கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1997.05

Page 1
"MALIIRAI PROGRESSIVE MONTHLY MAGAZIN
 

历。
ஆசிரியர் டொமினிக்2வோ
I. 15.00

Page 2
RAN GRIM
2),
k S"
IPM ( :
VIJAYA GEN
(AGRO SER
DEALERS: A GROC FERTI LIWER & W
No. 85. RIt majothy S. (Wol | cildhall SE|
(1.
醬
 

蠶- namunumo T
N
DNG WILS
(tïïï S( ዞ'('c'[ . 'it sile'. Leur kou.
(Mss-24ど5
ERAL STORES
WICE CENTRE)
EMICAL PRAYER: "EGETABLE SEEDS
Lr:WilniIIll L(h, \l: W II li, ":::| ), (' || 111 y 1 || R.
7
( )

Page 3
2S4
மீண்டும் உங்களைச்
1995 அக்டோபர் மாதம்தான் உங்
லிருந்து சந்தித்து வந்தது. கிட்டத்தட்ட டிவிட்டன.
இந்த இடைக் காலத்தில்தான எத் இருந்தும் மல்லிகையின் நிரந்தரச் சுவைஞ மறந்துவிடவில்லை.
பலர் திசை தெரியாமல் பிரிந்துடே முகவரியே தெரியவில்லை. இருந்தும் ஆர வளர்த்தெடுத்த இவர்களை இந்தக் க பார்க்கின்றேன். மல்லிகையின் புது வரவி கண்டுகொள்வேன் என நம்புகிறேன்.
எத்தனையோ கஷ்டங்கள், இடையூறு சோர்ந்துபோய், செயலற்றுச் சோம்பிய மல்லிகைச் சுவைஞர்களும் இருக்கவேண்
எங்கிருந்தாலும் என்னுடன் தொடர்பு
 
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
பாதியிணைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்று நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்"
(SLD - 1997
சந்திக்கின்றோம்.
களை மல்லிகை யாழ்ப்பாணத்தி ஒன்றரை ஆண்டுகள் உருண்டோ
தனை விதமான அனுபவங்கள்! தர்களை நான் எந்தக் காலத்திலுமே
பாயுள்ளனர். இன்னுஞ் சிலருக்கு "ம்ப காலம் தொட்டு மல்லிகையை ணத்தில் கூட நான் நினைத்துப் ன் ஊடாக மீண்டும் அவர்களைக்
கள் ஏற்பட்ட வேளையிலும் நான்
பிருந்தது கிடையாது. அப்படியே
னடுமென ஆசிக்கின்றேன். நீங்கள்
கொள்ளுங்கள்.
- டொமினிக் ஜீவா
g igt:a aggsasag: ரூபித்த எமது நவீன நீர்&க்க்

Page 4
With Best Compliments from: אי
Renarss Supplies Centre
Importers & Distributors,
of
Automa -k Everwear le Mypol is Lion head
Tyres & Tubes.
434348
 

s சோகத்தின் மத்தியிலும் வெளிச்சம்.
வரலாறு காணமுடியாத சர்வதேசச் சோகம் கவிந்துள்ள தமிழர்களது வாழ்நிலையை எண்ணிப் பார்க்கும் இந்த வேளையில் அடி மனசில் விரக்தியும் வேதனையும்தான் தோன்றமுடியும். செயலற்ற நிலைக்குத்தான் மனித மனம் சென்றடைய இயலும்.
இந்தப் பாரிய சோகங்களுக்கு இடையேயும், இழப்புக்களுக்கு மத்தியிலும் மகிழ்ச்சி நிரம்பிய சம்பவங்கள் இடையிடையே நடைபெறாமலுமில்லை.
இந்த மண்ணில், இந்தக் காலகட்டத்தில் தமிழில் வெளிவரும் தொகையான நூல்களின் புது வரவுகளைத்தான் இங்கு குறிப்பிட்டுப் பெருமையடைகின்றோம்.
எந்தக் காலத்திலுமே இல்லாத ஆர்வம் கலந்த வேகத்துடன் புதிய புதிய நூல்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து வாரா வாரம் வெளிவந்து கொண்டிருப்பதை நோக்கும்பொழுது எம்மால் மனசார மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
வாழ்வுத் துடிப்புள்ள ஓர் இனம் தனது இருப்பை இந்த வண்ணம் வெளிக்காட்டி வருவது நம்பிக்கையூட்டுகின்றது. இளந் தலைமுறையினருக்கு இது உற்சாகத்தைத் தருகின்றது. மனப்பூர்வமாக இந்தப் புதிய நம்பிக்கை ஊட்டலை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
அடுத்து, துன்ப துயரங்கள் சூழ்ந்துள்ள இந்தக் காலகட்டத்திலும் கூட, நாடளாவிய வகையில் இலக்கியக் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், நாடகப் பயிற்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் நடந்தேறி வருவது எதிர்கால நம்பிக்கையைத் துரலாம்பரப்படுத்துகின்றது.
சூழ்நிலைத் தாக்கத்தினால் துவண்டு போய் விடாமல், கஷ்ட நஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு உயிர்ப்புடன் இந்தத் துறையில் செயல்பட்டு உழைத்து வரும் அனைவரையும் பாராட்டுகின்றோம். அவர்களது செயலுக்காக வாழ்த்தி வரவேற்கின்றம்.
sfîrflui

Page 5
தமிழகத்தில் நமது நவீன நாடகக் குழுவினர் -
இலங்கையில் இருந்து சில நாடகக் கலைஞர்கள் சமீபத்தில் தமிழகம் சென்று SLكAp5ات6/اوزېږ Laر ஊர்களில் சில நாடகங்களை மேடையேற்றியிருந்தனர். இங்கி ருந்து சென்றவர்கள் பிரான்ஸிஸ் ஜெனம், எஸ்.ரி. அரசு, க.சிதம்பர நாதன், பத்மினி, கலா, சோ.தேவ ராஜா, சிவஜோதி. ஜனகமகன், அபிலாஷா, ஏ.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்குவர்.
இந்த மேடையேற்ற ஒழுங்கு களுக்கு மிக முக்கியமானவராகத் திகழ்நதவர் நமது நாட்டு நாடகக் கலைஞரும் தற்சமயம் இங்கி லாந்தில் வசிப்பவருமான அ.தா ஸிஸியஸ் அவர்களாகும்.
மல்லிகைப் பந்த வின் அழைப்பை ஏற்று அநேகமான கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் துரை விஸ்வநாதனின் துரைவி'
易
Z
திலகா சண்முகநாதன்.
மண்டப மேல் மாடியில் கூடி யிருந்தனர்.
குழந்தை சண்முகலிங்கத்தின் 'எந்தையும் தாயும்" "மகாகவி' யின் "புதியதோர் வீடு" அ.தாளிஸியஸின் "பொறுத்தது போதும்' ஆகிய நாட கங்கள் மேடையேற்றப்பட்டன. நா. சுந்தரலிங்கத்தின் "அபகரம் " நாடகமும் இடம்பெற்றுது.
தாஸிஸியஸ் தனது 'களா?" குழுவினருடன் தமிழகம் வந்து இந்தக் குழுவினருடன் கலந்து
கொண்டார். இளைய பத்மநாதன் தொடர்புள்ள குழுவினரும் இவர் களுடன் இணைந்து கொண்டனர்.
அழைப்பாளரான டொமினிக் ஜீவா எல்லாரையும் வரவேற்றுப் GL af267/7/i.
“காலம் காலமாகத்
தமிழகத்திலிருந்துதான் நாடகக் கலைஞர்கள் இங்கு வந்து நாடக மாடி விட்டுச் சென்றுள்ளன . ஆனால் கடந்த காலங்களில் எந்த வொரு நாடகக் குழுவும் தமிழகம் சென்று தமது தமிழகச் சுவைஞர்களுக்கு அறிமுகம் செய்ததில்லை. இந்தத் தடவைதான் முதன்முதலில் இவர்கள் சென்று வந்துள்ளனர். இது வரலாற்றுப் பதிவான சம்பவங்களில் ஒன்றாகும்” எனக் குறிப்பிட்ட அவர் கலைஞர் களை நோக்கி அவர்களது தனித் தனியான அபிப்பிராயங்களைச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
நாடகங்களைத்
 
 
 

இங்கிருந்து நாடகக் கலைஞர் களை முன்நின்று அழைத்துச் சென்ற வரான திரு.தேவராஜா, தனது கலைப் பயண அனு பவங்களைச் சொல்லும்போது 'பல ஆண்டு களுக்கு முன்னரே தாஸிஸியஸ் அவர்களுக்கு உலகத் தமிழ் நாடக அரங்கு பற்றி அடிமன ஆசை பற்றியிருந்தது. லண்டனில் இருந்து வந்த அவர் இங்கிருந்து போன
எங்களை ஆரத்தழுவி அன்பு காட்டி
வரவேற்றார். நாங்கள் புலம் பெயர்ந்த நாடகக் கலைஞர்களை நேருக்குநேர் தரிசித்ததே ஒரு பெரும் பாக்கியமாகும். தாஸிஸியஸ் அங்கு பேசும்போது எங்களுடைய வேர் களைத் தேடவே நாம் இங்கு வந்தி ருக்கின்றோம் எனக்குறிப்பிட்டார். உண்மையில் தன்னை நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்க ளுக்கு நன்றி கூறவே எங்களை யெல்லாம் அங்கு அழைத்திருந்தார். இந்த நாடக அரங்கம் அதற்காகவே தமிழகத்தில் கூடப் பெற்றது. நமது நாடக வளர்ச்சியைத் தமிழகச் சுவைஞர்களுக்குக் கோடி காட்டும் முகமாகவே இநத நாடக நிகழ்வுகள் நடைபெற்றன என்றார்.
கல்பாக்கம், li u revior ug eż Gef/f0, திண்டிவனம், விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, திருப்பூர், பொள்ளாச்சி, சென்னை போன்ற இடங்களில் நடை பெற்ற நாடக நிகழ்வுகளுக்கு, குண சேகரன், முத்துசாமி, சிதம்பர நாதன், ராமானுஜம் போன்றோர் வந்து சிறப்பித்ததாகவும் ஏராள மான பொதுமக்கள் கண்டுகளித்த தாகவும் கூறினார்.
லண்டனில் இருந்து வந்த களரி அமைப்பைச் சேர்ந்த இளம் நடிகர் களுக்கு ஓர் அங்கீகரிப்பைத் தேடும் நிமித்தமாகவும் தாஸிஸியஸ் இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண் டார். ஆரம்பத்தில் நமது மொழி உசசரிப்பு அவர்களுக்குப் பிரச்சி னையாக இருந்த போதிலும் பழகப் பழக அது பழகிப் போய்விட்டது.
பிரான்ஸில் ஜெனம் கருத்துத் தெரிவிக்கையில் “அந்நிய தேசத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வே எங்க ளுக்கு ஏற்படவில்லை. எங்களை வெகுவாக நேசித்தனர்" என்றார்.
அரசு அங்கு கூறுகையில்: "அங்கு சினிமா, தொலைக்காட்சி மோகம்தான் அதிகரித்துள்ளது. நாடகங்களில் நடிப்பதற்கு நடிகர் களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. மொத்தத்தில் சினிமா மோகம்தான்
தலைத்துரக்கியுள்ளது. இதைத்தான்
சுருக்கமாகச் சொல்லலாம்".
சிதம்பரநாதன் தமது குறிப்பில் குறிப்பிட்டதாவது: "நவீன நாடகத் திற்கான சூழல் தமிழகத்தில் இன்று நிலவவில்லை. இலங்கையில் 60களி லேயே நவீன நாடகச் சூழல் ஆரம் பித்துவிட்டது. எங்களுடைய நாடகங் களைப் பார்த்த சில சுவைஞர்கள் "மரணத்துள் வாழ்ந்து கொண்டே எப்பிடி இப்படியான தயாரிப்பு களை மேடையேற்றுகிறீர்கள்?” என வியப்புத் தெரிவித்தனர். ஒரு பேரா சிரியரே இப்படிச் சொன்னார். "நாங்கள் சேற்றிலே மிதிக்கின்றோம். நீங்கள் நெருப்பிலே நடக்கின்றீர்கள்” என வியந்தார். அங்கு பெண்கள் இரகசியமாகவே இருக்க விரும்பு
கின்றனர். எங்கள் பெண்கள்

Page 6
காட்டுகின்ற ஈடுபாடு கூட இல்லை. தலித் இலக்கியம் அங்கு நன்கு வளர்ந்திருக்கின்றது."
சபையில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் போய்வந்த பெண்
கள் பதிலளித்தனர் சுவையாக அவை இருந்தன.
ரூபவாஹினியைச் சேர்ந்த
திரு.எஸ்.வன்னியகுலம் அவர்களு டன் தொலைக்காட்சி தமிழ் நாடக வளர்ச்சி பற்றியும் ஆக்கபூர்வமான வருங்கால முயற்சிகள் பற்றியும் இறுதியில் கலந்துரையாடப் பெற்
றது. வன்னியகுலம் அவர்கள்
வந்திருந்த நாடகக் கலைஞர்
களுடன் மனந்திறந்து சாதக பாதக மான நிலைபாடுகளை எடுத்துரைத் த7ர். எப்படியும் நமது நாட்டு நவீன தமிழ் நாடகங்களை ஒளி பரப்பச் சகல கலைஞர்களையும் ஒத்துழைக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
"இந்த நிகழ்ச்சி ஒரு புது மாதிரியான நிகழ்ச்சி. இப்படியான கலந்துரையாடல்கள் நடந்தால் பல கலை அனுபவங்களை நாம் முடி வில் பெற்றுக் கொள்ளலாம்” வெளி யேறும் போது ஒரு சொன்ன கருத்து என் காதில் விழுந்தது.
சுவைஞர்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
மல்லிகையில் சுவைத்துப் படிக்கப்படுவது
தூண்டில்"
இக்கேள்வி - பதில் பகுதிக்கு உங்களது கேள்விக் கடிதங்கள் எதிர்ப்பார்க்கபடுகின்றன.
ஆசிரியர்
starszawieniaorsaxlokonanterxi:
Excellence Photographers for Wedding, Portraits & Child Sittings
300, Modera Street, Colombo - 15 Tel: 526345
 
 
 
 
 
 

| ീശുക്രഗ്ര ശ്ര ആമ മ
ഇന്ത്രഠമഗ്ര ക്ര ക്രി ഗ്ര
9 - A(ބޮޓް ޕް7%9) کرنےلگا۔ --سے
(மல்லிகையில் தொடர்ந்து எனது சுய சரிதையை எழுதிவந்தேன். எட்டுக் கட்டுரைகள் இதுவரை, எழுதிவிட்டேன். அக்கட்டுரைத் தொடரைத் தொடர முடியவில்லை. காரணம் நீங்கள் அறிந்ததே. புத்த அரக்கனின் கொடுங் கரங்கள் யாழ்ப்பாணத்து மக்களது குரல்வளையை இறுக்கிப் பிடித்து நசுக்கி, நெரித்தது. இந்தச் சூழ்நிலைக்கு ஆட்பட்ட மக்கள் காட்டுப் பிரதேசங்களுக்குப் புலம்பெயர்ந்தனர். மல்லிகையும் வெளிவர இயலாத ஸ்தம்பித நிலையை எய்தியது.
கொழும்பில் தொடர் வாழ்வைத் தொடங்கிய சமயத்தில் மல்லிகை வெளிவராதது பற்றி அப்படியொன்றும் அலட்டிக் கொள்ளவில்லை, நான். ஆனால் இலக்கியக் கூட்டங்களிலும், நேர்ச் சந்திப்புச் சம்பாஷணைக்களிலும் பலர் மல்லிகையின் தற்காலிக இழப்பைச் சுட்டிக் காட்டினர்.
நான் இதுவரை நினைத்திருந்ததை விடவும், மல்லிகையின் வேர்கள் இந்தத் தேசத்தின் நானா பகுதிகளிலும் பற்றிப்படர்ந்து வேரோடி உள்ளதை மெய்யாகவே உணர்ந்து கொண்டேன். உழைப்பு அதற்குரிய சரியான பயனைத் தரும் வேளையில் இடை நிறுத்தம் ஏற்பட்டு விட்டதோ என நினைத்தேன். -
ஆனால், மல்லிகையின் ஆணிவேர் என் இதயத்தின் பசளையில் தான் ஊடுருவிஇருந்தது என்பதை நன்றாகவே உணர்ந்து வைத்திருப்பவன் என்ற மெய்யான தரிசிப்பில் தினசரி இயங்கி வந்தேன். யாழ்ப்பாண மண்ணில் இருந்துதான் மல்லிகைச் செடி பூத்து மலர வேண்டும் என ஆரம்பத்தில் ஆசைப்பட்டேன். அது சாத்தியப்படவில்லை. அச்சகக் கலை நுணுக்க வளர்ச்சி அபாரமாக வளர்ந்துள்ள இந்தச் சகாப்தத்தில், அதற்குக் கொஞ்சமாகவாவது நாம் ஈடு கொடுக்க முடியாது போனால் வளர்ச்சி வேகத்தில் நாம் அப்படியே அடித்துச் செல்லப்பட்டு விடுவோமோ என அஞ்சினேன். அது உண்மையும் கூட.
இந்த வளர்ச்சி வேகத்திற்கு யாழ்ப்பாணத்திலுள்ளமல்லிகைச் சாதனங்கள் ஈடுகொடுக்க முடியாதவை என உணர்ந்து கொண்டேன்.

Page 7
எனவேதான் அத்தகைய சாதனங்களைப் பெறக் கூடிய வாய்ப்பும் சூழ்நிலையும் ஏற்படும் வரைக்கும் மல்லிகையை வேறொரு பிரதேசத்தில் பேணிப் பாதுக்காத்து வளர்த்து வரவேண்டியது எனது தற்காலிகத் தேவையாக அமைந்து விட்டது.
இங்கும் பல பிரச்சினைகள். சொந்தமாக மல்லிகைக் காரியா லயத்தை நிறுவுவது முதல் கட்டம். மல்லிகைச் சுவைஞர்களுடன் தொடர்பு கொள்வது அடுத்த கட்டம். சிதறிப் போய் அங்குமிங்கும் விரக்தியுற்று வாழ்ந்து கொண்டிருக்கும் - பலரது முகவரியே தெரியவில்லை - காலம்காலமாக மல்லிகையைப் பாதுகாத்த நண்பர்களைத் திரும்பவும் எழுதவைப்பதற்குத் தொடர்பு கொள்ளவேண்டியது அதற்கடுத்த கட்டம்.
இவை அத்தனையையும் தாண்டித்தான் மல்லிகையைத் திரும்பவும் கொழும்பிலிருந்து வெளியிட முடிவு செய்தேன்.
நான் தொடராக மல்லிகையில் எழுதிவந்த எனது சுயசரிதைத் தொடரைத் தாம் ரொம்பவும் விரும்பிப் படிப்பதாகவும் அதை நிறுத்தக் கூடாது எனவும் பலர் கேட்டுக் கொண்டனர். எனக்கும் அது அத்தியாவசியமான பணி என மனசில் பட்டது. எனவேதான் தொடர்ந்து இந்த இதழில் இருந்து எழுதி வரமுற்படுகின்றேன். தொடர் கட்டுரையாக இருந்தாலும் தனித்தனியாகத் கூடப் படிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதி வர முயற்சி செய்கின்றேன்.)
இரண்டாவது யுத்தத்தின் கோர பயம் மெல்ல மெல்ல, இலங்கை:ை விட்டு அகலத் தொடங்கிய காலகட்டம்.
பீதியின் காரணமாக யாழ்ப்பாண நகரை விட்டு நாட்டுப் புறப் பகுதிக்கும் தீவுப் பிரதேசங்களுக்கும் குடிபெயர்ந்திருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது வீடு வாசல்களை நோக்கி வரத் தொடங்கினர்.
எங்களது குடும்பத்தவர்களும் இன சனங்களும் அயல் அட்டையைச் சேர்ந்தவர்களும் தற்காலிகமாக அடைக்கலம் தேடிய அல்லைப்பிட்டிப் பிரதேசத்தை விட்டுத் திரும்பவும் தமது இல்லிடங்களை நோக்கி வந்து குடியேறினர்.
புத்த பயம் ற்றாக நீங்கி விடவில்லை. அதன் பக்க விளைவுகள் மக்களை .ாடாசீப் படுத்தியது. அத்தியாவசியத் தேவைகளுக்கு தட்டுபாடு, கூப்பன் கடைகள் உதயமாகின. உணவுப் பொருட்கள் பங்கீடு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அதிலும் ஊழல்கள் மலிந்தன. மக்களுக்குச் சென்றடைய வேண்டிய பொருட்கள் கள்ளச் சந்தைக்குள் குடிபுகுந்தன.
இப்படி இப்படியான எத்தனையோ பிரச்சினைகள். குடும்பத்தினருடன்
திரும்ப வந்த நான், எனது தொழிலகத்தை - சலூனைத் - திறந்து தொழில்
புரிவதில் மும்முரமாக ஈடுபட்டேன். ஆனால் முந்தைய செந்தளிப்பு
இல்லை.
 

