கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1971.12

Page 1

SLSLSLSLSLS S SLSLS
H

Page 2
அழகு மலர்கின்ற து!
அறிவு செழிக் fறது.
ஆந்ெத 1 திருக்குறள் கலன்டர்
இவ்வருடத்தின் மிகச்சிறந்த தயாரிப்பு
தயாரிப்பாளர்
ஆனநதா அசசகம,
226, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்
-o-I-്
அட்டைப்பதிப்பு: யாழ். கூட்டுறவு அச்சகம்

ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி யாதியினைய கலைகளில் - உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் - பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்'
கொடி 7 மலர் 43
டிசம்பர் - 1971
西另 லக்கிய மல்லிகை தழ் வண்ணங்கள் லங்கை எழுத்தாளன் தய எண்ணங்கள்,
அட்டைப் படம் என். எஸ். எம். இராமையா
அலுவலகம்! 60, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். (இலங்கை)
மணக்கும் மல்லிகை கதை பெயர் கட்டுரை கருத்து 6T6) to ஆக்கியோர் தனித்துவம், அவரே பொறுப்பு
இலக்கிய விழா
ஜனவரி-18
இலங்கைக் கலாசாரப் பேரவை நடத்தும் தமிழ் இலக் கிய விழா ஜனவரி 16-ந் திகதி நடைபெற இருக்கின்றது.
இவ் விழா யாழ். நகர மண்டபத்திலும் திறந்த வெளி யரங்கிலும் காலை யி லிருந்து தொடர்ந்து இரவுவரை நடை பெறும் .
இதில் கவியரங்கு, கருத் தரங்கு, கலையரங்கு, கலைஞர் கெளரவம் போன்ற முக்கிய
நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
மாண்புமிகு அ மை ச் சர் கள் குலதிலக, குமாரசூரியர், உதவி அமைச்சர் ஏ. எல், ஏ. மஜீத் ஆகியோர் பிரதம விருந் தினராகக் கலந்து கொள்ளுகின் றனர்,
இவ்விழா ஏதோ கூடிஞர் கள் ; கலைந்தார்கள் என்றில்லா மல், தமிழுக்கு ஆக்கபூர்வ மான சேவை செய்யக்கூடிய தாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
இலக்கியத்தை நேசிப்ப வர்கள், இந்த நாட்டுக் கலை ஞர்கள் தகுந்த கெளரவம் பெற் றுத் திகழ வேண்டுமென விரும்பு பவர்க : ஆகிய அத்தனைபேர் களும் இவ் விழாச் சிறப்புடன் நடைபெறச் சகல ஆதரவும் தந்துதவ வேண்டும் எனக் கேட் டுக் கொள்ளுகின்றேன்,
- டொமினிக் ஜீவா விழாக் குழு சார்பாக,

Page 3
ஆரோக்கியமான இலக்கியவள ர்ச்சிக்கு
ஆக்கபூர்வமான
குரல் கேட்கிறது!
தமிழ் விவகார ஆலோசனைக் குழு, மாண்புமிகு குமாரசூரியர் அவர்களது. தலைமையில் சமீபத்தில் கூடி நல்ல பல திட்டங்களைத் தீட்டியுள்ளது.
அதில் நம் சம்பந்தப்பட்டதும் ஒன்று. இலங்கையில் வெளி யிடப்படும் சஞ்சிகைகளின் கஷ்ட நஷ்டங்களைப் பற்றி இக் (Ֆ(Լք தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்துள்ளது. இப் பிரச்சினையைத் தனது ஆழ்ந்த கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள இக் குழுவினரின் முன் முயற்சியை நாம் இந் நாட்டுச் சஞ்சிகை களின் சார்பாக மனப்பூர்வமாகப் பாராட்டி வரவேற்கின்ருேம்: கூடிய சீக்கிரம் இங்கு வெளியாகும் தமிழ்ச் சஞ்சிகைகளின் பிரசுர கர்த்தாக்களின் மாநாடொன்றைக் கூட்டி, அவர்களினது கோரிக்கைகள், அபிப்பிராயங்கள், திட்டங்களைக் கேட்டறிந்து ஆவன செய்வது என இக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த நல்ல திட்டத்திற்கு வேண்டிய சகல ஒத்துழைப்பை நல்குவதுடன் இந்த ஆக்கபூர்வமான ஆலோசனையை நடைமுறைப் படுத்துவதற்கான சூழ்நிலை உருவாக நம்மாலான அனைத்தையும் செய்வோம் எனவும் வாக்குறுதி கொடுக்கின்ருேம்.
வாய்ச் சவடால் பேசுவதாலோ அல்லது காலத்தால் சாகாத தமிழ்!, எனத் தமிழின் தொன்மைக்குத் துதிபாடுவதாலோ தமி ழையோ தமிழ் இலக்கியத்தையோ, கலைகளையோ வளர்த்துவிட முடியாது - வாழ வைக்கவும் இயலாது.
இதற்கு இந்தத் தலைமுறையினரின் ஆக்கபூர்வமான அயராத உழைப்பு மிக மிகத் தேவை.
இதை சாதனைக்குக் கொண்டுவர சாதனங்கள் அத்தியாவசியம்,
 

கலை, இலக்கிய சாதனங்கள் இன்று நம்மிடையே எத்தனை உண்டு?
பல இடையூறுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் வெளி வரும் நமது சஞ்சிகைகளைப் பார்த்துவிட்டு, நல்லெண்ணம் படைத்த ஒரு சிலர், "இவற்றில் தரமோ, கனமோ போதாது” எனச் சொல்லுகின்றனர்.
உண்மை; முற்றிலும் உண்மை. "திருமணம் நடந்தால்தான் பைத்தியம் தீரும்; பைத்தியம் தீர்ந்தால்தான் திருமணம் நடக்கும்’ என்பதற்கொப்பவே நமது சஞ்சிகைகளின் நிலை இருக்கிறது.
விற்பனவு உயர்ந்து, விளம்பரம் கிடைத்தால்தான் சஞ்சிகை யில் கனம், தரம், உயர்வு ஏற்படும். கனம், தரம் உயர்ந்தால் தான் விளம்பரம் கிடைக்கும். விற்பனவு உயரும்.
இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாம் விடுபட்டு ஒருவித கலக்கமுமில்லாமல் பத்திரிகையை வெளியிட அரசாங்கம் போதி யளவு ஆதரவும் அக்கறையும் காட்டவேண்டும். விளம்பரம் தர வேண்டும்.
இதைவிட வெட்கப்படத்தக்க சங்கதி என்னவென்ருல், தேசி யப் பற்ருே, பாசமோ, பிடிமானமோ, அபிமானமோ அற்ற மட்ட ரக ரசனைக் கூட்டம் ஒன்று இன்று நம் நாட்டில் மிகப் பெரும்பான்மையாக இருந்து வருவதுதான்கு
இதையும் விடக் கேவலம் என்னவென்ருல், ஆங்கிலம் படித் தவர்கள் என்ற காரணத்தால் ஏதோ தம்மையும் மேதைகள் என எண்ணிக் கொண்டு வாழும் இந்த வெறுக்கத்தக்க கறுப்புத் துரை மார்கள் நமது சஞ்சிகைகளைக் கண்டவுடன், தூரத்தே கக்கூஸ் வண்டியைக் கண்டவுடன் இங்கேயே கை லேஞ்சி' யால் மூக்கைப் பொத்திக் கொள்ளும் மினிக் கவுண்காரிகள் மனுேபாவத்துடன் அருவருத்து ஒதுங்கிக் கொள்ளுகின்றனர்;
இந்த இரு சக்திகள்தான் நமது தலையாய எதிரிகள்! இப்படியான இரு முனைகளையும் சேர்ந்த பலமான - ஆனல் அத்திவாரமற்ற - சக்திகளின் தாக்கங்களிலிருந்து நாம் நமது கலை இலக்கியங்களை வளர்த்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். மிகத் துணிச்சலாக நடைமுறைக் காரியங்களைச் சாதிக்க வேண்டும்.
இதற்கு நமக்கு உந்து சக்திகள் மக்களே! காந்திஜி இந்த மக்கள் அத்திவாரத்தை வைத்துக்கொண்டு கதரைக் கட்டுங்கள்!" என்ருர். ஆனணுப் பட்டவர்களே தமது மேனட்டு உடைகளை நெருப்பிலிட்டுவிட்டு, மோட்டாக் கதரை உடுக்கத் துணிந்து விட்டனர்.
இந்த உணர்வுதான் இன்று இந்த நாட்டிற்குச் சகல துறை களிலும் தேவை. -
நமது தற்காலிக பழக்க தேரிஷ உணர்வுகளைத் தியாகம் செய்! முன்வருவோமானல் வருங்காலச் சந்ததி பெருமைப்படத்தக்க சாதனைகளை இந்த மண்ணில் நாமே நிகழ்த்துவோம்!
எனவே அமைச்சர் குழு எடுத்துள்ள ஆக்கபூர்வமான முடிவு கள் உடனடியாகச் செயல்யட வேண்டும். காலம் தாழ்த்தினுல், ஈரவிறகு புகையைக் கக்குமே தவிர, தீப்பிடித்து எரியாது என்
தையும் ஞாபகப்படுத்த விரும்புகின்முேம் Ar

Page 4
“ஒரு கூடைக் கொழுந்து இரா மையா இவர்தான். மலையகத்தின் படைப்பாளிகள் பரம் பரையில் முன் நிற்பவர்களில் இவ ரும் ஒருவர். தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கிக் கொள்ளாமல் பரந்து பட்ட தேசிய இலக்கியப் பார்வையு டன் வளர்ந்து வருபவர். திரு என். எஸ். எம். இராமையா வின் படத்தை மல்லிகை அட்டை யில் பொறிக்கும் போது பெருமிதம் அடைகின்றேம், "
- ஆசிரியர்
匯琴匯
மேகமூர்த்தி
"தினபதி பத்திரிகை, வள கும் எழுத்த்ாளர்கட்காக 'தினம் ஒரு சிறுகதை திட்டத்தை ஆரம்பித்த போது, களைச் சிபார்சு செய்வோர் பட் டியலில் திரு. என். எஸ். எம். இராமையா அவர்களின் பெயர் விலாசமும் இடம் பெற்றிருந் தது. அன்றிலிருந்து கடிதத் தொடர்பின் மூலம் எனது எழுத் துலக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய சிருஷ்டி கர்த்தாவை முதன் முதலில் சந்திக்கு வாய்ப் பினை ஏற்படுத்திய மாத்தளை
தமிழ் மன்றத்தினரின் வள்ளு.
வர் விழா என்னுள்ளத்தில் பசு
மரத்தாணியாய் பதிந்துள்ளது.
கார்மேகத் திரு மா லின் நெடிதுயர்ந்து,
வண்ணமாய், எளிய தோற்றத்துடன் நீண்ட காற்சட்டையும் கைகள் மடிக் கப்பட்ட வெள்ளைச் சேட்டினை யும் அணிந்து, குறுக்கக் கத்த
蒿
சிறுகதை
ரித்த மீசையுடன், மலையக மு ன்ன னரி எழுத்தாளரான "தெளிவத்தை ஜோசப் அவர் களோடு உரையாடிக் கொண் டிருந்தவரை எனது நண்பர் "மலரன்பன்' அறிமுகம் செய்து
வைத்தார்.
*வணக்கம்! நீங்க தா ன் மேகமூர்த்தியா?. , என்று
பேச்சை ஆரம்பித்தவர்; வயதி லும், அறிவிலும் இளையவனன எனக்கு மிக மதிப்புக் கொடுத்து நெடுநாட் பழகியவராய் மனம் விட்டுப் பேசிஞர். புதியவர்க ளுடன் அதிகம் பேசும் வழக்க மற்ற என்னை அவரது சரளமான சம்பாஷணை சற்றுத் தடுமாற வைத்தது உண்மைதான்.
சமூகத்தில் அன்ருடம் நடக் கும் சம்பவங்களில் ஒரு சிறு சம் பவத்திற்கு கலையம்சத்துடன் "உருக்கொடுப்பதே சிறுகதை எனக் கூறிக்கொள்வதோடு அச்

சம்பவம் எந்தக் களத்தில் நடை பெற்றலும் அந்தக் களத்தி னையே பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரங்களின் உரையா
டல், கனம் கொண்டதாய் மிளி
ரவேண்டும் எனவும் வற்புறுத் திக்கூறும் திரு. என். எஸ். எம் , அவர்களின் படைப்புக்களில் அவரது தனித்தன்மை புலப்படு வதைக் காணக்கூடியதாய் இருக்கின்றது.
, ஆளுல் இவரது படைப்புக் கள் அத்தனையும் பத்திரிகை ரகக் கதைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவையே என்பதை எடுத்தியம்புவதில் தவறில்லை என்பது என் நோக்கு. சமூகத் தில் நிகழ முடியாத வெறும் கற்பனவஸ்தைக் கதைகளில் காணும் புனையல்களும், திடீர்
முடிவுகளும் இவரது படைப்புக்
களில் பங்கெடுத்துக் கொள்வ தில்லை. பெரும்பாலும் மலையக அதிகார வர்க்கத்தினுல் நசுக் கப்படும் ஏழைத் தொழிலாளி களின் ஏக்கத்தினை வெகு நாசுக் காக சிறுகதை மூலம் படம் பிடித்துக் காட்டுவதில் சமர்த் தராகிய இவரது இலக்கியத் தொண்டு அரசியல் கலப்பற்றது என்பது ஆணத் த ரமா ன ge sket GOLD.
*குப்பி லாம்பின் மின்மினி வெளிச்சத்துடன் ல ய த் தி ல் வாழ்ந்து கொண்டிருந்த சாதா ரண மலையகத் தொழிலாளி ஒருவன் பெற்றே மக்ஸ்" விளக் கொன்றின் வாங்குவதற்காக பலகாலமாகப் பகீரதப் பிரயத் தனம் எடுத்ததையும், முதன் முதலாக அவனது "லயக் காம் பரா வில் அந்த விளக்கு எரிந்த போது அயலவர்கள் கூடி வியந்து இரசித்ததையும் *வேட்கை" என்ற தலைப்புடன் இவர் சிருஷ் டித்த சிறுகதையினை சென்னை வாசகர் வட்டத்தினர், தாம்
வெளியிட்ட "அக்கரை இலக்கி யம்’ என்ற நூலில் பிரசுரித் தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் வானெ லி நாடகங்களையே எழுதிக் கொண் டிருந்தவர் பின்னர் பத்திரிகை களுக்கு சிறுகதை எழுத முன் வந்தார். இ வ ரெழுதி ய வானெலி நாட்கங்களுள் "எதி ரொலி’, ‘தாமரைக் குளம்", "ஞானக்கண்", "பாலை நிலம்”, "தலைவன் வீட்டுக் கல்யாணம்", "ஒரு மின்னல்" ஆகி ய  ைவ பாராட்டுப் பெறுமளவிற்கு திறம்பட அமைந்துள்ளன.
பதுளையை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதும் கிணற் றுத் தவளையாய் வாழ்விரும்பாது கொழும்பில் குடித்தனம் நடாத் திக் கொண்டிருக்கும் திரு. என். எஸ். எம். அவர்கள், சவுக்கு மரமாய் உயர்ந்து கொண்டே யிருக்கும் வாழ்க்கைச் செல வோடு எதிர்நீச்சல் போடுவ தால் த்ரமான இவரது படைப் புக்களைக் காணும் வாய்ப்பி வாசக இரசிகர்கள் இழந்து கொண்டிருக்கிருர்கள். ஆனல் இந்நிலை நீடிக்கப்படாது என்ப துவே எனது வேணவா. இயற் கைச் சூழலின் மத்தியில் ஏகாந் தமாயிருந்து கலையம்சம் மிக்க கலையிலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள், இரும் புக் கடையின் மத்தியில் கணக் கேட்டுடன் சதா கருமமாற்றும் நிலை என்றுதான் மாறுமோ?
திரு. என். எஸ். எம். அவர் களுடன் உரையாடத் தொடங் கிய அன்றிலிருந்து பலதடவை அவரைச் சந்தித்த பின்னரே தன்னடக்கம், கண் ணியம், பகைவனையும் மன்னிக்கும் பண்பு எனும் வார்த்தைகள் வெறும் வர்ணனையல்ல என்பதை நான் உணர்ந்தேன், ★
s

Page 5
என் கணவரைப் பற்றிய
சில நினைவுகள்
தாஸ்தாயெவ்ஸ்கயா
தாஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி 1902-ம் ஆண்டில் லியோ
LITs) sil) LT60huld
சந்தித்தார்.
*தாஸ்தாயெவ்ஸ்கியின்
சிறந்த படைப்புக்களுக்கு நீங்களே காரணம்’ என்று லியோ டால்ஸ்டாய் அவரிடம் கூறிஞர்.
அன்னுரது 150-வது ஆண்டு ஞாபகார்த்தமாக,
ਨਨ வெளியீடு பொரு ளாதார ரீதியில் வெற்றி பெற் றது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதன் விளைவாக எங்கள் குடும்பம் ஒர ளவு தலைநிமிர்ந்து நிற்க முடிந் தது. சற்றும் எதிர்பாராத வகை யில் எனக்குப் பெருந்தொகை கிடைத்தது; எனவே தாஸ்தா யெவ்ஸ்கியின் கடன்கள் சில வற்றை அடைக்க முடிந்தது, இந்தக் கடன்களைத் தீர்க்க முடி யவில்லையே என்று தமது மரணத் திற்கு முன்பு தாஸ்தாயெவ்ஸ்கி அடிக்கடி வருந்தினர்.
பிரசுர கர்த் த ர் க ளின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தந்த போதிலும், என் கணவர் இறந்த பிறகு இவ்வளவு பெருந் தொகை எனக்கு ஏன் கிடைத் தது என்று எரிச்சலும் வந்தது. இந்தப் பணம் அவர் இருந்த காலத்தில் அவருக்கு நிம்மதி ஏற்பட்டிருக் கும் தனது குழந்தைகளின் வருங்காலக் கல்வியைப் பற்றி யும், தனது குடும்பத்தின் வறு மையைப் பற்றியும், சாகும் தறுவாயில் அவர் கவலைப்பட்
டிருக்க மாட்டார். அவர் கை யில் பத்தாயிரம் அதிகமாக இருந்திருந்தால், அவர் நிதா
னமாக எழுதியிருப்பார்; தம் வாழ்நாளில் ஒரு தடவையா
6
கிடைத்திருந்தால்
வது அதி அவசரமில்லாமல் ஒரு நூலை எழுதி முடித்திருப்பார். பணத்திற்காக அவசரமாக எழு தியதால், அவர் பல நூல்களைத் திருப்திகரமாக எழுத முடிய வில்லை; அவற்றில் ஏற்பட்ட குறைகளையும் தவிர்க்க முடிய வில்லை. இலக்கிய உலகிலும் சமுதாயத்திலும் அ வ ர து படைப்புக்கள் துர்க்கனேவின் படைப்புக்களுடனும் இ த ர எழுத்தாளர்களின் படைப்புக் களுடனும் மேலைய எழுத்தாளர் களின் படைப்புக்களுடனும் அடிக்கடி ஒப்பிடப்படுகின்றன; என் கணவரின் படைப்புக்களே விட நுர்க்கனேவின் படைப்புக் கள் முழுமையாக இருக்கின்றன என்றும், அவற்றின் வேலைப் பாடு அருமையாக உள்ளது என்றும், மக்கள் கூறுகிறர்கள். ஆனல் ஒரு எழுத்தாளர் எந்
தச் சூழ்நிலையில் வாழ்ந்தார், எழுதினர் என்பதைப் பற்றி அவர்கள் அதிகம் சிந்திப்ப
தில்லை. நல்ல ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும், உறுதியான வேலையும் உடைய எழுத்தாளர்கள்,தங்கள் படைப் புக்களை மீண்டும்மீண்டும் திருத்தி எழுதவும், முழுமைப்படுத்தவும் வாய்ப்பு இருந்தது ஆளுல் என் கணவரின் அப்படி யில்லை; இரண்டு தீவிர நோய்

