கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.01

Page 1

R -\l
W.
(bر%
ப்ெபிரிக்ரீவா

Page 2
படைப்பாளிகளின் ! புதிய ஆக்கங்களை
- மல்லிகை எதிர்பார்க்கின்றது.
அட்டைப்படம் எஸ்.புஸ்பராஜ் அட்டை வடிவமைப்பு:எஸ்.திவாகரன்:
கணினி அச்சமைப்பு : எஸ்.லிகோரின றோசி
உட்சித்திரங்கள் :புஸ்பா',
ரீதர் பிச்சையப்
二 / 、 Kathire San
こつ1cmeef
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் 'ஈன நிலைகண்டு துள்ளுவர்
Moaika” Progressive
(Yonfth Nogozine
தொடர்ந்து வெளிவரும் சிற்றிலக்கிய ஏடு
oj5ó 53 pasar
ஒவ்வோர் ஆண்டும் அந்தந்த ஆண்டுக்கான மலர்களைத் தயாரிக்கும்போது எனக்கு ஏற்படுகின்ற ஆத்ம சுகம் இருக்கின்றதே, அதுதான் எனது நீண்ட நெடுங்கால இலக்கிய பலம்.
இந்த ஆண்டும் இந்த 39-வது ஆண்டு மலரைத் தயாரித்து, அதை உங்களது கரங்களில் சமர்ப்பிக்கும் இந்தக் கட்டத்தில் எனது கடந்தகால இலக்கிய வழி நடைப்பயணத்தின் தோன்றிய அநுபவங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
பலர், இன்றும் கூட, 'இத்தனை ஆண்டுக் காலங் களாகத் தொடர்ந்து எப்படி மல்லிகையை வெளி யிட்டுக் கொண்டு வருகிறீர்கள்?’ என ஆச்சரியத் துடன் நேரிடையாகவே என்னிடம் கேள்வி எழுப்பிப்
பார்ப்பதுண்டு.
இந்தக் கேள்வியில் தொக்கி நிற்கும் ஆச்சரியமே. எனக்குள் ஆச்சரியத்தைக் கிளப்பி விடும்.
தரமான சுவைஞர்களை நம்பி, அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் எந்த இலக்கியக் காரியத்தைச்
செய்தாலும் அது வெற்றியையே தேடித்தரும்.
இன்றும்கூட, மகா சந்தோஷமான சங்கதி என்னவென்றால் இத்தனை ஆண்டுகள் சென்ற பின்னரும் மல்லிகை இதழ்கள் வெளிவந்த அன்றோ அல்லது அடுத்த நாட்களிலோ மல்லிகையின் ஆரம்ப கால அன்பர்களைத் தேடித் தேடிச் சென்று மல்லிகை

Page 3
இதழ்களைச் சேர்ப்பித்து விடுவேன்.
'ஜீவா எனக்கென்ன பெரிய சந்தோஷம் என்றால் அன்றிலிருந்து இன்றுவரை உன் கைப்படவே மல்லிகையை வாங்குவதுதான். எத்தனை எத்தனை வருஷங்களாகிப் போச்சு! ஆனா, உன்னட்டை நேரடியாக மல்லிகையைப் பெற்றுக் கொள்ளும்போது வருகிற சந்தோஷம் ஒரு தனித் தன்மையானது!”
இப் படிப் பலர் நேரடியாகச் சொல்லிக் குதுாகலிக்கும்போது மகிழ்ச்சி என் நெஞ்சை நிறைத்து விடுகிறது. பட்ட சிரமங்கள் அத்தனையும் மறந்து போகின்றன.
முப்பத் தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மல்லிகை இதழ்களுடன் தெருவில் இறங்கினேன்.
தொடர்ந்து மல்லிகையை ஆண்டுக் கணக்காகச் சுவைத்துப் படிப்பவர்களின் முகங்கள் அத்தனையும் எனக்கு நன்கு தெரியும் அவர்கள் மல்லிகை மாசிகையைப் பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளனர் என்பதும் எனக்குத் தெளிவாக விளங்கும்.
நான் நினைக்கிறேன். அது பெருமையாகக்கூட எனக்குத் தெரிகிறது. இந்தப் பூப்பந்திலுள்ள அத்தனை மொழிகளிலும் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளில் மல்லிகை ஆசிரியர் மாத்திரம்தான் இன்று வரைக்கும் தெருத் தெருவாகச் சுற்றிச் சுழன்று தனது சஞ்சிகையை விற்று வருகிறார் என்ற எதார்த்த உண்மையை இன்று பலரும் புரிந்து கொண்டு என்னைக் கனம் பண்ணிக் கெளரவிக்கின்றனர் என்பதையும் இந்தக் கட்டத்தில் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
இதனால் எனக்குப் பல வழிகளில் நன்மையே கிட்டியுள்ளது.
நான் இந்தத் தெருக்களைச் சுற்றி மல்லிகையை விற்று வரும் கலையைக் கைக்கொண்டதற்கு ஒரு வரலாற்றுப் பின் புலம் உண்டு. இடதுசாரி அரசியல் பின்னணியும் உண்டு.
அந்தக் காலத்தில் - ஐம்பது அறுபதுகளில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோக பூர்வமான செய்தி வாரப் பத்திரிகை ‘தேசாபிமானி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்து கொண்டிருந்தது. கொழும்பில் கொட்டா றோட்டிலிருந்து வெளிவரும் இந்த அரசியல் வார வெளியீட்டை வாரக் கடைசியில் தெருத் தெரு
 

வாகத் திரிந்து பொது மக்களிடம் விநியோகிக்க வேண்டியது எமது அரசியல் கடமைகளில் ஒன்றாக இருந்தது. அதன் விலை ஐந்து சதம் மிகப் பெரிய கல்விமான்களான தோழர்கள் பொன்.கந்தையா வைத்தி லிங்கம். கார்த்திகேசன் போன்றோர் பக்கத்தே தோழர்கள் புடை சூழ தெருவில் இறங்கி விற்பனை செய்வார்கள். இது ஒரு பெரிய அநுபவம்.
இதில் பெரிசு - சின்னன் இல்லை. சகல தோழர் களும் சரி சமத்துவமாகத் வீதியில் நின்று போட்டி போட்டுக் கொண்டு. சில சமயங்களில் ஆர்வ மிகுதியால் கோஷமெழுப்பிய வண்ணம் விற்பனவு செய்து வருவோம்.
இதில் முக்கியமாக நாம் இலக்கு வைத்து விற்பனைத் தளமாகச் செயல்பட்டுவரும் இடம் யாழ்ப் பாணப் பஸ் நிலையமாகும். நகரை அண்டிய கிராமப் பிரதேசத்து மக்கள் பிரயாணம் செய்யும் பஸ் வண்டி களை முற்றுகையிட்டு, விற்பனவுத் தொண்டைப் பூர்த்தி செய்து முடிப்போம்.
தோழர்கள் ராமசாமி ஐயர், எம்.சி.சுப்பிரமணியம், இளங்கீரன், டானியல், விஜயானந்தன் (இவர் பின்னர் சுடப்பட்டு இறந்தவர்), ராசையா, நவரத்தினம் (இவர் பின்னர் பாராளுமன்ற அங்கத்தவராகத் தெரிவு செய்யப் பட்டவர்), பூபாலசிங்கம். பஷீர், உஷா நடராஜா, அன்ரனி மாஸ்டர், எஸ்.பி.நடராஜா போன்ற தோழர்கள் அத்தனை பேரும் தோழமை உணர்வு கொப்பளிக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு உழைப்போம்.
மகத்தான மக்கள் தலைவர்களிடம் பயிற்சி பெற்றுத் திகழ்ந்தவன். நான்!
இந்த வெகுசனத் தொடர்புப் பயிற்சிதான் என்னைத் தெருவில் இறங்கி மக்களைச் சந்திக்க வைத்தது.
தெருத் தெருவாக வீதி விற்பனையாளனாக என்னை நானே உருவாக்கிக் கொண்டதில் என்னை நானே பண்படுத்திக் கொண்டேன். என்னிடமுள்ள சில அகம்பாவ எண்ணங்கள் என்னை விட்டுத் தொலைந்து போயின. சாதாரணர்கள் வீதியில் என்னை மறித்துக் கதைக்கின்றனர். உறவு கொண்டாடினர். மனதில் மறக்க முடியாதவர் களைச் சந்தித்து உரையாட இந்த வீதிச் சுற்றுலா எனக்கு பெரிதும் உதவி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் வீதியில் உருவான மைந்தன் நான்.

Page 4
ந9ற்பத9உது
நோக்
லக்கியச் சிற்றேடு ஒன்று தொடர்ந்து g ஒரிரு ஆண்டுகளைத் தக்கவைத்த
வண்ணம் வெளிவருவதே இந்த மண் ணிலும் தமிழகத்திலும் பெரிய சாதனையாகும்.
இத்தனை சிரமங்களுக்குமிடையே நமது மண்ணை அலைக்கழித்த கொடுர உள் நாட்டு யுத்தத்தைக் கடந்தும் தொடர்ந்து மல்லிகை வெளிவருவதைக் கண்டு இலக்கிய அபிமானம் கொண்ட பலர் தமது மன மகிழ்ச்சியை இடையிடையே தெரிவித்த 6600T600TLD 2-6T6T607 g.
பின் நோக்கிக் கடந்த காலத்தை நோக்கும் பொழுது, எமக்கே பிரமிப்பாக இருக்கிறது.
சுமார் நாற்பது ஆண்டுகள் என்பது சும்மா இலேசுப்பட்ட காலமல்ல. அரை நூற்றாண் டுக்குப் பத்து ஆண்டுகளே இன்னமும் குறைவாக உள்ளன.
தனிமனித உழைப்பையும், அர்ப் பணிப்பையும், இடையறாத ஊக்கத்தையும் மூலதனமாகக் கொண்டே இத்தனை ஆண்டு கள் தாக்குப் பிடித்து மல்லிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதை நடைமுறைச் சாத்தியமாக்கியது வெறும் அர்ப்பணிப்பு உழைப்பு மாத்திர LD6)6).
பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள், பல்
கலைக்கழக எழுத்தாளர்கள், புத்தி ஜீவிகள், தேசத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த
 

h ba p
ஆண்டை/
படைப்பாளிகள், அபிமானம் மிக்க விளம்பர தாரர்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப் புக் காரணமாகத்தான் மல்லிகை இத்தனை ஆண்டுக் காலமாக நின்று நிலைத்திருக்க முடிந்திருக்கிறது.
மல்லிகையைப் பற்றி எதிர்ப்பிரசாரம் செய்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி களைக் கூறி வைக்கின்றோம். காரணம், அவர்களது கண்டனப் பிரசாரங்களைப் பார்த்துப் படித்துச் சிந்தித்த பலர் இன்றுவரை மல்லிகையின் அபிமானிகளாக விளங்கி வருகின்றனர்.
மெத்தப் பெரிய உதவி அது.
இலக்கிய இயக்கத்தின் ஒரு கால கட்டத்திற்கு இன்று மல்லிகை வந்துள்ளது.
இனிவரக் கூடிய காலகட்டம் மல்லிகை யின் எதிர்காலத்திற்குச் சிறப்பானதொரு காலகட்டமாகும்.
அடுத்து வரும் பத்தாண்டு இடைப்பட்ட காலகட்டத்தில் நாம் இயங்கப் போகின்றோம் என்பதே இன்றைய நமது சிந்தனையாகும்.
நாம் நடந்து வந்த பாதையைச் சற்றுத் தாமதித்து நின்று திரும்பிப் பார்க்கும் இந்த வேளையில் எமக்குப் பிரமிப்பாக இருக்கிறது.
விமரிசகர்கள் என்னதான் கூறட்டுமே, எத்தனை எத்தனை வகை வகையான உள்ளடக்கங்களுடனும் அட்டை அமைப்பு களுடனும் மல்லிகை இதழ்கள் வெளி வந்துள்ளன! . " ܆ ܕܟܕ `

Page 5
இதற்குள் மல்லிகையின் ஆண்டு மலர் களையும் பார்த்து மகிழ்கிறோம். வகை தொகையான தனிக் கவர்ச்சி நிரம்பிய மலர்கள் வேறு.
அத்தனை இதழ்களையும் ஒருங்கு சேரப் பார்க்கும்போது எமது உழைப்பு, அர்ப்பணிப்பு வீண்போகவில்லை என்ற ஆத்ம திருப்தி யுடன்தான் நாம் தொடர்ந்து நாற்பதாவது ஆண்டை நோக்கி நடைபோட்டுச் செல்லு கின்றோம். པ་
அடுத்த கட்டம், எமது இலக்கிய நோக்கு ஐம்பதாவது ஆண்டாகும். அதாவது அரை நூற்றாண்டுக் காலகட்டமாகும்.
1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மல்லிகையின் முதல் இதழை வாசகர்களின் கரங்களில் சமர்ப்பித்த காலகட்டத்தில் திடமான ஓர் எதிர்கால நம்பிக்கையுடன்தான் அன்றைய வேலைகளை ஆரம்பித்தோம்.
எமக்குத் தெளிவான திட்டமொன்று இருந்தது.
சிற்றிலக்கிய ஏடுகளை ஆரம்பிப்பவர்கள் தமது சொந்த வீட்டுத் தபால் முகவரியைத் தான் சஞ்சிகையின் வெளியீட்டு முகவரியாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். அச்செழுத்தில் பதிய வைத்திருப்பார்கள்.
ஆனால், மல்லிகை மாத்திரம் 60, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் என முகவரி யிட்டு வெளிவந்தது. அந்த வீதி யாழ்ப் பாணத்தில் பிரபலமான வீதிகளில் ஒன் றாகும். வெளியே பெரிய கொட்டை எழுத்தில் 'மல்லிகை’ என்ற வாசகம் மிளிர்ந்து கொண்டிருந்தது. வீதியில் போவோர் வரு வோர் மாத்திரமல்ல, பஸ்ஸில் பயணம் செய் வோர்கள் கூட, வாசித்துத் தெரிந்து கொள்ளு மளவிற்கு அந்த விளம்பரப் பலகை கவர்ச்சி கரமாக அமைந்திருந்தது.
அச்சடிக்கிற மெஷின் வசதியில்லையே தவிர, ஏனைய அச்செழுத்து வசதிகளை வைத்துப் பதினாறு பக்கங்களைப் பக்கங் களாக அச்சடித்து முடித்தோம்.
பின்னர் மல்லிகை வளர வளர, காங் கேசன்துறை வீதியிலுள்ள குச்சொழுங்கை
A.

ஒன்றுக்குள் குடி புகுந்தோம். பின்னால் மல்லிகைக்குச் சொந்தமாக அந்தக் கட்ட டத்தையே விலைக்கு வாங்கினோம். நண்பர் செங்கை ஆழியான் இந்தக் கட்டட முயற்சிக் குப் பெரிதும் உதவினார். சொந்தக் கட்டிடத் திலிருந்து மல்லிகை வெளிவந்து கொண்டி ருந்த வேளையில் அதற்கான சொந்த அச்சு இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டி யிருந்தது. அதைக் கொள்வனவு செய்வதற் கான பொருள் உதவியை உதயன் பத்தி ரிகையாளர் சரவணபவன் தந்துதவினார். அவரது மைத்துனர் திரு. ந.வித்தியாதரன் இதில் பெரும் பங்காற்றினார்.
இப்படியே சொல் லிக் கொண்டே போகலாம்.
குருசுவாமி அண்ணாச்சி, கிஸார், ரெங்க நாதன், துரை விஸ்வநாதன் போன்ற நண்பர்கள் மல்லிகையின் வளர்ச்சிக்குச் செய்த உதவிகள் வார்த்தைகளுக்குள் அடங்காதவை.
நாற்பதாவது ஆண்டு நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்தவேளையில் மல்லிகை யின் வளர்ச்சிக்காக ஆத்ம சுத்தியுடன் பங்களிப்புச் செய்த சகலருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். அதேசம்யம் யாழ்ப்பாண நகரை அண்மித்துள்ள பிரதேசங்களில் வீதியில் வைத்து முகமலர்ச்சியுடன் ஆதரவு நல்கிய இலக்கிய நெஞ் சங்களையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கின்றோம்.
மகா மகிழ்ச்சியான இந்தச் சந்தர்ப்பத் தில் அடுத்த வருடம் வெளிவரவுள்ள நாற்ப தாவது ஆண்டு மலருக்கான வேலைகளை இப்பொழுதிலிருந்தே ஆரம்பித்து விட்டோம்.
இந்த நாற்பது வருட உழைப்பு ஊழியத் தில் 'மல்லிகைப் பந்தல் வெளியீட்டு நிறுவனத்தை நிறுவி, கிட்டத்தட்ட நாற்பது தரமான நூல்களையும் வெளியிட்டு வைத் துள்ளோம்.
இரட்டைக் குதிரைகளில் நிலை தளம் பாமல் சவாரி செய்துவரும் அசாத்தியத் தனித் திறமையை நமக்கு மனமுவந்து கற்றுத் தந்த வாசகப் பெருமக்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எமது மனநிறைவைத் தெரிவிப்பதில் தனி மகிழ்ச்சியடைகின்றோம்.
மல்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 6
t ண்ட இடைவெளிக்குப் பின்பு பஸ்ஸில் பயணஞ் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தமை யால் டேவிட்டின் அறிமுகம் கிட்டியது.
பெரும்பாலும் காரிலேயே பயணங்களை மேற்கொண்டு வந்த எனக்கு மாரடைப்பு வந்ததன் பின்பு - குறைந்தது மூன்று மாத காலத்திற்காவது காரைச் செலுத்தக் கூடாது என்று சிகிச்சை அளித்து, சத்திர சிகிச்சைக்கான நாளும் குறித்த னுப்பிய டாக்டரின் கண்டிப்பான உத்தரவு
இந்த பஸ் பயணம்தான் எவ்வளவு இனிமை யானது, சுவாரஸ்யம் நிரம்பியது. யன்னலருகே அமர்ந்து கடந்து செல்லும் காட்சிகளை ரசிக்கலாம். ஏறி இறங்கும் பயணிகளை, அவர்களின் உரை யாடலை, சிரிப்பை, கோபத்தை, ஏன். நவரசங் களையும் நேரில் தரிசிக்கலாம்.
கல்லூரிகளுக்குச் சென்று, திரும்பும் மாணவர் களின் அழகான நேர்த்தியான சீருடைகளை, பஸ்ஸினுள்ளே அவர்கள் உதிரும் அட்டகாசமான சிரிப்பலைகளை, கோமாளித்தனங்களை, சாரதியைச் சீண்டும் குறும் புத்தனங்களை ரசிப்பதோடு மேக்கப்புடன் பயணிக்கும் நங்கை யரிடமிருந்து பரவும் 'பெர்பி யூம் வாசனையை யும் நுகரலாம்.
கரந்ர்
 
 

இத்தகைய பரவசமான அனுபவங்களை நானே எனது காரைச் செலுத்திச் செல்லும்போது பெற முடியாதல்லவா?
வீதி ஒழுங்குகளையும், முன் - பின், அருகில் விரையும் இதர வாகனங்களையும் கண்ணாடி களுடாக கவனித்தவாறு, கண்ணும் கருத்துமாக காரைச் செலுத்த வேண்டும்.
பஸ்ஸிலே இந்தத் துன்பங்கள் இல்லை.
சாரதி அனைத்தையும் சுமக்கிறார், பாவம். அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியான கார் பயணத்தால் நிறையவே இழந்துவிட்டேன். சரி இனி ஆரம்பத்தில் குறிப்பிட்ட டேவிட் பற்றிச்
சொல்ல வேண்டும்.
வீட்டுக்குத் திரும்புவதற்காக ஒருநாள் பஸ் தரிப்பிடத்தில் நின்றபோதுதான் அவன் அறிமுக
மானான்.
மெலிந்த, குட்டையான தோற்றம். தலையின் பின்புறம் எத்தனை மயிர்கள் இருக்கின்றன?.
எண்ணிவிடலாம். கையிலே சிறிய தோல் பேக்,

Page 7
அவனுக்கும் என்னைப் போல் எதிர்பாராத விதமாக ஏதோ நோய் வந்து டாக்டர்களின் உத்தரவு பிரகாரம் காரைச் செலுத்தாமல், அதனை வீட்டின் கராஜில் தரித்து வைத்துவிட்டுத்தான் பஸ் பயணங்களை மேற்கொள்கிறானோ என்று
தான் முதலில் நினைத்தேன்.
பின்னர்தான், அவனிடம் காரே இல்லையென் பதை, அவன் மூலமாகவே அறிந்து கொண்டேன்.
கொடுத்து வைத்தவன். நிறைய ரசித்திருப்
பான் பஸ், ரயில், டாக்ஸி பயணங்களில்,
அவுஸ்திரேலியாவில் பெரும்பாலானவர் களிடம் கார் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு கார் இருக்கலாம். சில வீடுகளில் மூன்றுக்கும் அதிகம். கணவனுக்கு, மனைவிக்கு, பிள்ளைக்கு பல பல்கலைக்கழக மாணவர்கள் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்கள். பகுதிநேர வேலையை எங்காவது செய்து சம்பாதிப்பார்கள். விரிவுரைக்குச் செல்லவும், வேலைக்கு ஒடவும், வீடு திரும்பவும் பொதுப் போக்குவரத்து சேவை களை நம்பியிருக்கமாட்டார்கள்.
ஆனால், இந்த டேவிட் அவுஸ்திரேலியா வுக்கு வந்தது முதல் கார் இல்லாமலேயே காலத்தைக் கடத்தியிருக்கிறான் என்பதை அவனுட னான உரையாடல்களில் அறிந்து கொண்டேன்.
பஸ் வந்தது. நடத்துனர் இல்லாத பஸ், சாரதியே டிக்கட் தருவார். இரண்டு மணிநேரப் பயணம் - முழுநாள் பயணம், முழுக்கட்டணம், சலுகைக் கட்டணம் - ZONB 1-2-3 எனத் தரம் பிரிக்கப்பட்டு விலை மாற்றங்களுடன் விநியோகிக் கப்படுகிறது.
"இந்தியாவிலும் இந்த நடைமுறை அமுல் படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் அல்லவா?” அவன் என்னையும் ஒரு இந்தியன் என நினைத்துக் கொண்டுதான் அப்படிச் சொல்லி யிருக்க வேண்டும்.
அவனது ஆங்கில உச்சரிப்பிலிருந்து அவனை இந்தியன் என்று புரிந்து கொண்டேன். அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தேன். பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினேன். பஸ்ஸினுள்ளே போதியளவு ஆசனங்கள் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்தன. இருப்பவர்களையும் இலகுவாக எண்ணிப்பார்த்து
6

விடலாம். இங்கே பெரும்பாலானவர்கள் சொந்த மாக வாகனம் வைத்திருப்பதற்கு இந்தக் காட்சியே சிறந்த சாட்சி
யன்னலோரமாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து விட்ட குறையிலிருந்து புத்தகத்தை படிக்கலா னேன். எனக்கு முன்புறமிருந்த ஆசனத்தில் வந்த மர்ந்த டேவிட், முகம் திரும்பி "தமிழரா?” எனக்
கேட்டான்.
ஆம். பூரீலங்கா’ என்றேன்.
"நான். டேவிட். கல்கத்தா” கையை நீட்டினான். நானும் நீட்டினேன். குலுக்கிக் கொண்டோம். அவன் முகம் திருப்பாமலேயே பேசத் தொடங்கினான்.
அவன் காலையிலேயே மது அருந்தியிருக்க வேண்டும். வாடை வீசியது. சகித்துக் கொண் டேன். மூக்கைச் செறியும் பாங்கில் நாகரீகமாக எனது மூக்கை தடவிக் கொண்டேன்.
அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
篷。 “உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன் போலத் தெரிகிறது. நீங்கள் படியுங்கள்” அவன் மறுபக்கம் முகம் திருப்பி சாரதியைப் பார்த்தான்.
விட்டது தொல்லை என்ற களிப் போடு புத்தகத்தில் மூழ்கினேன்.
பஸ் இன்னமும் புறப்படாமல் தரமதிக்கிறது. எங்கள் ஊருக்குச் செல்லும் பஸ். அருகிலி ருக்கும் ஒரே ஒரு மேடையைக் கொண்ட சிறிய ரயில் நிலையத்துக்கு தலைநகரம் மெல்பனி லிருந்து வரவேண்டிய ரயிலுக்காக இந்த பஸ் காத்து நிற்கிறது என நினைத்துக் கொண்டேன். சாரதியும், ரயிலை எதிர்பார்த்து, இந்த பஸ் ஸில் ஏறுவதற்கு வரவுள்ள எங்கள் ஊர் பயணி களுக்காக காத்திருக்கின்றார்.
வெளியே ஈரம் கசியும் குளிர்காற்று.
சாரதிக்கு இந்த இடைவெளியில் புகைக்கத் தோன்றியிருக்க வேண்டும். பஸ்ஸினுள்ளே புகைக்க முடியாது. இங்கே சட்டத்தைப் பேணும் சாரதிக்ள்.
சாரதி இறங்கி, வெளியே பஸ் தரிப்பிடத்தில் நின்று சிகரட்டை புகைக்கத் தொடங்கினார். ரயிலின் தாமதம் அவரை சுகானுபவத்தில் திழைக்க
కీ.శ.83 396UH &b4ørbudasst gør624f – 2OOly

Page 8
வைத்தது. டேவிட்டுக்கும் அதில் திழைக்க விருப்பம் வந்திருக்கும்.
அவனும் எழுந்து சென்று சாரதியிடம் ஒரு சிகரட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டதை அவதானித்தேன். இருவரும் உரையாடினார்கள்.
* டேவிட்டின் குரல்தான் உரத்துக் கேட்கிறது.
எவருடனுமாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பழக்கத்தை அவன் வழக்கமாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
ரயில் வந்தது, சில பயணிகளும் வந்து பஸ்ஸில் ஏறினர்.
சாரதி, சிகரட்டை பாதியில் வீசிவிட்டு ஏறினார். டேவிட்டையும் ஏறுமாறு துரிதப் படுத்தினார். அவனுக்கோ அதனை வீச மனமின்றி பாதியில் எரிந்து கொண்டிருந்ததை இறுதியாகவும் ஒரு தம் இழுத்துவிட்டு எறிந்த பின்புதான் ஏறினான்.
அவனது தோல் பேக் அவனுக்காக ஆசனத்தில் காத்திருந்தது.
பயணிகளைப் பார்த்து சுகம் விசாரித்துக் கொண்டே வந்தமர்ந்தான். பஸ்ஸில் பயணிக்கும் எவரும் அவனுக்குப் பரிச்சயமானவர்களாகத்தான் இருக்கிறார்கள். இல்லையெனில் ஏதாவது பேசி, பேச முயன்று பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்வான் போலும், நானும் இப்போது அவனுக்கு சிலநிமிட நேரத்துள் பரிச்சியமாகி விட்டேனாக்கும்.
பஸ் புறப்பட்டது.
“நல்ல சாரதி” என்றான் என்னைத் திரும்பிப் பார்த்து சாரதி சிகரட் ஊதக் கொடுத்தமையால் இந்த நற்சான்றிதழாக்கும்.
ஆனால், என் கணிப்பு தவறானது என்பதை மறுகணமே அவன் உதிர்த்த வார்த்தைகள் சொல்லிக் கொண்டன.
“இந்த பஸ். சற்றுத் தாமதமாகத்தான் புறப்படுகிறது. ரயில் வருவதற்குப் பிந்திவிட்டது அதில் வந்த இந்தப் பயணிகளுக்காகவே சாரதி தாமதித்தார். உரிய நேரத்தில் புறப்பட்டிருந்தால் இவர்கள் மீண்டும் அடுத்த பஸ்ஸிற்காக முக்கால் மணி நேரம் குளிரில் காத்து நின்று கஷ்டப்பட்டி ருப்பார்கள்” என்று உரத்த குரலில் சொன்னான்

இவனைத் திரும்பிப் பார்த்த சிலர் முறுவலித் தனர். இவனும் அவர்கள் தனக்குத்தான் ஏதோ சொல்லத் திரும்புகிறார்கள் என நினைத்துக் கொண்டு, “சாரதிக்கு நன்றி சொல்லுங்கள்’ என்றான்.
சுவாரஸ்யமான பேர்வழியை ரசிக்க விரும்பி புத்தகத்தை மூடிக் கொண்டேன். அதுFஅவனுக்கு வசதியாகப் போய்விட்டது. மீண்டும் என்னைப் பிடித்துக் கொண்டான்.
“மற்றவர்களுக்கு உதவவேண்டும், அவர் களின் கஷ்ட நஷ்டங்களை அறிய வேண்டும். மகாத்மா காந்திஜி அப்படித்தான் சொல்லியிருக் கிறார்.”
% நான், இதனைக் கேட்டு சற்றுத் திகைத்து
விட்டேன்.
பஸ் ஒரு சந்தியில் திரும்பிய போது, பின் புறம் ஒரு ஆசனத்தின் கீழிருந்து ஒரு வெற்று கொக்கா கோலா போத்தல் உருண்டு கொண்டு வந்தது. சில சோடிக் கண்கள் பார்த்தன. பஸ்ஸின் அசைவிற்கு ஏற்ப அது வலம் இடமாக உருண் டோடியது.
“முட்டாள்கள். குடித்தால். வெற்றுப் போத்தலை எங்கே போடவேண்டும் எனத் தெரியாதவர்கள்” எனச் சொல்லிக் கொண்டே எழுந்து தட்டுத்தடுமாறியவாறு, நகர்ந்து கொண்டி ருந்த போத்தலை எடுத்தான். சாரதிக்கு அருகிலி ருந்த கழிவுப் பெட்டியில் அதனைப் போட்டான்.
சாரதி அவனைப் பார்த்து “நன்றி" சொன்னான்.
"கோலா குடிக்கத் தெரியும். போத்தலை என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத மடையர் கள்” முகமறியாத யாரையோ ஆசைத் தீர திட்டிக் கொண்டு அதே தடுமாற்றத்துடன் வந்து அமர்ந்தான்.
“என்ன சொன்னேன். மன்னிக்கவும். மகாத்மா காந்திஜி அந்தப் போத்தல் பேச்சை குழப்பி விட்டுவிட்டது. அவர் ஹேராம் எனச் சொல்லிக் கொண்டுதான் இறந்தார். தன்னைச் சுட்டவனை அவர் கோபிக்கவேயில்லை. மகாத்மாஜி நல்ல மனிதர். இந்தியாவின் தந்தை, கடவுள். இந்த நாட்டில் அவரை எத்தனை பேருக்குத் தெரியும்? அதுதான் எனது கவலை”
மேல்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 9
"பெங்கிங்ஸ்லி நடித்த காந்தி படம் பார்த் திருப்பார்கள்” என்றேன்.
டேவிட் உதட்டைப் பிதுக்கினான்.
கண்களை சற்று மூடி, ”ம்ஹ"ம். நான் நம்ப வில்லை. என்னிடம் வீடியோ கஸ்ட் உள்ளது. அடிக்கடி பார்ப்போன். உங்களுக்கு வேண்டுமா..?”
"நான் அதனை பூரீலாங்காவிலிருக்கும் போதே பார்த்து விட்டேன்.” -
“எத்தனை தடவையும் பார்க்கலாம் அல்லவா? நல்ல படம். பல விருதுகளையும் பெற்றது.”
நான் ஒரு தட்வைதான் பார்த்தேன். அது போதும்” என்றேன்.
என்னை ஒருகணம் உற்றுப் பார்த்தான்.
“நல்ல விடயங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். நான் பார்க்கிறேன். கெட்ட விடயங் களைப் பார்க்கக் கூடாது” எனச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பி தலையை உலுக்கியவாறு மீண்டும் என்பக்கம் திரும்பினான்.
“எனது மகன் நல்லவன். காந்தி படம் மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்று. எனது மகனையும் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு சிட்னிக்கு மாதம் ஒருதடவை போகின்றோன். ஆனால் அவனது தாய் கெட்டவள்." டேவிட் திடீரென்று இப்படிச் சொன்னதும் துணுக்குற்றேன்.
பேச்சு காந்தியிலிருந்து அவனது மகனுக்கு தாவியது. கண்களை கணத்தில் மூடித் திறந்தான். தலையை ஆட்டினான். போதையில் முணு முணுத்தான்.
பிட்ச் என்ற சொல் தெளிவாகக் கேட்டது. மனைவியை வைது கொண்டிருக்கிறானோ என ஒருகணம் யோசித்தேன்.
பஸ் எங்கள் ஊர் எல்லைக்குள் வந்து திரும்பியது. கடைத் தொகுதிகளுக்கு அருகே வந்ததும் இறங்கினேன். அவனுக்கு 'பை சொல்ல வும் முடியவில்லை. உறக்கத்திலிருந்தான் பஸ்ஸின் குலுக்கத்திற்கு தக்கவாறு அவனது தலையும் e9,1 QULUğl. -
அந்த பஸ் எங்கள் ஊரின் பிரதான வீதிகளுக் கூடாக ஒடி பயணிகளை இறக்கியும், ஏற்றியும் வலம் வரும். பத்து நிமிடத்தில் மீண்டும் கடைத்

தொகுதிகள் அமைந்துள்ள பக்கம் வரும். அதனைத் தவறவிடாமல் ஏறினால் பத்து
நிமிடித்தில் வீட்டை அடைந்து விடலாம். அந்த
பஸ்ஸின் பயணத் திசை வழி அப்படி
கடையில் வாங்கவேண்டிய சிலவற்றை மனைவி தந்துவிட்ட பட்டியல் பிரகாரம் வாங்கிக் கொண்டு பஸ் தரிப்பிடத்திற்கு விரைந்தேன். அதே பஸ் வந்தது. ஏறினேன். டேவிட் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் இறங்கியிருக்க வேண்டும்.
வீட்டுக்கு வந்ததும், மனைவியிடம் டேவிட் பற்றிச் சொன்னேன். ஆர்வத்துடன் கேட்டவள், டேவிட்டின் அடையாளம் சொன்னாள்.
“உமக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டேன்.
”அந்த ஆள் குடிகாரன். அடிக்கடி பஸ்ஸில் பார்த்திருக்கிறேன். யாருடனாவது ஏதாவது தொண தொணத்துக் கொண்டே வ்ருவான் இன்று நீங்கள் அவனுக்குக் கிடைத்திருக்கிறீர்கள். ஒரு நாள் நான் கம்பியூட்டர் வகுப்புக்குப் போன போது. எனது நெற்றிக் குங்குமம் பார்த்துவிட்டு, “இந்தியாவா’ எனக் கேட்டான். “இல்லை பூரீலங்கா’ என்றேன். “இந்து நாகரீகத்திலிருந்து வருவதுதான் இந்தத் திலகம். இந்து நாகரீகம் இந்தியாவிலிருந்து வந்தது. அதனால் உங்கள் மூதாதையர்களும் இந்தியாதானே” என்று பேச்சை வளர்த்தான். ஒரு விடாக்கண்டன். சில பயணி களுடன் அவன் விவாதம் செய்வதையும் பார்த் திருக்கிறேன். உரத்துப் போசுவான்.”
ஒகோ. நான் கண்ட நாய்கன் பிரபலமாகத் தான் இருக்கிறான். எனக்குள் சிரித்தேன். எனினும் மனதில் இனம்புரியாத நெருடல் அவனுக்குள்ளும் ஏதோ ஒரு சோகம் படிந்திருக்க வேண்டும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் குடி காரனாகியிருக்க வேண்டும்.
அவனை மீண்டும் எப்போது சந்திப்பதற் வாய்ப்புக் கிடைக்கும்? -
மற்றுமொரு பஸ் பிரயாணத்தில்தான் அது சாத்தியமாகலாம் என்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒருநாள் கடைத் தொகுதியில் அமைந் துள்ள . மரக் கறிக் கடையில் டேவிட்டைச் சந்தித்தேன்.
என்னைக் கண்டதும் "ஹாய்” எனச் சொல்லிச்
சிரித்தான்.
சில்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 10
“ஹலோ” என்றேன்.
அவன் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டிருந்தான். அவனது செயல் இங்கும் விநோதமாகவே நிகழ்ந்தது. கடைக் கண்ணால் அவனை அவதானித்தவாறே என் விட்டுக்குத் தேவைப்பட்டதை எடுத்தேன்.
இரண்டு கரட், மூன்று உருளைக்கிழங்கு, பெரிய பீட்ரூட், இரண்டு லீக்ஸ், பாதித் துண்டு
கோவா. இவைதான் அவன் வாங்கியைேவ.
ஷொப்பிங் முடிந்து வெளியே வந்தோம். எனது பேக்கில் வெங்காயம் இரண்டு கிலோ இருந்தது. அதனை டேவிட் பார்த்துவிட்டான்.
நீங்கள் வெங்காயம் அதிகம் சாப்பிடுபவரா? எனக் கேட்டான்.
"சாப்பிடுவதில்லை, சமையலுக்குச் சேர்த்துக் கொள்வோம்” என்றேன்.
“அதிகம் சேர்க்காதீர்கள். இது உணர்ச்சிகளை அதிகரிக்கும். மகாத்மா காந்திஜி புலனடக்கம் பற்றியும் சொல்லியிருக்கிறார்.”
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'சத்தியசோதனை படித்திருக்கிறானோ
பஸ்தரிப்பில் நின்றோம்.
அவனே தொடர்ந்தான். “நான் ஒரு வெஜி டேரியன். சூப் வைத்துக் குடிப்பதற்குத்தான் இவற்றை வாங்கிப் போகின்றேன்.”
“இது போதுமா?”
அவன் சிரித்துவிட்டு “கொஞ்சம் பொறுங்கள்’ எனச் சொல்லியவாறு சற்று அப்பால் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டு சிகரட் புகைத்தவாறு நிற்கும் இளைஞனிடம் சென்று திரும்பினான்.
இப்போது இவனது வாயிலும் ஒரு சிகரட்
ஒசியிலேயே சிகரட் வாங்கி புகைக்கும் பழக் கத்தையும் இவன் வழக்கமாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
இவனுக்கு சிகரட் கொடுத்த இளைஞன் பஸ் வரும் திசையைப் பார்த்தவாறு நின்றாலும் இடைக்கிடை டேவிட்டையும் பாாத்தான்.
அன்று பஸ் சாரதியிடம். இன்று இந்த
9

இளைஞனிடம்.
"நீங்கள் சிகரட். பழக்கமில்லையா?”
“நல்ல பழக்கம்”
“அடிக்கடி மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்கிறீர்கள். ஆனால், அவரது போதனை களைப் பின்பற்றுபவராகத் தெரியவில்லையே” என்றேன்.
“ஓ.கே. என்ன போதனை? மது அருந்தக் கூடாது, மாமிசம் உண்ணக் கூடாது, புகைத்தல் தகாது, அகிம்சை வழியில் வாழவேண்டும். இவற்றைத்தானே சொல்ல வருகிறீர்கள். நான் குடிக்கின்றேன், அதற்கு ஒரு காரணம் உண்டு, சிகரட் பழக்கமும் உண்டு. அதற்கும் காரணம் உண்டு. காந்திஜி. சொன்னபடி நான் மாமிசம் சாப்பிடுவதில்லை. அகிம்சை வழியிலும் நடக்க வில்லை. வேலைத்தலத்தில் முன்பு ஒருவனை சுத்தியலினால் அடித்துக் காயப்படுத்திவிட்டேன். அவன் மருத்துவமனையில் கிடந்தான். வேலையை அதனால் இழந்தேன். பொலிஸ் விசாரித்து வழக்கு நடந்து மூன்று மாதம் சிறையிலும் இருந்தேன். எல்லாம் அந்த மோசக்காரியினால்தான். அவள் எனக்குச் செய்த துரோகத்தினால் இன்று இப்படி ஆகிவிட்டேன்.”
டேவிட் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டேன். தொடர்ச்சியாக அவன் என்னை அதிர்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறான்.
"நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?”
“அவள்தாள் எனது மகனின் தாய்.”
“உங்கள் மனைவி என்று சொல்லலாமே?”
‘ஹ"ம் மனைவி.’ டேவிட் என்னை முறைத்துப் பார்த்தான்.
"அவள் ஒரு பிட்ச்" எனக்குத் தெரியாமல் ஒரு கள்ளக்காதலன் வைத்திருந்தாள். என்னை ஏமாற்றிவிட்டு அவனுடன் சிட்னிக்கு ஒடிவிட்டாள்.”
‘அப் போ. மகன்.?’ கவலையுடன் கேட்டேன்.
“மகன். என் மகன்." டேவிட்டின் உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின.
ல்ேலிகை 39வது ஆண்டுமல்ர் ஜனவரி - 20ot;

Page 11
“மன்னிக்கவும்” என்றேன்.
கண்களைத் துடைத்துக் கொண்டு, “ஓ.கே. நான் நல்ல தகப்பன் இல்லையென்றும், குடிக்கு அடிமையானவன் என்றும் நீதிமன்றத்தில் வழக்காடி மகனை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டாள். மாதம் ஒரு தடவை மகனை சிட்னிக்குப் போய் பார்த்து வருகிறேன்.”
"வீண் செலவுதானே. நீங்களும் சிட்னியில் இருக்கலாமே.”
"ஆமாம். ஆனால் இப்போது முடியாது. வீடு இருக்கிறது. அதனை விற்கவேண்டும். அந்த நாய்க்கும் அதில் பங்கு கொடுக்க வேண்டும். நல்ல விலைக்கு எவரும் வரவில்லை. தாமதமா கிறது.
டேவிட்டை பரிதாபத்துடன் பார்த்தேன்.
பஸ் வந்தது. ஏறினோம்.
"ஹிட்லரைத் தெரியுமா?” எனக்கு முன் ஆசனத்தில் வழக்கம்போல அமர்ந்து முகம் திருப்பிக் கேட்டான். -
"எந்த ஹிட்லர்?"
“உலகில் ஒரு ஹிட்லர்தான். ஒரு மகாத்மா காந்திஜிதான். இரண்டு பேரிடமும் நல்ல பழக்கங் கள் இருந்தன. இருவரும் புகைப்பதில்லை, மதுப் பழக்கமும் இல்லை, மாமிசம் உண்பதில்லை. ஆனால் இருவரது சிந்தனைகளிலும் செயல் களிலும் நிறைய வேறுபாடுகள் இரண்டு பேருமே ! சூடுபட்டுத்தான் செத்தார்கள். ஹிட்லர் தற் கொலை, காந்திஜி கொலை, காந்திஜி ஹேராம் எனச் சொல்லிக் கொண்டு சரிந்தார். ஹிட்லர் என்ன சொன்னானோ தெரியவில்லை.”
டேவிட்டிடமிருந்து மதுவாடை வீசியது. காலையில் தேநீருக்குப் பதிலாக விஸ் கி அருந்துவானோ?
அதுவும் சிகரட்டைப் போன்று ஒசியில் இருக்காது என்று நிச்சயமாக நம்பலாம்.
“காந்திஜி காந்திஜி என்று அடிக்கடி சொல் கிறீர்கள். ஆனால் அவரது போதனைகளுக்கு எதிராகத்தானே நடக்கிறீர்கள்?"
அவன் காவி படிந்த பற்கள் தெரியச் சிரித்தான். உமிழ்நீர் இதழ்க்கடையோரம் கசிந்தது.
10
 

துடைத்துக் கொண்டு மீண்டும் சிரித்தான்.
'கடவுளே. கடவுளே. என்று தினமும் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் நாம் கடவுளாவது இல்லை. அது போலத்தான் காந்திஜி, யேசு, புத்தர். இப்படி நிறையப் பேர் வருவாங்க போவாங்க. சதாம் ஹ"சைன், ஜோர்ஜ் புஷ், ஒஸாமா பின்லேடன். இப்படியும் வருவாங்க போவாங்க. எல்லோருமே இவர்களின் போதனை களைப் பின்பற்றுவதில்லை. நான் டேவிட். நீங்கள்.”
பெயரைச் சொன்னேன்.
“சரி. நான் டேவிட், டேவிட்தான். நீங்கள் நீங்கள்தான். நான் எனக்குத் தெரிந்ததை சொல் வேன், செய்வேன். அவர்களும் அப்படித்தான். நான் அவர்களாகவோ. அவர்கள் நானாகவோ மாற முடியாது. எப்படி எனது தத்துவம்.?”
நீ கெட்ட கேட்டுக்கு உனக்கும் ஒரு தத்துவமா’ என மனதிற்குள் சொல்லிக்
கொண்டேன்.
அவன் இறங்க வேண்டிய இடம் வந்திருக்க வேண்டும். எழுந்து மணியை அழுத்தினான். காற்சட்டை கீழே இறங்கியது. அதனை ஒரு கையால் இழுத்துக் கொண்டு பேக்குடன் இறங்கினான்.
வீடு திரும்பியதும் மனைவியிடம் விபரங்கள்
சொன்னேன். அவள் எரிச்சலுடன் கேட்டாள்.
"கவனம். அவனுடன் உங்களுக்கு அப்படி யென்ன உரையாடல், விரக்தியில் பிதற்றிக் கொண்டு அலைகிறான். இனிமேல் அவனைக் கண்டால் பேசாதீங்க. பிறகு. உங்களுக்கும் அவன்ர புத்திதான் வரும். கவனம்.”
"இல்லை வராது. அவன் அவன்தான், நான் நான்தான்.”
“யார் சொன்னது?”
“இதுவும் டேவிட்தான் சொல்லித் தந்தான்”
என்றேன் நிதானமாக,


Page 12
11
 

My மல்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 13
- செங்கை ஆழிuான்
ஏ.ரி.பொன்னுத்துரைக்கு சமூக கலை இலக்கி பரிமாணங்கள் இருக்கின்றன. குறும்பசிட்டிக் கிராம பெருமக்களான ஈழகேசரிப் பொன்னையா, இரசிக செந்திநாதன் வரிசையில் ஏ.ரி.பி.க்கும் தனித்ததொ யுண்டு. அவர் தன்னை நல்லதொரு இயக்கப் ப இனம்காட்டியிருக்கின்றார். குரும்பசிட்டி சன்மார்க் ஆரம்பகால உறுப்பினராகவும் பின்னர் நீண்டகால கவும் விளங்கிப் பலபணிகளைச் சமூகத்திற்குப் குறும்பசிட்டி மண்ணை உயர் பாதுகாப்பு வலயத்தி வார்த்துக் கொடுத்துவிட்டு வெளியேறிய ஏதிலிகளி அவர் இருந்தும் தன் கிராமத்தின் அடையாளத்தை வதில் அக்கறை கொண்டிருந்தார். சன்மார்க்க சை காப்பாளராகவிருந்து இறுதிவரை இயக்கியிருக்கின் காலங்களில் பல கலை இலக்கிய விழாக்களைக் சன்மார்க்க சபை நடத்தியிருக்கின்றது. அவற் கர்த்தாவாக ஏ.ரி.பி. விளங்கியிருக்கின்றார்.
யாழ். இலக்கிய வட்டத்தின் மூலவேர்களில் யானவராக ஏ.ரி.பி. இருந்தார். அதன் ஆரம்பகால உ
12
 

ழத்துத் தமிழ்க் கலையுலகும் இலக்கியவுலகும் F மூன்று படைப்பாளிகளை அண்மைக்காலத்தில் இழந்து கலங்கிப் போயிருக்கின்றது. அவர்கள்: மறுமலர்ச்சி எழுத்தாளர் ச.பஞ்சாட்சரசர்மா, கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்தரை, மகாவித்தவான் வீர மணிஐயர். பஞ்சாட்சர சர்மாவுக்கு இறக்கும்போத வயது 87 (13.11.1916), வீரமணிஐயருக்கு வயத 72 (15.10.1931), ஏ. ரி.பிக்கு வயத 75 (15.5.1928) அவர்களது கலை இலக்கியப் பணி களைப் பதிவிடுவோம்.
(n) எ. ரி. சிபாண்ணுத்துரை
கல்லில் பொறித்த கவிதையாக இன்றும் நினைவில் நிலைத்திருக்கின்ற காட்சி, கலைப் பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரையின் இல்லத்தில் அன்னாரின் பவள விழாவில் நாமெல்லாரும் கூடியிருந்தபோது, உடல் ச்ோர்ந்திருந்தாலும் உள்ளம் சற்றும் சோராத நிலையில் ‘தாளக் காவடி'யைப் பாடிக் காண்பித்த கம்பீரம். முன்னர் போலத் தரையில் கம்பீரமாக எழுந்து நிற்கும் வலுவிருந்திருக்கில் அதனை அவர் ஆடியே காண்பித்திருப்பார். ஏ.ரி.பி. இறக்கும் வரை அவர் சிந்தை முழுவதிலும் நாடகக் கலையே ஆக்கிரமித் திருந்திருக்கும். தான் வரித்த கலைக்காக வாழ்ந்து முடித்த மனிதர் அவர்.
யத்தில் பல ம் வழங்கிய மணி கனக ரு பெருமை னியாளனாக க சபையின் த் தலைவரா புரிந்துள்ளார். ற்குள் தாரை ல் ஒருவராக அவர் பேணு பயை அதன் றார். கடந்த குரும்பசிட்டி பின் காரண
முதண்மை
றுப்பினராகவும், பின்னர் தலைவர், பொருளாளராகவும்,

Page 14
மரணமடையும் போது அதன் செயலாளராகவும் தன் இலக்கியப் பணிகளை ஆற்றியிருக்கின்றார். யாழ். இலக்கிய வட்டத்தின் மூலம் அவர் ஆற்றிய இலக்கியப் பணியிலும் இளம் படைப்பாளிகளை ஆற்றுப்படுத்திய சிறப்பு அவருடையது. யாழ். இலக்கிய வட்டத்தினை மட்டுமன்றி தெல்லிப்பளை கலை இலக்கியக் களத்தினையும் தாபித்து இயக்கி யவர்களில் அவர் ஒருவர். மாவை முத்தமிழ் மன்றம் என்றவொரு அமைப்பின் மூலம் ஆரம்பத்தில் அவர் மேடையேற்றிய நாடக நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கவை.
பவள விழாவைக் கண்ட மூதறிஞரான ஏ.ரி.பி. யின் நாடகப் பணி இருவகைகளில் குறிப்பிடத் தக்கவை. ஒன்று மரபு வழிவந்த பாரம்பரிய நாடக மரபினைத் தெரிந்தவராகவும் அம்மரபினைக் கட்டிக் காப்பவராகவும் அவர் ஆரம்பத்தில் விளங்கினார். 1980களுக்குப் பின்னர் நவீன அரங்கியல் ஞானம் உள்ளவராகவும் பயிற்சி பெற்றவராகவும் கலைப் பணி புரிந்துள்ளார். நாடகத்துறையில் நடிப்பு, எழுத் தாக்கம், நெறியாள்கை, தயாரிப்பு எனப்பல நிலை களிலும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் மறக்க முடியாதவை. சென்னை கிறஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பிற்காக மாணவனாக விளங்கிய காலத்தி லேயே நடிப்பின் மீதும் நாடகக் கலையின் மீதும் இருந்த அடங்காத ஆர்வத்தால் மேடையேறியவர், நடித்தவர். 1950களில் பிரபல நாடகக் கலைஞர் சானாவின் நெறியாள்கையில் லோபி என்ற பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சிறந்த நடிகனாக இனங்காணப்பட்டவர். அதன் பின்னர் இறுதிப் பரிசு, நிறைகுடம் ஆகிய நாடகங்களில் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். இந் நாடகங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் மேடை யேற்றப்பட்டவை. பண்பின் சிகரம், பாசக்குரல், பரதன் முதலான நாடகங்களைத் தயாரித்து நடித்துள்ளார். ‘வருஷம் பிறந்து முன்னம் முன்னம், காதல் கை நட்டம், விதியின் சதி, ஆயிரத்தில் ஒருவன், பிற்பகலிலே’ என்பன இவருக்குப் பெருமை சேர்த்த வானொலி நாடகங்களாகும்.
தனது ஐம்பதாவது வயதில் யாழ்ப்பாண நாடக அரங்கக் கல்லூரியில் ஒரு மாணவனாகச் சேர்ந்து, நவீன அரங்கியலில் விற்பன்னம் வாய்ந்த மெளன குரு, குழந்தை சண்முகலிங்கம், தார்ஸ்சியஸ் என்போரிடம் அரங்கியலைக் கற்று அவர்களால் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் நடித்துத் தன் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார். நாடக அரங்கக் கல்லூரியில் வயோதிப வயதில் சேர்ந்து
13

பயிற்சி பெற்றமையை நவீன அரங்கியலாளர்கள் வியப்புடன் நோக்கித் தமக்குக் கிடைத்த அங்கீகார மாகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மெளனகுருவின் "சங்காரம், தார்ஸ்சியஸின் பொறுத்தது போதும், மகாகவியின் கோடை முதலான நவீன அரங்கு களில் ஏ.ரி.பி. நடிப்பிற்கு இலக்கணமாக நடித்தார். பாத்திரங்களாகவே மாறிவிட்டார். அந்த வயதில் இளைஞன் போல அவர் துள்ளிக் குதித்து ஆடிய ஆட்டமும் நடிப்பும் பலரது பாராட்டுக்குரியதாகியது. நவீன அரங்கியல் பயிற்சி ஏ.ரி.பி.க்கு நல்ல திருப்தியைத் தந்தமையைப் பல தடவைகள் அவர் பேச்சிலிருந்து புரிந்து கொண்டுள்ளேன். புதுமை களை அவர் வரவேற்றது போலவே தமிழரது பாரம் பரியக் கலைகளை வளர்ப்பதில் அவர் தன் கவனத் தினைச் செலுத்தியுள்ளார். கிராமிய மட்டத்தில் ஆடப்பட்டு வந்த தாளக்காவடி என்ற கலைக்குப் புத்துயிர் கொடுத்த பெருமை ஏ.ரி.பி.க் குரியது. தாளக்காவடியைக் கல்லூரிகள் தோறும் சென்று மாணவர்களிடையே பயிற்றுவித்தார். `நமது பாரம் பரியக் கலையைப் பேணுவதற்கு மாணவர்கள் தாம் ஏற்றவர்கள் என்பது அவரின் முடிவு.
நாடகமாமணி, கலைப்பேரரசு, கலாபூஷணம் முதலான பட்டங்கள் அவரைத் தேடி வந்தன. அவரின் நாடகத் திறனைப் போற்றி கலையரசு சொர்ணலிங்கத்தால் அவருக்குக் கலைப்பேரரசுப் பட்டம் வழங்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருதும் வழங்கப்பட்டது. ஏ.ரி.பி. அவர்கள் அச்சுப் பதிப்புகளாகம் பத்து நூலாக்கங்களைத் தந்து சென்றுள்ளார். அவரின் கலை இலக்கியப் பணிகளை என்றும் நினைவு கூரும் படைப்புக்களாக இவைதாம் விளங்கப் போகின்றன. நாடகம், கூப்பிய கரங்கள், பக்தி வெள்ளம், பாடசாலை நாடகம், கலையுலகில் கால் நூற்றாண்டு, அரங்கு கண்ட துணைவேந்தர், நிஜங்களின் தரிசனம், தாளக் காவடி, மயில், அரங்கக் கலைஞர் ஐவர் என்பன அவரது நூலாக்கங்கள். ’நாடகம்' என்ற ஓரங்க நாடக நூல் இலங்கைக் கலைக் கழகத்தின் பரிசிலைப் பெற்றது. கூப்பிய கரங்கள், பக்தி வெள்ளம் என்பனவும் ஓரங்க நாடகங்களாகும். கலையுலகில் கால் நூற்றாண்டு என்பது ஏ.ரி.பி. யின் சுயசரிதையின் ஒரு பகுதியாகும். ‘அரங்கு கண்ட துணைவேந்தர்’ என்ற நூல் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நாடகப் பணிகளை ஆவணப் படுத்தும் நூலாகும். பேராசிரியர் வித்தியானந்தத் திற்கும் ஏ.ரி.பி.க்கும் இடையிலான நல்லுறவின் வெளிப்பாடாக அந்நூல் விளங்குகின்றது.
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 15
பாடசாலை நாடகம், தாளக்காவடி என்பன கட்டுரை நூல்கள். அவை எடுத்துக் கொண்ட விடயங்களைத் தெளிவாக விளக்குவன. கலைஞர்கள் ஐவர் பற்றிய வரலாற்று ஆவணமாக அரங்கக் கலைஞர் ஐவர் விளங்குகிறது. மயில் என்ற நாடக நூல் நவீன அரங்கியலின் வடிவிலமைந்ததாகும்.
பொன்னுத்துரையின் இந்தப் பத்து நூல் களினதும் இலக்கியப் பெறுமானம் கணிப்பிற் குள்ளாக வேண்டிய காலகட்டம் ஏற்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன். நாடகக் கலைஞன் என்ற கணிப்பிற்கு அப்பால் படைப்பாளியென்ற தகுதி நிலையில் ஏ.ரி.பி.யின் நூல்கள் மதிப்பிட வேண்டும். தொளாயிரம் பக்கங்களுள் அவரின் படைப்புத்திறன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவருடைய ஓரங்க நாடகங்களில் விதந்துரைக்கத்தக்க அம்சம் அவர் யாழ்ப்பாணச் சமூகத்தினை ஆழமாக அவதானித் துப் பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தின் அடிமூச்சான பேச்சுவழக்கினைப்
1160) inuit 6Iild; அமர்ந்திருப்போர் (இடமிருந்து வலமாக) சு.வே. நிற்போர் : ( இடமிருந்து வலமாக) கோகில மகேந்திரன்,
ஆழியான், மயிலங் கூடலூர் நடராசன், புத்தெ
(2) மகாவித்துவாண் வீரமணிஜயர்
கொழும்பு இராமகிருஷ்ண விடுதி அறை யொன்றில் மகாவித்துவான் வீரமணிஜயரோடு ஒரிவு தங்குகின்ற இனிய அனுபவம் எனக்குக் கிடைத்தது. அவ்வேளை நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றி வந்தேன். வீரமணிஜயர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் அதிதி விரைவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். இந்தப் பணி நிலைகளுக்கு முன்னரேயே ஒருவரையொருவர் நண் கறிந்
1
 

பரவலாகப் பெய்து படைத்திருக்குந் திறனாகும்.
மற்றப்படி மயில் தவிர்ந்த அவரின் ஏனைய நாடகங்
கள். பெரிதும் நாடக வரலாற்றின் இடைக்
காலத்தைய மனோரதியாகப் பாங்கானவை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். அரங்கு
கண்ட துணைவேந்தர், அரங்குக் கலைஞர் ஐவர்
ஆகிய இருநூல்களும் கலைஞர்களை தக்கவாறு
அறிமுகப்படுத்தும் இலக்கிய நெறிக்கு எடுத்துக்
காட்டுக்களாக இருக்கின்றன.
கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை நாடக உலகிற்குத் தன் நடிப்பாலும், நெறியாள்கை யினாலும் ஆற்றிய பணி அதிகம். இலக்கிய உலகிற்குத் தன் படைப்புக்களால் அளித்திருக்கும் பங்களிப்பினைவிட கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத் துரை நாடக உலகிற்குத் தன் நடிப்பாலும் நெறி யாள்கையாகும், தாளக்காவடி என்ற கிராமியக் கலைமரபை அறிமுகப்படுத்தியதாலும் ஆற்றிய பணி அதிகம் என்பேன்.
ளுடன் ஏ. ரி.பி
வரதர், புதுமை லோலன், ஏ. ரி.பி. நந்தி, சொக்கன் கோபதி, கே. நடராஜன், பொ.சண்முகநாதன், சிற்பி. செங்கை
1ளி சிவபாதம், த. பரமஸிங்கம், க.தணிகாசலம்.
திருந்தோம்.
இரவு எட்டுமணி இருக்கும். முகத்துவாரம் விஷ்ணு தேவாலயத்தின் தர்மகர்த்தர்கள் அவரை நாடி வந்திறங்கினர். மறுநாள் காலை அரங்கேற்று வதற்கு ஊஞ்சற் பாட்டுத் தேவையெனவும் பாடித் தந்துதவுமாறும் கோரிக்கை விடுத்தனர். வர கவியான வீரமணிஐயர் ஒப்புக்கொண்டார். எனக்கு வியப்பாகவிருந்தது.
Déé 396aÉS 4Ghaob UD6LSái Ngara y Áf - 2oof

Page 16
` எப்படிச் சாத்தியம் ஐயா’ என வினவினேன்.
’ உங்கள் உறக்கத்தை இரவு எரியப்போகின்ற மின்சார லைற்றும் வாய் விட்டுப் பாடும் என் குரலும் கலைக்கா தெனில் விடிவதற்குள் அத்தேவாலயத் தின் இருபத்தாறு தெய்வங்களுக்கும் ஊஞ்சல் பாடி முடிப் பேண்’ என என்னிடம் கேட்டுவிட்டுச் சிரித்தார்.
` என் உறக்கம் பெரிதல்ல. நீங்கள் பாடுங்கள்.”
நான் உறங் கிப் போனேன். விழிப்புத்தட்டும் வேளைகளில் வீரமணி ஐயரின் இராகம் தாளம் தப்பா இசை என் காதுகளில் விழுந்துகொண்டி ருந்தது. விடியற்பொழுதில் விழித்த போது ஒரு கட்டுக் காகிதங்களுடன் அவர் எழுந்தி
` நன்றி. தாங்ஸ். தாங்ஸ்.’ என்றார். என் கரங்களைப் பற்றிக் கொண்டார்.
`இராத்திரி முழுவதும் என் காதுகளில் உங்கள் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் நான் உறக்கத்திலிருந்தேன்.”
^ நாரதர் கிருஷ்ணபரமாத்மாவின் புகழைக் கூறும் போது தாயின் கர்ப்பத்தில் இருந்த பிரகலாதன் உம் கொட்டிய மாதிரி நீங்கள் உறக்கத்தில் உம் கொட்டவில்லை.”
வீரமணிஜயரின் வித்துவத்திறனை அன்று கண்டுகொண்டேன். “கற்பகவல்லி உன் பொற் பதங்கள் பிடித்தேன் பாடலின் மூலம் தமிழர் நெஞ்சங்களில் ஏற்கனவே இடம் பிடித்துக் கொண்டார். நூற்றுக்கணக்கான சாகித்தியங்களை யும் இசை நாடகங்களையும் நமக்கு அளித்தவர். ஈடு இணையற்ற இசை ஞானி. முத்தமிழ் கலை ஞானி, கலாரத்ன, இயலிசை வாரிதி, கவிமாமணி, சாகித்ய சிரோன்மணி, சிருஷ்டி ஞாயிறு, முத்தமிழ் வித்தகர், மகாவித்துவன் என உண்மையில் நுாற்றுக் கணக்கான பட்டங்களைத் தாங்கி அவற்றிற்குப் பெருமை சேர்த்தவர். இசைக்கும், இசை நாடக நாட்டியத்திற்கும் படைப்பாளர், நெறி யாளர் என்ற வகையில் அவர் ஆற்றியுள்ள பணி மறப்பதற்கில்லை. பாரம்பரிய மரபோடு புதுமை களை உட்புகுத்தி அவர் மேடையேற்றிய இசை நாட்டியங்கள், நாடகங்கள் பலவற்றினைக் காணும்
15
 
 

ருந்தார்.
பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மெய்மறந்து மெய் சிலிர்த்த அனுபவங்கள் எனக்குள்ளன.
வீரமணிஜயரின் சாகித்தியங்கள் இசைப் பேழைகளில் பதிவாகியிருக்கின்றன. புகழ்பெற்ற சங்கீதக் கலைஞர்களால் அவை பாடப்பட்டிருக் கின்றன. அவருடைய இசை நாட்டிய நாடகங்கள் பல வீடியோக்களில் ஆங்காங்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இவற்றினைவிட தமிழிசை இலக்கியத்திற்கு அவர் எழுதி அச்சிட்டு விட்டுச் சென்றவையும் அச்சு வாகனமேறக் காத்திருக்கின்ற படைப்புகளும் அதிகம். அவை நமது இலக்கியத் திற்கு அணி சேர்ப்பனவாகவுள்ளன. வீரமணி ஐயரின் ஆக்கங்களை நான் படித்திருக்கிறேன். வீரமணிஜயரின் ஆக்கங்களைப் படிக்கக் கிடைத்த போது வியப்படைந்தேன். கேட்பதற்கும், பார்ப் பதற்கும் மட்டுமன்றி இவை படித்துச் சுவைப்பதற்கு முரிய இலக்கியங்களாக விளங்குகின்றன. ஆயிரக் கணக்கான இசைப் பாடல்களையும் நூற்றுக் கணக்கான கீர்த்தனை/ஊஞ்சல் பாடல்களையும், நூற்றுக்கணக்கான இசை நாட்டிய நாடகங்க ளையும் அவர் ஆக்கித் தந்துள்ளார். அவர் தன் படைப்புகள் பலவற்றிற்கும் பிரதி வைத்திருப்ப தில்லை. கோரிக்கை வரும்போது அவற்றினை யாத்து அவர்களிடம் அளித்துவிட்டு மறந்துவிடுவார்.
அவ்வாறு உலகத்தின் பல தமிழ்ப் பகுதிகளிலும் வீரமணிஜயரின் படைப்புக்கள் உள்ளன. அவரிடம் இருப்பனவற்றில் நான் படித்துச் சுவைத்தவற்றினை
ல்ேலிகை 39வது ஆண்டுமலsர் ஜனவரி - 20Oபு

Page 17
இங்கு ஆவணப்படுத்துவது அவசியமெனக் கருது கின்றேன்.
சத்தியம் - சிவம் - சுந்தரம்
திருமயிலைக் குறவஞ்சி
திருமலை வில்லூன்றிக் கந்தன் குறவஞ்சி
கண்ணப்பர் குறவஞ்சி
பீஷ்மர்
சரஸ்வதி கடாட்சம் பத்த பிரகலாதன்
ஸ்கந்த லீலா
குருத்துவம் 10. திருஞானசம்பந்தன் 11. தாய்மை
12. பண்டாரவன்னியன்
13. 72 மேளகர்த்தா ராகத் திருமயிலைக்
கற்பகாம்பாள் கீர்த்தனைகள்
14. செளந்தரலாகிரியம்
இங்கு பட்டியல் இட்டவை மட்டுந்தான் வீரமணி ஐயரின் படைப்புக்களென எண்ணிவிடக் கூடாது. அவை அனுமன் வால்போலப் பட்டியல் நீளும்.
இலக்கிய உலகில் வீரமணிஐயரின் இடம் யாதெனக் கணிப்பது அப்படியொன்றும் சிரமமான தல்ல. ஏனெனில் அவரது ஆக்கங்கள் இசைக் கலைஞர்களாலும், நாட்டிய விற்பன்னர்களாலும், நவீன புனைகதைச் சிருஷ்டி கர்த்தாக்களாலும், அறிஞர்களாலும், சமயப் பெரியார்களாலும் ஐயத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவர் ஈடு இணையற்ற கலைஞர். பேரறிஞர். வீரமணி ஐயரின் ஆக்கங்கள் கவிதைகள், கவிதா நிகழ்வு கள், இசை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் எனப் பல்வகைப்பட்டன. இவை சுட்டுகின்ற பொருள் சமயம், புராணம், சமகாலச் சமூகம். இவற்றி னடியாக அவரின் ஆற்றல் இசை வடிவங்களாகவும், நாட்டிய நாடகங்களாகவும் பரிணமித்திருக்கின்றன. உண்மையில் அவை கவிதை வெளிப்பாடுகள்தாம்.
வீரமணிஜயரின் ஆக்கங்கள் சில இலக்கியப் பழந்தமிழ் நடையில் அமைந்துள்ளன. கவிதா செருக்கு அவற்றில் இருக்கும். திங்களைப் பழிக்கும் முகம், செவ்வாய்க்கு உவமையில்லை. செங் காம் புதன் னிலவள். என நாட்களை அடுக்கும் வித்துவச் செருக்கு அவற்றில் இருக்கும். அவரது பல நாட்டிய நாடகங்களில் பேச்சு வழக்கு
16 −

விரவி வருவதையும் காணலாம். பெரும் எளிமை யான இலகு மொழி அவரது படைப்புகளில் இருக்கும். கோலமென்ன கோலமென்ன கொடுமை அலங்கோலம். கோவிலெல்லாம் எலும்பிறைச்சி குவித்த அபச்சாரம்' என எளிய இலகு தமிழ் அவரது படைப்புகளில் பேசும். அவரது படைப்புக் களில் தத்துவநடை விரவிக் காணப்படும். ஒன்றியே ஒன்றினாலும் ஒன்றன் மேலொள்ளினாளும் ஒன்றியே ஒன்றாய் ஒன்றும் ஒன்றனை ஒன்றுவார்க்கு.’ எனவும் அவர் எழுதிச் செல்வார்.
வீரமணிஜயரின் மொழி ஆளுகையில் தமிழும் சமஸ்கிருதமும் மணிப்பிரவாளமாக இனிமையுடன் பரவிக் காணப்படும். உத்தமமான பிராமணர் அவர். சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர். சாஸ்திர ரீதியான படைப்புக்களில் சமஸ்கிருதம் சேராது
整 படைப்புக்களை உருவாக்கிவிட முடியாது எனக்
கருதுபவர். அவருடைய உன்னதமான படைப்பாகத் தமிழ்நாட்டினரும் கொண்டாடுவது '72 மேளகர்த்தா
ராகத் திருமயிலைக் கற்பகாம்பாள் கீர்த்தனைகள்’
ஆகும். இந்நூல் அறிவியல் பூர்வமாக ஆக்கப்பட்டி ருப்பதாக அறிஞர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். ராக தாளங்களுக்குரிய உச்ச இழிவுகளை வரைபுச்
சித்திரங்களாக வரைந்து இந்நூலினை விஞ்ஞானப்
பூர்வமாகப் படைத்திருக்கிறார். இதுவரை எவரும் செய்திராத புதிய முயற்சி அதுவாகும். இந்நூலி லுள்ள 72 கீர்த்தனைகளும் இசையாளர்களுக்குப் பெரும் உதவியாக அமைவன.
மகாவித்துவான் வீரமணிஜயரின் சாதனைகளை மதிப்பிடுவதென்பது இலகுவானதன்று. ஏனெனில் அவர் ஒரு யுகபுருஷர். அவருடைய இடத்தினை வேறெவராலும் இலகுவில் நிரப்பிவிட முடியும் எனக் கூறமுடியாது.
மகாவித்துவான் வீரமணி ஐயரும், கலைப் பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரையும்.
ல்ேலிகை 39வது ஆண்டுமASர் ஜனவரி - 2004

Page 18
நீல மலைகள் வெட்டி நிறைய நாள் பதியம் வைத்து கானு களனி கட்டி கை பொத்தி வாய்பொத்தி கண்ணுக்குள் வளர்ந்தவளே - அடி சிங்கார சிறுக்கி நீ வித்தாரக் கள்ளி நீ
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
சின்னக்காளை பெரியக்காளை மச்சக்காளை மருதுக்காளை கண்டி மலைப் பொட்டலிலே காடழித்து மேடழித்து புல்லுவெட்டி மண்ணுவெட்டி முள்ளுக்குத்தி உரம்போட்டு இரத்தம் சிந்த வேர்வை சிந்த கண்டு கண்டு வளர்ந்தவளே! கூனி அடிச்சு வைச்ச கூட்டுக்குள் சமைந்தவளே!
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே
கண்டிச் சீமையிலே கண்காணா தேசத்திலே பொன்னுண்டு பொருளுண்டு தேயிலை செடிக்கடியில் தேங்காயும் மாசியுமாயுமாய் தெகட்டாத் தேட்டமுண்டு என்னெண்டு போய்ப்பார்த்த என்னண்ணன் என்னானான்
17
 

ஐரி 2006
- இரா. சடகோயண்
என்னப்பன் எங்கு சென்றான்
என் தாயை காணலியே
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே
Mvh

Page 19
முப்பாட்டன் முதுகொடித்தாய் என்பாட்டன் எலும்பொடித்தாய் என் பாட்டியின் உயிரைக்கூட பஞ்சத்தால் பறித்தெடுத்தாய் என் முன்னோரை எதற்காக வஞ்சித்து வரவழைத்தாய் முக்கால் காசுக்கு முழுப்பரம்பரையை கூசாமல் அடகுவைத்தாய் கோடிலயத்தருகே இருளில் விழித்திருக்கும் ரோதமுனிப் பிசாசே
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே
என் ஆத்தாவின் தளிர்க்கரத்தை அஞ்சு மணிக் கடுங்குளிரில் பெய்த பனிமழையில் விறைத்த விறகாக கொழுந்தெடுக்க வைத்தவளே! அட்டைக் கடி நடுவில் பாம்புப் புற்றருகில் ஆய்ந்த அரும்புகளை நாளுமணி மடுவத்தில் நான் நிறுக்க வந்தபோது “நாரு காம் பொடித்தாய் நாலிலையை ஏன் பறித்தாய்? வங்கி இலை கொய்தாய்” - என என் நாள் பெயரை மறுத்தானே நாசமாய்ப் போனவளே
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
கட்டபுள்ள கருத்தபுள்ள கண்டாங்கி போட்டபுள்ள சாயச்சேலை மடிச்சுக்கட்டி ஒத்தக்கட றோட்டுமேல ஒடிச்சென்று நெரபுடுச்சி மச்சான் மனம் வருந்த சிட்டாய்க் கொழுந்தெடுத்து கட்டுடல் தேய்ந்தாள்ே கருகித்தான் போனாளே இத்தனை பார்த்தபின்பும்
19

உன் இதயம் இளகலையே
கேடு கெட்ட பாதகியே! " தேயிலை ராச்சசியே!
பிரஜா உரிமை என்ற பித்தலாட்ட சட்டம் கொண்டு இந்தியாவா இலங்கையா ஒங்கப்பன் பொறந்தநாடு ஓங்க ஆயி வளர்ந்த நாடு பாட்டனுக்குரிய நாடு - என்று பலவாறு கேட்ட கேள்வி பஞ்சம் பொழைக்க வந்த எங்கள் பாதையை மறித்ததடி பத்துத்திரு தசாப்தங்கள் எம்மைப் பாடாய்ப் படுத்துதடி
கேடு கெட்ட பாதகியே! தேயிலை ராச்சசியே!
எங்கள் இரத்தத்தை அட்டை கொண்டு உறிஞ்ச வைத்தாய் எங்கள் வியர்வையை ஆறாய் பெருக வைத்தாய் என் அண்ணன்களைப் பலியெடுத்தாய் என் ஆத்தாவின் உயிர் குடித்தாய் - எங்கள் எட்டுப் பரம்பரையை எதற்காக சீரழித்தாய் இதற்கு மேலும் உன்னை இப்படியே விட்டுவைத்தால் அடுத்த பரம்பரைக்கு ஆர்தான் பதில் சொல்வார் எடுத்து வாருங்கள் - உங்கள் கவ்வாத்து கத்திகளை தூக்கி வாருங்கள் - உங்கள் அலவாங்கு ஈட்டிகளை
வெட்டியெறியுங்கள் - இக் கேடு கெட்ட பாதகியை! வேரறுத்து வீசுங்கள் - இந்த தேயிலை ராச்சசியை
sea, 39-JH &bærbuDeså g4T-Jf – 2OOu

Page 20
S னியும் மதியம் இரண்டாகி விட்டது. சீலாவதி ண் ஏன் இன்னமும் தன் வீட்டுக்குச் செல்லாமல்,
மசிந்து, மசிந்து நிற்கிறாள்? என்ன பிரச்சினை?
நிர்மலாவுக்குப் புரியவில்லை.
நிர்மலாவின் வீடு, வளவு, வாய்க்கால் எல்லாம் கூட்டித் துப்பரவாக்கும் வேலை, செடிக்குத் தண்ணிர் ஊற்றும் வேலை போன்றவற்றைச் சீலாவதிதான் செய்வாள். அவளை நிர்மலாவிடம் கூட்டி வந்து, அறிமுகம் செய்து வைத்தவன் சீலாவதியின்
கணவன் பீட்டர்தான். அவன் கூலி வேலை செய்து
பிழைக்கும் ஒருவன்.
ஹெந்தளையில் அமைந்துள்ளது நிர்மலா குடும்பத்தினரின் வீடு. அவள் சுமாராகப் படித்தவள். கூட்டுத்தாபனம் ஒன்றில் சிலகாலம் பணிபுரிந்தவள். திருமணம் செய்து, பிள்ளைகள் பிறந்ததும், அவர்ளைக் கவனிக்க ஆட்கள் இல்லாததால் வேலையை விட்டுவிட்டாள். ஆனாலும் அவளுக்கு சமூகசேவை விருப்பம் அதிகம் உண்டு. உள்ளூர் பொது ஸ்தாபனங்கள் சிலவற்றிலும் அவள் அங்கத்தவர். பிள்ளைகள் மூவரும் ஆண்கள். அவர்கள் வெளிநாடுகளில் தங்கித் தொழில் புரிகின்றனர். வீட்டில் தற்போது நிர்மலாவும் அவளது கணவர் தேவகுமாருமே இருந்தனர்.
19
 
 

அவர்கள் ஹெந்தளை வீட்டுக்கு குடிவந்து கொஞ்சக் காலம்தான். அதாவது 1983 ஆடிக் கலவரத்தின் பின்னர்; அவர்களது காணியில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள், சில பலா மரங்கள், வாழைகள், சில கொய்யா மரங்கள் ஆகியன நின்றன.
”தேங்காய் புடுங்கோணுமா நோனா?” என்று கேட்டுக் கொண்டு, ஒருநாள் கத்தியுடன் வந்தான் பீட்டர். கிராமத்து மனிதன். இடுப்பில் ஒர் அழுக்குச் சாரம், பரட்டைத் தலை, தாடி, மீசை, கையில் கத்தி இத்தியாதியுடன் ஒருவனைத் திடீரென்று வீட்டு வாசலில் பார்க்கின்றபோது யாருக்குத்தான் கலக்கம் வராது? நிர்மலா சிறிது மிரண்டுதான் போனாள்.
’பயப்பட வேண்டாம் நோனா. நான் அப்படி ஆள் இல்லே. நானுந் தமிழன்தான்.” பீட்டர் காவிப் பற்கள் தெரியச் சிரித்தான்.
அதற்குள் நிர்மலாவின் கணவர் தேவகுமாரும் வீட்டிற்குள் இருந்து வாசலுக்கு வந்தார். பின்னர் அவர்கள் பேசிக் கொண்டதையடுத்து, பீட்டர் அடிக்கடி அங்கு வந்து தேங்காய் பிடுங்கி, உரித்துக் கொடுப்பான். கடை கண்ணிக்குப் போய்ச் சாமான் வாங்கி வந்து கொடுப்பான். இப்படியாக அவன் அங்கு சினேகிதமாகிக் கொண்டான்.
656)gMsr? D6SøHO JØVUDs?
- அன்னலட்சுமி இராஜதுரை
NZ
39- 23
26. Uuo | af2Ool.

