கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2001.01

Page 1

LALMÓÍRÖ BOUM
ஆசிரியர்

Page 2
*Chillie Powder
g
ETTEஇல்
Dealers in Agro
Vegetable WIJAYA GE,
(Agro S er v
No, 85; Sri Ratnajothy
(Wolfen Colo Tele:
THE FLAWC
Curry Powder
*Turneric Powder
RANİ
Manufacturers Of Qu 219, Ma
M2
Te:O6(
 

chemical Sprayers
& Seeds etc
NERAL STORES
i C e Centre ) Sarawanamuthau Mawatha
dhal Steet) mbo-13 327O11
ani)
*Ws * :
OUR OF LANKA
* Chicken MaSala
* Mutt On Ma Sala
* Fish fry Masala
GRINDING MILLS
Jality Masala Products
in Street,
tale. 6-22425

Page 3
கண்களு
இந்த 36-வது ஆண் மகிழ்ச்சியடைகினர் இந்த மலர் இந்த அல்லது கொஞ்சம் உங்களனைவருக் வருகின்றது. நம்மா மல்லிகைக் காரிய மலர்களையும் உ வேலையாக இருந்து தோதான வேலைய e935) 633(65 U6000 cüt நம்மைப் பொறுத் தேடல்கள் மூலம் ( பெறுபேறுகளையு உங்களையும் செழு இப்படியாகத் ே எப்படியோ மல்லி விடுகின்றன.
தவிர்க்க முடியா கொள்வது நல்லது. கடந்த ஆண்டு 35. மலரை வெளியிட்டி அந்த மலர், கணிச பரவிப் பயன்பட்டது சென்ற ஆண்டு 35. மல்லிகை இதழ்கள் கொண்டுள்ளோம். வெளிவரும் மாத -sə’GooLiILILÏD: உள்ளடக்கக் காத்தி
Dawf கோட்டச் சித்திரம்: 15gbïr 175 ap3FuriuIIIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியனைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும்
நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்"
6 ஆவது ஆண்டு
க்குப் புலப்படாத காயங்கள்
1ண்டு மலரை உங்களது கரங்களில் சமர்ப்பிப்பதில் றோம். ஆண்டு ஜனவரி மாதமே வெளிவந்திருக்க வேண்டும்.
பிந்திக் கூட வந்திருக்கலாம். கும் தெரிந்த காரணத்தால் இந்த மலர் சுணக்கமாக ல் தவிர்க்க இயலவில்லை. ாலயத்தில் இருந்து கொண்டு இதழ்களையும் ஆண்டு ருவாக்கிக் கொணிடிருப்பது மாத்திரமே எமது து விடுவதில்லை. அது நம்மைப் போன்றவர்களுக்குத்
மல்ல.
பாளியின் கடமையுமல்ல. தவரை தேடுதல் தான் எமது தலையாய நோக்கம். தேடியடையும் உண்மைகளையும், தகவல்களையும் ம் வாசகர் முனி சமர்ப்பித்து மல்லிகையையும் மைப்படுத்துவதே எமது தலையாய நோக்கமாகும். தடல் முயற்சிகளில் ஈடுபடும் வேளைகளில் கையின் பல வேலை நாட்கள் அபகரிக்கப்பட்டு
த நிலைதானி இது என்பதை நீங்கள் புரிந்து
-வது ஆண்டு மலருக்கு அடுத்ததாக அவுஸ்திரேலிய டிருந்தோம். மான பிரதிகளை அவுஸ்திரேவியாவில் பரந்தளவில் து. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் அந்த மலரும் து மலரும் வரவேற்கப்பட்டது.
ளைப் பற்றி நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து
1ங்களோ, திகதிகளோ, ஆணிடுகளோ அதனி ரத்திற்கு முக்கியமானதல்ல. காலம் பிந்தினாலும்

Page 4
தொடர்ந்து மல்லிகை இதழ்கள் தங்களது கைவ8 விடுகின்றனர்.
மல்லிகை வர்த்தகச் சஞ்சிகையல்ல. அதன் ச அர்ப்பணிப்புச் சேவைதான்.
இதைப் புரிந்து கொண்டவர்கள் தெளிவாகத் 6 விரும்புகினிறோம்.
மல்லிகையை - குறிப்பாக அதன் ஆண்டுமலர் என்று கூடச் சொல்லலாம் - இன்றைய திகதிக்கல் தலைமுறைக்கு இந்த மலர்களை அர்ப்பண உ சிந்தனையுடனேயே உருவாக்குகின்றோம்.
இதைப் போன்ற மலர்கள் தினசரிப் பத்திகைகை விடத் தக்க செய்தி ஏடுகளல்ல. வருங்காலஞத்தி ஆய்வுக்குப் படிக்கும் போது இதன் பழைய இ தேவைப்படலாம். எனவே பத்திரமாகப் பாதுகாத் பழைய மல்லிகை இதழ்கள் சம்பந்தமாக எமக்கு கவனத்திற்குக் கொண்டு வருவது நல்லது என்று உங்களுக்குத்தான் தெரியுமே யாழ்ப்பாணத்தை வி புலம் பெயர்ந்ததுடன் பழைய இதழ்கள் அங்கேே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தேவை அலைந்தேர்ம். கடைசியில் வெள்ளவத்தையில் கேள்விப்பட்டு அணுகினோம். அந்த இதழின் அ அவசர தேவை கருதி நாம் அதற்குக் கொடுத்த செலவு வேறு.
அன்றுதான் எமக்குக் கூட மல்லிகையின் இலக் எனவே தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டுச் ெ வாங்குபவர்கள் உதட்டைப் பிதுக்கியபடி இலக்க புரட்டிப் பார்த்து வாங்காதீர்கள்.
இது உங்களுக்காக உருவாகும் சஞ்சிகையுமல்லி வெளியீடுமல்ல.
தயவு செய்து வழியை மறிக்காதீர்கள். மல்லிகையில் எழுதுபவர்களுக்கு ஒன்றைச் சொ இனிறு சமுத்திரங்களைக் கடந்து, கணிடங் உச்சரிக்கப்படுகின்றதென்றால் உங்களது அசாத்திய விடவில்லை.
முப்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு சிற்றிலக்கி ஒழுங்கையாகக் குடாநாட்டின் சகல பிரதேசங்களி நீங்கள் கொஞ்சம் கவனத்தில் வைத்திருப்பது ந6 காந்தியடிகளும் பிச்சைக்காரனும், உருவத்தில் காட்சி தரலாம். கையில் தடி, அரையில் முழங்கா காந்திய எளிமையும் பிச்சைக்காரனின் இல்லா மல்லிகையின் எளிமையையும் அதை உருவாக உணர்வையும் இன்றும் கொச்சைத்தனமாகப் ப புரிந்து கொண்டால் ஈழத்து இலக்கியத்திற்கு நல

ம் கிடைக்க வேண்டும் எனப் பலர் வேண்டுகோள்
கல அடக்கமுமே தனிமனித உழைப்புடன் கூடிய
)தரிந்து கொண்டால் ىP, இதைத் தானி நாங்கள்
களைத் தயாரிக்கும்போது - சிருஷ்டிக்கும் போது ல, இன்றைய மாதத்துக்குக் கூட அல்ல, எதிர்காலத் .ணர்வுடன் தயாரிக்கின்றோம் என்ற தெளிந்த
)ளப் போல, திகதி பார்த்து விட்டுத் தூரப்போட்டு ல் உங்களது பேரன், பேத்திகள் பல்கலைக் கழக இதழ்கள் அவர்களது உயர் கல்விக்கு அவசியம் துவைத்திருங்க்ள், பழைய இதழ்களை.
நேரடி அநுபவம் ஒன்று ஏற்பட்டதை உங்களது கருதுகின்றோம். ட்டு கொழும்பிற்கு மல்லிகையுடன் நாமும் உள்ளுர்ப் யே முடங்கிப் போய் விட்டன. க்காக ஓர் இதழ் தேவைப்பட்டது. தேடித் தேடி ஒளுளூரு நண்பரிடம் அந்த இதழ் இருப்பதாகக் ன்றைய விலை ஐம்பது சதக் காசுதான். ஆனால் விலை எண்பது ரூபாய்கள். அத்துடன் ஆட்டோச்
கிய அருமை புரிந்தது. அதன் பெருமை தெரிந்தது. சால்ல விரும்புகின்றோம். மாதம், வாரம், பார்த்து கியம் படிப்பவர்கள் தயவு செய்து மல்லிகையைப்
). உங்களது ரஸ்னையை ஆதர்சமாகக் கொணிட
'ல்லி வைக்கின்றோம். உங்களது இலக்கிய நாமம் களையும் தாணி டி அந்த அந்த நாடுகளில் பத் திறமை மாத்திரம் அதற்குக் காரணமாய் அமைந்து
ய ஏட்டின் ஆசிரியர் தெருத் தெருவாக, ஒழுங்கை லும் கொண்டு சென்று விற்று வந்தானே அதையும்
லது. மற்றவர்கள் பார்வையில் ஒத்தவர்களைப் போலக் லுக்கு மேலே வேட்டி, மெலிந்த உடல். மையும் ஒன்றல்ல. இரண்டுமே வேறு - வேறு. குபவரின் எடுத்துக் காட்டுக்குரிய அர்ப்பணிப்பு ‘ர்த்து மனசுக்குள் எடை போடுபவர்கள் இதைப் துெ.
h

Page 5
சரியாக ஒ
2000 ம் ஆண்டு டிசம்பர் 22 ந் திகதி புறப் நாடு திரும்பினேன். இந்த ஒரு மாத இடைத் த நடைபெற்று முடிந்தது.
ஐரோப்பாவிலுள்ள பாரம்பரியப் பிரபலம் வா போய் வந்தேன்.
பாரிஸ் - பேர்லினர் - லண்டனர்!
இந்த மேலை நாட்டுப் பிரயாணம் எனக்குள் பார்வை விரிவையும் இன்று எனக்குள் நானே !
நான் போனதே பாரிஸ் மாநகரில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொள்வதற்குத்தான்.
இரண்டு முழு நாட்களும் இந்த இலக்கிய வி பரிமாறல்களும் இலக்கியக் கருத்து மோதல்களும் வேலைத் திட்டங்களும் விவாதத்தில் இடம் பெ
ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல பேராளர்கள் ( நான் கலந்து கொண்ட மிகக் காத்திரமான இ என் நெஞ்சின் அடி ஆழத்தில் இதன் செழுை வந்து இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்து கெ பார்த்து என் மனசில் அவர்களது முகங்களைப்
அவர்களையும் இந்தக் கட்டத்தில் நினைத்துப் எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் இவ
இத்தனை இலக்கிய நெஞ்சங்களையும் நாணி சந்தித்திருப்பேனோ என்பது சந்தேகம் தான்.
இவர்களில் பலரை நேரடியாகச் சந்தித்து உை திரும்பியிருக்கிறேன்.
என் வாழ்க்கையில் எனக்கேற்பட்ட பெரும் பே
விழாவில் கலந்து கொண்டவர்கள் என் மீதும் கரிசனையைப் பார்த்து நான் உண்மையிலேயே
இவர்களில் பலர் தரமான சுவைஞர்கள்: இ எழுத்தாளர்கள்.
சந்திப்புக்குப் பேராளர்களும் வந்திருந்தோ வெளிப்பாடாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் தத் வைத்து விவாதித்தனர்.
 

ச
කඨි? ரு மாதம்
பட்டேன். அங்கிருந்து 2001 ஜனவரி 22 இல் ப்கலில் எனது ஐரோப்பிய இலக்கியப் பயணம்
ப்ந்த மூன்று தேசங்களினது தலை நகர்களுக்கும்
ஏற்படுத்தியுள்ள மிகப் பெரிய தாக்கத்தையும் உணர்ந்து கொள்ளுகின்றேன்.
புலம் பெயர்ந்த தமிழர்களினது 27லது இலக்கியச்
ழா நடைபெற்று முடிந்தது. ஆழமான கருத்துப் எதிர்காலத்தில் செய்யப்போகும் ஆக்கபூர்வமான ற்றன. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலக்கிய விழாக்களில் இதுவுமொன்று.
மை வியாபித்துள்ளது. பல திசைகளிலுமிருந்து ாண்ட பேராளர்களின் முகங்களைப் பார்த்துப் பதிய வைத்துக் கொண்டேன்.
பார்க்கின்றேனர்.
Jessit
எனது சொந்த மண்ணில் கடந்த காலங்களில்
ரயாடி, சிரித்து, சுக துக்கம் விசாரித்து மகிழ்ந்து
றுகளில் இதுவுமொன்று என்றே கூற வேண்டும்.
}ல்லிகை மீதும் காட்டிய பரிவு கலந்த பாசத்தை,
பிரமித்துப் போய் விட்டேன்.
இனினும் சிலர் ரஸிகர்கள். பொரும்பாலோர்
இலக்கிய ஆர்வம் காரணமாகவும் உந்துதலின் நமது மனக் கருத்துக்களை வெளி வெளியாக

Page 6
கேட்கக் கேட்கச் சந்தோஷமாகவிருந்தது.
ஐரோப்பாவிலுள்ள ஒரு பாரம்பரிய ! தலைப்பட்டினத்தில் தமிழ் இலக்கிய விழாவி என நினைத்த பொழுது எனது சர்வாங்கமுே
புலம் பெயர்ந்த தமிழனின் சாதனைகளில்
பலரும், ஏன் நான் உட்பட ஒரு கருத்துக் காலப்போக்கில் தமது தாய்ப்பா'ையை இய மொழிகளுடன் கலந்து, தமது தனித்துவத்தை விடுவார்களோ என எண்ணியிருந்தோம்.
அந்த எண்ணமே தவறு என எதார்த்த நிக பண்பாடுகள் மீதும் அவர்கள் வைத்திருக்கின்ற பார்க்கும் போது நாம் தான் வீணாகச் சந் சந்தேகம் ஏற்படுகின்றது.
சூழ்நிலையும், யுத்த நிலையும் எதிர்காலப் பு போக வைத்திருக்கலாம்.
ஆனால் எத்தனை எத்தனை சமுத்திரங்களை கூட, இந்த மண்ணை, இந்த மண்ணின் வாச மறக்கடிக்கச் செய்யவில்லை.
எனவேதானி பாரிஸில் தமிழுக்கு விழா எடுச் நடத்துகிறார்கள். லண்டனில் தமிழில் தொை சிறு சஞ்சிகைகளையும் தொடங்கி இயக்கி 6
நான் அடிக்கடி மேடைகளில் சொல்லி வ இதே கருத்தைச் சில மாதங்களுக்கு முன்னர்
தமிழகத்துக்குத் தமிழர்கள் ஐரோப்பிய அ போனால் தங்களது இருப்பை நிலை நாட் பழக்குவார்கள். அடுத்து கூட்டம் குழுவாக இருப்பிடங்களுக்குச் சமீபமாக ஸ்தாபிப்பார்க
நம்மவர்களோ இதில் வித்தியாசமாகச் செய புத்திஜீவிகளில் சிலர் ஒன்று கூடி தமது கழகமொன்றை உருவாக்குவார்கள். சிறிது கா ஒர் இலக்கியச் சஞ்சிகையை வெளியிடுவார்க முரண்பாடு தோன்றும். குறுங்குழுவாதம் தலை கட்டித் தங்களைத் தாங்களே திட்டித் தீர்ப்ப
இவையனைத்தும் அங்கு தமிழில்தான் நன பெறும். V.
ஐரோப்பாவில் கூட்டுக் குழுக்களால் இப்ப பிரிந்து போன சிற்றிலக்கிய ஏட்டாளர்கள் பல உரையாடியுள்ளேனர். 球
ஒவ்வொருவரும் மனந்திறந்து என்னுடன் சுத்தத்தில் எனக்குப் பரிபூரண நம்பிக்கையுணி
இந்த மூன்று ஐரோப்பிய மாநகரங்களில் இ நேரில் சொன்ன சகல கருத்துக்களையும் அபி கொணர்டேனர்.
ஒண

இலக்கிய விசாலம் கொணிட ஒரு நாட்டினர் ல் தமிழில் உரத்த குரலில் விவாதிக்கின்றனரே, ம புளகிந்தது. மனசு பெருமையால் பூரித்தது. இதுவுமொன்று.
கொண்டிருந்தோம். புலம்பெயர்ந்த நம்மவர்கள் ல்பாகவே மறந்து, புகலிடம் தேடிய நாட்டினது யும் கலாசார விழுமியங்களையும் இழந்து போய்
5ழ்ச்சிகள் நிரூபிக்கின்றன. மொழி மீதும் கலாசார அபார பற்றையும் பாசத்தையும் விசுவாசத்தையும் தேகப்படுகின்றோமோ என எம் மீதே எமக்குச்
யமும் அவர்களை இந்த நாட்டை விட்டுப் பிரிந்து
மலைகளைக் கடந்து போக வைத்திருந்த போதிலும் னையை, மொழியினர் பாரம்பரியத் தொண்மையை
கிறார்கள். பெர்லினில் தமிழில் இலக்கியவிமர்சனம் லக்காட்சிகளையும் வானொலி நிகழ்ச்சிகளையும் வருகின்றனர்.
ருவதை இங்கு எழுத்தில் பதிந்து வைக்கின்றேன். சென்னையிலும் நான் சொல்லியிருக்கின்றேன். ஒல்லது அமெரிக்க நாடுகளுக்குக் குடும்பத்துடன் டிக் கொள்வதற்காக மகளுக்குப் பரதநாட்டியம் ச் சேர்ந்து முருகனி கோயிலொன்றைத் தமது ଶf.
பல்படுவார்கள், புலம் பெயர்ந்துள்ள நம்மவர்களில்
இருப்பை நிலைநிறுத்துவதற்காக இலக்கியக் லம் சென்ற பின்னர் இவர்களில் பலர் இணைந்து ள். தொடக்கத்தில் நெருக்கம் இருக்கும். தொடர்ந்து ப காட்டும். குழுக்குழுவாகப் பிரிவார்கள். கணினை ለ`ጠ`ሪኝ6ገጥ`.
]டபெறும். நமது தமிழர்கள் மத்தியில்தான் இடம்
டி ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கருத்து மோதலால் பரை எனது இந்த இலக்கியப் பயணத்தில் சந்தித்து
பேசினார்கள். இத்தனைக்கும் அவர்களது ஆத்ம
வர்களைத் தனித் தனியே சந்தித்த சமயம் இவர்கள் ப்பிராயங்களையும் திறந்த மனசுடன் கேட்டறிந்து

Page 7
புலம் பெயர்ந்த நம்மவர்களை அதிலும் இளை பிரச்சினைகளை தெளிவாகத் தெரிந்திருக்க வேண அவர்களது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் த தொழில் நெருக்கடிகள், வாழ்க்கைச் சிக்கல் கலியாணத்திற்கு ஊருக்குக் காசு அனுப்ப வேண்டிய வந்து மூன்று வருட காலமாகத் தங்கியுள்ள தாய்க் கடனை இப்படி எத்தனை எத்தனையோ..!
இத்தனைக்கும் அந்தக் குளிர் மணிடிய பனி கொண்டு தொடர்பு அறுந்து போகாமல் ஒன்று சு வளர்ச்சி பற்றி விவாதிக்கின்றனர் என்றால் அவ பற்றும் பாசம்தானே காரணமாக இருக்க முடியும் அடுத்த 28-வது இலக்கியச் சந்திப்பு பனி இருக்கின்றது.
27-வது விழா முடிவில் பாரிஸ் விழாவில் வைத்ே பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள்.
சென்ற தலைமுறைக்காரர்கள் நமது நாட்டிலி இவர்களில் சிலரும் இத்தகைய மன மயக்கத்திற் அதாவது பிரபல தமிழகத்து நட்சத்திர எழுத்த சிலர் விரும்பியிருந்தனர்.
பல்வேறு வாழ்க்கை அநுபவங்களுக்கு உட்பட்டு இளந் தலைமுறையினர் இப்படியாக அழைக்கப்படு எதிர்காலத்தில் அழைத்துச் சிறப்பிக்க வே6 ஆயத்தங்களையும் செய்து கொடுத்தனர்.
இந்த மெய்யான ஆர்வலர்களின் வேண்டுகோள ஒன்று கூடலுக்கு விசே' அழைப்பாளராக அழை
என்னை அழைத்ததில் பலருக்கு பெரிய மனநி இதைப் போலத்தான் பெர்லினில் நான் கலந் நேரத்து இலக்கியச் சந்திப்பு பூரண நிறைவுடன் தங்களில் ஒருவனாக, அந்த விதமான பந்தாவுய கொண்ட நண்பனாக என்னை இனங் கண்டு ப எனது ஐரோப்பிய இலக்கியப் பயணத்தில் சந்தித்த நண்பர்கள்தான்.
லண்டனோ மிகப் பிரமாணடமான மாநகரம். மல்லிகையை ஆரம்ப காலத்தில் வாசித்துப் பழ அக்கறை காட்டிப் போரித்து வந்தவர்கள், எனினு ஒரு பெருங் கூட்டத்தினரே லணிடனில் வ மல்லிகையினதும் பெயரை முன்னரே கேட்டுத் ெ நேரில் பார்த்தறியாதவர்கள் கூட, லண்டனில்தா ஐரோப்பாவில் நானிருந்த ஒருமாத காலத்தில் இ தங்கியிருந்தேனர்.
அங்க ஐந்து கூட்டங்களுக்கு மேல் இலக்கியச் சந்திப்புகள் இடையிடையே நிகழ்ந்தன.

ாஞர்களைப் புரிந்து கொள்வதற்கு அவர்களது *டும். நமது பிரச்சினைகள் போன்றனவையல்ல. னித்தனியாக ஒவ்வொரு பிரச்சினை.
கள், வயது முதிர் கணினியான அக்காவின் ப அவசர தேவை, மற்றும் கொழும்பில் லாட்ஜில் குச் செலவுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயக்
கொட்டும் பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து டி ஆண்டுக்கு ஆண்டு தமிழ் மொழியின் ஆக்க Iர்களுக்குத் தமது மொழியின் மீதுள்ள ஆழ்ந்த ).
போர்த்த நாடான நோர்வேயில் நடைபெற
த வந்திருந்த பேராளர்களுக்கு இந்தத் தகவலைப்
ப் மன மயக்கத்தில் ஆழ்ந்திருப்பதைப் போல, கு ஆட்பட்டிருந்தவர்களே. ாளர்களை விரும்பி அழைத்து ஷாே’ நடத்தச்
டுப் பதப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டுள்ள வதை எதிர்த்து நம்மைப் போன்றவர்களைத்தான் ண்டும் என வற்புறுத்திக் கூறி அதற்கான
ரின் நெருக்குதல் கவனமாகத்தான் நான் பாரிஸ் க்கப்பட்டிருந்தேன்.
றைவு.
து கொண்ட ஷமல்லிகை மாலை’ ஒரு மாலை
நடந்தேறி முடிந்தது. ]ற்ற ஒருவனாக, மெய்யான இலக்கிய நெஞ்சம் ழகினர். நேசித்தனர். எனக்குக் கிடைத்த பெறுபேறே அங்கு நான்
ழக்கப்பட்டவர்கள், மல்லிகையின் வளர்ச்சியில் டைய கிட்டிய நண்பர்கள், உறவினர்கள் என ாழ்ந்து வருகின்றனர். அத்துடனி எனதும் தரிந்து வைத்திருப்பதுடன் என்னை இதுவரை ன் பெரும்பாலோர் இருந்தனர்.
ஒருபது நாட்களுக்கு மேல் நான் லண்டனில்தான்
சந்திப்புக்கள் இடம் பெற்றிருந்தன. தனிப்பட்ட
ES5 s

Page 8
என்னுடைய நீண்ட காலத் தோழர்களான வங்கண் தேவராஜன், சிவலிங்கம் போன்ற அழைக்க முன்னின்று உழைத்தவர்கள்.
பாரிஸ் விழா முடிந்ததும் அப்படியே ந அதற்கமைய பிரெஞ்ச் விசா கூட எனக்கு எனவே சந்திப்பு முடிந்ததன் பின்னர் திரு மூவரும் ஏதோ ஏற்பாடுகள் எல்லாம் செய்து
இந்த மூவரின் அன்பாதரவும் ஒத்துழைப்பும் எண்ணிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன்.
பல பழைய இலக்கிய நண்பர்களை அந்கு மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றாகும்.
பத்மநாப அய்யர், மு.பு'பராஜன், ஒ6 போன்றோரை அங்கு சந்தித்தது மறக்கமுடிய ஆனந்தராணி, போன்றோர் தமது இல்லத்து நடந்த சந்திப்பில் பலர் கலந்து கொண்டு சி அடுத்துப் பொங்கல தினத்தில் புதிதாக ஒரு அதில் நான் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து நான் லண்டனுக்கு வந்திருப்பதை நண்ப பாமா இராஜகோபால் தனது பத்திரிகைய டொமினிக்ஜீவா'என இரண்டு கலம் தலைப் ஷதீபம்’ என்ற தொலைக்காட்சி எனது ஒ பிரித்து ஒளிபரப்புச் செய்தது. எனினை அதற வளர்ந்து வரும் கலைஞர் இளைய அப்துல் சென்றடையக் கூடியது. இதைப் பார்த்த பல அதைப் போலவே மூன்று ஒலிபரப்பு நிறுவ தமிழ்ப்பிரியா, சந்திரா தியாகராஜா என்ற கேட்டு என்னுடன் தொலைபேசியில் தொட
நட்ட நடுச் சாமத்தில்கூட, தொலைபேசி
ஜனவரி 20 ந் திகதி அதாவது நான் ந எனக்கொரு பாராட்டுவிழா நடைபெற்றது.
அது எனக்கொரு பிரியாவிடை விழாவாக "ஈழத்தின் மூத்த தமிழ் எழுத்தாளர் மல்ல பணியையும் 36 ஆண்டுகளாகத் தொடர்ந்து ம பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்களின்
இந்த மணிணில் வாழ்ந்து வருகின்ற ஐ ஆர்வலர்களையும் விழாவில் கலந்து கொண்( அழைப்பிதழ் கூறியது.
பல நிறுவனங்களைச் சேர்ந்த்ோர் பாரா பற்றி திரு. மு. நித்தியானந்தனும், ஷமல்லிை மு. புஷ்பராஜனும், "ஜீவாவின் அரசியல்” ப முடிவில் எனது சிறப்புரை இடம் பெற்றது சபையோர்களிடமிருந்தும் லண்டன் மாநக்

, மிக நெருக்கமான நண்பர்களான பரீகங்காதரன், முக்கியமான மூவர்தான் என்னை லண்டனுக்கு
ாடு திரும்பத்தான் முதலில் முடிவெடுத்திருந்தேன். எட்டே எட்டு நாட்களுக்குத்தான் தந்திருந்தனர். புவதுதான் எனது முன்னைய திட்டம். இவர்கள்
விசா ஏற்பாடுகளைச் செய்து தந்தனர்.
இல்லையென்றால் நான் லண்டன் பயணத்தையே
சந்தித்துக் கலந்துரையாடியது என் வாழ்க்கையில்
பியர் கிருணராஜா, நேமிநாதன், இளவாலை அமுத ாது. நாடகக் கலைஞர் தம்பதியினரான பாலேந்திரா க்கு என்னை அழைத்துக் கெளரவித்தனர். அங்கு றப்பித்தனர். "
மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கொண்டேன். Iர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்த பழைய நண்பர் ான ஷபுதினம்’ என்ற இதழில் ஷ லண்டனில் பில் எனது வருகையைப் பாராட்டியிருந்தார். ரு மணிநேரப் பேட்டியை இரைண்டு நாட்களாகப் ற்காகப் பேட்டி கணிடவர் இந்த மணிணைச் சேர்ந்த லாஹற். இந்தப் பேட்டி அகில ஐரோப்பாவையும் ரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். னங்களும் எனது பேட்டியை சுடச்சுட ஒலிபரப்பின. இரு மல்லிகை எழுத்தாளர்களும் இப்பேட்டியைக் ர்பு கொண்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். என்னுடன் உரையாடக் காத்திருந்தது.
ாடு திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்
$வும் அமைந்தது.
பிகை டொமினிக் ஜீவாவின் மிக நீண்ட தமிழ்ப் ல்லிகை இதழை வெளியிட்டு வருவதையும் பாராட்டி *ார்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீவாவின் இலக்கிய நண்பர்களையும், இலக்கிய டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்’ என
ட்டிப் பேசினர். மடிவில் "ஜீவாவின் இலக்கியம்” கயும் சிற்றிலக்கிய ஏடுகளும்’ என்பது பற்றி திரு. ற்றி திரு. வி. சிவலிங்கமும் சிறப்புரையாற்றினர்.
ரத்திடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டேன்.
-டொமினிக் ஜீவா -

Page 9
- 1arur
স্বাক্ষরুশািফক্স
ஆசை
புது வருடப் பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்றதும் அவருக்குப் பயமாகயிருந்தது. இன்னும் மூன்று கிழ மைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகப் போகப் பயம் அதிகரித்துக் கொண்டிருந்தது. எப்ப டிச் சமாளிக்கப் போகி றேனோ என்று முழுசாட்டம் பிள்ளைகளுக்குப் புத்தாடை, உடுதுணிகள் வாங்க வேண்டும். ஐந்து பேருக்கும் வாங்கு வதானால் எவ்வளவு தேவைப்படும்? அதற்கு எங்கே போவது?
போன வருடத்தைப் போல இந்த வருடமும் கடத்தி விட முடியாது போலிருந்தது. மூத்த மகன் பிரகாஷ் ஏற்கனவே அவருக்குச் சொல்லி வைத்து விட்டான்.
"அப்பா..! எனக்கு இந்த முறை வருடப் பிறப்புக்கு நீல சேர்ட் வாங்கித் தாங்கோ! ஸ்கூலுக்கும் போடக்கூடிய தாய் இருக்கும்!”
வருடப் பிறப்பு என்பது ஒரு சாட்டுத்தான். பிள்ளைக ளுக்கு ஸ்கூலுக்குப் போடுவதற்கு உடை தேவைப்படுகி றது. மனைவி சரசு கூட அவருக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.
”ஒரு ஆமான உடுப்பில்லாமல் அதுகள் எப்படி ஸ்கூலுக்குப் போறது?”
அவர் அப்போது மனைவிய்ைச் சினந்து பேசுவார். “என்ன சரசு?. நிலைமை விளங்காத மாதிரி கதைக்கிறீர். என்னை என்ன செய்யச் சொல்லுறீர்?"
அவளுக்கு நிலைமை தெரியும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவளும்தான் என்ன செய்வது? வேறு யாருக்குப் போய் முறையிடுவது? எனினும் அப்படிச் சத்தம் போட்டால் அவள் திரும்பவும் அந்தக் கதையை எடுக்க மாட்டாள்.
உள்ளது இரண்டு சோடி உடுப்புகள்தான். பாடசாலை யால் பிள்ளைகள் வந்ததும் அதைத் தோய்த்துலர்த்தி
磁
Ý
 
 
 
 

அடுத்த நாளைக்காக ரெடி பண்ணி வைத்து விடுவாள். உடைகளில் கிழியல்களுக்குத் தையல் போட்டே அவளுக்கு அலுத்தே போயிற்று.
அவரது மகள் மீரா இரண்டு நாளுக்கு முன்னர்தான்: "அப்பா! பார்த்தீங்களா. கிழிஞ்சு போயிருக்கு1. பிள்ளையஸ் எல்லாம் பகிடி பண்ணுதுகள். இது என்ன போஸ்ட் ஒபீஸா. என்று!”
மீரா சட்டைக் கிழியலில் கைவிரலைவிட்டு அவருக்குக் காட்டியபோது அது இன்னும் கொஞ்சம் "சர்ர்”எனக் கிழிந்தது.
“ஆ.ஆ. கவனமம்மா. கவனம்!” அவர் பதறிப் போனார்.
“பிள்ளைகளுக்கு இந்தச் சட்டையை தைத்துக் குடும்'மனைவிக்கு உத்தரவு போட்டார்.
"அப்பா வருடப் பிறப்புக்கு எனக்கு இரண்டு யூனிபோம் தைப்பிச்சுத் தந்தீங்களென்டால் போதும்!”
குமர்ப்பிள்ளை. ஒரு நல்ல உடுப்பில்லாமல் இந்த மாதிரிப் போய் வருகிறாளே என்ற கவலை அவரது மனதை வருத்தியது. ஆனால் என்ன செய்வதென்றுதான் புரியவில்லை.
யாழ்ப்பாணத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கை யின் போது இடம்பெயரவேண்டி வந்தபோது, எடுத்தது பாதி எடுக்காதது பாதியாக ஓடியது திரும்ப வந்து பார்க்கையில். பறிபோயிருந்த பொருட்களுடன் உடுதுணிகளும் போய்விட்டன.
யாழ்ப்பாணத்துக்குள் ஆமி மூவ்பண்ணி வந்தபோது சாவகச்சேரிப் பக்கம் போய்த் தெரிந்த ஒருவரின் வீட்டில் ஒதுங்கினார். ஐந்து பிள்ளைகளுடனும், பல குடும்பங்கள் தங்கியிருந்த வீட்டில் படாத பாடு படவேண்டியிருந்தது பிறகு கிளாலிக்கூடாக கிளிநொச்சிப் பக்கம் பயணமாகி நண்பரொருவரின் காணியில் & குடிசை (மாதிரி)ஒன்றை அமைத்துக் *
భః

Page 10
எனப் பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டினார்.
அவர் குடும்பத்துடன் திரும்பவும் யாழ்ப்பாணம் வந்து விட்ட செய்தியறிந்து மாணிக்கம் மாஸ்டர் பார்க்க வந்திருந்தார். மாணிக்கம் மாஸ்டர் முன்னர் ஸ்கூலில் அவருக்குப் படிப்பித்தவர். பிள்ளைகளுக்கும் வீட்டுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பதுண்டு.
"இஞ்ச வராமல் வன்னிப் பக்கம் போயிடுவீங்களோ என்று கூட யோசிச்சன்! இந்த வீட்டை எப்படிக் கோயிலை ப்போல வைத்திருந்தனிங்கள்! அது இடிஞ்சு கிடக்கிற தைப் பார்க்க எனக்கே பொறுக்கயில்லை. அடிக்கடி வந்து பார்த்து விட்டு போனவன்.வேற என்னத்தைச் செய்யிறது. இப்ப நீங்கள் வந்து சேர்ந்திட்டீங்கள் என்றதும் ஆறுதலாயிருக்கு!
மாணிக்கம் மாஸ்டர் ஏதாவது பேச ஆரம்பித்தாலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கும். குறுக்க பேச மனம் வராது.
”தமிழ்ச்சனங்கள் இந்த நாட்டில எத்தனை விதமாய் வதைப்பட்டிட்டுதுகள்!. நாங்கள் இதையெல்லாம் பார்த்துப் பயந்திடக் கூடாது. சலித்துப் போகக் கூடாது. இந்த இடத்தை விட்டு ஒரேயடியாய் ஓடியிடக் கூடாது. இது எங்கட மண். எங்கட மூதாதையர் பரம்பரை பரம்பரையாக வளர்ந்த மண்!.”
மாணிக்கம் மாஸ்டர் சொல்வதைக் கேட்க மனசு தெம்படைவது போலிருந்தது. ஆற்றாமையோ அல்லது காரணம் புரியாததொரு கவலையோ உள்ளே புகுந்து நெஞ்சையடைப்பது போலும் ஓர் உணர்வு.
”ஐம்பத்தெட்டிலே. எழுபத்தேழுல. எண்பத்து மூன்றிலே. எல்லாம் தெற்குப் பக்கமிருந்த தமிழ்ச் சனங்களுக்கு எவ்வளவு கொடுமைகள் நடந்திது? பெண் பிரசுகளைக் கேவலப்படுத்தி. உயிர்களைக் குடிச்சு. தமிழருக்குச் சொந்தமான விடுவாசல்களை. வியாபாரத் தலங்களை. பக்டரிகள் எல்லாம் கொழுத்தி எரிக்கப் பட்டது. அப்ப, அடிச்சுக் கலைச்சபோது எங்கட சனங்க ளெல்லாம். இஞ்சால ஓடி வந்ததுகள். பாதுகாப்பாக இருக்க வடக்கு, கிழக்குப் பகுதிகள் இருந்திச்சுது.
..இப்ப என்ன நடக்குது? வடக்கு கிழக்கிலையும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எத்தனை நாட்கள் பதுங்கு குழிக்குள்ளே கிடந்தும். எத்தனை உயிர்களைப் பறிகொடுத்திட்டம்? சமாதானத்திற்கான யுத்தம் என்ற பேரிலே. இந்தப் பக்கம் இருக்கிற வீடு வாசல்கள். பொருளாதார வசதிகள் எல்லாம் அழிக்கப்படுகுது. யுத்தம் ஏற்படக்கூடிய நிலைமையை உருவாக்கினது ஆர்?. ஒரு உதாரணத்துக்குச் சொல்லுறன். எங்கட பிள்ளைகளின்ரை படிப்பில கையை வைச்சு முளையி லேயே கிள்ளி எறியலாம் என்று திட்டம் வகுத்தது
பிரகாஷ் ஓ.எல் பரீட்சையில் எட்டும் "டி" எடுத்துச் சித்தியடைந்தான். அவர் பூரித்துப் போனார். திரும்ப Iாழ்ப்பாணம் வந்தது நல்லதுக்குத்தான் என்றும் தான்றியது. குப்பி விளக்கில் கண்கள் பூந்திப் பூந்திப் ார்த்து அவன் படிக்கும்போது அவர் ஏசியும் இருக்கிறார்.

“காணுமடா!. இனிக்காணும்.போய்ப்படு!. இந்த மங்கல் வெளிச்சத்தில படிச்சால்.கண் பழுதாய்ப் போயிடும்!.
அவன் போய்ப் படுக்கமாட்டான். அவரும் அவன் படித்து முடித்துப் படுக்கப் போகும் வரை விழித்துக் கொண்டிருப்பார்.
இந்த டியூசனுக்குப் போக வேணும். அந்த டியூசனுக்குப் போக வேணும். என்று பிரகாஷ் சொன்ன போதுகளில் சினந்து விழுந்திருக்கிறார்.
“பள்ளிக் கூடத் தி ல ஒழுங் காயப் ப் படிக்காதவர்களுக்குத் தான் டியூசன் அங்க விளையாடித் திரிந்சால். ரியூசன் தேவைதான்!”என ஒரு நக்கல் போலச் சொல்லியிருக்கிறார்.
அவன் அதற்கு மறு கதை பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு போயிடுவான். ஆனால் ரியூசனுக்குத் தருவதற்கு அவரிடம் பணமில்லை என்று அவனுக்குத் தெரியும். ரியூசனுக்குப் போய்வரும் நண்பர்களின் வீடுகளுக்குப் போய்ப் போய்க் கேட்டுப் படிப்பான். அவன் படிக்கத்தான் போகின்றானா! அல்லது வேறு ஏதாவது இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறானா! என அவருக் குச் சந்தேகம் வந்ததும் உண்டு. அசுகை தெரியாமல் சில நாட்களில் பிறகால் போய்ப் பார்த்துமிருக்கிறார்.
படிப்பு, படிப்பு என்று நடந்தே அலைந்து திரிவான். "அப்பா!. ஒரு சைக்கில் இருந்தால் நல்லது. எவ்வளவு தூரம் நடக்கிறது?. நடந்து நடந்து. இரவில படுக்கேலா மல். கால் உளையுது. சைக்கிள் ஒன்று வாங்கித் தாங்கோ!'
”அந்தக் காலத்தில நான் எப்யடிப் பள்ளிக்குப் போய் வந்தவனென்று தெரியுமா? எவ்வளவு தூரம் நடந்து திரிஞ்சிருக்கிறன்!. உங்களுக்கு இப்ப சொகுசு தேவைப்ப டுது. கஷ்டப்பட்டுப் படிச்சால்தான் முன்னுக்கு வரலாம்!” என எதையாவது சம்பந்தமில்லாமலும், தன்னை ஒரு சாதனை வீரனைப் போலவும் குறிப்பிட்டு மகனது வாயை மூடிவிடுவார்.
தின்னவேலியிலிருந்து ஹின்டு கொலிச்சுக்கு நடந்தே போய் வருவது அவர் நினைவில் வரும். பலபலத்து விடியு முன்னரே தோட்டத்துக்குத் தண்ணிர் இறைக்க வேண்டும். தம்பி தண்ணிர் கோல அவர் துலா மிதிப்பார். ஐயா மரவள்ளிக்கும் மிளகாய்க் கன்றுகளுக்கும் தண்ணிர் கட்டுவார். பிறகு வெளிக்கிட்டு பள்ளிக்கூடத்துக்கு. ஒட்ட மும் நடையுமாகப் போனாலும் நேரம் கடந்துவிடும். பிறே யர் தொடங்கிவிடும். இப்போதுள்ள ஆமிக்காரரைப்போல அப்போது பள்ளிக்கூடத்தில் பிறிஃபெக்ட்மார், லேட்டாக வருபவர்களையெல்லாம் வாசலில் தடுத்து வைத்திருப்பார் கள். பிறேயர் முடிந்து கேனுடன் வரும் பிறின்சிபல்லிடம் கை நீட்டி அடி வாங்க வேண்டும். "அம்மா” என உறைக் கும். மாட்டை மேய்ப்பவர்களைப் போல ஏன் வாத்திமார் பிரம்பு வைத்திருக்கிறார்கள், என யோசித்திருக்கிறார். எத்தனை அடி அடித்தாலும் மாடு சுரணை இல்லாமல், ஆனால் தனது கடமையையும் செய்து கொண்டிருக்கிறது. அவரும் தவறாது தோட்டத்திற்குத் தண்ணிர் விட
ğCerra 9

Page 11
IMPORTERS & DISTRIBU
NO. 10 Upper GOUC FIO COOnbO-1
Te: 438227 Di: O74-71O366 E
Show. Room:
UEYA BOOK CENTRE 91-99 Upper Ground Floor,
People's Park Complex, Colombo-1 1.
Tel: 438227 Fax: 332939
 
 
 

cy (PVT) LTD
TORS OF PRINTED BOOKS.
Or, People's Park Complex, 11, Sri Lanka,
FaX: 332939 Mail: jeya Geureka.lk
JEYA BOOK CENTRE 688, Galle Road, Colombo-3. Te: 58O594
Fax: 332939

Page 12
வேண்டும். தவறாது பாடசாலைக்கும் வருகிறார். தவறாது அடியும் விழும்.
"நாங்களெல்லாம் அப்ப. எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிச்சம். இப்ப. உங்களுக்கு வசதிகள் கூடிப்போச்சுது! மகனுக்கு ஒரே போடாகப் போடுவார். பிரகாஷ் அதற்கு எதுவும் பேசாமல் போய்விடுவான்.
எல்லாம் பொருளாதாரப் பிரச்சனைதான். சீமெந்துத் தொழிற்சாலையில் போர்மனாக வேலை செய்தவர். யுத்தம் தொடங்கிய பிறகு தொழிற்சாலை இயங்காமல் போய்விட்டது. சில காலம் சம்பளமும் இல்லாமல் ஒன்றுமில்லாமல் இழுபறியாய் இருந்தது. பின்னர் ஏதோ ஒரு கொஞ்சம் கையிற் தரத் தொடங்கினார்கள். தொழிற் சாலை இயங்கிக் கொண்டிருந்தபோதே ஓவர்டைம் வேலை செய்து கைநிறைய உழைத்தாலும் அப்படி இப்படித்தான் சமாளிக்கக் கூடியதாக இருந்தது. இப் போது, இந்தப் பிச்சைக் காசை எடுத்து என்ன செய்வது? ஆனால் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததே அந்தக் காசையும் நினைவிற் கொண்டுதான்.
இப்போது, பிரகாஷ் சிறப்பாகப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது அவருக்குப் பெருமையளித்தது. தனது கவலைகளையெல்லாம் ஆற்றிவிட்டது மாதிரி ஓர் உற்சாகமும் தோன்றியது.
"என்ன பாடுபட்டும் என்ர பிள்ளையைப் படிப்பிச்சுப் போட வேணும்!” மனதில் ஒரு வைராக்கியம் போல நினைத்துக் கொண்டார். "நான் சாப்பிடாமல் கிடந்தாலும். பரவாயில்லை. பிள்ளையைப் படிப்பிச்சுப் போட வேணும்!
படிப்பித்துவிட்டால்?. பிறகு?. பிறகு? அவருக்குச் சற்றுக் குழப்பமாயிருந்தது. பிறகு அந்தக் குஞ்சு பறந்து போய்விடுமே?. இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து, படித்தவர்கள் அனேகர் பறந்து போய் விட்டார்களே! படிப்பு ஒரு காரணமாயிருந்து தன் பிள்ளையைத் தன்னிட மிருந்து பிரித்துவிடுமோ என்றும் அவருக்குக் கலக்கமாயிருந்தது. பிரகாஷ் தன்னைவிட்டுப் போய்விடுவானா? "அப்பா!. அப்பா!. என்று ஒரு நாய்க் குட்டியைப் போல கால்களுக்குள் சுற்றி வரும் பிள்ளை. ஒரு நாளைக்குத் தன்னைப் பிரிந்து போயே விடுவானா? அவருக்குத் தனது தம்பிமாரின் நினைவு வந்தது. அவர்க ளெல்லாம் படித்து ஆளாகியதும் பறந்து போய்விட்டார் களே! ஆஸ்திரேலியாவிற்கு ஒருவன், கனடாவுக்கு ஒருவன் என்று மைகிரேஷன் விசா கிடைத்துப் போய்விட்டார்கள்.
கொழும்பில் இன்னமும் இருக்கும் தம்பி கூட வெளிநாட்டில் இருப்பவன் போல இந்தப் பக்கம் வருவதுமில்லை. அவனும், அவுஸ்திரேலியாவுக்கோ, கனடாவுக்கோ மைகிரேஷன் விசாவுக்கு முயற்சிப்பதாக வும், கிடைத்ததும் போய்விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.
போனவர்கள் இனித் திரும்ப வருவார்களா? எப்போது வருவார்கள்? அவர்களுக்குப் பெயர் சூட்டியது னைவிருக்கிறது. அவர்களை தூக்கி விளையாடியது
s
g
i

னைவிருக்கிறது. அவர்கள் மேற்படிப்புக்கு வந்து பூனிவர்சிற்டி என்ரர் பண்ணியபோது சந்தோஷம் பொங்கி பது நினைவிருக்கிறது. இப்போது அவர்களெல்லாம் கண்காணாத தேசங்களில். எங்கோ ஒரு திக்கில்.
அப்போது அவரது தந்தையின் சம்பாத்தியம் அவர்களது படிப்புச் செலவுக்கு ஈடுகொடுக்குமளவுக்குப் பாதாது. அதனாற்தான் அவரும் படிப்பை இடைநடுவில் நிறுத்திக் கொண்டு சீமென்ற் பக்டரியில் வேலைக்குச் சர்ந்திருந்தார்.
தம்பியவர்கள் பாஸாகியதும் “நீங்கள் படியுங்கோ!. சலவைப்பற்றி யோசிக்க வேண்டாம்!"என உற்சாக ழட்டினார். அவர்களை எப்படியாவது படிப்பித்து ஆளாக்கி விட வேண்டும் எனக் கனவு கண்டார். இராப் கலாக ஒவள்டைம் வேலை செய்து உழைத்தார்.
தம்பியவர்களிடமிருந்து கடிதங்கள் வரும் அவர்களது தவைகளைக் குறிப்பிட்டு எழுதியிருப்பார்கள், காசு காஞ்சம் அனுப்பி வையுங்கோ'
கொஞ்சமென்றால் எவ்வள்வு? அது இரு நூறா? இரண்டாயிரமா? அவருக்குப் புரியாமலிருக்கும். ஆனால், 5ம்பியவர்கள் அந்தரித்துப் போய்விடக் கூடாதே என்று கவலையாயிருக்கும். தன் கையில் இல்லாவிட்டா லும்,யாரிடமாவது மாறிவிடுவார். சில வேளைகளில் பணம் கைக்கு கிடைக்கத் தாமதமாகிவிடும். தபாலில் அனுப்பச் iணங்கி விடுமோ என றெயினில் பயணமாகி நேரிலேயே கொடுத்து விட்டு வருவார். அப்படிப் போவதற்கு நம்பியவர்களை நேரிலே பார்த்த ஆறுதலும் ஏற்படும் ன்பதும் ஒரு காரணம்.
சம்பளமெடுத்ததும் பட்ட கடனெல்லாம் அடைக்க வண்டும். கை வெறுமையாகி விடும். அக்காவின் திருமணத்திற்குப் பட்ட கடன். மற்றும் வீட்டுச் செலவுகள் 'ன்ற ஐயா ஏற்கனவே கடனாளியாகியிருந்தார். அதையும் டுகட்ட வேண்டும். அக்கா திருமணம் முடித்து பாய்விட்டாலும். அவளுக்கு அன்றாடக் கஷ்டங்கள் பசதிக் குறைவு இருந்தது. வீட்டுக்குச் சொல்ல வண்டாம். ஏதாவது தந்து உதவி செய்.தம்பி!' என அவளும் எழுதியிருப்பாள். இவற்றையெல்லாம் மாளித்துக் கொண்டு இனி வரும் மாதத்தையும் எதிர் |காள்ள வேண்டும்!
வேலைக்கு வந்தால். மத்தியானச் சாப்பாட்டையும் விர்த்துக் கொள்ளப் பழகியிருந்தார். பக்டரிக்கு முன்னுள்ள கடையில் அவர், மற்றைய தொழிலாளர்க ளைப்போல் “எக்கவுண்ட்” வைத்திருக்க மாட்டார். அது சலவு அதிகரிப்பதற்கு ஒரு வழி என்ற பயம் அவருக் சிருந்தது. நண்பர்களோடு போய் ரீ. சிகரட் நண்பர்களுக்கு) அது இது என்று எடுத்துக் கொண்டு காப்பியில் பதிந்து விட்டு வந்தால். பின்னர் மாத pடிவில் முழிக்க வேண்டி வரும்,
கடையில் எக்கவுண்ட் இல்லை. கையில் காசுமில்லை. பூனால் பசிக்கும். பல நாட்களில் பசியோடு எப்படியோ நரத்தைக் கடத்தி விடுவார். ஆனால் பசி தாங்க pடியாத அளவுக்கு அவரை பல தடவைகள்
t 55 11

Page 13
வாட்டியதுண்டு கால்களில் ஒரு நடுக்கம் ஏற்படும். நட முடியாமல் தடுமாறும். உடல் சோர்ந்து போகும். ஆ மணியண்ணனுக்குத் தெரிந்துவிடும். மணியண்ை அவரது செக்சனில் அவருக்குக் கீழே வேலை செ ஒரு மூத்த மெக்கானிக்,
‘என்ன சேர்?. முகம் வாடிக் கிடக் சாப்பிடயில்லையா?”
அதற்கு அவர் சமாளிப்பாக ஏதாவது கூற முயல்வ ஆனால் மணியண்ணை விடாப்பிடியாகக் கேட்( கொண்டு இருப்பார்.
’சொல் லுங் கோ! . . சாப் பரிட் டனிங் களா? சாப்பிட்டனிங்களா?
மணியண்ணையிடம் கடைசியாகச் சரணை வேண்டி வரும். தனது கஷ்ட நஷ்டங்களை அ அவ்வப்போது மணியண்ணையுடன் கதைத்து கொள்வதுண்டு. அவரது நிலைமையைத் தெரிர வைத்திருந்ததால் போலும், மணியண்ணைக்கு அ மேல் ஒரு வித இரக்கமூம், கரிசனையும் இருந்த சிலவேளைகளில் மணியண்ணை கேட்காமலே .தான சென்று வாய்விட்டுக் கேட்டிருக்கிறார்.
“மணியண்ணை. பசிக்குது! இனியும் தாக்கு பிடிக்கேலாது!. என்ன செய்வம்” ஒரு பகிடியைப் பே இந்த விஷயத்தை மணியண்ணைக்குத் தெரிவித்தாலு என்ன செய்வது என்பது மணியண்ணைக்குத் தெரிய இரண்டு பேருமாக முன் கடைக்குப் போவார்கள். மு கடையில் மணியண்ணைக்கு ’எக்கவுன்ட்' இருந்த அங்கு அவர் பாணும் பருப்புக் கறியும் சாப்பிடுவ அந்தக் கணக்குகளையெல்லாம் குறித்து வைத்து, ம முடியச் சம்பளமெடுத்ததும் மணியண்ணையிட கொடுத்து விடுவார்.
தம்பியவர்கள் யுனிவர்சிட்டியில் பட்டமெடுத்தது
தான் பட்ட கஷ்டமெல்லாம் வீண் போகவில்லை என சந்தோஷமாயிருந்தது. . ஆனால். அவர்களெல்ல இப்போது அவருடன் இல்லையே! ஒவ்வொருவர ஆஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் குடி பெயர்ந்தபே அவருக்குச் சந்தோஷமாக இருந்ததா? கவலைய இருந்ததா? அவருக்குப் புரியவில்லை. 'எங்கையாள போய் நல்லாயிருக்கட்டும்' என்று மனதார வாழ்த்தின இங்கயும் இந்த நாட்டில இருந்து என்னதா செய்யிறது?”
ஒரே வீட்டிலிருந்து ஒன்றாக விளையாடி, ஒருவருக ஒரு காய்ச்சல் துன்பம் வந்தால் துடித்துப்போய். அம் தந்த சாப்பாட்டை வயிறு நிறைய உண்டு, ஐயாவை கணி டதும் ஒதுங் கரி வாழ் நீ த வாழ்க் ை இல்லையென்றாகிவிட்டது. அந்த ரம்மியமான நினைவுச மட்டும் மனதில் உண்டு. இந்த நாட்டில் இனப்பாகுபா( யுத்தப் பிரச்சனையும் இல்லாமலிருந்தால். இப்பட திக்குத் திக்காகச் சிதறிப் போகாமல் இங்கே( இருந்திருப்பார்களோ? எப்படியோ, இங்கிருந்து சீரழியாட போன இடங்களிலாவது நிம்மதியாக இருக்கட்டும் 6 மன ஆறுதலடைய முயல்வார். ஆனால், அவர்கை
12 seriend

9lĝ5il
T
ய்த
BITfi. டுக்
الناس வர் துக் ந்து ଶuff
oġbol.
குப் ால் லும் Jb. p6ir
ġbl.
TT.
ாத
— LD
iறு TLb
Tgl
町ö
JS
Tr.
DT lds
55 Б6ії டும்
இனி எப்போது காண்போம். இனி எப்போது வருவார்கள். எப்போதாவது வருவார்களா? என்ற கேள்விகள் பிறக்கும்.
ஷெல் விழுந்து வீடு உடைந்து போன விஷயத்தை எழுதியபோது திருத்த வேலைக்கென பணம் அனுப்பியிருந்தார்கள். 'காலமெல்லாம் உழைத்துக் கட்டிய வீட்டை நீங்கள் இழந்து நிற்கிறீர்கள். இங்கு நாங்கள் எங்கள் எதிர்கால உழைப்பையெல்லாம் இட்டு (வங்கியில் கடனெடுத்து) விடு வாங்கியிருக்கிறோம் என எழுதியிருந்தார்கள்.
சென்ற இடங்களிலெல்லாம் காலூன்றி விழுதுவிடுவது மகிழ்ச்சிதான். தமிழ் விழாக்கள் கூட நடத்துகிறார்களாம். சென்ற இடங்களிலெல்லாம் எங்கள் தேமதுரத் தமிழைச் சிறக்கவைக்கும் அவர்களின் செயலை அறிய உள்ளம் பூரித்து உணர்ச்சி வசப்படுகிறது. ஆனால் பிறகும் அதேபயம். இந்த மண்ணையும் மண்ணடி வேர்களையும் மறந்தே போய் விடுவார்களா? அவருக்குப் புரியவில்லை. தம்பி! நீங்களெல்லாம் ஒரு நாளைக்கு இங்கு வரவேண்டும். (அல்லது வந்து போக வேண்டும்)
இந்த மண்ணை மறக்கக் கூடாது. உங்களை வளர்த்தெடுத்த வேர்கள் இங்குதான் இருக்கின்றன.
கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தம்பியவர்கள் சொந்தமாக வீடு வாங்கி விட்டார்கள் என்றதும் ஒரு வித சந்தோஷம். மீண்டும் அதே கேள்விகள். அது சந்தோஷமா? . கவலையா? இவர்களெல்லாம் அங்கே வீடு வாங்கி விட்டார்கள். அங்கங்கே குடும்பத்துடன் நிலைத்து விட்டார்கள். திரும்ப இங்கு வருவார்களா? இங்கு அச்சுவேலியிலும் தின்னவேலியிலும் இருந்து கொண்டே ஒரு நல்ல நாள் பெருநாளுக்குக் கூட ஒருவரை ஒருவர் சந்திப்பது கஷ்டமாயிருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் இருந்து பிள்ளைகளின் போட்டோக்கள் வருகின்றன. சில வேளைகளில் வீடியோவிலும் பதிவு செய்து அனுப்புவார்கள். பேர்த்தே பார்ட்டி அது இது என்று டெக் வாடகைக்கு எடுத்து வந்து தன் பிள்ளைகளோடு கூட இருந்து பார்ப்பார். அந்தப் பிள்ளைகளை எப்போது நேரில் காண்போம் எனப் படங்களைப் பார்த்துக் கொண்டே உள்ளம் குமுறுவார். அல்லது அந்தப் பிள்ளைகளைக் காணுமுதலே காலம் வந்து போய்ச் சேர்ந்து விடுவேனோ? அவர்கள் பெரியவர்களானதும் ஒரு வேளை இந்தப் பக்கம் வருவார்களோ? வரும்போது இந்த நாடு யுத்தமில்லாமல் இருக்குமா? வந்தாலும் அவர்களுக்கு தன்னை ஞாபகமிருக்குமா? பாசமிருக்குமா? பெரியப்பா .தஸ் . புஸ் . கிஸ் என ஏதாவது ஆங்கிலத் தனமாகத் தங்களது கடமையை முடித்துக் கொண்டு போய் விடுவார்களோ? ஐயோ!. அப்படி இருக்கக் 8nLTg5).
பிரகாஷ் பரீட்சையில் எட்டும் "டி" எடுத்த விஷயத்தை எழுதியதும் அவர்களுக்குப் பரம சந்தோஷம். அவர்களது கைபடப் பிரகாசுக்கு கடிதம் எழுதினார்கள். படிப்புச் செலவுகளுக்குப் என்று பணமும் அனுப்பியிருந்தார்கள். "நீ படிச்சு ஒரு டொக்டராக வரவேணும். அப்பாவின் கஷ்டங்களை நீதான் தீர்க்க வேண்டும்!”

