கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1974.02

Page 1
' '
- t
|
பெப்ரவரி 1974 99&SEOத
TW|| || S LSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

silicissa san

Page 2
O எட்டாந்தரச்
சமுகக்கல்வி மாணவர்களுக்கான நூல் O 15 - 2 - 74 இல் வெளிவருகின்றது
எட்டாந்தரச் சமூகக்கல்வி
9 புதிய பாடத்தை உள்ளடக்கியது
ஏராளமான விளக்கப் படங்களையும் நிழற் படங்களையும் கொண்டது
0 கமலா குணராசா B, A, (Cey) ஆக்கியுள்ளார்
விபரங்களுக்கு :
பூநீலங்கா புத்தக சாலை 234, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
சுவை நிரம்பிய உணவுகள்
சிற்றூண்டி வகைகள்
இன்சுவை தரும் குளிர்பானங்கள் உற்சாகமான உபசரிப்புக்கள்
இவை எல்லாவற்றிற்கும் கொழும்பில் சிறந்த இடம்
அம் பா ள் கபே
104 ஆமர் வீதி, கொழும்பு-12.

ஆடுதல் பாருதல்கித்திரம்-கலி ಹೆಜ್ಜೈ; 懿 2ள்ளம் FFCbl6L6T3 if b L6)sf-192f ஈனங்ஃகண்டுதள்ளுவர்?
பிப்ரவரி
1974 70
· හිඟීmplගණ්ණිහිණි
இலக்கிய நண்பர்களுக்குச் சில வார்த்தைகள் சந்தாவை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும். முடியாதுபோனல் உங்களைத் தேடிவரும் சஞ்சிகை நிறுத்தப்ப டும் என்பதை முன் கூட்டியே சொல்லிவைக்க விரும்புகின்ருேம் , и
ஏனெனில் புதிய புதிய சந்ததாரர்களும் விற்பனைகளும் கணிசமான அளவு முன்னேறிவரும் நிலையில் மல்லிகையின் பிரதி களை அதிகரிக்க முடியாத சூழ்நிலையில் நாம் உள்ளோம். பத்திரி கைத்தாள் நெருக்கடி இதற்குத் தடையாக உள்ளது. எனவே மல்லிகையின் நிரந்தர ஆதரவாளர்களைத் தவிர தற்காலிக அசட்டை யாளர்களை இனங்காணவேண்டியது நமக்குத் தவிர்க்க முடியாததாகி வருகிறது. உண்மையாகவே இந்தத் தேசத்தில் ஒர் இலக்கிய மறுமலர்ச்சிக்கான விதையை இந்த மண்ணில் இன்று ஊன்ற ஆர்வ முள்ளவர்கள் யார் யாரோ அவர்களை ஒருங்கிணைப்பதே மல்லிகை யின் உடனடி நோக்கமாகும்.
தற்காலிகமாகச் சிலர் தமிழைப் பாதுகாக்கவென இன்று வரலாம்; போகலாம். நீண்ட நெடுங்காலத்திற்குத் தமிழ் வாழ . வளர - மதிக்கப்படத்தக்கதாக மிளிர - ஆவன செய்ய வேண்டு மென்பதே எமது நீண்டகாலத் திட்டம் , - ஆசிரியர் .
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர் .
கவிதை, கட்டுரை மல்லிகை
கருதது fr Ali T 1 Narf எல்லாம் ஆக்கிே Lunti மக் தனித்துவம்; யாழ்ப்பாணம்
பொறுப்பும் அவரே. (இலங்கை)

Page 3
வாழ்த்துகின்றேம்
எழுத்தாளர் திரு ஆ. சிவநேசச் செல்வன் - புனிதவதி திருமணம் 2-2-74-ல் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மணமக்கள் சீரும் கிறப்புமாக வாழ மல்லிகை வாழ்த்துகின்றது.
எழுத்தாளர் நெல்லை க. பேரன் - உமாவதி
திருமணம் 7-2-74-ல் நடைபெற்றது.
மணமக்களை மல்லிகை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகின்றது.
வாடைக் காற்று செங்கை ஆழியானின் புதிய நூல் வெளியீட்டு விழா
16-2-74-ல் செட்டிகுளம் 'சண்முகம் அரங்கில்
மாலை 5 மணியளவில் நடைபெறும். இலக்கிய நண்பர்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்:
 

மனிதனின்
லாப வெறிக்கு இலக்காகி
கூட்டம் சுட்டமாக செத்து மடியும் யானை களின் சோகக் கதை இது. ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறும் இந்தக் கோரப்
கொலை பாதகச் செயல், GL60ft
இயற்கையைத
பாதுகாப்பதன் அவசியத்கை
நமக்கு உணர்த்துகிறது.
கள்ள வேட்டைக் கொடுமை
ஆப்பிரிக்க நாட்டில் அண் மையில் வெளியிடப்பட்டுள்ள * சிவப்புப் புத்தகம்" என்ற நூல் ஒரு நாவல் அல்ல; எனினும் அது வாசிப்பதற்கு மிகச் சுவை யானது. பல புள்ளி விவரங்கள் அதில் இருந்த போதும், அது வெறும் வி வர த் தொகுப்பு நூலல்ல, மனிதனது மூர்க்கத் தனமான கொலை கார நடவடிக் கைகளின் பயணுக, எவ்வாறு பற்பல அரிய மிருகங்களும் பற வை களும் பூண்டோடு அழித்து ஒழிக்கப் படுகின்றன கூறும் நூல்
. மனிதன் இழைத்து வரும் டுேேைன் விளை வா க,
அழிந்து ஒழிந்து போன விலங் 瀏鷺 பட்டியலைக் கூறுகி
றது அது
வேறு எந்தக் கண்டத்தை யும்விட, ஆப்பிரிக்கக் கண்டத் தில்தான் வனவிலங்குகளைத் தங் களது சொந்த லாபத்திற்கா கக் கொல்லும் பழக்கம் அதிக மாக உள்ளது. அரிய ஆப்பிரிக்க விலங்குகளையும், பறவைகளை
போரிஸ் அசோயன்
dia
யும் கொன்று, அவற்றின் உடல் களைப் பாதுகாத்து, அ ரு ம் பொருள். காட்சிச் சாலைகளுக்கு விற்பதன் மூலம் கொள்ளை லாப மடிக்கும், ஒரு சில வெறியர்க
ன் செயல்தான் அதற்குக் காரணம் முதலைகள், சிறுத் தைகள், நீர்யானை, சிங்கம்
ஆகிய வனவிலங்குகள் நஞ்சு கலந்த அம்பாலும், துப்பாக்கி யாலும் கொல்லப்படுகின்றன. தற்போது, நவநவீன எந்திரத் துப்பாக்கிகள் இதற்குப் பயன் படுத்தப்படுகின்றன.
சட்ட விரோதமாக வேட் டையாடுதல் என்பது நெடுங் காலமாகவே நிலவிவரும் கொடு மையாகும். காலனியாதிக்க நாட்களில், தேசிய வளத்தை நாசம் செய்வது, ஒரு சட்ட பூர்வமான குற்றமாக இருந்து வந்தது. இன்ருே, ஆப்பிரிக்க நாட்டின் அரிய வன விலங்கு களை வேட்டையாடி அழித்தல் எனபது காலனியாதிக்கச் சுரண் டலின் ஒரு வகையே என்று ஆப்பிரிக்கர்கள் கருதுகின்ற

Page 4
னர். தற்போது, ஆப்பிரிக்கா வின் பூர்வ மிருகங்களுள் ஒன் முன யானைகள், பூரணமாக அழிந்துபடும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
கென்யாவின் த்சாவோ தேசியப் பூங்காவில் நான் கண்ட பயங்கரக் காட்சியை என்னுல் மறக்க முடியவில்லை. வேட்டை பாடுபவர்களின் ஈவிரக்கமற்ற தன்மையை அகரவருக்கும் எடுத் துக் கூறுவதற்காகவே அங்கு யானைகள், ய்ானைக் குட்டிகளது துண்டிக்கப்பட்டி s Gavẫu S Girதும்பிக்கைகளும்: கால்களும், காதுகளும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலங்களும், உறுப்புக்களும் காட்சி தந்தன.
வாரந்தோறும் றைய 300 யானைகள் கொல் லப்படுகின்றன" என்று எனது வழிகாட்டி தகூறினர். 'நீண் கொம்புகளுட்ன் கூடிய பெரிய யானேகளைத்தான் அவர் கள் 6 ல் ல விரும்புகின்றனர்: எனினும், மிகச் சிறிய தந்தத்
தைக் கொண்ட குட்டியையும் அவர்கள் விட்டுவிடுவதில்லை. ஏனெனில், குட்டிகளைக் கொல் வது எளிது’ என்று விளக்கினர் அவர்
வாரத்திற்கு 300 யானைகள் என்றல், ம்ாதத்திற்கு 1200 என்றும், ஆண்டொன்றிற்கு
15000 என்றும் கணக்கிட ஒரு நிபுணர் தேவையில்லை. கென்
வில் மொத் தம் 50,000 யானைகளும், உகண்டாவில் 20,000-மும் தான் உள்ளன
என்பதைப் பார்க்கும் போது, நடைபெறுவது அ g) u n u di ஜெல என்று தெரிந்து கொள் ளலாம்.
அனுமதியின்றி. அதாவது 2) சென்'ஸ்" பெருமலேயே
O
படுபவர்கள்,
ஏறக்கு
வேட்டையாடுவது கென்யாவில் ஒரு பெ ரும் தொழிலாகவே ஆகிவிட்டது. அந்த அமைப்பின் சூத்திரதாரிகள் ஒரு காலு ம் அகப்படுவதில்லை. அந்த சூத்தி ரதாரிகள், காடுகளில் சென்று புதர்களில் மறைந்திருப்பதில்லை; துப்பாக்கி :வின்  ைச களை இழுப்பதில் சில: குழிவெட்டுவ தில்லை. விலங்குகளின் குடிநீர்த் தேக்கங்களில் விஷமிடச் செல் வதுமில்லே அவர்கள் த ல் ல ம7 O  ைக களி ல் அமர்ந்து கொண்டு "பணத்தை’ மட்டும் வெளியே விடுகின்றனர். அகப் சாதாரண கைக் கூலிகள்தாம். மூலவர்கள் திரை மறைவிலேயே இருந்து விடுகின் றனா. அண்மையில் கென்யா அரசாங்கக் கஜானுவுக்கு 25000 பவுன் நஷ்டம் ஏற்படுத்தியிதற் காகப் பிடிபட்ட ஐந்து வேட் டைக்காரர்கள் தண்டனை ஏது மின்றி வெளியேறி விட்டனர். காட்டிலா கா அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் கையூட் டுப் பெற்றுக்கொண்டு, சட்ட விரோத வேட்டைக்காரர்களின் கூட்டாளிகளாகி விடுகின்றனர். அத்தகைய காவலர்களே தந் தம் விற்கும் தரகர்களாக உள் ளனர் என்று சமீபத்தில் கென்ய ஜன தி ப தி வருத்தத்துடன் அறிவித்தார்.
உகண்டாவின் வனத்துை
பி ர த ம ::* : பேசிக் கொண்டிருந்தபோது, அவர் வனப் பாதுகாப்பு துறை யில் உள்ள பலரும் சட்ட விரோ தக் கும்பலின் கையாட்களா
கவே உள் ள ன ர் என்றும், போலீசார் நடத்தும் எந்தத் திடீர் சோதனையும் பலனளிக்
காமற் போவதற்கு அவர்கள் முன்கூட்டியே எப்படியே எச்ச ரிக்கப்பட்டு விடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

சில சமயங்களில் பொலீ சார் வெற்றி பெற்றும் விடுகின் றனர். சென்ற ஆகஸ்டு மாதத்
தில், த்சாவோ தேசியப் பூங்கா
வின் காவலரும், அவரது இரண்டு உதவியாளர்களும் 480 பவுன்
பெறுமானமுள்ள 19 யானத் தந்தங்களுடன், கையுங் களவு மாகப் பிடிபட்டனர் என்ற பர பரப்பான செய்தியைக் கென்யா பத்திரிகைகள் கொட்  ைட எழுத்துக்களில் பிரசுரித்தன. தான்சான்யாவிலும் 70 தந்தங் களுக்காக, 35 யானைகளைக் கொன்ற ஒரு அதிகாரி பிடி Lul" (Tri”.
இத்தகைய கள்ள வேட் டைக் கும்பலின் மன்னகைத் திகழ்பவர்தான் சான்ய வைச்
சேர்ந்த சாமுவேல் குட்டிங்கலா
GTaöri Jauri . அவரது வீட் டைப் போலீசார் சோதனையிட் டபோது, 160 யானைத் தந்தங் களும் , 61 வரிக்குதிரைத் தோல்
களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ஏறக்குறைய 5 லட்சம் சான்
சானிய ஷில் லிங்குகள் ஆகும்!
தந்தங்களின் அரிய மதிப் பிற்காக யானைகள் கொல்லப் படுகின்றன. மேலும் அவற் றைக் கொல்வதும் சிரமமில்லை. பெரிய உருவம் படைத்தவை யாக அவை இருப்பதால், எத் தகைய மோசமான வேட்டைக் காரனும் அதைக் கொன்று விட லாம். அதில் மற்றொரு செளக ரிய ம் என்னவெனில் ஒ ரு யானை கொல்லப் பட்டவுடன் இறந்துபட்ட தங்களது உறவி னரை விட்டுப் பிரிய மனமில் லாது, பிற யானைகள், அதைச் சுற்றி நின்று துயரத்துடன் தங்களது தலைகளை அசைத்து ஒலமிட்டுக் கொண்டிருக்கின் றன; எனவே அவை கும்ப
6) It is எந்திரத் துப்பாக்கிக ளுக்கு இரையாகி விடுகின்றன:
தந்தத்தின் விலை மிக அதிக மாகும், கள்ள வேட்டையைத் தடுக்கும் சட்டங்கள் "அர்த்த மற்றவையாகி விட்டன" என்று அமெரிக்க சஞ்சிகையான நியூஸ் வீக் எழுதியுள்ளது. அதிகபட் சத் தண்டனையே இரண்டாண்டு சிறைவாசம்தான்; அதற்குப் பதிலாக அபராதமும் செலுத்தி விடலாம்:
நைரோபி தேசியவனப் பாதுகாப்புக் காவலர் என்னி டம் பேசிக்கொண்டிருந்தபோது கீழ்வருமாறு கூறிஞர். ‘அபரா தம் விதிப்பது பிரச்சினையைத் நீர்க்கப் போவதில்லை. சில சம யங்களில் நீதிபதி 50 பவுன் அல்லது 500 பவுன் GTõõrgpi syu ராதம் விதிக்கும் போது குற்ற வாளிகளால் சிரிப்பை அடக்க
முடிவதில்லை. ஒருமுறை நான் மூன்று மாத காலம் கஷ்
டப்பட்டு, 11 பேர் கொண்ட கள்ள வேட்டைக் கும்பலைப் பிடித்தேன், நீதிமன்றத்தில்
அவர்களுக்கு 390 பவுன் அப ராதம் விதிக்கப்பட்டது. ஒரு நாளிரவில் அவர்கள் சம்பாதிக் கும் தொகை யை விட அது குறைவு.
குறுக்கு வழியில் விரைவில் பணக்காரராவதற்கு, த ந் த வியாபாரம் எளிய வழி என்று கருதப்படுகிறது. தந்தத்திற்கு கள்ள மார்க்கெட் விலை எக்கச் சக்கமாக உயர்ந்து வருகிறது சென்ற ஆண்டு ஜனவரிக்குப் பின்னர் அதன் விலை இரண்டி ரை மடங்கு அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோகிராமின் விலை 35 பவுன்கள்
கிழக்கு ஆப்பிரிக்காவில், வேட்டையாடுதலுக்கு அனுமதி

Page 5
பெறுவதும் மிக எளிது என்பது வியப்புக்குரியதாகும். କ୍ଷୁ - 4 ଈର୍ଯ୍ୟଙ୍ଗ டாவில், வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடும் ஒவ் வொரு யானைக்கும் 25 அல்லது 30 பவுன் தான் அரசாங்கத்திற்
குச் செலுத்த வேண்டும். அதே
நேரத்தில், தான் வேட்டையா டிய விலங்கை அவர் தன் இஷ் டப்படி பணமாக்கிக் கொள்ள லாம். அந்த வருவாய்க்கு அவ ருக்கு வரியும் கிடையாது,
வனவிலங்குகளைப் பா து காக்க வேண்டிய அவசியத்தை ஆப் பிரிக் க ர் க ள் உணரத் தொடங்கியுள்ளனர். சென்ற ஆகஸ்டு மாதத்தில், தான் சா னிய அரசாங்கம் வேட்டையா டலுக்கு ஆறு மாத காலத் தடை உத்தரவு ஒன்  ைற ப் பிறப்பித்தது. யானைவேட்டைக் கான அனுமதி குறித்த சட்டங் களைத் திருத்துவதற்கும் ஆலோ சனை நடத்தி வ ரு கிற து. ஸெய்ரே, ஐவரிகோஸ்ட் குடிய ரசுகளும் அத்தகைய நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளன .
டன்றி,
இந்தத் தடை உத்தரவை அறி வித்த ஜனதிபதி கென்யாட்டா
குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று ம் அறிவித்தார்.
அதிகாரிகள் மேற்கொள் நடவடிக்கைகளுக்கு, ஆப் ரிக்கப் பொதுமக்களும் ஆத ரவு தருகின்றனர். தங்கு தடை யற்ற வேட்டை, பிராணிகளைப் பூண்டோடு அழித்து விடுவதோ தேசியப் பொருளாதா ரத்தையும் சிதைத்து விடும் என்று வெகுஜன ஸ்தாபனங் கள் மக்களிடையே பிரசாரம் நடத்தியும் வருகின்றன.
மனிதன் யானையின் விரோ தியா, நண்பனு? " நா க ரீ க" மோதலையும் சமாளித்து இந்த ஜி என் ன த மா ன விலங்குகள் வாழுமா? இவை தத்துவார்த் தக் கேள்விகளல்ல. இயற்கை யைப் பாதுகாக்கும் பிரச்னையி னடியாகப் பிறக்கும் கேள்விகள்.
★
YS eAS AeS eeLeLeS eee YeLLeLeLeeLeee ee eeeeeLee eeeee ee eeee LeLeLeeLLeS eeee eeeLe eeee eeLee LLLeeLeLeeLe eeLeLe S SeeeSS ssLS SeLSLY r&888&&.88.8888 & 3888 - 8888 & XX-888-88.88%. 8888 & XX .
愈*邻婚※※令令令令夺令***令领令°
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 8.50 தனிப்பிரதி 60 இந்தியா, மலேசிய 10.00
(தபாற் செலவு உட்பட)
必必必令令多*必****必必****必必心必***令令心必必●
 

உலகப் புகழ்பெற்ற அரேபியாவின்
wk
ஆயிரத்தோர் இரவுகள்
உலகப் புகழ்பெற்ற 'ஆயி ரத்தோர். இரவுகள்" என்ற பழம் பெருமைவாய்ந்த அரா பியக் கதைகளை நீங்கள் படித் திருக்கலாம். பல நூற்ருண்டு களாகியும் இன்றைவரை சுவை குன்ருமல், அந்தக் " தைகள் வெளிவந்து கொண்டு,ானிருக் கின்றன. "அலாவுதீனும் அற்புத விளக்கும்" "அலிபாபாவும் நாற் பது திருடர்களும்" 'சிந்துபாத் தின் கடல் பிரயாணம்" இந்தக்
கதைகள் பல அற்புத கற்பனை களைக் கொண்டவை. இந்தக் கதைகளில் உண்மைகளோடு
கற்பனைகளும் கலந்துவிட்டதால் எது உண்மை எது கற்ப னை என்று கண்டுபிடிக்க முடியாமல் இந்த 1001 இரவை பல எழுத் தாளர்கள் உண்மைச் சம்பவங் ளோடு தங்களுடைய அற்புத
மான கற்பனைகளையும் சேர்த்து
எழுதிவந்திருக்கிருர்கள்.
ஆயிரத்தோர் இரவுகளைப் பற்றி பல சரித்திராசிரியர்களு டைய அபிப்பிராயங்களைப் பற்றி ஆராயும்போது பல மொழிக ளில் இந்தக் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதென்பதை தெரிந்து கொள்கிருேம். இந்தக் கதைகளில் பல கதைகள் வெள் ளித் திரைகளில் வெற்றிப் படங்
எம். ஏ. கிஸார்
களாக பல மாதக் கணக்கில் ஓடிக்கொண்டிருந்ததை நீங்க ளும் அறிந்திருக்கவாம். ஆனல் இந்தக் கதைகளால் மக்களுக்கு என்ன நன்மை, அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு என்ன செய் திருக்கிறது என்று கேட்டால், தயக் கமின்றி உடனே பதில் சொல்லிவிடலாம். பொதுப் படை:ாகச் சொல்வதென்ருல் அன்றைய மக்களை பீதியடையச் செய்திருக்கிறது அந்தப் பயங் கரக் கதைகளைப் படித்த மக்களை பயந்தாங் கொள்ளிகளாக ஆக் கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அன்றையிலிருந்து இன்றையவரை பாமர மக்கள் பூதங்கள், ராட்சத மனிதர்கள், வனதேவதைகள், பயங்கர மிரு கங்கள், ஐந்துதலை நாகங்கள், அற்புதப் பறவைகள் இப்படிப் பட்ட பல அதிசயக் கதைகளைக் கேட்டும் படித்தும் மற்றவர்க ளுக்குச் சொல்லியும் ஆச்சரியத் தையும், பீதியையும் மக்கள்
மனதில் பதியவைத்து விட்டார்
கள்,
g)Gör go sin. L- p5b Lurr *g). Dmtrif கள் சிறுவர்களுக்கு இப்படிப் பட்ட அதிசயக் கதைகளைச் சொல்லி வருகிருர்கள். அந்தக்
கதைகளைக் கேட்பதால் அவர்