நகரத்தில் சன சந்தடியே இல்லை, நகரமே வெறிச்சோடிப் போயிருந்தது. மக்கள் அத்தியாவசிய தேவை கருதியே நகருக்குள் வந்து சென்றனர். ஒவ்வொருவர் முகங்களிலும் செயல்பாடுகளிலும் சுரத்தில்லை; சந்தோஷமில்லை. சும்மா ஒப்புக்கு நடமாடித் திரிந்தனர்.
பஜார்க் கடைகளில் வியாபாரம் படுத்துப்போய் விட்ட்து. பெரிய புடவைக் கடை வைத்திருந்த வடநாட்டு "பாய் மார் தங்களது நிறுவனங்களை இழுத்து மூடி விட்டு தங்கள் நாட்டுக்குக் கப்பலேறிவிட்டனர். சிலது கைமாறிப் போனது.
நகரத்தின் மீது சோகச் சாயல் கவிந்துபோய் இருந்தது. ஊருடன் ஒத்ததுதானே நமக்கும்.
சலூனில் நான்கைந்து ஆட்கள் தொழில் செய்து கொண்டிருந்த நிலைமாறி, ஒருவர் இருவர் என வந்து ஒப்புக்குத் தொழில் செய்தனர். சில சமயங்களில் ஒருவருமே வந்து சேரமாட்டார்கள். நானே தன்னந்தனியாக காத்திருப்பேன். அப்படியொன்றும் விவரம் தெரியாத வயசு, இருந்தும் தொழிலில் வலுசுட்டி, எத்தனை கெட்டிக்காரத் தனங்கள் இருந்தாலும், வாடிக்கையாளர் தானே தேடிவரவேண்டும். அவர்கள் வருவதாயில்லை. காத்திருந்து காத்திருந்து மாலையில் ஒரு சில ரூபாய்களுடன்தான் வீடு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குத் தெற்குப் பக்கம் எங்களது இருப்பிடம், நடுவே ஸ்டேசன். அதன் வடக்குப் பக்கம் அத்தியடி என அழைக்கப்பட்ட ஒரு பகுதி. அங்கு தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்று அவசர கோலத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. யுத்த காலம் காரணமாக நெருப்புப் பெட்டித் தட்டுப்பாட்டை நீக்குவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட திடீர்த் தொழிற்சாலை அது. அது வந்த பின்னர் நமது அயலில் ஒரு பரபரப்புத் தோன்றியது. விதைவைகள், வீட்டில் சும்மா இருக்கும் குமர்ப் பெண்கள், வேலையற்றுச் சும்மா குந்திக் கொண்டு அடிக்கடி சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் வயோதிபத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்களுக்கு வேலை கிடைத்து விட்டது.
தீப்பெட்டியில் தீக்குச்சிகளை வைத்து மூடும் லாச்சிகளை உருவாக்குவதே அந்த வேலை. அதற்கான சகல சாதனங்களையும் -பசை காய்ச்சுவதற்கான கோதுமை மா உட்பட - கம்பெனிக்காரர்களே தந்துவிடுவார்கள். ஆயிரம் மூடலுக்கு இருபத்தைந்து சதம் கூலி. ஆனால் சேதாரமும் இருக்கக் கூடாது; செருகும் பெட்டிகளிலும் சதுரம் கோணக்கூடாது. தப்புச்செய்தால் கூலியில் பிடிக்கப்படும். தொடர்ந்து செய்தால் சாதனங்கள் நிறுத்தப்படும். சில வீடுகளில் பத்தாயிரம், இருபதாயிரம் என மூடல் பெட்டி ஒட்டிவிடுவார்கள். குடும்பமே சிறிய தொழிற்சாலையாக இயங்கிவந்தது.

Page 8
எங்களது வீட்டிலும் பெயர் பதியப்பட்டது. அம்மா தொடங்கி வைத்தார் வீட்டில் நான்கைந்து பேர் இருந்தோம். "சும்மா சோம்பிக் கிடப்பதை விட நெருப்புப் பெட்டியாவது ஒட்டுவோம்!” என அம்மா எடுத்துள்ள முடிவை அமுல் நடத்துவதில் நான் முன்நின்று உற்சாகமாக ஆதரித்தேன். கடையிலும் தொழிலில்லை. வருமானமோ கம்மி. அப்பா இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தனிப் பெரும் பிறவி. பொறுப்புக்கள் அத்தனையும் அம்மாவின் தோள் மீது. அம்மா எடுத்த முடிவைச் செயல்படுத்த ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆயத்தமானோம்.
ஏனெனில் ஞாயிறு வாரத்தில் கடை அரைநாள் லிவு. பின்னர் வீடு வந்து குளித்துச் சாப்பிட்டால் மிஞ்சுவது பெரிய இடைவெளி நேரம். "பிளாக் அவுட்" முற்றாக நீக்கப்பட்டிருக்கவில்லை. தியேட்டர்களிலும் பகலில் பழைய படங்களைக் காட்டுவார்கள். - அதுவும் இங்கிலிஸ் படங்களை. எனவே வெளிப் பொழுது போக்குகளைத் தவிர்த்து தீப்பெட்டி மூடல்கள் ஒட்டும் பணி அமோகமாக எங்கள் வீட்டிலும் அரங்கேறியது. இதில் நான் முழு மூச்சாக ஈடுபட்டு உழைத்து வந்தேன்.
இந்த இடத்தில் ஓர் உண்மையையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பசை காய்ச்சத் தரும் கோதுமை மாவை அன்றும் இன்றும் நம்ம பிரதேசத் தினர் "அமெரிக்கன் மா’ என்றே அழைத்து வந்தனர். இந்த மா பசை காய்ச்சத்தான் லாயக்கு என்ற எண்ணம் பெருவாரியானோரிடம் பரவி யிருந்த காலம், சாவீட்டுப் பிணம் சுமக்கும் பாடைகளுக்கு வண்ணக் கட தாகிச் சோடனைகளை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பசை காய்ச்சும் மா என்றே பெரும்பாலானவர்களின் வீடுகளில் நம்பிக்கை, அப்படிப் பாடை சோடிக்கப் பயன்படுத்தப்பட்ட பசை காய்ச்சிய மண் சட்டிகளைக் கூட, வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். பசைச் சட்டியை அடி வளவிற் குள் உள்ள மா, வேம்பு மரங்களில் கீழ் கவிழ்த்து வைத்துவிட வேண்டும் என்பது அந்தக் காலத்து எழுதாச் சட்டமாக எங்கள் பகுதியில் நிலவி வந் தது. காரணம் அப்படிப் பசை காய்ச்சிய சட்டி துடக்குச் சட்டியாம். அது வீடுவாசல்களுக்குள்ளே வைத்திருந்தால் அந்த வீட்டுக்கே ஆகாதாம்; கூடாதாம்!
இப்படியாக ஒதுக்கப்பட்ட துடக்குச் சட்டி மெதுமெதுவாக எங்களது அயலவர்களின் சோற்றுப் பானைக்கு அணித்தாக இடம் பிடித்துக் கொண்டதுதான் காலத்தின் விசித்திரம்
அந்தப் பசை காய்ச்சத் தரும் அமெரிக்கன் மாவில்தான் பாண் போடுகிறார்கள் என்ற அதிசய உண்மையை ஒரு நாள் கண்டு தெளிந்தேன். எங்கள் கடைக்குச் சற்றுத் தூரத்தில் "கிரவுண் பேக்கரி என்ற பெயரில் ஒரு பேக்கரி இருந்தது. மாத்தறையைச் சேர்ந்தவர்கள். எங்களது கடைக்குத்தான் முடிதிருத்த வருவார்கள், அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள். முதலாளி ஒரு தங்கமான மனுஷன். நல்ல குணம், அவர்தான் மாவின் சூட்சுமத்தை எனக்கு விளங்கப்படுத்தினார்.
O

அமெரிக்கன் மா என நாம் பசை காய்ச்சப் பயன்படுத்தும் மாவும் பாண் தயாரிக்கத் தங்களால் பயன்படுத்தப்படும் மாவும் ஒன்றுதானாம்! - ஒன்றேதானாம்! سمبر
அம்மாவுக்கு இந்த உண்மையை எடுத்துச் சொல்லி நம்பவைக்க கன காலம் எடுத்தது. ஒரு நாள் என்னுடைய நச்சரிப்பு தாங்காமல் இரவு அந்த மாவில் ஒரு சிறங்கை எடுத்து அரிசி மாப் பிட்டு அவிப்பது போல, நிறையத் தேங்காய்பூ சேர்த்து அமெரிக்கன் மாப் பிட்டு அவித்துச் சுளகிலே பரப்பி வைத்தார்.
அப்பொழுதும் அம்மாவுக்கு இது உணவுக்கான மூலப்பொருள்களில் ஒன்று என்ற ஞானம் பிறக்கவில்லை; சகோதரங்களும் இது ஏதோ ஒரு விசர்வேலை!" என நினைத்து ஒதுங்கி போய்விட்டனர்.
நல்ல கருவாட்டுக் குழம்பு; வத்தக் காய்ச்சின மாசுச் சொதி. இரா உணவு புதிய சுவையுடன் தேவாமிர்தமாக இருந்தது.
ஏதோ புதியதைக் கண்டுபிடித்த பெருமிதம் என் நெஞ்சில், அன்றைக்கு தொட்ட இரவு உணவுப் பழக்கம், இடியப்பமோ அல்லது பிட்டோ அமெரிக்கன் மாவாகத்தான் இருக்க வேண்டும். அரிசி மாவை மறந்து எத்தனையோ காலம்!
தீப்பெட்டித் தொழிற்சாலையில் இருந்து வாரத்தில் சனிக்கிழமை தோறும் கணக்குத் தீர்க்க வருவார்கள். அவர்கள் வரும் நாட்களில் சில வீடுகளில் கொண்டாட்டம் களி கொள்ளும். அன்றைக்குத்தான் சில வீடுகளில் ஆமான சாப்பாடு இடம்பெறும். சிறிய தொகைப் பணம்தான். ஆனால் முழுக் குடும்பமுமே பாடுபட்டு உழைத்த பணமல்லவா? உழைப்புக் கேற்ற ஊதியமில்லாது போனாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனியானதுதான்.
தீப்பெட்டி மூடல் ஒட்டுவதில் நான் விண்ணன் எனப் பெயர் சம்பாதித்துவிட்டேன். அயலில் எனக்கு நல்ல உழைப்பாளி என்றும், சுறுசுறுப்பானவன் என்ற பெயரும் நிலைத்து போய் விட்டது. காசு அல்ல எனக்கு முக்கியம். உழைக்கிறோம், உழைப்பாலே பயன் பெறுகின்றோம் என்ற உணர்வே என்னுள் என்னை இயக்கிக் கொண்டிருந்தது.
எங்கள் அயல் தீப்பெட்டி வேலைத் தொடர்புகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டிருந்தவர் சொக்கலிங்கம் என்பவர். இவர் சிறு சண்டியன்."சட்புட் என்றுதான் பேசுவார். அதிலும் கொஞ்சம் பணிந்துபோய், பெண்கள் ՞-9|ւնւ! . ராசா. என்றால் உச்சிக் கொப்புக்குத் தாவிவிடுவார். மதிக்கமாட்டார். அதுவும் கணக்குத் தீர்க்க வரும் சனிக்கிழமைகளில் அவரைப் பிடிக்கவே முடியாது. அப்படியொரு "கெப்பர் தனம்,

Page 9
வீட்டுக்கு வீடு மெளனமான ஒப்பந்தம் ஒன்றை அவர் அமுல் நடத்தி வந்தார். வீட்டுக்கேற்ற வகையிலும் மூலப் பொருட்கள் விநியோகிக்கும் முறையிலும் ஆளாளுக்கு ஆயிரம் மூடல்கள் கணக்கில் வராமல் எண்ணித் தரச் சம்மதிக்க வேண்டும். அப்படித் தரச் சம்மதிக்க எதிர்ப்புக் காட்டும் வீட்டினர் தயாரிக்கும் தீப்பெட்டி மூடல்கள் கோணல் மாணல், வடிவாயில்லை, கொடுக்கும் சாமான்களுக்குப் போதுமானதாகவில்லை. என்ற குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும். பணம் வெட்டப்படுவது மாத்திரமல்ல, இக்குற்றச் சாட்டையொட்டி அந்த வீடு பதிவில் இருந்தும் நீக்கப்பட்டு விடும்.
பிரச்சினை என்றால் கரும்பு கிடைத்த சந்தோஷம் தானே எனக்கு. பிரச்சினைக்கு போகக் கூடாது வந்தால் விடக்கூடாது!
சொக்கலிங்கத்திடம் எனக்கு எந்த விதமான வெறுப்புமில்லை; துவேஷமுமில்லை. அவரை முதன்முதலில் பார்த்த போதே எனக்கு அவர் மீது நல்லபிப்பிராயம் சுரக்கவில்லை. "ஆள் விறுசன்” என்ற உணர்வே என் மனசில் பதிந்துவிட்டது. அதற்காக என் அபிப்பிராயம்தான் சரி என நான் நம்பவில்லை. தொழிலை மெய்யுணர்வுடன் செய்து கணக்குத் தீர்த்து வந்தேன்.
இவர் மெல்ல மெல்ல எங்கள் வீட்டில் ஒட்டும் பெட்டிகள் ஒழுங்காய் இல்லை. வளைஞ்சுப்போய் கிடக்கு. மனேஜரிட்ட ரிப்போட் செய்ய போறன்!" எனப் புறுபுறுத்த வண்ணம் எச்சரிப்பது போல, என்னை ரோட்ட 'usilurif: .
எனக்கு ஏற்கனவே இப்படி நடக்கும் எனத் தெரியும். ஏன் இத்தனை காலம் கடக்கின்றதென்று தெரியாமல் இருந்தேன். இன்று எனது வீட்டு வாசல்படிக்கே பிரச்சினை வந்துவிட்டது. இதுவரையும் வராமல் இருந்ததற்கும் காரணமுண்டு. வாய்ச் சாதுர்யக்காரன் என்று அயலில் பெயர் எடுத்துள்ளவன், நான். அத்துடன் அசாதாரண துணிச்சல்காரன். எனவே பகை சற்று விலகி இருந்தது, எட்டநின்றது.
இன்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது. வந்த சொக்கலிங்கம் எங்கள் வீட்டில் கணக்குத் தீர்க்காமல் கட்டி வைத்திருந்த சாக்கு மூட்டையைக் காலால் ஒரு எத்து எத்தி விட்டு வந்த சயிக்கிளிலேயே ஏறிப் போய்விட்டார்.
எனக்கு அவர் "ரெக்கிளாஸ்" பேசியதில் வருத்தமில்லை.
என் கையால் பாடுபட்டு சிருஷ்டித்த படைப்புக்களைக் காலால் எட்டி எத்தியதைச் சகிக்க இயலவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்களை அழைத்தேன். நேரே கம்பனிக்கு போய் நிய:த்தை கேட்போமெனக் கூப்பிட்டேன். பல நேரங்களில் இந்த அறிய:ானுடைய கெடுபிடிகளை என் காது கேட்கத் திட்டித் தீர்த்த
2.

பெண்கள் பயத்தினால் பின்னடைந்து விட்டனர். அம்மா சம்மதிக்கவில்லை. “ஏதோ அன்றன்றாடு வாய்க்கு வயித்துக்கு குடிக்கிற ‘கஞ்சித் தண்ணியைக் கெடுத்துப் போடவேண்டாம்" என எனக்கு அறிவுரை சொல்லியும் பயமுறுத்தினார்.
நான் எதற்குமே கிறுங்கவில்லை.
நீண்ட நாட்களாக ஒரு தொழிலுக்கு நடந்த அயோக்கியத் தனத்தைத் தட்டிக் கேட்க வேண்டுமெனத் துணிந்து செயல்பட்டேன். இது அவசரத்தில் எடுத்த முடிவுமல்ல. நீண்ட நாட்களாக என் நெஞ்சில் வெந்து கொண்டிருந்த வெக்காரத்தைத் தணிக்கும் செயலுக்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன்.
நடுவே யாழ்ப்பாண ரெயில்வே ஸ்டேசன். கடந்தால் அத்தியடி. ரெயில் தண்டவாளத்தினூடாக மூடையுடன் கடந்து சென்று கம்பனியை அடைந்தேன். பக்கத்தவன் என்கின்ற முறையில் இடம் ஏற்கனவே தெரிந்திருந்தது.
வாசலில் ஒருவருமில்லை. நேரடியாக மனேஜர் என்று எழுதப்பட்ட அறைக்குள் நுழைந்து சாக்குப் பாரத்தை இறக்கி வைத்தேன்.
கதிரையில் இருந்தவர் என்னை அண்ணாந்து பார்த்தார், “என்ன விஷயம்?” எனக் கேட்டார். அவர்தான் மனேஜர்.
நான் நடந்த சம்பவங்களைக் கோர்வையாகச் சோன்னேன்."கப்பம்" அறவிடுவதையும் சொல்லி வைத்தேன். நான் என் கைப்படத் தயாரித்த மூடிகளை எடுத்து "இதில் என்ன பிழை இருக்கிறது?" எனக் கேட்டு வைத்தேன்.
மனேஜர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். கொப்பியொன்றில் ஏதோ எழுதினார்.
"சாக்கு மூட்டையை மூலையோரம் வைச்சிட்டுப் போ, தம்பி” என்றார். “எண்ணிக் கணக்கிலை பதிஞ்சுவைப்போம்” என்றாார்.
அடுத்த சனிக்கிழமை கணக்குத் தீர்க்க அண்ணன் சொக்கலிங்கம் வரவேயில்லை. வேறொருவர் அவருக்காக வந்திருந்தார். அவரது பெயர் மதிமுகராஜா,
"வளரும் வாழ்க்கை”
1 a

Page 10
ரிெதழலில் ODIIT ழும்
 ைமனித
திரைச்சீலையை ஒதுக்கி விட்டுக்கொண்டு வெளியே பார்வையைச் செலுத்தினார் வேங்கடகைலாச சந்திர சேகரமூர்த்தி. வானம் ԼDւ վւն மந்தாரமுமாக நிறைசூல் கொண்டி ருந்தது. கொழும்பின் கொங்கிறீற் காட்டில் உயர் பாதுகாப்பு 6:த்தில் உயர்ந்த கட்டிடமொன்றில் பதினேழா வது மாடியில் அமைந்திருந்தது அவருடைய செயலகம். அம்மாவும் ஐயாவும் வைத்த அழகிய பெயரைக் குறுகத்தறித்து, மினுக்கிய பித்தளைத் தக டொன்றில் வி.கே. எஸ். மூர்த்தி என்று பொறித்துவைத்திருந்தது நிர் வாகம், முழுப்பெயரையும் எழுதினால் அவருடைய செயலகச் சுவரின் நீளம் போதாமலிருக்குமென நிர்வாகம் கருதியிருக்கலாம்.
கீழே 3ஈசக்கடை தெரிந்தது. பள்ளிக்கூட நாட்களில் சிறுவர்களும் சிறுமிகளுமாய் கல்விச் சுற்றுலா வந்தி ருந்தபோது பெரியசேர் சிலிங்கோ விற்குக் கூட்டிவந்து பதினான்காவது மாடியில் அமைந்திருந்த ஆகாசக் கடையைக் காட்டினார். மாடிவீடுகளே
EZ
- ராஜ பூரீகா ந்தன்
இல்லாதிருந்த வதிரிக் குக்கிராமச்
சிறிசுகள் விழிகள் விரிய அந்த அதிசயத்தைப் பார்த்து வியந்தன. எமது நாட்டிலேயே மிகவும் உயரமான கட்டிடம் இதுதானென்று பெரிய சேர் சொன்னார். ‘அப்படியெண்டால் சேர், இப்பிதக் கட்டினவைக்கும் பெரி: கையளும், பெரிய விரல்களும் இருக் குமோ?’ என்று கேட்டதையும் பெரிய சேர் ஆதரவாகத் தலையை வருடிய படியே “இல்லைக் குஞ்சு, அவையளும் எங்களை மாதிரி ஆக்கள்தான். 9696) யளுக்கும் எங்கடையளவான கைகளும் விரல்களும்தான். ஆனால் அவைய ளின்ரை மனசுகள் பெரிசு, சிந்தனை கள் பெரிசு. நீங்களும் இப்படிப் பெரிய மனசுள்ள மகரிசராக 6.6my வேணும்” என்றார். “நா60 இவையளை விடப் பெரிய மனசுள்ளவனாக வளரு வேன் சேர்” தான் அன்று கூறிய வார்த்தைகள் இன்றும் அவருடைய நினைவுத் தடத்தில் இருக்கின்றன.
சிலிங்கோவின் அருகில் வானளாவ
முளைத்துவிட்ட மூன்று கட்டிடங்கள் சிலிங்கோவைச் சிறிதாக்கிவிட்டன.
 
