கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1979.02-03

Page 1
ווה.
|- Lae sae |: 心 E! No |× | No — − o
 

ல்லிக்க ாைன்

Page 2
*守a哥e駁 į urm@g??, qui segons 岛电图的“点心电吗gæxlue:I Į Iş
søg og 韃* V NHẢIV f.メTB巨コne』ュ opfourt #993șđỉogo i opeo, os syg -★ →•^'^i^ • • • •量 ipso įrmno) qi@reggissepeos os ox{ oxi ogłosz思想ase。場Q“g)*麟3. #sso opš#æs, qț¢jn aaoof os usunoq woup3ansố șųogibone) įmụs?“lufto ßnrı sereg)" tegnoœgeçen IVYHITTIVIA,:ų restfo| 64 #ųılgı olyno (Norilo)
əuszp3 pJA,fisquow24įssəuổoues, „įpès]]|pW,
解密
...gl/flos)19ī£ ©iogogo, aoạigjines ĮGŪĶI - Įsterasi-igi qasī1ņ9-tog-ino), quouso-os - qøų9?dogo s 25 mg.urt நூ9தி ராgஒழு (gகுேயா (தஈடு*
 
 

வல்லிக்கண்ணன்
வல்லிக்கண்ணனை வாழ்த்து கிருேம்.
1978 - ஆம் வருடத்துக்கான சாகித்திய அகெடமிப் பரிசு ரூபா ஐயாயிரத்தைப் பெற்றுக் கொண்டமைக்காகவல்ல -
1930 களிலே தமிழ் இலக் கிய உலகிலே புகுந்து, இலக்கிய முயற்சிகளை இலட்சிய வெறி யுடன் நடத்திவந்த ஒருவருக்கு*வெகுசனப் பண்பாட்டின்" கோரப்பிடிக்குள் இலக்யெ சஞ் சிகைகளும், சஞ்சிகை எழுத்தா ளர்களும் சிக்கி இலக்கியத்தை யும், இலக்கியகாரரையும் சினி மாப் பாணி "கிசு கிசு" எழுத்து மரபின் வழியிழுக்கப்பட்ட பின் னரும் தொடர்ந்தும் நேரிய இ லக் கி ய ஆர்வம், எழுத்து என்னும்" "சிறுபான்மைப் பண் பாட்டினைத் தொடர்ந்து பேணி யும், இலக்கியத்துக்கேயுரிய விட யங்கள் பற்றியும் எழுதிவந்த ஒருவருககுண
அரசு நிலைப்பட்ட இலக்கிய அங்கீகாரம், இலக்கிய ஏற்பு டை  ைம கிடைத்ததையிட்டு நாம் சந்தோஷப் படுகின்ருேம். வ ல் லிக் கண் ண னு க்குக் கிடைத்துள்ள பரிசினைத் தவிர்க்க முடியா இலக்கிய அங்கீகாரம் என்றே கொள்ள வேண்டும். இந் த இல்க்கிய அங்கீகாரம் இலைமறை காயாக விளங்கிய ஒர் எழுத்தாளருக்கான சங்கப் பலகை அங்கீகாரமன்று; ஏனெ னில் வல்லிக்கண்ணன் இலக்கிய வலிமை 1930 சனிலிருந்தே - மணிக் கொடி, 1ாம ஊழியன் காலத்திலிருந்தே, நியமமான இலக்கியகாரருக்குத் தெரிந்தது தான். இப்பொழுது வழங்கம் பட்டுள்ள இலக்கிய அங்கீகாரப் ஸ்டார் வால்யூ" இல்லாதவர் களும், "ஸ்டார் வால்யூ" வினை

Page 3
வேண்டாதவர்களும், ஒதுக்கிவிடுபவர்களும் சமகால இலக்கிய அங்கீகாரத்துடையவர்கள் என்பதை வழக்கத்திலே முக்கிய புது மைக்கிடங்கொடாத இந்தியச் சாகித்திய அ கெ ட மி ஏற்றுக் கொண்டுள்ளதுதான மனதுக்குத் திருப்தியளிக்கின்றது.
மேற்குறிப்பிட்ட அங்கீகாரத்திலும் பார்க்க முக்கியமானது, தமிழின் புதுக்கவிதைக்கு வழங்கியுள்ள இலக்கிய அங்கீகாரமாகும். 1990 களில் சிறுகதையின் இலக்கிய ஏற்புடைமையிற் கானைப் பட்ட தயக்கத்தினை இப்பொழுது புதுக்கவிதைத் துறையிற் காண் கின்ருேம். புதுக்கவிதையின் இலக்கிய வம்சாவளி வன்மையாக விவாதிக்கப்பட்டு வரும் இந்நாட்களில் புதுக்கவிதையை ஒர் இலக் கிய வடிவமென ஏற்று அதன் வரலாற்றையும், அதற்கு இலக் கணத்தையும் வகுக்க முனைந்த ஒருவருக்குப் பரிசு வழங்கப்பட் டுள்ளதென்பதனை, அதுவும் அந் நூலைச் சுட்டியே பரிசு வழங்கப் பட்டுள்ளதென்பதனை எண்ணும்பொழுது மனம் திருப்தியுறுகிறது.
வல்லிக்க்ண்ணன் அட்டைப்பட அழகளுக மாற்றப்பட்டுள் ளார். வெகுசனப் பண்பாட்டுக்கு இதுவெல்லாம் கைவந்த கலை.
நாம் முன்னர் எடுத்துக் கூறிய இலக்கிய அங்கீகாரம், ஏற்பு டைமை யாவும் இத்தகைய பகட்டாரவாரத்துடன் நின்றுவிடுமோ என நாம் சந்தேகிக்க வேண்டும்.
ஏனெனில், இத்தகைய பகட்டாரவாரத்தினுல் இலக்கிய உலகின் "எம் ஜி ஆர்" களாகவும் 'சிவாஜி' களாகவும் மாறிய பல நட்சத்திரங்களையும், அவர்களது இலக்கிய அவரோகண நிலையை யும் நாம் அறிவோம். ஆணுல் ஒரு துணிவு உண்டு. வல்லிக்கண் ண்ன் இதற்கெல்லாம் "மசிந்து கொடுக்கக்கூடியவரல்லர்.
வல்லிக்கண்ணனுக்குப் பரிசு வழங்கியமையால் அகடெமி தனது இலக்கிய இதயத்தினை நிரூபித்துள்ளது. அந்த இதயம் புதிய இரத்தத்தினைப் பாய்ச்சுதல் வேண்டும். அடுத்து வரும் பரிசுகள் அவ்வுண்மையை எடுத்துக்காட்டுதல் வேண்டும்.
வல்லிக் கண்ணனுக்குக் கிடைத்த கெளரவம் கண்டு இலங்கை எழுத்தாளர் பூரிப்படைவது இயல்பே. இலங்கை எழுத்தாளர், விமரிசகர்களை அவர் எவ்வாறு நோக்குகின்ருர் என்பதற்கு அவ து பரிதில் பெற்ற நூலே சான்று. எம்மைப் பொறுத்தவரையில் நாம் வல்லிக்கண்ணனில் வெகுசனப் பண்பாட்டின் சமூகத் திரிபு களுக்கு இடங்கொடாத, இலக்கிய நேர்மையுன்ள, இலட்சிய தாகமுடைய, இலட்சிய தாகத்தைத் தனது அன்ருட வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டுள்ள ஒருவரையே காண்கின்ருேம். அதனல் அவருக்குக் கிடைத்த இலக்கியக் கணிப்பு எம்மை மகிழ் வடையச் செய்கின்றது.
வல்லிக்கண்ணன் நவீன இலக்கிய ரிஷிகளில் ஒருவர். அந்த ரிஷிமூலம் மேலும் சுரந்து பல நூல்களைத் தருதல் வேண்டும்.
கார்த்திகேசு சிவத்தம்பி

இருட்டில் நடந்த அட்டுழியத்திற்கு வெழிச்சத்தில் தீர்ப்புக் கூறப்படும்!
சீன வியட்நாமை மிகக் கொடூரமான முறையில் தாக்கியிருப் பதுடன் அதன் பிரதேசங்களையும் ஆக்கிரமிப்புச் செய்துள்ளது.
இதை உலக முற்போக்குச் சக்திகளும் ஜனநாயகத்தை நேசிக் கும் மக்கள் பகுதியும் வெகு வன்மையாகக் கண்டித்துள்ளன்
சீன உதவிப் பிரதமர் டெங் சமீபத்தில் அமெரிக்காவுக்குப் போய் வந்ததன் பின்னர்தான் இந்த வெறுக்கத்தக்க நிகழ்ச்சி நடைபெற்றிருக்கின்றது என்பது ஏதோ தற்செயலானதல்ல. தான் மூக்குடைபட்டுப் பின்வாங்கிய வியட்நாமை சீனவைக் கொண்டே பழிவாங்கச் சூழ்ச்சி செய்துள்ளது ஏகாதிபத்திய அமெரிக்கா • அதற்கு உடந்தைதான் இன்றைய சீனத் தலைமை.
"உன் நண்பர்களைப் பற்றிச் சொல்லு: உன்னைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்" என்ருர் யேசு, வாய் கிழியச் சோஷலிஸம் பேசும் சீனவின் 'இன்றைய நண்பர்கள் யார்? அமெரிக்கா, பிரிட் டன், ஜப்பான், மேற்கு ஜெர்மனி, சிலி, தென்னுப்பிரிக்கா! இந் தக் கடைகெட்ட பிற்போக்கக் கூட்டணியின் இன்றைய ஆத் மார்த்திக நண்பன் தான் சீன!
ஏகாதிபத்தியம் பலவீனப் படப்பட, இத்தகைய அழுக்குத் தனங்கள் தொடர்ந்தும் நடைபெறலாம். எனவே உலகம் மிக விழிப்பாக இருக்கிறது. மக்களும் எச்சரிக்கையாக இருக்கின்றனர். கிராமத்துப் பையன் ஒருவன் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் அந்த ஊர் சில்லறைச் சண்டியன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, “உன்னைக் கன நாளாக் கவனிச்சிருக்கிறேன்; -கவனம்" என்று சொல்லி மிரட்டுவது போலத்தான் சீனுவும் சில்லறைச் சண்டித்தனம் செய்துள்ளது.
எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் தம்மைத் தோழமைப் படுத்தி ஆசியாவில் மாபெரும் மாற்றத்திற்கான போராட்டத்தை முன் நின்று நடத்தி வெற்றி பெற்ற சீன மக்கள் தொடர்ந்தும் இந்த மடத்தனத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்பதை உறுதி யாக நம்புகின்ருேம்.
"இந்தி - சீனி பாய் பாய்' என இந்தியத் தலைநகரில் மக்கள் மாபெரும் வரவேற்பை அன்றைய பிரதமர் நேரு தலைமையில் சீனப் பிரதமருக்கு வழங்கினர்கள். அந்த அந்நியோன்னிய சுலோ

Page 4
கத்தின் ஒலி மறைவதற்குள் இந்தியாவின் முதுகில் குத்தியது சீன. இந்திய எல்லையில் போரைத் தொடங்கியது.
நம்பிக்கையின் மாபெரும் துரோகத்தால் நேரு மணஞ் சிதறிப் போய்விட்டார். அவரால் இந்தப் பேரடியைத் தாங்கவே முடிய வில்லை. நேருவின் சடுதி மரணத்திற்கும் இதுவொரு காரணம்
பிரெஞ்சு இராணுவ வெறியர்களை எதிர்த்து, அமெரிக் க மிலேச்சத் தாக்குதலை முறியடித்து இன்று தமது ஜென்ம பூமி யைப் புனருத்தாரணம் செய்து அபிவிருத்திக்காகப் பாடுபட் டுழைக்கும் வியட்நாமிய மக்கள் மீது அரக்கத் தனமான முறை யில் தாக்குதலைத் தொடுத்துள்ளது சீனு,
வியட்நாம் மக்கள் சீனர்களை அல்ல சீனர்களின் இன்றைய எஜமானர்களான அமெரிக்கர்களுக்கே 'தண்ணி" காட்டியவர்கள். என்வே வியட்நாம் வெல்லும்; அதன் தார்மீக நேர்மை ஜெயிக்கும்!
எப்படிய்ாவது உலகத்தில் போரை ஆரம்பித்து உலகத்தை ஒரு யுத்த நாசத்திற்கு இட்டுச் செல்வதே இன்றைய சீனுவின் ஆடிப்படை நோக்கமாகும். அதற்கு முன்னேடியான சம்பவங்களே இந்த அத்துமீறல்களும் அதிரடித் த} க்குதல்களுமாகும்.
ஹிட்லர் இப்படித்தான் கனவு கண்டான். உலகத்தை யுத்த களமாக்கினன். முடிவு எப்படி அமைந்தது என்பதை இந்தப் பூமண்டல மக்கள் நன்கு அறிவார்கள்.
துரியோதனதிகள் சபையிலே பாஞ்சாலி நியாயம் கேட்டு நிற் பதைப்போல, இன்று உலக அவையிலே நீதி கேட்கிறது வியட்நாம் .
பாஞ்சாலியைப் போல கண்ணனைக் கரம் கப்பித் தொழுது உதவி கோரவில்லை வியட்நாம். உலகத்தில் வாழும் நல்லெண்ணம் படைத்த மக்க ளின் முன்னும் தேசங்களின் முன்னும் தனது கோரிக்கையை வைத்துக் கொண்டே ஆக்கிரமிப்பாளர்களின் முது கெலும்பைக் கட்டம் கட்டமாக முறித்தெறிகிறது, அது.
பாஞ்சாலிக்குப் பரந்தாமன் மானங்காத்தான் என்டது புரா ணக் கதை, போராடும் வியட்நாமுக்கு வெற்றி தேடித் தருவார் கள் இப் பூமண்டல மக்கள். இது உண்மை வரலாறு.
பெரிய தேசம் என்ற திமிரும், பெரிய இன மக்கள் என்ற அகங்காரமும் இன்றைய சீனவை உலகத்தின் முற்போக்கு முகா மில் இருந்தே தனிமைப்படுத்தி வருகிறது. இது கடைசியில் ஏகாதிபத்திய முகாமில் கொண்டுபோய்த்தான் சேர்க்கும். இது தவிர்க்கப்பட முடியாதது. இதற்கு ஒர் உதகரணம் சிலி, அலெண் டேயைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவ பாஸிஸ்ட் வெறியனுக்குத் தார்மீக, பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றது இன்றைய சீன.
ஏகாதிபத்தியமும் போலிச் சோஷலிஸமும் தத்தமது முகமூடி களைத் தரித்துக் கொண்டே சேர்ந்து 'கிளித்தட்டு" விளையாடுகின் றன. இரண்டினுடைய வழி முறைகளும் ஒன்றேதான் என்பதைச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இவை இரண்டினது முகமூடிகளும் பிய்த்து எறியப்படும் காலம் வெகு தூரத்திலில்லை.
சீன வியட்நாம் மண்ணைவிட்டு உடன் வெளியேற வேண்டும். அல்லாது போனல் அது உலகிற்கே சர்வு நாசம் விளைவிக்கும் புத்தமாக மாறும்3

இலக்கியப்
பயணத்தின்
இனிமையான பல நினைவுகள்
இந்த இளசை
பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இளசை என பாரதி மண்ணுக்கு ஒரு பெயர் முன்னர் வழங்கி வந்ததாக இந்த இளசை என்ற காரணத்தை நான் விசா
ரித்தபோது சிலர் சொன்னர்
கள்.
இந்த இளசை மணியன்
ஒரு பாரதி பக்தன், "பாரதி
தரிசனம்" என்ருெரு தொகுப்பு நூலைப் பல சிரமங்களுக்கு மத் தியில் வெளியிட்ட தமிழ் அபி மானி. இந்தத் தொகுப்பு நூலை வெளியிட அவர் பட்ட கஷ்டங் களில், பாரதி "இந்தியா" பத்தி ரிகையில் எழுதிய கட்டுரைகளைக் கல்கத்தா தேசிய நூலகத்திலி ருந்து பெற்றுக் கொள்ள எடுத் துக் கொண்ட சிரமம் தலையா யது. பாரதி மேலுள்ள அபார பக் தி யா லும் தமிழ் மீது கொண்ட அதீத அபிமானத் தாலும் அத்தனை சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு அவர் இந்தத் தொகுப்பு நூலை வெளிக்
மணியன்
கொணர்ந்தார். பல ஆண்டு களுக்கு முன்னர் இவர் அது சம்பந்தமாக மல்லிகையிலும் எழுதியுள்ளார்.
பாரதி பிறந்த வீடு இப் பொழுது தமிழக அரசாங்கத் தால் தேசிய ச் சொத்தாகப் பிரகடனப் படுத்தப்பட்டு அதன் நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதைத் தி ன ச ரி மேற் பார்வை பார்க்கும் கடைமையில் ஈடுபட்டுள்ளவர்தான் இந்த இளசை மணியன்.
பாரதியின் பிற ந் த வீட் டைத் தரிசிக்கலாம் என நான் அவருடன் நடந்து கொண்டிருந் தேன். கடைத்திெருப் பக்கமா
கப் போய்க்கொண்டிருந்தோம்.
* இங்கு பல ல ங்  ைக  ைய ச் : பாரதி வீட் டைப் . பார்க்க வருவார்கள். இங்கு வரும் அவர்களிடம் நான் ஒன்றைக் கேட்பேன்" என ப் புதிர் போட்டுவிட்டு நடந்து வந்தார் நண்பர் இளசை மணி பன்.
நான் ஆவலுடன் என்ன என்பதை மு க க் குறிப்பால் கேட்டு அவர் முக த்  ைத ப்
பார்த்தேன்.
s
"அவர்களிடம் டொமினிக் ஜீவாவை, இலங்கையில் உங்க ளுக்குத் தெரியுமா? எனக் கேட்டு வைப்பேன். சென்ற மாதமும் ஒரு தம்பதிகள் இங்கு வந்திருந் தனர். அவர்களிடமும் உங்க ளைத் தெரியுமா எனக் கேட் டேன். அவர் கள் ரொம்ப ரொம்ப அவரைத் தெரியும் என்று சொன்னர்கள்" என்ருர்,
எனக்குச் சிரிப்பாக வந்தது.
"பாரதியின் மண்ணைத் தமிழ கத்தில் தரிசிக்க ஓர் இலங்கைத் தமிழன் பிரியப்பட்டு வந்தால்

Page 5
அவனுக்கு நிச்சயம் என்னைத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ கத்திற்கு இன்று இலங்கையில் இருந்து எது எதற்கெல்லாமோ வருகிருர்கள். சிலர் "கண்டேன் எம். ஜி. ஆரை, சிவாஜியை" என ஜென்மம் சாபல்யமடைந்து விட்ட உணர்வுடன் சொல்லும் பொழுது, அதையே ஒரு பெரு மையாக நினைக்கும் பொழுது, எங்கோ தமிழ் நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் க வி ஞ ன் மண்ணுக்கு வந்த இலங்கைத் தமிழர்களிடம் நீங்கள் என்னைத் தெரியுமா என்று கேட்பது உங் களவில் அது நியாயம்தான். என்னைத் தெரியுமோ தெ ரி யாதோ. "என்னைக் தெரியும் என அவர்கள் உங்களிடம் புளுகுவது கூட எனக்குப் பெருமைதான்" என்று நான் பதில் சொன்னேன்.
இப்படியே பல்வேறு சுவை யான சம்பவங்களைப்பற்றி பேசிக் கொண்டு ந,ா ங் கள் கடைத் தெருப் பக்கம் போய்க் கொண் டிருக்கையில் நண்பர் இளசை அருளுவும் இன்னும் சில நண் பர்களும் வழியில் எதிர்ப்பட்ட னர்.
நம்ம் கூட்டுறவுப் பால்
டிப்போத் தொழிலாளிகள் உங்க
ளைச் சந்திக்க விரும்புகிருர்கள். உங்களுக்குக் காப்பி தந்து உப ச ரி க்க ஆசைப்படுகிருர்கள் தயவு செய்து ஒருதடவை வந்து போங்கள். இடம் இதோ பக் கம்தான்" என அ ன் புடன் அழைத்தார் இளசை அருணு,
எட்டயபுரம் ந க ரு க் கும் சுற்று வட்டாரத்திற்கும் பால் விநியோகம் பண்ணும் பால் டிப்போவுக்குள் நுழைந்தோம். வரிசையாக நின்று வரவேற்ற னர் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள். எ ன் னை க் கண்டதும் கரம் கூப்பி வரவேற் றனர்.
"இரவு கூட்டத்திற்கு வந்தி ருந்தோம், ரொம்பவும் மகிழ்ச்சி எங்களுக்கு. உங்களுடைய பிர சங்கத்தைக் கேட்டதும் எங்க ளுக்கெல்லாம் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது" என வரவேற்றவர் களில் தலைவர் போலத் தோற்ற மளித்த ஒரு வர் சொன்னுரி. காப் பி வரவழைத்தார்கள்; பருகினுேம்.
பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவைத்தான் வைக்கி ருேம். எங்க தொழிலாளிகளு டைய அன்பளிப்பு இது. இதை எமது காணிக்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என அன் புக் கட்டளையிட்ட வண் ணம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுகளாகச் சேர்ந்த சுமார் இருபது ரூபாய்களை என்முன் நீட்டினர் அந்தத் தலைவரைப் போன்று காட்சி தந்த பால் டிப்போத் தொழிலாளி.
எனக்குத் தேகம் புல்லரித் தது. நான் இதை எதிர்பார்க்க
வில்லை. என்னுல் அதைக் கை நீட்டி வாங்க விருப்பமில்லை. "இதெல்லாம் என்னத்திற்கு?
உங்களுடைய அன்புதான் முக் கியம். நான் உங்களது விருந் தாளியாக வந்திருக்கின்றேன். என்னைத் தாராளமாகக் கெளர வித்திருக்கிறீர்கள். அது மட்டும் போதும். எ ன க் குப் பணம், வேண்டாம். இப்படி இலக்கியக்
கூட்டத்திற்குப் பணம் வாங்கு
வது நமது தேசத்தில் வழக்க மல்ல என மறுத்துரைத்தேன். எனக்கென்னமோ அவர்களிடம் அந்தப் பணத்தைப் பெற்றுக்
கொள்வது மனசிற்குக் கஷ்ட மாகவிருந்தது.
"அப்படியானல் இ  ைத ப்
பிச்சைக் காசென்று நினைக்கிறீர் களா? உங்க பேச்சைக் கேட்க வந்திருந்தோம் நாங்க அதற் கான தட்சணை இது. எங்களுக்கு உங்க பேச்சு ரொம்பப் பிடிச்

சுப் போச்சு, காலங்காத்தாலை எல்லாருமா ஒண்ணு கூடிப் பேசி இதை வசூலிச்சோம். நீங்க எங்க உணர்வுகளை மதிப்பதாக
இருந்தால் இந்த அற்ப உதவியை
மறுக்கக் கூடாது"
இரு கரங் கூப்பி அவர்களே வணங்கிவிட்டு,
அந்தப் பணத் தைக் கையேந்திப் பெற்றுக் கொண்டேன்.
இலக்கிய சம்பந்தமாக எவ்
வளவோ பனங்களை நான் கை
நீட் டி வாங்கியிருக்கிறேன். 1981-ல் சாஹித்திய மண்டலப் பரிசுக்குரிய பணத்தையும் அர சாங்கக் கெளரவத்துடன் பெற் றிருக்கிறேன். பின்னர் சாஹித் திய மண் ட ல உறுப்பினராக இருந்தபொழுதும் பல ஆண்டு கள் "அலவன்ஸ் பெற்று க் கொண்டிருக்கிறேன். மல்லிகைக் காக மிக ஆத்மார்த்த நண்பர் கள் ஆயிரக் கணக்கான ரூபாய் களை அன்பளிப்புச் செய்த போதுகூட வாங்கியிருக்கிறேன்.
இப்படி எத் த னை எத்த ஃனயோ சந்தர் ப் பங் களி ல் ப ண த்  ைத நான் கைநீட்டி வாங்கியிருக்கிறேன், அந்தச் சந் தர்ப்பங்களில் எல்லாம் ஏதோ ஒரு கடமை உணர்வுடன்தான் நான் செயல்பட்டிருக்கின்றேன். இந்த இரு பது ரூபாய்களைக் கைநீட்டி வாங்கும் பொழுது நானமடைந்த உவகை இருக்கி றதே. அப்பப்பா.. அது வார்த்தைகளுக்குள் அ டங்க முடியாத மகிழ்ச்சி; துடிப்புடன் கூடிய நெகிழ்ச்சி!
பால் டிப்போத் தொழிலா
ளர்களிடம் வி ைட பெற்றுக்
கொண்டு பாரதியின் பிறந்த
வீட்டைப் பார்க்கக் கிளம்பி னுேம், இளசை மணியன் வீட் டைச் சுற்றிக் காண்பித்தார்.
பாரதி பிறந்தது இந்த இடத்தில் தான் எனச் சதுரமாகக் கட்டப்
ஆத்மத்
பட்டுள்ள ஒரு பகுதியைச் சுட் டிக் காட்டினர். பாரதி இருந்து (1ழுதிய இட்ம் இதுதான் என வேருேர் இடத்தைக் காண்பித் தாா. எதற்குமே "கிறுங்காத" அந்த மாபெரும் யுகக் கவிஞன் பிறந்த அந்த மண்ணிற்கு வந்
ததே எனது இலக்கியப் பிரயா
ணத்தின் உச்சக் கட்டம் என என து மனசிற்குள் எண்ணிக் கொண்டேன்.
பாரதி வீட்டுப் படிக்கட்டுக் களில் நின்று கிழக்கு நோக்கிச் சூரியனைப் பார்த்தேன். இதே மாதிரித்தான் பாரதியும் இதே படிக்கட்டில் நின்று இதே சூரி யனை உற்றுப் பார்த்திருப்பான் என்ற நினைவு சட்டென்று எனக்கு நினைவு வந்தது.
d
அ ங் குள் ள கையேட்டுப் புத்தகத்தில் பாரதியின் நினை வாக எழுதிவைத்தேன். போரதி ன் ஞான குரு யாழ்ப்பாணத் துச் சாமி. அந்த யாழ்ப்பாணத் துச் சாமியின் பிறப்பிட மண் ணேச் சேர்ந்த நான்- எட்டய புரத்தானுக்கு மிக மிகக் கிட் டிய உறவினணுகிய நா ன் -- இந்த மண்ணுக்கு வந்து எனது நெருங்கிய உறவுக் கவிஞனின் பிறந்த இடத்தைத் தரிசித்ததை எனது வாழ்க்கையில் என்றுமே மறக்க மாட்டேன். பாரதி இந்த ஊருக்கோ இந்த மண் ணுக்கோ உரியவனல்ல. தமிழ் மொழிக்குக் கூட உரித்தான வனல்ல. அவ ன் உலகிற்குச் சொந்தக்கirரன். எனவேதான் மொழி கடந்து அவனை நேசிக் கின்றேன் - அவனது உலகக் கண்ணுேட்டத்திற்காக
அப்படியே நடந்து சென்று T5) மணிமண்டபத்தையும் பார்வையிட்டேன். அங்கும் கையேட்டுப் புத்தகத்தில் ஏதோ எனது மனதிற்குத் தோன்றிய விதத்தில் எழுதி வைத்தேன்.