Page 14
அவருக்கு அது வருத்தமாயிருந்தது. இந்தச் சிறுவனின் மனசுக்கு சுமையை ஏற்றுவதுபோல அந்த வாக்கியம் அமைந்திருந்தது. அதை அவர் விரும்பவில்லை.
“மகன்! என்ர கஷடங்களை நீ யோசிக்க வேண்டாம். அப்பன்! நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வந்தால். அதே போதும் எனக்கு!”
யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்தே அவர் வேலையுமின்றி வேற எந்தப் பிழைப்புக்கும் வழியுமின்றி இருந்தபோது தம்பியவர்கள் அவ்வப்போது பணம் அனுப்பிவைப்பார்கள். வாழ்க்கை கட்டையிலேறி விடாமல் ஓரளவேனும் ஓடிக்கொண்டிருப்பதற்கு அவர்கள்தான் காரணம். தாங்க முடியாத காலகட்டங்களிளெல்லாம் அவர்கள் விழுதுகள் போலத் தாங்கி நின்றதை நன்றியுடன் நினைத்துக் கொள்வார். இப்போது அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் என்ன? வருடப் பிறப்பும் வருகிறது. பிள்ளைகளுக்குச் சரியான உடுதுணிகூட இல்லை. ஏதாவது பார்த்து அனுப்பிவையுங்கோ என எழுதிப் பார்க்கலாமா? அவருக்கு கூச்சமாயிருந்தது. தம்பியவர்கள்தானென்றாலும் ஓர் அளவு இல்லையா? எப்போதும் கையேந்திக் கொண்டு போனால் அவர்கள் என்ன செய்வது? அவர்களும் குடும்பம் பிள்ளைகள், குட்டிகள் என்று ஆகி விட்டவர்கள். செலவுகள் அதிகரித்திருக்கும். அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது. தன் இயலாமையில் எப்போதாவது எழுதிவிடுவதுண்டு. அவர்களும் எந்த அளவுக்குத்தான் உதவி செய்து கொண்டிருக்க முடியும்? வேறு யாரிடமாவது கடனாகக் கேட்டுப் பார்க்கலாம். யாரிடம் கேட்பது? கேட்கக் கூடியவர் களிடமெல்லாம் கேட்டு விட்டார்கள். ஏற்கனவே வேண்டி யவை இன்னும் திருப்பிக் கொடுக்கவுமில்லை. இப்போது அவரைக் கண்டதும், இவர் கடன் கேட்டு விடுவாரோ' என முன்னெச்சரிக்கையாக ஒதுங்குபவர்கள் அதிகம்!
தனக்கு இது ஒரு ராசியோ என எண்ணிப் பார்த்திருக் கிறார். உழைக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே தன்னிறைவு கண்டதில்லை. ஏதாவது ஒரு தேவைக்காக கடன்பட வேண்டி வந்து விடும். கை நிறைய உழைத்திரு க்கிறாள். ஆனால் அதையும் மீறிய தேவைகள். அதனால் கடன் பட்டு.கடன் பட்டு கடனைச் செலுத்த இங்கு பட்டு அங்கு செலுத்தி. அங்கு பட்டு இங்கு செலுத்தி கடனாளியாக இல்லாது நிம்மதியாக இருக்கிற ஒரு நாள் வருமா? என ஏங்கியிருக்கிறார். வேண்டாம், மற்ற யாரிடமும் போக வேண்டாம் தம்பியவர்களிடமே கேட்க லாம். எப்பவாவது என்ர மகன் நல்லாய் வந்தால் நீங்கள் செய்த உதவிகளையெல்லாம் மறக்கமாட்டான். வருடப் பிறப்பும் வருகுது. கொஞ்சம் அனுப்பி வையுங்கோ”
தேவராசா அண்ணன் கொழும்புக்குப் போவதாகச் சொன்னவர். அவரிடமே கொழும்பிலிருக்கும் தம்பியிடம் கொடுக்கும்படி கடிதத்தைக் கொடுத்துவிடலாம். அவன் மற்றவர்களுடன் ரெலிபோனில் கதைப்பான். அவர்களது காசு வரச் சுணங்குமானால் இவனையே அனுப்பி வைக்கும்படி எழுதலாம். பின்னர் அவர்களது காசு வந்ததும் எடுத்துக் கொள்ளட்டும்
‘விடிஞ்ச நேரமுதல். என்ன இதிலையிருந்து

யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்?. எந்தக் கோட்டையைப் டிக்கிறதுக்கு? எழும்புங்கோ! எழும்பிப் பார்க்கிற அலுவலைப் பாருங்கோ!'
சரசு அதட்டுவது போலத்தான் பேசுவாள். ஆனால் அதட்டலல்ல. அன்புக் கட்டளை என்று எடுத்துக் கொள்ளலாம். தான் ஒரே இரையாக இருந்து யோசிப்பது அவளுக்கு சங்கடமாயிருக்கிறது. இந்த மனுசனுக்கு இப்படி இருந்து யோசித்து யோசித்தே ஏதாவது பூகிவிடுமோ என்ற பயம் அவளுக்கு என்பது அவருக்குத் தெரியும்.
இருந்த இடத்தை விட்டு எழுந்தார். குளித்து விட்டு வந்து சாமி படத்துக்கு முன்னால் போய் நின்று திருநீறு பூசினார். “கடவுளே’ என மனமுருகி வேண்டினார். தனது தந்தையையும் தாயையும் நினைத்தார்.
மனைவியை, பிள்ளைகளை, தம்பியவர்களை, அவர்களது குடும்பம் பிள்ளைகளை எல்லோரையும் நினைத்து எல்லோருக்காகவும் பிராத்தனை செய்தார். ால்லோரும் ஒரு தொல்லையுமில்லாமல் இருக்கவேணும். இந்த யுத்தம் கெதியில முடிய வேணும். எல்லோரும் ஒன்று சேர வேணும். இன்றையப் பிரார்த்தனையில் ஒரு விசேஷ அம்சத்தையும். வேண்டுகோளாக விடுத்தார். கைக்கு எப்படியாவது பணம் வந்து சேர வேணும். பிள்ளைகளுக்குப் புதுவருடத்துக்குப் புத்தாடை வாங்கக் கூடிய வசதி பிறக்க வேணும்.
தன்னால் இயலாது என்ற கட்டம் வந்ததும் கடவுளிடம் விட்டுவிடுவார். இலகுவாகத் தப்பிக்க இது ஒரு வழியாயுமிருந்தது. கடவுளும் ஏதோ ஒரு வழியில் அவரது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்ப்பதுண்டு. இல்லாவிட்டால் எப்படி அவருக்குத் தனது தந்தையின் 5டன்தனிகளைத் தீர்த்திருக்க முடியும்? தம்பியவர்களைப் டிக்க வைத்திருக்க முடியும்? பிள்ளைகளை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்திருக்க முடியும்? கடவுளும் அவரது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்காத நேரங்களில் அல்லது கடவுளுக்கும் இயலாமற் போன தருணங்களில் அதற்கொரு நியாயம் கற்பித்து அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளப் பழகியிருந்தார். 'இப்ப காலம் சரியில்லை. ல்ல காலம் வந்தால் எல்லாம் நல்லதாய் நடக்கும்!
நல்லகாலம் எப்போது வரும் என அவருக்கு ாக்கமாயிருக்கும். இந்த நாடு எப்போது சீரடையும்? ப்போது இந்த யுத்தம் ஒரு முடிவுக்கு வரும்? எப்போது ாங்களுடைய பிள்ளைகள் சுதந்திரமாக நடமாட முடியும்? பிள்ளைகளை வெளியிலே விடுவதானால், பெண் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி ஆண் பிள்ளைகளுக்கும் இப்போது துணை போக வேண்டியுள்ளது. வெளியே பான பிள்ளைகள் திரும்ப உருப்படியாக வந்து சேர்வார் க்ளா! என்ற பயம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஒவ் lவாரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் வருகின் |ன. சீருடையில். வந்தவர்கள் வானில் ஏற்றிக் கொண்டு பானார்களாம். பிறகு எந்த இடமென்று இல்லை. பெற்ற பர்கள் நெஞ்சு குமுற அலைந்து திரிகிறார்களாம். இது ன்ன சீர்? பொழுது பட்டால் எப்போது விடியுமென்று நஞ்சிடிக்கிறது. மூச்சு விடுவதற்கே பயந்து பயந்து
விக்க வேண்டியுள்ளது. பிள்ளைகள் தும்மினால் இ

Page 15
மினால் கூட சரசு பதற்றமடைகிறாள். "மெல்ல. மெல்ல சத்தம்போடாதயிங்கோ!” இரவில் வீட்டடங்குச் சட்ட
கொலைகள் ஒரு புறம் கொள்ளையர்கள் பற்றி பயம் இன்னொரு புறம், மூலைக்கு மூலை தொட கப்படும் கேடு கெட்ட சினிமாக்கள். கசிப்பு வியாபார இப்போது மற்றவித போதை வஸ்துக்களும் புளங்க தொடங்குகின்றன என்ற கதைகளும் அடிபடுகிறது மாணிக்கம் மாஸ்டர் சொல்வதுபோல திட்டமிட்ே எங்களுடைய கலாச்சாரம் சீரழிக்கப்படுகிறதா? இதிலெ லாம் எங்களுடைய பிள்ளைகள் சிக்கித் தொலைந் விடுவார்களோ என்று பயமாயிருக்கிறது. இங்க திரும் வந்தது சரியா என அவருள் கேள்விகள் பிறக்கின்ற6 இங்கு வராமல் வேறு எங்கு போவது? ஏன் போ வேண்டும். தப்பிப் பிழைப்பதற்கா? வாழ்க்கை என்ப தப்பிப் பிழைத்து உயிர் வாழ்வது மட்டுமா? எத்தை இடர் வரினும் இந்த மண்ணை விட்டு ஓடாது, இதி வேள் பாய்ச்சி எங்களுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத் விட்டு போவது உன்னதமான வாழ்க்கை ஆகாதா? சர சொல்லுவாள், நாங்களும் எங்கையாவது ஒரு நாட்டுக்கு போயிருக்கலாம். இந்தத் தலையிடிகள் இல்லாம நிம்மதியாக சீவிச்சிருக்கலாம். இந்தப் பிள்ளையளின் எதிர்காலமாவது நல்லாய் வந்திருக்கும். அவர் அதற் பதில் பேச மாட்டார். சரசுக்கு விசர் என நினைத்து கொள்வார். பின்னர் மனைவியைச் சமாதானமடைய செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டு “வசதியுள் ஆட்கள் போகினம். நாங்கள் எங்க போறது?’ என ஒ எதிர்க் கேள்வியைப் போடுவார்.
அவருக்குத் தெரியும், பிள்ளைகளின் எதிர்காலத்ை எண்ணிக் கொண்டே ஒவ்வொரு நாளும் தங்களுடை புத்திக்கு எட்டியவாறு ஒவ்வொரு இடங்களிலும் போ தஞ்சமடைகிறார்கள். அல்லது யாழ்ப்பாணத்திலேே தங்கிவிடுகிறார்கள்.
மீரா பாடசாலைக்குப் போக ஆயத்தமாகி வந் நின்றாள். “அப்பா நான் ரெடி. வாங்கோ போகலாம்
பிரகாஷையும் அழைத்துக் கொண்டு அவ புறப்பட்டார். அவரவர் பாடசாலைகளில் அவர்களை விட் விட்டு அவர் கையெழுத்திடப் போக வேண்டும். சீமெந் தொழிற்சாலை அலுவலகம் தற்காலிகமாக ஓரிடத்தி இயங்குகிறது. கையெழுத்திட்டுப் பெறும் (சம்பளப்) பண தில் தான் சாப்பாட்டுப் பிரச்சனை ஒருவாறு சரிக்கட்ட படுகிறது. இது கூடச் சரியா? என அவரை யோசிக்க தூண்டியிருக்கிறது. ஆனால் வேறு வழியில்:ை அப்போதும் மாணிக்க மாஸ்டரின் ஞாபகங்கள் தா நினைவில் வரும். "மறைமுகமாக நாங்கள் இப்படியொ நிலைமைக்குள் தள்ளிவிடப்பட்டிருக்கிறம். உலருணவு நிவாரணம் என்று எல்லாத்துக்கும் வேற கையைத்தா எதிர்ப்ார்த்து நிக்க வேண்டியிருக்கு. பார்த்தியளோ கையெழுத்திட வந்த ஏனைய நண்பர்கள் சிலரை கண்டபோது மனதில் சபலம் தட்டியது. சற்று பேதலி தது. இவர்கள் யாரிடமாவது கேட்டுப் பார்த்தால் என்ன அவருடைய நிலைமை தெரிந்த நல்ல மனம் கொண் நண்பர்கள் சிலர் உள்ளனர். பல தடவைகள் உத செய்திருக்கிறார்கள். கேட்டுப் பார்க்கலாம். சரி வந்தாலு
回哆巴

த்
:
வரக் கூடும். இப்போது பணம் கிடைத்தால் பிள்ளைக ளுக்கு தேவைப்படும் உடைகளைப் பார்த்து வாங்குவத ற்கு அவகாசமிருக்கும். பின்னர் தம்பியவர்களிடமிருந்து காசு வந்ததும் இதைத் திருப்பிவிடலாம்.
காசு கிடைத்து பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்து அவர்கள் குதூகலிப்பதை மானசீகமாக நினைத்துப் பார்த்தார். அவரது உள்ளமும் குதூகலித்தது. புதிய ஆடையென்றால் யாருக்குத்தான் சந்தோஷமிருக் காது? அவருக்குக்கூட, புதிதாக ஒரு சேர்ட் போட்டுப் பார்க்க ஆசைதான். மணமுடித்த ஆரம்ப காலங்களில் திருமணநாள் நினைவாக, மற்றும் அவரது பிறந்த நாள் என்று சரசு அவருக்குச் சேர்ட் வாங்கித் தருவாள். சேர்ட் கைக்கு வந்த உடனேயே அதைப் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்து விடுவார். கொஞ்ச காலம் தான் இதெல்லாம் தடல்புடலாக நடந்தது. அதன் பிறகு சரசுவுக்கும் அலுத்துப் போயிருக்கக்கூடும்! அல்லது அவளது தலையையும் அழுத்திய பொருனாதாரப் பிரச்சினை காரணமாயிருக்கலாம். இப்போது மண நினைவு நfளும் பிறந்த நாளும் வருவதும் போவதும் தெரியாமல் போய்விடும்.
காசு கிடைத்தால், இந்த வருடப் பிறப்புக்கு தனக்கும் ஒரு சேர்ட் வாங்கினாலென்ன என்று அவருக்கு ஆசையாயிருந்தது. ‘கந்தலைக் கசக்கிக் கட்டு' என எங்கேயோ ஒரு பாடல் ஞாபகம் இருக்கிறது. அது போலத்தான் தனது நிலைமையும் போய்க் கொண்டிருக் கிறது. வருடப் பிறப்புக்குப் புத்தாடை அணிந்து அயலிலுள்ள பிள்ளைகளின் உடைகளுடன் ஒப்பிட்டு இது நல்லது என மகிழ்ந்த காலம் இன்றும் நினைவி ருக்கிறது. தனது பிள்ளைகளுக்கும் அது போலத்தான் ஆசை இருக்கும்? புத்தாடையைக் கண்டு பிள்ளைகள் துள்ளிக் குதிப்பதை நினைக்கும் போதே நெஞ்சில் ஒருவித இதம் வருடியது.
அந்த ஆர்வத்தில் ஒரு சில நண்பர்களிடம் அணுகி கேட்டுப் பார்த்தார்.
“உங்களுக்கு இதொரு விளையாட்டாய்ப் போச்சுது! நெடுகலும் கடன். கடன் என்றால் நாங்கள் எங்க போறது? உங்களைப் போலத்தான் எங்களுக்கும் கஷ்டம்.” என்பது போன்ற பதில்கள்தான் கிடைத்தன.
சுமாரான வருமானம் உள்ளவர்களுக்கும் இங்கு வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது கஷ்டம் என்பது உண்மைதான். பொருட்கள் எதைக்கேட்டாலும் தடை. தட்டுப்பாடு, கிடைக்கக் கூடியதாயிருந்தால் கொடுக்க முடியாத விலை. இந்த விசித்திரத்தில் அன்றாடம் சீவியத்தைக் கொண்டு நடத்துவது எப்படி?
சரி, தம்பியவர்களிடமிருந்து பணம் வரும்வரை பொறுமையாயிருக்கலாம். என மனதைக் கட்டுப்படுத்த முயன்றார். எனினும் சில வேளைகளில் மனம் கேட்க மறுக்கிறது. கொழும்புக்குப் போன தேவராசா அண்ணன் பத்து நாட்களில் வருவதாகச் சொல்லியிருந்தார். எப்போது அந்த நாள் வரும் என எண்ணிக் கொண்டிருந்தார்.
விற்கக் கூடியதாக ஏதாவது இருக்கிறதா? என்றும்

Page 16
அவரது சிந்தனை ஓடியது. நகை. நட்டு என்ற ஒன்றும் இல்லை, வீட்டில், சமையல் பாத்திரங்களையும் சாப்பாட் டுக் கோப்பைகளையும்கூட சரசு அவர் கண்ணில் பட விடுவதில்லை.
நாலைந்து கோழிகள் வீட்டில் நிற்கின்றன. அவற்றை விற்றுவிட்டால் என்ன? அந்தக் கதையைக் கேட்டதும் சரசு அடிப்பதுபோல வந்து விட்டாள்.
“அதுகள் நிற்கிறதும் உங்கட கண்ணுக்கை குத்திப் போட்டுதா? அதுகள் நிற்கிற புண்ணியத்தில தானே பிள்ளைகள் இடைசுகம் முட்டை சாப்பிடுதுகள்? பிள்ளை யளுக்கு வேறு என்ன சத்தான சாப்பாடு குடுக்கிறம்?”
பிள்ளைகளுக்குப் போஷாக்கான சாப்பாடு இல்லை என்ற கவலை அவருக்கும் உண்டு. மினுக்கென்று இருக்கவேண்டிய பருவத்தில் எலும்பும் தோலுமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
தேவராசா அண்ணன் வந்து சேர்ந்திருப்பாரா? என இடையிடையே அவரது வீட்டுப் பக்கம் போய் பார்த்து வந்தார்.
“போனவரை இன்னும் காணயில்ல. அதுதான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.”
“வந்திடுவார்1. யோசியாதையுங்கோ! தெரியாதா. கொழும்புப் பயணம். போக்குவரத்து பெமிசன் எடுக்கவே. அலையவேண்டியிருக்கும்.' தேவராசா அண்ணனின் மனைவிக்கு அவர் ஆறுதல் கூறிவிட்டு வருவார். ஆனால் வருடப்பிறப்புக்கு முன் அண்ணன் வந்து விட வேண்டுமே! என்ற ஏக்கம் இவருக்கிருக்கும்.
வருடப்பிறப்புக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் உள்ளது என்ற நிலையில் அவருக்குக் காய்ச்சலே பிடித்து விடும் போலிருந்தது. இன்றைக்கும் தேவராசா அண்ணன் வரவில்லை யென்றால் என்ன செய்வது? பிள்ளைகளிடமென்றால் இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்றைக்குக் காசு வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேவராசா அண்ணன் வீட்டுக்கு ஒரு முறை போய் பார்த்து வரலாம் என்று தோன்றினாலும், நெடுகலும் போய் அலைவதை அவர்கள் எப்படிக் கருதுவார்களோ என ஒருவித சுய கெளரவம் தடுத்தது. மாலைவரை தாமதித்து பார்த்து விட்டுப் போகலாம்.
ஆனால் ஒரு அற்புதம் நிகழ்வதைப் போல தேவராசா அண்ணன் வீடுதேடி வந்தார். தம்பி கொடுத்தவிட்டதாக அந்த என்வலப்பையும் கொடுத்தார். பிரகாசும் மீராவும் அவருக்குப் பக்கத்தில் ஓடிவந்து விட்டனர். அவர் வந்தவரோடு கதைத்துக் கொண்டிருக்கப் பிள்ளைகள் அவள் கையிலிருந்த என்வலப்பை பிடித்துப் பிடித்துப் பார்த்தார்கள். அவருக்கு அதை அந்தக் கணமே உடைக்க வேண்டும் என்ற ஆவல், ஆனால் தேவராசா அண்ணன் தனது கொழும்புப் பயணத்தில் ஏற்பட்ட இடைஞ்சல்களையும், தனது சாதுரியத்தால் இவ்வளவு கெதியாக வரமுடிந்ததையும் ஒரு சாதனை போல சொல்லிக் கொண்டிருந்தார். போன பிறகு உடைக்கலாம் எனப் பொறுமையைக் கடைப்பிடித்தார். தனது கைவிரலால் மெதுவாக என்வலப்பின் உள்ளடக்கத்தை

உணர்ந்து பார்த்தார். தடிப்பாகத்தான் இருக்கிறது. எவ்வளவு அனுப்பியிருப்பார்கள்?
என்வலப்பை உடைத்தபோது ஐந்தாறு பக்கம் பக்கமாக கடிதம் பணம் இல்லை! சரியாகக் கவனிக்க வில்லையோ? எனத் தாள்களை ஒவ்வொரு ஒற்றையாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். இல்லை,பணம் இல்லை, கலவரத்துடன் கடிதத்தைப் படித்தார், சாராம்சம் இதுதான்.
"நீங்கள் எழுதியிருந்த பண விஷயமாக அவர்களுடன் ரெலிபோனில் கதைத்தேன். உடனடியாக அனுப்புவதற்கு வசதியில்லையாம். பின்னர் அனுப்புவதாகச் சொல்லச் சொன்னார்கள். தங்களுக்கும் குடும்பப் பொறுப்புக்கள் இருக்கிறது. இப்படி நெடுக அண்னைக்கு அனுப்பிக் கொண்டிருக்கேலுமோ? தன்னுடைய குடும்பத்தைக் கவனிக்கிற பொறுப்புணர்வு அண்ணைக்கு இருக்க வேணும். நெடுகலும் தங்களுடைய கையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாதாம்! அவையள் எப்ப அனுப்புவினமோ தெரியாது. அதை நம்பி என்ர கையில் உள்ள கொஞ்ச நஞ்ச காசையும் உங்களுக்கு அனுப்பிவிட்டு நான் என்ன செய்யிறது? கொழும்புச் சீவியத்தைப் பற்றி தெரியும் தானே?.
இந்த விஷயத்தை நோகாமல் சொல்லுவதற்காக ஆறோ ஏழோ தாள்கள் செலவளிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவருக்கு நொந்தது.
கைகளை அகல விரித்துத் தழைத்த மரமொன்றில்
அடிவேரை வெட்டி விட்டது போலச் சதுரமெங்கும் التي للماكاوليكي
பக்கத்தில் நின்ற மீரா கேட்டாள்
“காசு அனுப்பவில்லையா அப்பா?”
"இல்லை அம்மா!"
"66?"
அவர் பதிலளிக்கவில்லை. சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. அல்லது பதில் தெரியாது. வாழ்க்கையில் பதில் சொல்லப்படாத, பதில் அறிய முடியாத நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகள் நினைவில் வந்தால் அவரை இராப்பகலாய் வருத்துவதுண்டு.
கடிதத்தை மீராவின் கையில் கொடுத்தார். அதிலிருந்த வாக்கியங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து அவரை அடித்துப் போடுவது போலிருந்தது. மனதை ஒரு நிலைப்படுத்தி நிதானிக்க முயன்றார். தனது இயலாத தன்மையால் தம்பியவர்களையும் கஷ்டப்படுத்தி விட்டேனோ! என்ற குற்ற மனப்பான்மைக்கு உட்பட்டவர் போலானார். நீண்ட நேரம் யாருடனும் பேசாமலிருந்தார். மனைவி வந்து அவரை ஆறுதல் படுத்தினார்.
"அதுக்கேன் கவலைப்படுறிங்கள். அவையஞக்கும் என்ன கஷடமோ? ஆருக்குத் தெரியும்?கடவுள் விட்ட வழி!'இருளி வந்து மெல ல மெல்ல மூடிக்கொண்டிருந்தது. வேளைக்கே படுக்கைக்குப்
s GS) 1s

Page 17
போனார்.ஆனால் உறக்கம் வரவில்லை. சரசு வந்: படுத்து அடித்துப் போட்டது போல உறங்கி விட்டால் பகல் முழுவதும் மாய்ச்சல் படுகிற தேகம் போலு படுத்ததும் உறங்கி விடுவாள். அது அவளுக்கு ஒ கொடையென நினைத்திருக்கிறார். அதுவும் நல்ல தானே? மனக் கவலைகளுக்கு தூக்கத்தை விட வே மருந்து ஏது? ஆனால் அவர் எத்தனையோ இரவுகள் எத்தனையோ கவலைகளில் தூங்காமலே கிடந்: உளன்றிருக்கிறார்.
இந்தா இந்தா என்று சொல்லிக் கொண்டு பு வருடம் வந்து பிறந்து விட்டது! அது அவருக்கு தெரியவிலலை. இன்னும் படுக்கையைவிட் எழும்பாமலே கிடந்தார்.
“வருடப் பிறப்ப நாளும் அதுவுமாய். இப்படி படுத்திருக்கிறார். மனைவி சத்தமிட்டு சொல்லி கொண்டிருக்கும் சத்தம் கூட அவருக்குக் கேட்கவில்லை "அப்பாவைப் போய் எழுப்பம்மா!’ என மகை அனுப்பினாள். மீரா ஓடிவந்து அப்பாவை எழுப்ப அவ அசையாமல் கிடந்தார். அவரைத் தொட்டு அசைத்தாள "அப்பா!. எழும்புங்கோ!.எழும்புங்கோ!." அவள் துடித்து பதைத்துக் கொண்டு எழுந்தார்.
"விடிஞ்சுட்டுதாம்மா!” “ஓமப்பா!” எவ்வளவு அருமையான வார்த்தை விடியல்! இந்த புதுவருடம் இங்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் அந் விடியலைக் கொண்டு வராதா? இந்த வருடமாவ குண்டுச் சத்தங்கள் ஓய்ந்து போகாதா?
மகளைத் திரும்பிப் பார்த்தார். அவள் நின்ற கோல அவருக்கு அழுகையைக் கொண்டு வந்தது.
வருடப் பிறப்பு எவ்வளவு சந்தோஷமான நாள் அதிகாலையில் எழுந்து குளித்து கோயிலுக்குப் போ வந்து அறுசுவை உணவருந்தி.
பிள்ளைகளுக்கு இன்றைக்கு விசேடமான சாப்பா செய்து கொடுக்கக் கூட ஒரு வழியும் இல்லையே அவ்வளவு ஏன். இன்றைய வயிற்றுப் பாட்டுக்கே என்: வழியோ தெரியாது. சரசுவுக்குத்தான் அந்தப் புதிருக் விடை தெரியும். சாமான் சக்கட்டு வேண்டும். கன கடையில் கடனுக்கு மேல் கடன் ஏறி விட்டது. மாதாந்த எடுக்கிற சொற்ப சம்பளத்தில் சுமாரான தொகைை கனகு கடைக்குக் கொடுத்தாலும் கடனை முற்றா தீர்த்துச் சரிக்கட்ட முடிந்ததில்லை. ஏதாவது சாமா6 கேட்டுப் போனால் “இல்லை” “முடிஞ்சு போச்சு” எ6 ஏதாவது சொல்லித் திருப்பி விடுகிறாள். நின் மன்றாட்டமாக கேட்டுப் பார்த்தால் "இருக்கிற கடனை கொடுத்திட்டு. பிறகு சாமான் வேண்ட வாங்கோ' என முகத்திலடிக்கிறாள்.
“என்னப்பா யோசிக்கிறிங்கள்.?” “ஒன்றுமில்லையம்மா!. ராமுழுக்க நித்திரயில்லை. விடியப் புறமாய் அயந்திட்டன் போல அதுதான் எழும்பாமல் கிடந்திட்டன்.”
"கவலைப்படுகிறீங்களா.அப்பா? எங்களுக்கு பு உடுப்பு வேண்டாம்.இருக்கிறது போதும்! நீங்கள்
16 Deco

கவலைப்பட வேண்டாம்!”
அவர் தன் கைக்குள் மீராவை அணைத்துக் கொண்டு நெஞ்சுக்குள் விம்மினார்.
எழுந்து வெளியே வந்தார். குளிக்கும் போதும் யோசனை ஒடிக் கொண்டே இருந்தது. கொஞ்சக் காசாவது கையில் கிடைக்குமானால்? இப்படியொரு நல்ல நாள் பெருநாளிலாவது பிள்ளைகள் வாய்க்கு ருசியாக ஏதாவது சாப்பிடவேண்டாமா?
வாழை மரங்களைப் போய்ப் பார்த்தார்.இன்னும் வெட்டப் படாமல் புதிதாக விரிந்திருக்கும் இலைகளைக் கணக்கிட்டுப் பார்த்தார். நாற்பது ஐம்பது ரூபா
தேறினாலும் பரவாயில்லை. அவற்றை வெட்டி எடுத்துக்
கொண்டு சந்தைக்குப் போனார்.
தின்னவேலிச் சந்தையில் சனங்கள் குறைவாயிருந் தது. இலைகளை அப்படியே ஒரு வியாபாரிக்கு விலை பேசிக் கொடுத்தார். பணம் கைக்கு வந்ததும் சற்றுத் தெம்பு, புறப்படலாம் எனத் திரும்பியபோது. சற்றுத் தொலைவில் மணியண்ணை சுமார் இருபது வருடங்களு க்கு முன் ஒய்வு பெற்றவர் மணியண்ணை. இப்போது வயோதிபம் வந்து விட்டது. மட்டுக்கட்ட முடியவில்லை. வயோதிபம் எல்லோருக்கும் தான் வருகிறது. எவ்வளவு திடகாத்திரமாக இருந்த மனுஷன். இப்படித் தளர்ந்து போய் விட்டாரே! வயோதிபம் காலத்தோடு வருகிறதா? கஷ்ட்டத்தோடு வருகிறதா?
ஓய்வு பெற்ற பிறகு மணியண்ணையை இரண்டொரு
முறை காண நேர்ந்திருக்கிறது. இவரது இடம் மயிலிட்டி
என்ற படியால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இப்போது இடம் பெயர்ந்து யாழ்ப்பாணப் பக்கம் வந்து விட்டார் போலிருக்கிறது. ஒய்வு பெற்ற போது பணத்தில் தனது மகளுக்கு மணமுடித்துக் கொடுத்தாராம். அவரது மகளும் இரண்டு மகன்களும் ஐரேப்பிய நாடுகளில் குடிபோய் விட்டார்களாம். செலவுக்கு காசு அனுப்பி வைப்பார்கள். இப்படியே காலத்தைக் கடத்திக் கொண் டிருக்கிறேன்! என முன்னர் கண்ட போது மணியண்ணை சொன்னது ஞாபகம் வந்தது.
அவரது மனதில் பளிச் சென ஒரு வெளிச்சம். மணியண்ணையிடம் கேட்டுப்பார்க்கலாம். நிச்சயம் உதவி செய்வார்.
அவரது மனம் ஒரு துள்ளுத் துள்ளியது. மணியண்ணையை நோக்கி நடந்தார். மணியண்ணையும் அவரை அடையாளம் கண்டு கொண்டு வந்தார்.
“மணியண்ணை!” கையைப் பிடித்தார். மணியண்ணை கை நடுங்க நடுங்கி அவரைத் தழுவிக் கொண்டார். கண்ணி முந்தி கொண்டு வந்தது.
“மணியண்ணை எப்படியிருக்கிறீங்கள்?" "காலயிலிருந்து ஒரு தேத்தண்ணி கூட குடிக்கய ல்லை வயிறு புகையிது. பத்து ரூபாயென்றாலுL இருந்தாத் தாங்கோ!”
வாழையிலை விற்ற காசு கையிலிருந்தது. அதை அவ. அப்படியே மணியண்ணையின் கையில் கொடுத்தார்.
O

Page 18
சிவபாக்கியம் இடிந்து போனாள். எதிர்ப ராத விதத்தில் செல்லாச்சி மண்டையை போட்டு விட்டாள்.செய்வதறியாத் திகை பின் மத்தியிலே தான் சொந்த பந்தங்கள் சூழலாயினர். சண்முகம் கவலையின் ரேகை கூடக் காட்டாமல் ஸ்கூட்டரோடு ஒன்றிப் போய் சுழன்றடித்தான். எங்கிருந்து வந்தானே தெரியவில்லை. லான்ட் மாஸ்டரில் வாட கைக் கதிரை முதலில் வந்தது. பிரமுகர்கள் வந்தாலி உட்காரும் வசதியே அவனுக்கு முதன்மையாகத் தெரிந்திருக்கிறது. -
ஏழெட்டு ஊர்களுக்கும் அப்பால் இருந்து பறை மேளக் கூட்டம் டெலிக்கா வானில் வந்து சேர்ந்தது ரெடிமேட் கம்பிப் பாடைக்கு பிளாஸ்ரிக் பூச்சரங்கள் சுற்றிக் கட்டப்பட்டன. காய் வாழைகள் வண்டியிலே வந்ததும் சண்முகமே வாசல் தூணோடுதுணாகத் துக்கி நிறுத்தி வைத்தான். தோரணங்கள் நீள நீளமாகத் தொங்க விடப்பட்டன.
இதெல்லாம் நடப்பதே சிவபாக்கியத்தை ஆறுதலி படுத்தியது. ஒரு வாய்க் கோப்பி கூடத் தொண்டையை நனைத்திட முடியா நிலை. மிடறு வெறுங் குடலை வருடி நின்றது. முழு உரிமைக்காரி.
ஸ்கார்பரோவிலிருக்கிற சரோஜினிக்கு தாய் சிவபாக்கியத்திற்கும் தெரியாமலேயே தொலை பேசியில் மரண அறிவிப்பும் பண அறவீட்டுக் கோரிக்கையும் மின் வேகத்தில் போனது. அந்த அந்தரத்தில் அவளிடமிருந்து வரப் போகின்ற தொகையைச் சண்முகம் மாத்திரபே எதிர் பார்ப்பது அவனது குடுமி ஆடுகின்ற வேகத்தில் எவருக்கும் தெரியாது.
ஊர் வம்பெல்லாம் ஒவ்வொருத்தர் வாய் வழியே ஊற்றெடுக்கின்ற இடமாகச் சிவபாக்கியத்தின் வீடமைந்தது. வெள்ளிக் குத்துவிளக்கில் பக்குவமாகக் சண்முகமே திரி வைத்தான். தகரப் பந்தலுக்குள் சிறு குடங்கள் மூட்டைகட்டி எடுத்து வந்தான். அய்யர் வருவதில் தாமதம் ஏற்பட்டாலும்சாவீட்டிற்கு வந்தவர்கள் அலுப்புக் காட்டவேயில்லை. எல்லாக் கதிரைகளும் நிரம்பிச் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். ஒப்பாரியும் அது இல்லாத நேரத்தில் பறையடிப்புமாக மாறி மாறிச் களை கட்டிக் கொண்டது.
சிவபாக்கியம் தன் கழுத்திலிருந்த ஒற்றைச் சங்கிலியைத் தடவிப் பார்த்தாள். அவளால் செலவு செய்யக் கூடிடி ஐரே? பெறுழசனழ அது
வெறுமனே உருண்தி,
;"" ޗާ*ޗގީޗާއި&/
كم
 
 
 
 
 
 
 
 

ஒன்று விட்ட சகோதரன், முறையான இரத்தினமும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சளைக் காது வாரியிறைத்தான். கனடாவிலிருந்து சுளை பிடுங்கிக் கொள்வதில் முனைப்பு உந்தித் தள்ளிட அதிக விலைச் சவப்பெட்டியும் குளிப்பாட்டல் திரவியங்களும் வாங்கித் தள்ளினான். இந்தப் புது வியாபாரத்தில் முதலீடுகள் செய்தால் கனடா மண் ஒரு போதும் துரோகம் செய்யாது
T என்பதை நம்பி இம்மியும் இரண்டாகப் படாமல் செயலில்
இறங்கிக் கொண்டான்.
சரோஜினி பார்க்கவென வீடியோக் கமிராவை கூட
* கூலி கொடுத்து வரவழைத்துப் போட்டான் சண்முகம்.
போட்டா போட்டி வலுத்துக் கொண்டிருந்த வேளை வந்திருந்தவர்கள் சுடலை ஞானக் கிறுக்கில் சுருட்டையும் வெற்றிலையையும் மாறி மாறி பதம் பார்த்தனர். ஒழிவு மறைவாக ஸ்பெசல் சாரயமும் விநியோகிக்கப்பட்ட போது ஸ்பொன்சர் பண்ணியவர் சண்முகமா? இரத்தினமா? என்றே எல்லோரும் அலசி ஆராய்ந்தனர்.
“இந்தக் காலத்திலை இப்பிடியும் செத்த வீடு செய்யக் கிடைக்குமே? கும்பகோணக் குளியலுக்கு வந்த அந்தப் பூதக்கிடாரத்தைப் பாக்க இடிபட்ட சனத்தில ஐம்பது பேர் மட்டில செத்தினம்'
கிழவர் நாட்டு நடப்புப் பேசினார், "ஒமோம் ஐம்பத்தஞ்சில சிவாஜி திருப்பதிக்குப்
போனார். என்டவுடனே கட்சியால வெளியேற்றிச் சாணியடிச்சுச் சண்டை போட்ட ஒரே ஆக்கள் எப்பிடித் தலைகீழாய் மாறியிட்டினம்”
வரலாற்றை வெளிப்படுத்தினார் கேட்டவர். இரத்தினமே குளித்து மூழ்கிக்கொள்ளிக் குடமெடுக்க முன்வந்தார். சண்முகம் பந்தலுக்குள் உரல் இடித்தான். இருவருமே நாயகர் வேடம் தரித்ததைப் பெண்களும் ஒப்பாரியை மறந்து இரசித்தார்கள். செல்லாச்சி மரக் கட்டையாகக் கிடந்தபடி அப்பப்பட்ட சந்தன அத்தர்க ளால் மூடுண்டு போயிருந்தாள். சிவபாக்கியமே ஒயாது அழுதவளான பாராட்டுப் பார்வையையும் இரசிப்பையும் ஏகோபித்த தெளிவையும் பெற்றாள். நிறை குடிகாரர் சிலர் தமது செலவிலேயே வெடி கொளுத்தி ஆரவாரம் செய்ய ஆசைப்பட்டனர். ஆனால் பாடை சலனமின்றியே தூக்கப்பட்டது. -
சைக்கிள் வைத்திருந்த எண்பது வீதமானவர்கள்
குறுக்கு வழியில் சுடலை போய் விட்டதால் ஊர்வலம் வெறிச் சோடிப் போனது. மூலைக்கு மூலை பறைச் சமர் சண்முகத்தால் ஏற்பாடாகி இருந்தது. கொள்ளி
莎 passa),

Page 19
வைப்பதில் இரத்தினரை ஏன் விட்டுக் கொடுத்தான் என்பதில் விளங்காப் புதிர் உறைந்து கிடந்தது.
சுடலை மடத்தடியில் பிணம் எரியத் தொடங்கிட சண்டை வலுத்தது. கனடாவிலிருந்து வரப் போகிற இரண்டரை இலட்சத்திற்கும் எவர் உரித்தாளர் என்பதே அங்கிருப்பவர்கள் எல்லோரதும் ஒரே கேள்வி.
சுடலை நடுவில் துார்ந்து பற்றைச் செடியாலும் பாசியாலும் மூடுண்ட புதைகுழிக் கிணற்றில் அவர்கள் எவருமே தண்ணிர் அள்ளி ஒரு சிரங்கையாவது குடித்ததில்லை. அதெல்லாம் அதோ பிணம் எரிக்கிற பசுவனும் பரம்பரையும் தினந்தோறுஞ் செய்த வருகின்ற கைங்கரியம். '
வார்த்தைகளை உன்னிடம் பேசாமல் இருப்பது சுகமாகவும் இருக்கின்றது சுமையாகவும் இருக்கின்றது. தள்ளித் தள்ளிப் போடச் செய்கின்ற தயக்கப் பிரசவம் மாதிரி.
மனக் கருப்பைக்குள் அடைத்து வைத்தபடி காலத்தை நீடித்துக் கொண்டிருக்க முடியாமலும் அவதியறும் மனம்.
அழகாகவே அனைத்தையும் ஒப்பனை
பார்த்துவிட்ட பின்பும்
இன்னும் இன்னும்
 
 

எதனையுமே கருத்தில் கொள்ளாது வாய் வீச்சில் சண்முகமும் இரத்தினமும் இறங்கியது கண்டு வேடிக்கை பார்த்தனர். நான் தான் கூடச் செலவழித்தவன் என்பதேதான் இருவரதும் வாதம்.
ஒய்வு பெற்ற நீதவான் தீர்ப்புச் சொன்னார்.
“சண்முகத்திற்கு அறுபது. இரத்தினத்தாருக்கு நாற்பது. ' சமாதானமாய்ப் போங்கோ’
அவர்கள் கலையும் போது கொள்ளி வைத்த நெருப்பு நெஞ்சாங் கட்டை வரை வியாபித்தும் கோர வடிவமெடுத்தும் எரிந்தது.
கொஞ்சம் தயக்கம் காட்டுகிறது மனசு. நீ தானாகவே வந்து விழுந்தவளுமல்ல நானாகவே வருந்தி அழைத்தவளுமல்ல இரண்டிற்கும் இடையில்.
நாள் போக நாள் போக வார்த்தைகள் பெருகிப் பெருகி புதிய வடிவங்களாகி புதிய ஆசைகளுடன் புதித புதிதாக வந்த கொண்டிருக்கின்றன.
முடித்து விட்டால் எல்லாமே முடிந்து விடலாம்.
என்னை விட்டுப் போன பிறகு என்னுடையத என்ற சொந்தம் கூட எனக்கில்லாத போய் விடலாம்.
இப்படியெல்லாம் பல்கிப் பெருகுகிறது கண்ணே
எனது வார்த்தைகள் உன்னிடம் சொல்லப்படாமலேயே..!

Page 20
அனைத்து நாட்களிலும், கடந்த நான் கைந்து ஆண்டு காலத்துக்குள் எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை நான் ஒழு ங்குறச் செய்துள்ளேன். என்னையும் விட என்னுடன் சேர்ந்து வேலை செய்கின்ற சமூக சேவக, சேவகிகள் இந்தப் பணிக ளைச் செவ்வனவே நிறைவேற்றியுள்ளனர்
கடந்த ஆறுமாத காலமாக, விடுதலை முன்னணியினராலும் அரசாங்கத்தினாலும் அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எம்மிடம் ஒரேயொரு சந்தேகமே நிலவி வருகிறது. எமது பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்து கிறது. இதற்கும் மேலாக அவசரகாலச் சட்டத்தினைட் பிரகடனப்படுத்துபவர்கள் விடுதலை முன்னணியினரா இல்லை இவ்விரு தரப்பிற்கும் உட்படாத வேறுமொரு இயக்கமா?
”டிரிங். டிரிங். டிரிங்.”
தொலை பேசி மணி ஒலிக்கிறது. நான் "ஹலோ என்று கூறாமல் செவிமடுக்கிறீேன்.
"நாம் சொன்னோம் தானே இந்த அலுவலகத்தை மூடச் சொல்லி? எத்தனை முறை சொல்லிவிட்டோம் நாளை ஆகும்போது நீர் உயிருடனிருக்க ஆசையா இல்லை, செத்துப்போக ஆசையா?”
அச்சத்துடன் நான் எதையோ கூற விழைகிறேன்.
“வந்து. இதுதான் சகோதரர் - இப்போது பேசுவது யாரென்று எனக்குத் தெரியாது. இங்கு வேலை செய்வது நானல்ல - இங்கு வேலை செய்கின்ற மற்ற ஆண்களும் பெண்களும் அவர்கள் உரிய நேரத்திற்கு வேலைக்கு வருகிறார்கள் -என்னால் எப்படி இந்த அலுவலகத்தை மூட முடியும்?”
“இது ஒரு சதி! அவர்கள் உமக்கு பயம் போலும்!
"ஹலோ! ஹலோ! ஹலோ!” கொஞ்சம் கேளுங்கள் - இந்தக் காலத்தில் யார் எனக்கு பயப்படுவார்கள்? அவர்கள் வேலை செய்வது சேரி (கடிசைகளில் அங்கிருப்பவர்கள் எமது பிள்ளைகளுக்கு
 
 

சிங்களத்தில் : சைமன் நவகத்தேகம தமிழில் : இப்நு அசுமத்
பாதுகாப்பு வழங்குகின்றனர்.”
"நீர் செத்துப் போக ஆசையா?” "gFIाक.?" என்னால் அதற்கு பதில் கொடுக்க முடியவில்லை. நான் பேயறைந்தது போலாகிறேன்.
“ஹலோ! ஹலோ! ஹலோ." பிரச்சினை இதுதான் - நேற்றோ அல்லது நேற்றைக்கு முன்தினமோ கலைஞரொருவர் கொலை செய்யப்பட்டார். யாரது பேசுவது? எம்மால் தவறேதும் நடந்திருந்தால், வாருங்களேன் கொஞ்சம் பேசிப்பார்ப்போம். நீங்கள் விடுதலை முன்னணியினர் என்று சொன்னால் நினைக்க முடியாது!”
“உமக்கு எமது கடிதம் கிடைத்ததா? “கிடைத்தது” "அதில் இரத்தக் கையெழுத்தைக் கண்டீரா? “கண்டேன்’ "நீர் அதைப் பிரதமருக்கும் காட்டினீர்தானே?” 'நான் வேறென்ன செய்ய? எனது மகள்,எனது மனைவி, மேலும் பிள்ளைகள் பலரும் கண்டனர்!”
“இன்றிரவு உம்மைக் கொல்லுவோம்” “ஹலோ! ஹலோ! ஹலோ. என்னைக் கொன்று போட்டு என்ன நடக்கப் போகிறது? இந்த நாட்டில் விடுதலை ஏற்படுமா? புதியதொரு அரசாங்கம் அமையுமா? எப்படியும் நான் விரைவில் செத்துப் போவேன் சிகரெட் குடித்தே இந்தக் கொலைகளின் மூலம் தற்போது ஆட்சியிலிருப்பவர்களது பலம் உறுதி பெறுகிறது!”
“அவை எல்லாம் எமக்குத் தெரியாது - இதுதான் எமது தலைமைச் செயலகச் சகோதரரது கட்டளை!”
"அதாவது, என்னைக் கொன்று போட்டால் விடுதலை அரசாங்கமொன்று உருவாகும்!”
“ஹலோ, உம்மைப் போன்றவர்களால்தான் இந்த அரசு இதுவரை காலமும் ஆட்சியிலிருக்கிறது!”
"எனக்கென்றால் இது எதுவும் புரியவில்லை - நாங்கள் சேரிக் குடிசைகளிலுள்ள ஏழைக் குழந்தைகளுக்குச்

Page 21
சேவை செய்கிறோம்!”
“அமெரிக்காவின் நன்கொடையினால்!” “இல்லை இல்லை ஐக்கிடி நாடுகள் சபையின் உதவியினால்!”
“ஐக்கிய நாடு என்பது அமெரிக்காதானே?" "இல்லை இல்லை - ஐக்கிய நாடுகளின்.” “ஐசே, அது அமெரிக்காவில்தானே இருக்கிறது?” "ஆமாம் - ஆமாம் - என்றாலும்.நியூயோர்க்கில் ஜெனிவா - ஹலோ - ஹலோ.”
"எமக்கு அவற்றால் பயனில்லை - இன்று இரவு, இல்லை பகல் 1000 மணிக்கு உம்மைக் கொல்லுவோம்!”
“ஹலோ - ஹலோ - ஹலோ!. எனது காரியதரிசி இந்தத் தொலைபேசி அழைப்புக்களினால் பயந்து விலகிச் சென்றுவிட்டாள். ஏனையவர்கள் வேலை செய்கிறார்களே, நான் என்ன செய்வது?"
“எம்மிடமா கேட்கிறீர்?. அவர்களையும் நாம் கொல்லுவோம்!”
“ஹலோ - ஹலோ. அவர்களைச் சேரிகளில் உள்ளவர்கள் பாதுகாக்கின்றனர். இந்தப் பகுதிக்கு மட்டும் போக வேண்டாம். வேண்டுமென்றால் என்னைக் கொல்லுங்கள், நீங்கள் சும்மாவே செத்துப் போவீர்கள். எமது பிள்ளைகளின் மீது அந்த மக்கள் மிகுந்த விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.”
"ஹலோ. நான் நினைக்கிறேன் நீங்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களல்ல. திருட்டுக் கும்பல்தானே? ஹலோ - ஹலோ - பறையன்களே - நீயெல் லாம் பொய் கி காரக் கும் பலைச் சேர்ந்தவன்கள்தானே, எனக்கு விளங்குகிறது. நீ கேட்டுக் கொண்டிருப்பது, மூச்சு இழுத்து விடுவது எல்லாமே கேட்கிறது!.. நீயெல்லாம் இங்கே கிட்டடியில் இருப்பவன்கள்தானே? நீயெல்லாம் எனது மண்டையைக் குழப்புகிறீர்கள். நான் சொல்லுகிறேன் - நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை - நான் அங்கு போனால் - நீயெல்லாம் வந்தால் எனது பிள்ளைகள் மரணிக்கக்கூடும். நானிந்த ஒபீஸிலேயே இருப்பேன்! வாங்கடா பார்ப்போம்”
"நீ என்ன செய்ய?’ கடுரமான குரல்.
" நான் எதுவும் செய்யமாட்டேன் - இதோ கதவு திறந்து இருக்கிறது - முதலாவதாக வருபவனைக் கொல்லுவேன்!”
“எப்படிக் கொல்லுவாய்?
நான் முட்டாளைப்போல் மரண பயத்துடன் பதில் கொடுக்கிறேன்.
"கொல்லுவது இப்படித்தான். திரைப்படங்கள் LITsi5g5 இருக்கிறாயா? - முதலாவதாக வருபவனின் ரிவோல்வரை அல்லது துப்பாக்கியைத் தூக்கி அடிப்பேன் வயிற்றுக்கு”
‘ஹஹற்.ஹஹற்.ஹக்.ஹக். நீர் புதுமையான முட்டாளல் லவா? உம்முடைய புத் தகங்களை வாசிக்கும் போது நாம் நினைத்தோம் சிறந்த புத்திசாலியென்று!”
DGGS

“முட்டாள் என்பதால் என்னிடம் கவனமாக இருக்கவும்!”
"டக்.டிரக்.”
“ஹலோ - ஹலோ - வெட்டிப் பிசாசே!”
அதன் பின்னர் நான் பயத்தால் நடுங்குகிறேன். நான் பார்த்திருக்கும் திரைப்படங்கள் பற்றி நினைக்கிறேன். குறிப்பாக மிக அருகில் இருக்கும் படமாளிகையில் பார்த்திருந்த 'கராட்டித் திரைப்படம் பற்றி நினைக்கிறேன். உடனடியாக என்னைக் கொலை செய்வதற்கு யாராவது வந்தால் அவர்களைத் தாக்குவது எப்படி என நினைக்கிறேன். 'கராட்டி பற்றி அல்ல, நான் சிறு காலம் தொட்டு தெரிந்துள்ள தடியடி பற்றி அடுத்ததாக நினைக்கின்றேன்.
KK 参亨
டிரிங். டிரிங். டிரிங். "ஹலோ! - ஹலோ! - “ஹலோ எனக்குக் கேட்கிறது உங்களிள் யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருப்பது
கடுரமான த்ரல் "இல்லைச் சகோதரரே இப்போது உம்மைக் கொலை செய்வது யாரென்று தெரியுமா?” "யார் ஹலோ - ஹலோ ” “உம்மை அடுத்தபடியாக நாங்கள் கொல்வது எமக்கு எதிரானவர்கள் என்பதற்காக எம்மீது குற்றஞ் சுமத்துவதற்காக!”
“இது நல்ல கதையல்லவா! நீர் தானே முதன் முதலில் என்னோடு பேசியது?”
"என்றாலும் யார் பேசியது என உமக்குத் தெரியுமா?" "இனி நீங்கள் நியாயத்தின் பக்கம் பேசுவதென்றால் என்னைப்பற்றியல்ல, எனது பிள்ளைகளைப் பற்றிப் பார்க்க வேண்டும் தானே?”
"யார் பிள்ளைகள் என்போர்?" "எனது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சேவக சேவகிகள்!”
"அவர்கள் பிள்ளைகளா? ஒரு சிலர் திருமணம் முடித்தவர்கள்”
"அது உண்மை! என்றாலும் நான் குறிப்பிடுவது பிள்ளைகள் என்றே - ஹலோ - ஹலோ - ஹலோ!” மீண்டும் கடுரமான குரல்
“சேரிகளுக்குச் சென்று என்ன அவர்கள் செய்கிறார்கள்?"
“இல்லை! இல்லை! அரசியல் அல்ல! தாய்ப்பால் கொடுத்தல், இளம்பிள்ளை வாதத்துக்கு முன்கூட்டியே மாற்றுச் சக்தி வழங்குதல். ஹலோ - ஹலோ”
"நீங்கள் இதைச் செய்வது நடைமுறையில் இருக்கும் முறைமையின்கீழ்?”
“ஹலோ - ஹலோ கொஞ்சம் கேளுங்கள்.” “நீர் பயந்துவிட்டுள்ளி தானே?" "இல்லை. ஹலோ. ஹலோ. ஆமாம் பயந்துவிட்டேன். இல்லை. இல்லை.ஹலோ. ஹலோ”