Page 21
ஒருநாள் அவன் தனது மனைவ சீலாவதியைக் கூட்டிவந்து அறிமுகப்படுத்தினான் `இந்தா பாரு நோனா நல்லவங்க. மாத்தயாவுற தான்! நீ இவங்களுக்கு ஒவ்வொரு நாளும் வந்து வேலை செஞ்சி குடு! நீங்க என்ன வேலையின் னாலும் இவகிட்ட சொல்லுங்க நோனா! இது சிங்களந்தான். ஆனா தமிழும் தெரியும்!” என்று பணிந்தான்.
சீலாவதி நடுத்தர வயதுப் பெண்ணாகத் தோன்றினாள். பொது நிறம். மெல்லிய உடல். உழைப்பால் உரம்பெற்ற உடல். கனிவான முகம். அவள் மேலே பிளவுசும், இடுப்பில் கம்பாயமும் அணிந் திருந்தாள். அவள் நிர்மலாவுக்கு இளையவள்தான். அதிலிருந்து அந்த வளவு, வாய்க் கால்களைக் கூட்டித் துப்பரவு செய்வது, கடை கண்ணிக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவந்து கொடுப்பது, மாவிடித்துக் கொடுப்பது போன்ற வேலைகளை சீலாவதி மேற்கொண்டு வந்தாள்.
அவளது வேலைகள் நிர்மலாவுக்குப் பிடித்துப் போயிற்று. குணமுந்தான். பார்த்துப் பாராமல் கூலி கொடுப்பாள். உணவுந்தான். வீட்டுக்குக் கொண்டு போய் பிள்ளைகளுக்குக் குடு என்று தின்பண்டங் களைக் கொடுப்பதுமுண்டு. நிர்மலா சாவகாசமாய் ஏதாவது கதைத்தால், சீலாவதியும் பணிவு காட்டிக் கதைப்பாள். இல்லாவிட்டால் வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டுப் போய் விடுவாள்.
. இன்று ஏன் தயங்கிக் கொண்டு நிற்கிறாள்? வீட்டில் ஏதாவது பிரச்சினையோ? காசு, கீசு தேவைப்படுகிறதோ? நான்கு பிள்ளைகளின் தாய். மூத்தவன் தன்னிஷ்டத்துக்கு ஒருத்தியைக் கட்டிக் கொண்டு, மனைவியின் ஊருக்கே போய்விட்டானாம். மூத்தபெண் தமயந்தியும், கல்யாணம் கட்டிக் கொடுத்த பின்னரும், பெற்றோரோடுதான் வசிக் கிறாளாம். அவளுக்கு இரண்டு பிள்ளைகள் வேறு. அவனும் கூலிவேலைக்குத்தான் போகிறானாம். தமயந்திக்குக் கீழே இரண்டு பெண்பிள்ளைகளாம். பீட்டர் முன்பே தனது குடும்ப விபரங்களை அவ்வப் போது சொல்லியிருந்தான்.
` என்ன சீலாவதி? ஏன் இன்னும் வீட்டை போகேல்லை? என்ன விசயம்?’ நிர்மலாவே கேட்டாள்.
20

சீலாவதி நிர்மலாவை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு சட்டென்று தலையைக் குனிந்தவாறு நோனாக்கிட்ட நான் . ஒண்ணு கேட்கோணும்” என்று முனங்கினாள்.
‘’ என்ன..? சொல்லு!”
6
சிறிய தயக்கத்தின் பின் ‘எங்க மூத்த மக நிலமைதான் ஒங்களுக்குத் தெரியுந்தானே நோனா! அவ புருசனுக்கும் அவன் உழைக்கிறது போதாது. நல்லா குடிப்பான். சல்லி கேட்டால் அடிப்பான். மக பாவம். பிள்ளைகளோட என்ன பண்ணுவா? நாங்க என்ன செய்யிறது.” குரலில் கவலை, விரக்தி.
“இப்போ என்ன சொல்லுறா மகள்?”
சவுதிக்கு போகப் போறாவாம் ஹவுஸ் மெயிட்டு வேலைக்கு!”
k
‘ஓ! அப் பிடியா? அவ புருசன் சரி 6T60ổi Lọ LTJ IT?”
`ஒ நோனா! அவனும் சரி சொல்லிட்டான். எங்க அக்கா மக சவுதிக்குப் போய் வேலை செஞ்சி நிறைய சல்லி அனுப்பிச்சு எங்க மாமா மகளும் ஒமானுக்குப் போய் வேலை செஞ்சி, இப்ப நல்லா இருக்கா. அதுதான். இவவம் போகனுமாம். வெளி நாட்டுக்குப் போய் வேலை செஞ்சா,நல்லதுதானே? சல்லியும் நிறையக் கிடைக்கும் பிள்ளைகளுக்கு கரைச்சல் இல்லாம திங்கக் குடுத்து வளக்கலாம் என்கிறா நோனா!. அவ தாத்தாவும் சரி சொல்லிட்டார்!’ என்று இழுத்தாள்.
‘அப்போ, சீலாவதி என்ன சொல்லுறது?” நிர்மலா சிறிய புன்முறுவலுடன் கேட்டாள்.
’ எனக்குத்தான் நோனா மனசு அடிக்குது பல மோசமான கதைகளைக் கேள்விப்பட்டிருக் கிறன். இவவுக்கு சின்ன வயது. இப்பதான் இருபத்தைந்து வயது. பதினாறு வயசில கட்டிக் குடுத்தோம். இவவுக்கு எப்படி எல்லாம் இருக்கும் எண்டு யோசிக்கிறன். நாங்க ஏழைச் சனங்க. ஒண்டுக்கும் வழியில்லாதவங்க. எப்பிடி சரி, ஒரு வழியில துணிஞ்சி போகோனுந்தானே நோனா!”
அத்தாயின் கண்கள் கலங்கியிருந்தன.
its 39-)H &b„Prbuo-Vs 26r-Ust – 2OOl

Page 22
'சீலாவதி இப்போ எதுக்கு அழ வேணும்? அழவேண்டாம்! நான் என்ன உதவி செய்ய வேணும்?” w
அவள் நிமிர்ந்து நிர்மலாவைப் பார்த்தாள்.
* நோனா! நீங்க மிச்சம் நல்ல வங்க! எங்களுக்கு நீங்க ரொம்ப உதவி செஞ்சிருக்கீங்க!
நீங்க எங்களுக்குக் கடவுள் மாதிரின்னு என்ட மனசோட சொல்றன் நோனா!”
நிர்மலா மெல்லச் சிரித்தாள்.
‘சரி. என்ன வேணும் சொல்லு?”
` கொஞ்சம் சல்லி வேணும் நோனா பிரயாணச் செலவுக்கு!”
“எவ்வளவு?”
’ பத்தாயிரம்”
‘’ பத்தாயிரமா?”
”ஓம் நோனா! மக வேலை செஞ்சி, கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பித் தந்திடுவா!”
நிர்மலா சிறிது யோசித்தாள், பணம் திரும்பி வந்தாலும், வராவிட்டாலும், ஓர் ஏழைக்கு உதவு என்று உள்மனம் உந்தியது.
`சரி, நாளைக்கு உன் மகனைக் கூட்டிக் கொண்டு வா பார்க்கலாம்!” என்றாள்.
இதைப்பற்றி அவள் தன் கணவரிடம் கேட்ட போது `உனக்குத்தான் பீட்டர் குடும்பத்திலே இரக்கம் வந்திட்டுதே! உன் இஷ்டம்!” என்று விட்டார்.
மறுநாள் சீலாவதி தன் மகள் தமயந்தியுடன் வந்தாள். நாகரீகம் என்று இல்லாவிட்டாலும் அழகான இளம் பெண். பொது நிறம். அழகான கண்கள்.
’ என்ன தமயந்தி, சவுதிக்குப் போறதாமே? அம்மா சொன்னா" என்று நிர்மலா புன்முறுவலுடன் கேட்டாள். அவள் எதிர்பாராமல் அவள் கால்களில் விழுந்து பணிந்தாள் தமயந்தி.
21

‘நோனா! ஓங்களைப்பத்தி, தாத்தாவும் அம்மாவும் நிறையச் சொல்லியிருக்காங்க! என் பிள்ளைங்களுக்காகத்தான், சவுதிக்குப் போறது நோனா! ஓங்க சல்லியை வேலை செஞ்சி எப்பிடியும் தருவேன் நோனா!” என்றாள் மிகக் குழைவோடு.
` சரி. சரி. நீங்க கேட்ட சல்லியை நான் தாறேன். திருப்பித் தாறதை பிறகு பார்க்கலாம். மணிசருக்கு மணிசர் உதவுறது வழக்கந்தானே? நீ அங்கே துணிவாய் இருக்கோணும். கவனமாயும் இருக்கோணும் என்ன?. ஒழுங்காய் கடிதம் போடவேணும் என்ன?”
‘சரி நோனா’ என்றவள் விடை பெற்றாள்.
இருவாரங்களின் பின், தனது பிள்ளைகளைத் தனது பெற்றோரின் பொறுப்பில் விட்டுவிட்டு, தமயந்தி சவுதிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.
சீலாவதி வழமைபோல் வந்து வேலைகளைச் செய்துவிட்டுப் போவாள். ஒருநாள் நிர்மலாவிடம் ‘நோனா! மக கடிதம் போட்டிருந்தா. கரைச்சல் இல்லை என்று எழுதி இருக்கா. இப்பத்தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி” என்று புன்சிரிப்போடு சொன்னாள். “சந்தோசம்” என்றாள் நிர்மலா.
ஐந்து மாதங்கள் எப்படியோ கழிந்து போயின. சீலாவதியின் முகத்தில் வாட்டம். தமயந்தியிட மிருந்து பணம் ஏதும் வராதது ஒருபுறமிருக்க, கடிதமே வருவதில்லையாம்! இதைப் பற்றி அவளிடம் விசாரித்தால் போதும். அழத் தொடங்கி விடுவாள். பாவம் தாயுள்ளம். அதனால் நிர்மலா அதிகமாக ஏதும் விசாரிப்பதில்லை.
அவளை சவூதிக்கு அனுப்பிய ஏஜண்டிடம் போய், இவர்கள் சில தடவை விசாரித்தனர். அவனும் சரியான பதிலைக் கொடுக்க முடியாமல் இருந்தான் என்று சீலாவதி கவலையோடு கூறியிருந்தாள்.
’பாருங்களேன் இந்த அநியாயத்தை பாவியள் போற இடம் பள்ளமும் திட்டியும் எண்டமாதிரித்தான் இந்தச் சீலாவதி வீட்டு விசயங்களும் இருக்கு என்று நிர்மலா புலம்பியபோது `` ஏன்? என்ன நடந்தது?’ என்றார் அவளது கணவன்.
‘சீலாவதியின்ர மகளிடமிருந்து நாலைஞ்சு
iධි மல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 23
மாதமாய் கடிதம் ஏதும் வரேல்லையாம். ஏஜெண்டுக் கும் ஒண்டும் பதில் சொல்ல முடியேல்லையாம். ஆரிட்டப்போய்க் கேட்கிறது எண்டு அந்த அப் பாவிகள் தவிக்குதுகுள். அதோட வீட்டிலேயும் பிரச்சினைகள் இருக்குத்தானே? கவலைகளாலா சீலாவதி சோர்ந்து போயிட்டுது. வேலை செய்யிற திலையும் உஷாரில்லை. போதும் போதாதற்கு அவளின்ரை அதுதான் பேரப்பிள்ளைகளையும் எல்லே காப்பாற்ற வேண்டிக் கிடக்கு!” -
‘எங்கட நாட்டுக்கு வாற வருமானத்தில கணிசமான பகுதி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகப் போகிற எங்கட பொம்பிள யாலைதான் கிடைக்குது எண்டு அரசியல்வாதிகள் பெருமையாய்ப் பேசுவினம். ஆனால் அதுக்காக, அவையள் படுகிறபாடு பெரும்பாடுதான்!
‘இன்னும் எங்களுக்குத் தெரியாமல் பல விஷயங்கள் இருக்கும்!”
'உண்மைதான்! எங்கட நாடுகளில இருந்து, அந்த நாடுகளுக்கு வேலைக்குப் போகிற ஆம்பிளையலிலும் பார்க்க, பெண்கள் கூடுதலாகக் கஷடப்படுகினம் எண் டு தான் நினைக் கத் தோன்றுது!’
``சே! சே! அப்படிச் சொல்ல ஏலாது! ஆம்பிளையஸ் பெரும்பாலும் கம்பனிகள், பொது ஸ்தாபனங்களில் வேலை செய்வான்கள். அவங் : களுக்கும் வேலைக் கஷ்டங்கள் இருக்கு. ஆனால் பெரம்பிளயஸ் தனித்தனி வீடுகளில்தானே வேலை செய்வினம். எசமான், எசமாட்டி நல்ல ஆட்களாக இருக்க வேணும். இல்லாட்டிக் கஷடந்தான்!”
‘ஓமோம் உண்மைதான். எவ்வளவு கதைகள் கேள்விப்பட்டிருக்கிறம். சிலருக்கு வாய்க்குது. சிலருக்கு சரியான இடம் வாய்க்கிறதில்லை. இந்தப் பெடிச்சிக்கு என்ன மாதிரியோ தெரியேல்ல. ஒரு கடிதம் போட்டால்தானே அதுகளுக்கும் விளங்கும்!” என்றாள் நிர்மலா வருத்தத்துடன்.
’அதுக்கு நீ ஏன் வீணாய்க் கவலைப்படு கிறாய்? கவலையை விடு உனக்கு ஊர் விசாரமும் அதிகம் ஊருக்கு உதவும் உத்தம புத்திரி என்று ஆராவது கூப்பிட்டுப் பட்டம் தந்திருக்கலாம் போல கிடக்கு’ லேசான தமாவஷ்தான்.
’ இல்லை. ஒரு பெண்ணுக்கு இன்னொரு
22
 
 
 
 

பெண் காட்டும் இரக்கந்தான்” என்றாள் நிர்மலா சிறு கவலையுடன்.
" அப்போது வெளியில் ‘நோனா!” என்றொரு குரல். வெளியே விரைந்து வந்தாள் நிர்மலா. முற்றத்தில் பீட்டரும் சீலாவதியும் நின்றிருந்தார்கள்.
‘’ என்ன பீட்டர்! என்ன சீலாவதி? என்ன இரண்டு பேரும் வந்திருக்கிறியள்?”
அவர்கள் முகத்தில் கவலை படர்ந்திருந்தது.
* நோனா! எங்க மக தமயந்தியை இங்கு ஹொஸ் பிட்டல் ல கொணாந்து வைச் சிருக் காங்கலாம்!” என்றான் பீட்டர்.
‘‘கொழும்பு பெரியாஸ்பத்திரியிலதான் நோனா. அவங்க சொன்னாங்க. அதுதான். பஸ்ஸ"க்குக் கூட கையிலே இப்ப சல்லி . இல்லே! அதான் உங்ககிட்ட ஓடிவந்தோம் நோனா! சீலாவதிக்கு குடுக்க வேண்டிய சல்லியில கழிச்சுக் கொண்டு தாங்க நோனா! உங்களுக்குத்தான் நாங்க கரைச்சல் தாறம்..!’
``சே! சே! அப்பிடி ஒன்றுமில்ல பீட்டர். நீங்க நில்லுங்க வாறன்!” என்று உள்ளே போய், நூறு ரூபா பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
‘சரி நீங்க போய்ப் பாருங்க! நான் பிறகு வாறன்’ என்றாள்.
‘நீங்களா?” என்ற பீட்டரின் கண்கள் வியப்பில்
விரிந்தன. 'எதுக்கு நோனா உங்களுக்குக் கரைச்சல், எங்க கஷ்டம் எங்களோட இருக்கட்டும். நீங்க உதவுறது போதாதா? நீங்க வீட்டில் இருங்க. நாங்க போய்ப் பார்த்து வந்து சொல்லுவோம்!” என்றாள் சீலாவதி பவ்வியமாக. அவளது கண்கள் கலங்கியிருந்தன.
அவர்கள் போய்விட்டார்கள். நிர்மலாவின் இதயம் பரபரத்தது.
உள்ளே போய்க் கணவரிடம், “ பாவம் அந்த தமயந்தி! நானும் ஒருக்கால் பார்க்க வேணும் எண்டு தோன்றுது.” என்றாள் அவர் முகத்தை உற்றுப் பார்த்தபடி
* உனக்கு வேறை வேலை இல்லையா? அவள் சுகமாகிவரட்டன். பிறகு பார்க்கலாந்தானே!
apờó 396 JH 46 aoUb UDAS si agar SJÁf - 2OOF

Page 24
இப்ப என்ன அவசரம்” என்றார் சிறிது படபடப்புடன்,
“இல்லை. ஆஸ்பத்திரியில இப்ப போய்ப் பார்த்தால்தான் நல்லது. அவளுக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். பீட்டரும் சீலாவதியும் எங்களுக்கு நிறைய வேலைகள் செய்து தாறதுகள் தானே?”
`இது என்னப்பா! வேலை செய்யிறதுக்கு காசு குடுக்கிறதுதானே?. உனக்கு சமூகசேவை கூடிப்போச்சு! இனி ஆர் தடுக்கேலும்? சரி. சரி. போறதெண்டால் போய்க் கெதியாய் வா!” என்றார்.
d 参
ஆஸ்பத்திரி பெண் நோயாளிகள் வார்டில் கசமுசவென்று இரைச்சல்கள். அழுகைகள், கூக் குரல்கள்! ஆறுதல் அணைப்புகள். அது பார்வை யாளர் நேரம்.
அதோ பீட்டரும் சீலாவதியும் விரைந்து செல் கிறார்கள். நிர்மலா அவர்கள் பின்னே விரைந்து நடந்தாள்.
கட்டிலில் இரு கால்களையும் நீட்டிக் கொண்டு சோகமும் விரக்தியுமாய் உட்கார்ந்து கொண்டி ருப்பவள். இவள்தான் தமயந்தியா? அடையாளம் காண முடியவில்லையே! முகம் உப்பி, கண்கள் சிறுத்து, வாய் சிறிது கோணி. தலையைச் சுற்றி ஒரு துணிக்கட்டு, தோள் மூட்டில் கட்டு, முழங்கால் இரண்டிலும் கட்டு. இன்னும் உடலில் எங்கெங்கு கட்டுகளோ! கவுண் மறைத்திருந்தது.
* தமயந்தி என் மகளே! உனக்கு என்ன நடந்தது? என்ன நடந்தது?’ சீலாவதியின் தாய்மைக் குமுறலின் வெடிப்பு' 'ஒ' என்று கத்துகிறாள்.
` அம்மே! அம்மே!’
தாயும் தந்தையும் மகளைத் தொட்டுத் தொட்டு அழுகிறார்கள். கண்ணிரில் கரைகிறார்கள். சில நிமிடங்களின் பின் சற்று விலகிய பீட்டர், பின்னால் திரும்பியபோது, அங்கு நிர்மலா நிற்பதைக் கண்டு ஆச்சரியமுற்றான். “ நோனா! நீங்களா? சொன்ன படியே வந்திட்டீங்களா!” என்று கும்பிட்டுக் குழைந்தான். ’துவ! மகளே! இங்க பார் யார் வந்திருக்கிறதென்று" என்றவன் நிர்மலாவைக் காட்டினான். `அட நோனாவும் ஓடி வந்திட்டீங்

களா? வாங்க! இந்தப் பாவி பெத்த பாவியைப் பாருங்க!” என்று கண்ணிருடன் கூறிய சீலாவதி, சற்று நகர்ந்து நின்று மூச்சை இழுத்து அழுதாள்.
தமயந்தியின் நிலையைப் பலரும் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். அந்தப் பெண்கள் வார்டில் இருந்த சில நோயாளிகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்கள்தானாம். சிலர் காயப் பட்டிருந்தார்கள். சிலர் ஊனமடைந்திருந்தார்கள். சிலரோ மனநிலைப் பாதிப்போடு விரக்தியாக இருந்தார்கள். வார்ட் நிறைய பார்வையாளர்கள்.
‘மகளே தமயந்தி இங்க பாரு! உன்னைப் பார்க்க ஆர் வந்திருக்கிறாங்க என்று!’ நிர்மலாவைக் காட்டி மரியாதையும் அபிமானமும் பொங்கக் கூறினாள் சீலாவதி.
நிர்மலா இரண்டடி வைத்து முன்னே வந்ததும் "ஐயோ நோனா! தெய்யனே நோனா! நீங்களும் இந்தப் பாவியைப் பார்க்க வந்தியளா? ஸ்துதி நோனா!” என்று முனகிய தமயந்தி, தன் இரு கைகளையும் மிகச் சிரமப்பட்டு ஒன்று கூட்டிக்
கும்பிட்டாள். ‘என்னாலே இனி நடக்க முடியாது நோனா! என்னாலே இனி வேலை செய்ய முடியாது! ஒண்ணுமே முடியாது! உங்க சல்லியை நான் எப்படித் திருப்பித் தருவேன் நோனா!” என்று கண்ணிர் விட்டாள்.
t
‘சே! சே! தமயந்தி என்ன கதைக்கிறாய்? சல்லி கேட்கவா நான் வந்தேன்? அப்பிடி நான் என்ன இரக்கம் இல்லாதவளா? உன் நிலைமை யைப் பார்க்கத்தானே ஓடி வந்தேன். அதை யெல்லாம் விடு உனக்கு என்ன நடந்தது? உன் நிலைமை என்னவெண்டு தெரியாமல், உன்ர தாத்தாவும், அம்மாவும் எப்பிடித் துடிச்சுப் போயிட் டாங்க தெரியுமா?’ என்ற நிர்மலாவின் குரலில் பட்சாத்தாபம் பொங்கி வழிந்தது.
* நோனா பாத்தீங்களா! என் இரு கால்களும் அடிபட்டு சக்தி இழந்திட்டுது! இதே பாத்தீங்களா? என்ர உடம்பெல்லாம் காயம் என்னால அசைய முடியல. உழைக்கப் போனேன். போன இடத்திலும் எனக்கு கெட்டகாலம்!” அவள் குலுங்கி அழுதாள். அவளோடு சேர்ந்து தாயும் அழுதாள். நிர்மலாவின் கண்களிலும் நீர் கசிந்தது. அதைக் கைக் குட்டையால் ஒற்றிக் கொண்டாள். ‘உனக்கு என்ன
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20ot;

Page 25
தான் நடந்தது தமயந்தி? உன்னிடமிருந்து 8 மாதங்களாக கடிதமே வரலையாமே?’ என வினாவினாள்.
'உண்மைதான் நோனா! நான் வேணுமென்று அப்படிச் செய்யல. என்ர கதை பரிதாபக் கதை நோனா! ஐயையோ! யாருக்கும் இப்பிடி நடக்கக் கூடாது!’ என்றவள் சிறிது நேரம் பேசாமல் இருந்தாள்.
பிறகு தொடர்ந்தாள். `நான் வேலைக்குப் போன வீட்டில், ஒருமாத காலம் பிரச்சினை இல்லாமத்தான் இருந்தது. அந்த வேலையில எசமானி அதிகம் பேசமாட்டாங்க. நிறைய வேலை தருவா. இருந்தாலும், சமாளித்துச் செய்து கொண்டிருந்தேன்.
பிறகு, மெல்ல மெல்ல எசமானி கடுமையாக நடக்கத் தொடங்கினா. ஓயாமல் வேலை சொல்லுவா. கண்டதிலும் குறைகண்டு திட்டுவா. தலைமயிரைப் பிடித்துக் கொண்டு அடிப்பா. பாத்திரங்கள், கரண்டி, கத்தி எண்டு கண்ட பொருளாலையும் துக்கி எண் மீது வீசுவா. அதனாலே எனக்குச் சின்னச் சின்ன காயங்கள் : ஏற்பட்டன. சிலவேளை என்னை உதைத்துத் தள்ளுவா!
பசிக்கு போதுமான சாப்பாடு தரமாட்டா. மிஞ்சிற சாப்பாட்டிலை, அரைகுறைதான் தருவா. வீட்டிலே இருந்து கடிதம் வந்தாலும் எனக்கு தாறதில்லே. என்னையும் எழுதவிடமாட்டா. 接
ஒருநாள் ‘என்னை ஏன் அடிக்கிறீங்க? நான்
என்ன பிழை செய்தேன்?’ என்று கேட்டதற்கு, சிங்கம் போலப் பாய்ஞ்சா `என்னை எதிர்த்தா பேசுகிறாய்?’ என்று என்னைப் பலமாகத் தள்ளி விட்டா, என் தலை சுவரில் மோதி மண்டை உடைந்தது. இரத்தம் பீறிட்டது. எனக்கு மயக்கம் வந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் மருந்து கட்டுவித்தாங்க.
இன்னொருநாள் என் வேலை சரியில்லேன்று, எசமானி கோபத்தோடு என் தோளிலே சுட்டுப் போட்டாங்க! இதோ பாருங்க தோளை! அந்தக் காயத்தை, இன்னும் மாறல்ல!’ என்று தன் தோள்பட்டையைக் காட்டினாள். பெரிய காயந்தான் போலிருக்கிறது. இங்கு ஆஸ்பத்திரியில் பாண்டேஜ்
24 . . . . . .
 
 
 

போட்டிருக்கிறார்கள்.
‘ராட்சதப் பிறவி” என நிர்மலாவின் வாய் முணுமுணுத்தது.
‘தெய்வமே! இது என்ன அக்கிரமம்!” என்று தலையில் கைவைத்து அழுதாள் சீலாவதி, பீட்டர் தன் தோளில் கிடந்த துவாயை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டான். பாவம் அந்த ஏழைத் தந்தை அவனால் அழுகையை அடக்க முடிய வில்லை. ` அத்தோட இன்னொரு விசயம் நோனா! அந்த வீட்டு ஆம்பிளைங்க வேறு என்னைக் கஷ்டப்படுத்த ஆரம்பிச்சாங்க!”
‘‘அடப்பாவிங்களா!’
“ஒருநாள் எசமானி என்னைத் திட்டி அடிச் சாங்க நோனா! அது மட்டுமல்லாமல், நான் சற்றும் எதிர்பார்க்காமல், மேல் மாடியில இருந்து என்னைக் கீழே தள்ளிவிட்டாங்க நோனா! நான் ஐயோ என்று கத்திக் கொண்டு கீழே, நிலத்தில் விழுந்தேன்! பிறகு எனக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை நோனா!
நான் கண்விழித்த போது, ஆஸ்பத்திரியில் கிடப்பதை உணர்ந்தேன். பொலீஸ் வந்து விசாரிச்சா, தவறி விழுந்ததாகச் சொல்ல வேணும் என்று மிரட்டினாங்க! நான் அப்படியே சொன்னேன் நோனா! என் இரண்டு முழங்காலும் உடைஞ் சிட்டுது நோனா! என்னாலே நடக்க முடியாது! நான் வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருந் தேன். அதுக்குப் பிறகுதான் என்னைத் திருப்பி அனுப்பினாங்க நோனா!’
நிர்மலா விக்கித்துப் போய் நின்றாள். இது என்ன கொடுமை! எத்தனை ஆயிரம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் சென்று உழைத்துத் திரும்புகின்றார்கள்! இவளுக்கு மட்டும் ஏன் இந்தக் கதி? அல்லது கொடுமைகள் சகஜமானதா? யாவற்றையும் சகிக்கும் ஒரு நிலை இருக்கிறதா? எப்படி இந்தச் சிறுபெண் இக்கொடுைைமகளைத் தாங்கினாளோ!
"உனக்கு சல்லி ஏதும் தந்தார்களா?”
இல்லை நோனா! வேலைக்குப் போய் இரண்டு மாசத்திற்கு அப்புறம், பிறகு தருவோம் என்றாங்க. இதற்குள்ளேதான் என்னை வதைச்
ஸ் 39வது ஆண்டுமலsர் ஜனவரி - 20Oபு

Page 26
சாங்களே! பிறகு ஒண்ணுமே தரல்ல! வெறுங் கையோடுதான் வந்திருக்கிறேன். என் தாத்தாவும், அம்மேயும் பாவம் ! என்னாலே கவர் டப்பட போறாங்க நோனா!. பெரும் கனவுகளோட என் புருசன், பிள்ளைகளைப் பிரிஞ்சி போனேன்! என்னத்தைக் கண்டேன் நோனா! கஷடங்களைத் தவிர! எல்லாம் முடிஞ்சு போச்சு இனி நான் உயிரோட இருந்தும் செத்த மாதிரிதானே? மத்தவங்களுக்குப் பாரந்தானே? என்ன நோனா! நான் சொல்லுறது சரிதானே?”
கண்ணிருக்கும், விம்மலுக்கும், பெருமூச்சுக்கும், விரக்திக்கும் மத்தியில் அந்த அப்பாவிப் பெண் Gäbt_LI6.
’அழாதே தமயந்தி உன் கெட்ட காலத்துக்கு கெட்ட சனங்களின் கையிலே அகப்பட்டு இப்பிடி யெல்லாம் துன்பப்பட்டு விட்டாய்! எப்படியோ கடவுள் கிருபையால், ஊருக்கும் வந்துவிட்டாய்! உன் அப்பா, அம்மாவையும் பார்த்துவிட்டாய் உன் புருசனும் பிள்ளைகளும் உன்னைப் பார்க்க வாறாங்க! மணிசருக்கு எல்லாக் காலமும் கஷ்ட காலமா? இல்லை! நிச்சயம் நல்ல காலம் வரும்! உன் உடல் காயங்களுக்கு மருந்து போடு கிறார்கள்தானே? பார்! இன்னும் பத்து நாளையில புண்ணெல்லாம் மாறிப் போயிடும்! கால்களுக்கும் நல்ல வைத்தியம் பார்த்து குணப்படுத்துவாங்க! நீ நிச்சயமாய் ஒன்று, இரண்டு மாசத்திலை குணமாகி எழுந்து நடப்பாய் அழாதே தைரியமாய் இரு உன் தாத்தாவுக்கும் அம்மாவுக்கும் தைரியம் சொல்லு!”
இப்படிக்கூறி வலிந்து புன்னகை செய்தாள் நிர்மலா. தமயந்தியின் கையைப் பிடித்து, அக் கைக்குள் ஆயிரம் ரூபா நோட்டு ஒன்றை வைத்து மூடினாள்.
இது ஒரு மல்ல
வெளி டொமினிக் ஜீவாவின் 50 இரண்டாம் பதிப்பு த்யாரா முன்பதிவு செய்
 
 
 
 
 

‘இது என்ன நோனா! நான் உங்ககிட்ட முன்பே சல்லி வாங்கினதுதானே!. இப்பவுமா?. உங்களுக்கும் ஏழைகளான எங்களுக்கும் என்ன உறவு நோனா! நீங்க எங்க மேலே ரொம்ப நேசம் காட்டுறீங்க! உங்களுக்கு நாங்க எப்படி நன்றி காட்டப் போறோமோ, தெரியலை நோனா?” அவள் மனம் நெகிழ்ந்தாள்.
‘இங்க பார் தமயந்தி! இது ஒன்றும் உன்ர பிரச்சினைகளைத் தீர்க்காது! எல்லாம் மனிசருக்கு மணிசர் காட்டுகிற இரக்கந்தான். இதுக்கு என்ன நன்றி?. ஏதாவது வாங்கிச் சாப்பிடு! உன் எதிர்காலத்திற்கும் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிற மற்றப் பெண்களுக்கும் உதவுறதுக்கு, நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கத்தின்ர முக்கியமான கடமை இல்லையா? அதுமட்டுமில்லை, அவங் களுக்கு முற்பாதுகாப்பு, வேலை செய்யிற் இடத்தில இம்சை செய்யாமல் இருக்க பாதுகாப்பு, பணத்தை ஒழுங்காய் பெற்றுக் கொள்ளவும், அதை வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் வசதி செய்து குடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்புத்தான். இதுக்கு மக்களாகிய நாங்கள்தான் தூண்டுதலாக இருக்க வேணும்! எண்டாலும் எங்க நாட்டுப் பெண்கள், தங்கட குடும்பக் கஷ்டங்களை தீர்த்துக் கொள்ள இப்பிடி வெளிநாடுகளுக்கு, குடும்பங் களை விட்டு ஓடாமல், இங்கேயே அவங்க வேலை செய்து சம்பாதிக்க வழி செய்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!” என்றாள் நிர்மலா.
அந்த மூவரும் அவளை வியப்புடன் பார்த்து நின்றனர்.
一ー
பிகைப் பந்தல்
யீடு
சிறுகதைகளின் தொகுப்பு கின்றது. தேவையானோர் து கொள்ளலாம்.
ஸ் 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 27
Caes/O12shes ta.
ᏭIᏓaᏪᏋᎲaᏍ89"
Quality 0llsel Phinlers & Scanning, Planning, Pla 8inding & tlamullachu
984. Uuekamanda Tթl . 23 Fix Ol
26
 
 
 

رعuحم آکر مa حل؟
'riniers
hy
Computer Jype Sellers, le & Positive Processing, ring o Exercisr 3ooks
Hill, Colombo — I3. վվԱվի -15
மல்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 28
ᏑuᎠᏑᏱᏁᏍus வாசிப்புத்துறையில்
ണ്ണു 6öT
CY 6 سمبر) U oase) -62. (ો 乐f
F6D6)
இருந்த ஆழ்ந்
பரிமாற்றமும், வெகுவாகக் குல அங்கு வலEக ( விசை கொள் கிடப்பதையும் இலக்கியம் சார் புதிய அலை ஆ 6|6)60(I LIT +[ உள்ள கல்லூரி வாங்க வேண்டுப்
அற நாவல், சி
ஆய்வு என்று
இறக்குமதியாகு
நிரப்பிக் கொன
DIT 6006).jİJ56 ஒரு பொதுவான உந்து சக்தியா காரணங்கள் எ6
புதிய கல்வி மாணவர்களுக்கு
B60) DTB 996
கற்பித்த6ே படிவங்கள் தயா இதனால் ஆசிரி எனவே மாணவ சிந்தனையை உ
மாணவர்கள்
விடயம். சங்கில JITL ġIT 60D6)856ffg
பெறுவதிலும் ப
27
 

றைய இளந்தலைமுறையினரின் நவீன தமிழ் இலக்கிய ாசிப்பில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக 69(5 பாதுவான கருத்து நிலவுகின்றது. இதைப் பல ரணங்களைக் கூறி நியாயப்படுத்த முடியும்!
மட்டத்தில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன் த வாசிப்பும் கலந்துரையாடல் மூலம், கருத்துப் கிரகித்தலும், சிந்தனைத் தூண்டலும் சமகாலத்தில் றைந்துள்ளது. புத்தகசாலைக்குச் செல்லும் ஒரு வாசகன் நோக்கம் கொண்ட சஞ்சிகைகள், நூல்களின் விற்பனவு வதையும், நவீன இலக்கியம் பேசுபவை கிடப்பில் அவதானிக்க முடியும். பாடசாலை நூலகங்களில் நவீன ந்த நூல்கள் கொள்வனவு செய்ய வேண்டுமென்ற ஒரு ங்காங்கே வீசி ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முயன்றாலும் லைகளிலும் நூலக வசதிகள் இல்லை. நூலகங்கள் களிலும் நவீன இலக்கியம் சார்ந்த நம் நாட்டு நூல்களை b என்ற உத்வேகம் இன்னமும் முனைப்புப் பெறவில்லை.
றுகதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, விமர்சனம்,
எதை எடுத்துக் கொண்டாலும் தமிழகத்திலிருந்து ம் நூல்களும் சஞ்சிகைகளுமே புத்தக அலுமாரிகளை
டிருப்பதைப் பார்க்கலாம்.
மத்தியில் தரமான ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றிய
கண்ணோட்டமும், ஆசிரிய ஊக்குவிப்பும், வழிகாட்டலும், க அமையாமல் இருப்பதுதான் இதற்கு அடிப்படையான OT6) TLD.
பிமுறை நடைமுறைக்கு வந்த பின்னர் ஆசிரியர்களுக்கும் 5ம் நேரமின்மை ஒரு பிரச்சினை மட்டுமல்ல, பெரும் ர்களை அழுத்திக் கொண்டிருக்கிறது.
லாடு மாணவர்களை மதிப்பீடு செய்வதும், உரிய ரித்து நிரப்புவதிலுமே அவர்களது நேரம் கரைகின்றது. யர்கள் எழுதுவினைஞர்களாகக் கூடு பாய்கின்றனர். ர்களிடையே மொழிச் செறிவை விதைத்து இலக்கியச் உருவாக்குவது அவர்களுக்கு முடியாததாகின்றது.
i எதிர்நோக்கும் நேரமின்மை பரிதாபத்திற்குரிய ஒரு
Sத் தொடர் போல் காலை தொடக்கம் மாலை வரை லும், கல்லூரிகளிலும் பாடங்களை கிரகிப்பதிலும், பயிற்சி ல மணித்தியாலங்கள் கழிந்துவிட, மாலை முழுவதும்

Page 29
சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட பிரத்தியேக ரியூசன் வகுப்புகளுக்குச் சமூகமளிப்பது கட்டாயத் தேவையாகி விட்டது. அதுவும் பெரும்பாலும் விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கணக்கியல் போன்ற பாட நெறிகளிலேயே மாணவர்களின் ஆர்வம் முடங்கிக் கிடக்க, மொழித்துறையில் கற்றுத் தேர்ச்சி படைவது பூஜ்யமே. வெறும் பரீட்சை வினாக்களுக்கு விடைகள் அளிப்பதற்கான ஒரு மொழிப் பயிற்சி மட்டுமே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
நவீன இலக்கியத்தில் ஒரு பொதுவான கண்ணோட்டம் இல்லாதவர்களே மொழியை, இலக்கியத்தைக் கற்பிக்கின்றனர். இவர்களும் மரபு வாதிகளின் வாரிசுகளாகவே விளங்குகின்றனர். பார்க்கப் போனால் இன்றைய விரிவுபடுத்தப்பட்ட கல்வித் திட்டத்தில் மேலதிக வாசிப்புத்துறைக்கு இடமில்லை. ஒப்படைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைக் கல்வியே கோலோச்சு கின்றது. பாடசாலை நூலகங்களும் ஒழுங்காக இயங்குகின்றதா? என்பது கேள்விக்குறியாகின்றது.
இன்றைய வாசகர்களின் முன்னேற்றத்திற்கு தொலைக் காட்சி மற்றுமொரு தடைக் கல மாணவர்களுக்குக் கிடைக்கிற சிறிது நேர gᏭᏓᎥ Ꭻ60)6)jᏓᎥ IlᎠ இந்த டி.வி. முழுமையாக விழுங்கிவிடுகிறது.
இன்று தொலைக்காட்சி ஒரு கவர்ச்சிப் பொருள். ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத இளைய தலை முறையினரைக் கவரும் நிகழ்ச்சிகள் தடையின்றி காட்டப்படுவதால் இளைஞர்கள் மயங்குவது இயல்பே
சமகால வாசிப் புத் துறை புதிய தலை முறையினரின் வாசிப்பை மட்டும் ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்லவில்லை. தரமான இலக்கியக்காரரையும், வாசகர்களையும் நுணுக்கமாக அவதானித்தால் அவர்களிடத்திலும் தேக்கத்தின் உச்சக் கட்டம் ஊடுருவியிருப்பதை நாம் கான (Uplgu|LĎ.
புற்றீசல போல் இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் நூல்களை நுகர்பவர்கள் யார்? விலை கொடுத்து வாங்குபவர்கள் எல்லாம் உண்மையில் மிகுந்த ரசனையுடன் வாசிக்கிறார்களா? என்பது ஆய்வுக்குரிய விடயம்.
நாவல்களாக இருக்கட்டும், கதைத் தொகுப்பு களாக இருக்கட்டும். கவிதைத் தொகுப்புகளாக இருக்கட்டும் அல்லது வேறு நூல்களாக இருக்கட்டும். வாசித்தீர்களா? என்று ஒரு கேள்விக் கொக்கியைப் போட்டுப் பார்த்தால் கிடைக்கும் வாக்குமூலம் மிக
29
 

மோசமாக இருப்பதை அவதானிக்கலாம்.
`விமர்சனம் எழுதவேண்டும் அல்லது மேடையில் ஆய்வுரை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகத் தட்டிப் பார்த்தேன்.”
”நேரமில்லை. எடுத்து வைத்திருக்கிறேன் கட்டாயம் வாசிக்க வேண்டும்.”
“இரண்டு அத்தியாயங்கள் படித்தேன். இன்னும் முடிக்கவில்லை”
மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். நல்லாயிருக்கு.” ۔ ; s
நல்லாயிருக்கு என்பதும் சம்பிரதாயபூர்வமான ஒரு சிறு அபிப்பிராயம் மட்டுமே. அதற்கு மேல் சொல்ல வேண்டுமென்றால் கருத்தூன்றிப் படித்திருக்க வேண்டும்.
’கிடைக்கவில்லை. இனித்தான் தேடவேண்டும்.”
“நான் நிறையவே வாசிக்கிறேன்.” என கதை விடுபவர்களிடம் என்னென்ன படித் தீர்களென விசாரித்தால் பேந்தப் பேந்த விழிப்பார்கள்,
மேலே தொனித்த கருத்துக்களிலிருந்து வாசிப்பு முழுமையாக இடம்பெற்றிருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடியுமா?
“இரண்டு முறை எழுத்தெண்ணிப் படித்தேன். கருத்துக்களைத் திணிக்காமல் சமூகாலப் பிரச்சினை ஒன்றை லாவகமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.”
மிகவும் அபூர்வமான ஒரு கருத்து இது. இப்படி ஒரு கருத்தைக் கேட்பது மிகவும் அரிது. ஆனால் சிலர் புகழுக்காகவும் சொல்வதுண்டு!
’அதை நான் வாசிக்கவில்லை. எழுதியவர் எங்கட வட்டத்தைச் சேர்ந்தவரல்ல.
“இப்பதான் 'ஈமெயிலில் வாசிக்கலாமே.”
சி.டி.யில் பதிவாக்கி வைத்திருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கு. பிறகு வாசிக்கலாம்.
இணையத்தளங்கள் ஊடாக தொடர்புகள் எனும் விடயம் இளைஞர்களை மிகவும் கவர்ந்துள்ளதொன்று. இதில் உள்ள அதீத ஈடுபாடு வாசிப்புத்துறையை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இது இப்பொழுது சிறிதாக இருப்பினும் எதிர்காலத்தில் வாசிப்பிற்கு மிகவும் அச் சுறுத்தலாக இருக்கப் போவது இதுவேயெனிலாம். -
மல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 200பு

Page 30
இவ்வாறாகப் பல்வேறு கார0ைங்களால் இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமல்ல வளர்ந்த முதிர்ந்த சிறப்பு வாசகர்களையும் பாதித்துள்ள்து.
சமகால ஊடகங்களின் அமளிகளின் ஊடுருவலால் மிகுந்த ரசனையடன் சொற்களை நயந்து, வசனங்களின் பொருளை அல்லது தொனிட் பொருளை உள்வாங்கும் ஆழ்ந்த வாசிப்பு மெல்லமாக அருகி வருகிறது. இலக்கியக்காரர் கூட பெரும்பாலும் முழுமையான ஆர்வத்துடன் வசிக்காமல் நுனிப்புல் TTTTS TcMCMT T LLTLL S TTTMS TLLLLLLL LLc0 முறையில் கிரகித்துக் கொள்கிறார்கள். அநுபவட் பட்டவர்களுக்கு இது பெரிய விடயமல்ல என்று கருதினாலும் சிலவேளைகளில் அரைகுறை வாசிப்பால் அவர்கள் வெளியிடும் கருத்துக்களில் முரண்பாடுகள் தோன்ற வாய்ப்பிருக்கிறது.
சில வாசகர்களுக்கு நூலாசிரியர்களின் பெயரைக் கண்டவுடனேயே ஒருவகையான அலர்ஜி ஏற்படுவதுண்டு. இது சில இலக்கியக் குழுமங்களின் விதைப்பு. இதனால் சில வாசகர்கள் செக்கு மாடு களாக ஒரே வட்டத்தைச் சுற்றுகின்றனர். இதனால் தேறுவது சிந்தனைத் தேக்கந்தான்!
மாணவர்களுக்கு சின்னஞ்சிறு வயதிலேயே வாசிப்பு ஆர்வத்தை ஊட்ட வேண்டும். பாடசாலை நூலகங்களில் வெறும் புத்தகங்களைக் குவிப்பதனால் பிரயோசனமில்லை. பாடசாலைகள் தோறும் நவீன இலக்கிய அமைப்புகள் உருவாகி பொறுட் பாசிரியர்களின் வழிகாட்டலில், நூலகங்களுக்குச் செல்லும் மாணவர்களின் வாசிப்பு நெறிப்படுத்தப்பட வேண்டும். எத்தனைதான் தடைகள் வந்தாலும் மாணவ உள்ளங்களில் விதைக்கப்படும் ஆர்வ விருட்சமாக வளர்ந்து விடும். ஆர்வம் அனைத்தையு மிஞ்சி விடும் என்ற நிலை தோன்றிவிடும். நூலகர்கள் வெறும் கொடுப்பவர்களாகவும் எடுப்பவர்களாகவு இல்லாது அவர்களும் சிறப்பு வாசகர்களாக தம்ை ஆக்கவேண்டும்.
எக்கால கட்டத்திலும் வெளிநாட்டு மாணவு களின் வாசிப்புத்துறை சீராகவே இயங்கிக் கொண் ருக்கின்றது என்பதற்கு உதாரணமாக ரஷ்ய நா திகழ்கிறது.
ரஷ்ய நாட்டு மாணவர்கள் தமது ஒய்வு நேரத்ை வாசிப்பதில்ேயே கழிப்டார்கள் என்று ரஷ்ய நாட்டுக் விஜயம் செய்து வந்தவர்கள் பெருமைப்படுகிறார்க
நம் நாட்டு மூத்த எழுத்தாளர்களின் செவ்
29

களையும் தமிழ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் களின் பின்னணியையும் பார்க்கும் பொழுது, அவர்கள் தேர்தெடுத்துக் கொண்ட இலக்கியத்துறையில் வெளியான நூல்கள் அனைத்தையும் ஆழ்ந்து வாசித்த பிறகே எழுதத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடியும்.
ஆழமான வாசிப்பு நல்ல இலக்கியவாதிகள் தோன்றவும், அவர்களிடமிருந்து நல்ல இலக்கியங்கள் வெளியாகவும் கால்கோலாக அமைகிறது என்பது ஒருபுறமிருக்க, வாசிப்பு வாசகனின் உள்ளங்களைப் பண்படுத்தி பக்குவப்படுத்துகிறது. பரந்த மனதை உருவாக்குகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் வாசிப்பு மனிதன் மனிதனாக வாழ மனிதனைப் பூரணப்படுத்துகிறது. இதனை ஆங்கிலோயன் என்றோ Gol Ff6d6S 6 LIT6öI. “Reading makes a man perfect” என்று. இக்கருத்தினை காலத்திற்குக் காலம் வளரும் தலைமுறையினருக்கு உணர்த்துவது இலக்கியக் காரர்களின் கடமையாகும்.
உலகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் நிகழும் புதினங்களை அவ்வப்போது இலத்திரனியல்
ஊடகங்கள் காட்டினாலும் வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்வதில் ஒரு தனி ரசனை இருக்கத்தான்
செய்கிறது.
எமது உள்ளங்களில் கிளர்ந்தெழும் கருத்துக்
களை வெளியிட ஒரு சாதனமாகப் பயன்படுவது
மொழி. மொழி சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டு மெனில் ஓயாத வாசிப்பு நிகழவேண்டும். வாசிப்பு மூலம் சொல்வளம் பெருகி, எமது கருத்துக்களை வெளியிடும் போது அவை கைகோர்த்து நின்று உதவ வேண்டும். வாசிப்பதன் மூலம் புதுப்புதுச் சொற்களை நாம் தரிசிக்க முடியும்.
ஆகவேதான், தேக்கமடைந்துள்ள எமது மாணவர் களின் வாசிப்புத்துறை மீண்டும் செழுமையடைந்து அவர்களிடமிருந்து நல்ல இலக்கியச் சிந்தனைகள் தோன்ற வழிவகைகள் செய்வது எமது கடமையாகும். எனவே தேக்கமடைந்துள்ள நவீன இலக்கிய வாசிப்பை மீண்டும் நகர்த்துவதற்கு எமது மூத்த பாப்பாக்களும் வாசிப்பில் முனைப்புக் கொண்டு இளையோருக்கும் மனவர் 1) (ஒளுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்பது காலத்தின் கட்டளையாகும்!
ஒரு நல்ல வாசகன் நிறைய தகவல்கள் கொண்ட மனிதனாகக் காட்சி தருவான். தகவல்கள் நிறைந்த மனிதன் பின்னர் மிக முக்கியமான ஒரு மனிதனாகக் கருதப்படுவான்.
மல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 31
தையின் இரு பக்கங்களும் அலங்காரப்
பூமதில்கள். அவற்றுக்கிடையே எறியப் பட்ட பொருட்கள் குவியலாகப் போடப்பட்டிருந்த இடத்திற்கு அருகே இருபக்கமும் நன்றாக நோட்ட மிட்டபடி நான் போய்க் கொண்டிருக்கிறேன். கறுத்த மேகக்கூட்டம் வானத்தில் ஒருமித்து சேர்ந்திருக் கிறது. சூரியவெளிச்சம் சுத்தமாய் இல்லை. குளிர்ச்சியான தன்மை இன்னும் தொடங்கா விட்டாலும் ஆகாயம் மழை வருமாப் போல முட்டிக் கிடக்கிறது. பளிச்சென அணிந்திருந்த மக்கள் விறு விறுவென அங்கும் இங்கும் விரைகின்றனர். சொகுசு வாகனங்களின் தொடர்ச்சியான ஒட்டம். அவற்றினால் பிரதான பாதை நிரம்பி வழிகிறது. கடைகள் இன்னும் மூடப்படவில்லை. நகரத்தின் பரபரப்புத் தன்மையிலும் மாற்றமில்லை. இரவைத்
தொட ஒருமணி நேரமிருக்கிறது. அதற்கிடையில்
நான் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை வந்துவிடு கிறேன். என்றாலும் நான் தேடி வந்த சாமான் இன்னும் அகப்படவே இல்லை.
அது டோக்கியோவில் சின்ஜ"கு பக்கமாகச் செல்லும் பிரதான வீதி. நாலா பக்கங்களிலும் வாகனங்களின் இடைவிடாத விரைவு. வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டதால் நகர வீதிகளின் பரபரப்பு மேலும் அதிகரிக்கின்றது. அவர் களது செயல் முழுநாளும் கொட்டப் போகும் மழைக்குத் தயாராவது போல் தெரிகிறது.
வீதி வழியே மேலும் முன்னேறுகிறேன். நான் தேடுவதெல்லாம் பாவனைக்குப் பிறகு தூக்கி யெறியப்பட்ட குடையே கச்சிதமாகக் கத்தரிக்கப் பட்டு சரிபடுத்தப்பட்டிருந்த பூமதில்களுக்கிடை யிலோ, அல்லது அதற்கருகிலோ ஒரு குடையை
30
 
 

Ö56) -
யாவது இனி னும் காணோம். கவர்ச்சிகர மான கடதாசிப் பெட்டி கள், பிளாஸ்ரிக் பாத்தி ரங்கள், காகிதாதிகள் குவிந்திருந்த குப்பை களுக்கிடையே இன்று பார்த்து எவருமே ஒரு குடையாவது போட்டி ருக்கவில்லை.
மழை விட்ட கை யோடு சில ஜப்பானியர் கள் தாம் பாவித்த குடையை வீசியெறிந்து விட்டுச் செல்வது பற்றி எனக்கு நன்கு தெரியும். சில இடங்களில் அவ் வாறான பல குடைகளை தேர்ந்தெடுக்க முடியும். அவ்வாறு ஜப்பானியரால் தூக்கியெறியப்பட்ட, ஆனாலும் நன்கு பாவிக்கக்கூடிய ஒரு குடையைத் தேடித்தான் வீதி தோறும் அலைந்து கொண்டி ருக்கிறேன். அதிக தூரம் செல்லும் முன்பு அவ் வாறானதொன்று எண் கைக்குக் கிடைக்கு மென்பதில் அதீத நம்பிக்கை.
மழை இன்னும் தொடங்கவில்லை. சிலமணி நேரங்களில் 'பெய்து விடுவேன்’ எனும் கருமேகச் சிதறல். சின்னதாய் மழை பெய்து ஓய்ந்தாற் கூட, இவ்வாறான வீதிகளில் எறியப்பட்ட குடைகளைத் தாராளமாக சேகரிக்கீ முடியும். ஜப்பானியர்களுக்கு

Page 32
குடை அவ்வளவு பெறுமதியான பொருள் அல்ல.
சில நாட்களாகவே மாலையானதும் விடாத ழை. அதனால் நகரத்தில் எந்தவொரு இடத் திற்கும் போகமுடியாத நிலை, காலையில் மழை இல்லாவிட்டாலும், வேறு அலுவல்கள் இருந்ததால் செல்ல முடியவில்லை. மாலை நேரங்களில் மட்டுந் , தான் வெளியில் செல்ல நேரம் கிடைக்கிறது. என்றாலும் அந்நேரமாய்ப் பார்த்து மழை தொடங்கு வதால் குடை இல்லாமல் வெளியில் செல்வது ஆபத்து.
இன்னும் இரண்டு முன்று நாட்கள்தான் டோக்கி யோவில் தங்கியிருப்பேன். அதற்குள் தேவையான இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்றேயாக வேண்டும்.
குடையொன்றை பணங்கொடுத்து வாங்குவது வீண் செலவு அதற்காக ஆயிரம் யென்கள் வரை செலவழிப்பது அப்பட்டமான அநியாயம். இலங்கை யில் அதே விலைக்கு ஐந்து குடைகளையாவது வாங்கித் தள்ளலாம். விலை கொடுத்து வாங்கி னாலும் அநாவசியம். சில நாட்கள் பாவித்து விட்டு வீசியெறிந்த ஒன்றைத் தேடுவதுதான் புத்தி சாலித்தனம்.
அவ்வாறான ஒன்றை இலகுவாகவே தேடிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட, குடை வாங்கும் எண்ணம் அப்படியே அமிழ்ந்து விட்டது.
அந்தத் திட நம்பிக்கையில்தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து கிளம்பினேன். இப்போதைக்கு மிகத் தொலை தூரம் வந்து விட்டேன். இதுவரையில் ஒரு குடையாவது அகப்பட்டால்தானே? நீலவானம் கருமேகக் கூட்டமாக நிறம் மாறியிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் மழை பெய்யக் கூடிய அறிகுறி. பாதையில் போவோர், வருவோர் அனைவரது கைகளிலும் குடைகள். அவற்றை ஆவல் ததும்ப பார்க்கிறேன். அதே நேரம் எனது நிலைமையை நினைத்தும் எரிச்சல் பொத்துக் கொண்டு வருகிறது. எனக்குக் குடையொன்று கட்டாயமாகத் தேவை. ஆனால் ஒன்றைக் கூட தேட முடியவில்லையே?
பிரதான பாதையில் தவறினாலும் சிலவேளை ஒழுங்கைகளில் கிடைக்கலாம் என யூகித்த நான், ஒழுங்கைப் பக்கமாகத் திரும்புகிறேன். அதன் இரு பக்கங்களும் கவனமாகப் பார்த்துக் கொண்டே போகிறேன். அவ்வாறான குடையைக் காணவே
31
 

கானோம்.
குடையொன்றை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை - என்ற தீர்மானாத்திற்கு வந்து விடுகிறேன் ஆயிரம் யென்கள் என்றால் சும்மாவா? இலங்கைப் பணத்தில் எண்ணுாறு ரூபா வரை யிலான பெருந்தொகை. ஒரு தற்காலிக குடைக்காக அவ்வளவு தொகையை தாரை வார்ப்பது அபாண்டம். சுற்றும் முற்றும் பார்த்த எனது கண் களுக்கு குடை விற்பனை செய்யும் கடையொன்று தட்டுப்பட உள்ளே நுழைகிறேன். பலதரப்பட்ட குடைகள் ஏராளமாக அடுக்கப்பட்டிருந்தன. அவற் றின் விலைகளை நுணுக்கமாக ஆராய்கிறேன். ஒன்றின் விலை ஆயிரத்து முந்நூறு யென்கள். இன்னொன்று ஆயிரத்து இருநூறு, அடுத்தது ஆயிரம். அதைக் கைக்கு எடுத்து உயரத் தூக்கிப் பார்க்கிறேன். கவர்ச்சியாய், கைக்கு வாகாய் இருக் கிறது. என்றாலும் ஆயிரம் யென்கள்! “ஒரு குடைக் காக அவ்வளவு த்ொகையை விரையமாக்குவது மடத்தனம் குடையை இருந்த இடத்தில் வைத்து விட்டு வெளியே வருகிறேன். மனத்துள் எதிர்ப் பார்புக்கள் சிதறிப்போன உணர்வு. அத்தோடு விரக்தி. தோல்வி. சலிப்பு எல்லாம்! இன்று பார்த்து எவரும் ஒரு குடையையாவது பாதை யோரத்தில் போடாமல் இருக்கிறார்களே. ஏன்?
ஒழுங்கை வழியே நேரே சென்ற நான், அப்புறப்படுத்தப்பட்ட சாமான்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் போய் நிற்கிறேன். யாராவது கவனிக்கிற்ார்களா என்று அடிக் கண்ணால் நோட்டமிடுகிறேன். எவரும் என் மீது கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை. சந்தேகம் தீர்ந்ததும் குப்பைக்கு அருகே, பாதையோரமாக நின்று அவற்றின் மீது ஊடுருவுகிறேன். பாதையில் பலரும் என்னைக் கடந்து செல்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்துச் சென்ற குடை அங்கும் இல்லை. சுற்றி வளையப் பார்த்துவிட்டு மீண்டும் அங்கிருந்து கிளம்புகிறேன்.
எதிர்ப்பட்ட குப் பைகளில் வேண்டியளவு பெறுமதியான பொருட்கள் தாராளமாக இருந்தன. எனக்கு அவற்றால் ஒரு பிரயோசனமுமில்லை. எனக்கு தேவையெல்லாம் ஒரு குடை அந்த இடங் களில் இது இல்லை. மீண்டும் பிரதான பாதைக்கு வந்த நான் முன் நோக்கிச் செல்கிறேன். பூமதில் கள். குப்பை மேடுகள் ஒவ்வொன்றையும் நுணுக்க மாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். ஓர் இடத்திலாவது குடையைக் காண முடியவில்லை.
சில்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 33
பாதையில் போவோர், வருவோர் அனைவரது கைகளிலும் மழையை எதிர்பார்த்து விரிந்த குடைகள். என் கை மாத்திரம் வெறுமை. எனது அவசரத் தேவை ஒரு குடை. அது இல்லாவிட்டால் இரண்டு மூன்று நாட்களுள் நான் போகத் திட்ட மிட்ட அனைத்துமே பாழ்.
எதிரே குடைகள் விற்பனை செய்யும் பிரமாண்டமான கடை. வேறு வழியின்றி அதற்குள் நுழைகிறேன். பல அளவுகளில், பல விதங்களில் குடைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ் வொன்றையும் பரிசீலனை செய்கிறேன். ஒன்று மூவாயிரம் யென்கள்; இன்னொன்று ஆயிரத்து ஐந் நூறு, மற்றது ஆயிரத்து எண்ணுறு, அம்மாடியோவ்! அதில் ஒன்றையேனும் என்னால் சமாளிக்க முடியாது. பல குடைகளைக் கைக்கு எடுத்து பல முறை சோதித்துப் பார்த்த நான் இருந்த இடத்தில் வைத்துவிட்டு திரும்புகிறேன்.
எதிர்பார்ப்பு முறிந்ததால் ஏற்பட்ட கோபம் துளிர்க்கத் தொடங்குகிறது. இன்னும் சற்று நேரத்தில் குடையொன்றைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வந்த வழியே திரும்ப வேண்டியதுதான்! அப்படியானால் மறுநாள் குடை யில்லாமல் அவதிப்பட வேண்டி ஏற்படும். அதனால் எப்பாடு பட்டாவது குடைய்ொன்றைத் தேடிக் கொள்ள வேண்டும்.
காணுமிடமெல்லாம் குடைகள் விற்பனை செய்யும் கடைகள். ஏதும் செய்ய இயலாமல் மற்று மொரு கடைக்குள் நுழைகிறேன். கழுகுப் பார்வை பார்க்கும் என்னைப் பற்றி அக்கறை கொள்வோர் அங்கு இல்லாததால் சிறிது நிம்மதி. குடைகளின் கவர்ச்சியை, வடிவமைப்பை விட அதில் குறித் துள்ள விலையைத்தான் உன்னிப்பாகக் கவனிக் கிறேன்.
விலையை பெரிதாக எழுதி காட்சிக்கு வைத் திருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை. ஆக விலை குறைந்த குடை ஆயிரம் யென்கள். குடையை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு இருந்த இடத்திலேயே வைத்து விட்டுத் திரும்பு கிறேன். எதிர்பார்ப்பு தூர்ந்து போய் சோர்ந்து திரும்பிய போது கடையின் ஒரு மூலையில் குவிக் கப்பட்டிருந்த குடைகள் கணி களில் படுகின்றன. அசிரத்தையுடின் அங்கே போகிறேன். ஒரு கூடைக்குள் இருந்த குடை தொளாயிரத்து ஐம்பது யென்கள். மற்றக் குடைகளை விட விலை குறைவு. கிண்டிக் கிளறி ஒரு நல்ல குடையைத்
፱፮
 

தேர்ந்தெடுத்து நாலுபக்கமும் புரட்டிப் பார்க்கிறேன். நீண்ட நேரமாக அப்படியும் இப்படியும் கை மாற்றி மாற்றி வாங்குவதா இல்லையா என நேரத்தைக் கடத்துகிறேன். என்ன பெரிதாகக் குறைத்து விட்டார்கள்? ஐம்பது யென்கள் தானே! சும்மா, இலவசமாக ஒரு குடையைத் தேடிக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கும் போது இவ்வளவு பணங் கொடுத்து எதற்கு வாங்க வேண்டும்? குடையை கூடைக்குள் சொருகி விட்டு வெளியே வருகிறேன்.
பிரதான வீதி வழியே நேரே செல்வதற்குப் பதில் வந்த வழியே திரும்புகிறேன். அதுவரைக்கும் நன்றாகவே களைத்துப் போனேன். கால்கள் வேறு வலிக்கின்றன. சூரியனையும் காணோம். மேகங்கள் குவியல் குவியலாக இருந்ததெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கனமழை இருட்டு. இன்னும் சற்று நேரத்தில் மழை படபடவென்று இறங்கக் கூடும் என்பதால் பாதை மேலும் சுறுசுறுப்பாகிறது. போவோர், வருவோர் அனைவர் கையிலும் குடை அதைப் பார்க்கும் போது எனக்குக் கோபம் பற்றிக் கொண்டு வருகிறது.
குடை தேடும் படலத்தைக் கைவிடுகிறேன். கால் வலியையும் பொருட்படுத்தாது அவசர நடையாய் விடுதியை நோக்கிச் செல்கிறேன். அந்தளவுக்கு நான் சோர்ந்து போயிருக்கிறேன்.
விடுதிக்கு வந்ததும் டோக்கியோவில் ஏற் கனவே போகவிருந்த ஓர் இடம் ஞாபகத்தை முட்டு கிறது. ’ச்சே. குடை தேடிய நேரத்தில் ஓரிரண்டு இடத்திற்காவது போயிருக்கலாமே? இன்னும் சில நாட்களுள் எனது அனைத்துப் பயணங்களையும் முடித்தாக வேண்டும். என்றாலும் மாலையில் கொட்டும் மழைக்கு முன்னால் செய்வதறியாது தடுமாறுகிறேன். அதனால் எப்படியாவது ஒரு குடை தேடியாக வேண்டும்.
வெளியே மழை கொட்டுகிறது. இனி, இன்றைய மாழைப் பொழுது முழுவதும் நாசம்தான். நாளை சின்ஜ"கு பாதைக்குப் பதிலாக வேறு வழியைத் தேர்ந்தெடுத்துத் தேடுவதுதான் புத்தி. இன்று நான் போன பகுதி அதிகமாக அலுவலகங்கள் உள்ள பகுதி. அதனால்தான் போலும் அப்பகுதிகளில் எவரும் குடைகளை எறிந்து விட்டு செல்வது குறைவு.
மறுநாள் மாலை. மழை தொடங்க முன்பே விடுதியிலிருந்து புறப்பட்டு கின்ஸா பகுதியை நோக்கிச் செல்லுத் தொடங்குகிறேன். எனக்கு அப்
6ëð)ð5 3961'Hí éb&órbwAsí 2ðre's - 2OOl;

Page 34
பகுதியில் வேறு ஓர் அலுவலும் இருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கின்ஸா - சின்ஜ"கு போலன்றி குடியிருப்பாளர்கள் நெரிசலாக வாழும் இடம். எனது தேவையையும் நிறைவேற்றிக் கொண்டு, ஒரு குடையையும் தேடிக் கொண்டு வரமுடியும்.
கின்ஸா செல்ல புகையிரதத்தில் ஏறிய நான், அடுத்த புகையிரதப் பாதைக்கு மாறுவதற்காக புகையிரத நிலையத்தில் இறங்குகிறேன். மேடைக்குக் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரயிலை நோக்கி சனத்தை விலக்கிக் கொண்டே முன்னால் செல்கிறேன்.
மேடையில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆசன வரிசையின் மூலையில் ஒரு குடை, கடும் ஊதா நிறப் பூக்கள் நிறைந்த புத்தம் புதுக்குடை, கடைசி ஆசனத்தில் சாத்தப் பட்டிருக்கிறது. அடுத்த மூலையில் ஒரு ஜப்பானியன் அமர்ந்திருக்கிறான். மற்ற ஆசனங்கள் எல்லாம் காலி. அவ்விடத்தில் சனநடமாட்டமும் குறைவு. நான் குடை இருக்கும் இடத்தைக் கடந்து சிறிது . தூரம் போய், மற்றவர்கள் காணாத வகையில் மீண்டும் திரும்பி மறுபக்கத்திற்கு வருகிறேன். மூலையில் அமர்ந்திருப்பவன் நிச்சயமாக குடையின் உரிமையாளனாக இருக்க முடியாது. ஏனென்றால் குடையை அவன் மற்ற மூலையில் வைத்திருக்க LDFT'LT6. -
குடை அழகாக சுருட்டப்பட்டு முடிச்சும் இடப் பட்டிருக்கிறது. யாராவது மறந்துபோய் வைத் திருக்கக் கூடும். அப்படிப்பட்ட குடையை எடுப்பதில் என்ன தப்பு? அதைத் தேடி உரிமையாளர் வரவா போகிறார்?
நான் குடை இருக்கும் இடத்தைக் கடந்து இன்னும் சிறிது தூரம் முன்னால் செல்கிறேன். அடுத்த புகையிரதம் தூரே இருந்து வருகின்ற சத்தம் கேட்கிறது. அதோடு சேர்ந்து மனிதர்களின் பரபரப்பும் அதிகமாகிறது. புகையிரதம் மேடையில் நிற்கிறது. இறங்கியவர்கள் கதைகளில் மூழ்கிய படியே நகர்கின்றனர். நான் சனங்களோடு சேர்ந்து, குடை இருந்த பக்கம் பார்த்தபடியே சிறிது தூரம் சென்று திரும்பவும் வருகிறேன். மறு மூலையில் அமர்ந்திருந்த மனிதன் நிறுத்திய புகையிரதத்தில் ஏறப் போயிருந்தான். ஓரிருவர் மாத்திரம் இங்கும் மங்கும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
நான் மேலும் இரண்டு மூன்று தடவை குடை
-
 

யிருந்த இடத்தைக் கடந்து மற்றவர்களுக்கு விளங்காத வகையில் பின்னால் செல்கிறேன். சூழ ஒருவரும் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்ட நான், ஒரேடியாக குடை இருந்த இடத்தை நெருங்கி சடார் என அதை எடுத்து முன்னால் நடக்கிறேன். யாராவது கவனிக்கிறார்களா என்று மெதுவாக நோட்டமிடுகிறேன். அப்பாடா! எவரும் பார்த்ததாகத் தெரியவில்லை.
நடையைத் துரிதப்படுத்துகிறேன். புகையிரத மேடையைக் கடந்து வெளியேறும் கதவுப் பக்கமாகப் போகிறேன். மனம் திக்திக்கென அடிக்கத் தொடங்குகிறது. அமைதியின்றி தவிக்கிறது. இன்னும் வேகமாக நடக்கிறேன். பதற்றம் குறைந்த பாடில்லை.
அதையடுத்து மனசுக்குள் பயமுரசு அடிக் கிறது. குழப்பமான எண்ணங்கள் ஊர்கின்றன. விபரீதமான காட்சிகள் நகர்கின்றன. குடையை அங்கு வைத்துவிட்டு உரிமையாளர் எங்காவது போயிருக்கலாம். சிலவேளை மலசல கூடத்திற்குச் சென்றாரோ என்னவோ? அப்படியானால் திரும்பவும் அதே இடத்திற்கு வருவார். மறதியாக வைத்து விட்டுப் போனாலும் தேடிக் கொண்டு வரலாம். அங்கே சிறு நிகழ்வு நடந்தாலும் புகையிரத நிலையப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறையிடுவது வழக்கம். அவர்கள் உஷாராகி விடுவார்கள். கடும் ஊதா நிறப் பூக்களையுடைய குடையை அடையாளம்காண்பது மிக மிக சுலபம்.
புகையிரத மேடையில் போவோர் வருவோ ரிடையே யாராவது ஒரு நபர் நான் குடையை எடுத்ததை தூர இருந்தே அவதானிக்க வாய்ப்பு உண்டு. நான் கையிலிருந்த குடையை இடது காலோடு சேர்த்து ஒட்டி வைத்தபடி எவரும் அறியாத வகையில் செல்ல முனைகிறேன்.
குடையைப் பற்றி பாதுகாப்பு உத்தியோகத்தர் களுக்கு முறைப்பாடு செய்தால் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஏனென்றால் நான் இன்னும் புகையிரத நிலையத்திற்குள்தானே நிற் கிறேன். கடும் ஊதா நிறப் பூக்களுடைய குடையை கையில் ஏந்தியபடி இருக்கும் என்னை சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியும். அப்படி ஏதும் நடந்தால் பெரும் அவமானம்தான்! அதனால் ஏற்படும் தலைக் குனிவை தாள முடியாமல் போய் விடும். அத்தோடு விட்டுவிடுவார்களா? பொலிஸ் பிரிவு. நீதிமன்றம். என அலைய வேண்டி வரும். விசேடமாக ஜப்பான் புகையிரத தொலைபேசி அசுர
சில்லிகை 39aus abat QbuDasi garauf - 2oolp

Page 35
வேகம். சில செக்கன்களில் முழுப்பகுதியையும் துளைத்து விடுவார்கள்.
இந்தப் புகையிரத நிலையத்தில் இல்லா விட்டாலும், மாறுகின்ற அடுத்த புகையிரதப் பாதை யில் என்னை நிச்சயமாக மடக்கிப் பிடிப்பார்கள். நான் குடையை எடுப்பதை யாராவது கண்டிருந் தால் எனது அடையாளம் அவருக்கு மறக்காமல் இருக்கும். நீல நிறக் காற்சட்டை, வெள்ளை ஷோட், கையில் சிவப்பு நிறக் கடதாசிப்பை. என்னை அடையாளம் காண்பதற்கு இதுவே போதும் சிவப்பு நிற கடதாசிப் பையிலிருந்த சஞ்சிகையை எடுத்து விட்டு அதைக் குப்பைத் தொட்டியில் போடுகிறேன். அப்பாடா, கண்டு பிடிப்பதற்கு இருந்த ஒரு அடையாளத்திலிருந்து தப்பி விட்டேன். இது சரி உடையை மாற்றவது எப்படி? இங்கிருந்து வெளியே பாய்வதுதான் ஒரே வழி வேறொன்றும் தோன்றவில்லை. புகை யிரதத்தில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
புகையிரத நிலைய சுவரில் பிரமாண்டமான ஒரு விளம்பரம். பரவிய பல நிறங்களின் பின்னணி யில் விசாலமான பாம்பு போன்ற உருவம். வெளியே பாய்ந்து எதையோ கெளவத் தயார் நிலையில் இருந்தது. அந்தக் கவர்ச்சியான விளம் பரம் கூட எனக்குள் பயத்தையே விதைக்கிறது.
மாறுவதற்கான புகையிரதப் பாதைக்கு வந்து
அங்கே மேடையின் பெரிய தூணில் சாய்ந்து கொள்கிறேன். குடையை இடது காலுக்கும், தூணிற் :
குமிடையே மறைத்துக் கொள்கிறேன். கடந்து போவோர் வருவோர் கைகளில் குடைகள். எனது கையில் குடை இருந்தாலும் பதைத்தபடி, மறைத்த படி நிற்கின்றேன்.
அடுத்த ரயிலை எதிர்பார்த்தபடி மேடையில் மக்கள் மொய்திருக்கின்றனர். வரவர சந்தடி கூடு கின்றது. எப்படியாவது இங்கிருந்து வெளியேறுவது தான் புத்தி. பாழாய்ப் போன புகையிரதமும் நினைத்த வேகத்தில் வருவதாகத் தெரியவில்லை. பயத்தினால் நெஞ்சுக்குள் வேர்க்கிறது. மாட்டிக் கொண்டால் ஏற்படும் மானக்கேட்டை போக்க முடியாமல் போய்விடும். முன்னைய புகையிரத மேடை பாதுகாப்பு உத்தியோகத்தருடன் இந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குடையைப் பற்றி விசாரிப்பார். அவரும் சகல விபரங்கள்ையும் விலாவாரியாகச் சொல்லி விடுவார். அது போதாதா இந்த ஆசாமிக்கு சகல விபரங்களையும் ஒலிபெருக்கி
R
 
 

மூலம் அறியத் தருவார். குடையை எடுத்த நான் வகையாக மாட்டிக் கொள்ளவது திண்ணம்.
கடும் ஊதா நிற பூக்களுடைய குடையைத் திருடிய நபர் நீல நிறக் காற்சட்டை, வெள்ளை ஷேர்ட் அணிந்துள்ளார். கையில் ஒரு சஞ்சிகை ஒலிபெருக்கியில் போகும் போது எல்லோர் முன்னிலையிலும் அகப்பட்டுக் கொள்வேன். அவ மானத்தால் வெந்து சாம்பராகி விடுவேன். எங்கள் நாட்டுப் பத்திரிகைக்காரர்கள் செய்திக்காக லோலோ என்று அலைகிறவர்கள். ‘இலங்கை நபர் ஜப்பானில் குடை திருடி மாட்டிக் கொண்டார் என்று கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்து விடு வர்கள். அதன் பிறகு இலங்கையில் உள்ளவர் களும் எனது ஈனத்தனத்தை அறிந்து கொள் வார்கள்.
புகையிரத மேடை ஒலிபெருக்கியில் ஓர் அறிவித்தல். ஜப்பான் மொழி என்பதால் ஒன்றுமே எனக்கு விளங்கவில்லை. இதயம் வேகமாய் பட படக்கிறது. சந்தேகமும் திகிலும் பரவ சுற்றிலும் பார்க்கிறேன். எங்கும் அமைதியற்ற சூழல். மக்கள் அங்குமிங்கும் போய்க் கொண்டிருக்கிறார்கள். சுற்றிவர உள்ள அனைவரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு நான் தூணின் மறுபக்கமாகப் போய் சாய்ந்து கொள்கிறேன். அப்போதுதான் என்னை முழுமையாக மறைத்துக் கொள்ள முடியும். என்றாலும் மனக்குழப்பம் குறைந்தபாடில்லை. சுற்றிலும் பார்க்கிறேன். பயமேகம் பலமடங்கு அதிகரிக்கிறது. முழு உடம்பும் வியர்வையினால் தெப்பமாகி விடுகிறது.
அதே சமயம் அருகிலிருந்த குப்பைத்தொட்டி கண்களைத் தொடுகிறது. தூணிலிருந்து மெதுவாக வந்து தொட்டி இருந்த பக்கமாக விரைகிறேன். குடையை குப்பைத் தொட்டியை நோக்கி எறி கிறேன். அப்பாடா. இப்போதுதான் நிம்மதியாய் மூச்சுவிட முடிகிறது.
அப்போது கூவென்று அலறி அடித்துக் கொண்டு புகையிரதம் மேடையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதன் சத்தம் எனது காதுக்குள் எதிரொலிக்கத் தொடங்குகிறது.
சில்லிகை 3962)Hs ébærbuDAsst 2garajst – 2OOt

Page 36
鳄下 コーイ、睦t闘{ 憎到若丽
கனவுகள் நிறைந்த மூட்டையைச் சுமந்து வீதியில் நடையாக நடக்கின்றேன்
சந்தைகளிலும் வீதிகளிலும் போய் தொணர்டைத்தணிணி வற்றும் வரை கத்தினேன்
எவ்வளவு கூவி அழைத்தும் பயனில்லை
இன்னமும் ஒரு கனவு கூட விற்பனையாகவில்லை!
சின்னஞ் சிறுவர்களிடம் சென்றேன்
6.
’கனவு வாங்கவில்லையோ?”
‘எங்களுக்கு கனவுகள் வேண்டாம் நாங்கள் கணினியோடு விளைாயடுகின்றோம’ என மறுத்து பறந்து போனார்கள்
 
 
 
 
 

(கலுநம் கனவுகளும்
- குறிஞ்சி இளந்தென்றல்

Page 37
ஒரு இளைஞனிடம் சென்றேன் ‘’கனவு வாங்கலையோ?”
‘‘மன்னிக்க வேண்டும் நான் காதலிப்பவளைத்தான் தினமும் கனவு காணர்கின்றேன். கனவுகள் வேண்டாம” என சிரித்தபடி என்னை கடந்து சென்றான்.
திருமணம் முடித்த ஒருவரிடம் சென்றேன் ‘’கனவு வாங்கலையோ?”
‘அட. போப்பா!
பொண்டாட்டி புள்ளன்னு மனுசன் படுற பாடு தெரியாம கனவு கினவுன்னு வந்து உசிர வாங்கிறியே’ன்னு என்னை முறைத்தபடி போனார்.
i
ஐம்பதை தாண்டிய ஒரு வரிடம் சென்றேன்
* * '''
கனவு வாங்கலையோ?
‘தம்பி பேரப்பிள்ளைகளோட விளையாடும் போது
கனவு எதுக்கப்பா போப்பா. போய் வேற இடம் பாரு’ன்னு
W
பேரப்பிள்ளைகளைக் கொஞ்சினார்.
சரி போனாப் போகுது
எழுபதை தாண்டிய ஒருவரிடம் சென்றேன்
‘’கனவு வாங்கலையோ?”
ད།
36
 

‘ஏம்பா. இது உனக்கே சரியாப் படுதா? சாகப் போற வயசில கனவு ஒரு கேடா. (3lur! Gut ! போய் பொழைக்கிற வழியப் பாரு’ன்னு என்னைத் திட்டியே விட்டார்.
விற்பனையாகாக் கனவுளோடு வீதியில் அலைந்து திரிந்து வீடு திரும்பினேன்
இன்றும் கனவுகள் விற்பனையாகும் என்கிற கனவும்
கனவாய்ப் போனது.
ல்ெலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 38
線
*ణ. O; shes to.
மல்லி 39வது ஆண்டு நிை
P.O. (3x 100,
Colombo - Phone : 2329151-5 E-Mail: millers6
Sole Agents
KODAK PHOTOGRAP BONLAC INSTANT, 70BLEROME CHOC CADBURV CHOCOL KRAFT CHEESE PRO TANG FLAVOURED F POST BREAKFASTC
37
 
 

叱n心
بمسمح لك من ال"
கையின்
றவில் பூரிப்படைகிறது
50, Jork Streeł,
, Sri Asanka.
lax: +94 1440273
millerslimited.com
/ Distributors
ዘዘ0 ፲ቅR0Dሀ07§ SKIMMILK POWDER
LATES 8s
ITES
DVCTS
OWDERED DRINK "REALS
rつ。
är eos, 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 39
முற்றத்து
மல்லிகை
- ச. முருகானந்தன்
g
 
 

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் ராஜ்மோகன். இன்னும் சில நாட்களில், சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்த சாமன்யன் பல்கலைக் கழகம் போகப் போகிறான். காலையில்தான் அது பற்றிய கடிதம் வந்திருந்தது.
C ந்த மல்லிகைப் பந்தலின் கீழ் அமர்ந்திருந்து
மையற் பொழுதில் வீசிய தென்றல் காற்று மல்லிகை மலர்களையும் தழுவி அவனையும் தழுவிச் செல்கிறது. மாலையாகி விட்டதால் மல்லிகை மலர்கள் மொட்டு விரித்து, இளம் பெண்ணின் முத்துப் பல் போல் சிரிக்கின்றன. முற்றத்து மல்லிகையின் இனிய நறுமணம் இங்கிதமாக இருக்கிறது. பொழுது மங்கி விட்டதால் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி கற்பனையில் மிதக்கிறான்.
இந்த இனிய பொன்மாலைப் பொழுதில் ரஞ்சி அவனது மனவானில் சிறக்கடிக்கிறாள். ரஞ்சி வேறு யாருமல்ல. அவனது பெரியமாமாவின் மூத்த மகள்தான்.
பருவ வயது வந்தபின் அவனை முதன் முதல்
ஆக்கிரமித்த பெண் அவள்தான். இன்றுவரை
அவன் இதயத்தில் அவள்தான். அவள் மட்டும்தான் குடியிருக்கிறாள். எனினும் இன்றுவரை அவளோடு அதிகம் பேசிப் பழகியது கிடையாது. அவ்வப்போது பார்வைகள் தழுவி இதயத்தை நிறைத்திருக் கின்றது. என்றும், எப்பொழுதும் அவளைக் காண வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டே யிருக்கும். எனினும் அவன் வளர்ந்து வந்த சூழ் நிலையில் அதற்கு மேல் ஒரு அடிதானும் எடுத்து வைக்கவில்லை.
இந்த மல்லிகைப் பந்தலுக்கும் ரஞ்சிக்கும் இடையே ஒரு உறவு உண்டு. இன்று இவ்வளவுப் பெரிய பந்தலாகி விருட்சம் போல் நிழல் தரும் இந்த மல்லிகைப் பந்தலை வளர்த்தெடுத்ததில் அவளுக்குப் பெரும் பங்குண்டு.
அவன் சின்ன வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அவனது நண்பனின் வீட்டிலிருந்து ஒரு சிறு செடியாக அதைப் பிரட்டிக் கொண்டு வந்து வீட்டில் நட்டது என்னவோ ராஜமோகன்தான். ஆனால் அதை வளர்த்தெடுத்தப் பெருமை அவனது தங்கை மேகலாவுக்கும், ரஞ்சிக்கும்தான்.
அவர்களது வீட்டுத் தண்ணிர் உவர். அந்தக் கிராமத்தில் அநேகமான வீடுகளில்