Page 6
ஆண்டுக்கொருதடவை மிகக் கோலாகலமாகப் பெரு விழா ஆட்சியினரால் நடத்தப் படு கின்றதென்றும் அதுகூட ஒரு
கடமையாகக் கொள்ளப்படுகின்
G விர, பாரதியின் முழு పీ.వీ தரிசிக்கும் விழாவாக அது அமைவதில்லை என வும் கூட வந்தவர்கள் சொல்லக் Gas CL-67.
அதுவும் மாறுகிற ஆட்சியா ளர்களின் அரசியல் கருத்துக் கோற்ப பாரதி சிறு சிமிழுக்குள் அடைக்கப்பட்டு தெய்வமாக்கப் படும் அவல நிலையையும் சிலர் விவரித்துக் கூறினர். ്.
இலங்கையில் நாம் பர தியை, பாரதியாகத்தான் விரி வாகப் பார்த்து விமர்சிக்கின் ருேம்; ஆய்வு செய்கின்ருேம்: யுக்ப் புரட்சிக் கருத்துக் கவிஞ ஞக - வழி காட்டியாக மான ஸ்பீகமாக நினைத்து வழி நடக் கின்ருேம்" என அவா.களுககு நான் சொன்னேன்.
நான் கடந்த இரவுக் கூட் டத்தில் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமி பற்றி யும் அவரைப் பற்றி மறைந்த நமது முற்போக்கு w மு ன் னே டி அ. ந. கந்தசாமி அவர்கள் ஆராய்ந்து அன்னரது பிறந்த ஊர். முன்னைய பெயர், கடைசி யில் அவர் சமாதி அடைந்த பகுதி ஆகியவை பற்றி விரிவாகப் பேசியது ಟಿ?
மைத் தகவலாக இருந்தது. :/ விடுத்து விடுத்துக் கேட் டார்கள். அந்த ஆராய்ச்சியா ளர் அ. ந. கந்தசாமி பற்றியும் பலர் அக்கறையுடன் வினவினர்
நான் எனக்குத் தெரிந்த சகல தகவல்களையும் நேர்முகச் சம்பாஷணையில் மிகவும் விரிவாக எடுத்துச் சொன்னேன்.
அடுத்த ஆண்டு பாரதி இளைஞர் மன்றத்தின் ஆதரவில்
இலக்கிய
நடக்க இருக்கும் பாரதி விழா வில் என்னை அவசியம் கொள்ள வேண்டும் என ஒரு
நண்பர் வற்புறுத்திக் கூறினர்.
நான் தயங்கியதைக் கண்டதும் "போக்கு வரத்துப் பிரச்சினை பற்றி யோசிக்காதீர்கள். அதை நாங்கள் கவனித்துக் கொள்ளு கின்ருேம். நீங்கள் அ டு த் த செப்டம்பரில் இங்கு கண்டிப் பாக வரவேண்டும்" எனக் கேட்
எனது தயக்கத்துக்கு அது காரணமல்ல. அடிக்கடி தமிழகம் வரமுடியாத வேலைப் பளு உள் ளவன நான. ஒரு த ட  ைவ 11 - 15 மல்லிகை நா ட் கள் பிரயாணத்தில் வெட்டப்பட் டால அது ஒரு மாதம் மல்லிகை வெளிவருவதைப் பாதிக்கும். எனவே மல்லிகையை ஒழுங்காக வெளிக்கொணர வேண்டியது தான் எனக்கு முக்கியமே தவிர, இப்படியான இலக்கியப் பிரயா ணங்களால் நாட்களை ஒட்டுவது எனக்கு முக்கியமல்ல, என எண் ணிக் கொண்டேன். அதை வாய் திறந்து சொல்லவில்லை.
. எதற்கும் முயற்சியுங்கள் நானும் எப்படியும் பாரதி விழா விற்கு வரத் தெண்டிக்கிறேன்" எ ன ச் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டேன்.
அன்று சாயங்காலம் தூத் துக்குடியில் ஓர் இ லக் கி யச் சந்திப்புக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது:
நானும் இளசை அருணவும் பஸ்ஸில் புறப்பட்டோம். பல நண்பர்கள் பஸ் நிலையம் வந்து எங்களை வழியனுப்பிவைத்தனர்.
(தொடரும்)

LASLL LLTALALLAALLLLLALALLAALLLLLALLTALLLAALLLLLAALLLLLAALLLLLALALAqLLLAAAA பாரதியின் சுயசரிதை
மனுேன்மணி சண்முகதாஸ்
பாரதியின் பின்னணி
20 - ம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் இந்திய விடுதலை இயக்கம் தமிழ்நாட்டில் பரவலாயிற்று. இந்திய விடுதலைப் போரின் வர லாற்றிலே 1906 முதல் 1920 வரையுள்ள காலப்பகுதியைச் சிறப் பித்துக் கூறும் வழக்கம் உண்டு. ஏனெனில் இக்காலத்திற்ருன் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றிணைந்தன. தமிழகத்திலே தேசியமும் தமிழும் இரண்டறக் கலந்தன. இக்காலத்தில் கவிஞர் கள் புரட்சியைப்பற்றிப் பாடத் தொடங்கிஞர்கள். தாய் மொழி யிலே வளம் பெற்றிருந்தவர்கள் தேசப்பற்ருல் உந்தப்பெற்று எழுத்துகிகளிலே தம் கருத்துக்களைப் பொறிக்கத் தொடங்கினர்) இதனல் பிரதேச மொழிகளிலே வார இதழ்களும் நாளிதழ்களும் வரத் தொடங்கின.
சிறு வயதிலேயே கவி எழுதும் ஆற்றல் பெற்றிருந்த பாரதி இக்காலம் தொட்டுத் தேசியக் கவியாக மாறுகிருர். இத்துடன் பாரதியுகமும் தமிழ்நாட்டில் தோன்றுகின்றது. விடுதலையே தமது மூச்செனக் கொண்டு வாழ்ந்த பாரதியின் கவிதைகளில் அதுவே பிரதிபலித்தது. நாட்டு விடுதலைக்குச் சமூக முன்னேற்றம் அவசி யம் என்று கொண்ட பாரதி மேஞட்டுச் சமூகத்தோடு தமது சமூகத்தை ஒப்பிட்டு தம் சமூகக் குறைகளைத் தமது கவிதை களிலே எடுத்துரைக்க முற்பட்ட புரட்சிவாதியாக விளங்கினர். பெண்ணுரிமை, சாதிபற்றிய ஏற்றத்தாழ்வு முரண்பாடுகளின் ஒழிப்பு, வறுமை விதிபற்றிய கவிதைகளும், கட்டுரைகளும் விடு தலை நோக்கின் பல்வேறு அம்சங்களாகத் தோன்றின.
பழைய இலக்கியங்களிலே இருந்து தேசிய உணர்வூட்டும் பாடல்களைத் தொகுத்ததால் பாரதத் தாய்க்கு அர்ப்பணிக்கப் பாரதி முயன்றமை அவர் சொல்லாலே வெளிப்பாடாகின்றது;
* எமது தாய் நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வர்ணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல் வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகாை ஒர் மாலை யாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கின்றேனதலின் பண்டைத் தமிழ் நூல்களில் பாரத நாடு முழுவதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர்கள் தெரிந்தனுப்புவார்க ளாயின் அவர்மாட்டு மிகவும் கடப்பாடுடையவனுவேன்" (1)

Page 7
பாரதியார் இத்தகையதொரு வேண்டுகோளை விடுத்த து 1906-ம் ஆண்டு ஆகும். ஆனல் அவரது வேண்டுகோள் நடை முறைப் படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு மாருக அவரே தேசியக் கவியாக மாறிவிட்டார். அவரது மாற்றம் “பாரதி சகாப்தம்’ என்று சொல்லத்தக்க ஒரு காலகட்டத்தையே தமிழ் இலக்கிய வரலாற்றில் தோற்றுவித்தது எனலாம். தேசிய கவிஞர் பரம் ப ரை யின் முன்னேடியாக அப் பரம்பரையைத் கோற்றுவித்தவராகவும் பாரதி விளங்குகிருர்,
சுயசரிதையின் காலம்
பாரதி எழுதிய தேசபக்தி மணக்கும் பாடல்களின் முதற் தொகுப்பு 1908-ம் ஆண்டு ஜனவரி மாதம் "ஸ்வதேச கீதங்கள்? என்ற பெயரால் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு 1909-ம் ஆண்டு "ஜன்ம பூமி" என்ற பெயரில் வெளிவந்தது. 19 0-ம் ஆண்டு நவம்பர் மாதம் மாதா வாசகர் என்ற பெயரில் மூன் ருவது தொகுப்பு வெளிவந்தது. இத்தொகுப்பில் வெளியான ப்ாடல்கள், மகாசத்தி. மகாசக்திக்கு விண்ணப்பம் காளிக்கு சமர்ப்பணம், மகாசக்திக்கு சமர்ப்பணம், நான், மனத்திற்குக் கட்டளை, தெளிவு, ஸ்வசரிதை, ஜாதிய கீதம், பாரதமாதா, திருப்பள்ளியெழுச்சி, கிருஷ்ணன் மீது ஸ்துதி என்பன என்று ம. பொ. சி. விடுதலைப் போரில் "தமிழ் வளர்ந்த வரலாறு" என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார். இம் மூன்ருவது நூலிலே * சுயசரிதை” என்னும் பாடல் நூற்றுப்பதினைந்து செய்யுட்கள் கொண்டதாகும் என அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனல் பாரதியாரின் சுயசரிதைப் பாடல் நாற்பத்தொன்பது பாடல் களின் தொகுப்பெணச் சாலினி இளந்திரையன் தமது "வாழ்க்கை வரலாற்று இலக்கியம்’ என்னும் நூலிற் குறிப்பிட்டுச் சொல் கின்ருர். (2) பாரதி பாடல்களைத் தொகுத்துப் "பாரதி நூல்கள்" என்ற பெயரில் 1932-ம் ஆண்டு வெளியிட்ட பாரதி பிரசுரால யத்தார் தமது முன்னுரையில்,
பாரதி அறுபத்தாறு" இவைகளெல்லாவற்றிலும் சிறந்த நூல். இதில் சினத்தின் கேடு, தேம்பாமை, பொறுமையின் பெருமை, கடவுள் எங்கே இருக்கிருர், தாய் மாண்பு முதலிய அனேக விஷயங்களைப் பற்றித் தமதபிப்பிராயத்தை வெளியிட் டிருப்பினும் ஸர்வமத சமரஸ்ம் என்ற பகுதி பாரதியாரின் மதக் கொள்கைகளையும், வேதாந்தத்தையும் நன்கு விளக்குகின்றது" (8) என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனலிப்பகுதியில் பெண் விடுதலைக் காதலின் புகழ், விடுதலைக் காதல் போன்ற காதல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், பற்பல பதிப்புக்களை வெளியிட்டவர்கள் புதிய புதிய பாடல்களைச் சேர்த்துப் பொருள் வகுப்புச் செய்து கொண்ட்மையேயெனக் கைலாசபதி கூறுகிருர்,
உதாரணமாகக் கண்ணன் கண்ணம்மா என்னும் பெயர்கள் வரும் பாடல்கள் சிலவற்றைத் தனிப் பாடல்களாகப் பாரதியார் இயற்றி இருக்கிறர். அவற்றையெல்லாம் கண்ணன் பாட்டு என் னும் தொகுதியிலே பிற்காலத்தவரான பதிப்பாசிரியர்கள் சேர்த் தமைத்துக் கொண்டனர். அதுபோலவே ஸ்வசரிதையும் பிற பாடல்களும் என்ற பெயரில் (1910-ம் ஆண்டு) வெளியான சிறு
10

தொகுதியில் எத்தனையோ மாற்றங்கள் செய்து பிந்திய பதிப் பாசிரியர்கள் வெளியிட்டு வருகின்றனர். "ஸ்வசரிதை” என்று பாரதியார் வழங்கிய தொடர் சுயசரிதை என்று சென்னை அர சாங்கப் பதிப்பிலும் (அதைப் பின்பற்றிய சக்தி வெளியீட்டிலும்) தன் வரலாறு" என்று உபதலைப்பாக மேர்க்குரி புத்தகக் கொம்ப னிப் பதிப்பிலும் மாற்றம் பெற்றுள்ளமையை நோக்குமிடத்து இன்று நாம் படி க் கும் பாரதிபாடல்கள் எந்தளவுக்கு மூல பாடத்தை ஒத்தன என்பது நியாயமான வினவாகும். இன்று சுயசரிதையிற் சேர்க்கப்பட்டிருக்கும் பாரதி அறுபத்தாறு என்னும் பகுதி முந்திய பதிப்பில் வேதாந்தப் பாடல்கள் என்னும் தலைப் பில் வெளிவந்த்தாகத் தெரிகின்றது. இப்படிப் பற்பல மாற்றங் கள். நிகழ்ந்துள்ளன. (4)
பதிப்பாசிரியர்களது பதிப்புக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பாரதிபாடலைப் பற்றிய அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்துவன வாக இன்றுள்ளமையைக் கைலாசபதியின் கருத்து வலியுறுத்து வதற்குச் சான்ருகப் பாரதி நூல்கள் காவியங்கள் என்றும் பாரதி பிரசுராலயத்தினரது பதிப்பிலே ஸ்வசரிதை என்னும் பகுதி விடப் பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. ம. பொ. சி. சுய சரிதைப் பாடல்களிலே இணைத்துக் கூறுகின்ற பாடற் பகுதிகள்= இந்நூலிலே பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியிலே இணைக்கப் பட்டுள்ளன. அதனுல் ம. பொ. சி. குறிப்பிடுகின்ற "மாதா வாச கம்" என்னும் பெயரில் வெளிவந்த தொகுப்பிற்கும் க. கைலாச பதி குறிப்பிடுகின்ற ஸ்வசரிதையும் பிறபாடல்களும் என்னும் தொகுப்பிற்குமுள்ள பாடபேதத்தை நாம் இலகுவில் உணரக் கூடியதாக இருக்கின்றது. இருதொகுப்புக்களும் ஒரே ஆண்டு ( 1910) வெளிவந்த போதும் மாறுபட்டனவாக விளங்குகின்றன. எனவே பதிப்பாசிரியர்களது முயற்சியினல் பாரதியின் பாடல்கள் தொகுப்புக்களாக வெளிவரும்போது மாறுபட்டிருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படைக் கருத்தை வைத்துக் கொண்டே பாரதி யின் சுயசரிதைப் பாடல்கள் பற்றிய ஆராய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையிலே சுயசரிதைப் பாடல்களுக்கும், பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் அமைந்த பாடல்களுக் கும் இடையேயுள்ள பொருளமைதி வேறுபட்ட அடிப்படையிலும் இதனை நோக்கவேண்டியது அவசியமாகும். ஒரே கவிஞன் பாடிய இருவேறுபட்ட பாடற் பகுதிகள் அவையென்பதைப் பாடற் பொருளமைதி கொண்டு உய்த்துணர முடிகின்றது. ஆனல் இவ் விரு பகுதிகளில் ஒன்று கவிஞனின் வாழ்க்கைச் சம்பவங்கள் சில வற்றின் தொகுப்பாகவும் மற்றது பல்வேறு விடயங்கள் பற்றிய அவனது அபிப்பிராயங்களாயும் காணப்படுகின்றது, சுயசரிதையிற் காணும் வாழ்வு
பாரதியின் சுயசரிதையில் அமைந்த பாடல்களைப் படிக்கும்
போது அவர் வெறுப்பும் அவநம்பிக்கையும் கொண்ட ஒரு குழ லால் அப்பாடல்களை எழுதியுள்ளார் போலத் தோன்றுகின்றது. "வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவலோர் தம் உரை பிழையன்று காண்" என்று ஆரம்பிக்கும் பாரதி தம் சுயசரிதைக் குறிப்பினை "எந்த மார்க்கமும் தோன்றில என் செய்கேன் ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே’ என்று முடிக்கின்ருர் இறுதி காக உள்ள மூன்று பாடல்களும் இக்குரலில் வெவ்வேறு படிவங்
翼葛

Page 8
களாகவே அமைகின்றனவெனலாம். பாரதி 1882-ம் ஆண்டு பிறந்தவர் 1921-ல் இறந்தார். முப்பத்தொன்பது ஆண்டுகளே இவ் வுலகில் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலப்பகுதியில் ஏறக்குறைய 2 அல்லது 85 வயதளவில் தனது சுயசரிதைப் பாடல்களைப் பாடியிருக்க வேண்டும். ஏனெனில் இப்பாடற் பதிப்பு 1910-ல், வெளிவந்தது. எனினும் அவர் சுயசரிதையை எழுதியபோது தமது முழுதான வாழ்வின் அனுபவங்களைக் கூறமுடியாத நிலையில் குறிப் பிட்ட சில நிகழ்ச்சிகளைப் பின்னுேக்கிப் பார்த்துள்ளாரெனலாம். அவ்வாறு பார்க்குமிடத்து அவர் கடந்த கால வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளாகச் சிலவற்றை மதித்திருக்கிருர், அவற்றையே சுய சரிதைப் பாடல்களாக வடித்துள்ளார். முக்கியமாகத் தமது பத் தாவது வயது தொடக்கம் தந்தை மறைந்துபோன பதிஞருவது வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளையே குறிப்பிட்டுள்ளார். எவ்வாறு குறிப்பிடும் போதும் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளையே குறிப்பிட முற்பட்டுள்ளார் எனலாம். அவையாவன, பாரதியின் முதற் காதல், திருமணம், ஆங்கிலக் கல்வி முயற்சி என்பன. இம்மூன்று நிகழ்ச்சிகளும் பாரதியின் உள்ளத்தில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன என்பதை அவர் கவிதைகளிலே காணமுடி கின்றது. பாரதியின் வாழ்வுக் காலத்தைப் பத்துப் பத்து ஆண்டு களாகப் பகுக்கும்போது சுயசரிதையில் அவர் குறிப்பிடுகின்ற வாழ்வுக்காலம் மூன் ரு வது பத்தாண்டுக்குள் அடங்குகின்றது எனலாம்
சாதாரண மனிதனின் வாழ்வுக் காலத்திலே இக்காலப் பகு தியை இளமையின் ஆரம்பகாலமென்று பகுத் துக் கூறலாம். ஆனல் பாரதியின் சுயசரிதைக் கவிதைகள் இவ்வாறு கொள்வ தற்குச் சான்று சிரமத்தைத் தருகின்றன. அவரது பாடல்களின் பொருளமைதி அவரை ஒரு முதிர்ந்தவராகக் காட்டுகின்றது. *உலகெலாமோர் பெருங் கனவஃதுளே
உண்டுறங்கி யிடர் செய்து செத்திடும் கலகமானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங் கனவாகும்" என்ற பாரதியின் கூற்று வாழ்க்கை முற்றையும் ஆராய்ந்த அனுப வமிக்கவர் குரலாகவே தென்படுகின்றது. காதல் வாழ்வும் அனுபவமும்
குழந்தைப் பருவத்திலே ஏற்பட்ட தன் காதலைப் பற்றிப் பாடியுள்ள பாடல்கள் பிள்ளைக்காதல் எனப் பதிப்பாசிரியர்கள் வேறுபடுத்திப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பாரதியின் பத்து வய திலே ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தியைக் கண்டு காதல் கொண்ட தாகப் பாடுகின்ருர்.
ஒன்பதாய பிராயத்த ளென்விழிக்
கோது காதைச் சகுந்தல் யொத்தனள் என்பதார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய்கேள் பழியென்மிசை யுண்டுசொல் அன்பெனும் பெருவெள்ள மிழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே முன்புமாமுனி வோர் தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?"

என்னும் பாரதியின் உள்ளத் துணர்வுகள் வயதுக்கு மேற்பட்டி ருந்ததை உணர்த்துகின்றன. காதலுணர்வுகளைப் பற்றி அவர் வருணிக்கின்ற பகுதிகளும் இதனையே வலியுறுத்தி நிற்கின்றன. எனினும் அவர் மனதிற் கொண்ட இவ்வுணர்வின் அடியிலே வேருெரு உணர்வும் இருந்ததைக் குறிப்பாகப் புலப்படுத்துகின்ருர், தான் காதலியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையினை
**நீரெடுத்து வருவதற்கவள் மணி
நித்திலப் புன்னகைச் சுடர்வீசிடப் போரெடுத்து வருமதன்முன் செலப் v போகும் வேளை யதற்குத் தினந்தோறும்
வேரெடுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம் சீரெடுத்த புலையியற் சாரர்கள்
தேசபக்தர் வரவினைக் காத்தல்போல்" என்று குறிப்பிடுகின்ருர், பாரதியின் எண்ணத்தோடு கலந்திருந்த விடுதலைக் காதல் உணர்வினை இங்கே காணமுடிகின்றது. தந்தை யின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியிருந்த போதும் கன்னியைக் கண்டு ஆவல் கொண்டபோதும் சுதந்திரமென்ற ஒரே உணர்வு டன் அவர் வாழ்ந்ததை உணர்த்த முற்படுகிருரெனலாம்.
d M-N பாரதியின் பிள்ளைக் காதலுணர்வுகளின் வெளிப்பாட்டுக் கவிதைகளாகப் பதினறு கவிதைகள் அப்பகுதியில் அமைந்துள்ளன அப்பாடல்களில் கூறப்பட்டுள்ள காதல் உணர்வுகளின் தன்மை கொண்ட பாடல்களாகக் கண்ணன் பாட்டுத் தொகுதியில் அமைந் துள்ளள, காதலன் காதலி பாடல்கள்" அமைந்துள்ளன. சுயசரி தையில் அவர் கூறுகின்ற அதே கருத்துக்களைக் கண்ணன் பாட் டிலும் கூறியுள்ளார். -
"கன்னிமீதுறு காதலின் ஏழையேன்
கவலையுற்றனன் கோடியென் சொல்லுகேன்" என்று பாரதி சுயசரிதையிற் பாடியது போலவே "கண்ணன் என் , காதலனில்" அவ்வுணர்வுகளின் தன்மைகளை விரிவாக்கிப்பாடுகிருர்,
உண்மைக் காதல் கொண்டபின்னர் பாவம், தீமை, பழி எதையும் நோக்குவதற்கில்லையென்றும் பண்டைக்காலத்துத் தேவ மனிதர் போலவேதான் காவல், கட்டு, விதி, வழக்கெல்லாவற் றையும் பாரதி விட்டுவிட்டதாகக் கூறும் செய்தியைக் கண்ணம்மா என் காதலியில் விரித்துரைக்கிருரெனலாம்.
பாரதியின் காதல் பற்றிய கருத்துக்களும், உணர்வுகளும் சுயசரிதைப் பாடல்களில் புலப்பட்டிருப்பது போலவே ஏனைய காதற் பாட்டுக்களிலும் புலப்பட்டு நிற்கின்றன. குயிற் பாட்டில் வருகின்ற m
"ஒன்றேயதுவாய் உலகமெலாந் தோற்றமுறச் சென்றே மனபோந்து சித் பிந் தனதின்றி நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ யார்றிவார்?" என்னும் அடிகள் பாரதியின் கவிதைக்"கருவைக் காட்டி நிற்கின் றன. சிறந்த காதற் பாட்டுக்களைப் பாரதி பாட அவரது வாழ்க்

Page 9
கையனுபவமும் ஒரு காரணமாக அமைவதைச் சுயசரிதைப் பாடல்கள் எமக்குணர்த்தி நிற்கின்றன.
கல்வி வாழ்வும் அனுபவமும்
பாரதி வரலாற்றை எழுதிய ஏனையோர் பாரதியின் முதற் காதலைப் பற்றி எதுவும் குறிப்பிட்டாரில்லை. ஆணுல் அவரது திருமணம் பற்றிய கருத்து எல்லோராலும் குறிப்பிடப்பட்டுள் ளது. செல்லம்மாளைத் திருமணம் செய்வதற்கு முன்னர் பிள்ளைக் காதல் வயப்பட்டதைப் பாரதி தனது சுயசரிதையிற் கூறியிரா விடின் அவரது காதற் கவிதையின் ஊற்று காணப்படாததொன் ருகவே இருந்திருக்கும். அவர் முதற் காதல் பற்றிய நிகழ்ச்சியின் பின்னர் தனது ஆங்கிலக் கல்வி பற்றிய வரலாற்றினைப் பாரதி குறிப்பிடுகின்றர். பாரதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆங்கி லக் கல்வி பெறுவதைப் பெரும் வரப்பிரசாதமாகக் கருதி வாழ்ந் தனர். ஆஞல் பாரதி அதனைத் தனக்கேற்பட்ட விபத்தென்று கருதி வருந்துகின்ருர்,
'குதிலா உளத்தினன் எந்தை தான்
சூழ்ந்தெனக்கு நலஞ் செயல் நாடியே ஏதிலார் தரும் கல்விப் படுகுழி
ஏடுயுய்தற் கரிய கொடுப்பிலம் யன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினுமேய சிரத்தையும் வாதும் பொய்மையும் என்ற விலங்கினம்
வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன்"
என்று தன்மீது அன்பு கொண்ட தந்தையார் தம்மைப் பள்ளிக்கு அனுப்பிய செய்தியைக் குறிப்பிடுகிருர். தான் அவ்வாறு படிக்கச் சென்றதால் அடைந்த தீமைகள் பலவென்று காட்டுகின்றர். தன் பொழுதெல்லாம் வீணே கழிந்ததாகவும், மெய் அயர்ந்து விழி குழிவிழுந்து வீரம் தொலைந்து, உள்ளம் நலிந்து, படித்த பொருள்களிலே தெளிவில்லாமல் ஐயங்கள் அதிகரித்து, சுதந்திர உணர்வு செத்து, தன் அறிவு அலைகடலில் அகப்பட்ட துரும் பென அலைந்ததாகக் கூறுகின்ருர். அந்த அனுபவத்தைக் கவிதை யிலே வடித்த பாரதியார் முடிவுரையாக,
**செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது
து எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன நலமோரெட்டுனையும் கண்டிலேனிதை
நாற்பதாயிரங் கோயிலில் சொல்லுவேன்" என்னும் கவிதை உருவெடுத்துள்ளது. தன்னுடைய முன்வினைப் பயன்களினலும், தேவி பாரத அன்னையின் அருளினலும் தான் அப் பேரிருளிலிருந்து பிழைத்து விட்டதாகப் பெருமூச்செறிகிருர் Lunt prg.
ஆனல் பாரதி தம் வாழ்க்கையில் ஆங்கிலத்தைப் பின்னர்
கற்ருர், அதஞல் நன்மையும் அடைந்திருக்கிருர், ஆங்கில மொழி யிற் சரளமாகப் பேசவும் சுவையாக எழுதவும் திறமை பெற்ற
d