Page 6
கள் சொல்லும் அந்தப் பயங் கரச் சம்பவங்கள் நம் சிறுவர் கள் மனதில் உறைந்து விடுத தால் அவர்கள் வளர்ந்து வாலி பர்களாகியும், அந்தப் பயந்த சுபாவம் அவர்களை விடுவதாக @(ນ. அவர்களைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறது. இருட் டில் ஒரு இடத்துக்குப் போகப் பயப்படுகிருர்கள். அவர்களோடு ஒரு பேய்க்கதை சொல்லும் நண் பனும் சேர்ந்துவிட்டால் அவன் சொல்லும் கதைகளைக் கேட்டு பயந்து நடுங்குகிறர்கள், இப்ப டிப் பல குறைகள் இருந்த போதிலும், அந்தக் கதைகளில் வரும் அழகி ய கற்பனைகள்,
கவர்ச்சிகள் போற்றத் தக்கவை
என்பதை மறுப்பதற்கில்லை.
பிரபல வரலாற்று ஆசிரி யர் ஸ்ர், ரிச்சாட் பிரான்ஸிஸ் அராபிய இலக்கியங்களை ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து வெளி யிட வேண்டுமென்ற ஆவ ல் கொண்டு அரபு மொழியைக் கற்று அதி ல் நன்கு தேர்ச்சி யடைந்தார். அவருடைய கவ னத்தை முதன் முதல் ஈர்த்தது. இந்த அராபியக் கதைகள். அந் தக்கதைகளை பொறுக்கியெடுத்து மூலம் கெடாமல் 1840-ல் ஆங் கிலத்தில் வெளியீட்டிருக்கிருர், பல தொகுதிகளை அலுப்புத் த ட் டாம ல் உணர்ச்சியோடு படிப்பதற்கு ஏற்றவாறு நடை கண் அழகிய முறையில் அமைத் திருக்கிருர், இவரைப்போல் இன்னுமொரு எழுத்தாளரான எட்வர்ட்லேனும், அரபு மொழி யைக் கற்று சில கதைகளை 1853-ல் பதினுெரு தொகுதிக ளாக வெளியிட்டிருக்கிருர்,
பத்தாம் நூற் றண் டி ல் வாழ்ந்து வந்த வரலாற்று எழுத்
தாளரான மசூதி என்ற அரபு ஆசிரியர், இந்தக் கதைகள்
14
அதிகமானவை பாரசீகப் பாசை யிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டதாகக் கூறுகிருர் . “ஒரு அரசன், அவருடைய அமைச் சர், அந்த அமைச்சரின் மகள் வீராஜாத், ஒரு அடி  ைம ப் பெண் தினுஜாத் இவர்களைப் பாத்திரமாகக் கொண்டு எழு தப்பட்டது" என்று சொல்கி ருர் - ஆனல் அதே நூற்ருண் டில் வாழ்ந்துவந்த இபுன் அல்
நாதீம் என்ற அரபு ஆசிரியர்
தாம் தயாரித்த புத்தக விபரத் தொகுப்பில் அமைச்சர்களின் கதைகள் என்ற தலைப்பைக் கொண்ட நூ லை எழுதியவர் முகம்மத் பின் - அப்ஸ் என்பவர் என்றும், அரபு, பாரசீகம், கி ரே க்க மொழிகளிலிருந்து சேகரித்த கதைகளை நல்ல கருத் துள்ள - உள்ளத்தைத் தொடும் உணர்ச்சியுள்ள கதைகளை மட் டும் தேர்ந்தெடுத்து 480 இரவு கள் என்ற பெயரோடு வெளி யிட்டார் என்றும், பாக்கி 521 கதைகளைச் சேகரித்துக் கொண் டிருக்கும்போது அவர் இறந்து விட்டதாகவும் கூறுகிருர், இவர் கூறிய கருத்துக்களை சில மேல் நாட்டு ஆசிரியர்கள் கிரேக்க பாசையிலிருந்து கடன் எடுத் தவைகள் என்று சொல்வதில் உண்மையில்லை என்றும் இந்தக் கதைகளில் கனிபா ஹாரூன் அல் ரஷீத் அவர்களைப் பின்ன னியாக வைத்து அனேக கதை கள் வெளிவந் திருப்பதால், முழுக்க முழுக்க இந்தக் கதை கள் அரபு, பாரசீக இலக்கிய மாகத்தான் இருக்கவேண்டு மென்று எண்ணுகிருர்கள்.
கீழ்த்திசை மொழிவல்லுநர் கள் பார சீ க நாகரீகம்தான் முற்பட்டதென்றும் ஆனதால் இந்தக் கதைகள் பாரசீக கதை கள் மட்டும்தான் என்று வாதா டியிருக்கிருர்கள். இந்தக்கூற்றை

மறுத்து அந்துவான் காலன்டு என்ற நூலாசிரியர் இந்தக்கதை
கள் அராபியக் கதைகள்தான்
என்று சொல்வதோடு "இந்தக் கதைகளைப் படிக்கும் உங்களை நான் ஒன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்துவந்த கலீபா ஹாரூன் ரஷீதோடு பக்தாத் நகரத்தில்
பகலில் பட்டுமன்றி இரவுகளி லும் உங்களை அந்நகரத்தின் தெருக்களில் நடக்கச் செய்தி ருக்கிறேன்" என்று வர்ணிக்கும் இவர் 1700-ம் ஆண்டில் அரா பியக் க  ைத க ள் சிலவற்றை வெளியிட்டவர். இப்படித் தர மான சர்ச்சைகள் இருந்தபோதி லும் இந்தக் கதைகள் "அரா யாவின் இரவுகள்" என்று உல கப் புகழ்பெற்று விளங்கிவரு கின்றன.
சிந்து பாத் என்ற துணிகர கடலோடியைப்பற்றியும் அவனு டைய ஏ மு பிரயாணங்களைப் பற்றியும் ஒவ்வொரு பிரபா னைங்களிலும் அவன் பல பயங் கரங்களையும், பல கஷ்டங்களை யும் அனுபவித்து வெற்றி வீர ஞகத் திரும்பியதைப் பற்றியும் குறிப்பிடப் பட்டிருப்பதோடு, அவன் கதைகளில் பெரிய பூதங் கள், ராட்சுஷத பாம்புகள், பிர மாண்டமான திமிங்கலங்கள், கடலில் வசிக்கும் அதிசயக் கிழ வன் , தீவு இப்படிப்பல அற்புதங்களைக் கொண்டதாக வர்ணிக்கப்பட்டி ருக்கிறது. அவனுடைய பயணங் களைப்பற்றிய கதைகள் அள வுக்கு மீறி ய கற்பனைகளைக் கொண்டதாக அமைந்திருந்த போதிலும், தி  ைச அறியும் கருவி, கடிகாரமுள், உயர்வு மானி முதலிய கருவிகளைப் பற் றிச் சொல்லும்போது அதைப் பயன்படுத்தி துணிகர கடல் பயண த், ைத மேற்கொண்ட மாலுமிகளின் வீரத்தையும்,
காண்டாமிருகங்களின்
"ஆயிரத்தொரு
பிளினி, ஸ்டிராபோ ஆகியவர் களின் தாவல்களைப் படித்தபின் கப்பலில் சென்று வெண்திமிங் கலங்களையும், திபேத்திலுள்ள லாமாக்களையும் கண்டு பிடித்த மாலுமிகளின் துணிகரச் செயல் களையும் இந் த க் கதைகளில் காண்கிருேம் என்று நஜிமுத்தீன்
பம்மாட்டோ கூறுகிருர் .
மைக்கல் லெட்டர்பி என்ற எழுத்தாளர் கீழ்நாட்டு இலக் கியத்தில் தனித் தேர்ச்சி பெற் றவர். குழந்தைகளின் அராபி யக் கதைகளை 1958-லும் சில குறிப்புகளுடனும் முகவுரையுட னும் கூ டி ய 'ஆயிரத்தோர் இரவுகள்’ எனும் நூல் 1956 லும் எழுதினர். அவரது டயக்ஸ் ஹீரோஸ் ஏத்மிக்ஸ் (கடவுள் வீரர் புராணங்கள்) எனும் இந்த அரிய நூல் ஈ ர (ா ன் உட்பட பல நாட்டுப் புராணங்களையும், பண்பாடுகளையும் பற்றியது. இவர் 'ஆயிரத்தோர் இரவுகள் அ ல் ல து ஷெஹரஜாடேபின் இரகசியம்' எ ன் று கூரியரில் எழுதிய கட்டுரையில் இந்தக் கதைகள்பற்றி பல ரசமான தகவல்களை நமக்குக் கொடுத்தி ருக்கிருர், ஆயிரத்தோர் இரவு கள் கதைகளில் பல பாரசீக நாட்டில் ஒன்பதாம் நூற்ருண் டில் தோன்றியவை. இவை இப்போது உலகம் முழுதும் மரபு வழிக் கதைகளாகப் பரவி விட் டன. பண்டைய காலந்தொட்டு இன்றைவரை இக்கதைகளை உலகமெங்கும் வயது வந்தோ ரும் சிறுவரும் ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்திருக்கிருர்கள். இந்தக் கதைகள் பல நாடுகளில் பல மொழியில் எழுதப்பெற்று வளர்ந்துகொண்டே போயின. மங்கோலியாவில் "ஆயிரத் தொரு மாலைகள் பெருவில் மணி க ள்" டார்ட்டாயில் "ஆயிரத்தொரு
5

Page 7
கால்மணிகள்’ சிரியாவில் 'ஐந் நூறு காலைகளும், அரைக்காலை யும்"பிரான்ஸில் "ஆயிரத்தொரு தயவுகள்" என்று ஷெஹரஜா டே பல நாடுகளில் ம க் கள் மனதைக் கவர்ந்தாள்.
மேலே கூறிய நூல்களைத் தவிர பிரான்ஸில் இன்னும் பல நூல் கள் தோன்றுவதற்கும் ஷெஹரஜாடே காரணமாயிருந் தாள். 1910 -ஆம் ஆண்டில் li r mr sir G5) i) , ஷெஹரஜாடே நாடகத்தை டியா லேவ் f5னக்குழு அழகர்க நடித்துக்காட் டினுர்கள் . பாஸ்கோவில் இன் றும் அலாவுதீனும் அற்புதவிளக் கும் எனும் கதையை பொம் மையாட்டக் கூடத்தில் செர் ଘର & i ! ஒப்பராஸ்ட்ஸோவின் பொம்மைகள் நடித்துக் காட் டுகின்றன. இப் படி யாக ஷெஹரஜாடேயின் உணர்ச்சி களைப்பற்றிய ஜருக்கமான கட்
இந்த ஆசிரியர். அவர் சொல் லும் கதையை சுருக்கிக் கீழே
தருகிறேன்.
ஒரு கா லத் தி ல் ரஷ்ய தேசத்தை சேர்ந்த சமர் கண்ட் டை ஆண்டுவந்த அர ச ன் ஷாஜனன் தன் மனைவி கள்ளக் காதலனேடு சல்லாபத்தில் ஈடு பட்டிருக்கும்போது நேரி லே கண் டு அவர்களிருவரையும் தன் வாளுக்கு இரையாக்கினன். அதன் பின் அந்த நாட்டிலே வாழப்பிடிக்காத அந்த அரசன் நாட்டைவிட்டே புறப்பட்டுப் (BL grula) LL-fT6ör. egy 6llg91691-1 உயிர்த் தோழனுகிய சீனதே சத்து அரசன் ஷாரியர் தன் தண்பனுக்கு நடந்த அவமானத் தால் பெண் இனத்தின் பேரிலே வெறுப்புக் கொண்டு அந்தப் பெண் இனத்தை பழிதீர்க்க
.
வேண்டுமென்ற வெறி அவனைப் பிடித்துக்கொண்டது. ஒவ்வொரு நாளும் ஒரு பெண்ணை மணப்ப தென்றும் மறுநாட் காலையில் அவளைக் கொன்று விடவேண் டும் என்று ஒரு பயங்கரத் திட் டத்தை வகுத்தான். இதன் காரணமாக அந்த நாட்டிலே
ஒவ்வொரு நாளும் ஒரு கன்
னிப் பெண்ணுடைய பிரேதம் அரண்மனையிலிருந்து மயானத் துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்தது. இந்தக் கொடுமைகளை எதிர்ப்பதற்கு யாருக்கும்துணிவு ஏற்படவில்லை. அவன் அரசன். அவன் நினைத்ததைச் செய்து
வந்தான். அ  ைத த் தடுக்க Lurrprit 6ão (plg. u Lib?
இந்தக் கொடிய செயலை தடுத்து நிறுத்துவதற்கு துணி கரமாக முன்வந்தாள் அந்த நாட்டின் அமைச்சரின் அருமை மகள் ஷெஹாஜாடே. தன்
கிழத் தந்தையை நோக்கி, இந்த நாட்டில் நடக்கும் அக்கிரமங் களுக்கு ஒரு மு டி வு கட்டத்
துணிந்துவிட்டேன். கொலை கார அரசனிடமிருந்து நம் நாட்டுச்
சகோதரிகளைக் கா ப் பா ற் ற உறுதி கொண்டுள்ளேன். அத ணுல் என்ன அரசனுக்கு மணம் முடித்துவையுங்கள் என்று கேட்
டுக் கொண்டாள். இ ைத க் கேட்ட அமைச்சர் பதறிவிட் டார். மகளே! நெருப் போடு
விளையாடத் துணிந்துவிட்டாய்.
நாளை மறுநாள் உன் பிரேதத் தைத்தான் நான் பார்க்க முடி யும் என்பது உனக்குத் தெரி யுமா? இந்த விஷப்பரிட்சையை விட்டுவிடு என்று கெஞ்சிஞர். தந்தையே, எனக்கு என்ன நடக் கும் என்பதை மு ன் கூ ட் டி தெரிந்தே இந்த முடிவுக்கு வந் தேன். எனக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்ற நம் பிக்கை உண்டு. ஆ ன த T ல்

கொஞ்சங்கூடப்பயமின்றி நாளை என்னை அரசனுக்கு மணம்முடித் துக் கொடுங்கள் என்று கேட் டுக்கொண்டாள். மதியூக மந்தி ரியின் மதியூகம் தன் மகளிடத் தில் தோல்வியடைந்து விட்டது. மறுநாள் அரசனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள்.
முதல் இரவு பஞ்சணையில் படுத்திருந்த அரசனை அணுகி ஒரு கதையைச் சொல்ல ஆரம் பித்தாள். கதையிலே மயங்கிய அரசன் கதையின் முடிவு தெரிந் துகொள்ளுமுன் விடிந்துவிடும் நாளைக்கு என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்து விடுவான். ஒவ்வொரு நாளும் முடிவில்லாத அழகிய கதைகளைச் சொல்லி திடுக்கிடும் சம்பவங்களோடு நிறுத்திவிடுவாள். அரசன் குறட் டைவிட ஆரம்பித்து விடுவான். இந்தக் கட்டத்தில் ஆசிரியரு ட்ைய நடை மனதை நெகிழச் செய்கிறது. ஷெஹரஜாடே தன் னந் தனியாக நின்று சாவுடன் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்ருளா? எ ன் று நம்மை எண்ணச் செய்துவிடுகி முர் அவள் கூட இருந்துவரும் அவளுடைய த ங்  ைக_தினர்
ஜாடே. அக்கா நீ இனனும் உயிரேnடிருந்தால் உனக்குத்
தெரிந்த சுவைமிகுந்த கதைக ளில் ஒன்றைச் சொல்லமாட் டாயா? உன்னிடம் கதைகேட் பது இதுவே கடைசிமுறையாக இருக்கலாம் என்று அவள் கூறும் ப்ே பாது, நம்மையறியாமலே அந்த வீராங்கனையின் பேரில் @@ அனுதாபத்தை உண்டுபண் னச் செய்துவிடுகிருர் ஆசிரியர்.
இப்படியாக 1000 இரவுக அளக் "கடத்திவிட்டாள் மந்திரி குமாரி. 1001-வது நாள் அரச னுக்குப் பிறந்த இரண்டு குழந்
வியப்புக்குரிய
தைகளையும் அழைத்துவந்து அர சன்முன் நிறுத்தி அந்தக் குழந் தைகளுக்காக அரசரிடம்தனக்கு
உயிர்ப்பிச்சை கொடுக்கும்படி மன் முடினுள் அரசன் தன் மனை  ைய யும் குழந்தைகளையும்
பார்த்ததும் கண்ணிர்விட்டான். தன் குழந்தைகளைக் கட் டி. அணைத்துக் கொண்டு பின்வரு மாறு கூறினன்: "ஷெஹர ஜாடே உன்னுடைய கற்பு, தூய்மை, அறிவு, பக்தி ஆகிய வற்றை நான் எப்போதோ உணர்ந்துவிட்டேன்" தன் நாட்டு இ ள ங் கன்னிகளுக்காக தன் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வெற்றிகண்ட அவளை
வாழ்த்தினன்.
கடைசியாக பெருமிதமான வெற்றியைப் பெறு கி ரு ள் ஷெஹரஜாடே. ஆயிரத்தோர் இரவுகளில் அவனைப் பார்க்க வில்லை. தன் கதையாகிய திரை மறைவில் அவள் இருந்தாள். எனினும் ஒவ்வொரு இரவிலும் க  ைத சொல்லும் அவளுக்கு சாவு காத்திருந்தது என்பதை நாம் மறக்கமுடியுமா? கொலை வெறி கொண்ட தன் கணவனை ஆயிரத்தோர் இரவுகள் கதை கேட்கவைத்த அவள் திறமை யும், தன்னிச்சையாகச் செயல் படும் ஒரு பேரரசனுடைய மனதைத திருப்பிட் அ வ ள்  ெவ ற் றி யும் வியப்புக்குரிய வையே. ஆன ல் அதைவிட செய்தி இந்த இருபதாம் நூற்ருண்டில் வாழும் மேல்நாட்டினர் அதை எல்லாம் நம்புவதுதான். அதில்தாம் நாம் அவளுடைய வெற்றியின் இரக
சியத்தின் ஒரு பகுதி  ைய க்
காண்கிருேம்
தமிழிலும் ஆயிரத்தோர் இரவு அரபிக் கதைகள் என்று
7

Page 8
உபயோகம்
கடைசியாகஎஞ்சியிருந்த சாமிபடத்தைச் தூசிதட்டி o a se o s a 8 a o விற்று- Y 8 குடிசையில் இருந்தோர் தமதுசில நாள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.
@@欣4绝@@9斤ggr
பலகதைகள் வெளிவந்திருக்கின் றன. அந்தக் கதைகளில் நம் நாட்டைப்பற்றியும் ஒரு கதை யில் சொல்லப்பட்டிருக்கிறது. சிந்துபாத்தின் ஏழாவது கடல் பிரயாணம்தான் அந்தக் கதை. கலிபா ஹாரூன்ரஷீத் சிந்து பாத்தைக் உயர்ந்த அழகிய பொருட்களை யும், முத்திரை வைக்கப்பட்ட ஒரு கடிதத்தையும் அவளிடத் தில் கொடுத்து இந்தப் பொருட் களை ஸ ரா ந் தீவு அரசனிடம் கொடுக்கவேண்டும். உன் மூல மாக அவர் எவ்வளவோ பரிசு களை எனக்கு அனுப்பி இருக் கிருர், என்ருர்,
இதுவரையில் நாம் அவ ருக்கு ஒன்றும் அனுப்ப சந்தர்ப் பம் கிடைக்கவில்லை. ஆனதால் இந்தப் பரிசுகளைப் பத்திரமாக அவரிடத்தில் சேர்ப்பிக்க வேண் டும் என்று கட்டளையிட்டார். இந்த ஸாந்தீவு என்ற துறை முகம் எந்தத் தேசத்திலிருக்கி றது என்பதை சிந்திக்கும்போது இலங்கையை அராபியர்கள் ஸான்தீவு என்றுதான் அழைத்து
18
கூப்பிட்டு, விலை
வந்தார்கள். அதனுல் இந்தக் கதையில் வரும் சம்பவம் நம் நாட்டை ப்பற்றியதுதான். அந் தக் கதையைப் படித்ததும் நம் நாட்டைப்பற்றியும் குறிப்பிடப் பட்டதை நினைத்து மகிழ்ச்சி யடைந்த எனக்கு இந்தப் பயங் கர கடலோடியின் சமாதியைப் பார்க்கும் ஓர் அரிய சந்தர்ப் பம் கிடைத்தது என்பதை உங் களுக்குச்சொல்லவிரும்புகிறேன்.
நான் என்னுடைய மத்திய கிழக்கு சுற்றுப் பிரயாணத்தின் போது பக்தாத்திலிருந்த் பசரா வந்த  ை ந்தேன். குவைத்துக் குச் செல்லும் விமானத்திற்காக இரண்டு நாள் பசராவில் காத் திருக்க வேண்டிய நிலைமை ஏற் பட்டது. இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொண்டு புராதன சின்னங்களைப் பார்ப் பதற்கு ஒரு டாக்ஸியில் புறப் பட்டேன். டாக்ஸி டிரைவர் சிந்துபாத் உடைய சமாதியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர் களா? என்று கேட்டார். ஒரு ந ல் ல சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துவிட்டதாக எண் ணி கண்டிப்பாகப் பார்க்கவேண்டு மென்றேன். நாங்கள் ஒரு சின் னக் கிராமத்தை அடைந்தோம் . சிறுவர்கள் பட்டாளம் எங்கஃா சூழ்ந்துகொண்டது. ஒரு பெரிய பூட்டப்பட்டிருந்த சமாதியைத் திறந்து காட்டினர். அதி ல் நிறைந்திருக்கும் தூ சி  ையப் பார்த்ததும் இந்தச் சமாதியை சமீபத்தில் யாரும் பார்த்ததாக எனக்குப் புலப்படவில்லை. பல பூதங்களோடு வீரப் போராட் டம் நடத்தி, துணிகரமாகப் பல திமிங்கலங்களின் வயிற் றிலே குடியிருந்து வீர சாகசங் கள் செய்த அந்தக் கடலோடி கிந்துபாத் அமைதியாக உறங் கிக் கொண்டிருப்பதைப் பார்த்
துவிட்டுத் திரும்பினுேம்,

U
ご士エ
விஷக்காற்று
அ. செ. கந்தசாமி
LLLAqL LASLLALALALLAqqLALAqAqALALALALALLALALA TMLLAqqLL AAALLLLLLLS
திவிட்டையும் பிண்ணுக் 1கையும் பிசைந்து குழைத்து ஆட்டுக்கு வைத்துக்கொண்டி
ருந்தாள் அன்னம்மா. குழந்தை சந்திரன் அவள் பக்கத்தில் வந்து நின்று வலதுகையால் தாயா ருடைய தோள்ப்பட்டையைப் பற்றியவண்ணம் இடதுகையால் தன் னு  ைடய த லை யை ச் சொறிந்து சிணுங்குகிருன்: தளர்ந்து கிடந்த தாணிெச் சேலையை ஒதுக்கிச் சரிசெய்து கொண்டு "என்னராசா” என்று கேட்டபடியே அவனுடைய முதுகை வருடுகிருள். கையை வெறுப்புடன் த ட் டி விட் டு “அற்கை வாம்மா’ என்று தெற் குப் புறத்தை நோக்கிச் சுட்டு விரலால் காட்டுகிருன்.
*synin Gobaix orgŵreargrtrefnir”
முது  ைக வருடியபடியே அன்னம்மா கேட்கிருள். சிணுங் கல் ஒலி பலத்தது. அங்கை
வாம்மா’ என்று மறுபடியும்
முனகிய சந்திரன் ஏதோ சொல்
லத் திக்குமுக்காடுகிருன்;
... ...6untributorr ... ... חמLמו"חנה6"
பிஞ்சுக்கையால் தாயாரின் முந்தானைச் சேலையைப் பற்றிய படியே இழுத்துகொண்டு செல் கிருன். M
o பக்கத்து வளவு அது. தரை மட்டத்திலிருந்து ஒரு அடி பரி மாண இடைவெளி விட்டு முட் கம்பி அடித்து அதன்மேல் தக ரத்தால் அடைக்கப்பட்டிருந் தது வேலி. தாயாரை இழுத் துக்கொண்டு வேலியண்டை சென்று குந்தியிருந்து அடுத்த வளவைக் காட்டுகிருன். அண் ணுர்ந்து தாயாரின் முகத்தை நோக்குகிருன். அந்தப் பார்வை யில் உணர்ச்சிக்கீறல்கள் நெளிந் தோடுகின்றன. 96ä7 6OrublonT உடம்பை" வில்லாக வளைத்து குனிந்து பார்க்கிருள்:
மூன்று சில்லுகளுள்ள சயிக் கிளில் அடுத்த வீட்டுப் பிள்ளை கள் மாமரத்தைச் சுற் றிச் சவாரி செய்கிருர்கள். சிவப்பும் நீலமும் கலந்து புது மெருகுடன் மின்னும் அந்தச் சயிக்கிள்அதில் கிணிர் கிணிர் என எழும் மணியோசை. சந்திரன் மன மும் அதைச் சுற்றி ஒடுகிறது: "அம்மாச்சி அ  ைத வாங்கித் தாயன்
தாயாரின் இரண்டு கைகளை யும் தனது இரண்டு கைகளா லும் உன்னி இழுக்கிறன். சர் வாங்கமும் ஒரு கணம் விறைத் துச் சிலிர்க்க அன்னம்மா ஸ்தம் பித்து நிற்கிருள்.
"அவங்கள் தருவாங்களா! அ வங்க  ைட பிள்ளையஞக்கு வாங்கிக் குடுத்திருக்கு; அது o6ov šig5 Gau Gwurruh rmr Frro