Page 40
அப்படித்தான். குடிநீருக்கும் வயற் கிணற்றுக்குத்தான் போக வேண்டும். அநேகமான வீடுகளில் பெண்கள் குறிப்பாக பெண் பிள்ளைகள்தான் தண்ணிர் அள்ளிக் கொண்டுவரப் போவார்கள். அவர்களது தரிசனத்திற்காக வயல் வரம்புகளில் வாலிபர்கள் கொக்குத் தவமிருப்பதுமுண்டு.
மல்லிகைச் செடிக்கு நல்ல தண்ணிர் ஊற்றி னால்தான் விரைவாகச் செழித்து வளரும் என்று அப்பா சொன்னதால், தினமும் மேகலாவும், ரஞ்சியும் ஒரு தடவை நல்ல தண்ணிர் கொண்டு வந்து மல்லிகைச் செடிக்கு ஊத்திவிட்டுத்தான் வீட்டிற்குத் தண்ணிர் எடுப்பார்கள்.
தோழி மேகலாவிடம் வருவது என்ற சாக்குப் போக்கில் ரஞ்சி தினமும் இங்கு வருவாள். ஒரு தடவை என்றாலும் தினமும் அவனைப் பார்க்காமல் அவளால் இருக்க முடிவதில்லை. அவள் வரவுக் காக ஏங்குவது ராஜ்மோகனுக்கும் வழக்கமாகி விட்டது.
மல்லிகைச் செடியோடு போட்டி போட்டுக் கொண்டு அவர்களது அன்பும் மனதளவில் வளர்ந்து வந்தாலும், அவர்கள் அதிகம் பேசிக் கொள்வதோ, தனிமையில் சந்திப்பதோ இல்லை.
மல்லிகைச் செடி ஒரளவு வளர்ந்த பின் அதற்கு ஒரு பந்தல் போட்டபோது கூட, அது இவ்வளவு பெரிய பந்தலாக வந்து, வெயிலுக்கும், வெக்கைக்கும் ஆறுதல் அளிக்கும் என அவன் நினைத்ததில்லை. ஒருநாள் அந்த மல்லிகையில் மொட்டுக்கள் அரும்பியபோது வீட்டில் எல்லோ ருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
முதலாவது பூவைச் சாமிக்கு வைக்க வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம். தனது தலையில் சூடிக் கொள்ள வேண்டுமென்பது மேகலாவின் விருப்பம். அம்மலரை ரஞ்சிக்குக் கொடுக்க வேண்டும் என்பது ராஜ்மோகனின் விருப்பம்.
மல்லிகையோ எவருக்கும் வஞ்சகமின்றி ஒரே நாளில் நான்கைந்து பூக்களைத் தந்தது. பூப்பூத்த அந்த மாலையில் ரஞ்சியும் வந்திருந்தாள். அது ஒரு பெளர்ணமி நாள் என்று அவனுக்கு ஞாபகம். மேகலா பூவைப் பறிப்பதற்கு எட்டி எட்டிப் பார்க் கிறாள். எட்டவில்லை.
‘அண்ணா, இந்தப் பூவைப் பறிச்சுத் தா.”
39

என்று அவனிடம் இறைஞ்சுகிறாள்.
அவன் எழுந்து ஒரு சினிமாக் கதாநாயகன் போன்ற நினைப்புடன் துள்ளி பூக்களைப் பிடுங் கினான். அம்மாவிடமும், மேகலாவிடமும் ஒவ்வொரு பூவைக் கொடுத்து விட்டு மற்றப் பூவை, கண்களால் ரஞ்சியை நிமிர்ந்து பார்த்தபடி நீட்டினான். அவள் ஓடிவந்து வாங்கித் தனது கூந்தலில் சூடிக் கொள் கிறாள். அவனது மனது நிறைகிறது. அந்த நேரத்தில் வானத்துப் பெளர்ணமி நிலா போல் அவளது வதனமும் மலர்ந்ததை ராஜ்மோகன் அவதானிக்கிறான். நிலவே, நிலவே துது சொல்லாயோ என்று அவனது மனது தாளமிட்டது.
இப்போது மல்லிகையும் படர்ந்து பந்தல் முழுவதும் பரவி தினமும் பூத்துக் குலுங்குகிறது. அவனும் படித்து, சித்தியடைந்து இதே பல்கலைக் கழகம் போகப் போகிறான். மனதிலே ரஞ்சி மீது ஏற்பட்டிருந்த வாஞ்ஞையும் பெளர்ணமி நிலவாகி விட்டிருந்தது. எனினும் அவளிடம் தனி விருப்பத்தைத் தெரிவிக்குமளவுக்குத் தைரியம் வரவில்லை. ‘இன்று சொல்லலாமா? என்று ஒரு கணம் யோசித்தாலும், அதை நடைமுறைப்படுத்த முடியாமல் ஏதோ தடுத்தவண்ணமே இருக்கிறது.
இதோ ரஞ்சியும் வந்து விட்டாள்! அவனைக் கடந்து உள்ளே சென்றவள், திரும்பவும் மேகலா வுடன் வெளியே வருகிறாள்.
`ரஞ்சி உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேணுமெண்டுதான் வந்தவ.’ மேகலா சிரித்தாள்.
‘ரொபி கொண்டு வந்து கொடு.” ராஜ்மோகன்.
என்றான்
“உங்கட கையாலதான் வாங்குவாவாம்.”
'' 660TT b ...?"
‘அப்பதான் இனிக்குமாம்.”
` சும்மா இரடி. ரஞ்சி மேகலாவிடம் கூறினாள்.
‘வாற பதினைந்தாம் திகதி கண்டிக்குப் போக வேணும்.” பொதுப்படையாக கூறுவது போல் கூறிய ராஜ்மோகனின் குரலில் ஒரு சோகம் படர்ந் திருந்தது. ரஞ்சியின் வதனமும் வாடிப்போனது.
மறுவாரம் அவன் கம்பஸ் போய் விட்டான்.
புதிய உலகம்; புதிய சூழல்; எத்தனை
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - உOOபு

Page 41
எத்தனை விநோதமான அனுபவங்கள்; மாற்றங்கள் வெல க ம பார்ட் டியில் தணி னியடித்தது: பெண்களோடு கதைத்துப் பேசிப் பழக முடிந்தது; ஒரு புதுயுகப் பிரவேசமாக பல்கலைக்கழகம் அமைந்தது.
இதோ விடுமுறையில் வந்திருக்கிறான்.
அதே மல்லிகைப் பந்தல்.
அதே இனிய சுகந்தம்.
அவனுக்கு மட்டும் ஏன் வாசம் தெரிய வில்லை.?
அவன் வந்திருப்பதை ரஞ்சி கேள்விப்பட்டிருக்க வேண்டும். இதோ அந்த இனிய மாலைப் பொழுதில், மனதில் பொங்கும் மகிழ்வுடனும், வாஞ்சையுடனும் அவனைக் காண ஓடோடி வந்திருக்கிறாள்.
புத்தகத்தில் லயித்திருந்த ராஜ்மோகன் ஒருகணம் நிமிர்ந்து பார்த்துவிட்டு அவளைக் கவனிக்காதது போல் மீண்டும் புத்தகத்துள் மூழ்கினான்.
தன்னைச் சீனி டிப் பார்ப்பதாக ரஞ்சி நினைத்தாள்.
அவனது மெளனத்தைத் தாள முடியாமல், ‘'மேகலா இல்லையோ?” என்று பேச்சை ஆரம்பித்தாள். அவன் அவளை நிமிர்ந்து பார்க்காமல் `உள்ளே” என்று சொல்லிவிட்டு புத்தகத்துள் மறைந்தான். ' கம்பஸ் போனதோட சரியான லெவல் என்று எண்ணியபடி ` எப்ப வந்தனிங்கள்?’ என்று கேட்டாள்.
&
காலமை.” பார்வையை புத்தகத்திலிருந்து எடுக்காமலே பதில் சொன்னான்.
மீண்டும் மெளனம் திரையிடவே, அவள் குழம்பிய மனதுடன் மேகலாவிடம் சென்றாள்.
ரஞ்சி விடைபெற்றுச் சொல்லும் போதும் அவன் அவள் பக்கம் திரும்பிப் பாதுக்காமலிருந்தது மேகலாவுக்கும் ஏமாற்றமாக இருந்தது. `ரஞ்சி போகப் போறாவாம்.”
&
b.
ரஞ்சியை வழியனுப்பி விட்டு திரும்பிய மேகலாவுக்கு கோபம் எள்ளும் கொள்ளுமாய் வெடித்தது.
本6

` ஏன் அண்ணியோட முகம் கொடுத்துப் பேசயில்லை அண்ணா?”
‘அண்ணியோ?. உனக்கென்ன விசரே?”
``போன மாசம் மாமாவும் மாமியும் வந்து அப்பா அம்மாவையோட கதைச்சவை. இவையும் ஓம் எண்டு சொல்லிப் போட்டினம். படிப்பு முடிய, வேலை கிடைச்சவுடனை கலியாணம்.”
’ஏன், என்னைக் கேட்காமல் ஓம் எண்டவை?” சீறினான்.
‘ரஞ்சிக்கு என்ன குறை?. வடிவு, நல்ல குணம், அதோட சொந்த மச்சாள், சொத்துப் பத்து, வீடு வாசல் எல்லாம் இருக்கு.”
‘இருந்தா..?”
6.
’ எனக்கு விருப்பமில்லை. நெருங்கின சொந்தத்தில் செய்யக் கூடாது.
* பொய் சொல்லாதையுங்கோ. விரும்பித் தானே இருந்தனிங்கள். இப்ப திடீரென்று ஏன்.?” மேகலாவின் தொண்டை அடைத்து குரல் தழ தழத்தது.
‘நான் பொய் சொல்லேல்லை. நான் அவளை விரும்பி இருக்கேல்லை.”
‘ஏன் அண்ணா பொய் சொல்லுறியள்?. இந்த மல்லிகைப் பந்தல் சாட்சி சொல்லும்.”
` நீங்கள் எல்லோரும் தப்பாக எடை
போட்டுட்டியள்’
‘சரி, விடுங்கோ. இப்ப கலியாணம் பேசி யிருக்கு. நல்ல பிள்ளை. செய்ய வேண்டியது தானே?”
‘’ஸ்ரைல் இல்லை.”
` ஸ்ரைல்..? அவள் நாகரீகம் தெரிஞ்சவள். எப்படியும் பழக்கி எடுக்கலாம் அண்ணா.”
6
படிப்புக் காணாது.”
“ ‘நீங்கள் எதையோ மனசிலை வைச் சுக் கொண்டு தட்டிக் கழிக்கப் பார்க்கிறியள்.”
‘சரி. அப்படியே வைச்சுக் கொள்ளண்.”
‘அப்படியெண்டா.”
ல்ேலிகை 39வது ஆண்ருமAsர் ஜனவரி - 2004

Page 42
* அப்படியெண்டா அப்படித்தான். உனக்கு இப்பச் சரியான வாய்.”
ராஜ்மோகன் தங்கை மீது சீறி விழந்தர்ன். மேகலாவுக்கு அழுகையே வெடித்துவிடும் போலிருந்தது.
‘பெண் பாவம் உன்னைச் சும்மா விடாது.”
“சபிக்கிறியோ. போடி. மட்டு மரியாதை இல்லாமல் கதைக்க வந்திட்டா.
மேகலா விசும்பிக் கொண்டு உள்ளே சென்றாள்.
ராஜமோகன் சிடுசிடுப்பாக இருந்தான். மனச் சாட்சி ஒரு கணம் இடித்துரைத்தாலும், மறுகணமே அதை அமுக்கிவிட்டு ஜெயந்தியின் முகம் அவன் மனதில் தோன்றியது.
ஜெயந்தி..?
விதம் விதமாக டிரெஸ் செய்கின்ற ஜெயந்தி, செல்லமாக ஸ்டைலாக கதைக்கின்ற ஜெயந்தி, அவனைப் போலவே படிப்பில் சுட்டியான ஜெயந்தி. ம். எனக் குப் பொருத்தம் அவள் தான். ராஜ்மோகன் மனம் ஜெயந்தியை அசை போட்டது.
இந்த மூன்றே மாதத்தில் என்னமாய் அவனை ஈர்த்து விட்டாள்!
வெல்கம் பார்ட்டியில் அவன் பாடிய பாட்டு, அவனை அனைவருக்கும் பரிச்சயமாக்கியது. அன்றைய தினமே ஜெயந்தி அவனைப் பாராட்டிய போது சங்கோஷத்துடன் அவளை நோக்கினான். அன்றே அவளது உருவம் அவன் நெஞ்சில் மென்மையாய்ப் பதிந்தது.
அடுத்தமாதம் கொழும்பு பல்கலைக் கழக அணியுடன் நடந்த கால்பந்தாட்டப் போட்டியின் போது வெற்றிக் கோலை அடித்து எல்லோர் மத்தியிலும் ஹீரோவானான் ராஜமோகன். போட்டி முடிந்ததும் ஜெயந்தி தோழிகள் புடைசூழ அவனை வாழ்த்தினாள். `போட்டி ஆரம்பித்த நேரம் முதல் எனினமாய் ஓடியோ டி பந்தைத் துரத் தி விளையாடினீர்கள்? அவளது வாழ்த்தில் அவனது உச்சி குளிர்ந்தது.
ஜெயந்தியின் அழகும், ஆடை அணிகளும், துடுக்குத்தனமும் அவனை அவள் பால் ஈர்த்தது எனினும், அவளை நெருங்கிடவும் அவையே
4俳

தடங்கலாய், தாழ்வு மனப்பான்மையுடன் பின்னுக் குத் தள்ளியது. ஆனால் அவளே அவனை அடிக் கடித் தேடித் தேடி வந்த போது அவனது சிக்கல்கள் தவிடு பொடிய்ாகின. ஒரே மாதத்தில் நல்ல நண்பர்களாகி விட்டனர். இப்போது விடுமுறையில் ஊர் வந்திருந்த போதுதான் அவன் ரஞ்சியை நினைக்கிறான். மனதில் இருவரையும் ஒப்பிட்டு நோக்கியபோது ஜெயந்தி உயர்வாகப் பட்டமை யினாலேயே ரஞ்சியை தவிர்த்து வருகிறான்.
விடுமுறை முடிந்து எப்போ ஜெயந்தியைக் காணலாம் என்று மனது தவித்தது. விடுமுறை முடிந்து பல்கலைக்கழகம் போன பின்னர் ஜெயந்தி யுடனான நட்பு இன்னும் இறுக்கமடைந்தது. இரண்டாவது வருடத்தில் நண்பர்கள் பகிடி பண்ணு மளவுக்கு நொருங்கி விட்டார்கள். எனினும் இறுதி யாண்டு வரை இருவரும் தமது காதலை வாய் விட்டுச் சொல்லவில்லை. சொன்னால்தான் காதலா? என்று இருவரும் நினைத்தார்கள்.
ரஞ்சி இன்னமும் அவனையே நினைத்து உருகுவதை அண்மையில் ஊர் போனபோது கூட ராஜ்மோகன் உணர்ந்து கொண்டான். எப்படியும் அவளை வெட்ட வேணும் என்று அவன் நினைத்தான். தங்கை மேகலாவிடம் தனக்கு ஒரு காதலி இருப்பதாக ரஞ்சியிடம் சொல்லும்படி கூறினான். ஆனால் அவளோ ரஞ்சி தாங்கிக் கொள்ளமாட்டாள் என்று கூறி மறுத்து விட்டாள். மனதில் ஜெயந்தியே ஆக்கிரமித்திருந்தாள்.
இறுதித் தவணையும் வந்துவிட்டது. இனியும் வாய் விட்டுக் கதைக்காமல் இருக்கக் கூடாது என்று ராஜ்மோகன் நினைத்தான். இன்று எப்படியும் ஜெயந்தியோடு மனம் விட்டு கதைக்க வேண்டும் என்று எண்ணியபடி விடுதிக்குத் திரும்பி அசதி தீரக் குளித்தான். மாற்றுடை அணிந்து கொண்டு கண்ணாடியின் முன் நின்று தன் விம்பத்தை நோக்கினான். பவுடரும், பேர்பியூமும் பூசிக் கொண்டு தலைமுடியை நெற்றியில் தவழ விட்டபடி மெல்லச் சிரித்துக் கொண்டான். திருப்தி. இன்று தன்நம்பிக்கையுடன் ஜெயந்தியோடு உலாவலாம். புறப்பட்டாயிற்று.
இராமநாதன் விடுதியை அடைந்ததும் தான் வந்திருப்பதை ஜெயந்திக்கு சொல்லி அனுப்பினான்.
சிறிது நேரத்தில் சிரித்த முகத்துடன் வந்தாள் ஜெயந்தி. ஆர்வம் பொங்கும் விழிகளினால் அவுளை நோக்கியபடி ' எங்காவது வெளியே
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 43
போவோமா?’ என்றான்.
ஜெயந்தியும் இதையே எதிர்பார்த்தாள். எனினும், ட்ரியூட்ஸ் செய்ய வேணும்” என்றாள்.
“அதைப் பிறகும் செய்யலாமே?”
அவள் தலையசைத்து விட்டு உள்ளே சென்றாள். இவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். நீல நிற பிரிண்டட் கவுண் அணிந் திருந்தாள். அது அவனுக்குப் பிடித்ததென்று ஏற்கனவே அவளிடம் கூறியிருக்கிறான். அதனால் அவனுக்கு திருப்தியாயிருந்தது.
மரங்களினிடையே மலைச் சரிவுகளினருகே ஓரங்குல இடைவெளியில், வளைந்து செல்லும் கலஹா ரோட்டில் நடந்து செல்கையில் சொர்க்கம் காலடியில் தெரிந்தது.
குளிர்காற்று பலமாக வீசியது. உடல் வெட வெடத்தது. அவள் அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். குளிருக்கு நன்றி சொல்லியபடி ராஜ்மோகன் அவள் மீது ஒட்டிக் கொண்டான். இருவரும் பூங்காவில் ஒரு சீமெந்து பெஞ்சில் அமர்ந்து கொண்டனர்.
‘ஐ லவ் யூ ஜெயந்தி. என்றான்
“இப்பொழுது தானா?.” அவள் சிரித்தாள்.
& &
இரண்டரை வருடங்களாக..! இன்று தான் வார்த்தைகளில் வந்தது.”
‘நான் உங்களைப் பார்த்த நாள் தொட்டே, என் மனதில் நீங்கள் தான் நிறைந்திருந்திருக் கிறீர்கள், ராஜ்! வாழ்க்கை பூராவும் உங்களை விட்டுப் பிரியாமல் உங்க கூடத்தான் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் என்னுடைய ஆசை.” ஜெயந்தி நெகிழ்ச்சியுடன்,
** நிச்சயமாய் அப் படித் தானி வாழப் போகின்றோம்.”
அவள் பூரிப்போடு அவனை நோக்கினாள். ‘’ சத்தியமாகத்தான் சொல் கிறீர்களா?. இது பொய்யில்லையே’
தன்னை நிமிர்ந்து பார்த்த அந்தப் பார்வை யின் பிரகாசம் கண்களில் தெரிந்த ஒளி, முழுமதி போலாகிவிட்ட முகம். இத்ற்காக எது வேண்டு மானாலும் செய்யலாமே!’ என்று எண்ணியபடி உணர்ச்சிப் பெருக்கில் மிதந்தான் ராஜமோகன்.
虚2
 

அவள் தொடர்ந்து அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் அவனது பாதங்களைப் பார்த்தாள். அவன் அரைக் காற்சட்டை அணிந்து வாக் போக வந்திருந்ததால் அவனது கால்களின் அழகினை ரசித்திட முடிந்தது. எவ்வளவு அழகான கால்கள்! எவ்வளவு அழகாக வைத்திருக்கிறான்! என்று நினைத்துக் கொண்டாள்.
இந்தக் கால்கள் மைதானத்துள் இறங்கி விட்டால் என்ன லாவகமாய் பந்தைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றது.! கோல் போடாமல் வந்த வரலாறே கிடையாது. ம். யாருமே கால்களை இவ்வளவு அழகாக வைத்துக் கொள்வதில்லை. அவனது சிவப்பு மஞ்சள் நிறக் கால்கள் தொடையிலிருந்து உருண்டு திரண்டு கறுத்த மயிர்களால் அலங்கரிக்கப்பட்டு என்னமாய் ஜொலிக்கிறது! எந்த அழுகுக்கும் படியாமல் சுத்தமாய் கொழு கொழுவென்று ஜெயந்தி வான்பரப்பில் சிறகடித்தபடி மீண்டும் அவனது ஆண்மை மிக்க வசீகர முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஏன் கதாசிரியர்கள் எல்லாம் ஆணின் அழகை வர்ணிப்பதில்லை? இவர்களில் பலர் ஆண்களாக இருப்பதனாலோ?. நான் ஒரு கதை எழுதினால் அதில் ஆணின் அழகை எல்லாம் வர்ணித்து எழுதுவேன்.’ என்று நினைத்துக் கொண்டாள்.
‘என்ன ஜெயந்தி மெளனமாகி விட்டாய்?”
‘ஒன்றுமில்ல.” என்று சிரித்தாள் ஜெயந்தி.
‘இந்த முறை விடுமுறையில் போகும்போது நீங்கள் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும்.”
“வீட்டிலே ஏதாவது கதைத்திருக்கிறாயா?”
&
‘ம். அக்காவிடம் சொன்னேன். இப்ப எல்லோருக்கும் தெரியும். உங்களைப் பற்றி, உங்களுடைய குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரிச்சினம். திருப்தி.”
‘‘கெட்டிக்காரி தான். நான் வீட்டில் நான் வீட்டில் கதைக்கவில்லை. தங்கை மேகலாவிடம் கூறினேன். ஆதரவு இல்லை.”
‘ஏன்.? அவள் அதிர்ந்து நோக்கினாள்.
‘ரஞ்சியை. என்னுடைய மச்சாளைத்தான் செய்யவேணும் என்று யோசிக்கிறார்கள்.”
‘அப்படியானால்..?” அவள் படபடப்புடன்
●
ல்கே 39வது ஆண்டுமலர் ஜனவரி - 200;

Page 44
கேட்ட 61.
`நான் சம்மதிக்கவில்லை. எப்படியும் எல்லா வற்றையும் ஒரம் கட்ட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு.’ அவன் உறுதியுடன் அவளது கைகளைப் பற்றினான். ‘என் மனது உனக்குத் தான்”
‘நீங்க இல்லாவிட்டால் அப்புறம் நான் உயி ரோடை இருக்க மாட்டன். வீடு வாசல், சீதனம், நகை நட்டு எதிலும் எனக்குக் குறைவில்லை.”
* சீ. என்ன ஜெயந்தி? நான் ஏதாவது கேட்டேனா?’ அவன் ஆறுதலாக அவளது தலையை வருடினான். ‘’ வேண்டுமானால் இப்போதே தாலியைக் கட்டட்டுமா?”
அவள் கிளுக் என்று சிரித்தாள்.
விடுமுறையில் வீட்டுக்குப் போனபோது ராஜ் மோகன் தனது காதலின் உறுதி பற்றி எடுத் துரைத்து வாதாடினான். எல்லோரும் எதிர்த்தனர். மேகலா அவனை வெறுப்போடு நோக்கினாள்.
* காதல் என்பது மலருக்கு மலர் தாவும் பட்டாம்பூச்சி இல்லை அண்ணா.”
‘உண்மைதான் மேகலா. அதுதான் நான் காதலிக்கிற ஜெயந்தியையே கட்ட நினைக்கிறன்’
`அப்போ ரஞ்சியுடன் பழகிறது.?”
‘ரஞ்சியுடன் நான் பழகினேனா? கதைத்தது கூட அபூர்வம். அவள் தப்பாக எடை போட்டது என் தவறா?”
* பொய் அண்ணா நீங்கள் ரஞ்சியைக் காதலிச்சது எனக்குத் தெரியும். பாவம் ரஞ்சி.”
‘மேகலா அது காதலல்ல. வெறும் கவர்ச்சி.”
‘’ ஆனால் ரஞ்சி அப்படியல்ல. உங்களை மனதிலே வரித்து உங்கள் நினைவுகளுடனே தினமும் உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக் கிறாள். தினமும் மலையில் வந்து இந்த மல்லிகையில் மலர் கொய்து உங்களை நினைத்தே பூச்சூடி கொள்கிறாள்.”
மேகலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராஜ்மோகன், கல்லாய் இருந்தான். மறுநாள் ஜெயந்தியின் வீட்டிற்குப் போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். நண்பன் சிவாவையும் காலையில் வரும்படி கூறியிருந்தான்.
R

காலையில் வீட்டிற்கு வந்தான் சிவா. "மல்லிகைப் பூவின் வாசம் கமகமக்கிறது. முற்றத்திலே இப்படி ஒரு மல்லிகையை வைத்து உண்டாக்கியிருக்கிறீர்களே. பிரமாதம்..” என்றான்.
இருவரும் ஜெயந்தியின் வீட்டிற்குப் புறப் பட்டார்கள். நல்லூர் வரை பஸ்சில் சென்று, இறங்கி அவளது வீட்டை நோக்கி நடந்தபோது அவனது மனது ஆனந்தத்தில் மிதந்தது.
“சிவா, ஜெயந்தி வீட்டில் பிரச்சினை இல்லை. எங்கள் வீட்டில்தான் இழுபறி. மச்சாளையே செய்ய வேண்டுமாம்.”
‘காதல் எல்லோருக்கும் வெற்றியைத் தருவ தில்லை. இந்தச் சிக்கலான பாதையில் கற்களும் முட்களும் நிறைந்திருக்கும் அவற்றைத் தாண்டி வெற்றி கொள்பவர்கள் சிலரே. நீ வெற்றி காண் கிறபோது இன்னொருத்தி தோல்வியில் துவள் வாள். இது காலம் காலமாகத் தொடரும் கதை தான். பாவம் உன் மச்சாள்.”
மனதிலே வானவில்லின் வர்ண ஜாலங்கள் பவனி வர ஜெயந்தியின் வீட்டை நோக்கி நடக்கும் போது அவன் புதிய உலகில மிதந்து கொண்டிருந்தான்.
கண்களிலே உற்சாகம் மேலிட நண்பனோடு உரையாடிக் கொணர் டு அவனி நடந்து கொண்டிருந்தபோதுதான் எதிர்த் திசையில் இரண்டு லொறிகள் வரவே அவன் பாதையை விட்டு விலகி கரை ஒதுங்கினான்.
* Lமார்’
என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று ஒருகணம் இவனுக்குத் தெரியவில்லை. ‘அம்மா’ என்ற சத்தத்துடன் அவன் தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்தான்.
மிதி வெடி வெடித்ததை உணர்ந்த சிவா ஓடிவந்து அவனைத் தூக்கினான். அவனால் எழும்ப முடியவில்லை. கால் ஒன்று சிதறிப் போயிருந்தது. சிறிது நேரத்தில் மயக்கமுற்ற அவனைப் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றான் சிவா. ஒ எதிரிகள் நெல் போல் விதைத்து விட்டுப் போயிருக்கும் கண்ணிவெடிகள் எத்தனை பேரைப் பலி கொண்டு, எத்தனை பேரை அங்கவீனர் களாக்கிவிட்டது? என்ற தவிப்புடன் நண்பனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்தித்தான்.
லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 45
தகவல் அறிந்து அவனது குடும்பத்தினரும், ஜெயந்தியின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டான் என்ற மகிழ்ச்சியான செய்தியை எண்ணிக் குதுகலிக்க முடியாமல், பேரிடியாக அவனது கால் ஒன்று தொடைப் பகுதியில் அகற்றப்பட்டுள்ள தகவல் இடியாய் வந்தது.
சுய நினைவுக்கு வந்த ராஜ்மேகன், தனது வலக் காலை இழந்து விட்டதை அறிந்து அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானான்.
‘கடவுளே. என்னைக் கொன்றுவிடு. கால் இல்லாத முடவனாய் இந்த உலகில் எப்படி வாழப் போகின்றேன்” என்று கதறி அழுதான்.
எல்லோரும் வந்தார்கள். மூடிக் கிடந்த கண் களிலிருந்து பொல பொலவெனக் கண்ணிர் பெருக் கெடுத்தது. அவனால் இனி காற்பந்தாட முடியாது. பரவாயில்லை, சரியாக நடக்கத்தான் முடியுமா?
குமுறிக் குமுறி அழுது மனம் களைத்து விட்டது.
சூழ நின்ற எல்லோர் முகங்களிலும் வேதனை. . ஜெயந்தியின் கண்கள் அவளையும் மீறிக் கசிந்தது. ரஞ்சி ஒரு மூலையில் ஒதுங்கி நின்று மேகலாவின் கைகளைப் பற்றியபடி கண்ணிரைக் கட்டுப்படுத்த முடியாமல் விசும்பினாள். அம்மா அழுது ஒப்பாரியே வைக்க ஆரம்பித்துவிட்டாள்.
அவனுக்கு யாரையும் பார்க்க முடியவில்லை. வெறுப்புடன் கண்களை மூடிக் கொண்டிருந்தான். எல்லோரும் துடித்துப் பதைத்து ஓடிவந்து அனுதாபத் துடன் அவனைப் பார்க்கையில் அவனால் தாங்க முடியவில்லை. ‘இது தானா வாழ்வு?
மறுநாள் அதிகாலையிலேயே ஜெயந்தி வ்ந்து விட் டாள் . வீடு நல லுTரில் என பதா ல நேரத்துடனேயே வரமுடிந்தது. தனியே அவனைச் சந்தித்ததும் அடக்கி வைத்திருந்த சோகமெல்லாம் வெடித்துக் கிளம்பியது.
ஆதரவாக அவனருகே, வந்து அவனது கை களைப் பற்றியபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை. எவ்வளவு ஆசையோடு அவளைக் காணச் சென்றான். அந்த வேகம் எல்லாம் இப்போது வற்றிவிட்டது போலிருந்தது. இந்தக் காலோடு எப்படி அவளை நினைப்பது? அவன்தான் ஊனமாகி விட்டான்

என்றால், அவளையும் ஏன் துன்பப்பட வைக்க வேண்டும்?
கண்களைத் திறந்து அவளை நோக்கினான்.
w
‘ஜெயந்தி. விதி விளையாடிவிட்டது. இனி நான் ஒரு ஜடம். யாருக்கும் என்னால் பிரயோசன மில்லை. நீ இனிமேல் இங்கே வரவேண்டாம். அது உனது எதிர்காலத்திற்கும் கூடாது.”
‘ராஜ். என்ன சொல்கிறீர்கள். ஐ லவ் யூ ராஜ். வாழ்வில் முதல் தடவையாக அவள் அவ்வார்த்தைகளை வாய்விட்டுச் சொன்னபோது அதை அவனால் ரசிக்க முடியவில்லை.
`இந்த நிலையில் கூடவா?”
அவன் முடிக்க முன்னரே, அவள் அவனது வாயைப் பொத்தினாள். நீங்கள் என்னிலை வைச்சிருக்கிற அன்பு உண்மைதானே. அது போல தான் நானும் ஒரு வேளை கல்யாணத்திற்குப் பிறகு இப்படி வந்திருந்தால்?”
'நீ என்ன சொன்னாலும் உன்னுடைய வீட்டார் விரும்ப மாட்டினம்.”
‘’ எனக்குச் சரியெண்டா, பிறகு அவையென்ன தடுக்கிறது?. ஏற்கனவே சம்மதிச்சவை தானே? வாழப்போறது நான்தானே?”
அவள் உறுதியோடு சொன்ன போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனினும் அவனால் அவளது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஜெயந்தி அவனுக்கு உணவூட்டி விட்டுப் புறப்பட்டாள், `மத்தியானம் வாறன்.”
அவள் போய் ஒரு சில நிமிடங்களில்
மேகலாவும், ரஞ்சியும் வந்திருந்தார்கள். ரஞ்சியும் , அதே போல.
அவனோடு அதிகம் கதைத்தறியாதவள் இன்று என்னென்னவோ கூறி அழுதாள். விடை பெறும் போதும் அவள் சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் ஈரத்தை ஏற்படுத்தியது.
’அத்தான், கால் போயிட்டுது என்று கவலைப் படாதையுங்கோ. உங்களது இன்னொரு காலாக நான் இருப்பன்.”
'பாவம். பேதைப் பெண் என்னமாய் என் மீது அன்பு லுைத்திருக்கிறாள்" என்று நெடுமூச்
1ல்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 46
செறிந்தான்.
உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் வருகிறார்கள், போகிறார்கள். ஆறுதல் வார்த்தை களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால் போன கால் திரும்ப முளைத்து வரப்போகிறதா என்ன?
இனியும் ஒரு வாழ்வு வேண்டிக் கிடக்கிறதா? இந்த இலட்சணத்தில் கலியாணம் ஒரு கேடா? செத்து மடிந்திருக்கலாம். யாருக்கும் சுமையில்லை.
ஜெயந்தியும், ரஞ்சியும் போட்டி போட்டுக் கொண்டு வருவது போல் வந்து போனார்கள்.
“வீட்டிலை என்ன சொல்லினம்?
’அவையின்ரை கதை வேண்டாம்.” அவள் கதையை மாற்றினாள். எனினும் அவனால் ஊகிக்க முடிந்தது. ஒரு நாள் பார்த்துவிட்டுப் போன அவளது வீட்டுக்காரர் யாரும் பிறகு வரவில்லை. அவை யிலும் பிழையில்லை. சொத்துச் சுகத்தோடை இருக் கிற வடிவான, குணமான மகளை நொண்டிக்கு ஏன் கட்டிக் கொடுக்க வேணும்?
’அவையஞக்கு விருப்பமில்லைத் தானே, அவன் மறுபடியும் கேட்டபடி அவளை நோக்கினான். ` அவை சொல்றதும் சரி தானே. நீ வேற நல்ல இடமாகப் பார்த்துச் செய்.”
‘விசர்க்கதை கதைக்காதையுங்கோ. அவள் விடைபெற்ற போது அவன் குழம்பித் தவித்தான்.
ரஞ்சியும் அடிக்கடி வந்து கொண்டுதானிருந் தாள் சின்ன மாமாவையும் இடைக்கிடை வந்து பார்த்துப் போனார்கள். தானாடாவிட்டாலும் தசை ஆடுமோ?
தினமும் மூன்று நேரம் வந்து கொண்டிருந்த ஜெயந்தி இரண்டு நேரமாகி, ஒரு நேரமாகி வந்து கொண்டிருந்தாள். இன்று அவள் அதிக நேரமிருக்க வில்லை.
முதலில் ஜெயந்தியை எங்காவது செய்யும்படி ஆலோசனை கூறிக் கொண்டிருந்த அவனது மனதில் படிப்படியான மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். . . . .
செயற்கைக் கால் பொருத்திய பின் மெல்ல மெல்ல அவனால் கைத்தடியின் உதவியோடு நடக்க முடிந்தது. சில வேளைகளில் புண் இருந்து மாறிய முனைப் பகுதி அண்டி நோகும். எனினும் செயற்கைக் கால் பொருத்திய பின் அவனது விரக்தி
45

குறைவடைந்து வந்தது உண்மைதான்.
அடிக்கடி வந்து கொண்டிருந்த ஜெயந்தி இப்போதெல்லாம் இடைக்கிடையே தான் வந்து கொண்டிருந்தாள். பாவம் அவளுக்கும் அலுத்துப் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
“நாளைக்கு வாறன். ஜெயந்தி விடைபெற்ற போது, ‘கட்டாயம் வருவீரோ?” என்று ஆவலுடன் கேட்டான் ராஜ்மோகன்.
இரண்டு மூன்று நாட்களின் பின் வந்திருந்தாள். ‘முதலாம் வகுப்பில் சித்தியடைந்திருக்கிறன்.”
` என்னுடைய ரிசல்ட்..?”
` நீங்களும் பாஸ்.” ரொபியை அவனிடம் நீட்டினாள். கையிலே தந்தது அவனுக்கு ஏமாற்ற
மாக இருந்தாலும், ’நாளைக்குக் கட்டாயம் வாரும்.” என்றான்.
‘நேரம் கிடைச்சா வாறன்.” அவள் விடை பெற்ற போது அவன் நெடுமூச்செறிந்தான்.
ষ্টু அவள் போன பின்னர் ரஞ்சி வந்தாள். கேக், சொக்லேட், பற்றீஸ், பொம்பே சுவிற் என்று ஒரு சுவீற்ஸ் கடையையே கொண்டு வந்திருந்தாள்.
‘நீங்கள் பாஸ் பண்ணினது எனக்கு சரியான சந்தோசம்.”
`பாஸ் பண்ண மாட்டான், மொக்கன் என்று நினைச்சீரோ? அவன் "சிரிப்போடு கேட்டான்.
இப்பொழுதெல்லாம் ரஞ்சி அடிக்கடி வந்து கொண்டிருந்தாள். அவன் நடப்பதற்கு உதவி புரிவாள். அவளது பணிவிடைகள் அவன் மனதை மகிழ்வித்தன.
இன்று அவள், கொண்டு வந்திருந்த இனிப்பு வகைகளை அவனது கையில் கொடுக்காமல் ஊட்டினாள். அவனது மனம் நெகிழ்ந்தது. "நீயும் சாப்பிடன் ரஞ்சி.”
அவள் விடை பெற்றுச் சென்றாள்.
அவள் கொண்டு வந்திருந்த வெள்ளிநாதம் பத்திரிகையை புரட்டினான். ஊக்கமாத்திரை பகுதியில் டாக்டர் எழுதியிருந்த பகுதிகள் அவனை ஈர்த்தன. அதை வாசிக்க வாசிக்க மனதில் நம்பிக்கைத் துளிகள் பன்னிராய்த் தெளித்தன.
'இப்போது எதற்காக அழவேண்டும்? ஒரு கால்
Ea. 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 47
தானே போனது? அதற்கும் சிகிக்சை செய்தாகி விட்டது. வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான். துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் அடுத்த அடியையைச் சரியான திசையில் பதித்து பயணத்தைத் தொடர வேண்டும்.
ஜெயந்திக்குச் சரி என்றால் நான் ஏன் தாழ்வுச் சிக்கலுடன் மறுக்க வேண்டும்? அன்று நிம்மதியாக உறங்கினான். கனவிலே திருமணம்! அருகே ஜெயந்தி! அவன் தாலியைக் கட்டிவிட்டுப் பார்க்கிறான். அது ரஞ்சியாகத் தெரிகிறது. அவன் விழித்துக் கொண்டான்.
இது என்ன புதுமையான கனவு
ஜெயந்தி சில நாட்களாக வரவில்லை. அவனுக்கு குழப்பமாக இருந்தது. ரஞ்சி வந்து போய்க் கொண்டிருந்தது. மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
‘ரஞ்சி. நீ இப்படி அடிக்கடி அலையக் கூடாது.”
“எனக்கு இதில சிரமமொண்டுமில்லை. மனத் திருப்தியாக இருக்கு. மாமிக்கும் ஏலாது. மேகலாவுக்கும் படிப்பு. சோதினை கிட்டியிட்டுது. நான்தான் சும்மா இருக்கிறன்: அடிக்கடி வந்து பார்க்கிறன். இது என்னுடைய கடமை.
ரஞ்சியின் அன்பான வார்த்தைகள் அவனது மனதில் பாலை வார்த்தது. எனினும் இந்தப் பெண்ணை ஏமாற்றுகிறோமா என்கிற தவிப்பு.
* பாவம், இவள் அன்றிலிருந்து ஓடி ஓடி வந்து போய்க் கொண்டிருக்கிறாள். அவளோடு அன்பாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எனினும் தவறாமல் வந்து போகிறாள். அவன் அவளிலிருந்து விலகி, இன்னொருத்தியில் நாட்டம் கொண்ட பின்னரும்கூட, பரிவோடு வந்து பணிவிடை செய்து போகிறாள். அவன் விலகினாலும் அவள் விலகு வதாய் தெரியவில்லை. ஜெயந்தியின் விசயம் தெரியாமலிருக்காது. இருந்தும்.
திடீரென்று ஜெயந்தியின் முகம் மனத்திரையில் வந்து போயிற்று. எப்படி அவள் ஒதுங்கினாலும்கூட அவளில் அன்பு குறைவதாய் இல்லையே! `இறைவா, உலகில் ஏன் பெண்ணை படைத்தாய்?
ஒரு வாரம் கழித்து ஜெயந்தி வந்தாள்.
‘ஏன் கனநாளாக வரவில்லை?”
本6 ܀
 

` வீட்டில ஒரே பிரச்சினை. ஒரு டொக்ரரின்ர குறிப்புப் பொருத்தமாக இருக்காம். அவரும் என்னை கோயில்ல பார்த்திருக்கிறார். பிடிச்சுப் பேர்னதால சீதனமும் கடுமையாகக் கேட்க வில்லை. அவரைத்தான் செய்யவேணுமென்டு விட்டில வற்புறுத்துகினம்.”
‘'நீ என்ன சொன்னனி?”
`நானும் வாதாடிக் களைச்சுப் போனன். இப்ப வெளிக்கிடும் போதும் பிரச்சினைதான். அம்மா கேட்டா, எங்க போறாய் பிள்ளை?” என்று. நான் ஆஸ்பத்திரிக்கு என்று சொன்னதும், இனி நீ அங்கே போகவேண்டாம். இது நல்லதில்லை. கலியாணப் பேச்சுக்கு இடைஞ்சலாகப் போகும் என்று அம்மா தடுத்தா, இண்டைக்கு மட்டும் போறன் அம்மா என்று சொல்லிப்போட்டு வந்தனான்.”
8
அவன் மெளனமாக அவளை நோக்கினான்.
’அப்ப நீ இனி வரமாட்டியோ ஜெயந்தி?”
’ எவ்வளவு நாளைக்குத்தான் அவையளையும் எதிர்த்து நிற்கிறது?. அவையள் சொல்லுற தில்லையும் ஒரு நியாயம் இருக்கு. ஏன், நீங்கள் கூட சொன்னீங்கள்தானே..?”
`நான் இப்ப அப்படிச் சொல்லயில்லைத் தானே” என்று தொண்டை வரை வந்த வார்த்தை கள் தொண்டைக்குள்ளேயே அடங்கிப் போனது. சிறிது நேரம் இருவரிடையேயும் மெளனம் திரை யிட்டிருந்தது.
‘நான் போட்டு வாறன்.”
ش
வருவியோ?” சந்தேகத்துடன் அவளை நோக்கினான்.
....ம். அவள் விடைபெற்றாள்.
அன்றிலிருந்து அவள் வரவில்லை. அவள் வரவுக்காக அவன் தவிக்கும் வேளைகளிலெல்லாம் ரஞ்சிதான் வந்து கொண்டிருந்தாள்.
அவன் சுகமாகி வீட்டிற்குச் செல்லும்போது ஜெயந்தியின் வரவை ஆவலோடு நோக்கினான். அவள் வரவேயில்லை.
வீட்டிற்கு வந்தபின் ஒரு இடத்தில் முடங்கிப் போயிருப்பது கஷ்டமாக இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லை. ரஞ்சி வந்து போய்க் கொண்டிருந்தாள்.
۔۔۔بہت. ھم صلى الله عليه وسلم
. லீகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 48
பகலெல்லாம் அந்த மல்லிகைப் பந்தே தஞ சமென அவனி ஏதாவது வாசித் து கொண்டிருந்தான். ரஞ்சி முன்னரைப் பூோ இல்லாமல் அவனுடன் கதைத்துப் பழகினான்.
ரஞ்சியின் மீது அவன் மனது மறுபடிய அலைபாய ஆரம்பித்தபோது, அதையும் மீறி குற் உணர்வு அவனை உறுத்தியது. அவளை ஒதுக் விட்டு இப்போது அங்கவீனனான பின்னர் மறுபடிய நினைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது..?
இவ்வளவு நடந்தும், சகலதும் அறிந்தும்சு அவள் இன்னமும் அவன்மீது அன்பைப் பொ கிறாளே? எப்படி இவளால் முடிகிறது! இன்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னய செய்திடல் என்று யோசிக்கிறாளா?. அன்டை பொழிகின்ற இந்த நல்லவளின் வாழ்வை நா ஏன் பாதிக்க வேண்டும்? வாழ வேண்டிய பென எங்காவது நன்றாக வாழட்டும்.
இவன் குழம்பிப் போயிருந்தான். அவள் குழப் மெதுவும் இன்றி ஒவ்வொரு மாலைப் பொழுதிலு வந்து போய்க் கொண்டிருந்தாள். இப்பொ தெல்லாம் முற்றத்து மல்லிகையின் வாசம் அவ இதயத் தை தொட்டு சுகந்தமாய் வீசி கொண்டிருந்தது.
இதற்கிடையில் அவ்வூர்க் கிராம சேவையா ராகப் புதிதாக வந்த இளைஞன் அவளை விரும் கலியாணம் பேசி அனுப்பியதாக அறிந்தாலி அவனுக்குச் சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் அவ நல்லாக வாழட்டும் என்று மனதார வாழ்த்தினால்
ரஞ்சி சீற்றத்துடன் அவனை ஏறிட்டு நோ கினாள். ‘இன்னும் கூட என் மனது உங்களுக்கு
g
மல்லிகைப்
8. (இரண்டாம் பதிப்பு
虚7
 

)ப்
१
புரியவில்லையா?. தடிமாடு.” என்று செல்லமாக அவனைத் திட்டிவிட்டு, 'எழும்புங்க. இன்றைக்கு கைத்தடியின் உதவியில்லாமல் கூடுதல் தூரம் நடப்போம்.” என்று அழைத்தாள்.
அவளை நன்றியோடு நோக்கிய அவன் உள்ளத்தில் அன்பு மழை பெருக்கெடுத்து ஓடியது. கண்கள் பனித்தன. “ரஞ்சி. ஐ லவ் யூ.” அவன் குரல் கரகரத்தது. ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரென்பதெல்லாம் பொய்யோ என்று எண்ணினான்.
அவளது வதனம் முழுமதிபோல் பிரகாசித்தது.
‘அத்தான், மண் விளையாட்டு விளையாடிய சின்னப் பருவத்திலேயே நீங்கள் என்னுள் புகுந்து
விட்டீர்கள். புதிதாக நானும் ஐ லவ் யூ சொன்னால்
தான் காதலா?”
அவன் ஆவலுடன் அவளை நோக்கியபடி
இன்பப் பிரவாகத்தில் மிதந்தான்.
“எனக்கொரு காதல் பரிசு தருவீர்களா?”
‘’ என்னால் முடிந்தால்.”
‘முடியும். இந்த மல்லிகைப் பந்தலில் பூத்துக் குலுங்கும் மலர்களில் ஒன்றைக் கொய்து என் கூந்தலில் சொருகுவீர்களா?. இது என் நீண்ட நாள் கனவு.”
அவன் எழுந்து எட்டி மல்லிகை மலரொன்றைக்
கொய்து, அவளது கூந்தலில் சூட்டினான்.
ஓ. என்னமாய் வாசம் வீசுகிறது, இந்த முற்றத்து மல்லிகை
இது ஒரு
பந்தல் வெளியீடு
"స్క్రి
ரிக் ஜீவாவின்
6). D6h)WDs. ~ புதிய தகவல்களுடன்.)
-
மல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 49
9
Qese/O-2shes (O.
9ta CC Kai 3.
Importers & Distri 8Electrical
B.G. B. 102, Wolfe
Colom Tel: 2328729,
Fax: +94-11-24з962 E-Mail : kal
 
 

butors of Machinery Equipments
uiding hhal Street, bo - 13.
2332949 - 50
23 +94-11-2576273 Kison(CDSlt.lk
39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு « همه خربق

Page 50
வரக் கடையல்ல, இது இது எனது சர்வகலா சாலை!”
உலகிலுள்ள அத்தனை மொழிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சவரக் கடையை பல்கலைக் கழகத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள ஒரேயொரு மொழி நமது தமிழ் மொழியாகத் தானிருக்கும் என உறுதியாக நம்புகின்றேன்.
இதைப் பகிரங்கமாக எழுத்தில் ஆவணப்படுத்தக் கூடிய நெஞ்சுரம் கொண்டவனும் நானாகத்தான் இருக்க முடியும் எனவும் திடமாகச் சொல்லிக் கொள்கிறேன்.
இதைத் திரும்பத் திரும்பச் சொல்லும் சமய மெல்லாம் நான் ஆத்ம பலமடைகின்றேன்.
நம்மைப் பற்றிய, நமது பரம்பரைக்குக் கடந்த காலங்களில் தொடர்ந்து செய்யப்பட்டு வந்து இந்த மானுட இழிவுத் தனங்களை நாம் ரொம்பவும் மன நோவுடன் மேடைகளிலோ அல்லது நமது எழுத்துக் களிலோ பதிவு செய்ய முற்படும் போது ‘நாய்களுக்கு எங்குதான் கல்லடி பட்டாலும் அது காலைக் காலைத்தான் தூக்கும்! அதைப் போலத்தான் உங்களில் சிலரும்!’ என நக கலாகச் சொல் லி விடுவதை நான்
அச்சுத்த
அறுப8
49
 
 
 
 
 
 
 

பலதடவைகளில் என் காதால் கேட்டிருக்கிறேன்.
அவர்களுக்கு நான் சொன்ன பதிலே இதுதான்: “கல்லடி எங்கேயோ பட்ட நோவின் காரணமாகத் தானே காலைக் காலைத் தூக்குகின்றன நாய்கள். கல்லடி பட்டிராத எந்த நாயாவது காலைத் தூக்கிக் கொண்டு ஓடியதை உங்களில் யாராவது பார்த் திருக்கிறீர்களா? உடலில் எங்கோ ஒரு பகுதியில் நோப்பட்டதன் அறிகுறியாகத்தானே காலைக் காலைத் தூக்குகின்றது, நாய். நாம் அதனது காலைப் பார்த்து முடிவு செய்வதைவிட, அதன் உள்ளார்ந்த நோவைப் பற்றிப் புரிந்து கொள்வது முக்கியம்!
எத்தனையோ வகையான கல்லடிகளை இது வரையும் நான் பட்டுத் தேறியிருக்கிறேன்.
அந்த நோவின் ஆத்ம வெளிப்பாடுகள்தான் என்னுடைய எழுத்துக்களும் எனது மேடைப் பேச்சுக்களும். a.
1960ஆம் ஆண்டுக்கான சிருஷ்டி இலக்கியப் பரிசை நான் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பியிருந்த சமயம்.
கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப் படிப்பித்த பண்டிதர் இராசையா என்பவர், வகுப்பில் ஆசிரிய மாணவர்களுக்கு நக்கலாக சொன்ன கருத்து இன்னமும் எனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்து போயுள்ளது.
வகுப்பில் ஆசிரிய மாணவனாக இருந்த எனது
Tsfor parLITs
ஒா Ш Ш60ОТi
- டொமினிக் ஜீவா

Page 51
இலக்கிய நண்பன் தெணியான் இந்தத் தகவலை வகுப்பறையில் தன் காதால் கேட்டு, பின்னர் எனக்கு விளக்கமாக விவரித்துச் சொன்னார்.
"ஓர் ஆச்சரியம் இந்த ஆண்டு இந்த மண்ணில் தமிழுக்கு நடந்திருக்கிறது! நாவிதன் ஒருவனுக்கு இந்த ஆண்டு படைப்பிலக்கியத்திற்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது. தமிழ் போகிற போக்கைப் பார்த்தீர்களா?” என எனது பெயரையும் சேர்த்துச் சொல்லிக் கிண்டலடித்தாராம்.
இந்த மண்ணில் இதுவரை எழுதிக் கொண்டி ருக்கும் எந்தவொரு தமிழ் எழுத்தாளனுக்கும் இப்படி யொரு அநுபவம் ஏற்பட்டிருக்காது!
வேறொரு அநுபவத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும், இந்த இடத்தில்.
தண்ணீரும் கண்ணிரும் என்ற எனது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கைச் சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொண்டு நண்பர்கள் மத்தியில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டங்களில் கலந்து
கொண்டு மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் ஒருநாள், !
யாழ்ப்பான பஸ் நிலையத்தில் பண்டிதர் இள முருகனாரைச் சந்தித்தேன்.
என்னதான் கருத்து வித்தியாசம் இருந்தாலும் தமிழ்ப் புலமையாளர்களை நான் கெளரவித்துக் கனம் பண்ணி மதிப்புக் கொடுப்பது எனது நீண்ட நாளைய வழக்கம்.
இந்த எனது இயல்பான குணத்திற்கமைய அவரை மதித்து கிட்டே நெருங்கிக் கதைத்தேன்.
”டேய், தம்பி! புத்தகமெல்லாம் எழுதி இந்த
ஆண்டுப் பரிசெல்லாம் பெற்று விட்டாயாம்! "
உன்னுடைய புத்தகம் ஒன்று எனக்குத் தேவை!” என அன்புடன் முகம் மலரக் கேட்டுக் கொண்ட்ார்.
எனக்கு இவரது மருமகனைத் தெரியும். இவர் கார்த்திகேசனின் மாணவன். அப்பொழுது இந்துக் கல்லூரியின் ஆசிரியர். எனது நண்பர். முன்னரே இளமுருகனார் கேட்டுக் கொண்டதிற்கிணங்க எனது சிறுகதைத் தொகுதியை அன்பளிப்பு எனக் குறிப்பிட்டு எனது கையெழுத்தைப் போட்டு, அவரது மருமகனும் எனது நண்பருமாகிய இந்துக் கல்லூரி ஆசிரியரிடம் "இதைப் பண்டிதரிடம் நேரில் சேர்ப்பித்து விடுங்கள்!” எனச் சொல்லிக் கொடுத்து விட்டேன்.
இப்படி அன்பளிப்புக் கொடுத்ததையே நான் மறந்துபோய் விட்டேன்.
50

இந்தக் காலகட்டத்தில் நான் கொழும்பு செல்ல வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. w −
அப்பொழுது இலங்கைச் சாஹரித் திய மண்டலத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்தவர் கே.ஜி.அமரதாஸ் என்பவர். அருமையான பிறவி. தமிழ் மீது தனிப்பற்றுக் கொண்டவர். அபிமானி.
அவருடைய காரியாலயத்திற்கு ஒருநாள் பிற்பகல் நான் சென்றிருந்த சமயம், அவர் புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டே, ஒரு புத்தகத்தை என் முன்னால் எனது பார்வைக்கு வைத்தார்.
அந்தப் புத்தகம் எனது சிறுகதைத் தொகுதி, தண்ணிரும் கண்ணிரும்.
அந்த நூலின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். சிவப்பு மையினால் இடையிடையே அடிக்கோடிட்டு அந்த நூல் திட்டமிட்டு அலங்கோலப்படுத்தப் பட்டிருந்தது.
அந்த நுாலுடன் இணைக் கப்பட்டிருந்த
கடிதத்தைக் கண்ணோட்டமிட்டேன். ‘இலக்கண, இலக்கிய சுத்தமில்லாத இழிசினர் நூலுக்கு எப்படிச் சாஹித்திய மண்டலப் பரிசளிக்கலாம்? எனக் கேட்டு கையெழுத்திட்டிருந்தார் பண்டிதர் இளமுருகனார்.
புத்தகத்தின் முன் அட்டையைப் புரட்டிப் பார்த்தேன்.
அந்த நூல் நான் கையெழுத்திட்டு அன்பளிப்பாக அவருக்குக் கொடுத்த புத்தகம்!
இதைக் கண்ணுற்றதும் எனக்கென்றால் சொல்ல முடியாத மன ஆவேசம். ஆத்திரம்.
பண்டிதர் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்லும் இடங்கள் தோறும் அவரை நேரில் சந்தித்து விட வேண்டுமென்ற நோக்கில் இந்த `இழிந்த செயலுக்கு என்ன சொல்லப் போகிறார்? என்ற நினைப்பில் தேடுதல் நடத்தினேன்.
இதை ஏதோ வகையில் அறிந்து கொண்ட அவரது மருமகனும் யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியரு மான எனது நண்பர், மாஸ்டர் கார்த்திகேசனிடம் சொல்லி எனது நோக்கத்தைக் கைவிடும் வண்ணம் வேண்டிக் கொண்டார்.
என்னை விமரிசிப்பதையோ, எனது எழுத்தைக் கிண்டல் பண்ணுவதையோ, எனது உழைப்பின் ஒவ்வொரு வியர்வைச் சொட்டின் மூலம் இத்தனை
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 52
காலமாக வெளிவந்து கொணி டிருக்கும் மல்லிகையைக் குறை கூறுவதையோ நான் எதிர்க்க வில்லை. அது அவரவர் சுதந்திரம். தனிமனித அபிப் பிராயம், அது தனிப்பட்டவர்களின் கருத்து. *
ஆனால், இப்படியான பண்டிதத் தப்பிலித்தனங் களைத் தான் நான் முற்றாக வெறுக் கிறேன். எதிர்க்கிறேன்.
இலக்கியத்தில் கொ மகா புனிதம் பேசும் யாழ்ப் LT600TL ဖိုးနှီးမ္ယမ္ပိ சுபாவமே இதுதான். யாழ்ப்பாணத்து இத்துப் போன புலமை நோய்க் கூறுகளில் ஒன்றுதான் இந்தப் பண்டிதம்.
இதனடிப்படையில் பிறந்ததுதான் இழிசினர் இலக்கியம் என்ற உயர்சாதி வெறிக் கோஷம்.
இந்தக் கோஷத்தின் பின்னணியில் யாழ்ப்பாணப் பண்டிதம் மாத்திரம் இருந்துவிடவில்லை. எம்மைப் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தோன்றி மலரும் தலித் புத்திரர்களின் படைப்பாற்றலை மழுங் கடிக்க நினைக்கும் உயர் குழாத்தின் பேனா நண்பர் கள் சிலரும் மறைமுகமாகச் செயல்பட்டு வந்தனர்.
இது எமக்கு நன்றாகவே தெரியும்.
முதலில் எமது பரம்பரையின் மனசைக் கொச்சைப் படுத்துவது. பின்னர் வலிமை இழக்க வைப்பது. அடுத்தது கொஞ்சங் கொஞ்சமாக ஒழித்துக் கட்டுவது. தனிமைப்படுத்துவது.
இந்தத் தந்திரம்தான் நீண்ட காலமாகக் கடை பிடிக்கப்பட்டு வந்துள்ளது.
இது ஒரு மனத் தத்துவத் தாக்குதல் தந்திரம். இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த இழிசினர் இலக்கியம் என்ற கோஷத்தை வெகு வன்மையாக எதிர்த்து நாடளாவிய இயக் கமொன்றை நடத்தக கொண்டிருந்தது.
இத்தகைய பின்னணியை மனதிற் கொண்டுதான் நான் மல்லிகை மாத சஞ்சிகையை எப்படியும் வெகு விரைவில் ஆரம்பித்து விடவேண்டுமென்ற முடி வெடுத்து, ஆரம்ப வேலைகளை வெகு துரித கதியில் செய்யத் தொடங்கினேன்.
இப்படியாக மல்லிகைத் தொடர் மாத வெளியீடு சம்பந்தமாக நான் என்னையே மறந்து பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு சம்பவம் நடை பெற்றது.
51
 

எப்படியும் மாதம் ஒரு ஹர்த்தாலோ அல்லது கடையடைப்போ எதிர்ப்பு ஊர்வலமோ கண்டிப்பாக நடந்தேறிவிடும் சூழ்நிலை அன்று வடபிரதேசமெங்கும் வியாபித்திருந்தது.
ஒரு திங்கட்கிழமை என நினைக்கிறேன்.
ஹர்த்தாலுக்கும் அதையொட்டிய கடையடைப் புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
காலை பத்து மணியிருக்கும்.
கோப்பாய்க் கோமான் என அழைக்கப்பட்ட தலைவர் வன்னியசிங்கம் தலைமையில் ஒரு கூட்டம் கடைத் தெருவெங்கும் சுற்றி வந்து கடைகளை அடைக்கும்படி வேண்டுகோள் விடுத்த வண்ணம் நகர்ந்து கொண்டிருந்தது.
நானிருந்த வீதியும் யாழ்ப்பgண நகரத்தில் பிரபலமான தெருக்களில் ஒன்று.
நான் கடை வாசலில் ஒருவிதமான அலட்சிய மனோபாவத்துடன் நின்று கொண்டிருந்தேன்.
கடையடைப்புச் செயல் மூலம் முன்னேறிக் கொண்டிருந்த வன்னியசிங்கம் அவர்களது தலைமை யில் வந்து கொண்டிருந்த கூட்டம் கதவு சாத்தப் படாமல் விரியத் திறந்திருந்த எனது கடை வாசலருகே வந்து நின்றதும் என்னைப் பார்த்துக் கோஷ மெழுப்பியது.
தமிழர்களினது பரந்த ஒற்றுமைக்காக எல்லாரும் ஒருங்கு சேர்ந்து கன்டகளைப் பூட் டி எமது எதிர்ப்பைத் தெரிவித்து ஹர்த்தாலை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டுமென்பதே அவர்களது அவாவாக இருந்தது.
நான் கடைப் படிக்கட்டில் கையைக் கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றேன். எனக்கொரு கருத்துண்டு.
கூட்டத்தினரின் ஆவேசக் கூச்சல்களுக்கு மத்தி யில் வன்னியசிங்கம் அவர்கள் எனக்குச் சமீபமாக நெருங்கி, கடைக் கதவைச் சாத்தும்படி வேண்டு கோள் விடுத்தார்.
நான் எனது செய்கையால் மறுத்து விட்டேன்.
மீண்டும் வற்புறுத்தினார், அவர்.
அவரது கோரிக்கையை நான் மீண்டும் மறுதலித்தேன்.
”தமிழனாய் இருந்தால் அவன் எங்களுடன்
laina 33வது ஆண்டுமலர் ஜனவரி - 2OOபு

Page 53
சேர்ந்து கட்டாயம் ஒத்துழைப்பான்!” என்றார். கூட வந்த குழுவினர் அவர் சொல்வதை ஆமோதிப்பது போல, கோஷமிட்டு அங்கீகரித்தனர்.
நான் தெளிவாக நின்றேன்.
“உண்மையாகச் சொல்லுங்கள். எங்களையும் உங்களைப் போன்ற சமமான தமிழர்கள்ாகத்தான் நினைக்கிறீர்களா? அப்படியென்றால் கொல்லங்கலட்டிப் பக்கம் உங்கட உறவினர்கள் இன்றிைக்குக் கூட தேங்காய்ச் சிரட்டையில் எங்கட சகோதரங்களுக்குத் தேத்தண்ணி குடுக்கினமே, சிரட்டைத் தமிழன் எப்பிடி இண்டைக்கு உங்கட சகோதரமாக மாறினான்? அதைப் போய் மாத்துங்கோ. பின்னாலே தமிழன் ஒற்றுமை பற்றிப் பேசலாம்!”
நான் இப்படி எதிர்க்கனை தொடுப்பேன் என அவர் சிறிதுகூட யோசித்துப் பார்த்திருக்கவில்லை.
கூட்டத்தினர் அவரது கட்டுப்பாட்டையும் மீறி என்னையும் எனது கடையையும் தாக்க முற்பட்டனர்.
வன்னியசிங்கம் அவர்கள் அனுபவசாலி. புத்தி சாதுர்யமானவர்.
நான் தொடர்ந்து சொன்னேன்! “என்னை அடிக்கலாம். கல்லால் எறிந்து என் கடையை இன்று நீங்கள் நொருக்கி விடலாம். நாளைக்கு இதுக்காக எங்கட சனத்திற்கு உங்கட கட்சி பதில் சொல்ல வேண்டி வரும்! இதை ஒருக்காலும் விடமாட்டன்!”
என்னுடைய இந்த அஸ்திரம் தனது வேலையை ஒழுங்காகச் செய்து முடித்தது.
சரி. சரி. அது அவரது இஷ்டம். வாங்கோ நாங்க போகலாம்” எனச் சொல்லிக் கொண்டே புறப்படத் தயாரானார் தலைவர்.
கூட்டமும் பின் தொடர்ந்தது.
இது என்னுடைய வறட்டுப் பிடிவாதக் கருத்தல்ல. நீண்ட நெடிய நாள் அபிப்பிராயம்.
தமிழர்களின் தனிப்பெரும் அபிமானத்தைக் கொண்டியங்கி வந்த கட்சி தமிழரசுக் கட்சி.
தேய்ந்து தேய்ந்து தேடுவாரற்ற கட்சியாக உருமாறி வந்துவிட்டது, இன்று.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமே தனக் கென்றொரு தனித்துவமான, வலிமை மிகுந்த கட்சிக்
கொள்கை இல்லாததே என இப்பொழுது யோசிக்கும் வேளைகளில் நினைக்கத் தோன்றுகின்றது.
52 d
 

1963இல் யு.என்.பி.யுடன் அரசியல் கள்ளக் காதல் நடத்தி ஒரு மந்திரிப் பதவியைப் பெற்றுக் கொண்டு, அத்துடன் திருப்தியடைந்து விட்டது அக்கட்சி.
திருச்செல்வம் அவர்கள் அமைச்சரவையில் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மேதின நிகழ்வில் எங்கள் ஊர்வலத்தில் அக்கட்சி கல்லெறிந்து குழப்ப முனைந்தது. ஆட்சிச் செல்வாக்கு அதற்குத் துணை நல்கி நின்றது. அந்த நமது ஊர்வலமும் பொதுக் கூட்டமும் இன்றைய யாழ்ப்பான பஸ் நிலையத் திலேயே நடைபெற்றது. குழப்ப முனைந்த கூட்டத்தி னரின் கல்லெறிபட்டு என் மண்டை உடைந்தது. எட்டு இழை போடப்பட்டது. இன்றும் அத்தழும்பு என் நடுத்தலையில் உண்டு.
இந்த அரசியல் குரோதத்தினால் நான் இந்தக் கருத்துக்களை இங்கு எழுதிப் பதியவில்லை.
O
தமிழரசுக் கட்சி ஏனைய முதலாளித்துவக் கட்சி களைப் போலவே, வாக்காளர்களை நம்பி வாழ்ந்த கட்சி. அதுதான் அதன் பலம். அதுவேதான் அதன் பலவீனமும் கூட ஆசனங்கள் பறிபோய்விடக் கூடாது.
வடபுலத்தை அன்று அல்லோல கல்லோலப் படுத்திய மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் பிரச்சினை யில் அது டபிள் கேம் விளையாடியது. சாதி வெறி யர்களுக்குப் பயந்து பணிந்துபோய் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பேய்க் காட்டியது.
சுந்தரலிங்கம் போன்ற கல்விமான் கோயில் நிர்வாகத்திற்குப் பெரும் ஆதரவாக நின்ற சமயம் அக்கட்சி ஏனோதானோ என்ற கொள்கையைத்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் சம்பந்தமாகக் கடைப்பிடித்து ஒழுகி வந்தது.
தலைவர் செல்வநாயகம் அவர்களினது தொகுதிக்கு உட்பட்டதுதான் மாவிட்டபுரம் கிராமம். தனது தொகுதிக்கு உட்பட்ட பிரதேசத்தில் நடந்த மானுட அட்டூழியம் சம்பந்தமாக ஒரு தெளிவான கொள்கையோ, கோட்பாடோ அற்ற இரண்டுங் கெட்டான் நிலையைத் தான் தலைவர் கடைப் பிடித்தார். பொதுவாக நடந்து கொண்டார்.
பிரச்சினை கூர்மையடையும் நேரத்திலெல்லாம் தலைவர் கொழும்பில் இருந்தார். தொகுதியில் சிக்காராக நின்று பிரச்சினைக்கு முகம் கொடுக்க வாக்கள்ளர் பயம்.
சுந்தரலிங்கம் களத்தில் நின்றார்.
- (அநுபவம் தொடரும்)
மல்லிகுை 39வது ஆண்டுமAsர் ஜனவரி - 20Oபு

Page 54
வானத்திலிருந்து பொழிந்த குண்டுக நினைவூட்டி நினைவூட்டி இப்போது கொஞ்சம் மழை பெய்கிற எறித்த கொடும் வெய்யிலுக்கு ஊரெல்லாம் திட்டியதால் வானம் அழுகிறது போலும்!
பயிர் பச்செடி வளர்வதற்கு மழை முக்கியம்தான் வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனாலும் எங்கள் குடிசையில் கூரையைப் பாருங்கள் தொட்டம் தொட்டமாக
எங்கும் ஒரே ஒழுக்கு குந்தவும் இடமில்லை
குருநாகல் ஒலைமட்டை
குழப்பத்தால் நின்று போச்சு! லொறி வரும் வரைக்கும்
மழையே வேண்டாம்!
நாடே எரிந்தாலும் சரி இப்போது எங்களுக்கு
வெய்யில்தான் வேண்டும்'
5.
 

കക്രf
- கவிஞர் செ.குணரத்தினம்
66

Page 55
Oaes/O12shes (6.
9latab39
மல்லிை 39வத ஆண்டு நிறை
Onlinan Goods Electrical Good
77, Havelock Ro. Tel : 25
a fes Ps
O
11
Olindn Goods
Electrical Good
9 A, Ave f leg
54
 
 
 
 
 
 
 
 

可
i. s.
رucرحم آگرہax علا“
கயின்
வில் பூரிப்படைகிறது
biyas
. GroCes"les. st Stationery 兹 、
1d, Colombo - 5 S2567
f Delivery
malas
. GroCeries. st Stationery
laria Road, (
முல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 56
u (půu Tag5ý ஆடல் வளம்
- சபா. ஜெயராச
கிராமிய வாழ்க்கை, நிலம் தழுவிய உற்பத் முறைமை, தொழிற்பிரிவுடன் தொடர்புடைய சா முறைமை, மனவெழுச்சிப் பூர்வமான வழிபாட் இயல்புகள், சடங்குகள் தொடர்புடைய வாழ்க்கை செயற்பாடுகள் முதலியவற்றுடன் யாழ்ப்பாணத் ஆடல் வளம் இணைந்திருந்தது.
யாழ்ப்பாணத்து ஆடல் மரபுகளை பின்வருமா வகுத்துக் கூறமுடியும்.
1. தொழில் முறைமையோடு இணைந்த
ஆடல்கள்
2. கிராமிய வழிபாட்டுடன் இணைந்த
ஆடல்கள்
3. வளப்பெருக்குடன் இணைந்த ஆடல்கள்
4. பொழுது போக்கு அழகியலுடன்
இணைந்த ஆடல்கள்
55
 

T
жымы
1. தொழில் முறைமையோடு இணைந்த ஆடல் களில், உழவு நடனம், பயிர்க்காப்பு நடனம், அறுவடை நடனம், மீனவ நடனம், பசுக்கோலி நடனம், வெள்ளாவி நடனம், சுமைதாங்கி நடனம், குத்தல் வண்டி நடனம் முதலியவை குறிப்பிட்டுக் கூறக் ծռլգա I60)6)].
2. கிராமிய வழிபாட்டுடன் இணைந்த ஆடல்களில் கரகம், காவடி, பாற்செம்பு, தீச்சட்டி, ஆலாபரணம், நடனங்களும், வளர்ந்து கட்டல் ஆடல்களும் பேயோட்டி, கொடும்பாவி, சங்கரி ஆடல்களும் உருவாட்டமும் சிறப்பிடம் பெற்றிருந்தன.
3. வளட்பெருக்குடன் இணைந்த ஆடல்களில் கும்மி, கோலாட்டம், தினைக்கூத்து, பிள்ளை வரம், பாம்பாட்டம், மாரியாட்டம், காய்மடை, பழமடை, கருக்கல்மடை ஆட்டங்கள் முதலியவை முக்கியத் துவம் பெற்றிருந்தன.
4. பொழுதுபோக்கு அழகியலுடன் இணைந்த ஆடல்களாக ஒயிலாட்டம், பந்தாட்டம், குதிரை யாட்டம், பொம்மலாட்டம், அநுமாராட்டம், பாவனை யாட்டம், கதைக்கூத்து, தெருக்கூத்து முதலியலை இடம் பெற்றிருந்தன.