வசாக விளங்கிஞர். 1914-ம் ஆண்டில் "பொன்வால் நரி என்ற பெயரில் நகைச்சுவை பொதிந்த, கட்டுரையென்றை எழுதி வெளி யிட்டுள்ளார். அக்கட்டுரை ஆங்கிலம் படித்தவர்களாற் பெரிதும் பாராட்டப் பட்டதாகும். இதே ஆங்கில மொழியின் அறிவினுல் பாரதி ஷெல்லி, கீட்ஸ் போன்ற ஆங்கிலக் கவிஞர்சளின் கவிதை களைப் படித்துச் சுவைக்கும் வாய்ப்பினைப் பெற்ருர், "ஷெல்லியின்
கில்டு" என்று ஒரு சங்கம் அமைத்தது மட்டுமன்றிச் "ஷெல்லி தாசன்" என்ற புனைபெயரைத் தமக்குச் சூட்டியும் கொண்டவர். பாரதி ஆங்கில மொழியிலே சில கவிதைகளையும் எழுதியுள்ளார்; நம்மாழ்வார் ஆண்டாள் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிருர். இதைவிட ஆங்கிலப் பத்திரிகைகளிலே பல கட்டுரைகளையும் எழுதியிருக்கின்ருர். இத் தன விதமாக ஆங்கில மொழியிலே தம்மை ஈ டு படுத் தி க் கொண்ட பாரதி தனது சுயசரிதைப் பாடலில் "தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது" என்று குறிப்பிடுவது சிந்தனைக்குரியதா கவே காணப்படுகின்றது.
பாரதி தனது கவிதை வடிவங்களிலே மேலை நாட்டு வடிவங் களையும் கையாண்டுள்ளார். மேலை நாட்டு இலக்கியத்திலே 'Lyric" என்று சொல்லப்படும் தன்னுணர்ச்சிப் ப்ாடல்களையும் பாரதி இயற்ற முற்பட்டுள்ளார். தன் சொந்தமன நிலையை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு இத்தகைய பாடல் வடிவத்தைப் பாரதி கையாண்டுள்ளார். "நல்லதோர் வீணை செய்தே. . சுட்டும் விழிச்சுடர்தான்" போன்ற பாடல்களை இவ்வகைப் பாடல் களுக்கு உதாரணமாகக் கூறலாம். இப்பாடல்களிலே தன்னுணர்ச் சிப் பாடல்களின் தன்மை (5) பெரிதும் அமைந்து காணப்படு கின்றது.
ஆங்கிலக் கல்வியை வெறுப்பதாகச் சுயசரிதையிற் கூறும் பாரதியே தனது தமிழ்த் தாய் என்னும் கவிதையில் (6)
**புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்தவளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமீசை யோங்கும்"
என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கருத்துக்கள் பாரதியின் மனநிலை வேறுபாட்டைப் புலப்படுத்துவனவாக அமைகின்றன; இங்கு "பாரதியின் சுயசரிதம்" ஒரு குறிப்பிட்ட நோக்கிலும் கசப்புணர்ச்சியிலும் எழுதப்பட்டிருப்பது எ ன் ற சாலினியின் கருத்து ஒத்தமைவதாக விளங்குகின்றது.

Page 10
பாரதியாரைப் பொறுத்த மட்டில் அவர் ஆங்கிலங் கற்பதை வெறுக்கவில்லையென்றே கருதக் கிடக்கின்றது. அவரது கவிதை களும் கட்டுரைகளும் பாரதி ஆங்கில மொழியின் செல்வாக்கைத் தான் எதிர்த்தார் என்பதைக் காட்டுகின்றன. பாரதியின் காலத் திலே ஆங்கில மொழியின் ஆதிக்கத்திற்கெதிராகப் பாரத கலா சாரத்திற்கேற்ற ஒரு புதிய கல்விமுறை வகுக்கப்பட்டது. அதற் குத் தேசியக் கல்வி என்று பெயர் தரப்பட்டது (7) இத்தேசியக் கல்வியிலும் ஆங்கில மொழியின் ஆதி க் கம் ஊடுருவுவதைப் பாரதி வெறுத்தார் எனலாம்.
"தமிழ் நாட்டில் தேசியக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி அதிற் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி, இங்கிலீஸ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்திஞல் அது தேசியம் என்பதன் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே பிர தானமென்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக் கத்துடன் தொடங்கப்படுகின்ற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டில் இருந்து பரிபூரண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டு மானுல் இந்த முயற்சிக்குத் தமிழ்ப் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப் படும் என்பதைத் தம்பட்டம் அறிவிக்க வேண்டும். (8) என்று கூறும் அவரது கருத்து இதனை வெளிப்படுத்திக் காட்டு கின்றது. தமிழினம் பாரதி மீது கொண்ட காதல்தான் அவரை ஆங்கில மொழியைப் பற்றிச் சுயசரிதையில் "ஆரியர்கிங்கருவருப் பானது" என்று குறிப்பிட வைத்ததெனலாம். "சாதிகளில்லையடி பாப்பா" என்று பாப்பாப் பாட்டில் அறிவுரை கூறும் பாரதி சுயசரிதையில் ஆரியர் என்று பிரித்துப் பேசுவது வியப்பாகவே இருக்கின்றது.
(தொடரும்)
நகைச்சுவை உலகில் தனித்துவச் சஞ்சிகை
தொடர்ந்து படித்துப் பாருங்கள்
w
6 :
 

மஹாகவியின் கவிதை.
சிங்களப் பத்திரிகையின் விமரிசனம்
தமிழில்: ஜவாத் மரைக்கார்
மஹாகவியின் கவிதைகளின் ஒன்ருன
சிங்களக் கவிதை ஏடாகிய
மிடுக்கு",
"மீண்டும் தொடங்கும் கவிய" 1978 டிசம்பர்
இதழில் "நல்வாழ்த்து" என்ற தலைப்பில் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
இக்கவிதையைச் சிங்களத்தில் பெயர்த்திருந்தவர்,
பிரபல சிங்க
வரக் கவிஞர் பராக்கிரம கொடித்துவக்கு ஆகும். இதே இதழில்,
அரீசென் அஹ"புது எழுதிய 6)ay Gir"
இவ் விரு
*துட்டகைமுனு (துட்டு கெமுனு ஜாதிய அமதய்) என்ற இனவாதக் கவிதையொன்றும் பிரசுரிக்கப் பட்டுள்ளது
கவிதைகளைப் பற்றியும்
னத்தை நினைக்
குறிப்பிடத்தக்கது. 1979 ஜனவரி 11-ந் திகதி
"எத்த" பத்திரிகையில் வெளிவந்த விமர்சனம் கீழேதரப்பட்டுள்ளது
கவிய
அகில இங்ங்கை சிங்களக் கவிஞர் சம்மேளனத்தின் செய லாளர் பீ. மலல்கொடவின் நிர் வகிப்பில் வெளியிடப்பட்டுள்ள "கவிய" பத்திரிகையின் இந்த இதழில், ஒருசில விசேடங்கள்
உண்டு.
க விஞர் சம்மேளனத்தின் 47 - வது ஜயந்தி முயற்சியை வெளிப்படுத்திக் காட் டு வ து அதிலொன்றகும். இந்த ஜயந் தியை முன்னிட்டு நான்கு பக் கங்கள் விசேட அனுபந்தமும் இணைக்கப்பட்டுள்ளது.
இ ல ங்  ைக முற்போக்குத் தமிழ்க் கவிஞர் ஒருவரின் உயர் கவிப் படைப்பொன்றின் மொழி பெயர்ப்பு பிரசுரிக்கப் பட்டிருப் பது மிகவும் எடுத்துக்காட்டப் பட வேண்டிய விசேடமாகும். அந்தத் தமிழ் மஹாகவியின் பெயர் கைவிடப் பட்டிருப்பது அச் சுப் பிழை காரணமாக T வனத்தெரிகிறது. ("மஹாகவி' கன்ற கவிஞரின் பெயரை སྔོ༠7
சகர், புனைபெயராகக்
கொள் ளாமல் கவிஞரின் பட்டமாகக் கருதியதால் கவிஞரின் பெயர் பிரசுரிக்கப்படவில்லை எனக் கருதி யு ள்ள 1ா ர் - பெயர்ப்பாளர்). கவிஞரின் படைப்புடன், சிங்கள மொழிபெயர்ப்பாளர் பரா க் கிரம கொ டி த்துவ க் கு வின் புகைப்படம் மட்டும் பிரசுரிக்கப் பட்டிருப்பது, அத்தமிழ்க் கவிஞ ரின் புகைப்படத்தை அவசரமா கப் பெற முடியாது போனதா லாக இருக்கக்கூடும்.
அது எவ் வாறு இருப்பினும், இம்முறை. முழு கவிய" பத்திரிகையிலும்
பிரசுரிக்கப்பட்டுள்ள பெறுமதி யான பண்டப்புக்களுக்கிடையில் மிகப் பெறுமதிவாய்ந்த படைப்பு இதுவென விமர்சனக் கண்க ளால் பார்க்கும்போது தெரி கின்றது. இப்படைப்பில் மிளிர்
வது, விவசாயியின் சக்தியும், தைரியமுமாகும்.
"ஏர் ஏருது: காளை இழுக் காது"
r

Page 11
ஏரைச் செலுத்த முடியா மல், பொறியிற் சிக்கிய மிருக
மெனத் துடி க்கு ம் விதமும்,
அதனுள் விவசாயியின் சிரமங் களும் தெரியவில்லையா?
"எனினுமந்தப் u nr 60D 35 பி ழ ந் து பயன் விளைப்பான்" நெருப்புப் போன்ற கொடூர மான வெய்யில் என்பது கவி தையில் திறமையாக வெளிப் படுகின்றது. நீரால் நெருப்பால் அணையும். விவசாயி வியர்வை சிந்துவது, வெய்யில் நெருப்பை அணைக்கும் முயற்சியென்று கவி ஞர் தெரிவிக்கின்ருர். விவசாயி இவ்வளவு முயற்சியுடன் நெல் உற்பத்தி செய்வது உ ல கி ன் ஒரே மங்கள காரியம் என்பதா கக் கவிஞர் அடுத்த அடியில் வெளிப்படுத்துவது, 6ðlaug tr யின் சிரமத்தின் பெறுமதியை உச்சத்தில் எழச் செய்கின்றது. முயற்சியுடன் பராமரித்த பயிர், வளர்ந்து பூத்து வரும் வேளையில் கவிஞர், விவசாயியின் உளப் பாங்கை வெளிப்படுத்திக் காட்டுவது
'மனிதன் முயற்சிக்கு
இறைகொடுக்கும் பொற்காசாம்
நெல்லுப் பொதி"
என்னும் வரிகளிலாகும் இந்த நெற்பயிர்கள். தங்க நிறமாகப் பழுத்துள்ளன என்பது, பொற் காசு என்ற வார்த்தையால் உணர்த்தப்படுகின்றது. இதன் பின், இந்தப் பொன்மயமான நிலத்தில், தங்கத் தூசு துகள் கள் அசைவதுபோல் பயிர்கள் காற்றில் ஆடியவாறு உள்ளன: ஆணுல், வ ய ல் வரப்புகளோ சொதியின் சுவையினை அனுப விக்காது உலர்ந்து போயுள்ள உதடுகள் போன்றவை. விவசா யியின் உ த டு கள் உலர்கின்ற விதமும் அதேபோன்று வாசகர் உள்ளத்தே உண்டாக்கப்படுகின்
寂8
நன. ஆன ல்
திருக்கும.
ராகக் கொண்ட
றது மழை நீர், ரைப்புகள் எ ன் ற உதடுகளுக்கு அவசிய மான சொதியென உணரும் போது, விவசாய மக்க ளி ன் உணவுத் தேவை வெளிப்படுத் தப் படுகின்றது.
நெற் கதிர்களுடன் விவசா யிகளின் எதிர்பார்ப்புகளும் முற் றிக் கொண்டு வரும் வேளையில் அந்த எதிர்பார்ப்புகளைத் தவிடு பொடியாக்கிக் காற்றேடு கூடிய மழை வந்தால், வெள்ளம் பாய்ந்து பயிர்க்ள் மூழ்கிவிடுகின் விவசாயியின் தைரியம் தவிடுபொடியாகாமல்
இருப்பதை வாசகருக்குக் காட்
டும் கவிஞர், தனது கவிதையை
முடிப்பது, அத் த கு தைரிய, முள்ள விவசாயிக்கு நல்வாழ்த்
துக் கூற, வாசகரிடம் வேண்டிக்
கொண்டாகும்
இந்தப் படைப்பில் வெளிப் படுவது, எமது பூமியில் துயர் படும் விவசாயிகளின் வாழ்வின தும், சிரமங்களினதும், தைரி யத்தினதும் வாசகமேயன்றி, சிங்கள - தமிழ் மணமோ துர் நாற்றமோ அல்ல. பொதுமக்க ளு  ைடய உளப்பாங்குகளின் குண நலன்கள் உயர் இலக்கிய வாதிகளின் சிருஷ்டிகளில் செறிந் ஆகவே சிங் கள இலக்கியச் சிருஷ்டிகள் தமிழ் மொழியிலும், தமிழ் இலக்கியச் சிருஷ்டிகள் சிங்கள மொழியிலும் எழச்செய்து சமர்ப்பிப்பது இந்த இரு மொழிகளையும் உபயோகிக் கும் மக்களின் உளப்பாங்குகளை அ ந் யோ ன் ய மாகப் புரிந்து
கொள்ள உதவும் இவ்வாறே இது "கவிய" பத்திரிகை மூலம் இ னி யும் நிறைவேற்றப்பட வேண்டும்.
தேசிய உணர்வையும், Lрдš கள் போராட்டத்தையும் உயி தொகுப்புக்

களிலும், அழகியலை வெளிப் படுத்தும் பல கவிதைச் சிந்தனை களிலும், மற்ற முறைகளைவிட இம்முறை "கவிய வளமுடைய தாகவுள்ளது. ஆனல் இம்முறை இதழில், ஒரு பக்கத்தின் மேற் பகுதியானது, இனவாதப் புண்
விலிருந்து வடி யும் சீழிஞல்
பழுதுபட்டுள்ளது.
"கவிய ஆசிரியரான, அகில இலங்கை சிங்களக் கவிஞர் சம்மேளனச் செயலாளரால் எப் போதும் பிரகடனம் செய்யப் படும் ஏகாதிபத்திய விரோத, முதலாளித்துவ விரோ த ப் பாதையில் பயணம் செய்வதற்கு இந்த இனவாதப் புண்ணுனது பெரும் பாதிப்பாகும். இப் பாதையில் வருபவர்களின், இப் படியான புண்களைச் சுகப்படுத்த உதவுவது "க வி ய" ஆக்குநர் களின் கடனுகும். அதுவல்லா மல், புரையோடச் செய்வதற்குச் கொஞ்ச இடமேனும் கொடுப் பது இப் பயணப் பாதைக்கு உகந்ததல்ல. பலரும் இப்படி யான புண்ணைச் சுகப்படுத்தி எடுக்கவில்லையாயின் இப் ப ய ணத்தை இப்படியான புண்காரர் களுடன் மேற்கொள்ள முடி யாது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும்.
துட்டகைமுனு இனத்தை நினைக்கிருன்’ என்ற தலைப்பில் உள்ள அக்கவிதையில், விதேசிய சோழர் இல்லாமல் இலங்கைத் தமிழ் மக்கள் இருக்கிறர்கள் என்பது மறக்கப்பட்டுள்ளது: இக்கவிதை சுயபாஷை விருப் பின் காரணமாக இருந்தபோதி லும், இலங்கைத் தமிழ் மக்கள் வி தேசி கள் என நினைப்பது
குரிய குமாரதுங்கா முனிதாஸ்
வின் கற்பித்தலுக்கு முற்றிலும்
இப்படியான புண் ண ப்
விரோதமானது. தமிழ் மொழி பேசும் ஈழத்து மக்கள் இருக்கி ருர்கள் என்றும், அவர்களும் இனத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது என்றும் தெளிவுபடுத் தி யுள் ளார் குமாரதுக்க முனி தாலும்,
இலங்கைத் தமிழ் மக்களும் இலங்கை முஸ்லிம் மக்களும் எங்கள் இனமே என எண்ணு தல் வேண்டுமென்றும் விதேசிக ளென எண்ணக் கூடாது என்றும் குமாரத்துங்க முனிதாஸ் காட் டித் தந்துள்ளார். அ வ ரா ல் "சிங்களத்தில் அ பாக் கி யம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டு, "வித்தியோதய? சஞ்சிகையின் 1936-ம் ஆண்டு ம்ே இதழில் 1-ம் கலத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இதனைத் தெரிவிக்கின் றது. "ஹெல ஹெலிய" என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆரம் பத்திலேயே இது எடுத் து ச் சொல்லப்பட்டுள்ளது
* சிங்கள, தமிழ், முஸ்லிம் பரங்கி என இருக்கும்வரை நிச்ச யமாக வெற்றி கிடைக்காது" என திபெத்திய இனத்தவரான எஸ். மஹிந்த என்ற சிங்களக் கவிஞரின் கருத்துக்களையும் நினைவு கூருவோம்,
எ ல் லாக் கவிஞர்களையும் ஒன்றுதிரட்டும் முகமாக, எல் லாக் கவிதை நோக்குகளுக்கும் இடம் கொடுப்பதற்கு இதழாசி ரியர் எண்ணியிருக்கக் கூடும்? அப்படியான பரந்த எண்ணமா usair, மல்லிகை, செவ்வந்தி போன்ற மலர்களை அர்ச்சனை செய்யும் தேவஸ்தானத்தில் கூடாத மலர்களையும் சேர்ப்பது உகந்ததல்ல, *毅

Page 12
ஒரு கடிதம்
சென்ற மாதம் ஒருநாள், நான் அச்சுவேலியில் இருந்து பஸ் எடுத்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்தேன்.
பஸ்ஸுக்குள் பருத்தித்துறையில் இருந்து வந்துகொண்டிருந்த ஒரு கூட்டம் உள்ளேயிருந்தவர்களின் பொறுமையைச் சோதிக்கும் விதத்தில் நடந்து கொண்டதை என்னல் கூடப் பொறுக்க முடிய வில்லை. அவர்களின் அட்டகாசச் சம்பாஷணையில் இருந்து அவர் கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் சமீபத்தில் மறைந்த நமது கலைஞர் பூரீ சங்கரின் மரணச் சடங்கில் அவர்கள் கலந்து விட்டு வருகின்றனர் என்பதையும் புரிந்து கொண்டேன்.
பஸ் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் நடந்து கொண்ட முறை அவ்வளவு விரும்பத்தக்கதாக இருக்கவில்லை. சிலர் தமது நிலை மறந்து இருந்தனர். மற்றும் சிலர் ஏதோ ஏதோவெல்லாம் கதைக்கக் கூடாத வகையில் பிதற்றிக் க்ொண்டே வந்தனர்.
இடையில் சிலர் பிரயாணிகளுடனும் மோதத் துவங்கி விட் டனர். இப்படி பஸ்ஸில் பிரயாணம் செய்வதே சங்கடமாக இருந் தது. இத்தனைக்கும் அந்த பஸ்ஸில் பெண் பிரசுகள் பலர் பிரயா ணஞ் செய்து கொண்டிருந்தனர். h
அக் கூட்டத்தில் சிலரை இனங் க்ண்டுகொண்ட பிரயாணி களில் இளம் வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் "இப்படியான கலை ஞர்கள் இப்படி நடந்து கொள்வது வளர்ந்து வரும் ஈழத்துக் கலை உலகிற்கே பெருத்த அவமானமாகும்" என் உரத்துச் சொல் வது கேட்டது.
பஸ் ஓட ஓடக் கலாட்டாவும் கூடியது: பஸ் கண்டக்டர் எவ்வளவோ தரம் சொல்லிப் பார்த்தாரி3 அவர்கள் கேட்பதாக இல்லை.
ஒரு தடவை பஸ் பிரயாணிகள் சிலருக்கும் அந்தக் கலைஞர் குழுவிற்கும் கைகலப்பே இடம்பெறக் கூடிய வகையில் நிலைமை முற்றியது. கூச்சலும் குழப்பமும் பஸ்ஸில் இடம் பெற்றன.
ஒரு வழியாக பஸ் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. பஸ் நிலயத்திலும் இவர்கள் இழுபட்டு விழுபட்டதைக் கண்டு எனக் குள்ளேயே நான் பரிதாபப் பட்டுக்கொண்டேன்.
ஒரு கலைஞனின் பிரிவுக்காகத் தமது அஞ்சலியைத் தெரிவிக்க நீண்ட தூரத்தில் இருந்து வந்து அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அக் கலைஞர்கள் அதே பெருந்தன்மையுடன் திரும்பி யிருப்பார்களானல் அது அக் கலைஞனுக்கும் அக் கலைக்குமே பெரு மையாகும். ஆனல் நடைமுறை அப்படி நடக்கவில்லையே!
இந்த நாட்டுக் கலைஞர்கள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்து வரும் மல்லிகையின் கவனத்திற்கு இந்தச் சிறு அசிங்கமான சம்பவத்தைக் கொண்டு வருவது எனது கடமை என நினைக்கின்றேன்
இனிமேலாவது நமது கலைஞர்கள் பொது இடங்களில் நமது கலையின் பெயரைக் களங்கப்படுத்தாமல் நடந்து கொள்வார்களா?
毓一 . அச்சுவேலி Фаi дамуға

இரவல் மனப்பான்மையும் மேற்குமய மோகமும்
இன்று தமிழகத்தில் எழுதி வெளியிடப்பட்டு ஏற்று மதி செய்யப்படும் பெருவாரியான சஞ்சிகைகளிலும் க வர் ச் சிக் கதைப் புத்தகங்களிலும் இரவல் மனப்பான்மையின் (o) In mr GS) மையை நாம் நன்கு காணலாம். பளபளவென்று பளிரிட வாணிஷ் பூசி- சில சமயங்களிலே சென்ற் றும் பூசி - வரும் இவை கண் களைச் சுளுக்க வைக்கும் நிறங் களிலே அட்டையிடப்பட்டு வரு வன. நிருவாணப் படங்களோ எணத்தக்க படங்களுக்குச் சாட் டுக்காக ஆ  ைட உடுத்தி - உடையோ உடையின்மையோ என்று பிரமை கொள்ள வைக்
கும் இலேசான சில கோடுகளை
அல்லது வண்ணக் கீறல்களை ஒப் புக்காக அங்குமிங்கும் இழுத்து விட்டு - அவ்வகைப் படங்களை அட்டையிலும் உட்புறத்திலும் அச்சிட்டு மேற்படி சஞ்சிகை களும் புத்தகங்களும் தயாரிக்கப் படுகின்றன.
இந்தச் சஞ்சிகைகளும் புத்த கங்களும் இரவல் மனப்பான்மை யின் விளைவுகளே. முதலாவ தாக இவை வாழ்க்கைப் பண் பாடுகளுக்கு முதன்மை தருவ தில்லை. சினிமாப் பண்பாட்டுக்கே மேலாதிக்க முன்னுரிமையை வழங்குகின்றன. சினிமா உல கின் சில்ல்றைச் சங்க தி களை மிகைப்படுத்தி ஆர்ப்பாட்டஞ்
முருகையன்
செய்கின்றன; நடிக நடிகையரின் நடத்தை முறைகளையும் பழக்க வழக்கங்களையும் விசித்திர விநோ தங்களையும் அறிமுகஞ் செய்து அவற்றில் மக்களை ஈடுபட வைப் பதே தம் குறிக்கோள் என எண்ணுகின்றன.இவ்வாறு செய் வதன் காரணம் வணிக மனப்பான் மையே தவிர வேறு யாதுமில்லை5
இரண்டாவதாக, இ ைவ வேற்று மொழிச் சஞ்சிகைகளை யும் புத்தகங்களையுமே ஆதார மாகக்கொண்டு தமது பிழைப்பை நடத்துகின்றன. மூன்ருந்தர மலிவு நாவல்களையும் துணுக்கு களையும் ஆங்கிலத்தில் அரை குறையாக விழுங்கிவிட்டு அவி யல் மொழியிலே வாந்தியெடுக் கும் "ஹிப்பி - மொட் - பொப் நியூ வேவ்" எழுத்தாளர் கும் பலே இவற்றைத் தயாரித்துப் பரப்புகிறது. வ் வாரு ன 'ஹிப்பி. மொட், பொப், நியூ வேவ் எழுத்துகளுக்குவக்காலத்து வாங்கும் சிலர், தமிழ், பண்பு, கலை, கலாசாரம் பக்தி, தத்து வம் யாத்திரை புண்ணியம் முத்தி, மோட்சம் என்றும் சில சமயங்களிலே பேசிக்கொள்வ துண்டு. இது பெரிய வேடிக்கை
ஆகவேதான், இரவல் மனப் பான்மையால் நேரும் சீரழிவு கள் இவை இவை என்று ஒவ் வொன்முக விரல் மடித்து எண்

