கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1998.01

Page 1


Page 2
219, Main Street, Matale, Sri Lankca.
Phone: 066-2425
VIJAKA GENERAL STORES
(AGRO SERVICE CENTRE)
DEALERS: AGROCHEMICAL SPRAYERS, FERTILIZER & VEGETABLE SEEDS
No. 85, Ratnajothy Sarawanamuthu Mawatha, (Wolfendhal Street), Colombo 13.
Phone:-327011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
wyw
thly Magazine
காலத்தின் முன் நின்று கர்வப்படுகின்றோம்
இந்த 33ஆவது ஆண்டுமலரைத் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாம் கடந்த காலத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்கின்றோம்.
மல்லிகையின் முதலாவது ஆண்டு மலரை வெகு சிறப்பாகத் தயாரித்து வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆண்டு மலர்களை வெளியிட்டு வந்துள்ளோம். இடையிடையே பிரதேச மலர்களையும் வெளியிட்டுள்ளோம். நீர்கொழும்பு, மலையகம், திக்வெல்லை, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு இலக்கியக் கெளரவம் கொடுக்கக் கருதி மலர்களை வெளிக்கொணர்ந்தோம். அதன் இலக்கியத் தாக்கம் இன்றும் கூட, இலக்கிய மேடைகளில் விமரிசன ரீதியாக விதந்தோதப்படுவதையும் அநுபவ பூர்வமாகக் கேட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
நாம் வெளியிட்டு வைத்துள்ள மலர்களில் சிறப்பு அம்சம் என்னவென்றால் சிறுகுழந்தைகளின் சிறந்த ஓவியங்களை மலர்களின் அட்டைப்படங்களாக வெளியிட்டு அந்த இளம் மேதைகளை மக்கள் மத்தியில் கெளரவித்து வந்துள்ளோம்.
அத்துடன் இடையிடையே, உழைக்கும் வர்க்கத்தினரை - உடலுழைப்பாளிகளை - அவர்களது நிதர்சன உடலுழைப்புக் கோலங்களினூடே முகப்பில் வெளியிட்டிருந்தோம். இது இலங்கையில் வேறெந்தச் சஞ்சிகையும் செய்தறியாத தனித் தன்மை வாய்ந்த செயலாகும்.
இத்தனை முயற்சிகளுக்கும் அடிப்படை அத்திவாரமாக நம்மிடம் திகழ்ந்தது உழைப்பு ஒன்றேதான் - பாரிய உழைப்பு மாத்திரம் தான்.
2

Page 3
அம்மாவுக்கு எழுதி வந்தேன். சென்ற ஆண்டு இப்படி எழுதினேன்:- "தம்பியுடனோ தங்கையுடனோ போய் இருங்கள் அம்மா. அல்லது யாத்திரை வருவதாக இங்கே வந்துவிடுங்கள். மலையாக மூன்று பேர் இருக்கும்போது நீங்கள் ஏன் தனிமையில் வாடவேண்டும்? அப்பாவைப் புதைத்த இடத்தி லேயே உங்களையும் அடக்க வேண்டும் என்ற உங்கள் பிடிவாதத் தில் அர்த்தமே இல்லை. மயான த்தை விற்றுவிட்டார்கள். அங்கே வீடுகள் எழுந்துவிட்டன என்று நீங்கள்தானே எழுதியிருந்தீர்கள்? படிப்பறிவில்லாத அம்மா, தொங்க வீட்டு விசாலாச்சி மூலம்எழுதிய பதில் என்னைக் கூனிப் போகச் செய்துவிட்டது.
அப்பாவின் பக்கம் என்பது இந்தத் தோட்டத்து மண்ணை, மகனே பிறந்தகம் பிரிந்த நீங்கள்
மூவருமே மூன்று திக்குகளிலும்
அடங்கி விடுவீர்கள். உங்கள் அப்பா தனித்துப் போகக்கூடாது. என்னை இங்கே புதைத்தால், ஒரு கல்லையாவது நட மாட்டீர்களா? வருஷத்துக்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டை நீங்கள் திரும்பிப் பார்க்க மாட்டீர்களா?.
அம்மா, உங்கள் தலைச்சன் பிள்ளையாகவே நான் இருப்பேன். அம்மா, என் மடியில் உங்கள் உயிரோ உங்கள் மடியில் என் உயிரோ பிரியட்டும். இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தான் தாயே.
சே, அரை நூற்றாண்டாகியும் எனக்குப் புத்தியில்லை. வருவதாக அம் மாவுக் கு முதலிலேயே எழுதியிருக்க வேண்டும். இப்படித்
32
திடீரென்று அம்மா முன் போய் நின்று, அந்த ஆனந்த அதிர்ச்சியில்.
இல்லை, அப்படி எதுவும் நடக்காது.
மறுபடியும் மனக் கொதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
"சர் க் கார் சுவீகரிக் கப் போகு துன் னு பங்காளிங்க சுடுகந் தயக் θοι (3) போட் டாங் களாமே, இப்ப தோட்டம்னே ஒன்னு கெடயாதே?”
"சேர் இந்தியாங்களா?” "ஆமாப்பா, மதுர"
"பேச்சிலேயே நெனச்சேன். சுடுகந் தன் னு முழு சா ஒரு தோட்டம் இல்லதான். ரோட்டோரத் துண்டெல்லாங் கொலனியாகீறிச்சு. எங்க காணியும் அங்கதாங்க நடுப்பகுதியில ஒரு நூறேக்கர்
மாதிரி @ ( (8ğ5 T Lʼ L LD fT நடந்துக்கிட்டுத்தான் இருக்கு."
"ஜனங்க?"
"ஆரம்பத் தல கொஞ்சம் கஷடமாத்தாங்க இருந்திச் சி. போகப் போக வெளி வேல வெளிநாட்டு வேலன் னு மள மளன்னு ரொம்பப் பேருக முன் னேறீட்டாங்க. இப்ப சுடுகந்தைல வட்டிக்குக் குடுக்றாங்க. பிஸினஸ் பண்றாங்க. பத்து முப்பது பேருக்கு மேல வெளி நாட்ல இருக்கிறாங்க. கொஞ்சப் பேர் காணிபூமியும் வாங்கீட்டாங்க போங்க."
தோட் டக் கா டெல் லாபம்
இப்படியேதானா?
"அப்படியெல்லாம் பாதிப்
பில்லிங்க. நாட்டுப் பக்கமா இருந்த
லோக்கல் தோட்டங்க கொஞ்சம்

இப்பிடித்தான். ஆனா பெரிய தோட்டங்க எல்லாம் வேற வகயா முன்னேறிச்சின்னுதாங்க சொல் லனும். கைல மடிய்ல இருந்தவுங்க இந்தியாவுக்குப் போய்ட்டாங்க. இங்க நின்னு போனவவுங்க எப்பிடியும் பொழச் சாகனுமே. எடம் மாறுனாங்க. தொழில மாத்துன் னாங் க. புள்  ைள க வேற வளந்தாச்சி. அப்பறம் என்னாங்க."
*சிலோன் ல தோட்டக் காடெல்லாம் பொதுவா எப்பிடி?”
காடுங் க் ற பேச் சுக் கே எடமில்லிங்க. செல தோட்டங்கள்ல எலக்ட் றிஸிட் டி வந்திறிச் சி. சொந்தமா ஊடு கட்டிக் குடுக்கப் போறாங்க. ஒட்டுரிம கெடச்ச பொறகு அரசே மதிக்குங்களே. நாலஞ்சி பேருக வேல செய்ற குடும் பம்னா ஏழெட்டாயிரஞ் சம்பாத்தியமாகும். இன்னொரு பத்து வருஷம் போய்ட்டா பாருங்க, அதிலயும் இந்தத் துவேஷக் 35605 600) 5 UL. TLD 3(5ë g5' L. T, தோட் டங்க எல் லாமே கைத்தொழில் பேட்டையாகீறும்.
"இது.இப்ப ஒரு. பத்திருபது வருஷத்துக்குள்ள தான் போல?” "ஆமாங்க, எங்க அப்பாம்மா காலத்லயும் அதுக்கு முந்தியும்
கண் மூடிக் கெடந்தாங்க. எதுக்
கெடுத்தாலும் இந்தியாதான் அவுங்களுக்கு. அதுனால இங்க உள்ள பொறுக் கிக நல் லா ஏமாத்துனாங்க. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்துக்குப் ப்ொறகு இது தல கீழா மாறிறிச் சி. பதியோட கல்வித்திட்டத்தால பாதி, இப்ப உள்ள தலமொற படிச்ச தலமொற யாயிறிச்சி. வர்ற தலமொற இத உட நல்லாருக்குங்க."
"அப் பிடியும் இன்னும் . ஸ்ட்ரைக்கு, அது, இதுன்னு."
“எல்லா சமூகத்திலயும் அது உள்ளது தானுங்களே! வெலவாசி ஏறிப்போச்சு! நாகரீகம் வேற! சமாளிக்கணுமே?. இதுக்காக இந்தியாவுக்கு ஓடிற முடியுமா? அதனாலதான் இதெல்லாம். சரி பாதி இன்னும் படிப்பறிவில் லீங்களே! ஒருத்தன் ஸ்ரைக்குப் பண்ணும் பான் ! சரிம் பாங்க! ஒருத்தன் ஐயோ வேணாம்பான்! சரீம்பாங்க! எல்லாம் வறுமையும் படிப்பில்லாத குறையுந்தான்!. ஆனா முந்தி மாதிரி இல்லீங்க! எலங்கைல எந்தக் கட்சி ஆட்சிக்கு வாறதா இருந்தாலும், தோட்டத்து ஜனங்களோட ஒட்டு வேணுங்க."
என் பத்தினித்தாயை பரத்தை என்று அக்கம் பக்கம் கேலி பண்ணியபோது நான் தலைமை வகித்தேன் அன்று. இன்றோ அதே அக் கம் பக்கம் கோவில கட்டுகிறது. நான்?.
ஒரு சுற்றுப் பருத் திருந்த காளியைத் தாண்டி, தவறனைப் பாத்திகளில் மாதிரி முளைத் தெழும் வீடுகளைத் தாண்டி தோட் டத் தின் உள்ளே போகப்போக, ஆட்டாவின் அறுபது ரூபாவை நியாயப்படுத்தியது பாதை.
ஒரு மாற்றமும் இல்லாத அப் பாவின் வெள்ளை மரத்தையாவின் மாயத்தோடு
காலணி முடிந்துவடைந்து தோட்டப்
பழமை வரவேற்றது.
எனக் குப் போல றப் பர் மரங்களுக்கும் அதிக வயது தெரிந்தது. கவ் வாத்துப் பட்ட கொக்கோ மரங்கள், மலையாண்
šDC 63

Page 4
இந்த அர்ப்பணிப்பு உழைப்பிற்கு நமக்குப் பின்னணியாகத் திகழ்ந்தவர்கள் ஏராளமானோர் - தமது நாமத்தை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தாமலே எமது பணிக்குப் பங்களிப்புச் செய்தோர் பலப் பலர்.
அந்தப் பண்பார்ந்த நெஞ்சங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிப் பெருக்குடன் வந்தனங்களையும் தெரிவிக்கின்றோம்.
அத்துடன் மல்லிகையின் உள்ளடக்கப் பக்கங்களில் தங்களது ஆழமான கருத்துக்களை விதைத்து விதைத்து ஈழத்து இலக்கியப் பண்ணையைச் செழிப்பூட்டியவர்களுக்கும் தமது மண்சார்ந்த தனித்துவக் கற்பனை வளத்தால் முத்திரை பதித்த எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் நன்றி கூறுகின்றோம். அவர்கள்தான் மல்லிகையின் இலக்கிய நாமத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப் பாதை வகுத்தவர்கள். அதன் பெயரை நிலை நிறுத்த உழைத்தவர்கள்.
இதில் ஒரு விசேஷத் தன்மையை நீங்கள் மல்லிகையைத் தொடர்ந்து படித்து வந்திருந்தால் அவதானித்திருக்கலாம். ஈழத்தின் மிக ஆற்றல் மிக்க விமரிசகர்கள், சிந்தனையாளர்கள், கல்விமான்கள், கனம் வாய்ந்த கனவான்கள் மல்லிகையில் தமது எழுத்துக்கள் மூலம் தத்தமது பங்களிப்பை நல்கி வந்துள்ளனர். அதே சமயம் அப் படைப்புக்கள், கட்டுரைகள் அவர்களது நாமத்தை மாத்திரம் தாங்கி வந்துள்ளனவே தவிர, அவர்களது பட்டம் பதவிகள் எழுத்தில் பதியப்பட்வில்லை என்ற புதுமையையும் நீங்கள் மல்லிகையில் பார்த்திருக்கலாம்.
இது கூட மல்லிகையின் தனித்துவங்களில் ஒன்று என இங்கு குறிப்பிட்டுச் GFIT606)6)rtif. 3.
மதிக்கப்படத் தக்க கல்வி, பதவித் தகைமை வாய்ந்த கனவான்கள் மல்லிகையின் ஆரம்ப கால எழுத்துக் கொள்கையை ஏற்றுக் கனம் பண்ணி நம்முடன் இன்றுவரை ஒத்துழைத்து வந்ததற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் தனித் தனியாக நமது நன்றியறிதலைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.
அடுத்து முக்கியமான குறிப்பொன்றை இங்கு நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். என்னதான் அற்புதமான பொருளாக - சிருஷ்டியாக - இருந்தபோதிலும் கூட, அந்தப் பொருளுக்கு அல்லது சிருஷ்டிக்கு விலை ஒன்று பதியப்பட்டு மக்கள் மத்தியில் அது ஒரு விற்பனைப் பண்டமாக ஒப்படைக்கப்பட்ட உடனேயே அந்தப் பொருள் வியாபாரப் பண்டமாக மாறிப் போய்விடுகின்றது. அதற்கொரு பொருளாதார விலை நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றது.
மல்லிகைக்கு விற்பனை விலை குறிக்கப்பட்ட உடனேயே அது ஒரு விற்பனைச் சரக்காக மாறிவிடுகின்றது. அச்சடிக்கப்படும் அத்தனை
2

பிரதிகளும் விற்பனையானாலும் கூட, அடக்கச் செலவு கிடைத்துவிடாது. எனவே மல்லிகை சிற்றேடாக இருந்தபோதிலும் கூட, விளம்பரதாரர்களின் தொடர் ஒத்துழைப்புத் தேவைப்பட்டது. இது தவிர்க்க முடியாததும் கூட.
தனிமனித ஆளுமையின் மூலதனத்துடனும், அதே தனிமனித உழைப்புத் திறனுடனும் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய சஞ்சிகைக்காக யாரிடம் போய் யாசிப்பது? எம்மை - எமது பாரிய இலக்கிய நோக்கைப் புரிந்து கொண்டு எமக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடிய வியாபாரிகள் யார்? - எவர்?
குமுதம் என்ற சஞ்சிகையை ஆரம்ப காலங்களில் படித்தவர்களுக்கு ஒன்று தெரியும். அதன் கடைசிப் பக்க விளம்பரம். ரெனி ஸ்னோ, ரெனி பவுடர் விளம்பரம். இன்று குமுதம் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கலாம். ஆனால் அன்று அந்த ரெனி விளம்பரம் தான் அந்தச் சஞ்சிகைக்குப் பேருதவி செய்தது. அது போல ஆரம்ப காலம் தொட்டே மல்லிகையின் கடைசிப் பக்கத்தை அலங்கரித்து வந்தது 'சேவுகன் செட்டியார் விளம்பரம். அதைத் தொடர்ந்து தந்துதவியவர் இலக்கிய நெஞ்சம் கொண்ட வியாபாரி திரு. எம். ரெங்கநாதன் அவர்கள். அதே கைங்கரியத்தை இன்று செய்து வருபவர் இளம் வயசு தொட்டே மல்லிகையின் அபிமானியாகத் திகழ்ந்து வரும் திருமதி ஜெயந்தி விநோதன் அவர்கள். அதே போல மல்லிகையின் உட்பக்கங்களுக்கும் ஆண்டுமலர்களுக்கும் தொடர்ந்து விளம்பர உதவி செய்துவருபவர்கள் மல்லிகையையும் அதன் ஆசிரியரையும் உளமார நேசிக்கும் நல் நெஞ்சங்கள் ஆகும்.
இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாகப் பெருத்த பொருளாதார நன்மை ஒன்றும் சித்தித்து விடாது. கனத்த லாபத்தையும் எதிர்பார்க்க (PL9UTg5).
அசாதாரண கருத்தொன்று நமது மனசில் இடையிடையே நிழலாடுவதுண்டு. அது இந்தக் கட்டத்தில் நகைப்புக்கிடமானதாகத் தென்படலாம். ஆனால் நாளை நிச்சயமாக எதார்த்தமாக நடைபெறக்கூடும்
மல்லிகை போன்ற சிற்றேடுகளில் வரும் விளம்பரங்கள் அச் சிற்றேடுகள் மீது கொண்ட பரிவு காரணமாக - கரிசனையின் நிமித்தமாக 355glg56).jLIL61)Tib.
ஆனால் நாளை என்றொரு நாள் வரத்தான் செய்யும்.நிச்சயம் வரும். இன்றைக்கு உதவும் வர்த்தகர்களின் பின் பரம்பரை - பேரனோ, பேத்தியோ அல்லது அவர்களது புத்திரர்களோ - பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும்போது, ஆய்வுக்காக நூலகத்தில் புத்தகங்களைத் தேடும்போது இன்றைய இவர்களது விளம்பர வாசகங்கள் அவர்களது பார்வையில் நிச்சயம் படும். மகிழ்ச்சியால் துள்ளிக் குதிப்பார்கள். சக மாணவர்களிடம் இந்த நற்செய்தியைச் சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் அடைவார்கள்.

Page 5
இந்தப் பரம்பரையினருக்கு அந்தப் பரம்பரையினரின் முகம் கூட ஞாபகத்தில் இருக்காது.
மல்லிகை போன்ற உழைப்பால் வேர் பிடித்துத் தழைத்து வரும் சிற்றேடுகளில் வரும் விளம்பரங்களின் தகைமை அப்படிப்பட்டது. அது காலத்தால் சாகாதது. நின்று நிலைத்திருக்கக் கூடியது.
ஆரம்ப கால மலர்களில் இருந்தே ஆண்டு மலர்களுக்கு அட்ஃைப்படம் வரைந்து தருபவர் இலங்கையின் தலை சிறந்த ஓவியர்களில் ஒருவரான நண்பர் 'ரமணி' அவர்கள். மல்லிகையில் தொடர்ந்து வரும் அட்டைப்பட எழுத்தே ரமணி வரைந்து தந்ததுதான். அவருக்கு இங்கிருந்து கொண்டே நன்றி செலுத்துகின்றோம்.
இந்த மலரின் அட்டையை வரைந்து தந்துதவியவர் ஒரு சிங்களச் சகோதரர். பெயர் எஸ். அழகியவரு. இவரொரு படைப்பாளியும் கூட. இவரை எனக்குச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியவரும் ஒரு கலைஞரே. இவர்கள் இருவருக்கும் எமது நன்றிகள் எப்போதும் உரியவை.
சந்தாப் பணத்தை மாத்திரமே நோக்கமாகக் கொள்ளாது பலதடவைகள் பல வழிகளில் எமக்குப் பொருளாதார ஒத்துழைப்புத் தந்த நல்லோர்கள் பெரியோர்கள் இந்த மண்ணில் உலாவருகின்றனர்.
அவர்களது இந்த மேன்மை தங்கிய உதவி கிடைக்கப் பெறாமல் இருந்திருந்தால் மல்லிகை எப்போவோ கடையைக் கட்டியிருக்கும். இதைச் சொல்வதில் நாம் என்றுமே வெட்கப்பட்டது கிடையாது.
மல்லிகைச் செடியைச் சிறு கன்றாக யாழ்ப்பாணத்தில் ஊன்றி அதை வளர்த்தெடுக்க நாம் செய்துவந்த அத்தனை முயற்சிகளுக்கும் எமக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அத்தனை பேர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஏன் இந்தக் குறிப் புக் களை இத்தனை விரிவாகச் சொல்லுகின்றோமென்றால் புலம் பெயர்ந்து தலைநகரில் சிக்காராகப் போய்க் குந்திக் கொண்டு விட்டார்களோ என ஐயப்பாட்டுணர்வுடன் மல்லிகையைச் சுவைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வுடனேயே இத்தனை தகவல்களையும் இங்கு கூற வேண்டி ஏற்பட்டுள்ளது.
மல்லிகை உங்களை மறக்காது. மல்லிகையையும் நீங்கள் மறந்து
விடாதீர்கள்.
- ஆசிரியர்.
...Y 4

மல்லிகையின் ஆரம்ப காலம் தொட்டே நாம் அதன் நண்பர்களாக இருக்கின்றோம்.
அதன் தொடர் வளர்ச்சி எம்மைப் பிரமிப்பூட்ட வைக்கிறது. தொடர்ந்து அதன் 83 வது ஆண்டு மலர் வெளிவருவது பெருத்த மகிழ்ச்சி எமக்கு.
VEGETARIAN HOTEL
சுத்தமான, சுவையான, சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வகைகளுக்கு கொழும்பு
மாநகரில் பிரசித்தி பெற்ற ஹோட்டல். ن" எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கத்தக்க பெயர்.
கோல்டன் கபே
98, பாங்ஸால் வீதி,
கொழும்பு - 11. தொலைபேசி : 324712
2 R DGS S

Page 6
அநுபவம் நிமிர்ந்து நிற்க எனக்குக் கற்றுத்தந்துள்ளது!
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டு மலரிலும் இந்தத் தலையங்கப் பகுதியில் எனது மன உயாவுகளைப பெய்து பெய்து உங்களுக்குக் கடிதமெழுதி வருகின்றேன். அப்படி எழுதுவதில் என்னையறியாமலே மனதில் ஒரு தனிச்சுகம் தோன்றும்.
கடைசியாக நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியது 30 -வது ஆண்டுமலரிலாகும். இது நடந்து மூன்று ஆண்டுகள் மறைந்தோடிவிட்டன. அதன பின்னர் இந்த 33 - வது ஆண்டு மலரில்தான் அநதக கடிதத் தொடர்பைத் தொடர்ந்து எழுதுகின்றேன். இடையே ஆண்டுமலர்கள் வெளிவரவில்லை. ஏன் மாத இதழ்கள் கூட யுத்தச் சூழ்நிலை காரணமாகவும வடபுலத்து நெருக்கடி நிலை காரணமாகவும விட்டு விட்டு மலர்ந்து கொண்டிருந்தன, வெளிவந்தன.
புதிதாக வரித்துக் கொண்ட கொழும்பு மாநகரில் வே விட்டுப் புது வாழ்வு 35 60 முயன்று உழைக்கவேண்டியிருந்தது.
ஆரம்பத்தில் மனதில் அச்சம் நிழலாடியது.
இந்த மாநகரில் எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்து குப்பை கொட்டப்போகிறேனோ என்ற மனக் கிலேசப் இரவில் தூக்கத்தைக் கூடத் தடுத்து வந்தது.
இந்த மனப்பிராந்தியை, மனச்சஞ்சலத்தைப் போக்க
உறுதியாக முடிவெடுத்தேன் நான். மல்லிகை ஆசிரிய
என்றே விளம்பர சாதனங்கள் எல்லாம் ஏற்கனவே எனது பெயரைப் பிரபலப்படுத்தியிருந்தன.
ஆனால் மல்லிகைச் சஞ்சிகை தொடர்ந்து வெளிவரமுடியாத அவலச் சூழ்நிலை. முதலில் என்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்று உழைத்தேன் குந்தியிருந்து வேலை செய்வதற்கு ஒரு புறாப்பொந்து ஒன்று உடனடித்தேவை என்பதை உணர்ந்தேன் கதிரேசன் வீதியில் மாடியில் ஒரு சிறிய இடப் கிடைத்தது. சிக்காராகக் குந்தியிருந்து கொண்டேன்
உழைப்பு - உழைப்பு - உழைப்பு என்பதே எனது தினசரி தாரக மந்திரமாக அமைந்தது.
 
 

இந்த இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய அவலங்களை, கஷட நிஷடுரங்களை, வாழ்க்கை அனுபவங்களாகப் பெற்று நிமிர்ந்து வந்திருக்கின்றேன். அந்த அனுபவங்களோ அளப்பரியன. சொல்லி விளங்கப்படுத்த முடியாதன. நினைத்துப் பார்க்கவே நெஞ்சைத் திடுக்கிடவைப்பன.
ஒரு மனிதன் என்பதையும் மீறி,ஒரு படைப்பாளி என்கின்ற முறையில் இந்த அனுபவ ஞானம் வாழ்க்கைக்குத் தேவைதான் எனத் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆழமாக யோசித்துப் பார்த்திருக்கின்றேன்.
முன்னர் வெளிவந்த ஆண்டு மலர்கள் அத்தனையும் யாழ்ப்பாணத்திலிருந்தே - மல்லிகைக் காரியாலயத்தி லிருந்தே - வெளிவந்தவைகளாகும்.
அதற்கு மாறாக இந்த ஆண் டு மலர் கொழும் பிலிருந்து வெளிவருகின்றது. இதுவே எனக்கொரு புதிய அனுபவமாகும்.
கடந்து போன மூன்று ஆண்டு இடைவெளியில், குறிப்பாகச் சென்றுபோன இரண்டு ஆண்டுகள் 6666) என்றுமே மறக்கமுடியாத வருஷங்களாகும்.
அந்த இரண்டு வருட காலகட்டத்தில்தான் நான்
இந்த இடைக்காலத்தில் இருபதிற்கு மேற்பட்ட புதிய புத்தகங்களை வெளியிட்டு வைத்தேன்.அதில் முக்கியமாக குறிப்பிடத் தக்கதென்னவென்றால், என்னுடைய ஐம்பது கதைகளை நானே தொகுத்துத் திரட்டி வெளியிட்ட "டொமினிக் ஜீவா சிறுகதைகள்” என்ற பெயரில் வெளிவந்து பாரிய சிறுகதைத் தொகுதியாகும்.
சத்தியமாக இங்கு ஒன்று சொல்லுகின்றேன். இந்தத் தொகுதியை எப்படி நான் வெளியிட்டு வைத்தேன் என்பதை இப்போது கூட என்னால் நம்பமுடியவில்லை.
நான் பிரச்சனைகளின் அழுத்தத் தாலி யாழ்ப்பாணத்தை விட்டுக் கொழும்பிற்குப் புலம் பெயர்ந்து வராது போயிருந்தால் இந்தப் பாரிய புத்தக வெளியீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல் நடத்தியிருக்க இயலாது என்பதை உண்மையாகவே இந்தக் கட்டத்தில் ஒப்புக்கொள்ளுகின்றேன்.
உண்மைகள் சிலசமயங்களில் தற்பெருமைபோல - தலைக்கனம்போல - தோற்றம் தரலாம். ஆனால் அது உண்மை என்பதே அடிப்படை உண்மையாகும்.
இந்தப் பாரிய பொறுப்பை - பாரத்தை - என் தோள்மீது சுமக்க எத்தனித்த சமயம் நான் அப்படியே ஆடிப்போய் விட்டேன். இது உண்மை. அதே சமயம்

Page 7
என் தன்னம்பிக்கை விழித்துக்கொண்டு என்னை வழிநடத்த முன்வந்தது. எனது இலக்கிய நேர்மை மீது என்றுமே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வாழ்ந்து வருபவன் என்ற காரணத்தால் தொடர்ந்து முயன்று வந்தேன்.
வாழவேண்டும்: இலங்கையின் தலைநகரில் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலக்கியப் பாதை தடம் புரளாமல் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொண்டு திட்டமிடத் தொடங்கினேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நல்நெஞ்சங்களின் முகவரிகளைத் தேடிப் பிடித்தேன். கடிதம் எழுதினேன். தொடர்பு கொண்டேன். அவர்களுடன் கடிதத்தில் பேசினேன்.
நானே ஆச்சரியப்படத் தக்க வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்றேன். மலைத்துப் போனேன். இந்த உற்சாக உதவிகளின் பங்குப் பணியால் செயலாக்கம் பெற்றேன்.
கொழும்பில் ஒரு புதிய வரலாறு சமைக்க அத்திவாரமிட்டேன். தான் வாழும் சமுதாயத்திற்காக எவனொருவன் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை ஒப்புக் கொடுத் து உழைக்கின்றானோ அவன் அந்தச் சமுதாயத்திடம்
கொழும்பில் வெளியிடத் தக்கதான ஆக்கபூாவமான வழிமுறைகளை யோசிக்கத் தொடங்கினேன்.
இன்று உலகில் இரண்டு பெரும் துறைகள் வளர்ச்சியின் உச்சிக்குச் சென்றுவிட்டன. ஒன்று தகவல் சாதன வளர்ச்சி; அடுத்தது அச்சக முன்னேற்றம்.
யாழ்ப்பாணத்தில் மல்லிகை சொந்த அச்சு வசதிகளுடன்தான் பல ஆண்டுகாலம் வெளிவந்து கொண்டிருந்தது. இன்றைய அச்சுச் சாதன வளர்ச்சிக்கு மல்லிகை ஈடுகொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயதேவை ஒன்று குறுக்கிட்டது.
யாழ்ப்பாணத் திலிருந்து இவைகளைச்
சாதிக்கமுடியாது. அது சாத்தியமானதுமல்ல.
மல்லிகையை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்ல இயலாது. அது நடைமுறைச் சாத்தியமல்ல.
எனவே நவீன அச்சுச் சாதன வளர்ச்சியை என்வரை
உள் வாங்கிக் கொண்டு மல்லிகையைக் கொழும்பில்
நடத்த என்னாலான சகல முயற்சிகளையும் செய்து வருகின்றேன்.
1997 மே மாசம் தொடக்கம் மல்லிகை புதுப். பொலிவுடன் கொழும்பில் மலரத் தொடங்கியது.
 
 

உரிமையுடன் உதவி கேட்டுப் பெற தார்மீக உரித்துடையவன், என முற்று முழுதாக நம்பிக்கை கொண்டவன் நான்.
தொடர்ந்து மல்லிகைப் பந்தல் காரியாலயத்தை நோக்கிப் பலர் தினசரி வரத் தலைப்பட்டனர்.
புது உற்சாகம் என்னுள் பிறந்தது.
"மல்லிகை ஆசிரியர் எனத்தானே இந்த நாடு உங்களை இதுவரை அறிந்துள்ளது. ஆனால் மல்லிகைப் பந்தல் வெளியீட்டாளராகவல்லவா நீங்கள் இப்பொழுது கருதப்படுகிறீர்கள்!” என ஒருநாள் நடந்த நேர்ப் பேச்சில் நான் மதிக்கும் துரைவி பதிப்பக வெளியீட்டாளர் துரை விஸ்வநாதன் அவர்கள் கேட்டார். அதில் உண்மை தொனித்தது. சட்டென்று இந்தக் கருத்து என் நெஞ்சில் பட்டது.
மல்லிகை ஆசிரியர் என்ற பெயர் காலப்போக்கில் ஈழத்து இலக்கிய உலகிலிருந்து மறைந்து போய்விடுமோ என்ற மனப் பயம் என் நெஞ்சை ஆட்கொண்டது.
என்ன விலை கொடுத்தும் மல்லிகையின் பெயரை நிலை நிறுத்தவேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு அன்று நான் வந்தேன். தொடர்ந்து மல்லிகையைக்
இன்று தனது 33 - வது ஆண்டு மலரை வெளியிட்டு வைக்கின்றேன்.
இதிலும் ஒரு பிரச்சனை உண்டு. யாழ்ப்பாணத்தில் சொந்த அச்சகம், நிரந்தரமான கட்டடம், அச்சுக் கோப்பாளரின் ஒத்துழைப்பு இருந்த போதிலும் கூட, மின்சார வசதியீனம், பேப்பர்த் தட்டுப்பாடு, விநியோகச் சுருக்கம் போன்ற இடர்ப்பாடுகள் உண்டு. இங்கோ கணனிமுறை வளர்ச்சி காரணமாக அடக்கவிலை உயர்வு, புதிய பிரதேசங்கள் தொடர்பு, கலண்டர் சீசன் போன்ற எதிர்பாராத சிக்கல்கள் உண்டு.
இத்தனையையும் இங்கு ஏன் சொல்லுகின்றேன் என்றால் மல்லிகையை மனசார நேசிப்பவர்களின் மன உணர்வுகள் ஏற்கனவே எனக்குத் தெரியும். அவர்கள் தெளிவு பெற வேண்டும், என்பதற்காகவே.
என்னுடைய நோக்கம் வாழ்வது. சும்மா உயிரோடு இருப்பது வாழ்வாகாது. அது அர்த்தமற்றதும் கூட.
- டொமினிக் ஜீவா -

Page 8
With Best Wishes from:
NW GAN ESAIN P[ONTE2S
OFFSET 8 LETTER PRESS PRINTING
22, Abdul Jabbar Mawatha, Colombo - 12. Phone : 435422
GS) 5
 

saa aggaraani
~மேமன்கவி
விளைய விதையாய் இருந்து பார்த்ததில் வேரின் சுகந்தமே சுவாசமாகிவிட்டதா? தரித்துவிட்ட வேஷத்தை இனி கலைப்பது எப்படி?
சாக்கடைக்குள் தலையைச் சரித்தபின் பன்னீர் வாசத்தின் ஏக்கத்தில் கழிக்கலாமா காலத்தை?
அடியெடுத்து வைத்து விட்டீர்கள் இனி சுவடுகளைத் தரிசிக்காமல் உங்கள் பயணத்தை நிறுத்துதல் ஆகுமோ?
எல்லாமே கைவசம் வைத்திருந்தும் எதையுமே உருவாக்கம் செய்ய முடியவில்லையே உங்களால்; வயசின் உதிர்வு மட்டும் மிஞ்சிய நிலையில். இனி - நரைத்த கூரையின் கீழ் வசித்தலே நியாயம்! - உங்களுக்கான பரிவாரங்களுடனும், பரிகாரத்துடனும் முயலை பிடித்துவிட்டீர்கள்
இனி அதற்கும் கால்கள்
மூன்று மட்டுமே எனும் மேலாண்மைக் கருத்தையே தூக்கிப் பிடியுங்கள்!
நீங்கள் ஏறிநிற்கும் கொம்பை நீங்களே வெட்டி சாய்க்கும் அவலத்தில் நீங்கள் இல்லையா?
2 SS pggapE Sta

Page 9
யாரோ சொன்னது போல் “வெளவாலுக்கு வாழ்க்கைப்பட்டால் தொங்கித்தான் ஆகவேண்டும்"
நீங்களும் திருமதி வெளவால்கள் தான்! தொங்குதல் இனி உங்களுக்குச் சாபமாகிவிட்டது! இல்லற சுகம்போல்:
உங்கள் படலை அருகே மரணத்தின் கடைசி நிமிஷங்கள் காத்து நின்றாலும் -
வரலாற்றுப் பெருமை மிக்க உங்கள் வாழ்வின் அம்சங்களின் சிறப்புகளைப் பற்றிய பேச்சுக்களை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்!
அவ்வாறு நிறுத்துதல் என்பது உங்களுக்கான விஷ கோப்பைகளின் தயாரிப்புக்கு நீங்களே மூலப்பொருளாகி விடுவது போல் ஆகும்! ஜாக்கிரதை!
m
வாழ்த்துகின்றோம்
கல்விமானும் ஈழத்தின் பிரபல விமரிசகருமான பேராசிரியர்
சி. தில்லைநாதன் அவர்களினது மணிவிழா சமீபத்தில் கண்டி மாநகரில்
வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அன்னாருக்கு இம்மணிவிழா காலகட்டங்களைத் தொடர்ந்து சகல
செளபாக்கியங்களும் மேன்மைகளும் கிடைக்கவேண்டும் என மல்லிகை
மனப்பூர்வமாக வாழ்த்துகின்றது.
- ஆசிரியர்.
Z §2 6565

சிங்களத்தில் : ரத்ன பி. ஏக்கநாயக்க
தமிழில் :
இப்னு அஸ"மத்
ஐயட்பனே! சுவாமியே! உனது கருணை எல்லாம் சிங்களவர் களுக்கு மட்டும் தானா! நீ ஒரு கடவுள் என்பது உண்மையெனில் ஏனிந்த இன-குல- மொழி வேறுபாடுகள்? இவையெல்லாம் எதற்காக? உனது கருணை மனிதத் தன்மைக்குக் கிட்டாதா? என்னைப் பார்த்து “தமிழச்சி” என்கிறார்கள். எனது முகத்தில் அப்படி ஏதேனும் எழுதப்பட்டிருக் கிறதா? எனது ரத்தமும் சிங்கள மக்களின் ரத்தத்தைப் போன்றே இருக்கிறது. நானும் ஒரு மனிதப் பிறவி. ஏன் கடவுளே எனது மனிதத் தன்மையைப் பார்த்தாவது உனது நெஞ்சம் இளகிவிடாதா? - தாரா படுக்கையில் அங்கும் இங்கும் புரண்டவாறு தன் இயலாமையை (ouD6T6ðILD sI 85 (86) புலம் பிக் கொண்டிருந்தாள்.
விழித்திரைகளில் வழிந்தோடும் நீர்; புண்பட்டுப் போன நெஞ்சம்.
"என்னால் சிங்களத்தில் பேச முடியாது. எனக்குத் தெரிந்த மொழி தமிழ் மட்டுமே. நான் பிறந்து வளர்ந்த சூழலில் புளக்கத்தில் இருந்தது தமிழ் மொழி மட்டுமே. இதற்கு நான் என்ன பண்ணுவது? நான் சிங்களத்தை வெறுப்பவள் அல்ல. நான் சிங்கள விரோதியும் அல்ல. இதற்காக நான் ஒரு குற்றவாளியா? கடவுளே.
காரணத்தினால்
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் தாரா இந்த வைத்திய சாலைக்குச் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தாள். தாரா பிறந்து வளர்ந்தது கொடிகாமத்தில் மூன்று குழந்தைக
ளுக்குத் தாயான அவளது கணவன் கொடிகாமத்திலே
விவசாயம் பண்ணி வருகிறான்.
வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காக தாரா முதல் முதலில் யாழ்ப்பாண வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு வசதிகள் குறைவு என்ற வவுனியா வைத்திய சாலைக்கு மாற்றப் பட்டாள். தாராவைக் குணப்படுத்த வேண்டுமானால் சத்திர சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கூறினர். வைத்தியர் களின் ஆலோசனையின் பேரில் யுத்தகளங்களையும் பல வீதித் தடைகளையும் கடந்து இந்த வைத்தியசாலைக்கு அவள் வந்து சேர்ந்தாள்.
சிங்கள மொழியில் கூறும்
எதுவும் தாராவுக்குப் புரியாது. தாரா
தமிழில் கூறும் எதுவும் இந்த வைத்தியசாலையில் உள்ளவர் களுக்குப் புரியாது. மொழிகள் புரியாத காரணத்தினால் தாராவின் நோய் குணப்படுத்த மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டன. என்றாலும் அவள் யாழ்ப்பாண வைத்திய சாலையில் இருந்து கொண்டு வந்த
čŽDCC 13

Page 10
வைத்திய அறிக்கையை வைத்து இங்குள்ள வைத்தியர்கள் அவளது நோயை அறிந்துகொண்டனர்.
"தாராவின் வயிற்றில் ஒரு கட்டி வளர்ந்து வருகிறது. இதனை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்” என்பது மட்டுமே தாராவுக்குத் தெரியும்.
ஏனைய நோயாளிகளைப் பார்வையிட அவர்களது உறவினர் களோ அன்றி நண்பர்களோ வந்து போகும் சமயங்களில் தாரா தன் இரு கண்களையும் இறுகப் பொத்தியவாறு கட்டிலில் அப்படியே சுருண்டு படுத்துக்கொள்வாள். அவர்கள் அனைவரும் வார்டை விட்டு அகன்ற பின்னர்தான் அவள் மீண்டும் தன்கண்களைத் திறப்பாள்.
(
இந்த வைத்தியசாலையில் தாராவுக்கு இருக்கும் ஒரேயொரு சொந்தம் வஜிரா. தாரா இருக்கும் வார்டில் பணிபுரியும் புதிதாக வந்த தாதி, வஜிரா திருகோண மலையைச் சேர்ந்தவள். வஜிரா ஒரு சிங்கள யுவதி என்ற போதிலும் அவளுக்கு நன்றாகத் தமிழ் பேச வரும்.
ஒவ்வொரு நோயாளியும் தங்களைப் பார்த்துப் போக வரும் சொந்த பந்தங்கள், நண்பர்களுக் காகக் காத்துக் கிடக்கும் போது, தாரா இந்த வஜிராவை எதிர் பார்த்துக் காத்துக் கிடப்பாள். தினமும் காலைவேளையில் கடமைக்கு வரும் வஜிரா சில மணித்தியாலங்கள் வேலை செய்துவிட்டுப் போய் விடுவாள். வஜிரா தனது கடமைகளில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவள்
4 čDCCC
போகும் வரும் திசைகளையே தாரா உற்றுநோக்கிக் கொண்டி
ருப்பாள்.
வாழ்க்கையிலும், தாதி சேவை யிலும் இளையவளான வஜிரா எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் கருணை மிக்க மனதுடனும் காணப் பட்டாள். அவளிடம் மனிதாபிமானம் நிறையவே இருந்தது. தினமும் தனது கடமைகளை முடித்துக் கொண்டு புறப்படும் முன்பாக அவள் தாராவிடம் வந்து சில நிமிடங்களைக் கழிக்கத் தவறுவ தில்லை.
"டொக்டர் என்ன கூறுகிறார்?" தினமும் தன்னிடம் வரும் வஜிரா விடம் தாரா மிகுந்த குதுகலத் துடன் விசாரிக்கத் தவறுவதில்லை
"குறிப்பாக எதுவும் இல்லை தாரா அக்கா! என்றாலும் சத்திர சிகிச்சைக்கு ரத்தம் தேவைப் படுகிறது. ரத்தம் கொடுப்பதற்கு யாரேனும் வரும் வரை தான் சுணக்கம் தாரா அக்கா வீட்டுக்குச் சொல்லி அனுப்பவில்லையா?”
"எப்படி சொல்லி அனுப்புவது நோனா? அங்கிருப்பவர்களுக்கு இங்கே வர முடியாது. இங்கிருப் பவர்கள் அங்கு செல்வதில்லை. கடிதமேதும் அனுப்பவும் முடியாத நிலை, தபால் வேலை செய்வதும்
கிடையாது. இந்த நிலையில் நான்
எப்படி வீட்டுக்குத் தெரிவிப்பது?".
இங்கிருப்பவர்கள் சிங்கள மக்கள், சிங்களவர்கள் கெட்டவர் கள் அல்ல. அவர்கள் தான் எமக்கு எப்போதும் உதவி வந்தவர்கள். தமிழ் மக்களுக்குக் கைகொடுத்தும்

உள்ளனர். நாடு பூராவும் பரந்து சென்று வாழும் தமிழ்மக்களின் சுகதுக்கங்களை அறிந்து அண்டை அயலில் வசிப்பதற்கு வழி சமைத்துக் கொடுத்தவர்களும் சிங்களவர்களே. ஆனால் இன்று? அன்றய நிலை மாறிவிட்டது. "தமிழ்” என்ற மூன்று எழுத்து அவர்களுக்கு நஞ்சாக மாறி விட்டது.
நான் இந்த இடத்தில் இருந்துகொண்டு வாய் திறக்க மாட்டேன். வாய் திறந்தால் "தமிழச்சி” என இகழ்வார்கள்.- தாரா மிக மெதுவாக வஜிராவிடம் கூறினாள்.
"இப்போது என்ன பண்ணுவது தாரா அக்கா? எப்படி ரத்தம் கொடுக்க யாரையேனும் அழைத்து வருவது? இதனால் தான் ஒப்பரேஷனும் தாமதமாகிறது. ரத்தம் கொடுக்க இன்று யாராவது இருந்தால் இன்றே ஒப்பரேஷன் பண்ண முடியும். இப்படியே நாட்களைக் கடத்துவது உடம்பு க்கும் நல்லதல்ல. நாளுக்குநாள் கட்டி முற்றிக்கொண்டே வரும்”
"அதுதான் நோனா. என்னால்
வாய் திறந்து சிங்களத்தில ரத்தம்
வேண்டும் என்று கேட்க முடியுமானால் நான் வந்து போகும் ஒவ்வொருவரிடமும் கேட்பேன். என்ன செய்வது. தமிழில் கேட்டால் சிங்களவர்களுக்குப் புரியாது. புரிந்தாலும் கணக்கெடுக்க மாட்டார்கள். மாங்குளம் பெரிய குளம் பகுதிகளில் இந்நாட்களில் ரத்த ஆறு ஓடுகிறதாம். எவ்வளவு ரத்தம் இந்த பூமிக்குள் செல்கிறது?
தமிழ் ரத்தமும் சிங்கள ரத்தமும் ஒரே ரத்தம் தான். எந்தவொரு வேறுபாடும் கிடையாது. பூமியில் விழுந்தவுடன் பூமி அதை உறிஞ்சிக்கொள்கிறது. யுத்தகள நிலை அப்படி இங்கே வைத்திய சாலை நிலை இப்படி. ரத்தம் தேவையான எனக்கு ரத்தமின்றி காலங்கடத்தப்படுகிறது. ரத்தம் தேவையான மனிதர்களுக்கு ரத்தம் கிடையாது. ரத்தம் தேவையே இல்லாத பூமிக்கு வாரிவழங்கப் படுகிறது.” s
"இதையெல்லாம் கூறி இட்போது பயனில்லை தாரா அக்கா. ரத்தம் கொஞ்சம் தேடிக்கொள்வதற்கான வழியினைப் பார்ப்போம். நான் சொல்லவா? வஜிரா சில நொடிகள் யோசித்தாள். “நான் உங்களுக்கு ரத்தம் தருகிறேன்"
“நோனா. நீங்கள் எனக்கு ரத்தம் தருகிறீகளா? ஏன் நேர்னா? நீங்கள் என்ன சொந்தமா? பந்தமா? இல்லை. எனது இனமா? ஏன் அப்படிச் சொன்னீர்கள்?" தாராவின் விழிகள் பிரகாசமடைந்து காணப்பட்டன.
"தாராக்கா ரத்தத்துக்கு ஏது இன, புல வேறுபாடு? கிடையாது ரத்தம் எல்லோருக்கும் பொது வானது. அதன் நிறம் ஒன்றே. குணமும் ஒன்றே எனது ரத்தம் தாரா அக்காவின் உடம்பினுள் சென்றதும் தமிழ் - சிங்கள ரத்தம் கலந்து தமிழுமற்ற சிங்களமுமற்ற ஒரு பெண் உருவாவாள்"
“நோனா. உங்களுக்குக் &5ւ6)յ6it வழிகாட்டுவார் . உங்களுக்கு ஒன்றுமே
šио и да Б

Page 11
பிழைக்காது. கடவுள் துணை
நிற்பார்”. தாராவின் முகம் தாமரை போல் மலர்ந்து காணப்பட்டது.
என்ன செய்வது? தாராவும் ஒரு பெண் . இன்னொரு ஜீவன். உயிர்களைக் காட்பது தானே எமது சேவை? தாராவுக்கு உதவ இப்போது யாரும் இல்லை. அவளது கணவனுக்கு அறிவிக்க வழியுமில்லை. அறிவித்தால் வரமுடியாத நிலை. பாதை நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளில் காரணம் கூறி சம்மதம் பெற்று வந்து சேர்கையில் தாராவின் உயிர் அவள் வசம் இருக்காது.
யுத்தத்தினால் மட்டும் தானா மனித உயிர்கள் அழிகின்றன. இந்த யுத்தத் தின் மூலம் எழுந்துள்ள பற்பல காரணங்களால் நிதமும் எத்தனையோ உயிர்கள் அழிகின்றனவே. தாராவின் வயிற்றி லுள்ள கட்டி இப்போது நன்றாக முற்றியுள்ளது. ரத்தம் கொடுக்க ஒருவரில்லாத காரணத்தால் ஒப்பரேஷன் பண்ணுவதற்குக் குறித்த நாளும் கழிந்து இன்றுடன் மூன்று நாட்களாகிவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் ரத்தம் கொடுக்க முடியாவிட்டால் அவளது நிலை பரிதாபத்திற்குரியது. என்ன் நடக்குமோ? நினைக்கவே பயமாக வுள்ளது. கடவுள்தான் அவளுக்குத் துணை செய்ய வேண்டும் - வஜிரா தாராவுக்காகப் பரிதாபப்பட்டாள். என்றாலும் இந்த விடயம் பற்றி அவள் வேறுயாருடனும் கதைக்க
வில்லை. எல்லாவற்றையும் மனதுக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டாள்.
18 DEC
S
வஜிரா அன்று அந்த வார்டுக்குப் பொறுப்பான வைத்தியரைக் காணச்சென்றாள்.
"டொக்டர். இந்தப் பன்னிரெண்டாம் கட்டிலிலுள்ள
நோயாளிக்கு ரத்தம் கொடுக்க
யாரும் இல்லாததால் அவளது ஒப்பரேஷன் இன்னும் நடந்த பாடில்லை. இப்போது அவருக்கு வருத்தம் அதிகரித்துள்ளது.”
"இனி நம் மால் என்ன பண்ணமுடியும் வஜிரா? ரத்த வங்கியில் சிறிதளவு ரத்தமே இருக்கிறது. இந்த ரத்தத்தினை எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது என்பது கட்டளை. யுத்த களத்திலிருந்து கொண்டுவரும் காயமடைந்த வீரர்களுக்கு இந்த ரத்தம் ஒதுக்கப்பட்டுள்ளது"
"என்றாலும் டொக்டர் இந்த நோயாளிக்கு எவருமே இல்லை. வீட்டிலிருந்து எவரையுமே அழைத்துவர முடியாத நிலை. அண்டையில் ஒருவருமே இல்லை. அவளது ஊர் கொடிகாமம் கணவர் இருந்தும் வரமுடியாது. அவருக்குத் தெரிவிக்கவும் முடியாது. இந்த நோயாளிக்கு ரத்தம் கொடுக்க வழியே இல்லையா டொக்டர்?"
"வஜிராவுக்குத் தெரியும் தானே? ஏதாவது வழி இருந்தால் நாம் Ga5ITOBä535TD6NOT g(bĽK3LuTtD? (bsTLD ரத்தமின்றித் தவிக்கின்ற இந்த நோயாளியை மட்டும் தானே காண்கின்றோம். ரத்தம் இல்லாத காரணத்தினால் தினந்தோறும் சிங்கள இளைஞர்கள் எத்தனைபேர் மரணமாகின்றனர்?"

