கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1967.10

Page 1
|×------- -----: :
|-%*: ': ***********, , , ,
 


Page 2
தரமான படங்களைத் திரையிடும்
எஸ். ரி. ஆர்.
பிலிம்ஸ் -
பெருமையுடன்
அளிக்கும்
மாபெரும் திரைவிருந்து
தங்கை
இப்பொழுது நடைபெறுகிறது
JT T2g IT யாழ்ப்பாணம்
சிவாஜி கணேசன் )ே K. R. விஜயா நாகேஷ், சுந்தரராஜன், பாலாஜி, காஞ்சன இசை: விஸ்வநாதன் பாடல்கள்: கண்ணதாசன்
திரைக்கதை - டைரக்ஷன் A. C. 9ỳ (1536ùm 363.j595ữ M. A.
அடுத்து வெளிவரும் திரையோவியங்கள் தங்கவளையல் )ே காவல்காரன்
முகூர்த்தநாள் )ே காதல்பறவை
ડ, T, R, FILMAS
 

யாழ்ப்பாணம் பூரீ லங்கா புத்தகசாலை புதிய வெளியீடுகள்
வினப்பத்திரங்கள் ஐந்தாம் வகுப்பு: :
I
வட இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்க வெளியீடு 1960-1966 விலை ரூபா:- 1-75
எண்-சூழல் தமிழ்-ஆங்கிலம் 2. இன்பத்தமிழ்ப் பயிற்சி 2ம் வகுப்பு விலை சதம் -95 며
s 3ம் , et5LuIT 1-00 ps y 3 4ம் , 1-25며 Š je 9 ) бић , , is 150 ஆக்கியோன்;. வித்துவான் பொன் கந்தசாமி 3’ கணிதப் பயிற்சி 2ம் வகுப்பு விலை சதம் 70 . , 3-ம் , விலை , 75 s 4ம் s is 9 -75
ஆக்கியோன்:- சைவப் புலவர் நா. கணபதிப்பிள்ளை. 며 4. குடியியல் வினவிடை (க. பொ.த. சாதாரண வகுப்பிற்
குரியது) வெளியீடு உயர்கலைக் கல்லூரி விலை ரூபா 2-00
s
. தமிழ் இலக்கிய விளக்கம் (க. பொ. த சாதாரணவகுபிற் 며
குரியது)
ஆக்கியோன் வித்துவான், பண்டிதர், சைவப்புலவர். 며
க. வேந்தனர் விலை ரூபா 3.50
6
. இந்து சமய பாட மாதிரி வினவிடை (க. பொ.த. சாத 며
ரனவகுப்பிற் குரியது) ஆக்கியோன்:- சைவப்புலவர். நா. 49వడ
விலை ரூபா 1-50 தமிழ் இலக்கிய விணுவிடை (க. பொ. த. சாதாரண
m வகுப்பிற் குரியது) (1967-1969) 며 ஆக்கியோன். வித்துவான் பொன். கந்தசாமி 며 விலை ரூபா 1-75 며 ------------------L-L-L-L-L-l-l-l-l
LSSTLLLLSSSLLLSLLSzSSSSSSLSCCSSSLSLSL LSLS S LGLSSLLLLSLSLLLLLSLLLLLSGLLLGLLGLLLGSLSSLLLSLGLGSGGSGLGSLLSLLTSLLLLLL
7

Page 3
O
ஸ்ரோர்ஸ்
உரிமையாளர்: K. M. சின்னத்தம்பி
45, கஸ்தூரியார் ரூேட், யாழ்ப்பாணம். நவநாகரீக டிசைன்களில் பல
வர்ணங்களில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள், ஆடவர், பெண்மணி களுக்கு ஏற்ற பாதரட்சைகள்
வேண்டுமா?
எமது ஸ்தாபனத்திற்கு விஜயம் செய்யுங்க
மற்றும் ஆட்கேஸ்கள் பல்வேறு ரகங்களில் இங்கு பெற்றுக்கொள்ளலாம். ஆதரவாளர்களுக்கு எமது நன்றி
Cae Stories
Head Office: Branch:
THE NEW BOOTEMPORTUM 10, & 12 Main Street, No. 13, Main Street, Galle. Galle,
白<运
A
ܨܡܪ̈ܓܠܲܐܣܧ
تکگ
གྱུར་
4ང་
asy
 

జిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజిజి
娄 器 ( 器 இஸ்வரி ஆலை : 器 நல்லூர் மார்க்கட் - கல்வியங்காடு 翠 器 ஐ & கெல் குற்றுதல் : 3. x மா திரித்தல் 器 懿 x மிளகாய் அரைத்தல் 器 இ8 எண்ணெய் ஊற்றுதல் 器 器 S3 器 என்பன குறித்த 器 நேரத்தில் செய்து ஐ கொடுக்கப்படும் 器
ASWAJ MS 澄 器 NALLUR MARKET, ఛ KALVIYANKADU. S:

Page 4
q LLesMLY LLLeMMMLz eLLeMLLSMMSLeMLLLLL
3 RAJUSTORES
DIRECT IMPORTERS-WHOLESALERS-RETAILERS S
All kinds of Soda Factory and Bakery, requirements, Rice Hullers, Grinders and Accessories, Water Pumps, Electric Motor
All Kinds of
Scent Lables, New empty Bottles, Leather and plastic Cloth Wono Spring beds, Toilets, Fancy Goods, Gift Sets,Toys, Plastic Goods, Glass and Enamel Wares, Milk Foods, Suit Cases, Sundries Etc. Etc
(Northern Province Agents For Lanka
S
S
S
S
Glass Factory Prod S ass Factory Products) S S
S
s
S
S
67, 69, Kasthuri ar Rd, Jaf fna Tele Phone: 372 P.O. Box: 61 Telegram: "RAJU”
Drink
BRAND
Special
MADE BY The Subramaniam Aerated Water Manufactory V A L v E T T IT U R. A II Telephone: 97 پید Telegram: SODA'
(ബo(ഭ
 

ஆங்கில மொழியில்
ஈழத்துச் சிறுகதைகள்
பிறமொழி ஆக்கம் செய் வதென்பது எப்போதுமே இலக் கிய உலகில் நடக்கும் கலைச்சே வைதான். இலக்கியத் தரமான பிறமொழிச் சிருஷ்டிகளை அனு பவிக்கவும், ரசித்து மகிழவும், செளஜன்ய கலாச்சார பரிவர் த்தனைக்கும் மொழிபெயர்ப்பு ஒரு பயனுள்ள சாதனம் என் பதை எல்லோரும் ஏகமனதாக ஏற்றுக் கொள்வார்கள் என்ப தில் ஐயமில்லை. பொதுவாக வாசகர்களும் மொழிபெயர்ப் புகளை சர்வசகஜமாகப் படித்து வருகிருர்கள். எல்லா நாடுக ளிலும், அரசாங்கத் தொடர் புள்ள ஸ்தாபனங்கள் தமது நாட்டுச் சிருஷ்டிகளை மொழி பெயர்ப்பதற்காக தனிச்சிறப் புள்ள ஸ்தாபனங்களை நிறுவி யுள்ளன. இலங்கையிலும் இந் தியாவிலும் கூட, தற்போது இப்பேற்பட்ட சூழ்நிலை தோன் றியுள்ளது. எழுத்துலக அனுப வமும், தாய்மொழிப் பற்றும், ஆங்கில அறிவும் படைத்த ஒரு சிலர் இலக்கிய முன்னேற்றம் கருதி தமது நாட்டுச் சிறு கதை, நாவல்களை பிறமொழி ஆக்கம் செய்து வருகிறர்கள். மொத்தத்தில் இவர்கள்
முயற்சி பாராட்டுதலுக்குரிய விஷயம். இந்தியாவில் பதினன்கு பிரதேச மொழிகளில் வரும் கதைகள் - நாவல்களை ஆங்கில பாஷையில் மொழிபெயர்த்து சர்வதேசங்களிலும் அறிமுகப் படுத்த வேண்டும் என்று ஒரு சிலர் இதயபூர்வமாகவே கெய லாற்றி வருகிருர்கள். அகில உலகிலும் பேசும் தொடர்ட மொழியாக ஆங்கிலம் நீடித்து வருவதால், நமது சிருஷ்டிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியது மிக அத்தியாவசி யமானதாகும். அவ்வாறிருக்க, தேசநலனை முன்னிட்டு பிரதேச மொழிகளிலும் கதைகள்-நாவல் கள் மொழியாக்கம் செய்யப் படவேண்டும். சிங்களக் கதை களைத் தமிழிலும், தமிழ்க் கதை களை சிங்களத்திலும் மொழி பெயர்ப்புச் செய்யும் பொறுப்பு சிங்கள, தமிழ்ப் புலமையுள்ள எழுத்தாளர் மீது விழுந்திருக் கிறது. இதனுல் இலக்கிய பரி வர்த்தனை என்பது முதலில் தேசிய இனங்களின் அடிப்படை யில் ஒன்றிணைக்கப்பட்டு, பிறகு சர்வதேசங்களிலும் "அறிமுகமா கும் வாய்ப்பை உண்டாக்க வேண்டும். ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழியாக நீடித்து
- இ. ஆர். திருச்செல்வம் -

Page 5
வருவதால் ஆங்கில மொழி பெயர்ப்புகளின் மூலம் எமது சிருஷ்டிகளை வெளிநாட்டவ ருக்கு அறிமுகப் படுத்தலாம். இதுவே உண்மை நிலை. ஆனல், இந்தியாவில், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இந்த நடை முறை முழுதாகச் செயல்பட வில்லை. உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள தமிழ் நாட்டுச் சிருஷ்டிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆங்கிலத்தில் மட்டு ம ல் ல, வேண்டுமானல், மேலை நாட்டி னர் புரிந்து கொள்ளும் வேறு எந்த மொழியின் மூலமும் தமிழ் நாட்டுக் கதைகளை உல கிற்கு அறிமுகப்படுத்த வேண் டும்
தமிழ் நாட்டிலுள்ள படிப் பாளிகளும், எழுத்தாளர்களும் பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய பா ஷைகளில் மெச்சத்தக்க புலமை உள்ளவர்கள் என்பதை மறுப் பதற்கில்லை. ஆங்கிலேயரிடம் ஆங்கிலத்தைக் கற்று, ஆங்கி லேயரைவிடத் திறம்பட ஆங் கிலத்தில் எழுதக்கூடிய க. நா. சுப்பிரமணியம், லா ச. purnir Dnir மிர்தம் போன்றவர்களும் தமிழ் நாட்டில் இருக்கிருர்கள். இவ ர்கள் தமிழ்நாட்டுக் கதைகள். நாவல்களை உலகிற்கு அறிமுகம் செய்யவேண்டும் என்ற லட்சி யத்தை மனத்தில் கொண்டி ருந்தால் கேரளத்தையும், வடக் கிலுள்ள வங்கத்தையும் விட தமிழ் நாடு மொழி பெயர்ப்புத் துறையில் பின்தங்கியிருக்க
6
நியாயமில்லை. தமிழகத்து எழு த்தாளன் புகழும் மங்கியிருக்க நியாயமில்லை.
பேராசிரியர் அ. சீனிவாச ராகவன், **விக்னேசுவரா,** சிதம்பர ரகுநாதன், க. நா. சுப்பிரமணியம், சி. சு. செல் லப்பா, ராஜாஜி, ஆர். கே. கண்ணன் ஆகியோரின் ஆங்கிலத் தகமை மொழி பெயர்ப்புத் துறையில் சரியாக இன்றுவரை பயன்படுத்தப்படவில்லை. “தமிழ் நாட்டிலுள்ள ஆங்கில மொழி வல்லுநரின் அறிவும், ஆற்ற லும் இத்துறையில் (மொழி பெயர்ப்பு) ஆழமாக வேரூன்ற வில்லை என்பது மிக வருந்தத் தக்கதாகும்" என்று தாமரை ஆகஸ்ட், 67 இதழில் தலையங் கம் எழுதியுள்ளது. தமிழ்க் கதைகளை ஆங்கிலத்தில் தருவ தையே தொழிலாகவோ அல் லது கடமையாகவோ கொண் டவர்களும் தமிழ் நாட்டில் இல்லை. ஆனல், கேரளம் தமிழ் நாட்டை விட இத்துறையில் மிகவும் முன்னேறியுள்ளது. மலையாளத்தில் உள்ள படிப் பாளிகளான கே. எம். ஜார்ஜ், நாராயண மேனன், கே.பி.எஸ். மேனன், என். கே. நாயர் போன்றேர் தமது உண்மையான ஆங்கில மொழிப் புல மை யை பயனுள்ள வழிகளில் பயன்ப டுத்தி உள்ளனர். மலையாள மொழி மேற் கொண்ட பற்றின லோ அல்லது மலையாள இலக் கிய முன்னேற்றம் கருதியோ அவர்கள் வள்ளத் தோளையும், சங்கர குரூப்பையும், தகழி சிவ

சங்கரம்பிள்ளையையும் லத்தில் மொழி அகில உலகிற்கும் பரப்புகிருஜர் கள். ஆயினும், தமிழ் கூறும் நல்லுலகின் இலக்கிய நலத்தை நாடுவோர் நம்மிடையில் இல் லாமலில்லை, சரஸ்வதியில் பிர சுரமான 'மெளனி வழிபாடு' என்ற கட்டுரையின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரபல் பமான ஏ. ஜே. கனகரெத்ணு
ஆங்கி
1959-60-ல் ஈழத்துச் சிறுகதை
களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சோதனைகள்.இன் னல்களுக் கிடையில் முதன் முறையாக இப்படி யொரு முயற்சியில் ஏ. ஜே. ஈடுபட்டார் என்பதே ஒரு சாதனைதான். இவர் முயற்சியால் சொக்கன், கனக செந்திநாதன், எஸ். பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, பொ. தம்பிராசா, வரதர், சாந்தினி ஆகியோரின் 560556ir Sunday Times, Obser ver, Illustrated Weekly Of India, ஆகிய ஆங்கிலப் பத்தி ரிக்கைகளில் இடம் பெற்றன. இன்னும் அச்சேருமல் பலரு டைய கதைகள் இவரிடம் இருக்கின்றன. டானியலின் கதை ஒன்றை கா. சிவத்தம்பி அவர்கள் மொழிபெயர்த்து ஈழத்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. திரு.ஏ.ஜே. கனகரெட்ணு கதையின் மையக் கருத்தும், சத்திய உணர்வும் மாருமல் தமது மொழிபெயர்ப் புகளைச் செய்துள்ளார் என்ருல் மிகையாகாது. ஏ. ஜே. யின் இலக்கிய முயற்சிக்கு ஊட்டம்
பெயர்த்து
தரும் வகையில் அவ்வப்போது மனங்கனிந்த நல்லாசியும், ஆலோசனையும் வழங்கிய ஆங் கில எழுத்தாளரான அழகு சுப்பிரமணியத்தை இத்தருணத் தில் நெஞ்சில் நினைவு கூருவது அவசியமாகின்றது
ஏ. ஜே. யின் மகத்தான ஆங்கிலப் புலமையைப் பற்றி நான் 1950-ல் ஜெயகாந்தனி டம் சென்னை-திருவல்லிக்கேணி யில் பிரஸ்தாபித்தபோது, ஜெயகாந்தன் தனது போர்வை என்ற கதையை மொழிபெயர் ப்புக்கென, ஜீவாவின் மூலம் திரு. ஏ. ஜே. க்கு அனுப்பிவை த்தார். திரு. ஜெயகாந்தன் போர்வையின் ஆங்கில மொழி பெயர்ப்பால் கவர் ப் பட்டு 18-1-60 திகதியிட்ட தனது கடிதத்தில் நண்பர் டொமினிக் ஜீவாவுக்கு பின்வருமாறு எழு தியுள்ளார்:
**கணகரெத்தினவின் மொழி பெயர்ப்பு அற்புதமாக அமை ந்துள்ளது. நண்பர் கண்க ரெத்தினு அவர் களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவியுங்கள். ஆங்கிலப் புலமை நிறைந்த நண்பர். ஆர். கே. கண்ணன் மொழி பெயர்ப்பை மிகவும் பாராட் டுகிருர்."
ஏ. ஜே. யின் மொழிபெயர் ப்பை ஆங்கிலத்தில் ஊறித் திளைத்த அழகு சுப்பிரமணியம் பெருமிதமாகப் பேசியுள்ளார். சுந்தர ராமசாமியும் மகத்தான அவர் மொழி Gol iu urio" 6öbLu
2

Page 6
ரசித்துள்ளார் என அறிகிறேன். தனது மொழிபெயர்ப்புகளினல்
இலங்கைச் சிறுகதைகளுக்கு சர்வதேசிய புகழைத் தேடித் தரக் கூடிய ஒருவர் நம்மி
டையே உள்ளார் என்று பெரு மிதம் கொள்ளுகிருேம். சமீப காலமாக ஏ. ஜே அவர்களிடம் ஒருவகை இலக்சியச் சோம்பே றித்தனம் மிகுந்துள்ளதை அவ தானிக்க முடிகின்றது. இந்தத் தேக்கம் அவருக்கு மாத்திர மல்ல, வளர்ந்து வரும் ஈழத்து இலக்கியத்திற்கும் மிகப்பெரிய நட்டமாகும். இதை அவர் உணர்ந்திருக்கிருரோ என் னமோ இலக்கிய அபிமானி கள் இதைப் புரிந்து கொண்டுள் ளனர். தனக்காக போனலும் ஈழத்துப் படைப் பிலக்கியங்கள் சர்வதேசப் பெரு மையைப் பெற்றுப் புகழடைய வும் இலங்கைத் தமிழ் எழுத் தாளனை உலகம் பூராவுமே அறிந்து கொள்வதற்குமான ஒரு சேவை என இதை எண் ணிச் செயலாற்றினலே போ தும். அவர் எழுதிக்கொண்டு தான் இருக்கிருர். அதுமாத் திரம் அவரது திறமையின் வெளிப்பாடல்ல. . ஆங்கில மொழியாக்கம் அவருக்குக் கைவந்த கொடை, மலையாள எழுத்தாளரான தகழி சிவசங் கரம்பிள்ளையை உலகப் பிரபல மாக்கியவர் நாராயணமேனன்.
இல்லாது
ஏன் தாகூரின் கீதாஞ்சலிக்கு நோபல் பரிசு கிடைக்கச் செய் தது அவரது சிருஷ்டிகளை
மொழிபெயர்ப்புச் செய்த கார
ணமும் ஒன்று.
இவரைப் போலவே ஆங் கில மொழிப் பாண்டித்தியம் உள்ளவர்கள் நிறையப் பேர் கள் நம்மிடையே உண்டு. ஆனல் அவர்கள் பயப் படுகின்றனர். அல்லது மேதாவித்தனத்தால் நிலத்தைப் பார்த்து நடக்கப் "பஞ்சிப் படுகின்றனர். இது ஈழத்திதுத் தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்.
மகாஜனக் கல்லூரி ஆசி ரியர் ஆர். கந்தையா அவர்க ளும் உடுப்பிட்டி அமெரிக்க மிஷ ன் கல்லூரி ஆசிரியர் ஜேக்கப் சல மோனும் குறிப்பிடத்தக்க ஆங் கிலப் புலமை மிக்கவர்கள். நண்பர் ஏ. ஜேயைப் போலவே இவர்கள் தமது ஆற்றலையும் ஆங்கிலமெர்ழி அறிவையும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்க ளினது சிருஷ்டிகளை மொழி யாக்கம் செய்யப் பயன்படுத்தி 'னலே போதும்.
நிச்சயமாக நம்பலாம். ஈழத்
துத் தமிழ் ஒரு காலத்தில் நோபல் பரிசைப் பெற்றே தீரும்.
○
அலங்காரமான சொற்களும் ஆடம்பரமான சொற்ருெடர்க ளும் சொல் வீக்கம் என்ற நவீன இலக்கிய வியாதியின் அறிகுறி
களாகும்.
8

வில்லூன்றி மயானம்
-- அ. ந. கந்தசாமி
IITழ்ப்பாணத்தில் மீண்டும் சாதிப்பேயின் கோரதாண்டவம். கொடிகாமத்தில், அச்சுவேலியில், சங்கானையில் இரத்த களரிஇவற்றை எல்லாம் கேட்கும் போது நாம் வாழ்வது இருபதாம் நூற்ருண்டா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா ?
மனிதனை மனிதனக மதிக்காத சமுதாயத்தின் அநியாயச் சட் டங்களை அடியோடு தகர்த்தெறிய வேண்டும் என்று துடி துடிக் காத முற்போக்குவாதி யார் ? ** யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்று வாயளவில் பேசிக்கொண்டு தீண்டாமைப்பேயை இரகசியமாகவும், பகிரங்கமாகவும் இன்னும் வாலாயம் செய்து வரும் சாதி வெறியர்களை என்னென்பது?
சாதிப்பேயின் வெறியாட்டம் சங்கானையில் ஐம்பது வயதுக்கார்த் திகேசுவின் உயிரைக் குடித்திருக்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட் டின் சாதி ஒழிப்புப் போரில் இந்தக் கார்த்திகேசு இரண்டாவது நரபலி.
முதலாவது நரபலி 1944ம் ஆண்டு செப்டம்பர் 26ந் தேதி யன்று வில்லூன்றிச் சுடலையில் மாலை ஆறு, ஏழு மணியளவில் முகிலுக்குப் பின்னே மறைந்தும் வெளிவந்தும் கொண்டிருந்த சந் திரன் சாட்சியாக அளிக்கப்பட்டது. **டுமில்’’ என்று ஒரு துப் பாக்கி வேட்டு. இலங்கை முழுவதும் அதனல் அதிர்ச்சி! யாழ்ப் பாணம் ஆரியகுளத்து முதலி சின்னத்தம்பி தியாகியானன்.
முருகன் மனைவி வள்ளிப்பிள்ளை- அவளே இதற்கெல்லாம் காரணம். அவள் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான முடிக் குரிய காணியில் எரிப்பதற்கு எடுத்துச் சென்ற சிறு கூட்டத்தில் ஒருவன்தான் இந்த முதலி சின்னத்தம்பி. கலகம் வர்லாம் என் பது அவனுக்குத் தெரியாததல்ல, ஆனல் கலகத்துக்குப் பயந்து உரிமைப் போரை எவ்வளவு காலத்துக்குத்தான் தள்ளிப் போடு வது? உலகமெல்லாம் சமத்துவப் பறை பேரொலியுடன் கொட் டிக்கொண்டிருந்த அவ்வேளையிலே யாழ்ப்பாணத்தின் தாழ்த்தப் பட்ட சமூகத்தினரும் விழித்துக் கொண்டனர். அதுவே ஈழத்துச்
9

Page 7
சிறுபான்மைத் தமிழரின் முதலாவது விழிப்பு. 'கலகம் வந்தால் நியாயம் பிறக்கும், பார்ப்போம்" என்ற எண்ணத்துடன் உயிரைட் பயணமாக வைத்து வின்லூன்றி மயானபூமிக்குச் சவத்தைச் காவிச் சென்றது அச்சிறு கூட்டம். அதன் பயன்..? எதிர்பார்த் தது நடந்தது. உண்மையில் மயானபூமி சாவின் பூமியேதான் வள்ளிப்பிள்ளையின் பக்கத்தில் இன்னேர் பிரேதம்-முதலி சின்னத் தம்பியின் பிரேதம் விழுந்தது.
எனினும் சாவின் பூமியில்தான் புரட்சி பூத்தது. வில்லூன் றிச் சுடலையில் தான் யாழ்ப்பாணத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் பிறந்தது.
இச் சம்பவம் நடந்து இப்பொழுது இருபத்துமூன்று ஆண்டுக ளாகி விட்டன. இருந்தாலும் அன்று அந்நிகழ்ச்சி ஏற்படுத்திய பரபரப்பு இன்றும் எனக்கு நல்ல நினைவிருக்கிறது. எனக்கு அட் பொழுது வயது இருபது.
'பார்ப்பாரை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப்
பரங்கியைத் துரைஎன்ற காலமும் போச்சே!' என்ற பாரதியின் பாட்டை என் வாலிப உள்ளம் முழுமூச்சோடு பாடிக் கொண்டிருந்த காலம் அது.
**இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்ருனே!" என்ற பாரதி தாசனின் கவிதை என்நெஞ்சை ஆவேசத்தோடு ஊடுருவி நின்ற காலமது.
** பார்ப்பார்கள் தோள் சுமந்து பாணரை முன் திருக்கோவில் சேர்த்தார்கள் என்ற கதை தெரியாதோர் உண்டோ? ஐயா!' என்ற தேசிகவிநாயகனின் தீண்டாமை ஒழிப்புப் பாடல் செவி நிறைந்து நின்றகாலமது.
சாதிக் கொள்கையை நையாண்டி செய்து நவாலிச் சோம சுந்தரஞர் பாடிய ' ஏருத மேட்டுக்கு இரண்டு துலை இட்டிறைக் கும் பேருன கதை'யைப் பலருக்கும் நான் பாடிக்காட்டி வந்த காலமது.
இப்படிப்பட்ட உணர்ச்சி பொங்கும் என் மனதிலே வில்லூன் றிக் கொடுமை ஒரு பெரும் புயலையே கிழப்பி விட்டது. அப் புயலைக் கவிதை ஆக்கினேன். 1944 நவம்பர் 9ந் தேதி ** தினகரன்' தினசரியில் வெளிவந்த அக்கவிதை பின்வருமாறு:-
0

நாட்டினர் நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில் நாம்கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று! கேட்டினிலே உளயிணத்தை உண்பதற்குக் கிளர்ந்தெழுந்த தீயன்று! நெடுநாளெங்கள் நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும் நச்சு மர வீழ்ச்சியினைக் காண்பதற்காய் வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும் வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது!
மக்கள் குல மன்ருேநாம் மரமோ கீழாம் மாடுகளோ விலங்குகளோ கூறும என்று திக்கற்ருன் நெஞ்சினிலே பிறந்த வைரத் தீஅதுவாம்! திசை எங்கும் பரவுதற்கு மக்கள் நாம் மறுப்பதெவர் என்று கூறி மாவுரிமைப் போர் தொடங்கி விட்டான்! அந்தத் திக்கதனை வில்லூன்றித் திருத்தலத்தைச் சிரந்தாழ்த்தி வணங்குவோம் புனிதபூமி!
கேளிர்ஒர் வீரமிகு காதைஈது கிளரின்பம் நல்குமொரு சேதியன்ருே? பாழினிலே பயந்திருந்த பாமரர்கள் பலகாலந் துயில் நீங்கி எழுந்துவிட்டார் வாழியரோ வரப்போகும் நவயுகத்தின் வளக்காலை இளம்பருதி வரவுணர்த்தும் கோழியது சிலம்பலிது! வெற்றி ஓங்கக் கொள்கைக்கிங் காதரவு நல்குவோம் நாம்
பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று பழங்கதைகள் பேசுகின்ருர் மனிதர் பார்ப்பின் பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்டபின்னும் சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச்செய்கைச் சிறுமைஎன்று செகமெல்லாம் நகைநகைத்துச் சிரிப்பதற்குச் செவிதாரீர்! தீண்டாங்பேயின் சிரங்கொய்தே புதைத்திடுவோம் வாரீர் வாரீர்!

Page 8
இருபத்துமூன்று ஆண்டுகளின் பின்னே வயதால்வாடிப் பழுப் பாகி விட்ட 'தினகரனின் பழைய பிரதியிலே இச் செய்யுட்களை வாசிக்கும்போது எனக்கேற்படும் எண்ணங்கள் பல. வில்லூன்றி நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமான் நிகழ்ச்சி ! இருந்தும் அன்று என்னைத்தவிர வேறு எந்த ஆக்க எழுத்தாளனுமே அதைத் தன் எழுத்துக்குரிய பொருளாகக் கையாளவில்லை. யானே அன்றே அந்நிகழ்ச்சியில் இன்றைய கொடிகாமத்தையும், அச்சுவேலியை யும், சங்கானையையும் கண்டுவிட்டேன்! அன்று அந்நிகழ்ச்சி இருள் படிந்த ஓர் இடுகாட்டின் ஒரு மூலையில் நடைபெற்ற சிறுசம்பவம். ஆனல் என்னைப் பொறுத்த வரையில் வில்லூன்றித் தீப்பொறி நாளடைவில் ஒரு பேரியக்கமாக எரிய ஆரம்பிக்கும் என்று அப் போதே நான் நம்பினேன். அது வீண்போகவில்லை. வில்லூன்றியால் ஏற்பட்ட விழிப்பே - மரணத்தில் கூட எமக்குச் சமத்துவ மில்லை என்ற அந்த எண்ணமே - நாளடைவில் யாழ்ப் பாணத்துச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. அதனுல் ஏற்பட்ட உரிமை உணர்வே இன்று புரட்சி யாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளிலும் வெடித் துக்கொண்டிருக்கிறது.
** வில்லூன்றி தன்னில் நாம் கண்ட தீ வெறும் தீயன்று.”* என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் கவிதைத்தேவி என் நாவி லேறி முழங்கினுள். வில்லூன்றிச் சம்பவம் ‘* வரப்போகும் நவ யுகத்தின் வளக்காலை இளம் பருதி வரவுணர்த்தும் கோழியது சிலம்பல் " என்று கூவினுள். ' வில்லூன்றித் திருத்தலத்தைச் சிரம் தாழ்த்தி வணங்குவோம், புனித பூமி ! " என்று புரட்சி யின் மண்ணுக்கு அஞ்சலி செலுத்தினுள்.
அநீதிக்கு எதிராக நடக்கும் போரிலே, இருபத்து மூன்று வரு டங்களின் முன்னே என் இருபதாவது வயதிலேயே நான் இரண் டற ஒட்டிக்கொண்டேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம். அவ்வாறு ஒட்டியதனுற்தான்போலும் பலர் என்னை முற்போக்கு எழுத்தாளன் என்று அழைக்கிருர்கள்! ஆனல் எனது மகிழ்ச்சி, அந்தோ, வில்லூன்றியில் தொடங்கிய அப்போர் இன் னும் வெற்றியில் முடியவில்லையே என்பதை நினைத்ததும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறது, இருள் நீங்குவதெப்போ, விடிவதெப்போ என்று சங்கானையிலும் கொடிகாமத்திலும் அச்சு வேலியிலும் ஏங்கும் நெஞ்சுகளுடன் சேர்த்து என் நெஞ்சும் ஏங்குகிறது.
பலர் வில்லூன்றிச் சம்பவத்தை இன்று மறந்துவிட்டார்கள். ஆனல் வில்லூன்றியின் விழிப்பு வீரசரிதை எழுதிச் செல்லுகிறது"
B

தியாகி முதலி சின்னத்தம்பியின் பெயரைக்கூட இன்று பலர் நினைவு கூருவதில்லை. இருந்தாலும் சங்கானைத் தியாகி கார்த்தி கேசு தோன்றுவதற்கு அவனே காரணம்.
உயிர் விட்டவர்களின் மரணத்தால் நாம் பயனடைய வேண் டும். சமத்துவப் போரை எல்லாத்துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தீண்டாமைப் பேயை நாட்டை விட்டு முற் முக ஒட்டும்வரை எமக்கு ஒய்வில்லை, ஒழிவில்லை என்று தீர்மா னிக்கவேண்டும். பேச்சால், செயலால், எழுத்தால் அதற்கு ஆதரவு நல்க வேண்டும்.
தீண்டாமைப் பேய் அறிவீரோ - அதன் சேட்டைகள் முற்றும் தெரிந்திடுவீரோ ?
Gà) ᏩᎧ ᏩᎧ கூடியிருக்க வொட்டாது - நண்பர் கொண்டு வருவதை உண்ண வொட்டாது. தேடி வருவோரை அன்பாய் - வீட்டுத் திண்ணையில் உட்கார வைக்க வொட்டாது.
ᏩᎧ G?) GRD
கோவிலின் வாசற் படியில் - நிதம் கும்மாளி கொட்டிக் குதித்தாடி நிதமும் வாவிக் கரையிலும் நிற்கும் - அங்கு வந்த மனிதரை ஓட்டித் துரத்தும்.
" ᏩᎧ Q) Gà)
பொல்லாத பேயிதை நம்பி - இன்னும் பொங்கலிட் டாடுதல் புத்தியோ ? ஐயா ! நல்லாக வேண்டுமேயாளுல் - இதை நாட்டை விட் டோட்டித் துரத்துவோம், ஐயா !
- கவிமணி தேசிக விநாயகன்
மக்குள்ளே இருக்கும் "நான் ' என்ற உணர்வு மக்கு அதிக பலவீனமாகவும் உள்ளது;
அதேநேரம் மிகப் பலமாகவும் உள்ளது. ாம் அதைப் பலவீனமாக வளர்த்து விடாமல் பலமாக வளர்க்க நிறைய நிறையத்
தன்னம்பிக்கை தேவை,

Page 9
இஸ்லாமியர்கள் தமிழுக்கு
சீரிளமைப் பொலிவுடன் தொல்மொழியான தமிழ் இன் ணும் அழகுமெருகேறி வாழ்ந் திருப்பதற்குக் காரணம், தமிழ்த்தாய் சாதி சமய வேற் றுமை கடந்து எல்லோர் வாயி லும் வாழ் விருப்பமுடையவ ளாக இருப்பதுதான். ஆகை யாற்ருன், ஜைனர்களும், புத் தர்களும், சைவர்களும், வைண வர்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அம்மொழியை வளம்படுத்துவதற்குரிய வாழும் இலக்கியங்களையும், இலக்கணங் களையும் ஆக்கிப் பொலிவு பெறச் செய்திருக்கின்ருர்கள். தமிழ்த்தாயின் இளமை காலத் தால் மாருது. என்றென்றும் நிலையாகவிருக்க மேற்கூறிய பல்வகை மதத்தினரும் இலக் கிய இலக்கணங்களைத் தமிழ்த் தாயின் இளமை நிலைத்து நிற் கும் அமிலங்களாகச் செய்து மெருகூட்டி இருக்கின்றர்கள் என்பது வரலாற்றுண்மை. ஆ னல், வரலாற்றுக்கு மாருகச் சை வமும், தமிழும் ஒன்றித்த நிலை யுடையதெனத் தனிப்பட்ட tD5 வாதிகள் பலமத மக்களும் கூடுமிடங்களில் மேடையேறிவி ளாசுவது தமிழைக்குறுக்கி அன்
14
|அளித்த பெருமை
இக்பால்
இளமைக்குத் தொய்வு ஏற்படச் செய்கின்ற சூழ்ச்சிகள் செய்கின்ருர்கள் என்பதைக்க றும் சந்தர்பம் இவ்விடத்திலேற் பட்டுள்ளது. பல்வகை மதத்தி GOTUTIT Gi) வளம்படுத்தப்பட்ட தமிழை இன்று பல்வேறு நாட் டினரும் மோகித்து அதன் சிறப் பைக்கூற முன்வருவதால் இன் னும் சில காலத்தின்பின் தமி
ழன்னையின் அழகை மேலும் பொலிவிக்கப் பலநாட்டினரும் ஆக்கங்கள் செய்வரென்பது திண்ணம்.
தென்னுட்டில் தமிழுடன் ஒன்றித்த இஸ்லாமியர்கள் மிகச் சிறுபான்மையினராகவே
வாழ்ந்தனர்; இன்றும் வாழ் கின்றனர், இஸ்லாமியர்கள் மதரீதியில் சிறுபான்மையின ரானபோதும் மொழிரிதியில்
தமிழர்களுடன் ஒன்றித்த சிறப் புப் பெற்றவராயினர். இஸ் லாமியர்கள் தமிழரிடை மதரீ தியில் நூற்றுக்கு ஏழுசத விஷி தாசாரப்படி வாழ்ந்தபோதும் தமிழில் ஆக்கங்கள் செய்த அளவில் அவர்களது விகிதா சாரத்திற்கு அதிகமான அளவு

அன்னையை அழகுற அணி செய் திருக்கின்றனர். இவர்கள் சமய அறிவில் அதிக உற்சாகங் காட் டிக் கற்றுத் தேர்ந்ததுபோல் தமிழறிவிலும் சிறந்து விளங் கினர். 'குர்ஆன்", 'ஹ நீஸ்', இஸ்லாமியச் சட்டதிட் டங்கள், தத்துவங்களை ஆய்ந்து கற்றது போல், தமிழிலக்கண, இலக் கியங்களையும் தமிழர்களறிந்த துபோல் பிழையறக்கற்றுத் தேர்ந்தனர். பிரபந்த வகை கள், குறள், நீதி நூற்கள், இன்னேரன்னவைகள் யாவை யும் கற்றதினுல் இஸ்லாமியர் கள் கூட இவைகள்பற்றிய ஆய்வுகளிற் சிறந்து விளங்கினர்.
தாய்மொழியில் இஸ்லா மியர்களுக்குச் சமய ஞானம் கற்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டதால் அறபுத்
தமிழிலும் சமய நூல்கள் பல ஆக்கப்பட்டன. நாயக்கர் கால நடுப்பகுதியில் இஸ்லாமியர் களின் தமிழ்ப்பணி ஆரம்பமா யிற்று. தமிழில் (PROSE) வசன நடை ஐரோப்பியர் காலத்தின் பின்தான் வழக்குடன் கிளர்ந் ததெனும் தமிழிலக்கிய வர
லாறு அவர்கள் தமிழ் லிபி
யைக் கொண்டு எழுதிய வசன ந ைட யா ல் நி ரூ பி க் கப்படுகின்றது. ஆனல், நாயக் கர் காலப்பின்னணியிலே ஐரோ ப்பியர் வருகைக்கு முன்னே, 'ஸதக்கத்துல்லா ஹ்அப்பா' காலத்திற்கும் சில நூற்றண் டுகளுக்கு முன்
சமய அடிப்படைத்
இஸ்லாமிய
சமய வல்லுனர்கள் சமய நூல் களைத் தமிழ் வசனநடையில் எழுதிக் குவித்திருக்கின்ருர்கள் அவையாவும் சிறந்த தமிழ் வசன (PROSE) நடை நூற்க ளாகும். இவ்வுண்மை தமிழி லக்கிய வரலாற்றில் சேர்க்கப் பட்டிருந்தால், தமிழில் வசன
(PROSE) நடை இஸ்லாமியர்
களாலேயே ஆக்கப்பட்டதெ னும் வரலாற்றுண்மையால் தமிழ் கூறும் நல்லுலகில், இஸ் லாமியர்களது பெருமை இன் னும் உயர்ந்திருக்கும். ஆனல், அவ்வுண்மை சேர்க்கப்படாத தற்குக் காரணமுமுண்டு. இஸ் லாமியர்களால் ஆக்கப்பட்ட தமிழ் நூற்கள் தமிழெழுத்துக்களால் ஆக்கப் பட்டதல்ல. மாருக, அறபு (த்தமிழ்) எழுத்துக்களால் ஆன
வசனநடை
வையாகும். இந்நூற்கள் வரிவ
டிவில் அறபெழுத்தைக் கொண் டதெனினும், ஒலி வடிவில் தமிழாகும். இந்நூற்கள் தமி ழுலகில் நடமாடாததற்கு அதன் வரிவடிவு காரணமாயிற்று. அதையும்விட மஸஅதிகளில மைக்கப்பட்ட வாசிகசாலைக ளில் இவை தஞ்சமானபடியால் இஸ்லாமியர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் படிக்க வாய்ப் பற்றுப் போய்விட்டன. வர லாற்றில் சேர்க்கப்படாவிட் டாலும், தமிழ் வசனநடையை ஐரோப்பியருக்கு முன்னமே பிர யோகித்துவிட்டோமென தமிழ றிந்த இஸ்லாமியர்கள் இப் போதும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