 
 
 

அதன் உச்சியிலிருந்த ஆகாசக் கடை புகை படிந்து, கரி மண்டி, மனித சஞ்சாரமற்றுத் தெரிகிறது. 1995இன் முதல் மாதத்துக் கடைசிநாள் நிகழ்வு கள் இதயம் ஒரு கணம் உறைந்து மீண்டும் மெல்லத் துடிக்கிறது . ‘இவர்களுடைய மனசு எப்படிப் பட்டது?" பல்கூற்றுப் பிளவடைந்த அக்கேள்வி மீண்டும் தலைதூக்கி, பதிலறியாமல் மனதுக்குள் மெல்ல அடங்குகிறது.
பேர்சி கொத்தலாவலை கூறிய சம்பவமொன்று நினைவிற்கு வந்தது. பேர்சி கட்டைப் பிரமச்சாரி, வானொலி தொழில்நுட்பவியலாளர், ஹோசி மின்னின் அழைப்பின்பேரில் வியட் நாமிற்குச் சென்று புரட்சியின் வெற்றி விழாவிற் பங்குபற்றித் திரும்பியவர். ஹனோயில் சந்தித்த அமெரிக்கச் சிப்பாய் ஜோர்ஜ் மில்ரனின் அனு பவமொன்றைச் சொன்னார். வியட் நாமில் குடியிருப்பை அண் டிய கோதுமை வயல்வெளி. அதனை ஊடறுத்துச் செல்லும் நெடுஞ் சாலைக்கு அப்பால் வியட்நாமிய விடுதலைப் போராளிகள் வயல் களுக்குள் பதுங்கியிருந்து குடியிருப்புப் பகுதியிலிருந்த அமெரிக்கச் சிப்பாய் களை நோக்கி வேட்டு மழை பொழிந்துகொண்டிருந்தார்கள். இரு தரப்பிலும் இடைவிடாது வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அருகிலிருந்த குடி யிருப்பொன்றிலிருந்து அழகிய பெண் குழந்தையொன்று பெரியதொரு போனிக்காவை அணைத்துப் பிடித் துக்கொண்டு நெடுஞ்சாலையில் ஒடி வந்தது. சாலையின் மறுபுறத்தே பதுங் கியிருந்த வியட்நாமிய விடுதலைப் போராளி இளைஞன், பாய்ந்து வந்து அந்த நீலக்கண் குழந்தையை வாரி
யெடுத்துக்கொண்டு குனிந்தோ டினான். அமெரிக்கச் சிப்பாயொரு வனின் வேட் டொன்று அந்த விடுதலைப் போராளியின் உயிரைக் குடித்தது, குழந்தை உயிர் பிழைத்தது. மனித நேயத்தின் கொடுமுடியான அந்த விடுதலைப் போராளி எதிரிகளின் இதயத்திற்கூட இன்றும் வாழ்கிறான். ஜோர்ஜ் மில்ரன் இந்த நிகழ்வினை'யுத்த பூமியில் ஒரு மனித தேவதை” என்ற தலைப்பில் குறும் படமாகத் தயாரித்துள்ளார்.
இன்ரகொம்மின் இனிய சிணுங்கல் மூர்த்தியின் கவனத்தைத் திருப்பியது. மனித வள முகாமையாளர் ஒகஸ்ரஸ் சில்வா ஆங்கிலத்தில் கரகரத்தார். "மிஸ்ரர் மூர்த்தி, கிடைத்த விண்ணப் பங்களில் மிகத் தகுதிவாய்ந்த மூவ ரைத் தெரிந்தனுப்புகிறேன். இரண்டு தமிழ்ப் பிள்ளைகளும் மிகச் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார்கள். மூன்றாவது பிள்ளை முஸ்லிம் பிள்ளை ஆங்கிலம் சற்று இடறுகிறது. எப்ப டியோ, உங்கள் வேலைக்குப் பொருத் தமான ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்
அதிகாரத்தை உங்களுக்களிக்கிறேன்.
15
இது சம்பந்தமான கோவைகளை உங்களிடம் அனுப்பிவைக்கிறேன். என்னால் தெரிவுசெய்யப்பட்ட மூவ ரும் வரவேற்பறையில் இருக்கிறார் கள். உங்கள் முயற்சிகள் வெற்றி யளிக் கட்டும் ,” இன் ர கொம் மெளனிக்க செயலகச் சேவகர் கோவையொன்றைக் கொண்டுவந்து மூர்த்தியிடம் கொடுத்தார்.
முதலாவது பெயர் குமுதினி. குட் செப்பேர்ட் கொன்வென்றில் க. பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி, செயலாளர் கற்கை நெறியில்

Page 11
உயர் சித்தி, ஐ. டீ.பீ.எம். மில் .
டிப்ளோமா இன் கொம்யூட்டர் ஸ்ரடீ,
வெஸ்ரேன் ஸ்கூல் ஒப் ஸ்பீசு அன்ட் டிராமா சான்றிதழ்கள் இத்தியாதி, இத்தியாதி. ஒகஸ் ரஸ் சில்வா நேர்முகப் பரீட்சையில் அதிக புள்ளி களைத் தாராளமாக வழங்கியுள்ளார்.
இரண்டாவது பெயர் ஹிப்பொலிதா முருகவேள் . ஜி. ஏ. கியூ. சித்தி, பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பு மாணவி. தந்தையார் அரசின் உயர்மட்டத்தில் செல்வாக்கு மிகுந்தவர் என்பதற்குச் சான்றுபகன்றது பிரதியமைச்சரின் சான்றிதழ். கறுவாக்காடு பிளவர் வீதி மகளிர் கல்லூரி தட - கள விளை யாட்டுப் போட்டிகளில், தேசிய மட்டத்திலான நீச்சற் போட்டிகளில் ஏராளமான சான்றிதழ்கள். மனிதவள முகாமையாளர் தந்தையாரின் பெய ளின் கீழ் நீலப் பென் சிலால் கோடிட்டுள்ளார்.
மூன்றாவது பெயர் ரஹீமா முஹம் மத் யாழ்/இந்து மகளிர் கல்லூரியிற் கல்விகற்று தமிழ் மொழியில் அதி உன்னத சித்தி, தமிழ் தட்டெழுத்தில் சிறப்புச் சித்தி, உயர்தரம் படித் துள்ளார், பரீட்சைக்குத் தோற்ற வில்லை. கொழும்பு மத்திய சிறப்பு அங்காடித் தொகுதியில் லங்கேஸியா அச்சகத்தில் தமிழ் ரைப்செற்றராகத் தற்காலிகப் பணி.
மூர்த்தி கோவையினை மூடினார். அவருக்குத் தேவை சுருக்கெழுத்துத் தெரிந்த தமிழ் தட்டெழுத்தாளர். அரச கரும மொழி ஆணையாளரின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி சகல சுற்று நிருபங்களிலும் கட்டாயம்
சிங்களத்திலும் தமிழிலும் தேவைப் படின் ஆங்கிலத்திலும் வெளியிடப் படவேண்டும். மீறுவது அரச கரும மொழிச் சட்டவிதிகளின்படி தண்ட னைக்குரிய குற்றம். ஆனால் இன்று வரை ஓர் ஒணான்கூட இத்தண்ட னையைப் பெற்றதாக இலங்கை
வரலாற்றில் சான்றேதும் இல்லை.
மூர்த்தியின் மேசையில் எலக் ரோனிக் அடிமைகள் ஒரமாக வீற்றி ருந்தன. பஸிமைல் ஏதோவொரு செய்தியை அச்சிட்ட வெள்ளைத் தாளைத் துப்பியது. டிக்ராபோன் எடுத்து சிவப்புப் பொத்தானை அழுத்தி காலஞ்சென்ற கோமல் சுவாமி நாதனின் காலஞ்சென்ற சுபமங்க ளாவிலிருந்து சிறிய பந்தியொன்றை மெதுவாக வாசித்தார். குட்டி எலக் ரோனிக் அடிமை அமைதியாக ஒலிப் பதிவு செய்தது. றிவைன்ட் செய்து கொண்டே அழைப்பு மணியை அழுத்தி சேவகரை அழைத்து வரவே ற்பறையில் காத்திருந்த மூவரையும் அழைத்துவரச் சொன்னார். வந்தோரை அமரவைத்து பெயர்களைக் கேட்டறிந்து மூவ ருக்கும் சுருக்கெழுத்துத் தாள்களைக் கொடுத்தார். குமுதினியும் ஹிப்பொ லிதாவும் நவீன கைப்பைகளைத் திறந்து கிளச் பென்சில்களை எடுத்து காரீயக் கூர்களை வெளியே தள்ளி ஆயத்தமானார்கள் ரஹீமாவிடம் கைப்பை இருக்கவில்லை. மூர்த்தி தனது றிசெப்ராக்கிலிருந்து ‘கிறேற் வோல் சீனத்து பென்சின்ல எடுத்து பென்ரோச் பற்றரியில் இயங்கும் திரு வியினுள் முனையைச் செலுத்தியதும் அது தன்னியக்கம்பெற்று பென்சிலைக் கூராக்கியது. டிக்ராபோனை மூவ ருக்கும் மத்தியில் வைத்து "பிளே’
16

பொத்தானை அழுத்தினார். மூவரும் குனிந்து ஒலிவடிவத்தை சுருக் கெழுத்துக் குறியீட்டுக் கோடு களாக்கிக் கொண்டிருந்தார்கள்.
மூர்த்தி கண்களால் பெண்களை அளந்தார். குமுதினி மாநிறம், செழு மையான கவர்ச்சிகரமான குழந்தை முகம், நேர்த்தியாக உடையணிந் திருந்தாள். ஹிப்பொலிதா எயர் ஹொஸ் ரஸ் போன்ற வசீகரத் தோற்றம். இடதுகால் மேல் வலது காலைப் போட்டுக்கொண்டு அலட் சியமாக அமர்ந்திருந்தாள். ரஹீமா அடக்கமான சல்வார் கமீஸ், மெல்லிய உடல்வாகு, துடைத்துதெடுத்தது போன்ற முகம். அதில் ஆழமான சோகம் கவிந்திருப்பதுபோற் தெரிந் 另莎l·
ரைப்பிங் பூலில் இரண்டு தமிழ் தட்டச்சு இயந்திரங்களே இருந்தன. குமுதினியையும் ஹிப்பொலிதாவை யும் அங்கேயனுப்பினார். தனது பெரிய எலக்ரோனிக் அடிமையின் முன் - கொம்பியூட்டரின் முன் ரஹீமாவை அமரச் செய்தார். சுழற்கதிரையின் நுனியில் பட்டும்படாததுமாக அமர்ந் தாள்.
*சேர், இதிலை 'வேர்ட்ஸ்" கிடக்கா?” மெளஸ் பாட்டிலிருந்த மெளஸில் விரல்களைப் பதித்தவள் *சேர், இந்த மெளசிலை இரண்டு பொத்தான்கள், நான் வேலைசெய்யிற இடத்திலை ஒரு பொத்தான் மட்டுந் தான்” என்றாள்.
‘ஓ! இது இரட்டைத் தலை எலி. வலது பக்கப் பொத்தானை நீங்கள் பாவிக்கலாம். வின்டோ 95இல் “வேர்ட்ஸ்’ இருக்கிறது. ”
17
கீபோட்டில் உரிய பொத்தான்களை அழுத்திக் கட்டளை பிறப்பித்தாள். வின்டோ - 95இல் “வேர்ட்ஸ்" ஐகனைக் கிளிக் செய்தாள். பைலைத் திறந்து பொன்ற்ஸ்களை நோக்கினாள். அண் மைக் கால கனேடிய பொன்ற்ஸ் - பூபாளம், கார்முகில், கிழவி, பிச்சைக் காரி, ரகசியம், சிங்காரம், சிரிப்பு, சொறிநாய், குஷ்பு வினோதமாகப் பெயரிட்டிருந்தார்கள், சிங்காரம் அழ கிய பொன்ற், அதனைத் தெரிவு செய்தாள். பைலுக்கு 'வாணி’ என்று பெயரிட்டு சுருக்கெழுத்க் குறிப்பை வாசிப்புத் தாங்கியிற் பொருத்தி வேலையை ஆரம்பித்தாள். விசைப் பலகையில் தளிர் விரல்கள் நர்த்தனம் புரிந்தன. "பிறின்ற் கட்டளையிட்டு ஒ.கேயைக் கிளிக் செய்ததும் 600 டீ.பீ. ஐ. லேஸர் பிறின் ரறில் காட்டுப்பூச்சிகள் கீறீச்சிடும் சத்தத் துடன் அச்சிடப்பட்ட வெள்ளைத்தாள் எமது வேகத்தில் வெளியே வந்தது. உருவியெடுத்து எழுந்து நின்று இரு கைகளாலும் மூர்த்தியிடம் பணிவாகக் கொடுத்தாள். குமுதினியும் ஹிப் பொலிதாவும் வந்தார்கள். மூவரையும் வரவேற்பறையில் இருக்கச் சொல்லி விட்டு மூர்த்தி தட்டச்சிட்டதாள்களை நோக்கினார்.
குமுதினி அடிக்கோடிட்டிருந்த தலைப்பு “ஹோமல் சுவாமினாதனின் சுவமண்கலா”. உள்ளே வரிக்கு வரி கொழும்பு டமில் கொஞ்சியது. ஹிப்பொலிதா பரவாயில்லை. ஆயி னும் ரகர றகர , லகர ழகர பேதங்கள் காணப்பட்டன. ரஹீமாவின் தாள் பூரண திருப்திதந்தது. தனது குறிப்பு டன் கோவையை ஒகஸ்ரஸ் சில்வா விடம் அனுப்பிவிட்டு குமுதினியையும் ஹிப்பொலிதாவையும் அழைத்து

Page 12
முடிவுக்கூறி, நன்றிக்கூறி அனுப்பி வைத்தார்.
சேவகர் ரஹீமாவை உள்ளே அழைத்து வந்தார்.
ரஹீமா, நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். எனது பாராட் டுக்கள்” என்றவாறே வலது கரத்தை அவளைநோக்கி கைகுலுக்க நீட்டி னார். ரஹீமா தனது கரங்களைக் குவித்து “உங்களுக்குத்தான் நான்
நன்றி சொல்ல வேணும் சேர்” என்றாள்.
“இன்னும் அரை மணி நேரத்திலை நியமனக் கடிதம் தயாராகிவிடும். அது வரைக்கும் என்னோடை இருக்கலாம். அது சரி, நீங்கள் எப்ப யாழ்ப்பாணத் திலிருந்து கொழும்புக்கு வந்தியள்?”
"நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வரேல்லை சேர், துரத்தப்பட்டம்.”
‘எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுவியளோ?”
‘தொண்ணுாறாம் ஆண்டு ஒக்ரோபர் 30 ஆந்தேதி காலமை வெள்ளென 5.30 மணிக்கு சுபஹ் தொழுகையை முடிச்சுக்கொண்டு உம்மா அடுப்படிக்கை தேத்தண்ணி கலக்கினா. எல்லா முஸ்லீம் ஆம்பி ளையளையும் ஒஸ்மானியா கொலிஜ் மைதானத்திலை காலமை 6.00 மணிக்கு கூடும் படி ஒலிப் பெருக்கியிலை எனவுன்ஸ் பண்ணிக் கொண்டு போச்சினம். எங்கடை வீட்டிலை ஆம்பிளையள் இல்லை. எனக்குச் சின்ன வயசிலை வாப்பா செத்துப்போனார். அண்ணா சவூதி யிலை, நாங்கள் பொம்பிளைப் பிள்ளையள் நாலுபேர். ஆனால் அண்
டைக்கு பெரியக்கா வீட்டிலில்லை. அவ மாவனலல்யிைல் படிப்பிக்கப் GBuTuiuu` LrT°
"அப்ப உங்கடை வீட்டிலையிருந்து ஒருதரும் ஒஸ்மானியா மைதானத்
துக்குப் போகேல்லையோ?”.
18
*இல்லை சேர், நான் போற னெண்டு வெளிக்கிட்டன். உம்மா விடேல்லை”
**ஆங்கை என்ன நடந்ததாம்"
கையிலை எடுக்கக்கூடிய எல்லாத் தையும் எடுத்துக்கொண்டு இரண்டு மணித்தியாலத்திற்குள்ளை யாழ்ப் பானத்தைவிட்டு எங்கையெண்டாலும் ஓடச்சொன்னவையாம்".
*நீங்கள் என்ன செய்தியள்?
*முதல்லை என்ன செய்யிற தெண் டு ஒகுத்தருக்கும் தெரி யேல்லை. நான் எல்லாற்ற சேட்டி பிக்கற்றுகளையும் வீட்டுறுதி, காணி யுறுதிகளையும் பெட்டகத்துக் கையிலி ருந்து எடுத்து பொலித்தீன் பேப்பரிலை சுத்தினன். சின்னக்கா அவசர அவசர டிாக ஒவ்வொருத்தற்ரை உடுப்புக் களிலையும் ஒண்டிரண்டை எடுத்து மூண்டு சின்ன ரவலிங் பாக்கிலை திணிச்சா, உம்மா வீட்டையிருந்த காசுகளையும், எல்லாவற்றையும் நகை யளையும் எடுத்து தன் ரை உள் பாவாடைப் பொக்கற்றிலை வைத்து அவசரமாக மூடித் தைச்சா, மற்றக்கா சின்ன உரப்பையில கொஞ்சம் சாப்பாட்டுச் சாமானும் பிளாஸ்ரிக் கானிலை தண்ணியும் எடுத்துக் கொண்டா. சாச்சா வீட்டை ரண்டு லொறிநிண்டது. அங்கை போகப் புறப்பட்டம். வீட்டைப்பூட்டித் திறப்பை

எடுத்த உம்மா திடீரெண்டு என்ன நினைச்சாவோ தெரியாது, திறப்பைப் போட்டுக் கதவை அகலத் திறந்து விட்டு ஓவென்று அழுதபடி திரும்பிப் பார்க்காமல் நடந்தா. எங்கடை வீட்டைக் கடைசியாகப் பார்த்துப் போட்டு நானும் நடந்தன், ஆனால் எனக்கு அழுகை வரேல்லை, நெஞ்சை ஏதோ அடைக்கிறமாதிரி இருந்தது.”
மூர்த்தியின் கண்கள் பனித்தன. கண்ணாடியைக் கழற்றிவிட்டு கைக் குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
"அப்பிடியே நேரே கொழும்புக்கு வந்திட்டியளோ?”
“இல்லை சேர், எங்கடையாக்கள் இருந்த இடமெல்லாத்தையுஞ்சுத்தி செக் பொயின்றுகள். ஒரு ஈ காகம் தப்பேலாது. ஐந்து சந்தி என்ற இடத்திலை எங்களை மறிச்சினம். பெட்டையள் பொம்பிளையளையும் பொடியங்கள் ஆம்பிளையளையும் சோதிச்சினம். என்ரை பொலித்தீன் சுருளுக்கையிருந்த உறுதிகள் எல்லாம் எடுக்கப்பட்டன, மறைச்சுவச்ச, மறைக் காமற் போட்டிருந்த நகைகளெல்லாம் குவிக்கப்பட்டன, கையிலும் பையிலு மிருந்த பணமெல்லாம்வாங்கப்பட்டன. குடும்பமொண்டுக்கு நாலாயிரம் ரூபா வீதம் தரப்பட்டது. லட்சக்கணக்கிலை காசு கொண்டந்தவைகூட எல்லாத் தையும் குடுத்துப்போட்டு அவைதந்த, நாலாயிரத்தைக் கைநீட்டி வாங்கிச் சினம். சாச்சாவின்ரை லொரியிலை அடைஞ் சு கொண்டு காட்டுப் பாதையாலை நாச்சிக்குடாவுக்கு வந்து ஒரு கொட்டிற் பள்ளிக் கூடத்திலை கொஞ்சநேரம் தங்கிப்
9
போட்டு அண்டிரவே மதவாச்சிக்கு வந்து சாச்சான்ரை கூட்டாளி அமீன் நானா வீட்டிலை சாப்பிட்டுவிட்டுப் படுத்தம். அடுத்தநாள் காலையிலை ரயிலெடுத்துக் கொழும்பு வந்து மாவனல்லையிலை படிப்பிச்சுக் கொண் டிருந்த பெரியக்கா தங்கியிருந்த வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தம்.”
ரஹீமா நிமிர்ந்து பார்த்தாள், மூர்த்தி விம்மிக்கொண்டிருந்தார். அவருடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக,
*சேர், நீங்கள் எந்த இடம்?"
*வடமாராட்சிப் பனங்கொட்டை”
*ஊரெது சேர்?"
*வதிரி, தெரியுமா?"
“வந்ததில்லை, ஆனாக் கேள்விப் பட்டிருக்கிறன்”
*சொல்லிக்கொள்ளப் பெரிசா அங்கை ஒண்டுமில்லை. நிறையப் பனையள், வடக்குத் தொங்கல்லை ஒரு வேதப் பள்ளி, மேற்குப்பக்கத்தில் ஒரு சைவப்பள்ளி. ஊருக்கு நடுவிலை ஒரு பிள்ளையார் கோவில் அவ் வளவுதான். முந்தியொரு கூட்டுறவுச் சப்பாத்துத் தொழிற்சாலை இருந்தது. இப்ப கனகாலமா அந்தக் கட்டிடம் மட்டுந்தான் வெறுமையாக்கிடக்கு. எண்டாலும் உலகத்திலை எனக்கு மிகவும் பிடிச்ச இடம் அதுதான். ஏனெண்டால் அங்கைதான் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே.”
“எனக்கும் அப்பிடித்தான் சேர்; எப்ப யாழ்ப்பாணம் போகலாமெண்டு தவிப்பாக்கிடக்கு. எங்கடை வீட்டு