கள் அவரைப் பீடித்திருந்தன: குடும்பச் சுமையும் கடன் சுமை யும் அவரை அழுத்தின; அன் ருட வாழ்க்கையை எப்படிக் கழிப்பது என்ற பிரச்னை அவரை எப்பொழுதும் வாட்டிக்கொண் டேயிருந்தது. பல சமயங்க ளில் கீழ்க்காணும் நிலை ஏற்பட் டதுண்டு; அவரது நாவவின் முதல் மூன்று அத்தியாயங்கள் அச்சில் வந்திருக்கும்; நான்கா வீது அத்தியாயம் அச்சகத்தில் இருக்கும்; ஐந்தாவது அத்தியா யம் பத்திரிகை ஆசிரியரை நோக்கித் தபாலில் சென்று கொண்டிருக்கும்; அதற்குப் பிந் திய அத்தியாயங்களை எழுத முடியாதபடி பணத் தொல்லை களும் கவக்லகளும் அவரை வாட் டும்; எனவே, பாக்கியுள்ள அத் தியாயங்கள் அவர் மனத்தி லேயே தங்கி விடும். அவரது நாவலின் அச்சான அத்தியாயம் ஒன்றை அவர் படிப்பார்; அதி லுள்ள ஒரு குறையைத் திடீ ரென்று கண்டு பிடிப்பார்; அந் தக் குறை என் நா வலை க் கெடுத்து விட்டதே என்று துய ரத்தில் மூழ்கி விடுவார்.
ஆந்த அத்தியாயத்தைத் திருத்தி எழுத முடியுமாஞல்! என்று ஏங்குவார். ‘அந்த அத் தியாயம் அச்சாகவில்லையானுல், நான் அதைத் திருத்தியிருப் பேனே! அதில் என்ன குறை என்பதும், அதை ஏன் தொ டர்ந்து எழுத முடியவில்லை என் பதும், இப்பொழுதுதான் தெரி கிறது. இந்தத் த வ ரு ல், சொல்ல வந்த விஷயத்தையே நான் கொன்று விட்டேனே!" என்று அவர் வருந்துவார்
தனது பிழையைக் கண்டு பிடித்து விட்டு, ஆனல் அதைத் திருத்த முடியாது அவதிப்படு
கிற கலைஞனின் உண்மையான துயரம் அது துரதிருஷ்டவச மாக, த ன து படைப்புக்களி லுள்ள பிழைகளைத் திருத்தும் வாய்ப்பே அவருக்கு கிடைக்க வில்லை. ஏனெனில் எங்களுக்கு எப்பொழுதும் பணக் கஷ்டம் இருந்தது; அன்ருடம் வாழ்வ தற்கும், கடன்களை அடைப்ப தற்கும் போதிய பணமில்லை; எனவே, வலிப்பு நோய் கண்ட மறுநாளிலும்கூட, அவரதுமனம் குழம்பியிருந்த நிலையிலும் கூட அவர் எழுதத் தொடங்குவார்; அவசரம் அவசரமாக எழுது வார்; எழுதியவற்றை மீண்டும் படிக்க G ந ர ம் இருக்காது; அவற்றை உடனே பிரசுரத்தா ருக்கு அனுப்பி விடுவார்; அப் படியானுல்தான் குடும்பச் செல வுக்கு விரைவில் பணம் கிடைக் கும். "ஏழை மக்கள்" என்ற ஒரு நாவலைத் தவிர, ஏனைய நாவல் கள் அனைத்தையும் அவர் வெகு வேகமாக எழுதினர். அமைதி யான சூழ்நிலையில் பிழை ஏது மின்றி எழுத வேண்டும் என்று அவர் விரும்பினர். ஆணு ல் சாகும்வரையில் அவரது விருப் பம் நிறைவேறவில்லை.
"ரஸ்கிவெஸ்தினிக்" என்ற சஞ்சிகை அவரது நாவல்களை வெளியிட்டு வந்தது. ஏதாவது ஒரு காரணத்தினுல் அந்தச் சஞ் கை தனது நாவலை வெளியி டாமல் இருந்துவிடுமோ என்று தாஸ்தாயெவ்ஸ்கி அடி க் கடி வருந்தினர்.
அந்தச் சமயத்தில் தனதுமிக முக்கிய தேவைகளையும், மிகச் சாதாரண வசதிகளையும் அவர் துறக்க நேரிட்டது. நகரில் நடக்கும் நாடகங்களைப் பற்றி நண்பர்கள் கூறுவார்கள் ஆணுல் மிக அவசரமான எழுத்து வேலை யில் அவர் ஈடுபட்டிருப்பார்,
7

Page 6
அப்பொழுது அவர் கூறுவார்: "அன்யா! என் நிலை உனக்குத் தெரியும்; இந்த வேலையை முடித்து விடுகிறேன்; பிறகு நாம் இருவரும் அந்த நாடகதி தைப் பார்க்கப் போவோம்."
நான் பதில் சொல்ல மாட் டேன். அவர் எழுதி முடித்த தும், நீங்கள் சென்று வாருங்கள் என்பேன்; அதற்கு ஏதாவது, காரணத்தைக் கண்டு பிடிப் பேன்; எனக்கு உடல் நலமில்லை என்றே, குழந்தைகளைத் தனி
யாக விட்டுவரமுடியாது என்ருே
சொல்லுவேன். சோகத்துட னுல், சில வேளைகளில் எரிச்லு டனும், இவ்வாறு கூறுவார்: "அன்யா! எப்பொழுதும் இப் படித்தான் கூறுகிருய், ஆனல் உன்னுடன் நாடகம் பார்க்கச் செல்ல வேண்டுமென்றும், ஒன் ருகச் சிரிக்க வேண்டும் என்றும் சிறிது நேரம் ஒய்வு எடுக்க வேண்டும் ள்ன்றும், புதிய உற் சாகத்தையும் கருத்துக்களையும் பெற வேண்டும் என்றும், நான் விரும்புகிறேன். உனது கிழட் டுக் கணவனுடன் வெளியே வர உனக்கு இஷ்டமில்லை; அவ்வாறு வெளியே வந்தால் உன் தோழி கள் கேலி செய்வார்கள் என்று நீ பயப்படுகிருய்; அ ப் படி த் தானே?"
அவரது கேலிப் பேச்சுகள் எனக்குவேதனைகளைத்தான் அளிற் தன. ஏனெனில் அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அவரைக் கணவராக அடைந்தது குறித்து நான் எப்பொழுதும் பெருமைப்பட்டுக் கொண்டிருந் தேன். அவரை விட அன்பும் அழகும் நிறைந்தவரை நான் காணவில் கவலைகளும் ஏ மாற் றங்களும் நிறைந்த எங்கள் வாழ்க்கையிலிருந்து, அதன் சுமைகளிலிருந்து, சற்று
8
விடுபட்டு ஓய்வு எடுக்கவே அவரைப்போல் நானும் விரும் பினேன்; ஆளுல் கணவருடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை; எங்கள் பொருளாதார நிலை அவ்வளவு மோசமாக இருந்தது. நானும் அவரும் நாடகம் பார்க்கச் சென்ருல், பத்து ரூபிள் செல வாகி விடும்! அன்று குடும்பம் இருந்த நிலையில், அது சாத்தி யமில்லை. சூழ்நிலைகள் அநுகூல மாக இருந்த பொழுது, நானும் அவரும் நாடகத்திற்கோ, கச்சே ரிக்கோ செல்வதுண்டு. அப்பொ ழுது என் அருமைக் கணவர் ஆனந்தக் கடலில் மிதப்பார்.
அவர் ஒவ்வொரு கோடைக் காலத்திலும் "எம்ஸ்" என்ற ஊருக்கு ஒய்வெடுக்கச் செல்லு வார்; போதிய பணம் இல்லா ததால், தனியாகவே செல்லு வார்; ஆணுல் குடும்பத்தோடு செல்ல வேண்டுமென்று அவர் மிகவும் ஆசைப்படுவார். "எம் ஸில் தனியாக இருப்பதைவிட, சிறைவாசம் மேல் என்று தோன் றுகிறது. நீயும் குழந்தைகளும் இல்லாமல் எனக்கு இங்கு இருக் கவே பிடிக்கவில்லை" என்று கடிதம் எழுதுவார்.
அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, புத்தக வெளியீட்டிலிருந்து இவ்வளவு பணம் கிடைத்திருந்தால், அவ ரும் நாங் களும் எவ்வளவு
மகிழ்ச்சியாகவும் நிம்மதியாக வும் வாழ்ந்திருப்போம்! ★
懿 gesveeg

பாசிபடிந்த
SaTS
inline
பாதையிலே
சிவா சுப்பிரமணியம்
வள் - அவளுக்காக இல்லாவிட்டாலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவ ளுடைய குடும்பத்தினருக்காக வாவது பெயரை இங்கு குறிப் பிடாமல் விடுவதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.
அவளே எனக்கு நீண்ட காலமாகத் தெரியும்.
உடலின் மேற்பாகத்தை மூடிமறைக்க வேண்டும் என்ற எண்ணமோ அதற்கான அவசி யமோ இல்லாத நிலையில் "சின் னப் பொடிச்சி' யாக இருந்த நாட்களில் அவளோடு நான் சேர்ந்து விளையாடியிருக்கலாம். ஒருவேளை அவளும் நானும் அந் தக் காலத்தில் ஒருவர்மீது மற் றவர் மிகவும் பிரியமாகவும் இருந்திருக்கக் கூடும். அவை யெல்லாம் இப்போது ஞாபக மில்லை. ஆனல் எனக்கு நினைவு தெரிந்த நாள் தொடக்கம் அவளிடம் ஏற்பட்டுவந்த அத் தனை புறமாற்றங்களையும் அப்ப டியேனன்னல் ஒப்புவிக்கமுடியும்:
சின்ன வயதிலேயே அவள் மீது எனக்கு ஒரு அக்கறை
ஏனென்று எனக்கே புரியாத அக்கறை. எந்த நேரமும் அவள் அருகிலேயே இருக்க வேண்டு மென்ற ஒரு ஏக்கம்!
எனக்கும் அவளுக்கும் ஒரே வயதுதான் இருக்கும் நினைக்கிறேன்.
அந்தநாட்களில் பாவாடை சட்டையுடன் பள்ளிக்கூடத் திற்கு அவள் புறப்பட்டு வரும் வரையும் தனிப்பனை முடக்கில் காத்திருந்து அவளை ப் பின் தொடர்வேன், நான் அங்கு நிற்பதையே கவனிக்காதவள் போல அவள் போவாள்.
அவளுடைய அழகில் குறிப் பிடத்தக்க மாற்றம் எதுவும் எந்தக் காலத்திலும் எனக்குத் தென்படவில்லை. என்னல் எவ் வளவுக்கு நினைத்துப் பார்க்க முடியுமோ அவ்வளவு காலத் திற்கு முந்திய அந்த நாட்களில் அவளிடம் நான் கண்ட அதே அழகுதான் வளர்ச்சியின் ஒவ் வொரு கால கட்டத்திலும் காணக்கூடியதாக இருந்தது. உடல் வளர்ச்சியின் காரணமாக
ஒருசில புறமாற்றங்கள் ஏற்பட்
டபோதிலும் என் நுகர்வின்
9
என்று

Page 7
நிலைமட்டத்தை அளவுகோலாக் கிப் பார்ப்பதானுல் மாறுதல் கள் எதுவுமே இல்.ை
அவளிடம் அ பாரமான அழகு நிறைந்திருந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் என் னைக் கவர்ந்து பித்தனுக்கக்கூடிய அளவுக்கு ஒரு அதிசயமான கவர்ச்சி இருந்தது.
மாலை நேரங்களில் மைத் துனிமாரோடு விளையாடுவதற் காக அத்தை வீட்டிற்குச் செல் லும் அவள் தோட்டவெளியைக் கடந்துதான் செல்லவேண்டும். வரம்பு மேட்டில் அலுங்காமல் குலுங்காமல் அடிமேலடிவைத்து அவள் நடந்து செல்லும் அழகு இருபுறமும் மதாளித்து வளர்ந் திருக்கும் செடிகளின் இளமை போடும் பசுமையோடும் போட் டிபோடுவது போல இருக்கும். அந்த நேரத்தின் தனிமையைப் பயன்படுத்தி அவளோடு பேச் சுக் கொடுக்க நான் முயற்சித்த போதெல்லாம் அவளின் கூரிய
பார்வைக்குப் பயந்து வெறு மனே பார்த்து ரசிப்பதோடு நின்றிருக்கிறேன்.
அவளை நான் அடிக்கடி பார்ப்பேன். அவளும் என் அடிக் க டி பார்த்திருப்பாள் என்று தான் நினைக்கிறேன். ஆனல் அவளுடையபார்வையை "எதிர்த்துப் பார்க்கும் அள வுக்கு அந்த நாட்களில் எனக் குத் துணிச்சல் இருக்கவில்லை.
வேவிக்குள் அடங்கியபின் அவளை வெளியிலே காணமுடிய வில்லை, அதனல் ஏதாவது சாட் டில் எப்போதாவது ஒருமுறை அவளின் வீட்டிற்குப் போய் வந்து கொண்டிருந்தேன். அப் போதெல்லாம் என்னை அவள் ஒருமாதிரியாகப்பார்ப்பாளென் முலும் என்னையும் என் ஆசை
10
கண்யும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை என் எண்ணங்களைக் கொஞ்சம்
வெளிப்படையாகவே வெளியி
டுவதற்கான தைரியமோ அல் லது அதற்கான "ரெக்னிக்" கு கள்பற்றிய அறிவோ அப்போது எனக்கு இல்லாமலிருந்திருக் கலாம்.
சில சம்பவங்களை வைத்துக் கொண்டு அவள் என்னை விரும் புகிருள் என்றும், விரும்பவில்லை என்றும் மாறிமாறி நினைத்துக் கொண்டிருப்பதிலேயே என் முயற்சிகள் நிலைபெற்றுநின்றன.
எனக்குள்ளேயே எண்ணங் களை வளர்த்துப் பின் நாளுகவே அவற்றை அழித்துக் கொண்டு "ஒப்டி மிஸ்டாகவும் பெஸிமி ஸ்டாகவும்" மாறி மாறி வாழ்ந் துகொண்டிருந்த நாட்களில் தான் அது நடந்தது.
திருமணமாகி மூன்று பிள் ளைகளுக்குத் தகப்பனன அருகு வீட்டுக் காரனுடன் ஓடிவிட்
டாள்.
"அந்த ஒடுகாலி இனிமேல் இந்த வீட்டுப் படியிலை மிதிக்கக் கூடாது" என்று தகப்பன் பிடி வாதமாகச் சொல்லிவிட்டார்.
அவனின் குடும்பமே ஆத ரிப்பார் இல்லாமல் கஷ்டப் Lull-sil.
நானே யாருக்காகவும் பசி சாத்தாப்படவில்லே. அந்த மூன்று பிள்ளைக் காரனுக்குத் தெரிந்த நுணுக்கங்கள் எனக்குத் தெரியாமல் போய்விட்டனவே என்றுதான் கவலைப்பட்டேன். உண்மையைச் சோல்வதானுல், நான் பொருமைப் பட்டேன்.
இது தடந்து எட்டு வருடங் கள் கழிந்துவிட்டன.

இப்போது நான் கொழும் பில் "உத்தியோகம் பார்க்கி றேன். அவள் ஓடிப்போன அடுத்த மாதமே எனக்கு உத்தி யோகம் கிடைத்துவிட்டது.
முதன் முதலாக மனதில் இடம் பிடித்துக் கொள்பவர் களைக் கடைசிவரையும் மறக்க முடியாதாம். ஐந்து வருடங்க அவளையே அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன்.
* அதன்பின் அவளை ஒருநாள் சந்தித்தேன்
ஒரே கும்மிருட்டு:
அந்தச் சந்தின் பல வளைவு
களைக் கடந்து வந்துவிட்டேன். என்ரு
மனத்தில் ஒரே பயம். லும் எனக்கு முன்னுல் போய்க் கொண்டிருப்பவன் நீண்ட நாட் களாகத் தெரிந்தவன்-நம்பிக் கையானவன். பல நாட்களா கத்தெரிந்தவனென்ருலும் இந்த விதத்தில் உதவக்கூடியவனென் பது அண்மையில்தான் எனக்குத் தெரியும். இதைப்பற்றி நான் கதையோடு கதையாக பிரஸ் தாபித்தபோது அவனுக்கும் முதலில் அதிசயமாகத்தான் இருந்திருக்கும்.
நெருப்புஎரியத்தொடங்கினுல் அணைந்துதானே தீரவேண்டும். தானுகவும் அணைகிறது; அணைக் கவும் படுகிறது. அணைக்கும் விதத்தில்தான் எத்தனை வேறு
urtG sissir !
என் நண்பர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்லும் போது அவர்களைக் குற்றவாளி
அதே வேளையில் சோர சோப னத்தின் சுகத்தை மானசீகமாக அனுபவித்திருக்கிறேன். அந்த மானசீக அனுபவம் தந்த இனி
மைபற்றிய ஏ க் கம் என்னை இன்று இங்கே இழுத்து வந்தி ருக்கிறது.
சின்னஞ் சிறிய வீடு. முன் ஞல் ஒரு விருந்தை, இரண்டு அறைகள். ஒன்று குசினியாகப் பாவிக்கப்படுகிறது. அடுத்தது படுக்கை அறை
விருந்தையில் ஒரு சின்னக்
குழந்தை ஆழ்ந்த நித்திரையில்
தன் அலங்கோலத்தை உணரா மல் படுத்திருக்கிறது. படுக்கை அறையில் இன்னெரு உருவம் தன் அலங்கோலத்தை உணர்ந்த நிலையில் படுத்திருக்கின்றது.
என்னைக் கூட்டிவந்தவன் எப்போதோ போய்விட்டான். அவன் திரும்பி வருவதற்குக் குறைந்தது இன்னும் இரண்டு மணித்தியாலங்களாவது ஆகும்.
மெதுவாக அறையினுள் நுழைகிறேன்.
மங்கலாக எரியும் அந்த மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில்...
காட்டாமல் காட்டுவது
தான் கவர்ச்சிக் கலையோ!
குப்புறப்படுத்திருந்தஅந்த உருவத்தைத் தொட்டு நிமிர்த் தியபோது. முதலில் அதிர்ச் சியடைந்தாலும் பிறகு வெட் கப்படுகிறேன். பிறந்த கிராமத் தில் கொடிகட்டிப் பறக்கும் என் கெளரவம் எந்த விதத்தி லும் அவளால் பாதிக்கப்படாது என்பதைப் பூரணமாகத் தெரிந் திருந்தும் நான் வெட்கப் படு
கிறேன்
என் தோற்றத்தில் ஏற்பட் டிருக்கும் ம்ாற்றங்களினலோ அல்லது அவள் குடிபோதையில்
இருந்ததனுலோ முதலில் என்னை

Page 8
அவளால் யாரென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. நானகச் சொன்னபின் நினைவுகளை நிறுத் திப் பார்த்துப் புரிந்து கொண் Lurresir.
அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு அவ ளோடு அவளைப்பற்றிக் கொஞ் சம் கதைக்க வேண்டும் போல இருந்தது.
"அந்த நாட்களில் உன்னை நான் மிகவும் விரும்பினேன்."
"இப்போதும் விரும்பித் தானே வந்திருக்கிருய். நீ வந்த நோக்கம் நிறைவேறியதும் உன் விருப்பமும் முடிந்துவிடும், அவ ளின் பேச்சில் ஒருவித கர்வம் தொனித்தது. அது அவளைப் போன்றவர்களின் நிரந்தரமான சுபாவமாக இருக்க வேண்டும்.
"உன்னைப் பற்றி ஊரில்
என்ன கதைக்கிருர்களென்று தெரிந்து கொள்ள உனக்கு விருப்பமில்லையா?*
ஊரைப் பற்றியோ உலகத் தைப் பற்றியோ எனக்கு அக் கறையில்லை. என் ஊரிலிருந்து என்னிடம் ". என்று நான் க்க வில்லை. இஃபா' 營露 கிருய். வீணுக நேரத்தைக் கடத்திக்கொண்டிருக்கிருயே."
"வந்த நோக்கம் நிறைவே றியதும் என் விருப்பமும் முடிந் துவிடும் என்ருயே. ஆனபடியால் அந்த நோக்கத்தை நிறைவேற் ரூமல் இருப்பதையே விரும்பு கிறேன். ஏனென்ருல் உன்னை நான் விரும்பினேன், அந்த விருப்பம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க் கிறேன்." . . .
2
நான் பேசி முடித்ததும் அவளிடத்தில் ஒரு திடீர் மாற் றம் ஏற்பட்டது.
கர்வம் முத்திரை குத்தி யிருத்த முகத்தில் ஒரு விதமான ஏக்கத்தின் பிரதிபலிப்பு தெரிந் தன. அலங்கோலமாகக் கிடந்த ஆடைகளே அவசரமாக ஒழுங்கு படுத்திக்கொண்டு இடது கை யைத் தலையணையின் மீது ஊன் றியபடி கட்டிலின்மீது சாய்த் திருந்தாள். அந்த ஒரு கணத்தில் அசல் குடும்பப் பெண்போல.
வைரம் பாய்ந்த அந்தக் கண்கள் கூடக் கண்ணிரைச் சொரிந்தன. கொஞ்சநேரம் என்னையே பார்த்துக் கொண்டி ருந்தாள். பின் விம்மலும் விக் கலும் கலந்த குரலில் பேசிஞள்.
"அழுகிப்போன இந்த உட லோடு வாழ்க்கை நடத்துவ தற்கு ஒருவரும் விரும்ப மாட் டார்கள்தான். ஆனல் என் மனத்தோடு வாழ்க்கை நடத்த விரும்புகிருயே; அதற்காக நான் உன்னைக் கைதுக்கிக் கும்பிட்
டாலும் போதாது. அந்த நாட்
களில் உன்னை நான் விரும்பி னேன். ஆஞல் என்னுல் உள் னைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. உன்னிடம் இல்லாத துணிச்சல் அவனிடம் இருந்தது. அவனுடன் மட்டுமே பழகிய நாட்களில் அவனிடம் மட்டுமே "அது இருப்பதாக நிளேத்தேன். தன்னுடைய செளகரியங்களுக் காகக் கொஞ்சம் கொஞ்சமாக என்னை இந்த வாழ்க்கைக்குப் பழக்கிவிட்டு வருமானம் குறைத் ததும் ஓடிவிட்டான்."
*பிறகாவது நீ சரியான வழியில் நடக்க முயற்சித்திருக்
suontub” M

"உலக ம் தெரியாதவன் போலக் கதைக்கிருய். நான் பிறந்த கிராமத்தில் இருந்தால் கூலிவேலை செய்து கெளரவமா கச்சீவிக்கலாம். இது கொழும்பு.
இங்கே பட்டம் பெற்றவர்கள்
கூட ஏதேதோ முறையில்தான்
வேலை தேடுகிருர்கள். மேலும் அந்தப் பாவி பழக்கிவிட்ட பழக்கம் இது."
"அவன் அவன் என்கிருயே இப்போது அந்த அவன் எங்கே வாழ்கிருன்"
'இப்போ எந்த மூலையில் எந்தப் பெண்ணை இந்த நிலைக் குத் தள்ளிக் கொண்டிருக்கி ருணுே தெரியாது. அவனைப் பற்றிய எண்ணமே எனக்கு இப் போது இல்லை. என் பிள்ளைக் காகத்தான் இப்படிக் கேவல மான வாழ்க்கை வாழ்கிறேன். என் சதையிலும் ரத்தத்திலும் வளர்ந்த பிள்ளையை தான் இருக் கும்வரையும் காப்பாற்றத் தானே வேண்டும். நான் செத் தபின் அது நடுருேட்டிலே கண் ணைக் கசக்கிக்கொண்டு நிற்பதை நான் காணவா போகிறேன்.?
அவள் விக்கி விக்கி அழு தாள். அந்த அழுகையிலே - சிந்தும் கண்ணீரிலே தன் கறை கள் கழுவப்படுவதைப் போல அழுதுகொண்டேயிருந்தாள்.
அன்று அவளுக்கு வருமா னம் இல்லை எனக்கு.
இரண்டு வாரங்களுக்குமுன் காரியாலயத்தில் மேலதிக நேர வேலையை முடித்துவிட்டுப் புகை யிரத நிலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். ஒல் கொட் மாவத்தையால் சென்று கொண்டிருக்கும்போது சின்னக் குழந்தை என் காற்சட்டையைப் பிடித்திழுத்துக் கைநீட்டியது.
திரும்பிப்பார்த்தேன் அவள் நின்ருள். நான் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தோடு ஒடிச் சென்று அதை அவளிடம் கொ டுத்தது. அவள் என்னையே பார்த் துக்கொண்டு நின்முள். ஆளுல் தெரிந்ததாகக் காட்டிக்கொள் erosodobo.
அதன் பின் ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தைக்கு ஒரு ரூபாய் கொடுப்பேன். திரு மண்ச் சந்தையில் விற்பனேக்கு விடப்பட்டிருக்கும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் அதற்குமேல் என்னல் எதுவும் செய்யமுடியாது.
நேற்றுப் பின்னேரம் ஆற ரை மணியளவில் வ ழ க் கம் போலப் புகையிரத நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந் தேன். தூரத்தில் வரும்போதே அவள் நடைபாதையில் படுத் திருப்பது தெரிகிறது. அந்தக் குழந்தை அவளின் கன்னத்தைத்
தட்டுவதும் கொஞ்சத்தூரம் ஓடுவதும் மீண்டும் திரும்பிவந்து கன்னத்தைத் தட்டுவதுமாக
விளையாடிக் கொண்டிருக்கிறது.
அருகில் வந்துவிட்டேன். குழந்தை அவளின் கன்னத்தை தட்டிவிட்டுச் சிரித்துக்கொண்டு துள்ளி ஓடுகிறது.
அவனைச் சுற்றி ஈக்கள் பறக்கின்றன. முகத்தில் எறும் புக் கூட்டம்.
இனி அந்தக் குழந்தை நடு ருேட்டிலே கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்பதை அவள் காணமாட்டாள்.
S