Page 10
தென்னுட்டில் இஸ்லாமிய மக்கள் இஸ்லாத்தின்பால் ஊறித்திளைத்ததுபோல் தமிழி லும் மரபறிந்து கற்ற வல்லு னர்கள் அக்காலம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எனவே தான், மரபு தவருத முறையில் இவர்கள் தமிழ்க்கவிதையாத் தனர். அதனுள்ளே அறபு, உருதுச் சொற்கள் இழையோ டிய போதும் கவிமரபு காக்கப் பட்டே வந்ததெனலாம். பாமர மக்கள் கூடச் சமய சம்மந்த மான விஷயங்களைக் காவியமா கத் தமிழ் மொழியிற் கேட்க அவாவினர். இதனல், தமிழில் இஸ்லாமிய இலக்கியங்கள் வளர்ந்தோங்கின. இச்செல்வங் களைப் பொதுமக்கள் கூட ஏற் றிப் போற்றுமளவிற்குத் தமிழ றிந்தவர்களாகவும், தமிழ்ப்பற் றுடையவர்களாகவும் திகழ்ந்த னர். அக்காலப்புலவர்களின் கவிதைகளை மனனஞ் செய்து கூறுவதில் பெருமையுடையவ ராகினர். இப்புலவர்களது ஆக் கங்கள் யாவும் சமயவிசாரமா கவும், சமய சரித்திரமாகவும் பரிமளித்தன. அத்தகைய ஆக் கங்கள் தமிழ் மரபு தழுவிப் பிரபந்த இலக்கண வரம்புக்குள் எழுந்ததால் இன்னும் தமிழிலக் கியங்கள் அதிகரிப்பதற்கு இஸ் லாமியர்கள் காலாகினர்.
அது மட்டுமல்ல, தமிழ் மரபுக் கட்டுக் கோப்பை இன்னும்
விசாலமாக்கிப் புதுவகையான பிரபந்த வகைகளையும் சேர்த்து இஸ்லாமியர் மரபு விதியினை அகன்ற தாக்கினர்,
6.
புதிதாக இஸ்லாமியர்கள் தமிழன்னைக்கு அளித்த பிர பந்த வகைகள் அறபு, பார லீக மொழியிலிருந்து தமிழில் புகுத்தப்பட்டனவாகும். அவையாவன:-
) முணுஜாத்து. இது இர கசியம் பேசுதல், வழிப் பாட்டுப் பிரார்த்தனை, இறைவனை இரந்து பாடல் எனும் அர்த் தத்தைக் கொண்டதா கும். இது பிற்காலத்தில் இறைவனிடத் து ம் , இறைவனை அண்மிய புருடாத்துவப்படி கட ந்த மகான்களிடத்தும் மன்ருடி வேண்டுதல் செய்து பாடப்படும் எண் வரையறுக் கப்ப டாத செய்யுள் வகை யாக விளங்கின.
(2 கிஸ்ஸா. இது கதை சொல்லுதல் எனுமர்த் தத்தையுடையது. ஹா
ஸ்யமாகச் சமய அனுஷ் டானத் தத்துவங்களை, வரலாறுகளைப் பாக்க ளிற் புனைந்து பாடுமிந் தப்பிரபந்த வகை தமி ழுக்கு முஸ்லிம்களால் அளிக்கப்பட்டதாகும்.
மஸ்அலா. இது சமய சம்மந்தமான சிக்கலான கேள்விகளைக் கேட்டு விடை பகர்வதாக அமையும் செய்யுள் தொகுதி. மேற்கூறிய

இம்மூன்றுவகைப் பிர பந்தங்களும் அறபிலி ருந்து தமிழுக்கு அறிமு கம் செய்யப்பட்டவை களே. பாரளீக மொழி யிலிருந்து "நாமா?? (நாமே என்னும் வழக் குச் சொல் தேய்ந்து வந்தது.) என்னும் பிர பந்தத்தையும் இஸ்லா மியர் தமிழுக்கு அறிமு கமாக்கியுள்ளனர். இதன் கருத்து, கதை வரலாறு என்பதாகும். இவ்விதப் புதுமுறைப் பிரபந்தங் களைக் கொண்டு விதி யாக்கி அனேக இலக் கிய நூல்களை இஸ்லா மியர்கள் தமிழில் யாத் திருக்கின்றனர்.
இப்புகழ்மிகு தமிழிலக்கி யங்களையும், புலவர் பரம்ப ரையினரையும் தமிழிலக்கிய வரலாறு எழுதியவர்கள் தவற விட்டுத்தான் வந்திருக்கின்ருர் கள். குமாரசுவாமிப் புலவரியற் றிய 'தமிழ்ப்புலவர் சரிதத்தில்" தமிழ்நாட்டு இஸ்லாமியப் புல வர்களது தமிழிலக்கிய ஆக்கங் கள் பற்றிக் குறிப்பிடாது மறைக்கப்பட்டிருப்பதைக் காண் கிருேம். பூணி, கணேசையர் தமது 'ஈழத்துத் தமிழ்ப் புலவர் சரிதத்தில்' ஈழத்துவாழ் இஸ் லாமியப்புலவர் ஒருவரையே னும் குறிப்பிடவில்லை. ஆனல், ஏ. ஆர். எம். ஸ்லீம் எழுதிய "ஈழத்து முஸ்லிம் புலவர்கள்' என்னும் கிழக்குமாகாணத்தி
லுள்ள அக்கரைப்பற்று, அட் டாளைச்சேனையில் வாழ்ந்த நான்கு புலவர்களது வாழ்க் கையையடக்கிய நூலின் பதிப் புரையில் 'கணேசையர் பட்டி தொட்டியிலிருந்தெல்லாம் 102
புலவர்களைத் தேர்ந்தேடுத்து ஈழத்துப் புலவர் வரலாற்று நூலொன்றை எழுதினர். அதில் முஸ்லிம் புலவர் ஒருவரே இடம் பெற்றிருந்தார்’ என்று எழுதப்பட்டிருப்பது எந்த நூலை வாசித்தோ நாமறியோம்! பூீரீ கணேசையரின் நூலிலென்ருல் முஸ்லிம் புலவர் எவருடைய பெயரும் இடம் பெறவேயில்லை. சி. சுப்பிரமணியம் é5 L 0 357 * 'இலக்கிய வரலாற்றில்" ஒரு பக்கம் மட்டும் இஸ்லாமியப் புலவர்களுக்காக வேண்டாவெ றுப்புடன் கொடுக்கப்பட்ட வரலாறும் சில இடங்களில் மாறுபாடுடைய கருத்தையடக் கியே இருக்கின்றது. "தமிழி லக்கிய வரலாறு" தந்த வி. செல்வநாயகம் இஸ்லாமிய இலக்கிய கர்த்தாக்களின் ஆக்க ஆற்றலை வெட்டிக்குறுக்கி ஒன் றரைப்பக்கத்தில் கொடுத்திருக் கின்றர். மயிலைசீனி வெங்கடா சாமி, இராசமாணிக்கஞர், சு. வித்தியானந்தன் போன்ற தமி ழறிஞர்கள் மதவேறுபாடற்று இஸ்லாமியர்கள் u T 5 5 தமிழ்ச் செல்வங்களை அண்மைக் காலந் தொட்டுத்தான் தட்டிப் பார்த்திருக்கின்றனரெனலாம்.
அதற்கு முன் 'இஸ்லாமியர்க ளுக்கும் தமிழ் தெரியுமா?", என்ற ஒதுக்கு மனப்பான்மை

Page 11
யுடன்தான் தமிழறிஞர்கள் இருந்திருக்கின்றனரென்பது சு. வித்தியானந்தனது (இலக்கியத் தென்றல்) கூற்றிலிருந்து விளங் குகின்றது. தமிழிலக்கியம் படைத்துத் தமிழன்னைக்கு அழ
கூட்டிய குற்றத்திற்காக 'தமிழ்
த்தொண்டாற்றிய இஸ்லாமி யப் பெரியார்களைக் கண்டுபி டித்து அவர்களை அறிமுகப்ப டுத்த வேண்டிய பொறுப்பு இஸ்லா மியர் களுக்குத் தா னுண்டு : எங்களுக்கில்லை’ என்று ஒரு காலத்தில் 'கலை மகள்' ஆசிரியரும், தமிழறிஞ ருமான கி. வா. ஜெகந்நாதன் போன்றவர்கள் கூறியிருக்கின் ருர்களென்பதை நினைக்கும் போது வேதனையே! பொறுப்பு வாய்ந்த தமிழாராய்ச்சி அறிஞர் கள் இப்படிக் கூறியிருப்பது நகைப்பிற்கிடமானதாகும்.
இஸ்லாமியர்களில் ஆற்றல் மிகுந்தவர்கள் தமிழுக்கணி யான இலக்கியங்கள் செய்வ தில் தொண்டு புரிந்து கொண் டிருக்கச் செல்வம் படைத்தவர் கள் ஊக்கமளிக்கத் தொடங் கினர். தமிழ்மொழியில் சாகாத இலக்கியங்கள் யாத்த புலவர்
பெருமக்களை மதவேறுபாடு பார்க்காது வள்ளல் சீதக்காதி போன்ற தமிழ்ப்பற்றுடைய
இஸ்லாமியர்கள் பொன்னும், மணியும் வாரிவாரிக் கொடுத்து தமிழின் வளர்ச்சிக்கு அழியாத தொண்டு செய்தனர். தமிழுக் குப் புதுமை செய்த வல்லவர்
8
டிலும்,
களுக்கும் அவர்கள் ஊக்கமளித் தனர். தமிழுக்கே 'சதுரக ராதி" அளித்த "பெஸ்கி" என்னும் வீரமாமுனிவருக்கு உற்சாகமூட்டிச் செல்வம் வழங்கியவர் திருச்சியில் 18ம் நூற்ருண்டில் ஆட்சி புரிந்த இஸ்லாமிய மன்னர் **சிந்தா சாஹிபு' என்பவராகும். இவையெல்லாம் தமிழ் மொழி
'யிலும், தமிழை மொழிந்தவர்
களிலும் கொண் ட பற் றேயொழிய, வேறல்ல.
இஸ்லாமியர்களது இலக் கிய G3 Luft gil,
ஆக்கங்களை
இஸ்லாமியர்கள் தமிழ்த் தொண்டு செய்வதில் அதிக கவனஞ் செலுத்தவில்லை, அவர்களது இலட்சியமான மத சம்பிரதாயத் தத்துவார்த்தங் களையும், வரலாறுகளையும் தமி முறிந்த இஸ்லாமியர்களுக்குப் பரப்புவதற்காக வியப்புமிகு தமிழிலக்கியங்களைத் தென்னட் ஈழத்திலும் ஆக்கினர். அந்த எதிர்பாராத தொண்டு, தமிழ்த்தொண்டாக மாறிற்று. அதுமட்டுமல்ல, அவை தமிழன் னையைப் பொலிவுறச் செய்து விட்டன. எனவே, தமிழ் பெரு மையுறும் காரணத்திற்கு இஸ் லாமியர்களும் இலக்காகினர். அவர்களது உன்னத ஆக்கங் களையும், ஆக்கிய பெருமைமிகு பரம்பரையையும் விரிவாக
நோக்கும்
நோக்கத் தமிழறிஞர்கள் முன்
வர வேண்டும்,

நினைவுத் துளிகள் O O. O. O.
சி. செல்லத்துரை
* கயிறு திரிக்கத்தான் வேண்டும், - ஆணுல்
தும்பில்லாமல் அதனைத் திரிக்க நினைக்காதே."
கிவியோகி சுத்தானந்த பார தியார் முதன் முதல் யாழ்ப்பா ணத்திற்கு வந்திருந்த சமயம் எனக்குச் செய்த இந்த உபதே சம் இன்றும் என் மனதைவிட்
டகலாத ஒரு பொன் மொழி
யாக இடம் பெற்றிருக்கிறது. ஆனல் இன்றைய பத்திரிகை நிருபர்கள் யாருக்காவது இது ஒரு 'புன்மொழி'யாகப் பட லாம் அவ்வாறு கருதப்படுவ தைக் கண்டு வாசகர்கள் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்குத் தும்பில்லாமல் கயி று திரிக்குந் தொழில் நிருபர் கள் மத்தியில் விஷம் போலப் பரவிவருகிறது. பாவம், அவர் கள்தான் என்ன செய்வது செய் திப் பத்திரிகைகள் உலகில் இது ஒரு போட்டியுகம். போட்டிம னப்பான்மையும் அதிமேதாவித் தனமும் இந்த நிருபர்களைக்கூட தண்டவாளத்தை விட்டிறங்கிய றயில் போலத் தடம் புரளச் செய்து வருகின்றன. அகப்பட் டதை விழுங்கி அப்படியே வாந் திஎடுப்பதை அமிர்தம் என ரசி
களாகி விட்டார்கள் வாசகர் கள்.
சுத்தானந்த பாரதியாரின் உபதேசம் என்னையும் 905 2.L. தேசியார் ஆக்கி விட்டதாக்கும் என்று வாசகர்கள் முகம் சுழிப் பதற்கிடையில் இதோ திருப்பத் திற்கு வந்து விடுகிறேன்.
" என் நீண்ட நாள் நண்ப TITar o "Lodi)6)6);** ஆசிரியர் மல ருக்குக் கட்டுரை வேண்டு மென்
று விடாக் கண்டனுக வற்புறுத்
தினர். அவரது நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் எதையோ எழுதிக் கொடுத்தேன்." என்று இக்கால எழுத்தாளர் பாணி யில் சொல்லி நானும் ஒரு பிசி மனிதனுக நடிக்க விரும்பவில்லை. கடந்த இருபத்தொரு வருட காலத் தொழில் அனுபவத்தில் மனதிலே நிறைந்து கிடக்கும் நினைவுத் துளிகள் அப்படியே வற்றி வறண்டுபோய் விடாமல் சிலவற்றையாவது சொல்ல * மல்லிகை ' மூலம் சந்தர்ப் பம் கிடைத்ததே. இந்த மன நிறைவோடு இறந்த காலத்தை
க்கவேண்டிய அபாய்க்கியவா ன் இரை மீட்டுப் பார்த்துச் சில
9

Page 12
சம்பவங்களைக் குறிப்பிட விரும் புகின்றேன்.
அசாதாரணங்களைத் தேடி ஆலாய்ப் பறந்து கொண்டி ருப்பவர்கள் பத்திரிகை நிருபர் கள் என்று பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். பேய் வெள்ளத்தையும் பெரும் புயலையும் அரசியல் வாதிகளின் அகோர யுத்தங்களையும் ஆவலு டன் எதிர்பார்த்துப் பழகிப் போன இந்த நிருபர்களுக்கு அசடு வழியக்கூடிய அநுபவங் களும் குறுக்கிடாமல் இல்லை. ஏறக்குறைய ஒரு வெள்ளி விழாக் காலத்தைக் கொண்ட என் நிருபர் வாழ்க்கையில் இம் மாதிரியான பல சம்பவங்களை அனுபவித்துச் சகித்திருக்கின் றேன். தொழிலே தொடங்கி யது அப சகுனம்மிக்க ஒரு செய்தியோடுதான். அதாவது முதன் முதல் எழுதக் கிடைத் தது, வயோதிபர் ஒருவரின் கொலைச் சம்பவமேயாகும். பிற் காலத்தில் கொலையும், கொள் ளையும், கற்பழிப்பும் மிகுந்த செய்திகளைத் தேடி நான் அலை யப்போகிறேன் - இல்லை; அந் தச் செய்திகள்தான் என்னைத் தேடி முற்றுக்கையிடப்போகின் றன என்பதை அகால மரண மடைந்த அந்தக் கிழவர் எப் படியோ முன்கூட்டியேஉணர்ந்து எனக்காக உயிரைத் தொலைத்
தார். அவரது ஆத்மா சாந்தி யடைவதாகுக.
பூமாலையும் பொல்லடியும்
என்று சொல்கிருர்களே, நிரு
பர்களைப் பொறுத்தவரை இந்
தப் பூமாலையும் பொல்லடியும்
a
கிடைக்கா விட்டாலும் புகழ் மாலையும் சொல்லடியும் எதிர் பாராத சமயங்களில் எல்லாம் அவர்களுக்குக் கிடைப்பதுண்டு. அதிலும் சொல்லடிக்குக் குறைச் சலே இருக்காது. செய்யாத தவருென்றிற்குச் சொல்லடி வாங்கிய பெருமை எனக்குண்டு, சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஆனைப்பந்தியில் கண்டனக்
கூட்டமொன்று நடந்தது. கண்
டனம் எனக்கல்ல. அரசியல் கட்சி ஒன்றின் வாரப் பத்திரி கைக் கெதிராக அப்போது ** மாஜி " யாக விளங்கிய பத் திரிகை ஆசிரியர் ஒருவரின் தூண்டுதலால் இக் கூட்டம் நடைபெற்றது. நானும் ஒரு மூலையில் இருந்து பொறிப்பறக் க நிகழ்ந்த பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். திடீரெனப் பேச்சாளர் ஒருவ ரின் பார்வை என் பக்கம் திரும்பியது. எனது பெயரைப் பகிரங்கமாகச் சொன்னர். அடு க்குத் தொடரில் என்னை ஒரு மூச்சுத் திட்டித் தீர்த்தார். என்ன சொன்னர் தெரியுமா ? ** இவர் இந்தக் கூட்ட நிகழ்ச்சி எதையும் பத்திரிகையில் வெளி யிடமாட்டார். எங்களுக்கெதி ரானவர். ஆளை எனக்கு நல் லாய்த் தெரியும் ** என்று பொழிந்து தள்ளினர். பதட் டத்தின் மத்தியிலும் அவர் சொன்னதில்உண்மை இருந்தது. ஒரு பத்திரிகைக் கெதிரான கண்டன யுத்தத்தில் மற்ருெரு பத்திரிகை ஏன் அணுவசியமாக மாட்டிக்கொள்ளவேண்டும். இந் தப் பத்திரிகா தர்மத்தை அறி

யாமல் நடந்து கொண்டார். அவர் ஒரு தமிழாசிரியர்.
ஒரு பத்திரிகையை இன்னெரு ப த் தி ரி  ைக அணுவசியமாக நையாண்டி செய்வதும் தவறி கண்டு பிடித்துத் தலையாரிவேலை பார்ப்பதும், வலுச்சண்டைக் குப் போவதும் இப்போதெல் லாம் சகசமாகிவிட்டது. முக் கியமான செய்தி யொன்றைத் தவறவிட்டதற்காக அந்தச் செய்தியை முந்திக் கொண்டு வெளியிட்ட மற்ருெரு பத்திரி கைமீது ஆத்திரத்தைக் கொட் டித்தீர்த்த ஆசிரியர் ஒருவர் இப்போது என் மனத்திரையில் தென்படுகிருர், அந்தச் செய்தி யை எழுதியவன் நான். அது வெளியான மறுநாள் அணுவசி யமான குறைபாடுகளைக் கற் பித்து அது தவருண புதினம் என்ற கருத்துப்பட அவர் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்திருந்தார். இந்த அனுப வம், அனுப்வசாலியான பத்தி ரிகாசிரியர் ஒருவரிடம் இருந்து எனக்குக் கிடைத்ததை இப் போது நினைத்தாலும் சபல புத்தி உண்மையை ஆராய்ந்து அறியவிடாது கண்களை மூடி மறைத்து விடுகிறது என்று எண்ணத் தோன்றுகின்றது.
இன்றைய இலக்கிய உலகில் '' பண்டிதத்தனம்’’ என்று ஒரு சாரார் சொல்லிக் கொள்ளுகி
முர்களே, இந்தப் பண்டிதத் தனம் என்னேடு ' கவி 'த் தனம் செய்த சம்பவமொன்
றையும் சொல்லி வைக்க விரும்
புகின்றேன். பரமேஸ்வராக்கல் லூரி இலட்சிய ஜயந்தியில் சொற்பொழிவு நிகழ்த்த வந் திருந்த பேராசிரியர் டி.எம். பி. மகாதேவன், அ. ச. ஞானசம் பந்தன் ஆகிய இருவரையும் சந்திப்பதற்காக கலாநிதி சு. நடேசபிள்ளையின் இல்லம் சென் றிருந்தேன். பேட்டி நடந்து கொண்டிருந்தது. அவர்களது பழைய மாணவர் என்ற உரி மையுடன் இருவர் இடையில் புகுந்து கொண்டார்கள். புகுந்
ததுடன் மட்டும் நிற்கக்கூடா தா ? கேள்விகளுக்குத் தாங்க ளே முந்திக்கொண்டு பதில்
சொல்லும் மேதாவிகளாகவும் மாறினர்கள். சில சந்தர்ப்பங் களில் தங்கள் அதி மேதாவித் தனத்தைக் காட்டி என்னைக் கேலியும் செய்தனர். மிக இக் கட்டான நிலை. அவர்களோடு மல்லுக் கட்டுவதா? அல்லது மெளனத்தோடு வந்த காரியத் தைச் சாதிப்பதா? கடைசி வழியைத் தான் கையாண்டேன். எந்தச் செய்தியையும் மற் றைய பத்திரிகைகளுக்கு முந்தி அனுப்பிவிடவேண்டும் என்பது நிருபர்களுக்கு இருக்கவேண்டிய தொழில் முறைத் தார்மீகப் பண்பு. இந்த அவசரம் என்னை இதுவரை ஒரே ஒரு சந்தர்ப் பத்தில் மட்டும் அவமானத்தில் ஆழ்த்தப் பார்த்தது. எப்படி யோ சமாளித்து விட்டேன். இலக்கிய விழா ஒன்றை மேயர் ஒருவர் ஆரம்பித்து வைக்க விருந்தார். முதல் நாளே அவ ரிடம் பிரசங்கப் பிரதியைப் பெற்றுப்பத்திரிகைக்கு அனுப்பி
2.

Page 13
விட்டேன். மறுநாள் விழா வும் தொடங்கிவிட்டது. மேய ரை அந்தப் "பக்கமே காண வில்லை. வீடு நோக்கி ஓடினேன். பக்கத்து வீட்டில் அவர் தூக்கத் தில் - அல்ல, மயக்கத்தில் கிடப் பதைக்கண்டு திடுக்கிட்டேன். ஆசாமியை மோட்டார் மூலம் விழாவிற்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கலாம். அவர் மைக்
கின் முன்னல் எழுந்து நின்று
ஏதாவது நாலு வார்த்தை பேச வேண்டுமல்லவா ? பத்தி ரிகை அச்சுக்குப் போகவேண் டிய கடைசி நேரம். இடைத் தூரமோ 254 மைல். என்ன செய்வது, அதே இடத்தில் அவருக்கு நிரந்தர ஸ்துதி பாடி விட்டுத் தொலைபேசி என்ற தேவதையின் கிருபா கடாட்சத் தை நாடினேன். மறுநாட்பத் திரிகையில் மேயரது ஆசிச்செய் தியாக அது வெளிவந்துமானத் தைக் காப்பாற்றியது.
துணிச்சலான காரியம் ஒன் றையும் சொல்லி வைக் கட்டு மா? தமிழரசுக் கட்சியின் கச் சேரி சத்தியாக்கிரகத்தின்போது ஒருநாள் தொண்டர்களைக் கடற் படையினர் முற்றுகையிட்டனர். உள்ளே போய்ப் பார்த்தால்
என்ன என்று என் மனம் துடித்
தது. இத்துடிப்பிற்கு ஆங்கிலத் தினசரி யொன்றின் நிருபரான என் நண்பரும் உற்சாகமூட்டி ஞர். இருவரும் காலஞ்சென்ற திரு. வன்னியசிங்கத்தின் வீட்டு மதில் ஏறிக் குதித்துக் காவல்
எல்லையையும் தாண்டி உள்ளே
புகுந்துவிட்டோம். எங்கிருந்தோ ஒரு பயங்கர மிரட்டல் குரல்
8ጻ
கேட்டது. திரும்பிப் பார்த்த போது ஈட்டியுடன் கூடிய துட் பாக்கியைநீட்டியவண்ணம் கடற் படை வீரர் ஒருவர் கிட்ட நெருங்கிக் கொண்டிருந்தார்.
என் அசட்டுத் துணிச்சல் வாயில்
வைத்த ஐஸ் பழ ம் போலக்
கரைந்தது. கையிற் பிடித்தி ழுத்து வந்து எங்களை எல்லைக்கு வெளியே விட்டபின்புதான்
போன உயிர் திரும்பி வந்தது.
யாழ்ப்பாண நகர மண்டபத் தில் காந்திய் தத்துவம் பற்றிட் பேசிய கல்கியிடம் கேள்விச் கணை தொடுத்து அவர் பேச் சிற்குக் குறுக்கே வண்டில் விட் டது மூலம் வாங்கிக் கட்டியதை இப்போது நினைத்தாலும் வெட் கம் பிடுங்கித் தின்கிறது. அக காலத்தில் சென்னையில் தலை தூக்கி நின்ற குலக் கல்விட பிரச்சினைபற்றி முன் கூட்டியே சில கேள்விகளைக் கொடுத்து அதன் மூலம் சூடான செய்தி யைப் பெற்றுக்கொள்ள முயன் றேன். நகைச் சுவையான நல்ல பதிலும் கிடைத்தது. அதே நேரம் கிண்டலோடு கூடிய கண் டனமும் வெளி வந்தது. குட் டுப் பட்டாலும் மோதிரக் கை யினுல் அல்லவா அந்தக் குட்டு விழுந்தது. அதே கல்கி தமிழ் விழாவின்போது முதல் நாள் நடந்த கொடியேற்ற வைபவம் , பற்றிய செய்தியைத் தொலை பேசி மூலம் அனுப்புவதற்குச் செய்த ஒத்தாசையையும், மறு நாட் செய்தி பிரமாதமாக வெளி வந்திருக்கிறதே என்று தட்டிக் கொடுத்துப் பாராட்டி யதையும் அப்போது சென்னை

யில் பிரதம நீதியரசராக இருந் இப்படியாக எத்தனையோ த திரு. இராஜமன்னரிடம் நினைவுகள் மனதில் துளிர்விடு என்னை அழைத்துச் சென்று கின்றன. சொல்லிக்கொண்டே அறிமுகம் செய்து பேட்டிக்கு போகலாம். இத்துடன் போ டிற்பாடு செய்ததையும் எண்ணி தும் என்றே நம்புகிறேன். அவர் பெருந்தன்மைக்கு வியந் மீண்டும் சந்திக்காமலா போ தேன். கப் போகிருேம் ?
šiš
துறவின் சூட்சுமம்
ஹலரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் அரசு துறந்த பிறகும், விற்சில சமயங்களில் பணியாட்கள் புடைசூழ ஆடம்பரமாகH பிரயாணம் செய்வார். அவர் தங்கும் கூடாரங்களைத் தங்கமுளே களால் அடித்திருப்பார்கள். 8
ஒரு தடவை ஸஅபியொருவர் அந்தக் கூடாரங்களின் வழியே போக நேர்ந்தது. அரசு துறந்த ஆத்மஞானி ஒருவர் இப்ப? ஆடம்பரமாயிருப்பதைக் கண்ட ஸஅபி பெரிதும் ஆச்சரியப்பட் டார். பிச்சைப் பாத்திரத்துடன் ஆத்மஞானியை அணுகி, ‘நீங் கள் ஞானி என்று கூறிக்கொண்டு இவ்வளவு உல்லாசப் பொருள் களை வைத்துக் கொண்டிருப்பது விநோதமில்லையா?’ என்று கேட்
("TTT" .
ஞானி உடனே பதில் தரவில்லை. ஸOபியை இருத்தி உபசா ரம் செய்து அவரைத் தம்முடன் மக்காவுக்கு வரும்படி அழைத் தார். அவரும் இசைந்தார். அந்த உயர்ந்த பொருள்களே4ம் பணியாட்களையும் அப்படியே விட்டுவிட்டு, மக்காவுக்கு ஞானி கிளம்பினர்.
சிறிது தூரம் சென்றதும் தம் மரக்கோப்பையைக் கூடாரத் தில் மறந்து வைத்துவிட்டு வந்தது புதிய மனிதருக்கு நினைவு வந்தது. உடனே திரும்பிப்போய் அதை எடுத்துவர, ஞானியிடம் அனுமதி கேட்டார்.
"நம் இருவருக்கும் இடையேயுள்ள வேற்றுமை இதுதான்! நான் என் மதிப்புயர்ந்த பொருள்களையெல்லாம் துறந்து உங்க ளுடன் வந்தும், அவற்றுக்காகக் கவலைப்படவில்லை. உங்களுடைய அற்பக் கோப்பை ஒன்றை விட்டுவிட்டு வர உங்களால் முடிய வில்லை. உங்கள் ஆச்சரியத்துக்குக் காரணமான அந்தத் தங்க முளைகளை மண்ணிலே தான் ஊன்றினேனேயொழிய என் மனத் திலே அவற்றை ஊன்றவில்லை’ என்று அமைதியாகப் பதில் அளித்தார் ஞானி,
* மணிவிளக்கு”
23

Page 14
எனது
„Ђ IT I , J.
அநுபவங்கள்
ஏ. ரி. பொன்னுத்துரை பி. ஏ.
நெயாண்டி நாயகர்கள், நளினப் பேர்வழிகள் நாடக உலகத்தைத் துரற்றலாம்; துச்ச மென மதிக்கலாம். ஆனல் இத்துறையில் ஈடுபட்டு இன்பம் நுகரும் கலைஞனுக்குத் தான் தெரியும் இது அளிக்கும் பெரும் பேரின் பத்தின் ஆழத்தை. நுண் கலைகளின் சங்கமமாய் உணர்ச்சிச் சிதறல்களின் கூட்டாய் அமைந்த கலாசமுத்திரமல்லவா நாடகம்.
இச் சமுத்திரத்தில் தோய்ந்து
தோய்ந்து சென்று இருபது ஆண் டுகளாய் குதூகலித்தவன்-அநுப வம் பெற்றவன் என்ற முறையில் நான் பெற்ற அநுபவங்களில் சிலவற்றை எழுத்துருவில் கொ ணர்தல் இத்துறையை நாடும் இளம் கலைஞர்களுக்கு உதவ லாம் என்று கருதுகிறேன்.
நடிகனென்ற முறையில் மேடைநடிப்புக்கலையின் நுண் ணிய அம்சங்களை நன்கு உணர்ந் தவரும், இலக்கியச்சுவை ததும்ப நாடகங்களைப் படைக்கும் வல் லமை பெற்ற வ ரு மா கி ய “ GILDfrG” in för நாடகம் எனக்களித்த அநுப வங்கள் அனந்தம். லோபி என்ற
24.
*லோபி" என்ற
முக்கிய பாத்திரத்தை மைய ΕρΠ 55 கொண்டு மற்றைய பாத்திரங்கள் சுற்றிச்சுழல்கின் றன இந்நாடகத்தில். இப்பாத் திரத்தைத் தாங்கி நடித்த எனக் கு, அதன் குணஇயல்புகள் கெடா தவகையில் நடிக்க, கைகொ டுத்து உதவியது எனது மனன சக்தியே. எனது பாத்திரத்து டன் தொடர்புடைய மற்றைய பாத்திரங்களின் உரையாடல் உட்பட, முழுநூலையுமே நன்கு மனனம் செய்திருந்தேன். சிரிக் கும் சொற்கள் எவை, கண்ணிர் சொரியும் சொற்கள் எவை என்பவற்றை எல்லாம் ஆய்ந்து ஆய்ந்து படித்தேன். மேடை யேறிய போது எனது மனன சக்தி மாபெரும் துணிபை-ஒரு வித உந்துதலை ஊட்டியது. அந்த உந்துதல் வெற்றிப் படியை அமைத்தது. மனனம் செய்ய முடியாத காரணத்துக்காக நாடகங்கள் கொச்சைத்தமி ழிலேயே இருக்கவேண்டும் என் று வாதிடுபவர்களும் எம்மி டையே உளர். கற்பனை எழிலும் கவிதை அழகும், உணர்ச்சிப் புயலும் உள்ள உரையாடல்கள் நாடகத்துக்குக் கலாரூபம் கொ

டுக்கின்றன. இத்தகைய உரை பாடல்களை மனனம் செய்ய முடியாத கலைஞன் முதற்படியி லேயே கோணுகிருன், மனனம் செய்யும் பயிற்சி நடிகனுக்கு இருக்க வேண்டிய முக்கிய அம் சம் என்பதை இந்த நாடக மூலம் உணர்ந்தேன்.
எனது வாழ்க்கையில் கிழ மைக்கு ஐந்து தடவையாக ஆறுமாதங்கள் தொடர்ந்து ஒத்திகைகளில் பங்கு கொண்டு நடித்த நாடகமும் இதுவேதான். நாடகத்தில் அமைந்த அடிநா
தமான பொருளைப் புரிந்து சம்பவத் தொடர்களை முறை யாக அறிந்து, உரையாடல்
களில் தேக்கப்பட்டுள்ள உணர்ச் கிகளை உச்சரிப்பு மூலம் தெறிக்
கச் செய்து, அளவாக, அழ காக நடிக்க, நடிப்பிலே பூர ணத்துவம் பெற, நடிகனுக்கு
"அலுப்புத்தட்டும் வரை ஒத்
திகை அவசியம் அவசியம் என்ற அனுபவம் தந்ததும் இந்த நாடகமே. ஒத்திகைக்கு
வராதும் ஒழுங்காகப் பயிலாதும் "அன்றைக்கு எல்லாம் வரும்’ என்று அலட்சியமாக மேடை யேற முனையும் நடிகர்களுக்கு இந்த அநுபவத்தை ஞாபகமூட் டுகிறேன்.
மற்றைய நடிகர்கள் பேசி
நடிக்கும் போது GLIF (TLDGv மேடையில் நிற்க வேண்டிய கட்டங்களில் எதிர் நடிப்பை
(Reaction) முகமூலம் காட்ட நடிகன் கற்க வேண்டும் என்ற
இந்த
அநுபவமும் நாடகம் தான் தந்தது.
லோபியாக இந் நாடகத் தில் தோன்றுபவன் குடுகுடு கிழவன் வேஷத்தில் தான் மேடையில் தோன்ற வேண்டும் இளமைப்பராயத்தில் இருந்த
நான் எனது நண்பர்கள் முன், கல்லூரித் தோழர்கள் முன், மற்றும் ஆசிரியர்கள், அறிந்த வர்கள் முன் கிழட்டு வேஷத் தில் தோன்ற வெட்கமுற்றேன் "மேக்கப்" முடிந்ததும் கண்ணு டியில் பார்த்துவிட்டு அழக்கூட ஆரம்பித்து விட்டேன். அவ்வ
ளவு அவலட்சணம். ஆனல் அந்தத் தோற்றம்தான் சரி யான லோபியாக என்னைக்
காட்டிய தென்றனர் சானவும் கலையரசும். பாத்திரத்துக்குத் தக்க ஒப்பனை - அது அவலட்ச ணமே ஆயினும்-அது அவசியம் என்ற அநுபவம் ஆணிவேரிட் டதும் இந்த நாடகமூலமேயே.
நாடகம் பற்றி ய பல பிரச்சனைகள், பு தி ய பு தி ய அநுபவங்களை சென்னைக் கிறீஸ் தவக் கல்லூரியில் தந்தன. “ I ዘg)” எ ன் ற நாடகத்தை தமிழ்ப் பேரவை மேடையிட்ட போது, யாழ்பாணத்துப் பேச்சு முறை தெட்டத் தெளிவாகப் புரி வதில்லை என்ற காரணத்துக் காக ஐந்து நிமிடங்கள் தலை காட்டும் வேலைக்காரன் பாத் திரம் தந்தார்கள். முக்கிய பாத்திரம் பெற முனைந்து தோல்விகண்ட நான் அந்த
25

Page 15
ஐந்து நிமிடங்களில் உச்சரித்த
சொற்களால், அங்க அசை வால், ஒரு பழைய பாடல் வரியால் பிரதமவிருந்தினரே
முதல்தர நடிகரென என்னைப் பாராட்டுமளவுக்குச் செய்து வி ட்டேன். அந்த ஐந்து நிமிட நடிப்புக்கும் என் தனி அறை யில் செய்த ஒத்திகை ஐம்பது தடவைக்கு மேலாகும். சிறு பாத்திரமானலும் முறையாக நடித்தால் முக்கிய பாத்திரங்க ளையும் விஞ்சிவிடலாம் என்ற அநுபவம் இச்சந்தர்பத்தில் ஏற்பட்டது. நாடகம் என்றதும் முக்கிய பாத்திரத்துக்கு ஆசைப் படும் இளைஞர்களுக்கு இந்த அ நுபவத்தைக் கூறிவைக்கிறேன்.
தமிழர்மட்டுமன்றி, மலை யாளம், தெலுங்கு குஜரத்தி, கன்னடம் போன்ற பல பாஷை களும் பேசும் பட்டப்படிப்பு மாணவர்கள் சம்மேளனத்தின் முன் "தொழிலாளி", "குவேனி", *ராகி மை டியர்" என்ற சிறு நாடகங்களைத் தயாரித்தளித்த போது என்முன் பல பிரச்சனை கள் தலைநீட்டின. பல் வேறு மொழி பேசுபவர்களைத் திருப் திப்படுத்துவது எப்படி’ எனச் சிந்தித்து இறுதியில் ஒரு உத் தியைக் கையாண்டு வெற்றியும் கண்டேன். உரையாடலுடன் முக்கியமாக கிராமிய ஆடலை யும் பாடலையும் கூடுதலாகப் புகுத்தி ரசிகர்களை ஈர்த்துக்
கொண்டேன். சரச்சந்தருடைய
(நரிபேணு) என்ற சிங்கள நாட கம் மட்டக்களப்பில் மாபெ
26
ரும் வெற்றி யை த் தமிழ் ரசிகர்கள் முன் ஈட்டியதை நான் கண்டேன். அந்த நாட கத்திலும் ஆடல் பாடல் என் பன முக்கிய இடம் பெற்றிருந் தன. பல பாஷைபேசும் மக்களை
ஈர்க்க ஆடலும் பாடலும் உரையாடலுடன் இடம்பெற வேண்டுமென்ற அநுபவத்தை
தயாரிப்பாளருக்குச் சமர்ப்பிக்கி
றேன்.
நானே நாடகங்களை எழு தித் தயாரித்து நடித்த நாட கங்களுள் வெற்றியீட்டிய நாட கங்களும் உள. தோல்வியில் முடிந்தவையும் உள. இவைகள் தந்த அநுபவங்களும் பற்பல. "செங்கோல் சரிந்தது" என்ற நாடகத்தை இரு இடங்களில் மேடையிட்டு ஓரிடத்தில் வெற் றியையும் மறு இடத்தில் படு தோல்வியையும் கண்டேன். *ஏ. ரி. பொ. வின் நாடகம் குப்புற வீழ்ந்தது' என்ற விமர் சனமும் வந்தது. தோல்வி ஏற் பட்டதற்குக் காரணத்தை அல சினேன். உண்மை விளங்கியது. இரண்டாவது முறை மேடை யிடும் போது ஒப்பனையை ஒரு வரிடமும் செற்றிங் அமைப் பை வேறு குழுவிடமும் ஒப்ப டைத்தேன். ஒப்பனை செய்தவர் நடிகர்களுக்குச் சிவப்பு நிற அணிகளை, உடைகளை உடுத்தி அலங்கரித்தார். காட்சி அமைத் தவரோ கடும் சிவப் பி ல்
*செற்றை அமைத்துவிட்டார்.
சோடனையில் உள்ள நடிகர்களை விட
காட்சிச் தூண்கள்