Page 9
வேதனையின் குமைவில் பரி ணமித்த வார்த்தைகளுடன் அன்னம்மா சந்திரனைத் தூக்கி இடுப்பில் இருத்தினுள் தாயா ரின்கையை விடுவித்துக்கொண்டு நுளுந்திக் கீழே இறங்கி, மறு படியும் குந்தியிருந்து அந்தக் கா ட் சி  ைய ப் பார்வையால் விழுங்குகிருன் ஆசை அதிக ரித்து அவனை உலுப்ப மீண்டும் எழுந்து நின்று
"வாங்கித்தாம்மா நா ன் ஓடப்போறன்"
கால்களைத் தரையில் மாறி மா றி ப் பலமாக உதைத் து உடம்பை அசைத்துக் கோணி தலையை ஆட்டி அடம் பிடிக் கிருன். அன்னம்மா கூடியமட் டும் தெண்டித்துப் பார்த்துவிட் டாள். எதைச் சொல்லியும்எவ்வளவு பிரயத்தனப்பட்டும் சந்திரனை அந்த நிகழ்ச்சியின் லயிப்பிலிருந்து மீட்டுக்கொள்ள முடியவில்லை. பலாத்காரமாக அவனைத் துர க் கி த் தோளில் போட்டுக்கொண்டு நடக்கிருள் அன்னம்மா. கையையும் காலை யும் உதறி அழத் தொடங்கி னன் சந்திரன்.
அன்னத்தின் நெஞ்சுக் சுட் டுக்குள் தாழமுடியாத வருத் தம். அவள் நினைவுக் குருவி எங்கே பறக்கிறது. கணவனின் நினைவு மனத்திரையில் மானஸி கமாகத் தோன்றி உருவெழில் காட்ட, டும் நினைவின் எழுச்சிகள் அலை யோசை எழுப்புகிறது. அவள் கணவன் மாணிக்கம் ஒரு றைவர் யாழ்ப்பாண வர்த்தக நிலைய மொன்றில் லொறி றைவராக
வேலைபார்த்துக் கொண்டிருந் த வ ன், கொழும்பிலிருந்து சாமான்கள் ஏற்றிக்கொண்டு வரும்போது அகஸ்மாத்தாக
20
மாறிமாறித் தென்ப
இ ன் ஞெ ரு லொறியுடன் மோதுண்டதால்...?
இப் படி நடக்குமென்று
யார்தான் எதிர்பார்த்தார்கள். துணைமலர் உதிர்ந்து அன்னம்மா தனிமலராணுள். கணவனுடைய உழைப்பென்ற பாதையில் ஓடிய வாழ்க்கைச் சக்கரம் அச்சாணி முறிந்தபோது . . . அன்னம் மாவின் மனதில் கேள்விக்குறி எழுந்து வாழ்க்கைப் பாதையில் பூதா காரமாக நின்றது.
மும்முனைத் தாக்கங்கள் அவளேக் குத்துகின்றன.
குடும்பத்துக்குத் தலைவன். அன்னத்துக்குத் தலைவன் குழந்தைக்குத் தகப்பன்,
இந்தநிலை நிரந்தரத் தொட ராகிவிட்டது.
வயதின் மூப்பைத் தாக்குப் பிடித்தபடியே 'காடு வாவா வீடு போபோ" என்கிற நிலை யில் பிரபஞ்ச வாழ்க்கை நாட கத்தின் முடிவின் முனையை எட் டிட் பிடிக்கப் பந்தயம் போட் டுக்கொண்டு பாயோடு நோயா கக் கிடக்கிருள் அன்னம்மாவின் தாய்க்கிழவி. மூன்று ஜீவன்க ளின் வயிற்றுப் போராட்டத் துக்கு தன்னைப் பணயமாக்க வேண்டிய நிலைக்குக் காலம் வஞ் சித்தது. நாய்படாப் பாட்டுக் குப் பிறகு ஒரு மில்லில் வேலை யாளாகச் சேர்ந்துவிட்டாள்.
女
சந்திரன் அம்மணக் கோலத் துடன்தான் திரிவான். மேலிலே சட்டை போடுவதென்ருல் அவ னுக்கு ஒரே அரியண்டம். ஒரு நாள் சந்திரன் வேலியிலிருந்த கண்டாயத்தால் நுழைந் து அடுத்த வளவுக்குள் மாமரத்தின்

கீழ் உதிர்ந்து கிடக்கும் மாம் பிஞ்சுகளைப் பொறுக்கி ஒரிடத் தில் குவித்துவிட்டு சற்று த் தூரத்தில் கிடந்த ஒரு பழைய பேணியை எடுத்துவந்து மாம் பிஞ்சுகளைப் பொறுக்கி அதற் குள் போட்டுக் கொண்டிருந் தான். அப்போது அவ்விடம் வந்த அவ்வீட்டுப்  ைப யன் "எங் கடை பேணியை ஏண்டா எடுத்தனி! இ ஞ்  ைச கொண் டுவா” என்று பேணியைப் பிடித்து இழுத்து மாம்பிஞ்சுக ளையும் பறித் துக் கொட்டி காலால் சிந்திவிட்டு சந்திரன் முது கில் அடித்துவிட்டான். கண்களேப் பிசைந்து கொண்டு பலமாக அழு த சந்திரனின் கு ர ல் குசினிக்குள் சமையல் செய்துகொண்டிருந்த அன்னம் மாவின் செ வி யி ல் பட்டுத்
தெறித்தது. பதறிய நிலையில்
சடாரென்று எழுந்து ஓடினுள்.
அந்த வீ ட் டு வலைக்காரப் பெண் அங்கு நடந்ததைக் கிணற் றடியில் நின்று அவதானித்து விட்டு சந்திரன் அருகில் வந்து மாம்பிஞ்சுகளைப் பொறுக்கிப் பேணிக்குள் போட்டு "இந்தா கொண்டுபோ" என்று கொடுப் பதற்கும் அன்னம்மா அவ்விடம் வருவதற்கும் சரியாக இருந்தது. வேலேக்காரி சொல்ல, நடந்த வற்றை அறிந்த அன்னம்மா
இனிமேல் நீ அங்  ைக போகக்கூடாது ராசா. உனக்கு மாம்பிஞ்சுகள் வேண்டாம்"
சந்திரனின் மூக்கால் வழிந் திருந்த சளியையும், கண்களிலி ருந்து வந்த கண்ணிரையும் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் அன்னம்மா. சந் திரன் "ம்" என்று தலையசைத் தான். அன்று தொடக்கம் சத் திரன் மாம்பிஞ்சுகள் பொறுக்கு வதற்குப் போவதில்லை. பிள்ளை
கொதித்தது,
கள் விளையாடும் ஒலியும் கல கலப்பும் கேட்டால் வேலிக்குப் பக்கத்தில் போயிருந்து பார்த் துக்கொண்டிருப்பான். பார்த் துக் கொண்டிருந்தபோதுதான் ஒரு நாள் அக் காட்சியைக் கண்டான். சந்திரனின் ஆவல் விஸ்வரூபமெடுத்து விரிந்தது. பிஞ்சு உள்ளத்தில் எழுந்த ஆசை அவனைச் சிப்பிலியாட்டி அந்தச் சிறிய சைக்கிளில் ஏறிச் சவாரி செய்யத் துருதுருத்தது. குழர் தையின் உள்ளம் அதற்குக் கட் டுப்படுவதாயில்லை.
Fuji S&T வாங்கித்தா சயிக்கிளை வாங்கித்தா' என்றே அடிக்கடி கரைச்சல் கொடுத் தான். அன்னம்மாவின் மனப் பீடம் தழல் பிழம் பா க க் தாயுள்ளமல் வவாசி
அடுத்த வீட்டுப் பிள்ளைகள் சயிக்கிளில் ஏறிச் சவாரி செய் யும்போது, அவளுடைய குழந் தைக்கும் அந்த ஆசை இருக் கத்தானே செய்யும் , "அதுகள் பணக்கார வீட்டுப் பிள்ளையன்" துக்கத்தின் கொந்தளிப்பால் இமைவட்டத்துள் கண்ணிர்த் துளிகள் கரைதட்டப் பொல பொலத்தன. நெஞ்சறைக்குள் பாரமும், வேதனை நிரம்பிய நோவும் அதன் நசிவாலும் உராய்வாலும் எழும் புண்களும் அன்னம்மாவைத் தாக்கியது5 குழந்தையின் தகப்பன் இருந் தால் கேட்டவற்றையெல்லாம் வாங்கிக் கொடுப்பாரே! இப்ப டியாகக் குழந்தை தவிக்குமா? கணவனின் பிரிவு, அதஞ ல் சூழ்ந்த இருள் - அந்தத் தகிப் பால் அன்னம்மாவின் கண்கள் பனித்தன. தலைவிறைத்துக் கனக்கிறது. அவர் இருந்தால் குழந்தை கேட்கிறதை வாங்கிக் கொடுப்பாரே, ஐயோ கடவுளே நான் என்ன செய்ய . . .

Page 10
பொருமிப் புழுங்கித் துடித் தாள்.
சீ. குழந்தையின் ஆசை யைத் தீர்க்கமுடியாத வக்கற்ற நிலைமை.
★
"அம்மா.. அம்மா.. சயிக்கிள்" என்ற பிதற்றலோடு சந்திரன் நித்திரை கலைந்து எழு கிருன். பக்கத்தில் ஏதோ தட் வுகிருன். சுற்றுமுற்றும் பார்க் கிருன். நினைவு அனுமார் வால்போல நீள்கிறது,
*அங்கை வாம்மா அதை வாங்கித்தாம்மா பழைய பல்ல வியை மீண்டும் பாடத் தொடங் கினன். அதை இதைக் கூறி அந்த எண்ணத்தை மறக்கச் செய்வதற்கு அன்னம்மா எடுத்த முயற்சிகள் எதுவுமே சரிவர வில்லை. அந்தப் பிரயத்தன முனை வில் தோல்வியுற்ருள். இடையிடைய்ே அந்த எண்ணம் கலைந்து விளையாடிக் கொண்டி ருப்பின் சந்திரன், அடுத் த வீட்டுக் ಟ್ವೀಶ ಆಗಿ: 62&nt யாட்டு ஒலியும் prolј пиraршћ சந்திரனின் au ಙ್ಗಲ್ಲ: வேளையில் அந்த எண்ணம் மீண் டும் தோகை விரித்தது.
கால்களை முன்னுல் நீட்டிய Lg ::*ಅ # து ள |ா வி "ஈர்கொல்லி யால் பேன்களை வாரி "ஸ் ஊ . ஸ்ஊ’ என்ற ஒருவித ஒலிவடி வில் 'ச ம் ஹாரம்" செய்து கொண்டிருந்தாள் அன்னம்மா. அப்போது சந்திரன்ட இளந்தென்னை மரமொன் றின் மட்டை சரிந்து வளைந்து தரையை முத்தமிட்டுக் கொண் டிருந்தது. சந்திரன் அதற்கு மேல் ஏறி இருந்து கொண்டு "அம்மா இஞ்சை சயிக்கில்"
தான் சயி க் கிள் ஒடுகிருஞம் பாற்பற்களைக் காட்டிச் சிரிக் கிருன். அவனுக்குச் சயிக்கிளி லில் இருந்து சவாரி செய்வது போன்ற உணர்ச்சிப் பிரமை
வான் முகட்டில் சூ ரிய ன் செம்முகம் தெரியவில்லை. ஒரே மப்பும் மந்தாரமுமாக இருக் கின்றது இலேசான காற்றின் வருடலில் உடம்பு ஜில்லிடுகி றது. வானம் முழுமையும் கரு  ைம யு ள் தோய்ந்துவிட்டது. *டும் டொடோம் வானமங்கை பிரசவ வேதனையால் குளறுகி ருள். மயிரிழைத் துளிகள் பிரச் விக்கத் தொடங்கின. இலே சான தூறல் ம  ைழ யு ரு க் கொண்டு கனத்துப் பொழிந் தது. சந்திரன் மழையையும் பொருட்படுத்தவில்லை. சயிக் கிள் சவாரி செய்கிறன். துடித் துப் பதைத்து எழுந்து சென்ற அன்னம்மா ஒடிப்போய் சந்தி ரனைத் தூக்க முனைய அவன் மட்டையைக் கையால் கட்டிப் பிடித்து "நான் சயிக்கிள் ஒடுறன் வரமாட்டன் போ.. * என்று மறுத்தான். தலையெல்லாம் நன்ருக நனைந்து விட்டது. சந் திரன் குளறக் குளறத் தூக்கிக் கொண்டுவந்து துணியால் ஈரத் தைத் துடைத்து உச்சிக்கும் காதுகளின் பக்கத்துக்கும் பிட ரிக் கீழ்ச்சரிவுகளுக்கும் பவுடர் போட்டு நன்ருகத் தேய்த்து
விட்டாள்.
அன்றிரவு- சந்திரனுக்கு உடம்பு கணகணவென்றிருந்
தது. கொத்தமல்லியும் வேர்க் கொம்பும் அ வித்து நீரைத் தெளித்து அந்தக் கசாயத்தில் சீனியும் போட்டு சந்திரனுக்குப் பருக்கிளுறள். LDL-LIDL-G6Nu6î gy அவ்வளவையும் குடித்துவிடுகி ருன், அந்தரித்த இரவில் அந் தக் கைமருந்தைத் தவிர வேறெதை அவளால் கொடுக்க

னுாடே சந்திரனின் முனகலும் முக்கலும் பெரிதாகக் கேட்கி றது. இரவுப்பொழுதின் ஆமை வக நகர்வில் குழந்தையின் தலைமாட்டில் இருந்துகொண்டு அடிக்கடி நெற்றியிலும் நெஞ் சிலும் கைவைத்துப் பார்த்து என்னவெல்லாமோ யோசித்து அழுதுகொண்டிருக்கிருள் அன் 60 DIT
இருளினை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு கீழ்வானில் சிரித்து வருகின்றன் செங்கதி ரோன், ஒளிக்கற்றைகள் உல கத்தாயின் மேனியை ஆலிங்க னம் செய்கின்றன. அன்னம் மாவின் மு க ம் சலனமற்றுக் கிடக்கிறது. ஒளியிழந்த விழி கள், அதிலே ஏ க் கத் தி ன் நிறைவு. மீண்டும் சந்திரனைத் தொட்டுப் பார்க்கிருள். நெருப் பாகத் தகிக்கிறது. குழந்தையை டொக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். ஊசிக்கும் கலவை மருந்துக்கும் பணம் வேண்டுமே? யாரிடம் போவது எவரிடம் கேட்பது? அன்னம்மாவின் மன வெளியில் ஆட்டின் உ ரு வம் தெரிகிறது. திரும்பிப் பார்க்கி ருள். குசினியின் தாழ்வாரத்தில் இரைமீட்டுக் கொண்டு நிற்கி றது ஆடு. அந்த ஆட்டிலிருந்து தான் பெறப்போகும் ஆதாயங் களை நிரைப்படுத்தி வைத்திருந் தாள். இன்னும் இரண்டு மாதங் கள் சென்ருல் தாயும் குட்டியும்.
குட்டி துள்ளித்திரிய தாய் ஆடு
அதன் முதுகில் நாக்கால் தட வும் தாய்மையுணர்ச்சி. அந்தத் தாய்மையுணர்ச்சி அன்னம்மா வின் தாய்மை உணர்வோடு சங்க மித் து மனக்களத்தில் போராடுகின்றது. நாலைந்து வீடுகளுக்கு அப்பாலுள்ள ஒரு வர் அந்த ஆட்டின்மேல் கண்
வைத்து அதைக் கேட்டுப்பார்
தபோது விற்பதில்ே சங்கற்பம் திண்டிருந்தவள் அன் னமமா. சந்திரனின் நிலை அவ ளின் மனதைக் இடைந்து தாய் GðLot 6PMorriř*Gaouz உதைக்கிறது
செல்கிருள், ܚ டுங்கு
கின்றன. அவி', நட்கீகிருள்." சித்துக்கொண்டு
‘அம்மr t'. Qతాmమా"
87ங்கை
3F di 6). U”säv. దృష్టి
எழுகிறது. அன்னம்மா 'ಕಿತ್ಲಿ
w வஸ்தைப்படுகிமுள் மிக்குத்
**த்துப் புரள மறு: "இந்த కాళిL-6_
Tசாவுக்கு சயிக்'ை O)
போறன், 6մF fեյցել,
--- S96ör607ubrudsr .
முன் "அம்மா ལྔ་པ་ཚོ་
கொண்டுபோகாை இஞ்சை,
இருக்கு சயிக்கிள்; இதுதான்
%"Gwoopr 今a?あの67。 .
தேடி"ள நான் ஒடப்
ச ந் தி ர ன் சயிக்கிளாகப்
பாவித்து தென்னம'ை அவன் வேண்டுகோளுக்ணெ பக்கத் தில் கொண்டு வந்து வைத்தாள் அன்னம்
gఇ7_ வானத்தில் மின் னல கீற்று శిత్తి போல * நீது வாடியிருந்த முத் னின் முகத்தில் '? மலர்ச்சி ஒளிகாட்டியது. ‘அம்மா இஞ்சை நான் சயிக்கிள் ஒடுறன். ஆட்டைக் கொண்டு போகாதை இஞ்சை வாம்மா ?
அன்னம்மா
உணர்வற் நிலையில் சிலையாக DD
நின்றள்.

Page 11
நாவலர் சபை நடாத்திய சிறுகதைப் போட்டியில் 3-வது பரிசுபெற்ற கதை
தங்கைக்கு ஒரு
சட்டை
ஆகுறல53)-3D5ெ
承
‘நானு. நான எனக் கொரு வெள்ளச் சட்ட தச்சித் தாங்கொலே. -- இஸ்கூல்ல எல்லாருக்கும் வெள்ளச் சட்ட தான் போட்டுக்கொணு வர இல்லித்தி வீட்டுக்கு வந்து வராததுமாக தங்கை பாரிஸா
வந் எனது  ைகயை ! பிடித்து முகத்தை"வளத்துச் சுளித்து, கெஞ்சி வேண்டினள. தச்சித்தார தங்கச்சி. ன்ன் ம்'ஸ்கூல் தொடங்கி நாளீக்கிதானே’ வழமைபோல் இன்றும் தவணை பேர்ட்டுவிட்டு: கையில் கொண்டுவந்த கத்தரிக் காய் அரை இருத்தலையும் நெத் தலிக் கருவாட்டையும் நேரே 6ாண்டுபோய் குசுனிக்குள்-ே மாவின் மு ன் வைத்துவிட்டு முகம், கை கழுவச் சென்றேன்.
பாரிஸா எத்தனையோ நாட் களாகத்தான் வெள்ளச் சட்
d
வெள்ளச்சட்ட" என்று எனக்கு, ஞாபகமூட்டிக் கரைச்சல் தந்து கொண்டிருக்கிருள். ஒவ்வொரு நாளும் ஏதாவது சாட்டுச்சொல் லித் தப்பித்துக் கொண்டபோ தும் இதுவரை சட்டைக்குத் தேவையான அளவு துணிவாங்க என் கையில் காசு சேரவில்லை யென்பதுதான் உண்மை .
ஒவ்வொரு நாளும் அந்தத் தொப்பி தைக்கும் கடையில் தையல் மெஷினேடு நேரத்தைக் கழித்து, மாலையில் வேலைக்கேற்ப நிர்ணயித் துள்ள கூ லி யா கக் கிடைக்கும் ஒருசில ரூபாய்களில் என்னதான் மிஞ்சப்போகிறது. எவ்வளவு வேகமாக வேலைசெய் தாலும் ஆகக் கூடிய தொகை யாக மூன்று ரூபாதானே தேறு கிறது.
நாளாந்தம் அத்தியாவசிய மாகத் தேவைப்படும் சாப்பாட் டுச் சாமான்கள், மண்ணெண்
 

ணெய், சவர்க்காரம். றுக்கே பற்ருக்குறைதான்.
நான்தான் ஐந்தாம் வகுப் போடையே வாப்பா 'மெளத்' தாகிப் போனதால், குடும்பப் பொறுப்பு முழுவதையும் தலை யிற் சுமந்துகொண்டு பள்ளிப் படிப்புக்கு பெரியதொரு முற் றுப்புள்ளி வைத்துவிட்டேன். அவ்வாறு செய்துவிடாமல் தங்
இவற்
கையை எப்படியாவது தொ டர்ந்து படிக்கவைக்க வேண்டு மென்பதுதான் என்னுடைய
அவா, உம்மாவுடைய எண்ண மும் அப்படித்தான்.
அதனுல்தான் கடன்பட்டா லும் சரியென்று அவள் கேட் கும் போதெல்லாம் பென்ஸில், புத்தகம், கொப்பியெல்லாம் வாங்கிக் கொடுத்துவருகிறேன்.
ஒரேயடியாக எட்டு, பத்து ரூபாவுக்கு ஏதாவது தேவை யேற்படும்போதுதான் அவளை யும் சும்மா வீட்டில் இருத்திக் கொள்ள வே ண் டு மென்ற கெட்ட எண்ணம் என்னுள்ளத் தில் எழுந்து நிற்கும்!
இந்தாங்கொ நாணு ஸால்
மீன் டு ம் வாசலுக்கு வருவ தோடே, மு கம் துடைக்கும் *டவலை" க்  ைக யி ல் தந்தாள் untilan) T.
அவளுக்கு இந்தச் சில நாட் களாக என்மீது மேலதிக அன்பு, அநற்குக் காரணம் எப்படியா வது வெள்ளைச் சட்டை பெற் றுக்கொள்ள வேண்டுமென்பது தான் போலும்!
நா ன் லாம்பைப் பற்ற வைத்துத் தூக்கியதும் என்றும் போல் வாசிப்புப் புத்தகத்தை எடுத்து சத்தமிட்டுப் படிக்கத்
துவங்கியவள், ஏதோ ஞாபகம்
வந்தவளாக இடையில் நிறுத்தி,
என்னைப் பார்த்து "நான இன்
னம் ஸ்கூல் தொடங்க மூனு
நாள்தான் ஈக்கி" என்று சொல்
லிவிட்டுப் பதிலையும் எதிர்பார்க்
10ல் தொடர்ந்து படிக்கத்
. . . )ள்.
சென்ற வெள்ளிக்கிழமை இரவுதான் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது "அவள் வெள்ளச்சட்ட கேட்டு ஒரே அழுகியாள். மாத்தி உடுக்கேம் ஒண்டுமில்லதான்" என்று ஆரம்பித்தாள் உம்மா.
*ஏன்ட கைலயென்டா ஒரு
சாமும் இல்ல. ஒங்குளுக்கிட்ட ஈந்தாத் தாங்கொ" என்றேன் நான்.
d
*நீ தந்தாத்தானே மகன் எனக்கட்டீக்கோணும். எங்கட ஹாஜியார் சாச்சாட கடக்கிப் பெய்த்து ரெண்டுயார் நல்லத் தில வெள்ளப் பொடவ கடனுக் காலும் கேட்டுப்பாரே. பொறகு எங்களயாலும் பாத் துக் குடுக்கேலேன்" என்ருள்.
அன்று இரவே நான் கடைக் குப் போய் பார்த்தபோது பிட வையென்ருல் தாராளமாக இருந்தது. உம்மா சொன்னது
போல் 'கசியர்" வீட்டை அலங்
அலE
கரித்துக் கொண்டிருந்த ஹாஜி யாரை நெருங்கினேன். அவர் தூரத்து உறவில் உம்மாவுக்குச் சொந்தக்காரரும்கூட. இந்த நம்பிக்கையையும் மனசில் நிறுத்
திக் கொண்டுதான் எ ன் ஞ ல்
தைரியமாக வாய்நிறக்க முடிந் தது.
*ஹாஜியார். ரெண்டு யார் வெள்ளப் பொடவ, அவ சரமாத் தேவைப்படுகிது. இன் னம் ஒரு கெழமேல சல்லிதா
o

