கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தலைப்பூக்கள்

Page 1
WWiskj85
மல்லிகை
 

|
必关秀 éâNSK
|N.
|
ằ

Page 2
தலைப்
டொமி
ଗଇu।
மல்லிை
234-8, sTišK
uu Typ

பூக்கள்
Gifhäk gaur
கப் பந்தல்
கேசன்துறை வீதி,
turreorb.

Page 3
முதறபதிப்பு : மே 1981 உரிமை பதிவு ,
விலை ரூ. 40.00
தமிழ்நாட்டில் கிடைக்குமிடம் :
'குமரன் பப்பிளிஷர்ஸ் 79, முதல் தெரு குமரன் காலனி, வடபழனி சென்னை-600 026,
அச்சிட்டோர் சித்ரா பிரிண்டோ கிராபி, இசன்னை-14,

உள்ளே.
1. கலை இலக்கியப் பரிவர்த்தனை என்பது
ஒருவழிப் பாதையல்ல! ' 17 2. ஒர் ஆண்டும்-ப்ன்னிரண்டு இதழ்களும் 22 3. உலகமெலாம் தமிழோசை முழங்கச்செய்வோம்! 26 4. சாதனையை நிலைநாட்ட சாதனங்கள் தேவை 28 5. மருந்து எப்பொழுதும் கசப்பாகத்தான் இருக்கும் 32 6. திமிங்கலத்தைப் பிடிக்க மீன் வலையால் முடியாது 35 7. ஏழாண்டும் எமது கணக்கெடுப்பும் ! 42 8. நமது சஞ்சிகைகள் ஏன் தோல்வியடைகின்றன? 45 9. சொல்லில் அடங்காத சோகம் ! 48 10. தேசிய கெளரவம் பாதுகாக்கப்பட வேண்டும்! 50 11. அழகு சுப்பிரமணியம் 54 12. அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது?
கதை தொடரவேண்டும் ! 57 13. அகண்ட சத்தியத்தின் உயர்ந்த
இலக்கியத் தொனி! 80 14. உண்மையான பெருமைக்கு உழைப்பு
ஒன்றேதான் அடையாளம் ! 64 15. புதிய இலக்கியப் பரம்பரை
இங்கு உருவாகப் போகின்றது ! 69 16. இலக்கியக் கருத்துக்களின் ஒருங்கினைவும்
செயலாக்க உறவுகளின் நெறிமுறைகளும் 7 17. கெளரவம், கெளரவம் பெறுகின்றது! 75 18. பன்முகத் தன்மை வாய்ந்த நல்லிணக்கம் தேவை 78 19. தமிழ் நாவல் நூற்றாண்டு
சரித்திர யதார்த்தத்தில் சில உண்மைகள் ! 79 20. அரசியல் அயோக்கியர்களின் கடைசி புகலிடம்
என்பதைப் பொய்யாக்கியவர்! 82 21. சோகம் எனது கதவைத் தட்டிக் கதை
சொல்லிச் சென்றது. * 87 ܫ 22. கறுப்புக்கொடியும் துக்கதின அனுஷ்டித்தலும்
மாத்திரம் பிரச்சினையைத் தீர்க்க முடியாது! 92 23. எதார்த்த உண்மைகளின் ஆதார பலம் 1 95 24. தினசரி வாழ்க்கையே ஒரு சுமையாக
மாறிவிட்டது 100 25: ஆத்ம பூர்வமாகத் துணை நிற்பவர்களுக்கு. 103 26. பேராசிரியர் வானமாமலை V−* − 108 27. வருங்காலத்தைச் சிருஷ்டிக்கும் போராட்டம்! 111 28. நீதிச் சுதந்திரத்திற்கு ஆபத்து! 116

Page 4
29. மார்க்ஸ் என்றொகு மானுடன் தோன்றினான் 149 30. வெல்லற்கரிய வலிமை உழைப்பிலிருந்துதான்
பிறக்க முடியும் 122 31. சமகாலத்தை வென்றவர் எதிர்காலத்னத
நிர்ணயித்தவர் 126 32. வானொலியும் தொலைக் காட்சியும் 28 38. கைத்துப்போன அந்த வாரங்கள் 1.31 84. தேசிய சிறுபான்மை இனப் பிரச்சினை
தீர்வுக்கு ஒரு மார்க்கமுண்டு 184 6. உலக சமாதானப் புறாவின்
சிறகுகள் துண்டிக்கப்பட்டன! 37 36. ட்டிச்சுவர் அருகே சுழுதைகளின் தவம் ! 140 37. இளேே கருகவிடக் கூடாது 143 38. வாழ்வது என்பது ஒர் ஆக்கபூர்வமான வேட்கை 146 39. கறுப்புச் சூரியன்! 151. 40. தன்னம்பிக்கையின் ஒலியே தவிர,
தலைக்கணத்தின் ஒசையல்ல! 154 41. புத்தாண்டில் புது யோசனைகள்! 1.59 42. ருபெரும் இழப்புக்கள்! 62 43. சரத் முத்தெட்டு வேகம்! 56 44. மனித ஆத்மா உழைப்பின்மூலம்தான்.
தன்னை வெளிப்படுத்திக்காட்ட முனைகிறது! 167 46. இ. மு. எ. ச, நடத்திய எழுத்தாளர் மகாநாடு 172 46. பல்கலைக் கழகங்களும் கெளரவப் பட்டங்களும் 175 47. ஒரு பெருந்துயரமான நிகழ்வுப் போக்கு. 1.78 48. க்கபூர்வமான வெளிச்சத்தில் மதிப்பீடு
18i 49. ஆழமானஉணர்வுகள்மெளனத்தில்வாழ்கின்றன!185 50. மக்களிடமிருந்து மலர்ந்த கலைஞன்
மக்களது கலைக்குச் செழுமையூட்டிய நடிகன் 190 51. வெப்பமான மண்ணில் இலக்கியப்
பாதங்கள் பதிகின்றன! 193 52. இலவச ஆலோசனையின் பகிரங்க வெளிப்பாடு 197 58. ஆக்கபூர்வமான கருத்துப் பரிவர்த்தனை 2O2 54. நான் நட்சத்திரங்களையே குறிவைத்துச்
செயலாற்றுகின்றேன்! 205 35. சிறியன சிந்தியாதான்! h 2O7
6

ஆசிரியர் பேசுகின்றார்
1966-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்திகதி மல்லிகை யின் இதழ் முதன் முதலில் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் பெரியகடைப் பகுதி என அழைக்கப்பட்ட வியாபாரப் பிரதேசத்தில் முக்கிய தெருவான கஸ்தூரியார் வீதியிலுள்ள 60-ம் எண்ணுள்ள "ஜோசப் சலூன்" என வழங்கப்பட்ட ஒரு பிரபல சவரக் கடையின் பின் பகுதியில் இருந்துதான் இச் சஞ்சிகை வெளிவர ஆரம்பித்தது. V
உலக வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி இது. சிகை அலங்கரிக்கும் நிலையம் ஒன்றினுள் இருந்து வெளி வந்த ஒரேயொரு இலக்கியச் சஞ்சிகை மல்லிகை ஒன்று தான்!-- சலுரனில் தொழில் செய்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சர்வதேசச் சஞ்சிகையும் மல்லிகை தான்

Page 5
அங்கு தொழில் செய்து வந்தவன்தான் இந்த மல்லிகை ஆசிரியர். அதாவது டொமினிக் ஜீவர், என அட்டையில் ஆசிரியராகப் பெயர் பொறித்த நான்!
1961-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படைப்பு இலக்கியத் திற்கு முதன் முதலாகச் சாஹித்திய மண்டலப் பரிசினைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கோண்டு யாழ்ப்பாணம் திரும்பிய சமயத்தில், யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் இலங்கையின் பிரபல தினசரிகளான வீரகேசரி, தினகரன் நிருபர்கள் என்னைப் பேட்டி கண்டு எனது கல்வித் தகைமையை விசாரித்த போது, எனது தொழில் நிறுவனத்தை பெருமையுடன் சுட்டிக் காட்டி: அது சவரக் கடையல்ல; எனது சரிவகலா சாலை!" என அன்றே பேட்டி கொடுத்தவன், நான். என்னை உருவாக்கி, என் வயிற்றுக் குச் சோறிட்டு, பல மேதைகளைச் சந்திக்க வைத்து எனது ஆத்மாவைச் செழுமைப்படுத்த உதவி வந்ததே அந்த ஜோசப் சலூன் என்ற சிகை அலங்கரிக்கும் நிலையம்தான்.
அந்தக் காலத்திலேயே எனது இந்தப் பேட்டியின் உட்ட் கருத்துக்கள் பலராலும் விழரிசிக்கப்பட்ட ஒன்றுதான்.
அந்த ஜோசப் சலுரனின் பின் அறையைச் சஞ்சிகைக் காரியாலயமாக்கி, அங்கிருந்தபடியே மல்லிகையை வெளி விடத் தொடங்கினேன். தினசரி அங்கிருந்த வண்ணமே இயங்கி வர ஆரம்பித்தேன்.
அன்றைய நிலையில் அது ஒரு பெரிய திருப்பம் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி; பிரமிப்புடன் திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்.

9
அந்த ஸ்தாபனத்தில் இருந்துதான் பல ஆண்டுகளாக மல்லிகை ஒழுங்காக வெளிவந்து கொண்டிருந்தது. பின்னர் வளர்ச்சி அடையத் தொடங்கியதும் மல்லிகைக் காரியால யத்தை வேறோர் இடத்திற்கு இடம் மாற்றிக் கொண்டேன்.
முதன் முதல் வெளிவந்த இதழின் அட்டையிலேயே ஆசிரியர்; டொமினிக் ஜீவா என வண்ணத்தில் பொறித்துக் கொண்டேன். ஒவ்வொரு இதழிலும் தொடர்ந்து அந்தப் பெயர் அட்டையில் பொறிக்கப்பட்டே வந்து கொண்டிருக் கின்றது.
இது வெறும் வறட்டுப் பதிவல்ல; வரலாற்று ஆவணம் எனது அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் முத்திரைட் பதிவு,
'முதலாவது இதழின் அட்டையை வரைந்து உதவியவர் வரன்' என்பவராகும். பச்சையும் மஞ்சளும் கலந்த இரு நிறங்களில் மல்லிகைப் பூக்களின் கொத்துக் கொத்தான காட்சியை அவர் ஓவியமாகத் தீட்டித் தந்தார்.
மனைவியின் கைக் காப்பு இரண்டையும் அடைவு வைப்ப தாகப் பொய் சொல்லி வாங்கி வந்து விற்றுக் காசாக்கிக் கொண்டேன். கையில் 360 ரூபா. உடன் கிடைத்தது. தோழர் அயரத்தினம் என்பவர் ரூபா 40 தந்தார். இதைக் கேள்விப் பட்டு, புத்தகக் கடைப் பூபாலசிங்கம் ரூபா 25 தந்துதவினார். கையில் ரொக்கமாக ஒரு தொகைப் பணம் கிடைத்ததும் உற்சாகமாக இலக்கிய வேலைகளை ஆரம்பித்தேன். முதல் இதழுக்கான ஆரம்ப வேலைகளை ஒரு வழியாகச் செய்து முடித்து அச்சுக்குக் கொடுத்து விட்டேன்.

Page 6
0
இதுதான் மல்லிகையின் ஆரம்ப வரலாறாகும்; ஆரம்ப மூலதனமுமாகும்.
பணத்தைப் பற்றி நான் எந்தக் காலத்திலுமே அச்சப்படு பவனல்ல. ஆத்ம சுத்தியும், செய்யும் தொழிலில் ஆழ்ந்த கன்ற பக்தியும். விசுவாசமும் , தினசரிச் செயல்பாடுகளில் இடையறாத ஈடுபாடும் ஒருவனுக்கு வாய்க்கப் பெற்றால், பணம் அவனுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அது எங்கிருந்தோ வந்து சேரும் . நினையாப் பிரகாரமாகச் சிலர்
வந்து கை கொடுப்பர்.
இது எனது இலக்கிய வாழ்வில் நீண்ட கால அனுபவ மாகும். சில சமயங்களில் நான் இ தப் பார்த்துப் பிரமித்துப் போவதுமுண்டு.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிற்றிலக்கிய ஏடொன்றை வெளியிட்டு வருபவன் என்ற ஹோதாவில் இந்தக் கருத்தை இந்த இடத்தில் அறுதியிட்டுக் கூறு கின்றேன். உண்மையான பொது உழைப்பாளிக்குப் பணம் என்றுமே ஒரு பிரச்சினையாக இருந்து விடுவதில்லை. திட்டம்தான் முக்கியம். அதில் அசுர ஈடுபாடுதான் அவசியம் பணம் எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் வந்து சேரும். இதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். நான் இதை நடைமுறையில் கண்டு கொண்டுமிரு” கின்றேன்.
முதல் இதழின் விலை: முப்பது சதம். பக்கங்கள் 48, காங்கேசன் துறை வீதியிலுள்ள நாமகள் அச்சகத்தில்

1.
அச்சிடப் பெற்றது. 500 பிரதிகளே முதன் முதலில் வெளி வந்தன. மொத்தச் செலவுகளுமே 250 ரூபா தான்.
'விந்தன்' நான் மதிக்கும் படைப்பாளி "மனிதன்" என்றொரு சஞ்சிகையை ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்குள் ளேயே ஆட்டங்கண்டு விட்டது. ரகுநாதன் சாந்தி" இதழை வெளிக் கொணந்தார். அதற்கும் அதே கதி. விஜயபாஸ்கரன் "சரஸ்வதி” என்ற பெயரில் இலக்கியத் தரமான இதழை வெளியிட்டார். அதில் ஈழத்துப் படைப்பாளிகள் எழுதிப் பிரபலம் பெற்றனர். அதுவும் நின்ற் போனது, ஜெயகாந்த னின் "ஞானரதம் க. ரா.சு. வின் பல சஞ்சிகைகளின் கதி
களும் இப்படியேதான் ,
நமது மண்ணிலும் "வரதர்" "மறுமலர்ச்சி" என்றொரு இதழை அந்தக் காலத்தில் ஆரம்பித்தார். அது பிற்காலத் தில் "மணிக் கொடி' மாதிரிப் பெயர் சொல்லப்பட்டதே தவிர, நின்று நிலைக்கவில்லை. "சிற்பியை" ஆசிரியராகக் கொண்டு 'கலைச் செல்வி வெளிவந்தது. இளங்கீரனை" ஆசிரியராகக் கொண்டு "மரகதம் பரபரப்புண்டாக்கியது. இவைகள் ஒன்றுமே சில வருஷங்களைத் தவிர, ஈழத்து மண்ணில் வேர் பாய்ச்சி நின்று நிலைக்கவில்லை.
உண்மையான ஆத்ம சமர்ப்பணத்துடன் ஆரம்பிக்கப் பட்ட மேற்கண்ட சஞ்சிகைகள் ஏன் நின்று நிலைக்கவில்லை? என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு.
மல்லிகை ஆரம்பித்த காலத்தில் இந்தக் கேள்வி என்னுள் விஸ்வரூபம் எடுத்தது. நெஞ்சைக் குடைந்து கொண்டேயிருந்தது. ஏன்?-என்?.

Page 7
12
இங்குதான் ஆனந்த விகடன் ஆசிரியர் வாசனுடைய நெஞ்சார்த்த அதுபவம் எனக்குக் கைதந்து உதவியது, அச்சடிக்கப்பட்ட பிரதிகளைத் தோளில் சுமந்து கொண்டு தேருத் தெருவாகத் திரியத் தொடங்கினேன். விலைகூறி விற்க ஆரம்பித்தேன். யாழ்ப்பாண வீதியெல்லாம் சுற்றித் திரிந்து இலக்கிய வியாபாரம் செய்தேன். கள்ளுக்கொட்டில், சாராயத் தவறனை என்று பாராமல் எங்கும் நுழைந்து இலக்கிய நெஞ்சங்களைத் தேடித் திரிந்தேன். விற்பனை செய்தேன் என்று சொல்வதை விட, வலிந்து திணித்தேன் என்ற பதமே இதற்குப் பொருத்தமாகும், சிலர் என்னைக் கண்டு ஒளித்தோடியதுமுண்டு.
தனி இதழ்களாக வாங்கிய நெருங்கிய நண்பர்கள் சிலர், ஆண்டுச் சந்தா தரப் பஞ்சிப்பட்டனர், இத்தனைக்கும் அன்று ஆண்டுச் சந்தா ரூபா நான்கு தான்!
*நந்தி சிவா சுப்பிரமணியம், வே. தனபாலசிங்கம் ஆகியோரின் சிறுகதைகளும் ஆன்டன் செகாவ்வின் கதை யொன்றும், நீலாவணனின் கவிதையும், அகஸ்தியரின் உணர்வூற்றுச் சித்திரமும், மூன்று கட்டுரைகளும் யாழ்ப் பாணக் கவிராயர் என அழைக்கப்பட்ட பசுபதியின் அஞ்சலிக் குறிப்பொன்றும் "பலதிலும் பத்து" என்ற இலக்கியத் திரட்டும் "வணக்கம்' ஆசிரியத் தலையங்கமும் உள்ளடக்கிய முதல் இதழ் வெளிவந்து இலக்கிய வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
பின்னர் ஆண்டாண்டாக மல்லிகை இதழ் விரிவுபட்டு வளர்ந்தது. தனக்கெனச் சொந்தமான கட்டடத்தையும் அச்சக சாதனங்களையும் பெற்றுத் தன்னிறைவு கொண்டது

தற்சமயம் யுத்த நெருக்கடி காரணத்தினால் புலம் பெயர்ந்துள்ளேன். மல்லிகைக் காரியாலயம் அப்படி அப்படியே விட்ட குறை தொட்ட குறையாக யாழ்ப்பாணத் தில் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது. நான் கொழும்பில் ஒரு நண்பரின் கடை மாடியில் தற்சமயம் தங்கியிருத் கின்றேன்.
இந்தப் புத்தகத்தை-மல்லிகைத் தலையங்கங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற எனது மன அவாவைக் கூடச் கை வசம் இல்லாமல் நண்பர்களின் ஒத்துழைப்புடன்தான் இந்த தலைப் பூக்களை" உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். எல்லா ஆவணங்களும், குறிப்பாக மல்லிகைப் பிரதிகள் அனைத்தும் மல்லிகைக் காரியாலயத் தில் முடங்கிப் போயுள்ளன.
சகல தலையங்கங்களையும் இந்த நூலில் சேர்த்து விட்டேன் எனச் சொல்லிவிட முடியாது. கைக்குக் கிடைத்த தைக் கொண்டுதான் இந்தப் புத்தகத்தை ஆவணப்படுத்தி யுள்ளேன். யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது எழுதப்பட்ட தலையங்கம் கூட, கை வசம் கிடைக்கவில்லை. உள்ளதைக் கொண்டே ஓரளவு ஒப்பேற்றியுள்ளேன். அடுத்த பதிப்பில் குறையை நிறைவு செய்வேன் என்பது திண்ணம்.
இந்த இடைக்கால கட்டத்தில் மல்லிகை மலரவில்லை. மல்லிகை அன்பர்களுடன் உள்ள மனமார்ந்த தொடர்பை என்னால் துண்டிக்க முடியவில்லை. அந்த உறவைப் புதுப்பிக்கும் நோக்கத்துடனேயே மல்லிகைப் பந்தல் வெளி யீடுகளை வெளிக்கொணர ஆவன செய்து வருகின்றேன்.

Page 8
14
இந்தத் தவிப்பு மிக்க இடைக்காலத்தில், சோகம் கவிந் துள்ள இந்த அந்தர வேளையில் நான் முறைப்படி இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாது போனால் எனது இலக்கிய இதயம் துருப்பிடித்துவிடும். தொடர்ந்து செயல் படாமலே போனேனென்றால் என் ஆத்மாவே சிதறிப் போய் விடும் என மெய்யாகவே அஞ்சுகின்றேன். எனவே துணிந்து செயல்பட்டு வருகின்றேன்.
சின்னஞ்சிறு வயதிலிருந்தே மெல்லிய ஓர் உணர்வு என் நெஞ்சக் கூட்டுக்குள் ஒலிந்துக்கொண்டே இருக்கின்றது. வெந்ததை விழுங்கி, விதி வந்தால் செத்துப் போகப் போகும் சாதாரணவன் அல்ல நான். என் உணர்வே என்னை எப்போதும் வழிநடத்தி வந்துள்ளது. அந்த உள்ளுணர்வே என்னுள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றது.
மல்லிகையின் 81-வது ஆண்டிலும் மனசிற்குள் இந்த உணர்வுகளை எண்ணிப் பார்க்கின்றேன். எனக்கே என் செதுல்களில் பிரமிப்பு
எரிந்துபோன சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த் தேழும் பீனிக்ஸ் பறவை தான்!
*மல்லிகையின் தோற்றமும் வளர்ச்சியும், அதன் பின்னணியும் தாக்கங்களும். அது நடந்துவந்த பாதைத் தடைக் கற்கள்" என்ற தலைப்புகளில் வருங்காலப் பல் கலைக் கழக மாணவர்கள் ஆய்வு செய்யத் தோன்றுவார்கள் , அவர்களுக்கு இது ஆய்வுத் தலைப்பாகக் கூடும்.

15
அதற்காகவே இந்த முன்னுரைத் தளத்தை நான் siffisegwrsar பயன்படுத்தியுள்ளேன்.
அந்தக் காலகட்டங்களில் எனது உணர்வுகளைப் பாதித்த சம்பவங்களை எனது நெஞ்சத்தைத் தொட்ட நிகழ்ச்சிகளை, எனது மூளையில் உறைத்த விஷயங்களை 55 தலைப்புக்களில் தொகுத்துத் தந்துள்ளேன். இந்தக் கருத்துக்கள் சுயம்புவாகவே எனது சொந்தக் கருத்துக் களாகும். அதீத கல்விப் பயிற்சியினால்-அல்லது பட்டப் படிப்பினால், இரவல் கருத்துக்களை உள் a Tide, a lar வாங்கிப் பழுதுபட்டுப் போய்விட்ட திருப்பிடித்த கருத்துக் கனல்ல, இவை.
இவைகள் அத்தனையும் ஒரு சாதாரணனின் அபிப் பிராயங்கள்; கருத்துக்கள்; சிந்தனைகளே.
இதற்கு மாற்றான கருத்துக்ககும் இருக்கலாம், இருக். முடியும். இருப்பதுதான் நல்லது.
பாம்பு அடிக்கடி சட்டையை உரித்துத் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வதைப்போல, என்னைக் கட்டம் கட்ட மாகப் புதுப்பித்துக் கொள்ளவே நான் பெரிதும் முயன்று உழைத்து வருகின்றேன். ஆனால் அடிப்படைக் கருத்துக் களில் யாருடனும் என்றுமே சமரசம் செய்து கொள்ளும் தன்மை எனக்கில்லை. நான் நானாக திலைத்து நின்று நிமிர்ந்து பார்க்கப் பழக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வளர்ச்சியை, அல்லது முதிர்ச்சியை எனக்குக் கற்றுத் தந்ததே அந்த அடிப்படைப் போதம்தான். அந்தப் போதம்

Page 9
16
தான் என்னை இதுவரைக்கும் வழிநடத்தி வந்துள்ளது. இனிமேலும் வழிவிடும் என மெய்யாகவே நம்புகின்றேன்.
ஈகைவசம் • மல்லிகை இதழ்கள் ஒன்றுகூட இல்லாமல் நான் அந்தர நிலையில் இருந்தபோது எனக்கு இதழ்களைத் தந்துதவிய நண்பர்களுக்கும், இந்த நூலைச் சீக்கிரமாக வெளியிடக் காரணமாக இருந்த இளைஞன் திரு க. குமரன் அவர்களுக்கும் மல்லிகை வெளிவராத இந்தச் சூழ்நிலை யிலும் என்னை என்றுமே மல்லிகை ஆசிரியராகிக் கனம் கண்ணிக் கெளரவித்து மதிப்பளிக்கும் இலக்கிய நெஞ்சங் ஆளுக்கும், மல்லிகைப்பந்தல் வெளியீடுகள் தொடர்ந்து வெளிவரக் காரணமாக அமைந்த நண்பர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதில் பெருமை அட்ைகின்றேன். அட்டையை அழகுற வரைந்த திரு. பூரீதர் பிச்சையப்பா அவர்களுக்கும் இந்த நூலைச் செம்மையாக -- உருவாக்க உதவிய அச்சக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். ..
#ಲ :
தொடர்ந்தும் தொடர்ந்தும் உங்களைச் சந்தித்து மகிழ்வேன்.
2848; காங்கேசன்துறை வீதி Gursfäs Guar.
யாழ்ப்பாணம்: ' 1重-4-96。

கலை இலக்கியப் பரிவர்த்தனை என்பது
ஒருவழிப் பாதையல்ல A
சமீப காலமாகப் பலர் தமிழகத்திலிருந்து திமது தாயகமான இலங்கைத் திருநாட்டிற்கு அடிக்கடி வந்து வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். இப்படி அடிக்கடி வருபவர்களிலே முக்கியமாகக் கலை சம்பந்தப்பட்டவர்கள்நடிகர்கள் - ஏன் ஒருசில அரசியல்வாதிகளும் இருக்கின் றனர். வெளிநாட்டைச் சேர்ந்த பலர் நிமது நாட்டிற்கு வருவது பற்றியோ, வந்து நமது ஈழமாதாவின் இயற்கை அழகையெல்லாம் பார்த்து ரசிப்பது பற்றியோ நமக்கு எவ்வித ஆட்சேபனையோ அல்லது அபிப்பிராய பேதமோ கிடையவே கிடையாது. வரட்டும்; வந்து நன்றாக நமது நாட்டை எல்லாம் சுற்றிப் பார்க்கட்டும்; நமது விருந்தோம் பும் பண்பையும் தயவுசெய்து அவர்களெல்லாம் புரிந்து கொள்ளட்டும்.
ஆனால், வருபவர்களில் பலர்-நமது அதிதிகளாகத் தங்கி இருக்கும் பலர்-நமது விருந்தோம்பும் பண்பையே தவறாகக் கணக்குப் போட்டுள்ளனர். நமது மேதைத்தனத் தில் நாமெல்லாம் மயங்கிவிட்டோம் எனத் தப்பர்த்தம் செய்து கொண்டு, தமது திரு வாயைத் திறந்து நமக்கு உபதேசம் செய்யக் கிளம்பி இருப்பதுதான் சிரிப்புக்கிட மான செய்தி, உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் என்று
島ー2

Page 10
18 தலைப்பூக்கள்
தம்மைக தாமே கூறிக்கோள்பவர்களுக்குக் கொஞ்சம் பொறுப்புணர்ச்சி வேண்டும். ஆனால் இவர்களது பேச்சு களோ எரிச்சலை ஊட்டுகின்றன. நமது பாரம்பரியப் பண்பை எண்ணிப் பொறுமை காட்டிகின்றோம். இது எத்தனை நாட்களுக்கு நிலைக்குமோ நமக்கே தெரியாது.
நமது நாட்டிலிருந்தும் பல தலைவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஐரோப்பிய அல்லது ஆசிய, பக்கத்து இந்திய நாட்டிற்குப் பலகாலமாகச் சென்று வருகின்றனர். இது சகலருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அங்கு சென்று குரு-சிஷ்ய மனப்பான்மையில் அங்கு வாழும் மக்களுக்கு உபதேசம் புரிவது கிடையவே கிடையாது. இது நமது வெளிநாட்டுப் பண்பு. ஆனால் சமீபத்தில் இங்கு வருகை. தந்த பலர் பலப்பல கோணங்களில் நமக்கு உபதேசமும் இலவசப் புத்திமதிகளும் சொல்லிப் போவதைச் செய்திப் பத்திரிகைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. அக்கூற்றில் ஓர் அம்சம்தான் கலாச்சார இலக்கியப் பரிவர்த். தனை என்ற கோஷம்
கலாச்சாரப்பரிவர்த்தனை என்பது குரு-சிஷ்ய மனோ பாவமோ, உபதேச மந்திர உச்சாடனமோ அல்லது ஒரு வழிப் பாதையுமோ அல்ல!
அது ஒரு தேசத்து மக்கிளின் கலை, இலக்கிய, நாகரிக பண்பாடுகளை இன்னொரு நாட்டு மக்கள் பரஸ்பரம் புரிந்து அறிந்துகொள்வது. ஆனால் நடைமுறையில் என்ன நடக் கின்றது? தமிழன் பெயராலும் தாய்நாடு என்ற மறைமுகப் போலிப்போர்வையைப் போர்த்துக்கொண்டும் நம்மீது நச்சு இலக்கியங்களும், நாசகாரக் கருத்துக்களுமே திணிக்கப்படு கின்றன. நமது நாடு வெறும் வர்த்தகச் சந்தையாகக் கணிக்கப்பட்டு, குப்பையும் கூளமும் இங்கு இறக்குமதி யாக்கப்படுகின்றன.

டொமினிக் ஜீவா 19
பல இலக்கிய மேடைகளிலும் கலை விழாக்களிலும் புத்தக வெளியீட்டு உரைகளிலும் இக் கருதையே ஈழத் துச் சிந்தனையாளர்கன் சொல்லிச் சொல்லி வந்துள்ளனர்.
சதக்.சதக்.என்று குத்தினான். பருவப் பெண் பாவாடையில் இ3த்தம்’ இப்படியான பத்திரிகைத் தலை யங்கங்களின் வியாபாரப் பின்னணி நமக்குத் தெரியும்.
இது கலாசாரப் பரிவர்த்தனையல்ல!
சிவாஜி-எம். ஜி. ஆர். கோஷ்டியினரின் கடும் மோதல் பல வாலிபர்கள் ஆயிரம் ரூபாய் பிணையில் விடப்பட்டனர்.
நமது வருங்காலச் சந்ததியை சினிமாச் சோம்பேறிக் காடையர்களாக்குவதும் கலாச்சாரப் பரிவர்த்தனையல்ல!
அல்லது, கழுகுக் குகை என்ற தமிழ்ச் சொல்லை "கலுகு கொகை" என்று கன்னடத்துப் பைங்கிளி நாடோடி மன்னனில் பேசுவதைப் புரிந்து கொள்ளும் *தாய் நாட்டுப் பெரு மக்கள், நமது நாவலன் தமிழுக்கே பிழை திருத்தம் கூறி, ஒழுங்கை, விதானையார் போன்ற சில சொற்கள் தமக்குப் புரியவில்லை. எனவே அடிக் குறிப்பு இடுங்கள் என விளக்க உரை கேட்கின்றனர். "கலுகு கொகை" அவர் களுக்குப் புரிகின்றது. வியாபார ரீதியான சினிமாத் திணிப் பினால் நமக்கும் விளங்குகின்றது. நமது நல்ல தமிழ்ச் சொற்களே, நாளாவட்டத்தில் கலப்படமாகி விடுகின்றன. இதைப் புரியாதவர்கள்-அல்லது புரிந்தும் புரியாததுபோல நடிப்பவர்கள் - வீம்புத்தனத்துடன் பத்திரிகைப் பேட்டி கொடுக்கின்றனர்.
இதுவும் கலாச்சாரப் பரிவர்த்தனையல்ல, கலை இலக் கியப் பரிவர்த்வனையல்ல!
நமக்குத் தெரிந்த கலை இலக்கியப் பரிவர்த்தனை
என்பது இதுதான்; நமது நாட்டிலுள்ள மிகச் சிறந்த கலை இலக்கியக் கருத்துக்களை நாம் மற்றைய நாட்டவர்களுக்

Page 11
20 as abalusiasar
குக் கொடுக்க வேண்டும் அதேசமயம் ஏனைய தாட்டவர் களிடமிருந்து-அவர்கள் எஸ்கிமோ தேசத்தவர்களானா ஆம்- அவர்களுடைய மிகச் சிறந்த கலை இலக்கியங்கனை நாம் இரு கரங்களையும் நீட்டிப் பெற்றுக்கொள்ள வேண் டும்; பயன்படுத்த வேண்டும்.
இதற்குப் பேர்தான் கலை இலக்கியப் பரிவர்த்தனை என்பது.
ஆனால், யதார்த்த ரீதியாக நாம் சேனும் நிலை என்ன?
பெண்ணும் ஆணும் கட்டிப் புரளும் சினிமாக் 6A4ssir
டப்பாக் குத்து ஆட்டம், டப்பா சங்கீதம்! PDysapi துப்பறியும் கதைகள்; புதுமுகம் சவுண்டி ராணியின் F65 DI ) செய்வது எப்படி என்ற பேட்டிக் கட்டுரை, அல்லது "கோபர லன் வந்தான். கோட்டைக் கழற்றினான். கமலா காப்பி யைக் கொண்டுவந்தாள்" என்ற மிகச் சிறந்த சிறுகதை.
இவைதான் இன்றைய மார்க்கட் நில்வரம்
ஒன்றை நாம் மனந்திறந்து கேட்கின்றோம். ஒரு மாபெரிய தேசத்தினுடைய கலை 856antaigfrau- u6ööTLu mʻu‘G6di கருத்துக்கள் எல்லாம் இவைதானா?-இவைகளேதான?
இவைகள் வெறும் கீழ்த்தரமான வியாபாரச் சுரண்டல் கள்!-நமது வாலிபச் சந்ததியினரின் சிந்தனை சக்திகளை கியல்லாம் மழுங்க அடிக்கும் பித்தலாட்டக் கருத்துக்கள் இவற்றை மறைப்பதற்காகவே கலாச்சாரப் பரிவர்த்தனை என்ற கலைப் போர்வை உபதேசப் பொன்மொழிப் TF கங்கள் பேட்டிக் கட்டுரைகள்
நமக்கு உபதேசம் புரிய எத்தனிப்பவர்களைப் பார்த்து நாமொன்று கேட்க விரும்புகிறோம். தமது தேசத்தில் வெளிவரும் தின, வார, மாத இதழ்கள் எத்தனை உங்களது தமிழகத்தில் விற்பனையாகின்றன? விற்பனையாக வேண்

டொமினிக் ஜீவா 21
டாம் எத்தனையோதீங்களே படித்திருக்கின்றீர்கள்.எங்களது கலை இலக்கிய அறிஞர்கள் எத்தனை பேர்களை நீங்கள் கெளரவித்துள்ளீர்கள்? நடிப்பிலும், மற்றும் நாடக, சினிமா தொழில் நுட்பக் கலைகளிலும் தேர்ச்சிபெற விரும்பிய வாலிபர்கள் எத்தனை பேர்களுக்கு நீங்கள் கைதந்து உதவி
புள்ளீர்கள்?
ஒரே வரியில் சொல்லப்போனால் ஈழத்தை நிரந்தரச் சந்தைக் கடையாக வைத்திருப்பதே -ஒரு சிலரைத் தவிரஉங்கள் சகலரினதும் நோக்கமாகும்.
ஆண்டில் 80 இலட்ச ரூபாய் சினிமாவிலும் கிட்டத் தட்ட ஒருகோடி ரூபாய் புத்தக சஞ்சிகைகளாலும் சுரண்டப் படுகிறது நமது நாடு.
இதை நமது புதிய சந்ததி சிந்திக்கத் தொடங்கி விட்டது.
பலர் கருத்துக்களை மேடைகளிலும் சொல்லத் தொடங்கி விட்டனர். இதே போக்கில் நமது நாடு போய்க்கொண்டி ருந்தால் வெகுவிரைவில் கலை இலக்கியப் பாலைவனமாகி விடுமோ என உள்ளூர அச்சப்படத் தொடங்கிவிட்டனர், நமது ரசிகப் பெருமக்களான வாலிபர்கள் இதற்குக் காரணம் உங்கனது நாடகமுறைப் பேச்சு; செயல்: நடவடிக்கை,
நீங்கள் எங்களுக்குக் கற்றுத்தந்த பாடம்; கலை இலக் கியப் பரிவர்த்தனை என்பது ஒருவழிப் பாதை; அது ஈழத்த வர்களுக்கல்ல. தமிழ் நாட்டவர்களுக்கே சான்பது
ஆனால் நாம் கூறுகிறோம் கலை இலக்கியப் பரிவர்த் தனை என்பது ஒரு வழிப் பாதையல்ல. பரஸ்பரம் போய் வரக்கூடிய இருவழிப் பாதை,
செப்டம்பர் 1966.

Page 12
ஒர் ஆண்டும் - பன்னிரண்டு இதழ்களும்
மல்லிகையின் ஆண்டு மலரை உங்களது கரங்களில் சமர்ப்பிக்கும் இதே வேளையில் மனதில் நம்மையறியாமலே ஒரு பூரிப்பும் ஆத்மதிருப்தி எனச் சொல்வார்களே அப்படி யானதொரு நெஞ்சநிறைவும் உண்டாகின்றன.
நேற்றுப்போல இருக்கின்றது. பன்னிரண்டு இதழ் களும் எப்படித்தான் வெளிவந்தன என ஆச்சரியப்பட முடி கிறது இந்த ஓர் ஆண்டிற்குள் எத்தனை எத்தனை படிப் பினைகள்- அநுபவங்கள்!- பிரச்சனைகள். "சீக்கிரம் மல்லிகை இதழ் வாடிப்போய் விடும்" என்ற ஆரூடக்காரர் கள் ஒருபக்கம்; இது எத்தனை நாட்களுக்குத்தான் உயிர் வாழப் போகின்றதோ?’ எனச் சாக்குருவி மனத்தினரின் வயிற்றெரிச்சல் இன்னொரு பக்கம்: "தன்னைச் சுய விளம்பரம்பண்ண இது ஒரு குறுக்குப்பாதை" எனத் தமக்கு எது செய்தும் விளம்பரம் கிடைக்கவில்லையே என மயங்கும் மாய்மாலக்காரர்களின் பொச்சரிப்பு வேறு. சுயவிளம்பரம் எது, நியாதுமான புகழ் எது என்பதை இன்னுமே புரிந்து கொள்ளாதஅரை மயக்கக்காரர்களின் இந்த மனநோய்க்குமேனியாவுக்கு-சிரிப்பதைத் தவிர வேறெந்தப் பதிலும் சொல்லப்போவதில்லை. வேண்டுமென்றால் நமது செயலே அவர்களுக்குப் பதிலாக இருக்கட்டும்!--பாவம்!
இத்தனை சம்பவங்களும் நடந்தேறிவிட்டன.
-இருந்தும் மல்லிகை சாகவில்லை!

டொமினிக் ஜீவா 3
தெருத் தெருவாக, வீடு வீடாக, ஊர் ஊராக மல்லிசை இதழ்களைக் கைகளில் சுமந்து விற்று, முப்பது முப்பது சதங்களாகச் சேர்த்த அநுபவம் ஒன்றே போதுமே.
-எதிர்காலம் அப்படியொன்றும் இருண்ட பாதையாகத் தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொள்வதற்கு!
ஈழத்து ரசனைமிக்க மக்கள்பற்றிப் பலர் பலவிதமாகத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். இதையே இந்த ஒரு வருடத்தில் படிப்பினையாகக் கற்றுக்கொண்டோம். கலை இலக்கியத்துறையில் ஒரு புதுவேகம், ஒரு புதிய உற்சாகம், ஒரு புதுமையான திருப்பம் இந்தநாட்டு மக்களிடம்-அவர் கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களானாலும், எந்தத் துறையைச் சேர்ந்தவர்களானாலும், எந்தத் தொழிலைச் செய்பவர்களானாலும்- ஏற்பட்டு வருகின்றதை யாருமே மறுக்க முடியாது, இந்த நாடடுக்கலை-இலக்கியங்களை விரும்பி வரவேற்க, ஆதரிக்க, அரவணைத்துக் கெளரவிக்க அவர்கள் முழுமனதுடன் முன்வருகின்றார்கள் என்பதே ஒரு பேரநுபவந்தானே!
வியாபாரத்தைத் தமது அடிப்படை நோக்கமாகவும் ஆதார சுருதியாகவும் கொண்டுள்ள வர்த்தகப் பத்திரிகை களில் நாம் ஈழத்து ரசனை வளர்ச்சியைப்பற்றி அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், பிரபல பத்திரிகை களின் முக்கிய குறிக்கோளே லாபம் ஒன்றுதான் ஒன்றே தான்!
எனவேதான் நம்மைப் போன்றவர்களின் கணிப்பீடும், மல்லிகைபோன்ற சிறிய இலக்கியச் சஞ்சிகைகளின் கடமை யும் மிகப் பொறுப்புள்ளதாகவும் இலக்கிய உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைதல் வேண்டும், இப்புதிய அணுகுதல் முறையையே மல்லிகை கடைப்பிடித்து வருகின்றது.

Page 13
24 தலைப்பூக்கள்
இப்புதிய கருத்தோட்டத்தை முன்வைத்து இயங்கு போது பல சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். இருந்து புஷ்டியானதும் தரமானதும் சர்வ தேசிய அந்தஸ்தை பெறக்கூடியதுமான ஓர் ஈழத்து இலக்கியப் பரம்பரைக்கு மல்லிகை வழிசமைக்க விரும்புகின்றது.
-இது தவறென்றால் தயவுசெய்து யாருமே எம்பின் னால் வராதீர்கள்; தனித்துநின்றும் இம்மாபெரும் இலட் சியங்களுக்காகப் போராடத் தயங்காது, மல்லிகை
ஆனால், யதார்த்தமான நிலைமைகள் நமது கருத்துக் களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன. பலப்பலரை அவர்கள் எழுத்தாளர்களாகவும் ரசனையாளர்களாகவும் நமது தேசிய இலக்கியம் முன்னேறவேண்டும் என்ற நல்நெஞ்சமுள்ள அநேகரை மல்லிகை இனங்கண்டு வைத் திருக்கின்றது. எவ்வித சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த நல்லவர்களின் இன்முகங்களே மல்லிகையின் பக்க பலங் களாகத் திகழும் என்பது திண்ணம்.
மல்லிகையின் அரசியல் பின்னணியைத் தெரிந்து கொண்டதாக பம்மாத்துப்பண்ணும் சிலர் சாக்கடை சேற்றை அள்ளி நம்மீது வீசமுனைந்துள்ள சம்பவமும். நமக்குத் தெரியாததல்ல. இவர்களின் கூப்பாட்டை மல்லிகை பொருட்படுத்தத் தயாராயில்லை! ஏனெனில் சேற்றை வாரி அள்ளும்போதே அவர்களது கைகள் அசுத்தப் படுகின்றன என்பது நமது நாட்டுத் தரமான ரசனையாளர் களுக்கு நன்கு தெரியும். அதுதவிர இவர்கள் யார் என் பதும் இவர்களைவிட ரசிகர்களுக்கு ஏற்கனவே மிக மிகத் தெளிவாகப்புரியும்.
-இதையும் மீறிக் குற்றஞ்சாட்டுபவர்களைப்பற்றி நமக்கென்ன கவலை? மலரைப் பூராவாகப் படிப்பவர்களுக்கு ஒன்று பெருமிதத்துடன் சொல்லிவைக்க விரும்புகின்றோம். இந்த விலைக்கு இப்படியான ஒரு மலர் இதுவரை வெளி வந்ததேயில்லை!

GL-ruflafák gener 25
இதில் எழுதியுள்ள பலர் பலவிதமான அபிப்பிராய பேதங்களை, கருத்து முரண்பாடுகளை உள்ளடக்கிய வர்கள். இருந்தும் உண்மையான இலக்கிய வளர்ச்சியின் நோக்கத்தையே குறிக்கோளாகக்கொண்டு நம்முடன் ஒத்துழைத்துள்ளனர். அவர்களுக்கும் சென்ற இதழ்களில் மல்லிகையின் பொறுப்பான கருத்துக்களை மதித்து, கெளரவித்துக் கண்ணியப்படுத்தியவர்களுக்கும் இம்மலரில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"மல்லிகையின் இதழ் அடக்கங்களில் கனம் போதாது; ஆழம் அதிகமில்லை" என நியாயமாக முறையிடுவோரின் கருத்துக்களை நாம் மதிக்கிறோம். ஏற்றுக்கொள்கின்றோம். நமது நாட்டு சூழ்நிலையில் ஒவ்வொரு இதழ்களையும் தவறாமல் வெளிக்கொண்டு வருவதுதான் முழுமுதற் கட்டம், ரசிகனின், வாசகனின், சந்தாதாரனின் நம்பிக்கை யைப் பூரணமாகப் பெற்றுக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். சந்தாவின் பெயரால் நமது நாட்டுத் தரமான ரசிகன் கடந்த காலங் களில் ஏமாற்றப்பட்டுள்ள கசப்பான நிகழ்ச்சிகளை நாம் மறந்தாலும் அவர்கள் இன்னும் மறத்துவிடத் தயாரா யில்லை! எனவே, ஏட்டுத்திட்ட இலட்சியங்களையும், கனம், தரம், ஆழம் என்பதைவிடத் தொடர்ந்து வெளிவரும் என்ற நம்பிக்கையைப் பெறுவதே உடனடிப் பிரச்சினை யாகும்.
தரம் கனம், ஆழம் மிகமிகத் தேவைதான்;
இரண்டாவது கட்டத்தில் அதைச் சாதிப்போமே
அடுத்த ஆண்டு மலர். இம்மலரையும்விடச் சிறப்பாக அமையும் என்பதை இப்போதே கூறிவைக்க விரும்பு! கின்றோம்!
(முதலாம் ஆண்டு மலர் 1967)

Page 14
உலகமெலாம் தமிழோசை முழங்கச் செய்வோம்!
செப்டம்பர் பாரதி மாதம். இம்மாதம் பூராவுமே பாரதி யின் பெயரால் ஈழத்தில் பல சொற் பொழிவுக் கூட்டங்கள், Studitor Luor 6T afpriser, கவியரங்கங்கள், பேச்சுப் போட்டிகள் ஆகியன நடை பெறத்தான் போகின்றன. சென்ற ஆண்டில் நடந்த நிகழ்ச்சிகள் தான் இந்த ஆண்டி லும், இந்த ஆண்டில் நடந்தவைகள் தான் அடுத்த ஆண்டி லும், அதற்கு அடுத்த அடுத்த வருடங்களிலும்.
மீண்டும் மீண்டும் சொற்பொழிவுகள், விழாக்கள், கவியரங்குகள், பேச்சுப் போட்டிகள். .
பாரதியை ஒரு மக்கள் கவிஞன், மகா கவிஞன் என்ற ஸ்தானத்தைவிட்டு, அவனையோரு தெய்வீக அவதார மாக்கிக் கோயில் கட்டிக்கும்பிட வைத்துவிடுவார்களோ என அச்சப்படவேண்டி இருக்கிறது. இந்தப்பயத்தில் நியாய முண்டு. மகாகவி காளிதாஸனைத் தமிழர்கள் சினிமாப் படத்தில் காட்டி காளியின் வரப்பிரசாதத்தால் தான் அவனொரு மகாகவியானான் எனப் பாமரமக்களை நம்பும் படி செய்துள்ளனர். அதைப் போலவே, காலத்தை மீறிக் கவிதை புனைந்த கவிஞனை-தீர்க்கதரிசியெனப்புலவனைதமிழர்கள் எல்லாருமே சேர்ந்து தெய்வீகப்பட்டங்கட்டி, தெய்வாம்சக் கவிஞனாக்கி அவனது விழாக்களையும் தூபதிப நைவேத்தியங்களுடன் கொண்டாடி பாரதியின் படத்தைத் தேரில் வைத்துப் பவனி வந்து பூஜை செய்யத் துவங்கி விடுவார்களோ எனப் பயப்படுவதில் நியாயமில்லாமலில்லை; அச்சப்படுவதிலும் அர்த்தம் இல்லாமவில்லை.

டொமினிக் ஜீவா 27
பாரதி தேவதையல்ல! - தெய்வீக வழித்தோன்றலு மல்ல தமிழர்களிடையே தோன்றிய மாகவிஞன்
பாரதியை-அந்த மக்களின் மகாகவியை-மக்களிட மிருந்து பிரிப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சி வலையின் நுட்ப இழைகள் தான் தெய்வீகப் புலவன் என்ற வார்த்தைப் பின்னல்கள். ஆரம்பத்தில் பிற்போக்குப் பண்டிதர்கள் பாரதி மகாகவியல்ல, எனக்கோடி மெழுப்பினார்கள். வளர்ந்து வந்த இலக்கிய வேகத்தில், வாரதியின் கவித்துவதாக்கத்தின் முன்னால் இந்த பண்டிதக் கோஷம் எடுபடவில்லை. பாரதி மகாகவியானான் பண்டிதத் திருக்கூட்டம் தனது போர்த் தந்திர முறைகளை மாற்றிக் கொண்டது. மக்களால் மகாகவி என அங்கீகரிக்கப்பட்டுவிட்ட பாரதியைத் தெய்வீகக் கவி என்ற பேழைக்குள் மூடிவைக்க முயன்று செயலாற்றுகின்றது. இதில் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் பாரதியைப் பார்த்து அச்சப்பட வேண்டியதில்லை. அல்லது தோளிற் சால்வையை எடுத்துவிட்டுப் பயபக்தியுடன் குனிந்து கும்பிட வேண்டியதில்லை. மாறாக அவனது படைப்புகளை அணுகி ஆராய்ந்து ரசிக்கப் பழக வேண்டும். நாம் பாரதியைப் பாரதியாகப் புரிந்து கொள்ள அப்படித் தான் இயலும்.
அப்பொழுது நச்சு இலக்கியம் எது, நல்ல இலக்கியம் எது என வகுத்துணரும் ஆற்றல் நமக்கு வளரும் வளர்ந்து வரும் ஈழத்து இலக்கிய உலகிலும் நாம் தடந்தெரிந்து வழி நடக்கச் சுலபமாக இருக்கும். ن,
ஈழத்தில் இன்று இலக்கிங் உலகில் பிரமிக்கத்தக்க ஓர் அசைவு ஏற்பட்டுள்ளது. இங்கு பல இலக்கிய இயக்கயன் களும் கலை இலக்கியத் திருப்பங்களும் நடத்தேறி வருகின்றன. இங்கு இலக்கிய வாழ்வு உறைந்து ஸ்தம்பித் துப் போய்விடவில்லை. கடந்த காலங்களிலும் இன்றும் ருெம் மாற்றங்கள் கலை இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ளன. முற்போக்கு சக்திகளும், தரமான நல்லெண்ணம் படைத்த

Page 15
28 தலைப்பூக்கள்
ரசிக வட்டாரங்களும் சக்திப்பட்டு வருகின்றன. நமது கருத்துக்கள் ஒரு சிறிய பகுதியினரைத்தான் பாதிக்கின்றன என்பதல்ல. நாடு பூராவுமே ரன் கடல் கடந்து தமிழ் நாட்டையும் தாண்டி பெரிய தாக்கத்தை எற்படுத்தத்தான் செய்கின்றன என்பதில் நிறைந்த மனத்திருப்தி நமக்குண்டு. ஆனால் அதே நேரம் நமது கருத்துக்களுக்கு எதிரான பல மான சக்திகளும் நம்மிடையே உண்டு என்பதை நாம் மறக்க வில்லை,
அடுத்த ஆண்டுப் பாரதி மாதத்துக்கிடையில் ஆக்க பூர்வமான செயலை நாம் செய்து முடிக்க வேண்டும். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் சிறு கதைகளை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து, அவற்றைத் தொகுத்து நூலுருவில் வெளியிடுவதுதான் இந்தப் பாரதி விழாவில் எழுத்தாள நண்பர்கள் எடுக்கும் சபதமாக இருக்க வேண்டும். பாரதிக்கு நாம் செய்யும் கைமாறும் அதுதான்.
பாரதி தமிழன்தான்!- ஆனால் அவனது நெஞ்சம் உலகளாவியது!
(செப்டம்பர்- 1967)
சாதனையை நிலைநாட்ட சாதனங்கள் தேவை!
இந்த மல்லிகை இதழை உங்களது திருக்கரங்களில் சமர்ப்பிக்கும் இந்த வேளையில் நாம் பெருமிதத்தால் பொங்கிப் பூரிக்கிறோம். நமது சாதனங்களின் சாதனை இது, இதுவரை காலமாக - கடந்த இரண்டாண்டுகளாக மல்லிகை இதழை வெளிக் கொண்டுவர நாம் அச்சகங்களை நம்பியேதான் காரியமாற்ற வேண்டியிருந்தது. மூவாயிரத்து

டொமினிக் ஜீவா 29
இருநூறுரூபாய்கள் நட்டக்கணக்கில் சேர்ந்துவிட்டது. இத்தனைக்கும் அசுரத்தனமான உழைப்புக்குக் கணக்கு வழக்கேயில்லை. திடீர்ச் சிரமங்கள் வேறு. இத்தனையையும் சமாளித்து முன்னேறினாலும் இடையிடையே ஒழுங்காக மல்லிகை வெளிவரமுடியாத பொருளாதாரச் சிக்கல். அதை யும் சமாளித்து வெளிக்கொண்டு வரலாம் என்றால் ஊதிய உயர்வு, விலையேற்றம் என்ற பெயரால் ஒவ்வொரு இதழின் அடக்க வேலைகளுக்கும் மாதா மாதம் புதுப்புது விகித செலவு வளர்ச்சிகள்.
இந்தக் கட்டத்தை மனதில் கொண்டுதான் கடைசி யாக வெளிவந்த மல்லிகை இதழில் 'மலர் 16ல்- "இலக்கிய இதயங்கொண்ட இனிய நெஞ்சங்களே! என்ற தலை யங்கம் தீட்டப்பட்டது. நமக்கு ஒரு சமுதாயக் கடமை யுண்டு. சும்மா கையைச் கட்டிக்கொண்டு தத்துவம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. நாம், வரலாறு சுமத்துகின்ற இலக்கியக் கடமை களைப் பொறுப்புணர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள நாம் என்றுமே பின்வாங்கப் போவதுமில்லை. எனவேதான் இந்த நாட்டில் அரும்பு கட்டிவரும் புதிய புதிய சிந்தனை களுக்கும் கலை இலக்கியக் கருத்துக்களுக்கும் ஓர் உருக் கொடுக்க மல்லிகையை ஆரம்பித்தோம். இந்த மல்லிகை என்ற சாதனத்தினால் நாம் பல போராட்டங்களை நடத்த எண்ணியிருந்தோம். போர்க்களத்து வீரனுக்கு ஆயுதம் எப்படிப்பட்டதோ அதே போன்றே இலக்கியப் போர்க் களத்தில் துணிச்சலுடன் நிற்கும் ஈழத்துச் சிருஷ்டியின ருக்கும் மல்லிகை போராயுதமாகவும், பேராயுதமாகவும் பயன்பட வேண்டும் என முயன்று செயலாற்றுகிறோம். இன்று மல்லிகை தனது சொந்த அச்சக சாதனங்களுடனும் புதிய கவர்ச்சியுடனும் வெளிவரக் காண்பதில் உள்ள சகல பெருமைகளும் உங்களுக்கே உரியது.
இன்று நமது நாட்டில் கலைஞர்கள்தான் தேடுவ" ரற்ற அனாதைகளாகவே காட்சி தருகின்றனர் பல ஆண்டு

Page 16
30 தலைப்பூக்கள்
களாக எழுத்தாளர்கள் இந்த நாட்டில் இயங்கி வருகின் றனர். இந்த எழுத்தாளர்கள் இன்று ஒரு கருத்தரங்கோ, கவியரங்கோ, புத்தக வெளியீடோ நடாத்தத் தமக்கென ஒரு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். முன்னர் கல்லுரரி மண்டபங்கள் கிடைத்தன. ஆனால் நமது கல்வி கலாச்சார மந்திரியின் மகத்தான கலைத் தொண்டினால் கல்லூரிகள் கலைநிகழ்ச்சிகளுக்கு மறுக்கப்படுகின்றன. கடைசியில் தேநீர்க்கடைகள்தான் தஞ்சம். மண்டபம் இப்படியென்றால் எழுத்தாளர்களுக்கு டேப்ரிக்காட்டரோ, புகைப்படக்கரு வியோ அல்லது ஒரு டைப்ரைட்டரோ கூட கிடையாது. வெறுங்கையுடன் வீரம் பேசும் நமது எதிர்காலத் திட்டம் தான் என்ன?
திறந்தவெளி அரங்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப் பட்ட பின்னர் எத்தனை தாடகங்களை நாம் பார்த்துப் பெருமைப்பட்டுள்ளோம். பல கலைஞ்ர்களின் திறமை அந்தச் சாதனத்தின் மூலம் இன்று பிரகாசிப்பதைப் பார்க்கும் பொழுது சாதனங்கள் எப்படிப்பட்ட மகத்தான பங்கு வகிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவேதான் உள்ளூராட்சி மன்றங்களை அணுகி ஊருக்கு aardf எழுத்தாளர் மண்டபங்க்ளையும் திறந்த வெளி அரங்கு களையும் ஸ்தாபிக்க நாம் முன் முயற்சி எடுக்க வேண்டும்.
ஏனென்றால் பலம் வாய்ந்த, சகலவசதிகளும் வாய்க்கப் பெற்ற பிரசார அமைப்புகளைத் தன்னகத்தே கொண்ட, தார்மீக ரீதியில் கஞ்சாக் கலை இலக்கிய மயக்கத்தில் ஆழ்ந் துள்ள சகல தீய சக்திகளையும் நாம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை தாம் எந்தக் கட்டத்திலும் மறந்துவிடக் கூடாது. எதிரிபலத்தில் மாத்திரமல்ல அழிவுத் தனத்திலும் நம்மைவிடச் சக்தி மிக்கவன். தரங்கெட்ட தமிழ்ச் சினிமாப் படங்களையும் தச்சுநாசக்கருத்துகளை விலைபேசும் தென்னிந்தியச் சாக்கடைச் சஞ்சிகைகளையும் நாம் போராடிச் சீக்கிரம் வெற்றி கொண்டுவிட முடியாது என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டியது ஒன்று.

