கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1973.03

Page 1
: silšais
リー
ஆகி
-| || ... ( ( ): ! !! !!!!!!!!!!××××××※%× s ( ( ( ( ( !!!!!!!!!!!|- - , !---------|- ) -----:|- |-|- |-| || ...|- |-, ,s os|-■ . - mae | No|(-)|- |- |-|-, ! o , + . ( , !, !|----| || . ..| || ... - - ( )= ||- ,!!!!!!!!!, ! ,|| ( )|- |-, ,|-|-|-:, - ( ) |- |(: ,! -sae -|- |- - |-| | | || |-_-'!!! !! !! !!!|-, ! !, !|- |- || ● |----| || ...!!!, ,|- ( )|-! !! | ( ) . . . . : ! ! !|-| –-------------------- |- |-|×|×| | |=|----|- :|- | –| __, ||-│ │ │----|-|- |- D ( ), !|--|------ |-|- _ _ _ _ _ _ · |- . .|-|- .|- |- ( )|-|-| || .|-- - - -- |- |-| –|-|1 , , . |----- |-|---- | | | | ||- |-|-|-|-|-| | | | |' . | . . .| || . - - - - |-|-| – |-| - ( )- |-„saei (, , , ! - ( ) |-s ≡ ≈ ≠ ≠--------|- . . .: - ( ) |- ( ) - |- |- -sae|- - - - , , , , ,| || ... :-) - |( )su : ( ), ! , ! ! ! ! ! !|- |- |-|- | |- !! !! ! ! ( )|----|-
*( ) * 呼
和 :
陶| | E제
 
 

கலே இலக்கிய
Li si

Page 2
ஆழ்தல் பாருதல்தித்தி వ్లో ԼLil ஈனங்ஃகன்டுத்ள்
கொடி 8
Lourri
க. நா. சு. பற்றி
க. நா. சு. பற்றி ஒரு மல்லிகையில் கோடி காட்ட
நண்பர்கள் பலர் உற்சாகமாக
"பிராமணர் அல்லாதார் போல, பிராமணர்கள் "பெ என்று பம்பாயில் க. நா. சு. துள்ளது.
ஆர். சண்முகசுந்தரத்தை க, நா. சு. திரு. டி. எஸ். ெ வடிக்கைக்குப் பின்னர் இன்று பிடிப்பதையும் அவதானிக்க
சாதித் தளத்தை அடிப்ப டரகமான இலக்கிய அளவு கோல்கள்?
இவரைப் பற்றிய திறனய் இடம் பெறுகின்றது.
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர் கவிதை, கட்டுரை, கருத்து, எல்லாம் ஆக்கியோர் தனித்துவம் பொறுப்பும் அவரே;

Dads 26 -ܙ 1627sfநவா
LDa)ii 59 d- 1973
d
கட்டுரைத் தொடர் தொடரும் என ப்பட்டதைத் தொடர்ந்து இலக்கிய
அதை வரவேற்க முன்வந்துள்ளனர். , புதுமைப் பித்தனைப் பாராட்டுவது )ளணி' யைப் பாராட்ட வேண்டும்’
, கூறிய தகவலும் இன்று கிடைத்
த் தமது பட்டியலில் சேர்க்க மறுத்த சாக்கலிங்கத்தின் கடுமையான நட ஆர். சண்முகசுந்தரத்தைத் தூக்கிப் முடிகிறது.
டையாகக் கொண்ட இத்தனை மட் கோல்களா, க. நா. சு. வின் அளவு
1வு மதிப்பீடு விரைவில் மல்லிகையில்
- ஆசிரியர்
அலுவலகம்: 234-ஏ, கே. கே. எஸ் வீதி,
யாழ்ப்பாணம் (இலங்கை)

Page 3
பிரமணியம்
சர்வதேசப் புகழ் வாய்ந்த நமது எழுத்தாளர் அழகு சுப்பிர மணியம் மறைந்து விட்டார் என்ற துக்கச் செய்தியின் தாக்கத்தை நன்குணரும் இலக்கிய நெஞ்சங்கள், இந்த இழப்பு எத்தனை பெரிய மகத்தான சோகத்தின் பின்னணியை நம்முன் விட்டுச் சென்றுள் ளது என்பதையும் சேர்த்து உணரக் கூடும்.
இங்கிலாந்தில் வாழ்ந்து, முல்க்ராஜ் ஆனந்த், மற்றும் அன்று அங்கு வசித்து வந்த ஆசிய ஆபிரிக்க முற்போக்கு எழுத்தாளர் களுடன் சேர்ந்து முற்போக்குக் குழுவாக இயங்கி, இலக்கியச் சஞ் சிகை ஒன்றைச் சிறிது காலம் அங்கு நடத்தி, பல ஐரோப்பிய எழுத்தாளர்களின் நட்புறவினலும் தொடர்பினுலும் த ன் னை வளர்த்துக் கொண்டதுடன் தமிழ் மொழியின் ஆழ - அகலங்க ளைப்பற்றி அவர்களுக்குப் புரிய வைக்க முயன்றவர் நமது அழகு அவர்கள்:
சம காலத்தில் நம் கண் முன்னுல் வாழ்ந்து, எழுதி, மறைந்து போன அவரைப்பற்றி நாம் சரியாகக் கணிப்பீடு செய்ய மறந்தி ருக்கலாம். ஆல்ை அதற்குரிய ஒரு காலம் நிச்சயம் வரத்தான் போகின்றது. அன்று அந்த மாபெரும் கலைஞனை நாம் அலட்சிய மாக நடத்தினேமே எனப் பலர் பரிதவிக்கத்தான் போகின்றனர்
ஒரு சர்வதேசப் புகழ் வாய்ந்த கலைஞனின் முடிவு ஏன் இத் தனை சோகம் ததும்பியதாக அமைய வேண்டும்?
இந்த மண், மேதைகளைத் தாங்குவதற்குரியதாக இன்னமும் பண்படுத்தப்படவில்லை எனச் சொல்லலாமா?
அல்லது மேதைகளே தமது தகைமைகளைப் புரிந்து கொள் ளாமல் மண் புழுதியில் தமது காற் தடங்களைப் பதித்து விட்டுச் சென்று விடுகிருர்களா?
இவை அத்தனையும் சரியாகவும் இருக்கலாம்; த வ ரு கவு ம் தோன்றலாம்.
ஆனல் நமக்குத் தோன்றுவது இதுதான். மக்கள் இவர்களைப் புரிந்து கொள்ள முடியாத உயரததல் இவர்கள் வாழ்ந்தார்கள். நீண்ட இடைவெளி இருபாலரையும் பிரித்தது. அத்துடன் அந்நிய மொழி ஆக்கம் என்பதும் குறிப்பிடப்பட வேண்டும்.
இதனுல் இந்த மேதையை மக்கள் வாழுங் காலத்திலேயே புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்.
 

விரக்தி, வெறுமை, தம்மைப் புரிந்து கொள்ளுகின்றர்கள் இல்லையே என்ற மனத் தவிப்பு அத்தனையும் சேர்ந்து அக் கலை ஞனை நிலை குலைய வைத்துவிட்டது.
ஐரோப்பாவில் விருந்துகளில் பழகிவந்த பழக்கம், இங்கு நிரந் தரப் பழக்கமாகி, பின்னர் அதுவே சகலமுமாகி விட்டது.
ஒரு கலைஞனின் அழிவிற்கு இந்த நாடும் பங்கேற்க வேண்டும்3 இதைத் தட்டிக் கழித்துவிட முடியாது.
கடைசிக் காலத்தில் நோயின் தாக்கத்திற்கு உட்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தபொழுதும் இலக்கியம்தான் அவரது பேச்சு மூச்சாக இருந்தது. W "எனக்குக் குழந்தைகள் இல்லை. "பெரிய பிள்ளை' என்ற எனது முதலாவது சிறுகதைத் தொகுதிதான் எனது மூத்த பிள்ளை. இரண்டாவது குழந்தை ஒன்றும் சீக்கிரம் கிடைக்க இருக்கிறது" எனத் தமது இரண்டாவது சிறுகதைத் தொகுதி உருவாக இருப் பதை நகைச் சுவையுடன் கூறிக்கொண்டிருந்த எழுத்தாளன் அழகு சுப்பிரமணியம் அதைக் கண்ணுல் கூடப் பார்க்காமல் போய்ச் சேர்ந்து விட்டார். s
ஒரு படைப்பாளிக்கு இதைவிடத் துரதிர்ஷ்டம் வேறென்ன இருக்கிறது!
கடந்த காலங்களில் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு விட்டன. அவர்களது படைப் புக்கள் நூலுருப் பெற ஆவன செய்வோம் என அரசாங்கமும் உறுதியளித்தது.
ஆனல், நடைமுறையில் படைப்பாளிகளின் புத்தகங்களை வெளிக் கொண்டுவர இன்று ஏற்பட்டுள்ள பல திடீர்ப் பிரச்சினை களுக்குத் தீர்வு கண்டால்தான் இது சாத்தியமாகும்.
இதைச் சாத்தியமாக்கினுல்தான் வாக்குறுதிகளைக் கலைஞர்கள் நம்புவார்கள். இயக்க ரீதியாக ஒன்றுபடுவார்கள்.
அழகு சுப்பிரமணியத்தின் உருவத்தை யாழ்ப்பாணச் சட்ட நூலகத்தில் திரைநீக்கம் செய்து வைக்க அவரது சக தோழர்கள் முயன்று வருகின்றனர்.
இது வரவேற்கத் தக்க நல்ல முயற்சிதான். ஆனல், தொழில் துறையை விட, அவர் சிருஷ்டி கர்த்த வாகவே ஆரம்ப காலத்திலிருந்து இறுதிவரை பிரகாசித்தார்.
எனவே படைப்பாளி என்கின்ற முறையில் நாம் அவருக்கு என்ன செய்ய விரும்புகின்ருேம்?
ஏதோ ஒப்புக்கு நாம் நமது அநுதாபத்தைச் செலுத்தி விட் டோம் என மனத் திருப்தி அடைபவர்கள் அடைந்து விட்டுட் போகட்டும். காலத்தையும் மீறிக் கனிந்து நின்ற கலைஞனுக்கு நாம் நமது பொறுப்பான கடமையைச் செய்ய வேண்டும். சும்மா ஊர் கூட்டி மேளமடிப்பதல்ல.
அவரது படைப்புக்கள் தகுந்த கெளரவத்தைப் பெற நம்மில் சிலர் சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டாலே போதும்
நிச்சயம் கலைஞர்கள் மரணிக்க மாட்டார்கள்!

Page 4
சோகத்தின் முடிவு
மல்லிகை இரண்டு ஆண்டு களுக்கு முன்ன்ரே தனது கடமை யைச் செய்து விட்டது. மார்ச் 71-ல் அட்டையில் திரு. அழகு சுப்பிரமணியத்தின் உருவத்தைப் பதித்து, தனது கருத்தையும் எழுதியுள்ளது. சில நண்பர்கள் தமது கருத்துக்களை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறியுள்ளனர்.
- ஆசிரியர்
அழகு சுப்பிரமணியத்தின் நட்பு எனக்கு ஏற்பட்டது பெரும் -பாக்கியம் என்றே கருதுகிறேன்: சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தேன் அப்பொழுது தாயகம் திரும்பி ஒரு சில ஆண்டுகள்தான். பெய ருக்குப் பொருத்தமான தோற் றம். அவரது உரையாடலோ தோற்றத்தையும் விடக் கவர்ச்சி
4
கரமானது. அவர் இங்கிலாந் திலே தங்கியிருந்த காலம் பெயர் பெற்ற எழுத்தாளர்களோடும் கலைஞர்களோடும் - எ ன் னை ப் பொறுத்த மட்டில் பெயரளவில் தான் அவர்களை எனக்குத் தெரி யும் - உறவாடியிருந்தால் அவர் களைப் பற்றி சுவாரஸ்யமான த7வல்களை தெரியத் தந்தார். மணித்தியாலக் கணக்காக அவ ரோடு பேசிக்கொண்டிருக்கலாம். அலுப்பே தட்டாது. நகைச் சுவை ததும்பிய அவரது பேச்சு - அவரது கதைகளிலும் இப் பண்பைக் காணலாம் - கேட் போரை ஈர்த்த வண்ணமேயிருக் கும்.
பொன்னுத்துரை, ஜீவா, நான் அவரை அடிக்கடி சந்திப் போம். அவர்களது கதைகளைப் படித்துவிட்டு நல்ல ஆலோசனை களை அழகு கூறுவார். எனது மொழிபெயர்ப்புக்களைத் திருத்து வதோடு நில்லாது அவற்றை பிரசுரிப்பதிலும் ஆர்வங்காட்டி ஞர். அவரது முயற்சியாலேயே நான் மொழிபெயர்த்த "தலைக் கொள்ளி? (பொ. தம்பிராசா எழுதிய து) "இலஸ்ரேட்டட் வீக்லி ஒவ் இந்தியாவில்" வெளி வ ந் த து. இவ்வாறெல்லாம் அழகு எங்களது இலக்கிய முயற் சிகளுக்கு ஆக்கபூர்வமான உதவி களைச் செய்து வந்தார்.
அழகு செய்த தவறு அவர் தாயகம் திரும்பிவந்ததுதான் என நான் சில வேளைகளிலே நினைப்பதுண்டு. ஆளுல் தன்னல நோக்கோடு பார்க்கையில் அத் 'தவறு" எங்களுக்கு எவ்வளவு ஆதாயமாயிற்று!
அவரது நினைவு வாழ்க!
ஏ.ஜே. கணகரெட்கு
 

சமீபத்தில் அமரரான திரு. அழகு சுப்பிரமணியம் அவர்களை "மல்லிகை" மூலமே நன்கு அறிய மூடிந்தது. எனவே எனது மனம் கனத்த துக்கத்தை மல்லிகை மூலமே அவரது குடும்பத்தின ருக்குத் தெரியப்படுத்திக் கொள் கிறேன்.
அவரை நான் நேரில்காணும் பாக்கியம் பெற்றதில்லை. எனி னும் பிறிதோர் எழுத்தாளனின் கூர்மையான சொற்கள் மூலம் அந்த எழுத்தாளனை தரிசிக்கும் பேருணர்வு கிட்டியது. அதற் காக 1971 மார்ச் மாத உங்க ளது கட்டுரைக்கு எனது நன்றி. இ லக் கி யம் என்றதும் "தன்னை மறந்த லயந்தனில்" ஆழ்ந்துவிடும் கலை உள்ளம்: நாமெல்லாம் விரலைச் சூப்பிக் கொண்டிருந்த காலத்திலேயே ஈழத்திற்கு தன் எழுத்துக்களால் பருமை தேடித்தந்த பேராற் 0ல், தன்காலத்துப் பிரக்ஞை மட்டுமின்றி இன்றைய எழுத் துக்களையும் புரிந்து கொள்ளத் துடிக்கும் ஆவல் இவைகள் உரு வகிக்கும் அழகோடு த ன து இரண்டாவது சிறுகதைத் தொகு திக்காக அவர் மனைவி படும் சிர் மத்தைக் கண்டு "பாவம் அவள், வீட்டுக்கும் "லோன் எடுத்தாச்சு எனக்கும் மருந்துச் செலவு. வீட் டுச் செலவு. . " என்று கனியும் மனித இதயம் ஆகியவைகள் என்னை நெகிழவைக்கின்றன.
அவரது இரண்டாவது சிறு கதைத் தொகுதி வெளி வ ர ஏதாவது செய்ய இயலுமா என் பதைத் தெரிவிக்கவும். அத்து டன், அவரது ஆங்கிலச் சிறு க  ைத களை மொழிபெயர்த்து மல்லிகையில் பிரசுரித்தால் இன் றைய தலைமுறையினருக்கு அவ
ரைப் புரிந்துகொள்ள உதவியாக
இருக்கும்.
என். எஸ். எம். ராமையா
றலை என்றும் பறை
நண்பர் அழகு சுப்பிரமணி யத்தின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அதிர்ச்சியடையவில்லை.
ஒரு சர்வதேசப் புகழ் பெற்ற
எழுத்தாளனின் மறைவு எப்படி அதிர்ச்சிதராமல் இருந்தது. காரணமே மல்லிகையின் மார்ச் 71 இதழ்தான்.
* யாராவது இலக்கிய நண் பர்க்ள் இப்படி அடிக்கடி வந்து போனல் அந்த ம கி ழ் வில் நோயின் நோவை மறந்து விடு வேன்" என்று அவருடை கூற்றை மல்லிகை வாயிலாகக் கேட்ட போதே மனச்சங்கடமாகத்தான் இருந்தது.
அவரது மறைவால் துயரு றும் மனைவிக்கும் " மற்ற உறவி னர்களுக்கும் எ னது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வ துடன் அவருடைய இறுதி ஆசை யான இரண்டாவது தொகுதி வெளிவர ஆக் க பூர்வமான செயலில் இறங்குமாறு பொறுப் புள்ளவர்களை வேண்டுகின்றேன். இவருடைய படைப்புக்கள் இவருடைய திறமையை - ஆற் சாற்றிக் கொண்டிருக்கும்.
தெளிவத்தை ஜோசப்
யாழ்ப்பாணத்துக் கதாபாத் திரங்களை அழகான ஆங்கில நடையிலே கண்டவர் - காட்டிய வர் - சிந்தனையும், குறியீடுமாக ஆங்கில மொழிவிளக்கத்தினல், மக்களும், அவர்தம் உணர்ச்சி களும், இந்நாட்டின் சமூக விளை நிலத்தில் வேரூன்றி நிற்கின்றன. அழகு சுப்பிரமணியம் இறந்தா லும், அன்னரின் க  ைத க ள் உலாவித்திரிகின்றன.
sur. GlguJrrón
5.

Page 5
தமிழில் அடிக்கடி நவீன ' விஞ் ஞானக் கட்டுரைகளைப் படிக்க முடி கிறது. அதன் ஆசிரியர் டாக்டர் இந்திரகுமார்.
தீ மிதிப்பு சம்பந்தமாக ஆங்கிலத் தில் ஒரு நூலைச் சமீபத்தில் வெளி யிட்டுள்ளார். இது ஒரு பகுத்தறிவு நூல்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொருளாளராக இருக்கும் இவர், இலக்கிய இயக்கங்களில் ஈடுபாடு கொண்டவர்.
அன்னரது உருவம் மல்லிகையின் முகப்பை அலங்கரிக்கின்றது
ஆசிரியர்
அட்டைப்படம்
டாக்டர் இந்திரகுமார்
கு. இராஜகுலேந்திரன்
சில வருடங்களுக்கு முன் னர் தமிழ்த் தினசரி வார ஏட் டில் விஞ்ஞானக் கட்டுரை ஒன் றினை வாசிக்க நேர்ந்தது. புதிய கோணத்தில் அக்கட்டுரையில் விஷயத்தை அணுக்கியிருந்தார் கட்டுரையாளர் இந்திரகுமார். அதன் பின்னர் அவரது கட்டு ரைகளைத் தேடி எடுத்து வாசித் தேன். அவர் விஷயங்களை அணு கும் முறை, அவற்றை வெளிக் கொணரும் விதம் ஆகியவை
எனக்குப் பிடித்தமாக இருந்தன. ,
நான் முன்னர் இந்திரகுமாரை நேரில் சந்தித்ததில்லை. ஆயினும் அவர் பல்கலைக் கழகத்தைச்
酸
சேர்ந்தவராக இருக்கலாம் என்று எண்ணினேன். பின்னர் அவரை நேரில சந்திக்க நேர்ந்தபோது எனது உளகம் சரியாகயிருப்பதை உணர்ந்தேன். அப்போது அவர் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பிரிவின் மாணவராக இருந்தார்.
அவரைப்பற்றி நான் முன் னர் கொண்டிருந்த கணிப்பை, அவரைச் சந்தித்து அளவளாவிய பின்னர் கிடைத்த தகவல்கள் வலுப்படுத்தின. எமது நாட்டில் சுயபாஷைத் திட்டம் வந்தபின் னர் தமிழ் மொழி பல்துறைக் ளிலும் வளர்ச்சிபெற்று வருகி
 

றது. இந்த வளர்ச்சி போர்" என்றும் மறப்பேர்ர்" என்றும் வரட்டுக் கத்தல் போடு பவர்களால் காணப்பட்டதல்ல. தமிழ் மொழி புதிய துறைகளில் அதாவது விஞ்ஞானத் தமிழ், தொழில் நுட்பத் தமிழ் என்றும் வளர்ந்து வருவதற்கு அவ்வத் துறைகள் பள்ளிகளில் பாடங்க ளாகக் கொள்ளப்படுவது மட் டுமன்றி சாதாரண மனிதனின் கவனத் தி ல் கொள்ளப்படும் வகையில் விளக்கமாக எழுதப் படும் கட்டுரைகளும் காரணமாக இருக்கின்றன.
இன்று மனிதனுடன் பிரிக் கப்பட முடியாதவாறு விஞ்ஞா னம் இணைத்துள்ளது. அவனு டைய வாழ்க்கையின் தேவைக ளும், அவற்றைப் பூர்த்திசெய் யும் சாதனங்களும் விஞ்ஞானத் தினலேயே உருவாக்கப் படுகின் றன. எனவே அவன் விஞ்ஞா னத்தை எந்த அளவுக்குப் புரிந்து கொள்கிருன் என்பது அவனது பொது அறிவின் பரிணுமத்தைப் பொறுத்தது. சமீபத்திய ஆண்டு களில்
ஏற்படுத்திய விஞ்ஞரன, விண் வெளிச் சாதனைகளை சராசரி இலங்கைத் தமிழன் எந்த அள வுக்குச் சீரணித்துக் கொண்டுள் ளான் என்பதும் இங்கு கவனிக் கப்படல் வேண்டும்.
இந்த வழியில் டாக்டர் இந்திரகுமார் எழுதிவரும் விஞ் ஞானக் கட்டுரைகள் காத்திர மான பணியைச் செய்து வரு கின்றன. நவீன விஞ்ஞான சாத னைகள் குறித்தும் அண்ட வெளிப் பேரற்புதங்கள் குறித்தும் அவர் விளக்கமாக எழுதிவரும் கட்டு ரைகள் பத்திரிகையின் சாதா ரண வாசகர்களிடையே கூடதாக் கத்தை, ஏற்படுத்தியுள்ளன.
சோவியத் யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகள்
ரும் கூட.
உலகுதழுவிய விஞ்ஞானச் தின் விளைவுகளை 皺 முறையில் மதிப்பீடு செய்வது அதைத் துரித வளர்ச்சியடைய வும் செய்யும். இத்தகைய துரித வளர்ச்சிக்கான வழிவகைகளை யும் சமூக வாழ்வில் இவற்றின் பயன்களையும் தக்க முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும். இதை டாக்டர் இந்திரகுமார் நனருக உணர்ந்துள்ளார். விஞ் ஞான வளர்ச்சியின் போக்கும் விளைவுகளும் சர்வதேச அரங் கில் நிகழும் அரசியல் போராட் டத்தில் ஒரு பெரும் அங்கமா கத் திகழ்கின்றன. தற்பொழுது இந்திரகுமார் ஒரு தினசரியின்
ஞாயிறு இதழில் எழுதிவரும் "மண்ணிLருந்து விண்ணுக்கு” என்ற தொடர் கட்டுரையில்
அண்டவெளியின் பேரதிசயங்கள் பற்றி மட்டும் விளக்கவில்லை. அண்ட வெளி ஆய்வோடு ஒட்டி யுள்ள அரசியல் போட்டிகளையும் கூடத் தெளிவுபடுத்துகின்ருர் .
சமூக உணர்வும் தெளிவும் கொண்ட இந்திரகுமார் சிறந்த பேச்சாளர். தமிழிலும் ஆங்கி லத்திலும் உரையாற்றுவதில் வல் வவர். ஆங்கிலத்தில் அவர் எழு
திய விஞ்ஞானக் கட்டுரைகள் டெய் லி மிரர், டைம் ஒப் சிலோன்,
ஃபோவார்டு ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள் ளன. பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற கட்டுரைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். அத்துடன் சிறந்த நாடக நடிக
விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதற்கொப்ப இந்தி ரகுமார் தமது 15-வது வயதில்
யாழ். இந்துக் கல்லூ ரி யின் ஆண்டு சஞ்சிகையில் எழுதிய *ச ந் தி ர னை ச் சேர்ந்திடுதல்