Page 13
னிச் சுட் டிக் காட்டவேண்டி உள்ளது. அச் சீரழிவுகளை இனங் கண்டு கொள்வதுடன் எங்கள் இளைஞர்கள் அவற்ருல் எ ந் த அளவுக்குப் பாதிக்கப்படுகிருரி கள் என்று விசாரணை செய்வதும் விரும்பத்தக்கது.
2 இர வ ல் இலக்கியத்தின்" உள்ளடக்கத்தை மு த லிலே
பார்க்கலாம். பெருவியாபாரப் பத்திரிகைகளான கு மு தம் ஆனந்த விகடன், தினமணி
கதிர் இதயம் பேசு கிற து போன்ற சஞ்சிகைகளில் வெளி யாகும் கதைகளில் வரும் கதா நாயகர்கள் யார்? அக்கதைகள் யாரைப்பற்றிப் பேசுகின்றன? சற்று ஆழமாக யோசிக்க வேண் டிய சங்கதிகள் இவை.
"கஞ்சி குடிப்பதற்கு இல்லார் - அதன் காரணங்கள் இவை என்னும் அறிவும் இல்லார்
பஞ்சமோ பஞ்சம் என்றே -
தம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்ருரே - துயர்களைத் தீர்க்க ஓர்
என்று நெஞ்சு பொறுக்காமற் பாடினனே, பாரதி அன்ருெரு நாள் அந்த மக்களெல்லாம்
எங்கே? அவர்கள் சீரும் சிறப் பெற்று மங்களமாக வாழ்
ருர்களா? மாட மாளிகைகள் கட்டி கூட கோபுரங்கள் எழுப்பி உல்லாசமாக வாழ்கிருர்களா? இன்னல் எல்லாம் தீர்ந்துவிட எல்லாப் பெருஞ் செல்வமும் எய்திவிட்டார்களா? இல்லையே! "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடு தலை தவறிக் கெட்டு’, பாழ் பட்டுப்போன நிலையிலே தானே அவர்கள் இன்னமும் உள்ளனர்? துஞ்சி மடியும் அந்த மக்கள் பற்றி, அவர்களின் இன்னல் நிறைந்த வாழ்க்கைபற்றி, அந்த இன்னல்களுக்கான காரணத் தைப் பிட்டுக்காட்டி, நம்பிக்கை ஊட்டி எழுச்சிப் பாதையில்ே இவர்களை இட் டு ச் செல்லும் உயிரிப்பையும் ஊக்கத்தையும் த ரும் எண்ணங்கள் பற்றி - அவ்வாருண எண்ணங்களை எல் லாம் பக்குவமான கலைகளாக உருமாற்றிப் படைப்பது பற்றி, தினை அளவாயினும் அக்கறை உண்டா, இந்த வியாபாரக் க ைத எழுத்தாளர்களுக்கு? நாடெங்கும் பரந்து பாடுபடும்
இவர்
வழியும் இல்லை - அந்தோ..."
பொதுமக்களே முற்றிலும் புறக் கணித்து, உல்லாச புரிகளையும் அவைபற்றிய ஆசைக் கனவுகளை யும் இல்லாது வெறுமைகொண்டு சொல்லாலும் படங்களாலும் பின்னித் தருவதுதான். வர்த்தக இர வ ல் எழுத்தாளர்களின் சிறப்பியல்பு.
கோடீசுவரர்களையும் இலட் சாதிபதிகளையும் விலையுயர்ந்த ஒட்டல்களில் மதுவருந்தி நடன மாடுவோரையும், விமானத்தில் ஏறி உலகை வலம்வரும் வசதி படைத்த மேன்மக்களையும் - குறிப்பாகச் சொல்வதானுல் . வருக்க நிலையில் உயர்ந்தவர்களை மாத்திரமே இன்றை தமிழகக் கதை வியாபாரிகள் சித்திரித் துக் காட்டுகிருர்கள். வருக்க உயர்வு என்பது அமெரிக்கக் கலாசாரம் அ ல் ல து மேற்கு நாட்டு நாகரிகம் என்பதுடன் சமன்படுத்தப் பெறுகிறது. நல் வாழ்வு என்பது மேற்குமயமான சூழலில் வாழும் வாழ்வே என்று காட்டப்படுகிறது.
ஒர் உதாரணம் காணலாம்: பி. வி. ஆர். எழுதிய "காதலுக் கும் கண் உண்டு என்பது ஒரு

நாவல் அதன் இறுதிப் பந்தி பின்வருவது
"தான் செய்துவிட்ட கட மையில் பூரிப்பு அடைந்த பாரித் திபன், மஞ்சு - கைலாசத்தைத் தன் சொந்த சிலவில் பிரான் சுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தான். பாரிஸ் நகரத்தை விடச் சிறந்த இடம் தேன் நிலவுக்கு எங்கே இருக்கிறது?
- பக்திமானுகவும் கருநாடக இசை ஞானம் படைததவனுக வும் "பண்பாளஞகவும்" கதை முழுவதும் காட்டப்பட்ட கைலா சம், மங்கல வாழ்வு தொடங்கு வதற்குப் போகவேண்டியுள்ள இடம் பாரிஸ் உண்மையைச் சொல்லப்போனல், குடுமிக்கார ணுகவும் கட்டுப்பெட்டியாகவும் இருந்து கைலாசத்தை மண்ம் மாற்றி மஞ்சு என்னும் பணக் காரியை அவனுக்கு மணமுடித்து 6Da அவனுடைய வருக்க : . க வழியிலே உயர்த்தி, இறுதியில் அவனை மேற்குமயமான சூழலுக்கு ஏறறு மதி செய்து விடுவதே மேற்படி நாவலின் சாராம்சம் இவ்வாறு மேற்குமயமாதலை இலட்சியப் படுத்திக் காட்டுவதே இன்றைய இரவல், வர்த்தகக் கதைகள் பலவற்றின் ஆடிக்கருத்து. ஆகை யால் மேற்குமயமான குழல் களே கதைகளிலும் கலைகளிலும் அதிகம் இடம்பெறுகின்றன.
இவ்வாருக இடம்பெறுவ தால் மேற்குமயமாகும் வாய்ப் பும் உயர்ந்த வருக்க த்தில் துழைந்திடும் வாய்ப்பும் ஓரள வுக்கு உள்ளவர்களான கல்லூரி மாணவர்கள் (இலங்கை வழக் குப்படி, பல்கலைக்கழக மாண வர்கள்) அல்லது அந்த வாய்ப் L96ör నీల్డ இளைஞர்கள், மேற்குமய கதை 蠶 ஆக்கங்களிலே தாராள்மாக இடம் பெறுகிரும்
கள். இவர்களின் வயதும் பருவ மும் வாழ்க்கைப் பொறுப்புகளை உணராத வயதும் பருவமுமா கையால், இவர்களுடைய உலக நோக்கு, உயர் வருக்கத்தின் நோக்கை ஒத்ததாகவே உள். துெ. ஆகையால் இவர் களு 60 t-tul u GS Go r விநோதங்களும் காதல் விகளயாட்டுகளும் மேற் படி கதைகளிற் காணப்படும்; சுருக்கமாகச் சொல்வதானல், Ś" இரவல் எழுத்தாக்
உயர்ந்த வருக் கத்தின் வாழ்க்கை,
* உயர் வருக்க வாசற்படியில் நிற்கும் இளையோரின் லீலை கள். t
* மேற்படி அமிசங்களைச் சித் திரிப்பதற்கு வசதியாக, மேற்குமயமாகும் போக்கில் 9RC561605 மோகம்g
இத்தனைக்கும், இக்கதைகளை எழுதும் எழுத்தாளர்கள் எல் லாரும் உயர்ந்த வருக்கத்தினர் என்ருே மேற்குமயமாகிவி' ஆங்கிலப் Լյ696նrig;6եր அல்லது துரைத்தனப் பிரபுக்கள் என்றே சொல்வதற்கும் இல்லை. திருச் சிற்றம்பலிக்க 6ն Ա Ո լյ ri ●@ தடவை கூறியது போல,
உள்ளிக்கும்
Չ- ւ ւ * «Ե ւb ஒருவே ஃா 7 வெற்றிலைக்கும் அள்ளிப் பருக அரைவயிற் றுக் கஞ்சிக்கும்? ஆவண்டையடிக்கும் சாதாரண மனிதர்கள் தான்
அப்படியானல் இவர் கள் ஏன் இப்படி எழுதுகிருர்கள்?
எட்டாத கனவுகளை இன் பப் போலி , s9.jll la Lorr;3) ஏழைகளிடம் நீட்டும் இவர்கள் தாங்களும் அந்த மாயையிலே அ ற் ப சுகம் காண்கிருர்கள் போலும்
A9

Page 14
இவ்வாறு sp-6üтооцршпт 60т உருப்படியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காது விலகும் ஒரு போக்கினை இவர்கள் வளர்க்கி முர்கள், வேருெரு வகையிற் சொன்னல், வருக்க உணர்வினை இவர்கள் மழுக்குகிருர்கள்.
செய்வதனுல்
3
இன்று எழுதப்படும் கதை கள் பலவும் வசதி படைத்த வருக்கத்தினரையே மையமாகக் கொண்டுள்ளன. உள்ளடக்க
ரீதியில் அவற்றின் பண்பு அது
இந்த உள்ளடக்கத்தின் தன் மைக்கு ஏற்பவே மேற்படி எழுத் தாக்கங்களின் மொழி நடையும் க3ல உத்திகளும் அமைந்துவிடு கின்றன. இது தவிர்க்க முடி யாத ஒரு விளைவே ஆகும்.
தமிழகத்துப் பிரபல எழுத் தாளர்களின் மொழி நடை எப்படிப்பட்டது? இன்றைய மனி தனின் உணர்வுகளையும் இலட் இயங்களையும் வேட்கைகளையும் அச்சொட்டாக, இம்மியும் பிச காது வெளிப்படுத்தும் ஆற்றல் நிறைவு இன்று தென்னகத்துத் தமிழ் மொழி க்கு உண்டா? சிறிது யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டும்,
இந் த க் கேள்விக்கு!
ஏனென்ருல் மேற்படி கதைளில் வரும் பாத்திரங்கள் அநேகமாகத் தமிழில் உரையா டுவதே இல்லை. முக்கியமான, உறைப்பான கட்டங்களில் அவர் களுடைய வா யில் வருவது ஆங்கிலந்தான்: "ஹவ் அப்சர்டு, ஹவ் அப்சர்டு" என்ருே ஐ ாேன்ட் கேர் வாட் யூ ஃபீல் எபவுட் ஈட்" எ ன் ருே தா ன் அவர்கள் தம் உணர்வுகளையும் உள்ளக் கிளர்ச்சிகளையும் turifluort றிக் கொள்ளுவார்கள். ஜெய
வாழ்க்கையின்
ஏறத்தாளப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், இலக்கிய ஆர்வலனன மாணவனுெருவன் மஹாகவியைச் சந்திக்க நேர்ந்தது தனது 'ஒட்டோஃப்" புத்தகத்தை அவரிடம் கொடுத்தபோது மஹா கவி எழுதினுர்
நாடு பெரிதை;
நடவாப் புதுவழியில்
ஒடு; சலிக்காது உழை.
“சோழன். 22 - 2 - 67
காந்தன் ஒரு நாடகம் முழுவ தையுமே அப்படி ஆங்கில உரை யாடல்களைப் பெய்து எழுதி யிருந்தார். ஆங்கி ல நாடக மொன்றைத் தமிழ் எழுத்துகள்
கொண்டு அவர் எழுதினர் என்று
கூடச் சொல்லிவிடலாம். (ஆங் கில நா ட கம் எழுதுவதற்கு ஆங்கி ல எழுத்துகள் தானே பொருத்தமானவை; வாய்ப்பா னவை! அவற்றைப் பயன்படுத்தி இருக்கலாமே!)
இவ்வாறெல்லாம் செய்யும் போது மொழிக் கலப்படம் நிகழ்கிறது. கலப்படம் நிகழ்கி
றதே என்பதன்று கவலைக்குரிய
சங்கதி. தமிழ் மொழியின் வ6. மையை அதிகமாக்கும் வகையில் அண்டை மொழிகளிலிருந்துப் உலக மொழிகளிலிருந்தும் சொ களைப் பெற்றுப் பயன்படுத்து
வது ஆரோக்கியமான வளர்ச்சி
யையே குறிப்பிடும், த னி த தமிழ் தூய்மை கெட்டால், குடி யே முழுகிவிடும் என்று நாம் வாதிக்கவில்லை.
ஆனல், தமிழகத்து மொ. எழுத்தாளர் செய்யும் கல
B4

படம், வாழும் தமிழின் கழுத்தை தெரித்துக் கொல்வதுபோன்ற ஒரு முயற்சியாகும், ஏனென்றல் உணர்ச்சி நுண்மை பட்ைத் தோர் எனப்படும் கலைஞர்களா கிய எழுத்தாளர்களே, த 10 து சாதனமாக வேற்றுமொழியை கையாளும் போது தமிழ்மொழி இழக்கிழந்த ஒன்ருகக் குன்றி விடுகிறது. திேய்ந்துபோய் விடு கின்றது. ベ
இவர்களின் இந்தக் கலப் பத்தினுல் ஆங்கிலத்துக்கும் நன்மை இல்லை - ஏனென்ருல், அது இந்தக் கதை வியாபாரி களால் நன்மை பெறக்கூடிய அளவுக்கு ஆற்றல் குன்றியதாக இல்லை - தமிழுக்கும் நன்மை இல்லை. மாருகி, தமிழுக்கு நட் டமே மிகவும் உண்டு. குறிப் பாக எழுத் துத் தமிழுக்கும் பெருநட்டம் உண்டு.
* எப்படி?
பேசுந்தமிழே வாழுந்தமிழ். அதுவே உயிர்ப்போடுTநில வி வருவது. இந்த வாழுந் தமிழ், பல இலட்சமாகப் பரந்து விரிந்த பொதுமக்களிடையே. குறிப்பா கச் சொல்வதானுல், டாடுபடும் வருக்கத்தி டையே, ம ங் கா த ஒளியோடு, மழுங்காத கூர்மை யோடு இன்றும் வழங்கி வருகி றது தொன்றுதொட்டே இடை யருது வரும் தொடர் ச் சிப் பாரம்பரியமாக வ ழங் கி வரு கிறது.
கிராமியம் என்றும் அநா கரிகம் என்றும் அசப்பியம் என் றும் அசிங்கிம் என்றும் ஒதுக்கப்
G if t Jay சொற்களும் தொடர்களும் மக்க ஜின்அடி மனத்திலிருந்து பிறப் பெடுத்து மற்றவரைச் சென்ற டைந்து குறி தவருது தைக்கும் ற்றல் உன்டை யவை ஆதரவு "ே அநுதாபம் தெரிவிக்
கவும் இரங்கவும், கலங்கவும்.
as
“பட்டிக்காட்டுச்"
சீறவும், சினக்கவும், நகைக்க வும், நக்கல் பண்ணவும் ஏற்ற *வலு திறமான" சொற் பிரயோ கங்கள் பாடுபடும் வருக்கத்தாரி டையே இப்போதும் உயிர்ப் போடு பயின்று வருகின்றன.
வடமொழி, ஆங்கிலம் (p5 லான வேற்று மொழிகளோடு பழக்கமுடையவர்கள் @ ର) do றைப் பட்டிக்காட்டுத் தன்மை உடையவை, தீண்டத்தகாதவை என்று விலக்கி வைக்க முற்பட் டமையால், எழுத்து வழக்கில் இவை நுழையாமல் நின்றுவிடு கின்றன. இப்படி நின்றுவிடுவ தஞறல், மக்கள் மொழியின் மூல வளங்கள் எல்லாம், எழுத்துத் தமிழைப் பொறுத்தவுரை தக்க படி பயன்படாமல் வீணடிக்கப் படுகின்றன. மே fն (5 տ ա լ: போக்கு என்னும் மோகத்தினல் நாம் அடையும் நட்டங்களில் ସ୍ଥି, s! ରy lib • ஒன்ருகும். கைப் பொருள் அனைத்தையும் விஷி எறிந்துவிட்டு, தி  ைர கடல் கடந்து திரவியம் தேட ஓடுவது போன்ற அசட்டு முயற்சி இது
ஆகவேதான், மக்கள் மொழி யின் அடியாக நிகழக்கூடிய நற் றமிழ் வளர்ச்சியை முடக்குவ காக உள்ளது, "மொட் எழுத் தாளர்களின் கலப் பட விளை LTL (B). இந்த அரை வேக்காட் டுக் கலப் பட விளையாட்டில் மிகப் பெருந்தொசுை எழுத்தா ளர்கள் ஈடுபடத் தொடங்கி யிருப்பது விசனிக்கத் தக்கது,
4.
இவையெல்லாம் இர வல் மனப்பான்மையின் விளைவுகள். தமிழ் இலக்கிய வரலாறு முழு வதையும் எடுத் து நோக்கும் போது, இன்று நிகழும் அள வுக்கு இரவல் மனப்பான்மை யின் ஆட்சி முன்னர் எப்போ தும் நிகழ்ந்ததில்லை என்று கூறி விடலாம், ஏன் இந்த நிலைம்ை?

Page 15
இந்த இரவல் மனப்பான்
மைக்குரிய காரணங்களில் ஒன்று
எவ்வாறேனும் இலாபஞ் சம்பா தித்துவிட்டல் வேண்டும் என்ற வர்த்தக நோக்கு, பத்திரிகை கள், சஞ்சிகைகள் வெளியிடுந் தொழில் பாரிய வணிகமுயற் சிகளாக நிறுவன ரீதியிலே வளர்க் சப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு உதவி புரியும்வகை லே சினிமா வானுெலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் விரிவும் பரம்பலும் அமைந்து விட்ட்ன. சுருங்கச் சொல்வதா ஞல், நவீன நகர்களில் வாழும் மனிதர்சள் வெகுசன ஊடகங் கள் ஆகிய பத்திரிகை, வானெலி தொலைக்காட்சி என்னும் நவீன சாதனங்களால் மிகவும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டு வருகிருர் கள். இச்சாதனங்கள் ஒன்றை யொன்று சார்ந்தும் ஒன்றினுல் ஒன்று பாதிப்புற்றும் ஒன்றுக் கொன்று உறுதுணையாகியும் நடைபெறுவன. பத் தி ரி  ைக களுக்கு விளம்பரம் வேண்டும் இவை ஆடம் ! நுகர்ச்சிப் பண் ட "உற்பத்தியாளர்களிட மிருந்தே அநேகமாகக் கிடைக் கின்றன. ஆகையால், அநத நுகர்ச்சிப் பண்டங்கள் விலை போவதற்குச் சாதகமான சூழ் நி3லயைச் சமூகத்தில் ஏற்படுத் துவதற்குப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தம்மை அறியா மலே முயற்சி செய்கின்றன. மனப்பூர்வமான, அறிவறிந்த முயற்சியாசவும் அது இருப்ப துண்டு. இன்றைய நிலையில்
ஆடம்பர நுகர்ச்சி, மேற்குமயம்
ஆதலுக்கு உறுதுணை யா ய் உள்ளது
இனி, இன்றைய தமிழகத்
தின் முதன்மையான பெருவணி
கத் தொழிலாய் உள்ளது சினிமா. அது பெரு முதலீட்டின்
ä6
தேவை ஆகிறது.
அடியாக இயங்குவது. ஆகை யால் எவ்வாறேனும் கொள்ளை இலாபம் ஈட்டு வது அதன்
ஆகையால் எல்லா விதங்களிலும் சகல மக் களும் விரும் பும் வகையிலே
திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டி உள்ளது. அவ்வாறு தயாரிக்கும் போது, இலாபம்
தவிர்ந்த வேறு விடயம் எது வும் ஒரு பொருட்டாக மதிக்கப் படுவதில்லை. ஆகவே மக்கள் இரசனையின் மிக இழிந்த பொது மட்டமே திரைப்படக் கலையின் மேல்வரிச் சட்டமாகக் கொள் ளப்படும். சினிமாவின் செல் வாக்கு, வானெலி நிகழ்ச்சிகளி லும் தொலைக்காட்சி நிகழ்ச்சி களிலும் மேலோங்கி நிற்கும் அதஞல் அங்கும் மக்கள் இரச னையின் மிக இழிந்த பொது மட்டமே ஆட்சி செலுத்தும்.
இவ்வாருக, வெகுசன ஊடி கங்களின் விரிவு, நுகர்ச்சிப் பண்ட விளம்பர வியாபாரப் போக்கு வளர்ச்சி மெறுவதற்குக் காரணமாகவும் அவ்வளர்ச்சி யின் காரியமாகவும் அமைந்து விடுகிறது. இதன் வழி நகர கலாசாரத்தை இலட்சியப்படுத் திக் காணும் நோக்கும் மேற்கு மய மோகமும் இரவல் மனப்
பான்மையும் தோன்றுகின்றன:
இலக்கிய உலகில் நிலவும் இரவல் மனப்பான்மையும் இவ் வாறே தோன்றுகிறது எனில் ஒரளவு மொருத்தமாகும்.
w
தகுந்தவாறு திட்டமிடப்
படும் இலக்கிய இயக்கங்கள் இவ்
வகை மனப்பான்மைகளை முறி படிக்கும் முயற்சியிற் பெரிதும் உதவக்கூடும் *

உலகச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் ரஞ்சன்
V− சிறு பராயத்திலும் வாலிபப் பராயத்திலுந்தான் ஒருவரது ஆளுமை வடிவம் பெற ஆரம்பிக் கின்றது இந்த வயதில் தான்
ஒருவருக்கு அறிவையும் ஆற்றலை
யும் ஒருசேர உறிஞ்சிக் கொள் ளும் "உத்வேகமும் உத்ஸாகமும் ஏற்படுகின்றது. இதனுல் தான் கல்வி, கலை, கலாசார சம்பத்துக் களை நூல் வடிவில் வடித்துத் தருவதனை ஒரு முக்கியமான பணியென சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.
இதனல் சர்வதேச சிறுவர் ஆண்டு எனப் பி ரக ட ன ப் படுத்தப் பட்டுள்ள இந் த ஆண்டில், உலகப் பேரிலக்கியங் களில் சிறந்தவற்றைத் தேர்ந் தெடுத்து ஒரு அரிய திரட்டாக சிறுவர்களுக்கான விசேஷ பதிப் பாக வெளியிடுவதற்கு சோவியத் சிறுவர் இலக்கிய பிரசுராலய மான "தெட்ஸ்காயா லிட்டரேச் சுரா? முன்வந்துள்ளது.
சோவியத் யூ  ையனில் 70 க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய பிரசுராலயங்கள் 52 மொழிகளில் சிறுவர்களுக்கான நூல்களை வெளியிட்டு வருகின் றன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
இருநூறு பாகங்களை க் கொண்ட "உலக இலக்கிய களஞ் சியம்’ ஒன்றினைப் பதிப்பித்து வெளியிடும் வேலைகள் ஏற்கனவே சோவியத் யூனியனில் நடை பெற்று வருகின்றன. இந் த ப் பாரிய பணியின் ஒரு பகுதியா கவே மேற்படி உலக சிறுவர் பேரிலக்கியத் திரட்டும் வெளிவர
yள்ளது,
எல்லா வயது மட்டங்களையுஞ் சார்ந்த சிறுவர்களான இந்த இ லக் கி ய த் திரட்டுக்காக உலகப் பேரிலக்கிய சிருஷ்டிக ளைத் தெரிவு செய்யும் வேலைக ளில் பிரபல சோவியத் எழுத்தா ளர்களும் இலக்கிய வரலாற்ருய் வாளர்களும், ஆசிரியர்களும் சிறு வர் சித்திர விற்பன்னரிகளும் பங்கு கொண்டனர்.
ஒரு சிறு வ ன் ஒழுக்கசீல ரீதியிலும் சரி, அழகியல்ரீதியி லும், சமூகரீதியிலும் ஒரு முழுமையான பி ர ஜை யாக வளருவதற்குத் துணை செய்யக் கூடிய சிறந்த 180 சிருஷ்டிகளை மேற்படி வெளியீட்டுக்கென உலக இலக்கியச் சுரங்கத்திலி ருந்து இவர்கள் தேடியெடுத் துள்ளனர்.
புராதன கிரேக்க கற்பனைச் கா வி யங் க ள |ான 'இலியத் 'ஒடிஸி "ருேலந்தின் கீதம்" முதலான ஐரோப்பிய காவியங் கள், புராதன ருஷ்ய நாட்டார் கதைகள், பழம்பெரும் ருஷ்ய இலக்கிய சிருஷ்டியான "ஈகர் படையின் சிந்து" ஆகியன உட் பட பல உலகப் புகழ் பெற்ற இலக்கிய சிருஷ்டிகள் இத்திரட் டில் இடம் பெறுகின்றன.
ஏற்கனவே மேற்படி சிறுவர் இலக்கியத் திரட்டின் 10 பாகங் கள் வெளியாகியுள்ளன. மஹா கவி புஷ்கின், லேர்மந்தோவ் ஆகியோரின் படைப்புகள் தனித் தனிப் பா க ங் களாக வும், GfG unir Gulu தோவ்வினதும் கிரிலோட்பினதும் கற்பனைக் கதைகளும், நெக்கிரஸோவ்வின்

Page 16
கவிதைகளும் பிறிதொரு தனிப் ருஷ்ய தேவதைக் கதைகள்" வெளிவந்துள்ளன. அேயல் உலகக் கவிஞர்களின் லூயிஸ் கருே லின் "அதிசய கவிதைகள் ஆகியன உட்பட உலகில் அலிஸ் கிப்பிளிங்கின் பல சிறந்த சிருஷ்டிகள் இடம்
மெளஇளி? ஆகியவற்றுடன் பெறவுள்ளன. அலெக்ஸாண்டர் இமாஸ், மார்க் - மொத்தம் 400,000 பிரதிக டுவைன் முதலானேரின் சிறந்த வில் வெளியாகவுள்ளன இந்த படைபபுகளும தனித்தனிப் உலக சிறுவர் 'இலக்கியத் பாகங்களாக வெளிவந்துள்ளன திரட்டு? உலகெங்குமுள்ள வெளிவரவிருக்கும் பாகங்க பொது நூலகங்களுக்கும் பாட ளில் 'தாயகத்துக்கு ருஷ்ய சாலை நூலகங்களுக்கும் விநியோ கவிஞர்களின் கீதா ஞ் சலி கிக்கப்படும்.
ஒரு கடிதம்
ம்ல்லிகை பொங்கல் ம்லரில் இலக்கியப் பயணத்தின் சில இனிய நினைவுகள்" என்னும் தங்கள் பயணக் கட்டுரையில், தியாகி வாஞ்சி நாதன் ஆஷ் துரையெச் சுட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொண் டமையைக் குறிப்பிட்டுவிட்டு, ‘குனிந்து அந்த மண்ணைக்கிள்ளி எனது நெற்றியில் திருநீருய் பூசிக் கொண்டேன், ஸ்டேசன் பைப் பைத் திருகி அந்த மண்ணின் (புனித) தண்ணிரைச் சிறிது அருந்தி னேன்? என்னும் குறிப்பிட்டுவிட்டு, r
"வாஞ்சிநாதனின் தனிமனித பயங்கரவாதத்தை நான் முற்ருக நிராகரிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
தங்களுக்கு உடன்பாடற்ற விடயத்திலும், தனிம்னித உணர்வு டன் இதய சுத்தியுடன் - இலக்கிய நேர்மையுடன் தாங்கள் நடந்து கொண்டதை அறிந்ததும் நான் மிகவும் மனம் மகிழ்ச்சியடைந்தேன். நாவேந்தனின் "பசுமை நினைவுகள் கட்டுரையில் முப்ப து ஆண்டுகளாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பணிபுரிந்த ஒரு இலக் கிய வாதியின் ம்னப் பிரதிபலிப்பாக, "ஆத்மாவின் உயிர்ப்பு ஒலிக ளைச் செவி மடுக்காத ஒரு சமுதாயத்தில் இருந்து எ ப் படி மகா பரிசுத்தமான விடுதலை பிறக்கும் என்பது எனக்குப் புரியவில்லை என்று நாவேந்தன் குறிப்பிட்டு ஈழத்து இலக்கியவாதிகளின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
"ஈழத்தில்தான் இந்த நிலை என்பதல்ல; தமிழகத்திலும் இது தான் நிலை" என்கிருர் வல்லிக்கண்ணன் தமிழகக் கடிதத்தில்.
ஆக மொத்தத்தில் தமிழ் இலக்கிய உலகம் கவர்ச்சியின் விரசத் தின் நிலைக்களஞக மாற்றமடையாமல் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. . . . . . .
இந்த நிலை மாறவேண்டுமாயின் எ முத்தா ளர் கள் இயக்க பேதமின்றி ஒன்றுபட வேண்டும் என்பதைச் சுட்டி க் காட் ட விரும்புகின்றேன். '
கணபதி கணேசன்
፳8