Page 13
முத்தத்திலை படுத்து உருள வேணும் போலை கிடக் கு. சைக் கிளை எடுத்துக்கொண்டு வாணியையும், வாசுகியையும் கூட்டிக்கொண்டு நாவலர் வீதியாலைபோய் மானிப்பாய் வீதியிலையேறி, பிரப்பங்குளத்தாலை வந்து ஹிண்டு லேடீஸிலை எங்கடை ஜனதா ரீச்சரோடை நாள் முழுக்கக் கதைச்சுக் கொண்டிருக்கவேணும்.” இப்பொழுது, அவளுடைய கண்கள் பனித்தன.
அவளுள் எரிந்த சுவாலை முர்த்தியைத் தகித்தது. சுழற் கதிரையிலிருந்து எழுந்து மேசையைச் சுற்றிவந்து ரஹீமாவின் தலையை மூடியிருந்த முக்காட்டின்மீது வலது கரத்தை வைத்து “எனக்கு ரெண்டு பெம்பிளைப்பிள்ளையள் இருக்கினம்., அந்தக் கிளாஸ் பாட்டில்லை இருக்கிற போட்டோக்கள் அவையின்ரைதான். தாயோடை ஊரிலையிருந்து படிக்கினம். ஒவ்வொருநாளும் அது களைப் பார்த்துக் கொஞ்சிப் போட்டுத் தான் வேலையைத் தொடங்குவன். நேரிலை பார்த்து ஐஞ்சு வருசமாச்சு. இண்டையிலிருந்து எனக்கு மூண்டு பெம்பிளைப் பிள்ளையஸ், ” என்றார்.
ரஹீமா விம்மி வெடித்தாள். வெந்து கொதித்த இதயம் வெம்மை தணிந்து ஆறிக்குளிர்ந்தது. திடீரென எழுந்து அவருடைய கால்களைத் தொட்டு வணங்கினாள். மூர்த்தி அவளுடைய தோள்களைப் பற்றித் தூக்கினார். அவளுடைய முக்காட்டை சரிசெய்து கன்னங்களில் கோடிட்டிருந்த கண்ணிரை தனது வெற்றுக்கரங்களால் வாஞ்சையுடன் துடைத்துவிட்டார்.
விதிர்த்துப்போன
சுழற்கதிரையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஒய்ந்தார். இதயம் கனதி யிழந்து மென்பஞ்சாகியிருந்தது. மனித வள முகாமையாளர் கஸ்ரஸ் சில்வா ஒப்பமிட்டு சேவகர்மூலம் கொடுத்தனுப்பிய நியமனக் கடிதத்தை ரஹீமாவை நோக்கி நீட்டினார். அவள் எழுந்து நின்று இரு கரங்களையும் நீட்டினாள். அவர் பதறியெழுந்து இரு கரங்களாலும் கொடுத்தார், நன்றி கூறிப் பெற்றுக்கொண்டாள்.
* ஒக்ரோபர் முதலாந் திகதியிலிருந்து நீங்கள் வேலைக்கு
6) Jourt to."
* ஒக்ரோபர் முப்பதாந் திகதி . . . ஒக்ரோபர் முதலாந் திகதி என்ரை வாழ்க்கையிலை முக்கியமான ரண்டு
திகதியள்."
“எனக்கும் ஒக்ரோபரிலை முக்கி யமான ரண்டு திகதியள் இருக்கு. மூத்த மகள் ஒக்ரோபர் ரண்டாந் திகதியும் சின்னமகள் ஒக்ரோபர் இருபத்தி நாலாம் திகதியும் பிறந்தவை. ஐஞ்சு வருசத்துக்கு முந்தி ரண்டு குழந்தைகளை விட்டிட்டு வந்தன் . இனிப் போய் ரண்டு குமரியளைத்தான் பார்க்கட்போறன்.”
“நீங்கள் போகேக்கை நானும் வாறன் சேர்”
‘கட்டாயம், கட்டாயம். வலு கெதியிலை நாங்கள் ரண்டுபேரும் சேர்ந்த யாழ்ப்பாணம் போவமம்மா."
●
2O

'மனிதன் எங்கு அடிமை கொள்ளப்படுகின்றானோ, மனித குலம் எங்கு ஒடுக்கப்படுகின்றதோ துன்புறுத்தப்படுகின்றதோ, தனி மனிதன் எங்கு பாதிக்கப்படுகின்றானோ, அதற்கு எதிராகக் குரல் கொடுப்பது மாத்திரமல்ல, தனது பேனாவின் முழு வல்லமையையும் கொண்டு போராடும் எழுத்தாளனே உண்மையில் மனித நேயமிக்க எழுத்தாளனாக மக்கள் மததியில் பிரகாசிப்பான். அணுகுண்டு ஜப்பானில் வீசப்பட்டது. இன்று அதே அணுகுண்டு வலுவிழந்து விட்டது. ஜப்பானிய மக்களின் தளராத உழைப்பின் காரணத்தால் அந்த அணுகுண்டு ஒதுக்கப்பட்டு உழைப்பு மேலோங்கியுள்ளது. இந்த அணுகுண்டைவிட, மிகப் பெரிய சக்தி மிக்கது எழுத்தாளனின் பேனா முனை”.
சமீபத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை வந்திருந்த மலையகத்தின் பழம் பெரும் கல்விமானும் எழுத்தாளருமான திரு.இரா.சிவலிங்கம் அவர்கள் குறிப்பிட்டார்.
கொழும்பிற்கு வருகை தந்துள்ள அன்னாருக்கு "மல்லிகை பந்தல்' சார்பாக வரவேற்பு உபசாரம் ஒன்று நடத்தது. ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள "துரைவி" பதிப்பக மேல் மாடியில் நடைபெற்ற இந்த இலக்கியக் கலந்துரையாடலில் ஏராளமான இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தது குறிப்பிடக் கூடிய ஒன்று.
'எண்ணங்கள் பல வடிவங்களில் கவிதையாக, சிறுகதையாக, நாவலாக, ஒவியமாக, சிற்பமாக ஒரு படைப்பாளியிடமிருந்து வெளிவருகின்றன. கலை உணர்வும். இலக்கியத்தின் உள்ளடக்கமும் மானுட சமுதாயத்ததை மாற்றியமைக்கும் ஊடகமென்றால் அது மிகையாகாது. மக்கள்தான் சரித்திரத்தைச் சிருஷ்டிக்கின்றனர். மக்களின் சரித்திரம்தான் உண்மையான வரலாற்று ஆவணமாகத் திகழப் போகின்றது. இதைத் தமது எழுத்தாளர் மூலம் வெளிப்படுத்துபவர்களே
— LIDIT GÓ —
21

Page 14
மக்கள் எழுத்தாளர்கள் ஆவர். இந்த நாட்டிலுள்ள பல்வேறு இன இளைஞர்கள் இலக்கியத்துறையில் சாதனை படைத்து வருகின்றனர். மலையக இளைஞர்களும் இது போன்ற இலக்கியச் சாதனை படைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர். "மல்லிகைப் பந்தல்" ஏற்பாடு செய்துள்ள இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டதுடன் பல நண்பர்களை நேரில் பார்த்து அவர்களுடன் நேருக்கு நேர் சிரித்துக் கதைத்ததிலும் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.
இந்த இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்த மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அனைவரையும் வரவேற்று உரையாற்றுகையில், "1983க்கு முன்னர் மலையகத்தில் மூன்று நம்பிக்கை நட்சத்திரங்கள் சுடர்விட்டுப் பிரகாசித்தனர். அவர்கள் முறையே, இரா.சிவலிங்கம், திருச்செந்தூரன், மு.நித்தியானந்தன் ஆகியோராகும். இந்த நம்பிக்கைக்குரிய மூன்று நம்பிக்கை நட்சத்திரங்களும் மலையகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து விட்டனர். இது மலையகத்தை நேசிக்கும் எம்மைப் போன்றவர்களுக்கு வேதயைத்தான் தருகின்றது. நண்பர் சிவலிங்கத்தின் வருகை எமக்கெல்லாம் மகிழ்ச்சித்தருகின்றது. மலையக மக்களுக்கும் இலக்கியத்திற்கும் சேவையாற்றுவதற்கும் நண்பர் திரும்பவும் மலையகம் திரும்ப வேண்டும். இலங்கை எழுத்தாளர் எழுதி வெளியிடும் நூல்கள் பற்றித் தமிழகத்தில் கணிசமான சுவைஞர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே தனது தமிழகத் தொடர்பைப் பயன்படுத்தி நண்பர் சிவலிங்கம் தனது பிரதேசத்தில் 'ஈழத்துப் புத்தகக் கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் இதில் வியாபார நோக்கில்லை. ஒரு தோழமை கலந்த உறவு இலக்கியத் துறையில் பலப்பட வேண்டும். இலங்கைத் தமிழனின் கலைப் படைப்புக்களை உலகத் தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது அபிலாஷை" என்றார் தொடர்ந்து
- இந்த இனிய மாலை நேரத்தில் தனது சகோதர அழைப்பை ஏற்று இங்கு பலர் வருகை தந்துள்ளீர்கள். மெத்த மகிழ்ச்சி. குறுகிய நேர முன் அறிவிப்புக் காரணமாக, விரிவாக இலக்கிய நண்பர்களுக்குத் தகவல் தர இயலவில்லை. இருந்தும் இத்தனை பெருவாரியான இலக்கிய நெஞ்சங்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டதற்கு மல்லிகைப் பந்தல் சார்பாக நன்றி கூறுகின்றேன்" என்றார்.
பிரப" எழுத்தாளர் தெளிவத்த ஜோசப், பழம் பெரும் கவிஞர் சக்தி
பாலையா, "ழுத்தாளர் அந்தனி ஜீவா ஆகியோர் கருத்துரை கூறினர். ‘துரைவி' வெளியீட்டகத்தின் பதிப்பாளர் நன்றி கூறினார்.
22

மா லைவேளை, வழமைபோல் அந்த சந்திக்கு வாடிக்கையாளர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். என்றுமே
படிகள் ‘கைவாறு அடிக்கக் கை
கொடுக்கும்.
-நைன்டியில் வந்த நிஸ்ரீன் நண்பர்களைக் கண்டு புன்சிரிப்போடு நிறுத்தினான்.
é é.
ஆ. . . வாங்க ஹாஜி" வரவேற்பு பிரமாதமாக இருந்தது.
அவன் மக்காவுக்குப் போகாத ஹாஜி. ஏத சிரித்துச் சமாளித்துக் கொண்டான்.
பேச்சு . . . கிண்டல். . . சிரிப்பு. . . ஏதேதோவெல்லாம் அரங்கேறிய போதிலும் நிஸ்ரீனுக்கு எதுவுமே ஓடவில்லை.
அவன் .. பெயா டெக்ஸ் உரிமையாளரின் இளையமகன்.
அவனது வாப்பா முப்பது வருஷத்துக்கு முந்தியே மக்காவுக்குப் போய்வந்தவர். வருஷம் இரண்டொ ருவரே தர்தீபாகப் போய் வரும் காலம். இப்பொழுதெல்லாம் தற்செயலாகத் தடுக்கி விழுந்தாலும் ஒரு ஹாஜியின் மேல் விழும் அளவுக்கு. . .
23
இந்த அலையில் வருடம் ஒருவ ராக தன் குடும்பத்தினரை ஹஜ்ஜுக்கு அனுப்பும் கைங்கரியத்தில் திட்டமிட்டு இறங்கினார் அத்துலதீப்ஹாஜி. இதற்காக மாதாமாதம் பணம்கட்டும் } சீட்டொன்றில் கூட
திக்குவல்லை - கமால்
இணைந்திருந்தார்.
எப்போதோதனியாகச் சென்றவர் இரண்டாந்தடவையாக மனைவியைக் கூட்டிச் சென்றார் . அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மகனாக அனுப்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் கடைசியாக நிற்பவன்
தான் நிஸ்ரீன். இது நண்பர்கள்
மட்டுமல்ல ஊரே அறிந்த விஷயம்.
“மசான் எந்த ஏஜென்ஸியாலயன் போற ?"
பேச்சு எங்கெங்கோ சென்று திரும்பி, மீண்டும் ஆரம்பித்த
இடத்துக்கே வந்தது அவனுக்கு
சங்கடமாக இருந்து,
“எத்தின பேரு வாரன். வாப்ப இன்னம் முடிவெடுக்கல்ல மசான்”
உண்மைதான். ட்ரவல் ஏஜென்ஸி களின் உள்ளுர் ஏஜென்டுகள் ஆள் பிடிப்பதற்காக பேயாய். . . சிலவேளை
நாயாய் அலையத்தான் செய்கிறார்
Š56፲፫ .

Page 15
'வாரன். . . வேலீக்கி" மோட்டார் சைக்கிள் திரும்பி வரி ைரநதது . நரிஸ் ரீனு க கு தர்மசங்கடமான நிலை, வாப்பா ஹஜ்ஜுக் கதையை எப்போது எடுப்பாரென்று எதிர்பார்த்திருந்த போதிலும், இன்னும் அவர் அதுபற்றி மூச்சுக்கூட காட்டவில்லை. உம்மா வும் கூட பலதடவை கேட்டாகி விட்டார்.
சைக்கிள் மேலும் வேகமாகப் பறந்தது.
நி ஸ்ரீன் அன்று கடையிலிருந்து வீட்டுக்கு வந்து சேரும்போது முழுக் குடும்பத்தவர்களுமே அங்கு கூடி நின்றனர். இன்று இரண்டி லொன்று முடியும் என்பது அவனுக்கு சட்டென்று விளங்கிவிட். ஈ
என்ன கரணம் போட்டாவது மக்காவுக்குப் போய்வராவிட்டால்
அவன் எப்படித்தான் ஊருக்கு முகம்கொடுப்பான்.
வொவும் எடுத்து . . . தேநீர்
குடித்துவிட்டு மாப்பிள்ளைபோல் முன்வாசலுக்கு வந்தான்.
'நிஸ்ரீன் நீ இந்தப் பைணம் மக்க் துக்கு பொகப் போறா. . .' இல் லாட் டி இப் பிடியே
நிக்கப்போறா...?"
‘பிடி'யோடு வாப்பா பேசிய
உள்ளர்த்தம் அவனுக்கு புரியாம
லில்லை. எதிர்பார்த்ததும்தான்.
‘எல்லாரேம் அனுப்பினபோல தம்பியேம் அனுப்போனுந்தானே
வாப்பா" அவனுக்காகத் தர்க்கம் பேசினாள் சப்ரினா,
‘அனுபியன். . . சல்லி ரெடி ஆனா நான் செல்லியத்தக் கேக்கோணும்"
எல்லோரும் வியப்புற்று ஒரு கணம்
அவரையே பார்த்து நின்றனர். சந்தர்ப்பம் பார்த்து இப்படிக் கழுத்தை நெரிப்பாரென்று யார்தான் நம்பி னார்கள்.
எவ்வளவு கசப்பாக இருந்தாலும் மருந்தைக் குடித்தே ஆகவேண்டிய
நிலை.
வாப்பாவின் குணம் பிள்ளை
களுக்குத் தெரியாதா என்ன?
நிஸ்ரீன் என்ன சொல்லப் போகி றானென்று எல்லோரும் அவன் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்து நின்றனர்.
*செல்லியத்த கேக்கியன்'
"அப்பிடி வா வழிக்கி. ஏன்ட ஆம்புள பொம்புள ஆறு புள்ளயரூக்கு நான் நல்ல மொறக்கி கலியாணம் செஞ்சி வெச்சீக்கி. அதப்போல ஒனக்கும் செஞ்சி வெக்கோணும். அணிவர் ஹாஜியார் ட மகளட விஷயத்துக்கு ஒன்டும் செல்லாம ஆறுமாஸ்மா நீ கிரீத. இப்ப எனத்தியன் செல்லிய. . ."
“சரி சரி அவன் புரியமென்டு தானே செல்லிய" இடையில் உம்மா குறுக்கிட்டார்.
"அப்ப பேச்சிவாத்தய முடிச்சி
பாத்திஹா ஒதிய பெய்த்திட்டு வந்து கலியாணம். வெளங்கியா? சரி
24

நாளக்கே நான் சல்லியக் கெட்டியன். பாஸ்போட்ட தேடிவெய். . . "
நிம்மதியாக மூச்சுவிட்டான் நிஸ்ரீன்.
ஒரு சந்தோஷ அலை எல்லா முகங்களிலும் நுரைப் பூக்களை அள்ளி வீசியது.
இரவு எட்டு மணிக்கும் ஒன்பது மணிக்கும் இடையில்தான் நிஸ்ரீன் எப்பொழுதும் அஸ்மியாவை சந் திக்கச் செல்வான் . அன்றும் அவனுக்காக அவள்வீடு திறந்தே கிடந்தது.
முன் வாசலில் அஸ்மியாவும் அவளது உம்மாவும் ‘முஸ்லிம்
நிகழ்ச்சி கேட்டுக் கொண்டி ருந்தனர்.
மரியாதையோடு எழுந்து
சிரித்துக்கொண்டு அவளது உம்மா உள்ளே சென்றாள். உள்ளேநின்ற இஸ்மாயில் நானா இடையில வந்து இரண்டொரு வார்த்தை கதைத்து விட்டு கடையடிக்கு சென்றுவிட்டார்.
தூரத்து உறவு என்ற நூலிழை அவர்களை நெருக்கமாக்கியிருந்து. உள் நிலையருகே சுவரோடு சாய்ந்தபடி அஸ்மியா நிஸ்ரீனோடு கதைத்துக்கொண்டிருந்தாள்.
இடையில் தேநீர் உபசரிப்பு வேறு. நிஸ்ரீனின் மனோநிலை இன்றும் என்றும்போலிருக்கவில்லை. நான்கு வருடங்களாக அவன் வருவதும் போவதும் ஊரறிந்த சங்கதி.
25
காலம் கணியும்போது சம்பிரதாய பூர்வமான பேச்சுவர்தைக்காக அவள் பெற்றோர் காத்திருந்தனர்.
'இந்தப் பைணம் மக்கத்துக்கு
பொக யோசின" அவன் மெல்ல நெருங்கினான்.
'அது எல்லாருக்கும்
தெரீந்தானே” அவள் உள்ளார்ந்த பெருமையோடு சொன்னாள்.
"எல்லாருக்கும் தெரிஞ்சத்துக்கு நேத்து ராவுதான் வாப்பா முடிவெடுத்த”
'அப்படியா . . . " அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"அவரு செல்லியத்த கேக்கி
யெண் டு சத்திய மெடுத்துக் கொண்டுதான். . . "
'கலியான விஷயத்திலயா...?” சட்டென்று அவள் கேட்டேவிட்டாள்.
நிஸ்ரின் தலையாட்டியபடி கீழே பார்த்துக்கொண்டான்.
பக் கென்று நெஞ்சு விம்மி வெடிப்பதுபோல் உணர்ந்தால் அவள். வார்த்தைகள் வரவேயில்லை. கணக்ள் உடைப்பெடுத்து மகாவலி கங்கையாய். . . .
அன்வர் ஹாஜி வீட்டுக் கல்யாணப் பேச்சுக்களையெல்லாம் அவன் அவ்வப்போது சொல்லிச் சிரித்த தெல்லாம் அவள் நினைவிலே மின்ன லடித்தன. அதே வாயால்தானா இதை ԱյԼ0. . .
“அஸ்மியா. . . நீங்கெனத்தியன் செல்லிய?"