"முழிப்பாகத் தெரித்தன என்று விகர்களில் பலர் கூறினர். பக்கவாத்தியக்காரர் பாடகனை விழுங்கினல் எப்படிச் சங்கீதக் i,j Gay if அமையுமோ அது போன்ற நிலைதான் இதுவும். எனவே என்னென்ன நிறத்தில் "செற்றிங்", உடைகள் மற்றும் பொருட்கள் அமையவேண்டும் என்பன போன்ற மிக நுணுக் கமான விஷயங்களில் அலட்சி யமாக இருப்பின் அவகேட்டைப் பெறநேரும் என்ற அநுபவம் என் நெஞ்சைவிட்டகலா அது பவம்.
ருேயல் கல்லூரி, பருத்தித் துறை மெதடிஸ்ற் மகளிர் கல் லூரி உட்படப் பதினைந்து அரங் குகளில் வெற்றியீட்டிய எனது "அண்டல் ஆறுமுகம்" என்ற நகைச்சுவை நாடகம் நாட்டுப் புற மேடையில் படுதோல்வி கண்டது. மதிநுட்பமாக எழுதப் பட்ட நகைச்சுவைகள், 'கொல்" லெனச் சிரிக்கவைக்கும் நகைச் சுவைகள் ஒன்றுமே எடுபட வில்லை. நாட்டுக்கூத்தை ரசிக் கும் பழக்கமுள்ள் அவர்கள் முன் இந்த ஒரு செற்றில் அமைந்த நாடகம் வெற்றியீட் டவில்லை. எப்படிப்பட்ட ரசிகர் கள் முன் எப்படிப்பட்ட நாட கத்தை மேடையிடவேண்டும் என்ற அறிவும் இயக்குநனுக்கு அவசியம்தான் என்ற அநுப வத்தை அன்றைய தினம் பெற் றேன்.
கலையரசின் 75வது பிறந்த விழா கோலாகலமாக கலைஞர் பெருமக்கள் முன் மானிப்பாய்
இந்துக்கல்லூரியில் கொண்ட டப்பட்டது. அன்றைய விழா வின் ஒரு நிகழ்ச்சியாக எனது நிறைகுடம்’ என்ற நாடகம் இடம்பெற்றது. முன்னர் என் னுடன் நடித்த முக்கிய நடிகர் கள் பங்குபற்ற முடியாத சூழ் நிலையில், இளம் கலைஞர்கள் சிலரை, தற்காலிகமாகத் தயா ரித்து மேடையில் ஏறினேன். நர்த்தன கலைவல்லுநர், சங் கீத விற்பன்னர், நடிகமேதை கள் முன் இந்த இளம் நடிகர் கள் என்ன செய்து விடுகிருர் களோ என்று பயந்தேன். முடிவில் பலர் பாராட்டினர். 'அடுத்து என்ன நிகழும் என்ற அவாவுணர்வை ரசிகர்களிடம் தூண்டத்தக்க நல்ல 'ரெம்போ' உள்ள, திருப்பங்கள் நிறைந்த கட்டுக்கோப்பான கதைய மைந்த நல்ல நாடகம் மாஸ் டர், என்றது ஒரு குரல். அது வேறுயாருமல்ல, நர்த்தனக்கலை விற்பன்னன் கலைச்செல்வன் சுப்பையா அவர்கள் தான். மாத்தளை விஜயாக்கல்லூரியில் அதன் சிங்கள அதிபரும், யாழ்ப் பாணம் வந்த ஜேமன் ஹைகொ மிஷனரும்கூட இந்நாடக்க் கதை அமைப்பைப் புகழ்ந்தனர். தென்னகத்தில் இன்று கோபால கிருஷ்ணன், கே. பாலச்சந்தர் போன்ருேர் கதையம்சச் சிறப் பினல் மட்டும் நாடகக்கலையை எவ்வளவோ உயர்த்திவிட்ட னர். நல்ல கட்டுக் கோப்பும். நடிப்புக்கு ஈடுகொடுக்கும் சம் பவங்களும், திருப்பங்களும் கொண்ட கதை நாடகத்தில் அமையின் அது மட்டுமே நாற்
7

Page 16
பது ஐம்பது புள்ளிகளைப் பெற் றுத்தந்து விடும் என்பது "பண்பின் சிகரம்”, “பாசக்குரல்" போன்ற எனது நாடகங்களில் நான் கண்ட உண்மை. தயாரிப் பாளருக்கு இந்த அநுபவம் பயன்தரும் என்பது என் எண் ணம்.
கட்டுக்கு அடங்காத நடி கர்களை வைத்துக் கொண்டு நல்ல நாடகங்களைத் தயாரிக்க முடியாதென்பதும் என் அநுபவ உண்மை. ஒத்திகைகளில் காட் டாதவைகளை அன்றி பேசாத வைகளை, ரசிகர்களின் கைதட் டுதலைக் கண்டதும், மேடையிடும் தினத்தில் காட்டும் நடிகர்கள் இத்துறையில்லிருந்தும் விரட் டப்படவேண்டியவர்கள் என்ற அசையாத உணர்வை என் கலைவாழ்வு தந்திருக்கிறது. ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்கு வதற்குச் செல்லும் கட்டத்தில் வேட்டியுடன் சென்றவன் ஆஸ் பத்திரியால் திரும்பும் போது காற்சட்டை தொப்பி அணிந்து வருவதாய் இருந்தால் யார் தான் சிரிக்கமாட்டார்கள். ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்கச் செல்வதே அன்றி உடைகளை மாற்றுபவர்களும் ε) όόότι τ’ சினிமாவில் நடிகர்கள் அடிக்கடி உடைகளை மாற்றுகிருர்களே, ஆகவே அடிக்கடி நாடகத்தி லும் உடைகளை மாற்றலாம் என எத்தனித்த ஒருவரின் செய்கை தான் இது. இயக்கு நணுகிய நான் காட்டிக்கொ டாத ஒன்றை, எனக்கே தெரி யாமல் நடிகன் செய்ததால் ஏற்பட்ட வினைதான் இது.
28
இப்படிப்பட்ட பழக்கங்களை நாடகஉலகில் வளரவிடாது தடுப்பது இயக்குநனன் கடன் எனற அநுபவம் எனக்கு நற் பலனைத் தருகிறது.
கலைக் கழகம் நடாத்திய மேடை நாடகப் போட்டியில் 1964-ல் ‘ ஆராமுது அசடா " என்ற நாடகம் முதலிடம் பெற் றது. அதில் ' பாஸ்கர் ’ என்ற ஒரு குணசித்திர பாத்திரத்தைத் தாங்கித் திறம்பட நடித்த நான் ஒரே ஒரு தடவை மட்டும் எனது " கோற்றை மாற்றினே னே தவிர உடுப்பு மாற்றத்தில் நான் கவனம் செலுத்தவில்லை. இந்த நாடகத்தை ஒட்டி நடந்த பாராட்டு வைபவத்தில் (த்ே நீர் விருந்து) யூனியன் கல் லூரி ஆசிரியரும் நாடக நுணுக் கங்களைத் துறைபோகத் தெரிந்த வருமாகிய கே. சோமசுந்த ரம் அவர்கள் பேசும்போது மனன சக்தியை, உச்சரிப்பு சிறப்பை, நடிப்புத்திறமையை உடையவன் அடிக்கடி உடை யை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று பேசியபோது எனது கொள்கையை ஆதரிக்க இவராவது இருக்கிருரே என மகிழ்ந்தேன். இந்த அநுபவம் ஸ்கொத்திலாந்து நாடகமேதை களின் தொடர்பால் ஏற்பட்ட அநுபவம்.
அநுபவங்களை அடுக்கிக்கொண் டே”போகலாம் . * சுய விளம் பரம் செய்ய முற்படுகிருர்
ஆசாமி என்ற குரலும் ஒலிக்கி றது: இந்நிலையில் . .

எனதுபேட்டி அனுபவம்
'''L'II yrsr'
Iராவது ஒரு எக்ஸ்ரா நடிகை கூட தமிழ் நாட்டிலி ருந்து இலங்கைக்கு வந்து விட் டால், அவரைப் பேட்டி கண்டு, பலகோணங்களில் பிடித்த அவ ரின் படங்களையும், அந்தப்பேட் டியையும் முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்துக்களில் பிர சுரிக்குமளவுக்கு நம்நாட்டு தின சரிப் பத்திரிகைகளின் முன் னேற்றம் இருக்கின்றது. பாவம், அந்த " எக்ஸ்ரா நடி கையை அவர் வீட்டுக்குப் பக் கத்து வீட்டில் குடியிருப்பவருக் குக் கூடத் தெரியாமலிருக்கும். அந்தம்மா காய்கறி விற்பவ ராக இருந்திருப்பார். ஏதாவது ஒரு படத்தில் ' குரூப் டான் ஸ"க்கு வந்து போயிருக்கலாம். ஆனல் நம்ம பத்திரிகைக்கா ரரோ, அந்த அம்மாவைப்பற்றி, * பிரபல நடிகை மீன டைரக்ட் செய்யப் போகிருர் " என்று கொட்டை எழுத்தில் போடுகி (U?tř35 Git . .
- பேட்டிகளுக்கு ளவு தூரம் ' மவுசு ஏற்பட்டு விட்டது, நம் நாட்டில் இத ஞல் நமது மக்களின் ரசனை யைப்பற்றிக் கேவலமாகக் குறிப் பிடுகிறேனென்றர்த்தம் வேண் டாம். கைகள் நம் நாட்டவர்களின் ரசனையை இரவலாக்கி, மூளையை
இவ்வ
நமது ஒரு சில பத்திரி
* மெட்ராசு ? க்கு அடைவு வைக்குமளவுக்கு ஆக்கி விட்
டன !
என்று பத்திரிகைத் தொழிஜல ஏற்றுக் கொண்டேனே, அன்றே இந்த "பேட்டி யும் என்னு டன் ஒட்டிக்கொண்டுவிட்டது. தமிழ் நாட்டிலிருந்து வரும் * பெரியார்களையும், சினிமா pilg. கர்களையும் ஆரம்பத்தில் அவ் வப்போது பேட்டி கண்டேன். முதல் பேட்டிகளையே சுவை யாக எழுதியதால், ஆசிரியர் என்னை ரொம்பவும் பாராட்டி தட்டிக் கொடுத்தார். அந்தப் பாராட்டு எனக்கு மேலும் உற் சாகத்தைக் கொடுக்கவே அரசியல் வாதிகள், அறிஞர் கள், எழுத்தாளர்கள் . இப்ப டியே எனது " பேட்டி ப் பட லம் தொடர்ந்தது. நான்பணி யாற்றும் பத்திரிகையின் வாரப் பதிப்பில் கலை சம்பந்தமான பகுதிக்கு என்னைப் பொறுப்பாள ராக்கவே, மாதத்தில் ஒன்று இரண்டாக இருந்த பேட்டி கள், வாரத்தில் ஒன்று இரண் டாகி, அடிக்கடி காண வேண் டிய நிலை ஏற்பட்டது. இவை களால் நான் பெற்றவை . . தெரிந்து கொண்டவை . .
* போலி களின் சுயரூபம், அரசியல் வாதிகளின் ஏமாற்று
&9-

Page 17
புராணம், வேடிக்கையான சம் பவங்கள், தமிழ்நாட்டு இறக் குமதி பெரியார்களின் ஈழத்துப் பற்று, நடிகைகளின் வண்ட வாளங் கள் . . இன்னும் எத்தனை . ஆனலும் இவர்கள் மத்தியில் ஒரு சில உண்மையானவர்களை யும், உண்மைக் கலைஞர்களையும், சந்திக்காமலில்லை. எனினும், நூற்றுக்குத் தொண்ணுறு வீத மும் " போலி !
நான் எழுதிய ஒவ்வொரு பேட்டியிலுமே ஒவ்வொரு * திரைமறைவுக் கதை நிச்சய மாக இருக்கும் அநேகமாக ஒவ்வொரு பேட்டியுமே வொரு சுவையான கதை .
தமிழ் நாட்டு சினிமா நடிகை ஒருவர் ஈழத்துக்கு வந்திருந் தார். விமான நிலையத்திலேயே அவர் வந்திறங்கியதும், அவரை ஒரு பேட்டி காண்பதற் காக என்னை அனுப்பியிருந்தார் கள். தற்போதைய தமிழ் நாட்டு போக்குவரத்து மந்திரி கலைஞர் மு. கருணுநிதி தலை மையில் ஒருவரை சீர்திருத்தத் திருமணம் செய்து, பின்னர் அந்த மனுஷனுக்குக் கல்தா " கொடுத்து விட்டு இன்னெரு சினிமா டைரக்டருடன் வாழ்வு நடாத்தும் ஒரு புரட்சி நடி கைதான் அவர்.
விமா ன நிலையத்திலுள்ள ஓய்வு அறையில் அவரிடம் முத லில் சம்பிரதாயத்துக்கு ஒரு சில கேள்விகளைக் கேட்டுவிட்டு,
* தாங்களும், பர . . ଜT ନର୍ବit ୋt '
30
தமிழ் நாட்டு நடிகர்,
ஒவ
ரிடம்
தகராறில் பிரிந்தீர்கள் . ? ' என்றதும்தான் தாமதம் . . நடிகையின் முகம் வீங்கி சிவந்து கறுத்து விட்டது. எதிர்பா ராத விதமாக * சடக் "கென்று * நான்சென்ஸ் " என்று கூறிய படியே எழுந்து சென்று விட் டார். அங்கு நின்ற மற்றப் பத்திரிகைக் காரர்களுக்கெல் லாம் என்மீது கோபம் வந்து விட்டது. திட்டு திட்டென்று
திட்டினர்கள். அந்த நடிகை யை இங்கு கூப்பிட்டவர்களுக் கும் என்மீது கோபம்தான் !
என்ன செய்யலாம் ? குறிப் பிட்ட அந்த நடிகை போகும் போதுகூட தன் நெருங்கிய ஒரு வரிடம், நான் இந்தக் கேள்வி கேட்டதுபற்றிக் கூறி மிக்க துக்கப்பட்டாராம் !
சினிமா உலகத்து இலட்சிப நடிகர் ஒருவரும், இலட்சிய நடி கையான அவர் மனைவியும் இங்கு வந்திருந்தபோது பேட்டி கண்டேன். பெயரளவில்தான் அவர்கள் இலட்சிய நடிகர்களே தவிர, செயலிலும், குணத்தி லும் . . * கலையரசு சொர்ண லிங்கம் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “ என்று அவ ஒரு கேள்வியைக் கேட் டேன்.
** அவரைப்பற்றி நா ன் ரொம்பவும் கேள்விப்பட்டிருக் கிறேன். அவர் கலைக்காகச் செய்
யும் சேவை . என்னைப் போன்ற
இலட்சிய நோக்குள்ள இளைஞர் v ' - அவர் கடைசியாகச் சொன்ன அந்த வார்த்தையை எண்ணி சிரிப்பதா, அழுவதா

என்று தானிருந்தது எனக்கு. கலையரசுவைத் தெரியாது என்று சொல்லி யிருக்கலாமல்லவா? தெரியுமென்று சொன்னுல்,
ஈழத்தை நன்முக அறிந்துவைத்
திருக்கிருர் என்று எண்ணு வோம் என்பது அவர் நினைப்பு. பாவம் !
ஆசிரியர் தனது அறையிலி ருந்து துணை ஆசிரியருக்கு * போன் செய்தார் : " ஒரு வரைப் பேட்டி காண்பதற்கு உதவி ஆசிரியர் ஒருவரை அனுப்புங்கோ. ' துணை ஆசி ரியர் என்னை அனுப்பி வைத்
தார். ஆசிரியர் எனக்கு அவ ரை அறிமுகப்படுத்திவைத்தார். அவர் தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு திருப்புகழ்மணி.
அதாவது திருப்புகழ் பஜனை செய்பவர். ஆசிரியர்கூட இருக் கவே பேட்டி காண்பது ஒரு மாதிரியாகவும், கூச்சமாகவும்
இருந்தது. அத்துடன் திருப் புகழ் மேதையுடன் பேட்டி காண்பதென்ருல், அது பற்றி ஏதாவது தெரிந்து வைத்
திருந்தாலாவது நன்ருக இருந்
திருக்கும். ஏதோ ஒரு கேள்வி யைக் கேட்டேன். அவரும் பதில் சொன்னர். அடுத்த தாக ஒரு கேள்வி: ' உங்க அப்பாவும் இதே தொழில் தானு? " திருப்புகழ் மணியி
டம் கேட்டுவிட்டு ஆசிரியரை யும் சாடையாகப் பார்த்தேன். அவர் முகம் கறுத்துவிட்டது. தலையில்கூட கை வைப்பார் போல இருந்தது. ** நீங்க கேள்வி கேட்காதீங்க. அவரே தன்னைப் பற்றிச் சொல்வார்,
எடுத்துக் கொள்ளுங்க! ** என் முர் ஆசிரியர், என்னைப்பார்த்து. * என்ன ஆளையா நீங்க அனுப்பி வைத்தீங்க சினிமா நடிகர்களைப் பேட்டி காண்பது போலல்லவா கேட்கிருர் ! " என்று துணையாசிரியரிடம் ஆசி ரியர் என்னைப்பற்றி முறையிட் டுக்கொண்டதாக ஒரு வதந்தி. அரசியல் வாதிகளின் பேட்டி யின்போது, அவர்கள் இதை பத்திரிகையில் போடவேண்டா மென்று சொல்லிவிட்டுத் தான் நிறையக் கருத்துக் கூறுவார்கள். யாழ்ப்பாணத்தில் செல்வாக்குப் பெற்ற ஒரு கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களென்ருல், நூற்றுக்கு எண்பது வீதமும் பத்திரிகை யில் இதனை போட்டு விடா தீங்க, என்று சொல்லி விட்டு சொல்வதுதான் கூடவிருக்கும். ஒரு சமயம், ஒரு எம். பி. யைப் பல்வேறு விஷயங்கள் சம்பந்த மாகப் பேட்டி கண்டுவிட்டு, அவர் போடவேண்டாமென்று சொல்லிக் கூறிய கருத்துக்களை யெல்லாம் பெரிதாக முக்கிய இடம் கொடுத்துப் போட்டுவிட் டேன். இதனுல் அவர் கட்சியி லிருந்தே வெளியேற்றப்பட வேண்டுமென்று எதிர்ப்புக்குரல் கள் எல்லாம் கட்சிக்குள்ளேயே எழுந்தது. அவர் பட்டபாடு - அது ஒரு பெரிய கதை ! அதற்குப் பிறகு நான் அந்த எம். பி. யின் முகத்தில் விழிப்ப தில்லையென்ற சமாச்சாரம் வேறு பக்கம் இருக்கட்டும். அந் தப் பேட்டியினல் அவர் பட்ட பாட்டை இன்னுமே அவர் மறக்கவில்லையாம்! 3.

Page 18
* அரசியல் தம்பதிகள் " என்ற தலைப்பில் ஒரு பேட்டித்தொட ரைச் செய்வோமென்று தேர் தல் காலத்திலும், மற்றும் பொதுக்கூட்டங்களிலும் குரல் எழுப்பும் வீரப் பெண்மணியை யும், அவர் கணவரையும், ஒரு தடவை பேட்டி கண்டேன். முதலில் அவர் கணவர் பேட்டி யளித்தார். பின்னர் அந்தப் பெண் மணி பேட்டியளித் தார். ‘தமிழிர்களெல்லாம்சொ குசாகவும், பெண்களெல்லாம் கறுவாக்காட்டு நாரீமணிகளாக வும் வாழ விரும்புகிருர்களே !' என்று அவர் கணவர் அடிக்கடி கூறிவார். அந்தப் பெண்மணி யைப் பேட்டி கண்டபோதுதான் தெரிந்தது, தன் மனைவியைப் பார்த்துத்தான் அப்படிக்கூறின ரென்ற விஷயம் ! ' அத்தா னில்லாமல் நானில்லை, நானில் லாமல் அத்தானில்லை" என்று, சினிமா நடிகைகள்போல் கை யில்லாத சட்டை போட்டு கவர்ச்சி நடிகைபோல் காட்சி யளித்த அந்த வீராங்கனை, ஈழத்து "தமிழ்ப் பெண்களின் தலைவியாக வரக்கனவு காணும் அந்த * அரசியல் நடிகை ' சொன்னர். அரசியல் சம்பந்த மாக இவரிடம் கேள்வி கேட்ப தில் அர்த்தமில்லை என்பதைத் தெரிந்துகொண்ட நான், சினி மா நடிகைகளிடம் கேட்கும் கேள்விகள் போன்றே கேட் டேன். ** தங்கள் திருமணம் காதல் திருமணமா? ** ** தங்கள் கணவரை முதல் முதலில் சந் தித்ததும்என்ன நினைத்தீர்கள்?* என்பன போன்ற கேள்விகளை
32
ரையும்
யே கேட்டுவைத்தேன். 'படங் கள் பார்ப்பீர்களா ? " என்று அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் , * ஆங்கிலப் படங்களைத்தான் பார்ப்பேன் ! "
பேட்டிகளின் போது பொறு
மை யில்லாதவர்கள் பேட்டி காணமுடியாது என்பது என் அனுபவம். ஆரம்பத்தில் பொறுமை யில்லாதிருந்தது தான். போகப்போக எல்லாம் சரியாகிவிட்டது.
நமது முதுபெரும் கலைஞர் கலையரசு சொர்ணலிங்கம் அவர் களை அதிகாலையில் பேட்டி காணப் போய், இரவு 7 மணிக் குத்தான் அவரிடமிருந்து போக முடிந்ததென்ருல் பாருங்களேன்! அவரது பேட்டி பொறுமையைக் சோதித்தாலும், நல்ல அனுப
வத்தையும், பல தகவல்களை யும் எனக்குத் தந்தது. உல கக் கலைஞர்கள் வரிசையில்
வைக்கக்கூடிய நல்லதொரு கலை ஞரை சந்தித்தது என் வாழ்க் கையிலே ஒரு மறக்கமுடியாத சம்பவம்தானே!
ஈழத்து எழுத்தாளர்கள் சில பேட்டி கண்டிருக் கிறேன். அத்தனை பேரும் மற்ற எழுத்தாளரை தாக்கியும், கொள்கை யற்றவர்களென்றும் தான் கூறியிருக்கிருர்கள். ஆனல் அரசியல்வாதிகள் போன்று பத்
ஒரு உண்மையான கலைஞன் மக்களின் இதயங்களைக் கிள றிப் பார்க்கும் திறன் படைத் தவனுகவும் இருக்கவேண்டும்.

திரிகைளில் அவைகளைப் பிர சுரித்துவிட வேண்டா மென்று சொல்லிவிடுவார்கள் !
எனது ஒரு சில வருட கால பேட்டி அநுபவம் சில சமயங்க ளில் என்னை இனி " பேட்டி " காண்பதில்லை. அந்த வேலையை விட்டுவிட வேண்டு மென்ற வெறுப்பையே ஏற்படுத்துகி றது. ஆணுலும் தரமானவர் களை இந்த உலகத்துக்கு அறி முகப்படுத்தக் கூடிய " சக்தி " இந்தப் பேட்டிக்கு இருப்பதால்
ஒரு சாதாரண ஆசாமி வந் தாலும் அவர்களை யெல்லாம் போய் பேட்டி காணக்கூடிய அளவுக்கு நமது பத்திரிகைக ளின் நிலை ஆகிவிட்டது. இப்ப டியான " இறக்குமதிச் சில்ல றைச் சரக்கு களை யெல்லாம் பேட்டி கண்டு போடுவதால், நமது நிலை என்னகுமோ என்று கூட அஞ்சவேண்டியுள்ளது. இந் நிலை மாறி தரமானவர்களின் பேட்டிகள் வெளியிடப்பட்டால் தான், நம் நிலை உயரும்; பத்திரி
தரமானவர்களை பேட்டி கைகளின் தரமும் உயரும். இல் காணும் பணியைத் தொடர்ந்து லையேல், மக்கள் தரங்கெட்ட கொண்டிருக்கின்றேன். வைகளையெல்லாம் புறக்கணிக்க
தமிழ் நாட்டிலிருந்து எந்த வேண்டும் !
CAAAAAAvNAPAee sea
EF II ir602 fl
பெரிஸ்?
海
அந்த ஜனக் கூட்டத்தின் நடுவே ஓர் அழகிய பெண் நிற்கி
ருள். அவள் பேரழகி !
எல்லோர் மொய்க்கின்றன. தலை நிறையப் பூவைத்து,
கண்களும் அவளையே நெற்றியில் பெரிய
தொரு திலகமிட்டு, தங்கத் தாம்பாளம் போன்ற முகம் தகதக வென ஜொலிக்க அவள் அடக்க ஒடுக்கமாக அங்கே நிற்கிருள்.
G3sF
இந்த அழகிய பெண் தனக்கு அம்மாவாக வந்திருக்
கக் கூடாதா என்று ஏங்குகிருன் ஒரு சிறுவன்.
இந்த ஊர்வசி தன் காதலியாகாளோ என்று தவிக்கின்றது
ஒரு இளம் வாலிபனது உள்ளம்.
இந்தத் தங்க விக்கிரகம் தனது மருமகளாய் வந்தால் எவ்வ ளவு நல்லாயிருக்கும் என்று படம் போடுகிறது ஒரு வயோதிபர்
மனம்.
ஆனல் ஒரு ஈ மட்டும் அந்தப் பெண்ணின் காலிலிருந்து தலைவரைக்கும் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. ஏன் தெரியுமா ? தான் உட்காருவதற்கு அந்தப் புெண்ணின் மேனியில் ஒரு புண்
ணைத் தேடி.
38

Page 19
க. கணேசலிங்கம்
குளொக்குக்கு சந்திப்பேன்" என்று ஒருவரிடம் சொல்லி விட்டு அந்தப்பக்கமே தலைகாட்
டாமலிருப்பது ஸ்டண்டைப் பற்றி மேலும் பழகவிரும்புப வர்கள்
அறிந்துவைத்திருக்க
ஸ்டண்ட்’ எனும் கலை!
இருபதாம் நூற்ருண்டின் மத்திய பகுதியில் பிரபல்யமா கிக்கொண்டிருக்கும் ஒரு கலை இந்த "ஸ்டண்ட்". பாடசாலை யிலிருந்து பார்லிமென்ட் வரை எந்தத்துறையை நோக்கினலும் அந்தத்துறையில் எங்கோ ஒரு மூலையில் இதன் முத்திரை பதிந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
நல்ல ஒரு "ஸ்டண்ட்’ படம் சமீபத்திய தியேட்டரில் ஒடிக் கொண்டிருக்கும் போது எந்த gp(5 மாணவனுக்குத் தான் வகுப்புக்குப் போய் பொறுமை யுடன் வாத்தியார் முகத்தைப் பார்க்க் மனம் வரும்? இந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் வாத்தி யார் மேசையில் குறிப்பிட்ட மாணவனுக்கு 102-லோ அல் லது 108-லோ காய்ச்சல் காய்
வதாகத் தகவல் தெரிவிக்கும் அந்தக் காய்ந்த காகிதத் துண்டு
*ஸ்டண்ட்", பாடசாலைகளில் எப்படி வேலை செய்கிறது என்பதற்கான ஆரம்பபாடம்.
நாளை பிற்பகல் ஷாப் டு ஒக் 34
மீண்டும்
வேண்டிய ஒரு முக்கிய பாடம்" இப்படிக் கூறிய இரு மாதங் களின் பின்னரோ அல்லது மூன்று மாதங்களின் பின்னரோ அந்த "அப்பாவி யைத் தெரி யாத்தனமாகத் தவிர்க்கமுடி யாத ஒரு சூழ்நிலையில் காண வே ண் டி நேர்ந்துவிட்டால் "ஐ ஆம் வெரி சொறி, அவசர மாக வெளியூர் போகவேண்டி நேரிட்டுவிட்டது" என்று (சிக ரெட் புகைப்பவராக இருந்தால் சிகரெட்டை நெருப்புப்பெட்டி யின்மேல் ஒரு தட்டுத்தட்டிக் கொண்டு) சடார் என்று சிறி
தும் தயங்காமல் கூறுவது ஸ்டண்டின் அடுத்தபாடம். அது மட்டுமல்ல. இரண்டோ
மூன்றே வருடங்களுக்கு முந்திய டயறி யொன்றை பொக்கெட் டிலிருந்து அவசரமாக அவர் கண்முன்னலேயே எ டு த் து அடுத்த முறை சந்திக்கவேண் டிய திகதிபற்றிக் குறித்து வைத்துக் கொண்டு அவர் கண் காணுமல் பொக்கெட்டினுள் வைப்பது சந்திப்பு *ன்டண்ட் பாட த் தி ன் தொடர்ச்சி,

பொறுப்பான ஆள் இவர் தான் என நம்பி தமது வேலை யொன்றைப் பொறுப்பித்து விட்டுச் சென்ற ஒருவர் ‘எப் படியிருக்கிறது என் விஷயம்?" என்று அலைந்து வந்துகேட்கும்
பொழுது அவ்விதம் கேட் பவரை ஏழேழு ஜன்மத்தில் சந்தித்திருக்கிருேமா என்ற கேள்வி எழுந்தால் கூட, 'உமது வேலையில் தானப்பா இரவு LS6) ITS மூழ்கிக்கொண்டிருக்
கிறேன்" என்று சிறிதும் பதட் டமில்லாமல் கூறிவிட்டு 'உம் முடன் பேசிக்கொண்டிருந்தால் உமது வேலைதான் வீணுகத் தாமதமாகும்’ என்று அவருக்கு சிரமத்தைக் கொடுக்காது அனுப்பிவிடுவது ஸ்டண்டின் மற்ருெரு உத்தி.
மகாநாடுகள் பலவற்றிலும் இந்த ஸ்டண்ட் இப்போது பெரும்பங்காற்றி வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக விருக்கிறது. மகாகாநாடுகள் நடைபெறத் தொடங்கு முன் னரே நீண்ட பல தீர்மானங் கள் ஏகமனதாக, நிறைவேற்றப் படுவதும் பின்னர் அவையாரும் (சில சமயங்களில் இந்தத் தீர் மானங்களை எத்தனையோ சிர மப்பட்டு நிறைவேற்றியவர்கள்
கூட) விளங்கிக்கொள்ள முடி
யாததால் செயல்படமுடியா திருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் இந்த மகாநாடுக ளில் ‘ஸ்டண்ட் எவ்வளவு தூரம் பங்கு கொண்டு வருகின் ADğ5I என்பதற்கு ஒரு நல்ல சானறு
பெரிய பிரமுகர் ஒருவ ருக்குச் சூட்டுவதற்காக ஒருவர் மாலையை அவர் கழுத்துக்கு அருகில் கொண்டு சென்றிருக் ğ56UnTLb. ஆனல் அந்தப் பிரமுக ருக்கு Lo IT ટો) போட்டது வேருெருவராகப் பத்திரிகையில் படம் வெளிவரும். இது புகைப் படப்பிடிப்பில் இப்போது சில இடங்களில் புகுந்துவிட்ட էվg]
வகை ஸ்டண்ட்.
பெரிய பெரிய மனிதர்க ளின் தலைகளையே இந்த LD வித்தையான ன்டண்ட் சில சமயங்களில் சுழலவைத்து விடுகிறது. இதனல் இவர்கள் திPது ஆசனங்களை அடிக்கடி தொட்டுத்தாம் இருந்த ஆச னத்தில்தான் தொடர்ந்து இருக் கின்றேமா என்று உறுதி செய்து கொள்ளவேண்டிய நிலையை இப்போது ஸ்டண்ட் ஏற்படுத்தி வருகிறது.
தானுண்டு தன் வேலை யுண்டு என்று இருப்பவர்கள் மத்தியில் ஸ்டண்டுக்குத் தனி
யான ஒரு இடமுண்டு. எது வுமே தெரியாமல் எல்லாம் வல்லவர்களாகி விடக்கூடிய
‘சக்தி தருவது இந்த ஸ்டண்ட்.
கடவுளிடம் கூட ஸ்டண்டை
விடுபவர்கள் தற்போது பரவி
வருகிருர்களென்ருல் மகத்துவத்தை என்னென்று சொல்வது. யார் கழுத்தில் கை வைக்கலாம் என்ற கொள் கையைக் கடைப்பிடித்துக் கொண்டு, ஆண்டவன் சந்நி
8.
அதன்

Page 20
தானத்தில் தாரை தாரை பாகக் கண்ணிர்விடுவது, அவ னது திருநாமங்களை வாய்கூசா மல் உச்சரிப்பது பல வி த ஸ்டண்டுகளில் உயர்ந்த ஸ்தா னம் வகிக்கிறது.
த்து அரைவாசிப் பகுதியினரா வது படித்து வைத்திருக்கும் இந்தக் கலையைப்பற்றி அவர்க ளிடமே இன்னும் கேட்டுத்  ெத ரிந் து கொள்ளுங்கள். "என்ன செய்வது, இப்படி இல்
லாவிட்டால் இந்த உலகததில்
'இதென்ன ஸ்டண்ட், வாழமுடியாதே" என்ற பதில் இது இல்லாமல் வாழமுடி அவர்களிடமிருந்து கண்டிப் யாதா?* எ ன் று என்னைப் பாகக் கிடைக்கும் என்பதை பார்த்துக் கேட்காதீர்கள். மட்டும் சொல்லி முடிக்கின் நமது சமுதாயத்தில் குறைந் றேன்.
திகைக்க வைத்தார்
ஒருதடவை நான் பிரபல சிங்கள நாவலாசிரியர் மார்ட் டின் விக்கிரமசிங்காவைச் சந்தித்துப் பேசும் எண்ணத் துடன் அவர் வீட்டுக்குப் போனேன். நான் வீட்டு வாசலை யடைந்த போது, வாசலில் சாரம் மாத்திரம் அணிந்து கொண்டு ஒரு முதியவர் நின்றிருந்தார். -
"மார்ட்டின் விக்கிரமசிங்கி விட்டில் இருக்கிருரா?” என்று அந்த முதியவரிடம் நான் கேட்டேன்.
"ஆ. இருக்கிருர், வாருங்கள்” என்று சொல்லி என்னை உள்ளே அழைத்துச் சென்று ஹாலில் அமரவைத்து விட்டு தான் உள்ளே சென்ருர்,
சிறிது நேரத்தின் பின் வேலைகாரப் பையன் ஒருவன்
வந்து 'ஐயா அறையினுள் இருக்கிறர். தங்களைக் கூப்பிடு கிருர்" என்று சொன்னன்.
நான் எழுந்து உடையை ஒருமுறை சரிப்படுத்திக்கொண்டு
பைலும் கையுமாய்ப் பயபக்தியுடன் அறையினுள் நுழை கிறேன்.
நுழைந்தவன் ஒருகணம் திகைத்துப்போய் நின்று
விட்டேன். ஏன் தெரியுமா? வாசலில் வெறும் மேனியுடன் நின்ற அதே முதியவர்தான் சேட் அணிந்து கொண்டு சிகரட்டையும் பிடித்துக் கொண்டு சிரித்தபடி புத்தகக் குவி யல் மத்தியில் மார்ட்டின் விக்கிரமசிங்காவாக இருந்தார்!
- பெரி. சண்முகநாதன். 36.
أمير

'நந்தி லண்டன் கடிதம்
இலங்கையில் இருந்து_. 22- 9 - 67
39 வருட காலம் எனது அன்புமிக்க தாய் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டையும் நான் கண்டதில்லை.
நாளை நான் லண்டன் நோக்கிப் பறந்து கொண்டிருப்பேன்.
எனது வலது கையின் அதிர்ஷ்ட ரேகையில் இருந்து ஒரு பிரயாண ரேகை கிளை விட்டிருக்கின்றது. மூன்று வருடங்களுக்கு முன் நயினு தீவிற்கு நான் அம்பாளைத் தரிசிக்கப் போனதோடு அந்த ரேகையின் பலாபலன் தீர்ந்துவிட்டது என்று எண்ணி னேன். ஆனல் இலங்கைச் சர்வகலாசாலை வேறு விதமாகத் தீர்மானித்தது. அதன்படி நான் மூன்று வருட காலம் லண்டன் மாநகரில் அஞ்ஞாத வாசம் செய்யவேண்டும்,
** இலண்டனைக் காணுமல் இருப்பேனுே - நான் இந்த சென்மத்தை வீணுகக் கழிப்பேனுே? '
என்று இந்த நந்தி எப்பொழுதும் அழுதது கிடையாது. ஆகை யால் சிறு வயதில், ஆங்கிலம் படிக்க ஆரம்பித்த அந்நிய நாட் களில் நான் எழுதிய இந்த Ceylon - London விஷயம் தான் ஞாபகத்திற்கு வருகிறது
C EY L ON
L 0N DON என்ருலும் போட்டோவும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும் எடுத்து பாஸ்போட் எடுத்தாச்சு. வருமான வரி இலாகாவில் வரி கட்டின அத்தாட்சி பெற்ருச்சு. இதைக் காட்டி செலாவ ணிக் கட்டுப்பாட்டு இலாகாவில் உத்தரவு வாங்கியாச்சு. அதன் பின்பு இங்கிலாந்து தூதராலயத்தில் விஸா கிடைத்துவிட்டது. இவை எல்லாவற்றையும் காட்டி விமானச் சீட்டும் வாங்கியாச்சு. இவ்வளவு பிரயத்தனமும் செய்தபின் பர்சம் என்ற நந்தி வழி மறைக்கலாமா?
மூன்று நாட்களுக்கு முன் எனது தந்தையைக் கடைசி முறை யாகப் பார்த்தேன். எழுபத்தைந்து வயதான அவருக்கு அந்திக்
87 ,