டொமினிக் ஜீவா 3.
-எனவேதான் நமக்குச் சாதனங்கள் தேவை.
தமிழகத்தின் நண்பர்களாகத் தம்மைத் தாமே விளம்பரப் படுத்திக்கொண்டு மேடையில் காட்சி தருபவர்களைப் பற்றியும் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காரணம். தமிழகத்திலிருந்து வரும் நல்லவைகளுக்கு நாம் என்றுமே சத்துராதிகள் அல்ல! அப்படியான மகத்தானவை களுக்கு இன்றும் தலைவணங்குகின்றோம் நாம். ஆனால் நமது கலை இலக்கிய ஆத்மாவை நபுஞ்சகப்படுத்தும்நம்மைக் கேவலப் படுத்தும்- நமது'நாட்டையே சாக்கடைப் படுத்தும் கலை இலக்கியங்களுக்குத்தான் நாம் சென்மப் பகைவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் குண்பகப்படுத்து கின்றோம்.
-இதைச் சோல்லும் பொழுது இவர்களுக்கேன் கோபம் வருகிறது?
சமீபத்தில் காவலர் விழா மிகப் பிரமாண்டமா ஈழத்தில் நடைபெற்றது. தென்னிந்தியாவில் இருந்து வெளிவந்து இலங்கையைச் சந்தைக்கடையாக சாக்கடை நற்றமெடுக்க வைக்கும் எத்தனையோ சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் அதன்பின்னரும் இங்கே அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. குமுதம் அதைப் பற்றி ஒரு வார்த்தை எழுதியதா? விகடன் மூச்! தினமணிக் கதிர்வாயே திறக்கவில்லை. ஆனால் கல்கிமாத்திரம் ஏதோ ஒப்புக்கு இங்குள்ள ஒருவரின் கட்டுரையைப் பிரசுரித்து பரிகாரம் தேடப் பார்க்கின்றது.
கோபிப்பவர்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம். இகற்கேன் கோபம் வரவில்லை உங்களுக்கு?
நாம் வாழும் தேசத்தின் மீது பற்றோ பாசமோ இல்லா மல் எங்கோ இருக்கும் நாட்டை தாய் நாடு எனச் செவிப்

Page 17
32 தலைப்பூக்கள் பவர்களுக்கு ரோஷம் வருகிறதாம் TTarih. Samos எதிர்த்துத் தான் போராடுகின்றோம்.
எனவேதான் நமக்குச் சாதனங்கள் தேவைப்படு கின்றன.
(ஆகஸ்ட் - 1969)
மருந்து எப்பொழுதும் கசப்பாகத்தான் இருக்கும்!
இமது பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா தென் னிந்தியாவிலிருந்து இங்கு விற்பனைக்கு வந்து குவியும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சம்பந்தமாக ஒரு வாரத்துக்குள் தனக்குப் பூரண அறிக்கை ஒன்றைத் தந்துதவும்படி முற்போக்கு எழுத்தாளரும், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமா அதிகாரிகள் சபை உறுப்பினருமான தோழர், எச்.எம்.பி. மொஹிடீன் அவர்களைக் கேட்டிருந்தார்.
இதற்கிணங்க தோழர் எச்.எம்.பியும் பூரண விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றைப் பிரதமரிடம் கையளித் துள்ளார். பல சிரமங்களுக்கு மத்தியில், ஒருவார அவகாசத் தில் மிகத் துரிதமாகச் செயல்பட்டு பூரண விவரங்களைத் திட்டி உதவிய தோழர் எச். எம், பி. அவர்களை நமது தாய்த் திருநாட்டை நேசிக்கும் சகல எழுத்தாளர்களினது சார்பிலும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.
மல்லிகையின் இடையறாத போராட்டமும் மற்றுமுள்ள ாழுத்தாளர்களினது நீண்டகாலக் கோரிக்கையும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு வசதிகள் பெறக்கூடிய நல்லதொரு சூழ்நிலை தோன்றி வருகின்றது என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். இந்தத் தேசத்து எழுத்தாளர்கள் அனை

டொமினிக் ஜீவா 33
வருமே தென்னிந்தியக் குப்பைகளின் இறக்குமதியால் விபரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது சஞ்சிகைகள் உட்பட, தேசிய தினசரிகள் கூட இந்தியாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட முடியாத நிலையில் இந்திய அரசாங்கம் தடை போட்டுள்ளது என்பதையும் நாம் நமது அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். நமது நாடு ஒரவஞ்சக மாக நடத்தப்படுகின்றது.
நம்மை மாத்திரமல்ல, மலேவிய மக்களையும் இந்தச் சாக்கடைச் சஞ்சிகைக் கூட்டம் கடந்த பலகாலமாகத் தமிழின் பேரால் சுரண்டி வருகின்றது என்பதை, அந்த மக்களினது கூக்குரல் மூலம் நாம் அறியக் கூடியதாக இருக் கின்றது. ۔
எனவேதான் அரசாங்கம் எடுக்க இருக்கும் இது சம்பந்த மான நடவடிக்கைகளுக்கு நாம் பரிபூரண ஆதரவு கொடுக்கச் சித்தமாக இருக்கிறோம்.
மாதம் ஒன்றுக்குப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் கிட்டத்தட்ட கால்கோடி ரூபாய்கள்-வருடத்திற்கு 3 கோடி-நமது நாட்டு அந்நியச் செலாவணி நாசமாக்கப் படுகின்றது. தமிழன் பேரால் இந்த அழுக்குத்தன மோசடி செய்யப்படுகின்றது. சினிமாவினாலும் புத்தகங்களினாலும் போகும் பணம் வேறு.
*அறிவுக்குத் தடையா?’ என அழகிய கோஷம் எழுப்பப் படுவதையும் நாம் உணராமலில்லை. அறிவு தென் னிந்தியாவுக்கு மாத்திரம் அடிப்படைச் சொத்தா என்பதை யும் கேட்க விரும்புகின்றோம். ஏன் நமது நாட்டில் இருந்தும் சிறிய அறிவு அங்கு போய்த்தான் பார்க்கட்டுமே என்பதை ஏன் இவர்கள் சொல்லப் பயப்படுகின்றனர்? 'தாய் நாடு" என்ற பழைய பாசமா அல்லது நமது நாடு கலை இலக்கியப் பாலைவனம் என்ற நினைப்பா?
த-8

Page 18
g.
34. தலைப்பூக்கள்
இத்தனைக்கும் நமது நாட்டில் வெளிவருவதாகச் சொல்லும் ஒரு மாத சஞ்சிகை மாத்திரம் 500 பிரதிகள் மாதா பாதம் அங்கு விற்பனைக்குச் செல்ல அனுமதிக்கப் படுவதாக, வும் ஆனால் பணம் வந்து சேருவதில்லை எனவும் சொல்லப் படுகிறது . 3.
சர்வதேச பணக் கடத்தல் மோசடி கலை இலக்கியத். தின் பெயராலும் சினிமாவின் பெயராலும் நடத்தப் படு கின்றதா என்பதையும் நாம் அறிய விரும்புகின்றோம்.
தமது இந்தக் கருத்துக்களுக்கு, பொருளாதாரப் பிரச் சினை மாத்திரம் காரணமல்ல. இதில் அரசியலும் கலத் துள்ளது. இலங்கையில் இலட்சக் கணக்காக விற்பனை யாகும் பிரபல சஞ்சிகைகள் சுதந்திரா-சிண்டிகேட் கூட்டத் தினரின் ஊதுகுழல்கள் என்பது பகிரங்க உண்மை 9) söálsrir காந்தி 14 வங்கிகளைத் தேச உடமையாக்கியதை எதிர்க்கும் இந்தப் பிற்போக்குக் கூட்டத்தின் பிரச்சார சாதனங்களாக விளங்கும் இந்தச் சஞ்சிகைகளின் கருத்துக்கள் நமது நாட் டின் அரசியல் முன்னேற்றத்திற்கே முட்டுக்கட்டை போடு கின்றன. நமது புதிய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கே கேடு செய்ய முனைகின்றன.
எனவே மக்களின் வெற்றியை தாம் பாதுகாக்க வேண்டு மாக இருந்தால், இந்தத் தென்னிந்தியக் குப்பைகளை உடனடியாக-உடனடியாக-உடனடியாகத் தடை செய்ய வேண்டும்,
முற்போக்கெண்ணம் கொண்ட தமிழ் மக்கள் நிச்சயம், இதை வரவேற்பார்கள்
(4வது ஆண்டு மலர்-1970),

திமிங்கலத்தைப் பிடிக்க மீன் வலையால் முடியாது!
நான்கு ஆண்டுகளுக்கு முன் "மல்லிகை"யில் சிறுபொறி யாக ஆரம்பிக்கப்பட்ட, தென்னிந்தியச் சாக்கடை இலக் கியங்களைத் தடை செய்யுங்கள்!" என்ற இயக்கம் இன்று நாடு முழுவதும் பேரெழுச்சியாக உருவாகியுள்ளது. மிக்க மகிழ்ச்சி எமக்கு, இதற்கு ஆலம் வித்திட்டவர்கள் என்ற முறையில் பெருமைப்படும் நாம், இதற்காகப் போராடி வலுவூட்டியவர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்வதில் கஞ்சத்தனம் காட்டவில்லை.
ஒரு பிரச்சினையின் மையக் கருத்தை அறிந்து அணுகும் சாமர்த்தியத்துடன் நாம் அதற்கு ஒரு கோஷம் கொடுத்தபடி யால்தான் இன்று அதையொட்டிய சாதக-பாதகமான மோதல்கள் நாடு பூராவும் ஏற்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் ஆரோக்கியமான இலக்கியச் சூழ்நிலைக்கு இப்படி யான கருத்துப் போராட்டங்கள் மிக மிகத் தேவை. கருத்து மோதல்கள் இலக்கிய விழிப்பிற்கு ஆக்கந் தரத் தக்கவை. எனவே பற்பல கோணங்களில் தத்தமது கருத்துக்களைச் சொன்னவர்கள் விரும்பியோ விரும்பாமலோ நமது கருத் தினது ஆளுகைக்கு உட்பட்டேதான் கருத்துக்களைக் கூறி யுள்ளனர். நமது கருத்தின் வலிமையைத்தான் இது காட்டுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற முடியாத சூழ்நிலையுடன் இதை ஒப்பிட்டு நாம் பார்க்க வேண்டும். ஒருசில எழுத் தாளர்களின் மனக் கருத்து, இன்று நாட்டின் மனச்சாட்சி யையே உலுக்கிக் குதறும் அளவிற்கு விசுவரூபம் எடுத் துள்ளது. இது முதற் கட்ட வெற்றி.

Page 19
36 தலைப்பூக்கள்
இப் போராட்ட முறை இங்கு பலருக்கு கசப்பாக இருக்க லாம். ஏன் கசக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்:
ஜார்ஜ் மன்னருக்கு. வேல்ஸ் இளவரசருக்கும், வாழ்த் துப்பாடியவர்கள், தமது ராஜ விசுவாசத்தை மாட்சிமை தங்கிய மகாராணியாரின் பிரதிநிதியான கவர்னர்களுக்குச் சமர்ப்பணம் செய்தவர்கள், நிலப் பிரபுத்துவச் சக்திகளான சாதி, மத அமைப்பைத் தூண்டி விட்டவர்கள், முதலாளித் துவத்திற்குச் சாதகமாக இனவெறியை மொழி வெறிவை உசுப்பி விட்டவர்கள்தான் இன்று தமிழ் மக்கள் முன்னால் இன்னொரு வேஷத்துடன் வருகிறார்கள் என்பதும் என் களுக்குத் தெரியும் .
சென்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு, உதறி எறியப்பட்ட சில அரசியல் கோமாளிகள் இப் பிரச்சினையில் லாபம் தட்டப் பார்ப்பதும், இலக்கியப் பாசாங்குக் காரர்கள், * முன்னால் பார்த்தால் செட்டியார் குதிரை மாதிரியும், பின்னால் பார்த்தால் திருடனுடைய குதிரை போலவும் காணப்படுவதாக" குட்டிக் கதைகள் சொல்லிக் குட்டை குழப்ப முனைவதும், பக்கப்பாட்டுப் பாடும் சில இரண்டுங் கெட்டான் பேர்வழிகள் இக்கோஷத்தின் பின்னால் ஏதோ துவேஷம் இருப்பதாகக் கதைகட்டி விடுவதும் நமக்குப் புதிதான ஒன்றல்ல. இவை அனைத்தையும் நாம் எதிர் பார்த்தோம், இன்னும் எதிர்பார்க்கின்றோம். அதனால் நமது போராட்டம் ஓயாது.
ஈழத்துத் தமிழ் வளர்ச்சிக்கு தமிழகத்துக் குப்பைகள் தான் வளமூட்டுகின்றன எனக் குப்பையைக் கிளறிக் கிளறியே ருசி கண்டவர்கள் இன்று கருத்துத் தெரிவிக்க முன் வந்துள்ளனர். எனெனில் அங்குள்ள சாக் கடைச் சரக்கு வியாபாரிகளுக்கும் இவர்களுக்கும் ஒட்டுண்ணி உறவு இருந்து வந்திருக்கின்றது. இதுவும் எமக்குத்தெரியும்.
இங்குள்ள சில தமிழ்ச் சினிமாப்பட திமிங்கலங்களுக் கும் இந்தப் பென்னாம் பெரிய தலைவர்களான கனவான்

டொமினிக் ஜீவா 37
களுக்கும் எந்தெந்த வகையில் உறவு முறைகள் இருந்து வந்துள்ளன என்பதை இந்த நாட்டில் தமிழ்ச் சிளிமாப்படம் தயாரித்த தேசாபிமானம்மிக்க நண்பர்கள் நெஞ்சு வெடிக்கச் சோல்லியழுத வரலாறுகள் நமக்கு ஏற்கனவே தெரியும். நரட்டிலும் இது பகிரங்க ரகசியம்.
தமது உள்ளூர்த் தமிழ்த் திரைப்படங்கள் திரையிட்ட போழுதெல்லாம் பிரபல இரு திலகங்களின் படங்களைப் பக்கத்துப் பக்கத்துத் திரைகளில் திரையிட்டு நமது ஆக்கங் களைக் கழுத்தைப் பிடித்துத் திருகிச் சாகடித்தபொழுது இக்கனவான்கள் தமது வாயைக் திறந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களா? m
அல்லது
நமது நல்லை நகர் நாவலருக்குச் சென்னையில் திட்ட மிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்ட பொழுது இந்தச் சென்னைத் தமிழ் வீரக் காவலர்கள் தமது மனைவிமாருடன் ஹாலிவுட் படங்கள் பார்த்துக்கொண்டு காலத்தைக் கழித் தார்களா என்றும் நாம் கேட்க விரும்புகின்றோம்.
நமது நாவலனுக்குச் செய்யப்பட்ட சிலை இருட்டடிப்புப் பற்றி வாயே திறக்காத இந்தத் தேசபக்தியற்ற பரதேசிக் கூட்டம் இன்று பெட்டை நாயைப்போல, வீட்டு வேலிக்குள் நின்று வாட்டுக் குரைப்புக் குரைக்க முயல்கின்றது.
தமிழுக்காகப் போராடுவோம் என எங்கேயோ இருக்கும் இறக்குமதித் தமிழுக்காக வக்காலத்து வாங்கும் இந்த ஆங்கில மோக அப்புக்காத்குத் துரைமார்கள் இதுவரை ஏதாவது தமிழ் இலக்கியச் சஞ்சிகை ஒன்றைத்தானும் வெளி யிட முனைந்ததுண்டா? அல்லது முனைந்து செயலாற்ற முற் பட்டதுண்டா? κ
பாரதி பாடலில் சில அடிகளை அரசியல் மேடைகளில் பாடி அரசியல் லாபம் எடுப்பது தமிழ்த் தொண்டல்ல.

Page 20
S8 தலைப்பூக்கள்
பச்சைச் சந்தர்ப்பவாதம். பாரதி பரம்பரையை இங்கு உருவரிக்க வேண்டும். புதுமைப் பித்தன் வழித்தோன்றல் களை நமது நாட்டில் நாம் தோற்றுவிக்க முன்முயற்சி ன்டுத்துப் பாடுபட வேண்டும். ° V
இந்தப் போராட்டத்தின் முதல் அம்சமே அழுக்குகள் தடை செய்யப்பட வேண்டும்" என்ற நமது கோஷம்,
இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஆங்கிலமொழியைத்தான் தமது தாய் மொழியாகக் கொண்டி ருந்தாலும் இவற்றின்து தனித்துவ கலை, இலக்கியங் களும் அபிலாசைகளும் வேறு வேறு என்பதை இந்த மர மண்டையர்கள் தாம் வணங்கும் அந்த ஆங்கில மொழியில் இருந்தே புரிந்து கொள்ளலாமே! பின்னர் என்னத்தைத் படித்துக் கிழிக்கிறார்கள்?
ஒரு காலத்தில் இதே பிரச்சினை அமெரிக்காவிலும் எழுந்ததுண்டு. இங்கிலாந்திலிருந்து வெளிவந்த புத்தகசஞ்சிகைகளின் ஆதிக்கம் அமெரிக்க மக்களை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த காலம் அக்காலம். இப்படி யான ஒரு குரல் எழும்பியதும் அமெரிக்க மக்களின் ஆங்கிலக் கலாச்சாரமே அழிந்து ஒழிந்து போய்விடும் என் ஆங்கிலேயர் கள் தர்மோபுதேசம் செய்தார்கள். சில அமெரிக்கக் கையாலாகாதவர்கள் இங்குபோல் அங்கும் தமது திரு வாயைத் திறந்து கருத்துக் கூறினார்கள். நாலு கிழமை களுக்குள் "மிகச் சிறந்த ஆங்கில நூல்கள்' சஞ்சிகைகள் பிரிட்டனில் இருந்து இங்கு வந்துவிடும். நமக்கேன் இந்த வீண் சிரமங்கள் எல்லாம்" என்றார்களாம். இன்று இங்கு தாய்நாடு கோஷம் போடுபவர்களைப் போலத்தான் அன்றும் அங்கு இருந்து கூப்பாடு போட்டனர்.
இன்று நோபல் பரிசு பெறும் பலர் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர்களைவிட, அமெரிக்கர் என்பது குறிப்பிடத் தீக்கது. அத்துடன் அவர்களில் பலர் அமெரிக்காவின்

டொமினிக் ஜீவா 39
ஆதிக்க வெறியையும் வியட்நாம் மிலேச்சத் தனத்தையும் கண்டிக்கும் முற்போக்கு இயக்கங்களில் பங்கு கொண்டு உழைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே நாம் முதன் முதலில் துணிந்து சொன்னபடி இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெறும் தமிழன் நிச்சயம் இலங்கையனாக்த்தான் இருப்பான் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றோம். سمه : . . .
மிகச் சிறந்த தமிழகத்து எழுத்தாளர்களும் விமர்சகர் களும் நண்பர்களும் தம்மைப் புரிந்து வைத்திருக்கின்றனர் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பரிதாபத்திற்கு இடமானது.
இருளால் ஏற்பட்ட அறியாமையை விட, இருளை வளர்க்கும் அறியாமைக்கு எதிராகப் போர் தொடுப்பது நமது உடனடிக் கடமை. ཚེ་༧” ༦.
சில ஆண்டுகளுக்கு முன்னர் எட்டயபுரம் பாரதி விழா வில் 'தினத் தந்தியைத் தடைசெய்" என்று தீர்மானம் போட்ட தமிழகத்து நண்பர்களின் போராட்டப் பாதையே நமது பாதை என்பதையும் இந்தக் கூட்டத்தில் தாம் தெளிவுபடுத்திக் கூற விரும்புகின்றோம்.
நமது கருத்துக்கள் யார்மீதும் துவேஷம்கற்பிக்க எழுந்த வையல்ல. தமிழகத்துத் தரமான எழுத்தாளர்களும் இந்த வர்த்தகப் பத்திரிகைகளின் கிடுக்கிப் பிடிக்குள் சிக்கிச் சீரழிந்து போகின்றனர். அல்லது இருட்டடிப்புச் செய்து மறைக்கப்பட்டு வருகின்றனர். இது நமது போராட்டம் மாத்திரமல்ல; தமிழகத்து முற்போக்குக் கலைஞர்களின் போராட்டமும் இதுவேதான்.
எனவே பரந்து பட்ட இப் போராட்டத்தில் படைப்பாளி களாகிய நாம் ஓரண்ரியில் நிற்கின்றோம்என்பதும் கவனிக்கத் தக்கது.

Page 21
40 தலைப்பூக்கன்
ஈழத்துச் சஞ்சிகைகளின் வளர்ச்சிக்காக அல்லது பொரு ளாதார அரசியல் காரணங்களுக்காக மாத்திரம் நாம் போராடவில்லை. நாமே நமது சொந்தக் கால்களில் நிற்க. வேண்டும் இரவல் கால்களில் நிற்கள் பழகுங்கள் எனச் சொல்பவர்கள் நமது தாய்த் திருநாட்டின் ஜென்மச் சத்து ராதிகள் என்பது நமது எண்ணம். இது வேறெந்த நாட் டிற்கும் விரோதமானதல்ல. நமது சிங்களச் சகோதரர்கள் இலக்கியம், சினிமா, நாடகம், ஓவியம் போன்ற கலைகளில் பிரமிக்கத்தக்கதாக முன்னேறி வந்துள்ளனர். சர்வதேசங் பரிசுகளையும் பெற்றுள்ளனர். இதற்கு மாறாக ஈழத்துத் தமிழ் மக்கள் சென்னையில் இருந்து வெளிவரும் செருப்புத் துடைக்கக்கூடத் தகுதியற்ற சஞ்சிகைகளுக்குப் பஜ கோவிந்தம் பாடுவதைத் தமது ஜென்ம சாபல்யமாகக் கருதித் துதி பாடுவதில் முனைகின்றனர். இந்த முனைப்பு நம்மை இந்த நாட்டில் நாதியற்றவர்களாக்கி விடும் என அஞ்சுகின்றோம். இப்பொழுது சில பெரிய மனிதர்கள் நமது நாடு கலை இலக்கியப் பாலைவனம் எனக் கூறத் தொடங்கி யுள்ளனர். இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், சிங்களச் சகோதரர்களின் பிரமிக்கத்தக்க ஆக்க வளர்ச்சிக்கு முன் னால் தாக்குப்பிடித்து நாமும் நமது பங்கை கலை இலக்கியத் துறைக்கு ஆற்ற முடியாது போனால் நாம் இங்கு வாழ்ந்து தான் என்ன பிரயோசனம்? நமது தனித்துவத்தைப்பேணி நாமும் இந்த நாட்டில் சுயமரியாதையுள்ள மொழிபேசும் மக்கள் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். இது நமது சமுதாயக் கடமையுங்கூட, எனவேதான் நமது சொந்தக் கலை இலக்கியங்களை இந்த மண்ணில் நாமே உருவாக்கு வோம் என முனைந்து செயலாற்றுகின்றோம். இது தவ றென்றால் இந்த நாட்டில் நாம் பிறந்ததே தவறென்று ஆகிவிடும்? இதற்கு இடைஞ்சலாக உள்ள சகல இறக்குமதி சாக்கடைகளையும் தடைசெய்யுங்கள் என நாம் நெஞ்சுநிமிர்த்திக் கோருகிறோம், விரும்பியோ விரும்பாமலோ தமிழகத்துத் தாக்கம் நம்மைத் தினசரி பங்கப்படுத்து

டோமினிக் ஜீவா 41
கின்றது. அதற்காகவே "தமிழகத்து" என்ற அடைமொழி யைச் சேர்க்கின்றோமே தவிர, வேறெந்த நாட்டின் மீதும் துவேஷத்தினாலல்ல என்பதையும் மீண்டும் கூறிக்கொள்ளு கின்றோம்.
நமக்குச் சில புத்திமதிகளைச் சோல்ல ஆகாய மார்க்க மாகப் பறந்தோடி வந்தனர் இரு பிரபல சஞ்சிகைகளின் பிரதிநிதிகள் இவர்கள் கோழும்பில் பலரைத் தரிசித்து உள்ளனராம். நாம் திட்டவட்டமாகக் கூறுகின்றோம். இது தமது உள்நாட்டுப் பிரச்சினை. வர்த்தகச் சூதாடி களுக்கு இங்கென்ன வேலை? "உடனடியாக இத் தேச விரோதச் சக்திகளின் "பாஸ்போட்டைப் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டே விரட்டியிருக்கவேண்டும் இவர்களை! நாம் விழிப்புடன் இருந்தால்தான் இது சாத்தியமாகும்.
நமக்கு உபதேசம் புரிய வந்த இந்த ஞானாசிரியர்கள் தங்களது அரசாங்கத்தைக் கேட்டிருக்க வேண்டும். இலங் கையிலிருந்து ஒரேயொரு பத்திரிகையைக்கூட இந்தியாவில் விற்பனை செய்ய இந்திய அரசாங்கம் தடைசெய்துள்ளதே, இது தெரியாதா, இவர்களுக்கு? அந்தத் தடையைத் தகர்க்க இவர்கள் ஏன் பாடுபடக் கூடாது?
உங்களது பண வருவாயில் அடி விழுந்தவுடன்தானா, ஈழத்திற்குக் கலைப்பாலம் அமைக்க ஓடோடி வருகிறீர்கள்!
விழித்துவிட்ட ஈழத்து மக்களினது தலையிலும் மலேஸிய மக்களினது தலையிலும் இனிமேலும் மிளகாய் அரைக்க முடியாது என்பதைத் தயவுசெய்து தமிழகத்து வர்த்தக இலக்கியக் கூட்டம் புரிந்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இல்லாது போனால் நஷ்டமடைவது நாமல்ல என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
சூரன் திருவிழாவில் - சூர சம்ஹார தினத்தில் - சுப்பிர மணிய சுவாமியின் வேலாயுதம் முன்னே போகப்போக சூரன் பின்னடிக்கிற மாதிரி, நமது ஜனநாயகக் கோஷம்

Page 22
4鲁 தலைப்பூக்கள்
மூன்னேற முன்னேற இலங்கையிலிருந்து மாத்திரமல்ல, மலேஸியாவிலிருந்தும், மற்றும் இந்தியாவின் பல பகுதி களில் இருந்தும், முடிவாக தமிழகத்து மக்களிடமிருந்தும் தனிமைப்பட்டு ஒழிக்கப்பட்டு விடுவார்கள், இந்தச்சாக்கடைக் கும்பல்கள் என்பது திண்ணம்.
நமது பொது எதிரியின் பலத்தை நாம் குறைத்து மதிப் பிடத் தயாராகயில்லை. பல கோணங்களில் தனது விஷக் கரங்களைப் பரப்பி வரும் இந்தச் சர்வதேச வர்த்தகக் கூட் டத்தின் பின்னணியும், அதனது அரசியல் கருத்துக்களும், வர்க்க உறவுகளும் நமக்குத் தெரியாததல்ல.
-எனவே நமது சாதனங்களைப் பலப்படுந்துவோம். நமது விழிப்பை உஷார் நிலைப்படுத்துவோம்; தமது கோஷத்தின் ஜனநாயகத் தன்மையை மக்கள் பகுதிக்கு எடுத்துச் சொல்வோம்" r
(-செப்டம்பர் 1970)
ஏழாண்டும் எமது கணக்கெடுப்பும்
மல்லிகை இந்த இதழுடன் ஏழாவது ஆண்டில் அடி யெடுத்து வைக்கின்றது.
இந்த ஆண்டு மலரைக் கூடிய பக்கங்களுடன், இன்னும் கனமாகவும், கவர்ச்சியாகவும் வெளியிட முடிவு செய்து ஆரம்ப வேலைகனைத் தொடர்ந்து செய்தபோதுதான் முதல் நெருக்கடி ஒன்று தோன்றியது.
சஞ்சிகைகள் அச்சிடும் பத்திரிகைத் தாள் கிடைக்க முடியாமல் திண்டாடிப் போய்விட்டோம். எனவேதான் மலர்
பக்கங்களைக் குறைத்து வெளியிட வேண்டி வந்தது.

டொமினிக் ஜீவா 43
சிலர் வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதற்குப் பதிலாக தற்போது நடக்கும் வழியே நிரந்தரமானது; புகழ் கிடைப்பதற்குச் சிலாக்கியமானது என்ற மனமயக்கத்தி தம்மை அறியாமலே இறுமாந்து பேர்வதுண்டு. . "...ية ن
நம்மைப் பொறுத்தவரை இதுவரை நாம் நடந்து வந்த பாதையை நாம் என்றுமே மறந்துவிடவில்லை!--மறக்கப் போவதுமில்லை! அதே சமயம் எதிர்காலப் பாதை எது என்பதும் அதன் தடத்தில் எப்படி எப்படி நடை போடலாம் என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரியும்,
தனக்கென்று தனித்துவமான சொந்தப் பாதையைச் செப்பனிட்டு முன்னேற முனையும் மல்லிகையைப் போன்ற ஒரு சிறிய தேசியச் சஞ்சிகைக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.
ஆரம்பத்தில் சரியான மனத்திடமும் உழைப்பும் உற் சாகமும் நண்பர்களின் ஊக்கமும் ஒத்துழைப்புந்தான் மல்லிகையின் மூலதனமாக விளங்கியது. இன்றோ ஆயிரக் கணக்கான ரூபாய்களைக் கொண்ட சாதனங்களை மல்லிகை தனதுடமையாகக் கொண்டு வெளிவருகின்றது.
இவ்வளவு வெற்றிக்குமுரியவர்கள் நல்லெண்ணம் படைத்த இலக்கிய ரஸிகர்களும் நண்பர்களும்தான் என் பதை எண்ணிப் பார்க்கும்போது மனம் பூரிப்படையும் அதே வேளையில் நம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை எண்ணி, அதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக நம்மைத் தயார்ப்படுத்தி வருகிறோம்.
எந்தக் கஷ்டங்களினால் சிரமப்பட்டாலும் உழைப்புத் தான் பரிசுத்தமானது. புனிதம் என்பது உழைப்பைத் தவிர வேறல்ல.
இதுவேதால் மல்லிகையின் தாரக மந்திரம்.

Page 23
4. தலைப்பூக்கள்
சில இலக்கிய சூர்ப்பனகைகள் மல்லிகை சம்பந்தப்பட்ட வசை சீதா வேஷம் போட்டு நம்மை ஏமாற்றி விடலாம். என்று முனைந்து முயற்சிக்கின்றனர்.
பாவம்!--முடிவில் அந்த மெக்கப் சிதைகள் ஏமாறப்
போவதை நினைத்து இப்போதே நமது ஆழ்ந்த அனுதா பத்தைக் கூறிக் கொள்ளுகின்றோம்.
ஏனெனில் மல்லிகையின் பலம் நமது பலமல்ல. இந்த மண்ணை இந்தத் தேசத்தை-இந்த நிலத்தில் வாழும் கலை ஞர்களை, கலைகளை நேசிக்கும் மக்கள் பெருங் கூட்டத்தின் ஆத்ம பலம் மிக்க ஒரு போராட்டச் சாதனமே மல்லிகை என் பதை அதனது பலத்தின் மூலவேரை-அறிந்து வைத்திருப் பவர்களுக்கு கூறிக் கொள்வதின் தனிப் பெருமை கொள்ளு கின்றோம்.
எங்கோ ஒரு மூலையில் இருந்து கெர்ண்டு, எங்கேயோ இருக்கும் யாரோ ஒருவனுக்காக இயக்கம் நடத்தவில்லை. நாங்கள்.
இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு. தமிழை நேசித் வனை நேசித்து; உண்மையான மக்கள் இலக்கியம் எது என இனங் கண்டவனை இனங் கண்டு அரவணைத்துப் போகும் ஆயிரக்கணக்கான ஈழத்து ரஸிகர்களுக்காகக் குரல் கொடுத்து வரும் நாம் நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார்? என்பதை மிகத் துல்லியமாகத் தெரிந்து வைத்துள் (6m Frh. M
குறைகளை விமர்சிப்பது என்பது வேறு; நொட்டை சோல்வது என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.
நொட்டை சொல்லது ஒருவகை மனநோய் , அது ஆக்க. பூர்வமானதல்ல. அது நச்சுத்தன்மை வாய்ந்தது. கபடத் தனம் மிக்கது.

டொமினிக் ஜீவா 45
எனவே இந்த ஏழாண்டுக் கணக்கெடுப்பில் நாம் நமது
குறை நிறைகளை சற்று நின்று நிதானித்து நிறுத்திப் பார்க் கவும் தவறவில்லை,
குறைகள் திச்சயமாகத் திருத்தப்படும். குரைத்தல் களுக்கு சந்திரன் என்ன பதிலைக் கூறுமோ அதுதேதான் நமது பதிலுமாகும்!
7-வது ஆண்டு மலர் 1971
கமது சஞ்சிகைகள் ஏன் தோல்வியடைகின்றன?
சில சோகமான இலக்கியத் தற்கொலைகள் சமீப கால மாக நமது நாட்டில் நடந்தேறி வருவதை தேசிய ஆரோக் கியத்தை விரும்பும் நல்லெண்ணம் படைத்த இலக்கிய ரசிகர் கள் உணர்ந்து கவலையடைந்துள்ளனர்.
நமது நாட்டில் இலக்கியத் தரமாக வெளிவந்து கொண் டிருந்த அஞ்சலி, தமிழமுது, கற்பகம். கலசம், மலர் கடைசி யாக வெள்ளி போன்ற சஞ்சிகைகள் இன்று நம் மத்தியில் வெளிவர முடியாத அவல நிலையில் மூச்சு முட்டி நின்று விட்டதை எண்ணும்பொழுது இதற்கான அடிப்படைக் கFரணம் என்ன என்பதை நாம் ஆழ்ந்து யோசிக்கத் தவறுவோமானால் வருங்காலத்தில் இந்த நாடே மெல்ல மெல்ல கலை இலக்கியப் பாலைவனமாகி விடும் என்ற அச்சத்திற்கு நாமும் உடந்தையாகி விடுவோம் என்பதை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.
ஏன் நமது சஞ்சிகைகள் தோல்வியடைகின்றன?
எத்தனை பேர்கள் இதைப் பற்றிச் சற்று நேரம் சிந்தித்துள்ளார்கள்? யார் இதைப் பற்றிக் கவலைப் படுகி றார்கள்?

Page 24
46 தலைப்பூக்கள்
ஆரோக்கியமானதும் ஆக்கபூர்வமானதுமான கலை, இலக்கிய வளர்ச்சி இன்று, வளர்ந்து வருகின்றது என ஓரளவு எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள இந்தச் சூழ் நிலையில் இப்படியாகச் சஞ்சிகைகள் நின்று விடுகின்றன என்றால் எங்கோ ஓரிடத்தில் முரண்பாடு இருக்கின்றது என்பதுதானே அர்த்தம்.
பச்சையாக ஒரு உண்மையை நாம், ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த நாட்டு வாசக வட்டாரத்திடம் இன்னமும் தேசப் பற்று மருந்துக்குக்கூட இல்லை என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. f
எடுத்தவுடன் குமுதம்" "கல்கி ‘விகடன்" எனக் கதைக் கிறார்களே தவிர, அவையல்ல இவை என்ற சாதாரண அறிவு உணர்வுகளைக் கூடக் காணமுடியவில்லை. இந்த நாட்டைப் பற்றிய பாசமில்லை; பற்றில்லை.
அந்த மாபெரும் ஸ்தாபனங்களுடன் நமது சஞ்சிகை. களின் அமைப்பையோ, அழகையோ ஒப்பிடுவது எத்தனை மிகப் பெரிய தவறு என்ற எண்ணமில்லாமல் பாமரத் தனத் துடன் வினா எழுப்புகின்றனர் என்பதை எண்ணும்போது, இந்த வயிற்றெரிச்சலை யாரிடம் போய் முறையிடுவது?
அவற்றைப் போல அமைப்பு. அழகு நமது சஞ்சிகை களில் இல்லாமல் இருப்பது உண்மை. ஆனால் இந்தத் தேசத்தின் ஆத்மக் குரல் நமது சஞ்சிகைகளில் உள்ளீடாக உண்டு என்ற மகத்தான உண்மையை இவர்கள் புரிந்து கொள்ளாமல் கதைக்கிறார்களே, இதற்கு என்ன செய்வது?
ஆயிரம்தான் சொல்லட்டுமே! இவைகள் நமது நாட்டின் நமது சிந்தனையின், நமது உழைப்பின் அறுவடைகள் இவைகளின் ருசியே தனி
வீட்டுத் தோட்டத்தில் காய்த்த கத்தரிக்காயை எடுத்துக் கறிசமைத்து ருசிக்க ருசிக்க உண்டு-அதையே தனிச்சுவை யாக மகிழும் சாதாரண கிராமத்தவனின் மனப் பாங்கு கூட

டொமினிக் ஜீவா 47
தங்களை உண்மை ரசிகர்கள் என மதிப்பிட்டு இந்நாட்டுச் சஞ்சிகைகளை விமர்சிக்கும் இவர்களிடம் காணமுடியவில்லை. உற்சாகத்தையும் , , உழைப்பையும் மூலதனமாகக் கொண்டு பல சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டி ருந்த இச் சஞ்சிகைகளுக்கு ' சஞ்சிகையாளர் ஒன்றியம்* தோன்றியதும் சற்று நம்பிக்கை ஒளி தோன்றியது.
ஆனால் அரசாங்கத்தின் அனுசரணையான பார்
வையோ, அனுதாபமோ இதுவரை சஞ்சிகையாளரிடம் திரும்பவேயில்லை,
ஆர்வமும் உற்சாகமும் எத்தனை நாட்களுக்குக் கட்டுப் படியாகும்?
சோர்வு தட்ட வேதனை மேலிட, நம்பிக்கை சிதைய, ஊக்கமெல்லாம் பறிபோக கடைசியில் சஞ்சிகைகளை நிறுத்த வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விடுகின்றது.
வசதி படைத்தவர்களைத் தவிர, இலக்கிய உணர்வு உள்ளவர்கள்தான் இந்நாட்டில் சஞ்சிகைகளை நடத்தி வந்துள்ளனர். இது ஒரு குறை என்பதைச் சொல்லும் அதே வேளையில் இதுவே ஒரு பலமாகவும் ஈழத்தில் விளங்கி வந்துள்ளது. இலக்கியப் பிரச்சினைகள் எழுதப்பட்டனவே தவிர, மாலினி மாங்காய்தின்றாள்' என்ற செய்திகள் வியா பாரத்திற்காக இடம் பெறவில்லை.
இந்த இலக்கிய முயற்சித் தோல்விகளைக் கண்டு நமக் கென்ன ஆச்சு எனப் பொதுவாக நாம் அலட்சியமாக விட்டு வைப்போமானால் வருங்காலத்தில் யாருமே இத்துறையில் துணிந்து காலடி வைக்கப் பயப்படுவார்கள்.
எத்தனை பெரிய தேசிய நட்டம் இது!
ஏப்ரல் 1973

Page 25
சொல்லில் அடங்காத சோகம்!
மல்லிகையின் இலக்கியப் பார்வையை-பாதையைஅது ஆரம்பித்த காலம் தொடக்கம் மிக நிதானமாக அவ தானித்து வந்தவரும், சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது மல்லிகையின் இலக்கியப் பணி பற்றி கலை, இலக்கிய மேடைகளில் கருத்துச் சொல்லி, ஈழத்து இலக்கிய வளர்ச்சி யின் சரியான திசை வழியைப் பற்றி தமிழக இளந் தலை முறையினருக்கு எடுத்துச் சொன்னவகுமான அருமைத் தோழர் கே. பாலதண்டாயுதம் மறைந்துவிட்டார் என்ற துக்கச் செய்தியை நினைக்கும் பொழுதெல்லாம் நெஞ்சே உருகி, நிதானத் தப்பி விடுகின்றது.
அரசியல்வாதிகளில் மிகப் பெரிய தியாக சிலர். அரசியல் வாதி என்றளவிற்கு எவ்வளவு காத்திரம் அவரிடம் உண்டோ, அதற்குச் சற்றும் குறையாமல் மிக ஆழமான இலக்கிய விமர்சகர் என்பதையும் இலக்கிய உலகு நன்கு அறியும்.
கடைசியாக அவரைச் சந்தித்து உரையாடிய அந்த இனிமையான உணர்வுகள் இன்னும் மனதைவிட்டு அகல வில்லை. அத்தனை பசுமையானவை அவை,
தமிழகத்திற்கும்- ஈழத்திற்கும் உண்மையான கலைஇலக்கியப் பாலம் எப்படி அமைக்கலாம்-அதுவும் ஒரு வழிப் பாதையாக அல்லாமல், போகவும் வரவும் என்கிற முறை யில்-இதை எப்படியெல்லாம் சாதிக்கலாம் என ஏழுமணி நேரங்களாக இருந்து திட்டமிட்டுப் பேசி ஒர் ஆக்கபூர்வ பூான முடிவை எடுத்துச் செயல்பட எண்ணிய சமயத்தில் அவரது பிரிவு மிகப் பெரிய இழப்பு.

டொமினிக் ஜீவா 4.
இம்மாதம் 23-24ந் திகதிகளில் கோவை மாநகரத்தில் நடைபெற இருக்கும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாலாவது மாநில மாநாட்டில் இங்குள்ள முற்போக்கு எழுத் தாளர்களும் அவசியம் பங்கு கொள்ள வேண்டும் என அதன் தலைவர் என்கிற முறையில் நமது நாட்டிற்கு அழைப்பு விடுத்த அந்த அமைப்பின் தலைவர் மாநாட்டிற்குத் தலைைைம வகிக்காமல்-திசை கெட்டுச் சிதறி நிற்கும் தமிழக இலக்கியப் பரம்பரைக்குச் சரியான வழிமுறைகளைச் சொல்லித் திட்டம் தராயல்-போயே போய்ச் சேர்ந்து விட்டார்.
எத்தனை பெரிய துரதிர்ஷ்டம் இது
மரணமடைவதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான் இலங்கை வந்திருந்தார். இங்கு அவரது பழைய நண்பர் களையும், பல அரசியல் தலைவர்களையும், குறிப்பாக இலக்கியத் தோழர்களையும் கண்டு, கதைத்து, உரையாடி நமக்கெல்லாம் புத்தூக்கமும் புதியதொரு சிந்தனையையும் தந்துவிட்டுச் சென்றவர். நமது நெஞ்சக் கருத்துக்களை யெல்லாம் தமிழகத்து முற்போக்கு இயக்கங்களுக்கு விளங்கப் படுத்தாமல் சென்றுவிட்டார்.
எதிர்பாராத மன அதிர்ச்சி எமக்கு.
17 ஆண்டுகள் சிறையில் தவம் செய்தவர். தொழிலாள வர்க்கத்தின் நன்மைக்காகத் தனது சுக வாழ்க்கையையே தியாக வேள்வியில் ஆகுதி செய்தவர். அகில இந்தியத் தலைவர் மட்டத்தில் வைத்து எண்ணப்படத் தக்கவர். சிறந்த சிந்தனையாளர், மொழி பெயர்ப்பு வல்லுநர், சிதறிக் கிடந்த தமிழகத்து முற்போக்கு எழுத்தாளர்களை ஒருங்கிணைத்த தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தின் தலைவர். பாராளுமன்ற உறுப்பினர். ஈழத்து கலை ஞர்களுடன் நீண்ட காலமாகத் தொடர்பு கொண்டு, எமது
あー4

Page 26
50 தலைப்பூக்கள்
ஆத்மக் குரலை அதன் ராக பாதத்துடன் சரியாகப் புரிந்து: கொண்டவரான இந்தத் திருமகனின் இழப்பு, தமிழகத்திற் கல்ல. இந்தியாவிற்கல்ல, நமக்கும் மிகப் பெரிய இழப்பே என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்துள்ளோம்.
இந்தத் துக்கத்தை யாரிடம் போய்ச் சொல்வது? நாம் சொல்ல நினைப்பவர்களெல்லாம் சோகத்தில் துடிக்கிறார். களே.
இந்தப் பாரிய சோகத்தினால் தாக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டு முற்போக்கு இலக்கிய நண்பர்களின் ஆழ்ந்த துயரத்தை நாம் புரிந்து கொள்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? எமது வலுவான கரங்களை உங்கள் கைகளுடன் இணைத்துப் பிடிக்கிறோம்.
அந்தச் செயல் வீரன் நமக்குக் கற்றுத் தந்துள்ள பாடத்தை- உழைக்கும் வர்க்கத்துக்காக அயராது செயல் படுவோம்!" என்ற தாரக மந்திரத்தை ஏந்திப் பிடித்தபடி, செயலாற்ற முனைகின்றோம். ፵
சரித்திரத்தில் தனது புனித நாமத்தைச் செதுக்கிவிட்டு மறைந்து போன நமது தோழனுக்குச் செய்யும் கைங்கரியம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
9வது ஆண்டு மலர்-1973
தேசிய கெளரவம் பாதுகாக்கப்பட வேண்டும்!
நாலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நமது நாட்டில் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகக் கேள்வி தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரது நெஞ்சிலும் எழும்பிக் கொண்டேயிருக்கிறது.

டோமினிக் ஜீவா 51.
இடையிடையே நமக்கு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பார்த்தால், திட்டமிட்டபடி இம் மாநாடு நடை பெறாமல் போய் விடுமோ என நாம் அஞ்சவேண்டி புள்ளது.
அரசியல் நிலையை சிலர் காரணம் சொல்கின்றனர். வேறு சிலர் நமது நாட்டு இன்றைய சூழ்நிலையைச் சுட்டிக் காட்டி பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள முனை கின்றனர். உறுதியும் கடமையுணர்வும் மிக்க இன்னும் சிலரோ எப்படியான முட்டுக் கட்டைகள் நமக்கு ஏற்பட்டச லும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியே தீரவேண்டும்! என உறுதியான நிலையெடுத்துக் காரியம் செய்கின் றனர்.
இந்த மூன்றாவது பகுதினரின் ஆர்வத்தை-மனோதைவி யத்தை-ஆக்கபூர்வமான தமிழ் அபிமானத்தை நாம் மனப் பூர்வமாக வரவேற்பதுடன், எந்தச் சமயத்திலும் இவர் களினது ஆலோசனைக்கும் செயல்திட்டத்திற்கும் நடிை முறைச் சாத்தியப்பாடான சகல ஒத்துழைப்பையும் நல்கு வோம், மக்கள் பெருங் கூட்டத்தை இவர்களுடன் செயலூக் கத்துடன் பணி புரிய வைக்க உதவுவோம் என இந்தடி சந்தர்ப்பத்தில் சத்திய உணர்வுடன் கூறிவைக்கின்றோம்.
பிரச்சினைகளைப் பூதாகாரப்படுத்தி செயலிழக்கச் செய்ய முனைபவர்கள், அலை ஓய்ந்ததின் பின்னர்த கடற் குளிப்பு நடத்தலாம் என நம்புகின்ற வரிசையைச் சேர்ந்தவர்களாவார்கள். ペ
இப்படியானவர்கள் இங்கு மாத்திரமல்ல, எங்குமே உள்ளார்கள் எப்பொழுதும் உள்ளார்கள். சரித்திரத்தின் சக்கரச் சுழற்சியை இவர்களால் தடுத்து வைத்துவி, முடியாது.
சமீபத்தில் மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது நாட்டில் நாலாவது மாநாட்டை தடத்தலாம் எனப் பகி

Page 27
52 தலைப்பூக்கள்
சுரங்க அறிக்கை விடுத்ததையும் இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் *காட்ட விரும்புகின்றோம்.
இதன் மறைமுகக் கருத்து என்ன?
வெறும் வாய்ச் சவடால்காரர்களும் விளம்பரத்தை விரும்புபவர்களும் உண்மை மொழி அபிமானிகளற்றவர்களு மான உங்களால் உங்களது நாட்டில் ஒரு தமிழ் மாநாடு நடத்த முடியாது. எனவே முதல் மாநாட்டை நடத்திய நாமே நாலாவது மாநாட்டையும் நடத்துகின்றோம். விடுங் கள் என்பதுதானே அர்த்தம்.
ஓர் இனத்திற்கோ மொழிக்கோ மாத்திரமல்ல; நமது தேசத்திற்கே விடப்பட்ட சவால் என நாம் இதைக் கருது கின்றோம்.
காலாதி காலமாகத் தமிழை எத்தனையோ சிரமங் களுக்கு மத்தியில் வளர்த்து வரும் நாடு நமது நாடு. நாங்கள் நாளை இல்லாமல் போகலாம். ஆனால் நமது பின் சந்ததி யினர் தமிழ் மொழியை இந்த மண்ணில் வாழ வைக்கத்தான் போகின்றனர். வளர்க்கத்தான் போகின்றனர்.
இம்மாநாட்டைச் சீர்குலைக்க சில சிறுமதி படைத்த கட்டம் எத்தனையோ சீர்கெட்ட வேலைகளையும் சதிகளை யும் அடுத்துக் கெடுக்கும் முட்டுக்கட்டைகளையும் போட்டு வருவதை நாம் உணருகின்றோம். சந்தர்ப்பம் வரும்பொழுது இந்தச் சின்னப் புத்தி படைத்தவர்களின் அழுக்குத் தனங் களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று இவர்களது முக மூடியைக் கிழித்தெறியத் தயங்கவும் மாட்டோம்!
அதே சமயம் ஆராய்ச்சித் திறனும் உண்மை அபிமான மும் ஈடாடாத நெஞ்சு உறுதியும் செயல் ஆற்றலும் மிக்க ஆரோக்கியமான சக்திகள் இந்த மாநாட்டுக் குழுவின ரிடையே இல்லாமல் இல்லை. இவர்களின் உழைப்புக்கும் உற்சாகத்திற்கும் நேர்மைக்கும் தமிழை நேசிக்கும் மக்கள்

டொமினிக் ஜீவா 53
பெருங்கூட்டம் மதிப்பளிக்கின்றது. இவர்களால் பெருமை யடைகின்றது.
குறுகிய எந்த உணர்வுகளுக்காகவும் அரசியல் நலன் களுக்காகவும் இந்த மாநாடு பலியாக்கப்படக் கூடாது.
அரசியல் பிரச்சினைகள் இன்று தோன்றலாம். நாளை அவை வேறு உருவம் எடுக்கலாம். மறுநாள் வேறு பிரச்" சினைகள் புதிதாக உருவாகலாம். ஆனால் இப்படியான சர்வதேச மாநாடுகள் சரித்திரத்தில் சில சமயங்களில் மாத் திரமே நடைபெறும்
இதைக் கொச்சைப்படுத்தி, அழியாத அபகீர்த்தியை நாம் தேடிக்கொள்ளக் கூடாது. மொழியை நேசிக்கிறோம் என்ற வெறியின் பேரால் மொழிக்கு ஏற்படும் இந்தச் சர்வ தேச கெளரவத்தை நாம் சிதைத்துவிடக் கூடாது. இப் பிரச்சினையில் நாம் யாராக இருந்தாலும் மிக மிக நிதான மாகச் சிந்திக்க வேண்டும்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இந்தக் கருத்துக் களைத் தான் மக்கள் முன் வைத்துள்ளது.
என்னதான் கருத்து வித்தியாசங்கள் அபிப்பிரா: முரண்பாடுகள் நம்மை அலைக்கழித்தாலும் நமது தேசிய கெளரவத்தைப் பேணிக் காப்பதில் நாம் சகலரும் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுக்க வேண்டும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.
செப்டம்பர்.1978

Page 28
அழகு சுப்பிரமணியம்
சர்வதேசப் புகழ் வாய்ந்த நமது எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் மறைந்துவிட்டார் என்ற துக்கச் செய்தியின் தாக்கத்தை நன்குனரும் இலக்கிய நெஞ்சங்கள், இந்த இழப்பு எத்தனை பெரிய மகத்தான சோகத்தின் பின்ன னியை நம்முன் விட்டுச் சென்றுள்ளது என்பதையும் சேர்த்து உணரக் கூடும்.
இங்கிலாந்தில் வாழ்ந்து, முல்க்ராஜ் ஆனந்த், மற்றும் அன்று அங்கு வசித்து வந்த ஆசிய ஆபிரிக்க முற்போக்கு எழுத்தாளர்களுடன் சேர்ந்து முற்போக்குக் குழுவாக இயங்கி, இலக்கியச் சஞ்சிகை ஒன்றைச் சிறிது காலம் அங்கு நடத்தி, பல ஐரோப்பிய எழுத்தாளர்களின் நட்புறவி னாலும் தொடர்பினாலும் தன்னை வளர்த்துக் கொண்ட துடன் தமிழ்மொழியின் ஆழ-அகலங்களைப்பற்றி அவர் களுக்குப் புரிய வைக்க முயன்றவர் நமது அழகு அவர்கள்.
சம காலத்தில் நம் கண் முன்னால் வாழ்ந்து, எழுதி மறைந்து போன அவரைப்பற்றி நாம் சரியாகக் கணிப்பீடு செய்ய மறந்திருக்கலாம். ஆனால் அதற்குரிய ஒரு காலம் நிச்சயம் வரத்தான் போகின்றது. அன்று அந்த மாபெரும் கலைஞன் நாம் அலட்சியமாக நடத்தினோமே எனப் பலர் பரிதவிக்கத்தான் போகின்றனர்.
ஒரு சர்வதேசப் புகழ் வாய்ந்த கலைஞனின் முடிவு ஏன் இத்தனை சோகம் ததும்பியதாக அமைய வேண்டும்?
இந்த மண், மேதைகளைத் தாங்குவதற்குரியதாக இன்னமும் பண்படுத்தப்படவில்லை எனச் சொல்லலாமா?