Page 16
இப்படியொரு கோழைத்தனமான பேச்சை, அவன் வாயிலிருந்து இதற்கு முன்பு அவள் கேட்ட தேயில்லை.
'நான் ஒன்டும் செல்லல்ல. . . ஹஜ்ஜுக்கு போறது கடம. அத வாணான்டு எனக்கு பாவத்த தேடிக் கொளேல. நீங்க போங்க"அல்லாஹ் வுக்கு பயந்தவளாகத்தான் அஸ்மியா இவவளவையும் சொன்னாள்.
அழுதும் அடம்பிடித்து ஊரைக் கூட்டுவாளென்று நினைத்தவனுக்கு இவ்வளவு லேசாக சம்மதித்ததது பெரிய நிம்மதியாகப்பட்டது.
ஒப்பாரிவைத்து அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு
"பெய்திட்டு வாரன்”
அவள் எதுவும் செல்லவில்லை. அவன் வெளியிறங்கியதும் வந்து முன் வாசல் படியில் நிற்கவில்லை. அவன்
பாதைக்கிறங்கியதும் அவள் முற்றத்
துக்கு எட்டி எட்டி பார்க்கவில்லை.
அவன் கடைசித்தடவையாக அந்த வீட்டுப் படிகளிடம் விடைபெற்றான்.
நாளை அதிகாலையில் ஹஜ்ஜாஜிகள் புறப்படுவதால் அவர் களை சென்று சந்திப்பதில் ஊர் ஜமாஅத்தினர் வீடுவீடாக ஒடிக் கொண்டிருந்தனர்.
இஸ்மாயில் நானாவும் முப்பதுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு ஏறி இறங்கி விட்டார்.
ஹஜ்ஜுக்குப் போகும் பாக்கியம் தனக்கும் எப்போதாவது கிடைக்கு மென்று அவர் எதிர்பார்க்கவில்லை.
26
அது.
ஹஜ்ஜுக்குப் போகாவிட்டாலும் போகின்றவர்களை சந்தித்து ஸலாம் சொல்லிக்கொள்ள அவர் என்றுமே தவறியதில்லை.
அத்துலதீப் ஹாஜியார் வீட்டை நெருங்கியபோது அவர் கால்கள் தயங்கி தடுமாறின.
"பழைய ஒறவ புதுப்பிக்கப் போறென்டு நம்ப வெச்சி. . . நாலு வருஷமா வந்து பெய்த்து. மகள்ட மணசில ஆசய வளத்து. . . ஹஜ்ஜட பேரால அழவெச்சவனுக் கிட்ட ஸ்லாம் செல்லப்போறா'
6
ம். . . எங்க பார்வக்கி பொழயா பட்டாலும் . . . அல்லா அந்தப் பாக்கியத்த குடுத்தீக்கச்செல்லே. . நாங்க கொறவா நெனக்கேலுமா?"
இப்படி எத்தனையோ எண்ணத் தொடர்கள் இஸ்மாயில் நானாவுக்கு. இறுதியில் எந்த சக்தியோ அவரை வாசல் வரை இழுத்து வந்து நிறுத்திவிட்டது.
தின்பண்டங்கள். . . குளிர்பானம் இந்த மரியாதைகளை யார் யாரோ செய்தார்கள்.
அத்தர் மணம் குப் பென்று வீசியது. ஹஜ்ஜாஜி முன்னே வந்தார். ஒவ்வொருவராக ஸலாம் சொல்லிக்கொண்டனர்.
இஸ்மாயில் நானாவின் சந்தர்ப்பம் மனம் பதைக்கப் பதைக்க கைகளைத் தொட்டு ஸ்லாம் சொல்லிக் கொண்டார்.
'தூ'ஆ செஞ்சிக்கோங்கோ"
இதைத்தவிர நிஸ்ரீன் வேறெ துவும் பேசவில்லை.

முகம் என்னவோ பேயறைந்தது போல். முடிவெட்டி, நீளக்கை சேட், ஸாரம் அணிந்து பக்திமானாகத் தெரிந்தார்.
விடை பெற்றுக் கொண்டு வெளியேறிய போதும். . .
‘எல்லா ஹஜ்ஜாஜியளும் ஸ்லாம் செல்லி. கொறகுத்தம் செஞ்சீந்தா மன்னிச்சிக்கோங்கோண்டு கேக் கிய. இவரு தாருக்காலும் ஒரு குத்தமுமே செஞ்சில்லபோல. . . "
இஸ்மாயில் நானா அடுத்த ஹஜ்ஜா ஜியின் வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்.
அன்று அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் விடிந்துவிட்டது. வழமைபோல் ஹஜ்ஜாஜிகளை பள்ளிவாசலிலிருந்து வழியனுப்பு கின்ற நிகழ்வு.
பாதையெங்கும் கலகலப்பும் வாகன இரைச்சலும் எல்லாவற்றையும் கிரகித்தபடி கட்டிலிலே கிடந்தாள் அஸ்மியா.
இஸ்மாயில் நானாவும் எழுந்து தயாராகி பள்ளிக்குப் புறப்பட்டு விட்டார். உம்மாவும் அடுத்தடுத்த வீட்டுப் பெண்களும் கதைத்தப்படி முற்றத்தில் கூடிநிற்பது அவளுக்கு விளங்கியது.
மகள் பாதிக்கப்பட்டாலும் சம்பந்தப் பட்டவன் பாக்கியசாலி என்று சிந்தி க்கும்.அளவுக்குத்தான் அவளது உம்மா வாப்பாவின் ஞானம் இருந்தது.
பள்ளிவாசலுக்கு ஹஜ்ஜாஜிகள் எல்லோரும் வந்து சேர்ந்து விட்டார்
கள் போலும் ஹாஜியானிகள் இரண் டாம் முறையாகப் பொண் போவது' போல பள்ளிவாசல் முன்றலிலே கார்க ளிலகே அமர்ந்திருந்தார்கள்.
அந்த நேரத்திலும்கூட ஹஜ்ஜாஜி களுக்கு ஸலாம் சொல்லிக் கொள்வ தில் ஜமாஅத்தார் பின் நிற்கவில்லை.
பெரிதாக பைத் முழங்கி ஓய்வ தோடு கார்கள் புறப்பட்டன.
இஹ்ராம் உடையிலே நிஸ்ரீன் அமர்ந்திருந்தான். வாப்பாவும் மூத்த நானாவும் காரிலே உடனிருந்தனர்.
ஹஜ்ஜுப் பாக்கியம் கிட்டியதன் மூலம் தனக்கும் பெரிய சமூக அந்தஸ்து வாய்த்துவிட்ட பூரிப்பு நிஸ்ரீனுக்கு! ஆனாலும் மனதிலே ஒரு குறுகுறுப்பு.
இந்தச் சிலநாட்களாக எல்லோருந்தான் முட்டிமோதிக் கொண்டு ஸ்லாம் சொல்லிய போதும். . . நடு இரவில் வந்து வழியனுப்பியபோதும். . . அவனது நீண்டகால நண்பர்களென்று இருந்த சிலபேர் அவனை எட்டியும் பார்க்க வில்லை. அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கார் ஊர்வலம் கட்டுநாயக்கா
விமான நிலையத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.
சு மார் ஒரு மாத காலம் உருண்டு, ஹஜ்ஜாஜிகள் வரும்நாள் வந்தே விட்டது.
ஊரெல்லாம் மீண்டும் விழாக் கோலம். உற்றார் உறவினர் சந்தோஷ வெள்ளத்தில் நீச்சலடித்தனர்.
27

Page 17
பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. இன்னும் ஐந்தோ பத்தோ நிமிடத்தில் வந்துவிடக்கூடும். அங்கு தொழுது துஆ செய்தபின்பே வீடுகளுக்குச் செல்வார்கள்.
மக்கா - மதீனாவில் ஹஜ்ஜுக் கிரியைகளையெல்லாம் செய்து முடிக்கும் போது பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகனாய் மாறிவிடுவார்களாம். அந்த நிலையில் அவர்களுக்கு ஸலாம் சொல்லி முஸாபஹா செய்வதன் மூலம், அவர்கள் சுமந்து வரும் அருளின் ஒளிக்கீற்றுக்கள் தங்களுக் குள்ளும் ஊடுருவிப் பரவசப்படுத்து மென்ற நம்பிக்கை பலருக்கு!
ஒன்பது ஹஜ்ஜாஜிகள் வந்து சேர்ந்து விட்டார்கள். சனத்திரளுக்கு மத்தி யில் பத்திமான்களாக ஒவ்வொரு வராக இறங்கி பள்ளிவாசலினுள்ளே
சென்றார்கள்.
சுன்னத்து தொழுது முடியும்வரை அவர்களை ஆரத்தழுவும் அமுக்க நிலையில் ஜமாஅத்தார் அவதிப் பட்டனர்.
அத்தரால் குளித்துநின்ற நிஸ்ரீன் ஹாஜியை ஆயிரம்பேர் முஸாபஹாச் செய்தபோதும், அவர் ஏமாற்றத்தால் கூனிக் குறுகிப் போய்விட்டார். தன்னுடைய அந்த நண்பர்களை வரவேற்பில் கூட காணவில்லையே என்பதால்தான்.
வீடுகளுக்கு புறப்படும். நேரம், கார்கள் பூச்சிய வேகத்தில் நகர்ந் தன. இஸ்மாயில் நானாவின் வீட்டைக்
கடக்கும் போது நிஸ்ரீன் ஹாஜியின்
மனம் திக்கென்றது.
மணிக் கெல்லாம்,
வீதியெங்கும் சிறுவர்களும் பெண்களுமாகக் குழுமிநின்றனர். கார்கள் கடந்ததைத் தொடர்ந்து வீடுகளை நோக்கிய படையெடுப்பு ஆரம்பித்தது.
இதற்கிடையில் ஆங்காங்கே நாலைந்து பேராக, போஸ்டர்கள் ஒட்டிய சுவர்களைச் சுற்றிநின்றனர்.
உள்ளுராட்சித் தேர்தலின்போது ஒட்டிய போஸ்டர்கள் கிழிந்தும் கிழியாததுமாக ஒட்டிக் கிடந்தன. அவற்றுக்கு மத்தியிலே வெறும் வெள்ளைப் பேப்பரில் எழுதப்பட்ட கவர்ச்சியர்ற சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதான் அதிலுள்ள வசனங்கள:
"காதலியுங்கள்; கைவிடுங்கள்; அன்று பிறந்த பாலகனாய் மாறுங்கள்"
மலிலிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
201, 1/1, பூரீ கதிரேசன்
கொழும்பு - 13
வீதி
28
 
 
 
 
 

Úီir 9, பாட்டனாரிடம்
ப்பாக்கி இருந்தது
- தில்லைச் சிவன் -
. ரவணையூரின் கிழக்குப் பக்கமாக ஊர்காவற்றுறை பண்ணை நெடும் பாதைக் குத் தெற்கே பரந்திருக்கும் பற்றைக் காடும் புல்வெளியுமாயுள்ள நிலப்பரப்பின் நடுவணாக அமைந்திருந்தது, எனது பாட்டனாரின் ஆச்சிரமம் போன்ற ஒரு அறையும் சாருங்கொண்ட குடில், வடக்கே நீண்டகன்ற நாய்க்குட்டி வாய்க்கால் கடலும், கடலின் நடுவே அமைந்திருக்கும் புன்னன் கண்டிச் சுடலையும், சுடலையில் அடிக்கடி எரியும் ஈம ஒளியும் புகையும், ஒரு பயங்கரமான சூழலாகத் தோற்றங் கொண்ட இடமது. தெருவின் இருபக்கங்களிலும் வளர்ந்து செழித்திருக்கும் பூவரசுகளும் தாழம் புதர்களும் ஆங்காங்கே காணப்படும் ஆலமரங்களும், அவற்றின் கீழ் கழிப்புக் கழித்து விட்டு மேலே பேய்களை ஏற்றி ஆணிகளால் அறைந்து விட்டிருக்கும் காட்சியும். அவ்வழியால் போவோர் வருவார்க்கு ஒரு சவாலாக அமைந்திருந்தது. இரவு வேளைகளில் அசாதாரண துணிவுள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் நுழைய அஞ்சுவர். அத்தகைய ஒரு இடத்தில் அமைந்திருந்தது எனது பாட்டனாரின் வீடு.
அவ்வீட்டைச் சுற்றியுள்ள ஒருபத்துப் பரப்பு நிலம், பனைகளும் வடலிகளும், தென்னைகளும் நிறைந்து நிற்க, சுற்றிவர பூவரசுகளும் வேம்புகளும் கிளுவைகளும் வேலிகளாக அரண்செய்யப் பெற்றிருந்தது.
அவ்வளவின் தெற்கு எல்லையில் ஒரு கிணறும் சதுரக் கள்ளிகளால் சுற்றி அடைக்கப் பெற்ற ஒரு தோட்டமும் இருந்தது. மாரிகாலத்தில் கத்தரி மிளகாய் வெண்டை போன்ற செடிவகைகளையும், வெள்ளரி, வத்தகை, பாகல், பூசனி போன்ற கொடிவகைகலையும் பயிர் செய்யும் எனது பாட்டனார் தனக்கொருபங்காளியையும் வைத்திருந்தார். தோட்ட வேலைகளுக்கு உதவி செய்வதற்காக விளைபொருட்களில் ஒரு பங்கு
29

Page 18
பங்காளிகட்குப் போகும். தோட்டவேலிகளில் தன்னிச்சையாகப் படர்ந்து காய்த்திருக்கும் பீர்க்கு, பாகல், கோழி அவரை என்பவற்றை ஊரவர்கள் கேட்டுப் பெற்றுச் செல்வர்.
கோடையில் ஆட்டுப் பட்டி அடைக்கப்பெற்ற தோட்டமாதலால் மண் செழித்து நல்ல வளந்தந்தது.
மாரிக்காலத்தில் வளவுள் உள்ள தொழுவங்களிலும் கோடையில் தோட்டங்களிலும் வயல்களிலும் பட்டிகளில் அடைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்குமேற்பட்ட செம்மறி ஆடுகளை நாய், நரி முதலிய மிருகங்கலிடமிருந்து பாதுகாத்தற் பொருட்டும், பல்லுக்குக் கடிக்க வேண்டும் பொழுது பறவைகளையும் முயல் போன்ற சிறு பிராணிகளையும் வேட்டையாடவும், எனது பாட்டனார் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
அது ஒரு சன்னத்துப்பாக்கி. மருந்து, பொச்சு, கடுதாசி என்பவற்றைத் துப்பாக்கிக் குழாயில் இட்டு, கம்பியால் குத்தி இறுக்கிக் கெற்பும் மாட்டி, எந்நேரமும் தயாரான நிலையில் தனது கட்டிலின் பக்கத்துச் சுவர்களின் மூலையில் சாத்தி வைத்திருப்பார். எப்போதாவது நாய்கள் குரைக்க, நரிகள் ஊளையிட பட்டியில் ஆடுகள் பதட்டப்பட பாட்டனார் உசாராகி விடுவார். துப்பாக்கியைத் தூக்கிச் சரிபார்த்துக் கொண்ட அவர் முற்றத்துக்கு வரவும் , நானும் துT க்கங் கலைந்து எழுந்து அம்மனக்குண்டியனாய் என்னவோ ஏதோ என்ற அங்கலாய்ப்புடன் அவரின் பின்னால் நிற்பேன். சிலவேளைகளில் இருட்டும் சிலவேளைகளில் நிலவுமாக இருக்கும். எவ்வேளையாயினும் ஆட்டுப்பட்டிகளையோ தொழுவங்களையோ சுற்றிச் சுற்றிப் பார்த்து, ஒன்றையுங் காணாத போதும், வெளியே சத்தமிட்டுச் சிறிது நேரம் காவல் இருந்தபின் மீண்டும் வந்து துரங்குவோம். அயலில் துர்நாற்றம் வீகமாக இருந்தால் குள்ளநரி, எங்கோ ஒழித்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டு நெடுநேரம் காவல் இருப்பார்.
எங்களிடம் , துப்பாக்கி ஒன்று இருப்பது பற்றிய எனது பெருமை
சொல்லக்கூடியதல்ல. அதன் அமைப்பும் வலிமையும் பெருமையும் பற்றி எல்லாம் எனது பள்ளித் தோழர்களுக்கு அறிமுகஞ் செய்து, அவர்களை எனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுவந்து, சுவரில் சாத்திவைத்திருக்கும் துப்பாக்கியைத் தொட்டுவிடாமலே எட்ட நின்று காட்டி அதன் செயல்முறை பற்றியும், அதனால் சுட்டு வீழ்த்தப்படும் பறவைகள் மிருகங்கள் பற்றியும், குறிவைத்துச்சுடும் எனது பாட்டனாரின் திறமை, பறக்கும் போதே பறவைகளைச் சுட்டுவீழ்த்தும் ஆற்றல் என்பவை பற்றியும் சொல்லி அவர்களை வியப்பில் ஆழ்த்துவேன். இவ்வகையான மெய்யும் பொய்யுங்கலந்த கற்பனைப் புழுகினால் கடந்த நாட்கள் சில.
எனது பாட்டனார் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு போவதும் நான் அவர் பின்னால் ஓடுவதுமாகப் பலநாட்கள் நடந்தும் ஒருநாளாவது ஒரு
3O

நாயையோ நரியையோ நான் காணவில்லை. அவர் சுட்டதாகவும் இல்லை. ஆனால் நானோ என்னை ஒரு பெரிய வேட்டைக்காரனாகவும் எனது பாட்டனார் இல்லாத வேளையில் ஒரு நரி வருவதாகவும் அதை நானே சுட்டு வீழ்த்துவதாகவும் கற்பனை பண்ணிக் கொண்டு எனது பாட்டனாரின் கைக்குள் அடங்கித் துயில்வேன்.
கண் விழித்துக் காவல் காத்தபோதும் எங்கள் பட்டியில் அவ்வவப்போது ஆடுகள் காணாமற் போனதுண்டு. சிலவேளைகளில் இவை திருடர்களின் முறிப்பு வேலைகளாகவும் சிலவேளைகளில் எங்களை ஏமாற்றிவிட்டு நாய நரிகள் செய்த திருவிளையாட்டாகவுமிருக்கும். எதானாலும் இனிவரட்டும்ே பார்ப்போம் என்று பாட்டனார் காவல் இருக்க நான் அவரின் பக்கத்தில் நடக்கப்போகும் விபரீதங்களைக் கற்பனை செய்தபடி விழித்திருப்பேன்.
ஒருநாள் நாங்கள் எவ்வித கவலையுமின்றித் துரங்கிக் கொண்டிருந்த ஓர் இரவில் பால்போல் நிலவு எரிந்து கொண்டிருந்த வேளையில் எமது ஆட்டுப் பட்டிக்குள் ஒரே அல்லோல கல்லோலம். நாய்கள் குரைப்பதும் ஆடுகள் துள்ளுவதும் பாய்வதும் கத்துவதுமாக அமர்க்களப்பட்டன். பாட்டனார் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு முன்னே சென்றார். குரைத்துக்கொண்டு நின்ற எமது நாய்கள் எங்களை கண்டதும் உத்வேகமாக முன்னேறிச் சென்றன. அவற்றின் எதிரில் ஒரு கூட்டம் நரிகள். நாலு ஐந்திருக்கும். எங்களின் இரு நாய்களும் எனது பாட்டனாரும் நரிகளுக்கெதிராக நிற்கின்றனர். நான் பக்கத்தில் இருந்த வேப்பமர நிழலில் இருளில் நின்று கொண்டேன். நரிகளோ இவர்களை மூர்க்கமாக எதிர்க்கின்றன. இந்த வேளையிலும் பாட்டனாரின் துப்பாக்கி பேசவில்ல்ை. மெளனமாக இருப்பதேன்? ஒரு வெடி வைத்தால் மறுவெடிதீரத் திரும்ப மருந்து இடித்துக் கெற்பு மாட்டவேண்டும். இதற்குப் போதிய அவகாசம் வேண்டும். இதை யோசித்துத்தானோ என்னவோ ஒரு வெடியைத்தானும் தீராமல் தற்காப்புக்காக வைத்து கொண்டு நாய்களுந்தரனுமாக நரிகளுடன் வாய்வெருட்டில் போராடிக்கொண்டிருந்தார். நரிகளோ மூர்க்கமாக எதிர்த்து முன்னோக்கி வந்து கொண்டிருந்தன. இப்பொழுது நரிகள் எனது பாட்டனாரைச் சூழ்ந்து முற்றுகை இடக்கூடிய தருணம். இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும் என்ற சமயத்தில் பாட்டனாரின் துப்பாக்கிக் குதிரை பாய்ந்தது. "டக்” திரும்பவும் "டக் டக் டக்” துப்பாக்கி வெடிக்கவேயில்லை. திகைத்துப் போன பாட்டனார் துப்பாக்கிக் குழலில் பிடித்துக்கொண்டு எதிர்த்து வந்த நரிகளைத் துவக்குச் சோங்கினால் அடித்தார். நரிக் கூட்டத்துள் நின்று சுழன்று சுழன்று கம்பு வீசுவது போலத் துப்பாக்கியால் அடித்தார். நாய்களும் தங்கள் வலிமையைக் கூட்டிப்பாய்ந்து நரிகளின் பிட்டத்தில் கடித்தன. இந்த அமளி கேட்டு ஊரவர்களும் தடிகளுடன் ஓடிவரவும் நரியொன்று குற்றுயிராய் விழுந்து மடியவும் நேரம் சரியாய் இருந்தது. ஆட்களைக் கண்டதும் நரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக
31