Page 6
என்ருே?" என்னும் கட்டுரையின் சிறப்புக் கண் டு அக்கட்டுரை "வானமரன்” என்ற நவயுக ஏட் டில் மறுபிரசுரம் செய்யப்பட்
• التقنيـا
மருத்துவப் பிரிவில் படித்துக் கொண்டிருக்கையில் முன்னுள் கல்வியமைச்சரின் மூர்க்கத்தன மான போக்கை எதிர்த்து பல் கலைக்கழக மாணவர் நடத்திய பகிஷ்கரிப்புப் போராட்டத்தின் போது முக்கிய பங்கு வகித்த வர் டாக்டர் இந்திரகுமார். தனது 99 வ்ருட வரலாற்றில் ஒருமுறையேனும் ‘வேலைநிறுத் தம்" செய்யாதிருந்த மருத்துவப் பிரிவில் முதன் முதலில் மருத் துவ மாணவர்களைப் புரட்சிக் கொடியை ஏந்தவைத்த பெருமை இந்திரகுமாரையே சாரும் .
இப்போராட்டம் முடிந்தி தும், அதுபற்றி அவர் எழுதிய புரட்சிப் பிழம்பிலே ஒரு பல்க லைக்கழகம்’ என்ற கட்டுரை பல்கலைக்கழக சஞ்சிகையில் L?ア சுரமாகும் முன்னர் உபவேந்த ரி ஞல் அலசி ஆராயப்பட்டபின் னரே வெட்டுகள் எதுவும் இன்றி பிரசுரத்துக்கு அனுப்பப்பட்ட-து.
1966 முதல் 1968 வரை இலங்கை ராணுவத்தின் தொண் fi Grihadi) கட்மையாற்றிய இந்திரகுமார். துறைமு. தொழிலாளரின் வேலைநிறுத்தத் தை முறியடிக்க யு. என். அரசாங்கம் இராணுவத் தொண் ட்ர் படையைப் பயன்படுத்திய தைத் தொடர்ந்து இராணுவத்
தில் இருந்து ராஜினமாச் செய்
தார்.
முகம அரசாங்க வைத்திய சாலையில் டாக்டராகக் கடமை யாற்றும் இந்திரகுமார் உழைப் பாள வர்க்கத்தை மதிப்பவர். இவர் வானுெலியில் நடாத்தும் ‘விஞ்ஞான தீபம்’ என்ற நிகழ்ச் சியில் சாதாரண தொழிலாளி யான மீனவனின் குரலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
அடிநிலை மக்களின் இதய ஒலியையும் விருப்பு வெறுப்புக் களையும் நன்குணர்ந்து கொண் டுள்ள டாக்டர் இந்திரகுமார் இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் பொருளாளர் , இலங்கை சோவியத் நட்புறவுச் சங்க உறுப்பினர். யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் பொதுச்
செயலாளர்.
சோஷலிசத்தைக் கட்டும் நோக்கத்திற்காக, விஞ்ஞானம் தொழில் நுட்பத்தை முழு அள வில் பயன் படுத்திக் கொண்டாக வேண்டும். . என்று லெனின் கூறியதற்கேற்ப, நமது நாட் டின் சுபீட்சத்திற்கான பாதை யில் மக்களைத் தயார் செய்வ தற்கு அவர்களுக்கு விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை ஊட்டு வதில் ந எண் பர் இந்திரகுமார் தமது பங்குப்பணியைச் செய்து
வருகிருர். இவர் தொடர்ந்து செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு m

கதறும் வயிறுகள்
திக்குவில்லை கமால்
குளித்து விட்டு வந்து அ மீர் நாணுவின் கடையில் வழமைபோல் இர்ண்டுரொட் டிகள். ஒரு பருப்பு . பிளேன்டீ யுமாகக் காலைச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பள்ளிவாசல் கேற்றுக்குள் பிரவேசித்தார் மோதினர்.
ஸாரம், சட்டைகளை காற் ருடக் கொடியில் போட்டுவிட்டு பள்ளிக்குள் நுழைந்து தனக் கென ஒதுக்கப்பட்டுள்ள ஆற டிச் சதுர அறைக்குள் சேட்டை கழற்றி வைத்துவிட்டு வெறும் மேலுடன் இதர வேலைகளைக் கவனிப்பதற்குத் தயாராஞர்
முதலில் தொழுகைச்சாலை கூட்டும் வேலைதான். மார்பல் தரையில் துடைப்பங்கட்டை இ யங் கி ஒய்ந்ததைத் தொ
டர்ந்து. . . ராத்திபு ஒதும் இடத்தில் விரிக்கப்பட்டிருந்த பாய்கள் மோதினின் கண்களில் பட்டன. ஒவ்வொரு சனிக்
கிழமையும் அவற்றைக் கழுவிப் போட வேண்டுமென்பது அவ ரது டைம் டேபல். அதுவும் முடிந்தபின் ஜ"ம்மாவுக்குப் பின்பு நேற்று அவசர அவசர மாக மடித்துப்போட்ட வெள்ளை விரிப்புக்களை உதறித் தட்டி அழகாக மடிக்கும் படலத்தை ஆரம்பித்து முடிவதோடேயே, மணிக்கூடு ஒன்பதுமுறை ஒலித் தோய்ந்தது.
இனிப் பள்ளிக்கு வெளியே யுள்ள வேலைகள். *ஹவுலை" நெருங்கியதும் கால் கழுவி க் கொள்ள வசதியாக வைக்கப் பட்டிருந்த டின்களில் மூன்றி லொன்றுக்குமேல் "ஹவுலு"க் குள் போடப்பட்டிருந்ததைக் கண்ணுற்றதும் தொழுவதென்ற பெயரில் விளையாடவரும் சிறு வர்கள் மேல்தான் அவருக்கு ஒருபாட்டம் கோபம் கிளர்ந் தோய்ந்தது.
முழங்கால்களை நில த் தி லூன்றி, ஒரு கையையும் முட் டுக்கொடுத்து, அடுத்த கையின் முழங்கைக்கும் அரைவாசிக்கு மேல்வரை அமிழும் வண்ணம் குனிந்து, ஒவ்வொரு டின்னக எடுத்து வைத்துக்கொண்டிருக் கும்போது கேற்றைத் திறந்து கொண்டு சிறுநீர்க் கூடப்பக்க மாக யாரோ போகும் சத்தம் கேட்டபோதும் பார்க்கவேண் டிய அவசியமில்லாததால் தனது வேலையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தார். U
"ஹ"ம் பத்துமணியாகப் போகுது அங்க மூத்திரக் கக் குஸயெல்லாம் நாசமாக்கி வெச் சீக்கு. இன்னம் கழுகாமப் பாத்துக்கொண்டு நிண்டாக்க" முன்னுத்துவீட்டு ஆளம்சாவின் மூத்தமகன் அதிகார நெடியுடன் மோ தி ஞ  ைர ப் Lum ritsgi இரைந்து. அப்படியேயொரு கொடூரப் பார்வை பார்த்தபடி
நின்முன்;

Page 7
"நான் வெளனேலிந்து ஒரு ஒரு வேலயேம் செஞ்சிக்கொணு வாரன். இ ன் ன ம் அங்கல போகல்லயே இவர் களை ப் போன்ருேருக்கெல்லாம் தலை குனியத் தேவையில்லாவிட்டா லும் அவரது இயல்பான தாழ் மைச் சுபாவம் அப்படிப் பேச வைத்தது.
*அங்கதான் தலப்புகுப் பாக்கோணும் வார போரவங் களுக்கு மூக்க வைச்சிக் கொண் டீக்கேலாமீக்கி" ஏதோ மாதம் மாதம் சுளை யாக எண்ணிச் சம் பளம் போடுபவர் போன்று வேகத்துடன் ஆணை பிறப்பித் துக்கொண்டு நடந்தார்.
"இவனுகலெல்லாம் எங்க ளுக்கு லோப்போடியானியல்" மனதுக்குள்ளால் புறுபுறுத்துக் கொண்டு, வாளியையும் தூக் யபடி ச ல கூட ப் பக்கமாகச் சென்ருர்,
யாரோ இரவில் திரியும் காவாலிகளின் வேலை. நான் ந்து வாளித் தண்ணிரடித்துச் சுத்த மாக்கிவிட்டு வந்தார். ஏதோ அவரால் புறக்கணித்து விடத் தக்க வேலையாகவிருந்தாலும், ஏச்சையும் பேச்சையும் கேட்டுக் கொண் டு செய்வதெல்லாம் அல்லாவுக்காக" என்ற பக்தி யுணர்வால்தான்.
மீண்டும் சேட்டை மாட்டிக் கொண்டு வெளிக்கிட்டு நடக் கத் துவங்கினர். அவரது நெஞ் சத்திலே வீட்டைப் பற்றிய நினைவு.
மனைவி பிள்ளைகளின் அன் பான வாழ்க்கை. என்ற உண்ர் வுதான் அதற்குக் காரணமல்ல. வாராவாரம் போய் ஏதோ பத்தைப் பதின்ைந்தைக் கொடுதி துவிட்டு வரும் ஒழுங்கின்படி
நிம்மதியடையலாம்.
அவர் நேற்றுப் போயிருக்க வேண்டும்! அது அப்படியிருக்க வியாழக்கிழமைமாலை பிள்ளைக்கு * லக்ஸ்பிரே? வாங்கிவரும்படி மனைவி அனுப்பியிருந்த செய்தி இன்னெரு பக்கத்தால் ஏதோ செய்தது.
இரண்டுமே செய்துகொள்ள முடியாத நிலைதான்.
வழமை யைவிட ஒருநாள் கழிந்துவிட் டபோதும்.. ஊருக்குப்போக
முடியாமல் செய்து கொண்டி ருந்தது. கண்ணுக்குக் காணும் படி இருந்துவிட்டால் எல்லோ ருமாகச் சேர்ந்து பச்சைத் தண் ணிரைக் குடித்துவிட்டாவது ஆ ஞ ல்
இருபது மைல்களுக்கப்பால் வதியும் மனைவி பிள்ளைகளின் பசியை நினைத்துப் பார்த்து எப்படி ஒரு பொறுப்புள்ள கண வணுல் . . தந்தையால். நிம்
மதியடைந்துவிட முடியும்?
நேற்றுக்கூட அவர் சென்ற மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி யைப் பெற்றுக்கொள்வதற்கா கச் சென்று படியேறி இறங்கித் தோல்வியடைந்த பரிதாபகர மான சம்பவம் கண்ணிர்த் துளி களாக அவர் கண்ணிமைகளுக்
கிடையில் தேங்கி நின்றது.
“ulu (Tegyei Gavrir. . . . . . இன்றைக் குப் போற விஷயமாலும் கை கூட வேணும்" வாய் (1Ք9ծծ)/ முணுக்க, கீழே பார்த்த வண் ணம் நடந்து கொண்டிருந்தார் மோதினர்.
கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே போய், வீட்டு முன் படியில் கால்களைப் பதிப்பதோ டேயே அவர் கண்களில் மேல் சுவர்ப்பக்கமாகப் பொருத்தப் பட்டிருந்த பெயர்ப் பல கை L1-t-gile

அவர் இலேசான பிரமுகர் அல்ல, நாட்டின் பல பகுதிகளி இம் கடைகள் வைத்து நிர்வ கிப்பவர், தர்கள் என்ருெரு பட்டியல் தயாரித்தால் நிச்சயமாக, ஐந் ਨੂੰ அடங்கக்கூடியவரென் முல ன்னும் விளக்கம் தேவை 露醬" 岛津
அந்த இடத்திற்கு மோதி இர் வந்து சேர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் கழிந்து விட்ட போதிலும் ராஸிக் முத லாளி வெளியே வருவதாக இல்லை. வெளிச் சுவரின் ஒரு பக்கமாக அழைப்புமணி பொ ருத்தப்பட்டிருந்த போதிலும் அதனை அழுத்தி முதலாளியை அழைக்கத் தனக்கு தகுதியில்லை யென்பது போன்ற எண்ணம்!
மோதினரின் எண் ண த் தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் "சரஸ். சரஸ்" என்ற செருப்பொவி அங்கே ஒலித்தபோது, கழுத்தை நீட்
டிச் சாடையாக உள்ளே எட், மில்.ை
டிப் பார்த்தபோது. . அங்கே ராளிக் முதலாளி வந்துகொண் டிருந்தார். ஆணு ல் அவரது முகம் நொடிப்பொழுதில் மாறிப் போனதை ந ன் ரு க அவதா னிக்க முடிந்தது.
"என்னத்துக்கு இந்த நேரத் தேல வந்த படபடப்போ கேட்டு கண்ணிமைகளைச் சுருக்கி நின்று பதிலை எதிர்பார்த்தார்
"முதலாளி இண்டைக்கு ஊருக்குப் போக யோசிக்கியன் போன மாத சம்பளச் சல்லிய தந்தா ஒதவியா ஈக்கும் த லை
யைச் சொறிந்து குனி ந் து
வேண்டினர்.
"ஹ"ம். ஒன க் குத்
தாரண்டு சென்னு விளங்காது
போல.. எனக்கு நல்ல ஞாப
ஊரில் பெரிய மணி
மீக்கி. . சந்தோசமா ஒரு பயணம் போக வரச்செல்ல முன்னுக்குவந்து இந்த மூசலப் பேச்சு.
முதலாளியின் கோபக்கனை கள் இன்றும் காரியம் சரிப்பட்டு வராது எ ன் ற உண்மையை உரைக்கவே அப்படியே அங்கி ருந்து திரும்பி நடக்கத் தொடங் கினர்.
பாவம் அவரும் அவரது சம்பளமும் மாதம் அறுபது ரூபா ச ம் பளம் பெற ஆறு இடங்களுக்கு ஏறியிறங்க வேண் டும். பணம் படைத்தவர்கள் மத அபிமானிகளென்ற வரிசை யில் தெரிவு செய்யப்பட்டுள்ள
அவர்களிடம் பல த ட  ைவ காவடியெடுத்து ஏச்சும் பேச் சும் கேட்டுப் பிலமாதங்களுக்
குப் பின்புதான் பெறவேண்டி யிருக்கிறது. எந்தவொரு மாதத் திலாவது அந்த மாதமே முழுச் சம்பளத்தையும் கையோடு பெற்றுக்கொண்டதாகச் சரித்தி
பேருக்கு மாத்திரம் அறு பது ரூபாய்ச் சம்பளம், பள்ளிக் காணி வருவாய்கள். என்று பிரமாதமாக விளம்பரப்படுத் தப்பட்டுள்ளது. ஆனல் இதுவ ரைக்கும் பள்ளிவாசலைச் வு ள் ள அக் காணியிலிருந்து மோதினர் ஆகப் பத்து ரூபா யாவது பெற்றுக்கொண்டதே யில்லை. நடம்பதென்ன? தேங் காய்களும், வாழைக் குலைக ளும் மதிப்பிற்குரிய மேற்பார் வையாளர்களின் கெட்டித்தனத் தால் "குட்பை" போட்டுவிடும்;
காரியம் கைகூடாத மன வேதனையோடு. வீட்டு நினை வின் ஊடறுப்பினேடு. நடந்து கொண்டிருந்தவரை வெய்யில் கூடக் கடுமையாக வதைத்துக்

Page 8
கொண்டிருந்தது. “ளு ஹர்' நேரம் நெருங்கிக் கொண்டிருந் ததால் கடமை அவரை அவசர மூட்டியதோ என்னவோ!
பிரச்சனைகளும் சம்பளத்தில் தில்லு முல்லுகளும் கச்சிதமா கவிருந்தபோதும். ஆத்த தொழிலை விட்டுவிட்டுப்போக இடம் கொடுக்காது *அல்லாஹ்" வுடைய வேலை அவனுக்காக வாவது செய்ய வேண்டும் என்ற நிரம்பிய மன ஆளுமை அவரைத் தடுத்துக் கொள்ளும்!
*ளுஹருக்கு பாங்கொலித் தது. ஆனல் 'அந்தக் குரல் வசி மைபோல் அழகாக அமையா ததை எத்தனை பேர் தா ன் உணர்ந்து கொண்டார்களோ! அங்கே தொழுகைக்காக மனி தர்கள் கூடிக்கொண்டு இருந் தார்கள். இமாம் வரும்வரை வில் வாயிலைப்பார்த்துப் பார்த்து உலாவிக்கொண்டிருந்த மோதி னரை அங்கு இடித்னக்கொண்டு வந்த குரலொன்று மோ தி நிறுத்தியது.
"ஹ"ம். . . ளொணுரும் பிந்திட்டுது. இன்னம் லே l நூத்தில்ல. . இதுக்கா சம்ப
ளம் குடுத்து மோதின் வெச் ஒக்திய நேரே நின்றவர் பக் கச் சரிவாகத் திரும்பி உள்ளே கைநீட்டி அடுத்தவர்களுக்கும் அந்த அநியாயத்தைக் காட்டு வதுபோல் நின்ருர்,
ஆம் அங்கே பிம்பர்" (பிர சங்கமேடை) க்குமேல் ஆத்த சிறிய நீலநிற நைட்பல்ப் எரிந்து கொண்டிருந்தது. ஏதோ நேற் றிலிருந்து அடுத்த வர்கள் அறிந்து கொள்ள முடியாதது மாத்திரமல்ல. . அப்படிக் கஷ்டப்பட்டுத் தெரிந்துகொள் ளத் தேவையில்லாததுமான பிரச்சனைப் பின்னங்கள் இப்படி யொரு சிறிய தவறை வருவித்
1丝
துவிட்டதை நினைத்துப் பார்த் தபடி, ஸ"விச்சை அணைத்து விட்டு அங்கிருந்து கீழே பார்த் தபடி மெளனமாக வந்தார்.
தொழுகைக்காக வருவாரா என்று எதிர்பார்த்துப் பார்த் திருந்த, முஹியத்தின் மத்திச் சம் (பரிபாலகர்) தற்செயலாக
•ஒன்றுக்கிருக்க வந்துவிட்டுப் போகும்போது மோ தி னின் கண்களில்படவே
வகையாகப் பற்றிப் பிடித்துக்கொண்டார். 9 . . இன்ன.. இன்னம்
இந்த மாத்தே சம்பளம் ஒரே ட்த்தாலேம் கெடக்கல்ல. போன மாததே பாக்கீம் ரெண் டுடத்தில வ ரீக் கி. இந்தக் குறைப்பாட்டின் மூலம் தனக்கு காசு தேவைப்படுகின்றதென் பதை அவருணர்ந்து வகை செய்யவேண்டும் என்ற நோக் கில் சொல்லிப் பார்த்தார்.
o Ftf ... ... எப்பிடியும் தந்தி டுவாங்க . . பல துக்கும் இன் னம் கொஞ்சம் நாள் பாருங்க இல்லாட்டி பெறகு எனத்தியா லும் செய்வம் அவ்வளவு Guif? தாக முறைப்பாட்டை எடுத்துக் கொள்ளாத வாக்கில் ப தி ல் மொழிந்தார்.
நோ ன் இன்டக்காலும் ஊருக்குப் பெய்த்திட்டு வரோ னும். அ த ச் சுட்டீத்தான்
செல்லிய" முக்கியமாகப் பணம் தேவையென்பதை மீண்டும் வலியுறுத்தினர்.
* கரச்சல் படுத்துவாண. இந்த மாதம் முடிய முத்தி தம் திடுவாங்க . . . அல்லாவுக்கா கொஞ்சம் நாளக்கி பொறுத் துங்கோங்க" என்று பதில் மொழியையும் எதிர்பார்க்கா மய் இரு கைவிரல்களையும் பின் பக்க" இடுப் பில் சொருகிக் கொண்டு நகர்ந்தார்.

மோதிரூர் கண்களால் மாத் திரமல்ல, அவர் மறையும்வரை வாயையும் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கொடுக்க வேண்டியவர்கள் உரிய நேரத்தில் கொடுக்காவிட் டால் கேட்டாலாவது கொடுக்க வேண்டுமே! அப்படியும் அவர் கள் செய்யாவிட்டால் பரிபா லிப்பவராவது பெற்று க் கொடுக்க முயற்சிக்கவேண்டும்! அப்படியும் பொறுப்பில்லாதவர் களுக்கிடையில் யார்தான் வேலை செய்ய விரும்புவர். , !
அன்றி ரவு வெகுநேரம்
கழிந்தும் மோதினருக்குத் தூக் கம் போவது வெகு கஷ்டமாக
விருந்தது. வந்த தூக்கமும் வெகுநேரம் கழியுமுன்னரே திடீரென்று கலைந்து, தும்மல் வரப்போவது போன்று முக்கடி
யில் அலாதியானதொரு அவ ஸ்தை .
அப்படி ஏற்படுவது தங்களை யாராவது நினைக்கையில்தான் என்ற பாமர நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவரல்ல மோதி ஞர் மனைவியைத் தவிர இந்த நடுச்சாமத்தில் அவரை நினைக்க வேறுயார்தான் இருக்கப்போகி af selv?
ஒருவேளை பா லி ன் றிக் குழந்தை பசியால் அழுவதைத் தேற்றிக் கொள்ள வழியறியா மல் மனைவி தன்னை நினைக்கி ருளோ என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் அவருக்கேற்பட்டது.
எழும்பியிருந்து கோப்பை யில் வைத்திருந்த தண்ணிரில் ஒரு டம் அடித்துவிட்டு கைவி ரல்களால் மூக்கை அழுத்திக் கசக்கிக்கொண்டு மீ ன் டு ம் பாயில் புரண்டார்.
சென்ற வாரம் வீட்டுக்குப் போயிருந்தபோது இரவு சாப்
பிடும் வேளையில் மனைவி கூறியது
மோதினரின் நினைவில் பட்டது.
கஷ்
"நீங்க ராவு பகலா.
டப்பட்டு சாகியீங்க. ஒழுங்கா
சம்பளம் தராட்டி எனத்துக்கு அதச்செய்த . . . *
"அப்படிச் செல்லவாண. அல்லாட பள்ளிவாசல்ல செய்த வேல இனி ஒழுங்காத் தருதாங்க போலிக்கி."
"ஒழுங்காத் தாரதான். ப ள் வி ச் சொத்தெல்லாம் தாரோ தின்டு தொலைக்கியா னியல். மோதீன் வெச்சி சரியால் சம்பளம் குடுக் கமட்டும் தெரியா. . . நீங்க முந்தியப் போல அத உட்டிட்டு 'முஹாபு" (மதநூல்) யாவாரம் செய்ங் கோ. ஒரு கரச்சலுமில்லை. ஊடு வாசலோட நிக்கேலும்"
அவருடைய மனைவி சொன் னதில் என்ன தவறிருக்கிறது? மூன்று உயிர்களைப் பசியால் தவிக்கவிட்டுவிட்டு "அல்லாவுக் காக" வென்று பள்ளிவாசலைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்
தால் என்ன அர்த்தம்?
அடுத்தநாள் அதிகாலையில் இருளையும்அமைதிய்ையும் கிழித் துக்கொண்டு அல்லாஹ9 அக் பர் அல்லாஹ" அக்பர்" என்று சு பஹ" க்கு பாங்கொலிக்க வில்லை. ஏன் மோதினரை மாத் திரமல்ல அவரது பெட்டி படுக் கைகளைக் கூடக் காணமுடிய வில்லை!
அல்லாஹ"க்காக" அவருக் கும் எதையும் செய்ய விருப்பம் தான். ஆனல் அவருடையதும் அவரில் தங்கியுள்ளதுமான இன்
னும் மூன்று வயிறுகளும் "அல் லாஹ்வு" க்காகப் பசிக்காமலி
குப்பதில்லையே!