Page 12
ரண்டு உம்மா வாங்கிக்கொணு
வரச் சென்னு தாழ்மையாக வேண்டிநின்றேன்.
சொந்தம் பந்தமெல்லாம்
இப்படிப்பட்ட நேரங்களில்தான்
ஒடியொளித்துக் கொள்கின்ற னவே. ஹாஜியார், என்னைத் தெரிந்ததாகவாவது காட்டிக்
கொள்ளவில்லையென்றல், அந்த ளவுக்கு இந்த விஷயத்தில் அவர் திறமைசாலி என்றுதான் கருதிக் கொள்ளவேண்டும்!
இந்தக் காலத்தில யாவா ரத்தில கடன் கிடன் வெக்கேல புள்ள. & Gö65)ë6)dji JFTT || DfTGöt வாங்கியதே இந்த அநியாயக் கார கோமேந்தில ஏலாமீக்கச் செல்ல எப்பிடியன் கடன் குடுக் கிய. * தலையையும் ஆட்டிக் கொண்டே, என்னைப் பார்த்து கேள்விக்குறி தொடுத்து ஓர் அசட்டுச் சிரிப்போடு நிறுத்தி ஞர்.
எனக்குக் ' கோபமாக தது. கடனுதவியைச் செய்து விட்டு, அந்த அரசியல் பிரசா ரத் தை ஆரம்பித்திருந்தால் தந்த மரியாதைக்காகவாவது பொய்க்குக் கொஞ்சம்எண்ணெய் ஊற்றியிருக்கலாம்.
வந்
மீண்டும் மீண்டும் கேட்க வோ வேறு கதைகளை வளர்த் துக்கொண்டிருக்கவோ விரும்பா
ததால் மெதுவாக வெளியே வந்துவிட்டேன்.
*நான) . . . நானு இதில
ஸைன் வெச்சித் தாங்கொ. ரீபோட் அட்டையை நீட்டிக் கொண்டு வந்தாள் பாரிஸா ,
அதனை எடுத்து ஐந்தாம் வகுப்புவரை பாட் பார்த்த பழைய அனுபவத்தோடு புரட்
26
டிப் பார்த்தேன். எல்லாப் பாடங்க ளிலும் எழுபதுக்கு மேல் தான் புள்ளிகள் பெற்றிருப்பது தெரிந்தது.
அந்த மகிழ்ச்சியோடு "நிலை’ யை தேடிப்பிடித் ;ப் பார்த்த போது, அதற்கு \ , ரே ஒன்று" என்று :ெபபில் அழகாகக் குறிக் கப்பட்டிருந்தது.
"இந்தத் திறமைக் காரியை யா நான் நிறுத்திவிட வேண் டுமென்று நினைத்தேன்’ இக் கேள்வியை எனக்குள்ளே எழுப்பி நானே ப தி லும் சொல்லிக்
கெ"ண்டேன்.
பென்ஸிலை எடுத்து ஸைன்
 ைவ த் து க் கொடுத்துவிட்டு எழுந்தேன். நேற்றைய நிகழ்ச்சி யொன்றும் அதையொட்டிய
மகிழ்ச்சியொன்றும் எனக்குள் பிரகாசம் பரப்பிப் புத்துணர் வொன்றைத் தந்தது.
மேசை லாச்சியைத் திறந்து அதற்குள் வைத்திருந்த கத்தரிக் கோலேத் தேடியெடுத்து இடுப் பில் சொருகி, டோச் லைட்டை யும் கையிலெடுத்துக் கொண்டு வெளிக்கிடத் தயாரானேன்.
"நாணு . . நாஞ எங்கியன் போகப்போற பாரிஸா ஓடி வந்து கையில் தொங்கினுள்.
"த ங் க ச் சிக் கு சட்டப் பொடவ வாங்கிக் கொணுவரத்
தான்" என்று சொன்னேனே
இல்லையோ, எல்லை க ட ந்
a ,35, לון
மகிழ்ச்சியில் 'உம்மா’ என்று
சத்தமிட்டுக் கொண்டு அதைச் சொல்ல உள்ளே ஓடினள்.
நான் வெளியிறங்கி கடைப் பக்கமாக அல்ல குளிக்கப்போ கும் கொடவானைப் பக்கம் நோக்கி பள்ளத்து ருேட்டால் நடக்கத் துவங்கினேன்,

எங்கும் ஒரே இருள் வியா பித்து ஆட்சி நடத்திக் கொண்
டிருந்தது. " பக்கமாக வயல் மறுபக்கம் ந ன் ட 'ென்னந் தோட்டம். இராப் பூ வின் ஏகப் பேரிரைச்சல் / /களை
ஆக்கிரமித்துக் கொண்டிருநதது.
இடையிடையே காணப்ப டும் சிங்களவர்களின் குடிசைக ளுக்குள்ளிருந்து பரவும், மெல்
வெளிச்சங்க%ளயும் கையிலுள்ள மாத்திரந்
லிய லாம்பு தவிர்த்தால் என் டோச் வெளிச்சம் தான்!
நான் நாடிவந்த இடமான அத்தோட்டத்துக்குள் பிரவே சித்ததோடு, இடுப்பைத் தொட் டுப் பார்த்து, கத்தரிக்கோல் இருக்கின்றதாவென்று ஊகிதம் செய்துகொண்டேன்g
ள் - யாருமே இல்லை-- ரு ரு அமைதி.
நா ன் மெது மெதுவாகக் காலடிவைத்து வந்து டேTச்சை
உயர்த்தி மேலேயடித்து, அந்த அலங்காரங்களையெல்லாம் சில நிமிடங்கள், எல்லாம் மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
அது. . இரண்டு நாட்க ளுக்கு முன்பு இறந்து, நேற்று
மாலையில் புதைத்த பியதாஸ் முதலாளியின் புதை குழியும் அதைச் சூழ எழுப்பியுள்ள அலங் காரப் பந்தலும்தான்!
பெரிய செ ல் வந்த ராக வாழ்ந்தவர் என்பதைப் குழியிலும் காட்டிவைக்க வேண் டித்தானே . மலர்த் தட்டுக் கள், கண்ணுடி நிற உருண்டை கள், வெள்ளைப் பிடவைச் சுற்று மதில், இத்தியாதிகள் எல்லாம்3
புதை
மானத்தை மறைத்துக் கொள்ள எத்தனையோ பேர் ஒரு துண்டுப் பிடவைகூட இல் லாமல் தவிக்கையில் மழையில் நனைந்து, வெய்யிலிற் காய்ந்து, மண்ணுகிப் போகவா இத்தனை துணிகளும்..!
கத்தரிக்கோலை வெளியே எடுத்து ஒரு கணந்தான், அந்த இருளுக்குள்ளும் அங்குமிங்கும் பார்த்து, இரண்டு யார் அளவு பி ட வைத் துண்டொன்றை வெட்டியெடுத்து விட்டேன்
கடையில் “அன்று பார்த்த தைவிட எவ்வளவோ நல்ல. நிறமான துணிபோல் எனது கைகளுக்குத தெரிந்தது. மடித் தெடுத்து வயிற்ருேடு சேர்த்து வைத்து, ஸாரத்தை இறுக்கமா கக் கட்டிக்கொண்டு நடக்கத்
துவங்கினேன்.
இனி, தங்கைக்கொரு வெள் ளைச் சட்டை அதனல் தைத்துக் கொடுக்கலாம்தானே..? *
தஞ்சம்
ப்ல பேக்கரிக் கடைகளில் ஏறி நுழைந்து பாணைத் தேடினேன் காணவே இல்லை. கடைசியில் பட்டினி யோடு விழித்துக் கிடந்தேன் இரவைக் கழித்தேன் பச்சைத் தண்ணிர் தஞ்சம் அளித்ததே!
(p: s1-Tú sysir
7

Page 13
ஈழத்தில்
கட்டுரை ஆக்க முயற்சியின்
சபா. ஜெயராசா
கட்டுரை உரைநடையிலும், செய்யுளிலும் அமையுமாயினும், கட்டுரையாக்கம் உரைநடையின் வளர்ச்சியுடன் பெரிதும் தொடர் புடையதாகக் காணப்படுகின் றது. ஈழத்தின் கட்டுரையாக்க வளர்ச்சிக்கு அச்சுயந்திரத்தின் உபயோகம் மட்டும் பிரதான காரணியாக அமையவில்லை. ஆங்கிலேயரின் வருகையுடன் தொடர்புடைய அரசியல் பொரு ளாதார நிகழ்ச்சிகள் முக்கிய பகைப்புலமாக விளங்கிய தென் பதை மறுக்க முடியாது. பத் தொன்பதாம் நூற்ருண்டின் பிற் பகுதியில் மதம் பரப்புவதற்கும், மதக் கண்டனங்கள் செய்வதற் கும் கட்டுரைகள் பலம் பொருந் திய சாதனங்களாகப் ப யன் படுத்தப்பட்டன.
சமயம், மொழி ஆகிய துறைகளுடன் மட்டும் நின்று விடாது, கட்டுரையின் பரப்ப ள  ைவ அதிகரிக்க வேண்டிய தவிர்க்க முடியாத் தேவை ஆறு முக நாவலருக்கு ஏற்பட்டது. சமுதாய மாற்றத்தை விளக்கிக் கொண்டு, மாற்றத்திலுண்டா கும் தேவையை நிறைவேற்றும் பொருட்டு மொழி, சமயம் ஆகிய துறைகளுடன் மட்டும்
29.
ஒட்டியிராது பிற துறைகளுக்கு முரிய கட்டுரைகளை நாவலர் எழுதத் தொடங்கினர். 1874-ல் நாவலர் சுகாதாரம், சரித்திரம் இலங்கைப் பூமிசாத்திரம் ப்ற்றி எழுதியது குறிப்பிடத் தக்கது. சமகாலத்தவர்களாகிய இராம லிங்க அடிகள் கட்டுரை எழுது வதிலும் பார்க்க கவிதைத்துறை யிலே கூடிய கவனம் செலுத்தி யதற்கும், ஆறுமுக நாவலர் செய்யுள் எழுதுவதிலும் பார்க்க உரைநடையில் அதிக கவனம் செலுத்தியதற்கும் இவ்விருவரும் வாழ்ந்த வேறுபட்ட சமூக ச் சூழல்கள் காரணமாக இருந்த தெனக்கொள்ளுதல் தவருகாது. ஆறுமுகநாவலரைத் தொடர்ந்து சபாபதி நாவலர், அம்பலவாண நா வ ல ர், பொன்னம்பலம் பிள்ளை, சுன்னுகம் குமாரசாமிப் புலவர், கதிரவேற்பிள்ளை ஆகி யோர் மொழி, சமயக் கருத்துக் களைக் கூறக் கட்டுரைகளை வாக னங்களாகப் பயன்படுத்தினர்.
ஆங்கிலேயராட்சி l_w D୮ ରJ
லான தாக்கங்களை ஏற்படுத்தத்
தொ ட ங் க, உத்தியோகம் பெற்று பொருளிட்டும் புதிய சமூகவமைப்பு பேரள வி ல்
வளர்ச்சி பெறத் தொடங்க பல

மாற்றங்கள் ஒருங்கமைந்து நிக ழலாயின. வட்டுக்கோட்டை செமினெறி மேலைத்தேச கலை, அறிவியற் பாடல்களைக் கற்பிக் கத் தொடங்கியது. இதன் விளை
வு ர க சி. வை. தாமோதரம் பிள்ளை, க ருே ல் விசுவநாத பிள்ளை, வைமன் கதிரவேற்
பிள்ளை முதலியோர் அறிவியல் சார்ந்த கட்டுரைகளைத் தமி ழிலே தந்தனர். டாக்டர் எஸ். எப். கிறீன் (1822 - 1884) தமிழ் மொழி மூலம் அறிவியற் பாடங்களைப் போதிப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தமிழ்க் கட்டுரையாக்கப்பரப்பினை விசா
லிப்பதற்குத் துணையாக இருந்
தாலும், இம்முயற்சி ஆழமாக வேரூன்ருமைக்கு தமிழ் மொழி மூலம் கற்றவர்கள் உத்தியோ கங்களைப் பெறும் வாய்ப்புக் கள் பெருகிச் செல்லாமை கார ணமாக இருந்ததெனலாம்.
இருபதாம் நூற்றண்டின் ஆரம்பத்தில் வெளிவந்த பத்தி ரிகைகளில், பொது விடயங்க ளைச் சார்ந்த பல கட்டுரைகள் வெளிவரத் தொடங்கினலும், அவற்றின் தாக்கம் உயர்ந்தோர் குழாத்துடன் மட்டும் நின்றதே யன்றி, பொதுமக்களை நோக்கிச் செல்லவில்லை. பரந்த கட்டாயக் கல்வி பொதுமக்களைத் தழுவி நிற்காமையினல், மக்களிற் பலர் எழுத்தறிவற்ற நிலையில் இருந் தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. சமய நோக்கில் "தெட் டம் தெட்டமாக எழுந்த பாட சாலேகள் பொதுமக்களுக்குக் கல்வி வழங்கியதைப் பரந்த
அ டி ப்ப  ைட க் கல்வியாகக் கொள்ள முடியாது.
1922-ல் ஆரிய திராவிட
பாஷா விருத்திச் சங்கம் வித் தியா பகுதியின் அங்கீகாரத்து டன் இயங்கத் தொடங்கியது.
பொருளைச்
இதன் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருந்த பூரீ கணேசையர். பண்டித நவநீத கிருஷ்ண பார தியார், பூரீ சதாசிவ ஐயர், பண்டிதமணி சி. க ண ப தி ப் பிள்ளை, வித்துவான் சுப்பையா பிள்ளை ஆகியோர் பாடத்திட் டத்துடன் இணைந்தும் இணையா மலும் சமயம், மொழி ஆகிய துறைகளில் கட்டுரைகளை எழு தினர். எ டு த் துக் கொண்ட சுவைபடக் கூறும் ஆற்றலினைப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்களின் கட் டுரைகளிற் காணலாம்.
இலங்கை அரசியல் வரலாற் றில் டொனமூர் திட்டம் பல த ர க் க ங் களை உண்டாக்கும் நிகழ்ச்சிகளை வருவித்தது. அர சிலார்வமும், எழுத்தார்வமும் விரிவடையத் தொடங்கின. ஈழகேசரி, வீரகேசரி போன்ற பத்திரிகைகள் தமிழ் வாசகர்க ளுக்கு அரசியல். சமூகம், பொரு ளாதாரம், வர்த்தகம் போன்ற புதிய துறைகளில் கட்டுரைகளை வழங்கத் தொடங்கின. இந்தி யாவில் மகாத்மா காந்தி மேற் கொண்ட உப்புச் சத்தியாக்கிர கம், இலங்கையில் சேர். பொன் இராமநாதன் மேற்கொண்ட டொனமூர் திட்ட எதிர்ப்புப் பிரசாரம் ஆகியவை பொது ஜனக் கவர்ச்சியைக் கொண்டி ருந்ததால், அரசியல் துறையி னைச் சார்ந்த கட்டுரையாக்கம் வளரத் தொடங்கியது. "எழுத் தாளர்கள்' வீரகேசரி, ஈழகே சரி, மறுமலர்ச்சி ஆகிய ஏடுகளு டன் இலங்கையில் வளர்ச்சி பெறத் தொடங்கினர்.
பத்திரிகைகள் பொதுமக்க ளுக்கு விளங்கக்கூடிய கட்டுரை களை வெளியிடுவது தவிர்க்க
முடியாததாக இருந்தது. இச் செயலில் வீரகேசரி ஓர ள வு
A9

Page 14
வெற்றி கண்டமையால் அதன் ஆயுள் நீடிக்கத் தொடங்க * மறுமலர்ச்சி ஏடு இயக்கியவர் களின் கையைக் கடிக் கத் தொடங்கியது. ஆனல் மறும லர்ச்சிக் குழு  ைவச் சார்ந்த அ. ந. கந்தசாமி அவர்களுடைய கட்டுரைகள் பொதுமக்களுக்குப் புரியக்கூடியவையாகவும், பொது ஜனங்களின் வாழ்வில் ஒளியூட் டும் வேட்கை கொண்டனவாக வும் காணப்படுகின்றன.
இலவசக் கட்டாயக் கல்வித் திட்டம் (1945) ஓரளவு பரவ லாகச் செயற்படத் தொடங்க, எழுத்தறிவோர் தொகை வளர்ச்சி பெறத் தொடங்கியது. இதன் தொட்ர்பாக வாசகர்கள் தொகையும் அதி க ரிக் கத் தொடங்க, வாசிப்புச் சாதனங் களின் தொகையும் அதிகரிக்கத் தொடங்கின. (ஈழத்தில் சிருஷ்டி இலக்கியங்களின் வளர்ச்சியை ஆராய்ந்தவர்கள் இலவசக் கட் டாயக் கல் வித் திட்டத்தின் தாக்கங்களைப் பற்றி ஆராய்த லும் இங்கு குறிப்பிடத்தக்கது) இக்கட்டத்தில் தென் - இந்தியா விலிருந்து பெருந்தொகையாக வந்த சஞ்சிகைகள் ஈழத்து வாச கர்களின் இரசனையைப் பாதித்த வார இதழில் வெளிவந்த கட் டுரைகளில் தென் - இந்திய இலக் கியங்களின் தாக்கம் துலங்கு கின்றன.
இந்திய சுதந்திரத்தின் பின் னர் தமிழ் நாட்டில், தி. மு. க. வின் செல்வாக்குப் பரவத் தொடங்கியது. தி. மு. க. எழுத்தாளர்கள் எழுதிய கட்டு ரைகள் உருவிலும், அமைப்பி லுமே பெருங்கவனம் செலுத் தும் போக்கினை உடையனவாகக் காணப் படுகின்றன. சொற்க ளைச் சுழற்றி "மேக்கப்' செய் பும் முயற்சியே விதந்து பாராட்
3.
டப்பட்டது. இப்போக்கினுக்கு எதிராக சொற்களை நிதானமாக உபயோகிக்கும் உறுதியை இந் நாட்டில் பேராசிரியர்கள் கண பதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகியோர் வளர்த்தெடுத்தார் கள்,
1956-ம் ஆண் டி லிருந்து இலங்கையில் தேசிய எழுச்சிக் குரிய நிகழ்ச்சிகள் நிகழ ஆரம் பித்தன. சிங்களமும் தமிழும் உயர்கல்விக்குரிய மொழிகளாக் கப்பட்டன. ஆங்கில ஏகாதிபத் திய எதிர்ப்புக் குரல் எழுப்பப் பட்டது. ஈழம் முன்பு அறிந்தி ராத தேசியமயத் திட்டங்கள் முன்வைக்கப் பட்டன. முற் போக்கு இயக்கங்களின்வளர்ச்சி, தொழிற் சங்கங்களின் வளர்ச்சி தலைதூக்கியது. சோசலிச நாடு களிருந்து இலக்கியங்கள் இலங்  ைக க்கு வரத் தொடங்கின. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற் படத் தொடங்கின. இவற்றின் தாக்கம் காரணமாக கட்டுரை யாக்க முயற்சிகள் விரிவடையத் தொடங்கின. நவீன அறியயற் க ட் டு  ைர க ள் வெளிவரத் தொடங்கின. வளர்ச்சிக் கேற் றவாறு மொழி நவீனப் படுவ தையறியாமல் பல ர் செக்கி ழுத்த மாடுபோல் மீண் டு ம் மீண்டும் பழைய பாஷையிலே சுழன்று கொண்டிருந்தார்கள். இத்தகைய மனுேபாவம் கொண் டவர்கள் முற்போக்குக் கொள் கை களை வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கினர்.
கலை இலக்கியத் துறைகளைப் பொருள்முதல் வாத நோக்கில் அணுகிய க. கைலாசபதி, கா, சிவத்தம்பி, எச். எம். பி. முஹைதீன், இ. முருகையன், சி. தில்லைநாதன், பிரேம் ஜி ஆகியோரது கட்டுரைப் போக்

குக்களை எதிர்க்கத் தொடங்கி யவர்கள் எத்தகைய விஞ்ஞான பூர்வமான காரணங்களைக் கூறி எதிர்ப்பதென்று அறியாமல், ஒரு சாரார் தமிழ் மொழி சிதைந்து விடுமென்று முகம் சுழித்தனர் - இன்னெரு சாரார்
இலட்சியவாதக் கருத்துக்களில் சரண் புகுந்தனர்.
பொருள் முதல். வாதக் கருத்துக்களை ஏற்காவிடிலும், இந்நாட்டின் தனித்துவமான தேசியக் குரலை கனக செந்தி நாதன், கலாநிதி சு. வித்தியா
னந்தன், மு. தளையசிங்கம், எஸ். பொன்னுத்துரை ஆகி யோர் த மது கட்டுரைகளில்
தெரியப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாததாக இருந் தது.
பல்கலைக் கழகத்தில் நவீன துறைகள் சிங்க ள ம், தமிழ் ஆகிய மொழிகளில் செயற்படத் தொடங்க பரவலான மாற்றங் கள் ஏற்படத் தொடங்கின. பல்வேறு துறைகளையும் சார்ந்த விரிவுரையாளர்கள் தமிழில் தத்தம் துறைகளைச் சார்ந்த ஆழ்ந்த கருத்துக்களையும், ஆய் வுகளையும், ளாகத் தரத் தொடங்கினர்கள். கலாநிதி கா. இந்திரபாலா, திரு. ப. சந்திரசேகரம், ஜனுப்
அமீர் அலி, கலாநிதி எஸ். முத்
துலிங்கம், திரு. அ. சிவசாமி, போரசிரியர் பே. கனகசபாபதி, கலாநிதி சோ. செல்வநாயகம், டாக்டர் நந்தி, திரு. வே. காசி நாதன் முதலிய பலர் தத்தம் துறைகளைச் சார்ந்த கட்டுரை களைத்தமிழில் வழங்கத் தொடங் கியுள்ளார்கள்.
"கட்டுரை என்ருல் என்ன? எ ன் று திரு. வி. ஆர். எம் . :ெய"குறிடி (செட்
தமிழ்க் கட்டுரைக
டியார் வி. ஆர். எம். - இலக் கிய விருந்து" ஸ்டார் பிரசுரம் காரைக்குடி -1958 பக்கம் 10) வாழ்க்கை வெறி, சிந்தனை வெறி, பாஷைவெறி, நடை வெறி, ஹாஸ்ய வெறி? ஆகிய “வெறிகள்" கரைபுரண்டு ஒடும் தன்மைகள் பொதுவாக ஈழத் தின் முன்னேற்றமான கட்டுரை யாசிரியர்களிடம் காணப்பட வில்லை. இதற்குப் பதிலாக நிதா னமாகவும், ஆழமாகவும், கூர் மையாகவும் செல்லும் போக்கு ஈழத்தின் கட்டுரை யாக்கத்தில் காணப்படுகின்றது.
புதிய தலைமுறையினராகிய ஏ. ஜே. கனகரட்ணு நுஃமான், இந்திரகுமார், ச பா. ஜெய ETT Ffr . GEIT. சந்திரசேகரன், எஸ்.ஹ"சேன்மியா, சண்முகம் சிவலிங்கம், ஆசிச்செல்வன், எம். ஜே. பைஸ்தீன், செம்பியன் செல் வன் சம்ஸ், தில்லைக்கூத்தன் ஆகியோ ரது கட்டுரைகள், நிதானமாகவும் கூர்மையாகவும் செல்கின்றன. 女
(psT6õ07 urtG)
கொட்டும் பேய் மழையில்மாடி வாழும் கொழுத்த நெஞ்சங்கள் சுகபோகக் களிப்பில் குதூகலிக்கஒழுகும். பொத்தல் குடிசைக்குள் அடைந்து கிடக்கும்; ஏழை ஜீவன்கள் அவலக் குரலெழுப்பி கதறித் துடிக்கும்!
செந்தீரன்?