Page 9
ஜெயகாந்தனின் ஆன்மீகமும் சமுதாயமும்
இலக்கியப் Lesop.lüt unrer ri களுக்குள்ளேயும், விமர்சகர்க ளுக்குள்ளேயும் இன்றைக்குச் சில பதப்பிரயோகங்கள் மயங்க அடித்துக்கொண்டும் lo 65 ar  ைவ த் துக் கொண் டு மிருக் கின்றன.
சமுதாயப் பார்வை என் றும் சமுதாய ஆன்மீகப் பார் வை என்றும் பேசப்படும் இந்தச் சொற்கள் கேட்கிறவர்களை மாத்திரமல்ல, சொல்கிறவர்க ளையேகூடத் தவிக்க விட்டுவிடு கின்றன.
ஒரு வாரப் பத்திரிகையில், ஒர் எழுத்தானர் இந்த பார்வை கள் பற்றி பதில் சொல்லியிருக் கிருர். ஆஞல் எந்தக் கேள்வி யை நிருபர் அவரிடம் கேட் டாரோ அதே கேள்வியை - இரண்டு பக்கங்கள் விளக்கம் தரப்பட்டும் கூடப் புரிந்து
ரகுநாதன் பதில்
கொள்ள முடியாமல், “Ձմ போது சொல்லுங்கள் - சமூ தாய ஆன்மீகப் பார்வை என் முல் என்ன- என்று பேட்டி பின் கடைசிக் கேள்வியாகவும் வைத்திருக்கிருர்,
கேள்விக்கும் பதிலுக்கு மான அந்தப் பிரச்ன் என்ன அவ்வளவு சிக்கல் நிறைந்ததா? நிச்சயமாக இல்லை.
untri சமூகத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் ஒதுங்கிக் (as nrch 6t நி3னக்கிருர்களோ
அவர்கள், தங்கள் உணர்வுகளை யும், சிந்தனைகளையும் சமூகத்து டன் ஒட்டவிடாதபடிக்கு இழு துக் கட்டிப்போட்டு, 6. யிலே ஒரு திரையையும் போட் டுக் கொள்கிருர்கள்.
சமூகப் பொறுப்புக்களிலி ருந்து விலகிச் செல்கிறவர்கள் தங்களுடைய துறவுக்கு நியாபம் கற்பிக்க முயலும்போது குழம்
*ஆன்மீகப் பார்வை" யின் அளவுகோல் என்ன?"
14

புவது அவர்களுக்கு இயல்பு, குழம்புவது அவர்களுக்கு அவ Яшції .
வருக்கு வெளியே நின்று பார்த்தால் கோபுரம் பெரிதா கத் தெரியும். கோபுரத்துக் குள்ளே இருப்பவனுக்கு அது கண்ணுக்குத் தெரிவதில்லை.
ஆஞல், ஒரு பார்வையாள னின் வர்ணனையைவிடவும் சமு தாய உணர்வுகளுக்குள்ளேயே இருப்பவனுக் குத்தான் அது பற்றி அதிகமாகத் தெரியும்: அக்கறையும் இருக்கும். -
சமுதாயப் பிரக்ஞை இருக் கிறதினல்தான் இலக்கியம் பிறக் கிறது. அப்படிப்பட்ட இலக்கி யத்தில் ஆன்மீகப் பார்வை என்பது இல் லா மற் போய் விடாது.
ஆன்மீகம் என்பதை நான் மனிதாபிமானிகள் சொல் கிற அர்த்தத்திலல்ல சொல்வது;
சமுதாயம் என்றும், மக் கள் என்றும் ஓர் எழுத்தாளன் எந்த அமைப்பை, எந்த வர்க் கத்தை உருவகப்படுத்துகிருன் என்பதுதான் அறிவிக்கப்பட வேண்டிய அம்சம்.
நீ யார்? சொல்
"நீயும் நானும்" என்ற எனது கதையில் அந்த ஆன்மீக ப் பார்வை குறைகிறது என்று சொல்கிறவர் தன்னை யார் என்று அடையாளம் காட்ட வேண்டும். யாருடைய பிரதி நிதியாக வருகி ருர் என்று தெரிய வேண்டும்.
நான் எந்த ஆயுதத்தை எடுப்பதென்று எனது எதிரிதான் தீர்மானிக்கிருன்.
முதலில் அதைச்
எனது படைப்பில் நான் யார் என்று எல்லோருக்கும் தெரிகிறது. இதை விமர்சிக்கிற வரின் விலாசம் என்ன? தெரிந் தால் நான் பதில் சொல்வது சுலபமாக இருக்கும்!
கம்யூனிஸ்டுகள் தலைமறை வாக வாழ நேர்ந்த காலத்தில், நான் நீயும் நானும் என்ற கதையை எழுதினேன்.
மனித உரிமைகளுக்காகப் போராடும் அவர்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவிக்கும் உணர்வு என்ன அந்தக் கதை யை எழுதத் தூண்டிற்று.
அந்தக் கதையின் சுருக்கம் இதுதான்
துப்பாக்கி முனை யி லே தேடப்படும் ஒரு கம்யூனிஸ்டுக்கு தனது வீட்டிலே பாதுகாப்புத் தருகிருள் ஓர் சாழைத் தாய். அங்கேயும் போலீஸ் வந்துவிடு கிறது.
அந்த க் கம்யூனிஸ்டைக் காப்பாற்ற வேண்டுமென்ருல் ஏதாவது "டெஸ்பரேட்" டாகச் செய்து போலீஸின் கவனத்
தைச் சில நிமிடங்களாவது திருப்ப முடியுமென்ருல், அந்த நேரத்துக்குள் ஒளிந்திருக்கும் கம்யூனிஸ்ட் தப்பிக்கொள்ள முடியுமென்று அவள் கருது கிருள்.
அவசரமும் அவசியமுமான அந்தநேரத்தில் அந்தத் தாயால் என்ன பெரிய கலக்கத்தைப் போலிஸ்காரர்களுக்கு ஏற்படுத் திவிட முடியும்? ஆளுல் எப்படி யும் அந்த கம்யூனிஸ்ட் இவர் களின் கைக்குத் தப்ப வேண் டுமே! அவள் தனது குழந்தை யை பொலீசுக்கு முன்னுல் தரை யிலே அடித்துக் சுொன்றுவிடு கிருள்.
yr

Page 10
பொலிஸ்காரர்கள் இந்தச் சில விஞடி அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் கம்யூனிஸ்ட் தப்பி விடுகிருன்.
கம்யூனிஸ்டைத் தப்புவிப்ப தற்காகக் குழந்தையை கொன்ற தாய், தனது குழந்தையின் மரணத்துக்காக அழுதாளா என் றெல்ல்ாம் நான் எழுதவில்லை. ஆனல் படிக்கிறவர்களால் ஒரு தாயின் நிலையை உணர்ந்து கொள்ள முடியும்.
சமுதாய ஆன்மீகப் Trif வைக்கு விளக்கம் சொல்கிறவர் இதில்ே அது இல்லே என்கிறர். சமுதாய ஆன்மீகப் பார்வை யுள்ள கதை ஒன்றையும் அவர் சொல்லியிருக்கிருர் .
வேடிக்கை என்னவென்ருல், அவர் ஆன்மீகப் பார்வையுள்ள கதை என்று சொல்கிருரே அந்தக் கதையை அவருக்குச் சொன்னதே நான்தான் !
அப்போது அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். e எழுதப்பட்டு, புத் த கமா வந்து பலரால் பாராட்டப் பட்டபோது, எனக்கு என் கதையின்மீது சந்தேகம்வந்தது.
"என்னப்யா, எனது கதை யில் ஒரு கம்யூனிஸ்டுக்காக ஒரு தாய் தனது குழந்தையைக் கொல்வதாக இருக்கிறதே-இது சரிதாஞ என்கிற சந்தேகம் எனக்கு இப்போது ஏற்பட்டிருக் கிறது. ஆனல் நான் மாத்திரம் இப்படி எழுதவில்லை. ఫ్లోజ్జ
மார்க்ஸிய எழுத்தாளரும்
படி எழுதியிருக்கிருர் என்று அந்தக் கதையையும் சொன் னேன்.
எதிரிகளுக்கு மறைத்து சில கம்யூனிஸ்ட் வீரர்களும் அவர்
6
"நீயும் நானும்
களுடன் ஒரு கணவனும் மனைவி պւն, அவளுடைய கைக் குழந் தையும் ஒரு பாலத்துக்குக் கீே ஒளிந்திருக்கிருர்கள். களுடன் எதிரிகள் அவர்களை அங்கே தேடிக்கொண்டிருக்கிருர் கள். அப்போது இடுப்பிலே இருக்கும் குழந்தை ஆழத் தெர பங்குகிறது. அந்தக் குரல் கேட்டு எதிரிகள் சூழ்ந்துகொள் ளக் கூடும் என்பதால் குழந் தையின் தாய் அதை மார்போடு அணைத்துக் கொள்கிருள். குழந் தையால் அழமுடியவில்லை. அழ
மாத்திரமா மூச்சுவிடக்கூட முடியவில்லை. அதன் மூச்சு அடங்கி, மெல்ல் மெல்ல துடிப்பு அடங்குகிறது. குழந்தையிடம்
எந்தச் சலனமுமில்லை. தாய் பார்க்கிருள்; குழந்தை மரித்தி ருக்கிறது.
இது அந்தக்கதை. அப்புறம் தாய்மையுணர்ச்சியால் இவர் அழுததாகவும், அவள் வாயைக் கணவன் பொத்தியதாகவும் இன்றைக்கு இவராகச் சொல்லிக் கொள்வதுதான். கதையில் இதெல்லாம் இவ்ல், ஆளுல் அதை நம்மால் எழுதாமலே
அனுமானிக்க முடியும்.
எனது சந்தேகத்தையும், இந்தக் கதையையும் கேட்டு விட்டு, உங்களுக்கு எப்படி இது மாதிரியான சந்தேகம் வந்தது.
அது- "நீயும் நானும்’- ஒரு அருமையான கதை என்ருர் நண்பர்.
எனக்கு என்னவோ, ஏற் பட்ட சந்தேகம் மறையவே இல்லை. அந்தச் சந்தேகம் கதை
யிலே "சமுதாயப் பார்வை இருக்கிறது:ஆன்மீகப் பார்வ இல்லை’ என்பதனல் இல்லை.
ஆன்மீகப் பார்வை இல்லை என் பவர்களை எதனுல் அப்படிச்

சொல்கிறீர்கள்? உங்கள் அளவு கோல் என்ன?’ என்று கேட்க நியாயம் இருக்கிறது.
இந்த நாட்டிலே, சிவனுக்
குத் தனது மகனை அறுத்து விருந்து படைத்ததாகக் கதை இருக்கிறது.
மகாவிஷ்ணுவுக்கு த ன து மனைவியைக் கொடுத்த கதை யும் இருக்கிறது. இவை கதை என்கிற அந்தஸ்துக்கும் மேலே போய், தர்மங்கள் என்று உப தேசிக்கப்படுகின்றன.
சிவனுக்காக மகனைச் சமைத்
தது சரி என்றல், அதிலே ஆன் மீகம் இருக்கிறதென்ருல்
மகாவிஷ்ணுவுக்காக மனை வியை விபச்சாரியாக்குவது சரி என்றல், அது தர்மம் என்று ஒப்புக்கொள்ளப்படுமென்றல்
கடவுளுக்காகச் செய்யப் படும் இந்தத் "தியாகங்களே ஒரு மனிதனுக்காகவும்
செய்யக் கூடாது?
விஷயம் அதுவல்ல. எனது கதாநாயகன் ஒரு கம்யூனிஸ்ட் டாக இருக்கிருன்.
அவனை நேதாஜியின் படை
வீ ர ன க ச் சித்திரித்திருந்தே னென்ருல் விவகாரம் வேறு விதமாக இருக்குமென்பதும்,
இதைத் தலையிலே தூக்கி வைத் துக்கொண்டு ஆடுவார்கள் என் பதும் தெரியாதா என்ன?
இந்த மாதிரியான சமா தானங்களைச் சொல்வதன்மூலம் எனது சந்தேகங்களை நான் அகற்றிவிட முடியாது. அப்படி யென்றல் எனக்கும் மதாபிமா
னிக்கும்வித்தியாசம் என்னஇருக்
வதற்கென்று,
நைவேத்தியமாகக்"
கிறது ?
எனது சந்தேகம்
கம்யூனிஸ்ட் என்பவன் சமூ கக் கொடுமைகளைச் சகிக்க முடியாமல் நசுக்கப்படும் மக்க ளின் நல் வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். அவனுடைய இலட்சியம் மக்க ளுக்காகத் துன்பங்களைத் தாங் கிக் கொள்ளவும், ரத்தம் சிந்து வதற்கும். கொல்லப்படுவதற் கும்கூட அவனை ஒப்புக்கொடுக் கத் தயாராக இருக்குமே தவிர அவனுக்காக மக்கள் ரத்தம் சிந்துவதை ஏற்றுக்கொள்ளாது.
மக்கள் சுதந்திரம் மலர் கம் யூ னி ட் தன்னை உரமாகத் தருவான்; ஒரு தேவதை மாதிரி மக்களை கேட் க மாட்டான்.
அப்படியானல், என் கை யிலே தலைமறைவாக இருக்கு கம்யூனிஸ்டைக் காப்ப்தற்கா தாய். தனது குழந்தையை கொல்கிருளே, இது சரிதான"
தனதுகுழந்தையின் மரணத் துக்காக அந்தத் தாய் அழ வில்லை என்பது எனது நண்பரின் வாதம். எழுதப்படாத அந்தக் கண்ணிரை எங்கள் இதயம் உணர்கிறது என்பது வாசகர் கருத்து.
தான் இன்னெரு புலம்பலை யும் கேட்கிறேன். அந்தக் குழந் தைக்காகவும், அந்தத் தாய்க் காகவும் இதுமாதிரியான தியா கங்களாலும் வறுமையாலும், சட்டங்களாலும், கோடிக் கணக் கான மக்கள் சாகநேரிடுகிற சமுதாய அமைப்டின்சகவும் கண்ணிர் வடிக்கிற கம்யூனிஸ்ட் டின் குரல்.
இதிலே ஏதோ பார்வை குறைகிறது என்பவர்கள் சொந்
7

Page 11
தமாக எதையும் கண்டுபிடித் துச் சொல்லவில்லை. எனது சந்தேகத்தையேகூட அவர் சரி யாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் கருதுகிறேன்.
"நீயும் நானும் கதையில் நான் கொள்கிறபேதம், நாள் சொல்லியிருப்பதைவிடவும் ஒரு கம்யூனிஸ்டின் இலட்சியம் இன் னும் எவ்வளவோ மகத்துவம் வாய்ந்ததாகும்- நான் அந்த இலட்சியத்தின் உச்சத்தைத் தரவில்லை என்பதுதான்.
சமீபத்தில் வேருெரு கதை படித்தேன். நாஜிகளின் ஏகா திபத்தியப் போர் மூண்டெழுந்த நேரத்தில் சோவியத் ரஷ்ய மக சுளுக்காக மாத்திரமல்லாமல் உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காவும் போ ராடிய சோவியத் வீரர்கள் பெர்லினிலுள்ள ஒரு ஆஸ்பத் திரியிலுள்ள சிறு குழந்தைகளைக் காப்பதற்காக தங்கள் உயிர் களை அர்ப்பணித்து அவர்களை மீட்டு வாழவைத்தார்கள். இது கதைமாத்திரமல்ல. வரலாற்று - מL (60 ז68% - כ4
அந்த மக்களின் நண்பர் களுக்கு நினைவுச் சின்னமாய் பெர்லினில் சிலைவைக்கப்பட்டி ருக்கிறது. ஒரு போர்வீரன் ஒரு குழந்தையைத் தாயினும் பரிவு டன் அணைத்திருப்பதை அந்தச் சிலையிலே காணலாம்,
ஆம், கம்யூனிஸ்ட் என்ப வன், மக்களுக்காகச் சமாதா னத்தை வழங்குகின்றவன் மக் களுக்காகவே அவன் தியாகம் செய்கிறவன், மக்களின் உரிமை களுக்காக மரணத்தையும் ஏற் கிச் சித்தமாயிருக்கும் 'அவன் உங்களிடம் கேட்பதெல்லாம்
18
"தோழர்களே, உங்கள் உரிமை களைச் காப்பீர்களாக" என்பது தான்,
ஒரு கம்யூனிஸ்ட்டின் தியா கச் சிகரங்களை நான் விளக்குவ தென்ருல் என் கதையிலே இன் னும் எவ்வளவோ சொல்லியி ருக்க வேண்டும்.
ஆணுல் விவாதம் அதுவல்ல, கதையிலே சமுதாயப் பார்வை இருக்கிறது-ஆன்மீகப் பார்வை இல்லை என்ருல் அது எந்த அடிப்படையில்?,
நண்பர் சொல்கிற ஆன்மீ கப் பார்வை எதுஎன்று தெரிந்து கொள்வதற்காக - அவரிடம7 வது விளக்கம் கிடைக்குமா என்பதற்காக - அவருடைய கதைகள் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒருகதை. அலுவலகத்திலே வே ஆல செய்யும் ஒரு கணவன் சில தவ ருண வெளித்தொடர்பு கொண் டிருக்கிருன். விவரத் தெரிந்த மகன் இதைத் தன் தாயிட்ம் வந்து சொல்கிருன். அவள் இதைப்பற்றியெல்லாம் உனக் கெதற்கு - ஆந்தரங்கம் புனித மானது என்கிருள்.
கணவன் சம்பாதிக்கிறவ னக இருப்பதால், அவள் அவன் தயலிலேயே பிழைக்கிறவளாக இருப்பதால் இப்படிச் சொல் கிருளோ - இதிலே தெரிகிற ஆன்மீகப் பார்வையை கொஞ் சம் திரும்பிப் பார்ப்போம்.
இந்தக் குடும்பத்திலே மனை தான் சம்பாதித்து கணவனுக் குப் போடுகிருள். கணவன் சென்ற மாதிரி அவளும் சில தவருன வழிகளில் செல்கிருள்: பையன் வந்து அப்பாவிடம் "அம்மா ஏன் அப்பா அப்படிச்
செய்கிருள்" என்று கேட்கிமூன்.