Page 9
மன்னனுக்குப்
கரேலிய கிராமியக் கதை
பாடம் புகட்டிய இளைஞன்
(UPன்னெரு காலத்தில் ஓர் அரசனிருந்தான். அவனுக்குக் கதைகள் கேட்பதில் மிகவும் பிரியம். தினந்தோறும் ஒரு பு தி ய கதை சொல்வதற்கு அவன் தனது சேவகர்களை நாட் டின் நாலா பக்கங்களுக்கும் அனுப்பினன். ஏற்கெனவே மன் ணன் கேட்டிருந்த கதையை கூறினல், உடனே கதை சொல் பவனுடைய த லை வெட்டப் படும், அதுதான் நிபந்தன. மன்னன் ஒரு குறிப்பிட்ட கதை யைக் கேட்டிருக்கிருஞ இல் லேயா என்பது எப்படி மற்ற வர்களுக்குத் தெரியும்? எனவே தினத் தினம் பல த லை க ள் உருண்டு கொண்டிருந்தன.
ஆக, ஒருவருமே புதிய கதை சொல்ல மன்னரிடம் வரப் பயப்பட்டனர். மன்னனின் சேவகர்களோ, கதை சொல்ப வர்களைத் தேடித்தேடி அலுத் தனர்.
இறுதியில் மன்னன் சேவ கர்களை மிரட்டினன். 'யாரே னும் ஒரு கதை கூறுபவனை நீங் கள் பிடித்துக் கொண்டு வரா விடில் உங்கள் தலைகளுக்கும் ஆபத்து," என்முன்.
எதிர்பாராத வித மா க, அந்த நேரத்தில் ஒருவன் தைரி யமாக முன்வந்து மன்னனுக்கு கதை சொல்ல ஒப்புக் கொண் L-rreir.
மன்னனுக்கு மிக மகிழ்ச்சி; அந்த இளைஞனுக்கு ஒரு ஆசனம்
d
கொண்டு வந்து போடப்பட் l-go
'உம்! கதையை ஆரம்பி," என்ருன் மன்னன்.
'நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னர் உங்களது தாத்தாவும்: என்னுடைய தாத்தாவும் ஒன்று சேர்ந்து ஒரு நெற்களஞ்சியத் தைக் கட்டத் தொடங்கினர். அது மிகப் பெரிய களஞ்சிய மாக இருந்தது. அந்தக் களஞ் #Cಷಿ ஒரு மூலையிலிருந்து ஒரு அணில் மற்முெருமூலைக்கு ஒட ஒருநாள் பிடிக்கும். அவ் வளவு பெரியது. அதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர் களா, பிரபு?"
இல்லை, நான் கேள்விப் பட்டதில்லை, என்று ஒப்புக் கொண்டார் மன்னர்.
அப்படியானல் இன்றைக்கு இவ்வளவும் போதும் மீதிக் கதையை தாளை வந்து நான சொல்லுகிறேன். என்று Stars பிஞன்”அந்த இளைஞன்.
அடுத்த நாள், முன்னர் கதை கேட்கத் ਨੂੰ
ந்தார். ஞறும் வ ಕ್ಲಿಲ್ಲ: அவன் கூறத் தொடங் கினன்:
உேங்கள் ாத்தாவும் சர்ந்து கட்டிய களஞ்சியம் நினைவிருக்கி ;#ޒޯ றதல்லவா? அதில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெரிய sm“ðbrot வளர்த்தனர். அதன்

கொம்புகள் மிக அகலமாக இருந்தன. எவ்வளவு அகலம் என்ருல் ஒரு குருவி ஒரு கொம் பிலிருந்து மற்ருெரு கொம்பிற் குப் பறந்து செல்ல ஒரு முழு நாள் பிடித்தது; அதைப்பற்றி தீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்
Ger T?”
இல்லை" என்ருர் மன்னர்
அப்படி யானுல், இன் றைக்கு இது போதும் நான் தாளை வருகிறேன், என்று புறப் பட்டுப் போய்விட்டான் இளை (65dr.
மன்னருக்குக் கோபம் வந் தது.இரு இரு:நீ என்னையர் ஏமாற்றப் பார்க்கிருய்! உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று மனத்திற்குள் கூறிக்கொண்டார்
அடுத்த நாள் காலை, மன் னர் தனது சபையைக் கூட்டி. எல்லோரிடமும் இன்று அந்த இளைஞன் கதை கூறும்போது, அதை நான் ஏற்கெனவே கேட் டிருப்பதாகக் கூறுவேன். நீங் கள் எல்லோரும் என்னுடன் சேர்ந்து நீங்களும் அ  ைத க் கேட்டிருப்பதாகக் கூறவேண் டும்" என்று உத்தரவிட்டு விட் L-mic
மூன்ருவது நாளும், குறித்த நேரத்தில் இளைஞன் வந்தான். மன்னர் எக்காளப் புன்சிரிப்பு டன் வரவேற்ருர்,
இளைஞன் தாடர்ந்தான்; "பின்னர் உங் கள் தந்தையும், என் தந்தை யும் அண்டை நாட்டு மன்னர் களாக இருந்தபோது உங்கள் தந்தையார், என் தந்தையிட மிருந்து 40 மூட்டைத் திங்கத் தைக் கடனுக வாங்கி, அதை நாற்பது குதிரைகளில் ஏற்றிச்
க  ைத  ைய த்
சென்ஜர்: அதை நீங்கள் .ே டிருக்கிறீர்களா?
&F 6öpu u Giŝtonrnjo களுக்கு மன்ன
ரின் உத்தரவுதான் நினைவில் இருந்தது, அவர்கள் அனைவரும் ஒருமுகமாக, "ஆமாம்!ஆமாம்! தாங்கள் அதைக் கேட்டிருக்கி ருேம்" என்ருர்கள்.
"அப்படியானல், பிரபோ, நீங்கள் அந்தக் கடனைத் 8Փւն பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என் முன் இளைஞன்.
மன்னர் விழித்தார். F6 யோர்கள் அனைவரும் மன்னர் கடனளிதான் எ ன உறுதிப் படுத்திவிட்டனர். வேறு வழி இல்லாமல் தனது பொக்கிஷம் முழுவதையும் சுரண்டி எடுத்தும் ஒருமுட்டை தங்க ம் தா ன் சேர்ந்தது.
அந்த இளைஞன் ஒரு மூட் டைத் தங்கத்தையும் எடுத்துக் கொண்டு, மீதிய்ை பின் ன ர் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்வி ஒட்டம்பிடித்தான்.
அதற்குப் பின்னர் மன்ன
தக்குக் கதை கேட்கும் அசை போய்விட்ட்து. கும் ஆ
பசு நெய்யிட்ட கோழிப் புரியாணி உண்ட தை துடைக்க
* உதவும்
திருவாசகத் தாள்கள்
'osurr'

Page 10
கவிதைகளுக்கு
க்பா, ஜெயராசரி
இயற்கை வருணனைகள்
கவிதைகளில் இயற்கை வருணனைகள் இடம்பெறுவது நெடுங்காலமான வழக்கமாகி Gf. L-gil · ஆனல் இவ் வழக கத்தின் இன்னும் பின்பற்று ”தேவைதானே என்பது கேள்விக்குரியது
மூங்கில் இலை Gun(s) தூங்கு பணி ËGJ தூங்கு பணி நீரை வாங்கு கதிரோனே'
போன்ற கிராமியப் பாட ல்
யற்கையின் நேரடியா இத் திரிப்பாகவுள்ளது. உவமை, உருவங்கள் கற்பனைகள், முத லியன இங்கு இட்ம்பெறவில்லே இக்கவிதை இயற்கைச 9岛剑 ரிப்பின் ஆரம்பக் கட்டமாகவே u46ir67g • மலரைச்
* சந் திரனைப்
க்கோ , நட்சத்திரங்களை
வைரங்களுக்கோ, உவமித்த கவிதையாக்கங்கள் இயற்கை வருணனை வளர்ச்சியின் தொரு கட்டத்தினைக் இன்றன.
கவிதை மனிதவரலாற்றின் ஆரம்பத்தில் தோன்றிய இலக்
காட்டு
அவசியமோ?
கவர்ச்சியான மலர்களும்
பிறி
கிய வடிவமாகையால், இயற் கையை மனிதத்திறனினல் வசப் படுத்தலாமென்ற தன்முனைப் பான எழுச்சியினைப் பரவலாக விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இயற்கையின் பிடி இலக்கியத்தில் தளராத வலு வாக இருந்தது. இயற்கை நிகழ்ச்சிகள் பயத்தினையும், மகிழ்ச்சியையும் ஊட்டின. பெரு Lb 60lf, இடிமுழக்கங்கள் பயத் திண்யும் கிலியினையும் கொடுத் தன. இதமான காலைகளும், மெதுவான காற்றுக்களும்
இன் பத்தையும் கவர்ச்சியினையும், கொடுத்தன. இவற்றினை அடிப்
படையாகக் கொண்ட கவிதை யாக்கங்களும் இடம்பெறத் தொடங்கின. இயற்கையைத் தாம் கண்ட கோணங்களிலே
கவிஞர்கள் பாடினர்கள்.
அன்று தொட்டு இன்று வரை காலை மாலைக்காட்சி ஆகாயம் தடாகம், தாமரை, முல்லை, காடு கழனி, கடல் அலை, முதலியவற்றைக் கவிஞர் கள் ஏன் பாடவேண்டும்? முன் னைய கவிஞர்கள் பாடிவிட்டார் கள், நாமும் பாடுவோம்மென்று "மரபைக் காப்பாற்றுவோர்"

ஒருசாரார். உண்மையிலே இயற்கை மனத்தைப் பறித்து விட்டதால்" பாடுவோர் இன் னுெரு வகையினர். இவைதான் "நித்திய இன்பம் தரவல்ல கவி தைப் பெருட்கள்" என்று பாட் டிசைப்போர் வேருெருசாரார். பத்திரிகை, அல்லது வானுெலி ஒரு தலையங்கத்தைத் தந்ததி ஞல் பாடுவதாக வேருெரு
வகையினர் கூறுவார்கள். கவி தைகள் காவியங்களில், மட்டு மன்றி, நவீன இலக்கிய வடிவங் களிலும் இயற்கையை பூசிக்கும் பண்பு காணப்படுகின்றது.
இலக்கியத்தின் இயக்கப் பண்பினை மறந்து முன்னைய பிடி யினைவிடாப் பிடியாகப் பிடித் தல் விரசத்தினையும் உண்டாக் குகின்றது.
:மஞ்சல் குளித்து முக மினுக்கி - இந்த மாயப் பொடி வீசி நிற்கும் நிலை கஞ்ச மகள் வந்து காணிற் சிரிக்குமோ கண்ணீர் உருகுமோ? யாரறிவார்.
என்று சூரியகாந்தியைப் பாடு வதில் "இரசிப்பதற்கு" என்ன par?
மனிதனது உழைப்புத்திற ஞல், இயற்கை மலர்களிலும் அழகான மலர்கள் தொழிற் கூடங்களிலே தயாராகின்றன, தென்றலிலும் இதமான குளி ரூட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டன. பூகம்பத்தைத் தாங் கக்கூடிய வீடுகள் கட்டப்படு கின்றன. இந்நிலையில் இலக்கி யத்தின் நோக்கினைத் திசைதிருப் புவதற்கும் இயற்  ைக  ையப் பாடல் தன்முனைப்பாகப் பயன் படுத்தப்படுகின்றன .
கதிர் தந்து குலுங்கி நிற் கும் வயலின் அழகைக் கண்டு குதூகலித்துப் பாடுபவர் அதனை உருவாக்கிய உழைப்பை மறந்து விடுவாராணுல், அல்லது மறைப் பதற்கு முயன்ற ராணுல், இலக் கியம் குறையுருவமாகி விடுந் தானே!
தென்னந் தோப்பில் தென் றல் சிறகடிப்பதும், நாணங்
செயலிலீடுபடுத்தும்
கொண்ட பெண்கள்போல நெற் கதிர்கள் தலைசாய்ந்து நிற்பதும், குயிலைத் தூதுவிடுவதும், கேட் டுக் கேட்டுப் புளித்துப்போன சொற்ருெடர்களாகி விட்டன. இச் சொற்ருெடர்கள் அலுத் துப் போனமைக்குரிய காரணம் வாழ்க்கைப் போரில் இவற்றின் பங்கு அரிசியும் தவிடுமற்ற வெறும் உமியாகிக் கிடப்பதே யாகும். ஆனல் இயற்கையை உழைப்புக் கண்ணுேட்டத்தில் பார்க்கும்பொழுது, அக்காட்சி நிறைவுள்ள காட்சியாவதை மறுக்கமுடியாது.
மா வலி நதியைப் பெண் ணுக்கு உவமித்து, அதன் தன் மைகளைப் பெண்களின் தன்மை களுக்கும் வலிந்து பொருத்தி ஒட்டுப்போடும் பொழுது நதி யின் அழகும் பெண்ணின் அழ கும் சீரழிக்கப் படுகின்றன. ஆனல் மனிதவுழைப்பை மாவ லியில் செலுத்திப், பயிரும், வலுவும் பெற முயற்சிக்கும் க வி ைத யாக்கத்தில் நதியின் அழகு சீரழிக்கப்படவில்லை.
盈?

Page 11
என்னத ான்
நடக்கின்ற து?
மல்லிகை சி. குமார்
அந்த வீட்டின் ஸ்தோப்
பில் ஒரு குப்பி விளக்கு புகை யைக் கக்கியவாறு எ ரிந்து கொண்டிருக்கிறது. *
அதன் புகை மூக்கில் ஏறு.
வதைக் கூடப் பொருட்படுத்தா மல் இந்த தோட்டத்தின்_இன் றைய நிலையைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர் அண்ணு
மலையும் அடுத்தவீட்டு ஆறு முகமும் .
*அண்ணுமலை. . . இந்தத்
தோட்டத்து சனங்க தலையில்
இப்படியொரு இடி விழுமென்று
நான் கொஞ்சமும் எதிர்பார்க் கல்ல'
"என்ன.. ஆர்மோ. நான் மட்டும் எதிர்பாத்தேனக் கும். யாரோ ஒரு முதலாளி இந்த தோட்டத்தை வாங்கப் போருன்னு சொன்ஞங்க அட அந்த முதலாளி வாங்கின என் னக் குடி முழுகிடப் போவுது. நமக்கு வேலை கொடுத்துதானே தீருவான், என்று அசட்டையா கத்தான் இருந்தேன். ஆன. இப்பத் தலைக்கு மேலே வெள் ளம் வரப்போவுது
எல்லாப் பயிலுங்களும் ஒன்ன சேர்ந்துக்கிட்டு நம்மத் தொழிலாளிங்க வ யி ற் றி ல் மண்ணை வாரிப் போட்டுட்டா
8
னுங்களே. அவனுங்கெல் லாம் உருப்படுவாஞ?" என்று உளம் நொந்து சொன்ன அண் னமலை எச்சிலைக் காறிப் பக்கத் திலுள்ள பணிக்கத்தில் துப்பி விட்டு “ஆர்மோ. நாற்பது
வருஷத்து மேல நாம இந்த தோட்ட த்தில் வாழ்ந்திட் டோம். ஆன இப்படியொரு
அநியாயம் இதுவரைக்கும் நடக் கல்ல. இந்த தோட்டத்தை அடுத்த முதலாளிக்கு விற்கப் போறேன். அதுக்கப்புறம் உங் களுக்கெல்லாம் இங்கே வேலைக் கிடைக்காமல் போ னு லு ம் டோ குழுன்னு அந்தப் பழைய
துரை ஒரு வார்த்தை சொன்
னணு . . ? பாவி மூடிவச்சேக் கழுத்தறுத்திட்டான். அட.. அவன்தான் அப்பிடி செஞ்சிட் டான்னு . இந்த தோட்டத்தை புதுசா வாங்கின முதலாளி என்னு சொல்லுருன் தெரியுமா?
“எனக்குத் தேயிலை தேவை யில்லை நான் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தப் போறேன். அதை எல்லாம் கவனிக்க வெளி யிடத்திலிருந்து ஆட்கள் வரு வாங்க" என்று சட்டம் போட் டிட்டான். அப்படின. இவ் வளவுக் காலமா இந்த நிலத் தில் உழைத்த நம்மக் கதி? கேள் விக் குறியை எழுப்பிய அண்ணு மலை ஆறுமுகத்தை நோக்கினர்.
"நம்மக் கதி என்னுவா .. அதுதான் அந்த புது முதலாளி நேத்து சொன்னுணும் . . நாஃாக்குள்ள இங்க . . இந்த மண்ணில் உழைச்ச நம் ம த் தொழிலாளிங்கெல்லாம் இந்த நிலத்தைவிட்டு வெளியேறிடணு முன்னு கட்டளைப் போட்டுட் ம்ே கட்டளை 1 ஆத்திரத் சொன்ன ஆறுமுகத்தின் சண்கள் சிவந்தும் வார்த்தை கள் சினந்துமிருந்தன.

வெளிப்புற வாசல் நிலையில் சாய்ந்தபடி இவர்களின் வார்த் தைகளைக் கேட்டுக் கொண்டி ருந்த ராக்கம்மாவை ஏறிட்டுப்
பார்த்தார் அண்ணுமலை. விளக்
கொளியில் அவளின் முகத்தில் பொதிந்து கிடக்கும் வேதனையை அவரால் நன்கு அறியமுடிந்தது. ராக்கம்மா கார்த்திகேசு வரவுக் காகத்தான் நிலை ப் படி யில் காத்து நிற்கிருள் என்று தனக் குள் எண்ணிக்கொண்ட அண்ணு மலை வலதுபுறக் காதில் செருகி வைத்திருந்த சுருட்டுத் துண்டை எடுத்து விளக்குச் சுடரில் காட்டி இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு வாயில் ஊறிய எச்சிலைத் துப்பி விட்டு ஆர்மோ . நம்மல விடுய்யா நாமெல்லாம் ஐந்து வருஷத்துக்கு முன்னமே பென் ஷன் வாங்கி ஐந்தே நாளில் தின்னுக் கழிச்ச கட்டைங்க: இன்னைக்கோ நா ளை க் கோ தாலாள் தலைமேல் காட்டைப் பார்த்துப் போறவுக. ஆன. இன்னக்கி இந்த தோட்டத்தில் வாழும் இளசுகளை எண்ணிப் பாரையா. அதுகளோட எதிர் காலம் என்ஞகும்? எம் மகன் கார்த்தியையே எடுத்து க்கு வோம். அவனுக்குக் கல்யாணங் கட்டி இன்னும் ஆறு மாசம் முடியல்ல. அதுக்குள்ள அவன் மனைவியோட வாழும் இந்த வீட்டிற்கே இப்படியொரு இக் கட்டு வந்திடுச்சி. ரவ்வோடு ரவ்வா வந்து வீட்டுக் கூரை யைப் பிரித்துப் போட்டாலும் போடுவான் இந்த புது முத லாளி. அதுக்கப்புறம் நாமெல் லாம் நடு த் தெருவில் தானே நிற்கணும் . . ’ என்று வேதனை யோடு சொன்னர் அண்ணுமலை.
*இந்தா. இதுக்கெல்லாம் நாம கவலைப்படக் காலம் காலமாக நாம இந்த
கூடாது.
நிலத்தில் உழைச்சவுங்க. நேத்து வந்த அந்தப்புதுப் பய நம்மை எல்லாம் ஒடுன்னு சொன்னப் பில நாம் ஒடனுமாக்கும்!" துணிவோடு நிமிர்ந்து சொன்ன ஆறுமுகம், பின் ஏதோ ஒரு நினைவில் முகத்தை முழங்காலு களுக்கிடையில் பு ைத த் துக்
கொண்டு யோசனையில் ஆழ்ந்
தார்.
கையில் கனிந்து கொண்டி ருக்கும்சுருட்டை இழுத்தபடியே Trr J55). DfT 60) 6t பார்த்தார் அண்ணுமலை
அவள் கதவில் சாய்ந்தபடி நிலவொளியில் மங் கலா கத் தெரியும் வெளிச் சூழலை நோக் கிக் கொண்டிருந்தாள்.
d
"இந்தா. . புள் ளே! நீ ஏம்மா இப்படி வாசற்படியி லேயேநிக்கிற? உள்ள போம்மா கார்த்தி இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான்தானே. நீ உள்ளப் போய் இரும்மா."
அண்ணுமலையை வெறித்துப் பார்த்த ராக்கம்மா 'மாமா. எனக்கென்னமோ இருக்கு. அவரை இ ன் னும் காணுேமே. PP
"இந்தாம்மா.. நீ ஏன் இதுக்கு இப்படி பயந்து சாவுர? அப்படி அவன் எங்கப் பொ ருக்கான், நம்ம சங்கத்து ஜில் லா வுக்குத்தானே. அதும் அவன் மட்டுமா போயிருக்கான். இல் லேயே. பத்தோட பதினென்ன போயிருக்கான். பிரதிநிதி அய்யா நமக்கெல்லாம் என்னு முடிவு சொல்லப் போருங்கன்னு கேக்கப் போனவுங்க. எப்படி யும் நேரம் தாழ்த்தித்தானே வருவாங்க. நீ இதுக்கெல்லாம் Frän 95 - L - Gunt Lort? GëLuft, .....
9

Page 12
பணியில் நனையாமல் உள்ளப் Gurruborr...... * என்று ராக்கம் மா வைப் பார்த்து ஆறுதலாகச் சொன்னர் ஆறுமுகம்,
"ஆமாய்யா ஆர்மோ.. நான் சொல்லியும் அதுக் காதில் விழுல்ல. நீயும் வேற சொல் லய்யா" அலுத்துக் கொண்டார் அண்ணுமலை.
ராக்கம்மா அந்த இருவ ரையும் மாறி மாறிப் பார்த் தாள். "நான் அவரைக் காணத் துடித்துக் கொண்டிருக்கின்றேன் அந்தத் துடிப்பைப்பற்றி இவர் களுக்கென்னத் தெரியும். . தனக்குள் எண் ணி நொந்து கொண்ட ராக்கம்மா வெளியில் எட்டிப் பார்த்தாள். பக்கத்தி லுள்ள குடியிருப்புகளெல்லாம் நிலவொளியில் மங்கலாக . . பயங்கர அமைதிக்குள் மூடிக் கிடந்தன. எதிரே உள்ள குன் றில் கட்டப்பட்டிருக்கும் துரை பங்களாவின் முகப்பில் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கு மட்டும் பள்ளத்திலுள்ள ஏழைத் தொழிலாளியின் குடியிருப்பைப் பார்த்து ஏ ள ன ம் செய்வது போல பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒளி at 1U Lunt IT sys I unt IT 3, & print 35 கம்மாவிற்கு உடம்பெல்லாம் எரிவது போன்ற உணர்வு தட் டியது. இவ்வளவு காலமாய் இந்த மண்ணில் உ  ைழ த் து வாழ்ந்துகொண்டிருக்கும் தொழி லாளர் வாழ்க்கையில் மண்ணைப் போடுவதற்கென்றே வந்திருக் கும் புது முதலாளி களாவில்தானே இருக்கின்றன் என்பதை எண்ண அவளுக்கு ஆத்திரமாக இருந்தது மேலும் வெளியில் நிற்க விரும்பாதவள் வீட்டிற்குள் போய் அடுப்பங் கரையில் அமர்ந்துகொண்டாள்.
20.
அந்த பங்
ஸ்தோப்பில் அமர்ந்திருக் கும் கி ழ ட் டு க் கட்டைகள் எதை எதையோ பேசிக்கொண் டிருந்தனர். -
இவர்களின் பேச்சு
grë கம்மாவிற்குப் பட்டும் படா மலும் கேட்டுக் கொண்டிருந்
தன. எனவே அவள் தன் கவ
னத்தை இதில் ஈடுபடுத்தவில்லை அ வளி ன் எண்ணமெல்லாம் கணவன் கார்த்திகேசுவைச்
சுற்றியே வலம் வந்தன.
‘ராக்கம்மா.. Ձ) ւն ւմ இங்கே நடக்கிற பிரச்சினை சாதாரணப் பிரச்சினையில்ல. ஒவ்வொரு தொழிலாளியின் வாழ்க்கைப் பிரச்சினை. இவ்வ ளவு காலமாய் வாழ்ந்த மண்னை விட்டுவிட்டு * வெளி யே ப் போடான்னு கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுகின்ற அளவுக்கு முத்திவிட்ட ஒரு பயங்கர நிலை யில் நாம் இருக்கிருேம். நம்ம தொழிலாளர் வர் க் கத்  ைத நமக்கு மேலே இருக்கிற ஒரு வர்க்கம் போட்டு அமுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அமுக் கலில் இருந்து நாம் விடுபட. ஒரு சரியான தீர்வைக் காண் பதற்காகத்தான் நாம் முயன்று கொண்டிருக்கிறேம். இன்றைக்கு ஜில்லாவில் இதைப்பற்றி ஒரு முடிவெடுக்கத்தான் பிரதிநிதி ஐயா எல்லாரையும் ஜில்லா வுக்கு வரச்சொல்லி இருக்குருர். யாரோ ஒரு பெரிய தலைவர் கூட வரப் போருராம். நானும் போய் வருகிரேன் ராக்கம்மா" என்று சொல்லிவிட்டு மத்தியா னத்திற்குப் பிறகு தன் கட்சிக் காரியாலயத்திற்கு சில தொழி லாளர்களுடன் போன கார்த் திகேசு இன்னும் திரும்பாமல் இருப்பது ராக்கம்மாவுக்கு மிக வும் வேதனையாக இருந்தது.