Page 21
கால வியாதி. மூன்று வருடங்களுக்கு வாழ முடியாது. பாசம் என்ற சேடத்தை கடமை என்ற பாலால் நிறுத்தி . . .
மனத்தில் தாய், மனைவி, குழந்தை ஒரு புறம் ; நண்பர்கள் ஒரு புறம் ; நல்லூர்க் கோவில் மணி, இலக்கியக் கூட்டப் பேச் சுக்கள், ஹிந்தகலை வட்டாரக் குழந்தைகளின் மழலைகள் இன் னும் ஒரு புறம்.
சான, சொக்கன், சோமு, ஜீவா. இப்படியாக எத்தனையோ இலக்கிய நண்பர்களும், ஸ்வாமிநாத தம்பிரான் சுவாமிகள், கலா நிதி வித்தி போன்ற பெரியார்களும் கண்களை நனைக்கின்றனர். இவர்களை இனிக் காண மூன்று வருடங்களா ?
ஆகா, சுமார் 14 மணி நேரத்தில் ஒரு புதிய உலகம். ஆங்கிலப் படம் பார்ப்பதுபோல் இருக்கப்போகிறது. ஆனல் நிழல் உருவங்களுக்கும் மனித ஜீவன்களுக்கும் எவ்வளவு வித்தி யாசம் !
இலங்கை நண்பர்களைப் போல் எத்தனையோ அன்பு மனிதர் இருப்பர். இவர்களிலும் நல்லவர்கள் இருக்கலாம். எத்தனை தாய்மார் இருப்பர். தாய்ப் பாசம் சர்வதேச மொழியல்லவா ? மக்கள், மக்கள் பிரச்சினைகள், மக்கள் ஆசாபாசங்கள் இவற்றை பற்றிய அவதானிப்பு ஒரு எழுத்தாளனுக்குத் தேவைதான்.
எனது லண்டன் அனுபவத்தையும், அவதானிப்பையும் உங்க ளுக்கு மல்லிகை மூலம் தொடர்ந்து தர இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். o o o
தாகூரின் கஷ்டம்
தாகூரின் சிறுகதைகள் காவியதர்மத்தையே அடிப்படைய்ா கக் கொண்டிருக்கின்றன என்றும், அவரது உரைநடை காவியத் தின் சந்தத்திலேயே செல்கின்ற தென்றும் சிலர் குறைபட்டுக் கொள்கின்றனர். தாகூரின் கதைகளில் கதையின் போக்கை மீறி அவரது காவிய நடை இடைக்கிடை தோற்றுவதென்னவோ உண் மைதான். ஆனல் அதற்கும் தாரணம் இருக்கிறது. தாகூருக்கு முன் ஞல், வங்க மொழியை உரைநடைக்கேற்றதாக யாருமே வளப் படுத்தவில்லை. வங்க மொழில் தாகூரே புதிய வசன நடையைச் சிருஷ்டித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அயல்நாட்டு எழுத்தா ளர்களது வசனநடை சிறிது உயர்ந்து தானிருக்கிறது. அவர்களது உயர்வுக்குக் காரணம் அவர்கள் ஏற்கனவே பண்பட்ட மொழியைப் பயின்றமையே. மொழியைச் சீர்திருத்திக் கொண்டே இலக்கி யத்தை உருவாக்கும் கஷ்டம் தாகூருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தான் தாகூர்தம்மீது குறைகண்டவர்களைப் பார்த்து, 'மொழியை வளப்படுத்திக் கொண்டே சிருஷ்டிக்க வேண்டியநிலை எனக்கேற்பட் டதுபோல மேல் நாட்டவருக்கும் ஏற்பட்டிருந்தால் தெரியும், அவர்கள் பாடும்!" என்றுஆவேசமாகக் கூறுகின்ருர்!
38

(பழைய நூல் அறிமுகம்)
யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி
இரசிகமணி. கனக, செந்திநாதன்
Iழ்ப்பாணச் சரித்திரத்தை அறிய அவாவும் ஒருவர் யாழ்ப்பாணவைபவமாலை, வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப் பாணவைபவ கெளமுதி, யாழ்ப்பாணச்சரித்திரம் என்னும் இவற் றைப்படித்திருத்தல் வேண்டும். அதன்பின்பு படிக்கவேண்டிய நூலாக இந்த உத்தியோகர் லக்ஷணக்கும்மி துலங்குகின்றது. இந்த நூலில், ' கி. பி. 1200 ஆண்டு முதல் உள்ள தமிழரசர் காலம், பறங்கி, உலாந்தர்காலம் என்பவைகள் சுருக்கமாகவும், 1795 ம் ஆண்டில் ஆங்கிலேயர் உலாந்தரை வெற்றி கொண்டு வந்தது முதல் உள்ள வரலாறு இயன்றவரை விரித்துரைக்கப் பட்டுமிருக்கின்றது. இது ஆங்கிலேயர்காலத்தில் யாழ்ப்பாணத் தை அரசாட்சி செய்த ஏஜண்டுமார் காலங்களையும் அந்தந்த ஏஜண்டுமார் காலத்தில் உத்தியோகம் செய்தவர்களையும் அவர்கள் செய்த நன்மைதீமைகளையும் அக்காலம் நாடிருந்த நிலைமை முதலானவற்றையும் நன்கு கூறுகிறது. பூரீமான் சேர். பொன். இராமநாதத்துரை யாழ்ப்பாணத்துக்கு விஜய்ஞ் செய்தது இறு தியாக கி. பி. 1887 ம் ஆண்டு வரையுள்ள, சரித்திரம் கூறப்பட் டிருக்கிறது. முக்கியமான பல சம்பவங்கள் இன்ன இன்ன ஆண் டுகளில் நிகழ்ந்தன என்று ஆண்டுக் கணக்குடன் கூறப்பட்டிருக் கின்றன. இதனை முழுதும் வாசிப்பவர்கள் நமது நாட்டைப்
39

Page 22
பற்றிய பல விஷயங்களை அறிந்துகொள்ளலாம்." இப்புத்த கத்தை இயற்றியவர் வண்ணுர்பண்ணை ஒட்டுமடத்தில் வதிந்த தம்பிப்பரிகாரியாரின் மகனகிய அப்பா என்று வழக்கத்தில் அழைக்கப்பட்டு வந்த கதிர்காமர் என்பவரென்று ஊகிக்கப் படுகின்றது.
இந்த நூலில், யாழ்ப்பாண அரசர்கள் செய்த நல்லரசாட் சியை வியந்து போற்றியபின் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தைப் பிடித்ததையும் அவர்களைத் துரத்திவிட்டு ஒல்லாந்தர் ஆட்சி செய்வதையும் பாடியுள்ள ஆசிரியர், இவர்களது கொடுங்கோ லாட்சியைத் தொட்டுக்காட்டியுள்ளார். ஒவ்வொர் புருஷர்க்கும் தங்கள் பெயர் சூட்டி, உயர்சிவபக்தி செய்யாது தடுத்து, சைவர் களாயினும் "தொன்பிலிப்பு' வாக்கி கோவில்களை இடித்துத்தள்ளி, திண்ணைப் பள்ளிக்கூடக்கல்வியை மறித்து குத்தகை ஒவ்வொன் றையும் தப்பாது வாங்கி 'பூணுரக்குத்தகை" போன்ற புதுவரி களையும் வைத்து ஆண்டதை நெஞ்சிற் கனலெழுப்ப அவர் பாடி யுள்ளார். அவர் ஒல்லாந்தரது அரசாட்சிபற்றிப் பாடியுள்ளதில் இரண்டு கும்மிகளைப்பாருங்கள்:-
* பன்றிகள் மூக்கில் வளைய மில்லா விடில் பலரும் பிடித்ததைக் தின்னலா மென்று வம்பாய்ப் பலபல கட்டளை செய்த வலுவந்தக் காரராம் ஞானப்பெண்ணே.
ஆருமந் நாளையில் உத்தியோகர் தம்மை அவசர வேலைக் கழைத் தாராகில் தாமத மில்லை அரிசி கறியவர் தலைவிதி யாமடி ஞானப்பெண்ணே.
1795 ஆம் ஆண்டு ஒல்லாந்தரை வெற்றி கொண்டு ஆங்கி லேயர் ஆட்சிபுரிந்தபோது யாழ்ப்பாணத்துக்கு வந்த, மோயாட் வேயாட், டயிக், பிறைஸ், கிப்சன், போல், மறை, மோவியு, றசல், துவையினம் என்னும் ஏஜண்டுமார்களைப் பற்றி இந்நூலில் ' விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களது ஆட்சிக் காலத்தில் இருந்த கீழுத்தியோகத்தர், நீதிபதிகள், அப்புக்காத்து, தரணிமார் ஒவ்வொருவரைப் பற்றியும் ஆசிரியர் விபரிக்கிருர், மேயோட்" என்னும் "ஏஜண்ட்’ பற்றிக் கூறும் போது, 'வண்ணை வைத்தீசுரன் கோவில் அவர் வல்லபத்தாலே சிறந்தது" என்றும், 'எண்ணமுடியாத நன்மை இவ்வூருக்கு இட்டமாய்ச் செய்தவர்"
46

என்றும் பாடி அன்னவரை ஒரு படி உயர்த்தியுள்ளார், அக் காலத்திற்குச் சிறிது முன்னல் இருந்த நிலையைப் பாட வந்த ஆசிரியர்.
மேள மடிக்க முடியாது வீட்டில் மேற் கட்டி கட்டவும் கூடாது ஆளும் பணங் காசிருந்தாலுந் துரை *ஆக்குத்து வேண்டுமாம் ஞானப்பெண்ணே
ஏழைச் சனத்துக்குக் காசைக் கொடுத்து எடுத்துச் சிறையாய் வளர்த்து வந்தார் ஆளடிமை கொள்ளல் ஆகா தென்றுபின் அழித்துப் போட்டாரடி ஞானப்பெண்ணே
என, அக்காலத்தில் ஊர் தோறுமிருந்த நடைமுறைகளை விபரிப்பது இக்காலத்தவர்க்குப் புதுமையிற் புதுமையாகத் தோன் றலாம்.
முற்காலத்திற் பணம் வாங்கியவன் பணம் கொடுத்தவனுக்கு நோட்டு, சீட்டு, அறுதி என இக்காலத்தில் இருப்பது போல எழுதிக்கொடுப்பதில்லை. பின் எப்படி எழுதிக்கொடுத்தான் என் பதை அவ் வாசகம் முழுவதும் வர ஆசிரியர் பாடியுள்ளார்.
**பணத்தை இறுப்பேன் இருது போனல் நல்ல பங்குனி மாதம் பகல் வழி போமவன் கனத்த பாடுபடு வானது போல் நானும் கன்மத்துக் காவேணும்' ஞானப் பெண்ணே
கையை அடித்துப்பின் ஆணை மறந்தவன் கன்றுக்குப் பாலை விடாமற் கறந்தவன் ஐயா இவர்கள் தான் போகும் நரகத்துக் கவன் போவா ஞமடி ஞானப் பெண்ணே.
அந்நாளில் வழங்கிய நாணயங்களாகிய இறைசால், பணம், துட்டு, சல்லி என்பவற்றைப் பற்றியும் 1838 ஆம் ஆண்டளவில் வழங்கிய பவுண், ஷிலிங், பென்சைப் பற்றியும், பிற்பாடு வழங் கிய ரூபா, சதம் பற்றியும் கவிஞர் பாடியுள்ளதைச் சரித்திரக் கதைகள் படைக்கும் எழுத்தாளர் நிச்சயம் அறிந்து வைத்திருத் தல் வேண்டும். அக் காலத்தில் சுப்பிறீம் கோடு தொடங்கும் அழகை அப்படியே நம் கண்முன் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிருர். பெத்தான், நன்னி, காசி என்ற கள்வரைப் பற்றி
41

Page 23
யும் "டயிக்" என்ற ஏஜண்ட்" அவர்களைத் தொலைத்தமை பற்றி யும், அக்காலத் தண்டனைமுறை பற்றியும் இந்நூலில் இருக்கி றது. துப்பறியும் கதைக்குரிய “கரு” தொட்டுக்காட்டப்பட்டுள் ளது. இவற்றை வைத்துக் கொண்டு சிறந்த துப்பறியும் கதையை வல்லவர் சிருல்டிக்கலாம். தொடக்க காலத்திலே ஆங்கிலம் தெரிந்த தரணிமார்கள் இல்லாமையால் நன்ருகத் தமிழ் கற்ற "நாலைந்து பேரைத் தரணிமாராக நியமித்த சம்பவமும் வாசிக் கச் சுவையாக உள்ளது.
**அப்புக்குட்டி ஐயர் நெல்லிதாதர் பின்னு மந்தச் சேனதர் சூசைப் பிள்ளை இப்படி நல்ல தமிழ்ப் பாஷை கற்றவர் இருந்தார் சிலகாலம் ஞானப் பெண்ணே.
வரவரப் பாஷை படித் துணர்ந்திங்கே வந்து குதித்தார் தரணி மார்கள் அருமையும் வீரமும் நீதியுங் காட்டியே அள்ளினர் காசெல்லாம் ஞானப் பெண்ணே.
எத்தனையோ லோயர்’ மாரைப் பற்றியும் "முதலியார் களைப் பற்றியும் மிக விரிவாக . சற்று அலுக்கும் படியாகவுந் தான் - எடைபோட்டுப் பாடியுள்ள இக்கவிஞர் ஒரு “கோட் டடிப் புலி” யாகத்திகழ்ந்திருக்கிறர் என்பது உண்மை. அல்லது இவ்வண்ணம் நுணுக்கமாகப் பாடமுடியாது. தரணிமார் பெயர் களையெல்லாம் ஐம்பதுக்கு மேற்பட்டகும்மிகளிலே அனயாசமாகக் கையாள்கிருர். கும்மி என்ற இத்துறை இவருக்குத் "தண்ணிர் பட்டபாடாக நன்கு வளைந்து கொடுக்கிறது. உதாரணத்துக்கு இரண்டு பாடலைப் பாருங்கள்:-
வாதிக்குப் "போயிலோ மற்றவனம் பிரதி வாதிக்குக் கேமிசு வாகநின்று சாதிக்குந் தர்க்க வொழுங்கையும் பேசுஞ் சமர்த்தையுங் கண்டாயோ ஞானப் பெண்ணே. 'மறை யப்புக் காத்து ஒருபக்க மாகவும் மற்றப் பக்கம் முத்துக் கிட்டின ராகவும் எதிரெதி ராயவர் பேசும் வடிவை நான் என்னென்று சொல்லுவேன் ஞானப் பெண்ணே.
"டயிக்" என்ற ஏஜண்ட் செய்த நல்ல உபகாரவேலைகளை யெல் லாம் வரிசையாகப் பாடும் இப் புலவர் "முத்துச்சிலாபம் குளிப் பித்தது, “கவுண்மேந்துப் பாடசாலைகள் கட்டியது, கீரிமலைக்குத்
42

தெருப்போட்டது, அம்பலவாணரைச் சிறைநீக்கியது, வல்லிபுரி கோவிலுக்குத் தெருப்போட்டது முதலிய எவ்வளவோ சங்கதி? களைச் சரித்திர ஆசிரியர் தோணரயிற் கூறுகிறர். இந்தச் ‘சங்க திகளுக்கிடையில் "கிறீன் பாதிரியார்’ பற்றிய ஒருதுணுக்கு எம் மனத்தைக்கவர்கிறது (கிறீன் பற்றிக் கவிஞர் அம்பி விரிவாக எழுதியுள்ளார்) அந்த நிகழ்க்சி இது:-
*மானிப்பாய்க் கோயிலில் மேளத் தொனியால் மனது வருந்திக் கிறீனும் முறையிட ஏழைக் கிரங்குந் துரையவர் வேகத்துக் கென்ன சொன்னர் சொல்லு ஞானப் பெண்ணே.
சண்டை குழப்பங்கள் வராமல் ஊர்ச்சுகம் கண்டு நடப்பது என் கடனம் பண்டைத் தெருப்பிலே போயிரும் என்ருெரு துண்டு அனுப்பினர் ஞானப் பெண்ணே. அப்புக்காத்து கூல் அவர்களின் திருகுதாளங்கள் பற்றி இக் கவிஞர் விரிவாகப் பாடியுள்ளார் இந்தக் கூல் அப்புக்காத்தின் சரித்திரத்தை மக்கள் கவிமணி, வட்டுக்கோட்டை மு. இராமலிங் கமவர்கள் ஈழகேசரி ஆண்டுமடல் ஒன்றிலும் இந்து சாதன மலர் ஒன்றிலும் விரிவாக எழுதியுள்ளார். (இது நூல் வடிவில் வருதல் நன்று) அவரது சரிதத்தை அறிந்தவர்களுக்கு இப்பாடல்கள் இரட்டிப்பு இரசனையை உண்டாக்கும்.
'கூல் வழக்கின் பின் அடுத்த இதழ் னே Q7 தலைப்பட் டதை" இந்நூலாசிரியர் விபரித்து ஆறுமுகநாவலர் எழுதிய "மித்தியாவாத நிரனம்’ என்ற கண்டனக் கட்டுரையையும் தொட் டுக் காட்டி, பிற்காலத் தில் ஏற்பட்ட வரிகளால் மக்கள் சொல்லொணுக் கஷ்ட மனு பவித்த தைப் பாடுகிருர், சிறிய கடை களுக்கு வரி. கீரை, அரிசி, நெல் இவை விற்கக் கூட வாடை. காட்டு விறகுக் குக்குப்பணம். கஞ்சல் குழை வெட்ட இரண்டரை (bLinT, தலைவரி. இவையெல்லாவற்
43

Page 24
றையும் ஏழைச் சனங்கள் மேற்போட்டு வதைக்கிறர்களே என ஆவேசத்தோடும் சிறிது நகைச்சுவையோடும் பாடி, இக்கவிஞர், ஒரு தேச பக்திக் கவிஞர் என்னும் நிலையை எட்டிப்பிடிக்கிருர் இரண்டு கும்மிகளைப்பாருங்கள்:-
கீரைகள் விற்கிற பெண்களின் கொள்முதல் கெட்டியாய் யாரும் அறிவர் ஒரு பணம் ஆரை வறுத்தவர் வாடை கொடுப்பது அநியாய மல்லவோ ஞானப் பெண்ணே
நெல்லும் அரிசியும் விற்கிற பேதையை நெருங்கி யிவர்கள்வா தாடுஞ் சமயத்தில் பல்லுப் பறக்க இடித்த கதையையுஞ் சொல்லிச் சிரிக்கிருர் ஞானப் பெண்ணே.
"ஆரை வறுத்தவர் வாடை கொடுப்பது?’ என்ற தொடர் அரு மையான கிராமத்துமொழி. நன்ருக விழுந்து , உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. 'பல்லுப் பறக்க இடிந்த கதை" படிக்க நகைச் சுவை நல்குகின்றது.
புரட்சி புரட்சி என்று வானளாவக் கத்துகிருர்களே. அது இப்போது தான் கண்டுபிடித்த பண்டம் என்பது பலரது நினைப்பு: "தலைவரியை எதிர்த்து எழுந்த கிளர்ச்சியையும் அதனல் ஏற்பட் டநன்மையையும் ஆசிரியர் பாடுவதைக் கேளுங்கள்:-
தளர்ந்து நரைத்து வயது சென்ருலும்தலைவரியால் முன்னே தள்ளாது வைத்தனர் எழுந்த குழப்பத்தைக் கண்டு பலபேரை ஏனே கழித்தாராம் ஞானப் பெண்ணே
ஐஞ்னுற்றுக்கு மேற்பட்ட கும்மிகள் உள்ள இந்த நூலில் பதினைந்து பாடல்களைத் தொட்டுக் காட்டியிருக்கிறேன். ஆசிரியர் எடுத்தாண்டிருக்கின்ற உவமானங்கள்-செருப்புக்கு நல்ல வைரம் பதித்தாலும் சிரசில் அணிவாரோ?, உழுது விதைத்த எருதென் ருலும் உள்ள பயிரை அழிக்கவிடலாமோ? - என்பவற்றைக் காட் டஇன்னும் பல பாடல்களைக் காட்டலாம் இந்த நூல் எம். எஸ். துரை அவர்களால் சோதிடப் பிரகாசயந்திரசாலையில் 1936இல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. வெறும் நாட் டார் பாடல்களை நெடுகஷம் போட்டு வியாக்கியானம் செய்யா மல் தகுந்த அறிஞர்கள், பழைய நூல்களோடு பரிச்சயமுள்ளவர் கள் இப்படியான நூல்களுக்கு வேண்டிய குறிப்பெழுதி நன்ருக வெளியிட்டால் அது நல்ல தமிழ்க் தொண்டாகும். ஈழநாட்டுக் குச் செய்த சேவையுமாகும்,
44.

மஹாகவி'
பத்திரிகைக் கொரு பாட்டினை அனுப்பினேன் சித்திரை மலரிற் சிறப்பாய்ப் போட்டனர். * பாடலைக் கூடப் படிப்பார் உளர்' என ஆடிப்பாடி அகமிக மகிழ்ந்தேன். ஆடிப்பாடி அக மகிழ்ந்தேனு, பத்தரைமாதம் பறந்தது. பறந்ததன் பின்றை,
மத்தியானம்; மாசி; துயில்விட்டு அருண்டு நான் விழித்தேன். அஞ்சலில் இரண்டரை ரூபா எனக்கு வந்திருந்ததே !

Page 25
முயற் இெ
திருவிகன யாக்குமடா
காரை. செ. சுந்தரம்பிள்ளை.
நாட்டில் விளைவை வளர்ப்பவர்கள் - பெரும்
நாசம் புரிந்திடும் தீயவர்கள் ஏட்டைப் படித்தென்ன லாபமடா - இவர்
எட்டி மரத்துக் கணிகளடா. மெத்தப் படித்தவர் கோடியடா - பலர் மேதினிக்கோ பெரும் பாரமடா சொத்தைக் கதைபல பேசிப்பேசி - இவர் சோம்பல் வளர்ப்பதே மிச்சமடா. மாடி மனைகளைக் கட்டியென்ன - தினம்
மண்ணையும் விண்ணையும் ஆய்ந்துமென்ன கூடி யிருக்க வழியறியார் - கொல்லும் ,
குண்டுகள் கண்டதே மிச்சமபடா. உள்ளம் வளர்ச்சி அடையவில்லை - புவி
ஒற்றுமை இன்னுமோ காணவில்லை வெள்ளம் போலேபெரும் சிக்கலடா - இதை
வெட்டி விடுபவர் இல்லையடா. ஒட்டுண்ணி போல இருப்பவரை - இவ்
வுலகைச் சுரண்டியே வாழ்பவரை விட்டு வைத்தாற் பெரும் பாவமடா - இந்த
வீணரால் என்னதான் லாபமடா. பூமி யிருக்க வளமிருக்கப் - பல புத்தம் புதிய வழியிருக்க சாமியை நம்பி இருப்பதோடா - அவன் தானுக வந்துனைக் காப்பனேடா. முயற்சி திருவினை யாக்குமடா - இது
முப்பாற் குரியவன் போதமடா உயர்ச்சி அளித்திடும் மார்க்க மடா - இதை
ஒர்ந்தவனே புத்திசாலி யடா.

எனது ஆசை - க், சச்சிதானந்தன் -
முல்லைப் பந்தல் போட ஆசை
முற்றம் இல்லையே
கல்லைப் பேர்த்துக் கழனி செய்வேன்
காணி இல்லையே
வேலை செய்து வேர்வை சிந்தி
வெட்டிக் கொத்த உள்ள முண்டு
காலிற் கையில் வன்மை யுண்டு
காணி இல்லையே
சொட்டுச் சொட்டாய் வேர்வை சிந்தி
சொட்டுக் கொன்று முத்தைப் போட்டு கட்டுக் கட்டாய் நெல்லுக் காசை
காணி இல்லையே
ஒட்டுக் கன்று மாவை வைப்பேன்
ஒங்குந் தென்னம் பிள்ளை வைப்பேன் கட்டிப் பாத்தித் தண்ணிர் விடுவேன்
காணி இல்லையே
ஒலைக் கீற்றில் கொட்டில் போட்டு
உள்ளே மட்டை சுற்றிக் கட்டி
காலை நீட்டித் தூங்க ஆசை
காணி இல்லையே
சின்னச் சின்ன வீடு கட்டிச்
செல்வக் குஞ்சைத் தோளிற் போட்டு முன்னும் பின்னும் உலவ ஆசை
முற்றம் இல்லையே

Page 26
இயற்கை நியதி
-வி. கந்தவனம்
பெரிய வலை விரித்துக் கரிய சிறு சிலந்தி உரிய இட மொதுங்கி இரிய இளைத் திருக்க
உறுமொ ரீவி ழுந்து விறுவி றென முயன்று சிறகை அடித் தடித்து “ இறுக வலையிற் சிக்கி
துடித்துப் பதைப தைத்துப் படுத்த உயிர்க் கிரங்கி எடுத்து விட நினைத்த அடுத்த கொடிப் பொழுதில்முற்றும் பசிச் சிலந்திக் குற்ற இரை தவிர்த்தல் குற்றம் என எழுந்த மற்றும் ஒரு நினைவுபற்றி இழுத்து நிற்கச் சுற்றிக் குழம்பித் துயர் உற்றுத் தெளிவு பின்னர் பெற்றுத் திரும்பி விட்டேன்.
இயற்கை முறையில் உள்ள வியக்கும் நியதிக் குன்றன் செயற்கைப் பரிவு மென்ன பயக்கும் படி5ல் 5ெஞ்சே

விடிவு!
நீலாவணன்
ஒரு பெரும் பொய்யைக் காக்க உலகத்தின் சிறு பொய் யெல்லாம் வரிசையாய் அணிதி ரண்டு வந்தன போலும், வானில் கறைநிலா ; உடுக்க ணங்கள் ! காலத்தின் நரைத்த சாவாய் உருவாகித் துயில்கொள் கின்ற ஓர் இரா உலகை யாளும் !
பிணங்களும் கூட, இந்தப் பேருல காள்தல் கூடும் ? கணங் கணங் கேட்ட போழ்து கைகளை உயர்த்த, மூடச் சனங்களும் சம்பத் துக்கள் சகலதும் வாய்ந்தால் . செத்த பிணங்களும் கூட விந்தப் பெரும்புவி ஆள்தல் கூடும் !
அமெரிக்கச் சீமாட்டீ போல் அழகான நிலவும், அந்த அமெரிக்க அழகிக் குள்ள ஆதிக்கப் பெருமை காக்க அமெரிக்கர் வியட்னும் மண்ணில் அணியமைத் திருந்தாற் போன்று, சமரிலே மடியப் போகும் காரைகள் கண்ண டிக்கும் !
துணைவரைப் பிரிந்த நெஞ்சம் துயர் பொங்கத் துயிலா தேங்கும்

Page 27
அனைவரும் அாங்கும் வண்ணம் அபின் கொஞ்சம் அருத்தி, அன்னர் மனைகளில் மயங்கிப் போக, மண்ணுல காளப் பார்க்கும் . பனையின் மேல் கிலவே, உன்னைப் பார்க்கவும் நாணு கின்றேன் !
* சாவந்தாற் . சாவோம் ! நாங்கள் சனித்த விப் புனித மண்ணில் தேவர்வக் தாலும், எந்தத் திறலுடை யவர்வங் தாலும் சாவிர்கள் ! ? என, வியட்னும் சங்கொலி முழக்க மாகி சேவல்கள் விடிவை நோக்கிச் சிவப்புப் பூச் சிலிர்த்துக் கூவும் !
குமுறியே கடலா வேசம் கொண்டெழும் ! குருதி பொங்கும் ! திமிரொடும் உலகை யாண்டு, திரை நடு வுறங்கு கின்ற, குமர் நிலா கூனி யஞ்சிக் கொலைப் படும் 1 சுதந்திரத்தின் அமர கீதத்தை . வையம் அனைத்தும் வெண் புருக்கள், பாடும்:
* கலகத்தின் திரையாய்த் தொங்கும் கரிய ராச் சவத்தைச் சுட்டு, உலகத்தை ஆள்வோம் ! “ என்ற உறுதியோ டொருவன் வந்தான் ! நிலவே பார், சிவப்பு வானம் ! நீயும் கின் படையும் தோற்றீர்! உலகெலாம் பழித்த தும்மை ! ஒடுவீர் . . ஒளிந்து கொள்வீர்!
---- wa-as.

கொழும்பு நகர்க் கடலோரம்
புலவர். ம. பார் வதிநாத சிவம்.
செழும்பருதி கடல் மகட்குப் பொன்னல் ஆடை செய்தளிக்க முயல்கின்ற மாலைப் போதில் இளம்பருவ நண்பரினம் என்னைச் சூழ ஏகினேன் இனிதென்றே பலரும் போற்றும் கொழும்பு நகர்க் கடலோரம் ஆங்குக் கண்ட கூறரிய காட்சிகளே இயன்ற மட்டும் உளமுணர்ந்த வகையினிலே உரைப்பேன் கண்ணே ! ஒவ்வொன்ருய் யாவையுமே கேட்பாய் பெண்ணே ! தேநீரை விற்போர்க்கும் கடலை விற்கும் சிறுவர்க்கும் வேலை செயும் இடமாம் மற்றும் தேனியும் இதழ் படைத்த மானைத் தேடிக் திரிகின்ற இளைஞர்க்கின் வனமாம் செல்வ வானுகி உயர்ந்திட்ட மனிதர்க் குணவு செரிப்பதற்கு நடைபயிலும் பரப்பாம் ஆங்கு மீன் கோக்கும் பலவாய பறவைக் கென்றும் விருந்தளிக்கும் விடுதியுமாம் அறிவாய் பெண்ணே ! வஞ்சனைகள் பொருமையென மக்கள் தம்பால் வளர்த்திருக்கும் குற்றமெதும் அறியாப் பாலர் பிஞ்சுமொழி மொழிபவராய் மணலின் கண்ணே பிழை யறியா விளையாட்டில் மகிழ்வார் ஆசை கெஞ்சுடைய பாவையரோ எதிர்காலத்தின் நிலைமையினே மிக மறந்தே இளைஞர் கூறும் நஞ்சமைந்த இன்சொல்லில் மயங்கி வாழ்வின் நன்மையினே இழப்பதிலே கழிப்பார் காலம் ! ஆங்கிலத்திற் பேசுவதும் பெண் களோடே அளாவுவதும் இவ்வையத்துயர் வென்றெண்ணும் பாங்குடைய செல்வர்கள் நாக்க ளோடே பவனி வந்து கொண்டிருப்பர் ஒருநாட் சோற்றுக் கேங்கிடு வோர் தம்வினையை நினைத்துப் பார்த்தே என் செய்வோம் நாளேக் கென் றழுவார் சற்றும் தீங்கறியாக் கிராமத்துப் புதியர்ப் பின்னே திருடர்கள் நடந்திடுவார் சமயம் பார்த்தே !

Page 28
மனதைத் தட்டி எழுப்பிடுவோம்!
அம்பி
LMLkLSSLLSBLSSLMMSkLSLSLS0LSSLSLSL L SLLGLLLSLLLL LLS
எங்கள் திரு நாடு-நமதே என்ப துணர்ந் திடுவோம் சங்கு முழங் கிடுவோம் - மனதைத் தட்டி எழுப் பிடுவோம்
ஈழம் எனுங் கணமே - இணையில் இன்பஞ் சுரந்து வரும் ஆளுந் தகைமை வரும் - கணமும் ஆண்மை குதித்து வரும்
சோம்பல் அகன்று விடும் - துடிப்புத் தோளிற் பிடித்து விடும் தேம்பி அழும் மனதில் - திருவுந் தேரில் எழுந்து விடும்
ஊக்கம் உயிர்த்து விடும் - உளத்தில் உண்மை விழித்து விடும்
ஆக்கஞ் சிரித்து வரும் - அண்யா
அன்பு துளிர்த்து விடும்
சாதிப் பிரி வினைகள் - தகர்ந்தே சாய்ந்து சரிந்து விடும் நீதிக் கதிர் எழுந்தே - நிமிர்ந்த நெஞ்சில் விரிந்து விடும்

சொந்த நலன் கருதும் - மனதின் சூழ்ச்சி சிதைந்து விடும் ܗܝ பந்தம் அறுத்து மனம் - பரந்த பார்வை அறிந்து விடும்
கூனல் நிமிர்ந்து விடும் - மனதின் கூதிர் மறைந்து விடும் மானம் உணர்ந்து குலம் - மலர்ந்து மாண்பு நிறைந்து விடும்
வேலைகள் ஆயிர மாய் - வினவி வீதியில் தேடி வரும்
ஆலையின் சங் கொலி யில் - அலையாய்
ஆற்றல் அடர்ந்து வரும்
கல்லு நிலம் மலரும் - கழனி காட்டிற் கனிந்து வரும் கொல்லும் பசி பிணிகள் - அழிந்தே கொள்கை உயர்ந்து விடும்
வேளைக் குணவு வரும் - விளையும் வேதம் உதித்து வரும் வாழுந் துடிப்பு வரும் -வளமா வாஞ்சை தளிர்த்து வரும்
பொங்கும் ஒளிப் பிழம்பிற் - புதுமை பூத்துக் குலுங்கும் கையில் தங்கக் கரம் நீட்டித் - தயவாய்த் தாயின் கருணை வரும்
எங்கள் திருநாடு - நமதே என்ப துணர்ந் திடுவோம் சங்கு முழங் கிடுவோம் - மனதைத் தட்டி எழுப் பிடுவோம்
岛3

Page 29
தா பம்
*தில்லைச் சிவன்
அமிழ் திற்குத் தமிழ் என்று
பெயர் வந்ததா ? - இல்லை அழகிற்குத் தமிழ் என்று பெயர் வந்ததா? இவளுக்குத் தமிழ் ' என்று
பெயர் சொன்னதார் - இவள் இசைவிற்கு * அசை ' என்று
எனச் செய்த தேன் ? * இருளுக்கு உற' வென்று
குழல் சொன்ன தேன் ? - இவள் இதழுக்குத் தாமரை
மலர் செய்த தென் ? பொரு தற்கு என இரண்டு
மலை நின்றதா - இவள் புரு வத்தில் இணே என்று
சிலே சொன்ன தா ? மருளற்க என இந்த
விழி நின்றதா ? - என் மனதிற்குள் 5ோய் தந்து
அகல் கின்ற தேன் ? தெருவுற்று 5ட மாடுஞ்
சில யுள்ளதா ? - அதன் சிரிப்புக்குள் மரு தோன்றி கமழ் கின்ற தா ? அழகென்ப திவள் தன்னுள்
நிறை வுற்ற தா ? - இவள் * கில வென்ருரல் அழகிங்கு கிலை யுற்ற தேன் ? * மழை என்றும் இவளுக்கு
பெயர் உள்ளதோ - இவள் மருங் குற்ருல் மனதிற்குள்
குளிர் கின்ற தேன் ?

பயில் ஸ்ெற கவியின்பம்
இவள் உண்டதா ? - தளிர்ப் பரு வத்தின் கருவந்த
திரு வென்பதா ? அயில் உண்ட விழி ஒன்றே
எனெ வெல்லுமே - அவள் அடி கொஞ்ச அயல் வந்து
துயர் செய்வ தேன் ? சலி வுற்ற என துள்ளம்
தளிர் கொள்ளுமோ ? - அவள் சகை மின்னும் முகம் என்றன்
அசல் தங்கு மோ ? கலே பெற்ற வடிவின்ப
மலே உச்சியில் - உள்ளங் களி கொண்டு பனிப் போர்க்கு
அறை கூவு மோ ?
LI JULI 6ðir
என்றன் பாட்டை இசைத் துணர்ந் ததனற் பயனெய்த இந்தப் பரப்பி லோருயிர் தானு முண்டாமேல் அந்தோ வுயர்ந்த மலைதன் னுச்சிதனில் நின்றென் சொந்தப் பாட்டைச் சுவையோ டிசைக்க அருள்வாயே!
கொன்னிக் கொன்னிக் (ருாலே நடுங்கிப் பேசிடினும் என்றன் பேச்சா லிங்கோ ருயிரே யாகிடினும் நன்மை யடைந்தால் யானம் மலையின் உச்சியிடைச் சென்றே முழங்கச் செய்! என் பிறப்பாற் பயனெய்வேன்!
(பதினரும் நூற்ருண்டில் வாழ்ந்தவரெனக் கருதப்படும் பெயர றியா ஆங்கிலக் கவிஞர் ஒருவரின் கவிதையைத் தழுவியது.)