Page 19
ஒடிபபோயின. ஒடிய நரிகளைத் துரத்திக் கொண்டு சென்ற நாய்களும் திரும்பி வந்தன. பிரிந்து ஓடிச் சென்ற நரிகள் ஒன்றையொன்று அழைக்க ஊளையிட்ட சத்தம் ஊரையும் ஊர்நாய்களையும் எழுப்பி விட்டுச்
சென்றது. பாட்டனாரின் சன்னத்துப்பாக்கி குழல் வேறு சோங்கு வேறாக நிரந்தரமாகவே மெளனித்துக் கிடந்தது.
/
ಬಶಭgð೭b
மல்லிகை கொழும்பில் இருந்து வெளிவரவுள்ளது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. இங்குள்ள மல்லிகை அபிமானிகள் இந்தச் சந்தோஷமான செய்தியைக் கேட்டு ஆனந்தப்பட்டனர்.
மல்லிகைதான் உங்களது பலம். அதனை நீங்கள் என்றும் பாதுகாத்து வரவேண்டும். விரைவில் எனது படைப்புக்களை அனுப்பி வைப்பேன். அதில் எனக்குத் தனிப் பெரும் சந்தோஷமும் கூட!
மீண்டும் இடைவிட்டுக் கொழும்பில் மலரும் மல்லிகைக்கு எனது நல் வாழ்த்துகள். இன்றைய சூழ்நிலையில் கொழும்பில் இருந்து மல்லிகை வெளிவரும் போது புதிய பரிமாணங் களுடன் புத்தம் புதிதான உருவப் பொலிவுடன் வெளிவர வேண்டும். இதுவே எனதும் நம்மைப் போன்றவர்களின் விருப்பமுமாகும். அச்சமைப்புக்கள் கண்களுக்கு நேர்த்தி யாகவும் கவர்ச்சியாகவும் இருக்கவேண்டும். கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை
மீது சொல்லப்பட்ட குற்றங் குறைகளை நீக்க இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி நிவர்த்தி செய்ய வேண்டும்.
இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
உள்ளத்துள் இருந்த ஏக்கம் மல்லிகை மீண்டும் மலரு
கின்றது என்ற செய்தியுடன் மறைந்து விட்டது. ஆவலுடன்
மல்லிகையைப் படிக்கக் காத்திருக்கின்றோம்.
32
ܓ=
 

மல்லிகை என்னும் மலருக்கு இயற்கையாக ஐந்து வெண்ணிறப் பூவிதழ்கள் அமைந்திருப்பு போல், மல்லிகை என்னும் சஞ்சிகைக்கும் ஐந்து சக்திகள் ஒருங்கிணைந்துள்ளன.
மல்லிகை ஆசிரியர், மல்லிகை சாதனைகள், மல்லிகை நண்பர்கள், மல்லிகைப் பந்தல், மல்லிகையை இயக்கும் மானுட நேசம்.
இவையின்றி மல்லிகை இல்லை!
மல்லிகையைப் பற்றிய எனது கண்ணோட்டம் மலையகப் பின்னணியிலிருந்து விரிகிறது.
மல்லிகையையும் மலையகத் தையும் ஆராய்வததற்கு முன், மலையகத்தின் கேந்திர நகர மாகிய நாவலப்பிட்டியில் ஐம்ப துக்கும் அறுபதுக்கும் இடைப்பட்ட கால இலக்கியத்தின் நிலைப்பாட்டை அல்லது அதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி சிறிது நோக்க வேண்டியது அவசியமாகின்றது.
மலையகம் என்று குறிப்பிடும்போது, கவினுறு வாவியால் சிறப்புப் பெறும் கண்டி மாநகரிலிருந்து முப்பத்திரண்டு கிலோமீற்றர் தூரத்தில் அழகிய மலைகள் சூழ்ந்து சுவாத்திய சுகந்தத்துடன், மகாவலி கங்கை மருவும் வளமார் நாவல் நகர் மிகவும் பிரதான இடத்தை வகிக்கின்றது.
நாவலப்பிட்டிக்கு ‘ரயில்வே நகரம்' என்றொரு பழைய பெயரும் உண்டு. ஆனால் நாவல் நகர் என்ற பெயரே இலக்கியவாதிகளிடம் பிரசித்தி பெற்றிருக்கிறது. நாவலிப்பிட்டியை நாவல் நகராக மாற்றிய பெருமை "நாவல் நகர் டீன் மன்னன்' என்னும் புனைப் பெயரில், மரபுக் கவிதை, மேடை நாடகம், நடிப்பு போன்ற பல துறைகளில் 1950களில் தமது ஆற்றலை வெளிப்படுத்திய சி.எம்.பி.மொஹிடீன் அவர்களையே சாரும். 'காங்கிரஸ்' என்றொரு பத்திரிகையில் கடமையாற்றிய இவர் முன்னோடி' என்னும் மாத சஞ்சிகையை சில வருடங்கள் தரமாவும் புதுமையாகவும் வெளியிட்டார்.
33

Page 20
ஐம்பதுகளில் நாவலப்பிட்டி சென்ற் மேரிலஸ் கல்லூரியிலும், கதிரேசன் கல்லூரியிலும் கல்வி கற்ற உயர் வகுப்பு மாணவர்களிடையே மலர்ந்த இலக்கிய ஆர்வம் குறிப்பிடத்தக்கது. என்.எஸ். சிவலிங்கம், பரமேஸ்வரன், எம்.டி.என்.சரூக், குயின்ஸ்பெரி சிவாஜி செபஸ்ரியன், சேதுராமன், பெளசி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். என்.எஸ்.சிவலிங்கம் 'நேரு ' என்ற தலைப்பில் ஒரு வரலாற்று நூல் வெளியிட்டுள்ளார்.
ஐம்பதுளின் பிற்பகுதியில் இர சந்திரசேகரன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட 'கலைமகள் படிப்பகம்' இலக்கியத்துறையில் பலருக்கு உந்து சக்தியாக விளங்கியுள்ளது. இவ்விலக்கிய அமைப்பில் கணபதி, சந்தனவேலன், ராமகிருஷ்ணன் (ராமு) வேலாயுதம் போன்றவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தரமான வாசகர்களை உருவாக்குவதே தலையாய இலட்சியமாக இருந்தது. அதில் வெற்றியும் கண்டது. எனினும் தொழில் காரணமாக அதனை இயக்கியவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் ’பிரிந்ததால் கலைமகள் படிப்பகம் தொடர்ந்து இயங்க முடியவில்லை. எனினும் அது தோற்றுவித்த விழிப்புணர்ச்சி குறிப்பிடத்தக்கது.
திரு.இர சந்திரசேகரன் அவர்க்ளின் 'விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்' நூல் நாவல் நகரிலும் இரண்டாம் பதிப்பு தமிழகத்திலும் வெளியாகியது. மேலும் நாவலப்பிட்டியில் எழுத்தாளர்களும் கவிஞர்களும் வாழ்ந்து தரமான படைப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர் என்பதற்கு கவிஞர் பெரியாம்பிள்ளை அவர்களை குறிப்பிடலாம். இவர் சுற்று வட்டார தோட்டங்கள் தோறும் தொழிலாளர் பாடல்களும், மரபுக்கவிதைகளும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.
நாவலப்பிட்டியின் இலக்கிய வரலாற்றில் 1959ம் ஆண்டும் 1960ம் ஆண்டும் மிகவும் முக்கியமான காலகட்டமாகும்.
1960ல் கவிஞர் L மகாலிங்கம் (மாலி) நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கதை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
சசந்தனப்பிச்சை, கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி (நூர் முகம்மது) சு.பிரேமசம்பு, ஆப்டீன். பெ.இராமானுஜம் போன்றோர் இளம் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து இலக்கியக் கருத் தரங்குகளையும் , கவியரங்குகளையும் , விழாக் களையும் நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் நாவலப்பிட்டிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாக மாற்றம் பெற்று வந்த, நாடறிந்த எழுத்தாளர் டாக்டர் நந்தி அவர்களின் வருகை நாவலப்பிட்டி இலக்கிய ஆர்வலர்களிடையே ஒரு திருப்பத்தையும் உத்வேகத்தையும் தோற்றுவித்தது.
. பதுளை, நாவலப்பிட்டி, கண்டி, மாத்தன்ள ஆகிய பகுதிகளில் இளம் எழுத்தாளர் சங்கங்கள் தோன்றி வருதல் மலையகத்தின் இலக்கிய
34

விழிப்புணர்ச்சியைக் காட்டுகிறது." என்று கனக செந்திநாதன் தமது "ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டின் படைப் பிலக்கிய வாதிகளையும் அவர் களது படைப்புக்களையும் டாக்டர் நந்தி அறிமுகப்படுத்தினார். காவலூர் ராசதுரை, நீர்வை பொன்னையன், கே.டானியல்.என்ற வரிசையில் டொமினிக் ஜீவா மிகவும் முக்கியமானவர். இவர்களது படைப்புகளைப் பற்றி கருத்துப் பரிமாறல் மூலம் நாவலப்பிட்டியில் முற்போக்கு இலக்கியச் சிந்தனை வித்திடப்பட்டது எனலாம். நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர்களின் ஆக்க இலக்கியத்துறையில் பிரதேச மண்வாசனை சமூகப்பார்வையுடன் மிளிர்ந்தன.
டாக்டர் நந்தியின் தலைமையில் ஆத்மஜோதி நிலையம் பக்திக் கவிஞர் பரமஹம்சதாசன் தங்கியிருந்த ‘சக்தி அன் கம்பெனி', சென்றல் ஹோட்டல் போன்ற இடங்களில் அடிக்கடி இலக்கியச் சந்திப்புகளும் விமர்சனக் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றன. டொமினிக் ஜீவா அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள், 'தண்ணிரும் கண்ணிரும் "பாதுகை' போன்றவை வெறுமனே வாசித்து அலுமாரிக்குள் அடக்கிவிடாமல், பாடபுத்தகங்கள் போல் அடிக்கடி படித்து விமர்சிக்கப்பட்டன. இதனால் இளம் எழுத்தாளர்களுக்கு, டொமினிக் ஜீவாவைச் சந்திக்கும் ஆவல் பெருக்கெடுத்தது. .
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த பல எழுத்தாளர்களின் தொடர்புகள் மிக முக்கியமானவை. இதன் விளைவு 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இ.மு.எ.ச வின் நாவலப்பிட்டிக் கிளை அங்குரார்ப்பணம் செயட்து வைகக்ப்பட்டது.
நண்பர் டொமினிக் ஜீவாவைச் சந்தித்தோம்.
மலையக தோட்டத்தில் தொழிலாளர்களின் வரலாறு எனக்கு நன்கு தெரியும், ஆனால் இன்னும் ஒரு தோட்டத் தொழிலாளரைச் சந்திக்கவில்லை. சொல்லப் போனால் நான் இன்னும் ஒரு தேயிலைச் செடியைக் கூட பார்க்கவில்லையே." என்று தமது கடிதமொன்றில் குறிப்பிட்டு, ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த ஜீவா அவாக்ளின் விருப்பம் இனிதே நிறேவேறியது. இதுவே டொமினிக் கஜிவா அவர்களின் முதல் மலையக விஜயமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு பெரியாரைக் குறிப்பிட்டாக வேண்டும். அவர்தான் அண்மையில் கனடாவில் காலமான ஆத்மஜோதி ஆசிரியர் நா. முத்தையா அவர்கள். 'ஆன்மீகம் மூலம் மக்கள் மத்தியில் மானுட நேயத்தை மலரகச் செய்தவர் அவர். பல தஸாப்தங்களாக ஆத்மஜோதி மாத சஞ்சிகையை வெற்றிகரமாக நடாத்தினார். அதிபர் என்ற முறையிலும், எமது ஆசிரியர் என்ற முறையிலும், ஆத்மஜோதி நிலையமும், கதிரேசன்
35

Page 21
கல்லூரி மண்ட்பமும் எமது கருத்தரங்குகளுக்கும், கூட்டங்களுக்கும் எப்பொழுதும் கிடைக்கும். எமது கூட்டங்களுக்காகத் தூர இருந்து வரும் பிரமுகர்களுக்கு தங்கு வசதியளித்து உபசரிக்கத் தவறியதே இல்லை.
இ.மு.எசவின் தேசிய சபை உறுப்பினர்களான டாக்டர் நந்தி, திரு. ஈழத்துச் சோமு, திரு டொமினிக் ஜீவா, ஆகியோர் ஆத்மஜோதி நிலையத்திலும், சென்றல் ஹோட்டலிலும் தங்கியிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட இலக்கிய விழாவில் பலரும் கருத்துரைகள் வழங்கினர்.
"மலைநாட்டு எழுத்தாளர்கள் ஒரு ஸ்தாபன ரீதியாக திரண்டு செயலாற்ற வேண்டும்” என்று கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி குரல் கொடுத்தார்.
மக்கள் இலக்கியம் படைக்கும் மலையக எழுதத்ாளர்கள் இ.மு.எ.ச.வில் சேர்வது இயல்பே நாவலப்பட்டியில் கிளை தோன்றும் இந்த நாள் நமது இலக்கிய வளர்ச்சியில் ஒரு மைல்கல்..” என்று நத்தி அவர்கள் அன்று குறிப்பிட்டார்.
திரு. டொமினிக் ஜீவா அவாகள் உரை நிகழ்த்தியபோது
"மலையகத்தில் இன்று ஏற்பட்டுள்ள இக்கிளைச் சங்கம், மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை, அபிலாஷைகளை எதிரொலிக்கும் எழுத்தாளர்களை ஒன்று கூட்டி இயக்க ரூபத்தில் பல வெற்றிகளை ஈட்டுமென்பதை இங்கு கூடியுள்ள இளைஞர்களின் உற்சாகத்தைப் பாாக்கும்போது உணரக் கூடியதாக உள்ளது." என்று ஜீவா அவர்கள் அன்று கருத்துரை வழங்கினார்.
இவ்வங்குராார்ப்பண கூட்டத்தில் திரு ஈழத்துச்சோமு, திருமதி.பத்மா சோமகாந்தன், திருவாளர்கள் சு.பிரேமசம்பு, ச.சந்தனப்பிச்சை உட்படப் பலரும் கருத்துக்களை முன் வைத்தனர்.
கண்டி மாவட்டக் கல்விபட்பணிப்பாளர், எழுத்தாளர் முஹம்மது சமீம் அவர்கள் பாடசாலை மண்டபங்களில் கூட்டங்கள் நடத்துவதற்கும் ஒலி பெருக்கி பாவிப்பதற்கும் அவ்வப்போது உதவிகள் வழங்கினார். இச்சந்தர்ப்பத்தில் ஆத்மஜோதி நிலையத்தில் கடமையாற்றிய நா. அருமைநாயகம் மாஸ்டர், நடேசன் மாஸ்டர், கவிஞர் சி.பொன்னுத்தம்பி (பாலபாரதி) கவிஞர். வேலாயுதம், மற்றும் என்.எஸ்.பாக்கியநாதன், மொஹிடீன் பிச்சை ஆகியோரின் பங்களிப்புகளையும் குறிப்பிட்டாக வேண்டும். w
அறுபதுகளில் நாவல்நகர் சித்தி பரீதாமுஹம்மது கட்டுரை, கவிதை, நாடகம் போன்ற துறைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்துள்ளார்.
36

நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கமும் இ.மு.எ.ச.நாவலப்பிட்டி கிளையும் இணைந்து இரு தஸாப்தங்களுக்கு மேலாக நவீன இலக்கியத்துறையில் ஆற்றிய சேவைகள் இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்ச்சியையும் எழுத்தாளர்களிடையே ஒரு புதிய போக்கையும் நிலைநாட்டியிருக்கிறது.
டாக்டர் நந்தி, நண்பர் ஜீவா ஆகியோரின் உற்சாகம் தரும் இலக்கிய கடிதத் தொடர்புகள் மென்மேலும் ஆக்க இலக்கியத்துறைக்கு
வலுவூட்டியுள்ளன. . *; 1; " • - {
' கலைஞன்” என்ற பெயரில் 'ஆகஸ்ட் தொட்க்கம் ஒரு கனில இலக்கிய மாத இதழை ஆரம்பிக்க இருக்கின்றேன். உங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை. கருத்துக்கள்ை எழுதவும், கதைகள் அனுப்பவும்.” . . . . .
மேற்கண்டவாறு ஜீவா அவர்கள் குறிப்பட்டிருந்த பிரகாரம்: ஒரு மாதத்திற்குப் பின் மாத சஞ்சிகை அஞ்சலில் கிடைக்கப்பெற்றோம்.
"கலைஞன்” இதழைப் பார்க்கும் ஆவலில் அவசர அவசரமாக பிரித்துப் பாார்தத்போது -
எமது கரங்களில் 'மல்லிகை"யின் முதலாவது மொட்டு விரிந்திருந்தது. இதுவே 'மல்லிகை"யின் முதல் தரிசனம். அன்று மாலையே நண்பர் மாலியின் இல்லத்தில், மல்லிகையின் வருகையைக் கொண்டாடும் முகமாக, கவிஞர் ஒளியேந்தியின் தலைமையில் ஓர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்தது.
"மல்லிகையில் எழுதி தமது இலக்கியப பாதையை செப்பனிட்டவர் பலர். நாவலப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட பல இளைஞர்களுக்கு "மல்லிகை'களம் அமைத்துக் கொடுத்துள்ளது. . . ; : : : 1
‘மலையகத் தபால்' என்ற தலைப்பில், மலையக இலக்கிய விடயங்கள் சார்ந்த ஒரு தொடர் கட்டுரையை கவிஞர் பி.மகாலிங்கம் (மாலி) எழுதியுள்ளார்.
1970களில் நாவலப்பிட்டி நற்றமிழ்க் கழகம் இலக்கிய ஆர்வலர்களுக்கு குறிப்பிடத்தக்க சேவை செய்துள்ளது.
இர சடகோபன் நற்றமிழ்க் கழகம் மூலம் வளர்ந்த மலையக் கவிஞர். இவரது ஆரம்பகால ஆக்கங்கள் 'மலைக்குருவி" சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளன.
1980களில் "மலையக மறுமலர்ச்சி மன்றம்' என்ற இலக்கிய அமைப்பு கலை இலக்கிய வளர்ச்சிக்கு கணிசமான சேவை செய்துள்ளது.
37

Page 22
கவிதையிலும் ஒவியத்திலும் சிறந்து விளங்குபவர் நாவல் நகர் எஸ்.தர்மசீலன் அவர்கள். அவரது வானொலி ஆக்கங்கள் பலரது வரவேற்பினை பெற்றவை. திரு.தர்மசீலன் அவர்கள் மேற்குறிப்பிட்ட கையெழுத்து சஞ்சிகையை (மலைக்குருவி) வெளியிட்டார். திரு.கணேசதாசன் திரு. பத்மகுமார் ஆகியோர் இவருக்குத் துணைநின்றனர்.
நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருநீலன் மயில்வாகனம் இலக்கியத்துறையில் மேடைநாடகம், சமய இலக்கியம், கட்டுரை போன்ற துறைகளில் தமது பங்களிப்பை செய்துவருகின்றார். திரு.ஏ.ஆர்.ஏ.ஹசீர் அவர்கள் புதுக்கவிதைத் துறையில் தமது பங்களிப்பைச் செய்து வருகின்றார். தரமான சிருகதைகள் எழுதிவரும் திரு.கிரெகரி அவர்கள் நாவல் நகரில் தோன்றிய மற்றுமொரு எழுத்தாளராவார். செல்வி ஸ்டெல்லா மேரி அவர்களும் வளர்ந்துவரும் சிறுகதை எழுத்தாளர்.
ஆன்மீக கலை இலக்கிய மன்றம் மூலம் கடந்த சில ஆண்டுகளாக திரு.கே.பொன்னுதுரை அவர்கள் காத்திரமான இலக்கியப் பணி புரிந்துவருவது குறிப்படத்தக்கதாகும். அவரது இலக்கிய சேவை தொடரவேண்டும். V
கடந்த சில ஆண்டுகளில் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு இன்று ஒரு பலம் வாய்ந்த நிறுவனமாக வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. "மல்லிகைப் பந்தல்" "இரவின் ராகங்கள் மல்லிகைப் பந்தலின் ஐந்தாவது வெளியீடாகும். ". இது நாவல்நகர் எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றி. நாம் நாவலப்பிட்டியில், ஜீவா அவர்களின் தலைமையில் ஒரு வெளியீட்டு விழா நடாத்த வேண்டும்." என்று விரும்பியிருந்த ‘மாலி' அவர்கள் திடீரென்று நோய் வாய்ப்பட்டு காலமானதால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. அவ்வப்போது தரமான கட்டுரைகள் எழுதிவரும் திரு.பெ.ராமானுஜம் பத்திரிகை துறையில் ஆர்வமுள்ளவர்.
இவ்வாறாக, டாக்டர் நந்தி, திரு.ஜீவா ஆகியோர் அளித்த ஊக்கத்தின் மூலமும், மல்லிகை மல்லிகைப்பந்தல், இ.மு.எ.சஆகியவற்றின் தொடர்புகளாலும் நாவல் நகர் சார்ந்த படைப்பாளிகள் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொகண்டதுடன் ஆரோக்கியமான இலக்கிய போக்கையும், வளத்தையும் தமதாக்கிக் கொண்டனர். அந்த ஆதர்சனத்தின் தொடர்ச்சியாக ஆக்க இலக்கியப் பணி புரிந்து, நாவல் நகரில் படைப்பாளிகள் இன்று எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தரமான வாசகர்களாக இருப்பதோடு, நாவல் நகரில் உள்ள புதிய தலைமுறை படைப்பாளிகள் முயற்சிகளும் அந்த ஆதர்சத்தின் தொடர்ச்சியாக அமைவதைப் பார்க்கம்போது மகிழ்ச்சியாக உள்ளது.
38