Page 57
யாழ்ப்பாணத்து மரபில் ஆடலாக்கம் 'நேராட்டம், கிளையாட்டம் என இரு வகைப்பட்டிருந்தது. ஆடற் பொருளை நேரடியாக வெளிப்படுத்தி ஆடல் நேராட்டம் எனவும், ஆடற் பொருளோடு இணைந்த கற்பனை களையும், தொன்மங்களையும் வெளிப்படுத்தி ஆடல் கிளையாட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இது ஒரு வகையில் பரத நடனம் குறிப்பிடும் சஞ்சாரி பாவத்தை ஒத்ததாக அமைந்தது.
ஆடலை வெளிப்படுத்தும் அசைவுகள், 'எடுப்பு என்ற எண்ணக் கருவால் வெளிப்படுத்தப்பட்டது. காலசைவுகள் காலெடுப்பு எனப்படலாயிற்று. பரத நடனத்தில் இது அடவு. அடைவு என வழங்கப் பெறும். குதி எடுப்பு, மிதி எடுப்பு, நாக படம், இணை எடுப்பு, விரி எடுப்பு, ஒருமை, இருமை, வளையம், தாயம், பின்னல், முடக்கு, முறி, செப்பம், துண், துண்டி, தூக்கு என்றவாறான காலெடுப்புக்கள் வழக்கிலிருந்தன.
கையெடுப்புக்கள், பிண்டி, பிணையல், செருகல், சங்கு, குடம், நாகம், ஒருமை, இருமை, சள்ளை, வீச்சு, விரிசல், பூட்டி, தம்பட்டம், மாலை, மடக்கை, முழவி, மத்தளம், சின்னம், பெருவி, சிறுவி, தும்பி, தொடு குழல், முன்னெடுப்பு, பின்னெடுப்பு என்றவாறு பலவகைப்பட்டிருந்தன.
கண்ணசைவு என்பது கண்ணெடுப்பு, கண் ணாட்டம், மணியாட்டம் என்றவாறு அழைக்கப் பட்டது. தாழெடுப்பு, மேலெடுப்பு, தளம்பல், முழி வித்தை, செருகல், வாக்கு, கருவோட்டம் என்பன கண் ண சைவுகளைக் குறிக்கும் எண் ணக் கருக்களாயின.
வலமடி இடமடி, முன்மடி, நெட்டியாணம், மிதப்பு என்றவாறு தலையசைவுகள் குறிப்பிடப்பட்டன.
ஆடல் மனவெழுச்சிகளுடன் இணைந்த வெளிப் பாடு கொண்டிருந்தது. உணர்ச்சிகளையும், மன வெழுச்சிகளையும், உயிரினங்களோடு தொடர்புப் படுத்திக் கூறல் யாழ்ப்பாணத்து ஆடல் மரபிலே காணப்பட்டது. இழிவு - மந்தியாட்டம் எனவும், பயம் ஆந்தையாட்டம் என்றும், கோபம் - பாம்புடன் தொடர்புபடுத்தப்பட்டு சீறல் ஆட்டம் என்றும், சாந்தம், இரக்கம் - பசு ஆட்டம் என்றும், வீரம் வேங்கையாட்டம் என்றும், காதல் - குமரியாட்டம் என்றும் கூறப்படலாயிற்று. பரத நடனத்தில் உள்ளடங்கிய ரசம் என்ற எண்ணக் கரு பிற்காலத்தில்
56
 

மட்டுமே யாழ்ப்பாணத்தில் அறிமுகமாயிற்று. உணர்ச்சி வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு சொற் கட்டுக்களும், தாளப் பிரயோகங்களும், சேமக்கலம், மத்தளம், ஞாண்பறை, உடுக்கு, பெரிய மேளம், கிடுக்கிட்டி மேளம் முதலிய தோற் கருவிகளும் இசை முறைமைகளும் கையாளப்பட்டன.
கூடிய வலுவைப் பயன்படுத்தி ஆண்கள் ஆடிய ஆடல் மல்லுக் கூத்து எனப்பட்டது. மல்லுக் கூத்து ஆடிய கலைஞர்கள் வாழ்ந்த இடம் மல்லுக் குறிஞ்சி என அழைக்கப்பட்டது. தற்போது இது மல்வம் என அழைக்கப்படுகின்றது. இணுவில் கிராமத்தின் எல்லையில் உடுவில் கிராமத்தோடு இணைந்த பகுதியாக இது அமைந்துள்ளது. மல்லுக் கூத்து நிகழ்ந்த பிறிதொரு கிராமம் மல்லாகம் என்றும் சொல்லப்படுகின்றது. மென்மையானதும் நளினம் மிக்கதுமான அசைவுகளையும் அலங்காரம் மிக்க ஆடைகளையும் அணிந்து பெண்கள் ஆடிய ஆடல் பண்டக் கூத்து எனப்பட்டது.
பண்டர வெளியிலே பண்டக் கூத்தும் குண்டாளச் சட்டியிலை கொதி நெல்லும் என்ற தொடரின் விளக்கத்தையும் முதியோர் வாய்க் கேட்ட பொழுது நெல் அவித்தல், குற்றுதல், புடைத்தல், பொங்கு தலுடன் பண்டக் கூத்து தொடர்புடையதாக இருந்தமையைச் சுட்டிக் காட்டியுள்ளனர். அளவுப் பரிமாணங்களுடன் அடி வைத்து ஆடல் நிகழ்ந்த இடம் அளவடி என்றும் பிற்காலத்தில் இது அளவட்டி, அளவெட்டியென்றும் அழைக்கப்பட்டதென முதியோர்கள் கூறிய தகவல் முற்றிலும் வாய்மொழிச் சான்றாகவே அமைந்துள்ளது. இக்கருத்தைப் பலப் படுத்துவதற்குரிய பிற ஆதாரங்கள் இன்னமும் கிடைத்தில.
வாய்மொழியாகக் கிடைத்த மேலும் சில தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
1. தாவி ஆடிய புலம் - தாவடி
2. கெந்தி ஆடிய நிலம் கெந்தல் தறை -
கொம்மாந்தறை
3. சீராக அடி வைத்து ஆடிய இடம் - சீரடி -
சீரணி
4. பாதம் சிவக்க ஆடிய ஒழுங்கை - ஆடிய பாதம்
வீதி
5. கூத்தாடிய புலம் - கூத்தப் புலம் (இணுவில்
முஸ்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 58
கிராமத்துக் காணி உறுதிகளில் இது காணப் படுகின்றது.)
யாழ்ப்பாணத்து ஆடல் வளத்துக்கும் வாழ்வுடன் நிலைபேறு கொண்டிருந்த மருத்துவ முறைமை களுக்குமிடையே நேரடியான தொடர்புகள் காணப் பட்டன. இப்பிரதேசத்தில் நிலவிய நாட்டார் மருத்துவமும், சித்த மருத்துவமும் நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய இயற்கைக் கூறுகளோடு மனிதரை இசைய வைப்பதன் வாயிலாக உடற் சுகமும், உளச் சுகமும் எட்டப்படலாம் என்பதை வலியுறுத்தின. இயற்கைக் கூறுகளோடு மனிதரை இசைய வைப்பதற்கு ஆடல்கள் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டன. m
நிலத்தோடு இசைவுற ஆடும் ஆடலுக்குரிய சில பாடல் வரிகள் கிடைத்தன.
பூத்தாயே பூமகளே பொன்னளந்த சீமாட்டி காத்தருள வேண்டி யெல்லோ காலடுக்கிப் பாவுகிறன்.
பூத்தாயே பூமகளே கண்ணளந்த சீமாட்டி காத்தருள வேண்டியெல்லோ காலடுக்கித் தாவுகிறம்
பூத்தாயே பூமகளே
கண்ணளந்த சீமாட்டி
கூத்தாட வந்த வழி
குங்கும மாய்க் கிடக்குதடி
நீரோடு இணைந்த ஆடல்கள் முத்துமாரியம்மன் பாடல்களோடு தொடர்புடையதாயிருந்தன. நீர், காற்று, தீ, வெளி (ஆகாயம்) ஆகியவற்றோடு தொடர்புடைய ஆடல்கள் ஒலி எழுப்பி ஆடல்களாக (VOCE MAKING DANCES) esOLD5560. BL 60TLDIT(6(36) is st ஒன்று சேர்ந்து குரலெழுப்புதல் இங்கு இடம் பெற்றது. இது குரவை என்றும் கூறப்படும்.
நீரோடு இசைவுற ஆடும் ஆடல் முத்துமாரி அம்மன் வழிபாட்டோடும் சடங்குகளோடும் இணைந்திருந்தது.
குடங்குடமாய்த் தண்ணியள்ள கோரைப் புல்லு மூச்செடுக்க சடங்கு வைச்ச மாரியம்மன் சாத்திக் கொட்டிப் படியளப்பாள்.
57

வாடல் செண்டை வரியெடுக்க வருக்கல் மரம் சுரி சுமக்க கூடல் கொண்டை மாரியம்மன் குவிச்சுக் கொட்டிப் படியளப்பாள்.
பாளைப் பனை விறைப் பெடுக்க பறவிக் குளம் மிதப்பெடுக்க சாளை யம்மன் முத்துமாரி சங்கெடுத்துப் படியளப்பாள்.
யாழ்ப்பாணத்து முத்துமாரியம்மன் பாடல்கள் வரன் முறையாகத் தொகுக்கப்படாமையால் அவை மறைந்த சுவடுகளாகி வருகின்றன.
தீ மிதித்தல், தீச்சட்டி தாங்குதல் முதலிய வற்றோடு இணைந்த ஆடல்களும் பொங்கல் பானையைச் சுற்றி ஆடுதலும் நெருப்போடு பழகும் ஆடல்களாக இருந்தன. தீப்பரவலைச் சுற்றி ஆடுதலும், தீ மிதிக்க முன்னரும் பின்னரும் ஆடுதலும் திரெளபதி, சீதை முதலாம் பாத்திரங்களின் தொன் மங்களோடும் இணைந்திருந்தன. நெருப்பைப் பெண்
தெய்வமாக்கி அடுப்பு நாச்சி' என்று கூறும் மரபு
நிலவி வந்தது.
காற்றோடு இசைய வைக்கும் நடனங்களின் படி முறை வளர்ச்சியோடு ஒய்லாட்டம் தொடர்பு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துணியைக் காற்றில் பிடித்து அசைய வைத்து ஆடல் செய்தலில் இருந்து ஒயிலாட்டமாக மாறிய தென்பர். யாழ்ப்பாணத்து மரபில் இது ஆண்களுக் குரிய ஆட்டமாகவே இருந்தது. ஆண்கள் தமது தோள்களில் அணிந்த தாவல்களை (சால்வைகளை) ஆகாயத்தில் வீசி எறிந்து ஏந்தி இந்த ஆடல்களை இயற்றினர். தாவல்களை விரித்தெறிதல், முறுக்கி எறிதல், சுருக்கியெறிதல், தொடுத்தெறிதல் என்பவற் றோடு தொடர்புடைய ஆடல்கள் வழக்கிலிருந்தன. (உத்தரியங்களை எறிந்து மகிழ்ச்சி கொண்டு ஆடியமை பற்றிய செய்தி பூரீலழரீ ஆறுமுக நாவலரது எழுத்தாக்கங்களிலும் காணப்படுகின்றது) காற்றோடு இசைய வைக்கும் ஆடல்கள் வெற்றிக் களிப்போடும் பெருமிதத்தோடும் இணைந்தவையாகக் காணப் ULL61.
பிணி நீக்கும் ஆடல்களில் மேலெங்கும் பச்சிலை களை அரைத்துப் பூசி ஆடுதல் சிறப்பிடம் பெற்றி ருந்தது. பேயோட்டும் ஆடல்கள் விகாரமான அசைவு கணிளக் கொண்டிருந்தன. உதாரணமாக கைகளைத்
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 200பு

Page 59
தரையில் உளன்றிய வண்ணம் தலை கீழாக நின்று ஆடுதலும் கரணம் அடித்தலும் போயோட்டி ஆடல் களில் இடம் பெற்றன.
இயற்கையோடு இசைவுற வைத்தல் போன்று மனிதர்களோடு மனிதர்களை இசைய வைப்பதற்குரிய ஆடல்களும் யாழ்ப்பாணத்திலே ஆடப்பட்டன. தற்கால ஆய்வாளர்கள் குறிப்பிடும் சமூக மயமாக்கற் செயல் (p60) mufo) (SOCIALISATION PROCESS) ஆடல்களை ஆராயும் பொழுது இது தெளிவாகப் புலப்படுகின்றது.
ஒரு பெண் தமது கண்களைப் பொத்திக் கொண்டு ஆடுதலும், மற்றைய பெண்கள் பொத்தாமல் ஆடுதலும், கண் பொத்திய பெண் கண் பொத்தாத பெண்களைப் போன்று காலசைவுகளை வைத்து ஆட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. கண் பொத்திய பெண் சமூக மயமாகாத பெண்ணுக்கு குடியீட்டு வடிவினளாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
616)JLLD 616)JL-D
புளியடி புளியடி
என்ன வேணும்
சொல்லடி சொல்லடி என்று சொல்லிக் கொண்டு இருவரும் ஒரே சீராகக் கால் பதித்து ஆடுவர்.
கடகம் எடுத்துக் காவல் வைச்சு நடவு நட்ட தினையைக் காக்க 616) to 616) LD புளியடி புளியடி என்ன வேணும்
b_6HLQ bi bill)
முதியோர் தமது திறன்களை இளையவர் களுக்குக் கற்றுக் கொடுத்தலும் சமூக சீராக்கத்தின் பாற்படும். புல்லரிப்பு நடனம் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது. வயல்களிலும் தோட்டங்களிலும் பெரியவர்கள் வேலை செய்வதைப் பாவனை செய்து இளையவர்கள் ஆடும் ஆடலாக இது அமைந்தது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் களை பிடுங்குதல் என்பது புல்லரித்தல் என்று குறிப்பிடப்படும். விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களைப் பாவனை செய்யும் ஆடல்களும் யாழ்ப்பாணத்தில் வழக்கிலிருந்தன. பாவனை ஆடல் தொடர்பாகக் கிடைத்த பாடல் ஒன்று வருமாறு.
59
 
 

சின்ன மணிச் சிறுக்கி ஆடே! சீந்தில் வெளி மேய வந்தாய்! கனக மணி நாச்சி அம்மை கால் பதிக்க விட்டாளோ?
சுளகு மணித் துள்ளல் மாடே! சூரன் வெளி மேய வந்தாய்! கனக மணி நாச்சி அம்மை கால் பதிக்க விட்டாளோ?
பச்சைத் தினை கொய்ய வந்த பனை மரத்துக் கிளியாத்தா! உச்சி வெய்யில் கொழுத்த வெல்லோ ஊர் சுத்திக் குதிக்க வந்தாய்!
வெட்டை வெளிப் புல் கடிக்கும் பொட்டுக் குயில் ஆத்தாளே! அட்ட வெளி மாங் கொப்பில் அரசிருக்க வந்தாயோ? w
ஆடலுக்குரிய வளமான சொற்கட்டுகள் (சொற் பூக்கள் அல்லது ஜதிகள்) யாழ்ப்பாணத்தில் நிலவி வந்தாலும், அண்ணாவி மரபின் வீழ்ச்சியோடு ஆடலும், சொற்கட்டுக்களும் குயிலுக்கருவிகளும் மறைய லாயின. மேலைத்தேயக் கல்வி முறையின் தீவிரம் கிராமிய ஆடல் பாடல்களை வேண்டாத பொருள் களாகக் காட்டியது. மறுமலர்ச்சி பெற்ற இந்துக் கல்வி இயக்கங்கள் தொல்சீர் ஆடல்களையும், இசையையும் மீட்டெடுத்தனவேயன்றி நரட்டார் கலை களைப் பெருமளவில் நழுவ விட்டன. மறுமலர்ச்சிக் கல்வி இயக்கங்களால் மீட்டெடுக்கப்பட்ட பரத நடனத்தின் நாட்டாரியல் வேர்கள் கண்டறியப்படாது, செம்மைப்பட்ட இலக்கியங்களில் இருந்தும் புராணங்களில் இருந்தும் ஆரம்பம் குறித்துரைக்கப் படுகின்றது.
மறுமலர்ச்சி இயக்கங்கள் மத்திய தர வகுப்பினரை அடியொற்றி இயங்கியமையால் கீழ்த்தட்டு மக்களின் கலைகளின் ஆழத்தைக் கண்டறியும் முயற்சிகளை மேற் கொள்ளவில்லை. பொதுநல நோக்கம் கொண்ட ஆய்வறிவாளர்கள் சிலரே இவ்விடயம் பற்றி ஆழ்ந்து சிந்தித்தனர். (இணுவில், அளவெட்டி, கலைநகர், மாத்தளை முதலாம் இடங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுத்தாக்கம் பெற்றது)
ஸ்கை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oடி

Page 60
unsis5608, 3 6 Tit' tgt'it' எமது நல்6 gtnitie
அஸ்ரீஸ் அமீன்
டாம்
கொமு தொலைபேசி
59
 
 
 
 
 
 
 
 

9வது ஆண்டை | ဂိါး
டிப்தையிட்டு வாழ்த்துக்களை க்கின்றோம்.
) மன்றம்
கட்டிடம் வீதி, ம்பு - 11.
2433170,2330597
Ea. 396 JH Ababib UD6LS si gav SJÁf - 2oo

Page 61
-/asy-so\-soy (புதியவர்கள்
u او eی -, மராட கலப்பாக இ
foo6)TLD6) அந்த வீடு மு இருந்தது. வந்து, அந் வீட்டின் உ களையும் ப களுக்கும் 8
அந்த ெ மாலைதான் கினாள். அ6 இருக்குமா. கிழவியில் ற
60
 

க. சட்டநாதன்
ழைய நாற்சதுர வீடு. தொண்ணுாற்றைந்து - தென் சியை நோக்கிய இடப்பெயர்ச்சிக்கு முன்னர் கல நிருந்தது. கடந்த ஏழு வருடங்களாக, உயிர்ப்பேது, களை இழந்து, காடு மண்டிக் கிடந்தது. இப்பொழுது முற்றத்துக் குருமணல், பொன்னாய் பளிச்சிட அழகாய் நான்கு நாளாக முகம் தெரியாத மனிதர்கள் சிலர் த வீட்டையும் வளவையும் துப்பரவு செய்தார்கள். டைந்த பகுதிகளையும் களவு போன மூலை ஒடு )ாற்றிச் சரி செய்தார்கள். ஜன்னல்களுக்கும் கதவு வேடச் சிறு சிறு தச்சுவேலைகள் நடந்தன.
பீட்டுக்கு அவள் புதிதாகக் குடி வந்திருந்தாள். நேற்று அவளொரு மொறிஸ் மைனர் காரில் வந்திறங் வளுடன் வயதான ஒரு முதுகிழவி. அவளது தாயாக ? உதவி ஒத்தாசை என்று வந்தவளாயிருக்கக்கூடும். நல்ல தளர்ச்சியும் தளம்பலும் தெரிந்தது.
களது வீடு மாடி வீடு. மாடியின் மேற்குச் சாய்வில் ந்திருந்த குண்டு மல்லிகைப் புதரின் மறைவில் ர்றபடி, என்னால் அந்த வீட்டின் புறச்சூழலை றிப்பாக அவளையும் அவளது அசைவுகளையும் பனம் கொள்ள முடிந்தது.
வதவதவென அவள் வளர்ந்திருந்தாள். பிருஷ்டத் ந்குக் கீழாகத் தழையும் கூந்தல். முகம் வசீகரமாகவும் ன்கள் பெரிதாகவும் இருந்தன. மாந்தளிரில் சிறிது ஞ்சளைக் கொட்டிப் பிசைந்தது போன்ற நிறம். ர்பகம் கவர்ச்சி ஏதுமில்லாது மிகச் சிறியதாக நந்தது.
“தூரத்துப் பசுமை கண்ணுக்கு குளிர்ச்சி பதுபோல ஏதாவது இவளிடமும் இருக்குமோ..!"
அவளை நெருக்கத்தில், மேலுதட்டோரம் துளிர்த் நக்கும் பூனைமயிர் தெரியப் பார்க்க வேண்டும் போலி

Page 62
குந்தது.
ஏய். ஏய். இது கொஞ்சம் அதிகம்.”
w
உள்ளிருந்து, ஏதோ என்னை எச்சரித்தது.
யாரோ மாடி ஏறிவரும் அரவம். யாரோ என்ன, எனது சகதர்மினி நிதிதான் . சுதாரித்துக் கொண்டவன், இரண்டு மல்லிகை மொட்டுக்களுடன் அவளை நெருங்கினேன்.
தையல் மெஷினோடு மல்லுக் கட்டியபடி அவள். என்னைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் பழைய களை, பிரகாசம். நீரிழிவால் அவதிப்படும் அவளுக்குப் புதிய மருந்து நன்றாகவே வேலை செய்கிறது.
அவள் அருகாக வந்து, கையில் இருந்த மல்லிகை மொட்டுக்களை அவளது கைகளில் பொதித்துவிட்டு, விலகிய போது, அவள் சிரித்தபடி கேட்டாள்:
“என்ன. என்ன இளமை திரும்புதோ..?”
அவளுடன் வாழ்ந்த வாழ்வின் அற்புதங்கள் அனைத்தும் ஒரு கணம் மனதில் மிதப் புக் கொள்கிறது.
’கொடுத்து வைத்தவன்..!
மனசு தளம்பி, அமிர்தமாய் வர்சிக்கிறது.
மாடியிலிருந்து இறங்கிய நான், வீட்டின் முன் முற்றத்துக்கு வந்தேன். ஹோர்ஸ் பைப்பின் உதவி யுடன் பூஞ்செடிகளுக்கு நீர்வார்க்க ஆரம்பித்தேன். மேற்குப்பக்கமாக ஆளரவம். திரும்பியவன், அவள் மதிலோரம் நிற்பதைக் கண்டேன்.
‘என்ன முசுந்தாஸா..? குங்கும நிறத்திலை, கொத்துக் கொத்தாக, உந்தக் கண்ணிகள் எவ்வளவு வடிவு.!”
பேச்சு மூச்சு ஓய்ந்த நிலையில் - நான் விரும்பிய நெருக்கத்தில் அவளைப் பார்த்தேன்.
அவள் அழகிதான். மேல் உதட்டோரம் பொன் கிளையாய்ப் பூனை மயிர்கள் இருந்தன. ஈரம் உலர்ந்து, வதங்கிய மலர்போல அவள் இருந்தாள். அவளது கண்களிலும் ஈரமில்லாத வரட்சி. தொலைத்து விட்ட எதையோ அவை தேடுவது போலிருந்தது. இனந் தெரியாத ஒரு துயரின் சாயல்
61

அவளைச் சூழ இருந்தது
இது ஏன். எதற்கு.?
மனசு இளகி அவள்பால் பரிவு கொண்டது.
அவளது வயதுக்கு, அவளது ஒதுக்கம் எனக்கு வியப்பாக இருந்தது.
கடிவாளமிடாத, திமிர்த்த, பிடரி மயிர் சிலிர்க்கும், வீரியம் மிகுந்த, ஓர் அரபிக் குதிரையின் துள்ளல் இவளுக்குக் கூடிவந்தால். இவள். இவள் எப்படி இருப்பாள்.!
குதித்துக் கும்மாளமிடும் மனசைச் சமனப் படுத்தியபடி, அவளைப் பார்த்துக் கேட்டேன்:
“உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா..?”
பதிலேதும் தராது மெளனித்தவள், வீட்டின் உள்ளே வேகமாகச் சென்று மறைந்தாள்.
) ))
அவளைப் பற்றிய செய்திகள் - எங்கள் வீட்டுப் பக்கம் சிறிது சிறிதாகக் கசியவே செய்தன.
மறுநாள் காலையில், பரமேஸ்வரனின் ஒட்டோவில்தான் அவள் பட்டணப் பக்கம் போனாள். பரமேஸ் என்னைக் கண்டதும் தானாகவே சொன்னான்:
‘ஆள் உரும்பிராய்ப் பக்கம் போல. கொழும்பிலை இலங்கை வங்கியிலை வேலை செய்தவ. வெள்ளவத்தை பிராஞ்ச். இஞ்சை ஸ்ராண் லி றோட் பிராஞ்சுக்கு மாற்றலாகி வந்திருக்கிறா. மனேச்சர்.”
‘பாக்கிறதுக்குச் சின்னப்பெட்டை மாதிரித் தெரியுது. மனேச்சரோ.!’
எனது குரலின் ஆச்சரியத்தை வெட்டியபடி, பரமேஸ் தொடர்ந்தான்:
’இல்லை. ஆள் கொஞ்சம் முத்தல். முப்பது வயதாவது இருக்கும்.”
அவன் ‘முத்தல் கித்தல்' என்று அவளைப்
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 200ழ

Page 63
பற்றிக் கூறியது எனக்கு ஏனோ பிடிக்கவில்லை.
நாலுநாள் கழித்து, எனது அடிசிற்கினியாள் காவி வந்த செய்தி, எனக்கு இன்னும் சுவை யானதாக இருந்தது.
‘இந்தப் பெட்டை ஈசு.”
ஆரப்பா. எந்தப் பெட்டை.?”
“பக்கத்து வீட்டிலை வந்திருக்கிற ஈஸ்வரிதான். சடங்கு முடிச்சு, கொழும்பிளை மாப்பிளையோட இருந்தவள். அவன் அப்படி இப்படியெண்டதாலை, அவனை விட்டிட்டு, இஞ்ச வந்திட்டாள்.”
‘அப்படி இப்படியெண்டால்..?”
“சத்தம் போடாதேங்கப்பா. அவன் ஒரு Sexual Pervert.'
`இது உனக்கு ஆர் சொன்னது?”
‘’ நம்மடை நகுலாதான். இரண்டு பேரும் ஹிண்டு லேடீஸிலை ஒண்டாப் படிச்சவை. நல்ல .பிரண்ட்ஸ்.”
‘நீரும் ஹிண்டு லேடீஸ் தானே.”
G
அவை இரணி டு பேரும் எனக் கு ஜனியேர்ஸ்.”
`சரி. சரி. பேர்வேர்ட் எண்டா என்ன மாதிரி?”
எனது ஆர்வம் நிதியைக் குழப்பியிருக்க வேணும். இறுக்கம் குலைந்த குரலில் அவள் சொன்னாள்:
é.
‘அதை. அந்த அசிங்கத்தையெல்லாம் சொல் லேலுமா. இவள். இந்தப் பெட்டை எல்லாத்தையும் நகுலாட்டைக் கொட்டி அழுதிருக் கிறாள். நகுலாதான் எனக்குச் சொன்னவ.”
’அது சரி. அந்த ஆளின்ரை வக்கரிப்புத்தான் என்ன..? எனக்குச் சொல்லுமன்.”
கதை கேட்கும் ரசனை எனக்கு.
‘’அவன்ரை பேர் தயாளன். திண்னவேலிப் பக்கம். வேலுப்பிள்ளை வாத்தியாற்றை மகன். ஏகபுத்திரன். டொனேசன் அது இதெண்டு இவள் பெட்டேற்றை பத்துக்கு மேலை சுவடீற்றான்.”
62 ܗܝ•

ட்பத்து லட்சமா..?”
ஓம். ஓம். ஆள் சரியான சிம்பான்ஸி. எனக்கு அவனை நல்லாத் தெரியும். ஈசுவுக்கும் அவனுக்குமிடையிலை, தெறிப்பு ஏற்படுறதுக்கு அவன் வேலை செய்யிற கொம்பனி ஸ்ரெனோதான் காரணம். இருவது வயது. இளம் பெட்டை. சிங்களத்தி. சுனந்தா எண்டு பேர்.”
` சிங் களத்தி எண் டா நல்ல வடிவாத் தானிருப்பாள்.”
‘சரி சரி வாயூறிறதை விட்டிட்டுக் கேளுங்க. முதலிலை அவன், அந்தச் சுனந்தாவோடை ஊர் சுத்தியிருக்கிறான். ஒருநாள் அந்த Stud bu11, சுனந்தாவைக் கூட்டிக் கொண்டு, இவையின்ரை அனெக்சுக்கே வந்திட்டான்.” O
'' 9.Qg566,60T Stud bull...
"ஒண்டோடை மனசடங்காமல் கண்ட கண்ட பெண்டுகளோடை அலையிறவனை வேறென் னெண்டு சொல்லுறது.?”
`ம். சரி சொல்லும்.!’
’கொழும்பிலை அணைக்ஸெண்டா உங்களுக் குத் தெரியுந்தானே, ஹோல், ஒரு பெட் ரூம், கிச்சின், அற்றாச் பாத் அவ்வளவுதான். சாப்பாடு ஆனதும் தயாளன்தான் பெட்மேக் பண்ணினான். டபிள் பெட் மூண்டு பேரும் ஒண்டாப் படுக்க வேணுமெண்டு ஈசுவை அவன் வற்புறுத்தியிருக் கிறான்.”
’ ‘இதென்ன கூத்து. எண்டு ஈசு விக்கித்துப் போனாளாம்.’
G
கட்டிலை ஆயத்தம் செய்யும் போதே, தயாளன் அந்தச் சுனந்தாவை இழுத்து இழுத்து அணைத்து, முத்தம் வேறு கொடுத்திருக்கிறான். இவளுக்கு உடம்பெல்லாம் தீப்பற்றியது போல 3(bbg5(bdb(5. you... you Son of a bitch... get lost... எண்டு ஏதோதோ முனகியவள், தனது தலை யணையையும் பெட்சீற்றையும் உருவி எடுத்தபடி, ஹோல் பக்கமாக வந்துவிட்டாள்.”
கதை கூறிவந்த நிதி, என்னையும் அடிக்கடி கடைக்கண்ணால் பார்த்துக் கொள்ளவும் செய்தாள்.
'ஹோலைப் பார்த்த கதவு - திறந்தபடி
ல்ேலிகை 39வது ஆண்டுமAsர் ஜனவரி - 20Oபு

Page 64
இருக்க, அவன் சுனந்தாவுடன் முணங்கினான். ஒரு பெண், வெட்கம் கெட்டதனமாக ஒரு ஆடவனுடன், அதுவும் திருமணமான ஒருவனுடன் புனர்வதை ஈசு ஒரக் கண்ணால் பார்க்கவும் செய்தாள். இவள் எழுந்துபோய் கதவை அடித்துச் சாத்திய பொழுது, மூக்கனும் சாரையும் போல அவர்கள் பிணைந்து கிடந்தார்கள்.”
`இந்த இடத்திலை ஈசு ஒரு பட்டுத் துணியைப் போட்டெடுத்திருக்கலாமே. பாம்புகளின் ரை ஸ்கலித நீர் பட்ட பட்டு அப்படிச் செல்வத்தை கொட்டிக் கொடுக்குமே.”
நான் சிரித்தபடி கூறினேன்.
‘வக்கிரம். வக்கிரம். நீங்களும் ஆம்பிளை தானே..! உங்கடை புத்தி எங்க போகும். அந்தப் பெட்டை பாவமெண்டு ஒரு சொட்டு இரக்கங்கூட உங்களுக்கில்லை.”
‘ஸொரி. ஸொரியடா. என்னை மன்னிச்சிடு.”
கூறியவன், எழுந்து நிதியிடமிருந்து தூரமாக விலகிக் கொண்டேன்.
இந்தத் தயாளனின் Perversion இது மட்டுமா? Q6ïGojñ... Q6ôïgotb bestiality, exhibitionism, SadiSm, Sodomy, tape 6TSööị QL- 6ò 6ò Tưô 6ìfìIfì6ìị கொண்டிருக்குமோ..?
மனசு ஈசுவைப்பற்றி, அவளது வாழ்க்கை பற்றி, அதன் அவலங்கள் பற்றி எல்லாம் மேலும் அறிந்து கொள்ள விரும்பியது.
‘நிதியிடம்தான், கால நேரமறிந்து கதைக்க வேணும்.’ என நினைத்துக் கொண்டேன்.
b )
ஈசுவைப் பற்றி நானும் நிதியும் கதைத்த இரண்டொரு கிழமைக்குள்ளாகவே அவள் எங்கள் வீட்டுப் பக்கம் வந்தாள்.
படி ஏறிவந்த அவளை, மனசு நனைகிற மாதிரி சிரித்தபடி வரவேற்றேன்.
‘ரீச்சர் இருக்கிறாவா..?”
`வாருங்க ஈசு...! எங்க வீட்டுப்படி ஏறுற தில்லை எண்ட சபதமா..?”
63

‘கோயிலை பார்த்துப் பேசியது போதாதா..?
’அது சரி. நான் கூடப் பக்கத்திலை இருந்தும் உங்களை எட்டிப் பார்க்கிறேல்லை.”
** அக்கா பெரிசா ஒண்டுமில்லை. என்ரை Boluse block கொண்டு வந்திருக்கிறன். எனக்கு இரண்டு சட்டை தைச்சுத் தரவேணும்.”
“இப்ப தைக்கிறேல்ல. எண்டாலும் உமக்கு முடியாதெண்டு சொல்லேலுமா.”
“அதென்ன எனக்கு மட்டும் ஸ்பெஷல்'
‘நொந்து போயிருக்கிற பெட்டை எல்லா எங்கட ஈசு.”
Gigsful DIT...?'
‘‘கொஞ்சம் கொஞ்சம் தெரியும். நகுலா சொன்னவ.”
‘முழுசாத் தெரிய வேண்டாம் அக்கா. அந்த மனிசன் ஒரு சாக்கடைப் புளு மாதிரி. அந்த வாழ்க்கை ஒரு கெட்ட கனவு மாதிரி. அந்தச் சகதியிலை இருந்து, விடுபட்டு வந்தது, மனசுக்கு நிம்மதியா இருக்கு.”
எல்லாவற்றையும் துடைத்து எறிந்து விட்டவள் போல அவள் பேசினாள்.
அந்தப் பேச் சிலிருந்த அலட்சியமும் தைரியமும் எனக்குப் பிடித்திருந்தது.
* மிஸ் இப்படித்தான் உசாராய் இருக்க வேணும்.”
எனது குறுக்கீடும் அதிகப்பிரசங்கித் தனமும் அவளை அசர வைத்திருக்க வேண்டும்.
‘சேருக்கும் தெரியுமா..?”
அவளது குரலில் இழைந்த ஏதோ ஒன்று என்னைக் கூனிக் குறுக வைத்தது.
நிதியின் முகத்தைப் பார்ப்பதற்குத் தெம்பேது மில்லாது, மனக்கிலேசத்துடன் எழுந்து, எனது அறைப் பக்கம் நடந்தேன்.
மாடி ஏறிய ஈசுவும் நிதியும் அன்று பலமணி நேரம் ஏதோ குசுகுசுத்தார்கள். அவர்கள் எதைப்
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 65
பற்றி அப்படிப் பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் நிதியிடம் கேட்பதற்கு துணி வில்லாது விட்டுவிட்டேன்.
b )
கால நகர்வில், ஈஸ்வரியின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
பொலிவிழந்து, உலர்ந்து போயிருந்த அவளது உடலில் ஒரு திரட்சியும் செழுமையும் தானாகவே தழைந்தது. கன்னங்களில் செம்மை படர, மென்மை யும் பட்டின் பளபளப்பும் அவளுக்கு வாய்த்தது. கண்களில் பிரபஞ்சத்தையே வளைத்துப் போடும் ஒரு பிரபை, ஒளிக் கீறலாய் ஒரு சிரிப்பு, எப்பொழுதும் அவள் உதட்டோரம் இருந்தது. மனசோடு புதைந்து கிடந்த துயரம் விலகிப் போக, அவள் வெண்பஞ்சின் லாவகத்துடன், தரையில் கால் படாமல் மிதந்தாள்.
அவள் ஆடை அணிவதிலும் தன்னை அலங் கரிப்பதிலும் கூட அதிக அக்கறை எடுத்துக் கொண்டாள். ஒரு சமயம் வீட்டுப் பக்கமாக வந்து GBU T60T GUT (pg, Intimate perfumeuô6ð Gbọ, எங்க வீட்டுச் சுவாசத்தையே ஈரப்பூடுத்தியது.
‘இந்த ரசவாதம். மாற்றம். எல்லாம் எதனால்..?
குழம்பிக் கிடந்த எங்களுக்கு, இரண்டொரு நாளில், விடை எளிதாகக் கிடைத்தது.
அன்று நனைந்து கிடந்த வானம் உடைத்துக் கொண்டது. மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. மழையில் நனைந்தபடி, அவனும் அவளும் ஒரு ஒட்டோவில் வந்து இறங்கினார்கள். அவனை முன்பின் பார்த்த ஞாபகம் ஏதும் எனக் கில்லை. புதியவன் என்று நிதியும் கூறினாள்.
அவன் ஒடிசலாய், வதவதவென்று வளர்ந் திருந்தான். உடல் சிவந்து கிடந்தது. ஆழ்ந்த பெரிய கண்கள். முகத்தை விட்டகலாத சிரிப்பும் மலர்ச்சியும் அவனிடம் இருந்தது.
அவளைவிட அவன் இளமையாக இருந்தான்.
மழையில் நனையாதவாறு அவளைத் தனது மார்பினுள் புதைத்தபடி - கேற்றைத் திறந்து, வீட்டுப்
64
 

படிக்கட்டில் ஏறினான். நனைந்த கண்மடல்கள் படபடக்க, அவனையே பார்த்தபடி, அவளும் படி ஏறினாள்.
மூன்று நாட்களாக மழை விடாது பொழிந்தது. அவர்கள் இருவரும் வெளியே எங்கும் போகாமல் - தேன் நிலவுத் தம்பதிகள் போல - இழைந்து இழைந்து, காதல் வசப்பட்டவர்களாய் கிறங்கிக் கிடந்தார்கள்.
அதை, அந்த நாற் சார் வீட்டின் மேற்கு விறாந்தையிலும் அலட்சியமாக - நீக்கல் தந்து, மூடிக் கிடந்த, அறைக் கதவுகளின் ஊடும் என்னால் பார்க்க முடிந்தது.
‘அப்படிப் பார்ப்பதே விவஸ்தை கெட்ட தனமா? என மனம் விசாரப்பட்டபோதும் - கூத்ச மேதுமில்லாமல் அவர்களது அசைவுகளையும் இசைவான மிதப்புகளையும் நான் பார்க்கவே செய்தேன்.
‘வாழ்வு தரக்கூடிய நிறைவையும் தாம்பத்திய சுகத்தினுள்ளுறும் பரவசத்தையும் தவற விட்டு விட்டுத் தவிக்கும் இவளுக்கு. இந்தப் பெண்ணுக்கு எல்லாமே கிடைக்க வேணும்.’
மனசாரத் துளிர்க்கும் நினைவுகள்.
இந்த அனுபவம் எனக்குப் புதியது. ஏதோ உள் வீட்டுப் பிள்ளையின் சுகதுக்கங்களில் தோய்ந்து போனது போல ஒரு திருப்தி. இந்த மகிழ்ச்சியையும் பூரிப்பையும் நிதியும் பகிர்ந்து கொண்டாள்.
மூன்று நாட்களாக அடைப்பாம்புகள் போல வளைய வந்தவர்கள், நாலாம் நாள் காலை வெளியே கிளம்பினார்கள். பரமேஸின் ஒட்டோதான் அவர்களைச் சுமந்து சென்றது.
ஈசுவுடைய அவன் - வார இறுதி நாட்களில் வந்து, அவளுடன் தங்கிப் போவதைக் கவனம் கொண்டேன். ஈசுவும் அவனுடன் போனால், இரண் டொரு நாள் அவனுடனே தங்கி வருவதையும் வழமையாக்கிக் கொண்டாள்.
ஒரு மாத காலத்துக்குப் பின்னர். ஒரு மாலை நேரம் - அன்றும் மழை பெய்து கொண்டிருந்தது. ஈசு எங்கள் வீட்டுப் பக்கம் வந்தாள். புதிதாகச் சட்டை தைத்துக் கொள்ள மட்டுமல்ல, அவளுக்கு
lias 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 66
வேறு தேவைகளும் இருந்தன.
வந்த ஈசுவை, வசமாக இழுத்து வைத்துக் கொண்டு, நிதி சளசளக்கத் தவறவில்லை. "
என்னைப் பார்த்த ஈசு, ‘நீங்களும் இருங்க சேர்.” என்றாள்.
அவள் தன்னுடைய அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதும் - தனக்கு மிக நெருக்கமானவர்களாக எங்களிரு வரையும் கருதியதும் எனக்கு மிகுந்த மன நெகிழ்ச்சியைத் தந்தது.
ஆரம்பத்தில் அவளைக் காணும் போதெல் லாம் ஏற்பட்ட, ஆணுக்கே உரிய - மன முதிர்ச்சி சரிந்த, விடலைத்தனமான - உணர்வுகளில் இருந்து விட்டுபட்டது எனக்கு ஆறுதலாக இருந்தது. அவளை முகத்துக்கு முகம் பார்த்துப் பேசமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
முதலில் அவள்தான் பேசினாள்.
“ரூபன் என்னோடைதான் வேலை செய்கிறார். துணை முகாழையாளர். அவர் நல்ல மாதிரி. வெள்ளை மனசு, ஒளிச்சு மறைச்சு வைக்க 96)Jfü60)L 960ö(BGLD 96Ö60)60. He isjust an Open book. எங்க இருவருடைய உலகமும் அழகானது. ஒத்த ரசனைகள், ருசிகள், விட்டுக் கொடுத்து, அனுசரிச்சு எங்க்ளாலை எதையுமே செய்ய முடியுது. தளைகள் ஏதுமில்லாத இந்த உறவு எங்களுக்கு பிடிச்சிருக்கு.”
‘சரி. சரி. எனக்கு எல்லாம் விளங்குதம்மா. ஒண்டு கேக்கலாமா..?”
``கேளுங்க..!”
`இந்த வாழ்க்கையை நீர் ஏத்துக் கொண்டது ஒரு வகையிலை முரட்டுத்தனமா, வீம்பா எனக்குப் படுகுது. உம்மடை காயப்பட்ட நாளைக் கொஞ்சம் ஒத்தடம் கொடுக்கிற மாதிரியும் இருக்குது. என்ன இருந்தாலும் அந்தத் தறுதலை தயாளனை விட்டிட்டு, இப்படி தூரப்பட்டு வந்தது, என்ரை மனசுக்கு இதமா இருக்குது.”
`வீம்பு, திருப்தி எண்டு ஏதும் எனக்கில்லை அக்கா. தயாளனிலை பிடிப்பு தளர்ந்தும் அவனிலை பிடிப்பு எண்டு ஏதாவது இருந்ததா என்ன . ரூபனிலை ஒரு பிடிப்பு விழுந்திட்டுது
65

அவ்வளவுதான்.”
‘'நீர் என்ன சொல்லும் - என்ரை மனசு கேக்குதில்லை. உம்மை நினைக்கப் பயமாயும் துக்கமாயும் இருக்குது.”
‘என்ன பயமா. துக்கமா. எதுக்கு?”
அவள் கலகலவெனச் சிரித்தாள்.
‘ஈசு சிரியாமல் நான் சொல்லுறதைக் கேளும். இந்த Living together எல்லாம் இந்த மண்ணுக்குப் பொருந்தி வாற மாதிரி இல்லை. இதையெல்லாம் சரி செய்யிற மாதிரி - ரூபனை, உம்மடை கழுத்திலை ஒரு தாலியைக் கட்டச் சொல்லுமன்.”
‘அக்கா. பிளிஸ். எனக்குக் கொஞ்சம் மூச்சு விட வேணும் போலை இருக்கு. இந்த Social, legal bin dingS 6I 6ö 6) [T Lô {9 uj (3 u T 60) g5 8É (g5 வேண்டாமே. பட்டது போதும். ஒரு ஆணும் பெண்ணும் மனம் விரும்பி இணையிறது பிழையா..? Adultery. ஒழுக்கக் கேடா..? இது ஒழுக்கக் கேடெண்டா. அம்மி மிதிச்சு, அருந்ததி பாத்து. ஐயர் மந்திரம் சொல்ல, சடங்கு முடிச்சு - அந்த Sex maniac தயாளனோடை குப்பை கொட்டின தெல்லாம் எதிலை சேரும்.”
ஈசு சற்று அழுத்தமாகவே பேசியது போல எனக்குத் தோன்றியது.
அவள் தொடர்ந்து கேட்டாள்:
‘எங்க இருவருக்குமிடையிலான இந்த உறவு வெறும் செக்ஸ் சம்பந்தப்பட்டது மட்டும்தானா..? அதுக்கு அப்பாலை. அப்பாலை எதுவுமே இல்லையா..?”
ஈசு உணர்ச்சி வசப்பட, அவளது குரல் கரகரத்தது. f
பதட்டமடைந்த நிதி, அவளை ஆதரவாக அனைத்துக் கொண்டாள்.
நிதியின் கரங்களை இறுக்கமாகப் பற்றிய ஈசு
எதுவும் பேசாது, மெளனமாக, ஒரு தலை
யசைப்பில் எங்களிருவரிடமும் விடை பெற்றுக் கொண்டாள்.
அவள் நிமிர்ந்து நேராக நடந்து போவதை நானும் நிதியும் வைத்தகண் மாற்றாது பார்த்தபடி நின்றோம்.
சில்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 67
೫ತ್ರಿ இலக்கிய வரலாற்றில் கடந்த நாற்பது
ஆண்டுகளாக முற்போக்கு இலக்கியமும், அதன் படைப்பாளிகளும் பல தரப்பட்டவர்களால் தாக்குதல்களை எதிர்கொண்டு வந்துள்ளனர் என்பது யாருமறிந்தததே. சமீபகாலத்தில் இப்போக்கு இன்னும் தீவிரமடைந் துள்ளதை அவதானிக்க முடிகிறது. இலக்கிய அரங்கு களில், கூட்டங்களில் முற்போக்கு அணியினர் தாக்கப் படும் அளவுக்கு வேறு யாரும் தாக்கப்படுவதில்லை. குறிப்பாக சில முற்போக்குவாதிகள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றனர்.
இத்தாக்குதல்கள் பின்நவீனம், தூய அழகியல்வாதம். மாந்திரிக யாதார்த்தவாதம், பெண்ணியம் போன்ற புதிய போக்குகளின் பரபரப்பில் இன்னும் தீவிரமடைந்துள்ளன. இக்குற்றச்சாட்டுகளின் தார்ப்பரியத்தைக் கூர்ந்து நோக்கின், இக்கருத்தியல்களின் உட்கிடையான பலவீனங்கள் தெரிய வரும். பொதுவாக, முற்போக்கு இலக்கியத்தின் மீது இவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு யதார்த்தவாதம் காலா வதியாகி விட்டது என்பதாகும். இன்னும் இலக்கியத்தில் அரசியல், கலைத்துவம், அழகியல், சாதியம் என்பவை தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இக்குற்றசாட்டுகள் எவ்வகையில் நியாயமானவை என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. சமூகத்தில் சிக்கலான சமூக உறவுகளும், முரண்பாடுகளும் மிகுதி யாகக் காணப்படுகையில் படைப்பின் மரபு சார்ந்த வடிவங்களால் அவற்றைப் பிரதிபலிக்க முடியாது. மாறிவரும் பிரக்ஞை பூர்வமான சமூகத்தில் இறுக்கமான மரபுவழி வடிவங்களைத் தவிர்த்தல். புதிய வடிவங்களை உருவாக்குதல் என்பது இயங்கியல் நியதியாகும்.
அந்தவகையில் காலத்துக்குக் காலம் படைப் பிலக்கியங்களிலும் வடிவ மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததைக் காணமுடிகிறது. அத்தகைய மாறுநிலை வடிவத்தில்
ஒன்றே யதார்த்தவாதம் ஆகும். இது காலத்தின் தேவையு.
மாக உள்ளது. இன்றைய மனிதனின் வாழ்வுக்கான தேவை கள் அவசியப்பாடுகளே அவனது வாழ்வின் யதார்த்தங்கள் ஆகும். மனிதன் இந்த யதார்த்தங்களை விட்டு விலகி வாழ முடியாது. இந்த யதார்த்தங்களை மனிதன் சார்ந்தி ருக்கும்வரை காலம் முழுவதும் யதார்த்தவாதம் என்பது நிலைபெறும். அதன் தொடர்ச்சியும், நீட்சியும் இருந்து கொண்டே இருக்கும். மேலும், மனிதனின் வாழ்வு, கருத் தியல், கலை உணர்வு என யாவற்றிலும் உட்கிடையாக யதார்த்தவாதம் என்பது உள்ளது. யதார்த்தம் இல்லாமல் மனிதனின் ஆக்கம், படைப்பு என்பது சாத்தியமில்லை எனலாம்.
66
 

இலக் கியம் -
தவறான புரிதல்களி
மீதான நோக கு
- மு.அநாதரட்சகன்
கலை இலக்கியங்கள் காலத்தினால் நிர்ணயிக்கப் படுபவை. அவை இக்காலகட்டத்தின் கருத்தாக்கங்கள், அபிலாஷைகள் தேவைகள், நம்பிக்கைகள் என்பவற்றை பிரதிபலிக்கின்றன. அத்துடன் அவ்வப்போது மேலோங்கு கின்ற சமூக தேவைகளை புதிய ஒளியில் பரிசீலனைக்குள் ளாக்குகின்றன. இவ்வகையிலேயே அறுபதுகளில் ஈழத்தில் எழுச்சி பெற்ற முற்போக்கு இலக்கியப் படைப்புக்களை நோக்க வேண்டும்.
அடுத்து, முற்போக்கு இலக்கியங்கள் மீதான எதிர்கருத்து இலக்கியத்தில் அரசியல் பற்றியது. இதனை முன்வைப்போர் அரசியலை தனிமனிதனிலிருந்து பிரித்துப் பார்க்கும் தவறான சிந்தனை வயப்பட்டோராவர். அரசியல் என்பது மனிதன் மனிதனாக இருப்பது பற்றிய இரகசியங் களை வெளிப்படுத்துவதாகும். இதன் அர்த்தம் மனிதனாக இருப்பது என்பதே பிற மனிதர்களைச் சார்ந்து வாழ்தலைக் குறிக்கும். தனிமனிதனின் குணாம்சமே அவன் சமூகத்தில் வாழ்வதனால்தான் ஏற்படுகின்றது. ஆன்மீக வயப்பட்ட அனுபவங்கள் கூட சமூகத்திலிருந்தே கிடைக்கின்றது. மனிதனின் சுய அக்கறையின் உச்ச நிலையே சமூக அக்கறையாகிறது. எனவே, மனித மேம்பாடு, சமூக அக்கறை குறித்துப் பேசுகின்ற அரசியலை தனிமனித உணர்வு நிலையிலிருந்து பிரித்துப்

Page 68
விக்க முடியாது.
இன்றைய தேசிய இனவிடுதலையை தழுவிய .க்கியங்களிலும் இதுவே நடைமுறை யதார்த்தமாக உள்ளது. இதனால் இப்படைப்புச் செல்நெறி சார்ந்தோருக் கான மனிதகுல மேம்பாடு குறித்தவோர் அரசியல் கோட் பாட்டுத் தளமிருந்தது என்பதில் வியப்பில்லை. அதன் வழி அவர்கள் கூறவந்த செய்தியில் ஒருவகை வீச்சும், ஆவேசமும் தெரிந்தது. அவற்றின் அழகியல் வரட்சி பற்றிப் கூறுவோர். அழகியலிலுள்ள தீவிரப் பற்றினால் அவை கொண்டிருக்கும் மானிட நேயத்தை சமூக நோக்கினை மறுதலிக்கும் அபத்த நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். சமூக உணர்வு என்பது சமூக இருப் பிலிருந்து முகிழ்வது. அரசியல், பண்பாடு, கலைகள், அறிவியல், அழகியல் எனக் கூறப்பட்ட பல்வேறு பண்பு களும் சமூக உணர்வின் முழுமையில் பங்கெடுப்பன என்பதை மறந்துவிட முடியாது.
ஓர் படைபிலக்கியவாதி தான் அன்றாடம் எதிர் கொள்ளும் முரண்பாடுகள், பிரச்சினைகளில் சரியான திசை கோளினை அடைவதற்கு அல்லது விளங்கிக் கொள்வ தற்கு கருத்தியல், கோட்பாட்டுத்தளம் அவசியமாகும். இவ்வகையில் இதனை ஈழத்தில் வற்புறுத்தியோராய் பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கவிஞர் முருகையன் போன்றோர் விளங்கினர். இலக்கியத்தில் இச்செல் நெறி அரசியல், பொருளாதார விடுதலையை வலியுறுத்தியது. எனினும் இதில் அழகியல் சார்பில் சில போதாமைகள் இருப்பதை அவ்வணியினரே இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர் இது குறித்து, பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி. சி.சிவசேகரம், ஏ.நுஹற்மான் போன்றோர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
தேசிய இனப்பிரச்சினை குறித்து மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இன்றைய மாற்றங்களின் புதிய பரிமாணங் களை முற்போக்கணியினரும் உள்வாங்கத் தலைப்பட் டுள்ளனர். அவ்வகையில் இனப்பிரச்சினையை தாங்கிய படைப்புக்களை செ.யோகநாதன், செ.கணேசலிங்கன், தெணியான், சாந்தன் போன்றோர் தந்துள்ளனர். இவற்றுக்கு தெணியானின் ‘இன்னுமா, உவப்பு போன்ற சிறுகதைகள் சாட்சி. இப்படைப்புகளில் அழகியல் விகசிப்பையும் காண
முடிகிறது.
இலக்கியத்தில் அரசியல் பற்றி முகஞ்சுழிப்போர். தம் மளவில் ஒரு அரசியலைக் கொண்டுள்ளனர். அது ஒடுக்கப் பட்ட உரிமை மறுக்கப்பட்ட மக்களது அரசியலுக்கு எதிர்நிலை அரசியல் என்பது வெளிப்படை.
67

அன்று சாதிய எதிர்ப்பினை வெளிக்கொணர்ந்த இலக்கியங்கள் மீதான வக்கிரப்பார்வை இன்றும் சிலரிடையே அற்று விடவில்லை. இது காலாகாலமாக சாதியத்தின் பேரால் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாற்றை மறுதலிக்கும் முயற்சியாகும். தமழ்ச் சமூகத்தில் அப்படியொரு பிரச்சினை இருந்த தில்லை. அதை இடதுசாரிகளும், முற்போக்கு அணியின ருமே ஊதிப் பெருப்பித்து விட்டார்கள் என்ற வரலாற்றுப் புரட்டையும் முன்வைக்க இவர்கள் தவறவில்லை. இதனால் கேடானியல், டொமினிக் ஜீவா. என்.கே. ரகுநாதன், தெணியான் போள் றோர் இவர்களால் இலக்கியத் தீண்டாமையுடன் நோக்கப்படுகின்றனர்.
தமிழர் வாழ்வில் ஒன்றிவிட்ட சாதியத்துக்கு எதிரான போராட்ட களமாக இலக்கியத்தை முற்போக்கு அணி யினரே முன்னெடுத்தனர். அப்பணியை செவ்வனே ஆற்றினர். ஒடுக்கப்பட்டோர் சார்பான இப்படைப்புக்கள் அவர்களது நேரடி வாழ்வோடும். வார்த்தைகளோடும் செழுமை பெற்றன. இவை எவருக்காக எழுதப்பட்டதோ அம்மக்களை அப்போராட்டத்தின்பால் திசைப்படுத்தி பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது. தவிர. அன்றைய : இலக்கியப் படைப்புகளை இன்றைய சூழலில் வைத்து நோக்குவது எந்த வகையில் நியாயமானது? இன்றைய சூழலில் அவற்றுக்கு புதிய அர்த்தங்களைக் கற்பிப்பதில் பயனேதும் விளையப் போவதில்லை. மாக்சிய வழிநின்ற படைப்புக்களில் சிலபோதாமைகள் பலவீனங்கள் இருப் பின் அவற்றைச் சரிசெய்து, எதிர்காலத்தில் அச்செல் நெறியை செழுமைப்படுத்த வேண்டியதே தம்முள்ள கடமையாகும். மாக்சியம் என்பது இறுகிப்போன தத்து
வமல்ல. மாறிவரும் சூழலை உள்வாங்கி சரியான இலக்கிய செல்நெறிக்கு வழிகாட்டக்கூடிய இயலுமையை அது கொண்டிருக்கிறது. மாற்றம், வளர்ச்சி என்பது மாக்சிய நடைமுறைக்கு உடன்பாடான விடயங்களே.
இன்று மொழி நாடு வர்க்கம் என்ற தனித்துவங்களை வேருடன் அழித்து, ஏகத்துவச் சுரண்டலை நிலை நிறுத்த உலகமயமாதல் என்பது தீவிரமாகச் செயற்படு கின்றது. தனது வர்த்தக நோக்கிலான இலாப மீட்டலுக்கு முழு உலகையும் அவாவி நிற்கிறது. தன் நோக்கத்தை யடைய புதிய புதிய கருத்தியல்களை கவர்ச்சியுடன் பிரகடனம் செய்கிறது. அவை இன்றைய புத்திஜீவிகளை பரபரப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்துகின்றது.
இத்தகைய வெகுஜனக் கலாசாரத்தில் அமுங்கிப் போயுள்ள இலக்கியச் செல்நெறியினை மீட்டெடுக்க வேண்டியது மாக்சிய வழி நிற்போரின் வரலாற்றுக் கடிமையாகும்.
27 D66) 396JÓs ébaob UDALSfi agðr-Usf - 20Oly.

Page 69
மலையகச் சிறுகதைகள் 33 மலையக எழுத்தாளர்களின் கதைகள். உழைக்கப் பிறந்தவர்கள் 55 எழுத்தாளர்களின் கதைகள்
LumrelorTui தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல மலையகம் வளர்த்த தமிழ் சாரல் நாடனின் கட்டுரைகள் சக்தி பாலையாவின் கவிதைகள் சக்தி பாலையா ஒரு வித்தியாசமான விளம்பரம் சின்னஞ் சிறுகதைகள் - ரூபராணி ஜோசப் மலையக மாணிக்கங்கள் மலையக முன்னோடிகள் பன்னிருவரைப் பற தோட்டத்து கதாநாயகர்கள் நடைச்சித்திரம் - கே.கோவிந்தராஜ் பரிசு பெற்ற சிறுகதைகள் 1998 துரைவி - தினகரன் சிறுகதைப் போட்டி மலையகச் சிறுகதை வரலாறு தெளிவத்தை ஜோசப் (முநீ லங்கா சாஹத்திய துரைவி நினைவலைகள் அமரர். துரை விஸ்வநாதன் பற்றிய கட்டுரை வெள்ளை மரம் சிறுகதைகள் - அல்.அஸ"மத் (முரீ லங்கா சr சிறுகதைத் தொகுதி)
தேயிலை தேசம் குறிப்பு சி.வியின் ஆங்கில சிறுகதைகளின்
85, இரத்தினஜோதி சரவ
கொழும்பு தொலைபேசி - (+94 11
 
 

ளியீடுகள்
}கள்
ற்றிய நூல் - அந்தனி ஜீவா
மண்டலப் பரிசு பெற்ற நூல்)
ஹத்திய மண்டலப் பரிசு பெற்ற
மொழிப்பெயர்ப்பு- மு.சிவலிங்கம்.
னமுத்து மாவத்தை,
13. 2327011, 2331596
ல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 70
ல்லூர்க் கிராமம் விடியலுக்கு முன்னே பர பரப்புக்குள்ளாகியிருந்தது. இதமான சீதளக் காற்று மரங்களைத் தழுவி வந்து வீசியப்து. முன்தின மிரவு அர்த்த ராத்திரியில் நிகழ்ந்த அந்தக் காடுரம், கிராமவாசிகளின் உரையாடலுக்கு கருப்பொரு ளானது. சம்பவத்தை செவியுற்ற கணத்திலிருந்து என் மனம் அதிர்ந்து துடிக்கிறது. இது போன்ற துர்ச்சம்பவங்களால், எனக்குள் இருக்கும் இலக்கிய ஆன்மா, விகCத்து அலறத் தொடங்கிவிடும்
&2 8AX°« ž se s ille. YA: YX^* Yمي NA リ意cm 更苓诰德羲茨摄器j榜髅器其 ~昭、s恩但显、易器疗
69
 

கண்ணுக்கு நேரே சாட்சியாகிப் போன வேண்டாத நிகழ்வுகள், என்னுள் சங்கடத்தை தோற்றுவிக்கின்றன. எழுது, எழுதுவென என் அந்தராத்மா பிடரியில் அறைந்து ஒலமிடுகிறது.
நிஜங்கள் மட்டும் கதைகளாகி விடுமா? இதை ஒரு விவாதத்திற்காக மட்டும் எழுப்பிப் பார்த்தாலும், கற்பனைகளின் ஆதாரத்தினால் எழுதுபவை மட்டும் எப்படி யதார்த்த இலக்கியமாகி விடும்? என்ற கேள்வியும், கூடவே வருகிறது. ஜெயகாந்தன் சொன்னது ஞாபகத்தில் இழை பின்னுகிறது.
கதைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் உண்மையில்லாமல் கதையே இல்லை' என்றார். நிஜம் கலந்த கற்பனை, சிறந்த விவரணை, உயிர்த்துவமுள்ள கதையோட்டம், இயல்பான பேச்சு வழக்கு இவற்றின் கலவைதானே யதார்த்த, கலைப் படைப்புகள்?
கற்பனை என்பது வாழ்வின் சாரங்களிலிருந்து விலகியோடும் பிம்பங்களா? நிஜத்தின் தீவிர வெளிப்
பாடுகள், எதிர்கொள்ளலில் கசப்பானவைகளா? எந்தச் சிந்தனைக்கும் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால்
கருத்தியலுக்கும், அறிவார்ந்த தளத்தின் வரம்பிருக் கிறது.
அதிர்ஷ்ட சீட்டை வாங்கிய ஒருவன், பரிசு எனக்குத்தான் என்ற கற்பிதத்தில் கற்பனை சுகம் காண்கிறான். அதிர்ஷ்டம் என்ன, எல்லோரினதும் கடைக்கண் பார்வைக்கும், எளிதில் வசியமாகிவிடும் மலினப் பொருளா?
கற்பனையென்பது வெறும் மாயை, என்ற இறுதி ஸ்திதிக்கு வந்துவிட முடிகிறதா நம்மால்? கற்பனை களும், கனவுகளும், நிஜமாகிப் போன சாட்சியங்கள் இருக்கின்றதே தாராளமாய். சிருஷ்டிப் படைப்பு களுக்கு இவையிரண்டும் ஆதார சுருதிகள்தாம். வாழ்விற்கும் இருப்புக்கும் கூட, இவையிரண்டுக்குமான இடைவெளி குறுகிப் போனது.
காக்கைத்தீவு கடற்கரை காட்டுக்குள், ரீட்டா ஜோன் என்ற மும்பை அழகியை, காடையர்கள் கடத்திக் கொண்டு போய், சித்திரவதைகளுடனான, பாலியல் வல்லுறவும், படுகொலையும் நிகழ்ந்ததே. இது நடந்து பலநாட்கள் கழியும் வரை ஊண் உறக்க மின்றி மனங் கசங்கிக் கிடந்தேன். ஊடகங்களும், பொதுமக்களும், குமுறியெழுந்தது இன்னும் நின்ைவிலிருக்கிறது. V & , , , " :

Page 71
வடக்கே இராணுவ வெறியர்கள் தமிழ்ப் பெண் களை விசாரணைக்கென இட்டுச் சென்று, இருட்டறை களில் நிர்வாணமாக்கி, கற்பு சூறையாடப்பட்டு, கொலை செய்து, குழிகளில் போட்டு மண் நிரப்பிய இரத்தக் கறை படிந்த அத்தியாயங்களை, நம்மால் எளிதில் மறந்துவிட முடிகிறதா? யுத்தச் சூழலில் காட்டு மிராண்டிகளின் தர்பார் கொடிகட்டிப் பறந்தது, அன்று.
ரீட்டா ஜோனின் சிதைவு என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தக் காட்சிகள் என் கற்பனைகளிலிருந்து விலகிவிட மறுத்தன. அந்தக் கொடுமையின் உறுத்தல். 'ஒரு குயிலின் சித்திரவதை என்னும் கவிதையாக வடிவெடுத்தது. அதன் சிறப்பை சிலாகித்து, என்னை விதந்து பலர் உற்சாகமூட்டினர். ட்டா ஜோனின் கணவர், அதை படித்திருப்பாரே யானால், அந்தப் படைப்பு அழியா ஒவியமாக அவர் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடும்.
கல்லூர்க் கிராமம், நித்திரா தேவியை அணைத்து மகிழும் இரவு வேளை. தெருவிளக்குகள் ஒளி மங்கிச் சுடர்ந்தன. சாத்திய முகப்புகளோடு
இல்லங்கள் சலனமின்றி ஓய்ந்து போயிருந்தன.
கிராமத்து இருளுக்கு எப்போதும் இறுக்கம் அதிகம். அடர்ந்து, சடைத்து, வளர்ந்த காட்டு மரங்கள் இராப் பொழுதுகளில் பீதியூட்டிக் கொண்டிந்தன. நகரத்தைப் போலன்றி, கிராமம் பத்து மணிக்கு மேல் உயிர்ப்பற்று ஓய்ந்து போயிருக்கும்.
a முன்தூங்கி, முன்னெழும்பும் fக்கத்தினர். ஒரு மணியைத் தாண்டிய பின்னிரவு வேளை, அவன் நிம்மதியற்ற மனநிலையில், தெருவில் அலைந்து கொண்டிருந்தான். எங்கும் ஆளரவமில்லை. கஞ்சாவும், ஹெரோயினும் ஏற்றிய போதையில் அவன் கால்கள் தடுமாறின. விழிகள் தீக்கங்குகலாக சிவந்து துடித்தன. சதைப் பிடிப்பற்ற அவனது முகத்தில் எலும்புகள் துருத்திக் கொண்டு மிதந்தன. கோடு போட்ட சாரமும், கட்டைக்கை சேர்ட்டும் அணிந் திருந்தான்.
ஒரு முப்பதை தாண்டாத மெலிந்து உயர்ந்த தோற்றம். அடர்த்தியில்லாத முகத்தாடியும், அலை பாயும் பெரிய விழிகளும் அவனுக்கு. கிராமமே தன் ஆளுகைக்கு கீழிருப்பதான நெஞ்சு நிமிர்த்திய தோரணை. சந்தடியில்லாமல் வீடுகள் பலவற்றைத் தாண்டி பாதையில் நடந்து சென்றான்.
70
 
 

ஒரேயொரு வீட்டில் மட்டும், தொலைக்காட்சி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. ஆண்களும், பெண் களும் சூழவேயிருந்து சினிமா ரசனையில் ஈடு பட்டிருந்தார்கள். 'கொல்' என்ற சிரிப்பொலி உரத்துக் கேட்டது. தமிழ்த் திரைப்படமொன்றின் மூன்றாந்தர நகைச்சுவைக் காட்சியொன்றினை மனம் குதூகலித்து ரசித்துக் கொண்டிருந்தார்கள் போலும் அவன் போதை யேறிய விழிகளால் அனைத்தையும் அனுமானித் தவனாக பதட்டமில்லாமல் நடந்து சென்றான்.
திரைப்பட கலகலப்பிற்கு, அடுத்தாற் போல், ஒரு சிறிய குடிசை, அதில் வாசம் செய்வோரின் வறுமையை துல்லியமாக பறைசாற்றிக் கொண்டி ருந்தது. குடிசைக்கதவு லேசாக திறந்த நிலையிலி ருந்தது. அவன் ஒசைப்படாமல் கதவை மெல்லத் தள்ளினான். காற்று ஒசையின்றி, சுற்றுச் சூழலுக்கு குளிர்மையை விதைத்துச் சென்றது.
ஒரு ஏழுவயதுச் சிறுமி, முகத்தில் மழலை பாவம் சுடர, பாயில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவன் அர்த்த புஷ்டியோடு, அவளை வெறித்துப் பார்த்தான். சிமினி விளக்கு மேசையில் எரிந்தும் எரியாமலும் போக்குக் காட்டியது.
இவனை ஆட்டிப் படைக்கும் மிருகம் பூதாகார மாய் விழித்துக் கொண்டது. கிறங்கும் விழிகளால் சுற்றுச் சூழலை அளந்தான்.
ஆளரவமோ, ஓசைகளோ சிறிதும்ல்லை. சிறுமி யின் தாயும் தந்தையும் பக்கத்து வீட்டில் சினிமா ரசனையில் முடங்கிக் கிடந்தனர். இவன் மனதில் என்றுமில்லாத தைரியம் வலுத்தது. சிறுமியை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான். போர்த்தி யிருந்த துணியினால் அவளை நன்றாக மூடிக் கொண்டான். எதிர்ப்புகளில்லை என்பதை தெளிவாக உறுதி செய்து கொண்டு, ஆட்டைக் கவவிய ஒநாயாக மரங்களடர்ந்த காட்டுப்பாதையினுடாக இருளில் மறைந்தான்.
ஊரில் பரபரப்பு உச்சக்கட்டத்திலிருந்தது. லfபுடைய ஏழுவயது மகளை, எவனோ இரவு கடத்திக் கொண்டு போய், கெடுத்துவிட்டு தெருவில் போட்டு விட்டுப் போயிட்டானாம். யார் என்று தெரிந்திருந்தால் அவனை ஒரே வெட்டாய் வெட்டிக் கொன்று போட்டிருக்கலாம்! பலர் ஆத்திரம் கொண்டு கதைக்கத் தலைப்பட்டனர்.
ஒழுக்கம், மரியாதையோடு வாழ்ந்துவந்த
ல்ேல 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 72
கல்லூர்க் கிராமவாசிகளுக்கு, இந்தப் பயங்கரச் சம்பவம், முதல் அனுபவமாக அதிர்வு தந்தது. சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்புட்டு பிறப்புறுப்பில் ஐந்து தையல்கள் இடப்பட்டன. அந்தப் பிஞ்சு உடல் பெரிய பாதிப்புக்குள்ளாகி இருந்தது.
தாய்மார்கள் ஒன்றுகூடி அந்த முகமறியாக் காமுகனை மனம் குமுறி சபித்தார்கள். அச்சத்தினால் தங்கள் பெண்பிள்ளைகளை வெளியில் அனுப்பாது வீட்டினுள் பாதுகாத்தார்கள். பொலிஸார் லரீபிடம் யார் மீது சந்தேகழென வினாவினார்கள். எப்போதும் போதையில் திரியும் கரீம் இதைச் செய்திருக்கக் கூடும் என்று ஊகம் தெரிவிக்கப்பட்டது. சிறுமி அடிக் கடி மருத்துவமனையில் நினைவிழப்பதும் அதிர்ச்சி யுறுவதுமாக துயருற்றாள். தாய் கண்ணிர் விட்டுக் கதறி அழுது வருவோர் போவேரிடம் நெக்குருக முறையிட்டாள்.
நாட்கள் கரைந்தன. குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க கஷ்டமாக இருந்தது. கரீமை சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கைது செய்தது. அவனை அடித்துத் துன்புறுத்தி வாக்குமூலம் பெற முனைந்தது.
”நான் சிறு சிறு களவுகள் செய்திருக்கிறேன். போதைப் பொருள் பாவித்திருக்கிறேன். இதை நான் செய்யவேயில்லை! நான் நிரபராதி” என்று கரீம் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தான்.
காவல் துறையினருக்கு நேரடி சாட்சியமில்லாமல் இருந்ததால், வெறும் ஊகங்களை வைத்துக் கொண்டு வழக்குத் தொடுப்பது சங்கடமாக இருந்தது. கரீமின் சகாக்கள் இருவரைப் பிடித்து வந்து விசாரித்தும் சம்பவத்திற்கான ஆதாரங்கள் எதுவும் கிட்டவில்லை. சிறுமி பொலிஸைக் கண்டு மிரண்டாளே தவிர, மேலதிக தகவல் கூற அச்சப்பட்டாள்.
கரீம் திருட்டுமுழி கொண்டவன். கட்டாக்காலி மாடு போல் தொழிலில்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவன். களவு, சூது, போதை இவற்றோடே அவன் பெரிதும் ஐக்கியப்பட்டிருந்தான். தூர இடமொன்றில் திருமணம் செய்து, இவன் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை.
என்றாலும், குடும்பத்தோடு எந்தத் தொடர்பு களுமற்று வாழ்கிறவன். அவன் வம்புச் சண்டைக்குப் போய் பலரிடமும் அடிவாங்கிய அனுபவம் அதிகம்.

சிறுமியைப் பார்ப்பதற்கு ஊரவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
யாரும் சிறுமியிடம் எந்தக் கேள்விகளையும் கேட்கக் கூடாது என்பது மருத்துவரின் கட்டளை. அதனால் சிறுமியின் மனநிலை மேலும் பாதிக்கப் படலாம், என்பது அவர்கள் கருத்து. பிள்ளைக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து தாயும், தந்தையும் துடித்தழுதனர். சிறுமியின் தந்தை லரீப் அன்றாட கூலிவேலை செய்து பிழைப்பவன். பரம ஏழை. அவனிடம் மருத்துச் செலவுகளுக்கோ, வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கோ, பணமில்லை என்ற காரணத்தால், ஊரார் மனமுவந்து உதவினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது இரக்கம் கொண்டு நானும் மருத்துவமனை சென்று அடிக்கடி உதவிகள் புரிந்தேன். e
அது ஒரு மதியப் பொழுது!
தாடி வளர்த்து, விழிகள் பெருத்த, ஒல்லியான ஒருவன், சிறுமியின் அடுத்த கட்டிலில் இருந்த நோயாளியை பார்ப்பதற்காக வார்டினுள் பிரவேசித் தான். சிறுமி அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு கலவர மடைந்தாள்.
“இவன்தான். இவன்தான் என்னத் தூக்கிக் கொண்டு போனவன்!” என்று பீதியோடு கூக்குரலிடத் தொடங்கினாள். என் தேகாந்திரம் புல்லரித்தது. தீர்க்கமாக அவனை ஊடுருவிப் பார்த்தேன். அவன் ஒரு பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவன். ஊருக்குள் துணிவோடு வந்து, இந்த பயங்கரத்தை இவன் எப்படிச் செய்வான்?
ஆனபோதும், எந்தப் புற்றில் எந்தப் பாம்பி ருக்குமோ என குழம்பிப் போனேன். அவனை நெருங்கி நளினமாகக் கன்த கொடுத்தேன். “இந்தப் பிள்ளையை உனக்கு இதற்குமுன் தெரியுமா?” என்று வினா தொடுத்தேன். அவனது முகபாவங்களிலிருந்து இச்சம்பவத்திற்கும் அவனுக்கும் சம்பந்தமேயில்லை என்பதை தெளிவாக உணர்ந்தேன்.
அவனது முகத்தை மீண்டும் கூர்ந்து நோக்கினோன். உள் புதைந்து கிடக்கும் யதார்த்த மொன்று என் அடிமனதில் நிழலாடியது.
நான் லரீபின் தோள்களை ஆதரவாகப் பற்றினேன்.
s -
ல்ேலிகை 39ajg5 é5ári budasi gavaJf - 2ool

Page 73
“என்னைத் தோளில் போட்டுக் கொண்டு போனவன் இவன்தான்!” என்று சிறுமி மீண்டும் பிதற்றினாள்.
“இவனல்ல, இவன் கரீமின் சாயலை அப்படியே ஒத்திருக்கிறான். கரீமை கூட்டிவந்து இவள் முன் நிறுத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்!” என்றேன்.
நானும் லரீபும் காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டரிடம் நடந்த விடயத்தைக் கூறினோம்.
அவர் உற்சாகமடைந்து, அப்படிச் செய்து பார்ப்போம் என்றார். “எங்களைக் கண்டவுடன் பிள்ளை பயத்தால் நடுங்குகிறது. நாங்கள் பின்னணியில் மறைந்து இருந்து கொண்டுதான் விசாரணைகளை தொடரவேண்டும்” என்று கூறினார் அவர்
இதன் பெறுபேறுகள் எப்படி அமையப் போகிறதோ? இந்த முயற்சியும் பிழைத்துப் போனால், குற்றம் செய்தவனை எவ்வாறு கண்டு பிடிப்பது? என்ற எண்ணச் சுழற்சியில் தடுமாறிப் போனேன். நான் ஒரு அறையில் கரீமை சுற்றிலும் பாதுகாப்போடு நிறுத்தி விட்டு சிறுமியைக் கூட்டிவந்து அவன் முன் : நிறுத்தினோம் பொலிசார் மறைந்திருந்து நடப்பவற்றை கெஸட்டில் பதிவு செய்தனர். :
”இந்த நாய்தான். இவனேதான், எனக்கு அநியாயம் செஞ்சவன்!”
சிறுமி குமுறிக் குமுறி அழுதாள். கரீம் மீண்டும் பொலிஸ் நிலையம் கொண்டுவரப்பட்டு, இரவு பூராவும் கடும் சித்திரவதை செய்யப்பட்டான். முகம், கை, கால்கள் கடும் தாக்குதல்களால் வீங்கிப் புடைத் திருந்தன. உண்மையை அவனது வாயினால் எடுப்பதற்கு கடும் பிரயத்தனம் செய்யப்பட்ட்து. “உண்மையை சொல்லாவிட்டால் உன்னை விடிவ தற்குள் பிணமாக்கிப் போடுவோம்” என்று பொலிஸார் அச்சுறுத்தினர்.
வலியையும், வேதனையையும் சகித்துக் கொள்ள இயலாத அவன், இறுதியில் தான் குற்றம் புரிந்ததாக ஒப்புக் கொண்டான். விசாரணை தீவிரமாக முடுக்கி விடப்பட்ட நிலையில், அவனை சம்பவம் நடந்த இடத்தைக் காட்டுமாறு ஊருக்குள் கொண்டு வந்தனர். காட்டுக்குள் நீண்டு வளர்ந்திருந்த ஒரு புளியமரத்தின் அடிப்பாகத்தை அவன் சுட்டிக் காட்டினான். இங்கு சிகப்பு நிறத்தில் பழுப்பேறிய உள்ளாடையெரன்று
72 i ti;
 
 

கண்டு பிடிக்கப்பட்டது. அது கரீமுடையதுதான் என்று அவனது சகாக்கள் அடையாளம் காட்டினர்.
அவனைப் பொலிஸார் ஊருக்குள் நடையிலேயே அழைத்துச் சென்றனர்.
ஊரே திரண்டுவந்து ஆத்திரத்தால் அவனைத் தாக்கத் தொடங்கினர். சிலர் ஆக்ரோஷம் கொண்டு கல்லால் எறிந்தனர். நிலமை மோசமாகவே பொலிஸார் சிரமப்பட்டு, அவனை விடுவித்து அழைத்துச் சென்றனர்.
இச்செய்தி ஊடகங்களில் கொட்டை எழுத்துக் களில் பிரசுரமாயின. அடையாள அணிவகுப்பில் கரீம் சிறுமியினால் சரியாக இனங்காணப்பட்டான். வைத்தியப் பரிசோதனையிலும் அவன்தான் குற்ற மிழைத்தவன் என்பதற்கு போதிய ஆதாரமிருந்தது. பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீதிமன்ற வளவிற்குள் முக்காடு அணிந்த முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“குற்றவாளியை தப்பிச் செல்ல விடாதே!”
“கரீமுக்கு கடும் தண்டனை கொடு!”
'அவனுக்கு மரணதண்டனை கொடு!" என்ற பதாதைகளை பிடித்தவாறு பெண்கள் போராட்டம் நடத்தினர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பத்து வருடத்திற்கு குறையாத கடுழிய சிறைத்தண்டனை கரீமுக்கு நிச்சயம் கிடைக்குமென வக்கீல்கள் உறுதியாகக் கூறினர்.
மருத்துவமனையில் அன்று ஒரு அசாதாரண பரபரப்பும், அதிர்ச்சியும் நிலவியது. எல்லோர் முகங் களிலும் பதட்டம் நிறைந்திருந்தது. லரீபின் மகள் காலையில் மலசலகூடத்தில் கால், வழுக்கி விழுந்து, அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டாள். கீழே விழுந்ததில் இடப்பட்டிருந்த தையல் அகன்று கடும் காயத்திற்கு ஆளானாள். பாதிக்கப்பட்ட இடத்தில், உடன் ஆப்ரோஷன் நடத்த வேண்டுமென டாக்டர்கள் கூறினார்கள்.
அக்னி மழை பொழிந்தது! வானத்திலிருந்து அல்ல! அந்த ஏழைப் பெற்றோரின் கசிந்த விழி களிலிருந்து பூத்துக் காய்ப்பதற்கு முன் சிறுதளிர் குரூரமாக சிதைந்து போன அவலத்திற்காக!
pasaga), 396jë 45abilbudasi gatojë - 2oolf

Page 74
சமகால ஈழத் தமிழி அசைவிறுக்கத்து காரணிகள் ஒரு விவாதப் பு நோக்கி.
திர்ச்சி மதிப்புக்காய் இலக்கியத்தில் அபத்த
முடிவுகளை வெளியிடுகிற காலமாக இருக்கிற வகையில், மிக்க விவாதத்துக்குரிய வெளிப்படுத்துகளைச் செய்வதில் ஒரு சுய கட்டுப் பாட்டை விதித்திருப்பவர் மத்தியிலும் ஒரு சில பொழுதுகளில் அதைத் தவிர்க்க முடியாதபடி செய்ய நேர்ந்து விடுகிறது. தற்கால ஈழத் தமிழிலக் கியத்தின் அசைவிறுக்கம் பற்றிய சிந்தனை என் மனதில் கடந்த சில மாதங்களாகவே இருந்து கொண்டிருந்தது. எனினும் வீரகேசரி வார இதழில் (13.07.03) இராகவனின் ‘எச்சமாயுள்ள அனு மானங்கள் சிறுகதை வெளிவந்ததின் பின்னர்தான் அச்சிந்தனை தீவிரமடைந்தது. ‘எச்சமாயுள்ள அனு மானங்கள் சிறுகதையே உன்னதமானதில்லை தான். ஆனாலும் இலக்கிய உருவ உள்ளடக்க வகைமை மாறுங்கால சிதைப்பின் அடையாளமாக அது தன் வரவை முன்னிறுத்துகிறது என்பது பிரதானமான விஷயம். இதற்கு முன்னோடியாக பரீட்சார்த்த முயற்சிகள் சில இருந்தன. காலம் இதழிலும், சரிநிகர் பத்திரிகையிலும் மு.பொவின் சிறுகதைகள் இவ்வகைப் பரீட்சார்த்த முயற்சிகளின் அடையாளமே. ஆனால், எச்சமாயுள்ள அனு மானங்கள்’ ஓர் இளங் கதைஞனின் இயல்பின் விகசிப்பு என்கிற வகையில் முக்கியமானது.
அறுபதுகளில் முகிழ்ந்த தேசிய இலக்கிய எழுச்சிக்கும், முற்போக்கு இலக்கியத் தோற்றத் துக்கும் பின்னால், கடந்த கால் நூற்றாண்டாய் ஈழத் தமிழிலக்கியம் மிகுந்த சோம்பல் தனத்துடனும் மொட்டைத் தனத்துடனும் அசைவியக்கம் அற்றுக் கிடக்கும் காரணங்களின் தேடல் மிக்க அவசிய
 

மானதும் அவசரமானதுமாகும். இது குறித்த திறந்த மன விவாதம் ஒன்று அவசியமென்பதை முன் கூட்டியே தெரிவித்துக் கொண்டுதான் இச்சிந்தனை கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
அறுபதுகள் இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமாகும். பூரீலங்கா சுதந்திரக் கட்சி இடதுசாரிகளுடன் இணைந்து ஆட்சியமைத்த சம்பவம் அப்போதுதான் நிகழ்ந்தது. அதுவே தேசிய இலக்கிய விழிப்புணர்வை முன்னெடுத்த காலப் பகுதியாகும். அதன் உச்சம் அந்தத் தசாப்தத்தின் இறுதிவரை தொடர்ந்ததாய்க் கொள்ள முடியும். 1972இல் புதிய அரசியற் சட்ட நிறைவேற்றத்தோடு இலங்கைத் தேசிய இலக்கிய, முற்போக்கு இலக்கிய போக்குகள் ஈழ இலக்கிய வெளியில் மறைகின்றன என்பது ஒரு சரியான கணிப்பே. பின்னால், ஈழத் தமிழிலக்கிய வர லாற்றில் இடதுசாரிகள் இனவாரியாய்த் தம்மை அடையாளங் காட்டியது பெரும் திருப்புமுனையாய் ஆகியிருக்க வேண்டும். மாற்றிலக்கியத்தின் தோற்றம் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் இலக்கியம் மொட்டைத்தனம் அடைந்து இறுகிக் கிடந்தது. இதற்கான வரலாற்றுப் பின்னணிகள் உண்டு.
தமிழ்நாட்டு இலக்கியத்தின் தோற்ற வளர்ச்சி வீச்சுக்களாலேயே ஈழத் தமிழிலக்கியம் தொடர்ந் தேர்ச்சியாகத் தாக்கம் பெற்று வந்ததென்பது பொது வாகவே இலக்கிய விமர்சகர்களாலும், இலக்கிய வரலாற்றாசிரியர்களாலும் ஒப்புக்கொள்ளப்படுவது.

Page 75
நாவல், சிறுகதை, புதுக்கவிதையென்று எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் அவற்றின் முகிழ்ப்புக்குப் பின்னரே ஈழமும் அவ்வத் துறைகளில் தன் முயல்வை மேற்கொண்டிருந்தது. 1879இல் தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்பே ஊசோன் பாலந்தை கதை என்கிற திருகோண மலை இன்னாசித் தம்பியின் ஈழத்து முதல் நாவல் வெளிவந்ததென்கிற வரலாற்று உண்மை இக் கூற்றை உறுதிப்படுத்தும். அதுபோல் 1930ஆம் ஆண்டின் உப்புச் சத்தியாகிரகத்தின் காரணமாய் ஒரு பேரலை எழுந்ததென்றும், அந்நேரத்தில் வீச்சுப் பெற்று வளர்ந்ததே தமிழ்ச் சிறுகதைத் துறை யென்றும் தெரிவிக்கும் இலக்கிய வரலாறு. அதன் பின்னாலேயே அவ்வலை ஈழச் சிறுகதையை மறுமலர்ச்சி இயக்கமாக மலரச் செய்ததென்று சொல்லப்படுகிறது. (ஈழத்து இலக்கிய வளர்ச்சி - கனக.செந்திநாதன், ஈழத்து சிறுகதை வரலாறு - செங்கை ஆழியான்)
பிந்தி உணர்வு பெறும் இந்த வரலாற்று உண்மைகளை நாம் மறுக்க வேண்டியதில்லை. ஆனால் விவாதமும் இங்கிருந்துதான் துவங்கு கிறது. பிற மாநில அல்லது உலக இலக்கிய அலை ஏதும் தமிழகத்தைத் தாக்கி, படைப்புகள் உருவாகத் துவங்க, அதிலிருந்துதான் உத்வேக மடைந்த ஆக்கங்களைப் பிரசவிக்கும் ஈழத் தமிழிலக்கியப் பரப்பு, தலித்தியம் பின்-நவீனத்துவம் சார்ந்து அங்கே இலக்கியங்கள் எழுந்தபோது கடந்த கால் நூற்றாண்டுகளாகவே வழக்கம்போல் ஏன் ஒரு பாதிப்பை அடையவில்லை? இந்த வினா முக்கியமானது.
மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகத்துக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் பரவிய தலித்திலக் கியம், அங்கெல்லாம் வீச்சான படைப்பாக்கங் களால் தன்னை ஓர் இலக்கியச் சிந்தனையாக நிறுவிக் கொண்டுள்ளது. இது எழுபதுகளில் துவங்கி யதாகக் கொள்ளலாம். ஆயினும் இதுவரை காலத்தில் தலித் இலக்கியத் தாக்கம் ஈழத்தில் நிகழவில்லையென்பது சாதாரண விஷயமில்லை. ஆழ்ந்து விசாரித்தால் சில அடிப்படை உண்மை கள் அதிர வைக்கும் வகையில் வெளிவரும். அவற்றை இப்போது பார்க்கலாம். -
எந்த மொழி இலக்கியத்தின் வளர்ச்சி வீழ்ச்சியும் அந்தந்த மொழியிலுள்ள விமர்சனத்தின் தீக்ஷண்யமான கண்காணிப்பிலேயே தங்கியிருக்கிற தென்பது முக்கியமான ஓர் இலக்கிய உண்மை
7.
 