Page 22
நான் சுற்றும்முற்றும் பார்க்கிறேன். எல்லோரு அலுவலகத்தை விட்டுப் போய்விட்டுள்ளனர். வே நாட்களில் இந்த மாடி வீடுகளில் எல்லா பக்கத்திலிருந்தும் எரிச்சலை உண்டு பண்ணுகின் அளவுக்கு வீடியோத் திரைப்படங்களின் ஒலி கேட்கு தமிழ், ஹிந்தித் திரைப்படக் கேசட்கள். இன்று எல்லாே மெளனமாகியுள்ளன. நாணிந்த அமைதியினால் சற் நிலை தடுமாறுகிறேன்.
எனது மனதைத் தடுமாற வைப்பதில் யாருக்கு இருக்கும் உரிமை என்ன? நாம் தினந்தோறும் எம்மிட ஒப்படைக் கப்பட்ட அலுவல்களை ஒழுங் குற செய்துள்ளோம். தேவைக் கும் அதிகமாக செய்துள்ளோம். எமது தவறு அது தானா?
என்ன இருப்பினும் நான் பயத்தால் நடுங்குகின்றேன் பயமில்லை என்று நினைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன் பத்து மணிக்குப் பதினைந்து நிமிடங்கள் இருக்கு போது அலுவலகக் கதவை பூட்டுகின்றேன். எனக்கு ஒரு புத்தகத்தையோ அன்றி எதையுமோ வாசிக் முடியாதிருக்கிறது. எயிட்ஸ் நோய் பற்றித் தொடர்பு சாதனங்களினூடாக ஏதாவது எச்சரிக்கையொன்றை எமது மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகளது அமைப்பு எனக்குத் தெரிவித்திருந்தது. இந்த பிரச்சார வேலையை எவ்வாறு செய்ய முடியுமென நான எண்ணிப் பார்க்கிறேன். அதனிடையே இந்த மரண அச்சுறுத்தல்
நான் மீண்டும் சென்று, அலுவலகக் கதவு நன்றாக பூட்டப்பட்டுள்ளதா? என நிதானித்துப் பார்க்கிறேன் அதனிடையே கதவைச் சற்றுத் திறந்து சுற்றுமுற்றுப் பார்க் கிறேன். எல்லோரும் கதவுகளை மூடிக் கொண்டுள்ளனர். ஆட்சியிலிருக்கும் அனைவரும் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். மருதானைப் புகையிரத நிலையத்திலிருந்து புகையிரத இயந்திரமொன்றின் ஓசை கேட்கிறது. ஒரே இரைச்சல். எங்கேயோ செல்வதற்கு இயந்திரமொன்றை உயிர்ப்பிப்பது எந்தத் துணிவான சாரதி? எமது கட்டிடத்தின் மேலேயுள்ள நீர்த் தாங்கி நீரினால் நிரம் புகலிறது. நான் கேட் டுக கொண்டிருக்கின்றேன். இதற்கு மட்டும் நீர்ப் பாய்ச்சுவது
JÄTT?
எமது பிள்ளைகளைப் போன்றே பொது வசதிகள் சபையிலும் யாரோ ஒரு பணியாளர் துணிச்சலுடன் பணியாற்றுவதாக என்னுள் எண்ணமேற்றப்படுகிறது.
எனது மரண பயத்தைக் குறைத்துக் கொண்டு துணிவினை வெளிக் காட்டிக் கொள்ள நாணி முயலுகின்றேன்.
நானொரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டு அலுவலகத்தினுள்ளே அங்குமிங்கும் நடக்கிறேன். நாப் பெருமை கொள்ளத் தக்க அட்டவணை ஒன்று உண்டு அது சுவரில் மாட்டப்பட்டிருக்கிறது. அதன்படி எமது பிள்ளைகளுக்கு மாதத்தில் முப்பது நாட்கள் வேலை செய்துள்ளனர்.
இதனிடையே எனது சிக்ரட் பற்ற நினைத்துச்

கொள்கிறேன். இந்த நேரத்தில் சிகரட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டது ஏன்? இதன் மூலம் எனக்கு ஆத்ம பலமொன்று கிடைப்பதாலா? கைக்கருகில் இருக்கிற மரணபயத்தைக் குறைத்துக் கொள்ள இந்தச் சிகரட் எனக்கு உதவி புரியுமா?
அர்த்தமில்லாத மரணபயம் எல்லா இடங்களிலுமாகப் பரவியுள்ளது. எப்படியேனும் இன்னும் சிறிது காலத்தில் நாம் இறந்து விடுவோம், இல்லையா? நான் பெளத்த கதைகளைப் பற்றி நினைவுபடுத்த விழைகிறேன். என்னால் ஒரு ஸ்லொஹத்தையெனும் நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை. என்ன இருப்பினும் சகல ஸ்லோஹக் கதைகளிலும் மரணம் எமது கதைகளில் எப்படிக் கூறினாலும், கூறாவிட்டாலும் மருதானைக் கோட்டே வீதி யொன்றில் வாகனமொன்றுக்குள் அகப்பட்ட நாம் இறக்கக் கூடும். பணம் கொடுத்து நாமொரு பயணம் மேற்கொள்ளுவதற்காக விழுந்தேனும் இறக்கக் கூடும். நான் மீண்டும் அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களை பரீட்சித்துப் பார்த்து விட்டு நித்திரை கொள்வதற்காகச் செல்கிறேன். நித்திரை சிறந்த பிரயோகமாகும். வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சனைகளையும் மறந்து விட முடியும்.
நித்திரை என்னை நோக்கி வருவதாக இல்லை.
ஒரு காலத்தில் என்னுடன் பழகிய ஹிப்பி யுவதி பற்றிய ஞாபகம் வருகிறது. அவளது பெயரை ஞாபகப்படுத்திக் கொள்ள முனைகிறேன். எனக்குப் பல பெயர்கள் ஞாபகத்துக்க வருகின்றன. ஷேன் - ஜேன் - ஹயிம் - கிறிஸ்டீன்! --
ஒரு யுவதி எனது ஆலிங்கனத்திலிருந்தவாறு இவ்வாறு கூறினாள்.
“நான் ஆசைப்படுவதனாலேயே யாருடனாவது இருக்கிறேன். ஒரு நாள் என்னை விளையாட்டுப் பொருளாக எடுத்துக் கொண்டான் ஓர் அராபியன் - உங்களுக்குத் தெரியும், நான் முழு உலகத்தையும் தனியாகச் சுற்றி வருபவள். நான் என்ன செய்தேன் தெரியுமா? நான் பலஹினமாக கூரையைப் பார்த்துக் கொண்டு விழுந்து கிடந்தேன்! நான் முஷ்டியால் உதைத்தேன். அவனது . க்கு ! அவன் மயங்கி விழுந்தான்!!!”
என்னைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியவர்கள் வந்தால் நானும் அவ்வாறே செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்கிறேன்.
"அடிவயிற்றுக்கே அடிக்க வேண்டும்!” என்றாலும் இப்படியானவர்கள் ஒருவருக்கப் பின் ஒருவராக ரவைகளைத் துப்பும் மெஷின் கன்' போன்ற துப்பாக்கிகளைக் கொண்டுதானே வருவார்கள், இல்லையா? டி 56 - ஏ.கே 47.”
நான் பேயறைந்ததைப் போலாகின்றேன்.
கற்பழிப்பில் கூட இனிமை இருக்கக் கூடும். ஆசை இல்லாத விட்டாலும் சற்று நேரம் சென்றதன் பின் ஆசை உருவாகலாம். அந்தத் துஷட்டன் தான் கற்பழிப்பது
gotok.

Page 23
MANLI
UV CRE
TYPE SETTING, TAM II, HGH OUALITY L OFFSET P
258/3, DAM COLOM
wedding, Child S
HAPPY
300, Mode Colom T-phone
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The 36th year
KAN
ATIONS
ENGLISH & SINHALA ASER PRINTING RINTING
M STREET, MBO-12
21987
r
Portraits ittings PHOTO
ra Street V bO-15
526345

Page 24
கூடிய ஆசையினால், பித்துப் பிடிப்பததனால் தான் என்றாலும் மெஷின் துப்பாக்கிக்கு, தாமதித்தாவது ஆசையுடன் முகங் கொடுப்பது எப்படி?”
நான் மேலும் பேயறைந்ததைப் போலாகிறேன். பூேனையொன்று அழுவது எனக்குக் கேட்கிறது. இது மிகவும் தரித்திரம் பிடித்த அழுகை போன்று எனக்குப் படுகிறது. எமது அலுவலகத்தின் பிள்ளைகளும் நானும் அதற்கு அநேகமாக உண்ண குடிக்க கொடுத்துள்ளோம். பழக்கம் கர்ரணமாக அது வரும். அது அல்ல. இது ஒரு பெண் பூனை என்று எனக்குப் படுகிறது. இதற்குக் கூட உண்ண குடிக்க கொடுக்கவில்லை போலும் சகல கடைகளும் மூடப்பட்டுள்ளன. இவை குறித்து நினைக்கும் போது 'எனக்கு பயங்கரமான ப்சி எடுக்கிறது. ரஞ்சனி இன்று காலை வீட்டிலிருந்து கொண்டு வந்த சோற்றுப் பாசலை எனக்குக் கொடுத்தாள். அவள் மத்தியானம் எப்படிச் சாப்பிடுவாள் என்பதைச் சிந்தித்துப் பார்க்காமல் முழு சோற்றுப் பாசலையுமே.நான் சாப்பிட்டுவிட்டேன். உணவு என்ற ரீதியில் கோவாவிற்கு என்னுள் அதிக விருப்பமில்லை. என்றாலும் கோவாவுடன் மிகவும் விரும்பி சகல சோற்றுப் பருக்கைகளையும் சாப்பிட்டேன். பெட்ட்ைப் பூனை என்மீது எதிர்பார்ப்பு கொண்டிருந்ததாக தெரிகிறது. சுவரில் ஊர்ந்து செல்கின்ற கரப்பான் பூச்சியைப் பிடிப்பதற்காக அது உயரப் பாய்கிறது. அது குட்டி ஈன இருப்பதாக எனக்குத் தெரிகிறது. பட்டினியில் கிடந்தாலும் அதன் வயிறு முட்டிக் கொண்டிருக்கிறது. மதுபானம் அருந்தினால் அனைத்தையும் மறந்துவிட்டு நித்திரை கொள்ள முடியும். மருதானைப் பகுதியில் சகல மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பது என் ஞாபகத்துக்கு வருகிறது. என்ன இல்லாவிட்ட்ாலும், அருகாமையில் ஓர் இடத்தில் கசிப்பு விற்கப்ப்டுவது குறித்து நானறிவேன். நான் 'பொக்கட்டு' களைத் துளாவிப் பார்க்கிறேன். ஐம்பது ரூபா நோட்டொன்று இருக்கிறது. நான் படிகளில் இறங்கிக் கீழ் மாடிக்குச் செல்கிறேன். தற்போது பத்து மணி தாண்டி விட்டது. பத்து மணிக்கு என்னைக் கொல்லுவதாக அச்சுறுத்தினார்கள் தானே? இந்தக் கட்டிடத்தின் காவல்காரன் கீழ் மாடியிலேயே இருக்கிறான். அவன் மேசை மீது தலையைச் சாய்த்துக் கொண்டு நித்திரையில் மூழ்கி இருப்பதாக எனக்குத் தெரிகிறது. எனது நடைச் சத்தத்திற்கு விழித்தது போன்று உடனடியாக அவன் எழுகிறான். நித்திரை கொண்டதற்கு மன்னிப்புக் கேட்பது போல என்னைப் பார்க்கிறான். நான் அவனுடன் நட்பு ரீதியாகச் சிரிப்பதற்கு முயலுகின்றேன்.
"நாடு தலைகீழாகப் புரண்டாலும் உமக்கென்றால் நன்றாகத் தூக்கம் வருகிறது."
“என்ன தூக்கம் சேர்! நேற்று அந்தியிலிருந்து இதே இடத்தில்! அடுத்த வேலைக்கு வரவேண்டியவன் வரவில்லை. பஸ் இல்லாமல் இருக்கும்”
“என்ன விசேஷத் தகவல்கள்?” ܕܝ
“அதோ.. அந்த திணைக் களத் தின் செக்கிறுாரிட்டியைக் கொன்றோர் துப்பாக்கியையும் எடுத்துச்வெசன்றுவிட்டார்களாம்: எமக்குத் துப்பாக்கி இல்லாதது ஒரு வகையில் நல்லது :- இல்லாவிட்டால்
 

சனியன், துப்பாக்கியை எடுக்க எங்களையும் கொல்லுவார்கள்."
நான் அவனைத் தாண்டிச் சென்று கட்டிடமுற்றத்தில் உலாவுகிறேன். நடப்பட்டிருக்கும் பூஞ்செடிகள் வாடிப்போயுள்ளன: அவற்றைக் கவனித்துப் பார்க்கும் ஊழியர் ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைக்கு வரவில்லை. நாணிந்த காவல்காரனைப் பற்றிச் சிந்திக்கிறேன். 'யாராவது என்னைக் கொல்லுவதற்கு வந்தால இவன் என்ன செய்வான்? பிஸ்டலோ அன்றி டி'57 ரகத் தன்னிய்க்க ஆயுதம்ோ தேவ்ையில்லை. ஒரு கத்தியைக் காட்டினாலே போதுமானது. நான் நித்திரையில் இருந்தாலும் கூட அவர்களது கட்டளையை வந்து, ஏதாவதொரு தேவை குறித்துக் கூறி என்னை எழுப்பிக் க்தவைத் திறந்து கொடுப்பான்.
அடுத்ததாக நான் என்னைக் குறித் து ஆச்சரியமடைகிறேன். இவ்வளவு அச்சுறுத்தல்கள் இருந்தும் நான் கீழ் மாடியில் உலாவிய படி அச்சுறுத்திய்வர்களது இலக்குக்கு உட்பட்டவாறு கேட் அருகாமையிலேயே உலாவுகின்றேன். இது புரிந்து கொள்ள முடியாத, என்னுடையதேயான ஏற்கத்தகாத செயலாகும். நான் தெருப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சொறி நாயொன்று நீண்ட தூரக் குறிப்பிடத்தக்க பயணமொன்று மேற்கொள்ளவதைப் போன்று என்னைக் கூடிப் பாராது அவசர கதியில் பயணிக்கிறது. தெருவோரத்தில் நான் பெயரளவில் தெரியாத மரக் கிளையில் நிறைந்திருந்த காகக் கூட்டமொன்று தம் முன்னால் இல்லாத உணவு பற்றிக் சுறித் தூர இருக்கும் காகங்களை அழைக்கின்றன: காவற்காரன், என்னைப் பார்த்து பார்த்துவிட்டு நிச்சயமற்ற 'ல் தன் மையுடன் உலாவிக் கொண்டிருக்கின்றான். நான் அருகில் இருக்கும் போது அவன் அமருவதில்லை. அவனும் அவனது நண்பர்களும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் கூடுதலான கெளரவத்தை எனக்கு வழங்குகின்றான். என்னைக் கொல்லுவதற்கு யாராவது வந்தால் அவர்களுக்கு இவன் உதவக் கூடும். என்றாலும் மனதால் என்னைப் பற்றி அநேகமாகத் துன்பப்படுவான் என்று எண்ணுவதற்குக் காரணங்களுன்டு. இந்தச் சிந்தனையினால் அவர்கள் குறித்து என்னுள் ஆழ்ந்த துன்பம் போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது. அதன்பின் எனக்கு இப்படித் தோன்றுகிறது. இது என்ன்ைப் பற்றியே ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய ஆத்ம அனுதாபமா?
நான் எனது செயளாளர் பற்றி சிந்திக்கிறேன். அவள் மிகவும் பக்தி பூர்வமாகச் சேவையாற்றினாள். இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் இதனை வளர்த் தெடுத்துக் கொள்வதற்கும் பகல் இரவு பாராமல் கடினமாக வேலை செய்தாள். தொடர்ந்து தொலைபேசி மூலமாகவும் தபால் மூலமாகவும் எனக்கக் கிடைத்த அச்சுறுத்தல்களால் அவள் அச்சமுற்றாள். முதலில் அவள் அச்சங் கொண்டது என்னைப் பற்றி இரக்கத்தால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்றை வாசித்தபடியே ஒருமுறை அவள் அழுதாள், கால ஓட்டத்தில் என்னைக்

Page 25
குறித்து ஏற்பட்ட அச்சத்தைத் தனக்கே பொருத்திக் கொண்டாள் போலும். யாருக்கும் கூறாமலேயே அவள் விடுப்பில் சென்று விட்டாள். மீண்டும் அவள் வரவில்லை. இப்போதைக்கு மூன்று மாதங்கள் கடந்து விட்டன. அவளால் ஏற்பட்டுள்ள அலுவலகப் பணியை நிரப்புவதற்கு யாருமே முன்வரவில்லை. ஏதாவதொரு ஃபைல் தேவைப்படும் பொழுது என்னால் அதைத் தேடிக் கொள்ள முடியாது. தொலைபேசி மணி ஒலிக்கும் போது, அடித்துக் கொள்ளும் இதயத்துடன் அதிலிருந்து எப்பொழுதும் கேட்கக் கூடிய குரல் களின் அச்சுறுத்தல்களை நான் மட்டுமே தனிமையில் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இந்த அச்சுறுத்தல்கள் அவளுக்கான்வை அல்ல என்றாலும் அவள் எந்தளவு விரக்தியடைந்திருப்பாள் என்ற எண்ணம் என்னுள் எழுகிறது. அவள் குறித்துச் சில வேளைகளில் என்னுள் நியாயமற்ற உணர்வுகளும் எழுகின்றன.
மிகவும் கடினமானதொரு சந்தர்ப்பத்தில் அவள் எம்மைக் கைவிட்டுச் சுயநலப் பயணமொன்று சென்று விட்டாளோ? என எனக்குத் தோன்றுகிறது. இது எந்தளவு நியாயமற்ற சிந்தனையாகும்? அடுத்ததாக நான் எனக்குத் தெரியாத நபர்கள் குழுவொன்று குறித்து எனது வைராக்கியத்தைத் தொடுக்கிறேன். குறைந்த பட்சம் எனக்கு ஆதரவாக விருந்த,எமது வேலைத்திட்டத்தில் சேவை செய்கின்ற அப்பாவிப் பிள்ளைகள் குறித்து மிகுந்த பக்தியுடனிருந்த, நல்லதொரு பெண்ணை என்னிடமிருந்து பிரிக்க இந்தத் தீர்க்கதரிசனமற்ற அச்சுறுத்தல்காரர்களால் முடியுமாகியுள்ளது.
"துரைக்கு எதுவும் வேண்டுமா? கடைகளெல்லாம் மூடி அதென்றால் இங்கே பக்கத்திலிருந்தே கொண்டுவர முடியும்!”
நான் ஐம்பது ரூபா நோட்டை அவனிடம் கொடுக்கிறேன். *
“எனக்கென்டாத் தேவையில்லை. பியதாசவுக்குத் தேவையெண்டா கால் போத்தல் எடுக்கவும். அங்கு இருந்தால் சிகரட் கொஞ்சம் கொண்டு வாரும்.”
“சேர் குடிக்கும் பிரேன்ட் இல்லை” “என்ன இழவாவது”
ஏதோவொரு காரணத்தால் நான் பலஹினமாகி எரிச்சலுடன் கூறுகின்றேன்.
அவனைத் தாண்டி எனது அலுவலகத்தை நோக்கிப் படியேறுகின்றேன். படிகள் சிலவற்றை ஏறுவது மிகவும் களைப்பான செயல் என்று என் பாதங்களுக்கும் மனதுக்கும் தெரிகிறது.
முன் கூட்டியே, எனக்கு மீண்டும் தொலைபேசியின் இரைச்சல் கேட்கிறது. நான் அதை நோக்கிச் செல்கிறேன். ரிசீவரைக் கையிலெடுக்கர்மல் நீண்ட நேரமாக தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதன் ஒலி நிற்பதாகத் தெரியவில்லை.
எனது ஹிருதயத் துடிப்பு அதிகமாகிறது. நான் எதுவும் கூறாமல் செவிமடுத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆச்சரியமடைகிறேன். பிரையனின் நட்புக் குரல்

எனக்குக் கேட்கிறது. நான் வியப்பினால் மலர்கிறேன்.
"யார் . சனி இருக்கிறாரா?”
“ஆம் ஆமாம் - பிரையன்'
“என்ன இது காலையிலேயே தூங்கிக் கொண்டு இருந்தீரா? அதுவல்ல - எப்படி சாப்பாடு எல்லாம்" கொழும்பில் எல்லாக் கடைகளும் மூடியல்லவா? நான் ஒரு சின்ன வேலை காரணமாகவே பேசுகிறேன் தெரியுந்தானே எமது சிறியாவதி - அதுதான், அந்த ரொம்பவும் முடியாத அங்கஹறினப் பிள்ளை - அவளுக்கு ரொம்பவும் சுகமில்லை - நான் பொலீசுக்குக் கூறினேன் - வரும்போது அனுமதிப் பத்திரமொன்று தருவதாகக் கூறினார்கள் - எமது வாகனம் கொஞ்சம் அப்செட்சனியின் வாகனத்தை எடுத்துக் கொண்டு வரமுடியுமா? பிள்ளையை ராகமைக்கு அல்லது பொரளை லேடி ரிஜ்வேயிற்குக் கொண்டு செல்ல வேண்டும்”
"சரியான வேலைதான் பிரையன், எனது டிரைவர் வேலைக்கு விரவில்லை! என்ன செய்வது?"
"ஓ.ஹற்ம்! - சரி - நான் எப்படியாவது வருகிறேன். எனக்குக் கொஞ்சம் உதவுங்கள் - வரும்போது ஒபீசுக்கு வருகிறேன்"
பிரையன் பேசுவது ஹெந்தலை பிரீத்திபுர
சிறுவர்கள் இல்லத்திலிருந்தே. அது புத்தி சுவாதீனமற்ற சிறுவர்களுக்கான சமூக சேவை இல்லமாகும். நானும் ஓய்விருக்கும் போதெல்லாம் உதவி, ஒத்தாசை செய்கின்றேன்.
"பிரையன் - பெகஸஸ் ரீஃப் ஹோட்டலிலிருந்து வாகனமொன்று கேளுங்கள் - டுரிஸ்ட் வாகனமொன்றில் போவது மிகவும் சுலபம்!"
உடனடியாக என்னுள் பாரிய தெம்பு ஏற்பட்டுள்ளது. அவரது அன்புக் குரலே அதற்குக் காரணமல்ல. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் வெறுமனே பொழுதைப் போக்காமல், ஏதேனுமொரு சேவையைப் புரிவதற்காகக் காலத்தைச் செலவிடுவது மனதுக்கு உறுதி. எமது பிள்ளைகள் வேலை நிமித்தம் வனாத்தமுல்லைக்கு நடந்தே சென்றனர். வரும் போது அங்கும் சென்று 656) Tub.
நான் முற்றத்திலே மிகவும் தென்புடன் உலாவுகிறேன். எனக்கொரு கவிதை எழுதக்கூட மனம் வருகிறது. இது நேந்று நள்ளிரவு ஞாபகத்திற்கு வந்த கருப்பொருளாகும்.
“உலகம் உறங்கிய பின் விழிப்புடனிருக்கிறேன். உலகமே விழித்தவுடன் நித்திரையில் விழுகிறேன்”
இதில் இரண்டாவது வரி குறித்து எனக்குள் திருப்தியில்லை. அதனால் கவிதையின் அடுத்து வரும் கருத்துக்களை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கும் எனது மனதைச் சரிபடுத்திக் கொள்ள முடியவில்லை. நான் மீண்டும் ஒழுங்குபடுத்திக் கொள்ள முனைகிறேன். இது ஒரு கஷ்டமான காரியமல்ல. கணி டிப்பாகக்

Page 26
கவர்ச்சியானதொரு பயிற்சியாகும்.
'உலகமே உறங்கும் போது விழிப்புடன் இருக்கிறேன் உலகின் விழிகளின் நடுவே நித்திரை உலகில் வாழ்கிறேன். இந்த இரு வரிகள் குறித்து எனது மனதுக்குள் எதுவித விருப்பும் இல்லை.
இருப்பினும் நான் அனைத்து உள்ளார்ந்த அச்சங்களையும் சந்தேகங்களையும் மறந்துவிட்டு அவசர கதியில் உண்டான தெம்பான உடம்புடன் முற்றத்தினுடே அங்குமிங்கும் நடக்கிறேன்.
பிரையனுடன் நான் லேடிரிஜ்வே வைத்திய சாலைக்குச் சென்றேன். அவர் தொடர்ந்து பி.பி.சி செய்திகள் பற்றிக் கூறுகின்றார். மரணம் மற்றும் அழிவுகள் பற்றி அவர் கூறும் எதுவும் என்னுள் துன்பத்தையோ அன்றி மகிழ்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. எனக்கு முக்கியம் அவரது குரலின் ஆதரவான தன்மை தான். நான் மீண்டும் மீண்டும் பின்புற ஆசனத்தில் மாலா அக் காவின் மடியில் செயலற்றுக் கிடக் கும் சிறியாவதியைப் பார்க்கின்றேன். அவளுக்கு இருக்கும் நோய் எதுவென்று யாருக்குமே கூற முடியவில்லை. அதிகமாகக் காய்ச்சல் இருப்பது மட்டும் தெரிகிறது. அவள் வாயையும் விழிகளையும் மூடியபடி மயக்கமுற்றவளாக இருக்கின்றாள். ஒன்பது வயதுக்குரிய தோற்றமிருக்கும்.
வைத்தியசாலை கேட்டருகே எமக்குக் கெட்ட விதமான செய்தியொன்று கிடைத்தது. அவ்விடத்தில் இரு இராணுவச் சிப்பாய்கள் இருந்தனர். மதிலில் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் இரண்டினை நாம் வாசித்தோம். அவை பாதி கிழிக்கப்பட்டிருப்பினும் சில வார்த்தை வரிகள் எம்மால் வாசிக்க முடியுமாக இருந்தன.
'.மரணம் . வேலைக்கு . மரணம்!" நாம் சென்ற வார்ட்டில் ஒரு வைத்தியரும் வயதான ஒரு பணிப்பெண்ணும் இருந்தனர்.
வேண்டுமானால் நிறுத்தி விம்டுப் போங்கள் - மிகவும் மோசமான நோயாளிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம் - யாரும் வேலைக்கு வரவில்லை!"
நாம் எதுவும் பேசவில்லை. இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணிபுரியும் இந்த இருவர் பற்றி எமது இதயங்கள் கடமைப்பட்டிருக்கின்றன. நாம் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்கிறோம். தெளி வான எந்தவோர் உணர்வும் அவர்களது முகங்களிலே இல்லை. ஒரு கட்டிலின் மீது கட்டில் விரிப்பொன்று இருக்கிறது. அது முழுவதுமாக ஈக்கள் அங்கும் இங்கும் உலாவுகின்றன. தலையணை போன்று ஏதாவது சிறிய தொன்று அதனுள் இருப்பதாக எண்ண முடியும். பிரையன் அந்த விரிப்பைத் தூக்கிப் பார்க்கிறார். அரைவாசி கரைந்து போன நிலையில் ஒரு குழந்தை பிறந்து அதிக நேரமிருக்காது. வைத்தியரும் பணிப்பெண்ணும் எம்மைப் பார்ப்பது கிடையாது. குழந்தைகளை வைத்துக் கொண்டு பல தாய்மார்கள் கட்டில்களின் மீது உள்ளனர். அனைவ ரும் செய்வதறியாது அமைதியாகவே இருக்கின்றனர். இரு குழந்தைகள் ஒரே நேரத்தில் அழ ஆரம்பிக்கின்றன.

பிரையன் மாலாக்காவுக்குச் சைகை செய்கிறார். மாலா மீண்டும் சிறியாவதியைத் தூக்கிக் கொள்கிறார். நாம் வைத்தியசாலையை விட்டுப் புறப்படுகிறோம். இவ்வாறான அழிவுகள் ஏற்படும் போது தான் உயிருடன் இதுவரை இருந்தோமா என்பது கூடத் தெரியாத புத்தி மந்தமான சிறியாவதி பற்றி என்ன கதைக்க இருக்கிறது?
இப்போதெனது முயற்சிகள் யாவும் செயலிழந்து போய் விட்டது. வனாத்த முல்லைக்குப் போக வேண்டும் ள்ன்று கூறுவதற்கு என் நா வளையவில்லை. நாம் பேசாமல் பயணஞ் செய்தோம். களனிப்பாலத்தின் நடுவே வாகனம் நிறுத்தப்பட்டது. எதுவுமே கூறாமல் பிரையன் போலீஸ் அனுமதி பத்திரத்தைக் காட்டுகிறார்.
ஏன் பிள்ளையை பாரமெடுக்கவில்லையா? மிலிட்டரிப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகனத்திற்குள் எட்டிப் பார்த்தவாறே கேட்கிறார். பிரையன் எதுவுமே கூறவில்லை.
நாம் வத்தளைச் சந்தியூடாக எலகந்தைப் பக்கமாகப் பயணஞ் செய்து கொண்டிருக்கிறோம். ஊரடங்குச் சட்டம் இருந்தாலும், இங்கே பாதைகளில் அதிகம் பேர் இருந்தனர். அவர்கள் மிகுந்த அச்சத்துடன் மெதுவாக வாகனத்தைப் பார்க்கின்றனர். பெண்களோ குழந்தைகளோ எவருமே பாதைகளில் இல்லை.
நாம் தனியார் டிஸ்பென்சரிக்குப் போவோமா? ‘எல்லாம் மூடி!' பிரையனின் குரலில் எதுவித ஈரமும் இல்லை. தொண்டை வரண்டு போனது போல் அவர் இருமுகிறார்.
"டொக்டர் ஜயசிங்காவின் வீட்டுக்குப் போவோம்' அவர் வாகனத்தைத் திருப்புகிறார். டொக்டர் மிஸிஸ் ஜயசிங்காவின் இரண்டு மாடி வீட்டின் முன் முற்றத்தில் வாகனம் நிறுத்தப்படுகிறது. பிரமாண்டமான அல்சேஷன் நாயொன்று குரைத்துக் கொண்டே பாய்ந்து வருகிறது. நாம் வாகனத்தின் ஜன்னல் கதவுகளை மூடிக் கொள்கிறோம். மேல்மாடியின் ஜன்னலொன்று திறக்கப்படுகிறது. யாரோ எட்டிப் பார்த்து விட்டுக் காணாமல் போகிறார். அடுத்ததாக மிஸிஸ் ஜயசிங்க முகத்தை வெளிக்காட்டுகிறார்.
விஸ்கி - விஸ்கி" நாயைக் கூப்பிடுகிறார். சற்று நேரத்திற்குப் பின்னர் கீழ்த்தளத்தின் கதவு திறக்கப்படுகிறது. நாய் உள்ளே செல்கிறது. அவர் கையை ஆட்டுகிறார்.
நாம் சிறியாவதியையும் தூக்கிக் கொண்டு உள்ளே செல்கிறோம். அவர் கதவை மூடி விடுகிறார்.
பிள்ளைக்கு என்ன? பிரையன் பேசவில்லை.
அந்தக் கவிச்சியில் பிள்ளையை வையுங்கள்’ அவர் பேசுவது ரகசியக் குரலில். வெளியே யாருக்காவது கேட்கக் கூடும் என்ற பயத்தினால் போன்று. இந்தப் பிள்ளைக்குக் கடந்த சில காலமாக வலிப்பு அவர் கைகளால் சைகை செய்துவிட்டு மாலாக்காவுடன் பிள்ளையையும் எடுத்துக் கொண்டு
Ricrenas

Page 27
அறையினுள் செல்கின்றார்.
நாம் நின்று கொண்டே இருக்கிறோம். செய்வதறியாத சந்தர்ப்பமொன்றைக் கடத்துவதைப் போன்று பிரையன் சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் ஓர் ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மோனாலீஸா வழக்கமான, புரிந்து கொள்ள முடியாத பார்வையினால் பிரையனையோ என்னையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். எத்தனை நூற்றாண்டு காலமாக அவர் பல்வேறு நிகழ்வுகளை இந்தப் பார்வையால் பார்த்துக் கொண்டிருக்கிறார் இல்லையா? தன்னை ஓவியமாக்கிய டாவின்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததுவும் இந்தக் கேலிச் சிரிப்பலைகளை முகத்தில் தேக்கிக் கொண்டுதான்!
மாலக்கா குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருகிறாள். நாம் மிஸிஸ் ஜயசிங்கவைப் பார்க்கின்றோம். "இன்ஜெக்சன் ஒன்று கொடுத்துள்ளேன். - நான் நினைக்கவில்லை.” அவர் ரகசிய சுபாவத்துடன் கூறுகிறார். புலப்படாத அனைத்து அச்சுறுத்தல்களும் அவரது கண்களில் குறிக்கப்பட்டிருக்கின்றன.
பிரையன் பர்சை எடுக்கிறார். மிஸிஸ் ஜயசிங்க கைகளை அசைத்து அதை நிராகரிக்கிறார் கதவின் பக்கமாகச் செல்கிறார். அவருக்குச் செய்ய வேண்டிய அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான வேளையில் நாம் உடனடியாகக் கிளம்பிப் போகவேண்டும். அவரைப் பாதுகாக்க எம்மால் முடியாது. நாம் மெளனமாகவே பயணிக்கின்றோம் . வேலைக்காரியோ யாரோ மேல்மாடியின் ஜன்னலூடே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளது முகத்தில் உளவு பார்க்கின்ற ஒருவரது ரகஸியப் பார்வை தென்படுகிறது. பள்ளியாவத்தையினுTடாகச் செல்லும் போது, கடற்கரையில் பாரிய சனக் கூட்டமொன்று கூடி நிற்பது தெரிகிறது.
பிரையன் வாகனத்தை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அங்கு எமக்குத் தெரிந்த மீனவர்கள் பலர் இருக்கின்றனர். 藏
நானும் வாகனத்திலிருந்து இறங்கி பிரையன் பின்ன்ல் செல்கிறேன். தலை இல்லாத மனிதச் சடலங்கள் சில கரையொதுங்கிக் கிடக்கின்றன. களனி கங்கையினூடாக வரும் மனிதச் சடலங்கள் கரையொதுங்குவது இங்குதான். சடலங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு நான் முயற்சிக்கின்றேன். ஒரு சிலர் பிரையனுடன் உட்ரையாடுகின்றனர்.
முரட்டுத் தோற்றமுள்ள மனிதனொருவன் என்னை நோக்கி வருகிறான். எனக்கு அவனது நையாண்டிப் பார்வை பழக்கமானது. எனது உத்தியோகபூர்வ வாகனம் வரும்பொழுது பாதையில் இருந்தால் வேறு நாட்களின ‘போது எனக்கு சிரிப்பின் மூலம் உபசரிப்பான். இன்று அவன் என்னை நையாண்டிப் பார்வை பார்த்துக் கொண்டு இருண்ட முகத்துடன் என்னைத் தாண்டிச் செல்கிறான். என்னைத் தாண்டியவுடன் ‘த்து’ என்று காறித் துப்புகிறான். என் பக்கம் சற்றுத் திரும்பிப் பார்க்கிறான்! “உம்முடையவர்களது அரசு செய்கின்ற காரியம்!" என்னைப் புறக்கணித்துப் போகின்ற அவனை நான் பார்க்கிறேன். எனது உடம்பு முழுதும் சிலிர்த்துவிட்டது.
grossos

பிரையன் திரும்பி வருவதற்கும் முன்பே நான் கரையோரமாக நடந்து வாகனத்தருகே செல்கிறேன். பின்புற ஆசனத்தில் சிறியாவதியை அனைத்துக் கொண்டிருந்த மாலாக்காவைக் கூட நான் பார்க்கவில்லை. “சிறியாவதியின் உடம்பு குளிர்கிறது தொரை!” மாலாக்காவின் குரல் எனக்குப் புற உலகிலிருந்து முணுமுணுக்கும் குரல் போன்றே கேட்கிறது. கடலின் இரைச்சலுக்குக் கூட என் இரு செவிகளும் செவிடாகியுள்ளன. எனது உடம்பு குளிராக இருந்த போதும் செவிகள் இரணர் டும் சூடேறி இருப்பதாகப்படுகிறது.
பிரையன் வந்து என்னைக்கூடப் பாராமல் வாகனத்ை உயிர்ப்பிக்கிறார்.
அரசுடன் தொடர்பான ஓர் ஸ்தாபனத்தில் நான, வேலை செய்கிறேன்.
"நான் எப்படி இதற்குப் பதில் சொல்வது?’ என்று கூறத் தோன்றுகிறது. அவ்வாறு கூறினால் நான் கூறுவது என்னவென்று பிரையனுக்குப் புரியுமா? அடுத்தது இந்த மனிதர்களைக் கொன்று, கழுத்துகளை வெட்டி ஆற்றில், கடலில் போட்டது யாரென்று உறுதியாக யாருக்குத்தான் Ցո{B (Մ)լգսկլb?
வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஒன்றரைக்கண் மனிதனின் பின் சென்று அவனது கன்னத்தில் அறைய நினைக்கின்றது. நான் கண்களை மூடிக் கொள்கிறேன். உடைந்து சிதைந்து போன பாதையினுாடே வாகனம் குலுங்கி - குலுங்கிப் பயணிக்கிறது. பிரையன் வேண்டுமென்றே மேடு பள்ளங்களின் மேல் கவனமின்றி வாகனத்தைச் செலுத்துவதாக எனக்குப் படுகிறது.
நான் மனதைச் சரிப் படுத்திக் கொள்ள முனைகின்றேன்.
"அந்த மனிதன் எனக்கு ஏசியதானது ஏசுவதற்கு வேறு எவரும் இல்லாததால் போலும் முதலாவது முன்னால் வந்தவரிடம் மன வருத்தத்தையும் வைராக்கியத்தையும் தீர்த்துக் கொண்டான்'
நான் ஆச்சரியமடைகிறேன். பிரையன் இவ்வாறு கூறுகிறார்,
"நேற்று ஆத்தர் சி. கிளார்க் உரையாற்றினார். இந்தப் பிரிவினைவாத யுத்தத்தை, பயங்கரவாதத்தை விட மிகவும் பயங்கரமானது இந்தக் கடலரிப்பு" என்று - இன்னும் சில காலத்தில் இந்தப் பாதையும் கடலுக்குள் அரித்துக் கொண்டு போய்விடும். நாட்டில் பாதி கடலுக்குள் புதையுண்டு போகும்! வேனின் ‘ வெடிாக் எப்ஸோபர்' எல்லாம் இறங்கிவிட்டது.
சிறியாவதி பற்றி மாலாக்கா கூறியதைப் பிரையனிடம் கூற எனது நா எழவில்லை. மாலாக்கா தனது மடியில் வைத்துக் கொண்டு வருவது இன்னொரு இறந்த சடலத்தை அல்லவா? நாம் எமது ஒவ்வொருவரினதும் கண்டிப்பான தனிப்பட்ட சிந்தனைகளில் மூழ்கித் திராணியற்ற நிலையில் பயணிக்கின்றோம். கடலுக்குள் அரித்துச் செல்லப்படும் பாதையின் மேடு பள்ளங்களில் மோட்டார் வாகனம் மட்டும் மிகுந்த பலத்துடன், விரைவில் செயலிழந்து விடக்கூடிய ஹிருதயம் போன்று 'கடாஸ்.கடாஸ். என்று குலுங்குகிறது.

Page 28
கனேடிய ஆங்கில இலக்கியத்துறை
மைக்கல்
இலங்கையில் பிறந்து, கனேடிய ஆங்கில இலக்கியத்துறைக்கு வளம் சேர்த்து, உலக இலக்கியப் பரிசுகளைப் பெற்று வருபவர் மைக்கல் ஒண்டாட்ஜி (Michael Ondaatje) இவர் ஒல்லாந்து / இந்தியக் கலப்பு வம்சத்தில் உதித்தவர். இவரு டைய உடன் பிறப்பாளர் கிறிஸ்தபரும் கனடாவில் வளமான வணிகம் மேற் கொள்ளும் ஒருவர். மைக்கல் ஒண்டாட்ஜிக்கு அடுத்தடுத்து இலக்கிய விருதுகளும் பரிசுகளும் அவர் எழுதிய நூல்களுக்காகக் கிடைத்து வருகின்றன. பிரான்ஸ் நாட்டின் பிறி மெடிச்சி (PRE MEDICI) Lufìgi L585 960oi 60) LDuf6ò கிடைத்ததொன்று.
இற்றைக்கு 38 வருடங்களுக்கு முன் நமது நாட்டை விட்டகன்று இங்கிலாந்து சென்ற மைக்கல் அதன் பின்னர் கனடாவில் குடிபுகுந்தார். அங்கு லின்டா ஸ்போல்டிங் என்ற மாதை மணம் புரிந்தார். இவர்கள் இருவரும் இப்பொழுது பிறிக் (BRICK) என்ற இலக்கிய ஏட்டை நடத்தி வருகின்றனர். இலக்கியத்தில் முதுமானிப் பட்டம் ஆங்கில இலக்கியத்துறை ஆய்வுகளுக்காக வழங்கப் பட்டது. நெடுங்காலமாகக் கனடாவில் வசித்து வரும் மைக்கல். ரொரோன்ரோ யோர்க் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணி புரிகிறார். வட அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற படைப்பாளியாக அவர் கணிக்கப்பட்டு வருகிறார். அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தரமுயர்ந்த செய்தித்தாளான "த உவோள் ஸ்ரீற் (gigoT6 (The Wall Street Journal) sol(535(5) L35 மாலை சூட்டியுள்ளது.
இலங்கையில் தலை சிறந்த ஆங்கில எழுத்துக்கு sy60öT(6) (85 Tsibitibá(8J696öT Uffigi (GRATIENPRIZE)6)1pÉ45 பட்டு வருகிறது. க்ரேஷன் என்பவர் டச்சு இனத்தைச் சேர்ந்த இலங்கையின் முன்னாள் உயர் நீதியரசரும் மூதவை உறுப்பினருமாவார். “பூக்கர் பரிசை” (BOOKER PRIZE) மற்றொரு எழுத்தாளருடன் பகிர்ந்து கொண்ட மைக்கல் ஒண்டாட்ஜி, தனது பணப்பரிசின் ஒரு தொகையை க்ரேஷன் நம்பிக்கைச் சொத்தாக ஆக்கி அதிலிருந்து ஆண்டுதோறும் ஈழத்து ஆங்கில மொழி வாயிலான இலக்கியநூல்களுக்குப் பரிசளித்து வருகிறார் இந்த க்ரேஷன் பரிசை" வழங்குவதற்கான அங்குரார்ப்பண வைபவத்திற்கு மைக்கல் ஒண்டாட்ஜி கொழும்பு வந்திருந்தார். அவ்வைபவத்தில் உரையும் ஆற்றினார். அச்சமயம் அவரிடம் சென்று எனது Aspect of Culture in Sri Lanka'6T669 b|T606) 966TU6ft L3 Gaug சிறிது நேரம் உரையாடும் பெருமை கிடைத்தது.
மைக்கல் ஒண்டாட்ஜியின் தாராளத்தன்மை மெச்சத் தக்கது. பிரித்தானிய பொதுநல அமைப்பு நாடுகளிடையே
 
 

ஒண்டாட்ஜி
கே. எஸ். சிவகுமாரன்
அதியுயர்ந்த இலக்கியப் பரிசுத் திட்டம் பூக்கள் பரிசு’ ஆகும். இந்தப் பரிசைப் பெற்றுள்ள மைக்கல், கனடாவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். அவற்றுள் சில: கிரிவிம பசிபிக் றிம் புக் பிரைஸ் (KIRIVIMA PACIFICRIM BOOK PRIZE) gauf Ussi (GILLER PRIZE). 'g, Si6569 (Bu696óti (The english Patient) 6T6ip நாவல் திரைப்பட வடிவமாகவும் வெளிவந்து ஒஸ்கார் (OSCAR) விருதுகளைப் பெற்றது. இவருடைய மற்றொரு நாவலான 'அனில்ஸ் கோஸ்ட்’ (ANILS GHOST) உலகெங்கும் அதிக விற்பனையாகும் நாவல்களாகும். மைக்கல் ஒண்டாட்ஜி வெறுமனே நாவலாசிரியர் மாத்திரமல்லர். கவிஞர். திறனாய்வாளர், இலக்கிய ஏட்டின் ஆசிரியர், திரைப்பட நெறியாளருங் கூட. தனது பெற்றோர், பேரன் / பேத்தி போன்றோரின் சரிதத்தை, ரன்னிங் Saif g . Gulf 65' (Running in the family) 6T6 B நினைவாக்கமாக தந்துள்ளார் மைக்கல். 1982 ல் இந்த நூல் வெளியாகியது. தனது ஈழத்து வேர்களை இனங் கண்டு மைக்கல் ஒண்டாட்ஜி இந்த நூலை எழுதினார். ஒரே பந்தியிலேயே, ஒண்டாட்ஜியும் அவருடைய கற்பனை வளமும் கண்டங்களைக் கடந்து சென்று விடும் என ஒரு திறனாய்வாளர் மைக்கலின் எழுத்து வன்மையை குறிப்பிடுவதற்காக அவ்வாறு வருணித்தார். இன்னொருவர் விபரிக்கிறார்.
'ஜேஸ் ஒத்திசைகள், திரைப்பட “மொன்டாஜ் உத்தி, மிக ஆழமான அழகு மொழி வளம் ஆகியனவற்றின் வியத்தகு சேர்க்கையே மைக்கலின் எழுத்து நடை.
ஆசியப் பாரம்பரியத்தை இறுகத் தழுவி 'ஜிட்பேர்க்' பங்காளியாக அவர் எடுத்துச் சுழல்கிறது என்கிறார் மற்றொரு திறனாய்வாளர்.
ஆயினும் சமூக யதார்த்த நாவல்களை விரும்பிப் படிக்கப் பழகிக் கொண்ட வாசகனாகிய எனக்கு. மைக்கல் ஒண்டாட்ஜியின் புனைகதைகள் துாரவிலகிச் செல்லும் பிரமையை உண்டு பண்ணுகிறது. மேனாட்டுச் சந்தைக்காக, அந்நிய விநோதக் கதைகளைச் சில ஆசிய எழுத்தாளர்கள் எழுதுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு கூறுவதனால், அற்புதமான எழுத்தாளரான மைக்கல் ஒண்டாட்ஜியின் தகைமையை நான் கேள்விக் குறியாக்குகிறேன் என்றில்லை. அவரு டைய கவிதைகள் அழகு மிகு சொல்லோவியங்கள்.
தற்சமயம் வழியாம் செல்வதுரை, ரொமேஷ் குணசேகர, ஏ. சிவாநந்தன், யஸ்மீன் குணரத்ன, கொலின் சில்வா போன்ற இலங்கையர் ஆங்கில இலக்கியத்தில் சில அவதானிப்புக்களைப் பெற்றுள்ளனர். அவர்களுள் மைக்கல் ஒண்டாட்ஜி மிக முக்கியமானவர். இலங்கையில் பிறந்தாலும் அவர் குடிபுகுந்த நாடான கனடாவுக்கே அவர் பங்களிப்பு பெருமை தருகிறது. கனேடிய ஆங்கில இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
pressor

Page 29
தேவைகளைத் தீர்க்கும் திறமை யிருப்பவர்கள் ஆவலினை அடக்கி நிற்கும் அறிவிலிகள் புதுமை தேடும் காவலுக்குள் அகப்பட்டுக் காலம் வீணாய்க்கரையும் நோவினைகள் செய்ய நுளைந்திடுதல் காண்கின்றோம்!
ஏது இது புதுமையென ஏமாந்த சோனகிரிப் பாதுகாவல் தேடு மொரு பழையமுறை இன்றிதற்குச் சூதுவாதுள்ள உலகில் இருப்பதற்குச் சொந்தமாய் ஒருமறைவிடத்தைத்
நாமமிட்டுச் செயல்புரிந்து நாட்டு மக்கள் வரிப்பணத்தைத் நாமெடுத்து அநுபவிக்கும் தறுதலைகள் ஒழிப்பதெப்போ! ஒரு கால ஆட்சிக்குள் உட்புகுந்து திறமையற்றுக் கருங்காலிக் கம்புகளாய்க் காடேறி நிற்பவர்கள் திருந்தாத பேர்வழிகள் திருத்துதற்குச் செயல்முறையில்
r SMDGSE.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துணையாகும் என் றோதுகிறார்! வாய்ப்பந்தல் ஜீவிதத்தின் வழிமுறைக்குத் தற்காலிகமாய் ஒய்வெடுக்க உதவுமொரு உத்தி இது இன்று நோய்வாய்ப் பட்டிருக்கும் நமது போர்ச் சூழலுக்கும் நாய்வால் நிமிர்த்துகின்ற நாட்டின் மற்றவர்க்கும் பொருந்தும்! ஆமைகளும் ஊமைகளும் அடர்ந்து நிற்கும் புதரிலுள்ள தீமைகளை யணுகாது திறமையுள்ள காரியங்கள்
கவிஞர் ஏ. இக்பால்
விருமபாது விட்டுவிட்டால் வீணாகும் நம் நிதியம்!
ஆக்கிரமிப்பு எப்போதோ அணுகிவிட்ட போதிலும் நீக்கிவிட எத்தனிப்போர் நேரெதிராய் நிற்பதினால் ஊக்குவித்து அவர் செயல்கள் ஊறவிட்ட போதினிலும் வாக்கு நிறைவேறவில்லை வாட்டமுற்று விழிபிதுங்கும்!

Page 30
நல்ல நண்பன் மேமன் கவியின் 'ஒரு பிரதியின் முணுமுணு'த்தலைத் தொடர் ந்து வாசித்து வரும் நேயர்களில் நான் ஒருவன். அதிலுள்ள அடிப்படையான விடயம் என்றோ முளைத்த ஒரு விடயம் தான்-மரபுக்கவிதையா? புதுக்கவிதையா? முடிவு காண முடியாத பிரச்சினைதான். எனில், எம் மனதில் பட்டதை எழுத எண் னினோம். சரியோ பிழையோ யாமறியோம். ஏனெனில் மாற்றுக் கருத்துக்கள் இருப்ப தால் தானே இப்பிரச்சனை முடியாமல் தொடர்கிறது.
நானும் ஏதோ ‘கவிஞன் என்று பெயர் பெற்றவன். தினபதியின் தினமொரு கவிதை பகுதிக்குக் கவிஞர் களின் கவிதைகளை சிபாரிசு செய்யும் கவிஞர்களின் பட்டியலில் பெயர் பதித்திருந்தனர். மேலும், யாப்பிலக் கணம் கற்றுள்ளோம். ஆங்கிலத்திலும் PROSODY - யாப்பிலக்கணம் படித்துள்ளோம்.
எனவே, எமக்கும் இப் பிரச்சனை பற்றி எழுத ஏதோ அறிவும் தகுதியும் உண்டு என்று எண்ணுகின்றோம்.
ஆம். மரபு என்றால் என்ன என்பதில் பிரச்சனையே இல்லை. தொன்று தொட்டு வழங்கி வருவது என்கின்றனர். சரி, கவிதை இலக்கணம் அதாவது செய்யுள் இலக்கணம். எனில் யாப்பிலக்கணம் தொன்று தொட்டு வழங்கி வருவது என்பர். மேலும், இதை மீறக்கூடாது என்பர். அவ்வாறெனில் ஏன் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல அல்லது குற்றமில்லை என்றனர். மீறலாமீ என்பதுதானே கருத்து. முதலில் இலக்கணம் இருந்தால் தான் அதற்கு இலக்கணம், அதாவது சில சட்டங்கள் எழுதலாம். எனவே இலக்கியம் முதல் அதன் வழி வந்ததே இலக்கணம். இவ்வாறு இலக்கணம் எழுதிய பிறகு அதன் வழி எழுத, பேச வழி கொள்கிறார்கள். எனவே ‘கவிதையை பொறுத்த அளவில் முதலில் செய்யுள் இலக்கணம்தான் இருந்திருக்க வேண்டும்.
ஆம், முதலில் செய்யுள்' என்னும் கவிதை எழுதினர். அந்தச் செய்யுளுக்கு இலக்கணம் எழுதியபின் அந்த இலக்கணத்தின் அடிப்படையில் செய்யுள்கள் சமைத் தனர். இவ்வாறு யாத்த காரணத்தால் யாப்பிலக்கணம்' உருவாகியிருக்க வேண்டும். "செய்யுள் யாத்தல்' என்னும் `கவிதை யாத்தல்' என்றே கூறி வந்தனர்.
குறில் நெடில் எழுத்துகள் இவ்வாறு ஒசைபடும் பொழுது அசையாகும் என்றும், இத்தனை அசை சீராகும் என்றும், இத்தனை சீர் அடியாகும் என்றும் விரித்தனர்.
 