அந்த வேதனையை மாற்றும் தன்மையில் "ராக்கம்மா" என்று அழைத்தபடி வீ ட் டி ற் கு ன் நுழைந்தான் கார்த்திகேசு.
ஸ்தோப்பில் அ ம ர் ந் து கதைத்துக்கொண்டிருந்த அண் னமலையும் ஆறுமுகமும் இவனேக் கண்டதும் வீட்டிற்குள் வந்து இவனேச் சூழ்ந்து கொண்டனர். "ஏம்பா .. கா ர் த் தி பேரன விஷயம் என்னச்சி?
யூனியன் ஓபிசி ல் என்ன
சொன்னுங்க. அந்த புது முத லாளியோடு பேச்சுவார்த்தை நடத்துணுங்களா? அவன் என்
னமோ சர்வாதிகாரி போ ல நம்மை எல்லாம் வீட்டைவிட் டுத் துரத்துகிற அளவு க்கு அவன் சட்டம் போட்டிருக்கா ஞமே. அந்த சட்டம் எல்லாம் தவுடு பொடியா பொயிருச்சா?" ஆர்வத்துடன் கேட்ட அண்ணு மலைக்கு எந்தவிதப் பதிலும் சொல்லாது மெளனமாக நின்
மெளனத்தை கண்ட ராக்கம்மா "என்னங்க... . என்ன முடிவு சொன்னங்க"
"அந்த புது முதலாளியோட வெறிக்கு நாம பலியா சத்தான் ஆகணுமா?" என்று கேட்டாள்.
அவளேக் கூர்ந்து பார்த்த கார்த்திகேசு, "ராக்கம்மா.. இன்னைக்கி எந்தவித முடிவும் பொறக்கலடி நாளைக்குத்தான் முடிவு சொல்ல முடியுமாம். அதுவரைக்கும் நம்ம தொழிலா ளர்கள் ரொம்ப அமைதியா இருக்கும்படி பிரதிநிதி சொல் லிவிட்டார். ஒருவித விரக்தி யோடு சொன்னன்.
என்னப்பா கார்த்தி. . இதைக் கேட்டிட்டு வரவா இவ்வளவு நேரம்? ஏதோ ஒரு
நல்ல தீர்வை சொல்லுவாங் கன்னு எதிர்பார்த்துக்கொண்டி ருந்தேனே என்று அங்கலாய்த்த ஆறுமுகம் 'தம்பி. . . நம்மத் தலைக்கு மேல பெரிய எரிமலை, புகைந்துகொண்டு இருக்கு. எந்த நேரத்தில் அது வேடிக் கும் என்று சொல்ல முடியாது. ஏதுக்கும் நாம எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" என்ருர், அவ ரின் பேச்சிலிருந்து வெடித்த உண்மையை உணர்ந்த கார்த் திகேசு "எந்த நேரத்திலும் அந்த புதுமுதலாளியால் இந்த தொழி லாளர்களுக்கு ஆபத்து ஏற்பட லாம்" என எண்ணிக் கொண்ட வன் அச்சத்துடன் நிற் கும் ராக்கம்மாவைப் பார்த்தான். ஏதோ ஒருவிதத் த வி ப் பில் மிரள மிரளப் பார்த்தபடி இருந் தாள். அதே நேரத்தில் ஒரே கூக்குரல் வெளியில் கிளம்பியது.
கார்த்திகேசு பதட்டத்து டன் வெளியில் வந்து எட்டிப் பார்த்தான். அவனுக்குப் பின் ஞல் ராக்கம்மாவும் மற்றவர் களும் ஓடிவந்தனர்.
கோவில் முற்றத்தில் ஒரு ஜீப் வண்டியும் அதை சூழ்ந்து மக்கள் நிற்பதும் நிலவொளியில் மங்களாகத் தெரிந்தது. என்ரு லும் அவர்களின் கூக்குரல் பெரி தாகக் கேட்டது.
ஜீப் வண்டி புது முதலாளிக் குச் சொந்தமானதுதான் என் பதை நில வு வெளிச்சத்தில் அடையாளம் கண்டுகொண்ட ஆறுமுகம் "க்ார்த்தி. தலைக்கு மேல வெள்ளம் வந்திருச்சி. அந்தப் புதுப்பய ஆளுங்கக்கிட்ட தகராறு பண்ணத்தான் இந்த இருட்டு நேரத்தில் வந்திருக் கான்" என்றவர் வேட்டியை தூ க் கி க் கட்டிக் கொண்டு கோவில் முற்றத்தை நோக்கி ஒடிஞர். அவருக்குப் பின்னல்

Page 13
  

Page 14
லுறன். உங்கடை சாமானுகள் எல்லாத்தையும் 5 GI GðIT LID FT வையுங்கோ'
பயணிகள் மீசைக்காரனின் பேச்சை உன்னிப்பாகக் கேட் கின்றனர். நேத்துப் பின்னேரம் இதே பஸ்ஸைத்தான் ஆருங் கட்டையிலை வைச்சு கொள்ளை அடிச்சுக்கொண்டு போனவங் கள். என்ரை காசு ஒரு பன்னி ரண்டு ரூபாவையும் கொண்டு
போட்டாங்கள். பொண்டுக ளின்ரை நகை தாலிக்கொடி எல்லாத்தையும் க ழ ட் டி க்
கொண்டு போட்டாங்கள். சப் பாத்துகளுக்கை கூட சாமான் ஏதும் இருக்கோ எண்டு தேடு
வாங்கள்"
திடீரென்று பயணிகள் கூட் டத்தில் ஒரு சலசலப்பு. மத்தி யிலிருந்த சீற்றுகளில் மூன்று பெண்மணிகளும் இரண்டு சிறுமி களும் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். அவர்கள் முகங் களில் மிரட்சி, முன் சீற்ரிலிருந்த
கட்டையான மனிதர் தனது மனைவியிடம் வருகிருர் . அவரு டைய மனைவி சர்வாலங்கார
பூஷிதையாகத் தனது பணச் சிறப்பை பிரகடனப் படுத்திக் கொண்டு சொர்ண லட்சுமியா கப் பிரயாணம் செய்து வந்தவர்,
* என்ன செய்வம் இந்த நகையளையெல்லாம்? கழட்டு எங் கையும் பவித்திரப் ப் டு த் தி வைப்பம்" அவருடைய பேச்சு அச்சத்தினுல் தடுமாறுகிறன. மனைவி கலங்கிய முகத்துடன் நகைகளையெல்லாம் ஒவ்வொன் முகக் கழற்றுகிருள். தாலிக் கொடியைத் தவிர எல்லாவற்
றையும் கழற்றியாகி விட்டது அதைக் கழற்ற விரும்பவில்லை அப்பெண்மணி. *அ  ைத யும்
கழட்டு அந்தச் சிறிய மனித
24
ருக்கு பயத்தின் நடுவே தமது மனைவியை எண்ணிக் கோபமும் வருகிறது. ‘சொன்னுல் கேக்க மாட்டாய், இருக்கிற எல்லா நகையையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வாறது" எல்லா நகை யையும் ஒரு பெ ட் டி க் கு ஸ் அடைத்து அதைத் தம்முடன் கொண்டு செல்கிருர் அவர் . களைப்பினுல் களையிழந்து, பயத் தினுல் மிரண்டு, நகைகளையும் எல்லாம் இழந்து நிற்கும் அப் பெண்மணியைப் பார்க்க பரிதா பமாயிருக்கிறது.
மற்றப் பெண்மணிகளும் தம்முடைய நகைகளைக் கழற்று கின்றனர். அந்தச் சின்னக் குழந்தையின் காதணிகள் வளை யல்கள் என்பனவும் கழற்றப் படுவது பார்க்கச் சகிக்கவில்லை. பத்துப் பன்னிரண்டு வயதுடைய சிறுமியர் இருவர் தமது காத ணிகளைக் கழற்றித் தாயிடம் கொடுக்சின்றனர். "அம்மர புரி எங்கையோ கழண்டு விழுந்து போட்டுது" தாய் கோபத்தில் வெடிக்கிருள். 'சனியன் எங்கை போனலும் இப்படித்தான்.' "நல்லாத் தேடிப்பார் சிறுமி சீற்றுக்குக் கீழே தேடிப் பார்க்கி ருள். "இங்கை இருக்கு" தாய் நகைகளை ஒரு பொட்டலமாகக் கட்டி "நெஞ்சகத்துள்' வைத் துக் கொள்கிருள். சிறுமியர் இருவரும் அழாத குறை.
நன்முக இருண்டு விட்டது. பஸ் வவுனியாவை விட்டுப் புறப் பட்டது. பயணிகள் அனைவருக்கு மிடையே ஒரு திகில் போர்வை. நிசப்தம். மீசைக்காரன் மறுப யும் அமைதியைக் குலைக்கிருன். *எல்லோரும் ஏன்பயப்பிடுறியள்? அவங்கள் வந்து கேட்டால் இருக் கிறதைக் குடுத்துவிட வேண்டி யதுதானே. அடிச்சுக்கொல்லவே போருங்கள் இந்த ஹாஸ்யம்

அவர்களிடையே எடுபடவில்லை.
அந்தப் பெண்மணி கேட்கி ருள். "இன்னும் கனதுாரம் இருக்குதோ அந்த இடத்துக்கு?"
"பொறுங்கோ நான் அந்த இடம் வரேக்கை அவங்களும் பாத்து யாழ்ப்பா ணத்து பஸ்ஸைத்தான் எப்பவும் மறிக்கிருங்கள். எங்கடை ஆக் கள்தானே பெட்டிக்கிளை இருக் கிற எல்லாத்தையும் எடுத்துப் போட்டுக் கொண்டு *ஷோக் காட்ட வாறவை" நடுத்தர வய துள்ள ஒருவர் தனது கைக்கடி காரத்தைக் கழற்றி வைத்தபடி அங்கலாய்க்கிருர்,
பஸ் அடர்ந்த காட்டினுT டாகச் செல்கிறது. திடீரென்று ஒரு பிரேக் போட்ட சத்தம். பஸ் நிற்கிறது. பிரயாணிகள் முகத்தில் திகில் படர்கிறது. நகையிழந்து பரிதாபக் கோலத் தில் நிற்கும் பெண்மணி முருகா முருகா" என முணுமுணுக்கிருள். *சந்நிதிக் கந்தா, இதிலையிருந்து என்னைக் காப்பாற்றினுல் உனக்கு பாலாலை அபிஷேகம் செய்வன்" "இந்தச் சனியன் பிடிச்ச நகை யளை ஏன்தான் போ ட் டு க் கொண்டு வந்தேன், பேசாமல் பெட்டியிலை போட்டுட்டு வந்தி
ருக்கலாம். இதுகளாலே எவ்வ ளவு கரைச்சல் "இனி ஒரு நாளும் இப் படி நகைகளைப்
போட்டுக்கொண்டு வரக்கூடாது" பெண்கள் மத்தியில் சுடலை ஞானச் சிந்தனைகள்.
பஸ்ஸிலிருந்து டி  ைர வ ர் இறங்கி கீழே செல்கிருன். அவ னைத் தொடர்ந்து சில பிரயா னிகள். அனைவரும் பஸ்ஸினுள் ஏறுகின் றனர் "டிரைவர் பயத்திலை கண் மண் தெரியாமல் ஓடி மாடு ஒண்டை அடிச்சுப் போட்டான்'
காட்டுறன்.
சிறிது நேரத்தின் பின்
பிரயாணிகள் ஒருவருக்கொருவர் குசுகுசுத்துக் கொள்கின்றனர் பயணம் தொடர்கிறது.
அடர்ந்த காடுகளினூடாக படு வேகத்துடன் பஸ் செல்கி றது. இதுதான் ஆருங்கட்டை நேற்றுக் கொள்ளைநடந்த இடம்" மீசைக்காரன் இடத்தைக் காட் டுகிருன், திடீரென்று பஸ் மறு படி நிற்கிறது. முன்னுல் ஒரு லொறியிலிருந்து இரண்டு பச்சை யூனிபாம் அணிந்த ராணுவ வீரர்கள் பஸ்ஸினுள் நுழைகின் றனர். பிரயாணிகளின் அச்சம் அதிகரிக்கிறது. கொள்ளைக்கார ரும் ராணுவ வீரர்போல் வந்து கொள்ளையடித்துச் சென்றிருப்ப பதாகக் கேள்விப்பட்ட கதைகள் நடுத்தர வயதுள்ள அம்மனி தரை மேலும் கலங்கச் செய்
கின்றன. "இ தி யாருடைய பெட்டி ராணுவ வீரர் ஒவ் வொன்ருக பஸ்ஸிலுள்ள எல்
லாப் பெட்டிகளையும் சோதனை யிட்டு விட்டுச் செல்கின்றனர். அவர்களுடைய லொறி புறப்ப டுகிறது.
பஸ் வெளிக்கிடுகிறது. காடு கள் பற்றைகள் வயல்வெளிகள் கடந்து செல்கின்றது, வழியில் ஏறுவோர் மீதெல்லாம் சந்தே கக் கண்ணுேட்டத்துடன் பயணம் தொடர்கிறது. தம்மிடமுள்ள நகைகளெல்லாம் க ல் லா க க் கனப்பதுபோல் பெண்களுக்குத் தென்படுகிறது. அந்தச் சின்னக் குழந்தை மட்டும் உறக்கத்தில் சிரிக்கிறது. சிறுமிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த படி துரங்குகின்றனர். முன்னே யிருக்கும் ஆண்களும் பயத்துடன் அமைதியாக இருக்கின்றனர்.
ஒருவாருக பஸ் ஹொறவப் பத்தானையைத் தா ன் டி பன் குளத்தை அடைகிறது. ‘இனிப்
25

Page 15
பயமில்லை இஞ்சாலை பொலிஸ் காவல் கூட, குடியிருப்புகளும் கூட" பயணிகளில் ஒருவர் கூறு கிருர், பயணிகள் எல்லோருக் கும் இப்போதுதான் பழையபடி முகத்தில் களை வ ரு கிற து. "பாருங்கோ இந்தக் கொள்ளைக் காரங்கள் ஒரு இரண்டு மூன்று பேர்தான் வருவாங்கள். பஸ் ஸ்"க்குளை இருபது மு ப் பது பேரிலை ஒரு இரண்டு பேராவது துணிஞ்சு அவங்களை மடக்க வேணுமென்று நினைச்சா மடக்க ஏலாதே? சிங்களவங்கள் எண் டால் துணிஞ்சு செய்து போடு வாங்கள் தம்முடைய வாட்சை பெனியனுக்குள் இருந்து எடுத் துக் கையில் கட்டிக் கொண்டே அந்த நடித்தர வயதுள்ள மனி தர் கூறுகிருர் .
குழந்தையுடனும் சிறுமிய ருடனும் பயந்தபடி இருந்த அவர்களின் தாயார் அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பி காத ணிகளையும் வளையல்களையும் அணிவிக்கிருள். ‘மலை வந்திட் டுதோ அம்மா? சிறுமியர் வின வுகின்றனர். அந்தக் குழந்தைக் கும் உறக்கத்திலேயே அதன் வளையல்களையும் சங்கிலியையும் தாய் அணிவிக்கிருள். குழந்தை விழித்துப் பார்த்துவிட்டு பின் தூக்கத்தைத் தொடர்கிறது. பின் தானும் தன்னுடைய நகை களை எடுத்து அணி கி ரு ள். அணிந்த அப்பெண் நகையின்றி இருக்கும் மற்றப் பெண்மணியை யதேச்சையாகப் பார்க்கிருள். நகையின்றி ‘முருகா முருகா’ என்றபடி இதுவரை பிரார்த் தித்தபடி வந்த பெண்மணிக்கு தன்னை அ வ ள் ஏளனமாகப் பார்ப்பதுபோல் தோன்றுகிறது. அவளுடைய நகையோ சீற்றில் இருக்கும் கணவனின் பெட்டியில் இருக்கிறது. தனது பக்கம் திரும்பாமல்
2
முன்
இருக்கும்
கணவன்மீது கெட்ட கோபம் வருகிறது அவளுக்கு. ‘இந்த மூளிக் கோலத்தில் எவ்வளவு நேரம் இருக்கிறது' தனக்குள் அவள் புகைந்து கொள்கிருள்.
பன்குளத்தில் சிறிது தூரம் சென்று பஸ் ஒரு தேநீர்க்கடை யின் முன்னல் நிற்கிறது. நகை யின்றி அந்தரப்பட்டுக் கொண் டிருக்கும் பெண்மணியிடம் அவ ளது கணவன் வருகிருரர். "தேத் தண்ணி குடிக்கப் போறியோ?"
*தேத்தண்ணி வேண்டாம் அந்த நகையளைத் தாங்கோ. நகையளில்லாமல் வெறுங்களுத் தோடையும் கையோடையும் எவ்வளவு நேரம் பிரமசத்தி பிடிச்சதுபோலை இருக்கிறது" கணவனிடம் அவள் கடுகடுவெ னப் பொரிந்தாள், ܫ
அவன் பெட்டியை அவளி டம் கொண்டுவந்து கொடுக்கி ரு ர். அவள் அவசர அவசரமாக
நகைகளை அள்ளிப் போட்டுவிட்டு
பக்கத்திலிருந்த பெண்மணியை ஒருவித செல்வப் பெருமிதத்து டன் பார்க்கிருள். அவளுடைய மனக்கண்ணில் நகையும் நட்டு மாகத் திருமலையில் தன் அண் ணன் வீட்டில்தான் சொர்ண லட்சுமியாகப் போய் இறங்கப் போகும் காட்சி நிழலாடுகிறது. எண்ணங்களின் நடுவே கை தான
கவே சங்கிலியை எடுத் து வெளியே விடுகிறது.
பஸ் புறப்படுகிறது. 卡、

ராணி
ஏன்
இப்படிச்
சொன்னுள்
. தே. பெனடிக்ற்
பிள்ளையள் நல்லாயிருக்க வேணுமெண்டுதான் நாங்கள் நினைக்கிறம். அதுகள் நல்லாயி ருந்தால் அதுகளின்ரை நிழலிலை நாங்கள் ஆறலாம் எண்டுதான் ஒரு காரியத்தைச் செய்யிறது. இருபத்தையாயிர ரூபாய் காசை உழைக்கிறதெண்டால், இருபத் தைஞ்சு வருஷம் போனலும் முடியாது. தம்பி என்னெண் டால் உன்னை நாங்கள் கிணத் துக்கை தள்ளப் பார்க்கிறம் எண் டதுபோல கதைக்கிருய்
தனது பங்கைச் செலுத்தி விட்ட மாமா, எனது வாயிலி ருந்து என்ன பதில் வரப்போகி றதோ என்பதை அறிவதற்கு ஆவல் கொண்டிருப்பவர் போல் காணப்பட்டார்.
எனது பதிலை ஏற்கனவே ஒரே முறையில் உறுதியாகக் கூறிவிட்டேன். இருந்தாலும்
புத்தி சொல்லுதல் என்ற போர் வையில் மனதை மாற்றும் முயற் சிகள் நடைபெறுகின்றன. அவற் றில் ஒன்றுதான் மாமாவின் உப தேசம். எதிர்த்துக் கதைப்பது சச்சரவுக்கு வழி வகுத்துவிடும் என்ற நினைப்பு எழ, மெளனம்
தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
சிறிது நேரம் எவருமே எது வும் பேசாமல் இருக்கிறர்கள். கூடியிருக்கும் ஒவ்வொரு வரை யும் பார்க்கிறேன். ஐயாவின் முகத்தில் ஆத்திரம் தொனிக்
கிறது. அம்மாவின் முகத்தில் பீதியின் பிம்பம் தெரிகிறது. உறவினர்களோ, “த கப் பன்
சொல்லைத் தட்டாமல் வளர்த்த இந்தப் பெடியனுக்கு இவ்வளவு நெஞ்சுத் துணிவு எப்பிடித்தான் வந்ததோ’ என்ற கேள்விக்கு விடை காண ஆவல் கொண்ட வர்கள்போல் இருக்கிறர்கள்.
ஒவ்வொரு முகத் தி லும் படர்ந்திருக்கும் மாற்றங்களை அவதானித்த பின் த லே  ைய கதிரையில் சாய்த்து, கூரையைப் பார்க்கிறேன். நான் எதுவும் பேசாது, தங்களை அவமதிப்ப தாகப் பட்டிருக்க வேண்டும் ஐயாவுக்கு,
"நாங்கள் வேலையில்லாத வங்கள் மா தி ரி க் கதைச்சுக் கொண்டிருக்கிறம். அவர் தானும் தன்பாடும். எல்லாம் தீவாள் குடுத்த துணிவுதான்"
உள்ளத்தில் ஏற்பட்ட ஆத் திரத்தை கஷ்டப்பட்டு அடக் கிக் கொள்கிறேன். சாதிக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்த நாள் மாறி, வேற்றுமை பாராட் டுவதே அநாகரியமானது என்று கருதப்பட்டு வரும் இந்த நாளில் ஐயா சாதியைப் பற்றிப் பேசு கிருர். என் மெளன விரதம் சிரிப்போடு கலைகிறது.
"இலங்கைத் தீவிலை இருக் கிற நாங்கள் எல்லாரும் தீவார் தானே' என்று ஐ யா  ைவ ப் பார்த்துக் கூறுகிறேன். நான் கூறும் பகிடிகூட நாராசமாக ஒலிக்கிறது அவருக்கு.
27