V།
டொமினிக் ஜீவா 55
அல்லது மேதைகளே தமது தகைமைகளைப் புரிந்து கொள்ளாமல் மண் புழுதியில் தமது காற் தடங்களைப் பதித்துவிட்டுச் சென்று விடுகிறார்களா?
இவுை அத்தனையும் சரியாகவும் இருக்கலாம்; தவறாகி 6a,b தோன்றலாம்.
ஆனால் நமக்குத் தோன்றுவது இதுதான். மக்கள் இவர்களைப் புரிந்துகொள்ள முடியாத உயரத்தில் இவர்கள் வாழ்ந்தார்கள். நீண்ட இடைவெளி இருபாலரையும் பிரித்தது. அத்துடன் அந்நிய மொழி ஆக்கம் என்பதும் குறிப்பிடப்பட வேண்டும்.
இதனால் இந்த மேதையை மக்கள் வாழுங் காலத் திலேயே புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்.
விரக்தி வெறுமை, தம்மைப் புரிந்து கொள்ளுகின்றார் கள் இல்லையே என்ற மனத் தவிப்பு அத்தனையும் சேர்ந்து அக்கலைஞனை நிலை குலைய வைத்துவிட்டது.
ஐரோப்பாவில் விருந்துகளில் பழகிவந்த பழக்கம், இங்கு நிரந்தரப் பழக்கமாகி, பின்னர் அதுவே சகலமுமாகி விட்டது.
ஒரு கலைஞனின் அழிவிற்கு இந்த நாடும் பங்கேற்க வேண்டும். இதைத் தட்டிக் கழித்துவிட முடியாது.
கடைசிக் காலத்தில் நோயின் தாக்கத்திற்கு உட்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தபொழுதும் இலக்கியம்தான் அவரது பேச்சு மூச்சாக இருந்தது.
"எனக்குக் குழந்தைகள் இல்லை. "பெரிய பிள்ளை" என்ற எனது முதலாவது சிறுகதைத் தொகுதிதான் எனது மூத்த பிள்ளை. இரண்டாவது குழந்தை ஒன்றும் சீக்கிரம் கிடைக்க இருக்கிறது" எனத் தமது இரண்டாவது சிறுகதைத் தொகுதி உருவாக இருப்பதை நகைச் சுவையுடன் கூறிக்

Page 29
56 தலைப்பூக்கள்
கொண்டிருந்த எழுத்தாளன் அழகு சுப்பிரமணியம் அஓதிக் கண்ணால் கூடப் பார்க்காமல் போய்ச் சேர்ந்து விட்டார்.
ஒரு படைப்பாளிக்கு இதைவிடத் துரதிர்ஷ்டம் வேறென்ன இருக்கிறது!
கடந்த காலங்களில் எழுத்தாளர்களுக்கும் /கலைஞர்ரி கருக்கும் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு விட்ட்ன. அவர் களது படைப்புக்கள் நூலுருப் பெற ஆவன செய்வோம் என அரசாங்கமும் உறுதியளித்தது.
ஆனால், நடைமுறையில் படைப்பாளிகளின் புத்தகங் களை வெளிக் கொண்டுவர இன்று ஏற்பட்டுள்ள பல திடீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டால்தான் இது சாக்கிய EDTG5th.
இதைச் சாத்தியமாக்கினால்தான் வாக்குறுதிகளைக் கலைஞர்கள் நம்புவார்கள். இயக்க ரீதியாக ஒன்றுபடு வார்கள்.
அழகு சுப்பிரமணியத்தின் உருவத்தை ாழ்ப்பாணச் சட்ம் நூலகத்தில் திரைநீக்கம் செய்து வைக்க அவரது சக தோழர்கள் முயன்று வருகின்றனர்.
இது வரவிேற்கத் தக்க நல்ல முயற்சிதான்.
ஆனால், தொழில் துறையை விட, அவர் சிருஷ்டி கர்த்த வாகவே ஆரம்ப காலத்திலிருந்து இறுதிவ்விர பிரகாசித்தாரி
எனவே படைப்பாளி என்கின்ற முறையில் நாம் அவ ருக்கு என்ன செய்ய விரும்புகின்றோம்?
ஏதோ ஒப்புக்கு நாம் நமது அநுதாபத்தைச் செலுத்தி விட்டோம் என மனத் திருப்தி அடைபவர்கள் அடைந்து விட்டுப் போகட்டும். காலத்தையும் மீறிக் கனிந்து நின்ற கலைஞனுக்கு நாம் நமது பொறுப்பான கடமையைச் செய்யம் வேண்டும். சும்மா ஊர் கூட்டி மேளமடிப்பதல்ல,

டொமினிக் ஜீவா 57
அவரது படைப்புக்கள் தகுந்த கெளரவத்தைப் பெற நம்மில் சிலர் சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டாலே போதும்
நிச்சயம் கலைஞர்கள் மரணிக்க மாட்டார்கள்!
(மார்ச்-1973)
அத்தியாயம் ஆரம்பித்து விட்டது? கதை தொடர வேண்டும்!
பொறுப்பும் ஆற்றலும் ஸ்தாபன இயக்கத்தில் நம்பிக்கையும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் கொழும்பில் சென்ற மாதப் பிற்பகுதியில் ஒருங்கு கூடினர். ஒரு முழுநாள் இருந்து விவாதித்து முடிவெடுத்தனர்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் புனர் நிர்மாணம்
செய்வதுடன் தொடர்ந்தும் ஈழத்து இலக்கியத்திற்குச் சரியான திசைவழி காட்ட வேண்டிய காலத்தின் அத்தியா" வசிய தேவையைச் சகலரும் உணர்ந்து சகல எழுத்தாளர் களும் இயக்க ரீதியில் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டு மென்பதை கூடிய எழுத்தாளர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர்.
அத்தனை எழுத்தாளர்களும் தங்களது குறை நிறை களை மனந்திறந்து சுய விமர்சனம் செய்ததுடன் மற்றைய கலைஞர்களைப் பற்றியும் சகோதர விமர்சனம் செய்து, தத்தமது மனக் கருத்துக்களை ஒளிவு மறைவின்றிப் பகிரங்க மாக எடுத்துச் சொன்னார்கள்.
முற்போக்கு எழுத்தாளர்கள் எனச் சொல்லப்படுவதி
னால் அவர்கள் அத்தனை பேர்களும் சகல துறைகளிலும், ஒத்த கருத்துள்ளவர்கள் அல்ல.

Page 30
58 தலைப்பூக்கள
அரசியலில் வேறுபட்டவர்கள் உண்டு. இலக்கியக் கருத்துக்களில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் கொண்டவர் களும் இருக்கின்றனர். நடை, உத்தி, உள்ளடக்கம், ப்ார்வை. ரசனை, எடுத்தாளும் தன்மை இப்படியான இலக்கியப் பிரச்சினைகளில் பல்வேறு கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கொண்டவர்கள் தமக்குள்ளேயே பல கோணங்களில் விவாதித்து வருகின்றவர்களும் இவர் களிடையே இல்லாமல் இல்லை.
ஆனால் அடிப்படைக் கருத்துக்களில் இவர்கள் அத்தனை பேர்களும் உருக்குப் போன்ற உறுதியுடன் இயங்கக் கூடியவர்கள். தமது இலக்கியப் பாதையை ஆரம்ப காலத்திலிருந்தே அமைத்துக் கொண்டவர்கள்.
--மக்களுக்காகவே கலை, இலக்கியம்! இதுதான் இவர்களது தாரக மந்திரம்.
கண்ல கலைக்காகவே எனக் கோஷமெழுப்பி, மக்களைத் திசை திருப்பித் தமது தற்காலிக லாபங்களுக்காகவும் நிலப் பிரபுத்துவ- சுரண்டும் வர்க்கங்களுக்குத் துணைபோகும் நாசகாரக் கருத்துக்களுக்கு இவர்கள் அனைவரும் ஜென்மச் சத்துராதிகள் பரம விரோதிகள்!
*சகலதும் மக்களுக்காகவே' என்ற அடிப்படை இலட்சி யத்தைத் தமது வாழ்க்கை- இலக்கிய- நடைமுறைஇலட்சியமாக வரித்துக் கொண்டுள்ள இவர்கள் இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமது இயக்கத்தை அணுக வரும் சகல இலக்கிய இளந்தலைமுறையினர் அனைவரையும் ஒருமித்த மகிழ்ச்சியுடன் வரவேற்கக் காத்திருக்கின்றனர்.
நாமும் பல தடவைகளில் இதை வலியுறுத்தியுள்ளோம். இளம் இலக்கிய நண்பர்களைச் சரியான திசை வழியில் நடத்திச் செல்வதற்காகவாவது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உடனடியாகத் தனது வேலைத் திட்டத்தை மக்கள் முன் வைத்து இயங்க முன் வரவேண்டும் என இதே

டோமினிக் ஜீவா 59
தலையங்கத்தில் நாம் வற்புறுத்தி வந்ததுடன் இளந் தலை முறையின் கருத்துக்களையும் கட்டுரை வடிவில் வெளியிட்டுள் Gen Tub.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் புதுப் பொலி வுடனும் புதிய வீறுடனும் புதிய ஆர்வத்துடனும் இயங்க முன் வந்துள்ளதையிட்டு மற்றைய ஆரோக்கியமான இலக் கிய சக்திகளுடன் சேர்ந்து தாமும் பெரு மகிழ்ச்சியடை கின்றோம்.
அடிக்கடி அறிக்கைகளைப் பத்திரிகைகளில் விடுத்து நானும் உயிருடன் இருக்கிறேன் என்பதை பொதுமக்களுக்கு ஞாபகப்படுத்துவதைக் கூடியளவு குறைத்துக் கொண்டு, செயலின் மூலமும் இயக்கங்களின் வாயிலாகவும் வெளியீடு களை வெளியிட்டும் இயங்கி வந்தால்தான் முற்போக்கு எழுத்தாளர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் வேர் பாய்ந்து துளிர்த்துத் தளிர்க்க முடியும் என உறுதியாக நம்புகின்றோம்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கவில்லையே தவிர அந்த இயக்கத்தைச் சேர்ந்த முன்னோடிகள் தேசத் தின் சென்ற கால இலக்கிய இயக்கங்களில் தமது பங்குப் பணியைச் செவ்வனே செய்துள்ளார்கள் என்பதையும் புதிய புதிய வெற்றிகளை எழுத்தாளர்கள் சமூகத்திற்குத் தேடித் தந்துள்ளார்கள் என்பதையும் நாம் மனப் பூர்வமாக ஒப்புக் கொள்ளுகின்றோம்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த காலங்களில் இந்த நாட்டு இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டு இளந் தலைமுறையினருக்குச் சரியாகச் சொல்லப்படாது போயிருக் கலாம். அது உயிருள்ள இயக்கமாக இயங்கிய காலத்தைப் பற்றியும் அது செய்த ஆக்கபூர்வமான தொண்டுகள் பற்றி யும் அது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், வென்றெடுத்த லாபங்கள்பற்றியும் அவ் இயக்கம் மக்களுக்குக்கூறவேண்டும்,
பெப்ரவரி-1974

Page 31
அகண்ட சத்தியத்தின் உயர்ந்த இலக்கியத் தொணி
ஒரு பக்குவமான ரசிகன் பார்வையுடன் கடந்த ஒன்பதாண்டு காலமாக வெளிவந்துள்ள மல்லிகை இதழ் களை ஒருங்கு சேர்த்தெடுத்துப் பார்க்கும்பொழுது அதன் நிறை குறைகளை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
எத்தனை எத்தனையோ விதம் விதமான கட்டுரைகள் கவிதைகள்-கதைகள்-மற்றும் இலக்கிய விவாதங்கள் மேடை யேறியிருக்கின்றன என்று கணக்கெடுத்துப் பகுத்துப் பார்க்கும்போது நமது மனதில் ஒரு நிறைவு அரும்பாம் லில்லை. அதே சமயம் இன்னும் திறமாக அவைகளைச் செய்திருக்கலாமே என்ற குறையுணர்வும் நமது நெஞ்சத் தைத் தொடாமலுமில்லை.
இன்றைய உலகில் நடைபெறும் சம்பவங்களை-அவை நெடுந்தொலைவில் நடைபெறும் சம்பவங்களாக இருந்தா' லும் சரி, அல்லது மிக அருகாமையில் நடைபெறும் நிகழ்ச்சி களாக இருந்தாலும் சரி-இவற்றை ஒரு கலைஞன்-அவனது பெரு முயற்சியால் நடைபெற்றுவரும் சஞ்சிகை-அலட்சிய மாகக் கருதிவிட முடியாது.
இதை மனதில்கொண்டே கடந்த காலத்தில் மல்லிகை செயல்பட்டுள்ளது என்பதை நாம் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
. உழைப்பே-ஓய்வு ஒழிச்சலற்ற அசாதாரண உழைப்பேகடந்த ஆண்டுகளில் மல்லிகை வரலாற்றின் கதையாக மலர்ந்துள்ளது.

டொமினிக் ஜீவா 6.
மக்களை ஒருங்கு சேர்ப்பதில் கலை இலக்கியங்கள் வகிக்கும் முக்கிய பங்கை நாம் மறந்துவிடக்கூடாது. இதை நாம் எந்தக் கட்டத்திலும் மறக்காமல் செயலாற்றி வந்திருக் கின்றோம்.
ஈழத்து இலக்கியத்தின் குணாம்சத் தன்மையை. அதன் பரிணாம வளர்ச்சியைக் கணக்கிலெடுத்து, இன்றைய சமுதாய இயல்புகளை விமர்சன கோணத்தில் ஆராய்ந்து, மிக முக்கியமான கருத்துக்களை மக்கள் முன்னால் கொண்டு சென்றிருக்கின்றோம்.
அதேசமயம் தூய இலக்கியவாதிகளையும் துவேஷ இலக்கியக் குரலெழுப்பிகளையும் நாம் தயவுதாட்சண்ய மின்றி விமர்சித்துப் போராடி இருப்பதுடன், முடிவில் இந்த அதிசூர இலக்கியக் கூட்டத்தினர் பிற்போக்குக் கும்பலின் இலக்கியப் பகுதியினருடன் தான் கைகோர்த்து நின்று நம்மை எதிர்ப்பார்கள் என்ற தீர்க்க தரிசனத்தையும் வரலாற்று அநுபவங்களை அடி ஆதாரமாகக் கொண்டு நாம் கணிட்பீடு செய்திருக்கின்றோம்.
இத்துடன் இன்றைய வரலாற்றுக் கட்டத்தின் தேவை யைப் பூர்த்தி செய்துவிட்டோமா என்ற கேள்வி நம்முன் எழுகின்றது.
நமக்கிருக்கும் சாதன வசதியீனம் இலக்கியமல்லாத பொது வாழ்வில் நாம் பங்குகொள்ளும் தினசரி சமுதாயக் கடமைகள், பிரயாணங்கள் போன்றவைகள் இடையிட்டு நமது முழுச் சக்தியையும் இலக்கியத் துறைக்குள் முற்று முழுதாகத் திணித்துச் செயல்படச் செய்யாமல் குறுக்கிட்டு விடுகின்றன.
இதுவேதான் மல்லிகையின் பலம் என்று நாம் கருதிய போதிலும் கூட, இன்றைய ஈழத்து இலக்கியப் போராட்டம் ஏதோ ஒரு பொழுது போக்குச் சங்கதியல்ல; அது தம்மைத்

Page 32
62 தலைப்பூக்கள் :
தாமே முழுநேரமாக அர்ப்பணித்து இயங்கும் இயக்க வேள்விக் கூடம் என்பதையும், அதற்காக ஒரு சிலர் தம்மைத் தாமே அழித்துக் கொண்டாலும் பாதகமில்லை என்பதையும் நாம் மனச் சுத்தியுடன் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்பு கின்றோம்.
கடந்த பல ஆண்டு காலமாக இலக்கிய ஆளுமை மிக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்காமல் இயக்கமற்று இருந்த வேளையில் அதைச் சுட்டிக் காட்டி, 'இளந் தலை முறையின் திசை வழியைச் சரியான பாதையில் நடத்திச் செல்வதற்காகவாவது எழுத்தாளர் இயக்கம் மறு சீரமைப்புத் துரிதமாகச் செய்யப்பட வேண்டும்" என்ற இயக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது மல்லிகை.
நமக்குள்-ஈழத்து எழுத்தாளர்களுக்குள் - என்னதான் கருத்து வித்தியாசங்கள், சித்தாந்த முரண்பாடுகள் இருந்த போதிலும் கூட, பொதுப் பிரச்சினைகளில் நாம் போராடி வன்றெடுக்கக் கூடிய ஆக்கபூர்வமான லாபங்களை நாம் அலட்சியம் செய்துவிடக் கூடாது என்ற கருத்தையும் பல தரப்பட்ட எழுத்தாளர்களின் முன்னாலும் கருத்து வடிவில் வைத்து, நடைமுறையில் பல கருத்தோட்டமுள்ளவர்களுக் கும் பரந்த முறையில் தளமமைத்துத் தந்துள்ளோம்.
அதே சமயம் சமரசப் போக்குடையவர்களின் பாசாங்குக் கூச்சல்களையும் அதி சூர, தீரர் வறட்டுத் தத்துவ வாதி களின் ஆத்திரக் கூப்பாடுகளையும் நாம் கேட்டு அதற்காக எமது பயணத்தை இடையில் முறிக்காமல் தொடர்ந்தும் நாம் சரியான மார்க்கத்தில்தான் போய்க் கொண்டிருக் கின்றோம் கான்ற மனவலிமையுடன் சென்று கொண்டிருக் கின்றோம்.
ஆக்கப் படைப்புக்களையும் ஆரோக்கியமான கருத்துக் களையும் இலக்கிய விவாதங்களையும் சித்தாந்தப் போராட் டத்திற்கு முரணற்ற முறையில் நாம் நடத்தி வந்துள்ளதைத் காய இலக்கியக் கோஷமெழுப்பிகள் ” நம்மை அவதூறு

டொமினிக் ஜீவா 63
செய்வதிலிருந்தும் முற்போக்கு இலக்கியத்தின் பரமவைரிகள் நம்மை அர்த்தமற்றுத் திட்டித் தீர்ப்பதிலிருந்தும் நாம் எமது இலட்சியத்தின் பிசகற்ற தன்மையைப் புரிந்து கொண்டுள்ளோம்.
மல்லிகையின் ஒவ்வொரு இதழுமே ஒவ்வொரு சரித்திரம்.
அதற்காக எமது கஷ்டங்களையோ, சிரமங்களையோ, அவலங்களையோ பிலாக்கணத் தொனியில் உங்கள் pf னால் வைத்து அழுது தீர்க்க நாம் தயாராக இல்லை.
மிகப் பிரகாசமான-வாழ்வும் வளமும் செழிப்புற்றுத் திக ழும் ஒரு எதிர்காலத்திற்கான-பங்குப் பணியை நம்முடன் சேர்ந்து செய்து முடிக்க யார் எம்முடன் ஒத்துழைகத் தயாரோ அவர்களை மேலும் மேலும் இனங்கண்டு, அவர் களுடன் அன்புப் பிணைப்பில் இணைய நாம் தினசரி முயன்று வருகின்றோம்.
அப்படியானவர்கள் இந்தத் தேசத்தின் எங்கெங்கோ மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து வருகின்றனர் என்ற உண்மை அநுபவ மூலம் நாம் அறிந்து வைத்துள்ளோம்.
சிங்கள மக்களாற் சூழப்பட்டுள்ள பெயரே கேள்விப் படாத சிறிய கிராமங்களில் இருந்தெல்லாம் மல்லிகையின் இலக்கியக் கருத்தோட்டத்தை விசுவாசிக்கும் பல இலக்கிய நண்பர்கள் நம்முடன் கடிதத் தொடர்பு கொண்டுள்ளதை எண்ணும்போது பிரமிப்பாக இருக்கின்றது.
இன்னும் இன்னும் இன்னும் நாம் மக்கள் மத்தியில் செல்ல வேண்டும்- நமது கருத்துக்கள் அவர்களைச் சென் றடைய வேண்டும் என்ற உற்சாகம் நம் மனதில் புதிய தெம்பை ஊட்டுகின்றது.
தமிழகத்தின் சகல பிரதேசங்களில் இருந்தெல்லாம் இலக்கிய ஆர்வலர்கள் நம்முடன் தொடர்பு கொள்ளு

Page 33
64 தலைப்பூக்கள்
கின்றனர். மல்லிகையைத் தகுவிக்கும் வழி முறைகளைக் கேட்கின்றனர். நாமறிந்த வரைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்குத் தமிழ்ப் புத்தகங்கள் தருவிப்பதற்கு இந்திய சர்க்காரே தடை போட்டுள்ளனர் என்ற உண்மையை நாம் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.
காலக்கிரமத்தில் நாம் இருபகுதியினரும் இதற்கெதிராக இயக்கம் நடத்தி இந்தத் தடையை முறியடிப்போம் என் பதை இங்கு உறுதியாகக் கூறிக் கொள்ளுகின்றோம்.
நம்முடன் ஆத்மபூர்வமாகத் துணை நின்றவர்கள் அநேகர். அவர்களின் பேரை இங்கு குறிப்பிடுவது அவ்வளவு உசிதமல்ல. அது அவர்களுக்கும் நமக்கும் ஆத்மார்த்திக ரீதியாக தெரிவதே ஒரு புனிதமல்லவா?
19ሽ 4
உண்மையான பெருமைக்கு உழைப்பு ஒன்றேதான் அடையாளம்
பதினோராவது ஆண்டு மலர் இநு. நீண்ட தூரம் கப்பல் பிரயாணம் செய்யும் போதே மீகா மன் தனது திசை காட்டும் கருவியை அடிக்கடி பார்த்துக் கொள்வான் ஆயிரத்தில் ஒரு பங்கு டிகிரி நேர் வழியில் இருந்து கப்பல் திசை மாறினாலும் கூட, ஆரம்பத்தில் அது மிகச் சிறியதாகத் தென்பட்ட போதிலும் நேரஞ் செல்லச் செல்ல திசை மாற்றம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டு விடும் என்ற உண்மை அவனுக்குத் தெரியும்.
இந்த ஆண்டு மலரைத் தயாரிக்கும் போது கூட நமக்கு அந்த மீகாமனின் மன நிலைதான் இருந்தது.

டொமினிக் ஜீவா 65
கடந்த ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட நிர்வாக-- பொரு *ளாதார.விலை உயர்வுச் சிக்கல்களை விட புத்திமதிச் சிக்கல்தான் பெருத்த தடையாக இருந்தது. இருந்து வந் துள்ளது.
பொது சனங்களை நம்பாதவர்கள்-மக்கள் மத்தியில் வேலை செய்ய விரும்பாதவர்கள்-நமக்குத் தமது உபதேசங் களை இலவசமாக நல்க முன் வந்திருந்தனர்.
இப்படியானவர்களின் கருத்துக்களை நாம் திட்டவட்ட மாக நிராகரித்து விட்டோம்.
கடல் கடந்து தூரப் பிரதேசங்களில் இருந்து-லண்டன் கல்கத்தா, சிங்கப்பூர், மாஸ்கோ போன்ற இடங்களிலிருந்து நம்முடன் பல இலக்கிய நெஞ்சங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளன.
எல்லாருடனும் எல்லா மட்டங்களிலும் எம்மால் அடிக்கடி கடிதத் தொடர்பு வைத்திருக்க முடியவில்லை. அது சாத்தி யப்பாடானதுமல்ல.--காரணம் நேரமின்மை.
காலையில் இருந்து நடுச் சாமம் வரைக்கும் இலக்கியப் பிரச்சினைக்காகவே வாழ வேண்டிய-வேலை செய்ய வேண்டிய-சூழ்நிலையை ஆக்கிக் கொண்டிருந்த போதிலும் கூட. நம்மால் நமது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நெருக்கடி நிலை தோன்றி விடுவதுண்டு.
அதற்காகச் சம்பத்தப்பட்டவர்கள் தமது தொடர்பு களைத் துண்டித்துக்கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
நம்முடன் தொடர்பு கொண்டுள்ள சகலரினும் ஆத்ம வெளிப்பாடுகளை மையமாக வைத்தேதான் ஒவ்வொரு மல்லிகை இதழும் மலர்ந்து வெளிவருகின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்காகத் தனித் தனியாகத்
A5-5

Page 34
66 தலைப்பூக்கள்
தங்களுடன் நாம் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என அவர்கள் நியாயமாக ஆசைப் படுவதை தற்காலிகமாகவச யினும் அவர்கள் தடைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் களினது நியாயமான மன விருப்பங்களுக்கு நாம் உட்பட்டு நாம் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு கொள்ள முற் பட்டால் இந்த இலக்கிய ஏட்டின் நிரந்தர வேலைகளுக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும் என்பதையும் சம்பந்தப்பட்டவர் களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
எனவேதான் சகலரினது கருத்துக்களையும் படித் தறிந்து, அவர்களினது ஆவலைப் புரிந்து கொண்டு காரிய மாற்றச் சாத்தியமான வழி முறைகளை யோசித்துச் செயல் படுவதினால் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் எம்மால் தொடர்பு கொள்வதற்கு முடியாமல் போய் விடுகின்றது.
ஒரு மீகாமனின் நீண்ட தூர அவதானத்துடன் நாம் காரிய மாற்றி வருகின்றோம் என்பதை இன்றில்லாவிட்டா லும் நாளை வரவிருக்கும் புதிய சந்ததி புரிந்து கொள்ளும் என்ற திட சித்தத்துடன்தான் நாம் காரியமாற்றி வருகின் றோம்.
இப்படியானவர்களின் கருத்து பரிமாற்றங்களினால் ஆக்கபூர்வமான பழைய மரபுகளைப் புரட்சிப் புதுமையுடன் அங்கப் பகுதியாக எப்படி இணைத்துப் பிணைப்பது என் பதைப் பயன் நிறைந்த கவன ஈர்ப்புடன் கற்கக் கூடியதாக, வுள்ளது.
இதே சமயம் சமரசப் போக்குடையவர்களின் பாசாங்குக் கூச்சல்கடையும் வரட்டுத் தத்துவ வாதிகளின் ஆத்திரக் கூப்பாடுகளையும் நாம் அடிக்கடி கேட்கவேண்டி ஏற்படு” கின்றது
மீகாமன் திசை காட்டும் கருவியைக் கவனிப்பது போல, நாமும் மிகக் கூர்மையுடன் நமது பிரயாணத்தின் திசை வழி. மீது மிகக் கவனமாகக் கண் வைத்திருக்கின்றோம்.

டொமிகை ஜீவா 67
இதே காலங்களில் நமக்குப் பல அநுபவங்கள், ஆக்க பூர்வமான யோசனைகள் உதிப்பதுண்டு,
தமிழ்மொழி மீதும் தமிழ்க் கலாசாரத்தின் மேலும் ஆர்வசி மும் அபிமானமும் கொண்டு வரும் பல சிங்களச் சகோதரர் களை-முக்கியமாகப் புத்த பிக்குகளை-நாம் மல்லிகையின் ரலிகர்களாகப் போற்றுத் திகழ்கின்றோம்.
நமது நோக்கத்தின் பிசகற்ற தன்மையைத் தெரிந்து கொள்ள நமக்கு இவர்களின் ஆத்ம சினேகம் உதவுகின்றது.
இதையிட்டு நாம் பெருமிதமடைகின்றோம்.
இந்த நியாயமான பெருமை நாளை இந்த நாட்டில் இன ஐக்கியத்தின்-தேசிய ஒருமைப்பாட்டின் ஸ்தூல: வெற்றியாக அமையும் என நாம் நிச்சயமாகநம்புகின்றோம்.
"வாழ்க்கையை விட, மிகவும் மதிப்பு வாய்ந்தது வேறெதுவும் இல்லை; மனிதன் தான் உலகத்தில் எல்லா வற்றையும் விடச் சிறந்தவன்" இந்த அடிப்படை நோக்கை முன்வைத்தே நாம் இலக்கியப் போராட்டத்தை நடத்துகின் றோம். இந்த நோக்கில் நம்முடன் ஒன்றுபட நினைப்பவர் கள் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைக்க விரும்பு கின்றோம்.
மாறாக வாழ்க்கையைப் பற்றிச் சின்னத்தனமான கருத்துக் கொண்டவர்கள், எவ்விதக் கோட்பாடுமற்றவர்கள் நோய் பீடித்தமனப்போக்கு உடையவர்கள், மற்றைய படைப்பாளிகள் பற்றித் தனிப்பட்ட ரீதியாகக் கோள் மூட்டு பவர்கள், இளம் எழுத்தாளர்களை ஆக்க ரீதியாக வளர்த் தெடுப்பதை விரும்பாமல் சில அதி தீவிர கோஷங்களை அவர்கள் மீது திணித்து அவர்களினது எதிர்கால வளர்ச்சிக் குக் குந்தகம் செய்பவர்கள், மக்களைத் தவறான வழிகளில் திசைதிருப்பி விட முனைந்து நடுச் சந்தியில் நின்று கூப்பாடு போடுபவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது. அதைவிட நமக்கும் நல்லது.

Page 35
68 தலைப்பூக்கள்
நரம் எந்த நோக்கத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்பதைப் பற்றி நமக்குத் தெளிவான கண்ணோட்டம் இருக் கின்றது. நம் முன்னுள்ள இலட்சியங்களும் பணிகளும் சரி யானவை, அவசியமானவை. காரிய சாத்தியமானவை என்ற நம்பிக்கை நமக்கு உறுதியாகவுண்டு.
இந்த வெளிச்சத்தின் வழிகாட்டுதலில்தான் நாம் கடந்த பத்து ஆண்டுக் காலமாக நடைபோட்டு முன்னேறி, இன்று பதினொராவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கின் றோம்.
இந்தப் பத்தாண்டுக் கால கட்டத்தில் நம்மைப்பற்றி நமக்குத் தெரியாத பல செய்திகளை நமக்கெதிராகப் பிாசாரம் செய்து தோல்வி கண்டவர்களை நமக்குத் தெரியும்.
அவர்களை இலக்கிய உலகம் இன்று மறந்து விட்டது.
நமது வளர்ச்சியில் உள்ளூரப் பொறாமை கொண்டிருந்த போதிலும் கூட, நம்மை அணுகி மல்லிகையின் வெளிச்சத் தில் குளிர் காய முனைந்தவர்களையும் நாமறிவோம்.
அவர்கள் சிறிது சிறிதாக நம்மை விட்டு ஒதுங்கி விட்டனர்.
அதைத் தவிர ஆயிரக் கணக்கான ஆரோக்கியமான இலக்கிய நெஞ்சம் கொண்டவர்கள் நம்மைத் தினசரி அணுகி வருகின்றனர்.
அவர்கள்தான் மல்லிகையின் சொத்தாகும்.
அவர்களினது ஆக்கபூர்வமான ஆலோசனை களையும் உதவிகளையும் உற்சாகமூட்டல்களையும் பெற் றுள்ள மல்லிகை வரப் போகும் ஆண்டுகளில் புதுப் புதுப் பொலிவு பெற்றுத் திகழும் என்பதை கூறிவைக்கின்றோம்
11வது ஆண்டுமலர்-1975

புதிய இலக்கியப் பரம்பரை இங்கு உருவாகப் போகின்றது
இலங்கைப் பல்கலைக் கழக - யாழ்வளாகம் ஆரம்பிக் கப்பட்டு இந்த மாதத்துடன் ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. பன்னிரண்டு மாதங்கள் உருண்டோடி விட்டன.
ஈழத்தில் வேறெந்த வளாகங்களுக்கும் ஏற்பட்டிராத எதர்ப்புக்களும், தூற்றல்களும், முட்டுக் கட்டைகளும் இதற்கு ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் எல்லாவற்றையும் விட, காழ்ப்புணர்ச்சி கொண்ட பிற்போக்கு அரசியல் கூட்டக் கும்பல் இந்த வளாகத்தை இயங்காமல் தடுக்க தம்மாலான சகல முயற்சிகளையும் செய்து தோல்வி கண்டுள்ளது. இருந்தும் தனது பிரசார எதிர்ப்புக்களை இன்னமும் கை விட்டு விடவில்லை. தொடர்ந்து இந்தக் கல்விக் கோபுரத் தின் மீது அழுக்கை வீசி எறிவதில் தனக்குத் தானே திருப்தி கொண்டுள்ளது.
தமிழர்களைப் பொறுத்த வரையில் கல்விக்குத் தெய்வ அந்தஸ்துக் கொடுத்துப் போற்றி வந்துள்ளனர். இந்த மாதம் கல்வி, கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதிக்கு விழா எடுத்துக் கொண்டாடியுள்ளனர்.
தமிழர்களிலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் கல்விக்குக் கொடுக்கும் அதி முக்கியத்துவமும் கெளரவமும் அந்தஸ்தும் இந்த நாடே புரிந்து கொண்டுள்ளது மாத்திரமல்ல, கடல் கடந்தும் இந்தப் பெருமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இப்படியாகக் கல்விக்கு அடித்தளமான பசளையிடப்பட பட்டுள்ள இந்த மண்ணில் ஒரு சர்வகலாசாலை வளாகம் தோன்றுவதற்கு ஏன் இந்த எதிர்ப்பெல்லாம்?

Page 36
70 தலைப்பூக்கள்
இங்கேதான் இதன் சூட்சுமம் இருக்கின்றது,
சுருட்டுக்காரன் மகனும், சலவைக்காரன் பிள்ளையும் கமக்காரன் மகளும், கள்ளுச் சீவுகின்றவன் பேரனும், சவரத் தொழிலாளியின் பரம்பரையும், மீனவக் குழந்தை களும், தச்சுத் தொழிலாளர் செல்வங்களும் உயர் கல்வி கற்றுவிட்டால் தமது பரம்பரைக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்ற அடிப்படையான வர்க்க ஆதாயப் பயப் பிராந்திதான் இந்த எதிர்ப்புக்களுக்கும் அடாவடித் தனங் களுக்கும் அடிப்படைக் காரணங்கள் என நாம் அறுதியிட்டுக் கூறுகின்றோம்.
ஆண்ட பரம்பரையல்லவா? ஆளத் துடிக்கிறது. தம்மால் அடக்கி ஒடுக்கப்பட்ட பரம்பரை அந்தஸ்துப் பெற்றுத் தலை தூக்குவதையும் அரசியலில் தலைமை தாங்குவதையும் விரும்பவில்லை. எனவேதான் தமிழின் பேரால் எதிர்ப்பு!
நேற்றைய மக்களல்ல இன்றைய மக்கள். இன்றைய மக்கள்ல்ல நாளைய ம்க்கள் Ꭶ
எனவே கல்வியிலும் அரசியல் அதிகாரத்திலும் வர்த்த கச் சுரண்டலிலும் தம்மை அடக்கி ஒடுக்கி வந்த உயர் பரம் பரையின் இந்த வளாக எதிர்ப்புக்கு எதிராக பாமர மக்கள் திரண்டு நின்றனர். "நமது வளாகத்தைப் பாதுகாப்போம்!" என உறுதி பூண்டு இயங்கினர். இந்த ஒராண்டு வரலாறு இதுதான்.
இந்தச் சூழ்நிலையில்தான் வளாகம் ஒராண்டைப் பூர்த்தி செய்துள்ளது.
இப்படி நாம் கூறும்பொழுது வளாகத்தில் குறைபாடோ தவறோ இல்லை என்பதும் நமது வாதமல்ல. இந்தக் குறை பாடுகளும் தவறுகளும் தீர்க்கப்படக் கூடியவை, நிவர்த்தி செய்யப்பட வேண்டியவை. நிச்சயம் இவைகள் வருங்காலத் தில் தீர்க்கப்படவேண்டும் எனவும் நாம் சம்பந்தப்பட்டவர்
களுக்குச் சொல்லி வைக்கின்றோ

டொமினிக் ஜீவா 71.
பல நூற்றாண்டுக் காலப் பெருமைபெற்ற செக்கோஸ்ல வேக்கியத் தலைப் பட்டினத்தில் இயங்கும் "பெராக் யூனிவ சிட்டி'யைப் பற்றி அறிஞர் பெருமக்கள் குறிப்பிடும்பொழுது அது இப்பொழுதும் குழந்தைப் பருவத்தை இன்னமும் தாண்டவில்லை எனக் குறிப்பிடுவார்களாம். பல நூற்றாண் டுத் தொன்மைமிக்க அந்தச் சர்வகலாசாலைக்கே இந்த நிலையென்றால் ஆரம்பித்து இன்னமும் மூன்று இலை முழு சாக விடாத இந்த பிஞ்சுக் குருத்து நிலையில் உள்ள வளாகத்தின் வளர்ச்சிக்கு நாம் ஆக்கபூர்வமாக உதவாது அதற்கு வக்கனை சோல்வது எந்த நியாயத்தில் சேர்ப்பது என நாம் நிதானமாகக் கேட்க விரும்புகின்றோம்.
இந்த வளாக வளர்ச்சியில் நமக்கு- இந்த நாட்டுப் படைப்பாளிகளுக்கு - நியாயமான அக்கறையுண்டு. இந்த வளாகத்தை யாழ்ப்பாணத்தில் அமைக்க வேண்டும் என ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து இயக்கம் நடத்தியவர் களில் எழுந்தாளர்கள் முன்னணியில் நின்றுழைத்துள்ளனர். அதுமட்டுமல்ல. இந்த வளாகத்தின் முதலாவது தலைவரே நமது இயக்க அணியைச் சேர்ந்த திரு. க. கைலாசபதி அவர்கள். ஒரு முன்னோடியான மூத்த எழுத்தாளரை முதல் தலைவராகக் கொண்டதும் பல படைப்பாளிகளை வளாக விரிவுரையாளராகக் கொண்டதுமான இந்த வளாகத்தின் வளர்ச்சியிலும் வழி காட்டுதலிலும் இந்த நாட்டுப்படைப் பாளிகளுக்கும் நிறையப் பங்குண்டு என நாம் நம்பு கின்றோம்.
$ቋGö புதிய இலக்கிய பரம்பரையே இங்கு உருவாகப் போகின்றது, நவீன தமிழுக்கு, என நாம் தீர்க்க திருஷ்டி யுடன் அவாவுறுகின்றோம்,

Page 37
இலக்கியக் கருத்துக்களின் ஒருங்கிணைவும் செயலாக்க உறவுகளின் நெறிமுறைகளும்
சமீப காலமாக ஒன்றை நாம் அவதானித்து வருகின் றோம். இதை உணர்ந்த பலரும் எமக்குச் சொல்லியிருக் கின்றனர்.
இலக்கியக் கூட்டங்களுக்கு - நூல் வெளியிட்டு விழாக் களுக்கு - கலந்துரையாடல்களுக்கு வருபவர்கள் கணிச மான அளவு குறைந்துள்ளனரே ஏன் இந்த அவல நிலை?
பொது சனங்கள், ரசிகர்கள் வந்து கலந்து கொள்ளாதது ஒரு பக்கம் இருக்கட்டும்; இலக்கிய உலகில் தொடர்பும் நாட்டமும் கொண்டவர்களே அக்கறையற்று அலட்சியமாக ஒதுங்கிக் கொள்ளுகின்றனரே இவர்களைப் பற்றி நாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
இப்படியானவர்கள் உண்மையாகவே இலக்கிய ஆர்வ மும் ஈழத்து இலக்கியம் வளர வேண்டும் என்ற இதயபூர்வ மான நம்பிக்கையும் கொண்டவர்கள் தானா என நாம் உண்மையாகவே சந்தேகப் படுகின்றோம்.
இப்படியாக இவர்கள் ஒதுங்கிப் போனால் புதிய வேகத் துடன் வளர்ந்து வரும் நவீன இலக்கியப் பரப்பில் இவர் களது நாமமே இல்லாமல் ஒடுங்கிப் போய் விடும் என்பதை யும் இவர்களுக்கு ஞாபகப்படுத்த நாம் கடமைப்பட்டவர் களாக இருக்கின்றோம்.
இலக்கியக் கூட்டமொன்றை ஒழுங்கு செய்வதென்றால்
இன்றைய கட்டத்தில் எத்தனை எத்தனை சிரமம் அதைத் தவிர பொருளாதார ரீதியில் எவ்வளவு கஷ்டம்

டொமினிக் ஜீவா 7s
இலக்கிய ஆர்வலருக்கு அழைப்பொன்றை அனுப்ப? இருபது சதம் அந்த அழைப்பாளருக்குச் செலவிடப்படு கின்றது. இவற்றை நடாத்துவது பெரிய நிறுவனங்களோ அல்லது உணவு செரிக்காமல் சிரமப்படும் பொழுது போக்குப் பெரிய மனிதர்களோ அல்ல. அழைப்புக் கிடைப்பவாகளின் பொருளாதார நிலையில் உள்ளவர்கள்தான் தமக்கு இந்தத் துறையில் உள்ள ஈடுபாடு காரணமாக, தம்மால் ஏதோ செய்ய முடிகின்றதே என்ற மன ஆர்வத் தூண்டுதலினால் இத்தனை சிரமங்களையும் பொறுப்பேற்றுக் கொண்டு, இக் கூட்டங்களை ஒழுங்கு செய்து அழைப்பை அனுப்புகின் றனா.
கூட்டங்கள் அரை மணி நேரம் பிந்தியே ஆரம்பிக்கப் படுகிறது.
வந்திருப்பவர்களோ பத்துப் பன்னிரண்டு பேர்தான்!
அத்தனை சிரமங்களையும் ஏற்றுக் கொண்டு கூட் டத்தை ஏற்பாடு செய்தவருக்கு எப்படி இருக்கும்?
இதில் இலக்கியப் பிரம்மாக்கள் வந்து கலந்து கொள்ள மாட்டார்கள். காரணம் கெளரவப் பிரச்சினை! பேச்சாளர் பட்டியலில் இவர்களது பெயர் இடம் பெற்றிருக்காது. விசேஷமாக அழைக்கப்படாத கூட்டங்களில் இவர்கள் வந்து கலந்து கொள்வது இவர்களினது கெளரவத்துக்கே இழுக்காம்!
அப்படித்தான் எழுதிக் கேட்டுப் பெயர் பொறித்து அழைப்பிதழ் அனுப்பினாலும் கடைசி நேரத்தில் கடிதத்தில் மன்னிப்புக் கேட்டுத் தப்பித்துக் கொண்டு விடுகின்றனர்.
உண்மையாகவே நமது மண்ணில் ஆரோக்கியமான இலக்கியம் வளர்ச்சியடைய வேண்டும் என நம்பும் சகலரும் இதைப் பற்றிச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

Page 38
74 தலைப்பூக்கள்
இப்படியே போனால் தாம் எங்கே போய்ச் சேரப் போகிறோம்?
அடுத்த அழைப்பு அனுப்பி வரச் சொல்பவர்கள் நடந்து கொள்ளும் முறை
அழைக்கப்பட்டவர்களை நேருக்ரு நேர் வைத்துக் கொண்டே பெயர் சொல்லித் தனிப்பட்ட முறையில் தாக்கு வதுமுண்டு, விருந்தினாக அழைக்கப்பட்டவர்கனினது முகத்தில் சாணி அபிஷேகம் செய்வதை ஒத்தது போன்று சில சமயங்களில் இது தோன்றும்.
எனவே பிரச்சினைப் படுவதினின்று தப்ப வேறு சிலர் ஒதுங்கிப் போக முற்படுகின்றனர்.
அதற்காகக் கருத்துப் போராட்டங்களே வேண்டாம் என்பது நமது கருத்தல்ல.
நல்லெண்ணம் படைத்த இலக்கிய நெஞ்சங்களின் கவனத்துக்கு இதை நாம் வைக்கின்றோம்.
இலக்கிய உலகில் பல எண்ண முரண்பாடுகள், கருத் தோட்டங்கள் இருப்பது உண்மை. தேசத்தில் இருப்பது தான் எழுத்தாளரிடமும் எதிரொலிக்கின்றது,
இதை நாம் கெளரவமான முறையில் விவாதிப்போம்;. தர்க்கிப்போம்; கலந்துரையாடுவோம்; சேர்ந்து வேலை செய்யக் கூடிய கட்டங்களில் நமது தேசத்தின் பொது நன்மை கருதி ஒன்று சேர்வோம்: கருத்துப் போராட்டம் வந்தால் ஈடாடாத மனத் தெம்புடன் துணிந்து தத்துவப் போராட்டத்தை நடாத்திச் செல்வோம். இதில் தனிமனிதத் தாக்குதலுக்கு இடமேயில்லை!
தொடர்ந்து இலக்கிய அழைப்புகளை அலட்சியம் செய் பவர்களை அழைக்காமலே இருந்துவிட வேண்டும். அவர் களுக்கும் இப்படி அழைக்க ஒரு சந்தர்ப்பம் வரும். நாமும் கட்டுப்பாடாகப் போகாமலே இருந்து விடலாம்.
(-டிசம்பர் 1975)

8ፕ
கெளரவம், கெளரவம் பெறுகின்றது.
பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு இலங்கைப் பல்கலைக் கழக ஆளுநர் சபை "டாக்டர்" பட்டம் வழங்கிக் கெளரவிக்க முனைந்து முடிவெடுத்ததையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம், நாம்.
இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் ஆளுநர் சபை, இருந்தும் இப்பொழுது செய்ய முன் வந்திருப்பதை எண்ணி அந்த கவனிப்பின்மையை நாம் மறந்து விட முயலு கின்றோம்.
பழம் பெரும் இலக்கியங்களில் துறை போந்த பண்டித மணி அவர்கள், நாவலர் மரபு வழி வந்தவர், கந்தபுராண கலாசாரந்தான் நமது அடிப்படைக் கலாசார அமைப்பு என வாதிட்டு நிறுவியவர். ஈழத்துத் தனித்துவமான தேசிய இலக்கியம் வளர உழைத்தவர். பண்டிதர்களுக்கே இயல்பாக அமைந்த கொடுந்தமிழ் நடையைக் கைவிட்டு எளிய இனிய, அழகு தமிழில் உரைநடை எழுதியவர். இவரது எழுத்து நடையைப் பல சிருஷ்டி எழுத்தாளர்கள் பின்பற்றி வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பல கட்டங்களில் இதே ஆசிரியத் தலையங்கத்தில் நாம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். * தகைமையாளர்களுக்கு இலங்கைப் பல்கலைக் கழக செனட் கலாநிதிப்பட்டம் வழங்க வேண்டும்" எனக் குரல் கொடுத்திருந்தோம்.
தங்கள் தங்கள் துறைகளில் வாழ்நாள் பூராவையும் அர்ப்பணித்து உழைத்து வந்துள்ள வல்லுநர்களைக் கல்வி யின் உயர்பீட அமைப்புக்கள் கெளரவித்தால் தான் நாடு அவர்களை மதிக்கும் எனவும் சொல்லி வந்துள்ளோம்.

Page 39
76 தலைப்பூக்கள்
இந்தத் தேவையின் நேர்மைக்குரல் இன்று நடை முறைக்கு வந்துள்ளதை எண்ணும்ப்ோது இந்த நாட்டும் படைப்பாளிகளே இதையிட்டுப் பெருமைப்படுகின்றனர்.
இத்துடன் முடிந்து விடக்கூடாது. படைப்பு இலக்கியப் பகுதியைச் சேர்ந்த முதிர்ந்த, ஆக்கத் துறையைச் சேர்ந்த தரமானவர்களுக்கும் வருங்காலத்தில் டாக்டர் பட்டம் அளித்து பட்டத்துக்கே ஒரு கெளரவத்தைத் தேடித் தர வேண்டுமென ஆளுநர் சபையைக் கேட்டுக் கொள்ளு கின்றோம்.
ஒக்டோபர்-1976
பன்முகத் தன்மை வாய்ந்த நல்லிணக்கம் தேவை.
மேது நாட்டில் இன்று தமிழ் நாடகத் துறை சம்பந்த
மாக ஒரு புதிய உற்சாக விழிப்புணர்ச்சி தோன்றியுள்ளதை அவதானிப்பவர்கள் நிச்சயம் மனமகிழ்ச்சியடைவார்கள்.
நாட்டுக் கூத்துப் போன்ற பழைய அண்ணாவி மரபு நாடகங்களும் நவீன கதையம்சம் கொண்ட புதிய நாடகங். களும் தினசரி நாடு பூராவும் மேடையேறி வருகின்றன.
வெறும் கலை ஆர்வத்தை மாத்திரம் மூலதனமாகக் கொண்டே இயங்கிவரும் தாடக சபாக்களும், நிறுவனங் களும் தனி நபர் அமெச்சூர் இயக்கங்களும் இந்த நாட்டில் நாடக வளர்ச்சிக்காக தொடர்ந்து தொண்டாற்றி வரு கின்றன.
இவற்றுள்ளே போட்டி, பொறாமை, இருட்டடிப்பு, நக்கல் பண்ணுவது போன்ற சிறுமைத் தன்மைகள் வேரோடி உள்ளதையும் நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். "=

டொமினிக் ஜீவா 77.
நமது தலைப் பட்டினத்தில் அடிக்கடி நாடகங்கள் மேடையேறுவது சகஜம். பல வகையான, பல தரப்பட்ட நாடகங்கள் இவற்றுள் அடங்குவன.
இந்த நாடகக் குழுக்களுக்குள்ளே இன்று கோஷ்டி மனப் பான்மைகளும் குழு உணர்வுகளும் தலைதுாக்கி வருவதை நாம் உணர்ந்து வேதனைப்படுகின்றோம்.
கொழும்பு மாநகரிலேயே நாடகக் கலைஞர்கள் மத்தி யில் ஒருவகைப் பகுதி மனப்பான்மை வளர்ந்து வருவதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்து, அதற்கான காரணம் என்ன என்பதையும் ஆராய்ந்து வருகின்றோம்.
கொழும்பு-6 , கொழும்பு-13, கொழும்பு-10 என்ற வகை யில் நாடகக் கலைஞர்கள் தரம் பிரிக்கப்பட்டு-பகுதிப் பண்பு மிளிரும் நாடகக் கலைஞர்கள் இவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு-ஒதுக்கப்படுவதையும் நாம் அலட்சி யம் செய்துவிட முடியாது.
இந்த நாடகக் கலைஞர்களுக்குள்ளேயே உயர்வுதாழ்வு பார்க்கப்படும் ஒரு அவல நிலை உருவாகியுள்ளது.
அந்தப் பகுதியில் ஒரு சிறந்த நடிகர் இருந்தாலும் பகுதி காரணமாக அவரது சிறப்பம்சம் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுவதாக ஒரு குறை சொல்லப்படுவதுண்டு. இதைப் போலவே இந்தப் பகுதியினரும் சொல்லிக் கொள்ளு
கின்றனர்.
இதற்கு எதிராக ஏன் எழுத்தாளர்கள் குரல் கொடுக்கக் கூடாது எனவும் இவர்கள் அடிக்கடி கேட்டு வைக்கின்றனர். அதே சமயம் இந்த நாட்டுப் படைப்பாளிகள் நமது நாட்டின் தனித்துவத்துக்காகப் போராடிய பொழுது இவர்கள் ஒன்றுமே பேசாது ஒதுங்கியிருந்தவர்கள் என்பதும் கவ னிக்கத் தக்கது.

Page 40
78 தலைப்பூக்கள்
சமீபத்தில் கொழும்பில் ஒரு முன்னோடி நாடக நடிகருக் குப் பாராட்டு விழா நடந்தபொழுது இந்தக் குழுக்களைச் சேர்ந்த கலைஞர்கள் அன்னாரது விழாவைப் பகிஷ்கரித்த தும் நாம் அறியாததொன்றல்ல.
படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், உத்தியோகம் பார்ப்பவர்கள் என்ற உயர்வு உணர்ச்சி காரணமாகப் பின் தங்கிய பகுதிகளில் இருந்து திறமையின் காரணமாக நாடக உலகில் உழைத்து உயர்ந்து வரும் கலைஞர்களை மேற். கண்டவர்கள் மதிப்பதில்லை - கெளரவிப்பதில்லை - அவர் ளெது பெயர்களை விமர்சனக் கட்டுரைகளில் குறிப்பிடுவ தில்லை என்றொரு குற்றச்சாட்டும் உண்டு.
இதில் ஓரளவு உண்மையும் உண்டு.
பட்டம், படிப்பு, உத்தியோகம், அரச செல்வாக்கு. ஆகியவைகளால் ஒரு கலைஞன் கலைஞனாகி விட முடியாது. அவனிடத்தில் கலைத்துவம் நிரம்பியிருந்தால்-திறமை மெருகடைந்திருந்தால்-மாத்திரமே, அவன் ஒரு கலைஞ. னாக உருவாக முடியும். t
ஆயிரம் இடைஞ்சல்கள் ஏற்பட்ட போதிலும்கூட, உண்மைக் கலைஞனை யாருமே இருட்டடிப்புச் செய்துவிட முடியாது. தம்மைத் தாமே நாடக உலகின் தகைமையாளர் என முடி சூடிக் கொண்டுள்ளவர்கள் கூட அவர்களது ஆற்றலை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது; இயலாது.
அப்படியானவர்களிடம் தேங்கிக் கிடக்கும் நடிப்பு ஆற்றலைச் செம்மைப்படுத்தி, வளர்த்து, அத்துடன் தாமும் வளர்வதுதான் தாட்டுக்கும் நல்லது; நாடகத் துறைக்கும் பெறுமதியானதாகும்.
மற்றொன்று: இந்தக் குழுக்கள் ஒருவர் நாடகத்தை இன்னொருவர் பார்ப்பதுகூட இல்லையாம்! - பார்க்கா மலேயே பழிப்பார்களாம்! நொட்டை சொல்வதில் சுய இன்பம் காண்பார்களாம்!

டொமினிக் ஜீவா 79
இப்படியான மனப்பான்மை வேரோடி இருந்தால் இந்த நாட்டில் எப்படி ஆரோக்கியமான நாடக வளர்ச்சி ஏற்படும் என்பது யோசிக்கத்தக்கது.
இந்த ஒதுக்கல் மனப்பான்மையை மிக இறுக்கமாகக் கண்டிக்கின்றோம். நாம்.
கலை, நாடகத்துறையில் கருத்து வித்தியாசங்கள் நிலவ லாம்; அபிப்பிராய முரண்பாடுகள் எழலாம்; நோக்குச் சம் பந்தமாக பார்வைகள் வேறுபடலாம். ஆனால், நமது நாட்டின் கலாசாரப் பொது வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய தாக எது அமைந்தாலும் அதைக் களைந்து எறிந்துவிடக் கலைஞர்கள் முயல வேண்டும். இது அடிப்படைத் தேவை மாத்திரமல்ல; அத்தியாவசியமான கடமையுமாகும் ,
இன்று நாடகத் துறையில் புதிய புதிய பரிமாணங்களில் நமது சகோதரர்கள் பரிசோதனையும் வெற்றியும் பெற்று வரும் இந்த வேளையில், இதை நாம் சொல்லி வைப்பது முக்கிய நோக்கத்திற்காகவேயாகும்.
நவம்பர்-1976
தமிழ் நாவல் நூற்றாண்டுசரித்திர யதார்த்தத்தில் சில உண்மைகள்!
தமிழ் நாவல் நூற்றாண்டின் கடைசிக் கட்டத்தில் நாம் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம்.
1876-ல் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற
நவீனத்தை முதன் முதலில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை என்பவர் எழுதி வெளியிட்டார்.
இதுதான் தனித்துவமாகத் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என இன்று பலராலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.

Page 41
80 தலைப்பூக்கள்
தமிழில் வெளிவந்த முதல் நாவல் இதுதான் என்பதைப் பற்றிய அபிப்பிராய பேதம் அறிஞர்கள்டையே இருக்க வில்லை. ஆனால் ஆண்டைப் பொறுத்தவரை பலரிடையே பலவிதமான ஐயப்பாடுகள் தோன்றியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதன் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்த கால ஆண்டு 1876 அல்ல; அது 1879 என்ற கருத்துச் சிலரிடையே நிலவுவதுண்மை. கமில் சுவலபில், ஆஷர் போன்ற மேல் நாட்டுத் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் 1879-ஐத்தான் முதல் தமிழ் நாவல் வெளிவந்த ஆண்டாகக் கணக்கின்றனர். இவர்கள் உத்தியோக ஆவணங்களைத் தமது கூற்றுக்கு ஆதாரமாகக் கொண்டு இந்தக் கணிப் பீட்டைச் செய்திருக்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த எழில் முதல்வன் அவர்களும் சழத்தைச் சேர்ந்த கலாநிதி கைலாசபதி அவர்களும் 1876 தான் த்மிழ் நாவல் தோற்றத்தின் முதலாண்டு என ஆராய்ந்து நிரூபித்துள்ளனர்.
வாதமல்ல இங்கு முக்கியம்.
அனுபவ ரீதியாக நாம் நமது காலத்தில் நடைபெறும் சம்பவங்களை எடுத்துத் தொகுத்துப் பார்க்க வேண்டும்.
சாகித்திய மண்டலப் பரிசுப் போட்டிக்கு வரும் நூல்களில் பல பிரசுரித்த அந்த ஆண்டுப் போட்டியில் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை. *ஆர்க்கைவ்ஸ்"ஸில்-புத்தக, சஞ்சிகைப் பதிவகத்தில் பதியப்படாததுதான் இந்தத் தவறு நேருவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது எனச் சுட்டிக் காட்டப்படுவதுண்டு.
இன்றே நிலைமை இதுவானால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நூற்களில் இப்படியான சில தவறு கள் ஏற்பட்டு விடுவதை நம்மால் புரிந்து கொள்ள முடி கின்றது.