 

எம்மை எழுதத் IIգեւIգ51
ஏ.பி.வி. கோமஸ்
ஏன்? எழுத்து எண்ணி அமைக்கின்ற செய்யுள் கூட இருக்கிறதே. உதாரணத்துக்கு ஒன்று காண்போமா? கட்டளைக் - கலிப்பா: தேமா, புளிமா என்னும் மாச்சிரை முதற்சீராக உடைய நாற்சீரடி, முதலசை நேரசையாயின் அதாவது தேமாவாயின் - பதினோரெழுத்தும் பெற்று, இது ஓர் அரையடியாய். இத்தகைய அரையடி இரண்டு கொண்ட அடி நான்கு வருவன கட்டளை கலிப்பா எனப்படும். எழுத்தெண்ணும் போது ஒன்று நீக்கி எண்ண வேண்டும். இது கட்டளை கலித்துறைக்கு ஒக்கும் எழுத்து எண்ணிப் பாடுவதால் இது இப்பெயர் பெற்றது என்பர். கட்டளை - அளவு இதோ அச்செய்யுளடி சூத்திரம்
மாச்சீர் முதல நாற்சீரடியே நேர் பதினொன்றாய நிரை பன்னிரண்டாய் எழுத்துடை யரையடி யிணைந்தடி நான்கு கவினுரு வருவது கட்டளைக் கலியே ஆம். இவையெல்லாம் அவசியமா, தேவைதானா என்று தான் புதுக்கவிதையினர் வினவுகின்றனர். நாம் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.
ஆனால், மரபு இலக்கணம் என்பதெல்லாம் ஒரு சட ‘டம்: கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமெனில் கடைப்பிடி யுங்கள். வேண்டாம் எனில் விட்டுத் தள்ளுங்கள்.-மீறுங்கள். இன்று வசன நடை இலக்கணத்திலும் மீறப்படுவ தைத் தாராளமாய் காண்கிறோம். நாம் அவதானிக்கின்ற ஒன்று, எம் ஆங்கில வகுப்புக்கு வரும் மாணவர்கள். நூற்றுக்கு நூறு என்றே கூறலாம். நாளைக்கு வர்ரன் என்று, நாளைக்கு வருகிறேன் என்ற கருத்தில் சொல்லுகின்றனர். எதிர்காலத்துடன் எப்படி நிகழ்காலம் வரும். எனவே, மரபை மீறவில்லையா? என்ற கேள்வி எழுகிறதில்லையா?
ஆக, பேச்சுத் தமிழுக்கும் புதியதோர் இலக்கணம் தேவைபோல் தெரிகிறது.
பழங்காலத்தில் செய்யுளாய் இருந்த பொழுதும், பிற்காலத்தில் கவிதையாய் இருந்த பொழுதும் - ஆசை அடிநாதமாய் இருந்தது என்பது எமது தாழ்மையான எண்ணம். புதுக் கவிதைக்கு இது தேவையில்லை என்று எண்ணுவதுபோல் விளங்குகிறது.
ஆனால், புதுக்கவிதைக்கு இலக்கணம் எழுத எத்தனை ஆண்டுகள் கழிய வேண்டுமோ நாமறியோம். எது எவ்வாறிருப்பினும் இலக்கியம் படையுங்கள்.
அது மக்களுக்காக அமையட்டும். O
Riterrazy
VN

Page 31
தொண்ணுாறு
IIITiipiiI ITGIST 9TIT51)
కా
தொண்ணுாறுகளில் தீவிரப்பட்ட போரின் விளைவாக அரசியலில் ஏற்பட்ட தாக்கங் கள், மாற்றங்கள், மக்களின் அவலங்கள் என்பவற்றினுாடாக நிஜத்தை எதிர்கொள் ளும் போக்கும், தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலான பண்பாட்டுத் தேடுதலும் தொண்ணுறுகளின் அரங்கில் முனைப்பாக வெளிப்பட்டது.
போரையும் அதன் விளைவுகளையும் அதன் நிஜத் தன்மையுடன் எதிர் கொள்ள முற்பட்டபோது 80களில் இருந்ததைவிட தொண்ணுாறுகளில் நாடகம் அதிக யதார்த்தத் தன்மையை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
அதே வேளை, ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் வெளிக்கிளம்பும்போது அட்டகாசமான முறையில் தான் வெளிப்படும் என்ற நிலைப்பாட்டிலும் அரங்கச் செயற்பாடுகள் தீவிரமாக நடந்தேறின.
உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் யதார்த்தமா கவே இருக்க உருவத்தைப் பொறுத்தவரையில் யதார்த்தத்திற்கும் மோடியுற்ற தன்மைக்கும் இடையில் ஊசலாடியும் நின்று இறுதியில் சீரமைக்கப்பட்ட யதார்த்த நாடகங்களாகப் பலரால் முன்னெடுக்கப்பட்டும் சென்றது. 80 களில் பிரதான நாடக ஆசிரியராக முகிழ்ந்த குழந்தை ம. சண்முகலிங்கமும், நெறியாளராகத் தடம் பதித்துக் கொண்ட க. சிதம்பரநாதனும் 80 களின் அர ங்கை மிகைப்படுத்திய அசைவுகளை வேண்டி நிற்கும் மோடியுற்ற அரங்காக வளர்த்தெடுத்து நவீன நாடகத்தின் வடிவமாக்கியிருந்தனர். மேற்படி போக்கு 90 களில் இந்த இருவருக்குள்ளேயே இரு கிளைப்பட்டுச் சென ’றமை முக்கியமானதொன்றாகும். குழந்தை.ம.சண்முகலிங் கம் உருவ ரீதியிலும் யதார்த்தத் தன்மையை நோக்கி நகரத் தொடங்க, க.சிதம்பரநாதன் மேலும் கூடுதலான உடல் அசைவுகள், குறியீட்டுத் தன்மைகள் என்பவற்றுடன் செயற்பட்டார். w
தொண்ணுாறுகளின் முற்பகுதியில் சி.ஜெய்சங்கரின் நாடக முயற்சிகள், கடும் விமர்சனங்கள் என்பன யாழ்ப் பாண நாடகத்துறையை அழுத்தமான செயற்பாடுகளுக் குத் தள்ளிச் சென்றது.
தொண்ணுாறுகளில் உருவான அரசியல் அரங்கப் போக்கு மக்களிடத்தில் அதிகளவு கொண்டு செல்லப்
 
 

DDgDS0000SSDDDSDDSDDSDSDSDSDyyDSDySDyyS
DDDSDSDSD0SDS0S0DDSrr00SSSDSDDD0SDDSDDSDyySSDDrSDDSDDSDDSyySSSSS
களில் நாடகம் :
ിമ്നന്റ്' tit(I
பா. இரதவர்;
பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டிய தேவையை வலியு றுத்தி எளிமையான யதார்த்த வடிவத்தின் அவசியம் பற்றிப் பேசிய சி.ஜெய்சங்கர் பல்கலைக்கழகத்தில்கன்ரீன் நாடகம் மூலமாக தமது உருவ ரீதியான நிலைப் பாட்டை ஆற்றுகையாகச் செயற்படுத்திக் காட்டினார்.
குழந்தைம்.சண்முகலிங்கம், க. சிதம்பரநாதன், சி.ஜெய்சங்கர் ஆகியோரின் மும்முனைப்பட்ட நாடகச் செயற்பாடுகள் பல்கலைக்கழகம், பாடசாலைகள், தனியார் நாடக நிறுவனங்கள் என விரிந்து நின்றன.
இவ்வேளை தொண்ணுறுகளின் முற்பாதியில் கலை பண்பாட்டுக் கழகத்தினரின் அரசியற் பிரச்சனைகளை முதன்மைப்படுத்திய நாடகங்கள் மக்கள் மத்தியில் அதிகளவு கொண்டு செல்லப்பட்டு பிரச்சார ரீதியாக அதிக அளவில் மக்களால் ஈர்க்கப்பட்டு இருந்தன.
80 களில் குழந்தை.ம. சண்முகலிங்கத்தின் பாடசாலை நாடகங்களையும் , சிறுவர் நாடகங்களையும் மேடையேற்றிக் கொண்டிருந்த சி.ஜெய்சங்கரின் கருத்து நிலைமாற்றம் தொண்ணுாறுகளில் ம. நிலாந்தனின் அகதிகளின் கதை, யுத்தத்தின் நாட்கள் போன்ற நாடகங்களை சீரமைக்கப்பட்ட யதார்த்தவகை நாடகமாக நெறியாள்கை செய்யத் தூண்டியது. அடுத்த கட்டமாக சி.ஜெய்சங்கரின் தீ சுமந்தோர் நாடகமும் சிறப்பான முறையில் அரசியல் மாற்றங்கள், இராணுவ ஒடுக்க முறைகள் என்பவற்றை ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் அவலம் மூலமாக சித்திரித்துக் காட்டினார்.
தென்கிழக்காசியச் சுற்றுப்பயணத்தை ஆசியாவின் ஒலம் என்ற நாடக அனுபவங்களுடன் முடித்துக் கொண்டு திரும்பிய க. சிதம்பரநாதன் அகஸ்தா லோலாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நிலையில் தீவிரமான நாடக செயற்பாடுகளில் ஈடுபட்டார். பெருங் காட்சிகள், படிமங்கள், குறியீடுகள், கூடமேகங்கள் என மிகைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகள், இசை என்பன அட்டகாசமான வெளிப்பாடுகள் நிறைந்த உயிர்த்த மனிதர் கூத்து, பொய்க்கால், மாற்றம் போன்ற முக்கிய நாடகங்களை நெறிப்படுத்தினார்.
க.சிதம்பரநாதன் படச்சட்ட மேடையை நிராகரிக்கும் பண்புடன், விவாத அரங்குக்கான ஆரம்ப நிலையுடன் தனது நாடகங்களுடாகப் பார்வையாளர்களுடன் கருத்துக்களைக் கதைத்துப் பரிமாறி வலிமையான தொடர்பை ஏற்படுத்த முயன்று கொண்டிருந்தார். எமக்குத் தேவைப்படும் அரங்கு இவரின் ஆய்வுப் பொருளாகியது.

Page 32
இவரது நாடகங்கள் கலந்து பேசி நிகழ்த்திப் பார்த்து புத் தளிப்பு முறையில் உருவாக்கப் பட்டன. கவிஞர்.க.முருகையனால் நாடகம் பிரதி வடிவம் பெற்றது. க.சிதம்பரநாதன் 80 களிலும் சரி, தொண்ணுாறுகளிலும் சரி எமது அரங்கிற்குப் புதிய அரங்க முயற்சிகளை தனது நெறியாள்கை மூலம் வழங்கியிருந்தார்.
இவ்வேளை குழந்தை.ம. சண்முகலிங்கத்தின் எந்தையும் தாயும் நாடகம் நாற்சார் வீட்டு அரங்காக மிகுந்த தாக்க வலிமையுடன் நிகழ்த்தப்பட்டது. தனித்து விடப்பட்ட வயதான பெற்றோர்களின் பாடுகளின் ஊடாக சமகாலப் பிரச்சனையை சித்திரித்தது. நாற்சார் வீட்டு அரங்க முயற்சி எமக்குப் புதியதொரு அனுபவமாக மட்டுமன்றி, நடிகர். பார்வையாளருக்கிடையிலான அன்னியோன்னியம் மிக வலுவாக இருந்தது. பிரான்சிஸ் ஜெனத்தின் அற்புதமான நடிப்பும் எந்தையும் தாயும் நாடக வெற்றிக்கு காரணமாக இருந்தது.
குழந்தை.ம. சண்முகலிங்கம் அன்னை இட்ட தீ என்ற நாடகத்தின் மூலம் பிணி நீக்கல் அரங்குக்கான ஆரம்ப முயற்சியினைத் தோற்றுவித்தார். யுத்த சூழ்நிலையால் மக்களுக்கு ஏற்படக் கூடிய உள நெருக்கீடுகளை இந்நாடகம் கலைத்துவத்துடன் பேசி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
தொணி னு றுகளில் க.சி தம் பரநாதனின் நாடகங்களினுாடாக நல்ல நடிகனாக அறிமுகமான க.ரதிதரன். பின்னர் வித்தியாசமான நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தினார்.
உயிர் இயந்திரம் (சைக்கிள்) நாடக மூலம் யாழ்ப்பாணத்தின் ஒடிந்து போன மக்களின் வாழ்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார்.
க.ரதிதரனின் அண்டவெளி என்னும் நாடகம் பெரு வெளி அரங்க முயற்சியாக யாழ் பல்கலைக்கழக மைதானத்தையும் கட்டிடங்களையும் அரங்காகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட புதிய முயற்சியாகும். முடிவிலா அண்ட வெளியில் மனிதனுக்கான இடம் மிகச் சிறு புள்ளி. அவனோ பெரிதாக நினைத்துத் தம்முள் முரண்படும் அவலத்தைச் சித்திரித்திருந்தார். இவரின் மலநீக்கம், பொங்கொலி நகர் நாடகங்களும் குறிப்பிடக் கூடியவை. மலநீக்கம் யாழ் பல்கன்லக்கழகத்தால் தடை செய்யப்பட்ட நாடகமாகும். துண்டு துண்டான சிறு காட்சிகளுடாக நாடகத்தை முழுமையை நோக்கி
6) TP35 gol
மல்லிகையின் மீதும் மல்லிகை ஆசிரியர் மீதும் நீண்ட லோகேஸ்வரன் தம்பதியின் மகள் சக்தி அவர்களுக்கும் தி அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பு புதிய கதிரேசன் மண் மண்டபம் நிறைந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இ புதுமணத் தம்பதியினரை மல்லிகை நெஞ்சார வாழ்த்தி ம

நகர்த்தும் பாங்கு இவரிடம் அலாதியாக வெளிப்பட்டது. இவ்வேளை திருமறைக் கலாமன்றத்தினரின் பல்வேறுபட்ட நாடக முயற்சிகளும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. கொழும்பு, ஐரோப்பிய நாடுகள் என பிற இடங்களிலும் இவர்களது நாடகங்கள், நாட்டுக்கூத்து, இசைநாடகம், நவீன நாடகங்களாக அரங்கேறின. இவர்கள் நடத்திய நாடக அரங்கியற் கண்காட்சி மிகவும் பயனுள்ள முயற்சியாகும். ஆற்றுகை என்ற நாடக சஞ்சிகையும் மிகக் காத் திரமாக வெளிக் கெர்ணரப்படுகிறது. −
கரும்புலி தின நாடகப் போட்டிகளினூடாக நாட்டுக்கூத்து, நவீன நாடகங்கள் என்பன புதிய உத்வேகம் பெற்றன. திருமறைக் கலாமன்றமும் நாட்டுக் கூத்துப் போட்டியை நிகழ்த்தியது.
மெற்றாஸ் மெயிலின் பாரம்பரிய நாடகப் போட்டிகளும், வேழம் படுத்த வீராங்கனை நாட்டுக் கூத்தும் குறிப்பிடப்பட வேண்டியதாகும். மேற்படி நாட்டுக் கூத்து பெண்ணின் வீரம் பற்றிப் பேச வேண்டிய கால சூழ்நிலையின் விளைவாக வெளிக் கொணரப்பட்டதாகும். யுத்த காலத்தில் சிறுவர்களது மனோநிலை பாதிக்கப்படாமல் இருக்கும் முயற்சிகளாக சிறுவர் நாடக முயற்சிகள் குடா நாடெங்கும் நடைபெற்றன. பல பாடசாலைகளில் சிறுவர் நாடக அரங்கு முக்கியத்துவம் பெற்றது.
கலாநிதி காரை சுந்தரம்பிள்ளையின் இசை நாடகம் தொடர்பான நூல்கள், க.சிதம்பரநாதனின் எமக்குத் தேவைப்படுமரங்கு, குழந்தை.ம.சண்முகலிங்கத்தின் நாடகங்கள் நூலுருவாக்கம் பெற்றமை என்பவற்றுடன் கல்வி சார் முயற்சிகளாக குழந்தை, சண்முகலிங்கத்தின் மன்னன் ஈடிபஸ் மொழிபெயர்ப்பு நூல் என்பன குறிப்பிடக் ՑուգԱ 1601,
தொண்ணுறுகளின் இறுதியில் குழந்தை.ம. சண்முகலிங்கத்தின் வேள்வித் தீ என்னும் நாடகம் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணொருத்தி எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கூடாக போர்க்கால அவலமொன்று கலைத்துவ ரீதியாக கற்பு பற்றிய கருத்து நிலையையும் அலச முற்பட்டது. 21ம் நூற்றாண்டு யாழ்ப்பாண அரங்கும் வேள்வித் தீயுடனே SJ bLULDT607g5).
கின்றோம்
காலமாகப் பேரன்பு கொண்ட திரு. திருமதி கே. ஸி. நமதி. தி. விஜயரட்ணம் அவர்களது மகன் கணேஷ்குமார் டபத்தில் திருமணம் வெகு சீரும் சிறப்புமாக நடந்தேறியது. ருந்தது.
கிழ்கின்றது. శ్రీ,
- ebffuulr
函可卤

Page 33
36வது ஆண்
VVE CHAN
వ్లో
:
IT LANKA ACA
320-111,
Colon
Te: O75-5199OO/1
 
 

οιΦ (D6υΦδΦ வாழ்த்துக்கள்
DEMY (PVT) LTD Galle Road, nbo-03
Fax: 57778O

Page 34
இலக்கியப் பார்ன் (Henrik
சேக்ஸ்பியர்' காலத்தில் நாடகம் கண்ட பெருவளர்ச்சி, செழுமை, செறிவு கூடவே நாடகம் பார்ப்பவர்களிடம் யல்பாகவே உள்ள நாடகம் பற்றிய அறிவு, தெளிவு, கற்பனை வளம், ஈடுபாடு என்பன அவரை அண்டிய காலப் பகுதிகளில் நலிந்தே காணப்படுகின்றன. 1642ம் ஆண்டு நாடக அரங்குகள் மூடப்பட்டவுடன் தொடங்கிய 'í வீழ்ச்சி, அவை 1660ல் மீண்டும் திறக்கப் பட்ட பின்பும் ஓர் ஆரோக்கிய நிலையை அடைய முடியவில்லை. இக்காலங்களில் நாடக ஆசிரியர்கள் இல்லாமலோ, நாடகங்கள் மேடை ஏற்றப்படாமலோ இருந்ததோவெனில் அதுவும் இல்லை.
19ம் நூற்றாண்டைப் பார்ப்போமாயின் ஐரோப்பாவில் நாடகத்தின் நிலை பரிதாபகரமானதாகவே விளங்கியுள் ளது. இக்காலத்தில் மேடையேறிய நாடகங்கள் யாவும் உணர்ச்சிகளைத் தூண்டவல்ல நிகழ்வுகளையும், மிகைப டுத்தப்பட்ட பாத்திரங்களையும் கொண்டு இனிய முடிவு களை உடைய 'மெலோறாமா (melodrama) வகையினதா கவே காணப்படுகின்றன. நாடகத்தைக் கட்டுப்படுத்திய கட்டுப்பாடுகள் 1842 இல் அகற்றப்பட்ட பின்பும் நாடகங் கள் மக்களிடையே காத்திரமான செல்வாக்கைச் செலுத்த முடியவில்லை.
‘எலிசபெத் காலத்துப் பார்வையாளர்கள் போன்று இக் கால அரங்கு செல்வோர் கற்பனைச் செறிவோ, நாட்டமோ இல்லாமலே இருந்தனர். புதினங்கள் வாசிப்பதில் காட்டிய ஈடுபாட்டை நாடகங்களில் காட்ட மறுத்தனர். காரணம், நாடகங்கள் கேவலமானவை என்றும்,நடிப்போர் நடத்தை கெட்டவர்கள் என்றும் அவர்கள் எண்ணியதே ஆகும். அன்றியும் நாடகங்களை ஊக்குவிக்கும் மன்றங்களோ, சபைகளோ அல்லது ஆதரிப்பாளரோ இல்லாமையுமாகும். பழைய நாடகங்களை மேடையேற்றிய தயாரிப்பாளர்கள் புது முயற்சியில் ஈடுபட்டமைக்கான சான்றுகளும் அரிதா கவே காணப்படுகின்றன. ஒரு சில விமர்சகர்கள், சேக்ஸ் பியரது ஒப்பற்ற உயர்ந்த, உலகளாவிய தன்மைக்கு நிகராக எழுதுவதென்பதே முடியாத காரியமென எண் ணியே நாடகங்களைப் பலர் எழுதப் பயந்தனர் என்றும் கூறுவர். இது மிகைப்படக் கூறிய கருத்தென்றாலும், இதில் உண்மை இல்லாமலும் இல்லை.
இவ்வாறான ஒரு காலகட்டத்திலே நோர்வேயின் எல்லை யைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஓங்கி ஒலிக்கின்றது. இப்சன் என்னும் நாடக ஆசிரியனது குரலே அது. யதார் த்த நாடகத்தின் தந்தை எனப் பின்னால் புகழாரம் சூட் டப்பட்ட இப்சன் தனது நாடகங்களை அரங்கேற்றத் தொடங்குகிறார். ஐரோப்பாவின் பல பாகங்களிலும் இக்காலங்களில் மேடையேற்றப்பட்ட எந்தவொரு
 
 

வையில் இப்சன்
Ibsen) ,
b.dbib60built
நாடகமும் அவரது நாடகங்களுக்கு ஈடு கொடுக்க முடி யாது திணறியது. இப்சனின் பல தரப்பட்ட நாடகங்களை மேடையேற்றுவதையே தயாரிப்பாளர்கள் இலாபகரமான தாகவும், கெளரவமானதாகவும் கருதினர். 'பேர்னாட் சோ இப்சனின் நாடகங்கள் அனைத்தும் மேடையேற்றியபின் நாடகங்கள் இல்லாத குறையைப் போக்கக் கருதி "விதவைகள் இல்லங்கள்” எனும் நாடகத்தை எழுதியதன் மூலம் 20ம் நூற்றாண்டின் புகழ் பூத்த நாடக ஆசிரியராக மாறினார் என்பது இவ்விடத்தில் குறிப்படத்தக்கது.
ஐரோப்பாவில் இன்று திரையுலக நடிகர்களுக்கு மக்கள் அளிக்கும் அமோக வரவேற்பைவிடப் பல மடங்கு வரவேற்பை அன்று மக்கள் இப்சனுக்கு (நடிகனுக்கு அல்ல) அளித்தனர் எனில் அவரது புகழ், செல்வாக்கு, ஆற்றல் எவ்வாறு இருந்திருக்குமென நாம் எடை போட முடியும். லியோ ரோல்ஸ்டோய் நாவல் இலக்கியத்தில் 19ம் நூற்றாண்டில் எவ்வளவு செல்வாக்கைப் பெற்றிருந் தாரோ அதே அளவு செல்வாக்கை இப்சன் நாடகத்தில் பெற்றிருந்தார். இதனாலேயே பேர்னாட் சோ இவரைத் தனது குருவாகக் கொண்டார்.
வாழ்க்கை வரலாறு
இப்சன் நோர்வேயின் "ஸ்கீன்’ எனுமிடத்தில் 20.03.1828ல் பிறந்தார். இவரது தந்தை செல்வந்தரான ஒரு வர்த்தகர். பலரது கல்வி முன்னேற்றத்துக்குப் பண உதவி புரிந்தார். பிற்காலத்தில் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றார். பலரது கல்விக்கு உதவியவரது மகன் தனது கல்வியைத் தொடர முடியாது ஒரு மருத்துவரின் கீழ்ப் பயிலுனராக வேலைக்கமருகின்றார். பொருத்த மில்லாத தொழிலில் “ஏற்பட்ட அதிருப்தி, வறுமையின் தாக்கம், தனிமையின் கொடுமை, வாழ்வின் வறுமை என்பவை தந்த விரக்தி அவரைத் தன்னிலும் பத்து வயது மூத்த வேலைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யத் தூண்டுகிறது. இவருக்கு ஒரு மகவும் உண்டு.
1851ம் ஆண்டு தொடக்கம் 1862ம் ஆண்டு வரையி லான 10வருட காலப்பகுதி இப்சன் எனும் உலக நாடக ஆசிரியன் களப்பயிற்சி பெற்ற காலப் பகுதியாகும். 1851-56 காலப் பகுதியில் பேர்கன் தியேட்டரில்' அரங்க முகாமையாளராகவும், நாடகக் கவிஞராகவும், 1857-62 வரையில் நோர்வீயன் தியேட்டர் இயக்குனராகவும் கடமை புரிகின்றார்.
நாடகக் கலை என்பது செய்திறன் அதிகம் கொண்ட ஒன்றாகும். சிறப்பாக இது கட்புலன் சார்ந்த ஊடகமாகும். நாடகம் பற்றிய விசேட புலமையோ, நியாய வாதங்களோ, கோட்பாட்டுத் திறனோ நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றப் போதுமானவை அல்ல. நடிகர்களுடன்
தொடர்ச்சியான நெருக்கம், நாடகம் பார்ப்போரது நாளர்

Page 35
பல்வேறுபட்ட உணர்ச்சிகளின் பிரதிபலிப்பைக் கணிப் பிடல், அரங்கச் செயற்பாட்டில் உள்ளார்ந்த ஈடுபாடு, ஒலி ஒளி விளைவு பற்றிய தொடர்ச்சியான திட்டமிடல் போன்றவையே நாடகங்களைச் சிறந்த முறையில் மேடையேற்ற உதவுகின்றன. இப்சன் பெற்ற 10 வருட தொடர்ச்சியான மேடை அனுபவம் அவரை பெரும் நாடக ஆசிரியராக மாற்றிவிடுவதுடன், புதுமைகளைப் புகுத்தும் நுட்பத் திறனையும் தந்து நிற்கின்றது. கூடவே அவரது மனதில் குமுறிக் கொணடிருந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திண்மை அவரைக் கருத்தாழம் மிக்க நாடகங்களை எழுதத் துணை போகின்றது.
இவரது இளமைப் பராயம் எதிர்கால இப்சனைப் புலப்படுத்தும் வகையில் அமையவில்லை. இளம் பெண்ணொருத்தி இவரது இளமையை இவ்வாறு நினைவு கூருகிறார். “ஒரு சிறிய கூச்சப்பட்ட அணில்' இவரது தந்தையார் கூட இவர் பிற்காலத்தில் மேதையாகப் போவதற்கான அறிகுறிகளைக் கண்டாரில்லை. ஆனால் யாவரும், "அகலத் திறந்த கண்களை உடையவன்” என்பதைக் குறிப்பிடுகின்றார்கள்.
இப்சனின் முதலாவது நாடகம் ‘கற்றலீன்' 1849ம் ஆண்டு வெளிவருகின்றது. ஆனால் அவரது தாக்கமான படைப்புக்கள் 1877ம் ஆண்டிற்குப் பின்னே மேடையேறு கின்றன. வருடமொரு நாடகம் என்ற வகையில் நாடகங் களை எழுதிய இவர் 1900ல் பாரிசவாத நோயினால் பீடிக்கப்பட்டு பின் 1906ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இறந்துவிடுகின்றார்.
இப்சன் இயல்பாகவே அமைதியான நிகரான போக்கை உடையவர். இருப்பினும் கொள்ளையிலிருந்து இம்மியளவும் விலகாதவர். "றோயல் தியேட்டரின்” அரங்க முகாமையாளர், "ஒரு சிறிய வாய் பேசாத விளிப்பான விரிந்த கண்களையுடைய நோர்வீயன்” என இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். "யோன் நோர்கம் அவர்கள் “20ம் நூற்றாண்டின் பிரதான ஆக்க சக்தியாக வரப்போ கும் மனிதன் தனது சமூகத்திலிருந்து தான் அந்நியப் படுத்தப்பட்ட தன்மையை உணரப்போகின்றான் என்பதைப் பற்றி 19ம் நூற்றாண்டிலேயே அவரால் உணர முடிந்தது' என்றும், "இவைகளைக் கூறுகையில் கூட அவ்வுணர்வ களை வெளிக் கொண்டு வந்தாரேயன்றி ஒரு பொழுதும் தனது தீர்ப்பை வழங்கினாரில்லை” என்றும் கூறுவார்.
இய்சனின் நாடகங்கள்.
இப்சனின் நாடகங்கள் நவீன நாடகங்கள் யாவற்றிற்கும் சிகரமாக விளங்குகின்றன. நடைமுறையிலுள்ள நெறி பிறழ்தல்கள், குறைபாடுகள் என்பவைகளை வெளிக்கொ ணர்வதையே அவர் தலையாய கடமையாகக் கொண்டிரு ந்தார். அரங்கம் என்பது அவரைப் பொறுத்தவரையில் உண்மையான ஒர் உலகம். அங்கு இரக்கமற்றப் பகுப்பா ய்வு நிகழ்த்த விரும்பினார். அரங்கில் மனித மனமும், ஆத்மாவும் நேர்மையுடன் வெளிக்காட்டப்படல் வேண்டும். அவர் யாரையும் திருப்திப்படுத்த விரும்பவில்லை. அவ் வாறே யாராலும் அவரைத் திருப்தியமைக்கவும் முடியவில்லை .
மேடையில் அவரது சில பாத்திரங்கள் பார்த்துச் சீரணிக்க முடியாமல் இருக்கும். சில பாத்திரங்கள் சகிக்க முடியாத தன்மையைக் கூடத் தந்து நிற்கும். (தனது உண்மையான உருவை எவன்தான் நேருக்கு நேர் சந்தி

க்க விரும்புவான்?) ஒரு சில விமர்சகர்கள் இவற்றைக் கருத்திற் கொண்டு அவரது நாடகங்கள் பிரதி வடிவில் இலக்கியச் செறிவுடையவை என்றும் அரங்கில் சுத்த அபத்தம் என்றும் குற்றம் சுமத்துவர். உண்மையில் இது இப்சனது தவறு அல்ல. நாடகத் தயாரிப்பாளர்களது அறியாமையினாலும், கவனயீனத்தாலும் ஏற்பட்ட தவறே ஆகும். இப்சன் ஒருபொழுதும் ஒரே பாணியிலான நாடகங் களை எழுதியதே இல்லை. யதார்த்தவாதியின் சுயதரிச னம் அவற்றைப் பார்க்கும் பக்குவமற்றவர்களுக்கும் விசனமாகவே படும்.
மேடைக்குகந்த பல நாடகப் பிரதிகள் புத்தக வடிவில் இலக்கியத் தன்மையைக் காட்டி நிற்பதில்லை. அபத்த நாடகப் பிரதிகளை உதாரணத்திற்கு நாம் கூற முடியும். இலக்கியத் தன்மை மிகுதியாக உள்ள நாடகப் பிரதிகள் மேடைக்குதவாதவை ஆகிவிடுவதும் உண்டு. ஆனால் இப்சன், பிறேக்ட்', 'சேக்ஸ்பியர்' போன்றோரது பிரதிகள் மேடையிலும், புத்தக வடிவிலும் இலக்கியச் செழுமை கொண்டு விளங்குகின்றன.
இப்சன் சுமார் 24 நாடகங்களை எழுதி மேடையேற்றி யுள்ளார். “கீாற்றிலைன்” அவரது முதலாவது நாடகம். "இறந்த நாம் விழித்தெழும்போது” அவரது கடைசி நாடகம், அவரது புகழ் பெற்ற நாடகங்களுள் "பாவை வீடு', 'ஆவிகள்”, “மக்கள் விரோதி”, “றொர்மசோம்”, “சமுதாயத் தூண்கள்” போன்றவை ஒரு சிலவாகும். அவருடைய கவிதை நாடகங்களுள் “பியர் கையினர்”, “பிறான்ட்’ போன்றவை மொழி பெயர்ப்பாளர்களைத் திணற வைத்துள்ளன. இவரது நாடகங்களை கவிதை நாடகங்கள், சமூக நாடகங்கள், உளவியல் நாடகங்கள், பெண்ணியல் நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் எனப் பொதுவாக வகைப்படுத்துவர். உண்மையில் அவரது நாடகங்கள் பலவும் அவரது பலதரப்பட்ட சமூகப் பார்வையை எனக்குப் புலப்படுத்துகின்றன.
இவரது ஆக்கங்களை மீண்டும் நாம் இரு கூறுகளாகக் கால எல்லைப் பிரகாரம் வகைப்படுத்திப் பார்க்க முடியும். “சமுதாயத் தூண்களுக்கு" முற்பட்டகால நாடகங்களை 1ம்பிரிவிலும் அதற்குப் பிற்பட்டகால நாடகங்களை 2ம் பிரிவிலும் அடக்க முடியும். முன்னைய நாடகங்களில் அவரது முதிர்ச்சியின்மை தெள்ளெனத் தெரியும். இவை கள் யாவும் வீரம் பற்றியே அதிகம் பேசும். அரங்கக் கவர்ச்சியை நோக்காகவைத்தே இவைகள் எழுதப்பட்டன. இரண்டாம் பிரிவில் அடங்கும் நாடகங்கள் முதற்றர மான தனது அனுபவங்களை மையப் பொருளாகக் கொண்டவை. தான் வாழ்ந்து அனுபவித்தவையே நாடக மாகத் தமக்கு வெளிவந்தமையை அவரே குறிப்பிடுகின் றார். இதனாலேயே இம்முயற்சிகளில் புது நாடக பாணி யிலான மாற்றங்களை அவரால் கொண்டு வரவேண்டியி ருந்தது. அவரது கருத்துக்களைப் பிரதிபலிக்க வல்ல அரங்கை அவர் கண்டதும் இவற்றால்தான். இப்பிரிவு நாடகங்களில் சொற்களும் காட்சியும் சங்கமமாகும் அற்புதத்தை நாம் காண்கின்றோம்.
அவரது நாடகங்கள் பலவும் அவரது உயர்ந்த இலட்சியங்கள், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றையும் அநீதி கண்டு கொதித்தெழுந்த தன்மைகளையும் கொண்டிருக்கி ன்றன. அவரது அயரா உழைப்பு, உண்மையைக் காணும் முனைப்பு, ஆத்மாவின் குமுறல்கள் என்பவையே அவரது நாடகங்கள் யாவிலும் புரையோடிக் காணப்படுகின்றன.

Page 36
இய்சனின் யதார்த்தவாதம்
"மோறாலிட்டி (morality) நாடகங்களில் கூட யதார்த்தப பாணி இருப்பதைக் காணமுடிகின்றன. ஆதாமும் ஏவாளும் அம்மணக் கோலத்தை உணர்த்த வெள்ளை ஆடை அணிந்து வருவர். சேக்ஸ்பியர் கூட யதார்த்தத் தன்மையைத் தனது நாடகங்களில் காட்டியுள்ளார். இருப் பினும் இப்சனையே நாம் யதார்த்தநாடக ஆசிரியர் என அழைப்போம்.
இப்சன் காலத்தில் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. இவைகளால் அன்றைய மக்களின் வாழ்க்கைப் போக்கே மாறிவிடுவதுடன் வாழ்வில் பார்வை கூட வேறு திசைகளுக்குத் திரும்பி விடுகின்றன. 1832ல் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தச்சட்டம், 1960 களில் வெளியான டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின் தாக்கம், 'கார்ல் மாக்ஸ் அவர்களது 'தாஸ் கப்பிட்டல் புத்தகம் ஏற்படுத்திய எதிர் விளைவுகள், 1864ல் வாக்குரிமைச் சட்டம் என்பவை குடும்பம் தவிர்ந்த முயற்சிகள் யாவிலும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இதுகாறும் கடவுளே உலகின் மையமாக இருக்க, இப்பொழுது மனிதனே உலகின் மையமாக மாறத்தொடங்குகின்றான். ‘கடவுள் மண்ணைப் படைத்தது என்னவோ உண்மை. ஆனால் கடவுளை மனிதனே படைத்தான்’எனக் கடவுளை மனிதனுக்கு அடுத்தபடியாக வைக்கும் நிலை ஏற்படுகி றது. இப்சனைப் போன்ற 'அகலத் திறந்த கண்களை உடைய ஒருவன் இவைகளைப் பாராமல் இருக்க முடியாதல்லவா?
காலம் காலமாக நோர்வேயில் கடைப்பிடித்து வந்த கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் என்பன உண்மையில் போலியானவை என்ற எண்ணம் இப்சனில் தோன்ற இம் முரண்பாடுகளால் ஏற்பட்ட மனக் குமுறல் கள், வேதனைகள், விரக்தி போன்றவை அவன் படைத்த ஆக்கங்களில் முகை வெடிக்கத் தோன்றின. இப்போலித் தனங்களைக் கண்டும், உணர்ந்தும் இருந்த 'அறிவுசால் மேல் மக்கள் பலர் அவைகளைத் துணிந்து கூறுவதற்கு அஞ்சினர். சமூக விழுமியங்கள், சமய அங்கீகாரம் பெற்றி ருந்தமையால் அவைகளை விமர்சிப்பதற்குக் கூட இவர் கள் அஞ்சினர். ஆனால் இவைகளை அப்பட்டமாகத் துணிவுடன் மேடையில் காட்ட இப்சன் கையாண்ட உத் தியே பின் யதார்த்த நாடகங்கள்" என்ற நாமத்தைப் பெறுகின்றது.
சமகால சமுதாயத்தின் உள்ளார்த்தங்கள் யாவும் காலத்திற்கொவ்வாத கருத்துக்களாலும், உளப் பாங்குகளாலும் அரண் போடப்பட்டிருந்தமையால், மக்களுடைய சிந்தனையில் தனது நாடகங்களினூடாக மாற்றங்களை ஏற்படுத்த இப்சன் விரும்பினார். “நான் எனக்கு உண்மையாக இருப்பது கூட ஒருவித யதார்த்தம்” என்று இதனாலேயே கூறினார்.
ஆகவே "கட்டமைக்கப்பட்ட நாடகத்தை” (well made play) இப்சன் அறிமுகப்படுத்தி அங்கே நான்காவது சுவரை நீக்கி விடுகின்றார். இந்த நான்காவது சுவரூடாக மக்கள் யாவற்றையும் பார்க்க விடுகின்றார். நாடகங்களில் வரும் கதாநாயகன், கதாநாயகி அசாதாரண மானிடர்களா கக் காட்டப்படுகின்றனர். இவர்களிடம் விசேட தன்மைகள் குடிகொண்டிருக்கும். அவர்களது எதிர்பார்ப்புக்கள் யாவும் கொள்கை பிடிப்புள்ளவையாக இருக்கும். இவைகள் அவர்தம் உணர்வுகளைப் பிரதிபலித்து நிற்கும். இந்நிலை

பில் அவர்களது சொந்த எதேச்சையான போக்கு, முரண் ாட்டுக்குள் அவர்களைத் தள்ளிவிடும். முடிவு இவர்கள் அச்சூழலின் எதார்த்த மாந்தராக மாறி விடுகின்றனர்.
இப்சன் தனது நாடகங்களில் மொழி யதார்த்தமாக இருக்க வேண்டும்:- உடை இயல்பாக, இயற்கையாக அமைய வேண்டும்:- நடிகன் களநிலையை அறிவதுடன் ஆத்மாவை அடகு வைக்காமல் இருக்க வேண்டும்:- Fாதாரண நாடகம் பர்ர்க்கச் செல்வோன்கூட பாத்திரங்க ரில் தானும் ஒருவன் என உணர வேண்டுமென ாதிர்பார்ககின்றார். −
இவ்வாறான யதார்த்த நாடகங்களை மேடையேற்றி வெற்றி பெற இவரால் மட்டும்தான் முடிந்தது. ஏனையோர் தோல்வியுற்றனர் எனக் கூறுவோரும் உளர். இவ்வாறே பிறெக்ட் அவர்களால் புகுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தியும் அவர் கைகளிலேயே வெற்றி கண்டது. அவர் நவிர்ந்த ஏனையோரால் இவற்றை அரங்குக்குக் கொண்டு வரமுடியவில்லை எனக் கூறுவதும் நாம் அறிந்ததே.
உண்மையில் இவர்களது உத்திகளின் வெற்றி அவர் களது எண்ணக் கருவாகிய நாடகப் பிரதிகளைச் சார்ந்த வையே. அத்துடன் நாடக ஆசிரியனது அகக் கண்ணின் காட்சிப் புலப்பாட்டை அவனொருவனால்தான் புரிந்து கொள்ள முடியும், மேடைக்குக் கொண்டு வரவும் முடியும். பிறிதொரு நாடக ஆசிரியனின் உணர்வுகள் இவர்களது உணர்வு போன்று இருக்க வேண்டுமென்பதில்லையே. ஒரு இப்சனை ஒரு பிறெக்டை வாசிக்கும் போது ரற்படும் தாக்கம் மற்றவர்களிடம் ஏற்படவில்லையெனில் அவர்களது நாடகங்களைவிட அவர் முன்வைத்த கருத்துக்கள் தாக்கமுடையனவாக அமைந்தமையே ஆகும். தாக்கமுடைய கருத்தாழம் கொண்ட நாடகங்கள் ஜபூளுமையுடைய நாடக ஆசிரியரால் ஏற்ற அரங்கில் மேடையேற்றும் போது அவை பிறிதொருவரால் செய்ய முடியாத செயலாகவே அமையும். "நோறா' கதவைச் சாத்திக் கொண்டு இருட்டில் வெளியேறியமை ஐரோப்பாவின் முகத்தில் விழுந்த அறை என நாம் கூறுகின்றோமெனில் அங்கே காட்சிப் புலனைவிட கருத்துக்களம் கனதியாக இருந்ததே ஆகும்.
இப்சனின் யதார்த்த நாடகங்கள் பற்றி கலினி மிகவும் அழகாகக் கூறுவார். அவர் (இப்சன்) ஒரு பெரிய ஒவியனை எவ்வகையில் யதார்த்த ஓவியன் என அழைக்கின்றோமோ அவ்வகை யதார்த்தவாதியாவான். அவர் நிழல் பாடல் கலை' என வர்ணிக்கப்படும் கருத்து டன் ஒத்துப் போவதில்லை. உதாரணமாக யதார்த்தவாதி என முத்திரையிடப்பட்ட “சோலா'வுடன் தன்னைச் சேர்த்துப் பார்ப்பதை அவர் வெறுத்தார். அவரைப்பற்றி சோலா) அவர் (இப்சன்) கூறுவார். '
“சோலா" சாக்கடை நீரில் குளிக்கச் செல்வார். நானோ இதைத் துப்புரவு செய்யச் சொல்வேன்’ இதனாலோ என்னவோ இப்சன் காட்சி அமைப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார். மேடை அமைப்புப் பற்றிய சிறிய விடயங்களைக் 4ட விரிவாகத் தனது நாடகப் பிரதிகளில் எழுதியும் வைத்துள்ளார்.
இப்சன் மறைந்து கிட்டத்தட்ட நூறு வருடங்கள் சென்றுவிட்டன. இன்றும் மேடை ஏற்றுபவர்களிடமும், நடிகர்களிடமும், பார்வையாளர்களிடமும், இன்னும் கூறப்போகின் இலக்கிய ஆய்வாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். 9

Page 37
IMPORTERS 8 DISTRIBUTERS OF M
BGB
102, Wolfe COOr
PhOne: 328729
332949-50
 
 

ACHINERY ELECTRICAL EVIPIENTS
lilding ndha Street, nbO-13
Fax :94-1-439.623 94.1.576273 E-mail : kalkison CDst.lk

Page 38
ரீபிராந்தன்
இருபதாம் நாற்றாண்டின் இணையற்ற மனிதர் எவர்?" என விருதை வைத்துக்கொண்டு வினவுகிறது உலகு. ஐன்ஸ்டீன், காந்தி என்ற பிரபல முகங்களைப் பிரேரிக்க முடியவில்லை. தோற்சுருக்கம் ஒவ்வொன்றுள்ளும் சோகங்களைச் சொருகி வைத்திருக்கும் நாகசாகி நண்பனே! பிரபல முகங்களை என்னால் * பிரேரிக்க முடியவில்லை.
உந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய சொர்க்கம் ஒரே கணத்தில் சுடலையாயிற்று சகோதரத்துவத்தக்கு அங்கே கட்டிய சமாதி மேலே
இன்று துளிர்க்கிறாய் நீ. மானுடத்தை மானுடமே கழுவேற்றிய தாக்கு மரத்தில் தொங்கும் அபாய அறிவிப்பாய் அமைந்ததன் வாழ்வு.
 
 
 
 

உடலே சிலுவையென உயிர் வளர்ப்போனே! அமெரிக்க வல்லூறின் அணுகுண்டு எச்சம் உன் பரம்பரைச் சட்டையைப் பாதித்தக் கழுவினாற் போகாத கறையாயிற்று.
ஆணவம் போர்த்திய செயல் நிர்வாணத்தை விடவும் வெட்கம் தந்தது. சந்திரனை நோக்கிய விண்கலத்தில் சாதனைகளை நிரப்பிய கரங்களே, விமானத்தில் உங்கட்கான சவப்பெட்டிகள் தந்தன.
விண்வெளி முட்ட வளர்ந்த விசுவரூபம், வழுக்கி உங்கள் வயலில் வீழ்ந்ததில் பயிர்கள் மட்டுமா பாழாய்ப் போயின? சந்ததி விதைகளும் சிதைவுற்றனவே!
நீ சிதைவுற்ற வித்தே எனினும் சிரமப்பட்டு . சிறுகச் சிறுக. சகோதரத்துவத்துக்குச் சுவர்கள் கட்டிய சமாதி மேலே துளிர்க்கிறாய் இன்று. அணுகுண்டு கர்ப்பம் வளரவும், "மலடி நான்" என்று மார்தட்டி நாடுகள் செய்யும் நடிப்புப் பார்த்தும் ‘சமாதானத்தக்கான யுத்தம்" என்னும் மனசை மறைக்கும் வார்த்தைகள் கேட்டும். இன்று நீ தளிர்த்துச் சிரிக்கிறாய். கருப்பைக்குள்ளே கந்தகம் குடித்து இரும்பைத் தயர் மேல் ஆக்கிய நண்ப இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதனென ઉો நின்னைத் தவிர வேறெவரையும் op நினைக்க முடியவில்லை.

Page 39
ஓர் அறிமுகக் குறிப்பு
தெணியானின் க
ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கியத்தி ற்கு வளம் சேர்த்தவர்களுள் தெணியா னும் முதன்மையானவர். அவரது ஐந்தா வது நாவலாக அண்மையில் வெளிவந்தி ருப்பது ”காத்திருப்பு” நாவலாகும். சமூகத்தின் போலி முகங்களைத் தோலுரி த்துக் காட்டும் அவரது ஏனைய படைப்புக் களிலிருந்து வேறுபட்டு, இந்நாவல் வேறொரு தொனியில் பேசுகிறது. ஒரு பெண்ணின் பாலியல் பிறழ்வு நடத்தையால் குடும்பத்தவ ரிடம் எழும் அகப்புறச் சிக்கல்கள் பற்றி கதைப்புலம் விரிகின்றது.
பாலியல் உணர்வு என்பது அடிப்படையில் இயல்பான மனித உணர்வு. அத்தகைய உணர்வு பிறழ்வுறும் சமய த்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணுபவர்களை அது எவ்வாறு பாதிக்கின்றது. அவர்க ளில் எத்தகைய மன உளைச்சலைக் கொடுக்கிறது. என்பதை மிக மென்மையான உணர்வு வெளிப்பாட்டுடன் இந்நாவலைத் தெணியான் சமநிலை நின்று எழுதியுள்ளார்.
கதையில் பல பாத்திரங்கள் தலை காட்டினாலும், துாக்கலாக நிற்பன சுப்பிரமணியம் - அநேக சந்தர்ப்பங்களில் "பேய்ச்சுப்பு, அவனது அன்புக்குரிய மனைவி ஈசுவரி, குடும்பத்துடன் உறவு கொண்ட சங்கக்கடை மனேச்சர் நந்தகோபாலன். இம்மூவரின் தாபங்கள், ஏக்கங்கள், அகமனப் போராட்டங்கள் நாவலின் மூலவிசையாக நின்று நாவலை நகர்த்திச் செல்கின்றது.
சுப் பிரமணியம் - ஈசுவரி தம் பதியினரின் தாம்பத்தியத்தில் காணப்பட்ட சில போதாமைகள், இயலாமைகள் உறவில் திருப்தியின் மையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் நந்தகோபாலனின் தொடர்பு சில தேவைகளை நிறைவு செய்கிறது. ஈசுவரி நந்தகோபாலனின் ஆளுகைக்குள் வசப்பட்டு விடுதல், அதனைக் கண்டும் காணாதவனாக தனக்குள் சிதைந்து கொண்டிருக்கும் கணவன். அதனைச் சாதகமாக்கிக் கொண்ட இருவரது பாலியல் பிறழ்வு நடத்தை உச்சநிலை அடைதல். இதனைச் சகிக்க முடியாமல் நோய் கண்டு - இறுதியில் இறந்து போகும் கணவன். பின்பு ஈசுவரி மனம் திருந்தியவளாக நந்தகோபாலனைத் துறந்து கணவனின் தூய நின்ைவுகளுடன் இறுதி வரை வாழச் சபதமெடுக்கிறாள். இதுவே கதைச்சுருக்கம்.
சுப்பிரமணியம் தன்னைச் சுற்றியுள்ள உறவுகளில் மாறா அன்பு கொண்டவன். குறிப்பாக மனைவி ஈசுவரியிடம் காட்டும் அன்பு கோபுரம் போல உயர்ந்தது. புனிதமானது. அதுவே சுப்புவின் பலவீனமாகவும்
 
 
 

ாத்திருப்பு நாவல்
மு. அநாதரட்சகன்
நிலைத்து அவனது அகப் புறச் சிதைவுக்கும் ஏதுவாகிவிடும் சோகத்தை மிக நேர்த்தியாக கலைத்துவத்துடன் ஆசிரியர் காட்டியுள்ளார்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட சுப்பிரமணியத்துக்கு அன்பு, அரவணைப்பு, கணிப்பு போன்ற உளவளத் தேவைகள் பூரணமாகக் கிடைக்காமை அவனது ஆளுகையில் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பதை உளவியல் நோக்கில் வுெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இளமையில் பேய்ச்சுப்புவாக இருந்து வாலிபத்தில் சுப்பிரமணியமாக உயர்ந்து, தாம்பத்திய வாழ்வில் மீண்டும் பேய்ச்சுப்புவாக தாழ்ந்துவிட்டவனின் நிலை இயல்பாகப் படைக்கப்பட்டிருப்பது தெணியானின் முதிர்ச சியைக் காட்டுகிறது. கதையில் ஈசுவரியும் தான் வாழும் வாழ்விலிருந்து தன்னளவில் தார்மீக நியாயத்தைக் கொண்டவளாகவே படைக்கப்பட்டிருக்கிறாள். சம்பிரதாய ஒழுக்க நெறிகளை மீறித் தன் போக்கில் ஒரு வாழ்வை அமைத்துக் கொண்டு வாழும் ஈசுவரிக்கு சமூகத்தில் தன் வாழ்முறை குறித்துச் மனச்சங்கடங்கள் எழாம லில்லை. இது பூடகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில் அவள் எடுத்திருக்கும் முடிவில் அவளிடம் உள்ளுறைந்திருந்த மேலான குணாம்சம் வெளிப்படு கின்றது. இது கதையில் மென்மையாக, ஆனால் அதிர்வூட்டும் கோட்டுச் சித்திரங்களாக உருப்பெற்று நாவலுக்கு வலுச் சேர்த்துள்ளது.
இந்நாவல், பாலியல் சார்ந்த பிரச்சனையை விரசமி ல்லாமல் நாகரிகமாகவும் சொல்லலாம் என்பதற்கு ஒரு வகை மாதிரியாக வெளிவந்துள்ளமை இதன் சிறப்பாகும். அவ்வகையில் 'காத்திருப்பு நாவல் ஆண்பெண் உறவு களை விரசமில்லாமல் கலைத்துவத்துடன் படைத்து வெற்றி கண்ட கு.ப.ரா, கி.ஜானகிராமன் போன்றோரின் படைப்புக்களை நினைவூட்டுவதாக உள்ளது.
இந்நாவல் சமூகப் பரிமாணத்தில் இன்னொரு உண்மையையும் கோடிட்டுக் காட்டுகிறது. பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பத்துக்கு பொருளுதவிகள் செய்வதன் வாயிலாக, அக்குடும்பத்தின் ஆத்மார்த்தமான - அந்தரங்கமான - உணர்வுகள் இன்னொருவனால் சுரண்டப்படும் அவலம் நன்றாக வெளிப்படுத்தப்பட் டுள்ளது. அத்துடன் கதை விரிவில் ஆங்காங்கே வரும் குறியீடுகள் ஆசிரியரின் ஆக்க வெளிப்பாட்டு நுடபத்திற்குச் சான்றாக உள்ளன. மாற்றானுடன் மனைவி இன்பம் சுகிப்பதைப் பொறுக்கமுடியாத கணவன் சுப்பு, அவனின் சைக்கிள் காற்றைத் திறந்துவிடுவது சுப்புவின் இயலாமையின் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளமை சிறப்பான ஓர் உத்தியாகும்.

Page 40
நாவலின் கதை நகர்வில் வரும் வாடகைச் சைக்கி கடைபருத்தித்துறைத் தோசை, கூப்பன் கடை, நல் தண்ணீர் கிணறு, வைரவர் கோயில் சூழல், கிராமத்து பனங்கூடல்கள், இயற்கை வனப்புக்கள் போன் இன்றைய இளைய தலைமுறையினரின் அனுபவத்தி கைய்க்கப்படாத விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன அத்துடன் கிராமிய வாழ்வின் ஆதாரங்களா நிலைத்துவிட்ட சடங்காசாரங்கள், ஐதீகங்கள் கற்பிதங்கள், கட்டுப்பெட்டித்தனங்கள் என்பவை அவற்றி பலத்துடனும், பலவீனத்துடனும் மேற்கிளம்புவை இயல்பானநடையிற் சந்தடியில்லாமல் ஆசிரிய எழுதியுள்ளார்.
இந்நாவலில் தெனியான் வாசகனுக்கு நிறையே சுதந்திரத்தை வழங்கி அவசியமற்ற தலையீட்டை தவிர்த்துள்ளார். இத்தகைய போக்கு தெணியானி அணி மைய படைப் புக் களில் காணப் படு
XXX
ఖభఃఖ
ခိ.
கலலறை
உனக்கு அரசியல்
மலர் வ
என் கல்
காமதேவி இரவுகளின் வர்ணமே 因ഗ്ഗത്വ அர்த்தநாரீஸ்வர முகவரியே fbs 0 நந: உன்னால் ஒடிந்து போன கரும்புவில் "9 இறந்துபோய் வலியே ஆடிக்களைப்பதற்குள் சிவந்த தாளம் தப்பிப்போன തങ്ങ சலங்கை மனது பொய் முகாரியில் சுகம் தேடுகிறது நீ அதில் செல்மாவின் நினைவுகளில் கார்த்தி6 ஜிப்ரானாகிறேன் ు ஒரு திருத்தம் உரமா நான் ஏமாற்றப்பட்டவன் உன் வி காதலியே சுடுநீர் : Hởớở 6
என் கல்லறையில் பறவைகள் எச்சமிடும் முன் கடைசி ஒரு பூ வைபபாயா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறப்பம்சமாகும்.இது அவர் எடுத்துக் கொண்ட விடயத்தில் அவருக் கிருக்கும் கலாபூர்வமான ஈடுபாட்டையே காட்டுகிறது.
பெண்ணின் கற்பு நிலை பற்றி பல்வேறு கருத்து நிலைகள் இன்று எழுந்துள்ள போதிலும், கணவனுக்கு உண்மையானவளாக உடலாலும், உள்ளத்தாலும் இறுதிவரை வாழுதல் மனைவியின் கடப்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
öI
நாவலைப் படித்து முடித்தபோது பெண்ணின் கற்புநிலை மீதும், அது சார்ந்த மதிப்பீடுகள் மீதும் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பூபாலசிங்கம் புத்தகசாலையின் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவல் புனைகதை இலக்கியப்பரப்பில் தெணியான் உறுதியாகப் பதித்திருக்கும் இன்னொரு தடமாகும். O
- அரபி
Ꮒl
ப் பிடித்த ல்வாதியின் சடலத்திற்கு ளையம் வைப்பதாய்
லறையில் பூ எறி.
பனின் க் கண்டு பயந்த தவனம் ணான் மனதால்
மேய்ந்த போனத.
இதழில் எந்தப் பகுதியில் டை விதைத்திருந்தாய்
ல் விளைந்திருந்தால்
கெக்காய் தவமிருந்து மக்கு
னன்.
ரல்களும் *ளற்று எனத்தெரியாது சடியை நட்டுவைத்தேன்.
JTů
த்மா சாந்தியடைய றயிலேனும் பூ எறி.