Page 15
O
நறிலக்கித்திலுல்
あ研工あ元2cm I愛ぶ。
மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டிலே பரிதிமாற்கலை ஞர் என வழங்கப்பெறும் வி. கோ. சூரிய நாராயண சாஸ்தி ரியார் (1870 - 1903) அவர்க ளது நூற்ருண்டு விழா கொண் டாடப்பட்டது. அவ்வேளையில் வெளிவந்த நூற்ருண்டு விழா மலரில், பம்பாய்ப் பல்கலைக்கழ கத்திலே அர சி ய ல் துறைத் துணைப் பேராசிரியராயுள்ள ஆர். பூரீனிவாசன் நவீன காலப் பகு தியிலே தமிழ்ப் புத்திசீவிகளைப் பற்றிய சமூகவியற் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். நவீ னத்துவத்தை முழுமையாக ஏற் பதிலும் அதனை அழுத்தந்திருத் த மா க எடுத்துரைப்பதிலும் தமிழ்ப் புத்திசீவிகள் - குறிப்பா கப் பத்தொன்பதாம் நூற்ருண் டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றண்டின் முற்பகுதியிலும் செயற்பட்டவர்கள் பெ ரு ந் தோல்வி கண்டனர் என்பதே பூரீனிவாசன் அக்கட்டுரையிலே வற்புறுத்தியுள்ள அடிப்படைக் கருத்தாகும். தமிழ்ப்புத்திசீவிக ளைப்பற்றிக் கூறப்படும் இக்கருத் துரை பொதுவாக இந்திய ஆய் வறிவாளர் பலருக்கும் பொருந்
守2
தும். "இந்திய தேசியத்தின் சமூகப் பின்னணி" என்னும் நூலிலே, பம்பாய்ப் பல்கலைக்
கழகத்திலே சமூகவியற் பேராசி ரியராயிருக்கும் ஏ. ஆர். தேசாய் பின்வருமாறு கூறியுள்ளார்: "இந்திய தேசிய இயக்க வரலாற்
றைப் பார்க்கும் ஒருவர் அதிலே
முனைப்பான ஒரு பொருள்முதல் வாதியையோ, கடவுளுண்மை மறுப்பு வாதியையோ, ஐயுறவு வாதியையோ தேடிப்பார்த்தா லும் காணமாட்டார். அனைத் திந்தியாவிற்கும் பொதுவான இப்போக்கு நமது நவீன இலக் கியத்தை எவ்வாறு பாதித்துள் ளது என்பதை 'தமிழ் நாவல் இலக்கியம்' எனும் நூலில் ஒர ளவு விவரித்திருக்கிறேன். உதா ரணமாக இந்திய மறுமலர்ச்சி யின் விடிவெள்ளி எனக் குறிப் பிடப்படும் ராஜாராம் மோகன் trfrtir (1772 - 1833) Grøör í வரை எடுத்துக் கொள்வோம். சிறப்புமிக்க சீர்திருத்தவாதியா யும், பிரம்ம சமாஜ நிறுவகரா யும், இந்திய தேசிய வாதத்தின் பிதா மகனயும் விளங் கி ய மோகன் ராய், எவ்வளவுதான்
 
 

பகுத்தறிவுவாதியாக இருந்த போதும் வேதங்களின் தெய்வத் தன்மையை நம்பினுர்,
இது குறித்து மகாகவி சுப் பிரமணிய பாரதியார் கட்டுரை யொன்றிலே கவலைப்பட்டு எழு தியிருக்கிருர், சணுதன வழக்கு களைக் களைந்து இந்து சமயத் தையே புனர்நிர்மாணஞ் செய் யப் போவதாகக் கூறிச் செயல் புரிந்த மோகனராய், த ம து மரணப்படுக்கையிலே, பூணுரல் அணிந்து சகல சடங்குகளையும் செய்வித்தார் என்பது கவலைக் குரிய செய்தியாகும் என்று 1906-ம் ஆண்டளவில் புனைபெய ரில் எழுதிய பிரசுரம் ஒன்றிலே பாரதியார் கூறியுள்ளார். (இப் பிரசுரத்தை எனக்குக் காட்டித் தகவலையும் தந்தவர் நண்பர் சிதம்பர ரகுநாதன்.)
வேருெரு வகையிற் சொல் லப்போனுல், பெரும்பாலான இந்திய நவீனர்கள், தமக்குக் கிடைத்த ஆங்கிலக் க ல் வி ப் பயிற்சியினலும் பரிச்சயத்தின லும் நாவல், விமர்சனம், முத லிய இ லக் கி ய வடிவங்களைக் கைக்கொண்டனரெனினும் மேலை நாடுகளிலே அவ்வடிவங்களுக்கு ஆதாரமாயமைந்த சமுதாய மாற்றக் கருத்துக்களையும் சில பல புரட்சிகரமான சிந்தனைகளை யும் ஏற்றுக் கொண்டாரல்லர். கல்விப் பழக்கத்தினல் முன்
க் ர் அடி எடுத்து வைத் ## அடுத்தகணமே திகில டைந்து பின்னுக்கு ஈரடிகள் வைத்தனர். அப்படிப் பின்ன டைந்த பொழுது, பிரமஞா னம், வேதாந்தம். தியோஸ்பி, மறைஞானம் முதலியவற்றைப் பற்றுக்கோடாய்க் Gଗ 8. It ଜdit டு சமாதானங் கூறினர். அதுமட்
பின்னே சென்று தமக்கு முத
லிலே தூண்டு சக்தியாய் இருந்த ஆங்கிலக் கல்வியையும் அதன் மூலம் பெற்ற "முற்போக்கு எண்ணங்களையும் நிராகரிக்கவும் செய்தனர். இந்த வரலாற்றுப் பி ன் ன னரி யில் நோக்கும் பொழுது, இலக்கிய "விமர்சகர்’
க், நா. சுப்பிரமணியத்திடம் அடிக்கடி காணப்படும் முரண் பாடுகள் தமக்குரிய விளக்கத்  ைத ப் பெற்று விடுகின்றன. 'க. நா. சு. வின் நாவல்களும்
அவற்றின் அடிப்படைத் தத்து வமும்' என்னும் கட்டுரையிலே வெ. கிருஷ்ணமூர்த்தி இத் த கைய முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். (ஆராய்ச்சி, மார்ச், 71) 粤
இக்கட்டுரைத் தொடரிலே நாம் அவ்வப்போது தொட்டுக் காட்டி வந்திருப்பதைப் போல, மேனட்டு எழுத்தாளர் சிலரால் ஈர்க்கப்பட்டே, க. நா. சு. இலக்கியத் துறையில் இறங்கி ஞர்.
"இலக்கிய வாழ்க்கை நடாத் துவதற்காக" அவர் எழுதத் தொடங்கிய முப்பதுகளில் ஆங் கில இ லக் கி ய விமர்சனம் இருந்த நிலைக்கும் அது இன்று இருப்பதற்கும் எவ்வளவோ வேறுபாடு காணப்படுகிறது. காலத்தையொட்டி அமைந்த இவ்வளர்ச்சி ஒரு வி த த் தி ல் தவிர்க்க இயலாததே. க. நா. சு. வின் குருநாதர்களான எஸ் ராபவுண்டு, ஜேம்ஸ் ஜோய்ஸ் மு த லி ய *ஜாம்பவான்கள்" தொடக்கிவைத்த நவீன இலக் கிய நெறி எத்தனையோ மாற் றங்களைப் பெற்றுவிட்டது. அம் மாற்றங்களில் முக்கியமான தொன்று, இலக்கிய விமர்சனம் அதிகம் அதிகமாக ஆய்வுமுறை யில் அமைந்து வந்திருப்பதாகும். உ லக நோக்கிலும், வர்க்கச்
3.

Page 16
சார்பிலும் முரண்படும் மேனட்டு
விமர்சகர்கள் கூட, அடிப்படை யான சில விமர்சனக் கருவிக
ளைக் கைக்கொள்வர் ஐ. ஏ. றிச்சர்ட்ஸ், தொடக்கம் ஆர் னல்ட் கெட்டில் வரை முக்கிய மான ஆங்கில இலக்கியத்திற ஞய்வாளர் ஆய்வறிவு ரீதியான தரநிர்ணய முறை களை யும் அணுகு நெறிகளையும் கடைப் பிடிப்பதைப் பலரும் அறிவர். ஆங்கில இலக்கியத்தைப் பொ றுத்தவரையில் இச்செய்தி விளக் கம் வேண்டாப் பொது உண் மையாகும்.
(முன்னர் பல தடவைகள் நாம் சுட்டிக் காட்டியிருப்பது போல) அடிப்படையில் டி. கே.
சி. யைப் போல ரசிக நோக் கையே கொண்ட க. நா. சு. ,
தானே ஏற்றுக்கொண்ட - அதை விட்டால் வேறு கதி இல்லையென் றிருக்கிற - ஆங்கில விமர்சனத் துறையை மெல்லவும் முடியா மல் விழுங்கவும் மாட்டாமல் திண்டாடுவதைக் காணலாம். தமிழ் எழுத்தாளர் மத்தியில் மேஞட்டு இலக்கியம், உல க இலக்கியம் என்றெல்லாம் சவ டாலடித்துக் கொள்ளும் க. நா. சு. தான் பிரமாணமாய்க்கொள் ளும் த ன க் குப் பாதகமான முறையில் இருப்பதைக் கண்ட தும், சந்தர்ப்பவாத நோக்கில் தப்பிக்கொள்ள முற்படுகிருர் .
இரு வழிகளில் இந்நோக்குச் செயற்படுகிறது. முதலாவது, தான் சிலாகித்துப் பேசும் ரசிக முறையிலான விமர் ச ன ம் மேனுட்டிலும் இன்னும் வளர வில்லை என்று பாசாங்குசெய்தல்:
. . . . . இலக்கிய விமரிச னம், கலைத்தத்துவ தரிசனம் மேலை நாடுகளில் அவ்வள வாக முன்னேறிவிடவில்லை
என்பது தெளிவு. கவிதை வசனம் இரண்டு துறைகளி லும் பல நல்ல நூல்கள்,
மேலை நாடுகளில், இலக்கிய விமர்சனத்துறையில் அவ்வ ள வா க ப் பெரியவர்கள் தோன்றவில்லை. விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய - லாங் கினஸ், கதே, மாண்டைன்மூவரைத்தான் விமர்சகர்க GIT FT 95 i பத்தொன்பதாம் நூற்ருண்டுக்கு முன் பெயர் சொல் ல முடியும். புது விமர்சனம் ஆங்கிலத்தில் கோலரிட்ஜுடன் தோன்றி மாத்யூ ஆர்னல்ட் மூலம் வளர்ந்தது. பின்னர் இது பல பிரிவுகளாகப் பிரிந்து இன்று அமெரிக்காவிலும் வேறு பல தேசங்களிலும் எல்லைகள் அறியாத விமர் θF 6ότι η Πτέ5, வியர்த்தமான பல பாதைகளில் சென்று குரு ட் டு ப் பாதைகளில் போகிறதை காண்கிருேம்." (ஞானரதம், ஜூன்-1972)
க. நா. சு. தான் இவ்வாறு கூறியிருக்கிருர் என்பதைப் பலர் நம்ப ம று க் க ல 7 ம். நவீன (மேனுட்டு) விமரிசன முறைக ளைத் தமிழில் அறிமுகப்படுத்தி யவர் அவரே என்று பலரால் ஒருமுகமாகப் பாராட்டப்பட்ட க. நா. சு. தான் மேலைத்தேய ஜிமர்சன வளர்ச்சியைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கிருர் . நவீன ஆங்கில இலக்கிய விமர்சனம் *வியர்த்தமான குருட்டுப் பாதை களில் செல்கிறது" என்கிருர் அவர் . காரணம் என்ன? 9Ngi] ஆய்வறிவு ரீதியிலே செல்கிறது என்பதுதான். எனவே, பழைய சில மேலைத்தேய விமர்சகர்களு டன் நின்று விடுகிருர் க. நா. க. சீடர்கள் கொண்டாடும்

"நவீன விமர்சகர் நவீனத்து வத்தை நிராகரிப்பதை இங்குக் காண்கிறேம். அவருக்கே இந்த விசித்திரமான (உண்மையில் பரி தாபகரமான) நிலைமை புலப் படுகிறது. அதைச் சமாளிப்ப தற்காக "சுயவிமர்சனம் செய் வதுபோலப் பாவனை செய்கிருர்:
*சிந்தித்துப் பார்த்தால் ஆங்கிலத்தில் பழசில் உள்ள அறிவு எனக்குப் புதுசில் இல்லை என்றுதான் சொல் லத் தோன்றுகிறது. அதி
லும் மிகப் புதுசில் எனக்குப்
பரிச்சயமேயில்லை உதாரண LDFT 5 . . . . . . . . . தற்கால நாவ லாசிரியர்களின் நாவல்களில்
எதையும் நான் படித்ததே
யில்லை. அதேபோலத் தமி ழில் புது  ைசப் பற்றித் தெரிந்த அளவு பழசைப் பற்றித் தெரியவில்லை. தமி ழில் பழசைப் பற்றி . . . செய்யவேண்டிய விமர்சனம் - அடைய வே ண் டி ய நோக்கு நிறைய இருக்கிறது என்று சொல்ல வேண்டும்." (எழு த் து. செப்டம்பர், 1962)
எத் தனை முரண்பாடுகள் இக் கூற்றுக்களிலே காணக்கூடியன வாய் உள்ளன! தனது பலவீனத் தைச் சமாளிப்பதற்காக, நவீன ஆங்கில விமர்சனப் போக்குகளை நிராகரித்து விட்டுத் திடீரெனத்
தமிழ் இலக்கிய விமர்சனம் தமி
ழுக்கு ஏற்ற விதத்தில் அமைய வேண்டும் என்று கூறுகிருர் . "தமிழைத் தமிழ் நோக்குடன் விமர்சனம் செய்ய வேண்டும்"
என்று ஒரு சந்தர்ப்பத்திலே (சரஸ்வதி - 3) கூறினர். இந் தக் குதர்க்கம் பற்றி சி. சு.
செல்லப்பா குத்திக் காட்டியிருப் பது விஷயத்தை விளக் கப் போதுமானதாயிருக்கிறது:
"படைப்பு விஷயத்தில் தாமஸ்மானுக்கும், ஜேம்ஸ் ஜாயிஸ9க்கும், காஃப்கா வுக்கும் - உலக இலக்கியம் பூ ரா வுக் கு மே - தான் வாரிசு என்று சொல்லுகிற போது, ஒரு மொழி வளத் தில் வள ரும் இலக்கியப் படைப்புக் கலையை வேறு ஒரு மொழி வளத்துக்குத் திருப்புவதுக்கு அவருக்கு ஆட்சேபனை இல்லை. ரசனை விஷயம் அதாவது விமர்சன நோக்கு வருகிறபோதுதான் அது வேறு, இது வேறு 'தமிழைத் தமிழ் நோக்கு டன் விமர்சனம் செய்ய வேண்டும்’ என்று அவருக்கு வாதாடத் தோன்றுகிறது: அ வர் வாதம் போலவே ஒருவர், "தமிழ் இலக்கியத் தைத் தமிழ் நோக்குடன் படைக்கவேண்டும்" என்று சொல்லக்கூடுமே படைப் புக்கு சோதனை முயற்சிக ளைத் திருப்பலாமாம். ரச னேக்கு, ஆராய்வுக்கு, அந்த சோதனை முயற்சிகளை மதிப் பிட உபயோகித்த அளவு கோல்களை கிட்டக் கொண் டுவரக் கூடாதாம்! தமி ழைத் தமிழ் நோக்குடன் விமர்சனம் செய்ய" என்ற புதிரான கருத்து க. நா: சு. வுக்கு எப்படிச் சொல் லத் தோன்றி இருக்கும் என்றுதான் ஆச்சரியமாக இருக்கு. ஏனென்ருல் அவ ரைச் சுற்றி வீசுவது முழுக்க முழுக்க மே ல் நாட்டு க் காற்று என்பது விவாதத் திற்கே இடமில்லாது ஒப் புக் கொள்ளப்பட வேண்டிய
விஷயம்." (எழுத்து, மே - 1960) செல்லப்பாவின் நியாயமான
வினக்களுக்கு மேலும் விளக்கம்
J5

Page 17
தேவையில்லை. ஆனல் அவர் குறிப்பிடும் முரண்பாடுகள் அவ தானிக்கத் தக்கன. சகபாடியான செல்லப்பாவும். சீடப்பிள்ளைக ளான வெ. சாமிநாதன் தருமசிவராமு முதலியோரும், மார்க் சீயக் கண்ணுேட்டத்தில் ஆரா பும் வெ. கிருஷ்ணமூர்த்தியும் க. நா. சு. வை நுணுக்கமாக நோ க் கத் தொடங்கியதும் முதலிலே தென்படுவது அவரது எழுத்துக்களிலே காணப்படும் முரண்பாடுகள்தாம். இதற்கு முந்திய கட்டுரைகளிலே இத்த 65) 5 li முரண்பாடுகளுக்கான ஏதுக்களை ஏ டு த் து க் காட்டி யிருக்கிருேம்.
அடிப்படையில், ஆய் வு முறைகளையும், சமூக வி ய ல் நோக்கையும் வெறுக்கும் க. நா. சு. தனக்குத் தெரிந்த சில பல ஆங்கில நூ ல் களை ப் பற்றிக் கொண்டு, ஏனையவற்றை நிராக ரிக்கத் தொடங்கி, அச்செயலின் தருக்கரீதியான விளைவாக மேலை நாட்டு விமரிசனக் கலையையே பெருமளவுக்கு மறுக்கும் பரிதா
பகரமான முடிவுக்கும், அதற்குச்
சமாதானம் தேடுவது போன்று, தமிழ் ரீதியான விமர்சனம் வேண்டும்" என்ற அவசரக் கூற் றுக்கும் வருகிறர். இது வும் திருப்தியளிக்காத நிலை யி லே விமர்சனமே வேண்டாம் என் றும் தான் வேண்டா வெறுப்பா கவே விமர்சனத் துறையில் ஈடு பட்டு வந்திருப்பதாயும் கூற முற்படுகிருர், "விமரிசனக்கலை" என்னும் நூ லி லே (பக். 8) அவர் கூறியிருப்பது சுவாரஸ்ய மாய் இருக்கிறது:
*எனக்கு இலக்கிய விம ரிசனம் செய்வதிலே அவ்வ ளவாக நம்பிக்கை கிடை யாது. எனினும் ஒரு இரு பத்தைந்து வருஷங்களா கவே கட்டுரை எழுதப்
பட்ட வருடம் 1958. க. கை. நான் இலக்கிய விம ரிசனம் செய்து கொண்டு வரவேண்டியதாக இருந்தி ருக்கிறது. இஷ்டமில்லாம லேதான் நான் இலக்கிய விமரிசனம் செய்துகொண்டு வருகிறேன் - தவிர்க்க முடி யாத நிர்ப்பந்தத்தினல்." அப்படியிருந்தும் மனமற்ற மண மகஞன அவரையே விமர்சன கதாநாயகனுக்கி அவரது அபி மானிகள் பட்டமும் சூட்டி விட் டனர்! g
இந்த அவல நிலை க. நா. சு. வுக்கு ஏற்படுவதற்கு அடிப் படைக் காரணம் ஒன்று உண்டு. ஆய்வறிவு ரீதியான விமர்சனம் இறுதியில் ஓரளவுக்கேனும், சமூ கத்தை எதிர்நோக்கிச் சில விஷ யங்களைக் கூறவேண்டிய பொ றுப்பை விமர்சகனுக்கு கொடுக் கிறது. அங்கே பொருள் சிறப் பான இடத்தைப் பெறுகிறது. ஆன ல் விஷயம், அ ல் ல து பொருள் இலக்கியத்துக்கு முக் கியமன்று என வாதிடும் க. நா. சு. விஷயத்தை நிராகரிப்பதற் காகவும் விமர்சனத்தைக் கைவி டும் பரிதாபகரமான நிலைமைக் குத் தள்ளப்படுவதைக் காண்கி ருேம். தன்னையே இறுதியில் அழித்துக்கொள்ளும் பூர் ஷ" வாச் சிந்தனையாளனது சீரழிவை இவ்விடத்திலே நாம் துலக்க மாய்க் காணக்கூடியதாய் இருக் கிறதல்லவா?
என்னதான் உரத்த குரலிற் கூ வின லும் இலக்கியத்தில் பொருள் இல்லை என்று க. நா. சு. வினல் நிலைநாட்ட இயலாது. எனவே பொருள் எப்பொழுதும் உள்ளது. உத்தியும் உருவமுமே புதிது புதிதாய் வருவன என்று கூறு கி ரு ர். *இலக்கியத்தில் சோதனை" என்ற குறிப்பில், (எழுத்து, ஜூன், 1956) அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