Page 30
சங்காரம்
- செய்து விடுவோம்!
முருகையன்
இசைத்தமிழ்
சங்காரம் செய்து விடுவோம்-சகோதரனே! சண்டாளர் செய்கை கொல்லுவோம்-ட்தகாத சங்காரம் செய்து. (பொய்யை
魏
எங்கே அசுரத்தனம் உண்டே அதை
அழிப்போம் அங்கே அமைதி வர ஆங்காரம் பங்கம் சங்காரம் செய்து. (செய்வோம்
கோணல் மதியினரின் கொடுமை
தொலைத்திடுவோம் கொல்லும் தொழிலர்களின் தொல்லை
A. கலைத்திடுவோம் பேணும் சமத்துவத்தின் பெற்றி நிலை நிறுத்தி பெண்மை நலம் இகழ்வோர் வெம்மை சங்காரம் செய்து. (தணித்திடுவோம்
சாதிகள் நூறு சொல்லி சாத்திரம் பேசுவோர் தங்கள் நலம் நினைந்து சண்டைகள்
மூட்டினுல் மோதிக் கிளர்ந்தெழுந்து முன்னேறும்
சக்தியால் மூர்க்கத் தனம் அனைத்தும் தீர்க்கச் சமர் சங்காரம் செய்து. தொடுப்போம்
வல்லான் வகுத்ததொன்றே வாய்க்கால்
எனப்பிறரை வாட்டும் வழக்கமெல்லாம் போட்டு
மிதித்திடுவோம் இல்லாமை இல்லை இனி - கல்லாமை
இல்லை என்னும் ஏற்றம் வருவதற்காம் LOstsib spb 35GBit Lumr tř சங்காரம் செய்து. (உண்டேல்
 

சரியான சாப்பாடில்லா மல், கிடைத்த சாப்பாடும் உடம்பில் ஒட்டாமல் வாடிப் போயிருந்த சிவகுமாரன் பீ. ஏ. திடீரென்று பூரித்துப் போனன். பூரித்தது அவனது உடம்பல்ல, என்னதான் சத்துள்ள உணவு களைத் திணித்தாலும் உடம்பு
பூரிப்பதற்குச் சில மாதங்களா
வது செல்லும். ஆனல் உள்ளம்
அப்படியல்லவே. ஒரு நொடியி
லேயே அது பொங்கிப் பூரித்து விடுகிறது! கடந்த இரண்டு வருடங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாய் மெலிந்து நலிந்து செத்துக் கொண்டிருந்த சிவ குமாரனுடைய உள்ளம் இன்று திடீரென்று உயிரின் முழுப் பொலிவையும் பெற்றுவிட்டது.
ஆறு வருடங்களுக்கு முன் ஞல் பல்கலைக் படிப்பதற்கு இடம் கிடைத்துச் சென்ற போது, தன்னுடைய
வாழ்க்கையே உயர்ந்து விட்ட
தாக அவன் நினைத்தான். நாலே நாலு வருடங்கள் என்ன கஷ் டப்பட்டும் படித்து முடித்து விட்டால், இந்தச் சமூகத்தில் தானும் ஒரு சிறந்த மனிதனுக வாழலாம் என்று அவன் கனவு கண் டான். கஷ்டமென்ருல் சாதாரண கஷ்டமா? அந்த
கழகத்தில்
தகுதி
நான்கு வருடங்களும் அவனைச் சாப்பிட்டே விட்டன.
தகப் பனருடைய சிறு சம்பளதில் குடும்பம் நடக்குமென்றும்,
தங்களுக்கிருந்த ஒரே ஒரு வீடு வளவை ஈடுவைத்து கடன் வாங் கிப் படிப்பதென்றும் ஏற்பாடு. படிப்பு முடிந்ததும் உடனே வேலைகிடைக்கும்; வெகு சீக்கி ரத்தில் கடனைத் தீர்த்து விட லாம்; அக்காவின் சீதனமாகக் காத்துக்கிடக்கும் அந்த வீடு வள வையும், வேண்டுமானல் இன்னு ம் பணத்தையும் கொடுத்து அக் காவை நல்ல இடத்திலே - அந்த இராமநாதனுக்கே - திருமணம் செய்து வைக்கலாம் - இப்படி யெல்லாம் ஒரு ஒழுங்கான திட்
டத்தோடுதான் சிவகுமாரன் பல்கலைக் கழகப் பிரவேசம் செய்தான். •ሱ
ஆனல், இரண்டாவது வரு டமே அவனுடைய திட்டத்தின் உச்சந்தலையில் பெரிய இடி விழுந்தது. சொற்ப சம்பாத் தியம் செய்து அதைக் கொண்டே குடும்பச் செலவை நடத்தி வந்த அவனுடைய தகப்பனுர், பத்து நாள் படுக்கையில் கிடந்து கண் ணைமூடிவிட்டார்.
சிவகுமாரனுக்கு எக்கச் சக் கமான நிலை. தகப்பனுர் இறந்த
57

Page 31
துக்கத்தையும் மிஞ்சி, அதற்கு மேலாக அவனுடைய பொரு ளாதார நெருக்கடி பெரும் பூதமாக அவனைக் கெளவி நின்
Digil .
படிப்பை நிறுத்தி விட லாமா என்றுகூடச் சிவகுமா ரன் யோசித்தான். தாயார் கூட, அப்படிச் செய்வதுதான் நல்லதோ என்று எண்ணினுள். அவளுக்கு மகளைப்பற்றிய கவலை. ஆனல் அக்காதான் ஒரே பிடி யாகத் தம்பி எப்படியும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்தினுள் படிப்பை நிறுத்தி விட்டாலுங்
கூட, பிரச்சனை தீரும் வழியைக்
காணுததால், சிவகுமாரனும் படிப்பைத் தொடர்ந்தான்.
அதன் பலன் அவனுடைய படிப்பு முடியுமுன்னரே ஈடு வைத்த வீட்டை விற்க வேண் டிய நிலைவந்தது. வீட்டை விற் றும் ஒன்றும் மிஞ்சவில்லை. கட னுக்கும் வட்டிக்கும், சிவகுமார னுடைய படிப்புக்கும் அது ஒரு மாதிரி ஈடுகொடுத்தது. அந்த மட்டிலாவது திருப்திப்பட வேண்டியதுதான்.
சிவகுமாரன் பி. ஏ. பட்டத் தோடு வீட்டுக்கு வந்தான். இரண்டு வருடங்களுக்கு முன் வீட்டுக்கு வந்தவன், இன்னமும் வீட்டிலேயே இருக்கிருன்.
அவன் மாத்திரமா, அவ னுடனும், அவனுக்கு முந்தியும், பிந்தியும் பல்கலைக்கழகத்திலி ருந்து வெளிவந்த இன்னும்
5&
எத்தனையோபேர் சும்மாதான்
இருக்கிருர்கள்.
ஆனல், அவனைப் போலவா!
அவனுடைய நிலையிலா!
எத்தனையோ நண்பர்கள் பொழுது போக்குக்காகவும், பெற்றேருடைய வற்புறுத்த லுக்காகவும் படித்தார்கள். சிவகுமாரனின் நண்பன் செல் வராசன் கூட அந்த வர்க்கத் தைச் சேர்ந்தவன்தான். அவ G01 60) E. --L 1. த கப் பணுருக்குப் பெரிய உத்தியோகம். படித்து பி. ஏ. பாஸ்பண்ணிவிட்டு, ஒரு வேலையும் இல்லாவிட்டாலும்,
சந்தோஷமாகத் தனது ஸ்கூட்
டரில் அவன் சுற்றிக்கொண்டு திரிகிருன். ஆணுலும் அவன் உண்மையில் நல்ல நண்பன்.
'நாள்மலர்' பத்திரிக்கையில் உதவி ஆசிரியர் வேலை ஒன்று இருக்கிறது. நல்ல சம்பளம், மாதம் ரூபா 350 ல் தொடங் கும். என்னை விண்ணப்பிக்கும் படி அப்பா சொன்னர். ஆனல் சிவா, எனக்கும் அந்த உதவி ஆசிரியர் வேலைக்கும் வெகு தூரம்; உனக்குத்தான் தோ தான வேலை. முயற்சித்துப் பார்" என்று அவன்தானே சொன்னன்! தனக்குத் தோ தாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வேலை என்று வருவதை யார்தான் விடுவார்கள்! அது வும் அவனுடைய அப்பா நினைத் தால் அந்த வேலை அநேகமாக அவனுக்குக் கிடைத்து விடும். அப்படியிருந்தும் அவன் என்

பஷடத்தை நினைத்தே விட்டுக் கொடுத்திருக்கிருன். அவன் ஒருவனுக்குத்தான் என்னைச் சரியாக விளங்கும்’- என்று நினைத்தபோது ஒடிப்போய் செல்வராசனைக் கட்டிப்பிடித் துக் குழற வேண்டும் போல ஒரு உணர்ச்சி தோன்றியது சிவகுமாரனுக்கு, தன் கண்களில் பணிந்த துளிகளை விரல் நுனி யால் துடைத்துவிட்டு, மெல் லச் சிரித்துச் கொண்டான். *செல்வராசன்தான் எவ்வளவு
பெரிய தியாகி!"
நாள்மலர் ஆசிரியர் எழு திய கடிதத்தை - எத்தனையோ தடவைகளுக்குப் பிறகு - மீண் டும் ஒரு முறை எடுத்துப் படி த்தான்.
"நான் நேரில் சொல்லிய படி கிடைத்த விண்ணப்பங்க ளுள் உங்களுடையதுதான் மிக வும் கிறந்ததாக இருக்கிறது. நான் நல்ல சிபார்சு செய்து முதலாளியிடம் அனுப்பியிருக் கிறேன். இந்த வாரத்திலேயே கடிதம் வரும். வருகிற முத லாம் தேதியிலிருந்து இங்கே வேலை செய்யவேண்டியிருக்கும். தயாராக இருங்கள்."
இயல்பாகவே இலக்கியத் தில் இருந்த ஆர்வத்தினல் சிறு கதை எழுதத் தொடங்கி, அந்தத் துறையில் ஒரு சிறப் பான இடத்தைப்பெற்று, அதன் மூலம் மாதந்தோறும் முப்பது, நாற்பது ரூபா கிடைக்கிற தென்ற காரணத் தின ல்
தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தது எவ்வளவு நல்லதா யிற்று. 'நாள்மலர்" வார இதழ் களில் அடிக்கடி சிவகுமாரனின் சிறுகதைகள் வெளி வந்து கொண்டிருந்தன. அதனுல்தான் செல்வராசன் நாள் மலரில் உதவி ஆசிரியர் வேலை இருக் கிறது என்று சொன்னதும் கொஞ்சம் நம்பிக்கையோடு விண்ணப்பத்தை அனுப்பினன். நேர்முகமாக இவனை அழைத்து நாள்மலர் ஆசிரியர் பரீட்சித் தபோது, அந்த நம்பிக்கை மிக வும் வளர்ந்தது. ஆசிரியருக்கு இவன்மீது நல்ல மதிப்பு இருந் தது தெரிந்தது. “பெரும்பாலும் உமக்குத்தான் இந்த வேலை கிடைக்குமென்று நம்புகிறேன். பிறகு கடிதம் எழுதுகிறேன்’ என்று சொல்லி அவனுடைய கதைகளுக்காகவும் அவனைப் பாராட்டி அனுப்பிய ஆசிரியர், சொன்னது போலவே கடிதம் எழுதிவிட்டர்,
சிவகுமாரன் பி. ஏ. திடீ ரென்று பொங்கிப்பூரித் துப் போனன்.
முதலாம் திகதியே உத்தி யோகம். மாதம் 350/- &שLiח" சம்பளம்!
லொட லொட சைக்கிளில் ஓடிக்கொண்டிருந்தவனுக்கு திடீ ரென்று பென்ஸ் கார் சவாரி கிடைத்தது போல இருந்தது சிவகுமாரனின் நிலைமை.
உ ல கில் வரட்சியையும், வெறுப்பையும், கசப்பையுமே
59

Page 32
கண்டு கொண்டிருந்தவனுக்கு முன்னுல், உலகம் செழிப்போடு, இன்முகத்தோடு சிரித்தது.
இனி என்ன!
அவனுக்கு வாழ்வு பிறந்து விட்டது! அவனுடைய அக்கா வுக்கு வாழ வழி பிறந்து விட் விட்டது! அம்மாவின் முகத் திலே இலட்சுமி குடிவந்து விட் டாள்!
எல்லாம், எல்லாம், எல் லாமே வந்து விட்டன!
'அக்காவுக்கும் இராமனத னுக்கும் சம்பந்தம் செய்யலா மென்று முன்பு ஒரு எண்ணம் இருந்தது. அவர்களுக்கு ஸ் சாடையாகக் காதல் இருந்த தென்று θη. Η - அவ ன் காதில் விழுந்ததுண்டு. காத லென்ன, காதல்! பல்கலைக் கழகத்துக்காதலா? தனியாகப் பதினைந்து நிமிடநேரம் பேசக்
கூட இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்திராது. சும்மா ஒரு விருப்பமாக்கும். என்ருலும் அக்காவுக்கு இராமநாதனைப் பிடிக்குமென்றல், எப்ப்டியும் அவரையே ஒழுங்கு செய்து விடவேண்டும்!
* தம்பி, இந் தா’ என்று அக்கா கொண்டு வந்து அவன் கையில் பணத்தைக் கொடுக் கிருள்.
"இது என்னக்கா? என்ன பணம்?"
60
செல்வச்
பணம்.
'அடைவு எடுக்கலாமென்று மாதம் மாதம் சேர்த்து வைத்த எண்பது ரூபா இருக் கிறது. அடைவு பிறகு எடுக்க
லாம். இப்போது உ ன க் கு வேலைக்குப் போக உடுப்புத் தான் வேணும். ஏ தாவ து வாங்கி வந்துவை.
966-6 பிறகு எடுக்கலாம்" W .
"இப்போது அவசரமில்லை அக்கா’ என்று முதலில் சொன் ஞலும், சிவகுமாரன் பணத்தை வாங்கிக் கொண்டான். முதல் மாதச் சம்பளத்திலேயே அடை வை எடுத்துவிடமுடியுமல்லவா! இப்போது அவனுக்கு உடுப்பு களும் மிக அவசியந்தான்.
"என்ன இருந்தாலும் அக் காவுக்குத்தான் என்னிடம் எவ் வளவு அன்பு முன்பு அப்பா இறந்தபோது தொடர்ந்து படிக்கும்படி வற்புறுத்தியவளும் அவள்தானே? - என்ன கஷ்டப் பட்டாலும் அக்காவின் விருப் பப்படி அந்த இராமனத னுக்கே."
Q)
இரண்டாவது நாள் அவ னுக்குக் கடிதம் வந்தது.
கடிதத்தைப் படித்து முடிப் பதற்குள் அவன் பார்வை மங் குகிறது; மனம் செத்தே விட் டது!
"...உங்கள் விண்ணப்பத் துக்கு நன்றி. குறித்த உதவி ஆசிரியர் பதவிக்கு வேறு ஒரு வரை எடுத்து விட்டோம்.'

கூடவே இன்னும் இரு கடி தங்கள், கை பிரிக்கிறது. பார்க்கிறது.
நாள்மலர் ஆசிரியர் எழுதி யிருக்கிருர்:
". . . . . . நான் மிகவும் வருந்து கிறேன். முதலாளிக்கு மிக வேண்டிய ஒருவருக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்ஏற்பட்டு விட்டது."
மூன்ருவது கடிதம் செல் வராசன் எழுதியிருக்கிருன்.
". . . . . . நான் விண்ணப்பிக்கா மலிருக்கவும், அப்பா அந்த உதவி ஆசிரியர் வேலையை எனக்கு வாங்கிக் கொடுத் திருக்கிருர், நான் என்ன செய் வேன்? மன்னித்துக்கொள்."
கடிதங்களை மேசை லாச்சி யுள் போட்டு விட்டு, மேசை மீது தலையைப் போட்டுக் கிடக் கிருன் சிவகுமாரன்.
'சிவா’ படித்தால் மட்டும் போதுமா? பட்டம் வாங்கி
கண்
விட்டாலும் போதுமா? அந்த வேலையைத் திறம்படச் செய்ய இந்தத் தேசத்தில் நீதான் ஏற் றவன் என்ற நிலை இருந்தாலும் போதுமா? ஐயோ பாவம்; மிக வும் கஷ்டப்படுகிருய். உனக்கு ஒரு வேலை மிகமிக அவசியம் என்ற நிலையில் நீ இருந்தா லுங்கூடப் போதுமா?
'சிவா, அதற்கு வேறு தகு திகளும் வேண்டும். அது செல் வராசனுக்கு இருக் கிற து. உனக்கு இல்லையே! உனக்கு இல்லையே! உனக்கு இல்லையே!
"உனக்கு ஒன்றும் இல்லை!"
அவனுடைய உள் ள ம் செத்து விட்டது,
உடம்பு
அது மெதுவாகத் தலை யை நிமிர்த்தி எழும்பி யாருக் கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறித் தெருவில் நடக்கிறது.
எங்கே போகிறதோ!
ᎧᎧ©
உயிர்த்தியாகம் செய்வதற்கு ஒரு இலட்சியம் இருந்தால் மனிதன் மரணத்தையும் திரணமாக மதிப்பான். இலட்சியந்தான் மனிதனுக்கு வலு வைத் தருகின்றது. நியாயத்திற்காகத்தான் போரா டுகின்ருேம் என்ற தெளிவு இருந்தால் துன்பமில் லாமலே இறக்க முடியும். இவ்வாறுதான் இலட் சிய புருஷர்கள் உதிக்கின்றர்கள்.
61

Page 33
புளியங் கொம்பு
மணியடிக்கிறது. எங்கும் செருப் பொலிகள். ** என்ன பிள்ளை' ஆசிரியை கமலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிருள். 'குழந்தைக்கு வரு த்தம் கடுமை யென்ருர்களே, தேவையென்றல் இரண்டு நாள் லீவு எடுமன்”
தலைவியின் குரலில் ஒர் தவி ப்பு. தனக்குப் பயந்துதான் ஆசி ரியை கமலா வரமுடியாத சந் தர்ப்பத்திலும் கல்லூரிக்கு வரு கிருளே! உலகம் தன்னை அரக்கி என்றல்லவா கூறப்போகின்றது என்ற மன உளைச்சல்,
"பரவாயில்லை; தகப்பன் வந்து நிற்கிருர், காலையில் 1010 ரில் காய்ச்சல் இறங்கியிருக்கி றது. என்ருலும் அடிக்கடி ஏறிக் காய்கிறது’ குரலில் GFIT5 இழை ஓடினலும் முகத்தில் பணிவோடு வலிந்திழுத்த சிரிப் புக் காணப்படுகிறது.
**வகுப்புக்கு வேலையைக் கொடுத்துவிட்டுப் போம். நான் கவனிக்கிறேன்?? தலைவியின்
குரல் எவ்வளவுக்குக் கணியமுடி யுமோ அவ்வளவுக்குக் கணிகி fDSl
**தாங்ஸ். காய்ச்சல் கூடினல் டெலிபோன் பண்ணுவார்கள். அப்போ பார்ப்போம்.' நன்றி கண்களில் மின்னுகிறது.
6盛
“குறமகள்'
இன்னமும் ஒருபடிகீழ் இறங்
கித் தோழமை கொண்டாட வேண்டுமென்று உள்ளம் விழைந் தாலும், அதிகார பீடம் தந் நிலையை உணர்த்திச் சுண்டியிழுக் கிறது. வேறு அலுவல்களில் கவ னம் செலுத்துவது போல் தலை யைத் திருப்பிக்கொண்டே எதிர் ப்புறத்தில் நடக்கிருர் அதிபர்.
ஒருகணம் தயங்கிய கால் களை இழுத்துக் கொண்டே வகுப் பறைகளை நோக்கி நடக்கிருள்
50 60 fTt
“ஹலோ, மிஸஸ் நாதன்! குழந்தைக்கு சீரியஸ் என்று மிஸஸ் சின்ன சொன்னதே! பொய்யா? நாங்கள் மத்தியா னம் வந்து பார்க்கலா மென்றல் லவா இருந்தோம்’ இரு ஆசிரி யைகள் ஆவலோடு வழிமறிக் கிருர்கள். மிஸஸ் சின்னவும் வரு கிருள்.
** காலையில் கொஞ்சம் குறைவு. இனிப்படியும் போலத் தெரிகிறது. அவரும் மெயிலில் வந்திட்டார். இரண்டு பேரும் நின்று என்ன செய்கிறது? அது தான் வந்திட்டேன் " அவள் கால்கள் தொடர்ந்து நடக்கின் றன. அதிசயப் பார்வைகள் அவளைத் தொடர்கின்றன. மீண் டும் பார்வைகள் சந்தித்தபோது மின்னல் வேகத்தில் ஒரு வம்புத் தனம் தோன்றுகின்றது.

** அப்பாடி! குழந்தை மூடின கண் திறக்காமல் கிடக்குது என் கண்ணுலேயே கண்டேன். கொஞ் சம் குறைவாம் குறைவு”
* ஒரு வேளை அதிபரிடம் லீவு கேட்கப் பயப்படுகிதோ "
** நல்ல பயம்! அ வ வே போகச் சொன்னுவே இப்போ'
** அதுக்கென்ன, நி ன் று பார்க்கிறதுக்கு ஒரு சோலி சுறட் டில்லாத சிறியதாய், தாங்கிப் பிடிக்க மிஸ்டர் நாதன். கவலை யும் பொறுப்புமில்லைத்தானே!"
*" ஆஸ்பத்திரியிலும் பார்க் கப் பள்ளிக்கூடத்தில் நிம்மதி கூடத்தானே? ?"
என்ருலும் பாசம் கூடவா
இல்லை!"
அவர் களும் சாதாரணப்  ெப ண் க ள் தானே! பேசிக் கொண்டே வகுப்புகளில் நுழை கின்றனர்.
இரண்டாம் மணியடிக்கிறது,
கல்லூரிக் கீதம் ஒலிபரப்பப் படுகின்றது.
கமலாவின் வகுப்பறையில் முப்பத்தைந்து மாண வி க ள். அவர்களுள் இரு பத் தெட் டு மாணவிகள் ஜி. ஸி. இ. ப்பரீட் சைக்கு விண்ணப்பம் அனுப்பி விட்டார்கள். பள்ளி வாழ்க்கை யின் எல்லை. அவர்களின் எதிர் கால வாழ்க்கையையே நிர்ண
யிக்கப் போகும் காலம். நல்ல உத்தியோகம் - படிப்பு அல்லது நல்ல உத்தியோகமுள்ள கண வன் இரண்டையும் ஒரளவு தீர் மானிக்கக் கூடிய பரபரப்பான சூழ்நிலை. பத்துப் பதினெரு வரு டப் பள்ளி வாழ்க்கையின் பலா பலனைக் காணத்துடிக்கும் ' உள்
ளங்கள்.
" ரீச்சர், நீங்கள் வராதது எங்களுக்குப் பெரிய " டல்லாக இருந்தது"
வ ரு த் த
*" குழந்தைக்கு மென்று சொன்னுர்களே
*" நீங்கள் காட்டி விட்ட வேலையெல்லாம் முடித்து விட் GLITb, rifjfri ””
ரீச்சர்; யோகாவும் ஜெயா வும் "பொட்ணிப்பாடம் முழுவ தும் "ஹோம் வேக்" செய்யா மல் எழும்பிநின்றவை. உங்கடை செல்லத்தாலைதான் நாங்கள் தங் களை மதிக்கிற தில்லை யென்று பொட்ணி ரீச்சர் ஏசினவ"இரு மாணவிகளும் எழுந்து மிகவருத் தத்தோடு தலை குனிந்து நிற்கின் றனர்.
கமலாவின் முக த் தி ல் வேதனை பரவுகிறது.
'லட்சுமி, எழும்பும். ரீச்சர் அப்படிச்சொன்னுலும் நீர் அதை எனக்குச் சொல்லலாமா?"
எழும்புகிருள் லட்சுமி, தலை குணிகிறது. ' வெரி சொறி, ரீச் சர் ' ஆனல் முகத்தில் வருந்து
63

Page 34
கின்ற உணர்ச்சியைவிட நடிப் புத்தான் பிரதிபலிக்கின்றது.
" சரி தனிமையாகப் பிறகு சந்தித்துக் கொள்ளலாம்" என எண்ணுகிருள் கமலா,
*" கண்ணனுக்கு இப்போ எப்படி ரீச்சர்? நேற்றுக்கடுமை யென்று சொன்னர்களே. நீங் கள் வரமாட்டீர்களாக்கும் என நினைத்தோம்’
கமலா கனிவோடு அவர்க ளைப் பார்க்கிருள்.
** இப்போ பரவாயில்லை. நீங்களும் என் பிள்ளைகள்தானே என்று ஓடி வந்திட்டேன்’
பெருமிதங்கலந்த புன்னகை வகுப்பி ல் பரிமாறப்படுகிறது. தொடர்ந்து ஓர் நினைவும் ஒடுகி றது. காட்சி விரிகிறது. கல்லூரி யின் ஆபீஸ் அறை அதிபரின் முன் இரண்டொரு ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சி இதழுக் குக் கை யொ ப் ப ம் வாங்கிக் கொண்டிருக்கிருர்கள்.
** என்ன வகுப்பில் பிள்ளை களோடு வீட்டுக்கதை கதைக் கிறீர்களாமே?
மெளனம் நிலவுகிறது.
* பச்சை மிளகாய் இல்லை உப்பில்லை என்ரு" என்று நினைக் கிறது கமலாவின் உள்ளம்.
"பா ட ங் க ள் நடாத்தும்
போது, உதாரணக் க  ைத க ள் சொல்லும்போது, சாதாரண
64
வீட்டுச் சூழ்நிலைச்சம்பவங்களைச் சொல்லித்தானே மாணவருக்கு அறிவுறுத்தவேண்டும்’ எ ன் று மெலிந்த குரலில் முணுமுணுக் கிருர் ஓர் ஆசிரியை.
அதிபர் மனம் விட்டுச் சிரிக் கிருர்,
ஆசிரியருக்கும் மாணவருக்கு மிடையே ஒரு தகர்க்க முடியாத வேலியிருக்கவேண்டும். கடவுளு க்கு அ டு த் த படியாகத் தாம் வைத்து எண்ணப்பட வேண்டும். என்று விரும்பும் ஒரு சார் ஆசிரி யர்கள் மாணவிகள் தம்  ைம க் கண்டதும் சிங்கம் புலியைக் கண் டதுபோல் ஓடி ஒ விரி வ  ைத க் கண்டு திருப்தியுறுவார்கள். அப் படிப்பட்டவர்கள் ".........- •
மாணவருடன் கலந்துரை யாடி அவர்கள் கஷ்ட நஷ்டத் தையறிந்து தாயாக - சகோதரி யாக - வேண்டிய விட த் துத் தோழியாக, குறிப்பாக பாரதி யாரின் நண்பனுய் மந்திரியாய் நல்லாசிரியணுய் . என்பது போல வாழ வேண்டுமென விரும் பும் மற்ருெரு சார் ஆசிரியர்மீது மாணவிகள் காட்டும் விசே ட அன்பைக்கண்டு பொருமையுற் றுத் தம் பாரம் பரியத்துக்குப் பங்கம் வந்ததேயென்று அதிப ரிடம் வைத்த திரி அது.
ஆனல் ஆசிரியரின் வேலை திருப்திகரமாக இருக்குமட்டும் அதிபரிடம் அந்தத் திரி லேசில் புகைக்காது. அந்தமட்டில் நன்றி.

ஒவ்வொரு மா ன வி யி ன் வீட்டு நிலைபரத்தை சூழலை அறி ந்து, அவளது கல்வி பாதிக்கப்
8 IG ல்லது ''' டாம் சீசர் முதுவேனிற் பருவ
வசதிக்கட்டணம் வசூலிக்கவேண் டிய நிலையையோ தெரிய வேண் டிய ஆசிரியர், வீட்டுக் கதைகள் கதைக்க முடி யா ம ல் இருக்க லாமா? அது மாத்திரமல்ல, மாணவிகளிடமிருந்து நம்பிக்கை யையும் அன்பையும் வளர்ப்ப தற்காக **உங்கள் குழந்தைக்கு என்ன பெயர்? இப்போ நடப் பாளா? உங்களைத் தியேட்டரில் கண்டேனே, ரீச்சர். ' போன்ற சிறு அன்புக் கேள்விகளுக்குக் கூடப் பதிலளிக்கக் கூடாதா? அது வீட்டுக் கதையாக இருந் தாலும்கூட அதிலும் குமரிப் பரு வத்து மாணவிகள் - தம்மனந் திறந்து நம்பிக்கையுடன் தங்கள் பிரச்சனைகளைச் சிக்கல்களை ஆசி ரியருடன் கலந்துரையாடுவதற் குச் சந்தர்ப்பமளிப்பதற்காக, அவர்கள் உரிமையுடன் கேட்கும் கேள்விகளுக்கு - அது அதிகப் பிர சங்கித் தனமாக இருந்தாலும் கூட, ஏதோ சொல்லிச் சமா ளிக்கத்தானே வேண்டும். கேட்ட கேள்விக்குப் பதில் கிடையாமல் அந்த அன்புள்ளங்கள்
வதை சகிக்க முடியுமா?
சாம்பு
பாடம் தொடங்குவதற்கு மூன்றும் மணியடிக்கிறது. சிந் தனை யறுகிறது.
** இன்று கைகேயி சூழ்வி னைப் படலத்தில் "தசரதன் துய ரம் பொழிப்புரை கேட்கிறது 守学g庁"" *Kr».
குசுப்பு
மாணவியரிடையே சிறு குசு
:
** இன்றைக்கு அது வேண்
வர்ணனை படிப்போம்” பலதலை கள் சேர்ந்தாடுகின்றன.
** அது நாளைய பாடமல் லவா? என்ருலும் “முதுவேனிற் பருவம் படிக்க விரும்புவோர் கரங்களை உயர்த்துங்கள்?"
கண்கள் பேசுகின்றன. ஒன் றும் பாக்கியில்லாமல் எல் லாக்கரங்களும் உயர்கின்றன. முகபாவங்கள் உள்ளதை அறி விக்கின்றன.
க ம லா வின் உள்ள ம் நெகிழ்ந்து கசிகிறது.
ஆசிரியர் தான் வகுப்பு நடத்தும் போது மனேதத்து வத்தை அனுட்டித்து நடத்த வேண்டுமென்ருல் மாணவிகள் அவர்களையும் விஞ்சிவிட்டார் களே!
இத்தனை அன்புள்ளங்களும், "தசரதன் துயரத்தில் ஒன்றிக் குழந்தையின் நினைவால் ஆசிரி யையின் முகத்தில் ஒரு துயரக் கோடும் பரவக்கூடாதென்று முனை ந் து நிற்கின்றனவே. உணர்ச்சியை உள் ளடக் கி க் கொண்டே?
** சரி இது சனநாயக உலக மல்லவா. பாமா! முதலில் முது வேனிற் பருவவர்ணனையை இய ற்றிய் முகாந்தரம் சதாசிவ ஐய ரைப்பற்றிச் சொல்லும் பார்ப் Gutub. ””
65

Page 35
பாடமும் ஆசிரியரும் மாண வரும் ஒன்றி விடுகிருர்கள்.
வகுப்பு முடிய மணியடிக்கி றது.
கமலா எழுந்துநிற்கிருள்", * தாங்க்யூ ரீச்சர்"
நல்ல வேளை ரீச்சர்! நாங் கள் பயந்துவிட்டோம். இந்தத் தவணைதானே இரண்டு வருடப் படிப்பையும் திருப்பிப் படிக்க வேண்டும். நீங்க ள் வராவிட் டால் நாங்கள் குண்டுதான். பிறகு பள்ளிப் படிப்பும் போ, எல்லாம் போ. வீட்டிலிருந்து கொண்டு.”
*"நாளெண்ண வேண்டியது தான்" என்கிருள் ஒரு துடுக்குக் காரி. சிரிப்பலை எழுகிறது.
உள்ளூர ரசித்தாலும், அந் தப்பகிடி தனக்குப் பிடிக்கவில்லை என்பதைக்காட்ட ஒரு கோபப் பார்வையைச் சிந்திவிட்டு" என் ருலும் மன்னிக் கப்படுகிறது" என்ற அர்த்தம் தொனிக்க முறு வலிக்கிருள் கமலா,
"ரீச்சர், பிள்ளைக்குச் சுகம் வர வேண்டுமென்று காலைமை கும்பிட்டனன். பின்னேரம் பிள்
ளையாருக்கு ஒரு தேங்காய் உடை
ப்பன்**
"ரீச்சர் நானும் மன்ருடின ஞன். பிறகு ஒரு செபமா சொல்லுவேன்"
எத்தனை நம்பிக்கை அந்த முகங்களில்
ஆசிரியையின் மன அமை திக்காக ஆஸ்பத்திரியில் படுக் கையிலிருக்கும் குழந்தை மீது நம்பிக்கை. குழந்தையின் சுக நலனுக்கு தங்கள் வேண்டுதல்
மீது நம்பிக்கை. வேண்டுதல்கள்
66
நிறைவேற்றப்படுமென்று ஆண் டவன்மீது நம்பிக்கை. எல்லாவற் றிற்கும் மேலாகத் தம் பரீட் சையின் பெறுபேற்றிற்கு ஆசி ரியை மீது நம்பிக்கை. பரீட்சை யின் எட்டுப் பா ட ங் களு ஸ் நான்கு பாடங்களுக்குக் கம லாவே ஆசிரியர். அவர்களின் பெறு பேற்றின் நயநட்டத்தில் பெரும் பங்கு பெற வேண்டிய வள் அவளே. அந்த இளம் உள்
ளங்களின் நம்பிக்கைக்குத் துரோ
கம் செய்யக்கூடாது என்ற ஒரு எண்ணமே அவளைக் கல்லூரிக் குத் துரத்தியடித்தது என்பதை மற்றவர்கள் அறியாதவரை அது புரியாத புதிராகத்தான் இருக் கும். இத்தனை உள்ளங்களின் மொத்த நம்பிக்கையே ஒரு பல மான சக்தியாக அமைந்து சிதை யில் கிடக்கும் பிணத்தைக் கூட உயிர் பெற வைத்திடுமே!
அந்த நம்பிக்கையை உறுதி
கோலாகக் கொண்டு கரும்பல கையில் ஒடுகிறது க ம லா வின்
6) is
a x b = ab
a + b = a + big, (69d)
ax b = a Xb g6 GT 6är இருக்கக் கூடாது ஏன் ab ஆக வேண்டும். அது வும் ஒருவர் மீது வைத்தநம்பிக் கையே என ஒடுகிறது சிந் தன.
டெலிபோன் மணியடிக்கும்
போதெல்லாம் பரபரப்புடன்
றிசீவரைத் தூக்குகிறது அதி பரின் கை:
ஆனல் கமலாவுக்கு டெலி போன் அழைப்பு வரவேயில்லை!

சிரிக்கானே,
" |
-சசி LUEryri?
இருபத்தோராவது நூற்ருண்டில் ஒரு நாள் சந்திரமண்டலத் தில் விசேஷமாயமைக்கப்பட்ட மண்டபம் விழாக்கோலம் பூண்டு திகழ, பூமியின் பல்வேறு பாகங்களிலுமிருந்து திரண்டிருந்த புகழ் பெற்ற விஞ்ஞானிகள் ஒரு குடும்பமேபோன்று கூடியிருக்கின் றனர். அது ஒரு மாநாடு.
விஞ்ஞானத்தின் சாதனைகள் குறித்துப் பலரும் பெருமை யுடன் பேசினர். அப்போது ஒரு பிரதிநிதி எழுந்து விஞ்ஞானம் இன்னும் சாதிக்க வேண்டியுள்ள பிரச்சினைகள் பற்றி விளக்கினர். மக்கள் வெற்றி கொள்ள வேண்டிய கிரக மண்டலங்கள் பற்றி அவர் விளக்கினர்.
சந்திரமண்டலத்துக்கும் பூமிக்குமிடையேயான போக்குவ ரத்தை இலகுவாக்குவதன் அவசியம் பற்றிக் கூறிய ஒரு பிரதி நிதி பூமண்டலத்துக்கும் சந்திரமண்டலத்துக்கும் ஒரு பாலம் அமைக்க வேண்டுமென வற்புறுத்தினர்.
இந்தக் கட்டத்தில் இடைமறித்துப் பேசிய ஒரு விஞ்ஞானி முன்னே பிரஸ்தாபிக்கப்பட்ட பிரச்னைகள் யாவும் விஞ்ஞானத் தைப் பொறுத்தவரையில் பிரச்னைகளே அல்ல வென்றும் மண்டல அரசுகள் அவற்றை வெகு அமைதியாகவும் 90). மாகவும் தீர்த்துவிட முடியுமென்றும் கூறி, இம்மாநாடு உருப் படியான யோசனையெதுவும் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். W
"கடவுளைச் சிருஷ்டிப்பதென நாம் இத்தினத்தில் தீர்மானிப் பது ஒரு பயனுள்ள நல்ல யோசனையாயிருக்கும் என்பது என் அபிப் பிராயம்" என்று ஒரு பிரேரணையை அவர் மாநாட்டில் சமர்ப்பித் தார். . . . .
கூட்டத்தில் ஒரே ஆரவாரம். "ஆஹா, ஆஹா' என எல் லோரும் கூத்தாடினர். ஒரே குரலில் அவர்கள் கோஷமிட்டனர்:
67

Page 36
"ஆம், நாம் கடவுளைச் சிருஷ்டிப்போம்.' இலங்கை நேரப் படி சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு மாநாடு கலைந்தது.
QQDO
விடிந்ததும் வெளியான ஒரு தமிழுலகத் தினசரி இம்மாநாட் டுச் செய்திகளைத் தனது முதற்பக்கத்தில் கொட்டை எழுத்துக் களில் பிரசுரித்திருந்தது. அது தீட்டியிருந்த தலையங்கத்தின் ஒரு பகுதி வருமாறு:-
'சந்திரமண்டலத்தில் விஞ்ஞானிகள் மாநாடு செய்த முடிவு அறிந்து தமிழ் கூறும் நல்லுலகம் சிரிக்கிறது. ஆயிரமாயிரம் ஆண் டுகளின் முன்னே தமிழன் ஆயிரமாயிரம் கடவுள்களைப் 160-gigi) விட்ட பின்னே, சந்திரமண்டல மாநாட்டு முடிவு தமிழனைச் சிரிக்கவைக்காதா?”
நம்பிக்கையாகத் தொடர்ந்து வெளிவந்து
கொண்டேயிருக்கும்.
་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཀན་པ་བ་མང་ பிரபல சிறுகதை வி எழுத்தாளர்கள், கவி ஞர்கள், விமர்சகர்கள் தொடர்ந்து எழுது வார்கள். நமது தாய்த் திரு நாடான இலங்கை யிலும் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், ‘கவி ஞர்கள், கலைஞர்கள் இருக்கிருர்கள் GT6ir பதைப் பெருமையுடன் உலகிற்கு நெஞ்சு - e a ச நிமிர்த்தி உரைக்கும் 60. கிஸ்தூரிபார்ஜி lസൃ00ണ്ണ0 : த்துடன் : .assa R ங்கப்பட்ட மாத இதழ் مسح صدر
தனிப்பிரதி: 30 சதம் வருடசந்தா: 400 இந்த இதழுடன் சந்தா முடிந்தவர்கள் தயவுசெய்து உடனடியாகப் புதுப்பித்துக்கொள்ளவும்.
68
 

.ir ஒரு சரியான திடுமலிக் குமரிه له پ9 است. وی ۰ص است ریاست . குண்டுக் கோப்பை கணியம் நல்ல சோக்கான வெள்ளைப் பொட்டை எடி அறுவாள் ஒரு நல்ல சட்டையாப் பாத்துப் போட்டுக் கொண்டு ஒரு ஒதுக்கம் பதுக்கமா நில்லாம, இந்த நட்டுக்கு நடுச் சந்தியில வந்து “ஈ” யெண்டு இளிச்சுப் பிடிச்சுக்- கொண்டு அப் புடி என்ன கண்டறியாத விடுப்புப்பாக் @gi...... P −
"போச்சடா, ஆரோ ஒரு ஆள் அவசர O மாக வாருன். வாறவனும் இள வட்டம் ΙΤ ́ தான். •
"உவள் ஒரு கேடு கெட்ட நாய்ப் O பிற விதான். சிரிச்சமணியம் அவனை த் 25 தேடியல்லே போருள்? படு தோறை.
"பேந்தும்பார், சனியன் முப்பத்திரண்டு பல் லையும் காட்டி இ விக் கிற விறுத்தத்தை? மூதேவி, போற வாறவங்களுக் கெல்லாம் வாயத் துறந்து காட்டி, “ஈ” யெண்டு இழிச்சுப் பிடிக்கிற பேய்ச் சனியன். O மரியாம்பிள்ளை அண்ணர் மனுஷனுய் d5 நிற் க வில் லை; அவர் நெஞ்சு கெந்தகித்
ჭნჭეl•
அப்போது.
'அய்யா துரோய், ஏதாச்சும் தாங் கையா’’ என்ற குரல் கேட்கவே மரியாம் d பிள்ளை அண்ணன் திரும்பிப் பார்த்தார்,
அந்தத் * து  ைர அசட்டையாக, சட்டைப்பைக்குள் கையை விட்டுத் துழாவி, சில சில்லறைகளை எடுத்து அவள் குவளைக் ன்கயில் எற்றி எறிந்துவிட்டு ‘விர் ரென நடந்தார். O அண்ணனின் தேகம் எகிறியது. 6O. ** அச்சாத் தொரை; நீங்க நல்லாயிருக்
கோணும் தொரை'
'சிச்சீ! இவளின்ர தொழில் இதுதானு?* இதுவரை தொண்டைக் குழியில் ஊனம் வழியக் கண்குத்தி "அவ'வைப் பார்த்த o மரியாம்பிள்ளை அண்ணருக்கு, அவ இப்படி எஸ். அகஸ்தியர் ஏந்தி வாங்கும் காட்சி மிளகாய்ப் பொடி
தூவிற்று,
69