Page 41
陌 இந்த 2001ம் ஆண்டில் மலரும்
மலருக்கு எமது மனங்
Buyers & Selli (Gold, Silver Platir 暨 Diamonds, Gems 8 Authorised Money Changer
131 SEA STREET, COLOMBO-11, SRI LANKA.
S
------------- مثا
 
 

- , . --
மல்லிகையின் 38-வது ஆண்டு கனிந்து வாழ்த்துக்கள்
ers Of Bu llion num & Palladium)
Cubic Zirconium
- Custom Made Jewellery.
TEL: 432502 FAX: 3271 O1 E-Mail: devi131 (Ovisual k : -

Page 42
மாலைக் கருக்கலில் சுந்தரம் அச்சந்தியை வந்தடைந்திருந்தான். சனசந்தடி குறைந்து மயான அமைதியினுள் சந்தி புதையுண்டு கிடந்தது. சந்திக்குச் சற்று அப்பால் அமை ந்திருந்த இராணுவச் சென்றியும் வீதிக்குக் குறுக்கே இழுத்து விடப்பட்டிருந்த முட் கம்பிச் சுருளும் முடக்கப்பட்ட யாழ்ப்பாண த்து மக்களின் அவல வாழ்வின் அம்ச மொன்றைச் சுட்டி நின்றன.
மனதில் தயக்கம். உடல் சற்றுப் பதற்றப்பட்டது. கொழும்பிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணம் வருகிறான். 'கொட்டு மழையில், இருளுள், பாதை தடவி நிகழ்ந்த பெரும் இடப்பெயர்வோடு வன்னியூடாகக் கொழும்புக்கு ஓடிப் போனவன். ஒடிப் போனபோது இருந்த ஊருக்கும் , இன்றைய ஊருக்குமிடையில் பெருத்த வேறுபாடு. அனுமான் எரித்த பூமியாக, சிதைந்த கட்டிட இடிபாடுகள் கண்ணில் பட்டன. வீதிகளின் சந்திகளெங்கும் நிலை கொண்டுள்ள காப்பரண்களும். குறுக்கு வீதிகளும், ஒழுங்கைகளும் அடைக்கப்பட்ட நிலையில் சிரசைச் சுற்றி நாசியைப் பிடிப்பது போன்ற சுற்று வழிப் பயண நிலைமையை அவன் புரிந்து கொண்டான்.
மனமும் இதயமும் கனத்துக் கனன்றன. அவன் தனது பயணப்பையைச் சுமந்தபடி, சென்றியில் தயங்கி நிற்க, இராணுவ வீரனொருவன் துப்பாக்கியை நீட்டியபடி அவனை நோக்கி அவதானமாக நடந்து வந்தான்.
“கேபியூ நேரம். றோட்டு மூடியாகிவிட்டது, ஏன் இப்ப வந்தது?
“கொழும்பால வாறன். பஸ் லேற்.”
 
 

“ஐசி யை தா.”
அவன் தனது அடையாள அட்டையை எடுத்து நீட்டினான். அதனைத் திருப்பித் திருப்பி ஆராய்ந்தபடி, "கொழும்பில என்ன செய்யிறது?’ என்று வினவினான்.
“ஒரு கொம்மியூனிகேசன் சென்ரரில வேலை செய்கிறன்.”
"கொழும்பில, எங்க இருக்கிறது?”
“லில்லி அவென்யூ.”
"அது எங்க?
“வெள்ளவத்தை."
"6).T66' 60 FILT, f 608 List'?"
சுந்தரத்துக்கு இப்பொழுது விளங்கிவிட்டது. அவன் கொழும் பிலிருந்துதான் வருகிறான் என்பதை உறுதிப்படுத்த அந்த இராணுவ வீரன் விழைகிறான்.
"கொழும்பில பதிஞ்ச இருப்பிட பாஸ் இருக்குது.”
அவன் ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். கொழும்பில் வசித்தமையை உறுதிப்படுத்தும் பொலீஸ் பதிவு அது. இராணுவ வீரன் முகத்தில் திருப்தி பரவியது.
“இப்ப எங்கை போறது?”
“என்ர வீட்டுக்கு. ஸ்கூலுக்குப் பக்கத்து ஒழுங்கை. என்ர மருமகளுக்குக் கலியாணம். அதுக்காகத்தான் யாழ்ப்பாணம் வந்தன்.”
“சரி கெதியாப் போ. கேபியூ நேரம்.”
வீதிக்குக் குறுக்கே இழுத்து விடப்பட்டிருந்த முட் கம்பிச் சுருளைச் சற்று விலக்கி, சுந்தரத்தைப் போக அனுமதித்தான்.
‘போகோமஸ் துதி." (நன்றி)
அவன் வீதியில் நடக்கும் போது, அவனை அனுமதித்த இராணுவ வீரனை, இன்னொரு இராணுவ வீரன் சிங்களத்தில் ஏசுவது கேட்கிறது. "கேபியூ நேரம் வந்திருக்கிறான். கொட்டியாவா இருப்பான். விட்டு விட்டாயே?”
சாட்டையாக அவன் வார்த்தைகள் தாக்க அவன் வேகமாக நடந்து, பாடசாலை ஒழுங்கையில் திரும்பி, சிறிய ஓட்டத்துடன் தன் வீட்டிற்குள் நுழைந்து

Page 43
கொண்டான். அக்கா சுமதி அவனை வியப்புடன் பார்த்தாள்.
“இந்த நேரம் வந்திருக்கிறாயே, தம்பி” அவன் சிரித்தான். பயம் நீங்கிய சிரிப்பு. "அக்கா. தனுசா எங்கை?" அக்காவின் முகத்தில் கலவரம். “சுன்னாகத்திற்குச் சினேகிதியின் திருமண வீட்ட போனவள். இன்னும் வரவில்லை. சிலநேரம் அங்க தங்கி 6LT(36TIT?”
“கல்யாணப் பெண்ணை.? என்ன அக்கா?” அவள் சந்தியை அடைந்தபோது இருட்டிவிட்டது. சைக்கிள் பஞ்சராகிவிட்டதால், ஒரு கிலோ மீற்றர் வரை உருட்டிவர வேண்டி ஏற்பட்டுவிட்டது. எப்பொழுதும் இப்படி நடந்ததில்லை. சினேகிதியின் கலியாணத்திற்கு எப்படிப் போகாமலிருப்பது? உயிருக்குயிரான நண்பி.
நீரில் நனைந்த கோழிக் குஞ்சாக அவள் தேகம் படபடத்தது. வீதியின் சன நெருக்கடியற்ற அமைதி அவளைப் பயமுறுத்தியது. வேகமாக நடந்தாள். இதயம் அடித்துக் கொள்வது தெளிவாக அவளுக்குக் கேட்கிறது. இராணுவச் சோற்றிற்குத் தம்மை இழந்துவிட்டு வீதியில் படுத்திருந்த நாய்கள் அவளைப் பார்த்துக் குரைத்தன. அடுத்த முகட்டில் திரும்பினால் வீட்டிற்குரிய ஒழுங்கையில் இறங்கிவிடலாம்.
இருந்தாற்போல கனத்த சப்பாத்துச் சத்தம் அவள் பின்னால் எழுகிறது. பதறிப்போய்த் திரும்பிப் பார்க்கிறாள். நெடிய தடித்த உருவமொன்று அவளை நோக்கி வேகமாக வருவது தெரிகிறது. இராணுவச் சீருடையின் சரசரப்பும், சப்பாத்துக் கால்களின் கனத்த ஒலியும், தலையில் அணிந்திருந்த தலைப்பாகையும் அவனை அடையாளம் காட்டின.
அவனை அவள் சென்றியில் கண்டிருக்கிறாள். ஒருநாள் அவளுடைய அடையாள அட்டையைப் பரிசோதித்தான். அடையாள அட்டையிலிருந்த சிங்களமும் தமிழும் அவனுக்குப் புரியவில்லை.
“நம்பர். நம்பர்.” அவள் தனது அடையாள அட்டையின் ஒன்பது இலக்கங்களையும் அதிலுள்ள ஆங்கில எழுத்துக் குறியையும் சரியாகச் சொன்னாள்.
".ம்..” என்றபடி அவளை ஆழமாக ஏறிட்டுப் பார்த்தான்.
அந்த நெடிய உருவம் இப்போது அவளைப் பின் தொடர்கிறது. மங்கலிருட்டில் தொடரும் அந்த மனிதனின் நோக்கத்தை அவள் புரிந்து கொண்டாள்.
சயிக்கிலை வேகமாக உருட்டிக் கொண்டு விரை நடை'நடந்தவள், ஒரு கட்டத்தில் சயிக்கிலை அப்படியே வீதியோரத்தில் எறிந்துவிட்டு ஓடத் தொடங்கினாள்.
அவளை அவன் துரத்த ஆரம்பித்தான். மூச்சு நின்றுவிடும் போல உணர்வு. அடிவயிற்றிலிருந்து உச்சியை நோக்கி ஏதோ எழுந்து, நெஞ்சுக் குழியை அடைக்கிறது.
ši pGjGSG)ë

'ஏய்.ஏய்." அவன் தொடர்ந்து கூறியவை அவளுக்குப் புரியவில்லை.
இனி அவளால் ஓடித் தப்ப முடியாது. சுந்தரம் தமக்கையை மெல்லிய சினத்துடன் ஏறிட்டான்.
"என்ன வேலை செய்யிறியள், அக்கா. இன்னும் ஆறு நாளில தனுசாவுக்குக் கலியாணம். அவளை இப்ப போய், சினேகிதியின் கலியாணத்துக்கு அனுப்பி வைச்சிருக்கிறியள்."
"நான் என்னடா தம்பி செய்யிறது? சிறு வயசிலிருந்து தனுவோடு படிச்சவள். நல்ல பிரண்ட்ஸ்.”
"இப்ப ஊரில நடக்கிறதெல்லாம் உங்களுக்குத் தெரியாதே? வயது வந்த பொம்பிளைப் பிள்ளைகளைத் தனிய அனுப்பலாமே? என்னவோ.ஏதோ?.”
சுந்தரம் தலையில் அடித்துக் கொண்டான். "அப்படியொன்றும் ஆகாதடா. அவள் நேரம் சென்றதென்றால் சினேகிதி வீட்டிலேயே தங்கியிருப்பாள். அதுகள் நல்ல சணம்.”
இவ்வாறு தம்பிக்குச் சுமதி ஆறுதல் கூறிய போதிலும், அவளது கலக்கம் தீரவில்லை. தனது கலக்கத்தை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கலவரமடையக் Ցnt-fT5l.
" நான் போய்ப் பார்த்து வரவே, அக்கா?” சுமதி துடித்துப் போனாள். “உனக்கென்ன விசரே? இப்ப வெளியில போக முடியாது. ஊரடங்குச் சட்டம் இருக்குது. நீ வந்ததே பெரிய காரியம்.”
"அவள் அங்கிருந்து வெளிக்கிட்டிருந்தால்.” 'அவளுக்குக் குறுக்கு வழியள் தெரியும். வந்திடுவாள். அவள் அப்படிப் புத்தியில்லாத பொடிச்சியல்ல. அங்கைதான் நிற்பாள்.' இருள் மெதுவாகக் கவியத் தொடங்கியது.
மூச்சிரைக்கின்றது. நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு. வாயால் பெரிதாகச் சுவாசித்தாள். இனி ஓடினால் நிலத்தில் விழுந்துவிடுவாள்.
அவன் அவளை நெருங்கிவிட்டான்.
எட்டி அவள் கரத்தை வெறியோடு பற்றிக் கொண்டான்.
s
"ஐயோ. அம்மா." என்று அவள் பெருங் குரலில் வீறிட்டுக் கத்தினாள்.
முடக்கில் திடீரென ஒரு மோட்டார் சயிக்கில் ஒளி பாய்ச்சியபடி ஏறியது. மிக வேகமாக அவர்கள் அருகில் வந்து நின்றது. மோட்டார் சயிக்கில் ஹெட் லயிற் ஒளி அவர்களை ஊடுருவியது.
“சரத்சிங். அவளை விடு.” மோட்டார் சயிக்கிலிலிருந்து வந்த கம்பீரமான குரல் அவனைப் பதற வைத்தது. அவளது கரத்தைப் படக்கென விட்டான். பாம்பின் கெளவலிலிருந்து விடுபட்ட

Page 44
தவளையாக அவள் நடுநடுங்கியபடி நின்றிருந்தாள். சரத்சிங்கின் உடலும் நடுங்கத் தொடங்கியது.
அவனது இராணுவ மேலதிகாரியிடம் கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டான்.
“பயப்படாதை பெண்ணே. உனக்கு ஒன்றும் நடக்காது.” என்று தமிழில் கூறியவன், ஹிந்தியில் சரமாரியாக ஏச, சரத்சிங் திரும்பி ஓடத் தொடங்கினான்.
‘நன்றி ஐயா. என்னைக் காப்பாற்றினீர்கள்.” "பயப்படாதே. என் பெயர் கேணல் உமாசங்கர். பின்னால் ஏறிக்கொள். பயப்படாதே. நான் உன் தந்தை போல.”
அவள் ஏறி அமர்ந்தாள். இன்னமும் பயம் குறையவில்லை.
இரவு அவர்களால் உணவருந்த முடியவில்லை. தமக்கை தந்த தேனிரைப் பருகிவிட்டு, சாப்பாடு எதுவும் வேண்டாமென்று சுந்தரம் கூறிவிட்டான்.
தனுசா வைக் குழந்தையிலிருந்தே துTக்கி வளர்த்தவன் அவன். அவளது மழலை மொழியை மனதார ரசித்தவன். அவளது வளர்ச்சியில் கண்ணுங் கருத்துமாக இருந்தவன்.
அவளுக்குத் திருமணம் பேசி முற்றாக்கியவன் சுந்தரம்தான். ஜனார்த்தன், தனுசாவுக்கு ஏற்ற கணவன். தனுசாவின் மெலிந்த, உயர்ந்த, சிவந்த அழகிற்கு அவன் தோற்றம் சோடை போனதன்று.
“கலியாணமாகப் போகிற ஒரு பெண். பிறத்தியார் வீட்டில ஓரிரவு தங்கினாள் என்பது மாப்பிள்ளை விட்டாருக்குத் தெரிந்தால் என்ன நினைப்பினம், அக்கா.” சுமதி, கோபத்தோடு தம்பியை ஏறிட்டாள். வார்த்தைகள் சூடாக வெளிவந்தன.
“என்ன நினைக்கிறது?” "எங்கட ஆக்கள் அப்படி, அக்கா.” “மனதுக்கு வந்ததெல்லாம் சொல்லிவிடலாமோ? மனச்சாட்சிக்குத்தான் பயப்படுவன், தம்பி. நரம்பில்லாத நாக்கால ஆரும் நாக்குவளைப்பினம்?
”அதில எங்கட ஆக்களுக்கு ஒரு சுகம், அக்கா.” ”அதைவிடு தம்பி!" f “சமூகத்தை விட்டு எப்பிடி அக்கா, வாழுகிறது?" சுமதி சுந்தரத்தை ஆழமாக ஊடுருவிப் பார்த்தாள். “என்ர பிள்ளையை எனக்குத் தெரியும். இந்தச் சமூகத்திலும் பார்க்க. அவள் நெருப்பு.”
கதிரையில் அமர்ந்திருந்தபடியே அவள் உறங்க முயன்றாள். முடியவில்லை. விழிகள் மூடும் போது, அவன் அவளைத் துரத்திக் கரம் பிடித்த பயங்கரக் காட்சி விரிந்தது.
"பயப்படாதே, பெண்ணே உனக்கு ஒன்றும் ஆகாது.” என்றார் கேணல் உமாசங்கர். “இராணுவத்தில் மட்டுமா இப்படிக் கயவர்கள் உள்ளனர்? எல்லாவிடமும்தான்." “என்னை இப்பவே வீட்டில கொண்டு போய் விட்டிடுங்கோ சேர்.” அவள் கரம் கூப்பிக் கேட்டாள்.
உமாசங்கர் வேதனையோடு சிரிக்கிறார். “அது சரியல்ல அம்மா."

"ஏன்?" அவளைப் பயம் பற்றிக் கொண்டது. " உன்னைக் கொண்டு போய் இராணுவத்தினர் உன் வீட்டு வாசிலில் இப்போது இறக்கிவிட்டால், அதைக் காண்பவர்கள் என்ன பேசுவார்கள் தெரியுமா? உன் எதிர்கால வாழ்க்கையே சரியம்மா."
" நீங்கள் உங்கள் மோட்டார் சயிக்கிலில் கொண்டு போய் விடுங்கோ.”
உமாசங்கர் புன்னகைத்தார். 'நானும் இராணுவ வீரன்தான். இதோ பார் பெண்ணே. விடிந்ததும் உன் சயிக்கிலையும் எடுத்துக் கொண்டு, இயல்பாக வீட்டிற்குப் போ. சினேகிதி வீட்டில் இரவு தங்கியதாகக் கூறு. இங்கு காம்பில் இரவு தங்கியதாக எவருக்கும், உன் அம்மாவுக்கும் கூட மறந்தும் சொல்லிவிடாதே. அது உன் வாழ்வைப் பாதிக்கும். உன் பெயரைக்கூட நான் கேட்கவில்லை. அது கூட எனக்குத் தெரிய வேண்டாம். நடந்தவற்றை நீயே மறந்துவிடு”
கேணல் உமாசங்கரின் வார்த்தைகள் அவள் மனதில் தெளிவாகப் படிந்தன. கதிரையில் பயமின்றி அப்படியே கண்ணயர்ந்தாள். ஒரு பெட் சீற்றால் அவளுக்குக் குளிராதிருக்க உமாசங்கர் போர்த்துவிட்டமை. அவளுக்குக் காலை விழித்த போதுதான் தெரிந்தது.
அவர்களும் அன்று உறங்கவில்லை. தனுஷாவுக்கு என்ன நடந்ததோ? அதிகாலை புலரத் தொடங்கிய வேளையில் சுந்தரம் கூறினான்.
“எனக்கு ஏனோ பயமாகவிருக்கிறது. அக்கா. தனுசாவை இன்னமும் காணவில்லை. கேள்விப்பட்டவை கலக்கத்தைக் கொடுக்குது. உவங்கள் நம்பிக்கை ஆணவங்களில்லை.”
“மனிதாபிமானம் ஒரு போதும் செத்துப் போனதில்லை. தம்பி.” சுமதி நீண்டதொரு பெருமூச்சு விட்டாள். பின் தொடர்ந்தாள்: “ இவ்வளவு காலமும் ஒருவருக்கும் சொல் லாத விசயத்தை இப்ப உனக்குச் சொல்லுறன். ஒருநாள் மாலைக் கருக்கலில். அப்ப இந்திய இராணுவம் இங்க இருந்தது. ஐபிகேஎஃவ்,. ஒர் இராணுவ வீரனிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவன் என்ைைனத் துரத்தி என் கரத்தை வெறியோடு பற்றிக் கொண்டான்.”
"அக்கா..?” "அப்ப கடவுள் போல கேணல் உமாசங்கர் வந்து என்னைக் காப்பாற்றினார். என்னைத் தனது காம்பில் வைத்திருந்து பாதுகாத்து காலையில் அனுப்பி வைத்தார்.எனது மானத்தைக் காப்பாற்றிய கடவுள் அவர். ஆனால். தம்பி.”
சுமதியின் விழிகள் கலங்கி நீரை வடிய விட்டன. "அக்கா..?” “ அவர் என்ன சொன்னார் தெரியுமா? அந்தச் சம்பவத்தையும், இரவு இராணுவ காம்பில் தங்க நேர்ந்தமையையும் அம்மாவிற்குக் கூட கூறவேண்டாம் என்றார்.”
சுமதி விழிகளைத் துடைத்துக் கொண்டாள். சயிக்கிலிலிருந்து இறங்கிய தனுசா படலையைத் தள்ளித் திறந்தபடி உள்ளே வருவதை இருவரும்
நிம்மதியாக நோக்கினர்.

Page 45
ADealers in Video, Cassette, Calculators, Lux
152, Bankshall Street, Colombo-1 1.
Fancy Station
தலை நகரில் சலூன்களு யாவும் சகாய விலையில
24, SRI, KATF COLC
TEL:
 
 
 
 
 
 
 
 

XXXXXX XXXXXXXXXXX
pріп9 Centre ..o
T. V. Radio,
s, Audio cassettes,
ury & Fancy Goods.
Tel: 446O28,441982 FaX : 38 1050
الم
N
Enterprises
ery & Saloon Items)
க்குத் தேவையான சாமான்கள் ம் பெற்றுக் கொள்ளும் இடம்
HIRESAN STREET, DMBO-13.
439412
X

Page 46
“ரெண்டு புள்ளப் பெத்த பொம்புள” இப்படிச் சொன்னால் எவருமே நம்பமாட் டார்கள். ஒல்லியான உடம்பு. அச்சொட் டான அங்கங்கள். புன்னகை பூக்கும் கீற்று உதடுகள். துடிக்கும் கண்கள். உண்மை யில் இருபது வயதைக் கூட அவள் இன்னும் தாண்டவில்லைத்தான். அவளது வாழ்க்கையில் எல்லாமே அவசர அவசரமாக நடந்து முடிந்துவிடுவது போல. நேற்றைய சம்பவம் அவளை வெகுவாகப் பாதித்து விட்டது.
பிள்ளைகள் இருவரும் நித்திரையாகி விட்டார்கள். மூன்றரை வயதில் ஒன்றும் இரண்டரை வயதில் இன்னொ ன்றுமாக இரண்டிருந்தால் இனிக் கேட்கவா வேண்டும். ரீவியைத் தட்டிவிட்டு அமர்ந்த போதுதான் முன் வாசலில் அந்த பெல் சத்தம் கேட்டது.
”ஆ.ரஸ்மின். இந்தப் பொக்கத்துக்கு வர நெனச்சீக்கி"
அவன் சைக்கிளை விட்டு இறங்காமலே காலைக் குத்திக் கொண்டு நின்றான்.
“சும்மா வந்த.மச்சனில்லையா?” s “வெளன போனது இன்னேம் வரல்ல" r "சாச்சி காயிதமனுப்பினா?” அவன் ஃபர்ஸானாவின் பெரியம்மாவின் மகன். இவளு க்கு ஆண் சகோதரர்களென்று எவருமே கிடையாது.
“உம்ம இப்ப காயிதமனுப்பியல்லேன்' “அதெனா?” அவன் ஆச்சரியத்தோடு கேட்டான். "அடுத்தூட்டுக்கு ஃபோன் வந்தாப் பொறகு அடக்கெட உம்ம பேசிய'
"சரிசரி அப்ப லேசிதானே" அதற்குமேல் பேசக் கிடைக்கவில்லை. மோட்டபைக் வந்து நின்றது.
"மச்சன் இப்பவா வார" - ரஸ்மின் முந்திக்கொண்டு கேட்டான்.
“ம்.” என்றவன் அதே வீச்சில் உள்ளே போய்விட்டான். "நான் பொறகு வாரன் ஃபர்ஸானா’ ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அவன் புறப்பட்டான்.
அவளுக்கு மாப்பிள்ளை மீது அடங்காத கோபம்
 
 

பொங்கியது.
"பேசி முடிஞ்சா. இனம் கொஞ்சம் பேசேலேன்' உள்ளே சென்றவன் காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பி நின்று இப்படிக் கேட்டான். முகத்திலே கருமை அப்பிக் கிடந்தது.
“மனிசத் தனமில்லாத மூதேவியொண்டு" அவள் சபித்துக் கொண்டாள்.
"புள்ள ரெண்டும் கட்டில்ல. அங்கலே ரீவியப் போட்டு வெச்சிக்கி. வெக்கம் கெட்ட பேச்சிக்கு மட்டும் கொறச்ச லில்ல” வார்த்தைகள் தடிப்பாக விழுந்தன.
“எனக்கு நானாமாரோடையாலும் கொஞ்சம் பேசவழி ல்ல இந்த மனிசனால” கோபம் பொத்துக் கொண்டு பாய்ந்தது.
"b.5T60TTLDIT(55T66' அதை அங்கீகரிக்கத் தயாரில்லாத பாங்கு அவனது வார்த்தைகளில்,
"ஏன்ட தல நஸபு" கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, அடக்க முடியாத அழுகையோடு காம்பராவுக்குள் புகுந்தாள். கதவைப் படாரென அடித்துப் பூட்டினாள்.
அவனுக்கு இது பழகிப் போன சங்கதி. எப்படியாவது மனைவியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்ற கடுமையான முயற்சியில் இப்பொழுதெல்லாம் அவன் முழுமையாகவே இறங்கி விட்டான்.
ஃபர்ஸானாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சென்ற வெள்ளிக் கிழமையும் இப்படித்தான். "ஃபர்ஸானா தாத்தா கோல்' பக்கத்து வீட்டுச் சிறுவன் கத்தினான். 'உம்மவாயிக்கும். ஒடிவாரன்” அவள் அனுமதி கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. பத்து நிமிடமாக உரையாடல் தொடர்ந்தது. “எனத்தியன்.ஃபர்ஸானா உம்ம செல்லிய?” “வரோணுமாம்” "கொமரு குடுக்கவா..? இல்லாட்டி ஊடுகெட்டவாமா..? இன்னம் ரெண்டு வருஷத்து நின்டிட்டே வரச்செல்லு”
இப்படிக் கதை ஆரம்பித்துவிட்டது. கோல் வரும் நேரமெல்லாம் முகம் கோணாமல் கூப்பிட்டு உதவும் அவர்களோடு இணக்கமாக நடந்து கொள்ள

Page 47
வேண்டுமென்பதில் அவள் கவனமாக இருந்தாள்.
”ம் இவளவு நேரமும் கோல்ல கதக்கியத்துக் ஒங்கடும்ம சவுதீல ராஜாத்தியா'
அவளது சுணக்கத்துக்கு வேறு அர்த்தம் கற்பித்து கொணி ட கணவனின் நக்கல் அவளுக்கு பிடிக்கவில்லை.
"ஓங்களுக்கு எனத்த புடிச்சீக்கோ தெரிய. எனக் வேல ஒத்தனொத்தனோட பேசித்திரீததுதான்”
“ஹிஹற்ஹி' - சிரிப்பு “ஓங்களோட அந்த டைமில கதச்சதுக்கு சிரிச்சதுக் எல்லாரோடேம் எனக்குக் கதக்கத் தேவில்ல. இந்தமட் கெட்டதனம் ஒங்கிட்டீக்குமெண்டு நான் மனாவிலயாலு நம்பல்ல.”
"ம். கோவம் மட்டும் வார. போன கதயலா வேலில்ல. இதுாப்பொறகாலும் நான் சொல்லியத் கேட்டு நடந்துக்கோ’
"ம். கேக்காம நடக்கிய மாதிரியேன் நீங்க செல்லிய நினைத்து நினைத்துக் கவலைப்பட இப்படி ஓரிரண் சந்தர்ப்பங்களா என்ன?
ஃபர்ஸானாவுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் வாப்பாவினால் மூன்று குமர்களையும் கரை சேர்க் முடியாதென்பது உறுதியாகத் தெரிந்ததால் அவள, உம்மா சவூதிக்குப் புறப்பட்டுப் போய் முழுசாக ஆ ஆண்டுகள்.
இரண்டு வருடித்துக்கொரு முறை வந்து இரண் சகோதரிகளைக் கரை சேர்த்துவிட்டாள்.
ஃபர்ஸானாவுக்காகத்தான் மீண்டும் பயணப்பட்டால் ஃபர்ஸானாவின் மூத்த சகோதரியின் உறவினர்தா அவளது கணவன் அஸாம் தாத்தா விட்டுக்கு வந்துபோ பழக்கத்தில் இருவருக்குமிடையே உறவேற்பட்டுவிட்ட சுறுசுறுப்பாக தொழில் வேறு செய்து கொண்டிருந்தா அப்போது.
“இந்தக் கூத்து சரிவாரல்ல. விஷயத்த முடிச் வெக்கியதுதான் நல்லம். . பாத்துப் பாத்தீந்து வேலில்லி அவளுக்கு வயசு போதவேன். இப்பதானே பதினாறு இன்னம் ரெண்டு வருஷமாலும் பொகோணும்"
“ரெண்டு வருஷம் போறதுக்கெடேல எனத்தெனத் நடக்குமோ தெரிய”
“உம்மக்கு காயிதம் போட்டிட்டு எல்லாரும் சேந் விஷயத்தச் செய்யோண்டியதுதான். குடுக்கல் வாங்கல பொறகு பாத்துக்கொளேலும்”
குடும்ப அனுபவசாலிகள் பர்ஸானா விடயமா தங்களுக்குள் கலந்துரையாடி இறுதி முடிவுக் வந்துவிட்டார்க்ள்.
இரண்டொரு கிழமைக்கு மேல் நீடிக்கவில்லை. பர்ஸானா - அஸாம் திருமணம் இனிதே நடந்தேறியது உல்லாச வாழ்க்கைதான். இளைய மகளின் காரிய லேசாக நடந்துவிட்ட மகிழ்ச்சியில் உம்மர்வும் அனுப்பி கொண்டிருந்தாள்.
மூன்றே வருடத்தில், இரண்டு பிள்ளைகளையு பெற்றுப் போட்டுவிட்டார்கள்.
“அஸாமுக்கென்டா நல்ல சான்ஸொண்டு பட்ட மெலிஞ்ச கடுவன். நல்லோரு துண்டப் போட்டுக்கொன டம். தெம்பிலி கொலேல காக்க நின்ட மாதிரி"
அவனது நண்பர்கள் அவனைப் பகிடி பண்ணும்போ

க்
i
:
胡
:
O
b
தான் பெரும் அதிர்ஷ்டசாலியென்று பூரித்துப் போவான்
96most b. ஒருநாள் கடற்கரையில் கூடிக் கதைத்துக் கொண்டிருந்த போது ‘அழகிய மனைவியும் பொருத்தமற்ற கணவனும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்காகவே அது பரிணாம மடைந்துவிட்டது. எத்தனையோ அழகிகளின் கதை அங்கே அலசப்பட்டது.
அன்றுமுதல் அவள் அழகுக்குத் தான் பொருத்தம் தானா என்ற விஷச்செடி அவனுக்குள் சடைத்து வளரத் தொடங்கிவிட்டது.
"இவனோட இனி வாழ்ந்து வேலில்ல' இப்படிப் புலம்பின படியே கட்டிலில் எழுந்தமர்ந்து கொண்டாள் ஃபர்ஸானா. சற்று நேரத்துக்கு முன்புதான் கதவு பூட்டும் சத்தமும் வெளியே பைக் சத்தமும் கேட்டது. கூட்டாளிமர்ரோடு கூத்தாடிவிட்டு வழமைபோல் பதினொரு மணிக்குத்தான் அஸாம் வருவான்.
லைற்றைப் போட்டு குழந்தைகள் இரண்டையும் ஒழுங்கமைத்துப் படுக்க வைத்தாள். அந்தப் பிஞ்சு முகங்கள்ை உடுருவிப் பார்த்தாள்.
"ஒன்ட்ாலும் என்னப் போலில்ல. சபட மொகம்.கறுப்பு" திரும்பிப் பார்த்தாள். அலுமாரியின் பக்கக் கண்ணாடியில் அவள் விம்பம் தெரிந்தது.
அந்த சோகத்துக்குள்ளும் அவள் என்ன மாதி அழகாகத் தோற்றமளித்தாள்.
"ம். எனக்கு இப்பதான் இருவது வருஷம். நான் இன்னேம் பஸந்துதான். என்னைக் கலியாணமுடிக்க இனி ஒருத்தரும் புரியப்படாட்டீம் காரியமில்ல. எனக்கு இந்தக் கத்தம் பொறப்பான வாண. எனக்கொன்டும் வெளங்காத வயஸில அநியாயமா மாட்டிக் கொண்ட” தாய்ப்பாசம் புயலாய்ச் சுழன்றடிக்க. கண்ணிரோடும் கவலையோடும் அவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாளா? "நடந்தது நடந்திட்டு. மாப்புள பொணாட்டிக்கெடேல சண்ட தக்கம் வாரதானே.சமாளிச்சிக் கொளோணும். உட்டுப்போட்டு நெனக்கியதே பாவம்"
இப்படி உபதேசம் பண்ண எத்தனையோ பேர் வரத் தான் போகிறார்கள். இந்த அபத்த வாழ்க்கையிலிருந்து அவளை மீட்டெடுக்க எவரும் வரப் போவதில்லையே! யோசித்தாள். முன் வாசலில் வந்தமர்ந்து கொண்டு யோசித்தாள். விளையாட்டுத் தனமான ஆசைகளின் விளைவுகளிலிருந்து அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முனைந்துவிட்டாளா?
வெளியே பைக் சத்தம் கேட்டது. நேரம் பதினொரு மணி. கதவைத் திறந்த அஸாம் திடுக்கிட்டான். ஃபர்ஸானா இப்படியொரு கோலத்தில் அமர்ந்திருப்பாளென்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளது முகபாவம் ஆரோக்கியமாக அவனுக்குப் படவில்லை.
“ஃபர்ஸானா பதினொரு மணியாகீட்டேன். வாங்க படுக்கோம்”
இதமாக ஒலித்தது அவன் குரல். இரவு நகரும்போது என்ன பிரச்சினையிருந்தாலும் ஆண் குரல்களெல்லாம் இப்படித்தான் ஒலிக்குமோ!
"ம்.படுக்க.படுத்தது போதும்" இறுதி முடிவாகத்தான் அவள் சொல்கிறாளென்பது அவனுக்கு இன்னும் புரியவேயில்லை. O

Page 48
"செக் பொயின்டுகளில் மாட்டிக் கொள்ளாமல் போய்விட்டால் நல்லது நேரத்துக்குப் போய்விடலாம்"
ஆட்டோவின் அலறலொலியுடன் மனைவியின் மெலிதான குரல் காதுவழி புகுந்து மனதைக் குடைந்தது.
இப்போது ஐந்தரை ஆகிறது. ஆறரை மணிக்கு ‘நொவினா வத்தளையிலிருந்து ‘கும்பனித்தெரு’ என்று தமிழால் பிரசித்தம் பெறத் தயங்கிவிட்ட ஸ்லேவ் ஜலன்ட் குழந்தை யேசுவின் கோவிலுக்குப் போக வேண்டும்.
ஒரு மணிநேரம் இருக்கிறது. நல்ல நாட்களில் என்றால் ஒரு மணி நேரம் என்பது மிகத் தாராளம் நாற்பது நிமிடம் இருந்தாலே போதும்.
இன்றைய நாட்களில் எதையும் நிச்சயிக்க முடியாது இடையில் மாட்டிக் கொண்டோமென்றால் தொலைந்தது கோவிலாவது: குழந்தை யேசுவாவது பிரார்த்தனையாவது!
வெள்ளிக்கிழமை விடாமல் தொடர்ந்து குழந்தை ஏச கோவிலுக்கு நாங்கள் போகத் தொடங்கிய ஆரம்பத்தில் நண்பர் ஒருவர் எங்களை இப்படிக் கிண்டல் செய்தார் 'வளர்ந்த ஏசுவாலேயே ஒன்றும் செய்துகொள்ள முடிய வில்லை. சிலுவையில் அறையப்பட்டு வருந்தி வருந்திச் செத்தார். குழந்தை ஏசு என்னத்தைச் செய்துவிடுவார் ஆண்டவர்களை யார் வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆள்பவர்களைத்தான் ஒன்றும் சொல்ல முடிவதில்லை என்று அவருக்கு நான் கூறினேன்.
ஒவ்வொரு வெள்ளியும் மாலை ஆறரை மணி நவநாள் வழிபாட்டுக்குத் தவறாமல் செல்வதை ஒரு மரபாகக் கொண்டிருக்கின்றேன். அதுவும் மனைவி மக்களுடன் குடும்பமாக.
இன்று மாதத்தின் முதல் வெள்ளி. அதுதான் ஒரு மணி நேரம் போதுமா என்னும் மனைவியின் ஆதங்கம்.
வத்தளையில் இருந்து எத்தனை செக் பொயின்ற்கள் மனம் கணனியாகிப் படர்கிறது.
ஹெந்தலைச் சந்தியைத் தாண்டியதுமே ஒன்று
 
 

ஏழெட்டு பேர் போல் நிற்பார்கள். அதில் மாட்டாமல் தப்பிக்கவே முடியாது. அடுத்தது, ஒவியமுல்லை. இதுவரை எங்களை நிறுத்தியதில்லை. இன்றைக்கு எப்படியோ! m
பிறகு பேலியகொடையைத் தாண்டி கொழும்புக்குள் பிரவேசிக்கு முன் விக்டோரியா பாலத்திடம் ஒன்று.
பாலத்துறைப் பக்கம் திரும்பாமல் நேராகப் போய் கண்டி வழியாக கொழும்புக்குள் நுழைந்துவிடலாம் என்றால் புதுப்பாலத்திடமும் பெரியதாக ஒன்று. மணல் மூட்டைகளும் பீப்பாய்களுமாக. கையை நீட்டாமல் விடவே மாட்டார்கள்.
சுகததாச ஸ்டேடியத்தைத் தாண்டியதும் ஸ்போர்ட்ஸ் ஹோட்டலுக்கு முன்பதாக ஆமர் வீதி முகப்பில் ஒன்று. ஆமர் விதியில் விழுந்து கொச்சிக்கடை வழியாகப் போய்விடலாம் என்றால் மீன் மார்க்கட்டை எட்டுமுன் ஒன்று. துறைமுகவாயில் சுற்று வட்டத்திடம் ஒன்று. லேக் ஹவுஸ் றவுண்ட் எபவுட்டிடம், ரீகலுக்கு முன்பாக ஒன்று.
அத்தனையும் தாண்டி அந்தா இந்தா என்று கோவிலை அடையும்போது கொம்பனித்தெரு போலீஸ் ஸ்டேசனிடம் ஒன்று.
கொச்சிக்கடை வழி வேண்டாம். கூடுதலான சோதனைச் சாவடிகள்! மருதானையால் போய்விடலாம் என்றால் கெப்பிட்டலுக்கும் டவர் மாளிகைக்கும் இடையில் ஒன்று. அதைத் தாண்டி நிம்மதியாக ஒடி அதோ தெரிகிறது கோவில் என்னும் தூரத்துக்கு வந்துவிட்டதும் யூனியன் பிளேசில் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை எட்டுமுன் ஒன்று. பாதையின் குறுக்கே போடப்பட்ட கம்பித் தடைகளும் தாங்களுமாய்.
அப்பாடா! ஒரு மணிநேரம் எப்படிப் போதும். ஆபீஸ் முடிந்ததும் வீட்டுக்கோடி தெரிந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து வீட்டுப் பெண்களுடன் கோவிலுக்குப் போவதே வழக்கம்.
ஏதாவது ஒரு காரணத்தின் நிமித்தம் ஒரு வெள்ளிக் கிழமை போகமுடியவில்லை என்றால் அதுவே ஒரு பெருங்குறையாக விஸ்வரூபம் கொண்டு மனதை
அழுத்திக் கொண்டிருக்கும்.

Page 49
ஆகவே சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல் சி மாறுதல்களைச் செய்து கொள்வோம்.
ஒரு தடவை எனக்கு ஆபீஸ் தாமதமாகும் போ தெரிந்தது. வழமையான ஆட்டோவை ஏற்பா( செய்துகொண்டு மனைவியையும் மகளையும் கிளம் வரச் சொல்லிவிட்டு நான் ஆபீசடியில் நின்றேன். எங்க ஆபீசைத் தாண்டித்தான் கோவிலுக்குப் போக வேண்டு ஐந்துக்கெல்லாம் வெளியேறி வழிமேல் விழி வைத் ஓடிவரும் ஒட்டோக்களை எல்லாம் உற்று உற்று பார்த்துகண் பூத்துவிட்டது.
'நாலு மணிக்கெல்லாம் கிளம்பி வரச் சொன்னேனே இன்னும் என்ன. வழியில் ஏதாவது." என்று மரு நிற்கையில் ஆறு மணிபோல் ஆட்டோ வந்து நின்றது
“என்னப்பா” என்றவாறு ஏறிக் கொண்டேன். “என்னவா. அதை ஏன் கேட்கிறீர்கள்.?” என் ஆரம்பித்தாள் மனைவி.
மகளைப் பார்த்தேன். முகங்கள் பொலிவாக இல்ை இருவருக்கும். 邻
"விக் டோரியா பாலமுனையரில் ஆட்டே நிறுத்தப்பட்டதாம். உள்ளே இரண்டு பெண்கள் மட்டுபே பிறகு கேட்பானேன்.
பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ் பழமொழி. ஆனால் இவர்களுக்குத் தமிழ்ப் பெண்களை கண்டுவிட்டால் பேயைக் கண்டது போலத்தான். பயின் வைத் தொடர்ந்து இருவரும் இறங்கிக் கொண்டனர். "கோவிலுக்கு என்னும் பதிலுடன் அடையாள அட்ை நீட்டப்படுகிறது.”
மேயா கவுத தாயிடம் கேள்வி. எனது மகள் மனைவியின் பதில், அடையாள அட்டைகளை நீண்ட நேரம் திருப்பித் திரு பிப் பார்த்தவன் எதைக் கொண்டு நான் அதை ஏற்று கொள்ள முடியும். பிறந்த இடமும் வசிக்கும் இடமு கொழும்பு என்று இருக்கிறது உங்களுக்கு. இந்தப் பென ணுக்கு தெல்பெத்த்ை பதுளை என்றிருக்கிறது. இப்ப ஓரமாக நில்லுங்கள் என்றவன் பெரியவனிடம் நடந்தான அவனுடைய கேள்வி மிகவும் அசட்டுத்தனமாக பட்டிருக்கிறது மனைவிக்கு.
திரும்பி வந்தவனிடம் ' என்னுடைய பெயருட6 இணைந்திருக்கும் பெயர் எனது கணவருடையது. இதி: என் மகளின் பெயருடன் இணைந்திருக்கும் அதே பெய அவளது தந்தையினுடையது.
அவள் என்னுடைய மகள் என்பதற்கு அதுதான் இப்போதைய அத்தாட்சி.
நான் பதுளைக்குப் போயிருந்தபோது இவள் பிறந்தாள அதனால்தான் பிறந்த இடம் பதுளை என்றிருக்கிறது இதில் என்ன கேள்வி வேண்டியிருக்கிறது. அதுவு போக எனக்கும் அடையாள அட்டை இருக்கிறது. அவளுக்கும் இருக்கிறது. பிறகு அவள் எனது மகளா இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன.
மனைவியின் சிங்களம் அவனை மருள வைக்கிறது இருந்தாலும் சமாளிக்கின்றான்.
நீங்கள்தானே மகள் என்று சொன்னீர்கள். அதனால் தான் உறுதி செய்து கொள்ள கேட்க வேண்டி வந்தது

என்றவன் மெதுவாகக் கேட்கின்றான் 'தெலிபெத்தை எங்கிருக்கிறது. யாப்பாணநெவே நே.
மனைவி விளங்கப்படுத்தி இருக்கின்றாள். பதுளையில் இருந்து பசறை போகும் பாதையில் இரண்டாவது மைலில் இருக்கிறது தெல்பத்தை என்னும் தேயிலைத் தோட்டம்' என்று.
தெளிவத்தை என்பதன் ஆங்கிலப் பதம் அது. அதைத் தான் சிங்களத்தில் அப்படியே எழுதி இருக்கின்றார்கள். அதைக் கண்டுதான் அவனும் மிரண்டிருக்கின்றான். ஏதோ தெல்லிப்பழை மாதிரி ஒலிக்கின்றதே என்று.
யாழ்ப்பாணப் பக்கம் இல்லையே' என்னும் அவனு டைய வினாவின் தொனியும் அதுதான்.
யாழ்ப்பாணத்தை விடமாட்டோம் என்றவர்களும் இவர் கள்தான். யாழ்ப்பாணம் என்றதும் வெருள்கிறவர்களும் இவர்கள்தான்.
அடையாள அட்டைகளைத் திருப்பித் தந்து போங்கள்’ என்றான்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேர அலைக்கழிப்பு. தனியாக சீெவளியே சென்று பழகியிராத இவர்களுக்குப் பயமாகவும் வெறுப்பாகவும் போய்விட்டது.
வேண்டாம்னு போயிறிச்சீங்க. ஏண்டா கோயிலுக்குக் கெளம்புனோம்னு. நடு றோட்டுல நிப்பாட்டி வச்சுக்கிட்டு. என்னமோ அவனோட சொத்தை கொள்ளையடிக்க வந்த மாதிரி. போறவாறவன்லாம் பாத்துப் பாத்துக்கிட்டு போறா னுக. ஸவுல வேடிக்கை பாக்குறாப்புல சிறுமைப்படு த்தப்பட்ட சீற்றத்திலிருந்து அவள் இன்னும் மீளவில்லை. அடையாள அட்டைகள் தமிழில் எழுதப்பட்டிருப்பதால் தான் நடுப்பாதையில் நிறுத்தி வைக்கின்றார்கள்.
அரச அலுவலகங்களில் தமிழ் எழுதுகின்றார்களா? இல்லை. ஆஸ்பத்திரிகளில் பொது இடங்களில், போக்கு வரத்துச் செய்யும் ரயில்களில், பஸ்களில். இடங்களைக் கூறும் பெயர்ப்பலகைகளில். இல்லை.
அரசு அனுப்பும் சுற்று நிருபங்கள், படிவங்கள், பத்திரங்கள் அவ்வளவு ஏன் அரசு நடத்தும் தமிழ் விழா போன்றவைகளின் அழைப்பிதழ்களில். இல்லை. ஆனால் ஆட்களைக் காட்டும் அடையாள அட்டைகளில் தமிழ் இருக்கிறது. அது ஏன்?
இது போன்ற செக் பொயின்டுகளில் இருப்பவர்களுக்கு இவன் தமிழன் சந்தேகமற, பரிபூரணமாகச் சோதனை செய்துகொள்’ என்று அறிவுறுத்தத்தான். அதைத்தான் இவர்களும் செய்கிறார்கள். இதில் கொதிக் கவோ கோபிக்கவோ என்ன இருக்கிறது?அவர்களின் சந்தேகங் களை நிவர்த்தி செய்ய வேண்டியது நமது பொறுப்பு. இந்த 'செக்கிங் நிலைமைகள் வருவதற்கு முன் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் தமிழ் எழுதப் பட்டிருக்கவில்லையே!
காரணத்துடன்தான் காரியங்கள் நடக்கின்றன. கோவிலுக்குப் போவதற்குக்கூட நாங்கள் அனுபவிக் கும் இன்னல்கள். சோதனைகள்.
யாருக்குப் புரிகின்றன இவைகள். இன்னல்களிலிருந்து விடுபடத்தான் கோவிலுக்கே செல்கின்றோம்.
இன்றும் அப்படி யாராவது ஒரு அதிகப் பிரசங்கியிடம் அகப்பட்டுக் கொண்டால் தொலைந்தது. வழிபாடு முடிந்த

Page 50
பிறகுதான் கோவிலை அடைய முடியும்.
தடங்கல்கள் ஏதுமின்றி, நேரத்துடன் கோவிை அடையவேண்டும். நவநாள் வழிபாட்டில் முழுதாக பங்கேற்க வேண்டும் என்று மன்றாடியபடியே ஆட்டே பயணம் தொடர்கிறது.
வத்தளையில் இருந்து லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வை ஒரு இடத்திலும் சிக்கிக் கொள்ளாமல் அந்த நாள்போ ஜிவ்வென்று வந்து ரீகலையும் தாண்டியாகி விட்டது. ஒவ்வொரு பொயின்ட்களையும் தாண்டும் போது மன லேசாக அடித்துக் கொள்ளும். முன்னால் போ: வாகனத்தை நிறுத்திவிட்டார்கள். நம்மை நிறுத் மாட்டார்கள் என்னும் போலியான மகிழ்ச்சி வேறு.
அந்தா இந்தா என்று கோவிலை அடையும் நேர படுபாவி ஸ்டொப் கார்டைத் தூக்கிப் பிடித்தானே. ஆட்டோக்காரன் ஓரத்திலடித்து நிறுத்தினான். டக்கெடு இறங்கி நின்று லைசன்ஸ் இத்தியாதிகளை நீட்டினால நானும் இறங்கி, மனைவிக்கு இறங்க வழி விடுகையில் ஆமிக்காரன் அருகே வந்தான்.
தோளில் தட்டி என்னை ஒதுக்கிவிட்டு உள்ளே பார்த்தான். பெண்கள்.
பயின்ட ஒன நே.’ என்று மெதுவாகக் கூறியப இறங்கத் தேவையில்லை என்று சமிக்ஞை செய்தான் அதற்குள்ளாக டிரைவரின் லைசன்ஸ் இத்தியாதிகள் ளயும். எங்களுடைய அடையாள அட்டைகளையு சோதனையிட்ட மற்றவன் டமில் கட்டிய நே' என்றவாறு இவர்களைத் தெரியுமா? என்று சாரதியிடம் வினவினான் நன்றாகத் தெரியும்' என்று சாரதி சர்டிபிக்கே வழங்கினான்.
மனைவியின் முகம் திடீரென மாறியது. நாங்கள் தமிழர்கள் என்பதால் ஒரு ஆட்டோ சாரதி எங்களுக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்க வேண்டி இருக்கிறது என்பே அந்தத் திடீர் முகமாற்றத்துக்கான காரணம்.
இவன் அவனைப் பார்த்தான். ஆட்டோ சாரதியின் விலாசமும் உங்கள் விலாசமுi ஒரே இடத்தைக் குறிப்பதால் தான் கேட்டேன்’ என்றால் அவன்.
எங்களின் உணர்வுகளைப் ரிந்து கொள்கிறவர்களா அவர்கள் இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.
"எங்கே போகின்றீர்கள்' இன்று முதல் வெள்ளி வரை இன்ஃபன்ட் ஜிஸள கோவில் நொவீனாவுக்குப் போகின்றோம். ஆறை மணிக்கு நொவீனா. மனைவி கடகடத்தாள்.
ஒ இன்று வெள்ளிக்கிழமை. அதுவும் மாதத்தில் முதல் வெள்ளி. எங்களுக்கு அதெல்லாம் ஒன்றும் தெரிவ தில்லை. நாள் கிழமை. கோவில். திருவிழா. எதுவு தெரிவதில்லை. நேரமும் இல்லை.இரவு பகல் வெயில் மழை என்று இப்படி எங்காவது நிற்போம். டியூட்டி முt யும் வரை உயிருடனிருந்தால் கேம்ப். பிறகு டியூட்டி. நீங்கள் செல்லுங்கள்’ என்றவன் ஒரு ஏக்கத்துடன் கூறினான் கோவிலில் பூசையின்போது எங்கள் நினைவு வருமானால் எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்
பாவமாறுக்குங்க என்றாள் மனைவி. நொவினா தொடங்க இன்னும் நேரமிருக்கின்றது. ஆ6

யத்தில் பிரார்த்தனை நடைபெறுகின்றது. தேவ அன்னை மரியாளையும் சகல புனிதர்களையும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்னும் மன்றாட்டுப் பிரார்த்தனை.
‘எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் குரல்கள் ஒலிக்க ஒலிக்க அந்த இரண்டு ஆமிக்காரர்களின் முகங்
'களே எங்கள் மனம் முழுக்க வியாபித்து நிற்கின்றன.
‘எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் என்னும் அவர்களின் ' குரல் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. y
இன்றைய நவநாள் பிரார்த்தனையை அவர்களுக்கு
த ஒப்புக் கொடுத்து அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்
T
என்று தீர்மானித்துக் கொண்டோம்.
மணி ஆறரை. THERE SHALL BE SHOWERS OF BLESSINGS THIS IS THE PROMISE OF LOVE என்னும் ஆரம்ப கீதத்துடன் வழிபாடு தொடங்குகிறது. குருவானவர் சீடர்களுடன் பீடத்தில் ஏறுகின்றார். கோவில் கொள்ளாத சனம். தங்களைச் சுற்றி நடக்கின்ற சகல விதமான புற நிகழ்வுகளையும் மறந்து இறைவனுடன் ஒரு மணிநேரம் ஒன்றிவிடும் அற்புதம் ஒரு சிலருக்கு எப்படியோ சித்தித்து விடுகிறது.
நவநாள் வழிபாடு நடந்து முடிவதற்கடையாளமாக இறுதிக் கீதம் ஒலிக்கத் தொடங்குகிறது.
கோவிலில் அத்தனை கூட்டமும் ஒன்றித்து அக்கீதத்தில் இணைகிறது.
இசையும் கீதமும் உச்சத்தில் ஒலித்துக் கொண்டிருக் கையில் திடீரென ஆலயம் அதிர்கிறது. பூகம்பம் வந்தது போல் அமர்ந்திருந்தவர்கள் ஆடி விழுந்து எழுகின்றனர். அத்தனை பெரிய சப்தத்தை இதற்குமுன் நாங்கள் கேட்டதே இல்லை.
ஒரு வினாடி ஆலயம் ஸ்தம்பித்துவிட்டது. குண்டுதான் வெடித்திருக்கிறது! கோவிலுக்குள்ளா. தெரியவில்லை. அத்தனை கூட்டமும் விதிர் விதிர்த்துப் போய் நிற்கிறது.
குண்டு கோவிலுக்குள் வெடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள ஒரு சில வினாடிகள் பிடித்தன.
‘அமைதியாக இருங்கள். சிரம் தாழ்த்தி மன்றாடுங்கள்.” பீடத்தில் இருந்து வந்த குருவானவரின் நம்பிக்கைக் குரலுடன் இறுதி கீதம் தொடர்கிறது.
நாவுலர்ந்து போன வாய்களில் இருந்து கீதம் எழ மறுக்கிறது.
ஒரு வினாடிதான்! பிறகு தொடர்கிறது. WHEN MY LIFE IS ALMOST GONE HEAR MY CRY HEARMY CALL HOLD MY HAND LEST I FALL நொவினா முடிந்துவிட்டது. பாதைக்கிறங்கப் பயந்து போய் கோயிலில் நின்ற
கூட்டம் வெளியேற வெகு நேரம் பிடித்தது.
மெது மெதுவாகச் செய்தி வருகிறது. சோதனைச் சாவடியில்தான் வெடித்திருக்கிறது குண்டு. சோதனையில் ஈடுபட்டிருந்த இரண்டு ஆமிக்காரர்களும் உடல் சிதறி.
டியூட்டி முடியும் வரை உயிருடன் இருந்தால். என்ற அந்த இரட்டைமுகங்கள் எங்கள் இதயத்தின் ஆழத்தில்.
EEEE5