Page 16
"நானும் சொத்தி நாமுத் தர் வாத்தியாரிட்டை பூமிசாத் திரம் படிச்சனன்தான். இலங்கை தீவு எண்டது எனக்கும் தெரி யும்" என்று முறைப்போடு கூறி விட்டு உள்ளே போனர் ஐயா.
'தம்பி, இளம் ரத்தத் துடிப் பிலை முன்பின் யோசிக்காமல் மடைத்தனமான காரியத்தைச் செய்துபோட்டு, இரண்டு மூண்டு பிள்ளையஞம் பிறந்து குடும்பம் பெருத்த பிறகு, கையிலையும் கடிக்கத் துவங்கேக்கை அப்ப ஐயா சொன்னர், மாமா சொன் ஞர், நா ன் எல்லாத்தையும் மறுத்துப் போட்டேனே எண்டு மனவருத்தப் படுகிறதிலே பிர யோசனமில்லை" மாமா மறுபடி ஆரம்பித்துவிட்டார்.
மடைத்தனமான காரியத் தைச் செய்பவன், செய்ய இருப் பவன் மடையன். மாமாவைப் பொறுத்தவரையில் நான் ஒரு மடையணுகவே இருந்துவிட்டுப் போகிறேனே.
அருகே யாரோ வந்து நிற் பது போன்ற உணர்ச்சி. திரும் பிப் பார்க்கிறேன். ஐயாதான். புறங்கையால் வாயைத் துடைத் தவாறு என் அருகே நிற்கிருர், உள்ளத்தில் ஒரு பயம் தோன்
றத்தான் செய்கிறது. சமாளித் துக் கொள்கிறேன்.
* உங்களையெல்லே. * நை
யாண்டியான ஒரு மரியாதை தருகிருர் ஐயா.
"இந்தக் கையை ஒருக்கால் பாருங்கோ , மண்வெட்டி பிடிச் சுப் பிடிச்சு மரத்துப்போன கை தெரியுதே. செவிட்டைப்பொத்தி ஒண்டு த ந் து, காதுக்காலை றெயில் ஒட ஓட, கச்சேரியிலை கையெழுத்து வைக்கப் பண்ண முன்னம் மரியாதையாய் நான்
28
சொல்லுறபடி செய். விளங்
குதே"
'நீங்கள் சொல்லுறதெல் லாம் எனக்கு விளங்குது. நான் சொல்லுறதுதான் ஒருத்த குக் கும் விளங்குதில்லை’
*நீர் சொல்லுறதெல்லாம் எங்களுக்கு விளங்குது. நான் நெடுகக் கதைச்சுக் கொண்டிருக்க மாட்டன். கடைசியாய்க் கேட் கிறன் நீ என்ன செய்ய ப் போருய்"
v 4 Y ar a 8 a e « a es
* வாயுக்குள்ளை கொழுக்கட் டையே? வாயைத் திறந்து பதில் சொல்லன்"
"ஒரு கேள்விக்குத் திருப் பித் திருப்பிப் பதில் சொல்லிக் கொண்டிருக்க என்னுலை முடி யாது"
நான் பதில் சொன்ன விதம் சரியில்லை என்பது எனக்கே தெரி கிறது, கடலுக்கே கரை இருக்
கும்போது என் மெளனத்துக்கு
மட்டும் முடிவில்லை என்று நினைத் துக்கொண்டிருக்க என்னுல் முடி யவில்லை. என்ன செய்யப் போகி ருய் என்ற கேள்விக்கு, ஏற்க னவே நான் பதில்கூறிவிட்டேன். கடைசியாக என்ன செய்யப் போகிருய், இனி என்ன சொல் கிருய், இப்போது உன் முடி வென்ன என்பதுபோன்ற கேள் விகளுக்கு நான் எப்பிடித்தான் பதிலளிப்பது? கேள்வி ஒன்று தானே.
நான் கூறிய பதில் எனக்கே திருப்தியைத் த ரா த போது,
ஐயாவுக்கு மட்டும் கேட்கச் சகிக்குமா. w
கொழும்புச் சுவாத்தியத்
திற்கு பழக்கப்பட்டுப்போன என்

கன்னங்களில் யாழ்ப்பாணத்து விவசாயியின் கரம் பட்டபோது காதல் பாதை துன்பம் நிறைந் ததுதான் என்பதை மனம் ஒப் புக் கொண்டது. இ  ைத யே பெரிய துன்பமாகக் கருதினுல் இனிமேல் உண்டாகும் துன்பங் களை சமாளிப்பது எப்படி என்ற நினைவு வர, பல்லைக் கடித்த வாறு அந்த அடிகளைத் தாங்கிக் கொண்டிருந்தேன்.
அம்மாவின் குழ ற லும், மாமாவின் குறுக்கீடும் அந்தத் துன்பத்தை நீடிக்கவிடாமல் தடுத்து விட்டன. ஐயாவை நிமிர்ந்து பார்த்தேன். அந்த முகத்தில் தெரிந்தது ஆத்திரமா, அல்லது என் அவமதிப்பினுல் எழுந்த வெறியா என்பதை என் ஞல் புரிந்துகொள்ள முடி ய வில்லை. மறுபுறம் திரும் பி க்
"என்ரை கண்ணுக்கு முன் ஞலை அவன்ரை மேலிலை இனி ஆரும் தொட்டால் என்னை உயி ரோடை பார்க்க மாட்டியள்.
9. . . . . . . . .
நா தழுதழுத்தாலும் ஆவே சத்தோடு தன் ஆட்சேபத்தை தெரிவித்துவிட்ட அம்மா அவ வின் ஆட்சேபம் ஐயா வின் ஜுவாலையை தூண்டிவிடுகின் றன.
"தீவாளுக்கு மாமியாராக உமக்கும் விருப்பமோ”
*தீவாள் எண்டால் அவள் பொம்பிளை இல்லையே? அவனுக்கு விருப்பமில்லாத இடத்திலை கலி யாணம் செய்துவைச்சு, ஏன் அவன்றை வாழ்க்கையை அழிப் பான்"
*அவர் தான் நினைச்ச இடத் திலை போய் அழிஞ்சுபோனுல்."
"எல்லாரும் அழிஞ்சுதானே போறது. இருக்குமட்டும் நிம்ம தியாய் இருக்கட்டன் அவன்’
ஐயாவுக்கு ஆத்திரம் பீறிட் டுக்கொண்டு வருகிறது. அம்மா விடம் அதைக் காட்ட முடியாது: காரணம் - பயமல்ல அவ வருத் தக்காறி. எப்படித் தனது ஆத் திரத்தை தீர்த்துக்கொள்வது என்றே தெரியாத சங்கடமான நிலை அவருக்கு.
எமது வே விக்கு மேலால் சில த லை கள் தெரிகின்றன. தமது வீடுகளில் என்ன நடக் கிறது என்பதைப்பற்றி அறி யாது, அறியவும் விரும்பாது மற்றவர்களின் வீடுகளில் நடப் பதைப் பற்றி அறிவதிலேயே கண்ணுயிருக்கும் பிற ர் நலம் விரும்பிகள். இந்தத் தலைகளில் ஒன்று ஐயாவின் கண்களில் பட்டு விடுகிறது. ஆ த் திர த்  ைத க் கொட்டுவதற்கு இதை விட்டால் வேருென்று கிடைக்குமா?
‘விடுப்புப் பார்க்கிறியளோ? நில்லுங்கோடா வாறன்" என்று கத்தியவாறு, மூலையில் வைக்கப் பட்டிருந்த தும்புக் கட்டையை எடுக்கிருர் ஐயா. தும்பு வேறு தடி வேருகப் பிரிக்கப்படுகிறது அந்தத் துடைப்பம். கையில் கிடைத்த தடியுடன் ஒடும் ஐயா வைக் கண்டதும், காலில் மிதி பட்ட சிற்றெறும்புக் கூட்டம் போன்று சிதறி ஓடுகிருர்கள் "பிறர் நலம் விரும்பிகள்"
* கவுன்மேந்து ருேட்டிலை நாங்கள் நிண்டால் அவர் என்ன கேக்கிறது" எ ன் று கேட்டுக் கொண்டே ஓடுகிருன் ஒருவன், அவன் கூறியது மாமாவின் காதி லும் விழுந்திருக்க வேண்டும்.
"இத்தாள் ஆற்றையோ ஆத்திரத்தை அவங்களிலை காட்
9.

Page 17
டப் போகுது" என்று சொல் லிக்கொண்டு எழுந்து வீதிக்குப் போகிருர் மாமா.
"நீயும் இதிலை இருக்காதை" எழும்பிவந்து சாப்பிட்டிட்டு எங்கையன் போ. இல்லாட்டில் படுத்துநித்திரைகொள். எழும்பு’
ஐயாவின் கண்களில் நான்
படாதிருப்பதற்கு அம்மா கூறும் இந்த யோசனையை என்னுல் மறுக்க முடியவில்லை. சாப்பிடும் நிலையில் நான் இல்லை என்பதை அம்மாவுக்கு கூறிவிட்டு, அறை யை உட்புறமாகப் பூ ட் டி க்
கொண்டு படுக்கையில் சாய்கி
றேன்.
நான் இரணைதீவில் வாழ்ந்த
நாட்களைப் பற்றியோ, மேரி
யைச் சந்தித்த விதம்பற்றியோ, அவளோடு சேர்ந்து திரிந்ததைப் பற்றியோ நினைத்துப் பார்க்கும் நிலையில் நான் இல்லை. இப்போது அது தேவையற்றதும்கூட. ஆனல் அவளுக்கு அளித்த வாக்குறு தியை மட்டும் அலட்சியம்செய்ய முடியவில்லை என்னல்.
ஐயாவின் எதிர்ப்புக்கும், உறவினர்களின் வெறுப்புக்கும் இடையில், மே ரி க் கு நான் கொடுத்த வாக்குறுதி காப்பாற் றப்படவேண்டுமா? அது அவ் வளவு முக்கியமானதா என்பதை யும் எண்ணிப் பார்க்கிறேன்.
ஏழைக் குடும்பமாக இருந் ததனல், என்னை வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டுவர அவர்கள் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
பெற்றேர் காட்டும் அன்புக் கும், மேரி என்னில் வைத்திருக் கும் அன்புக்கும் இடையே இருக் கும் வேறுபாட்டை உணராம லில்லை. என் வாலிபப் பருவத் தில் மட்டும் என்னைக் கண்டவள்
90
மேரி. தனக்குப் பிடித்தமான ஏதோ என்னிடம் இருப்பதாக நினைத்து என்னை விரும்புபவள். இருவரின் அன்பும் ஒரே தன்மை யானது என்று கருத முடியாது. சென்றமுறை விடுமுறையில் ஊ ரு க் கு வந்திருந்த போது நடந்த சில சம்பவங்களை நினைத் துப் பார்க்கிறேன்.
அம்மாவுக்குப் பல் வருத் தம். சூடு தாங்க முடியாது. இருந்தாலும், பெரியம்மாவின் மகள் ராணிக்கு "ஐஸ்" வைத்து காலைச்சாப்பாட்டைத் தயார் செய்துவிடுவா. காலைச்சாப்பாடு தயாரித்து முடிந்தவுடனேயே, 'உந்த நெருப்பு நூர முன்னம் உலையை வையுங்கோ" என்று ஐயா ஆரம்பித்துவிடுவார்.
"அவள் இன்னும் காலமைச் சாப்பாடே சாப்பிடேல்லை அதுக் குள்ளை. " என்பா அம்மா.
*கந்தோரிலை பன்னிரண்டு மணி அடிச்ச உடனை சோத்துக் கோப்பைக்குள்ளை கையை வைக் கிற பெடியனை ரண்டு மூண்டு மணிவரையும் பட்டினி போடப் போறியே? உனக்குப் பல்லுக் கொதிச்சால் நீ போய் அந்த விருந்தையிலை இரு. இஞ்சைவா /ராணி. செல்லையன் மீன்கொண்டு வருவான் அதை வெட்டித் தந் தால் காணும் மிச்சமெல்லாம் நான் செய்வன்"
"கொழும்பிலை அவனுக்கு நல்ல சாப்பாடு இல்லை. வீட்டி லையெண்டாலும் வாய்க்கு ருசி யாய்ச் சமைச்சுக் குடுக்கலா மெண்டு பார்க்கிறன். குழப்பா தையுங்கோ என்னை"
இந்த வயதிலும் என்னை பசி தாங்க மாட்டாத குழந்தையா கவே நினைக்கும் ஐயா, தனது பல்லுக்கொதியிலும் பார் க் க

எனக்கு ருசியான சாப்பாடு சமைப்பதை முக்கியமாகக் கரு தும் அம்மா, இவர்களின் அன் புக்கு முன்னுல் மேரியின் அன்பு பெரிதென்று என்னுல் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதே வேளையில் நா ன் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாத பட்சத்தில், அநியாயமாக ஒரு உயிர் பலியாகுமே என்பதை மறுக்கவும் முடியவில்லை.
ஒருநாள் மேரியோடுசேர்ந்து நான் கோவிலுக்குப் போனேன். அந்த ஊரில் உள்ள வ1 லிபர்கள் எல்லாம் என்னையே முறைத்துப் பார்த்தார்கள.
* யாரடா இவன். ஊருக்குப் புதிசாயிருக்கிருன் எ ன் மு ன் ஒருவன்.
“ஊரும் தெரியாது. பேரும் தெரியாது. ஆனல் மேரி இவ னைத்தான் கலியாணம் செய்யப் போருளாம் எண்டது தெரியும். மேரி வீட்டாருக்குக் கூட விருப் பமாம்" என்ருன் இன்னெருவன்.
இப்படியெல்லாம் ΦΘΙΙ fί கதைக்குமளவுக்குப் பழகியபிறகு அவளை விட்டு இன்னுெருத்தியை நான் மணந்தால் அவளின் கதி என்ன? அவளை ஏற்றுக்கொள்ள இன்னுெருவன் விரும்புவாணு. இன்னுெருவன் விரும்புவான என்ற கேள்வியை விட்டு, ஊர றிய ஒருவனேடு சேர்ந்து திரிந்த பெண்ணை என் மனைவியாக ஏற்க நான் விரும்புவேனு? முடியாது என்ற பதில்தான் வருகிறது. வாக்குறுதி அதைவிட முக்கிய மானது என்று முடிவு செய்கி றேன்.
கோப்பை ஒன்று விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்கிறது. கதவைத் திறந்து என்ன என்று பார்க்கவேண்டும் என்ற ஆவல்.
*ஆக்க ளிலை கோபமெண் டால் கோப்பை கிளாசுகளிலையே காட்டுறது?"
அம்மாவின் குரல் கேட்ட பிறகு அந்த எண்ணத்தை மாற் றிக் கொள்கிறேன். அம் மா சாப்பாடு கொண்டு போயிருப்பா ஆத்திரம் தணியாத நிலையில் இருக்கும் ஐயா, அதை வாங்கி விருந்தையில் எறிந்திருப்பார் . ம். இன்னும் என்னென்ன வெல்லாம் நடக்கு தென்று பார்ப் போம் என நினைத்துக்கொண்டு மீண்டும் படுக்கையில் சாய்கி றேன்.
கண் விழித்தபோது இருட்டி விட்டது. கதவில் யாரோ தட் டுகிறர்கள். கூடவே அண்ணை . அண்ணை. " என்ற குரல் கேட் கிறது. ராணியின் குரல்தான்.
இரண்டு மாதங்களுக்கு முன் புதான் ராணிக்குத் திருமணமா கியது. அதுவும் காதல் திரும ணம்தான். ராணிக்கு அந்தப் பையனுக்கும் கா த ல் என்று ஊரில் க  ைத பரவியபோது,
ராணியின் அப்பா சொன்னுராம்
*உந்தக் காவாலிக்கு என்ரை பிள்ளையைக் குடுப்பணுே" என்று. இதையே ஒரு சாட்டாக வைத் துக்கொண்டு, "உன்னைக் காவாலி என்று சொன்னவன் வீட்டை நீ பொம்பிளை எடுக்கப்பட்ாது" என்று ஒரே பிடியாக நின்ருர்கள் பெடியன் வீட்டார். ராணியின் கண்ணிரும், சாப்பிடாமலே உயிரை விடுவேன் என்ற அவ ளின் பிடிவாதமும், என்னைச் சமாதானத் தூதுவணுக மாற்றி விட்டன. பையனின் அப்பாவு டனும் அம்மாவுடனும் கதைத் தேன். அழாத ஒரு குறை. மற்ற தெல்லாம் செய்தாயிற்று. கடை சியாய்  ைய ய fை ன் அம்மா சொன்ன, தம்பி உன்ரை முகத் துக்காகத்தான் நாங்கள் இதுக்கு

Page 18
உடன்படுகிறம் அவள் அதிஷ் டக்காரி. நினைத்தது கைகூடி விட்டது. நான். p
க த  ைவத் திறக்கிறேன். கொண்டுவந்த லாம்பை மேசை மீது வைத்துவிட்டுக் கட்டிலில் அமர்கிருள் ராணி. ராணியின் எண்ணத்தை நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். ஆனல் நான் நினைத்ததை ராணியால் முடித்து வைக்க முடியாது. எனது உட னடிப் பிரச்சனையைத் த ଙ ot பேசுவதற்கு எதுவுமே இல்லா ததஞல் மெளனம்
"சாப்பிட்டியா அண்ணை’
பசித்தால்தானே ராணி
சாப்பிடலாம்"
“தேவையில்லாத பிரச்சனை பள் மனசிலை இருந்தா பசி எப் படி வரும் , い
ராணி என்ன சொல் கிருள்? எது தேவையில்லாத பிரச்சனை. எனக்குப் பேசிவந்த கலியாணத் துக்கு மறுப்புத் தெரிவித்ததை தேவையற்றது என்கிருளா அல் லது மேரியைத்தான் திருமணம் செய்வேன் என்று ဓါ44မ္ဘ၇၅## தேவையற்றது என்கிருளா. இநீஃபிடுகிருள் என்றே புரியவில்லை எனக்கு.
"ராணி, எதைத் தேவை யில்லாத பிரச் ச னை எண்டு சொல்லுருய்
வேறை எதை. உன்ரை மேரிக்கதையைத்தான். எங்கை
யோ உள்ள ஒருத்தியை யார் எவள் எண்டே எங்களுக்குத் தெரியாதவளைக் கொண்டுவரப்
போறன் எண்டு நிக்கிருய், ஒரு
மனம்
வேளை சின்னையாதான்
ss
நிலவுகிறது.
மாறி மேரியைக் கட்டிக்கொண்டு வரச் சொன்னுலும், இன சனம் உன்னைச் சபைசந்தியிலை."
*போடி வெளியிலை"
அடக்க முடியாத ஆத்திரத் தோடு நான் போட்ட சத்தத் தால் ராணி திகைத்துப்போய் நிற்கிருள். காலையில் இரண்டு பேர் பணத்தின் மகிமையைப் பற்றி எடுத்துக் கூறினர்கள். அதற்கெல்லாம் நான் மசியாத ததனல் பலாத்காரமும் பாவித்து அட்டகாசங்கள் ந ட ந் த ன. இப்போ என்னடாவென் ருல் இவள் ஒருத்தி வந்து என்ன சாதியோ, சபையிலை வைக்கக் கூடியவளோ என் றெல்லாம் ஒலம்  ைவ க் கி ரு ள். ஐயா எதிர்த்தார் அவருக்கு காசு பெரிது. மாமாவுக்கும் அதுதான். இது எதிர்பார்த்த எதிர்ப்பு. ஆனல், ராணி எதிர்க்கிருளே. இவளும் ஒரு பெண் . பெண்ணின் மன நிலை தெரிந்தவள். அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் ஏமாற்றம் எப்படியி ருக்கும் என்பதை அனுபவ ரீதி யாக உணர்ந்தவள். இவளே இப்படி எதிர்க்கும்போது வேறு
யார்தான் ஆதரிக்கப் போகி ருர்கள்! ---
காதலிக்கும் ஆணை யும்
பெண்ணையும் தவிர, உலகத்தில் உள்ள அனைவரும் அதை எதிர்க் கவேண்டும் என்று ஒரு சாபம் காதலுக்குக் கொடுக்கப்பட்டிருக் கிறதோ? 女

வானளாவிய கட்டிடங்களில்
வாழ முடியுமா?
அமெரிக்காவில் நியூயார்க்
உலக வர்த்தக கேந்திரம் 412 மீட்டர் உயரமுள்ளது. இந்தக் கட்டிடத்தை உருவாக்கிய இஞ் சினியர்களில் ஒருவர், "நாங்கள் விரும்பினுல், இதைக் காட்டி லும் உயரமான கட்டிடத்தை இந்த ஆண்டிலேயே கட்ட த் தொடங்க முடியும்" என்று கூறு கிருர். r
இதில் ஒன்றும் புதுமையில்லை 1956-ம் ஆண்டிலேயே பிரபல அமெரிக்கக் கட்டிடக் கலை நிபு ணரான பிராங்க் லாய்டு ரைட் என்பவர் சுமார் இரண்டு கிலோ
மீட்டர் உயரமும் 528 மாடிக
ளும் கொண்ட ஓர் இருப்புக் காங்கிரீட் கட்டிடத்துக்கான திட்டத்தைத் தீட்டி, அதன்
மாடலையும் செய்துகொடுத்தார். அந்த மாடல் சிகாகோ நகராட் சிக் கட்டிடத்தில் இன்றும் உள் ளது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் கட்டிடக் கலை நிபுணரான விலெம் டபிள்யூ பிரீச்மான் என்பவர் இன்னும் உயரமான கட்டிடம் ஒன்றைத் திட்டமிட்டார். 120 மீட்டருக்கு 120 மீட்டர் என்ற அளவில் அஸ்திவாரத்தைக் கொண்டிருக் கும் அக் கட்டிடம் 850 மாடி களோடு மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கும் மேலிருக்கும் எனக் கூறினர். இந்த வானளாவிய கட்டிடத்தில் ஐந்து லட்சம் பேர்
வசிக்க முடியும் என்றும் அவர் கூறினர்.
இத்தகைய திட்டங்களைத் தீட்டிய நிபுணர்கள் யாவரும், இவை ஒன்றும் கற்பனைத் திட்ட மல்ல, தொழில்நுட்ட ரீதியில் காரிய சாத்தியமானதே என்றும் கூறுகின்றனர். ஆயினும் ஒரு கேள்வி எழுகிறது; அவ்வளவு உயரத்தில் மனிதன் வாழ முன் வருவது சாத்திய ந்தான?
இதனைக் குறித்து சிகாகோ நகரிலுள்ள ஜான் ஹான்சாக் சென்டர் என்ற 100 மாடிக் கட்டிடத்தில் வசிக்கும் நபர்களி டையே ஒரு வாக்கொடுப்பு நடத் தப்பட்டது. இந்த வாக்கெடுப் பின்போது அவர்கள் அளித்த பதில்கள் பலவிதமாகவம் இருந் தன. அக்கட்டிடத்தின் ஆகவுய ரமானமாடிகளுக்கு அருகிலுள்ள மாடிகளில் வசித்து வந்தவர்கள் சிலர் இவ்வாறு கூறினர்:
* மேலே இருந்து பார்த்தால் இல்லினுய்ஸ், இண்டியான, மிச் சிகன், விஸ்கோன்சின் ஆகிய நான்கு மாநிலங்களின் மீதும் கருப்புகை சூழ்ந்து காட்சியளிப் பதைக் காணலாம்." என்ருலும் உச்சி மாடிகளில் வசிப்பவர்கள் அநேகமாக எதையுமே பார்க்க முடிவதில்லை. ஏனெனில் அவர் களது மாடிகள் மேக மண்டலத் துக்கும் அப்பால் உயர்ந்து நிற் கின்றன. எ ன வே வெளியில்
తీ