Page 37
மரியாம்பிள்ளை அண்ணருக்கு இது முகத்தில் 'பளார் அடி. "சடாரென்று அங்கிருந்து அகன் முர். இருப்பினும் அண்ணனுக்கு அப்பால் எந்த ஒரு வேலையும் நேர் சீராக ஓடவில்லை. அனற் கொதியால் உந்திய அவர் மேனி யில் இப்போ பெரும் சோர்வு தட்டிற்று. அதனல் 'ஹாவ் டே லீவ்” போட்டுவிட்டு மத்தி
யானத்தோடு 'போடிங்"கிற்குத்
திரும்பினர்.
மரியாம்பிள்ளை அண்ணன் நம் மைப்போல ஒரு அசல் யாழ்ப் பாணி. மேலும், அவர் வலு கடுவலான மத விஸ்வாசி. துறை முகக் கப்பல்களில் கொழும் பிலே வேலை. சீவியம் முழுதும் *போடிங்'கில்தான். ஆள் தனிக் கட்டையல்ல; அதேவேளை அவர் பெண் கொள்ளாத இளந்தாரியு மல்ல. கலியாணம் செய்து பதி னைந்து பதினறு வருஷம். கட வுளே என்று அரை டசினுக்கு மேல் பெத்துப் பெருக்கிவிட் டார்; பெரிய குடும்பஸ்தர். பொடி பொட்டைகளாக மொத் தம் ஆறுக்கு அண்ணன் அப்பன். இந்த ஆறும்போக அவவுக்கு 'வயிறு அழிந்தது மூன்று. உருப் படியாகப் பார்த்தால் கணக்கு ஒன்பதாகிறது. அவ-அக்காவு மோ வருஷக் கொத்தி. இந்தக் கோசும் அவ பெறுமாதம். ‘ஏழு மாசத்தில ஆறு கடக்கப்படாது என்று நாலு பத்து வாப்பு மூப் புத் தெரிந்தவர்கள் எழுதியிருந் தார்கள். என்ருலும், அண்ணர் கடைசிவரை வைத்திருந்துவிட்டு
70
போன கிழமைதான் பெறு வுக்காக அவவை யாழ்ப்பாணத் தில் விட்டுவிட்டு வந்து கை யாறியிருக்கிருர்,
வந்து கால் ஆறவில்லை. அதற் கிடையில் இந்த உஷ்ணக்கூத்து. இந்த உஷ்ணம், அந்தப் போடிங் கின் ஐந்து ரூபாய்ச் சாக்குக் கட்டிலால் வந்ததோ அல்லது அவரோடு இருந்த தங்கராசா மாஸ்டரின் பழக்க வழக்கத் தால் ஏற்பட்ட தோஷம் என் பதையோ சொல்ல முடியாது. ஏனென்ருல் தங்கராசா மாஸ் டர் ஏதோ பள்ளிக்கூடச் சட் டம்பியல்ல, அவருக்கு இவர் "மாஸ்டர் அவ்வளவுதான் சங் கதி,
மரியாம்பிள்ளை அண் ண ன் மாசத்தின் முதல் வெள்ளிக் காரன்; ஒரே கோயிலும் ஜெப மும்தான், ஆளும் தானும் தன் பாடுமாயிருப்பவர். வலிய வம்பு க்கு இழுத்துப் பேசினலும் ஏனெ ன்றும் வாய்விட்டுக் கேளார். சாரைப் பாம்புபோல ஒரு வித் சோலி சுர்ட்டுக்குமே போக மாட்டார். ஒரு பரம சாது
இப்பேர்ப்பட்ட மரியாம் பிள்ளை அண்ணன்தான் இப்போ போடிங்கிற்கு வந்து அமைதி யாக இருக்க முடியாமல் அந் தரப்படுகிறர்; எல்லாம் கிளர்த்
தெழுந்த அந்தகார நில்ை"
"அப்போதை அவளை க் காணேக்க பட்ட ப் பகலா ப்

போச்சு. அப்பமட்டும் எப்பன் மைம்மல் பட்டிருந்தால் ஆளை வடிவாய் அமத்தியிருக்கலாம். எண்டாலும் இந்தக் கொழும் பாளவைக்கு எந்த நேரமெண்டி ருக்கே?" என்று ஒரு கணம் நினை வூறினர்.
மறுகணம் அவர் ஆ  ைச
இறல் பாய்ந்தது:
"இப்ப மருதானையிலயிருந்து வசு எடுத்து, கோ ட்  ைட ப் பொலிஸ்ரேசனுக்குப் பின்னல றங்கி, ஆசுப்பத்திரி ருேட் முச்
சந்தியில் ஏறின, அங்கினேக்க
அவளைக் ளெண்டா,
காணலாம். நிண்டா வாச்சுப்போம். s
உடனே வெளிக்கிட்டுப் போக "அவுக் கென்று உன் னி எழுந்தார். தாரி கிழுவந்தடி முறிந்த மாதிரிநொறுக் கிட்டது. * கோதாரியில போன நாரிப் பிடிப்பு இன்னும் விட்டபா டில்லை என்று மனம் வெம்ப, வெளியில் வந்தார்.
அப்படிக் "குஷி"யாக வரும் போது சொல் லி வைத்தாற் போல அன்றைக்கென்றுதான் யாழ்ப்பாணத்திலிருந்து "அவ' வுடைய கடிதமும் வந்தது.
அக் காவின் கடிதத்தைக் கண்டபோது அண்ணனின் இத யம் கலக்கத்தால் கூழ்முட்டை யாகி விட்டது.
* வயித்தில வாயில இருக் கிறவ என்ன பாடோ? தனது கட்டிய புருஷனுக்கென்று ஏதா
வது விசேஷமாக எழுதியிருப்பா
பிள்ளைப் பெறுவுக்கு முந் தியே லீவு போட்டுவிட்டு எல் லாப் பிள்ளைகளுக்கும் வீட்டுக் குப் போய் வருவது வழக்கம்: அப்படித்தான் அவ எழுதியி ருப்பா என்ற நினைப்பில் அதைப்
பிரித்து வாசித்தார். அண்ணன் எதிர் பார்த்தபடி தான் அவவும்
எழுதியிருந்தா,
அதிலே குருசு அடையாளம் உட்பட எழுதியிருந்த வெவ் வேறு தெய்வ வேண்டுதல்கள் போக, ** இஞ்ச ஆளணியில்லை. *நாள் சரக்கும். நேரகாலத் தோட வேண்ட வேணும். ஆன மட்ட, முந்தின பிள்ளைப் பெத் துகளுக்கு வந்து போனமாதிரி இந்தக் கோசும் வாருங்கோ " என்றுகண்டிருந்தது வாசகம்,
அவ அவரை நம்பித்தான்
அப்படி எழுதின. ஆனல், அண்
ணன் இந்தக்கோசு குந் த கம் பண்ணி, ** இப்ப லீவு கீவு எடுக்க ஏலாது. பிள்ளையை நல்ல சுகமா கப் பெற வேணுமெண்டு இஞ்ச கொழும்பு கொச்சிக்கடை அந் தோனியார் கோயிலுக்கு நான் நேந்து ஒரு கட்டு மொழுதிரி கொளுத்திறன். நீ ஒண்டுக்கும் யோசியாதை, அந்தோனியார் சுவும் தருவார். எல்லாத்துக்கும் பிறகு வாறன்’ என்று உடனே நாலு வரி எழுதி அனுப்பிவிட்டு, அவர் போக வேண்டிய ஸ்தல மாகிய கொழும்பு- கோட்டைக் குச் சட்டென்று கிளம்பினர்.
GL I Trygg மைம்மல் பட்டுப் பூமியும் கருகிக்கொண்டு வர,
அண்ணனும்கோட்டைச்சந்திக்கு
7.

Page 38
வந்துவிட்டார். அவரது துரதிர் ஷ்டம், சந்தியில் அவர்எதிர்பார் த்த அந்தப் பெட்டையைக்காண வில்லை.
அவர் முகம் தொட்டாற் சுருங்கி போல் சடாரென்று கும் பியது.
'பொக்கட்டுக்குள் போட்ட கைகள் தாமாகத் துழா வ, நாலா பக்கங்களும் சுழற்றிக்கொண்டு பெரிய ஒரு "துரை' போல, சாலை ஒரம் அங்கு மிங்குமாகக் கால்களை எறிந்து மெதுவாக நடந்துகொண்டிருந் தார்.
அ ச் சா , 96ft 600TG) 60l-til "அது இரண்டு நிமிஷத்தில் அங்கே வந்து பிரசன்னமாகி யது. ”
அண்ணன் தலை கால் தெரி
யாமல் பதறினர்.
ஆசை, நாணம், பயம்ஆகிய இடி மின்னல்களால் தாக்குண்டு, அவற்றைத் தன்னுள்ளே அட க்கி, கனலாய் எரிந்து தீ யும் உடற்கட்டை, கேவலம் ஒரு சாதாரண நாணத்தின் உள்ள டக்க நரம்புகளால் தாக்குப் பிடித்தபடி அவர் மறுபடியும் சுற்றிப்பார்த்தார்.
அறிந்த முகங்கள் அங்கே தென்படவில்லை.
இனி என்ன, யோகம்தான். யாரும் நின்ருல் கூட இனங் கண்டுகொள்ள முடியாத நல்ல செக்கல் பொழுது. கொட்டுக் குள் உயிர் ஊசலாடிக்கொண்டி ருக்க, அவராக வலிந்து அழை
72
கண்களைச்
த்ததென்பும் உறுதியும் ஒருவாறு அவரை ஆட்கொண்டன.
அப்பவும் ஒரு கணம் அவர் யோசனை பயங்கரமாகத் திசை திரும்பியது:
'காடையங்கள் ஆரெண்டா
லும் இந்த நேரம் நிண்டு இதைக்
கவனிச்சா..??
கிலுக்கட்டியாக ஆடும் உட லையும், வெட வெடத்துப் பதறி உதறி எடுக்கும் நெஞ்சையும் அவருடைய ஒரு அற்ப ஆசை” யானது உள்ளூர அவரை இராட் டினமாட்டி மாய்த்துக்கொண்
-gil.
அவ்வேளை யாராவது இனந் தெரியாமல் மெதுவாக வந்து ஒரு "டேய் போட்டால் ஆள் அப்படியே காலியாகிவிடுவார். அப்படி அண்ணன் அங்கே அங் கலாய்த்துக் கொண்டிருந்தார்.
சற்றுக் கொஞ்ச நேரம் சுண ங்கி, பின் பக்கம்ாகக் கழுத் தைத் திருகிப் பார்த்து விட்டு, "அவுக் கென்று " அ வ வுக்குக் கிட் டப் போய் நின்று, 'ஏய். ஏய். இஞ்ச வா - இப் பிடி வா’ என்று நாக் குளறி அவர் வாய் அழைக்க, சரீரமோ மிருதங்க ஆவர்தனம் செய்து ஒரு கிறுத்தா போட்டது.
** அய்யா தொரை, ஏதாச் சும் தாங்க தொரை ’ எ ன் று வழக்கம்போல் கேட்டுக்கையை
நீட்டினள்.
உடனே அண்ணன் வலு அந்
தர காரணுகினர்.

அண்ணன் எடுத்துக் கொடு த்த ஐந்து ரூபாய்க் "கரன்ஸி நோட்டையே அவ வெகு பவ் வியமாக வாங்கி, அதைச் சற்று உற்றுப் பார்த்து, பின் ஒரு ஐயக் கேள்வி எழுப்பி, வியப்பில் மூழ் கிய முகத்தோடு மெளனமாகச் சாரை போல் திரும்பின.
"தொரை சல்லியைப் பாக் காமத் தந்திட்டு முழுசுருரோ?" என்று நினைத்தவள், தி ரு ம் பி நின்று, " நீங்க, நல்லாயிருக் கோணும் தொரை ' என்ருள்.
அண்ணன் நிலத்தில் நிற்க வில்லை.
*" ஏய், இந்தா ஏய், இஞ்ச Glfr '
"சல்லியத் திருப்பி வாங்கி றத்துக்கோ?
தாமரை இதழ் மேல் குதி த்த நீரோட்டத்தில் மனம் தவி க்க, வெள்ளைக் கடதாசியில் தெறித்தமையாக அவ முகம் கறுத்தது.
** என்னது, பிட்றீங்களா? ?
நுனி விரலின் விளிம்பு நக த்தை, நாணிய முக வா யி ல் கோணி வைத்துக் கடித்தபடி திரும்பி வந்து சிரித்துக்கொண்ட அவள், அவர் முன்னல் இடுப் புக் குத்தி, ஒரு சள்ளைத் தாக் கில் நின்ருள்.
என்னைக் கூப்
அவள் பார்வையில் பெரும் பசி,
* உன்ர பேரென்ன? ??
ம். பேரோ? ?
* அவ ”வுக்கு வெட்கக் களிப் பில் சாடையாக முகம் சளித் தது. ஒட்டுக்குள்ளே உள் வாங் கியிழுக்கும் நத்தையாக விழிகள் மேலிட, வார்த்தைகள் பிணமா கின. த லை யை க் கவிழ்த்துக் கொண்டே, காற் பெருவிரலால் நிலத்தைச் சுரண்டிக் குழிபறித்த வண்ணம், " ஏன் தொரை பேர் கேக்கிறீங்க?’என்ரு, எடுப்பாக"
மரியாம்பிள்ளை அ ண் ண னுக்கு அப்போது "கிளிக்கென்று ஒரு அடி மின்னல் ஊசி ஊடுரு வுவதுபோல் பிரமை தட்டிற்றுச் ஆள் அந்தரமாகினர்:
*வேணும், சும்மா கேட்ட ஞன் ”
* என்னத்த கிறீங்க?"
அவ திமிறித் திமிறிச் சிரிக் கும்போது, முகத்தில் மத்தாப் பூக்கள் சொரிந்து கொண்டிருந் தன.
* நீ எங்க இருக்கிறனி?”
அய்யய்ய, இவற்ர ஆசை யைப் பாருங்களேன்?
அவ நினைவில் மிடுக்கு ஏறி, பரிகாசம் துள்ளியது.
வேணும்ங்’
" ஏன் தொரை, ஒங்களுக்கு * வேணிம் டா பேசாம அப்பு டியே வாறத்துக்கு, அங்கால ஏன் சும்மா, என்னத்தையோ எல்லாம் ஒப்பினைக்குக் கேக்கி
நீங்க?"
அவர் நோக்கத்தை அவ அறிந்துவிட்டா; விஷயம் மகா வெற்றி.
73

Page 39
அண்ணர் பறக்கச் செட்டை கட்டினர்.
* எங்க வர்றது? ” படு தீவிர எடுபிடியில் குருக் குத்திய அவவின் கேள்வியில், அண்ணர் தீய்ந்துபோய் நின்ருர், * அ ப் படீ ன் ன, வர்றிங் a;G36Trr?'
" ஓம்; வாறன்!" * அது சரி, எப்பன் நிலத் தில நில்லுங்க ?”
எடே பகுடி கூட விடுருளே’ அது, இடம் கண்ட வேளை மடம் பிடுங்கிற வேலை.
* ஹி. ஹி. ஹி.." பற்களெல்லாம் மல்லிகைப் பூக்களாகத் தெரிய அண்ணன் வாய் ஆ "வென்று அ க ன் று இளித்தது.
திடீரென்று அண்ணன் எதிர் பாராத ஒரு எரிசரப் பாணத் தைத் தொடுத்தாள்:
"தொரை,கலியாணம் செஞ் சனீங்களோ?
"ம். தொரை, வாய்க் குள்ள முட்டையா?"
** அங்...???
* கல்யாணம் செஞ்சனிங் களோ'ன்னு கேட்டேன்? ”
... இல். லியோம்!"
அசல் துரோகம்தான். ஆன லும், அண்ணன் இதிலே வலு துணிச்சல்காரன் என்பதை எப் படியோ பிரகடனமாக்கி விட் டார்.
“ “ Fif), வாங்க போவம் ” * கிண்ணென ஒரு எரி வெள் ளிக் கதிர் அவர் உடம்பில் அப்
74:
போது ஊடுருவி எரித்தது; கண் மூக்குத் தெரியவில்லை,
* வேகமாகக்கிளம்பிய புயல் தன்பாட்டுக்கு அடிந்து ஓய்ந்த பின்தான் அமைதி கொண்டுறை யும்.'
அண்ணனின் உவ மா ன ம் அசல்.
'அற நனைந்தவனுக்கு கூதல் என்ன கொடு கடி என்ன? என்று அவர் மனம் தீட்சுஷண்ய முற்றது.
ஒரு நாள் யாழ்ப்பாணத்தி லிருந்து அண்ணரின் பெண்சாதி
* யுடைய பிள்ளைப் பெறுவை அறி
வித்து அவருக்கு ஒரு தந்தி வந் தது. அந்த வருஷ லீவு கொழும் பிலே கழிந்துவிட்டதால், அவர் மெடிக்கலில்தான் யாழ்ப்பா ணம் போனர்,
போன இரண்டாம் நாளே யாழ்தேவியில் திரும்பி வந் து குதித்தார். வந்ததும் சிந்தனை யில் ஆழ்ந்தார்.
அக்க்ாவோ பெரும் நுணுக் கக்காறி. அதனல் அவ, "நான் செத்தாலும் என்ர புள்ளை ப் பெத்துக்கு தரும ஆசுப்பத்தி ரியை எட்டியும் பாக்கமாட் டேன்" என்று ஒரே பிடிவாத மாகச் சொல்லிவிட்டா. இதை அறிந்த அவ மாமிக்காறி, "ஏன டியாத்தை, எக்கணம் பேந்து ஏதேன் ஒரு வில்லங்கமெண் டால் பிறகு குத்தி மாயுறதோ? என்று விஷயத்தைக் கேட்ட போது, அதற்கு அக்கா, "ஆசுப் பத்திரிவளிய போன, ஆம்புளை டாக்குத்தர்மார் வந்து பாப்பி

னம், அது பெரிய கிலிசகேடு; மானம் மருவாதையான பொம் புளையள் சம்மதியாளவை. எனக் கும் அதுதான் கூச்சமாயிருக்கு’ என்று தனது "புருஷ பக்தி' யையும் பூசிக் காட்டிப் பெருமை கொண்டா,
அதன் நிமித்தம் வீட்டில் தான் பிள்ளைப் பெறுவும் நடந் தன. மரியாம்பிள்ளை அண்ணன் உண்மையில் வெறும் நோஞ்சல் தான். என்ருலும், அக்கா பெற்றெடுத்ததோ நல்ல ஆண்
இதனலும் மரியாம்பிள்ளை அண்ணருக்கு ஒரே யோசனை.
கிட்டத்தட்ட ஆறு மாதங் கள் கழிந்து, ஒரு நாள் குழந் தை சம்பந்தமாக அக்கா g?Ġ5 கடுதாசி எழுதியிருந்தா:
''. . . . . . . . . புள்ளைய மாதா கோ யில்ல-அடைக்கல ஆச்சியின்ரை காலடிக்குக் அவவின்ர சந்நிதியில வைச்சு "நாளுக்குச் சோறு தீத்த வேணும். ஆன்மட்ட, அதுக்குக் கட்டாயம் அல்லத் தட்டாமல் வந்திடுங்கோ?
இதற்கும் அண்ணர்
* மெடிக் கலில் தான் போனர்.
'பாவம், ஆறு gTOLp first LDrts என்ர முகம் காணுமல் தவிச் சிருந்தவர்"
அக்காவுக்குப் பரிவும் வாஞ் சையும் இரக்கமாகப் பரிண மித்தன; அ வ வாக வே,
* Lurr60) ul'h G3u urru all LG3unt?” என்று ஆசையுடன் கேட்டு வைத்தா,
கொண்டு போய்
அவ்வேளை அவர்தனக்குள்ளே, இது பாவத்துக்குத் துரோகம் செய்யப்படாது; செய் தா ல் அது பெரும் கறுமம்" என்று எண்ணிக்கொண்டு, கும் பி ப் போன தனது கை விரல்களைச் சாடையாகத் தூக்கிப் பார்த் தார்; அவருக்கு அருவருத்தது. க ட வா ய் க் கணுக்குகளோ பொருக்குவிட்டு, வெடித்து, புண்ணுகப் புரையோடிக் கிடந் தன. ஒரு தடவை காறித் துப்பிவிட்டு, பெண்சாதியைப் பரிதாபிம் நிறைந்த கண்களால் நுணுவினர்.
மனம் சஞ்சலப்பட, இருமல் வேறு வந்து குமைந்து தொல் லைப்படுத்திற்று. ஒருசாவாக
மூச்சைப்பிடித்து இருமியதால்
ஆள் நன்ருகக் களைத்துவிட்டார். பேசுவதற்கு வாயை விடாமல் இளைப்பு வேறு அவர் கோது நெஞ்சை உயர்த்தித் தாழ்த்தி யது.
"உதென்ன உந்தக் கை விர லெல்லாம் குண்டூறுமாதிரிப் பொருக்கி வெடிச்சிருக்கு?
அழுகின்ற பாவனையில் அக் காவிடம் வெடுத்துக் கிழம்பிய சந்தேக வின, அவர் இருதயத் தைக் கிழித்த பனங் கிழங்கில் அகப்பை கொண்டு சதை வறுகி எடுக்கும் நிலைக்குள்ளாக்கிற்று: அதற்கும் அண்ணர் ஒரு விளக் கம் கொடுத்தார்:
“ஒரு நாள் ராத்திரி கக்க சுக்குப் போக வாளிய எடுத் தன். எடுக்கேக்க, அவுக்கடி யெண நிலம் சறுக்கிப் போட்
- 70

Page 40
டுது. அந்தடியலா வாளியோட அடிச்சுக்கொண்டு மலாரடிச்சுக் கீழ விழேக்க, போணி ஒண் டு க்க கிடந்த நெருப்புத் தண்ணி தெறிச்சுக் கை முழுதும் பட்டிட்டுது?
அக்காவுக்குச் சொல் லி த் தீராத கவலை.
*நல்லவேளை, அது கண்ணில கிண்ணில பட்டிருந்தால்-ஏதோ கண்ணுக்க வாறதைப் புருவத் தோட வைச்சு அந்தோனியார் தான் காப்பாத்தியிருக்கிருர், என்ர மண் டா ட் டம் வீண் போகேல்ல" என்று அவ எண் ணயபோது, அக்காவின் இரு தயம் கரைந்தது; கண்கள் உரு கிக் கண்ணிராய்க் கொட்டின. "தேகத்தைக் கீ க த்  ைத க் கவனிக்கிறேல்ல. சுவமில்லாம இருந்தாலும் "ஒவல் ரைம்"
(“OVERTIME” øya, Gutrução இப்படி மறுபிறவி எடுத்திருக் கிறது) எண்டு சொல்லி நித் திரை முழிச்சு ஓயாம வேலை செய்யிறது. உப்பிடி அம்பலோ திப்பட்டுஉழைச்சு எங்களைக் காப்பாத்த வேணுமே? சுவர் இருந்தாத்தானே சித்திரம் கீறலாம்.?”
அவ சொல்லி வாய் மூட வில்லை. கண் ணி ர் பொலு பொலுத்துக் கொட்டியது, துக் கம் தொண்டையை அடைக்க, வாள்கள் இருதயத்தினூடாகப் பாய்ந்தன.
*என்ர அடைக்கல ஆச்சி, அவருக்கு நல்ல சுவத்தைக் குடனே தாயே! '
76
பக்கத் தி ல்
நெஞ்சு கரைய மனசுள்ளே சொல்லி மன்ருடி, மாத T கோயிலுக்கு ஒரு நேர்த் தி க் கடன் வைத்துப் பிரலாபித்து உருகும் தனது ம ன வி  ைய அண்ணன் ஏக்க விழிகளால் நோக்கிக் கொண்டேயிருந்தார்.
காலையில் அவர் தானுக எழுந்திருக்கவில்லை; பா யி ல் தீய்ந்துபோய்க் கிடந்த அவரை அக்கா போட்டுக் கொடுத்த ஒரு முட்டைக் கோப்பிதான் தட்டி எழுப்பிவிட்டது.
அந்த வாரத்துடன் "மெடிக் கல் லீவு’ம் முடிந்தது. அண் ணன் சேமமே கொழும்புக்குத் திரும்பினர். கொழும்பு அவரை உறங்க வைத்தாலும் அண் ணனே கொழும்பை உறங்க விடாது "நொடு நொடுத்துக் கொண்டிருந்தார் கொழும்பிலே யார் கேட்க இருக்கிருர்கள்?
கிட்டத் தட்ட ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அவர் மனைவி வெகு பச்சாத்தாபத் தோடு எழுதிய ஒரு கடிதம், உண்மையாகவே அவரின் இரு தயத்தைக் கசக்கிச் செக்காட் Լգ-Ա15l.
கண்ணீர் வெம்ப அதை வாசித்தார்;
'அன்னை மரி மாதாவை முன்னிட்டு வாழும் என் மேல் பட்சம் மறவாத ஆசை நாய கர் அறிவது என்னவெண்டால், நாங்கள் எல்லோரும் அச்ச சிட்ட அடைக்கல மாதாவின் கிருபையால் நல்ல சு க மே இருக்கிருேம் அதுபோல நீங்

களும் உவ்விடம் நல்ல சுகமே
இருக்க, கோடி கோடி அற்பு தரான கொச்சிக்கடை அந் தோனியாரைப் பாத்து அனு தினமும் மண்டாடி வருகிருேம்.
ஒரு வியளம்; அது என்ன வெண்டால், நீங்கள் இந்தக் கோசு வந்திட்டுப் போன பிறகு எனக்கு வாயி ல கொஞ்சம் அவியல் தாவியிருக்கு, தேகமும் ஈக்கில் மாதிரி மெலிஞ்சு வரு குது. பால் குடிக்கிற புள்ளை யும் இருமுது. அது கறுமம், அதுக்கும் வாய் கீய் எல்லாம் அவிஞ்சுபோய் இப்ப பரியாரி சுப்புறுமணியத்திட்டக் காட் டித் தமிழ் வயித்தியம் செய்யி றம். அது பச்சைப் பாலன், வாய் துறந்து பால் குடிக்கு தில்லை. எல்லாம் ஆண்டவர் சித்தம், ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம். அச்சசிட்ட அந் தோனியாரும் அடைக்கலமா தாவும் எப்படியோ சு வ ம் தருவினம்.
நீங்கள் நல்லாச் சாப்பிட்டுத் தேகத்தைக் கவனியுங்கோ; அது தான் முக்கியம். சுவர் இருந் தாத் தானே சித்திரம் கீறலாம்?
உங்கட சுகமே எங்கட பாக்கி
Այւն .
உங்கள் அன்பான மனைவி, ம. பெர்ணபேத்தம்மா.
கடிதத்தை வாசித்து முடிக்க, அவருக்கு விஷயம் "முற்ருக" ப் புரிந்துவிட்டது. அப்போது அவ ரின் சுய உணர்வு செத்து, அவர் முகத்தில் கண்ணிர் வழிந்தது.
நெஞ்சு கரித்து, அழுத்த விறைப் பெடுத்த முக வாய்க் SG3)60). F (FGDGO)6) TG) தப்பி ஒற்றியவண்ணம் எழுந்த போதும், விம்மி வந்த அழு கையை அவரால் அடக்க முடிய வில்லை.
பனங்கற்ருளைச் சாருகக் கண் கள் நீரிட்டு மினுமினுக்க, எடுத்த துவாயால் வாயைப் பொத்திக் கொண்டு,மோல விழி யுருட்டிப் பிரலாபித்து அழுதார்.
"அச்சசிட்ட அந்தோணி முனி யோரே! அது ஒண்டும் அறி யாத பாவி; எப்பனும் வஞ்ச கம் இல்லாதது. அதுக்கு எந்தக் கெட்ட வருத்தமும் வராமல் காப்பாத்து ராசா. நான்தான் டுபாவி. வேணு மெண்டா ஸ்ரீன்னை வருத்திச் சாக்கொல்லு: அதி* அற்புதரே! வாற கிழமை நான் சம்பளம் எடுத்த கை யோட உன்ர ஆலயத்துக்கு ஒடி வந்து ஒரு கட்டு மொழுகு ரி வேண்டியந்து கட்டாயம் கொளுத்திறனணயப்பு. அதுக்கு மட்டும் நோய் வராமல் காப் பாத்தி நல்ல சுகத்தைக் குடு p"ITJFIT...... !”
இப்படியெல்லாம் ம ன சு க் குள்ளே ஒரு நேர்த்திக்கடன் வைத்தபடி, சாறு பிழிந்த தக் காளிப் பழமாக, துவைந்த கண் களும், நெகிழ்ந்த நெஞ்சுமாக அழுது கொண்டு அவர் கொச் சிக்கடை அந்தோனியார் கோயி லைத் தேடி நடந்தார்)
வீதியோரமாகப் போ ப் க் கொண்டிருக்கும் போது, அந்தக் கோயில் வீதியோரத்திலே; அந் தக் கொழும்பு - கோட்டைச் நீதிே சந்தித்த அவரின் "ஆசை”க்கினிய பிச்சைகாரி, புழு க்கள் கெந்த, பிரேதமாய்ச் செத்துக் கிடந்தாள்.
"ஐயோ’ என்று அவர் வாய டங்கிக் குழறியது.
அண்ணன் அன்று வேலைக்குப் போகவில்லை: -
ஆள், "அப்ஸன்ற்.
77

Page 41
குருவிக்கூடு
சிங்களம்: R, G. விஜயவர்த்தன
தமிழில்: சிவா சுப்பிரமணியம்
அண்மையில் எங்கள் வீட்டில் வந்து குடியேறிய புதிய 'தம்ப திகள்’ என்னைப் பொறுத்த அளவில் வெற்று மனத்திற்குத் தீனி போட வேதனை கலந்த எண்ணங்களை வலிந்து தேடும் நிலையை இல்லாமல் செய்து விட்டன. ஒய் வு நேரங்களில் கலை இலக்கியம் பற்றிச் சில நேரங்களிலும் என் "ஆற்றமை யைப் பற்றி மற்றைய நேரங்க ளிலும் சிந்தனை செய்தபடியே சாய்மனைக் கதிரையில் படுத்தி ருப்பதையே வழக்கமாக்கிக் கொண்ட எனக்கு, இப்புதிய திருப்பம் மகிழ்ச்சிகரமானதே. அவர்களுடைய வருகைக்குப் பின் என் சிந்தனை முழுவதும் அவர்களுடைய வளர்ச்சியைப் பற்றியதாகவே இருந்தது. என் னுடைய மனைவியோ அவர்களது வருகை எங்களை எதிர்நோக்கி வரவிருக்கும் மகிழ்ச்சிகரமான
மல்லிகைக்கென பிரத்தி யேகமாக எழுதப்பட்ட கதைஇது. சிங்களச் சகோ தர எழுத்தாளருக்கு எமது மனங்கனிந்த நன்றி. ஆ ர்
78
காலத்திற்கு அறிகுறி என்ற நம்பிக்கைச் செடி நட்டு நீரூற் றத் தொடங்கினள்.
அவர்களுக்கு வாழ்க்கையில் எந்தவிதமான கவலையுமில்லை. சுதந்திரமாகச் சிறகடித்துத் திரி யும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவி கள் அவை. ஆணும் பெண்ணு மாக அவை வாழ்க்கை நடத் தும் விதமே ஒரு தனித்துவம் வாய்ந்தது. அந்த ஆனந்த வாழ்க்கை ஏன் தான் மனிதருக் குக் கிடைப்பதில்லையோ!
விடிந்ததும் கதவைத் திறப் பேன். திறந்ததும் அங்குமிங்கு மாக ஒன்றையொன்று துரத்தி மகிழும் அச்சிட்டுக் குருவிச் சோடிதான் என்கண்ணில் படும். அவற்றின் காதல் வாழ்க்கை யைப் பார்க்கும்போதெல்லாம் என் மனத்தில் என்னையுமறியா மல் இனந் தெரியாத ஒரு இன் பமும் அதைத் தொடர் ந் து பெருமை யுணர்ச்சியும் தோன் றும். -
நானும் ரூபாவும், சகல சம் பத்தும் பெற்று வாழ்க, என்ற
வாழ்த்துக்களோடு தம்பதிக ளாகி இப்போது பத்தாவது வருடம். இந்தப் பத்து வருடங்
களிலும் முதல் இரண்டு வரு டங்களைத் தவிர மிகுதிக் காலத் தை வேதனைகளுக்கு மத்தியில் தான் கழித்திருக்கிருேம். திரு மணமாகி இரண்டு வருடங்க ளின் பின் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்று நாங்கள் எதிர் பார்த்தோம். ஆனல் தாயாகும் வரிகுறிகள் மட்டும் 85ԼIn 6ն)

டம் தோன்றவில்லை. இந்த ஏமாற்றம் எங்கள் வாழ்க்கை யை அதிகமாக்ப் பாதித்தது. எங்கள் தாம்பத்திய வாழ்க்கை முறிந்துவிடாமல் இருந்ததை யிட்டு உண்மையாகவே நான் இன்று ஆச்சரியப்படுகிறேன்.
சிட்டுக் குருவிகள் இரண்டும் எங்கிருந்தோ பறந்துவந்து கூட் டுக்கருகில் இருந்தன. தனை மீண்டும் அவற்றின்பால் திரும்பியது. பெண்குருவி ஆண் குருவியிலும் பார்க்கச் சிறியது. அழகான சிறகுகளோடு முதுகி லுள்ள மண்ணிற வரைகளும் சேர்ந்து அதை இன்னும் அழகு படுத்தின. ஆண் குருவியின் முதுகிலுள்ள வரைகள் இன்னும் அழகானவை. அவற்றின் முது கில் எத்தனை வரைகள் இருக் கின்றன என்பதை அறியும் ஆவலில் மெள்ள மெள்ள அவற் றை நோக்கி நடந்தேன். ஒரு யார் தூரம் சென்றிருப்பேன். ஆண் குருவி என்னைக் கண்டு கொண்டதால் குசினியை நோக் கிப் பறந்தது
ரூபாவுக்குத் தாய்மைப்பேறு கிடைக்காமை எங்கள் இருவர தும் துர்ப்பாக்கியம் என்றே நினைக்கிறேன். எங்கள் இருவ
ருக்கும் "ஜனன சக்தி" இல்லை என்றும் நாங்கள் மலட்டுத் தன் மை கொண்டவர்கள் என்றும் எங்களைப் பரீட்சித்த வைத்திய அதிகாரிகள் சொன்னர்கள். எனினும் ஏதோ ஒருவித நம் பிக்கை இருந்த படியால் வைத் திய அதிகாரிகளைக் கலந்தா லோசித்து எங்கள் "வரட்சி"யை
என் சிந்
மாற்றுவதற்கு வழி தே ட த் தொடங்கினுேம். ஆனல் என் நம்பிக்கை வரண்டுவிட்டதால் வைத்தியரிடம் போ வ  ைத நிறுத்திக்கொண்டதோடு ரூபா வையும் போகவேண்டாமென்று தடுத்தேன். என்ருலும், அவள் அடிக்கடி ஒரு பெண் வைத்திய அதிகாரியைக் கலந்தாலோசித் திருக்கிருள் என்பது மிக அண் மையில்தான் எனக்குத் தெரிந் தது. அவளுக்கு அவ்வளவு ஏக் கம்! −
சென்ற வாரம் அக் குருவிக ளின் கூட்டுக்கு அருகில் ரூபா கட்டித் தொங்கவிட்ட நெல் முட்டி காற்றுக்கு லேசாக ஆடு கின்றது. அதற்குள் நெல் மணி கள் இருப்பதைத் தெரியாமல் அக் குருவிகள் பறந்து சென்று இரை தேடுகின்றனவே!
ரூபாவிலும் பார்க்க அவளது அம்மாவிற்குத் தான் பெருங் கவலை. தன்னுடைய கொடி பூக்காமல் காய்க்காமல் கருகிப் போவதை எந்தத் தாய்தான் விரும்புவாள்? ரூபா தாய்மை யடையாமல் இரு ப் ப த ந் கு ஏதோ பசாசின் துர்ப்பார்வை பட்டதே காரணம் என்பது அவளுடைய எண்ணம். பிரசித்தி பெற்ற ம ந் திர வா தி களை
அழைத்து வந்து ரூபாவிற்குச்
சாந்தி செய்யத் தொடங்கினுள். மந்திரங்களிலும் பசாசுகளிலும் கொஞ்சமும் நம்பிக்கை இல் லாத நான் அவற்றை எதிர்த் தேன். அதனல் எனக்குத் தெரி யாமல் சாந்தி செய்யப் போவ தையிட்டு ரூபாவின் அம்மா
79

Page 42
வுடன் நான் சண்டை செய்ய வேண்டியும் ஏற்பட்டது.
நான் சிட்டுக் குருவிகளின் கூட்டைப் பார்க்கிறேன். ஆண் குருவி மட்டும் கண்ணுக்குத் தென்படுகிறது. பெண் குருவி யின் சத்தம் கூடக் கேட்க வில்லை. “வந்த புதிதில் கூடு கட்டுவற்க்கு அவை எடுத்துக் கொண்ட சிரத்தைகள் என் மனத்திரையில் தோன்றுகின் றன. . . அவை இரண்டும் சின் னஞ்சிறு தென்னத்தும்புகள், காய்ந்த கோரைகள் போன்ற வற்றை ஒவ்வொன்ற கச் சேர்த்து வந்து, பி ன் னர் அவற்றை மாறி மாறி அடுக்கிக் கூடாக்கின. அவர்கள் கூடு கட்டியது காலங்காலமாகப் பரி ஞமம் என்ற பெயரில் இருந்து வரும் "சுய இன விருத்தி’ எனும் சுபாவத்தினுலல்லவா? சகல சீவ ராசிகளின் சரித்திரம் நீண்டு கொண்டிருப்பதற்குக் காரணம் சந்ததி விருத்தியல்லவா?
"வானர* யுகத்திற்கும் அப் பாலுள்ள இறந்த காலத்தை யும் நிகழ் காலத்தையும் இணைக் கும் சங்கிலி ஆண் பெண் சேர்க் கையால் உருவான "அடுத்த" பரம்பரை தானே! உலகம் நாளுக்கு நாள் எதிர்காலச் சந் ததியினரின் கையில் ஒப்படைக் கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சட்டத்தின் மூலம் கட்டாயப் படுத்த முடியா விட்டாலும், எதிர்காலத்திற்காக நா ம் செய்ய வேண்டிய கடமைகளில் எதிர்காலப் பரம்பரையை உரு வ்ாக்குதலும் ஒன்றுதானே!
80
என்னேடு கல்லூரியில் ஒன். ருகப் படித்த சோமதாச இன்று மூன்று குழந்தைகளுக்குத் தந் தை; பாடசாலை ஆசிரியையான திலகா நான்கு குழந்தைகளுக் குத் தாய். வங்கியில் வே லை செய்யும் ஜயசேகரா அண்மை யில் சந்தித்தபோது தன் மனைவி கர்ப்பத்தடை மாத் திரைகள் பாவிப்பதாகச் சொன்னது அவர் க்ளுக்குப் போதுமான பிள்ளை கள் இருக்கின்றர்கள் என்பதைத் தானே காட்டுகின்றது. நானும் ரூபாவும் மட்டும். எங்க ளுடைய "தாம்பத்ய வாழ்வில் எந்த விதமான குறையும் காண முடியாது. ரூபாவிற்குக் குழ ந்தை பெறும் பாக்கியம் கிடைக் காமலிருப்பதற்கான * ஸ்திர மான * எந்தக்காரணமும் எனக் குத் தென்படவில்லை. ஒரு குழந் தையையும் பெற்றெடுக்காத பெண்ணை 'மலடி எனப் பட்டஞ் சூட்டிச் ச மு த ரா ய ம் ஒதுக்கி வைத்துவிடுவதால்,உண்மையாக அவள் ஒரு துர்ப்பாக்கியசாலியே, அப்படியான ஒரு பெண்ணை மணஞ் செய்துகொண்ட நான் எல்லோரிலும் பார்க்கத் துர்ப் பாக்கியசாலி!
GQ) (7) Q9
"என்னவோ தெரியாது; அம்மாவையும் தங்கச்சியையும் இன்னும் காணவில்லை. ' ரூபா தேநீர்க் கோப்பையுடன் வந் தாள்.
" அப்பாடி, சரியா. ஆ. ன ருசி. இன்றைக்குப் புத்தகத்தின் படி சரியாகப் போட்டிருக்கிருய்" அவள் ஒரக் கண்களால் கள்ளப்

பார்வை பார்த்தபடி கதிரையில் அமர்கிருள்.
** இப்ப இரண்டு மூண்டு
மாசமாக. அப்படித்தானே?*
அவளது குரலில் ஒரு புதிய பெருமை தொனிக்கிறது:
**அப்படியில்லை ரூபா, முன்
பும் ருசிதான். ஆனல்இப்போது
அதிக ருசி, ?
ဖွား- இப்போதெல்லாம் (Ejt IIT பெரும் போரொன்றில் வெற்றி கொண்ட மா ம ன் ன னை ப் போன்ற பெருமையுட்னேயே கால த்  ைத க் கழிக்கின்ருள். நீண்ட காலமாகக் காணுத ஒரு பொலிவு அவளது முகத்தில் தெரிகின்றது. திருமணமான
புதிதில் கூட இவ்வளவு மகிழ்ச்
சியை அவளிடம் நான் காண வில்லை. அவளுடைய அம்மா அடிக்கடி இங்கு வந்து மற்றைய நாட்களிலும் பார்க்கப் பல மாகச் சிரித்துப் பேசுகிருள். ரூபாவின் தங்கை * ITւD60ծի՚ முன்பு இல்லாத விதமாகத் தமக்கையுடன் கேலி பேசிச் சிரித்து விளையாடத் தொடங் கியிருக்கிருள். ஒரு வாரம் பண் டாரவளையில் தங்கிவிட்டு வரு வதற்காக ரூபாவின் அம்மா வையும் தங்கையையும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிருேம். "ஏன் சிட்டுக் குருவிகளின் கூட்டையே பார்த்துக் கொண் டிருக்கிறீர்கள்'
: ‘ஒன்றுமில்லை ரூபா’.
* "ஒன்றுமில்லாமலில்லை. என்ன யோசிக்கிறீர்கள்? பத்து
தண்ணீருக்குத்தான் ஆழம் உண்டென்பதில்லை. தீர்க்க மான சிந்தனையின் பின் வெளி வரும் வார்த்தைகளுக்குக் கூட ஆழம் உண்டு.
வருட்ங்கள் யே ஈ சித் த து போதாதா...??? w
ரூபாவிற்கு இப் போது தலை தெரியாத பெருமை.
'இல்லாமல் முடியுமா..ஏன்'
உங்களுக்கும் பெருமை தானே!. இன்னும், ஐந்து அல்லது ஆறு மாதங்களில் நீங் களும் ஒரு தகப்பன் தானே.”* நான் எழுந்து சென்று அவளி ருந்த கதிரையின் கைப்பிடியில் இருந்தேன். அவள் மெதுவாக எனக்கு மேல் சாய்ந்து. எவ் வளவு நேரம் அப்படி இருந் தோமோ தெரியாது.
ரூபாவின் அம்மாவும் ரம ணியும் வந்ததும் மூவரும் வீட் டிற்குள் சென்று பலத்த சத் தத்தில் சிரித்துப் பேசிக் கொண் டிருந்தனர். நான் முற்றத்தில் கதிரையைப் போ ட் டு க் கொண்டு பத்திரிகையைப் புரட் டத் தொடங்கினேன்.
இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் எங்கள் வீட் டில் ஒரு சின்னஞ்சிறு குழந்தை யின் குரல் ஒலிக்கப் போகின் றது. நீண்ட காலமாக என் மனதில் இருந்த ஆசை நிறை வேறும் நாள் அணுகிக் தன் சின்னஞ்சிறு குழந்தையைத் தாலாட்டும் காட்சி என் மனத் திரையில் நிழற் படங் காட்டு கின்றது.
8.