Page 51
மலையகத்தில் வாழும் தோட்டத் தொழி லாளர்களிடையே காமன் கூத்து, அருச்சு னன் தபசு, பொன்னர் சங்கரர் போன்ற பாரம்பரிய கூத்துகள் காணப்படுகின்றன. மலையகத்தில் காமன் கூத்தே ஏனைய கூத்துக்களை விடச் செல்வாக்கு மிக்கதா கவும் பிரபல்யம் அடைந்ததாகவும் காணப் படுகிறது. இக்கூத்து பற்றியப் பல ஆய்வு முயற்சிகள் வெளிவந்துள்ளன. அவை பெரும்பாலும் கூத்துத் தொடர்பான கலை
யம்சத்தை விபரிப்பனவாகவும், சடங்கு முறைகள் தொடர்பான அறிமுகத்தை வழங்குவன வாகவுமே காணப்படுகின்றன.
இக்கூத்துத் தொடர்பாக கள ஆய்வில் பெற்ற சில தகவல்களை மலையக வரலாற்றுப் பின்னணியில் வைத் துத் தர முற்படுவதாக இக்குறிப்பு அமைகின்றது. அவ் வகையில் இத்துறையில் ஆய்வினை மேற்கொண்டுள்ளோ ருக்கான சில தகவல்களைத் தர முற்படுவது இதன் சாராம்சம் என்பதனையும் கூற விழைகின்றேன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருப தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக ஒப்பந்தப் பிணைப்புச் செய்து கொண்டு இங்கு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் வழக்காறுகள், சடங்குமுறைகள் என்பவற்ற னையும் கொண்டு வந்தனர். அவை பெரும்பாலும் இலங்கையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளி லிருந்து கணிசமான அளவு வேறுபட்டிருந்தது. இவர்கள் தமிழகத்தில் எந்தக் கிராமத்தில் இருந்து வந்தனரோ! எந்த சாதியைச் சேர்ந்தவர்களாகக் காணப்பட்டனரோ அவற்றிற்கு உரித்தான வாழ்க்கை முறையின் பாதிப்புக் காணப்பட்ட அதே சமயம், இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் உற்கத்தி உறவுகளுக்கும் ஏற்ற வகையில் புதிய பரிணாமம் அடைந்தனர். அவ்வகையில் தான் இவர்களது கலைகளும் புதிய வடிவம் பெற்று இம்மக்களிடையே செல்வாக்கு பெற்றுவிளங்குகின்றன. மலையகத்தில் காமன் கூத்துப் பற்றி நோக்குவதற்குப் பண்டைய புராண இதிகாச காவியங்களில் “காமன்' பற்றிய செய்திகளை வேண்டியுள்ளது.
DS
 
 
 

காமன் கூத்து
ானிப்புகள்
விலனின் மதி
சிலப்பதிகாரத்தில் கண்ணகி காமவேள் கோட்டம் சென்று வழிபடுமாறு கூறியதாகக் கதையுண்டு. சுரமஞ்சரி என்பவள் சீவகனே கணவனாக வரவேண்டுமென்று காமனை வழிபட்டதாகச் சீவக சிந்தாமணி கூறுகின்றது. நாச்சியார் திருமொழியில் காமன் பண்டிகை கொண்டாடப் படும் மாதம், திகதி என்பன கூறப்பட்டுள்ளதைக் காணலாம். கலித்தொகையில் பெண்டீர் பால் கொண்டு சென்று காமன் கோயிலில் வழிபட்ட செய்திகளை அறியக்கூடியதாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி கணவனை விடுத்து காமனை வணங்குவது பீடன்று என உரைப்பதன் மூலம் பெண்கள் காமனை வழிபாடு செய்திருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. ஆண்டாள் திருமாலைக் கணவனாகப் பெற காமன்நோன்பு நோற்றிருக்கின்றாள். பெண்கள் காமவேள் கோட்டம் புகுமுன்னர் சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற இத்துறைகளில் வழிபாடு செய்தனர். (மாத்தானை வடிவேலன் 1993) இவ்வாறான இலக்கியச் செய்திகள் ஒருபுறமிருக்க கந்தபுராணத்தில்தான் காமனது வரலாறு, கதை என்பன மிகவும் விரிவாகப் பாடப்பட்டுள்ளது. அதன் உற்பத்திக் காண்டத்தில் காமன் தகனம் பற்றியும் பேசப்படுகிறது. நாட்டார் இலக்கியங்களில் காணப்படு கின்ற காமன் பற்றிய கதை மரபானது பெரும்பாலும் கந்தபுராணக் கதையுடனே மிக நெருங்கிய தொடர்பி னைக் கொண்டுள்ளது. மலையக மக்களிடையேயும் காணப்படுகின்ற காமன்கூத்தானது கந்தபுராணத்தின் வழி வந்தது எனக் கூறின் அது தவறாகாது.
இக்கூத்தானது சடங்காகவும், தோட்ட மக்களது வழிபாட்டு முறையாகவும் விளங்குகின்றது. காமன்கூத் தினை நடாத்துவதால் தோட்டம் சிறப்படைவதுடன் பெண் கள் தாம் விரும்பிய கணவனை அடையலாம், குடும்ப வாழ்வு செழிக்கும் என்ற நம்பிக்கையும் காணப்படுகின்றன.
மலையகத்தில் மாசி மாதம் அமாவாசை கழிந்த மூன்றாம் பிறையில் கம்பம் ஊன்றி கரகம் பாலித்தல் என்ற நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகும். இக்கூத்தானது கம்பம் ஊன்றி மூன்றாம் அல்லது ஐந்தாம் நாளில் காமன் ஆட்டம் தொடங்குகிறது. பின்னர் தோட்டங்கள், கடை வீதிகள் தோறும் ஆடப்பட்டு நிதி சேகரிக்கப்படும். இறுதியாக முப்பதாவது நாளில் இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெறும். இறுதி நாள் நிகழ்வு காமன் கம்பம் ஊன்றி

Page 52
உள்ள பொட்டலில் ஒரு திறந்த வெளியரங்கில் (Open Theartre) ஆடப்படும். இன்றைய நாளில் மன்மதனுக்கும், ரதிக்கும் தேவர்கள் கூடிய சபையில் திருமணம் செய்து வைக்கப்படுவதுடன், பின்னர் காமன் தகனம் வரையிலான நிகழ்வுகள் விடிய விடிய நடைபெறும்.
இக்கூத்துத் தொடர்பான கள ஆய்வின்போது பின் வரும் விடயங்களை அம்சங்களாகக் (தோட்டங்களுக்குத் தோட்டம் வேறுபாடு இருப்பினும்)காணக்கூடியதாக இருந்தன.
1. இக்கூத்துப் பெரும்பாலும் படிக்காத பாமர மக்களாலேயே ஆடப்படுகின்றன.
2. இக்கூத்தில் பங்கு கொள்ளும் கலைஞர்கள். காமன், வாத்தியார், பார்வையாளர்கள் என்போர் பெரும்பா லும் தோட்டத் தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர்.
3. சாதாரணத் தொழிலாளர்கள் பங்கு கொள்வதனால் இக்கூத்தின் பாடல், ஆடல், உடை, நடிப்பு என்பவற்றில் ஓர் ஒழுங்கைைமப்பு பேணப்படாதிருக்கின்றது.
4. நகர்ப்புறங்களில் இக்கூத்து ஆடப்படாமல் தோட்டப்புறங்களிலேயே ஆடப்படுகின்றது. இதற்கு மறுபுறமாக நகர்ப்புறங்களில் செந்தமிழ் வழக்கிலான இலக்கிய நாடகங்கள் இடம் பெற்றன.
5. இக்கூத்து இனம், மதம், மொழி, சாதி என்ற பேதங்களைக் கடந்து உழைக்கும் மக்கள் என்ற நிலையில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
6. இக்கூத்தின்போது தப்பு அதனுடன் இணைந்த டோலக்கு ஐசுல், கஞ்சிரா முதலிய வாத்தியக் கருவிகளே இசைக்கப்படுகின்றன.
7. இக்கூத்துக்கான பாடல்கள் (பெரும்பாலும் குப்புசாமி ஆச்சாரியார் முதலானோரால் பாடப்பட்டு அச்சுப் பதிவு செய்த புத்தகப் பாடல்கள்) நாட்டாரியல் இசையி லான லாவணி தாளத்திலேயே" பாடப்படுகின்றன. மிக அண்மைக் காலங்களில் தமிழ்த் திரைப்படத்தின் தாக்கம் காரணமாக இவற்றில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
8. மதம் ரதிக்கான திருமண நிகழ்வைத் தவிர ஏனைய நிகழ்வுகள் யாவும் திறந்த வெளியரங்கிலேயே இடம் பெறுகின்றன. இறுதிநாள் நிகழ்ச்சி மட்டும் இதற்காக ஒதுக்கப்பட்ட களத்தில் நடைபெறும்.
9. காமன் கூத்தில் ஆட்ட அசைவு முறையானது பாத்திரங்களுக்கு ஏற்ப அமைந்திருக்கும். எடுத்துக் காட்டாக மதன், ரதி ஆட்டம் என்பன ஒரு விதமாக அமையத் தூதன், இயமன் முதலானோரின் ஆட்டங்கள் வேறுவகையாக அமைந்திருக்கும்.
10. காமன்கூத்தில் வெட்டியான், வெட்டிச்சி என்ற பாத்திரங்கள் முக்கியமாக இடம் பெறுகின்றது. இவை ரதி மன்மதன் பாத்திரங்களுக்கு உதவியாக அமைகின்

றன. மிக அண்மைக் காலங்களில் இப்பாத்திரங்களின் வெளிப்படுத்துகையானது தொழிலாளர்களின் பிரச்சனை களை வெளிப்படுத்துவதாக அமைந்து காணப்படுகின்றன.
இவ்விடத்தில் சில விடயங்கள் குறித்து நோக்க வேண்டியுள்ளது. தென்னிந்திய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் சாதிய அடக்கு முறைகளுக்கும் ஒடுக்கு முறைக்கும் உட்பட்டிருந்த இம்மக்கள் இலங்கையில் ஒரு பெருந்தோட்ட உற்பத்தியின் கீழ் பரந்துபட்ட தொழிலாள வர்க்கமாக மாற்றப்பட்டதுடன் வர்க்க ரீதியாக அடக்குமுறைக்கும் உட்பட்டனர். இங்கு மூலதனக்காரர் களுக்கும், உழைப்பை விற்பவர்களுக்கான பாட்டாளிகளு க்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்தி உறவே மலையக சமூக மனித ஊடாட்டத்தின் அடிப்படையாகும். அதனடி யாக எழும் வர்க்கப் போராட்டமே அதற்கான தீர்வாக அமைந்திருந்ததனால் மலையக தொழிலாளர்களிடையே காணப்பட்ட வழிபாடுகள், கலைகள் என்பனவும் அவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்து காணப்படுகின்றன.
மலையக சமூக அமைப்பின் குணாதிசயம் காரண மாக வடகிழக்குப் பகுதியில் காணப்பட்ட தென்மோடி, வடமோடி கூத்துக்கள், பறைமேளக்கூத்து, மகுடிக்கூத்து போன்றன போன்று சாதியத்தை பிரதான முரண்பாடாக கொண்டிருக்கவில்லை. அத்துடன் இதற்காக பாவிக்கப் பட்ட கருவியும் “தப்பாகும். தப்பு என்பது அடிநிலை மக்களை துயில் எழுப்பவும் (அம்மக்களின் வாழ்வுடன் கூடிய கருவியைக் கொண்டே அவர்களைச் சுரண்ட முற்படல்) பயன்படுத்தப்பட்டது. இன்று 'பறைமேளம்” என்பது சாதிய அடையாளத்துடன் குறிப்பிடப்பட மலையகத்தில் தப்பு என்னும் பதம் அத்தகைய இறுக்கத்திலிருந்து விடுபட்டு நிற்பதனைக் காணலாம்.
இதைத் தவிர பெருந்தோட்ட உற்பத்தியுடன் இணைந்து வாழ்ந்த சிங்களவர்,முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போன்றோரும் இக்கூத்தில் பங்கு கொள்வதினை அவதா னிக்க முடிகிறது. உதாரணமாக அட்டன் கார்பெக்ஸ் தோட்டத்தில் நுண்ப் எனும் முஸ்லிம் இளைஞன் ரதி வேடம் தாங்கி ஆடி வருவதையும், அட்டன் ஒஸ்போன் தோட்டத்தில் யூசுப் என்பவர் தூதன் பாத்திரம் தாங்கி கூத்து ஆடிவருவதையும் காணலாம். இவ்வாறு சிங்கள இளைஞர் சிலரும் பங்கேற்ற அவதாரங்கள் (பாத்திரப் படைப்புக்கள்) என்பன தோட்டத்திற்குத் தோட்டம் வேறுபடுவதையும் காணலாம். காமன் திருமாலின் மகன் என்றும் கிருஷ்ணரின் மகன் என்றும் பிரம்மனின் மகன் என்றும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. எனினும் மதனை மாயவன் மகனாகவும் ரதியை சிவனின் மகளாக வும் கொள்ளப்படுகின்ற மரபே முதன்மை பெற்றுள்ளது. அத்துடன் அவர்களின் பிறப்புப் பற்றிய செய்திகளும் மாறுபட்டே காணப்படுகின்றன. இதற்கு தென்னிந்தியாவில் இம்மக்கள் வாழ்ந்து வந்த சூழலும் இங்கு இடம்பெற்ற கதைகளுமே முக்கிய காரணங்களாகும்.

Page 53
இக்கூத்தினைச் சற்றே நிதானித்து நோக்கும்போது சைவ, வைணவ மதங்களுக்கு இடையிலான மோதலைச் சித்திரிப்பதாகவும் அமைவதைக் காணலாம். உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் இவ்விரு மத முகாம்களிலிருந்து வெளிப்பட்டிருப்பினும் கொடுரமானதாக அமைந்தது. அத்துடன் மதமுகாம் சிறு நிலக்கிழார்களை பிரதிபலிப்பதாக அமைந்ததுடன் கடவுள் என்பவர் மக்களுடன் வாழ்ந்து அவர்களின் துன்பங்களைப் போக்குபவராக காட்சியளித்தார். (அவதாரகோட்பாடுகள்) சிறப்பாகப் போற்றியதுடன் சிவனை ஓர் உயர்வர்க்க கடவுளாகக் கண்டனர். அதன் விளைவாகவே சிவன் பற்றிய வெறுப்பும் மலையக தொழிலாளர்களிடையே விரவியிருந்தது.
காமன் கூத்தில் சிவனுக்கு எதிரான கலகக் குரலைக் காணலாம். அத்துடன் சிவனை எதிர்க்கின்ற மதம் என்ற பாத்திரமே இம் மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.
இக்கூத்தில் மலையக மக்களின் வாழ்க்கை பிரதி பலிக்கப்படவில்லை என்றபோதிலும் அவற்றில் இழை யோடியுள்ள சில மீறல்களும், அடக்கு முறைக்கு எதிரான போர்க்குணமும் இம் மக்களின் வாழ்க்கை முறையுடன் இணைந்து காணப்பட்டமையால் அவை அம்மக்களை வெகுவாகக் கவர்ந்து நிலைபெறத் தொடங்கியது. இவ்வாறான கூத்துக்கள் பக்தியுணர்வுடன் ஆடப்பட்ட போதிலும் இவற்றில் இடம் பெற்ற மீறல் உணர்விற்குரிய பாத்திரங்கள் இம்மக்களைக் கவரக்கூடியதாக இருந்தன. இவ்வகையில் நோக்குகின்றபோது காமன் கூத்தில் இடம் பெறுகின்ற முரண்பாடுகளும், போராட்டங்களும் ஆதிக்க சக்திகளுக்கும், அவற்றுக்கெதிரான சக்திகளுக்கும் இடை யிலான முரண்பாடாகவே அமைந்து காணப்படுகின்றது.
சமூக முரண்பாடுகளின் அடிப்படையில் எழும் மோதல்களையும், சகல உணர்வுகளையும் பார்க்கின்ற நாம் அதில் சைவ மேலாதிக்கத் தன்மையுடன் இடம் பெறுகின்ற சமரசப் போக்கினையும் கவனத்தில் எடுத்தல் அவசியமானதொன்றாகின்றது. அதாவது கூத்தின் இறுதியில் சிவனை யாராலும் வெல்ல முடியாது என்ற கருத்து நிலை நிறுத்தப்படுகின்றது. பேராசிரியர் கா. சிவத்தம்பி “மூன்றாம் உலக நாடுகளின் சமூக உளவியல் அடித்தளத்தை அறிந்து கொள்வதற்கு நாட்டார் வழக்கு அத்தியாவசியமானவை” என்கின்றார்.
உழைக்கும் மக்களின் சமூக மாற்றப் பணிகளில் ஈடுபடுவோர் இவ்வம்சத்தினைக் கருத்தில் கொள்ளல் அவசியமானதாகும். அவ்வகையில் கூத்தில் இட்ம் பெறு கின்ற கலகக் குரல்களையும்,சமரச போக்குகளையும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். போர்க்குணத்தை மட் டும் கவனத்தில் கொள்வது பின்னடைவிற்கும் சமரசத் தினை மட்டும் எடுத்துக் கொள்வது விரக்திக்கும் வழிவகுக்கும்.
கிராமியக் கூத்துக்களை மேடைக்கு ஏற்றவகையில்
s2 terroa

மாற்றியமைத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்றதில் பேராசிரியர்.சு.வித்தியானந்தனுக்கு முக்கிய இடமுண்டு.
இவ்வகையில் மலையகக் கூத்துக்களையும் மேடைக்கேற்ற வகையில் அமைப்பதற்கான முயற்சிகள் ஆங்காங்கே இடம்பெற்று வந்துள்ளன. 1970களில் இருந்து திருச்செந்தூரன் அவர்களாலும், இன்று சில கலைஞர்களும் இம் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 1990களின் ஆரம்பத்தில் பாடசாலை மட்டத் தமிழ்த் தினப் போட்டியில் இக்கூத்துச் சேர்க்கப்பட்டிருந்தமையால் இத்துறையில் ஓரளவு புலமைத்துவம் பெற்ற ஆசிரியர்கள் சிலர் இம்முயற்சிகளை மேற்கொண்டனர்.
அம்பகமுவ கல்வி வலயத்தைச் சார்ந்த ஜே.எப் ஹெலன், மூ.மூவேந்தன், என்.சாம்பசிவமூர்த்தி, முதலா னோரின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. அவசியமான பாத்திரங்கள், கதையோட்டத்திற்கு அவசியமில்லாத பாடல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட காப்பு விருத்தங்கள் என்பவற்றினை நீக்கி அரை அல்லது ஒரு மணித்தியாலத் துக்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைத்திருந்தனர். இம்முயற்சி இன்னும் திட்டமிட்ட வகையில் ஒழுங்கமைக் கப்படல் வேண்டும்.
சமூக மாற்றப் பணிகளில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் சிலர் இக்கூத்து மரபுகளைப் பயன்படுத்தி நவீன உள்ளடக்கம் கொண்ட நாடகங்களை ஆக்கியிருந்தனர். இலங்கையில் பேராசிரியர் சிவத்தம்பி, சி.மெளனகுரு முதலியோரின் முயற்சிகள் விதந்துரைக்கத்தக்கது. அத்தகைய முயற்சிகளுக்கான சாத்தியக் கூறுகள் மலையகத்தில் தென்படுகின்றன. இவ்வாறான சூழலில் இக்கூத்துக்களில் சமய உணர்வினை விட சமுதாய உணர்வே முனைப்புற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
தகவல்: பெருமாள் கம்பளையார் பொன்னையா (காமன் வாத்தியார் காசல்றி தோட்டம் - ஹட்டன்) எஸ்.எல்லன் (கா.வா. கார்பெக்ஸ் தோட்டம் - ஹட்டன்) எம்.வடிவேல் (கா.வா. ஒஸ்போன் தோட்டம் - ஹட்டன்) எஸ்.சாம்பசிவமூர்த்தி (உப அதிபர் - டங்கல்ட் த.வி. டிக்கோயா) குழந்தை.வே.பாலா (ஆசிரியர் - டயகம) ஆர்.எஸ்.முத்துக்குமார் (ஆசிரியர் - பதுளை) பயன்பட்ட நூல்கள்: மெளனகுரு.சி. பழையதும் புதியதும் (1992) மட்டக்களப்பு கேசவன்.கோ. “கதைப்பாடல்களும் சமூகமும்" (1975) தோழமை வெளியிட்டகம் - கும்பகோணம். மாத்தளை வடிவேலன் (கட்டுரையாசிரியர்) "தமிழ் நாட்டார் வழக்காற்றியல்" (1995) இந்து கலாசார சபை கொழும்பு லெனின் மதிவானம் (கட்டுரையாசிரியர்) "மலையக பரிசுக் கட்டுரைகள்" (2000) சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு கொழும்பு. Velupillai C.V Born to Labour (1970) M.D.Gunasena Colombo.

Page 54
கெகிறாவ ஸஹானா
குறிப்பிட்ட இருபது நோயாளிகளையும் பரிசோதித்தாயிற்று. போகலாம் என்று எழுந்தபோது வாசலில் நின்ற தாதி பவ்யமாகக் குனிந்து சொன்னாள், 'Sir, இன்னொரு பேஷன்ட் வெளியே நெடுநேரமாக நிற்கிறார்.” நேரத் தைப் பார்த் தான். இருபது நிமிடங்கள் மீதமிருந்தன. “சரி, வரச்சொல்.” வெளிநாட்டு உயர்ரக நறுமணம் கமகமக்க ஒரு பெண் வந்து அமர்ந்தாள்.
“ளுசை, எனக்கு வயது முப்பது. ஒரு மகன் இருக்கிறான். ஒரு வயது. இப்போ நான் மீண்டும் கன்சீவ் பண்ணியிருக’ கேன். இரண்டு மாசம்."
“நல்லது” “இந்தப் பிள்ளையை யடிழசவ பண்ணனும் ளசை” டாக்டர் நஸ்ருதீன் மெதுவாகப் புன்னகைத்தான். மேஜையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது பெயர்ப் பலகையைத் திருப்பி அவள் பார்வையில் படும்படியாக வைத்தான்.
"ஐ ஆம் டொக்டர் நஸ்ருதீன் எம்.பி.பி.எஸ், எம்.எஸ்.ஓ.ஜி, எம.சீ.ஓ.ஜி, வி.ஓ.ஜி ஒன்லி, ஐடோன்ட் டு எபோஷன்ஸ்.”
கண்கள் லேசாகப் பனிக்கத் தலையைக் குனிந்து கொண்டாள். உதட்டைக் கடித்து ஒரு நிமிடம் மெளனம் காத்தாள்.
“நா இந்த ஊருக்குப் புதுசு ளசை, எங்கே போறது. யாரைக் கேப்பது. ஒண்ணுமே புரியல்ல. அதனாலதான் உங்களைக் கேட்டா நல்லதுன்னு வந்தேன்.”
அவன் இதுவரை இப்படி ஒரு கேசை சந்தித்த தில்லை. வழக்கமாக சட்டென்று சிடுசிடுக்கும் நஸ்ருதீன் ஏனோ மென்மையாகப் புன்னகைத்தபடி தலையை ஆட்டினான். அவளை நம்புகிறேன் என்கிறாற்போல்.
“வட்ஸ் த ரீஸன்.?” “என் மகன் ஒரு அப்நோமல் கேஸ் Sir, அவனோட ரொம்பவும் இன்வோல்டா இருந்தாதான் அவனinfuture நோர்மல் நிலைக்குக் கொண்டு வரலாம்னு கன்சல்டன்ட்
 
 
 
 
 

சொல்றார். அதுதான்.”
தொடர்ந்து அவளோடு பத்து நிமிடங்கள் வரை உரை யாடிக் கொண்டிருந்தான். ஈற்றில் அவள் கூறிய காரணங் கள் யாவும் நியாயமானவை என்பதன் காரணமாகவோ, அல்லது அவள் மீது இயல்பாகவே சுரந்த அனுதாபம் கலந்த ஈர்ப்புக் காரணமாகவோ தனக்குத் தெரிந்த ஒரு டாக்டரின் பெயரைக் குறிப்பிட்டு அவரிடம் போகும்படி சொன்னான்.
女 女 ★ ஏறத்தாழப் பத்து நாட்கள் கழிந்துவிட்டன. அன்றிரவு தனது குவாட்டர்ஸில் அமர்ந்து தனியே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது டெலிபோன் கிணுகினுத்தது. மறுமுனையில் ஷர்மிளா.
"லொட் ஒஃப் தேங்க்ஸ் சேர், உங்க உதவியால எல்லாம் நல்லபடியா முடிஞ்சிட்டுது.”
உற்சாகம் கொப்புளிக்க நஸ்ருதீன் கேட்டான். “ஓ ஹவ் நைஸ். என் நம்பர் எப்படி, உங்களுக்கு.?
“டிரக்டரியை ரிஃபர் பண்ணினேன் சேர்.” "ஓ! வெரி க்ளெவர் ஒஃப் யூ.” காரணமின்றி பலத்த குரலில் சிரித்தான். தொடர்ந்து பல நிமிடங்களாக அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர்.
★ 女 ★ ஷர்மிளாவின் சொந்த ஊர் குருனாகலுக்குப் பக்கத்தில் பொத்துஹர. கணவனின் ஊர்தான் கெகிறாவ. கல்யாணமாகி மூன்று வருடங்களில் ஒரு ஆண் குழந்தை. அவள் ரொம்பவும் திறமையாகப் படித்தவள். மருத்துவத்துறை அனுமதியை நாலு புள்ளிகளில் கோட்டை விட்டவள். எனினும் மனம் தளராமல் ஃபார்மஸி கோர்ஸ் செய்து முடித்துச் சிறிய ஃபார்மஸி ஒன்றை ஊரில் நடாத்தி வந்தாள்.
நயிம் அனுராதபுரத்தில் எஸ் - லோன் நிறுவனத்தில் ரீஜனல் மெனேஜர் வேலை பார்த்து வந்தான். தூரத்துச் சொந்தமும் கூட. எனினும் பெற்றோர் பார்த்துப் பேசிய திருமணம்தான். திருமணத்திற்குப் பிறகு குருனாகலுக்கும் அனுராதபுரத்துக்கும் பிரயாணிப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தது. எனவே அவளை கெகிறாவைக்கு அழைத்து

Page 55
வந்துவிட்டான். சிறிய கடை ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடியமர்த்தினான். கடையின் முன்புறம் ஃ பார்மஸியும், மாடியில் வீடும் இருந்தன.
அவளிடம் ஆரம்ப முதலே காணப்பட்ட இயல்பூக்க மும். சுறுசுறுப்பும் அவனுக்கு ரொம்பப் பிடித்தன. அவனைப் பொறுத்தவரை பெண் என்பவள் படித்தவளாக வும். விவேகியாகவும் இருக்க வேண்டும். அந்த எதிர்பார் ப்பை அவள் இலகுவாகப் பூர்த்தி செய்தாள். இப்போது அனுராதபுரத்திலிருந்து கெக்கிறாவைக்குத் தின மும் பயணம் செய்வது அவனுக்கு வெகு எளிதாக இருந்தது. குழந்தையையும் கவனித்துக் கொண்டு ஃபார்மஸியை யும் நடத்துவது அவளுக்கு ஒரு பொருட்டாக இல்லை. எனினும், எதிர்பாராத விதமாக மீண்டும் கர்ப்பமுற்றபோது அவள் கலங்கிப் போனாள். அவனுடன் கலந்தாலோசித் தாள். கருவைக் கலைப்பதே நலம் என்று இருவரும் தீர்மானித்தனர்.
அதற்கொரு காரணமும் இருந்தது. மிகவும் சூட்டிகை யான ஷர்மிளா - நஸிம் தம்பதியினருக்குப் பிறந்த செல்வன் ஏனோ குறை வளர்ச்சியைக் கொண்டிருந்தான். பல மாதங்களாகத் தொடர்ச்சியாகச் சிகிச்சையளிக்கப ’பட்ட பின்பே அவனைப் பெரும் பாடுபட்டுக் காப்பாற்ற முடிந்தது. இந்நிலையில் டாக்டர்கள் இன்னொரு குழந்தை யைப் பெற்றுக் கொள்ள இப்போதே அவசரப்பட வேண ‘டாம் என்று ஆலோசனை கூறியிருந்தனர். எப்படியோ நடந்த தவறினால் மீண்டும் கர்ப்பமானாள் ஷர்மிளா.
நஸ்ருதீன் இனிய முப்பதுகளைக் கடந்தவன். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. பொலனறுவையில் பிறந்தவன். வசதியான, செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவன். மாத்தளையில் மணமுடித்து குடித்தனமாக இருந்தான். வார இறுதியில் மட்டும் வீட்டுக்குச் சென்று வருவான்.
எத்தனை சம்பத்துகள் இருந்தபோதும் வாட்டசாட்ட மான தேகக்கட்டும், தேஜஸான முகவாக்கும் அவனிடம் இல்லை. எனவேதானோ என்னவோ பெண்கள் என்றால் அவனுக்கு அலர்ஜி. தூர நின்றே பேசுவான். அவனது தொழிலும் அதற்கு ஏற்றாற்போலவே அமைந்திருந்ததால் அவனால் இந்தப் பலவீனத்தை இலேசில் உதறித் தள்ள முடியவில்லை.
பெண் என்றால் வெறும் சதைப்பிண்டம் என்கிறாற் போல் அவனிடம் ஒரு கணிப்பு உண்டு. தாதிமாரிடமும், உதவியாளர்களிடமும் அனேகமாக சிடுசிடுவென்று பேசுவான். காரணமின்றி எரிந்து விழுவான்.
வார இறுதியில் மனைவியிடம் செல்லும்போது தான் ஒரு மகப்பேற்று நிபுணன் என்பதை வலிந்து மறக்க முயற்சிப்பான். அப்படி மறந்தால் மட்டுமே அவனால் இயல்பாக இருக்க முடியும். குழந்தைகளிடம் பிரியமாக இருப்பினும் சடாரென்று மூட் மாறிவிடுவான். மனைவியும், குழந்தைகளும் அவனுக்கு ஏற்ற விதத்தில் நடந்து கொண்டதன் காரணமாக குடும்ப வாழ்க்கை பிரச்சனை யின்றி கழிந்து வந்தது. எனினும், அவன் வீட்டில் தங்கிச் செல்கின்ற இரண்டு நாட்களிலும் கத்தியின் மீது நடப்பது போன்ற கவனத்துடன் அவனது மனைவி நடந்து கொண்டால்தான் உண்டு. கொஞ்சம் இசகு பிசகானால் கூடப் போதும், பேய்த் தாண்டவமாடுவான் நஸ்ருதீன்.

நேரம் ஒன்பதரையைத் தாண்டி இருந்தது. எதிர்விட்டு மாமி கொண்டுவந்த உணவை வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் டி.வி. முன்னால் அமர்ந்தான் நஸ்ருதீன்.
திடீரென்று தலை கிறுகிறுத்து மரத்துப் போனாற் போலிருந்தது. ஷர்மிளாவின் வனப்பு மிகு தோற்றமும், எழிலார்ந்த முகமும், கண்கள் எதிரே சுழல்வது போல் ஒரு பிரமை, அவளது மெல்லிய குரல் காதுகளில் கிசுகிசுக்கிறாற்போல்.
எத்தனையோ பெண்களுக்கு மருத்துவம் பார்த்த மகப்பேற்று நிபுணன் அவன். பெண்களைக் கண்டு சிறி தும் சலனமடையாதவன். மெல்லிய ஆடையுடன் வந்து களைப்பும் தளர்ச்சியுமாக மல்லாக்கப் படுத்திருக்கும் பெண்களை அவன் மிகக் கவனமாகப் பரிசோதிப்பான். அவர்களது சகல உடல் உறுப்புக்களையும் தொட்டுப் பரிசோதிக்கும் எக்கணத்திலும் அவன் கீழ்த்தரமான எந்த உணர்ச்சிகளுக்கும் அடிமையானதில்லை. முகத்தை நேராகப் பார்ப்பதே போன்று பரிசோதனைகளை முடித்து விடுவான். பெண்களின் இடுப்பு வளைவுகளே, அந்தரங்க மச்சங்களோ அவனை எப்போதும் எதுவுமே செய்த தில்லை. தாய்மையை அடைவதற்குத் தவிக்கின்ற பெண் களைத் தக்கவாறு தயார்படுத்தி, எளிதாக வழிதிறக்கச் செய்ய முயலும்போது அந்தப் பெண்கள் படும் பாடு கண்டு எப்போதுமே அவனுள் ஓர் அனுதாப உணர்வு மேலோங்கி நிற்கும்.
பொதுவாக பயத்துடனும், நோயின் வாட்டத்துடனும் வரும் பெண்களே அனேகம். சில வேளைகளில் வழமை க்கு மாறாகச் சிரித்துப் பேசும் வேற்று மதப் பெண்களை எதிர்கொண்டிருக்கிறான். “totaly Prostitutes" என்று எடுத்த எடுப்பில் முடிவு கட்டி, அவர்களிடம் கவனம் திரும்புவ தைத் தவிர்த்துமிருக்கிறான்.
எனினும், இத்தனை வருட காலத் தொழில் அனுபவத் தல் சென்ட் மணக்க, தனியே வந்த abortion பற்றிப் பேசிய, மிக நியாயமான காரணங்களை எடுத்துக்கூறி மகப்பேற்று நிபுணனான தன்னையே கருச்சிதைவை ஆமோதிக்கச் செய்து, வெற்றிகரமாக அதை முடித்து, இப்போது phone இல் நன்றியும் சொல்கின்ற இந்தப் பெண்ணை - ஷர்மிளாவை - அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
டி.வி.யை அணைத்துவிட்டு வெறுமனே இருளில் அமர்ந்திருந்தான். இந்த உணர்ச்சி என்ன? காதலா? காமமா? வேட்கையா? அன்பா..?
நெஞ்சு வரண்டு வாய் காய்ந்து போயிற்று. கல்யாணமாகிக் குழந்தை குட்டிகள் கண்ட மகப்பேற்று நிபுணன் நஸ்ருதீன் - தகித்துப் போய் சிலையாய் உட்கார்ந்திருந்தான் நெடுநேரமாக,
இனியும் தாமதிக்க முடியாது போலிருந்தது. கதவை அறைந்து மூடிவிட்டு, கராஜில் நிறுத்தியிருந்த காரை நோக்கிச் சென்றான். விரைந்து இயக்கினான்.
நகரின் மையப் பகுதியில் பிரதான வியாபார நிலை யங்களுக்கு அருகில் இருந்தது ஷர்மிளா ஃபார்மஸி தூரத்தே காரை நிறுத்தினான். உள்ளிருந்தபடியே போர்டைக் கூர்ந்து பார்த்தான். தொலைபேசி இலக்கங் களை மனதில் பதித்துக் கொண்டான்.போர்ட்டருகே பளிச்

Page 56
சென்று பரவியிருந்த நியோன் விளக்கொளி உதவிற்று. நேரம் பத்து இருபது. கடைகள் யாவும் மூடப் பட்டிருந்தன. சற்றுத் தொலைவில் நைட் ஹோட்டல் ஒன்று விழித்துக் கிடந்தது. ஒன்றிரண்டு பிச்சைக்காரர்கள் கடைத் திண்ணையில் சுருண்டு படுத்திருந்தனர்.
அவளது மாடி வராண்டாவில் பூச்சாடிகளில் அழகாகப் பூக்கள் படர்ந்து வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. கதவுகள் மூடியிருந்தபோதும் உள்ளே மெல்லிய விளக் கொளி. எவ்வளவு நேரம் அவ்வாறே காத்திருந்தானோ? திடீரென்று கனவா என்று தெரியாத ஒரு நிகழ்வு. அவள் மெல்லிய நைட் கவுனுடன் ஜன்னலருகே வந்து நின்று திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தாள். தோளில் மகனைச் சாய்த்துத் தட்டிக் கொடுத்தவாறே ஜன்னலைத் திறந்து வைத்துச் சிறிது நேரம் நின்றிருந்தாள். காற்று வாங்குகிறாளோ என்னவோ?
உடலெங்கும் அனல் பொறிகள் பறக்க நஸ்ருதீன் அவசரமாகக் கார்க் கதவைத் திறந்தான். அதற்குள் மறைந்துவிட்டாள். திரைச்சீலைகள் பழையபடி அகலமாக இழுத்து விடப்பட்டன.
பொங்கிய பால் வடிந்து போனாற்போலிருந்தது. அவளது கணவன் வந்திருக்கிறானா? எவ்வளவு பேசியிருக்கிறேன். இதைக் கேட்க மறந்துவிட்டேனே.! தனது முட்டாள்தனத்தை நொந்துகொண்டான்.
ஷர்மிளாவுடன் இரண்டு உரையாடல்களின் போதும் தன்னையறியாமலேயே அதிகளவு சகஜமாகவும், ஆர்வத் துடனும் தான் அவளைப் பற்றிய பல விபரங்களைச் சேகரித்ததை உணர்ந்து தனக்குள்ளாகவே அதிசயித்துக் கொண்டான் நஸ்ருதீன், அவளும் அவன் எதிர்பாராத அளவுக்கு மிக வெளிப்படையாக தன்னைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் ஒளிவு மறைவின்றி வெளியிட் டமை அவனுள் பெரும் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக நேற்றிரவு மங்கிய விளக் கொளியில் மறைந்தும், மறையாமலும் அவள் காட்டிய அழகுக்கோலம் அவன் மனத்துள் தெள்ளிய சித்திரமாய்ப் பதிந்து அடிக்கடி மேலெழுந்து கொண்டிருந்தது.
அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டான். வார இறுதியில் வீட்டுக்கு வரமுடியாது என்பதை மனைவிக்கு ஃபோனில் தெரிவித்தான். இந்த வார முழுதும் அனுராத புர ஜி.எச்.இல் ஒரு தொடர் கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருப்பதாக காரணம் சொன்னான்.
டு ஐ லவ் ஷர்மிளா? என்று அடிக்கடி உள்மனம் கேட்ட கேள்வியை ஏதோ சாக்குப் போக்குக் காட்டி அடக்கி வைத்தான்.
இரவு பதினொரு மணி தாண்டியிருந்தது. லேசான தூக்கத்தில் புரண்டு படுத்தவனை டெலிஃபோன் ஒலி எழுப்பிற்று. மருத்துவமனையிலிருந்து தாதி பேசினாள். வயிற்றினுள் எடை கூடிய குழந்தையொன்றைத் தாங்கிய இளம் தாயொருத்திக்குப் பிரசவ வேதனை அதிகரித்திருப் பதாகவும், அவசர உதவி தேவைப்படுவதாகவும் சொன்னாள். உடன் விரைந்து சென்றான்.
காரியங்கள் முடிந்து வருகையில் மணி பன்னிரண் டரை ஆகிவிட்டிருந்தது. தூக்கம் வராமல் கட்டிலில் மல்லாக்கப் படுத்து விட்டத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்.

மீண்டும் ஷர்மிளாவின் முகம். அழகு சூழ்ந்த வெளி நாட்டு உயர்ரக நறுமணம், தலை சிறிது சிறிதாக விறைக்கிறாற்போல்.
சடாரென்று எழுந்து ஃபோனை நோக்கிச் சென்றான். இலக்கங்களைச் சுழற்றினான். அதிக நேரம் மணி ஒலிக்கவில்லை. ஷர்மிளா பேசினாள். குரல் தெளிவாக இருந்தது. என்னைப் ப்ோலவே அவளும் இன்னும் தூங்கலையோ?
“இன்னும் தூங்கல்லியா?” “இல்ல Sir, ஸ்டோரி புக் படிக்கிறேன்.” மீண்டும் பிரமிப்பு தட்டிற்று. என்ன பெண் இவள்? சாதாரண மானிடப் பெண்ணில்லையா இவள்?
“என்ன Sir இவ்வளவு அவசரம்.? என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு கணம் திகைத்து யோசித்தான். சட்டென்று ஒரு பொய்.
"ஐ நீட் களோமிஃபீம் என்ட் ப்ரொவிரொன் ஃபொ மை டிஸ்பென்சரி. எச்.சி.ஜி. ஒல்சோ.”
"ஓ யெஸ். நாளைக்கு அனுப்பி வைக்கவா?” "இல்ல நானே வந்து எடுக்கிறேன்.” “தேங்க்யூ சேர். வைக்கவா? குட்நைட்." பேச்சை முடிக்க மனமில்லாவிடினும் "ஸ்வீட் ட்ரீம்ஸ்" சொல்லி வைத்தான். மீண்டும் விட்டத்தை வெறிக்கத் தொடங்கினான்.
மறுநாள் மாலைவரை ஷர்மிளா அவனை எதிர்பார்த் துக் காத்திருந்தாள். அவன் வரவில்லை.
ஆறு மணிக்கு மேலே அவனது குவார்ட்டர்ஸ் பக்க மாக ஏதோ வேறு வேலையாக என்று திரும்பி வரும் போது அவனது ஞர்பகம் வரவே திடீரென்று அவன் எதிரே போய் நின்றாள். அவன் சற்றும் எதிர்பார்க்க வில்லை. ஏதோ எழுதிக் கொண்டிருந்தவன் பரபரவென்று ஓடிவந்தான்.
"ஐம் சொறி. மறந்துட்டேன்." “டோண்ட் மைன்ட் சேர், எவ்வளவு தேவைன்னு சொல்லுங்க. செர்வன்ட் கிட்ட அனுப்பி வைக்கிறேன்." அவன் புரிந்து கொள்ளவே முடியாத ஓர் அதிசயமாகவே மீண்டும் அவள் மலர்ந்து நின்றாள்.
எதிர்வீட்டு மாமி உடன் டி கொண்டு வந்து வைத்தாள்.வலிந்து வலிந்து உபசரித்தாள்.
அவன் எதிரே சாவகாசமாக அமர்ந்து எவ்வித சங்கோஜமும் இன்றி கலகலப்பாகப் பேசினாள். இளம் ரோஸ் நிற சல்வார் கமீஸில் முக்காடிட்ட அழகு நிலாத் தேவதையே போன்று காட்சியளித்தாள்.
நஸ்ருதீன் இமைக்க மறந்து போனான். தான் வெறும் பனியனும் சாரமுமாக இருந்ததையும் மறந்தான்.
அவள் பேச்சுவாக்கில் தனது கணவருக்கு அனுராத புரத்திலிருந்து மாத்தறைக்கு உத்தியோக மாற்றம் வந்திருப்பதைத் தெரிவித்தாள்.
“மாத்தறை ஒஃபீஸ் ரொம்ப கஷ்டமா இருக்கும் போலிருக்கு Sir. அவருக்கு அங்க யாரையுமே தெரியாது. பிஸினஸ்ஸ டெவலப் பண்றதுக்கும் கொஞ்ச நாளாகும் போல தோணுது.”
“ஸோ, ஹி கான்ட் ட்ரவல் டெய்லி.?”
Terrass

Page 57
"அது வேற பெரிய ப்ரொப்ளம் சேர். எப்படி தனிய காலம் தள்ளுறதுன்னு தெரியல்ல. வன்ஸ் இன் அ ஃ போர்ட்நைட் வந்து போறேன்னு சொல்றார்.”
உள்ளுர மகிழ்ச்சி பிரவாகித்தது. காட்டிக் கொள்ளாமல் சொன்னான்.
"டெல் ஹிம் டு கிவ் அப் ஹிஸ் ஜொப். உங்களோடவே தங்கி ஃபார்மஸிய பாத்துக்கலாமே.” "இட்ஸ் இம்பொசிபிள் சேர், ஹி லவ் ஹிஸ் ஜொப் G6uf tDá ..."
மெல்லிய கீறலாய் ஒரு பொறி தட்டிற்று. "யூ டோன்ட் வொரி. என் ஃப்ரென்ட் ஒருத்தன் மாத்தறையில இருக்கான், ஃபேமஸ் கன்ட்ராக்டர். அவன இன்ட்ரட்யூஸ் பண்ணி வைக்கிறேன்.”
கண்களைப் படபடத்து மூடினாள். “ஸோ குட் ஒஃப் யூ .” என்று கூறி எழுந்து சென்றாள்.
மாத்தறை எஸ் - லோன் கம்பனி ரீஜனல் மெனேஜராக நயிம் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டான் என்பதை உறுதி யாகத் தெரிந்து கொண்ட பின்னர் தினமும் ஷர்மிளா ஃபார்மஸிக்கு சென்று வரத் தொடங்கினான் நஸ்ரூனாதீன். தூக்கமின்றித் தவித்த பொழுதுகள் கூட்டெரித்தன. அப்போதெல்லாம் இரவு ஒரு மணிக்குக் கூட ஷர்மிளாவு டன் தொலைபேசியில் பேசுவான். தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் அவள் சிடுசிடுக்காமல் பேசி முடிப்பாள். அடுத்த ஒரு வாரத்திற்குள் தனது நண்பனான ராஃ பியை ஷர்மிளா - நயீம் தம்பதியினருக்கு அறிமுகப்படு த்தி வைத்தான். ராஃபியை அவர்களுக்கு நிரம்பவும் பிடித்தது. ராஃபியின் உதவி ஒத்தாசைகளால் மாத்தறை யில் தயக்கமின்றி கம்பனி வேலைகளைத் தொடர முடிந்தது. குறுகிய காலத்துக்குள் அதிக விற்பனை லாபமும் கிடைத்தது.
ராஃபி ஷர்மிளா தம்பதியினருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆனான்.
ஷர்மிளா வித்தியாசமான பெண், எந்த ஆணைக்கண் டும் அவள் மிரண்டோடியது கிடையாது. மருகி ஒளிந்து கொண்டது கிடையாது.
அவளது கணவனின் பார்வையில் அவள் எப்போதும் வெரி ஸ்மார்ட் என்ட் சின்சியர். தனது கணவன் மேல் கொண்ட அன்பைப் போலவே தனது வாடிக்கையாளர்க ளிடத்தும், நண்பர்களிடத்தும் அவள் மரியாதை கலந்த நட்புணர்வையும், அன்பையும் பேணி வந்தாள். தனது கணவனைப் போலவே அனைத்து ஆண்களும் ரொம்ப எளிமையானவர்கள் என்று நினைத்திருந்தாளோ என்னவோ?
நஸ்ருதீனுடன் பிரியம் கொண்டது போலவே ராஃ பியுடனும் அவள் பிரியத்துடன் பழகினாள். வேலைப் பழுவின் நடுவிலும் அவர்களிருவரையும் அவள் நன்றியுடன் நினைத்துக் கொள்வாள்.
வவுனியாவுக்கு சென்று வரும் வழியில் இடையில் தனது ஃபார்மஸிக்கு வந்த ராஃபியை குளிர்பானம் வழங்கி உபசரித்து பேசிக் கொண்டிருந்தாள். இடையில் அவன் கேட்டான்.
GSG

நஸ்ருதீன் இங்க வர்றதில்லயா..? மிச்ச நாளா அவரைக் காணல்ல. ஃபோனும் வரல்ல. சுற்றும் முற்றும் பார்த்து மெல்லிய குரலில் சொன்னான்
'நோ. ஹிஸ் லிட்டில் மென்ட்டல். பி கேள்ஃபுள். ‘ஓ..! அவள் அதிர்ந்து போனாள். அவன் விடைபெற்றுச் செல்லும் வரை மெளனமே உருவானாள்.
அவளால் நஸ்ருதீன் ஒரு மன நோயாளி என்பதை நம்பவே முடியவில்லை. எவ்வளவு பெரிய அறிவாளி.! அவருக்கெப்படி..?
ஏன்தான் ராஃபியைச் சந்தித்தோமோ என்று கூடத் தோன்றிற்று. இந்த உண்மை தெரியாமலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லது!
நஸ்ருதீனைச் சந்தித்துப் பேச வேண்டும் போலிருந் தது. வேலைகள் முடிந்த பின்னர் மகனைப் பணிப்பெண் ணிடம் கொடுத்துவிட்டு அவனைப் பார்க்கச் சென்றாள். அவன் வழக்கம் போலப் பேசினான். இந்நாட்களில் அதிகளவு எமர்ஜன்ஸி கேஸ்களைக் கையாளவேண்டி வந்ததாகச் சொன்னான். வார இறுதியில் வீட்டுக்குப் போய் வந்ததாகவும் கூறினான்.
ஏனோ வழக்கம்போல அவனுடன் கலகலப்பாக பேச முடியவில்லை. திடுமென திரை விழுந்தாற்போலிருந்தது. ராஃபி அடிக்கடி வந்து போவது பற்றியும், அவனைத் தன் கணவருக்கு ரொம்பப் பிடித்திருப்பது பற்றியும் அவள் பேச்சு வாக்கில் குறிப்பிட்டாள்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுச் சென்றான்.
女 ★ ★ இரவு பதினொரு மணி தாண்டியிருந்தது. நஸ்ருதீன் உறக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். மாலையில் திடீரென நிகழ்ந்த ஷர்மிளாவின் வரவும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பாஷணையும் மனதுள் திரும்ப ஓடிக் கொண்டிருந்தன.
ராஃபியை தங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது என்று ஷர்மிளா சொன்ன சேதி வதைத்தது. . எழுந்து டெலிஃபோன் அருகே சென்றான். மாத்தறை யில் விடுதியில் தங்கியிருக்கும் நயீமின் கையடக்கத் தொலைபேசியின் இலக்கங்களைச் சுழற்றினான்.
மறுமுனையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நயிம் கரகரத்த குரலில் "ஹலோ" சொன்னான்.
நஸ்ருதீன் கைக்குட்டையால் சிறிது வாயைப் பொத்தி, குரலை மாற்றிக் கடுமையாக்கிக் கொண்டான்.
'ஐம் ராஃபி, கல்ாவெவ ரெஸ்ட் ஹவுஸிலிருந்து பேசுறேன்.
நயிமுக்கு ஒன்றும் புரியவில்லை. அது ராஃபியின் குரல் அல்ல என்பது மட்டும் புரிந்தது.
‘என்ன விஷயம்? ஒப்புக்குக் கேட்டான். யூ சீ. ஐம் ஷேரிங் மை பெட் வித் ஷர்மிளா. யுவ வைஃப்..!
வெகு நாகரிகமாக ஆங்கிலத்தில் சொல்லி தொடர்பைத் துண்டித்தான்.

Page 58
இரவு, விடியச்சாமத்தோடு ஜீவ மரணப் போராட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது, எங்கள் கிராமம் வேதனையால் வெந்துருகி அழுது கொண்டிருக்கிறது. இரவெல்லாம் இடைவிடாது பெய்து கொண்டிருந்த மார்கழி மாதப் பனியில், கொடுகிக் கிடந்த நாய்களும், காகம், குருவிகளெல்லாம் அழுது கொண்டிருக்கும் எங்கள் கிராமத் தின் துயரத்தைத் தாங்க முடியாமல், கண் விழித்துக் கத்திக் கொண்டிருக்க, தூரத் தில் ஆட்காட்டிப் பட்சியொன்று பரபரப்போடு கத்திக் கொண்டிருக்கிறது. ‘என்ர ரகுமானே, எங்கிட ஊருக்கு நடந்த கொடும, என்ன வாப்பா..? ஒண்டுமறியாத எங்கிட மக்களுக்கு இந்தக்கெதி என்னத்திக்கு வரணும், அல்லாஹ..? அண்டைக்கண்டைக்கே கனாயத்த போக்கிறத்திக்கு கூட வழியில்லாமக் கயித்தப்பார். இந்த ஏழ எளிய சனங்களுக்கு. ஏனல்லாஹற் இந்தக் கயித்தம் வரணும்.? பால்குடி மாறாத இந்தப் பாலா பரதேசிகளை எல்லாம் மாடுகளை அறுக்கிறாப் போல, படுத்த பாயோட அறுத்துப் போட்டுப் போன, இந்தக் கொலகாரப் பாவிகளையெல்லாம், எங்கிட கிராமத்து மக்கள்ள வயிறு எரியிறாப் போல எரிச்சிப் போடு. நாசமத்துப் போன சண்டாளப் பாவிகள், எவ்வளவு அழகா இரிந்த எங்கிட ஊரக் குப்பயக் கூட்டிப் பத்தவெக்கிற மாதிரி, பத்தவெச்சிப் போட்டு போயிரானுகளே.இவனுகளெல்லாம் மனிசங்களே இல்ல. ஈவிரக்கமில்லாத பண்டிகள்தான். இல் லாட் டி, கதைக் கத் தெரியாத குஞ் சு
S
 
 

குறுமானையெல்லாம், நித்திரயில வந்து, பதறப்பதற வெட்டி அரிஞ்சி போட்டுப் போவானுகளா..? எத்தின கயித்தப்பட்டு வெச்ச குடில்கள்.அதுகளுக்கும் நெருப்பு வெச்சிப் போட்டு பெயித்தானுகளே. றப்பே ரகுமானே.! இந்தக் கொடுமைக்கெல்லாம் நீதான் செரியான தண்டன கொடுக்கணும். எங்கிட ஊர்மக்கள்ள குடியெல்லாம் பொசுங்கினாயப் போல, இந்தப் பாவிகளும் பொசுங்கிரணும்.
சுபஹசத் தொழுகையை தொழுது விட்டு வந்த, எங்கள் கிராமத்து பெரிய பள்ளிவாசல் மோதினார், அமைதியின் உருவாக இருந்த எங்கள் கிராமத்திற்கு நேர்ந்த சோகத்தை, எரிந்து போய் அலங்கோலமாய்க் கிடக்கும் குடிசையொன்றின் முன்னால் நின்று, வேதனை தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறார். இருளில் நடந்த இக் கொடுரத்தை, வெளிச்சத்தில் வந்த எங்கள் கிராமம் பார்த்துப் பார்த்து, விம்மி விம்மி அழுது கொண்டிருக்கிறது. இயற்கையின் எழிலரசியாக இப்பகுதியில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த, எங்கள் கிராமத்தில் வேதனையும், விக்கலும், அழுகையும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றன. மணப்பெண்ணைப் போலிருந்த எங்கள் கிராமம், பொட்டிழந்து பொலிவிழந்து விதவையைப் போல் இருப்பதைப் பார்க்க முடியாமல், விடியச் சாமம் விரைவாக ஓடிக் கொண்டிருக்கிறது. கிராமத்தை முடியிருந்த பனிமூட்டம் மெதுவாகக் கரைகிறது.

Page 59
என்ர மகனே, நீ என்ன உட்டுப் போட்டுப் போயிற்ரியா..? இனி இந்தக் கிழவிய ஆருவய்யா பாக்கப் போறாங்க? இந்த ஒலகத்தில இனி ஆருவய்யா தொண. எனக்கு.? விடியச் சாமத்துக்கு முன்னயே, வட்டைக்க போகணுமெ ண்டு செல்லிக்கு படுத்த நீ இப்ப மையத்தாக் கிடக்கியே. என்ர கல்பெல்லாம் பத்தி எரியிதே மகனே. லாவுதானே மகனே, ஒன்ட கவியாணத்தப் பத்தி ஓங்கு மாமா வந்து பேசிப்போட்டுப் போனாரு. விடியிறத்துக்குள்ள நீ, மையத்தாப் போனியே, ராசா. இது என்ன கொடும, அல்லாஹற்! என்ர மகனே! ஒனக்கு இப்பிடியொரு மகுத்து வருமெண்டு ஆருக்கு வாப்பா தெரியும்? ஒண்டுமே அறி யாத எங்களப் போல ஏழையளுக்கு ஏனல்லாஹற்! இந்தச் சதிமானம் வரணும்.? மகனே! இனி நீ இல்லாமல் இந் தக் கிழவி இருந்துதான் என்ன பயன்? எங்கிட நெருப்பு, இந்தக் கொலைகாரப் பாவிகளைச் சும்மா உடமாட்டா. மகனே. படுத்த படுக்கையிலேயே பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட தன் மகனின் உடலைப் பார்த்துப் பார்த்து அலிமாக் கிழவி தலையிலடித்து அழுது கொண்டிருக்கி றாள். அலிமாவின் வேதனையைப் பார்த்து வானமும் அழுகிறது. வானத்தின் கண்ணிரைக் கண்டு, இரவெல் லாம் தூங்கிக் கொண்டிருந்த சூரியனும் எங்கள் கிராமத் தின் துயரத்தைக் காண விரும்பாமல், மூடிய நேத்திரங்க ளைத் திறக்காமல், கார் கால மேகக் கூட்டங்களுக் கிடையில் மறைந்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.
இயற்கையின் இனிய தாலாட்டில் தூங்கி, இளந்தென்றலின் ஊடலில் இன்பங்கண்டு கோலோச்சிக் கொண்டிருந்த எங்கள் கிராமம் இன்று இனவெறிபிடித்த அயோக்கியர்களால் அழிக்கப்பட்டு பிணக்காடாகிக் கிடக்கிறது. இருளின் அமைதியைச் சாதகமாக்கிய இதயமில்லாக் கொடியவர்கள், எங்கள் கிராமம் உறங்கிக் கொண்டிருந்த வேளை உட்புகுந்து அப்பாவி மக்களை யும், அவர்களின் பால்குடி மாறாப் பச்சிளங் குழந்தை களையும் கத்திகளால் வெட்டித் துண்டுகளாக்கி விட்டு, அவர்களின் வானம் தெரியும் ஒலைக் குடிசைகளுக்கும் தீயிட்டுக் கொழுத்திவிட்டு இருளோடு இருளாகப் போய் விட்டார்கள். எங்கள் கிராமத்தை மூடியிருந்த பனிமூட்டம் முற்றாக மறைந்து விட்டது.
'மகளே!. என்ர தங்க மகளே.! நீ புள்ளத்தாச்சி யெண்டு பாராமலே, இந்தக் கொடியவனுகள் ஒன்னக் கொல செஞ்சி போட்டானுகளே. நீ தலைப்புள்ளத்தாச்சி எண்டு, நான் எவ்வளவு கரிசனயோடு பாத்து வந்தன். ஒன்ட புள்ளய ஒருதரம் கொஞ்சிப் பாக்க எனக்கு,
நசிபில்லாமப் போச்சே மகளே.! என்ர மனசி தாங்குதில்
லியே..! நெருப்புழுந்து போவானுகள், என்ர ரெண்டு சீவனையிம் ஒண்டாக் கொல செஞ்சி போட்டானுகளே. என்ர மகளே! இனி ஒன்ன எப்ப நான் பாக்கப் போறன்.? கள்ப்பிணி மகளைப் பறிகொடுத்து, துயரம் தாங்கமால் கத்திக் கொண்டிருக்கும் கதிஜாவின் கதறலைக் கேட்டு, தூறிக் கொண்டிருந்த வானம், மழையைச் சோ வென்று கொட்டிக் கொண்டிருக்கிறது.