புயலும் புதுமையும்
அன்பு முகையதின்
எங்கள் வாழ்வில் இனிய வசந்தம் வந்து ஒருநாள் வறுமை ஒட எழுந்து வீசும் என்று நாங்கள் வசந்தக் காற்றின் வரவை மிகவும் ஆவலாய் பார்த்து அமர்ந் திருந்தோம், வசந்தக் காற்று வரவே இல்லை!
வருடக் கணக்காய் வருந்தி நாங்கள் உழைத்த எமது உடமை யெல்லாம் கோரக் காற்று கொண்டு சென்றது. எல்லாம் இழந்து இழக்க எதுவும் இல்லா தோராய் இன்று நாங்கள் கூதல் காற்றில் குந்திக் கொண்டு வானப் பந்தலில் வாழு கின்ருேம்:
பச்சைக் குழந்தை பசியால் மிகவும் கத்திக் கத்திக் களைத்துப் போனது. அந்தக் குழந்தை அழுகை அடக்க எங்கள் கையில் எதுவும் இல்லை!
பத்து நாளாய் பசியால் நாமும் செத்துச் செத்து சீரழி கின்ருேம். பக்கத்து வீட்டு பரிதா உம்மா, சாய்ந்த மருது சாயிஷ் லெவ்வை, கல்முனை வாழும் கந்த சாமி, அடுத்து உள்ள அப்பு காமி எம்மைப் போன்றே எல்லாம் இழந்து உள்ளார் என்று ஒருவர் சொன்னர்.
அடித்த புயலில் அழிந்து போனுேம் என்று சிலபேர் ஏங்கி வந்தனர். வண்ணக் கார்களில் வந்த அவர்கள் எம்மைப் பார்த்து இரங்கி நின்றனர். இன்னும் சிலபேர் எமக்கு அளிக்க கொள்ளை உணவு கொண்டு வந்தனர். வண்டி வண்டியாய் வந்த உணவை கண்டு மக்கள் களித்து நின்றனர். கொள்ளை அடித்தலை குடும்பத் தொழிலாய்ச் செய்யும் சிலபேர் திரண்டும் வந்தனர்,

Page 17
வெற்றுக் கையுடன் வீடு வந்தோம், பசி வயிற்றேடு படுத்துக் கிடந்தோம், சின்னக் குழந்தைகள் சிணுங்கத் தொடங்கின.
எட்டுச் "சிறி' என்முன் நின்றது எட்டிப் பார்த்தேன்; இரண்டு பெண்கள் சீனத்து பொம்மையாய் சிரித்து மகிழ்ந்து எந்தக் கவலையும் இல்லா வாறு அழகிய க்ாரில் அமர்ந் திருந்தனர்.
அந்தப் பெண்கள் அணிந்த ஆடையில் பூசிய நல்ல புதிய நறு மணம் என்னை வந்து தழுவிச் சென்றது. கையில் அந்தக் கன்னியர் இருவர் அன்று பூத்த அழகிய ருேசா ஒன்றை வைத்து உயர்த்திப் பிடித்து மணந்து மணந்து மகிழ்ந் திருந்தனர்.
பாணுக் காகவும் பருப்புக் காகவும் வீதியில் நாங்கள் வியர்வை யோடு அலைவதைப் பார்த்து அந்தப் பெண்கள் மலரின் புதிய மணத்தை நுகர்ந்தனர்.
பசியால் நாங்கள் பாதையில் அலைவதை பார்த்து அவர்கள் படமும் பிடித்தனர். எங்க்ளைக் காண இறங்கவும் இல்லை! எங்களுக் காக இரங்கவும் இல்லை. வண்ணக் காரில் வந்த வாறே மலரை மணந்து மறைந்து சென்றனர்.
கோரய் புயலின் கொடும்ை யெல்லாம் நெஞ்சை விட்டு நீங்கப் பார்த்தும் இன்னும் அந்த இரண்டு பெண்கள் நெஞ்சை விட்டு நீங்கவே இல்லை!
கல்லூரியொன்றில் பாடசாலை மூடும் நேரம், வழக்கப்படி மாணவர்கள் வகுப்புக்களில் எழுந்து நின்று தேவாரம் பாடுகிருர் கள் - வெளியே ஒடிவிட வேண்டும் என்ற அவசரம், அவர்களது
குரலில் பரபரப்பு.
*தோடுடைய செவியன் விடையேறி' மாணவர்கள் தங்கள் பாணியில் பின்வருமாறு ராகமிழுத்துப் பாடிக் கொண்டு கல்லூரி வாசலைக் கடந்து வெளியேறுகிருரிகள்.
*தோடுடைய செவியன் அவன் யாருடைய பொடியன்? காடு
டைய சுடலை அது யாருடைய படலை?"
80
வெளியேறி - வந்த

கிறு க் கன்
gamawa W
*ராஜா?
கிறுக்கன் இறந்துவிட்டா ஞம்! இதுதான் அன்று "பிளெக் வூட்" தோட்டத்தில் ஒரு புது மைச் செய்தியாக எல்லோர் வாயிலும் புகுந்து வந்துகொண் டிருந்தது.
" அவன் மரணச் செய்தியை அந் த த் தேயிலைத் தோட்ட வாசிகள் ஒவ்வொருவரும் தங்க ளுக்குத் தெரிந்த வரையில் விமர்சனம் செய்து கொண்டிருந் தார்கள். ஏனென்ருல் "கிறுக் கன்" என்று பெயர் சூட்டி அழைக்கப்பட்டு வந்த அவன் அந் த த் தோட்டத்தில் ஒரு விசித்திர கதாபாத்திரம். ஒரு சிலருக்கு இந்தச் செய்தி ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகை நியூஸ். தங்களுக்குத் தெரிந்தவர்களிட மெல்லாம் இதைப்பற்றிக் காதும் மூக்கும் வைத்து சுவாரஸ்யமா கக் கதைத்துக் கொண்டு வந் தார்கள். வேறு சிலர் இவன் மரணம் தாங்கள் முன்பே எதிர் பார்த்த ஒன்று என்று கூறி அதன் மூலம் தங் களை ஒரு தீர்க்கதரிசி" யாகப் பறைசாற்
றிக் கொண்டனர். எஞ்சியோ ருக்கோ இது எந்தவித உணர்ச் சிப் பிரதிபலிப்புகளையும் ஏற்ப
டுத்த முடியாத ஒரு சாதாரண
செய்தியாக இருந்தது.
ஆணுல் எனக்கோ அவன் மரணச் செய்தி அவ்வளவு எளி தாக ஜீரணிக்கக் கூடிய ஒன்ரு கவோ அல்லது சுவையாகக் கதைக்கக்கிடைத்த பரபரப்பான செய்தியாகவோ தோன்றவில்லை. அவன் மரணத்துக்குப் பின்னணி
யில் ஆயிரம் அர்த் தங்க ள் தொனிப்பது போன்ற (Uj பிரமை. நா ன் மட்டுமல்ல,
எங்கள் வீட்டில் ஒவ்வொருவரும் எங்கள் வீட்டில்தான் ஏதோ மரணம் நடந்துவிட்டது போன்ற உணர்ச்சிப்பிடியில் சிக்கியிருந்த னர். எல்லேர்ருக்கும் கிறுக்கஞ கப்பட்ட அவனில் நாங்கள் கண்டுணர்ந்த, இனந்தெரியாத பாசவுணர்வு எங்கள் எண்ணங் களை அலைக்கழித்துக் கொண்டி ருந்தது. அவன் செய்கைகளும், பேச்சுக்களும் எங்கள் மனத் திரையை விட்டு அகல மறுத் தன
வாடிக்கை
o LD AD j5 ğ5 g5I líb @Tい5@・・・・・・・・・
என வாட்டிடும் 22 li...”
பாட்டைப் பாதியில் நிறுத்தி விட்டு அந்தப் பாட்டின் அடுத்த வரிகளை வி சில டி த் தான். சாரத்தை ஒரு கையால் தூக் கிப் பிடித்துக் கொண்டு ஒடுகி முன். "ஹே. ஹே. கிறுக்கா. கிறுக்கோய். ஊய். என்றெல் லாம் பலவாறு கூவிக்கொண்டு அவன் பின்ஞல் ஒரு சிறுவர் கூட்டம். அவர்களுள் சிலர் இவனைக் கண்டவுடன் உடையை
யும் மறந்து தங்கள் லயத்தில்
இதற்: வந்த 瓷 போல் ர்வாணமாகவும், ன்னுஞ் சிலர் இடுப்புக்குக் கீழே நழுவிக்
οι

Page 18
கொண்டிருக்கும் தங்கல் காற் சட்டைகளைத் தூக்கித் துரக்கி
விட்டபடியும் குதித்துக் குதித்து மிகவும் சுவாரஸ்யமான ஒரு செயலாக அதில் லயித்து அவன் பின்னல் ஒடுகின்றனர்.
அவன் உண்மையிலேயே ஒரு கிறுக்களு. ? இல்லை என்கி றது என் மனம் இந்த உலகத் தின் நெளிவு சுளிவுகளில் சிறைப் படாத, போட்டி, என்னும் பாதங்களின் நிழல்கூட தன்மீது படியாத ஒரு உண்மை யான மனிதன். உருவத்தால் வளர்ந்தும், மனதால் வளர்ச்சி பெருத ஒரு குழந்தை. அவ னுக்கு இந்த உலகத்தில் அதிக மாகத் தெரிந்தது ஒன்றேயொன் றுதான், பசி, தோற்றத்தில்
முடியாத அவனின் வயது இப் போது இருபதைத் தாண்டிக் கொண்டிருந்தது. ஆணுல் இன் னும் தோட்டத்தில் பெயர் பதிந்து வேலை செய்யவில்லை. இதனல் "தண்டச் சோற்றுக் காரன்", "தாங்கள் முற்பிறவி
யில் செய்த பாவத்தின் பரிசு",
என்று தன் குடும்பத்தாராலும், "கிறுக்கன்" என்று தோட்டத்து மக்களாலும் திட்டப்பட்டும் கிண்டல் செய்யப்பட்டும், அவன் மட்டும் இவற்றைப்பற்றியெல் லாம் சிறிதும் கவலைப்படாமல்
சதா நேரமும் எங்கு உணவு
கிடைக்கும் என்ற ஒரே ஆவ லோடு தி ரிந்து கொண்டிருந் தான் - Х
வழக்கமாக எண் ணை யே கண்டிராத தலைமயிர் என்ருவது ஒருநாள் எங்களது நச்சரிப்புத் தாளமுடியாமல் முகத்தில் வழி யும்வரை தலையில் எண்ணெய் வைத்து வகிடு எடுத்து வாரிக் கொண்டு வருவான். அவன் மேலுதடு ந ன் ரு க உயர்ந்து மேல்முரசின் காவியேறிய முன் வரிசைப் பற்கள் நாலைந்து வெளி
பொருமை
யில் காட்சியளித்துக் கொண்டி ருக்கும். விளம்பரங்களில் காட்சி யளிக்கும் போலியோ நோய் பிடித்த குழந்ன்தயின் உடம்பைப் போல் வெளியில் துருத் தி க் கொண்டிருக்கும் எலும்புகளுடன் காட்சியளிக்கும் அவன் உடலின் இடுப்புக்கு மேற்பட்ட பகுதி எட்போதும், வெய்யிலுக்கும் மழைக்கும் தன்னை அர்ப்பணித் துக்கொண்டிருக்கும். இலேசாக அரும்பிய மீசையுடன் g5 T60. யில் ஒன்றிரண்டு 'மயிர்கள் மட் டும் முனைத்திருக்க. அவன் விசித் திரத் தோற்றத்துடன் காட்சி யளித்துக் கொண்டிருப்பான்.
இவனின் இந்தத் தோற்ற மும் சில அசாதாரண செய்கை களுமே இவனுக்குக் "கிறுக்கன்" என்று பெயர் வரக் காரணமாக அமைந்தன. எங்கள் வீட்டிலும் கூட எல்லோரும் அவனை அப்ப 4த்தான் அழைக்க வேண்டும் என்ற எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல், ஆனல் வேறு எப் படியும் கூப்பிட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுமல் "கிறுக் கன்" என்றே கூப்பிடுவோம்.
அவனுக்கு எங்கள் குடும்பத் தின் மீது ஒரு இனந்தெரியாத பாசம், அதுவும் முக்கியமாக என்மீதும் எ ன் அம்மாமீதும் அலாதியான பிரியம். அவன் குடும்பத்தார் மீது காட்டமுடி யாத அல்லது காட்ட விரும் பாத பாசவுணர்ச்சியை எங்களி டம் காட்டுவான்.
காலை எட்டு மணிக்கெல் லாம் மடிந்த கீழுதடை மேல் முரசின் முன்வரிசைப் பற்கள் கவ்விநிற்க, அந்தப் பற்களுக் கும் உதட்டுக்கும் இடைப்பட்ட சந்தினூடாக சுருதி பிரளாத இசை என்றெல்லாம் கூறமுடி யாத வண்ணம், ஒரு வி சி ல் ஓசை அவன் வரவுக்குக் கட்டி யம் கூறிநிற்க. எங்கள் வீட்டி
83

னுள் நுழைவான். அப்படி வரும் வேளைகளில் எங்களை அழைத்து விட்டு நுழைய வேண்டுமென்ருே அல்லது எங்க்ள் உத்தரவு கேட்ட பின் உள்ளிட வேண்டுமென்ருே என்ருவது அவன் நினைத்ததாக எனக்கு ஞாபகமில்லை.
இடுப்புக்கு மே ல் உயர்ந் திருக் கும் சாரக்கட்டோடு, கைகள் இரண்டையும் பின்புறம் கட்டியவண்ணம் விசிலோசை யுடன் தன்னிச்சையாக நுழைவான்.
உள்
*கி று க் கா சாப்பிட்யா?" அம் மா அவனிடம் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.
*gFrrull 94. Ci lub prr.* gFrli பிட்டதாக அவன் பதிலளித் தாலும் அவன் கண்கள் எங்கள் வீட்டு சமையல் பாத்திரங்களை யும் சாப்பிட்டுக் கழு வர மல் வைத்திருக்கும் கோப்கைகளையும் துளாவி ஆராயும்
அம்மாவின் இந்தக் கேள்வி யும் அவனின் பதிலும் ஒரு ஒப் புதலுக்காக நாளாந்தம் கேட்டுக் கொள்ளப்படுபவை. அ வ ன சாப்பிட்டு வந்திருந்தாலும் சாப்பிடாவிட்டாலும் அவனுக் குரிய சாப்பாடு எப்போதும் அம்மாவால் ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும்.
"சரிபோய் வால எல ஒன்ணு வெட்டிக்கிட்டு வா அம் மா இதைச் சொல் லி முடிக்கு முன்பே,
*எல. இருக்கும்மா." என்று தறிக் கொண்டே முதல்நாள் இரவு ஒளித்து வைத்துவிட்டுச் சென்ற இலையை எங்காவது
கொண்டு வருவான். இலையில் உணவுகள் பரிமாறப்படும் அதே வேகத்தில் உ ண்டு முடிப்பது அவனுக்கு மட்டுமே கைவந்த
போன்றுதான் இருக்கும்.
ஒரு கலை எத்தனை முறை பரி மாறப் பட்டாலும் நாங்களாக அவ்வளவுதான் என்று கூறும் வரையில் இலையுடன் அமர்ந்தி ருப்பான். அவனுடைய வீட்டில் தன்முகச் சாப்பிட்டுவிட்டு வந்தி ருந்தாலும் சாப்பிடாவிட்டா லும் சாப்பாட்டில் அவன் காட் இம் ஆவலும் வேகமும் இதே இவ் வளவுக்கும் அவன் உடம்பின் தோற்றமோ எதிர்மாருகத்தான் இருக்கும்.
சாப் பிட் டு முடிந்ததும் அம்மா ஏதாவது வேலை சொல் வாள் என எதிர்பார்த்திருப் பான். அம்மா எதுவும் சொல்லா விட்டால் கைகள் இரண்டை யும் பின்புறம் கட்டியவாறு அவ னுக்கே உரிய் விசிலோசையுடன்
வீட்டைச் சுற்றி வருவான். இல்
லாவிட்டால் ஏதாவது gCl சினிமாப்பாட்டை தான்நினைத்த மெட்டில் பாடிக்கொண்டிருப் பான். அவன் பாடசாலையின் பக்கம் தலைவைத்தும் படுத்
தில்லை. அவனைப் uਯੋ போது ஒரு சில நேரங்களில் ஒரு குழந்தையைப் போலவும், வேறு சில நேரங்களில் (5 வேதாந்தியைப் போ ல வு ம் காட்சியளித்துக் கொண்டிருப்
6.
எங்கள் வீட்டு முக் கி ய வைபவங்களின் போது அவன் ஒரு கதாநாயகனுக இருப்பான். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவன் பம்பரம்போல் சுழன்று யார் என்ன வேலை சொன்ன
லும் செய்து கொண்டிருப்பான்
அவன் தாய் எங்கள் வீட் டிற்கு வந்திருக்கும் வேளைகளி ல ல் லாம். "நீங்களாச்சும் சொல்லி அவனைத் திருத்துங் கம்மா. இன்னம் செக்ரோல்ல பேரு பதியல. இவெனுக்கு எலய பயலுங்கள்ளாம் மாசம்

Page 19
நூறு இருநூறுன்னு சம்பாதிக் கிmங்க . .
வ மட் டு ம் தின்னிட்டு ஊ ர கத்திக்கினு வர்ருன்.. இவ்வளவு பெரிய ஆம்பிளேய சும்மா வச்சி திங்கக் குடுக்க நா எங்க போவேன்." என்று அவனைப்பற்றி அடுக்கடுக் காக குற்றச்சாட்டுகளைச் சுமத் துவாள்.
இதுபோன்று அவ ன் மீது அவன் த ரா யா ர் குற்றங்கள் சுமத்தப்படும் வேளைகளிலெல் லாம் அனேகமாக அவ னு ம் அந்த இடத்தில்தான் நின்று கொண்டிருப்பான். ஆளுல் இந் த க் குற்றச்சாட்டுகளெல்லாம் யாரைப் பற்றிய்ோ கூறப்படு வன போன்ற ஒரு முகபாவனை யுடன் தனக்கே உரித்தான சுபாவத்தோடு கைகளைப் பின் ஞல் கட்டிய வண்ணம் விசிலடித் துக் கொண்டிருப்பான்.
அவன் தாய் பொறுமை இழந்து. "பாருங்கம்மா, இவ்வ ளவு சொல்றேனே. கொஞ்ச மாச்சும் கேக்ருனு பாருங்களே. சரியான அல்ச்சாட்டியம் புடிச் செவம்மா.. 滤
மேலும் அவன் தாய் நேரடி யாக அவனைப் பேசினுல் முகத் தில் வெறுப்பின் சாயம் படர. "நீ போ, நா அம்மா வீட்வயே இருக்கப்போறேன்" என தில ளித்துவிட்டு ஒரு விசில் சத்தத் துடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவான்.
, རྩི ཆ་
ஒருநாள் எங்கள் வீட்டிற்கு அவன் வந்தபோது என்றுமில் லாதவாறு அவன் முகத்தில் ஒரு சோ க க் களை தென்பட்டது. அவன் வரவைக் கட்டியம் கூறும் வழக்கமான வி சில் சத்தமும்
இல்லை.
* கிறுக்கா. , ! ஏண்டா ஒரு மாதிரி இருக்கிற. ?? நான் தான் அவனைக் கேட்டேன்.
"எங்க வீ ட் ல எல்லாரும் ஈந்தியாவுக்கு போருங்களா. நானும் போவனுமா. .
அவன் குரல் வெறுப்பின் சிதறல் க ளா க வெளிவந்து தெறிக்கிறது,
அவன் குடும்பம் இந்தியா வுக்குப் பயணமாவது எங்களுக்கு ஒரளவு தெரிந்ததுதான். என்ரு லும் இதுபற்றி அவன் காட்டிய கவலையும், நெகிழ்ச்சியும் ஆச் சரியத்தை அளித்தது.
"எல்லாரும் போன நீயும் போகத்தானே வேணும். உங்க் வீட்ல நீ மூத்த ஆம்பிளைப் பிள்ளையில்லையா..."
அம்மா அவனுக்குப் புத்தி மதி கூறுவதுபோல் கண் டி க் கிருள்.
நோ போவமாட்டேம்மா. அவு ங் க வேணும்னு ஈந்தியா வுக்கு போவட்டும் நா ஒங்க ளோடவே இருக்கே.
ஒருவித படபடப்புடன் இப் படி அவன் பேசியது வெகுளித் தனமாக இருந்தாலும் வெளிப் பட்ட ஒவ்வொரு சொற்களுலும் ஏதோ ஒரு உறுதியின் சாயல் தொனித்தது.
அவன் எங்களுடன் தங்கு வதில் எங்களுக்கு எந்த வி த ஆட்சேபணையும் இல்லாவிட்டா லும் அவன், அவன் குடும்பத் திற்கு மூத்த ஆண்பிள்ளையாக இருந்தது எங்களால் எந்தவித சுய முடிவையும் எடுக்கவிடாமல் தடுத்தது.
"சரி போற நேரம் அதெப்
பத்திப் பாக்கலாம். på Gunr வந்து சாப்பிடு"
அப்போதைக்கு அவனை
நாங்கள் சமாளிக்கிருேம்.
*

Aar-AM 'Va. A-ra 4-ra M. Arra Arra
சந்தா விபரம்
geðvGá ska;" 15 — 00 (LDA)* alt-ul-J
தனிப்பிரதி 11 00 ܘܚܗ இந்தியா, மலேசியா 20 -00
(தபாற் செலவு உட்பட
AALLL LLLL SLLLLLAALLLLLAALLLLLALASLLALLLLLAALLLLLAASAALLLLLALAL
நாட்களின் ந க ர் ச் சி யி ல் அ வ ர் க ள் இந்தியாவுக்குப் போகும் வேலைகள் துரித கதி யில் நடைபெற்றுக் கொண்டிருந் தது. அடுத்த மாதத்தில் அவர் கள் தலைமன்னரில் கப்பல் ஏற வேண்டியிருந்தது.
இப்பொழுதெல்லாம் அவன் அடியோடு மாறிப் போயிருந் தான். இயற்கையான சுபாவம் மாறி அநேகமான நேரங்களில் தனிமையில் சிந்தித்துக் கொண் டிருந்தான். அந்த நேரங்களில் பின்னல் கட்டிய கைகளுடன் வானத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருப்பான். அவன் சிந் தனையில் எப்படியான எண்ணங் கள் ஒடிக்கொண்டிருந்தது என் பதைத் தீர்மானிக்க முடியாம லிருந்தது.
ஒரிரு தினங்கள் அவ ன் எங்கள் வீட்டுப் பக்கமே வர
i rr ti? Går
வில்லை. விசாரித்துப் பார்த்த தில் அவனுக்குக் கடுமையான ஜாரம் கண்டு படுக்கையில் கிடப் பதாகக் கேள்விப்பட்டேன்.
இறுதியாக நேற்றுக் காலை நானும் அம்மாவுங் அவனைச் சென்று பார்த்தபோது அவனல் பேச முடியவில்லை. எங்களைக் கண்டதும் கண்களில் கண்ணிர் ஊற்ருகப் பெருகி கன்னங்கள் வழியே வழிந்து கொண்டிருந் கொண்டிருந்தது. அவன் வீட் கவலேயீனத்துக்காக அவர்களைப் பேசிவிட்டு அவனை நான்  ைவத் தி ய சா லை யில் சேர்த்துவிட்டு வந்தேன். ஆளுல் நேற்று இர வே அவனுடை \ாறுகி இரவாக மாறிவிடுமென்று
1, 1 க்கள் கனவிலும் நினைக்க வில்லை.
"என்னங்கம்மா அ வ ங் க
இந்தியாவுக்குப் பயணமா க இ ன் ன ரெண்டு மூனு நாளு தானே பாக்கி. அதுக்குள்ள இவெ இப்பிடி போயிருவான்னு யாரு நெனச்சது."
அடுத்த அறையில் அவனு டைய தூரத்து உறவினர் ஒரு வர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருப்பது என் காதுகளில் விழுகிறது.
"இந்தியாவுக்குப் போ க மாட்டேன் என அவன் சொன்
னதை மெய்ப்பித்து விட்டானே"
நான் மெளனமாக எழு ந் து வீட்டின் வெளியே செல்கிறேன், சற்றுத் தொலைவில் பஸ்போகும். பாதை என் கண்களில் படுகி றது. அந்தப் பாதை வழியே அவன் தன்னிச்சையாகப் பாடிக் கொண்டு ஒடுவது என் மனக் கண்ணில் மீண்டும் மீண்டும்
தோன்றிக் கொண்டிருக்கிறது. "கிறுக்கன்" என் மனதில் ஒரு காவியமாக் மலர்கிறன் 峰、
嗣廖

Page 20
கம்போடியா பற்றி அமெரிக்க ஏடுகள
சென்ற மாதம் நிகழ்ந்த கம்போடிய சம்பவங்களைத் தொடர்ந்து இங்கு பத்திரிகையாளரும் சஞ்சிகைகளும் பழைய பொல் - பொட் ஆட்சியில் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட அட்டுழியங்கள் பற்றி திடுக்கிடும் செய்திகளை பிரசுரித்துள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூன்று ஆண்டுகனில் முதன் முறையாக கம்போடியாவுக்குள் பிரவேசிக்க பழை ய அரசாங்கம் அனுமதித்த இரண்டு பத்திரிகையாளர்களாக வாஷிங்டன் போஸ்ட்” நிருபர் எலிசபத் பெக்கரும், செயிண்ட்றுயி "போஸ்ட் டிஸ்பட்ச் நிருபர் நிச்சர்ட்டட்மனும் அந்நாட்டின் இரத்தம் படிந்த அண்மைக் கால நிகழ்ச்சிகளை விபரமாக விவரித்துள்ளனர். பழைய ஆட்சி சீன வின் ‘கலாசார புரட்சி பாணியில் மக்களை அவஸ்தைப் படுத்திய தாக அவர்கள் எழுதியுள்ளனர்.
நகர வாழ்வுடன் தொடர்புடையவர்களும், வர்த்தக, அறிவு, விஞ்ஞானத் துறைகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் துடைத்தெறியப் பட்டனர் அல்லது கூட்டமாக நாட்டுப்புறங்களுக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டனர் என்றும் "நியூயார்க் டைம்ஸ்" கூறுகிறது.
ஐ. நா. உரிகைக் க மி ஷ னின் சிறுபான்மையினர் பாதுகாப்பு பிறிவினர் திரட்டியுள்ள தகவல்களின்படி, கம்போடியாவில் இன சங்க்ாரம் நீடந்ததென்றும், நாடே ஒரு சிறைச்சாலையாக மாற்றப் பட்டதென்றும் கூறப்படுகிறது.
1978 செப்டம்பரில் ஜெனிவாவின் 17 நாடுகளைச் சேர்ந்த நிபு ணர்கள் முன்னிலையில் கனட்ா, நார்வே, பிரிட்டன், அமெரிக்க நாடுகள் கம்போடியாவில் ஆட்சியினர் கட்டவிழ்த்து விட்ட அட்டு யங்கள் பற்றிய விபரங்களும் பத்திரிகைகளில் இடம் பெற்றன,
"சமூக மாற்றங்களை நிறைவேற்ற கம்போடிய ஆட்சியினர் மூர்க்கத்தனமான முறைகளை கடைபிடித்தாக ‘நியூஸ்வீக்" எழுதுகிறது.
அமெரிக்க புலனய்வுத் துறையின் மதிப்பீட்டில் படி மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் குறைந்த பட்சம் 20 லட்சம் மக்க்ள் கொலை செய்யப்பட்டனர். பிரபலம் வாய்ந்த "டைம்" வார ஏடு வெளியிட்டுள்ள செய்தி இத் தொகையை ஊர்ஜிதம் செய்கிறது.
சொந்த மக்கள் மீது அட்டுழியங்களை நடத்திய பொல்-பொட் நிர்வாகம் அண்  ைட நாடுகளான தாய்லாந்து மக்களையும் விட்டு வைக்கவில்லை என்று ரீடர்ஸ் டைஜஸ்ட் சஞ்சிகை எழுதுகிறது. தாய்லாந்தின் எல்லையோர கிராமங்களுக்குள் கம்போடிய ராணுவத் தினர் காலத்துக்குக் காலம் பிரவேசித்து குழந்தைகள் முதல் கிழவர் கள் வரை அனைவரையும் கொலை செய்து வந்தனர் என் து அது மேலும் கூறுகிறது. -
*இவ்வாருண படுபாதகமான குற்றங்க்ள் எமது கால த் தி ல் செய்யப்படுகிறது என்து நம்ப முடியாத அளவுக்கு அவை அத்துமீறி நடைபெற்றுள்ளன” என்று ரீடர் டைஜஸ்ட் எழுதுகிறது.