Page 19
மிழை பெய்கிறதா இல்லையா என்றுகூட அவர்களால் சொல்ல முடியாது. மேலும் மேல் மாடி களில் வசித்தால், அவர்கள் நாயை வெளியே கொண்டுபோய் உலாத்திவிட்டு வருவது என்ப தும் நடக்காத காரியம். அந்தக் கட்டிடத்திலுள்ள நபர்களிற்
பலர் சிக்கல் வாய்ந்த லிப்டுக
ளில் வேலை பார்க்கின்றனர் அதில் வேலை பார்ப்பது ஏதோ சுரங்கப்பாதை வழியே பயணம் செய்வது போலத்தான். -
"இங்கு வாழ்வது மிகவும் இயற்கைக்குமாருகவே உள்ளது. எல்லாமே பொத்தானை அமுக்கி நடத்துகிற காரியமாகவே இருக் கிறது. உச்சி மாடிகளில் வசித் தால் ஜன்னலைக் கூடத் திறக்க முடியாது. ஏதோ விண்வெளிக் கப்பலில் வசிப்பது போலத்தான் எங்கள் வாழ்க்கை இருக்கிறது" என்று அங்கு வசிக்கும் பெண் ணுெருத்தி கு  ைற ப் பட் டு க் கொண்டாள்.
இந்த உவமானம் மிகவும் பொருததபானதுதான். அமெ ரிக்காவிலுள்ள பெத்லஹேமில்
அண்மையில் வானளாவிய கட் டிடங்கள் பற்றிய முதல் சர்வ தேச மாநாடு நடைபெற்றது. இதில் கட்டிட நிபுணர்களும் இஞ்சினியர்களும் மட்டுமல்லா மல், சமூகவியல் நிபுணர்களும் பங்கு கொண்டனர். அவர்கள் இத்தகைய கட்டிடங்களில் வசிப் பவர்கள் உடலாலும் உள்ளத் தாலும் படும் அவதிகளைப் பற் றிக் கூறினர். அக் கட்டிடங்க ளின் அதிர்ச்சியலைகளால் சில சமயங்களில் விஞடிக்கு 60 முதல் 90 வரை ஏற்படும் அதிர்ச்சி யலைகளால் அங்கு வசிப்பவர்க ளுக்கு ஏற்படும் தீங்கான விளை வுகளையும் சிலர் எடுத்துக் கூறி ஞர்கள். உதாரணமாக, அத்த கைய அதிர்ச்சிகளால் கண்பார் வை பாதிக்கப் படுகிறது என்று தெரிவித்தனர்.
என்ருலும் ஒன்று மட்டும் உண்மை . வானளாவிய பல நூறு மாடிக் கட்டிடங்களைக் கட் டுவதற்கான திட்டங்களை வகுக் கும் நிபுணர்கள் மட்டும் அத்த கைய கட்டிடங்களில் வசிப்ப தில்லை; அவற்றில் வசிக்க விரும் பவும் இல்லை!
உண்மை இலக்கிய ரசி
கர் களு க் கு பொறுப்பான கடமை கள் உண்டு. ஈழத்து
தேசிய இலக்கியம் தனக் குகந்த தகுந்த கெளர வத்தைப் பெற வேண் டும். இதைச் சாதனை யாக்க முனேந்து செய லாற்றி வெற்றி பெறும் நோக்கத்து டைே யே மல்லிகை ஆரம்பிக்கப் பட்டது. இதைச் சாதிக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து மல்லிகை யைப் படிக்கவும்.
ஆண்டுச்சந்தா 7-00 தனிப்பிரதி 50 சதம்.
 

ஆங்கிலத்தில்; அழகு சுப்பிரமணியம்
பட்டதாரி
LDst 600I616öT
திம்பிராசாவின் வெற்றி குறித்து அவனுடைய சகோதரி லீலாவும், அவளுடைய கணவ னும் மிகவும் பெருமையுற்ருர் கள். லீலா தம்:பிராசா வைவிடப் பலவருடங்கள் மூத்தவள். சிறிய வயதிலேயே பெற்ருேரை இழந்
துவிட்ட அவனை லீலாவும் கண
வணுமே பாதுகாத்து வந்தனர். அ வ ன் பல்கலைக் சேர்ந்தடோது செலவுகள் அதி கரித்தன. ஆனல் பல்கலைக்கழக பரீட்சையில் அவன் மி க த் திறமையுடன் பெற்ற சித்தி அவனுக்குப் பல் கலைக் கழக உபகாரப் படிப்பி னேப் பெற்று க் கொடுத்தது வீலாவுக்கும், கணவனுக்கும் பெருஞ் சுமையொன்று அகன் முற்போல இருந்தது, தம்பி ராசா விரைவில் அரசாங்க உப காரப் பணத்தில் இங்கிலாந்து சென்று தனது மூன்ருண்டு மேற் படிப்பைத் தொடரவிருந்தான்
இலங்கையில் அரசாங்க உப காரப் படிப்பினைப் பெறுவது சாதாரண காரியமல்ல. அப்ப டிப் பெறுபவர்கள் குடும்ப வட் டத்தினுள்ளும், படித்தவர்கள் மத்தியிலும் ஓர் உன்னத இடத் தைப் பெறுவார்கள். அதே போன்ற ஒரு இடம் தம்பிரா சாவுக்கும் கிடைத்தது. அன்றை யதினம், ஆங்கில முழு ஆடை
கழகத்திற்
தமிழில்: ராஜ பூரீகாந்தன்
தரித்து துவிச்சக்கர வண்டி யொன்றிலேறிக் கொழும்பு வீதி களிற் சுற்றித் திரிந்தான். அவ னுடைய வெற்றியை அறிந்த வர்கள் மற்றையோரிடம் அவ னைச் சுட்டிக்காட்டி அவனைப் பற்றிக் கூறினர்.
அவ்வெற்றியின் பின் அந்த வாலிபனின் நடத்தைகளில் மாற்றங்கள் காணப்பட்டன, இளைஞர்களுக்குரித்தான தன் மையை விடுத்துப் பெரிய மணி தத் தோரணையில் நடமாடத் தொடங்கினன். உடைகளிற் கூட மாற்றம் தெரிந்தது. மைக் கறைகளற்ற, ம டி ப் புக் கலை யாத ஆடைகளையே அணியத் தொடங்கினன்.
தம்பிராசாவின் இவ் வெற் றிபற்றிய செய்தி இலங்கையின் மு க் கி ய நகரங்களிலெல்லாம் பரவியது. கொழும்பு மாநக ரத்து நண்பர் குழாம் பல விருந் துகள் வைத்தன. யாழ்ப்பாணத் தில் அவனுடைய சகோதரி உற வினர்களுக்கெல்லாம் இ ரா ப் போசனமளித்து மகிழ்ந்தாள் அவளுடைய விருந்தினர் பலர் தம்பிராசாவின் சாதகக் குறிப் பினிலேயே அதி க அக்கறை காட்டினர்.
விவாகப் பேச்சுக்கள் நாணு திசைகளிலிருந்தும் ஆரம்பிக்கப்
s5

Page 20
பட்டன. பலதரப்பட்ட கல்யா ணத் தரகர்கள் வாரத்திற்கு இருவர் வீதம் வந்து சென்றனர். பல்வேறு கன்னிகளின் புகைப் படங்களும் சாதகக் கட்டுக்க ளும் வந்து போயின. சீதனம் ஆறு இலக்கங்கள்வரை ஏறி விட்டது. லீலாவும் அவள் கண வனும் ஒவ்வொரு கன்னியின் சாதகத்தினையும் தனித்தனியா கப் பரிசீலித்தனர்.
முதலில் தனது சகோதரன் இங்கிலாந்துக்குச் சென்று மேற் படிப்பை முடித்துக் கொண்டு வந்த பின்பு இவைகளைப்பற்றி யோசிப்பது என்று லீலா முடிவு செய்திருந்தாள். ஆனல் அவன் திரும்பி வரும்போது ஒரு வெள் ளைக் காரப் பெண்ணையும் கூட்டி வந்துவிடுவானேவென்ற அவளுக்கு ஊட்டப்பட்டது. ஐரோப்பியப் பெண்களைப்பற்றி பல கதைகளை அவள் கேள்விப் டட்டிருந்தாள். அதிலிருந்து மேற்கத்தையப் பெண் களெல் லாம் கிழக்குநாட்டு ஆடவனெ ருவன் எப்பொழுது வருவான் என்று வலைவிரித்துக் காத்திருப் பார்கள் என்றவொரு தப்பெண் ணம் அவள் மனதில் உருவாகி யிருந்தது. எனவே இங்கிலாந்து செல்லுமுன் தனது சகோதரனை மணக்கோலத்திற் பார்த்துவிட அவள் விரும்பினுள்
விவாக ச ம் பந் த மா க மேலோட்டமான கருத்துக்கள் தம்பியிடம் தெரிவிக்கப்பட்டது லீலாவும், 1 சனவனும் தமக்கு மிகவும் பிடித்திருந்த ஒரு பெண் ணைப்பற்றி அவனிடம் கூறினர் கள். ஆளுல் அவனுடைய எண் ணம் அவர்களுடைய நோக்கத் திற்கு எதிரிடையாகவிருந்தது. அவனுடைய மனம் பல்கலைக் கழகத்தில் அவன்விரும்பிய ஒரு பெண்ணிடமே லயித்திருந்தது.
3.
பயம்
அவளுக்குப் பெயர் ராதா அசாதாரணமான உயரம். அன்
னத்தின் கழுத்தைப் போன்ற அழகான கழுத்து, யாருமே த ன க் கு நிகரில்லையென்பது
போன்ற கம்பீரமான - ஆனல் அடக்கமான நடை. பேராசிரி டர் வரும்வரை மண்டப வாச லிற் காத்திருக்கும்போது அவர் கள் கண்கள் பேசிக்கொள்ளும். புன்னகைகள் பரிமாறிக்கொள் ள ப் படும். gyari asgyan Lau அ ன் பு படிப்படியாக, மெது வான வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் தம் பிராசா ராதாவின் விரிவுரைக் குறிப்பினை வாங்கி அதன் ஒரத் "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று எழுதியபின் திருப்பிக் கொடுத்தான். அப்போது அவ னுடைய சின்னிவிரல் அவளு டைய விரல்களிற் பட்டது: இருவருமே சிரித்தார்கள்-மாசு மறுவற்ற அன்பிற் தோன்றும் களங்கமற்ற சிரிப்பு. குறிப்புப் புத்தகத்தில் தம்பிராசா எழு திய சொற்களைச் சுற்றி அழகான சிறுபூக்களை ராதா வரைந்தாள். இச்சம்பவங்களின் பின் அவர்க ளுடைய அன்பு மேலும் பரிண மித்தது.
தம்பிராசா தனது எண்ணக்
கிடக்கையைச் சகோதரியிடம் தெரிவித்தான். "€5 Ա tծ ւ ւն பையா, ஒரு பெண்ணின் பின்
ஞல் நீ ஓடுவதா. ச்சீ ஒரு கை அசைவினலே அந்தக் கூற்றினை நிராகரித்து விட்டாள். "படிக் கும் காலத்தில் காதலில் ஈடு படும் பெண்கள் கலியானப் பேச்சிற்கே அருகதையற்றவர் கள். நிச்சயமாக நீ விரும்பும் பெண்ணும் ஒரு துர்நடத்தைக் காரியாகத்தான் இருக்கமுடி யும்" என்று லீலா சொன்னுள்

காதல் நோயாற் பீடிக்கப் !ட்ட அந்த வாலிப்ன் கனத்த இதயத்துட்ன் சென் ரு ன். தனித்த ஓரிடத்திலமர்ந்து பல கடிதங்களை ராதாவுக்கு எழுதி ஞன். பின்பு எல்லாக் கடிதங் களையும் கிழித்தான். இறுதிச் சத்தர்ப்பத்தில் அவனுடைய துணிவு உதவ மறுத்துவிட்டது. நண்பர்களிடம் இதுபற்றிக் கூறி ஞன். அவர்கள் இரண்டுவித மான ஆலோசனைகளை அவனுக்கு வழங்கினர்கள். ஒன்று காலம் வரும்வரை அவளுக்காகக் காத் திருப்பது; அடுத்தது ராதாவை அழைத்துக்கொண்டு எங்காவது சென்றுவிடுவது. இவ்விரண்டு ஆலோசனைகளிடையே அவனு டைய மனம் ஊசலாடிக் கொண்
டிருந்தது.
அதே வேளையில் அவனு டைய பாதுகாவலர்கள் தங்க ளிடையே பல திட்டங்களை act வாக்கிக் கொண்டிருந்தனர். விலா ஒரு பெண்ணைத் தெரிவு செய்வாள். கணவனே வேருெரு டெண்ணைத் தெரிவு செய்வர் பெண்ணைத் தெரிவதில் அவர்க ளிடையே சில முக்கியமான கணிப்புக்கள் இருந்தன. முக்கி யமாகச் சீதனம், சாதி, பெண் ணின் உருவ அமைவு, பெற்ருே (560 l su செல்வாக்கு, கெளர வம், மணப்பெண்ணின் குளுதி சயங்கள் முதலியனவும் இன்னும் பலவும் அவற்றுள் அட்ங்கும். சில நாட்களின் பின் மேற்கூறிய அம்சங்கள் யாவும் பொருந்திய பெண்ணெருத்திதெரிவு செய்யப் பட்டாள். ஆனல் அவள் கறுத்த நிறமுடையவளாக இருந்தமை யால் லீலாவால் நிராகரிக்கப் பட்டாள், பெண்ணின் நிறத் திற்கும் லீலா ஒர் எல்ல வகுத் திருந்தாள்.
"மிகவிரைவில் அவனுடைய விவாகத்தை நடாத்தவேண்டும்
னவற்றை வாங்கிக்
க ன வி ல்
sayang Gao Liu பயண நா ள் நெருங்கி வருகிறது. ஒரு நல்ல
பெண் ணை த் தெரிவுசெய்து எழுத்தை முடித்துவிட்டாலா வது போதும். அவன் இங்கி லாந்திலிருந்து திரும்பியதும் விவாகத்தை நடத்திவெக்க லாம்" என்று லீலா கணவனி
டம் சொன்னுள்.
இங்கிலாந்து செல்வதற்கு வேண்டிய இறுதி ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டுத் தம்பி ராசா கொழும்பிற்குச் சென் ருன் இந்தமுறை அவன் முத லாம் வகுப்பிற் பிரயாணம் செய்தான். அவனுடைய வே&ல யாள் மூன்ரும் வகுப்பிற் பிர யாணித்தான். சில புகையிரதத் தரிப்புக்களில் வேலையாள் இறங் கிவந்து சிகரெட், GՖո՞ւյլն), இனிப்புப் பண்டங்கள் முதலிய கொடுத் தான். பிரயாணத்தின்போது படிப்பதற்கென்று இரண்டு புத் தகங்கள் அப்பட்டதாரி எடுத் துச் சென்றிருந்தான். ஆனல் அவற்றில் ஒன்றிவிட அவஞல் முடியவில்லை. ராதா வுடன் தான் கழித்த நாட்களையே மீண்டும், மீண்டும் அசை போட்டான். அவற்றினிடையே தனது இங்கி லாந்துப் பயணத்தைப் பற்றி பும் அம்மாணவன் சிந்திக்கத் தவறவில்லை. பட்டப் படிப்பை மிக வெற்றிகரமாக முடி க் க வேண்டுமென்ற
ற தி டிசித் தம் அவனிடமிருந்தது. /
பன்னலினூடு த லை யை வெளியே நீட்டினன். குளிர்ந்த காற்றுமுகத்தில் வீசியடித்தது. மிதப்பது போன்ற வொரு கிறக்கம். அழகான அழகான பூக்களும், செடிகளும் மண்டியிருந்த காட்டினூடாகப் புகையிரதம் சென்றுகொண்டி ருந்தது.
፴ሃ

Page 21
கொழும்பிற் செய்யவேண் டியவற்றையெல்லாம் முடித்துக் கொண்டபின்னர் தம் பிராசா பல்கலைக் கழகத்துக்குச் சென் ருன் . அங்கு அவனுடைய தண் பர்கள் பலர் நூல்நிலையத்திற் கூடியிருந்தனர். சேவகஞெரு வன அழைத்து ராதாவுக்கு ஒரு குறிப்பினை எழுதியனுப்பினுன் , ஐந்து நிமிடங்களில் ஐந்து யுகங் களைப்போன்று கழிந்தன. இறு தியாக ராதாவுக்குப் பதிலாக அவளுடைய அந்தரங்கச் சிநே கிதி ராஜி வந்தாள். ஏதாவது பானம் அருந்தலாமெனக் கூறி அவளைச் சிற்றுண்டிக் சாலைக்கு அழைத்துச் சென்றன். இருவ ரும் அமைதியான ஓர் ஒதுக்குப் புறத்தில் அமர்ந்துகொண்டனர். சிறிது நேரம் மெளனம். ராதை வராமை குறித்து அவன் தனக் குள்ளாகவே பலவித காரணங் களை ஆக்கிக்கொண்டான். ‘சில வேளை அவள் விரிவுரைகளுக்குச் சென்றிருக்காலம். ஆனல் இந்த நேரத்தில் எ ன் ன விரிவுரை நடக்கும்? ராஜியும், அவளும் ஒரே வகுப்பிற்தானேயிருக்கி ருர்கள்?
வளந்த சீப்பொன்றைத் தலையிற் சொருகியிருந்த சிங்க ளப் பரிசாரகன் ஒருவன் வந் தான். சர்பத் கொண்டுவரும் படி கூறிஞர்கள். சிற்றுண்டிச் சாலையிலிருந்த அனைவரின் பார்  ைவகளும் அவ்விருவர்மீதே பதிந்திருந்தன. தம்பிராசாவின் அதிவிவேகத்தைப் பற்றியும், ராஜியின் முன்னேற்றம் பற்றி யும் அலர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள், மதலில் பேராசிரியர்கள், விரிவுரையா ளர்கள் புற்றியும் அவர்கள் சில ரின் தனித்துவம் குறித் தும் பேசினர். பின்னர் தங்களுடைய இலட்சியங்கள், நோக்கங்கள் பற்றிப் பேசினர். ஆனல் இரு
38
வருமே ராதாவைப் பற்றிப் பேசிக்கொள்ளத்தான் தவித்
அண்மைச் செய்தி ஒன்றைக்கூற ரா ஜி துடித்துக் கொண்டிருந் தாள். ஒருபடியாகத் தம்பிராசா அதற்கு அடிகோலிக் கொடுத் தான்.
ராஜி அவனிடம் எல்லாவற் யும் சொன்னுள். திடீரென்று ஒருநாள் வீட்டிற்கு வரும்படி ராதாவிற்கு அழைப்பு வந்தது. ராதையின் மைத்துனனுெருவன் முடிக்குரிய சத்திரசிகிச்சையா ளர் கல்லூரி அங்கத்தவனுகி இங்கிலாந்திலிருந்து வந்திருந் தான். ராதையின் முடிவையறி யாமலே அவளுக்கும், அவனுக் கும் திருமண ஒழுங்குகள் செய்து முடிக்கப்பட்டன. மிக விரை வில் திருமணம் நடக்கவிருந்தது. இந்தத் திருமணத்திற்கு ராதா உடன்பட்டாளா வென்று ராஜிக் குத் தெரியவில்லை. ராதையிட மிருந்து வந்திருந்த இறு தி க் கடிதம் மேற்குறித்த சம்பவங் களை மட்டுமே கொண்டிருந்தது. தனது சொந்த அபிப்பிராயங் கள் எதனையும் அவள் எழுதி இருக்கவில்லை.
தம்பிராசாவின் உதடுகள் வரண்டன. கண்கள் பனித்தன. மெளனமாகத் தலையைக் குனிந் துகொண்டான். ராஜி அவனைத் தேற்ற முற்பட்டாள். ராதா வைப் பற்றிய இச்செய்தி அவ ளுக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்போது: ராதாவின் மேல் உயிரையே வைத்திருப்ப வனின் நிலை எப்படியென்பதை அவளால் ஊகிக்க முடிந்தது.
அவன் பல்கலைக்கழகத்தை விட்டுச் செல்லும்போது ராதா ஒருத்திதான் அவன் நெஞ்ச மெங்கும் வியாபித்திருந்தாள்.