“என்றாலும் டொக்டர் இந்த நோயாளி நம் கண் முன்னே
இருக்கின்றார். இன்றோ நாளையோ
ஒப்பரேஷன் பண்ணாவிட்டால் இந்த நோயாளி இறக்கக்கூடும் அதனால் டொக்டர்.நான் அந்த நோயாளிக்கு ரத்தம் கொடுக்கிறேன்.”
"நீ ரத்தம் கொடுக் கப் போகிறாயா? உனக் கென்ன பைத்தியமா வஜிரா?” அந்த வார்டுக்குப் பொறுப்பான தாதி வஜிராவிடம் வினவினாள். "உனக்குத் தெரியுமா. நீ இன்னும் பயிற்சி பெறும் தாதி. நீ நினைத்தபடி நடக்க முடியாது.
D G is i8
தந்தைக்கோ ரத்தம் கொடுப்பதாக இருந்தால் பரவாயில்லை. இவள் எங்கேயோ இருந்து வந்த தமிழச்சி. ரத்தம் கொடுக்கக் கூடாது புரிகிறதா? எங்களது இளைஞர் களைக் கொன்று குவித்துவிட்டு முழு நாட்டையுமே பறித்துக் கொள்ளப் பார்ப்பவர்கள் அவர்கள். அவர்களுக்கு ஏன் நாம் ரத்தம் கொடுக்கவேண்டும்?” - அந்தத் தாதி பேசிக்கொண்டே போனாள்.
“எது என்ன இருந்தாலும் வஜிரா எமது வாழ்க்கை நோயாளிக ளுடனே கழிகிறது. இந்த மாதிரி ரத்தம் தேவைப்படுவது இந்த நோயாளிக்கு மட்டுமல்ல. இன்று இந்த நோயாளிக்கு ரத்தம் தேவைப் படுவதால் கொடுக்கலாம். நாளை இதைவிடப் பயங்கரமான ஒரு நோயாளிக்கு ரத்தம் தேவைப்படும். நீ அந்த நோயாளிக்கும் ரத்தம் கொடுப்பாயா? வைத்தியசாலையில் பணிபுரிபவர்களுக் கெல்லாம் அவ்வாறு செய்ய முடியாது. நோயாளிக்குப் பணிபுரிய நாம்
தேகாரோக்கியத்துடன் இருக்க வேண்டும். உனது நோக்கம் மிகவும் உயர்வானது தான். என்றாலும் தகுதியற்ற நிலையி லேயே நாம் இருந்து வருகிறோம். ஆக உனது அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடு” வைத்தியரும் வஜிராவுக்கு உபதேசம் புரிந்தார்.
அதுவரை மேசையின் மீது மிகவேகமாகச் சுழன்று கொண்டிருந்த மின் விசிறியை வைத்தியர் நிறுத்தினார். வஜிரா மிக வேகமாக முன்னேறிவந்த பாதை அத்துடன் முடிவுபெறுவதாக இருந்தது. மீண்டும் முன்செல்ல அவளுக்குப் பாதையில்லை. அவள்
திரும்பித் தாராவிடம் சென்றாள்.
"இங்கிருக்கும் இந்த நோயாளிக்கு அத்தியாவசியமாக O நெகடிவ் ரத்தம் தேவைப் படுகிறது. இவர் ஒரு தமிழ்ப் பெண்மணி” - என்று சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் ஒரு மட்டையில் எழுதி தாரா
படுத்திருந்த கட்டிலின் ஓரமாக
இருந்த இரும்புக் கம்பியில் கொளுவிவைத்து விட்டுத் திரும்பினாள்.
மத்தியான வேளை, நோயாளிகளைப் பார்வையிடுவதற் காகப் பல்ரும் வந்து போய்க் கொண்டிருந்தனர். வஜிரா ஒரு ஒரமாக நின்று தாரா படுத்திருந்த திக் கையே நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் எழுதி வைத்த மட்டை வாசகத்திற்கு ஏதும் பலன் கிடைக்குமா என்ற நட்பாசை அவளுள் மேலோங்கி இருந்தது.
2 R 6563, 7

Page 12
ஒரிரு தமிழர்களும் பத்துப் பதினைந்து சிங்களவர்களும் தாரா படுத்திருந்த கட்டிலைத் தாண்டிச் சென்றனர். வாட்டில் அங்கும் இங்கும் யாரையோ தேடிக் கொண்டிருந்த ஓர் இளைஞனும் யுவதியும் தாராவின் கட்டிலை நெருங்கி அந்த வாசகத்தைப் படித்தனர்.
எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்கள் தமிழர்கள் தான். வஜிரா
ஓடோடிச் சென்று அவர்களிடம்
தமிழில் பேசினாள்.
"ஆமாம்! உதவி செய்யத்தான் வேண்டும். அவரும் எங்களது ஆள்தான். என்றாலும் O நெகடிவ் ரத்தம் எங்களிடம் இல்லையே."
என்று கூறியவாறு அவர்கள்
திரும்பிவிட்டனர். தாராவின் விழிகளிலிருந்து நீர் பெருக்கெடுத்து ஓடுவதை வஜிரா அவதானித்தாள்.
“ஏன்? என்ன பிரச்சனை? அந்த வழியாக வந்த ஓர் இளம் ஜோடி வஜிராவிடம் சிங்களத்தில் கேட்டது. வஜிரா தாராவின் நிலைபற்றி சிங் களத்தில் அவர்களிடம் கூறினாள்.
"சரி, நாங்கள் ரத்தம் கொடுக்கிறோம் எனது மனைவியின் ரத்தம் O நெகடிவ். குமாரி. இந்த நோயாளிக்கு ரத்தம் கொடுக்க உனக்குச் சம்மதம் தானே? அந்த இளைஞன் தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான். வஜிராவின் மனம் சந்தோஷத்தால் நிரம்பலா யிற்று.
தாராவின் நிலை இன்று வேறென்றும் இல்லாதவாறு இன்று
te SŽDCC
மிகவும் மோசமாக இருந்தது. அவளது முகத்தில் வேதனையின் ரேகைகள். கட்டிலில் அங்கு மிங்குமாகப் புரண்டபடி கிடந்தாள்.
"நோயாளிக்கு மிகவும் வருத்தம் போலும் கூடிய விரைவில் ரத்தம் எடுக்கச் சொல்லுங்கள், நாங்கள் தயார்” என்று குமாரி கூறினாள். வஜிரா ஓடோடிச் சென்று வாட்டுக்குப் பொறுப்பான வைத்தி யரிடம் விடயத்தைக் கூறினாள். சகல காரியங்களும் சிறப்பான முறையில் நடந்தேறின. ஒரு பக்கத்தில் குமாரியிடமிருந்து ரத்தம் எடுக் கப்பட்டது. மறுபக்கம் தாராவுக்கு "சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.
தாராவின் உயிரைக்காட்பாற்றும்
பார்துTரமான கடமையினை
ஏற்றிருந்த வைத் தியருக்கு
உடல்களினதும் ரத்தத்தினதும்
வாடையில் எதுவித வித்தியாசமும்
தெரியவில்லை. அவர் சத்திர சிகிச்சையை ஒழுங்குமுறைப்படி
செய்துகொண்டிருந்தார்.
என்றாலும் அவரால் தாராவின் உயிரைக் காப்பாற்ற முடியாமற் போயிற்று. எப்போதோ செய்ய வேண்டியிருந்த சத்திர சிகிச்சை காலதாமதமானதால் அது அந்தப் பெண்ணின் உயிரையே குடித்து விட்டது. சத்திரசிகிச்சை அறையி லிருந்து வெளியேறிய செய்தி மிகவும் துன் பகரமானதாக இருந்தது. அது வஜிராவைப் பெரிதும் தாக்கியதுடன் குமாரிக்கும் அது ஒர் விபத்தாகப் பட்டது.

மல்லிகையின் 33 வது ஆண்டு மலர் வெளிவருவது பெரிய சாதனைகளில் ஒன்று. அதற்கு எமது வாழ்த்துக்கள்.
Brounson Industries
139, Bankshall Street, Colombo - 11. Telephone: 3271 97
ウエ UGla 9

Page 13
சிறுகதை
ܠܟ
கே. விஜயன்
பத்திரிகை முழுவதையும் எழுத்து எழுத்தாக, வரி வரியாக, பந்தி பந்தியாக கண்களால் விழுங்கித் தள்ளிய பின்னர் தான்
ஏனைய அலுவல்கள் ஆரம்ப
மாகும். இன்று அந்தக் கடமை முடிந்துவிட்ட ஆத்ம சுகத்தில் விரல்களுக்கிடையில் பத்திரிகை DGIT 3F 6M) T 1ọ GĖ கொணி டிருக்க ஜன் ன லுக்கு வெளியரில் எதனையோ பார்த்துக்கொண்டிருக் கிறார் கனகரத்தினம். முகத்திலோ ஆயிரமாயிரம் யோசனைகள்.
"தேத்தண்ணியும் குடிக்காம அதென்ன அப்படி முழு சிக் கொண்டிருக்கிறியள்?"
பகீரதியின் குரல் செவிக்கருகில் மேளமடிக்கிறது.
"இஞ்ச வந்து வெளியில கொஞ்சம்
ன்னலுக்கு ாருமேன்."
"ஏன் என்னவாம்?" ஆவிபறக்கும் தேநீருடன் பகீரதி அருகில் வந்து நிற்கிறாள். பார்வை பரபரப்புடன் ஜன்னலுக்கு வெளியில் விழுகிறது.
"இந்த வெற்று இடத்திலே ஒரே கல்லும் முள்ளுமா கிடக்கல்லே.” "அதுக் கென்ன?” சட்டென கேட்ட பகீரதி கேள்வியுணர்வுடன் பார்க்கிறாள்.
"என் னவோ உமக் குத் த  ைவி) uசில ஒரு மணி னும்
62- مسيه 2O
கிடையாது.” என முறைத்த அவர் "என்ன அநியாயம் சும்மா கிடக்கிற இந்ந நிலத்தில கொஞ்சம் பாகல் புடலை என்று ஏதேனும் நட்டால். சா எவ்வளவு பிரியோசனம்" வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடன் கனகரத்தினம் கூறுகிறார்.
பகீரதியின் கண்களில் லேசாக கோபம் படர்ந்தது. "இஞ்ச இந்த எண்ணங்களை விடுங்கோ. இது கொழும்பு. எங்கட சாதி சனம் வாழ்ற இடமில்லை.”
ஜன்னலுக்கு அப்பால் லயித்துக் கொண்டிருந்த கனகரத் தினம்
மாஸ்டரின் முகம் சட்டென திரும்பி
மிஸ்ஸின் முகத்தில் நிலை குத்தியது. கண்மணிகள் கூர்
ஈட்டிகளாக சிந்தனையரில் ஊடுருவின.
முகத் தில் முதுமையும்
தலையில் நரையும் இழையோடத் தொடங்கியிருக்கின்றன. கிட்டத் தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இதே இடத்தில் ஜீவிதம் கரைந்து கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் இந்தக் கொழும்பு மண் இவளுக்கு அந்நியமாகவா படுகிறது! என்ற எண்ணங்கள் ஆழ்கடல் நீரோட்டமாக மனதில் ஓசையில் லாமல் நகர் ந் திட மாஸ்டரின் பரந்த நெற்றியில் சிந்தனைக் கோடுகள் பள்ளமி
டுகின்றன. மறுபடியும் அவருடைய
பார்வை ஜன்னலுக்கப்பால் சென்று அங்கே லயித்தும் விடுகிறது.

"நான் என்ன சொல்லுரன் என்றால், நீங்கள் எதையும் நடப் போக அது வளரும் , இங்கத்தய பொடியளைத் தெரியும் தானே?” பகரே தியின் குரல் விசனமுடன் காதில் விழுகிறது.
“தெரியாமல் என்ன? நான் என்ன ஏ.கே போட் டிசெவனோ ட திரியுரவனே. மனிசனோட பழகத் தெரியவேணும்."
சட்டெனக் கொதித்துக் கதறிய மாஸ்டரின் குரலில் சினத்தி புரண் டெழுந்தது. யாரோடோ வஞ்சினம் கொண்டு அவர் எதனையோ வார்த்தைகளாக உமிழ்ந்தார்.
"அது இல்லேப்பா, இங்கத்த சிங்களப் பொடியள்." எனப் பகீரதி மறுபடியும் ஆரம்பித்து முடிக்க வில்லை.
"சும்மா இரும்.எங்கட ச்ாதி சனம் எண்டு அளக்குறீர். கடைசியா ஊருக்குப் போயிருந்தப்போ அந்த எளிய சாதிப் பயல் நிமலன் என்னமாதுரி வந்துட்டான்." "எதைச் சொல்லுறியள்?" "என் னப் பா அதுக் குள்ள மறந்துட்டியே? குறுக்கு வழியா கனகா வீட்டுக்குப் போனப்போ நிமலண்ட வெங்காய வரம்புக்கை ஏறிப்போனோமே”
"ஓம்! ஓம்"
"என்ன ஓம்! ஓம்! அந்த எளிய சாதி நிமலன் ஒய் கனகரத்தினம் எப்ப உமக்குக் கண் போனது, சிங் கள அரசாங் கத்துக் கு உழைத்து உழைத்து உமக்குக் கண் ணும் என்றல்லவா கேட்டவன்"
போயரிட் டுதோ
பகிரதி மூச்சடைத்தாற்போல் நிற்கிறாள்.
LDs 6m5 L fl6ost ஒயவில்லை.
9) (BLD 6)
“கைகட்டிச் சேவகம் புரிந்த எளிய நாயஸ் இப்ப கொடிகட்டிப் பறக்கினம்”
அவர் துப்பினார்.
குமுறலுடன் காறித்
இதென்னடா தொல்லை 66 அலுத்துக்கொண்ட பகீரதி “சரி சரி
விடுங் கோப் பா. இதைக் குடியுங் கோ” என தேநீரை நீட்டுகிறாள்.
மாஸ்டரின் முகத்திலிருந்து சினரேகைகள் மாறவில்லை.
மிஸஸ் கனகரத்தினத்திற்கு என்ன தோன்றியதோ தெரிய வில்லை. கொஞ்சம் நின்று அவர் முகத்தைப் பார்த்து லேசாக
முறுவலித்தார். مه’’
"இஞ்ச சும்மா பொரியாதேங் கோப்பா. முகத்தைப் பாக்கச் சகிக்கல்ல" என வெடுக்கெனக் கூறினார். மாஸ்டரின் முகத்தில் அசடுவழிகிறது.
“ g“) 60 LĎ சினந் தாரையே
கொல்லும்" எனத் தனக்குள்ளா கவே புறுபுறுத்துக் கொண்டார்.
சதா மனதை ஆண் மீக விசாரத்திற்குள் ஈடுபடுத்தி அறு அறுவென அறுத்துக் கொண்டிருப் பவராயிற்றே இந்த பென்சன்காரர். இன்றய உலகப் பிரச்சனைக் கெல்லாம் அடிப்படைக் காரணம் கோபம்தான். சினத்தை அடக்கி னால் உலகத்தை வெல்லலாம் என்ற தாரக மந்திரத்தை அடிக்கடி அனைவருக்கும் போதிக் கும்
š2locitola 2:

Page 14
மனிதராயிற்றே. இவர் தனக்கு கோபம் வந்துவிட்டதென்று எவரும் சுட்டுவதை எப்படிப் பொறுப்பார்?
கனகரத்தினம் மாஸ்டர் அரச உத்தியோகத்திலிருந்து ரிட்டயர் ஆன காலம் முதலாகப் பத்திரிகை வாசிப் பதை விடவில் லை. விடியலிலே எழுந்து பத்திரிகை வாங்கிவந்து வாசிக்காவிட்டால் அவருக்கு மண்டை வெடித்துவிடும்.
காலை கருக்கலில் எழுந்து இருளோடு இருளாக வீதியைக் கடந்து பத்திரிகை வாங்கி வந்து நாற்காலியில் அமர்ந்தாரென்றால் "ஆரடா இந்த மனிசன்” எனப் பத்திரிகையின் பக்கங்களே ஒப்பாரி வைக்கும் அளவிற்குப் பக்கங்களை உருட்டியும் பிரட்டியும் எழுத்து விடாமல் வாசிப்பார். அப்புறம் பொடியங்கள் குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஒரு பிரசங்கம் செய்வார்.
இன்றும் விடியலில் எழுந்து விட்டார். ஆனால் பத்திரிகை வாங்குவதற்கு வீதிக்கு நடவாமல்,
ஜன்னல் கதவைத் திறந்துவிட்டு
வெளியுலகைப் பார்த்தார்.
"அடடா எத்தனை சுகம்" ஜன்னல்வழியாக உள்ளே ஓடிவந்த காலையின் இளங்காற்று சிலுசிலு வென உடலைத் தழுவிக்கொண்ட பொழுது மெய்மறந்து போனார். “எத்தனை கோடி இன்பம்
வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா. தன்னை மறந்து பாரதியின் பாடலை முணுமுணுத்தார்.
உற்சாகம் உடலை ஓர் உசுப்பு உசுப்பிவிட இன்று பத்திரிகை வாங்கப் போவதை மறந்து
2 22 Deco
மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வீட் டின் பின் புறம் சென்று ஜன்னலுக்கு அப்பாலுள்ள வெற்று
நில தி தைக் கொத் தத் தொடங்கினார்.
உடலில் வியர்  ைவ
மழைத்துளிகளாக வழிந்தோட மணலைப் புரட்டிப் பாத்தியும் கட்டி
வேலியும் எழுப்பி நிமிர்ந்த போது
ஜன்னலில் பகிரதியின் முகம் தெரிகிறது. இளமைக் கால பிரேமையுடன் மிஸஸ் கனகரத் தினம் அவன்ரக் கண்களால் விழுக்கிக் கொண்டிருந்தார்.
“தேத்தண்ணியும் குடிக்காம, பேப்பரும் படிக்காம இதென்ன அதுக்குள்ள குந்திக்கொண்டு.” "தோட்ட வேலை செய்யுறன்" மாஸ்டர் குழந்தையைப்போல் குழைந்துகொண்டு பதில் சென்னார். பகல் முழுவதும் கடுரமான வெயில் எரித்து வெம்மை வறுத்தெடுத்த போதும் பிற்பகலில் இடிமுழக்கத்துடன் லேசான தூறல் விழுந்து மாலையில் அதிகரித்து நடுராத் திரியில் கொட் டோ கொட்டென மழை பொழிந்து தள்ளுகிறது. இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக அடமழையின் கொட்டம் நிற்க வில்லை.
மழையோடு மழையாக சுவிஸ், கனடா ஆகிய இரண் டு நாடுகளிலிருந்தும் பிள்ளைகள் இருவரினதும் கடிதங்கள் வந்திருந்தன. இவற்றைத் திரும்பத் திரும்ப வாசிப்பதிலும் பதில் எழுதுவதிலும் பொழுதைக் கழித்தார்.

கொழும்பு வாழ்க்கை நார்மலாக இருக்கிறது. கெடுபிடிகள் எல்லாம் உண்டுதான் என்றபோதும் ஊரில் (8LJ Tul குணி டுகளுக்கும் சண் டைக் கும் மத் தியில்
அவதிப்படத் தேவையில்லை எனப்
பதில் எழுதினார். நாட்டு நிலையை சரியாகக் கணிப்பீடு செய்துள்ளோம் எனப் பரம திருப்தி அவருக்கு.
மழை ஓய்ந்துவிட்டது. நான்கு நாட்கள் எவ்வாறு ஓடி மறைந்தன என்று தெரியவில்லை.
வழக்கம் போல் காலையில் எழுந்து வெளுப்புக் கரைசலில் ஜன்னலால் எட்டிப் பார்த்த பொழுது அவருடல் புல்லரித்துப்போனது. மனதினுள் ஓர் ஆனந்த அலை அடித்தது.
நிலத் தைக் கொத் தரிப் பதப்படுத்தினார் அல்லவா. அன்று பாகல் விதையொன்றினைப் புதைத்துவிட்டிருந்தார். இந்த விதை துளிர்விட்டு மணலைப் பிளந்து வெளியில் தலை நீட்டிக்கொண் டிருக்கிறது.
அடுப்படி வேலையில் கிடந்த பகரே தியை கட்டி முகர் ந் து ஜன்னலடிக்கு இழுத்துக்கொண்டு வந்தார் . என்னவோ எனப் பதறிப்போன மிஸஸ் கனகரத் தினமும் துளிர் விட்டுத் தலையை ஆட்டிக்கொண்டடிருக்கும் பாகல் கொடியின் தளிரைக் கண்டதும் மெய்மறந்துபோனார்.
கனகரத்தினம் மாஸ்டர் தோட்ட வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க பகீரதி ஜன்னலால் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
பாகற் தளிரைச் சுற்றி கொஞ்சம் மணலை மேடாக்கி பாத்திபோல்
கட்டிவிட்டு அவர் பெருமிதத்துடன் எழுந்த பேர்து சேவலொன்று கூவியது. w
சரே லென எங் கிருந் தோ பறந்துவந்த அந்த அழகான சேவல் வேலியின் மேல் நின்று மறுபடியும் மிகவும் கம்பீரமாகக் கூவியது. வே லியரிலிருந் து g (GL 601 நிலத்திற்குக் குதித்த அச்சேவல் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகற் தளிரை ஒரே கொத்தாகக் கொத் தி விழுங் கி விட்டது. அடக்கடவுளே அப்பொழுதுதான் அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது.
ஆ! என மாஸ்டர் அலறினார். ஒரு பிசாசு பிடித்து உலுக்குவது போல் அவருடல் நடுங்கியது. மணி வெட் டியை இறுகப் பிடித்திருந்த கைகள் அதனை ஒரு விசுறு விசுறின.
அந்த வீச்சில் சேவலின் அழகிய கொண்டையுடன்கூடிய கழுத்து அறுபட்டுத் தனியாக விழுந்து துடிதுடித்தது. சடார் சடாரென சேவலின் உடல் நான்கு முனைக் கும் துடிதுடித் துப் பாய்கிறது.
அடுத்தவீட்டு திலகரத்தினவின் மகன் அரவிந்தவின் செல்லப்பிராணி அது. இங்கே நடந்த கொடுரத்தை ஜன் ன லால் கண் டு அவன் அலறினான்.
"புது அம்மே! மஹே குக்குலாவ
அல்லப்பு ஹெதர கொட்டியா மெருவா."
"ஐயோ அம்மா! என்னுடைய சேவலை பக்கத்துவீட்டுப் புலி கொன்னுட்டான்".
šDo 28

Page 15
33 வருட காலமாக இந்த மண்ணில் பூத்து நறுமணம் பரப்பி வரும் மல்லிகையை வாழ்த்துகின்றோம்.
aశస్త్రం
E. Sittampalam & Co
General Merchants & Commission Agents 25, Old Moor Street, Colombo -12.
TPhone : 432813 T Grams : 'Pokisam'
24 ±

சிறகுகள்
குருதியில் தோய்ந்து கை காலுதைத்து யோனிச் சுவரதிர அன்று நான் சிசுவாய் ஜெனித்தேன்
வெட்டுக் கிளிபோல் துள்ளித் திரிந்து கனவுகளில் சிறகசைக்கும் ஒரு பொழுது எங்கிருந்தோ மின்னலதிர்வு - நான் வயதுக்கு வந்ததாய் அம்மா நெகிழ்ந்தாள்
திங்கள் தோறும் நொம்பலங்களுடனே விலகும் நான்கு நாட்கள் இலட்சியங்களாயன்றி இரத்தங்களால் கூர் படுத்தப்படும் வாழ்க்கை மிஞ்சியது கவலைகள் தான்.
ஒவ்வொரு படிகளிலும் மாற்றங்களுடனே
மு.பவர்
ஊற்றுச் சுரப்பு ஆழங்கள் தழுவிய வேராய் தடங்களுடனே திரவம் - கசிவு
பலவீனம் பெண்ணில் மட்டுமா நாங்கள் எப்போதுதான் ஆரோக்கியமாக
இருந்தோம் வெறும் அடையாளமாகவன்றி உதிரம் இழப்பு
மீண்டும் துளிர்ப்பு!
உடலிரண்டு களிகிலிர்த்த மணநாள் கன்னிகழிதல் சாட்சியாய் சொட்டுத்துளி
காலப்பரப்பில் காலூன்றி - நிலைக்காது பிரக்ஞை துடிப்பு
உறுத்த
காற்றின் சிறகுகளில் உதிர்ந்திடாது - இழை பின்னும் சிலந்தியின் தேடல்
புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்
மல்லிகைச் சுவைஞர்களுக்கும் மல்லிகைப் பந்தல் வாசகர்களுக்கும் எமது புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு
மகிழ்ச்சியடைகின்றோம்.
- ஆசிரியர் -
GS, upgrgos 2s Sta

Page 16
:புதிய நூலொன்று
வாழ்வுச் சுவடுகள் நா. சுப்பிரமணியன்
இது (h சுயசரிதை, வேலணையூர் சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் என்ற பெரியவரின் எண்பதாண்டு கால வாழ்வியல் அநுபவங்கள் இவ்வாக்கத்தில் பதிவுபெற்றுள்ளன. அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பற்றிய மனப்பதிவுகளை மட்டும் அதிலே தொகுத்திருந்தால் இது அவருடைய குடும்பக்கதை என்ற அளவில் அக் குடும்பத்தினர் மட்டுமே பேணிக்கொள்ள விரும்பும் ஆவணமாக அமைந்திருக்கும். அவ்வாறன்றி இது ஒரு சமூக வரலாற்று ஆவணமாகும் அளவு உள்ளடக்க நிலையில் விரிவெய் தியுள்ளது. அணிந்துரையிலே கலாநிதி க. குணராசா அவர்கள் குறிப்பிட்டது போல "எண்பது ஆண்டு கால யாழ்ப்பாணத்தை அதன் பலத்தோடும் பலவீனத் தோடும்” தரிசித்த உணர்வை இவ்வாக்கம் தருவதற்கு அடிப்படை இதன் சமூக நிலைப் பட்ட "உள்ளடக்க விரிவு" தான்.
வைத்தியர், சமாதான நீதிபதி, ஆசிரியர், கவிஞர், கமக்காரர், அரசியல் வாதி, தர்மகர்த்தா, கூட்டுறவாளர் முதலிய பன்முகப் பரிமாணங்களுடன் திகழ்ந்த ஒருவரது வாழ்வியல் அனுபவங்கள் ஒரு குடும்பக்கதை என்ற சுருங்கிய வட்டத்துள் அடங்கிவிடுவது சாத்தியமில்லை என்பதையும் நாம் இங்சே மனங்கொள்ள வேண்டியது
2 2e UEFE
அவசியம். ஏனெனில் இப்பன்முக நிலைகள் சமூக ஊடாட்டங்கள் சார் நீ த ைவ. சமூகத் தின் அசைவியக்கத்தோடு இணைந் தவை. சமூக வரலாற்றுச் செல் நெறியைத் தீர்மானிக்கும் ப்ண்பு வாய்ந்தவை. இவ்வகையில் திரு. சி. இராசரத்தினம் அவர்களது "தனிமனித - குடும்ப" வாழ்வானது யாழ்ப்பாணப் பிரதேச வரலாற்றின் ஒரு நுண்ணிய கூறாகவே குறிப்பாக வேலணையை மையப் பகுதியாகக் கொண்ட திவக மண்ணின் சமூக வரலாற்றின் ஒரு நுண்ணிய கூறாகவே கணிக்கத் தக்கது.
தன்னைச் சூழவுள்ள சமுதாயா த்தின் பலம் பலவீனம் என்பவற்றை உணர்ந்து கொண்டு அதனை
வழிநடத்தக் கூடிய தகுதிப்பாடு
தனக்கு உள்ளது என்பதையும் நிச்சயப்படுத்திக்கொண்ட ஒரு வரலாற்றுப் பாத்திரமாகவே திரு. சி. இராசரத்தினம் அவர்களை இந்த வரலாற்றுநூல் எமக்குக் காட்டுகிறது. "ஏடுதொடக்கல்” முதல் “மீளக்குடியமர்வு" வரையான இருபத்தாறு தலைப்புக்களிலான கட்டுரைகளில் இந்த வரலாற்றுப் பாத்திரத்தின் குணாம்சங்களின் இயல்பு வளர்ச்சி என்பன எம்முள் காட் சிப் படுத் தப் பட்டுள்ளன. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்ட நிகழ்வுகளையும் நினைவுகளையும் நாட் குறிப்பு முறையில்
 

தடடப்பாங்குடன் பேணிக்கொண்ட ஒருவராக திரு சி. இராசரத்தினம் இந்நூலில் காட்சி தருகிறார்.
அன்பும் பண்பும் வாய்ந்த ஒரு குடும்பத் தலைவனாகவும் பொறுப்பு
வாய்ந்த ஒரு சமூக மனிதனாகவும்,
நாட்டின் நற்குடிமகனாகவும் அவர் திகழ்ந்துள்ளார் என்பதை இந்நூற்
செய்திகள் உணர்த்தியமைகின்றன.
பண்பாட்டுக் கூறுகளைப் பேணிக் கொள்ள முயலும் அதேவேளை அவற்றில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத வற்றை விமர்சிக்க முற்படும் ஒருவராகவும் அவர் திகழ்வதை (சிதம் பரரகசியம், கதிர் காம முருகன் பேழை - ப. 107) அவதானிக்கலாம். நோயுற்றவர் களுக்குத் துணை போகும் மனிதாபிமானம் , அவசரத் தேவைக்குத் தனி விமானம் “புக்" பண்ணும் துணிவு, சமூகத்தின் நலனைக் கருத்திற் கொண்டு தேர்தல்களில் "தில் லுமுல்லு" களை மேற்கொள்ளும் ராஜ தந்திரம், சமூகத்தில் தாழ்த்தப் பட்டோரின் விடிவுக்குத் துணை நிற்கும் சீர்திருத்த உளப்பாங்கு, முதலியனவாக இவர் புலப்படுத்தி நின்ற உணர்வு நிலைகள் இவரது சமூகப் பார்வையின் வீச்சைப் புரிந்துகொள்ள முடிகின்றது. சமூக நிறுவனங்களில் இவர் இணைந்து நின்று ஆற்றிய பன்முகப்
பணிகளில் இவரது செயல்
வீரத்தைப் பறைசாற்றுவன.
இவ்வாறு சமூகப் பார்வையும் செயல்திறனும் இணைந்த ஒருவரை எமது தரிசனத்திற்குத் தந்துள்ள தன் மூலம் இந் நுT ல் ஒரு தனிமனிதனின் "குடும்பக்கதை" என்ற வட்டத்தைத் தாண்டி ஒரு சமூகவரலாற்றுக்குரிய ஆவணம்
என்ற கணிப்பை எய்தத் தக்க தாகின்றது.
சமூக வரலாறானது பலவேறு அணுகு முறைகளுடாகப் பதிவு செய்யப்படலாம். தரவுகளை அறிவியலடிப்படையில் "தொகை வகை” செய்து புள்ளிவிபரங்கள், நிழற்படங்கள், அட்டவணைகள் முதலியனவற்றோடு தொகுத்த மைக்கும் அணுகு முறையொன்று (உ-ம் கலாநிதி க. குகபாலனின் தீவகம்) இன்னொன்று புனைகதை (Fiction) அணுகுமுறை. அதாவது ஒரு சமூகத்தின் காட்டுருவான 3560).5LDT b560) (Typical Characters)
ப் படைத்து அச் சமூகத்தின்
விழுமியங்கள், முரண் நிலைகள் என்பவற்றைக் கதைவடிவில் பதிவு செய்தல் . (உ-ம் செங்கை ஆழியானின் வாடைக்காற்று, மு. தளையசிங்கத்தின் ஒரு தனிவீடு, காவலூர் ஜெகந்நாதனின் நாளை,
"அங்கையின்" கைலாசநாதனின்
கடற்காற்று) மூன்றாவது வகை சமூக மாந்தரின் தனிமனித வரலாறு அல்லது சுயசரிதைகள் (Biography - Autobiography) முதல் வகையில் உண்மைகள் (Facts) உணர்ச்சிக் கலப்பின்றி அமையும், இரண்டாவது வகையில் உணர்ச்சி, உணர்வு என்பன முதன்மைப்பட்டு உண்மைத் தரவுகள் அவற்றுக்கான அடித்
தளமாக அமையும். இவ்விரண்
டிற்கும் இடையில் நிற்பன
"தனிமனித வரலாறு - சுயசரிதை”
ஆக்கங்கள். இவற்றில் தரவுகள் நிகழ்வுகள் என்பனவும் தனிமனித உணர்வு, உணர்ச்சி என்பனவும் பின்னிப் பிணைந்து அமைவன. கற்பனை மாந்தரைப் படைத்துக் கதை கூறும் புனை நிலைக்கு
2 R 656) 35 27

Page 17
இவற்றில் இடமில்லை. உண்மை மனிதரை அவர்களது இயல்பான தோற்றத்தில் இவை காட்டும். திரு சி. இராசரத்தினம் அவர்களின்
இவ்வாக்கம் இந்த மூன்றாவது
வகை சார்ந்தது என்பதை விளக்க வேண்டியதில்லை.
யாழ்ப்பாணப் பகுதியின் - குறிப்பாக தீவகத் தின் - வரலாற்றிலே கடந்த ஒரு நூற்றாண்டில் பல்வேறு வளர்ச்சி மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. கல்வி நிலையில் ஏற்பட்ட வளர்ச்சி, பொருளியல் உத் தியோக நின்லயில் ஏற்பட்ட விரிநிலைகள் தாய் நிலத்துடனான பாதை பாலத் தொடர்பு, சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளில் நிகழ்ந்த மாற்றங்கள், தமிழகத்துடனான உறவு நிலை, மற்றும் புலம்பெயர் அவலங்கள் என்பனவாக இவற்றை வகைப் படுத்தலாம். இவ்வாறான வளர்ச்சி, மாற்றம் என்பன இம்மண்ணின் ஒவ்வொரு தனி மனிதனையும் அவனது குடும் பத் தையும் பாதித் த ைவ. இவற்றுக் கு ஈடுகொடுக்கத்தக்க வகையில் ஒவ்வொருவரும் தம்மளவில் மனநிலை, செயல்நிலை என்ப வற்றில் வளர்ந்துகொள்ள நேர்ந்தது. மரபுகளைப் பலிகொடுக்காமல் புதுமைகளை வரவேற்பதிலும் வரவேற்பதிலும் அனுசரித்து நடப்
பதிலும் கவனம் செலுத்த
வேண்டியிருந்தது. இத்தகைய இயங்குநிலை காட்டுருவான ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவ ரையே திரு சி. இராசரத்தினம் அவர்களின் இவ்வாக்கம் எமக்குக் காட்டுகின்றது.
ஏடு தொடக்கல், கவிதை முதotய தலைப் புக் களில்
in2 28 பத்மனதுை
அமைந்த பகுதிகளில் பண்டைய கல்வி மரபுடன் அவர் கொண்டிருந்த தொடர்பை நோக்கலாம். ஆன்மீகம் என்ற தலைப்பில் அவருடைய சமய ஈடுபாடு தெரிகிறது. மாந்திரீகம், வைத்தியம் முதலிய தலைப்புக்களில் அவரது பாரம் பரியம் பேணும் ஆர்வம் அவற்றைச் சமகால சமூகத்திற்கும் பயன் படுத்திக்கொள்ளும் நோக்கு என்பன புலனாகின்றன. இவ்வாறு மரபுகளில்
காலூன்றி நிற்கும் இவர் காலத்
தோடொட்டிப் புதிய மாற்றங்களை வரவேற் பவராகரின் றார் , தம் பிள்ளைகளைப் புதியமுறைக் கல்விகளுக்கு வழிப்படுத்துகின்றார். சமூக நிலையில் தாழ்த்தப் பட்டவர்கள் சமயம், அரசியல் என்பவற்றில் தம் தகுதியை உயர்த்திக்கொள்ள முயலும் போது அவர்களின் துணைவனாக அமை கின்றார். சனநாயக முறையிலான கூட்டுச் செயற்பாடுகளில் கோயிற் பரிபாலன F 60) முதல் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஈறாகப் பல்வேறு நிறுவனச் செயற்பாடுகளில்- பங்குகொண்டு செயற்படுகிறார். வழிநடத்தல் பொறுப்புக்களையும் வகிக்கின்றார். பாரம் பரியமான விவசாய முறைகளில் ஈடுபாடு கொண்டு
உழைத்த அவர் தம் அடுத்த தலைமுறையினரைப் புதிய "பொருளியல் - அரச பணி”
க்களங்களுக்கு வழிப்படுத்துகிறார். குடும்பநலன், சமூகநலன் என்ப வற்றுக்குச் சமகால அரசியல் தலைவர்களை - குறிப்பாக நாடாளுமன்ற அங்கத்தவர்களை உரியவாறு பயன் படுத் திக் கொள்கிறார். இவற்றையெல்லாம் நோக்கும் போது சமூக - பண்பாட்டு மாற்றங்களைக் கால உணர்வுடன்

தரிசித்து வரவேற்ற - அதேவேளை தன் பண்பாட்டு அடிப்படைகளை விமர்சிக்க முற்படாத நடுத்தரவர்க்க புத் தி ஜூவியாக தரு சரி, இராசரத்தினம் அவர்கள் காட்சி தருவது தெரிகிறது. இங்கே நமக் கும் தெரிபவர் ஒரு இராசரத்தினம் அல்ல. யாழ். மண்ணின் பலநூற்றுக்கணக்கான நடுத்தர வர்க்க புத்திஜீவிகளுக்கு காட்டுருவாக ஒருவர் என்பதே என் கணிப்பு இவ்வகையிலே ஒரு சமூக வரலாற்றுப் பதிவு என்ற கணிப்புக்கு உரியதாகிறது.
இந் நுT லிலே முதல் சில இயல்களில் திரு சி. இராசரத்தினம் அவர்கள் தமது இளமைப்பருவ நினைவுகளை மீட்கிறார். கடந்த எழுபது என்பது ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்று எவ்வாறு திகழ்ந்திருக்கும் என அறிய ஆர்வமுள்ள
பண் பாட்டியல் , சமூகவியல் , நாட்டார் வழக்காற்றியல் ஆர்வலர் களுக்கு இவை சுவையான
தரவுகளைத் தரவல்லன. குறிப்பாக
அன்றய கல்விமுறை, ஆசிரியர் களின் குணாம்சங்கள், வகுப்பறை அமைப்பு, பாடத் திட்டங்கள், விளையாட்டுக் கள் மற்றும் திருவிழாச் சூழலில் பண்பாட்டுக் கோலங்கள், வண்டிச் சவாரி முதலியன பற்றிய விவரணங்கள் இவ்வகையின. குறிப்பாக கடதாசி விளையாட்டுப் பற்றியும் வண்டிச் சவாரி பற்றியும் விரிவான தகவல்க்ள் உள்ளன. தொலைக் காட்சிக் கலாச்சாரம் வருவதற்கு முற்பட்ட காலத் தில் நமது பொழுதுபோக்குகள் எப்படி அமைந்தன என்பதை உணர்வதற் கான பதிவுகள் இவை. அவ்வகை யில் இவ்வாக்கம் ஒரு பண்பாட்டு வரலாற்றுப் பதிவு என்று கணிக்கத்தக்கது.
Excellent Photographers
for
Wedding
Portraits &
Child Setting
300, MODERA STREET, COLOMBO - 15. TEL: 526345
2 தி மலகை 29

Page 18
தரிரு சிதம் பரப் பிள்ளை இராசரத்தினம் அவர்கள் தமது கிராமம் (வேலணை) சமகால அழிப்பு முயற்சிகளுக்கு முன் எய்தியிருந்த பேணிநின்ற பண்பாட்டு வளத்தைப் பதிவு செய்து பேணிக் கொள்ளும் ஆர்வத்துடன் இந் நுT லாக் க முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேவேளை தமது வாழ்வியல் அனுபவங்களை அதனோடு பின் னிப் பிணைத்துக் காட்ட முயன்றுள்ளார். தமது பிறந்த மண்மீது அவர் கொண்டிருந்த பற்றும் தம்மைப் பற்றி அவர் கொண்டிருந்த சுய கணிப்பும் இந்நூலாக்கத்தின் அடித்தளங்கள். வேலணை மண்ணில் தொடங்கிய இச் சுயசரிதை, யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டம் இவை எல்லாவற்றையும் கடந்து கொழும்பு கதிர்காமம் வரை மட்டுமன்றி தமிழ்நாடு வரை சென்று மீள்கிறது. இயன்றவரை அவ்வப் பிரதேசங்கள் பற்றிய தகவல் களை முரண் பாடற்ற வகையில் தரமுற்பட்டுள்ளார். இவ் வகையில் அவரது நினைவாற்றல் பாராட்டத்தக்கது.
தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும்.
என்பது குறள் , திரு சி. இராசரத் தினம் அவர்களின் தகுதிவாய்ந்த வாழ்க்கையின்
எச்சம் என்ற வகையில் திரு இரா. சிவசந்திரன் அவர்களின் உயர் பண்பை என்னால் கடந்த முப்பது ' ஆண்டுகளில் நன்கு இனங்காண முடிந்தது. திரு சிவசந்திரன் அவர்களின் உடன்பிறந்தோர் எத் தகு பணி புடையோராக இருக்கின்றார்கள் என்பதை நான் அநுபவபூர்வமாக அறியவில்லை.
ஆனால் ஒரே கொடியில் பூத்த
மலர்கள் என்ற வகையில் அவர்களும் சிறந்த பண்பாளர்கள் என்றே கணிக்கின்றேன்.
உயிருள்ள எச்சங்களான
மேற்படி சிவசந்திரனும் அவரது
உடன் பிறந்தோரும் திரு சி.
இராசரத் தினம் அவர்களுக்கு
அமைந்துள்ளார்கள். அதேபோல அவரின் உணர்வு எச்சமாக அமைவது இந்த வாழ்க்கைச் சுவடுகள் நூலாக்கம். இது அவரது பெயரை நிலைநிறுத்தும். இனிவரும் தலைமுறையினர்க்கு வழிகாட்டும். இது என் நம்பிக்கை.
திரு சி. இராசரத் தினம் அவர்களைப் போல இங்குள்ள முதுபெரும் தக்கோர் தம் வாழ்வுச் சுவடுகளைப் பதிவு செய்து எமது வரலாற்றைக் கட்டியெழுப்பவும் பண்பாட்டை வழிநடத்தவும் துணைநிற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த |b այ6)|60) Ù 60) այ நிறைவு செய்கின்றேன்.
சிருஷ்டி நூல் இது.
ஈழத்தின் மூத்த எழுத்தாளரான சம்பந்தன் அவர்களுடைய சிறுகதைத் தொகுதி "சம்பந்தன் சிறுகதைகள்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. தரமான சுவைஞர்கள் தேடிப்பெற வேண்டிய
l
2 ao G paga
St.

மல்லிகையை மனதார நேசிக்கின்றோம்.
அதன் வளர்ச்சியில் பெருமிதம் கொள்கின்றோம்
33 ஆண்டில் பிரவேசிக்கும் அதற்கு நமது நல்வாழ்த்துக்கள் என்றும் உரியவை.
ஓரியண்டல் சலூன்
182, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு -11. தொலைபேசி : 439413
2 PS patasoa S2
3.

Page 19
"இதுவா எங்கட கிராமம்?"
அவன் இப் படி வீறிட் டு அலறுவானென நான் நினைக்க வில்லை. எல்லாரதும் கவனம் எங்கள் பக்கந் திரும்பியது. எங்களை அழைத்து வந்த கிராமசேவகரும் இராணுவ அதிகாரியும் எங்களை நோக்கி வரத் தலைப்பட்டனர்.
"ஒண்டுமில்லை." என்று நான் குரல் தந்தேன்.
உடைந்து கற்குவியலாகக் கிடந்த பாடசாலைக் கட்டிடத்தின் முன் ஊனப்பட்டுக் காய்ந்து கருகிக் கொண்டிருக்கும் வேப்பமரத்தின் கீழ் நின்றிருந்தோம். எங்கள் சிதைந்து போன கனவுகளாக அவை உருக் குலைந்து கடந்தன. உடைந்த கற்குவியலிடையேயும் பற் றைகள் கவிந் திருந்த வீதயினுT டேயும் பாம்புகள் நெளிந்தன. அவற்றைப் பயத்துடன் எல்லாரும் பார்த்தனர்
"நாங்கள் இங்கிருந்து ஓடியதும் பாம்புகள் குடிகொண்டு விட்டன" என்றார் நடராஜா மெதுவாக, பாம்புகளுக்குக் கேட்டுவிடலா மென்ற அச்சத்துடன் மெதுவாக அவர் கூறியதாகப்பட்டது.
"சனசந்தடி வந்ததும் அவை விலகிவிடும்" என்றேன் நான். எனது கடந்த கால வாழ்க்கையில் இப்படி 82
எத்தனையோ கண்டிருக்கிறேன்.
பாம் புகளைக்
"விசப்பாம்புகள் போல."
"இருக்கும் . அதுகளுக்கு 6TB 5660)6TBS 5 600 L T 6) JULLD . எங்களுக்கு அதுகளைக் கண்டால் பயம். தனகினால் கொத்தத்தான் செய்யும். சாரையஞம் இருக்கும்."
"சில து தனகா மலே
கொத்திவிடும்.”
எட்டு நீண்ட ஆண்டுகளின் பின்னர் எங்கள் ஊரில் மீண்டும் குடியேற இராணுவம் அனுமதித் திருக்கின்றது. இந்த மண்ணி லிருந்து ஒரு நாள் அதிகாலை உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள உடுத்த உடுப்போடு குழந்தை குட்டிகளைக் காவிக்கொண்டும் இழுத்துக்கொண்டும் ஓடினோம். அதன் பின்னர் இன்றுதான் இந்த
மண்ணில் கால்களைப் பதித்து
நிற்கின்றோம்.
இது ஒரு இனிமையான அனுபவம். இது நான் வாழ்ந்த மண்தரை. கால்களில் அணிந்
திருந்த சிலிப்பர்களைக் கழற்றி
விட்டு மண்தரையில் பாசத்துடன் கால்களை அழுத்தமாகப் பதித்துக் கொண்டேன். பாதங்களுடாக என்னுள் என் தாய் மண்ணின் குளிர்மையும் இனிமையும் உச்சி வரை ஊடுருவிப் பரவிய உணர்ச்சி.
 