கணிப்பு:
ஈழத்து இலக்கியம் , திறனாய்வுப் பார்வைகள்
இலங்கை இலக்கிய உலகில் பிரபலம் பெற்று விளங்குபவருள் ஒருவரான கே.எஸ்.சிவகுமாரன் பல்கலைக்கழகம் நுழையாமலே தமது விடாமுயற்சியானாலும் திறமையினாலும் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுக் கொண்டவர். ஆங்கில மொழியிலும் ஆங்கில இலக்கியங்களிலும் மேலை நாடுகளின் இலக்கி யங்களிலும் பழைய திறனாய்வு முயற்சி களிலும் புதிய திற னாய்வு முயற்சிகளி லும் அதேசமயம் தமது சுயமுயற்சி யினால் தமிழ் இலக்கி யங்களிலும் தமிழ் இலக்கிய உலகில் வளர்ந்து கொண்டு வரும் திறனாய்வுத்துறையில் கணிசமான அளவு அறிவும் பரிச்சயமும் அனுபவமும் பெற்றுக்கொண்டவர்.
இலங்கைப் பல்கலைக்கழக மட்டத்தில் நவீன இல்ககிய ஆய்வுலகில் பேராசிரியர்கள், கைலாசபதி, சிவத்தம்பி, தில்லைநாதன் முதலியோர் போன்று, பல்கலைக்கழக மட்டத்திற்கு வெளியில் இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு சிலர்தான் இவ்வகையிற் சிறப்புற்று விளங்குகின்றனர். அத்தகையவர்களுள் திறனாய்வாளன் என்ற வகையில் முன்னணியில் நிற்கும் ஒரு சிலருள் கே.எஸ்.சிவகுமாரனும் ஒருவரென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
போதியளவு ஆங்கில மொழி அறிவு, போதிய அளவு மேலை நாடுகளின் இலக்கியப் பரிச்சயம், பல்வேறு துறைகளிலும் பல்வேறு பதவிகளை வகித்ததன் மூலம் தாம் பெற்றுக்கொண்ட அறிவு, அனுபவங்கன், செயற்பாடுகள் முதலியவை ஒருபுறம் மறு 1றம் அவர் அரும்பாடுபட்டுத் தேடிக் கெண்ட தமிழ் இலக்கிய அறிவு, தமிழ்மொழிப் புலமை, ஆங்கிலத்தில் சரளமாகவும் தமிழில் கணிசமாகவும் சொற்பொழிவாற்றவும், எழுதவும் விமர்சிக்கவும் பெற்றுக்கொண்ட தகுதிப்பாடுகள்;
39

Page 23
இன்னொருபுறம் அவரிடத்தே குடிகொண்டுள்ள மிதமிஞ்சிய தன்னடக்கம்,
மனஉறுதி. ஆய்வறிஞர்களை அளவுகடந்து மதித்துப் போற்றும் பண்பு, உல்கள்ாவிய் அனுபவங்கள்; இவையாவும் சிவகுமாரனைப் பற்றி எம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.
இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இதுவரை அவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்களும் கட்டுரைகளும், வகித்த வகித்துக் கொண்டிருக்கின்ற பதவிகளும் அமைகின்றன.
இவை யாவற்றையும் நாம் மனத்திற் கொண்டு குறைநாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் - என்னும் தெய்வப் புலவனின் கூற்றினை மனதிற்கொண்டு சிவகுமாரனை மதிப்பிட்டால் பல உண்மைகள் வெளிவரும்.
அவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவ்விரு நூல்களும் விளங்குகின்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தமது வாழ்நாளில் எத்தனையோ அக்கினிப் பரீட்சைகளுககு மத்தியிலும் தொடர்பு சாதன ஆலோசகராகவும், திரைப்படம், நாடகம், இலக்கியம் முதலியவற்றின் மதிப்பீட்டுக் குழுவின் அங்கத்தவராகவும் வருகைதரும் விரிவுரையாளராகவும் வானொலியில் சுதந்திர எழுத்தாளராகவும், இலக்கியம், அரங்கியல், திரைப்படம், கலை முதலியவை தொடர்பான எழுத்தாளராகவும், விமர்சகராகவும் பல்வேறு துறைகளிலும் அங்கம் வகித்து அலுப்புச் சலிப்பில்லாது உழைத்து வரும் ஒருவர்; சத்தியத்தையும் மானுடத்தையும் இதயபூர்வமாக நேசிக்கும் ஒருவர்; அடக்கமும் அறிவும் வாய்க்கப்பெற்று நிறைகுட்மாக விளங்கும் ஒருவர் கே.எஸ்.சிவகுமாரனராவார்.
. அவரது விமர்சன முறையின் விதந்தோதத்தக்க முக்கிய பண்புகள்: எவரையும் புண்படுத்த மாட்டார்; குழந்தைத் தனமாகக் கருத்துகளை அள்ளிக் கொட்டமாட்டார்; அதே சமயம் மிகமிக நிதரனமாகவும் பிறரது முயற்சிகளோடு ஒப்பிடும் ‘நாகரிகமாகவும் நறுக்காவும் தமது அபிப்பிராயங்களை வெளியிடுவார்; அதே சமயம் தமக்குச் சரியெனப் பட்டதைத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் பேசுவார்; எழுதுவார்.
சிவகுமாரனைப் பற்றி முதுபெரும் பேராசிரியரும் புகழ்பூத்த திறனாய்வாளருமான சிவத்தம்பி அவர்கள் கூறியுள்ள சில கருத்துக்களை இங்கே சுட்டிக் காட்டுதல் மிகவும் பொருத்தமாக அமையும் என நம்புகிறேன்;
'திரு.சிவகுமாரனது தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு புலமைத் தேவையுள்ளது. ஆங்கிலத்தில் ஆழமான பரிச்சயமில்லாத எழுத்தாளர்களுக்கும், ஆற்றல் கொண்ட வாசகர்களுக்கும் இவரது எழுத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக மாணவர் மட்டத்தில் (ஏ.எல்.முதல் பட்டதாரி வகுப்புவரை) திரு.சிவகுமாரன் வாசிக்கப்படுவதற்கான காரணம் இதுவேயாகும். இன்றைய
40

கல்வி முறையின் அமைப்பிலே திரு.சிவகுமாரன் போன்றவர்கள் முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகின்றனர்.
மேற்கூறிய எழுத்துப்பணிகளை நிறைவுறச் செய்வதற்கு இவ்வாறு எழுதுபவர் நிறைய வாசிக்க வேண்டுவது அவசியமாகின்றது. ஆங்கிலத்திலும் வாசித்தல் வேண்டும், தமிழிலும் வாசித்தல் வேண்டும். இத்தொழில்பாட்டில் சிவகுமாரன் அவர்கள் சிறிதளவேனும் பின் நிற்கவில்லை. வேண்டியன பற்றி, வேண்டப்படும் வேளைகளில் அவர் வாசித்துக் கொள்கிறார். இது ஒரு பெரிய புலமை நிர்ப்பந்தமாகும. அதனைப் போற்றக் கூடியமுறையில் திரு.சிவகுமாரன் நிறைவேற்றி வருகின்றார்.
சிவகுமாரன் அவர்களைப் பெரிதும் "ஏற்புடைத்தான" ஒருவராக்கியது அவர் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் முறைமையாகும். தான் அறிமுகம்படுத்தும் ஆசிரியரையோ ஆக்கத்தையோ, ஆராய்ச்சியினையோ பக்ககச்சாார்பு இல்லாது, இயன்ற அளவுக்கு நடுவுநிலை நின்று கூறும் ஒரு பண்பு இவரிடத்து உண்டு. ஆயினும் இவரிடத்து இலக்கியம் பற்றிய ஒரு உலக நோக்கு இல்லை என்றும் முற்று முழுதாகக் கூறிவிடவும் முடியாது. இலக்கியம் என்பது சுவைக்கப்படத்தக்கதாய், அடிப்படை மனித நியமங்களைப போற்றுவதாய் அமைய வேண்டும் எனுங்கருத்துப் பலவிடங்களிலே தெளிவாகச் சுட்டப்பெறுகின்றது.
இந்த எழுத்துக்களை இவர் எழுதும் முறைமையே பிரதானமானதாகும். சிவகுமாரன் தன்னை என்றும் ஒரு நியமமான விமர்சகனாகக் கொள்வதில்லை. இவர் தனது எழுத்துக்களை "மதிப்புரை” (review) களாகவும்பத்தி எழுத்துக்களாகவுமே (columns) காண்கின்றார்.ஆழமான, நுண்ணிதான கருத்து நிலைத்தளம் நின்ற விமர்சனங்களிலிருந்து தனது எழுத்துக்களைப் பிரித்துக் காட்டுவதற்காகவே இவர் இவ்வாறு கொள்கின்றார் என்பது தெரிகின்றது.
இந்த விடயத்தைப் பொறுத்தவரையில், திரு.சிவகுமாரன் தன்னைத்தான் குறைத்து மதிப்பிடுகின்றார் என்றே கருதுகின்றேன். ஆழமான விமர்சனக் கண்ணோட்டம் ஒன்று இல்லாது மதிப்புரைகளையும், இலக்கியப் பத்திகளையும் எழுத முடியாது. தமிழிலக்கிய உலகிலே காணப்படும் கருத்து நிலை, தனியாள் நிலைச் சிக்கற்பாடுகளுக்குள் தான் அகப்பட்டு விடக்கூடாது என்கின்ற ஒரு நிலைப்பாடு அவரிடத்து உண்டு என்பதை உய்த்துணரக் கூடியதாகவுள்ளது. இந்த விடயத்தில் இவரது ஆளுமையின் இயல்பும் முக்கியமாகின்றது." (கே.எஸ்.சிவகுமாரன், திறனாய்வுப் பார்வைகள், 1996, அணிந்துரை)
1950களில் ஆக்க இலக்கிய கர்த்தாவாக இலக்கிய உலகில் காலடி எடுத்துவைத்த கே.எஸ்.சிவகுமாரன் இன்று நாடறிந்த தரமான கலை இலக்கியத் திறனாய்வாளராகப் பரிணமித்துள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலும் போதிய அளவு அறிவைப் பெற்றுள்ள அவர் அம்மொழிகள் சார்ந்த கலை
4l

Page 24
இலக்கியங்களை, குறிப்பாக ஆக்க இலக்கியங்கள், சஞ்சிகைகள் திரைப்படங்கள், நாடகங்கள் முதலியவற்றை மிகுந்த ஆர்வத்தோடு !!!டித்துச் சுவைப்பதுடனமையாது திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் அவை பற்றிய தமது கருத்துக்களையும் துணிச்சலோடும் நடுநிலையோடும் வெளியிட்டு வருபவர்.
ஏறத்தாழ 1960களிலிருந்து 1980களின் இறுதிவரையில் அவர் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளுள் அதிகமானவை திறனாய்வுப் பார்வைகள் என்ற நூலில் அடங்கியுள்ளன.
திறனாய்வுத்துறையில் பயிற்சியும் அனுபவமும் பெற விரும்பும் ஆரம்ப நிலையிலுள்ளோர்க்கும் இளைய தலைமுறையினர்க்கும் உயர் வகுப்பு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக முதற்பட்டப்படிப்பை (உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் )த் தொடரும் மாணவர்களுக்கும் இவ்விரு நூல்களும் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
கண்டி இலக்கிய செய்தி மடல்
18/13 பூரணாவத்தை, கண்டி )
a
வாழ்த்து கின்றோம்.
பிரபல எழுத்தாளரும் மல்லிகையில் தொடர்ந்து எழுதிவருபவருமான “செங்கை ஆழியான்" அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளராக நியமனமாகியுள்ளதை அறிந்து மல்லிகை தனது
பெரு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
42
 

எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் - தேவகெளரி மல்லிகைப் பந்தல் வெளியீடு - 1996
(லக்கிய வரலாற்றுப் பதிவேடாக வெளிவந்திருக்கும் பயனுள்ள நூல் இது யாழ்ப்பாணத்திலிருந்து தரமான ஓர் இலக்கிய ஏடு, எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை ஆசிரியராக் கொண்டு வெளிவந்தபொழுது, மல்லிகை என்ற அந்த ஏட்டிலே 1980களில் வெளிவந்த விமர்சனங்கள் தொடர்பான பதிவுகளையும், தனது விமர்சனக் குறிப்புகளையும், நூலாசிரியர் தேவகெளரி இந்த நூலில் தருகிறாார். தேவகெளரி தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்று பட்டம் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி. புதிய நோக்கில் சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வருபவர். அவர் மேற்கொண்ட ஆய்வுகூடத் தமிழியலில் பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு பன்னியாகும்.
LL S S L L கே.எஸ்.சிவகுமாரன் SS SS S LS LSLSS
ஆய்வு மாணவர்களுக்கு வேண்டிய தரவுகளைக் கூடிய அளவு நிறைவாக இந்த 132 பக்க நூல் தருகிறது. ஈழத்து இலக்கியம் பற்றி அறிய விரும்பும் பொது வாசகர்களுக்கும் பல தகவல்களை நேரிடையான தமிழில் இந்நூல் தருகிறது.
இந்த நூல் மூலம் தெரியவரும் மற்றொரு விஷயம், புதிய பரம்பரை வாசகர்களுக்குப் புதிய தகவல்களாகும். 30 வருடங்களுக்கும் மேலாக, ஓர் ஆக்க இலக்கியப் படைப்பாளி, ஆய்வுக் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், இலக்கியச் செய்திகள், கேள்வி - பதில்கள், ஆசிரியர் தலையங்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கி மல்லிகை என்ற சஞ்சிகையைத் தந்துள்ளார் டொமினிக் ஜீவா என்ற ஆசிரியர் என்பது அந்த தகவலாகும். தலைசிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படும் டொமினிக் ஜீவா, தனது மல்லிகைப் பந்தல்
43

Page 25
வெளியீடுகள் மூலம் பல பயனுள்ள நூல்களைத் தந்திருப்பதும் தெரியவரும் வாய்ப்பு, தேவகெளரியின் இந்த நூல் மூலம் கிடைக்கிறது.
உயர்கல்வி மட்டத்திலும் தனது முயற்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. என்ற பூரிப்பில், மானுடம் பேணும் அந்தப் படைப்பாளி டொமினிக் ஜீவா கூறியிருப்பதை நாம் இங்கு நினைவுகூரலாம்:
"இந்த ஆய்வு நூலை வெளியிடுவதில் எனக்கொரு மனநிறைவு. புதிய தலைமுறை விமர்சகர் ஒருவரைச் சுவைஞர்களுக்கு அறிமுகப்படுத்த முடிகின்றதே என்ற மகிழ்ச்சி. அதற்கு அவரது பட்டப்படிப்பு ஆய்வுக்கு எனது அசுர உழைப்பால் மலர்ந்து வெளிவந்து கொண்டிருந்த மல்லிகை தளமாகவும், களமாகவும், பயன்பட்டுள்ளது, என்பதை நினைக்கையில், மனசில் ஒரு பெருமித உணர்வு. நிறைவு நிரம்பிய மனச் சந்தோஷம்."
"தேடத் தேட, முயல முயல, புதிய தலைமுறை இலக்கியச் சிந்தனையாளர்கள், விமர்சகர்கள், இந்த மண்ணிலே கண்டு பிடிக்கப்படுவார்கள்".
"இலக்கிய விமர்சனமும் வரலாறும்" என்ற தலைப்பிலே, முன்னுரை எழுதியுள்ள பெரும் ஆசான், பேராசிரியரர் கா.சிவத்தம்பி அவர்களின் குறிப்பும் இங்கு கவனிக்கத் தக்கது:
. "ஆய்வுப் பயிற்சி நிலையின் ஆரம்ப முயற்சியாக அமையும் இந்த ஆய்வு, 1980களின் இலக்கிய விமர்சன முயற்சிகளை 1990களில் இலக்கிய வரலாறாகத் தருகிறது."
"இலக்கிய விமர்சனம் என்பது அறிவியல் நிலை நின்ற ஆக்க முயற்சி. படைப்பாளியையும் ஆக்கத்தையும் புரிந்து கொள்ளாமல், விமர்சனம் செய்ய முடியாது. இன்றைய இலக்கிய விமர்சனம் நாளைய இலக்கிய வரலாற்றுக்கு திருஷ்டிக் கண்ணாடி ."
நூலாசிரியை தேவகீெளரி, நூலின் அமைப்பைத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பதும், எமது வாசிப்பு இலகுவாக அமைய உதவுகிறது. மூன்று இயல்களுடனும், நிறைவுரை, அடிக்குறிப்புகள் ஆகியவற்றுடனும், நூல் தரவுகளைத் தொகுத்து, தருவதுடன் நூலாசிரியையின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் நூல் தருகிறது.
எண்பதுகளில் மல்லிகையில் வெளிவந்த விமர்சனங்கள் பற்றிய தேவகெளரியின் பார்வை, அவருக்கே உரித்தானது. வேறொருவர், வேறுவிதமாகப் பார்க்கக் கூடும்.
தனக்கேயுரிய பார்வையில் தேவகெளரி இந்த விஷயத்தை அணுகிய முறை, இந்தப் பயனுள்ள நூலின் தனிவிசேஷம்.
44
 

எல்லோரும் வந்து ஆகிவிட்டதா? இன்னு மொரு முறை சரி பார்த்து க்கொள்! கணக்குப் பிழைத்தால் காரியம் கெட்டு போகும்! அவரவர்களுக்கான முகங்கள் சரிதானே!
"நீ மூர்த்தி - நீ கலீல் நீ சோமபாலா - நீ பெனடிக் எல்லாம் சரிதானே?
அவரவர்களின் பெயர்களுக்கான அடையாளங்களை நெஞ்சில் குத்திக் கொள்ளவும், முகத்தில் பூசிக் கொள்ளவும், தோளில் போர்த்திக் கொள்ளவும், காலில் மாட்டிக் கொள்ளவும் மட்டும் உத்தரவு இடாதே!
இங்கே அடையாளங்களின்
பிரகடனங்கள் - விளம்பரங்கள்
பேதங்களை பயிர் செய்யும் !
பின் - உன் வியூக பயணம் வானில் வெடித்த விமானமாய் சிதறிப் போகும்!
சரி! தொடங்குவோமா? ‘எங்கே நீ பேசு பார்ப்போம்" உன் பேச்சில் சுவாரசியமில்லை சலித்துப் போன காதலி போல்; நம் தேசத்து நிகழ்வுகளைப் போல்;
ஏதோ ஒரு முகம் குறைகிறதே! இல்லை - முகமுடி குறைகிறதோ? சரி - சரி எண்ணிப் பார்க்க நேரமில்லை! மாலையில் - ரூபவாஹினியின் ஒளிபடிமத்திலும் இராத்திரியில் SW -2 யிலும் சரி பார்த்து க் கொள்ளலாம்! வெவ்வேறு பட்டங்களுடன் செய்திகளின் பாடைகளில்; கவலைவிடு!
45

Page 26
எங்கே தொடங்கவில்லையா? அடங்கிய குரலில் பேசவேண்டிய அரசியலை உரத்த குரலில் பேசு! தேசீய வேஷம் தாங்கிக் கொண்டு: உன் இருப்பை நிச்சயம் படுத்திக் கொண்டு: (அடங்கிய குரலில் 'குட்டிகதை' களை பேசுவோம் - பக்கத்தில் நிற்கும் பெரிசுகளுக்கு பயந்து : அப்பாவுக்கு சிகரட் புகையை மறைக்கும் மகனைபோல்)
எங்கே நமக்கான கருவிகள் ? மீட்ட அரிக்கும் விரல்கள்! ஒ. வார்த்தைகளின் போர்வையில் மூடப்பட்டு இதயத்தில் ஒளிந்து கிடக்கின்றனவோ அவை? வெளியே எடு! நம் விரல்கள் கோர்த்து நிற்கும் வட்டச் சங்கிலியின் உருண்டை - அவர்களுக்கான துக்குக் கயிற்றின் சுருக்காய் குறியீடு ஆகட்டும்!
ஒ. கால சர்ப்பமே! இன்னு மா நீ ஆடை மாற்றவில்லை? எங்களுக்கான ஆடைகளுடன் நிஜ வியூகத்திற்கு வா, ஒத்திகைக்கான நிமிஷங்கள் தொலைந்து போகும் முன்!
உன் வருகை தாமதமானால்எம் இருப்பும் நிஜமும், நிமிஷங்களும் ஞாபகங்கள் இழக்கப் போகின்றன! துரிதமாய் ஆடையை மாற்று ! துரியோதனர்களின் கொடுமை பொறு க்கவில்லை! (வியூகக்காரர்களான எமது இந்த அழுகையை முகாரி ராகத்தில் எந்த வானொலி அறிவிக்கும்)
சரி - சரி நேரம் நெருங்கிவிட்டது இந்த வியூகக்காரர்களை எழுப்பு! கல்லில் வளர்ந்த இன்னொரு கல்லாய் சமைந்து போய் இருக்கிறார்கள். சுயபோக மயக்கத்தில்; టీ சுயநல் போதையில்;
46