கருப்பம் தரிக்கிறது!
பாண்டியூரன்
தோளில் மலையைச் சுமக்கவல்ல ஏழைமன ஆழிக் கடலில் அமுக்கம் கனக்கிறது!
வெறிவாய்க் குகந்த குழம்பு நாம், கோழிக் கறியென்ரு எண்ணம்? கவலை சுமந்த வறியோர் நாம் குரு வழியாலும் வெந்து, தறிப்பட்ட வீரை மரமானுேம்; உங்கள் விறகா நாம்.? சேமச் சுடுகாட்டில் தாறும் பிணமான உம்மை எரித்து, கிருமி அணுகாமற் செய்யும் அரண் ஆம்!
ஆழிக் கடலில் அமுக்கம் கனப்பதனல். சூழும் முகில்வான் முகட்டில் சுரக்கிறது!
கோழியும் குஞ்சுகளு மாக,
குருணல் ம6 நாளெல்லாந் தேடும் நலிந்த பிறவிகள் நாம். முட்டைப் பொரியல் முழுக்கோழி உப்பவியல், கட்டுடலைக் காக்கக் கறியும், விருத்துமாய் தாழிதம் செய்து தின்னும் தம்பியையா எங்களது ஊருக்கு மோனை நீ என்று உயர்த்திவைத்தால். குரு வளி, உன் சுழைவார்ந்த தீம்பலாவோ?
சூழும் முகில் வான் முகட்டில் சுரப்பதனல் ஆழி விளிம்பில் அலைவாய் கொதிக்கிறது!
ஆட்சிப் பொறுபர், அதிகாரி யாக்கி மாட்சிமையும் தந்து மகுடமும் சூட்டி நிவாரண வேலைகளை நேர்மையுடன் செய்ய சிவனென் றுனைப் பொறுப்பாய் செய்தார்;
pirrorrr! நெய்க்குடம் வீழ்ந்து நிலத்தில் பெருக்கோட நாய்க்குலம் கூடிநின்று நக்குவது போல், எங்கள் வாய் வயிற்றைத் தட்டி, வழித்துப் புசிக்கின்றீர்! பால் மா, பருப்பு, கருவாடு, பச்சரிசி. தோல் மூடத் தந்த துணிகளை, குறையிட்டுச் சாராய மாக்கி,

Page 21
சனத்துக்குத் தீ வைத்தீர்! காணுதா மாராயம்.? காணும்! கடைசியில், தம்படியும் வீட்டழிவு தாரோம் என அதட்டி, ஐம்பதும் நூறும். அழிமதிக் காசுகளில் வாங்கி, குடும்பம் வளர்க்கும் வடிவென்னே! ஏங்குமனம் வீசும் எழுந்து
ஆழி விளிம்பு கொதிக்க, அயல் தென்னை தாழும் தலையும் தழுவும்வில் ஆகிறது.
பாரதம் ஒன்றில் பதினெட்டு அக்குரோணி போராடி மாளப் புறம்மூட்டி வைத்தவனும் கண்ணன் கடமையது காத்தல்; அவனருளால், மண்ணில் நிலைத்த மனிதரும் வாழ்ந்தாரா? புண்ணியம் வைகுந்த போகத்தில் இல்லையில்லை, மண்ணில் நிறைந்த மனதுள் நிகழ்வதோய்! வாழ்விலே குழு வளிகண்ட நாணல் நாம் தாழ்ந்து, குனிந்து, சவண்டு கிடந்தாலும் சூரு வளித்துயரைத் தோளிற் சும்ப்பவர் நாம் சூரு வளியைச் சுகித்து முடிந்தவுந்தன் சீவியத்தில் குழு வளிவீசத்தூரமில்லை பாவிகளைத் தின்னும் பசி.
பின்தங்கியிருந்த மக்களின்
இலக்கியப் பெரும் பாய்ச்சல்
பி. தாதுரோவ்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் கிர்கீசிய மொழிக்கு வடிவம்.
உருவாக்கப் பெற்றது. என்னும், கிர்கீசிய நாவலாசிரியராக சிங்கிஸ் அய்த்மதோவ், இன்று உலகப் புகழ்பெற்றுள்ளார். ஒரு தலைமுறைக் குள் உலகப் புகழ் பெறும் பாக்கியத்தை, சோ வி ய த் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள பிற மொழிகளும் பெற்றுள்ளன. இதற்குக்
காரணம் என்ன?
வரலாறு சார்ந்த புரட்சிகரக் கருப்பொருள் என்பது,
மற்றும் உரை நடையில் தலையாய அம்சமாக விளங்குகிறது. கஜாக் மொழியில், இதிகாச நாவலாக இது உருப் பெற்றுள்ளது.
R

இன்றைய பிரபல கஜாக் நாவலாசிரியரான தூர்பெய்சோவ் (1924 - ல் பிறந்தவர்), "இரத்தமும் வேர்வையும்" என்ற நாவலைப் பத்தாண்டுகளில் மூன்று பாகங்களாக எழுதியுள்ளார். கஜாக் மக்க ளின் கடந்த காலம் மற்றும் எதிர் காலம் பற்றிய தமது கண்ணுேட் டத்தை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார்
ஆயுதமேந்திய கரங்களுடன், சோவியத் ஆட்சிக்கும் சோஷலிசத் திற்கும் ஆதரவாக கஜாக் மக்கள் ஏன் வாக்களித்தனர்? காரணம், பெரும்பாலான கஜாக்'மக்கள், ஏழைகளாக, எழுத்தறிவற்றவர்க ளாக, அநாதைகளாக இருந்தனர். 1917 அக்டோபரில் நடைபெற்ற புரட்சிதான் அவர்களது வாழ்வை அடியோடு மாற்றி அமைத்தது. இர்த்தமும் வேர்வையும்" என்ற நூல் இதைச் சித்திரிக்கிறது. சிறந்த கலைப்படைப்பான இந்நூலுக்கு 1974-ல் அரசாங்கப் பரிசு வழங்கப் பெற்றது.
இன்றைய கஜாக் இலக்கியம், நம் காலத் தி ன் மிக முக்கிய பிரச்னைகளைக் கூர்ம்ையாக வெளிப்படுத்துகிறது. எந்திர விவசாயத் தின் காரணமாக, கஜாக் மக்களின் பாதிக்கு மேற்ப்ட்டோர், நகரங் களில் குடியேறினர்; ஆலைத் தொழிலாளராகவும், வீடு கட்டும் தொழிலாளராகவும் பணியாற்றுகின்றனர். இதன் விளைவாக, மக்க ளின் மனப்பாங்கில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டன. நகர வாழ்க் கைக்கு ஏற்ப, சிலர் மிக எளிதாகத் தம்மை மாற்றிக் கொண்டனர்; மற்றவர்களால் அவ்வாறு செய்ய இயலவில்லை.
இந்தப் பிரச்னையைக் கருப்பொருளாகக் கொண்டு, நாற்பது வயது எழுத் தா ளர்களான கே. இசாகோவ், எஸ். சன்பயேவ், எஸ். முரத் பெகோவ் முதலியோர் இலக்கியம் படைத்துள்ளனர்
இன்று கிர்கீசிய இலக்கியத்தின் தஜலயாய எழுத்தாளர், சிங்கின் அய்த்மதோவ் தான்; (இவருக்கு வயது 50); ஆண்டுகளுக்கு முன்பு பிராணி இயலாளராகவும், ஒரு சில கதைகளின் ஆசிரியரா கவும் விளங்கிய அய்த்மதோவ், 50 வயதுக்குள் உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியராக மாறுவார் என்று எவரும் கற்பனை செய்திருக்க முடியாது. 30 லட்சம் மக்கட் தொகையைக் கொண்ட கிர்கீசியா விலிருந்து உலகு அனைத்துக்கும் இவரது புகழ் பரவியுள்ளது.
கிர்கீஸ் மக்களின் வரலாற்றையும் நாட்டு லக்கியங்களையும் நன்கு பயின்றுள்ள அய்த்மதோவ், ஆழமான தேசிய எழுத்தாளரர்க விளங்குகிறர். இதுவரை கிர்கீசிய மக்க%ளப் பற்றி எழுதி வந்த இவர், சிறிய வட்பகுதி மக்களைப் புற்றி சோவிய்த் ஆரரகிழக்கில் வாழும் "நிவக்குகள்" என்னும் தேசிய் இனத்தைப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். இது சிறுவனின் உயிரைக்காப்பதாகச் சித்திரிக்கிறது. ஒப்பற்ற தனித் தன்மையும் உனனத மனிதாபிமானமும் நிறைந்த இப்படைப்பு, நம் காலத்தின் மாபெரும் கலைஞர் சிங்கிஸ் அய்த்ம தோவ் என்பதைத் தெளிவாக்குகிறது.
9

Page 22
Asså
தமிழன்
சாந்தன்
குமாரசா மிக்கு நல்ல பசி.
மத்தியானம், சாப்பாட்டு நேரத்தில் கோட்டைக்கு ஒரு அலுவலாகப் போனவர், மினைக் கெட்டுப் போனர். நேரே கந் தோருக்கு வந்தும் இரண்டரை மணியாகி விட்டது. இனி, வழக் கம் போல கணேஷ் கஃபேக்குஅங்கேதான் அ வருக்கு அக் கெளன்ட் - போய்ச் சாப்பிட்டு விட்டுவருவது முடியாத காரியம்.
இந்த நேரத்திலும் இங்கே கன்ரீனில் சோறு கிடைக்குந் தாள் ஆ  ைல், குமாரசாமி சைவம்3 w
கண்ணுடி அலுமாரிக்குள் பார்த்தார், வடை இல்லை. எள்ளுத்தலகுளி" யையுங் காண வில்லை. மற்றதெல்லாம் நம்ப முடியாது; மச்சமாயிருக்கும்.
தம்பி, மரக்கறியாக ஒண்டு
மில்லிையா?
கன்ரீன் பெடியன் கட்லட்
தட்டைத் துர க் கி நீட்டினன். இது மரக்கறிதான் மாத்தயா’ குமாரசாமி தயங்கினர்.
பயப்பட வேணும், இது சைவம்." என்ருன், அரை குறைத் தீமிழில்.
தேத்தண்ணிக் கிளா  ைஸ இடதுகைக்கு மாற்றிக்கொண்டு. ஒரு கட்லட்டை- எடுத்தார்.
நல்லாயிருந்தால் இன்னுென்று எடுக்கலாம் என்ற எண்ணம்,
திரும்பியபோது வந்தது.
ஹேலோ கும். இங்கே வாருமேன். 畿
“ஹலோ... " - Saipant
இருந்த மேசையடிக்குப் போய், காலால் கதிரையை மெ ல் ல அரக்கிக் கொண்டு உட்கார்ந் தார்.
இந்தக் கன்ரீன் வர வர மோசம்" சில்வா சொன்னர்.
*.இங்க பாரும் ரீ எண்டு சொல் வித் தந்தான். சீனி இல்லை. ஒரே சாயம், படு கைச்சல்*
உறிஞ்சிய தேநீரை மிடறு விழுங்கியபடியே குமாரசாமி "ம்ம்.. என்ருர், தலையை மேலுங் கீழுமாட்டிப் புன்னகைத் தார்.
அந்தத் தர்மசங்கடப் புன் ன கை  ைய மாறவிடாமலே, கட்லட்டை வாயருகிற் கொண்டு போய், முறுகி மொறுமொறுத்த அதன் தோலை எச்சரிக்கையாய் துணிப் பற்கனாற் கடித் துப் பிய்த்தார்.
ஜன்னல் பக்கத்து மேசை யில் என்னவோ, g ○ r <器可 வாரம். s
டனிபாஸ் கத்திக் கொண் டிருநதான
0.

حمام خمام حمام حمام حصمام خصمای سیمهای سرامح
இலங்கை இந்திய தமிழ்க் கவிஞர் கள் 20 பேர்களின் 40 கவிதை கள் சிங்களத்தில் மொழிபெயர்க் கப்பட்டு அச்சேறிவிட்டது. இம் மாத இறுதிக்குள் புத் த கம்
வெளிவரக்கூடும். சிங்களக் கவிஞர் பராக்கிரம கொடித் துவக்கினுல் மொழிபெயர்க்கப்
பட்டு "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் - சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!" என்ற பாரதியின் அடிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு "இந்து சஹ லங்கா" என்ற 魯濫。 வெளி வரும் இத் தொகுப்பில் எம். ஏ. நுஃமானின் "தாத்தாமாரும் பேரர்களும்’ கவிதைத் தொகுதி முழுமையாக அடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. சிங்களப் பத்திரிகை களில் மேற்படி தாரகமந்திரத்து டன் விளம்பரங்கள் வெளிவந்து கொண்டுள்ளன.
MLM-reamWMINIAMM-1WMMM-MMMM-AMWMAs
அங்கே பாரும்." சில்வா, பிறகும்.
.பைப்பிலை தண்ணி இல்லையாம். சாப்பிட்டவன்கள் கைகழுவத் தண்ணியில்லையெண்
என்ருர்
டால் சத்தம் போடுவான்கள் தானே" m
குமாரசாமி திரும் பி ப்
பார்த்தார். டனிபாஸ் மாத்திர மில்லை, அந்த மேசையிலிருந்த மற்றவர்களும் சேர்ந்து இரைந்து கொண்டிருந்தார்கள். இலையான் கள் மாதிரி, இந்தச் சத்தமும் அரியண்டமாயிருந்தது,
கட்லட்டில் முழுதாய் ஒரு
கடி கடிக்கப்போன போதுதான் அது மணத்தது. வெடுக்கு சரி யான மீன் வுெடில், குமாரசாமி,
வாசலடிக்கு
துள்ளியெழுத்து 3 象,念 ஒடிஞர். வயிற்றைப் புரட்டிக்
d
கொண்டு வந்தது. துப்பினர். கையிற் கிடந்ததை எ றி யப் போனவர், எறியவில்லை.
கைலேஞ்சியால் வா  ைய அழுத்தித்துடைத்த போதே; வந்த ஆத்திரத்தையும் துடைத் துக் கொண்டார். திரும் பி க் கணக்கு மேசையடிக்குப் போன போது,
"என்ன என்ன, கும்?. . என்று சில்வா கேட்டது அவர் காதில் விழவில்லை. இந்த அமளி கள் ஜன் ன ல டி மேசையைச் சுற்றியிருந்தவர்களை இங்கே திரும்பச் செய்ததையும் அவர் கவனிக்கவில்லை. >
"இந்தா பார், தம்பி."- பொடியனிடம் கடித் த கட் லட்டை நீட்டினர். அமைதியா கத் கேட்டார்.
"மரக்கறியெண்டு @ର &f (t ଜfir ஞய் இல்லையா?* سمعیبر
"மரக்கறிதான் மாத்தயா? அவன் அதை வாங்காமலே பிடிவாதமாகச் சொன்னன்.
இதற்குள் சில்வா எழுந்து வந்துவிட்டார்.
‘என்ன பிரச்சினை, கும்?" "இது என்ன பாரும்? வாங் கி முகர்ந்துவிட்டு, வலு சாதாரணமாக, "மாலு" என்ருர் சில்வா
"...ஏன், என்ன அதில்? சில்வாவுக்கு உடனே யே நினைவு வந்தது:
"ஓ! கும், நீர் ஒரு வெஜிற் றேரியன்- நான் அதை மறந்தே GBuft:(36or68iro
"இது மீன்தான் பெடியா. மீன்." என்று சில்வா சொன்ன பிறகுதான் கன்ரீன் பெடியன் கையை நீட்டி அதைக் கும்மிட மிருந்து வாங்கினன், விரல்

Page 23
க்ளால் அழுத்திப் பிரித்தான். அதைப் பார்க்கவே அருவருத் தது, கும்ாரசாமிக்கு,
"பார்த்தியா? ..." என்ற போது அவன் பதில் சொல்லா மல் மு னு மு னு த் தா ன். வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது,
"கணக்கு எழுதியாச்சா?" குமாரசாமி கேட்டார். அவன் தலையாட்டினுன் ,
"ஐம்பது சதம் வீண் காசு.
அந்தக் க ண க்  ைக வெட்டி விடேன்"
"ஒமோம். மாத்தயாவில்
பிழை இல்லை, வெட்டிவிடு. என்ருர், சில்வாவும்.
"தேத்தண்ணியோட சமா ளிக்க வேண்டியதுதான்" என்று நினைத்தபடி இன்னுெருதரம் சொண் டெ ல் லாவற்றையும் இறுக்கித் துடைத்தார், குமார -- sFrruń. 举
சபாருங்க மாத்தயா, வெட் டிறன்" - பெடியன் பேனையைத் திறந்தபோது, பின்னலிருந்து டனியாஸின் கு ர ல் பலத்துக் கேட்டது: m
*வேண்டாம், வேண்டாம்"
இவர்கள் திரும்பிப் பார்த்த போது அவ ன் சொன்னன்:
வெட்டத் தேவையில்லை"
வெட் ட
இவனுக்கென்ன வந்தது, இதில்? பைத்தியமா?
"ஏன்?" - குமாரசாமிக்கு
போன கோபமெல்லாம் ஒன்றுக் குப் பத்தாகத் திரும்பி வந்த மாதிரி. W
அவன் எச்சிற்  ைக யை வெறும் வட்டிலிற் தட்டிவிட் எழும்பி வந்தான்.
கும் மின் கேள்வியைக் கவனி யாமலே பெடியனுக்குச் சொன்
ஞன்: "அது இந்த ஆளுடைய
《&
, ιμπ ή ... ...
போஞரன்.
பிழை, வாங் கி ன போதே பார்த்து வாங்கியிருக்க வேணும்" இந்த பாஸ் பயல் நல்லாய்க் குடித்துவிட்டுச் சாப்பிட வந்தி ருக்க வேண்டும் என்று குமார சாமிக்குப் பட்டது. -
"நீ உன்னுடைய வேலையைப் உனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை . .
"என்ன ஒய் சொல்லுறிர்? யாழ்ப்பாணத்திலையிருந்து வந்து, இ ங் க சண்டித்தனமா விடுகி
நீங்கள்?"
கும்மின் இடது கன்னத்தில்,
அவனது எச்சிற்கை அடையா ளம் பதிந்தது.
- 2 عب.
காலையில் வந்தவுடன் இந் தக் கதையைக் கேள்விப்பட்ட தும் ரமணன் திடுக்கிட்டான். இது நேற்று நடந்திருக்கிறது. நேற்று அவன் லீவு.
*இவ்வளவும் மட்டுந்தானு, நடந்தது?"
"இன்னும் வேணும்?"
"இவ்வளவு மட் டுந் தா னெண்டா, அவனுக்கேன் அவ் வளவு கோபம்?">
"கொஞ்ச நாளைக்கு முந்தி அவன் பத்துரூபா கடன் கேட்க இவர் இல்லையெண்டு சொல்லி இருக்கிருர்"
"இதைப்பற்றி ஒருதருக்கும் றிப்போட் பண்ணேல்லையா??
*ம் ஹ" ம். ரமணனுக்கு வந்தது. •ܝܟܝ
நே ரே குமாரசாமியிடம்
என்ன நடக்க
ஆத்திரமாக
"ஏன் அண்ணை, ஏன் றிப் போட் பண்ணுமல் விட்டீங்கள்?" குமாரசாமி ஒரு நிமிஷம் பேசாமலிருந்துவிட்டுப் பிறகு
அவனையே திருப்பிக் கேட்டார்.