பால்குடி மாறாப் பச்சிளம் பாலகர்களும், கர்ப்பிணித் தாய்மார்களும், அப்பாவி ஏழை மக்களும் கொடிய இனவெறி அரக்கனால் கொல்லப்பட்டுத் தலையில்லாம லும், கை, கால்கள் இல்லாத முண்டங்களாகவும், கிடப்பதைப் பார்த்து, எங்கள் கிராமத்தில் உயிர்த் துடிப்போடு வாழ்ந்து கொண்டிருந்த மானிட நேசம், ஒன்றுமே செய்ய முடியாத ஊமையாகி கிராமத்தோடு சேர்ந்து அழுது கொண்டிருக்கிறது.
கொட்டும் மழையிலும் எங்கள் கிராமத்து மக்களோடு சோர்ந்து நிற்கும் கிராமசேவகள் தன் கையில் கட்டி இருக்கும் மணிக்கூட்டைப் பார்த்து, எட்டு மணியென்று அலுத்துக் கொள்கிறார். அப்பொழுது, இரவெல்லாம் கவலை மறந்து தூங்கிக் கடந்த பொலிசாரும் படையின
5
ZA
纱
ae
%
黏
冕

Page 60
ரும் ஜிப் வண்டிகளில் வேகமுடன், எங்கள் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அலுத்து நின்ற கிராமசேவகர் போய் பொலிசாரையும் படையினரையும் அழைத்து வந்து கொலையுண்ட உடல்களை ஒவ்வொன் றாகக் காட்டிக் கொண்டிருக்கிறார். இப் பஞ்சமா பாவத் தைச் செய்து விட்டு, இருளோடு இருளாகச் சென்றுவிட்ட இரக்கமற்ற இனவெறியர்களைக் கண்டு பிடித்து தண் டனை அளிக்க முடியாத அரசின் காவலர்கள் உயிரற்ற உடல்களை, எங்கள் ஊர் மக்களின் உதவியோடு மிசின் பெட்டிகளில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். அழிந்துவிட்ட உடல்களிலிருந்து அவையின் ஆத்மாக்கள் எப்படிட் பிரிந்து சென்றன என்பது பற்றி, பகுப்பாய்வு செய்து மரண விசாரணை செய்வதற்காக எங்கள் கிராமத்து வைத்தியசாலைக்கு அவைகளைக் கொண்டு செல்வத ற்கு யந்திரம் போல் பொலிசாரும் படையினரும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். வானம், ஏங்கி ஏங்கிக் கண்ணி விட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும், பொழுது விழிக்கவே இல்லை.
அப்பொழுது சோறு கிடைக்கும் இடத்தையெல்லாம் சொந்தமாக்கி நடைப்பிணமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சாவல், தொடை வரையில் கிழிந்து தொங்கும் தன் காடை நிறச் சாறனால் கழுத்துவரை போர்த்திக் கொண்டு கார் விட்டு வருகிறான்.
՞լնլ... ! ւմնւմն... !! մլն... !!!' கார் வருகிறது. தள்ளுங்க, தள்ளுங்க..! கிஸ்சராக் கோண். தம்மோளி வாப்பா.
f'Lju....! If...!!!” மழையில் பொதும்பிக் கிடக்கும் கிறவல் றோட்டில் சாவலின் கார், புதைந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் சாவல், மனைவி மக்களோடு மிகவும் கெளரவமாக செல்வச் செழிப்போடு வாழ்ந்தவன்தான். தோட்டம் தொரவு. தொடுகையுடன் மாடுகன்று விடுவளவு எல்லாப் அவனுக்கு இருந்தன. ஆனால், இனவெறியின் அகோரட் பசிக்கு இவனும் தன் மனைவி மக்களையெல்லாப் இரவோடு இரவாகப் பறிகொடுத்துவிட்டு, “கிஸ்சராக் கோண்” ”தம்மோளிவாப்பா” என்னும் இரு அர்த்தமற்ற சொற்களை மட்டும் தன் வாழ்க்கைக்குத் gj60)600TuJITs வைத்துக் கொண்டு, இன்று எங்கள் கிராமத்தைச் சுற்றி சதா கார் விட்டுக் கொண்டிருக்கிறான்.
பாவம்! சுமார் பத்து வருடங்களுக்கு முன் தன் உணர்வுகளையும், உள்உறுத்தல்களையும், சுய அறிவையும் ஒரே நாளில், அவன் மனைவி மக்கலை அடக்கம் செய்த மண் ணறைகளில் சேர்த்து புதைத்துவிட்டு, கார் விட்டுத் திரியும் சாவலுக்கு வயது ஐம்பது. எங்களுர் சாவலுக்கும் சொந்த ஊர்தான். எங்கள் கிராமத்து மண்ணில்தான், அவனும் தன் இளவயதில் இயற்கையின் இனிய ராகத்தை மீட்டிக் களித்தான் இக்கிராமத்தின் பசுமை நிறைந்த வயல் வெளிகளிலும்

ஓங்கி உயர்ந்து நிற்கும் தென்னந் தோப்புகளிலும், பளிங்கு போல் சலசலத்தோடும் நீரோடைகளிலும்தான் அவன், ஆடிப்பாடி மகிழ்ந்து திரிந்தான். எங்கள் கிராமத்தின் இளந் தென்றல்தான் அவனுக்குத் தாலாட்டுப் பாடியது. அப்படியெல்லாம் அவன் உயிருக்குயிராக நேசித்த இக்கிராமம், பிணக்காடாகிக் கிடப்பதைக் கிஞ்சித்தும் பாராமல், கவலையின்றிக் காரோட்டித் திரிகிறான். மானிட நேசம் அவனைக் கண்டு அழும் போதெல்லாம், அவன் அழுவதுமில்லை, சிரிப்பதுமில்லை. ஓய்வின்றி ஒட்டிக் கொண்டிருக்கும் அவன் காருக்கு இருட்டும் ஒன்றுதான் பகலும் ஒன்றுதான். அமைதியும் அழகும் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த அவன் இல்லறவாழ்வு இரக்கமற்ற இனவெறி அரக்கனால் பறிக்கப்பட்ட பின், அவ்வெறி பிடித்த அரக்கனைத் தேடிப் பிடித்து அவனைக் கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில்தான், சாவல் எங்கள் கிராமத்தைச் சுற்றிச் சுற்றி அவனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
“նվ.! մtյմն...!! մլն... !!!" கார் வருகிறது வெலகிங்க.விலகிங்க. கிஸ்சராக்கோண். தம்போளி வாப்பா. ப்யூ.பீப்.! உலகில் சொந்தமென்று சொல்வதற்கு யாருமே இல்லாத அப்பாவி அனாதையாகி எலும்பும் தோலுமாய்ச் சதா, கார் விட்டுத் திரியும் அந்தச் சாவலையும் சேர்த்துத்தான், எங்கள் கிராமம் அழுகிறது.
எங்கள் கிராமத்தின் இயற்கையோடு பின்னிப் பிணைந்து அதன் சுகத்தோடு இரண்டறக் கலந்து, அமைதியோடு வாழ்ந்து அநியாயமாக அழிந்துவிட்ட அப்பாவி ஆத்மாக்களின், உயிரற்ற முண்டங்களையும் அவைகளின் உறுப்புக்களையும் ஏற்றிக் கொண்டு, படைவீரர்கள் புடைசூழ, உழவு யந்திரங்கள் வைத்தியசாலையை நோக்கிச் செல்லுகின்றன. அவைகளைப் பின் தொடர்ந்து எங்கள் கிராமமே சென்று கொண்டிருக்கின்றது.
ஆனால், சாவல் மட்டும். இனவெறியைக் கொல்ல முடியாமல், நேத்திரங்களை மூடி, நிஷ்டையில் தேங்கிக் கிடக்கும், ஈசனைத் தேடிக் கொல்வதற்கு வெறி பிடித்து ஓடுகிறான். இன்று, சதா குயிலோசையும் குருவிகளின் சப்தமும் கேட்டுக் கொண்டிருந்த எங்கள் கிராமத்தில், அடக்கமுடியாத அழுகைக் குரல்களும், வேதனையின் விசும்பல்களும், பேய்களின் பயங்கர அலறல்களும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. இளநிலாவும், இனிய தென்றலும் எங்கள் கிராமத்துக்கு வருவதே இல்லை. ஏனென்றால் இப்பொழுதெல்லாம் எங்கள் கிராமத்து மக்கள் இரவில் ஆறு மணியோடு தங்கள் வீடுகளிலிருந்து வெளியில் வருவதே இல்லை. O
芭 passes so

Page 61
வடமேற்கின் கரையோரத்தில்ஆரம்பமாகும் அலுவலக ரயில், மேற்கின் மாநகருக்கு முந்திய மாநகரத்து ரயில் நிலையத்தில் நின்ற போது வழமைபோல் சிங்களம் பேசுவோ ரால் நிறைந்த பெட்டிகளுள் ஒன்றில் நின்றிருந்த ஒர் யுவதி, என் கையிலிருந்த 'கருக்கைக் கண்டு அத னைச் சற்றே பார்ாத்துவிட்டுத் தரக் கேட்ட போது எனக்கு உண்மையில் பெருமிதமே ஏற்பட்டது. வாசிக்கும் ஆர்முள்ளவர்கள் அவரைப் போன்று நிறையவே உள்ளனர். ஆனால் விலை கொடுத்து வாங்கும் சக்தி மட்டுமின்றி, தரமான நூல்கள் கரமெட்டும் தன்மையும் அரிதாகவே இருக்கிறது. இரண் டாவது பதிப்பைக் கண்டிருந்த 'கருக்கு என்ற நூலைப் பெறுவது அதற்குரிய வாய்ப்பும் வசதியும் கொண்ட எனக்கே சிரமமாயின் மேற்குறித்த யுவதி போன்றவர்க ளைப் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. ஏனெனில் இந்நூலும் தற்செயலாகவே வாங்கப்பட முடிந்தது.
கருக்கு ரம்பம் போன்றது. எனினும் அது இருபுறத் தாலும் அறுத்துக் கிழித்து ரணங்களை ஏற்படுத்தக் கூடியது. இதுபோல் சமூக ரீதியிலும் தற்போதய சூழலிலும் இதன் காயங்களுக்கு உட்பட்டிருக்கக் கூடிய ஒருவர் என்ற முறையிலேயே அந்த யுவதிக்குக் கருக்கு உடனடியாக உறுத்தியிருக்க வேண்டும்.
கருக்குப் பனை, கருக்கு (வ - சிங்கள வடிவத்தில்) முதலாக பனையடி போன்ற பனை சார்ந்த கிராமங்கள் வடமேற்கில் நிறைய உண்டெனினும் இங்கு சமூக ஏற்றத் தாழ்வுகள், செல்வத்தின் உண்மை இன்மையையே பொறு த்துள்ளன. செல்வத்தைத் திரட்டிக் கொள்ளக் கூடிய ஒருவர் சமூகத்தின் உயர் வர்க்கத்திற் கரைந்துவிட (փLգեւյլb.
தலித் பெண் எழுத்தாளரான பாமாவினால் தலித் இலக்கியத்துக்க வழங்கப்பட்ட உன்னதமான போதம் என்று கருக்கு எடுத்துக் காட்டப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான தலித்தியம், அதனோடு சேர்ந்து பெண்ணியம் (அல்லது பெண்ணிலை வாதம்) போன்ற தொடர்கள் தமிழ் நாட்டில் வெகுவாகப் புழக்கத்துக்கு வரத் தொடங்கி யுள்ளன. இவற்றை ஓர் அரசியல் சக்தியாக முன்னெடுக்க முனையும் நோக்கமும் தெளிவாகப் புலப்படுகிறது.
கருக்கு போன்ற நூல்களுக்கு அதீத சிறப்புத் தர முற்படும்போது, குருதிப்புனல், பஞ்சமர் போன்றவற்றைப் புறந்தள்ள முற்படும் நிலை ஏற்படுமோ என்ற ஐயம் கூட ஏற்படுகிறது.
 
 

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய இலக்கியம் தான் தலித் இலக்கியம் எனில் இத்தகைய இலக்கியத்தை நாம் இழிசனர் இலக்கியமாக இலங்கை யில் முன்பே கண்டுள்ளோம். இவ் இலக்கியத்துக்கு அடிநாதமானோர் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர் கள், இழிசனர்கள், கீழ் சாதிகள் என்ற பெயர்களால் காயப்படுத்தப்பட்டுள்ளனர். வட பகுதியிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் எழுந்த ஆக்க இலக்கியங்கள் இத்தகையோரைக் கதா மாந்தர்களாகக் கொண்டன. எனவே கருக்கை வாசிக்கும் போது இவற்றையெல்லாம் தேடி வாசிக்கும் ஆர்வம் தான் மேலோங்குகிறது.
கருக்கு ஒரு கிராமத்தின் சரித்திரம்: சுயசரிதை: நாவல் என்று பல பரிமாணங்களில் நோக்கப்படுகிறது. யதார்த்த வாழ்க்கைக்கும் யதார்த்த இலக்கியத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பையே இந்நோக்குகள் காட்டுகின்றன.
எழுத்து நடை இந்நூலின் துணிச்சலான மற்றுமோர் அம்சமாகும். தலைமைக் கதாபாத்திரத்தின் பேச்சு வழக்கிலேயே முழுநூலும் அமைந்துள்ளது. இதன் ஆரம்ப வரிகளே இதற்கு எடுத்துக்காட்டு.
"எங்க ஊரு ரொம்ப அழகான ஊரு. ரொம்பப் பெரிய முன்னேத்தமோ, எதுவுமோ இல்லேன்னாக்கூட அதோட அழக வச்சுத்தான் எனக்கு அத ரொம்பப் புடிக்கும். சின்ன ஊருதானாலும் இங்க பல சாதி மக்க குடியிருக் காக. சாதி சனத்தப் பத்திச் சொல்றதுக்கு முன்ன ஊரப்பத்தி நெறய்ய சொல்ல வேண்டியது இருக்குது.
ஊரச் சுத்தி வருசையா மலைகளா இருக்குது. பாக்குறதுக்கு அழகா இருக்கும். அத மேக்குத் தொடர்ச்சி மலன்னு சொல்றாக.”
இத்தகைய ஒரு நடைக்கு இலங்கையில் இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுக் கொடுக்க நீண்ட காலம் எடுத்திருந்தது.
கருக்கு இயக்க ரீதியான உணர்வுகளின் வெளிப்பாடா கவே அமைந்தது. யாழ் குடாநாட்டில் ஐம்பதாண்டுகளு க்கு மேல் இத்தகைய வெளிப்பாடுகள் இருந்து வந்த போதும் உரிய பிரசித்தத்தை இன்னும் பெறவில்லை. எனவே கருக்கு போன்ற நூல்களின் பின்னணியில் இவற் றைத் தகுந்த மதிப்பீட்டுக்கு உள்ளாக்கத் தற்போதைய சூழல் நல்ல ஒரு சந்தர்ப்பத்தைத் தரமுடியும்.
O

Page 62
இரசிகமணி" என்றும் இலக்கியச் செல்வர்' என்றும் இலக்கிய நெஞ்சங்களால் அழை க்கப்படும் கனக. செந்திநாதன் என்ற படை ப்பாளியை, விமர்சகனை, வரலாற்று ஆசிரியனை அவனது இலக்கியப் பற்றை, இலக்கிய நேர்மையை, அவனது படைப் பாளுமைகளை, பலவீனங்களை இலக்கிய உலகம் நன்கறியும். இதற்கு இவர் தொட ர்பாக வெளியான கட்டுரைகள், நூல்கள் என்பனவே தக்க சான்று. இவ்வாறு நாடளாவிய ரீதியில் அறியப்பட்ட இரசிகமணி தமது பிறந்த மண்ணிலே இலக்கியப் பாரம்பரியம் ஒன்று தொடர வகித்த பங்களிப்பைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம். இதன் மூலம் கலை இலக்கியத் துறையினர் இரசிகமணி பற்றிய சில புதிய தகவல்களைத் தரிசித்தல் கூடும்.
இரசிகமணி தினமும் காலையில் தனது ஒன்றுவிட்ட சகோதரியான திருமதி. செல்லம் சபாரத்தினம் வீட்டிற்குச் செல்வது வழக்கம். (முன்னாள் சுன்னாகம் திருமக்ள் அழுத்தகம், தனலக்குமி புத்தகசாலை முதல்வர் வீடு) அங்கு தினமும் காலை ஆறரை மணி முதல் ஏழரை மணி வரை ஒரு 'பேச்சுக் கச்சேரி நடக்கும். கலை இலக்கிய நண்பர்கள், சன்மார்க்க சபை அன்பர்கள், அச்சகத் தொழிலாளர் எனப் பத்து முதல் பதினைந்து பேர் வரை கூடுவர். “கலாகேசரி’ தம்பித்துரை, கவிமணி கந்தவனம், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை, “வெற்றிமணி” ஆசிரியர் மு.க. சுப்பிரமணியம், குழந்தைக் கவிஞர் “இதம்" அன்பர் இரத்தினம், சன்மார்க்கசபை பொதுச் செயலாளர் த. இராசரத்தினம், விதானையார் செல்லத்துரை, அச்சகத் தொழிலாளர் முத்தையா, கண்ணப்பசாமி என ஒரு பட்டியல் தொடரும். இப் பேச்சுக் கச்சேரி ஒரு மாதமோ, இரு மாதமோ, அன்றி ஒரு வருடமோ இரு வருடமோ நடந்ததல்ல. பதினைந்து வருடங்களாகத் தொடர்ந்து நடந்தது. மழையாலோ, பனியாலோ, புயலாலோ கூட இப்பேச்சுக் கச்சேரியைத் தடுக்க முடியவில்லை. கந்தபுராணத்தில் தொடங்கி கம்பன் கவி நயத்திலும் இளங்கோவின் சிலம்பிலும் தாவி நவீன இலக்கியப் படைப்புக்கள் முதல் நாள் யாழ்ப்பாணத்தின் எங்கோவோர் முன்னிலையில் நடந்த இலக்கியக் கூட்டம், இரசிகமணி கடைசியாகப் பார்த்த ஆங்கிலப்படம். கடைசியாக வந்த தமிழ்நூல் எனச் சுவாரசியமாகச் சென்று சரியாக ஏழு முப்பதிற்கு திருமகள் அழுத்தக வண்டி சுன்னாகம் புறப்படுவதோடு (plq6).j60Lub.
குரும்பசிட்டிக் கல்விப் பாரம்பரியத்தினதும் இலக்
 
 

கியப் பாரம்பரியத் தந்தை பொன். பரமானந்தர் காட்டிய சைவ மரபில் ஊறித் திளைத்தவர்களையும், தமிழாசிரியர் களையும், பண்டிதர்களையும் கொண்ட ஒரு கிராமத்தில் அதுவும் யாழ் மாவட்டத்திலுள்ள மிகப் பின் தங்கிய கிராமத்தில் நவீன இலக்கியப் பரிச்சயத்தையும், அதனை நயக்கவும், நலன் பாராட்டவும் ஓர் ஆர்வத்தை உந்தலை இப்பேச்சுக்கச்சேரி ஆரம்பித்தது. இதன் தளகர்த்தராக இருந்தவர் இரசிகமணி என்பது இங்கு மனங் கொள்ளப் பட வேண்டும். இதன் விளைவாக அறுபதுகளிலிருந்து ஈழத்தின் பல பாகங்களிலிருந்தும் கலை இலக்கியப் படைப்பாளிகளும், தமிழகத்திலிருந்து யாழ் வரும் கருத் தாளர்களும் குரும்பசிட்டி என்ற கிராமத்துக்குவரத் தவறு வதில்லை. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற கலை இலக்கிய நிகழ்வுகளிலும் குரும்பசிட்டியைச் சார்ந்த குறைந்தது பத்துப் பேராவது பங்கு பற்றத் தவறுவதுமில்லை. இத்தகைய ஓர் இலக்கிய ஊடாட்டத் தின் உறவுப் பாலம் ஏற்படவும் இப்பேச்சுக் கச்சேரி மூலம் இரசிகமணி வழி கோலினார்.
காலையில் முடிந்த பேச்சுக் கச்சேரி மீண்டும் இரவு எட்டு முப்பதிற்கு ஆரம்பிக்கும். இப்பொழுது களம் குரும்பசிட்டி சன்மார்க்க சபையாக மாறியிருக்கும். சன்மார்க்க சபையில் தினமும் காலை எட்டு மணிமுதல் இரவு எட்டு மணிவரை ஒரு வாசிகசாலை நடைபெறும். இதில் தமிழ், ஆங்கிலத் தினசரிகள், சமய, கலை இலக்கிய, அறிவியல் ஏடுகள் வாசிக்க இருக்கும். அரச, கூட்டுத்தாபன, தனியார் துறைகளில் கடமை புரியும் சபை உறுப்பினர்கள் மாலை ஏழு மணி முதல் அங்கே கூடுவர். வாசிகசாலை முடிவுற்றதும் அங்கே கூடுவோர் சமகாலப் புதினங்கள், அரசியல் அலசல்கள் எனப் பலவற்றைப் பற்றியும் கருத்துப் பரிவர்த்தனை செய்வர். வெள்ளிக் கிழமைகளில் அந்தப் பேச்சுக் கச்சேரியில் ஒரு விசேட அம்சம் இடம் பெறும். எமதுமண்ணின் சாந்தி பீடமாக விளங்கும் குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக் கிழமைகளில் இரவு ஏழு மணிக்கு விசேட பூசையும், கூட்டுப் பிரார்த்தனையும் இடம் பெறும். இது முடிவுற்றதும் சன்மார்க்க சபையில் கூடும் அன்பர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சன்மார்க்க சபைக்கு வருவர். அன்று இரசிகமணியின் பங்கு முக்கியமானது. அன்று அவர் நவீன கலை இலக்கியங்கள் பற்றிக் குறிப்பிடுவார். குறிப்பாக ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள், அவர்களது படைப்புக்கள், அக்காலத்தில் வெளியாகும் ஈழத்துச் சிற்றிலக்கிய ஏடுகள் பற்றிக் குறிப்பிடுவார். சிறுகதைகளையும், கவிதைகளையும் வாசித்து விமர்சிப் பார். இது அன்று சிறுவர்களாகவும் இளைஞர்களாகவும்
geltseroa, 61

Page 63
  

Page 64
ஒற்றையா பறந்தது. தள்ளாடித் ஒருவரை நேரத்தைப் அந்த ே சுவிற்சலா தயாரிப்பு அந்தக் ை விமானத் நேரத்திற் கொண்டா கனகேஸ் உஷனத் இடங்களி நிறுத்தப்ட விசாரணை கவலையு முதலிலே செய்தால் என்று ஒ6 * அடக்கிக் κε சுவிற்சலா [ "ご。 இருப x_ளைக கா . Diff(
தெரியாத மிகவும் ச மஞ்சள் இறுகிப் ே பொலிசா
 

மே அவனுக்கு ஆச்சரியம்ாக இருந்தது. விட்டு வீசுகின்ற காற்றிலே கூட இயக்கம் நப்பதாக உணர்ந்தான். நிமிர்ந்த போது 1ள மரம் அசைவற்று நின்றது. காகம் க மிரட்சியோடு எங்கோ பார்த்து விட்டுப் தூரத்திலே தலையில் மூட்டையொன்றுடனே தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்த கிழவர் வேகமாகத் தாண்டியவாறு பஸ்வண்டி வந்தது. பார்த்தான் சிவசாமி. ஏழு மணி பத்து நிமிஷம். நரத்திலே சந்தேகப்படத் தேவையில்லை. ந்தின் பிரபல்யம் வாய்ந்த மணிக்கூட்டுத் நிறுவனத்தில் ஆறுமாதங்களின் முன்னர்தான் கக்கடிகாரத்தினை அவன் வாங்கியிருந்தான். தில் இருந்து இறங்கியதும் இலங்கை கு சரியாக, கடிகார நேரத்தினை மாற்றிக் ன். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து, வரன் கூட்டி வந்த வானில் ஏறிய போதே தகிப்பை உணர்ந்தான். வழிவழியே பல ல் இராணுவத்தாராலும், பொலிசாராலும் பட்டுச் சோதனை என்ற பெயரில் குறுக்கு ா செய்யப்பட்ட போது மனதினுள்ளே எரிச்சலும் ம் வெறுப்பும் உண்டாயிற்று. கனகேஸ்வரன், யே சோதனைச் சாவடிகளில் வாதப் பிரதிவாதம்
வீணாக சிக்கல்களில் மாட்ட வேண்டி வரும் *றுக்கு மூன்று முறை சொன்னதால் தன்னை
கொண்டு மெளனமாயிருந்தான். ந்திலிருந்து வந்து ஏழு நாட்கள். து ஆண்டுகள் இடைவெளியில் பல மாற்றங்க ண வேண்டி வரும் என்று நினைத்திருந்தான். ளூக்குப் பதிலாக சிதைவுகளும் மங்கலும் இனந் அச்சமும் நிறைந்திருப்பதைக் கண்டான். முன்பு ாதாரணமாகப் போய் வந்த இடங்களிலெல்லாம் கறுப்பு நிறத்தடுப்பு வேலிகள். அதனருகே பான முகத்தோடும் துப்பாக்கிகளோடும் நிற்கும் ரும் சிப்பாய்களும்.

Page 65
சுவிற்சலாந்துக்கு வந்த ஒருவரிடம் இலங்கை ஆங்கி லத் தினசரி ஒன்றினைச் சென்ற வருடம் தற்செயலாக வாங்கிப் பார்த்தான். அதில் அமைச்சர் ஒருவர் ஆணித்தர மாகக் கூறிய கருத்தொன்றினைப் படித்தான். வியப்பும் கேள்விகளும் மனதினுள்ளே ஒன்றாய்ப் பத்தாகப் பெரு கின. கடந்த காலங்களை விட இப்போது இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்திருப்பதாக விகிதா சாரத் தொகையோடு அவர் விளக்கியிருந்தார். அதை அப்போது அவன் அரசியல்வாதிக்குரிய பொய் வார்த்தை யென நினைத்தான். இப்போது நேருக்கு நேராகப் பார்க் கிறபோது, சந்திக்குச் சந்தி காணப்படுகிற சாவடிகளை யும், மீசையே அரும்பிடாத இளமுகங்களையும் பார்க்கிற போது அது, அந்த அமைச்சரின் வாக்கு மூலம் உண்மை யென்றே கொள்ளத் தோன்றுகிறது. இனந்தெரியாத கவலையோடு மனதினுள் உதிர்ந்தது சிரிப்பு.
'அண்ணா.
யோசனை கலைந்தான்.
எதிரே உதயன்.
என்ன?
புன்னகையோடு கேட்டான்.
'வீட்டுக்காரனோடு பொலிசில் பதியப் போவது தள்ளிப் போகிறது. திடீர் திடீரென்று சோதனை நடக்கிறது. அந்த ஆள் வந்ததும் செய்ய வேணும். உதயன் நிதானமாக அவனைப் பார்த்தான்.
'உதயா, நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். நான் இந்த நாட்டுப் பிரஜை அல்ல. சுவிற்சலாந்துப் பிரஜை. இந்த நாட்டுப் பிரஜைகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்னை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
உதயனின் முகத்தில் புன்னகை. அறியாமை நிறையப் பெற்ற ஒருவனுக்காக வெளிப்படும் புன்னகை. இரக்கமான அபிப்பிராயம். அவனை உதயனின் பார்வை மேலுங்கீழு LDT35 s),6Tbgbg5).
ஆனால். இழுத்தான்.
"சொல்லும்? சிவசாமியின் குரலில் கனிவு.
ஆனால் நீங்கள் ஒரு தமிழன்'
யாராக இருந்தாலுமென்ன சட்டம், சட்டந்தானே.
அழுத்தமாகக் கேட்டான் சிவசாமி.
நீங்கள் நன்றாகப் படித்தவர் தானே. நானா இதை உங்களுக்குச் சொல்ல வேணும்.
இல்லை . சொல்லும் . கூறி முடிக்கவில்லை அவன்.
அவர்கள் சென்ற வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சோதனைச் சாவடி, u
இறங்குங்க. சிங்களத்தில் சொன்னான் சிப்பாய் தடித்த குரலில், இன்னொருவன் துப்பாக்கியைப் போல அஃறிணையாகத் தெரிந்தான். பாஸ்போர்ட் நீட்டியவனை மேலுங்கீழுமாகப் பார்த்தான் சிப்பாய். அடையாள அட்டையை நீட்டிய இன்னொரு ஆளை, அதைப் பார்க்காமலே சைகை காட்டி சிங்களத்திலே ஏதோ கூறி அவனைப் போக விட்டான். இவனைப் பார்த்து 'ஐசி
GGSG

என்றான். சிப்பாயைப் பார்த்து ஆங்கிலத்திலே தனக்கு அடையாள அட்டை தேவையில் லை. நான் சுவிற்சலாந்துப் பிரஜை என்று கூறினான். சிப்பாய் கோபத்தோடு அவனை ஏறிட்டான். மட்ட ஜாதிக ஹந்தனும் பத்த சகா பொலிஸ் வார்த்தாவ வென்வன்ன வெனுவா, நத்னங் ஏக்க நீதியிங் வறதா’
இவனுக்கு அருகே நின்ற வயதான ஒருவர், சிங்களவராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சொன்னார்.
உங்களுடைய அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவையும் காட்டச் சொல்கிறான். அவை இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாம்.
வயதானவருக்கு தன்னை அறிமுகப்படுத்திய சிவசாமி, தனது நிலை பற்றி சிங்களத்தில் சிப்பாய்க்கு கூறுமாறு அவரிடம் கேட்டான். அவரது முகம் சுருங்கிற்று. சட்டென்று அங்கிருந்து போய் விட்டார். போகும் போது அவர் முணுமுணுத்தது அவனது காதோடு கேட்டது, நான் இப்படிய்ான சிக்கலுள் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.
அப்போது அங்கே இன்னொருவன் வந்தான். அதிகாரியாய் இருக்க வேண்டும், சிப்பாய் அவனிடம் ஏதோ சொன்னான். அதிகாரி ஆங்கிலத்திலே சிவசாமியிடம் கேட்டான்: ‘என்ன விஷயம்? சிவசாமி யாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். அதிகாரி கவனமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கண்களைச் சுருக்கியவாறு அவனைப் பார்த்தான்.
ஆனால் நீ ஒரு தமிழன் தானே. சிவசாமிக்கு எரிச்சில் பெருகிற்று. '.ம் ம் ம். ஆனால் இந்த நாட்டுப் பிரஜை இல்லை. பிறகு எதற்காக இங்கு வரவேண்டும்? நையாண்டியாக அதிகாரி அவனைப் பார்த்தான். 'எனது உறவினர்களைப் பார்க்க வந்தேன். அதிகாரி எரிச்சலூட்டும் விதத்திலே சிரித்தான். சிவசாமியின் மனதுள் ஆத்திரம் கொழுந்து விட்டெரிந்தது. உடம்பே எகிறுவதை உணர்ந்தான். முகத்தில் ஆத்திரம் சிவந்தது.
"இந்த நாட்டுப் பிரஜை இல்லை என்கிறாய். பிறகு உனக்கு எப்படி இங்கே உறவினர்கள் இருக்க முடியும்.”
ஆத்திரம் எல்லை கடந்து போயிற்று அவனுக்கு. 'இப்போ நான் என்ன செய்ய வேண்டும்? அதிகாரி தலையைச் சொறிந்து கொண்டான். 'உன்னைப் பற்றி யாரிடம் விசாரிக்கலாம்? சட்டென்று சொன்னான் சிவசாமி. சுவிற்றலாந்து “எம்பசியில் விசாரிக்கலாம். நானே அவர்களோடு வேண்டுமானால் தொலைபேசியில் பேசுவேன்.'
அதிகாரியின் முகம் மாற்றங் கண்டது. சிவசாமியை உறுத்துப் பார்த்தான். பின்பு அவனுடைய 'பாஸ்போர்ட் டை வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பிக் கொடுத்தான்.

Page 66
நீ போகலாம். தங்கியிருக்கும் முகவரியைத் தர வேண்டும்.
அவன் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரன் திசநாயக்கா நல்ல மனிதன். தனது வீட்டிலே ஆறு ஆண்டுகளாகக் குடியிருக்கும் தியாகராசா, மாதம் பிறந்த மூன்றாம் நாளே வாடகைப் பணம் கொடுத்து வருவதால் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான். அங்கே இன்னொருவரான சிவசாமியை தியாகராசா தங்க வைப்ப தாகச் சொல்லி அதற்காக இன்னும் ஐந்நூறு ரூபா அதிகமாகத் தருவதாகக் கூறியதும் அதற்கு சந்தோஷ மாக ஒப்புக் கொண்டான். ஆனால் பொலிஸ் பதிவு அவசியமென்றான். மறுநாட்காலையில் காலியிலுள்ள திசநாயக்காவின் அண்ணன் காலமானதும் அவசர அவசர மாகக் காலிக்குப் புறப்பட்டுச் சென்று ஏழு நாட்களின் பின் இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். களைப்பை ஆற்ற தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது சடசடவென்ற சத்தத்துடன் உள்ளே நுழைந்தனர் சிப்பாய்கள்.
திசநாயக்காவின் உடல் வெட வெடவென்று நடுங்கிற்று. அப்போது சிவசாமி வெளியே வந்தான். திசநாயக்காவைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"ஏன் பயப்படுகிறீர்கள்? என்றான். இராணுவ அதிகாரி சத்தமிட்டான். 'ஐ.சி காட்டுறதுங். சிப்பாய் ஒருவன் சிவசாமியைக் கேள்வியோடு பார்த்தான். சிவசாமி அறையினுள்ளே ஃபோய் தனது ‘பாஸ்போர்ட்டை எடுத்து வந்து அதிகாரியிடம் கொடுத்தான். அதைப் பார்த்து விட்டுத் திருப்பிச் சேர்த்த அதிகாரி சாதாரணமாகக் கூறினான்:
நீங்கள் பொலிசிலும் பதியவேண்டும். அவர்கள் போனதும் திகைத்துப் போயிருந்த திசநாயக்காவை பரிவோடு நோக்கினான் சிவசாமி.
"எதற்கு இப்படிப் பயந்தீர்கள். இல்லை. இவர்கள் கூட்டிச் சென்றால். அது நரகம், ஒருமுறை பொலிஸ் ஸ்டேஷனுக்கு நான் முறைப்பாடு செய்யச் சென்றேன். வீட்டுக்குத் திரும்பி வந்து ஒரு கிழமையாகக் காய்ச்சலில் படுத்திருந்தேன்."
'ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? திசநாயக்கா யோசித்தார். பிறகு தனக்குத் தானே கூறுவது போலச் சொன்னார்.
'சின்ன வயதில் நடுச்சாமத்திலை நானும் காமினியும் பந்தயம் கட்டி சுடுகாட்டிலை எத்தனையோ தரம்போய் இருந்திருக்கிறோம். காமினி அரசியலுக்குப் போனான். ஒரு நாள் களனியிலை அழுகிய பிரேதமாய் மிதந்தான். தெரியேல்லை. ஏன் இப்படி நான் ஆகிப் போனேன் என்று தெரியேல்லை.
ஆங்கிலம் கொச்சை தட்டிற்று. நல்ல காலம். வந்த அதிகாரி நல்ல ஆள். அல்லாவிட்டால் நாங்கள் இருவரும் ஏதாவது ஒரு பொலிஸ் நிலையத்துக்கு கூட்டிப் போகப் பட்டிருப்போம். நாளை காலை முதல் வேலையாகப் பொலிஸில் பதிய

வேண்டும் மனதினுள்ளே சிரித்துக் கொண்டான் சிவசாமி. கண்டி என்ற அழகிய கனவின் மீது தூசியும் அழுக்கும் படிந்துள்ளது போல சிவசாமிக்கு உணர்வு தட்டிற்று. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற போது நெஞ்சைப் பறித்தெடுக்கும் நீல மலைகளையும், வளைந்து ஒடும் மகாவலியையும், வண்ணங்களைத் தூவி நிற்கும் செடிக் கூட்ட்ங்களையும், மலைகளைச் சுற்றி மெல்லவே புரளும் சோம்பல் மேகத்திரளையும், சிலிர்த்துச் சிதறும் மழைத் துமியலையும் பார்த்து உணர்ந்து பரவசமெய்திய நாட்களெல்லாம் இப்போது பழங்கனவாகி விட்டாற் போல உணர்ந்தான் சிவசாமி. மனதுள் வெறுமை பரவிற்று. விதிகளின் நெருக்கத்தில், ஆளை ஆள் பார்க்கையில் நம்பிக்கையினம் ஒளிவின்றித் தொனித்தது.
கொழும்பு பஸ்ஸில் ஏறினான். அருகே இருந்தவனோடு மெல்ல அறிமுகம் உண்டாயிற்று. பொன்னையா மலைநாட்டு இளைஞன். மெல்லிய குரலிலே கதைத்தான். பஸ் கண்டக்டர் டிக்கட் கொடுக்க வந்தான். பொன்னையா ஐந்நூறு ரூபாவைக் கொடுத்தான். மிகுதியை டிக்கட் கொடுத்து முடிந்ததும் தருவதாகச் சொன்னான் கண்டக்டர். பொன்னையா மெளனமானான்.
அரைமணி நேரம் போயிற்று. கண்டக்டர் திரும்பவும் அருகே வந்தான். பொன்னையா அவனைக் கேள்வியோடு பார்த்தான். பிறகு தருவேன் என்று சைகையால் கூறிவிட்டு பின்பக்கமாகப் போனான் கண்டக்டர். பொன்னையாவின் முகம் சோர்ந்து சுருங்கிற்று.
பஸ் போகையில் ஒரமாகப் பார்த்தான் சிவசாமி. முன்பு பழங்களும் பச்சைக் காய்கறிகளும் நிறைந்திருந்த இடங்களில் இப்போது தண்ணிர்ப் போத்தல்களும், வண்ண வண்ணப் பக்கெற்று களில் கொறிப்புத் தீனிகளும் தொங்கின. சில எருமைகள் நிலத்தில் சிதறியிருந்த கொறிப்புத் தீனியின் வெறும் பைகளை அதக்கி அதக்கித் தின்று கொண்டிருந்தன.
திடீரென்று அருகே கேட்ட சத்தம் சிவசாமியைத் திரும்ப வைத்தது. திரும்பினான்.
பொன்னையாவின் சட்டையைப் பிடித்து உலுப்பிக் கொண்டிருந்தான் கண்டக்டர்.
அதிர்ந்து போனான் சிவசாமி. எழுந்து பிடித்துத் தனியாக்கினான்.
கண்டக்டர் சிங்களத்தில் கத்தினான். பஸ்ஸில் இருந்த அனைவரும் மெள்னமாயிருந்தனர். இந்த விஷயங்களில் எதிலுமே சம்பந்தமில்லாமல், தாங்கள் வேறெங்கோ இருப்பது போல அமர்ந்திருந்தனர்.
பொன்னைய கவலையோடு சொன்னான்: ‘ஐயா, நான் பஸ்டிக்கற்றுக்குரிய பணத்தை மட்டுந்தான் கொடுத்தேனென்று.
கண்டக்டர் சொல்லுகிறார். ‘என்ன? அதிர்ந்தது சிவசாமியின் குரல். நான் உனக்கு சாட்சியென்று அவனிடம் சொல்லு. பொன்னையா அதைச் சொன்ன மறுகணம்ே.
t ar XV

Page 67
கண்டக்டர் அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான். பிறகு விறுவிறுவென்று டிரைவரின் அருகே சென்று சத்தமாகக் கத்தினான்.
பஸ்ஸில் இருந்த அனைவரும் மெளனமாயிருந்தனர். ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசாமல் மெழுகுச் சிலைகளாக,
கொஞ்ச நேரத்தில் பஸ் , பொலிஸ் நிலையமொன்றினுள் வந்து நின்றது.
டிரைவரும் கண்டக்டரும் உள்ளே போய் இரண்டு பொலிசாருடன் அங்கே வந்தனர். பொன்னையாவை கண்டக்டர் அடையாளம் காட்ட, ஒரு பொலிஸ்காரன் அவனை இழுத்துக் கீழே இறக்கினான். ஏளனமாக அவனைப் பார்த்த கண்டக்டர் சிவசாமியை வெறுப்போடு ஏறிட்டான்.
சிவசாமிக்கு தன் மீது அடங்காத வெறுப்பு வந்தது.
வரப்புயர மழைபொழிய்
காற்றாட்ட காடாட வன்னிமையின் இமையொப்பும் வயல்களிலும் மீ வன்னிமையும் வாழ்ந்ததையா வந்தார்கள் முன்னோர்கள் சேர்த்து வைத்த கொம்பறை விதை காண்டாவனம் விரட்ட வந்தார்ை வரவேற்கும் வற்றாப்பளை விலக்கி கனதாரம் ஓடி வந்தேன் எனதருகே நடந்திருந்த கடல்நந்திவற்றியதாய் வ புலம்பெயர்ந்த இவ்வடவுருவப்புல்வெளியில் யாரோ இருவர் எதிரெதிரே இருந்துரைக்க அருகருகே இருக்கை ! யாரொருவர் இல்லோன் நான் எதிரெதிரே இருந்துரைக்க அருகருகே இருக்கை இப்புலம் பெயர்ந்த புல்வெளியில் மரநிழலொன்றில் கிடந்து உயிரறும்பசுவொன்று இரை மீட்டு அசை போடல்போல் இக்குளிடை குந்தியிருந்த குமுறும் இப்பழம் பசு நினைவசைத்தல் போலும் எண்மனம் போடுமசையால் நெஞ்சுநோவேன்.
என் கவினுறுநாடே "நீ இழந்ததோ என்னை மட்டும்தான் போ நானிழந்ததோ பல்கோடி உன் மணிகளன்றோ" யாரொருவர் இல்லோன் நான் கடல்நந்தி வற்றிய இப்புலம் பெயர்ந்த புல்வெளியில் எதிரெதிரே இருந்துரைக்க இப்புவியில் ஏனோதான் ஏனோதான் இருக்கை செய்தேன். நிர்வாணமாய் கருவறையில் இருந்ததொப்ப வாழ்விலும் நிர்வாணமே பெரிதென்க தோழர்காள்.

பொன்னையா இப்போது எப்படி இருப்பான், என்ன நடந்திருக்கும் என்ற கேள்விகள் மனதினைக் குடைந்து வேதனைப்படுத்தின. வேதனை மெல்லவே கேள்விகளை எழுப்பிற்று. பொன்னையா இறக்கப்பட்ட போது தானும் இறங்கி பொலிஸ் ஸ்டெஷனில் சாட்சி சொல்லி அவனை விடுவித்திருக்க வேண்டும். அதைச் செய்யாதது பெரிய தவறல்லவா என்று மனதினுள்ளிருந்து சத்தம் கேட்டது. ஏன் அப்படிச் செய்யவில்லை. குரல் பெருகிற்று. அவற்றிடையே திசநாயக்காவின் மெலிந்த சத்தமும் கேட்டது. திசநாயக் காவைத் தான் கேட்ட கேள்விகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தன்னைச் சுற்றிச் சுற்றிக் குரலிடுவதாக சிவசாமிக்கு உணர்வு தட்டிற்று. நெற்றியைக் கைகளால் அழுத்திக் கொண்டான். ஆனாலும் குரல்கள் ஒயவேயில்லை. இப்போது கனகேஸ்வரனின் வார்த்தைகளையும் அக்குரல்களிலே சிவசாமி அடையாளம் கண்டு கொண்டான்.
ாடி நான் மனம் நொந்து
செய்தேன்.
செய்தேன்.
தாய்
இருக்கை செய்தேன்.

Page 68
மொழி பண்பாடு பற்றிய ஒ 1961 முதல் 2000 வரைய
- சாரல்நாடன் -
1960ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை தமிழ் விழா ஒன்றை நடாத்தியது. அவ்வேளையில் வெளிவந்த தமிழ் விழாமலரில் 'இலக்கியமும் மலைநாட்டு மக்களும்' என்ற கட்டுரையில், தற்போதைக்குக் குறிப்பிட்டுக் கூறுவதற்கு ஒன்றுமில்லை, எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இந்த நம்பிக்கையூட்டுவது பொதுவாக கூறப்பட்டதுதான் என்று ஒதுக்கப்பட முடியாது என்பதற்கு இந்தக் கருத்தைச் சொன்னவர் மக்கள் கவிமணி ஸி.வி. வேலுப்பிள்ளை என்பவராவார் என்பதாகும்.
1960 வரையிலும், தன்னுடைய குடும்பப் பின்னணியிலும், இதற்கும் மேலாக தனது தனிப்பட்ட மொழி ஆற்றுமையாலும் இலக்கிய உலகில் ஓரிடத்தைச் சொந்தமாக்கி வைத்திருந்தவர் ஸி.வி. வேலுப்பிள்ளை யாவர். அந்தக் காலக் கட்டத்துக்குள் தன்னுடைய வாழ்வற்ற வாழ்வு' எனும் தொடர் நவீனத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் பத்திகை வாயிலாகத் தொடர் நவீனமாகத் தந்திருந்தவர் அவராவர். இப்படி ஒரு தொடர் நவீனத்தை இரண்டு பாகங்களாக, முதற்பாகம் 11 அத்தியாயம், இரண்டாம் பாகம் 19 அத்தியாயம் எழுதும் அளவுக்கு அவரது மலையகப் பரிச்சயம் இருந்தது. இலக்கிய உலகில் புதியவராக அறியப்பட்டவர்களும் அவரது இலக்கிய அறிவுக்கு உரிய மதிப்பளித்தனர். க. கைலாசபதி, சில்லையூர் செல்வராஜன், சு. வித்தியா னந்தன், கா. சிவத்தம்பி என்பவர்களுடன் இர. சிவலிங்கம், எஸ்.எம். கார்முேகம், இரா. நாகலிங்கம் என்ற மலையக இலக்கிய முன்னோடிகளும் அவரை மலையகத்தின் சிரேஷ்ட கவிஞராகவும், இலக்கிய கர்த்தாவாகவும் முன் னிறுத்தினர். கூடவே அவரை ஒரு தொழிற்சங்கவாதி யாகவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸிலும், பின்னர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்ஸிலும் பணியாற்றிய அவர் தன் நண்பர் வெள்ளையனையும் இணைத்துக் கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தோற்றுவித்து சாகும் பரியந்தம் அதன் வெற்றிக்காக உழைத்தார். இதனால் அவரது வாழ்க்கை மலையக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து வந்ததாக இருந்தது. தோட்டப்புற மக்களைப்பற்றிய ஆங்கில ஆய்வு நூல்களில் கோ. நடேசய்யர், ஸி.வி. வேலுப்பிள்ளை என்ற இரண்டு பேரின் நூல்களே உதாரணங் காட்டப்பட்டு வந்துள்ளன என்பதும்
 

கவனிக்கத்தக்கது.
மலையகத் தொழிலாளியின் பலம் அவர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்க பலமாகும். அந்தப் பலத்தை இ.தொ.கா. முறையாகப் பயன்படுத்தியதா,? என்பதில் அபிப்பிராய பேதங்களிருக்கின்றன. அந்தப் பலத்தை அப்படியே வளரவிடக் கூடாதென்பதில் இனவாதிகள் பலரும் அக்கறை காட்டியே வந்திருக் கின்றனர். அவர்களின் அகம் மகிழத்தக்க விதத்தில் 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் அமைந்தது. 1964ல் நிறைவேற்றப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தால் இந்த மக்கள் அரசியல் பலத்தை இழந்து போனார்கள். 1964ல் நிறைவேற்றப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத் தால் இந்த மக்களின் குடிசனத் தொகையில் ஐந்தரை லட்சம் பேர் இல்லாது போனார்கள். இந்த ஒப்பந்தம் இ.தொ.கா வின் கலந்தாலோசிப்பின்றியே நடைபெற்றது. எனினும், இதை எதிர்க்கும் எவ்வித முயற்சிகளும் செய் யப்படவில்லை. புத்திஜீவிகளின் எதிர்ப்பு இதற்கு வெகு பலமாக இருந்தது. மாலைமுரசு, செய்தி ஏடுகள் கட்டுரை களையும் கவிதையையுந் தாங்கி வெளிவந்தன.
மலைநாட்டு வாலிபர் சங்கம் (1960) இவர்களின் பாசறையாயிற்று. இர. சிவலிங்கம் இவர்களின் தளபதி யானார்.
"கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்” என்ற குறளுக்கு விளக்கமாய் அமைந்திட்ட பேச்சாளன். தொண்டமானை எதிர்த்தும், ஒப்பந்தத்தை எதிர்த்தும் மூலைமுடுக் கெல்லாம் அவரின் குரல் எதிரொலிக்கத் தொடங்கியது. தோட்டங்கள் தோறும்மன்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. படிப்பகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. நூல்நிலையம் தோற்றுவிக்க அனுமதி கிடையாது என்ற துரைமார் சங்கத்தினரின் கட்டளையை மீற முடியாத இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கையை பிசைந்து கொண்டு நின்றது. மலையக இளைஞர் முன்னணி, (1970) மலையக மக்கள் இயக்கம் (1974), மலையக வெகுஜன இயக்கம் (1978) என்ற இயக்கங்கள் பரவலாகத் தோன்ற ஆரம்பித்தன.
தோட்ட லயக் காம்பிராக்களிலும், நகர்ப்புற சலூன்களிலும் தொங்கிய நேதாஜி, நேருஜி,
প্রেজন্দ্রগাসতও।

Page 69
மகாத்மா காந்தி படங்கள் மறைய ஆரம்பித்தன. இந்தியத் தலைவர் களை மறக்க ஆரம்பித்த அவர்களுக்கு இயக்கத் தலைவராக ஒருவர் மாற்றீடாகக் கிடைக்கவில்லை. 1972ல் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. தேசிய மயமாக்கல் என்ற போர்வையில் ‘சிங்களமயமாக்கல் இடம் பெற்றது. அடிமட்ட உழைப்பாளர்களைத் தவிர்த்து ஏனைய மட்டங்களில் இந்தக் கொள்கையே நடை முறைப்படுத்தப்பட்டது. அடிமட்டத் தொழிலாளர்களும் கூட, அளவுமீறிய தேசியமய கண்டர்களால் அவ்வப்போது தாக்கப்பட்டனர். ஜனவசம, அரசபெருந்தோட்டயாக்கம் என்ற இரண்டு நிறுவனங்களுக்குக் கீழ் வந்த தொழிலாளர்கள் ஓரளவு க்கு நியாயமாக நடத்தப்பட்டனர். இவர்கள் பெரு வாரியாகச் சார்ந்திருந்த இ.தொ.கா இயக்கத்தின் தலைவர் அரசாங்கத்தில் மந்திரியாகவும் இருந்தமையால் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையும், அவர்களின் நலன் பேணும் கருமங்களும் பாதுகாக்கப்பட்டன.
இந்த இயல்பான போக்கை மாற்றியமைக்கும் விதத்தில் 1983 ஆடி கலவரம் நிகழ்ந்தது. ஆடிக்கலவர நிகழ்வுதான், முழு இலங்கையிலும் திட்டமிட்ட விதத்தில் தமிழினத்துக்கெதிராக நடைபெற்ற நிகழ்ச்சியாகும். இன சங்காரமே நடைபெற்றது. மலையகத்து இளைஞர்களை முன்னின்று வழி நடாத்திய பலர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். எஞ்சி இருந்தவர்கள் எப்படி இந்த நாட்டில் வாழ்வது என்ற வினாவுக்கு விடை தேடலாயினர். எந்த ஒரு செயலுக்கும் எதிர் விளைவுண்டு.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் ஓடிக் கொண்டிருந்த ராமானுஜம் கப்பல் சேவையை 1984ல் இடைநிறுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டது. அதை நம்பிக் கொண்டு தமது நாட்களை எண்ணிக் கொண்டு வாழ்ந்த இந்திய பாஸ்போர்ட்டாளர்களும் இந்த நாட்டிலேயே தொடர்ந்து வாழ வேண்டிய நிலை உண்டாயிற்று.
இலங்கையில்தான் இருந்தாக வேண்டும் என்ற சூழல் தோன்றியபோது, இலங்கையிலேயே தம்மை நிலை நிறுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். கால த்துக்குக் காலம் ஏற்படும் வன்செயல்கள் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கும். v கரை மேவும் அலைகளென இதற்கு மத்தியில் தான் தமது வாழ்வு அமைய வேண்டும் என்பதை இளைஞர்கள் உணர்ந்தனர். தாக்குதலே, தற்பாதுகாப்புக்கான ஒரே வழி என்பதை தலைவர்களும் உணர ஆரம்பித்தனர்.
1988ல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலவரங்களால் தமிழர்களின் கணிசமான வாக்குகளைப் பெறுபவர்களே அதிகாரத்துக்கு வரும் நிலைமை üණු இந்த நிலைமையை மறைந்த

தொண்டமான் நன்கு பயன்படுத்தி, நாற்பது வருடங்களின் பின்னர் மலையக மக்களின் இழந்த வாக்குரிமையை பெறும் வழிவகை களை மேற்கொண்டார். அவரது தலைமையில் மலையக மக்களுக்கு கிடைத்த இந்த வாக்குரிமையை ஒரு பெரும் வெற்றியாகவே கொள்ள வேண்டும். தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு மலையக மக்களுக்கு இருந்த தளை அகற்றப்பட்டது. அறுபதுகளின் பின்னால் இலக்கிய உலகில் ஒரு புதிய மாறுதல் தோன்றினாலும், 1965ல் அவர்கள் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் ஒன்றை அமைத்ததாலும் அதன் இயக்க ரீதியான செயற்பாடு 1971ல் ‘கதைக் கனிகள்’ என்ற தொகுதியினால்தான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதன் பின்னால் 1979ல் தான் "தோட்டக் காட்டினிலே’ என்ற இன்னொரு சிறுகன்தத் தொகுதி வெளிவந்தது. தங்களது சமூகத்தின் செயற்பாடுகளை ஆவணமாக்கித் தருவதில் மலையக சமூகம் இவ்வளவு காலத்துக்குப் பின்னரும் பின்தங்கியேதான் இருக்கிறது என்ற குற்றவுணர்வு சிலரைச் செயற்படத் தூண்டியது. தமது சமூக மேம்பாட்டுக்காக உழைத்தவர்களை கனம் பண்ணத் தொடங்கினர். ஆவணக் காப்பகத்தைப் பயன்படுத்தி சான்றுகளை வெளிக் கொணர்ந்தனர்; இலக்கிய கர்த்தாக்களைக் கனம் பண்ணி அவர்களின் நூல்களை ஆதரிக்கத் தொடங்கினர்.
1986ல் அமைச்சர் ராசதுரையைக் கொண்டு ஏழு இலக்கிய கர்த்தாக்களையும் 1996ல் பதினைந்து கலைஞர்களையும் கெளரவம் செய்தனர். 1991ல் கண்டி திரித்துவக் கல்லூரியில் இந்து பண்பாட்டமைச்சு தமிழ்விழா ஒன்றை நடாத்தியது. இந்த மலையகத்துப் புத்தெழுச்சியை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் நிகழ்வாக ஐரோப்பிய தமிழ் மாநாடு ஒன்று 1991ல் ஜெர்மனியில் நடைபெற்றது. மலையகத்து ஆய்வாளர் மு. நித்தியானந்தன் இதை முன்னின்று நடாத்தினார். எண்பதுகளின் பின்னர் கடல் கடந்த நாடுகளில் மலையகப் பணிகள் ஆதரிக்கப்பட்டதும் அங்கீகரிக்கப் பட்டதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். மலையக மக்களின் வழக்காறு பற்றிய, மலையகத் தமிழ் ஆராய்ச்சி பற்றிய இலக்கிய விழாக்களும் கொண்டாடப்பட்டு வருவது உயிர்த்துடிப்போடு அவர்கள் இயங்குவதைத் தெரியப்படுத்துகிறது. 1998ல் இரத்தினபுரி வேவல்வத்தையில் ஏற்பட்ட அழிவை இந்த மக்கள் எதிர்கொண்டனர். இதற்கு முன்புபோல் ஓடவோ, ஒளிந்து கொள்ளவோ முனைய வில்லை. ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இவர் களுக்குத் தலைமை நல்கிய தொண்டமானின் மறைவு, இவர்களுக்கு ஒரு புதிய தலைமை வரவேண்டிய தேவையைக் கொடுத்திருக்கிறது. புதிய தலைமையை, வலிய தலைமையை மலையகம் 2000த் தொடரில் பெறும். - நிச்சயம் நம்பலாம்.