விபரிக்க முடியாத புத்துணர்ச்சி.
கிராமசேவையாளர் இராணுவ
அதிகாரியின் கூற்றினைத் தமிழில் சொன்னார். "நீங்க எல்லாரும் உங்கட பிறந்து வளர்ந்த ஊரில இனிச் சந்தோசமாக இருக்கலாம். வீடுகளை உங்க உங்க வளவுகளில கட்டிக் கொள்ளலாம். தொழில்களைச் செய்யலாம். இங்கு புதைக்கப்பட்டிருந்த மிதிவெடிகள் கண்ணிகள் கூடியவரை அகற்றப் பட்டுவிட்டன. இனி." அவர் தொடர்ந்து பேசிக் கொண்டு வந்தார். அவரின் பேச்சினையும் நடராஜாவின் பேச் சினையும் கவனிக்கும் நிலையில் எவரு மில்லை. அவர்களின் விழிகள் நாலா பக்கங்களும் துளாவித் தவித்தன. தாங்கள் எங்கிருக் கின்றோமென்பது பலருக்குப் புரியவில்லை. திக்குத் திசை விளங்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை மஞ்சவண்ணாப் பற்றை களும் செடிகொடிகளும் வளர்ந்து
படர்ந்து கிராமத்தை முடியிருந்தன.
பாரிய மரங்கள் குண்டடிபட்டுக் கிளைகளை முறித்துக் கொண்டு பட்டுக் கிடந்தன. கிராமத்தைச் சுற்றிக் காணப்பட்ட பனங்கூடலைக் காணவில்லை. சோளகக் காற்றில் தலையசைத்து முகில்களை எட்டிப் பிடிக்கத் துடித்த பனைமரங்கள் காணாமற்போயிருந்தன. வீதிகள், கிணறுகள், வீடுகள்.எதையும் இனங்காண முடியவில்லை.
ஆங்காங்கு பாம்புகள் மட்டும் தெளிவாகக் காணப்பட்டன. சில மூர்க் கத்தோடு இவர்களைப் பார்த்து வெறித்தன.
கிராமத்தின் மேற்குக் கோடியில் பாதுகாப்பு அரணாக மணி
அணையொன்று நீண்டு சென்றது. அதில் பாம்புப் புற்றுக்கள் காணப் பட்டன. புற்றுகளுக்கு மேலாகப் பாம்புகளின் தலைகள் மங்கலாகத் தெரிந்தன. முட்கம்பி வேலிகளில் பாம்புச் செட்டைகள் கழற்றப்பட்டிருந்தன.
அவர்கள் கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்த பாடசாலைக் கற்குவியலையும் குட்டிச் சுவர்க ளையும் கொண்டே தங்களது கிராமம் என அடையாளம் கண்டு கொண்டனர். பாடசாலை வளவி னைச் சுற்றி நின்றிருந்த பனை மரங்கள் பல தறிக்கப்பட்டிருந்தன. பல விரைந்து வந்த ஷெல்களால் தலை சீவப்பட்டிருந்தன.
பாடசாலை முன்றலில் முன்னர் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அவற்றின் நிழலில் வகுப்புக்கள் நடந் திருக் கலின் றன. அந்த மரங்களைக் காணவில்லை. உக்கிப் போன அடிமரங்களில் கறையான்கள் பற்றிப் படர்ந்
திருந்தன. மரங்கள் இருந்தனவென்
பதற்குச் சாட்சியாக ஊனப்பட்ட வேப்பமரம் ஒன்று மட்டும் எஞ்சி யிருக்கின்றது அதன் பாரிய கிளைகளைக் குண்டுகள் சீவி யிருந்தன. சன்னங்கள் மரத்தின்
பட்டைகளைப் பிய்த்துச் சொறி பிடிக்க வைத்திருந்தன.
"எங்கட கிராமம் பாழடைந்து விட்டது. இங்கு இப்ப எஞ்சி யிருப்பது சரித்திர ஆராய்ச்சிக்கு உதவும் சிதைந்த கட்டிடங்கள் தாம்." என்றார் கந்தசாமி மாஸ்ரர்.
"பாழடைந்தாலும் எங் கட
ஆத்மா இங்கதான் இருக்குது.”
R p695a), 83

Page 20
என்னருகில் நின்றிருந்த அவன் என் கரத்தைத் துயரத்துடன் பற்றிக் கொண் டான் . அமைதியாக இருக்கும்படி நான் அவன் தோளில் கரத்தைப் பதித்தேன். முகங் காய்ந்து வெளுத்த நிலையில் எல்லாரும் நின்றிருந்தனர். எல்லார் மனத்திலும் இங்கு வருவதற்கு முன் னர் அற்ப நப்பா சை இருந்துள்ளது. இராணுவத்திற்குப் பயந்து ஓடிப்போனபோது விட்டு விட்டு வந்த நிலையில் வீடு வாசல் சொத்துப் பத்து இருக்குமென்ற எண்ணம் இங்கு கால் பதித்ததும் கணத்தில் சிதைந்துபோனது. குன்றிக் குமைந்து நின்றிருந்தனர்.
தாம் வாழ்ந்த இடத்தினை அடையாளம் காண முடியாமல் ஊரே சிதைந்து போய்விட்டது. எவ்வளவு பக்குவமாக தத்தம் வளவுகளுக்குக் கதியால்கள் நாட்டி எல்லையிட்டு அச்சறிக்கையாகக் கடுகு வேலிகளை இட்டுப் பேணியிருந்தார்கள். கிடுகுவேலிக ளுக்குள் எங்களது கலாச்சாரம் பேணிப் பாதுகாக் கப் பட்டது. எங்களது பெருமைக் கமைய அசிங்கங்களையும் அக்கிடுகு
வேலிகள் வெளித் தெரியாது
காத்துள்ளன.
சின்னத்தம்பி அம்மானுக்கும் ஆடுகால் அம்பலத்தாருக்கும் பத்து வருடங்களாக நடந்து கொண்டி ருந்த நீதிமன்ற வழக்கு வேலிப் பிரச்சனை சம்பந்தமானது தான். அம்பலத்தார் கிணற்றடிப்பக்கமாக அரையடி உட்புறமாகத் தள்ளி கதியால் களை நடப் போய் , சின்னத்தம்பி அம்மான் கொடுவாக் கத்தியுடன் பாய்ந்து கட்டிப் புரண்டு. காயப்பட்டு. கோடேறி. இரண்டு பேரும் அந்தக்காணிகளை
گیبسوه 34
நான் வடக் குப்
முதலில் ஈடு வைத்துப் பின்னர் விற்றுப் புரக் கிராசிமாருக்குக் கொடுத்தழிந்தும் வழக்கு முடிவு காணாத நிலையில் ஊரை விட்டே கோவணத்துடனும் கோபத்துடனும் ஓடிப் போனார் கள் . இன்று வேலிகளுமில்லை. வேலிச் சச்சரவுப்பட மனிதர்களுமில்லை. கலகாரிப் புஸ்மன்களைப் போல் பற்றைகளையும் பின்னிப்பிணைத்து விட் டு அவற்றுள் வாழ்ந்து முடித்துவிடலாம். ஊரெல்லாம் காடாகிப் பாம்புகள் பெருகிவிட்டன. புஸ்மன்களுக்குச் சாப்பாட்டிற்கு கஷ்டமில்லை.
விதானையாரின் ஒலிக்கிறது.
குரல்
"என்ன யோசித்துக்கொண்டு நிற்கிறியள்? இது தான் முந்தைய பிரதான வீதி. மறந்து போனியளே? இப்படியே வடக்கு பக்கமாகச் சுந்தரம் அழைத்துப் போவார். அங்காலப் பக்கம் வீடிருந்தவை அவரோடு போய்ப் பாருங்கோ. தெற்காலப்பக்கமாக மாணிக்கம்
கூட்டிப்போவார். போய்பார்த்திட்டு
சுணங்காமல் வாருங்கோ. கண்ட பாட்டிற்கு திரியாமல் மிதிவெடிகள் இருக்கும். தெளிவான பாதையால நடவுங்கோ."
"பாம் புகளோடை கண் ணி வெடிகளும் இருக்குது." என்று
நடராஜா பெருமூச்செறிந்தார்.
கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. U öß  LDIT 35 அவனையும் அழைத்துக் கொண்டு சுந்தரத்தைத் தொடர்ந்தேன். பற்றைகளை விலக்கிக் கொண்டு நடந்தோம்.

"அதரி லை தான் என் ர வீடிருந் திருக்க வேணும் . ஒண்டையும் காணோம்." என்றபடி தில்லைநாதன் ஓரிடத்தில் குறுக்கே புகுந்தான்.
"கவனம்.கவனம்.”
அவனுடைய வீடு கூரையின்றிக் கிடந்தது. கதவுகள், யன்னல்கள் என் பன சுவர் உடைத் து நீக்கப்பட்டிருந்தன. காற்றிற்கும் வெயிலுக்கும் மழைக்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் சுவர்கள் பாளம் பாளமாக வெடித் திருந்தன. அவற்றில் ஆலமரங்கள் வளரத் தொடங்கியிருந்தன. கொடிகள் சுவர்களில் பற்றிப் படர்ந்திருந்தன.
"ஐயோ.”என்று தில்லைநாதன் அலறினான். "என்ர வீடு.எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுக் கட்டினன். இரண்டு வரியம் கூட ஆமாகக் குடியிருக்கவில்லை. எல்லாத்தையும் புடுங்கிக் கொண்டு G3UTL LT66856i.”
தில்லைநாதனின் வாழ்க்கையின் ஆணிவேர் ஆட்டங்கண்டிருந்தது. யாழ்ப்பாணச் சமூகத்தின் வாழ்
விலக்கு வீடு, வளவு, கிணறு, அச் சறிக் கையான வேலி, தண் ணிரைக் குடித்துக்
கொண்டாவது நிம் மதியாக வாழ்ந்துவிட வேண்டும். யுத்தம் எல்லாவற்றையும் குலைத் து விட்டது. நம் பரிக் கைகள் தளர்ந்துவிட்டன.
"பாவிகள்.பாவிகள்."
o * ۔ ۔ ۔ ۔ ٤٤
நான் என்ர வீட்டைப் பார்க்க வரவில்லை, மாமா." என்றான் அவன்.
"இப்படியிருக்குமென்று எதிர் பார்த்துத் தான் வந்தம். எட்டு வரியத் துக் குப் பரின் னும் குடியிருக்காத வீடு வாசல் அப்படியே இருக் குமெணி டு நம்புகிறாயா,வசந்தன்?"
எவ்வளவு அழகான கிராமம் எங்களுடையது? ஊரில் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அந்தக் கிராமத்தை ஒவ்வொருவரும் உயிருக்கு மேலாக நேசித்திருக் கிறார்கள். இந்த மண்ணில்தான்
9, 61st E 6i பிறந்தர்ர்கள் . வளர்ந்தார்கள் . ஒடியா டி விளையாடினார்கள்.
"எனக்குத் தாய்நாடு இதுதான், மாமா. நான் பிறந்தபோது எந்த வாடைக்காற்று என்மீது பட்டதோ, எந்த நீர் என்னைக் கழுவிற்றோ. விருத் தெரிந்தபோது எந்தச் சுற்றாடல் என் கண்ணில் பட்டு மனதில் பதிந்ததோ.அது "அந்தக் கிராமத்தில் தான் இருந்தன. எங்க வீடு.உங்க வீடு..இங்க இப்ப ஏக்கத்தோடு தம் வீடு வளவுகளைப் பார்க்க வந்திருக்கும் எல்லோரதும் வீடுகள்.பிள்ளையார் கோயில், ஆலடிச்சந்தி.நரியன் குண்டு. பரியாரி மதகு . சங்கரையர் தோட்டம். துரவு.கிராமத்தைச்
சுற்றி வளைத்திருந்த பனந்தோப்
புகள். வடலிகள்.இவைதாம் ! 5 6Ö) LO ULJ I 66 நினைவில் நிற்கின்றன. அவை எங்கே? இவ்வளவு இனிமை களையும் பறிகொடுத்துத் தான் நாங்கள் உரிமைகளைப் பெறவேண்டுமா? அரசியல் வாதிகளின் சுயநலத் திற்கு அதிகார வேட்கைக்கு நாங்கள் பலியாகிவிட்டம்.”
வசந்தன் பொருமினான்.
Saab 35 KAN

Page 21
"இந்தப் போராட்டத்தில் நாங்கள் இழந்தது மிக மிக அதிகம்."
பிள்  ைள யார் கலசத்தை இழந்திருந்தது. முன் மண்டபங்கள் சிதைந்து கிடந்தன. கோபுரத்தில் ஆலும் அரசும் ஆழ வேரூன்றி வளர்ந்திருந்தன. ஓணான் ஒன்றுபிள்ளையார் சிலை மீது படுத் திருந்தது. ஆள் அரவம் கேட்டதும் எங்கோ புகுந்து மறைந்தது.
நாங்கள் பிள்ளையார் கோயில்
முன் சற்றுத் தரித்து நின்றோம். இரவிரவாக இங்கு திருவிழாக்கள் நடக்கும். நான்கு
வீதிகளும் சனம் நிறைந்திருக்கும்.
கடலைக் காரிகள் வரிசையாக அமர்ந்திருப்பர். தும்பு முட்டாஸ். ஐஸ்கிறீம்.எவர்சில்வர் பாத்திரக் கடைகள். மணிக்கடைகள்.ஊரே திரண்டிருக்கும். இது எங்களது கோயில்.எனக்குச் சோறு தீத்தியது இந்தக் கோயில் மண்டபத்தில் தான். எட்டு வருடங்களாக நான் யாழ்ப்பாணக் குடாநாடு எங்கும் இடம் மாறி இடம்மாறிக் குடியிருக்க
அலைந்து திரிந்திருக்கிறேன்.
எத்தனையோ கோயில்களைத் தரிசித்திருக்கின்றேன். இப்போது இந்த எங்கள் பிள்ளையார் கோயில் முன் நிற்கின்ற சுகானுபவம் கிட்டியதில்லை. ’ என் விழிகள் கலங்கின.
கிராமம் சுடுகாடாகிவிட்டது. வீடுகள் கற்குவியல்களாகிவிட்டன.
அல்லது செடி கொடிகளால்
மூடப்பட்டு பாழடைந்துவிட்டன. பிள்ளையார் ஏகாங்கியாகிவிட்டார். அவருக்கு விளக்கேற்ற எவரு மில்லை. ஆலயம் தேடுவாரின்றிப் பழுதுபட்டு அருள் விளக்கத்தை
36 šo
இழந்து வருகின்றது.கிராமத்தை விட்டு தெய்வங்கள் வெளியேறிவிட பேய்களும் பிசாசுகளும் குடியேறி விட்டன. பாம்புகள் எம்மைச் சினத்தோடும் நேயமின்றியும் பார்க்கின்றன.
கோயிலின் சுற்றாடலில் விழிகள் பதித்து அலைந்தன. கிழக்கு வீதியில் பற்றைகளுக்கிடையில் விழிகள் எதையோ தேடின. கோயிலின் கிணறு அங்குதான் இருந்தது. கிராமம் முழுவதும் இருக்கும் கிணறுகளில் நன்னீர் கிடைத்தாலும் பிள்ளையார் கோயில் வெளிவீதிக் கிணற்றின் நீரில் எங்குமில்லாத சுவையி ருக்கும். கிராமத்தவர்கள் கோயில் கிணற்றில் விரும்பி நீர் அள்ளிச் செல்வார்கள். கிணற்றடியில் எத்தனை சண்டைகள் நிகழ்ந்திருக் கின்றன. சாதிச் சண்டைகளின் இருப்பிடமாக இந்தக்கிணற்றடி ஒரு காலத்தில் விளங்கியது. என்னுடைய சிறுவயதில் எல்லாரும் கிணற்றில் தண்ணிர் அள்ளிவிட முடியாது. துலாக்கயிற்றினைப் பற்றி நீர் அள்ளுகின்ற உரிமை ஒரு சிலருக்குத்தான் இருந்திருக் கின்றது.
மெல்ல மெல்ல அந்தக் கட்டுப்பாடு தளர்ந்து போனது. அந்தக் கிணறு இருந்தவிடத்தில் இன்று ஒரு இறக்கம் மட்டுந்தான் காணப்படுகின்றது. கிணற்றின் சுற்றுக் கட்டுகள் இடித் துத் தள்ளப்பட்டு கிணற்றின் முக்கால் பகுதி மூடப்பட்டிருந்தது. எத்தனை கிணறுகள் இப்படித் தூர்ந்து போயினவோ?
"கடவுளே” என்றார் ஆறுமுகம். "அருமையான நல்ல தண்ணிக்

கிணறு. மூடிப்போட்டான்கள்."
"இனி த தோணி டேக் க இதுக் குள் ள எத் தனை எலும்புக்கூடுகள் அகப்படுமோ?”
வசந்தன் என்னைக் கவலை யோடு பார்த்தான்.
வசந்தனின் வீடு வாசிக
சாலைக்கு அருகில் இருந்தது. சுந்தரத்தின் பின்னால் நடந்தோம். வழியெங்கும் பற்றைகள் பற்றை களை விலக்கிப் பார்த்துவிட்டு பலர் நிலைகுலைந்து போயினர். தங்கள் வீடுகள் இருந்த இடம் தெரியாது போன நிலை அவர்களைப் பதற வைத்தது.
"தம்பி என்ர வீடிருக்குமா?" என்று நடராஜா கவலையோடு கேட்டார். இந்தக்கிராமத்தில் அரசடிச்சந்தியில் கடை நடத்தியவர்.
நான் அவரை இரக்கத்துடன் பார்த்தேன்.
“இப்பதான் பாக் கிறியளே? இந்தக்கிராமத்தில் ஒரு வீடும் முழுமையாக இல்லை. எல்லாம் வாழமுடியாதளவிற்குச் சிதைந்து
விட் டன். சண் டை எங் கட கிராமத் தில் உக்கிரமமாக நடந்திருக்குது. உங்கட வீடு
மதவடியிலை தானே?"
"ஒமோம், தம்பி. வீடு போனாப் பறவாயில்லை. வீடிருந்தவிடம் தெரியவேண்டும்.”
"உங்கட வீட்டைச் சுலபமாகக் கண்டுபிடிக்கலாம், அண்ணை. மதவுக்கு முன்னால."
"தம் பி." "என்றார்
6T 6f 6f Llf
அவர்
ஒருத்தருக்கும் சொல்லாதை. ஆமி வருகிது என்றதும் ஒடுறதுக்கு முன்னால என்றை நகைநட்டெல் லாத்தையும், நூறு பவுனுக்கு மேல.ஒரு பேணியில போட்டு கோடியில தாட்டுப் போட்டு ஓடினனான்.இவ்வளவு காலமும் நான் உறங்கினதே யில்லை. இப்பவாறது அதுக்காகத்தான். என்ற பிள்ளையளின்ரை கல்யாணம் கார்த்திகை எல்லாம் அதிலதான் தங்கியிருக்கு." அவர் என்னை ஊக்கத்தோடு பார்த்தார்.
பற் றைகள் சரசரத் தன. கட்டாக்காலி மாடுகள் இரண்டு மூசிக்கொண்டு ஓடின. எவரும் கட்டி வளர்க் காததால் அவை குழு பிடித்திருந்தன. பாதையில் பெரும் புற்றுக்கள் காணப்பட்டன.
மதவடி வந்தபோது நடராஜா
பரபரப்டைந்தார். மதவுக்கு முன்
காணப் பட்ட பற் றைகளை விலக்கியபடி உள்ளே புகுந்தார்.
"அண்ணை கவனம்.மிதிவெடி இருக்கும் ." எவரது எச்சரிக்கையையும் கேளாமல் அவர் ஆவேசமாக நுழைந்தார்.
"ஐயோ.என்ர அம்மாளாச்சி." என்று அவர் பெருங் குரலில் அலறுவது கேட்டது. நான் பதற்றத்துடன் அவர் நுழைந்த வழியால் புகுந்தேன்.
இவர் வீட்டினைக் காணவில்லை. அவர் வீட்டின் வளவின் ஊடாக அரைப்பனை உயரத்திற்கு மண் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரும் பாதுகாப்பு அணைக்குள் அவர் வீடு இருந்த இடம் தெரியாமல் குவியலாகிவிட்டது.
2
Sai 32

Page 22
நடராஜா நிலத்தில் அப்படியே சரிந்து விழுந்தார்.
அவரை ஆசுவாசப்படுத்தி வெளியே அழைத்துவந்தேன். அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.
"நீங்கள் பார் தி தரிட் டு வாங்கோ. நான் இப்படியிருந் திட்டுபள்ளிக்கூடத்திற்குப் போறன்."
தங்கள் தங்கள் வளவுகளையும் சிதிலமாகிய வீடுகளையும் பார்த்து மனம் இடிந்து போனவர்கள் ஆங்காங்கே தங்கிவிட்டார்கள். வாசிகசாலை வரை செல்ல (86) 60óí (6 LĎ. அங்குதான் என்னுடையதும் வசந் தனதும் வீடுகள் இருந்தன.
"திரும்பி விடலாம் போல இருக்குது, மாமா.”
“வந்தனாங்கள், ஒருக்காப் பார்த்திட்டுப் போவம்."
அவன் என்னை ஆழமாகப் பார்த்தான்.
"மாமா.என் வீடும் முற்றமும் வளவும் மரங்களும் இன்னமும் என் கண்களில் பசுமையாக நிற்கின்றன. அந்த வீட்டை நானும் கூலியாளாக நின்று கட்டின்ன். ஒவ்வொரு அரிகல்லும் சாந்தும் என் கரம் பட்டவை.நானும் என் குடும்பமும் அந்த வீட் டில எவ்வளவு குதுாகலமாக வாழ்ந்தம் தெரியுமா? முற்றத்தில் பெரியதொரு பலாமரம் . கொந்தல் இறக்கவும் பலாப்பழம் இறக்கவும் இந்த மரத்தில் எத தனை தடவைகள ஏறியிறங்கியிருப்பன் தெரியுமா? அந்த மரத்தின் ஒவ்வொரு
se šé
Hasa
கிளையும் என்னை. வீட்டின் பின்னால் மாமரங்கள் . கொக்கத் தடியில் பட்டை கட்டி முற்றிய மாங்கனிகளைப் பறித்திருக்கிறன்
நான் அவனை ஆதரவாகப் பார்த்தபடி நடந்தேன். அவன் தொடர்ந்தான்.
“வளவு முழுவதும் நான் வைத்த செவ்விளநீர் மரங்கள் .
இவ்விடத்தை விட்டு ஓடும்போது
காய்க்கத் தொடங்கியிருந்தன. இப்ப காய்த்துச் சிலிர்த்திருப்பினம்.”
வானத் தில் பருந் தொன்று கேவியது. உச்சிவெயில் சூழலை வறுத்தெடுத்தது.
"மாமா. என்னை விடுங்கோ. நான் வரவில்லை. என் மனதில் இருக் களின் ற 6) D6) அழித்துக் கொள்ள என்னால முடியாது. என்ர வீடு உடையேல்ல. அந்தப் பலாமரம். அடிவளவு மரங்கள். நான் ஆசையோடு வைத்த செவ்விளநீர்க்கன்றுகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன.
நான் திரும் பரிப் போய் பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு அங்கு வரப்போறன்."
வசந்தன் திடீரெனத் திரும்பி நடக்கத் தொடங்கினான். அவனைத் தடுக்க நான் விரும்பவில்லை. அவன் கூற்றில் நியாயமிருக்கிறது.
"தம் பரி, S-15 d5 L உத்தேச மென் ன?” என்று மாணிக்கவேலர் என்னிடம் கேட்டார்.
"இதில யோசிக்கிறதுக்கு என்ன
இருக்கிறது? இது எங்கட கிராமம் நாங்க பிறந்து வளர்ந்த மண்.

எங்கட மூதாதையர் வாழ்ந்து முடிந்த பூமி. நாங்க இதை இப்படியே பாழடைய விட்டுவிட முடியாது. திரும்பி வரத்தான் வேணும். என்ன விலை கொடுத்தும் முந் தியது மாதிரி கட்டி யெழுப்பத்தான் வேணும்."
"அதுக்கு முதலில் மக்கள் கிராமத்தை விட்டு ஓடியதும் பாம்புகளும் பிசாசுகளும் இங்கை குடியேறிட்டன. அதுகளுக்குக் கழிப் புக் கழிக்க வேணும் முதலில்.” 参
நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
"பிசாசுகள் இருக்கத்தான்
செய்யும். அதுக்காக நாங்க கிராமத்தை விட்டு ஓடிவிட முடியாது, அண்ணை."
அப்பொழுது தான் அந்தச் சத் தம் கேட்டது. வீட் டை மூடிச் சென்ற பாதுகாப்பு அணையைக் கிளற முயன்ற நடராஜாவின் பாதம் ஒன்று காணாமல் போயிருக் கும் . கிராமத்தை மீளக்கட்டியமைக்கும் போது இப் படி எத்தனை கண் ணிகள் வெடிக் கக் காத்திருக்கின்றனவோ?
நாங்கள் பாடசாலைக் குத்
திரும்பி வந்தபோது நடராஜாவை வாகனமொன்றில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருந்தார்கள். முழங் காலுக் குக் கீழ் காணாமற் போய் விட்டதாம் . சிதைந்து கிடக்கும் தங்கள் வீடுகளையும் காணாமற் போன நடராஜாவின் பாதத்தையும் ஆங்காங்கு நெளிந்த பாம்புகளையும் புற்றுகளையும் பார்த் த u 6) i கலங் கசிப்
இருக்கிறது?" என
போய்விட்டார்கள். திரும்பி வந்து கிராமத்தில் குடியேறுவோம் என்ற நம் பரிக் கை பலருக் குத் தகர்ந்திருந்தது போலப்பட்டது.
எப்படிச் செழிப்போடு விளங்கிய கிராமம் இன்று காடடர்ந்து குட்டிச்சுவர்களோடு கற்குவியலாக வும் மண்மேடுகளாகவும் மாறி விட்டது. வளமான தோட்டங்களின் வளமான மண் புல்டோசர்களினால் வாரி அணைகளிடப்பட்டிருக் கின்றன. ஆயிரக் கணக் கில் உயர்ந்து நின்றிருந்த பனைகளும் தென்னைகளும் இருந்தவிடம் தெரியாமல் போய் விட்டன. சென்றிகளில் உக்கிக்கிடக்கின்ற, இக் கிராமத் து மக் களின் மனங்களைப் போல.
"உங்கள் உங்கள் வளவுகளில் முதலில் தற்காலிக கொட்டில்களை அமைத்துக்கொண்டு குடிவாருங்கள். பின்னர் படிப்படியாக வசதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். என்ன சொல்கிறீர்கள்?" என விதானையார் (3a5'Tf.
"இதில் சொல்வதற்கு என்ன நான் அவசரமாகக் குறுக்கிட்டேன். "இது எங்கட கிராமம்.நாங்க பிறந்து வளர்ந்து ஓடியாடித் திரிந்த மண். எங்கட மூதாதையர் வாழ்ந்து
முடிந்த பூமி. அதை அப்படியே
பாழடைய விட்டு விட முடியாது. ld 600i (6f &ւ լգ 6) եւ (Ա Լl L குடியேறவேண்டும்."
"இங்க இப்ப என் ன இரு க க றது . . . எ ல லா ம அழிந்து விட்டது. są, LD T607 பிரயோசனம் எதுவுமில்லை. கிணறுகள் துTர்ந்துவிட்டன.
čŽDCC 39

Page 23
கட்டிடங்கள் சிதைந்துவிட்டன. பள்ளிக் கூட மில்லை. கோயில் பாழ்பட்டுவிட்து. மொத்தத்தில் கிராமமே இல்லை.” என்றார் ஆறமுகம்.
"கிராமம் என்பது மண்ணும் மக்களும் தான், அண்ணை. அவை இரண்டும் இன்னமும் அப்படியே இருக்கின்றன.”
"நாங்க இங்க குடிவாறதுக்கு பாம்புகள் தடையாகவுள்ளன.
"நாங்கள் இக்கிராமத்தை விட்டு
ஓடிவிட்டதும் அவை இங்கு
குடியேறிவிட்டன."
நான் அவரை நிமிர்ந்து
பார்த்தேன்.
"பாம்புகள் இருக்கத்தான்
செய்யும். அதுக்காக நாங்க எங்கட
கிராமத்தை இப் படியே விட்டுவடுவதா?”
"இவர்கள் என் ன
சொல்கிறார்கள்?" என்று இராணுவ அதிகாரி கிராமசேவையாளரிடம் கேட்டார். இவர்களின் பேச்சின் போக்கு அவருக்குத் திருப்தியைத் தரவில்லை.
"கோஸ்ட்.கோஸ்ட்.பேய்பிசாசுகள் இருக்காம்."
“இல் லை விதானை யார்
பாம்புகள்."
என்றார்
"இது மூடநம்பிக்கை.அதுகள் இருந் தாலும் ஒண் ணும்
செய்யாது.பயப்படவேணாம்.”
"உடையாத சில வீடுகளில் அவை இருப்பதைப் பார்த்தம்.”
"பிசு.விசர்."என்றார் இராணுவ
அதிகாரி.
"இல் லை. விதானை யார், பாம்புகள் இருந்தால் அவற்றைத் தேடிப் பாம் புப் பிடாரன் கள் வருவினம். பின்னர் மக்கள் அங்க நிம்மதியாக வாழ முடியாது.
"ஜி.எஸ் . அவங்க என்ன பேசுறாங்க. விருப்பமெண்டா கெதியில குடியேறச் சொல்லும்." இராணுவ அதிகாரி. "சரி. மிச் சம் நேரமாச் சுது. புறப்படுவம்.”
அவர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டனர். கிராமத்தின் எல்லையிலிருந்த சென்றியில் ஒப்படைத் திருந்த அடையாள அட்டைகளை மீளப் பெற்றுக் கொண்ட போது பாம்புகளும் பிடாரன்களும் மனதில் பட்டனர்.
"என்ன ஒரு ஐ.சி மிஞ்சுது." என்று இராணுவவீரன் சீறினான்.
"அவர் ET 6.65 6) (TLD 65 ஆஸ்பத்திரிக்குப் போட்டார்." என்றேன் நான்.
பிறந்த தின விழா, திருமண விழாக்களுக்குப் பரிசளிக்கும் போது ஈழத்து நூல்களைப் பரிசளிக்க மறவாதீர்கள். அது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்.
2 40 S upgrgaot

MDCCD 4

Page 24
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
1944 ம் ஆண்டு செப்டெம்பர் மாசம் 26 ந் திகதியை என் உள் நினைவு என்றுமே பதியவைத்து வந்திருக்கின்றது.
யாழ்ப்பாண நகருக்கு உட்பட்ட சுடலையின் பெயர் வில்லுான்றி மயானம் என்பது. அன்று, அந்த நகரில் அந்தச் சுடுகாட்டில் பிரேதத்தைத் தகனம் செய்யச் சென்றவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. முதலி சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். உயர் சாதியினரைத் தகனம் செய்யப்படும் அந்தச் சுடுகாட் டில் ஒடுக் கப் பட்ட சமூகத் தைச் சேர்ந்த ஒரு மனிதனின் பிணம் இறுதிக் கிரியைகளுக்காகக் கொண்டுவரப் பட்டு தீயிடப்பட்டிருந்த வேளையில் இதை ஏற்கனவே மனசார வெறுத்த ஒரு கும் பல துப் பாக் கிப் பிரயோகம் செய்து அந்தச் சுடலையிலேயே ஒரு கொலையை நடத்தி முடித்து விட்டது.
துப்பாக்கிக் கலாசாரத்திற்கு அன்றே அந்த மண் ணில் அத்திவாரம் இடப்பட்டுவிட்டது என இன்று நான் கருதுகின்றேன்.
வில்லூன்றி மயானத்திற்குக்
கொண்டு செல்லப்பட்ட பிணம் , எங்கள் கடைத்தெரு வழியாகத்
தாள் போனது. நான் கடையின்
12 டொமினிக் ஜீவா
வெளிப்படிக்கட்டில் நின்றபடியே
அந்தச் சவ ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டுதான் நின்றேன். எதிர்ப்பக்கத்திலிருந்த தேநீர்க் கடையிலும் சைக்கிள் கடையிலும் வெற்றிலைக் கடைப் படிகளிலும்
நின்ற ஒரு சிலர் குசு குசு எனத்
தங்களுக்குள் கதைத் துக் கொண்டதை நான் அவ்வளவு பெரிசாக அப்பொழுது கவனத்தில் எடுக்கவில்லை. ஆனால் அப்போதே அவர்களுக்கு அந்தச் சம்பவத்தின் பின் னணித் தகவல் கள் தெரிந்திருக்க வேண்டும் எனச்
சம்பவம் நடைபெற்றதன் பின்னர்
என்னால் உணர முடிந்தது.
"சுட்டுப் போட் டான் கள் ! சுடலையிலை சுட்டுப்போட்டான் கள்!” எனக் கூவிக் கொண்டு சனக் கும்பலின் ஒரு பகுதி தெருவழியாக ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு சில கடைகளின் கதவுகள் சாத்தப்படுவதைக் கண்டு நானும் உள்ளுக்குள் பயந்தவண்ணம் கடைக் குள் நுழைந்து ஒதுங்கியிருந்து கொண்டேன்.
அன்று சாயந்த்காலம் வரை பல விதமான வதந்திகள் பரவியபடியே இருந்தன.
யாழ்ப்பாணம் பலாலி வீதி ஆரியகுளத்தடியைச் சேர்ந்த ஒரு கிழவி இறந்துவிட்டார். அந்தப் பகுதிக்கு வெகு அண்மையில்

உள்ள சுடலை தான் இந்த வில் லூன்றிச் சுடலை. நீண்ட நெடுங் காலமாகவே அப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அந்தச் சுடலை யரில் அவர்களது பிணங்களை எரியூட்ட மறுக்கப்பட்டு வந்தது.
படித்தவர்களும் இளைஞர் களும் இந்தச் செயலைக் கண்டித்து வந்தனர். இந்த ஜனநாயக யுகத்தில் , தங்களது மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இழிவான செயல்களை துடைத் தெறிய முன் முயற்சி எடுத்து உழைத்து வந்தனர்.
தங்களது அடிப் படை உரிமையை வென்றெடுத்து நிலை நாட்ட முனையும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வில்லூன்றிச் சுடலைப் போராட்டம்.
இந்தப் போராட்டத்திற்கு முன் னின்று g5 60) 6Ü) 60) LD தாங்கியவர்களில் ஒருவர் தான் பின்னர் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் தலைவராகவும் றுரீமாவோ அரசாங்கத்தில் இந்தப் பகுதி மக்களின் தலைவராக அங்கீகரிக்கப் பட்டு பாராளுமன்ற நியமன அங்கத்தவராகவும் விளங்கிய தோழர் எம். சி. சுப்பிரமணியம் என்பவர் என்பதை நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இந்த மனித உரிமைப் போராட்டம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. உரிமை கேட்டுப் போராடிய மக்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அந்தச் சுடலையிலேயே பிணமாகச் சரிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை அறிந்து அன்று தமிழ்ச் சமூகமே அப்படியே உறைந்து போய் விட்டது. நல்லவர்கள், படித்த கனவான்கள், பண்பாடான குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் பேசுவது என்னவென்றே தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். நமது கலாசாரம் கந்தபுராணக் கலாச்சாரம் என வடபுலத்துக் கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிப் பெருமிதப் பட்டவர்கள் , வாய டைத்துப் போய் மெளனியாகி விட்டனர்.
இந்த மனிதச் சங்காரத்தை எதிர்த்து எதிர் நடவடிக்கை எடுக்கப் பெரும் மனப் பண்பு கொண்டவர்கள் முன் வந்தனர். அறிக்கை விட்டனர்: கண்டித்தனர்: தமது எதிர்ப் பைச் செயல் முறையில் நிரூபித்தனர்.
அன்று யாழ்ப்பாணப் பட் டின சபைத் தலைவராக விளங் கிய கனவான் சி. பொன்னம்பலம் என்பவர் ஒடுக்கப் பட்ட மக்களின்பால் உறுதியாக நின்று பல்வேறு நடவடிக்கைகள் அரசு ரீதியாக எடுக்க முன் நின்று உழைத்தார். அவருடன் பல சமூகப் பெருமக்கள் இந்த மனுக்கொடு மைக்கு எதிராகச் செயல்பட்டனர்.
அந்தக் காலகட்டத் தில்
தினசரிப் பத்திரிகைகளில் எல்லாம்
இது சம்பந்தப்பட்ட செய்திகளே தலைப் புச் செயப் திகளாக
மிளிர்ந்தன.
இந்த மானுடச் சங் கார நிலையிலும் கூட "இதுகளுக்கு, இந்த எளியதுகளுக்கு நல்ல பாடம் தான் படிப்பிச்சாங்கள்" எனச் சில கீழ் நிலை மனநோயாளிகள் தமது
த்துை 43

Page 25
சாதி வெறிப் புலம்பலை புலம்பினர். சிலரது வாய்ப் பேச்சின் மூலம் என்னால் இதைக் கிரகிக்கக்கூட முடிந்தது.
இந்த மனித உரிமைப் போராட்டம் இந்தச் சுடலைப் போராட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட உரிமைப் போராட்டமல்ல. இதற்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. பாரிய சரித்திரம் உண்டு.
இது நடப்பதற்குச் சில
தசாப்தங்களுக்கு முன்னர் யுத் காங்கிரஸ்' என்றொரு அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட அலையும் காந்தி அடிகளின் அஹிம் சா உணர்வு வேகமும் கலந்த ஓர் அழுத்த நிலை வடபுலத்துக் கல விமானி களிடையேயும் அரும்பியது. அதன் அமைப்பு வெளிப்பாடே இந்த யுத் காங்கிரஸ் என்ற இயக் கம் , தமிழ் மக்களினதும் பொதுவாக முழு நாட்டினதும் சுதந்திர வேட்கையைப் பிரகடனப்படுத்த ஏற்பட்ட இந்த இயக்கத்திற்கு அன்று எல்லாராலும் மதிக்கப்பட்ட, பெரு மதிப்புடன் போற்றப்பட்ட திரு. ஹன்டி பேரின் பநாயகம் தலைமை தாங்கினார். இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் தன் வேர்களைப் பரப்ப முனைந்து செயல் பட்டது. அவர்களது உரிமையை அங்கீகரித்தது. அந்தக் கால கட்டத்தில் "சம ஆசனம்: சம போசனம்!” என்ற
கோஷம் பரவலாக ஒலிக்கத்
தொடங்கியது. இந்த இயக்கம் பெரிய மாற்றங்களை உடனடி யாகச் செயப் ய முடியாமல் இருந்தபோதிலும் கூட, வடபுலத்து ஒடுக்கப்பட்ட மக்களின் மனித
44 )
உரிமைகளை அங்கீகரித் து அவர்களுக்காகப் பொது வாழ்வில் முதல் குரல் கொடுக்க முன்வந்தது. நசுக்கப்பட்ட மக்களின் கோரிக்கை களில் உள்ள நியாயத்திற்காகப் போராட முன் வந்தது. இந்த அங்கீகரிப்பு வரலாற்றில் ஒரு
திருப்பு ഗ്ര ഞങ്ങ என் றே குறிப்பிடலாம்.
இந்தக் கோரிக் கைப்
போராட்டத்திற்காக அந்தக் காலத்தில் பலர் அவதுTறு செய்யப்பட்டதுண்டு. தமது சொந்தச் சாதிக்காரர்களாலேயே சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவர்களு முண்டு. தங்களது சமுக நன்மை தரீமைகளில் இவர்களை, இவர்களது குடும்பத்தினரைத் தள் ளரி வைத் ததுமுண் டு. இதைக் கண் டு மரிரண் டு
போனவர்கள் பொது வாழ்விலிருந்து
ஒதுங் கலிப் போய் விட்டனர். ஒதுங்கமுடியாமல் தலைநிமிர்ந்து நின்றவர்கள் தேர்தல் காலத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.
35 Dil உரிமைகளை மற்றவர்கள் வென்றெடுத்துத் தருவார்கள் என்பதை விடுத்து தமது விடுதலைக்குத் தாம் தாமே போராடவேண்டும் என்ற ஞானோ தயம் சில துடிப்புள்ள அந்தக் கால இளைஞர்கள் மத்தியில் அரும்பு விடத் தொடங்கியது. பொருளாதார விடுதலை, கல்வி மேம்பாடு இவை இரண்டின் மூலமும்தான் தாம் தமது சமூகத்தரத்தைத் தரம் உயர்த்த முடியும் என்ற யதார்த்த நிலைக்குச் சிலர் தள்ளப்பட்டார்கள்.
நகரங்களில் மிஷனரிமார்களின்
கல்லூரிகளில் தமது குழந்தை களைச் சேர்ப்பித்து உயர் கல்வி

கற் பிக் க முனைந்தார்கள் அத்துடன் பரம்பரை அடிமை குடிமை வேலைகளை மெல்ல மெல்ல விடுத்து மாற்றுத் தொழில் செய்யப் பழகிக் கொண்டார்கள்.
இந்த இயக்கம் வடபுலத்தில் பகுதி பகுதியாகப் பரவி வந்தது. இந்த இயக்கத்தினால் சில இளம் தலைவர்கள் தோன்றினார்கள். திரு. எம். சி. சுப்பிரமணியம், திரு. யேர்வேல் போல், திரு. ஆ ம. செல்லத்துரை, திரு. ஜேம்ஸ் மூப்பர் என்போர் குறிப்பிடத்தக்க வர்கள்.
இந்தக் காலகட்டத்திலேதான் பருத்தித்துறைப் பகுதியில் 'வதிரி என்ற கிராமத்தில் ஒரு புதுமை நடந்தது. நிலமானிய சமூக அமைப்பின் நச்சு வேர்கள் ஆழப் பதிந்துள்ள அந்தக் காலப் பகுதியில் கல்வி பெறவேண்டி ஆவலுடன் காத்திருந்த அந்தப் பகுதி மக்களின் பேரவாவை நிறைவேற்றி வைத்தவர்களின் முன்னோடி திரு. கா. சூரன் அவர்கள். தேவரையாளிச் சைவப் பாடசாலையை ஆரம்பித் து வைத்தார். இந்தச் சமயத்தில் அந்தப் பகுதியில் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலை ஒன்றும் இருந்தது. இருந்தும் தமது சைவ மக்களின் குழந்தைகள் கல்வி கற்க இந்தப் பாடசாலையை நிறுவினார், சூரன். இது பின்னர் தேவரை யாளி இந்துக் கல்லூரியாகப் பரிணாமம் பெற்றது. இந்தக் கல் வரிப் பணியை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு சூரன் அவர்களுக்குக் கரவெட்டி மணியகாரர் சிற்றம்பல முதலியார் பக்கபலமாக நின்று வேண்டிய உதவிகளை நல்கினார்.
இக்காலப்பகுதியில் கவிஞர் மு. செல் லை யா அவர்கள் தலைமையாசிரியராகப் பொறுப் பேற்றுப் பாடசாலையைத் தரமுயர்த்த உழைத்தார். சைவப் புலவர் வல்லிபுரம், ஆ. ம. செல் லத்துரை, ச. சிவகுரு, ஆசிரியர் க. முருகேசு ஆகியோர் சைவ போதனையிலும் சைவப் பண்பாட்டு வளர்ச்சியிலும் தீவிர முனைப்புடன் செயலாற்றினார்கள். தேவரையாளிச் சமூகத்தின் உயிர் மூச்சாகச் சைவமும் தமிழும் விளங்கி வந்தது. ஆசிரியர்கள் அனைவரிடமும் காந்திய உணர்வே மேலோங்கி நின்றது. பண்பாட்டு
ஒழுக்கமே சிறந்து விளங்கியது.
பிற் காலத் தில் இந்தச் சமூகத் தினரை ச் சுட்டும் பொழுதெல்லாம் தேவரையாளிச் சமூகம் என்றே பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டு அந்தச் சமூகத் திற்கு ஒரு தனித்துவப் பெயரையும் சூட்டி மதிப்புக் கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
தேவரை யாளிச் சைவப் பாடசாலையின் தோற்றம் சும்மா ஒரு பாடசாலை நிறுவிய சங்கதி மாத்திரமல்ல. இது ஒரு போராட்ட சமூகத்தின் வரலாறுமாகும் . கல்வியில் பின் தங்கிய ஒரு சமூகம் கல்வியுடன் சேர்த்துச் சைவத்தையும் பேணி இன்று வரை வளர்த்து வருவது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவமாகும்.
சைவத்தையும் தமிழையும் இலங்கையில் அழிந்து போகாமல் பாதுகாத் தவர் Uரீலழரீ ஆறுமுகநாவலர் என்பது சரித்திரப் பதிவு. இது நாவலர் செய்த மிகப்
DeSaif 45 A

Page 26
பெரிய தொண் டு என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். அதில் நாவலரின் ஒரு பக்கம்தான் மக்களுக்குத் தெரிகிறது. பூரீலழரீ நாவலருக்கு இன்னொரு பக்கமும் உண்டு. இன்று அப் பக்கம் மீளாய் வுக் கு உட் படுத் தப் பட்டுள்ளது. வரலாறு பூர்வமாக இது ஆய்வு செய்யப்படுகின்றது. அந்நியர் வருகையாலும் ஆங்கில மொழிக் கல்வியாலும் மிஷனரிக் கிறிஸ்தவப் பள்ளிப் பரம்புதலாலும் வடபுலத்து நிலமானிய சமூக அமைப் புச் சிதலமடையத் தொடங்கி விட்டது. நாவலர் போன்றவர்களால் கட் டிப் பாதுகாத்துப் பேணிவளர்க்கப்பட்டு வந்த சாதிப் படி முறைத் தன் மைகள் கல கலக் கத் தொடங்கிவிட்டன. இந்தச் சைவ வேளாளத் தலைமைத்துவச் சாதி அமைப்புத் தகர்ந்து போகாமல் தன்னால் இயன்றவரை ப்ாதுகாக்க முன்வந்தவர் நாவலர். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் மனித உரிமைகளைக் கூட உயர்சாதி அ க ம பா வக காரர்களுடன் கூட்டுச்சேர்ந்து ஒட்டு மொத்தமாக நிராகரித்தவர் அவர். பின்தங்கிய விளிம்பு நிலை மக்களை மனித சீவன்களாகவே ஏற்றுக்கொள்ளா தவர்தான் நாவலர்.
இந்த அரக்கத்தனத்தையும், அகம்பாவத்தையும், கொடுரமான ஆதிக்க மனப்பான்மையையும் எதிர்த்து அதன் நுகத்தடிமைகளாக இருக்கப் பிரியப்படாமல் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிச் சென்றனர் ஒரு சாரார். மற்றும் இந்த மக்களுக்குத் தமிழைத் தவிர வேறு பாஷையே தெரியாது. தங்களது
46 še
கிராமிய நம்பிக்கைகளையும், நாட்டார் பாடல்களையும், மரபார்ந்த கலைகளையும் பேணி வந்தவர்கள் இவர்கள். இவர்கள் அனைவ ரையுமே ஒட்டுமொத்தமாக நிராகரித்த நாவலர் தமிழையும் சைவத்தையும் பாதுகாத்தார் என
‘எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின்
புத்திஜீவியால் ஏற்றுக் கொள்ள இயலும்?
முடியுமானால் இப் படிச் சொல்லலாம். அன்றைய சமூக அமைப் பின் மிக உயர் குடிப்பிறப்பாளர்களின் மதத்தையும் மொழியையும் பாதுகாத்தவர் நாவலர் என்று சொல்லலாம். சைவத்தையும் மக்கள் பேசும் மொழியாகிய தமிழையும் எனச் சொல்ல இயலாது. அன்பே சிவம்
என்பதுதான் நான் அறிந்த
தத்துவம் . உலகமே அன்பு மயம்.உயிர்களிடத்தே அன்பு செயப் வதுதான் சைவத் தரின் அடிப்படைச் சாரம் . கோழி, ஆடுகளைக் கொலை செய்து ஊன் உண்பது பாவம் என்பதை விட, மனித உயிர்களின் உணர்வு களைச் சாகடிப்பதே சாவான பாவம் என நான் கருதுகின்றேன் .
வார்த்தைக்கு வார்த்தை அகம் பாவக் கொக்கரிப்புடன் தினசரி
தன் னைப் போன்ற F 55 மனிதர்களின் மனித உணர்வு களைப் புண்படுத்திச் சாகடித்துக் கொண்டே தம்மைப் பரம்பரைச் சைவர்கள் எனக் கூறிக் கொண்டு திரிபவர்களைப் பார்த் து
அவர்களது வெளிவேஷங்களைக்
கண் டு - உணி மையாகவே அவர்கள் மீது நான் பரிதாபப்படுகின்றேன்.