Page 43
திடீரெனச் சிட்டுக் குருவி கள் பெருங்குரலெடுத்துக் கத் தத் தொடங்கின. நான் ஒடிக் சென்று கூட்டைப் பிார்த்தேன். கூரை மரத்திலிருந்து ஒரு சாரை ப்பாம்பு சிட்டுக்குருவிகளின் கூட்டை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு பயந்து சிறகடித்து அவலக்குர லெழுப்பும் குருவிகளைக் கண்ட தும் என்னையறியாமல் ஓடிச் சென்று ஒரு நீண்ட தடியுடன் திரும்பி வந்தேன்.
நான் வந்த போ து சாரைப் பாம்பு புடலங்காய் போலத் தொங்கிக் கொண்டு
குருவிக்கூட்டுக்கு மிகவும் அண் மையில் நெருங்கிவிட்டது. ஒரு நிமிடம் பிந்தினுலும் அத்தனை
வேண்டுமென்ற எண்ணத் தில் பாம்பின் தேகத்தில் படும்படி தடியால் வேகமாக அடித்தேன். பயமும் கோபமும் கலந்த ஒலி யுடன் பாம்பும் குருவிக் கூடும் ஒன்ருகச் சிமெந்து நிலத்தில் வீழ்ந்தன. V
சத்தம் கேட்டு வீட்டுக்குள் ளிருந்த ரூப்ாவும் ரமணியும் மாமியும் ஒடி வந்தார்கள், நான் என்னுடைய கையிலி' ருந்த தடியை ர ம ணியி ன் கையில் கொடுத்து விட்டு உள்ளே சென்றேன். ரூபாவின் முகத்தைப் பார்ப்பதற்குக் கூட எனக்குத் தைரிய மில்லை.
நீண்ட நேர நிசப்தத்திற்குப் பின் ரமணியின் குரல் மட்டும் கேட்டது:
முட்டைகளையும் குடித்து ஏப்பம் ** அக்கா. எல்லா முட் விட்டிருக்கும். குருவிகளையும் டையும் உடைஞ்சு போச்சு.!" முட்டையையும் காப்பாற்ற O O. ()
SA
உண்மையான கலைஞன் என்றல் அவன் வாழ்வின்
வெளிப்பூச்சற்ற
உண்மைகளை ஆழமாக
உணர்ந்
திருக்க வேண்டும். தான் சிந்திரிக்க அல்லது படைக்க விரும்பும் விஷயங்களில் நிறைந்த ஈடுபாடு கொள்ள
வேண்டும்; பண்படுத்த வேண்டும்.
அதற்காகவே
தனது உணர்ச்சிகளைப்
றபர் சில், வீட்டுப் பெயர் முதலியன செய்து கொடுக்கப்படும் எஸ். ரி. எம். இன்டஸ்றி (கலாஜோதி)
பழைய பஸ் நிலைய அருகாமை
யாழ்ப்பானம்.
82

? یحح ہےجحے سےحطےہےیججئے سیھطنتسےحصیحح=$ உங்களது உருவங்களை புதுப் புதுக்
கோணங்களில் புகைப்படத்தில் கண்டு களிக்க
“GLIII” GLIIIGLI
உரிமையாளர்: சிட்டு 15, மணிக்கூண்டு வீதி, யாழ்ப்பாணம். முன் ஏற்பாடு செய்தால் நிகழ்ச்சிகளை நேரில் வந்து புகைப்படமெடுக்கலாம்.
QassivelasiwezaNyasse easies ܡܓܪܒܧܡܫܒܧ
=
M. O | M இராசரத்தினம் 며| செந்தமிழ்த் தோட்டம்
(பாம் ஸ்கூலுக் கருகாமையில்) 며| பலாலி ருேட், திருநெல்வேலி. ! எங்களிடம் சகல இன ஒட்டு மாங்கன்றுகள்,
며| ஒட்டுத்தோடை, ஒட்டு எலுமிச்சை, ஊர் எலுமிச்சை, 며| Lodi, மாதுளை, நெல்லி, அகத்தி, பியஸ், (முந்திரி | 며| கைக்கன்று.) யம்பு நாவல், வெளிநாடுகளில் இருந்து 며| இறக்குமதி செய்யப்பட்ட ருேசாச் செடிகள் மற்றும்
பூக்கன்றுகள், பூவிதைகள், கத்தரிக்கன்று, தக்காளி, ஊர்மிளகாய் கன்று, கறிமிளகாய் கன்று இலைக்கோவா, 며 பீற்றுட் கன்று, முட்டைக் கோவாக்கன்று, பூக்கோவாக் கன்று, சலாஸ் கன்று மற்றும் விதைகள் சில்லறை யாகவும் மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஒடர் | கள் கவனிக்கப்படும்.
rt

Page 44
며| 5, 7, Stanley Road, Jaffna.
உங்கள் இல்லங்களை அலங்கரிக்க நவீன I
며| தளபாடங்கள் வேண்டுமா?
இன்றே விஜயம் செய்யுங்கள்
பாஷன் I
பேணிஷிங் பலெஸ்
இலகுவான கட்டுப்பணு முறையில்
தளபாடங்களை விநியோகிக்கும் 며| யாழ்நகரின் ஒரேஸ்தாபனம.
பரஷன் பேணிஷிங் பலெஸ்
5, 7, ஸ்ரான்லி ருேட், யாழ்ப்பாணம்.
N உங்கள் திருப்தியே, எங்கள் திருப்தி
S அழகிய நவநாகரீகமான s O றெடிமேட் O S உடைகளுக்கும் நவநாகரீகப் S d பொருள்களுக்கும் O S சிறந்த ஸ்தாபனம் S
Glushalt LIIII
1/3 மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
L MSLYqMLezMLMLLLLMLekYLL LeYLeLLLLLLMLLkLJLLLLLLL

ஹிந்திச் சிறுகதை LS G Dke
உபேந்திரநாத் ஆஸ்க்
ᏩᎧ
கத்தரிச்
செடி
逃
Na
தமிழில்:
“ (o LI If "
மிகிராம் அந்தக் கத்தரிச் செடி யைப் பிடுங்கி எறிந்து விட்டிருந் தாலுங் கூட, அந்தக் தோட்டத் தின் எல்லையான குறுகிய வரம்பின் மீது நடந்து போன போது அந்தக் காய்ந்துபோன மஞ்சள் நிறமான கத்தரிக்காய் அப்போதும் என் கண் முன்னே தளிராக ஆடியது!
அந்த மழைக்கால நாளும் முடிந்து போனது. அது காலங் கடந்த மாலைப் பொழுது. வழக்க மாக இரவுப் போசனத்தின் பின் வைத்துக் கொள்ளும் நீண்ட நடை யின் பின்னர் திரும்பிக் கொண்டிருந் தேன். மார்கழி மாதக் குளிரிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள SIG பனியன், மேல் ஒரு சேட்டு , பின்பு ஒரு "கோட்டு", அதற்கு மேல் இன் றுமொரு ஓவர் கோட், கம்பளியி னலான "மப்ளர் ஆகிய கனமான உடைகளை அணிந்திருந்தேன். எனது "ஓவர் 'கோட்டின் காலர் மேலெ ழும்பி நிற்க, கையில் ஒரு "டார்ச்' சுடன், பிரீத் நகரின் கடினமான
மண்ணில் நடந்த படியே, எனது
சப்பாத்துக்கள் ஏற்படுத் தி க் கொண்ட "கிறீச்" சப்தங்களை வெகு வாக ரசித்தேன்
எனது சிறிய பங்களாவின் விருந் தையை அணுகிய போது, நான்
நின்று கொண்டேன். விருந்தையில்
யாரோ இருந்தார்கள், "டார்ச்"சை அடித்துப் பார்த்தேன். மெலிந்து போன ஒரு கிழவன் அங்கே all. கார்ந்திருந்தான். கிழி ச ல் கள் நிறைந்த ஒரு துணியால் அவன்
86

Page 45
தனது உடம்பைச் சுற்றியிருந் தான். அந்தத் துணியின் நிறத் துக்கும், அந்த இருளின் கரு மைக்கும் அவ்வளவாக வித்தி யாசம் தெரியவில்லை.
**நீயாரப்பா?.. எ ன் ன விஷயம்.?.'.நான்கேட்டேன்.
“ஒன்றுமில்லை. நான் மகி ராமினுடைய ஆள்.” என்று சொன்னன் அவன்.
* ம கி ராமி னுடைய
ஆளா?. அது சரி. நீ ஏன் இந்த அழுக்கடைந்த விருந்
தையில் இருக்கிருய்? குளிரா யிருக்குமல்லவா?.”
** என்னைக் காப்பாற்றிக்
கொள்ளக் கூடிய உடை என்
னிடம் இருக்கிறதய்யா."
நான் எதுவும் பேசாமல் போய் என் அறைக் கதவைத் திறந்து கொண்டேன். மேசைமீ திருந்தமண்ணெண்ணை விளக்கு எரிந்து கொண்டிருந்தது . ஜன் னல்கள் திறந்திருந்தன. அப்ப டியிருந்தும் அந்த அறை சற்று வெப்பமாக இருந்தது. அந்த அறையினுள்ளிருந்த காற்றில் மண்ணெண்ணை மணம் கலந்திருந் தது. பூட்டிய அறையில் எரிந்த படியே விளக்கை விட்டுச் செல் லவேண்டாமென்று
அடிக்கடி நண்பர்கள் எனக்குப் புத்தி சொல்வார்கள். **விளக்கிலி
ருந்து கிளம்பும் புகை கலந்த
துர்க் காற்றைச் சுவாசித்தல்
இருதயத்துக்கு ஆகாது’ என்
றெல்லாம் சொல்லுவார்கள்.
அது தீமையானது என்பது
86
எனக்கும் தெரியும். அதை நான் நன்ருக உ ண ர் ந் து கொண்டிருக்கிறேன். ஆனல்
நான் கதவைத் திறந்து வைத்
துக் கொண்டு அ  ைற யி ல் வே லை செய்யும் போது, வெளியேயுள்ள குளிர் ந் த
காற்று உள்ளே வந்து எனது விரல்களை நடுக்குறச் செய்வத னல் எனது கை வேலை செய் யவே மறந்து விடுகின்றது. கதவுகளை மூடுவதன் மூலம் அறை சற்று உஷ்ணமாய் விடு கிறது என்பது உண்மையா யினுங் கூட நான் அந்தச் சூழ் நிலையைப் பழக்கப்படுத்திக் கொண்டேன். ஏன் அந்த மண் ணெண்ணை மணமும் எனக்குப் பிடித்ததென்றே சொல்லலாம்.
மப்ளரை நன்ருகக் கழுத் தைச் சுற்று இறுக இழுத்து விட்டுக் கொண்டு வேலையைத் தொடங்கலாமென்று மேசை யடியில் உட்கார்ந்தேன்.
ஆனல் என்னுல் ஒரு வரி di. எழுத முடியவில்லை. வெளியே வீசும் குளிர்காற்றி டையே விருந்தையிலிருந்த அந்த மெலிந்த கிழவனின் நினைவு என்னை என்னவோ செய்தது.
அந்தக் கிழவனை அன்று காலையிலும் பார்த்தேன். நான் சாப்பாட்டு அறையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவன் தோட்டத்தில் கத்தரிச் செடிகளைக் கத்தரித்துவிட்டுக் கொண்டிருந்தான் தோட்டத் தின் குறுகிய வரம்பில் சிறிது

நேரம் தரித்து நின்று அவன் ஏன் அப்படிச் செய்கிருன் என் பதைக் கேட்டேன்.
அவன் சொன்னன் 'பாபுஜி! இப்படிக் கத்தரித்து விட்டால் செடிகள் இன்னும் மதர்த்து வளர்ந்து, மீண்டுமொரு தட வை காய்த்து விடும்'.
நான் அந்தக் கத்தரிச் செடிகளை நன்ரு கப் பார்த்தேன். ஒரு செடியில் வளைந்து சுருண்டு போன மஞ்சள் நிறமான கத் தரிக்காயொன்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கத் தரிக்காயிலிருத்து என் கண்கள் கிழவன் மீது தாவின. அவனு டைய வயதை மதிப்பது சற் றுக் கடினமாயிருந்தது. ஆனல் அவன் நன்ருய்க் கிழடு தட்டிப் போய்த் தோன்றினன். கிழிந்து போன பருத்தித் துண்டொன்று அவனது உடலைச் சுற்றியிருந் தது. அவனது கைகள் வெளு றியும், செழுமையற்றும் போயி ருந்தன. அவனது கால்கள் ஒரு சோடி மெல்லிய மூங்கில் கள் போலத் தோன்றின; கண் கள் நன்ருய்க் குழிவிழுந்து
5IT6ÖT.It I L.60T.
கத்தரிச் செடிகளை மீண்டும் உற்றுப் பார்த்து ஆச்சரியப் பட்ட நான் இப்படியாக நினைத் தேன்: ‘'இடையில் அக் கத்த
ரிச் செடிகளைக் கத்தரிப்பதன் மூலம் , அவைகள் மீண்டும் மொரு தடவை புதிதாய்க்
காய்த்து விடுகின்றன. இதே முறை வேறு செடிகளுக்கும் பொருந்துகிறது. ஆனல் இப்
படியான ஒரு கொடையை மனிதனுக்கு மட்டும் கடவுள் ஏன் கொடுக்கவில்லை?”
ஆனல் அதே கணம், என் னுள்ளிருந்த ஏதோவொன்று என்னுடைய விசித்திரப் பிரச் சனைக்கு விடையளித்தது: மணி
தன்கூட அழிவதில்லை. மரணம்
என்பது கத்தரிக்கோல் போன் றது. ஆண்களும் பெண்களும் வளர்ந்து செழுமையடைந்து, பின்பு செழுமையற்றுப் போகும் சமயத்தில், மரணம் என்ற கத் தரிக்கோல் அவர்களைக் கத்த ரித்து விட்டு அந்த இடத்தில் புதிய கிளைகளை, மலர்களை, கனிகளை - அதாவது சுகம் வழி யும் சிரிப்புகளை, இனிமை பாயும் பாடல்களை, அழகுமிகு ஆடல் aër புதியதாக, . வாழ்வின் மலர்ச்சிகளாக வைத்து விடுகி
றது."
மீண்டும் நினைவு கிழவனை அடைகிறது. ஆனல் ஏன் அந் தக் கிழவன் நடுங்கும் குளிரில் வெளியே இருக்கிருன்? “ தங்கு வதற்கென்று அ வ னு க் குச் சொந்தமாக ஒரு வீடில்லையா? நான் எழுந்து கிழவனிருக்கு மிடத்தையடைந்து மொரு தடவை,
'நீ யார்?" என்று கேட் டேன்.
'நான் மகிராமினுடைய ஆள் ஐயா !”
'நீ மகிராமின் ஆளென்ருல் சரிதான் எந்தவிதத்தில் மகி
87.

Page 46
ராமுடன் உனக்குத் தொடர்
அந்தக் கிழவன் ஏதோ சொல்லப் போகும் சமயத்தில், இருந்தாற் போல அவனுக்கு இருமல் வந்து குரலை அடைத்து விடுகிறது. அவன் கொஞ்ச நேரம் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தான். பின்பு ஒரு வாருக மூச்சைப் பிடித்துக் கொண்டு, எப்படியோ பேசி ருன். தான் மகிராமின் கிரா மத்தைச் சார்ந்தவன் என்ப தைத் தவிர வேறெந்த வகை யிலும் தான் மகிராமுக்கு இனத்தவன் இல்லையென்றும், இரண்டு வளர்ந்த பெண்களுட ஞன ஐந்து பிள்ளைகளும் மனை வியுமடங்கிய பெரிய குடும்பத் காப்பாற்ற வேண்டியி
தைக்
ருப்பதால் ஏதாவது gFibinr
தித்துக் கொள்ளவே தான்
இவ்விடம் வந்திருப்பதாயும்
விளக்கினன்.
நான் மீண்டும் எ ன து
மேசைக்குத் திரும் பினேன். மேசையடியிலிருந்தும் என்னல் வேலையில் கவனஞ் செலுத்த முடியவில்லை. கலக்கம் நிறைந்தி ருந்த அந்தக் கிழவனின் குரல் என் மனதைக் கசியச் செய்து விட்டது. நான் அறையினுள் கம்பிளியாலான உடை களின் மேல் இன்னெரு தடித்த போர் வையையும் போர்த்துக் கொண் டிருக்கிறேன். அந்தக் கிழவனே வெளியே கிழிந்து போன அழுக் குத் துணியினுள் சுருண் டு போய்க் கிடக்கிருன்.
நான் மெல்லிய குாலில் சொன்னேன்: 'உள்ளே வந்து
88
படுத்துக் கொள்ளப்பா . . வெளியே விருந்தையில் சரியான குளிராயிருக்கிறதே."
கிழவனிடமிருந்து ஏ தும் பதில் வரும் முன்னரே சீமந்தி ணுலான விருந்தையில் சப்பாத் துக்களின் பலமான மிதியடிகள் கேட்டன. அடுத்த கணம் எனது அறைக்கதவடியில் கண்ராக்டர் கோபால்தாஸின் உத்தியோ கத்தரான, ஆறடி உயரமுள்ள மகிராம் தோன்றினன்.
அவன் தலையில் ஒரு "டேர் பன்’ வைத்திருந்தான். உடம் பைத் தடித்த போர்வையால் மூடியும், கால்களில் கனமான
சப்பாத்துக்களை அணிந்துமிருந்
தான்.
"ஐயா ! நான் தான் அவனை இவ்விருந்தையில் ப டு க் க ச் சொன்னேன். யா ரே ரா ஒரு போக்கிரி நமது தோட்டத்தில் இரவு நேரங்களில் காய்கறிக ளைத் திருடி விடுகிருன். நேற்று முன்தினம் பழுத்திருந்த தக்கா ளிகள் அனைத்தையும் கொண்டு போய்விட்டான். நேற்று இரவு நன்ருய் மதர்த்து வந்திருந்த பத்துக் "கோவா" க்கள் திருட் டுப் போய்விட்டன. எனக்குச் சலித்துப் போய்விட்டது . " - இப்படிச் சொன்னன் மகிராம் நான் குறுக்கிட்டு: "காய் கறிக ளைத் திருடுவது யாராயிருக்க முடியும்? கடந்த ஒரு வருஷமாக நான் இந்தக் "காலணி"யில் இருந்து வந்திருக்கிறேன். ஆனல் எந்த விதமான திருட்டைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லை.

பெரும்பாலும் இது யாரோ வெளியான் ஒருவனின் வேலை யாகத் தானிருக்கும்." என்று நான் சொன்னேன்.
மகிராம் சொன்ன ன், "இல்லை ஐயா ! ஒரு சில "கோவா’க்களுக்காக தூரத்திலி ருந்து எந்த மடையனும் வர மாட்டான். இது "காலணி"யி லுள்ள ஒருவனின் வேலைதான் என்று எனக்கு நன்ருகத் தெரி யும். அவ னு க்கு நான் ஒரு பாடம் படிப்பிக்கவே போகி றேன். அது அவன் த ன து எஞ்சிய சீவியகாலத்தில் எந்த நாளும் மறக்கமுடியாதபடிதான்
அமையும்.’-இப்படி யா கச் சொன்ன மகிராம் உதடுகள் ஒருமாதிரியாக நெளிந் து
போயின. அவனுடைய வடுக் கள் நிறைந்த முகத்தில் அந்த உதடுகள் நெளிந்த மாதிரியைப் பார்க்க அச்சமாகவேயிருந்தது.
**அது சரி.இந்த மனிதனை
உள்ளே படுக்க விடலாமா?."
வெளியே சரியான குளிராயிருக் குமல்லவா?’ என்று நான் சொன்னேன்.
மகிராம் சொன் ஞ ன் : * 'இல்லை ஐயா, உங்களைப் போன்ற பணக் காரர்களைத் தான் குளிர் பாதிக்கும். ஏழை களாகிய நாங்கள் குளிரின் தாக் கத்துக்கு நன்கு பழக்கப்பட்ட வர்கள். ஒரு தந்திரத்திற்காக இந்தக் கிழவன் இங்கு இருக்க வேண்டுமென்று சொ ல் லு கி றேன். தி ரு ட னை ப் பிடிக்கப் போவது இவனல்ல, நான்தான்.
நான் போய்த் தோட்டத்தில் ஒளிந்து கொள்ளப் போகிறேன். கிழவன் இங்கே நித்திரையாயி ருப்பதைக் காணும் திருடன் துணிந்து காய்கறிகளில் கை வைக்கும்போது அவனை நான் கையும் மெய்யுமாகப் பிடித்து விடுவேன்."" இப்படியாகச் சொல்லிவிட்டுத் திருப்தியுடன் பலமாகச் சிரித்தபடியே போய் விட்டான் மகிராம்.
நீான் உள்ளே போய் மீண் டும் எனது வேலையில் கவனத் தைச் செலுத்த முயன்றேன்" ஆனல் என்னுல் முடியவேயில்லை. இந்தத் தடவை மு த லா வி கோபால்தாஸின் முகமே என் நினைவுக்கு வந்தது. ஏராளமான பணம்; அரை டஜன் ஆண்பிள்ளை கள் எவ்வித கவலையுமில்லை இந்த ஐம்பது வயதிலுங் கூட அவனுடைய கன்னங்கள் செம் மையாக ஜொ லிக்கின்றன . * எலும்பினுள் புகுந்து உறைக் கக் கூடிய இந்தக் குளிரில் அவர் தனது அறையில் குளிருக்கு இத மான "கணச் சட்டி" யின் முன் ஞல் இருந்து பேசிக் கொண்டோ அல்லது சீட்டு விளை யா டி க் கொண்டோயிருப்பார். ! என்று நான் நினைத்துக் கொண்டேன்.
எனக்கு என்னவோ சரியில் லாமலிருந்தது. சற்று அதிக மாகவே சாப்பிட்டிருந்தேன். குளிருக்கு இதமாக நன்ருய் உடு த்தியிருந்தேன். அறையும் உஷ் ணமாக - இதமாகத் தானிருந் தது. ஆனல் எனக்கு என்னவோ போலிருந்தது. முக்கியமான ஒரு சில கடதாசிகளை எ டு த் துக்
R9

Page 47
கொண்டு, விடியற் காலை யில் எழுந்து வேலை செய்யலாம் என்ற எண்ணத்துடன் படுக்கை யறைக்குச் சென்றேன்.
புறப்படுமுன்னர், ஆபீஸ் அறைக் கதவைப் பூட் டு ம் போது உள்ளே வந்து படுக்கும் படி மீண்டுமொருதரம் கிழவ னிடம் சொன்னேன்.
அவன் G F T där (G9 GăT : ஐயா, எ ன் னிடம் இருக்கும் துணிகள் போதுமா னவை. தவிர இரவு முழுவதும் நான் உஷாராயிருக்க வேண்டும்.
w
இப்போது சற்று இலேசான மனதுடனேயே படுக்கையறைக் குச் சென்றேன். படுக்கை தயா ராகவிருந்தது. இன்னெரு போர் வையால் மூடிக் கொண்டு கண் மூடிக்கொண்டேன். நூ ற் று க் கணக்கான நினைவுகளெல்லாம் ஒருமித்து எழுந்து என் மூளை யைக் குழப்பின. ஆனல் கொஞ் giải கொஞ்சமாக இமைகள் கனக்க ஆரம்பித்து, கடைசி யில் நித்திரையாகப் போனேன். ஆனல் அந்தக் கிழவன், மகி ராம், முதலாளி கோபால்தாஸ் ஆகியோர் நித்திரையில் என் னைக் குழப்ப வந்தார்கள்.
நான் ஒரு கனவு கண்டேன்: திருடனைக் கையும் மெய்யுமா கப் பிடித்துக் கொண்ட மகி ராம் அவனைக் கிராமத்துக்கு இழுத்துக் கொண்டு போனன் . போகும் வழியெல்லாம் அவனை அடித்தும், உதைத்தும் விடுகி முன். கிராமத்தவர்களெல்லாம்
90
திருடனைச் சூழ்ந்து கொள்கிருர் கள். திருடன் குனிந்தபடி நிற் கிருன். இருளில் அவன் முகம் சரியாகத் தெரியவில்லை. அவ னுக்கு மீண்டும் வயிற்றில் ஒரு அடி கொடுத்துவிட்டு, காய்கறி. கள் திருடும் யாரும் இந்த மாதிரித்தான் தண்டிக்கப்படு வார்கள் என்று க த் தின ன். இப்போது திருடன் தலைநிமிர்ந்து துயரம் தேங்கிய கண்களுடன் மகிராமைப் பார்க்கிருன். நான் மங்கலான இருளில் அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்க்கிறேன் நான் ஆச்சரியத்தால் அசந்து போனேன்!. அத்திருடன் வேறு யாருமல்ல. முதலாளி கோபால் தாஸ்ேதான்! அதே வழுக்கல் தலை, அதே செழுமையான கன் னங்கள், கடைந் தெடுத்தது போன்ற மூக்கு...!
கண்களைத் திறந்து விட்டேன். கனவு கலைந்து போனது கம்பளிப் போர்வை கால்களிலிருந்து நழு விப் போயிருந்தது. எனது தொண்டை அந்தக் குளிரிலுங் கூட வரண்டுபோன மாதிரியிருந் தது. எழுந்து போய்க் கொஞ் சம் தண்ணீர் குடித்தபின் மறு படியும் வந்து கம்பளிப் போர் வையினுள் புகுந்து கண்ணை மூடி னேன்.
வெளியே பலமான புயல் வீசிக் கொண்டிருந்தது. மரங் களையெல்லாம் காற்று அலைத்து ஆட்டுகிறது. ஆயிரம் காட்டு யானைகள் ஒரு சேரப் பிளிறுவது போலப் பயங்கர ஒலமிட்டது, புயற்காற்று. கம்பளிப் போர்வை யை விலக்கிப் பார்த்தேன். கண்

ணுடி ஜன்னலூடாக மரங்கள் ஆடுவதைப் பார்த்தால். புயற் காற்றின் கோரத்தைக் காண அவை அஞ்சி நடுங்குமாப்போல் இருந்தது. அங்கு மிங்குமாய் மின்னலும் முழக்கமும். மீண் டும் கம்பளியினுள் புகுந்தேன். இதமாயிருந்தது. மெதுவாக நித் திரையிலாழ்ந்து விட்டேன்.
ஆனல். இந்தத் தடவை யும் ஒரு கனவு: மழை 'சோ' வென்று கொட்டுகிறது. பேய்க் காற்று ஊளையிட்டுக் கொண்டி ருக்கிறது" "டென்னிஸ் பந்த ளவு பனிக்கட்டிகள் விழுந்து கொண்டிருந்தன. தோ ட் டம் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது காய்கறிகள் அழிந்து, சிதைந்து அள்ளுப் பட்டுப் போகின்றன. ஆனல் அந்தக் காய்ந்து போன மஞ்சள் நிறமான கத்தரிச் செடி மட்டும் எதற்கும் அசையாமல் அங்கே நிற்கிறது. பின்பு அந்தச் செடியிலிருந்த கத்தரிக்காய் திடீ ரென்று வளர்வதைக் காணுகின் றேன். அது பருத்துப்போய் முற் றிலும் உருமாறி விடுகிறது. இறு தியில் அது அந்தக் கிழவனின்
முகத்தைப் போல உருவமைந்து விடுகிறது. தனது நெஞ்சுடன் கால்களை மடித்துக் கைகளால் முழங்கால்களை வளைத்துப் பிடித் திருந்த கிழவன், தலைமயிர் முறு கிப்போய்க் காம்புபோல செடி யில் இணைந்திருக்கக் கத்தரிக் காய் வடிவில் தொங்கிக் கொண் டிருந்தான். பனிக்கட்டிகள் துவன் மேல் விழுந்து தாக்குகின்
றன. அங்கு மிங்குமாய் அவன் ஆடி அலைகிருன். ஆனல் கீழே விழுகிருனில்லை. பின்பு அந்தக் கத்தரிச்செடி என் கண் முன்ன லேயே கிசுகிசுவென்று வளர்ந்து கடைசியாக அது ஒரு ஆலமரம் மாதிரி வந்து விடுகிறது. அந்தப் பெரிய மரத்தின் கீழ் பல மனிதர் கள் கூடி நிற்கிறர்கள். எல்லோ ரும் சேர்ந்து 'கிழவன் செத்து விட்டான்! சிழவன் செத்து விட் டான்!!" எனறு கத்துகிருர்கள் 'அவ்ன் செ த் து விட்டான்! அவன் செத்துப்போயே விட் ι π6ότι . . . . . என் காதில் "செத் துவிட்டான்! செத்துவிட்டான்!” என்ற குரல்கள் கணிர் கணி ரென்று கேட்டன. அந்தக் கிழ வன் தொங்கிக் கொண்டிருந்த கிளை குறிவது போல - மிக விரை வாக முறிவது போலத் தெரி கிறது. .
நான் கண்களைத் திறந்தே விட்டேன். கனவு போய் விட் டது. யாரோ அறைக் கதவைப் "படபட"வென்று தட்டினர்கள் “வந்துவிட்டேன்..!" என்று படுக் கையிலிருந்து எழும் போதே சொல்லிக் கொண்டநான் உடை களைச் சரிப்படுத்திக்கொண்டேன் தொப்பியை எடுத்துத் தலையில் அணிந்து கொண்டு போர்வை யால் மேலே சுற்றிக் கொண்டு போய்க் கதவைத் திறந்தேன்: அந்தக் "காலனிக் காரியதரிசி வேறு சில ஆட்களுடன் நின்று கொண்டிருந்தார். அவர்களு டைய குடைகளிலிருந்து மழை நீர் சொட்டுப் போட்டுக் கொண்
டிருந்தது. ‘விடிந்து போயிருக்க
9.