"அது வீண் பிரச்சினையளைக் கொண்டுவராதா?" -
"என்ன பிரச்சினையள்? றிப்போட் பண்ணுறதாலை இந்த விஷயம் ஒரு இனவாத விவ கா ர மா கத் திரும்பிக் கொண்டால் என்ன செய்யிறது? ஆனபடியாலை இவ்வளவோட வி டு கிற து புத்திசாலித்தனம் எண்டு சொல்லுருங்கள்.
*ஆர்?" "எங்கட ஸெக்ஷன் ஆக்கள்
தான்."
:kkkākāk;
மல்லிகை இதழ்கள் ஒவ்வொன்றை யும் வருங்காலக் தேவை கருதி மிகப் பாதுகாப்பாக வைத் திருங்கள். இகழ்க ளேத் தவற விட்டு வி ட் டு ப் பின்னர் எம்முடன் தொடர்பு கொண்டு அதைப் பெற்றுக் தொகுப்பில் இணைக்கலாம் என்ற எ ண் ண த் தி ல் தற்காலிகமாக அசட்டையாக இருந்துவிடாதீர்கள். பின்னர் உங்களது தொகுப்பிற்கு அந்த இதழ் கிடைக்காமலே போய்விடலாம். இப்படியாகத்தான் பல பழைய இதழ் க3ளக் கேட்டு எழுதுகின்றனர். பழைய இதழ்கள் கிடைக்கலாம். என்பது உத்த ரவாதமல்ல. குறிப்பாக உயர் கல்வி மாணவர்களும் தரமான சுவைஞர்களும் மாதா மாதம் தங்களு
டைய 'கெளேப் பத்திரப் படுத்திக் கொள்ளவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் இ த ழ் க ளே இரவல்
கொடுக்க வேண்டாம்.
\ மல்லிகை இதழ்களின் பெருமை உடனடியாகப் புரியாமல் இருக்கலாம். காலம் போகப் போகத்தான் அதன் பெறுமதி விளங்கும். எனவே சேமித்து
வைக்கப் பாருங்கள்.
-ஆசிரியர்
1ākkkakkak;
இலக்கியச்.
சாதகபலனின் படிக்கு யில்லாத கோளாறுகளைத் தரக்
'மறைமுகமான மிரட்டல்" கூடவே வந்து நின்ற சந்திரன் கசந்து சிரித்தான்
*. இதிலை இனித் திரும் பிறதுக்கு என்ன இருக்கு?"
ரமணன் ஒரு பெருமூச்சுக் குப் பிறகு சொன்னன். ஏன் எல்லாத்தையும் இந் த இனக்
கண்ணுேட்டத்திலைதான் பார்க்,
கிருங்கள்? எங்கட ஸெக்ஷனைச் சேர்ந்த ஒருதனுக்கு - எங்கடதொழிலைச் செய்யிற ஒருத
னுக்கு - ஒரு பிறத்தியான் ஆநி
யாயமாகக் கை நீட்டி விட் டானே எண் டு ஏன் பாக்க முடியுதில்லை?. . அண்ணை இது
எப்பிடித் திரும்பினுலும் திரும் பட்டும். அது க் குப் பயந்து இதெல்லாத்தையும் பொறுத்துக் கொண்டிருக்க வேணுமா?"
"அதுதானே?" சந்திரனும்.
பென்சிலை உருட்டியபடியே பேசாமலிருந்தார், குமாரசாமி. யோசிக்கிருர் போலும்.
3 ༧.ནཱ་ ரமணன் தனது இடத்திற்
குத் திரும்பிய கொஞ்ச நேரத் தில் அவர் அவனிடம் வந்தார்.
எ ன் ரு ன்,
நீ சொன்னது சரிதான், தம்பி." ஒரு பெருமூச்சுக்குப் பிறகு ஆறுதலாகச் சொன்னர்
*. ஆன, எனக்கு b இப்ப காலம் அவ்வளவு சரியில்லை. இந்த வியாழன் மாற்றம் என்ர தேவை
கூடிய காலமெண்டு சொல்லி யிருக்கிறன்கள்- வீண் சண்டை, வம்பு, வழக்கு, கோடு, கச்சேரி எண்டு அலைய இடமிருக்காம். ஏன் வீண் தொல்லைகளை?-
எழுந்து, தானும் ஒரு அடி போடலாமா எ ன் றிருந்த து ரமணனுக்கு *

Page 24
இலங்கை ஒரு கலாசாரப் ாஜலவனம் என ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்
சேர் "ஐவர்ஜெனிங்ஸ் இலங்
கைப் ப்ல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் - கூறியதும் பெரும் சர்ச்சை கிளம்பியமை சிலருக்கு நினைவிருக்கலாம்.
யாழ்ப்பாணம் ஒரு கலா சாரப் பாலைவனம் என அவரை அடியொற்றிக் கூறி சொல்லும்பு களுக்கு இலக்காக தான் விரும் பாவிடினும், பொழுதுபோக்குத்
துறையைப் பொறுத்தவரை யாழ்ப்பாணம் போர் அடிக்கி றது” என்ருல் மிகையாகாது.
இதனுல்தானே என்னவோ இங் குள்ள படமாளிகைகள் நிரம்பி வழிகின்றன. ஆன ல் இங்கு திரையிடப்படும் பட ங் க ள் பெரும்பாலும் சலிப்பைபே தரு கின்றன. இத்தகைய சூழ்நிலை அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ரூமேனிய திரைப் பட விழாவையிட்டு நாம் ரூமே னிய தூதரகத்திற்கும், ரீகல் தியேட்டருக்கும் முதலில் நன்றி கூறவேண்டும்.
மொத்தம் ஆறு படங்கள் திரையிடப்பட்டன; சாகாவரம் பெற்றவர்கள், நடனமாடும் ஒநாய், பேராசை, வல்லூறு
கள் தூய்மையான கரங்கள்
f4
ரூமேனியத் திரைப்பட விழா
ஜனரஞ்சகம் என்றல் மட்டீரகம் அல்ல
ஏ. ஜே. கனகரட்ணு
பொன்னசை. இவற்றில் இரண்டு படங்கள் (சாகாவரம் பெற்ற வர்கள், வல்லூறுகள்) 17-ம் நூற்ருண்டைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்றுக் காவியங் கள். நடன மா டும் ஒநாய் நாடோடிக் கதையைப் பின்னி குழந்தைகளுக்காக ஆக்கப்பட்ட சை - நடனப் படம். பேரா சையும், தூய்மையானகரங்களும் 1945 - இல் நிலவிய அரசியல்
பொருளாதார வரலாற்றுப் பின்னணியைக் கரள மா க க் கொண்டவை. பொன்னுசை, உருவகப் பாணியில் அமைந்த இரு குறும் படங்கள்; சென்ற நூற்ருண்டின் பிற்பகுதியைக்
களமாகக் கொண்டிருந்த அவை
பொன்னசையைக் கருப் பொரு ளாக உள்ளடக்கியிருந்தன.
பொதுவுடைமைக் குழா மைச் சேர்ந்த நாடு என்பதைத் தவிர, ரூமேனியாவைப் பற்றி எம் மி ற் பெரும்பாலோர்க்கு ஒன்றுமே தெரியாது. அவர்க ளில் ஒருவனகத்தான் நானும் இப்படங்களைப் பார்க்கச் சென் றேன். அடிமனதிலே ஒரு சிறு அச்சம்: கலை மெருகற்ற வெறும் பிரச்சாரமாக இவை அமையக் கூடும் என்ற எண்ணம் சற்று உறுத்தத்தான் செய்தது. எமது அறியாமையே இத் த கை ே
 

வெற்றுணர்வுகளுக்கு வழிகோலி இருந்தது.
மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என உள்ளத்தை உந் தும் உன்னத கலைப்படைப்புக் களாக இப்படங்கள் விளங்காத போதிலும், அவை கலை நுட்பத் தோடும் மெருகோடும் அமைந்த ஜனரஞ்சகப் படைப்புக்கள் என் பதில் கருத்து வேறுபாடுகளுக் கிட மி ல் லை. இதனுலேதான், எதிர்பார்ப்புக்கு மாருக, ஏராள மான மக்கள் இப்படங்களைப் பார்க்கத் திரண்டனர்.
முதல் படத்தின் (சாகா வரம் பெற்ற1 கள்) மு த நீற் காட்சியே எம்மை ஈர்த்தது.
நாட்டை ஒன்றுடாடுத்த உறுதி பூண்டுள்ள சிறு குழுவின் உறுப் பினர் ஒருவர் இழைத்த நம்பிக் கைத் துரோகத்திற்கு மரண
தண்டனை வழங்கப்படும் காட் படு பயங்கரமாக,
சியே அது: மூர்க்கத்தனமாக அவன் மலைச் சரிவிலே உருட்டப்படுகின்ருன்.
அவனத்துரத்தி வருபவர்கள் தப்பறியும் கதை.
குதிரைகளில் அமர்ந்தவாறு ஈவி ரக்கமற்று துன்புறுத்தி அவனை சுட்டுக் கொல்கின்றனர். இந் தக் காட்சி மனத்தை விட்டு இன்னும் அகலவேயில்லை. ஆனல் நன்கு படம்பிடிக்கப்பட்டதென் பதைத் தவிர இதைப்பற்றி பிரம்மாதமாகச் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.
ν
"நடனமாடும் ஒநாய்" மிக அழகாகப் படம்பிடிக்கப்பட்ட திரைப்படம். இசையாலும் நட னத்தாலும் குழந்தைகளை மட்டு மல்ல வளர்ந்தோரையும் அது கவர்கின்றது. அந்த வகையில் அது பூனை வெற்றியென்றே சொல்லலாம்.
பேராசை" யில் காணப் படும் பத்திர வார்ப்பு உருவகக் கதைகளின் எளிமைப்படுத்தப் u 4. t.-- ) nt ši AS) a Gau rfrtlü
முறையை நினைவூட்டியது. அதீத நாடகத் (“மெலோடிராமா") த ன்  ைம யும் அதில் சற்றுக் கோலம்காட்டியது. இருப்பி னும், மொட்டையான பிரச் சாரம் தொனிக்காதது வரவேற் கத்தக்கதே.
"வல்லூறுகள்" "நாடோடி மன்னனை" நினைவூட்டியதாக ஒரு நண்பர் குறிப்பிட்டார். மிகப் பொருத்தமான குறிப்பா
4 க்தான் எனக்குப் படுகின்றது
அத்தகைய பாணியில் அமைந்த படம்தான் அது அ த ஞ ல் தா வேறு என்னவோ இது திரை யிடப்பட்டபோது, கொட்டகை நிரம்பி வழிந்தது. ஒரு காட்சி மட்டும்தான் நினைவில் நிற்கின் றது; போர்க்களத்தை நோக்கி இரவில் மக்கள் செல்கின்றனர், கைகளிலே தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம், கண்கவர் காட்சி யாக இது அமைந்தது:
"தூய்மையான கரங்கள்" அரசியலுடன் பின் ன ப் பட்ட 'சாகாவரம் பெற்றவர்" களின் நெறியாளரே இப்படத்தையும் நெறிப்படுத்தி யுள்ளார். விறுவிறுப்பும், அடி சூடு போன்ற அம்சங்களும் விரவியிருந்தமையால் அரசியல்" விழுங்கப்பட்டு, புறச் சம்பவங் களிலேய்ே அழுத்தம் விழுந்தது:
"பொன்னசை" இறுக்கமான குறும்படங்கள்: முதல் படத்தின் ஆரம்பக் காட்சி சாகாவரம் பெற்றவர்" களின் முதற் காட்சி யைப் போன்று அச்ச உணர்வை எழுப்பி எம்மை உலுக்கியது: ஆனல் இரு குறும் படங்களி லும் இழையோடியிருந்த பெண் குரோத உணர்வு, இகழ்ச்சி, அச்சம் கலந்த பரிகாசம், ஏள னம் மனதைக் குழப்பின. அக் காலகட்டத்திற்கு இயல்பான நிகழ்ச்சிகள், உணர்வுகள் என "சம்ாதானம்" கூற முனைவது

Page 25
fVervY~vufMovY~rafVav/Y~rafMwWVY~tafMAMr-~-- AMVY*
தெரு மாடுகள்
வெற்றிலை யடுக்கிய தட்டம் போல விருந்தை யெங்கும் பூஞ்செடி நின்றது. மதிற்கரை யோரம்
மலர்ந்த செடிகளும் எதிர்க் கரை யோரம்
உலர்ந்த குடிகளும். மாரி மழையின் மணித்துளி வீழ்ந்த கிழுவை மரமும் கிழிந்த இலைகளும், ஒல்லி மாடு ஒடும் போது வில்லு வில்லாய் வளைந்தது எலும்பு.
சபா. ஜெயராசா
தப்பித்தல்" முயற்சியாகவே எனக்குப் படுகின்றது.
மொத்தத்தில் நோக்கும் போது, இப்படங்கள் எவையுமே
ஆழமான வாழ்க்கைத் தரிசனத்
தைத் த ரத் தவறிவிட்டன என்று கொள்ளலாம். பொழுது போக்குச் சாதனத்திடமிருந்து கனமான தரிசனத்தை எதிர் பார்க்கலாமா என வினவுபவர் களுக்கு ஒர் உதாரணத்தை மட் டும் சுட்ட விரும்புகின்றேன்: நகைச்சுவை மன்னன் சார்லி சப்ளினின் சிறந்த படைப்புக் கள் பொழுது போக்கையும் சமூக விமர்சனத்தையும், நகைச்
நெறியாள்கை.
பட்ட செக் படங்கள்
திற்கும் ,
தையும் இணைக்கும் விதம் நினைவு
கூரத்தக்கது. ஏனைய உயர் கலை களைப் போன்று திரைப்படக் கலையும் வாழ்க்கையின் இரகசி யங்களை அம் பல ப் படுத் த வேண்டும். ጶ
இப்படங்களைப் பற்றி இவ் வாறு கூறும் அதே மூச்சில், இன்னென்றையும் கூறிவைக்க விரும்புகிறேன். சினிமா உத்தி, நடிப்பு, வர்ணம், கதைக்கோப்பு, படப்பிடிப்பு ஆகிய அம்சங்களைப் பொறுத்த வரை “இவை நேர்த்தியானவை என்பதில் ஐயமில்லை. ஆனல் வெறும் உத்தியை மட்டும்தான
நாம் தரிசிக்க விரும்புகிருேம்?
இங்கு திரையிடப்பட்ட ரூமேனியப் படங்கள் எந்த அள விற்கு சமகால ரூ மே ணிய திரைப்படக் கலையை பிரதிநிதித் துவப் படுத்துகின்றன என்பது எனக்குத் தெரியாது. ஆனல் இவற்றையும் அண்மை யி ல் யாழ்ப்பாணத்தில் திரையிடப் ( "வாழ்க் கைக்கு வேண்டிய இரண்டு", அடிபட்டுச் செல்லல்’ (எட் றிப்ட்)), போலி ஷ் படம் ( "கேனல் வலோஜலெஸ்கி") ஆகியவற்றை மனதில்தொகுத்து நிறுத்தும் போது சினிமாத் துறையைப் பொறுத்தவரை மார்க்சிய வாதம் இ ன் னு ம் கிழக்கு ஐரோப்பிய பொதுவு டமை நாடுகளின் குருதியோடும், தசையோடும் ஒன்றவில்லை என ஐயப்பட வேண்டியுள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்ருகத் தோன்றினும், கசப்பான உண் மையே. கலைக்கும் மார்க்சியத் எட்டாம் பொருத்த மில்லையே: இவ்வுண்மைக்குச் சான்முக ஏராளமான படைப் புக்கள் எமக்குக் கிடைத்துள்
சுவையையும் மனிதாபிமானத். எனவே *
40

சு. சமுத்திரம்
حیرمسہ حبرمجہ حربہ حبرہم حبرسہ حیرسہ حسبرح مسیرسہ
தமிழின் புதிய
நம்பிக்கைகள்
செ. யோகநாதன்
படைப்பிலக்கியத் துறை யைப் பொறுத்தவரையில் förtsår அதிகமாகவே குறிப்பிடவேண்டி யுள்ளது. ஒரு_துவந்த யுத்தம்ே தமிழகத்தில் சிருட்டியாளரிளி டையே நிகழ்ந்து கொண்டிருப்பு தனை நான் அவதானித்தேன்; ஒரே விதமான கருத்துடைய வர்களே அவிழ்த்துவிட் நெல் லிக்காய் மூட்டையாகச் சிதறிப் போயிருக்கின்ருர்கள் இது கவலையூட்டுகின்ற செய்தியே.
சென்ற பத்தாண்டுக் காலத்
தில் படைப்பில்க்கியத் துறை
47
ஆசாபாசங்கள்,
יש שét שC
யிலே குறிப்பிட்டுப் பேர்சொல் லக் கூடியதாகப் பலர் தோன்றி யிருக்கின்ருர்கள். சிறந்த நூல் களும் வெளியாகியுள்ளன. நக ரப்புற இலக்கியங்களின் செயற் கத் தன்மைக்கு மாரு கட் சிராமத்து வாழ்வுட் அவர்களின் போராட்டங் கன் வாழ்க்கை முறை கள் ஆகியன ப்ற்றி வெகு இயல்பா கவும் அ வ தா னி ப் புடனும் படைப்பிலக்கியங்கள் வெளியா கியுள்ளன. பிரபல பதிப்பகங் கள் தாமாகவே முன்வந்து பிர சுரத்திற்கு விஷயங்கள்'தரும் படி பொன்னீலன், பா. செயப் பிரகாசம், تا ۴۰ قه )Up 3 وزی( pr th வண்ணதாசன், வண்ணநிலவன்,
அம்பை, ஜெயந்தன், டி. செல்வ
ராஜ் ஆகிய எழுத்தர்ளர்களைக் கேட்குமளவிற்கு” ]B &( 6מן פו மாற்றமடைந்துள்ளது:
எதையுமே மிகக் கூர்மை யாக அவ்தானித்து a.6it autia, அதன் இயல்புத்தன்மை tort Gigi
அற்புதமான சித்திரமாக்கித் தி ரு வ தி ல் "வண்ணநிலவன் திறமைசாலி. உதிரியாக வெளி
யாகி இன்னமும் திலுருவம் பெருத அவரின் சிறுகதைகள், எஸ்தர் தொகுதி '45-6 pri தில்" என்ற நாவல் ஆகியன எனது கருத்தின் ஆதாரங்கள்
சமூகத்தின் பல்வேறு பகுதியி ஆலும் இடர்ப்படுகின்ற மக்களே அவரின் நாயகர்கள். வெறு
மனே சம்பவக் கோர்வைகளுக் காகத் தேடி sla u m Loai, இதை உறுத்துகின்ற விதத் தில் தன் படைப்புக்கி3ள ளின் வாழ்வினது அவலங்கள், வசீகரங்களிலிருந்தே தேர்ந்து எடுத்துக் கூறுகின்ற கொள்கையிேை இவரது
முத்துவாழ்வில் நெறிய கொண்டு இன்று தமிழ் படைப் பிலக்கியத்திலே வனத்துக்குரி til allrfrg; வளர்ந்திருக்கின்ருர், "வண்ணநிலவன்?

Page 26
திருச்செந்தூர்ப் புக் க க் கடற்கரையோரமாக வாழ்கிற மீனவர்களின் வாழ்வினை வெகு இயல்பாகச் சித்தரித்து அவர் எழுதிய நாவல் "கடல்புரத்தில்" இந்த நாவல் 'இலக்கியச் சிந் தனே' யின் பரிசினைப் பெற்றது. இன்றைய இலக்கிய வளர்ச்சிப் போக்கினை அறிய விரும்புகின்ற வர்கள் தவ ரு து வாசித்துப் பார்க்க வேண்டும். ஆசிரியரி டமே பிரதி இல்லாத அளவிற்கு விற்பனையாகித் தீர்ந்துவிட்டது இந்த நூல் என்று கேள்விப் படுகையில் மிகவும் சந்தோஷ மாயிருந்தது. "எஸ்த" ருடைய சேதியும் இதுதான். இ  ைவ இரண்டும் இரண்டாம் பதிப்பாக வெளிவருகின்றன எ ன வும் அறிந்தேன்.
எந்தவிதமான போலியுணர் வுமில்லாத, வெகு இயல்பாக எழுதப்பட்ட நாவல் "கடல் புரத்தில்". கடல்புரத்தின் மீனவர் மக்கள்தான் இதன் நாயகர்கள். அவர் கள் ஒவ்வொருவரினது இயல்பும் எவ்விதமான மாற்ற முமின்றி சித்தரிக்கப்படுகிறது. அவர்களின் இருதயத்திலிருந்து வருகின்ற சொற்கள், சுருதி சுத்தம் பிசகாது ஒலிக்கின்றது: வெகு யதார்த்தமாக இயங்கும் அவர்களுக்கும் ங்களுக்கும் "வண்ணநிலவன்" என்ற அற்புத மான கலைஞனே இணைப்பாளன் என்பதனைத் தவிர வேறு செயற் கைத்தன்மைகளோ, அலங்கா ரங்களோ இந்த நாவலில் கடு களவு கூட இல்லையென்று நான். துணிந்து கூறுவேன். ஃபிலோமி, குரூஸ் மிக்கேல், செபஸ் தி யான், சாமிதாஸ். மரியம்மை, ரஞ்சி, வாத்தி ஆகிய பாத்தி ரங்களிற்கு நாங்கள் அறிமுக மாகின்ற போது, இவர்களை நாங்கள் இப்போதுதான் சந் தித்துவிட்டு வந்ததாகி உணர்வு மனதினுள் ஒரு அலையினைப்
னிலங்கையில்
போல எழுகின்றது. அது உண் மைதான். இதே சூழல், இதே நபர்களை எங்கள் யாழ்ப்பாணக் கடற்கரையிலே நாங்கள் சந்திக் கின்ருேம். இதே பாத்திரங்களை சான்டா பார்பரோ கடற்கரை யில் ஜேர்மனியர்களும் அன்ன செகெர்ஸ் மூலம் சந்திப்பார்கள். *சத் சமுத்ர" வாயிலாக தென் பூரீ குணசிங்கா மூலம் சிங்கள மக்கள் சந்திப் பார்கள். சுருங்கக் கூறின் கட லோரக் கிராமங்களைச் சித்தரிக் கின்ற உயர் கலைஞன் எவனுமே "வண்ணநிலவ" இனப் போலவே எங்களோடு அறிமுகமாவான்; எங்களுக்கு இலக்கியத்தினைத் தருவான். இவை உயர்வு நவிற் சியான கூற்றல்ல. மலட்டுத் தனமான இலக்கியப் பண்டிதர் கள் எவ்வளவுதான் விமர்சன அ ள வு கோ ல் களை எடுத்துக் கொண்டு புறப்பட்டாலும் இத் தகைய படைப்பாளிகளின் திற மைகளை அறிய முடியாத அன விற்கு இன்றைய வாசகன் அறி வுத் திறமை குறைந்தவஞயிருக் கவில்லை;
இ லக் கி யப் பரிசோதனை கள், புரட்சிகரப் படைப்புகள் என்ற முகமூடிக்ளோடு வருகிற அவியல் இலக்கியங்களிற்கிடை யில், இத்தகைய எழுத்துகளிற்கு ஆழமான விமர்சனங்கள் மிக அவசியமானவை என்பது வற். புறுத்தாமலே விளங்க வேண்டிய உண்மையாகும். அ தோடு "வண்ணநிலவன்" போன்ற படைப்பாளிகளின் 160 L-tity கள் புதிது புதிதாக வெளிவர வேண்டும். வண்ணநிலவன்", எளிமையான, அ ட க் கம் மிகுந்த, நட்புக்குரிய கலைஞன் என்பதில் இரண்டாவது கருத் திற்கு இடமில்லை, அவரிடம் புதிய தமிழிலக்கியம் மேலும் படைப்புகளை எதிர்பார்த்திருக் கின்றது;
48

"ஒரு ஜெருசலேம்" என்ற சிறுகதைத் தொகுதி வெளி யானபோது, இலக்கிய ஆர்வ லர்களிடையே மகிழ்ச்சி ததும் பிய எதிர்பார்ப்பு ஒன்று ஏற் பட்டது. "பிரபஞ்ச இயக்கக் தை தெளிவாகப் புரிந்து கொ டு, மக்களின் சமூக அமைப்பின் முரண்பட்ட போக்கைத் தன் கதைகளில் தெளிவாக விவரிக் கும் தன்மை பெற்றிருப்பதால்,
ச்ெயப்பிரகாசத்தின் கதைகள் மக்கள் இலக்கியங்களாக மிளிர் கின்றன" என்ற அறிமுகத்
தோடு நாங்கள் செயப்பிரகா சத்தின் கதைகளிற்குள் போகின் Oogh. "ஒரு ஜெருசலேம்", *காடு", "ஒரு கிராமத்து இராத் திரிகள்” ஆகியன செயப்பிரகா சத்தின் இதுவரையிலே வெளி யான தொகுதிகள். "காடு", "ஒரு கிராமத்தின் இராத்திரி கள்" ஆகிய இரு தொகுதிகளும் சென்ற ஆண்டில் இருமாதகால இடைவெளிகளிலே ତରu ଗf a in ,
னவை என்பதும் இங்கே குறிப்
பிடத்தக்க செய்தியாகும்.
செயப்பிரகாசத்தின் பலம் என்பது அவரின் பாத்திரங்கள், அவரின் கவிதைமயமான நடை என்பனதான். கிராமங்களிலே, கரிசல் மண்ணிலே வாழ்கின்ற ஏழை மக்களின் வகைமாதிரி யான மனிதர்கள்தான் இவரால் ந ம க்கு அறிமுகமாகின்றவர் கள். ஆணுல் இவர்கள் வெறு மனே வாய்புலம்பிச் செல்கின்ற வர்கள் அல்லர். இ வர்கள் வாழ்க்கையை மிக நம்பிக்கை யோடு எதிர்கொள்பவர்கள்; தங்களை வருத்துகின்ற சுமை களைத் தூக்கி எறிய விரும்பி முயல்கின்றவர்கள்; களாயினும் சிறு  ைபn கண்டு சீறுபவர்கள் சமுதாயப் புறக் கணிப்புகளை தி ரா கரித் து தாமும் மனிதர்களாக வாழ முனைபவர்கள் நிலவுடமைச்
சிறு வர்
சமுதாய அமைப்பின் மோச் மான தாக்குதல்களை நெஞ்சிலே தாங்கிக் கொண்டு தலைசாய்க் காதவர்கள்.
சோகமயமான ஒரு குழ்நிலை யிடையேயாயினும், நம்பிக்கை யினைத் தோற்றுவிக்கிற வித மாக எழுதுகின்ற த ன்  ைம கைவரப் பெற்றவர் செயப்பிர காசம். அதற்கு க் காரண முண்டு. ஏனெனில் பா. செயப் பிரகாசம் தத்துவத் தெளிவும், சரியான வாழ்க்கை நோக்கு முள்ள முற்போக்குக் கலைஞன்.
முற்போக்குக் கலைஞர்களைப் பற்றி ஒரு "பழி நீண்ட கால மாகவே சொல்லப்படுவதுண்டு. "அவர்கள் வெறுமனே கருத்துப் பிரசாரம் செய்வார்களே தவிர கலையழகு பற்றி அறியமாட் டார்கள்" என்ற அப் பழியினை முற்ருகவே நிராகரிக்க வைக் கி ன் ற எழுத்துக்கள் செயப் பிரகாசத்தினுடையவை. அவரு டைய படைப்புகளின் உருவம் உள்ளடக்கத்தினுலும், உள்ள டக்கம் உருவத்தினுலும் வலு வும் வனப்பும் பெற்று கல்த் திறன் மிகுந்து மிளிர்வதைக் காணுகின்ருேம். அவரது மூன்று தொகுதிகளையும் திரும் பத் திரும்ப வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தோற்றுவிப்பது இந் தச் சிறப்பியல்புகள்தான். க இலக்கியத் துறையினிலே சரி யான பாதையினைத் தேர்ந் தெடுத்திருக்கின்ற செயப்பிரகா சம், தன்னுடைய சமகாலத்து எழுத்தாளர்களையே வெகுவா கப் பாதித்திருககின்றர் 6 ன் பதை ஒரு முதிர்ச்சி பெற்ற வாசகன் ஒப்புக்கொள்ளவே Fuit an ir 6T, ஆடம்பரமோ, வீண் படாடோபமோ அற்ற கலை ஞ ணுகி ய செயப்பிரகா,
சத்தை இன்றைய எழுத்தாளர்
49