என்று வைத்துக் கொள்வோம்: அப்போது அந்தத் தந்தை பேசாதே, அந்தரங்கம் புனித மானது" என்றுதான் சொல் sumrfrnr? சொல்ல வேண்டும். ஆமீகப் பார்வை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படக் கூடாதே!
இப்படிப்பட்ட ஆன்மீகப் பார்வையின் மூலம் எனது நண் பர் என்ன சொல்கிருர்?
சம்பாதிக்கிறவர்களின் தவ றுகளை, பொருளாதார வாய்ப்பு இல்லாதவர்கள் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என் பதுதாளு?
இம்மாதிரியான ஆன்மீகப் பார்வை எனது "நீயும் நானும்" கதையில் இல்லைத்தான்.
எனது கதை - தனக்குச் சம்பந்தமில்லாத - சகல மக்க ளுக்காகவும் போராடும் ஒரு மனிதனுக்கு, தானும் ஏதாவது
ஏழைத் தாய் விரும்புகிருள்.
அவள் ஏழையாக இருக்க லாம்; மனிதாபி மானமற்றவ ளாக இருக்க வேண்டுமென்பது என்ன அவசியம்?
அவளுடைய தியாகம் ஒரு கம்யூனிஸ்ட்டுக்காகச் செய்யப் பட்டிருக்கின்றதே - அதுதான் சிலரின் எரிச்சலுக்குக் காரண மென்முல்
சமாதான சக வாழ்வுக்கா கப் போராடுகிறவர்கள், கம்யூ னிஸ்ட்டுகளாக இருந்தால் - அல்லது கம்யூனிஸ்ட்டுகளாக மாறிஞல், நா ன் எப்படித் தடுப்பது? நண்பர் எப்படிக் கோபிப்பது?
德 (திறஞய்வு மன்ற இலக்கிய வார விழாவில், தோழர் தி. க. சிவசங்கரன் தலைமையில் "நீயும் நானும்" என்ற தலைப் பில் பேசியது:
(நன்றி:
*கார்க்கித
60േff് ബസ്ത്ര്
தனித்துவம் நிரம்பிய ஈழத்து இலக்கிய பரம் ப்ரையைக் கட்டி வளர்ப் பதுடன் நமது தேசிய பரம்பரையைப் பேணிப் பாதுகாக்க விருப்பமுள் ளவர்கள் "மல்லிகை" யைத் தொடர்ந்து படிக்கலாம்.
ஆண்டுச்சந்தா ரூபா 6-70
assa
WäveM. . . . . . .تا 8ث بدم k۰ تا ۸ ن
s:xxxiliar

Page 12
தமிழகச் சஞ்சிகைகளும்
கே. எஸ். சிவகுமாரன் ஈழத்தவர்களும்
தமிழில் வெளியாகும் இந் தியப் பத்திரிகைகளை நம்மவர் கள் விழுந்து விழுந்து படிக்கி ருர்கள். இதற்கொரு காரணம் இருக்கத்தான் வேண்டும், மணி தனுக்கு இயல்பாகவே கீழ்த்தர மான, மலிவான, தப்பியோடிச் செல்ல உந்தும் விதத்தில் அமை கின்ற குணங்கள் சில உள அவற்றை எளிதில் இனங்கண்டு பயன்படுத்திக் கொள்கின்றன ஜனரஞ்சகக் கலைகள். இந்தியப் பத்திரிகைகளும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளே. குடும்பப் பத் திரிகை என்று இவை தம்மை விளம்பரப் படுத்திக்கொண்டா லும், உண்மையில் வீட்டுலுள்ள பெண்களுக்காகவே இவை தயா ரிக்கப்படுகின்றன. *ஆனந்த விகடன்" பத்திரிகையின் ஆசிரி யர் குழுவைச் சேர்ந்த திரு. மணியன் இதனை கொழும்பில் பரிரங்கமாகவே ஒருதடவை ஒத்துக்கொண்டார்.
80
டிக்கூறுவதணுல்
இந்தியப் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகள் ஆக்கப் படைப்புகளாக இருப்பதில்லை. அந்தக் கதைகளில் பெரும்பா லானவை கட்டுவிக்கப் படுகின் னன. சிறந்த வடிவங்களில் இறுக்கமாக அமைக்கப்படும் இத்தகைய கதைகளின் நீரோட் டமான நடையும், உள் உருவ அமைதிகளும் நேர்த்தியாக அமைவதனுல் வாச க னு க்கு அவற்றில் பிரீதி ஏற்படுகிறது. முழுமூச்சாக அவற்றை அவன் படிக்கவும் செய்கிறன். இப்ப இக் கதாசிரியர் கள் சிறுகதை அல்லது நாவல் வடிவங்களின் உன்னத படைப் பாளிகள் என்று கூறுவதற்கில்லை. கட்டுவித்தல்வேறு, படைத்தல் வேறு. தவிரவும் அவர்கள் தீட் டும் விஷயங்கள் கூட புறம்பான ஆய்வுக்கு உரியவை. தென்ன கத்து தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்கள், வழக்கம்போல் பிரபல்யம் அடையாதிருக்க,
 

ஜனரஞ்சக எழுத்தாளர்களின் பெயர்களோ தமிழர் க ள து * வீடுகளில் பிரபல்யம் அடைந்
துள்ளன.
இலங்கையில் உள்ள மத்தி யதர தமிழ்க் குடும்பங்கள், தென்னகத்து வாரப் பத்திரி கைகளை ஆவலுடன் வாங்கிப் படிக்கின்றன. இரண்டு அல்லது மூன்று இந்திய வாரப்பத்திரிகை களை வாங்கிப் படிப்பவர்கள், ஈழத்தில் வெளியாகும் மாதாந் தப் பத்திரிகைகளில் ஒன்றை யாகுதல், வாங்கிப் படிப்பதைக் காணுேம்.
பிரபல்யம் அடைந்துள்ள இந்த தென்னகத்து தமிழ்ப் பத்திரிகைகள் மூவர்ண அட்டை யுடன் கவர்ச்சியான முறையில்
வெளியிடப்படுகின்றன. நிறை யப் படங்களும் ஹாஸ் ய த் துணுக்குகளும் அமைந்துள்ள
இவற்றில், தப்பியோடிச் செல் வதற்கான வாசிப்பு அம்சங்கள் காணப்படுகின்றன. வரலாறு என்ற பெயரில், கற்பணுலயப் போக்கில் அமைந்த நெடுங் கதைகள், மத்தியதர மேல்தட்டு வட்டாரத்தினரின் யதார்த்த பூர்வமற்ற காதல் - காமக் கதைகள், திரைப்பட நடிகர் கள், அரசியல் வாதிகள் பற்றி யும் அவர்களாலும் எழுதப் பட்ட கட்டுரைகள் ஆகியவை இந்தப் பத்திரிகைகளில் காணப் படுகின்றன.
சமய நிகழ்ச்சிகள் பற்றிய ஓரிரு கட்டுரைகளும், வெவ் வேறு விஷயங்கள்பற்றிய துணுக் குகளும், தென்னிந்திய அரசியல் சூழ்நிலை பற்றிய தலையங்கங்க ளும், இப்பத் திரிகை களில் காணப்படுகின்றன. இப்பத்திரி கைகள் இவ்விதம் இருப்பதனல் கவலை ஒன்றுமில்லை. ஆனல்,
யில் வந்து
அவை ஈழத்து மக்களை போதை மயக்கத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டாமென்றே நாம் கேட் டுக் கொள்கிருேம். இலங்கை படையெடுப்புச் செய்யவேண்டாமென்றே நாம் போராடுகிருேம். இந்தியப் பத் திரிகைகளைத் தடை செய்யா விட்டாலும் அவற்றின் இறக்கு மதியை மட்டுப் படுத்துவது அவசியம்.
ஜனரஞ்சகமாக இருக்கும் இந்த இந்தியப் பத்திரிகைகளை பெரும்பாலான மக்கள் விரும் பும் பொழுது அவற்றை நாம் மட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்பது நியாயமானதே. ஆனல் எமது பெரும்பாலான மக்களின் ரசனையை மட்டரகமானதாக்கி, சிந்தனையை மழுங்கடித்து, உட னிகழ்கால நிதர்சனங்களிலி ருந்து தப்பியோடிச் செல்ல வழி வகுக்கும் எந்த ஒரு படைப்பும் ஜனரஞ்சகமாக இருந்தபோதி லும் அதன் தாக்கத்தை குறைக்க வேண்டியது, நாட்டின் நலன் குறித்து அவசியமாகும். கனவு உலகம் என்று கூறத்தக்க கற் பன உலகில் சஞ்சரித்துவரும் தென்னிந்திய பத்திரிகையாளர் களின் கட்டுக்கதைகளிளுல் இயற்கையாகவே இந்நூற்ருண் டின் ஆய்வறிவுத் துறைகளில் ப்ரிச்சயம் கொண்ட ஈழத்தவர் பலியாகிக் கீழிறங்கக் கூடாது.
தவிரவும், ஈழத்தவரின் சமூக, பொருளாதார, அரசி யல்--ஏன்-மொழி நடையிலும் கூட வித்தியாசப்படும் தென் னிந்திய சூழ்நிலைகள், கருத் தோட்டங்கள் ஆகியவற்றின் விளைவுகளினல் நாம் பாதிக்கப் படுவது மட்டுமன்றி நமது தனித்தன்மையையும் இழக்க வேண்டுமா?

Page 13
இந்திய ஜனரஞ்சகப் பத்தி ரிகைகளை ஈழத்தவர் மாத்திரம் எள்ளி நகையாடவில்லை. தமிழ கத்து ஆய்வறிவாளர்களும், அறிஞர்களும் கூடக் கண்டித்து வருகிறர்கள். நமக்கு இந்திய தமிழர்களுடனுே, இந்திய கலை ஞர்களுடனே வெறுப்பில்லை. பத்திரிகை என்ற பெயரில் வெளிவரும் கீழ்த்தரமான குப் பைகள் மீதே ஆத்திரம். இந்தி யாவிலிருந்துதான் "தாமரை" தொடக்கம் "கணையாழி" வரை எத்தனையோ பத்திரிகைகள் வியாபாரக் கவர்ச்சியில்லாது வெளிவருகின்றன. இவற்றின் கொள்கைகள் கருத் துக் கள் மாறுபட்டவையாக இருந்த போதிலும், ஜனரஞ்சகப் பத்தி ரிகைகளின் ரசக் குறைவான அம்சங்கள் காணப்பருவதில்லை யாதலால், நாம் இவற்றையும் வரவேற்கிருேம் ,
ஜனரஞ்சகப் பத்திரிகைகள் இருக்கவே கூடாது என்பது அல்ல நமது வாதம். எந்த மொழியிலும் தரமுள்ள பத்தி ரிகைகளும், ஜனரஞ்சகப் பத்தி ரிகைகளும் இருக்கவே செய்கின் றன. ஆனல், தமிழில் வெளி யாகும் ஜனரஞ்சகப் பத்திரிகை கள், காலத்தின் தேவைகளை உணராது, சமூகப் பிரஞ்ஞை அற்ற, பழைய பெருமைகளை மாத்திரமே பேசும், ஒருவித போலி உலகை சிருஷ்டிக்கின் றன. இது வே கண்டிக்கத் தக்கது.
இலங்கையிலிருந்து வெளி யாகும் தமிழ் பருவ ஏடுகள் அதிர்ஷ்டவசமாக தென்னிந்தி யப் பத்திரிகைகளின் பாணியை பின்பற்றுவதாக இல்லை. ஓரிரு பத்திரிகைகள் அவற்றின் சாயல் களைக் கொண்டிருந்தாலும், இப் பத்திரிகைகளின் தாக்கம் தெளிவானவையாகவும், குறிக் கோளுடையதாகவும் இருக்கின் றன என்பதே எனது நம்பிக்கை. ஆஞல், அளவுக்கு மீறிய பத்தி ரிகைகள் வெளி வருவதனுல் போட்டாபோட்டிகள் அதிகரிக் கின்றன. எல்லாப் பத்திரிகை களும், ஒரேமாதிரி, பலதரப் பட்ட வாசகர்களையும் திருப்தி பண்ண முற்படுகின்றன. இவற் றைத் தவிர்த்து, ஆங்கிலத்தில் வெளியாவதுபோல், ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பத்திரி கை என்ற முறையில் இவை வெளியானுல் பிரயோசனமாக இருக்கும். பலதரப்பட்ட வாச கர்களும் தமக்குத் தமக்குத் தேவையான அம்சங்களை இவற் றில் கண்டு பயனடையலாம்.
பத்திரிகை உயிர்வாழ நிதி தேவை. கைத்தொழில் அதிபர் கள் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்க தாமா கவே முன்வரவேண்டும். பத்தி ரிகைகள் வெளித்தோற்றத்தில் கவர்ச்சிபெற புதிய உத்திகள் கையாளப்பட வேண்டும். 长
 

0 - 04. O 8
மாட்டு வண்டி திக்குவெல்லை கமால்
800
அதிகாலை ஐந்துமணியின் அலறல். காரிருள் இன்னும் கலையவில்லை. பேரமைதி! குளிர்ந்த இளந்தென்றல் மெல்லத் தவழ்கிறது. அதனிடையே-ம்
நீண்டு வளைந்து நடுங்கிய பாதையிலே, ஆடியசைந்து ஒலியெழுப்பி அரிக்கன் லாம்பின் ஒளியுடன் வருகிறதோர் மாட்டுவண்டி.
கட்டைக் கைபணியனும் வட்டம் விரி தொப்பியும் அதிலே அமர்ந்திருப்பவர்; நந்தியஸ் ஐயா என்பதை நன்முக எடுத்துக் கூறின.
ஊருக்கு அப்பால். இரண்டு மைல் தொலைவில்; நாளாந்தம் நடைபெறும் சந்தைக்குத்தான் அது செல்கிறது. ழுற்பகல் பத்து ம்ணிக்கெல்லாம் மீண்டும் வண்டி திரும்பிவிடும் அதுவரையில்மடியிற் காசும்
23

Page 14
கைகளிற் பையுமாய் ஊரவர்கள் காத்திருப்பர்.
பலாக்காய்.
வாழைக்காய்.
கீரை கறிவகை, சுமந்தபடி வண்டி வந்து;
பள்ளியடி,
மலைவளவு,
முச்சந்தி, முதலான இடங்களில் தங்கிச் சென்ருல் எங்கும் ஒரே கலகலப்புத்தான்!
அந்தோ.. பாதையின் மறுமுனையில் ஆடியசைந்து ஒலியெழுப்பிச் செல்கிறது அவ்வண்டி.
நேற்றும்
இன்றும்
மாத்திரமா என்ன? நந்தியஸ் ஐயாவின் உயிரிருக்கும்வரை அதிகாலை ஐந்து மணிக்கு . காரிருள் கலையுமுன்பு . . பேரமைதியிடையே. ஆடியசைந்து ஒலியெழுப்பி அந்த மாட்டுவண்டி இந்தப் பாதை வழியே நகர்ந்துசெல்லும்,
1943-இல் ஹாஜி-அதா என்பவன் போர் முனையிலிருந்து குபாச்சி கிராமத்துக்குத் திருப்பினுன். வெள்ளி நகை வேலை களில் அவன் மிகத்தேர்ந்தவன்; ஆஞல், போரில் இர ண் டு கைகளையும் இழந்துவிட்டான். அவனைப் பார்க்க எல்லோரும் வந்தனர்.
** இனிமேல் எப்படி வேலைசெய்வாய்? “ என்று அவர்கள் வருத்தத்துடன் கேட்டனர்.
" தலையினல் வேலை செய்வேன்! " என்று அவன் உற் சாகமாகப் பதில் அளித்தான், ' நான் எவ்வளவோ விஷயங்
களைப் பார்ந்திருக்கின்றேன்- எனவே, வாழ்க்கையை நேசிக்கு மாறு உங்களுக்குப் போதிக்கலாம் என என்ணுகின்றேன் ' என்று
கூறினன் .
24

தமிழில்:
Uதினைந்து வருடங்களுக் குப் பின்னர் நான் மீண்டும் விமலாவைச் சந்தித்தேன். வத் தேகமைக்கு ஒரு காரியமாகச் சென்றிருந்தப்ோது நான் அவளை யும் சந்திக்கச் சென்றேன்.
அவள் வேறு ஒருவனை விவா கம் செய்து ஒரு வருடம் கழியும் வரை எனக்குத் துக்கமாக இருந் தது. எனது தாயினதும் சகோ தரிகளினதும் எதிர்ப்புத்தான் நான் அவளை விவாகம் செய்து கொள்ள முடியாமற் போனதற் குக் காரணம் என்று நான் நினைத் தேன்; ஆனல் உண்மை வேறு.
அவள் எவ்வளவு அழகியாக இருந்தபோதிலும் அவள் பொ ருட்டு நண்பர்களினதும் உறவி னர்களினதும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும் தைரியம் எனக்கு இருக்கவில்லை; அதன லே யே அவள் எனக்குக் கிடைக்கவில்லை. இளவயதில் நான் பயந்த சுபா வம் உடையவனக இருந்தேன். நான் ஒரு பெண்ணை உறுதியுடன் காதலிக்க முடியாதவன் என்பது
அதற்குக் காரணம் அல்ல. என்
னேடு பழகிய பிற வலிபர்களை விட, ஒரு பெண்ணை நேர்மை
S. SKÈK KÈK
சிங்கள மூலம்: மார்ட்டின் விக்கிரமசிங்க
எம். ஏ. நுஃமான்
${ ်ဒွိန္တီး)::
iš Go T
த ல்
யுடனும் உறுதியுடனும் காதலிக் கக் கூடிய தன்மை என்னிடம் இருந்தது. எனினும் அதிகமான கெளரவ உணர்வும் கிராமத்த வர்களின் கதைப்பேச்சுக்களை அதிகமாகப் பொருட்படுத்தும் தன்மையும் கூட எ ன் ட ம் இருந்தன. அதனல் ஒரு பெண் ணைப்பற்றிய தீர்மானத் தி ல் இறங்கி அதை உறுதியோடு தொடர்ந்து காப்பாற்றச் சக்தி யற்றவனக இருந்தேன்.
இலட்சிய நாவல்களையும், பழமையான நீதிக் கதைகளையும் படித்த தனல் பெற்றுக்கொண்ட பல முதிர்ச்சியடைந்த கருத்துக் கள் என்னிடம் இருந்தன. அத னல் சீதைபோன்ற ஒரு பெண்ணை நான் தேடினேன். சீதாதேவி யைத் தேடுகின்ற ஒரு வாலிபன் தன்னை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்பவன் ஆகையினல் அவன் ஒருபோதும் சீதையைச் சந்திப் பதில்லை!
தன்னேடு பழகிய ஏனைய வாலிபர்களைவிட, விமலா என் னிடம் அதிக அன்பு செலுத்தி ஞள் என்பது எனக்குத் தெரியும். அவள் என்னிடம் மட்டுமல்ல வேறு இரண்டு மூன்று வாலிபர்
25

Page 15
களிடமும் அன்பு செலுத்தினள், அவர்களுள் ஒருவனைத் தவிர மற்றவர்கள் எனது நெருங்கிய
நண்பர்கள்.
தங்களுடன் விமலா விடும் பகடிகளை அவர்கள் என்னிடம் சொல்வார்கள். அவர்களில் இருவர் அவளிடம் இருந்து கிடைத்த இரண்டு கடிதங்களை
ஒருமுறை என்னிடம் காட்டினர் கள். அவர்கள் இருவரும் ஊரில்
உள்ள இரண்டு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர் கள். அவர்களிடம் காட்டாத பிரியத்தை விமலா காட்டினள். அவர்களுள் ஒருவனை விவாகம் செய்யக்கூடிய வாய்ப்பு தனக்கு ஒருபோதும் ஏற்படாது என்பதை அவள் உணர்ந்திருந் ததே அதற்குக் காரணம் என்று நான் நினைத்தேன். நன்ருக வாழ்ந்து வறுமைப்பட்டுப்போன
குடும்பத்தைச் சே ர் ந் த வ ள்
அவள். தனது தந்தையின் மர ணத்தின்பின் அவள் 'தாயுடன் வசித்து வந்தாள்.
அவளது அழகிய தோற்றத் துக்காகவும் அவள் வெட்கப் பட்டுக் கொண்டு ஒதுங்காமல் தங்களுடன் நெருங்கிப் பழகுவ தஞலுமே பணக்கார வாலிபர் கள் அவளுடன் பழகினர்கள்.
அவள் ஒருவனுடன் அல்லா
மல் பல இளைஞர்களுடன் பழகு
வதணுல் உண்டாகிய பொருமை யினுல் அவளுடைய சிநேகிதன் ஒருவன் அவளைப்பற்றிப் பல கவிதை வரிகளை எழுதி அவளது நண்பர்களுக்கு அனுப்பி இருந் தான். அந்தக் கவிதைகளில் அநேக வரிகள் அவளது உருவத் தைப் பற்றிய வருணனைகளா கவே இருந்தன. அவற்றுள் ஒரு வரி எனக்கு இன்னும் ஞாபகம்
இருக்கிறது.
26
என்னிடம்
*அறுபத்து நான்குவகை மாயங்கள் செய்து அவள் எங்கள் இளைஞர்களை அழித்தவிதம் தன்னை வருணிக்க இயலாது வார்த்தைகளும் இல்லை’ விமலாவை நான் உண்மை யாகவே காதலித்தேன். பிற வாலிபர்களிடம் இருந்து அவ ளைப் பிரித்து நான்மட்டுமே பூஜிக்க முயற்சி செய்தேன்.
ஒரு சிறுகதையை எழுதி இதைப் படித்துப்பார் என்று ஒருநாள் நான் அவளிடம் கொ டுத்தேன். ‘ஏழெட்டு வாலிபர் களுடன் உறவாடிய ஒரு பெண் ணுக்கு நெருப்புக் காய்ச்சல் உண்டாகின்றது. இரண்டு மாதங் களில் அவளது அழகிய கூந்தல் உதிர்ந்து தலை மொட்டையா கின்றது. தசை திரண்டிருந்த அவளது முகத்தில் எலும்புகள் தெரிகின்றன. கரு நீல மான அவளது கண்கள் ஒரு கிழவியின் கண்களையும்விட வெளிறிப்போய் குழிகளுக்குள் ஆழ்ந்து விடுகின் றன. அவளது நண்பர்கள் அவ ளைக் கைவிட்டு விடுகின்ருர்கள். அதன்பின் அவள் இருந்த திசை பில்கூடத் திரும்பிப் பார்க்க வில்லை."
இந்தக் கதையை வாசித்து விட்டு, மறுநாள் பின்நேரம் நான் அவளுடைய வீட்டுக்குப் பேரயிருந்தபோது அவள் என் னிடம் இவ்வாறு சொன்னுள்,
*இந்தக் கதை உண்மை. பல தா ஸ ஆக்களை இனியும் இங்கே வரவேண்டாம் என் சொல்ல எண்ணி இருக்கிறேன்."
அன்று நான் அவளுடன் கதைத்துவிட்டு மிகுந்த மகிழ்ச் சியுடன் வீட்டுக்குச் சென்றேன். எனது கதையைப் படித்த மாத்