Page 48
வேண்டும்" என்று எண்ணிக் கொண்ட நான் காரியதரிசியை என்ன விஷய மென்று விசாரித் தேன்.
"உங்கள் விருந்தையில் அந் தக் கிழவன் செத்துப் போய்க் கிடக்கிருன்."
அப்போதுதான் நான் எட்டி விருந்தைப் பக்கம் பார்த்தேன். அங்கே கிழவன் கிடக்கிருன்.
தலை நொடிந்துபோய் விளிம்பி
லிருந்து தொங்குகிறது. அவன் உடல், உடை யெல்லாம் மழை நீர்.
'நான் அப்போதே அவனி டம் சொன்னேன். ** என்று பேச வாயெடுத்த என்னுல் வேறெதையும் சொல்ல மூடிய வில்லை.
"நான் பால்வாங்கச் சென்று கொண்டிருந்தேன். இவன் இங் கேகிடப்பதைக் கண்டு கூம்பிட் டுப் பார்த்தேன். ஒரு பதிலு
பார்த்து, அவன் இறந்து போன தை உணர்ந்து கொண்டேன்." என்று சொல்லிய காரியதரிசி பக்கத்தில் நின்ற தொழிலாளி ஒருவனிடம், 'உடலை இங்கி ருந்து அகற்ற ஏற்பாடு செய்!”* என்று மேலும் கூறிவிட்டு அங் கிருந்து அகன்று விட்டார்
o O O
சில நாட்களின் பின் நான் அந்தக கத்தரித் தோட்டத்தி னருகிலுள்ள குறுகிய பாதையில் நடந்து போன போது, இருந் தாற்போல சற்று நின்று, தோட் டத்தினுள் நின்ற மகிராமிடம் சொன்னேன், 'தயவு செய்து அந்த மஞ்சள் கத்தரிச் செடி யைப் பிடுங்கி எ றி ந் து
விடப்பா!...”*
என்னை அவன் ஒருமாதிரிப் பார்த்தான். என் குரலில் ஏதோ நூதனமான ஒன்று இருப்பதாய் எனக்கே படும்போது அவன் திகைப்பதில் என்ன ஆச்சரியம்?
மில்லை. அவன் அசையவுமில்லை. அவன் சொன்னன், "நல்லது எனக்குச் சந்தேகமாய்ப் ப்ோய் ஐயா! அப்படியே செய்கி விட்டது. நான் அருகில் வந்து றேன்!”
0 0 6
புத்தகங்கள்
சிறப்பு மலர்கள்
நிகழ்ச்சி நிரல்கள்
திருமண அழைப்பிதழ்கள் இரத "ஜொப்' வேலைகள் யாவற்றுக்கும் சிறந்த இடம்
நாவலர் அச்சுக்கூடம்
150, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்,

- N பரிணுமவாதமும்
இலக்கியமும்
ஏ. ஜே. கனகரெட்ன
உயிரினங்கள் தனித்தனியே பண்டக்கப்பட்டவை, அவை மாருதவை எ ன் ற பழைய
கொள்கையை இன்று விஞ்ஞா னிகள் ஏற்கமாட்டார்கள். இன் றுள்ள உயிரினங்கள் ஆதியிலி ருந்த உ ரு வங் களி லிருந்து தோன்றியவையே என்றும் இம் மா ற் ற ம் படிப்படியாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெற் றது, நடைபெறுகின்றது எனப் படிமுறை வளர்ச்சிக் கோட் பாடு வலியுறுத்துகின்றது. ஆதி யிலிருந்த உருவங்களும் இன் றுள்ள உருவங்களுக்குமிடையே எத்தனையோ மாறுபாடுகள் இருக்கின்ற போதிலும், இன் றைய உயிரினங்கள் யாவும் பழைய உருவங்களின் வழிவந் தவையே.
இக்கோட்பாடு இன்று ஆதிக் கம் செலுத்தி வருவதனுல் சில வழிகளிலே எமது சிந்தனையை அ. .து கோணச் செய்திருக்கின் றது. இதனல் நான் படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டை
நிராகரிப்பதாகவோ கண்டிப்ப தாகவோ கொள்ளவேண்டிய தில்லை. உயிரியல் ரீதியாக இக் கோட்பாடு உண்மையாயினும்! பொருந்தாத துறைகளிலே இத னைப் புகுத்த முனைவதுதான் தவறு.
படிமுறை வளர்ச்சியின் மூலம் ஏற்படும் மாற்றங்கள் முன்னேற்றமானவை எ ன் ற கருத்துப்பட நம்மிற்பலர் சிந் திப்பதனல் பழையனவற்றைப்
பற்றி இழிவாகத்தான் எண்ணு
கின்ருேம். பரிணும வளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்பதே இவர்களின் வாதம். புதியவைதான் சிறப்பு வாய்ந்
தவை, சமுதாயம் எல்லாத் துறைகளிலும் மேலே மேலே செல்கின்றது, என்றெல்லாம்
நாம் இன்று நினைக்கின்ருேம்: இதற்கு நேர்முரணுக இருக்கின் றது இந்துக்களின் நம்பிக்கை. இன்று கலியுகம் நிகழ்வதாக வும், எல்லாம் தலைகீழாய் நடப் பதாகவும் இவர்கள் கருதுகின் றனர். இவர்களின் நோக்கின் படி உலகம் வீழ்ச்சிப் பாதை யில் சென்று கொண்டிருக்கின் றது. உண்மை எதுவோ நான் அறியேன்; இந்தத் தத்துவத் துறையை விட்டுவிட்டு இலக்கி யத்தை நோக்குவோம்.
அன்று தொட்டு இன்றுவரை இலக்கியத் துறையில் ஒரே வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளதா ? அன்றி ஏற்ற இறக்கத்தைந்தான் அவதானிக்க முடியுமா? குறிப் பாக ஆங்கில நாடகத்துறை யை நோ க்கு வோ மா யி ன்
93

Page 49
ஷேக்ஸ்பியருக்குப் பின்பு ஆங் கில நாடகம் தேய்ந்துகொண்டு போவதைக் காணலாம். ஆங் கிலக் கவிதைத்துறையை எடுத் துக்கொண்டாலும் காலத்திற் குக் காலம் ஏற்ற இறக்கம் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க லாம். இவ்வுண்மை ஆங்கில இலக்கியத்திற்கு மட்டுமன்று,
வேற்று நாட்டு இலக்கியத்திற்
கும் பொதுவாகக் கலைத்துறைக் கும் பொருந்தும், ஆதலால் கலை, இலக்கியத் துறையிலே ஒரே வளர்ச்சி, ஒரே முன்னேற் றம் ஏற்படுகின்றது எனக் கொள்வதைவிட ஏற்ற மும் இறக்கமும் மாறிமாறி நடை பெறுகின்றன என்றே கருத வேண்டியுள்ளது. இவ்வுண்மை யை கார்ல்ஸ் மாக்ஸ் உணர்ந் திருந்தார். ஈஸ்கிலஸ் போன்ற கிரேக்க நா ட கா சி ரிய ர் வாழ்ந்த காலம் சமூக ரீதியாக பிற்போக்கானதென்றும் ஆனல் அவர்கள் படைத்த உன்னத
நாடகங்களுக்கொப்பாக, சமுக பொருளாதார ரீதியில் முன் னேறிய பிற்காலத்தில் நாட
கங்கள் பெரும்பாலும் படைக் கப்படவில்லையென்பதை அவர்
சுட்டிக்காட்டினர். ஆதலால் சமூக பொருளாதார அடிப் படைக்கும் கலை இலக்கியங்க
ளாகிய மேற்கட் டு மா ன த்
திற்குமிடையே நேரடித் தொ
டர்பு இல்லையென்பதை அவர்
உணர்த்தினர்.
கலை இலக்கியத்துறையில் ஏற்
படும் ஏற்ற இறக்கத்திற்கு கார
ணம் யாது? வெவ்வேறு கலை
94
எலிசபெத்தின்
ஞர்களின் கலைத்திறமையிலுள்ள ஏற்றத் தாழ்வு ஒரு காரணம். ஆனல் இது முழு விளக்கமன்று.
ஷேக்ஸ்பியருடைய நாடகங்ளி லே பொதிந்துள்ள கருத்தாழ மும் சொல்வளமும், கற்பனைச் செறிவும் அவரின் கலையாற்ற
லில் மட்டுமிருந்துதான் முளைத்
தன என கொள்ளலாகாது? அவருடைய நா ட கங் களின் வளத்திற்கு அவர் வாழ்ந்த
கா ல மும் உர மி ட் டது . அவர் வாழ்ந்த காலம் மாலை
மயக்கத்தைப் போன்றிருந்தது.
பழையன முற்ருகக் கழியவு மில்லை. புதியன முற்ருகப் புகவு மில்லை. பழைய பண்பாட்டிற் கும் புதிய கொள்கைகளுக்கு மிடையே ஏற்பட்ட மோதல் அவருடைய படைப்புக்களுக்கு வளமூட்டின. ஷேக்ஸ்பியருக்குப் பின்பு திறமைபடைத்த நாட காசிரியர்கள் வாழ்ந்தார்கள். ஆனல் இவர்களுடைய நாட கங்கள் உன்னத படைப்புக்க ளாக மிளிராததற்கு ஒரு கார ணம் ஷேக்ஸ்பியருடைய நாட கங்கள் பிறந்த பின்னணி மறை ந்தமையே. ஷேக்ஸ்பியர் வாழ் ந்த காலத்தில் வேறு நாடகா சிரியர்களும் இருந்தபோதிலும், அவருடைய திறமை இவர்களி டம் இல்லாததினுல் ஷேக்ஸ்பி யருடைய நாடகங்களுக்கொப் பாக இவர்களது படைப்புக் கள் நிற்கமுடியவில்லை. இதிலி ருந்து பின்னணியோடு கலைத் திறனும் வேண்டும் என்பது புலனுகின்றது. ஆனல் முதலாம் காலத்திற்குப் பின்பு ஆங்கில நாடகத்துறை

யிலே தேக்கம் ஏற்பட்டுள்ள தற்கு பின்னணி மாற்றமும் முக்கிய காரணமாகும்.
இன்று எமது கலைஞர்களுக்கு
உத்திகளைப் பற்றியெல்லாம் நன்கு தெரியும். பழைய கலை ஞர்களுக்கு தெரிந்திருக்காத
எத்தனையோ உத்தி நுணுக்கங் களெல்லாம் எம் ம வர் க் குத் தெரியும். ஆனல் இன்றைய ப  ைட ப் புக் களி ல் எத்தனை பழைய கலை ஆக்கங்களுடன் சமதையாக நிற்க வல்லன? அப்படி தலை நிமிர்ந்து நிற்கக் கூடியவை மிகச் சிலவே. ஆத லால் வெறும் கலைத்திறனும், கலையைப் பற்றிய அறிவு ம் போதா. இன்று எமது எழுத் தாளர்களில் பலர் நுணுக்கமா கச் சொல்லும் திறன் வாய்ந் தவர்களாய் விளங்குகின்றனர். ஆனல் சொல்வதற்குத் தான் அவர்களிடம் ஒன்றும் இல்லையே! இன்றைய எழுத்தாளர் பல ரின் நோக்கு குறுகியிருப்பதே அவர்களுடைய படைப்புக்க ரின் வீழ்ச்சிக்குக் காரணம். நோக்குக் குறு கியிரு ந் த ரா ல் எந்த உத்தியாலும் கலை þ1609) க்கத்தாலும் சமாளிக்க முடி யாது. இதற்கு எழுத்தாளர் களையும் குறை சொல்ல முடி யாது. அவர்கள் வாழும் காலப் பின்னணியின் சாயலே தவிர்க்க முடியாது அவர்களின் படைப் புக்களில் படிந்திருக்கின்றது. இதனை தாண்டுவது அரிதிலும் அரிது.
NAе
அல்பேர்ட்டோ மொறேவியா எழுதிய ஒரு நாவலில் வரும் பாத்திரத்தின் சிந்தனையுடன் இக்கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன். இன்றைய படைப்புக்கள் பெரும்பாலான வற்றில் ஹோமரின் ஒடிசீயி லுள்ள ஆழமும் செறிவும் இல்லையெனக் கூறி, ஹோமர் அகத்தையும், புறத்  ைத யும் இணைத்தது போன்று இன்றைய படைப்புக்கள் இணைக்கவில்லை யென் அப்பாத்திரம் குறிப்பிடு கின்றது. ஹோமரது படைப்பு விசாலமானது; ஒளிமயமானது. இன்றைய படைப்புக்கள் ஒடுங்
கியவை, குறுகிய பிரக்ஞை என்ற சிறையில் உழல்பவை என்றகரு த் துத் தொனிக்க அ ப் பா த் தி ரம் சிந் தி க் கிறது. இச்சிந்தனையில் கணி சமான உண்மை இருப்பதா கவே எனக்குப் படுகின்றது. ஏனைய துறைகளைப் போன்று
கலைத்துறையிலும் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின் றன. ஆனல் மாற்றமெல்லாம் முன்னேற்றமாகுமா? தவிர ஏற் றம் இறக்கம் வளர்ச்சி வீழ்ச்சி என்ற பதங்கள் ஓரளவிற்கு ஒவ்வொருவரின் நோ க் கி ல் தொக்கி நிற்பவை. அவற்றிற்கு திட்ட நுட்பமான வரையறை இல்லை. ஒருவருக்கு வளர்ச்சி யாகத் தோன்றுவது இன்னெ ருவருக்கு வீழ்ச்சியாகப் பட லாம். இத்தகைய கரு த் து வேறுபாடு நிலவுவது இயல்பே.
95

Page 50
செனித் வாச் கொம்பனி 56, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், கைக்கடிகாரங்கள், சுவர் மணிக்கூடுகள் மற்றும் சகலவிதமான கடிகாரங்களையும் நுட்பமான முறை யிலும் நவீன சாதனங்களின் உதவியுடனும் திருத்திக்
கொடுப்பவர்கள்.
குறித்த காலத்தில் திருத்திக்கொடுப்பதில் நன்மதிப்புப்
பெற்றவர்கள்.
ஒருமுறை விஜயம் செய்யுங்கள்.
ZENITH WACH CODMADANY 56, KASTURAR ROAD, JAFFNA.
eGee GaGatastrose
வை. சி. சி. கு.
57, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
காரம், மணம், குணம் நிறைந்த சுருட்டு வகை களுக்குப் பேர் பெற்றவர்கள், நன்கு சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கும். சிற்றுண்டி, தேநீர் போன்ற வற்றிற்கும் யாழ்ப்பாணத்தில் என்றும் பேர் பெற்ற ஸ்தாபனம் இதுவே. ஒருமுறை நேரில் வருகை தாருங்கள். உங்கள் ஞாபகத்தில் என்றும் வைத்திருங்கள்.
V. S. S. K.
57, K. K. S. ROAD, - JAFFNA,
Ec=EG=0=
 

யாழ்ப்பாணத்துப் பிற்காலச்
சுவரோவியங்கள்
கலாகேசரி. ஆ. தம்பித்துரை.
அழகுக் கலைகள் ஐந்து. அவை மனிதனுடைய அழகுணர்ச் சியிலிருந்து ஊற்றெடுத்து அவனது அறிவினலும் மனுேபாவத் தாலும், கற்பனையாலும் உருவமெய்தி, மனித இனம் பண்புட னின்புற்று வாழ வழிவகுத்து வழிந்தோடிவரும் பஞ்ச நதிகளா கும். இவற்றின் கலைப்பெருக்கிலே மூழ்கி அவற்றின் அழகை அனுபவிக்க மறுக்கும் அறிவு நிரம்பாத எந்த மனிதனும் கொம் புகளும், வாலுமற்ற விலங்கிற்குச் சமனவான் என்பது அறிவுடை யோர் கருத்தாகும். இன்கலை, கவின்கலை, நுண்கலை, நற்கலை எனச் சிறப்பித்துக்கூறப்படும் அழகுக் கலைகளுள் உள்ளத் தெழுக்கை யாவும் தூரிகைமூலம் ஊற்றெ டுத்துத் தங்கு தடை யின்றிப் பிரவகித்து வண்ண மலராக மிளிரும் ஒவியக்கலையும் ஒன்ருகும்.
சீரிய நாகரீகத்திற் சிறப்புற்றுப் பண்டைய பண்பாட்டில் மலர்ச்சியுடன் பாங்குற விளங்கும் நாடுளிலெல்லாம் ஒவியக்கலை நன்ரு கவளர்ந்து வந்துள்ளது. குகைச் சுவர்களிலும், ஆலயங்க ளிலும், அரண்மனை மாடங்களின் சுவர்களிலுமே இவ்வண்ணக்கலை முதலில் வளரத்தொடங்கியதெனலாம். சுவரை ஆதாரமாகக் கொண்டு தீட்டப்படும் ஒவியங்களைச் சுவரோவியங்கள் (Wal Painting அல்லது சுவர்ச் சித்திரங்கள் என்பர். வரலாற்றுச்சிறப் பும், கலைச்சிறப்பும் பொருந்திய சுவரோவியங்களை ஈழத்திருநாட் டிலும் பண்டைய மக்கள் தீட்டிப் பயனடைந்திருக்கின்றனர். அவற்றுள் சிகிரிய ஒவியங்கள் அஜந்தாச் சுவரோவியங்களை நிகர்த்தன. தம்புல்லா, கல்விகாரை, ஹிந்தவாகலா, திம்புலா கலா, பொலநறுவா, கண்டி, மகியங்கன, களனி ஆகிய இடங். களிலும் சிறந்த சுவரோவியங்கள் காணப்படுகின்றன. ஈழநாட் டின் இந்த ஒவியங்கள் இந்தியச் சுவரோவியங்களைப் போல் அபிநயச் சிறப்பும், வண்ணச் சிறப்பும் வாய்ந்தவை. பொல நறுவை காலத்திற்குப் பின் ஒவியக்கலை இலங்கையில் வளரவில்லை என்பது ஆராய்ச்சியாளரின் கருத்தாகும். அன்னியர் ஆட்சியில் ஓவியக்கலை தன்னிலைகுன்றி தன்மையிழந்து தாழ்வு ற் று ள்ள காலகட்டத்திற் தீட்டப் பெற்ற ஒரு சில சுவர்ச்சித்திரங்கள் யாழ்ப்பாணத்திலம் காணப்படுகின்றன. இவை மிகவும் பிற்பட்
Ꭶ7

Page 51
டகாலத்தவை. அதாவது இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன் 150 வருடங்கள் வரையுள்ள கால இடைவெளிக்குள் தீட்டப் பெற்றனவாகும். இவற்றைப் பற்றி அறிய முற்படும் நம்மை இவ் ஓவியங்கள் அ வ் வள வு கலையம்சம் பொருந்தியனவா? எனச் சிலர் எள்ளி நகையாடக்கூடும். இவற்றை நாம் இரசிக்க முற்படாவிட்டால் இன்றைய ஒவியர்கள் தீட்டும் சுவர்ச்சித்திரங் களை நம் பிற்காலச் சந்ததியினர் ஏற்றுக் கொள்வதற்கு என்ன விசேடமான கலையம்சங்கள் அவற்றிற்கு இருக்கின்றன, என்பதை கலைவல்லுநர்களே தீர்மானிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திற் காணப்படும் இச்சுவரோவியங்கள் கவனிப் பாரற்ற நிலையில் அனதைகளாகக் காட்சிதருகின்றன. இவ் ஓவி யங்கள் சுதை ஒவிய முறையிலோ அல்லது திறமான ஒட்டு வண்ண முறையிலோ தீட்டப்படவில்லை. வெண்சாந்து பூசிய சுவ ரிலே ஒட்டு வண்ணங்களையோ அல்லது தூள் வண்ணங்களையோ வச்சிரம் போன்ற ஒருவகைப் பசையுடன் சேர்த்துத் தீட்டியிருக் கின்ருர்கள்.
யாழ்ப்பாணத்தின் சரித்திரத்திலே தமிழ்நாட்டுடன் நெருங்கிய த்ொடர்பு பூண்டுள்ளதும், 'துரங்காண விமோசனபுரே' என்று வழிபாட்டுப் பத்ததியிலே விழித்துக் கூறப்பட்டுள்ளதுமான மாவிட் டபுரத்திலே கோயில் கொண்டருளியுள்ள வள்ளிக்கிசைத்த மண வாளனுகிய கந்தன் ஆலயத்திலும் சில சுவர்ச்சித்திரங்களை நாம் காணலாம். இவற்றின் கலையழகை காணும் நோக்கத்துடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து 679ம் இலக்க பஸ் வண் டியில் ஏறி உட்கார்ந்துள்ள நாம் அரைமணி நேரத்தின்பின் கோயிலின் அண்மையிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இறங்கி பக்தியுடன் செல்கின்ருேம். இராம, இலக்குமணரை மிதிலை மாநகரத்தின் செழுமணிக் கொடிகள் தம் கைகளை நீட்டி உள்ளே வாவென அழைத்தது போல, நீள்பெருங் கோயிலில் மேற்கு நோக்கி வானுடன் உறவாடும் நிகரில் கோபுரத்தின் சேவற் கொடியும் நம்மை வரவேற்கின்றது நீல வானத்திற்கியைந்த ஒத்திசை வைத்தரும் வெண்ணிற நீல வண்ணத்தால் அலங்கரிக் கப்பட்டசிற்பக்கோபுரம் மேற்கு நோக்கி இருப்பினும் முருகன் கிழக்கு நோக்கியே இருக்கின்ருன் ஆகவே வடக்கு வீதிவழியாக வாயில் பக்கம் சென்று கை, கால், சுத்தம் செய்து கோபுர வாயிலை வணங்கி உள்ளே செல் இன்ருேம் இரண்டாம் வீதியி லுள்ள வாயிலிலே நின்று முருகனை வணங்கி வடக்கே தலை வைத்து அட்டாங்க நமஸ்காரம் செய்து எழும்பும் எமது கண் களை வசந்த மண்டபத்தின் சுவர்களில் எழுதப்பட்ட மூன்று ஒவியங்கள் கவுர்கின்றன. w
98

மண்டப வாயிலுக்குமேலே மருகனுக்குப் பதிலாக திருமால் வண்ணத்தால் தீட்டியிருக்கின்றர்கள். நீல நிறம் பொருந்திய திருமால் திருப்பாற் கடலிலே ஆதிஷேடன் மேற் சயனித் திருக்க மகாலட்சுமி காற்பக்கத்திலே வீற்றிருக்கும் நிலையில் இவ் ஒவியம் வரையப்பட்டுள்ளது. கீழ்நாட்டிற்கேயுரிய தனித்துவப் பாணியிலே சயன நிலையிலே இருக்கும் திருமாலின் கால்களின் கீழ் விரிந்து பொலியும் தாமரைமலர் தீட்டப்பட்டிருக்கும் மரபு குறியீட்டுத் தன்மையை வெளியிடுகின்றது. உந்தியில் உதித்த அயனும் அவனது பத்மாசனமாகிய பங்கயமும் கூட இத்தன் மையையே உணர்த்துகின்றன. கைகளின் முத்திரைகள், அவற் றின் அமைப்பு ஆகியவற்றைத் தீட்டிய அவ் ஓவியன் 2ே நாட்டு முறையான தூரநோக்கும் முறையைப் பின்பற்ருது நமிது மரபிற் கேற்ப அவைகளை தீட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. நீலவண்ணத்
திரு மாலின் சுவர்ச்சித்திர த் து க் கு க் கீழே யுள்ள இரு மருங்கி அலும் இருமுழு ஓவியங்கள் காணப் படுகி ன்றன. கிழக் குப் பக்கத்தி லேயுள்ள சித் திர த் தி லே மாருதப் புர வல்லியின் க ண வ ஞ கிய உக்கிர சே ன ன், கைகூப்பி வணங்கு கிரு ன். அவனுக் குப் பின்மாரு தப் புரவல்லி அரசிளங் குழ ந்தையை இடு ப்பில் வைத்து இடது கையி ஞல் அணைத் துக் கொண்டு

Page 52
திரிபங்க நிலையில் நிற்கும் காட்கி மிகவும் லாவண்ய மான அழகுடன் சித் த ரிக் க ப் பட் டி ருப்பது போற்றப்பட வேண் டியது. அரசனது கம்பீர நிலையும் பக்திப் பெருக்கும் உணர்ச்சி ததும்பக் காட்டப்பட்டிருக்கும் முறை நன்ருக இருக்கிறது. மறுபக்கத்திலே மந்திரியும், சேவகனும் தத்தமக்குரிய பாணியில் கெம்பீரமாகக் காட்சியளிக்கின்றனர். அரசனுக்கும், மந்திரிக்கும், சேவகனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை ஆடை அணிகள் மூலமும் உருவ அமைப்பு மூலமும் விளங்கவைத்திருப்பது நோக்கற் பாலது. அன்னம், மலர் போன்ற அம்சங்களைக் கொண்டு வாயில் அமைப்பைச்சுற்றி அழகிய கரைச்சித்திரங்கள் தீட்டப்பட்டிருக் கின்றன. அந்தந்த உருவங்களுக்கேற்ற ஆடை அலங்காரங்கள்ை வ்ண்ணங்களிலும் கோடுகளின் லளித ஒட்டத்தினலும் திறம்பட காட்டப் பெற்றுள்ளன. ஒவியங்களின் மேற்பாகங்களை அலங் கரிக்கும் அலங்காரக் கொடுங்கைகளும் காணக்கூடியவை. இவ் ஒவியங்களின் பொது அமைவும், வண்ண அமைப்பும் நன்ருக இருக்கின்றன. அநேகமாக மூலவண்ணங்களிலே உபயோகிக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாக மேலை நாட்டுக் கலைக்கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு ஒருசில குறைபாடுகள் தென்பட்டாலும், இவ் ஒவியங்கள் தீட்டப்பட்ட கால கட்டத்தையும் வேறும் வசதிகளை யும் நோக்கி ஆராய்பவர்களுக்கு இச் சுவரோவியங்கள் ஓரளவு திருப்தியையே கொடுக்கும்.
இப்பழைய சுவர்ச்சித்திரங்களை கவாரசனையற்ற சுவருக்கு சுண் ஞணம்பு பூசும் பெரியோர்கள், பகுதி பகுதியாகச் சிதைத்துச் சித் திரவதை செய்து வருகின்றனர். அரசிளங்குமரனது தலையின் ஒரு பகுதியையும், சேவகனையும், ஏற்கனவே துண்டாடி விட்டனர். எனவே இனியாவது கோயில் முகாமையாளர்கள் மிகுதியாக இருக்கும் சுவரோவியப் பகுதிகளையேனும் அழியவிடாமல் அவற் றைப் புதுப்பித்து கலை உள்ளங் கொண்டோரின் பாராட்டுதலை பெறமுயற்சிப்பார்கள் என்னும் எண்ணத்துடன் நாமும் திரும் புவோம்.
அடுத்து நாம் காண முற்படும் சுவரோவியங்கள் யாழ்ப் பாணத்துத் தாவடியைச் சேர்ந்த திரு. துரைச்சாமி என்னும் ஒவியரினல் வரையப்பட்டனவாகும். இவர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமுள்ள ஆலயங்களிலும் தனவந்தர்களின் மனைக ளிலும் ஒவியங்களைத் தீட்டியிருக்கின்றரென நமது முதியவர்களின் வாயிலாக அறிந்தோம். இவர் தான் வாழ்ந்த காலத்திலேயி ருந்த பெரியோர்களின் உருவப் படங்களை உள்ளது உள்ளவாறு குறுகிய நேரத்தில் வரையும் ஆற்றல் உள்ளவராக விளங்கியுள் ளார். தூள் வண்ணத்தைக் கொண்டு மேலைத் தேசப் பாணியிலே கீரிமலைச்சிருப்பர் மடம், யாழ்ப்பாணத்துக் கிட்டங்கிச் சுவர்கள்,
00

நல்லூர் சட்டநாதர் ஆலயம் முதலிய இடங்களில் இவர் தீட்டிய ஒவியங்கள் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் ஒருசிலவற்றைத் தவிர மற்றயவைகள் இன்று அழிந்துவிட்டன.
நல்லூர் இராசதானியின் அரசியல் விவகாரங்களுடன் நெருங் கிய தொடர்புள்ளது நல்லூர் சட்டநாதர் ஆலயம். இக் கோயிற் கோபுர வாயிலின் மேற்றளத்தில் அம்மை அப்பன் இடபவாகன ரூடராகவும், தெற்குப் பக்கச்சுவரிலே கண நாதராகிய வினயக ரும், வடக்குப் பக்கத்திலே பீழ்நி ஆண்டியும் சித்திரிக்கப் பட்டி ருக்கின்றனர். மண்டப வெளித்தூண்கள் ஐந்தில் ஆலயத்துடன் தொடர்புள்ள ஐந்து பெரியோர்களது முழு உருவப் படங்களும், ஆழுவது தூணில் இச் சித்திரங்களை வரைந்தவர் எனக்குறிப்பி டப் பட்டிருந்த ஓவியர் துரைச்சாமி அவர்களது தன்னுருவ ஒவியமும் காட்சியளிக்கின்றன. ஆனல் இன்று அவை அழிக்கப் பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவைகள் எலிவாகனரூடராகிய வினய கரும், பழநி ஆண்டியுமே. வினயகப்பெருமான் சர்வாலங்கார ரூபணுகவும் கருஞ்சிவப்பு நிறம் உடையவனுகவும், எலிவாகனத் தில் வீற்றிருக்க கோயிற் பூசகர் தீபாராதனை செய்து கொண்டி ருக்கிருர், மேலைத் தேசப் பாணியில் வரை யப் பட்டிருக்கும் இந்த ஒவியத்தில் வினயகரது வலது கால் தூரநோக்கு முறை யைப் பின்பற்ருது, எழுதப்பட்டிருப்பது ஆச்சரியத்திற்குரியது . ஆனல் பூசகரது உருவ அமைப்பும் வண்ண அமைப்பும் தத்ரூப மாக அமைந்துள்ளது போற்றவேண்டியதே. பழநி ஆண்டவரது வலது பக்கத்திலுள்ள கூவுஞ் சேவல் கலையம்சம் பொருந்தத் தீட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் கண் உள்ள குறைகளை நீக்கி நல்ல அம்சங்களை இரசித்துக் கொண்டு யாழ்ப் பாணம் மாநகரசபையை நோக்கிச் செல்வோம்.
மாநகர சபைக்கு அண்மையில் உள்ளனவும் வர்த்தகக் களஞ் சியங்களாக மிளிர்ந்தனவுமான கி ட் ட ங் கி க் கட்டிடங்களின் வெளிச் சுவர்களிலே பல சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்த அடை யாளங்களைக்காண முடியும், அவற்றுள் இலக்குமி, சரஸ்வதி போன்ற தெய்வ உருவங்களும் மற்றும் வேறு நிகழ்ச்சிகளை விளக் கும் ஒவியங்களும் மறைந்து கிடக்கின்றன. திரு. துரைச்சாமி அவர்கள் தீட்டிய ஓவியங்களில் திறமையானவை எனக்கருதக் கூடிய இரு ஓவியங்களை மாத்திரம் சிறிது கலை உள்ளங்கொண்ட கட்டிடச் சொந்தக்காரர்கள் அழியாது வைத்திருக்கின்றனர். இருந்தும் அவை வண்ணங்கள் அழிந்து அரைகுறையாகவே காட் சியளிக்கின்றன, இதன் காரணத்தால் அவற்றின் முழுத் திறனை யும் நாம் இரசிக்க முடியவில்லை.
இவ் ஓவியங்கள் இரண்டும் அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத் திலிருந்து அரசாங்கப் பதவிகளை நிர்வகித்த இரு துரைமார்கள்
0.

Page 53
தங்களது குதிரைகளில் சவாரி செய்யும் காட்சிகளையே சித்தரிக் இன்றன. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து அவரவர்க ளது வளர்ப்பு நாய்களும், பணியாளரும் ஓடிவருகின்றனர். துரை மார்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அண்மியதும் த த் தமது குதிரைகளின் கடிவாளங்களை இழுத்துக் குதிரைகளை ஒடவிடாது நிற்பாட்டுகின்றனர். குதிரைகள் இரண்டும் ஒரளவு கட்டுப்பாட் டுக்குள் வந்ததும் வெள்ளைக்காரத் துரைகள் இருவரும் சம்பாஷிக்க ஆரம்பிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிஃய மிகவும் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்ருர் ஒ வியர். வலது கரையிலிருந்து வந்த குதிரை சற்று வேகமாகத்தான் வந்திருக்க வேண்டும். அக் குதிரையினது எஜமானுகிய கு ஸ் ள வடிவுடைய வெள்ளைக்காரத் துரை அதன் கடிவாளங்களைப் பிடித்திருக்கும் தன்மையிலிருந்தும், குதிரையினது கழுத்துத் திருப்பலிலிருந்தும், கால்களின் அமைப்பி லிருந்தும் அறியமுடிகின்றது. இடது கரையில் இருந்து வந்த குதிரை கெம்பீர நடையில் வந்திருக்கிறது. குதிரை நிற்கும் நிலை யிலிருந்து இதனை அறியலாம்,
இக்குதிரையின் எஜமானராகிய துரை இருண்ட மஞ்சள் நிற மேலங்கி அணிந்து, குதிரைக் சவாரிக்கேற்ற உடைகளுடன், மொட்டைத்தலையில் ஒரு சில மயிர்களுடன் காட்சியளிக்கிருர், இவரது குதிரை கறுப்பு நிறமுடையது. வெண்ணிறஉடை அணிந்து,
02
 
 

அரசாங்க உத்தியோகத்தில் மிக உயர்ந்தவர் என்பதைக் காட் டும் தங்கப்பதக்கத்துடன் காட்சியளிக்கும் குள்ளமான வெள்ளைக் காரத்துரையின் தோற்றம் இரசிக்கக்கூடியது. இவரது உடையிற் காணப்படும் வெண் நிற வண்ணத்திற்கேற்ற வண்ண ஒத்திசைவை ஏற்படுத்தும் பொருட்டு அவர்தம் குதிரையின் நெற்றியிலும், கெண்டைக் கால்களிலும் வெண்மை நிறம் தீட்டியிருப்பது நோக் கற்பாலது. குதிரை கருஞ்சிவப்பு நிறமுடையது.
பெரிய துரையாகிய இவரைத் தொடர்ந்து வரும் நாய் நாக்கை நீட்டிக் கொண்டு ஓடி வருகின்றது. இது நெடிய உருவ மைப்புடையது. இடது பக்கத்திலிருந்து வருகின்ற நாய் சடை யுடன் கூடிய குள்ளவடிவுடையதாய் வரையப்பட்டிருக்கிறது. நாய்களின் தோற்றங்களை இந்த வகையில் அமைத்து ஒவியத் தின் பொது அமைவைச் சம சீருடன் விளங்க வைத்திருக்கின் ருர் கண்ணுள் வினைஞர்.
வலது பக்கத்தில் வந்து கொண்டிருக்கும் பணியாள் தலை யிற் தலைப்பாகையுடன் பணியாளுக்குரிய அரசாங்க உடை தரித்து ஒரு கையிற் சாமரையுடனும், மறு கையில் விருதுக் கொடியுடனும் ஓடி வருகின்றன். இவனது முதுகுப்புறம் அழி பட்டு விட்டது. மறுபக்கத்தில் வருகின்றவன் பணியாளோ அல் லது கைப்பிரம்பு வியாபாரியோ என்று விளங்கிக் கொள்வது சற் றுக் கடினம், சாரத்துடன் கோட்டு அணிந்து, தலையிற் துண்டு கட்டிக்கொண்டு வருகின்ருன், தோளில் மாட்டியுள்ள கூடை யில் கைப்பிரம்புகள் பல இருக்கின்றன. வலது கையில் ஒரு பிரம்பைத் தூக்கிப் பிடித்திருக்கும் நிலையில் வரையப்பட்டிருக்கி முன். இவ்வோவியங்களைப் பொதுவாக நோக்குமிடத்துச் சிறந்த பொது வமைவுடனும், ஒத்திசைவுடனும் விளங்குகின் றன. சட்டநாதர் ஆலயத்திற் காணப்பட்ட முற்குறுக்கக் குறைபாடு இங்கு அ தி க ம் காணப்படவில்லை. உருவங்களின் அமைப்பும், சந்திப்பு நிகழ்ச்சியின் தன்மையும் உள்ளது உள்ள வாறு காட்டப்பட்டிருக்கும் முறை நம்மை மிகவும் கவர்கின் றது. இத்தகைய ஒவியங்களைச் சீக்கிரத்தில் பழுதுற விட்டுவிட் டிருப்பது கவலை அளிக்கின்றது. இவற்றைப்போல பல காலத் தால் முந்திய சுவரோவியங்கள் யாழ்ப்பாணத்தின் பல பாகங் களிலும் இருந்திருக்கலாம், அவை நமது கண்களுக்கு இன் னும் புலப்படவில்லை. அழியாமல் இருக்கும் சில சுவர்ச்சித்திரங் களை யாவது பாதுகாத்து யாழ்ப்பாணத்திலும் இப்படியான ஒரு கலை இருந்திருக்கின்றது என ஏனையோர் நினைக்கும் வண் ணம் செய்யவேண்டியது கலா ரசனையுடைய ஒவ்வொருவரு டைய கடமையுமாகும்.
703

Page 54
மலரில் எழுதியவர்கள் e
aumont
இ. ஆர். திருச்செல்வம் ஒரு பட்டதாரி, இன்று குருநாகலில் படிப்பிக்கின்றர். நீண்ட நெடுங்காலமாக இலக்கியத் \தாடர்பு உள்ளவர். அ. ந. கந்தசாமி அவர்களைத் தெரியாதவர்களே இல்லை எனலாம். பழைய மறுமலர்ச்சிக்கால முன்னுேடிகளில் ஒரு வர். ஏ. இக்பால், கவிஞர்; முஸ்லிம் இலக்கியங்களில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். சி. செல்லத்துரை வீரகேசரி நிருபர். இதுவே போதும் அவரைப்பற்றி. ஏ. ரி. பொன்னுத்துரை ந்ாட கத்துறையை தமது உயிர் மூச்சாகக் கொண்டவர்; பட்டதாரி, யாழ். இலக்கிய வட்டத் தலைவர். “பாரா ஈழநாடு பத்திரி கையின் உதவி ஆசிரியர்களில் ஒருவர், இளைஞர்; திறமைசாலி. க. கணேசலிங்கமும் அதே போன்றவர். இலக்கிய இதயம் படைத்தவர். நந்தி, இன்று லண்டனில் வசிக்கிருர், இருந்தும் அவர் நெஞ்சம் ஈழத்திலேதான் உலவும். இரசிகமணி மல்லிகை யின் ஆரம்பம்தொட்டே மல்லிகைக்காக உழைப்பவர். கருத்து முரண்பாடு உண்டானலும் மனத்தினுல் பெரியவர், கவிஞர்கள்: மகாகவி, இன்று யாழ். கச்சேரியில் உத்தியோகம் பார்க்கிருர், சிறந்த கவிஞர்களில் ஒருவர் என அங்கீகரிக்கப்பட்டவர். சுந் தரம்பிள்ளை பல பரிசுகளைப் பெற்று வளர்ந்து வருபவர். கந்த வனம் துடிப்பான கவிஞர்; இளைஞர்; பட்டதாரி ஆற்றல் மிக் கவர்.நீலாவணன் கீழ்மாகாணம் தந்த கவிஞர்ச்செல்வம். இனி யவர் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர். பார்வதிநாதசிவம் பண்பாளர்; இளைஞர்; தமிழன்மேல் ஆழமான பற்றும் பாசமும் மிக்கவர். அம்பி பழகுவதற்கு நல்லவர்: கவியரங்கங்களில் தலைசிறந்து நிற்பவர்; ஆர்வம் மிக்கவர். தில்லைச்சிவன் குழந்தை நெஞ்சம் படைத்த இக்கவிஞர் தமிழ் ஆசிரியர், சரவணையைச் சேர்ந்தவர்; கவிதைக்கன்னியின் கடாட்சம் பெற்றவர். பஸில் காரியப்பர், இளைஞர்; வளர்ந்துவரும் கவிஞர்; கொழும்பு சகிராக் கல்லூரி ஆசிரியர். முருகையன் தலைசிறந்த ஈழத்துக் கவிஞர்களில் ஒருவர். இவரைத் தெரியாதவர்களே ஈழத்தில் இல்லை, வரதர்" மறுமலர்ச்சி தந்த இலக்கியச் செல்வம். இலக்கியமே அவரதுமணம், அவரது மனமே இலக்கியம். குறமகள் பட்டதாரி ஈழத்தில் குறிப் பிடக் கூடியபெண் எழுத்தாளர்- மல்லிகைக்கு எழுதுபவர். சசிபாரதி குழந்தை இலக்கியத்திற்காக உழைப்பவர். பல இலக்கிய நண்பர்க ளுடன் நேரடி ஈடுபாடு கொண்டவர், அகஸ்தியர், பலராலும் அறி யப்பட்ட சிறுகதை எழுத்தாளர்; இலக்கிய ஆர்வமும் உழைப்பும் மிக்கவர் சகலருக்குமே இவரைத் தெரியும். சிவா சுப்பிரமணியம், சிங்களத்திலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் மிக்கவர், அரசாங்க ஊழியர்; எழுத்தாள உலகில் வளர்ந்து வருபவர். பெரி. சண்முகநாதன் வளர்ந்து வரும் குறிப்பிடத்தக்க எழுத்தாள இளைஞர். ஏ. ஜே. ஈழத்தில் யாருமே முன்நிற்க முடி யாத ஆற்றலும் திறமையும் உள்ளவர், பட்டதாரி, ஆங்கிலத்தை விசேடபாடமாக எடுத்தவர். கலாகேசரி, ஆசிரியர்; அருமையான சிற்பி பிரபல ஆலயங்களில் உள்ள தேர்களில் இவரது கைவண் ணம் இன்றும்மிளிர்கின்றது: -ஆசிரியர்
04

இப்பொழுது நேரம் வந்துவிட்டது!
1968-ம்
s2b
ண்
ககு
உங்கள் 2. வர்த்தக /-త్త ཆོ་ kar క్ష్(2 விளம்பரங்கள்
அடங்கிய
I
அ
6()/:
வி
r
I
க்
O O O கலண்டர்களுககு இப்பொழுதே விண்ணப்பியுங்கள். பல்வேறு மாதிரிகளில் அழகான படங்களுடன் கவர்ச்சிகரமாக அச்சிட்டு குறித்த தவணையில் தருவோம்,
நம்.1, நம். 2 நம். 3, மற்றும் ருேல் கலண்டர்களும் பெரிய, சிறிய அளவுகளில் நாட்குறிப்பு (டயறி) களும், விலை விபரங்களுக்கு எழுதுங்கள்.
KO 9 தொலைபேசி: ஆனநதா அசசகம "gs
- 226, காங்கேசன்துறை வீதி, தந்தி:
யாழ்ப்பாணம். ‘அச்சகம்
TSLuiAiLuTTTqqqAqALLSSTTSSA SA AALLLYLTTziuLLSLiu SiLLiuLSuSAA iiuSY
So

Page 55
FIRST ANNUAL-1967
விவசாயிக வருக
ஓர் நற் P
உங்கள் பயிர்களே பூர் காளான் நோய் அ
பாதிக்கின்றன
கவர்ல வேண்
விய 1ங்க
ଗାଁ' ) || ? ) புருேவின் ஷல் டி 5市、エリsts ● யாழ்ப்
- '' 628
ஹொலிடே இன்ஸ் ஹோட்டல் ன்
I , , 337 li, si fl. l. ait: '',''' fii ஆசிரியரும் வெளியீடு வருமான ே பரனர் . 131 ந1 எ வர் 'ேட்டினிது சிட்டு ைேளிடட்டே 'து.
 

i FA Lit. H
கு o y un @!
F. பூக்கள் கியவை ?"ד, וה
ử !
凰 墅_ னப் பொ (TE ட்கள்
Il VI I II i
ஸ்ட் றி பியூட் t-i (ಹ್ಲಿ
? ', ' ' ' ?!!!! :) : ,
| , ' AN Í,
விமிட்டெட் டிசின் கட்டு ஸ்* זוודה נו י
F -
பார் 'கியில் இருப்பதும் ! ஸ்லிகை டா மினர்ஜீனா ஆr கள1 ல் , 17 ஆழ்ப் க்கு: ந" (பர் அச்சுக் கடத்தி, *ச்