 

யாகும். இலக்கியத்தின் உரமும் நோய்க் கொல்லி யும் விமர்சனமே. தமிழகத்தில் நவீன காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறான நெறி இருந்தது. யதார்த்தவகை இலக்கிய்த்தை முன்னெடுத்த மார்க் ஸய இலக்கிய வாதிகளை எடுத்துக் கொண்டால் சிதம்பர ரகுநாதன், நா. வானமாமலை, கோவை ஞானி, தி. க. சிவசங்கரன், எஸ்.வி.ராஜ துரை போன்றவர்கள் இருந்து அந்நெறியைச் செழுமைப்படுத்தினார்கள். அதுபோல் கலைக் கோட்பாட்டை முதன்மைப்படுத்திய அணியை க.நா.சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, பிரேமிள். வெங்கட் சுவாமிநாதன் போன்ற விமர்சகர்கள் விமர்சித்தும் முன்னெடுத்தும் வளப்படுத்தினார்கள். ரவிக்குமார், அ.மார்க்ஸ், தமிழவன், நாகார்ஜ"னன் போன்றோர் பின்னர் தோன்றி வளர்ந்த தலித்தியம், பின்-நவீனத்துவம் ஆகிய நெறிகளை விமர்சித்து சரியான பாதையில் செல்ல வைத்தனர்.
இந்த நிலைமை ஈழத்தில் ஏற்படவில்லை யென்பது பெரிய துர்ப்பாக்கியம். அறுபதுகளிற்குப் பின் இங்கே மூன்று வகையான விமர்சன முறைமை கள் தோற்றமெடுத்தன. கா. சிவத்தம்பி, க.கைலாச பதி, எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் ஆகியவர்ளுடாய் அவற்றை நாம் இனங்கான முடியும். முன்னிருவரும் மார்க்ஸிய விமர்சன முறையை முன்னெடுக்க எஸ். பொன்னுத்துரை நற்போக்கு என்றோர் இலக்கியக் கொள்கையை முன்னிறுத்த முயன்றார். மார்க்ஸிய விமர்சனகாரரை குறிப்பாக கா.சிவத்தம்பியையும், க.கைலாச பதியையும் - எதிர்க்கிறதான தளத்தில் மட்டும் நின்று முன்னெடுக்கப்பட்ட அவ்வகையினம், தோன்றியதுமே மரணக் குழிக்குள் விழுந்தது. தனி மனித வெதும்பல் திறனாய்வு என யாழ். பல்கலைக் கழக ஆய்வாளர் ஒருவர் (ஓர் ஆய்வாளர் என்று தான் கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது) வகைப்படுத்தினார். (ஞானம், இதழ் - 40, செப். 2003) மு.தளையசிங்கம் மெய்யுள் என்ற இலக்கிய - விமர்சன வகைமையை உருவாக்கினார். இலக்கிய யதார்த்தமான தமிழ்ச் சிந்தனை என்ற முறையில் தமிழிலக்கியப் புலம் அதுவரை காணா தது அச்சிந்தனை முறைமை. பின்-அமைப்பியல், பின்-நவீனத்துவம் என்று இப்போது விரிவாகப் பேசப்படும் போக்குகளின் கீழித்திசைக்கான, குறிப் பாக தமிழ்ப் புலத்துக்கான, வடிவ உள்ளடக்கக் கூறுகளை அது கொண்டிருப்பினும், தன் பல ஹீனத்தையும் தவிர்க்கவியலாதபடி கொண்டிருந்து விட்டது. ஆன்மீகம் சார்ந்த சர்வோதய கருதுகோள் அச் சிந்தனையின் பலவீனமாகி இறுதியில்
மல்லிதை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 76
சிந்தனையே தமிழ்ப் பரப்பில் இல்லாது போயிற்று.
அதனால் தனக்கு ஒப்பதான மிக்கதான விமர்சன முறைமை ஏதுமின்றி ஈழத் தமிழிலக்கியப் -ரப்பில் மார்க்ஸிய விமர்சன முறைமை திகழ்ந்து கொண்டிருந்தது. இவ்வகையில் தமிழ்நாட்டை விடவுமே ஈழ விமர்சன முறைமை பெருவலுப் >பற்றிருந்ததாய்ச் சொல்ல முடியும். அதனாலேயே அதன் அதிகாரமும் இலக்கிய உலகில் வலுவான தாக இருந்தது. கட்சி சார்பான நிலைப்பாடு அதனை வெகுவாகப் போஷித்தது. ஈழத்து மார்க்ஸிய விமர்சனம் ஒரு கண்ணை மூடி நடப்பது தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்தது. இலக்கிய வரலாற்றில் யதார்த்த வகை எழுத்து ஒரு வளர்ச்சிக் கட்டம். அவ்வாறான கட்டத்தில் தோன்றிய ஈழத்து யதார்த்த இலக்கியம்கூட சரியான விமர்சிப்பின்றி அது அடைய வேண்டிய அளவுக்குக் கூட வளர்ந்து உச்சம் அடைதலின்றி குறளியாகிப் போனது. ஈழத்து இலக்கிய கrணத்தின் ஒரு காரணம் இது. இன்னொன்றை இனிக் காண்போம்.
வெவ்வேறு தேசங்களில் இலக்கியங்கள் அத னதன் உட்பொருட்களால் மட்டுமன்றி வடிவ ரீதி யிலும் பெருவளர்ச்சி அடைந்து கொண்டிருந்த வேளையிலே, தம் புதிய புலங்களுக்கும் எடு பொருள்களுக்கும் பொருத்தமான ஒரு மொழியை அவை கையாண்டன. இலக்கியம் அதுவரை கை யாண்டதிலிருந்து நவீன இலக்கியம் கையாண்டது அதே மொழியாயினும் ஒருவகையில் வேறான மொழியேயாகும். ஆகக் கூடிய மொழியின் பயன் பாட்டுச் சாத்தியங் காண இலக்கியங்கள் அடையப் பிரயத்தனப்பட்டன. சசூரின் குறியியல் பற்றிய மொழி ஆய்வு பெரும் திறவு. அதன் மூலம் மொழி கடந்தும், பிரதியில் இடையிடும் மெளனங்களி னுாடும், உட்பிரதிகளினூடும் (Inter-textual) இலக் கியங்கள் மகா சாதனைகளை நிகழ்த்திக் காட்டின. இவ்வகையான சிந்தனைகள் யாவும் பல்கலைக் கழக மட்டங்களிலேயே பிறப்பும் வளர்ச்சியும் இலக்கியப் பயில்வும் கண்டன. பிராக் சிந்தனைப் பள்ளி, பிராங்க்பேர்ட் சிந்தனைப் பள்ளியென இவை அடையாளங் காணப்பட்டன. ஆனால் ஈழத்துப் பல்கலைக் கழக மட்டங்களில் ஈழத்து விமர்சனமும், மொழிச் சிந்தனையும் அடைபட்டுக் கிடந்து தேக்கம் கண்டன. u
மொழியின் பழைமை உடைந்து விடாதபடி வெகு கவனம் செலுத்தி ஈழத் தமிழ் புதிய விஷயங்களுக்கான ஒரு மொழியாக ஆவதிலிருந்து
75

அதைத் தடுத்த குற்றத்தை இலங்கைப் பல்கலைக் கழகங்கள் செய்தன என்று சொல்வதில் பெரும் தப்பில்லையென்று நினைக்கிறேன். ஈழ விமர்சன உலகில் முக்கியமானவர்களாக அறியப்படும் கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, எம்.ஏ.நுட்மான், சி.சிவ சேகரம் யாவருமே பல்கலைக் கழகம் சார்ந்தோரே. இலங்கைப் பல்கலைக் கழகங்கள் அறிவுக் களத்தின் அடையாளங்களாகவும் இருக்கின்றன. இந்த நிலையில் விமர்சனம் அந்த மட்டத்திலேயே முழுதாகவும் அடங்கியிருப்பது ஆரோக்கியமான, நியதிகளுக்குட்படாத சிந்தனை வளர்ச்சிக்கு உகந்ததா என்ற கேள்வியில் நியாயம் உண்டுதான். (இதில் எம்.ஏ.நு.மானும், சி.சிவசேகரமும், தாம் தாமும் ஆக்க இலக்கிய கர்த்தாக்களாகவும் இருக் கிற வகையில் கல்வி மட்ட செவ்வியல் மொழி மரபிலிருந்து விலகவும், மார்க்ஸிய சித்தாந்தத்தை புதிய சிந்தனை வழி அணுகவும் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.)
அடைத்து வைத்துக் காக்கப்படும் அந்தத் தமிழ் யதார்த்த வகையான இலக்கியத்தைப் பேசவே உகந்தது. வெறும் கதை சொல் லாக, கள வர்ணனைகளாக நமது இலக்கியம் நீண்டது இக் காரணத்தினாலேயேயாகும். புதிய மொழியையும், புதிய இலக்கியச் சிந்தனா முறைகளையும் அடையாதவரை ஈழத் தமிழிலக்கியத்தின் இந்த அசைவிறுக்கத்தை உடைத்துவிட முடியாது. நம் கவிதை கண்ட வெற்றியும் அதன் கள, உணர்வு ஆகியவற்றில் அது காட்டிய புதியதினாலேயே நிகழ்ந்தது. அதனாலேயே மொழி கடக்க அது முயற்சியெடுத்தது. ஓரளவு அதில் வெற்றியும் கண்டது. ஆனால் புனைகதை இலக்கியம் விறற்றுக் கிடந்தது. அதனால் ஈழத்துப் புனைகதையை உண்மையாகவே புனைகதையாக்க அதைப் புனைவுத் தளத்துக்கு உயர்த்த, வழிகள் இனி மேலாவது திறக்கப்பட்டாக வேண்டும். இலக்கியம் பிரஞ்ஞைபூர்வமான முன்னெடுப்பு என்றே பின்நவீனத்துவம் பேசுகிறது. அதன் இதுகால வரை யான தளைகள் - இன்னொரு விதத்தில் புனிதங்கள் - உடைபட்டு புதியவெளி ஏற்பட வேண்டும். இவ்வகை இலக்கிய முயற்சிகளுக்கான தளம் சிறுபத்திரிகைகளே. அது ஈழத் தமிழ்ச் சூழலில் அரிதாகவே காணக் கிடப்பது. எனினும் படைப்பாளி களினதும் விமர்சகர்களினதும் கவனம் அதன் அசைவிறுக்கத்தில் குவிந்து கருத்தளவிலேனும் நாம் மாற்றுக்கள் கண்டாக வேண்டும். காணுவோம்.
b»
27 DE) 396 JH 4 habib UDAS si garaíso – 2oof

Page 77
டலைப் பருவம் , அங்கமனைத் தோட்டத்தை விட்டகன்று வெளியுலகம் பார்த்தது இதுவரையிலும் இல்லாதது. மக்களாட்சி மலர்ந்தது என்றெல்லாப் பத்திரிகைகளும் ஊதுகுழலின்றி ஊதியதால் ராசேந்திரத்தின் காதுகளையும் ஊதுகுழலாய்க் குடைந்து நெஞ்சினிலே நெருப்பு வைத்து பெருநகரையும் புதிய பண்பாட்டையும் பார்த்தறியும் வெறி
பீடித்தது. அதே ஆண்டின் ஏப்ரல் கிளர்ச்சி அடங்கி ஊரடங்கு தளர்ச்சி கண்டது ஒர் அருமையான வாய்ப்பாகிப் போனது. ராசேந்திரம் கம்பளையிலிருந்து கிளம்பி வந்தான்.
அறிவியல் புகுமுக வகுப்புப் படிப்பையெல்லாம் நிறுத்தியே ஆகவேண்டிய குடும்பச் சூழ்நிலை எழுந்தது.
ஏதோ ஒரு தொழில் தேட வேண்டிய நிர்ப்பந்தம் செட்டியார்த் தெருவில் பத்தர் ஒருவரின் முகவரியை மாத்திரமே தெரிந்து வைத்து அவரின் தயவு தாட்சண்யத்தை எதிர்பார்த்து வந்திருக்கிறான். அவரோ சாக்குப் போக்குச் சொல்லி ராசேந்திரத்தை நாயாய் அலையச் செய்தார். சட்டியில் ஊதுகுழலை ஊதியூதிப் புடம் போடுவதிலே முனைந்திருந்தார். தொந்தியை மாத்திரம் நன்கு பெருத்து வளர்த்திருந்தார்.
சவோய் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புனித கத்தோலிக்கத் திருச்சபை போலவே பட்டது. அத்தனை - நீள - அகல - விஸ்தீரணமான ஒரு திரையரங்கு ராசேந்திரம் கண்டறியாதது. பூச்சாடி கூட மேடையோடும் ஒட்டியபடி அழகொழுகிட வர்ண மின்னொளி வீசிட உள்ளேயிருந்தது. அவனுக்குப் பிரமிப்பாகவே தெரிந்தது.
SQN
νάδSΣSSΣΣ گKAYYZZé
NA
76
 
 

குளிரூட்டிகள் அந்த யன்னல்களாகி மேனியைச் சிலிர்க்கச் செய்தது. இப்படியான இதமளிப்பும் எப்போதுமில்லாத புதுவித அனுபவம். அய்ஸ் சொக்ஸ் கட்டிகளை வாயிலே கடித்தபடி எல்லோரும் வெள்ளி ஈயப் பேப்பரின் பதனிட்ட சொக்கிளேற்றுடன் இருக்கைகளை ஆக்கிரமிப்புச் செய்வது அவனை மிரண்டிட வைத்தது.
போலந்து தேசத்தை கொழும்புக்குள் கொண்டு வந்தே காட்டிடக் கங்கணம் கட்டிய புதிய தலைவர்கள் திரைப்பட விழா எடுத்திருந்தனர். வெளிவாசலில் படபடத்த மஞ்சள் நிறத்துண்டில் அலங்கரிப்பும் கொட்டை எழுத்தில் ஒளிர்ந்தது. மிக மலிவாகவே போலந்தையும் கிழக்கு ஐரோப்பிய சோசலிசத்தையும் கணி டு களித்திடலாம் போன்ற பிரமையை ஊட்டுவதாய் விழா எடுத்திருந்தனர். ஆனாலும் அதனாலே சவோய் அட்டகாசமாய் மாறியதுமில்லை. சோடிப் புறாக்களாகச் சிலர் குடைப் பிடியோடும் இளவயது நழுவாத அலங்கரிப்போடும் வந்து சென்றனர். எவருக்கும்
@rఠాతశr csXIITéF60
- சி. சுதந்திரராஜா

Page 78
வெண்திரை வார்சோ வாசலாகிடும் போலவே திரைப்பட
வாரம் அமைந்திருந்தது.
ராசேந்திரம் முழுப்படங்களையும் பார்த்திடவே ஆவல் கொண்டான். மொழி புரியவில்லை. கீழே ஆங்கில உப தலைப்புகளைப் படித்திட முன்னால் காட்சிகள் மாறிக்
கொண்டேயிருந்தன.
மனங்கவர் வர்ணங்கள் மகிழ்ச்சிப் பிரவாகம் ஊட்டினாலும் பேச்சாடலைப் புரிந்திட முடியாமல் வெறும் உடல் வனப்பையே படங்களில் தேட வேண்டியே நிர்ப்பந்திக்கப்பட்டான். ஆங்கிலப் படங்களிலே கூடப் பரிச்சயம் குறைந்தவனுக்குப் போஷாக்கு ஊட்டுவதாய் கதைகளும் அமையவில்லை. வித்தியாசம் தெரியாமல் ராசேந்திரம் திகைப்புண்டான்.
கொச் சிக்கடை அந்தோனியாரிடம் செவ்வாய் ஆராதனைகளில் கலந்து கொள்ளுகிற ஷெரீன் தினந்தோறும் கண்ணில் படுகிற ராசேந்திரத்தை ஓர் அபூர்வப் பூச்சி போலப் பார்த்தாள்.
கால் வாய் சலனமின்றி ஓடுகின்ற சவோய் மேம்பாலத்தின் அப்பால் பஸ் நிறுத்தத்தில் தவம் செய்தபோது சாந்தனி தட்டுப்பட்டாள். கிராமியக்களை
வீசிய முகம். சரிக்கமுல்லையிலிருந்து சவோய் வரை தனித்தே போலந்தின் திரைப்பட விழாவிற்கு வந்தது ராசேந்திரத்தைக் கவர்ந்திருக்கிறது. பேச்சுக் கொடுத்திடத் திராணியற்று அவள் அங்க அழகை இரசிப்பதில் ஆற்றல் களைச் செலவு செய்தான். ராசேந்திரம் அறிந்திருந்த சிங்களம் அறிமுக ஆரம்பத்துக்குக் கைகொடுப்ப தாயில்லை. பல சோடிகள் ஓயாமல் தங்களுக்குள் சிரிப்பதும் கனைப்பதும் ராசேந்திரத்தின் அந்தரங்க உணர்வுகளைக் கிள்ளி மேலும் மெய்மறக்கச் செய்ததால் அவன் செயலிழந்தான். போலந்து வாழ்க்கைச் சித்திரங்கள் சபல உணர்வுக்கும் மேன்மேலும் தூபமிடுவதால் தன்னை யும் இழந்தான். ஆனால்,
நிழல் சோவியத்தான போலந்து காட்டும் கலாச்சார வாசல் வாழாவெட்டி வாலிபத்தை விடுத்த வேறு உலக வனப்புக்கு இட்டுச் செல்வதாயிருந்தது.
சரிக்கமுல்லைவரை சாந்தனியைப் பின்தொடரலா
னான். அவள் விழி வீச்சினால் கட்டுண்டான்.
வானொலி உதிரிப் பாகங்களை விற்பனை செய்கின்ற சிறுகடை பகுதி நேர வேலையாக சாந்தனியின் தந்தையார் வால் வ் பொருத்திய வானொலிகளை திருத்திக் கொண்டிருந்தார். வசதி படைத்தவராகத் தெரியவில்லை.
77

ராசேந்திரத்தை எள்ளளவும் விரும்புவதாயுமில்லை.
வெள்ளித் தகடு கிழிந்து தொங்கிய மிதிவாசலிலே நெருக்கியடித்தபடி பஸ்ஸில் தொங்கி வந்த ராசேந்திரத்தை தகடு சிராய்ப்பை ஏற்படுத்தி பதம் பார்த்தது. அகோரமாய் முகம் மாறுவதாக உணர்ந்தான். சாந்தனியை பஸ்ஸில்
பின்தொடர்வதைக் கைவிட்டாள்.
திரைப்பட விழா முற்றுப்பெற்றதும் வெளிநோயாளர் சிகிச்சைப் பகுதியில் மணிக்கணக்காகக் கால் கடுக்கக் காத்து நின்றான். முக விகாரத்தை வைத்திய உதவிச் சிகிச்சை செய்து போக்கலாம் என்று நினைத்தான். ஏராளமான நோயாளர் வயிற்றோட்டம் தலையிடி இருமல் சுகயின மருந்தெடுக்க அங்கே நிரம்பியிருந்தனர்.
வராத வருத்தத்தையும் வரவழைத்து விடுமாற்போல் வைத்தியமனை நெடிலடித்துக் கொண்டிருந்தது. ஓங்காளம் ராசேந்திரத்தை ஆக்கிரமிப்புச் செய்தது. கை லஞ்சம் ஒழிக்கப்படும் என்றெல்லாம் குழுரைத்து தேர்தல் வெற்றி கண்டவர்கள் ஒடியொளிந்து விட்டனர் போலிருந்தது.
மயக்கமூட்டும் மாலைத் திரைக்காட்சிகளையும்
விழாக்களையும் காட்டியும் நடத்தியும் ஏமாற்றினால் போதும் என்றெண்ணி ஓய்ந்தது போலிருந்தது.
புதிதான ஐம்பது ரூபாய்த் தாளினை ஒடலியிடம் கொடுத்து ராசேந்திரம் காரியத்தை நிறைவேற்றினான். முகத்தை மறைத்துப் பிளாஸ்ரர் வைத்துக் கிழிசல் மீது
தையல் போடலானார்கள்.
முகவிகாரம் ராசேந்திரத்துக்குப் புதியதொரு பாடம் போதிக்கப் போதுமாயிருந்தது.
சபல புத்தி படைத்தவனாகி உழன்றழியாமல் திருப்பி வைத்தது.
அங்கமனைத் தோட்டம் அவனை மீளவும் அரவணைப்புச் செய்து அங்கமெல்லாம் நிறைந்த வனாக்கிட வரவேற்றது.
உடல் உழைப்பு கேவலமானது என்கின்ற கருது கோள் ராசேந்திரத்தை விட்டு விட்டுக் கழன்று கொண்டது.
மூங்கில் மரக் கம்புகளை வார்ந்து கொழுந்துக் கூடைகள் பின்னுவதில் ராசேந்திரம் முனையலானான். பெருநகரப் படையெடுப்புச் செய்வதையும் அத்தோடு நிறுத்திவிட்டான். தேயிலைக் கொழுந்துகளின் கலசம் அவனது கைவண்ணத்தில் மிளிரலாயிற்று.
iko 39வது ஆண்ருமலர் ஜனவரி - 20Oபு

Page 79
முஸ்லிம் பண்பாடு
-- ஏ. இக்பால்
ன்றைய உலகக் கோளத்தை GLOBAL
VILLAGE - புவிக் கிராமம் என்று குறுக்கிக் கூறுவதற்குக் காரணம் : புவிக் கிராமத்தை அடையாளம் காண்பதற்கு உதவியாக நிற்பவை ஆகாயமும், நீர் வளம் நிறைந்த ஆழியுமே என்பதை நுணிதாக நோக்கலாம். அதனால், ஆகாயத்தையும், ஆழியையும் மனிதன் தன்வசமாக்கிய நாகரீகத் தாக்கம் தெட்டத் தெளிவாகும். ' ',
“என்னிலிருந்து எனது தாய் தந்தையர் இருவ ரெனக் கொண்டு, அவர்களின் தாய் தந்தையர்கள் நால்வர் எனக் கணக்கிட்டுப் பல்லாயிரம் வருடங்களை எல்லை வகுக்கும் போது, பலகோடி மக்கள் எண்ணிக்கை பெற்று எனது குடும்பமாவதைக் காணலாம்”
ஒரு புத்தக வெளியீட்டில் அமைச்சர் எம்.எச்.எம். அஷரப் கூறிய சிந்தனைக் கதையிது. அரசியலில் அவரை அலசாவிட்டாலும், அறிஞனாக அலச முடியும். அதனால், உலகக் குடும்பம் ஒன்றுதான் என்ற உயரிய சிந்தனையை நாம் பெற்றாக வேண்டும்.
. .
79
g2O 6
இை
9)Ալ
ՑB6T
60
தனி தனி
61(B)
60
J6.
ԱվB
வா
d
U6
D60
BFD
60
தெ
 
 
 

லகக் குடும்பம் பல நாட்டவராகி. பல ஊரவராகி,
சமூகங்களாகி, பல மொழியினராகி, பல யத்தினராகி, பல்திறப்பட்ட பண்பாடுகளையுடைய களாகி உலகெலாம் உலவுவதைக் கான் றோம். இன்று மனித பண்பாட்டைப் பொதுமை க்கிக் கூறுவதற்கு முக்கிய காரணம்: புவிக் ாமமாக உலகம் குறுகி நிற்பதாம் என்பதை வரும் மனதில் கொள்ளுதல் முக்கியமெனக் துகிறேன்.
பண்பாடு என்பது நாடு சார்ந்ததாகவும், மொழி, ாம், சமயம் சார்ந்ததாகவும், நகரம் ஊர் எனும் ம் சார்ந்ததாகவும், குலம் கோத்திரம் என்னும் ம்பம் சார்ந்ததாகவும் பல பகுதிகளின் கூறு ாகப் பிரிந்து நிற்பதை நாமறிகின்றோம். அதனால், பாட்டைப் பலரும் பகிர்ந்து கொள்ள முடியும். மனிதனின் சமூகத்துடன் ஒட்டி வாழ்வதும் சமூகம் மனிதனுக்கு உணர்த்தி நிற்பதும் பண்பாட்டின் டிப்படையிலேதான் என்பதையும் நாம் கணக்கில் த்தல் அவசியம். இவ்வுலகம் நிலைத்து நிற்பதற்குப் ண்பாடு நிலைத்து நிற்பதே காரணம் எனலாம். கையால்தான், சங்க இலக்கியமான கலித்தொகை ன்பெனப்படுவது பாடறிந்தொழுகல் என வலி |த்துகின்றது. இந்த அடி தரும் உண்மைக் கருத்து லகச் சான்றோர் ஒழுகிய ஒழுக்கம் அறிந்து ழ்தல்தான் பண்பு என்பதாகும். வள்ளுவரும்: ண்புடையார்ப் பட்டுள் டுலகம் அதுவின்றேல் ன்புக்கு மாய்வது மண்” என்றார்.
‘உலக நடைமுறைகள் பண்பாளர்களைச் சார்ந்து பங்க வேண்டும். இல்லையேல் அந்நடைமுறைகள் சமாகி விடும்' என இக்குறள் விரித்துக் கருத்துத் கின்றது.
இஸ்லாமும், “மனிதர்களே! நிச்சயமாக நாம் ங்களை ஒர் ஆண் மற்றும் பெண்ணிலிருந்து டத்தோம். இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் ரிமுகமாகிக் கொள்வதற்காக உங்களைக் ளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். சயமாக அல்லஹாவிடத்தில் உங்களில் மிக்க ண்ணிய மிக் கவர் உங்களில் மிகவும் பய தியுடையவர்தான்” அல்குர்ஆன் 49:13. உண்மை ல கண்ணியம் மிக்கவர் என்னும் பண்படைய பக்தி அவசியம் என்பதைக் கூறி நிற்கின்றது.
‘முஸ்லிம் பண்பாடு' என்னும்போது, அது யத்தின்பால் நின்றெழுவதைக் குறிப்பிடுகின்றது. ன்பாடுகள் மனிதப் பொதுமையாகி இங்கே சமயத் ாடர்புடன் மாறுவதை நோக்க வேண்டும்.

Page 80
அரோபியாவில் இஸ்லாத்தின் தோற்றம் குறித்து 1853இல் கார்ல்ஸ்மார்க்ஸ், ஏங்கல்ஸுக்கு எழுதிய கடிதத்தில் “கீழ்நாடுகளின் சரித்திரம் மதங்களின் சரித்திரமாக இருப்பது ஏன்?’ எனும் கேள்வியை எழுப்புகின்றார். ஏங்கல்ஸ"ம் மார்க்ஸ்ஸிடம் “இன்னும் சில தினங்களில் நான் முஹம்மதின் சரித்திரத்தை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்வேன்’ எனக் கூறியிருக்கின்றார்.
மனித நாகரிகத்தின் முக்கிய இடங்களாகக் கருதப்படும் பபிலோனியா, மெஸ்பதோமியா, எகிப்து போன்ற நதிக்கரைப் பிரதேசங்களும், தென்யெமனி லிருந்து ஸிரிபா வரைச் செல்லும் வணிக நீள் பாதையும் உலக நாகரிகத்தின் உன்னத உறை விட்ங்கள் என்பதை உலகம் மறந்து விடாது. பபிலோனியராகவும், அஸ்ஸியராகவும், ஹீப்றுக் களாகவும், அரேபியர்களாகவும் நின்று உலக நாகரிகத்துக்கு வித்திட்டவர்கள் செமித்தியர்கள்தான்.
நபி முஹம்மத’ (ஸல்) அவர்களது வருகைக்கு முற்பட்ட செமித் தியர்கள் அரேபியர்களாக இந்தியாவுக் கூடாக இலங்கை வரை வந்து குடியி ருந்து அவர்களது பண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்துள்ளும் பரப்பியிருக்கின்றனர்.
அல்குர்ஆனில் 5:69ஆம் வசனத்திலும், 22:17ஆம் வசனத்திலும் கூறப்படும் ஸாபியீன்கள் எனப்படுவோர் ஏகத்துவக் கொள்கையுடையவர்கள். இவர்களின் வணிக வரவு தமிழ்நாடு முழுவதிலும் பரம்பி நின்றுள்ளது. அரச குடும்பங்கள் கூட, தங்களுடைய சமத்துவத்தில் இவர்களை வைத்துப் போஷித்தனர். சங்க காலப் புலவர்களைக்கூட இவர்களது ஒரிறைக் கொள்கையும், நாடுகள் தோறும் பரவிச் சென்ற பண்புகள் பரத்தலையும் கவர்ந்திருக்கின்றன. சங்கப் புலவர் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் அடியும், பிற்காலப் புலவர்களின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் அடியும் சாபீயின் களின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கின்றன எனக் கொள்ள முடியும். பல தெய்வ வழிபாடுள்ளவர்கள் இந்த ஓர்மைக்கு வந்தமைக்கு செமித்தியப் பண்பு காரணமா கின்றது.
'இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னருள்ள அறபி களின் மார்க்கத்தை தென்னிந்திய மக்களும் பின்பற்றி யிருக்கின்றார்கள் என வின்ஸன்ட் எனும் வரலாற் றாசிரியர் கூறுகிறார். இதை மேற்கோள் காட்டி INFLUENCE OF ISLAM OF INDIAN CULTURE என்ற நூலில் டாக்டர் தாராசந்த குறிப்
79

பிடுவதை இங்கே நோக்கலாம். இவ்விபரத்தைத் தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு எழுதிய ஏ.கே.Pபாயி குறிப்பிடுகிறார்.
அரூபக் கடவுளை வழிபடும் சமணர்களைக்கூட ஓரிறைக் கொள்கையுடைய சாபீயீன்களும், ஹனிப் களும் கவர்ந்திருக்கின்றனர். முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின், இங்கே வந்த வணிகர்களுடன் சமண அரசர்கள் மிகவும் அந்யோன்ய மாக இருந்திருக்கின்றனர். சைவ, வைணவ அரசின் அழிவுகளுக் கஞ்சிய சமணர்கள் அரூபியான ஓரிறையை வணங்கும் முஸ்லிம்களாக மாற முற் பட்டனர், மாறினர். தொன்மைச் சமூகமொன்று நவீன சமூகமாக மாறுவதற்கு பண்பாட்டு விருத்தி காரண மாகும். இப்பண்பாட்டு விருத்தியை இஸ்லாம் கொடுத் ததினால் அறபுச் சமூகம் உலகளாவிய விதத்தில் மாற்றம் பெற்றது. அரேபியரின் வணிகத் தொடர்பால் முஸ்லிமானவர்களைவிட, சமணர்கள் முந்திக் கொண்டு முஸ்லிம்களாக மாறியிருக்கின்றனர். தமிழ் மொழிச் செல்வாக்குடைய முஸ்லிம்களின் அனுஷ் டானத்துக்குரிய அநேக தமிழ்ச் சொற்கள் சமணர்கள் உபயோகித்த சொற்கள்தான் என்பதை இங்கே காணமுடியும். சமணப் பண்புகள் பல தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே புகுந்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
வணக்கத்தலத்தை சமணர்கள் பள்ளி’ என்றே அழைத்தனர். சைவர்கள் கோயில் என்றே கூறி வந்தனர். பள்ளி' என்ற சொல் முஸ்லிம்களிடையே பள்ளிவாசலாகியது. முஸ்லிம்கள் இன்று வழக்கத்தில் கொள்ளும் நோன்பு, தொழுகை, பெருநாள், ஆணம், களரி, சோறு, கிளை, இரணம், ஒடுக்கம், ஒடுக்குச் சோறு எனும் பண்பாட்டுச் சொற்கள் யாவும் சமணர்கள் பாவித்த சொற்களே. எனவே, இன்றையத் தமிழ் நாட்டு இலங்கை முஸ்லிம்கள் பல தெய்வக் கொள்கையுள்ள இந்துக்களிலிருந்து வந்தவர்களல்ல. ஒரிறை - அரூப வழிபாடுள்ள சமணர்களிலிருந்து வந்தவர்களே என்பதை நாம் உறுதியாக்கலாம்.
இலங்கை முஸ்லிம்களின் பண்பாடு சமயம், மொழி, பிராந்தியம் என்பவற்றுடன் இணைந்து நிற்பதை நாம் காண முடியும். சமயம் என்னும் பொழுது, அரேபிய நாட்டின் செமித்திய நாகரிகத்தின் உலகளாவிய வணிகப் போக்கின் பிரதி பிம்பமாக இருந்தாலும் அல்லாஹற் அருளிய அல்குர்ஆன், அவனது தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் அடங்கிய ஹதீஸ் என்னும் வஹியையே மூலாதாரமாகக் கொண்டு விளங்கும். இந்த அடிப்படை பிறழ்ந்தால், அது இஸ்லாமல்ல. இஸ்லாமல்லாதவற்றைப் பின்பற்றுபவர்
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20oபு

Page 81
முஸ்லிமல்ல.
இஸ்லாம் சமயப் பண்பாட்டுடன் அல்லாஹற் வைத்துள்ள முஸ்லிம் என்ற பெயருடன் நின்று ஒழுகும் முஸ்லிம்கள் வரம்பு மீறமாட்டார்கள். வரம் பிட்ட அல்குர்ஆன், ஹதீஸ் ஆகிய வஹிக்கு உட் பட்டே வாழ்க்கையை நடத்துவார்கள். அல்லாஹற் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. வரம்பு மீறுவோர் அடையும் இடம் நரகம் என்கின்றான். இவ்விதம், வரம்பு மீறுவோரை சபித்து நிற்கும் கூற்றுக்கள் அல்குர் ஆனில் அதிகம் இடம் பெறுவதை அறிகின்றோம். வரம்பு மீறும்போது, முஸ்லிம் பண்பாடும் பல்திறப்பட்டு பிரிந்து நிற்பதையும் நாம் காணலாம். இஸ்லாத்தின் பால் அதிகம் பற்றுக்கொண்டு, அதிகம் நன்மை யடையலாம் என்றெண்ணி வரம்பு மீறி நிற்கும் இஸ்லாத்துள்ளே அமைத்துக் கொண்ட மார்க்கங் களை இங்கே காணமுடியும். 48
தரீக்காக்கள், தப்லீட்ஜமாஅத், சூபிமார்க்கம், சுன்னத்வல்ஜமாஅத், மத்ஹபுகள், ஹ"ப்புல் அவ்லியா இவ்விதம் சில மார்க்கங்கள் வரம்பு மீறிச் செல்வதை குர்ஆன், ஹதீஸ"டன் உரைத்துக் காணமுடியும். இம்மார்க்கங்களை எதிர்க்கும் சில மார்க்கங்களான ஜமாஅத்தே இஸ்லாமி, தெளஹரீத் ஜமாஅத், அன்ஸார் ஸ“ன்னத் ஜமாஅத், பிரதஹட் மூவண்ட் என்பவை முன் சொன்னவற்றை எதிர்க்கும்போது, அவை பின்பற்றும் இஸ்லாத்தின் உண்மைகள் சிலவற்றையும் எதிர்த்துத் தள்ளுவதினால் வரம்பு மீறுகின்றன. இன்றைய காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்களின் ஒரே மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறும் முஸ்லிம்கள் வரம்பு மீறித் தட்டழிந்து சமயப் பண்பாட்டில் தலைகீழாக நிற்கின்றனர். இது, சமய ரீதியில் காணும் முஸ்லிம் பண்பாடு' எனக் கூறமுடியும். இவ்வரம்பு மீறல் இலங்கை, இந்தியா இவ்விதம் பல நாடுகளில் பரந்து நின்றாலும், வரம்பு மீறாது, வஹியை மட்டும் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் மிகச் சொற்பமாக உலகில் வாழுகின்றனர்.
மொழிப் பண்பை நோக்கும்போது, இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி, வீட்டுமொழி தமிழ்தான். தமிழ்மொழிப் பண்பாட்டுடன் வெளிவந்த இலக்கி யங்களின் தாக்கம் தமிழ் பேசும் முஸ்லிம்களிடை யேயும் தாக்கம் பெற்று நிற்பதையும் அறிகின்றோம். மட்டக்களப்புப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை தமிழ் நாட்டு இலக்கியச் செல்வாக்கு, முக்குவரின் பழக்க வழக்கங்கள் குடிவழி எனும் தமிழர்களிடமிருந்து வந்த குலமுறைமை முஸ்லிம்களிடையே வேரூன்றி நிற்கின்றன. இது தாய்வழித் தலைமையை ஊன்றி நிற்கும். தாய்வழியே குடிவழி.
90

ஒரே குடிவழியில் மணஞ் செய்யும் முறை சமயத்தை மீறி மிகவும் கடுமையாகக் கடைப்பிடித்த காலமொன்று - சுமார் இருபது, இருபத்தைந்து வருடங் களுக்கு முன் மிகவும் கொடூரமாக இருந்துள்ளது. இப்போது சிறிது தளர்ந்தாலும் வசை சொல்லும் நேரம் சொல்லித் தீர்ப்பார்கள். சுமார் முப்பத் திரண்டுக்கு மேற்பட்ட குடிகள் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் இருந்தபோதும், ஒரூரில் பதினெட்டுக்கு மேற்பட்டுக் குடிகள் இருந்ததில்லை. ஊரில் ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு மரைக்கார் தலைமை தாங்குவார். மக்கள் தொகை குறைந்த குடிக்கு இன்னொரு குடியின் மரைக்கார் பொறுப்பாயிருப்பார். பள்ளிவாசல் பரிபாலனம் குடி மரைக் கார்மார்களின் செயற் றிறமையைக் கொண்டே செவ்வனே நடக்கும். குடி மரபுகள் பேணப்படும். முதியோரை மதிப்பது, பள்ளிக்குக் கட்டுப்படுவது, குடியின் தீர்மானங்களை ஏற்பது, குடி அங்கத்தவர்களுக்கு உதவியளிப்பது போன்ற சமூக நடவடிக்கைகள் பேணப்பட்டபோதும், முற்றிலும் சமயம் பேணப்படுகின்றதா? அதாவது தீர்ப்புக்கள் அல்லாஹற், றஸஉலைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றதா? என்பது கேள்வியாகவே இருக்கும். கட்டுப்பாட்டுக்கடங்காவிட்டால், ஊரைவிட்டு நீக்கி விடுதல், நன்மை தீமைகளில் கலக்காதிருத்தல்
போன்ற தண்டனைகளுக்குட்பட நேரிடும்.
ஒருகாலத்தில் 'சங்கரப்பத்தான்’, ‘தவிட்டுப் பத்தான் குடிகளைத் தீண்டாத குடிகளாக முஸ்லிம் கள் எனக்கூறப்படுவோர் கணித்து நடத்தியிருக் கின்றனர். கல்யாணக் களரிக்கு அக்குடிகள் வர மாட்டா. கல்யாணப் பந்தலுக்கு கம்பு தறிக்க எல்லாக் குடியினரும் உதவும் சமயம் இக் குடியினரின் உதவியை யாரும் வேண்டார். வண்ணான் வெள்ளை கட்ட வருவான். இந்த இடம்கூட, அக்குடியினருக் கில்லை. இக்குடிகள் இன்று மந்திவிட்டன. இவ்விதம் சமூகப் பழக்கவழக்கங்கள் தமிழ் மொழியாலும், தமிழ் மக்கள் கலப்பாலும் ஏற்பட்டவை. சமயப் பண்புகள் சிலவற்றுடன் மொழிப் பண்பும் முஸ்லிம் பண்பாக இங்கே சேர்ந்து கொள்வதைக் காண்கின்றோம். நிலத் தோடு சேர்ந்த விவசாயத் தொழில் செய்வோர், வணிகத்தோடு சேர்ந்த வியாபாரத் தொழில் செய்வோர், பண்ணையோடு சேர்ந்த இடையர்கள், கடலோடு ஒட்டிய மீன்பிடிகாரர், உப்புச் சேர்ப்போர் இவ்விதம் தொழில் முறைகள் சார்ந்தோர்கூட, குடிமுறை சார்ந்தே வாழுவர். வயல் சொந்தக்காரர்கள், நிலச் சொந்தக்காரர்கள், தெங்குத் தோட்டச் சொந்தக் காரர்கள் என்போர், சாதாரண கமக்காரர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும், தெங்குத் தோட்டத் தொழிலாளர்களையும் அடிமைப்படுத்தாமல் அடிமை களாக்கி வைத்திருப்பர். நிலத்தைச் சார்ந்தோர்களின் ஆதிக்க முறையிது. இரக்கம் சற்றுக் குறைந்
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 82
தளவிலேயே நிலம் சார்ந்தோரிடம் இருப்பது வழமை. ஆகையினால், நிலத்தைச் சுரண்டல், தொழிலைச் சுரண்டல் என்பன சர்வசாதாரணம். இந்த அமுக்க முறையிலேயே மட்டக்களப்புப் பிராந்திய முஸ்லிம் களின் பண்பாட்டு விருத்தியும் நடந்தேறியுள்ளது.
மட்டக்களப்புப் பிராந்தியம் திருகோணமலை தொடக்கம் பொத்துவில் ஈறாக 180 மைல்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு. அதாவது 288 கிலோமீற்றர் நீளமுடைய பிராந்தியம். இப்பிராந்தியத்துள் சில பண்பாட்டுப் பாரம்பரியங்கள் வித்தியாசப்பட்டு நடந் தாலும் மொழிப் பண்பாட்டடிப்படையில் இப்பிராந்திய மக்கள் இவற்றை ஏற்று நடப்பர். கிழக்கு மாகாணத் தின் வடபகுதிப் பெண்கள் சேலை கட்டும் விதமும், தென்பகுதிப் பெண்கள் சேலை கட்டும் விதமும் வித்தியாசப்படும். தற்காலம் இப்பண்புகள் வேறுபட்டு படித்தவர்களால் மாற்றம் பெற்றுள்ளது. கல்யாணச் சம்பிரதாயங்கள், சடங்கு முறைகள், தீவனம் செய்து குவிக்கும் முறைமைகள் அப்துல்காதர் லெவ்வை அவர்களின் செய்னம்பு நாச்சியார் மான்மியம்’ எடுத்துக் கூறுவது போலவே நடக்கும். அப்பண்புகளில் அதிகமானவை இன்று மாற்றமடைந்துள்ளன. திரு மணத்தின் போது, மாப்பிள்ளை கூட்டிச் செல்லும் போது, பைத்து என்னும் பாடல் பாடிச் செல்லல், பெண்ணின் வீட்டு முற்றத்தில் மாப்பிள்ளையைப் பெண் வீட்டார் உள்ளழைத்துச் செல்லும் வரை விருத்தம் பாடுதல், சபாஷ் கூறுதல் போன்ற கலாசாரப் பண்புகள் இன்றும் அழியாமல் நிற்கின்றன. கிராமியப் பாடல்கள் இப்பண்பாட்டுக் கோலங்களை அடியொட்டி நிற்பதையும் நாம் காணலாம்.
கோடை எறிச்சுக் குளங்களெல்லாம் ஒடிவத்தி
மாண்டதுதான் தம்பி ஒங்குட மனதறிந்த மட்டிலயும் எனும் தொழிலால் ஏற்பட்ட மனக்கசப்பும்,
வட்டான மூத்தாப்பா வங்கிசத்திலுள்ளவர்தான்
சதக்காக் கொடுக்கிறது சல்லிசதம் மூத்தஉம்மா என்று கூறும் நிலச்சுவாந்தாருடைய பண்பும் கிராமியக் கவிதைகளாக எழுவதைக் காணலாம். வறுமையில் வாழ்ந்த போதும், இரக்க சிந்ததை ஒடிவிடாத உண்மையைக் காட்டும்
வாழைப் பழமே ஒங் குட வகுத் தி லயும் ஒண்டுமில்ல
என்ர ஈரலிலே பாதி ஈந்து தரத்தின்பயளோ என்பதையும் காணலாம்.
நிலப்பிரபுத்துவ நிழல்கள் இன்றும் அங்கே நிழலாடி நிற்பதைக் காணமுடியும். கல்யாண வீட்டில் மிகக் கச்சிதமாய் உடுத்து நின்று வர்க்கரீதியில் பிரிந்து கூட்டங் கூட்டமாக நிற்பதையும் காணமுடியும். நெல்லை 'மொனப் போலி செய்யும் அரிசியாலைச்
81
 

சொந்தக்காரர்கள், நிலச்சுவந்தர்கள் படித்து மேல் தட்டில் நிற்கும் உயர்ந்த உத்தியோகத்தர்களை எந்த விலைகொடுத்தும் வாங்கும் செல்வமுடையவர் களின் செல்வச் செருக்குகள் கூட இப்பகுதியில் ஒரு பண்பாகவே வளர்ந்து நிற்பதைக் காணமுடியும். இவற்றைப் பொருளாதார வேறுபாடுடைய பண்புகள் என்றே சுட்டலாம். இவற்றை முஸ்லிம்களே பின்பற்று வதால் முஸ்லிம் பண்பாடு என்று கூறுவதில் பிழை யெதுவுமில்லை. பொருளாதாரம் நோக்கி நொந்து கொள்ளும் கிராமியப் பாடல்களையும் இங்கே சுட்டுதல் நன்றெனக் கொள்கின்றேன்.
”சொந்தமெண்டு சொல்லி சொச்ச நெல்லுத் தந்தாங்க
அத்தக் கூலிதான் அவிய அளந்தெதையும் கொட்டவில்ல'
"விளைச்சலுக்குக் காசி வீசியெறிந்தவர்தான் புற வளவச் சேர்த்து புதுக் கணக் குப் போட்டழிச்சார்’
நெல்லுக்குக் காசெடுத்து நெலத்திலதான் போட்டிருந்தோம்
அல்லாவின் பக்கல் அழிச்சதுதான் மிச்சமில்ல'
சோத்து நெல்லுத் தந்தார் சொச்சமிச்ச வேலதந்தார்
வேர்த்து விடாச் சதுதான் வெளச்சலிலே ஒண்டுமில்ல'
வர்க்க முரண்பாடும் கூட, பண்புகளை மாற்றி நிற்பதைப் பார்க்கலாம். கல்வியைக்கூடப் பொருளா தாரக் கண்கொண்டு கற்கும் ஒரு பரம்பரை மட்டக் களப்பிலுண்டு. அது இன்று முஸ்லிம்களிடையே மிகவும் பரந்து நிற்பதைக் காணமுடியும். ஒரே குடும்பத்தில் பேசியிருக்கும் மாப்பிள்ளையைச் சீதனப் பேரம் பேசித் தட்டியெடுக்கும் ஒருவிதப் பண்பு இப்ப குதியிலுண்டு. உறவுமுறை பேணுவதிலும் ஒருவிதப் பண்பை இங்கே அறியலாம். சொந்தக்காரர் சபைக்கு வரத் தகுதியற்றவரென நினைக்கும் மகன்கூட, தந்தையை சிலவேளைகளில் தந்தையெனச் சொல்லக் கூச்சப்படும் பண்புடையோரும் உண்டு.
இலங்கையின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் சொந்த உறவு மிகத் தூரமாக இருக்கும். ஆனால், மிக நெருக்கமான சொந்தமாக உறவு கொண்டாடு வார்கள். மத்திய மலைநாட்டில் உறவினர் எங்கிருந் தாலும், அவர்களை அழைத்து வந்து அறிமுகப் படுத்துவதில் முன்னிற்பார்கள்.
உணவுப் பண்புகளில் நெல்லரிசியில் செய்யும் பதர்த்தங்களை மட்டக்களப்பு முஸ்லிம்கள் பரந்
Dé) 396NJIH 46 aoUb UDóAssi agar6JÁo - 2OOF

Page 83
தளவில் பங் கிட்டு உண்பர். ஏனைய பகுதி முஸ்லிம்கள், சோறு படைத்தலிலே அதிகம் கவனம் செலுத்துவர். உணவுக்குப் பின், பழத்துடனும், பாணி போன்றும், புளிபானம் போன்றும் பதார்த்தங்களை மட்டக்களப்புப் பகுதியில் பருகுவார்கள். சாப்பாட்டுக் களரி நீண்டு முகத்தை முகம் பார்த்திருந்து உண்ணுவதாக அமையும். கறிவகைகள் கூட தனித் தனியாக பகிருவர். இந்தமுறை இலங்கையின் ஏனைய பகுதிகளில் இல்லை. சஹன் முறையில் ஆறுபேர் கைபோட்டு உண்னும் பழக்கம் மட்டக் களப்புப் பகுதியில் இல்லை. உண்டபின், வட்டிலப்பம் அல்லது கிறிணி, அல்லது பூந்தி இனிப்பு வகை அத்துடன் சர்பத் குடித்தல் போன்ற பண்புகள் மட்டக் களப்பில் இல்லை. இப்பழக்கம் அரபிகளிலிருந்து வந்ததே. மட்டக்களப்பில் தமிழர் விருந்து முறைதான் பேணப்படுவதைக் காணமுடியும்,
சமயப் பண்புகள், மொழிப் பண்புகள் ஊடாடி வாழும் அயலவர் பண்புகள், பிராந்தியப் பண்புகள் என்பன முஸ்லிம் பண்புகளில் அடங்கி நிற்கின்றன. பொதுவாகச் சமயப் பண்புகள் பிறழ்வுபட்டாலும், எங்கும் ஒருமையாக நின்று ஒன்றித்த பண்பாக நின்று நிமிர்வதை இங்கே காண்கிறோம்.
சமயப் பண்புகளின் தாக்கம் செறிவடைந்து, உலகெல்லாம் கலைப்பண்புகளுடன் சேர்ந்து திரி படைந்திருப்பதைக்கூட வரலாற்றில் காண்கிறோம். இம்மாற்றத்தைச் செய்த உலக எழுத்தாளர்கள் பலரி ருந்த போதும், தமிழுடன் கலந்த இருவரை இங்கே குறிப்பிடுதல் அவசியம். ஒன்று பிக்தால், அவரெழுதிய 'இஸ்லாமிய கலைப்பண்பு ஆங்கிலத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பாகும். அடுத்துத் தமிழில் 'பிறை யன்பன் என்ற பெயரில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் எழுதிய கலையும் பண்பும் எனும் நூலைக் குறிப் பிடலாம். இவர்களின் கணக்கெடுப்புக்கள் இஸ்லாம் மதத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளின் கணக் கெடுப்புக்களே ஒழிய, இஸ்லாத்தின் பண்புகளாகா.
மட்டக்களப்பு முஸ்லிம்கள் தங்களது 'முஸ்லிம் பண்புகளை இஸ்லாம் சமயம் நோக்கியும், ஏனைய சமூகங்களின் உறவு நோக்கியும், மொழி நோக்கியும், இடம், இடத்தின் தொழில் நோக்கியும் ஆக்கிக் கொண்டனர் என்பதைத் தனித்தனி எடுத்து நோக்குதல் அவசியம். புவிக் கிராமத் தோற்றத்தால் உலகம் சுருங்கிக் காணப்படுவதால், உலகெங்கிலும் சுற்றித் திரியும் மட்டக்களப்பு முஸ்லிம்களின் பண்பாட்டுக் கோலங்கள் இன்னும் மாற்றமடையும் சாத்தியமுண்டு. அம்மாற்றங்கள் சமயத்துடன் இணைந்து செயல் பட்டால்தான் மிக வெற்றியளிக்கும். அல்லாது விட்டால் தடுமாற்றமடையலாம்.
92
 
 

இறுதியாக விசுவாசிகளை நோக்கியும், மனித குலத்தை நோக்கியும அல்லாஹற் அருளியுள்ள பத்து விடயங்களை இங்கே முன்வைக்கின்றேன். இவை அல்குர்ஆன் 6:15,152 ன்னும் இருவசனங்களில் கூறப்பட்டுள்ளன.
இறைவன் மனிதகுலத்துக்கு மகிமையான பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் பலவற்றைக் கூறு கின்றான். அவற்றுள் முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவைகள்:-
1. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள். 2. உங்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்து
நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள். 3. வறுமைக்காக உங்கள் குழந்தைகளை நீங்கள்
கொலை செய்யாதீர்கள். 4. மானக்கேடான காரியங்களை - வெளிப்படை யானவற்றையும் இரகசியமானவற்றையும் செய்ய நெருங்காதீர்கள். 5. அல்லாஹற் தடுத்துள்ள எந்த ஆத்மாவையும்
நியாயமான உரிமையின்றிக் கொலை செய்து விடாதீர்கள். 6. அநாதையின் பொருளை அவர் பிராயமடையும்
வரையில் நியாயமான முறையிலன்றி அனுபவிக்க நெருங்காதீர்கள். அளவைச் சரியாகப் பூரணமாக அளவுங்கள். 8. எடையை - நிறுவையை நீதமாக நிறைவு
செய்யுங்கள். 9. பாதிக்கப்பட்டவர் உறவினராயினும் பேசினால்
நீதத்தையே பேசுங்கள். ty
10. நீங்கள் அல்லாஹற்விடம் செய்த
வாக்குறுதியையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்.
நல்லுணர்ச்சி பெறவே இவ்வுபதேசம் இறைவ னால் செய்யப்படுகின்றது. இந்த உபதேச வழிமுறை களுடனேயே முஸ்லிம் பண்பாடு தோற்றம் பெற்றுள்ளன என்பதை அறிதல் மிக முக்கியம். கால, இட, வர்த்தமானங்களினால் சில பிறழ்வுகள் ஏற்பட்டாலும் முஸ்லிம் பண்பாடு இஸ்லாத்தின் மூஒா தாரத்துடன் நின்று பிறழாத வகையிலேயே தோறறம பெற்றது என்பதையும் நாம் அறிதல் அவசியம். யதார்த்தமாக முஸ்லிம் பண்பாட்டையும், முஸ்லிம்கள் பின்பற்றும் பண்பாடுகளையும் எடுத்துச் சுருக்கி யுள்ளேன். யதார்த்தவாதி வெகுசன விரோதி என்பது பழமொழி. எந்நாளும் விரோதியாவதற்குப் பயந்து யதார்த்தத்தை எடுத்துச் சொல்லாமலிருக்க முடியாது. ஒப்புக் கொண்டாலும், ஒழித்து விட்டாலும் தப்புச் சொல்ல யாருமில்லை.
சில்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 84
Cees/O12/es to
;رنaلانا9ltaV
MOOSAE
34, MWA.D, RAMA
COOM
Tel: 2307 FdX : 2
g
 
 

39" ره ازaA اگر AAuرع
ES LMTED
NAVAK MAMWAITWA M30 - 02
168/170/171 2307169
áid. இகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 200டி

Page 85
ள்ளை அவர்களுக்கு உறக்கம் பிடிக்கவில்ை
வடமராட்சியில் இருந்து வெள்ளவத்தைக்குக் இதுவரை அலர் கழித்ததில்லை. மனமகிழ்வும் ம இரண்டும் தூக்கத்தைத் தொலைத்து விடுகின்றன. ே பெட்டி சிகரெற் புகையில் இதுவரை பிள்ளை அவர் புகைக்க வேண்டுமென்று அவருக்குள் ஒரு வெறி. கனவு, தனது இலட்சியம் நிறைவேறிவிட்டதான ( போதை வெறி.
பிள்ளை அவர்கள் இன்று வெறும் முருகுப்பி
வரப்புகள் உயரா
كفها ۳ آیه است.
எருமையோடு சேற்றில் கிடப்பது போலத்தான். அவ
அறையில் அவரோடு வந்து ஒன்றாகப் படுப்பதற்கும் ஆரம்பத்தில் இங்கு அவள் மறுத்தாள். ‘வளர்ந்த பிள்ளையஸ் இருக்கேக்க..” என்று மறுகினாள். வடமாராட்சி போல வீட்டு, விறாந்தையிலே பாய் விரிச் சுப் படுக் க 9 u9y LDT, இந்த வெள்ளவத்தையில். அவள் வந்து கட்டில் மேல் சரிந்தால் போதும். மறுகணம் குறட்டை ஒலி கேட்கும்.
அவள் இன்றைக்குமல்லவா அப்படி உறங்கிக் கிடக்கின்றாள். அவளுக்கு மனதில் மகிழ்ச்சி என்பது இல்லையா என்ன மனிஷி இவள்! அவள் மற்றவர்கள் போலச் சொல்ல வேண்டாம்! ‘பிள்ளைவாள்” என்று அவர் அழைக்கப்படுவதில் தனக்குள்ள பெருமையைக் காட்டிக் கொள்வ தற்குப் பகிடியாகவேணும் ஒருநாள் பார்த்து அப்படி அழைத்திருப்பாளா? இல்லையே! இப்போது மாத்திரம் எங்கே அவள் அழைக்கப் போகின்றாள்! அந்தக் குரல் அவள் குரலாக. இப்படி ஒன்று மில்லை. அரும்பும் அவர் புன்னகையில் உதடுகள் கூம்புகின்றன. அவருக்கு இது ஒன்றும் புதிய அநுபவமல்ல. எப்பொழுதும் யாரோ அவரைப் “பிள்ளைவாள்” என்று அழைப்பது போன்று ஒரு குரல் இடையிடையே அவருக்குள் ஒலித்துக்
9本,

5ᏙᎩ .
குடிபெயர்ந்து வந்த பின்னர் இப்படி ஒரு இரவை னவேதனையும் மனிதனுக்கு ஒன்று போலத்தான். பாதையில் கரைந்து கிறங்க வைக்கின்றன. மூன்று கள் மிதந்து திளைத்து விட்டார். இன்னும் இன்னும் அது ஆனந்த வெறி. இதுகாலவரை தான் கண்ட பேரானந்த வெறி. கொள்கையில் வெற்றி கண்ட
ள்ளை அல்லர். முன்னொரு காலத்தில் மதிப்புக் குறைவாக 'முருகு' என்று அழைக்கப் பெற்ற மனிதனும ல லர். இன் று, இப் போது * பிள்ளைவாள்' என்றுதான் அவரை எல்லோரும் கனம் பண்ணி அழைக்கின்றார்கள்.
இந்தவேளையிலும் கெளரவமான அந்த அழைப்பு அவர் செவிகளில் வந்து விழுந்து தேனாக இனிக்கிறது. அந்த இனிய நாதம் மீண்டும் எழுகின்றதா எனச் செவிகளை மிகக் கூர்ந்து உன்னிக்கின்றார். மனைவி சரசுவதி அடுத்துள்ள கட்டிலில் படுத்துக் கிடந்து குறட்டை விடுகின்றாள். அவள் படுத்தால் |ளுக்கு இம்மை மறுமை தெரியாத உறக்கம். ஒரு
கொண்டிருக்கின்றது.
வீதியில் இறங்கி அவர் சென்று கொண்டி ருக்கையில், வீதியோரத்தில் பேசிக்கொண்டு நின்ற வர்கள் ‘இவர்தான் பிள்ளைவாள்” என மதிப் புடன் சுட்டிக்காட்டி தமக்குள் பேசிக்கொள்வதாக அவருக்குத் தோன்றும். அவரைக் கடந்து போய்க் கொண்டிருப்பவர்கள், பிள்ளைவாள் போகின்றார் எனப் பெருமையாகச் சொல் 6லிக் கொண்டு செல்வதாக அவர் உணருவார். பொதுக்கூட்டம்

Page 86
ஒன்றில் பார்வையாளனாகப் போய் எங்காவது அவர் சென்று சபையில் அமர்ந்திருந்தால் மேடை யில் நிற்கும் பேச்சாளன் ‘* பிள்ளைவாள் அவர்களே!” என கெளரவமாக விளிப்பதாகச் செவி கள் சொல்லும்,
ஆரம்பகாலத்தில் இண்டொரு நண்பர்கள் முருகுப் பிள்ளை என்ற பெயரைச் சுருக்கி, பகிடியாகப் `பிள்ளைவாள்’ என அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் இப்பொழுது கெளர வமாக அவரைக் குறிப்பிட்டு அழைக்கும் பெயராக அது உயர்ந்து நிற்கிறது.
* பிள்ளைவாள்’ என்னும் பெயரால் இன்று அவர் கனவானாகக் கனம் பண்ணப்படுகின்றார்.
காலிமுகக் கடற்கரையில் மாலை வேளை களில் அவர் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் சாமானியமானவர்கள் அல்லர். ஒய்வு பெற்ற நீதிபதி, ஒய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர், ஒய்வு பெற்ற கணக்காளர், இத்தியாதிக் கன வான்கள்தான். அவர்கள் மத்தியில் ஓய்வு பெற்ற எழுதுவினைஞரான பிள்ளைவாளும் இருப்பார். அவர்கள் எல்லோரும் தாங்கள் வகித்து வந்த பதவியினால்தான் கனவான்கள் ஆனார்கள். அவர் தான் கொண்ட கொள்கையினால், இலட்சியத்தி னால் மதிக்கப்படுகின்றவர் என்பதில் அசையாத நம்பிக்கை அவருக்கு உண்டு. அந்தக் கனவான் களும் தாங்கள் அவருக்குக் கொடுக்கும் கெளரவம் கொஞ்சமும் குறையாமல் ‘பிள்ளைவாள்” என்று அழைப்பார்கள். அவர் பேசும் ஆங்கிலத்தில் அவர் களுக்கு அலாதியான பிரியம். கேரளத்து அச்சு தம் பிள்ளையிடம் பிள்ளையிடம் கற்றுக் கொண்ட ஆங்கிலமல்லவா அது
இவையெல்லாம் எங்கே சரசுவதிக்குத் தெரியப் போகிறது!
மகன் டொக்டரினாலதான் அவருக்கு இந்தப் பெருமை எல்லாம் வந்தது என்று ஒரு சமயம் மனைவி சரசுவதி சொன்னாள். அப்போது அவருக் குப் பற்றிக்கொண்டு வந்ததே சினம்! தன்னை மறந்து சன்னதங் கொண்டார்.
தன்னை அவள் அவமதித்து விட்டதாக அவர் உணர்ந்தார். அறிவீனத்துடன் அவள் பேசுவதாக அவளைப் போட்டுச் சாடினார். வடமராட்சியில் அவர் வாழ்ந்த கிராமத்தை அண்டியுள்ள பகுதி களில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரை விளங்கிக் கொண்டுள்ள அளவுக்கு, அவரோடு
85
 

சேர்ந்து ஒன்றாக வாழும் மனைவிக்கு அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் 'பிள்ளைவாள் என்றுகூட ஒருநாளோனும், ஒருவர் தானும் அழைத்ததில்லை. எப்பொழுதும் அவர் களுக்கு அவர் ‘ஐயா’தான். “முருகுப்பிள்ளை” ஐயாதான். அவர்களது சனசமூக நிலையக் கூட்டங்கள், கோயில் விழாக்கள் எதுவாக இருந்தாலும் பிள்ளை அவர்கள் இல்லாமல் அவை நடைபெறுவதில்லை. அந்தக் கூட்டங்கள், விழாக் களில் பிள்ளை அவர்களே பிரதான பேச்சாளனாக விளங்குவார். ‘கல்வி வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்பன சாதிக் கொடுமைகளை முற்றாகத் தீர்த்துவிட மாட்டாது. கலப்புத் திருமணம் ஒன்றே சாதிவேறுபாட்டை ஒழித்துக் கட்டுவதற் குள்ள ஒரே மார்க்கம்” எனப் பிள்ளை அவர்கள் முழங்குவார். அந்த மக்கள் மத்தியில் ஒரே கை தட்டலும் வரவேற்புமாக இருக்கும்.
கொழும்பு வந்த பிறகும் பிள்ளை அவர்களுக் குப் பேச்சு மேடைகள் கிடைப்பதில் குறைவில்லை. ஆனால், பிள்ளை அவர்கள் முன்போல சாதி விஷயத்துக்கு அழுத்தம் கொடுத்துப் பேசுவ தில்லை. ஆயினும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல் லாம் சாடைமாடையாகச் சொல்லிக் கொண்டு தான் வருகின்றார்.
அவரது கொள்கைப் பிடிப்பும், அறிவாற்றலும் அவரைப் 'பிள்ளைவாள்' என எல்லோரும் கணம் பண்ணும்படி அவரை உயர்த்தி வைத்திருக்கின்றன.
மனைவி சரசுவதிக்கு இவைகளை விளங்கிக் கொள்ளும் அறிவுத் திறன் இல்லை என்பது பிள்ளை அவர்களின் முடிவு.
மகன் கந்தவேல் இந்த நாட்டில் இருக்கக் கூடிய தலை சிறந்த இருதயநோய் நிபுணர்களுள் ஒருவன். கொழும்புப் பல்கலைக்கழகம், கொழும்பு அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டி ருக்கின்றான். இவைகளோடு தனியார் வைத்திய சாலைகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கிறான். மகனுக்கு வயது அதிகமில்லை. முப்பத்தைந்துதான். இளம் வயதில் மிக உயர்ந்த நிலைக்கு மகன் வந்துவிட்டதில் பிள்ளை அவர்களுக்கும் மகிழ்ச்சி தான். தனது மூளைதான் மகன் கந்தவேலிடமும் இருப்பதாகப் பிள்ளை அவர்கள் மனைவி சரசுவதி யிடம் இடையிடையே சொல்லிக் கொள்ளுவார். மூத்தமகள் சாதாரண கல்வித் தராதரப் பத்திர வகுப்புத் தாண்டவில்லை. அவளுடைய தலையில் மனைவியின் மூளை இருப்பதாக மனைவி சரசு
சில்லிகை 39வது ஆண்ருமலர் ஜனவரி - 20Oபு

Page 87
வதியைக் கிண்டல் பண்ணுவார். ஒரு தபாற் காரனைப் பிடித்து மூத்த மகளுக்கு ஊரில் திருமணம் செய்து வைத்துவிட்டார். பிள்ளை அவர்கள் தபாற்காரனுக்கு மேல் ஒரு மணமகனை மகளுக்குத் தேடிக் கொடுக்க அவருக்கு இயலாது போயிற்று. அது அவருடைய சக்திக்கு மேற்பட்ட ஒரு காரியம். தபாற்காரனுக்கும் ஐந்து இலட்சம் சீதனம் கொடுக்க வேண்டி நேர்ந்தது. மகளின் திருமணத்துக்குப் பட்ட கடன், மகனின் படிப்புச் செலவு எல்லாம் பிள்ளை அவர்களுக்கு இப்போது முள்ள கடன்கள்தான். அவைகள் யாவும் இனிமேல் தீர்ந்து போய் விடும். மகனுக்குக் கொழுத்த சீதனம் வாங்க வேண்டுமென மனைவியிடம் பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்.
கொழும்பு வந்து தன்னோடு தங்கி இருக்கு மாறு தாயைத்தான் மகன் அழைத்தான். பிள்ளை அவர்க்ளை மகளோடு ஊரில் தங்கி இருக்கவிட்டு, தான் மாத்திரம் கொழும்பு வருவதற்கு தாய் மறுத்து விட்டாள். அவன் எப்பொழுதும் தாயுடன் நெருக்கந் தான். தன்மீது தகப்பனுக்குரிய மரியாதை. ஒரு விலகல் என்று பிள்ளை அவர்கள் நினைத்து மனச் சமாதானம் செய்து கொள்வார். ஆயினும் தன்னை ஒதுக் கிவிட் டு தாயை மாத்திரம் அவனி கொழும்புக்கு அழைத்ததை நினைத்து பிள்ளை அவர்கள் உள்ளுர கொதித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கொதிப்பை அவர் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. தன்னையும் மனைவியையும் மகன்தான் கொழும்புக்கு விரும்பி அழைத்தான் என்று பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருக் கின்றார்.
கொழும்பு வந்து இரண்டாண்டு காலத்துக்குள் பிள்ளை அவர்கள் மிகப் பிரபலமாகிவிட்டார். ‘பிள்ளைவாள்’ என எல்லோராலும் பெரிதும் மதிக் கப்படுகின்றார். இந்த மதிப்பு மரியாதைகளுக்கு மேலாக, இன்று கதிர்காமத்தம்பி வீடு தேடிவந்து கேட்டுப் போனதில் பிள்ளை அவர்கள் மகிழ்ந்து உறைந்து போனார்.
கதிர்காமத்தம்பியைக் கண்டு இப்படியொரு திவ்வியமான செய்தியை அவன் சுமந்து வந்திருப் பான் என்று பிள்ளை அவர்கள் அணுவளவேனும் எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டதும் தனது இதயத்தில் அவன் ஆழமாகக் குத்தி ஆறாத புண்ணை உண்டாக்கினான் என்பது அவர் நினைவுக்கு வந்தது. அந்த வடு இன்றும் அவரை உறுத்திக் கொண்டிருக்கின்றது. நெஞ்சு வலிக்
கிறது.
86 . . . . .

முருகுப்பிள்ளையும் கதிர்காமத்தம்பியும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். அந்தக் கால்த்தில் பிள்ளை அவர்களை 'முருகு' என்று தான் பள்ளிக்கூடத்தில் அனைவரும் அழைப்பார் கள். சின்னையா வாத்தியார்தான் அவர்களுடைய வகுப்பு வாத்தியார். அவர் வகுப்பறையில் வைத்து ‘என்னடா உனக்கெல்லாம் ஒரு பிள்ளை. சொல் லடா முருகு' என்று சொன்னார். அன்று முதல் பிள்ளை அவர்கள் 'முருகு ஆகிப்போனார்.
ஒரு தினம் மற்றைய மாணவர்களுடன் விளை யாட்டு மைதானத்தில் முருகு நின்று கொண்டி ருந்தான். அப்பொழுது இந்தக் கதிர்காமத்தம்பி ஓடி வந்து முருகு தோளில் பாய்ந்தேறி உட்கார்ந்து கொண்டான். ‘இறங்கிறங்கு” என்று முருகு சத்த மிட்டபோதும், அவன் முருகுவின் தலைமயிரை இறுகப் பற்றிப் பிடித்த வண்ணம் “செத்த பிறகோ, உயிரோடையா பாரம் அதிகம்.? சொல்லு பாப்பம்” என்று கிண்டலாகக் கேட்டான். அங்கு கூடி நின்ற மாணவர்களுள் ஒருவன், 'டேய் அவனுக்குச் செத்த பிறகுதானே தூக்கிப் பழக்கம்” என்றான். சுற்றி நின்ற மாணவர்கள் எல்லோரும் முருகுவைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தார்கள். திரும்ப, கதிர் காமத்தம்பி கேட்டான்: ‘நான் உயிரோடைதானே இருக்கிறன். இப்ப ஒப்பிட்டுச் சொல்லு பாப்பம்”. மீண்டும் உடன் மாணவர்களின் ஆரவாரித்த கேலிச் சிரிப்பு. முருகு மூக்குச் சீறி, கண்ணிர் சிந்தி அழுத வண்ணம் சின்னையா வாத்தியாரைத் தேடிச் சென்றான்.
நெற்றி, உடலெங்கும் திரிபுண்டரந் தரித்து சால்வையினால் உடலை மூடிக் கொண்டிருந்த சின்னையா வாத்தியார், அழுதவண்ணம் வந்து, முருகு செய்த முறைபாட்டைக் கவனமாகக் கேட்டு விட்டு பலமாயச் சாத்தார். பிறகு முருகுவைப் பார்த்துச் சொன்னார்: “இதற்கேன் நீ அழுகின்றாய்! அவன் சொன்னது உண்மைதானே!”
அந்தக் கதிர்காமத்தம்பி இன்று ‘பிள்ளை வாள்’ என மரியாதையாக அழைத்த வண்ணம் வீட்டுக்குள்ளே வந்து பவ்வியமாக அவர் எதிரில் அமர்ந்து கொண்டான்.
. இது எல்லாம் வெறும் நடிப்பு என்றுதான் பிள்ளை அவர்களுக்கு முதலில் தோன்றுகிறது. தேவையான தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொண்டு போவதற்கு இந்தக் காலத்தில், யார் யாரோ எப்படி எல்லாம் நடிக்கிறார்கள். அந்த
es 396Jós ébaroi Ub UD6Assi galvawsaf - 2oog

Page 88
வகையான ஒரு நடிப்புத்தான் என்று பிள்ளை அவர் கள் எண்ணிக் கொண்டார்கள். பிள்ளை அவர் களை வந்து பிடித்து மகனிடம் காரியம் பார்க்க வந்திருக்கிறான் என்றே பிள்ளை அவர்கள் ஊகித்தார்கள்.
பிள்ளை அவர்கள் வழமையாக வாயைச் சும்மா வைத்துக் கொண்டிருக்க மாட்டார். இன்று அதற்கு மாறாக வந்திருக்கின்றவர் சொல்லட்டும் என்று மெளனமாக அவன் முகம் பார்த்திருக்கின்றார் பிள்ளை அவர்கள். அப்பொழுது கதிர்காமத்தம்பி வாய் திறந்தான்:
‘பிள்ளைவாள் நான் ஒரு நல்ல காரியமாகத் தான் வந்திருக்கிறேன். நீங்கள் மறுக்கக் கூடாது.”
‘சொல்லுங்கோ’
'உங்கடை மகனுக்கு ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்கிறேன்’
‘நானும் அந்த எண்ணத்தோடைதான் இருக் கிறேன். எல்லாம் தோதா வந்தால் செய்யலாம்”
‘சீதனமென்றால்.” அவன் மெல்ல இழுக் கிறான்.
“ஒன்றுக்கு மேலே. ஒரு கோடி கேட்டாய்ச்சு”
`பிள்ளைவாள் உங்களுடைய மகனுக்கு இதைவிடக் கூடவும் வாங்கலாம். அது எங்களுக்குத் தெரியும். என்னை இப்ப அனுப்பி இருக்கிற பகுதி யிட்டைச் சீதனம் என்று பெரிதாக எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பெரிய இடம்.”
`ஓ! அப்படியே! சொல்லுங்கோ எந்தப் பகுதி!”
`மணியக்காரன்ரை பேத்தியின்ரை மகள். எனக்கும் சொந்தம் என்றது உங்களுக்குத் தெரியுந தானே. அதனாலேதான் என்னைப் பிடிச்சு அனுப்பி இருக்கினம்.”
பிள்ளை அவர்களுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. பேச்சு மூச்செல்லாம் மெல்ல அடங்கிப் போயிற்று. தான் கனவு கண்டு கொண்டு இருப்பதற்கான ஒர் உணர்வு அவருக்குள் மேலெழு கிறது. தன்னைத்தானே ஒருதடவை கிள்ளிப்பார்க்க வேண்டும் போல அவருக்குத் தோன்றுகிறது.
பிள்ளை அவர்களின் தீடீர் மெளனம் சம்மதம் என்று அவன் கருதவில்லை. பிள்ளை அவர்களிடம் ஒரு கலக்கம் இருப்பதாக அவன் உணருகிறான்.
87

பின்னை. இருக்காதா! அந்தத் தயக்கத்தை முதலில் போக்க வேண்டும் என்று தீர்மாணித்துக் கொண்டு பிள்ளை அவர்களைப் பார்த்து பணிவாகச் சொல்லு கிறான்.
‘நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். காலம் மாறிப் போச்சு, படிநிலையிலே கிட்டவுள்ள பகுதிகள் இந்தக் காலத்திலே ஒன்று சேருவதிலை ஒரு தவறுமில்லை. நாங்கள் பூரண மன விருப்பத் தோடுதான் வந்திருக்கிறோம். நீங்கள் எதற்கும் மகனோடு யோசித்து நல்ல மறுமொழி சொல்ல வேண்டும். நான் ஒரு வாரத்துக்குப் பிறகு திரும்ப வருவேன்’
அவன் சொல்லிக் கொண்டு எழுந்து விட்டான். பிள்ளை அவர்களுக்கு வாய் திறக்க இயலவில்லை. மெளனமாக, அவன் பின்னே சென்று அவனை வழியனுப்பி விட்டுத் திரும்பிய பிறகுதான் பிள்ளை அவர்கள் திகைப்பில் இருந்து விடுபடுகிறார். உடனே உள்ளே பார்த்து, ‘சரசு. சரசு.” என்று அழைத்துக் கொண்டு விரைந்தோடுகிறார்.
பிள்ளை அவர்கள் மனம் குழைந்து மனைவியை அழைக்கும் போதெல்லாம் ‘சரசு. சரசு.” என்று அழைப்பது அவர் வழக்கம். இன்றும் ஆனந்தத்தின் எல்லையில் தன்னை மறந்து, துள்ளிக் குதித்து, வளைந்து குழைந்து, வார்த்தைக்கு வார்த்தை சரசு போட்டு மனைவி யிடம் நெருங்கி வந்து தகவல் சொன்னார்.
அந்தச் செய்தியை மகனிடம் சொல்லி, அவனுடைய ஒப்புதலைப் பெற்றுத் தன்னிடம் தெரிவிக்குமாறு பிள்ளை அவர்கள் மனைவியைக் கேட்டுக் கொள்ளுகிறார்.
அந்தப் பிள்ளை அவர்களுக்கு இப்பொழுது எப்படி உறக்கம் வரும்! ஆனால் அவள். மனைவி சரசுவதி மனதில் ஒரு சலனமும் இல்லாமல் ஆழ்ந்து உறங்குகின்றாளே! பாவம் அவள்! அவளுக்கென்று என்ன இலட்சியம் இருந்தது என்ன கொள்கை இருந்தது!
சில தினங்கள் ஓயாது சிகரெற் புகையில் திளைத்து மிதந்து கொண்டிருக்கிறார் பிள்ளை அவர்கள்.
மகன் இரவு வீடு வந்து காலையில் வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றதும் மனைவியிடம் ஒடிச் சென்று விசாரிக்கிறார். ‘தம்பி என்ன சொன்னது? தம்ழி என்ன சொன்னது?”
ல்ேலிகை 396Jð 4haob UD6LSai gavauso - 2oo

Page 89
அவள் சரியான பதில் அவருக்கு இதுவரை சொல்லவில்லை. அவர் ஆவலுடன் கேட்ட போதெல்லாம், “தம்பி ஒண்டும் சொல்லயில்லை. தம்பி ஒண்டும் சொல்லயில்லை.” என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
ஒருநாள் அவர் நச்சரிப்புத் தாங்காமல் பொறுமையிழந்து அவரிடம் அவள் கேட்டாள்;
“சீதனம் எவ்வளவு குடுக்கினமாம்”
‘சீதனம் என்ன. சீதனம். அவர் தட்டிக் கழித்து அலட்சியமாகப் பதில் சொல்கிறார்.
"வீடுவாசல் குடுக்கினமோ?”
`தம்பி தன்ரை வருமானாத்திலே கொழும் பிலே ஒருவீடு கட்டமாட்டானே! ஆரும் கொடுக்கிற வீடு அவனுக்கு என்னத்துக்கு அதுசரி, உதெல் லாம் தம்பி கேட்கச் சொன்னவனே!”
‘’ இல்லை. இல்லை. நான் சும்மா கேட்டனான்’
‘'நீ ஒரு அமசடக்கி. உன்னட்டைச் சொல்லி ஒன்றும் நடக்காது. தம்பி வரட்டும் நான் கேட் கிறேன்” பிள்ளை அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
இரவு ஏழு மணியளவில் மகன் கந்தவேல் வீடு வந்து சேருகின்றான்.
அரைமணி நேரம் கழித்து அவன் தனது
அறைக்குள் நுழைந்து எதனையோ படித்துக் கொண்டிருக்கின்றான்.
அவன் அறைவாசலில் போய் நின்று பிள்ளை அவர்கள் அடித்தொண்டையால் மெல்ல ஒருதடவை செருமுகின்றார்.
அவன் படிப்பதை நிறுத்திவிட்டு தலை நிமிர்ந்து அவரை நோக்குகின்றான்.
`தம்பி, உன்னோடு முக்கியமான ஒருவிஷயம் பேசவேண்டி இருக்கு' வாஞ்சையுடன் தந்தை என்ற மிடுக்கும் இழையோடச் சொல்லிக் கொண்டு ஹோலுக்குத் திரும்புகின்றார்.
அவரைத் தொடர்ந்து அவனும் அங்கு வந்து அமர்ந்து கொள்ளுகின்றான். அந்தச் சமயம் தாய் சரசுவதியும் வந்து அவன் அருகே அமருகின்றாள்.
‘தம்பி, அம்மா உனக்கு எல்லாம் சொல்லி இருப்பா!’
99.
 