GT66afiš januar 8t
நூல், சஞ்சிகைகள் பதிவு இந்தியாவில் அமுலுக்கு வந்ததே 1815-ம் ஆண்டளவில்தான். எனவே உத்தியோக ரீதியாக முதல் நாவல் 1869-ல் பதியப்பட்டிருந்த போதிலும் கூட, அது எழுதி வெளியிடப்பட்டது 1876-ல் தான் என்ற முடிவுக்கே நாம் வரக் கூடியதாக அமைகின்றது.
இந்த நூறு ஆண்டு இடைவெளிக்குள் தமிழ் நாவல் வளர்ச்சியில் எத்தனை எத்தனை வளர்ச்சி. பார்த்தால் பிரமிப்பு ஏற்படுகின்றது. இந்த நாவல் நூற்றாண்டில் "சித்திரப் பாவை’ அகிலன் ஞானபீடப் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் பரிசு பெற்றுள்ளதும் சாகித்திய மண்டலப் பரிசாக *செங்கை ஆழியான்" பிரளயம் நாவலுக்குப் பரிசு பெற்றுள்ள தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எண்ணிப் பார்த்துப் பெருமைப்படுகின்றோம்.
அதே சமயம், ஆங்கில, அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு ஏன் நமக்குப் பக்கத்தேயுள்ள மலையாள நாவல்களைப் படிக்கும் போது நாம் உலக நாவல் இலக்கிய வளர்ச்சியில் எவ்வளவு தூரம் பின் தங்கியுள்ளோம் என்ற உண்மையையும்
ஆற்றாமையோடு எண்ணிப் பார்க்கின்றோம்.
அத்துடன் தமிழகத்து நாவல் இலக்கியத் துறையுடன் நமது ஈழத்து நாவல் வளர்ச்சியையும் இந்தக் கட்டத்தில் நாம் ஒப்பு நோக்கத்தான் வேண்டும்.
தமிழ் நாவல் வளர்ந்த நூறு ஆண்டுகளில் கணிசமான
பங்களிப்பைக் கடந்த 75-80 ஆண்டுகளுக்கு முன்னரே தொடர்ந்து செய்து வந்துள்ளனர் நமது முன்னோடிகள்.
ஆனால் நவீன நாவல் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் நமது பங்களிப்பைச் செய்யப் பின் நின்று விட்டோம் என்பதே யதார்த்தமாகும். சமீபத்திலிருந்து இந்த நிலை மாற்ற: மடைந்து வருகிறது. இது வரவேற்கத்தக்க சங்கதியாகும்.
高一6

Page 42
82 தலைப்பூக்கள்
ஒரு நிறுவனம் நாவல் போட்டிக்கு ஏற்பாடு செய்த போது அறுபத்திநான்கு தமிழ் நாவல்கள் இங்கு போட்டிக்கு அனுப்பப் பட்டிருந்தன என்ற ஆரோக்கியமான செய்தியை யும் நாம் அவதானித்துப் பெருமைப்பட வேண்டும். - −
ஒருவித புதிய உத்வேகம் நாவலைப் பொறுத்தவரை நமது நாட்டில் உருவாகி வருவது மகிழ்ச்சிப்படத்தக்க அனுபவமாக மாறி வருகின்றது.
நூறு ஆண்டுகள் என்பது சரித்திரத்தில் ஒரு சிறிய காலம். நிகழ்ச்சி பூர்வமாகப் பரிசீலனை செய்து கூட்டு மொத்தமாகப் பார்த்தால் தமிழ் மொழி நாவல்கள் உலக மொழிகளின் நாவல் வளர்ச்சியுடன் சமதையாக வைத்து எண்ணப்படத் தக்கதாக அமையாது போனாலும் ܐܝܗ̄ -. நூறு ஆண்டுகளை மாத்திரம் வைத்து விமர்சனக் கண் கொண்டு சிந்திக்கும் பொழுது எதிர்காலம் பிரகாசமுடைய தாகவே அமையும் என நிச்சயமாகக் கூறலாம்.
-டிசம்பர் 1976
'அரசியல் அயோக்கியர்களின் கடைசி புகலிடம்" என்பதைப் பொய்யாக்கியவர்
அடுத்து -அடுத்து, மூன்று பெரும் இழப்புக்கள்;
திருவாளர் திரு - ஜி. ஜி.- செல்வா போன்றவர்களை இழந்ததால் நமது எநிர்காலம் என்ன என்று தமிழ் மக்கள் சோகத்தால் திகைப்படைந்து நிற்கும் இந்தச் சமயத்தில் தான் நாம் நிதானம் இழக்காமல் சிந்தித்து நல்ல முடிவுக்கு வர முயல வேண்டும், அந்த முடிவு புத்திசாலித்தனமாக அமையவும் வேண்டும்:

டொமினிக் ஜீவா 8.
வெறும் உணர்ச்சிகள் பிரச்சிகளைத் தீர்ப்பதில்லை. எனவே பாரிய துக்கமும் நெஞ்சையெல்லாம் நெகிழவைக்கும் சோகமும் நிறைந்துள்ள இந்தச் சூழ்நிலையில், பிரச்சினை களை இன்னும் இன்னும் சிக்கல் படுத்தாமல் நிதானமாக நின்று, பதட்டப் படாமல் பிரச்சினைகளின் உயிர் முடிச்சைப் புரிந்துக்கொண்டு, திறமையான இராஜதந்திர நுண்ணறி -வுடன் அதைத் தீர்க்க முன் வரவேண்டும், தமிழ் மக்களின் பிரதிநிதிகள்.
செல்வா ஒரு கட்சியின் தலைவர் என்பதைவிட, உரிமை பறிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் மூலவர் என்கின்ற முறை யில் அவர் காட்டிய மதிக்கப்படத்தக்க சகிப்புத் தன்மை பரிசுத்தமானதாகும். நீண்ட காலப் பிரச்சினைகளை நேச சக்திகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிச்சயம் பேசித் தீர்க்க முடியும் என்ற நல்லநொரு சூழ்நிலை முகிழ்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் அவரது இழப்பு மாபெரும் இழப்பு மட்டுமல்ல. அதற்கும் மேலே. மேலே.
அரசியல்வாதி என்கின்ற முறையிலும் தனிநபர் என் கின்ற ரீதியிலும் அவரது ஆத்ம நேர்மை, துணிவு, வைராக் கியம் மிகப் பிரசித்தியானது; பலராலும் மதிக்கப்பட வைத்தது.
சேர் பொன். இராமநாதனுக்குப் பின்னர், ஒரு குடா நாட்டில் பிறந்த தலைவனுக்கு இப்படியான தேசிய மரியாதை - தனிக் கெளரவம் - சகல மக்களின் சோக அஞ்சலி செலுத்தப்பட்டது கவனிக்கத்தக்கதொன்றாகும்.
குறிப்பாகச் சிங்கள மக்கள் இந்த மாபெரும் சோகத்தில் தம்மையும் ஓர் அங்கமாக இணைந்துக் கொண்டு மறைந்த தமிழ்த் தலைவருக்குக் காட்டிய உளமார்ந்த மரியாதை இங்கு குறிப்பிடத்தத்கதாகும்.
இறந்த வாரம் முழுவதும் தீவிர சோகத்தின் சாயல் R பூராவும் பரந்து கிடந்ததையும் நாம் குறிப்பிட வேண்

Page 43
8. தலைப்பூக்கள்
டும். சகல பகுதி மக்களும் இந்த இழப்பைத் தமது சொந்த இழப்பாகக் கருதி இயங்கி வந்துள்ளனர்.
எம்மைப் பொறுத்தவரை மறைந்த தலைவரது எல்லா அரசியல் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டவர்களல்ல. சிலவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம். குறிப்பாக "தனி நாடு" பிரிவினைக் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக் கின்றோம், இது தமிழ் மக்களது தற்கொலைக்குச் சம மானது என்பதே நமது அபிப்பிராயமாகும். தேசம் முழுவ தும் பரந்து பட்டு வாழும் தமிழ்மக்களை ஒரு சிறு பகுதிக். குள் குறுக்கி ஒதுக்கி விடும் என்பது மாத்திரமல்ல; இது நடைமுறைக்குச் சாத்தியமற்றதுமாகும். தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தி விடும். அத்துடன் 'தமிழ்நாடு" பிரதேசத் துக்கு அப்பால்தான் பெரும்பான்மைத் தமிழ் மக்களும், அவர்களது பொருளாதார பிணைப்புகளும் நலன்களும் வேரோடிப் போயுள்ளன என்பதையும் நாம் உற்று யோசிக்க. வேண்டும்.
இலங்கை ஒரு சிறிய நாடு. இதை விரும்பிய விதம் துண்டு போட்டால், துண்டுபட்ட இந்தியாவை அந்நியன் சூறையாடியது போல, நமது முழு தேசத்தையும் நாளைக்கு அந்நியர் கைப்பற்றி விடக்கூடும்
தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகளுண்டு; அவை நியாய மானவை: உண்மையானவை; அவசியம் தீர்க்கப்பட வேண் டியவை.
இதை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு வழி வகைகள் என்ன?
துக்கக் கலக்கத்தில் உணர்ச்சி வசப்படாமல் தேசிய ரீதி" யிம் தமிழர்களின் நியாயத் தன்மை அடிப்படையிலும் நமது நேச சக்திகள் எவை எவை என்பதை இனங் கண்டு அணுகு வதன் மூலமுமே இந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க முடியும் என நாம் நிச்சயமாக நம்புகின்றோம்,

டொமினிக் ஜீவா $等
தமிழ் மக்களினது மொழி, கலை, கலாசாரம், பிரதேசம் பண்பாடுகள் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது அத்தியாவசியம். அதற்காக ஒர் அமைப்புத் தேவை, இதை முற்போக்கு இயக்கங்கள் வேறெந்தக் காலத்தையும் விட, இப்பொழுது துல்லியமாக உணர்ந்து, பேசி, நடவடிக் >கைகள் எடுத்து வருகின்றனர். " பிரதேச சுயாட்சி" என்ற அமைப்பின் மூலம் இவைகளைப் பாதுகாப்பதுடன் தமிழர் கன் தம்மைத் தாமே நிர்வகிக்கலாம் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக இன்று ஒப்புக் கொண்டுள்ளது. கட்சியின் ஒன்பதாவது மாநாடு இதை அங்கீகரித்துள்ளதும் இங்கு கவனிக்கத் தக்கது.
இக் கருத்தை இன்னும் தெளிவாக விவாதித்து, இன்னும் இன்னும் செழுமைப்படுத்தி, நடைமுறையில் இதைச் செயல்படுத்த செல்வா அவர்களின் வாரிசுத் தலை வர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும். அந்த முடிவு நல்ல முடிவாக அமையும் என்பதே நமது நம்பிக்கை யாகும்,
ஆரோக்கியமான நல்ல சூழ்நிலை இது.
தந்தையின் மரணத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்து போய்ச் செயலிழந்து விடக் கூடாது. இப்பொழுதுதான் வேறெந்தக் காலத்தையும் விட, எச்சரிக்கையும் வலிமை *யான சிந்தனைத் தெளிவு உருக்குப் போன்ற கட்டமைப்பும் தேவை மறைந்த தலைவரின் ஆன்ம பலத்தை நமது தார்மீக ஆயுதமாகப் பாவித்து புதிய முடிவுகளை உருவாக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
உண்மையாகவே ஒரு சோஷலிஸ் இலங்கைைையக்கட்டி
வளர்க்க இதய பூர்வமாக விரும்பும் முற்போக்களாருக்கு
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றைச் சொல்லி வைக்க விரும்பு கின்றோம்:

Page 44
3C தலைப்பூக்கள்
தமிழ் மக்களினது நியாயமான அபிலாஷைகளைநோக்கங்களை - அடிப்படை உணர்வுகளைப் புரிந்தி அனுதாபமாக அதைப் பரிசீலித்துத் தீர்த்து வைக்க முன் வராது போனால் இந்த மண்ணில் சோஷலிஸம் ஒரு தத்துங் மாக மாத்திரம் மந்திரச் செபம் செய்யப்படுமே தவிர, நடை முறையில் அந்த மாபெரும் அரசியல் விஞ்ஞானம் வேர் விட்டு வளர்ர் முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
எனவே முழுத் தேசத்திலும் தொழிலாளி.விவசாயி களின் இலட்சியமான சோஷலிஸ சமூக அமைப்பைக் கட்டி வளர்ப்பதற்காகவாவது சிறுபான்மைத் தேசியப் பிரச் சினைகளைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும்.
ஆகவே நமது கணிப்பின்படி இது ஒரு தேசியப் பிரச் னையே தவிர, தமிழ் மக்களின் ஒரு பகுதிப் பிரச்சினை யல்ல.
அதேபோலத் தமிழ் மக்களும் பரந்து பட்டுச் சிந்திக்கப் பழக வேண்டும். தேசம் வாழ்ந்தால்தான் நாம் வாழி முடியும் என்பதைப் பூரணமாக உணர வேண்டும். சென்று போனதைப் போல இனி வருங்காலத்திலும் காலம் கால மாகச் சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்கள் இந்த மண்ணில் சேர்ந்து வாழத்தான் வேண்டும். இது தவிர்க்கப்பட
plek T35E5 •
நமது தாய் மொழி தமிழ் ஒரு குறுகிய வட்டத்தின் வீட்டு மொழியாக இல்லாமல், பரந்துபட்டு தேசம் முழுவதும் வாழ்ந்து வரும் சகல தமிழ் பேசும் மக்களினதும் நாட்டு மொழியாக அங்கீகரிக்கப்படத்தக்க ஒரு வாய்ப்பான சூழ் நிலையைத் தோற்றுவிப்பதற்காகத் தேசத்தின் இடதுசாரி ஜனநாயக சக்திகளை வென்றெடுப்பதே இன்றைய நமது கடமையாகும்.
இது சாத்தியமா என்ற ஐயப்பாடு தேவையில்லை.

டொமினிக் ஜீவா 8.
பல சோஷலிஸ நாடுகளில் இப்படியான மொழி-இனப் பிரச்சினைகள் தோன்றியதுண்டு. அதை அவர்கள் வெகு திறமையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நிதானமாகவும் தீர்த்து வைத்திருப்பது உலகப் பிரசித்தமானதாகும். -
அவரது இழப்பைச் சும்மா இழவு வீட்டு அழுகையாக ஆக்கி, பேசிப் பேசியே ஆர்ப்பாட்டம் செய்யாமல், இராஜ தந்திர நிதானத்துடன், புத்திசாதுர்யம் கலந்த பொறுப் புணர்ச்சியுடன் அணுக வேண்டிய விதத்தில் அணுகித் தீர்க்க வெண்டியதே நாம் அன்னாரது நாமத்துக்குச் செய்யும் முறையான அஞ்சலியாகும்.
"அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்!" என் பதைப் பொய்யாக்கித் தமது சீரிய ஒழுக்கத்தாலும் நேர்மை யான நடத்தையாலும் அப்பழுக்கற்ற பொதுத் தொண்டா லும் அதைப் புனிதமாக்கிக் காட்டியவர் தமது மண்ணில் உதித்த செல்வா அவர்கள்.
இது உலகிற்கே ஒரு முன் மாதிரி1
(-மே 1977)
சோகம் எனது கதவைத் தட்டிக் கதை சொல்லிச் சென்றது!
சென்ற பன்னிரண்டாவது ஆண்டு மலரில் உங்களுக்கு எழுதிய திறந்த கடிதத்திற்குப் பின்னர் அடுத்து எழுதும் பகிரங்க லிகிதம்தான் இது.
ஓராண்டு எப்படியோ ஒடி மறைந்துவிட்டது!
இந்தப் பன்னிரண்டி மாதங்களுக்குள் தான் எவ்வளவு பெரிய மாற்றம் , இந்த தேசத்தில்!

Page 45
S8 தலைப்பூக்கள்
அரசியலில், மக்களின் மன அரங்கில், இனங்களுக் கிடையே இருந்த செளஜன்ய உறவில் தான் இந்தத் திடீர் மாற்றம் எற்பட்டது என்பது புரியாத புதிராக இருக் சின்றது.
இந்தப் புதிரை விடுவித்து, சகல மக்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு திசை வழியை நோக்கி நமது தாய் திருநாடு முன்னேறி வரும் என்றே நான் மனப்பூர்வமாக நம்பி வருகிறேன்.
இந்த நம்பிக்கைதான் வாழ்க்கையின் ஆதாரம்
இதன் அடியொற்றியேதான் மல்லிகையின் எதிர் கால மும் அமையும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
இன்று சரியாகவோ தவறாகவே கலைஞர்கள் மத்தியில் ஒருவித விரக்தி உணர்வு தலைதூக்கி வருவதை நான் அவ தானித்து வருகிறேன். குறிப்பாகத் தமிழ் நாடக-சினிமாக் கலைஞர்கள் தமது ஆக்கங்களின் எதிர்காலம் என்ன என்று தெரியாமல் திக்பிரமை அடைந்து இருக்கின்றனர்.
தாம் போராடி வென்றெடுத்த பல உரிமைகள் - நமது சொந்தக் கலை - கலாச்சாரங்களை இந்த மண்ணில் வேரூன்ற வைத்துவிட வேண்டுமென்ற சலிப்படையாத உணர்வுகள் - புரிந்து கொள்ளப்படாத காரணத்தால் அலட்சியம் செய்யப்பட்டு விடுமோ என மனதார அச்சப் படுகின்றனர்.
கலை இலக்கியச் சிற்றேடுகளைப் பல சிரமங்களுக்கு மத்தியிலே வெளிக் கொணரப் பாடுபட்டு உழைக்கும் சில சகோதரத் தோழர்கள் தமது உழைப்பின் மதிப்பு எதிர் காலத்தில் பாதுகாக்கப்படுமா என மனச் சஞ்சல மடைந் துள்ளனர்.
இந்த நியாயமான அச்ச உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

டொமினிக் ஜீவா 89.
காரணம். நானும் அவர்களில் ஒருவனாக இருக்கிறேன் என்பது மாத்திரமல்ல, அவர்களினது கபடமில்லாத இதய உணர்வுகளை சரியாகப் புரிந்து கொண்டவன் என்பதாலும் அது அமையலாம்.
எதற்கும் நாம் அச்சப்படத் தேவையில்லை.
போராடி, மக்களைத் திரட்டி, நியாயங்களை ஏற்றுக் கொள்ள வைத்தவர்கள் என்ற அடிப்படை ஆதார சக்தியாக நாம் திகழ்ந்த காரணத்தால் மிக விழிப்பாக இருந்து நாம் நாட்டுக்காகப் பெற்றெடுத்த நல்லவைகளை இழந்து விடாமல் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வோம் என்பது எனது பகிரங்க வேண்டுகோளாகும்.
முதலாவது ஆண்டு மலர் தயாரித்த காலம் இப்பொழு தும் எனது ஞாபகத்தில் இருக்கின்றது. அதைப் போலவிே இாண்டு. மூன்று. நான்கு. இப்படியே நீண்ட பட்டியல் தொடர்ந்து பதினொன்று, பன்னிரண்டாவது ஆண்டு மலர்கள் தயாரித்த கடுமையான உழைப்பு நிகழ்ச்சி கள் எனது மனதில் ஆழப்பதிந்து போயிருக்கின்றன.
இந்த அனுபவங்களை எல்லாம் தூக்கி அடிக்கக் கூடிய அநுபவமாக இந்தப் பதின்மூன்றாவது ஆண்டு மலர் தயாரிக் கும் போது ஏற்பட்ட சம்பவங்கள் அமைந்து போய் விட்டன,
பதின்மூன்றாவது மலர் தயாரிப்பதற்கான ஆரம்ப வேலைகளை ஒப்பேற்றி முடித்த பின்னர் அதை உருக் கொடுக்க ஆரம்பித்து வேலைகளைச் செய்துகொண்டு வரும் போது தேசத்திலும் குறிப்பாக நாம் வாழும் பிரதேசத்திலும் rற்பட்ட "சரித்திரம் காணாத துயரச் சம்பவங்கள்! நமது வாசற் கதவையே தட்டித் தட்டிக் கதை சொல்லிச் சென்றன.
வெறும் வர்த்தகச் சஞ்சிகையாக மாத்திரம் மல்லிகை இருந்திருந்தால் அடுத்த இதழில் ஒரு விளம்பரம் வந்தி

Page 46
90 தலைப்பூக்கள்
ருக்கும். "தவிர்க்க முடியாத காரணத்தால் சென்ற மாதம் வெளிவர இருந்த பதின்மூன்றாவது ஆண்டுமலர் வெளிக் கொண்ர இயலவில்லை. ரசிகர்க்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கோருகிறோம்" என அச்சாகி இருந்திருக்கும்.
என்னைப் பொறுத்தவரை இப்படியொரு அவல அறிவிப்பு வரக்கூடாது என்பதற்காக உழைக்க வேண்டியி ருந்தது.
என்னதான் தனிமனித சிரமங்கள் ஏற்பட்டாலும் பரவா. யில்லை. எடுத்த கருமத்தைச் சீராகச் செய்து முடித்துவிட வேண்டுமென்ற மனத் திண்மைதான் இன்று இந்த மலர்உங்கள் முன்னால் மலர்ந்திருப்பதற்குக் காரணம்.
இதைப் பற்றிய நடைமுறை அநுபவங்களைப் பற்றிப் பின்னால் உங்களுக்கு விரிவாக எழுதலாம் என நினைக் கிறேன்.
இந்தக் கடிதத்தைச் சகலருக்காகவுமே எழுதுகின்றேன். வடிப்பவர்கள் தமக்குத் தாமே நேரடியாக இது எழுதப்பட் டுள்ளது என உணர்ந்தாலே எனக்குப் போதுமானது.
ஏராளமான கடிதங்கள் எனக்குத் தினசரி வருகின்றன. முன்பின் அறிமுகமில்லாத பல இலக்கிய ரசிகர்களிடமி ருந்தும் வருகின்றனர், s
என்னிடமிருந்து பதிலை எதிர் பார்த்து எனக்கெழுதும் நண்பர்களின் மன அவாவை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை. அதேசமயம் வருகின்ற அத்தனை கடிதங் களுக்கும் நான் நேர்முகமாகப் பதில் போடுவதாக இருந் தால் கடிதம் எழுதுவதே எனது முழுநாள் வேலையாக அமையும். அத்துடன் எனது பொருளாதார நிலை அதற்கு. இடம் தராது.
எனவேதான் இந்த கடிதத்தை வரைகின்றேன்.
அன்புள்ளம் கொண்ட நண்பர்களே,

டொமினிக் ஜீவா g
உங்களுடன் நிறையக் கதைக்க வேண்டும் என்பது: எனது ஆசை, இப்படியான சந்தர்ப்பத்தை அதற்குப் பயன் படுத்த வேண்டுமென்பதே எனது பெரு விருப்பம்,
இந்தச் சந்தர்ப்பம் அதற்குச் சரிதானா என யோசிக் கின்றேன்.
தேசத்திலும் பொதுவாக உங்கள் ஒவ்வொருவர் வாழ்வி லும் ஏற்பட்டுள்ள சோக உள்ளடக்கத்தின் மெளனத் துயரை முற்றாகப் புரிந்துக் கொள்ளுகின்றேன். '
தேசம், நாடு, மக்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள் என நோக்கும்போது இவைகளைப் பார்த்து நாம் மனந் தளர்ந்து விடக் கூடாது நேரடியாக அநுபவித்தவர்களின் துன்பம் மிகப் பாரியதுதான். அதற்காக நாம் விரக்தி யடைந்து விடக் கூடாது. ஒரு "புதிய-உலகத்தின் பிரசவ வேதனையாகக் கூட இது இருக்கலாம். எனவே தைரிய மாக இருப்போம்.
நீங்களும் நானும் ஒரு நோக்கிற்காக இயங்கி வருபவர் கள். நம்முடைய இலட்சியம், இலக்கியத்தை பொழுது போக்குச் சாதனமாக பயன்படுத்துவதல்ல. இலக்கியம் மனித சமுதாயத்தின் நல் வாழ்வுக்கான ஒரு போராயுத மாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கோ எனக்கோ இரண்டு வித அபிப்பிராயமில்லை.
"இலக்கியம், இலக்கியம்" எனப் பொழுது போக்குக்குப் பேசிக் கொண்டு வந்தவர்களும், அதால் புகழ் அடையலாம், வெளிச்சம் போட்டுச் செல்வாக்குத் தேடலாம் என நம்பி இந்தத் தளத்தில் கால் வைத்தவர்களும் இன்று போய்விட் டார்கள். மற்றும் சிலரும் போயே போய் விடுவார்கள்.
அத்துடன் அவர்களது அத்தியாயம் முடிந்துவிடும்.
ஆனால் வரலாற்றில் எனது பாத்திரம் அதுவல்ல; அது எனக்குத் தெரியும். −

Page 47
92 தலைப்பூக்கள்
நான் எனது நோக்கத்தை ஈடேற்ற என்னை மறந்து உழைக்கப் பழகியுள்ளேன்.
இதைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கும் ஆயிரக்கணக் கான முகவரிகளையும் அதே போல ஆயிரக் கணக்கான நட்பு முகங்களையும் எனக்குத் தெரியும்.
இந்த நம்பிக்கையின் ஒளித் தடமே எனது எதிர்காலப் பாதை என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன்.
(18-வது ஆண்டு மலர்-1977)
கறுப்புக்கொடியும் துக்க தின அனுஷ்டித்தலும் மாத்திரம் பிரச்சினையைத் தீர்க்க முடியாது!
சதி அதீதிக் கொடுமைகளைப் பற்றிக் கடந்த காலத் தில் முற்போக்கு எழுத்தாளர்களும் இடதுசாரி சக்திகளும் இயக்கம் நடத்திய பொழுதும், கோஷம் எழுப்பிய சமயங் களிலும் அதைப்பற்றி நையாண்டி பண்ணியவர்கள், * இழிசனர் இலக்கியம்" எனக் கிண்டல் பண்ணியவர்கள், * அப்படி ஒரு பாரிய பிரச்சினையும் இல்லை. சும்மா சில்லறை சில்லறையாக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சம் பவங்கள் நடப்பதுதான். ஆனால் நமது தமிழ் மண்ணில் சாதி அநீதிக்கு எப்பவோ சமாதி கட்டிவிட்டோம், " எனச் சோப்புப் போட்டுக் கதையளந்த தமிழ்த் தலைவர்கள் இன்று, "இப்படி ஒரு பாரிய பிரச்சினை பூதாகரமாக இருக் கின்றது; இந்தச் சனியனை விரட்டியடிக்க வேண்டும்" எனச் சொல்ல முன் வந்ததற்காக நமது நன்றியை அவர்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
கைதடி மாத்திரம் அடையாளமல்ல. ஒவ்வொரு கிராம மும் இன்றைக்கு இந்தச் சாதிச் சனியனின் மறைவிடமாகத் தான் நடைமுறையில் இருந்து வருகின்றது.

டொமினிக் ஜீவா g3 *
சமாதான நீதவான்கள் என அரசாங்கத்தால் நியமிக்கப் பட்ட சிலர் சாதித் திமிர் பிடித்த சமூக விரோதிகளாகவே காட்சி தருகின்றனர், சமாதானத்தை நிலைநாட்ட உருவாக் கப்பட்ட இவர்களில் சிலர் சாதிக் கலவரங்களைத் தூண்டி விடுவதில் முன்னோடிகளாக விளங்குகின்றனர். இவர்களை உடனடியாக இவர்களது பதவிகளில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் என நீதி மந்திரியைக் கேட்டுக் கொள்ளு. கின்றோம்.
இந்தச் சாதிச் சனியனை எப்படித் தமிழ் மக்கள் மத்தி யில் இருந்து ஒழித்துக் கட்டலாம்,
இது ஒரு பகுதியினரின் பிரச்சினையல்ல, முழுச் சமூகத் தினுடைய பொதுப் பிரச்சினையுமாகும். எனவே சகல அரசியல் கட்சிகள், வெகுஜன நிறுவனங்கள், ஜனநாயக ஸ்தாபனங்கள். நல்லெண்ணம் படைத்த தனி நபர்கள் ஆகிய சமூகத்தின் சகல சக்திகளும் ஒருங்கிணைந்து இந்தச் சனியனுக்கெதிராகப் போர் தொடுக்க வேண்டும். ஆத்ம சுத்தியுடன் இந்த வேள்வியில் தம்மைத் தாமே அர்ப்பணித் துக் கொள்ள வேண்டும்.
நோய்க்கு மருந்து கொடுக்கும் போது நோயின் மூலக் கூறுகளைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குந்தி இருக்க நில மில்லை; கமம் செய்யக் காணித்துண்டு கூட இல்லை. எனவே மாற்றானுக்கும் பொருளாதார ரீதியாக அடிமைப் படுபவன், சாதிச் சகதியில் இருந்து மீள முடியாமல் நிரந்தர மாகவே அதில் மூழ்க நேரிட்டு விடுகின்றது. எனவே ‘உழைப்பவனுக்கே நிலம்" என உரத்து இயக்கம் நடத்த வேண்டும். நிலமற்றவர்களுக்கு நிலத்தைப் பகிர்ந்து கொடு!" என உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்ட வேண் டும்! அடிப்படையில் நிலப் பிரச்சனை தீர்ந்தால்தான் சாதிப் பிரச்சினையின் ஆணிவேரையே பிடுங்கி எறிந்துவிட முடியும்,

Page 48
'94 தலைப்பூக்கள்
அது மட்டும் சும்மா இருக்கலாமா? கூடாது! * சாதி ஒழிக" என உரத்துக் கூக்குரல் இடுபவர்களி லேயே சாதி வெறியனும் ஒளிந்து கொண்டிருக்கிறான். இவன் எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்த இயக்கத்தில் மறைந்து கொண்டிருந்தாலும் இவனுடைய சுய ரூபத்தை இனங் கண்டு, பொது மக்களுக்கு இனங் காட்டி இவனது கறுப்புத் திரை முகமூடியை உரித்துக் காட்ட வேண்டியது நல்லெண்ணம் படைத்த ஊழியர்களின் தனிப் பெரும் கடமையாகும்.
அடுத்து, தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு ஒரு வேண்டு கோள்; நீங்கள் கைதடியில் வசித்தாலும் அளவெட்டியில் இருந்தாலும் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந் தாலும் கரவெட்டி உங்கள் பகுதியாக இருந்தாலும் அச் செழுக் கிராமத்தில் இருந்தாலும் வேலணையில் வசித்தாலும் உரும்பராயில் இருந்தாலும் நீர்வேலி உங்களது வசிப்பிட மாக இருந்தாலும் கரம்பனில் பிறந்திருந்தாலும் இளவாலை உங்களது சொந்த ஊராக இருந்தாலும் புங்குடுதீவில் பிறந் திருந்தாலும் காரைநகரில் பிறந்திருந்தாலும் மிருசுவில்மீசாலையில் இருந்தாலும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். பொது இடங்களிலும் ஆலயங்களிலும் துணிந்து உங்களது மனித் உரிமைகளை நிலை நாட்டுங்கள். கூச்சப் பட வேண்டாம் பயப்படவும் வேண்டாம். இது நமது அரசியல் சாஸனம் எங்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமை யைப் பிரயோகிக்க நீங்கள் பின் வாங்கக் கூடாது. இது சட்ட விரோதமல்ல. உங்களை-உ ங் கள து மனித உரிமையை-மறுப்பவர்கள்தான் சட்ட விரோதிகள்-வெகு ஜன எதிரிகள்!
எனவே உங்களது மனித உரிமைகளை வென்றெடுக்க நீங்கள் தான் முதன் முதலில் கைகொடுக்க முன்வர வேண் டும் இதைத் தடுப்பவர்கள் எவராக இருந்தாலும்-அந்த ஊரில் எந்தக் கொம்பனாக இருந்தாலும்-அவனுக்கு எதி

டொமினிக் ஜீவா 95
ராக இந்த நாடே திரண்டு உங்கள் பக்கம் வலுவாக நிற்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள். சாதி வெறியர்களின் விஷப் பற்கள் விடுங்கி எறியப்படும் என்பதையும் மறவா தீர்கள்.
இந்தப் பிரச்சினையில் ஒத்த கருத்துக் கொண்ட அனை வரும் ஒன்றிணைந்து சகல வழிகளிலும் போராட்டத்தைத் தொடர வேண்டும். பிரசார மூலம், நடைமுறை இயக்கங் களின் மூலம், நேரடி நடவடிக்கைகள் மூலம் சகல தரப்பு மக்களையும் ஓரணியில் திரட்டி இந்தச் சாதிச் சனியனை விரட்டியடிக்க சலக சக்திகளும் ஒன்று திரள வேண்டும்.
(ஜூன் 1979)
எதார்த்த உண்மைகளின் ஆதார பலம்
பதினாலாவது ஆண்டு மலர் உங்களது கரங்களில் தவழும் இந்தச் சந்தர்ப்பத்தில் பல்வேறு மன உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வ மேலீட்டினால் இந்தக் கடிதத்தை வரைய வேண்டிய எண் -ணம் எனக்கு ஏற்பட்டது. X
இந்த மலர் தயாரித்து முடியும் கட்டத்தில் எனக்குத்
தமிழகத்திலிருந்து ஓர் அவசர அழைப்புக் கிடைத்ததுஅவசிய அழைப்பு!
திருப்பூரில் நடைபெறும் கலை இலக்கியப் பெரு மன்றத் தின் 5-வது மகாநாட்டில் என்னைக் கலந்து கொள்ளும்படி அந்த அன்பழைப்பு என்னை உரிமை உணர்வுடன் கேட்டுக் கொண்டது.
மலரை முடிப்பதா அல்லது தற்காலிகமாக அம்மலர் வெளியீட்டை ஒத்திவைத்துவிட்டுத் தமிழகம் செல்வதா என்ற பிரச்சினை என் நெஞ்சைப் போட்டு அலைக்கழித்தது.

Page 49
96 தலைப்பூக்கள்
பல நண்பர்கள் நான் இந்த மகாநாட்டில் கலந்து கொள்வது அத்தியாவசியமானது. எனவே சகல வேலை களையும் ஒத்தி வைத்துவிட்டுப் பிரயாணத்திற்கு ஆவன செய்யும்படி வற்புறுத்தினார்கள், எனக்கும் அதுவே சரி யெனப்பட்டது. காரணம் பல சந்தர்ப்பங்களில் தமிழகம் LApůull- ஆயத்தப் படுத்தியும் இடையிடையே ஏற்பட்ட சிரமங்கள். இடையூறுகள் காரணமாக என்னால் எனது பிரயாணத் திட்டத்தை அமூல் நடத்த முடியாமல் போய் விட்டது. எனவேதான் இந்த அழைப்புக் கிடைத்த தும் எப்படியும் தமிழகம் செல்வது என்ற தீர்மானத்துடன் அலுவல்களைப் பார்க்க முற்பட்டேன்.
எனது தமிழகப் பயணத்தைப் பற்றித் தனியாக மல்லிகை இதழ்களில் தொடர்ந்து எழுதலாம் என எண்ணு கின்றேன். இந்தப் பிரயாணத்திற்கு இரு வாரங்களுக்கு மேற்பட்ட நாட்களை ஒதுக்க வேண்டி ஏற்பட்டதால் மல்லிகை மலர் வெளிவர வேண்டிய நாளும் தாமதித்து விட்டது.
மலரின் தாமதத்திற்கான நிலைமையை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே இத்தத் தகவலை உங்களது கவனத் திற்குக் கொண்டு.வருகின்றேன்.
ஒவ்வொரு மலரையும் படித்துப் பார்த்ததுடன் அதைப் பாதுகாத்து வைத்திருக்கும் இலக்கியத் தரமான நண்பர் களுக்கு இந்த மலர் ஏமாற்றம் தராது என்ற மன நிறை வுடன் இந்தக் கருத்துக்களை நெஞ்சத்துக்கு கிநருக்கமான உங்களுக்கு எழுதுகின்றேன்.
சென்ற ஆண்டு மலர் தயாரிக்கும்போது ஏற்பட்ட பிரச்சி னைகளை விட, இப்போது மலர் தயாரிக்கும்போது ஏற்பட்ட நிலை வேறுவிதமானது.
மலருக்குத் தேவையான மூலப் பொருட்களின் அசுரத் தனமான விலையேற்றம் சிறிய சஞ்சிகைக் காரர்களின் குரல்

டொமினிக் ஜீவா 97.
வளையைப் பிடித்து நெருக்கி வருகின்றது. அதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் இந்த மலர் வெளிவருகின்றது.
எங்கெங்கெல்லாமோ இருந்து மல்லிகையின் ஆதர வாளர்கள் பெருகி வருகின்றனர்.
அவர்களினது ஆதரவுக்கான காரணத்தை என்னால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. மல்லிகை தனது நெடும்பயணத்திற்கான சரியான திசை வழியில் தெளிவாக நடைபோடுகின்றது என்ற உறுதியான நம்பிக் கையே அவர்களினது ஆதரவுக்கு அடி அத்திவாரமாகும்.
எத்தனை சிரமங்கள் வந்த போதும்-எத்தகைய நெருக் கடிகள் என்னை அலைக்கழித்தாலும்-நான் எனது விசால நோக்கைக் குறுக்கித் தற்காலிக லாபத்திற்காகத்தடம் புரள மாட்டேன் என்பதை வாக்கு மூலமாக இந்தக் கட்டத்தில் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.
தமிழகத்தில் எனது சுற்றுப் பயணத்தின்போது பல நல்ல அனுபவங்களைப் பெற்றேன். சுவையானவை, பல வேறு வகைப்பட்டவை அதில் மல்லிகை சம்பந்தப்பட்ட அனுபவங்கள் தனியானவை.
மல்லிகையைப் பற்றித் தெரியாத தரமான ரஸிகர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்றே சொல்லி விடலாம். சென்ற இடங்களிலெல்லாம் மல்லிகை பற்றியே விசாரித்தனர். படைப்பாளி என்கின்ற முறையில் மாத்திரமல்ல, இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் என்ற வகையிலும் நான் கெளரவித்து வரவேற்கப்பட்டேன் என்பதையும் இங்கு குறிப்பிட வேண் டும்-அப்படி ஒரு வரவேற்பு
ஒரு சஞ்சிகையை இந்த மண்ணில் வேர்விட்டுத் தளைக்கப்பண்ண எடுத்த முயற்சிகள், சிரமங்கள். சோதனை கள் அத்தனையும் தமிழகத்தில் அதன் காரணமாக எனக்குக்
5ー7

Page 50
98. தலைப்பூக்கள்
as trigu) பரிஷ் கலந்த பர்சத்தின் க்ண்த்தால் மறக்கடிக்கப் பட்டு விட்டது,
இந்தக் கடிதத்தை மனத்திறந்து எழுதும்போது கெஞ்சில் ஒருவித நெகிழ்ச்சி ஏற்படுகின்றது.
நேரடியாக உங்களுடன் சம்பாஷிக்கும் ஓர் உணர்வே என் மனதில் நிழலாடுகின்றது.
வருங்காலத்தில் மல்லிகையில் எத்தனையோ புதுப் புதுப் பரிசோதனைகளைச் செய்து இலக்கிய தெஞ்சங்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எனது பேரவா நிறைவேற உங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பும் தேவை.
எனது தனிப்பட்ட திறமை மாத்திரம் 5 Tresor D6übsaj, Luar இலக்கிய நெஞ்சங்களின் பிரதிபலன் கருதாத ஒத்துழைப்பின் காரணமாகவுமேஇந்தப் பதினாலு வருடங்களைபின்னோக்கி ஒடவைக்க முடிந்திருக்கின்றது.
பதினாலு ஆண்டுகள் என்பது அப்படியொன்றும் சொற்ப மான காலமல்ல.
நீங்களும் நானும் மறைந்து விடலாம், ஆன்ால் மல்லிகை தொடர்ந்து வாழும்; வளரும். அதற்கான அத்திவாரத்தைப் போட்டுக் கட்டடத்தை
எழுப்புவதிலேயே எனது பெரும்பகுதிப் பொழுதைக் கழித் திருக்கின்றேன். * ,
இதொன்றும் இலக்கிய நண்பர்களுக்குத் தெரிந்திராத
ཆ.,, இருந்தும் இப்படிச் சொல்வதில் ஒர் ஆசை பயணத் தின் நீண்ட பாதையைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு வித மனத்
திருப்தி.

டொமினிக் ஜீவா 99
இத்தனை காலமும் மல்லிகை செழுமையான உள்ளடக் கத்துடன் வெளிவந்ததந்குரிய பாரிய பொறுப்புக்களில் முக்கியமான பங்கை அதற்கு எழுதி உதவிய நண்பர்கள் வகிக்கின்றனர். ,
அவர்களுக்கு மல்லிகையில் எழுதியவர்கள் என்ற பெரு மையைத் தவிர, வேறொரு ரீதியிலும்-குறிப்பாகப் பொரு னாதார வகையில்-எந்தவித உதவியையும் செய்ய முடிய வில்லை.
இது எனது மனதை அரிக்கும் ஒரு குறை.
இதைக் கூடிய சீக்கிரம் நிவிர்த்திக்க வேண்டும் என்ற பேசவா எனது நெஞ்சில் எப்பொழுதும் நிறைந்துள்ளது.
நான் வெறும் பத்திரிகையாளனல்ல, படைப்பாளி. சிருஷ்டி கர்த்தாவாகவே ஈழத்து இலக்கிய உலகில் காலடி வைத்தேன். அதுவேதான் எனது ஆதார ஸ்தானம்.
இருந்தாலும் நமது நாட்டில் இலக்கியத்துறை வெளி பீட்டுச் சாதனங்கள் வெகு அருந்தலாக இருந்ததன் காரண மாக நானே இத்துறையில் துணிந்து இறங்க வேண்டும். என்ற நிர்ப்பந்தம் என்னை இந்தத் துறைக்குள் பிடித்துத் திணித்து விட்டது.
ஒரே சமயத்தில் இரு போசாட்ட ஆயுதங்களை வைத்துக் கொண்டு களத்தில் நிற்கும் நிலை எனது நிலை
படைப்பாளி என்ற பேனா ஆயுதம் ஒன்று, பத்திரிகை என்ற வெளியீட்டுச் சாதனம் மற்றோர் ஆயுதம்.
இந்த இரண்டு ஆயுதங்களையும் ஒருங்கு சேர வைத்தி ருக்கும் சிருஷ்டியாளர்கள் வெகு சிலரே.
என்னுடன் களத்தில் தோள்கொடுத்து நிற்கும் இலக்கிய நண்பர்களினதும் எனது சொந்தமானதுமான பொது வளர்ச்சியே மல்லிகையின் கடந்த கால வரலாறாகும்,
(14-வது ஆண்டுமலர் 1979)

Page 51
தினசரி வாழ்க்கையே
ஒரு சுமையாக மாறிவிட்டது!
. ;
Y !
சமீப காலமாக இந்த நாட்டு மக்கள் சகலரும் வேறெந்தக் காலத்தையும் விட, மிகப் பார துரமாகப் பரிதவிக்கின்றனர்.
தினசரி வாழ்க்கையே அவர்களுக்கு ஒரு சுமையாக-பளு வாக-பாரம் மிக்கதாக மாறி விட்டது.
வாழ்க்கைச் செலவின் உயர்வு ஒவ்வொரு குடுப்பத்தை பும் தாக்கித் தடுமாற வைத்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களான மா, சீனி, பாண், அரிசி போன்றவைகள் விலையேற்றம் பல குடும்பங் களையே நிலைகுலைய வைத்துவிட்டது.
பல உழைக்கும் குடும்பங்களில் முன்னரே அரைப் பட்டினி, கால் பட்டினி. .
இன்று முழுப் பட்டினி நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.
உணவு முத்திரை விநியோகம் என்பது சீரற்ற காரணத்
தால் திரி சங்கு நிலையில் பல குடும்பங்கள் சிக்கித் தவிக் கின்றன.
முத்திரை கிடைக்குமா. கிடையாதா, கிடைத்த முத்திரையாவது விசாரணைக்கு உட்படாமல் தப்பிப் பிழைக்குமா இல்லையா என்ற அவல நிலையில் உழைப்பு வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்று தினசரி ஏங்கித் தவிக்கின்றன.

டொமினிக் ஜீவா 101.
கிராம சேவகர்கள் இல்லததில் தினசரி கூடும் கூட்டத் தைப் பார்க்கும் போது, இந்த மக்கள் தமது தினசரித் தொழிலுக்குச் சென்று நாலு பணம்" சம்பாதிப்பதா? அல்லது இப்படி வெயிலில் நாட்கணக்காகத் தவம் கிடந்து விரக்தி அடைவதா என நல்தெண்ணம் படைத்த கனவான் கள் மன இரக்கப்படும் நிலைக்கு இன்று அவர்களுடைய நிலை உருவாகி விட்டது.
ஏழை மக்களுக்கு வாழ்க்கையே வேண்டத்தகாத சுமை யாகி வருகின்றது.
"எட்டு றாத்தல் தானியம் தருவோம்’ எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பசித்த வயிறினருக்குத் தர்மோபதேகம் செய்கின்றனர்.
இன்று இந்த நாட்டில் மிக மிக மலிவாகக் கிடைக்கக் கூடிய ஒரே ஒரு பொருள் உபதேசமாகும். பத்திரிகைகளைப் படிக்க எடுத்தால் இந்த உபதேசப் பொன் மொழிகள் வரிக்கு வரி கண்ணில் படுகின்றன.
'ஏழைக்கு இறைவன் சோற்றுப் பருக்கையில் காட்சி தரு வான்’ என்பதும் ஒரு காந்தீய மொழிதான்.
ஆனால் இந்தச் சோற்றுப் பருக்கைப் பொன் மொழி இன்று வசதிக்காகப் பலராலும் மறக்கப்பட்டு விட்டது.
எந்தப் பெரிய தர்மவானுடைய பொன் மொழிகளும் வயிற்றுக்கு ஒரு நேர உணவைத் தர முடியாது.
"கியூ வரிசையை இல்லாமல் ஆக்குவோம்!" எனக் கோஷமெழுப்பி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்று கியூவரிசையையே இல்லாமல் செய்து விட்டனர். மக்களால் அன்றாடப் பாவனைப் பொருட்களை வாங்கக் கூடிய சக்தி அற்றுப்போய் விட்டது. விலைகளோ எக்கச் சக்கம்! கியூ இயல்பாகவே இல்லாமல் ஒழிந்து விட்டது.

Page 52
卫02 தலைப்பூக்கள்
வயிறைப் பொறுத்தவரையும். பசியைப் பொறுத்தளவி லும் அதற்கு இனவாதம், மொழி வெறி, பிரதேசக் கொதிப்பு இல்லை.
தெரிந்த பாஷை வயிற்றுப் பசிக்கு ஆகாரம், உண்ண உணவு வேண்டும் அவ்வளவுதான்.
நமக்குத் தெரிந்த வரையில் எத்தனையோ குழந்தைகள் காலை ஆகாரம் உண்ணாமலே பள்ளிக் கூடத்திற்குச் செல்லு கின்றனர்.
பசித்த வயிறுள்ள மூளைக்குள் கல்வி எப்படி உட்செல்லும்?
பாமர மக்கள் மாத்திரம் இந்தப் பரிதவிப்புக்கு உட்பட வில்லை. அலுவலகங்களில் வேலை பார்க்கும் மத்திய தர் வர்க்கப் புத்தி ஜீவிகளே மலங்க மலங்க விழிக்கின்றனர்.
எடுக்கும் சம்பளம் பத்து நாட்களுக்குக் கூடப் போதாது. கடன்படலாம்-எத்தனை நாட்களுக்கெனக் கடன் படுவது?- இது ஒரு சிக்கல்.
இன்று இந்த நாட்டில், வாழும் பிரச்சினையே-வயிற் றுப் பிரச்சினையே-பெரும் பூதாகாரமாக உருவெடுத் துள்ளது.
அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு நாட்டுக்குத் தேவை தான். மக்களைப் பட்டினி போட்டு அதன் மீது எழுப்பப்படும் திட்டங்களால் யாருக்குப் பயன் கிடைக்கும்?
அபிவிருத்திகள் வெற்றி பெறலாம். ஆனால் மக்கள்மக்களது குடும்பங்கள்-வாழ்க்கையின் எதிர்காலக் கனவுகள் சித்திச் சின்னாபின்னமாகப் போய் விடுமே!
ஆட்சிக்கு வருவதற்காகப் பல வாக்குறுதிகளைத் தந்து அதிகார பீடமேறியவர்கள், மக்களுக்குத் தந்த வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளு கின்றோம்.

டொமினிக் ஜீவா 103
இந்த நாட்டு மக்களுக்கு ஒரு புதிய சுபீட்சமான எதிர் காலம் தேவை. பசி, பட்டினி, வறுமை, வாழ்க்கைச் சுமை யற்ற சுபீட்சமான மனித வாழ்க்கை வேண்டும். அது மக்களினுடைய கரங்களிலேயே தங்கியுள்ளது.
-மார்ச் 1980
*毽
ஆத்ம பூர்வமாகத் துணை நிற்பவர்களுக்கு.
இனிய நெஞ்சங்களே! v ي، حم
ஆண்டுக்கு ஒரு தடவை, மலரின் பக்கங்கள் சிலவற்றை “உங்களுடன் மனம் விட்டுக் கதைப்பதற்காக ஒதுக்கிக்
கொண்டு வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
எனக்கு நீங்களோ அல்லது உங்களுக்கு தானோ அந்நியப்பட்டவர்களல்ல.
இந்தப் பதினாறு ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்திலும் ஏன், அதற்கு முற்பட்ட காலங்களில்கூட, என்னை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இருந்ததில்லை.
விடாப் பிடியாக-அசுரத்தனமாக-நான் மல்லிகைக்கு உழைத்து வருவதைக் காணும் உங்களில் சிலர் அளவிற்கு மீறி என்னிடம் கழிவிரக்கம் காட்ட முன்வந்ததுண்டு. அவை கள் அத்தனையையும் நான் நிராகரிக்கின்றேன்.
என்னிடம் இரக்கம் காட்டுவதல்ல இதற்குச் சரியான பரிகாரம், தயவு செய்து என்னை-என்னுடைய உழைப் பைப்-புரிந்து கொள்ளுங்கள்.
அளவுக்கு மீறிய உழைப்பை-எனது சக்திக்கு மீறிய செயலை-எல்லாம் மல்லிகைக்குப் பசளையாக்கி உரமிட்டு
வளர்த்து வந்துள்ளதை இன்று நின்று நிதானித்துச் சித்

Page 53
104 தலைப்பூக்கள்
திக்கும் பொழுது, வருங்காலத்தில் இன்னும் இன்னும் உ" மிட்டு, உழைபபுத் திறமைகளைப் பயன்படுத்த வேண்டு மேன்ற பேரவா என்னுள் முகிழ்கின்றது.
இதே உழைப்பையும் கரிசனையையும் ஒரு தனி நபர் நிறுவனத்திற்கு அத்திவாரமாக இட்டிருந்தால் இன்று நான் பல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்திருக்க முடியும்.
மிக நெருங்கிய சுற்றத்தவர்கள் மத்தியில் எனக்கிருக்கும் பெயரே வாழத் தெரியாதவன்! என்பதுதான். ( :
சில சமயங்களில் இந்த எழுத்துத்துறையை ஏன் தேர்த் தெடுத்தேன் என மனஞ் சலிப்பதுண்டு. சூழ்நிலைகளும், பொருளாதாரப் பிரச்சினைகளும், குடும்ப நிலைமைகளும் என் மனதை அலைக் கழிப்பதுமுண்டு. அது கூடின நேர மயக்கம்தான். இந்த மன உளைச்சல்களுக்கு நான் இரை யாகி விடுவதில்லை.
எனவே சுதாரித்துக் கொண்டு, இந்த இலக்கியக் கொடுங்களத்தில் மீண்டும் மீண்டும் கால் பதிய என்னை நிரந்தரப்படுத்திக் கெய ள்ளுகின்றேன்.
இதை எல்லாம் மனந்திறந்து ஏன் சொல்லுகின்றேன். என்றால் என்னைப் புரிந்து கொண்டவர்கள் எனது மன உணர்வுகளைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள வேண்டு என்பதற்காகவே.
எனக்கு ஏற்பட்ட சஞ்சிகை அனுபவங்கள் பல விசித் திரமானவை. நினைக்கும் தோறும், நினைத்து அடி ம: ச் சிந்தனையில் அவைகளை அசை போட்டுப் பார்க்கும் போதும் பல ஆச்சரியமானவை; இனிமையானவை!
நோய்க் கூறான மனக்கோளாறு படிந்த ஒரு சிலர்முன்னர் மல்லிகைத் தளத்தைப் பாவித்துத் தம்மை இலக்கிய உலகில் இருப்புக் காட்டிக் கொண்ட அந்தச் சிலர்- பல கட்டங்களில் மல்லிகையை அவதூறு செய்வதாக எண்ணி

டொமினிக் ஜீவா os suv vis
இலக்கிய உலகை நச்சுப்படுத்த-அசுத்தப்படுத்த-முனைந்த திருக்கின்றனர்.
காலம் இந்த அவதூறுக்காரர்களான மனநோய்க். கூட்டத்தை அழுக்குக் கூடைக்குள் எறிந்துவிடும் என்பது எனக்குத் திண்ணமாகத் தெரியும்.
மல்லிகை வாசகர்களான உங்களில் அநேகரை எனக்கு. நேரடியாகவே தெரியும். இந்த உண்மையை நான் பெரும் பேறாகவே கருதுகின்றேன். ஏனெனில் எழுதுவது யாரோ அச்சடிப்பது எவரோ, விற்பனவு எங்கேயோ என்றில்லாமல் மல்லிகையின் சகல நோக்கமும் ப்ோக்கும் உங்களை நம்பித் தான் என்ற பெரும் உண்மை உங்களைப் போலவே எனக்கும் நன்கு தெரியும்.
எனவேதான் வருடா வருடம் உங்களுடன் இந்தப் பக்கங் களின் மூலம் நேரடியாகச் சம்பாஷிக்க விரும்புகின்றேன்.
அது நல்ல பயனைத் தந்தும் வருகிறது. இலக்கிய உலகில் பலர் வந்ததுண்டு, போனதுண்டு.
யார் இந்த இலக்கியக் களத்தில் நின்று நிலைத்துப் பெயர் போடப் போகின்றனர் என்பதுதான் எதிர்காலக் கேள்வி.
இந்த மண்ணில் முழு நேர எழுத்தாளனாக வாழ்வதற்கு ஒருவனுக்கு அரசுத்தனமான மனத்துணிச்சல் வேண்டும்; எழுத்தாள வாழ்க்கையுடன் சஞ்சிகை ஆசிரியனாகப் பரிண மிப்பதற்கோ துணிச்சலுடன் மகா தன்னம்பிக்கையும் வேண்டும் ,
இந்தத் தன்னம்பிக்கையும் அசுரத் துணிச்சலும் எனது; பிறவிக் குணாம்சங்கள். இவை இல்லாது போனால் இந்தத் துறைக்கே நான் வந்திருக்கமாட்டேன். வந்திருந்தாலும் இந்தத் துறையில் எதிர்ப்பட்டு, அலைக்கழித்த பிரச்சினை

Page 54
*L06 தலைப்பூக்கள்
களைக் கண்டு, மனஞ் சோர்ந்து அல்லது விரக்திப்பட்டு ஒடிப்போயிருப்பேன். s
இந்தத் துணிச்சல்தான் என்னை "உருவாக்கி, எனது பொதுவான இயல்புகளை இத்தனை காலமும் நெறிப்படுத்தி வந்துள்ளது.
பலர் இலக்கிய உலகில் உபதேசம் செய்யும் உபதேசி DTissTras உருமாறி வருவதை நீங்கள் வெகு சகஜமாக இன்று பார்க்க முடியும். இவர்கள் என்ன உபதேசிக்கிறார்கள் என்பதையல்ல என்ன செய்கிறார்கள், குறிப்பாக இலக்கிய உலகில் இக்கட்டான நேரத்தில் என்னத்தைச் செய்கிறா? கள் என்பதைத் தயவு செய்து ஊன்றி அவதானியுங்கள். காணும் இப்படித்தான் இவர்களைப் பார்க்க முயலுகின் றேன். அதை அவதானித்துக் கணித்த பின்னரே அவர் *ளைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வாருங்கள்.
ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னைப் பூரணமாக ஒப்புக் கொடுத்தவன் அப்படியொன்றும் பர பரப்புக் காட்டமாட்டான்: பயந்துவிடவும் மாட்டான்.
உரக்கக் கூச்சல் போடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏன்ெனில் அவைகள் வெறுங் குடங்கள்.
மல்லிகைக்காகத் தினசரி செய்யும் வேலைகளை நான் ஒரு வேள்வியாகக் கருதியே கடமையாற்றுகின்றேன்.
உடனடியாகத் தாக்கத்தைப் பற்றி எனக்கு அக்கறை -யில்லை. நீண்ட நெடுங்காலம் நிலைத்திருந்து பயன் விளை விக்க வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.
மல்லிகையைப் பொறுத்தவரை உடனடி லாபம் எனக்கு முக்கியமல்ல. நீண்ட காலத்திட்டம் எப்பொழுதும் என்னிடம் உண்டு. இந்த நீண்ட கால நடைமுறைத் திட்டத்தில் *ண்பர்களை-எந்தவிதமான சில்லறை ஆசைகளுக்கும்

டொமினிக் ஜீவா 07
அப்பாற்பட்ட - இலக்கிய நண்பர்களைத் தேடுவதிலேயே எனது தேடல் முயற்சி இன்று ஆரம்பித்துள்ளது.
இந்தப் பதினாறு ஆண்டுகளுக்குள் எனக்கு நட்பான பல புதிய முகங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் மனதில் எண்ணிப் பார்க்கிறேன்.
இந்த மண்ணில் வேறெந்த எழுத்தாளர்களுக்குமே கிடைத்திருக்க முடியாத அருமையான இலக்கிய நெஞ்சங்கள் என் நட்புக் குரியவர்களாகி இருக்கின்றனர். அவர்களின் தாக்கம் என்னில் பிரதிபலித்த நட்புறவுச் சம்பவங்கள் பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதலாம் என்பது எனது எண்ணம்.
மல்லிகையைத் தொடர்ந்து படித்துவரும் உங்களில் அநேகர் ஒரு சில நிமிடங்களைக் கூட அதற்காகச் செல வழிப்பதில்லை என்ற மனக்குறை எனக்கு நீண்ட கால மாகவே உண்டு. நீங்கள் மனவிருப்புடன் எழுதும் கடிதக் கருத்துக்களைத்தான் எனது உழைப்புக்குத் தரும் தகுந்த கெளரவமாகக் கருதுபவன், நான் எனவே குறை நிறை களை என்னுடன் பகிர்ந்துகொள்ள முன் வருவது முக்கியம் என நீங்கள் உணர்ந்து கொள்வீர்களானால் தயவுசெய்து எழுதுங்கள், படைப்பாளிகள் கருத்துக்களைவிட, வாசகர் களும் அபிமானிகளுமான உங்களது கருத்துக்களை நான் மிகவும் வேண்டி நிற்கின்றேன்.
எனவே தொடர்ந்து முன் செல்ல ஆயத்தப்படுவோம்!
16-வது ஆண்டு மலர்-1988

Page 55
பேராசிரியர் வானமாமலை
பேராசிரியர் வானமாமலை அவர்களினது மறைவைக் கேட்டு நமது நாட்டிலுள்ள ஆய்வாளர்களில் பலர், இலக்கிய நெஞ்சமுள்ள அநேகர் அதிர்ச்சியும் ஆற்றொணாச் சோகமும் அடைந்துள்ளனர்.
எமக்கு அதிர்ச்சி மாத்திரமல்ல, இந்தப் பாரிய இழப் பின் சோகத் தாக்கத்தை ஏற்று செயலற்றுப் போய் முடங்கி விட்டோம்.
மல்லிகைக்கும், பொதுவாக இலங்கை முற்போக்கு இலக்கியவாதிகளுக்கும் விஞ்ஞான ரீதியான நவீன ஆய் வாள்ர்களுக்கும் ரொம்பவு நெருக்கமானவர். இதயப் பிணைப்புடன் கூடிய தொடர்பு கொண்டிருந்தவர் பேரா சிரியர் அவர்கள்.
கருத்து, கொள்கை, கோட்பாடு வழி முறைகளில் மிக நெருக்கமாக இருந்தவர் மாத்திரமல்ல, நட்புச் செறிந்த இதய உணர்வுகள் சங்கமிக்கப்பட்ட, நேச உள்ளங்களின் தோழாக, - ஒரு சகோதரனாக - ஆலோசனைகள் கூறும் மதி நுட்பம் சொறிந்த ஆசானாக அவர் பல காலமாக விளங்கி வந்துள்ளார். வேறெவரையும் விட நமது நெஞ்சங் களுக்கு மிக மிக நெருக்கமானவராகவே அவர் கடைசி காலம் வரை இருந்து வந்துள்ளார்.
அவரது அறுபதாம் ஆண்டு மணி விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்ட காலத்தில் அவரது சேவைகளைப் பாராட்டி, மகிழ்ச்சியை பல கட்டங்களில் தெரிவித்து வந்தி ருக்கின்றோம்.