சாதி ஒடுக்கு முறைகளைக் கண்டு உள்ளிருந்து போராடாமல் தப் பித்து ஓடி மதம் மாறித் தம்மைப் புதுப்பித்துக் கொண்ட வர்கள் கூட, அங்கு புதிய உரிமை களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அதுவுமில்லை. இக் கரைக்கு அக்கரை பச்சை என்ற கதைதான். இறுக்கமான சமூகப் பிடிமானம் சற்றுத் தளர்ந்து போயிருக்கலாமே தவிர, முற்றாக அது வென்றெடுக்கப்படவில்லை என்பதே யதார்த்த உண்மையாகும்.
இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நான் மேலே சொன்ன தேவரையாளிச் சமூகம் இன்றும் தொடர்ந்து தமிழையும் சைவத் தையும் வளர்த்து வருகின்ற தென்றால் அது நாவலருக்கு விடப்பட்ட பெரும் சவால் என்றே நான் கருதுகின்றேன்.
வில் லுTன்றி மயானத்தில்
தொடங்கி இத்தனை விஸ்தார மாகக் கருத்துக்களை நான் சொல்வதற்கு ஓர் அடிப்படைக் காரணமுண்டு.
வடபுலத்தில் முதல் முதலில்
ஒரு கம்யூனிஸ்டான தோழர் பொன்.
கந்தையாவைப் பாராளுமன்றத் திற்கு அனுப்பி வைத்தது இந்த வதிரியை உள்ளடக் கரிய பாராளுமன்றத் தொகுதிதான்.
அத்துடன் இந்தத் தேவரையாளிக்
கல்லூரியில் கல்வி பயின்ற தேவரையாளிச் சமூகத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் அவர்கள்தான் வட பிரதேசத்து ஒடுக்கப்பட்ட மக்களிடையே இருந்து முதல் முதலில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதியும் ஆவார்!
வில்லூன்றிச் சுடலைச் சம்பவம் இளைஞனான 6T 6öi g)60) Luu ஆத்மாவை அப்படியே அசைத்து விட்டது. அதன் எதிர்ப்புக் குறியாக அன்றைய கொலை செய்யப் பட்டவரின் முப்பத்தொராம் நாளன்று
- துடக்குக் கழிவன்று - சுத்த
வெண் மையான நிறத்தில் வேட்டியும் வெள்ளை நாஷனலும் அணியத் தொடங்கினேன். எமது தொழில் நிலையங்களின் வழக்கத் துக்கு விரோதமாகக் காலில் செருப்பும் போட்டுக்கொண்டேன்.
எனது வெள்ளை உடை மாற்றத்தைப் பற்றித் தாயார் அத்தனை கரிசனை காட்டவில்லை. ஆனால் காலில் செருப்புப் போட்டுக்கொண்டு அத்துடன் நின்று
கொண்டு தொழில் செய்வதை
அம் மா வால் சீரணிக்க
முடியவில்லை.
“எடேய் பொடியா! எங்கட வயித்துக் குச் சோறு போடுற தொழிலப்பா. நாலு பேர் நாலு விதமாயப் க் கதைப் பரினம் இவங்கடை கெப்பரைப் பாரன் எண்டு சொல்லித் தொழிலுக்கு வர மறுப்பினம். நல்லாய் யோசிச்சுப் பார், தம்பி” என எனக்குச் சோறு போட்டுத் தரும்பொழுதெல்லாம் புத்தி சொல்ல ஆரம்பித்தார் அம்மா.
"இந்தா "பாரம்மா, மாஸ்டர்மார் காலிலை செருப்புப் போட்டுக் கொண்டுதான் படிப்பிக்கினம். ஏன் எங்கட மாதா கோயிலிலை கூடக் குருமார் சப்பாத்துப் போட்டுக் கொண்டுதானே பூஜை செய்யினம்." என நான் மறுத்தான் விடுவேன்.
2 S. pgsgat, 47 Sta

Page 27
"என்ன இருந்தாலும் அதுவும் இதுவும் ஒண்டே?” என வாய்க்குள் முணுமுணுத்தபடியே அன்றைய உழைப்புக் காசுக் கணக்கை எண்ணத் தொடங்குவார். முதல் நாளைவிட அன்று வருமானம் அதிகரிக்குமே தவிர குறைந்திருக்காது.
செயல் மூலம் அம்மாவுக்குப் பதில் சொல்ல நான் என்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு தினசரி முயன்று வந்தேன்.
காலில செருப்பு, ஆசிரியர் களைப் போன்ற தூய வெள்ளை வேட்டி, அதற்கேற்ற நாஷனல், எதற்கும் கிறுங்காத நேர்ப்பார்வை, சொகுசான நடை இத்தனை அலங்காரங்களுடன் என்னை ஆரம்பத்தில் பார்த்த பலர் விநோதமாக என்னை நோக்கினர். தொழில் செய்யச் சலூனுக்கு வந்தவர்களில் சிலர் விசித்திரமாகப்
பார்த்தனர். ஒன்றும் சொல்ல வரில் லை. பார்வையாலே அளந்தனர்.
என்னைத் தெரிந்த இன்னும் சிலர் முகபாவத்தின் மூலம்
566)
இவருக்கு இப்ப வந்த கெப்பரைப்
பார்!’ எனச் சாடை செய்து சைகை
மூலம் கருத்துத் தெரிவித்தனர்.
எனக்கு ஏற்கனவே இதன் பின் விளைவுகள் தெரியும் என்ற காரணத்தால் எதைப்பற்றியுமே கண்டுகொள்ளாதவன் என்கின்ற பாவனையரில் தினசரிக் கடமைகளைத் திட்டமிட்டுச் செய்துவந்தேன்.
நாள் போக, நாள் போக என்னை அலட்சியம் செய்த ஒரு சிலரே பார்வையால் மதிப்புக் காட் டத் தொடங்கினர். மரியாதையாக வழிவிட்டனர். இன்னும் சிலரோ "மாஸ்டர். மாஸ்டர்!" என வாய் நிறைய அழைக்கத் தலைப்பட்டனர். நானும் கண்ணியத்துடன் அவர்களுக்கு மதிப்புக் காட்டத் தொடங்கினேன்.
அதிலிருந்து நான் ஒரு பாடத்தைக் கற்றுத்தெளிந்தேன். நேர்மை, ஒழுக்கம், தன்னில் தானே நம்பிக்கை கொண்டவனை முடிவில் அவனைப் புரிந்து கொண்ட மக்கள் மதிக்கவே செய்வார்கள்.
(வாழ்க்கை தொடரும்)
ஆண்டுச் சந்தா 18O/-
மல்லிகைச் சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்
மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
15 ரூபாவுக்கான தபால் தலைகள் அனுப்பியும் தனிப்பிரதிகள் பெற்றுக்கொள்ளலாம்.
மல்லிகை 201,1/1 -ழரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி - 32O721
தனிப்பிரதி 15/-
48 R DSUG)
M

மல்லிகை தனது 33 வது ஆண்டு மலரை வெளியிடுகின்றது. இந்த மகிழ்ச்சியான மலர் வெளியீட்டுக்கு எமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றோம்.
BG Brothers (Pvt) Ltd.
"BG Building' 110,112, Wolffendhal Street, Colombo -13.
Phone : 328729 Fax : 94 - 1 - 439623
074-715962 576273
R GGS),
4)

Page 28
மறுமலர்ச்சி காலத்து மறக்க முடியாத வாழும் மனிதர்
அ. செ. முருகானந்தன் தெளிவத்தை ஜோசப்
நவீன தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளில் ஒருவரும் ஏறத்தாழ ஒரு அறுபதாண்டு காலம் ஈழத்து இலக்கியத்துடன் தன்னை இறுகப் பிணைத்துக் கொண்டு, வாழ்வே இலக்கியம் இலக்கியமே வாழ்வு என்று வாழ்ந்துவிட்ட வருமான திரு அ. செ. முருகானந்தன் அவர்கள் 1997 அக்டோபரில் தனது 76 வது வயதில் அமரராகிவிட்டார் என்ற பத்திரிகைச் செய்தி தவறானதாகும். அவர் இன்றும் கொண்டிருக்கிறார்.
1940 களின் ஆரம்பத்தில் மறுமலர்ச்சிச் சங்கம், மறுமலர்ச்சிச் சஞ்சிகை ஆகியவற்றினூடாக வெளிக்கிளம்பிய ஈழத்து நவீன இலக்கியத்தின் ஒரு பிதாமகனா கவே அவர் செயல்பட்டார்: தோற்றமளித்தார். ஆனாலும் அதிக விளம்பரம் பெறாத அதற்கான
செயற்பாடுகளில் ஈடுபடாத ஒரு
அமைதியான மனிதராகவே இருந்துவிட்டார்.
"எவ்வளவோ எழுதிக்
குவித்தேன். ஆயினும் எனக்குப்
பூரண திருப்தி தரக்கூடிய எதையும் இன்னும் நான் படைத்துவிட வில்லை." என்று ஒரு உயர்வான கலைஞனுக்கே உரித் தான இயல்புடன் அடக்கமாகக் கூறியபடி எழுத்துப் பணியாற்றியவர் இவர்.
2 SO . R DSUNIgD)
வாழ்ந்து
நுாற்றுக்கு மேற் பட்ட சிறுகதைகள், நாவல், நாடகம், வரலாறு, விமர்சனம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று சகல துறைகளிலும் எவ்வளவோ எழுதியிருந்தும் இவருடைய எந்தப் படைப்புமே உரிய நேரங்களில் நூலுருப் பெறாமையும், அ.செ.மு என்ற தனது இலக் கரியச் செல்வாக்குப் பெற்ற பெயரை இவரே அடிக்கடி மறைத்துவிட்டு, பீஷ்மன்: யாழ்பாடி: யாழ்தேவி: முருகு: நீலாம்பரி: கதிரவன்: காங்கேயன்: சோபனா. இளவேனில்: மயிப்புறவம்: பூராடன்: தனுசு: மேகலை: கத் தரிக் குறளி: போர்வீரன்: வள்ளி காந்தன் என்று ஏராளமான புனை பெயர்களுக்குள் மறைந்திருந்து எழுதியமையாலும் அ. செ. முருகானந்தன் என்னும் இலக் கரியப் பெயர் அத கம் விளம்பரம் பெறாத பெயராகவே இருந்துவிட்டது.
1940 களிலேயே சென்னை
அலி லயன்ஸ் கம் பெனியார்
வெளியிட்ட கதைக்கோவையில் இவருடைய 'மனித மாடு' என்னும் சிறுகதையும் இடம் பெற்றுள்ளது குறிப்படக்கூடியது.
1942 ல் மறுமலர்ச்சிச் சங்கம் உருவாகியது. 1946 பங்குனியில் மறுமலர் ச் சி முதல் இதழ் அச்சுவாகனமேறியது. இப்பணி களின் முக்கியஸ்தர்களாகக்

கருதப்படுகிறவர்கள் வரதர் : அ. செ.மு : க. செ.நடராஜா : அ.ந.கந்தசாமி. ச.பஞ்சாட்சர சர்மா ஆகியோர் . மறுமலர்ச்சியின் ஆரம் பகர் த் தாக்கள் ஐவர் என்றழைக் கப்பட்டவர்களும் இவர்களே. மறுமலர்ச்சியின் முதல் இதழில் வெளியிடுபவர் க.செ.நடராசா என்றும், ஆசிரியர்கள் அ.செ.முருகானந்தன்: தி.ச.வரத ராஜன் என்றுமே இருக்கிறது. ஆரம்ப கர்த்தாக்கள் ஐவரிலும் முதலில் இருக்கின்றார் அ.செ.மு. அ.செ.மு வெளியூர் சென்ற பிறகு அவர் விட்ட இடத்தை ச.ப.சர்மா நிறைவு செய்ததாக வரதர் குறிக்கின்றார். (பஞ்சாட்சரம் நூல்). அ.செ.மு. திருகோணமலையி லிருந்து g5 T 60) 6TujL9. சபாரத்தினத்துடன் இணைந்து "எரிமலை" என்னும் ஏட்டை வெளியிட்டார். நட்டப்பட்டார். திருகோணமலை பிரதானவீதி கிருஷ்ண விலாஸில் இருந்து 1947 இறுதியில் மறுமலர்ச்சியில் வரதருடன் இணையாசிரியராக சர்மாவுக்கு இப்படி எழுதுகிறார். "என்னுடைய சிறுகதைத் தொகுதியை திருமகள் கம்பெனியர் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே அதனை இலங்கையில் நாமே வெளியிடலா மெனத் தீர்மானித்திருக்கின்றேன். அதை அச்சிட்டுக் கொடுக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா? அடுத்த மாதம் தொடக்கம் மறுமலர்ச்சி 100
பிரதிகளை இங்கு அனுப்ப ஒழுங்கு
செய்யவும்"
இதிலிருந்து நாம் இரண்டு விடயங்களை அவதானிக்க முடிகிறது. தன்னுடைய சிறுகதைத்
அவர்கள்
திகழ்கின்றார்"
தொகுதி ஒன்று கட்டயமாக வெளிவர வேண்டும் என்னும் ஆவல் அவருக்கு 47 லேயே இருந்திருக்கிறது என்பது ஒன்று: மறுமலர்ச்சியை விட்டு விலகி வெளியூர் சென்றுவிட்டாலும் கூட மறுமலர்ச்சியின் வளர்ச்சியில் அவருக்குள்ள அக்கறை மற்றது.
இப்படி இலக்கியம், அதன் வளர்ச்சிக்குக் காலமைக்கும் பத்திரிகை உலகம் என்றே வாழ்ந்துவிட்ட ஒரு பிரம்மச்சாரி இந்த அ. செ. மு.
மாவிட்டபுரத்தில் அக்டோபர் 1921 ல் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை மாவிட்ட புரத்திலும் பிறகு தெல்லிப்பளை
மகாஜனக கல லுTரியரி லுமி
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும் பயின்றவர்.
தெல்லிப்பளை மகாஜனாவில் படிக்கும்போதே ஈழகேசரியின் மாணவர் மலர்களில் எழுதத்
தொடங்கினார். அப்பொழுது
ஈழகேசரியின் ஆசிரியராக இருந்த திரு. சோ. சிவபாதசுந்தரம் மாணவ இளம் எழுத்தாளர்களை உருவாக்கவும் ஊக் குவிக்கவும் என்று ஈழ கேசரியில் 'ஈழகேசரி கல்வி அனுபந்தம்' என்னும் ஒரு புதுப் பகுதியை 1938 ஆம் ஆண்டில் தொடந்கினார்.
"இந்தப் பகுதியின்மூலம் எழுதத் தொடங்கிய அ. செ. முருகானந்தன் தான் இன்று புகழ் வீசி நிழல் பரப்பி குளிர்மை தரும் கதை மன்னனாகத் என்று கனக செந்திநாதன் ஈழகேசரியில் எழுதியுள்ளார்.(ஈழத்துப் பேனா
Sy pagsao S Sta

Page 29
மன்னர்கள் கரவைக் கவி கந்தப்பனார் ஈழகேசரி 1955)
1941 ல் ஈழகேசரி ஆசிரியக் குழுவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இந்தக் கால கட்டத்திலேயே இவருடைய
சிறுகதைகள் நிறைய வெளி
வந்தன. பூரீராமானுஜம், வெறுப்பும் வெற்றியும், எச்சில் இலை, காப்பிரி, பரிசு, மனித மாடு, வண்டிற்சவாரி, கிழவி, விடியுமா, போன்ற நல்ல சிறுகதைகள் வெளிவந்தன.
இலங்கை வானொலி நடத்திய நாடகப் போட்டியில் 1943 ல் இவருடைய சுதந்திரக் கவி' என்னும் நாடகம் முதற் பரிசு பெற்றது. அதன் பின் நிறைய வானொலி நாடகங்களை எழுதினார்.
மறுமலர்ச்சி. ஈழகேசரி, எரிமலை ஆகியவற்றிற்குப் பிறகு திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்களுடைய ஆசிரியத் துவத் தின் கீழ் சுதந்திரனில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் நாட்டிலும் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த "புகையில் தெரிந்த முகம்" என்னும் நீண்ட கதை இந்தக் காலகட்டத்திலேயே வெளிவந்தது.
"புகையில் தெரிந்த முகம்" நூலுருப் பெற்று வெளிவந்தபோது தமிழகத்திலும் ஈழத் திலும் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. "இது புகையுண்ட ஓவியம் அல்ல; யாழ்ப்பாணத்தின் உண்மைச் சித்திரம்" என்று ஆனந்த விகடனும்,
"கதை நல ல முறையில் விறுவிறுப்பாக எழுதப் பட் டிருக்கிறது. புதிது புதிதாக
வெளிவரும் கதைத் தொகுதியில்
52 šéD
இதுவும் வரவேற்கத்தக்கதே" என்று "தினமணியும், "கதையை ஆசிரியர் நல் ல தமிழ் நடையரில் எழுதியுள்ளார். கதையைத் தொடங்கி வளர்த்து முடித்திருக்கும் விதம் அழகாக உள்ளது, படிக்க நல்ல சிறுகதை" என்று
சுதேசமித்திரனும் எழுதியிருந்தன.
‘இந்தப் புகையில் தெரிந்த முகம் கூட பத்திரிகையில் தொடர் கதையாக வந்தபோது ‘ஆஃப் பிரின்டாக எடுத்துத் தொகுத்த நூலாகும். என்று எழுதியுள்ளார் திரு. செம்பியன் செல்வன் தனது ஈழத்துச் சிறுகதை மணிகள் என்னும் நூலில்:
இந்தக் கதை வந்த பிறகே, யாழ்ப்பாணத்துக் கமக்காரர்களின் புகையிலைத் தோட்டங்கள் சிறுகதைகளில் இடம் பெறத் தொடங்கின. புகையிலைச் சம்பவங்கள் புனை கதைகளில் இடம் பெற தீ தொடங் கரி ன. புகை யரி லைத் தோட் டங்கள் படைப்புக்களில் சித்தரிக்கப்படுவது நவீன சிறுகதைகளின் ஒரு முன்னெடுப்பாகவே கருதப்பட்டது. அ.செ.முவுடனும் அவருக்குப் பின் வந்தவர்களுமான பிரபல படைப்பாளர்கள் சகல ருமே ஏறத்தாழ ஆளுக்கொன்றாகவேனும் புகையிலைத் தோட்டம் பற்றிய சிறுகதைகளை எழுதியுள்ளமை கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
சுதந்திரனுக் குப் பிறகு வீரகேசரியின் ஆசிரியர் குழுவில் இணைந்து ஒரு ஐந்தாண்டுகாலம் பணியாற்றிவிட்டு மீண்டும் யாழ் சென்றவர் ஈழநாடு வாரமலரில் சிறிது காலம் பணியாற்றினார்.

ஒரு அரை நூற்றாண்டுகாலம் FFUp g5 g5) இலக் கியத் துடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த இவர் அதில் பாதிக்காலத்தை ஈழத்துப் பத்திரிகை உலகிலேயே கழித்துள்ளார்.
1972 ல் இலங்கை கலாச்சாரப் பேரவை யாழ்ப்பாணத்தில் நடத்திய தமிழ் விழாவில் இவரைப் பாராட்டிக் கெளரவித்து இதே விழாவின் போது மலையகத்தின் மூத்த கவிஞரான திரு.சி.வி யும் இவருடன் கெளர வரி க க ப பட ட  ைம குறிப்பிடக்கூடியதே.
1948 சித்திரைப் புத்தாண்டு மறுமலர்ச்சி இதழில் அ.செ.மு ஒரு சிங்களச் சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். "மெனிக்காவின் ஜாதகம்” எனும்
இச்சிறுகதை அந்த நாட்களில்
புகழ் ப்ெற்ற சிங்கள எழுத்தாளர் ஜே.விஜயத்துங்காவின் படைப்பு. "ஆசிரியர் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டது" என்னும் குறிப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சிறுகதையே தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் சிங்கள சிறுகதையாகும்.
இவருடைய நல்ல கதைகளில் ஒன்றான " காளிமுத்துவின் பிரஜா உரிமை” மலையக மக்களின் எரியும் பிரச்சனையான குடியுரிமை பற்றியது. எத்தனையோ தடவைகள் மறுபிரசுரம் பெற்று விட்ட இந்தக் கதை நவஜீவனில் 1958 ல் எழுதப்பட்து. மலை யகத்தைச் சாராத மற்றப் பிரதேச எழுத்தாளர் ஒருவர் மலையகத் தைப் பற்றி எழுதிய முதல் சிறுகதையும் இதுவேயாகும் , அண்மையில் வெளியிடப்பட்ட
துரை வியரின் 9D , 60) p &É &b til பிறந்தவர்கள் என்னும் மலையகச் சிறுகதைகள் தொகுதியிலும் இந்தச் சிறுகதை இடம்பெற் றுள் ளது. (2.60) p 35 d5 பிறந்தவர்கள் ஜூலை 97)
யாழ் கலாச்சாரப் பேரவை இலக் கியக் குழு 1986 ல் இவருடைய "மனித மாடு” என்னும் சிறுகதைத் தொகுதியை வெளி யிட்டது. 1940 களிலேயே ஒரு சிறுகதைத் தொகுதியை வெளி யிட்டு விட அவாவுற்ற அசெ.முவின் சிறுகதைத் தொகுதி ஒன்று நாற்பதாண்டுகளின் பின் கைகூடி யுள்ளது. இது தான் ஈழத்து நூல் வெளியீட்டுத் துறையின் நிலை. யாரையும் யாரும் குறை கூறிப் பயனில்லை.
அ.செ.மு வின் கதைகள் போலியான கற்பனைகள் மலிந்தவையல்ல. யதார்த்தச் சித் தரிப் புக் கள் . இந்த யதார்த்தங்கள் கூட யாழ்ப் பாணத்துக் கிராமங்கள் மட்டுமன்றி திருகோணமலை, கொழும்பு, மலையகம் என்னும் முழு இலங்கையையும் உள்ளடக் கியதாக வெளிக் கிளம்பியவைகள். எழுதக் கிளம்பிய காலம் தொட்டே எழுத்தின் நோக்கம், எழுத்துக்கும் வாழ்வுக் குமுள்ள தொடர்பு பற்றியெல்லாம் சிந்தித்தவர் இவர். வெறும் காதல் கதைகள் எழுதுவதால் யாருக்கு என்ன லாபம் என்ன பலன் என்றெல்லாம் எழுதியவர்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது இலங்கை வந்த ஒரு நீக்ரோவின் அன்னைப் பாசம் பற்றியது இவர் எழுதிய "காப்பிரி"
R p5a5b5 53

Page 30
என்னும் சிறுகதை. மனித நேயம் மிக்கதொரு இலக்கிய நேசர் இவர். மறுமலர்ச்சிச் சங்கத்தின் தலைவராக அ.செ.மு இருந்த காலத் தில் கு. பா, ரா வின் மறைவுக்காக ஒரு நிதிசேர்த்து அனுப்பிய நிகழ்ச்சிகள் நெஞ்சை நெகிழவைப்பவை.
ஈழத்து நவீன இலக்கியத்தின் மூலவர்களில் முக்கியமானவராக, ஒரு ஆளுமை மிக்க படைப்பாளி
“u T 5,
பத்திரிகை uLI (T 6TT JT &E5, இலக்கியச் செயற்பாட்டாளராக, (Actnist) எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு இலக் கரிய நேச ராக, நம்மிடையே வாழ்ந்து வருபவர் அ.செ.மு. அவர்கள் ஒரு மறக்க முடியாத மனிதரே தான்.
ஈழத்து இலக்கிய உலகு
அவரை என்றும் மதித்தவரும் என்பது திண்ணம்.
பின்னர்
நூல்களாகும்.
பிரபலப்படுத்துங்கள்.
சுவைஞர்களுக்கு ஓர் உளமார்ந்த வார்த்தை
மல்லிகை கொழும்பு மாநகருக்குப் புலம்பெயர்ந்து வந்ததன் எத்தனையோ சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலைக்கு ஆட்பட்டது. இருந்தும் கஷடங்களைப் பொருட்படுத்தாமல் நிமிர்ந்து நின்று செயற்பட்டு வருகின்றது.
இந்த இடைப்பட்ட இரண்டு வருட காலத்தில் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் இந்தத் தேசத்தின் பலவேறு பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பாளிகளின் சிந்தனைகளை, கற்பனைகளை, வாழ்க்கை அநுபவங்களை உள்ளடக்கிய
மல்லிகையை ஒழுங்காகச் சுவைத்துப் படித்துவரும் சுவைஞர்கள் "மல்லிகைப் பந்தல்" வெளியீடுகளின் தகவல்களை ஏற்கனவே அறிந்து வைத்திருப்பீர்கள். மல்லிகை இதழ்களிலும் புத்தகவிபரங்கள் வெளியாகி வந்துள்ளன.
மல்லிகைக்கு நீங்கள் சுயமாகவே உதவித் தோள் கொடுக்க விரும்பினால் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை வாங்கி ஆதரவு தாருங்கள், நண்பர்களை, நூலகங்களை, கல்லூரி நூல் நிலையங்களை வாங்கி ஆதரிக்க உற்சாகப்படுத்துங்கள்.
என் தோள் மீது ஏற்றப்பட்டுள்ள பாரிய பாரத்தில் ஒரு பகுதியை நீங்களும் சுமக்க நினைத்தால் இன்னும் நிறைய வேலை செய்ய முடியும் என்னால்,
-டொமினிக் ஜீவா.
y 4. VM D

மல்லிகையின் சாதனைகள் வாழ எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
9േLബdേtി ബീഗ്ഗ பெயர் சொன்னாலே போதும் மக்களின் மகோன்னத ஆதரவுடன் குலபதி ஆறுமுகம் கந்தையா ஜேபி. அவர்களின் டுெமுயற்சியினால் தொடர்ந்து வெளிவரும் அவர்,லdஷ்மி தினத்தாள் கலண்டர் റ്റെ.ബdഖി பஞ்சாங்கக் கலண்ைடர்
அஷ்டலசஷ்மி தமிழ் Lயறிகள்
அஷடலசஷமி பதிப்பகம் 32O, செட்டியார் தெடு, கொடும் 11. தொலைபேசி இல. 334004
தலைமையகம்: േl.ബdന്റെ puളൺ. 1, pl.
ヴエ U009માં
S

Page 31
Dimibeau
- அல் அஸ"மத் -
என் பிறப்புத் தரீவு இருபத்துமூன்று வருஷங்களுக்குள் எவ்வளவோ மாறியிருப்பதை நான் மாத்தளையில் கால் பதித்த ஆறு மணித்தியாலங்களில் கண்டேன். மாத்தளையைக் கண்டதில் எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிக்குப் பெயர் என்னவாக இருக்கும்? பொறாமை? வயிற்றெரிச்சல்? ஏமாந்த துயரம்? இன்னும் கொஞ்சம் மலையேறி னால், நான் கேள்விப்பட்டவற்றை நேரிடை கண்டால்.
"அடேய், ராம்ஸே! உன் போன்ற நாட்டுப்பற்றில்லாதவர்கள் போன பிறகுதான் நான் உருப்பட்டேன்!” என்று முகம் பார்த்தே இந்த மலைநாட்டின் வாசல் சொல்கி மாதிரி ஒரு பிரமை
பெற்று வளர்த்த மலையை இகழ்ந்தா ஓடினேன் என்ற விரக்திப் பரிணாமத்தில், மதுரையிலிருந்து இதுவரை கனக் காத இரு
வியாபாரப் பெட்டிகளும் என்
மனச்சுமை போற் கனத்தன - செந் தொமஸ"க்கருகில் இறங்கும்போது.
நாட்டுப் பற்று! எனக் கது இருக்கவில்லைதான். எப்படி இருந்திருக்க முடியும். மலைப்பற்றே இல்லாதிருக்கும்போது? அதை எனக்குக் கல்வியோ தொழிற் சங்கங்களோ அரசோ அக்கம் பக்கமோ சொந்த உறவுகளோ DSIL I TLD 6ö , பிற கெப் படி,
மந்திரத்தாலா வந்திருக்க முடியும்?
வரவேயில்லை! அதனால் நான் போக வேண்டி வந்தது. போனேன் - போகாதவர்களையும் போகும்படி அவமதித்துவிட்டு!
மனைவியின் உறவுகள் மதுரையைச் தேர்ந்தன. தமிழ் வளர்த்த பூமி என்னையும் வளர்க்கும் என்று நானும் போனேன்.
எவ்வளவோ வாதாடியும் என் தாய் தகப்பனுக்கு இலங்கையே மதுரமாக இருந்தது.
இலங்கையன் என்று சொல்லிக் கொள்ளும் உரிமை இல்லாத நிலையில், அதிலும் மலையகத் தான் என்று முத்திரை விழ அருவெறுத்த அவதியில் புகுந்தகத்தோடு சுவர்க்க டிக்கட் பெற்றுவிட்ட பெருமையில் மதுரை
- ஆனையூர் என் ஊராகப் பதிவுற்றது.
பொற்றாமரை வாவியை
நாசஸ்தலமென்று, மாசி மிட்டாய் மலைத்தீவை வாசஸ்தலமாக்கிக் கொண்ட என் முந்தையோரின் முட்டாள் தனத்தை சரிக்கட்டுவதாக நான் பெருமைப்பட்ட பதிவு அது.
அந்த மூன்றாம் படைவீட்டில்
எனக்குத் தமிழ் நீதி அளிக்கச் * சங்கப் பலகையே இல்லாமற்
போனதே, அதுதான் ஊழ்வினை.

அப்படி என்னதான் அங்கே நடந்ததென்று தோண்டுவதில் பயனில்லை. சில விஷயங்கள் எதுவும் நடக் காமலேயே நடந்தேறுவதில்லையா?
அலிகளுக்குக் குழந்தைப் பேறு இல்லாததைப் போல, இந்த ராம் ஸே யப் க்கு இதுவரை நாட்டுப்பற்று வந்ததே இல்லை! அப்பா முந்தி அடிக்கடி சொல்வார் 39(3L J T (up ... நம் ம நம்பிக்கைங்கிறது நம்மளோடயே செத்துப் போறதில்லைடா! நாம செத்தாலும், அது இந்தக் காத்து
மாதிரி, இந்த ஒலகத்திலேயே
கெடக்கும் ! நம்மவுட்டு அதே நம்பிக்கை இன்னொருத்தருக்கு வந்திட்டா, அது எத்தனை யுக - யுகாந்திரங்கள் கழிஞ்சாலுஞ் சரி,
நம்மகிட்ட இருந்த அந்த அதே
நம்பிக்க, இவரோட நம்பிக்கை யோட சேந்துகிடும். அதைத்தான் உட்ட கொற- தொட்ட கொறன்னு சொல்றது."
புராணமென்று அப்போதெல்லாம் அவரை நான் அவமரியாதார்ச்சனை செய்வதுண்டு. நான் திடமிழந்த பிறகுதான் அதன் திடகாத்திரமே தெரிந்தது.
எனக்கும் அந்த நாட்டுப்பற்று நம்பிக்கை, வந்து சேரவேயில்லை. வர விடாமற் செய்தார் களா என்பதுவும் தெரியவில் லை. இப்போதிப்போது தான் ஏதோ தட்டுப்படுகிற மாதிரி.
நேத் திரங்கள் விற்றுச் சித் திரங்கள் வாங் குவதை மகா கவியே கைகொட் டி நகைத்திருக்கின்றான்!.
எங்கள் தகப்பனார் இலங் கேயோர் என்று எழுபத்திரண்டில் எழுத்தில் பதித்துவிட்டு அடுத்த வருஷமே மண்ணுக்குள் புதைந்து அதை நிரூபித்தார். அவ்வாண்டே என்னையும் பிரியும் கண்ணிரை அம்மா வடிக்க வடிக்க, ஆனைமீது ஊரப் போவதாக நான் கப்பலேறினேன்.
இங்கில் லாத ஆனையா என்றெல்லாம் நான் அன்று எண் ணிப் பார்க் கவில் லை. தோட்டக்காட்டானியத்திலிருந்து பெறும் விடுதலை ஒன்றுதான் இலட்சியம்.
像 兽 兽
கால் நுTற்றாண்டில் பஸ் ஸ்டாண்டும் மாறிவிட்டது.
மனக்குடைச்சலைத் தற்காலிக மாகத் தடுத்துக் கொண்டேன்.
பஸ்ஸில் வீடு போக முடியாது. பெட்டிகள். தோட்டத்தில் ஒரு மைல் மலையேற்றம். டாக்ஸி பிடித்தால் கட்டணம் ஜர்ஸ் தி வரலாம்.
ஆட்டாதான் கூட்டு. எவ்வளவு
கேட்பான்? பத்து? .இதென்ன
மதுரையா?.
கைதட் டினேன். விழுந்து
கும்பிட்டமாதிரி வந்து நின்றது. குனிந்து டிரைவரைப் பார்த்தேன். சிங் களத்தை மறந் தாயிற்று. அவனது முக நரம்புகளாலேயே மொழியைத் தெரிந்துகொண்டவன் போல தமிழிலேயே வினவினேன்.
"சுடுகந்த போக என்ன வரும்பா?”
أص R DGS) 85 57

Page 32
"காளி. கோயில் வருங்க!” "அட, சார்ஜீ என்னா வரும்பா?” "சுடுகந்தைல எங்க போகனும்?” "பெரிய பங்களாவுக்கு” "அறுவது ரூவா தாங்க” "அட, கம்மியா சொல்லுப்பா!"
"என்னா சொன்னீங்க?" "முப்பது ரூபா தர்றேன்!” "அறுவது கொறையாதுங்க!” "அட, நாப்பது தர்றேன்!” 'ஏலாதுங்க சேர். தோட்டத்துப் பாதை ஆக மோசம் லோட் வேற!” "நாப்பத்தைஞ்சு தீத்திடு!" "அறுவதுதாங்க ரேட் வெரி சொரி" அறுக்கட்டுமென்று இருவருமாகப் பெட்டிகளை ஏற்றி ஏறினோம்.
அதே நிலம். அதே வீதி. குடிபடை மாற்றம். அதே ஆலமரம். கலாச் சார மாற்றம் . அதே மாரியாத்தா, என்னிடமும் அதே பக்தி. என்னில் மாற்றம். மாரி மீது வைத்த பக்தியை நான் ஏன் மலை மீது வைக்காமற் போனேன்?.
எழுபதி து மூன்றில் விபரமில்லாக் குழந்தையாக இலங்கை வயிற்றிலிருந்த மதுரை மண்ணிற் போய்ப் பிறந்த நான், ஆட் டா (3 JIT (E,L) (3UIT B தொன்னுாற்றேழின் வாலிபனாக
இருந்து பணி னாமத் து மச் சினியைக் காதலிக் கத் தொடங்கினுேனா? -
இதே மச் சினியை அன்று உதாசீனப்படுத்தினேன். இவள் இலங்கையனை மணந்தாள். நான் மதுரைக்காரியை. இன்றய காதல் நியா'nானதாகுமா?. S5 Se)
(3 g5 T Llf என்பதை
ஒத்துக்கொள்வதில் அப்படியொரு
மானங் கெட்டதனம் அன்று - எனக்கு!
சூரியனுக்கு முன்பே சுடர் கொ ஞ த த க கொ ண டு பிள் ளைகளுக் குப் பால்
வார்ப்பதற்காகப் பால் வெட்டப்
போய், விழி மணி இருளும் ஒரு மணிப்பசியில் கூடு திரும்பிக் கொதிக்க வைத்து, சரஸ்வதியிடம் போயிருக்கும் பிள்ளைகளுக்கு முதலில் எடுத்து வைத்து மூடித் தாங்களும் பெயர் பண்ணிவிட்டு, மீண்டும், சூரியன் கறுக்கும் வரையில் கொக் காப் பழம் பிடுங்கியோ புல்லோ அந்திப் பாலோ வெட்டியோ மண் பால் தோண்டியோ வாய் வயிறுகளைக் (5 L 9 பரிள் ளைகளையும் கம் பணிகளையும் தொழிற் சங்கங்களையும் வியாபாரிகளையும் நாட்டையும் ஒரு சேரக் காத்து வளர்த்த என் பிரஹற்மங்களின் இதயபுரிகளையே சுட்டெரித்த மிருகப் பருவத்தில் உருத்திரனாய்த் திரிந்த காலம் அது.
அரசாங்க எடுபிடித்துவமோ உடுப்புக்குரிய உத்தியோகமோ கிடைக்கவில்லை. அலைந்து அலுத்த போது கண்டியில் ஒரு சர்வர் சந்நியாசம். மூன்றாம் மாதத்தில் கொழும்பில் ஒரு சேல்ஸ் மன் உபன்னியாசம்.
கஞ்சி கை கிடைத்திராத எனக்கு அது போதுமானதாக இருந்தது. தோட்டப் புறம் அனுசரிக் காத நாகரீகக் கூடாரத்துக்குள் நான் ஒட்டகமாகத் தலை நுழைத்த பிறகு

“தம்பி பேரென்ன?" - "ராம்ஸே!” - "அருமையான பேரு ஊரு?" - "மாத்தள!” "அருமையான ஊரு மாத் தளை ல எங் க?” -- 'டவுன்லதான்!” - "டவுன்ல எங்க?" - டவுன்ல மேப்பக்கமா!"
நாட் டுப் பற்றுக் கு முன் , மலைப்பற்றுக்கு முன், ஏன் இந்த வீட்டுப்பற்றே ராம்ஸேகளுக்கு விட்டுப் போனதென்று யாரும் ஆராய்ந்ததாக இல்லை.
சில வாத்திகளும், ஸ்ட்டா.. ப்மாரும் நகரக் கல்விமான்களும் எங்களைத் தோட்டக்காட்டுப் பயல்களாகவும் "புல் வெட்டப் போடா” க்களாகவும் ஐந்திலே வ  ைள த து வரி ட ட த ர ல |ா ? அம் மாங்கமே எங்களுக்குப் புலம்பெயர்தோர்க்குரிய பிச்சையை மட்டுமே இட்டதாலா? நாலு திசைக்குள் எந்தத் திசையிலே வந்து தேறுதலாவது சொல்லாததாலா?.
தோட்ட வெறுப்பின் மனோ வியாதி நாட்டு வெறுப்பாக வளருமென்று ஐக்கிய நாட்டுக்கே அறிவில் லை! நிர்வாகத் துரோகங்களைப் புரிந்துகொள்ளாத நானும் எனக்கே துரோகியாகிப் போனேனே!.
தோட்டத் துரோகிகள் என்று பட்டியல் போடுகிறார்களே அது பூரணமடையாது - என்னை வெறுத்த என் பெயர் அதில் முதலாவதாக விழும் வரை!
ஒரே தங்கையின் கல்யாணம் வந்ததுவும், எதிலுமே பட்டுக் கொள்ளாமல் இருந்த நான், என் நகர மனைவியும் இல்லாது
கொழும்பிலிருந்து நேராக இதே
மாத்தளைப் பிள்ளையார் கோவில்
வந்ததுவும், அந்தத்தோட்டக் காட்டுப் பந்தியில் உட்காரமலே தாலி கழுத்துப்பட்ட கனத்தோடு அம் மாவிடம் ஐந் நுTறும் தங்கையிடம் ஐந் நுTறும் நீட்டிவிட்டுத் திரும்பியதுவும், மீண்டும் ஒரு தரம் சித்திரவதையாக இருந்தபோதும் என் நினைவுக் கொப்பறையிற் குமிழியிட்டன.
என் னைக் கண் ட ஒவ்வொருவருமே அப்போதப்போதே அவரவர் கா துகளுக் குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். விஷயதானம் எனக்குத் தெரியும். அதை நான் சட்டை செய்யாத காலமல்லவா அது!
நாலைந்து வருஷத் திய நோயாளி அப்பா. வயதுக்கு மீறிக் கிழண்டிருந்தார். முகூர்த்தத்துக்கு முன் அவர் தயங்கித் தயங்கி என் னிடம் வந்தமை, இப் போதெல் லாம் என் னை அறுக்கும் ஓர் ஆயுதம்.
"...பெரிய தம்பி!...” என்றார் அடங் கிப் பயந் த மெதுத் தொனியில். "பசிக்கிற மாதிரி. இருக்குதப்பா!...”
சனியன் தொலையட்டும் என்ற பாவத்தோடு, “வாங்க!" என்று சொல்லிவிட்டு, கோவில் பக்கமாக இருந்த சல்காதோ ஹோட்டலுக்கு அவர் போனால் அதன் தரம் மாசுபட்டுவிடும் என்பது போல, எதிர்த்திசையிலிருந்த சைவக் கடைக்கு நடந்தேன். சர்வரை விரல் சொடுக்கினேன். வந்தான்.
நாட்டின் கஜானாவுக்கு தன் சக்தியை எல்லாம் தாரைவார்த்து
முடித்ததால் வீதியைக் கடக்கக்
கூட திராணியற்றுத் தடுமாறிக்
59 NA

Page 33
கொண்டிருந்த என் தந்தைக்கு ஒரு கை கொடுக்கவே வெட்கப்பட்டோ எரிச் சல பட் டோ முந் திப் போயிருந்த நான், அவரை சர்வரிடம் ởi L lọ 5 5 TL tọ "அந் தாள்
கேக்கிறதைக் குடுப்பா" என்றேன்
இரண்டு ரூபா நோட்டையும் கொடுத்து.
வெளியே வந்தேன். அதற்குள் தெய்வம் கைகொடுத்துவீதி கடந்திருந்த அப்பாவிடம் பத்து ரூபாயைக் கொடுத்து "தின்னுட்டு வாங்க!" என்று முணுமுணுத்து விட்டுக் கோவிலுக்குள் புகுந்து நின்றேன். கனவான்களுக்கிடையில்.
கூலிக்காரனின் மகனாக இருக்க இயலாதவனால் , பணக் கார முதலாளியின் மருமகனாகக்கூடவா
இருக்க இயலாது? இருந்தேனே,
பாவி.
அப்பாவின் சாப்பாடு எது என்று அம்மாவிடம் கேட்டிருக்கலாம். அல்லது நானே கவனித்து வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
மாப்பிள்ளை வீட்டிலேயே அவர் இறந்து போனதாக மறுநாள் தந்தி
வந்தது- என் இருதயம் தெரிந்து அவர் இருதயம் நின்று போனது போல!
ዩ9® நாட் டையே வாழ வைத் தவரை நான் வாழவைக்கவில்லை!.
தோட்டத்துக்குப் போக அன்றும் கூசினேன். இன்றும் கூசினேன். அன்று என் மேன்மையை மறந்து, இன்று என் கீழ் மையை உணர்ந்து!.
நான் தோட்டக்காட்டான் தான் என்று இமயத்தில் நின்று கூவ
8o ğDCCo,
சடலத் தைக்
இன்று பதைபதைக் கிறேன் , யாருக்கு என்ன லாபம் விளையப் போகிறது?
மரண வீட்டிலும் என் பீத்தல் அடங்கவில்லை; மாப்பிள்ளைப் பையன் படித்தவன். கம்மடுவைத் தோட்டம். வேலை இல்லாதவன். தோட்டத்திலேயே நாலு மாடுகளை வளர்த்துப் பாலூற்றி வந்தான்.
அவனுக்கேற்ற பொருளாதாரத்தில்
பெட்டி வாங்கிச் சுடுகந்தைக்கே கொண்டு வந்திருந்தான்.
"இதென் ன பெட் டி இது: பிச்சைக்காரப் பெட்டி: ஐநூறு அறுநூறு ருவாப் பெட் டி வாங்கியிருந்தா நான் வந்து பணம் குடுக்க மாட்டனா? நல்ல நேரம், அவளோ மாமா மாமியோ வரல்ல; பட்டிக்காட்டான் குடும்பம் மாதிரித் தப்படிப்பும் ஒப்பாரியும் வேற. இது தான் நான் இந்தப் பக்கமே வாறதல்லை. எப்பிடியாச்சித் தொலைங்க: ."
இடுகாட்டோடை கொழும்பு
வந்தவன்தான். தாயகப் பயணம்
சொல்லிக்கொள்ளத்தான் நான் அடுத்ததாகத் தாயிடம் போனேன்.
நெஞ் சப் புண் னைக் கீறிக் கொண்டிருந்த நினைவு
வேலை அகற்றிவிட்டு, "தம்பிக்கு
எந்துருப்பா?” என்றேன்.
"சுடுகந்தைங்க!”
சுடுகந்தையா?.யார் மகன்?. என்னைத் தெரியவில்லையோ?.
"அப்பா யாரு?" என்றேன். "மாரியப்பாங்க!”
"ஒம் பேரு?"