 

`ஒமோம் சொன்னவ
S’இப்படி ஒரு இடம் எங்களுக்கு ஒருகாலமும் வந்து வாய்க்காது”
அவன் வாய் திறக்காது மெல்லச் சிரிக் கின்றான்.
அந்தச் சிரிப்பின் பொருள் என்ன என்று உண்மையில் பிள்ளை அவர்கள் விளங்கிக் கொள்ள இயலவில்லை. பிள்ளை அவர்கள் தனது கொள்கையின் வெற்றியை இந்தச் சமயம் பெருமை யோடு மகனுக்கு உணர்த்திவிட வேண்டும் என்று மனம் கொள்ளுகிறார்.
‘தம்பி சாதி ஒழிய வேண்டும் என்று பிரசாரம் செய்து வந்தவன் நான். கலப்புத் திருமணங்களின் மூலந்தான் சாதி வேறுபாடு இல்லாது போகும் என்பது என் கொள்கை” KK
‘நானும் அதை நம்புகிறன்’
‘சபாஷ். சபாஷ். நீ என்னுடைய பிள்ளை. இனி என்ன. உன்னை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிற மணியகாரன் பகுதிக்கு. சம்மதம் என்று சொல்லி விடுகிறேன்.”
’அது வேண்டாம்” அவன் அமைதியாகச் சொல்கிறான்.
‘ஏன்?” பிள்ளை அவர்கள் உடல் பதற, அதி காரமாக முகம் சிவந்து கேட்கிறார்.
‘சாதியை ஒழிக்க வேண்டுமெண்டு சொல்லிக் கொண்டு கலப்புத் திருமணம் செய்தவர்கள் எல்லாரும் தனக்கு மேலே உள்ள சாதியிலேதான் பெண் எடுத்திாக்கிmார்கள். அது பெரிய போலித் தனம். ஏமாற்று. எனக்கு எங்களிலும் கீழேயுள்ன சாதியிலே. நல்ல குடும்பத்திலே. படித்த ஒரு பெண்ணாகப் பார்த்து திருமணத்துக்கு ஒழுங்கு செய்யுங்கோ! கலப்புத் திருமணத்தின் மூலம் சாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்குச் சிறிய ஒரு பங்களிப்பைச் செய்தவனாக நான் இருப்பேன்’ அவன் ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாகச் சொல்லிக் கொண்டு, அங்கிருந்து எழுந்து சென்று
தனது அறைக்குள் நுழைகின்றான்.
அவனைத் தொடர்ந்து அவன் தாயும் அங்கிருந்து எழுந்து போகிறாள். பிள்ளைவாள் அவர்கள் முகம் வாடி, தலை குனிந்து, தரையைப் பார்த்த வண்ணமீ அங்கே அமர்ந்திருக்கின்றார்.
ins 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 90
கிழ்த்து மலர்வோம் நம் சோதர உறவுடன்’ 29, 30 ஆகிய இரு தினங்கள் கொழும்பு புத் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்க மத்தியிலும் நடந்து முடிந்திருக்கின்றனது.
இனவாதிகளின் வெறியாட்டங்களினாலும் பல் கொடூரத்தினாலும் பிளவுபட்டிருந்த சிங்கள தமிழ் மீளக்கட்டியெழுப்பும் நோக்குடனும் முன்னெடுக்கப்பட அளிக்கும் பொருட்டும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட இந்நாட்டிலே வாழுகின்ற சிங்கள, தமிழ் பேசும் க பொதுமக்கள் என அனைவருக்குமான சகோதர
விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பு விடுக்கப்பட்ட உடனேயே சிங்க தமது செயற்பாடுகளினால் மீண்டும் இந்த நாட்டிலே தமிழின அழிப்பு நடவடிக்கைகட்கு திட்டந் தீட்டிச் திவயின’ போன்ற இனவாதப் பத்திரிகைகளும் தங்
திவயின’ பத்திரிகை 27.28ஆம் திகதிகளிலேே செய்திகளை வெளியிட்டன. குறிப்பாக 28ஆம் திகதி சிங்கள தமிழ் கலைஞர்களோடு புலி செயற்பாட்டுக்
பிரபாகரனுடைய ஆஸ்தான கவிஞர் ரட்னதுரை பயங்கரவாதிகளால் தயாரிக்கப்பட்ட முகங்கள் திரை தயார்’ என்பன போன்ற பலவிதமான தலைப்புக்க
வெளியிட்டன.
ஜனாதிபதியையும், முன்னாள் வெளிவிவகார செய்ய வேண்டுமென கவிதை பாடியவர் இந்த ர பிரதான அமைப்பாளர் கலாநிதி கே.சிதம்பரநாதன் வாளர்கள் என்றும், புலிகளின் சிங்களப் பத்திரிகையா மற்றும் ஈழநாதம் ஆசிரிய குழுவைச் சேர்ந்த நிலாந்த6 செய்திகளை வெளியிட்டிருந்தன.
ETSundisflair figūL
6.
السكسح
99
 

என்ற தொனிப் பொருளோடு கடந்த ஒக்டோபர் யெ நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஹிரு' ள தமிழ்க் கூடல் இனவாதிகளின் எதிர்ப்புகளுக்கு
லாண்டுகளாக இடம்பெற்று வந்த யுத்தத்தின்
முஸ்லிம் இனங்களுக்கிடையே நல்லுறவை டு வரும் சமாதான முயற்சிகளுக்கு உத்வேகம் டிருந்தது. இந்நிகழ்விலே கலந்து சிறப்பிக்குமாறு லைஞர்கள், புத்திஜீவிகள், ஆக்கக்கர்த்தாக்கள், த்துடனான அழைப்பினை ஹிறு குழுவினர்
ள மக்கள் மத்தியிலே இனவெறியைத் தூண்டி, புத்தத்தினை ஏற்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய செயற்படுகின்ற 'சிஹல உறுமய கட்சி மற்றும் களது வகுப்புவாதப் பிரசாரத்தை ஆரம்பித்தன.
ய இந்நிகழ்வுக்கு 'பொங்கு தமிழ்' சாயமிட்டு பத்திரிகையில் பிரபாகரனின் பிறந்தநாள் பரிசு.
குழுவினரும் வருகின்றார்கள்.
உரையாடல் மற்றும் பாடல்கள் எழுதி, புலிப் ப்படம் கொழும்பில் திரையிடுவதற்கு அனைத்தும் ளில் இந்நிகழ்வினைச் சித்தரித்து செய்திகளை
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரையும் கொலை ாட்னதுரை எனவும், பொங்கு தமிழ் நிகழ்வின் மற்றும் அனைவருமே புலிகளின் தீவிர ஆதர ன 'தேதுன்ன’ பத்திரிகையின் ஆசிரிய குழுவினர், ன் ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாகவும்
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ாக நடந்து முடிந்த மிழ்கலைக்கூடல்
- வல்வையூரான்
இந்த இனவெறியர்களுக்குத் துணை போகின்ற விதத்திலே வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் 'பொங்கு தமிழ் கொழும்பில் வேண்டாம் என்றும், அதனை நடாத்துவதற்கு அரசு இடம் அளிக்கக் கூடாதென்றும் அறிக்கை

Page 91
யினை வெளியிட்டிருந்தார்.
29ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து கொழும்பு புதிய நகர மண்டப வளவில், நீண்ட தொரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒன்று கூடும் வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சிப் பிரவாகத்தோடு சிங்கள - தமிழ் - முஸ்லிம் கலைஞர்கள், இலக்கியவாதிகள், கல்வி மான்கள் எனப் பலரும் ஆங் காங்கே நின்ற வண்ணம் உரை யாடிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஹிறு குழுவினர் எதிர்ப் புக்கள் எந்த ரூபத்தில் வந் தாலும் அவற்றிற்கு முகங்கொடுத்து அவ்விழா வினைச் சிறப்புற நடாத்தி முடித்திட வேண்டும் என்ற துடிப்போடும் முனைப் போடும் செயற்பட்டுக் கொண்டிருந் தார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், தொழிலாள வர்க்கத்தினர், வெகுஜன அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மனித நேயங் கொண்டவர்கள் என பல தரப்பினரும் வருகை தந்திருந்தார்கள். வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து பெருமளவில் தாய்க்குலத்த வர்களும் வருகை தந்து நிகழ்வில் கலந்து கொண்டமை ஓர் சிறப்பம்சமாகும்.
ஹிறு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் லால் பெர்ணாண்டோ அவர்கள் சிங் களத்திலும் தமிழிலும் தானே அறிவிப்புக்களைச் செய்து நிகழ்வின் சிறப்புக்கு வழி சமைத்தார்.
கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம், யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் திருமதி நாச்சியார் செல்வவிநாயகம், பேராசிரியர் சுசரித்த கம்லத், திரு. தர்மசிறி பண்டாரநாயக்க, பெண் எழுத்தாளர் திருமதி திலினா வீரசிங்ஹா ஆகியோரின் தீபம் ஏற்றும் நிகழ்வோடு விழா ஆரம்பமாகியது.
“இன்று சூரியன் பிரகாசிக்கின்ற ஒரு தின மாகும். பத்து ஆண்டுகட்கு முன்பாக ஹிறு குழு வினர் வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு இப்படி ஒரு சிறந்த அறுவடையைச் செய்ய எமக்கு வழி ஏற்பட்டதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
90
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8. 努 * x x
(திருமதி. கமலினி செல்வராஜன் t
உரையாற்றுகின்றார்.)
அன்று கனவாக இருந்தததை இன்று நாம் நன வாக்கிக் கொண்டிருக்கின்றோம். கூட்டு முயற்சி, சமாதானம் என்பவை தொடர்பாக ஒரு எதிர்மறை யான கண்ணோட்டம் இருக்கின்ற சமூகத்திலே அதனை நேர்மறையாகச் செயற்படுத்த முடியும் என்ற கருத்தினை வலியுத்தும் முகமாகத்தான் இந்த ஒன்றுகூடல் இடம் பெறுகின்றது. சிங்கள சமூகத்திலும் மனித நேயம் கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அந்த உண்மையான மனிதன் இன்று உருவாக்கப்படப் போகின்றான் என்ற வகையிலே நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்தப் புதிய மனிதனை இன்று நாம் உருவாக்கப் போகின்றோம். இந்தச் சிங்கள - தமிழ் ஒன்று கூடலை குழப்புவதற்கு பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டாலும் கூட அந்த ஐக்கியம் என்கின்ற பதாகையை முன்னெடுத்துச் செல்வதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதை இந்த மண்டபத்திலே காண முடிகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தினை நாம் நெகிழ விடாமல் அதனை அடியொற்றிக் கொண்டு முன்னேறுவோம் என ஹிறு சார்பில் வரவேற் புரை நிகழ்த்திய திரு.ரோஹித பாஷண குறிப் பிட்டார்.
ஆதனை அடுத்து சிங்கள எழுத்தாளர் திருமதி திலினா வீரசிங்ஹ அவர்களின் தலைமையில் புனைகதைகளைப் பற்றிய ஆய்வரங்கு ஆரம்பமா கியது. அவரது தலைமையுரையினைத் தொடர்ந்து பேராசிரியர் சுச்தரித்த கமலத் அவர்கள் தனது
line 39aj Ahaoi Ub UD6LSái gavauso - 2oo

Page 92
பிரதான உரையினை ஆரம்பித்தார். அவர் தனது உரையிலே யாழ். பல்கலைக்கழகத்திலே தான் கடமையாற்றிய அந்தக்காலகட்டத்தினை நினைவு படுத்தியதோடு அன்றிலிருந்து இன்றுவரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களுக்காக தொடர்ந்து தான் குரல் கொடுத்து வருவதை நினைவுபடுத்தினார்.
1983 இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது தமிழ்ச் சகோதரர் களைப் பாதுகாப்போம்' என்ற ஒரு பிரசுரத்தினை நாடு பூராவும் தாங்கள் வினியோகித்ததையும் குறிப்பிட்டதோடு, 1964இல் பூரீலங்கா சுதந்திரக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்ததன் மூலம் செய்த காட்டிக் கொடுப்பிற்குப் பின்பு தெற்கிலே எந்த ஒரு சிங்களக் கட்சியும் சிங்கள-தமிழ் ஒற்றுமை யின் பொருட்டுச் செயற்படவில்லை. அவை சிங்கள மக்களுக்காக மாத்திரமே குரல் கொடுத்து வந்துள்ளன. அன்று சமசமாஜக் கட்சி செய்த காட்டிக் கொடுப்பையே இன்று ஜே.வி.பி செய்து வருகின்றது. ஜே.வி.பி இன்று யுத்தம் வேண்டும், தமிழ் மக்களின் இரத்தம் தேவை என்ற நிலைகளில் இருந்துதான் அவர்களது போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றார்கள்” எனவும் குறிப்பிட்டார்.
"கலைஞர்களின் முக்கியமான ஒரு குறிக் கோள் நாங்கள் வாழுகின்ற சமூகத்தின் யதார்த்த நிலைமைகளை ஒரு கலைத்துவத்துடன் ஒரு ரசனையுடன் வெளிப்படுத்துவது அதை எனது இறுதி மூச்சு உள்ளவரை - தமிழ் இனத்தவர் களுக்கு எதிராக எடுக்கப்படும் சகல அடக்குமுறை ஒடுக் குமுறைகளுக்கு எதிராகவும் எனது அனைத்து ஆக்கங்களையும் பயன்படுத்திச் செயற் படுத்துவேன் என்பதனை இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்’ என அவர்கள் குறிப்பிட்ட போது சபையில் கரவொலி நீண்டநேரம் ஒலித்தது.
பேராசிரியர் அவர்களது உரையினைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் சார்பில் திரு. செ.யோகநாதன் தன்து பிரதான உரையினை ஆரம்பித்தார்.
"பத்தாண்டு காலத்திற்குள் இத்தகையதொரு அறுவடையைச் செய்த ஹிறு இயக்கத்த வர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுடை யவர்களாக இருப்போம். தமிழ் மக்களினுடைய சமத்துவத்தை மதித்து அவர்களது வாழ்க்கை யினுடைய இன்னல்களை தாங்கள் உணர்கின்
91

றோம் என்ற கூற்றினை இங்கே வெளிப்படுத் தினார்கள். எத்தனையோ காலமாக இந்த நாட்டிலே சமாதானம் வருவதை விரும்பாமல் யுத் தத்தின் மூலமாக உழைத்துக் கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு இந்த சமாதான முயற்சியைக் கண்டு அஞ்சுகின்ற வேளையில் துணிந்து நின்று இந்த கலைக்கூடலை ஒழுங்கு செய்தமைக்காக நாங்கள் இந்த ஹிறு குழுவினரைப் பாராட்டுகின்றோம். தமிழ் மக்கள் மீது எல்லையின்றிப் பரவிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராக எழுந்த இளைஞர் போராட்டத்தை முளையிலே கிள்ளி எறிவதாகக் கூறி தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தினை அரசுகள் பிரகடனம் செய்தன. தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களது பாரம்பரிய பிரதேசங்கள் இரசாயனக் குண்டு களினால் நாசமாக்கப்பட்டன. கோவில்கள் பள்ளிக் கூடங்கள், நூலகங்கள், வயோதிப மடங்கள் என்ற பேதமின்றிக் குண்டுகள் வீசப்பட்டன. பாலியல் பலாத்காரங்கள் இனத்திற்கெதிரான அச்சுறுத்தல் ஆக்கப்பட்டன. இராணுவம் சகல வன்முறை களையும் தனது கையிலே எடுத்துக் கொண்டது. நிராதரவான தமிழ் மக்களுக்காக இன்று உறுதியும் கட்டுப்பாடும் மிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் அவர்களது தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப் பாளர் ஆகின்றது" 8 (பின்வரிசை ஆசனங்களில் சிறிது சலசலப்பு. அதனைப் பொருட்படுத்தாது பேச்சு தொடர் 後 கின்றது.)
"தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மட்டுமன்றி பொருளாதார, சமூகவியல், கலை பண்பாட்டுத் தளங்களையும் வளர்த்தெடுக்கின்ற பொறுப்பை யும் அவர்கள் ஏற்றனர். விடுதலைப் புலிகளின் களமுனைப் பாடல்களே கலை இலக்கியங்களின் பிறப்பிடங்களாகின’ என திரு.யோகநாதன் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்த சமயம், முன் கூட்டியே திட்டமிட்டு சிங்கள - தமிழ் கலைக்கூடலை குழப்ப வேண்டுமென்ற நோக்கில் வந்து மறைந்திருந்த 'சிஹல உறுமய இனவாதக் கும்பல் உள்ளும் புறமும் தனது வன்முறைகளை ஆரம்பித்தன. கம்புகள், தடிகள், பொல்லுகள், சைக்கிள் செயின்கள் என கைகளில் ஏந்திய வண்ணம் தமிழ் மக்களின் இரத்தம் குடிப்போம் என்ற விதமாகச் செயற்பட்டார்கள்.
தங்களது உயிர்களைக் கொடுத்தாவது கலைஞர்களைக் குறிப்பாக தமிழ் மக்களை காக்க
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 93
வேண்டும் என்ற வீராவேசத்தோடு ஹிறு குழுவி னரும், சிங்களக் கலைஞர்களும் செயற்பட்ட அந்த விதத்தினை எமக்காக உதிரம் சிந்திய அந்த உடன் பிறப்புகளின் தீரத்தினை அந்த நிகழ்விலே கலந்து கொண்ட எந்தத் தமிழ் மகனும், தமிழச்சியும் தம்
வாழ்நாளிலே என்றுமே மறக்க மாட்டார்கள்.
திரு. யோகநாதனின் உரையினைத் தொடர்ந்து புனைகதை இலக்கியம் பற்றி எரிக் இளையப்ப ஆராச்சி, ஜயதிலக கமமெல்லவிர, எஸ்.எல்.எம்.ஹனிபா, இராஜதர்மராசா ஆகியோர் களும் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந் தார்கள்.
புனைகதை அரங்கினைத் தொடர்ந்து சிங்கள உலகின் பாடகரான திரு. ஜயதிலக பண்டாரவின் தலைமையில் இசைப்பாடல் அரங்கு ஆரம்ப மாகியது. அவ்வரங்கின் பிரதான உரையாளர்க ளாக கலாநிதி சுனில் விஜேசிறிவர்த்தன, கலாநிதி என்.சண்முகலிங்கன் ஆகியோரும், கருத்துரைக் குழுவிலே திருவாளர்கள் நவரத்தின கமகே, மகிந்த சமரசேகர, புதுவை அன்பன் மற்றும் திருமதி கமலினி செல்வராஜன் ஆகியோரும்
உரையாற்றினார்கள்.
“என்னுடைய அப்பாவும், என்னாசை அம்மம்மாவும் எத்தனை நாள் வாழ்ந்த தெங்கள் வீடும் வளவும் யார் யாரோ குடியிருக்கும் சுடலையானதோ? தங்கச்சியும் நானும் கெந்தி விளையாடிய முற்றங்கள் மறந்து போனதோ? ஏங்கு சென்ற போதும் எங்கள் ஊரின் சொந்தங்களை மறந்து வாழ்வேயோ?” இன்று வண்ரக்கும் நான் வீட்டைப் பார்க்க முடியவில்லை. இது என்னுடைய கதை மட்டு மல்ல. இன்னமும் எமது வீடுகளுக்குச் செல்ல முடியாத ஆயிரக் கணக்கான நாங்கள் இருக் கின்றோம். எங்களுடைய இந்தப் புதிய பாடல் களை நீங்கள் கேட்க வேண்டும் என்ற முன்னுரை யோடு தனது இசைப் பாடல் பற்றிய உரையினை ஆரம்பித்தார் கலாநிதி என்.சண்முகலிங்கன் அவர்கள்.
அவர் தனது உரையிலே யுத்தத்தின் கொடுமை பற்றியும் தமிழ் மக்களினுடைய தடம் புரண்டு போயிருக்கிற வாழ்க்கை முறைகள் பற்றி யும் எடுத்துக் கூறினார்கள். “வாழ்கின்ற வயதிலே எங்கள் உயிர்களைக் கொடுப்பதற்கு எங்களில்
92

யாராவது துணிந்து முன்வருவோமா? மீண்டும் ஒரு யுத்தம் நேருமெனில் அது மிகப் பயங் கரமானது உண்மையில் ஒரு கொடிய யுத்தத் தினுடைய அத்தனை முகங்களையும் நாம் பார்த் திருக்கின்றோம். எங்கள் உறவுகளைத் தொலைத் திருக்கின்றோம். இந்தப் பாடல்களுக்குள் மட்டும் அவர்களைச் சுமந்து கொண்டிருக்கின்றோம். ஒரு வகையிலையே எமது இசைப் பாடல்கள் எங் களுக்கு எங்களுடைய வாழ்வின் இருப்புக்கு இப்போது அர்த்தம் தருகின்றன. இவை எங் களுக்கு நம்பிக்கையையும் தருகின்றன. நாங்கள் வெறுமனே அழுகின்ற பாடல்களை மட்டும் பாடவில்லை. அழுகையோடு அந்தப் பாடல்களின் சாரமாக துணிவு இருக்கும்” என்றார் அவர்.
"தென்னிலங்கைத் தெருக்களிடையே எங்கள் சோதரிகள் குதறப்பட்டு கிடந்தபோது தனது உத்தரியத்தை கழற்றிக் கொடுத்து அவளின்
மானத்தைக் காத்த சிங்களச் சகோதரிகளின் அந்த
எண்ணங்கள் எனது நினைவுக்கு வருகின்றது. கட்டிய துணியோடும் கண்ணிரோடும் கைக் குழந்தையையும் தவறவிட்டு லங்கா ராணி’
கப்பலில் ஓடிவந்த அந்தக் காலம் நினைவுக்கு வருகின்றது. போன காலங்கள் போகட்டும். இனி வருங்கால - எதிர்கால சுபிட்சத்திற்காக காத்
திருக்கிறோம். இன்றைய சமாதானச் சூழலிலே தென்னிலங்கையில் சமாதானக் குரல்களும் சமாதானத்திற்கு எதிரான குரல்களும் ஒலித்துக் கொண்டு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். அந்த முரண்பாடுகள் இவ்வளவு தூரம் உச்சநிலை அடைந்திருக்குமென்று நாங்கள் நினைத்திருக்க வில்லை. நாங்கள் இங்கு வந்தபோது மிகுந்த உற்சாகத் தோடு ‘ஹிறு குடும்பத்தினர் வர வேற்றார்கள். இங்கே இருக்கின்ற சூழலைப் பார்க் கின்ற போது இந்த சூரிய குடும்பத்தினர் இங்கே எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும் நெருக்கடி களையும் அவர்கள் எந்தச் சவாலையும் எதிர் கொள்கின்ற அதாவது சமாதானத்திற்காக - சமத்து வத்திற்காக எந்த இழப்பையும் தாங்கிக் கொள் கின்ற வலிமையைக் கண்டு நேர்மையைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இங்கே சமாதானத் திற்காகவும் இரத்தம் சிந்துவோம் என்பதை நிரு பித்துக் காட்டிய அந்த மனிதர்களை நான் மனதார நேசிக்கிறேன்” என்று கூறி தனது உணர்ச்சிகரமான உரையினை ஆரம்பித்தார் கலைஞர் புதுவை
960TL 607.
வன்னியிலிருந்து வருகை தந்திருந்த அவர்
மல்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - உooபு

Page 94
நீண்டதொரு உரையினை ஆற்றினார். "போருக்குள் புதையுண்டு போன எங்கள் வாழ்வை நாங்கள் பாடுகின்ற போது போரைப் பற்றியோ போராட் டத்தைப் பற்றியோ பாடாமல் இருக்க முடிய வில்லை. என் வீட்டு முற்றத்தில் நிலவைக் காட்டி என் பிள்ளைக்கும் பாலூட்ட எனக்கும் ஆசைதான். ஆனால் எங்கள் வானத்தில் நாங்கள் நிலவின் அழகைப் பார்க்க முடியவில்லை. அண்ணார்ந்து பார்த்தால் தகரப் பருந்துகள் வந்து வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அப்போது என் பிள்ளைக்கு வானத்து நிலவைக் காட்ட முடியுமா? உன்னைக் கொத்தித் தின்னவரும் தகரப் பருந்திடமிருந்து நீ தப்பிக் கொள் என்றுதானே பாட முடியும். போராட்டத்திலே நாங்கள் கொடுத்த விலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. கலைக் குடும்பம் என்ற கூட்டுக்குள் நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம். இந்தக் கூட்டின் குருவிகளாகிய நாங்கள் எந்த இழப்புக்கள், தடைகள் வந்தாலும் எங்கள் இலட் சியப் பயணத்திலே ஒன்றுபட்டு முன்னேறுவோம். இந்தக் கூடு இன்றோடு குலைந்து போகாமல் பார்த்துக் கொள்வோம்” என்று கூறி தனது உணர்ச்சி பூர்வமான உரையினை நிறைவு செய்தார் புதுவை அன்பன்.
இசைப்பாடல் அரங்கினைத் தொடர்ந்து மே மகே சந்தயி, தனி தட்டுவென் பியாம்பன்ன திரைப்படங்களின் மூலம் சர்வதேச பாராட்டுக் களைப் பெற்றுக் கொண்ட சிங்கள திரைப்பட நெறியாளரான திரு. அசோக ஹந்தமகம அவர் களின் தலைமையில் சினிமா பற்றிய உரையாடல் இடம் பெற்றது. அதில் பிரதான உரையாளர்களாக பிரசன்ன விதானகே, அயேசுராசா ஆகியோர்கள் பங்கேற்றார்கள்.
கருத்துரைக் குழுவிலே சத்தியஜித்மாஇடிபே, க.சட்டநாதன், அமரதாஸ், ந.கேசவராஜன், சுழங் கிரில்லி திரைப்படத்தின் மூலம் சர்வதேச மட்டத்தில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்ட பெண் நெறியாளரான இனோகா சத்யாங்கனி ஆகியோரும் கலந்து
கொண்டனர். "
திரு. அ. யேசுராசா அவர்கள் குறிப்பாக தமிழ்ப் பகுதியில் தயாரிக்கப்பட்ட நிதர்சனம் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட வீடியோ படங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
சினிமாத்துறை பற்றிய கலந்துரையாடலுக்குப் பின் பொதுக் கலந்துரையாடல் ஒன்றுக்கும்
93

முகங்கள் திரைப்படத்தினை திரையிடுவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நேரம் போதாமையினால் அவை இடம்பெற முடியாமற் போனது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் முதல் நாள் இடம்பெற்ற அனர்த்தங்களினால் எப்படி நடை பெறப் போகின்றதோ என்ற ஏக்கத்தோடு ஆரம் பிக்கப்பட்டாலும் கூட பொலிசாரின் முன்னெச் சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளினால் எதுவித அசம்பாவிதங்கள் இன்றியும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
முதல் நாள் நிகழ்விலே ஏற்பட்ட அந்தச் சம்பவமானது முற்போக்கு எண்ணங் கொண்ட சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு புது உறவினை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விட்டது.
”அடிமைத்தனத்தை விட உயர்ந்தவர்களாக வாழலாம் எல்லாச் சவால்களுக்கும் முகம் கொடுக்கலாம் உயர்ந்தவர்கள் நாம் எல்லோரும்” என்ற ஜயதிலக பண்டாரவின் நெறிப்படுத்தலில் சிங்கள தமிழ் கலைஞர்கள் ஒன்றிணைந்து பாடலைப் பாடி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
அதனை அடுத்து பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. இந்த நாட்டில் ஏறத்தாழ கால் நூற்றாண்டு கால மாக நடைபெற்ற ஓர் நீண்ட போரின் பின்னர் ஏற்பட்டுள்ள ஒரு இடைக்கால சமாதான கால கட்டத்தில் நாங்கள் இரு பகுதியினரும் மூன்று பகுதியினரும் ஒன்றாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கு சேர்ந்திருப்பதென்பது மிக மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் சம்பவமாகும். வரலாற்றினுடைய எந்வொரு நடவடிக்கைக்குமான முன் நிகழ்வாக அந்த நாட்டின் அந்த மொழி களின் கலைஞர்களும் சிந்தனைவாதிகளும் தங் களுடைய கருத்துக்களை முன்வைப்பது எமக்கு வரலாற்றில் தெரிந்த ஒன்று அவர்கள் செல்கின்ற அந்த வழியில்தான் நாங்கள் அல்லது மக்கள் செல்வது இயல்பு வரலாற்று உண்மை.
இங்கு இன்றும் நேற்றும் தமிழ் சிங்கள கலைஞர்களும் புத்திஜீவிகளும் ஒன்று சேர்ந்து கடந்த காலத்தில் இவர்கள் தங்கள் சந்தித்துக் கொள்ளாத காலங்களில் தமது இலக்கியங் களிலும் கலைகளிலும் ஏற்பட்ட வளர்ச்சியைப் பற்றி கலந்துரையாட இருக்கின்றோம். இந்தக் கணக்கெடுப்பின் செய்தி இந்த நாட்டின் சிங்கள
es 3942j bakub Dassi garas - 2pog

Page 95
- தமிழ் மக்களுக்குச் சென்றடைய வேண்டும்.
“கடந்தகால வரலாற்றில் நாம் விட்ட மிகப் பெரிய தவறு என்னவென்றால் நம்மிடையே உள்ள ஒருமைப்பாடுகள் பற்றி அதிகம் பேசாது, நாம் எங்களிடையே காணப்படுகின்ற அந்த தனித்து
வங்களை வேறுபாடுகளாகக் கருதி பேசிக் கொள்
வதுதான். இதன் காரணமாக நாங்கள் பலவற்றை
மறந்து விட்டோம். உண்மையில் இந்தக் கூட்டம் அந்த ஒற்றுமைகளை மீள கண்டுபிடிப்பதற்கான, ஏற்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைய வேண்டும் என் நான் கருதுகின்றேன்” என்று தனது நீண்ட உரையை ஆரம்பித்த பேராசிரியர் அவர்கள்
“இந்த நாட்டின் பெயரால், இந்த நாட்டின் ஒற்றுமையின் பெயரால் சிங்களமும் தமிழும் ஒரே
சிந்தனையைப் பேசவேண்டும். இல்லாவிடில் நாம் இலங்கையராக இருக்க முடியாது. பிரிவினை பேசினால் நாடு ஒன்று படாது. இந்த நாட்டவரல்ல
என்று மற்றவரைச் சொல்வதும் நாட்டை ஒன்று
படுத்தாது. இதுதான் கலைஞர்கள் எதிர்நோக்கும்
சவால்களில் முக்கியமானது சிங்களவர்கள் தமிழர் கள் முஸ்லிம்களாக இருப்பதற்கு மேலாக மானுடர் களாக இருக்க வேண்டும்” என்றும் வற்புறுத்திக் கூறினார். . .
பேராசிரியர் அவர்களின் உரையினைத்
தொடர்ந்து கவிதை அரங்கம் இடம்பெற்றது. திரு.
அனுர கே. எதிரிசூரிய அவர்கள் தலைமையில் இடம்பெற்ற அரங்கின் பிரதான உரையாளர்களாக ஆரியவங்ச ரணவீர சோ.பத்மநாதன் ஆகியோ ரும், கருத்துரைக் குழுவிலே லால்ஹெகொட, அஜித் பெரகும், சண்முகம் சிவலிங்கம், நந்தன வீரசிங்ஹ, சு.வில்வரத்தினம் யதீந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து ஊடகம் பற்றிய கலந்துரையாடல் எஸ்.ஜி. புஞ்சி ஹேவா அவர்களின் தலைமையில் ஆரம் பமானது. பிரதான உரையாளர்களாக திலக் ஜயரத்ன, நிலாந்தன் ஆகியோரும் கருத்துரைக் குழுவிலே அஜித் சம நாயக்க, குணசிரி சில்வா, திபிரியாகம பண்டார, சுனந்ததேசப் பிரிய, டீ.சிவராம், நிராஜ் டேவிற், பா.சிவகுமார் ஆகியோர்
கலந்து கொண்டார்கள்.
வன்னியில் இருந்து வருகை தந்தி ருந்த கவிஞரும் ஊடகவியலாளருமான நிலாந் தனி அவர்களது உரை அனைவரையும் கவர் வதாகவும் சிந்திக்க
9.
 
 
 

வைப்பதாகவும் அமைந் திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ம்ாலை நிகழ்வாக நாடகம் பற்றிய கலந்துரை யாடல் இடம்பெற்றது. பியல் காரியவசம் அவர் களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நேரம் போதாமையால் திரு. தர்மசிறிபண்டார நாயக்கா, கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம். எழுத்தாளரும் நாடக நெறியாளருமான அந்தனி ஜீவா ஆகியோர் மாத்திரமே உரையாற்றினர்.
அந்தனி ஜீவா தனதுரையில் தமிழ் நாடகக் குழுவின் செயற்பாடுகள் பற்றியும், அதன் குறை பாடுகள் பற்றியும், குறிப்பாக சென்ற ஆண்டு வன்னியில் இருந்து வந்திருந்த தங்க வேலாயுதம் அவர்களைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் இங்குள்ள பொறுப்பான தமிழர் ஒருவர் நடந்து கொண்ட விதம் பற்றிக் குறிப்பிட்டு மிகவும்
வேதனைப்பட்டுக் கொண்டார்.
இரண்டு நாட்களும் நடைபெற்ற இந்த நிகழ் வில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் கலைஞர்கள் மற்றும் சிங்களக் கலைஞர்கள் பெருமளவில் கலந்திருந்தும் கொழும்பின் தமிழ் கலைஞர்களைப் பொறுத்தவரையில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே வந்து கலந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
சிங்கள - தமிழ் கலைஞர்களிடையே, புத்தி ஜீவிகளிடையே முகிழ்ந்து மலர்ந்த இந்தச் சோதர உறவு தொடர்ந்தும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இலங்கையின் பல பாகங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என்பதே இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
கலந்து கொண்ட மக்கள் 1 ܠܰܐܐܐܗ
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oடி

Page 96
95
மல்லி 39வது ஆண்டு நிை
UEGEAR
சுத்தமான, சுவையான
தயாரிக்கப்பட்ட சிற்
கொழும்பு மாநகரில் பி எப்பொழுதும் நினைவில்
51 ജൂഖg|
ECHTGOLI
urns ,98 - م . صي
! - தொலைபேசி II c.
 

೧àli றவில் பூரிப்படைகிறது
AM HOTEC
ா, சுகாதார முறைப்படி றுண்டி ரசித்தி பெற்ற ஹோட்டல்
வைத்திருக்கத் தக்க பெயர்
ജ്യങ്ങfറ്റ്. N O CEL
ஷால் வீதி, Dų - 11. ーイ二 இல, 2324712 பு
AIA O.
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 97
J5DS LJTLöT6)6 நமது நூல்க:
ல்விப் பரம்பரையையும் நாட்டுக் கேற்ற நற்பிரஜைகளையும் உரு வாக்குகின்ற அரும் பணியை கல்வித்துறையே மேற்கொண்டு வருகின்றது. புத்திஜீவிகளும் இலக்கியக் கர்த்தாக்களும் நல்ல வாசகர்களும் பாடசாலைச் சமுதாயத் திலிருந்தே உருவாகின்றனர். எனவே இலக்கியம் பற்றிய தெளிவையும் ரசனை களையும் வளர்த்துவிடும் பணி பாடசாலைக் காலத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
நமது பல்கலைக் கழகங்களிலும், ஆசிரியக் கலாசாலைகளிலும், பாடசாலை களிலும் நமது இலக்கியம் கணிசமான அளவு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டு மென்ற குரல் நீண்டகாலத்துக்கு முன் பிருந்தே எழுப்பப்பட்டு வந்தது. இது காலப் போக்கில் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதை எவரும் அறிவர்.
பல் கலைக் கழகங்கள் இலங்கை இலக்கியம் தொடர்பாக நிறையவே சாதிக் கின்றன. இலக்கியத்தோடு தொடர்புடைய பலர் பல்கலைக் கழகங்களில் பணியாற்றி யமையால் இது சாத்தியமாயிற்று. தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் என்பன தமது பங்களிப்பை நிறையவே செய்து வருகின்றன.
96.
 
 
 
 

- திக்குவல்லை கமால்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர, சாதாரண தரங்களில் மாத்திரமன்றி இடை நிலைக் கல்வி வகுப்புகளிலும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியப் பாட நூல்களில் நமது எழுத்தாளர் கவிஞர்களின் சிறுகதைகள், கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதைவிட ஒருபடி மேலே சென்று புதிய கல்விச் சீர்த்திருத்தம் ஒப்படை, செயற்திட்டம் போன்றவற்றை முன்வைத்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேடல் மிகுந்தவர்களாக மாறியுள்ளனர். வாசிப்பு தவிர்க்க முடியாத தொன்றாக மாறி வருகின்றது. வீட்டுக்கொரு நாளாந்தப் பத்திரிகையேனும் எடுக்க வேண்டிய நிலை. கிராம, பிராந்திய எழுத் தாளர்கள், அoபரதம் ஆக்கங்கள் பணிகள் பற்றியெல்லாம் கவனம் செலுத்தி வரு கின்றனர். பேட்டி காண்கின்றனர். பத்திரிகை நறுக்கு மூலம் சிறுகதை, கவிதைத் தொகுதி தயாரிக்கின்றனர். இப் படித் தயாரித்த ஒட்டுப் புத்தகங்களை காட்சிப் படுத்துகின்றனர். இந்நிகழ்வுகள் அவர்களை அறியாமலேயே இலக்கியத்தின் பால் நாட்டத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்த வழி வகுக்கின்றது.
இந்தப் பின்னணியில் நின்று பார்க்கும் போது பாடசாலை நூலகங்கள் என்று மில்லாத அளவுக்கு இன்று முக்கியத்துவம்

Page 98
பெற்று வருகின்றது. அந்த அளவுக்கு எமது நூலகங்களின் கொள்வனவு ஏற்புடையதாக இருக்கின்றதா என்பது கேள்வி.
பெரும்பாலான பாடசாலைகளில் ஒருசில அலுமாரிகளே நூலகங்களாக இருக்கின்றன. அவைகூட பாதுகாப்பாக இறுக்கி மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. மாணவர் பயன்பாடு மிகமிகக் குறைவாகவே உள்ளது. இன்னும் சில பாடசாலைகளில் நூலகக் கட்டிடங்கள் வகுப்பறைகளாகவும் மாறி யுள்ளன.
கல்வி அமைச்சு பொதுக் கல்வித் திட்டம் இரண்டின் கீழ், நாலாயிரம் பாடசாலைகளில் நூலக அபிவிருத்தி நடைமுறைப்படுத்தி வரு கின்றது. ஆசிரிய நூலகர்களைப் பயிற்று விப்பதும் இதில் ஒர் அங்கமாகும்.
எவ்வாறாயினும் ஆசிரியப் பணி மாணவர் களுக்கு வழிகாட்டல் செய்வதாகும். இலக் கியமின்றி வாழ்க்கை இல்லை என்பார்கள். இதனை உணர்ந்து இலக்கியம் படைக்கவும் படிக்கவும் நயக்கவும் வழிகாட்டும் பொறுப்பு ஆசிரியர்களுடையதே. இளம் இலக்கிய கர்த்தாக்கள் இனம் காணப்படும் களமும் LJпLøп6o6003ш. ܫ
குருடனுக்கு குருடன் வழிகாட்ட முடியாது. ஆகவே இலக்கியத்துக்கு வழி காட்டுபவர் குறைந்தது ஒரு சிறந்த வாசக ராகவாவது இருக்க வேண்டும். அல்லது அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். 'கற்றலுக்காகக் கற்றல் என்ற கோட்பாடும் முன்வைக்கப்பட்டுள்ள கால மிது. இந்த வகையில் எமது ஆசிரியர்கள் நல்ல வாசகர்களாக இருக்கிறார்களா? ஒவ் வொரு ஆசிரியர் வீட்டிலும் ஒவ்வொரு நூலகம் உண்டா? என்றெல்லாம் பார்க்கும் போது பதில் சாதகமாக இல்லையென்பதே உண்மையாகும். அதனால் ஆசிரியர்களின் வாசிப்புக்காகவும் சேர்ந்து பாடசாலை நூலகங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டி Այ6f6ո9;].
இனி வாசகர்களாக இருக்கின்ற ஆசிரியர்களை எடுத்து நோக்குமிடத்து அவர் களில் பெரும் பகுதியினர் வெறும் பொழுது போக்கு வாசகர்களாகவே இருக்கின்றனர்.
97 ।

அவர்தம் ரசனைக்கேற்பவே நூலகம் காணப படுகின்றது. மூன்றாந்தர இந்திய நாவல்கள், எமது மாணவர்களுக்கு எந்தவகையிலும் வாழ்வின் அர்த்தப்பாட்டை உணர்த்தப் போவதில்லை. அவர்களை கற்பனா லோகத் தில் சஞ்சரிக்கச் செய்வது எதிர்த்துலங் களுக்கே இட்டுச் செல்லும். ‘நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்’ என்பார்கள். அது எங் கிருந்து வந்தாலும் வரவேற்கத்தக்கனவே.
தனிநாடு, பிரதேச சுயாட்சி, நமது மண் என்றெல்லாம் உணர்ச்சி பொங்க நாம் பேசுகின்றோம். இதே உணர்வோடு நமது இலக்கியம் பற்றி நாம் சிந்திக்கின்றோமா? நமது மண்ணையும் மக்களின் வாழ்வையும், அதன் போராட்டங்களையும் பிரச்சினை களையும் இலக்கியங்கள் தான் பேசு கின்றன; பிரதிபலிக்கின்றன; ஆவணப்படுத்து கின்றன. அத்தகைய இலக்கியங்களோடு நமக்குள்ள ஒட்டுறவு எந்த நிலையிலுள்ள தென்பதே எமக்கு முன்னுள்ள கேள்வி யாகும்.
நமது நூல்கள் பெரும் நூலகங்களில் அடுக்கி வைக்கப்படுவதிலோ பாதுகாக்கப் படுவதிலோ எமக்குப் பெருமையில்லை. எமது இளம் சந்ததியினரின் கண்களில் படு வதன் மூலம்தான் உரிய பயன்பாட்டையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் ஏற்படுத்த முடியும். அந்தவகையில்தான் ஒவ்வொரு கிராம மட்டத்திலும் பாடசாலை நூலகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இன்னும் சில பாடசாலை நிர்வாகத்தினர் நிதி ஒதுக்கீடுகள் வாய்க்கும்போது அவற் றுக்கு பாட சம்பந்தமான பயிற்சி நூல் களையும் வினா, விடை புத்தகங்களையும் கொண்டுவந்து குவித்து விடுகின்றனர். பாடசாலைகளின் நிலைப்பாட்டைப் பொறுத்து இது கூடாத செயலல்ல. ஆனால் பாட சம்பந்தமான நூல்கள் தேவைப்படும் போது மாணவர்களும் ஆசிரியர்களும் அதைத் தேடிக்கொள்வதே பொருத்தமானதாகும். நூலகம் எனும்போது முறைசார் கல்விக்கு அப்பாற்பட்ட பொது அறிவை வளர்ப்பதும் மொழித்திறன் ஆளுமை விருத்தியை அடிப் படையாகக் கொண்டதுமான நூல்களைக் கொண்டமைவதே முக்கிய குறிக்கோளாகும்.
es 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 99
பாடசாலை நூலக விருத்திக்காக மாணவர், பெற்றோர், நலன் விரும்பிகளின் அன்பளிப்புக்கள் மூலமாக நூல்களைச் சேர்க்க முடியும். நேரடியாக கல்விப் பகுதி யிலிருந்து அனுப்பப்படும் நூல்கள் வேறு. பொது நிறுவனங்கள் அரச சார்பற்ற அமைப்புக்களிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புமுண்டு. இவற்குக்கு மேலதி கமாக பாடசாலைகளோடு சம்பந்தப்படும் மூன்று நிதிகளை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். அவையாவது: வசதிகள் சேவைகள் கட்டணம், பாடசாலை அபி விருத்திச் சங்க நிதி, குணநல உள்ளிடு என்பனவாகும். கல்விப் பணிமனையிலிருந்து அனுமதி பெற்றே இந்நிதியைப் பயன்படுத்த வேண்டும். ན་
எல்லாக் கிராமங்களிலும் எல்லாப் பிர தேசங்களிலும் புத்தகக் கொள்வனவு செய்ய ஏற்ற வசதிகள் இல்லை. தமிழ் நூல்களைப் பொறுத்தமட்டில் நகர்ப்புறங்களிலேயே புத்தகக் கடைகள் காணப்படுகின்றன. அரச விதிமுறைகளுக்கமைய கொள்வனவு செய்ய முற்படும்போது, நடைமுறைச் சிக்கல்கள் அதிபர்களை இதிலிருந்து துாரமாக்கி விடவும் செய்கிறது.
பாடசாலை நூலகங்களை காத்திரமாக வளர்க்க முற்படுவதில் மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவைப்படவே செய்கின்றது. எவ்வாறாயினும் நமது நூல்கள் என்ற சிந்தனையோடு செயற் படுவது இன்றைய காலச் சூழலில் அவசிய மாகும். இதற்கு அதிபர் - ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி வள அணியினர் ஆகிய முத்தரப்பினரும் கைகோர்த்துச் செயற் படுவது முக்கியமாகும்.
இப்பொழுதெல்லாம் பாடசாலை நூலகங் களுக்கு எத்தகைய நூல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன என்பதுபற்றி எவராலும் மேற்பார்வை செய்யப்படுவதில்லை. இந்தப் பலவீனம் காரணமாக மாணவர் சமுதாயம் உரிய பயனை அடைய முடியாத துர்ப் பாக்கிய நிலை நிலவுகிறது. கொள்வனவு &LDL 155LDT 85 கணக்காய்வு செய்யப்படும் போது நூல்களின் தராதரம் அவதானிக்கப் படுவதில்லை. -- Xx Yr * ...۶ ه. . . . . . . ش : -
99

மாகாண ரீதியாக கலாசார திணைக் களங்கள் இயங்குகின்றன. நூல் கொள்வனவு செய்கின்றன. மாகாண இலக்கிய விழாக் களை நடாத்தி விருது வழங்குகின்றன. நூற் தேர்வுக்காக வந்துசேரும் நூல்களின் பட்டியலை கல்வித் திணைக்களத்துக்கூடாக சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி, புத்த கக் கொள்வனவின்போது அந்நூல்களையும் வாங்குமாறு கேட்பதோடு, பிராந்திய கல்வி அலுவலர்களை அதை உறுதிப்படுத்தும் வகையிலான நடைமுறை அமையுமாயின் அந்தந்த மாகாணங்களில் வெளிவந்த நூல்களாவது பாடசாலை நூலகங்களைச் சென்றடையும்.
இதேபோன்று நூலக சேவைகள் ஆவண வாக்கல் சபை நூல் பட்டியலை பருவரீதியாக வெளியிடுகின்றது. கலாசாரத் திணைக்களம் சாகித்திய மண்டலப் பரிசுக்காக வந்துசேரும் நூல்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளி யிடுகின்றது. 75-100 புத்தகங்கள் பிரதி வருடமும் பரிசுத் தேர்வுக்கு வந்து சேர் கின்றன. இதனைப் பெற்று மத்திய கல்வி அமைச்சின், நூலபிவிருத்தி சபை நாட்டி லுள்ள தேசிய, 1 ஏபீ, 1 சீ பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கலாம். அவற்றின் பிரதிகளை வலயக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி மேற்பார்வைக்கு உதவலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை நூல்களை பாடசாலைகளின் வகைக்கேற்ப குறிப்பிட்ட வீதம் கொள்வனவு செய்வதை கல்வி அமைச்சு சுற்று நிருபம் மூலம் பணித் தல் வேண்டும். இதற்கான அழுத்தத்தை அறிஞர், எழுத்தாளர் சார் அமைப்புக்கள் கொடுக்குமாயின் நமது பாடசாலைகளில் நமது இலக்கியங்களையும் நூல்களையும் வாழ வைக்கலாம். அதன் மூலம் எழுத் தாளர்களையும் வெளியீட்டு நிறுவனங் களையும் வளர வழி செய்யலாம்.
புதிய நூல் | கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் செங்கை ஆழியானின் சிறுகதைத் தொகுதி வெளி வந்துள்ளது.
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 100
99
 
 
 

எடின்பரோ நகரில் அமைந்துள்ள கோபுரத்தின் உள்ளே எழுத்தாளர் ஸ்கொட் அமர்ந்து எழுதுவது போன்ற சிலை
லண்டன் சென்று திரும்பிய பின்னர் முத்தான மூன்று நினைவுகள் என் நெஞ்சை விட்டு அகலாமல் பசுமையாக பதிந்துள்ளன.
உலகமே மதித்த உன்னத மேலித மூல தனத்தை தந்த கார்ல் மார்க்ஸின் கல்லறை, உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவாலயம், எடின்பரோ நகரில் என்னை மிகவும் பாதித்த படைப்பாளிகளின் நினைவாலய மான எழுத்தாளர்களின் நூதனசாலையாகும்.
லண்டனில் பழம் பெருமை மிக்க ஸ்கொட்லாண் டிற்கு சென்றபொழுது, அதன் தலைமை நகரமான எடின்பரோவைச் சுற்றிப் பார்த்த பொழுது நகரின் நடுமையத்தில் உள்ள கோபுரத்தில் உள்ளே ஒரு நாற்காலியில் அமர்ந்து மேசையில் எழுதுவது போல காட்சியளித்தார்.
* அந்தக் கோபுரத்தை அருகில் சென்று பார்த்

Page 101
பொழுது, அந்தச் சிலையைப் பற்றிய குறிப்பை வாசித்த பொழுது. எழுதுவது போல காட்சி யளிக்கும் சிலை. ஸ்கொட்லாந்தின் புகழ் பெற்ற எழுத்தாளரும், உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படும் சேர் வோல்டர் ஸ்கொட் என்பவரே.
ஒரு படைப்பாளிக்கு எத்தகைய இடத்தை இவர்கள் அளித்துள்ளார்கள் என வியந்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது, “வாருங்கள் இன்னொரு முக்கியமான இடத்தைக் காட்டுகிறேன்’ எனக் கூறி எனது மனைவியின் சகோதரர் தேவா அழைத்துச் சென்றார்.
அவர் அழைத்துச் சென்ற இடத்தின் பெயரைப் பார்த்ததும் எனது விழிகள் வியப்பால் விரிந்தன. ஆச்சரியத்துடன் அந்தக் கட்டிடத்தின் பெயர் பலகையைப் பார்த்தேன். எழுத்த ாளர்களின் நூதன சாலை, எடின்பரோ (The Writers Museum Edinburgh) 6T 65 gol காணப்பட்டது.
இந்தப் பெயர் பலகையைப் பார்த்த மாத்தி ரத்தில் என்னுள் ஒரு பரவசமே ஏற்பட்டது. இலங்கையில் புகழ் பெற்ற எழுத்தாளர் ஒரு வருக்கு அவர் வாழ்ந்த கொக்கல என்ற இடத்தில் அவர் வீட்டின் ஒரு பகுதியில் தனிநபர் நூலக மும், நூதனசாலையும் அமைந்துள்ளது.
இந்த எழுத்தாளரின் நூதனசாலை எவ்வாறு உருவானது என்ற பதிவுகள் அங்கே காணப் படுகின்றன.
(86)LQ 6m)Lust 65B (Lady Stair's House) எடின்பரோ நகரில் ஒரு பிரசித்தி பெற்ற தொழில திபருக்கு சொந்தமானது. அவரால் 17ம் நூற் றாண்டில் கட்டப்பட்டது.
இந்தக் கட்டிடம் 1907 முதல் 1932 வரை எடின்பரோ நகரில் பிரதான நூதனசாலையாக இருந்துள்ளது. 1965இல் அதன் பிரதான நோக்க மாக இலக்கிய தொடர்புகளை கொண்டிருந்தது. அதனால் ஸ்கொட்லாந்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களான சேர்வோல்டர் ஸ்கொட் (Sir. Walter Scot 1771-1832) (GJ. Tuff (3Ligórón) (Robert Byrns, 1759-1796) (6) || L's L. Ha|u fl6sú 6mo (26)16ô736ôT (Robert Louis Stevenson 1850-1894) ஆகிய மூவரும் ஸ்கொட்டிஸ் இலக்கியத்தின் முன்னோடிகள். இவர்கள் படைப்புகள் ஸ்கொட்டிஸ் இலக்கியத்தில் உன்னத படைப்பாக கருதப்
100
 

படுகின்றது.
இந்த மூவரின் படைப்புகள், கையெழுத்து பிரதிகள் கடிதங்கள் போன்றவற்றை ஆரம்பத்தில சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களின் படைப்பு கள், கையெழுத்துக் பிரதிகள், இவர்கள் உபயோகித்த பொருட்கள் ஆகியவற்றை பணம் கொடுத்தும். அன்பளிப்பாகவும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எழுத்தாளர் நூதனசாலையின் முன்புறம் கட்டுரையாளர்
1993ஆம் ஆண்டு லேடி ஸ்டயர் வீடு என்ற பெயரை எழுத்தாளர்களின் நூதனசாலை என மாற்றப் பட்டுள்ளது. அது மாத்திரமல்ல, ஸ்கொட்லாந்து நாட்டிற்கே உரிய பாரம்பரிய இலக்கியத்துக்கு சேவை யாற்றிய ஏனைய எழுத்தாளர்களின் வெளியீடு களையும், கையெழுத்துப் பிரதிகளையும் அந்த நூதனசாலையில் உள்ளடக்க எண்ணினார்கள்.
சேர் வோல்டர் ஸ்கொட், ரொபர்ட் பேர்ன்ஸ், ரொபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் ஸ்கொட்லாந்தின்
uDødslapæ5 396UHs ébastbuDøvst agar6ust – 2OOly

Page 102
மாபெரும் படைப்பாளிகளாக மதிக்கப்பட்டவர்கள். இந்த மூவரின் படைப்புகளை தனித்தனியே வைக் காமல் ஒரே இடத்தில் வைத்ததற்குரிய காரணம், இவர்களுக்குப் பிறகு எழுதிய எழுத்தாளர்கள் அனை வரும் இவர்களின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களே. ”உலக இலக்கியத்தில் இந்த மூவருக்கும் தனி இடமுண்டு என ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த எழுத்தாளர்களின் நூதனசாலையின் மூன்றாவது மாடியில் நூறு எழுத்தாளர்களின் புகைப் படங்களையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் காணக்கூடியதாக உள்ளது.
அங்கே நிர்வாகியாக இருந்தவரிடம் விசாரித்த பொழுது இந்த எழுத்தாளர்களின் படைப்புகளை கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள நூலக அறையில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அந்த எழுத்தாளர் நூல்களை வாசிப்பதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ விரும்புகிறவர்கள் அந்த எழுத்தாளர்களின் நூதனசாலை பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது எடின் பரோவில் உள்ள சேர், வோல்டர் ஸ்கொட் சங்கத்தின் அங்கத்தவராக இருக்க வேண்டும்.
இந்தக் கட்டிடத்தின் முதலாவது மாடியில்தான் சேர். வோல்டர் ஸ்கொட்டின் நூல்கள், கையெழுத்துப்
త్ర*-
101
 

பிரதிகள், அவர் எழுதிய பேனைகள், அவரது உடை கள், தொப்பி, கண்ணாடி ஏனைய பொருட்கள் காணப் படுகின்றன. அத்துடன் அவர் எழுதுவது போன்ற மாதிரி உருவமும் உள்ளது.
அந்த உருவத்தைப் பார்த்த பொழுது, உயிருள்ள மனிதரைப் போல காட்சியளிக்கின்றது. அவரது தலைமயிர்கூட அங்கே வைக்கப்பட்டுள்ளது. இதேபோல ஏனைய இரண்டு எழுத்தாளர்களின் பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அங்கு ஸ்கொட்டிஸ் எழுத்தாளர்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சமகால ஸ்கொட்டி ஸின் புகழ் பூத்த கவிஞரான டெனிஸ் என்பவரின் கவிதைத் தொகுதி இரண்டை வாங்கினேன். அதில் ஒன்றின் விலை இலங்கைப் பணத்தில் ஆயிரம் ரூபாய். அந்த கவிதைத் தொகுதியின் பெயர் Smoke And Mirrors என்பது. அட்டை திறந்தவுடன் இரண்டு வரிகளில் ஒரு புதுக்கவிதை
”நான் ஒரு மனிதனைக் கண்டேன் அவனது பெயரோ நேரம் அவனே சொன்னான் நான் போகிறேன்’
இதுபோன்ற எழுத்தாளர்களின் நினைவாலயம் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைய வேண்டும் என்ற கனவுகளுடன் வந்தேன்.
ல்ேலிகை 39வது ஆண்ருமலர் ஜனவரி - 20Oபு

Page 103
se
மல்லி
39வது ஆ8
6TD 6). If
102
 
 

கையின்
ண்டு மலருக்கு ழ்த்துக்கள்
Págiõ 39425 &barbudasi garauí - 2oo

Page 104
பைல் தொலைபேசி அடித்தது.
கைகளால் எடுத்தபடி தலை
மாட்டில் இருந்த கடிகாரத்தைப் , பார்த்தேன்.
ஐந்தரையாக இருந்தது.
தொலைபேசியில் “நோயல் இந்த s நேரத்தில் அழைப்பதற்கு மன்னிக்கவும். நான் ஆர்தர் பேசுகிறேன். ஒஸ்காருக்கு ܚܝ பின் கால்கள் நடக்க முடியவில்லை. தொடர்ச்சியாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது.
“ஒஸ்காருக்கு என்ன வயது?”
'பத்து அல்லது பன்னிரண்டாக இருக்கலாம்.”
துன்பம் ஒரு
தெ9டர்கதை
(மிருப வைத்தியரின் அனுபவம்) .
என்.எஸ்.நடேசன்
103
 

“சரி, அரைமணி நேரத்தில் கிளினிக்கில் சந்திக்கிறேன்.”
ஒஸ்கார் நாயோ, பூனையோ என உறுதிப் படுத்த முடியவில்லை. பெரும்பகுதி உரை யாடல் நித்திரையின் மயக்கத்தில் நடந்தது, கனவில் நடந்தது போல் கூட இருந்தது. ஆர்தரின் குடும்பப் பெயரைக் கூடக் கேட்க வில்லை. பலர் தங்களது பெயருடன் செல்லப் பிராணிகளின் பெயர்களையும் நினைவு வைத் திருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ!
தூக்க மயக்கத்தில் காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு காரை வெளியே எடுத்தேன். மெல்பேன் முதல் இரவின் பின்பாக துயில் எழும் தம்பதிகள் போல் அரைகுறையாக பனிப்புகாரை விலக்கிக் கொண்டு மெதுவாகத் துயில் எழுந்தது. வாகனங்களின் கெட்லைட் மட்டுமே பனிப் போர்வையை ஊடறுத்து
தெரிந்தது:
கிளினிக்கை அடைந்தபோது, மிகவும் அறிமுகமான ஆர்தர் பேட்டன் பூனையை கொண்ட பெட்டியைத் தூக்கிக் கொண்டு

Page 105
எனக்காகக் காத்து நின்றார்.
கதவைத் திறந்து உள்ளே சென்றதும் ஆர்தர் பூனையை எடுத்து பரிசோதனை மேசையில் வைத்தார். கறுப்பும் வெள்ளையும் கலந்த பூனை, நெற்றியில் பொட்டு வைத்தது போல் கருப்பின் முன்னால் வெள்ளைப் புள்ளி இருந்தது. வழக்கமான நாட்களில் வர்ணக் கலப்பை சிறிது நேரம் ரசிப்பேன். ஒஸ்காரின் நிலை இன்று நேரடியாக உடல் நலத்தை கவனிக்க இறங்கி விட்டேன்.
இடுப்புக்குக் கீழே எதுவித அசைவும் இல்லை. உடலின் முற்பகுதி வேகமாக துடித்தது. சுவாசிப்பதற்காக ஒஸ்காரின் மார்பும் வயிறும் பட்டறை துருத்தி போல் அசைந்தது, சிறிய இதயத்தில் துடிப்பு கண்ணால் பார்க்க முடியாது.
“எவ்வளவு நாட்களாக இப்படி இருக்கிறது?"
“மூன்று நாட்கள்”
பின்னங்கால்களை தொட்டேன். குளிர்ந்தது. தொடையின் உள்பகுதியில் உள்ள இரத்த நாடியில் துடிப்பு இல்லை. "ஆர்தர் வயிற்றுக்குக் கீழ்பகுதியில் உள்ள முக்கியமான இரத்த நாடியில் இரத்தம் உறைந்து விட்டது. இதனால் இரத்தம் கீழ்பகுதிக்குச் செல்லவில்லை. மூன்று நாட்கள் ஆகிவிட்டதால் எந்தவிதமான மருந்துகளாலும் பிரயோசனமும் இல்லை.”
எனது பதிலை ஆமோதிப்பவராக தலையை ஆட்டினார்.
“நான் ஒஸ்காரை கருணைக் கொலை செய்ய விரும்புகிறேன்” ஆர்தரை தவிர்ந்த வேறு ஒருவராக இருந்தால் மூன்று நாட்கள் பிந்தி வந்ததற்குக் கண்டித்திருப்பேன். குறைந்த பட்சம் அவர்களின் கவனக்குறைவை எடுத்துக் காட்டியிருப்பேன். ஆர்தரின் நிலைமை எனக்குத் தெரிந்தபடியால் எதுவும் பேசவில்லை.
சிறிதுநேரம் கலங்கிய கண்களுடன் நின்று
விட்டு பின்னர் எனது கையைப் பிடித்து நன்றி சொல்லிவிட்டு வெளியேறினார்.
10.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

{0, 0, 0 0x8 0x8 0.
எனது கிளினிக்கில் சில தச்சுவேலைகளை
செய்வதற்காக அறிமுகமாகிய ஆர்தர் பின்பு
தனது செல்லப்பிராணிகளை என்னிடமே கொண்டு வருவார்.
பதின் மூன்று வயதான லாபிடோரை என்னிடம் கொண்டு வந்து, மக்ஸ் என அறிமுகப்படுத்திவிட்டு “கழுத்தில் ஒரு கட்டி இருக்கிறது” என்றார்.
கழுத்துக் கட்டியை பார்த்துவிட்டு முழங் காலுக்கு பின்னால் கையை விட்டுத் தடவினேன். அங்கும் ஒரு கட்டி தட்டுப்பட்டது. பல கட்டிகள் பரிசோதனைக்குப் பின் தெரிய வந்தது.
“ஆர்தர் இது கொச்சின் லிம்போமா என்று ஆட்களுக்கு வரும் கான்சராகும். இதைக் குணப்படுத்த முடியாது. தற்போதைக்கு அப்படியே விடுவோம்.”
நான் சொல்லியதுதான் தாமதம், “Bloody Hel1’ எனது மனைவிக்கும் தொண்டையில் கான்சர் என இரண்டு நாட்களுக்கும் முன்பாகத் தான் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.”
"ஐ ஆம் சொறி” என கூறின்ேன்.
சில மாதங்களின் பின் ஆர்தரின் மனைவி
ஒரு சிறிய லாபிறடோர் நாய்க்குட்டியுடன் வந்தார். அழகான பொன்னிறமான குட்டி திருமதி ஆர்தரின் முகத்தைப் பார்த்தேன். சிவப்புச் சாயம் பூசிய உதடுகள் மெல்ல
அசைந்தன. ஆனால் கழுத்துப் பகுதியில் இருந்து கரகரத்த குரல் வந்தது. வொய்ஸ் பொக்ஸ் (Voice box) மூலமாக குரல் வந்தது. கழுத்தைப் பார்த்தா அல்லது முகத்தைப் பார்த்தா பதில் சொல்வது என ஒருகணம் தடுமாறினேன். கவனமாக உதடுகளையும் குரலையும் அவதானித்தபோது புரிந்து கொள்ள முடிந்தது.
மாக்ஸ்க்கு துணையாகவும் உற்சாகமூட்டவும் இந்த சிறிய குட்டியை வாங்கினோம் என்று
_கூறினார். குட்டி நாயின் பெயர் பென் என்றும்
மல்லிதை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 106
புரிந்து கொண்டேன்.
வயதான, கான்சரால் பீடிக்கப்பட்ட மாக்ஸ் சுக்கு மட்டுமல்ல ஆர்தரின் குடும்பத்துக்கே இந்த குட்டி நாயின் வரவு தேவையாகவுள்ளது. துக்கம், துயரங்கள் நிறைந்த இடங்களில் நாய், பூனைக் குட்டிகளின் வரவுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். துள்ளிக் குதிக்கும் பென்னால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
பென்னை பரிசோதித்து தடுப்பு மருந்து கொடுத்து அனுப்பினேன். திருமதி ஆர்தருக்கு வாசல்கதவை திறந்தபோது தனது கையில் உள்ள நகக் கீறல்களைக் காட்டி, “இவை பென்னின் பரிசுகள்” என்றார்.
குட்டிநாயின் நகக்கீறல்கள் அவருக்கு சந்தோசத்தை அளிக்கிறது.
சில மாதங்களின் பின் மீண்டும் ஆர்தர் பென்னை கூட்டிக் கொண்டுவந்து புழுவுக்கு மருந்து தரும்படி கேட்டார். பென் இப்பொழுது பெரிய நாயாக இருந்தது.
s
எவருக்கும் கேட்பது போல் "எப்படி சுகம் என கேட்டு வைத்தேன். பதில் வராமல் இழை யோடிய சிரிப்பு மட்டும் வந்தது. மாத்திரையைப் பெற்றுக் கொண்டவர் ” எனது மகள் டண்டினேங் வைத்தியசாலையில்” என்றார்.
அவரது மகளை நான் பார்த்திருக்கிறேன். இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளம் பெண் உயரமான மெல்லிய உடலமைப்பு - மாடல் பெண்களை நினைவுக்கு கொண்டு வரும் உடலமைப்பு.
“என்ன நடந்தது?”
"நத்தார் தினத்தன்று ரோட்டில் காரால் மோதப்பட்டு கால்களிலும் எலும்பு முறிந் துள்ளது.”
“இப்பொழுது எப்படி”
"பரவாயில்லை. பலமாதங்கள் எடுக்கலாம்.”
"விரைவாக குணமடைய வேண்டும்” எனக்
105

கூறி விடைகொடுத்தேன்.
ஆர்தரின் மகள் குணமாகிய பின்பு தனது பூனையை கொண்டுவந்து என்னிடம் சோதித் தாள். நாகரிகம் கருதி இளம் பெண்ணிடம் எதுவும்
விசாரிக்கவில்லை.
சில மாதத்தின் பின்பு ஆதரைச் சந்தித்தேன்.
“மகளுக்கு முற்றாக குணம்தானே” என எதேச்சையாக வினாவினேன்.
”கால்கள் குணமாகி விட்டது. ஆனால் கர்ப்பப்பையின் கழுத்தில் புற்றுநோய்க்கான ஆரம்ப குறிகள் இருப்பதாக சொல்கிறார்கள்.”
ஆர்தருக்கு அனுதாபத்தைத் தெரிவித்து விட்டு இனிமேல் அவரிடம் சுகம் விசாரிப்ப
தில்லை என முடிவெடுத்தேன்.
பற்றிக் கவலைப்படுவதே பெரிய விடயம்தானே.
*بی س“۔ ج*ں۔ * A איל"
4/ 4イ V» 4VY *
JV A " A
*4~ Ne z
A
?
சந்தா செலுத்தி 6 test d6ITs 3
தயவுசெய்த மல்லிகையுடன் ஒத்தழையுங்கள். அசட்டை செய்வோருக்கு முன்னறிவிiயின்றி நிறுத்தப்படும்.
-
மேல்லிகை 39வது ஆண்டுமலsர் ஜனவரி - 20Oபு

Page 107
வீன இலக்கிய வளர்ச்சி, இலக்கியச் சஞ்சிகைக கூறுவதுண்டு. அதில் உண்மையுண்டு. அதேவே பத்திரிகைகளுக்கும் பங்குள்ளமை குறிப்பாக ஈழத்து
நோக்கும்போது புலனாகின்றது. ஆதலின் ஈழத்து நவீன பங்கு எந்நிலையிலுள்ளது என்பது குறித்துச் சிந்தித்
ஈழத்தில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியளவி வேளையில் பத்திரிகைகளே அவற்றிற்கான பிரசுர நாவலான அசன்பே சரித்திரம் முஸ்லிம் நேசன் (188 சிறுகதையின் தோற்றத்திற்கான ஆரம்ப முயற்சிகள் கதைகள் (நன்னெறிக் கதாசங்கிரகம்) உதயதாரகை
மேற்கூறிய நிலைமை 20ஆம் நூற்றாண்டிலும் மா.வே.திருஞானசம்பந்தம்பிள்ளை எழுதிய 'உலகம் ப நேசரத்தினம், துரைரத்தினம் நேசமணி முதலியன)
எனினும் 20ஆம் நூற்றாண்டினைப் பொறுத்தவரைய துறையின் திருப்புமுனையாகின்றது. சமயநோக்கி6ை பத்திரிகைகள் போலன்றி, அதிலிருந்து விடுபட்டு, ( முதன்முதலாக பத்திரிகைகள் வெளிவருவது இப்போ (1930), தினகரன் (1932) என்பனவற்றின் வரவு இவ்ே
எனினும் மேற்கூறிய மூன்று பத்திரிகைகளுள் ‘தி முதன்மையிடம் அளித்தது. ‘வீரகேசரியும் அவ்வாறு அதில் வெளிவந்தன. (எ-டு: வரணியூர் இராசை தொடர்கதைகளாகவே அமைந்தன.
‘ஈழகேசரி’ ஏனையவற்றிலிருந்து வேறுபட்டிரு புகழப்படுகின்ற இலங்கையர்கோன், சி.வைத்தியலிங் சிறுகதைகளுக்கு இவ் ஈழகேசரியே களமமைத்து எழுத்தாளரதும் மண்வாசனை கொண்ட படைப்புகள் ஈழ (எ-டு: க.தி.சம்பந்தன், சு.வேலுப்பிள்ளை, கனகசெ மொழிபெயர்ப்பு நாவல்களும், கணிசமாக வெளிவந்தன. வில்ஹெல்ஸ்மித் நாவல்கள்)
106
 

லக்கிய வளர்ச்சியும் ப் பத்திரிகைகளும்
— óld. 6ullldblIIId ll
5ளுடன் பின்னிப் பிணைந்ததொன்று என்று பலரும் ளையில் அத்தகைய இலக்கிய வளர்ச்சியில் நவீன இலக்கிய வளர்ச்சிப் போக்கினைக் கூர்ந்து ன இலக்கிய வளர்ச்சியில் ஈழத்துப் பத்திரிகைகளின் துப் பார்ப்பது பொருத்தமானது.
லே நவீன இலக்கிய முயற்சிகள் கால்கொண்ட களமாக இருந்துள்ளன. ஈழத்தின் முதற் தமிழ் 2) பத்திரிகையிலேயே வெளிவந்துள்ளது. ஈழத்துச் அதாவது ஆனால்ட் சதாசிவம்பிள்ளை எழுதிய (1841) வெளிவந்திருக்கிறது.
தொடர்கின்றது. இந்துசாதனம் பத்திரிகையில் லவிதக் கதைகள் (காசிநாதன் நேசமலர், கோபால தொடராக வெளிவந்தன.
பில் அதன் மூன்றாம் தசாப்தம் ஈழத்துப் பத்திரிகைத்  ைமுதன்மைப்படுத்தி இதுகாலவரை வெளிவந்த செய்திகளை வெளியிடும் நோக்குடன் ஈழத்திலே துதான் நிகழ்கின்றது. ஈழகேசரி (1930), வீரகேசரி வேளை இடம்பெறுகின்றது.
னகரன் தமிழக எழுத்தாளர்களுக்கே (1950 வரை) செயற்படினும் ஈழத்து எழுத்தாளரது ஆக்கங்களும் யா) அவை பெரும்பாலும் துப்பறியும் மர்மத்
ந்தது. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் என கம், க.தி.சம்பந்தன் முதலானோரது கணிசமான க் கொடுத்தது. இவர்களதும் ஏனைய ஈழத்து pகேசரியிலேயே முதன்முதலாக வெளிவருகின்றன. ந்திநாதன் படைப்புகள்) தவிர, குறிப்பிடத்தக்க (எ-டு: ஐவன் துர்கனேவ், ரெனிசன், தாமஸ்ஹார்டி,

Page 108
கவிதைத்துறை வளர்ச்சியிலும் ஈழகேசரி முக்கிய பங்காற்றியுள்ளமை பலருமறியாததொன்று. ஈழகேசரியின் ஆரம்ப காலத்தில் சமூகசீர்திருத்தம், சமூக முன்னேற்றம் கொண்ட கவிதைகள் (எ-டு: மனுப்புலியார், அகிலேஸ்வரசர்மா, மு.நல்லதம்பி) வெளியாகின. பிரக்ஞை பூர்வமாக நவீன நோக் குடைய புதிய கவிஞர் குழாம் நாற்பதுகளளவில் * மறுமலர்ச்சி சஞ்சிகையூடாகவும் பாரதி (கொழும் பு) ஊடாகவும் இனங் கானப் பட்டனராயினும் இவர்களது வளர்ப்புப் பண்ணை யாக விளங்கியிருந்தது ஈழகேசரியே. (பின்பு மறுமலர்ச்சி சஞ்சிகை வெளிவந்த பின்னரும்கூட இவர்கள் சமகால ஈழகேசரி இதழ்களில் எழுதி வந்துள்ளமை கவனத்திற்குரியது.)
எவ்வாறாயினும், நவீன இலக்கிய வளர்ச்சி யிலே கோலோச்சிய ஈழத்துப் பத்திரிகைகளின் மேற்கூறிய போக்கிலே நாற்பதுகள் தொடக்கம் ஓரளவு மாற்றம் ஏற்படுகின்றது. ஈழத்தில் முதன் முதலாக இலக்கியச் சஞ்சிகைகள் இவ்வேளை யிலே தோற்றம் பெறத் தொடங்கின. (எ-டு: "மறு மலர்ச்சி - யாழ்ப்பாணம் 1946, 'பாரதி - கொழும்பு 1946, “பாரதி - மண்டுர் 1948) இதன் பின்னர் இத்தகைய இலக்கியச் சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்குமிடையிலே பரஸ்பர ஊடாட்ட மேற்படுகின்றது. இத்தகைய சஞ்சிகைகளின் இலக்கியப் போக்குகளோடு சில காலப்பகுதியிலே பத்திரிகைகள் இணைந்தும், சில காலப்பகுதியிலே விலகியும் செயற்படுகின்றன.
இலக்கியச் சஞ்சிகைகள் பரவலாக வெளிவந்த மேற்குறிப்பிட்ட சூழலில் ‘சுதந்திரன்’ (1947) பத்திரிகையின் வரவு ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப் போக்கிலே கவனத்திற்குரிய மாற்றங் களை ஏற்படுத்துகின்றது. தமிழரசுக் கட்சியின் ஏடாக விளங்கிய சுதந்திரன் இவ்வேளை உருவாகி வந்த தமிழ் தேசியம் (மொழி வழித் தமிழ்த் தேசியம்) சார்ந்த எழுத்துக்களுக்கு களமமைத்துக் கொடுத்தமை இய்ல்பானது. அதேவேளையில் சற்றுப் பின்னர் முற்போக்கு எழுத்தாளர்களாக இனங்காணப்பட்டு முதன்மை பெறப்போகின்ற எழுத்தாளர் பலர். (எ-டு: டானியல், டொமினிக் ஜீவா) வளர்கின்ற பண்ணையாகவும் அது விளங் கியது. இவ்வாறு வெவ்வேறு இலக்கியக் கொள்கை சார்ந்த அணியினருக்கு மட்டுமன்றி ஈழத்தின் பல பிரதேச எழுத்தாளர்களுக்கும் முதன்முதலாக இடமளித்தது சுதந்திரன் பத்திரிகையே. குறிப்பாக, மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளர்கள் பலர் முதன்
107

முதலாக சுதந்திரன் ஊடாகவே இனங்காணப் பட்டனர்.
ஈழத்து நவ்ன இலக்கிய வளர்ச்சிப் போக்கிலே ஏறத்தாழ ஐம்பத்தைந்துகள் தொடக்கம் முக்கிய மாற்றமேற்படுகின்றது. பிரக்ஞை பூர்வமாக ஈழத்து இலக்கிய உணர்வு ("தேசிய இலக்கியம் - மண் வாசனை இலக்கியம்) பல்வேறு காரணங்களிலே இவ்வேளை உருவாகத் தொடங்கியது இப்போது தான். இத்தகைய சூழலில் 'தினகரன்’ பத்திரிகை யின் செயற்பாடுகள் முக்கியம் மிகுந்தவையா கின்றன. முற்போக்கு அணிசார்ந்த (பேராசிரியர்) க.கைலாசபதி இவ்வேளை தினகரன் பத்திரிகை ஆசிரியரானமை (1957-61) கவனத்திற்குரியதா கின்றது. இவ்வேளை மண்வாசனை எழுத்துக்கள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இளங்கீரன் ஈழத்தின் முதல் முற்போக்கு நாவலாசிரியராக தினகரன் பத்திரிகையூடாகவே இனங்காணப்பட்டார். இவ்விதங்களிலும் பின்னர், குறிப்பாக முஸ்லிம் எழுத்தாளர் பலர் உருவாவதற்கு களமாக விளங்கிய விதத்திலும் 'தினகரன் பத்திரிகை ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் முக்கிய இடம் பெற் றுள்ளது. தினகரன் அவ்வாறு முஸ்லிம் எழுத் தாளர்களுக்கு வாய்பளித்தது போன்று ‘வீரகேசரி’ புதிய தலைமுறை மலையக எழுத்தாளர்களின் எழுச்சிக்கு - வளர்ச்சிக்கு - வழிவகுத்து வந் துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஏலவே வெளியான நவஜீவன் பத்திரிகையும் மலையக எழுத்தாளர் களுக்கு களம் அமைத்துக் கொடுத்ததாக அறிய முடிகின்றது.)
தினபதி (1966) பத்திரிகையின் வரவு குறிப்பாக புதிய எழுத்தாளர் பலர் உருவாவதற்குக் கள மானது. தினபதி கவிதா மண்டலம் ஊடாக இளம் கவிஞர்கள் இனங்காணப்பட்டார். 'தினம் ஒரு சிறு கதை' திட்டம் ஊடாக, எழுத்தாளர்கள் பலர் அறியப்பட்டனர். இவ்வாறே இன்சான்’ பத்திரிகை யூடாக புதிய தலைமுறை முஸ்லிம் எழுத்தாளர் சிலர் இனங்காணப்பட்டனர். செய்தி (1963) என்பன முற்போக்கு எழுத்துக்களுக்கு வாய்ப்பளித்தது.
ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைத் துறையைப் பொறுத்தளவில் ‘ஈழநாடு’ (1959) பத்திரிகையின் வரவு பிரதேசப் பத்திரிகைகளின் வரவிற்கு வழி வகுத்தது. இவ்வழி பிரதேச எழுத்தாளர்கள் பலர் உருவாவதற்கு ‘ஈழநாடு காரணமாகவிருந்தது.
எண்பதுகள் இன்னொரு விதத்தில் தமிழ்ப் பத்திரிகை வளர்ச்சிப் போக்கிலே மாற்றங்கள்
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 109
ஏற்படக் காரணமானது. இக்காலப் பகுதியிலே வேரூன்றி வளரத் தொடங்கிய இனவழித் தமிழ்த் தேசிய உணர்வு சார்ந்த விடயங்களோ படைப்புக் களோ தேசியப் பத்திரிகைகளிலே வரமுடியா நிலையிலே பிரதேச மட்டத்தில் பல பத்திரிகைகள் உருவாகத் தொடங்கின. (எ-டு: ஈழநாதம் 1990, முரசொலி 1984, ஈழமுரசு 1984, உதயன் 1985) உருவாகி, காத்திரமான அத்தகைய பல படைப்பு கள் வெளிவர வழிவகுத்துள்ளன.
எண்பதுகள் போன்றே தொண்ணுாறுகளும் பிறி தொரு விதத்தில் ஈழத்து பத்திரிகை வரலாற்றில் முக்கியம் பெறுகின்ற காலமாகின்றது. இக்காலச் சரிநிகர் (1991) பத்திரிகையின் வரவு கவனத் திற்குரியதாகின்றது. ஈழத்தின் (தமிழில்) முதல் மாற்றுப் பத்திரிகையாக விளங்கிய சரிநிகர் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள பங் களிப்பு காத்திரமானது. சரிநிகர் (பின்னர் நிகரி) பத்திரிகை ஊடாக இனங்காணப்பட்ட புதிய - இளைய தலைமுறை ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிப் போக்கிற்கும் சிறுகதை வளர்ச்சிப் போக் கிற்கும் அளப்பரிய பங்களிப்பினை நல்கியுள்ளமை இலக்கிய ஆர்வலர் பலருமறிந்த விடயமே.
இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் போது பின்வரும் விடயங்களை நினைவு கூரலாம்: 1. ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியின் தோற்றத் திற்கும் காலந்தோறும் அதன் பன்முகவளர்ச்சிக்கும் ஈழத்துக் பத்திரிகைகள் காலாயிருந்துள்ளன. ii. பரந்த மட்டத்தில் அதிக எண்ணிக்கை எழுத் தாளர்கள் உருவாக வழிவகுத்துள்ளன. i. பிரதேச மட்ட எழுத்தாளர்கள் நவீன இலக்கிய உலகினுள் பிரவேசிக்க களமமைத்துள்ளன. iv. ஈழத்து நவீன கவிதை, சிறுகதை வளர்ச்சியிலே பத்திரிகை களுக்கு மட்டுமன்றி இலக்கிய சஞ்சிகைகளுக்கும் பங்கிருப்பினும் ஈழத்து நாவல் வளர்ச்சியிலே இப் பத்திரிகைகளுக்கே கணிசமான பங்குள்ளது. இவ் வழி வீரகேசரி நிறுவனம் எழுபதுகளில் ஈழத்து நாவல் வெளியீட்டு முயற்சியிலே ஈடுபட்டிருந்தமை யும் குறிப்பிடத்தக்கது. (இவ்வாரோக்கியமான முயற்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல இந் நிறுவனத்தில் ஜனமித்திர வெளியீடுகள் அமைந் துள்ளன.)
எனினும், ஆழ்ந்து நோக்கும்போது, மேற்கூறிய பத்திரிகைகளுடாக அதிக எண்ணிக்கையான எழுத்தாளர்கள் குறிப்பாக சிறுகதைத் துறையிலே இனங்காணப்பட்டாலும் அவர்களில் கணிசமா
109

னோரது எழுத்தின் கலைப்பெறுமானம் கேள்விக் குரியதாகவேயுள்ளது. (எழுத்தின் கலைப்பெறு மானத்தில் கவனம் செலுத்திய பத்திரிகைகள் சிலவே. இவற்றுள் 'திசை’, ‘சரிநிகர்’, ‘நிகரி என்பன விதந்துரைக்கத்தக்கவை.) எனினும், அவர் களது படைப்பின் சமூக நோக்கு (மித்திரனில் ஒரு காலத்தில் வெளியான சில நாவல்கள் தவிர) பாராட்டிற்குரியது என் பதிலே ஐயமில்லை! இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர் பலர் சிறுகதை என்ற பெயரில் மணிக் கதைகள்
(சிறியகதைகள்) எழுத முற்படுவதற்கு மித்திரன்
N
தொடக்கம் தினமுரசு வரையிலான பத்திரிகைகள் காலாக விளங்கி வந்துள்ளன என்பதும் இதுபற்றி போதியளவு நாம் சிந்திக்கவில்லை என்பதும் நினைவு கூரத்தக்கது. எவ்வாறாயினும் ஈழத்து நவீன இலக்கியத்தின் தோற்றமும் பின்னர் அவ்வக் காலகட்ட வளர்ச்சியும் தளர்ச்சியும் ஈழத்து பத்திரிகைகளின் தோற்றத்துடனும் வளர்ச்சியுடனும் பின்னிப் பிணைந்துள்ளமையை மறுப்பதற்கில்லை!
மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
ப. ஆப்டீன்
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
(வரலாற்று நூல்) தில்லை நடராஜா
ッ
ல்ேலிகை 39வது ஆண்டுமலsர் ஜனவரி - உOOபு