அங்ங்னமான ஒருத்தியைப் பிரிந்துவிட்டு வேருெருத்தியை ஏற்றுக் கொள்வதென்பது அவ ணுல் முடியாத ஒரு செயல். யாழ்ப்பாணத்திலுள்ள அவனு டைய அறையில் பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றின் படத் தைத் தொங்கவிட்டிருந்தான். ஏனெனில் அ தி ல் ராதாவும் இருந்தாள். காலையில், மாலை யில், இரவு நேரத்தில் அந்தப் படத்தினையே பார்த்தபடியிருப் பான். அவனுடைய அறையில் இன்னுெரு சித்திரமும் தொங் கியது. இரண்டு அன்னப் பட்சி கள் ஒருங்கிணைந்து நீ ந் தி க் கொண்டிருக்கும் அச் சித்திரத் தைச் சீன ஓவியன் ஒரு வ ன் வரைந்திருந்தான். இப்பொருட் கள் இரண்டுமே ராதா பற்றிய நினைவலைகளைக் கிளறிக்கொண் டிருக்கும்.
* காலை, மாலை எந்நேரத்தி லுமே அவள் நினைவு என்னை வாட்டுகிறது ராஜி. ஒ. . . நான் என்ன செய்யப் போ றேனே தெரியவில்லை. ராதா இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை" தான் ஒரு ஆண், தாங் கள் இருப்பது ஒரு பொது இடம் என்பதெல்லாவற்றையும் மறந்து விழுந்து, விழுந் து அழுதfன.
* அழாதீர்கள் எங்களைச் சுற்றியுள்ள எல்லாரும் எங்க ளையே பார் கிரு?ர்கள், தயவு செய்து அழாதீர்கள் ரா ஜி அவனைத் தேற்றினுள். ஒரளவு சுயநிலையடைந்த வஞகத் தனது பட்டுக் கைக் குட்டையை எடுத் துக் கண் க ளே த் துடைத்துக் கொண்டான்
ராதையுடன் தொடர்பு கொண்டு எப்படியாவது தம்பி ராசாவுக்கு உதவவேண்டும் என ராஜி தீர்மானித்தாள். அதன்
முதற்படியாக 96.1 g)160t-ty தற்போதைய நிலைபற்றி விரி வான ஒரு கடிதத்தை எழுதி னுள், கடித ஆரம்பத்தில் பல் கலைக்கழக வளாகச் செய்திக ளையும் தனது சுகம் பற்றியும் எழுதிவிட்டு இறுதிப்பகுதியில் தம்பிராசாவைப் பற்றி நீண்ட குறிப்பொன்றை எழுதினுள்.
ராதா தனது எதிர்காலக் கணவனுடனமர்ந்து தே னிர் பருகிக் கொண்டிருக்கும்போது தாயார் அக் க டி த த்  ைத க் கொண்டுவந்து கொடுத்தார். அக்கடிதம் ராஜியின் எழுத்தில் விலாசமிடப் பட்டிருந்தமையால் தாயார் உடைத்துப் பார்க்க வில்லை. அவ்விரு சிநேகிதிகளின் கடிதப் போச்குவரவைத் தாய் அனுமதித்திருந்தாள்.
"இது ராஜியிடமிருந்து வந் திருக்கிறது. உங்களிடம் பல முறை அவளைப்பற்றிக் கூறியி ருக்கிலேனல்லவா. அவள் ஒரு அதிசயமான பெண் . எனது உயிர்ச் சிநேஇதி. மிகவும் நகைச் சுவையுடன் கடிதங்களை எழுது வாள். இக்கடிதத்தில் எனது ராஜி என் ன எழுதியிருக்கி ருளோ?’ என்று தனது மைத் துனனிடம் கூறிக்கொண்டு கடி தத்தை உடைத்தாள்.
இருவருமாகச் சேர்ந்து கடி தத்தைப் படித்தார்கள். அவளு டைய முகம் இருண்டது. தலை யைக் குனிந்து கொண்டாள். சிறிது நேரம் அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் ராதா இத் திருமணத்குச் சம்மதிக்கவில்லை. அவளுடைய தாயார் எந்நேர மும் தனது மருமகனின் குளு திசயங்கள், தகைமைகள், பெரு மைகள் பற்றியே சொல்லிய வண்ணமிருப்பாள். ஒருநாள்
39

Page 22
ரா தா தம்பிராசாவின் மேல் தான் கொண்டிருந்த விருப்பத் தைத் தாயிடம் சொன்னுள் . தம்பிராசாவைப் பற்றியும் அவ னுடைய வெற்றிகள் பற்றியும் அவள் முன்பே அறிந்திருந்தாள். "யாரடி அவ்வளவு பணம் வைத்திருக்கிறது? பல் கலை க் கழகத்திலிருந்து உபகாரப் படிப் பினப்பெற்று வெளிநாடு செல் லும் ஒருவர் எப்போதுமே கூடிய தொகைச் சீதனம்தான் கேட் பார். நாம் அதற்கு எங்கை போவது? உனது விசர்த்தன மான ஆச்ைகளை இனிமேலும் வளர்க்காதே" என்று தாயார் கூறினர். அன்றிலிருந்து பலமா கப் புத்திமதிகள் வழங்கப்பட் டன. ஆன லும் ராதையின் மனது மாறியதாகத் தெரிய வில்லை.
ஒரு நா ள் gyal (op.65t-tu sint Lunt if தும்புத்தடியொன்றி ஞல் அவளை நன்முக அடித்தார். அவள் அசையவேயில்லை. தகப் பஞர் வந்தார். "ராதா, தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை தந் தைசொல் மிக்க மந்திரமில்லை யென்ற முதுமொழி பட்டதாரி மாணவியாகிய உனக்குத் தெரி யாதா அம்மா? அதுவும் ஒரு கன்னியாகிய நீ இப்படியான துர்ச்செயலைச் G) ëf uit uur G aan கூடாது" என்று அறிவுறுத்தினர்
ராதா சஞ்சலமுற்ருள். அவ ளால் வெளியே செல்ல முடிய வில்லை. தனது இதய தாகத்தை அடக்குவதைத் தவிர வேறு எவ் வித வழிகளுமே அவளுக்குத் தெரியவில்லை. பெற் ருே ர் வலோத்காரத்தைக் கையாண் டார்கள், வெற்றியும் பெற்ருர் கள். ராதா தனது விருப்புகளை மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. படிப்படியாக, எவ் , வளவோ சிரமப்பட்டு மைத்து னனுடன் பழகினள். இருவருமே
40
படித்தவர்கள், நாகரீகமான சோடி. எனவே திருமணத்திற்கு முன்பாகவே ஒன்றக இருந்து கதைப்பதற்குப் போதிய சுதந்தி ரமிருந்தது. ஆனல் அது ராதை யின் வீட்டில் மட்டும்தான், அது வும் தாயாரின் மேற்பார்வை யிலேயே நடக்கும். அவர்கள் ஒழுங்கான முறையில் நடந்து கொள்கிருர்களாவென்று பார்ப் பதற்காக ஏதாவதொரு சாட் டுக் கூறிக்கொண்டு அவர்களி டம் வந்து போவாள். அவன் ராதையிடம் மிகவும் பிரியமாக நடந்துகொண்டான். அடிக்கடி பரிசுப்பொருட்கள் கொண்டு வந்து ராதையை மகிழ்விப்பான். அவள் மீது அபரிமித அன்பைச்
செலுத்தி அவளைத் திணறடித்
தான்.
ராஜியின் கடி தம் இப் பொழுது அவனுடைய கையில் இருந்தது. ராஜி விபரீதமாக எதையும் எழுதியிருக்க மாட் டாளென்ற நம்பிக்கையிற்ருன் அக்கடிதத்தைப் படிக்க அவனை அனுமதித்தாள், ராதை யின் உடல் நடுங்கியது, உலகமே நொருங்கி அவள் தலைமேல் விழு வதுபோலிருந்தது. அவனுடைய பார்வை ராதைமேற் பதிந்தது. அருவருக்கத்தக்க பொருளொன் றைப் பார்ப்பதைப்போல அவ ளைப் பார்த்தான். பின்பு அக் கடிதத்தை எடுத்துச்சென்று அவளுடைய பெற்ருே ரிடம் கொடுத்தான். அமைதியாக, ஆழமான ஒர் ஆற்றின் நீரோட் டத்தைப்போல வாழ்ந்துகொண் டிருந்த குடும்பத்தில் புயல் வீச ஆரம்பித்தது.
ராதாவின் மைத்துனன்
அவள் பல்கலைக்கழக வளாக தில் தங்கியிருந்த விடுதியின் ஆசிரியைக்கு இதுபற்றி எழுதி னன். அக்கடிதத்தில் ராஜியின் பெயரும் இழுக்கப்பட்டிருந்தது.

அவர் தம்பிராசாவைக் கூப் பிட்டு எச்சரித்தார். அரசாங்க உபகாரம் பெற்றுப் படிக்கும்
ஒருவருக்கு மற்றைய பட்டதாரி
DiffGØð76 ffir அனுபவிக்குமளவு சுதந்திரம் வளங்கப்படு இன்ஜல்
யன்றும், ஒரளவு கட்டு, பr டுடன் அவர்கள் நடந்துகொள்ள
வேண்டுமென்றும் அறி, ர், தி ஞர். பல்கலைக்கழகத்த 0.0ப் பீடம் இது பற் றி அ , கால் அதல்ை ஏற்படக்கூடிய alry கள் பற்றி எடுத்துரை தார். இறுதியில் Doll69d -- uLu , Guaw
மேலிடத்திற்கு இதனை அறிவிக்கவில்லையென்று சத்தியம் செய்து கொடுத்தார்)
சகோதரனுடைய செயல் லீலாவிற்குப் பெரிய அதிர்ச்சி யாக இருந்தது. நாங்களெல் லாம் இருக்குமிடத்திலேயே இப் படிச் செய்பவன் உற்ருர், உற வினரற்ற இடத்துக்குச் சென்று
என்னவெல்லாம் செய்வானே.
அவனை இப்படியே விடுவது மிக வும் ஆபத்தான செயல் என்று கணவனிடம் கூறிவிட்டு மூச்சுட்ன் தம்பிராசாவிற்குப் பெண்தேடும் படலத்தை ஆரம் பித்தாள்.
தம் பிராசாவுக்கும்
ராதா வுக்குமிடையேயிருந்த காதல் விவகாரம் பல்கலைக்கழகமெங்
கும் பரவியது. பட்டதாரி மாண வர்களின் அனுதாபங்கள் அவ் விளங்காதலர்கள் மீதேயிருந் தது. அவர்களுக்குதவிய ராஜியை ஒரு நவ நா க்ரீ க எண்ணங் கொண்ட பெண்ணென்று வர் ணித்தனர்.
தம்பிரோசா உண்பது, உறங் குவது ஆகிய இரு செயல்களை யும் மறந்துவிட்டான். சர்பத் தை மட்டும் குடித்துக்கொண்டு நாட்களைக் கடத்தினன். வாழ்க் கையின் பிடிப்புக்கள் யாவுமே
- அவனுடைய
சதியைச் சேர்ந்த
ஆற்றுப்போய்விட்டன. ஒருநாள் லீலாவிடமிருந்து தந்தி வந்தது. "உடம்பைக் கவனமாகப் Umriš துக்கொள் ஏற்பாடுகள் எல் aðfrth செய்தாயிற்று. கடிதம் தொடர்கிறது?
தம்பிராசா வெறி பிடித்த ைெனப்போல அத்தந்தியைக் பிந்தான், கிழித்ததுண்டுகள் 'rடும் கிழித்தான் ட் பலநூறு
வர்கள், எல்லாவற்றையும்
ற் றில் வீசியெறிந்தான்.
யைவிட்டு வெளியேறிக் ருெந் , "லயுடன் வள7 தம் ) , தான்.
லீலா குறிப்பிட்டிருந்த கடி தமும் வந்தது. ஆரம்பத்தில் 5-9, தையைக் கண்டித்து எழுதியருந்தாள், அதன்பின் சிசிலுடைய விவர து சம்பந்தமான விளக்கங்கள். இலங்கையின் மிகப்பெரிய செல் வர்கள் வாழும் பகுதியான கறுவாத்தோட்டத்தில் ந ல் ல பெண்ணுெ ருத்தியை லீலாவும் கணவனும் தெரிவுசெய்திருந்தனர்" சீதனப் 16007 LD frg, எழுபத்தையாயிரம் ரூபா வை ரொக்கமாகவும். இன்னுமொரு எழுபத்தையாயி ரம் ரூபாவிற்குப் பெறுமதியான திகைகள், பண்டங்கள் முதலிய வற்றைத் தருவதாகவும் கூறி பிருத்தனர். பெண் "ஒலிவ், நிறத்தினளாகவும், மிக அழகா னவளாகவும், நாகரீகமானவ எாகவும், பியனே வாசிக்கத் தெரிந்தவளாகவும் இருந்தாள். நூற்றுக் கணக்கான "3ே அவளிடமிருந்தன. அவளுடைய ஆபரணங்களில் Gð96 Ursus (Bamr முக்கிய இடம் பெற்றிருந்தன?
தம்பிராசர அக்கடிதத்தை ரா லிபிடம் காட்டினன். இருவ ருதம் அது பிடிக்கவில்லை. "எத்தனையோ வாலி பர் கள்
41

Page 23
விவாகம் செய்யாமல் ஐரோப் பிய தேசங்களுக்குச் சென்று திரும்பியிருக்கிமுர்கள். உங்களை சரியாகப் புரிந்துகொள்ள உங் கள் சகோதரிய்ால் முடியவில்லை" என்று ராஜி கூறினுள். ராதா வைப்பற்றி இருவரும் பலமணி நேரம் கதைத்தார்கள். இறுதி யில், தான் ஒரு விரிவுரைக்குத் தயாராக வேண்டியிருப்பதாகக் கூறிவிட்டு ர ரஜி சென்றுவிட் டாள்: அன்று இர்வு அவன் படுக் கவில்க்ல. ஒருவித விர க்தி உணர்வு அவ்ன்ை ஆட்டிக்கொண் டது: "ஓ! ராதா, ராதா எல் லாமே முடிந்துவிட்டன. முடிந் தேவிட்டன . ஏதோ வெல் லாம் பிதற்றியபடி அழுதான்
இல்லை இப்படியே விடமாட் ன்ே: "இதற்கு ஒரு வழிய மைத்தே தீருவேன். ரா தா உன்னை எப்படியும் அடைந்தே தீருவேன்"
தம்பிராசா தனது ઉદ્ઘાટો); காரனையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட் டான். புகையிரத நிலையங்களில் இறங்கித் தன்னைத் தொந்தரவு தெய்யவேண்டாமென்று அவனி டம் கூறிவிட்டுத் தூங்கும் வ தியுள்ள பெட்டிக்குப் பிரவேசச்
சீட்டினை வாங்கினன். புகையி ரதம் புறப்பட்டது அமைதி யற்றவணுக ஒவ்வொரு பெட் டிக்கும் சென்றன். பிரதான
புகையிரதத் தரிப்புக்களில் அங் க்ாடி வியாபாரிகள் gigslistillனர். ஒரு பெ ட் பி. சிகரெட் வாங்கிக்கொண்டு தனது இடத் திற்கு மீண்டான் யன்னலை மூடி வெளியுலகத் Gast Li Li Gife. ருந்து "தன்னை விடுவித்துக் கொண்டான். ஒன்றன்பின் ஒன் ருக எல்லா ஒகரெட்டுக்களையும் புகைத்துத் தள்ளினன்,
4&
அடுத்தநாட்காலை புகையிர தம் யாழ்ப்பாண நிலையத்தை வந்தடைந்தது. தம்பிராசாவை வரவேற்க் அவனுடைய சிறிய தந்தையாரும், லீலாவின் கண வனும் வந்திருந்தனர்.
தம்பிராசாவின் வேலைக்கா ரப்பையன் த னது பெட்டியி னின்று இறங்கிவந்து தம்பிராசா பிரயாண்ஞ்செய்தபெட்டியினுட் பிரவேசித்தான். . தம்பிராசா மல்லாந்து படுத்திருந்தான். 'தம்பிராசா எழும்பப்பா என்று அவனை உலுப்பினர் மைத்துனர். தலை துவண்டது. பதிலில்லை.
புகையிரதச் சிப்பந்திகள் தம்பிராசாவின் உடலை அப்புறட் படுத்த உதவிஞர்கள். அவசர சிகிச்சைக்கு வந்த டாக்டரி பாதி அட் பிள் ஒன்று கண்டார். அப்பழத்தில் இயற்கையாகவே நஞ்சு படர்ந்திருந்தது.
பிரேதத்தைப் பார்த்ததும் லீலா நினைவற்று விழுந்துவிட் ட்ாள். மயக்கம் தெளிந்து எழுந் ததும் கதறி அழுதாள்? நீயே இறந்துவிட்டபின் நான் ஏன்
வாழவேண்டும் என் னையும் அவனு
டன் சேர்த்துக் கொழுத்திவிடுங் கள் என்று கணவனின் காலைக் கட்டிக்கொண்டு ஒலமிட்டாள்.
"அவன் நினைத்திருந்தால் கோடீஸ்வரியை மணந்திருக்க லாம். ஆனல் தான் விரும்பிய பெண்ணையடையவேண்டுமென்ற வீராப்புடன் இறந்துவிட்டான்' மரணச்சடங்கிக்கு வந்திருந்த ஒருவர் கூறினர். பல்கலைக்கழ கத் தலைமைப்பீடம் இன்னுெரு பட்டதாரியை இங்கிலாந்திற்கு அனுப்பியது.

இலக்கியச்
UD
யாழ் பொது நூல் நிலையத் தில் பிரிட்டிஷ் கவுன்ஸில் ஏற் பாடு செய்திருந்த புத்தகக் கண்
காட்சியொன்று அண்மை யி ல் நடைபெற்றது.
பெப்பிரவரி , முற்பகுதியில் கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தின் சார்பில் திரு. மாவை நித்தியானந்தன் தலைமையில் திரு. நெல்லை க. பேரன் எழு திய சிறுகதைகள் பற்றிய விமரி சன அரங்கு ஒன்று நடைபெற் றது. இ தி ல் திருவாளர்கள் க. இராசகோபாலன், குப்பி ழான் ஐ. சண்முகம், கே. பொன் னம்பலம் ஆகியோர் க ல ந் து கொண்டனர்.
செல்வன் நிமர்ராஜ் ராஜ் நல்லவின் புல்லாங்குழல் அரங் கேற்றம் வெ ள் ள வ த் தை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இலங்கை தியாகராஜ கான சமாஜத்தின் ஆதரவில் நடை பெற்றது. செல்வி கலாநிதி சுப்பிரமணியத்தின் இசை அரங் கேற்றம் பெப்பிரவரி முதல் பகு தியில் கொழும்பு மகளிர் சுல்லு ரியில் நடைபெற்றது. இவர் சென்னை ம த் தி ய கர்நாடக இசைக் கல்லூரியில் சங்கீத வித் துவான் பட்டம் பெற்றவர்.
பலாலி விசேட ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று வரும் இலக்கிய ஆர்வமுள்ள ஆசிரிய மாணவர்கள் சேர்ந்து முதல் முதலாக "இலக்கிய வட் டம் ஒன்றை அமைத்துள்ளனர். இவ்வட்டத்தின் சார்பில் புதுக்
மாணிக்கராசன்
கவிதை தொகுதியொன்று வெளி யிடப்பட இருக்கின்றது.
அகில இலங்கை திருவள்ளு வர் மகாசபையின் பிர சார ஏடாகிய "வள்ளுவன்" மகாசபை யின் தலைவர் Tதிரு. வி. ஞான ரத்தினத்தினுல் அண்மையில் வெளியிடப்பட்டது.
ஆனையிறவு தமிழ் இசை நாடக மன்றத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் ‘அண்மையில் மன்றக்கட்டிடத்தில் கிளிநொச்சி வரியிறுப்பு அதிகாரி திரு. சவுந் திரநாயகத்தின் தலைமையில் நடைபெற்றது. அத்துடன் மேற் படி மன்றப் பெயர் உப்பு க் கூட்டுத்தாபன கலா மன்றம் எனவும் மாற்றப்பட்டது:
அநுராதபுரப் பகுதியில் வாழும் கலை, இலக்கிய ஆர்வ முள்ள கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து இளம் இசை நாடகத்துறையை வளர்க்கும் பொருட்டு அநுராத புரம் கலைச் சங்கம் என்ற பெய ரில் திரு. நா. குமாரசாமி தலை மையில் அமைப்பொன்றை ஏற் படுத்தியுள்ளனர்.
நோர்வூட் கதிரேசன் வித்தி யாலயத்தில் *மலேயகத்தை எழுப்ப வந்த எழுச்சி எங்கே" என்ற தலைப்பில், ஹைலண்ட்ஸ் கல்லூரி அதிபர் திரு. திருச்செந் தூரன் தலைமையில் கருத்தரங் கொன்று மலையக இளை ஞ ர் முன்னணியின் ஆதரவில் நடை பெற்றது.
《别

Page 24
குரும்பசிட்டி சன்மார்க்க சபை மண்டபத்தில் பெப்பிரவரி மத்திய பகுதியில் அரசு வெளி யீடான 'கவியரங்கில் கந்தவ னம்’ என்னும் நூல் வெளியீட்டு விழா இலக்கியச் செல்வர் ரசிக மணி க ன க செந்தில்நாதன் தலைமையில் வெளியிடப்பட்டது.
இலங்கை இஸ்லாமிய எழுத் தாளார் சங்கம் ஜனப். எஸ். எம். ஏ. ஹசன் எழுதிய "அருள் வாக்கு" என்னும் நூல் வெளி யீட்டு விழாவை கண்டி சித்தி லெ ப்  ைப் வித்தியாலயத்தில் நடத்தியது. இவ் வைபவத்தில் சமூக சேவைகள் அமைச்சர் திரு. ரி. பி. தென்னக்கூன் பிர தம அதி தி யா க க் கலந்து கொண்டார். பேராசிரியர் கலா நிதி சு: வித்தியானந்தன் உட்ப
டப் பலர் பேசினர்.
மருதமுனை கலைக்கூட வரு டாந்தப் பொதுக் கூட்டம் கல்முனையில் அண்மையில் நடை பெற்றபோது தலைவராக மருதூர் "வாணன் தெரியப்பட்டார்.
நெடுங்கேணி நா வ ல ர் நாடக மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் திரு. நா. காரா ளசிங்கம் தலைமையிலும் கல்முனை பாராளுமன்றப் பொதுக்கூட்டம் தலைவர் திரு. கா. கதிர்காமத் தம்பி தலைமையிலும் அண்மை யில் நடைபெற்றன.
தெல்லிப்பளை அம்பனை கலைப் பெரு மன்றத்தின் சார்பில் புல வர் சிவபாதசுந்தரஞர் 'புறப் பொருள் வெண்பா மா லை’ ஆராய்ச்சி நூலாய்வும், அறிமுக விழாவும் திரு. கி. கதிரேசர் பிள்ளை தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
பெப்பிரவரி மத்திய பகுதி யில் வெளிமடை தமிழ் மகா வித்தியாலய மண் ட பத்தில்
44
* வாசகர் வட்டம் கூடியபோது சிறுகதைகளும், கட்டுரைகளும் வாசிக்கப்பட்டதோடு அ  ைவ பற்றிய அபிப்பிராயங்களும் பரி மாறப் பட்டன. இறதியாக வியட்நாம் வீரர்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற் [0ğbil .
நெல்லியடி கலை இலக்கியக் கழகத்தினரால் 'ஈழத்தில் சிறு கதைகளின் தற்போதைய நிலை பற்றி ஒரு இலக்கிய உரையா டல் நடத்தப்பட்டது. காதலை மையமாகக் கொண்டு பின்னப் படும் சிறுகதை இலக்கியங்கள் தற்காலத்தில் குறைந்து வரு கின்றது இலங்கையில். து வரவேற்கக் கூடியதாகும்’ என்ற வாறு இதில் கருத்துக் தெரிவிக் கப்பட்டது. நெல்லை ஐ. நடேஸ் பா. திருநாமம் உட்படப் பலர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
சட்டக்கல்லூரியின் த மிழ் இலக்கிய மன்றத்தின் விவாதக் குழு அங்கத்தவர் தெரிவு க் கூ ட் டம் திரு. குமாரசாமி விநோதன் தலைமையில் அண்மை யில் நடைபெற்றது.
கணக்காய்வு திணைக்களத் தின் தமிழ் இலக்கிய மன்ற இரண்டாவது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. தலைவராக திரு. தி. பொன் னுத்துரை தெரியப்பட்டுள்ளார்.
புதிய பறவைகளின் முதலா வது இலக்கிய விழா கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியா ல_தில் பெப்பிரவரி 18-ந் திகதி நடைபெற்றது. 'ஈழத்து இலக் கிய ஏடுகளின் வ ரி  ைச யி ல் 1973-இன் ஜனவரி இதழ்கள் மூன்று" என்ற விஷயம் ஆய் வுக்கு எடுக்கப்பட்டதோடு கவி பரங்கும் நடைபெற்றது.