"LD60)6)u IIT60örg"
மாரியப்பாவின் இரண்டாவது மகன். முக்கு வடித்தபடி நாற்ற உடுப் புகளோடு ஆட்டுப் பட்டி ஸ்கூலுக்குப் போனவனா இந்த மன்மதன்?
"ஆட்டா ஒன்னுதர்?"
"ஆமாங்க சேர், அண்ணாச்சி வாங்கிக் குடுத்தாரு”
"அவருக்கென்ன ஜோலி"
"அவரு ஜியேக் கியூ பாஸ் பண்ணுனாரு. தொடர்ந்து படிக்க வசதி இல்லீங்க. ஒரு சான்ஸ் கெடச்சி ஓமானுக்குப் போய் மூணு வருஷம் பில்டிங் சுப்பவைஸ்ராக இருந்துட்டு வந்தாரு. நானுஞ் g6mứuf Luçaj agf (Baj jí Lô LDT இருந் தேனுங் களா, இந்த ஒட்டோவை வாங்கிக் குடுத்ததுட்டு மறுபடியும் ஓமானுக்குப் போய் ஒண்ணர வருஷங்கிட்ட ஆகுது ."
"souTubupro
"ஊட்லதாங்க”
"லயத்திலயா”
"அதெல்லாம் உட்டு மூணு வருஷம் ஆச்சிங்க. சுடுகந்தை லையே ஒரு காணி வாங்கி ஊடு கட்டியிருக்கிறோம். பழய பிச்ச கண் டாக் கையா ஊட்டுக்கு மேப்பக்கமா”
நாட்டுப் பற்றோ தோட்டப் பற்றோ இல்லாத நான் போன பிறகு தோட்டம் முன்னேறி விட்டதுதான், வளம் தேடி அங்கே போனேன். ஆனால் மல்ட்டி வீஸா எடுத்து வியாபாரம் செய்து பிழைக்க இங்கே வர வேண்டியதாகி விட்டது. அது பிராயச் சித்தம். இருபது
வரலாம். வாழலாம். அம்மாவின் கடைசிக்
வருவடிங்களுக்கு மேலாக நான் வெந்து கருகும் தவத்தை மெச்சி அந்த மதுரை மரீனா ட் சரி எனக்களித்தவரமாகத்தான் இருக்க வேண்டும் இந்த மல்ட்டி வீஸா.
என் விருப்பம் போல் எப்போதும் தோட்டக்காட்டானாக
காலத்தில் அவருக்கு ஒத்தாசை யாக மாதத்தில் பத்திருபது நாட்களைக் கழிக்கலாம். அன்று என் நாகரீகத்திற்குத் துணை போன மலட்டு மனைவியையும் அழைத்து வந்து என் பிறப்பிட மகிமையை உணர்த்தலாம்.
அம்மா மட்டுமல்ல, இந்த மலையகமே பெருமைப் பட ஏதாவது செய்ய வேண்டும். என் எதிரிகள் போல் தொடர்பின்றி வாழும் தங்கையும் தம்பியும் வாசம் பிழிய நான் வாழ்ந்து ாட்ட
வேண்டும். ஆனால், இவ்வுலகில்
என்னைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக அம்மாவைத் தவிர வேறொருவரும் இருக் கப் போகிறார்களா?.
தமிழுக்கு "ஜே" என்று பேர் என அன்று சொன்னவர்கள், இன்று
ஜெயிலுக்கு பேர் “ஜே" என்று
பல்ட்டி அடிக்கிறார்கள் அங்கே. அந்தப் பட்டியலில் இவர்கள் என் னையும் சேர்த் து விடுவார்களோ?
ஆனை மீது நான் வருவதற்கு மாறாக என் மீது ஆனை வந்ததால் விழி பிதுங்கியதில் பார்வை கிடைத்த பிறகு, நான் இங்கே வெறுத்த கலாச்சாரங்களே அங்கே கடவுளாச்சாரங்களாக மிளிர்வது கண்டு என் தோட்டக்காட்டானியத் தின் அருமை - பெருமைகளை
உணர்ந்த பிற 莎 கண்ணிர் கொண்டு st

Page 34
டியைப் போற் சடைத்திருந்தன. நீளமான தொரட் டிகளுடன் பிடுங்கவும் பொறுக் கவுமாக வரக்கட்டிற் பெண்கள்.
பழைமை எனக்குள் தலை உயர் த் தியது. அம் மா - அப்பாவோடு பழம் பிடுங்கியது, பொறுக்கியது, விதை எடுத்தது, ஒரு வாகனம் போனாலி , ஹோட் டலுக் குள் நுழைந்த பெண் ணை சர்வர்கள் பொத்துவிடுகிற மாதிரித் தோட்டமே வேடிக்கை பார்ப்பது.
பாடமாத்தியில் தரும் பி
பங்களாவைப் பார்க்க ஏறியது
ஆட்டா. கீழ்ப் பக்கமாக ஒட்டு லயம் தெரிந்தது. நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வெறுத்தது
எல் லாமே அங்கே தான் . சாவதானமாகப் (8L T Աl & சமாதானப்படவேண்டும்.
அம்ம்ா இப்பொழுது அங்கே இல்லை. தம்பி,மட்டக்களப்பில் ஒரு கம்பனி மனேஜர் தங்கை கணவர், கொழும்பில் பால் மாக் கம்பனி ஒன்றில் குவாலிட்டி கண்ட்றோலர். பங்களாவுக்குக் கீழ்ப் பக்கமாக இருந்த டிஸ்பென்சரி காலியான போது, இவர்கள் வந்து போகும்
வசதி கருதி, இப்போதைய துரை,
சிறிய விலையில் அம்மாவுக்கு
அதை விற்றிருந்தார்.
இன்னும் ஒரு
கிலோமீட்டர்தான்.
கால்
"சேர் பங்களாத் தொரயவா பாக்கப் போறிங்க?"
"..என்னைத் தெரியவில்லையா, மலயாண்டி?.."
2 64 p6956.85
ஆட்டா நடுப்பாதையில் நின்று போக மலயாண்டி திரும்பினான்.
“..நான்.உண்ணாமல மகன்
ராமசாமி. இந்தியா போன JTLD&TLs)..."
”அணி னேன்.” என்றவன்
வார்த்தைகளை மறந்தவன் போல் விழித்தான், தடுமாறினான், பிறகு, தலையைத் தாழ்த்திச் சொன்னான், ".ஒங்கம்மா.ஒங்கம்மா..நேத்து ராத்திரி எறந்துட்டாங்கண்ணேன்.”
பிறகு நடந்தவற்றை என்னால் கோவை யாகச் முடியவில்லை - தெரியவில்லை.
தங்கை என்னிடம் சொன்னது
ஞாபகம் இருக்கிறது:
"நம்மள ஒரு அடியாவது அம்மா அடிச்சிருக்குமாண்னேன்.”
நான் எப்படிக் கதறினேன் என்பது ஞாபகமில்லை. ஆனால் நான் புலம்பிக் கதறியிருக்க வேண்டும்.
அப்போது தம்பி சொன்னது ஸ்பஷடமாக என் சரித்திரத்தில் பதிந்திருக்கிறது:
"பொலம்பாதீங்கண்ணேன். நாஞ் செத்தா யாரும் ஒப்பாரி வைக்கக் கூடாது: தப்படிக்கக் கூடாது: ஒங்கண்ணனுக்கு அது பிடிக்காது னனு சொல்லிட்டுத்தான் அம்மா தெய்வமாகீச்சண்ணேன்."
"ஐயையோ” என்று அந்தக் குன்றுகள் கேட்கும் படி நான் அலறியதுவும் அப் படியே ஞாபகமுண்டு.
சொல் ல

33 ஆண்டுகளாக இந்த மண்ணில் மலர்ந்து வரும் மல்லிகைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள்
தமிழக எழுத்தாளர்களின் நூல்கள்
அகராதிகள், ஆய்வு நூல்கள்
அறிவு நூல்கள் - UTL-jg|6O60OT நூல்கள்
மாணவர் பயிற்சி நூல்கள்
பாடசாலை உபகரணங்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலை
340, செட்டியார் தெரு, 257/1A 516S 65 கொழும்பு -11. வெள்ளவத்தை, தொலைபேசி : 422321 கொழும்பு - 6. தொலைநகல் : 337313 தொ. பே : 074-515775
R 6 - GS

Page 35
ഖഞ്ഞു. 67ưô.67ả7.67/ỗ.-9/6)ặ/2/7
() எல்லாமே இரகஸ்யமாய்
நடக்கின்ற இரவு; அந்தப்
பொல்லாத இரவுமே யார்க்கும்
சொல்லாமல் Rèe ஓடியே ஒழிகின்ற や O ஒரு காலைப் பொழுது
நான் è காரைதீவுச் சந்தியில் 『 நின்று கொண்டிருக்கின்றேன்
கொக்குகளின் கூட்டமொன்று வயல் பெண்ணின் காலை விருந்தை களித்துப் பசியாறுதற்காய் பக்குவமாய் வேளைக்கே வந்து விரைந்து இறங்கிக் கொண்டிருக்கிறது!
என்னருகே தன்னந்தனியனாய் எங்கிருந்தோ?
இந்தக் கருக்கலில் இந்த விடியச் சாமத்தில் ஓ! தாமதித்துக் கண்விழித்த ' கோழியும் ஒன்று கூவுதே! கோழிகளுக்கும் குருவிகளுக்கும் கூட நிம்மதியில்லாத காலமிது!
நள்ளிரவு அதன் நடுப்புள்ளியை கடந்து செல்லுகையில் A.K.47 அடிக்கடி தும்முவதால் துயில் கலைந்து அதிர்ச்சியினால் துடித்துப் பறக்கின்ற காகங்களும் கூட இந்த நாட்களில் அந்தக் கோழியையும் குருவியையும் போல நிம்மதி இழந்துதான் வாழ்கின்றன!
எத்தனை துணிச்சலுடன் எங்கு பயணம் போவதற்காய் இந்த இடத்தில் வந்து நீ நிற்கின்றாய்!
GSA),

பஸ்ஸ"ம் இவ்வளவு நேரத்தோடு வந்திடாதே அந்தக் காலமென்றால் அம்பாறையிலிருந்து மூன்று மணிக்கே முதல் பஸ் புறப்பட்டிருக்கும் மட்டக்களப்பிலிருந்து காலை ஐந்து மணிக்கே புறப்படும் ஹிஜ்றாக் கோச்சிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டே. அக்கரைப்பற்றிலிருந்தும் அம்பாறையிலிருந்தும் இந்தச் சந்தியூடேதான் தங்கிப் போயிருக்கும்
ஆனால் இன்று ஏதோ பதினான்கு ஆண்டுகளாய் வானத்தில் வாழ்ந்திருந்து விட்டு வந்தே இறங்கியவள் போல் திடீரென்று இங்கு நீ எங்கு பயணம் போவதற்காய் வந்து நிற்கின்றாய்!
ஸென்றி "Sentry' பொயின்டுகள் செறிந்து வளர்ந்துள்ள
நமது பிரதேசம் பயளைகளை பையன்கள் தினமும் போடுகிறார் கேட்காத சொல்லையுமே கேட்க வைக்கும் கேட்டிக் கம்புடனே நடந்து செல்வான் கறுப்பனைக் கண்டாலே விழி பிதுங்க் சுறுசுறுப்புடன் நடக்கின்ற எருமைச் சோடி சிவப்புச் சிறுவால் வெள்ளை பெனியன் சிந்தனை எல்லாமே நிரை விதைப்பு ஒரு சிற்றரசனே தான் அஸனார் காக்கா
கைப்பெட்டிக்குள் கைவிட்டு அஸனார் காக்கா - வயல் களத்தினிலே பெய்திட்ட நெல் துளிகள் ஏழு நாட்களின் பின்னே எழுந்து நடனம் ஆடுவதையும் பாடல் இசைப்பதையும் கேட்டாயா? பச்சைக் கம்பளத்தைப் போர்த்திக் கொண்டே படுத்துக் கிடக்கின்ற வயல் மகளையும் பார்த்தாயா?
மாணிக்கப் போடி என்றாலும் சரிதான் மயில்வாகனம் ஐயாவின் வயல் என்றாலும் சரிதான் அஸனார் காக்காதான் முளைகளை அள்ளியே வீசிட வேண்டுமென்பார் கைராசிக் காரர்தான் அஸனார் காக்கா!
šce 87

Page 36
அற்புத மலரே! அழகே! எப்படியடி உனக்கு இத்தனை துணிச்சல்? யாருக்காய் இக்கருக்கலில் தனியே காத்திருக்காய்; ஒரு போருக்குப் புறப்பட்டவள் போல்!
காரைதீவுக் கடற்கரையில் கரைவலைக் காரர்கள் மீன்பிடிக்க இந்து சமுத்திரத்தில் எதையுமே கல்முனைக் குடியிருந்தும் மருதமுனையிருந்தும் சாய்ந்தமருதிருந்தும் சம்மாந்துறையிருந்தும் முஸ்லிம் பெண்கள் தாம் பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தைகளை காரைதீவுச் சொத்தியன் பரிகாரியிடம் ஒப்படைத்து மனம் ஒய்வடைந்த காலமது!
பிரசவத்தின் பின்னே தாய்மாரும் மருந்தெடுக்க பரசுராமன் ஐயாவிடம் படையெடுத்த காலமுமது
அற்புத மலரே! அதையெல்லாம் எடுத்துரைக்க இந்தக் காலை நேரம் எனக்குப் போதாது!
ஏன் திடீரென உன் முகத்தில் அவசரமாய் புயலொன்று ஆரவாரம் செய்கிறது?
பஸ்ஸொன்று வருகிறதே சந்தோசம் ஏறிக்கொள் இதற்காகத் தானா இவ்வளவு அவசரமாய் இந்தக் கருக்கலில் வந்துநீ நின்றதுவும்?
அற்புதமலரே! அடியே நீயொரு விசித்தரமே!
ஏறிய வேகத்தில் ஏனிறங்கி வருகின்றாய்?
இரண்டாம் பஸ்ஸ"ம் வருகிறதே இனியாவது ஏறிக்கொள் STF திடீரென வெளிவந்தால் சிலவேளை இரைகளையும் தேடலாம் v YA STF தலைமையகம் இருக்கின்ற இச்சந்தியிலே தன்னந் தனியாளாய் நீயொருத்தி பெரும் தைரிய சாலியுமேதான்!
68 čŽDCCC

அற்புதமலர்! நீயொரு அழகியேதான் உன் கூந்தலில் பிறந்து தவழ்கின்ற வம்மிப் பூ வாசத்தைக் கொண்டு செல்ல வயலெல்லாம் சுற்றி வரும் காலைக் காற்று
மாவடிப் பள்ளியில் இருந்து வெளியேறும் நீரோடையும் முகத்தையேன் சுளித்துக் கொண்டாள் உன் வதனத் தெளிவினால் பொறுமை அவளை உந்துவதும் ஒருவகையில் சரிதானே?
எனது நூற்றிப் பதினைந்து கைகளில் நிறைந்து வைத்திருக்கும் சோடனைகளை உன் தலைகளில் சொரிந்து வரவேற்கிறேன் அழகிய வாகைப் பூக்கள்!ஆகா! மலர்களால் மகிழும் நீயுமொரு மலரேதான் அற்புத மலர்! நீ ஆர் பெற்ற பிள்ளையம்மா?
கைப்பெட்டியில் முளை நிறைத்து அஸனார் காக்கா களத்திலே கைவண்ணம் காட்டுவதை கண்டுள்ளாயா? காதல் வசப்பட்ட வயல் மங்கை கசிவினால் துடிதுடிக்கும் வேளைகளில் போதை தீர்த்திடவே புறப்பட்ட t புதுமாப்பிள்ளை போல் தோன்றிடுவார் அஸனார் காக்கா ஏர்பூட்டிய ஒரு சோடி எருமைகளுடன் போருக்குப் போவது போலும் புறப்படுவார் கறுப்பன் கச்சையுடன் வழிநடாத்த மறுப்பின்றி முன் செல்லும் எருமைச் சோடி.
மிஞ்ச விடாதவர்போல் வளைந்து வருவார்கள் உன் விழித் தோணிகள் எந்த மீனுக்காய் இந்த நேரத்தில் வளைந்து வருவதுவும்:
அற்புத மலரே; உனக்கு முன்னும் பலநூறு விழித் தோணிகள் இந்தச் சந்தியில் நின்று வளைந்ததனை கண்டு களித்தவன் நான்; சிலவேளை கண்களும் கலங்கியுள்ளேன்:
இன்று இந்த வளைந்த வட்டையும் வாய்விட்டுச் சிரிக்கிறதே
ウ GSG) 39

Page 37
70
அற்புத மலரே; அதுவுன் காதுகளில் விழுகிறதா? இந்த வீதியில் அந்தப் பக்கத்தில் நின்று வளரும் அந்த அரசமரம்: அதன் கீழ் அமர்ந்துள்ள புத்தபிரான் உன்னழகை காணும் அதிர்ஷ்டத்தை இழந்து விட்டார் கண்களை விழிக்காமல் பெரும் காட்சிகளில் தனை மறந்தார்;
பக்கீர் சேனைப் பள்ளியையும் கொக்கு மீனைக் கொத்தி எடுப்பது போல் உடைத்ததனால் கொதிக்கின்ற தமிழ் உள்ளங்களின் வெப்புச் சாரங்கள் எல்லாவற்றையும் ஆற்றுவது என் தொழிலாய் ஆகிய காலமிது;
மீண்டும் ஏறிய வேகத்தில் ஏனிறங்கி வருகிறாய் பெரும்
ஏமாற்றம் அடைந்தவளாய்?
மூன்றாம் பஸ்ஸம் வந்து விட்டதே; முண்டியடிக்கும் சனக்கூட்டம் ஆறுதலாய் வந்த பேரூர்திகளில் அமர்ந்து பயணம் செய்யாமல் கருக்கலில் நின்ற நீயேன் இப்போதிந்த
நெருக்களுக்குள்ளுன்னை நெருக்கியே கொள்வதுவும்?
சிரிப்பொன்றும் உதிர்கிறதே ஆரடி அது ஒ அன்வர் தானே?
எல்லாமே இரகஸ்யமாய் நடக்கின்ற இரவு அந்த இரவுமே யாருக்கும் சொல்லாமல் ஓடியே ஒழிகின்ற பொழுது அற்புத மலர் நீ மட்டும் அதற்கோர் விதிவிலக்காய் ஆகுவதோ?
வாகை மரம் நான் நீங்கள் தம்பதியாய்
வரும் வரை காத்திருப்பேன் பூ மாலைகளை சூடுதற்காய்.
2
DGSE))

WAHLS
Shopping Centre
Dealers in T.V. Radio, Watches and Luxary Goods
152, Bankshall Street, Colombo - 11. Telephone: 446028
2 R Self

Page 38
இலக்கியமும் இதழியலும்
ప్లే ஏ.ஜே. கனகரத்தினா
தலைப்பைப் பார்த்ததும் முழங் காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட நான் விழைவதாகச் சில வாசகர்கள் கருதலாம்.
புகழ்பூத்த ஆங்கில விமர்சகர் LD55u 9T60T601 (Mathew Arnold) இதழியலுக்கு (Journalism) வகுத்த வரைவிலக்கணம் வருமாறு.
"அவசர கோலம் பூண்ட SQ6dä5aÉSuub” (Journalism is literature in hurry)
அவசரத்தைப் பற்றிப் பெரும் பாலும் எல்லோரும் உடன்படுவர். செய்தி சுடச்சுடக் கிடைக்காவிடின், அது ஆறின கஞ்சிதான். ஆனால் இதழியலுக்கு இலக்கிய அந்தஸ்து வழங்குவது பற்றித்தான் கருத்து வேறுபாடு எழலாம்.
இலக் கியம் என்ற பதம் ஆங்கிலத்தில் எதனைக் குறிக் கின்றது என்பதனை ஆராய்தல் தெளிவை ஏற்படுத்தும். Literature" (இலக்கியம்) என்றபதம், 14 ஆம் நூற்றாண்டளவில் ஆங்கிலத்தில் புழக்கத்திற்கு வந்தது. அதன் இலத்தீன் வேர்ச்சொல் 'எழுத்து (Letter of the Alphabet) 6T60T) பொருள்படும். இவ்வாறு நோக்கில் எழுத்தில் அல்லது அச்சில் உள்ள சகலதையுமே 'Literature என்ற பதத்துள் அடக் கிவிடலாம் . எப்பொருளைப் பற்றியும் அச்சி லுள்ளது 'Literture தான்.
14 ஆம் நூற்றாண்டில், பிரஞ்சு மொழியின் பாதிப்பின் ஊடாக
ஆங்கிலத்தில் புழக்கத்திற்கு வந்த ス2 த்மலைைக
Literture என்ற பதம் வாசிப்பின் மூலம் மேல் வர்க்கத்தினர் பெற்ற அறிவையே குறிப்பிட்டது. 17ம் நூற்றாண்டு வரை இப்பதம் எழுத்து வாசனையை (Literacy) குறித்தது. 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியி லிருந்து, இப்பதத்தின் அர்த்தங்கள் விரிவடைந்து எழுதுதல் (writing) என்ற நடைமுறையையும் (practice) வாணி மை யையும் குறிக் கத் தொடங்கியது. ஆனால் இப்புது அர்த்தங்கள் எல்லா வகையான எழுத்துக்களையும் நூல்களையும் தம்மகத்தே அடக்கின.
19ம் நூற்றாண்டில் தான் Literature என்ற பதம் சிலவகை எழுத்துக்களையும் நூல்களையும் குறிக்கத் தொடங்கிற்று. படைப் பிலக்கியம் அல்லது ஆக்க இலக் கியம் (சிறுகதை, நாவல், கவிதை) என்ற ஓர் வட்டத்துக்குள் அதன் அர்த்தம் குறுக்கப்பட்டது.
ஆனால் இன்று இத்தகைய அர்த்த குறுக்கத்தை எதிர்த்து நவீன இலக்கியக் கோட்பாட்டாளர் எல்லா வகை எழுத்துக்களையும் நூல்களையும் உள்ளடக்க வல்ல எழுத்து (writing) தொடர்பியல் (communication) seasu 6T6061600lds கருக்களை முன் வைத் திருக் கின்றனர். இந்தக் கருத்துக்களின் படி, படைப் பிலக்கியம், விவரண 61(ggsgl (documentary or descriptive Writing) என்று வேறுபடுத்துவது தவறு. புனைகதை சார்ந்த எழுத் துக்களிலும் சரி, விவரணம் சார்ந்த எழுத்திலும் சரி, ஏற்றத்தாழ்வு
 
 

காணப்படும் தரத்தைப் பொறுத்த வரை, ஆனால் இருவகைகளும் மொழியையே தமது மூலப்பொரு ளாகக் கொண்டுள்ளன. இவ்வாறு நோக்கின். மொழியைப் பயன்படுத் தும் அம்சத்தில் இலக்கியமும், இதழியலும் இரத்த உறவினர். இலக்கியம் என்பது விஷேட மொழி யல்ல. அது விஷேட பண்பாட்டிற்கு
உட்படுத்தப்பட்ட மொழியே என்பது
நவீன இலக்கியக் கோட்பாட்டாள fflesör a5(5ĝ5g5]. (Literature is language in a condition of special use)
இலக்கியம் என்பது வாழ்வு LIBĉiuj 6ĵLDT3F60TLD (Literature is criticism of life) 6T66 Brit LDisgu
ஆர்னல்ட் ஹென்றி ஜேம்ஸ் (Henry
James)
இதழியல் என்பது ஒரு கணத்தைப் பற்றி அக்கணத்தி லேயே விமர்சிப்பதாகும் என்றார். (Journalism is criticism of the moment at the moment) 36.6}. Tg இரண்ட்ையும் வேறுபடுத்துவதும் ஓர் வகை மயக்கத்தை ஏற்படுத்தலாம். இலக்கியம் என்பது ஆழமான, நிலையான விடயங்கள் பற்றியதாக விருக்க, இதழியலானது நிலையற்ற மேம்போக்கான விடயங்களைப் பற்றியது என்ற தொனி ஜேம்ஸின் கூற்றில் தொக்கி நிற்கிறது.
இங்கிலாந்திலே, இதழியல் வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகத்த முன்னோடிகளின் வரலாற்றை அறிந்தால், இப் பிரச்சனை குறித்து மேலும் தெளிவு ஏற்படும். “ரொபின்சன் குருசோ (Robinson Crusoe) 6T66's biT61606) 6T (pġħu u LT6olu 6b Lo(3u IT (Daniel Defoe) ஓர் சஞ்சிகை நடத்திய
துடன் செயல் முனைப்பான இதழி
யலாளராகவும் விளங்கினார். புதிய
இலக்கிய வடிவமான நாவலை அற்புதங்கள் நிறைந்த பழைய வடிவமான "ரொமான்சி லிருந்து (Romance) வேறுபடுத்திய பண்பே நாவல் - அன்றாட யதார்த்த உலகில் வேரூன்றியிருந்த மைதான் இப் பணி பை நாவலுக் குப் பாய்ச்சியதில் இதழியலுக்குப் பெரும் வரலாற்றுப் பங்குண்டு.
இந்த நுTற் றாணி டில் ,
. (06)m frts (36) (HemingWay) d5(3)66
(Crane) போன்ற எழுத்தாளர்கள் ஒரு காலகட்டத்தில் இதழியல் துறையோடு நெருங்கி உறவாடி, போர்க்களச் செய்தியாளர்களாகக் கடமையாற்றினார்கள். இந்த உறவின் பாதிப்பை ஹெமிங்வே, யின் சிறுகதைகளின் நடையில் காணலாம்.அவற்றில் காணப்படும் இறுக்கமான தந்திப்பாணி நடை அவருடைய பத்திரிகை அனுபவத் தின் அறுவடையே.இந்த நடையும் அவரது வாழ்க்கை தரிசனமும் பின்னிப் பிணைந்திருக்கினறன.
போரைப் பின்னணியாகக் cGa5T606TL Red Badge of Courage என்ற நாவலையும் அமெரிக்க உள் நாட்டுப் போரையும் பின்னணியாகக் கொண்டசில சிறுகதைகளையும் எழுதிய கிரேன், போரில் நேரடியாக போர்வீரனாகப் பங்குபற்றியதில்லை. அமெரிக்க உள் நாட்டுப் போர் நடந்து முடிந்த சில ஆண்டுகளு க்குப் பின்னரே அவர் பிறந்தார். இப்படைப்புக்கள் வெற்றிகரமாக அமைவதற்கு அவருக்குக் கை கொடுத்து உதவியது அவர் பத்திரி கைகளின் போர்க்கள செய்தியா ளராகவிருந்து பெற்ற அனுபவமே,
இதழியலின் இலக் கியத் தன் மைகளை வற்புறுத் தும் பொருட்டு, ரொம் வுல்ப் (Tom
R DGGS685 78

Page 39
Wolfe) 6T6öU6) if Lig5u 95.5u Jó) (The New Journalism) 61601 3
தொகுப்பை வெளியிட்டு, சஞ்சிகை
களிலும் பத்திரிகைகளிலும் வெளியிடப் படும் சிறப்புக் கட்டுரை களின் (features) ஆக்க இலக்கியப் பரிமாணத்தை நன்கு வெளிக் கொணர்கிறார். தனது முன்னுரை யில், வுல் ப் இதழியலுக்கும் இலக்கியத்திற்கு மிடையே உள்ள நெருங் கிய உறவுகளைச்
சான்றாதாரங்களோடு நிறுவுகிறார்.
இதழியலுக்கும் இலக்கியத்திற் குமிடையே உள்ள உறவிற்கு இன்னும் கூட சான்றுகள் உள. bLD6öI abÜGLITLTruman Capote) என்ற அமெரிக்க நாவலாசிரியர் கொலைகாரன் ஒருவனைப் பற்றி ஓர் சஞ்சிகையில் தொடர் கட்டுரை கள் எழுத முனைந்ததன்விளைவே In Cold Blood 6 6Öi 13 g)}6) Jgöl வலுமிக்க, நூலாகும். யதார்த்தத் தில் வேரூன்றிய இப் படைப்பை faction' என்பர் விமர்சகர்கள். இச் சொல்லாக்கம் fact (யதார்த்தம்) என்ற சொல்லினதும் Fiction என்று புனை கதையைக் குறிக் கும் சொல்லில் உள்ள பின் மூன்று எழுத்துக்களிலும்(ion) இணைப்பே. இதற்கு ஆங்கிலத்தில் புழக்கத்தி லுள் ள் இன் னொரு பெயர் documentary Fiction (65 DirgoOTD சார்ந்த புனைகதை)
‘ஆக்க இலக்கியம்’ ’அவசர கோலம்பூண்ட இலக்கியம்' என
வேறுபடுத்துவதை விடுத்து, மொழி
பயன்பாடு அதனுடாகப் பெறப்படும் தரிசனம் என்ற அடிப்படையில் நோக்கினால், ஜோர்ஜ் ஒர்வெலின் (George Orwell) fn si3 (83 T (6 b Tub உடன்படலாம். நல்ல உரைநடை சாளரக் கண்ணாடி போன்றது 6T6örbst it 96ft. (Good prose like a
za kišaocietna
Window pane) இதுவே எழுத்தின் குறிக்கோள் என்பதை நல்ல எழுத் தாளர்கள் உணர்ந்திருந்தனர். அவர் களுடைய படைப்புக்கள் ஈற்றிலே இலக்கியமாகக் கருதப் பட்டால் என்ன, இதழியலாகக் கருதப்பட் டால் என்ன. ஓர்வெல் நாவலாசிரி யனாகவும் (1984, விலங்குப் பண்ணை) இதழியலாளராகவும்
இருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த நூற்றாண்டிலே, இதழிய லாளர் எனச் சிலரால் ஏளனததோடு நோக்கப்படுபவர்களின் சில படைப் புக்களை நோக்கினால், நிலைத்து நிற்கக்கூடிய ஆக்க இலக்கியம் தரும் அனுபவத்தை அவை எமக்கு அளிப்பதை நாம் உணரலாம்.
இங்கு விரிவாக ஆராயாமல், ஓர் பட்டியலை மட்டும் தான் தரலாம். ரஷ்யப் புரட்சி பற்றி ஜோன் ரீட் எழுதிய, உலகத்தை உலுக்கிய Lugbgb b'Tab6îT, (Ten days that shook the World By John Reed) சீனப்புரட்சியைப் பற்றி எட்கார் 6,360T (Edgar Snow) 6T(upg5u Red Star over China, 66)6Sub 6) móilgil L60i (William Hinton) எழுதிய (FanShen) ஜப்பானில் அணுகுண்டு ஏற்படுத்திய நாசங் களைப் பற்றி ஜோன் ஹேர்சி (John Hersey) 6TQg5u Hiroshima. இவை அவசரமே கோலமாகக் கொண்ட இதழியலின் தேவைகளி லிருந்து எழுந்தாலும், கனமான இலக்கியப் பெறுமதிமிக்கவை. நிலைத்து நிற்கக்கூடியவை.
என்னைப் பொறுத்தவரையில், இந்நூல்கள் ஆக்கத்தையும் அவசர த்தையும். இணைப்பதில் வெற்றி யீட்டியுள்ளன. எனவே இரத்த உறவினரான இதழியல் குறித்து, இலக்கியம் வெட்கித் தலைகுனிய வேண்டியதில்லை. தீட்டுப்பொருளா கக் கருதவேண்டியதுமில்லை.

மல்லிகையின் 33 வது ஆண்டு மலருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !
LVCKYLAN1D 1BSCVT MANVFACTVRES
Natharanpotha Kundasale. Phone: 08-224217, 232574
2
GSG5 75 তত্ব

Page 40
மலையக இளந் தலைமுறையினரின் இலக்கியப் பங்களிப்பு
ப. ஆப்டீன்.
ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பிரதேச ரீதியாக அணுகும்போது மலையக இலக்கியத்திற்கு ஒரு சிறப்பான இடமும் அதற்கென ஒரு தனி வரலாறும் இருப்பதை LD 60 6u) UU 5 இலக் கலிய தி தை ஆய்பவர்கள் மிகத் துல்லியமாக நிறுவியுள்ளார்கள்.
மலையக இலக்கியம் என்பது எமது நாட்டிற்கு அந் நிய செலாவணி க்கு கால் கோள் அமைக்கும் பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்க்கையைப் பற்றிய, அவர்களது பிரச்சனையைப் பற்றிய சித்தரிப்புக்களாகும்.
19 ஆம் நுTற் றாணி டின் முற்பகுதியில் கொடிய காடுகளை அழித்து கோப்பி, தேயிலை பயிர்ச்செய்கைக்காக, மலையக மண் ணைப் பக் குவப் படுத்த, ஆசைவார்த்தைகள் சொல்லி தென் இந்தியாவிலிருந்து கொண்டுவரப் பட்ட தொழிலாளர் பெருமக்களின் வாழ்க்கைப் பாதை பிரச்சனைகள் நிரம்பிய ஒரு மாபெரும் சோக காவியம்தான்.
மண்ணுரிமை, கல்வியறிவு, வேலைக்கேற்ற போதிய கூலி, இவை மறுக்கப்பட்ட காலம்.
கல்வியைக் கொடுத்தால்
சிந்திப்பான். சிந்தனை வளர்ந்தால்
உரிமைக்காகப் போராடுவான். போதிய ஊதியத்தைக் கொடுத்
23 R
தாலும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வான்.
தொழிலாளியின் உழைப்பை உறிஞ்ச வேண்டும். அவன் அரை பட்டினியோடு வாழ்ந்தால் தான், தோட்டப் பயிர்ச் செய்கையில் கம்பெனிக்கு இலாபம் திரட்ட (փլգեւյւD.
உண்மை வெல்லும் என்ற அடிப்படையில் எப்படியோ தடை களைத் தர்ண்டி கல்வியைப் பெற்றவர்களே தோட்டந்தோறும் போராடினார்கள். அவர்களது பேனா முனை கூர்மையடைந்தது.
பிற பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் மலையகத்தவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருந்தார் கள் 6] ଧୈ [b] சொல்லப்பட்டாலும், மலைநாட்டு
மக் களின் எழுச் சிக் கும் வளர்ச்சிக் குமாகப் போராடிய மலையகத் தன் இயக் க
வடிவங்களின் வளர்ச்சிக்காக
கணிசமான அளவு பிற பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் உதவியுள்ளார்கள்.
பாரதிக்கு இருந்த சுதந்திர வேட்கையைப் போல், அன்றைய மலைநாட்டு எழுத்தாளனுக்கு அருமையான களம் கிடைத்தது. மூத்த கவிஞர் களும் , எழுத்தாளர்களும் கிளர்ந்தெழுந்து தோட்ட நீ தோறும் துணி டுப்

பிரசுரங்கள் விநியோகித்தும் , கனதிமிக்க கட்டுரைகளாலும், கவிதைச் சரங்களாலும் மலையக இலக்கியத்திற்கு ஒரு பலமான அத்திவாரமிட்டார்கள்.
மலையக எழுத்தின் ஆரம்பம் 1920 தான். எனினும் 1960 க்குப் பின் பே பீறிட்டுக் கொண்டு வளர்ச்சியடையத் தொடங்கியது.
அறுபதுகளில் ஈழத்து இலக்கிய இயக்கத்தில், தேசிய இலக்கிய கோட்பாடு மிகவும் முனைப்பு பெற்றிருந்தது. தேசிய பதி திரிகைகளின் g)5. TS கவனத்தையும் பெற்றிருந்தது.
இக்காலகட்டத்தில் மலையக இலக்கிய வளர்ச்சியை முடுக்கி விடுவது போல "வீரகேசரி" பத்திரிகை பல சிறுகதைப் போட்டிகளை நடத்தியதால் அது மேலும் முனைப் புப் பெற்று வளர்ச்சியடையத் தொடங்கியது.
இத்தகைய ஒரு பின்புலத்தை வைத்துத்தான் இன்றைய இளைய தலை முறையினரின் இலக்கிய முயற்சிகளைப் பற்றி நோக்க வேண்டும்.
மலையகத் தின் முக்கிய நகரங்களான கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன், பண்டாரவளை, பதுளை, மாத்தளை போன்ற நகரங்களை வசிப்பிடமாகக்கொண்ட இலக்கிய வாதிகள், ஆங்காங்கே சிறு சிறு வட்டங்கள், சங்கங்கள் அமைத்து, இலக்கிய வளர்ச்சி சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்கள் கருத்தரங்கு கள் நடத்தி தமது இலக்கியப் பாதையை செழுமைப் படுத்தி யுள்ளனர். '
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மலையகத்தை முழுமையாகப்
பிரதிநிதித்துவப்படுத்தி பாரிய சேவைகள் புரிந்துள்ளது. அடுத்து நாவலப்பிட்டியில் இளம் எழுத் தாளர் சங்கத்தையும் குறிப்பிடலாம். இப்படியான மன்றங்கள் பல நகரங்களிலும் தோன்ற தம்மாலான பங்களிப்பைச் செய்துள்ளது.
மலையகத்தைப் பொறுத்த வரையில் அடிக்கடி கருத்தரங்கு கள், இலக்கியப் பட்டறைகள்,
விழாக் கள் நடத்துவதில் நடைமுறைச் சிக் கல் கள் இருக்கின்றன.
புவியியல் ரீதியில் மாத் தளையிலிருந்து கண் டி வரைக்கும் , கண்டியிலிருந்து
பதுளை வரைக்கும் சூழவுள்ள பெரு நீ தோட் டங் களையும் , நகரங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும் பிரதேசமே மலையகம்.
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல வேண்டுமாயின் நீண்ட துரமும், நேரமும் பிரயாணக் கவழ்டங்களும் இயற்கையாக அமைந்துள்ளன.
இந்நிலையிலும் இன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கே இலக்கியக் கருத்தரங்குகள், நடைபெறுவது 9) 6TT LĎ தலைமுறையினரின் இலக்கிய
ஆர்வத் தையே எடுத் துக்
காட்டுகிறது.
1980 க்குப் பின் புதிய
தலைமுறையினர் எழுத்துத்
துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு.
ஆங்கில மொழி மூலம் கல்வி
கற்ற கால கட்டத்தில் மேல்நாட்டு
ஆங்கில இலக்கியங்களிலும் ஓரளவு ஈடுபாடு இருந்தது.
77

Page 41
தமிழ்மொழி இலக்கியங்களை மிகவும் ஆர்வத்துடன் கற்று நவீன இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டனர்.
தாய் மொழிமூலம் கல்வி கற்றல் என்ற நிலை வந்ததும், ஆங்கில மொழி கற்பதில் வெகுவாக ஆர் வம் குறைந்து விட்டது. ஆனால் உலகளாவிய நவீன கலை இலக்கியங்களை மேலோட்டமாக அறிந்து கொள்வதற்கேனும் ஆங்கில அறிவு இன்றியமையாதது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1980 க்குப் பின் நவீன இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் புதிய தலைமுறையினருக்கு இது தவிர்க்க முடியாது.
, Լ0 60) 6Ù եւ j &5 இளைய தலைமுறையினரான இன்றைய இளைஞர்கள் தாய்மொழி மூலம் கல்வித்துறையில் ஈடுபட்டிருக் கின்றனர். அதே நேரத்தில் தொழில் வாய்ப்புகளுக்காக பெரும் நகரங்களை நோக்கிச் செல்ல வேண் டிய நிர்ப் பந்தமும் , உந்துதலுக்கு தவிர்க்க முடியாத கட் டாயத் தேவையாகவும் மாறி விட்டது. சிறு சிறு நகரங்களிலும் தோட்டத்துறை களிலும் போதிய வருமானமுள்ள தொழில் வாயப் ப் புக் கள் இல்லாமையே காரணம். ஆயினும் இந்த நகர் வு காரணமாக, வாழ்க்கையை நோக்குவதில் மலையக் புதிய தலைமுறையி னருக்கு ஒரு புதிய தரிசனம் கிடைக்கிறது. இது கடந்த கால மலையக இளைய தலைமுறையி னரிடமிருந்து இவர் களைப் பிரித்துவிட்டிருக்கிறது.
2 78 R Self
பல வேறு
இதனால் மலையகத்தின் புதிய தலைமுறையினரின் பார்வை மட்டங்களிலும் விசாலமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த கால இளைய தலைமுறையினரோடு இந்தப் புதியவர்களை ஒப்பு
நோக்கும் போது, இவர்களின்
பார்வையில் ஒரு தனித்துவமும், ஒரு வீச்சும், மாற்றமும் விழிப்பும் பீறிட்டுக் கொண்டு வரக்கூடிய ஒரு நிலைப்பாடு காணக் கூடியதாக இருக்கிறது.
பழைய இளைய தலைமுறை யினர் மலையகத்தைச் சார்ந்த பிரச்சினைகளை நோக்கிய விதமும் . அவர்கள் ஆக்க இலக் கரியங்களில் காட் டிய தரீர் வையும் விட இன்றைய தலைமுறையினர் தங்களது விசாலமான பார்வையால் அதே பிரச்சனைகளை நோக்கிய போது புதியவர்கள் முன் வைக் கும் தீர்வுகள் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுத் தருகிறது.
இன் றைய புதிய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கம் விசாலமடைந்திருப் பதற்குக் காரணம் தாய்மொழி மூலம் பெறும் கல்வியினுடாக இவர்களுக்கு அறிமுகமாகும். இலக்கியங்களைப் படிக்கும் போது அவை தொடர்பாக மென்மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று வளர்ந்துள்ள ஆவலும்
ஆர்வமுமேயாகும்.
இனி பழைய தலைமுறையினர் படைப் பாளிகளோடு புதிய படைப்பாளிகளும் இணைந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட

மையும் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு காரணியாக அமைகிறது.
உதாரணமாக "துரை வி" பதிப்பகம் மூலம் வெளியான "மலையகச் சிறுகதைகள்”
"உழைக்கப் பிறந்தவர்கள்” ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளைக் குறிப்பிடலாம்.
ஓர் இலட்சிய நோக்கோடு ஆரம் பிக் கப்பட்ட துரை வி பதிப்பகம், அன்று தொட்டு இன்று வரையிலான மலையக சிறுகதை
இலக்கியத்தை முழுமையாகவே
எதிர் காலத் து இலக் கிய ஆர்வலர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் ஆவணமாக முன் வைத்திருக்கிறது. தனது தேடல் வேலையை இன்னும் சற்று ஆழமாகத் துரிதப் படுத் திக் கொண்டு வரும் துரைவி பதிப்பகம் தொடர்ந்து மற்றுமொரு சிறுகதைத்
தொகுப்பை வெளிக் கொணர
விருக்கிறது. அதன் மூலம் மலையக சிறுகதை இலக்கியம் முழுமையாக புதிய தலைமுறையினரின் கைகளுக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்துடன் இன்றைய மலையக இலக்கியத்தை ஆய்வு செய்ய வருகின்ற ஆய்வாளர்களுக்குப் பின் ஒரு புதிய பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. அந்த இளைய தலைமுறையினரின் முழு
ஆற்றலையும் தேடிப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் இன்று மலையக இளைய தலைமுறை யினரின் இலக்கியப் பங்களிப்பு நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருக் கலிறது என்பதில் ஐயமில்லை.
இனி, தேசிய ரீதியில வளர் ச் சரியடை நீ தருக் கும் வெகுசனத்தொடர்பு சாதனங்கள் அன்றைய புதிய தலைமுறை யினருக்கு இல்லாத சந்தர்ப் பங்களை இன்றைய புதிய தலைமுறையினருக்கு வழங்கப் பட்டிருப்பது, இன்றைய இலக் கரிய வளர்ச் சிக் கு உந்துசக்தியாக இருக்கிறது. இங்கு மலையகப்பிரதேசத்தில் தோன்றிய சிறு சஞ்சிகைகளின் பணி குறிப்பிடத்தக்கது.
பொதுபோக மலையகம் பிரதேச ரீதியில் தனித்துவமான சமூக அரசியல் சிந்தனைகளை ஸ்தாபித்துக்கொண்டுள்ளது. இதில் கணிசமான அளவு இளைஞர்கள்
ஆட்பட்டிருப்பதையும் அதன்
பிரதிபலிப்பையும் காணக்
கூடியதாகவும் இருக்கிறது.
இந்தத் தனித்துவம் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற உந்துதல் காரணமாகவே மலையக இலக்கியப் பங்களிப்பு இடம் பெறுகிறது.
"சாய்வு நாற்காலி” நாவலுக்காகச் சென்ற ஆண்டுக்கான சாகித்திய அகடெமி பரிசைப் பெற்றுக்கொண்டவரான தோப்பில் முகமது மீரான் அவர் களுக்கு மல் லி கை தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
C R DUICO 29

Page 42
தில்லைச்சிவனின்
அந்தக் காலக் கதைகள் கார்த்திகேசு சிவத்தம்பி
அறுபது எழுபதுகளில் ஈழத்தின் இலக்கிய கள்த்தாக்களாக முன் நின்றவர்கள் தொண்ணுாறுகளில் "இளைப்பாற்று முதுமை நிலையை அடைந்து, வருகிறார்கள் என்பது அவர்களின் இன்றய நினைவு மீட்பு எழுத்துக் களிலிருந்து தெரிய வருகின்றது. மற்றவர்களைச் சித்தரித்தவர்கள் தங்கள் வாழ்க்கை யினை மீளநோக்குச் செய்யும் முயற்சிகளில் இறங்குவது இயல்பே.
பொன்னுத்துரையின் நனவிடைத் தொய்தல், வரதரின் மலரும் நினைவுகள், வ.அ. இராஜரத் தினத்தின் இலக்கிய நினைவுகள் எனச் சில நூல்கள் வெளி வந்துள்ளன.
இந்த நூல்களின் இலக்கியப்
பணி பாடு இரண்டு. ஒன்று இவர் களது ஆக்க ஆளுமை வளர்ந்த பின்புலத்தை நாம் அறிந்துகொள்கிறோம். மற்றது, இந்தச் சித்தரிப்புக்கள் ஒரு காலகட்டத்தின் சமூகவரலாற்றை எழுதுவதற்கான ஆவணங்களாக அமைகின்றன. இத்தகைய நூல்களின் இலக்கிய வரலாற்று முக்கியத்துவம் எப்படியிருப்பினும் இவற்றின் சமூக வரலாற்று முக் கியத் துவம் பெறுமதி வாய்ந்ததாகும்.
2 8O S5
தில்லைச்சிவனின் இந்த நூல் இத்தகைய முக்கியத்துவமுடைய ஒன்றாகும். எமது தொழில்முறை வரலாற்று ஆசிரியர்கள் எழுதத் தயங்கும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சமூக அமைப்பையும், அது தொழிற்பட்ட முறையையும் இந்த நூல் நன்கு காட்டுகின்றது. இந்த முக்கியத்துவம் காரணமாக 'வரலாற்று நேர்மை இத்தகைய நூல்களுக்கு மிக அவசியமாகும். அந்த நேர்மை இந்த நூலில் தெரிகின்றது.
தில் லைச் சிவன் தனது இளமைக்கால வரலாற்றைக் கூறும் பொழுது, 1930 40 களில் வேலணை எவ்வாறு இருந்தது என்பதனை நல்லதொரு சித்திரமாக வரைந்துள்ளார். வேலணையின் சமூக பொருளாதார அமைப்பு மிக்க தெளிவுடன் மேற்கிளம்பு கின்றது.
ஏறத்தாழ இதே காலகட்டத்துக் குரியவனான எனக்கு, இந்த நூலை வாசிக்கும் பொழுது, சமகாலத்து வடமராட்சியின் - குறிப்பாக எனது கிராமமாகிய கரவெட்டியின் - சமூக பொருளாதார முறை நினைவுக்கு வருவது இயல்பே. தீவுப்பகுதிகளுக் குரிய சிறப்பம்சங்களைத் தவிர,
அடிப் படையில் ஓர் சமூக பொருளாதார ஒருமைப் பாடு தெரிகிறது.