Page 110
இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் ாத்திரங்கள்
இதிகாசப் பெண பண்பாட்டு மறுவாசிப்
அமையினும் பிரதானப்படுத்
இப்பாத் (3UTJTUL 5 சிறுகதை, ந படைப்புக்கள் இன்றைய இ இதன்வழி :ெ
ஆய்வின் நோக்குநிை பாரம்பரியத்தி
 
 

மானதொரு பொருள் நிலைப்பட்ட போக்கு மரபு
ரீதியான பண்பாட்டினை மறுவாசிப்புக்கு உட் டுத்துவதாகும். இப்போக்கில் பழைய இலக்கியங்களில் ண்பாட்டின் அடையாளங்களாக விளங்கும் கதைக் றுகன், பாத்திரங்களை மறுவாசிப்பு உட்படுத்துவது )க்கிய நடைமுறையாக இருந்து வந்துள்ளது.
g ன்றைய இலக்கியப் படைப்புக்களது முக்கிய KV
அந்தவகையில் கலாநிதி கைலாசபதி போன்றோரின் தாடர்ச்சியாக அகல்யை, சீதை, நளாயினி ஆசிய திகாசப் பாத்திரங்களையும் அவற்றுடன் தொடர்புடைய திகாசக் கதைகளையும் இன்றைய படைப்பாளிகள் வ்விதம் மறுவாசிப்புக் செய்துள்ளனர் என்பதை விமர்சனக் ண்ணோட்டத்துடன் ஆராயும் முயற்சியாக கலாநிதி. ச.யோகராசா அவர்களின் இன்றைய இலக்கியங்களில் திகாசப் பெண் பாத்திரங்கள்’ என்னும் நூல வளிவந்துள்ளது.
கற்பிற்கு எடுத்துக்காட்டுகளாகப் போற்றப்பட்ட இப் ாத்திரங்கள் தற்காலப் படைப்பாளிகளால் வெவ்வேறு ளங்களில் பார்க்கப்படுவது பற்றியதொரு ஆய்வாக இது
லக்கியங்களில்
ர் பாத்திரங்கள்: புக்கள் பற்றிய ஆய்வு
- சி.சந்திரசேகரம்
ܫ̈ܫܫܓ̈ܠ ”2ܠܵܐ
அகல் யை பற்றிய மறுவாசிப்புக்களே அங்கு நதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
திரங்களை மறுவாசிப்புக்குட்படுத்துவதும் சுதந்திரப் ாலமிருந்து இன்றுவரை எழுதப்பட்டதுமான கவிதை, ாவல், நாடகம், கூத்து உள்ளிட்ட 25 மறுவாசிப்புப் ஆய்வு மூலங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. எனவே லக்கியத்தின் குறித்த போக்கினது வரலாற்று ஒட்டம் தரிய வருகின்றது. /
முற்பகுதி இன்றைய இலக்கியப் படைப்பாளர்களின்
ல பற்றிய புரிதலுக்குப் பின்புலமாக இந்தியப் ல்ெ கற்பு எவ்வாறு நோக்கப்பட்டது என்பது குறித்தும்

Page 111
இதிகாசங்களில் இப்பாத்திரங்கள் எவ்வாறு ஆணாதிக்க அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் அமைகிறது.
மறுவாசிப்புப் பற்றிய பிரதிகளை ஆய்வாளர் நிறுவன நிலைப்படுத்திப் பார்ப்பது குறிப்பிடத்தக்க தொரு அம்சமாகும். அந்தவகையில் இந்திய விடுதலை இயக்கம், மணிக்கொடி இயக்கம், திராவிட முன் னோற்றக் கழகம், மாக்சிய இயக்கம், பெண்ணிலை வாத இயக்கம் ஆகிய ஒவ்வொரு நிறுவனங்கள் சார்ந்த கருத்து நிலைக்கு உட்பட்டு இவர்களின் மீள்வாசிப்பு போக்கு அமையுமாற்றை ஆராய்கிறார். அவ்வகையில் திராவிட முன்னேற்றக் கழக பின்னணி யில் நளாயினியும் பெண்ணிலைவாத அடிப்படையில் இம்மூன்று பாத்திரங்களும் மற்றைய இயக்கங்களது பின்னணியில் அகல்யையும் எவ்விதம் நோக்கப் பட்டுள்ளனர் என்பது ஆராயப்படுகிறது. இத்தகைய படைப்பியல் போக்கில் முக்கியப் பாய்ச்சலை ஏற்படுத்திய இந்திய விடுதலை இயக்கம், மணிக்கொடி இயக்கம், பெண்ணிலைவாத இயக்கம் ஆகிய நிறு வனங்கள்சார் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
முதலில் இந்திய விடுதலை இயக்கச் சூழலில் அகல்யை கதையை பெண்ணுரிமை பற்றிப் பேசும் வகையிலும் அகல்யையை ஒரு பெண்ணாகப் பார்க் கும் வகையிலும் படைப்பாளர்கள் கையாண்டமை ஆராயப்படுகின்றது.
மணிக்கொடி குழுவினரோ இதற்கு அப்பால் கற்பு, குடும்ப உறவு பற்றிய பாரம்பரிய கருத்தியலை விமர்சனத்திற்குள்ளாக்கும் வகையில் அகல்யை கதையைக் கையாளுவதோடு யதார்த்த தளத்தில் நின்றுகொண்டு சமுகநோக்குடனும் கலைத்துவத் துடனும் அப்படைப்புக்கள் அணுகப்பட்டுள்ளமை யினைக் காட்டுகிறார்.
ஆனால் பெண்ணிலைவாத இயக்கச் சார்பில் நின்றெழுதும் படைப்பாளர்கள் (பிரபஞ்சன், அம்பை) இப்பாத்திரங்களை ஆணின் அடக்கு முறைக்கெதி ராகக் கிளர்ந்தெழுதல் (மன உணர்வின் ஆக்ரோச வெளிப்பாடு), பெண் வீட்டை விட்டு வெளியேறல், கற்பு பற்றிய பாரம்பரிய கருத்தியலைத் தலைகீழாக் கல் என்ற பெண்ணியக் கூறுகளை வெளிப்படுத்தும் போக்கில் கையாண்டுள்ளதோடு பெண்ணின் மன வுணர்வுகள் உன்னதமாக வெளிப்படும் வகையிலும் மறுவாசிப்புக்குட்படுத்தியுள்ளமை நோக்கப்பட்டுள்ளது. அம்பையின் 'அடவி சிறுகதை பற்றி விளக்குமிடத்து
110

பெண்ணென்ற நிலையில் நின்றுகொண்டு சீதை முற்றிலும் புதியதொரு கோணத்தில் மறுவாசிப்புக் குட்பட்டுள்ளதைக் காட்டுகிறார்.
இவ்வாறே திராவிட முன்னேற்றக் கழகம், மாக்சிய இயக்கம் சார் இத்தகைய படைப்புக்கள் வேறுபட்ட நோக்குடன் ஆனால் தம் இயக்கச் சார்பு டன் அமையுமாற்றையும் அச்சார்பு அதன் பலயினமாக அமையுமாற்றையும் சுருக்கமாகக் காட்டுகிறார்.
இத்தகைய இயக்க நிலைப்பட்ட நோக்கின் அடிப் படையில் இதிகாசப் பாத்திரங்களும் கதைகளும் படைப்பாக்கத்தின் வழி நோக்கப்பட்டு வந்த முறைமையில் கட்ட நிலைப்பட்ட ஒரு வளர்ச்சி நிலை வெளிப்படுவது தெரிகிறது. பொதுவாக பாரம் பரிய இந்து தர்மம் - பண்பாடு (கற்பு, குடும்ப உறவு) எவ்வாறு பார்க்கப்பட்டுள்ளது; பாத்திர இயக்கம், மனவுணர்ச்சி வெளிப்பாடு எவ்விதம் வெளிப்பட்டுள்ளது என்ற இரு கூறுகளும் குறித்த பிரதிகளில் வெளிப் பட்டுள்ள முறையியலைப் பார்ப்பதாவே ஆய்வின் மையம் அமைகிறது. விரித்துக் கூறின் இப்பிரதிகளில பின்வரும் பொருள்நிலை, ஆக்கியற் கூறுகள் வெளிப் படுமாற்றை ஆராய்வதில் கவனம் செலுத்தியுள்ளமை தெரிகிறது.
1. கற்பு, குடும்ப உறவு பற்றிய படைப்பாளியின் கருத்துநிலை.
2. பாரம்பரிய இந்து தர்மம் எவ்வாறு கேள்விக் குட்படுத்தப்பட்டுள்ளது. இது இவரது ஆய்வினூடாக இரு போக்குகளில் வெளிப்படுவதை உணர முடிகிறது. ஒன்று பெண்ணின் மனக்குமுறலாக வெளிப்படுமாறு. (மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புக்கள்) அடுத்தது ஆணாதிக்கம், கற்பு, குடும்ப உறவு பற்றிய மரபுக் கருத்தியல்களை ஆக்ரோசமாக எதிர்த்தல் அல்லது தலைகீழாக்கல் (பெண்ணிலைவாதப் படைப்புக்கள்). Ꮽ
3. நவீன உளவியல் சிந்தனையின் செல்வாக்கு வெவ்வேறு வகைகளில் வெளிப்படுமாறு. அதாவது உளவியல் நோக்குடன் இதிகாச பாத்திரங்கள் எவ் வாறு இயங்குகின்றன. அந்தவகையில் பாத்திர இயக்கம், பாத்திய மனவுணர்ச்சி எவ்விதம் வெளிப் படுகிறது.
4. அந்த ரீதியில் உணர்வும், சதையுமுள்ள - உட லுணர்வு கொண்ட சாதாரண பெண்களாக எவ்வாறு இதிகாசப் பெண் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள் ளன என்பவற்றில்கஆய்வாளர் அக்கறை காட்டுகிறார்.
மல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 112
எனவே வெறுமனே படைப் பின் பொருள் நிலையில் மட்டும் நின்றுகொண்டு குறித்த பிரதிகளை அணுகாது அவற்றினைக் கலைத்துவக் கண்ணோட் டத்துடனும் விமர்சன நிலைப்பட ஆராய்வது இவ் வாய்வின் பலமாகும். -
அதேவேளை இப்படைப்புகளின் போதாமைகள், பலயினங்களையும் எடுத்துக்காட்டுகிறார். அந்த வகையில் பெரும்பாலான படைப்புக்களில் பெண் ணுரிமைக் குரல்கள் மனக்குமுறலளவிலேயே வெளிப் படல், அகல்யை, கெளதமர் உறவுநிலை விமர்சனத் திற்குட்பட்டளவு கற்பொழுக்கம்சார் விடயங்கள் விமர் சிக்கப்பட்டமை, பாத்திர உணர்வு செயற்பாடு முக்கியம் பெற்றளவு சமூக உணர்வு முக்கியம் பெறாமை போன்ற போதாமைகளைக் காட்டுவதுடன் இத்தகைய புதிய நோக்கின் மத்தியிலும் குறித்த பாத்திரங்கள், கதைகள் மதநோக்கில் பார்க்கப்படும் - பாரம்பரிய நோக்கை மீள வலியுறுத்தும் (சம்பந்தன் பிச்சமூர்த்தி) ஆரோக்கியமற்ற முயற்சிகள் பற்றியும் விளக்குகிறார்.
IF
உ0ழதத)
நாட்டுக் கூத்து சக்கரவர்த்த அவர்களுக்கும் நாதஸ்வர மேதை யாழ்ப்பாண பல்கலைக் கழகம் கெளரவிக்க இருக்கிறது. மரண அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆழ்ந்த மகிழ்ச்சி உணர்வுடன் 6
அத்துடன் இந்தப் பட்டமளி கழத்தையும் பாராட்டுகின்றோம்.
1느
111

இறுதியாக ஈழத்துப் படைப்பாளர்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவது ஒப்பீட்டு ரீதியில் மிகக் குறைவாக உள்ளமையைச் சுட்டிக் காட்டு வதுடன் நவீன இலக்கியப் பிரக்ஞை காரணமாகவே அகல்யை கதை பலரால் மறுவாசிப்புக்கு உட்படுத்தப் பட்டுள்ளமையை ஆராய்கிறார். அந்தவகையில் தளையசிங்கம், சில்லையூர் செல்வராசன் போன் றோரின் குறித்த படைப்புக்கள் அகல்யையின் மன உணர்வுகளை, போராட்டங்களை வெளிப்படுத்து வனவாகக் காட்டும் அதேவேளை அனேகமான படைப்புக்கள் பாரம்பரிய தளத்தில் நின்றியங்கல், கற்பு, கும்ப உறவு பற்றிய பாரம்பரிய கருத்தியல் களை கேள்விக்குட்படுத்தாமை போன்ற போதாமை களைக் கொண்டுள்ளமையை உணர்த்த விளைகிறார்.
மொத்தத்தில் இந்நூல் இதிகாசப் பெண் பாத்திரங்கள் மீதான இன்றைய மறுவாசிப்புக்கள் பற்றிய ஒரு ஒட்டுமொத்தப் பார்வையைத் தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தின்றோம்.
தி நடிகமணி வி.வி. வைரமுத்து என்.கே.பத்மநாதன் அவர்களுக்கும் கெளரவ கலாநிதிப் பட்டமளித்துக் த்தின் பின்னர் இந்தக் கெளரவம் கலைஞர் இருவரையும் மல்லிகை வாழ்த்துகின்றோம்.
ப்பை நல்கிய யாழ். பல்கலைக்
w A.
- ஆசிரியர்.
ல்ேலிகை 392 urges éobagoibuDasí agavauf — 2oong,

Page 113
119
OKWhОee/Ć
9|alias'
ATC) FREIGH
Clearing, 3
453, T.B. Jaya Colombo - 1C Tel: 2678953/. 5-363
FaX: 26.
 
 

oplment Co
* ပဲ၊ပciဖf%Au© 議 TSMS
vrvarding
h MaWatha, ). Sri Lanka 4, 5-363637, 638 7895.3
முல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 114
மிழகத்தை ஊற்றுமூலமாகக் கொண்ட
உலகத் தமிழினத்தின் ஒரு கூறு ஈழத்
தமிழினம். தமிழ் நமது மொழி, தமிழினத்திற் கென்று பழமைமிக்க ஒரு பாரம்பரியம் இருக்கிற்து, செழுமைமிக்க ஒரு கலாசாரம் இருக்கிறது. ஓர் இனத்தின் இருப்பும் அதன் வளர்ச்சியும் செழுமையும் அதன் கலாசாரத்தினுடாகவே பேணப்படுகின்றன, பதிவு செய்யப்படுகின்றன, எதிர்காலத் தலைமுறை யினருக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தமிழினத் தினது கலாசாரத்தின் மிகப் பிரதான கூறுகளில் ஒன்று தமிழிசை உலக நாகரீகத்தில் உச்ச நிலை யிலிருந்த தமிழிசையை மீளக்கொணர்வதற்குரிய ஆரோக்கியமான எத்தனங்கள் ஈழத்தில் இடம்பெற்று வருவது தமிழ் உணர்வுமிக்கவர்களுக்குப் பெரு மகிழ்வினைத் தருகிறது.
இசைத் tбай 6laът. ஆரோக்கியமா
பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சு ஊடகங்களிலும் வானொலிகள். தொலைக்காட்சிகள் போன்ற இலத்திரனியல் ஊடகங்களிலும் தமிழிசை பேசுபொருளாகி வருகிறது. 2003இல் ஈழத்தின் மிகப் பெரிய கலாசார நிகழ்வுகளில் ஒன்றான, கம்பன் கழகத்தின் இசை வேள்வியினது இறுதி நாள் நிகழ் வான கருத்தரங்கில் “இசைத் தமிழ்” பற்றியும் ”தமிழ் இசை வரலாறு’ பற்றியும் இசை மேதை மதுரை ஜி.எஸ்.மணி நிகழ்த்திய பேருரைகள் புதைபொருளாகி விட்ட பல கலாசாரப் பொக்கிசங்களை சிந்தனை நுகர்விற்குத் தந்தன. வளமிக்க வட இந்திய இசைக்கு மட்டுமின்றி மேற்குலகின் பாரம்பரிய இசையாகப் போற்றப்படும் கிரேக்க இசைக்கும் தமிழிசை மூல
11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாகத் திகழ்ந்திருப்பதை ஆதாரபூர்வமாக செய்முறை விளக்கங்களுடன் அற்புதமாக எடுத்தியம்பினார்.
இரண்டாம். நாள் இசையரங்கிற்குத் தலைமை வகித த நம் மவரான சங்கத விற் பணி னர் ஏ.கே.கருணாகரன் கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கு மிடையிலுள்ள தொடர்புகளைக் கூறுமாறு மதுரை ஜி.எஸ்.மணியிடம் கேட்ட கேள்வி விடையளிக்கப் படாமலே விடப்பட்டதன் காரணத்தை அறிந்த்வர்கள் மட்டுமே நன்கறிவார்கள்.
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் இசைக் கல்லூரியின் தமிழார்வமிக்க சில ஆசிரியர் களும் மாணவர்களும் தமிழிசை பற்றிப் பேசவும் தேடவும் ஆரம்பித்துள்ளார்கள் அற்புதமான கலைஞரும் தமிழுணர்வுமிக்கவருமான பேராசிரியர்
தமிழின் ணர்விந்கு ன சமிக்ஞைகள்
- ராஜ முரீகாந்தன்
சி.மெளனகுரு இந்நிறுவனத்தின் ஒருங்கிணைப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தமிழிசையின் மீள் கொணர்விற்குப் பெரிதும் உதவக்கூடும். தமிழிசை பற்றிய விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளை முதலில் மேற்கொண்டவர்களில் மிக முக்கியமானவரான சுவாமி விபுலானந்தரின் பெயர்பூண்ட இந்நிறுவனமே தமிழிசை யின் மீளுதயத்திற்கு மிகவும் பொருத்தமான தல மாகும். இங்கிருந்து தமிழிசை உலக நாடுகள் எங்கணும் புதிய வீச்சுடன் எடுத்துச் செல்லப்பட வேண்டும் . இதன் பொருட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசை மன்றத்தின் தமிழிசை அறிஞர்களின் ஆதார உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

Page 115
கர்நாடக இசை தமிழர்களின் பாரம்பரிய இசையல்ல
தமிழர்களின் பாரம்பரிய இசை கர்நாடக இசையேயென்ற தவறான புரிதலுடன் மிகப் பெரும் பாலான தமிழர்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள், பாடசாலை முதற்கொண்டு பல்கலைக் கழகம்வரை கர்நாடக இசையே தமிழர்களின் இசை வடிவமாகப் போதிக்கப்பட்டுவருகிறது. இலங்கை கலா சார அமைச்சின் கலைக் கழகத்திலும் தமிழர்களின் இசையாக கர்நாடக இசையே கொள்ளப்படுகிறது. தமிழிசைபற்றிய முறையான ஆய்வுகளைச் செய்து தமிழிசையின் தொன்மையையும் பெருமைகளையும் உலகிற்கு உணர்த்திய சுவாமி விபுலானந்தரின் பெயர் கொண்ட இசை நிறுவனத்திற்கூட கர்நாடக இசையே பயிற்று நெறியாக உள்ளது.
கர்நாடக இசையின் தோற்றம் பற்றிய ஆய்வுகள் அது தமிழர்களின் பாரம்பரிய இசையல்ல என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளன.
கர்நாடக இசையின் தோற்றம்
கர்நாடக இசையின் தோற்றம் பற்றி இரண்டு எண்ணக்கருக்கள் முன்வைக்கப்படுகின்றன. கரை நாட்டில் தோற்றம் பெற்ற கரை நாட்டு இசை கர் நாடக இசையாக மருவியது என்பது ஒர் எண்ணக்கரு. ஆனால் தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க சான்றுகள் எவையுமே இதற்கில்லை.
தமிழகத்தில் கர்நாடகம் என்பது பழமையைக் குறிக்கும் ஒரு சொல்லெனக் கொள்ளப்படுவதால் “பழமையான இசையை” சுட்டும் கர்நாடக இசை வழக்கிலுள்ளது என்பது பிறிதொரு எண்ணக்கரு. ஆனால் கருத்தியல்ரீதியில் இந்த எண்ணக்கரு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது பழமையான இசையுமல்ல, சில நூற்றாண்டுகால வரலாற்றினையே கொண்டுள்ளது.
கர்நாடக இசையின் பிதாமகராக, ஆதி குருவாகக் கொள்ளப்படுபவர் புரந்திர தாஸர். இவர் வாழ்ந்த காலம் 1483 - 1564. ரகுநாத தாஸர் என்ற இயற்பெயர் கொண்ட கர்நாடகத்தவரான இவர் திருப்பதியில் தங்கியிருந்தபோது தமிழிசை ஞானம் பெற்ற புரந்திர தாசியிடம் இசையைப் பயின்றார். குருவின்மீது கொண்ட பக்தியின் காரணமாக தனது பெயரைப் புரந்திர தாஸர் என்று மாற்றிக்கொண்டார்.
11
 
 
 
 

14ஆம் நூற்றாண்டில் அலாவுத்தீன் கில்ஜியின் ஆக்கிரமிப்பைத் தடுத்து இந்துக்களைக் காக்க விஜயநகர அரசு உதயமாகியது. 15ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழ் சூழல் த்ெலுங்கு மன்னர்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சமஸ் கிருதத்தை அதிகளவில் உள்வாங்கிக்கொண்டன.
விஜயநகர மன்னர்களின் ஆட்சியதிகாரத்தில் புரந்திர தாஸர் மிகுந்த செல்வாக்கினைக் கொண்டி ருந்தார். இவரையடுத்து சியாமா சாஸ்திரிகள் (1762 1827). தியாகராஜ சுவாமிகள் (1767 - 1847), முத்துசாமி தீட்சிதர் (1776 - 1835) ஆகிய இசை மூவர்கள் கர்நாடக இசை மரபை உறுதியாக வேரூன்றச் செய்தார்கள். இவர்களில் மிகச் சிறப் பானவராகப் போற்றப்படுபவரான தியாகராஜ சுவாமிகள் தமிழ்ப் பண்ணிசை ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த திருவையாறில் தந்தை இராம பிரமத்திற்கும் தாய் ஸிதம்மாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஸொண்டி வேங்கட ரமணய்யா விடம் குருகுலவாசம் செய்து இசை பயின்றார். பரத மஹரிஷியின் நாட்டிய சாஸ்தருமும் முறையாகக் கற்றார். சமஸ்கிரதம் சேர்ந்த மதுரமான தெலுங்கில் அற்புதமான கீர்த்தனைகளை கர்நாடக சங்கீதத்திற் குத் தந்தார். தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் சுத்தமான தெலுங்கில் எழுதப்படவில்லையென்பது தெலுங்கு மொழிப் பண்டிதர்களின் கூற்றாகவிருப்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
உலகின் மிகத் தொன்மையான இசையாக இசை ஆய்வாளர்களினால் கொள்ளப்படும் தமிழிசையிலிருந்தே கர்நாடக இசை உருவாக் கப்பட்டுள்ளது. ஆபிரகாம் பண்டிதரின் ‘கர்னாமிர்த சாகரம்”(1917) என்ற இசை ஆய்வு நூலின்மூலமும் உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியராக அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து முறையான இசை ஆய்வுகள் செய்த சுவாமி விபுலானந்தரால் 1936இல் சென்னைப் பல்கலைக் கழக செனற் அரங்கில் தமிழர் இசைபற்றி நிகழ்த்தப்பட்ட பேருரை மூலமும் இது தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
இசைக்கு மொழியில்லையா?
தமிழிசையைப் பேசுபொருளாகக் கொள்ளும்
போது 'இசைக்கு மொழியில்லை என்ற வாதம் சில
இசைக் கலைஞர்களால் முன்வைக்கப்படுகின்றது.
மொழியற்ற இசை செவிநுகர்வின்போது செவிப்
பறைகளில் உணரப்படும் அதிர்வுகளின் ஆனந்தத்தை
சில்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 116
மட்டுமே தரும். கட்புலக் கலை தவிர்ந்த அனைத்துக் கலை வடிவங்களினதும் பூரணமான புரிதலுக்கு மொழி இன்றியமையாதது. இசைக் கருவிகளின் ஆலா பனங்களுக்கு இசைக்கு மொழியில்லை' என்பது ஓரளவு பொருந்தும். ஆனால் அவற்றில் பாடல்கள் இசைக்கப்படும்போது புரிதலுக்கு மொழி அவசியமா கிறது. புரிதலற்ற வாய்ப் பாட்டுக்கள் எந்த வகையிலும் பூரண இசை நுகர்வின் இன்பத்தை ஒருபோதும் 35JuDITILIT.
பண்டைத் தமிழிசையில் ஏழிசைகள் குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன முறையே மயில், காளை, ஆடு, கிரவுஞ்சப்பட்சி, குயில், குதிரை, யானை என்ப வற்றிலிருந்து பெறப்பட்டு இவையே ச, ரி, க, ம, ப, த, நி ஆகப் பரிமாணம் பெற்று C, D, E, F, G, A, B ஆக மேற்கத்திய பாரம்பர்ய இசைக் குறி களாகக் கொள்ளப்படுகின்றன. மொழி வளர்ச்சி ! யினுடாவே இசை வளர்ச்சி இடம்பெற்றுள்ளது.
தமிழிசையின் கொணர்விற்கு அரும் பணியாற்றிய அண்ணாமலை அரசரின் கூற்றொன்று இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. “தாய்மொழியில் உள்ள பாடல் களை இசையரங்கின் முடிவில்தான் பாடுவது என்று தள்ளிவைத்தல் தமிழ் நாட்டில் மட்டுமே காணப்படுகிறது. பிற மொழியில் உள்ள பாடல் களின் இசை ஓசையைத் தான் தமிழர்கள் இப்போது அறிய முடிகிறதேயன்றி, முற்றிலும் பாட்டின் உணர்ச்சியுள் புகுந்து அநுபவிக்க முடிவதில்லை. பாடல்கள் தமிழில் இருந்தால் இசை நயத்துடன் கருத்தின் நயத்தினையும் அறிந்து பாடுகின்றவரின் உணர்ச்சியோடு ஒத்த உணர்ச்சி அடைய இயலும். இவ்வுண்மை இசை யரங்குகளில் பிற மொழிப் பாடல்களைப் பாடும் போதெல்லாம் சோர்வாயிருந்து தமிழ்ப் பாடல் களைக் கேட்டவுடன் தமிழருக்குத் திடீரென உண்டாகும் கிளர்ச்சியானதும் மகிழ்ச்சியானதும் தெள்ளிதின் உணரப்படும். முழுவதும் தமிழ்ப் பாடல்களாக அமைந்த இசையரங்குகள் இசைக் கலைஞர்களால் விரைவில் நடைபெறக் கூடும்.”
கர்நாடக இசை தென்னிந்திய இசையேயாகும்
கர்நாடக இசை தெலுங்கு, கன்னடம், சமஸ் கிருதம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில்
இசைக்கப்பட்டுவருகின்றது. இவற்றில் சமஸ்கிருதம் தவிர்ந்த ஏனைய மொழிகள் அனைத்துமே தென்னிந்
115
 

திய மொழிகள். ஆனால் இம் மொழிகள் யாவும் வடமொழியான சமஸ்கிருதத்தின் செல்வாக்கிற் (35 t I u 60)6)].
15ஆம் நூற்றாண்டு தொடக்கம் தெலுங்கு மொழி பேசும் மக்கள், பண்டிதர்கள், ஜமீன்தார்கள், பாளையக் காரர்கள் என்று பல தரப்பினரும் தமிழகத்தில் அதிகார பலத்துடன் வாழத் தலைப் பட்டார்கள். இதனால் கர்நாடக இசை மரபின் இருப்பும் பரம்பலும் வலுவடைந்தன. இசைத்துறை யில் ஈடுபாடும் ஞானமும் கொண்ட தமிழர்களின் மனங்களிற் கூட தெலுங்குக் கீர்த்தனைகளே உயர்வானவையென்ற தவறான எண்ணக்கருக்கள் விதைக்கப்பட்டு அவை விசாலித்து வளர்க்கப் பட்டன. தெலுங்கு, சமஸ்கிருத மொழி ஆதிக் கங்கள் தமிழிசையை படிப்படியாக மறையச் செய்தன. தமிழ் வித்துவான்கள் பலர் தமிழை மறந்து தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடி தமது திறமைகளுக்குப் பாராட்டும் பொருளும் பெறுவதிலேயே வினைத்திறனுடன் கூடிய அக் கறை செலுத்தினார்கள். தமிழில் பாடல் இசைப் பது இழிவாகவும் திட்டாகவும் தமிழர்களாலேயே கருதப்படும் கொடுமை நிகழ்த்தப்பட்டுவருகிறது.
பல்மொழி பேசப்படும் நாடொன்றில், பல்கலா சாரம் பேணப்படும் நாடொன்றில் இனங்களை இணைக்கும் கலாசாரப் பிணைப்பாக கர்நாடக இசை கொள்ளப்படுவது முற்றிலும் வரவேற்கத்தக்கதே. இதனை அடியொற்றியே மகாகவி பாரதி "சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே' என்று பாடியுள்ளான். பாரதியின் காலம் தேசிய ஒருமைப்பாட்டினுாடு தேசிய விடுதலைக்கான போராட்டக் காலம். மொழியால் வேறுபட்டிருந்த பல்லின மக்களை ஒருங்கிணைக்கும் பாரிய பணியை கர்நாடக இசை வெற்றிகரமாகவே செய்துவந்துள்ளது. கர்நாடக இசை தென்னிந்திய மக்களை இறுக்கமாகப் பிணைத்துவைத்திருந்தது.
ஆனால் தமிழினத்தின் தனிச் சொத்தான தமிழிசையை ஒழித்து அதன் கல்லறைமீது கர்நாடக இசையை தழிழர்களைக் கொண்டே செழித்து வளர்த்து வருவது எந்தவகையிலும் நியாயமானதல் ல, இனியும் இக் கொடுஞ செயலை தமிழினம் அங்கீகரிக்கவேசுடாது.
பல்லாயிரம் ஆண்டுகால இசைப் பாரம் பரியத்தைக் கொண்டிருந்தும் உலகில் தமிழினம் மட்டுமே தனது கலாசாரத்தின் பிரதான கூறான இசைக்கு பிறிதொரு மொழியான தெலுங்கை வரித்துக் கொள்ளும் அவலம் நிகழ்த் தப்
சில்லிகை 39ajg5 é5aribudasi agavalyf – 2ool

Page 117
பட்டுள்ளது. தமிழினம் தனது மதத்திற்கும் பிறி தொரு மொழியான சமஸ்கிருதத்தினை வரித்துக் கொண்டுள்ளமைபற்றியும் தமிழர்களின் கவனங் கள் குவிமையப்படுத்தப்படவேண்டும். தழிழ் தனது இசையை இழந்துள்ளது, தமிழ் தனது மதத்தை இழந்துள்ளது. இவை இரண்டினது மீள் கொணர்வுகளும் தமிழினத் தின் நிலை பேறான இருப்பிற்கும் தமிழ் மொழியின் ஆரோக் கியமான வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை, இனியும் காலந்தாழ்த்தாது செய்து முடிக்கப்பட வேண்டியவை. -
கொழும்புக் கம்பன் கழகமும் கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தர் இசை, நடன டத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் தமிழிசை யைப் பேசுபொருளாகக் கொள்ள ஆரம்பித்துள்ளமை தமிழின வரலாற்றில் சுவடுகளைப் பதிக்கும்.
OyPilih YaScy G
116
tk 9a (Elka 39'ya
DALF
JUTE GUNNy BAGS, TEACH
IMPORTERS OF ALL JV ፲ፇE፳Rዚ 8RAIND 0ጅዚዚ0፻ዘ4/ሃ
Jayasanii)
1 18/7, S.R. Scarov (Wolfendhol Street), Co Tel : 24456 15, 2348430. Stores : E-mail : jaycarc

யாழ் பல்கலைக் கழக நுண் கலைப் பீடம், வட இலங்கை சங்கீத சபை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இளங் கர்நாடக இசைக் கலைஞர் சங்கம், ஆலாபனா கர்நாடக இசை அமைப்பு என்பவை உட்பட ஈழத்திலுள்ள அனைத் துக் கலாசார அமைப் புக் களும் தமிழிசையை வரித்துக் கொள்ளவேண்டும் . கல்வி, கலாசார அமைச்சும் அதன் உள்ளடக்க மான கலைக் கழகமும் வடக்கு கிழக்கு கல்வி, கலாசார அமைச்சும் தமிழிசையையே தமிழர் களின் பாரம் பர்ய இசையாகக் கொள்ள வேண்டும். இசைக் கலைஞர்களும் தமிழறிஞர்களும் கல்விமான்களும் தமிழ் மக்கள் அனைவரும் இப் பணியில் முனைப்பாக ஈடுபடவேண்டும். அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் தமிழிசையை மீளக் கொணரும் அவசிய தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
3 plments “Ĉoj
ueخمpecial Jه :
RS IN "EST, TWINE, POLYTHENE
UTE ITEMS, PAPER, F (CHINESF & JAPANESE)
{{fl
CanCamutifu Mw, lombo - 13. Sri LCinkC. 2345099 FCX: 0094 – 330 | 64
ImGSlf.net.lk
」
சில்லிகை 392,5 84oilbupassi agarays - 2ool

Page 118
GFIT ழ மண்டல் ஒவியர் சேரியில் அந்த வெண்நிலவும் களிகொண்ட இரவில் தாளமும் இசையும் பணிய
அம்பலத்தரசே நீ ஆடிய தெருக்கூத்தில் எம்மை பாரதப் போர்க்களத்து யுக நேற்றில் ஒருகணமும் கட்டியங்காரனோடு இன்றில் மறுகணமும் கால இடைவெளியுள் ... 3 பந்தாடிச் சென்றாயே
உன்னை யாரோ'பந்தாடிச் சென்றது.
அன்று காவியம் சொன்ன உன் உடல் சிவன் முதலாம் அரங்காடிகளின் முகங்களாலும்
முகமோ மாகவிஞர்களது நாவுகளாலும் பின்னப் பட்டிருந்தது.
நீ நிகழ்தியது பாரதக் கதைமட்டுமா நம் மண்ணின் புராண ஆன்மா நம் சிற்றுார்களின் இதிகாச முழுமை அறம் வெல்லும் என்கிற நம் பரம்பரையின் பாடல்கள்
நமது ஞானத்தின் வேர்
மத்தாப்பைக் கொண்டாடும் வேடிக்கைத் தமிழகத்தில் தாரகையே உன்னுடைய காற் சுவடுகூட தாயம் பிசகாமல்,
உன் ஆவி பிசகியதேன்.
117
 
 

ண்ணப்ப தம்பிரான்
நினைவில்.
வ.ஐ.ச. ஜெயபாலன்
உடல் மொழியால் ஒரு தேசத்தின் நினைவுகளில் நீ எழுதிச் சென்ற வேதங்கள் தமிழ் உள்ள நாள்வரைக்கும்
தாழிசையில் புத்துயிர்க்கும்.
உன் பொற்தாலிப் பூங்கொடியில் பூத்த மலர் இரண்டு மலர் உன் கலை ஞானமாம் பூங்கொடிக்கோ கால்மெல்லாம் பொன்மலர்கள்.

Page 119
O&es/O lishes (6.
9ItaCEisai. 39
Ulla SHOPPNG
Dealers in J. V., Rad Audio Casselle Дихиry & Ta
152, Banksh
“Colombc el: 2446O2
RaX : 32
119 ܗܝ
 
 
 
 
 
 

بمسممالك مما"
hls
G CENWTURE
lio, tideo Casselles, , Calculators, Incy (joods.
all 5treet,
- 1 1. 3, 244 1982
3472
v AhaoibuD6Assi garauff - 2oo 396 ومعرضا

Page 120
னித தரிசனங்கள் எனும் தொடரொன் உங்களுக்கு நினைவிருக்கலாம். கதைய விதமாக அதை எழுதியிருந்தேன். நான் . ெ ஏற்படுத்திய மனப் பாதிப்புக்களின் பதிவுகள் பேரைக் காண்கின்றோம். அல்லது சந்திக்கின் இனிய அநுபவங்களாக அல்லது சின்னக் கிற குறிப்பிட்டிருந்தேன்.
இதுவும் அந்த மாதிரியான ஒரு தொட சற்று வித்தியாசமானது. உன்னதமான மன பற்றியே மனித தரிசனத்தில் பொதுவாக விட்டது. இதில் சின்னச் சின்ன விஷயங்களுட விஷயங்கள் என்றால் சிறுமைத்தனமான சுபாவி சில சில மனிதர்களும் நம்மிடையே இருக்க களைப் பற்றிய கதைகளும் வரலாம். அது மிகச் சாதாரணமான சின்ன விஷயங்களுப உண்டு. சிலருடன் சில சந்தர்ப்பங்களில் ந முறை வேறொரு வேளையில் நினைத்துப் வேடிக்கையாயிருக்கும். அந்த வகையிலும் மனித வாழ்வின் வேறு வேறு பக்கங்களைத் ெ
1. இந்த முகம் எந்த முகம்?
அந்த முகம் எந்த முகம் என்பது எனக்கு உண்மையிலேயே நினைவில் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் ஒருநாள் அவர் என்னைக் காண வந்திருந்தார்.
எனது புத்தக இல்லத்தின் பின் அறையில், அப்போது நான் சில கடமைகளில் ஈடுபட்டிருந்தேன். மதியம் பன்னிரண்டு மணியிருக்கும். கடையிற் பணி புரிபவர் என்னிடம் வந்து அவரது வருகையைப் பற்றிக் GnsóGOTTi.
“உங்களை யாரோ தேடி வந்திருக்கினம்!”
'uTTg,
”தெரியவில்லை. காலமையும் வந்து தேடியிட்டுப் போனவர்.”
நான் எழுந்து வெளியே வரவில்லை. அவரது வருகை ஏதாவது அலுவலாக வந்திருந்தால், அவருடன் கதைத்துச் செலவிடப் போகும் நேரம், எனது வேலை களைத் தடை செய்யக்கூடும் என நினைத்தேன். இது உள்ளு) சற்று எரிச்சலையும் தந்தது. இதனால், முன்னே வந்திருப்பவர் யாரென்று எழுந்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படாமலிருந்தது.
119

று ஏற்கனவே நான் மல்லிகையில் எழுதியது மல்லாது கட்டுரையுமல்லாது இரண்டும் கலந்த ன்றுவந்த தேசங்களில் கண்டுவந்த நேசங்கள்
அவை. எங்கள் வாழ்நாட்களில் இப்படிப் பல றோம். அவர்களுடனான அறிமுகமும் பழக்கமும் ல்களாக மனதிற் பதிந்திருக்குமென அத்தொடரில்
தான். ஆனால் தப் பண்புகள் எழுத நேர்ந்து ) வரும். சின்ன 1ங்கள் கொண்ட றொர்கள். அவர் LDG LD6ð6oT LD6ð ) எழுதுவதற்கு ாங்கள் பழகும்
பார்க் கையில் இந்தத் தொடர் தாட்டுக் காட்டும்.
- சுதாராஜ்

Page 121
“இருக்கச் சொல்லுங்கோ!” எனக் கூறிவிட்டு எனது வேலையில் தொடர்ந்து ஈடுபட்டேன்.
சற்று நேரத்தில் பணியாளர் திரும்பவும் வந்தார்:
”அவர் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். (காத்துக் கொண்டிருக்கிறார்)” அதாவது எனது
அலட்சியம் (அப்படித்தான் அவர் நினைத்திருப்பார்) பணியாளுக்கும் பொறுக்கவில்லைப் போலிருந்தது.
எழுந்து வெளியே எட்டிப் பார்த்தேன். கடை வாசலில் அவர் நின்றார். தலையில் குல்லா (தொப்பி) அணிந்திருந்தார். வயதானவர் என்னைக் கண்டதும் முகம் மலர்ந்து (அப்படி நினைத்துக் கொண்டேன்) வாய் நிறைய சிரிப்பை வெளிக்காட்டினார்.
அவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. அவரை எங்கோ பார்த்த ஞாபகம் போலிருந்தது. ஆனால் நினைவுக்கு வரவில்லை. பதிலுக்கு நானும் சிரித்தேன். w
எனினும் உடனே அவருக்கு அண்மையாகப் போகவில்லை. அவர் யாரென்று ஊகித்து அறிவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.
“நில்லுங்க. வாறன்!” எனக் கைச் சைகையில் காட்டிவிட்டு சில அலுவல்களில் ஈடுபட்டேன்; அப்படி அலுவல்கள் செய்வதுபோல பாசாங்கு செய்தேன். : உண்மையில், வந்தவர் யாராக இருக்குமென்று நினைவுகளை மீட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவரை முன்னர் எங்காவது, எப்போதாவது கண்டிருக்கிறேனா. அல்லது அது எனது மனப் பிரமையை என்று தோன்றியது. அவரைப் போல இன்னொருவரைக் கண்டிருக்கலாம். குல்லா அணிந்த, வயதான, மழிக்கப்படாத முன்தோற்றத்துடன் அன்றாடம் பலரைக் காண்கிறேன். முன்பின் அறிமுக மில்லாத ஒருவராயிருந்தால் எதற்காக வந்திருப்பாரோ? (அவ்வப்போது சிலர் உதவி கேட்டு வருவதுண்டு) அவரது யாசிக்கும் கண்கள் அதைத்தான் கூறின. சற்று நேரத்தைக் கடத்தினேன். கடைக் கண்ணால் கடை வாசலில் நிற்பவரை நோட்டம் விட்டவாறு கடையிற் பணிபுரிபவர்களுக்கு இதைச் செய்! ‘அதைச் செய்' எனக் கட்டளைகள் இட்டுக் கொண்டி ருந்தேன். (அதாவது, நான் படு பிஸியாக இருக் கிறேனாம் என்பதை அவருக்குக் காட்டும் முயற்சி.) அவர் என்னையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
120
 
 

அவர் எனது தந்தையாரின் கூட்டாளியாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது. எனது தந்தையார் அண்மையிற்தான் காலமானார். யுத்த நிலைமைகள் காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து மக்கள் திக்குத் திக்காக இடம் பெயர்ந்து பல வருடங்கள் ஆச்சு. தங்களது நெஞ்சுக்கு நெருக்க மானவர்கள், நண்பர்கள், உறவினர்களது மரணச் செய்திகள்கூட, காலம் கடந்துதான் அவர்களைச் சென்றடைகிறது. எனது தந்தையார் இறந்த பிறகு பல நாளான பின்னரும் துக்கம் விசாரிக்க ஒருசிலர் வந்து போயிருக்கிறார்கள். இவரும் அப்படிப்பட்ட ஒருவராயிருக்குமோ?
புத்தளம் கற்பிட்டி வீதியில், நுரைச்சோலைக்கு அண்மையாக உள்ள இடம் பெயர்ந்தோர் முகா மொன்றில் எனது தந்தையாரின் நண்பர் ஒருவர் இருக்கிறார். மரக்காயர்’ என்றுதான் தந்தையார் அவரைக் குறிப்பிடுவார். மரிக்கார் எனும் பெயர் அப்படி மருவியிருக்கலாம். முன்னர் ஒருமுறை அவரைச் சென்று பார்த்திருக்கிறேன். அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த எனது தந்தை, மரக்காயரின் விலாசத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.
அவளை ஒருமுறை போய்ப் பார்த்து, கையிலை கொஞ்சக் காசு குடு. பாவம்! கஷடப்பட்டுப் போனான்’ என எழுதியிருந்தார். அவரது கண்ணிர்த் துளிகள் கடிதத்தில் விழுந்திருந்தன. அப்போது மரக்காயரைப் போய்ப் பார்த்துக் காசு கொடுத்துவிட்டு வந்தது நினைவில் வந்தது.
இவர் அவராக இருக்குமோ?
அவரது சாயல் போலத்தான் தெரிகிறது. சரியாக நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.
“என்ன கடுமையான வேலையா..? அவரும் பொறுமை இழக்கும் கட்டத்துக்கு வந்துவிட்டார் போலிருந்தது.
இதற்கு மேலும் நேரத்தைக் கடத்துவது சரியல்ல எனும் எண்ணமும் ஏற்பட, அவருக்குக் கிட்டப் போனேன். அவருக்குப் பக்கத்திற் போய் நின்றேன். அவரது முகத்தைப் பார்த்தேன். வியர்வைத் துளிகள் அவரது முகமெங்கும் விரவியிருந்தது. வியர்வையில் சேர்ட் நனைந்திருந்தது.
"நான் காலமையே. வந்திட்டன். இங்கு வந்து பார்த்தால் நீங்க இல்ல.! பிறகு உங்கட வீட்டுப் பக்கம் போனன். புள்ளைக உள்ளுக்க விளையாடிக்
சில்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oடி

Page 122
கொண்டிருந்தாங்க. கூப்பிட்டுக் கேட்டன். அப்பா இல்ல எண்டாங்க.”
அவரது முகத்தைப் பல கோணங்களில் விடுத்து விடுத்துப் பார்த்தேன். இந்த முகம் எந்த முகம்?
`சரியான வெயில். நோம்பு வேற. புளுக்கம் ஒரு பக்கம் மனுசனைக் கொல்லுது. களைச்சுப் போனன்.”
அவர் தானாகவே உள்வந்து கதிரையில் அமர்ந்து கொண்டார். சற்று விலகி அவருக்கு இடம் கொடுத்து, பின்னர் பக்கத்தில் வந்தேன்.
அவர் சோர்ந்து போயிருந்தார். எனக்குக் கவலை யாயிருந்தது. எனது தந்தையை ஒத்த வயசு, என்ன கஷ்டமோ? பெருநாளுக்கும் இன்னும் சில தினங்கள் தான் இருந்தன. ஏதாவது பண உதவி கேட்க வந்திருப்பாரோ என்னவோ? அல்லது வேறு எதற்காக இவர் என்னைத் தேடி வரவேண்டும்?
“எனக்கு. ஓரிடத்திலயிருந்து வரவேண்டிய கொஞ்சக் காசு கிடைச்சுது. இருபத்தையாயிரம். ரூபா. அதில ஐயாயிரத்தை எடுத்துக் கொண்டு மிச்சத்தைக் கொண்டு வந்தன். V.
இவர் ஆள் மாறி, கடை மாறி வந்துவிட்டாரோ?
“காசு கொண்டு வந்தீங்களா. ஏன்?”
“உங்களுக்குத் தர்றதுக்கு!”
அந்தக் கணத்தில் பளிச்சென அவர் நினைவுக்கு வந்தார்.
அவரது பெயர் சாகுல் ஹமீது சுருட்டு அடிக்கடி அடிப்பதால் சுருட்டு சாவல் என்ற பெயரிற்தான் அறியப்பட்டிருந்தார். சுமார் நான்கோ ஐந்து வருடங் களுக்கு முன்னர், தொழிலொன்றின் தேவைக்காக ஓர் இடம் குத்தகைக்கு எடுப்பதற்குத் தேடினேன். ஒரு புரோக்கர் மூலம் அவரது இடம் பேசப்பட்டது. அறுபத்தையாயிரம் ரூபா முற்பணம் கொடுத்தேன். அதற்கு எழுத்து மூலமான ரசீதோ, கடிதமோ எதுவுமே பெற்றுக் கொள்ளவில்லை. இரண்டொரு நாட் களிலேயே அந்த இடம் சம்பந்தமாக சிக்கல் தோன்றியது. இதை இன்னொரு பகுதி சொந்தம் கொண்டாடிக் கொண்டு வந்தது. இதுபற்றி அவரிடம் விசாரித்ததில். மற்றப் பகுதியினருக்கு தொழில் செய்வதற்காக பத்து வருடங்களளவில் அந்த இடத்தைக் குத்தகைக்குக் கொடுத்திருந்தாராம்.
121

பின்னர் அவர்கள் விட்டு விலக மறுக்கிறார்கள். அதனால் வழக்கு நடக்கிறது. இடம் எப்படியும் தனது கைக்கு வந்துவிடும் எனக் கூறினார். இந்த இழுபறி நிலை காரணமாக நான் விலகிக் கொண்டேன். ஆனால் கொடுத்த முற்பணத்தை திரும்பப் பெறுவது கஷ்ட மாயிருந்தது.
அவர் பல பிள்ளைகளைக் கொண்ட குடும்பஸ்தர். கஷ்ட நிலையிலிருந்தார். நான் கொடுத்த பணமும் ஏதோ கடனை அடைக்கப் பயன் பட்டதாம், கேட்டுப் பலனில்லை. விட்டுவிட்டேன். நான் இருக்கும் இடத்திலிருந்து அவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பலன் இராது என்பதால் போகாமலே விட்டுவிட்டேன். அவர் தொடர்பும் இல்லாமற் போயிருந்தது.
கடைசியாக வரும்போது அவரிடம் கூறியது நினைவில் வந்தது. “காசுக்காக இங்க தேடி வரமாட்டன். வரவும் விருப்பமில்ல. திருப்பித் தர வேணுமெண்டு உண்மையான எண்ணமிருந்தால் கொண்டு வந்து தாங்கோ.!”
சுமார் ஐந்து வருடங்கள். இப்போது அவர் வந்திருக்கிறார்.
மடியிலிருந்து பணத்தை மிகப் பக்குவமாக எடுத்து என்னிடம் தந்தார்.
y
“எண்ணிப் பாருங்கோ!.
மிச்சக் காசையும். வசதிப் படேய்க்க கொண்டுவந்து தருவேன். குற நினைக்க வேணாம். என்ன செய்யிற.? முழுசாத் தாறதுக்கு விருப்பம் தான். கஷ்டமாயிருக்கு1.”
எண்ணித்தான் பார்க்கிறேன்! இப்போது அவரது முகத்தைப் பார்க்க சங்கடமாயிருந்தது.
இந்த முகம் எந்த முகம்?
米 米 米 来 来 米 米 2ς 2ς 2ς 2ς 2ς 2
. 米 米 来 来 米 米 来 2ς 2ς 米
ல்ேலிகை 39ഖ്യ 94്ഥങ്ങf ജൂഖ് - ഉOO;

Page 123
ܠ ܐܬܵܠ̈ܠ ܐܬܠܶܐܠܛܡ ܐܠܣSSܛܽܠ ܐܬܿܛܟ݂
Insüß
வெளியி
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ~ 6 இரண்டாம் பதிப்பு ~ (புதிய அநபவத் தகவல்கள். தகவல்க
2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் (சிறுகதைத் தொகுதி 3. அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின்
4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப் 5. மண்ணின் மலர்கள் ~ (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 13
6. நானும் எனது நாவல்களும் ~ செங்கை ஆழியான்
கிழக்கிலங்கைக் கிராமியம் ~ ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~
(பிரயாணக் கட்டுரை) டொமினிக் ஜீவா
9. முனியப்ப தாசன் கதைகள் ~ முனியப்பதாசன்
10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூட) ~ பாலரஞ்சனி 11. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ 'சிரித்திரன் சுந்தர்' 12. அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை அலங்கரித்த
13. தேலை ~ முல்லையூரான் 14 மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான்
(3o எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 15. மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான்
(இரண்டாவது தொகுப்பு) (41 எழுத்தாளர்களின் படைப்பு)
16. நிலக்கிளி ~ பாலமனோகரன்
17. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு:
18. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ 19. தரை மீன்கள் ~ ச.முருகானந்தன்
20. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் ~ 21. அப்புறமெண்ன ~ (கவிதைத் தொகுதி) ~ குறிஞ்சி இன
22. அப்பா ~ தில்லை நடராஜா
மேற்படி நூல்கள் தேவையானோர்
வியாபாரிகளுக்கு வ
122
 

V47 [በNMቧበዐ)∂ዞሀLቪኣÔለቦU
விசுைப் பந்தல்
ட்டுள்ள நூல்கள்
டாமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு ளில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளத) ഖിഞ്ഞ: 25o/-
) சாந்தன் விலை: 140/=
விலை: 180/=
பு) சிரித்திரன் சுந்தர் விலை: 175/=
மாணவ ~ மாணவியரது சிறுகதைகள்) 6606): II off
விலை: 80/=
விலை: 100/=
6,606): 110/-
விலை 150/-
ഖിഞ്ഞ: 60/-
விலை: 175/= 5வர்களின் தொகுப்பு) வில்ை: 175/=
ഖിഞ്ഞുണ്ഡ: 150/-
ഖിഞ്ഞു: 275/=
விலை: 35o/- விலை: 140/-
டொமினிக் ஜீவா ഖിജ്ഞ: 150/=
ப.ஆப்டீன் விலை: 150/=
விலை: 150/=
செங்கை ஆழியான் விலை: 150/=
ாந்தென்றல், விலை: 120/-
விலை: 130/=
எம்முடன் தொடர்பு கொள்ளவும் பிசேஷ கழிவுண்டு
uᎠᏍᏑᏍᏑᏍᎣᎣ 39ᏍᏁᏡf è5ᏍᎹᏖbᏓᎠᏍᏚᎪ a3ᏜᏙᏍ1ff -- Ꭷ OOᏓᎭ

Page 124
ம்பவாரிதியின் வாராதே வரவல்லாய்
கட்டுரைக்குரிய (?) தொடர்பான சில
கருத்துக்களை எழுதுகிறேன். முழுமை யாகப் பிரசுரிப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. எனது இக்கருத்துகள் கனக சபேசனுக்கும் அவர் சார்ந்த சிலருக்கும் 'மலபரிபாகம் செய்விக்கும் என்று நம்புகிறேன். அத்துடன் இலக்கிய உலகில் சில தவறுகள் நிகழாமல் இருக்கவும் எனது கருத்துகள் காப்புறுதி செய்யட்டும்.
முதலில், மல்லிகை ஆசிரியரிடம் ஒரு கேள்வி ஈழத்தில் வெளிவரும் சஞ்சிகைகள் பல தரக் குறைவான கட்டுரைகளோடு வெளிவருகின்றன என்று அண்மைக் காலமாகத் தாங்கள் எழுதியும் பேசியும் வருவதை நான் நன்கு அறிவேன். அப்பிடி யிருக்க எதுவித தரமும் இல்லாத கனக சபேசனின் கட்டுரை (?) எப்படி உங்கள் இதழில் வெளியா கியது. காரணம் யாது?
விடயத்திற்கு வருகிறேன். இலக்கிய உலகில் நாகரிகம் என்று ஒன்று உளது. அதைப் பேணுவது எழுத்தாளர்களதும் பிரசுரகர்த்தாக்களதும் கடமை. ஒரு கட்டுரைக்கான எதிர்க் கருத்தியல் அவசிய மானதே. ஆனால் அது கருத்தியலை மறுக்க வேண்டுமே தவிர, நபரைச் சாடுவதாக அமைதல் நன்றன்று. இதை இலக்கிய உலகு சார்ந்தோர் அறிவர். கனக சபேசன் யாழ்ப்பாண வேலிச் சண்டையில் கத்துவது போல ஒரு மொழியைத் தெரிவு செய்து கட்டுரையின் கருவை விளங்காமல் தன்போக்கில் ஏதோ சொல்ல முற்படுகிறார். இவற்றை விடவும் முக்கியமான பிழை எதுவெனில் தனது கருத்தியலைத் தானே சரியென்று தீர்மானித்து அதனைப் புலம்பெயர்ந்த அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுமைப்படுத்தி கூறுவதாகும்.
கனக சபேசன் பயன்படுத்திய பண்பாடற்ற சொற்களை இங்கு மேற்கோள் காட்ட எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. அவற்றை மேற்கோள் காட்டுவது பண்பாடற்றது. ஆயினும் தக்க ஆதாரங் களோடு கருத்துக்களை முன்வைப்பதே சரியானது என்பதால் சபேசனின் பண்பாடு இல்லாத வரிகளை எடுத்துக் காட்டுகிறேன். இதற்கு பண்பாட்டு உலகிடம் அனுமதி வேண்டுகிறேன்.
சபேசன், லூசன் பைத்தியம், கெடுகுடி, முட்டாள்தனம், மக்குத்தனம், உழறல், கட்டைப் பிரமச்சாரி, டொல்லாப் போடுதல், சந்ததியற்றவர், வேடம் போட்டுச் சூடம் கொழுத்தும் பெரிய பூசாரி, பூச்சாண்டி, பரதேசி, பிச்சைப்பாத்திரம் ஏந்துவோன்,
12

92g Se: 6 ԱՀԽ1 ||
gains 2004
ஆத்தாதவன், பச்சோந்திகள், பாசாங்குக்காரன், பல்லிலித்தல், தப்புத்தாளம், புத்திசாலியில்லை, கோடாரிக் காம்பு, குறுமுண்டி, தண்டற்காரன், காக்கா பிடிக்கும் கம்சன், புழுங்காதீர்கள், அவிந்து போவீர்கள், மேலே-பெண், கீழே-ஆண், காக்கை வன்னியர், கேவலப்புத்தி, நக்கிற நாய்கு., நாத்தமும் பேறியிருக்குமே, நாற நாற நக்க வேண்டிவரும், அருண்டவன், வாங்கிக் கட்டுவீர்கள், கையிலாத்தனம். இவ்வளவு சொற்களும் (இதற்கு மேலும் உள்ளன) கனக சபேசன் பாவித்துள்ளார். கனக சபேசன் போன்ற புலம்பெயர்ந்து வாழும் தமிழர் (?) சிலர் நினைக்கலாம் தாம் பொருளாதார பலத்தில் உயர்ந்து விட்டோமென்று. ஆனால் இன்னும் பண்பாடாக எழுதுவது, பேசுவது கை வராத்தன்மை அவர்களின் அறிவுநிலை, பண்பாடு நினில வளராமையைத்தான் காட்டுகிறது. இப்படிப்

Page 125
பட்ட சந்ததிகள் பெருகினால் தமிழர் தம் பண்பாடு பற்றி நினைத்துப் பார்க்கத் தேவையில்லை.
இவ்வளவு சொற்களையும் பாவித்த கண்க சபேசன் கூறுகிறார் ‘தமிழர் தமிழராகத்தான் வாழ் கின்றோம் என்று இப்படிப் பேசி, இப்படி வாழ் பவர்களா தமிழர்கள்?
‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய்கவர்ந் தற்று' என்ற குறளை நினைத்துக் குணம் சில வளர்ப்போம். இந்த இடத்தில்
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும்
காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்’ என்ற குறளையும் நினைவுபடுத்தல் நன்று.
கனக சபேசன், உங்கள் ஊரில் ஏட்டிக்குப் போட்டியாக கோயில்கள் கட்டியதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? என்ற கேள்வியில் உங்கள் ஊர் என்பதன் மூலம் தன்னை அந்நியப் படுத்தி விடுகிறார். ஒருவன் தன்னுடைய ஊரை எப்பொழுது மறந்து, அந்நிய மோகத்திற்கு அடிமையாகி விடுகிறான் என்பதை அவன் வாயாற் பிறக்கும் சொல் காட்டும். சபேசன் ‘உங்கள் ஊர் என்று முன்னிலைப்படுத்திச் சொல்வதால் தனது ஊர் ஆங்கில தேசம் என்பதை அறிவிப்புச் செய்து விடுகிறார். பின்பு தேசபாசமுள்ளவர் போற்காட்ட தமிழீழ மகன்’ என்று சந்தனம் பூசுகிறார். சபேசன் அவர்கள் தனது தாய்நாடு ‘கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை என்பதை உணர வேண்டும்.
‘நண்பன் ஒருவன் குற்றம் சொல்கிறான் என்று கூறிய கம்பவாரிதிக்கு பிறர்மேல் ஏன் பழி போடுகிறீர்கள்? என்று கூறி 'அவன் உங்களுக்குள் உறங்குகிறான்’ என்று கூறும் சபேசன் அதே வேலையைத் தானும் செய்கிறார்.
உங்களுடைய எழுத்துக்களை அவர்கள் வாசித்தால் கொள்ளையில் போவான், கோதாரியில் போவான், அம்மை விளைாயட்டில் போவான், அறுப்பான், இப்படி எங்கள் பிள்ளைகளை பற்றி எழுதியிருக்கிறானே என்றுதான் சொல்வார்கள் என்ற சபேசனின் வாக்குமூலம் இதனை நிரூபிக் கிறது. வெளிநாடுகளில் சென்று நமது தமிழர்கள் பல கோடிக்கணக்கில் உழைப்பதை நான் வியக் கிறேன். அவர்களின் உழைப்புக்கு நிகர்
12
 

அவர்களே. ஆனால்,
*பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்
நின் பால் vo
கலந்தீமையாற் திரிந்தற்று' என்பதை உணர வேண்டும்.
கனக சபேசன் மேலும் குறிப்பிடும் போது 'கம்பன் குவித்த கவிதைகளை மட்டும் கிழறி உழறுபவர்தானே! ஏதோ அதைமட்டும் இட்டு விட்டுக் கொக்கரிக்காதீர்கள் என்கிறார். இக் கருத்தில் பொதிந்துள்ளது என்ன? கம்பன் குவித்த கவிதைகளைக் கிளறுதல் என்ற பதத்தால் கம்ப கவிதைகளைக் குப்பை என்றும் கிழறுபவரைக் கோழி என்றும் குறிப்பிடுகிறார். இது ஆங்கில, மோகத்தில் இருப்பவர்களுக்குத் தமிழ், தமிழ்க் கவிதை, அதன் உயர்வுகள் விளங் காத் தனி மையைக் காட்டுகிறது. ‘நுால் படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்த கம்பன் கவிதை சபேசனுக்கு குப்பை என்ற ஒப்பீட்டுப் பொருளாவது எப்படி? நாம் எந்நிறக் கண்ணாடியைப் போடு கிறோமோ அந்த நிறம்தான் பார்வைப் பொருளின் நிறமாகத் தெரியும் என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம். அரச சபையையே தூக்கி எறிந்து, மாபெரும் சோழ சாம்ராச்சியத்தைத் தூக்கி எறிந்து அதற்குத் தமிழை அடிமையாக்காது, தமிழ்க் காவியம் செய்த கல்வியிற் பெரியனான கம்பன் கவிதை குப்பைக்கு ஒப்பீடா? இந்த இடத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
ஆம்ஸ் ரோங் பலருக்கு 'அத்தை பையன்’ ஆனான் ‘சாள்ஸ்சும் டயானாவும் லண்டனில் தான் கைப்பிடித்துக் கொண்டார்கள் தமிழன் சந்தோசத்தில் சந்தனம் பூசிக்கொண்டான் வேல்ஸ் பரம்பரைக்கு விசுவாசம் தெரிவித்து WMவெற்றிலை போட்டுக் கொண்டான்.
இத்தகைய நிலையில் இருக்கும் தமிழருக்கு கம்பகவிதையைக் குப்பையோடு ஒப்பிடத்தான் தோன்றும். பின்னர் சபேசன் தனது தேவைக்கு மட்டும் தக்கது இன்னது.’ என்ற கம்ப கவியை
ல்ெலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2004

Page 126
எடுத்தாள்கிறார். இது சந்தர்ப்பவாதத்தின் தலைமை யிடம் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். சீதையை இழிவான சிந்தனைக்கும் உட்படுத்த அவர் தவறவில்லை. இவற்றைக் கூறிவிட்டு ஆத் மீகம் பற்றி எந்த மனதோடு பேசுகிறார். பின்பு சபேசன் "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் என்கிறார். நன்றாகத்தான் இருக்கிறது.
இன்னும் எங்கள் கள்ளங்கள் விலை போக வில்லை என்ற கூற்றால் தம்மிடம் கள்ளம் உள்ளன என்பதையும், தாம் அதை விற்க முயன்றதையும், அது விலை போகவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்.
நான் ஒரு பல்கலைக்கழக ஆய்வு நிலை மாணவன் என்ற நிலையிற் கூறுகிறேன். யாழ் மண்ணின் அடிப்படையை ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வே ஆட்டி வைத்தது என்பது முற்றிலும் உண்மையானது.
இங்குள்ளவர்களை விட நவநாகரிகப் பெண் களைப் பார்த்திருப்பீர்களா? என்ற கேள்வியின் தொனி நவநாகரிகப் பெண்கள் ஈழத்தில் இல்லை என்பதைக் காட்டுகிறது. சபேசன் நவநாகரிகம் என்று எதைக் கருதுகிறார் என்று தெரியவில்லை. ஈழத்தில் நவநாகரிகப் பெண்கள் படைத்த சாதனை கள் பற்றி வேராகி விழுதுமாகி என்ற ஒரு நூல் வந்துள்ளது. முடிந்தால் வாசித்துப் பார்க்கவும். வெளிநாடுகளில் படிக்கும் யாழ்ப்பாணப் பெடியன் களின் சாதனை பற்றி மார்பு தட்டும் அவர் ஈழத்தில் போர் சூழலில் சாதனை படைத்த மாணவர்களை அறியவில்லைப் போலும். மேலும் ‘எங்களிடம் வந்தால் இனி நீங்கள் நாற நாறக் கக்க வேண்டித் தான் வரும் என்ற வசனத்தால் அதிகமான நாய் களை வளர்க்கும் எஜமான் என்று தன்னை அடை யாளப்படுத்தியும் உள்ளார்.
”அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்துடனும் நின்று சொல்லி யிருக்கிறேன்’ என்று சபேசன் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்துக்களுக்கும் இக்கூற்றுக்கும் தமிழில் எந்தத் தொடர்பும் உள்ளதாக எனக்குப்படவில்லை. ஐந்து சால்புக்கும் உரிய ஆங்கிலச் சொற்களுக் காவது இவர் கருதும் பொருள் இருக்குமா என்று ' ஆங்கில அகராதியைப் புரட்டினேன். அதிலும் அப்படியெதுவும் இருப்பதாக எனது கண்ணுக்கு தெரியவில்லை. சிலவேளை அன்னிய தேசத்தை சேர்ந்த சபேசன் புதிய அகராதி ஒன்று உருவாக்
125

கினாரோ தெரியவில்லை.
குறிகளாற் பெறும் குழந்தைகளை மட்டுமே சந்ததி என்று கருதும் சபேசன் உங்களுக்குச் சந்ததியும் இல்லை’ என்கிறார். ‘எச்சமென் றொருவண் மக்கட்குச் செய்வன விச்சை மற்றல்லபிற' என்ற நாலடியாரின் கல்வி அதி காரச் செய்யுள் சபேசனுக்குப் புரியவேண்டும். அல்லது ‘இது கூடக் குப்பை. இதைக் கிழறும் கோழி நான். இதை எடுத்துக் காட்டிக் கொக்கரிக் கிறேன்’ என்று கூறுவாரோ தெரியாது.
நம் நாட்டுப் பிரச்சினையின் காரணமாக உயிரைக் காப்பாற்றவும், உழைக்கவும் பல தமிழர்கள் வெளிநாடு சென்றிருக்கிறார்கள் என்பதை நான் முழுமனதோடு ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தமிழ் மொழியின் பண்பாட்டை இங்கு நசுக்குகிறார்கள். நாம் அதை உலகறியப் பரவச் செய்வோம் என்று எவரும் இதுவரை வெளிநாடு சென்றதாக நான் கேள்விப்படவில்லை.
இங்கிருக்கும் பெற்றோர் இறந்தவுடன் தொலைபேசி எடுத்து வெளியில் இருக்கும் மகனுக்கு கூறும்போது எவ்வளவு காசுவேண்டும் என்றும், வீடியோ போட்டோ கட்டாயம் பிடிக்க வேண்டும் என்றும் கூறும் மகன் மாரின் குரல்களையும், சூரியனே உதிக்காத தேசத்திலிருந்து வந்தவர்கள் போல சொந்த நிலத்திற்கு வந்தவுடன் புழுங்கு வதையும் செருப்பில் புழுதி படிவதாகவும் கூறும் குரல்களையும், அங்குள்ள ந்ாகரிகம் நல்லது என்று கூறுபவர்கள் திருமணத்திற்கு மட்டும் பெண்களை இங்கிருந்து விலைக்கு வாங்குவதையும், பயத்தால் ஒடி பணத்தால் உயர்ந்தவுடன் தாமே ஈழத்தின் மேற்தர வர்க்கம் (சிலவேளை உலகினதும்) என்று நினைப்பதையும் கருத்து வெளியிடுவதையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். யதார்த்தத்தை எவரும் மறைக்க முடியாது.
கனக சபேசன் போன்ற ஒருசிலர் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து மண்வாசனையோடு (?) வாழ்கின்ற நல்ல தமிழர்களாக இருக்கிறார்கள். அதற்காக எல்லோரையும் அப்படிக்கூற முடியாது. சபேசன் அப்படிக் கூற முற்படுவது யதார்த்த ரீதியான சமூக அவதானிப்பில் அவரது தெளிவற்ற மதிப்பீட்டைக் காட்டுகிறது.
இன்னும் தமது பிழையை அர்த்தப்படுத்த ‘பெயக்கண்டும்.’ என்ற வள்ளுவர் குறளைக் கையாள்கிறார். இதில் ‘நயத்தக்க நாகரிகம்.”
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - உooபு

Page 127
என்பதை மறந்துவிட்டார்.
எனவே கனக சபேசன் கம்பவாரிதியின் கருத்துக்களை முறியடித்திருந்தால் வரவேற்றிருக் கலாம். பக்கம் பக்கமாக அசுத்த வார்த்தைகள் பெய்திருக்கத் தேவையில்லை.
‘பலசொல்லக் காமுறுவர்
மன்ற மாசுஅற்ற
சில சொல்லல் தேறாதவர்’ என்ற குறளை நினைவுறுத்துக.
சபேசன் அவர்களே! கம்ப வாரிதியின் கட்டுரைக்கு எதிர்கருத்துக்கள் வரலாம். வர வேண்டும். கருத்து மோதல்கள் கட்டாயம் இலக்கிய உலகில் இருத்தல் வேண்டும். ஆனால் பண்போடு எழுதுவது நல்லது. உணரக்கடவீர்களாக.
ஒட்டுமொத்தமாகப் பண்பற்ற சொற்கள் பல தாங்கி வந்த இக்கட்டுரையை சபேசன் எழுதியது
ΦΙΩ
நீண்ட நாட்களாக மல்லிகைக்குக் கடி அந்த வாய்ப்புக் கிடைத்ததற்கு நன்றி
உங்களுடைய பாரிய கெட்டித்தனம் எ
குதிரைகளில் வெற்றிகரமாகச் சவாரி .ெ
ஒன்று மல்லிகையின் தொடர் வர வெளியீட்டு நிறுவனம் பலரும் இங்கும் சிலகாலம் நடத்தி முடித்துவிட்டு அதற் விடுகிறார்கள்.
உங்களால் இந்த இரட்டைக் குதின கொள்ளாமல் எப்படிச் சவாரி செய ஆச்சரியப்படுவதுண்டு. எனது இலக் சொல்வதுண்டு.
நாவூறு பட்டுவிடக் கூடாது. இந்த நீங்கள் செயலாற்றி வருவதைக் கேள்விட் சந்தோஷமடைகின்றேன். மலரை எதிர்ப
126

மிகவும் தவறானது. நான் மிகவும் மதிக்கின்ற ஈழத்து இதழியலின் ஜாம்பவான் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அதனை வெளியிட்டதும் மிகவும் தவறானதே. மல்லிகையின் மணம்போல் இக் கட்டுரையும் உங்களை வந்து சேரட்டும் என்று கூறும் சபேசனின் கூற்றின்படி பார்த்தால் ஒரு காலத்தில் காண்டைப் பூக்கள் கூட கல்யாண மாலையாகி கழுத்தை அலங்கரித்தாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை.
இறுதியாக, கனக சபேசனின் பண்பாடற்ற கட்டுரையை யாராவது படித்துச் சிரித்து மகிழ்ந் திருப்பார்களாயின் அவர்களுக்கு வள்ளுவரின் வாக்கொன்றை நினைவுறுத்த விரும்புகிறேன்.
‘அரம் போலும் கூர்மையரேனும்
மரம் போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்’.
தம
தம் எழுதவேண்டுமென எண்ணியிருந்தேன்.
ன்னவென்றால் ஒரே சமயத்தில் இரட்டைக் சய்து வருகிறீர்கள்.
வு அடுத்தது மல்லிகைப் பந்தல் நூல் சரி, தமிழகத்திலும் சரி சிற்றேடொன்றைச் கு மூடு விழாச் செய்து அறிக்கையும்
ரகளில் இத்தனை காலமும் தளம்பாமல் |ய முடிகிறது? என நான் அடிக்கடி கிய நண்பர்களுக்கும் இதை எடுத்துச்
வயதிலும் ஓர் இளைஞனைப் போல,
படும் வேளைகளில் எல்லாம் அளவில்லாா ார்க்கிறேன். v
க. அரவிந்தராஜ்
நெல் லியடி
ك=
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 128
6'u)
‘போர் என்ப கொடுரமான பிரமிக் போர் என்பது நம பட்ட நிலையே. ர பிரமிக்கத் தக்கதா நாசம் விளைவி அனைவரினதும் த விளைவே. ஆக காரணமாக இருக் செய்ய வேண்டும்? நானோ அல்லது ஏனென்றால் அ கொண்டிருக்கிறது
நேற்றைய இரவின் என் கனவில் வந்தவன் நானாக இருந்தேன் என்றாலும், என் முகமே எனக்கு அடையாளம் தெரியா வண்ணம் சிதைவாக, புகை மண்டலம் சூழ,
நான்தானா என்ற
அடையாளமற்ற அந்த கனவில் ஒர் இருண்ட குகையில் தொடர்ந்த அந்தப் பயணத்தில்
முதல் சில வளைவுகளில் என் கரங்களில் -- வில்லும் அம்பும், அடுத்து வந்த வளைவுகளில் வாளும் கவசமும், நடுவளைவுகள் சிலவற்றில்
127
 

ரின் நான்
- மேமன்கவி -
து நமது அன்றாட வாழ்க்கையில் கத்தக்கதான விரிவாக்கமே இல்லையா? து அன்றாடச் செயலின் பெரிதுபடுத்தப் மது உள்மனதின் பிரதிபலிப்பே. அது கவும் மிகக் கொடூரமானதாகவும், பெரும் ப்பதாகவும் இருந்தாலும் அது நம் னிப்பட்ட செயற்பாடுகளின் ஒட்டு மொத்த வே, நீங்களும் நானும் போருக்குக் கும் போது, அதை நிறுத்த நாம் என்ன எந்த நேரத்திலும் எழக்கூடிய போரை | நீங்களோ நிறுத்த முடியாதுதான். புது ஏற்கனவே தொடங்கி நடந்து |.
- ஜித்து. கிருஷ்ணமூர்த்தி -

Page 129
துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும் இறுதியாக வந்த வளைவுகளில் அணுகுண்டுகளும், இரசாயனக் குண்டுகளும் என் ஆயுதங்களாய் இருக்க,
என் அதிகாரத்தைத் தக்க வைக்க மாறிய ஸ்தூல வடிவங்களுடன் என் ஊன்றுகோலான ஆயுதம் துணை புரிந்த குகையில்
ஜீவகாருண்யம் அற்ற விழிகளுடனும், குருதியில் நனைந்த கரங்களுடனும் நான் மேற்கொண்ட இருண்ட பயணத்தின் படிக்கட்டுகளாய் என் காலடியில் லட்சோப லட்சப் பிணங்கள் குவிந்து கிடக்க, பயணத்தின் நடுவில் நான் துப்பிய எச்சில் நச்சுவாயுவாய் மிதித்தவர்களின் நாடி நரம்புகளை ஊடறுத்து அவர்தம் உயிர் அணுக்களில் அமில மழையைப் பொழிந்து கொண்டிருக்க
எதிர்ப்பட்ட எவரேனும் என் ஆயுதங்களைப் பறிக்க எத்தனித்த பொழுதெல்லாம் அவர் தம்மைக் கொன்று குவித்தேன் எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி,
புரிந்த கொலைகளெல்லாம் என் பாதுகாப்புக்குத்தான் என பிரசாரம் செய்யுமாறு கையடக்கத் தொலைபேசி மூலம் என் சிஷ்யர்களுக்கு சேதி அனுப்பிய வண்ணமே
மிக வேகமாக, மிகவும் வேகமாக அந்தத் தொலைப் பயணத்தை கொலை பயணமாக்கக் . ܬ݁ܬ݂܂
129

கடந்து கொண்டிருந்த, இருண்ட அப்பயணத்தை கெளரவிக்கும் முகமாய்,
கவலை வேண்டாம் உன் பின்னால் பிரகாசமான ஒளி உமிழும் டிஜிடல் விழிகளுடன் வரும் குழுவினர் நீ புரியும் கொலைக் காட்சிகளை 'Zoom செய்து ஒளிப்படிமங்களாக்கி மரணத்தின் நேர்முக வர்ணனையாய் - உலக மனித மூளை முடுக்கெல்லாம் ஒளிபரப்பி வருகிறார்கள் வெற்றிகரமாய் என்றே அவர்கள் பதில் செய்தியினை அனுப்பிய வண்ணமே இருந்தனர் நான் களிப்புறும் வகையில்,
அந்த இருண்ட குகையின் அதியுயர் அதிகாரம் கொண்ட அரசன் நானே என்ற என் பிரகடனத்தை ஆமோதிக்கும் முகமாக குகையோரத்து எல்லாச் சாமிகளும் ஆமாம் போட, என் மனதில் மனுக்குல அழிவுக்கான தாக கருமை பரவியே கிடந்ததால் இறுதிவரை இருண்டே கிடந்த அந்த இருண்ட குகையின் போர் யுகம் ஒன்றுக்கான பொறுப்பாளி நானாகத்தான் இருந்தேன் என்பது உறுதி ஆயிற்று கனவு கலைந்து விழித்த நான் பிணமாய் என்னை
உணர்ந்த பொழுது,
கொன்றதும், கொல்லப்பட்டதும், கொல்லப்படப் போவதும், கொல்லப் போவதும், நான்தான் என உறுதியான பின், இப்பொழுது துல்லியமாய்த் தெரிந்த என் முகத்தில் தெளிவாய்த் தெரிந்தது இற்றைவரை என் அதிகார வெறியினால் கொல்லப்பட்டவர்களின் பிணங்களின் முக ஜாடை
மல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 130
Cees/O she so.
Ꮽ)lᏓaᏪᏝᎥᎲaᏯ8
மல்லி 39வத ஆண்டு நிை
கட்டைவேலி ப.நோ.
சமூக நோக்கில்
எமது
நூல் நிலையம் நூல் வெளியீடு நூல் அறிமுகம் நூல் கொள்வனவு நூல் விமர்சனம்
并
并 洪 共
கட்டைவேலி ப.நோ. கர
129
 
 

s" حل؟ a رم ۵ آکر ہرucر
கையின் றவில் பூரிப்படைகிறத
S - நெல்லியடி கூ.சங்கம்
இலக்கிய உலகுக்கு
சேவைகள்
சஞ்சிகைகள் நாளிதழ் விற்பனை புலமையாளர் கெளரவிப்பு புலமைப் பரிசில் வழங்கல் அனைத்துலக தினங்கள் பெரியார் தினங்கள் திரைப்பட விமர்சனம்
பி - நெல்லியடி
கூ. சங்கம் 65ug.
e 39வது ஆண்டுமலர் ஜனவரி - 2OOபு

Page 131
s ங்கள் வீட்டுச் சுவரில் கையில் ஒரு வேலுடன் நின் கொண்டிருந்தார் வேலப்பா இரண்டு கால்ப்பகுதியிலு இரண்டு ஒட்டைகள். எலியோ, பூச்சியோ அரித்திருக்கலா தூசியும் வேறு பிடித்திருந்தது. எங்களின் அபிமான நட்சத்தி சூரிய காந்தின் 'வேலப்பா’ படம் வெளியான சமயம் அற் போஸ்ரரை வாங்கிவந்து ஒட்டியிருந்தோம். எங்கள் வீட்டி எல்லோருமே சூரியகாந்தின் ரசிகர்கள்தான். இவர்களுக்கெல்ல நான் மூத்தவன். வவா கடைசி. அநேகமாக எங்களுக்கு சூரியகாந் தெய்வமாகத் தெரிந்தார். அதாவது அந்தக் கனவி தொழிற் சாலைக்கு அப்பால் பட்டும்கூட? உக்கிப்போ எண்ணங்களும், உழுத்துப்போன சிந்தனைகளும். எங்க தொலை நோக்கப் பார்வையை எங்கே தொலைத்தோே தெரியவில்லை! என்றுமே விட்டு விலக முடியா பனிமூட்டத்திற்குள் நாங்கள். எங்களுக்கெல்லாம் ஒரு கடவுள அவரால் ஆக முடியுமென்றால் இதிலே எந்த இடத்தில் நாங்க தாழ்ந்து போய்விட்டோம் என்ற சுயசிந்தனையும் அவ்வப்போ தலை காட்டிக் கொண்டு தான் இருந்தது.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் வரும் எம அபிமான நட்சத்திரத்தின் பிறந்தநாளை நாங்கள் கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றோம். சில பத்திரிகைகள் கூட நடு பக்கத்தில் இதனைப் பெரிதாகப் பிரதாபித்திருந்தன. தனிய வானொலிகள் நிமிடத்திற்கு ஒருதரம் வாழ்த்திக் கொண்ட நான் கூட சூரியகாந்தை வாழ்த்தி கவிதை எழுத, அ பத்திரிகையில் இடம் பிடித்திருந்தது. தவிர எனக்கு வே கெளரவப் பெயர் சூட்டப்பட்டது. இனிமேல் வெளிவரும் என்றும் நினைத்துக் கொண்டோம். ’உவன் சூரியகாந் பெரியப்பா கிண்டல் செய்தபோது வவாக்கே கோபம் வந்து அடித்திருக்கிறான் என்றால் பாருங்களேன்.
6.
சூரியகாந் ஐ ஆனால் திரையில் அவருடைய ஸ்ை என்பன இலட்சோ உள்ள சக நடிகர் தவறில்லை. ஆன ஒரு மகானைப் இன்றுவரை புரிய திருவள்ளுவரை
போட்டோவை
130
 