"இலக்கியத்தில் புது விஷயம் என்பது அநேக மாக சாத்தியமில்லை என்று சொல்லலாம். சொல்ல வேண்டிய பொருள் சொல்பமே. அதை பலரும் பல தினுசாகச் சொல்லியி ருக்கிருர்கள். இன்னெரு தினுசாகச் சொல்லிப் பார்க் கிற முயற்சியைத்தான் சிறப் பாகச் சோ த னை என்று சொல்ல வேண்டும்"
இவ்விடத்திலே க. நா. சு. இந் திய மரபு வழிவரும் தத்துவ வாதிகளின் கூற்றையே அட்ச ரந்தப்பாமல் எதிரொலிக்கிருர், உலகாயதம் ஒன்றைத்தவிர ஏனைய இந்திய தத்துவப் பிரிவு கள் அனைத்தும் வேத - உப நிடதங்களையே மூலத்தோற்று வாயாய்க் கொண்டவை. தத் துவ ஞா ன ம் சம்பந்தமாகக் கூறப்படக் கூடியன அனைத்தும் ஏலவே (வேதங்களில்) ஞானிக ளால் உணர்த்தப்பட்டு விட்டன; பின்வருவோர் அவ்வுண்மைகளை உணரும் முயற்சியில் அடிப்படை களைப் பல தினுசாகச் சொல்லி யிருக்கிருர்கள் என்பதே இந்திய மரபுவழித் தத்துவவாதிகளின் நம்பிக்கையாகும். "இந் தி ய தத்துவ ஞானம்' எ ன் னு ம் நூலிலே இவ்வுண்மையைச் சுருக் கமாக விளக்குகிருர் கி. லக்ஷம ணன்: இந் தி ய மெய்யியலைப் பொறுத்தவரையில், "ஆராய்ச்சி என்றைக்கோ முடிந்து, முடிவு களும் அறுதியாக வெளியிடப் பட்டு விட்டன; பின்வந்த ஞானி களின் ஆராய்ச்சிகள் யாவும் அம்முடிவுகளைச் சரியாக விளங் கிக் கொள்வதன் பொருட்டே மேற்கொள்ளப்பட்டன."
நவீன இலக்கிய விமர்சகர் க. நா. சு. வின் கூற்றுக்கும் அசல் வேதாந்திகளின் கருத்துக் கும் உள்ள அத்தியந்த ஒற்றுமை
ஏனென்ருல்
வெளிப்படை. எ த் த  ைக ய பொருள் நுணுக்க வேறுபாடும் வேண்டாத வேதாந்தியாகவே விமர்சனத்தை - ஏன் இலக்கி யத்தையே - நோக்கும் நிலைக்கு க. நா. சு. வந்துசேருகிருர். கீதையில் கண்ணன் சொன்னு லும், சொல்பவனும் நான், சொல்லப்படுபவனும் நான்என்று
கறுப்பும் வெள்ளையும், நீதியும் அநீதியும் எல்லாம் ஒன்று. சுரண்டுபவனும் சுரண்டப்படுப
வனும் ஒன்று. இங்கே எல்லாம் மாயைதானே. இந்த நிலையில் புகுந்து தப்பிக்கொள்கிருர் க. நா. சு. சுயசரிதைப் போக்கில் அமைந்த (சுயபுராணமான) கட்
டுரை ஒன்றிலே வேதாந்த விமர்
சகர் க. நா. சு.
உபதேசிக்கிருர்:
பின்வருமாறு
美
*விமரிசனத்தில் எனக்கு அடிப்படையளவில் நம்பிக் கை கிடையாது. படிப்ப தில் சொந்த அநுபவம்தான் முக்கியம், அறிவு பூர்வமாக எதையும் அலசி அறிய வேண்டியது அ வ சி ய மே யில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன். இந்த ஆன் மிகமானதொரு அநுப வ ஆனந்தம்தான், படிப்பதில் உள்ள இன்பந்தான், என்னை மேலும் படிக்கத் தூண்டு கிறது.
ஒன்றிலும் படாமல், தாமரையிலைத் தண்ணீராக பற்றறுத்து, எல்லாவற்றிற் கும் சாகழியாக நிற்கக்கூடிய நிலையை எட்டுவது என்பது வேதாந்தத்தில் ஒரு முக்கிய மான விஷயம். வேதாந்த விசாரத்துக்கு ஒரு சாதன மாகவும் நான் எனது படிப் பைக் காண்கிறேன். என் னைத் தொடவேண்டிய விவு யங்களையும் கூடத் தொடா மல் செய்ய, சாகழி மாக
7

Page 18
நின்று ஒதுங்க, என் படிப்பு எனக்கு வழிகாட்டுகிறது. படிப்பில் காண்கிற இன்பம் சீத் -சித் - ஆனந்தம் என்பதில் ஒரு அம்சமாகக் காண்பதனல்தான், என்னல் நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமாகவே ஒரு ஈடுபாட் டுடன், ஆர்வத் துடன் படி க்க முடிந்திருக்கிறது என்று நான் எண்ணுகிறேன்"
காலத்துக்குக் காலம் பட்டியல் தயாரிப்பதிலும், அபிமானங் களை மாற்றிக் கொள்வதிலும், தான் அண்டியிருப்பவர்களுக்கு ஏற்ப விசுவாசங்களை வேருக்கிக் கொள்வதிலும் க. நா. சு. வுக்கு எந்தவிதத்திலும் சளைக் கா த திரும - சிவராமு, செல்லப்பர தாசனுக இருந்த வேளையில் எழுதியவை க. நா. சு. வை அவரது சீ டன் வாயிலாகக் காட்ட உதவுகின்றன.
*எழுத்து" பிறக்கும் வரை, இலக்கியம் சம்பந்த மாக விஷயம் தெரிந்தவர்
தத்தில் ଘr if
சுப்ரமண்யம். அபிப்பிராயங் களையே விமர்சனங்கள்என்று எழுதிவந்தார்?? *
(ஞானரதம், மார்ச், 19 73)
:இ லக் கி யம் தெரிந்தமாதிரி வேஷம் போடுவதில் வெற்றி பெற்றவருள் ஒருவர் க. நா. சு.’ என்று தரும - சிவராமு கூறுவதைப் போல நாம் கூற வேண்டியதில்லை. ஆணுல் மேலே காணும் ‘வேதாந்த விசார' வேஷம் எத்தகைய்து என்று நமக்கு விளங்கவில்லை. வேதாந் புகலிடம் தேடியபின் விமர்சனம் அவரைப் பொறுத்தவரையில் செத்துவிட் டது எ ன் றே கூறவேண்டும். இதனை உணர்ந்தி காரணத் தாலோ என்னவோ சுந்தரராம சாழி: "அவர் ஒரு இலக்கிய ரிஷி” என்று க.நா. சு. வைக் குறிப்பிட்டிருக்கிருர், சுருங்கக் கூறின் கலை கலைக்காகவே என் றும் பூர்ஷ்வாச் சித்தாந்தத்தை, இந் தி ய் வேதாந்த மர்புடன் இணைத்துத் தமிழில் வெற்றிகர
A கப் பரப்பிவந்த விமர்சகர் க ளு ம், தெரிந்தமாதிரி " s r. வேஷம் போடுவதில் வெற்றி க.நா. ಆಳ್ವ எவருக பெற்றவர்களும்ே விம்ச்ச கும் ஐயமிருக் காது என னம் என்ற பெயரில் கட்டு எண்ணுகிருேம். ★ ரைகளை எழுதி வந்தனர். - عـ .-.. இவர்களுள் ஒருவர் க், நா. (முற்றும்)
இந்த இதழுடன் இக் கட்டுரைத் தொடர் முடிவடைந்து விட்டது. இக் கட்டுரை சம்பந்தமாக இலக்கிய நண்பர் கள் பலவகைப்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பது எமக்குத் தெரியும்.
இக் கட்டுரையைப் பற்றிய தங்கள் தங்கள் கருத்துக்கரேகட்டுரைகளையல்ல - எழுதியனுப்பி உதவும்படி இலக்கிய நண்பர்களைக் கேட்டுக் கொள்கின்றேம்.
- ஆசிரியர்
息A

அக்கினிப்
அந்த்னிஜீவா
புதுயுகம் காணத் துடிக்கும் புதிய தலைமுறையைச் சார்ந்த கவிஞர் ஈழவாணனின் "அக்கி ரிைப்பூக்கள்’ கவிதைத் தொகு தியின் அறிமுக விழா அம்ைச்சர் திரு. செ. குமார்சூரியர் தலை மையில் கொள்ளுப்பிட்டி தேயி லைப்பிரச்சார சபை மண்டபத் தில் நடைபெற்றது.
தலைமையுரையில் திரு. குமா ரசூரியர் பேசும் பொழுது "தமிழ் மொழி என்றுமே முதிர் ச் சி அடையப்போவதில்லை. இன்றைய விஞ்ஞானம், சட்டம், தொழில் நுட்பம், சோதிடம் ஆகியவற் றிற்கு வரைவிலக்கணம் கொடுக் கக்கூடிய ஒரே மொழி தமிழ். அத்தகைய தமிழ் மொழியைப் பற்றி இன்னுெரு மொழியான ஆங்கிலத்திலா ஆராய்ச்சி நடத்த வேண்டும்? கவிஞனின் பணி சமுதாய தேவையாக இருக்க வேண்டும். அவனது கவிதைகள் சமுதாயத்தைத் தட்டியெழுப்ப வேண்டும்" என்ருர்,
திரு க. கைலசாதி "அக்கினிப் பூக்களைப் பற்றி ஆய்வு ரை நிகழ்த்தும் பொழுது *சிந்தனை யில் இ ள ரத் தம் சீறட்டும்? என்று வீறு பெற்ற கவிதைக ளால் தற்கால இலக்கியத்தில்
அறிமுக விழா
ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளார்.
Hதுயுகத்தைச் காணத்துடிக்கும் கவிஞர் ஈழ வாணனின் கண் ஞே, ட் டம்
விரிந்த நோக்குடையது. அவர் ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் கட்டுப்பட்டு நிற்காது பரந்து பட்ட கருத்துக்களை கவிதையில் தெரிவித்துள்ளார். இ வ ர து கவிதைகளில் வெண்பா, எண்சீர் விருத்தம் ஆகியவை செவிப்புல னுக்கு இனிமையளிக்கும் fa0ptu கவிதைகளின் யாப்புகளை பின் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், அதில் புதிய உத்திகளைக் கை யாண்டுள்ளார்" எனக் குறிப்பிட் l.-FT I7° ,
திருகா.சிவத்தம்பி ஆய்வுரை நிகழ்த்துகையில் “கவிஞர்கள் சமூ க்த்தை தம்மோடு இணை க்3 வேண்டும். எங்கள் கவிஞர்கள் தத்துவ உணர்வோடு சமூகத் தைப் பார்க்கின்றர்கள். வீணை யின் தந்தியை மீட்டும்போது
எத்தகைய உணர்வு ஏற்படுகி
ததோ அதைப்போல கவிதை யைப் படிக்கும் பொழுது, அது மனித உணர்வுகளைத் தொட வேண்டும். சமூக நோக்கோடு இ லக் கி யம் படைக்கும்
(EE பாரம்பரியம் ஈழத்து இலக்கியத்
39

Page 19
தில் தனித்துவமானவை என்ப தற்கு ஈழவாணனின் "அக்கினிப் பூக்கள்’ ஓர் எடுத்துக் காட்டா கும்’ என்ருர்,
ஜனப். எச். எம். பி. முஹி தீன் பேசுகையில் "ஈழத்து இலக் கிய வளர்ச்சியைப் பற்றி பிற நாட்டவர்கள் த வ ரு ன கண் ணுேட்டம் கொண்டிருக்கிருர்கள் சில காலங்களுக்கு முன்பு வந்த திரு. பகீரதன் எம்மை இருபது வருடங்கள் பின் தங்கியவர்கள் என்ருர். இப்போது வந்துள்ள ஒரு பேராசிரியர் கவிஞர்கள் மக் களைப்பற்றி பாடவேண்டும். அவர் களின் வாழ்வோடு தொடர்பு இல்லாதவற்றைப் பற்றி பாடிக் கொண்டிருப்பதில் பய னில் லை என்று உலகத்தமிழாராய்ச்சி விழாவில் கண்டு பிடித்துக் கட்
டுரை சமர்ப்பித்துள்ளளார். எங்க
ளுக்கு கவிதையைப் பற்றி புதிய வரலாறு தேவையில்லை. எமது கவிஞர்கள் இருபது ஆண்டுக ளுக்கு முன்ன்ே மக்களைப்பற்றி பாடிவிட்டார்கள்" என்ருர்,
திரு. இர. சிவலிங்கம் பேசும் பொழுது 'பத்தாண்டுகளுக்கு
முன்பு 'பல்ஸுக்குள் பாவை' போன்ற காதல் கவிதைகளைப் பாடிய கவிஞர் ஈழவாணன் கால ஓட்டத்திற்கேற்ப மாற்ற மடைந்துள்ளார். அவரது கவி தைகளில் க ன ல் பறக்கிறது. "அக்கினிப் பூக்களை’ கை யி ல் எடுக்கும் பொழுதே சுடுகின்றது. ஒவ்வொரு கவிதை வரிகளும் தீயாகச் சீறுகின்றன. கவிஞரின் சமுதாயக் கண்ணுேட்டம் மிகச் சிறந்து விளங்குகின்றது. இவரது கவிதைகளில் ஒரு பரந்த விரிந்த பார்வை தெளிவாகத் தெரிகின் றது" என்ருர்,
விமர்சகர் கே. எஸ். சிவகு மாரன் பேசும்பொழுது "புதிய பரம்பரையினர் சமீபத்தில் வெளி யிட்ட கவிதை நூல்களில் "அக் கினிப் பூக்கள்" சிறந்து விளங்கு கின்றது" என்ருர் .
இறுதியில் நன்றி தெரிவித்து பேசிய க விஞர் ஈழவாணன் "ஈ ழ த் துப் பத்திரிகைகளும்,
விமர்சகர்களும் தனது வளர்ச்
சிக்கு பெரிதும் உதவினர்கள் என்றர்.
ஈழத்து இலக்கியம்
S என்பது ஒரு தேசிய எழுச்சி. இந்தச் சத்திய வேள்வியில் உங்களது பங்கென்ன? இதை நீங் கள் தெளிவாக இந்தக் கட்டத்தில் தீர்மானிக்க துர வேண்டும். இந்தப் புதிய விர, பயணம் ஆரம்பிக்கப்பட் டதே ஒரு வெற்றி.
இந்தப் பூவுலகை - தன்னம்பிக்கையுடனும் தூய கம்பீரத்துடனும்
e இடையருத உழைப்புட னும் நோக்குகின்ருேம்.
புதிய பரம்பரையினரை
* * set في. مجه - ష్ట్రాకెట్టి. ്വസ്ത്ര00൬ இந் நோக்கில் வரவேற்
2. கின்ருேம். அதுவே புதிய
༡ ༦.སྤྱི་ལྷན་ཚ༠༠༦ ཟ བཅར བ པ་ ~~ பாதைக்கு நுழைவாயில்
 
 
 
 
 

கற்சுவரிலே தோழனின் உருவம்
(நாடுகடத்தப்பட்ட புரட்சிவீரன் ஒருவனைப்பற்றிய கவிதை)
மூலம்: சிலிநாட்டு மகாகவி ‘பாப்லோ நெரூடா"
தமிழாக்கம் எம். எச். எம். சம்ஸ்
ஆம்! நிஜமாகவே நான் அவனை அறிந்திருந்தேன். ஆண்டுகள் Ꭵ , I Ꭷh) அவனுடன் நெருங்கிப் பழகி வாழ்வின் தாக்குதல்களால் நொந்தவன் அவன் அவன் வெளியேறினன் - தாயை தந்தையை மைந்தனை மருமகனை வீட்டை மாடுகளே இரத்த உறவினரை பாதி படித்த புத்தகங்களை பரகுவேயில் விட்டுவிட்டு கதவைத் தட்டிய அவர்கள் வாயிலிலே குரலெழுப்ப கதவு திறந்தவுடன் அவனைக் கைது செய்து பொலீஸைக் கொண்டு சென்று அவனின் அங்கங்களைத் தவிர்த்து எலும்புகளை முறித்தார்கள் இம்சைகளால் தப்பி உயிரைக் காத்துக்கொள்ள நாடு நாடாக கால் சென்றவாறெல்லாம்
(($ଜ୪tଙr
அலைந்தான். சென்ற , கெளி ெல்லாம் ) து உ ைந்து றிய ஆயத்திலிருந் பெரு, கெடு , ரு
இரத்தவாந்தியை உண்டு
இவ்வாறே இறந்தான். அவனது முகத்தை அதன்பின்னர் காணவேயில்லை. அவனது ஆழ்ந்த அமைதியின் குரலைக்கேட்க முடியவில்லை. மென்பட்டுச் சிலை போல் மலை முகட்டிலே பனிப்புகார் பரவிடும் நாளொன்றில் சுழல்காற்றுவீதம்சாம்பல் இரவில் குதிரை ம்ேல் சென்ற நான் எனது தோழனின் முகத்தைப் போன்று கற்சுவரில் கண்டேன். (தால் அதிர்ந்து வீசும் சண்டமாருதத் அசைக்கமுடியாக் கற்சுவர்போல் அவனது முகமும் புயலுக்கும் சுழல் காற்றுக்கும் அச்சமின்றி எதிர் கொண்டது சமுதாயத்துக்காகப் பலியான அவனது கற்பாறை உருவத்தின் நாசியால் எழும்பும் ஏக்கப் பெருமூச்சு போல காற்று எழுந்து வீசுகிறது. நாடுகடத்தப்பட்டு திரும்பியவன் இறுதித்தறுவாயில் தன்னகம் தாய்நாட்டு மண்ணில் என்றும் அழியாத கற்சிலைபோல இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிருன்!
4.

Page 20
ஆகசி. கந்தசாமி
நாங்கள் மத்தியகாலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நித்திய எதிர்ப்பின் ஏமாற்றங்கள்! ஏதேனும் வேலை கிடைக்காதா என்று தவிக்கும் நிகழ்கால ஏக்கங்கள்! விதைப்பவர்கள் நெல்லைவிட்டுப் பதரை விதைப்பதால் ஈழநாட்டின் நிர்வாக வயலில் களைகளே எங்கும் காட்சியளிக்கின்றன! மணிகள் கொடுக்கவேண்டிய நாங்கள் இன்றும் விதைகளாகவே இருக்கின்ருேம்: பதர் விதைப்பவரிடமிருந்து எங்கள் நாட்டைப் பறித்து நெல் விதைப்பவரிடம் கொடுப்போம்! அப்போது
கரைகளும் முளைக்காது!
எங்க்ளுக்கு
ஏக்கங்களும் இருக்காது!
கெளரவம்!
"ஆண்டவன் சந்நிதி அனேவரும் s Líbib*aract நீட்டி முழக்கிய கோயில் தலைவர் பூஜை முடிந்து முதல்
காளாஞ்சி கொடுக்கவில்லையென g9ti Digi
சீட்டைக் கிழித்துவிட்டார்!
நாவல்நகர். பீ. மகாலிங்கம்
《@
யானைக்கால் நோயாளர்.
தொடை இறுக்கி கீழ்க்கால் அகன்றிட நீளக்கால் சட்டை
அணிந்து:
“பல் - பெட்டன்" என்னும் பெயரு மதற்கிட்டு, நாலும் அறிந்த - நாகரிகம் தெரிந்தவன் என்னும் செருக்கினல் வீதிவலம் வரும் இன்றைய இளவல்கள், இருபதாம் நூற்ருண்டின் யானைக்கால் நோயாளிகள்
"ஜமாலி"

சல்ஜெனித்சினின் துரோகப் பாதை
** சோவியத் - எதிர்ப்பாள ராகவும் கம்யூனிஸ்டு - எதிர்ப் பாளராகவும் சல்ஜெனித்சின் இருந்தார்; இன்றும் இருந்து வருகிருர் சமாதானம் ஜனநாய கம், சோஷலிசம் ஆகியவற்றின் விரோதிகளின் முகாமுக்கு அவர் வேண்டுமென்றே ஒடிப்போனர். ஆத்திரமூட்டல் கார ஞ க வு ம், தூண்டி விடுபவனுகவும், அவர் பணியாற்றுகிருர்; சோவிய த் யூனியன் சம்பந்தமாக வேல் லான் வகுத்ததே வாய்க்கால்’ என்ற கொள்கையைப் பின்பற்றுமாறு அவர் ஏகாதிபத்தியவாதிகளிடம் பசப்பு வேலைகள் செய்கிருர்."
9 கம்யூனிஸ்டுகள் புரட்சி கரத் தொழிலாளர்கள், விவ சாயிகள் ஆகியோரைச் சுட்டுக் கொன்றவர்கள், மற்றும் தூக்கி லிட்டவர்கள், எதிர்ப் புரட்சி என்னும் இருண்ட இலட்சியத் தின் ஆதரவாளர்களது கண் களின் வாயிலாகப் புதிதாக மலர்ந்துவரும் சமுதாயத்தை சல் ஜெனித்சின் பார்க்கிருர் என் பதை அவரது "குலாக் தீவுக் கூட்டம்' என்ற புதிய புத்தகம்
அம்பலப்படுத்துகிறது.'
"நமது வாழ்வின் மிகச் சிறந்த அம்சங்களையும், மிகப்
புனிதமான அம்சங்களையும், சல் ஜெனித்சின் இகழுகிருர்; பக்க ளது தலைசிறந்த புதல்வர், புதல் வியரின் நினைவுமீது அவதூறு பொழிகிறர்."
"புரட்சியின் காரணமாக சல்ஜெனித்சின் உணர்ச்சிகள்புண் பட்டுள்ளன" என்பது அவரது படைப்புகளிலிருந்து புலகிைற து; ஏனெனில், பெரிய நிலப் பிரபுக்களின் வாரிசான இவருக் குப் பரம்பரைச் செல்வத்தையும் சலுகைகளையும் வழங்கத புரட்சி
இ. சலோவியேவ்
மறு த் து விட து. இ வர து படைப்புக்கள் இவர் ஒரு தீவிர சோவியத் - எதிர்ப்பாளர் என்ப துடன், "இவர் மிக ஒழுக்கங் கெட்ட, கீழ்த்தரமான மனிதர் என்பதையும் அம்பலப்படுத்து கின்றன: சோவியத் மக்களின் வீரர்களை, தமது இரத்தத்தை யும்இன்னுயிரையும் ஈய்ந்து FTG ஸ்டு அச்சுறுத்தலில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றிய சோவியத் இராணுவ வீரர்களை அவதூறு செய்யவும் அவமானப் படுத்தவும் இவர் முயலுகிருர் என்பதை இவரது படைப்புக்கள் அம்பலமாக்குகின்றன.
* கம்யூனிஸ்டு-எதிர்ப்புப் பிர சாரம்என்ற சாக்கடையின் மேல் பரப்பில் சல்ஜெனித்சின் பெயர் மீண்டும் தோன்றியுள்ளது."
*ச ர் வ தேச அரங்கத்தில் சோவியத் யூனியனின் மதிப்பும் செல்வாக்கும் இடையருது வள ர்ந்து வருதலும், சோவியத் கம் யூனிஸ்டுக் கட்சியின் உள்துறை அயல்துறைக் கொள்கையும், சர் வதேச ஏகாதிபத்தியப் பிற் போக்காளரிடமும், அவர்களது சித்தாந்தக் கைக்கூலிகளிடமும் வெறித்தனமான வெறுப்பைத் தூண்டிவருகின்றன."
சோஷலிசத்திற்கு எதி ரான போராட்டத்தில், எகாதி பத் தி யப் பிற்போகாளர்கள். பொய் புரட்டுக்கள் மற்றும் அவ
தூறுவரை, எந்த வழிகளையும் கடைப்பிடிக்கத் தயங்கமாட் LITrigssit. ””
"சல்ஜெனித்சினை வானளா வப் புகழும் மேலைநாட்டுக் கன வான்கள், இந்தக் கேடுகெட்ட நடவடிக்கையில் எந்த ஆதா யத்  ைத யும் பெறமுடியாது ஏனெனில், அரசியல் ரீதியிலும்