டொமினிக் ஜீவா 109
அட்டையில் அவரது உருவத்தைப் பதித்து அவரைப் பற்றிச் சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். அவரது சலியாத உழைப்பின் மேன்மையையும் விஞ்ஞானப் பார்வை வெளிச்சத்தில் அவர் தமிழுக்கும், தமிழ்ப் பழம் பெரும் இலக் கியங்களுக்கும் நாட்டுப் பாடல்களுக்கும் செய்த ஆக்கப் பணிகளை வாழ்த்தியுள்ளோம். அவரது பணிகள் வார்த்தை களுக்குள் அடங்காதவை
ஆரோக்கியமான எதிர்கால இலக்கியத் தலைமுறை அதைச் சரிவர இனங் கண்டு. தக்க மதிப்புக் கொடுத்து, சரியான வழி முறைகளில் பயன்படுத்தும் என மனப் பூர்வ மாக நம்புகின்றோம்.
இந்த மாதம் அவர் இலங்கைக்கு வருவதற்காகச் சகல விதமான ஆயத்தங்களையும் செய்திருந்தார். ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியிருந்தன.
ஆனால் அவர் இங்கு வராமலே போய்விட்டார்!
எழுத்தில்-கடிதங்களில்-மாத்திரம் சிந்தனை உணர்வு பூர்வமாக ஒன்றியிருந்த பல இலக்கிய நெஞ்சங்களையெல் லாம் நேரில் சந்தித்து அளவளாவ வேண்டுமென ரொம்பவும் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தார். பல ஆண்டுகளாக மனதில் பதித்து வைத்திருந்த பல இனிய நெஞ்சங்களை நேரில் சம்பாஷித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமெனப் பெரு விருப்புக் கொண்டிருந்தார்.
தனது அந்த விருப்பங்கள் அத்தனையும் நிறைவேறர மலே அவர் போய்ச் சேர்ந்து விட்டார்.
இங்கு வந்து இங்குள்ள ஆராய்ச்சியாளர்களும் பல்கலைக் கழங்களும் செய்யும் ஆய்வுப் பணிகளை நேரில் அறிந்து அவற்றில் இருந்து தான் பலவற்றைக் கற்றுத் தெளிய வேண்டுமென அவாவுற்றிருந்தார். இங்கு வந்து படைப் பாளிகளை, கலைஞர்களை, ஆய்வாளர்களை, நாட்டுப்

Page 56
110 தலைப்பூக்கள்.
பாடல்களை சேகரிக்கும் ஆர்வலர்களையெல்லாம் சந்தித்து
அவர்களுடன் உரையாடி மகிழ வேண்டுமெனப் பேராவல்
பட்டுக் கொண்டிருந்தார்.
அந்த ஆவல் 2-2-1980ல் அடங்கிப்போய் விட்டது.
அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பல நண்பர்களுக்கு அவரது மறைவுச் செய்திதான் கிடைக்கக்கூடியதாக இருந்தது.
இந்திய எளிமையின் இலக்கியச் சின்னமாகத் திகழ்ந்த பேராசிரியர் நா. வா. அவர்கள் அதே இந்திய அறிவு கூர்மையின் பிரதிநிதியாகவும் திகழ்ந்தார்.
அவரது மறைவுக்கு அதுதாபமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஓர் அஞ்சலிக் கூட்டத்தை நடத்தியது. நாம் அறிந்தவரையில் பேராசிரியர் அவர்களுக்கு முதன் முதலில் அஞ்சலிக் கூட்டம் நடத்திய முதல் சர்வகலாசாலை நமது பல்கலைக் கழகம்தான் என்பதில் நமது நாடே பெருமைப்பட நியாயமுண்டு.
தகமை நிறைந்த அறிவை அது எங்கிருந்து வந்தாலும் மதிக்கும் நமது ஈழத்துப் பாரிய பண்பு இதிலிருந்து புலனா கின்றது.
அந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு உப வேந்தர் அவர்கள் தலைமை தாங்கி இரங்கலுசை நிகழ்த்தினார்கள். disé06), பீடாதிபதி அவரது இலக்கியப் பணிகள் பற்றிப் பேருரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் அவரது ஆய்வுப் பணிகள் பற்றி ஆய்வுரை ஆற்றினார்.
அத்துடன் வெளியே முற்போக்கு எழுத்தாளர் சங்க. யாழ் கிளை சகல இலக்கிய நண்பர்களையும் ஒருங்கிணைத்து இரங்கல் கூட்டமொன்றை நடத்தியது.
ஆழ்ந்த மனச் சோகங்கள் தம்மைத் தொடர்ந்து ᏊlᏧuᏗ லற்றதாக்கி விடக் கூடாது. பேராசிரியர் அவர்களது வாழ்க்

டொமினிக் ஜீவா 11l,
கையும் பணிகளும் நமக்குப் புத்துக்கமும் புது நெறியும் காட்டுகின்றன்.
மனுக் குலத்தின் உய்வுக்காக அவர் காட்டிய வழிகளில் செல்வதே சரியென்றால் அந்தப் பாதையில் தடம் புரளாமல் செல்வதே நமது இலக்கிய சபதமாகும். ・
பொங்கல் வலர்-1980,
வகுங் காலத்தைச் சிருஷ்டிக்கும் போராட்டம்
இது ஒர் ஆசிரியத் தலையங்கமல்ல. s
கடந்த பல ஆண்டுகளாக மல்லிகையின் ஆசிரியத் தலையங்கங்கள் இந்த நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி மிகத் தெளிவானதும் ஆழமானதும் ஆக்கபூர்வமானது மான ஆலோசனைகளை முன் வைத்து தனது களத்தில் போராடி வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
இதற்கு மாறாக இந்த மலரில் ஆசிரியத் தலையங்கத் திற்குப் பதிலாக இந்தப் பகிரங்கக் கடிதத்தை வரைய முனைகின்றேன்.
இந்தத் திறந்த லிகிதத்தை நீங்கள் யாராக இருந்தா லும்-எந்தக் கருத்துள்ளவர்களாக இருந்த போதிலும்திறந்த மனதுடன் படித்துப் பார்க்க வேண்டும்.
உங்களில் பலரை எனக்கு நேர் முகமாகத் தெரியாது. அதே போல என்னையும் உங்களில் பலருக்கு முகப் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதே சமயம் என்னைத் தெரிந்து வைத்திருக்கக் கூடியவர்களான உங்களில் பலரை எனக்கு,

Page 57
தலைப்பூக்கள் با12
இருந்தும் இந்தக் கடிதத்தை எழுகின்றேன்.
ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமான காலம் என்பது சாதாரண சங்கதியல்ல. அதிலும், ஈழத்து இலக்கிய சஞ்சிகைப் போராட்டத்தில் இந்த ஆண்டுக் காலங்கள் சுலப மானவையல்ல, ஐம்பது ஆண்டுக் காலப் பாய்ச்சலை ஐந்து
ஆண்டுகளுக்குள் பாய்ந்து முன்னேற வேண்டிய இன்றைய
இலக்கியத் தேவை நிலை, எனவே, அசுரத்தனமாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தச் சூழல். ஒவ்வொரு ஆண்டு மல்ல, ஒவ்வொரு நாட்களுமே போராட்டத்தின் மூலம் தான்
முன்னேற வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு. ஏனெனில் ஆட்டுக்குட்டி கடித்துவிட்ட கருவேப்பிலைக்கன்றைப் பேணிப் பாதுகாத்து வளர்த்துப் பயனெடுக்கும் தோட்டக்காரனின்
VN
கவனிப்பு நிலைதான் என்னுடைய உழைப்பும்.
உண்மையைச் சொன்னால் சில சமயங்களில் பொருளா தாரப் பிரச்சினையால் நெஞ்சு அலைக்கழிக்கப் பட்டதுண்டு. எரிச்சலடைந்த சந்தர்ப்பங்கள் ஏராளம்,
இவை அத்தனையும் இன்று என்னிடமில்லை. நான் இயல்பாகவே முன்னமொரு காலத்தில் வரித்துக் கொண்ட இலட்சியத்தின் பிசகற்ற தன்மைதான் என்னைச் சரியான திசைவழியில் நடத்தி வந்திருக்கின்றது. அந்த வெளிச்சத்தில் நான் நடை போடப் பயின்ற பொழுது என் மன அடி ஆழத்தில் அழுந்திக் கிடந்த தன்னம்பிக்கை -எனக்குக் கைதந்து உதவி வருகிறது.
பிரச்சினைகளை நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ள வும், அதைத் நீர்க்கும் மார்க்கத்தை எண்ணிச் சீராகச் சிந்தித்துச் செயல்படவும் அந்த நோக்குத்தான் எனக்குக் கற்றுத் தந்தது.
அனைத்து மக்களின் சகாப்தம் இது.
இது உங்களுக்குத் தெரியும்.

டொமினிக் ஜீவா 113
எனவே அந்த மக்களை நம்பி-அவர்களினது நல்லெண் *ணத்தில் நம்பிக்கை கொண்டு-இந்த இலக்கிய இயக் யாத்திரையை ஆரம்பித்து நடத்தி வருகின்றேன்.
படைப்பாக்கல் அறிவுத் துறைக்குக் கடந்த காலங்களில் விடப்பட்ட சவாலை-இந்த நாட்டில் சஞ்சிகைகளை வெற்றி கரமாக நடத்த முடியாது-என்ற தோல்வி மனச் சித்தாந்தங் களை முறியடிக்க முனைந்நு நின்று அதன் முகத்துக்கு நேரே சவால் விடப் பழக்கப் பட்டதினால் தனிப் பலம் பெற்றுக் கொண்ட அனுபவம் வாய்க்கப் பெற்றவன் நான்.
நெருக்கடி மிக்க வாழ்க்கை முறைதான் எனது குணப் பண்புகளை உருவாக்கி வந்திருக்கின்றது என்ற உண்மையை இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கின்றேன்.
கலாசாரத் துறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வசதிக் காரக் கூட்டம் அறிவு சாகஸங்களைக் காட்டி என்னைத் திகைக்க வைத்துத் திசை மாற்றிவிட முனைந்து செயல்பட்ட சம்பவங்களும் ஆரம்ப காலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங் களாகும்.
இவைகளின் ஆளுமையில் நான் சிக்குப்படாமல் மிக மிக நிதானமாகவே எனது கடைமைகளைச் செய்து வந்திருக் கின்றேன்:
தமிழ் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்காக மாத்திரம் மல்லிகை போராடவில்லை. மல்லிகை தேசிய இலக்கிய ஒருமைப்பாட்டுக்காகப் பெரும் பொறுப்பெடுத்து இயங்கி வந்துள்ளது.
தாய் மொழியை நேசிக்கும் காரணத்தால் சகோதரப் பாஷையைக் கனம் பண்ணும் சிங்கள நண்பர்கள் பல சந்தா கட்டி மல்லிகையைப் படிப்பதுடன் மல்லிகையின் சேவையை மனதாரப் பாராட்டித் தமிழில் எழுதும் கடிதங்கள்
த-8

Page 58
114
எனது மன உளைச்சலுக்குத் தகுந்த ஒளஷதமாகச் சில வேளைகளில் பயன்பட்டு வந்துள்ளது. . ν
தலைப்பூக்கள்
பல சிங்கள நண்பர்கள்-புத்தபிக்குக்கள்-தமிழ்ப் படிக்கும் ஆர்வத்தையும் தமிழை நேசிக்கும் மனப் பான்மையையும் எம்மிடம் வளர்க்கப் பெரிதும் பாடுபட்டுள்ளது மல்லிகைதான் எனத் தமிழிலேயே எமக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அத் தகைய கடிதங்கள் மல்லிகையின் தேசிய இலக்கிய சேவைக் நற்சாட்சிப் பத்திரங்களாக அமைந்துள்ளன.
மல்லிகையின் வளர்ச்சி வரலாறு வெறும் நிகழ்ச்சிக் குறிப்புகளல்ல. அது நேசமிக்க இதயங்களின் பிரதிபலன் கருதாத உழைப்புச் சக்தியின் வரலாறாகவும் திகழுகின்றது.
இந்தப் பன்னிரண்டு ஆண்டு வரலாற்றின் கம்பீரமான சாதனைகளின் உட்சாரத்தை விளக்கமாகச் சொல்வதானால் இதன் தாக்கத்தையும் இதனால் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியை யும் முதலில் நாம் தொகுத்து ஆராய்ந்து வெளிக்கொணர வேண்டும்.
இதைச் சஞ்சிகையின் ஆசிரியர் என்கின்ற வகையில் நான் செய்வதைவிட, பொறுப்புள்ள விமரிசகர்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்தால் அது நிதானமான கணிப் பீடாக அமையும் என்பது எனது அபிப்பிராயமாகும்.
அழுத்தமான மனப்பதிவுகளை ஏற்படுத்தும் எழுத்துக் களை உருவாக்குவதே மல்லிகையின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. அதை எந்தளவுக்கு இதுவரை சாதித்துள்ளது என்பதும் ஆராய்வுக்குள்ள சங்கதியாகும்.
நமது ஈழத்துப் பழம்பெரும் இலக்கிய நண்பர்களில் பலர்- அத்துடன் ஆர்வமுள்ள இளைஞர்கள் கூட-இலக்கியம் பற்றித் தத்துவார்த்த-கோட்பாடு ரீதியான- சித்தாந்தப் போக்கான பிரசங்கங்களைப் பண்ணுகின்றனரே தவிர, எழுதுவதில்லை. அதைச் செயல் படுத்துவதில்லை. அதற் காகப் போராடுவதில்லை.

டோமினிக் ஜீவா 卫互夺
இதைக் கணக்கிலெடுத்து கூடியவரை பலரை எழுதத் தூண்டி, உற்சாகப்படுத்தி அவர்களிடமிருந்து அவர்கள் அந்தக் கட்டத்தில் செய்யவேண்டிய இலக்கிய வேலைகளை ஒரளவு செய்து முடிக்க உதவியிருக்கின்றது என்ற நியாய மான பெருமை அதற்குண்டு.
வசைப் பாட்டில் வசந்த கோகிலங்களாகத் திகழ்ந்த திருக் கூட்டத்தின் தனிப் பிரதிநிதிகளில் சிலர், மல்லிகை யின் மீது ஏற்பட்ட எரிச்சல் காரணமாக-அது ஒழுங்காக வெளிவருவதைச் சகிக்கமாட்டாத காழ்ப்புணர்ச்சியின் உந்து தலினால்-என்னைத் தனிப்பட்ட முறையில் வசை பாடிய சம்பவங்களும் இந்த இடைக் கால ஆண்டுகளில் நடைபெற்ற
உண்மைகள்தான்.
மல்லிகை சம்பந்தமாகவும் என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையிலும் நான் யார் மீதும் குரோதம் பாராட்டுபவனல்ல. மிகப் பெரிய நோக்கத்துக்காகப் போராடிக் கொண்டிருகின்றேன் என மனப்பூர்வமாக நம்பிச் செயல்பட்டு வரும் என்னைப் போன்றவர்கள் இப்படியான சில்லுண்டித் தனங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்து கொண்டவன், நான். ஆகவே எனது ஆக்க சக்தியை வீண் விரயம் செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை.
செயலற்ற பார்வையாளர்களை உருவாக்குவது மல்லிகையின் நோக்கமல்ல. புதிய சகாப்தத்தைவென்றெ டுக்க விரும்பும் கூர்மையான மனச்சாட்சியுள்ளவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே அதனது இலக்கிய பணி என்பதை மிகத் துல்லியமாக இந்தக் கட்டத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
12-வது ஆண்டு மலர்-1976"

Page 59
நீதிச் சுதந்திரத்திற்கு ஆபத்து!
சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு மாநகரில் இத்த நாட்டில் இதுவரையுமே தடந்திராத பாரதூரமான சம்பவ மொன்று நடைபெற்று முடிந்தது.
இந்தத் தேசத்தின் மிக உயர்ந்த நீதிபீடத்தை அலங் கரிப்பவர்களான உயர்நீதி மன்ற நீதியரசர்களின் வீட்டுக்கு முன்னால் திட்டமிட்டுக் காடையர் கோஷ்டியொன்று வாக னங்களில் வந்து உயர் நீதி மன்ற நீதியரசர்களின் தீர்ப்பை எதிர்த்துக் கூச்சல் போட்டதுடன் சுலோக அட்டைகளையும் தாங்கி வந்து அச்சுறுத்தி விட்டுக் கலைந்து சென்றுள்ளனர்.
இப்படு மோசமான நீதிக்கான பயமுறுத்தல் செயலை நாம் மிக மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் சம்பவத்தை இந்த நாட்டின் நீதித் துறைக்கே விடுக்கப்பட்ட சவாலாக ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை-அவர் கள் யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் கூட்விசாரிப்பதுடன் குற்றவாளிகளை அம்பலப்படுத்தி அவர் களுக்குத் தகுந்த தண்டனை தரவேண்டும் என அரசாங் நத்தைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
கடந்த மார்ச் 8- திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரி னால் தமக்கிழைக்கப்பட்ட அநீதிச் செயலுக்கு மனித உரிமை மீறல் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தரர் பூணூரீமதி விவியன் குணவர்த்தனா.
அக் குற்றச் சாட்டில் ஒன்றை ஏற்றுக் கொண்ட உயர் நீதி மன்ற நீதியரசர்கள் விவியனுக்கு நஷ்டயீடு வழங்கு மாறு தீர்ப்பளித்தனர்.

டொமினிக் ஜீவா 117
இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கும் தோரணையில்தான் மேற்படி கோஷ்டியினர் வாகனங்களில் வந்து நீதியரசர் வீடு களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
சமாதானத்தைப் பயமுறுத்தும் சம்பவங்கள் பல நடந் துள்ளன. குண்டர் கோஷ்டியினர் ஆட்டைக் கடித்து மாட் டைக் கடித்துக் கடைசியில் இன்று நீதித் துறையையே வாய் வைத்துக் கடிக்க ஆரம்பித்து விட்டனர்.
வேலை நிறுத்தப் போராட்ட ஆதரவாளர்களுக்காக ஆதரவு தெரிவித்து இயக்கம் நடத்திய தோழர் சோமபாலா கொல்லப்பட்டார். அமைதி மறியல் போராட்டங்கள் குண் டர்கள் தாக்குதல்களுக்கு இலக்காயின.
யாழ்ப்பாண நகரமே இரவோடிரவாகத் தீக்கிரையாக்கப் பட்டது. தென்கிழக்காசியாவில் மிகச் சிறந்த நூல் நிலையம் எனப் பாராட்டப் பெற்ற யாழ், பொதுசன நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. இதைச் செய்தவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட காடைக் கூட்டத்தினர் என பின்னர் அறியப் பட்டது.
இன்னும் பல்வேறு காடைத்தனங்கள் கட்டவிழ்த்து முடுக்கி விடப்பட்டன. இன்க் கலவரங்கள் என்ற பெயரில் கொள்ள்ை கொலைகளைச் செய்து குவித்தனர் திட்டமிட்ட குண்டர்கள்.
எழுத்தாளரும் அறிஞருமான சரத் சந்திரா பகிரங்கமாக மேடையில் இருந்து கீழே இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட் டார். இதற்குப் பின்னணி வகித்தவர்கள் ரெளடிக் கூட்டத் தினரே.
இதற்கெல்லாம் உச்சக் கட்டமாக இன்று உயர் நீதி மன்ற நீதியரசர்கள் தத்தமது வீடுகளிலேயே பயமுறுத்கம் பட்டுள்ளனர்,

Page 60
r' '.
118' தலைப்பூக்கள்
நீதித் துறையில் அதி உன்நத பதவிகளை வகிக்கும் இந்த நாட்டின் நீதியரசர்களுக்கே குண்டர்களினால் இப்படி பயமுறுத்தல்கள் செய்யப்படுகின்றதென்றால், சாதாரண மக்களின் தினசரி நிலைபாடுகள் எப்படியிருக்கும் என்பதைச் சுலபமாகவே நாம் புரிந்து கொண்டு விடலாம்.
ஜனநாயகத்தையும் மனித சுபீட்சத்தையும் சமாதான மான ஒரு தேசத்தையும் விரும்பும் சகல மக்களும் எந்தவித வேறுபாடுகளுமற்று நீதித் துறைக்கு விடப்பட்டுள்ள இந்தப் பகிரங்கச் சவாலை முறியடிக்கக் குரல் கொடுக்க வேண்டும்.
சகல உழைக்கும் மக்களின் ஐக்கியம்தான் இன்று நாட் டுக்கு முக்கியம்.
இந்த நாட்டில் வாழும் மக்கள் இன்று கிலி கொண்டு வாழுகின்றனர். அடுத்த நிமிஷம் என்ன நடக்குமோ என்ற பீதி ஒவ்வொரு குடிமக்கள் மனதிலும் 'இன்று நிறைந்துள் ளது. முன்னர் நாட்டில் நிலவியிருந்த அமைதியும் நிம்மதியும் இன்று அற்றுப் போய்விட்டது. இதை இன்று இந்த நாட் டில் வாழும் தேசத்தை நேசிக்கும் மக்கள் மனந் திறந்ே சொல்லுகின்றனர்,
இந்தக் குழப்பங்களையும் பீதியையும் மன வெருட்சி யையும் அகற்றி ஒரு நல்ல சூழ்நிலையைத் தோற்றுவிப் பதற்கு சகல ஜனநாயகச் சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்பதே இன்று அவசர முக்கியம்,
Grsuf 1979

iii.
மார்க்ஸ் என்றொரு மானுடன் தோன்றினான்
1883 ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் நாள் பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு, நமது காலத்தின் மாபெரும் சிந்தனையாளர், தாம் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்!" என லண்டன் ஹைகேட் கல்லறையில் உலக சகாப்தத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியபோது, அவரது ஆருயிர்த் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகில் இதுவரை தோன்றிய மேதைகளும் ஞானிகளும் உலகை எப்படிச் சீர்திருத்திச் செப்பனிடுவது என்பதைப் பற்றியே போதித்து வந்துள்ளனர். ஆனால் மேதை மார்க்ஸ் ஒருவர்தான் உலகை எப்படி முற்று முழுதாக மாற்றி அமைக்க முடியும் என்பதைப் பற்றிய தத்துவத்தை உலகிற்கு அளித்து சென்றுள்ளார்.
அதுதான் மார்க்ஸியம்,
இது வெறும் கற்பனா தத்துவமல்ல. இதை நடை முறைப்படுத்த இந்த மண்ணிலேயே இயலும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் லெனின்.
1917 ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி இதற்கு ஒர் உதாரணமாகும்.
மார்க்ஸின் வாழ்க்கை முழுவதுமே போராட்டம் நிறைந்தவையாகும். m
எல்லாத் தத்துவங்களும் தோன்றியதை விட, மார்க்ளி யம் தோன்றியதானது சமூக சிந்தனையின் வரலாற்றில் ஒரு புரட்சிகர மாற்றமாகும்.

Page 61
20 தலைப்பூக்கள்
இன்று மார்க்ஸியத்தை ஏற்றுக் கொள்ளாதஅறிஞர்கள், கலைஞர்கள் மக்களிடம் வேர் பாய்ந்தவர்களாக இருக்கவே முடியாது என்ற, நிலை தோன்றியுள்ளது. மார்க்ஸியத்தை நிராகரிப்பவர்கள் கூட மார்க்ஸியத்தைப் படித்து விட்டுத் தான் அதை எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக் கப்பட்டுள்ளனர்.
மார்க்ஸியம் இன்று பலராலும் பல கூட்டங்களிலும் பல்வேறு சூழ்நிலையில் பேசப்பட்டு வரும் தத்துவமாகும்.
இதில் விசித்திரமென்னவென்றால் மார்க்ஸிஸத்தைக் கொச்சைப்படுத்தும் கும்பல் சகல துறைகளிலும் இன்று கால் பதிக்க வந்துள்ளது.
உலகத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்த மக்கள் குலமேதை அவன். அந்த ஞானாசிரியனுக்குச் சரியான வலக் கைத் தோழனாகத் திகழ்ந்தார் ஏங்கல்ஸ்.
மார்க்ஸின் தத்துவமும் கருத்துக்களும் முடிவுகளும் காலாவதியாகி விட்டன என மேலைத் தேசத்துப் புத்திஜீவி களில் சிலர் இன்று நிறுவ முன்வந்துள்ளனர்.
அவர்கள் அக் கருத்துக்களை நிறுவ பல்வேறு வழிகளி லும் முயன்று வரும் அதே வேளைகளில் மார்க்ஸின் தத்துவக் கோட்பாடு அரசியல், பொருளாதார, கலாசார இன்னும் பல்வேறு துறைகளில் தனது வீரியம் நிரம்பிய வீச்சைச் செலுத்தி ஆளுமை பெற்று வருவதை இன்றைய உலக நடப்புக்களை உற்றுணர்ந்தவர்கள் புரிந்து கொள்ளு கின்றனர்.
முதலாளித்துவ சமூக அமைப்பின் சங்கிலிக் கண்ணி களில் பல இன்று பொடிப் பொடியாக இற்று விழுவதை ஆப் பிரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் காணக் கூடியதாக இருக்கின்றது.

டொமினிக் ஜீவா 2.
ليعة
அரசியலில் பொருளாதாரத்தில்தான் இப்படியென்றால் கலை இலக்கியத் துறையில் ஐரோப்பிய இலக்கியத்தில் மாாக்ஸின் தாக்கத்தை பரவலாகக் காணமுடிகிறது.
நமது தமிழ் இலக்கியத்தில் வேறெந்தக் காலங்களை விட, மார்க்ஸியப் பார்வை இலக்கியத்தின் சகல துறைகளி லும் இன்று ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. தமிழில் இந்த மார்க்ஸிஸ் விஞ்ஞான ஆய்வுப் பார்வையைத் தாங்கிக் கொள்ளாத ஒரு சிறு கூட்டத்தினர் மார்க்ஸியப் பார்வையை நிராகரிப்பதற்கென்றே புதிய மார் ஸியம் போதிக்க முற்பட்டு முனைகின்றனர்.
இன்று இவர்கள் மக்கள் மத்தியிலிருந்து தனிமைப் பட்டுப்போய் நின்று கூப்பாடு போடுகின்றனரே தவிர. மார்க்ஸின் தத்துவக் கோட்பாட்டை அடிச்சரடாகக் கொண்ட எதார்த்தவாத சோஷலிசக் கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்வதற்குத் தானும் முற்பட்டு உழைப்ப தில்லை.
மார்க்ஸ் நமக்குத் தந்துவிட்டுச் சென்ற அந்தத் தத்துவ ஒளியின் வெளிச்சத்திலே நடைபயிலும் போது அந்தத் தத்துவ ஒளியே நமக்கெல்லாம் புதிய பலத்தைத் தந்துதவு கிறது.
(-மார்ச் 1983),

Page 62
வெல்லற்கரிய வலிமை உழைப்பிலிருந்துதான் பிறக்க முடியும்
ஆண்டுக்கு ஒருதடவை உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்ப ஃமாக இந்தத் தலையங்கப் பகுதியை பல காலமாக நான்
பாவித்து வருவது உங்களுக்குத் தெரியும்.
மனந் திறந்து இந்தப் பகுதியில் நான் கன காலமாக உரையாடி வந்துள்ளேன். இன்றும் உங்களுடன் நேரடி யாகவே பேச விரும்புகின்றேன்.
சென்ற 17-வது மலர் வெளிவந்து ஓராண்டாகி விட்டது. இது 18-வது ஆண்டு மலர். இந்த ஒரு வருடத்தில் இலக் கிய உலகில் எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறி விட்டன. அறுபதுகளுக்குப் பின் இந்த எண்பதில்தாள் நிறைய நிறையப் படைப்பு இலக்கியங்கள் நூலுருவப் பெற்று வருதைக் காண முடிகின்றது. இது இலக்கிய ஆரோக்கியத்திற்கு நல்ல அறிகுறியாகும்.
அடுத்துப் பல பிரதேசங்களில் இருந்து பல மட்டங் களில் சஞ்சிகைகளும் வெளியீடுகளும் வந்தவண்ணமாகவே இருக்கின்றன. இந்த ஆர்வத்தையும் பங்களிப்பையும் மெய்யாகவே வரவேற்கின்றேன். ஆனால் இது மட்டும் போதாது. இன்னும் இன்னும் நிறையச் செய்யவேண்டும் -என்றொரு பேரவா என்னுள் முகிழ்கின்றது.
மல்லிகையைப் பொறுத்த வரையும் வேறெந்தக் காலத் தையும்விட மிகமிக மகிழ்ச்சியானதாக இந்த வருடம் விளங்கி யது. காரணம் மல்லிகையுடன் தொடர்பு கொண்ட பல புதிய நண்பர்களின் சேர்க்கை எந்தவிதமான பிரதிப் பிரயோ சனங்களையும் எதிர்பாராமல் இலக்கிய வளர்ச்சி ஒன்றையே

i orfosfáš en er 123,සද
குறிக்கோளாகக் கொண்டு உழைத்து வரும் இவர்களின் தொடர்பு மல்லிகைக்கு ஒரு புதிய உத்வேகத்தை ஊட்ட லாம் என உறுதியாக நம்புகின்றேன். பரஸ்பரம் இவர் களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இன்னும் அநேக காரியங் களை நடைமுறையில் சாதிக்க முடியும் என நினைக் கிறேன்.
ஓர் இனிய நண்பர், கவிஞர் நேர்ப் பேச்சில் ஒரு கட்டத் தில் இப்படிக் கேடடார்: "மல்லிகைக்காக வேலை செய்து கொண்டு வரும் இத்தனை காலத்தில் உங்களுக்குச் சலிப்பு நிரம்பிய விரக்தி எப்பொழுதுதாவது ஏற்பட்டதில்லையா? விவாதத்திற்காகச் சொல்ல வேண்டாம், உண்மையை அறியத்தான் இதைக் கேட்கிறேன். "
சிந்தனை எட்டிய தூரம் வரைக்கும் பின்நோக்கி யோசித்துப் பார்த்தேன். என்னை நானே சுய ஆய்வு செய்ய விரும்பி நெடும் தொலைவு வரை நினைத்துப் பார்த்தேன்.
அவருக்கு அப்பொழுது பதிலாகச் சொன்னதையே இங்கு சொல்லுகின்றேன், என்னைப் பொறுத்தவரை வாழ்வின் எல்லாச் சுகங்களும் இன்பங்களுமாகி நிற்பது மல்லிகை. மனதுக்கு உணவாக என் உதிரத்தில் கலந்து போய் விட்டது. இதன் மூலம் நாளைய நம்பிக்கைகளை இன்று செயலாக்கி வருகின்றேன். ஒரு கணம் கூட நான் வக்கரித்து நிண்றவனல்ல. ஒடும் ஆற்று நீரைப் போன்றதே எனது தினசரி வேலைத் திட்டம், புதிது புதிதாக ஆற்று நீர் ஊற்றுக்களில் இருந்து பாய்ந்து வருகின்றது. அதை வழிப் படுத்தி நெறிப்படுத்தும் போது ஏற்படும் மன நிறைவு அதை அனுபவித்தவர்களால்தான் உணர முடியும். இன் னும் இன்னும் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுத்தரும் இந்த இலக்கிய வேலையைச் செய்யும் போது எப்படி விரக்தி மனதில் தோன்றும்? -

Page 63
124 தலைப்பூக்கள்
என்னைத் தேடிவரும் நண்பர்கள் மல்லிகையின் ஆரோக்கியமான வளர்ச்சி கருதி என்னுடன் நீண்ட நேரம், விவாதிப்பதுண்டு. அந்த அந்த நண்பர்களின் ஆலோசனை கள்தான் எனக்கு உந்து சக்தியாகத் திகழ்வதுண்டு.
இன்னுஞ் சிலர் இருக்கிறார்கள், கடித மூலமும் மேடை களிலும் தேவைக்கதிகமாகப் புகழ்வதே அவர்களது வேலை யாக இருக்கின்றது. புகழைக் கேட்டு, பிரபலத்தில் மயங்கு கின்ற காலகட்டத்தை நான் தாண்டிவிட்டேன். எனவே எக் காரணத்தைக் கொண்டும் சும்மா புகழ்ந்துரைக்காமல் ஆக்க பூர்வமான யோசனைகளைத் தெரிவித்தால் அது எல்லோ ருக்கும் பயன் படக்கூடியதாக இருக்கும்.
அளவுக்கதிகமான புகழாரம் கூடச் சிலரைத் தலை கனக்க வைத்துத் தடம் புரளச் செய்துவிடும் என்பதை நண் பர்கள் மறந்துவிடக் கூடாது.
வ்ருஷம் தவறாமல் என்னை நானே புதுப்பித்துக் கொண்டு வருபவன் நான்.
என்னைப் புதுப்பிப்பதன் மூலம்தான் மல்லிகைமை” புஷ்பிக்கச் செய்யலாம் என எண்ணுகின்றேன்.
இத்தனைக்கும் பொறுமையான - கடுமையான விடா முயற்சி எனக்குத் தேவைப்பட்டது.
வற்றாத ஊற்றாக வரும் வல்லமையை நான் மல்லிகை. யைத் தொடர்ந்து நேசிக்கும் இதயங்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டுள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டும் மலர் வேலை ஆரம்பிக்கும் சமயங் களில்எனக்கு பல்வேறு பிரச்சினைகள். சிக்கல்கள், நெருக்கடி கள்தோன்றுவது வருஷ வழக்கம். ஆனால் இத்தனை சிரமங் களையும் தாண்டி மலரை வெளிக் கொணரும் போது ஏற்படும் மகிழ்சசி இருக்கின்றதே அது ஒரு தனி சுவை.

டொமினிக் ஜீவா 125
மலகுக்கு நான் எதிர் பாராத இடங்களில் இருந்தெல் லாம் விளம்பரங்கள் வந்து குவிந்தன. வந்த அவைகள் அத்தனையையும் போட முடியாமல் சிலவற்றை நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் எனக்கு ஏற்பட்டது. வந்த விளம் பரங்: அத்தனையையும் போட்டால் மலர் விளம்பர இதழாக மலர்ந்து விடுமோ என நியாயமாகப் பயப்பட்டே நான் அவைகளில் சிலவற்றை ஒதுக்கி விட்டேன்.
ஓர் இலக்கிய சஞ்சிகைக்கு ஏராளமான விளம்பரங்கள் வருவது ஒரு நல்ல அறிகுறிதான். இப்படியாக விளம்பரங் கள் ஏன் மல்லிகையை நாடி வருகின்றன என்பதை நானே யோசித்துப் பார்த்ததுண்டு. இலங்கையின் நானா திக்கு களுக்கும் மல்லிகை சென்றடைகின்றது. தமிழகத்திற்குக் கணிசமான பிரதிகள் போகின்றன. மல்லிகை அறிவு சார்ந்த மட்டங்களில், இலக்கிய மேடைகளில். நேர்ப் பேச்சுக்களில் அதிகம் பேச படுகின்றது. அது ஒரு காரண மாக இருக்கலாம். அத்துடன் என் உழைப்பைப் புரிந்து கொண்ட வர்த்தகப் பெருமக்களின் ஒத்துழைப்பு மனப் பான்மை அடுத்த காரணம். மல்லிகையை மனதார நேசிக்கும் நல்ல நண்பர்களின் பிரசார பலம் பிறிதொரு st 62o.
இத்தனை பசளையையும் - உசத்தையும் - மல்லிகை யின் வளர்ச்சிக்காகவே தினசரி பயன்படுத்த முனைந்து வருகின்றேன். 2
மல்லிகைக்குத் தொடர்ந்தெழுதும் நணபர்களும் ஒன்றைக் கவனிப்பது நல்லது. புதுப்புதுக் கருத்துக்களை புதிய புதிய பாணியில் சொல்லப் பழகுவது நல்லது. காலம் வேகமாக மாறி வருகின்றது. எனவே காலத்தின் சுழற்சிக் குத் தகுந்த முறையில் நாமும் வேகங்காட்டி முன்னேற வேண்டும் தவறினால் பின் தங்கி விடக் கூடிய அபாயமும் ஏற்பட இடமுண்டு,

Page 64
26 தலைப்பூக்கள்
மல்லிகையில் எழுதும் எழுத்துப் பலராலும் இன்று கவனிக்கப் படுகின்றது. பலர் அதில், வரும் கருத்துக்களை முன் வைத்துத் தர்க்கிக்கின்றனர். எனவே அது பரந்து பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை உணரக் கூடியதாக இருக்கின்றது. இதற்கேற்ற வழி முறைகளில் எழுதும் எழுத்தாளர்களின் கருத்துக்கள் அமைவது எதிர்காலத்திற்கு நல்லது.
20 வது ஆண்டு மலர் வெளிவரும் சமயம் இது வரை மல்லிகையில் வெளிவந்துள்ளவற்றில் பிரசுரிக்கத் தகுந்த வைகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நூலுருவில் கொண்டு வரலாம் என எண்ணுகின்றேன். *
எனக்கென்று ஒரு கருத்து உண்டு. ஆனால் அதை மல்லிகையில் எழுதும் படைப்பாளிகள் மீது வலிந்து திணிக்க மாட்டேன் இதைப் புரிந்து கொண்டு நமது நாட்டு நல்விலக்கிய வளர்ச்சிக்காக உழைப்பவர்கள் சேர்ந்துபாடுபட முன் வந்தால் மல்லிகையில் எப்பொழுதுமே அவர்கள் குரல் ஒலிக்கும்! ጶ¥ (18-வது ஆண்டு மலர் 1983)
சமகாலத்தை வென்றவர் எதிர் காலத்தை நிர்ணயித்தவர்
மம்முடைய காலத்தில் நம்முடன் ஒருவராக ஒருங் கிணைந்து நின்றவர். நமது இலக்கியப் போராட்டங்கள் அத்தனையிலும் மிக நெருங்கிய பக்கத் துணைவனாகப் பிணைந்து நின்று செயலாற்றியவர். தனது சக்திக்கேற்ற வகையில் ஈழத்து இலக்கியத் துறையின் முன்னேற்றத்திற். காக உழைத்து, அதனால் தமது தனித்துவ முத்திரையைத்

டொமினிக் ஜீவா 127
தமிழ் இலக்கியத்தின் மீது பொறித்தவருமான மேதை கைலாசபதி அவர்களினது ஞாபகார்த்தச் சின்னமாக இந்தச் சிறிய சிறப்பிதழைச் சமர்ப்பிக்கின்றோம்.
நாம் முன்னர் ஒரு தடவை குறிப்பிட்டுச் சொன்னது போல, காலம் போகப் போகத்தான் அவரது இலக்கிய ஆளு மையின் ஆகிருதி நமக்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வரும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது அறிவு வீச்சு, திறனாய்வுப் பார்வை மேதை தத்துவம் தமிழ் இலக்கிய உலகையே வெகுவாகப் பாதித்துத் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதை இன்று பலரும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
அவரை-அவரது விஞ்ஞான யுகக் கண்ணோட்டத்தைட மனசார வெறுத்தவர்கள் கூட, தமது கருத்துச் சாதனங் களில் அவரைப் பற்றி நாலு வரி எழுதி வெளியிட வேண்டிய அளவுக்கு அந்தத் தாக்கம் அவரது இலக்கிய எதிரிகளுக்குக் கூட ஏற்பட்டுள்ளது. இதை நினைக்கும் போது V.
se ar e ta அவரது ஆய்வு வீச்சு இன்னும் பல புதுமைகளை அவரில்லாத
as TG) செய்யும் என்பதை நாம் உண்மையாகவே ே னறோம,
జnజాబిబు பேராசிரியரின் இலக்கியப் புகழின் அடித்.
அவர் மக்களை அதிகமாக நேசித்தவர். மக்களினது வாழ்வின் சகல துறைக் குரல்களும் இலக்கியத்தின் பல் வேறு வடிவங்களில் எதிரொலிக்க வேண்டும் என p6oT FITr விரும்பியவர், அதற்காகப் போராடியவர்.

Page 65
வானொலியும் தொலைக் காட்சியும்
சக்தி வாய்ந்த வெகுஜனத் தொடர்புச் சாதனங்களில் இரண்டு மிக முக்கியமானவை. ஒன்று வானொலி; மற் றொன்று "ரூபவாஹினி" என்றழைக்சுப்படும் தொலைக் காட்சி. இவையிரண்டும் அரசாங்க ஆதரவில் கூட்டுத்தாபன அமைப்புடன் இன்று இலங்கையில் இயங்கி வருபவை.
இவையிரண்டும் இன்று நமது நாட்டில் மக்கள் மத்தியில் பலத்த கருத்துத் தாக்கங்களை ஏற்படுத்தும் சாதனங்களாக மிளிர்ந்து வருகின்றன.
கடந்த 83 ஜூலை மாதத்திற்குப் பின்னர் வானொலி யில் தமிழ் நிகழ்ச்சிகளே அருகிப் போய் விட்டன. ஆக்கபூர்வ மான நிகழ்ச்சிகளைக் கேட்க முடிவதில்லை. வெறும் சினிமாச் சங்கீதமே நாள் பூராவும் வானொலியை ஆக்கிச மித்துக் கொண்டு குதியாட்டம் போடுகின்றது. ஒரு காலத் தில் தரமான நிகழ்ச்சிகளை உருவாக்கி ரசிகர்கள் மத்தி யில் ஒரு கெளரவமான செல்வாக்கைப் பெற்றிருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ப் பகுதி. ஆனால் இன்று பழைய நிகழ்ச்சிகளையே திரும்பத் திரும்ப ஒலிபரப்பி வரு கின்றது.
இதற்குக் காரணம் கூறப்படுகின்றது. தகுந்த கலைஞர் களின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படு கின்றது.
பதினைந்து நிமிஷ நிகழ்ச்சி ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தி லிருந்து ஒரு கலைஞன் கொழும்புக்குச் செல்வதாக இருந் தால், இன்றைய நிலையில் பிரயாணம் செய்வதே மகா சிரமம். அத்துடன் அங்கு தங்கும் சாப்பிடும் செலவு வேறு. அந்த நிகழ்ச்சிக்குத் தரப்படும் அன்பளிப்பை விட இரண்டு

பனிக் ஜீவா 129
மூன்று மடங்கு பணம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற் படுகின்றது. வழக்கமாகவே கலைஞன் பொருளாதார சிரமம் நிறைந்தவன். இப்படிச் செலவு செய்வதற்கு எந்தக் கலைஞன்தான் சம்மதிப்பான்.
நீண்ட காலமாகவே யாழ்ப்பாணத்தில் ஓர் உய வானொலி நிலையமொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. தேரடியாக ஒலிபரப்பாது போனாலும் கூட, நிகழ்ச்சிகளை இந்த உப நிலையத்தில் இங்குள்ள கலைஞர்களைக் கொண்டு பதிவு செய்து கொழும்புக்குக் கொண்டு சென்று ஒலிபரப்புவது சிறந்ததல்லவா? இதனால் போக்கு வரத்துச் சிரமங்களும் குறையும், பொருளாதார நெருக்கடியும் தீரும்.
சம்பந்தப்பட்டவர்கள் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.
அடுத்தது தொலைச்காட்சிப் பிரச்சினை.
சில நாட்களில் தமிழ்ச் செய்தி ஒன்றைத் தவிர, தமிழ் நிகழ்ச்சிகளே ரூபவாஹினியில் இடம் பெறுவதில்லை, தொடர்த்தும இந்த ைெல நீடித்துவருகின்றது.
இன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டி லும் அத்தியாவசியத் தேவைப்படும் பொருட்களில் ஒன்றா கக் கருதப்படும் நிலை உருவாகி விட்டது. தமிழ்ப் பேசும் குடும்பத்தினர் ஏராளமாக இன்று தொலைக்காட்சிப் பெட்டி களைப் பாவிக்கின்றனர்.
ஆனால் அவர்கள் விரும்பி ரஸிக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் அவர்கள் விருப்பத்திற்கு ஒளிபரப்பப்படுவதில்லை. சில நாட் களில் ஆங்கில நிகழ்ச்சிகளே ஆக்கிரமிக்கின்றன. ஒரளவு சிங்கள நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பார்க்கச் சுவை யாகவும் மிளிர்கின்றன, ஆனந்தமாகவும் இருக்கின்றன. ஆனால் விகிதர்சார அளவுக்குக்கூட தமிழ் நிகழ்ச்சிகள் இடம் பெறுவதில்லை.
5-9

Page 66
130 தலைப்பூக்கள்"
இந்தப் பெரும் இடைவெளி நிரப்பப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான ரூபா செலவு செய்து, மீண்டும் உத்தரவுப் பத்திரம் பெற பணம் செலவு செய்து தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கும் குடும்பத்தினர், தாம் கண்டு களிக்கவே நிகழ்ச்சிகளை விரும்புகின்றனரே தவிர, தங்கள் மீது திணிக்கப்படும் அந்நிய நிகழ்ச்சிகளுக்கு இத்தனை பணம் செலவழிக்க விரும்பவில்லை.
சிங்கள நிகழ்ச்சிகள் பற்றி இங்கு குறையில்லை! ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? அந்த அந்நிய நிகழ்ச்சிகளுக்குப் பதிலாக இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழியின் கலை ஆக்கங்களை ஏன் ஒலிபரப்பக் கூடாது.
வாரத்திலே முழுத் தமிழ்ச் சினிமாப் படமொன்று காட்டப் படுகின்றதல்லவா எனச் சமாதானம் கூறலாம். அப்படங்கள் தமிழ்ப் படங்களே தவிர, நமது தேசத்தின் கலை, இலக்கிய, கலாசார வளர்ச்சியை எதிரொலிக்கும் கலை வடிவங்களல்ல. நமது நாட்டின் ஆன்மாவைப் பிரதி பலிக்கும் கலை நிகழ்ச்சிகள் தொலைக் காட்சியில் இடம் பெற வேண்டும், இதைத்தான் தமிழ்ப் பேசும் மக்களில் சிலர் ரூபவாகின்ரியிடம் எதிர்பார்க்கின்றனர்,
பரஸ்பரம் ஒருவர் கலையை ஒருவர் புரிந்து கொள் வதற்கும், ஒருவர் கலாசாரத்தை இன்னொருவர் விளங்கிக் கொள்வதற்கும், ஒருவருடைய பாரம்பரிய வளர்ச்சியை இன்னொருவர் தெரிநது கொள்வதற்கும் தொலைக் காட்சி யைப் போன்றதொரு அரிய சாதனம் வேறொன்றில்லை.
தொலைக் காட்சிச் சாதனங்கள் இந்த அற்புதமான சாதனைகளைச் செய்யவில்லை என்பதே நமது குறை பாடாகும்.
(நவம்பர் 1983)

கைத்துப்போன அந்த வாரங்கள்
தாங்க முடியாத இரவுகள்: நிம்மதியற்ற பகல்கள். அந்தக் காலத்தை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை.
அத்தனையும் இருண்டு போயிருந்தன.
ஜூலைக் கலவர வாரங்களையொட்டிய இந்தச் சூழ் நிலையில் மலர் வேலை செய்ய வேண்டிய பாரிய வேலையும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது,
வேலையென்றால் வேலைதான். வெளியில் பிரளயடிே நடந்தாலும் மல்லிகிைக் காரியாலயத்தில் நான் வேலை களைக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல் பட்டேன்.
நான் வேலையில் மூழ்கியிருந்த போதிலும் கூட, சுற்றுப் புறச் சூழ்நிலைகள் என் மனசைத் தாக்காமலில்லை. வெளியே இறங்கினால் ஒரே வதந்தி!- திரும்பிப் பார்த்தால் கை கால் முளைத்துப் பறக்கும் புதுப் புதுச் செய்திகள்!
உண்மையிலேயே நான் படிந்து விட்டேன். நான் எப்பொழுதும் மரணத்தைக் கண்டு அஞ்சுபவனல்ல. வாழ் வின் சில கட்டங்களில்-விபத்துக்களில்-நான் மரணத்தின் சந்நிதியை நேருக்கு நேர் தரிசித்துமிருக்கின்றேன். எனவே கொழும்பிலுள்ள எனது இதயத்துக்கு நெருக்கமான நண்பர்
களை, எழுத்தாளர்களை, அபிமானிகளை அந்தக் கணங் களில் நினைத்துப் பார்த்தேன்; பயந்தேன்.
நெஞ்செல்லாம் தவியாய்த் தவித்தது.