குறிப்பப் புத்தகத்திலிருந்து
ச ருகுகள்
கே. எஸ் சிவகுமாரன்
* மொழி என்பது கருத்து, உணர்வு, எண்ணம், சிந்தனை போன்றவற்றை வெளிப்படுத்த உதவும் ஒரு வாகனம். இலக் கண ரீதியாக சொற்கள் ஒரு வரண்முறையில் .9{ 60( Lמו וש מ பொழுது வாக்கியம் அர்த்தம் பெறுகிறது. சில வாக்கியங்கள் இலக்கண ரீதியாக அமைந்தா லும் அர்த்தம் பெறத் தவறு கின்றன. இதற்குக் காரணம் அவ்வாக்கியத்தில் அமைந்த சொற் கள் குறித்து நிற்கும் தொ னி படிப்பவருக்குப் புரி யாத நிலையில் அமைவதாகும். அதர்வது எந்த ஒரு தொணியை உணர்த்துவிக்க ஒரு சொல் ஆசி ரியரால் பயன்படுத்தப் படுகி றதோ அந்தத் தொனியை நேர டியாகப் பகிர்ந்துகொள்ள படிப் பவரின் அனுபவம் பக்குவம் அடைந்திருக்காவிட்டால் இந்த நிலைமை ஏற்படுகிறது.
மேல் நாட்டுத் திரைப்படங் கள் மக்கள் கலையாக இல்லை. மாருக தனிமனித வாதிகளின் கன வு ல கப் படைப்புகளாக இருக்கின்றன. ஆச்சரியம் என்ன வென்றல் இந்தப் படங்களை நெறிப்படுத்தியவர்களையே உல கின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்களாக விமர்சகர்கள் கருதுவதுதான். மிட் நை ற் கிராட்ஜாவற்,
கெளபோய், க் ரூ ட், ஈசி
றது, இங்கிலாந்து,
றைடர், தே ஆர் கிலிங்ஹோ ஸஸ், டோன்ற் தே? போன்ற ஆங்கிலம் பேசும் படங்கள் சில வற்றை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். மேற்கு நாட்டுப் படங் களின் கதைப்போக்கு மாற்றம் அடைந்து வருகின்றன என்ப தற்கு இவை உதாரணங்கள். முதலாளித்துவ சமூக அமைப் பில் இருந்து வெளியாகும் படங் கள் அடிவாருண முற்போக்குக் கருத்துக்களை முழுக்க முழுக்கக் காண்டிருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. ஆயினும் ஒரு சில வரம்புகள் அப்படங் களிலும் தளர்ந்து வருகின்றன என்பதை அவதானிக்க முடிகி சுவீடின், ஒல்லாந்து, பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, இத்தாலி, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் இருந்து இட துசாரி திரைப்படங்கள் வெளி வருவது அருமையிலும் அருமை அதேவேளையில் சோஷலிச நாடு கள்என்று கூறப்படும் போலந்து ஹங்கேரி, செக்கோஸ்லவாக் கியா யூகோஸ்லாவியா போன்ற நாடுகளின் படங்கள் மேற்கு நாட்டுப் படங்களின் போக்கில் காமத்தையும் வன்செயல்களே யும் சித்தரித்து வருவது மற் றும் ஓர் விந்தை.
இடதுசாரி திரைப்படங்கள் பற்றிக் குறிப்பிடும் அந்த்ரே

Page 25
பிறெட்டோன் என்பவரும் லியோன் ரொற்ஸ்கி என்பவரும் அப்படங்கள் நேர்மையானவை என்ருலும், உள்ளடக்கப் பளு அவற்றிற்கு அதிகம் என்று கூறுகிருர்கள். ஒரே நேரத்தில்
பல பிரச்சினைகளை இப்படங்கள் -
சித்திரிக்க முற்படுகின்றன என் றும் அவர்கள் கூறுகின்றனர். உருவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை எ ன் ற பழைய பல்லவியையே இவர்க ளும் பாடியிருக்கிருர்கள்.
பிரான்ஸில், மா செ ல் கார்வே என்பவர் லே றிச்சூஸ் என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டபொழுது லா எக்ஸ் பிறஸ என்ற அந்நாட்டுப்பத்தி ரிகை நொவல்வே வேக் (புதிய அலை) என்ற பதத்தைப் பயன் படுத்தியிருந்தது. Går ser rif பிரான்ஸ்சுவா ஜிரோ என்பவர் பிரெஞ்ச் இளைஞர்கள் பற்றி எழுதியுள்ள"கட்டுரை ஒன்றில் அதே பதத்தைப் பயன்படுத்தி யிருந்தார். "நியூ வேவ்" என்ற ஆங்கிலத்தில் இப்பொழுது அழைக்கப்படும் இந்தப் பெயர் பிரான்சில் வெளியாகும் புது விதமான படங்களைக் குறிக்கப் பயன்படுத் த ப் படுகிறது. குறைந்த செலவில் பெரிய நட் சத்திரங்கள் இல்லாமல் கைக் கமராக்களினல் பரபரப்பான விஷயங்களைத் தீட்டுவது இந்தப் புதிய அலையின் குறிப்பிடத்தக்க அம்சம் , கஹியர் டூ சினமா என்ற பிரெஞ்ச் திரையேட்டில் எழுதிவந்த அந்நாட்டு 659 Lorraf கர்கள் இதுப்ோன்ற படங்களை நெறிப்படுத்த ஆரம்பித்தார் கள். நூ போ, ரெனே GT air றவர்கள் இவர்களில் Gavrř. Ar
46
சேகரம் - முருகையா
மல் லி கை வளர்ச்சியில் ஆழ்ந்த ஆத்ம ஈடுபாடு கொண் Lவர்களான திருவாளர்கள் stein). G59. £51 b60) llu lluff : நற்குணம்
இராசேந்திரம், ஜெகஜோதி ஆகியோரின் உறவினரும், சேக ரம் - நல்லம்மா தம்பதிகளின்
மூத்தபுதல்வருமான apo 60 85ur அவர்கள் சென்ற மாதக் கடை சிப் பகுதியில் உ யர் கல்விப் பயிற்சிக்காக லண்டன் மாநகர் சென்றுள்ளார்.
இவர் தனது கல் st 60 சீமையில் சிறப்புடன் பயின்று தனது தாய்த் திருநாட்டிற்கும் உறவினர்க்கும் பெருமை தேடித் தரவேண்டும் என ம ன மா p வாழ்த்துகின்ருேம்,
சேகரம் முருகையா அவர் கள் உரும்பராய் இந்துக்கல்லூரி மாணவரும், அங்கு பயிலும் போது சாரணர் இயக்கத்தில் மிகுந்த செயலூக்கத்தில் இயங் கிக் கல்லூரிக்குப் பெ ரு  ைம தேடித் தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
- ஆசிரியர்
 

இப்படியும் சில.
* இ ன்று புதுக்கவிதைகள் பற்றிக் கருத்து மோதல்கள் நடைபெறுகின்றன. சார்பான கருத்துக்களை விட, எதிரான கருத்துக்களே - புதுக்கவிதை யின் இலக்கிய முக்கியத்துவத் தை வலுப்படுத்துவதாக இருக் கின்றன. இத்தகைய பலமான தாக்குதல்கள் உண்டாவதும், தாக்குப் பிடிப்பதுமே புதுக்கவி தையின் பலத்தைக் காட்டுகி றது. புதுக்கவிதைகளை ஏற்காத அறிஞர்களும், கவிஞர்களும் தற்போது புதுக்கவிதைபால் கவனம் திருப்பியிருப்பது இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும். "புதுக் கவிதை பற்றிக் கட்டுரை எழுதுங்கள்" என வல்லிக் கண், ணனை, கலாநிதி க. கைலாசபதி கேட்டுக்கொண்டதும்,
*பண்டைய நா ட் களி ல் மனனம் செய்வதற்காக எழுதப் பட்ட கவிதை, இடையில் படிப் பதற்காக எழுதப்பட்டு, இன்று புதுக்கவிதை வடிவில் பார்ப்ப தற் கா கவும் எழுதப்படுவது தவிர்க்கமுடியாத தேவையாகி விட்டது. ஐம்பெரும் காப்பிய வரிசையில் கம்பராமாயணத்தை
அடக்காமல் விட்டதற்கு, அது
மரபு வழி காவியங்கள் வெண் பாவால் பாடப்பட்டு முறையை மீறி வி ரு த் த ப் பாவால் பாடப்பட்டமையும் ஒரு காரணம். இத் த  ைக ய நிலையே இன்றைய புதிய, வசன
வந்த
*அரவான்'
கவிதைகளுக்கு ஏற்பட்டுள்ளது" என்ற சில்லையூர் செல்வராசன் கருத்தும் இதனை நிலைநாட்டும்.
2
புதுக் கவித்ைகள் சிலவற் றைப் படிக்கையில், எங்கோ, எப்போதோ படித்த வரிகளை யும் கருத்துக்கஃாயும் எனக்கு ஏனே நினைவூட்டுகின்றன. உங் கள அனுபவங்கள் எப்படியோ?
எங்கள் மீது சாம்பலைத் தூவாதீர்கள் நாங்கள் நெருப்புக் கோழிகள்.
- கங்கைகொண்டான்
எங்கள் மீது சுடு நீர் ஊற்றதிர்கள் நாங்கள் பச்சைத் தண்ணீர்ச் சாதிகள்.
- நீள் கரை நம்பி
3
"எதிர்எதிரான வர்க்கங்களை கொண்டுள்ள ஒரு சமுதாயத்தில் எழுத்தாளர் சுதந்திரம், இலக்
7

Page 26
கியச் சுதந்திரம் என்று சொல் லப்படுவதெல்லாம் வேறும் கட் டுக்கதை வெறும் மயக்குத் தோற்றம்" - லெனின்.
பெரிய பத்திரிகை முதலா ளிகள் தங்கள் பத்திரிகையின்
விளம்பரம், விற்பனை, செல் வாக்கு, செல்வம் பெருகுவ தையே முக்கியமாகக் கருதும்
போது இரு வர்க்க சமுதாய
அமைப்பில் எழுத்தாளனின் சுதந்திர உணர்வு பலியாகிவிடும் என்ற இதே உண்மையையே,
பெரிய பத்திரிகை முதலாளிக ளுக்கு ஆலவட்டம் சு ந் றும் ஜெயகாந்தனும், வேறு முறை யில் கூறுகிருர் .
"எனக்கும், பத்திரிகைத் தாபனங்களுக்குமிடையே உள்ள Ձ-06վ அவர்கள் என்படைப்பை வெளியிடுவது ஒன்றுமட்டுமே: அவர்களுக்கு என் படைப்பைக் கட்டியோ, குறைத்தோ வெளி யிடும் உரிமை உண்டு என்பதனை நானறிவேன்"அதனல் அவர் களுக்காக நானே எனது படைப பிை வெட்டிச்சிதைத்துக் குறைத் துக் கொடுப்பேன். ஆனல் என் உரிமைகளை எவரும் பறிக்க விட மாட்டேன் (!?"
- இது லெனினின் தீர்க்க தரிசன வாக்கிற்கு சிறந்த எடுத்
துக் காட்டாகவல்லவா விளங் குகிறது.
4
சில பிரபல எழுத்தாளர்கள் இலக்கியக் கூட்டமொன்றில் கூறிய சில கருத்துக்களை நீங்க ளும் அறிந்திருப்பது ந ல் ல து எனக் கருதுகிறேன்.
"நவீன இலக்கியம் என்பது 1860-ம் ஆண்டில்தான் உலகி லேயே தோன்றியது. ஏனென் ருல் அவ்வாண்டில் தான் கார்ல் மாக்ஸ் தனது "டாஸ்காபிடல்" என்ற நூ லை வெளியிட்டார்? - கே. டானியல்,
"மாக்ஸியக் கண்ணுேட்டம் என்று கூறி இலக்கியத்தை கட் சிப் போர்வைக்குள் அடக்கா மல், விஞ்ஞானம் பார்  ைவ என்று கூறுதலே சிறந்த முறை யாகும் எ ன க் கருதுகிறேன்" - இளங்கீரன். * கவிஞன் மனதில் எழும் ஊமைக்கனவுகளே கவிதைகளா கின்றன’
- சில்லையூர் செல்வராசன்
蕊
49
X {x
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 7-00 தனிப்பிரதி -50 இந்தியா, மலேசியா 10-00
 

ஒளவை சண்முகம்
நவாலியூர் நடேசன்
தமிழ் மூதாட்டி ஒளவையாரைத் தமிழ் உலகம் மேடையில் கண்டு பூரித்து அன்னரின் பெருமையினைத் தமது உள்ளங்களில் ஆழப்பதித்துக் கொள்ளும் வண்ணம் ஒளவைப் பாத்திரம் தாங்கி நடித்த நாடகக் கலைஞர் டி. கே. சண்முகம் அண்மையில் காலமா கியமை தமிழ்க் கலையுலகிற்குப் பேரிழப்பாகும்.
இவரது ஒளவை நடிப்பினைப் பார்த்தோர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வியந்ததுபோல், மந்திரமோ தந்திரமோ மாய மோ சண்முகத்தின் விந்தை நடி விசித்திரமோ என்று இன்றும் வியந்து கொண்டிருக்கின்றனர்.
சிறுவர்கள் பாடசாலைக்குக் கல்வி பயிலச் செல்வது போல சிறுவன் சண்முகம் அன்று நாடக சபாவிற்குச் சென்று நாடகப் பேராசான் சங்கரதாஸ் சுவாமிகளிடம் நடிப்புக்கலை ப யி ன்று நாடகங்களில் நடித்து வந்தார்,
தனது குருநாதர் சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்மல் சம் பந்த முதலியாரையும் தனது கண்களாக மதித்துவந்த சண்முகம், நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி நாடகங்களை எவ்வாறு நடாத்த வேண்டும், நடிப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று தமிழ் நாடகக் கலையுலகில் புதுமை விளக்கம் பெறச்செய்தார்,
தேசபக்தியினையும் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களையும் நாடகங்கள் மூலம் மக்களுக்கு ஊட்டியவர். மகாகவி பாரதிய்ா ரின் பாடல்களை நாடக மேடையில் முதன் முதல் ஒலிக்கச்செய்து பாரதியின் எண்ணங்களை மக்களிடையே ரீங்காரமிடச் செய்தவர்.
ஒருகாலத்தில் எங்கும் ஒலித்த "ஏழைக்கு ஏது இன்பம்" என்ற * வாழ்க்கைப்படப் பாடலையும் ‘எங்கநாடு’ என்ற பாடலையும் புனைந்தவர் இவரே. "புகழ் பாடச்சொன்ன புலவன்' 'நாடகக் கலை" ஆகிய இவரது நூல்கள் பாட நூல்களாகச் சேர்க்கப் பட் டிருக்கின்றன. "நாடகக் கலை" என்ற ஆராய்ச்சி நூல் சென்னைப் பல்கலைக்கழக பீ. ஏ. வகுப்பு மாணவர்களுக்குத் துணை நூலாக விளங்குகின்றது. "எனது நாடக வாழ்க்கை' என்ற நூ லை யும் இவர் வெளியிட்டுள்ளார்.
இந்திய அரசினர் பத்மபூரீ விருது உட்பட எத்தனையோ விருது கள் அவருக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. எதை மறந்தாலும் சண்முகத்தின் ஒளவையார் தோற்றத்தையும், நடிப்பாற்றலையும் எவரும் மறக்க முடியாது. சண்முகம் போன்றேர் மறைவதில்லை. மறக்கப்படுவதுமில்லை.
á 9

Page 27
தேடுகிறேன்
Ope சடாட்சரன் "" " " " " " "-------------سسسسسهسسسسسسسسسسسسسسس
புத்தாடை பூண்டு உவகை கொள்ளப் புறப்பட்டு வந்தேன் எனக்குமுன் வந்தோரில் ஓர் சிலர்:
சுகளிலே வெற்றிப் பொருளும் விரிந்த முகத்தோடும், ஒத்தியுற வாழ்ந்து ஒரிப்போடு போகின்ருர்! வந்திங்கே
வாழ்வை வளமாக்கி
பூரிக்க く * ஒந்தனை நெய்யூற்றி செம்மை விளக்கேற்றி கூட்டி வெளியாக்கி குப்பைகளைத் தீயாக்கி தேட்டம் பெருக்கி
திளைக்க முயல்கின்றேன்! இந்தமுறை எமக்கீடேற்றம் கைகூடும்! இந்நிலத்தின் பாதையெலாம் இன்சிவப்புப் பூச்சொரியும் வேகமாய் நெஞ்சம் விரும்பி உழைக்கின்றேன்! சோகமிலாச் சொர்க்கத்தைப் பூமியிலே தேடுகிறேன்!

துயரங்கள்
சிரிக்கக் கூடும்
சில சமயங்களில் திடீரென ஏற்படும் கொடூரமான மனத் துயரங்களை யாரிடம் சொல்லி ஆறுதல் பெறுவது எனப் பல தடவைகளில் அவன் திணறிப் போவதுண்டு.
என்னவோ தெரியாது மற்ற வர் க ளின் வாழ்க்கையிலும்
பார்க்க இந்தச் சோக கட்டங்
கள் அவன்வாழ்க்கையில் திடீர்த் திடீரென இறங்கிவிடும்.
எதைப் பற்றியுமே வெளி யில்பேசாது துன்பங்களை மென்று விழுங்கி விடும் மனப் பக்குவத் தைப் பெற்றுக்கொண்டான்.
துயரங்களை விதியின் பெரிய கோமாளியாக அவன் கருதிக் கொள்வான்.
தனது மிக நெருங்கிய இலக் கிய நண்பர்களுடன் கூட, இலக் கிய சம்பந்தமான பிரச்சினைகள்
Šīē šī
d
பற்றிப் பேசுவானே த விர, மறந்தும் கூடச் சொந்த விவகா ரங்களைப் பற்றிப் பேசியது நான றிந்தவரை ஞாபகமில்லை. அது சம்பந்தம்ாக ஒரு கட்டுப்பாடு அவனிடமுண்டு. எல்லாருக்கும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச் சனைகள்! இதையெல்லாம் பேசிக் கொண்டேயிருந்தால் அப்புறம் பொதுவாழ்வு என்னுகிறது
இது சம்பந்தமாக அவன் வைத்திருக்கும் தெளிவான கருத் துக்களை நான் பூரணமாகத் தெரிந்து வைத்திருப்பதால் அவ னது சொந்த விவகாரத்தில் நான் அதிகம் தலையிடுவதில்லை.
இருந்தும் சிவத்தம்பி, கண்க ரெட்ணு ஆகிய இருவரிடமும் அவன் இது சம்பந்தமாக ஆலோ சனை கலந்தான்.
அவனுடைய மூத்த பெண் குழந்தைக்கு இருதயதில் துளை. "ஒப்பரேஷன் செய்வதுதான் மிக வும் நல்லது என யாழ்ப்பாண ஆஸ்பத்திரி இருதய நிபுணர் டாக்டர் நற்குணம் சோதனை
5.

Page 28
யின் பின்னர் சொன்ன பொழுது ரு கணம் அவ ன் கலங்கிப் பாய் விட்டான்.
சிலர் வேலூருக்குக் கொண்டு போகச் சொன்னர்கள்.
வேறுசிலர், "கொழும்பிற் குக் கொண்டு போவதுதான் எல்லாத்திற்கும் நல்லது என் ருர்கள்.
ஓர் உயிரின் உயிர்ப் பிரச் g2,071
என்னதான் இ லக் கி யம் பேசி ன லும் மனிதன்தானே அவன்!
எங்கிருந்தாலும் திறமையை அந்தக் கணத்திலேயே மதிப்பீடு செய்யும் வரப்பிரசாதம் அவனுக் குக் கைவந்த கலை,
டா க் டர் நற்குணத்தை ஒரே யொ ரு தடவைதான் ஆழ்ந்து நோக்கியிருக்கிருன் அவன். அந்த அமைதியான ஆழ்ந்த புன்முறுவலுக்குப் பின் ஞல் தன்னம்பிக்கை சுடர் விடு வதை அவன் அவதானித்துக் கொண்டான். யாழ்ப்பாண ஆஸ் பத்திரியில் ஒப்பரேஷன் பொறுப் பை அவர் ஏற்றுக் கொண்ட பொழுது அவனது ம ன தி ல் நம்பிக்கை மிகுந்த நிம்மதி ஏற் பட்டது.
இந்த இடைக்காலத்தில் சொல்லி வைத்தாற்போல ஏரா ளமான பொது வேலைகள். பத் திரிகை வேலை தலைக்கு மேலே. கொழும்புப் பிரயாணம் அவசிய மாகிறது.
இதைக் கேள்வியுற்ற பிரேம் ஜியின் மனைவி அவ னி ட ம் கொழும் பில் சொன்னுர், நானென்ருல் ஆயிரம் தலை போனலும் ஊரைவிட்டு வரவே மாட்டேன்.
சிவத்தம்பியின் பாரியார் சொன்னர், குழந்தைக் குக் காய்ச்சல் தலையிடியென்றலே துடித்துப்போய் விடுகிருேம். நீங்
52

கள் என்னென்று இந்தச சோகத் தைத் தாங்கிக் கொள்ளுகின் நீர்கள்?
அ வ ன் சகலவற்றையும் கடந்த ஞானியல்ல. பந்தபா சங்களால் சூழப்பட்ட மனிதன் தான். மற்ற மனிதர்களைப் போல குடும் பம், குழந்தை யென்று குந்தியிருந்து அழ த் தெரியாத பொது மனிதஞகத் தன்னைச் சமுதாயத்திற்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டு விட்ட மனிதன் அவன்.
இதைப் பதிலாகச் சொல் லாது போனலும் இப்படி நினைத் துக் கொண்டான் அவன்.
இந்த நெருக்கடியான காலத் தில் அவன் தங்களுடன் சுமுக மாகப் பேசிச் சிரித்து உரையா டவில்லை எனக் குற்றஞ் சாட்டி யவர்களை அவனுக்குத் தெரியும். மனித உணர்வுகளை வைத் துப் பாத்திரம் படைக்கின்ருேம் எனப் பெருமைப்படுபவர்களே அவனது உள்ளுணர்வுகளைச் சரி யாகப் புரிந்து கொள்ளாமல் இப் படித் தப்புக் கணக்குப் போட்டு, ஒரு முடிவுக்கு வருகிருர்கள் என்ருல் இதைப்பற்றிக் கூட, அவன் கவலைப்படுவதில்லை"
ஏனென்ருல் வாழ்க்கையில் எத்தனையோ ஆழ்ந்த துயரங்க ளுக்காக அவன் எப்போதோ அழுது தீர்த்துவிட்டான்!
வெற்றிகரமாகச் சத் தி ர சி கி ச்  ைச முடிந்து விட்டது. குழந்தை வீடுதிரும்பிவிட்டாள். கட்டம் கட்டமாகக் குணமாகி வருகிருள்.
டா க் டர் நற்குணத்திற்கு மனங்கனிந்த நன்றி. W
நான் உணர்ந்த அவன், எந்தவித வாத விவாதங்களையும் கடந்து, த னது வேலைக்குள் தன்னைத் தானே ஒப்படைத்துக் கொண்டு விட்டான்.