Page 21
தார்மீக ரீதியிலும் இந்த ஐந்து அருவருக்கத் தக்கது எவ்வித மதிப்புக்கும் அருகதையற்றது, என்பது வெள்ளிடை மலை."
"சோவியத் அரசின் வரலா ற்றில் சில உணர்ச்சிமிக்க கணங் களைப்பற்றிய, குறிப்பாக, அவ் வரலாற்றில் நிகழ்ந்துள்ள சட்ட விரோதமான ஒடுக்கு முறைகள் பற்றிய "உண்மை'யை சல்ஜெ னித்சின் எழுதுவதால் அவரது நூல்கள் சோவியத் யூனியனில் பிரசுரிக்கப்படவில்லை என்று சித் திரிக்க பூர்ஷ்வா பிரசுரம் முயலு கிறது.”* ' - •
'இது ஒரு கீழ்த்தரமான கட்டுக்கதை, தனிநபர் வழிபாடு சம்பந்தமான சோஷலிசச் சட்ட நெறிகள் மீறம்பட்ட்தைச் சோ வியத் கம்யூனிஸ்டுக்கட்சியானது எள்ளளவும் விட்டுக்கொடுக்காத முறையில் மிக வெளிப்படை யாக விமர்சனம் செய்துள்ளது: கட்சியினுள்ளும் சமுதாயத்தி
லும், லெனினியக் கோட்பாடு களையும், வாழ்க்கை நெறிகளை யும், முழுமையாக மீண்டும் நிறுவியுள்ளது. ’’
"இங்கு குறிப்பிடப்பட்ட கடந்த கா லத் தவறுகளையும் குறைபாடுகளையும் விமர்ச்சிக்கும் பல படைப்புக்கள் சோவியத் நாட்டில் வெளியிடப்பெற்றுள் ளன. இந்தப் படைப்புக்களைச் சோவியத் மக்கள் ஆக்க பூர்வ மாக ஏற்றுக்கொண்டு உள்ள னர்; ஏனெனில் இந்நூலின் ஆசிரியர்கள் ஒரவஞ்சகத்திற்கு
இரையாகாமல், வரலாற்றுத் தொலைநோக்கு உண ர்  ைவ இழக்காமல், நிஜ உண்மையை
எழுதினர்கள்.”*
"முற்றிலும் எதிரான நிலை களிலிருந்து இந்தப்பிரச்சினைகளே சல்ஜெனித்சின் அணுகுகிருர், சட்டமுறைகளே மீறுதல் என்பது சோஷலிச சமுதாயத்தின் நெறி
44
களிலிருந்து விலகுவதால் ஏற்பட வில்லை என்றும், சோஷலிசத்தின் தன்(9மயே அது தான் என்றும் நிரூபிக்க அவர் முயலுகிருர் .”* **சோஷலிசந்திற்கும் சோஷ லிச அமைப்புக்கும் எதிரான அவ தூறு நிரம்பிய அவரது படைப் புக்களை, சோவியத் மக்களின் ஆக்க பூர்வமான உழைப்பால் உருவாக்கப்பெற்று உறுதிப்படுத் தப்பெற்ற அனைத்துக்கும் எதி ரான அவரது நூல்களை, சோ வியத் யூனியனில் வெளியிட இய லாது என்பது தெளிவு."
** சல்ஜெனித்சின் படைப் புக்கனின் பிற்போக்குத் தன்மை யும், சமாதானம், சோஷலிசம், மக்களிடையே நட்புறவு, நல் லிணக்கம் எ ன் ற இலட்சியங் கள்பால் அவர் கொண்டுள்ள பகைமையும், சகோதர சோஷ லிச நாடுகளின் மக்களது உள் ளத்தில் சினத்தையும் சீற்றத்தை யும் எழுப்புகின்றன."
*சல்ஜெனித்சின் பற்றி மேலை நாடுகளில் அவிழ்த்து விடப்படும் யூகங்களின் சாராம்ச மானது, பல நாடுகளின் பரந்த மக்கட் பகுதிகளுக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்துவருகிறது: பிரான்ஸ், பிரிட்டன், மேற் ஜெர்மனி, ஆஸ்திரியா, அமெ ரிக்கா, கனடா முதலிய நாடு களிலுள்ள முற்போக்குப் பிர சுரங்களில்ஏகாதிபத்தியளதிர்பிர சுரங்களில் ஏகாதிபத்தியப் பிர சாரத்திற்குக் கொடுக்கப்படும் கடுமையான பதிலடிகள் இதற் குச் சான்ருகும். *
"சல்ஜெனித்சின் ஒரு து ரோகி என்பதில் ஐயமில்லை: எல்லா சோவியத் உழைப்பாளி மக்களும், இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நேர்மையான மனி தரும், சினத்தோடும் அருவருப் போடும் அவரைப் புறக்கணிப் பர் என்பது திண்ணம்.”*

சிங்கள மூலம்:
மார்ட்டின் விக்ரமசிங்க
praaralasmaaaariraurwar
94 s 6 D
LMLAqLALMAqqLSLAiLMALM LLAqqLMLALMALALMiqLLMLB
தமிழில்: * நீள்கரை நம்பி"
ஸின் முதுகை முகர்ந்தவாறு 2-பாலிஸின் பாதங்களே வீட்டு வாயிலைப் பார்த்தது.
ஹந்தயா (சந்திரன்) முகர்ந்து நக்கியது. நித்திரை முழித்துத் தன் பாதங்களைக் கேந்தியில் பார்த்தான். மீண் டு ம் அது அவ ன் பாதங்களே நக்கியது. கண்ணிரில் நனைந்த கிழவியின் கண்கள் போன்ற அதன் விழி களையும் - தசையற்ற கன்னங் களையும் காணும்போது அவனுள் கோபம் முட்டியது.
இங்கு வா! Girl' மெளனமாகச் ஒரு மலையேற்ற வியாகுலத்து டன் முன்னங்கால்களை முன் வைத்து வீ ட் டு ஸ்தோப்பில் ஏறியது:
தன்னை அணுகிய அக் 'கிழ மாட்டின் மூஞ்சியைத் தடவி ஞன். அது தன் எஜமானின் கரங்களை நக்கியது. கழுத்துக் கட்டில் பிடித்து அதன் அங்கம் முழுதும் நெய்தடவிய காலத் தில்தான், ஹந்தயாவை உபா லிஸ் தன்னேடு அண் த் து க் கொள்வான்.
இன்று. ...! ஹந்தயா மீண்டும் உபாலி
அவன்
சொன்னன்.
களின்
கதவைத் திறந்து, ஸ்தோப் பில் வந்து நின்றவள் உபலிஸின் மனைவிதான்
இறங்கு - முற்றத்திற்கு இறங்கு' என்ற சன்னதக் குர லில் ஹந்தயாவின் சிண்டையைப் பிடித்துத் தள்ளினுள். சொன் னதைச் செய்யும் சின்னப்பிள்ளை போல் முற்றத்திற்கிறங்கி உபா
லிஸின் படுக்கையைச் சற்று
நேரம் பார்த்துவிட்டுச் சென்
Dğil."
அது, கொஞ்சத் தூரஞ்
சென்று, ஒதுக்கில் நின்று, ஈன சிர ஒலியெழுப்பி வா லை ச் சுழற்றி அடித்தது. ஒட்டுண்ணி
வேதனை போலும். *ஹந்தயாவுக்கு உறங்க டம் கொடுக்கக் கூடாது. அதி காலையிலே நித்திரையைக் கலைத் துவிடுகிறது இப்படிச் சொன் ஞள் உபாலிஸின் மனைவி.
"இப்பொழுது நேரம் எத் தனை மணி இருக்கும்"
" கரவாகம் இப்பொழுது தான் கரைகிறது. மணி ஆறு
4

Page 22
இருக்கும் இப்படிச் GF nr 667Lu வாறு சுற்றும் முற்றும் 1 Trig தாள் அவள் ம , "குவே! குவே!" என்ற காட்டுப் புழுவின் நாதமும் க்ேட்கிறது. சில Lt. சிகளின் மதுர' "கானங்களும் ஒலிக்கின்றன.
ஹந்தயா தினசரி வெள்ள னவே எழுந்து வந்து இவரது கால்களை நக்கி முழிப்பூட்டி" விடுகிறது. அதை எவருக்காவது விற்றுவிட வேண்டும். . .
வேண்டாம். வேண்டாம். அதை விற்கவேண்டாம் உபா லிஸ் சொன்னன், தனது வாழ் வும், ஹந்தயாவின் வாழ்வும் ஒரு சேர பி%ணக்கப்பட்டுவிட் டதை அவனேதான் அறிவான் மாட்டு வண்டியோடு வாழ்வைத் துவங்கிய நான் முதல் வாங்கிய மாடு ஹந்தயதான். குழந்தைகளோடும் மனைவியோ டும் ஹந்தய வாழ்ந்தது.
உபாலிஸ் உதயப்பொழுதில் எழுந்ததும் ஹந்தயாவை தன் சின்னத் ,திரிக்கலி" ல் பூட்டிப் பொல்ஒயாப் பாலம் பக்கமா கச் செல்வான். காலி நீதிமன் றத்திற்கோ, அல்லது வேறு அலுவ்லாகச் செல்லும் இரண் டொரு வரை யும் ஏற்றிக் கொண்டு கடவத்தையை நெருங் கின்ை. நகர நுழைவுக்கு அனு மதி இல்லாததால் அவன் வண் டியை மெதுவாக ஒட்டிச் சென் முன். அதற்காகப் பணத்தைக் கொட்டி அனுமதிப் பத்திரம் வாங்கவேண்டிய அவசியம் உபா லிஸுக்குத் தேவையில்லை. நக ரத்தைச் சீதனமாகக் கொள் ளும் 'திரிக்கல் காரர்களுக்குத் தான் அது அவசியம்.
இருபது வருஷங்களாக" ஞாயிறு நாட்களைத் தவிர மற்றைய தினங்களில் செல்
鸽字
இரண்டு
லும், காலி கடவத்தை ofr ..G6 வண்டிப் பயணத்தில் இரண்டு ரூபாய்க்கு மேல் அவன் ஆத பம் பெறுவதில்லை. பெளர்ணமி ஞாயிறைத் தவிர, சில ஞாயி றுகளில் கிராமத்துச் சமுசாரிக ளின் அரைச் சுமையுடன் ஹந் தயா திரிக்கலை இழுத்துச்செல் லும். சுண்ணும்புக் கற்களையும் சிலவேளை அது தாங்கும்.
குழந்தைப் பருவ காலங்க ளில் பிள்ளைகளிடம் செலுத்தும் சுமாரான அன்பைவிட உபா லிஸ் ஹந்தயாவிடம் கணிகர அன்பைச் செலுத்தினன் rrafë திற்கொருதடவை அதன் அங் கம் முழுதும் நெய்தடவி ஒட் டுண்ணிகள் பரவாது தடுத்து விடுவான். அதன் சதிரத்தில் நுளம்புகள் அமர்வதைக் கண் டதும் பதுங்கிச் சென்று அவற் றைச் சங்கரிக்கச் செய்வான். தாய் தந்தையர் அன்பு போன்று உபாலிஸ் ஹந்தயாவைப் பரா மரிப்பான்.
வண்டியில் ஏறிய பயணிகள் மாட்டைச் "சுருக்கா வெருட் டுமாறு உபாலிஸை நச்சரிப்பர். உபாலிஸ் காளையின் முதுகைத் த ட வி மறுகரத்திலிருக்கும் தடியைச் பின்பக்கமாகக் கால் கள்டையே சுழற்றிச் செல்வமே நட" என்பான். பிரயாணிகளின் மனுேகதியை உணர் ந் தா ற் போ ல் ஹந்தயாவும் நடை யோட்டத்தில் செல்லத் தயா grgoG) th:
முதலாளி! நீதிமன்றத்திற்
குத்தானே போவது?" உபாலிஸ்
கேட்டான்.
ஆம் மனிதனே! வழக்குத் தவணை"
இன்று
இன்னும் எவ்வளவு நேரம் உண்டு" "நான் எட்டு மணிக்கு

முன்பே முதலாளியைக் கடவத் தையில் இறக்கிவிடுகிறேன்" என்றபின் கீழ் வானத்தைப் பார்த்தான்.
"ஆறரை மணி ஆகவில்லை"
இரு பது வருஷங்களாக குறித்த நேரத்தில் சரியாகக் காலியை அடையும் உபாலி ஸ்"க்கு, உதய வானத் தை நோக்கி நேரம் சொல்லும் அபூர்வ அனுபவம் இருந்தது. உபாலிஸ் ஆகாயத்தை நோக்கி நேரத்தைச் சொன்னதும், மற் ருெரு பிரயாணி தன் சட்டைப் பைக்குள் கிடந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக் கொண் டார். உபாலிஸின் நேரமும் கடிகார நேரமும் மாறுபடுவது மிக அருமை.
முற்றத்திற்கிறங்கி, வாலைச் சுழற்றிக் கழுத்தை உயர்த்தித் தாழ்த்திச் செல்லும் ஹந்தயா வைப் பார்த்து உபாலிஸின் மனைவி இப்படிச் சொன்னுள்
*அது துறுமல் இழந்து கிழ மாகிவிட்டது. முதுகு ஏகமும் கொசுப் பட்டாளம். சரியாகச் சாப்பாடும் விழுவதில்லை. சிலர் அதைப் பி டி த் து க் கட்டிச் சுரண்டி வேலைவாங்கிக்கொண்டு ஆகாரம் எதுவும் கொடாது விரட்டிவிடுகின்றனர். நாள் முழுக்கத் திரிந்தாலும் கும்பி நி  ைற ய க் கிடைப்பதில்லை. அதன் முட்களெல்லாம் வெட் டை வெளிச்சத்தில் தென்படு கின்றன. விலா எலும்புகளும் கறள் ஈர்க்கில் வேலிதான்"
அதுக்கோசரத்தான் விற்று விடல் கூடாது" என்று உபாலிஸ் மறுவிநாடியே சொன் னு ன். "அது பனிரெண்டு வருஷ கால மாக வியாகூலப்பட்டு உழைத் துத் தந்தது. அதில்தான் நாங்
கள் சாடைமாடையாக வாழ்ந் தோம்"
எழுந்து நடமாடச் சக்தி யிழந்து துருத்தி சுருங்கிப் படுக்  ைக யி ல் சாய்ந்து கிடக்கும் உபாலிஸின் உள்ளத்தில் மரண விடுதலைப் பிரமை உணர்வு பத களித்தது. அவன் முள்ளு க் கூட்டை மட்டும் மறைத்துக் கடவத்தைப் பாலத்தின் மீது மாட்டு வண்டியைச் செலுத்திச் செல்லும்போது, நுகத்தடியி னின்றும் வழுக்கிப் பாதை நடு வில் விழுந்தான். அன்று முதல் அவ னு க் கு இவ்வுழைப்வில்
வெறுப்பு வந்தது. எனினும் குடும் ப சம்ரட்சணைக்காவே அதைச் செய்து வந்தான். "ஐயோ!" என்ற கூச்சலில்
விழுந்த அரவம் கேட்டு மாடும் நின்றுவிட்டதை உபாலிஸ் அறி வான். இடை முறிந்து வள்ளி சாக" ஆறு மாதத்தை அவன் வேதனை நிஷ்டூரத்தில் கடத்தி ஞன். வயிற்றுக் கழிப்புக்கு மட்டும் கட்டிலைவிட்டு கீழிறங் குவான்.
ஊன்று கோல் ஆதரவில் நகர்ந்தாலும் எவ்வளவு "உக் கிர கண்ணராவி இருக்குமென் பதை அவன் உணராமலில்லை. மல உ பத் திரவத் தித் கென மனைவி அல்லது மாற்ருர் துணை வேண்டி நிற்பதைவிட செத்து
மடிவது மேல் எனக் கருதும் கிராமத்தவர்களுக்கு இங்கு குறைச்சலில்லை. உபாலிஸாம்
அந்தப் பேர்வழிகளுள் ஒருவன் தான்.
முற்றத்திலிருந்து "கம்சபா' பாதைக்கு இறங்கிய ஹந்தயா அதன் ஓரத்தில் மேயத் துவங் கியது.
*அதற்கு மேயப் பாதை மருங்கில் புல் இல்லை. கோடை
§ 7

Page 23
ெவ ய் யி லி ல் கருகிவிட்டது" ஹந்தயாவைப் பார்த்து அவன் மனைவி சொன்னுள். அது தின் பது காய் ந் த புல்லைத்தான். அதையாவது உ எண் ண இந்த மனிதக் கும் பல் விடுவதில்லை. அதோ, ஒ (ரு வ ன் ஹந்தயா வைக் கயிற்றில் கட்டிக்கொண்டு செல்லக் துணிகிருன்"
வேண்டாமெனச்சொல்லு" உபாலிஸ் சொன்னன் அவனது சின்னமகள் பாதையில் ஓடினள்.
*ஹந்தய வுை இ ன் று கொண்டு போகவேண்டாமெ னத் தந்தை சொல்கிறர்"
ஏன்?"
"அதை மே ய விடுங்கள். நாலு நாட்களாக பிண்ணுக்குப் போடவில்லை எங்கள் கையில் காசுமில்லை"
பிண்ணுக்கு நீான் கொடுப் பேன். எனது தென்னம் மட் டைகளைச் சுமந்து சென்று சந் தையில் கொட்ட இருப்பதால்"
"ஐயா! உங்கள் தென்னம் மட்டைகளை இழுத்துச் செல்ல வேருெரு மாட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதை இன்று விட்டுவிடுங்கள்"
"நான் இம்பாதத்தில் இன் றுதான் இம்மாட்டைக் கொண் டுபோக வந்தேன், தெபாணிஸ் வாரத்தில் இருதடவை ஹந்த
யாவை வருத் மட்டைகளை இழுக்கவைக்கிருன். சிலர் கிழ மைக்கு இரு தடவைகளுக்கு
மேல் வேலைவாங்கி, அதற்குச் சோட்டு நீராவது அருந்தக் கொடுக்காது துரத்திவிடுகின் றனர்" என்றபின் அந்த மணி தன் ஹந்தயாவை விலங்கிடத் துணித்தான்.
48
"அந்தோ ஐயாவின் மடி கனத்திருக்கும் போது கூ வி கொ டு த் து மட்டைகளைக் கொண்டு போக இயலாதா? ஹந்தயாவைக் கவனிப்பதில்லை Quଗot ஜூவானிஸ் எங்களைத்
திட்டுகிருர், ஹந்தயாவினுல் அவருக்கு உழைப்பும் இல்லை யென்கிருர் . அதைக்" கட்
டாக் காலியாகத் திரியவிட்டி ருக்கிறர்கள் எனக் கிராமத்த வர்களும் எ ம்  ைமக் குறை சொல்கின்றனர்.
'ஹ ந் த யா உபாலிஸின் மாடுதான் என்று கிராமத்தவர் களுக்குத் தெரியும். ஏழைகள்
அதைக் கொண்டு வேலை வாங்
கியதன் பலனய் வரும் புண்ணி யங்கள் எல்லாமே உபாலிஸைத் தானே சேரும்?
"மனிதர்கள் அதை வதைக்
கிருர்கள். அன்னே! அந்தோ ஐயா ! இன்று ஹந்த யாவைக் கொண்டு செல்ல வேண்டாம்?
என்று அனுங்கிச் மகள்.
சொன்னுள்
"நான் ஒரு மணி நேரத்துக் குள் விடுவேன். முந்நூறு தேங் காய் மட் டை க ள் உண்டு! ஐம்பது சதம், ன்றிரவு பிண் ளுக்கு வாங்கிக் கொடு"
"கொஞ்ச நேரம் கிராமய னின் கையில் சிக்கிவிட்டதை அவள் உணர்ந்து கொண்டாள். அது வண்டியில் பூட்டும் காலத் தில்தான் புல் தின்றது. நுகத் தடிச் சுமைபிலிருந்து விடுதலே யாகிய மாடு, புல் நிலத்தை மேயத் துவங்கும். ஒரு கிராமி யன் அதைக் கொண்டு வேலை வாங்காத வேளையில் ஒதுக்கில் சென்று "அசைவெட்டக் கால் மடித்து ஒய்யாரமாக அமரும். ஹந்தயாவின் தாடை எலும் புகள் அம்மிக்கல் போலவும்

முன்னெற்றி நரம்புகள் தரை யில் படர்ந்த கொடி போலவும் தூர நின்று பார்ப்பவர்க்குத் தெளிவாகும். எதிர்ச் சக்திகளை எதிர்கொள்ள கொம்புகள் மட் டுமே உள்ளனர். அதன் உடல் ரோமங்களுக்குள் கொசுக்கள்
கெந்தி விளையாடும்.
ஒய்வு பெறும் வேளையில் ஹற்தயா ஒரு கிராமியப் பைய னிடம் சிக்கிக் கொண்டால், அவன் ஒருமணி நேரச் சிரமத் துக்குப்பின் அதன் முது கில் ஏறிக் கொள்வான். வேதனைக் குப் பின் குரல் எழுப்பும். முது கில் ஏறிய  ைப யன் அதன் கொம்பைப் பலமாகப் பற்றி உலுக்குவான். முடக்கி வைத்
திருந்த முன்னங்கால்களை இழுப்
பான். மற் ருெ ரு பையன் வாலைக் கையில் சுருட்டி இழுப் பான். - அப்பொழுது ஹந்தயா சீறியெழும்.
ஹந்தயா, என்றுமில்லாத
வாறு அன்று முற்ற த்தில் அமர்ந்து கால்களை நீட்டி, இரை
மீட்டிச் சப்பத்துவங்கியது. பிரீதி இன்பத்தில் 'தா  ைட உசுப்பிப் பேசும் கிழவிபோல
ஹந்தயா கீழன்னங்களை அசைப் பதைக் கானை உபாலிஸுக்குச் சந்தோஷம் துவன்றது.
இடையுடைந்து "மூலை முட் டா' வதற்கு முன்பு, உபாலிஸ் ஹந்தயாவை உவர்நீரில் வாரத் துக்கொருமுறை வான். அப்போது அதன் உடம் பிலிருக்கும் உண்ணிகளை அகற் றுவான .
"நான் இல்லாத காலங்க
ளில் உன்னை யார்தான் பராம if LifP”
o unresambløör Lo s sir air ளுக்குப் பி னே ந் த சட்டியை
குளிப்பாட்டு
ஹந்தயாவின் எதிரில் வைத் தாள்.
தொண்டையினுள் தீனி,
சப்தத்தோடு இறங்கியது. சட் டியை நிலத் தி ல் கவிழ்த்து விட்டது.
"உனக்குத் தீனி போடப் போய் சட்டியையும் கவிழ்த்து விட்டாய்" என்றவாறு ஹந்த
யாவின் குமட்டில் இரு அறை
களைக் கொடுத்தாள்.
ஹந்தயா மீண்டும் சட்டிக் குள் சொண்டினை இட்ட து திடீரெனச் சென்னியை உசத்தி
மூச்சுவிட்டது. சிறுமி வைத்த
சட்டியை திரும்பவும் கவிழ்த் தது. "உரஞ்சு' நக்கித் தெறிக்க மூச்சு விட்டதால் சிறுமியின் வஸ்திரத்தில் பிண்ணுக்கு நீர் படிந்தது. அவளுக்குக் கோபம் "பொத்துக்" கொண்டு வந்தது.
"என்னை எதிர்க்கவும் வ கிறது" என்றவாறு ஓடிப்போய் எ டு த் த தடியால் மாட்டை விளாசினுள்.
'அ த நீ கு அடிக்க வேண் டாம் உபாலிஸ் சொன்னன். "அது குத்தி வீழ்த்த வரவில்லை. முதுகில் கொசு மொய்க்கும் வேதனை போலும்"
மத்திய இராத்திரிக்குப்பின் உரத்த மழை பெய்தது. வெளி யில் உறங்கும் கணவனை, கத வைத் திறந்து மனைவி உள்ளே வரும்படி அழைத்தாள்.
"வாருங்கள் ச ரி யா ன "கூதல்" வாருங்கள் உள்ளே வந்து உறங்குங்கள்"
வேண்டாம். குளிராய்
இல்லை, வெளியே துரங்கி எனக் குப் பழகிவிட்டது. உ ஸ் ளே சென்ருல் தூக்கம் வராது"
49