ஒரு முக் கிய சந்தேகம் யாதெனில், 'வாரக்குடிமக்கள் (பக். 24) பற்றிய குறிப் பாகும் . கரவெட்டியில் அக் காலத்தின் ‘வாரக்குடி' என்பது, குடிமைக் குலங்களுள் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிலச் சுவாந்தர் குடும் பத்தின் சகல வேளாண்மைத் தொழில்களையும், செய்வதற்கு அக்குடும்பத்தினரின் சொத்தாகவே இருத்தலாகும். அவருக்குரிய உடுதுணி முதல் கல்யாணம் வரை யாவற்றையும் பார்க்கும் பொறுப்பு நயினாருக்கு உண்டு. ‘வாரக் குடி’ என்பதும் வாரத் துக் கு வேளாண்மை செய்வதென்பதும் வெவ்வேறானவை யாகும். இங்கு ‘வாரம்' என்பது ஒருவகைக் குத்தகை. வாரத்தில் நிலச் சொந்தக் காரணுக்கு விளைச்சலில் பங்கு கொடுக்க வேண்டும். அதனை வாரச்செய்கை என்பர். ‘வாரக் குடி' வேறு, வாரச்செய்கை வேறு.
வேலணையின் நிலமையை அவர் விபரிக்கும் பொழுது,
flow)
உண்மையில் அவள் வாரச்செய்கை யையே விபரிக்கின்றார். ‘வாரக்குடி முறையை அன்று. இதுபற்றிய தெளிவு அவசியமாகும்.
1930 களில் யாழ்ப்பாணத்தில் நிலவிய திருமணச் சடங்கு முறைகள், சமூக கட்டுப்பாட்டு மரபுகள் ஆகியன மிகத்துல்லிய மாகத் தெரிகின்றன.
சங்கு குளித்தல் பற்றிய தகவல்கள் மிக முக்கியமானவை ஆகும்.
i தில் லைச் சிவன் சொல் ல வந்ததை தெளிவாக நவர்ச்சியாக எடுத்துக் கூறுகிறார். தில்லைச் சிவனின் கதைகளில் காணப்படும் 'எடுத்துரைப்பு ஓட்டம் (Narative இந்தக் கதைகளிலும் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதி
பற்றிய ஒரு சான்றாக இந்த எழுத்து அமைகிறது.
ܬ ”
என் நன்றி உரியது.
மனப்பூர்வமான நன்றிகள்
w நண்பர் முருகபூபதி இலக்கியத் துறைக்கு வந்த 25 வருட
ஞாபகார்த்த விழாவில் தன்னை இலக்கிய உலகிற்கு ' அறிமுகப்படுத்தியதற்காக என்னை நீர்கொழும்பில் கெளரவித்து விருது தந்து சிறப்பித்தார். அத்துடன் கொழும்புக் கம்பன் கழகம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடத்திய கம்பன் விழாவில் என்னைக் கெளரவித்துப் பட்டமளித்துக் கெளரவித்தது.
இந்த மகிழ்ச்சியான கழ்ச்சிகளைக் கேள்விப்பட்ட மல்லிகை அபிமானிகள் நேரிலும் கடித மூலமும் தொலைபேசித் தொடர்பு ஊடாகவும் என்னை வாழ்த்திப் போற்றினர். அவர்கள் அனைவருக்கும்
- டொமினிக் ஜீவா - 1
Racco st

Page 43
<>
GOLI TIL Sesos > LAS 396 6ñT - டாக்டர் அழகு சந்தோவடி -
அது ஒரு இனிய காலைப் பொழுதாக இருக்க வேண்டும்.
மனதில்தான்.
வெளியே எப்படியோ தெரியாது. எனது டிஸ்பென்சரி கூடு போன்ற 69 (5 அறை, ஜன் ன ல கள் கிடையாது. எனது மருத்துவ ஆலோசனை அறையைத் திறந் தால், நோயாளர்கள் காத்திருக்கும் பகுதி. அதற்கும் வெளியே எதிர்க் கட்டிடச் சுவர். அவ்வளவுதான். இனிமையை எங்கே வெளியே தேடுவது?
பார்த்து முடித்த நோயாளி வெளிறுேவதற்கிடையில், இடித்துப் பிடித்துக்கொண்டு ஒரு பெண். உள்ளே நுழைந்த அவள் இழுக் காத குறையாக ஒரு முதிர்ந்த அம்மாளை கூட்டி வந்திருந்தாள்.
இருங்கோ’ நான்.
அம்மா கதிரையில் அமர்ந்து முடிவதற்கிடையில், "இவவுக்கு ஒரு குளுக்கோஸ் ஏத்த வேணும் டொக்டர்’ என்றாள் அந்தப் பெண்.
எனக்குக் கோபம் ஜிவ் வென்று முக்கு நுனியில் ஏறியது. நான் இன்னமும் நோயாளியோடு பேச வில்லை. நோயாளியைப் பரிசோதிக் கவில்லை. நோயை நிர்ணயிக்கவும் இல்லை. அதற்கிடையில் என்ன வைத்தியம் செய்வது என்று இவள் எனக்குக் கட்டளையிடுகிறாள் என்ற (335|TULD.
82 R DSG)
r
ஆனால் முகத்தில் கூட கோபத்தை வெளிப்படுத்தவில்லை. பதிலும் கூறவில்லை. நோயாளியை நிதானமாகக் கூர்ந்து அவதானித்தேன்.
வயது அறுபது இருக்கும். கறுத்த மெலிந்த தேகம், களைத்த உடல், சாதாரண சேலைதான்.
அதையுங்கூட ஒழுங்காகக் கட்ட
வேண்டும் என்று அக்கறை எடுத்த தாகத் தெரியவில்லை. தலை முடியையும் ஏதோ இழுத்துக் கவலை யீனமாக முடித் துக் கொண்டது மாதிரி இருந்தது.
முகத் தைப் பார்த்தேன். பொட்டில்லை. குழி விழுந்த கண்களில் ஆழ்ந்த சோகம். சுருக்கம் விழுந்த நெற்றி. தனக்கும் தான் இங்கு வந்ததற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்ப்து போன்ற விடுபட்ட~போக்கு.
கூட்டிக்கொண்டு வந்த பெண்
ஏதோ சொல் ல முனைவது தெரிந்தது. அவளை முந்திக் கொண்டு அம்மாவுடன் கதைக்க ஆரம்பித்தேன்.
பெயர், வயது போன்ற மாமூ லான கேள்விகளுக்கு மெல்லிய தொனியில் பதில் சொன்னாள் அம்மா.
‘அம்மா உங்களுக்கு என்ன சுகமில்லை? என மிகுந்த பரிவோடு கேட்டேன்.

“எனக் கு ஒண் டு மில் லை’ நறுக்காக வெட்டியது.
உவ இப்பிடித்தான் சொல்லுவா, சரியான பெலவீனப்பட்டுப் போய் கிடக்கிறா. ஒழுங்கா சாப்பிடறது மில்லை. சத்தாகக் குடிக்கிறது மில்லை. இப்படிக் கிடந்தால் இவவை நான் எப்படி வாற கிழமை லண்டனுக்குக் கூட்டிக்கொண்டு
போறது? அதான் ஒரு குளுக்கோஸ்
ஏத்திவிட்டால், நான் ஒரு மாதிரிச் சமாளிச்சு இவவைக் கூட்டிக் கொண்டு போடுவன்’
உணி மையரில் S9) ud LDT பெலவீனப்பட்டுத்தான் கிடந்தாள்.
அவளை ஒருவாறு சமாதானப் படுத்தி, கட்டிலில் கிடத்தி, தாதிமார் உதவியுடன் குளுக் கோஸ் செலுத்த ஆரம்பித்தேன்.
மகளின் முகத்தில் திருப்தி. ‘நான் ஒருக்கால் கடைக்குப் போகவேனும் . குளுக்கோஸ் முடியிறத்துக்கிடையில வந்திடுவன். அவ்வளவுக் கும் பார்த்துக் கொள்ளுங் கோ. வெளியேறினாள்.
இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்குத் தானே காத்திருந்தேன்! இனி அம் மாளை மனந் தறந்து பேசவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும்.
'ஏனம்மா ஒழுங்காகச் சாப்பி டுறியள் இல்லை? உங்களுக்கு
என்ன கஷடம்?” ஆதரவாகத் தோள்மூட்டில் தட்டிக் கேட்டேன்.
எனக் கு ஒணி டுமே பிடிக்குதில்லை’
‘மகள் வந்து நிக் கிறா. உங்களையும் தன் னோடு கூட்டிக்கொண்டு போகப் போகிறா. பிறகென்ன கவலை?
அவள்
அம்மாவின் கண்களில் நீர் முத்துக்கள். 'எனக்கு லண்டனுக் குப் போக விருப்பமில்லை
'660TLDLDsr?
நான் உள்ளுக்குப் போகவேணும். மகளிட்ட சொல்லுங்கோ ஐயா
கண்ணீர் ஓடக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
அம்மா இவ்வளவு காலமும்
ஊரில தான் இருந்தவவாம். கணவன் செத்து ஒரு வருஷங்கூட ஆக வில்லை. ஆறு பிள்ளைகள். மூத்த மகள் மனிசனிட் ட கனடாவுக்குப் போறதற்காக ஒரு வருஷமா கொழும்பில நிக்கிறா.
மிச்சம் ஐந்தும் கண்டத்துக்கு ஒண்டொன்ைட்டாய் பரந்து கிடக்குது கள். நடுத்தியாள் ஐந்து வருடங்க ளாக லண்டனிலை இருந்தாள். அம்மாவைப் பார்க்க ஆசைப்பட்டு கொழும்பு வர இருந்ததால் அம்மா வையும் கொழும்புக்கு வரச்சொல்லி எழுதினாள். அவளை எதிர்பார்த்து அம்மா நாலு மாசமாகக் கொழும் பில மூத்தவளோட நிக்கிறாள். அவளுக்குக் கொழும்பே பிடிக்க வில்லை, லண்டன் வேண்டவே வேண்டாமாம்.
ஊரிஸ் எண்டால் எவ்வளவு நிம்மதி. பக்கத்தில மருதடிப் பிள்ளையார் கோயில். ஒவ்வொரு நாளும் காலையில போய்க் கும்பிட் டுட்டு வந்தால்தான் அம்மாவுக்கு நிம்மதியாயிருக்கும். காலாற நடக் கலாம். கடை தெருவுக்குத் தனியப் போகலாம். அக்கம் பக்கத்தில் சகோதரர்களும், இனசனங்களும் இருக்கினை. மனமாறக் கதைக்
கலாம். இஞ்சை என்ன கிடக்கு?
“அதோட சொந்த வீட்டில இருக்கிறது போல வருமே. நான்
šиссора вз

Page 44
சாகிறதெண்டாலும் சொந்த வீட்டில தான் சாகவேனும் . இதுகள் லண்டனுக்கு வா வா என்டு அழுங்
குப்பிடியாய்ப் பிடிக்குதுகள். எனக்
குப் போகக் கொஞ்சமும் விருப்ப மில்லை. மகளுக்குக் கொஞ்சம் சொல்லுங்கோ ஐயா’ என்றாள்.
இவளுக்கு எப்படி அம்மாவின் நிலையைப் புரியவைப் பது? நாசூக்காக ஆரம்பித்தேன்.
'உங்கட அம்மாவுக்கு மனம் சோர்ந்துபோய்க் கிடக்கு. அதால தான் இப்படி வெறுத்துப் போய்க் கிடக்கிறா. ஒரு சாதிக் குளிசை தாரன். ஒவ்வொரு நாளும் பொழுது பட ஆறு மணி போ ஒன்று கொடுங்கோ. கொஞ்சம் கொஞ்ச மாகச் சரியாகிவிடுவா. ஒரு கிழமை யால திரும்பக் கொண்டுவந்து காட்டுங்கோ’ என்றேன்.
‘அதுக்கிடையில் போடுவம் போல இருக்கு' என்றாள்.
அதுதானே பிரச்சனை. அம்மாவுக்கு வெளிநாடு போறதில கொஞ்சம் கூட விருப்பமில்லைப் போல இருக் கு. அவவைக் கட்டாயம் கூட்டிக்கொண்டுதான்
போக வேணுமோ? என நான்
மெதுவாகக் கேட்டேன்.
‘என்ன டொக்டர் இப்படிச் சொல்லுறியள்! எல்லாப் பிள்ளை யளும் வெளிநாட்டில. அக்காவோட தான் இஞ்சை இருந்த வ. அக்காவுக்கும் பிள்ளையஞக்கும் கனடாவுக்கு விசா கிடைச்சிடுத்து. அவையஞம் பத்துப்பதினைஞ்சு
நாளைக்குள்ள போயிடுவின. பிறகு
ஆர் இவவைப் பாக்கிறது?
'அம் மாவுக் குக் கொழும்பு
வாழ்க்கையும் பிடிக்கவில்லையாம். தான் ஊருக்குத்தான் போகவேனும்
84 | peઇનના
எண்டு சொல்லுறா. சில வயதான வையஞருக்கு புதிய சூழ்நிலைக ளுக்கு அட்ஜஸ்ட் பண்றது கஷடம். தானே. அவவின்ர விருப்பப்படியே விடுங்கோவன். ஊரில எண்டால் சகோதரங்கள் இனசனம் எல்லாம் இருக்காம். தான் சந்தோஷமாக இருப்பாவாம். அதுகளும் இவவை அன்பாப் பாப்பினமாம்” என்றேன்.
அவள் முகம் சிவந்தது. அவமானப் பட்டது (8 Lu T 6o வெகுண்டாள்.
நல்ல கதை கதைக்கிறியள். இவவை ஊரில விட்டுட்டுப்போனால் ஊர் என்ன சொல்லும். எல்லாரும் வெளிநாட்டில சொகுசா இருந்து கொண்டு தாயைக் கைவிட்டிட்டினம் எண்டு தானே சொல்லுவினம். எங்களுக்குத்தானே வெக்கக்கேடு
அப்பிடி ஏன் நினைக்கிறியள். அம்மாவின்ர சந்தோஷம் தானே
முக்கியம்
'அம்மாவுக்கு இனி என்ன? வயது போனவ தானே. பேசாமல் என்னோட வந்து லண்டனில பொம் மைபோல இருக்க வேண்டியது தானே. எங்களுக்கு எங்கட மான மும் மரியாதையும் தான் முக்கியம். அவ என்ன நினைச்சாலும் பரவா யில்லை. கோபத்துடன் தாயை இழுத்துக்கொண்டு வெளியேறினாள்
அடுத்த வாரம் மருந்திற்கு அவர்கள் வரவில்லை. லண்டனுக் குப் போய்விட்டதாக எதிர்வீட்டுக் காரர் சொன்னார்.
LD ab 6f 6öst லண் டன் அப்பார்ட்மெண்ட் வரவேற்பறையில் சோகம் கவிழ்ந்த முகத்துடன் அலங்காரப் பொம்மை ஒன்று வீற்றிருக்கும்.

ஒரு சந்திப்பு
எம்.எம்.காசிம்ஜி
தமிழ்ப் பேச்சு முறை
இடத்துக்கிடம் வேறுபட்டதாக
இருப்பது கண்கூடு. முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் மக்களின் பேச்சு வழக்கு கிராமத்துக்குக் கிராமம் வேறுபட்டதாக இருக்கிறது. அப் பேச்சு வழக்குகளுக்கு இசைவாகவே அக்கிராமங்களில் பாடப்பட்டிருக்கும் கிராமியப் பாடல்களும் அமைந்திருக்கின்றன.
இரு புறமும் தமிழ் க் கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் பழம் பெரும் கிராமமான மருத முனைக் கிராமத்தில் பாடப்பட்ட பாடல்களாக இச் சந்திப் பைக் குறிப்பிடும் பாடல்கள் இருக்கின்றன. தமிழர்கள் - முஸ்லிம்கள் ஒருமைப் பாட்டையும் எடுத்தியம்புவனவாக இவை தென்படுகின்றன. இருவர் மிகச் சுருங்கிய காலத்துள் அவர்களது அடுத்த சந்திப்பை தீர்மானித்துப் பிரிவதை வர்ணிக்கின் றனவாகவும் அவை அமைந் திருக்கின்றன.
மாமி மகளும் மாமன் மகனும்
கிராமியச் சூழலில் அவள் பராயம்
அடையும்வரை கூடி விளையாடு கிறார்கள். அதனால் அவர்கள் இருவருக்குமிடையில் அன்பும் பாசமும் வளர்ந்து காதலாக
மிளிரும் வேளையில் சமூகக்
 L (B i Lu MT (GB அவர்களைப் பிரிக்கிறது. அவள் பராயம்
அடைந்ததைக் கண்ட அவளின் தாய் அவளை வீட்டிலிருக்கும்படி கூறி விடுகிறாள். ஆனால்
அவர்களுக்கிடையில் அரும்பிய
காதல் சுயமாகவே வளர்ச்சி அடைகிறது.
ஒருவரை ஒருவர் சந்திக்க முயற்சிக் கிறார்கள். அவன் அவளைச் சந்திக்க அவள் வீட்டு வழியால் தினசரி செல்கின்றான். ஆனால் அவளின் மேல் அவளது தாய் வைத்திருந்த கட்டுக்காவல் அவள் அவனைச் சந்திப்பதற்குத் தடையாக இருக்கிறது.
அன்று வியாழக் கிழமை. அடுத்தநாள் வெள்ளிக்கிழமை. தீப்பள்ளய தினம். பாண்டிருப்பு திரெளபதை அம்மன் கோவிலில் அதற்கு முதல் நாளிலிருந்து வருடாந்த உற்சவ நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வுற்சவம் தமிழர் விழாவாக இருந்தாலும் சூழவுள்ள கிராமங்களி லுள்ள முஸ்லீம்களும் அதில் கலந்து வர்த்தகம் போன்றவற்றில் கலந்து சிறப்பிப்பது முன்னோர் செய்த ஒழுங்காகவும் மரபாகவும் இருந்து வருகிறது. முக்கியமாக மருதமுனைக் கிராமம் முழு மூச்சாக இவ்விழாவில் பங்கு பற்றுவது வழமை.
மனமொத்த அவளும் அவனும் தங்களுக்குத் தனிமையாகச்
šDE 85

Page 45
சந்திக் கும் வாயப் ப் பொன்றை உண்டாக்க நினைத்து முயலு கிறார்கள். அவளின் தந்தையும் தாயும் ஏககாலத்தில் வெளியே செல் வதைக் கண்ட அவள் வழமையாக அவள் வீட் டு வழியாகச் செல்லும் மச்சானுடனும் கதைக்கச் சந்தர்ப்பமொன்றை உண்டாக்குகிறாள்.
அவள் வளவு நிறைய நின்ற
முந்திரிகை மரங்கள் காய்த்துப் பழுத்திருந்தன. முந்திரிகைப் பழங்கள் சிலதைப் பறித்து வைத்துக் கொண்டு முந்திரிகை மரமொன்றின் மறைவில் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு
அவள் மச்சான் வரும் திசையை நோக்கி அவன் காணக்கூடியதாக காத்திருப்பதையும், அவளைக் கண்டு கொண்ட அவன் "தங்க மச்சி” என விழித்து அவளுடைய மச்சானரின அவனே வருகிறான் எனக் கூறுவதை முதலாம் பாடல் கூறுகிறது.
1. முந்திரியம் மரத்துக்குள்ள
முந்தானையால் மூடிக்கொண்டு பாக்கிறிளே தங்க மச்சி மச்சான் நான் போயினங்க.
அடுத்த பாடல் அவளது வாப்பாவும் உம்மாவும் வீட்டில் இல்லாததையும் அவ்வேளை அவள் வைத்திருக்கும் முந்திரியம் பழங்களை அவன் சென்று எடுத்துப்போகும் படி அவள் அழைப்பதையும் குறிப்பிடுகிறது.
2. வர்ரீளோ மச்சான் கொஞ்சம்
வாப்பா உம்மா ஊட்டிலில்லை முந்திரியம்பழம் வெச்சிருக்கேன் எடுத்துச் சுறுக்காய்ப்
(8LTuiLoofb.
2 83 R Sess
(இப்பாடலில் சீக்கிரமாய் என்று கருத்துப் பட "சுறுக்கா” என்ற கிராமியச் சொல் பாவிக்கப்பட் டிருக்கிறது.)
அவனும் அவளும் பேசிக்
கொண்டிருக்கும் போது அவள் தாய் தூரத்தே வருவதையும் கிராமியச் சூழலுக்கேற்ப அவன் செயினா மாமி அவர்களைப்
பார்ப்பதையும் அவளிடம் கூறி அச்சூழலிலிருந்து தப்பி குறுக்கு வழியால் செல்ல அவசரமாகப் பழங்களைக் கொடுக்கும் படி அவன் கேட்பதையும் மூன்றாம் பாடல் கூறுகிறது.
3. கொண்டாக மச்சி அண்ணா மாமி மட்டும் வர்ரீனங்கா குறுக்கல போயிடுவேன் செய்னா மாமியும் பாக்கினங்க.
(குறுக்கால என்பது குறுகிய
குறுக்குப் பாதை - சிற்றொழுங்கை யைக் குறிக்கின்றது)
நான் காம் பாடல் அவர்கள் இருவரும் சிறுவயதில் விளையாடி யதைஅவள் அவனுக்கு ஞாபக முட்டி அவள் பராயப்பட்ட பின் அவன் அவளுடன் பேசாமல் விட்ட தற்கு என்ன குற்றம் செய்தேன் என்க் கேட்பதைக் கூறுகிறது.
4. முந்திரயக் காட்டுக்குள்ள
முந்தி நாங்க விளையாடியத மூத்த மச்சான் மறந்திட்டீரோ குத்தம் என்ன செய்தன்கா.
(மூத்தவர்களை இளையவர்கள் பெயர் சொல்லி அழைப்பது மரபாக இல்லாததினாலும் அவனுக்குத் தம்பிமார் இருந்ததினாலும் அவள்
அவனை "மூத்த மச்சான்” என
அழைக்கிறாள்.)

அவள் செய்த குற்றம் அவள் பராயப்பட்டு பெரிய பெண்ணானது என்றும் அவர்கள் அன்று முதல் சந்திப்பது இரகசியமாகத் தான் இருக்க வேண்டும் என்றும் அவன் கூறுவது ஐந்தாம் பாடலில் கூறப்படுகிறது.
5. நீ செய்த குத்தம் மச்சி
பெரிய மனுசி ஆனதுங்க இனி நாம சந்திப்பது கள்ளத்தனமா யிருக்கணுங்க.
அடுத்த பாடல் அவர்களின் அடுத்த சந்திப்பை பற்றி குறிப்பிடுகிறது. அடுத்தநாள் பள்ளயம். அவளு டைய வாப்பாவும் உம்மாவும் ஊரவர்களும் பள்ளயத்திற்குப் போய்விடும் போது அவர்கள் இருவரும் கதைத்திருக்க அவளை அவன் வீட்டிலிருக்கும் படி கூறுவதைக் குறிப்பிடுகிறது.
6. நாளைக்குப் பள்ளயங்க
எல்லாரும் அங்க போயிடுவம்
5 Dád psцLL 905 நான் வருவன் கதைச்சிருக்க
அவர்கள் இருவரும் தனித்துப் பேச அவள் வீட்டிலிருக்கும்படி அவன்
கூறியதை மறுத்து அவள் வருசத்தில் ஒருநாள் வரும் பள்ளயத்திற்கு அவள் முக்கியத் துவம் கொடுப்பதையும், அதைப் பார்க்க அவள் செல்லும் அவள் தோழி பொன்னியின் வீட்டுக்கு அவனை வரும்படி அழைப்பதையும் ஏழாம் பாடலும், அவள் வாப்பாவின் விருப்பத்திற்கும் உம்மாவின் எதிர்ப்புக்கும் இடையில் அவளை அவன் மணம் முடிக் காமல் விட்டால் அவள் மரணித்துவிடுவாள் என்று பயமுறுத்துதை கடைசிப் பாடலும் கூறுகின்றன. 7. வருசத்தில் ஒருநாள் மச்சான்
நான் போயிடுவன்
பொன்னியோடை அவ ஊட்டுக்கு வெந்திருகா பேசலாம் தீப்பாய மட்டும்
8. வாப்பாவுக்கு விருப்பம் மச்சான் உம்மாதான் வேனாங்கினம் நீ என்ன வேணாண்டின்னா பீங்கான் தான வேங்கப்
போவேன்.
(பீங்கான் வாங்கப் போவதென்பது மரணிப்பதைக் குறிக்கும் கிராமியப் பழமொழி)
‘துரைவி’யின் வெளியீடுகள்:
LD606)u 1865 &Aglds6Ong's 356i 33 மலையக எழுத்தாளர்களின் கதைகள் உழைக்கப் பிறந்தவர்கள் 55 எழுத்தாளரின் மலையகக் கதைகள்
u T6A) Tu தெளிவத்தை ஜோசப் மூன்று குறுநாவல்கள் சக்தி பால ஐயாவின் கவிதைகளிர் 85, ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு -13.
2 R 69 Sai 87

Page 46
ஒரு கடிதம்
முப் பதாண் டு மேலாக வெளிவரும் ஒரு இலக்கிய இதழ்: யாழ். சமூகத்தின் பல்வேறு அடக்கு முறைகளைத் தாண்டி வளர்ந் துள்ள இதன் ஆசிரியர்: நான் அவ் விதழின் பெருமைப்படத்தக்க விடயங்கள்.
இங்கிலாந்து மக்களால் இளவரசன் எனக் கருதப்படும் சாள்ஸ் என்பவரின் மனைவியான டயானா கணவனைப் பிரிந்து வாழ்கையில் அவரது காதலனாகக் கூறப்படும் ஒரு நபருடன் பரிஸ் நகரில் காரில் செல்கையில் விபத்தேற்பட அவ்விருவரும் இன் னொருவருமாக மூவர் இறந்து போயினர். டயானாவின் மரணம் திட்டமிடப்பட்ட கொலை என்றொரு கருத்தும் நிலவுகின்றது. ஏனைய பத்திரிகைகள் வியாபார நோக்கில் டயானாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளையும் படங்க
ளையும் வெளியிட்டன. ஆனால் இவரைப்பற்றி "மல்லிகை" குறிப்பிட் டிருப்பது எனக்கு அதிர்ச்சியாக
உள்ளது. ஏனெனில் - சாள்ஸ் திருமணத்திற்கு முன் பல பெண் களுடன் தொடர்புடையவராக இருந்தார் என்ற பத்திரிகைச் செய்திகள் கடல் கடந்து நமக்கும் எட்டியிருக்கையில் இங்கிலாந்தில் இருந்த டயானா இவ்விடயங்களை அறியாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும் டயானா - சாள்ஸ் திருமணம் இடம்பெற்றது. பின்னர் அவர்கள் விவாகவிலக்குப் பெற்றுக் கொண்டனர். டயானா விவாக விலக்குப் பெறுவதும் இன்னொருவ ரைத் திருமணம் செய்வதும் அவரது தனிப்பட்ட விடயங்கள். ஆனால் அவரைப் பற்றித் தரக் குறைவான படங்களும் செய்தி களும் வெளியாக இடமளித்தது மன்றி வளர்ந்த பிள்ளைகள் இருக்
88 čŽDEGIO
வாசகன் . இவை
கையில் காதலனாகக் கூறப்படும் ஒருவருடன் ஊர் சுற்றக் கிளம்பி விட்டார். இப்படியான பெண்ணொரு வளுக்கு எமது சமுதாயத்தில் எவ்விதமான இடம் வழங்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இது இவ்வாறிருக்க டயானாவுக்கு சமூகசேவகி என்றொரு முத்திரையு மிடப் பார்க்கிறார்கள். சாள்ஸின் நடத்தையை அறிந்து கொண்டும் அவரைத் திருமணம் செய்தது பணத்திற்காக அன்றேல் பிரசித்தம டைவதற்காக இருக்கலா மென்று கருதப்படுகையில் அவரது "சமூக சேவையும் பிரசித்தம் பெறும் நோக்கினைக் கொண்டது எனக் கூறுவதும் பிழையாக இல்லாதிருக் கலாம். இவர் அமைதியான வாழ்வை விரும்பியிருந்தால் விவாக விலக்குப்பெற்று எங்கோ ஓரிடத்தில் செய்திகளில் இடம் பெறாமல் வாழ் கின்ற சாள்ஸின் சகோதரி ஆன் போன்று ஒதுங்கிப் போயிருக்கலாம்.
இறந்து போன ஒருவரைத் தூற் றுவது நிச்சயமாக எனது நோக்க மல்ல. ஆயினும் மேற்குறிப் பிட்ட விடயங்கள் ஊடாக நான் சொல்ல வருவது இதுதான். "மல்லிகையில் குறிப்பிடப்படும் அளவுக்கு டயானா தகுதியானவரல்ல." அவர் தகுதியா னவர் என்று நீங்கள் கருதிக் கொண்டு அவரது பெயரைக் குறிப் பிட்டிருந்தால் அதற்கு மாற்றுக் கருத்தையும் தெரிவிக்கும் படி கேட்க எனக்கு உரிமையுண்டு. ஏனெனில் நீங்கள் மல்லிகையின் நிறுவினரும் ஆசிரியருமாக இருக் கலாம், ஆனால் எம் போன்ற வாசக ர்களின்றி அது 32 வயதை அடைந் திருக்க முடியாது என்பது உங்களு க்கும் தெரியும். இன்றைக்கோ நாளைக்கோ முறிந்து விழும் நிலையில் உள்ள இங்கிலாந்தின் முடியாட்சிக்கு நீங்கள் முண்டு கொடுக்க வேண்டாம்.
- ஒரு வாசகன் -

மலையகத் தமிழ்ச் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும்
- சாரல் நாடன் -
மலையகத் தமிழ்ச் சஞ்சிகை கள் பத்திரிகைகள் என்ற நோக்கில் நமது பார்வையைச் செலுத்து வதற்குப் போதுமான அளவில் கடந்த எண்பது ஆண்டு காலத்தில் 170 க்கும் அதிகமான வெளியீடுகள் அச்சில் வெளிவந்துள்ளன.
லாரிமுத்துக் கிருஷ்ணாவின்
ஜனமித்திரன் பத்திரிகை 1918 இல்
வெளியாகியது. இலங்கை வாழ் இந்தியர்களின் நலன் பேணும் முதற் தமிழ்ப் பத்திரிகை இதுதான். இந்த வரிசையில் 1994 ல் கண்டியி லிருந்து வெளிவரத் தொடங்கி இன்னும் வந்து கொண்டிருக்கும் அகிலம் என்ற திங்கள் வெளியீடு ஒரு கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகையாக காலத்துக்கேற்ற விதத்தில் உருவாகியுள்ளது.
இந்த எழுபத்தாறு ஆண்டுகளில் தோன்றி மறைந்த பத்திரிகைகளும், இன்று புதிதாக வெளிவந்துகொண் டிருக்கும் பத் திரிகைகளும் சஞ்சிகைகளும், நூற்றியெழு பதாண்டு கால சரித்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும் மலையகத் தமிழரின் வாழ்க்கை யோடும் வரலாற்றோடும் ஒன்றிப் போயுள்ளன.
மலையகத் தமிழரிடையே இன்றேட்பட்டுள்ள அரசியல் விழிப் புணர்வுக்கும், இலக்கிய வளர்ச் சிக் கும் இவைகள் தமது
காலத்தில் ஆற்றிய பணிகளே காரணமாயமைந்தள்ளன. இந்திய வம் சாவளித் தமிழர் களின் இலங்கைத் தொடர்பு ஆரம்ப காலந் தொட்டே அடக்குமுறை, அலட்சிய மனோபாவம், இனக்குரோதம் என்ற எதிர்ப்பலைகளைக் கண்டது தான்.
கற்றறிந்தவர் களிடையே தோன்றுகின்ற கோட்பாடு, நெறி முறை, அரசியல் சித்தாந்தம், குழுவாக இணைந்து செயற்படும் நிலைமைக்கு இட்டுச்செல்கிறது. உரத்த சிந்தனைக்கு ஊடகமாக விளங்கும் வெளியீட்டு முயற்சிகள் அவர்களிடையே தோன்றுகின்றன. சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் புதிது புதிதாகத் தோன்றி, தமது நோக்கத்துக்கான தேவை இருக்கும் வரை உயிர் வாழுகின்றன. சில தமது நோக்கத்தை வியாபித்துக் கொள்வதன் மூலம் தொடர்ந்து வாழுகின்றன.
அற்ப ஆயுசுடன் மரணித்துப் போன வெளியீடுகளில், தமது காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்துள்ள சஞ்சிகைகளும் பத்திரி கைகளும் இன்றைய வளர்ச்சிக்கு பின்னணியில் பலமான அத்திவாரத் துக்கு உதவியுள்ளன என்பதை நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
இலங்கைத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பிரதேச வாரியாகவே
89 NZ

Page 47
முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. சஞ்சிகை, பத்திரிகை முயற்சி களும் இவ்விதமாகவே ஆரம்பிக்கப் பட்டன. இலங்கையில் தேசியப் பத்திரிகை என்று முன்பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் பத்திரிகைகளுக்கு நேர்ந்தது இந்த அடிப்படையில் தான்.
இனி, அடிப்படையில் பிரதேச வாரியாக அமைந்து, மலையக மக்களின் வளர்ச்சிக்கும் இலக்கிய வெளிப் பாட்டு முயற்சிக்கும் உதவிய வெளியீடுகளைப் பார்ப் போம். கல்வியறிவில் குறைந் திருந்த ஒரு சமூகத்தினரிடையே (இலங்கை குடிசனத்தொகையில் ஒரு காலகட்டத்தில் 16 சத வீதத்தினராகவும், தற்போது 7 சத வீதத்தினராகவும் உள்ள) எழுத வாசிக்கத் தெரிந்தவர்களை நம்பி தொடக்கப்படும் முயற்சி ஒன்று முட்டாள்தனமானதாக இருக்க வேண்டும்; அன்றேல், முரட்டுப் பிடிவாதமானதாக இருக்க வேண்டும்.
முரட்டுப்பிடிவாதம் என்பதும் தளராத கொள்கை என்பதும் அடிப் படையில் ஒன்றுதான். பாராட்டுத லுக்கான குணாம்சம் தான்.
இந்தியாவின் தென்மாநிலத்தி லிருந்து, காசுப்பயிர்த் தோட்டங் களில் (கோப்பி, தேயிலை, றப்பர், தென்னை) கூலியாக உழைக்கவும், கங்காணியாகத் தொழில் பார்க் கவும் உபாத்தியாராக நியமனம் பெறவும் ‘கண்டிச் சீமைக்குக் கொண்டுவரப்பட்ட மக்களையும், ரயில்வே பாதை அமைப்பதற் கென்று விசேடமாக அழைத்து வரப்பட்ட மக்களையும், இந்தியா
2 90 R TDC)
வின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இலங்கையில் குடியேறிய வணிக, வங்கி, நிலப்பிரபுத்துவ, பத்திரிகை நோக் குடைய மக் களையும் “இந்தியாக்காரன்" என்றும், "வடக் கத்தியான்” என்றும் "தோட்டக் காட்டான்" என்றும் புறந்தள்ளும் போக்கு இலங்கையிலிருந்தது.
இப்புறந் தள்ளுதலிலிருந்து விடுபடவும், இதுகாலவரையிருந்த நீடு துயரில் போக் கி தமது சமூகத்தை முன்னேற்றவும் - கல்வி கேள்விகளில் ஈடுபட்ட - தற்போதய இருப்புக்களில் ஆத்திரமுற்று, விடுதலைக்கும் வேகமான மாறுத லுக்கும் ஆசைப்பட்ட இளைஞர்கள் முனைந்தார்கள். சஞ்சிகைகளும், பத் திரிகைகளும் அந்த முனைப்பின் வெளிப்பாடுகள்தாம்.
இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த இருபது களிலும், முப்பதுகளிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் பத்திரி கைகள் வெளிவந்த பின்னணியை " ஆற்றலும் ஆர்வமும் கொள்கை பிடிப்பும் லட்சிய வேகமும் புதுமைகள் செய்யும் துடிப்பும் பெற்றிருந்தவர்கள் மொழிக்கும் கலைகளுக்கும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் நல்லன சேர்க்கும் சாதனங்களாக பத்திரிகைகளைப் பயன்படுத்த முனைந்திருந்தனர்" என்று கூறுகிறார் வல்லிக்கண்ணன்,
இதழியல் என்ற தனது கட்டுரையொன்றில்,
இலங்கை தமிழ்
சஞ்சிகைகளுக்கும், பத்திரிகை களுக்கும் இக்கூற்று பொருந்துகிற தென்பதை அதே காலப் பகுதி களில் வெளியான பத்திரிகைகள் மெய்ப்பிக்கின்றன.

ஜனமித்திரன்’ இலங்கையில் இந்தியர்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய லாரி முத்துக்கிருஷ்ணாவால் வெளியிடப் பட்டது. இந்திய துவேஷம் இங்கு வேர் விட ஆரம்பித்த வேளை அரசியலில் இந்தியர்களின் ஈடு பாட்டை வளர்க்க ஆரம்பித்த இப்பத்திரிகையில் செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது.
தென்னிந்தியாவில் வர்த்தக மித்திரன், சுதந்திரன் என்ற பத்திரிகைகள் நடாத்தி அனுபவம் பெற்ற கோதண்டராம நடேசய்யரை ஆசிரியராகக் கொண்டு தேசநேசன் பத்திரிகையை ஆரம்பித்தார். மலையகத் தமிழரிடையே சிறப்பாகத் தோட்டத் தொழிலா ளரிடையே பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத் தவும் ,
பத்திரிகைக்குக் கடிதங்கள்
எழுதுபவர்களை உருவாக்கவும் ‘தேச நேசன் அடி எடுத்துக் கொடுத்தது.
இலங்கைக்கு இந்தியாவி லிருந்து தொழிலாளர்கள் வர
வேண்டுமென்ற தோட்டத் துரை
மார்களுக்கு ஆதரவான லாரி முத்துக்கிருஷ்ணாவின் போக்கு க்கும் தொழிலாளர்களை மேலும் மேலும் இலங்கைக்குத் தருவிப்பது நிறுத்தப் படவேண்டும் என்ற நடேசய்யரின் போக்குக்கும் ஒத்து வரவில்லை. "தேசநேசன்' தடை பட்டுப் போனது. தேசபக்தன்' என்ற
பெயரில் நடேசய்யர் ஒரு தீவிர
அரசியல் பத்திரிகையை ஆரம் பித்தார். தமிழகத்தில் திரு. வி. கலியாணசுந்தரனார் நடாத்திய தேசபக்தனை பல வழிகளில் நினைவு படுத்தும் விதத்தில்
நடேசய்யரின் தேசபக்தன் அமைந்
திருந்தது. தோட்டத் தொழிலாளர்க
ளிடையே ஆரோக் கரியமான அரசியல் தொழிற்சங்க சிந்தனை கள் வேர் விட்டு வளர்வதற்கு தேசபக் தன் பத் திரி கையே காரணமாயமைந்தது.
தேசநேசன் 1921 ல் வெளியான தினசரி என்பது கவனத்தில் கொள்ளப்படல் நலம். தேசபக்தன் ஆரம்பத்தில் கிழமைக்கு மூன்று என்று வெளியாகி 1929 ல் தினசரியாக வெளிவந்தது. இந்த பத்திரிகையில் நடேசய்யர் ஆற்றியபணிகளுக்கீடாக பின் னெவரும் செய்யவில்லை என்பதே அவரது அசுர ஆற்றலை வெளிப் படுத்தும் . அரசியல் நிகழ்வுகள் குறித்து உள்ளர்த்
தத்துடன் 'கார்ட்டூன்கள் வெளியிடு
வதை 'இந்தியா’ பத்திரிகையில் சுப்ரமணிய பாரதியார் 1907 ல் ஆரம்பித்து வைத்தார். அந்த வழி நின்று நடேசய்யர் தமது தேசபக்தனில் 1929 ல் கார்ட்டுன்கள் வெளியிட்டிருப்பதை வியக்காம லிருக்க முடியாது.
இக்காலப்பகுதியில் இலங்கை வாழ் இந்தியர்களுக்கு கட்டுப்படுத் தப்பட்ட அளவில் அரசியலில் வாக்களிக்கும் உரிமை இருந்தது. எனவே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகைகளை வேறு சிலரும் நடாத்தினர். அவர்களில்
குறிப்பிடக்கூடிய ஒருவர் கே.
சத்திய வாகேஸ் வர அய்யர். இலங்கையில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் நடேசய்யரின் அரசியல் கருத்துக்களுக்கு மாறு பட்டவர். " இலங்கை - இந்தியன்” என்ற வார ஏட்டை ஆங்கிலத்திலும் தமிழிலும் நடாத்தினார். 1928 ஆம்
2 GG pagsapa, at Q ヴエ

Page 48
வருடத்தில் வெளியான 'இலங்கை - இந்தியன்’ வாரப் பத்திரிகையில் சத்தியவாகேஸ்வரருடன் எச். நெல்லையாவும் இணைந்து ஆசிரி யராகப் பணியாற்றினார். இந்தியர் களின் இன்னல்கள், தோட்டத் தொழிலாளர்களின் சிரமங்கள், மகளிர் வாக்குரிமை குறித் தெல்லாம் தீவிர சிந்தனைக ளடங்கிய கட்டுரைகள் அப்பத்திரி கையில் வந்துள்ளன.
இக்காலப்பகுதியில், பத்திரிகை களின் சிறப்பு உணரப்பட்டு சத்யமித்திரன், ஊழியன் என்ற வேறு பலவும் வெளியாகின. பத்திரிகை வெளி யீட்டில் மகாத்மா காந்தியின் இலங்கை வருகையும் ஜவகர்லால் நேருவின் வருகையும் அவர் தோற்றுவித்த காங்கிரஸ் இயக்கமும் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தின. அதன்பின்தான் தாம் பாரத நாட்டின் புதல் வர்கள் என்றதோர் உணர்வு மலையக மக்களிடையே பீறிட்டெழுந்தது. இலங்கை அரசாங்கத்தின் போக்கு இந்திய வம்சாவளியினருக்கு விரோதமாக அமையத் தொடங்கிய 1939ல் தோன்றிய பத்திரிகைகள் பாரதகுலதீபம் , பாரத சக்தி, பாரதவீரன், பாரதயுவசக்தி என்ற பெயர்களைக் கொண்டிருந்ததை அவதானிக்கலாம். விழிப்புணர்ச்சி ஏற்படுத் தும் அரசியல் கருத்துக்களைப் பரப்புவதோட மை யாது, இந்த மக்களை
அணிதிரட்டும் முயற்சியும், இந்த
மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட 1948ல் தேவைப்பட்டது.
தொழிலாளர் முன்னேற்றத்
திற்குத் தொண்டுபுரியும் வாரப்பத்தி
ரிகையாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட நவஜீவன் அந்த
92 kg осира
ஆண்டு வெளிவரத் தொடங்கியது. மலைநாட்டுக் காந்தி இராஜ லிங்கத்தின் சகோதரர் சின்னையா செயப் தரிப் ப த தரி ரி ைக ைய பின்னாட்களில் தோற்றுவித்த ரா. மு. நாகலிங் கம் , இதன் பின்னணியில் செயற்பட்டனர். டி.எம். பீர் முகமதுவின் எழுத்துக்கள் நிறையவந்தன. சிறப்பாக 1952ம் ஆண்டு இலங்கை இந்தியன் காங்கிரஸ், மேற்கொண்ட நூறுநாள் சத்தியாக்கிரகத்தின் போது, சத்தியாக்கிரகச் செய்திகளை உடனுக் குடன் தர வேண் டி நவஜீவன் கிழமைக்கு மூன்றாக வெளிவந்தது. இந்தியர் வாக்குரி மையைப் பறிப்பதற்கென்றே இயற்றப்பட்ட் சட்டங்கள் என பிரஜா உரிமைச் சட் டத் தைத் தோலுரித்துக் காண்பித்ததில் நவஜீவனுக்கு தனி இடமுண்டு. கே.எஸ். காளிமுத்து இதன் ஆசிரியர். இந்த காலப்பகுதியில் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தமிழ்த் தினசரிகளும் , சஞ்சிகைகளும் நிறைய வெளிவர ஆரம்பித்திருந்தன. அவைகளில் இடம் பெறும் கவிதை, சிறுகதை யைப் போல நவஜீவனிலும்
* கவிதை, சிறுகதைகள் வெளிவந்
திருப்பது மலையகப் பத்திரிகை உல்கில் ஒரு முக்கியமான
அம்சமாகும். அதற்கு முன்பு ‘தேசபக்தன்' பத்திரிகையில் கவிதைகளும், கட்டுரைகளும்
வந்திருந்தன. “மூலையில் குந்திய முதியோன்' என்ற நடேசய்யரின் பத்திரிகையில் உலக சம்பவங் களை உள்ளடக்கிய தொடர்கதை வெளிவந்திருந்தது. சிறுகதைகள் வெளிவந்திருக்கவில்லை. தோட்ட மக்களைப்பற்றிய சிறுகதைகளை முதன்முறையாக நவஜீவன் தான்

பிரசுரித்தது. ஏ.எஸ். வடிவேலு, எச். செம் பீ, டி.எம். பீர் முகம்மது ஆகியோர் இவைகளை எழுதினர். கவி சிதம் பரநாதபாவலரின் ஜானகியின் துணிவு என்ற மலை நாட்டுத் தொடர் நவீனம் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
அறுபதுகளில் கண்டியிலிருந்து வெளியான செய்தி, ரா.மு. நாகலிங்கம் அவர்களின் சேவையை இன்றும் பதித்து வைத்திருக்கும் பத்திரிகையாகும். 1948 ல் பிரஜாவுரிமைச் சட்டத்தின் போது நவஜீவன் செய்ததற்கொப்ப 1964 ல் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தக் கொடுமையை எடுத்துக் காட்டிய பல வழிகளில் நவஜீவனின் மறு அவதாரம் என்று எண்ணும் விதத்தில் வெற்றி கரமாகச் செயற்பட்டது. பத்திரிகை யின் அமைப்பும் அவ்விதமே இருந்துள்ளது. எனினும் செய்தி, மலையகப் பிரதேசத்துக்கு முக்கிய த்துவம் கொடுத்தாலும் இலங்கை யின் இலக்கிய செல் நெறியை ஊக்குவிக்கும் பாங்கில் மு. தளையசிங்கத்தின் 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி தொடர் கட்டுரைக்கும், எஸ். அகஸ்தியரின் தொடர் நாவலுக்கும் இடம் கொடுத்தது. நெடுந்துாரம் என்ற மலைச்செல்வனின் தொடர்நாவலும், தொடுவானம் என்ற மாத்தளை
வடிவேலனின் தொடர் நாவலும்
செய்தியில் வெளிவந்த மலையக நாவல்களாகும். 'பிறைசூடி என்ற பெயரில் இர. சிவலிங்கமும், மயில்ராவணன் என்ற பெயரில் நா. சுப்ரமணியமும் இதில் எழுதிய அரசியல் கட்டுரைகள் சிறப்பானவைகள்.
அறுபதுகளில மலையகம் இலக் கரியப் புத் துனர்வு பெற்றதென்பது இன்று பலரும் ஏற்றுக்கொண்ட உண்மை. இந்தப் பெருமையில் மு.கு. ஈழக்குமார் என்ற கவிஞனுக்கும், க.ப.சிவம் என்ற பத்திரிகையாளனுக்கும் நிறைய பங்குண்டு. 'முத்தமிழ் முழக்கம்' என்ற பெயரில் ஆரம்பித்துப் பின்னர் மலைமுரசு’ என்ற பெயரில் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிய சஞ்சிகை தான் LD 60) 6v) uU 85 LÖ என்ற பிரக்ஞையைப் படைப் பாளிக ளிடமும், வாசகர்களிடையேயும் உண்டு பண்ணியது.
தமிழகத்து ‘மணிக்கொடியும் யாழ்ப்பாணத்து 'மறுமலர்ச்சி’யும் ஏற்படுத்திய உத்வேகத்துக்கு ஒப்பாக மலையகத்தில் இலக்கிய உத்வேகத்தை ஏற்படுத்திய சஞ்சிகை மலைமுரசு ஆகும். மலைமுரசு சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகளையும் நடாத்தியது. இன்றைய மலையக முன்னணி எழுத்தாளர்கள் இச் சஞ்சிகையில் வளர்ந்தவர்கள். கடித இலக்கியத்தை மலையகத் தில் ஆரம்பித்தது மலைமுரசுதான். இர. சிவலிங்கத்தின் கடித உருவிலான அரசியல் கட்டுரைகள் மிகவும் வரவேற்பைப் பெற்றன. இலக்கிய உணர்வு ததும்பி வழியத் தொடங்கிய இந்த வேளையில்தான் 'மலைப்பொறி' என்ற சஞ்சிகையும் "செய்தி? பத்திரிகையும் 'கலை ஒளி' பத்திரிகையும் வெளியாகின. இவையனைத்தும் நின்று போன போது, மலையகத்தில் வெளியான கனதியான இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது 'அஞ்சலி என்ற மாத சஞ்சிகையாகும். 1970ல்
šod 28