Page 67
132 தலைப்பூக்கள்
மல்லிகையின் கடைசிப் பக்க விளம்பரகாரர் திரு.எம். சங்கநாதன் பற்றியும் அவரது வியாபார ஸ்தலம் பற்றியும் அங்கிருந்து வந்த ஒரு சிலரிடம் வினவினேன். "அந்த மரக் கடையா? எல்லாம் சுடுகாடாக இருக்கின்றது" எனத் தகவல் தந்தார் ஒருவர். மனம் சப்பென்று போய்விட்டது. உள் விளம்பரம் தரும் சிற்றம்பலம் அதிபர் சிவலிங்கத்தைப் பற்றி விசாரித்தேன், தகவலே தெரியவில்லை என்றனர், நான் கொழும்பில் தங்கும் முதலாம் குறுக்குக் கடை பற்றியும் சாப்பிட்டு ஒய்வெடுக்கும் பூரீகதிரேசன் வீதிக் கடை பற்றியும் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தேன்: அவர்கள் தந்த தகவல்கள் வயிற்றைக் கலக்கியது. எழுத்தாள நண்பர்கள் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி விசாரித்துப் பார்த்தாலும் முன்னுக்குப் பின் முரணாகச் செய்திகள் வந்தன.
நடுச் சாமம் இரண்டு மூன்று மணியளவில் எழுந்திருந்து விளக்கைப் போட்டுவிட்டு, நாற்காலியில் விழித்திருப்பேன். மன்மே பலதையும் பத்தையும் ய்ோசித்து மூளையைக் குழப்பிக் கொண்டது.
ஓர் இரவு எனது மகன் எனது நிலையைப் பார்த்துவிட்டு விசாரித்தான். நான் எனது மனச் சஞ்சலத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டேன்.
நீங்க ஒண்டுக்குமே யோசிக்காதீங்க, மனசு சுத்தமாய் மல்லிகையை நேசித்தவங்களுக்கு ஒரு தீங்குமே வராது! "
அந்த இளம் நெஞ்சின் ஆறுதல் என் இதயத்தைக் குளிர் வித்தது. ی
நண்பர் ரங்கநாதனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் மறைந்த எம்.ஏ. கிஸார். "எனக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைகள். மல்லிகையை என் பெண்ணாக நினைக்கிறேன். சீதனம் கொடுப்பதாக நினைத்து மல்லிகைக்கு உதவ எனக்கு விருப்பம்" என்றொரு நாள் மனந் திறந்து சொன்னார் அவர். வியாபார மனோபாவம்

டொமினிக் ஜீவா 183
என்க் கேள்விப்பட்டிருக்கின்றேன். லாபம்தான் அதன் குறிக் கோள். இந்த மனுஷன் மல்லிகைக்கு மனங் கோணாமல் /உதவுகின்றாரே. நான் சில சமயங்களில் மலைத்ததுண்டு. " அந்த நல்ல இதயம் இந்தச் சந்தர்ப்பதில் என்ன சூழ்நிலையில் துடிக்கின்றதோ?
அடுத்தவர் திரு. சிவலிங்கம். ஐந்தாம் குறுக்குத் தெருவி லுள்ள இவரது கடையின் மேல் மாடியில் நீண்ட காலம் தங்கி யிருப்பவர் யேசுரத்தினம், வானொலி நாடக நடிகர். இவரைச் சந்திப்பதற்காக நான் இரவு நேரத்தில் அங்கு செல்வது வழக்கம், அப்பொழுது சிவலிங்கம் அவர்களைப் பார்த்தாலும் நான் அவ்வளவு முக்கியத்துவமளிப்பதில்லை. ஒருநாள் ஐந்துலாம்புச் சந்திக்கருகே பேசிக் கொண்டிருக்கும் போது, "சிவலிங்கத்தை நீர் நல்லாப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அருமையான பிறவி. அமசடக்காக இருந்து கொண்டு பல நல்ல காரியங்களுக்கு உதவும் பெரும் பிறவி அவர். அருமையான மனிதன் அவர். ஒரு நாளைக்கு அவரை உமக்கு அவசியம் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்" எனக் கூறிய யேசுரத்தினம், ஒருநாள் அறி முகமும் செய்து வைத்தார்.
அன்றிலிருந்து மல்லிகையில் விளம்பரத்தை அவரைக் கேட்காமலே வருடக்கணக்காகப் போட்டு வருகின்றேன்.
அந்தப் பெரும் பிறவி என்ன கஷ்டங்களுக்கு உட்பட்டுள் ளாரோ? அவரது ஸ்தாபனம் என்ன நிலையில் உள்ளதோ?
நான் தங்கிச் சாப்பிடும் கடைக்காரர்களான தம்பையா, செல்வம் போன்ற என்னைப் புரிந்து கொண்ட நெஞ்சங்கள் என்ன பதைப்புப் பதைக்கின்றனரோ?
t தந்தி ஒன்று வந்தது. மனக் கலக்கத்துடன் பிரித்தேன்.
"புதுக் கவினு ப்பியிருந்தேன் தவறாமல் கிடைத்ததா? :: இந்தச் சூழ்நிலையிலும் இப்படி
யொரு தமாஷ்!

Page 68
34 தலைப்பூக்கள்
மல்லிகையை உயிராக நேசித்த நண்பர்கள், என் வளர்ச்சிக்கு வித்திட்ட தோழமை எழுத்தாளர்கள். எனது சிரமங்களில் பங்கு கொண்டு உழைத்தவர்கள், பத்திரிகை களில் பணிபுரியும் சகோதரப் புத்திஜீவிகள் என்ன மாதிரிக் கஷ்டங்களுக்கு உட்பட்டுள்ளனரோ?
-இவர்கள் அத்தனை பேரும் உயிருடன்தான் இருச் கின்றனரோ?
திலீபன் தெளிவாகச் சொன்ன அனுதாப மொழிகள் அந்த நேரத்தில் ஒர் இதய நண்பன் கூறிய ஆறுதலுக்கு ஒப்பாயிருந்தது.
பின்னர் வந்த தகவல்கள் ஆரோக்கியமாகவிருந்தன. -திலீபனின் நம்பிக்கைகள் வீண் போகவில்லை!
அக்டோபர்-1983
தேசிய சிறுபான்மை இனப் பிரச்சினை - தீர்வுக்கு ஒரு மார்க்கமுண்டு
தமிழ் மக்களினது நியாயபூர்வமான அபிலாசைகள் இன்று முழு நாட்டிலும் பல பிரதேசங்களில் கட்டம் கட்டமாக வென்றாலும் சரியாகப் புரிந்து கெரள்ளக்கூடிய சில அறிகுறி கள் தென்பட்டு வருவதையிட்டு நாம் உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறோம்.
சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கலவான பாராளுமன்றப் பிரதிநிதியும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் களில் ஒருவருமான தோழர் சரத் முத்தேட்டுவகம தமிழ் மக்களினுடைய நியாயமான கோரிக்கைகளை முற்று
முழுதாக ஏற்றுக் கொண்டு தனிக் குரல் கொடுத்து வைத்

டொமினிக் ஜீவா 35
தார். பிரதேச சுயாட்சியின் மூலம் தமிழ் மக்களினுடைய பல நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு அரசியல் தீர்வொன் றைக் காணலாம்!" என அவர் சொல்லி வைத்தார். "தேசிய சிறுபான்மை இனங்களினுடைய சகல பிரச்சினைகளுக்கும் பூரண தீர்வு ஒரு சோஷலிஸ் சமூக அமைப்பில்தான் சாத்தி யப்படும்! என விளக்கம் தந்த அவர், "இருந்தும் தமிழ் மக்களுடைய அரசியல் அநாதை நிலை, பாதுகாப்பு, பயம், பீதி, விரக்தி போன்ற நிலைகளில் நின்று முழுத் தமிழினமு.3 விடுபட பிரதேசசுயாட்சி தற்போதைக்குச் சிறந்த அரசியல் பரிகாரமாகும்" எனவும் சூளுரைத்தார்.
நியாய மனம் கொண்ட ஜனநாயகப் பாரம்பரியம் மிக்க, நல்லெண்ண அபிமானம் படைத்த முற்போக்குச் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களினது நியாய பூர்வமான பல பிரச்சினைகளுக்குச் சரியான அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமென்ற அபிப்பிராயம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இந்தப் புரிந்து கொள்ளத் தக்க மன மாறுதல் நல்ல அம்சம் மாத்திரமல்ல, வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஆரோக்கியமான கருத்து-வடிவமுமாகும்.
சமீபத்தில் சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர்.டி. சில்வா கண்டியில் நான்கு இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு முன்னனிப் பிரசாரக் கூட்டத்திலும் பல நலல கருத்துக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் தெளிவாக வைத் திருக்கின்றார். அந்நிய வெள்ளைக்காரன் காலத்திலேயே தேசிய சுதந்திரத்திற்காகவும், முழு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் போராடி, அதனால் அந்நிய ஏகாதி பத்தியத்தின் எதிர்ப்புக்கு உள்ளாகிச் சிறை சென்று, தியாகங்கள் பல புரிந்த ஓர் இயக்கத்தின் தலைவர் அவர். இன்றையூ-இளந் தலைமுறையினருக்கு இந்தத் தியாகப் பரம்பரையின் தகவல்களே தெரியாமல் இருக்கலாம். அப்படி யான பாரம்பரியம் மிக்கவர் கொல்வின் அவர்கள்.

Page 69
136 தலைப்பூக்கள்
அவர் கண்டிக் கூட்டத்தில் பகிரங்கமாகவே கூறியதுச் தமிழ்ப் பத்திரிகைகளிலே வந்துள்ளது.’ இராணுவ பலத்தால் எந்த ஒரு இனத்தினதும் சுதந்திரப் போராட்டங்களையும் அடக்கிவிட முடியாது. அதன் மூலம் தேசிய ஐக்கியத்தையும் ஏற்படுத்த இயலாது. ஒவ்வொரு பிரதேச மக்களினதும் பாரம்பரிய கலாசாரங்களையும், பண்பாட்டினையும், மொழி யையும் பாதுகாப்பதன் மூலமும் பெரும்பான்மையோருக் குள்ள அனைத்து உரிமைகளையும் சிறுபான்மை மக்களும் சமத்துவமாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதேசசு யாட்சி வழங்குவதன் மூலம் மட்டுமே நாட்டில் ஒருமைப்பாட் டையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியும். இதை நாம் அன்றும் இன்றும் என்றும் வற்புறுத்துகின்றோம்.
கண்டியச் சிங்களவர்களினதும் கரையோரச் சிங்களவர் களினதும் பண்பாடு, பாரம்பரியம், பழக்க வழக்கம், கலாசாரம் எல்லாமே வித்தியாசமானவை. இது போலவே வடக்கு, கிழக்கு மக்களினதும் சமூக அமைப்பாகும். எனவே பிரதேச ரீதியிலான சுயாட்சி உரிமைகள் வழங்கினால் நாட்டின் ஒருமைப்பாடு உயருமேயன்றிக் குன்றாது!
இதே கூட்டத்தில் இப்படியான கருத்துக்களை ஆதரித் துத் தோழர் பீட்டர் கெனமன், விஜயகுமார ரணதுங்க போன்றோரும் பேசியுள்ளனர்.
நியாயத்தை நியாய உணர்வுடன் சிந்திக்கப் பழக்கப் பட்ட சிங்களத் தலைவர்கள் பலர், தமிழ் மக்களினுடைய நியாயமான கோரிக்கைகளில் உள்ள ஜனநாயகத் தன்மை யைப் புரிந்து கொண்டதுடன் மாத்திரம் நில்லாது, அதைச் சிங்கள மக்கள் மத்தியிலேயே தைரியமாக மேடையேறிச் சொல்லவும் முன் வந்திருப்பது ஒரு அரசியல் வளர்ச்சித் தீர்வுக்கு நல்ல அறிகுறியாகும்.
நாட்டில் வாழும் சகல இனப் பகுதி மக்களும் மன திம்மதியுடன் வாழ, பிரயாணம் செய்ய, தமது கருமங்களை ஆற்ற ஒரு சமாதானமான சூழ்நிலை கட்டாயம் உருவாக்கம்

டொமினிக் ஜீவா 1.37
பட வேண்டும். இதற்கு ஒரு வழியாகத்தான் ஜனநாயக உள்ளம் படைத்த நியாய நெஞ்சு கொண்ட, தேசியப் போராட்டப் பாரம்பரியத்தில் புடம் போட்டு எடுக்கப்பட்ட இடதுசாரித் தலைவர்களின் கருத்துக்கள் உள்ளன. இதை மனதில் கொண்டு அரசாங்கம் நியாயத் தீர்வொன்றைக் காண முயல வேண்டும்.
பரஸ்பரம் இளங்களுக்கிடையே புரிந்துணர்வை வளர்ப்ப தற்கும் நாட்டைச் சுபீட்சப் பாதையில் கொண்டு செல்வதற். கும் மேற்படி தலைவர்களின் ஆலோசனைகளைக் கவனத். தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலம் கடத்துவது சரியான இராஜதந்திர மார்க்கமல்ல.
(ஜூலை-1984)
D 6)85 சமாதானப் புறாவின் சிறகுகள் துண்டிக்கப்பட்டன!
VM ܡ " ܫܫܝܚܚܬܙ
பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை மனித குலத்தின் மனச் சாட்சியையே தொட்டுக் குலுக்கி விட்டது, இந்த மாபெரும் நாசவேலையால் இந்திய நாடு மாத்திரமல்ல, உலகமே துயரத்தில் ஆழ்ந்து விட்டது.
இது வெறும் சீக்கிய இன வெறியாலோ அல்லது பிரிவினை வாதிகளின் வெறுப்பாலோ மட்டும் ஏற்பட்டுவிட்ட படுகொலையல்ல. இவைகளைக் காரணப் பின்னணியாகவைத்து உலகப் பிற்போக்குக் கும்பல் நீண்ட காலத் திட்டந் தீட்டிப் பாரதப் பிரதமரைப் பலி கொண்டுள்ளது என்றோ கருத இடமுண்டு.
ஏனெனில் இந்தியாவின் கூட்டுச் சேராமைக் கொள்கை. யைப் பல ஏகாதிபத்திய நாடுகள் மனசார ஆதரிக்கவில்லை.

Page 70
138 தலைப்பூக்கள்
அத்துடன் சோவியத்-இந்திய நட்புறவு இறுக்கமாக வளர் வதையும், கட்டம் கட்டமாக முன்னேறுவதையும் இவர்கள் விரும்பவில்லை. இந்தியா இன்று பல்வேறு துறைகளில் மிகத் தீவிரமாக முன்னேறி வருவதை விரும்பாத இந்தச் சர்வதேச தீய சக்திகள் உள்நாட்டிலேயே இந்தியாவுக்குப் பல நெருக்கடிகளையும் நாசங்களையும் உருவாக்கிக் கட்ட விழ்த்து விட்டன.
வெளி உலகச் சக்திகளினால் உருவாக்கப்பட்ட பல நாச விளைவுகளுக்குப் பாரதப் பிரதமர் முகம் கொடுத்து, அதனுடன் போராடி அந்த நீச விளைவுகளைச் சமாளித்து மூன்னேறி வரும் வேளையில்தான் நாச சக்திகள் தமது போர்த் தந்திரத்தை மாற்றியமைத்து பாரதப் பிரதமரை கொலைப் பலி கொண்டிருக்கின்றன.
"இந்திராதான் இந்தியா!- இந்தியாதான் இந்திரா!' என்ற கோஷம் கடந்த காலங்களில், குறிப்பாகத் தேர்தல் நேரங்களில் மக்கள் முன் வைக்கப்பட்டதுண்டு.
இது வெறும் தனிமனிதப் பூஜா மனப்பான்மையை வளர்க்க உதவியதே தவிர, எழுபது கோடி மக்களைக் கொண்ட ஒரு மாபெரிய தேசத்திற்கு பலமான கூட்டுத் தலைமையை உருவாக்கித் தரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வதேசப் பிற்போக்குக் கும்பல் என்ன நோக்கத்திற் காக பாரதப் பிரதமரைக் கொலைப் பலி கொண்டதோ அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனதற்கு நாம் இந்திய உழைக்கும் மக்களை வெகுவாகப் பாராட்டுகின்றோம். ஏனெனில் இந்திரா மறைந்ததும் இந்தியா பலவீனப்பட்டு, துண்டுபட்டு, மக்கள் தமக்குள் தாமே மோதுவர். நாடு சிதைந்துவிடும்என நம்பிக்கொண்டிருந்தவர்களுக்குஇந்தியா வின் புதிய வீறு திகைப்பையும் கிலியையும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.

டொமினிக் ஜீவா 139
இந்த வளர்ச்சி இப்படியே போனால் வருங்காலத்தில் தமது உலக ஆக்கிரமிப்பு நோக்கத்திற்கும் சர்வதேச அணு யுத்தத்திற்கும் குந்தகமாக அமையும் என அவைகள் ஆத்திரம் கொண்டன.
இந்தியாவின் முன்னேற்றத்தையும் அண்டை அயல் நாடுகளில் அந்நாடு கொண்டுள்ள நட்புறவு நேசத்தையும் சின்னாபின்னப்படுத்த அவைகள் முயன்றதன் விளைவுதான் பிரதமர் இந்திராவின் படுகொலைப் பின்னணியாகும்.
இந்திரா காந்தி இந்தியப் பிரதமர் மாத்திரமல்ல, கூட்டுச் சேரா நாடுகளின் தலைவி. வளர்ந்து வரும் பின் தங்கிய நாடுகளுக்கு ஒர் ஆதர்சமாகத் திகழ்ந்தவர். எனவே அவரை ஒழித்துக் கட்டுவதன் மூலம் பழைய படியே உலக நாடுகளில் பெரும்பாலானவற்றை மறுபடியும் சுரண்டிக் கொழுக்கலாம் என்ற நப்பாசையின் காரணமாகத்தான் உலக வல்லூறுகள் இந்தியக் காலிஸ்தான் கும்பலுக்குப் பக்கபல மாக நின்று அந்த உலகத் தலைவியை ஒழித்துக் கட்ட முயன்று. வெற்றியும் பெற்றன.
இந்தியாவின் நிதானம், இந்திராவின் மதிநுட்பம் கலந்த இராஜதந்திரம் நமது நாட்டுச் சிக்கலில் அவர் நடந்து கொண்ட பொறுமை மிக்க தீர்க்க தரிசனம் ஒரு சாராரால் குறை சொல்லப் பட்டாலும் கூட, இந்த நிதானம் இந்தக் காலகட்டத்தில் மெச்சிப் புகழத்தக்க ஒன்றாகும். அவர் பரபரப்பு விரும்பியல்ல; அதே சமயம் பிரச்சினை களைக் கண்டு மிரண்டு விடும் சுபாவம் உள்ளவருமல்ல. எனவேதான் தனது கடைசி நாட்களில் கூட இலங்கைப் பிரச்சினையைத் தனது 356p6apuu Tau பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதி நுணுகித் தீர்க்க முயன்று ஆலோசனை சொல்லி வந்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இந்திராஜி படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.

Page 71
*f40 தலைப்பூக்கள்
உலகில் பயங்கர யுத்தமொன்று மூளக் கூடிய அபாய நிலை உருவாகி வந்தது. அணு ஆயுதப் போர் ஒன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. இந்த உலக அபாய நிலை யில் இந்தியப் பிரதமர் சமாதான சக்தியாகத் திகழ்ந்து வந்துள்ளார். உலகப் போர் மனுக் குலத்தையே சர்வ நாசப் படுத்தி விடும் என உணர்வு பூர்வமாக உணர்ந்துள்ள அவர் உலகத்தின் சமாதான விரும்பிகள் பக்கம் நெருக்கமாக நின்று ஓர் உலகப் பெரும்போருக்கான ஆயத்தங்களை முறியடிக்க முனைந்து வந்துள்ளார்.
அந்தச் சர்வதேசச் சமாதானப் புறாவின் சிறகுகளைக் கொலைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் கடைசியில் துண்டித்து விட்டனர்.
டிசம்பர்-1984
குட்டிச் சுவர் அருகே கழுதைகளின் தவம்!
சமீப காலமாக நமது பிரதேசத்தில் வதியும் படைப் பாளிகள் தங்களுக்குள் தாங்களே நடத்தும் சம்வாதத்தைப் படித்துப் பார்க்கும் கலைஞர்கள் பலர் தமது மனத் தாங்க லைச் சந்திக்கும் எழுத்தாளர்களுக்குச் சொல்லிச் சொல்லி மாய்வதைப் பார்க்கும்போது, இப்படியான தேவையற்ற சர்ச்சைகள் இந்த நேரத்தில்-இந்தக் கட்டத்தில்-அவசியம் தவைதானா என நம்மை நாமே கேட்டுக் கொள்ளு. ன்ெறோம்.
தனி மனித மன முரண்பாடுகளுக்கு புது உருவம் கொடுக்கப்பட்டு, இலக்கிய முலாம் பூசப் பெற்று, பத்திரிகை உலகில் கருத்துப் போராக நடைபெற்று வருவதைப் பார்க் கும் போது எரிச்சல் படாமல் இருக்க முடியவில்லை.

டொமினிக் ஜீவா 1:41
தப்பபிப்பிராயங்களை, சந்தேகங்களை, மனத் தாங்கல் களைப் பேசித் தீர்க்க முடியும்-தோழமையுணர்ச்சி இருந் தால். " . . . .
உலகத்தின் பாரிய பிரச்சினைகளே இன்று பேசித் தீர்க்கப்பட வேண்டுமென்ற வெகுஜனக் கோரிக்கைக் கிணங்கப் பேசப்பட்டு வருகின்றன.
தேசிய நெருக்கடிப் பிரச்சினையைக் கூடப் பேசித் தீர்க்க முடியும் என்று பலமான கருத்தோட்டம் நிலவி வரு கின்றகாலமிது.
இந்தச் சூழ்நிலையில் படைப்பாள்கள் தமக்குள்ளே ஏற்படும் மன முரண்பாடுகளை, தப்பர்த்தங்களை பரஸ்பரம் மனம் விட்டுப் பேசித் தீர்க்க முடியும் என்றே நாம் உறுதி யாகக் கூறுகின்றோம்
இதை விடுத்து தமது எழுத்து வன்மையைக் காட்டி சகோதர எழுத்தாளர்கள் ஒருவர் மீது ஒருவர் சேறு வீச முற் பட்டால் அச்சேறு சம்பந்தப்பட்டவர்கள் மீது மாத்திரமல்ல. இலக்கிய உலகத்தில் இயங்கி வரும் அனைவரின் முகங் களின் மீதுமே வந்நு படியலாம் என நியாயமாகவே அச்சப் படுகின்றோம்.
ஆழமும் கனதியும் ஆரோக்கியமுமிக்க ஈழத்து இலக் கியச் சுவைஞர்கள் இப்படியான சேறு வீசுவோரைப் பற்றிச் சரியாகவே கணிப்பீடு செய்து வைத்துக் கொள்வார்கள் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட விரும்பு கின்றோம்.
உண்மையாள படைப்பாளி தனது முத்திரை பதிக்கத் தக்க ,சிருஷ்டிகளின் மூலம்தான் தான் வாழும் சமூகத்துடன் மனந் திறந்து உரையாடுவான். இவை விடுத்து சும்மா கொச்சைத் தனமான வாதப் பிரதிவாதங்களை முன் வைத்து வாதாடுவதை விரும்பமாட்டான்.

Page 72
142 தலைப்பூக்கள்
ஈழத்து இலக்கிய உலகம் சரியான திசை வழியில் செல்ல வேண்டும் என்ற ஆத்மப் பசி கொண்ட படைப்பாளிகள் செய்ய வேண்டிய சரியான தொண்டு தங்களினது ஆகச் சிறந்த படைப்பை இச் சமூகத்திற்கு இந்தச் சமயத்தில் நல்குவதேயாகும்.
இந்த அவதூறுப் போரை சற்றே நிறுத்தி, உண்மை யாக இலக்கியத்தை நேசிக்கும் நெஞ்சங்களுக்குச் சற்றே ஆறுதல் தருவதைச் செயலில் செய்தால் அதுவே பெரிய இலக்கிய சேவையாக அமையும்.
இன்னொரு அவலத்தையும் காணுகின்றோம். இலக் கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஒரு சிலர் வேண்டு மென்றே - திட்டமிட்டே - அக் கூட்டத்தை ஒழுங்கு செய்த நோக்கத்தைத் திசை திருப்பி, தனது சொந்த மனக் குரோதங்களையும் மன முறிவுகளையும் கருத்து என்ற
போர்வையைப் போர்த்திக் குழப்பியடிக்கப் Lu rieš கின்றனர்.
இப்படியானவர்கள் இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு
விஜயம் செய்ததே இப்படியாகச் சொட்டை சொல்லி கிண்டல் செய்வதற்குத்தான்:
இலக்கிய உலகில் கருத்துப் பரிமாற்றம்என்பது வரவேற் கத்தக்கது. சித்தனையைச் செழுமைப்படுத்துவது. ஆனால் கருத்து என்ற கேடயத்தைத் தாங்கிப் பிடித்த சிலர் இலக் கியக் காடைத்தனம் புரியவும் முனைகின்றனர்.
எழுத்தாளர்களைப் பற்றி இந்த நாட்டு மக்கள் அசிங்க மாகக் கற்பனை பண்ணிச் சிரிக்கக்கூடிய காலமொன்றுவந்து விடுமோ எனப் பயப்படுகின்றோம் நாம்.
உண்மையாகத் தத்தமது துறைகளில் உழைப்பவன் யாரையுமே குறை சொல்ல மாட்டான். அவதூறும் மொழிய மாட்டான். தான் செய்யும் வேலையில்தான் கண்ணும் கருத்துமாக இருந்து இயங்கி வருவான். மற்றவர்களைத்

டொமினிக் ஜீவா 143
தேடிப் பிடித் குற்றங் குறை சொல்லிக் கொண்டிருக்க அவனுக்கு அவ Kr ப்பதில்லை.
வேலையற்றவர்களும் மற்றவர்களைச் சொறிந்து, அச் சொறியின் மூலம் இன்பம் காண்பவர்களும்தான் இப்படியான சொட்டைத் தனங்களைத் தொடராகச் செய்து கொண்டி ருக்கக் கூடியவர்கள்.
இப்படியானவர்களைச் சரிவர இனங் கண்டு பொது வாழ்விலிருந்து இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டியது தரமான இலக்கியச் சுவைஞர்களின் பாரிய கடமையாகும்.
- இதைச் சரிவர அவர்கள் செய்வார்கள் என்பதைத் திடமாக நம்புகின்றோம்.
(பொங்கள் மலர் - 1984)
இளங் குருத்துக்களைக் கருகவிடக் கூடாது!
வன் செயலால் இடம் பெயர்ந்த பல்கலைக் கழக மாணவ, மாணவியர் பிரச்சினை இன்று நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
வன் செயலுக்கு முன்னும் கூட, தென்னிலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் நடந்துள்ள பல கசப்பான - மனசு புண்படக் கூடிய - பல சம்பவங்கள் நடந்தேறியுள்ள தையும் காரணமாகக் காட்டி மாணவப் பகுதியினர் தமது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
தங்களுக்கு வடிக்கு, கிழக்கில் உள்ள பல்கலைக் கழகம், பல்கலைக் கழகக் கல்லூரி ஆகிய இடங்களில் இடமளிக்கப் பட வேண்டுமென்று தமது கோரிக்கைகளில் வற்புறுத்தி

Page 73
144 தலைப்பூக்கள்
ஆயுள்ளனர். இதற்காகப் போராட்டத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தைத் தமது எதிர்ப்பு நடவடிக்கையாக ஆரம பித்த மாணவர்கள் இப் போராட்டக் கட்டத்தையும் தாண்டி சாகும்வரை உண்ணாவிரதம் என்ற கட்டத்திற்குள் தம்மை உட்படுத்தியுள்ளனர். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பவர்களில் மாணவர்களுடன் சேர்ந்து சில மாணவிகளும் பங்கு கொண்டுள்ளனர்.
எனவே நிலைமை பாரதூரமான கட்டத்திற்கு மாறி யுள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நிலைமை அபாய கட்டத்திற்கு மாறுவதற்குள் சம்பந்தப் பட்டவர்களும் அரசாங்கமும் தகுந்த, நியாயமான தீர்வு நடவடிக்கைகளைக் கையாள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல் தலைவர்கள் தலையிட்டு உயர் கல்வி அமைச் சின் செயலாளர் கலாநிதி ஸ்டான்லி கல்பகேயுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் சொல்லு கின்றன.
சமாதானப் பேச்சுக்கள் மனிதாபிமான உணர்வுடனும் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் மனப் பரிவுடனும் துயருற்றவர்களுக்கு விடிவு ஏற்படுத்தும் வகையுடன் அமைய வேண்டும் என ஆசிக்கின்றோம். இந்தப் பாரிய பிரச்சினை யில் நிதானம் மிக மிக முக்கியம் என்பதையும் நாம் வற்புறுத் திக் கூறவிருப்புகின்றோம்.
காரணம், உணர்ச்சி வசப்பட்டுச் சம்பவங்கள் திசை திரும்புமானால் அது மிகப் பாரிய லிளைவுகளை ஏற்படுத்த லாம் எனவும் அச்சப்படுகின்றோம்.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையில் நிலைமை களை அனுசரித்து இரு பகுதியினரும் ஒருவர் பிரச்சினையை

டொமினிக் ஜீவா 45.
ஒருவர் புரிந்து கொண்டு சமாதான உடன்பாட்டுக்கு வர வேண்டியது அவசர அவசியக் கடமையாகும். ... "
சமீப மரதங்களில்தான் இந்தத் தேசமே வெட்கித் தலை குனியக் கூடிய இனச் சங்காரம் நடந்தேறியுள்ளது. இதைச் சகலரும் அறிவர். சகல தேசங்களும் அறியும், இந்தப் பின்னணித் துயர துன்பங்களின் சுவடுகள் இன்றும் கூட முற்றாக மறையவில்லை. இதன் எச்ச சொச்சங்கள் தென்னி லங்கைப் பல்கலைக் கழகங்களில் எதிரொலிக்காமல் இருக்க முடியாது.
இந்த நிலையில் மாணவர்கள் அச்சப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்யும்,
83 ஜூலை வன்செயலால் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் இன்னமும் தென்னிலங்கைக்கு முற்றாகத் திரும்பிவி, வில்லை. Ᏹ
இதையும் நாம் கவனத்தில் கொண்டுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமுகத் தீர்வு ஏற்பட வேண்டும் என விருப்புகிறோம்.
தென்னிலங்கைப் பல்கலைக் கழகங்களில் தமது உயில் உடமைக்குப் பாதுகாப்பில்லை என்று அச்சப்படும் மான களின் இந்த உயிர் மூச்சுக் கோரிக்கையை உயர் கல்வி பீடம் அதுதாபத்துடன் அணுகி, பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொண்டு ஒரு சுமுக தீர்வுக்கு வரவேண்டும் என மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகின்றோம்.
சம்பந்தப்பட்ட இடம் பெயர்ந்த மாணவர்கள் வெறும் பல்கலைக் கழகப் பட்டதாரி மாணவர்கள் மட்டுமல்ல, இவர்களில் அநேகர் எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் தலைமை தாங்கக் கூடியவர்கள்: உயர் பதவி ள் வகிக்கத்தக்கவர்கள்; சட்ட வல்லுநர்களாக, நீதித
த-10

Page 74
146 தலைப்பூக்கள் துறையில் தலைமை தாங்குபவர்களாக, இன்னும் பல்வேறு துறைகளில் உயர் தகுதி படைத்தவர்களாக விளங்கத் தக்க இவர்களின் எதிர் காலத்தில் மக்கள் சமூகத்திற்கும் பொறுப் பான பங்குண்டு.
எல்லாவற்வையும் விட, எதிர்காலத்தில் வாழ்ந்து வளம் பெறக் கூடியதான இளம் குருத்துக்களின் உயிர்கள் பாது க்கப்பட வேண்டும். உடனடிய* நடவடிக்கை எடுத் தால்தான் இது சாத்தியகாகவும் அமையும் .
(பிப்ரவரி 1984)
வாழ்வது என்பது ஓர் ஆக்கபூர்வமான வேட்கை?
ஆண்டுக்கு ஆண்டு, ஆண்டு மலர்களில் தலையங்கங் களுக்குப் பதிலாக நான் எனது மன உணர்வுகளை ஒழுங்கு கூட்டிக் கடிதங்கள் வுரைந்ததுண்டு. அதுபோன்று இம்மல ரிலும் உங்களுக்கு இந்த விகிதத்தை எழுதுகின்றேன்.
வேறெந்தக் காலங்களையும் விட இன்று என்னையும் உங்களையும் சுற்றி வேதனைகள், துன்பங்கள், துயரங்கள். Drô00 ஒலங்கள் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. மனித டிணர்வுகளே மரத்துப் போய்விடும் அளவிற்கு, வாழ்க் கயே வெறுத்துப் போய் விடக்கூடிய அவலத்திற்கு நம்மில் லர் இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின் றோம்.
இந்த நெருக்கடிகளின் மத்தியில்ேதான் நான் வாழ்வை அதிகமாக நேசிக்கின்றேன். இந்த மண்ணிலேயே வாழ வேண்டுமென்ற அவ என்னை உந்தித் தள்ளுகின்றது.

டொமினிக் ஜீவா 14
தமிழுக்கும் மக்களுக்கும் என்ண்ாலியன்ற கடமையைச் செய்ய வேண்டுமென்ற பேராசை என்னுள் முகிழ்ந்து வருகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான்-இந்த வெறுக்கப்படக் கூடிய சூழ்நிலைபில்தான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்.
* எப்படி உங்களால் எழுத முடிகின்றது? என நீங்கள் வியப்புடன் கேட்பது எனக்கு விளங்குகின்றது.
உங்களை மட்டுமல்ல மனுக்குலத்தை மிக மிக ஆழமாக நேசிப்பதினால்தான் நான் எழுத்தை நேசிக்கின்றேன். நான் காலத்தின் ஒரு கட்டத்தில் மறைந்து போகலாம்; ஆனால் எனது எழுத்துக்களும், சிந்தனைகளும், சாதனைகளும் காலம் காலமாக வாழும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாகவே எழுத்தை நான் ஆயுதமாகப் பாவிப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளேன்.
நான் மக்களுக்கு அடுத்தபடியாக எழுத்தைத்தான் நேசிக்கின்றேன்.
சுயபாவனை செய்து என்னை நானே சுளுக்கிக்கொள் ளும் போக்கு என்னிடம் என்றுமே இருந்ததில்லை. அப்படி இருந்திருக்குமானால் நான் தனிமைப்பட்டு, மக்களுடன் தொடர்பிழந்து போய்விடுவேன் என்பது எனக்கு நன்கு தெரியும்,
செயல்களின் வாயிலாக உழைப்புக்கு முன்னுதாரணமாக இருக்கவே நான் என்றும் விரும்புகின்றேன். அப்படி உழைக் கும்பொழுது-செயல்படும் வேளையில்-ஏற்படும் பாரிய சிரமங்கள் என்னைச் சில சமயககளில் திக்குமுக்காட வைத்து விடுவதுமுண்டு. கஷ்டங்கள் சில சமயங்களில் சிக்கல்கள் நிரம்பியதாகவும் பல வேளைகளில் கடுமை நிரம்பியதாகவும் இருந்து விடுவதுண்டு. நான் தயங்குவதில்லை. எனது பாரிய சிரமங்களும் கஷ்டங்களும் எல்லாரினதும் அக்கறைக்

Page 75
148 தலைப்பூக்கள்
கும் கவனிப்புக்கும் உரியவையாகின்றன என்பதை நானறி வேன்.
கடந்த பத்தொன்பது ஆண்டுகளில் மல்லிகை ஏற்படுத் திய இலக்கியத் தாக்கம் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளதையும் வருங்காலத்தில் அதன் விச்சு இன்னுமின்னும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நண்பர்கள் பலர் விவரித்துக் கடிதங்கள்மூலம் கருத்துத் தெரிவித்து வருகின் றனர்.
எனக்குத் திருப்தி இல்லை. நான் நம்பிய-விரும்பிய தாக்கத்தை இன்னும் என்னாலும், மல்லிகையாலும் ள்ந் படுத்த முடியவில்லையே என்ற மன ஆதங்கம் என்னிடம் நிறைய உண்டு. எனவே எனது மனத் திருப்திக்கு நான் இன்னும் நிறைய நிறைய உழைக்கவேண்டியிருக்கிறது.
என் மனசில் குறுகுறுக்கும் ஓர் எண்ணத்தையும் இங்கு சொல்லத்தான் வேண்டும்.
எழுதும் சிலர் இந்தக் கால கடதாசி விலையேற்றம் அச்சகச் செலவு ஒன்றையுமே கருத்தில் கொள்ளாது பக்கம் பக்கமாக எழுதி நிரப்புகின்றனர். அது அப்படியே மல்லிகை யில் இடம்பெற வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
மல்லிகையில் ஒரு சில படைப்பாளிகளின் ஆதிக்கம்தான் இருக்கவேண்டும் என்ற நினைப்பை முற்றாக நிராகரிப்பவன் தான். என்னுடைய ஆதிக்கம்கூட மல்லிகையைக் கட்டுப் படுத்தக்கூடாது
மல்லிகையின் வருங்கால வளர்ச்சி குறித்து பெருமளவில்” தீர்க்க திருஷ்டியுடன் சிந்தித்துச் செயலாற்றி வருகின்றேன்.
மல்லிகைப் பரம்பரை"யைத் தொடர்ந்து வளர்த்து வர வேண்டும் என்பதே எனது பேரவாவாகும். அதற்கு விலை உண்டு. அதுதான் இடையறாத இலக்கிய உழைப்பு. தேடல். சுலபமாகப் புகழ் பெற்று விடலாம் என நம்பி யாகும் தயவுசெய்து வந்துவிட வேண்டாம்

டோமினிக் ஜீவா 149
நெருக்கடியான கால கட்டங்கள் வரும்பொழுது மல்லிகை உயிர்த்துடிப்பு மிக்கதாகவும், செயற்பாட்டிற்கான சமயம் வரும்பொழுது சக்திமிக்கதான ஆற்றலும் வீரியமும் நிரம்பிய தாகவும் விளங்கும் ஒரு தனி மனித இயக்கமாகும். என் கூடவே தானும் வளர்ந்து புதிய குணாம்ச உள்ளடக்கத்தைப் பெற்றுக் கிளை பரப்பி வருகின்றது.
எண்ணற்ற நண்பர்கள், அநுதாபிகள், ரளிகர்கள் புடை சூழ மல்லிகை வளர்ந்து வருகின்றது என்ற எண்ணமே எத்தனை சுகமானது!-எத்தனை ரம்மியமானது! அந்த உற்சாகமான நம்பிக்கையும் மனத் தெங்புமே எனது வெற்றி பின் இரகசியங்களாகும். இருபதாண்டுச் சாதனை-மகத் தான வெற்றி-எனப் பலரும் பாராட்டும்பொழுது அயராத ானது உழைப்பின் வலிமையைக் கால்கோளாகக் கொண்டு அந்த அபிமானிகளின் ஒத்துழைப்பையும் நல்லெண்ணத்தை யுமே முதன் முதலில் எண்ணிப் பார்க்கின்றேன்.
மல்லிகையின் இத்தனை ஆண்டு அனுபவங்களை வைத்து ஒரு பெரிய நூலையே:எழுதிவிடலாம்-அப்படியொரு புத்தகம் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனது அடிமனசில் உண்டு. அத்தனைக்கத்தனை சுவையான, கசப்பான, மனசைத் தொடக்கூடிய சம்பவங்கள் மல்லிகை அனுபவத்தில் எனக்குப் போதனைகளாகவும் படிப்பினைகளாகவும் கிடைத் துள்ளன.
தமிழகத்திற்கு நான் அடிக்கடி போய் வரும்பொழுது ஒரு எதார்த்த உண்மையைப் புரிந்துகொள்வதுண்டு. வெறும் எழுத்தாளன் என்பதைவிட, ஒர் ஆரோக்கியமான சிற்றேட் டின் ஆசிரியன் என்கின்ற முறையில் எனக்குப் பல இடங் களில் கெளரவம் கிடைக்கின்றது. தமிழ்நாட்டின் பல மாவட் டங்களில் என் முக ந்தை நேரடியாகத் தெரியாதவர்கள் கூட, மல்லிகையைத் தரித்து வைத்திருப்பதினால் என்னைக் கனம் பண்ணி மனசார நேசித்துக் கடிதம் எழுகின்றனர்.

Page 76
50 தலைப்பூக்கள்
மிக துட்பமாக-மிக மிகக் கூர்மையாக என்னை அவதா னித்துப் பார்ப்பவர்களுக்கு ஒன்று தெரிய வரும். கருத்தை உருவாக்கி விடுவது மாத்திரம் எனது வேலையாக இருந்து விடவில்லை. அந்தக் கருத்துக்களுக்காகக் களத்தில் நின்று போராடவேண்டிய தேவையும் எனக்கு ஏற்பட்டதுண்டு.
மல்லிகையை உருவாக்குவதைத் தவிர, எனக்கு வேறு வேலையே இல்லை. வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து கொண்டு போகும் இன்றைய கஷ்டமான கால கட்டத்தில் தாளைய வாழ்க்கை, எதிர்கால நிலைமைபற்றி எதுவித சிந்தனையுமில்லாமல் எனது வருங்காலம் அனைத்தையும் இலக்கியத்திற்காகத் தத்தம் செய்துவிட்டுத்தான் இன்று மில்லிகைக்காகப் பேனா பிடித்து உழைத்து வருகின்றேன்.
என் உழைப்பில் கூதல் காய முனைந்து எனது உழைப் பையே சுரண்ட நினைப்பவர்களை நட்பு நிலையில் என்னிடம் நெருங்க அனுமதிக்க மாட்டேன்.
நான் எனக்காக "உழைக்கவில்லை. இதைப் பரிபூரண மாக உணர்ந்துகொண்ட நிலையிலேயே இலக்கியத் துறை வில் காலடி வைத்தேன். நான் அடிக்கடி சொல்வதுண்டு; "தனிமரம் எத்தனைதான் பருத்துச் செழித்தாலும் அது தோப்பாகாது! இதை மனதில் கொண்டே, சகல சகோதர எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து ஈழத்து இலக்கியப் பரப்பைக் கனம், காத்திரமானதாக உருவாக்க வேண்டும் என விரும்பிச் செயலாற்றி வருகின்றேன்.
எனது இந்த ஆத்ம உணர்வைப் புரிந்துகொண்ட ஒரு சிலராவது இருந்தாலும் போதும், இந்தத் தேசத்தின் தமிழ் இலக்கிய ஆளுமையையே சர்வதேச அந்தஸ்திற்கு உயர்த்தி விடலாம் என்பது திண்ணம்.
20-வது அண்டு மலர்-1984

கறுப்புச் சூரியன்!
உங்களுடன் மனந்திறந்து நிறையப் பேச வேண்டும் போல இருக்கின்றது. மனதை வாட்டுகின்ற, வருத்துகின்ற நெஞ்சை உருக்குகின்ற அத்தனை நெருடல்களையும் வேதனைகளையும் சொல்லித் தீர்த்துக் கொட்டிவிட வேண்டு மென்ற ஆவல் நெஞ்சில் முகிழ் கின்றது. அத்தனை கனத்த நெஞ்சுடன்-ஒருவித பரிதவிப்புடன் தான் இன்று நான் இயங்கி வருகின்றேன். w
சிந்திக்கத் தெரிந்த-உற்று நோக்கி உன்னிப்பாகக் கவனித்து தெரிந்த-கலைஞனாக இருப்பது எத்தனை மகாசிரமம் என்பதை வேறு எந்தக் காலத்தையும் விட இப்பொழுது நன்றாகத் தினசரி உணர்ந்து இயங்கி வருகின்றேன்.
சுற்றி வர வேதனைகள், சோதனைகள் . துன்பங்கள், துயரங்கள், அவலங்கள், அல்லோல கல்லோலங்களுக்கு மத்தியில் தினம் தினம் அவைகளைப் பார்த்து, உணர்ந்து) தரிசித்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்தான் என்னைப் போன்றவர்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக் கின்றனர்.
மற்றவர்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பார்வையில், கண்ணோட்டத்தில் வித்தியாசம் உண்டு மற்றவர்கள் பார்வையில் படும் காட்சிகளை, அவலங்களை மாத்திரம் கண்டு உணர்ந்து, அதன் தினசரிப் பழக்கத்தச லேயே அவற்றை ஜீரணித்துக் கொள்வார்கள். ஆனால் எம்மைப் போன்ற அறிவு ஜிவி நிலைக்கு உயர்த்தப்பட்டவரி கள் அவற்றை மிகைப்படுத்திக் கற்பனை செய்க செய்கே

Page 77
52 தலைப்பூக்கள்
தினசரி தம்மைத் தாமே சித்திரவதை செய்து கொள்வார் கள் ,-இந்த அவஸ்தையைத் தினசரி படுகின்றேன்!
தூக்கம் வராமல் விழித்திருந்து இரவுகளைக் கழிப்பது என்பது ஒரு வழக்கமாகி விட்டது. "இந்தக் கொடூரங்களுக்கு ஒரு முடிவு- விடிவு-வராதா?’ என ஏங்குவது என்பது தினப் பழக்கமாகி விட்டது. f
இருந்தும் நம்பிக்கையைக் கைவிட்டதில்லை நான் ஒரு போதும். நிச்சயம் சுபீட்சமான ஒரு விடிவு காலம் மலரத் தான் போகின்றது என உறுதியாக நம்புகின்றேன்.
இதுவரை பொங்கல் மலர்களில் சூரியன் சிவப்புச் சூரியனாகத்தான் உங்களுக்கும் எனக்கும் காட்சி தந்து வந்துள்ளான்.
ஆனால் இம்முறை அட்டையில் கதிர் வீசும் சூரியனைப் ஆாருங்கள் "கறுப்புச் சூரியன்!"
எனது உள்ளுணர்வுகளையும் சிந்தனைப் போக்கையும் துயர ஏக்கங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற் காகவே-அதன் குறியீடாகவே-இந்த ஆண்டு பொங்கலுக்கு உதித்த சூரியன் கருஞ் சூரியனாகவே உதயமாகினான் என்பதைச் சூசகமாகச் சொல்லியுள்ளேன்.
வழக்கம் போல, இவ்வாண்டும் பொங்கல், புத்தாண்டு வாழ்த்துக்களை வாசகப் பெருமக்களுக்கும், மல்லிகை அபிமானிகளுக்கும் தெரிவிப்பதில் சற்றுப் பின் நிற்கின்றேன். காரணம் சோகமும் துயரமும் வேதனையும் மிக்க இப் பொங்கல், புத்தாண்டு சூழ்நிலையை மனதில் கொண்டு மகிழ்ச்சியான வாழ்த்துக்களைத் தவிர்த்துக் கொள்ள 'முயன்றுள்ளேன்.
சும்மா உலக ஒப்பனைக்குத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. எப்போதோ ஒரு *காலத்தில் ஆராய்ச்சி மாணவன் பல்கலைக் கழகத்திலேயோ

டொமினிக் ஜீவா 133
அல்லது நூலகத்திலேயோ மல்லிகைப் பொங்கல் சிறப்பு மலரை ஆய்வு நோக்குடன் அணுகிப் படிக்கும்போது நுட்ப மான துயரக் குரல்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு இந்தக் கறுப்புத் திருநாளில் ஒலித்த நுட்பமான துயரத்தின் மென் ஒலிகள் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்காகத்தான் இந்தக் கரிநாள் சம்பந்தமாக எனது கருத்துக்களை இங்கு பதித்து வைத்துள்ளேன்.
நான் என்னைப் பொறுத்தவரைக்கும் மனந்தளர்ந்து மிரளுபவன் அல்ல. எதற்குமே கிறுங்க" மாட்டாதவன். எத்தனையோ பாரிய பிரச்சினைகள் நேருக்கு நேராகச் சந்தித்த போதுகூட, அதை நேர்நின்று எதிர் கொண்டவன்.
ஆனால் இப்பொழுது சூழ நடைபெறும் துயரச் சம்பவங் கள் என் ஒருவன் சம்பந்தப்பட்டதல்ல. மக்களின் முழு உறுப்பினர்களையும் தினசரி பாதிக்கின்றது. அவர்களது மனித மனங்கள்ை ஆழமாகப் புண்படுத்துகின்றது.
இருள் சுமந்த சோகங்கள் ஒவ்வொருவர் வீட்டு வாசல் கதவுகளையும் இன்று தட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த மக்களில் ஒருவன்-அவர்களை மனதார நேசிப் பவன் என்கின்ற முறையில் இந்தக் குறிப்புக்களை இங்கு பதியவைத்துள்ளேன்.
பொங்கல் மலர்-1985

Page 78
தன்னம்பிக்கையின் ஒலியே தவிர, தலைக்கணத்தின் ஒசையல்ல!
வழக்கம் போலவே, ஆண்டு மலர்களில் நான் எழுதும் நேரடி விகிதமே இது.
இந்தச் சந்தர்ப்பத்தில். இருபத்தோராவது ஆண்டு மலரின் பாரிய வேலைகள் அத்தனையும் முடிந்துவிட்ட ஒரு விடுபட்ட நிலையில் இருந்து நண்பர்கள் ஒவ்வொருவரின் முகங்களையும் மானசீகமாக நினைத்துப் பார்க்கின்றேன்.
அந்த அன்பு முகங்களின் மனோபாவங்கள்தான்” எத்தனை! - எத்தனை - அடேயப்பா!
உண்மையை உண்மையாக மனந்திறந்து சொல் கின்றேன். என்னை நேசிக்கும். என்னால் சிநேகிக்கப்படும் அந்த அன்பு நெஞ்சங்களின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் உற்சாகமான தூண்டுதலும் இல்லாது போயிருந்தால் இத்தனை ஆண்டுகள் இப்படியான கனதியான பளுவை சுமையைத் தாங்கிக் கொண்டு முன்னேறியிருப்பேனா என்பது சொல்ல முடியர்த சங்கதியாகும்.
வெளியே தெரியாத வகையில் மல்லிகைக்கு எத்தனையோ பிரச்சினைகள் இந்தச் சொற்ப காலங்களில் ஏற்பட்டதுண்டு. சஞ்சிகையை ஒழுங்காக மாதா மாதம் நடத்துவதல்ல எனக்குள்ள பொறுப்பு. சஞ்சிகையுடன் சேர்ந்து வளர்ந்து வரும் மல்லிகை நிறுவனத்தினுடைய பொருளாதாரச் சிக்கலுக்கு- நெருக்கடிகளுக்கு- முகம் கொடுப்பதே பாரிய பிரச்சினையாக என் முன் விஸ்வரூப மெடுத்து என்னைத் தடுமாற வைத்ததுண்டு. திகைத்துப் போயிருக்கின்றேன்.

டொமினிக் ஜீவா 155
இந்தப் பொருளாதாரச் சங்கடங்கள் என் முன்னால் தலை காட்டிய வேளைகளில் எல்லாம் எனக்குக் கைதந்து உதவியதுடன், எனது ஆளுமையில், திறமையில், துணிச்ச லில் ஆழமான நம்பிக்கை வைத்து என்னை ஊக்குவித்ததின் மூலம் ஈழத்தில் ஒரு நிரந்தர சஞ்சிகை ஸ்தாபனத்தை உருவாக்க முனைந்து செயல்பட்ட அத்தனை இலக்கிய நெஞ்சங்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
மல்லிகையின் குறைகளைச் சுட்டிக் காட்டுவோருண்டு. அத்தகைய குறைகளைக் களைவதில் வருங்காலத்தில் நான் முன் முயற்சி எடுப்பேன் என்பதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன். 、*
வீம்புக்காகவும் ஒரு வித மன வக்கரிப்புடனும் குறை கூறுகின்றவர்களின் முகங்களை ஏற்கனவே நான் இனங் கண்டு வைத்திருக்கின்றேன் அவர்களைப் பற்றி மல்லிகை வாசகர்களுக்கும் நன்கு தெரியும். மன விரக்தியும், பொச்சரிப்பும், எரிச்சலும் கொண்ட இவர்களினது அபிப்பிரா யங்களில் மனத் தூய்மையோ இலக்கிய நேர்மையோ இருந்ததில்லை.
எனவே இவர்களது கருத்துக்களை நான் என்றுமே கணக்கில் எடுத்துக் கொள்வதுமில்லை.
இந்தக் காலகட்டங்கள் மிகப் பெறுமதி வாய்ந்தவை. என் வாழ்வில் மறக்க முடியாதவை, வார்த்தைகளுக்குள் கட்டுப்பட்டுவிட முடியாத அவஸ்தைகளுக்கு, அவலங்களுக்கு சோகங்களுக்கு மத்தியில் ஒரு ஜீவத் துடிப்புள்ள வாழ்க்கையை, இலக்கிய வேலையை- நான் நடத்திக் கொண்டிருக்கின்றேன். இந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட எனது வாழ்வு ஆண்டுகளில், இப்போது என் முன்னால் கழிந்து போன மூன்று, நான்கு ஆண்டுகள் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களும் படிப்பினைகளும் தாக்கம் நிரம்பியவை; முன் அதுபவம் இல்லாதவை

Page 79
56 தலைப்பூக்கள்
f
இருந்தும் அத்தனை சோகங்களுக்கு, நிஷ்டூரங்களுக்கு *மத்தியில் எனது தினசரி இலக்கியக் கடமைகளை நாள் தவறாமல் நான் ஈடேற்றிக் கொண்டுதான் இயங்கி வரு கின்றேன்.
இந்தச் சூழ்நிலையிலும் இலக்கிய உலகின் கருத்துப் போராட்டங்களுக்கு நான் என்றுமே சளைத்துப் பின் வாங்கி Lu 66T66). அப்படியான கருத்துப் போராட்டங்களை இலக்கிய ஆரோக்கியம் கருதி, களம் அமைத்துத் தந்து ஈழத்து இலக்கியத்திற்குச் செழுமை பரப்பி வந்துள்ளேன்.
கருத்துப் போராட்டத்தின் காரணமாக, கருத்து முரண் பாடு கொண்டவர்களை-அவர்களினது கருத்துக்களைஎந்தக் காலத்திலுமே இருட்டடிப்புச் செய்ய நினைத்தவ னல்ல. அதற்காக எதிர் அணியைச் சேர்ந்தவர்களைத் தரக் குறைவாகத் தாக்கவோ, இகழ்ந்து பேசவோ நான் என்றுமே முயற்சித்தவனுமல்ல.
கருத்து முரண்பாடு கொண்டவர்களானாலும் கூட அவர்களிடம் நேசிப்புத் தன்மை, புறங் கூறா மனநிலை, இலக்கியப் புரிந்துணர்வுப் போக்கு இருக்குமேயானால் அவர் களது நெருங்கிய நண்பர்களைவிட, நான் அவர்களை மிக மிக நெருக்கமாகவே நேசிக்கத் தெரிந்தவன்.
இந்த மலர் வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில் விளம்பரத்திற்குச் சில ஆங்கில எழுத்துக்கள் தேவைப் பட்டன. அன்று ஒரு சனிக்கிழமை. அரை வேலை நாள். அச்சக மெஷின் பகல் ஒன்றரையுடன் நின்று விடும். செய்த ஒரு போமை மெஷினில் ஒட விட வேண்டும். ஆகவே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தேன். என்னிடம் இங்கிலீஸ் எழுத்துக்கள் இல்லை. இரண்டொரு ஆங்கில எழுத்துக்களைப் பெற்றுக் கொள்ள பக்கத்தேயுள்ள அச்சக மொன்றுக்கு அவசரமாகச் சென்று பெற்றுத் திரும்பி விட்டேன்.