திரத்திலேயே அவள் ஒரு சீதை யாவதற்கு முயல்வதைக் கண்ட தும் முதிர்ச்சியடையாத எண் ணங்களை உடைய இளைஞஞன எனக்கு எவ்வளவு சந்தோஷ மாக இருந்திருக்கும் என்பதை நீங்கள் நிசச்யம் உணர்வீர்கள்.
எனினும் ஏழெட்டு நாட் களுக்குப் பின்னர் பழையபடி
அவள் அவர்களுடன் பழகத் தொடங்கினுள். . .
விமலாவைச் ச ந் தி க் கச்
செல்ல நினைத்த கணத்திலேயே இந்த நினைவுகள் எனது மனதில் எழுந்தன. பதினைந்து வருடங் களாக விமலாவை மறந்திருந்த எனது இதயத்தில் இந்த நினை வுகள் புதிய நினைவுகளைப்போல தெளிவாக எழுந்தமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த நினைவுகளால் எனது மென்மை யான உணர்வுகள் கிளர்ச்சியுற் றன. பதினைந்து வருடங்களாக நான் அவளைச் சந்திக்கப் போகா மல் இருந்தது எனது நன்றி யற்ற தனமே.
அவள் ஒரு பணக்கார இளை ஞனையே விவாகம் செய்தாள். அவன் அவளை விவாகம் செய்வ தைத் தடுப்பதற்காக ஊரவர் கள் மட்டுமன்றி, அவளாகவே உறவாடிய சில வாலிபர்களும் கூட அவளுடைய குண இயல் புக்கு மாசு கற்பிக்கும் நோக்கத்
துடன் பல மொட்டைக் கடிதங்
களை அவனுக்கு அனுப்பினர்கள். அந்தக் கடிதங்களைப் படித்து அவன் த லை  ைய க் குழப்பிக் கொண்டான். அவனைச் சரிப் படுத்துவதற்காக நா ன் ஒரு சிறு காரியம் செய்தேன். அதை இப்போது நினைக்கையில் அவ ளைக் காதலித்தபோது ஏற்பட்ட நிறைவுபோன்ற ஓர் உணர்வு எனது இதயத்தில் ஏற்படுகின்
Ogil
அவளுடைய வீட்டுக்குள் நுழைந்ததும் நான் வியப்படைய வில்லை. பணக்கார வாலிபனை விவாகம் செய்த அவளுடைய வீடு மிகவும் சோபையுடன் விளங்கியதில் வி யப் படை ய என்ன இருக்கிறது? புதிய கதி ரைகள், ஸோபாக்கள், தளத் தை மூடி இருக்கின்ற விரிப்புக் கள், சுவர்களில் வரையப்பட்ட சித்திரங்களுக்கு ஏற்ற பொருத் தமான திரைச் சீலைகள் ஆகிய வற்றினல் உள் மண்டபம் அலங் கரிக்கப் பட்டிருந்தது.
அவளது வீட்டின் உட்புற அலங்காரங்களைக் கண்ட எனது மனம் என்னை நோக்கித் திரும் பிற்று. கண்கள் எனது ஆடையை நோக்கின. கபடின் கால்சட்டை யால் என் கால்கள் மறைக்கப் பட்டிருந்தன. சிவப்பு நிறச் சப் பாத்து என் பாதங்களை மூடி இருந்தது. நீலநிறச் சேட் என்" உடம்பை மறைத்திருந்தது. எனது கண்கள் இந்த ஆடை அணிகளை நோக்கிய காரணம் என்ன? அடிமனதில் மறைந்தி ருந்த போலிக் கெளரவம், பழைய காதல் ஆகிய உணர்ச் சிகள் மேலெழுந்தமையினுலா?
ஐயோ, சிறிமல் அண்ண னைக் கண்டு கன காலம்!" என்று சொல்லியவாறு விமலா என்னை நோக்கி வந்தாள். அவளது முகமும் விழிகளும், பால் பொங்
குவது போன்று அவள் இதழ்
களில் மலர்ந்த புன்னகையினல் சாந்தியோடு பிரகாசித்தன. உறவு முறைப்படி மச்சாளாக இருந்த போதிலும் அவள் அந் நாட்களிலேயே என்னைச் "சிறிமல் அண்ணன்" என்றே அழைத் தாள். அவள் விவாகம் செய்வ தற்கு முன்பெல்லாம் அவளது சிரிப்பு இவ்வளவு சுயேச்சையாக இருந்ததில்லை. கி ரா மத் துப்
急”

Page 16
பெண்ணுக இருந்ததனல், கிரா மத்தவர்களின் வம்புப் பேச்சு களுக்குப் பயந்தே அவள் அந் நாட்களில் தனது சிரிப்பை அடக்கிக் கொள்ளப் பழகியிருக் கவேண்டும் என்று நான் நினைத் தேன்.
விமலா என்னுடன் மிகுந்த
மகிழ்வோடு க  ைத த் தா ள். நான்கு பிள்ளைகளைப் பெற்ற அவள் முன்னரைவிட அதிகம் மாறி இருந்தாள். காக்கையின் இறகுபோன்ற அவளது கூந்த லில் இடையிடை சில நரைமயிர் கள் தோன்றியதைக் கண்டதும் எனக்கு வியப்புண்டாகியது.
குழந்தை வளர்ப்பில் உடல் இளைத்ததேைலா என்னவோ அவளது முகம் இப்போது சற்று ஆண்தன்மை பெற்றுத் தோன்
றியது. எனினும் இளவயதில் அம்முகத்தில் இருந்த மனங் கவர்கின்ற அடையாளங்கள்
இப்போதும் தெரிந்தன. அவளது பல்வரிசை முன்னரைவிட வெண் மையாகவும் அழகாகவும் இருந் தது. அவளது விழிகளில் இன் னும் கருனை துலங்கியது. இள வயதில், இடுப்பைவிட அகன்றி ராத அவளது பிருஷ்டபாகமே அவளுடைய தோற்றத்தில் கொஞ்சம் குறைபாடு உடைய உறுப்பாக இருந்தது. இப்பொ ழுது அவளது பிருஷ்டங்கள் அகன்றிருந்ததனுல் அவளது இடுப்பு கைப்பிடியில் அடங்கக் கூடிய அளவுக்குக் சிறுத்து இருப் பதாக எனக்குத் தோன்றிற்று. மாற்றமடைந்திருந்த அவளது அங்கங்களை நான் ஒர் உள் உணர் வுடன் நோக்கவில்லை. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த அவளது அங்கங்களை எனது கண்கள் விகல்பமின்றியே நோக்கின.
ae
'இது எனது மூத்த மகள்' என்று சொல்லியவாறு பன்னி ரண்டு லயதுடைய ஒரு அழகிய சிறுமியை அவள் என்னிடம் தள்ளினுள்.
அவள் தாயின் பிரதிபிம்ப மாக எனக்குத் தோன்றினுள். பன்னிரண்டு வயசுடையவளாக இருந்தபோது அவளுடைய தாயை நான் தினமும் இரண்டு மூன்று தடவை கண்டு பழகியது அதற்குக் காரணமாக இருக்க லாம் என்று நான் நினைத்தேன். அவளது மற்ற மூன்று குழந் தைகளுள் ஒன்று ஆண். அவளது கடைசிச் சிறுமி எனது கையில் இருந்து திமிறிக்கொண்டு தாயின் அனைப்புக்குள் அடங்கினுள். மூத்த பெண் என்னை - முக்கிய மாக எனது முடியைப்- பார்த் துக் கொடுப்புக்குள் சிரித்தாள்.
"மாமாவின் தலை நரைச்சுப் போய் இருப்பதைக் கண்டா நீலா சி ரி க் கி ரு ய்?" என்று விமலா கேட்டாள்.
"முகம் சின்னப் பிள்ளையின்
முகத்தைப்போல. ஆனல் ஏன்
தலையெல்லாம் ந  ைர ச் சு ப்
போச்சு??
பன்னிரண்டு வயதிலேயே
எனது தலையில் நரைமயிர்கள் இருந்தன. வயது அதிகரிக்கும் போது அதிகமாக எனது முடி தான் மாற்றமடைந்தது; முகம் மாறவேயில்லை. அதனுல் எனது முகத்தைப் பார்க்கும் யாரும் எனது நரையைக் கண்டு வியப் படைந்தார்கள்.
* சிறிமல், இப்ப என்ன செய்கிறீங்க? முன்னரைப்போல ஊரில் சும்மாதான் இருக்கிறீங் களா? இப்பவும் கடதாசி விளை யாடப் போlங்களா?"

இப்போதெல்லாம் கடதாசி விளையாடப் போவதில்லை; ஆன சும்மா இருக்கிறதும் இல்லை."
"அப்ப காசு சம்பாதிக்கிறீங் களா? சிறிமல்லுக்கு காசு எதற்கு? மனைவி மக்கள் இருந் தால்தான் பணம் சம்பாதிக்க வேணும். சிறிமல் கலியாணம் கட்டாமல் விட்டதே பயத்தி ணுல்தானே' என்று சொல்லிய வாறே அவள் சிரித்தாள்.
*சிறிமல் கலியாணம் கட் டாமல் விட்டது பயத்தினுல் தான் என்ற அவளது வார்த் தைகளைக் கேட்டு நான் வியப் படைந்தேன். அவை எனது வாலிபப்பருவத்து மனப்போக் கை அப்படியே வெளிப்படுத்தும் வார்த்தைகள். வி ம லா  ைவ நான் விவாகம் செய்வதற்குக் காலதாமதம் செய்தது அடிமன தில் இருந்த பயத்தினுல்தான் என்று எனக்குக்கூட இப்போது தான் தெரிகின்றது. விமலாவை ஒரு சீதையாக்குவதற்காக நான் அக்காலத்தில் முயன்றதும் அந் தப் பயத்தினலேயே அன்றி அவள் பிறவாலிபர்களுடன் பழ குவதனுல் உண்டான பொருமை யினல் அல்ல என்பதும் எனக்கு இப்போதுதான் தெரிகின்றது
al
எனக்கு ஒரு மனைவியைத்
தேடித்தருவதற்காக எனது தாயும் சகோதரிகளும் மிகுந்த சிரமமெடுத்தார்கள். அவர்கள்
கொண்டுவந்த எல்லா சம்பந் தங்களையும் நான் தட்டிக் கழித் துவிட்டேன். அதற்கும் என்னுள் இருந்த இந்தப் பயம்தான் கார ணம். மணவாழ்க்கையில் புகு வது என்பது முன்னர் கேள்விப் படடிராத ஒரு நாட்டில் நுழை வதைப பா ன் ற து என்று நினைத்து மணவாழ்வைப் புறக்
கணித்ததும் எனது அடிமனதில் இருந்த அந்தப் பயத்தினலேயே தான் இருக்க வேண்டும்.
காசு சேர்ப்பதற்காகக் கஷ் டப்படுவதில்லை’ *
*முன்னரும் சிறிமல் காசுக்கு ஆசைப்படுவதில்லை. அது நல்ல துதான். இப்ப என்ன செய்கி நீங்க? சும்மாதான் இருக்கிறீங்
d56TIT?
"ஆற்றுக்குத் தோணிவிடப் போவேன். மீன்பிடிக்கப் போ வேன். மாதத்துக்கொருதரம் கொழும்புக்குப் போய் நாலைந்து நாட்கள் இருந்துவிட்டுத் திரும்பி வருவேன்"
* மீன்பிடிக்கப் போரதா 1 அம்மா கோவிக்கிறதில்லையா?
* அம்மாவுக்குப் பயப்பட நான் சின்னப்பிள்ளையா என்ன? ‘'எதுக்காக மீன் பிடிக்கி நீங்க? பிடிச்ச மீனையெல்லாம் திரும்பவும் விட்டு விடுவீங்களா?
'இல்லை. சமைக்கச் சொல் லிச் சாப்பிடுவேன். நான் இப்ப ஆற்ருேரத்தில் வீடொன்று கட் டிக்கொண்டு அங்கேயே இருக் கிறேன்"
தனியேவா??
'இல்லை. நடுவயசுள்ள ஒரு ஆளும் இருக்கு. பெண்பிள்ளை அல்ல. .
“கருேலிஸா?
‘ஓம். எப்ப்டித் தெரியும்?,
"நான் நினைத்தேன். சிறிமல் அந்தக் காலத்தில் கருேலிசுடன் தானே உலாவப் போ வீங்க?"
89

Page 17
"கருேலிஸ் நல்லவன். எனக் குச் சாப்பாடு சமைக்கிறதும் அவன்தான். எனது பழைய நண்பர்களில் இப்போதும் ஊரில் இருப்பவன் பலதாசா மட்டும் தான். சும்மா இருக்க ஏலாத தினுல் ஆற்றுக்குத் தோணிவிடப் போவேன். மீன்பிடிக்கப் போ வேன். இரவில் ஒரு கிளாஸ் ž குடித்துவிட்டுச் சாப்பி
டுவேன்"
"முன்பு நீங்க இந்த ரெண்டு காரியமும் செய்யவில்லை. இந்தக் கெட்டபழக்கம் ரெண்டையும் பழகிக் கொண்டது எப்படி?"
தானகப் பழகிக் கொள்ள வில்லை. செய்வதற்கு வேறு வேலை எதுவும் இல்லாததினுல் தானகவே பழகிப் போச்சு"
தட்டமொன்றில் விஸ்கோத் துடின்னை வைத்து எடுத்துக் கொண்டு வந்த வேலைக்காரன் முதலில் என்னைப் பார்த்துவிட் டுப் பின்னர் விமலாவைப் பார்த் தான். அவன் என் அருகில்வந்து தட்டத்தை நீட்டியவாறே தலை யையும் முதுகையும் சற் று வளைத்தான்.
ஒரு விஸ்கோத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நான் விமலா வின் முகத்தைப் பார்த்தேன். இதுவரை நிலவிய மகிழ்ச்சி அவள் முக த் தி ல் இருந்து மறைந்து போயிருந்தது. அவள் எண்ணங்களுள் சிக்குண்டிரும்ப வள் போல் எனக்குத் தோன்
றினுள்.
அவள் எண்ணங்களுள் சிக் குண்டது கருேலிஸ் ஞாபகப் யடுத்தப்பட்டதனலா? நான் கெட்டவணுக மாறியதைக் கேள் விப்பட்டதனுல்தான் அவள் துன் பப்படுகின்ருளா?
‘சிறிமல் கலியாணம் கட்டி இருந்தால் இந்தக் கெட்ட் பழக்கம் எதுவும் பழகி இருக்கப்
போறதில்லை' எள்று "அவள் சொன்னுள். அவளது முகம் துன்பத்தால் வாடுவதுபோல்
எனக்குத் தோன்றியது.
சிறிமல்லினலேதான் இவர்
என்னைக் கல்யாணம் செய்தார்’
ரகசியம் சொல்ல நினைத்த வள்போல சுற்றிவரப் பார்த்து
விட்டு அவள் கதிரையில் இருந்து
எழுந்து வெளியே சென்ருள். தானும் முற்றத்தில் இறங்கி னேன்.
"நான் துக்கப்படுவது சிறி மல் ஒரு கெட்ட மனிதனைப் போலச் சீவிப்பதைக் கேள்விப் பட்டதனுல்தான்."
*கெட்ட மனிதன் .? நான் தனியாக ஒரு வீட்டில் வசிப்பது அம்மாவுடன் கோ பித் துக் கொண்டு அல்ல. பொழுது போக்குக்காக மீன்பிடிக்கிறதும் இரவில் கொஞ்சம் பிரண் டி குடிக்கிறதும் கெட்ட பழக்கமா? முன்பைவிட நான்
நன்ருகச்
சீவிப்பதாகத்தான் நினைக்கின் றேன்.
* அது ரெண்டும் பாவம்.
முன்னர் சிறிமல் அண்ணணுக்கு ஊர்ச் சனங்களிடம் கெட்ட பெயர் வாங்கப் பயம். உபாச கனைப் போலச் சீவித்ததும் அத ஞலேதான் ."
* ஊரவர்கள் மட்டுமில்லை இலங்கையர்கள் எல்லோருபே கெடும்பு சொன்னலும் இப்ப நான் பொருட்படுத்த மாட் டேன்."
அவள் மேலும் சோகமடைந் தாள்

நான் இப்ப சந்தோஷம் அனுபவிக்கிறது சிறிமல்லினலே தான்."
* என்னலயா?*
* சிறிமல் இல்லாவிட்டால் இவர் என்னைக் கல்யாணம்
செய்திருக்க மாட்டார். ஊர்ச் சனங்கள் எனக்கு எதிராக ஐம் பது கடிதம் அவருக்கு எழுதி இருந்தாங்க."
"ஐம்பது கடிதமா? அவர் விமலாவைக் கல்யாணம் செய் யப் போவதைக் கேள்விப்பட் டதும் விமலாவுக்கு எதிராக இரண்டு மூன்று மொட்டைக் கடிதம் எழுதினது எனக்குத் தெரியும். ஐம்பது கடிதம் எழு தியதை நா ன் கேள்விப்பட வில்லை.
அவர் என்னில் வெறுப்ப டைந்து என்னைக் கல்யாணம் செய்வதில்லை என்று தீர்மானித் திருந்தார். சிறிமல்லைச் சந்தித்து
என்னைப்பற்றிய விபரங்களைக் கேட்டு அறிந்த பிறகுதான் என்ஜனக் கட்டத் தீர்மானித்தி
ருக்கிருர், நான் ரெண்டுதரம் உண்டாகி மருந்து செய்து கலைச் சுத் தப்பினவள் என்று பலர் எழுதி இருந்தார்கள்."
*பிறகு? அந்தப் பொய்யை அவர் நம்பினர்ா?"
இல்லை, ஆணு என்ர நடத் தை சரியில்லை என்று அவர் நினைத்திருக்கிருர், சிறி ம ல் சொன்னவற்றை எல்லாம் கேட் டபிறகுதான் அவர் மனதை மாற்றிக் கொண்டிருக்கிருர் . சிறிமலும் எ ன் ர நெருங்கிய கூட்டாளி என்று பத்துப் பன் ரெண்டு கடிதம் எழுதி இருந் தாங்க. ஒரு கடிதத்தில்.
அவள் வாயால் சொல்லாத மற்ற வார்த்தைகளை நான் யூகித்துக் கொண்டேன்.
*வாலிபர்கள் பலருடன் கதைத்துப் பழகினுற்போல நான் கெட்டவள் இல்லை என்று அவரிடத்தில் சிறிமல் சொல்லி இருக்கிறீங்க அல்லவா?" என்று அவள் என்னிடம் கேட்டாள்.
*அவர் சிறிமல்லின் வார்த் தைகளை நம்பினர். அவரைத் தெரிந்த ஊரவர்கள் எல்லாரும் சிறிமல் நல்ல பிள்ளை, கெட்ட வேலை செய்கிறவன் இல்லை என்று சொல்லி இருக்கிருர்கள். சிறிமல் லையும் என்னையும் பற்றி எழுதின
மொட்டைக்கடிதங்கள் எல்லாம்
பொய் என்று அவர் எண்ணி இருக்கிறர்."
*கிராமத்துச் சனங்களின் குணம் அவருக்குத் தெரிய வில்லையா "
* சிறிமல் மட்டுமில்லை. பல தாசாவென்ருலும் எ ன் னை க் கலியாணம் செய்வதாகச் சொல் லியிருந்தால் நான் அப்போதே சம்மதித்திருப்பேன். எ ங் கள், அம்மா சிறிமல்லிடம் மிகவும் அன்போடு இருந்தாள். நானும் சிறிமல்லிடம் அதிக அன்பு  ெ லுத்தினேன். சிறிமல் இருக்
கி) இடத்திலேயும் சிறிமலுக்கு
எதிரிலேயும் நான் கொஞ்சம் அடக்கமாகத்தான் க  ைத ப் பேன்."
ஏன்???
“எனக்குத் தெரியா து" என்று சொல்லியவாறு அவள் சிரித்தாள்.
* ஊர்ச் சனங்களுக்கு என் மீது கோபம் என்று தெரிந்திருந் தால் பலதாச போன்றவர்களு டன் அதிகம் கதைபேச்சுக்குப்

Page 18
போயிருக்க மாட்டேன். சனங் கள் இவ்வளவு பொருமைக்
காரர்கள் என்பது எனக்குத் தெரியாது."
அவள் தன் விரல் நுனிக ளால் கண்களைத் துடைத்து விட்டாள்.
அவளது கணவனிடம் நான் சொன்னது உண் மை தான். அவள் பல வாலிபர்களுடன் உறவாடியது அவளது கெட்ட இயல்பினல் அல்ல, ப்ோலித் தனமான கெளரவ ஆணர்ச்சி கள் இல்லாமையினலேயே என் பதை நான் நன்முக அறிந்திரு தேன். நான் சொன்ன விபரங் களைக் கேட்டு அவளது கணவன் மன ஆறுதல்பெற்றதை அறிந்து கொள்ளக் கிடைத்ததையிட்டு நான் சந்தோஷப் பட்டேன். எனினும் அப்போது என்னுள் இருந்த பொருமையை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு தான் நான் அவளுடைய கணவ
உபாசகனக இருந்தேன் என்பது அதற்கு அர்த்தம் அல்ல.
‘இன்றைக்கு ராச்சாப்பாட் டுக் அவர் நேரத்தோடு வீட் டுக்கு வருவார். சிறிமல்லைச் சந்திக்க அவரும் ஆசைப்படு வார். இன்றைக்குத் தங்கிப் போகலாம்’ என்று விமலா சொன்னுள்.
*இல்லை, இன்றைக்கே திரும் பிப் போகவேணும். இன்னுெரு நாளைக்கு வருவேன்."
நான் விமலாவின் காரிலே யே பு  ைக யி ர த நிலையத்தை நோக்கிச் சென்றேன். அவளது கணவன் இரண்டு கார் வைத் துக்கொள்ளக் கூடிய அளவுக் குப் பணக்காரன். அவன் மட்டும் தனியாகப் பிரயாணம் செய்வ தற்குத் தனது சிறிய ஒஸ்டின்" காரைப் பாவிப்பான். என்னைப் புகையிரத நிலை ய த் துக் கு க் கொண்டு சென்ற றயிலி வண் டியில் மனைவி மக்களுடன் பிர
னிடம் அ ந் த விபரங்களைச் சொன்னேன். நான் பெரிய யாணம் செய்வான். 事
-au
=====--
வீதிகளில் ஒழுங்கோடு நடந்துசெல்பவர்கள் யார்? மன்தர் களா ? ஆடு, மாடு, நாய் போன்ற வீட்டு மிருகங்களா ? கோழி, வாத்து போன்ற பறவையினங்களா? என்பதைக் கண்டறிவதற் காக, அமெரிக்காவிலுள்ள பிராணி நூல் வல்லுனர்கள் சிலர் அண்மையில் ஒரு பரிசோதனையை நடத்தினர். அந்தப்பரிசோதனை யில் கண்ட முடிவு என்ன தெரியுமா ? வாத்துக்கள்தான் பூரண ஒழுங்கொடு வீதிகளைக் கடந்து செல்லுகின்றன என்பதுதான்!
2