எழுப்பு சலிப்பின் - அழிவின் உச்சஸ்தாதிமிக்க உக்கிரத்தில் இவர்களைக் கிளப்பு! அவசரத்தின் பொடியை அவதார வேஷமாய் முகங்களில் பூசிக்கொள்ளச் சொல் தேவையின் தாகத்தைக் கூட்டிக் கொள்ள சொல்! (இவனின் ஒருவனை தனது நாற்காலியை பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அறையின் துருப்பிடித்த பூட்டை பூட்டிய கைகளுடன் அகத்திற்கு சென்று ஆகாரம் உண்ணச் சொல்! துங்கி வழியும் அவன் தெரு டாக்டர்கேனும் 'போனி நடக்கும்)
சரி! போவோம் வாருங்கள்! ஒத்திகைக்கு அவகாசமில்லை! இனி இங்கு நாளை வந்து அமர்வோம்! கோடிட்ட இடங்களை நிரப்பும் சொற்களாய்; வந்து அமர்வோம்! அச்சுக் குலையாமல், அச்சகத்தில் நனையாமல்; வந்து அமர்வோம்!
அவரவர் இடங்களுக்கு, அவரவர் முகங்களுடன் அதே சலிப்புகளுடன்; அதே அவலங்களுடன் நிஜ நாடகத்தை நடத்தி முடிக்க!
須
மலையக உழைக்கும் மக்களிடமிருந்து முகிழ்ந்து வந்தவரான கவிஞர் மலைத்தம்பி சமீபத்தில் நம்மை விட்டுத் திடீரென மறைந்து விட்டார். உழைக்கும் மக்களின் சோகத்தில்
"மல்லிகை"யும் பங்கு கொள்ளுகின்றது.
- ஆசிரியர்
47

Page 27
V717 LANNGOdVLIGNJ
10.
1.
12.
13.
、量4。
1S.
16.
மீன்குஞ்சுகள் - ச.முருகானந்தன் பித்தன் கதைகள் - கே.எம்.எம்.ஷா அந்நியம் - நாகேசு. தர்மலிங்கம் தலைப்பூக்கள் - டொமினிக் ஜீவா (65 மல்லிகைத் தலையங்கங்கள் )
தூண்டில் - டொமினிக் ஜீவா (இரண்டாம் பதிப்பு )
அனுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில கைலாசபதி - டொமினிக் ஜீவா (தொகுப்பு நூல், இரண்டாம் பதிப்பு)
மீறல்கள் — (p.II Gni விடை பிழத்த கணக்கு - திக்குவல்லை கமால் மாத்து வேட்டி - தெணியான் எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் - தேவகெளரி
டொமினிக் ஜீவா - சிறு கதைகள் (ஆசிரயராலேயே தேர்ந்தெடுக்கப் பெற்ற 50 சிறுகதைகளின் - தொகுப்பு) மல்லிகை முகங்கள்
(35 தகைமையாளரின் அட்டைப்படத் தகவல்கள்)
தெரியாத பக்கங்கள் - சுதாராஜ் ஒரு தேவதைக் கனவு - கெக்கராவ ஸ்ஹானா , அந்தக் காலக் கதைகள் - தில்லைச் சிவன்
201, 1/1, நுகதிரேசன வீதி, கொழும்பு - i3
48
 
 

'து ரைவி ‘துரைவி' வெளியீடாக 33 மலையக எழுத்தாளரின் சிறுகதைகளை ஒருங்கு சேர்த்து மலையக சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தரமான புதிய படைப்பொன்று நூலுருப் பெற்று வெளிவந்துள்ளது. இந்தத் தொகுப்புக்கான கதைகளைத் தொகுத்தெடுத்ததுடன் ஆழமான முன்னுரை ஒன்றையும் எழுதியுள்ளார், தெளிவத்தை ஜோசப் அவர்கள். ஈழத்து இலக்கியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய தொகுதி இது.
49

Page 28
Shopping Centre
Dealers in : T.V.Radio, Watches and
Luxury Goods
50
 
 

தலைநகரில்
சிகையலங்காரத்திற்கு சிறந்த இடம்
ஓரியண்டல் சலூன் 182, முதலாம் குறுக்குத்தெருஇ கொழும்பு - 11 தொலைபேசி - 439413
ܐܹܠ
51

Page 29
அதிகாலைச் சேவலின் கூக்குரலும், கூரைமுகட்டுச சிட்டுக்குருவியின் சிருங்காரமும், புல்நுனிப் பணித்துளிகளும், காலைச்சூரியனின் வர்ணஜாலமும், வானின் நிர்மலமும, பஞ்சு முகில்களின் செளந்தர்யமும், ‘துணையாய் நான”
என வருடிச் செல்லும் தென்றலும்,
அந்திச் சூரியனின் அவசர விசாரிப்பும் சிணுங்கிச் செல்லும் சின்ன மழையும், இரவின் மடியில் வீதியில் நறநறத்தபடி சோர்ந்துபோகும் மாட்டுவண்டிகளும். மொட்டவிழ்க்கும் பவளமல்லி வாசமும் இரவின் நிசப்தமும் நடுநிசி அமானுஷ்யமும் பாரதியின் பட்டுக் கருநீலப் புடவையில் பதித்த நல் வைரமும் இனி நான் ரசிப்பதெப்போ?
எனக்கு. வேலை கிடைத்து விட்டது!
செல்வி.பாலரஞ்சனி சர்மா
LLLLLL L LLLLL LLLL LLLLSL S S q LSLSLL LLLL LLLL L LL LL L LL LLLL
52
bs
 

SDIVIS MÀGIDSWYKONA
uDIT. Lumraw&fritasub.
வவுனியாவில் நண்பரொருவரைச் சந்தித்தேன். அவர் ஒர் அதிகாரி. பல் விஷயங்களைக் கதைத்தோம். ‘என்னட்டை ஒருத்தர் வந்தார். அவர் எங்கட பக்கத்துப் பொடியன்தான். அவர்ரை பேச்சுக் கொஞ்சம் உறுக்காட்டியமாக இருந்தது. அவருக்கு சொன்னன்: ஆரோடு பேசுகிறாய் எண்டு யோசிச்சுப் பேசு! நான் ஆர், நீ ஆர் தம்பி?” என கூறி நண்பர் புன்னகைத்தார். என் பூர்வோத்திரங்களைநன்கு அறிந்துள்ள அவர் இப்படிச் செட்டாகச் சொன்னது எனக்கு மரியாதைக் கேடாக இருந்தது. நீயார், நான் யார்?" என்ற அவரது சொற் பிரயோகம் எனக்கும் சேர்த்துத்தானென மட்டுக்கட்டினேன். அவரோடு கதையைத் தொடராமல், . இடையில் முறித்துக் கொண்டு வந்துவிட்டேன்.
இந்த விஷயம் என்னை உரத்துச் சிந்திக்க வைத்தது. அப்பொழுது எனது நினைவை நிறைத்தவர் பிரபல நாவலாசிரியர் கே. டானியல்தான். ஒடுக்கு முறைக்கு அழுத்தம் கொடுத்து அரிய நாவல்களை தமிழுக்கு தந்தவர். தலித் இலக்கியத்தை இந்த மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவர்.
"பஞ்சமர்’நாவலைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட நாவல்கள் அனைத்தும் சாதிக் கொடுமையின் வெளிப்பாட்டு வடிவங்களே. மிகத் துணிகரமாகத் தன் மக்களிடமிருந்து கற்றதை மக்களுக்குக் கொடுத்தார். பேனாவின் மூலம் போராட்டம் நடத்தினார். அத்தகைய எழுத்துக்களை இப்பொழுது தேடுகிறேன். இன்றைய எழுத்தாளர்களுக்குத் தீண்டாமை மறை பொருளாகி விட்டது. என்னை வவுனியாவில் சந்தித்தவரைப் போன்றவர்கள் இன்னமும் இந்த மண்ணில் திரிவது தற்போதைய எழுத்தாளர்களுக்குத் தெரிவில்லையா?
பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களால், தீண்டாமையைக் கருவாக்கி எழுதப்படும் இலக்கியத்திற்கு தமிழ்நாட்டு இலக்கிய உலகு தலித் இலக்கியமென நாமகரணஞ் செய்துள்ளது. இந்த தலித் எழுத்தாளர்கள் தற்பொழுது புற்றிசல்களைப் போல் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களுக்குச் சவாலாக இருப்பார்களென ஏனைய எழுத்தாளர்கள் கலங்கு கின்றனர். ஆனால் ஈழத்து இலக்கியத்தில் மட்டும் இந்த விடயம் படுத்து
53

Page 30
விட்டது. இது ஆரோக்கியமற்றது. டானியலின் எழுத்துக்களுக்கு மேற்தளத்தவர்கள் ஆதரவு காட்டினர். எதிர்ப்பும் கிடைத்தது. கடந்த காலத்து இலக்கிய நடப்புகள் இதைக் காட்டுகின்றன. தாழ்த்தப்பட்டோர் பிரச்சனைகளை டானியல் மிகவும் தீவிரப்படுத்தி எழுதினார். இதனால் யாழ்ப்பாணத்து உயர் சாதி மக்களின் இழி கோலங்களைப் பச்சை பச்சையாக எழுத வேண்டிய நிர்ப்பந்தம்அவருக்கு இருந்தது. இதனால் அவர் எழுத்துக்கள் பழிவாங்கும் எழுத்துக்களென குறிசுடப்பட்டது. இத்தகைய ரோசக்காரரின் விளைக்சல்தான் எனது வவுனியா நண்பரும் இதையெல்லாம் என்னத்துக்கு இப்ப டானியல் எழுதுகிறதெனச் சிலர் குறைப்பட்டனர். சாப் பயமே இப்படி எழுதிக் குவித்துக் கொண்டிருப்பதற்கு காரணமென திருவாய் "மலர்ந்தவர்களுமுண்டு. நோய்க்குச் சிகிச்சை எடுத்தபடி டானியல் அசுர வேகத்தில் எழுதினார். அவைகள் பண்பாட்டு நாவல்களாகக் குவிந்தன.
பாடசாலைப் பருவத்திலிருந்தே டானியலை எனக்குத் தெரியும். சோடாப் போத்தல்களோடு அவர் பெரியகடை (யாழ்) வீதிகளில் வலம் வந்ததைக் கண்டிருக்கிறேன். அவர் குளிர் நீர் பானங்களை கடைகளுக்கு கொடுக்கும் வியாபார முயற்சியில் ஈடுபட்டிருந்தவர். பஸ்ராண்டில் நாசனல், வேட்டியோடு கட்சிப்பத்திரிகை விற்றவர். எனது கொட்டடிக் கிராமத்திற்கும் வந்துள்ளார். கிராமச்சங்க கூட்டம் நடைபெற்ற பலதடவைகளில் பிரசன்னமாகி உரை நிகழ்த்தியுள்ளார். கையை நீட்டி, நீட்டி, அசைத்து, அவர் இளமைத் துடிப் போடு பேசிக் கொண்டிருப்பதை நான் வேலிப் பொட்டுக்களால் பார்ப்பேன். சிறுவனாக இருந்தபடியால் என்னைக் கூட்டத்திற்கு அனுமதிக்கமாட்டார்கள். அந்த காலத்தில் அவர் னெக்கு மிகவும் பரிச்சயமானவர். ஆனால் அவரோடு நேரில் கதைத்ததில்லை.
அந்தக் காலத்துப் பிரபல பத்திரிகைகளில் அவரது சிறுகதைகள், நாவல் கள் வெளிவரும். நான் காத்திருந்து படிப்பேன். வாசிப்பது எனக்குப் பிடித்த மான அலுவல். எனது வாசிப்பு வேட்கைக்கு யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி நூலகம் ஊட்டம் அளித்தது. தமிழக எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தேடிப் படித்த எனக்கு டானியலின் எழுத்துக்கள் வித்தியாசமாக இருந்தன. அடிக்கடி நான் காணும் பெரியகடை, முற்றவெளி, பண்ணை ஆகியன அவரது புனைகதைகளின் செல் பாதைகளாக அமைந்தன. அத்தோடு உட்கருவும் நான் கேட்டவையாகவும் அறிந்தவையாகவும் இருந்தன. அவர் தனது எழுத்துக்களை யதார்த்த நிலையில் நகர்த்திச் சென்றார். எனவே, நான் டானியலின் ஏகலைவனானேன்.
இடம்பெயர்ந்து நான் நாரந்தனையில் இருந்தேன். ஒரு நாள் மாலைச் செய்தியில் டானியலின் பெயரைக் கேட்டேன். வைத்திய சிகிச்சைக்காக அவர் தமிழ் நாடு சென்றது எனக்குத் தெரியும். வானொலிச் செய்தியை உற்றுக் கேட்டேன். என் மதிப்பிற்குரிய நாவலாசிரியர் கே. டானியல் மரித்து விட்டார் என்ற சோகச் செய்தியை அறிவிப்பாளர் வானோலியில்
54

அறிவித்தார். விடிந்ததும் கோப்பாய்க்குச் சென்றேன். திரு.வ. இராசையா (தகவம்) வை அவரது அரவிந்தம் இல்லத்தில் சந்தித்தேன். இருவரும் கோயில் வீதியில் இருக்கும் டானியலின் இல்லம் சென்றோம். துயரில்
தோய்ந்திருந்த அவரது குடும்பத்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தோம்.
இந்த அஞ்சலி போதாதெனக் கருதினேன். ஊர்காவற்றுறை, வடகரம்பனி, அண்ணா சனசமூக நிலையத்தின் நிருவாக சபையில் அமரர். டானியலுக்கு, நிலையத்தால் அஞ்சலிக் கூட்டம் நடத்த வேண்டுமெனக் கேட்டேன். எனது அன்புக்குரியவர்கள் ஏற்றுக்கொண்டனர். கவிஞர். க.கணேசவேல்(கிராம் அலுவலர்) நவாலியூர்.த.பரமலிங்கம் ஆகியோரை அழைத்து ஊர்காவற்று றையில் அஞ்சலிக் கூட்டம் நடத்தினோம்.
தமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) கொழும்பில் ஒழுங்கு செய்த பஞ்சமர் நாவல் ஆய்வரங்கிற்கு நவாலியூர் த. பரமலிங்கம் சகிதம் கேடானியல் கொழும்பிற்கு வந்தார். கோட்டை, புகையிரதநிலையம் சென்று இருவரையும் எனது இல்லத்திற்கு அழைத்து வந்தேன். நண்டுக் கறியோடு அவர் எங்களோடு விருந்துண்டார்.இரவு டானியலோடு நான், நவாலியூர் த.பரமலிங்கம், மாத்தளை கார்த்திகேசு ஆகியோர் நீண்ட நேரமாக இல்க்கியச் சமா வைத்தோம். அவர் அடக்கமாகப் பேசினார். ஆழமான விளக்கங்களைத் தந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ஆலயப் பிரவேசங்களை முன்நின்று செய்து சண்டித்தனம் காட்டியது இநத் மணிசராவென வியந்தேன். இதுவுே முதல் சந்திப்பு.
வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தவர்களில் டானியலும் ஒருவர். அவர் நினைத்திருந்தால் பெரியதோர் முதலாளியாக மிளிர்ந்திருக்கலாம். அதை மறந்து ஒடுக்கப்பட்ட பாமர மக்களின் பிரச்சினைகளில் ஈடுபாடு கொண்டு உழைத்தார் வெலிங்டன் சந்தியில் இருக்கும ஸ்ரார் வெல்டிங் லேக்ஸ் டானியலுக்குச் சொந்தமானது. இதற்கு அவரது முழு உழைப்பும் கிடைத்திருந்தால் டானியல் கொழுத்த பணக்காரராகி இருப்பார். எங்கே சமூக ஒடுக்குமுறைகள் கருக்கட்டுகின்றதோ அங்கே டானியல் நின்றார். பங்களிப்புச் செய்தார். ஒரு போராளியாகவே வாழ்ந்தார்.
ஸ்ரார் வெல்டிங் வேக்ஸ்ஸிற்குச் சென்றால் தேத்தண்ணி (தேநீர்) தருவார். இதனால் அவரது அபிமானிகள் டானியலின் தேத்தண்ணீர்க் கதைக்கெனக் கூட்டம் கூடினர். தனது வேலைகளைப் பொருட்படுத்தமாட் டார். உரையாடலை இடைமறித்து வந்தவரை வழி அனுப்பமாட்டார். வந்தவர்களும் ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு அவரோடு சம்பாசிப்பர். இப்படியானவொரு சந்தர்ப்பத்தில் தான் பாசையூர் கவிஞர் தேவதாசனை எனெக்கு அறிமுகப்படுத்தினார்.
55

Page 31
அவர் ஆசிரியராக இருந்த மக்க சிறுகதை எழுதச் சொன்னார். ச இருக்க வேண்டுமெனச் சொன்னார்.
ஒரு சந்திப்பில் காணல் நாவலின் கொடுத்து வாசித்து அபிப்பிராயம் சாகித்தியப் பரிசைப் பெற்றஇந்த ஜாம் என்னிடம் தருகிறாரேயென யோசி அவரது செழுமையான பண்பாடு பn
போராளிகள் காத்திருக்கின்றனர் ஆகியவற்றைப் படிப்போருக்கு இவர் முடக்காதவரென்பது விளங்கும். ெ என்பவற்றிலும் இவரது ஊக்கம் இரு
தாமரை, சரஸ்வதி போன்ற த டானியலின் சிறுகதைகளைப் படித் களையும் அலங்கரித்துள்ளார்.
ஈழத்து இலக்கிய உலகு டானிய பிறக்கின்றது. இவருக்குப் பட்ட இப்பொழுது எங்கே? இவர்களது ே
இலங்கையில் இ தரமான இலக்கிய
201 - 1/1, கதிரேசன் வீதி, கொழும்பு - வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர் கொழும்பு -13 அச்சகத்திதல் அச்சிட்டு வெளி
 

ள் இலக்கியம் சஞ்சிகைககு என்னைச் திப்பிரச்சினைதான் மையக் கருவாக கதையை அனுப்பினேன், பிரசுரித்தார்.
கையெழுத்துப் பிரதியை என்னிடம் சொல்லும்படி என்னைக் கேட்டார். பவான் தனது நாவலை கற்றுக்குட்டியான ந்தேன். இளையவர்களையும் மதிக்கும் ராட்டப்பட வேண்டியதுதான்!
, டானியல் சிறுகதைகள் (தொகுப்பு) சாதிக்குள் மட்டும் தனது எழுத்தை தொழிலாளர், ஆணாதிக்கம், வறுமை ந்தது.
மிழகத்து இலக்கிய சஞ்சிகைகளில் ததுண்டு. அவைகளின் முகப்பட்டை
லை மறந்து விட்டது போன்ற உணர்வு த் சூட்டப் புறப்பட்டவர்களெல்லாம் நான்பு கலையுமா?
ருந்து வெளிவரும் ச் சஞ்சிகைகளில்
Wg
கொள்ள:
3 முகவரியைக் கொண்டவரும் ஆசிரியரும் களுக்காக ‘பிறஸ்மார்க் 115 புளூமென்டல் வீதி,
யிடப்பெற்றது.
56

Page 32
COLLOR
DEALERS IN INDUSTRIAL SPECIAL STS |N FABR
11, Bank,sh; Colloill PHOIC
MULTI CIEMIC
[M,I F*[]R"I"ERS.S"| ] {CKI, II IN DER GAN NIT () IR GAN SIJLWENT5, REAGEN
|N, GWIRE FIR:
41, BCյր|{Տի
COOT
IE : 44 || FCX A-1-4A559 A.
 
 

R CAMP
||LEMICA ISANI).IONES
| ANE |A|K|''EIG,
all Street,
|| |88||
AL SPECTRUM
"SIDIETRIEB LIITTORS OF NIC" CHEMICALS, |''S, INSTIR LIMIENTS,
LAB RATRIES
C|| Street,
է_յt_j | |
B, MAG 27 TT CÓCLITICII DET CK

Page 33
PARA EXPO PRO
Εχρο NO Tr
Sri LCNnk
30, Se Col. Te:
 

DUCTS (PVT) LTD,
rters of raditional san-Foods
la Avenue ՕmbՃ 3
57.37.17