டொமினிக் ஜீவா 157
அன்று பின்நேரம் என்னைத் தேடி இலக்கிய அன்பு ரொருவர் வந்தார். என்னிடம் நேசபூர்வமாக உரையாடும் போது நீங்கள் சக எழுத்தாளர்களை மதிப்பதில்லையாம், ாலையில் அச்சகம் வந்தபோது பல எழுத்தாளர்கள் அங்கு
ந்தனராம். நீங்கள் ஒருவரையும் பார்த்துக் கனம் பண்ணிச் சிரிக்கவில்லையாம்! இது சரியான செயலல்ல!" என்ற விதமாக நண்பர் என்மீது குறை கண்டு பிடித்தார்.
உண்மையாகவே நான் யாரையும் அலட்சியம் செய்யும் நோக்கில் இயங்குபவனல்ல. எந்த மனிதனையும் வெறுப் பவனல்ல. என் மனசுக்கு நெருக்கமில்லாதவர்களைல் கண்டால் நான் ஒதுங்கி விடுவதுண்டு. அது வெறுப்பால் விளைந்த விளைவல்ல. அது எனது ஒதுங்கும் மனப்பான்மை யின் அறிகுறி.
காலை ஏழு மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை நான் இலக்கிய வேலைக்காகவே ஒவ்வொரு மணித் துளி நேரத்தையும் செலவழிக்கப் பழக்கப்பட்டுள்ள எனக்கு இலக்கியத் தனகலுக்கு நேரமேங்கே இருக் கின்றது?
மற்றும் போலிச் சிரிப்புச் சிரித்து சும்மா முகத்துக்காக, நடிக்க எனக்கு வரவே வராது. அடுத்து இப்படியே ஒவ் வொரு எழுத்தாளனையும் சந்தித்துச் சிரித்துச் சிரித்துக் கதைக்கத் தொடங்கினால் யாழ்ப்பாணம் பஜார் பகுதியில் நடைபயிலும் எனக்குக் கதையளக்கத்தான் நேரமிருக்குமே தவிர, உருப்படியான வேலை செய்ய நேரம் இருக்காது.
எப்போவோ வரக்கூடிய-ஐம்பது, நூறு ஆண்டுகளுக் குப் பின்னால் வரக் கூடிய- சரித்திர காலகட்டத்திற்காகத் தான் நான் தினசரி கடமைபுரிந்து வருவதாக நான் மனதார நம்புவதால்தான் இவ்வளவு உறுதியாகவும் உற்சாகமாக வும் தன்னம்பிக்கையுடனும் என்னால் உழைக்க முடிகின்றது. நிச்சயமாக நான் மறைந்த பின்னர் எனது வேலைகள் வருங்

Page 80
158 தலைப்பூக்கள்
கால இலக்கிய உலகத்தினரால் பேசப்படும் என மெய்யா கவே நம்புகின்றேன். அப்பொழுது பேசப்படும் அந்தச் சரித்திர காலத்தில் நான் யாருடன் கோபித்தேன்; யாரை வெறுத்தேன்; யாருடன் முரண்பட்டேன்; எவருடன் தெரு வோரம் நின்று வாய்த் தர்க்கம் செய்தேன் என்பது குறிப் பிடப்படாது. நான் செய்த உருப்படியான வேலைகள்தான் குறிப்பிட்டுப் பேசப்படும்.
அதை மனதில் கொண்டுதான் நான் இயங்கி வருகின் றேன். மல்லிகையை முன் நடத்திச் செல்லுகின்றேன்.
என் இலக்கிய நேர்மையைச் சந்தேகிப்பவர்களுக் காகவும் மல்லிகையின் தார்மீக குணாம்சத்தை நிராகரிப் பவர்களுக்காகவும் கூட, நான் தினசரி என் உழைப்பின் மூலம் போராடி வருகின்றேன்.
என்னில் "நான்', ‘நான்’ என்ற தொனி அதிகம் ஒலிப்பதாக நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். என்னை உருவாக்கியவர்கள், பண்படுத்தியவர்கள் , செம் மைப்படுத்தியவர்கள் அனைவருமே இந்த நான் ஐக் கடந்தவர்கள்: மேதைகள். அற்புதமானவர்கள். எனவே என்னில் "நான்" வளர நான் என்றுமே நினைத்தவனல்ல. *மண்புழுவாக இருந்து மனிதனானவன் நான்' என அடிக் கடி எனக்கு நானே நினைவூட்டுவதுண்டு. V.
என்னிடமிருந்து வரும் "நான் தன்னம்பிக்கையின் ஒலியே தவிர, தலைக்கனத்தின் ஒசையல்ல!
21- வது ஆண்டு மலர்- 1985

புத்தாண்டில் புது யோசனைகள்
και .
மல்லிகைக்கும் அதன் காத்திரமான வாசகர்களுக்கும் எந்த விதமான நெருங்கிய தொடர்புமில்லை’ என்றொரு கருத்து ஒர் இலக்கிய நண்பரரல் முன் வைக்கப் பட்டுள்ளது. அந்தக் கனதியான சுவைஞரே மீண்டும் கூறுகின்றார்: இப்படியான ஆரோக்கியமான இலக்கிய இதயங்களை ஒருங்கு சேர்த்து அன்னாரது கருத்துக்களைக் கேட்டறிவதற் காவது மல்லிகை வாசகர்களை ஆண்டுக்கொரு தடவை அவசியம் சந்திக்க ஆவன செய்ய வேண்டும்.
இந்த ஆலோசனையை நாம் மெய்யாகவே வரவேற் கின்றோம். ஆண்டுக்கொருதடவை ஆண்டு மலர் வெளியீடு களை நாம் தொடர்ந்து நடத்துவதுண்டு அதில் முக்கிய மாக மல்லிகையின் நொடர் வாசகர்களையும், அபிமானி களையும் அழைப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் அதில் ஒரு சங்கடம் உண்டென்பதை இப்பொழுது உணரு கின்றோம். "ஆண்டு மலர் வெளியீட்டு விழாக்களில் வாசகர் களின் கருத்துக்களோ அபிப்பிராயங்களோ பெரும்பாலும் எதிரொலிப்பதில்லை. அதற்கு மாறாக மல்லிகையில் தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளே தமது கருத்துக்களை "மல்லிகைப் பந்த "லிலும் தெரிவிக்கின்றனர். பார்க்கப் போனால் தொடர்ந்து: மல்லிகையை ஆதரித்து வரும் உண்மையான வாசகர்கள் இங்கும் புறக்கணிக்கப்படுகின் நனர். - இதுவும் உங்களது கவனத்திற்குரியது என மேற் சொன்ன நண்பரே தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"மல்லிகை வாசகர்களின் ஆழமான கருத்துக்களை ஆசிரியர் அறிந்து வைத்திருக்கவில்லை" என்ற குற்றச்

Page 81
160 தலைப்பூக்கள்
சாட்டை எம்மால் பூரணமாக ஒப்புக் கொள்ள முடியாது. அதற்குத் தகுந்த காரணம் உண்டு. மல்லிகையின் கனதி யான வாசகர்களை நாம் வீதியிலும் வீடுகளிலும் பொது வைபவங்களிலும் சந்திப்பது நிரந்தர வழக்கம். பெரும் பாலான மல்லிகை இதழ்கள் சந்தாதாரர்களின் கரங்களில் நேரடியாகவே சேர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பு மல்லிகையைத் தவிர, வேறெந்தச் சஞ்சிகைக்கும் இல்லை என்றே கூறலாம், அப்படி அவர்களிடம் மாதாந்தச் சஞ்சி கையைக் கையளிக்கும்பொழுது அவர்களது கருத்துக்களும். அபிப்பிராயங்களும், ஆலோசனைகளும் கேட்கப்படுவது நடைமுறை வழக்கம், இது நீண்ட காலமாகவே கடைப் பிடிக்கப்படுவதைச் சம்பந்தப்பட்டவர்கள் நன்கு உணர் வார்கள்.
- அதே சமயம் வாசகர்களை ஒருங்கு சேரச் சந்திக்க வில்லை என்பதையும் நாம் மனமார உணருகின்றோம். மலர் விழாக்களில் அவர்களது அடி நெஞ்சக் கருத்துக்கள் எதிரொலிப்பதில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளு. கின்றோம்.
அந்த நண்பரின் இந்த ஆலோசனைக்காக மல்லிகை வின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் பகிழ்ச்சியடை கின்றோம்.
புத்தாண்டுத் தொடக்கத்தில்மல்லிகை வாசகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக வாசகர் கூட்ட மொன்றை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கூட்டலாம் என எண்ணுகின்றோம். மலையகத்திலும் மல்லிகைக் கூட்டமொன்றை ஒழுங்கு செய்து அங்குள்ள தரமான சுவை ஞர்களையும் அவசியம் சந்திக்க வேண்டுமென்பது எமது பேரவாவாகும். தேசச் சூழ்நிலை இடம் தருமானால் அதையும் நிச்சயமாக நடைமுறைப்படுத்தி வைக்க ஆவன Gayat Garb.

டொமினிக் ஜிவா 161
கொழும்பு - யாழ்ப்பாணம் மாத்திரமல்ல, மல்லிகை பல கிராமப் பிரதேசங்களில் கணிசமாக விரும்பப்படு கின்றது; படிக்கப்படுகின்றது, அப்படியான கிராமங்களி லுள்ளவர்கள் அழைத்தால் அந்தந்த கிராமங்களுக்கு மல்லிகை சார்பாகச் சென்று அவர்களது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் எதிர் காலத் தில் கேட்கச் சித்தமாகவுள்ளோம்.
இப்படிப் பரவல் படுத்துவதின் மூலமே ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சியை இந்த மண்ணில் ஊன்றி வளர்க்க முடியும் என்பது எனது திடமான கருத்தாகும்.
மேலே குறிப்பிட்ட இலக்கிய நண்பர்’சுட்டிக்காட்டியது போன்று வேறு யோசனைகள் உங்கள் மனதிற்குத் தட்டுப் பட்டால் தயவு செய்து எமது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
நல்ல முயற்சிகளை நேரக் காலத்துடன் ஆரம்பித்து வைப்பதன் மூலம்தான் சரியான திசைவழியில் ஈழத்து இலக்கிய வளர்ச்சியைக் கொண்டு செல்ல முடியும்.
மல்லிகையின் வாசகர்கள் பங்கு இதில் அளப்பரியது.
(பொங்கல் மலர் - 1986)
த -11

Page 82
இரு பெரும் இழப்புக்கள்
அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சி தரும் இழப்புக்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஏற்பட்டு விட்டன.
ஒருவர் பண்டிதமணி; மற்றவர் திரு. கே. டானியல்.
கந்தபுராணக் கலாசாரத்தின் ஜீவ தாருவை தனது வாழ்வின் இணைப்பாகக் கொண்டு தமிழுக்கும் சைவத் துக்கும் தொண்டாற்றி வந்தவர் பண்டிதமணி. நாவலர் பரம்பரையின் கடைசிக் கொழுந்து. பாரம்பரிய குருகுலக் கல்வி முறையின் அடியொற்றி வந்து, ஒரு பரம்பரையை உருவாக்கித் தந்த வித்தகன் அவர்.
ஈழத்துக்கென ஓர் இலக்கியப் பாரம்பரியம் உண்டு. அது மரபு சார்ந்த தமிழையும் தமிழ்க் கலாசாரத்தையும் தனித் துவத்துடன் பேணிப் பாதுகாத்து வந்துள்ளது. இதைத் தமது எழுத்தாலும் சிந்தனையாலும் நேர்ச் சம்பாஷணை களாலும் நிலை நிறுத்தியவர் அவர்.
மக்கள் எழுத்தாள்ர் டானியல் அடிமட்டத்து மக்கள் மத்தியிலிருந்து - ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, மனித உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு பிரிவினரிடையேயிருந்துதனது அயராத உழைப்பாலும் போராட்ட உணர்வினாலும் உந்தப்பட்டுப் பேனாவைத் தனது ஆயுதமாகப் பாவித்து தமிழ் இலக்கிய உலகில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை எழுத்தில் பிரதிபலித்தவர்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு புதுமை இவர் காலத்தில்தான் நடந்தது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிக் கொடுமைகளால் புண்டடுத்தப்பட்ட உழைக்கும் வெகுசன ப் பகுதியைச் சேர்ந்த மக்களின் மன உணர்வுகள் ,

டொமினிக் ஜீவா 163
ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்கள், இலக்கிய அந்தஸ் துப் பெற்றன. அப்படியான இலக்கியத்தைப் படைப்பதற் கும் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும் பகுதியிலிருந்தே எழுத்துக் கலைஞர்களும் தோன்றி, போராடி, அவமானப் படுத்தப்பட்டு, பின்னர் மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் களானார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் மாத்திரமல்ல, ஒடுக்கு முறையை வன்மையாக எதிர்த்து வந்தவர்களில் பெரும் பகுதியினரான கலைஞர்கள் இவர்களை அங்கீகரித்துக் கெளரவித் துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இந்த நூற்றாண்டில் நடந்து வந்த மிகப் பெரிய அதிசயம் இது.
பெரியவர் பண்டித மணி அவர்கள் ஈழத்து இலக்கியப் தின் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர். மக்கள் எழுத்தாளர் டானியல் அவர்கள் வேறொரு வகையில் பிரதி நிதித்துவம் வாய்ந்தவர்.
இரு இழப்புக்களும் வருங்காலங்களில் வருந்த வைக்கத்
தக்கவை.
ஏப்ரல்-1986
சரத் முத்தெட்டு வேகம
இலங்கையின் கடந்த காலத் துரதிர்ஷ்டங்களில் ஒன்று தேசியப் பெருந் தலைவர்கள் என்பவர்கள் தோன்றவே பில்லை என்பதுதான். -
இடதுசாரித் தலைவர்களில் பலர் தேசியத் தலைவர் களாக மிளிர்ந்து வந்தனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சிறு குழுக்கள்ன் தலைவர்கள். போதிய மக்கள் செல்வாக்கு அவர்களுக்கு இருக்கவில்லை. அத்துடன்

Page 83
164 தலைப்பூக்கள்
பொங்கியெழுந்த பேரினவாத அலைக்குள் உட்பட்டு தடம் புரண்டு விட்டார்கள்
பின்னால் சில இடதுசாரிக் கட்சிகள் தமது தவறைப் பகிரங்கமாக மகாநாடுகளில் ஒத்துக்கொண்டு, நம்மைத் திருத்திக் கொண்டதும் சரித்திர நிகழ்ச்சியாகி விட்டது.
தேசிய விடுதலைப் போராட்டமற்ற சுதந்திரம் பெறுதலி னால் ஒரு தேசியத் தலைமையே தோன்ற வாய்ப்பற்றுப் போன சூழ் நிலையில், இரு பக்கமும் இனங்களுக்காக வக்காலத்து வாங்கி பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரிந்த தலைவர்களுக்கு மத்தியில் தான், தனது பார்வையாலும் விவாதத்தாலும் உழைப் பாலும் ஒரு தேசியத் தலைவனுக்கு இருக்கக் கூடிய ஆளுமையுடன் உருவாகி, முகிழ்ந்து வந்தார், தோழர் சரத் அவர்கள்.
சகல மட்டத்து மக்களும் தேசம் தழுவிய நிலையில் அவர் எடுக்கும் முடிவை வெகு ஆவலுடன் அவதானித்து வந்தனர்.
தன்னைத் தெரிவு செய்த தொகுதி மக்களின் குறைக ை; மாத்திரமல்ல, தனது இனமாகிய சிங்கள மக்களின் கஷ்ட நஷ்டங்களை மாத்திரமல்ல. ஏனென்று கேட்பதற்கே நாதி யில்லாமல் இருந்த சகோதரத் தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் பற்றியும், அவர்கள் படும் இடர்பாடுகள் பற்றியும் மக்கள் மன்றத்தில் உரத்த குரல் கொடுத்தவர் சரத் முத்தேட்டுவகம. 曹
அவரது திடீர் இழப்பு முழு மனித குலத்துக்குமே பேரிழப்பாக அமைந்தது.
அவரது இழப்பைச் சகிக்க முடியாத மக்கள் கூட்டம்
தமது இறுதி அஞ்சலியை வெகு சோகத்துடன் வெளிப் படுத்திக் காட்டியது. ---

டொமினிக் ஜீவா 165
தமிழர்கள் நன்றி மறந்தவர்களுமல்ல; நன்றி கொன்ற வர்களுமல்ல.
நெருக்கடியான-துன்ப துயரங்கள் மேவிய-சூழ்நிலை யில் தமக்காகத் தனிக் குரல் கொடுத்த தோழர் சரத்தின் மறைவுக்காக முழுத் தமிழ்ப் பொதுமக்களும் தமது துக்கத்தை அஞ்சலிக் கூட்டங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டனர்.
இயக்கங்களும், தமிழ்ப் பகுதிகளில் இயங்கும் அரசியல் சமூக ஸ்தாபனங்களும் இப்பாரிய துயரத்தில் பங்கு கொண்டு தமது பங்களிப்பைச் செய்தன.
ஆனால் தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் ஸ்தாபனம் தான்தான் என உ ம பாராட்டும் தமிழர் கூட்டணி இதுவரை தோழர் சரத்தின் மறைவுக்கு ஒர் இரங்கல் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை என்பதைத் தமிழ் மக்கள் அனைவரினதும் கவனத்திற்குக் கொண்டு
வருகின்றோம்.
தமிழ் காக்கும் தலைவர்கள் எனச் சொல்லப் பட்டவர் கள் பாராளுமன்றக் கதிரைகள் பறிபோனதும் குடும்ப சமேதரராய்ச் சென்னைக்குக் குடி பெயர்ந்து தமிழக மண்ணைச் சிக்காராய் பற்றிப் பிடித்து வாழ்ந்து வரும் வேளையில்தான்
பாமர தமிழ் மக்கள் படுமோசமாகப் பாதிக்கப் பட்டார் கள்.
தமிழ் மக்கள் படும் அவலத்தைத் தனி மனிதனாக நின்று உலக அரங்கிற்கு வெளிப்படுத்திக் காட்டியவர் தோழர் சரத் ,
அதாவது, தமிழ்த் தலைவர்கள் கோழைகளைப் போலப் பரதேசத்தில் பதுங்கியிருந்த வேளையில் இந்த மண்ணில் மக்கள் படும் துயரத்தைப் பகிரங்கப்படுத்தி நீதி கேட்டவர் அவர் .

Page 84
166 தலைப்பூக்கள் s * ? :ہ ن Y . . . . . ' " .۹ - نه i. . " نشر
இதைத் தெளிவாகத் தெரிந்திருத்தும் அன்னாரது இழப்
பிற்கு ஒரு அஞ்சலித் தீர்மானமும் இதுவரை நிறைவேற்ற
வில்லை, தமிழர் கூட்டணி நிர்வாகம். .
நமக்குத் தெரிந்தவரை தினசரிப் பத்திரிகைகளில் இவர்
களது அஞ்சலித் தீர்மானம் இதுவரையும் வெளிவந்திருக்க
assiso6o
ஒருவேளை குற்ற உணர்வே இதற்குக் காரணமாக அமையலாம். தாங்கள் இந்த மண்ணில் இல்லாமல் மற்றொரு தேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள வேளையில் , இங்கு தங்களது மக்களுக்கு நடந்த அட்டூழியங்களைக் கட்டம் கட்ட மாக ஆளவந்தோரின் அடாவடித் தனங்களைத் தோலுசித் துக் காட்டிய ஒரு தோழமைக் கட்சி நண்பனுக்குத் தாம் அஞ்சலித் தீர்மானம் நிறைவேற்றினால் எங்கே தங்களது சந்தர்ப்பவாத அரசியல் தகிடுதத்தம் மக்களுக்கெல்லாம் விளங்கி விடுமோ என்ற மன அச்சமும் இதற்குப் பின்னணி யாக இருக்கலாம்.
வர்க்கத் தலைவர்கள் என்னதான் தமது மக்களுக்காக உழைப்பதாக பரவலாகக் காட்டினாலும் சந்தர்ப்பம் வரும் வேளையில் தமது வர்க்கக் குணாம்சத்தைச் செயலில் காட்டி விடுவார்கள் என்பது திண்ணம்.
சரத்தின் மரணம் இதைத்தான் நிரூபிக்கின்றது.
ஜூன்-1986

மனித ஆத்மா உழைப்பின் மூலம்தான் தன்னை வெளிப்படுத்திக் காட்ட முனைகிறது!
ஒவ்வோர் ஆண்டு மலர்த் தலையங்கங்களிலும் நாள் உங்களுடன் நேரடியாகச் சம்பாஷிக்க முனைந்து எழுதிக் கொண்டு வரும் கடிதம்தான் இது. உங்களுடன் நேரடியாகப் பேசுவதில் உள்ள ஆத்ம சுகம் கருதியே வருடா வருடம் இந்தப் பகுதியில் நான் மனத்திறந்து இந்த விகிதங்களை வரைந்து வருகின்றேன்.
அதைத்தான் நான் இப்பொழுதும் இனிமேல் வருங் காலத்திலும் தொடர்ந்து செய்யப்போகின்றேன்.
இன்று நான் 'நிறையப் பேர்களின் கவனத்திற்கும் பார்வைக்கும் உட்பட்டிருக்கின்றேன்.
அதற்கு மூல காரணமே எனது இடையறாத இலக்கிய உழைப்புத்தான்!
கடைசிவரையும் உழைக்கப் பிறந்தவன் தான்.
உங்களுக்கு தெளிவாகவே தெரியும். ஓய்வூதியமோ மாதாந்தச் சம்பளமோ மற்றும் வாழ்க்கையின் எந்த விதமான பிற்காலப் பாதுகாப்போ அற்ற நிலையிலேயே நான் சஞ்சிகை உலகத்தில் காலடி வைத்தவன். . " . . . "
சகல வசதிகளையும் தமது வாழ்க்கையின் பெறுபேறாகக் காண்டவர்கள் தூய்மையான இலக்கிய சேவை செய்வ் தாகச் சொல்லிக் கொள்ளும் பொழுது வெளியே தெரியாமல் நரன் மனசிற்குள் சிரித்துக் கொள்வதுமுண்டு. لماخ
சிலர் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். வேறு? சிலரோ அதிசயப்படுகின்றனர். * எப்படி உன்னால்

Page 85
68 தலைப்பூக்கள்
தொடர்ந்து இந்தத் துறையில் இடையறாது உழைக்க முடி கிறது?" என என்னிடமே நேர்ப் பேச்சில் கேட்கின்றனர். .
தினசரி என்னை அர்ப்பணித்து உழைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. ஏனெனில் வேறு விதங்களில் என்னால் வாழவே இயல்ாது.
என்னையும் எனது இலக்கிய நேர்மையையும் கம்பீச
உழைப்பையும் சீரணிக்கச் சத்தியற்ற சிலர், தாம் விரும்பிய வண்ணம் வக்கரித்த, குதர்க்க மனநிலையுடன் எனது மன மேன்மையை வியாக்கியானம் பண்ண முயற்சித்து வரு கின்றன்ர்.
இவர்கள் தமக்குள் கணிப்பீடு செய்துள்ளதைவிட எனது தினசரிக் கடமைகள் சரித்திரப் படைப்புக்கு ஆட்பட்ட வையாகும்.
நான் வெளியிடும் கருத்துக்கள் அத்தனையுமே ஆழ்ந்த மனிதத்துவத்திலிருந்து முகிழ்ந்து வந்தவைதான்.
என்னுடைய இன்றைய போர்க் கருவி எதுவென்ற தெளிவான ஞானமும் சரியான பார்வையும் எனக்குண்டு.
ஆரம்ப காலங்களில் என்னையும் எனது செயல்பாடு களையும் விமரிசித்து வந்தவர்கள் எனது வெளி உணர்வு களையே புண்படுத்தினார்கள். ஆனால் இன்றோ அவர்கள் "சிமிக்கிடாமல் தமது நரித்தன வேலைகளால் எனது ஆத்மாவையே காயப்படுத்த முயல்கின்றனர்.
காயங்களை எண்ணிக்கொண்டு இலக்கியக் களத்தில் நான் போரிடாமல் இருந்து விடவில்லை; இளைப்பாற விரும்பவுமில்லை. -
சிறு வயதிலிருந்தே எனக்கென்று சொந்தமான-தெளி
வற்ற-பல கனவுகள் முகிழ்ந்து வந்துள்ளன. நான் வளர வளர, எனது அநுபவங்கள் மிளிர மிளிர என்னைச் சுற்றிப்

டொமினிக் ஜீவா 1.69
படர்ந்துள்ள தெளிவற்ற நிலையை நீக்கிக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக் கொண்டு வந்துள்ளேன்.
சத்ா எனது அறிவை விசாலப்படுத்தவும், அநுபவங் களைச் செழுமைப்படுத்தவும் பார்வையை நவீனப்படுத்தவும்: வேண்டியிருந்தது.
எனது சொந்தக் கண்ணோட்டங்கள் சம்பந்தமாகவும், நிர்ணயிப்புகள் சம்பந்தமாகவும், இலக்கிய மதிப்பீடுகள் சம்பந்தமாகவும் தகுந்த பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியிருந்தது. அத்தகைய பொறுப்புணர்ச்சி யுடன் நான் காரியமாற்றாமல் இருத்திருந்தால் இன்று இத்தகைய உயர்ந்த செல்வாக்கையும் ஈழத்துச் சுலைஞர் களிடம் இத்தளவு பெரும் நம்பிக்கையையும் நன் மதிப்பையும், நான் பெற்றிருக்க முடியாது.
எந்தக் காலத்திலுமே இரைச்சலிட்டு என்னை நானே விளம்பரப்படுத்திக் கொண்டவனல்ல.
சகோதரக் கலைஞர்களை- அவர்களது படைப்பு ஆற்றல்களை- மக்கள் மத்தியில் தகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எனது உழைப்பின் &TTT ub & LDTE5ib, அதிலும் திறமையும் தகுதியும் வாய்ந்த இளந் தலைமுறையினரை இலக்கிய உலகிற்குச் செம்மை யாகத் தெரியப் படுத்தவேண்டுமென்பதே எனது பேரவா வாகும். M
புகழுக்குப் பின்னால் ஓடவேண்டும் என நான் எப்பொழுதுமே விரும்பியவனல்ல, வேறொரு வகையில் சொல்லப் போனால் புகழை நான் அறவே வெறுப்பவன் புகழ் எனது ஆளுமையைத் தூசி படிய வைத்து விடும் என நியாயமாகவே பயப்படுபவன்
உழைப்பின் அருமையைச் சின்னஞ் சிறு வயதிலிருந்தே புரிந்து கொண்டவன் நான். இயல்பாகவே நான் வரித்துக்

Page 86
170 தலைப்பூக்கள்
கொண்ட துறையில் அசுரத்தனமாக உழைக்கக் கற்றுக் கொண்டேன்.
வியர்வையில் ஊறியவைதான் எனது வெற்றியின்படிக் கட்டுகள்.
வோராட்டங்களின்றி வெற்றிகளில்லை. அதே போல அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட செயல் பாடுகளின்றி ஒரு மேதை தோன்றிவிடவும் முடியாது.
என்னுடைய அசாதாரண தன்னம்பிக்கையைச் சிலர் தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு விடுகின்றனர். தலைக் கனம் என அவர்கள் அவற்றிற்குப் பெயர் சூட்டிக் கொள்ளு கின்றனர்.
அவர்கள் நம்புவதுபோல என்னிடம் தன்னகங்காரம் இருந்திருந்தால் ஏற்கனவே தடுக்கி விழுந்திருப்பேன்.
"அவர்கள் நம்புவது போல நான் ஆகிவிடக் கூடாது. ” என்ற நம்பிக்கையில் என்னை நானே அடிக்கடி சுயவிமர் சனம் செய்து கொள்வதுமுண்டு.
தரமான-போற்றப்படத் தக்க-கலைஞர்கள் தமது தலைக்கணத்தினாலும் பந்தாக்களினாலும் கலை உலகில் இருந்து திடீரெனக் காணாமல் போய்விட்ட சம்பவங்களின் பின்னணி பற்றி ஏற்கனவே எனக்கு நன்கு தெரியும்.
திடீரெனக் காணாமல் போய்விடுவது எனது நோக்க மல்ல. ஈழத்து இலக்கியம் சரித்திரத்தில் முத்திரை பதிக்க வேண்டுமென்பதே எனது போரவாவாகும்.
நான் பென்னாம் பெரிய படிப்பாளியல்ல, அல்லது முறையாகப் பள்ளிப் படிப்பைப் பூர்த்தி செய்து கொண்டவனு மல்ல.
அதே சமயம் அறிவு ஒளி என் நெஞ்சின் அணு வில் ந்ெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது:

டோமினிக் ஜீவா 17.
அந்த அறிவுக் கனலை விசிறி விட்டுப் பெரு நெருப்பாகச் சுடரச் செய்தவர்கள் தான் இன்றும் நன்றியறிதலுடன் நினைவு கூரும் மாமனிதர்கள்.
எத்தகைய மரிம்னிதர்கள் அவர்கள்!
என்னையும் என்னைப்போன்ற எழுத்தாளர்களையும் உருவாக்குவதற்கு அவர்கள் தமது கல்வியையும் தத்துவ ஞானத்தையும் பேராதரவையும் பசளையாக அடியுரமிட்ட வர்கள்,
அவர்கள்தான் நான் பயின்ற பல்கலைக் கழகம்.
ஆரம்ப காலங்களில் அவர்கள் சொல்லித் தந்த மந்திர உச்சாடனங்கள்தான் இன்றும் எனது செயலிலும் படைப்பி லும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
மனிதர்களை-அதிலும் உழைக்கும் வர்க்கத்தைநேசிக்கப் பழக்கியவர்கள் அவர்கள், அந்த வர்க்கத்தின் சக்தியை எனது இளம் வயது நெஞ்சில் பதிய வைத்தவர் களும் அவர்களே.
*நீ நம்பிய இலட்சியங்களுக்கும் தத்துவங்களுக்கும் சோதனைகள் வரலாம். நடந்து செல்லும்போது பாதை மீது சந்தேகங்கள் தோன்றலாம். சம காலப் பிரச்சினை களின் தாக்கங்களும் அழுத்தங்களும் திசை திருப்ப முயல லாம். எதனுடனும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். நீ நம்பும் தத்துவ வெளிச்சத்தில் தடம் புரளாமல் நடக்கப் பழகு- முடிவில் வெற்றி உனது இலட்சியத்திற்கே ஏனெனில் நீ நம்பும் செழுமை ததும்பிய தத்துவம் இதுவரை யும் யாராலுமே வெற்றி கொள்ளப்பட்டதல்ல!"
இப்படியான உபதேசங்களின் அடி ஆதாரம்தான் எனது உழைப்புக்கு அடி ஆதாரமாகும்.
22-வது ஆண்டு மலர் 198*

Page 87
இ. மு. எ. ச.கடித்திய எழுத்தாளர் மகாகாடு
* 變鯊?
s SJSu S S S SSES Se JSeSJSySiSS 0S0S SyiS SSSiiSESEOOSS SS SSSSSeeSSSS .-88 ஒக்டோபர்,17:திகதி அன்று நல்லூரில் நாலுலர் மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கூட்டிய ஒ முழுநாள்மிகாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று 噶器 தியது.
"எழுத்தாள்ர்களும் இன்றைய நிலையும்" என்ற கருத் கோட்டத்தைத் தொனிப் பொருளிர்கக் கொண்டு இம் மகாநாடு கூத்த்ப்பட்டது. W
பல்வேறு அபிப்பிராய்ங்களையும், கருத்துக்களையும், இலக்கிது நோக்கங்களையும் கொள் தூற்றுக்கணக்கான எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் இம்மகர்நாட்டில்-க்கு கொண்டு. சிறப்பித்தது குறிப்பிடத் தக்கதோர் : அக்ச மாகும். --
:இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள்ளச் சமத்துவமான சதபிரஜைகளாக அங்கீகரிக்க அரசியல் யதார்த்தமும் ஜன. நாயக வாழ்வின் அச்சாணிகளான கல்வி வாய்ப்பு உழைப் புரிமைச் சமத்துவம் போன்ற இன்னோரன்ன பிற உரிமை கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டமையுமே இன்றைய சீவிர வாதப் போராட்டத்தின் ஊற்றாயுள்ளது.
**-ன்ன்று மக்ாநாட்டில் சமீர்விேதிகப்பட்ட அரசியல் தீர்மானித்தின் குப்குதிதேளிவாகவ்ேரிகுறிப்பீடுக்க்: புள்ளது. தொடர்ந்து தொடர்ச்சியர்சிவ்நிதிஆட்சியிfளர் களின் நடவடிக்கைகளே தமிழ்மக்கள்.தமது டிாதுகாப்புக்குத் தனிநாடே தகுந்த உத்தரவாதம் என்றநிதிைப்பு:ாட்டிையும் அதற்கான போராட்டத்தையும் வலுப்பெற்ச்' செய்துள்ளது என்பதையும் மறைக்க முடியாது.
 

கிடாமினிக் ஜீவா .43
இந்நிலையில் இலங்கையின்" இன்ப்ட் ர்ச்சினிைக்கான
s SASAqqSLLSS S AAAAA AA SAS AAALAAAAAA S SLALLS sA SSAeeSAAAAAAASAAAASAAS S A AAAS தீர்வென்பது தமிழ் மக்களின் மேற் குறிப்பீட்ட"அம்சங் களைப் போக்குவ்தான் ஏற்றுக்கொள்ளக் ಹಾಸ್ಟಿಕ್ಕಿ: இருந்தல் வேண்டும் என்றும் எத்தகைய அடக்கு முறை களுக்கும்'இம்மியிள்வேனும் இடங் கொட்ாத அம்ைபே இனப்பிரச்சினைக்கான உண்மையான் தீர்விென்பண்தியும் இ. மு. எ. ச, வன்மையாக எடுத்துக் கூறுகின்ஸ்து."
அரசியல் தீர்மானத்தில் இன்றைய..தமிழ் மக்களின் அவல நிலையையும் தீர்வுக்கான திசை மார்க்கத்தையும் கோடிட்டுக் காட்டும் இ.மு.எச, "தனது கலாச்சாரத் தீர்மானத்தில் தமது நிலைப் பாட்ன்ட வெகு துல்விக மக்கள் முன் வைக்கின்றது.” .ד ; : ,
"கலாசாரச் சீரழிவுகளையும், முதலாளித்துவ வெகுஜன பண்பாட்டு ஆதிக்கத்தையும் எமது சங்கம் எதிர்த்து வந் உள்ளது. ஆபாச இலக்கியங்களும் திரைப் படங்களும், போதைப் பொருட்களும் ஒழிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் மனதார வரவேற்கின்றோம். மலிவு இலக்கியங்களுக்கு எதிரான எமது போராட்டம் மேலும் வலிவுப் படுத்தப்பட வேண்டும்.
எமது பாரம்பரியமான கலைகள் புது மெருகூட்டிப்படு வதையும் எமது அரங்கு உயர்ந்த தரத்தைாட்டுவதையும் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். இந்த முயற்சிகளுக்கு வித்திட்ட முன்னோடிகளையும் அவரனின் வழிச்செல்லும் புதிய தலைமுறையினரின் முயற்சிகளையும் புராட்டு கின்றோம். !. ”ስ
நடுநிலை விமர்சனம்' போலியானது. மதிப்பீடுகள் சார்புடையவை என்ற விஞ்ஞர்ண விதியை ஏற்றுக் கொண்டு நடுநிலை விமரிசனம் என்ற பேர்லித்தனத்தை நிராகரிக் கின்றோம். மேலும் நீள்மார்க்ஸிஸ்ம் பற்றிய எமது நல்லது பர்டு தெளிவு படுத்தப்பட்டுள்ளது

Page 88
ஆரோக்கியமான கருத்துக்களையும் எதிர் வாதங்களை டிம் வரவேற்கத் தயாரர்கவிருக்கும் அதேவேள்ை, அவை யனைத்தும் கட்டாயமான முறையில் நடத்தப்படவேண்டு மென்பதைச் சுட்டிக் காட்டுகின்றோம் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர் எவருமிலர். எனினும் விமரிசனங்கள் தாழ்ப்புணர்ச்சியாகவும், தனிநபர் தாக்குதல்களாகவும் அமைவதைக் கண்டிக்கின்றோம்."
கலாசாரத் தீர்மானம் ஆழ அகலமான கருத்துக்களை உள்ளடக்கி வரையப்பட்டிருந்தது. , * . . . "மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல், கலாசாரத் தீர்மானங்களின் உள்ளடக்கக் கருத்து வடிவங்களையும் நேர்மையான ஆழ்ந்த பார்வையும் தொலைதூர நோக்கை யும் நாம் மனசார வரவேற்கின்றோம். பெண் விடுதலை பற்றி எடுத்துக் காட்டப்படவில்லை.
அரசியல் தீர்மானத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட அடிப் படைக் கருத்துக்கள்இடம்பெறாதது முக்கியகுறைபாடாகும், சுட்டிக்காட்டப்பட்ட் இக்குறைப்பாடு நிவர்த்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். :
பொதுவாக, கூர்மையடைந்துள்ள இனப் பிரச்சினை சப்பந்தப்பட்ட ஒரு நெருக்கடியான நேர்த்தில் அது சம்பந்த மான அரசியல் தீர்மானம்தான் அதி முக்கியத்துவம் பெறுவது தவிர்க்கேலாத இயல்பாகும். அப்பிரச்சினையில் சரியான - தெளிவூான - தீர்க்கமான - நிலைப்பாடு எடுக்கவேண்டியது அவசர அவசியமாகும். * எழுத்தாளர் மகாநாடு அரசியல் தீர்மானத்தில் சரியான பார்வையைச் செலுத்தி, தெளிவான தீர்மானத்திற்கு வந் துள்ளது வரவேற்கத்தக்க முயற்சியாகும்.
இப்படியான சிறப்பு மிக்க காத்திரமான எழுத்தாளர் மகாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த சகல எழுத் தளர்களையும் மனசாரப் பாராட்டுகின்றோம்.
நவம்பர்-1986

பல்கலைக்கழகங்களும் கெளரவப் பட்டங்களும்
ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சமீபந்தில் பத்திரிகைச் செய்திகளில் படித்தோம். .
முதிர்ந்த ஆற்றல் மிக்க அனுபவம் வாய்ந்த கலைருர் கள் முன்னோடிகள், திறமைசாலிகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்துக் கெளரவிக்கப் போவதாக அச்செய்தி பெருமையுடன் கூறியது.
மாபெரும் சினிமாக் கலைஞர் சிவாஜி கணேசன் அவர் களுக்கும். தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் புகழ் பூத்துத் துலங்கும் கிருபானந்தவாரியார் அவர்களுக்கும், கிரிக்கெட் டில் சரித்திரம் படைத்த காவஸ்கர் அவர்களுக்கும் அவரவர் கள் தத்தமது துறைகளில் செய்த சாதனைகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் கொடுக்கப் போவதாக அம் மகிழ்ச்சிகரமான செய்தி மக்களுக்குத் தெரிவித்தது. *
அத்துடன் வேறொன்றாக கிரிக்கெட் மன்னன் கரவஸ் கருச்கு விசாகப்பட்டனத்திலுள்ள ஆந்திரப் பல்கலைக்கழக மும் டாக்டர் பட்டம் தொடுத்து அன்னாரைக் கெளரவிக்கப் போவதாகப் பிறிதொரு செய்திம்பின்ன்ரி சொல்லியது,
' . . . . . . . . is . . . . . . . . . ፶፰oኒ ዙ
. i. பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை இனங் கண்டு இப்படியாகப்பல்கலைக் கழகங்கள் கெளரவிப்பதைக் கேட்கும் பொழுது'உண்ம்ையாகவே'பெருமகிழ்ச்சியடை 卤@றாம்.
அறிவும், சாதனையும் ஆற்றலும்.வல்கலைக் கழகங்
களுக்குள் மாத்திரம் முடங்கிக் கிடப்பவையல்ல பல்வேறு துறைச் சாதனையாளர்கள் விரிந்து பரந்து செயல்புஇகின்

Page 89
1.76 தலைப்பூக்கள்
றனர், தத்தமது ஆளுமையையும் பேராற்றலையும் வெளிப் படுத்தி மக்கள் மன்றத்தில் ஏற்கனவே தமது தனித்துவ மூத்திரையைப் பதித்து வைத்துள்ளனர்.
இத்தகையவர்களைத்தான் இன்று பல்கலைக் கழகங் கள் கெளரவிக்க முன் வந்துள்ளன.
மேனாடுகளில் இப்படியான கெளரவப் பட்டமளிப்புக்கள் இயல்பாகவே நடைபெறுவதுண்டு. அங்கு இப்படியான கெளரவங்களை மக்கள் அங்கீகாரத்துடன் சர்வகலாசாலை கள் மாபெரும் மக்கள் புதல்வர்களுக்கு வழங்கி, தம்மையும் தமது தகைமைகளையும் பெருமைப்படுத்திக் கொண் டுள்ளன .
இந்தப் பின்னணியில் நமது தேசத்தையும், நமது பிரதேசத்தையும் பார்த்துச் சிந்திக்கும் போது நமது நெஞ்சில் நம்மையறியாமலே ஒரு ஏக்கம் பிறக்கின்றது.
இலங்கையில் பல சர்வகலாசாலைகள் உள்ளன. இந்த ஆரோக்கியமான முன்னுதாரணத்தைப் பின்பற்றி சம காலத்தில் வரழ்ந்துவரும் மேதைகளுக்கும், அறிஞர் *க்ளுக்கும், சாதனையாளர்களுக்கும் கெளரவப் பட்டங்களை வழங்கிக் கெளரவித்தால் அது கெளரவிக்கப்பட்டவர்களை யல்ல, கெளரவித்தவர்களையே பெருமைப்படுத்தும் என் பதை உறுதியாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம்.
நமது மண்ணில் நிலைகொண்டு இயங்கிவரும் யாழ்ப் பாணப் பல்கல்ைக் கழகம் இப்பொழுது நமது நெஞ்சில் எழாமலில்லை.
மாபெரும் சிந்தனையாளர்கள், இலக்கிய விமரிசகர்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆராய்ச்சித் துறை வல்லுநர் கள், புதிய துறை விற்பன்னர்களைக் கொண்டு இயங்கி வருவது நமது பல்கலைக் கழகம் என்ற பெருமை ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு என்பது மறுக்க முடியாத
26Rf6)

டொமினிக் ஜீவா 177
பல ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிதமணி அவர்களுக்கும் தமிழ் நாட்டின் மாபெரும் விமரிசகர் வானமாமலை அவர் களுக்கும் கெளரவப் பட்டங்களைக் கொடுத்துத் தனக் கென்றே ஒரு பாரம்பரிய முத்திரையை நமது பல்கலைக் கழகம் பதித்து வைத்திருக்கின்றது என்ற யதார்த்த உண்மையையும் நாம் மனதில் நன்றி உணர்வுடன் நினைவு கூறுகின்றோம்.
அப்படியாகத் தனக்கென்றே ஒரு தனித்துவத்தைக் கடந்த காலங்களில் தனது பண்பாட்டுத் தளமாக ஆக்கிக் கொண்ட யாழ், பல்கலைக் கழகம், சமீப ஆண்டுகளாகத் தான் ஆரம்பித்து வைத்துப் பெருமைப்பட்ட அந்தத் தனிப் பெரும் கெளரவத்தைத் தொடர்த்தும் கடைப்பிடிக்காமல் போனதையிட்டு மெய்யாகவே நாம் நெஞ்சாரத் துக்கப்படு கின்றோம்.
தேசம் முழுவதும் பல அறிஞர்கள் தொண்டாற்றி வரு கின்றனர். பல சர்தனையாளர் தினசரி இயங்கி வருகின் றனர். பல ஆற்றல் மிக்க கலைஞர்கள், புத்திஜீவிகள் சிந்தனையாளர்கள் கடமை புரிந்து வருகின்றனர்.
இவர்களில் பலர் பல்கலைப் படிக்கட்டுகளில் ஏறி இறங் காதவர்களாக இருக்கலாம், அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகைமை பெற்றுக் கொள்ளாதவர்களாகக் கூட அமைய 6FT.
ஆனால் மக்கள் மன்றம் இவர்களது ஆற்றலையும் அறி வையும் சாதனையையும் மதித்துப் போற்றிக் கெளரவித்து வந்துள்ளது.
இந்த அளவுகோல்களை வைத்துதான் அண்ணா மலைப் பல்கலைக் கழகமும், ஆந்திரப் பல்கலைக் கழகமும் ஒரு கணிப்பீட்டுக்கு வந்து கணிக்கத் தக்கவர்களுக்குக் கெளரவம் தந்துள்ளது.
த-12

Page 90
78 தலைப்பூக்கள்
நமது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும்தான் முன்னர் நடைமுறைப் படுத்திய சாதனையைத் தொடர்ந்து செயல் படுத்த வேண்டுமென மனப்பூர்வமாக விரும்புகின்றோம்.
-டிசம்பர் 1986
ஒரு பெருக் துயரமான நிகழ்வுப் போக்கு.
வட பகுதிப் பொருளாதாரத் தடையினால் இப் பிரதேசத்து மக்கள் படும் துன்பமும் துயரமும் சொல்லில் அடங்காதவை!
அடிப்படை மனித நாகரிகத்தையே மீறும் செயல் இது. ஓர் அரசாங்கம் தனது ஆளுகைக்குட்பட்ட மக்கள் மீது மிக மிக மிலேச்சத்தனமான முறையில் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் இது.
பள்ளிக்கூட மாணவர்கள் கல்விக்கூடம் போக முடியாத அவல நிலையில் இன்று காட்சி தருகின்றனர், அவலமான நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத படு கஷ்டநிலைக்கு இன்று உள்ளாக்கப்பட்டுள்ளனர். சாதாரண பொது மக்கள் தமது அன்றன்றாடக் கருமங்களைச் செய்ய முடியாத போக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எரி பொருள் முற்றாக அற்ற நிலையில், வாகன வசதிகள் இயங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் படும் சிரமங்களோ எண்ணிப் பார்க்க முடியாதவை. பொதுவாக வட பிரதேசம் அந்நியரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் போல இன்று காட்சி தருகின்றது.
ஆஸ்பத்திரிகளில் மருந்துத் தட்டுப்பாடு, வரும் மருந்து வகைகளும் வழியில் தடுத்து வைக்கும் கொடூர நிலை.

டொமினிக் ஜீவா 179
விறகுத் தட்டுப்பாடு, தினசரி சமையலில் ஈடுபடும் வீட்டுத் தலைவிகள் படும்பெரும் வேதனைப்பாடு. மண்ணெண்ணெய் இல்லாக் குறை. வானம் பார்த்து நிலத்தைப் பண்படுத்தும் பாமர விவசாயிகள் படும் மனத்துயரம். ஏழை பாழைகளி னுடைய வாகனம் சைக்கிள். அந்தச் சைக்கிள் வண்டிகளுக்கு டயர் முதல் உதிரிப் பாகங்கள் கூடக் கிடைக்க முடியாத அவல நிலை.
உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருட்கள் இயல்பாகக் கிடைக்க முடியாத பஞ்ச நிலை பல பகுதிகளில் தாண்டவமாடுகின்றது. அதையும் மீறிக் கிடைக்கும் உணவுச் சாமான்களை விநியோகிக்க வாகன வசதிகளற்ற நிலை தீவகப் பகுதிகளிலோ உணவுப் பொருட்களினதும் மற்றும் வாழ்வதற்குத் தேவை யான நுகர்வுச் சாமான்களினதும் தட்டுப்பாடு காரணமாக மொத்தச் சனங்களினதும் பட்டினிப் பெருங்கொடுமை,
குப்பை கூழங்கள் அகற்றப்பட முடியாத நிலை. சுகா தாரச் சீர்கேடு தொற்று தோய் பரவும் அபாயம். விதி யெங்கும் குப்பை கூழங்களை எரிக்கும் காட்சி, புகை மண்ட லத்துள் மக்கள் சுவாசிக்கச் சிரமப்படும் அவலம். இதே நிலை தொடர்ந்தால் மக்கள்அனைவருமே நோயாளிகளாக ஆக்கப்படக் கூடிய அபாயம்.
தினசரி பஸ் மூலம் தமது கருமங்களுக்குப் போய் வரும் அரசாங்க, தனியார் நிறுவன ஊழியர்கள் படும் சொல் லொணாச் சிரமங்கள். போதிய வாகனங்கள் இல்லாமல் நேரங்கள் வீணாகக் கழியும் கால விரயம், அப்படி வாகனங் கள் கிடைத்த வேளையிலும் அதில் பிரயாணம் செய்வதற் காகப்படும் சித்திரவதை அநுபவங்கள்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் மூல காரணம், இன்று அமுலில் உள்ள எரி பொருள் தடைதான்.

Page 91
180 தலைப்பூக்கள்
பாரம்பரிய கலாசார பண்புமிக்க நிரந்தர நாகரிகச் செழுமை செறிந்த ஓர் இனத்தை இந்த கிடுக்கித் தாக்குதல் முறையில் அணுகி அவர்களைப் பணியவைத்து விடலாம் என அரசாங்கம் எண்ணிச் செயலாற்றினால் அது வீண் கன வாகவே இறுதியில் வந்து முடியும் என்பதை இந்தக் கட்டத்தில் நாம் மிகத் தெளிவாகவே சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன?-- அவர்களது நீண்ட நாள் அபிலாஷைகள் என்னென்ன?- என்பதைச் சரியான முறையில் உற்றுணர்ந்து அவர்களைப் புரிந்துணர்வுடன் தெரிந்து கொண்டு, நேச மனப்பான்ழை யுடன் நெருங்கிவந்து பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டால் தான் தமிழ் மக்களும் தமது நேசக் கரத்தை நீட்டுவார்கள்.
•.“ இதை விடுத்து, வில்லங்கத்தைத் திணித்து வல்லமை யைச் செலுத்தி இப்படியான குறுக்கு வழிகளில் அடக்க முற்பட்டால் அது வீணில்தான் இறுதியில் வந்து முடி வடையும்.
இராணுவத்தீர்வு எத்தகைய பயனையும் இதுவரை தரவில்லை. இனிமேலும் தரப்போவதுமில்லை. அப்புடியான முடிவு மிகப் பெரிய சோகத்தையும், இனச் சங்காரத்தையும், பேரழிவையும்தான் தரமுடியும். நிரந்தரமாகச் சிங்கள்தமிழ் மக்களிடையே குரோதத்தையும் நம்பிக்கையின்மையை யும் சந்தேகத்தையும் ஏற்படுத்திவிடும்.
எனவே அரசியல். தீர்வுகாண ஆக்க பூக்வமான வழி முறைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். நிரந்தரத் தீர்வுக்கும் அதுவே சரியான அணுகு முறையாகும்.
பொருளாதாரத் தடையை நீக்கி, புரிந்துணர்வுச் சூழ்
நிலையை உருவாக்குவதன் மூலமே அதற்கான சாத்தியம் தோன்றக்கூடும் என்பதைச் சொல்லி வைக்கின்றோம்.
மார்ச்-1987

ஆக்கபூர்வமான வெளர்ச்சத்தில் மதிப்பீடு செய்யப்படுகின்றேன்.
உங்களுக்குத்தான் வெகு தெளிவாகத் தெரிந்திருக் கிறது. இந்த நாட்டிலுள்ள வெகுசனத் தொடர்பு சாதனங் கள் அத்தனையும் ஓர் எழுத்தாளனுக்குக் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகத் தந்துவரும் பிரபல்யம் பிரமிப்பைத் தருகின்றது.
எனது அறுபதாவது வயது மணிவிழா சம்பந்தமாக வும் நான் சோஷலிஸ்த்தின் தாய் வீடான சோவியத் யூனிய னுக்குப் போய் வந்தது பற்றியும் அவை வெகு துல்லியமாகச் செய்திகளையும் தகவல்களையும் உங்களுக்குச் சொல்லி வந் துள்ளதை, பலர் புதுமுகப் பொலிவுடன் என்னை விதியில் இடை நிறுத்தி விசாரிக்கும்போது தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
நானறிந்தவரை ஈழத்து எழுத்தாளனுக்கு இத்தகைய முக்கியத்துவம் இதற்கு முன் இப்படியாகத் தரப்பட்டதில்லை என்பதையும் தெரிந்து மனசுக்குள் சந்தோஷப்படுகின்றேன். இது தனி நபருக்கல்ல பிரசித்தம். பேனா பிடித்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் சேர்த்து என்மூலம் தரப்பட்ட கெளர வம் என்று கருதியே இதை நான் ஏற்றுக்கொண்டு வந் துள்ளேன்.
நீங்கள் அறிந்து வைத்துள்ள அதே காரணங்களால் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் வரவிருந்த மல்லிகையின் 23-வது ஆண்டு மலர் அடுத்த அடுத்த மாதங்களில் மலர்ந்து உங்களது கரங்களில் இன்று திகழ்கின்றது.

Page 92
182 தலைப்பூக்கள்
தொடர்ந்து பல ஆண்டு மலர்களை உங்களுக்குச் சமர்ப்பிக்கும் வேளைகளில் உங்கள் ஒவ்வொருவரையும் மனசில் நினைவு வைத்துக்கொண்டு எழுதப்படும் கடிதம், இம்முறை பல உள்ளுணர்வுகsசின் வெளிப்பாடுகளினூடாக வரையப்படுகிறது.
முதலாவது என்னுடைய மணி விழா வைபவத்தை எழுத் தாளர்களும் நண்பர்களும் ஆர்வலர்களும் சுலைஞர்களும் கொண்டாடிய விதம் என் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியது.
என்மீது ஆழ்ந்த நம்பிக்கையும் விசுவாசமும் அபிமான மும் கொண்டவர்களின் வாழ்த்தொலிகள் அடங்குவதற்குள் மாஸ்கோ பயணம் இடையிட்டது. அங்கு லுமும்மா பல் கலைக்கழகத்து மாணவர்கள்- அவர்களில் பல்வேறு நாடு, சமூக, மொழி, இன, சாதி, சமயம் கொண்டவர்கள் அடங்குவர்-என்மீது கொண்ட பேரபிமானத்தினால் எனது மணி விழாவை அங்கு கேக் வெட்டிக் கொண்டாடினர்.
ஒரு கட்டத்தில் நானே திகைத்து விட்டேன்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மாபெரிய இந்த நாட்டில் எனக்கு இத்தகைய கெளரவமா?-- செல்வாக்கா?
இதை ஒரு கட்டத்தில் வாய்விட்டே கேட்டு விட்டேன். இதைக் கேட்டுவிட்டு மாஸ்கோவில் வாழ்பவரும் இலங் கையைச் சேர்ந்த சிங்களத் தோழருமான டாக்டர் ரொட்ரிகோ என்பவர் "இலங்கையிலும் பார்க்க உங்களைத் தெரிந்து நேசிப்பவர் இங்கு அநேகர். அதை நேரில் தினசரி பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றார். அது நிஜமாகத்தான் நடத்தது.
லுமும்பா மாணவர்கள் ஒரு தடவைக்கு இரு தடவையாக என்னை அழைத்து ஈழத்து இலக்கியத்தைக் கெளரவித்த தற்கு நான் சாட்சியாகி விட்டேன்.

டொமினிக் ஜீவா 183
வாழ்க்கையின் எதார்த்தங்களிலிருந்து என்னை தானே தனிமைப் படுத்திக்கொள்ளாத அதையே எனது கல்விக் கூடமாக எண்ணி வாழ்ந்து பழக்கப்பட்டவன் நான்.
செயலாற்றலற்ற வெறும் வாய்ச் சவடால் பேச்சுக் களைப் புறந்தள்ளி, நிராகரித்து வந்துள்ளேன். செயல்படும் போது தவறுகள் ஏற்படலாம்: ஏற்படவே செய்யும். செயல் படாமல் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதிலும் பார்க்க, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலுக்கு என்னை நானே ஒப்புக்கொடுத்து இயங்கும் வேளையில் ஏற்படும் தவறுகளைத் திருத்தி தொடர்ந்து முன் செல்வதே எனது சரியான வேலைத் திட்டமாகும்.
ஆக்கபூர்வமான வெளிச்சத்தில் நான் "பல கட்டங்களில்
மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றேன்.
மணிவிழாக் கருத்துக்கள், அபிப்பிராயங்கள், கட்டுரை
கள் இவையே மெய்ப்பிக்கின்றன.
எனக்கும் ஸ்ன் காலத்திற்கும் என்னுடன் வாழும் சகோதர மக்களுக்கும் நான் வாழ்ந்து வரும் இந்த மண்ணுக் கும் நான் நேசிக்கும் எனது தாய் மொழிக்கும் உண்மையாக வும் விசுவாசமாகவும் ஆழ்ந்த பற்றுறுதியுடனும் இருக்கவே நான் எனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துள்ளேன்.
-இதை இந்த மண்ணில் புதல்வர்கள் மாத்திரமல்ல, இந்த மண்ணுக்கு அப்பாலும் வாழும் மனுக்குலத்தை நேசிக்கும் மற்றையோரும் அங்கீகரித்துள்ளனர் என்பதையே சமீபத்திய நிகழ்ச்சிகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டு கின்றன. -
வாழ்க்கை இதைப்போல எப்போதுமே என்னிடம் அன்பு காட்டி வரவில்லை.
அதற்காக தான் வாழ்க்கையுடன் அன்பு காட்டாமல் *இருந்ததுமில்லை.