எஸ். எம். ஜே. பைஸ்தீன்
சிரி குணசிங்ஹவின்
- விதைகள
நிஸந்தஸ்". இது சிங்களத்திற் புதுக் கவிதைக்கு வழங்கும் பெயர். இக்கவிதை மரபின் காரணமாக வாசகர் வட்டாரத்தில் பெரும் புயலொன்றே தோன்றிவிட்டது. சிரிகுணசிங்ஹவின் கவி தைகள் இதற்குக் காரணமென்பது தவரு காது. ஜீ. பீ. சேனநா யகாவே "நிஸந்தஸ்" கவிதைகளின் தந்தை. மார்ட்டின் விக்கிரம சிங்ஹ நிசந்த - சந்த (யாப்பிலா - யாப்புடை) கவிதை மரபு களை இணைத்தார். குணதாச அமரசேகர அதனைப் பிரபலப்படுத் தினர். எனினும் இவர்கள் மூவரும் அதற்குச் சரியான வடிவத்தை வழங்கவில்லை. சிரி குணசிங்ஹவின் கவிதைகளிலேயே நிஸத்தஸ் கவியாளர்கள் பின்பற்றக் கூடிய உருவம், பொருளம்சம், மொழி நடை, உவமை போன்ற அணிகள் தெளிவுற விளங்குகின்றன. சமகாலத்தைப் பற்றிய உணர்வு, அவையனைத் ைபும் வெளிப் படுத்தத் தடைகோலும் மரபுவழியாப்பு, அதை மீறும் கவிதா உத்வேகம் அவரது கவிதைகளிலே காணப்படுகின்றன, அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் நவீன வாழ்ளி' நுணுக்கமான அணு பவ வெளிப்பாடுகள், -
"முடுக்கின் இருள்" விலைமகளொருத்தியின் அவல வாழ்வைக் கூறுகிறது. ப" வின் தொடக்கச் ேெலயே லி*' படு பண்டமாக அவள் மதிக்.ே கின்றமை சுட்டப்படுகி:
எத்தனை யுன்விலை யெத்தனை யெத் ரனே? தருதற் குள் த தை வளைத்திடு மதலைக்கு, யான் உன்னுடையன். என் கழுத்தைத் தழுவு நீ
*ங்கிலி ஆவாய்,

Page 19
தொடர்ந்து விலைமகள் பேசுகின்றவாறு விவரிக்கப் படுகிறது.
agrr6 un ritu Gurrub வாழ்வு கரைந்து மரணந் தன்னும் கருணையோ பணத்தொகையோ
கிடைக்காதே உன்னல் விருப்ப முன்பால் விருப்பம் விருப்பம்
நிமிடம் விஞடி ஆகும் என் கண்ணுளா . விரைந்த வரை எனக்குப் பிரீதியே. இருளில் மறைந்த உடலின் வெம்மை பாசகர் உதிர்க்கும் வாசகம் போல வுனக்குத் தருவேன்.
வெற்றிலைச் சுகுளென் னுடல் உன்னிடமே
முக்தி போகம் உண்டுன் குரூர உளத்தே"
கடைசி அடிகளில் விலைமகளது வாழ்வின் முடிவு வெற்றிலைச்
சக்கையாகவே எறியப்படத் தக்கதென்று காட்டப்படுகிறது.
"எருமை பற்றிய கவிதை மனிதவாழ்வுக்குரிய சிறந்த
உருவமாகும்.
எரிகிற மீசை யுடனே நான்
கடுகிமுடுகியே
குதித்துக் குதித்துப் போம்போது காலை
வாழ்வின் சுமையை
தோளிற் தாங்கியே
பாதை யோரத்தே புல்வெளி யூடே
சாய்வு நாற்காலியில் முதலாளிபோல
நீ நோக்கி நின்றன.
பல் நடுவிலும் இல்லே நீ
முகங் கழுவினதுமில்லை.
தொடர்ந்து கவிஞர் எருமைமாட்டை விளிப்பது உழைத்து உழைத்து ஓடாகிப் போகும் எண்ணற்ருேரை மனத்திற் கொண் டென்பது புலனுகிறது. P
சொல் என் எருமை மாடே எழும்பிக் கொள்ள உடல் சீவனிலா கிழட்டு உபாசக ஐயா! அத்தகையோருக்காக அறிவுரையொன்றையும் வழங்குகிருர்,
நேற்றென வேறென்றுமில்லே இல்லை இன்றென வேதும் - தாளை என்றும் இல்லை எதுவும் மூப்பிலாக் காலத்தே நீயே எந்தன் ஒரே கற்சியோவாய்
4.

"மடம் ஒரு சுயதரிசனமாகும் தன்னைப்பற்றிய உண்மை யுணர்வை அது காட்டுகிறது.
எனது ஆசான்களின் போதனைகளைப் போற்றி மணிமுத்து எண்ணங்கள் சிகரத் தேற்றிய மாளிகையாகும் என நினைத்தாலும் உள்ளே வேறுமையான மண்டையோட்டுள் எனக்கும் இருப்பது உந்தனுக்கெனவே அழுக்கு நிறைந்த மடம் தங்குதற் கிங்கே அரசர் தம்மின் குமர குமரியர் உள்ளே நுழையார். கிழிந்து சுக்கலான ஆடை போர்த்து வரும் எல்லாரும் யாசகர். சிலர் செவிடர் ஊமையர் சிலர். கட் புலன் குறைந்தோர் கால் ஊனமுற்ருேர் பிடி சோற்றுக்கும் கந்த லாடைக்கும் சிறுபொறி தெருப்புக்கும் குளிர்ந்த தரைக்கு நிதமும் சிண்டு பிய்த்திடும் பிச்சைக்காரர் இவ்வளவு மோசமான அழுக்கு மூட்டையே மனித மனம் என்று முடிக்கிருர் கவிஞர். w
"சிறுவன் ஏழைச் சிறுவன் ஒருவனது சோக வாழ்வாகும். சன நெரிசல் மிக்க மருதானையின் சேரி வாசி அவன்
"உடல் கறுப்பு. தூசுகள் தொகையில: இச் சிறு பையன் நகைக்கிருன் என நோக்கி ஏனடா எனப் பார்க்கின்றன? குசராஜனைப் போல எனக் கிருப்பதும் அவலட்சண முகார விந்தமே, x ஏழைச் சிறுவன் கவிஞரைப் பார்க்கும் பார்வைக்கு உள்ள பொருள் அடுத்துவரும் அடிகளில் தெரிகிறது.
பார்த்துக்கொள் பார்த்துக்கொள் காலங் கடக்கு முன்பே உன்னுடற் தோல் உரிந்து கொட்டும் கீழே உட லுரோமம் உதிர்ந்த நாய்க்குட்டி போல் இருந்து குரைத்து கால்கைகளைக் கடித்துப் பாண் துண்டைத் தேடிக் குப்பைத் தொட்டியைக் கிளறுவாய் கடவுள் பாற்கடலைக் கடைந்தாற்போலவே!
எனவே ஒரேஒரு பாண் (ரொட்டி) துண்டுக்காகத்தான் சிறுவன் இவ்வளவு நோக்கியதும். தேவரும் தேவாதி தேவரும் மூவா மருந்துக்காகப் பாற்கடலைக் கிளறச் சிறுவன் பாண்துண்டுக்கா கக் குப்பைத் தொட்டியைக் கிளறுகிறன். இருதிறத்தாரது முயற்சிகளினதும் தரமும் மட்டமும் ஒன்றே. புராணக் கருத் தொன்றுக்குக் கவிஞர் வழங்கியுள்ள புதிய கோணம் இங்கு நோக்கற்பாலதாகும்.
&:.
●移

Page 20
நீர்கொழும்பூர் முத்துலிங் கம்
இலந்தைப்
i
அவசரஊரடங்குசட்டம் அமுலில் இருக்கும் ஒருநாள். மாலை மூன்று மணி பிந்திவிட் டது. அவசரமாக நீர்கொழும் புக்குப் போயாக வேண்டும். வேலை முடிந்து வெகு வேகமாக பஸ்நிலையத்தை வந்தடைத் தேன். ஒருவேளை பஸ்கிடைக் காமல் போய்விட்டால் போக முடியாதே என்று மனப்பய மும் பரபரப்பும். பஸ்நிலையத் தில் நீர்கொழும்பு கியூ வரிசை யை வந்தடைந்து பார் த் த போது கூட்டம் ஓரளவு இருந் தது. நானும் வரிசையில் நின்று கொண்டேன். W
வரிசையில் நின்றுகொண் டே ஒருமுறை மேலோட்டமாக என்முன்னே நின்றிருந்த பிரயா ணிகளின் எண்ணிக்கையை அல சியபோது எ ன க் கும் ஸ்பீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக் கை ஏற்பட்டது.
வீட் கிடைக்காவிட்டால் நின்றுகொண்டு பிரயாணம் செய் யவேண்டும். நின்றுகொண்டு பிரயாணம் செய்வது எனக் கொன்றும் புதிதானவிசயமல்ல! ஏனென்ருல் தினமும் காலேயில்
பழத்துப் Կմ:
நீர்கொழும்பில் இருந்து கெr ழும்பிற்கு தொங்கிக்கொண்டு வருவதென்பது மு  ைற யா க மாறுதல் இன்றி நடைபெறும் விசயம்.
காலை நேரத்தில் நீர்கொ ழும்பு பஸ்நிலையத்தில் கொழும் புக் கியூவரிசையைக் காண்பது ஒரு மகத்தான காட்சியாகும்.
எப்போதாவது ஒருநாள்அற்புதமாய், அதியற்புதமாய் ஸிட்கிடைக்கும்போது அதில் இருக்கும் ஆனந்தம் வேறெதில் இருக்கிறது!
நேரம் செல்லச் செல்ல கியூ வளர்ந்துகொண்டிருந்தது. நான் முன்னுல் இருக்கும் பிரயாணி களைப் பார்த்துக்கொண்டும், வர வேண்டிய பஸ்ஸை எதிர்பார்த் துக்கொண்டும் ஒற்றைக்காலில் தவம் செய்துகொண்டிருந்தேன். வரப்போவது கடைசிபஸ் என்ற காரணத்தால் எல்லோரும் எப் படியாவது போகவேண்டும்.
இதைத்தவிர கியூவரிசை யில் வராமல் கண்டக்டர் டிக் கற் கொடுக்கக் கூடிய இடத்தில் ஒரு சிறு பிரயாணிகள் கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.
 

நான் இருந்த இடத்தில் இருந்து பார்க்கையில் தூரத்தில் பாதையில் அவசரமாக விரை யும் மனித உருவங்கள் வெகு சுவாரஸ்யமாக புலப்பட்டன.
எனக்கென்னவோ இந்த மனிதர்களைப் பார்ப்பதில் அலா தியானதொரு திருப்தி
மனிதர்களுடைய முகங்கள் தான் எத்தனை எத்தனை வித மாக அமைந்திருக்கின்றன! எல்லா முகங்களிலும் பொது அம்சமான மூக்கு, வாய், காது எல்லாம் இருக்கின்றன. இருந் தாலும் எல்லா முகங்களும் ஒன்றுபோல் இல்லையே!
இந்த விசயங்களை எண்ணும் போதே எனக்கு இந்தப் பிர பஞ்ச ரகசியமே, ஒரு புரிந்து கொள்ள முடியாத சிக்கல் போலத் தோன்றியது.
நான் ஏ ன் இப்படியெல் லாம் யோசிக்கிறேன்? எழுத் தாளர்கள் எல்லோரும் சில சமயங்களில் கிறுக்குத்தனமா கத்தான், யோசிப்பார்களாம். நான் எழுத்தாளன். அதில் எந்தவிதமான சந் தே கமும் கிடையாது. நானும் இப்போது கிறுக்குத்தனமாகவா யோசிக் இறேன்? ஒவ்வொரு மனித மூகங்களிலும், ஒவ்வொரு ஜீவத் துவம் மிக்க சிறுகதைகள் - நாவல்கள் புதைத்து கிடப்ப தாக எனக்குத் தோன்றும்.
இப்படி அர்த்தமில்லாமல், அல்லது அர்த்தத்துடன் யோ சித்துக் கொண்டிருந்தபோது முன்னுல் இதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் "ஸ். ஆ - ஊ" என்று வியர்வையை அதன் புழுக்க உ ண ர்  ைவ வெளிக்காட்டிக் கொண்டு என் பக்கமாகத் திரும்பினர்.
ஒருவரை,
என் எண்ணங்கள் தடைப் பட்டன. என் கண்கள் அவரை நோக்கின. என் கண்கள் அந்த மனிதரின் முகத்தை விட்டு அகல மறுத்தன. காரணம், அப்படிப்பட்ட அழகான, மிக கெளரவமான தோற்றமுடைய மிக அரிதாக இப் போதுதான் பார்க்கின்றேன். என்ன களையான முகம்!
சுருண்ட முடியுடைய கிராப்
ஒரு சினிமாப் படக் கதாநாய
கனுடையதைப் போன்ற எடுப் புடன் காட்சியளித்தது. சிவந்த வட்ட வடிவான முகம். நல்ல தீட்சண்யம் வாய்ந்த, பெண்மை யின் சாயல் மிளிரும் கண்கள்: தீர்மானமாக வெட்டப் பட்டு மை தடவாமலேயே கறுத்தி ருந்த மெல்லிய மீசை. அள வான உடலமைப்பு, மெல்லிய டெட்ரோன் சேர்ட், ரோன் நீண்ட பொயிண்டட் ஷ". .
மழுமழுவென்றிருந்த ஷேவ் செய்யப்பட்ட அந்த முகத்தில், அலுப்பும், களைப்பும் வியர்வை யும் தென்பட்டன. இருப்பினும், அந்த விசயங்களை மீறி மேக்கப் போ ட ப் பட் டி ரு ப் ப தைப் போன்ற ஒரு ஜொலிப்பு!
இப்படி அழகு வாய்ந்த அந்த மனிதர் என்னை நோக்கிப் புன்னகைத்தார். அந்தப் புன் கையில்தான் எத்தனை கவர்ச்சி அந்தப் புன்னகையை யாரா வது இளம் பெண்கள் பார்த் தால், எல்லாக் கட்டுப்பாடுக களையும், சம்பிரதாயங்களையும் மீறி அவருக்கு தம்மை அர்ப் பணித்து விடத் துடிப்பார்கள் என்றே தோன்றியது.
வியர்வையிலும் அந்த முகம்தான் என்ன செளந்தர்ய மாகத் தென்படுகிறது! நானும்
罗罗
டெட் கால்சட்டை,

Page 21
தான் அலைந்து திரித்துவிட்டு வீட்டில் போய் என் முகத்தைக் கண்ணுடியில் பார்க்கிறேன். அப்போது என் முகம் கறுத்து, கருவாடு மாதிரிக் காட்சியளிக் கும்.
ஆளுல் சிலருக்கு எவ்வளவு வெயிலில் அலைந்தாலும், திரிந்
தாலும், பளபளப்பு மாறுவ தில்லை. "ஸ்டெயின்லஸ் ஸ்டீல்" மாதிரி
அவருடைய கையில் ஒரு ஆங்கிலப் புத்தகம் இருந்தது. நான் அதை வாங்கி பக்கங் அளைப் புரட்டினேன். அது இன் றைய நிகழும் யுத்த வெறியின் மூலம் அணுதையாக-ஈவு இரக் கமில்லாமல் கொல்லப்படும் பல நாட்டு மக்களுக்காகப் பரிந்து எழுதப்பட்ட ஒரு கட்டு ரைத் தொகுதி. இடையிடையே
படுகொலை செய்யப்பட்ட மக்க
ளின் படங்கள். புத்தகத்தின் முன் பக்கத்தைப் புரட்டினேன். அது ஒரு ஜெர்மன் வெளியீடு. ஆமாம்! போரில் பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தானே போரின் கொடுமை விளங்கும். புத்தகத்தின் முகப்பில் அந்த மனிதர் "சுந்தரேசன்" என்று தம் பெயரை எழுதியிருந்தார். அல்லது, அந்தப் புத்தகத்தை
வாங்கியவர் தம் பெயரை
எழுதியிருக்கலாம்.
நான் சம்பிரதாய பூர்வ
மாக என் பெயரைக் கூறிக்
கொண்டு அவருடைய பெயரைக் கேட்டேன். அவர் "சுந்தரேசன்" என்ருர், போருத்தமான பெயர் தான்! அந்த மனிதகுடன் பேசு வதே ஒரு தனிப்பட்ட இன்ப மாக இருந்தது எனக்கு.
நானும் ஒரு ஆண், அவரும் ஒருஆண். எனக்கு இப்படியொரு
鹬段
கவர்ச்சி பெண்ணில் ஏற்பட லாம். வியப்பில்லை. ஆனல் இவரிடம் ஏர்ற்படுவது?
g(yGauðkir எழுத்தானன்
கிறுக்குத் தனமாகக் கூட ரசிப் பானுே!
"இந்த ப் போர்களினல்
சாதாரண மக்கள், எவ்வளவு கொடுமையாகப் பாதிக்கப்படு கிருர்கள் பாருங்கள்! - என்று புத்தகத்தைக் காட்டித் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித் தார்.
"ஆம் போர்களின் மூலம் அநியாயமாக மக்கள் இறப்பது இந்த உலகத்திற்கு ஒரு மகத் தான நஷ்டம் தான்!"
அ வரும் "ஆம்" என்று எனது பேச்சை ஆமோதித்து விட்டு, தனக்குள்ளேயே சிந்த னையில் ஆழ்ந்தார். துயரத்தின் சாயல் அவர் கண் களி ல் தெரிந்தது.
அந்த அழகிய மனிதரின் இதயங்கள்கூட எவ்வளவு கணி வுடன் விசயங்களை நோக்கு கிறது! '8
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பெரிய ராஜ பார்ட்காரனைப் போல் வந்து நின்ற பஸ்ஸில் இருந்து இறங்கிய கண்டக்டர், கியூவைப் பார்த்து ஒருமுறை கனத்துவிட்டு, "அதட மாறு சல்லி அரகண்ட" என்று தம் உரிமையைப் பிரகடனப் படுத் தினர். "கியூ" நகர்ந்தது. என் பின்னல் ஒரு பிள்ளையின் அழு குரல் - கியூவில் மூட்டை முடிச் சுகள் துர க் கி வைக்கப்படும் சப்த ஸ்வரங்கள்- "கச கச" வென்றஓசை நயம்-இத்யாதி. எதேச்சையாக பின்னல் திரும்பிப்பார்த்தேன். பின்ஞல்,

அதாவது- எனக்குப்
பக்கத் தில் ஒகு இளைஞள் கையில் சுமார் இரண்டு வயதுக் குழந்
தையுடன் நின்று கொண்டிருந் தான். அவனருகில் ஒரு இளம் பெண். கையில் எட்டு மாதம் மதிக்கத்தக்க கைக் குழந்தை.
இளைஞன் சற்று அப்பாவி Gunrev தோற்றமளித்தான். கசங்கி அழுக்கேறிப் போன உடைகள், கலைந்த ஒழுங்கற்ற தலை, வரிசை சீக்கிரம் மூன்னே முதா, என்ற கவலை அவன் கண்களில் தெரிந்தது.
அவர் தூக்கிக் கொண்டி ருந்த குழந்தை சீத்தை சட்டை யொன்று போட்டுக் கொண்டி ருந்தது.
அந்தச் சிறிய குழந்தையின் கீழ்ப் பாகங்களை மறைக்கும்படி ஆடை ஒன்றும் இல்லை. அந்தக் துரு, துருவென்று விழித்து சுற்று ப் புறங்களை நோக்கிக் கொண்ட ருந்தது. ஆயினும், அதன் வயிறு பெருத் துப்போய் கயரோகத் தடுப்பு நிதி நிவாரணக் கொடிகளைப் பாதையில் விற்பவர்கள் அல்ல வா, அதில் இருக்கும் படத்தில்
உள்ள குழந்தையைப் போல்
காட்சியளித்தது.
அந்த அவள் வெகு எளி மையாக இருந்தாள், கழுத் திலோ, கையிலோ எந்தவித மான நகையும் இல்லை காதில் மட்டும் நிறம் மாறிப்போன ஈரோல்டு கோல்டு” சும்மல் இருப் பது தெரியாமல் காட்சியளித் 占函·
இரண்டு குழந்தைகள் பெற் நவள் ஆயினும், பத்துக் குழந் தைகள் பெற்றவள் போல் தளர்ந்து போயிருந்தாள்.
அவள் கையில் இருந்த சிசு உறங்கிக்கொண்டிருந்தது. இருப் பினும், உறக்கத்தில் கூட பாலை கற்பனை பணணிச் சுவைப்பது போல் வாயை சப்பிக்கொண் டிருந்தது.
அவன் கையில் ஒரு பன்ழய பிரம்புக்கூடை. அதிலும் அழுக் குத் துணிகள். சில பார்சல்கள்.
"கியூ" முன்னேறியது அவன்
பின்னலிருந்து அவசரப்படுவ தில் என் முதுகில் அடிக்கடி முட்டிக்கொண்டான்.
ஒரு மாதிரியாக பஸ்ஸுக் குள் ஏறி ஒரு ஸிட்டில் அமர்ந் தேன். எனக்குப் பக்கத்தில் அந்த இளவயதுத் தாயும், பிள்ளையும் - பக்கத்தில் அவள் புரு ஷ னு ம். அந்த வயிறு பெருத்த விளம்பரக் குழந்தை யும்- அதற்குப் பக்கத்தில் அத்த செளந்தர்யம்மிக்க சுந்தரேசன்.
எல்லாப் பிரயாணிகளும் ஏறிக்கொண்டார்கள். நல்ல நெருக்கம். பின்னுல் சில மினி கவுன் தொடையழகுக் கன்னி யர்கள்.
பஸ் புறப்பட்டது. ஒவ் வெர்ரு குலுக்கிலும், unri யாரோ சபிக்கும் குரல்களும், மினி மங்கையரின் நகைப்பொ லியும் பஸ்ஸின் சப்தத்தையும் மீறி வெளிப்பட்டன.
இதுவரையில் என் பக்கத் தில் இருந்த அப்டெண்ணின் மடியில் இருந்து உறங்கிக்கொண் டிருந்த அக்குழந்தை விழித்துக் கொண்டது.
விழித்ததும், எந்த வயத்
துக்கும் எட்டாத ஸ்தாயியில் ராக ஆலாபனம் செய்ய ஆரம்
39