Page 27
gir Lu as a Gel sigilgil னுள்ள ஒரு முயற்சியாகும்.
பிரபலமான பத் திரிகை களில், சாதாரண மனிதர்களைப் பற்றியும், மேல்மட்ட மக்களின் கயமைகள் பற்றியும் எழுதி அண்மைக் காலத்தில் ÉGuču . Jr பரப்பினை ஏற்படுத்தியிருக்கிற வர் எழுத்தாளர் சு. சமுத்திரம் 1970-ல்" அவருடைய "குற்றம் பார்க்கில்" என்ற சிறுகதைத் தொகுதியும், சென்ற ஆண்டில் ஆபிஸ் (த்ர இனி" என்ற நாவ லும், இந்த ஆண்டிலே 'சோற் றுப்பட்டாளம்’ எ னற குறு நாவலும் வெளியாகியுள்ளன . இவருடைய கதை "இலக்கியச் சிந்தனை" யாலே 76-ம் ஆண்டிற் குள் வெளியான சிறுகதைகளில் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப் Eடுள்ளது. 'போதும் உங்க உபகாரம்" என்பது அக்கதை : எழுதத்தொடங்கிய காலத் திலிருந்தே த ன க் கென ஒரு நெறியினை வகுத்துக் கொண்டு எழுதி வருபவர் சு. சமுத்திரம். சதையுணர்வை அனுட்டும் கதை
2"எழுதும் எழுத்த2ே
ட்டேன்" என்ற நெ றி ப்
பாட்டினூடாகவே ஏழை எளிய வின் பிரச்சினைகளே மிக விதாபிமானத்தோடு அணுகி, அப்பிரச்சினைகளின் ܐܸܬܦ݂ ஆழித் தினைத் தொட்டுக்காட்டி அவற் றைத் தோலுரித்து எழுதிவரு
வர் சு. சமுத்திரம்"
சமுத்திரத்தின் வளர்ச்சியில் அவருடைய கவித சொல்லும் ரியே, தான்மிகவும் முக் gRIJDIT 6or இடத்தினைப் பெறு கிறது. மக்ளின் பழகு தமிழில் அவர் எழுதுகிருர், திருநெல் வேலித் தமிழின் வீறும், கம்பீ ரமும் அவரின் கத மாந்தரிட மிருந்து இயல்பாகவே எமக்கு கேட்கின்றன . எல்லாவற்றிற் கும் முல்க கதையிலே இழை போடுகின்ற இலசான நகைசி
0
ளைக் காண விழைந்து,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் தங்க அதன் பின்பும் தங்களைக காண முடி யாமல் போய்விட்டது குறித்து சற்று ஏமாற்றம்தான். இருப்பி
னும் "மக்கள் சகாப்தம் வாயி
லாக உங்களுடைய குர லை க் கேட்க முடிந்ததே. . gg குறித்து மகிழ்ச்சி.
உங்களுடைய வருகையின் போது சென்னையில் நீங்க ள் கலந்துகொண்ட கூட்டங்கள் பற்றியும், படங்களாகவும் செய் திகளாகவும் நிறைய இதழ்களில் வெளிவந்தன. உங்களுடைய அப்பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
பொன்மணி
சுவை, மனிதாபிமான நேயம் ஆகியவை எம்மைப் பெரிதும் கவர்கின்றன. தமிழிலக்கியப் படைப்பாளிகளில் கு. அழகிரி சாமியிடம் இத்தகைய இயல்பு
வெகு சிறப்பாகவே அமைந் திருந்தது. அவருக்குப் பிறகு சு. சமுத்திரத்தின் எழுத்துக் களிலேயே இந்தச் சிறப்பம்சம் கைவரப் பெற்றிருப்பதனைக் கா ன க் கூடியதாயுள்ளது. *போதும் உங்க உபகாரம்"
என்ற சிறுகதை என து @亞 கூற்றிற்குச் சிறந்த உதாரண மர்கும். கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளாகவே வெத ஆழமf ன நோக்கில் சு. சமுத்தி ரம் கதைகளினை எழுதி வரு இன்ற போதிலும் அவருடைய பார்வை, நடை ஆகியன கூர் மைப்பட்டு வருவதனை வெகு தெளிவாகவே காணக்கூடியதா யுள்ளது. இதை அவரே தனது தொகுதியின் முக வு ரை யில் பிரகடனம் செய்துள்ளார்.
(அடுத்த இதழில் முடியும்)

ஒரு அணுப் பிரளயம்
வெடித்தால்.
பளிரென்ற ஒரு பச் சை ஜுவாலையின் மின் வெட்டு. அதைத் தொடர்ந்து ஒரு வெடி யோசை, இருள் மூட்டம். ஒவ் வொன்றும் தீப்பறி எரிய ஆரம் பிக்கின்றன. தீப்பற்றிய ஆடை கள் தணலாக, சாம்பலாக,
மனித உடல்களிலிருந்து உரிகின்
றன. அவர்களின் கைகள், கால்கள், முகங்கள் எங்குமே தீ வேக்காட்டினுல் ஏற்பட்ட
கொப்பளங்கள். அவர்கள் கூக் குரல்களுடன் ஆண்களும் பெண் க ளு ம r க அங்குமிங்கும் ஓடி முட்டி மோதிக்கொள்ளுகின்ற னர் ஒரு புகலிடத்தைத் தேடி!
p6ã gy தஸ்ாப்தங்களுக்கு முன்னர் ஜப்பான் மீது அணு குண்டுவிழுந்து வெடித்த கோரக் காட்சியை நேரில் கான நேரிட் டவர்களில் ஒருவர் அக்கணத் தில் தாம் கண்ட காட்சியை இவ்வாறுதான் விவரிந்தார். 10,00 பேர் கொல்லப்படவும், குற்றுயிராக்கப்படவும் காரண மாக இருந்த அந்தச் சோக நாடகத்தின் ஒரு கணநேரக் காட்சி இது!
ஆணுல்
1945-ல் ஹிரோஷியாவல் போடப்பட்ட அணு குண்டினைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு நாசகார சக்தி வாய்ந்த அணு குண்டுகள் குவித்து வைக்கப் பட்டிருக்கும் இன்றைய கட்டத் தில், "ப்பூர் இதென்ன பெரிய
அரபு உக்லி
விஷயம்? 140,00 பேர் மான் டனர் என்ருல் அது பற்றி மார டித்து ஒப்பாரி வைக்க வேண் டுமா? இது ஒரு சமுத்திாத்தின் ஒரு சிறு துளிக்குக் கூடச் சமா னமாகுமா? அணுயுத்தம் ஒன்று வந்தால்தான் வந்துவிட்டுப் போகட்டுமே" என ப் பேசும் மனிதர்களும் இல்லாமலில்லை. "வாழுவதற்காகப் போராடும்" அன்ருடங்காய்ச்சிகள் ம லி ந் துள்ள இந்த உலகில் "போரா டுவதற்காகவே வாழும் இந்த அதிசயப் பிறவிகளும் இருக்கவே செய்கிருiர்கள்!
கடந்த 5, 80 ஆண்டுகளில் நடைபெற்ற 4,000 - க்கும் மேற்பட்ட யுத்தங்கள் ஏற்படுத் திய சேதத்தை ஒரு சில மணி நேரத்தில் செய்யவல்ல அழிவு கர ஆயுதங்கள் இன்றைய உல கின் ஆயுதப் பாசறைகளினுள் பதுங்கியுள்ளன! இ ன்  ைற ய
உலக நாகரிகத்தின் அத்திவா
ரம் முழுவதையுமே தகர்த்தெறி யக் கூடிய இந்த விஷ ஆயு தங்களைக் ைைகயில் வைத்துக் கொண்டு "ஒரு அணுயுத்தம் வந்து. அதில் மனித குலத்தின் அரைப் பங்கு அழிந்தொழித்
தாலும் கவலையில்லை - மிகுதி அரைப் பங்கு மி ஞ் சி ன ல் போதும்" என மாஓஸேதுங்
பாணியில் இ ன் று பேசுபவர் களைப் பார்க்கும் போது, இவர் கள் ஒரு முயலைப் பொரித்து வறுத்துத் தின்பதற்காக முழுக்
爵盛

Page 28
காட்டுக்குமே தீ  ைவ க் கத் தயங்காத "மஹா பண்டிதர்" களாகவே பலர் கண்ணுக்கும் படுகின்றனர்.
அநுமார் கை யி ல் குள் கொடுப்பது" போல இந்த "மஹா பண்டிதர்" களின் கையில் ஆயுதங்களைக் கொடுத்து தமது சுய இ லக் கு களை ளப்திக் கொள்ள முயலும் சில சக்தி களைப் பார் க் கும் போது, மொங்கோலியர்களின் துணை யுடன் முஸ்லீம்களைத் தொலைத் துக் கட்டுவதற்கு ஜெங் கி ஸ் கானைக் கூட "ஜோன்' என்று கொலுவேற்ற முனைந்த மத்தி
யகால "கிறிஸ்துவ பாதுகா வலர்" களின் ஞாபகந்தான் வருகின்றது.
இன்று ஒரு அணுயுத்தம்
வெடித்தால் அதன் விளைவுகள் எவ்வாருனதாயிருக்கும்?
இந்த விளைவுகளின் தன் மையை ஊகித்துக் கொள்ள கடைசியாக நடை பெற்ற இரண்டாவது உலக மஹாபுத் தத்தினுல் ஏற்பட்ட விளைவுகளை நினைவு கூர்வது துணைசெய்யும்
இரண்டாவது உலக யுத்தத் தில் 50 லட்சம் பேர் உயிரி ழந்தனர். 900 லட்சம் பேர் படு காயமுற்றனர். ஏறத்தாள 800 லட்சம் பேர் என்றென்றைக்கு s அங்கஹlனர்களாகினர். இவர்களிற் பலர் எய்துமுன்னரே மரணமாயினர், வேறு பலர் குடும்ப வாழ்வுக்கு லா யக் கற்றவர்களாயினர், ஹீரோஷிமாவிலும் நாகஸாக்கி யிலும் போடப்பட்ட அணு குண்டுத் தாக்குதலுக்கு இலக் கான ஆயிரக்கணக்கானேர் இன்று கூட கூன், குருடுகளாக, மனித வாழ்வுக்கு லாயக்கற்ற வர்களாக, "வாழ்ந்து வருகின் றனர்!
፵ኦ
Cup 5 Ga) up,
அன்றைய விளைவுகள் இல் வாறிருக்குமாயின், இன்று ஒரு அணுயுத்தம் உருவாகும் பட் சத்தில், நவீன அணுகுண்டுகள் வெளிவிடக் கூடிய நச்சுக் கதிர் களால் ஏற்படக்கூடிய விளைவு கள் எத்தகையதாக இருக்கும் என நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாயுள்ளது.
"ஒரு அணுப் பிரளயத்தின்
விளைவுகள் பற்றி அமெரிக்க ஹட்ஸன் நிலை ய இயக்குநர்
ஹேர்பட்கான் எழு தி யு ள்ள
நூலில் கூட, நேரவுள்ள இந் தப் பேராபத்தை ஒப்பு க் கொண்டுள்ளார்,
ஒரு அணு யுத் த த் தி ன் விளைவு கள் இவ்வாறுதான் இருக்குமெனத் தெரிந்துகொண் டும், ஒரு யுத்தம் மூளுவதற் குத் தூபம் போடுவது "கையில் விளக்கினைப் பிடித்துக்கொண்டு கிணற்றினுள் விழுவதற்குச்
FromT GOY Dnir artsnrgjith .
இதனுல்தான்- மனிதகுலத் தினது எதிர்கால நல னின் பேரி ல் சமாதானத்துக்கான போராட்டம் தீவிரப்படுதப்பட வேண்டும், அழிவு கர అతిgl ஆயுதங்களின் உற்பத்தி முற்ற கத் தடைசெய்யப்பட வேண் டும்; தற்போதுள்ள போரா யுதங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் முழுமையான ஆயுதப் பரிகரணம் எய்தப்பட வேண் டும்; , யுத்த வெறிப் பிரசாரி களின் முகமூடி கிழித்தெறியப் பட வேண்டும்.
இதுவே நாம் எமது எதிர்
வரும் தலைமுறையினருக்குச் செய்யக் கூடிய புனிதமான பணியாகும்!
ଏଠୁଁ

கேள்விகள் புதுமையாக இருக்கட்டும்.- தரமானவையாக அவை அமையட்டும். உங்களது கேள்வியின் பசனே எமது
பதிலுக்கு உற்சாகமூட்டட்டும்.
* மல்லிகையில் வெளியாகிய
சிறுகதைகள் இது வ  ைர * தகவம் பரிசு பெற்றுள்ளதா?
நில்லம்ப எஸ். இந்திராணி
தெணியானுடைய ஒன்றும். சட்டநாதன் கதை ஒன்றும், பரிபூரணன் கதை ஒன்றும் "தகவம்" பரிசு பெற் றுள்ள மல்லிகைக் கதைகள
கும். ی۔
* ஈழத்து ஆக்க இலக்கியத்
தைப் பொறுத்தவரையில் "சோழுவிஸ் யதார்த்தவாதம்" என்ற கோட்பாடு எ ந் த த் துறையில் முழு வடிவம் பெற் றுள்ளது?
மானிப்பாய்; சிதா சதாசிவ்ம் ஒரளவிற்குச் சிறுகதைக் துறையிலும், நாவல் துறையி
லும் சோஷலிஸ் எதார்த்த வாதம் இன்று அரும்பு விட்டுக் கொண்டு வருகின்றதென்றே கூறவேண்டும். சமுதாயத்தில் இருக்கும் ஆழ்ந்த முரண்பாடு களின் வெடிப்பினுரடேதான் சிறுகச் சிறுக முன்னேற்றமான காரியங்கள் வேர்விட முடியும்
நமது நாட் டி ல் இன்னமும்
颅艇
இவைகள் இலக்கியத் نه وو . 2°2
G. serfday T
ஏகாதிபத்திய மிச்ச சொச்சங் கள் மறையவில்லை. நிலப் பிர
புத்துவ கொடூரங்கள் இன்ன
மும் முற் ரு க மாளவில்லை. தொழிலாளி வர்க்கம் ஆதிக்க ச க் தி யா க இன்னமும் மலர
திலும் பிரதிபலிக்கத்தானே செய்யும். எனவே நாம் விரும் புவதற்கமைய உடனடியாக சோஷலிஸ் எதார்த்தவாதம் எ ங் கி ரு ந் தோ வந்து எமது இலக்கியங்களில் குதித்துவிடாது அது பரிணுமத் தன்மை கொண் டது. விஞ்ஞான அம்சம் உள் ளது. ஒரு சிலர் அதீத சோஷ லிஸ் யதார்த்தவாதம் எ ன நாவல் எழுதி மயக்கப் பார்க் கின்றனர்; இது சோஷலிஸ் ய தா ர் த் த நாவல்களல்ல. அதீத சோஷலிஸ் கற் ப ஞ வாதமாகும். அவைகளின் உள் ளடக்கத்தைப் படிக்கும்போது நமது நாடும் சமூக மாற்றமும்
இந்த அளவிற்கு உருவாகி உள்
ளதா எனச் சந்தேகப்பட்டிருக் கிறேன். நான். எனவே போலித் தனமான கற்பன வாதம் பிற் போக்குவாதிகளுக்கு மாத்தி ரம் உரியதல்ல. தம்மை முற் போக்கானரி என க் கூறிக்

Page 29
கொள்ளும் போலிப் புரட்சிக்
காரர்களும் இ ன் று இதற்கு உடந்தையானவர்களே.
* அஹமத், ஜோண்ராஜன் போன்றேருக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததைப் பற்றி ஒரு குறிப்புத்தானும் மல்லிகையில் வெளிவரவில் இேைய - உங்கள் குள் அவர்கள் இல்லையென்ப தால் கண் தெரியவில்லையா?
மாத்தளை ஆர். பத்மநாதன் முதலில் ஒன்றை நம்புங் கள். மல்லிகைக்குள் வட்டம் என்ற ஒன்று இல்லை. தரமான இலக்கியத்தை யார் யார் நேசிக்கின்ருர்களோ, எ வர் எவர் அதற்காகச் சிறிது சிரமப் பட முன் வருகிருர்களோ அவர் களெல்லாம் மல்லிகை வட்டத் தினரே. தேசத்தில் நடக்கும் எல்லா இலக்கிய விவகாரங்களை யும் பிரசுரித்துவிட முடியாது. அப் படி த் தொகுத்துத் தர யாரும் மு ன் வருவதுமில்லை. ஏதோ ந ம க்கு க் கிடைக்கும் அந்த அந்த நேரச் செய்தி ாளையே வெளியிடுகிருேம். சமயங்களில் சில தகவல்கள் வெளிவராமல் போய்விடுவது முண்டு. அது நமது அலட்சிய மல்ல, கோஷ்டி மனப்பான்மை
யுமல்ல, தவிாக்க முடியாமல் நேர்ந்துவிடும் த வறு க ளே அவை:
* சில் ல  ைற நாணயங்கள் தட்டுப்பாடு பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பரந்தன்
இப்பொழுது நடைபெறு வது "தர்மிஷ்ட ஆட்சி பாருங் கள். சில்லறைகள் எல்லாம் தர்பம் செய்யப் புறப்பட்டும் Curret L-6A
வட்டத்திற்
சில
வ. கோபாலன்
* தேகிய மயமாக்கப்பட்ட தன் மின்னர் நமது சில தினசரிகளின் நிலையைப் பார்த் 8ri serit? பத்திரிகையாளன் என்கின்ற முறையில் எ ன் ன நினைக்கிறீர்கள்? محمحب۔
கொழுங்பு - 6, ப யூரீகந்தராஜா
தேசிய மயம் என்பது அர சாங்க மயமல்ல. மக்கள் மயம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. மு ன் னர் இதே பத்திரிகைப் பிரதான செய்திகளில் பிரதமர், கல்வி அமைச்சர், தபால், தந்தி மந் திரி ஆகியோர் பவனி வந்தனர். இன்று ஜஞதிபதியும் பிரதமரும் முன்பக்கத்தில் ஊர்வலம் வரு கின்றனர். எனக்குத் தெரியப் பலர் இப்பொழுது இப்படியான தேசிய மயப் பத்திரிகைகளைப் படிப்பதில்லை. பத்திரிகை என் பது சுயமாகத் தனது கருத்துக் களைச் சொல்ல வேண்டும். மக் களைச் செயலூக்கப் படுத்திச் சிந்திக்க வைக்க வேண்டும். இதில் இன்ஞெரு விசித்திரத் தைப் பாருங்கள், அடுத்தடவை இந்த அரசாங்கம் மாறி அம்மா ஆட்சிக்கு வந்தால் இந்த ப் பத்திரிகைகள் என்ன தி  ைத எழுதும்? இதை யோசிக்க வேடிக்கையாக இல்லையா?
* "குங்குமம்", "இதயம் பேசு கின்றது" போன்று இலட் சங்களுக்கான போட்டி உண்ர்வு உங்களுக்கு இல்லையா? மல்லிகை இலட்சங்களை அடைவது எப் போது?
உடுவில் ஆர். மோகன்
இலட்சங்களின் நோக்கமே வியாபாரம்தான். எமது நோக் கம் இலட்சங்களல்ல- இலட்சி யங்கள்! சில ஆயிரங்களான மணிக்மகாடி முதன் முதலில் ஒரு தாக்கத்தை தமிழ் நாட் டில் ஏற்படுத்தியது. பின்னர்
轟標

சரஸ்வதி ஒரு புதிய சிந்தனைத் திருப்பத்தை உருவாக்கியது. இப்பொழுது தாமரை புதிய பாதையையே நமக்குச் சமைத் துத் தருகின்றது. மல்லிகையும் நமது நாட்டில் ஒரு தாக்கத் தையும் திருப்பத்தையும் புதிய இலக்கியத் தடத்தையும் ஏற் படுத்திஞலே போதும். இவை களைச் சில ஆயி ரங் களை க் தொண்டே சாதித்து விடலாம். மல்லிகை போன்ற சஞ்சிகைகள் அளவுக்கு மீறி வளர்வது கூட ஆபத்தைக் கொண்டுவந்து விட லாம். அதனது ஆத்மக் குரலில் வியாபாரத் தொணி ஒலிக்கக் கூடிய அபாயம் வந்துவிடக் கூடும். எனவே விரல்களை மடக் கக் கூடிய ஆயிரங்கள் வளர்ந் தாலே போதும்.
* ஜெயகாந்தன் ஜனவரியில் இலங்கைக்கு வருவதாக Cyp Gör LI எழுதியிருந்தீர்களே, அவர் வருவாரக மாட்டாரா?
பட்டிருப்பு. ம. சற்குணம்
அவர் இன்ன மாதம்தான் வருவார் என அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆளுல் நிச்சயம் அவர் வரத்தான் செய்வார். அவருக்கு அங்கு நிறைய வேலை கள் உண்டு. புதிய சினிமாப் படங்கள் தயாரிக்கும் வேலைச் சுமை உண்டு. எப்படியும் சீக் கிரம் வருவார் என்பதை நீங் கள் நம்பலாம்3
* சிரிக்கும் பெண்களை
6υπιoπό
பள்.
சிரிக்கும் ஆண்களை மாத்தி ரம் நம்பிவிடலாமா? சிரிப்பது ஆணுே பெண்ணுே என்பதல்ல கவனிக்சுத்தக்கது. 326 Golf யான மனித உணர்வுகளுடன் யார் கிரித்தாலும் அது வரவேற்
நம்ப
ப. சரவணன்
கத்தக்கதே. அது சரி இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கும் நீங்க ளே ஒரு ஆண்தானே? இதே கேள்வியை ஒரு பெண்
கேட்டிருந்தால்...? * உங்களுட ன் கடிதத் தொடர்பு  ைவ த் து க்
கொண்டால் அதற்குரிய பதிலை உங்களிடமிருந்து பெறலாமா?
செல்வி த, இந்துமதி
தயவு செய்து எள்னை வேலை செய்ய விடுங்கள், தி ன ச ரி வ ரு ம் நூற்றுக் கணக்கான கடிதங்களுக்கு உரிய பதில் போட முடியாமல் திணறுகின் றேன். தனி நபர் என்பதல்ல இங்கு முக்கியம். கடிதங்களைஅது எந் த ப் பிரச்சினையான லும் - மல்லிகை க்ரு எழுதுங் கள். அதனுல் பலருக்குப் பிர, யோசனம் உண்டு. தனி நப ரல்ல நான். எனது நேரத்தை தனப்பட்டவர்கள் பங்கு போடு வதை நான் விரும்புவதில்லை. பொது வாழ்க்கையில் ஈடுபட்
Lu F GO»fo.
டுள்ள ஒருவனின் நேரம் பொது
மக்கள் நேரம். எனவே இதைக் கவனத்தில் வைத்திருங்கள். இதில் இன்னெரு உண்மைவும் உண்டு. வருகின்ற கடிதங் களுக்கு நான் பதில் போடுவ தானல் மல்விகை பொருளா
தார ரீதியாகப் பாதிக்கப்பட்டு
விடும். எனவேதான் என்னைப் பொது மனிதனுகக் கருதுங்கள். நான் தனிப்பட்டவன் அல்ல.
* திரைப்படக் கூட்டுத் தாப னம் என்ன செய்கின்றது? அதன் தற்போதய நடவடிக் கைகள் நமது சினிமா வளர்ச் சித் துறைக்கு உற்சாகமூட்டுத தாக அ:ை , துள்ளனவா?
கொழும்பு - 11. எஸ். ஜெயராஜ்
நிஹால் சிங் ஹா வின்
பெருமை இப்பொழுதுதான்
55

Page 30
புரிகிறது. அவர் கூட்டுத்தாப
எத்தில் இருக்கும் பொழுது
நமது ஒணிமாத்துறைக் கலைஞர் கள் பத்தியில் இருந்த உற்சாக மும் தன்னம்பிக்கையூம் இன்று
இல்லவேயில்லை. திரைப்படக்
கட்டுத் தாபனம் வாங்கிக் காட்டும் வர்த்தக நிறுவனமா கத்தான் இன்று காட்சி தருகி றது. நமது சிங்கள - தமிழ்ப் படங்களின் தரத்தை வளர்த்து அத் துறையில் நமது நாட்டுக்
கலைஞர்களே ஊக்குவித்து உற்
சாகப் படுத்தும் முன் முயற்சி
நிஹால் காலத்தைப் போல இன்று நடைபெறவில்லை.
மாத்துறைக் கலைஞர்கள் G3gerir rif
வட்ைந்துபோய் இது ப்பது
விடையாகவே தெரிகின்
03
யாழ்ப்பாணத்தில் இன்று
இலக்கியக் கூட்டங்களோ கலந்துரையாடல்களோ இடம் பெறுவதில்லையே ஏன்? இந்த அவல நி ைமாறி எழுத்தாளர் கள் முன்வந்து உழைக்க மாட் LIT is 6T TP
கோப்பாய். ம, அருச்சுணன்
இலக்கியக் கருத்தரங்குகள் இன்று அருகிப்போய் விட்டது உண்மைதான். காரணம் இப் L1 ιφ (μ Π 607 கருத்தரங்குகள் நடைபெற இட வசதி கிடைப் பதில்&ல. முன்னர் யாழ். மேயர் து ரை யப்பா கேட்போர் கூடத்தை இலவசமாகத் தந்து வந்தார். பல இலக்கியக் கூட் திகள் நடைப்ெற்றன. இந்த நில மாறிவிட்டது. யாழ் மாந
இர சபை ஆண்ையாளர் கேட்
போர் கூடத்தை இலக்கியக் கூட்டங்களுக்குத் தந்து த வ வேண்டும். அப்பொழுது பல இலக்கிய ஆர்வலர்களின் ஆவல் நிறைவே17:ம். எழுத்தாளர்க ளும் மு 'று அடிக்கடி இலக் இயச் சந்திப்புக்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்

* உங்களைப் பற்றி ப் பல ககுத்துக்கள் பலராலும் சொல்லப்படுகின்றனவே அதில் எது உண்மை. அந்த உண் மையை எப்படி அறியலாம்?
அ’ புரம். ம. கிருஷ்ணநாதன்
நான் சொன்னதாக அல்லது கூட்டத்தில் பேசியதாக வரும் கருத்துக்கன் அத்தனையும் உண் மையல்ல. ஏனெனில் எனது முழுக் கருத்துக்களுமே அதில் இட ம் பெறுவதில்லை, எனது கைப்பட நான் எழுதும் கருத் துக்களில் எவ்வித ஒளிவு மறை வுமில்லாமல், சிந்திப்பதை - எனக்குச் சரியெனப்பட்டதைதாராளமாகக் கூறுகின்றவன் நான். எனவே வதந்திகள் அல் லது யாரோ யாரிடமோ கூறிய. கூறக் கேட்ட செய்திகள் அத் தனையும் உண்மைகளாக இருப்ப தில்லை. நான் எழுதுவதே எனது கருத்துக்கள்ாகும். இக் கருத் துக்கள் கூட மா ற க் கூடும், அல்லது வலிமையடையக் கூடும். எனது கருத்துக்களைக் கேட்ப தற்கு ஒரு வழி மல்லிகைக்கு எழுதுங்கள்.
* உங்களுடைய த மி ழ கப்
பயண கட்டுரை ஆர்வத் தைத் தூண்டுவதாகவும் சுவை unr 56yb இரு க் கி ன் றன. தொடர்ந்து எழுதுவீர்களா?
கொக்குவில் நாத சதாசிவம்
நான் மணியனல்ல. பொய் யும் அதீத கற்பனையும் சேர்ந்து எழுத்தை பிஸினஸ்” பண்ணும் வழி எனக் குத் தெரியாது. அடுத்த இதழில் அத் தொடர் முடிந்து விடும். தமிழகம் போக இருக்கிறேன் தொடர்ந்து எழு தலாம் என்பது எனது எண் னம்
S