Page 49
வெளியான இச்சஞ்சிகை 1971ல்
மலையகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. இம் மலரில பதினெட்டு மலையகப் படைப் பாளிகளின் ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன.
66
மலையகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்கள் பலரின் கருத்துச் செறிவு மிக்க படைப்புக்கள் -வாசகர்களுக்கு நல் விருந்தளிக்கும் என்பது திண்ணம்"என்ற ஆசிரிய வுரையில் குறிப்பிட்டிருப்பது ஒன்றும் மிகையானதல்ல.
மலையகச் சஞ்சிகைகளின் இலக் கரிய முயற்சிகளுக்கு ஆக்கபூர்வமான பணிகளாற்றியன என்று நதி, தரீர்த்தக் கரை, கொழுந்து, நந்தலாலா ஆகியவ ற்றைக் குறிப்பிடலாம். பின்னைய இரண் டும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன. இளைஞர் களின் கவனத்தையும், சிந்தனை யையும் சமூக உணர்வோடும் பிரதேச அபிமானத் தோடும் வளர்த்தெடுக்கும் பணிகளை இவைகளில் காணலாம்.
மலையகத்தில் இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வக் குழுவினர் சில சஞ்சிகைகளை வெளியிடுகின்றனர். தோட்டப் பிரதேசத்தினருக்கான கூட்டுச் செயலகம் வெளியிட் ட
‘குன்றின்குரல் ஒரு குறிப்பிட்ட
(அந்தனி ஜீவாவும், கொடியும் ஆசிரியக்
காலத்தில்
്ജ ബ്
களை
குழுவில் இயங்கிய போது) நிறையவே இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டது.
மலையகத்தில் இயங்கும் முன்னணி தொழிற்சங்கங்கள் உத்தியோகபூர்வமான பத்திரிகை நடாத் துகளின் றன. இவைகளிலும் இலக் கிய ஆக்கங்கள் வெளிவருகின்றன.
இவைகளுள் சிறப்பித்துக் கூறத் தக்க வை, ബി. ബി. வேலுப் பிள்ளை ஆசிரியராக இருந்தபோது தொழிலாளர் தேசியசங்கம் வெளியிட்ட மாவலி சஞ்சிகையாகும் . அவரின் மறைவுக்குப் பின்னர் இது வெறும் சங்க ஏடாக தரம் குறைந்து போனது. காங்கிரஸ்' பத்திரிகை அறுபதுகளில் D 606) 5 விழிப்புணர்வுக்கு உதவுமாப்போல் சிறுகதை போட்டி நடாத்தியது.
ஏராளமான சிறுகதைகளும் ,
கவிைைதகளும் கட்டுரைகளும் வெளியாகின. தமிழறிஞரான விஜயசுந்தரத்தின் மறைவுக்குப் பிறகு இதலும் தரம் பேணப்படவில்லை.
மலையகத்தில் வெளியான பத்திரிகைகளிலும் சஞ்சிகை களிலும் அவ்வக்காலக் கருத்துக் களுக்கு நிறையவே இடம் கொடுக் கப் பட்டிருக்கின்றன. இலக் கரிய வளர்ச் சியைப் எழுதப்போகும் ஓர் ஆசிரியனுக்கு இவைகள் நிச்சயம் பயன்படும்.
டொமினிக் ஜீவாவின்
14 சிறுகதைகள் சிங் களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளிவரவுள்ளது. இந்தப் பரீட்சார்த்த முயற்சிக்கு உங்களது ஆதரவு தேவை.
2 94. R GSB

தெளிவத்தை ஜோசப்
கறுப்பில் சிவப்புக்கரை போட்ட கம்பளியின் கதகதப்பு அதிகாலைக் குளிருக்கு இதமாக இருக்கிறது. இருந்தும் பல்லைக் கடித்துக் கொண்டு கம்பளியை உதறிவிட்டு சின்னவர் எழுந்துவிட்டார்.
சின்னவர் என்றால் சின்னக் கணக்குப்பிள்ளை. கண்ணைக் கசக்கிவிட்டுக் கொண்டார். கருமை இன்னும் விலகவில்லை. நிலம் தெளியவில்லை. காலைத் தடவிப் பார்த்துக்கொண்டார். சொறசொற வென்றிருந்தது - கல்லைப்போல.
கணுக்காலுக்குக்கீழே அடியில் கால்வாசிப் பாதம் கன்னங்கரேல் என்று.
கட்டிலை விட்டிறங்கியவர் காலை ஒருக்களித்து ஊன்றி மெதுவாக நடந்து கோடிப் பக்கம் போய் அமர்கின்றார்.
அவர் அமர்வதற்கும் தடால் என்று கூரைத் தகரத்தின் மேல் ஏதோ 5, 6 DT 65 ஒன்று விழுவதற்கும் சரியாக இருக்கிறது.
"அறையவேண்டும் றாஸ்கல் களை" என்று முனகிய வண்ணம் நடந்தவர் அண்ணாந்து 'கம்பளி மாசி மரத்தைப் பார்க்கின்றார்.
கானோரம் வளர்ந்து தகரக் கூரைக்கு மேலாகக் கிளை படர்ந்து நின் ற மரத் தில் கறுப்பும் சிவப்புமாய் கம்பளிப் பூச்சிகள்
போலவே சடைசடையாய்.
பழங் கள் .
பள்ளிக் கூடம் போகும் பையன்கள் பழம் பறிக்க வீசி எறியும் கம்புகள், கற்கள் சடைத்து நிற்கும் மரக்கிளைகளில் தொக்கி நிற்கின்றன.
அப்படித் தொக்கி நின்ற கம்போ, கல்லோ தான் சின்னவர் உட்கார்ந்த நேரம் பார்த்து டமார் என்று விழுந்திருக்கிறது, கூரைத் தகரத்தில்.
மரத் தை அணி னார் நீ து
பார்த்தபடி நடநதவர் கானோரக்
கல்லில் காலை உரசிக்கொண்டார்.
சுரீரென்றது.
வலது காலைத் தூக்கி இடது கையால் இலேசாகத் தடவிக் கொடுத்துக்கொண்டார்.
மாடு புண்ணாக்குத் தின்பது போல "மொச் மொச்' சென்று விரல்கள் அந்தக் கறுப்பின் மேல் மேய்ந்தன. தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் வாசல்கல்லில் அமர்ந்து காலைத் துTக் கி இடதுத் துடை மேல் வைத் துக் கொண் டு பறக் பறக்கென்று சொறிந்தார்.
அரிப்பு அடங்குவதாக இல்லை.
R DGIEE DS RN

Page 50
விரலைத் திருப்பிப் பார்த்தார். நகத்திற்கு மேலாக ஒரு கால் அங்குல உயரத்துக்கு சதையே மேவி நிற்கிறது.
நகம் கடிக் கும் பொல லாதது உணர்கின்றார்.
பழக்கம் என்பதை
வெடித்துக் கிளம்பும் பேய் அரிப்பிற்கு ஈடுகொடுத்துச் சொறிய விரல்களில் நகம் இல்லை.
காலை விந்தி விந்தி நடந்தவர் ஜன்னல் விளிம் பைத் தடவி சீப்புடன் மீண்டும் அமர்ந்தார்.
அரிப்பு அடங்கியதும் லேசாக எரிச்சல் தொடங்கியது. பொட்டுப் பொட்டாய் நீர் துளிர்த்து நின்றது. சாரத்தை இழுத்து ஒத் திக் GassT60öTLITj.
பையன் தேநீர் விளாவிக் , கொண்டிருந் தான் . பலகைக் கட்டையை இழுத்துப் பொட்டு அடுப்பின் முன் அமர்ந்தவர் காலைத்துக்கி அடுப்பு மேடையில் வைத்துக் கொண்டார்.
அடுப்புமேடையின் மண்சூடு நீர் கசியும் அந்த இடத்திற்கு மிகவும் இதமாக இருந்தது.
பட்சிகள் ஓசை எழுப்பத் தொடங்கின. கணுக்கால் மறையக் கட்டிய வேஷடியுடன் நொண்டுவது தெரியாமல் நொண்டி நொண்டி பிரட்டுக் களத்தை அடைந்தார்.
வெற்றிலை 6) Tulf வெறுங்காலுமாய் பெரிய கணக்கர் நின்று கொண்டிருந்தார்.
கைப் பிரம் பைத் தரையில் ஊன்றி அதன் மேல் வளைவில்
96 ±
லாவகமாய்ச் சாய்ந்து கொண்டிருந்
தவரின் வேஷடி முழங்காலுக்கு மேல் மடிந்து முன்னிடைக்குள் செருகி நின்றது.
கைச்செக்ரோலில் லயித்துக் கிடந்த பெரியவர் முதலில் பார்த்தது சின்னவரின் கணுக்கால் மறைக்கும் வேஷடிக்கட்டை, பிறகு பார்த்தது அவருடைய முகத்தை.
"றோட்டுக் கூட்டுறாப்புல வேஷடி கட்டிக்கிட்டா மலையேறி வேலை பார்க்க முடியுமான்னு படியளக்குற தொரை எங்கிட்ட கேக்குறான்” என்று சின்னவருக்கும் தனக்கும் மட்டுமே கேட்கக் கூடியதாக முனகிக் கொள்ளுகின்றார்.
米 米 米
சின்னவரின் பாதத்தில் ஒரு சத அகலத்தில் பொட்டுப் போல லேசாக அரிக்கத் தொடங்கியபோது சொறிந்து கொள்வதுடன் நிறுத்திக் கொண்டார்.
அதுவே பிறகு ஐம்பது சத அகலமாகி ஒரு ரூபாய் அகலத்துக் குப் படரத் தொடங்கியதும் இது என்னவாக இருக்கும் என்னும் ஆராய்ச்சியில் இறங்கினார்.
பூச்சிக்கடியா. படையா. சொறியா. சிரங்கா என்று நிர்ணயித் துக் கொள்ள முடியாத ஒரு மாத காலத்துக்குள் அது வளர்ந்து கால்வாசிப் பாதத்தை ஆக்ரமித்துக் கொண்டது.
லயம் பார்க்க வந்த தோட்டத்து டிஸ்பென்சர் கொழுந்து லொறியில் ஏறிப் போய்விடும் உத்தேசத்துடன் கொழுந்து நிறுக்கும் இடத்துக்கு வந்து ல்ொறி இன்னும் வராததால் சின்னவருடன் பேசிக் ெ ܫ ருந்தார்.

சந்தர்ப்பம் அப்படி அமைந் திராவிட்டால் சின்னவரை எல்லாம் மதித்து டாக்டரய்யா பேச்சுக்கு வந்திருக்கமாட்டார்.
அவர்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாகவே கால் சட்டை தொப்பிக்காரர்கள்.
சின்னவரோ -
வாசல் கூட்டி வைரவனின் வயிற் றரில் பிறந்து ஏதோ அரைகுறையாகப படித் து எப்படியோ சின் னக் கணக்கப்பிள்ளையாகி லயத்தில்
இருந்து வெளியேறி இன்று ஸ்டாப்
குவாட் டஸ் ஸஉக் குள் குடி நுழைந்தவர்.
அவருக்கும் இவருக்கும் எட்டுமா..!
சின்னவரின் காலைப் பார்த்த
அய்யா "திஸ் இஸ் எக்சிமா” என்றார்.
சின் னவர் மெளனமாகத்
தலையை ஆட்டிக்கொண்டார்.
“காலைச் வைத்திருக்க வேண்டும். தினசரி காலை மாலை கழுவ வேண்டும். அதெல்லாம் கவனிக்காததால் தான் இது போன்ற தோல் வியாதிகள் 'உங்களுக்கு வருகின்றன"
அய்யா உங்களுக்கு என்றது
சின் னவருக் குத் தனியாக உபயோகித்த மரியாதைப் பதம் அல்ல. எந்தச் சமூகத்தை நம்பி வயிறு வளர்க்கின்றாரோ அந்தச் சமூகத் தையே அப் படிக் கிண்டலாகக் குறிக்கின்றார் என்பது, “உங்களுக்கு’ என்ற அந்தச்
சுத் தமாக"
சொல்லுக்கு அவர் கொடுத்த அழுத்தத்தில் புலனாகின்றது.
"ஐயான்னா சப்பாத்து மேசுல காலை வைச் சிருப் பீங்க பங்களாவுக்குப் போனப்புறமும் சிலிப்பர்லே வைச்சிருப்பீங்க என்னால ஆவுமாங்க? அதோ பாருங்க எட்டேக்கர் உச்சி
அதுல ஏறி பத்தேக்கர் வறக்கட்டு
GT6
弥
வழியா எறங்குனேன்னா . 60)85uJIT ... 6T60).5i LIFT d5(53g) .
"அது கெடக்கட்டுங்க அய்யா இதுக்கு மருந்து தருவீங்களா? நானும் ஏதேதோ போட்டுப் பாத் துட் டேன். ஒன் னுக் கும்.
மசியுதில்லே."
"இது சிம்பிள் கணக்குப்பிள்ளே . ஒரு சின்னப் போத்தல் அனுப்பினா ஒரு மருந்து அனுப்புறேன். கர்பாலிக் சோப் தெரியுமா. செவப்பு கலர்லே இருக்குமே. சுடுதண்ணி போட்டுக் கழுவிட்டு நல்லா ஒத்திட்டுக் கோழிமயிரிலே தொட்டுத் தொட்டுப் போடணும். சரியா ரெண்டே கெளமியில கால் சுகமாயிறும்."
சின்னவருக்குத் திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சி. கால் ஒன்றுக்குமே ஆகாது போய்விடுமோ என்று பயந்து போயிருந்த அவருக்கு டாக் டரயப் யாவின் பேச்சு வரப்பிரசாதம் போல் இருந்தது.
"ஆறிப் :போயிறும் தானுங்களே..?" என்று மறுபடியும்
(335 L (6 உறுதப்படுத் துரிக் கொள்ளுகின்றார்.
“ஆறாமே? சின் னக் கிளாக் கரயப்யா தங்கச் சிக்கு
இதைவிட மோசமா இருந்துச்சே.
த்துை 97

Page 51
நானே தான் கழுவி மருந்து போட்டேன். ஒரே மாசத்துல் தளும்பு கூட இல்லாமப் போச்சு.”
’அவுங் களும் கழுவாமல் , குளிக் காமல் இருந்தாங்களோ.." என்று சின்னவர் நினைத் துக் கொண் டாலும் கேட்கவில்லை
"அந்தத் தங்கச்சிக்கும் இதே எடத்துலயாங்க?" என்று கேட்டவர் ஐயா ஒரு வினாடி தயங்கியதைக் கண்டதும் 'ஏன் கேட்டோம். நமக்கேன் வீண் வம்பு’ என்று எண்ணிக் கொண்டார்.
ஒரு வினாடி தயங்கிய ஐயா "மொளங்காலுக்கு கொஞ்சம் மேலே" என்றபடி லொறியில் ஏறிப் போய்விட்டார்.
'நானே கழுவி நானே மருந்து போட் டேன்’ என்று அவர் கூறியதிலிருந்து மொளங்காலுக்கு கொஞ்சம் மேலேயா இருக்காது கூடவே மேலேயாத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டவர் எந்த எடமா இருந்தா நமக்கென்ன இது ஆறுனா சரி’ என்றவாறு காலைப் பார்த்தார். -
தோல் வெடிப்புற்று நீர் கசிந்து காய்ந்து கோரமாய்க் கிடக்கிறது அந்த இடம்.
R 米 米 米 கார்பாலிக் சோப் போட்டுக் கழுவிவிட்டு மிகவும் நம்பிக்கை யுடன் அய்யா அனுப்பியிருந்த மருந்தைப் பூசத் தொடங்கினார் சின்னவர். " .
ஆனால் கால் அரையாகி முக் கால் வாசிப் கன்னங்கறேல் என்னு சொறிக்
98
S
கால் கை
பாதமுமே
கல்லாய் மாற மாற அவருடைய நம்பிக்கையும் மாறிவிட்டது.
அந்தம்மாவுக்குப் பூசக்கொடுத்த அதே மருந்தைத்தான் தனக்கும் கொடுத்திருப்பார் என்று அவரால் நம்ப முடியவில்லை.
மருந்து வியாதிக்கு ஏற்றவாறு வித்தியாசப்படாமல் ஆளுக்கு ஏற்றவாறு வித்தியாசப்படுவது என்ன விந்தையோ!
அய்யாவின் மருந்துதான் காலை ரொம்பவும் மோசமாக்கிவிட்டது என்றாலும் தப்பில்லை.
அவர் கொடுத்தனுப்பிய மருந்துப் போத்தலைத் தூக்கித் 'தலையைச் சுற்றி வீசிவிட்டு ஒரு சில நண்பர்கள் கூறியபடி ஒரு Éläb(8FFTLD (NIXODERM) Lņ6őT60)6OT வாங்கி வைத்துக் கொண்டார். `
அடுப்புக்கு மேல் இருக்கும் கறுத்தச் சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பதுபோல் ஆள்காட்டி வீரலால் நிக்சோடம்மைத் தொட்டு அள்ளிப்
பாதத்தின் கறுப்பில் பூசிக்கொண்டு
விந்தி விந்தி நடந்துவரும் சின்னவரைபட் பார்க்கப் பரிதாபமாக
இருக்கும்.
மட்டக் கொழுந்து மலையைப் பார்வையிட்டு விட்டு இறங்கிக் கொணி டிருந்தவர் கானைத் தாண்டுவதற்காக கானொட்டில் கிடந்த கல்லில் இடது காலை
ஊன்றின்ார்.
கல் ஆடி உருளவும் தடுமாறிப் போனவர், சமாளித்து ஒரு எட்டில் கானைத்தாவி வலது காலை ஊன்றி நின்றார்.

நீட்டிக் கொண்டிருந்த ஒரு தேயிலைக்கம்பு தாண்டும்போது எக்சீமாவில் கீறிவிட்டது.
சுரீர் என்றது சின்னவருக்கு.
உயிர் நிலையில அடி விழுந்ததுபோல் வயிற்றுக்குள்ளே ஒரு சுழற்சி.
கண்கள் கலங்கிவிட்டன.
காலை இறுகப் பற்றிப்
பிடித்தபடி தேயிலைக்குள் அமர்ந்து கொண்டார்.
வெள்ளையாகப் பூசப்பட்டிருந்த நிக் சோடத் துக்கும் மேலாக தண்ணிரும் இரத்தமும் கசிந்து இழைந்து கொண்டிருந்தன.
மெளனமாகச் சிறிது நேரம்
அழுது ஆற்றிக் கொண்டவர் மண்ணை அள்ளி லேசாகத் தெள்ளி கசியும் இரத்தத்துக்கு மேல் தூவி விட்டுக் கொண்டார்.
இது போல் எத்தனையோ
தடவைகள் கம்பும், கல்லும், குச் சியும் , கோலும் கறிப் பிளந்திருக்கின்றன.
அப்போதெல் லாம் அவர் இரத்தம் வடியும் காலுடன் நேராகப் பெரியவரிடம் வந்து முறையிடுவார்.
"பாதி தங்களா.. இந்த
எளவுக்காகத்தான் ஒரு சப்பாத்தை
மாட்டிக்கிறேன்னு உங்க கிட்ட கேட்டுக் கிட்டே இருக்கேன்.” என்பார் அழாத குறையாக
பெரிய வரா கொடுப்பார்!
அ ைசந் து
KK
என் காலைப் பாருங்க எத்தனை காயம். எத்தனை கீறல்.
எனக்கு சப்பாத்து போட்டுக்குற தெரியாதா? தொரை ஒரு மாதிரியா
பாப்பானே. ‘என்ன இன்னைக்கு
சப்பாத்தோட வர்றாரு . நாளைக்கு கார்ல வருவாரோ'ன்னு கருவிப் புட்டான்னா. நாம அவ்வளவுதான்."
அதற்கு மேல் பெரியவரிடம் கெஞ்சியும் பலனில்லை வாதாடியும் பலனில லை என்பது சின்னவருக்குத் தெரியும்.
நேராகத் துரையிடம் போய்க் கேட்டுவிடவும் முடியாது. "இவனும் திங்க மாட்டான் திங்கறவனையும் விட மாட்டான் வைக்கப்போருல படுத்துக்கிட்ட நாய் மாதிரி.." என்று முனகியபடி நடந்துவிடுவார்.
காட்டோரத் தேயிலையடியில் பாசி மண்டுவது போல் காலில் கறுப்பு மண்டிக்கொண்டே இருந்தது.
இதுக்கெல்லாம் இங்கிலீஸ் மருந்து ஒத்துவராது என்று பலரும் கூறக்கேட்ட சின்னவர், பதுளை டவுனில் உள்ள ஒரு மலையாள வைத்தியரிடம் போய் காலைக் காட்டினார்.
"கேஸ் முத்திப்போச்சு” என்று தொடங்கிய வைத்தியர் காலை நன்றாக உற்றுப் பார்த்தார். நான் மருந்து தாறன். மறு கெளம வரணம். தோலுக்குப் பூசி ஆவப்போறதில்லை. உள்ளுக்குக் குடிக்கணும்." என்றார்.
"மொதல் ல வ யத் தைக் கழுவனும் பெறகு பத்தியம் இருக்கணும்.இறைச்சி, கருவாடு நாடப்படாது. வாரக் கெழம வரட்டும். நான் ரெடி பண்ணித் தாறன்" என்று அனுப்பிவிட்டார்.
2 R D695685 99

Page 52
அவர் சொன்ன அடுத்த வாரம் சின்னவர் போய் நின்றார்.
ஒரு சிறிய ஹோர்லிக் ஸ் போத்தல் நிறைய லேகியமும் வயிற்றோட்டத்துக்குக் குடிக்க ஒரு பொட்டலமும் கொடுத்த வைத்தியர் "முப்பது ரூபாய் முடியுது" என்று முடித்தார்.
“காசைப் பாத்தால் காலைப் பாக்க முடியாதே" சின்னவர் தன் னை ஆறுதல் படுத்திக்கொண்டார்.
காசை வாங்கி மேசையில் போட்டுக் கொண்டே வைத்தியர் கூறுகின்றார் ‘புண்ணுல ரத்தம் கசியக்கூடாது. நகம் படக் கூடாது. நல்லா அரிக்கும் ஆனா சொறியக் கூடாது.சொறிஞ்சு ரத்தம் வந்ததோ இந்த ஜென்மத்துல ஆறாது. கணுக்காலுக்கு மேல ஏறிச்சோ அவ்வளவுதான். கால்முழுக்கப் படர்ந் துரும் . ஒரு கால் ஊனமானாலும் ஆச் சரியப் படுறதுக்கில்லே.”
சின்னவர் பயந்து போனார்.
"நான் தோட் டத் துல சின்னக்கணக்கப்பிள்ளை வைத் தியரே. தேயிலைக்குள்ற ஏறணும் எறங்கணும் . குச் சி கிச் சி ஒரசாமலா இருக்கும்.? ரத்தம்
வராமலா இருக்கும்."
வைத்தியருக்குக் கோபம் வந்துவிட்டது. டிராயருக்குள் கையை விட்டு முப்பது ரூபாயைத் தூக்கி மேசைமேல் போட்டுவிட்டு மேசைமேல் எடுத்து வைத்திருந்த மருந்துப் போத்தலை விருட்டென்று
இழுத்து அலமாரியில் மற்ற
போத்தல்களுடன் வைத்து விட்டார்.
"நான் மருந்து கொடுத்தா சொகமாகனும், காசுக்கு மட்டும் நான் வைத்தியம் பாக்குறதில்லே. புண்ணுல ரத்தம் வரப்படாதுன்னா வராமப் பாத்துக் குறணும் ." என்றவாறு ஒரு மலையாளப் பத் திரிகைக் குள் புதைந்து கொண்டார்.
அவரை சமாதானப்படுத்தி மருந்தை வாங்கிக் கொள்ள சின்னவர் பட்ட பாடு பெரும்பாடு!
கடைசி முறையாகவும் பெரிய கணக்கரிடம் கேட்டு மனமொடிந்து போன சின்னவரால் ஒரேயொரு முடிவுக்குத்தான் வரமுடிந்தது.
米 米 米 வெற்றிலை 6)j Tu_LĎ வெறுங் காலுமாய் பெரட் டுக் களத்தில் நின்றுகொண்டிருந்த பெரியவர் புதுச்சின்னவருக்காகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
புதுச் சின்னவரை இன்னும் காணவில்லை.
டக் டக் கென்ற சப்தம் சின்னக் கணக்கப்பிள்ளை வீட்டுப் படிகளில் கேட்கிறது.
முழங் காலுக்கு மேல் மடிக்கப்பட்டு முன்னிடைக்குள் செருகிய வேட்டியும் வெறுங் காலுமாய் கைச்செக்றோலுக்குள் லயித்துக் கிடந்த பெரியவர் கண்களை உயர்த்திப் பார்த்தார்.
பகீரென்றிருந்தது.
அரைக்கால் சட்டை சப்பாத்து மேல்சோடு சகிதம் தோட்டத்துச் சின் னத்துரை போல் வந்து கொண்டிருந்தார் புதிய சின்னவர்.
(தமிழமுது - 1968)

201 - 1/1, Sri kathiresan St.
Colombo - 13. VS47 T'Phone: 320721. LANA)(ÖhŐly főV)
7.
வெளியீடுகள்
பித்தன் கதைகள் - கே. எம். எம். ஷா (சிறுகதைத் தொகுதி)
மல்லிகை முகங்கள் - டொமினிக் ஜீவா (65 தகைமை சான்றவர்களின் அட்டைப்படத்
தகவல்கள்)
அந்நியம் - நாகேசு. தர்மலிங்கம் (சிறுகதைத் தொகுதி)
தலைப் பூக்கள் - டொமினிக் ஜீவா
(55 மல்லிகைத் தலையங்கங்களின் கொகுப்பு நூல்)
விடை பிழைத்த கணக்கு - திக்குவல்லை கமால்
(சிறுகதைத் தொகுதி)
மாத்து வேட்டி - தெணியான் (சிறுகதைத் தொகுதி)
அனுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா (வாழ்க்கை அனுபவங்கள்)
ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல்
- டொமினிக் ஜீவா
(பல்வேறு பேட்டிகள்)
மீறல்கள் - மு. பஷீர் (சிறு கதைத் தொகுதி)
2 R Self
O

Page 53
10.
11.
12.
13.
14.
15.
16
17.
18
19.
20.
எங்கள் நினைவுகளில் கைலாசபதி - டொமினிக் ஜீவா
(தொகுப்பு நூல்)
எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்
- ம. தேவகெளரி (விமர்சன நூல்)
டொமினிக் ஜீவா - சிறுகதைகள் (தேர்ந்தெடுக்கப் பெற்ற 50 சிறுகதைகளின் தொகுப்பு)
ஒரு தேவதைக் கனவு - கெக்கிராவ ஸஹானா (சிறுகதைத் தொகுதி)
தெரியாத பக்கங்கள் - சுதாராஜ் (சிறுகதைத் தொகுதி)
. உணர்வின் நிழல்கள் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
(சிறுகதைத் தொகுதி)
. தூண்டில் - டொமினிக் ஜீவா
(கேள்வி - பதில்)
அந்தக் காலக் கதைகள் - தில்லைச்சிவன்
(நடைச் சித்திரம்)
. நினைவின் அலைகள் - எஸ். வி. தம்பையா
(தன் வரலாற்று நூல்)
பாட்டி சொன்ன கதை - முருகபூபதி (சிறுவர் இலக்கியம்)
முன்னுரைகள் - சில பதிப்புரைகள் - டொமினிக் ஜீவா.
O2
Fg
SC
GS),

கடிதங்கள்
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் தற்காலக் கொடுமுடிகளில் ஒருவ ராக நீங்கள் இன்று பேசப்படுவது, எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. உண்மையில், உங்களது சேவையும், தியாகமும் பாராட்டத்தக்கன. இலக்கியமாகவே ஆகிவிட்ட நீங்கள் இன்னும் பல் லாண்டு காலம் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.
சமீபத்தில் நீர்கொழும்பில் நடைபெற்ற கெளரவமும் பாராட்டும் விதந்து கூறத்தக்கது. அடுத்து, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய விருதும் மூதறிஞர்
பட்டமும் உங்களுக்குக் கிடைத்
திருப்பது மிகப் பொருத்தமானதும் பாராட்டத்தக்கதுமாகும். டொமினிக் ஜீவா என்ற தனி நபருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டுக்
களும் விருதுகளும் மல்லிகைக்கும்
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும் கிடைத்திருக்கும் பாராட்டுக்களும் விருதுகளுமாகும். '
டொமினிக் ஜீவாவுக்கு வாழ்த் துக்களும் பாராட்டுக்களும். NA
சம்மாந்துறை. ஜமீஸ் அப்துல்லா.
' ' 2
நான் அடிக்கடி மல்லிகையை நினைத்துப் அத்துடன் உங்களையும் எண்ணி வியட்பதுண்டு. நீங்கள் யாழ்ப்பா
LJT ff t] Lig5!!60ổĩ (6.
ணத்தை விட்டுப் போனது - இன்று கொழும்பில் நிலைகொண்டிருப்பது - எனக்கென்னமோ மனதில் பூரண திருப்தியைத் தரவில்லை. மல்லிகையை என்னைப் போன்றவர்கள் எங்களது சொந்தச் சஞ்சிகையாகவே நினைத்துப் பார்த்துப் பழகி வந்துள்ளோம். உங்களையும் உடன் பிறவாச் சகோதரனாகவே கருதிப் பழகி வந்திருக்கிறோம். மல்லிகை எங்களது மண்ணின் சஞ்சிகை.
நீங்கள் மல்லிகைக் கட்டுடன் யாழ்ப்பாணத் தெருக்களில் அங்கு
மிங்கும் நடந்து செல்வதைப் பல
தடவைகளில் நான் நேரில் பார்த்திருக்கின்றேன். வேர்க்க விறுவிறுக்க நீங்கள் நடந்து போவதைக் கண்டு நான் உள்ளுரப் பெருமைப்பட்டிருக்கிறேன். இதைப் பலருக்கும் சொல் லியும் இருக்கிறேன்.
இன்று அந்தப் பெருமை எங்களது மண்ணுக்கு இல்லாமற் செய்துவிட்டீர்களே?
சிரமங்கள் சமகாலத்தில் நேரடியாகப் பார்ப்பவர்களுக்குப் பெரிய கஷ்டங்களாகத் தென்பட
நாளை வரலாற்றுப் பதிவுகளாகப் பேசப்படும் போது, அந்தப் பூமி பெருமைப் படும். w இது உங்களுக்கும் பொருந்தும்; யாழ்ப்பாணத்துக்கும் பொருந்தும்.
மீண்டும் இந்த மண்ணுக்கு மீண்டு வந்து மல்லிகையைப் பூக்க வைக்க முயற்சிப்பீர்களா என ஏங்கும் சுவைஞர்களில், நானும் ஒருவன்.
2 s Saab OS,

Page 54
யாழ்ப்பாணத்தில் உங்களைச் சுற்றி - மல்லிகையை ஒட்டி - ஒரு சிறிய குழுவே இயங்கி வந்தது. இது பெரிய தாக்கத்தை ஏற்படு த்திய கூட்டமல்ல. மல்லிகையைத் தேடிப்போய் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வரலாம் என நம்பி இயங்கி வந்த ஒரு இளைஞர் பகுதி. உற்சாகமான உங்களது ஒத்துழைப்பும், இயல்பாகவே நீங்கள் மனம்திறந்து பழகும் முறையும், இந்தச் சிறிய குழுவை இலக்கியத் துடிப்புடன் இயங்க
வைத்துக்கொண்டிருந்தது.
இன்று வெறுமையாக இருக்கின்றது.
இங்கு சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்த சூழல் மாத்திரமல்ல,
அந்த இலக்கியச் சூழலில் மனச்
சந்துவிஷ்டியுடன் இயங்கி வந்தவர் 'களும் இன்று திசைக்கொருவராகப்
பிரிந்து கிடப்பதை நினைத்து மனசு
தினசரி வருந்துகிறது.
மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். மல்லிகை இந்த மண்ணில்
வேர்கொண்டு தளைத்த மாசிகை.
அது இந்த மண்ணுக்கே உரியதுமாகும்.
அரியாலை க. மோகனதாசன்
மல்லிகை கொழும்பிலிருந்து இன்று வெளிவருவது சரிதான். ஆனால் நீண்ட இடைவெளிவிட்டு வருகின்றதே, இது சரிதானா?
O4 Self
NN
யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த மல்லிகைகளுக்கும், கொழும்பிலிருந்து இதுவரை வெளிவந்த மல்லிகைகளுக்கும், பாரிய வித்தியாசத்தை என்னால் பார்க்க முடிகிறது.
இன்று பிரசுரத் துறையில் வேறு எ நி த க கால த த லே யுமி காணமுடியாத பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் புதுப்புது உத்திகள் இந்தத் துறையில் புகுந்து, அச்சுத்துறையையே அதிசயப்பட வைக்கிறது.
இந்தப் பாரிய மாற்றத்தை நாம் கணக்கில் எடுக்காது போனால்,
எமது துறையில் நாம் பின்
தங்கியவர்களாகிவிடுவோம்.
நமது ரசிகள்களும் முடிந்தால் கைவிட்டு விடுவார்கள்.
உங்களது மன ஆதங்கம் எனக்கு விளங்குகிறது. பிறந்த மண் விசேஷம் தான். அதற்காக மல்லிகையைப் பழையபடியே அச்சமைப்பில் கொண்டுவருவது இன்றய நிலையில் சாத்தியமானது தானா?
நமது கலை, இலக்கியங்கள் மாத்திரமல்ல, நமது மொழி கூடச் சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நவீன சாதனங்களுக்கு நாம் நம்மையே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மல்ல்கை புதிய அமைப்பைப்
பயன்படுத்தி நவீன அச்சமைப்புடன் வெளிவருவதைக் ST6

மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் இன்னும் சிறப்புகளுடன் மல்லிகையை வெளியிட ஆவன செய்யுங்கள்.
2.3T616) ம. தேவதாஸன்
4.
மல்லிகைக்கு இந்தக்கட்டத்தில்
கடிதம் எழுதுவதையிட்டுச் சந்தோசப்படுகிறேன்.
இலங்கையில் இருந்த சமயம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு
முன்னர் மல்லிகையைத் தொடர்ந்து
விடாமற் படித்து வந்தவன்.
விதி வசத்தால் புலம் பெயர்ந்து பாரிஸ்"க்கு வந்துவிட்டேன். இருந்தும் மல்லிகையை குறிப்பாக உங்களை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது வழக்கம்.
உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ என்னமோ தெரியாது,
ஒருநாள் ம்ல்லிகைக்கு முன் றோட்டிலிருந்த "தாமோதர விலாஸ்
தேநீர் க் கடையில் நாங்கள் இருவரும் தேநீர் அருந்திவிட்டு, வெளியே வந்த சமயம் நான் சொன்னேன்: "கூடிய கெதியில் நான் வெளிநாடு போகப்போறன் அங்கை கோழிக் கறியோடு சாப்பிடும்
(3.b JG D6) 6) Tf ஜீவா உன்னையெல்லாம் நினைச்சுப்
பாப்பேன்" என்று சொன்னவன் நான்
எத்தனையோ கோழிக்கறிச் சாப்பாடு இந்தப் பிரஞ்சு மண்ணில் சாப்பிட்டுவிட்டேன். அத்தனை தடவைகள் என்றில்லாவிட்டாலும்
கூட, பலதடவை “என்ர ஜீவா'வை
நான் நினைத்துப் பார்த்துவிட்டுத் தான் சாப்பிடத் தொடங்குவேன். அத்தனை ஆத்ம பந்தம் நமக்குள் இது பல பிறவிகளின் விட்டகுறை
தொட்டகுறை.
கூடிய சீக்கிரம் இலங்கைக்கு வரவுள்ளேன். வந்தவுடன் சந்திக்க வேண்டிய ஆட்களில் நீங்களும் ஒருவர். என்னைப் போலவே உம்மீது அபிமானம் கொண்ட ஓர் நண்பர் சமீபத்தில் ஊர் வந்திருந் தார். கொழும்பில் உம்மைச் சந்தித்த கதையைக் கதை கதை யாக ரசித்துச் சொன்னார். அவர்தான் உமது முகவரியும் தந்தார். தொவைபேசி நம்பரும் தந்துதவினார். ... "
9d...ligibl விலாசம் கிடைத்ததும் நான் கொண்ட சந்தோசம் இப்படி அப்படிப்பட்டதல்ல.
வருகிறேன்; வருகிறேன், நேரில் சந்திப்போமே.
LIIIflorზ ச. வரதராஜன்
வரவேற்கப்படுகின்றன.
இலக்கியத் தரமான கடிதங்கள், கருத்துகள் பெரிதும்
གི་་་་་་་་་་་་་་་་་་་་་་
R DGSE) is 105

Page 55
சிறுகதை
புரியாதது
அலுவலகத்திலிருந்து வரும் போது பொழுதுபட்டிருந்தது. புவனா ஜன்னலடியில் நின்று பார்த்துக்
கொண்டிருந்தாள். "பிளாட்டின்
இரண்டாவது மாடியில் வீடு. அங்கிருந்து வீதியைப் பார்ப்பதற்கு வசதியாகவே ஜன்னல் அமைந் திருந்தது. வீடுகளை டிசைன் பண்ணுகிறவர்கள் பரந்த அறிவு படைத்தவர்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று.
நான் படியேறி வாசலுக்கு வர புவனா கதவைத் திறந்தாள். புவன என் மனைவிதான். புவனேஸ்வரி என்பது இயற்கைப் பெயர். ஆனால் அவளுக்குப் பெயர் இட்ட பெற்றோர்
முதற்கொண்டு எல்லோருமே
புவனேஸ் என்றுதான் அழைப் பார்களாம். மற்றவர்கள் செய்யும் தவறையே நானும் செய்ய
விரும்பாது (திருமணமான போது)
புவனா எனச் சுருக்கினேன் மன்னிக்க வேண்டும். இது என் மனைவியைப் பற்றிய கதையல்ல என்பதை முதலில் உறுதி செய்கிறேன். எனக்கே போரடிக்கிற விஷயத்தை உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்குமளவுக்கு நான் மோசமான ஆளல்ல.
“கனகசுந்தரம் வந்தவர்" - புவனா அன்றைய செய்தியைத் தெரிவித்தாள். அதில் ஏதும் சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும், வந்ததும் வராததுமாகச் சொல்வ
O3 R Self
-சுதாராஜ்
தால் ஏதும் முக்கியத்துவம் இருக்கலாம்.
"இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்திட்டு இப்பதான் போறார்!” அவர் காத்துக்கொண் டிருந்ததற்கு அல்லது காக்க வைக்கப்பட்டதற்கு எனது சுணக்கம் தான் காரணம் என புவனா குறைப் படுகிறாளோ எனத் தோன்றியது.
"இருங்கோ.வந்திடுவார் என்று சொன்னனான்.நாளைக்கு வாறன் என்று சொல்லியிட்டுப் போட்டார்."
"ஏனாம்? ”
"கை மாற்றாய். காசு பத்தாயிரம் கேட்டவர்!"
எனக்குத் திக் என ஒரு அடி அடித்தது. அதிர்ச்சியை வெளிக் காட்டாது எழுந்து அறையுட்
சென்று உடையை மாற்றினேன்.
புவனா துவாயை எடுத்துத் தர பாத்றுமுக்குள் நுழைந்தேன்.
கிடைக்கும் சம்பளத்தில் அன்றாடப் பாடுகளைப் பார்ப்பதே பெரும்பாடு. மாதாந்தச் சம்பளத்தை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தும் என்போன்ற அரசஊழியனுக்கு வேறு கதி இல்லைப்போலும்,
துண்டுவிழும் தொகை இல்லாமலே
சமீபளத்தை எடுத்துச் சரிக்கட்டக் கூடிய நிலை என்றாவது வருமா என்றெல்லாம் எண்ணுவதுண்டு.

இந்நிலையில் இப்படி ஏதாவது பணத்தேவை ஏற்பட்டால் முழு JIT Lid OgbTLssliai(BLD. E69t. நஷ்டப்பட்ட நேரங்களில் ஒருவருக் கொருவர் உதவி கேட்பதும் உதவி செய்வதும் சாதாரண விஷயம் தான். ஆனால் இல்லாதபோது என்ன செய்வது?
கனகசுந்தரம் நீண்டகாலமாகவே கொழும்பில் உத்தியோகம் பார்ப்பவர். குடும்பம் யாழ்ப்பாணத்தி லிருந்தது. யுத்தநிலைமைகளாலும் போக்குவரத்துக் கஷ்டங்களாலும் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஊருக்கே போகாமலிழுந்தார். காணும் போதெல்லாம் சொல்லி வருத்தப்படுவார். போய்வருவதற்கு போதுமான நாட்கள் லிவு தாறாங்க ளில்லை என மேலதிகாரிகள் மீது
பழியைப் போடுவார். போக்குவரத்
துக் கே எவ்வளவு செலவு பிடிக்கும். அதை அனுப்பிவிட்டால் வீட்டுச்செலவுகளுக்கு உதவும் என சமாதானமும் சொல்லிக்கொள்வார். கொழும்புக்கே குடும்பத்தை கூட்டி வந்துவிடலாமென்றால் முடியாம லிருக்கிறது என நடைமுறைக் கஷடங்களை குறிப்பிடுவார். பொருளாதார காரணங்களால் அவருக்கு லீவில் போய் வர முடியவில்லை. குடும்பத்தை கொழும்புக்குக் கொண்டுவந்து சேர்க்கவும் தயங்கிக் கொண்டிருந் தார். கடைசியாக, யாழ்ப்பாணம் இன்னும் நிலைமை மோசமாக குடும்பம் கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டது என்பதை அண்மை யில் அறிந்தோம். அதையொட்டித் தான் அவருக்கு பணநெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடும்.
கனகசுந்தரம் ஒருபோதும் பணத்தேவைக்காக இப்படி வீடு
வெகு தூரத்தில்!
தேடி வந்தவரல்ல. புவனாவின் வழியில் உறவுக்காரரானாலும் அது அவ்வளவு நெருக்கமான கொண்டாட்டம் இல்லை. ஒருவித கெளரவப் பிரச்சனை கருதி அவர் கடன் படுவது போன்ற தேவைகளை எங்களிடத்தில் தவிர்த்திருக்கலாம். இப்போது வேறு ஒரு வழியு மின்றியே வந்திருப்பார். இந்நிலை யில் அவருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டுமெனத் தோன்றியது. சம்பள நாட்களெனில் கையிலிருப்பதை மாறிக் கொடுக்கலாம். தேவையெனின் றோலடிக்கலாம். இப்போது எங்கு போவது?
இரண்டொரு நண்பர்களைச் சென்று பார்த்துக் கேட்டு வரலாம் என்று தோன்றியது. யார் யாரைப் பிடிக்கலாம் எனக் கணக்குப் போட்டவாறு கிளம்பினேன்.
முதலில் தேடிப் போனது விக்னேவழிடம் உத்தியோகத்துடன் சைட் பிஸினசும் செய்கிறவன். கையில் காசு பிழங்கக்கூடிய ஆள். ஆனால் அவன் வீட்டில் இல்லை. மனைவியுடன் ஏதோ பார்ட்டிக்குப் போயிருக்கிறானாம். வர லேட் ஆகுமென பிள்ளைகளிடமிருந்து பதில் கிடைத்தது.
பின்னர் சென்றேன்.
"வாங்கோ.வாங்கோ! என்ன இந்த நேரம்? ”
"சும்மாதான்!. பாத்திட்டு போகலாமெண்டு!" என எதை யாவது சொல்லி சிரித்தேன். அந்த ஹஸ்யத்தில் அல்லது எனது சிரிப்புக்கு மதிப்பளிக்குமுகமாக அவர்களும் சிரித்தார்கள். அது
2 STZ
பரமசிவத் திடம்

Page 56
ஹஸ்யம் அல்லாமல் வேறு ன்ன்ன? நேரம் கெட்ட நேரத்தில் வருகிறார் (கழுத்தறுக்க 1), பிறகு, சும்மாவாம் GDL DIT !
பரமசிவத்தின் மனைவி அவசர
<9ị 6)J 3: 0 LD T đó குசினிக்குள் நுழைந்தார். \
"வேண் டாம் . ரீ போட
வேண்டாம்!" எனக் குசினிக்குள் குரல் கொடுத்தேன். அலைச்சல்ப்பட்டு வந்ததில் ஒரு தேநீர் அருந்தினால் நன்றாயிருக்கும் போலிருந்தது உண்மை.
பரமசிவம் மிகுந்த பொறுமை
சாலி. வந்ததுமே எப்படிக் கேட்பது
என்று புரியாமல் சுற்றிவளைத்து தேவையில்லாத விஷயங்களை யெல்லாம் பேசிக் கொண்டிருக் கிறேன். அவரும் சுவாரஸ்யமாக (அல்லது அப்படிப் பாவனை செய்து) கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அவரது பொறுமையைச் சோதிப்பது அழகல் ல என எண் ணிக் கொண் டு வந்த காரணத்தைச் சொன்னேன்.
அதைக் கேட்டதும் அவர் கவலையடைந்தார். அவரிடம் பணம் இல்லை.
"அப்ப நான் வாறன் ! " என எழுந்தேன்.
“என்ன ரீயும் குடிக்காமல் போறிங்கள்? "
"இல்ல. வேண்டாம்..இனிப் போய்த்தான் சாப்பிடவேணும் ! " நான் வெளிக்கிட, "இஞ்சை போட்டிட்டன்" என அவரது மனைவி
யின் குரல் குசினியிலிருந்து
கேட்டது. போடப்பட்ட தேநீரைக் குடித்துவிட்டுப் போகலாமே எனத் திரும்பவும் அமர்ந்தேன்.
எனினும்,
மெளனம்
மிஸிஸ் பரமசிவம் சொன்னது சரி! தேநீருடன் கோப்பையைப் போட்ட சத்தம் கேட்டது. அவசரப் ulʼ uç? (Gbé  öÉ 3m (66uíb. u JLDöf6)] Líb எழுந்து குசினிக்குள் ஓடினார். தேநீரின் சூடு மனைவியின் கையையோ காலையோ பதம் பார்த்து விட்டதாம். (நல்ல வேளை எனது வாய் பதம் பார்க்கப்படாமல் தப்பித்துக்கொண்டது.) அநுதாபங் களைத் தெரிவித்துக் கொண்டு வெளியேறினேன்.
வீட்டுக்கு வந்து, சாப்பாட்டு
மேஜையில் அமர்ந்தபோதும் எனது மனம் ஒரு நிலையில் இல்லாதி ருந்தது. இனி, யார் யாரைப் பார்க்கலாம்? அவர்களை எப்படி
வளைத்துப் பிடிக்கலாம்? எந்த
நேரத்தில் சந்திக்க வசதியா யிருக்கும்? நாளைக்கு ஒஃபீசுக்கு 656 (3LTL6)TLDIT?
சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது விசித் திரா இன்னொரு அடி போட்டாள் விசித்திரா என்பது எனது இரண்டாவது மகள் . (பயப்படவேண்டாம் - இந்தப் பெயரைப் பற்றிய ஆராய்ச்சிக்
குறிப்புகள் இங்கு இடம் பெறாது.)
"அப்பா!. எனக்கு நாளைக்கு ஐநூறு ரூபா வேணும். ரியூஷன் '.பீஸ் கொடுக்க!”
நான் மெளனமாயிருந்தேன். சம் மதத்துக் கு அறிகுறியா இல்லையா என அவளுக்குப் புரியவில்லை. (ஏன், எனக்கே புரியவில்லையே!)
என்னப்பா.நான் கேட்கிறேன். நீங்கள் பேசாமலிருக்கிறீங்கள்?"
"பேசாமல் சாப்பிடு விசி1. அப் பாவைக் கரைச் சல