Page 24
*நந்தா வத்தியின் தந்தைக் குச் தளக் காற்றுப்பட்டால் நல்லதாயில்லை. இன்று மட்டும் உள்ளே வந்து நித்திரை செய்யுங்கள். தூக்கம் வராவிட்டாலும் பரவாயில்லை" என்று மனைவி நச்சரித்தாள்.
வீட்டுக்குள் துயில உபாலி ஸுக்கு விருப்பமில்லை. மனைவி ஒரு புடவையைக் கொணர்ந்து கணவனைப் பாதாதிகேசம்வரை போர்த்தினுள் .
"களைப்புத் தோன்றி மூன்று மாதம் செல்லவில்லை. களைப்பு மேலிட்டு பிரணுவஸ்தைப்படக் கூடும். பதனமா க இருங்க
ளென்று பரிகாரி சொன்னது
ஞாபகமில்லை பா? இவர் உள்ளே வந்து உறங்குவாரா ஞல் எனக்கு மிக்க விருப்பம்"
*இம்ஸு எனக்கு வெளியே நல்லது. போய்ச் சாய்ந்து கொள்ளுங்கள். ப்ே r iர்  ைவ என்னைக் குளிரிலிருந்து பேணி விடும் உபாலிஸ் சொன்னன், கைகால்களை உதறிக் கனறி வந்த காற்று மெல்லிய பவனத் தோடு மெளனமாகியது நாயின் உறுமல் மாத்திரம் மாத்திரம் கேட்டது. ஆளுனல் அவன் அதை ஒருக்கணித்துப் பார்க்க ஒருப் படவில்லை. மழைக்கு அஞ்சி ஸ்தோப்பு மூ லை யி ல் நின்ற தாயின் முனகலும் கேட்டது: கசையடிஎழுப்பும் ஓசைபோன்று பெய்மழைப் பtட்டம் கூரை சுவர், மரக்கிளை ஆகியவற்றில் போதியெழும்பும் ஒலியும் தெளி வாகக் கேட்டது,
போர் த் தி க் கொண்டு ஸ்தோப்பில் 'ஒரிடப்பட்டு’ உறங்க முன்பும் சண்டமாருதம், பெய்மழை, கனையிருள் எல்லாம் உபாலிஸ்"க்கு சகஜந்தான். படலைக்கருகில் நின்ற ஹந்தயா,
50
வாருங்கள்!
துடைத்துக் கொண்டு
எழுந்து சுவர் மூலைக்கு வரும் பொழுது கா லே ஐந்து பணி ஐந்து நிமிஷமாகி விட்டது. படிக் கட்டுப் பக்கமாகச் சென்று உபாலிஸின் கால்களை நக்கியது. உ. பா லி ஸ் விழிக்கவில்லை. இரண்டு மூன்று தடவை தன் எஜமானனின் பாதங்களை நக்கி
யது. கட்டிலை அணுகி அவனது
சிரசை முகர்ந்தது. அப்பொழு தும் உபாலிஸின் நித்திரை
கலையவில்லை. பய" உணர்ச்சியில்
உபாலிஸின் கன்ன மேட்டை
முகர்ந்தது.
ஊ சாட்டமின்றி 'ஊமாண் டி போல உறங்கிக் கிடக்கும் எஜமானனச் சற் று நேரம்
பார்த்துவிட்டு மறுகணம் வீட்
டறை வாயிலை நோக்கியது.
ஹந்தயாவின் அர வம் கேட்டு அந் த ப் பெண்ணும் அறைக் க த  ைவ த் திறந்து கொண்டு வெளியே வந்தாள். நீரில் நந்ைத பஞ்சு போன்ற நிலத்தையும் மரக்கிளைகளில் துயிலும் பணித்துளிகளையும் 姆 தாண்டு வந்த காற்றை அவள் ஆஸ்வாஸ் ப் படுத்தாமல் ஒரு தும்மல் வெளிப் பட்டது. திடீரென மெல்ல வீசும் காற்றுக்கு அசையும் மரக் கிளைகளின் அசைவொலி, சிறகு களை அடித்துக் கத்தும் காகம், குருவிகளின் ஆலாபனை லயம் எல்லாம் அவளுக்குச் சுத்த சூன் யமாய்க் கேட்டன. சம்ரட் சணை யற்றுத் திகைத்து நிற்கும் மிரு கம்போல அவளும் மனுேகதி வியப்பில் தன் கணவன் படுக் கும் படுக்கையைப் பார்த்தாள். அசைவாட்டமின்றிக் கிடக்கும் புருஷனை அணு கிக் கண்களை அகல வீரித்துப் பார்த்தாள்.
'88 . . . . . . . . . Curro

4-வது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றிய
கடந்த பல வருடங்களாக தென்னிலங்கையில் சிங்களச் சூழ லில், பழக்கம், பண்பாடுகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டு தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிருேம்.
எழுதுவதோடும், பிரசுரங்கள் வெளியிடுவதோடும் மாத்திரம் நின்றுவிடாது இலக்கிய இயக்கங்களையும் நடாத்தி வருகின்ருேம்: பல இன்னல்கள் மத்தியில் நாம் மேற்கொண்டுவரும் பணிகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் நாடே அறியும்
இத்தகைய ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் நடைபெற்ற தமிழா ராய்ச்சி மகாநாடு தென்னிலங்கைக்கு அளித்த பங்கு என்ன என் பதே கேள்வி!
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடைந்ததை ஒரளவுக்காயினும் மறந்து திருப்தியடையச் செய்யவோ என்ன வோதான் மகாநாட்டுப் பொருட்காட்சி பற்றிய செய்தி எங்களுக்கு கிடைத்தது. காட்சியில் ஓர் அங்கமாக ஈழத்துப் புத்தகம், சஞ்சி கைகள் பகுதியில் எமது வெளியீடுகளையும் கண்காட்சிக்கு வைக்க உடனடியாக அமைப்பாளருடன் தொடர்புகொண்டோம். அதி லும் வெற்றி அவர்களுக்குத்தான். இதை திட்டமிட்ட > புறக்க ணிப்பு என்பதா? அல்லது தமிழார்வங்களை இனங் கண்டுகொள்ள தெரியாத அளவுக்கு தமிழார்வம் கொண்டவர்களின் சித்து விளை யாட்டு என்பதா? -
பொதுவாகப் பார்க்குமிடத்திலும்கூட முக்கியத்துவமளிக்கப் பட வேண்டியவர்கள் ஒதுக்கப்பட்டும், ஒதுக்கப்பட வேண்டியவர் களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாலும் ஏற்பட்ட வேதனை கள் இன்னும் நெஞ்சைச் சுடுகின்றது, « W
யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தமிழாராய்ச்சி மகாநாட்டின் பின்னணியில் தவருன செய்ற்பாடு கள் நிலவியது என்பது மாத்திரம் உண்மை;
திக்குவல்லை. திக்குவல்லை - கமால்

Page 25
அப்துல்லா இன்டஸ்ரீஸ் அன் பேப்பர் மனுபெக்ஷரி
* ரன் பக் மூட்டைப் பூச்சிக் கொல்லி * ரன் ரெட் எலிக் கொல்லி * ரன் இன் செக்ட் கில்லர் - சகல பூச்சிக் கொல்லி * சகல விதமான பேப்பர் பேக்ஸ் வகைகளுக்கு
72, பார்பர் வீதி கொழும்பு 13. தொலைபேசி: 33954
மொத்தமாகச் சொல்வதானுல் யாழ்ப்பாணத்து மக்களின் சர்வ ஆர்வத்தையும் மூலதனமாகக் கொண்டு சிறப்பாக நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தாலும் ஓர் ஆராய்ச்சி மாநாடு என்ற வகையில் சோர்வுதட்டியது என்றே கூறவேண்டும். நிர்வாகிகளின் திறமையின்மை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதிபலித்ததைக் கூர்ந்து கவனித்தவர்கள் புரிந்து சுொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தில் விழா வைக்க வேண்டுமென வாதாடியவர் கள், கொழும்புத் தமிழர்களால் மண்டபத்தை நிரப்பி விழர் நடத்தி முடித்தார்கள். விழாநடந்தது உண்மை. ஆனல் ஆராய்ச்சி அங்கே எங்கே என்றுதான் தேடவேண்டியிருந்தது.
மண்டபத்தில் ஒரு கலைஞனையோ அல்லது இந்த நாட்டின் இலக்கியப் பரம்பரைக்குக் குரல் கொடுத்த ஒரு எழுத்தாளனையோ காணமுடியவில்லை. திட்டமிட்டு இந்த நாட்டு எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மஹாகவிக்கு ஆராய்ச்சிக் கட்டுரை உள்ளே. ஆனல் வெளியே அந்தக் கவிஞன் பரம்பரை கேற்றுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதுமல்லாமல் அவமானத்தால் திரும்பிச் சென்றதையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சிலருக்கு விளம்பரம்!- ஆனல் தமிழுக்கு?
நீர்வேலி வடக்கு ச. சந்திரகுமார்
་་
தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு ஆரம்ப அடிப்படையே விரிசல்" கண்டது. பின்னர் அரசின் பிடிவாதம், கொழும்பிலா? யாழ்ப் பாணத்திலா கெளரவப் பிரச்சினை, கிழக்கு மாகாணம், மலையகம், முஸ்லிம்கள் முற்போக்கு எழுத்தாளர்கள், அறிஞர்கள் புறக்க னிப்பு கடைசியில் எவ்வாருே சமாளித்து தமிழ் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆராய்ச்சியினல் எத்தனை ஆயிரம் தமிழ்

மக்கள் பலன் பெற்றர்கள்? என்ன ஆராய்ந்தார்கள்? தமிழ் மக் களின் உணர்ச்சியைத் தான் சிலர் பரிசோதித்துள்ளார்கள்.
அழையாத விருந்தாளியாக வந்து, எப்படியோ போன ஒரு தமிழ் 'ஜாம்பவான் கடைசி தினம் நடைபெற்ற அசம்பாவிதம் பற்றி தமிழக பத்திரிகைக்கு கொடுக்கும் செய்தியைப் பார்க்கும் போது இக்கூற்று உண்மையாவதோடு, அரசியல் கலப்பில்லை என்ற கூற்றும் பொய்யாகிவிடுகிறது.
ஒரு சம்பவம், மகாநாட்டுக்குப் போன எனது நண்பர் ஒரு வர் அழைப்பிதழ் இல்லாமல் உள்ளே அனுமதிக்கப்படவில்லையாம்! அழைப்பிதழ் பெற என்ன செய்யவேண்டும் என நண்பரைத் தடுத்தவர்களிடம் கேட்டாராம். "100 ரூபா கட்டி அங்கத்தவர் ஆகவேண்டும்" என்ருர்களாம். "ஒ. இது பணக்கார தமிழ் மகாநாடு' என்று அந்த நண்பர் வந்துவிட்டாராம்,
அனுராதபுரம், அன்பு ஜவஹர்ஷா
YA
வீதியெங்கும் விழாக் கோலம் பூண்டு - கார்ணிவலை ஞாபகப் படுத்தும் தோரணையில் - நடந்து, முடிவில் அல்லோல் கல்லோல மாக முடிவுற்ற 4-வது தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய சருத்துக் களைத் தெரிவிப்பதற்கு மல்லிகை தளமமைத்துக் கொடுத்திருப்பது வரவேற்கத் தக்கது மாத்திரமல்ல, அவசியத் தேவையானதும் dial- up
இம் மாநாடு யாப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு தற்காலி கமாக ஒரு "விழா மனப்பான்மை" யைக் கொடுத்தது. அதைத் தமிழுணர்வு, தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் பேசச் செய்தது உண்மையே.
யாழ்ப்பாணத்திலும் அனைத்துலக மாநாடுகளை நடத்த முடி யும், ஈழத்துத் தமிழர்களாலும் சர்வதேச விழாக்களை ஒழுங்கு செய்து நடாத்த இயலும் (தமிழ் என்ருல் அது தமிழகத்துக்கே குத்தகை என்ற மனப்பான்மைக்கு எதிரா க) இப்படிப்பட்ட விழாக்களை அரசின் உதவியின்றியே - சொல்லப் போனல் அரசின் அலட்சியத்திற்கு எதிராக நடாத்தலாம் என்ற தன்னம்பிக்கை நம்மில் பலருக்கு நிரூபணமாகியதெனலாம்.
இம் மாநாட்டை அமைப்பாளர்கள் பூரணத்துவமாக்கியிருக் கலாம். இது விழாவாகிவிட்டதே தவிர, ஆராய்ச்சி மாநாடல்ல என்ற குறை என்போன்றவர்களுக்குண்டு. காரணம் - என்னதான் அபிப்பிராய பேதம் இருந்தாலும் ஆராய்ச்சித் தகமை வாய்ந்த - தமிழ் கூறும் நல்லுலகமே மதிக்கக்கூடிய - கலாநிதிகள் கைலாச பதி, சிவத்தம்பி. இந்திரபாலா போன்றேர்கள் புறக்கணிக்கப் பட்டது விழாவில் துலாபரமாகத் தெரிந்தது,
அமைப்பாளர்கள் புறக்கணித்தார்களா அல்லது அவர்கள் கலந்து கொள்ளப் பின் வாங்கினர்களா என்பது என க் குத் தெரியாது ኟ:
5尋

Page 26
இருந்தும் இந்தச் சர்வதேச மாநாட்டில் அவர்கள் கலந்திருந் தால் இது ஒரு சர்வதேச மாநாடாகச் சிறப்புற்றிருக்கும் என் பதே எனது கருத்து.
கொழும்பு - Ill. வி. என், பரராஜசிங்கம்
女
அண்மையில் வெகு பரபரப்போடும், அதிர்ச்சியுடனும் யாழ்ப் பாணத்தில் நடந்து முடிந்த தமிழாராய்ச்சி மகாநாட்டை நான் நேரிலேயே_பார்க்க முடியாதவனக இருந்தாலும் மகாநாடு பற் றிய செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தறிந்தேன்.
மகாநாடு ஜனவரியில் நடக்குமா, நடக்காதா என்று சென்ற ஆண்டில் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த விடயம் இறுதியில் நடப்பது சாத்தியமில்லை என்ற தோரணையிலேயே செய்திகள் வெளி வந்தன. அப்படியான் நேரத்தில்தான் டிஸம்பர் மாத இறுதியில் உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு ஜனவரியில் நடந்தே தீரும், என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கான வேலைகளும் அவசர அவச ரமாகச் செய்து முடிக்கப்பட்டன.
இவ்வளவு பெரியதொரு மகாநாட்டை குறுகியகாலத்திற்குள் திட்டமிட்டு, பல பிரச்சினைக்கு மத்தியில், ஒரு நாட்டின் பெரும் பகுதி மக்களின் ஆதரவுமின்றி நடத் தி முடிப்பதற்கு அதன் அமைப்பாளர்களுக்கு அப்படி என்ன அவசரம் ஏற்பட்டு விட்ட தென்றே தெரியவில்லை.
ஈழத்தில் தமிழ்பேசும் மக்கள் என்ற முறையில் முஸ்லீம்களும் ம் மகாநாட்டில் பங்குகொள்ள உரிமை பெற்றவர்கள். அப்படி யிருக்க தமிழ் இலக்கியத்தில் சிறந்த அறிவு பெற்ற இஸ்லாமிய எழுத்தாளர்களான ஜனப்கள்: எம். சமீம், எச. எம். பி. மொஹி தீன், இளங்கீரன், எஸ். எம். கமாலுதீன் போன்ற இன்னும் வேறு பலரும் புறக்கணிக்கப்பட்டது ஒரு சமூகத்திற்கும், தமிழ்மொழிக் கும் செய்த ஒரு பெரிய துரோகச் செயலாகும்.
அதே வேளையில் இம்மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடாத்தப் பட்டாலும் அது ஈழத்தின் தமிழறிஞர்களை பரவலாக எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்திருக்கவில்லை. கிழக்குமாகாணத்தில் தமக்குத் தேவையான சிலரை மட்டும் பெயருக்காக அழைத்து தங்களின் பரந்த தன்மையை எடுத்துக் காட்ட முயற்சித்திருப்பது விசனத்திற்குரியதொன்ருகும். குறிப்பாக எமது பகுதியின் பழம் பெரும் எழுத்தாளரான திரு. வ. அ. இராசரத்தினம் கலந்து கொள்ளாதது கீழ்மாகாணம் புறக்கணிக்கப்பட்டதற்கு ஒர் எடுத் துக் காட்டாகும். Wi
மொத்தத்தில் தமிழி ன் பெயரால் நடைபெற்று நடந்து முடிந்த இம் மகரநாட்டின் சம்பவங்களைப் பார்க்கும்போது ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்களைப் பூர்த்தி செய்யப்படுவதற்காகவே இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியிலும், திட்டமிடப்படாமல் இம் மகாநாடு நடத்தி முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனல் ஒரு

தமிழ் 'தளபதி கூறியதுபோல இறுதியில் பிண ஆராய்ச்சி மகா நாடாக முடிந்தது, அனைவரினதும் உள்ளத்திலும் நீங்க 1ா த சோகத்தை ஏற்படுத்தி விட்டது. இவைபற்றி யார் எப்படிக் கூறினலும் இதன் உண்மையான குற்றவாளிகளை எதிர்காலம் இனங்கண்டு தண்டிக்காமல் விடாது.
மூதூர். மூதூர் முகைதீன்
YAr
மண விழாப்போல கோலாகலமாக ஆரம்பமாகி இறுதியில் மரணங்களோடு முடிவுற்ற நான்காவது தமிழாராய்ச்சி மகாநாடு தந்த சோகமும் கொதிப்பும் தமிழ் பேசும் மக்களிடமிருந்து இன் னும் மறைந்துபோகவில்லை. இந்த வேளையில் தமிழ்ப் பேசும் மக் களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து - உணர்ச்சி வசப்படாது சிந்தித்து - கறைபடிந்த இந்தச் சம்பவத்துக்கு கார ணகர்த்தாக்கள் யார் என்பதைத் தெளிவுறுதல் ஒவ்வொரு தமிழ் பேசும் மகனுக்கு முன்னுள்ள தேசியக் கடமையாகும். இந்த நாட்டில் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்தவும், அம்மகாநாட் டில் பிரதம மந்திரியும் ஏனைய மந்திரிமாரும் கலந்து கொள்ளத் தகுந்தவண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளையில், “கறுப்புக் கொடி காட்டுவோம்" என்ற வழமையான குரலைத் தமிழ் அரசி யல் வாதிகள் எழுப்பினர்கள். அதே அரசியல் வாதிகள்தான் நடந்து முடிந்த சோக மகாநாட்டில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கினர்கள் என்பதும் மனங்கொள்ளத்தக்கது. இவர்களது மாறுபட்ட போக்குகளுக்கான காரணந்தான் என்ன?
அரசியல் லாபம் தேட முனைந்து நின்ற சக்திகளின் முனைப் புக்கு ஈடு கொடுத்து அரசினர் போட்ட முட்டுக்கட்டைகளும், பின்வாங்குதலும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறிவிட்டனவென்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. எல்லா வற்றுக்கும் மேலாகப் பொலிசார் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளத் தவறியமை குறுகிய அரசியல் லாபத்துக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
பொலிகண்டி. தெணியான்",
-
i. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்று குறிப்பிடும் பொழுது, சோஷலிச நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்து கொள் ளவில்லை என்று குறிப்பிடத் தக்கது. மேற்கு நாடுகளில் தமிழியலை அறிமுகம் செய்த பேராசிரியர் அஷர் கூடக் கலந்துகொள்ளாமை அவதானிக்கத்தக்கது. 2. திறமான புலமையெனில் பிறநாட்டார் அதை வணக்கம்
செய்தல் வேண்டும்" தமிழ் மொழிக்குரிய திறன்களை உருவாக்க வேண்டுமே தவிர, மதம் பரப்புவதுபோல் மொழி, பிரசாரத்திற் குரியதல்ல.

Page 27
3. ஆய்வாளர்கள் நிலப்பிர களை மேற் கொண்டார்கே களை முன்வைக்கவில்லை.
4. ஜனுர்த்தனன் ஆட்சேப மதிக்கப்பட்டமைக்கும், டங்களுக்கும் தொடர்பு இரு பேச்சுக்கள் மொழியை வி குப் பதிலாக பொறுப்பற்ற மளித்த பேச்சாக இருந்தது
கரவெட்டி
மாநாட்டுத் தலைவரும் கடிதம் எழுதி எனது ஒத்து பொறுத்தவரை இம் மாந முண்டு, ஆனல் இதற்குக் சொல்லிவிட்டு வந்தேன்.
என்னைப் பொறுத்தவை வேலைகளைச் செய்திருக்கலா ஒன்றை நிறுவியிருக்கலாம். பாளர்கள் மார்பில் அணிந்: பெயர்களை இங்கிலீஸிலேயே இவர்களது மனப்பான்மை மாநாட்டைப் பகிரங்கப்படு: ருக்கத் தேவையில்லை. இந்: பாராளுமன்றத் தொகுதியை கிருர். சிலரைப் புறக்கணிந்து
இந்தத் துன்பத்திலும் ஒ ளவு உயிர் இழப்புகளுக்குப் மக்கள் இந்த உணர்ச்சிச் சூ, வகுப்புவாத உணர்ச்சியுடன் சம்பவம் நடந்ததற்குப் பின் கூடத் துன்பம் விளைவிக்க மு நோக்கவேண்டும். இது இ6 வேண்டிய ஆரோக்கியமான குரிய சூழ்நிலையே நிலவவில் மனவளத்தைக் குறிப்பிட்டுக்
சில "வந்தான் வரத்தா விளைவுகளும் அவர்களைப் ே உள்ளூர் அரசியல் மேளங்கள் பொறுமையின்மையுமே இச் காரணங்களாக அமைந்தன
56

புத்துவ, முதலாளித்துவ ஆய்வு முறை ளயன்றி, நவீன விஞ்ஞான ஆய்வு
கரமான முறையில் இந்நாட்டில் அனு சர்வதேச முதலாளித்துவ சதித்திட் }ப்பதாக ஊகிக்க இடமுண்டு. அவரது குஞான அடிப்படையில் வளர்ப்பதற்
முறையில் உணர்ச்சிகளுக்கே முக்கிய
வ. மகாலிங்கம்
YA
செயலாளர்களில் ஒருவரும் எனக்குக் ழைப்பைக் கேட்டிருந்தனர். என்னைப் ாடு சம்பந்தமாக அபிப்பிராய பேத
குந்தகமாக நிற்கமாட்டேன் எனச்
ர இம் மாநாடு ஆக்கபூர்வமான சில ம். ஞாபகார்த்த பொது மண்டபம் அதைச் செய்யவில்லை. மாநாடு அமைப் திருந்த பாட்ஜுகள்ல் எல்லாம் தமது ப எழுதியிருந்தனர். அப்படியானுல் தான் என்ன? 3 - 9 திகதிகளாக த்தியவர்கள் 10-ந் திகதிக்கு நீட்டியி த விழாக் கதாநாயகர்களில் ஒருவர் மனசில் வைத்து வேலை செய்திருக் 3தற்கு இதுவும் ஒரு காரணம்!
ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. இவ்வ பின்னரும் - யாழ்ப்பாணப் பெரு ழ்நிலைக்கு ஆட்பட்டிருந்த போதிலும்ா இப்பிரச்சினையைக் கணிக்கவில்லை. *னர் ஒரு சிங்களச் சகோதரனுக்குக் pனையவில்லை என்பதையும் நாம் கூர்ந்து வ் விழாவையொட்டி நாம் கவனிக்க முன்னேற்றம், வகுப்புக் கலவரத்துக் லை என்பதும் யாழ்ப்பாண மக்களின்
காட்டப் போதுமானது. ‘ன்கள்" செய்து விட்டுப்போன நாச பரிய மனிதர்களாக்க முனைந்த சில ரின் அவசர புத்தியும், பொலீஸாரின் சகல விளை வு களு க் கும் பொதுக்
டொமினிக் ஜீவா