[夺
தாச்சலம் என்றும், அடுத்தவருக்கு 'வேலப்பா என்றும் படத்தின் பெயரை அடுத்தவருக்கும் சூட்டவேண்டும்
நிஜத்திலை ஒரு கிழவன். மொட்டத்தலையன்” என்று துவிட்டது. அடுத்தநாள் தனது தலையையும் மொட்டை
வரில் ஓர் ஞானி
- இணுவையூர் உத்திரன்
ம்பது வயதைத் தொட்டுவிட்டார் என்பது உண்மைதான். பத்துப் பேரை ஒரே தடவையில் அடித்து நொருக்குகின்றார். ரைல் என்ன? அவருடைய வேகம், விவேகம், தனித்தன்மை பலட்சம் பேரை அடிமையாக்கி இருக்கின்றது.சினிமாவில் களோடு எல்லாம் அவரை ஒப்பிட்டுப் பார்ப்போம். இதில் ால் அதற்கும் மேலாய் சினிமாவிற்கு அப்பாற்பட்டும் அவரை போல நினைக்கின்றோமே அது ஏன்? என்பது எனக்கு வேயில்லை. அல்லது நாங்கள் எங்கள் வீட்டுச் சுவரில் யோ, பாரதியாரையோ அல்லது ஒரு சாக்கிரட்டீசின் அல்லவா மாட்டியிருக்க வேண்டும், நாங்கள் ‘பாரதி

Page 132
சினிமாப்படத்தை ஒருதடவை கூடப் பார்க்கவில்லை. ஆனால், வேலப்பா’ படத்தை பத்துத் தடவை பார்த்திருக்கின்றோம்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குத்தான். அதுவே வாழ்க்கை ஆகிவிடுவதில்லை. சினிமா என்கிற இந்த நிழலுக்கு உயிர் கொடுக்கின்ற பிரபல்யங்கள்கூட அப்பப்போ தாங்கள் நிஜ முகங்களையும் காட்டிக் கொள்வ துண்டு. ஒரு சமூகக் காவலனாக தயாளச் சிந்தை யுள்ளவனாக, ரசிகர்களை கவர்ந்திழுத்து மன்றம் கட்டியும் வைத்திருப்பார்கள். சமயத்தில் சினிமா கையை விட்டு விட்டால் இதுகூட உதவலாம். என்பதற்காக, அப்பப்போ பத்திரிகைகளில் சூரியா பற்றி வரும் செய்திகளை வவா தேடிப் பிடித்து வாசித்து வைத்திருப்பான். இதைத் தவிர வேறு எதையும் அவன் வாசிப்பது கிடையாது. இவர் களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக ஒருவேளை நானே இருந்து தொலைத்து விட்டேனோ? என்று வருந்தியும் இருக்கின்றேன். அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய 'மார்டின் லூதர்கிங்' கியூபா புரட்சியிலே மக்களோடு மக்களாக நின்று போராடிய சேகுவரா' தென்னாபிரிக்காவிலே இனவெறி அரசுக்கு எதிராகப் போராடிய ‘நெல்சன் மண்டேலா, ஏன் நம் நாட்டில் தமிழுக்காக அருந்தொண்டாற்றிய விபுலானந்தர் அடிகள்’ ‘தனிநாயகம் அடிகள் இவர்களைப் பற்றி யெல்லாம் நாம் என்றுமே சிந்தித்துப் பார்த்ததில்லை. தன் இனத்தின் தலைவிதியைப் பற்றி தானே சிந்திக்காத எந்த வொரு இனமுமே உருப்பட்டதாக உலக வரலாறு கிடை யாது. இதைப்பற்றியெல்லாம் நினைப்பதற்கு எங்களுக்கு எங்கே நேரம்? சூரியகாந்தின் அடுத்த படம் பற்றிச் சிந்திப்பதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். அது எங்கள் இனப்பிரச்சினையை விட ஆவலானதும், முக்கிய
மானதுமாகவே தோன்றும்.
சூரியாவின் அடுத்த படத்திற்கு யாரை கதா நாயகியாகப் போடலாம் என்று எங்கள் வீட்டில் அடிக்கடி ஒரு விவாதமே நடக்கும். ஜோதிகாவைப் போடலாம் என்று பெரியம்மா சொல்ல. இல்லை இல்லை 'சுவர்ணா வைப் போடலாம் என்று நாங்கள் மறுப்போம். ஒரு தனியார் வானொலியில் ‘நீங்கள் சந்திக்க விரும்பும் பிரபலங்கள் யார்?’ என்று கேட்டதிற்கு அனேகமானவர்கள் எங்கள் சூரியகாந்தின் பெயரைத்தான் முன்மொழிந்தார்கள். எங்களுக் கெல்லாம் ஒரே குது கலம் யாருமே அன்னை தெராசாவையோ, அல்லது ஏபிரகாம் லிங்கனையோ சொல்லவில்லை. இது தவிர 'இதோ சூரியகாந் அரசியலுக்கு வருகின்றர் என்ற சூடான செய்தியைப் பற்றியும் நாங்கள் விவாதிப்போம். அரசியல் என்பது சாச்
11

கடையாக இருக்கின்றது. அது சூரியகாந்தின் வருகை யினால்தான் சுத்தப்படுத்தப்படப் போகின்றது என்ற நினைப்பு எங்களுக்கு. காந்தி, காமராஜர், நேருஜிக்குப் பிறகு எங்கள் தலைவரினால்தான் ஏதோ இந்தியாவுக்கு விமோசனம் கிடைக்கப்போகின்றது என்ற எண்ணம் எங்களுக்கு இவ்வளவும் ஏன்? இங்கு இன்னல்படும் எங்கள் தமிழினத்திற்கு அனுதாபம் தெரிவித்து ஒரு வார்த்தை கூட பேசாத சூரியகாந் அரசியலுக்கு வந்துதான் எங்களுக்கு என்ன பிரயோசனம்?’ என்று பெரியப்பா கூறிய போது அதை மறுக்க என்னால் முடியவில்லை. ஆனாலும் சில அடாவடித்தனமான வாதங்கள் மூலம் என் தரப்பை நியாயப்படுத்தினேன். இதைத்தான் பக்தி வாதம் என்பது. ‘ஒரு பெண் ஒருவனை காதலிக்கும்போது எதனையுமே மன்னித்து விடுகின்றாளாம். அவனுடைய தீயகுணங் களைக் கூட. ஆனால் ஒருவனை நேசிக்காதபோது எதையுமே மதிப்பதில்லையாம். அவனுடைய நல்ல குணங்களைக்கூடத்தான்! இதே நிலையில்தாம் நாம் இருந்தோம். எங்களுக்கு பிடித்தவர் செய்யும் தவறுகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
ஒருவேளை நாங்கள் சரியான திசையில் சிந்திக்க வில்லையோ? அல்லது சிந்தனையை வளப்படுத்திக் கொள்ளவில்லையோ? வெறும் பொழுது போக்குக்களில்
காலத்தை கடத்தி விட்டோம். கனவு உலகில் வாழ்ந்து தொலைத்து விட்டோம். ஏன்? என்னை நானே கொஞ்சம் சுயமதிப்பீடு செய்யத் தொடங்கினேன். ஏனெனில் எனக்கும் வவாவுக்கும் இடையிலான இடைவெளி வெறும் வருடங்களாக இருந்து விட்க்கூடாது அல்லவா?
இப்போது எங்கள் வீட்டிற்கு வர்ணம் பூசவேண்டி இருந்தது. இதே சாக்கில் சுவரில் இருந்த வேலப்பா படத்தை அகற்றிவிட வேண்டும் என்று பெரியவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதில் இப்போது எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. உள்ளுக்குள் சந்தோஷமே. ஆனால் வவா இதற்கு சம்மதிக்க மாட்டான். ஆனாலும் அந்தப்படம் அகற்றப்பட்டது. அன்று பாடசாலையால் வந்த வவா சுவரைப் பார்த்தான். அங்கு படம் இல்லை. அழுதான். ஆர்ப்பாட்டம் பண்ணினான். அடம் பிடித்தான். அவனைச் சமாளிக்கவே முடியவில்லை. அடுத்தநாள் புதிய ஒரு ‘வேலப்பா' படத்தைக் கொண்டுவ ந்து அந்த இடத்தில் மாட்டிய பிறகுதான் அவன் சமாதானம் ஆனான். இதில் வியப்பு என்ன இருக்கின்றது. நிச்சயமாக இன்னமும் சில வருடங்களுக்கு என்றாலும் அந்தப்படம் அந்த இடத்தில் இருக்கத்தான் போகின்றது. அந்தச் சுவரில் கழுத்தில் மாலையுடன், கையில் வேலுடன் மீண்டும் புது மனிதனாக, நிமிர்ந்து நின்றார் வேலப்பா
ல்ேலிகை 39augby éobagoibuDéñSí agarraulo — 2oolgo

Page 133
ရှဗ်၊
|rt Leda 200!
No.32, Arcort Road, Kodambakkam, Chennai- 600024. Phone: 04423723182 2473 534 Fax. 04424721336 E-mail: mithra2001 in@yahoo.co.in
உலகளாவிய அளவில் தமிழ் நேசிப் வெளியீடுகளையும், தமிழ் தொன்மம் ச புத்தாயிரத்துக்கான புதிய திசைகளை தமிழ் இ
மூத்த தலைமுறையில் தமிழுக்குச் செழுை சுந்தராஜன், லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, விஜயப ஆகியோர் இந்த விழாவிலே கெளரவிக்கப்படு
புத்தாயிரத்துக்கான தமிழ் இலக்கியப் திசைகளைச் சுட்டியும், அவற்றை முன்னெ பேருரைகள் வழங்கப்படும்.
தமிழ் இலக்கியத்தில் புனைகதை, கவின் மற்றும் மொழிமாற்று இலக்கியம் ஆகிய த என்ற நோக்குடன் ஆய்வுகள் நடைபெறும்.
தமிழ்நாட்டில் வாழும் கதைஞர், கவிஞர், ஆகியோருடைய பன்னிரண்டு புதிய நூல்கள் கலை இலக்கியக் கொள்கைகளுடன் ஒன்றிணைகிறார்கள்.
அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிர வாழும் படைப்பாளிகளுடைய பன்னிரண்டு புத் இந்தக் கூட்டுறவால், உலகளாவியதாகப் L வெளியாவதினால், மாபெரும் தோழமை உணர்வி புதிது.
தமிழுக்குப் புதிய வளம் தேடும் கவிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை தமது ஐம்பது
நேசர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எஸ்.பொ. நூல் வெளியிடப்பட இருக்கின்றது.
தமிழ் நவீன இலக்கியப் போக்கோடு ன பரிமாணங்களை வெளிக் கொணரும் மூத்த L
132
 

9 ఏసెబు 2004
இடம் : சர் பிட்டி, தியாகராஜ மகால்
ஜி.என்.செட்டி சாலை தி நகர் நாள் 10.01.2004 ரூ 11.01.2004
எண்.32, ஆற்காடு சாலை, கோடமாக்கம், 6′6′ගී(ගණ්‍ය - 600 0.24. 6ed GaoBlues : 2372 318 2 / 2 4 7 3 5 3 1 4 தொலைநகல் 247 21535 ôl dx 607 658y asko ; mathra20ô* in 3.y...?, ?) 3. :
ணபயும் கணினி யுகத்தில் தமிழ் புத்தக ார்ந்த கலாசாரத்தையும் மையப்படுத்தி, இலக்கியம் 2004 முனைப்புடன் தேடுகின்றது.
)ம சேர்த்த வல்லிக்கண்ணன், சிட்டி பெ.கோ. ாஸ்கரன், தி.க.சிவசங்கரன், டொமினிக் ஜீவா கிறார்கள்.
படைப்புகள் பயணப்பட வேண்டிய புதிய டுப்பதற்கான செயல்திட்டத்தை விவரித்தும்
தை, நாடகம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ளங்களில் புதிதுகள் செய்யப்பட வேண்டும்
t
நாடகாசிரியர், திரை உலகக் கலைஞர்கள் வெளியிடப்படுகின்றன. இவர்கள் பல்வேறு வாழ்பவர்களாயினும் தமிழ் சேவிப்பிலே
ான்ஸ், மலேசியா, ஈழம் ஆகிய நாடுகளிலே நிய நூல்களும் வெளியிடப்படுகின்றன.
1டைக்கப்பட்ட தமிழ் நூல்கள் ஒரே விழாவில் பு மலரும். இது தமிழ் இலக்கிய நிகழ்வுகளிலே
பலரும் பங்குபெறும் கவியரங்கமும் உண்டு. ஆண்டு வாழ்வனுபவத்தின் ஊடாக தமிழ்
வின் வர்லாற்றில் வாழ்தல் என்னும் பாரிய
க கோர்த்து வந்துள்ள நவீன ஒவியத்தின் ற்றும் இளைய ஓவியர்களின் கைவண்ணம்
ஸ் 39வது ஆண்ருமலsர் ஜனவரி ட உOOடி

Page 134
ஒவிய அரங்கமாகக் காட்சிபடுத்தப்படும்.
சர்வதேசிய அளவில் பரிசுகள் பெற்ற, இருக்கின்றன.
கலை இலக்கியச் சுவைப்பின் அங் கலைஞர்களின் நிகழ்த்துதல் கலைகளும்
தமிழ் ஊழியத்தின் தோழர்களே,
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, பெயர்ந்த படைப்பாளிகளுடைய நூல்களை ெ மேற்பட்ட நூல்கள் பிரசுரமாகியுள்ளன. பிற நாட்டு வாசகர்களின் சுவைப்புக்குத் தருதல்
இந்தப் பணிகளை விரிவுபடுத்தி த கோலங்களைப் புலம்பெயர்ந்த தமிழர்களின் மேற்கொள்கின்றோம்.
அப்பா எஸ்.பொ.வின் 'வரலாற்றில் 6IIT 2004இல் பிரசுரமாகின்றது.
தமிழ் இலக்கியம் 2004 நிகழ்விலே, இந் சி.டி.இந்திரா, இன்குலாப், கவிஞர் அறிவு சிவகாமி, தமிழச்சி, யுகபாரதி, ஆர்.வெங்க சிவதாணு, சாத்தன்குளம் அப்துல் ஜபா பாலுமகேந்திரா, மற்றும் ஒவியர்கள் ஆதிமூ சிவபாலன், பத்மவாசன், நெடுஞ்செழியன், உள்ளார்கள் என்பது மகிழ்ச்சி தருகின்றது
தமிழ் கலை இலக்கிய முன்னெடுப்பிே
முழுத் தோழமை உணர்வுடன் ஆதரவு நிகழ்வாக்கித் தருமாறு அன்புடன் வேண்டு
m m em
ஈழத்து நூல்கை
பிறந்தநாள், திருமண தின ஈழத்து நூல்களை வாங்கி செயலால் இந்த நாட்டுப்
களாவீர்கள்.
13
 
 

குறும்படங்களும் ஒரு நிகழ்வில் திரையிடப்பட
5மான நவீன நாடகங்களும், விளிம்புநிலை சுவைஞர்களுக்காக அரங்கில் நடத்தப்படும்.
மித்ர வெளியீடு மூலம் ஈழத்து மற்றும் புலம் வளியிட்டு வருகின்றோம். இதுவரை எழுபதிற்கும் ) நாடுகளின் படைப்புக் கோலங்களை தமிழ்
நோக்கமாக அமைந்தது.
மிழ் நாட்டின் தற்காலப் படைப்பிலக்கியக் சுவைப்புக்கு எடுத்துச் செல்லும் பணியையும்
ழ்தல்' என்னும் பாரிய நூல் தமிழ் இலக்கியம்
திரா பார்த்தசாரதி, வீ.கே.டி.பாலன், பேராசிரியர் மதி, கவிஞர் பழமலய், இந்திரன், திலகவதி, கடேஷ், பா.ராகவன், ப.திருநாவக்கரசு, பூபதி, ர், திரைப்பட இயக்குனர்கள் மகேந்திரன், )லம், சந்ரு, மருது, வீர சந்தானம், புகழேந்தி, உஷாதேவி, மனோகர் ஆகியோர் இணைந்து
ல தமிழ் நாட்டின் அனைத்து ஆர்வலர்களும் தந்து, தமிழ் இலக்கியம் 2004ஐ வரலாற்று கிறேன்.
ra
அன்புடன்
பொன்.அநுர
OD n
ஞாபகார்த்த பரிசளிப்பவர்கள் ப் பரிசு கொடுங்கள். இந்தச் படைப்பாளிகளை ஆதரித்தவர்
Doapõ 392Jo ebaõib Desiagarao – 2ool

Page 135
Qees/Oshes (6.
tf 9itataw39
LEELAE.
3ancy, Sła Saloon
24, Sri Ka Colo Jel:
134 ----
 
 

terprises
hionery & Jiems
hiresan Street, Ymbov ~ 13. 24394-12
மல்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 136
டம் பார்த்துவிட்டு நேரங் கழித்துப் படுத்த போது நேரம் நள்ளிரவையும் தாண்டி விட்டிரு உள்ளம் அனைத்திலும் இனம் புரியாத ஒரு உணர்வு புத்துணர்ச்சி ஊற் றெடுத்துப் பெருகிக் மனதைக் கிளறியது. என்ன செய்தும் நித்திரை என்6 கனவுகளால் நித்திரை குழப்பியது.
தேசம்ரே தேசம்ரே. என்ற பாடல் வரிகள்தான் மீண்டும் ரீங்காரித்துக் கொண்டிருந்தது. தமது உன்ன போது கூட உறுதி குலையாது, மனம் சோராது தெ வீரர்களின் உருவம் கண்ணில் நிறைந்து வியாபித பூரணமாக ஆக்கிரமித்திருந்தது.
தேசம்ரே தேசம்ரே. என்ற பாடல் வரிகள் கூ
எனது தாய் நாட்டிற்காக எனது உயிரையும் அர் இனிமையும் நிறைந்த அந்த ஹிந்திப் பாடல் வரிக
ஆம். சுதந்திரம் என்பது விலை மதிக்க முடியாத அடிமையாக ஈனத்துடன் கூனிக் குறுகி, அவமான போராடுவதும், அதற்காக இன்னுயிரை இழப்பதும் எடுத்துக் காட்டுகின்றது.
அத்திரை விறுவிறுப்பு 4 உலகம் துயி கூட்டம் ஆரள மூவரின் தன ஆர்ப்பாட்டம் குழுமி நின் மக்களுமே அ மகஜர்கள் ( இடுகிறார்கள்
அதே ே இரகசியமாக
135
 
 
 

இரவு அது. சற்று நீண்ட படம். பர்ர்த்து முடியும் ந்தது. ஆனாலும் இமைகள் மூட மறுத்தன. உடல் வித கிளர்ச்சி, ஆவேசம், கோபம் எல்லாம் கலந்த கொண்டே இருந்தது. ஏதேதோ நினைவுகள் என் ன அண்ட மறுத்தது. தூங்கிய சில கணங்களிலும்
அன்று இரவு முழுவதும் எனது காதில் மீண்டும் த இலட்சியத்துக்காக தூக்குக் கயிற்றில் தொங்கும் ரிந்த முகத்தோடு சென்று அந்த மூன்று விடுதலை திருந்தது. அவர்களின் லட்சியப் பற்று மனத்தை
றுவது என்ன?
ப்பணிக்கத் தயங்க மாட்டேன்’ என்றுதான் அர்த்தமும் ள் எமக்குக் கூறுகிறது.
து. எந்த விலை கொடுத்தும் பெறப்பட வேண்டியது. ாப்பட்டு நிற்பதைக் காட்டிலும் சுதந்திரத்திற்காகப் மகத்துவமானது என்பதைத் தான் அந்த வரிகள்
~ எம்.கே.முருகானந்தன்
ப்படத்தின் ஆரம்பமே ஆச்சரியத்தை ஊட்டுவதாகவும், கூடியதாகவும் இருந்தது. இருள் சூழ்ந்த நள்ளிரவு. மில் ஆழந்து கிடக்க, சிறைக்கதவு வாசலில் மக்கள் ாரப்பட்டு நிற்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட ர்டனையை இரத்துச் செய்யும்படி அந்த மக்கள்
செய்கின்றார்கள். கோஷமிடுகின்றார்கள். அங்கு வர்கள் மாத்திரமல்ல, தேசம் முழுவதிலுமுள்ள தனையே வேண்டுகிறார்கள். கொதித்து எழுகிறார்கள். காடுக்கிறார்கள். தம் குருதியால் கையொப்பம்
நரம் லாகூர் சிறைச்சாலையின் பின் மதிற் சுவர் உள்ளிருந்து இடிக்கப் படுகிறது. மதிலில் துவாரம்

Page 137
ஏற்படுத்தப்பட்டு ஒரு சிறுபாதை திறக்கப்படுகிறது. மூன்று உடல்கள் அங்கிருந்து இரகசியமாகக் கடத்தப்பட்டு நகரத்தின் ஒதுக்குப்புறமான ஆற்றோரத்திற்கு மூடிய வண்டியில் அவசர அவசரமாக கொண்டோடப்படுகிறது. அங்கு அந்த உடல்களை இனங்காண முடியாதபடி துண்டு துண்டுகளாகக் கோரமாக வெட்டி எரியூட்டு கிறார்கள்.
கடத்தப்பட்ட உடல்கள் மூன்று இந்திய விடுதலைப் போராளிகளுடையதாகும். உடல்களை வெட்டி எரியூட்டியது பிரிட்டிஷ் சிறை அதிகாரிகள். அடுத்தநாள் நிறைவேற்ற இருந்த மரண தண்டனையை மக்களின் ஆர்ப்பாட்டத்தின் உக்கிரம் காரணமாக மிக இரகசியமான முறையில் முதல்நாள் இரவே அவசர அவசரமாக நிறை வேற்றி முடிக்கிறார்கள்.
‘விடுதலை வீரர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்’ என்று எமது தேசத்தின் கவித்துவமான வரிகள் இந்நேரத்தில் ஞாபகத்திற்கு வந்தது.
தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான அந்த விடுதலைப் போராளிகளை நள்ளிரவில் துண்டு துண்டாக வெட்டி எரியூட்டிய செயல் கவனத்தில் எடுக்கப்படாமல் போய்விடவில்லை. அச்சம்பவம் காலத்தால் மறைந்தும் போகவில்லை. அது உள்ளுரக் கனன்று கொண்டிருந்தது. சுடர் விட்டெரிய ஆரம்பித்தது. பின் ஊழித்தீ போல பெரு நெருப்பாகி பரவி இந்திய விடுதலைக்கே இட்டுச் சென்றது. இது நாம் அறிந்த சரித்திரம் தானே.
பேடித்தனமான இந்த ஈனச் செயல் கிராம மக்கள் சிலரின் கண்களில் பட்டுவிடுகின்றது. காட்டுத் தீ போல இச்செய்தி நாடு முழுவதும் பரவுகிறது. இந்திய தேசத்தின் ஆன்மா உலுப்பப் படுகிறது. முழுத் தேசமே கொதித்து எழுகிறது.
சூரியன் அஸ்தமிக்காத இராட்சியம் என்று பெருமைப்பட்டுக் கொண்ட, பலம் பொருந்தியதாக விளங்கிய பிரிட்டிஷ் சாம்ராச்சியம் இத்தகைய பேடித்தனமானச் செயலை ஏன் செய்தது? யாருக்காகப் பயந்து அந்த சாம்ராச்சியம், கபடத் தனமாக இச்செயலை மேடையின் பின்புறத்தில் அரங்கேற்றியது? பகத்சிங்கும் அவனது இரு தோழர்களான சுக்தேவ்சிங்கும், ராஜ்குருவும்தான் அவ்வாறு கபடத்தனமாகக் கொல்லப்பட்டவர்கள்.
16
 

தூக்குக் கயிற்றை நிமிர்ந்த தலையுடன் உறுதி யோடு ஏற்றுக் கொண்ட இலட்சிய புருஷர்கள் அவர்கள்.
இச்செயல் நடந்தது 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி. அந்தச் சம்பவம் நடந்து இன்று 73 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்களின் மனதில் சாம்பல் பூத்த தணல்போல் உள்ளே கனன்று கொண்டிருக்கின்றது. இந்திய மக்களின் மனதில் ஆழப் பதிந்து அவர்களின் சுதந்திர உணர்வு களைத் துளிர்விடச் செய்திருக்கிறது. அதனால்தான் போலும் "த லெஜண்ட் ஒவ் பகத்சிங்’ என்ற இத் திரைப்படம் இந்தியாவெங்கும் பெரு வெற்றி யீட்டியது. இது மாத்திரமன்றி, 2002ஆம் ஆண்டிற் கான சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருதையும் பெற்றுக் கொண்டது.
விடுதலை வீரர்களைக் கொன்று எரியூட்டிய ஆரம்பக் காட்சியைத் தொடர்ந்து படம் பின்னோக்கியப் பார்வையில் சொல்லப்படுகின்றது. பகத்சிங்கின் வீரம் செறிந்த வாழ்க்கையையும் தேச விடுதலைப் போராட்டத்தில் அவனது முன்னோடி யான பங்களிப்பையும் இத்திரைப்படம் அர்ப்பணிப் போடு எடுத்துக் காட்டுகிறது. 零
பாரதம் தந்த மாண்புமிகு மைந்தர்களுள் முதன்மையானவன் பகத்சிங். காதலில் குலவி கனி மொழி பேசித்திரிய வேண்டிய யெளவன பருவமான 23 வயதில் தனது நாட்டிற்காக உயிர் நீத்த தியாகி அவன். இந்திய மக்களுக்கு எதிரான பிரிட்டிஷ் அரசின் காட்டுமிராணி டித்தனத்தை முழு உலகிற்கும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டி யவன். அவனது வெற்றி அவனது மரணத்தில்தான் சாத்தியமானது. அவனது மரணம் மிகப் பெரிய சோகமாக எம்மை அழுத்துகின்ற போதும் அவன் தன் மரணத்தை உயர் லட்சியத்திற்காக ஆரா அமுதாகப் பருகிக் கொண்டான் என்பதே S) 6660)LD.
மிக இள வயதிலேயே நாட்டுப் பற்றும் சதந்திர வேட்கையும் அவனில் அரும்பியதை டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி மிகத் தீர்க்கமான காட்சிகள் ஊடாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். அக்காலத்தில் நடந்த ஜிலியன்வாலா படுகொலை யின் கொடுரம் அந்தப் பிஞ்சு மனதில் ஆழமான, அழிக்க் முடியாத வடுவை ஏற்படுத்தி விடுகிறது. படத்தில் வரும் இப்படுகொலைக் காட்சி எம் மனதையும் உலுப்பித் தாக்கி விடுகிறது.
மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக
சில்லிகை 39வது ஆண்டுமAsர் ஜனவரி - 20Oபு

Page 138
ஒன்று கூடுகிறார்கள். வன்முறை ஏதுமற்ற சாத்வீக எதிர்ப்பு. ஆனால் தலை கனத்த பிரிட்டிஷ் ஏகாதி பத்திய அரசுக்கு அதனைக் கூடப் பொறுக்க முடிய வில்லை. கதவுகள் மூடப்பட்ட அந்தக் கோட்டை யின் மதிற்கவருக்குள் மக்களை ஓட ஓட சுட்டு வீழ்த்துகிறார்கள். மதிலில் ஏறித் தப்ப முயன்ற வர்களையும் கூட அவர்களது துப்பாக்கி இரை யாக்கிக் கொக்கலிக்கிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமின்றி இரத்தம் தோய மண்ணில் வீழ்த்துகிறார்கள். உயிர் தப்புவதற்கு கிணற்றுக்குள் கூடப் பாய்கிறது மக்கள் கூட்டம். அங்கும் மரணம் அவர்களுக்குக் காத்திருக்கிறது.
திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் எம் நெஞ்சை இக்கொடும் செயல் உலுக்குகிறது. ஆனால் அச்சம்பவம் தரும் சோகத்துக்கு மேலாக அதனைச் செய்த அடக்கு முறையாளர்களின் மேல் கோபமும், வன்மமும்தான் மேலோங்கியது. வெலிக் கடைச் சிறைச்சாலையினுள் இப்படி ஒரு அழிப்புத் தானே 1983ல் அரங்கேறியது என்பது நினைப்பு வர மனம் எம் இனத்தின் சோக வரலாற்றுக் காட்சிகள் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. இனவெறி பிடித்த அடக்குமுறை ஆட்சிகள் எங்கும் இப்படித்தான் இருக்கும் போலும், 1958இலும், 1983 இலும் எண்ணெய் ஊற்றிக் கொழுத்தியதும், காரோடு சேர்த்து தீ மூட்டியதும், பெண்களைச் சூறையாடியதும் நாம் பெற்ற அனுபவங்கள் அல்லவா.
இரத்தத்தால் சேறாகிய அந்த மண்ணைத் தன் கையில் அள்ளி கண் கலங்குகிறான் சிறுவன் பகத்சிங். அதே கண்கள்தான் பிற்காலத்தில் கோபம் சிந்தி எரிதணலாக பிரிட்டிஷ் ஆட்சியை பஸ்மீ கரணம் செய்ய முனைந்தது.
பகத்சிங் 12 வயதிலேயே மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொள் கிறான். ஆனால் எண்ணெய் திரண்டு வரும் நேரம் மகாத்மா காந்தி அதை இடைநிறுத்தி விடுகிறார். காரணம் மக்கள் சில வன்முறைகளில் இறங்கியதே. இந்திய மக்களுக்குச் சுதந்திரம் பெறுவதற்கான தகமை இன்னும் வந்துவிடவில்லை' என்று சொல் கிறார் மகாத்மா காந்தி.
உற்சாகத்தோடு போராட்டத்தில் இறங்கிய துடிப்புள்ள இள நெஞ்சுக்கு இது பெருத்த ஏமாற்ற மாகி விடுகிறது. மகாத்மா காந்தியிலும் அவரது அகிம்சைப் போராட்டத்திலும் நம்பிக்கை அற்றுப் போகிறது. ஆனாலும் அவனது சுதந்திர தாகம்
137

வற்றி விடவில்லை. தன் இலட்சியத்தை அடைய வேறு மார்க்கங்களைத் தேடுகிறான். சந்திரசேகர அஸாட்டின் புரட்சிப்படையில் இணைகிறான். அங்கு அவன் முக்கிய போராளியாக முன்னணிக்கு வரு கிறான். சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் அவனோடு தோள் கொடுத்து முக்கிய போராட்டங்களில் பங் கேற்கின்றனர்.
"குட்டக் குட்டக் குனிபவனும் மடையன், குனியக் குனியக் குட்டுபவனும் மடையன்’ என்று சொல்லுவார்கள். ஆனால் இது குட்டுபவர்களுக்கு ஒருபோதும் புரிவதில்லை. மாறாக குட்டு வாங்கு பவர்கள் எப்பொழுதும் குனிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் நிச்சயம் ஒருபொழுது நிமிர் வார்கள். எதிர்க்க முயல்வார்கள். இறுதியில் பொங்கி எழவும் செய்வார்கள். இது தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. இனக் குழுக்களுக்கும், சமூகங்களுக்கும், தேசங் களுக்கும் கூடப் பொருந்திவரும். இதை உலக வரலாற்றில் பலமுறை நாம் பார்த்திருக்கின்றோம். வியட்நாமிலும், ஆபிரிக்க நாடுகளிலும், இன்னும் எங்கெங்கோ குட்டப்பட்டவர்கள் நிமிர்ந்தார்கள். இப்பொழுது ஈராக்கிலும் பாலஸ்தீனத்திலும் பார்க் கிறோம். இந்தியாவின் அந்நிய ஆட்சியில் கண்டோம். இலங்கையில் இன்று எடுத்துக் காட்டி வருகிறோம். அதன் ஒரு அத்தியாயத்தையே இந்தச் சினிமாப் படமும் சித்திரிக்கிறது.
வெள்ளையர்களின் அதீத இனவெறியை, உணர்வைக் கிளறும் சம்பவங்களாகக் காட்சிப் படுத்துவதில் நெறியாளர் வெற்றி காண்கிறார். வெள்ளையர்கள் ஒரு மைதானத்தில் கிரிக்கற் விளையாடுகிறார்கள். அவர்கள் அடித்த பந்து இவர்கள் மேல் வந்து விழுகிறது. கைக்கு வந்த பந்தை இவர்கள் விட்டுவிடவில்லை. ஆணவம் பிடித்த வெள்ளை இளைஞர்கள் இவர்களை இளக் காரமாகப் பார்க்கிறார்கள். கறுப்பர்கள் என இழிவு படுத்துகிறார்கள். வாய்த் தர்க்கம் முற்றுகிறது.
This is our ground 61601 Q66ft 6061535T இளைஞன் குரோதத்துடன் குமுறுகிறான்.
* Dont forget, This is our Country” 6T6IST பகத்சிங் சாட்டையடியாகப் பதில் கொடுக்கிறான். யாரைக் கேட்கிறாய் கிஸ்தி, நாற்று நட்டாயா, களை பிடுங்கினாயா. என தொடங்கி உணர்ச்சி பொங்க வீராவேசமாக சிவாஜி கணேசன் அன்று பேசியது மனதில் வந்தது. அந்த நேரத்தில் வீர பாண்டிய கட்டபொம்மனில் பேசப்பட்ட அந்த
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - உOOபு

Page 139
வசனங்கள் எத்தனை அர்த்தம் பொதிந்ததாக எம் மனதில் வீழ்ந்தது. எத்தனை உள்ளங்களில் கிளர்ச்சியை ஊட்டியது. இங்கு அஞ்சும் ராஜ பாலின் காட்டமான அர்த்தம் நிறைந்த வசனங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கிறது.
இன்னொரு காட்சி, படத்திரையரங்கு. அங்கு வாசலில் இவ்வாறான ஒரு அறிவிப்பு. “Dogs and Indians are not allowed. 3 bilui biTLL96) g(bibgb கொண்டே இந்திய மக்களை இவ்வாறு கேவலப் படுத்தும் ஆணவம் வெள்ளையர்களுக்கு அன்று இருந்தது. ஏன் இன்றும் இருக்கிறது. அமெரிக்கா விலும், தென்னாபிரிக்காவிலும் கறுப்பின மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைகளாக நடாத்திய வரலாற்றை சூடு சுரணையுள்ள எந்த மனிதனாவது மறந்துவிட முடியுமா? இன்று கூட ஈராக் மக்களை விடுவிப்பதாக வெளியுலகுக்குக் காட்டிக் கொண்டு அங்கு ஆக்கிரமிப்புப் படையாகச் செய்யும் அக் கிரமங்கள் எத்தனை?
பகத்சிங் அந்நியராட்சியின் கொடுமைகளுக்கு எதிராகவும், தேசவிடுதலைக்காகவும் நடாத்திய போராட்டத்தில் வன்முறையே முக்கிய வழியாக இருந்திருக்கிறது. மகாத்மா காந்தி கூட, ‘நான் பகத்சிங்கின் தேசப்பற்றையும் சுதந்திர வேட்கையை யும் மதிக்கிறேன். ஆனால் அவரது வன்முறைப் பாதையை நான் அங்கீகரிக்கவில்லை’ என்கிறார்.
ஆனால் அவனுடைய வரலாற்றைத் திரையில் பார்க்கையில், உண்மையில் அவன் வன்முறையில் மட்டும் "காதல் கொண்டவனாகத் தோன்றவில்லை. அவனது காதல் முழுவதும் தேசவிடுதலையிலேயே இருந்தது. தேசவிடுதலைக்காக தனக்குத் தெரிந்த உத்திகள் அனைத்தையுமே முழு மூச்சுடன் பாவித் தான். ரெயில் கொள்ளைக்கும் கவர்னரின் கொலைக்கும் திட்டம் தீட்டிய அதே பகத்சிங்தான் எழுச்சிக் கட்டுரைகளை எழுதினான், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தான். நீதிமன்றத்தைத் தனது பிரச்சார மேடையாகப் பாவித்தான். அதன் உச்சக்கட்டமாக தியாகி திலீபன் போல உண்ணா விரதப் போரையும் தனது ஆயுதமாக்கிக் கொண்டான்.
உண்மையில் அடக்குமுறைக்கு எதிரான, மானிட விடுதலையையே இலட்சியமாகக் கொண்ட ஒவ்வொருவருள்ளும் ஒரு பகத்சிங் இருக்கவே செய்கிறான். அவன் பகத்சிங் போன்ற உன்னத மானிடனாக உருவெடுப்பதும் அதற்காக இன்னு
 

யிரையும் தியாகம் செய்வதும் அல்லது மாறாக சாதாரண மனிதனாக மண்ணோடு மண்ணாக மக்கிப் போவதும் அவன் வாழும் சூழலிலும் அவனுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலும்தான் தங்கியிருக்கிறது எனலாம்.
சிறையில் அடைபட்ட பகத்சிங் உண்ணா விரதப் போரை ஆரம்பிக்கிறான். அவனது உண்ணாவிரதம் 50 நாட்களுக்கு மேல் நடந்தது. ஆனால் 15 நாட்கள் கடந்த நிலையிலேயே சிறை அதிகாரிகள் அவனுக்கு பலாத்காரமாக உணவு ஊட்ட முயல்கின்றனர். முடியவில்லை. கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தினர். அப்பொழுதும் முடியவில்லை. குழாய் மூலம் உணவைச் செலுத்த வும் பார்த்தனர். அதனையும் அவன் மூர்க்கத் தனமாக மறுத்து விடுகிறான்.
எதுவும் முடியாத நிலையில் இவனை அடித்துத் துன்புறுத்திய இந்தியச் சிறைக் க்ாவலன் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என வன்மத்தோடு கேட்கிறான்.
‘என்னால் அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்கிறான் பகத்.
என்னால் கீழிப்படிவின்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாது’ என ஆக்கிரோஷத்தோடு ஓங்கிய கையுடன் கத்துகிறான் சிறைக் காவலன்.
இதற்கு பகத்சிங் அமைதியாகக் கூறிய மறு மொழி அந்தக் கவலாளியின் மனதைக் கூட சுட்டு விடுகிறது. பகத்சிங் கூறியது இவ்வளவுதான்.
'நீ உனது தொழிலுக்கு விசுவாசமாக நடந்து கொள். நான் எனது தேசத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்கிறேன்.
கொடிய மனங் கொண்ட, அந்நிய தேசத்திற்கு விசுவாசமாக இருந்த அந்தச் சிறைக் காவலாளி யின் மனச்சாட்சியை இப்பதில் சுட்டுவிடுகிறது. இப்பதில் ஒரு நன் விதையை அவனில் துளிரச் செய்கின்ற அற்புதத்தை அதன் பின் வரும் காட்சிகளில் காண்கிறோம்.
பகத்சிங்காக நடிப்பவர் அஜேய் தேவகன். இலட்சிய வேட்கையும், அநீதிக்கு எதிரான கோபமும் கொண்ட பாத்திரம் அவருக்குரியது. அற்புதமாகப் பொருந்தி விடுகிறது. பாத்திரமறிந்து சிறப்பாகச் செய்கிறார். இத்திரைப்படத்தின் வெற்றியை அவரது அபாரமான நடிப்புத்தான் சாத்தியமாக்குகிறது. அதன் வெற்றியை முழுவது
மல்லிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 140
மாகத் தன் தோளிலேயே பாரப்படுத்துகிறார். அவரது திரைப்பட வரலாற்றைப் பேசும்போது இப் படத்தில் நடித்தமை என்றுமே நினைவு கூரப்படும் என நம்பலாம். சிறந்த நடிகருக்கான விருது இப் பாத்திரத்தில் நடித்ததிற்காக அவருக்குக் கிடைத் திருப்பது உண்மையில் பொருத்தமானதுதான்.
இப்பொழுது எனது பொறுப்பு அதிகமாயிருக் கிறது. இனிவரும் படங்களில் நான் ஏற்கப் போகும் எல்லாப் பாத்திரங்களிலும் முழுமையான ஈடு பாட்டுடன் நடிப்பேன். பகத்சிங் வேஷம் கடுமை யானது. அதன் வெற்றிக்காக நான் கடுமையாக உழைத்தேன்’ என ஒரு பேட்டியில் அஜேய் தேவகன் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது.
திரைக்கதையை வடிவமைத்தது அற்புதம் என்று சொல்ல முடியாது. பகத்சிங் ஏன் கடவுள் நம்பிக்கையற்றவனாக மாறினான், அந்த மூவரும் கைவிலங்கிடப்படுவதை ஏன் மறுக்கிறார்கள், ஆனால் கயிற்றால் கைகளைக் கட்டுவதை ஏற்றுக் கொள்கிறார்கள் போன்ற பல விடயங்களை காரணப்படுத்தவில்லை. இருந்தபோதும் பகத் சிங்கின் உண்மை வரலாற்றுக்கு துரோகம் இழைக் காமல் உண்மையைச் சொல்ல முயன்றிருக் கிறார்கள். அதற்கு மேலாக பார்ப்பவர் மனதில் தேசப்பற்றையும், சுதந்திர வேட்கையையும் பதியச் செய்வதில் இயக்குனரான ராஜ்குமார் சந்தோஷி பெருவெற்றி பெற்றுள்ளார். இதற்காக அவர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார் என்பதை அறி கின்றோம். அவர் பூனாவில் படப்பிடிப்பை மேற் கொண்ட போது பகத்சிங்கின் கடைசிச் சகோதர ரான குல்தார் சிங்கை தன்கூட ஏழு நாட்கள் வைத்திருந்து பகத்சிங்கின் வாழ்க்கையின் நுணுக்கமான அத்தியாயங்களைத் திரையில் கொண்டுவர முயற்சித்தார் என்று சொல்லப்படு கிறது. பகத்சிங்காக நடித்த அஜேய்க்கு அப் பாத்திரம் பற்றிய முழுமையான பார்வை கிடைப் பதற்காக பகத்சிங்கின் வாழ்க்கை பற்றிய பல நூல் களையும் வாசிக்கக் கொடுத்தாராம்.
பகத்சிங்கின் வரலாற்குக்கு நெறியாளர் துரோகம் இழைக்காததைப் பாராட்டும் அதே நேரம் படத்தில் குறுகிய நேரமே வரும் காந்திக்கு அதே நீதிக்கோலை அவர் பயன்படுத்தவில்லை என்பதை Ակմ) சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். ஹரே ராம் இல் வந்ததுபோல இங்கும் காந்தி உபபாத்திரமாக வருகிறார். அங்கு போல் இங்கும் அவரின் பாத்திர
139

வார்ப்பு ஏதோ ஆங்கில ஆட்சியாளர்களின் கைக் கூலியாக அவர் நடப்பது போலவே அமைக்கப் பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரப் போரில் அவரின் பங்களிப்பானது எத்தனை குறைபாடுகள் இருந்த போதும் மறுக்க முடியாதது. காந்தியின் பக்கத்திற்கு நெறியாளர் நியாயம் கொடுக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும், அவை எவ்வளவு சிறியதாக இருந்த போதும் நினைவில் நிற்கும் வண்ணம் கவனமெடுத்துச் செதுக்கியுள்ளார் நெறியாளர். அவர்கள் ஒவ்வொரு வரினதும் குண இயல்பு, மனரிஸம், உரையாடல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்திருப் பதிலிருந்து இது புலனாகிறது.
காதல் காட்சிகள் இல்லாமல் ஒரு திரைப் படமா? அவ்வாறான ஒரு திரைப்படத்தைத் தயாரிப் பதற்கான துணிவு தமிழ்த் திரைப்படங்களுக்கு மாத்திரமல்ல ஹிந்தித் திரைப்படங்களுக்கும் கிடையாது என்பதை இத்திரைப்படம் நிரூபிக்கிறது.
சுதந்திர வேட்கை கொண்ட பகத்சிங்கின் வாழ்க்கையில் காதலுக்கோ காதலிக்கோ இடம் இருந்ததில்லை. ஆனால் அவனது பெற்றோர்கள் அவனுக்கு என்று ஒரு பெண்ணை நிச்சயித் திருந்தனர். இந்த ஒரு சிறிய இழை போதும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு. ஒரு அழகான பாடல் காட்சியை நுழைத்து விடுகிறார்கள். அவளுடன் அஜய் காடு, மேடு, ஆற்றங்கரை என அலைந்து பாடும் ஒரு பாடலை இணைத்து விட்டார்கள். ஆனால் அது காதலின் நெருக்கக் காட்சிகள் கொண்ட பாடல் அல்ல என்பது நிம்மதி அளிக்கிறது.
‘என் பாதை வேறு, உன் பாதை வேறு. என் பாதை கரடு முரடானது. அங்கு காதல் போன்ற மென் உணர்வுகளுக்கு இடமில்லை என அவன் பாடுவது போல அமைந்துள்ளது அப்பாடல். உரையாடல்களுக்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பு அடியிடப்படுவதால் இவற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஏ.ஆர்.ரஹற்மானின் இனிய இசை காதுக்கு பெரு விருந்து அளிப்பதுடன் தேசாபிமான உணர்வினை யும் தூண்டிவிட உதவுகிறது. முக்கியமாகப் பின்னணி இசை அற்புதமாக உள்ளது. தேஸ் மேரே. மேரே ரங் தி. ஆகிய பாடல்கள் காதுக்குள் தேனாகப் பாய்கின்றன. சமீர் படத்தின் கனதிக்கு
ino 39வது ஆண்டுமலர் ஜனவரி - உoo!

Page 141
ஏற்ப, அதன் விடுதலை உணர்வைக் கூர்மைப் படுத்தும் வண்ணம் பாடல்களை இயற்றியுள்ளார்.
இயக்குனர் தான் சொல்ல வந்ததைத் தெளி வாகச் சொல்வதுடன் உரத்தும் சொல்கிறார். சொற்களை விழுங்கவில்லை. கருத்துக்களை மூடி மறைக்கவில்லை. வரிகளுக்கிடையே சொல்லப் படாதவற்றை தேடிப்பிடிக்க வேண்டிய வேலையை பார்வையாளர்களின் மூளைக்கு வைக்கவும் இல்லை. சொல்ல வந்த செய்தியை தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்கிறார். இதனால் டான்ஸ், பாட்டு, காதல், கொமடி என்ற வழமையான வர்த்தக ரீதியான திரைப்பட மோகத்தில் இருப்ப வர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடும் என எண்ணுகிறேன். ஆனால் அதே நேரத்தில் நவீன திரை நுணுக்கங்களையும், உத்திகளையும் கொண்ட கலாபூர்வமான அற்புத படைப்பு என்றும் : சொல்லிவிட முடியாது. நல்ல படம். அந்த வகை யில் பார்க்கும் போது, தன்மான உணர்வும், தேசப் பற்றும், சுதந்திர வேட்கையும் கொண்ட தரமான ரசிகர்களின் தாகத்தைப் பூர்த்தி செய்வதாக அமை கிறது. ஒரு காலத்தில் வழுபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங் களைப் பார்த்து புளங்காகிதமடைந்ததோடு மொழிப் பற்று, இனப்பற்று, சுதந்திர வேட்கை ஆகிய வற்றைப் பெற்றுக் கொண்ட எம் போன்றவர்களுக்கு மிகுந்த மனத்திருப்தியை அளிக்கிறது.
பதினேழு ஆயிரத்திற்கு மேலான போராளி களும், இன்னும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் தமது இன்னுயிரை அர்ப்பணித்த
நீங்கள் பிற்நத மன மொழியையும் மனத இருந்தால் இந்த ம6 களினது நூல்களை
ஆதரிய
120
 
 
 
 
 

போராட்ட வரலாறு எமக்கு உண்டு. எனினும் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் இன்று பேச்சு வார்த்தையில் சுணங்கி நிற்கிறது. தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் ஒன்றுக் கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இக்காரணத்தால் பேச்சு வார்த்தை ஸ்தம்பித்து நிற்கிறது.
ஸ்தம்பித்து நிற்பது போல வெளிப்படையாகத் தோன்றினாலும் உண்மை அதுவல்ல. தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய மனம் வராத சிங்கள மேலாதிக்க சக்திகள் தங்களுக்குள் முரண்படுவது போல் வெளிக்காட்டிக் கொண்டு தமிழ் மக்களுக்கு ‘பெப்பே காட்ட உள்ளுர முயல்கின்றன. கடந்த 55வருடச் சரித்திரத்தில் தமக்கு மீண்டும் மீண்டும் ஏய்ப்பு காட்டியதை தமிழ் மக்கள் மறந்து விடவில்லை. என்றும் மறக்கப் போவதும் இல்லை. பகத்சிங்கும் அவனது தோழர் களும் காட்டிய உறுதியையும் அர்ப்பணிப்பையும் நாம் ஒருமித்து வெளிக்காட்டினால் ‘உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே'தான் அவர்களுக்கு விடையாகக் கிடைக்கும்.
・・。 விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும் மிகவும் தேவைப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் அத்தியாவசியமாகப் பார்க்க வேண்டிய படம். ஆங்கில உபதலைப்பு களுக்கு பதிலாக தமிழ் உபதலைப்பு இடப்பட்டால் வடகிழக்கில் பட்டி தொட்டியெங்கும் ஆர்வத்தோடு பார்க்கப்படும் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு செய்வது சம்பந்தப்பட்டவர்கள் கடமை.
ண்ணையும் மக்கள் ார நேசிப்பவர்களாக ண்ணின் எழுத்தாளர் வாங்கி, அவர்களை புங்கள்.
seas 39வது ஆண்டுமலர் ஜனவரி - உOOபு

Page 142
புத்தளம் மாவட்டத்தி
சாஹித்திய
எம். டீ. குணசேன்
மல்லிகைப் பந்தல் óló2.Jól இங்கு பெற்றுக்
பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாடநூல்கள், அகராதி இலக்கிய நூல்க ஈழத்து மற்றும் புலம்பெ நூல்கள் அ
புத்தகக் கண்காட்
சாஹித்திய பு
4 குருதி (பஸ் நிலையத்தி
புத்த
6gTEmausuf / blöITED
ஈழத்து மற்றும் புலம்பெ பாடநூல் வெளியீட்டா6 - தொடர்பு ெ ᏭᎧ ikilᏧᏏ6iᎢ ;ᏏII6bᏧᏏ60Ꭰ6ll விற்பனை செய்
11 -

ல் ஒரு புத்தக இல்லம்! |த்தக இல்லம்
னாவின் ஏஜன்ட்
ரீயீடுகள் அனைத்தையும் *கொள்ளலாம்
த் தேவையான காகிதாதிகள்,
கள், உபகரணங்கள், ள், சஞ்சிகைகள் யர்ந்த எழுத்தாளர்களின் னைத்திற்கும்
சியும் விற்பனையும்
த்தக இல்லம் கல் வீதி, D(d) (91660)(Duhi)) எாம்.
லநகல் : 032-66875
யர்ந்த எழுத்தாளர்களும் ளர்களும் தயவு செய்து காள்ளுங்கள்.
காட்சிக்கு வைத்து து உதவுவோம்.
ல்ேலிகை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oடி

Page 143
ழத்துச் சிறுகதை. வரலாற்றில் மல்லிகையின் பங்களிப்பு மகத்தானது. கடந்த நாலு தசாப் தங்களாக பல சிறுகதை எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் சிறுகதை எழுத்தாளர்களை உருவாக்கியும், வளர்த்தும் விட்ட பெருமை மல்லிகைக்கு உண்டு என்றால் அது மிகையாகாது. அதே சமயம் இவ் எழுத்தாளர்களின் படைப்புகளால் மல் லி கையும் மகத் தான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மல்லிகையில் இவ்வருடத்திலேயே முதன் முதலாக எழுதியவர்களும் இருக்கிறார்கள். ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை எழுதிக் கொண்டி ருப்பவர்களும் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டு இடைவெளியில் மல்லிகைச் சிறுகதைகளை ஒரு தொகுதியாக செங்கையாழியான் தொகுத்து மல்லிகைப் பந்தல் ஊடாக வெளியிட்டுள்ளார். ஈழத்து சிறுகதையின் போக்கை இனங்காட்டி நிற்கும் இத்தொகுதியில் பழம்பெரும் எழுத்தாளர்கள் முதல் புதியவர்கள் வரை படைத்த கதைகள் இடம் பெற்றுள்ளன.
இன்று தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகி விட்டன. தொலைக்காட்சியும், கணணியும், வலைப் பின்னலுமாக மக்களை ஆக்கிரமித்துள்ள நிலை யிலும் வாசிப்புப் பழக்கம் தொடரவே செய்கிறது. எனினும் இயந்திரமயப்பட்ட உலகில் சிறுகதைகள் உருவில் சிறுத்து வருகின்றமை கண்கூடு. வாரப் பத்திரிகைகள் முன்னரைப் போல் நீண்ட சிறு கதைகளை வெளியிடுவதில்லை. எனினும் ஈழத்துச் சஞ்சிகைகள் இன்னமும் சிறுகதைகளுக்கு முக்கிய இடம் வழங்குகின்றன. கடந்த ஒரு வருடத்தில்
122
 

7ண்டு மல்லிகைச் றுகதைகள்
~ பிரகலாத ஆனந்த்
(மார்கழி 2002 முதல் கார்த்திகை 2003 வரை) 40 கதைகளை மல்லிகை பிரசுரித்துள்ளது. மூத்த எழுத்தாளர்களான செங்கையாழியான், தெணியான் முதல் இடைக்கால எழுத்தாளர்களான மு.பஷீர், சுதந்திரராஜா, முருகபூபதி, ச.முருகானந்தன். பெண் எழுத்தாளர்களான அன்னலட்சுமி இராஜதுரை, கொக்கிராவ ஸஹானா, புதியவர்களான அப்பர். தேவகாந்தன், கருணாகரமூர்த்தி வரை பல எழுத் தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. இவர் .களில் அதிக சிறுகதைகளை எழுதியவர்கள் சி.சுதந்திரராஜா, ச.முருகானந்தன், மு.பவரீர் ஆகியோர் ஆவர். s
இச்சிறுகதைகள் இன்றைய ஈழத்துச் சிறுகதை களின் போக்கையும், புலம் பெயர்ந்த எழுத்தாளர் களின் பார்வையையும், சமகால யுத்தம், இடப் பெயர்வு முதலானவை ஏற்படுத்தியுள்ள அவலங் களையும் தரிசனமாக்குகின்றன. இவ்வருடத்தில் வெளியான சிறந்த 12 கதைகளை ஈழத்துப் பத்திரிகை சஞ்சிகைகளிலிருந்து தேர்வு செய்யும் போது நான்கு ஐந்து சிறுகதைகளாவது மல்லிகைச் சிறுகதைகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நம்பிக்கை, தீராவிலை, தாத்தா சுட்ட மான், இந்த மண், குழாயடியும் குறுகுறுக்கும் நினைவுகளும். நறுக்குத் தெறித்தாற்போல் மனதைத் தொடும் சுதந்திரராஜாவின் சிறிய கதைகள் என்பன நிமிர்ந்து நிற்கின்றன.
இன்று சிறுகதைகள் விதம் விதமாக எழுதட் படுகின்றன. சிறுகதைகளாயினும் சரி, வேறு எந்தக் கலை வடிவாயினும் சரி அவை அடிப்படையில் உரு ரசிப்புத்தன்மையை உருவாக்கிட வேண்டும்

Page 144
எழுதப்படுகின்ற முறையினால்தான் கதைகள் சுவைக்கப்படக் கூடியவையாகின்றன.
பொதுவாக கதைகள் எழுதுபவர்கள் உருவ்ம், உத்தி, உள்ளடக்கம் என்ற அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சில அழகியல் கதைகளில் சமூகப்பார்வை இருப்பதில்லை. சமூகப் பார்வை யுடன் எழுதுகின்ற சில கதைகளில் வரட்சித் தன்மை தெரிகிறது. சில நல்ல உத்திகளைப் பாவிப் பவர்கள் உருவம், உள்ளடக்கம் இரண்டையுமே கோட்டை விட்டுவிடுகின்றனர். நல்ல சமூகப் பார்வையுடன், அழகியல் மிளிரும் வண்ணம், தகுந்த உத்தியோடு எழுதப்படுகின்ற கதைகளே வெற்றி பெறுகின்றன. இவை ஒன்றிற்கொன்று முரணானவை இல்லை என்பதையும் நாம் மறந்து விடலாகாது.
கதாசிரியன் மனிதர்களையும், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் செயற்பாடுகளையும் அடிப்படை யாகக் கொண்டே கதைகள் படைக்கிறான். ஒரு படைப்பாளி தனது புற உலக அனுபவங்களையும், உணர்வு ரசனை அனுபவங்களையும் சேர்த்து படைப்புகளை உருவாக்கிறான். புறக்கண்ணின் முன்னே விரியும் காட்சிகளின் அடிப்படையில், அகக் கண்ணில் காட்சிகளை உருவாக்கி, கற்பனை யோடு கலந்து சுவையாகத் தருகிறான். படைப்பும் படைப்பாற்றலும் இத்தகைய செந்நெறியில்தான் தனித்தன்மை பெறுகின்றன. படைப்பின் ஊடாக வெளிப்படுத்தப்படும் வாழ்க்கை அனுபவம் சொந்த அனுபவமாக அமையும்போது அது அழகாக வார்க்கப்படுகிறது. மல்லிகையின் கடந்த ஓராண்டு சிறுகதைகளில் இதை அவதானிக்க முடிகிறது.
பல படைப்புகளை வாசிப்பதன் மூலமும் சில அனுபவங்களைப் பெறமுடியும் எனினும், நேரடி அனுபவத்தினூடாக வருகின்றபோது அவை யதார்த் தமாகவும், தெளிவாகவும், சுவையாகவும் வார்க்கப் படுகின்றன. சாதியத்திற்கெதிரான படைப்புகளும், சமகால யுத்த அவலம் தொடர்பான படைப்புகளும் மல்லிகையில் நேர்த்தியாக வந்துள்ளமைக்கும், புலம் பேயர்ந்தவர்களின் வாழ்வு நிலை அழகாக வார்க்கப்பட்டுள்ளமைக்கும் நேரடி அனுபவங்களே காரணமாகி நிற்பதைக் காண முடிகிறது.
சமகாலத்தில், அக்காலத்து எரியும் பிரச்சினை களைத் தொட்டுக் கொள்ளாமல் படைப்புகளை உருவாக்க முடியாது. எக்காலத்திற்கும் பொருந்தும் மனித உணர்வுகளுடன் தொடர்பான கதைகளில் கூட. கதை நகரும் களத்தில் சமகாலம் மையல்
1 . . . . .

கொள்ளவே செய்கிறது. குறிப்பாக யுத்தகாலத்தில் எழுதப்பட்டுள்ள சில கதைகள் மல்லிகைக்கு மெரு கூட்டி நிற்கின்றன. பார்வைகள் மாறுபடலாம். ஆனால் அவலங்கள் நிஜம்தானே? யுத்தம் தற் காலிக ஓய்வுக்கு வந்தும் கூட சமாதானம் மலரும் நம்பிக்கையூட்டும் கதைகள் எதுவும் வெளிவர வில்லை.
மல்லிகைச் சிறுகதைகள் நாட்டில் பல்வேறு பல தேச எழுத்தாளர்களினாலும், புலம் பெயர்ந்த எழுத்தாளர்களினாலும் எழுதப்படுவதால் அவ்வச் சூழலுக்கேற்ப கதைகள் படைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மார்கழி இதழில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியானும், ச.முருகானந்தனும் கதை படைத் துள்ளார்கள். இரண்டுமே மண்வாசனை மிக்க, சம கால யுத்த அவலங்களைத் தொட்டு நிற்கும் நல்ல படைப்புகளாகும். ச.முருகானந்தனின் கதையில் வன்னி வாழ்வின் மண்வாசனையுடன், யுத்த அவலங்களும் தரிசனமாகின்றன. இறுதியில் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் மனைவி வேட்டையாடப் பட்டதைப் படிக்கும்போது மனது அழுகிறது. செங்கையாழியானின் கதையில் அவலங்களினூடே நம்பிக்கை ஒளிக்கிற்று குறியீடாகக் காட்டப்படு கின்றது.
தை 2003 மல்லிகை ஆண்டு மலரில் ஏழு கதைகள் பிரசுரமாகியுள்ளன. தெணியானின் ‘இவன் மிச்சம் நல்லவன்’ என்ற சிறுகதை இன்றும் கூட சாதி வேறுபாடு நீறுபூத்த நெருப்பாக இருப்பதை ஒரு திறமையான இளம் ஆசிரியன், மூத்த ஆசிரியர் என்ற இரு பாத்திரங்களினுடாகப் புட்டு வைக்கின்றார். வழமையான தெணியானின் எழுத்து நடை கதைக்குச் சுவை சேர்க்கிறது. ஒரு நல் லாசிரியன் என்ற வகையில் அவனது திறமையைப் பயன்படுத்தும் அதேவேளையில், அவனை வீட்டிற்குள் எடுக்க மறுக்கும் சாதிமான் களின் போர்வை விலக்கப்படுகிறது. ‘என் இனமே, என் சனமே கதையில் பொ.கருணாகரமூர்த்தியும் இதே கருவைக்கொண்டு வேறு உருக் கொடுத் திருக்கிறார். வெளிநாட்டு வாழ்க்கையில் உயர்ந்து விட்ட பின்னரும், இங்கேயும் தேநீர் அருந்தாமை மூலம் இரு நண்பர்களுக்கிடையேயான சாதிபாகு பாடு காட்டப்படுகிறது. இன்னொரு கதையான செ.குணரத்தினத்தின் தனிவழியும் சாதியையே தொட்டு நிற்கிறது. இங்கே சாதி மாறிச் செய்யும் திருமணமும் அதன் தாக்கங்களும் அலசப் பட்டுள்ளன.
முல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - உOOபு

Page 145
அன்னலட்சுமி இராசதுரையின் ‘ஒரு தாயாக இருக்கும் கொடுமை சிறுகதையில் பருவமடைந்த இளம் பிள்ளைகளை விட்டுவிட்டுச் செல்லும் தாயார் களின் வேதனைகளும், மகளுக்கு ஏற்படும் சோதனைகளும் கதையாக்கப்பட்டுள்ளது. தகப்பனா லேயே வஞ்சிக்கப்படும் மகள் அபூர்வமான பாத்திர மானாலும் கூட இல்லாத பாத்திரமல்ல.
மு.பஷீரின் 'மிருக உத்தி குடும்ப உறவை. கணவன் மனைவி பிணக்குகளை வீட்டில் வளர்க்கும் மிருகங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எழுத்து அழகாக இருந்தும், கொஞ்சம் ஆபாசத்தனமும் எட்டிப் பார்க்கிறது.
எனது அடியில் அப்பரின் முதற் சிறுகதை. முத்தான எழுத்து, வர்ணனைகள் எல்லாம் இருந்தும் சத்தான கரு இல்லை. வெளிநாட்டு வாழ்வு, புலப் பெயர்வு அலசப் பட்டுள்ளது. வாசகனை ஈர்க்கும் நடை எனினும் சம்பவக் கோர்வையாக கதை சொல்லப்படுகிறது.
ஆண்டு மலரின் இறுதிக் கதையான ச. முரு கானந்தனின் தாத்தா சுட்ட மான் சற்று வித்தியாச மான கதை. எதுவித பிரசார வாடையுமின்றி அழகு ணர்வோடு எழுதப்பட்டிருந்தது. வாசகனை கதை யோடு அழைத்துச் சென்று, வன்னி வனப் பிரதேசத்தைக் கண்முன் கொண்டு வரப்பட்டுள்ளது. கதையினூடே பாலியல் உணர்வு விரசமின்றி இழையோடி நிற்கிறது. இடியன் மணியம் பாத்திர வார்ப்பு இயல்பாக உள்ளது. மணியத்தோடு நாமும் காட்டுக்குள் சென்று வேட்டையாடுவது போல இருக்கிறது. இம்முறை ஆண்டு மலரில் வெளியான கதைகளைப் பற்றிக் குறிப்பிடும் கெக் கிராவ ஸ்ஹானா ‘நூற்றி முப்பத்தாறு பக்கங்களைக் கொண்ட ஆண்டு மலரில், நூற்றி இருபத் தெட்டாவது பக்கம் படித்து முடியும்வரை ஒரு நல்ல சிறுகதையைப் படிக்க முடியவில்லை என்ற ஏக்கம் தொடர்கிறது. நூற்றி இருபத்தியொன்பதாவது பக்கத்தில் அந்தக் குறை தீருகிறது. ச.முருகானந் தனின் "தாத்தா சுட்ட மான் காரணம்” என்று கூறுகிறார்.
மாசி மாத மல்லிகையில் பழம்பெரும் எழுத் தாளர் பாலமனோகரனின் 'கறுப்பும் வெள்ளையும், வே.சாரங்கனின் ‘அடையாளம்', சுதந்திரராஜாவின் ‘தணலின் துளிநிலை ஆகிய சிறுகதைகள் பிரசுர மாகியுள்ளன. மூன்று கதைகளும் வாசகனை ஈர்த்துச் செல்கின்றன. நீண்ட இடைவெளிக்குப்
1. 2 - ح - - ܝ
 

பின்னர் எழுதியுள்ள பாலமனோகரன் புலம்பெயர்ந்த காலத்தில் எழுதிய கதையெனினும், அவரது மண் வாசனைக் கதைகள் தந்த நிறைவை இக்கதை தரவில்லை. சுதந்திரராஜாவின் கதையில் வார்த்தை கள் வர்ணஜாலம் காட்டி மிளிர்கின்றன.
பங்குனி இதழில் ச.முருகதனந்தனின் ‘இந்த மண் சிறுகதை பிரசுரமாகியுள்ளது. கொடிய யுத்தத் தின் சிதிலங்கள் கதையில் மிகத் துல்லியமாக நீண்ட இடைவெளிக்குப் பின் புலம்பெயர்ந்த ஒருவரின் ஊர் திரும்புதலினுடாக தரிசனமா கின்றது. இந்த மண்ணில் அவனது இளமைக்கால நினைவுகளும், முன்பிருந்த அமைதியும், தொடர்ந்து வந்த இராணுவ ஆக்கிரமிப்புக் கொடுமைகளும் மனதைத் தொடும் வண்ணம் காட்டப்பட்டுள்ளது. இறுதியில் விதவைக் கோலத்தில் தங்கையைத் தரிசிப்பதோடு கதையை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தங்கையின் சிறுமகனின் துப்பாக்கி தேடல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அதனால் பிரசார வாடை தொனிக்கிறது. ܀-
சித்திரை இதழில் மு. பஷீரின் ‘விட்டில்’, சாரணாகையூமின் ‘முகவரி இல்லாத முகங்கள் ஆகிய கதைகளில் வெளிநாட்டு வேலைவாய்புப் பிரச்சினைகள் அலசப்படுகிறது. பஷீரின் கதையில் உலகை உலுப்பும் எயிட்ஸ் கதையின் கருப் பொருளாகிறது. ஏஜன்சியால் ஏமாற்றப்படும் கொடுமை சாரணாகையூமின் கதையில் தரிசன மாகிறது. கஷ்டப்பட்டு பணத்தைக் கொடுத்து, ஏமாந்து, இருப்பதையும் இழந்து நிற்கும் நிலை மனதைத் தொடுகிறது.
வைகாசி இதழில் கெக் கிராவ ஸஹானா எழுதிய ‘முடிவில் தொடங்கும் கதைகள், சி.சுதந்திரராஜாவின் வருணியின் விலாசம் ஆகிய கதைகள் பிரசுரமாகியுள்ளன. தனக்கே உரிதான அழகான நடையில் கெக்கிராவ ஸஹானா கதை யோடு எம்மை முடிவு வரை அழைத்துச் செல்கிறார். வருணியின் விலாசம் கதையில் இறுக்கமான கட்டுக் குலையாத நடையுடன் ஆங்காங்கே மனதைத் தொடும் விடயங்களைத் தூவியுள்ளார் சுதந்திரராஜா. சுதந்திரராஜாவின் கதைகள் கடுகு சிறிதானாலும் காரம் பெரிதானவை. இந்த நடையும், வீச்சும், தெறிப்பும், சில இடங்களில் மறுமுறை படிக்கும்போது தெளிவும் ஏற்படுகிறது.
ஆனி இதழ், சிறுகதைச் சிறப்பிதழ் போல் நான்கு நல்ல சிறுகதைகளுடன் வெளிவந்துள்ளது. தெனியானின் ‘தீரர்விலை’க் கதையில் சீதனக்
ல்ேலிகை 39வது ஆண்ருமலர் ஜனவரி - 20Oபு

Page 146
கொடுமை வித்தியாசமான கோணத்தில் அலசப் பட்டுள்ளது. பெண்ணின் சந்தையோடு எழுதப் பட்டுள்ள இக்கதையின் நாயகியின் துணிச்சலான முடிவு - சீதனம் கேட்ட காதலனைத் தூக்கியெறிவது இன்று பெண்கள் மத்தியில் கட்டாயம் தேவைப்படும் ஒன்றாகும். எனினும் அவளே சீதனம் கேட்பது, மனதைத் தொடவேண்டும் என்பதற்காக என்றாலும் கொஞ்சம் மிகைப்படுத்தல்தான். தவிர்த்திருக்கலாம். மு.பஷரின் ‘மைமூன் ஆச்சி அடுத்த கதை, வழமை பான பவழீரின் வித்தியாசமான நடை இக்கதைக்கு மெருகு சேர்க்கிறது. மைமூன் ஆச்சி பாத்திரம் சிறப்பாக வார்க்கப்பட்டிருக்கிறது. கலையுணர்வு வோடு செல்லும் அழகான கதை வார்ப்பு. ச.முரு கானந்தனின் ‘மண்ணின் மைந்தர்கள் யுத்தத் தினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி, தொண் ணுாறுகளின் பிற்பகுதியில் பலவித இன்னல்களைத் தரிசித்த வன்னி மக்களின் வைத்திய வசதி பின்மையைச் சுட்டி நிற்கிறது. இந்த மண்ணில் மக்கள் அவலப்பட, வெளிநாட்டில் வைத்தியம் செய்யும் இந்நாட்டு வைத்தியர்களைத் தோலுரித்துக் காட்டுவதோடு, மக்களை நேசித்து இங்கு நின்று பணி புரிந்தவர்களை மண்ணின் மைந்தர்களாக சுட்டி நிற்கிறது. அடுத்த கதை சுதந்திரராஜாவின் ‘கவிதையில் ஒளி நகல் உழைக்கும் மக்களின் வாழ்வு நிலையையும், காதலுணர்வையும் நறுக் காகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஆடி மாத மல்லிகையில் தேவகாந்தனின் வன்மம், ஒலுவில் அமுதனின் நெருப்போடு நெருப்பு ஆகிய கதைகள் பிரசுரமாகியுள்ளன. தேவகாந்தன் புலம்பெயர்ந்த காலத்தில் தமிழகத்தில் நிறையவே எழுதியவர் எனினும் மல்லிகையில் இது இவரது முதல் கதை. வன்மம் சிறுகதையில் இன்றைய இளைஞர்கள் கருப்பொருளாகியுள்ளனர். அடுத்த கதையான ஒழுவில் அமுதனின் நெருப் போடு நெருப்பு பாலியல் உணர்வுகளை தொட்டு நிற்கும் கதை.
ஆவணி இதழில் புதியன விரும்புதல் என்ற சுதந்திரராஜாவின் கதையும், வாப்பா வருவார் என்ற சாரணாகையூமின் கதையும், லெ.முருகபூபதி யின் ‘நம்பிக்கை சிறுகதையும் பிரசுரமாகியுள்ளன. நம்பிக்கை சிறுகதை சற்று மாறுபட்ட கதை. மத நம்பிக்கைகள் பற்றி கொஞ்சம் நகைச் சுவையாக அலசியுள்ளார். நோய் வாய்ப்பட்டு படுக்கையி லிருந்து மீண்ட தனது சுய அனுபவத்தை ஒரு அழகானச் சித்திரமாக்கி நிறைவைத் தந்திருக் கிறார். கதைக்களம் அவுஸ்ரேலியா, வாப்பா
15

வருவார் கதையில் குடும்ப உறவுகள், பிரிவுகள் பற்றி சுவையாகப் படைத்துள்ளார். புதியன விரும்புதல் சொற் சிக்கனத்துடன் எழுதப்பட்ட நல்ல
கதை.
புரட்டாதி மல்லிகையில் ச.முருகானந்தன் எழுதியுள்ள இன்னொரு விடியலுக்காய்’ சிறு கதையின் முற்பகுதியில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலியுறுத்தப்படுகிறது. பிற்பகுதியில் இனவிடுதலைப் போர், மக்கள் சந்திக்கும் அவலங்களைக் காட்டி நியாயப்படுத்துகிறது. ஒரு விதவையின் துயரை அழகாகச் சொல்ல ஆரம்பித்த முருகானந்தன் கதையின் இடையில் முறிவை ஏற்படுத்தி பிரசார பாணியில் நகர்த்துகின்றமை நல்ல ஒரு கதையை தோல்வியுற வைக்கிறது. இணுவையூர் உத்திரனின் ‘பணிவுக் கதை உளவியல் ரீதியில் எழுதப்பட்ட ஒரு காதல் தோல்விக் கதை. ஒரு பெண்ணின் ஊக்குவிப்பு மட்டுமன்றி, உதாசீனம்கூட ஒருவனை வாழ்வில் முன்னேற வைக்கும் என அழகாகச் சொல்கிறார். அடுத்த கதை ஆசி.கந்தராஜாவின் தவக்கோலங்கள் தனது இளமைக் காலத்தில் சந்தித்த ஓர் ஆசிரியையின் நினைவுகளோடு கதையை நகர்த்தியுள்ளார். மனிதநேயப் பணிகளின் அவசியம் கதையின் இறுதியில் கூறப்படுகிறது. சுதந்திரராஜாவின் 'விரிசல் அடுத்த சிறுகதை. இரண்டே பக்கத்தில் ஒரு சுவையான காதல் தோல்விக் கதையை சொல்லி மனதைக் கவர் கிறார். ’கண்ணில் கண்டு பலகாலம் கடந்து பூவாகிப் பழமாகி அழுகி விழுந்த விதையில் மரம்
கூட முகிழ்ந்து விட்டது போன்ற சுவையான கதை
சொல்லும் வசனங்களால் தூவப்பட்டு கதையின் இறுதி வரியாக ஏறேறு சங்கிலி, இறங்கிறங்கு சங்கிலி கனவுகளாகி அருந்தவத்தின் அடிமனதில் கனன்று கொண்டிருந்தாள்’ என்ற வசனத்தோடு கதையை நிறைவு செய்யும்போது மனது கதை யோடு ஒன்றிப் ப்ோகின்றது.
ஐப்பசி இதழில் ‘கதை சொல்லிகளின் களம் என்ற கதையை சுதந்திரராஜாவும், குழாயடியும் குறுகுறுக்கும் நினைவுகளும் என்ற கதையை மு. பவrரும், குறிஞ்சி மலர்களும் நெருஞ்சி முட்களும் கதையை திக்குவல்லை ஸப்வானும் எழுதி யுள்ளார்கள். கதை சொல்லிகளின் களம் ஒரு கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களைச் சுற்றி வருகிறது. வறுமையும், நிர்ப்பந்தங்களும் வழமைபோல் இரு பக்கங்களுக்குள் அழகிய சித்திர மாக்கப்பட்டுள்ளது. மு.பவரீரின் கதை இவ்வருடம் விெளிவந்த கதைகளில் முதன்மையாக நிற்கிறது.
மல்லிகுை 39வது ஆண்டுமலர் ஜனவரி - 20Oபு

Page 147
மனதை ஈர்க்கும் எழுத்தோட்டம், எதிர்பாராத முடிவு என்பன கதையின் வெற்றியை நிலை நிறுத்து கின்றன. அடுத்து ஸப்வானின் கதையில் சிறு
பிள்ளைகளிடையேயான மனிதநேயம் பெரியவர் களில் இல்லாமல் போவதையும், இறுதியில் உணர் வதையும் சிறுபிள்ளைகளின் ஊடாக அழகாகச் சொல்கிறார்.
ஓராணி டு மலலிகைச் சிறுகதைகளை நோக்கும்போது, சிறுகதை இலக்கியத்திற்கு இந்த கணினி யுகத்திலும் நல்ல வரவேற்பு இருப்பது தெரிகிறது. மல்லிகைக் கதைகள் பலவற்றில் கலை யுணர்வை விட மக்கள் பிரச்சினைகள் மேலோங்கி நிற்கின்றன. மல்லிகைக் கதைகளில் அழகுணர்வு இனி னமும் முன்னேற்றம் காணவேணி டும் . குழாயடியும் குறுகுறுக்கும் நினைவுகளும், தாத்தா சுட்ட மான், போன்ற ஒருசில கதைகளில் கலை
ܠܐ ܟܠ
ஒரு மகிழ்ச்சி
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுக் கா உலகில் எஸ்.பொ.என அழைக்கப்பட் எந்த விதமான கடிதத் தொடர்போ நே பாட்டுக்கு ஒதுங்கிப் போயிருந்தோம். இந்த இடைக்காலத்தில் கனடாவி இந்த ஆண்டு முற்பகுதியில் கொழும் ஜனவரி 10-11ந் திகதிகளில் சென்னையி 2004 விழாவில் கலந்து கொள்ள நானென்றும் குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாகத் தன் கைப்பட நேரடியாக ஒரு கடிதம் எழுதியிருந்த நானும் மனநிறைவுடன் இவ்விழாவி
146
 

யுணர்வு மேலோங்கி நிற்கிறது. பல கதைகளில் சமகாலப் பிரச்சினைகள் கருப்பொருளாகியுள்ளன. மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படாமலிருப்பது குறையாக உள்ளது. எனினும் ஒரு சமுதாயத்தை விழிப்புணர்வு கொள்ள வைப்பதில் பல கதைகள் பங்காற்றியுள்ளன. இன்னும் சில கதைகள் சமகால யுத்த அனர்த்தங்களைப் பதிவு செய்துள்ளன. பொதுவாகவே ஈழத்துச் சிறுகதைகள் ஒரு எல்லையைத் தாண்டுவதில்லை என்ற குறை மல்லிகைக் கதைகளில் தெரிகிறது. அரைத்த மாவை அரைக்கின்ற படைப்பாளிகளிலிருந்து விடு பட்டு புதிய உத்திகளுடன் கதைகள் படைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை. விமர்சகர்களுக் காக இல்லாமல் மனித ரசனைகளுக்கு முக்கி யத்துவம் கொடுத்து கதைகள் படைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
o o O O o O o O O e o O O o O o O O o o o o o O o
யான செய்தி
லத்திற்கு மேலாக நானும் இலக்கிய் ட எஸ்.பொன்னுத்துரை அவர்களும் ாடிச் சந்திப்போ இல்லாமல் அவரவர்
ரிலிருந்து சிறீசுக்கந்தராசா என்பவர் பு வந்து என்னைச் சந்தித்தார். 2004 ல் நடைபெறும் தமிழ் இலக்கியம்
வேண்டுமெனவும் அதில் ஒருவர்
திரு.எஸ்.பொ. அவர்கள் எனக்கு j. வில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.
- டொமினிக் ஜீவா
ஸ்கை 39awa édhaoiab UD6NSfi galvauso - 2oo

Page 148
نے
Q&es/O-ishes to.
தையல் - பின் சாதனை நிை
செம்பியன்
எம்பிரோய்டரி வேலை
63ı il) 1D/Iİdib
(கோன்களிலும், டியூப்புகளி: செம்பியண் நூல் கம்பெனித்
fÑ) UToojಪ)ಖ சிசம்பியண் நூல்கைைம்
செம்பியன் திறெட் (Champion Thread
இல, 100 புதிய சோன8
தொலைபேசி : +-Quc î5ù : Chá
201 - 1/1, பூரீ கதிரேசன் விதி 337 - கவரியில் வசிப் அவர்களுக்காக கெ" ஆ., ஃபிடேக~னந்த மேடு 98யுஇ இல
17
 
 

களுக்கு உன்னதமானது சில்க் நூல்கள் லும், களிகளாகவும் கிடைக்கும். தயாரிப்புகள் உறுதியானவை, ாக்கு உகந்தவை. யே கேட்ரு வாங்குங்கள். மனுபெக்சரிங் கொம்பனி Manufacturing Co.)
5த் தெரு, கொழும்பு - 12.
2435.034, 2451528
amptroCDstnet.lk
வரும் முல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா நகத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
39வது ஆண்டுமAsர் ஜனவரி - 20Oபு ܗܘܘܗܽܢܐ