Page 93
184 தலைப்பூக்கள்
உயர்வான பொறுப்புணர்ச்சியுடன்தான் நான் கருத்துக் களை மக்கள் முன் வைத்து வருபவன்.
காரணம் நாளை நான் பேசப்படுவதற்கு நானல்ல மூக்கியம். எனது திறமை, ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை கள் கூடக் காரணமல்ல; எனது கருத்துக்கள்தான் பிர தானம். அத்தனை வலிமை வாய்ந்தவை எனது கருத் துக்கள்
எனவே கருத்துக்களை நான் என்னை நேசிப்பது போலவே நேசிக்கின்றேன். அவைகளை வெளியிடும்போது மிக ஆழமாகச் சிந்தித்து வெகு நிதானமாகவே எழுத்தில் செதுக்கி வைக்கின்றேன்.
எனது இதயத்தின் குரலையும் ஆத்மாவின் வேண்டு கோள்களையுமே ஒரு பக்தனின் நெஞ்சார்ந்த உணர்வோடு பதிந்து வைக்க விரும்புகின்றேன்.
-அவைதான் மலரத் தொடர்ந்து துடிக்கின்றன.
எனது கருத்துக்கள் வசதி கருதியும் தேவையை ஒட்டியும் அவதூறு வேண்டியும் கொச்சைப்படுத்தப்படலாம்அப்படிக் கடந்த காலங்களில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. நான் அவைபற்றி அக்கறை செலுத்துவதில்லை.
எனது கருத்துக்களுக்காகத் தேவை கருதி என்மீது அவதூறு பொழிந்தவர்கள் காணாமலே போய் விட்டனர்.
-ஆனால் என்னையும் மீறி எனது கருத்துக்கள் இன்றும் வாழ்கின்றன-வளர்கின்றன!
அதுதான் தான்!
இலக்கியம் விடுதலையைப் பெற்றுத் தந்ததில்லை ஆனால் எந்த விடுதலையும் இலக்கியம் இல்லாமல் பிறந்தது மில்லை!

டொமினிக் ஜீவா 1.85
அந்த வகையில் முழு மனுக்குலத்தின் விடுதலைக்கான இலட்சியத்தைத் தேடித்தான் நான் தேடல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.
"ஆண்டு மலர்க் கடிதங்களை நூலுருவில் தரவேண்டும்" என்றொரு கோரிக்கையும் வெளிநாட்டில் சொல்லப்பட்டது.
-யோசிக்கின்றேன்: முயற்சிக்கின்றேன்.
என்னைப்பற்றி நான் எப்பொழுதுமே அலட்டிக் கொள் பவனல்ல, அவதூறுகளுக்கு நான் எந்தக் காலத்திலுமே நின்று பதில் சொல்பவனுமல்ல. எனது இலக்கிய நேர்மை யைச் சந்தேகிப்பவர்கள் எனது பதில்களுக்காகக் காத்திருப் பவர்களுமல்ல என்ற உண்மை ஏற்கனவே எனக்குத் தெரி யும். நான் வருங்காலத் தலைமுறைக்காகச் சிந்திப்பவன்: செயல்படுபவன்.
பின்வரும் தலைமுறை என்னைப்பற்றி நிறையவே பேசும். அது எனக்குத் தெரியும்.
அடுத்த நூற்றாண்டில் பேசப்படப் போகின்ற கருத்துக் களைச் செப்பனிட்டுத் தருவதே இன்றைய எனது முக்கிய கடமையாகும்.
23வது ஆண்டுமலர்-1988
ஆழமான உணர்வுகள்மெளனத்தில் வாழ்கின்றன!
வினைத்துப் பார்க்கும்போது மலைப்பாகத்தான் இருக் கிறது!-இருபத்து நான்கு ஆண்டுகளைக் கடந்து, அடுத்த ஆண்டு வெள்ளிவிழா மலருடன் இருபத்து ஐந்தாவது வருடத் தில் அடியெடுத்து வைக்க முனைந்து முன்னேறும் மல்லிகை வின் இத்தனை ஆண்டுக்காலகட்ட வளர்ச்சியை ஒரு கணம்

Page 94
186 தலைப்பூக்கள்
சிந்தித்துப் பார்க்கும் வேளையில் என்னால் கூட அதை நம்ப மூடியவில்லை.
நேற்றுப் போல, இருக்கிறது. அதற்குள் கால் நூற்றாண்டு உருண்டோடி விட்டது.
பின்னால் திரும்பிப் பார்க்கும்போது "நானா இதை யெல்லாம் சாதித்தேன்?" என்ற மன ஆச்சரியம் என் நெஞ்சில் முகிழ்ந்து எழும்புகின்றது.
ஆரம்ப ஆண்டுகளில் மல்லிகையை அச்சடித்து முடிந்த தின் பின்னர் அதைக் கட்டுக் கட்டாகத் தோளில் சுமந்த வண்ணம் தெருத் தெருவாகச் சுவைஞர்களைத் தேடி 'தரமான ரஸிகர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இதழ் களை மாசா மாசம் சேர்ப்பிக்க எத்தனை சிரமப்பட்டேனோ அத்தகைய சிரமத்தைத்தான் இன்றும் எனது தோளில் சுமந்து திரிகின்றேன். }.
-இப்படியாக உழைப்பதில் எனக்கொரு ஆத்ம திருப்தி
தெருக்களில், சந்துபொந்துகளில், ஒழுங்கைகளில், பஸ் நிலையங்களில், தேநீர்ச் சாலைகளில், புத்தகக் கடைகளில் தான் மல்லிகைக்குரிய ஆண்டுச் சந்தாக்களைப் பெரும் பாலும் நான் பெற்றுக் கொள்வது வழக்கம்
-அப்படியொரு வாசகர் தொடர்பு! நான் மனசார நினைக்கின்றேன்; இந்தப் பூமி உருண்டையில் நான் ஒருவன்தான் ஆசிரியன் என்ற ஹோதாவில் வீதிகளில் வைத்துச் சந்தா' வசூலிப்பவனென எனக்குள் நானே எண்ணிக் கொள்வேன். இத்தனை காலமும் விடாமல் இதனைச் செய்து வருபவன்தான் நான் ,
-இது ஒரு கின்னஸ் சாதனை!. இந்த மன வலிமையைத் தந்ததுதான் என்ன?
நான் நம்பிப் பேணிப் பாதுகாத்து இதுவாை கடை ப் பிடித்து ஒழுகி வரும் தத்துவம்.

டொமினிக் ஜீவா 187
மக்கள்தான் எனது எஜமான்கள். அவர்களை அவர் களது குறை நிறைகளுடன் நேசிப்பதுதான் எனது பலம், இதைக் கடந்த காலங்களில் எனக்குக் கற்றுத் தந்ததுதான் நான் நம்பிய கோட்பாடு. அதன் திசைவழியில் பயணஞ் செய்தே நான் இன்றைய பாதைக்கு வந்துள்ளேன். அதன் அறுவடையே மல்லிகையின் கால் நூற்றாண்டுத் தொடர்ச்சி.
சிற்றிலக்கிய ஏடுகளின் ஆயுள் ஒரு சில ஆண்டுகளே யாகும். தமிழில் இதுவரை வந்த சிற்றிலக்கிய சஞ்சிகைகள் ஒரு சில வருஷங்களில் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போயுள்ளன . அதே சமயம் அவை வெகுஜன பிரபல்யம் பெற்ற சஞ்சிகைகள் சாதித்ததைவிடவும் ஆழமாகவும்-அகல மாகவும் இலக்கியப் பாதிப்பை ஏற்படுத்தியும் உள்ளன.
உதாரணத்திற்கு மணிக்கொடியைக் கூறலாம். பின்னர் வத்த சரஸ்வதியைச் சொல்லலாம். தொடர்ந்தும் இச் சிறு சஞ்சிகைகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை, நிறுத்தப் பட்டு விட்டன.
ஆரம்ப காலத்திலிருந்தே இவைகளைப் பாடமாகப் படித்துக் கொண்டவன்தான் நான். "சிற்றிலக்கிய ஏடுகள் ஏன் தோல்வியடைகின்றன?’ என்று எனக்குள் நானே பல தடவைகள் விவாதித்துக் கொண்டதுண்டு.
-என்ன காரணம்? ஆர்வம் இருந்த அளவிற்கு இலக்கிய நேசிப்பு இருந்த அளவிற்குச் சரியான மதிப்பீட்டு உழைப்பு நல்கப்படவில்லை என்ற முடிவுக்கே நான் கடைசியில் வந்தேன்.
மக்களிடம்-மக்களிடம்-மக்களிடம் உறுதியாக வேர் பாய்ச்சி வளர்வது என்ற தாரக மந்திரத்தை மன மந்திர மாகச் செபிக்கக் கற்றுக் கொண்டேன்.
அச்சடிக்கப்பெற்ற மல்லிகை இதழ்களை எடுத்துக் கொண்டு வீதி வீதியாகத் திரியத் தொடங்கினேன். ஆரம்பத் தில் விற்பனவு செய்தேன் என்று சொல்வதைவிடவும்

Page 95
188 தலைப்பூக்கள்
வலுக்கட்டாயமாக நண்பர்களிடம் திணித்தேன் என்று சொல்வதே பொருத்தமுடையதாகும்.
மல்லிகை இதழின் ஆரம்ப கால விலை 30 சதம். ஆண்டு மலர் என்றால் ஐம்பது காசு. இதழ்களை நான் திணிக்கப் பட்டபாடு இருக்கின்றதே-அப்பப்பா! அப்படியொரு சிரமம் தெருக்களில் ஒரு யாசகனைப் போல, பிச்சை கேட்டுக் கெஞ்சும் ஒரு பிச்சைக்காரனைப் போலவே பெரும்பாலும் நான் காட்சி தருவேன்.
என்னைக் கண்டு தலைமறையும் எத்தனையோ நண்பர் களை எனக்கு இன்றும் தெரியும். அவர்களில் சிலர் இன்று மல்லிகையின் நிரந்தரச் கலைஞர்களாக இருக்கின்றனர்.
"இந்தப் பயலை நேரில் பார்த்துவிட்டால் முப்பது சதம் அழ வேண்டுமே" என எண்ணி ஒழுங்கைகளுக்குள்ளால் குறுக்கே திசைமாறிப் போனவர்கள் பலரை எனக்கு ஞாபக முண்டு.
இத்தனைக்கும் சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்று இலங்கையில் மதிக்கப்படத்தக்க ஓர் எழுத்தாளனாக மக்களால் நான் அங்கீரிக்கப் பட்டிருந்த வேளை, என்னை அவர்களில் சிலர் அந்தக் கோலத்தில் தரிசிக்க விரும்ப வில்லை; நானுமோ அந்தக் கோலத்தைச் சுலபத்தில் இழக்கத் தயாராகவில்லை!
வீதியில் என்னிடம் சஞ்சிகையைப் பெற்றுக் கொண் டுள்ள அநேகர் இன்னமும் அதற்குரிய கிரயத்தைத் தந்து விடவில்லை. நான் ரொம்பவும் ஞாபக சக்திக்காரன். அந்த முகங்களை இன்னமும் நினைவில் வைத்துள்ளேன்.
வேறு சிலர் மிகுதிப் பணத்தை வாங்க மறுப்பார்கள். நான் வற்புறுத்தித் திருப்பிக் கொடுப்பேன். அப்பொழுது அந்த நேரத்தில் அது வியாபாரம், அபிமானம் இருந்தால் சந்தாவைச் செலுத்தலாம்; வந்து அன்பளிப்புத் தரலாம். என்பேன்.

டொமினிக் ஜீவா 89
நான் மாணவனாக இருந்த காலத்தில் தேயிலைப் பிரசாரசபை வீட்டுக்கு வீடு இலவசமாகத் தேநீர் விநியோகம் பண்ணிற்று. நான் அதைத் தொடர்ந்து அருந்தியுள்ளேன். அப்பொழுது பிரபலமாகாத சிகரெட் கம்பெனி ஒன்று சிகரெட்டுகளை வீதியில் வீசிப் பிரசாரம் செய்தது. நானதைப் பொறுக்கியெடுத்து மாமாவிடம் ஒப்படைத் துள்ளேன். இலக்கிய வளர் கட்டத்தில் "கல்கி' வாங்கும் ஒவ்வொருவருக்கும் "குமுதம்' ஒன்றை இலவசமாகத் தந்தது புத்தகசாலை. அந்த ஒசிக் குமுதத்தையும் நான் பெற்றுப் படித்துள்ளேன். எம்.ஜி.ஆர். என்ற சினிமாக் கலைஞன் தமிழகத்தின் முதலமைச்சரானார். இதுவும் எனக்குப் புத்தி போதித்தது.
இவை அனைத்தையும் கிரகித்துச் சீரணித்துக் கொண்டி நான் ஒரு திட்டவட்டமான முடிவுடன்தான் "மல்லிகை" இதழ்களைச் சுமந்த வண்ணம் வீதிக்கு இறங்கினேன். திரும்பத் திரும்ப் மக்களிடம் சென்றேன்.
இந்தத் தேசத்திலுள்ள பிரதான பட்டினங்களுக்குப் போயிருக்கின்றேன். தமிழகத்திலுள்ள முக்கிய நகரங் களுக்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என் கை களை அலங்கரிப்பவை "மல்லிகை இதழ்களே நட்பைத் தேடித்தேடிச் சென்றிருக்கின்றேன்; இலக்கிய நெஞ்சங் களைக்-கண்டுபிடிக்கத் தேடல் முயற்சியில், மும்முரமாக ஈடு. பட்டிருக்கின்றேன்.
நான் இந்தத் தேசத்துத் தெருக்களில் விதைத்துள்ள இலக்கிய விதை எனக்காகவல்ல; மல்லிகைக்காகவல்ல; வருங்காலத்தில் இந்த மண்ணில் முளைவிட்டு அரும்பி வரப் போகும் சகல சிற்றிலக்கியத்தரமான ஏடுகளுக்காகவுமே இத்த உழைப்புத்தரனம் செய்துள்ளேன் என வருங்காலத் தலைமுறைதெளிவாகவே புரிந்துகொள்ளும்.
அடுத்த நூற்றாண்டு என்னைப் பற்றிப் பேசு.

Page 96
1.90 தலைப்பூக்கள்
சரித்திரச் சம்பாஷணைக்கு இன்று நான் பசளை யிட்டுள்ளேன். சமகாலத்தில் என்னைப்பற்றி எந்த விமரி சனமும் செய்யப்படலாம். விமரிசனத்திற்கு அப்பால் பட்ட வனல்ல நான். நன்றாக விமரிசிக்கட்டும். காலம் "எல்லாரை யும் விட மிகச் சிறந்த துல்லியமான விமரிசகன். காலமே தீர்ப்பளிக்கட்டும்!
காலங்கடந்து செய்யப்படும் அந்த விமரிசனத்திற்கு இன்று என்னை நானே தயார்ப்படுத்திக்கொண்டு உழைத்து வருகின்றேன்.
நான் எனக்குப் புகழ் சேகரிப்பதற்காக என்றுமே சிந் தித்தவனல்ல. இந்த மண் சிறக்கவேண்டும். இந்த மண் மைந்தர்களின் படைப்பாற்றலை உலகு அங்கீகரிக்க வேண்டும். இதுவே எனது ஆத்மார்த்திக அவாவாகும்.
24-வது ஆண்டுமலர்-1989
மக்களிடமிருந்து மலர்ந்த கலைஞன் மக்களது கலைக்குச் செழுமையூட்டிய நடிகன்!
நடிகமணி எனப் பாமரர்களாலும் இனங்கண்டு போற் றிப் பாராட்டப்பட்ட நாடகமணி வைரமுத்து அவர்களின் மறைவு ஈழத்து மக்கள் கலைக்குப் பெருத்த பேரிழப் பாகும்,
உழைக்கும் மக்களிடமிருந்து தோன்றியவர் நடிகமணி. உழைக்கும் வர்க்கத்தினரிடமிருந்து தோன்றியது நாடோடிக் கலைகள். அதில் தலையாயது நாட்டுக் கூத்து நாட்டார் இலக்கியம்.

டொமினிக் ஜீவா 191
தனது வாழ்தாள் பூராவும் தான் தனது மக்களிடமிருந்து பயின்ற பாமரக் கலையைப் பேணிப் பாதுகாத்து வந்ததுடன் கடைசி வரையும் அதற்காகவே உழைத்து வந்தவர்தான் நாடகமணி அவர்கள்.
போர்த்துக்கீசர் வந்தனர். போயினர். ஒல்லாத்தர் போயினர். ஆங்கிலேயர் வந்தனர்; தமது கலாசாரத்தை யும், இறுக்கமாகத் தமது மொழியையும் இந்த மண்ணின் மீது ஆழ வேரூன்றி விட்டுப் போயினர்.
இத்தனை கலாசார, மத, பண்பாட்டு, மொழி ஆதிக்கங் களுக்கு மத்தியிலும் நமது மொழியையும் கலாசாரங்களையும் பண்பாடுகளையும் பாரம்பரியக் கலை மரபுகளையும் பேணிப் பாதுகாத்தவர்கள் அடித்தட்டு மக்கள்; பாமர மக்கள் கிராமத்து உழைக்கும் மக்கள்; விவசாயப் பெருங்குடி மக்களேயாவார்கள்.
அந்த மக்களிடமிருந்து மாபெரிய ஆல விருட்சமாகத் தோன்றியவர்தான் நமது மதிப்புக்குரிய நடிகமணி அவர்கள்.
எங்கிருந்தோ வந்து, நவீன செழுமையால் எம் மீது ஆதிக்கம் செலுத்த முயன்ற அந்நியக் கலை கலாசாரங்க ளாலும் நமது மக்கள் கலையை அழித்தொழிக்க முடிய வில்லை.
காரணம் மக்களின் அடிமனசில் வேரூன்றிய கலையை அந்த அந்நியத் தாக்கத்தாலும் வெற்றி கொள்ள இயலவில்லை.
மக்கள் கலையின் வெற்றியே இதில்தான் அடங்கி யுள்ளது.
இதுவரையும் வாழ்ந்து, இயங்கி, இயக்கவைத்து ஒரு தனிக் கலைப் பாரம்பரியத்தை இடைவிடாது கட்டிப் பாது காத்து வந்த உயிருடன் திகழ்த்த நடிக மணியை விட

Page 97
9. தலைப்பூக்கள்
மறைந்துவிட்ட நாடகமணி எதிர்காலத்தில் அதிக சக்தி வாய்ந்த கலைப் போராளியாகத் திகழுவார் என்பது திண்ணம்.
வாழும்போது அலட்சியம் செய்த, கலைக்காகப் போரா டிய போது கண்டுகொள்ளாமல் விட்ட உயர் கல்வி பீடங்கள், பல்கலைக் கழகங்கள் கலாசாரக் கழகங்கள் கலை இலக்கிய மன்றங்கள் அவரது ஆளுமையின் சக்தியையும் வீச்சையும் புரித்துகொண்டு தக்க மரியாதையையும் கெளரவத்தையும் நல்கத்தான் போகின்றன என உறுதியாகச் சொல்லு கின்றோம்.
என்னதான் ஆளுமை மிக்க மக்கள் கலையாக இருந்தா லும் கலைஞனாக இருந்தாலும் அவைகளை ஆரம்பத்திலி ருந்தே புரிந்து கொண்டு, இனங்கண்டு அதுசரித்துப் பேணி மக்கள் மன்றத்திற்கு அறிமுகப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு தூண்டு கோல் தேவை.
நடிகமணியைப் பொறுத்தவரை பேராசிரியர் வித்தியா னந்தன் இவரது நாட்டார் கலை சம்பந்தமான மகிமையை. மகத்துவத்தை. மேதைத்துவத்தை முன்னரே மெய்யாகவே உணர்ந்து கொண்டு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்ததை நாம் நன்றியுணர்வுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு நினைவு கூருகின்றோம்.
பேராசிரியருடைய பேராதவு நடிகமணிக்குக் கிடைத் தது ஒரு திருப்பமாக அமைந்தது. குடாநாட்டிற்குள்ளேயே பேசப்பட்ட நாடகமணியின் பேராற்றலும் பெருந் திறமையும் தனி மனித மேதைத்துவமும் தேசம் பூராவும் விரிந்து பற்றிப் படர்ந்து வியாபிக்கக் காரணமாக அமைந்தது. வெகுசன சாதனங்களில் பதிவு செய்யப்படத்தக்கதாகவும் வெளிப் பிரதேச மக்கள் மத்தியில் பிரபல்யமடையத் தக்கதாகவும் அந்த ஆத்மார்த்திக உறவு நடிகமணிக்கு உதவியாக அமைந்தது. - • ܝ .

டொமினிக் ஜீவா Ι93
தோற்றத்தில் ரொம்பவும் எளிமையானவர் நடிகமணி. அவர் பிறந்து வளர்ந்தது வாழ்ந்து வந்த மக்களில் ஒருவ ராகவே அவர் கடைசி வரை காட்சி தந்தார்.
அந்த காந்தீய எளிமைக்குள்ளும் கலைத்துவ இறுமாப்பு அவரிடம் காணப்பட்டது.
அந்த சர்வாம்ச ஆளுமை மிக்க. கலைத்துவ இறுமாப்புக் கொண்ட கலைஞனை இந்த மண் என்றென்றும் ஞாபகத் தில் வைத்திருக்கும் என்பது சர்வ நிச்சயம்.
(ஜான் 1989)
வெப்பமான மண்ணில் இலக்கியப் பாதங்கள் பதிகின்றன!
வழக்கமாகவே ஒவ்வொரு ஆண்டிலும் வெளிவரும் மலர்களின் தலையங்கப் பகுதியில் நான் எனது பேனாவின் மூலம் உங்களுடன்-நெஞ்சுக்கு மிக மிக நெருக்கமான சுவைஞர்களுடன்-மனந் திறந்து சம்பாஷித்து வந்துள்ளேன்? சம்பாஷணையை நேரடியாக உங்களுடன் வைத்துக் கொள்வது போலவே. கருத்துக்களை, எனது தனிப்பட்ட மன அவசங்களை, எதிர்காலத் திட்டங்களை எல்லாம் கூறி வந்திருக்கின்றேன்,
பல்வேறு பிரச்சினைகளை மனம் விட்டுக் கதைப்பதன் மூலம் எனது நெருஞ்சப் பாரத்தைக் குறைக்கக் கூடியதாக இருந்தது.
என்னைப் பற்றி நான்-எனது உள் மன ஓட்டங்களைப் பற்றி நான்-ஏன் இத்தகைய கருத்துக்களைச் சொல்லி
த-13

Page 98
94. தலைப்பூக்கள்
வைக்கிறேன் என்பதில் எனக்குத் தெளிவான ஒரு கண்ணோட்டம் உண்டு. அடுத்த நூற்றாண்டில் என்னைப் பற்றியும் மல்லிகை சம்பந்தமாகவும் தப்புத் தப்பான கருத்து கள் பரவிவிடக் கூடாது என்பதற்காகவே எழுத்தில் இந்தத் தளத்தில் பதிந்து வைக்க விரும்புகின்றேன். வருங்காலத்துக் குரிய ஆவணங்கள் இவை!
எனவேதான் வெகு துல்லியமாக எனது அபிப்பிராயம் களை, நோக்கங்களை, சிந்தனைகளை எழுத்தில் வடித்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு-அவர்களது சிந்தனைக்கு விட்டுச் செல்ல ஆசைப்படுகின்றேன்.
இந்தப் பகுதியில் நான் எழுதிவரும் எனது ஆத்மார்த்த கருத்துக்கள் பற்றிப் பின்னர் நேர்ச் சம்பாஷணையில் பேசப்பட்டதுமுண்டு.
வருங்கால இலக்கிய வளர்ச்சி குறித்துப் பெருமளவில் தீர்க்க தரிசனத்துடன் சிந்தித்தே நான் எனது கருத்துக் களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதுண்டு. எனது கருத்துக் களுக்கு எழுத்தே ஆதாரம்
ஆன்மீகக் கலாசாரப் பிணைப்புக்கள் தாமாகவே தோன்றி விடுவதில்லை. மா மனிதர்களின் உழைப்பு, முயற்சி, சிந்தனை செயல்பாடுகளின் விளைவாகவே அவை நெருக்கமாகச் சித்திக்கின்றன.
பரந்த கடும் உழைப்புக் கொண்ட, சிக்கலும் நெருக்கடி யும், அவலமும் கொண்ட கடந்து போன ஆண்டுகளை நினைத்துப் பார்க்கின்றேன், சலியாத, இடையறாத உழைப்பும் இயங்கு நிலையுந்தான் எனக்கு வழிகாட்டி: அமைந்து வழிநடத்திச் சென்றன,
உண்மையாகச் சொல்லுகின்றேன், மலைப்பாக இருக் கிறது!

டொமினிக் ஜீவா 95
என் மீதும் மல்லிகை மீதும் எறியப்பட்ட அவதூறு ஈட்டி முனைகள் கூர் மழுங்கிச் செயலிழந்து திசை திரும்பிப் போன சம்பவங்கள் கடந்த கால் நூற்றாண்டுகளில் நிறையவே நடந்தேறியுள்ளன حمر
ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது ஒன்று புரிகிறது. என்னை எதிர்த்தவர்கள். காரணங்களற்று அவதூறு பொழிந்தவர்கள் பொறுப்பற்று விமர்சித்தவர்கள், என்னு டைய ஆளுமையை வளர்த்தெடுத்தார்களோ என இப்போது ஆறுதலாக இருந்து யோசிக்கும் வேளையில் எண்ணத் தோன்றுகின்றது.
சின்னஞ் சிறு வயசில் கைத்துப் ப்ோன வாழ்க்கை அநுபவங்கள்தான் எனக்குப் பேனாவைத் தூக்கும் நெஞ்சுரத் திராணியைத் தந்ததெனலாம்,
அந்த வெறுக்கத்தக்க அனுபவங்கள் என்னை வக்கிரப் படுத்துவதற்குப் பதிலாக மனுக்குலத்தை ஒருங்கு சேர நேசிக்கும் பார்வை வீச்சை நல்கின.
வெறும் சாதாரண சராசரி மனிதனல்ல தான். அப்படி வாழ்க்கையைக் கடத்திச் செல்வதற்காக நான் பிறவி எடுக்க வில்லை என்றொரு உள்ளுணர்வு எனக்குள்ளே எனது இருப்பை அடிக்கடி ஞாபகப்படுத்தி வருவதுண்டு.
பேனா பிடிப்பவன் எப்படியும் வாழலாம் என்பதை நிராகர்த்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு நியதியை, அந்தக் காலத்திலேயே பின்பற்றி, தொடர்ந்து ஒழுகி வருபவன் நான் , எனக்கெனச் சில வரையறைகள் உண்டு. அதை மீற நான் நடந்து கொண்டவனல்ல. மற்றர்களுக்காகவல்ல எனது மானுட முழுமைக்காகவே நான், இன்று வரை ஒழுக்க நியதிகளைக் கைக் கொண்டு பின்பற்றி வருகின்றேன்.

Page 99
96 தலைப்பூக்கள்
மணி விழா ஆண்டு எனக்கு மற்றொரு பரிமாணத்தை வழங்கியது. இவ்வாண்டில் என்னைப் பற்றிக் கூறப்பட்ட பல்வேறு கருத்துக்களையும் ஒரு ஞானியின் மனப் போக்கில் நின்று யோசித்துப் பார்த்திருக்கின்றேன்.
என்னிடம் நானே கண்டு கொண்ட பலவீனங்களை , முரண்பாடுகளை, கோபக் கொதிப்புக்களைக் களைந்து புதுப் பொலிவு பெற மணி விழாக் கருத்துக்கள் மெய்யாகவே எனக்குப் பேருதவி புரிந்துள்ளன.
பாசாங்குத் தனமான விமரிசனத்தை நான் முற்றாகவே நிராகரித்து வந்துள்ளேன். பொய் உறவுகளை விசுவாசமற்ற நெருக்கத்தை , கபடத்தனமான ஒட்டுதலை என்றுமே நான் அங்கீகரித்தவனல்ல.
பல தடவைகள் வாழ்க்கையில் நான் பந்தாடப்பட்டிருக் கின்றேன். கொச்சைத் தனமாக என்னைக் கிண்டல் செய்த வர்கள் இன்றும் இருக்கின்றனர். எனது இலக்கிய நேர்மை யைச் சந்தேகித்தவர்களுமுண்டு. இவை ஒன்றுமே என் ஆத்மாவையோ, ஆளுமையையோ பாதித்ததில்லை. என் இயல்பான தனித்தன்மையை நான் மாசு படிய வைத்தவிட வில்லை. எனவேதான் நான் எல்லாரையும் நேசித்தேன்; அநேகரால் நேசிக்கப்பட்டேன். எனது இதயத்தைக் கசப்புள்ளதாக ஆக்கிக் கொண்டதில்லை. அதே சமயம் எனது ஆத்மக் காயங்களை எண்ணிக் கொண்டு நான் போரிடாமல் இருந்துவிடவுமில்லை.
மல்லிகையின் வெள்ளிவிழா ஆண்டு எனக்குப் புதிய பரிணாம வளர்ச்சியைத் தந்துள்ளது. கால் நூற்றாண்டு களாக ஒரு தனி மனிதனாக நின்று இலக்கியச் சிற்றேடு ஒன்றைத் தொடர்ந்து நடத்துவது என்பது அசுர சாதனை தான், அதுவும் நமது நாட்டில் இது இமாலயச் சாதனை!
நல்ல நெஞ்சங்கள் வாழ்த்தும் இந்த மனப் பூர்வமான வாழ்த்துக்களை ரொம்பத் தன்னடக்கத்துடன் ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

டொமினிக் ஜீவா 197
ஒர் இலக்கிய உழைப்பபளியான எனக்கு ஆன்மீக உலகம் பற்றித் தெளிவாக அறிந்து வைத்துள்ள நம்பகத் தன்மை வாய்ந்த நல்ல நண்பர்கள் நெருக்கமாகக் கிடைத்ததுதான் எனக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து என நம்புகின்றேன்,
25-வது ஆண்டு மலர்-1990
இலவச ஆலோசனையின் பகிரங்க வெளிப்பாடு.
-ab
லே வேலைத் தொந்தரவுகளுக்கு மத்தியிலும் புதிய தொரு வேலை எனக்குச் சமீப காலமாக என்மீது சுமத்தப் பட்டு வருவதை இப்பொழுது தான் நன்றாக உணரு கின்றேன்.
பலர் ஆலோசனை கேட்கிறார்கள், வேறு சிலர் கடிதம் தீட்டுகின்றனர். இன்னும் சிலர் நேரில் வந்து என்னுடன் கலந்துரையாட விரும்புகின்றனர்.
புதிய சஞ்சிகையை எப்படி வெற்றிகரமாக நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை பெறவே இத்தனை பேர்களும் இன்று வரிந்து கட்டிக்கொண்டு ஆலோசனையை இலவச மாகப் பெற என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர்.
இதில் விசித்திரம் என்னவென்றால் இதுவரை மல்லிகை ஓர் இதழைக் கூட முழுமையாகப் படிக்காதவர்கள் கூட. என்னிடம் இலக்கிய இதழ் ஆரம்பிக்க ஆலோசனைக்கு வது கின்றனர்.
வேறு சிலரிடம் இந்த நாட்டில் வெளிவரும் மற்றும் இலக்கியச் சஞ்சிகைகள் பற்றி விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் அந்தப் பெயர்களையே இதுவரை அறிந்திருக்க

Page 100
98 தலைப்பூக்கள்
வில்லையாம் மற்றும் "ஈழத்தில் எழுதி வரும் எழுத்தாளர் களில் உங்களுக்கு எத்தனை பேர்களைத் தெரியும்?” எனக் கேட்டால், வந்தவர்கள் உதட்டைச் சுளிக்கின்றனர்.
இப்படியானவர்கள்தான் இலவச ஆலோசனைக்கு என் னிடம் வருகின்றனர்.
இளைஞர்கள், வாலிபர்களின் ஆர்வத்தை அவர்களினது விடா முயற்சியை மதிப்பவன் நான். அவர்களிடமுள்ள ஆக்க பூர்வமான சக்தியைச் செம்மைப்படுத்தி அவர்களை நெறிப் படுத்த வேண்டும் என்ற பேரவா உள்ளவன்தான் நான்.
ஆனால் ஒருவிதமான திட்டமுமில்லாமல், அடிப்படை யான அறிவுமில்லாமல் அவர்கள் என்னை வந்து நெருங்கும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரிவதில்லை.
ஒரு தடவை சிலர் கூட்டாக வந்தார்கள். ஆயிரம் ரூபா சேர்த்து வைத்திருப்பதாகவும் இதில் ஓர் இதழை முதலில் வெளிக்கொணர்ந்து விட்டால், அதை விற்றுப் பணமாக்கி அடுத்த இதழ்களையும் வெற்றிகரமாகக் கொண்டு வந்து விடலாம் என்ற யோசனையை முன் வைத்த வண்ணம் என்னை இலவச ஆலோசனை கேட்டனர். "தொடர்ந்து வலர் உதவுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்களாம்.
இந்த மாதிரியான வாக்குறுதிகள் அத்தனையும் அர்த்த Obspanoa. அநுபவம் எனக்கு இதைத்தான் கூறித் தந்துள்ளது.
இலகியச் சஞ்சிகை ஆரம்பிப்பதற்குப் பணம் கூட முக்கிய மல்ல. தன்னை முழுவதும் அர்ப்பணித்து ஒழுகுவதற்கு ஒர் இலக்கிய ஆத்மா முதலில் தேவை. அடுத்து சரியான திட்டம் வேண்டும் பரவலான இலக்கிய நண்பர்களின் நட்பு முக்கியம், சலியாத உழைப்பு அடிப்படை. நடத்தப் போகும் சஞ்சிகைக்கு ஒரு காரியாலயம் எல்லாவற்றையும்விட அத்தியாவசியம். சம்பந்தப்பட்ட இலக்கிய நண்பர்கள் வந்து கலந்து பேச தொடர்புகொள்ள, சந்தாதாரர்கள் நேரில்

டொமினிக் ஜீவா 199
வந்து பணம் செலுத்த அலுவலகம் இல்லாமல் ஒன்றுமே ஒப்பேறாது. ۔۔۔۔
எல்லாவற்றையும் விட முக்கியம் தொடங்கப்படும் சஞ்சிகை ஆசிரியரின் ஆளுமை,
பல ஆண்டுக்கால அரசியல், இலக்கிய, பொது வாழ்வுப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, பழக்கப்பட்டு பண் படுத்தப்பட்டவராக. மக்களால் ஒட்புக் கொள்ளப்பட்டவராக அவர் அமைவது சஞ்சிகையின் கருத்து ஆளுமைக்கு மக்கள் மத்தியில் அது செல்வாக்குப் பெறுவதற்குத் தேவையான ஒன்றாகும், পুরু,
'நமது நாட்டில் ஏன் இலக்கியச் சஞ்சிகைகள் தோல்வி அடைகின்றன?’ என நான் ஆரம்ப காலத்திலிருந்தே ஆழ்ந்து யோசித்து வந்துள்ளேன். ஆனந்த விகடனை ஆரம் பித்த வாசன் அவர்கள்தான் என் ஞாபகத்திற்குத் தட்டுப் பட்ட முக்கியமானவர். ஆரம்ப காலத்தில் வாசன் விகடனை அச்சகத்திலிருந்து எடுத்த உடனே மைலாப்பூர் தெருக் களிளுள்ள வீடுகளுக்குக் கால் நடையாகச் சென்று விநியோகித்து வருவாராம்.
இதுவே எனக்கு ஆரம்ப காலத்தில் ஆதர்ஸமாகத் திகழ்ந்தது. அதையே நான் தொடர்ந்து பின்பற்றினேன் .
சிலர் இருக்கிறார்கள், தமது ரத்தமும் சதையுமாக உருவாக்கிய படைப்புக்களைக் கொண்டு திரிந்து விற்க மனம் ஒப்ப மாட்டார்கள். அவர்களது சுய கெளரவம் அதற்கு இடந் தராதாம்! அச்சடித்து பரந்துபட்ட சில விற்பனைக் கடைகளுக்கு விநியோகித்துவிட்டு மாதம் முடிவில் விற்பனைக் கணக்குப் பார்க்க முனைவார்கள். عبد. این ترتیب: نه
இப்படியானவர்கள் சஞ்சிகை உலகிற்கு லாயக்கற்றவர்
கள் இந்த மண்ணில் ஒரு சஞ்சிகையைத் தொடர்ந்து இவர்களால் வெற்றிகரமாக நடத்தமுடியாது. 交

Page 101
200 தலைப்பூக்கள்
நான் தெருத் தெருவாக மல்லிகையை இன்னும் சுமந்து விற்பவன். நான் இன்று அதைச் செய்ய வேண்டிய தேவை இல்லாதிருந்தும் தொடர்ந்து செய்து வருகின்றேன். காச ண்ம் வருங்காலத்தில் இனிமேல் வரப்போகும் ஒரு சஞ்சிகை யாளனுக்கு எனது உழைப்புப் பசளையாக அமையும் என்பது" எனது எண்ணம்.
ஒரு காலத்தில் தேயிலைப் பிரசார சபையினர் நமது ஊரில் தேனீர் தயாரித்து இலவசமாக வீடு வீடாக விநியோகித்ததை நானறிவேன். சிகரெட் கம்பெனிக்காரர் கள் வானில் சென்று பாதசாரிகளுக்கு சிகரெட்டை வீசியெறிந் ததை நான் அனுபவ பூர்வமாகக் கண்டிருக்கின்றேன்.
இச்சம்பவங்கள் என் அடி மனசில் பதிந்திருந்தன. அவைகளைப் பாடமாக நான் படித்துக்கொண்டேன்.
வேறு சிலர் இருக்கின்றனர் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை சஞ்சிகையை வெளியிட்டுவிட்டு மனத்திருப்தி கொல்பவர்கள். வெளியீட்டுத் துறையில் மகா சிரமங்களைத் தினசரி அனுபவிப்பவன் நான். எனக்கு அதன் கஷ்ட நஷ்டங்கள் தெரியும். ஆனால் வாசகன் அப்படிப் பட்டவனல்ல. அவனுக்குப் படிக்கச் சஞ்சிகை தேவை. நமது சிரமங்களை அவன் கேட்கத் தயாராக இல்லை. நமது வாசகர்களை நாம் ஏமாற்றக் கூடாது தெளிவாக அவர்கள் முன்னால் உண்மைகளை வைத்து விடவேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வர இயலவில்லையா? ஆறு மாதத் திற்கு ஒரு இதழ் தருவோம் எனத் தெளிவாக முன்னரே கூறி விட வேண்டும். நீண்ட இடைவெளி விட்டு விடும்போது ஒரு ஆபத்தும் உண்டு. வாசகன் மறந்து போய் விடுவான். புதிய சஞ்சிகையின் நிலைதான் இதற்கும் ஏற்படும்.
அடுத்து தட்டச்சு கையெழுத்து வெளியீடுகள் இன்று
ஏராளமாக வெளிவருகின்றன. ஆரம்ப எழுத்தாளர்களுக்கு இது பயிற்சிக் களம்தான், ஆனால் டடக் கூடிய சிரமங்கள்

டொமினிக் ஜீவா 20.
கொஞ்சநஞ்சமல்ல. இந்த முயற்சியில் தம்மை அர்ப்பணித்து இயங்கும் இளந்தலைமுறையினரின் முயற்சிக்கு நான் முக்கியத்துவம் கொடுத்தாலும் அச்சில், அமைப்பில் வெளி வரும் சஞ்சிகைகள்தான் காலந்தோறும் பேசப்படும். பலர் இம்முயற்சிகளைக் கணக்கில் எடுந்துக்கொள்ளவே மாட் டார்கள்.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், மணிக்கொடி காலத்தி லிருந்து சரஸ்வதி காலமூடாக இக்காலம் வரை இலக்கியச் சிற்றேடுகள் வெளியிடுவது என்பதே அசுர சாதனைதான். ஒரு இதழ் சில இதழ்கள் வெளிவந்தவுடன் இயல்பாகவே மரித்துப் போகும் இதழ்கள்தான் ஏராளமானவையாகும். இது தொடர்ந்து நடைபெறும் சாபத்தீட்டாகும்.
இதைத் தவிர்க்க வழிமுறைகளும் உண்டு. சலியாத உழைப்பு. நம்பிக்கையான திட்டம், யதார்த்த உலகைக் கணக்கிலெடுக்கும் கணிப்பு, சுய கெளரவம் பார்க்காமல் மக்கள் மத்தியில் விற்பனவு செய்ய முனையும் மனத்திண்மை, தகுந்த காரியாலயம், ஒத்துழைக்க முனையும் இலக்கிய நண்பர்கள், ஆளுமை மிக்க ஆசிரியப் பேனா இத்தனையும் ஒருங்கு சேரப் பெற்றவர்கள் துணிந்து இத்துறையில் இறங்க லாம்; பயமில்லை.
இன்றைய சூழ்நிலை இன்று இந்த மண்ணை இலட்சியம் பசளையிட்டு பண்படுத்தி வருகின்றது. வரும் காலத்தில் அதை அறுவடை செய்யக்கூடிய இலக்கிய ஏடுகள் தேவை. அந்தத் தேவையை இப்போதே நாம் புரிந்து கொள்வது தன்லது.
Fibu ř-1991

Page 102
ஆக்கபூர்வமான கருத்துப் பரிவர்த்தனை
ஒரு நல்ல வாய்ப்பு.
சமீப காலமாகப் பல்வேறுபட்ட கருத்துக்களையும் நிலை களையும் கொண்ட சிற்றிலக்கிய ஏடுகளைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறிய இதழ்கள் தொடக் கம் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்தோர் வெளியிடும் கவிதை இதழ்கள் வரை வெகு ஆறுதலாக இருந்து படித்துப் பார்த்தேன். - .
காலச் சுவடு ஆண்டு மலர், கணையாழி, தாமரை இன் னும் பல்வேறு இதழ்களையும் அவசரமில்லாமல் கருத்தைப் பெறுவதற்காக வாசித்து முடித்தேன்.
*காலச் சுவடு ஆண்டு மலரை நான் படித்ததும் அல்லா மல் என்னால் மதிக்கப்படும் சில எழுத்தாளர்களிடமும் கொடுத்து, படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லும்படி கேட்டிருந்தேன்.
அவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களையும் இறுதி யில் சொன்னார்கள்.
அப்பொழுதுதான் என் மனசில் ஒன்று தோன்றியது.
இப்படியான ஆக்கபூர்வமான கருத்துப் பரிவர்த்தனையை ஒரு பத்துப் பதினைந்து பேர் மாத்திரம் குழுமி இருந்து விவாதித்தால் என்ன என்றொரு யோசனை எனக்குள் ஏற்பட்டது.

டொமினிக் ஜீவா 203
ஏனெனில் சிற்றிலக்கிய ஏடுகள் என்ற கருத்தோட்டத் தைப் பழைய பாணியிலேயே இன்னமும் நாம் வைத்திருப்பது சரியா? அதே தடத்தில் இன்றும் சிந்தித்துக் கொண்டிருப்பது வளர்ச்சிக்கு அறிகுறியா? இதைப்பற்றி நாம் சற்று யோசித் தால் என்ன?
மல்லிகையைப் பற்றிய ஒரு கருத்தைச் சமீபத்தில் கேட்க நேரிட்டது. V
"மல்லிகை இப்பொழுது சிற்றிலக்கிய ஏடல்ல!"
ஓராண்டு, அல்லது இரண்டு ஆண்டுகள் ஆறு, ஏழு இதழ்கள் வந்த பின்னர் மண்டையைப் போட்டுவிடும் இதழ் கள்தான் சிற்றிலக்கிய ஏடுகளா? அல்லது தம்மை மாபெரும் மேதைகள் என நம்பிக்கொண்டு, சாதாரண மக்களுக்கு விழங்காத பாஷையில் பெரும்பாலும் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தை பெய்து பெய்து எழுதி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைச் சேர்ந்த வர்கள் குறுகிய நிலைப்பாட்டில் நின்று வெளியிடுவதுதான் சிற்றிலக்கிய ஏடுகளின் இலக்கணமா-இலட்சணமா?
இப்படியான பல்வேறு கருத்துக்கள் என் மனசில் முளை விட்டன ,
அடுத்தது புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்றொரு புதுமொழி இன்று இலக்கிய உலகில் அடிபடுகின்றது. அதன் வெளிப்பாடாக வார, மாத இதழ்களும் இன்று பரவலாகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளிவருகின்றன. அவற்றின் உள்ளடக்கங்கள் வேறுபட்டிருக்கின்றன. அவர் கனது ஆர்வத்தைவிட, அவசரத் துடிப்பே அவ்வெழுத்துக் களில் உணரக் கூடியதாகவுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் சரி.
தொடர்ந்தும் இந்தப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வெளிவரக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டா?

Page 103
204 தலைப்பூக்கள்
பிஜித் தீவுக்கு இந்தியத் தமிழர்கள் போனார்கள்; அதே போல் தென்னாபிரிக்காவுக்கும் சென்று குடியேறினார்கள். இன்று பெயரில் மட்டும்தான் அவர்கள் தமிழர்களாக இருக் கிறார்களே தவிர, தமிழ்ப் பண்பாடு; நாகரிகம், பழக்க வழக்கம், மதம் ஆகியவற்றில் அந்நியராகிவிட்டதைத்தான் சரித்திரம் காட்டுகின்றது. நமது நாட்டிலிருந்து இந்த நூற் றாண்டின் ஆரம்ப காலங்களில் ஏராளமான தமிழர்கள் மலாயா, சிங்கப்பூர் போன்ற பிரதேசங்களுக்குச் சென்றார் கள்; குடியேறினார்கள். காலக்கிமரத்தில் தொடர்பே அற்றுப் போய் விட்டதுதான் எதார்த்த நிலை.
புலம் பெயர்ந்தோர்களும் இப்படியே கட்டம் கட்டமாகத் தமது தனித்துவத்தைக் கரைத்து விடுவார்களோ தெரிய வில்லை.
நாம் தினசரி முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் பந்தமி ஆழமாகச் சிந்தித்து, விவாதித்து நம்மை நாமே செழுமைப்படுத்திக் கொள்வதற்கு பரஸ்பரம் புரிந்து கொள்ளக் கூடிய நண்பர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடு வது நல்லது என்பது எனது கருத்தாகும்.
சமீபத்தில் பருத்தித்துறையில் நடைபெத்ற 'அறிவோர் கூடல்' நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். 23-வது அமர்வில் நான் கலந்து கொண்டேன். இந்த யோசனைகள் அங்கு முகிழ்ந்தவையே. R
நாமும் அவர்களுடைய அனுபவங்களை அடியொற்றி கலந்துரையாடினால் என்ன? தனி நபர் காழ்ப்புணர்ச்சிகள் மறைந்து ஓர் ஆக்கபூர்வமான நட்புணர்வு மலரக் கூடு மல்லவா?
மே-1992.

நான் நட்சத்திரங்களையே குறி வைத்துச் செயலாற்றுகின்றேன்!
வழக்கமாகவே ஒவ்வொரு ஆண்டு மலர்களிலும் நான் தலையங்கம் தீட்டுவதற்குப் பதிலாக, நேரடியாக உங் களுடன் சம்பாஷிக்கும் பாணியில் கடிதம் எழுதுவது தொடர்ந்து கடைப்பிடித்து வரும் செயலாகும் இடையில் நான் காண்டுகளாக ஆண்டு மலர்கள் வெளியிடவில்லை. முன்னைய ஆண்டுகளில் ஆண்டுகளுக்கு ஆண்டு, மலர்களை வெளியிட்டு வந்திருக்கின்றேன். அதை நீங்கள் அறிவிர்கள். கடைசியாக இருபத்தைந்தாவது ஆண்டு மலர் வெள்ளி விழா மலராக மலர்ந்தது. அதைத் தொடர்ந்து ஆண்டுகள் வந்து போயின. ஆனால் மலர்கள் தான் வெளிவர வில்லை.
காரணம் உங்களுக்குத் தெரியும். எனவே அதற்கான சூழ்நிலைகளை நான் இங்கு விவரித்துக் கூறவில்லை.
வேறெந்தக் காலங்களையும் விட, இந்த இடைப்பட்ட நான்கு வருஷ காலங்கள் எனக்கொரு சாவலாகவே அமைந்து விட்டன. எங்கு திரும்பினாலும் பிரச்சினை: சிக்கல் மூலப் பொருட்களற்ற அவல நிலை. என்ன செய்வ தென்றே தெரியாத ஒரு பரிதவிப்புச் சூழல். இருந்தும் நான் எந்தவிதமான சவால்களையும் ஏற்றுச் சாமளிக்கச் சித்தமாக இருந்தேன்.
மக்களை உண்மையாகவே நேசிக்கத் தெரிந்த-அவர் களது குறை நிறைகளுடன் - எழுத்தாளன் கூட, ஒரு பேனாப் போராளிதான், அவன் போராடும் களம் அல்லது தளம் வேறுபட்டிருக்கலாம். ஆனாலும் பிரச்சினைகளை எதிர்த்து அவன் தினசரி போராட வேண்டி ஏற்பட்டுவிடு கின்றது. இது இந்த இடைக் காலத்தில் நன்கு நிரூபண மாகி விட்டது. ஓரிரு தடவைகள் கொப்பி நூல் கட்டும் பேப்பரில் மல்லிகையை வெளியிட்டிருந்தேன். எனக்கு மனசுக்குள் சங்கடம், மல்லிகையின் தரத்தைக் கிழிறக்சி

Page 104
206 தலைப்பூக்கள்
விடுகின்றேனோ என்றொரு தயக்கம், ஆனால் கலைஞர் கள் பலர் பின்னர் சொல்லக் கேட்டிருக்கின்றென் : "அந்தக் கொப்பிப் பேப்பரிலை அச்சடித்த மல்லிகையை மற்றதுகளை விட, பாதுகாத்து வைச்சிருக்கின்றோம். காரணம் கஷ்ட கால இலக்கிய ஆவணம் இந்த இதழ்கள்!'-இதைக் கேட்டதும் என் நெஞ்சு சிலிர்த்தது.
ஏதோ என்னை நானே முதுகில் தட்டிக் கொடுப்பதம் காக, சுய திருப்திப்பட இப்படிச் சொல்லவில்லை. சில இரவுகளில் நடு இரவுகளுக்குப் பின்னர் நான் தூங்குவ தில்லை.
பல சந்தர்ப்டங்களில் வெட்கப்படாமல் அழுதவன் நான.
இது எனது சொந்த விவகாரத்தைப் பற்றியதல்ல. இத்தத் தேசத்தில் நடந்த பல நீதி கேடான அவலங்களை எண்ணியெண்ணி மனசிற்குள் கதறியிருக்கின்றேன். இத் தகைய கொடுமைகளைக் களைந்தெறிவதற்கு நான் முற் பட்ட வேளைகளில் எனது பேனாவும் மல்லிகை இதழ்களுமே எனக்கு களமமைத்துத் தந்துதவின.
எனக்கேற்பட்ட மன அவலங்களைச் சொல்லிப் புலம்புவ தல்ல எனது நோக்கம். இந்த மன அழுத்தத்தை என்னால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. சில பல ஆண்டு மன அவஸ்தை. இது,
முப்பது ஆண்டுகள் என்பது ஒரு சிற்றிலக்கிய ஏட்டிற்கு அதனைப் பொறுத்தவரை பெரியதொரு காலம், ரஷ்யாக் கார காசு கொடுக்கிறான்! அவனுக்கென்ன?" என என் மானசீகமான உனழப்பைக் கொச்சைப் படுத்திக் கதைத்த வர்கள் பலரை நான் நன்கறிவேன். அவதூறுகளுக்கு எப்பொழுதுமே தான் பதிலளிப்பதில்லை. மெளனமாக இருந்தேன். அந்த அவதூறாளர்களைப் பார்த்து இப் பொழுது இப்படிக் கேட்கின்றேன்: "எந்த ஜப்பான்காரன் இப்ப மல்லிகைக்கு உதவுகின்றான? எனது அரசியல ஈடு ாட்டை அரசியல் வஞ்சகமாகக் கொச்சைப் படுத்தியவர் க்ளின் இன்றைய அவதூறுக் கணை என்ன?
மல்லிகையை விரும்புங்கள்: அல்லது வெறுத்து விடுங் தள், இரண்டுக்குமான இடைப்பட்ட நிலை வேண்டவே

டொமினிக் ஜீவா 207
வேண்டாம்! இதை இந்த இடத்தில் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் மல்லிகை ஓங்கி வளருவதை நான் விரும்பவில்லை. தேயிலைச் செடியைப் போல, கீழே கிளைத்துப் படர்ந்து வளருவதுதான் அதன் நோக்கத்துக்கே வெற்றியாக அமை யும், இதை ஆழ்ந்த உள்ளுணர்வுடன் புரிந்து கொண்டவர் களின் உறவைத்தான் எதிர்காலத்தில் மல்லிகை கனம் பண்ணும்; நம்பும்.
மல்லிகை தனது தகுதிக்கு மீறிய வளர்ச்சிப் போக்கில் வளருவதை மெய்யாக நான் விரும்பவில்லை. இக் கூற்று உங்களுக்கு விசித்திரமாகப் படலாம். ஆனால் அதுதான் உண்மை. அடுத்த நூற்றாண்டில் பேசப்படக் கூடிய இலக் கிய இதழ் மல்லிகை.
எனக்குப் பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை. அதே சமயம் அடித்தளமான ஆசையொன்றுண்டு. இந்த மண்ணைச் சேர்ந்த எழுத்தாளர்கள்-அவர்கள் எந்தக் கருத்தைக் கொண்டிருந்த போதிலும், என்னில் முரண்பட்டு இருந்தாலும் கூட, அவர்கள் படைப்புகள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டதாகத் திகழ வேண்டும். ஈழத்து இலக் கியத்தை விமர்சிக்கும் பிற்சந்ததியினர் மல்லிகையும் அதற் கான அடித்தளமிட்டுள்ளது என மனசாரச் சொல்ல வேண் டும், இதுதான் எனது மன அவாவாகும்.
அன்று நானிருக்க மாட்டேன்.
30-வது ஆண்டு மலர் - 1995
"சிறியன சிந்தியாதான்!”
தோழர் - எஸ். ஆர், கே. என நெருங்கிய நண்பர்களா லும், டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் எனப் பலராலும் அழைக்கப்பட்ட திரு. ராமகிருஷ்ணன் சமீபத்தில் தமிழகத் தில் மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது மனசு நெக் குருகிப் போய்விட்டது நமக்கெல்லாம்.
மாபெரும் மார்க்ஸியச் சிந்தனையாளன் அதில் ஊறித் திளைத்தவர், கேட்போர் பிணிக்கும் சொல் வன்மை

Page 105
த
பல்வேறு நெருக்கடிகளி மல்லிகை சமு அவ்வக்காலத் ஆசிரியர் தன இந்நூல்.
"மல்லிை அதன் பின்ன கடந்து வந்த ப தலைப்பில் 6 மாணவர்கள் ஆ அவர்கட்கும் இ
அந்தந்த LOTIl:STU நெஞ்சத்தைத் மூள்ையில் உ தலைப்புகளில் இவை என் ெ கல்விப் பயிற்
படிப்பினால்
வாங்கிப் பழு துருப்பிடித்த க
டொமினி

====
லைப்பூக்கள்
தடைகள், யுத்த டையே, 31 ஆண்டுகளாக நசிகை வெளிவந்துள்ளது. தில் என்னால் எழுதப்பட்ட லயங்கங்களின் தொகுப்பே
கயின் தோற்றமும் வளர்ச்சியும் ணியும், தாக்கங்களும், அது ாதைத் தடைக்கற்களும் என்ற பருங்கால பல்கலைக்கழக பூய்வு செய்யத் தோன்றுவார்கள். இந்நூல் பயன்படலாம்.
க் காலக் கட்டங்களில் என் பாதித்த சம்பவங்களை, என் த தொட்ட நிகழ்சிகளை, றைத்த விஷயங்களை 55 தொகுத்துத் தந்துள்ளேன். சாந்தக் கருத்துக்கள். அதீதக் சியினால் - அல்லது பட்டப் இரவல் கருத்துக்களை உள் ழதுபட்டுப் போய்விட்ட - ருத்துக்களல்ல இவை,
ரிக் ஜீவா - முன்னுரையிலிருந்து