Page 22
பித்தது. இதற்கிடையில் அந்த வயிறு பெருத்த குழந்தையும் தகப்பனைச் சுரண்டி தன் பசியை அழுகை மூலம் தெரிவித்தது.
முன்னுல் ஒரு நாகரிகமான நைலக்ஸ் சாரி த  ைழ யத் தழைய தனது அழகுப் பிரதேசங் கள் வெளியே தெரிய இருந்த மங்கை, அப் பெண்ணையும் அவ னையும் ஒரு வெறுப்புடன் நோக் கினுள்.
தாம்பத்தியம் என்ற விச யத்தின் இறுதி சுவாரஸ்யமிக்க காட்சிகள் இவைகள்தான்! இப் படிப்பட்ட துயரங்களை மறைக் கும் கனவு எண் ண ம் தான் "திருமணம்” என்ற சமுதாய சம்பிரதாயமோ என்று அவள் மனம் தாம்பத்தியத்தையே வெறுத்திருக்க வேண்டும்.
நாகரிகம் தன் முகத்தை சுளித்து வேறுபக்கம் திரும் பியது.
அவன் தன் கையில் இருந்த குழந்தையை அதட்டிப் பார்த் தான். அது கேட்கவில்லை, அடம்பிடித்தது. அவன் கூடைப் பையைத் திறந்து ஒரு போத் தலில் வெறும் தேநீரை ஊற்றி ரப்பர் போட்டு அதன் வாயில் வைத்தான். அந்த போத்தல் சரியாகக் கழுவப்படாததால் அதன் மீது அழுக்கு விதம் வித மான கோ லத் தி ல் படர்ந் திருந்தது.
அது அதைக் குடிக்க ஆரம் பித்தது. அது குடிக்கும் சந்தோ ஷத்தில் தன் குச்சிக் கால்களை உதைக்கத் தொடங்கியது.
அந்த உதைகள் என் அழகு மன்னன் "சுந்தரேசன் அவர் களின் மீதும் பட்டது.
40
அவர் என்னமோ அவனி டம் கூறினர். அவர் கூறியதில் ஏதோ கடுமை இருந்தது என் கண்களுக்குப் புலப்பட்டது. அது ஒருவேளை வெறும் பிரமை யாகவும் இருக்கலாம்.
ஆஞல் என் கண்கள் கண் டது பிரமை இல்லை என்து நிச் சயிக்கும் விதமாக அந்த கந்த
ரேசன் "டிசன்ட், மெனர்ஸ் இல்லாத ஜென்மங்கள்" என்று முணு முணுத்தார். அது என்
காதில் தெளிவாக விழுந்தது.
அவன் குழந்தையின் கால் கள் அவர்மீது படாமல் குழந் தையை மடியில் இழுத்து அணைத் துக்கொண்டான்.
குழந்தைக்கு மெனர்ஸ் - அல்லது டீசன்ட் தெரியுமா என்ன?
மறுபடியும் காலை நீட்டி விளையாட ஆரம்பித்தது.
அந்த அழகிய முகத்தில் அருவருப்பும் அசூசையும் நிரம்பி
வழிந்தன.
சட்டென்று எழுந்து நின்ற சுந்தரேசன் ஏதோ வாய்க்குள் முனகியபடி தொங்கிக்கொண்டு பிரயாணம் செய்ய ஆரம்பித் தார்.
அவன் பரிதாபமாக - மன் னிப்புக் கேட்கும் ப்ாவனையில்அவரைப் பார்த்தான்;
எனக்கு அந்தக் கணமே அந்த ம னி த ரை ப் பற்றிய
உயர்ந்த எண்ணங்கள் கலைய ஆரம்பித்தன.
இதற்கிடையில் அவளின்
குழந்தை தன் அழுகையை பிர பலப் படுத்தி, எவ்வளவு தூரம்

ஒலியை அதிகப்படுத்த முடி யுமோ அவ்வளவு தூரம் அதிகப் படுத்தியது.
அவளுக்கு ஒன்றும் செய்ய வழியில்லை. சற்றுக்கூச்சத்துடன் குழந்தையை அணேத்து சட்டை யில் இருந்த ஊசியைக் கழற்றிவற்றிப்போன - வெளி றி ய வெண்மையின் ஊடாக நீல
நரம்புகள் ஒடிய பகுதியை வெளி
யெடுத்தாள்.
குழந்தை கண்களை மூடிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்
தது. அதில் பால் வருமா என்
பது சந்தேகம். ஆனல் குழந்தை
இன்னும் உறிஞ்சிக் கொண்டி ருந்தது.
இந்தக் கட்டத்தில் நின்ற படி பிரயாணம் செய்துகொண் டிருந்த சுந்தரேசன், பால்குடித் துக்கொண்டிருக்கும் அ ந் த க் குழந்தை தன் கையை அங்கும் இங்கும் அசைக்கும்போது முந் தானே விலக, gyonu GIt 6ð? ---- ULI கவர்ச்சியாக இருக்கவேண்டியஆனல், கவர்ச்சியற்ற அங்கங் களே வெறித்து நோக்கினர்.
வற்றிப் போனலும்-வதங் கிப் போனலும்- அவள் இள வயசுக்காரி. அவர், நான் இது வரை கருணை மிக்கவராக - ரசனை மிக்கவராக- கெளரவம் மிக்கவராக எண்ணிவந்த அந்த மனிதர் ரசிக்கிருர்!
கண்முன்னே இருக்கும் எளிய ஆத்மாக்களை மதிக்க f பிரகிருதி G# ಆ: இறக்கும் மக்களுக்க்ாக வருந்து கின்ருராம். அவர் உண்மையி லேயே வருந்துகின்றரா?- அது *- வனுக்குத்தான் வெ6ரிச் ‹ዳታ ፪Æ9
டஸ் ஒரு மாதிரியாக நீர் கொழும்பை வந்தடைந்தது. பிரயாணிகள் முண்டியடித்துக் கொண்டு இறங்கினர்.
ஆ4வனும், அவளும் இறங்கி அ வ ச ர மா க விரைந்தனர். அவன் கூடையையும் பிள்ளையை யும் தூக்கிக்கொண்டு- அவள் தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளை tைத் ாக்கிக்கொண்டு
சுந்தரேசன் பஸ்ஸை விட் டி பூங்கி தன் உடிைகளை ஒரு முறை சரிசெய்து கொண்டார். ஸ் - ஆ. என்று வியர்வையின் புழுக்கத்தை தனக்கு அல்லது மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொண்டு - என்னை நோக்கி மந்த காசமான புன்முறுவலோடு கையை அசைத்துவிட்டு, கம்பீ ரமாக நடக்கிருர்,
நான் - இந்த மனிதர்களை அவர்களுடைய இயல்புகளைப் பற்றி நினைத்துக்கொண்டு நடை யைக் கட்டுகின்றேன். Yr
சரியான பதில் என்பது பிரேமைமிக்க முத்தம் போன்றது.
- கொத்தே
புகழ்ச்சி என்பது பன்னீர் அதை முகரத்தான் வேண்டும்,
பருகக் கூடாது.
uHT(;fir -۔
金马

Page 23
ஜனவரி வெளியீடு 女
ஜேகாந்த் - லீலா
ஆனந்தன் - சாந்தி பேரம்பலம் - திருநாவுக்கரசு
இன்னும் பலர் நடித்த
தங்கையின் நல்வாழ்வுக்காகத் தியாகமே உருவான சோமு.
ஈழம் பெருமைப்படும் பாங்கான தமிழ்ச் சித்திரம்
வி, எஸ். ரி, பிலிம்ஷாரின் குத் து விளக்கு
தயாரிப்பு: வி. எஸ். துரைராஜா டைரக்ஷன்: மகேந்திரன்
 

சி. சுத ந்திரராஜா
த
J
இலங்கையின் முதலாவது சினிமாஸ்கோப் திரைப்படம் என்கின்ற கெளரவாம்சத்தைக் காட்டிலும் லத்தீன் அமெரிக்க இசை தழுவியதாகவோ அல்லா மலோ பாடல்களோ நடனங்
களோ இல்லாத மற்ருெரு சிங்
களப்படம் ‘வ லிக தர" என் கின்ற கெளரவாம்சமே "வலிக
தரவை" விமர்சிக்க வைக்கின் றன. லெஸ்டரின் "கொளுஹ தவத" ஏற்படுத்திய தாக்கத்தை நிஹால்சிங்காவின் "வலிகதர"
ஏற்படுத்துமா? என்பது நியாய மான சந்தேகமே. கதை அப்ப டியொன்றும் பிரமாதமானதும் அல்ல. பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறும் விக்கிரம (காமினி பொன்சேகா) உதவிப் போலீஸ் அதிகாரியா கப் பொறுப்பேற்று சிரத்தை யுள்ள வடபகுதிக்கு வருகின் முன். கள்ளக் கடத்தல்களை தீரத்துடன் கண்டுபிடிக்கின்றன். அவன் மனைவி கீதா (சுவினிதா அபயசேகரT) பெண்பாவை யாய், நலுங்காமல் குலுங்காமல் லக்ஸ் போஸ்டரில் உள்ளது போலவே அதிகம் அலட்டாமல் ஆங்கங்கே வருகிருர் போகிருரர். பார்ப்பவரின் நெஞ்சங்களிலும் நில்க்காமற் போகிழுர், மிகை
யில்லாத நடிப்பு என்ற லேபல் கிரீடத்தை அவருக்கு வேண்டு மானல் சூ ட் டி விடுங்கள். கொரிங் முதலாளி, சுதுபண்டா " என்ற இரு பெயருள்ளவராய் (ஜோ அபேயவிக்கிரம) கடற் கரையினில் காற்று வாங்கிய கீதாவின் காரினது சக்கரக் காற்றினைத் திறந்துவிடுவதோடு இடை நுழைகின்ருர் வில்லணு னவர். அவரது தங்கை முத்து மெனிக்காவை விக்கிரம காத லித்துக் கைவிட்டு விட்டானம்; LI fir ou th. புளித்துப்போன, அரைத்து ஒழிந்த மாவை மீண் டும் மீண்டும் அரைத்து கழுத் தைத் தி ரு கும் முக்கோணக் காதல் விவகாரம் "வலிகதர" விலுமா தலை தூ க் கணு ம்? என்ருே இறந்துபோன தனது தங்கைக்காகவே வாழ் ந் து விக்கிரமவின் துரோகத்திற்காக அவனது தலைகொய்ய முனைபவ னின் நிலைப்பாட்டை ஜோ செப்பனிட்டுச் சித்திரிப்பினும் நிகழ்வுகளின் தடம் எல்லாமே சோடை போனவைதான். கொ டுமையான நிந்தசும் அமைப்பு முறையினை மேலெழுந்த வாரி யாக தொட்டுக் காட்டியிருப் பது சாதத்தோடு தொட்டுக் கொள்ள நெய் விட்டது போவி
፭ ፵

Page 24
ருக்கின்றது. கீதாவை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற கொரிங் முதலாளியைத் தொ டர்ந்து தேடிக் கண்டு சுட்டுத் தனக்கான கடமையை நிறை வேற்றும் விக்கிரம கடைசியில் கீதாவுக்குக் கடிதமெழுதிவைத்து விட்டுத் தன்னைத் தானே சுடு வதுடன் கதையும் படமும் முடி கின்றது. கும்கும் சண்டை இல் லாமல் இப்படி ஒரு இக்கட்டான படத்தை எடுத்து முடித்த தயா flt" in arfløör துணி ச் ச லை ப் பாராட்டாமல் இருக்க முடி (Iu nrğI .
ஒரு நிகழ்வோடு அடுத்து வரும் நிகழ்வினையும் கலந்து இடையிடை பிணைத்திருக்கும் படத்தொகுப்பு முறை (எடிட் டிங்) எந்தப் படங்களிலாயினுஞ் சரி இதுவரை பார்த்திராதது. போர் அடிக்கும் அணுவசியமான கடற்கரைக் காட்சிகள் சிங்களப் படங்களில் மிகையுறக் காணக் கூடியதொன்ருகும். இதில் நாய கனின் இருப்பிடமே கடற்கரை. நிஹால்சிங்கா செய்திட நினைக் கும் புதுமைகளுக் கெல்லாம் இப்படியான புல்லுருவிகள் படம் முடியும் வரைக்கும் இருக் காமல் போகவில்லை, ஆயினும் தேவையற்ற கதாபாத்திரங் கள் - நகைச்சுவைக்குப் பிரத் தியேகமாக, தாயார் தகப்ப ஞர் - என்று குறிப்பிட மருந் துக்குக் கூட யாருமிலர். வழ மையாகக் கொடிகட்டிப் பறக் கும் படாடோடங்களையும் ஆ ம் பரங்களையும் காண முடியவில்லை எனக் கூற முடியுமான போதும் செட்டிங்கில் லக்சலவிற்கு வேத னமில்லாது விளம்பரம் செய்யும் "டிரெடிஸ்னல் அயிட்டங்கள் மீது புதுமையாளருக்கு மோக மும் ஏனுே’ ‘ப ழ  ைம யி ல் சாலூன்றிப் புதுமை செய்யும்’ பம்மாத்துப் புருடாவா? ஒரு ஜீப்பைத் தொடர்ந்து மற்ருெரு ஜீப் கலைத்துப் பிடிப்பது சிங்
d4
கள - தமிழ் -ண இந்திப் படங் களிலே எல்லாம் பார்த்துச் சலித்துப் போனவை. . இதிலே யும் கழுந்தறுக்கின்றது. இதுவே தான் நிஹால் சிங்காவின் படத்
தினுடைய கிளைமாக்ஸ். இதுவே
"வலிகதர" வை சாதாரணமான பொழுதுபோக்குப் படங்களு டன் சேர்த்து எண்ணிடவும் செய்கின்றது. தமிழர் - சிங்க ளர் ஒற்றுமையை இலக்காக்கி கதை நிகழிடத்தை தமிழ்ப் பிரதேசமாகவே அமைத்திருப் பதை விட கதையில் ஒற்று மையை வலியுறுத்தும் விளக்கங் கள் எதுவுமே வரவில்லை. மாருக பல இடங்களில் பலஹினமான
வசனங்களே பருணமித்திருக் கின்றது.
செனரத் யா ப் பா வின்
"மினிசா சக கபுடா" என்னும் டொ க்குமன்ரரியில் ஒரு கால் மணி நேரத்தில் சித்திரித்த நுணுக்கமான யதார்த்த வாழ்க் கை விளக்கத்தைப் போலான தை பல் கால்மணி நேரத்திலா யிம்கூட "வலிகதர அணுகவே இதிலிருந்து வெறும் சினிமாஸ் கோப்பையே வணிகப் பொரு ளாக்கும்நோக்கே இயக்குநருக்கு மிஞ்சியிருப்பதாகப் படுகிறது. "சிங்கள சினிமாவே ரஜ தக்கம’ என்ற சுலோகத்தைக் கொண்டு; முப்பெரும் ஜனரஞ்சக நட்சத்
திரங்களையும் நடிக்க வைத்து மேஞட்டுப் பாணியில் படமெ டுப்பதில் என்ன வந்துவிடப் போகிறது? எனினும் ஈயடிச்
சான் கொப்பிகளையும் சூரயாசூரசெளரயா கெளத சூரயாசூரயங்கெத் சூரயா - ஹதர
தெனுமா சூரயோ - அதத் குரயா எதத் சூரயா என்று அடுக்கடுக்காகச் சூரத்தனமே
யற்ற வீரர் (போலி)களைக் கண்டு கொண்டு நொந்து பட்டிருக்கும் நமது ஈழத்துப் படவுலகிலே * வலிகதர " ஒரு வலிமையான சாதனையே

‘லுக்'
நிறுத்தப்பட்டது ஏன்?
சுப்பிரமணியம்
"லுக்" என்பது அமெரிக் காவிலிருந்து ஏ ரா ள மா ன புகைப்படங்களுடன் வெளிவந்து கொண்டிருந்த ஒரு சன ரஞ்சக மான சஞ்சிகை. இச் சஞ்சிகை 1971 ஒக்டோபர் 19-ந் திகதிய இதழோடு நிறுத்தப் பட்டுவிட் டது. இதற்குத் தபால் கட்ட னங்கள் உயர்த்தப்பட்டமை தான் காரணமென்று பொது வாகப் பேசப்படுகின்ற போதி லும் உண்மையான காரணம் அதுவல்லவென்றே கருதவேண் டியிருக்கிறது.
இதற்கு முன்னரும் அமெ ரிகாவில் பிரபலம் பெற்றிருந்த சஞ்சிகைகள் திடீரென நிறுத் தப் பட்டிருக்கின்றன. 1950-க் களில் மக்கள் மத்தியில் பிரபல் யம் பெற்றிருந்த "கொலியர்ஸ்" என்ற சஞ்சிகை திடீரென்று நிறுத்தப்பட்டது. "சற்றர்டே ஈவினிங் போஸ்ட் என்ற சஞ் சிகை 1969-இல் நிறுத்தப்பட் டது. இந்த இரண்டு சஞ்சிகை களும் நிறுத்தப்பட்ட காலத் தில் தபால் கட்டணங்களிலோ அல்லது காகிதங்களின் விலை யிலோ ஏற்றம் ஏற்படவில்லை. அப்படியிருந்தும் இந்தச் சஞ்சி
கைகள் என்ன காரணத்திற் T dS நிறுத்தப் பட்டனவோ அதே காரணத்திற்காகவே "லுக்" சஞ்சிகையும் நிறுத்தப்
பட்டிருக்க வேண்டும். மேலும் தபால் கட்டணங்கள் அண்மை யில் தான் உயர்த்தப் பட்டன. ஆனல் 1970-ம் ஆண்டிலேயே "லுக்" சஞ்சிகைக்கு 50 லட்சம் டொலர்கள் நட்டம் ஏற்பட்டி
ருக்கின்றது. எனவே பொரு ளாதார நிலை காரணமாகவே ச ஞ் சி  ைக நிறுத்தப்பட்டது
என்ற முடிவிற்கே வரவேண்டி இருக்கிறது. இவ்வளவு தொ கையாக நட்டம் ஏற்படுவதற் கான காரணம் என்ன?
தனியார் துறையின் ஏக போக வளர்ச்சி உறுதியளிக்கப் பட்டிருக்கும் முதலாளித்துவ நாடுகளில் வியாபார ஸ்தாப னங்கள் போட்டி மனப்பான்மை யோடு வளர முயற்சிப்பது இயற் கையே. பெரிய வர்த்தகத்துறை தாபனங்கள் தங்கள். உற்பத்திப் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக முழு க் க முழுக்க விளம்பரங்களையே நம் பியிருக்கின்றன. இதனல் ஏரா ளமான விளம்பரங்களைப் பெறு வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்ற படியால் பத்திரிகை களும் சஞ்சிகைகளும் போட்டி மனப்பான்மையோடு கவர்ச்சி கரமாக வெளியிடப்படுகின்றன. பழக்க தோஷம் காரணமாக வாசகர்களும் கவர்ச்சிகரமான பத்திரிகைகளேயும் சஞ்சிகைக
磊5

Page 25
ளையுமே விரும்பி வாங்குகின்ற னர். இந்தக் கண்ணுேட்டத்தில் தான் "லுக் கின் கதையையும் பrர்க்க வேண்டும்.
இச் சஞ்சிகை 65 லட்சம் வாசகர்களை கொண்டது. இதன் வாசகர்தொகை கணிசமான அளவு அதிகமானபடியால் வர்த்தக விளம்பரங்கள் தாரா ளமாகக் கிடைத்து வந்தன. விளம்பரங்கள் திடீரெனக் குறை யத் தொடங்கின. 65 லட்சம் மக்கள் படிக்கும் பத்திரிகையில் விளம்பரம் செய்வதிலும்பார்க்க 5 கோடி மக்கள் பார்க்கும் டெலிவிசனில் விளம்பரம் செய் வதை வியாபாரிகள் அதிகமாக விரும்பத்தொடங்கினர். மேலும் ஒவ்வொரு ‘பிரி வி னருக்கு மென்றே தனித்தனிப் பத்திரி கைகள் அமெரிக்காவில் ஏராள மாக உண்டு. உதாரணமாகத் தி கு ம ன ப் பருவத்திலுள்ள இளம் பெண்களுக்காக வெளி வரும் "செவன்டீன்" என்ற சஞ் சிகையையும் புணரியல் சம்பந் தப்பட்ட விடயங்களைத் தாங்கி வரும்
Yee
ஒவ்வொரு பிரிவினருக்குமான பொருட்களை அவ்வப் பிரிவின ருக்காக வெளிவரும் சஞ்சிகை களிலும் பத்திரிகைகளிலும் வெளியிடுவதையே வர்த்தக ஸ்தாபனங்கள் இப்போது அதி விரும்புகின்றன. அண் மையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி அமெரிக்கா வில் உள்ள இனம் பெண்கள் வருடமொன்றிற்கு 800 கோடி டொலர்களை உடுப்புகளுக்கும் வாசனைப் டொருட்களுக்கும்
செலவு செய்கின்றனர். இந்த விபரம் வெளியிடப் பட்ட வுடனேயே " " செவன்டீன் ??
என்ற சஞ்சிகையின் விளம்பர வருமானம் 14 விகிதம் அதிகரித் திருக்கின்றது;
மேற்கூறிய காரணங்களால் * லுக் "கிற்குக் கிடைத்துவந்த விளம்பர வருமானம் படிப்படி யாகக் குறைந்து அதனல் சஞ் சிகையையே நிறுத்த வேண்டி ஏற்பட்டுவிட்டது. இது வர்த் தக விளம்பரங்களால் விழுங்கப் அமெரிக்கப்
"பிளே போய்" என்ற பட்ட மூன்ருவது சஞ்சிகையையும் குறிப்பிடலாம். பத்திரிகை. X
இராமாயண அனைத்துலக மாநாடு
இந்தோனேஷியக் கலாசாரத்தின் பின்னணியில்
இந்தியப் பண்பாடு துலங்குவதை இன்னமும் காணக்கூடிய தாகவிருக்கிறது. அதனுல்தான் இர்ாமாயணம், மகாபார தம் போன்ற இதிகாசங்கள் அங்கு மிகவும் பிரபலமடைந்
துள்ளன,
இராமாயணத்தைப் பற்றிய ஒரு அனைத்துலக மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவிலேயே நடாத்தப்பட்டது.
அங்குள்ள ஏராளமான ஆலையங்களின் உட்சுவர்களில் இராமாயண நிகழ்ச்சிகள் ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள் ளன. பல ஆலையங்களில் அவை சிற்பங்களாகவும் செதுக்
கப்பட்டுள்ளன.
எம். கே. ராஜா.
A6