படுத்தாதை" அதட்டினாள்.
" சரி அம்மா!" இது விசித்திரா அல்ல. இது போன்ற பக்குவமான பதிலையெல்லாம் அவளிடத்தில் எதிர்பார்க்கக் கூடாது என்பது இந்த வீட்டில் எழுதப்படாத விதி, ‘சரி அம்மா. பணம் தரலாம் என்பது போல அர்த்தப்பட என்னால் விசித்திராவுக்குச் சொல்லப்பட்ட பதில் அது.
5606).
L6)6OTT LD8560)6TT
விடியாமலிருக்கலாம். ஆனாலும் விடிந்து விடுகிறது. யாருக்கு என்ன பிரச்சனை இருந்தாலென்ன அவர்கள் என்ன பாடுபட்டாலென்ன என்ற கருணை இல் லாமல் விடிந்துவிடுகிறது. இரவு உறக்கம் கெட்டால் அதிகாலையில் இன்னும் படுக்கையில் கிடக்கவேண்டும் போலிருக்கும். ஆனால், புவனா குசினி அலுவல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்ட சத்தங்கள் ஏற்கனவே அலாரம் அடிக்கத் தொடங்கியிருக்கும். பாத்றுாமில் பிள்ளைகள் தண்ணிரைச் செலவு செய்கிற சத்தங்கள் எழுப்பிவிடும்.
அலுவலகத்துக்குப் புறப்பட ஆயத்தமானபோது புவனா கேட்டாள் - "கனகர் வந்தால் என்ன சொல்லுறது? அதே கேள்வியைத் தான் விடிந்ததிலிருந்து எனக்குள் ளும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.
"கைவசம் இல்ல. ஆரிட்டை யாவது மாறி ரெண் டொரு நாளைக்குள்ள .தரலாமெண்டு சொல்லுங்கோ!"
அலுவலகத்திலிருந்து சிலரிடம் ரெலிபோனில் விசாரித்தேன். சரிவரவில்லை. மாலையில் ஓவர்ரைம் வேலையையும் தியாகம்
செய்துவிட்டு சுந்தரேசனையும் சண்முகநாதனையும் சென்று பார்த்தேன். யாரிடமும் கிடைக்க வில்லை.
வீட்டுக்குச் சோர்வுடன் வந்தேன்.
"கனகர் வந்தவரோ?”
“வந்தவர்! . அவரைப் பார்க்கப் பாவமாயிருக்கு .என்ன அவசரமோ”
- புவனா கவலைப்பட்டாள். எனக் கும் கவலையாகவே இருந்தது.
இரண்டு நாட்கள் அலைச்சல் பட்டும் பணம் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் வேலைக்குப் புறப்பட்டபோது புவனா சொன்னாள்.
“பிள்ளையளின்ரை செயினை அடகு வைச்சிட்டுத் தேவையான காசை எடுத்துக் குடுத்தால் என்ன?”
கேட்க நன்றாய்த்தானிருந்தது - தலையிலிருந்து ஒரு பாரம் இறங்குவது போல. ஆனால் எப்படி? அடகுவைத்துப் பணம் எடுத்தால் திருப்பும்போது வட்டியும் சேர்த்துக் காட்டவேண்டுமே?
"அதுக்கென்ன செய்யிறது?. கனகருக்கு நிலமையைச் சொல்லுவம் அவருக்கு விழங்கும்" புவனா சமாதானப்படுத்தினாள்.
* சரி!” என்றேன். புவனா அறைக்குள் போனாள். அங்குதான் பிள்ளைகள் இருவரும் இருந்தார்கள்.
இக்கட்டான நேரங்களில் இது போன்ற 'பெறுமதி' யான ஆலோசனைகள் கூறி கணவன் மாரைக் காத்தருளும் மனைவி மாரை நினைத்து நான் புளகாங்கித
மடைந்து கொண்டு நின்றேன்.
R GSG935 109 KANA

Page 57
அறைககுள் சத்தம் கேட்டது. சத்தம் என்றால் அது விசித்திரா விட மிருந்துதான் எண் பதை ஊகித்துக்கொள்க.
“என்னம்மா இது?. கொஞ்சநாள் கழுத் தலை போட்டிருக் கிறது.கொஞ்சநாள் இல்லாமல் போறது. 'பிரண்ட்ஸ் எல்லாரும் கேட் கசினம் . இது என்ன சொந்தமா.இரவலா என்று! நான் தரமாட்டன் போங்கோ!”
நான் போக ஆயத்தமானேன். கதவைத் திறந்து எதற்கும் முன்னெச்சரிக்கையாக ஒரு காலை வெளியே வைத்தேன். எனினும் ஒரு கண் ணால் அறைக் குள்ளும் நோட்டமிட்டேன்.
elp g5 5 LD öE5 6íi நிலா பரிந்துரைப்பது கேட்டது -
"குடுங்கோ விசி!. அப்பா
பாவம்தானே!"
அந்த வார்த்தைகள் ஓரளவு நம்பிக்கையளித்தன.
"என்ன. எனக்குத் தெரியாதா?. இது அப்பாவுக்கில்லை. ஆருக்கோ குடுக்கிறதுக்கு ஒடித் திரியிறார்!" புவனா விசித் திராவுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடங்கினாள். - "ஆருக்கோ இல் லையம் மா. கனகசுந்தரம் அங்கிளுக்கு. அவரும் பாவம் தானே.”
"எங்களுக்கு வழியைக் காணயில்லை. மற்றவையஞக் காக ஏன் கவலைப்படுறிங்கள்?”
உள்ளே போன மனைவி உருப்படியாகத் திரும்பி வரவே ண்டும் என்ற கவலை என்னைத் தொட்டது. ஆனால், ஆச்சரியப்படும்
பணத் தைக்
Լյլգա IIT& விசித்திராவின் சத்தம் தணிந்து வந்தது. பிள்ளை மனம் இளகிவிட்டாள். புவனா அறையி லிருந்து வெற்றிப் புன்னகையுடன் வெளிப்பட்டாள்.
"நகை நட்டென்று இருந்தால் இப் படியொரு அவசரத்துக்கு உதவுறது க கு த தானே . . . அதுகளுக்கு விளங் காது கொண்டுபோங்கோ” என் கையில் நகையை வைத்தாள். நிலைமை யைச் சமாளித்த புவனாவின் கைங்கரியத்தை எண்ணி நன்றி பெருகியது. அன்றைய நாளின் இனிய ஆரம்பத்தை எண்ணியவாறு நடை போட்டேன்.
கனகசுந்தரத்துடன் அலுவலகத் துக்கு ரெலிபோனில் தொடர்பு கொண்டு ஈவினிங் வந்தால் பணம் ரெடியாயிருக்கும் எனக் கூறினேன்.
மாலையில் ஒரு பிஸ் கட் பக்கட்டுடன் வீட்டுக்கு வந்தார். "பிள்ளையன் உள்ள இடம்.நெடுக வெறுங்கையோடை வரக்கூடாது!" விசித் தரிரா வைப் பார்த் து "இந்தாம்மா !” என நீட்டினார்.
நான் பயந்தேன். இது யார் எவர் என்று பாராது பாயக்கூடிய சாமான். ஏற்கனவே தனது செயின் அவருக்காக அடகுவைக்கப்பட்ட
கோபத்திலிருக்கிறது. அதை
அவரிடம் காட்டிவிடுமோ என அஞ்சினேன்.
ஆனால் விசித்திரா அடக்க ஒடுக்கமாக வந்து பிஸ்கட்டை அவரிடம் பெற்றுக் கொண்டு "தாங்யூ அங்கிள்” என்றாள்.
வெளியே மழை பெய்யத்
தொடங்கியது.
கனகசுந்தரத்திடம் கொடுத் தாள்.
புவனா,

கொடுக்கும் போது, பணம் வட்டிக்கு எடுக்கப்பட்டதென்ற விஷயத்தை சற் று தயக் கத் துடனே தெரியப்படுத்தினாள்.
“என்னால..உங்களுக்கு வீண் சிரமம் !" எனக் கனகசுந்தரம் கவலைப் பட்டார் . "தாங் ஸ்” சொல்லிப் புறப்பட்டார்.
பிறகு, வெகு நாட்களாகக் கனகசுந்தரத்தை காணக்கிடைக்க வில்லை. அவர்கள் வீட்டுக்கு விசிட் பண்ண வேண்டுமென புவனா சொல்லிக் கொண்டிருந்தாள். புதிதாகக் குடிவந்திருக்கிறார்கள். போனால் சந்தோஷப்படுவார்களாம். ஆனால் பொழுது விடிந்தால் இருளுவது தெரியாமல் ஏதாவது ஒரு அலுவல் இருந்துகொண் டிருக்கும். ஞாயிறுகளிலென்றால் புவனா இன்னும் சில வேலை களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டிருப்பாள். அதனால் அவ் வெண் ணம் மலிருந்தது.
"நீங்களென்றாலும் ஒ.பீசால வரயிக்கை அப்படியே.போயிட்டு வரலாம்தானே?” எனப் புவனா அபிப்பிராயம் தெரிவித்தாள். அதற்கிணங்க ஒருநாள் ஒ. பிசிலிருந்து நேராக கனகசுந்தரம் வீட்டைத்தேடிச் சென்றேன்.
ஃபிளாட்டின் நாலாவது தட்டில் வீடு. படியில் மூச்சு வாங்க வாங்க ஏறி கோலிங் பெல் ஸ்விச்சை அழுத்திவிட்டு கதவின் முன் நின்றேன். கதவு திறக்கப்படாம லிருந்தது.
நம்பிக்கையை கைவிடாது எனது பல தி தையெல லாம் ஸ்விச்சில் பிரயோகித்தேன். பின்னர் கதவிலுள்ள கண் துளையூடு
60) 35 &n LT
(உள்ளேயரிருந்து வெளியே நிற்பவரைப் பார்க்கக்கூடியதாகத்) தோன்றிக் கொண்டு நின்றேன். எனது முகத்திலும் புன்னகை யைத் தோற்றுவித்து. மலர்ந் தமுகம் என் பார்களே . அதுமாதிரி வைத்திருந்தேன். வந்திருப்பது பேயோ பிசாசோ என்ற பயம் உள்ளே இருப்பவர்களுக்கு ஏற்படாமல் கதவு திறப்பதுபற்றிய முடிவை எடுப்பதற்கு இது உதவும் என நம்பினேன். ஆனால் அந்தப் பரீட்சையும் பயனளிக்காததால். இனிப் போகலாம் என நினைக்க, கதவு திறக்க.
கதவுக்கும் வாசலுக்குமிடையில் கனகசு நீ தரதி தனி மனைவரி பூங்கோதை
இப் டியொரு மனைவியை வைத்துக்கொண்டு எப்படி இந்த மனுசன் வருடக்கணக்காக லீவில் போகாமலிருந்தார் என்றதொரு பிரமிப்பு ஒருகணம் என் மனதில் பட்டுமறையத்தான் செய்தது.
"அவர் 'வீட்டில..இல்லை!"
கதவு முழுதாகத் திறக்கப் படாமல் கைகளால் பிடிக்கப்பட் டிருந்ததால்..'வரச் சுணங்குமோ?. “எத்தினை மணிக்கு வருவார்? போன்ற கேள்விகளைக் கேட்டு மினக்கெட் டவரணு மனசுக்குள்
'பூங்கதவே தாள்திறவாய். என்ற
பாட்டைப் பராயணம் செய்தேன்.
"அப்ப.நான் வந்தனான் என்று அவருக்குச் சொல்லுங் கோ” என்றவாறு திரும்பினேன். கதவு திறக்கப்படாமலிருந்த காரணம் புரியாமலிருந்தது. யோசித்ததேன்.
ஒருவேளை என்னை இன்னார் எனத்
தெரியவில்லையோ? ஒரு பொறி தட்டியது. வீட்டுக்கு இன்னும்
C
GSG)85 11

Page 58
கதிரை தளபாடங்கள் வாங்கி போடாமலிருக்கலாம். திருமதியார் அதைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.
அப்போது எனக்கு நண்பன் மோகனசந்திரனின் நினைப்பு வந்தது. அவனிடம் சோட்பா செற்
ஒன்று விற்பனைக்குள்ளது. அவன்
புதிய மொடலுக்கு மாறுவதால் பழையதை மலிவான விலைக்கு விற்கத் தயாராயிருந் தான் . யாருக்காவது விற்றுத்தரும் படியும் சொல்லியிருந்தான். அதுபற்றி கனகசுந் தரத்துக்கு சிபார் சு செய்யலாம் எனத் தோன்றியது.
அடுத்த நாள் திரும்பவும் அவர் வீட்டுக்குப் போனேன். அதன் பின்னரும் இருமுறை போனேன். கனகசுந்தரத்தைச் சந்திக்கமுடிய வில்லை. ஒவ்வொரு முறையும் வாசலில் நின்றே திருமதியுடன் பேசிவிட்டு வரவேண்டி யிருந்தது. 'பூங் கதவு' என்ற பாடலிலும் நம்பிக்கையிழந்து விட்டிருந்த படியால் அந்த உத்தியையும் கைவிட்டிருந்தேன். "நான் வந்தனான் என்று சொல்லுங்கோ பிறகு வாறன்"எனச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு திரும்பிவிடுவேன். வேறு என்னத்தைச் சொல்ல?
விற்பனைக்குள்ள அந்தச் சோ.". பா பற்றிச் சொன்னாலென்ன? போகக் கிளம்பியவன் நின்று," நீங்கள் வீட்டுக்கு சோ.பா வாங்கியிட்டீர்களா? " எனக் கேட்டேன்.
"ஏன்”
"ஒரு ஃபிரன்டிட்டை விற்க இருக் கு. நல் ல மலT வாயப் 6T6db356)Tib."
“தேவையரில் லை”
கதவு
பூட்டப்பட்டது. முகத்தைத் தடவிக் கொண்டு நடையைக் கட்டினேன்.
அடுத்தமுறை கனகசுந்தரம் வீட்டுக்குப் போகமுன்னர் மோகன சந்திரனைத் தேடிச் சென்று சந்தித்தேன். சோ.பா செட்டை ஒரு நல்ல விலைக்குத் தீர்மானித்தேன். பணத்தை உடனடியாக கொடுக்க தேவையில்லாத ஒரு ஒழுங்கையும் செய்துகொண்டேன். தவணை முறையிலும் செலுத்தலாம். இந்தச் செய்தியுடன் மீண்டும் கனகசுந்தரம் வீட்டுக்குப் போனேன்.
நல்ல காலமாக கனகசுந்தரம் அன்றைக்கு நின்றார். கதவைத் திறந்து அவர் வரவேற்க, எங்கே அமரப்போகிறேனோ என்ற தயக்கத் துடன் உள்ளே நுழைந்தேன். அட, அங்கே ஏற்கனவே ஒரு சோ.'.பா செட் போடப்பட்டிருக்கிறதே!
"எப்ப வாங்கினனிங்கள்?" எனக் கேட்டவாறே அதில் அமர்ந்தேன். முன்னரே வாங்கப்பட்டது எனப் பதில் வந்தது.
வீட்டு வாடகை இவ்வளவு, பிள்ளைகளுக்கு ஸ்கூல் அட்மிச னுக்கு இவ்வளவு கொடுத்தது,
வீட்டுக்கு அட்வான்ஸ் இவ்வளவு
கொடுத்தது போன்ற விடயங்க ளையே கனகசுந்தரம் சொல்லிச் சொல்லி மாய்ந்து கொண்டிருந்தார். விடைபெற்றபோது வழிஅனுப்ப வாசல் வரை வந்தார்.
"நீங்கள் தேடித் தேடி வந்த னிங்கள் என்று மிஸிஸ் சொன்னவி. குறை நினைக்க வேண்டாம். உங்கட காசு கெதிப்பண்ணித் தந்திடுவன்." எனக் கூறிவிட்டு முகத்தைக் குனிந்து கொண்டு நின்றார்.

6னக்குக் கவலை ஏற்பட்டது. நான் வீட்டுக்கு வந்து வந்து போனது கடன்காசுக்காகத்தான் என நினைத்திருக்கிறார்கள். இது அவர்களுடைய தவறா அல்லது என்னுடைய தவறா என்றும் புரியவில்லை. இனி இங்கு வந்து அவர்களை குழப்பக்கூடாது என எண்ணிக்கொண்டேன். வசதிப்பட்ட போது அவர்கள் பணத்தைத் தந்த பிறகு வரலாம்.
ஒரு மாதம் கழிந்திருக்கும்.
ஒருநாள் எதிர்பாராத விதமாக கனகசுந்தரம் பணத்தை கொண்டு வந்து தந்தார். எங்களுக்குப் பணம் தருவதற்காக வேறுயாரிடமாவது கடன் பட்டிருப்பாரோ எனக் கவலையாயிருந்தது.
"இதுக் கு இப்ப அவசர மெண் டு வந்தனிங்கள்?"
என் ன கொண் டு
"வட் டிக் காசும் வீணாயப் ஏறிக்கொண்டிருக்கு அதையும்
யோசிக்கத் தானே வேணும்?”
என்றார்.
"அதுவும் சரிதான்" இதன் பின் நாலைந்து
மாதங்கள் கடந்திருக்கும். மீண்டும் கனகசுந்தரத்திற்குப் பணநெருக்கடி. அவருக்குப் பண நெருக் கடி யென்றால் எனக்கு காய்ச்சல் பிடிக்குமளவுக்கு ஏற்கனவே பட்ட அலைச்சல் மனதில் பதிந்திருந்தது.
"அவசரமாய். பத்தாயிரம் ரூபாய் தேவையாயிருக்கு.யாரிட்டையாவது மாறித்தரேலுமே?”
“பாப்பம்” என்றேன். அவர் போய்விடார். எங்கே பார்ப்பது என்று LjuUTLD 6ò தலை சுற் றத் தொடங்கியது.
வாரோட்டத்தை தொடங்கினேன். அவரைப் பிடித்து இவரைப் பிடித்து என இரண்டுமூன்று நாட்களாக அலைந்தும், ஓரிடமும் பணம் கிடைக்கவில்லை. நகையை அடகு வைத் துப் பணம் எடுக் கும் எண்ணத்தை இரு காரணங்களுக் காக விரும்பாமலிருந்தேன். ஒன்று - செயினை கேட்கப் போக அதனால் என்ன குழப்பங்கள் நடக்குமோ என விசித்திரா பற்றிய பயம் மனதிலிருந்தது. இரண்டாவ தாக, கனகசுந்தரம் பணத்தைத் திருப்பியபோது வட்டி கட்டுவதுபற்றி கவலைப்பட்டதை நினைத்துக் கொண்டேன். வட்டியின்றி யாரிட மாவது றோலடித்துக் கொடுத்தால் அவருக்கு உதவியாயிருக்கும்.
விக்னேஷ் சில நாட்களாகப் பிடிபடாமலிருந்தான். அவனைத் தேடிப் போனேன்.
கேட்டபோது அவன் வழக்கத் திற்கு மாறாக, "ஏன் உங்களுக்கு காசு?” “இப்ப என்ன அவசரத் தேவை?” எனக் கேள்விமேல் கேள்விகள் கேட்டான்.
“எனக் கொரு தேவை . அதையேன் உனக்கு? .இருந்தால் தா” என மழுப்பலாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
"சொல் லுங் கோ நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன்” விக்னேஷ் வற்புறுத்திக்கொண் டிருந்தான். சொல்லிவிட்டால் தரமாட் டான் போலிருந்தது. சொன்னால் தரக்கூடும் போலவும் அவன் பேச்சு தோன்றியது. சொன்னேன்.
அவன் சிரித்தான்.
"கனகர் ஆக்கள் போன கிழமை
எங்கட வீட்டுக்கும் வந்தவை. அவர்
C2 R GGSaoi 13

Page 59
W
என்னட்டையும் காசு கேட்டவர். இருந்தால் குடுக்கலாம். இல்லை என்று சொன்னன். அதுக்குப் பிறகு தான் உங்களிட் டை வந்திருப்பார்." இனி இங்கு நின்று பயனில்லை என்று தெரிந்தது. விக்னேஷிடமிருந்து புறப் பட ஆயத்தமாக "ஒரு விஷயம்" என்றான். நின்றேன். சிரித்துக் கொண்டே கேட்டான்.
“என்ன, எங்களிட்டைக் காசு மாறி. வட்டிக் குக் குடுத்து உழைக்கிறீங்களோ?”
எனக்கு சுருக்கெனத் தைத்தது. விக் னே ஷ மேற் கொண் டு சொன்னான் "கனகசுந்தரம் ஆக்கள் உங்களைப் பற்றி குறை சொல்லுகினம்.”
எனக்குள் கேள்வி, "என்ன?” "அவசரத்துக்கு &BT5斋 கைமாற்றாய் கேட்டால். இல்லை யென்றிட்டு. பிறகு வட்டிக்கு எடுத்தது என்று சொல் லிக் குடுக்கிறீங்களாம்."
அதிர்ச்சியாயிருந்தது. "விக்னேஷ் இதை நீ நம்புநியா?” "நம்புறது நம்பாதது ஒருபக்கம் இருக்கட்டும்.நீங்கள் ஏன் தேவை யில்லாத வேலைக்கு போறிங்கள்?. இருந்தால் குடுங்கோ இல்லை யென்றால் இல் லையென்று சொல்லியிட்டுப் போங்கோவன்.” நான் உடைந்துபோனேன். வீட்டுக்கு வர புவனா கேட்டாள்: “காசு கிடைச் சுதா? கனகர் வந்து இவ்வளவு நேரமும் பார்த்துக்
ra 4. R
கொண்டிருந்திட்டுப் போறார்."
"இல்லை”
அதிகம் பேசமுடியவில்லை.
"அது க் கேன் கவலைப் படுறிங்கள்? வட்டிக் கெண்டாலும் எடுத்துத்தரச் சொன்னவர்தானே? பிள்ளையினரை செயினை வைத்து எடுத்துக் குடுப்பம்."
ஒருவித சீற்றம் உச்சிக்கு ஏறியது.
"அந்த வேலையெல்லாம் வேண்டாம். எங்களிட்டை இருந்தால் குடுக்கலாம். இல்லையென்றால் இல்லைத்தான்."
புவனா நடுங்கிப் போனாள். பேச் சற்றவ ளாய் நின்றாள். அவளைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. ஏதோ ஒரு வகையில் உறவினர்கள் என்ற காரணத் தாலோ என்னவோ, புவனா அவர்கள் மேல் கொண்டிருக்கும் வஞ்சகமற்ற அன்பை நினைத்துப் பார்த்தேன். சற்றுநேரம் கண்களை மூடி நிதானித்தேன். விக்னேஷ் சொன்ன கதையை மனதிலிருந்து அழித்தேன்.
“சரி புவனா நகையை வைச்சுக் காசெடுத்துக் குடுப்பம். ஆனால் காசு வட்டிக்கு எடுத்ததென்று அவையஞக்கு சொல்லவேண்டாம். திருப் பயரிக் கை .நாங்கள் வட்டியைப் போட்டுக் கட்டுவம்.”
புவனா ஒரு கேள்விக்குறியாக என்னைப் பார்த்தாள். அவளுக்குப் புரியவில் லை. புரியாமலே இருக் கட்டும் என எண்ணிக் கொண்டேன்.

தேசிய நாலக சேவைகள் சபையும் தமிழ் எழுத்தாளரும்.
- திக்குவல்லை கமால் .
இலங்கை தேசிய நூலக சேவைகள் சபை பல வேறு செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. எழுத்தாளர் கள் தமது நூல்களை வெளியிடு வதற்கு உதவி வழங்குவது அவற்றில் ஒன்றாகும். பத்தாண்டு களுக்கும் மேலாக இத்திட்டம் தொடர்கிறது.
ஒவ்வொரு ஆண்டிலும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இதற்கான
விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
இதே காலப் பகுதியில் கைப்பிரதி கள் சபைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.
பிரதிகள் கையெழுத்தில் அல்லது தட்டச்சில் தனித்தனி
பக்கங்களில் போதிய இடைவெளி
விட்டு தயாரித்தல் அவசியம். பிரதியில் பெயர், முகவரி, என்பன இடம் பெறக் கூடாது. இரண்டு பிரதிகள் ஒப்படைக்கப்படவேண்டும். சபை நிர்ணயிக்கும் குறிப்பிட்ட ஒரு
தொகைப் பணம் பரிசீலனைக்
கட்டணமாகச் செலுத்தவேண்டும்.
அச் சில் வெளிவரும் போது ஐம்பது பக்கங்களுக்குமேல் வரக்கூடியதாக கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வு இப்படி எந்தப் பரப்பிலும் அமையலாம். எதுவாக இருந்தாலும் முன்பு பிரசுரமானவையாக இருக்கக்
கூடாது. ஆனால் சிறுவர்இலக்கியம், சித்திரக் கதை, பாடநூல்கள் போன்றவை ஏற்கப்படுவதில்லை.
குறிப்பிட்ட துறைகளில் நிபுணத் துவம் மிக்கவர்கள் பிரதிகளை பரிசீலனை செய்து பிரசுரத்திற்கு ஏற்றதா இல்லையா என்று சிபார்சு செய்யும் பிரதி ஏற்கப்படுமெனில் குறிப்பிட்ட எழுத்தாளரை சபை அழைத்து ஒப்பந்தம் செய்து கொள்ளும். ஒப்பந்தம் செய்து நான்கு மாதங்களில் நூல் அச்சிட்டு வெளியிடப்படும்.
நுாலை அச்சிடும் போது எவ்வாறான நடைமுறைகளை கையாளவேண்டுமென்ற விபரங்கள் தெரிவிக்கப்படும். தாள், பக்க அமைப்பு, எழுத்துமுறை, ஐ எஸ் பி என் இலக்கம் முதலான அம்சங்கள் இதில் அடங்கும். ஒப்பந்தத்தின் பின்பு புத்தகத்தின் முன்பின் அட்டைகள் தயாரிக்கப் பட்டு சபையின் பிரத்தியேக அங்கீகாரத்தைப் பெற வேண்டும். சர்வதேச தரத்துக்கு நூலின் உள்ளடக்கம் மாத்திரமன்றி, உருவ அமைப்பும் அமைய வேண்டு மென்பதே இதன் எதிர் பார்ப்பாகும்.
நூலை அச்சியற்றியதும் அதில் ஒரு பிரதியை சபைக்கு அனுப்ப வேண்டும். சொல்லப்பட்ட விதி முறைகளுக்க மைய நுTல் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை
2 திருதுை 15

Page 60
அதற்கான குழு பரிசீலித்து ஏற்றுக்கொள்ளுமாயின், ஒப்படைக்க வேண் டிய பிரதிகளின் எண்ணிக்கையை அறிவிக்கும்.
நுT லின் அளவு, பக்க எண்ணிக்கைக்கேற்ப உதவித் தொகை நிர்ணயிக் கப்படும். எழுபத்தையாயிரம்வரை உதவி பெறும் வாய்ப்புண்டு. எழுத்தாளர், வெளியீட்டாளர்கள் எவ்விலை யையும் விற்பனைக்காகக் குறிப்பிட லாம். ஆனால் சபை சமகால அச்சுச்செலவை அடிப்படையாகக் கொண் டு ஒரு விலையை மதிப்பிடும்.
கோரப்படும் தொகை நூல்களை ஒப்படைத்தபின்பே ஒப்பந்தப்படி உதவித்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின்படி சிங்கள ஆங்கில - தமிழ் மொழிகளிலே
ஆண்டுதோறும் நூறு நூல்களுக்கு
உதவி வழங்கப்படுகிறது. சில எழுத்தாளர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஐந்துக்கு மேற்பட்ட
நுால களையும் வெளியரிட்
டுள்ளார்கள்.
தமிழ் எழுத்தாளர்கள் இந்த வாயப் ப்பை எந்த அளவுக்கு பயன்டுத்துகிறார்கள் என்பதே கேள்வி. ஆண்டுக்கு இருபது தமிழ் நூல்களை வெளியிட சபை விரும்பியபோதும் இரண்டொரு நூல்களே வெளிவருகின்றன.
அங்கீகரிக்கப்படுகின்ற நூல் களை ஏற்று வெளியிடுவதற்கு சிங்களத்தில் பல வெளியீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. நமது நாட்டைப் பொறுத்தமட்டில் தமிழில் அந்த வசதி இல்லை. நான் அதனால் எமது எழுத்தாளர்கள் சில கஷடங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதும் உண்மைதான்.
சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பினும் இந்த வாய்ப்பை தமிழ் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறக் din-sigil.
Excellent Photographers
Wedding Portraits
Child Setting
45, Farm Road, Colombo -15.
S
 

துரண்டில்
- டொமினிக் ஜீவா -
உங்களது கேள்வி பதில் வெளியீ
டான நூல் தூண்டிலில் இடம் பெற்றுள்ள 303 கேள்விகளிலும் மிக அதி சிறந்த மூன்று கேள்விக ளைத் தெரிவுசெய்து, பரிசு வழங்கு வதானால் யாருடைய கேள்வி களுக்குப் பரிசு கொடுப்பீர்கள்?
யோகபுரம் வி.கே. இராசா
இந்தக் கேள்விக் கடிதத்தைப்
படித்த போதுதான் இப்படியும் ஒரு யோசனை இருக்கின்றதா என என்
முளைக்குப் தட்டுப்பட்டது. இதற்
காகவே ஒரு தடவை தூண்டில்
புத்தகத்தைப் படித்துப் பார்க்
கிறேன். இது சம்பந்தமான பதிலை
வேறொரு தடவை சொல்லுகிறேன்.
X .
ஆழ்வார்கள் பட்டியலில் பாரதியா ரையும் சேர்த்து, அவரது சிலை யைக் கோவில் ஒன்றில் பிரதிஷ்டை செய்து, பாரதி சாமிக்குப் பூசை நைவேத்தியம் எல்லாம் நடக்கிற தாமே, நீங்கள் கேள்விப்பட்டீர்களா? அக்குறணை இறைய அப்துல்லாஹற்
கேள்விப்பட்டேன். எனக்கொன்றும் அதிசயமாகப் படவில்லை. சினிமா நடிகை குஷ்புவுக்குக் கோயில் கட்டிக் கும்பிட்ட கலைப்பித்தர்கள் கொண்ட எமது தமிழ்ச் சமுதாயத் தில் இது ஒன்றுமே அதிசயமல்ல. இந்த நூற்றாண்டின் மாபெரிய ஊழல் மகாராணி ஜெயலலிதா
வுக்குச் சிலை எழுப்பி, காலில்
விழுந்து கும்பிடக் கூடிய அரசியல்
விசரர்கள் மத்தியில் இந்தச் செய்தி எனக்கு அப்படியொன்றும் புதின மாகத் தெரியவில்லை.
பாரதிக்குச் சிலை வடித்துக் கோயிலில் வைத்துக் கும்பிட நினைக்கும் கும்பலின் நோக்கம் பாரதியின் சிந்தனைகளை கவித்துவத்தை மதிப்பதல்ல. அந்த யுகக் கவிஞனை சாகடிப்பதே அக்கும்பலின் நோக்கமாகும். நாம் பாரதியாரைப் பாரதியாகப் புரிந்துகொண்டால் போதும்.
区
நீங்கள் சமீபத்தில் படித்த நல்ல புத்தகமென்ன?
நீர்கொழும்பு க.சுரேந்திரன்
'கலாப்பிரியாவிலிருந்து கலை ஞர்வரை' என்றொரு தொகுப்பு நூலொன்று படித்தேன். ரஸித்தேன். சுபமங்களா சஞ்சிகையில் வெளி வந்த பலரின் நேர்காணலை நூலாகத் தொகுத்து நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நல்லதொரு (լք եւս (B &Ղ. படிக்கவேண்டிய புத்தகம்.
இங்கிருந்து மல் லி கையை
வெளியிடும் போது உங்களுக்கு
ஏற்பட்ட புது அனுபவம் என்ன?
வெள்ளவத்தை ச. சகாதேவன்
பலருக்குக் கொழும்பிலிருந்து மல்லிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதே தெரியாது. தகவல் பரவப்பரவத் தான் பலர் மல்லிகை இதழ் கேட்டு எமக்கு எழுதுகின்றனர் . எமக் கும் திட்டமிடத் தெரியவில் லை. எக் காரணத்தைக் கொண்டும்

Page 61
புத்தகக் கடைகளில் மல்லிகை அநாவசியமாகத் துTங் கிக் கொண்டிருக்கக் கூடாது என்பதில் வெகு கவனமாக இருக்கிறேன். நான் எதிர்பார்த்ததையும் விட மல்லிகையைக் கேட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்தெல்லாம் கடிதங்கள் வருகின்றன. இது எனக்குப் புது அனுபவம். அவர்களது தேவை யைப் பூர்த்தி செய்யத் தான் கைவசம் மல்லிகைப் பிரதிகள் இருப்பதில்லையே. X
இத் தனை ஆண் டுகளாகத்
தொடர்ந்து விடாது மல்லிகையை
நடத்தி வருகிறீர்களே, இந்த மன
ஒர்மத்தைத் தந்த பின்னணியை நான் அறிந்துகொள்ளலாமா?
அபுரம்
எஸ்.சுதானந்தன்
ܢܸܕ݂
நான் சஞ சிகையை ஆரம்பிக்கும் போதே அர்ப்பணிப்பு உணர்வுடன்தான் ஆரம்பித்தேன். எக் காரணத்தைக் கொண்டும் சோடை போகக் கூடாது: தோல்வியைத் தழுவக்கூடாது என்ற ம ன  ைவரா க க ய த து டன செயலாற்றத் தொடங்கினேன். அந்த மனஓர்மமே என்னை இதுவரை வழி நடத்தி வருகின்றது.
ΣΚ
கொழும்பில் சமீபத்தில் கம்பன் விழா நடைபெற்றது. நீங்கள் உட்பட ஐவர் கெளரவிக்கப்பட்டீர் கள். இவ்விழாவில் உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?
வெள்ளவத்தை ந. பிரேம்குமார்.
2 8 R
விழாவே ஒரு சிறப்பான நிகழ்ச்சி தான். கூட்டுழைப்பின் மகத்துவம் தெரிந்தது. எனது மனசைக் கவர்ந்த அம்சம் எனச் சொல்லச் சொன்னால், கம்பன் கழகத்தைச் சுற்றி இயங்கி வந்த இளைஞர் களின் அயராத உழைப்பு, அன்பான உபசரிப்பு. தம்மை ஒரு நோக்கத்திற்காக அர்ப்பணித்துக் கடமை புரிந்த தியாகப்பண்பு. அந்த இளைஞர்களுக்காகத் தமிழர்கள் அத்தனை பேர்களுமே நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப் படலாம்.
ΣΚ. 凶 Σ-Κ
மல்லிகை கொழும்பில் கூட
விட்டு விட்டு வருகின்றதே, அதை
ஒழுங்காகக் கொண்டு வர முயலக்கூடாதா?
கண்டி
க. ஜெயதேவன்
உண்மை. புதிய இடம், புதிய சூழ்நிலை: புதுப்புதுச் சிக்கல்கள். ஆண்டு முடிவு: கலண்டர், பில், டயறிக் காலம். அச்சகங்கள் ஒரே பிஸி. புதிய அச்சு நுட்ப வளர்ச்சி. ஒரே தடவையில் இலட்சக்கணக் காக அச்சியற்ற வேண்டும். அல்லது கட்டுப் படியா காது. மல்லிகை என்ன இலட்சக்கணக் கான பிரதிகளா வெளிவருகிறது? ஏதோ சில ஆயிரங்கள். எனவே இந்தத் தற்காலிக சிரமங்களைத் தாண்டித்தான் மல்லிகை கொழும் பில் வேர் விடவேண்டும். அத்துடன் என்னை நம்பிச் சந்தா தந்த சுவைஞர்களை ஏமாற்றக் கூடாது. அவர்கள் தந்த சந்தாவுக் கான பிரதிகளை எப்படியும் தந்தே

தீருவேன் என்பது திண்ணம். கஷடங்கள் தற்காலிகமானவை. பொறுத்துக்கொள்ளுங்கள்.
区 Σκ
நீங்கள் அபிமானத்துடன் வளர்த்
தெடுத்த முருகபூபதி கொழும்பில்
வந்து தங்கியிருந்தாராமே, அவர்
அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி விட்டாரா?”
யாழ்ப்பாணம்
எஸ்.இராகுலன்
வந்தார்; கண்டார்; சென்றார் எனச் சொல்லலாம். அவர் வந்த
நேரம் அருமையான நேரம். பல இலக்கிய விழாக்கள் நடந்தன. அதில் கலந்து கொண்டார். அவரும் நீர்கொழும்பில் ஒரு விழா நடத் தினார். எல்லா இலக்கிய நண்பர் களையும், பத்திரிகை உலகத் தோழர்களையும் சந்தித்தார், கதைத் தார். அவர் போனதுதான் எனக்குப் பெரிய கவலை, துக்கம்,
Σ.Κ. 区 *
நீங்கள் கொழும்பு நகருக்குப்
போனதன் பின்னர் யாழ்ப்பாணத்தை
முற்றாக மறந்து போய்விட்டதாக
இங்கு ஒரு கதை அடிபடுகிறதே இதில் உண்மை உண்டா?
கொக்குவில
க. தவேந்திரன்.
‘ரோமாபுரிக்குப் போனால் ரோமர்களைப் போல நட' என்பது பழமொழி. 'பாம்பு தின்னும் ஊருக்குச் சென்றால் நடுமுறி எனக்கு என்பதும் பழமொழிதான். இது அல்ல எனது மறுமொழி. நான்
திரும்பப்
எங்கிருந்து செயல்படுகிறேன் என்பது முக்கியமல்ல; என்ன செய்கின்றேன் என்பதை நீங்கள் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். இந்தச் சூழ்நிலையில் நான் மண்ணை நேசித்து அங்கு நிலைத்திருந்தால் அப்படியே சோம்பிப் போயிருப்பேன். துருப்பிடித்துப் பிரயோசனமற்று அழிந்திருப்பேன். மல்லிகையின் பெயரே மறக்கப்பட்டிருக்கும். இந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில்
எனது வாதங்கள் எடுபடாமல்
போகலாம். நாளை எனது வாதங்க ளைச் சீர்தூக்கிப் பாருங்கள். இதில் இன்னுமொன்று சிந்திக்கத்தக்கது. என்னைக் குறை சொல்பவர்களில்
அனேகர்வாழ்க்கைப் பாதுகாப்புக்
கொண்டவர்கள். மாதச் சம்பளம் பெறுபவர்கள். எதிர்காலப் பாது காப்பு ஓய்வூதியத்துக்கு உரியவர் கள். நான் அவர்களுக்காகச் சிந்திக்க இயலுமா என்ன?
凶 X
கொழும்பிற்கு வந்ததன் பின்னர் உங்களுக்குப் பிரத்தியேகமாகத் தனிப் புகழ் கூடி விட்டதாக என் நண்பன் சொல்கிறான். பேப்பரில் உங்களது பெயர், ரேடியோவில் உங்களது பெயர், தொலைக்காட்சி யில் உங்களது உருவம் அடிக்கடி இடம் பெறுவதாக வியந்து சொல்லு கிறான். இந்தப் புகழைப் பெறுவதற்
காகத் தான் நீங்கள் கொழும்பு
வந்தீர்களா?
வெள்ளவத்தை எஸ். மனோகரன்.
DGS85 9

Page 62
எந்தத் துறையிலும் தன்னை
அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒப்புக் கொடுத்து உழைப்பவனுக்குப் புகழ் தன்பாட்டில் வந்து சேரும். புகழ் அல்ல, எனது நோக்கம். உழைக் கக் கூடிய சூழ்நிலைதான் எனக்கு முக்கியம். ஆவலாதியும் எனக்கு இல்லை.
புகழ் பற்றி எந்த
区 図 凶
பேராசிரியர் சிவத்தம்பிக்குப் பின்னர்
அவரது இடத்தை நிரப்பக் கூடியவர் யார் என நீங்கள் கருதுகிறீர்கள்?
கனகராயன்குளம் எஸ். நித்தியானந்தன்
நேருவிற்குப் பின் யார் என
இந்தியா ஒரு கட்டத்தில் கேட்டது. நேருவுக்குப் பின்னரும் இந்தியா இயங்கி வருகின்றது. மனிதர்கள் வருவார்கிள், போவார்கள். மனுக் குலம் நிலைத்து நிற்கும். பேராசிரிய ருக்குப் பின் யார் என்ற கேள்வி என் உள்ளத்திலும் அடிக்கடி எழுவதுண்டு. உங்களைப் போலவே நானும் பதிலுக்காகக் கிறேன்.
காத்திருக்
区 X X 淡
லியோனி தலைமையில் நடை பெறும் பட்டி மண்டபம் பற்றிய உங்களது கருத்து என்ன?
கனகராயன்குளம் எஸ். நித்தியானந்தன்.
பாபுராவ் பட்டேல் என்பவர்
சினிமாப் பத்திரிகை ஆசிரியர். பிலிம் இண்டியா' என்பது அதன்
பெயர். பம்பாயில் வெளியாகும் சகல சினிமாப் படங்களையும் கிழி கிழியெனக் கிழித்து விமர்சனம் எழுதுவதுதான் அவரது வேலை. ஆனால் சினிமா உலகமே இந்தப் பேனாச் சண்டியனைக் கண்டு பயந்து கிலி கொண்டு ஒதுங்கியது. அவர் ஒரு படம் தயாரித்தார். தனது பிரைவேட் செக்ரட்டரி சுசீலாராணி என்பவரைக் கதாநாயகியாக்கிப் படம் தயாரித்தார். படமோ டப்பா. படேல் தொலைந்தார்.
லியோனியின் பட்டி மண்டபப் பேச்சைக் கேட்டிருக்கின்றேன். இவரும் சமீபத்தில் சினிமாவில் நடித்திருக்கின்றார். அதையும் பார்த்திருக்கிறேன். 'கங்கா - கெளரி என்ற படத்தில் மாப்பிள்ளையின் அப்பாவாக வரும் இவர் திருமண விழாவில் நாட்டியம் ஆடுகிறார். இது நடக்கக் கூடிய சம்பவமா? மக்களைப் பேய்க்காட்டுவதற்கும் ஒரு வரன் முறை உண்டு. மேடையில் வாய் க்கு வந்த வண்ணம் கருத்துச் சொல்லி மக்களை தற்காலிகமாக சிரிக்கச் செய்துவிடலாம். அந்தக் கருத்தைப் பேணிப் பாதுகாக்கப் போராட்ட குணம் வேண்டும். லியோனிக்குப் பணம் பண்ணுவது தான் பிரதான நோக்கம், கருத்துக்காகக் களத்தில்
நின்று போராடி அவருக்குப்
பழக் கமில்லை. இப் படியா னவர்களை மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.
201 - 1/1 கதிரேசன் வீதி, கொழும்பு -13. முகவரியைக் கொண்டவரும் ஆசிரியரும் வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு -12. பேர் பெக்ட்
அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது

* BRIGா இன்புத்தகங்களால் தமிழ் அன்னைக்கு ஓர் வேள்விசி
தேசிய கல்வி நிறுவகத்தின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட நூல்கள்
ஆண்டு 1
1. நாமும் சுற்றாடலும் 2. மொழி விருத்தி-தமிழ் 3. புதிய பாஷைப் பயிற்சி விளக்கம் 4. அழகியற் கல்வி 1, 2, 3. 5. நாமும் சுற்றாடலும் செய்நூல் ஆண்டு 2 6. நாமும் சுற்றாடலும் 7. மொழி விருத்தி-தமிழ் 8. கணிதம் 9. புதிய பாஷை பயிற்சி விளக்கம் 10. ஆக்கத்திறன் செயற்பாடு 1. நாமும் சுற்றாடலும் செயல்நூல் ஆண்டு 3
12. நாமும சுறறாடலும ಥೀ???" 14. கணிதம் 15. புதிய பாஷை பயிற்சி விளக்கம் 16. ஆக்கத்திறன் செயற்பாடு 17. நாமும் சுற்றாடலும் செயல்நூல்
ஆண்டு 4 18. நாமும் சுற்றாடலும் 19 ஆரம்ப விஞ்ஞானம்
20. நாமும் சுற்றாடலும் செயல்நூல் 21. ரம்ப விஞ்ஞானம் செயல்நூல் 22. புதிய பாஷைப்பயிற்சி விளக்கம்
23. மொழிவிருத்தி - தமிழ் 24. கணிதம் 25. இஸ்லாம் 26. சைவநெறி
27. ஆரம்ப பொது விவேகம் 28. ஆரம்ப பொது விவேகம் செயல்நூல் 29. மாதிரி வினாவிடை
ஆண்டு 5 30. புலமைப்பரிசில் மாதிரி வினாவிடை 31 வெற்றிக்கனி களஞ்சியம் ! 32. வெற்றிக்கனி களஞ்சியம் 2
33. புதியபாடத்திட்டம் 34. நாமும் சுற்றாடலும் 35. நாமும் சுற்றாடலும் செயல்நூல் 36. ஆரமப வஞஞானம 37. ஆரம்ப விஞ்ஞானம் செயல்நூல் 38. இஸ்லாம் செயல்நூல் 39. சைவ நெறி செயல்நூல் 40. மொழி விருத்தி - தமிழ் 41. புதிய வெற்றிக்கனி 16 42. புதிய பாஷைப்பயிற்சி விளக்கம் 43. கட்டுரை மஞ்சரி 4.5
ஆண்டு 6 曲 44. கட்டுரை *
45. சமூகக் கல்வி செயல்நூல்
40. 40. 25. 25. 25.
60.
40. 50. 25.
.00 25.
40
60
70
100
TO
ገ0 45
35.
35
50. 22.
00 00 00 00
00
00
OO 00 00
00
.00 60. 70. 25. 40. 25.
00 00 00
00 00
.00 70.
35. 35.
30. 60. 0. 35. 25. 75. 60.
100.
00 00 00 00 00 00 00 00 00 00
00
.00 250. 250.
75.
00 00 00
.00 35.
00
.00 .00 00
.00 0. 50
30. 35.
00
.00
00
00
00 50
46. கணிதம் ஆண்டு 8 47. வாழ்க்கைத் திறன் 1.8
48. புதிய விஞ்ஞானம் 49. சமூகக் கல்
ஆண்டு 9 50. புதிய விஞ்ஞானம் 51. கணிதம்
52. வரலாறு 9, 10, 11
53. மஞ்சரி 54. சங்க்தம 6, 11
க.பொ.த.(சா.த. 55. கல்வி மஞ்சரி 56. கல்வி மஞ்சரி 2 57. கல்வி மஞ்சரி 3 58. English Model 59. English Essay
60. சித்திரம் 61. தமிழ் இலக்கியம் சந்தர்ப்பம் கூறல் 62. தமிழ் இலக்கியம் பாட்டுக்குப்பொருள் 63. வரலாறு செயல்நூல் 64. சமூகக்கல்வி செயல்நூல் 65. விவசாய வினாவிடை
66. விஞ்ஞானம் 67. கணிதக் கையேடு 68. கணிதம் பகுதி !
69. கணிதம் பகுதி 1 70. மனையியல் பகுதி 1 க.பொ.த. (உ.த.) 71. செய்யுள் தொகுப்பு 72. தேர்ந்தெடுத்த சிறுகதை 13. உரைநடைத்தொகுப்பு 74. இலங்கை இலக்கிய வரலாறு 15. கம்பராமாயணம் திருவடிசூட்டும் படலம் 76. 77. பாரதியார் கவிதைகள் 18. நாகம்மாள் 19. அடிப்படை இலக்கணம் 80. ஈழத்து நூல் ஆய்வு 81. இந்து நாகரீகம் 82. பொருளியல் 83. அரசியல் விஞ்ஞானம்
உ.த.மாதிரி வினாவிடைகள் 84. பொருளியில் வினாவிடை 85. கணக்கியல் 86. கணக்கியல் 11 87. தமிழ் o: பகுதி ! 88. இந்து நாகரீகம் 89. இஸ்லாமிய நாகரீகம்
90. தூய கணிதம் ತ್ಯ' 91. தூயகணிதம் பகுதி 1
47.
90
60
100. 100.
.00
90. 70.
.00 30. 40. 80.
.00
.00 .00 40.
.00
100
90
60 50 50
60
60. 60.
75. 75. 75. 70. 60. 40.
.00
55.
50.
50. 150. 150. 100.
30
197. 147. 47. 147. 47. 197. 147. 47.
50
.00 50. 37.
00 50
.00 60. 45. 50. 75.
00 00 00 00
00 00
00 00
00
00 00
00
00 00
00 00 OO 00 00 00
00 00 00 OO
00 OO
50
50 50
50
50
50
50
50 .
எமது நூல்களை V. P. P மூலம் பெற்றுக் கொள்ள முடியும்
BRIGHT BOOK CENTRE (PVT) LTD.
S-27, First Floor, P.O.Box 162, Colombo Central Super Market Complex,
Colombo 11 Tel: 434770,074-718592

Page 63
iiii
மல்லிகைக்கு எமத வ
PARA EXPO PROD
Expor Non Tra Sri La 11 KL.
30. Se A COOn.
Te - o
#/TNH/TN ||/TNHH"NH/TNH/TNE
 
 

occia! Issule --Jan 98
ாழ்த்துக்கள் 翡
UCTS (PVT) LTD,
ters of
ditional C in Foods (
AW en Ufe, bO -3.
737 A