வி
தை
u
6
FILI ஜெயரா 巴FT
பிறப்பியல் நோக்கு
விேதைக்குக் கருவிய கப் பயன்பட்டதுஓசை அல்லது இசை ஆளுல் ஓசை தனியாட்சி செலுத் துமளவிற்குச் சில கவிஞர்கள் அடிமைப்பட்டு விட்டார்கள். ஒசைக்குள் சிக்குப்பட்டு கூற வந்த கருத்தைக் கைவிடல் அல்லது ஓசையைத் தேடிப் படாத பாடு பட்டு அ லை ந் து கவிதையுடன் தொடர்பற்ற பிறிதொரு கருத்தைக் கொண் டுவந்து ஒட்டுதல், பின்னர் அவ்வாறு ஒட்டப்பட்ட விடயத் திற்கு வலிந்து அமைதி காணுதல் முதலியன காணப்படுகின்றன.
"உத்தமர் , ஒருவரைப்பற் றிப் பாடிய பாடல் ஒன்றின் தொடக்கத்தில்
"சீர்புகழ்"
"பார்புகழ்"
"ஏர் புகழ் என்று அமைத் துக்கொண்டு வந்து நான்காம் அடியை அமைக்க 'நாயோட் டம் ஓடி, "கார்புகழ் ஓங்க” எனக் கவிஞர் பின்னுகின்ருர், கார் என்ருல் மழை. மழை புகழும் பெரியவரா? இவ்லே ட்
காரொத்த புகழ் - அதாவது
மழையொத்த புகழ் என விரித் துரைக்க வேண்டுமென்பது
கஷ்டப்பட வேண்டும்?
இவ்வாறு சந்தத்தைப் பந் தம் பிடித்தல் எதனல் நிகழ் கின்றது? எதுகையும் மோன்ை யும் தான கவிதையின் உயிர் நாடி? இங்குதான் கவிதைக்கும் கூறவந்த பொருளுக்குமுள்ள தொடர்பு நோக்கப்படுகின்றது. சிலர் கவிதையின் உயிர் இசை
யென்றும், கவிதை இசைச் சிந்தனை யென்றும் கூறுவர். ஆனல் இசைமட்டும் கவிதை யாகாது.
"கிழவிமேற் காதல் கொள்ளடா
தமிழா! கிண்ட லென்று எண்ணுதே பண்டை எம்மூதாட்டி ஒளவை கிழவிமேற் காதல் கொள்ளடா!' இவ்வாறு இசைச் சிந்தஜன யிலமைந்த பல "கவிதைகள்’ இசைத் தட்டுக்களாக வந்து வானெலியில் நாளாந்தம் ஒலி பரப்பேடுகின்றி. இதைக்
40 7

Page 26
கஷ்டப் பட்டுயாத்த இசையுரு
வமென லாம். (ஆணுல் கிழவி மேற் காதல் கொள்ள டா என்று தொடங்கும் "சஸ் பென்சை' இரசிப்பவர்களும் இருக்கலாம்!)
இதிலிருந்து நமக்கு ஒருண்
மை புலப்படுகிள்றது. இசைச்
சிந்தனைமட்டும் கவிதையாகாது. இசைக்கு மேம்பட்ட ஒரு விடயத்தைக் கவிதை நோக்கு கின்றது- அதுதான் உணர்ச்சி. உணர்ச்சி வெளிப்படுகையில் அதற்கென உரிய ஓசையுருவத் தையும் பெற்றுக்கொள்ளுகின் றது.
உணர்ச்சிகள் தேவைகளின டிப்படையில் எழுகின்றன. மனி தனுக்குரிய இயல்பூக்கங்களும், சமூகமும், தேவைகளை உரு பாக் குகின்றன. தேவைகள் நிறை வேற்றப் படாவிடிலோ, குறுக் கீடுகள் ஏற்பட்டாலோ, உணர்ச் சிகள் பொங்குகின்றன; தேவை களுக்கு முடிவில்லை. உணர்ச்சி களுக்கும் முடிவில்லை. உதார ரணமாக உணவு மனிதனுக் குத் தேவிை. உணவு கிடைக் காமற் பசியெழ, நடத்தைகள் மாறுகின்றன. உணர்ச்சிகள் வலுவடைகின்றன. மொழி வெளிப்பாட்டுத் திறனுடைய வன் அவ்வுணர்ச்சியைக் கவிதை யாக்குகின்ருன்- கலையுருவமாக் குகின் முன்.
கஷ்டம் துன்பவுணர்ச்சியை உருவாக்குகின்றது. துன்பத்தி லிருந்து தப்புதல் ஒரு தேவை, இன்பம் குதூகலிப்பை ஏற்படுத் துகிறது. இன்பம் ஒரு தேவை. மனிதன் ஒரு சமூகப் பிராணி
யாகவிருப்பதனுல் ஒருவனது உணர்ச்சியை அறிந்துகொள்ள வோ, புரிந்துகொள்ளவோ, உணர்ந்துகொள்ளவோ முடியும், எனவே ஒருவனது அனுபவம் இன்னெருவணு,லும் அறியப்பட லாம். "என்னுடைய உணர்ச்சி கள் என்னுடையவை, உங்களு டைய உணர்ச்சிகள் உங்களு டையவை’ என்பது மனிதனைச் சமூகத்திலிருந்து பிரித்தெடுத்த வாதமாகும். கவிஞனது தன்ன னுபவம் மட்டுமன்றி, பிறரது அனுபவவுணர்வும் கவிதையின் உயிராகின்றது.
தேவைகளை நிறைவேற்றுவ தில் பொருளாதார, சமூகவ மைப்பு பிரதான இடம் வகிப் பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே கவிதை இவற்றை அடி யொற்றிப் பிறக்கும் பொழுது உண்மையான உணர்ச்சியின் வெளிப்பா டாய் விளங்க, நிறை வுள்ள தோற்றமாகப் பிறக் கின்றது.
தேவைகளை நிரைப்படுத்து கையில் பிரதானமான தேவை கள் தலைதூக்க, பிரதானமற் றவை மறைந்து செல்கின்றன. உதாரணமாக உணவையும், உல்லாசப் படகுப் பிரயாணத் தையும் ஒப்பிடும் பொழுது உணவுத்தேவை தலைதூக்குகின் றது. நாளாந்தம் உழைப்பைப் பறிகொடுத்துச் சுரண்டப்பட்டு வாழ்பவனுக்கு, நீல முகில் வானமும், சோலே மலர் பூவும் தணிக்கப்படாத பி ர தா ன தேவையுணர்ச்சியின் உருவமா கவே தெரியும். ★
சிலருக்கு வறுமை இனிமையானது; ஏனெனில் அது
மிகவும் கதந்திரமானது.
48
- பேர்ள் பக்

ஒருழேர்
drailpl//7677607
A/ Ay2 A sis) 63A/
முற்போக்குச் சக்திகளிடமி ருந்து- "சரஸ்வதி யுக" வட்டா ரத்தினரிடமிருந்து - தனிமைப் படத் தனிமைப்பட, ஒரு விரக்தி நிலைக்கு தன்னையறியாமலே நண் பர் ஜெயகாந்தன் இழுத்துச் செல்லப்படுகின்ருர் . யாராவது பழைய உறவை எண்ணி கேட்க முற்பட்டால், *நீ யாரய்யா கொம்பன் எனக்குச் சொல்ல?" எனத் திருப்பிக் கேட்பதுடன் "நான் சொல்வதுதான் சொல் வேன்; எழுதுவதைத்தான் எழு துவேன்.என் எழுத்தை ரஸிக்கத் தெரியாது போனல் போய்யா! எனக்கொன்றும் நஷ்டமில்லை!" என்ற ரீதியில் பேசத் தொடங்கி விடுகிருர் .
பத்தினிக்’ கதைகள்
படிப்பீரே - உம் மச்சினி கிடைத்தால்
விடுவீரோ?
இந்த ரீதியாக "ஞானரதம் என்கின்ற அவரது சஞ்சிகையி லேயே எழுதத் தலைப்படுகிருர் .
இர ண் டு வருடங்களுக்கு முன்னர் பிரபல எழுத்தாளர் தி. ஜ. ர. மணி விழா சென்னை யில் நடைபெற்றது. அ தி ல்
ఫ్రెడ్కు
நண்பர் ஜெயகாந்தன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி ஞர்: "என் கதைத் தொகுதிகளை
வாசிப்பவர்கள் ஒரு குறிப்பைக்
கண்டிருக்கலாம். எனது கதைக ளுக்கு நானே முன்னுரை எழுது கிறேன். ஏனெனில் என் கதை களுக்கு முன்னுரை எழுத இங்கே யாருக்கும் யோக்கியதை இல்லை. ஆனல் ‘ஒரு பிடி சோறு" கதைத் தொகுதிக்கு மட்டுமே நான் மதிக்கிற - நான் போற்றுகிறநான் கற்றுக்கொள்ளும் உயர் குணங்களைத் தம்மிடம் கொண் டிருக்கிற திரு. தி. ஜ. ர: அவர் கள் முன்னுரை தந்துள்ளார். இங்கே இருக்கிறவர்களில் அவ ரைத்தான் நான் அறிஞர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என, தனக்கே உரித்தான சொல் லமைப்புகளுடன் பெருமிதமான குரலில் பேசினர் அவர்.
இன்றைய கட்டத்தில் அந்த முகவுரையில் திரு. தி. ஜ. ர. குறிப்பிட்டுள்ள சில கருத்துக் களை இன்று நான் எண்ணிப் பார்க்கிறேன். ‘ஜெயகாந்தனின் கற்பனைத் துலாக்கோல் எங்கே யாவது சாயுமாளுல் ‘பேவ் மெண்ட் வெயில் பக்கமேசாயு
மேயொழியப் பக்கத்திலுள்ள்
49

Page 27
மச்சு நிழலிலே சாயாது. கார ணம் அவர் சித்திரிக்க எடுத்துக் கொண்டது மனிதவர்க்கத்தையே கோடிக் கணக்கான மக்களின் வாழ்வை விட்டு, பொறுக்கியெ டுத்த சில மனிதர்களின் வாழ் வைச் சித்திரித்தால் அது மனித வர்க்கத்தின் சித்திரமாகுமா? அந் தச் சித்திரத்திலிருந்து மனித
குலம் எந்த நிலைக்கு வந்து நிற்
கின்றது என்று நாம் அறிய முடியுமா?’
இது 1955-ல் வெளிவந்த கதைகள் தொடங்கி ஏறத்தாள 1965-ல் வந்த கதைகள் வரை வேண்டுமால்ை அன்பர் தி. ஜ. ர, வின் கணிப்பீடு சரியாக இருக் கலாம். ஆனல் அறிஞர் தி. ஜ. ரவின் அன்றையடிமுழு மதிப்பீடு இன்று என்ன ஆயிற்று? `
65-க்கு மேலே சமூகம் என் பது நாலு பேரில் தொடங்கி, அந்தரங்கம் புனிதமானது ஆகி பாரிஸுக்குப்போய், நடிகை நாட கம் பார்க்கிருளில் வளர்ந்து, சில நேரங்களில் சில மனிதர்களைக் கண்டு *குமுதம்" ஜெயகாந்தன் ஒரு_பக்கத்தில் வந்து முடிந்தி ருக்கிறது.
சென்னையில் ஒருநாள் மத்தி யானம். நானும் நண்பர் ஜெய காந்தனும் சைணு பஜார் பக்கம் ஏதோ அலுவலாகச் சென்று விட்டு, சாப்பிடுவதற்காக நல்ல ஹோட்டல் தேடிச் சென்ருேம். அவரும் நானும் பிராட்வே வீதி யால் நடந்து. *தாமரை’க் காரி யாலயத்தைக் தாண்டி, ஒரு சந் துக்குள் நுழைந்து, பெரியண்ண மே ஸ் தி ரி தெருவுக்குள்ளால் புகுந்து, நடந்து கொண்டிருக்கும் போது, ஜெயகாந்தன் அந்த வீதி இரு பக்கத்திலுமுள்ள நடை பாதைகளைச் சுட்டிக் காட்டினர்.
都0
"என்ன சங்கதி?" என்பதற் 565). ITGTLDids நானவரைப் பார்த்தேன்.
*எனது கதா பாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நந்த வனம் இதுதான்!” என்ருர்,
பெளர்ணமி நிலவில் தாஜ் மகாலைப் பார்ப்பவன் போல, அந்தச் சென்னை நடைபாதை. யைக் கண்கொட்டாமல் பார்த்து மகிழ்ந்தவன், நான்.
பிராட்வே வீதியில் ஒதுக்க மாக ஒரு பழைய பூங்கா இருக் கிறது. இன்னெரு நாள் நானும் தாமரை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த எம். கே. இராமசாமி என்பவரும் அம்பீஸ் கபேயில்
காப்பி குடித்துவிட்டு நடந்து
வரும்பொழுது அந்தப் பழைய பூங்காவை அவர் சுட்டிக்காட்டி, ‘நண்பர் ஜெயகாந்தனின் ஒரு சிறுகதையில் இந்தப் பூங் க்ா ஜீவத் துடிப்புடன் சித்திரிக்கப்
பட்டிருக்கிறது. இடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்ருர்,
சரஸ்வதி யுக எழுத்தாள னின் கதைக் களங்கள்கூட இன்று நமது நெஞ்சில் L-fJr Gð)t D tLIff }; இருக்கின்றன. ஆனல் விகடன் கால எழுத்தாளனின் பாத்திரங் கள் கூட எங்கள் மனதில் பசு மையாக இடம் பிடிக்க முடிய வில்லையே!
கருத்துக்கள் என்ருலும் சரி, கலைப் படைப்புக்கள் என்ருலும் சரி ஒரு சக்தியாக மாறுவது அவை மக்கள் திரளைக் கவர்ந்து சிந்திக்கவும் செயற்படுத்தவும் தூண்டும் போதுதான் என்ற உண்மையை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாமல்லவா?

10-11-68 கல்கி இதழில் *எழுத்தில் புதுமை’ என்ற தலைப் பில் ஜெயகாந்தன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அந்தப் பேட்டியைப் படித் தவுடனே நான் திகைத்துப்போய் விட்டேன். முத்திரை பதிக்கப் பட்ட ‘விகடன் வட்டாரத்தின் பிரத்தியேக நட்சத்திரமாக மாற் றப்பட்டுள்ள அவர், சரஸ்வதி யுகத்தையே மறந்து விட்டார் என்பதை மிகத் துலாம்பரமாக அப் பேட்டியில் இருந்தே நான் அவதானித்துக் கொண்டேன்.
இந்த எனது மனத் தவிப்பை ஒரு கட்டுரை மூலம் வெளியிட் டேன். அக் கட்டுரை 'நச்சிலக் கியத்திற்கும் நசிவிலக்கியத்திற் கும் துதி பாடும் நவீன எழுத் தாளர்" என்ற நீண்ட தலைப்பு டன் தேசாபிமானி 26-11-68 வார இதழில் பிரசுரமாகியது.
முதன் முதலில் ஜெயகாந் தனை - அவரது தற்போதைய ஊசலாட்டத்தை- நான் இனங் கண்டு எழுதிய முதற் கட்டு ரையே அதுதான்.
அக் கட்டுரையைத் தாமரை மறுபிரசுரஞ் செய்திருந்தது.
*இதில் விசித்திரம் என்ன வென்றல் விகடனையும் மீறி தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாப் பதே தனது ஆன்மீகக் கடமை எனப் பஜனை பாடும் தமிழகச் சுதந்திராக் கட்சியின் ஊதுகுழ லும் சர்வதேசப் பிற்போக்குக் கும்பலின் தார்மீக ஞானத் தந்தையாகக் காட்சி தருபவரு மான ராஜாஜியைக் கெளரவ ஆசிரியாாகக் கொண்டதுமான "கல்கி' சஞ்சிகையில் தனி மனித சுதந்திரத்திற்காக வக்காலத்து வாங்கியிருப்பதிலிருந்தே நண்பர்
பர்கள்
ஜெயகாந்தனின் எதிர்காலப் பார்வை-அல்லது பாதை எது என்பதைத் தெளிவாகப் புலப் படுத்துகின்றது"
இப்படியாக அக் கட்டுரை யில் ஒரு பாராவில் குறிப்பிட் டிரு ந்தே ன்.
இன்றைய யதார்த்த பூர்வ மான உண்மை என்னுடைய கருத்தைத்தானே - மூன்ருண்டு களுக்கு முன்னர் நான் அவரைப் பற்றிக் கணித்த கணிப்பீட்டைத் தானே - வலியுறுத்துகின்றது.
இக் கட்டுரை வெளிவந்த தின் பின்னர் நா ன் நண்பர் ஜெயகாந்தனைச் சென்னையில் சந்தித்தேன்.
எனது கட்டுரையைத் தான் படித்துப் பார்த்ததாகவும் எனது கணிப்பீடு தவறு எனவும் அவர் என்னுடன் வாதித்தார். பல காரணங்களை எடுத்துச் சொன் ஞர்.
ஆனல் அவரைப் பற்றிய எனது மதிப்பீடு அன்றும் மாற வில்லை; இன்றும் மாறவில்லை. -எதிர்காலத்தில் எப்படியோ?
இக் கட்டுரை சம்பந்தமாகச் சென்னையில் பல இலக்கிய நண் என்னைச் சந்தித்துத் தமது பாராட்டுக்களைத் தெரி வித்தார்கள்.
இலக்கிய பூர்வமான ஆழ மான விமர்சனங்களைத் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் எழுதப் பின் நிற்கிருர்கள் என்ற உண் மையையும் அவர்கள் எடுத்துச் சொன்னர்சள்.
முக்கியமாக ஒன்றை அவ தானித்தேன். இளந் தலைமுறை யைச் சேர்ந்த பல இலக்கிய
荡翼

Page 28
நண்பர்கள் ஈழத்து இலக்கிய வளர்ச்சியைக் கண்டு பிரமிக்கி முர்கள் தகுந்த மதிப்புத்தருகி முர்கள் என்பதையும் கண்டேன்.
'விந்தன்" என்ற எழுத்தா ளனைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். வெடிச்சுப் போன பட்டாசு எனச் சுருக்க மாகச் சொன்னர், அவர்.
இன்று நான் உரக்கச் சிந்
ஆதிக்கும்போது எண்ணுகின்றேன்:
"இவர் நனைந்துபோன பட்டா சாகி விடுவாரோ?"
அரசியல் எனக்கு அலர்ஜி என அடிக்கடி சொல்லும் இவர் கடந்த தேர்தல் காலத்தில் நடந்து கொண்டுள்ள முறை யைப் பார்ப்போம். மன்னர்கள் மானியம் ஒழிக்கப்பட லோக் சபையில் தீர்மானம் கொண்டு வரப் பட்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட் அந்தச் சட்டத்தை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கி யது. கோடிக்கணக்கான ரூபாய் களை இந்த மன்னர்கள் விழுங்கி வந்தார்கள்.
பாராளுமன்றம் கலைக்கப் பட்டு புதுத் தேர்தல் சென்ற மார்ச் மாதத்தில் பாரத தேச மெங்கும் நடைபெற்றது.
இந்தப் பொங்கு மாங் கடல் மக்கள் வெள்ளத்தில் ஜெயகாந் தன் பாத்திரந்தான் என்ன?" -- அவர் பங்குதானென்ன?
பாரதத்தில் சகல கட்சிகளை யும் சேர்ந்த முற்போக்காளர் கள் ஒருங்கிணைந்து மன்னர் மானியம் ஒழிக்கப்பட வேண்டும் என நடத்திய மக்கள் இயக்கத் தைப் பின்னலிருந்து முதுகில் குத்தியவர் இவர்; இந்தச் சரஸ் வேதியுகத்தில் உருவாகிய இன் றைய குமுதம் எழுத்தாளர்.
5盛
A.
g
வி

பெருந் தலைவர் காமராஜ் வர்களுக்காகவும் சிண்டிகேட் யூதரவுக்காகவும் கூலி பெற்றுக் காண்டு மேடை மேடையாகக் ர்ஜித்தார். ‘மன்னர்களுக்கு, வர்களினது நலன்களைக் காப்ப தனச் சுதந்திரம் பெறும்போது ாக்குறுதி தரப்பட்டது. தேசத் லைவர்களால் இன்று அவ்வாக் றுதி காற்றில் பறக்க விடப் டுகின்றது. இது நேர்மைத் ரோகம்! என கோஷமிட்டார் மடை மேடையாக. இச் செய்தி ள் பத்திரிகைகளிலும் வெளி ந்துள்ளன. தலை சிறந்த அப் க்காத்தாக நின்று மேடையில் ாதிட்டு வந்தார்.
சுதந்திரம் பெறும்போது மன் "ர்களுக்குக் கொடுத்தீ வாக் றுதியை காட்டி நேர்மைக்கு க்காலத்து வாங்கி வாதிட்ட வர், இந்த சரஸ்வதியுகத் தச் சேர்ந்தவர் ‘சுதந்திரம் பறுவதற்கு முன்னர் - எப் பாவோ ஒரு கால த் தி ல்ராச்சிக் காங்கிரஸில் 40 கோடி க்களுக்கும் சுபீட்ச வாழ்வுக்கு த்தரவாதம் சொல்லப்பட்டுத் ர்மானம் நிறைவேற்றப்பட் ள்ளதே அதை சுட்டிச் காட்டி ரன் மக்கள் பக்கம் நிற்கவில்லை?" ன அந்த மக்கள் கேட்ட பாழுது ‘சமுதாய ஆன்மீகப் ார்வை பேசுகிருர், இன்று ரசியல் என்ருலே எனக்கு புலர்ஜி என அலறுகிருர்.
'ஏய். திருவாரூர்த் தெருப் பாறுக்கியே! தெரு வு க்கு ாயேண்டா. நானும் ஒரு கை ார்க்கிறேன்! என்றெல்லாம் ாக்கடைத் துளிகளைத் தமிழ ந் தோறும் தேர்தல் மேடை ளில் வாரி வீசிக் கொண்டிருந்
மக்கள் இவர்களை நிராகரித்து ff, 登ז60-L_' וו
(வளரும்)