Page 70
அவுஸ்திரேலியால் எழுத்தாளர் வி
படைப்பாளிகளும் கலைஞர்களும் சுதந்திரமான நிபந்தனைகள் விதிக்காமல், குற்றங் குறைகளைத் தே ஆயிரம் பூக்கள் மலரும் நந்தவனத்தில் உலாவப் போகு மிருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆே ஜனவரி 6, 7 ம் திகதிகளில் அவுஸ்திரேலிய மெல்டே - 2001 எழுத்தாளர்களுக்கும்,கலைஞர்களுக்கும் ஓர் எழு தமிழ் இனத்தை அடையாளப்படுத்தி பேணிக் காத்துக் கண்காட்சி, கருத்தரங்கு, கவியரங்கு, கலந்துரையாட நிகழ்வுகளும் விழாவின் நிகழ்ச்சி நிரலிலே இடம் பெ கண்காட்சியில், மறைந்த தமிழறிஞர், படைப்பாளிகள், உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. கம்பர். வள்ளு யாழ்ப்பாணத்தில் மறைந்த பத்திரிகையாளர் நிமலரா பெற்றன.
ஓவியக் கண்காட்சியில் பாரம்பரிய வகை ஓவியங்களு அவற்றில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிறந்து வளர் புத்தகக் கண்காட்சியில் அவுஸ்திரேலியாவில் வாழு எழுத் தாளர்களின் படைப்புக்கள், ஏனைய நாடுகளில் 6 ஆகியவற்றிற்குத் தனித்தனியான பிரிவுகள் இருந்த கண்காட்சியிலே காணக்கூடியதாக இருந்தது.
கருத்தரங்கு முதல் நாள் விழாவில் முக்கியமான நீ
சம்பந்தமான பல்வேறு விடயங்கள் இக்கருத்தரங்குகளி பாலம் லக்ஷமணன், மாவை நித்தியானந்தன், பேராசிரி திரு அம்பி, சட்டத்தரணி த.நா. ஜெகராஜசிங்கம், அ. தலைமை வகித்தனர். ஒவ்வொரு அமர்வுகளிலும் மூவர் லெ. முருகபூபதி, டாக்டர் பொன். சத்தியநாதன், நட்ச திருமதி அருண் விஜயராணி, செல்வி பாமதி சோமசே பூரீஸ்கந்த ராஜா ஆகியோர் உட்படப் பலர் கருத்துை மாலை நிகழ்ச்சிகளி, மல்லிகை அவுஸ்திரேலிய சி ரையை தி. ஞானசேகரன் நிகழ்த்தினார். அவர் த6 விளக்கி, ஈழத்து இதய இலக்கியமாக மல்லிகை தி: அடுத்து இளம் இசைக் கலைஞர்களின் வாத்திய இடம் பெற்றன. தொடர்ந்து த. கலாமணியின் "பூத தயாரித்த "வால்மீகி சிறுவர் வில்லிசை நாடகம், சி மன்றத்தினரின் ஒரு பொல்லாப்புமில்லை' நவீன நாடக மிகவும் உயர்ந்த தரத்தில் அமைந்திருந்தன.
எழுத்தாளர் விழாவில் இரண்டாவது நாள் நிகழ்ச்சி பெற்றன. கவிஞர் அம்பியின் தலைமையில் கவியர தொடர்ந்து யாழ்ப்பாணம் ஒடியற் கூழ் கலை இலக்கி எழுத்தாளர் கலைஞர்களின் கலந்துரையாடல் இடம் ெ எழுத்தாளர் விழா 2002 இற்கான ஒழுங்குகள் பற்றிய ஆ விழாவின் அமைப்பாளர் லெமுருகபூபதி எழுத்தாளர் தெரிவித்தார். - ܢܠ
 

வில் நடைபெற்ற
gg. - 2oo I
தீஞானசேகரன்.
வர்கள். அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல், டிக் கண்டுபிடிக்காமல், மனித நேயத்தை மேம்படுத்தி, b உணர்வுடன், ஆயிரம் சிந்தனைகள் கொண்டவர்களிட ாக்கியமான சூழலை உருவாக்கும் எண்ணத்துடன், Iர்ண் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர் விழா ச்சி விழாவாக அமைந்தது. புலம் பெயர்ந்த மண்ணிலே கொள்வதற்கான முயற்சியே இந்த எழுத்தாளர் விழா. ல், இசை நிகழ்ச்சிகள், நாடக அரங்கு எனப் பல்சுவை ற்றன. கலையிலக்கியத்திற்குப் பணிபுரிந்தவர்கள் ஆகியோரது நவர், இளங்கோ, பாரதி, வீரமாமுனிவர் முதல் இன்று ஜனின் உருவப்படம் வரை இக்கண்காட்சியில் இடம்
நம், நவீனப்படுத்தப்பட்ட ஓவியங்களும் இடம் பெற்றன. ந்த மண்ணின் ஏக்கங்களை வெளிப்படுத்தின.
ம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள், இலங்கை வாழும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் ன. பல நூற்றுக்கணக்கான அரிய நூல்களை இக்
கழ்வாக அமைந்தது. 8 அமர்வுகளில் கலையிலக்கியம் ல் இடம் பெற்றன. இக்கருத்தரங்குகளுக்குத் திருமதி. யர் பொன். பூலோகசிங்கம், டாக்டர் தி. ஞானசேகரன், சந்திரகாசன், சட்டத்தரணி செ. ரவீந்திரன் ஆகியோர் என்ற கணக்கில் கருத்துரைகள் வழங்கினர். இவர்களில் ந்திரன் செவ்விந்தியன், திருமதி ஞானம் ஞானசேகரன், கரம், த. கலாமணி, செ. பாஸ்கரன், சட்டத்தரணி செ. ரகள் வழங்கினர். 3ப்பு மலர் வெளியீட்டுடன் ஆரம்பமாகின. வெளியீட்டு எது உரையில் மல்லிகை சஞ்சிகையின் பணிகளை sழ்கிறது என்றார். விருந்து, வீணைக் கச்சேரி, தாளக் கச்சேரி ஆகியன ந்தம்பி” இசை நாடகம், திருமதி புவனா ராஜரட்ணம் .ணி தமிழ் அரங்கக் கலைகள் சக இலக்கியப் பவர் ம் ஆகியன இடம் பெற்றன. இசை, நாடக நிகழ்ச்சிகள்
கள் மெல்பேர்ண் திறந்த வெளிப் பூங்காவில் இடம் கு அன்றைய சிறப்பு நிகழ்ச்சியாக இடம் பெற்றது. பவாதிகளுக்கு வழங்கப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியாக, பற்றது. அடுத்த வருடம் சிட்னியில் நடைபெற இருக்கும் லோசனைகள் இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டன. விழா சிறப்பாக அமைய உதவிய யாவருக்கும் நன்றி
ಫ್ಲಹಾ

Page 71
அவுஸ்திரேலியா6 இலக்கிய மடல்
முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் வி விழா வெகு சிறப்பாக ஜனவரி 6ஆம் 7ஆய மண்டபத்தில் முதல் நாள் விழா காலை நடந்தது. மறைந்த தமிழ் படைப்பாளிகள், பத்தி கண்காட்சியும், தமிழக புலம் பெயர்ந்த நா நூல் கணிகாட்சியும் மல்லிகைப் பந்தல் கண்காட்சிகளை பேராசிரியர் பொனர் பூே வெட்டித் திறந்து வைத்தார். விக்ரோறியா மா ஒவியக் கண் காட்சியும் ஒவியர் தனசிங்கத் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. கா கருத்தரங்கு மாலை 6 மணி வரையில் தொட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இலங்ை லண்டனிலிருந்து யமுனா ராஜேந்திரனும் சகல கட்டுரைகளும் கணனியில் பதிவு ெ எழுத்தாளர் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட ஆரம்பமாகின. விக்ரோறியா மாநில வெகுஜன வழங்கினர். இலங்கையிலிருந்து வருகை த அவுஸ்திரேலிய மலரை வெளியிட்டு வைத்து கால அபிமானியும், வாசகருமான Dr. த. வ (கல்லடிவேலனி) பேத்தி திருமதி ராணி த சிவநாதன், ஜெயானி ஜூவல்லர்ஸ் உரிமை பிரதியைப் பெற்றுக் கொண்டனர். சிட் பொல்லாப்புமில்லை, மெல்பன் இளம் கலைஞ இசைகளின் சங்கமமென்ற வாத்திய விருந்து 6(6i BANDOORA PARK g6) goods, 6)66f கவியரங்கும் கலந்துரையாடலும் நடைபெற் நாடுகளிலிருந்து பலர் வந்து கலந்து கொன
ஒடியல்கூழ் விருந்தும் நடைபெற்றது குறி

சிக்ரோறியா மாநிலத்தில் தமிழ் எழுத்தாளர் b திகதிகளில் நடைபெற்றது. Preston நகர 9 மணி முதல் இரவு 1 மணி வரையில் திரிகையாளர்கள், கவிஞர்களின் புகைப்படக் டுகளில் வெளியாகும் இதழ்கள், மலர்கள் வெளியீடுகளுடன் நடைபெற்றன. இக் லோகசிங்கம் சம்பிரதாயபூர்வமாக நாடா நிலத்தில் வதியும் இளம் தலைமுறைகளின் தின் (எழுத்தாளர் சுதாராஜின் சகோதரர்) லை 10 மணிக்கு ஆரம்பமான இலக்கியக் டர்ந்தது. எட்டு அமர்வுகளில் மொத்தம் 24 கையிலிருந்து தெளிவத்தை ஜோசப்பும், கட்டுரைகளை அனுப்பி வைத்திருந்தனர். )சய்யப்பட்டு, தனித்தனி கோவைகளாக து. மாலை 7 மணிக்கு இரவு நிகழ்ச்சிகள் ன அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரை நந்திருந்த Dr.தி. ஞானசேகரன் மல்லிகை து உரையாற்றினார். மல்லிகையின் நீண்ட ாம தேவன், ஆசுகவி வேலுப்பிள்ளையின் 3ங்கராஜா, இலக்கிய அன்பர் திரு. ஆர். யாளர் திரு. பிரபாகரன் ஆகியோர் முதல் னி கலைஞர்களின் “பூதத்தம்பி", "ஒரு நர்களின் வால்மீகி முதலான நாடகங்களும், து நிகழ்ச்சியும் நடைபெற்றன. இரண்டாம் ப் பூங்காவில் கவிஞர் அம்பி தலைமையில் றன. மெல்பேனி, சிட்னி, கண்பரா முதலான ண்டனர்.
Pப்பிடத் தக்கது.
- முருகபூபதி

Page 72
எனக்கு அடையாளம் வில்லை அந்த வீட்டை ஒரு இந்த ஒழுங்கையில் சயிக்கிளி பனையோலை வேலிக்கும் கி வெடிப்பும் உடைவும், அரையு கிடந்த வீடு. இப்போது வெளி தடித்த, மெல்லிய சொக்கிலே தொடும் வண்ணம் ரம்மியமாக
அழைப்பிதழ் ஒன்று வரும் வந்து அவள் எனக்குத் தந்: களுக்கு மாத்திரமல்லாது, கொடுக்கக்கூடிய அழைப்பி அழைப்பிதழின் பெறுமதி இ குறையாமல் இருக்கும். தன் இந்த அழைப்பிதழ் இருக்கி எண்ணியிருக்கக் கூடும்.
அவள் அழைப்பிற்குரிய ஐந்து மணிக்கு விருந்து இரண்டு மணிக்கே என்னை எனக்கு ஆச்சரியம், மூன்று அல்லவா வரச் சொல்லுகின்ற போய்ச் சேர்ந்து விட வேண்டு இங்குள்ள குடிமகன் வரி பிடிக்கிறவனைக் காணயில் எடுத்தெறிந்து பேசுவார்கள். பட்டுவிட்டால் நாக்கைப் வேண்டும் போல அப்போது
கமராவைத் தோளில் ெ இந்த வெயிலில் சயிக்கிளி எதிர்பார்த்து அவள் காத தூரத்தில் என் உருவம் க 'கேற் றைத் திறந்து ஓடி 6
அவளைக் கண்டு ஒரு போகிறேன்.
அவளா, இவள்? இனம் கண்டு கொள்வத எனக்கு.
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டு கொள்ள முடிய மாத காலத்துக்கு முன்னர் iல் நான் போயிருக்கின்றேன். டுகுப் படலைக்கும் உள்ளே ம் குறையுமாக அழுக்காக்க் மதில், 'கேற் றோடு எல்லாம் ற் வண்ணங்களில் மனசைத் 5 அது காட்சி அளிக்கிறது. போது கையோடு கொண்டு திருக்கின்றாள். விருந்தினர் மற்றவர்களுக்குச் சும்மா தழ் அல்ல அது. அந்த இருபத்தைந்து ரூபாவுக்குக் பெருமைகளுக்குச் சான்றாக க வேண்டுமென்று அவள்
விருந்தாளி அல்ல நான். க் கொண்டாட்டம். ஆனால் வரச் சொல்லி இருக்கிறாள். மணி நேரம் முன்னதாக ாள். அழைத்த நேரத்துக்குப் ம், தாமதித்தால் என்னையும் சையில் வைத்து படம் லை' என்று இளக்காரமாக அந்த வார்த்தைகள் காதில் பிடுங்கிக் கொண்டு சாக
மனசில் தோன்றும். தாங்க போட்டுக் கொண்டு ல் கிளம்பி விட்டேன். ந்து நின்றிருக்க வேண்டும். ண்ணில் பட்டதும் வெளிக் வருகின்றாள்.
கணம் நான் திகைத்துப்
நற்கு இயலாத தடுமாற்றம்

Page 73
*மெல்லிய இளம் பச்சை வண்ணப் பஞ்சாப்பியில் பட்டாம் பூச்சியாகச் சிறகடித்து நிற்கின்றாள். அவள் வயதில் ஐந்து ஆண்டுகளை அந்த ஆடை அலங்காரம் அப்படியே விழுங்கி விட்டிருக்கிறது.
"வாங்கோ. வாங்கோ. அவளுக்கு முகம் கொள்ளா மகிழ்ச்சி. மனங் கொள்ளாக் குதூகலம்,
அவள் சொன்ன நேரம் தவறாமல் நான் வந்து சேர்ந்து விட்டேனல்லவா! நான் வராமல் இருந்து விடுவேனோ! என்று அவள் அச்சங் கொண்டிருக்க நியாயமில்லை. சிலசமயம் தாமதமாக வரக்கூடும் என்ற ஐயம் மனசில் இருந்திருக்க வேண்டும். எனக்கும் இன்று இடையூறு ஏதும் இருக்க மாட்டாது. வீடியோக்காரர் வந்தால் சபை முழுவதும் நிறைத்துக் கொண்டு நிற்பார்கள். நான் எங்காவது ஒரு மூலை பிடித்து ஒதுங்கி நின்று, வேமாகப் படங்களை அடித்துக் கொண்டு நிற்க வேண்டும். அப்படி யொரு கேவலநிலை இன்றைக்கு இல்லை. ஆனால் மூன்று மணி நேரம் முன்னதாக வ்ரச் சொல்லி இருக்கின் றாளே! அது ஏனென்றுதான் எனக்கு விளங்கவில்லை. என்னைக் கனம் பண்ணி அவள் வரவேற்ற பாங்கு எனக்குச் சிரிப்பு மூட்டுகிறது. தன்னில் மூத்தவன் அல்லது தன் வயதுக்காரனாக அவள் என்னைப் பாவனை பண்ணுகின்றாள். தான் ஓர் இளையகுமரியென என்முன் னால் நின்று பவ்வியமாக நாணிக் கோணி நளினம் பண்ணுகின்றாள்.
வெளிக் கேற்றில் இருந்து வீட்டு வாசல் வரை வரிசையாக இரு பக்கங்களிலும் சீமெந்துப் பூச்சாடிகளில் குளுகுளுவென வளர்ந்து நிற்கும் குறோட்டன்கள், பூமரங்கள்.
இரண்டு அறைகளோடு இணைந்து குறுகிக் கிடந்த திறந்த விறாந்தை அகலித்து சுவரெழுப்பி மூடிக்கட்டி கதவு யன்னல்கள் போட்டு வீடு நவீனிக்கிறது. கதவுகள், யன்னல்கள் எங்கும் தொங்கும் வண்ணச் சேலைகள், நெளி நெளித்து பளபளக்கும் வண்ண வண்ண ஈயத்தாள் கள், ஊதிப்பருத்த பல வண்ண பலூன்களால் அந்தச் சிறிய கூடம் அலங்கரித்து நிற்கிறது. உள்ளே வரிசையாகக் கதிரைகள், கண்ணைக் கவரும் வெளி நாட்டு வெல்வெற் கம்பளம் மூடிக்கிடக்கும் ஒரு மேசை நடுவில் கதிரை ஒன்றில் என்னை அமரவைத்துவிட்டு அவசரமாக அவள் ஒரு அறைக்குள் நுழைகின்றாள்.
அவள் தங்கை குளிர்பானத்தை வெள்ளி றேயில் வைத்து எடுத்து வந்து கனிவாக எனக்குத் தருகின்றாள். நன்றி நான் கையில் கிளாசை எடுத்துக் கொள்ளு கின்றேன். இந்த வெப்பத்துக்கு இந்தக் குளிர்பானம் இப்போது எனக்குத் தேவைப்படுகின்றது. ஸ்ரோவை வாயில் வைத்து மெல்ல மெல்லப் பருகுகின்றேன். ஐஸ் போட்ட குளிர்பானம், ஆகா! அருமையாக இருக்கிறது. அனுபவித்துச் சுவைக்கின்றேன். குளிர்பானம் தந்து உபசரித்தவளுக்கு அடுத்து இன்னொரு தங்கை, கடைக்குட்டியாக ஒரு தம்பி. அவர்கள் இருவரும் எங்கே போனார்கள்? வெளியே தேவையாக அவர்களை அவள் அனுப்பி வைத்திருப்பாள். கொண்டாட்டம் ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. அதுவரை

ான்ன செய்யப் போகிறேன்! மனசு சலித்துக் கொள்ளுகிறது.
"தம்பி!” அழைத்துக் கொண்டு அவள் அம்மா அடுக் களைப் பக்கத்தில் இருந்து வருகின்றாள். அவளுக்குப் பின்னே அவள் அப்பா.
“வாங்கம்மா! என்னைத் தெரியுதா? மனசில் எழுந்த ஜபூச்சரியம் கேள்வியாக எழுகிறது.
"சம்பந்தனோடை படிச்ச நீங்கள். இரண்டொரு தடவை இஞ்சை வந்திருக்கிறியள்”
அம்மாவுக்கு நல்ல ஞாபக சக்தி. “தம்பியை எனக்குச் சின்னனிலே தெரியும். உங்கட வீடு கட்டக்கை மேசனோடை நான் கூலி ஆளாக நிணி டனான். அப்ப தம்பி கோமணம் கட்டாத சின்னப்பிள்ளை, எங்கடை சம்பந்தன் அளவு. நான் ஆசையில தூக்கிறனான். தம்பி இப்ப மறந்திருக்கும்.” அவள் அப்பா என்னோடு இன்னும் நெருக்கமாக வந்துவிடுகின்றார்.
இந்த நெருக்கம் இன்று இந்த மண்ணுக்கு ஒரு புதுமையல்ல. பிள்ளைகளைப் பிரிந்து அவர்களை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் பெற்றவர்கள், தங்கள் பிள்ளைகளை ஒத்தவர்களிடம் தம்மை மறந்து ஒன்றிப் போகின்றார்கள். அந்த ஒன்றுதல்தான் இந்த அம்மா அப்பாவிடம். இவர்களுக்கு நான் இப்போது சம்பந்தன். ஞானசம்பந்தன். பெயருக்கேற்ப, சிறுவயதில் ஞானம் பெற்ற சம்பந்தன் அவன். படிப்பில் வெகு சுட்டி, குடும்பப் பொறுப்புணர்ந்து, உழைத்துப் பொருள் தேட வெளிநாடு போய்விட்டான்.
"வீடு வாசலெல்லாம் திருத்தி இருக்கிறியள்” "அவசர அவசரமாக நேத்துத்தான் வேலை முடிஞ்சது தம்பி"
"அக்காவுக்குக் கலியாணமா?" "அந்தக் கூத்தை ஏன் கேக்கிறாய் தம்பி" "என்ன விஷயம்?" "அது .” எதையோ சொல்வதற்கு அம்மா தயங்குகிறாள். தலையைத் திருப்பி எச்சரிக்கையாக வீட்டு அறையை நோக்குகின்றாள். மகள் இன்னும் வெளியே வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு குரலைத் தாழ்த்தி இரகசியம் போலச் சொல்லுகின்றாள்.
"தம்பி, நீங்க எங்கட பிள்ளை போல. உங்களுக்கு எப்பிடி மறைக்கிறது! இந்த வீடு வளவை ஈடு வைச்சு, இவையவையிட்ட கைமாத்தா மாறித்தான் சம்பந்தனைச் சுவிஸ்க்கு அனுப்பின நாங்கள். இன்னுங் கடன் தனி தீரயில்லை. வீடு வளவு மீளயில்லை.”
"கடனைப் பாத்தா அவவுக்கு வயதேறிவிடும்” "கலியாணம் எண்டா நாங்கள் கவலைப்படுவமே' "அவவுக்கொரு பேத்டே கொண்டாட்டம்' அப்பா பொறுமை இழந்து முணுமுணுக்கின்றார்.
இதுவரை அறுபதெழுபதாயிரம் சிலவழிஞ்சிருக்கும் “காசையேன் குடுக்கிறியள்?" "நாங்கள் ஆர் தம்பி குடுக்கிறது. எங்களுக்குப் படிப்பறிவு இல்லையெண் டு எல்லாம் தன்ரை பேரிலைதானே காரியம் பாக்கிறாள்"

Page 74
6
-...--
இலங்கை - இந்திய -
எழுத்தாளர்களி
பூபாலசிங்கம் புத்தகசாலை (இலங்ை தாமரைச்செல்வி பதிப்பகம் (சென்னை) காவ்யா பதிப்பக
மற்று அன்னம் - க்ரியா - கீழைக்காற்று இயக்கம் - சென்னை புக்ஸ் மணிமேகலை போன்ற மிகப் ெ வெளியிடப்பட்ட தீ
டானியல்-டொமினிக் ஜீவா - அந்தனி ஜீவா - சாரல் நாடன் - பெனடிக்ற் பாலன் - தெளிவத்ை பாலகுமாரன் - அகிலன் - கண்ணதாசன் - 6 - சண்முகதாஸ் போன்றவர்களி பெண்ணியம் - தலித்தியம் - மாக்சியம் -
வெளியீடுகள் நவீன சினிமா தொடர்பான
கவிஞர்களின் கவிதைத் தொகு பத்திரிகைகள் - சஞ்சி வாசிப்புப்புக்கான அை
பாடசாலை - அலுவலகத் ே அன்ைத்துத் தொன
இவை அை
PARIS ARWALLAYAM 7 Rue Perdonnet, 75010 Paris, France. (M": La Chapelle/Gare du Nord) Tel: O 14472O334 |Fax: 0 1 447203 E-Mail: arivaalayam(37.com
 
 

- - - - - - - - - -
புலம் பெயர்ந்த தமிழ் ண் படைப்புகள்
க) - விடியல் பதிப்பகம் (கோவை)
- காந்தளகம் பதிப்பகம் (சென்னை) கம் (பெங்களுர்) றும் - அலைகள் - வேர்கள் இலக்கிய நியூ செஞ்சரி - காலச்சுவடுபரிய புத்தக நிறுவனங்களால் தரமான நூல்கள்
தை யோசப் - அனுராதா ரமணன் - சுஜாதா - கைலாசபதி - சிவத்தம்பி - எம். ஏ. நுஃமான் ன் இலக்கிய ஆய்வு நூல்கள் பின் நவீனத்துவம் - பெரியாரியம் தொடர்பான
ஆய்வுகள் இலங்கை - இந்திய தமிழ் ப்புகள் இலங்கை - இந்திய கைகள் மற்றும் நவீன னத்து வெளியீடுகள்
தவைக்கான உபகரணங்கள்
லபேசி அட்டைகள்
னத்துக்கும்
செங்கை ஆழியான்- செ. கணேசலிங்கன் -

Page 75
”இந்த டாம்பீகங்களைப் பாத்து, கடன் தந்தவை வந்து எங்களைத்தானே நெருக்கப் போகினம். என்ன செய்யப் போறமோ!” அப்பாவுக்குக் குரல் கம்மி, கண்கள் கலங்குகின்றன.
“என்ரை பாலன் எந்தக் குளிரிலை பனியிலை கிடந்து கையடிச்சு உழைச்ச காசை.” தொடர்ந்து பேச இயலாது அம்மாவின் விழிகள் பனிக்கின்றன.
"என்னவாம் உதுகள்?" குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்கிறேன். அவள் மறுபடியும் ஒப்பனை செய்து முடித்துக் கொண்டு, அறையிலிருந்து வெளியே வந்து என் எதிரில் கதிரையில் வந்து அமருகின்றாள்.
அவள் வருகை கண்டு அம்மாவும் அப்பாவும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு எழுந்து போகின்றார்கள்.
அவளுக்கு எரிச்சலாக இருக்கின்றது. “என்னவாம்?’ மீண்டும் கேட்கிறாள். "சும்மா கதைச்சவை' A. "இதுகளுக்குப் படிப்பறிவில்லை.நாகரிகந் தெரியாது. பேத்டே எண்டால் என்னெண்டு தெரியாது. என்ரை பேத்டே கொண்டாட எனக்கு விருப்பமில்லை. ஆனால் சிறப்பாகக் கொண்டாடச் சொல்லி பிறதர் அறிவிச்சிருக்கிறாா”
பிறதர். ஆங்கிலம் அக்காவுக்குக் கை கொடுக்கிறது. பிறதர் என்றால் இவளுக்கு அண்ணனா? தம்பியா? அக்கா மகா கெட்டிக்காரி. “சரி அக்கா! நான் இப்ப என்ன செய்ய வேணும்?" வேண்டுமென்றே அக்கா என்ற வார்த்தைக்குச் சற்று அழுத்தங் கொடுக்கின்றேன்.
அவளுக்கு முகம் பட்டென்று கறுத்துப் போகிறது. அடுத்த கணம் அவள் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, ”பேத்டே கொண்டாட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முதல், இருபத்து நாலு புதுப்புதுக் கோணங்களிலே என்னை நீங்கள் படம் பிடிக்க வேணும்'
"ஏன் இருபத்திநாலு?” "இருபத்தி நாலாவது பேத்டே" ஓ . எனக்கு உள்ளூரச் சிரிப்பு வெடிக்கிறது. எனக்கு வயது இருபத்தைஞ்சு. சம்பந்தனுக்கும் அதுதான் வயது.சம்பந்தனுக்கு இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவளுக்கு இருபத்தி நான்கு. நல்ல கதை இது.
“சரி எடுப்பம்." பிறதரின்ரை ஆசையை நான் நிறைவேற்ற வேணும், அவர் தன்ரை பிறன்ஸிக்குக் காட்ட வேணுமாம் அதிலே தான் அவற்ரை மதிப்பிருக்கு. உங்கடை கலை நுட்பம் எல்லாம் இந்தப் படங்களிலே வெளிப்பட வேணும்'
ஒக்கே! நீங்க ரெடியா?. கமராவைக் கையில் துர்க்கிக் கொண்டு நான் எழும்புகின்றேன்.
பஞ்சாப்பி, கவுண் சட்டை, ஜீன்ஸ் சேட் சோட், ரீசேட், நைற்றி, காவ் சாறி, சேலை என்று உடைகளை மாற்றி மாற்றி அவள் வந்து கொண்டிருக்கிறாள். பூஞ்செடி, புற்றரை வீட்டுவாசல், கதிரை, முகம் பார்க்கும் முழுக் கண்ணாடி, படுக்கை அறை பின்னணிகளுக்கு அவளே என்னை அழைத்துப் போகின்றாள். நின்று, இருந்து, 齿萄 கால்மேல் கால் போட்டு, படுக்கை அறைக்
22 665)

கட்டிலில் அமர்ந்து, குப்புறப்படுத்து கால்களை மடக்கி மேலே உயர்த்தி, நேரில், பக்கவாட்டில், பின்புறத்தில். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஒரு ஆடவனுக்கு முன்னால் இப்படி எல்லாம் ஒரு பெண் காட்டலாமா? இந்தக் காட்சிகள் எல்லாம் படங்களாக யார் யாரோ மோகித்துப் பார்க்கப் போகிறார்கள். உடன் பிறந்த தம்பியும் அல்லவா பார்க்கப் போகின்றான். அவள் தான் பார்த்த சினிமாவில் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இணைந்து நிற்கும் காட்சிகளை மனசில் பதித்து, ஓர் ஆடவனோடு தான் அவ்வாறு சங்கமமாக இருப்பதான உணர்வில் எடுத்துக் கொண்ட படங்கள் சில. ஏனைய படங்களை எனது இஷ்டத்துக்கு எனது கோணங்களில் எடுத்து முடிக்கின்றேன்.
இருபத்து நான்கு படங்களும் ஒருவாறு எடுத்து முடித்து விட்டேன். இப்போது ஒருவர் இருவராக அவள் அழைத்த விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவள் வட்டங்கள். உறவினர்கள் என்று ஒரு சிலர். எல்லோரையும் அவளே முன் நின்று வரவேற்கின்றாள்.
பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பிக்கிறது. கேக் வெட்டி அம்மா அப்பாவுக்கு அவள் ஊட்டுகின் றாள். அவர்கள் முகங்களில் கொண்டாட்டமில்லை. அவள் பலவந்தப்படுத்தி அவர்களை இழுத்து வந்து நிறுத்தி இருக்கின்றாள். நண்பர்கள், நண்பிகள் அன்பளிப்புகள் வழங்கி அவளை வாழ்த்துகின்றனர். சிலர் அவளைக் கட்டியணைத்துத் தங்கள் நட்பின் நெருக்கத்தைப் பலர் அறியக் காட்டுகின்றனர்.
அந்தக் காட்சிகள் யாவும் நான் கமராவுக்குள் அடக்கிக் கொண்டு நிற்கின்றேன்.
பொழுது மறைந்து முற்றாக இருள் வந்து இன்னும் சூழவில்லை. அதற்குள் மின்விளக்குகள் பளிச் சென்று ஒளிருகின்றன.
எனக்கு வேலைகள் பெருமளவு முடிந்து போய் விட்டன. நான் நன்றாகக் களைத்துப் போய் விட்டேன். கதிரை ஒன்றில் அமர்ந்து கைக்குட்டையை எடுத்து முகம், கழுத்து, கைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தி அழுத்தித் துடைக்கின்றேன்.
தேநீர், சிற்றுண்டிகள் அவளே எடுத்து வந்து எனக்கு முன் வைத்து உபசரிக்கின்றாள்.
நான் தேநீரை மாத்திரம் மெல்லப் பருகிவிட்டு, கதிரையிலிருந்து எழுகின்றேன். கமராவைக் கையில் எடுத்துக் கொண்டு ‘வாறன்’ என்று அவளிடம் விடைபெற்று வெளியே நடக்கின்றேன்.
அவள் என்னைத் தொடர்ந்து பின்னால் வருகின்றாள். நான் சயிக்கிளைக் கையில் எடுக்க அவள் "கேற்றைத் திறந்து வழிவிட்டு வெளியே வருகின்றாள்.
"சரிபோவிட்டு வாங்கோ. படங்கள் நல்லா இருக்க வேணும். சுவிஸிக்கு அனுப்பிறது. அடுத்த பேத்டேக்கும் நீங்கள் தான் வந்து படமெடுக்க வேணும் அவள் சொல்லுகின்றாள்.
நல்லது வாறன்’ நான் சயிக்கிளில் புறப்படுகின்றேன். எனக்குள் இப்பொழுது இன்னொரு புதிய பிரச்சினை. அடுத்த ஆண்டு இன்னொரு புதிய கோணம் நான் கண்டு பிடிக்க வேண்டுமல்லவா!

Page 76
வான்வெளியின் பரந்த மார்பினடியில் வெணி துகிலென மழைத் துறலின் வருவழிப்பு. நிலம் பார்த்து, குடையாக விரிந்து மண லைத் தொடு வதற்கு நெம்பும், வாழை இலையின் பசுமையான மேனியில் “சரவர' வென மெலிதான சந்தடியடன் மோதல் கொடுத்து நீர்க் கோடுகள் என மழைத் துளிகள் வழிகின்றன. கறுவல் மேனி, நதி மீது தெப்பமாக ஈரத்துடன் பளபளக்கச் சூரிய வெளிச்சத்தில் கண்மன் கூசி, இமைகள் சுருங்கி, தவக்கோலச் சாமி போல் கல்லாகிவிட்டிருக் கிறான் பழனி.
வாழை மரம் அருகாக சண்முகம், தட தட'வென ஓடினான். காமாட்சிப் பாட்டியின் பேரன், தோட்டத்திலே பொல்லாத வாண்டுப் பயல் அவன்.
நரிக்கும் மழைக்கும் கல்யாணம்
நரிக்கும் மழைக்கும் கல்யாணம் ஆட்டமும் பாட்டமுமாய் கும்மாளித்து ஆடி பட பட வென பேரிரைச்சலுடன் நிலம் அதிர ஓடுகிறான். ஆனாலும் பழனியின் தவக்கோலம் கலையவில்லை.
சூரிய சக்கரப் பிழம்பு நடுப்பகலைத் தாண்டி கண்மூடித்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அசுர (8685b. * கல்லும் முள்ளும் பற்றையுமான மணற்தரையில் அமர்ந்து, முதுகை வாழைத் தருவில் சாய்த்து, நிமிர்ந்த முகத்தில் சூரிய கதிரும், மழை வருவழிப்பும் போட்டியிட கடும் யோசனைக் கடலில் சூழ்ந்து போயுள்ளான் பழனி.
அவன் காலடிக்குள் ஒடுங்கிக் கிடக்கும் கோழி, கக் கக் கக், கென கொக்கரிக்கிறது.
இந்த அணைப்பிற்காகவே இவ்வளவு காலம் காத்திருந்தேன்’ எனினும் உளக் கிளர்ச்சியிலிருந்து பீறிடும் பாசத்தின் செல்ல முனங்கலாக கோழியின் கொக்களிப்பு அலைகள்.
முட்டையிட்டு, பலமுறை அடைகாத்து குஞ்சு பொரித்து, பழனியின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும்
 
 

சொந்தமாகிப் போன கோழி அவன் வாழ்வினோடு உறைந்து போனதோர் இரண்டறக் கலப்பான ஜீவன்.
இந்தக் காட்சியை - நெஞ்சு படபடக்க உடல் முழுவதும் பதற கதவின் இடுக்கு வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் தெய் வானை - பழனியின் அம்மா.
மவன - பொலிஸ் பயலுவ நல்லாகவே மொந் திட்டாங்க போல, வலி தாங்க முடியலியாக்கும். அவள் மனசிற்குள் வேதனையின் நெருடல்.
ஊட்லேயிருந்து தரதரவென்று இழுத்துக்கிட்டு போவக்குள்ளேயே ஒடம்புச் சதையை கன்னா பின்னான்னு செதைச் சுட்டாங்கள் லே' நெஞ்சு வேதனையுடன் கதறுகிறது.
வழக்கமாக இரவு தான் வீடு வந்தான். அகோர பசியோடிருந்தான். தெய்வானை கொடுத்த இரண்டு ரொட்டிகளுக்கும் பசி அடங்கவில்லை.
பிளேன் டியை, நமுக் நழுக், கென தொண்டை க்குழாய்க்குள் இறக்கி விட்டு சாய்ந்தவன்தான். ஒரு நொடிக்குள்.
யப்பா, என்ன தூக்கம் தூங்குகிறான்' என்று தெய்வானை அசந்து நின்ற வேளையில் பொலிஸ் ஜீப் உறுமலுடன் வந்து வாசலில் நிற்கிறது.
குப்பி லாம்புடன் தெய்வானையின் கழுத்து வெளியில் எட்டிப் பார்க்கிறது.
நான்கு கிங்கரர்கள் ஜிப்பிலிருந்து தாவிக்குதித்து இறங்குகிறார்கள்.
ஹோ யக்கோவ் அத பல்லா!' "எங்கே பிசாசே அந்த நாய்' தடித்த பருப்பமான சப்பை முகத்தையுடைய கன்னங் கரேலான பொலிஸ்காரன் கடித்துக் குதறுவதுபோல் கர்ஜித்தான்.
‘மகன் மறுபடியும் ஏதாச் சும் பொல லாப்பு பண்ணிப்பிட்டு வந்துட்டானோ?
மனத்தில் பதற்றம் கப்பென ஒட்டிக் கொள்கிறது. கரும்புகை கக்கிக் கொண்டிருக்கும் குப்பிலாம்பு நடுங்குகிறது. Ve

Page 77
லயக்காம்பராவின் சுவர்களில் அவன் துவம்சம் செய்யப்படுவதின் நிழலாட்டம் போடுகிறது.
குடலே அறுந்து விழுந்தாப்போல் அலறுகிறாள். லயக் காம்பராக் கதவுகள் அறுபடும் சேவல்களாக முழு லயனே துடித்தெழுந்து பீதியுடன் பார்க்கத் திறபடு கின்றன. பழனியைக் குண்டுக் கட்டாகத் தூக்கி ஜிப்பினுள் எறிவது தரிசனமாகிறது. தனியொருவனை பந்தாடுவதில இந்த பொலிசார்தான் எவ்வளவு மூர்க்கமாகப் பாய்ந்து குதிக்கிறார்கள்.
ஒரே மகன், வளர்ந்து ஆளாகும் வயதில் தகப்பன் முருகண்ணன் கசிப்புக்கு உடலைத் தாரை வார்த்து விட்ட தியாகசீலனாக குடல் நாறி, வயிறு வீங்கி தேயிலைச் செடிகளுக்குப் பசளையாகிப் போனான்.
அப்பனுக்குத் தப்பாமல் பிறந்தவன் பழனி, வீட்டிற்கும், ஊருக்கும் அடங்காப் பிடாறி. சண்டை, குத்துவெட்டு, பெண்பித்து, போதைப் பொருள் இப்படியே சேற்றெரு மையாகக் காலத்தை உழக்கி கரைசலாக்குபவன்.
米 米 米
தேயிலை பிடுங்கல் மட்டுமல்ல மந்திரி ஐயா வீட்டிலும் தெய்வானை எடுபிடி வேலைகள் செய்வாள். அவர் உதவியால் ஸ்டேசன் போய் மகனைப் பிணையில் விடுவித்து வந்தாள்.
மணல் வீதியில் நடந்து வந்தபோது அவமானம் பிடுங்கித் தின்கிறது. வாரம் ஒன்று ஓடிவிட்டபோதும் வீதியில் எதிர்கொண்ட கண்கள், 'அடப்பாவி என்ன காரியம் பண்ணிப்பிட்டடா" என அங்கலாப்புடன் அசிங்கப்படுத்தின.
'சே' என்ன கேடு கெட்ட காரியம் செஞ்சுட்டான். அம்மாவின் மனம் ஓ! வென அழுகை ஒப்பாரி வைக்கிறது.
ராஜநடை பழனிக்குச் சொந்தமானது. இன்று மெல்ல மெல்ல நொண்டி, நொண்டி அவன் நடக்கிறான்.
செமத்தடியின் வேதனை முறிவுகள் இன்னும் தீரலையோ?
லயக்காம்பராக்களிலிருந்து எட்டிப் பார்க்கப் பெண் களின் கண்கள்' பிரலாபிக்கின்றன.
வாழை மரத்தின் நிழலிலுள்ள கோழிக் கூட்டின் மீது பழனியின் கண்கள் பதிகின்றன.
அடைக்கோழி அவனைக் கண்டு விடுகிறது. உயிரே போனாப்போல் "படபடவென சிறகை அடித்துக் கொண்டு பாய்ந்தும் பறந்தும் பழனியின் கைகளுக்குள் வந்து அடக்கமாகிறது.
பழனிக்கும் பாசம் உண்டா என்ன? அடடா ள்துவித பாச உணர்வுகளும் இல்லாத அவன் கண்களில் பிரிவின் துயர நீர்த்துளிகள் பிரவாகமெடுக்கின்றனவே!
ஒரு குழந்தையை அணைத்துக் கொள்வது போல கோழியைத் தழுவிக் கொள்கிறான்.
ஆ! என்ன இது, ஒடம்பெல்லாம் பூச்சு ஒடுறமாதிரி இருக்கே? மனம் பதறிய போதும் கோழியை உதறி யெறியாமல் நெஞ்சிலிருந்து தூக்கிப் பார்க்கிறான்.

கோழியின் உடம்பெங்கும் மணற்குவியலாக குறுமணி பூச்சுக்கள் படர்ந்து விட்டிருக்கின்றன.
ஐய்யய்யோ! பொலிசார் அவனை கொண்டு போன நாளிலிருந்து அம்மா பொம்புள கூட்டை கவனிக்கவே இல்லை.
மனத்தில் ‘தீ” யென கேள்வி எழுகிறது. அம்மா தெய்வானையை அக்கினிக் கண்களால் எரித்தான்.
வீட்டிற்குள் போகவில்லை. அங்கே குந்திச் சுள்ளிகளைப் பொறுக்கி நெருப்பினை மூட்டி 'சடசட' வென எழுந் தீய்க்கு மேலாக கோழியை ரோஸ்ட் செய்வதுபோல் உருட்டி பூச்சுக்களையெல்லாம்
..

Page 78
பொல பொலவென நெருப்பின் மீது விழுந்து கருகச் செய்தான்.
கோழிக்கு சுகமாகவிருக்கிறது. ஆனந்தமாக சிறகடிக்கும் அது செல்லமாக கொக்கரிக்கிறது.
இருண்டு கிடக்கும் கோழிக் கூட்டின் மூலை முடுக்கெல்லாம் தீப்பிடித்துத் துப்புரவப்படுத்திப் புதுமணல் கொட்டி அடைமுட்டைகளை ஆடாமல் அசையாமல்.
கடினமாக வேலை செய்வதில் பழனி அசகாய சூரன். இவ்வளவு வேலைகளை மனம் ஒண்டி முடித்து மணற் தரையில் குந்தி வாழைக்கருகில் முதுகைச் சாய்த் தவன்தான். ஏதேதோ நினைவுகளில் சமாதிநிலை அடைகிறான்.
'இவனையா ஊரும்உலகமும் கெட்டவன் என்கிறது? தெய்வானையால் ஜீரணிக்க முடியவில்லை.
அன்னையின் நினைப்புப்போல் அவன் மனத்தில் பொலிஸ் அடிப்பின் வேதனைகள் இல்லை.
மலைக் காற்றின் ஈரலிப்பு உடலைத் தழுவி விதிர் விதிர்க்கச் செய்ய, கஞ்சாப் புகையின் ஸ்பரிசக் கிறக் கத்தில் அவன் உடல் வேட்கை தணித்த வேகத்தில் சுமணா என்ற பிச்சைக்காரி துடிதுடித்தாளே அந்த இன்ப நினைப்பின் மயக்கத்தில் பழனி நிஷ்டையாகி விட்டிருந்தான்.
பொல்லாத ரசனை மனம் அவனுக்கு, மீண்டும் மீண்டும் அந்த இரவுச் சம்பவத்தை அசை போடுவதில் தான் எத்தனை இன்பம், இன்பம். இடியும், மின்னலும் கைகலப்பில் கலந்து விட்டிருந்த அந்த இரவு காலம். மனத்திரையில் மீண்டும் நினைவுக் கோலங்கள் கருக்கட்டத் தொடங்கியபோது.
ஏலே! பழனி மழ நின்னிருச்சி உள்ளே வந்து ரொட்டி சுட்டிருக்கேன் சாப்பிடு. தெய்வானையின் குரல் அழைக்கிறது. நினைவு மேகம் சிதறிட, கண்ணிமைகள் மயில் சிறகென சட்டென விரிகின்றன.
அப்பொழுது...! a முட்டைகளின் மீது சயனித்துக் கொண்டிருந்த அடைக்கோழி மெல்ல எழுந்து, சிறகுகளை சடசடத்து, மெதுவாக அவனைச் சுற்றி வந்தது.
சிறகுகள் புடைத்து விரிந்து, முகம் பாரித்து, உடலெங்கும் வேதனை பூரிப்பில் பச்சை உடம்புக் காரியாக அதன் கொள்ளை அழகு அவனை கிறங்கச் செய்துவிட, பழனி பூரிப்பில் ஆழ்ந்து விழி பிதுங்கி அதற்கு செல்லமாக முத்தமிடுகிறான்.
பழனியின் உதடுகளில் புன்னகையொன்று மலர்ந்து விரிகிறது. தெய்வானையின் மனத்தில் நிம்மதிப் பெருமூச்சு வெளியாகிறது. தெய்வீகமான சிரிப்பு, இவனையா? கெட்டவன் என்கிறார்கள்! அவளால் நம்பமுடியவில்லை.
சட்டென ஒரு சம்பவம் நடக்கிறது.

"கொக்கரக்கோ’
சேவலொன்றின் ராஜகம்பீரக் கூவல், கழுகுபோல் சிறகுகளை அடித்து விரித்துக் கொய்யா மரத்திலிருந்து தாவிக்குதித்து ‘குடுகுடு வென வேகமாக ஓடி வந்து, கோழியின் மீது தாவி அமர்ந்து, அதன் தலையை சளுக்கெனக் கெளவி, ஓர் அசுரப்போர் தொடுக்கிறது.
வெட வெடக்கும் கொக் கென விக்கித்தாப் கொக் கரித்தது. சடக் கென தாவி பழனியின் காலடியில் விழுந்து துடித்தது. அவ்வளவுதான் அதன் பின்னர் கோழி எழும்பவில்லை. கண்கள், கால்கள், உடல் விறைத்து முழுவதும் சடலமாகிவிட்டது.
'அம்மா
பழனியின் அலறல் கோழியின் சடலத்தை நடுக்க முடன் பார்க்கும் அவனுடைய கண்மணிகளினுாடே துடிதுடிக்கும் அவன் இதயம் தெரிகிறது.
பழனியின் அம்மா வென்ற அழைப்போசை தெய் வானையின் கண்களிலிருந்து ஆனந்த பிரவாகத்தை அணையுடைக்கிறது. அப்படி அவன் கூப்பிட்டு எவ்வளவு காலமாகிறது.
DE(360T
தாயுள்ளத்தின் பாச நலம், நெஞ்சின் துடிதுடிப்பா கிறது.
'எலெ பிச்சு ஒனக்கு வெவரம் தெரியுமா? இந்த பய பழனி புள்ள பெத்து ஒருநாள் கூட ஆவாத பிச்சக்காரி சுமணாவ வெறித்தனமா கெடுத்துப்புட்டான். பாவம் பச்ச ஒடம்புக்காரி மரக்கட்டையாயிட்டா.
'அடப்பாவி'
தேயிலைக் கூடைகளுடன் இரு பெண்கள் இவ்வாறு பேசிக் கொண்டு மலை இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
மலை முகடுகளில் பதுங்க முனையும் சிகப்புச் சூரியனை நோக்கி பெண்களின் கருத்த நிழல்கள் விரைந்து கொண்டிருக்கின்றன.
‘ஐயயப் யோ’ படுபாவி என்ன காரியம்
பண்ணிப்புட்டான்.
மலையடிவாரத்திலிருந்து ஒரு கதறல் அசுர கானமாக மேலெழும்பி வருகிறது.
செல்லாயி கிழவி தான் அழுது புலம்பிக் கொண்டு ஓடி வருகிறாள்.
‘என்னாத்தா ஏன் இப்படி கத்திக்கிட்டு ஓடி வார.
‘என்னா சொல்வேன், எப்படி சொல்வேன்'
"என் சேவல அடிச்சி கொன்னுட்டானே'
այrr(15?
'அந்த படுபாவி பழனி
'அவன எழவு புடிக்க, இப்ப சேவல் அடிச்சித் தின்ன வாரம்பிச்சிட்டானா'
இல்ல அவனுடைய அடைக் கோழியே என் சேவல் மிதிச்சிட்டாம்.
'அட கொல்லயிலே போவ பெண் நிழல்கள் நாடியில் கை வைக்கின்றன.
& Desert

Page 79
ఫ్రీ குஜராத் பூகம்பம் பற்றிய என் வலிகள் இவை.
இ கவிதை வரிகள் என்றும் கலைத்துவம் தரமுடியா. * எழுத்து விழிகளின் வார்த்தைக் கண்ணீர் இது.
இதை இதய இதழ்களின் புலம்பல் சொற்கள் என்பதே பொருந்தும். இருந்தும்.
தாண்
ஏய். மண்ணே.! எனினே கொடுமை. செய்தாயப் சொல்.
தாய் மணி என்று. சந்தோஷமாய். வாழ்ந்த பிள்ளைகளை.
மடியில் போட்டுக். கொள்ள வேண்டிய நீ. மடியில் போட்டு. கொல்லலாமா. சொல்?
தாலாட்டுப் பாடாமல். போனாலும் பரவாயில்லை. ஒப்பாரி பாடலைத்தாயே காதகி.
மிதித்து நடந்தாலும். பூமாதேவி என்று. மதித்து நடந்தோமே. காலடி மணிதனை. தலையில் தூக்கிப் போட்டாயே. சண்டாளி.
பஞ்ச பூதங்களில் ஒன்று.? இப்படியா உடல்களைத் திங்கும் வஞ்சப் பூதங்களில் ஒன்றாவது. பூமியே உனக்கென்றாயிற்று. சுற்றி சுற்றி.
சுற்றியதால் உனக்கு.
 
 
 
 

பூனிதர் பிச்சையப்பா
தலைச்சுற்றா. சரி. நீ. ஒய்வெடுத்துக் கொள்வதற்கு உடல்களின் பாடையா கேள்பது? எங்களின் கண்ணிர் குடித்தா . உன் தாகம்தனைத் தீர்ப்பது.? எங்கள் மனிதப் பிணங்கள் எரித்தா நீ.
குளிர் காய்வது..? பூமியே உனக்கென்னாயிற்று.?
படைத்தவனே கொஞ்சம் இந்த ஊர்தனைப் பார்.
இது தெருக்கள், இது வீடுகள்,
ā
)ク
s
AR
룰

Page 80
இது கட்டிடம், இது வெற்றிடம், இது அவ்விடம், இது இவ்விடம். என்று. இனம் கண்டோம். இன்று எல்லாம் கற்குவியலாகி. பிணம் கண்டோம். படைத்தவனே கொஞ்சம் இந்தப்பார்தனை வந்துப் பார்
கோலம் போட்டுப் பார்த்த இடங்கள் எங்கும்.
காலன் நடந்த காலடித் தடங்கள் ஏனப்பா..?
பூக்கள் மலர்ந்த பூமி எங்கும் கால், கை, தலைகள் எதற்கப்பா..?
இறந்து போனபின். மண்ணுக்குள் போவது பரவாயில்லை. அது. உலக வழமை மண்ணுக்குள் போனதால் இறந்து போவது உலகிலிது என்ன கொடுமை.
cJ0idí. பூமியில் புதைகுழி. உண்டு. பூமியே புதைகுழி
 
 
 
 
 
 
 

அன்னையே . ஆம். இத்தனை காலம். மண்ணையே, உன்னையே அன்னையே என்று. அழைத்தோமே.
இன்று. தாய் உனக்கு. என்ன நிகழ்ந்ததடி.?
குளிக்க நதிகள். தந்தாய்! இனிக்கப் பழங்கள். தந்தாய்! விதைக்க வயல்கள் தந்தாய்!
ரசிக்க இயற்கை தந்தாய்.
இன்று தாய் உனக்கு என்ன நிகழ்ந்ததடி. தாய் உனக்கு. பேய் பிடித்ததா..?
ஏயப். பெண்ணே.! எங்கள் பெண்கள் கேட்கிறார்கள்
உணர் இலைத்தலைகளிடை பூக்கள். மலர்த்திப் பார்த்தோமே. எங்கள் பூக்களை நீ பறிக்கவா? என்று. எங்கள் ஆணர்கள் கேட்கிறார்கள் மணர் உனைப்
பொனர் செய்து மாற்றிப் பார்த்தோமே எங்கள்
புன்னகையை நீ அழிக்கவா என்று
శ్ల్కోడ్డీజశ 韃器 به همین Ծ: 硫

Page 81
என்ன பதில் உன் வசம்?
பஞ்ச பூதங்களே. பெயர் சரிதான். நெருப்பாய் வருகையில். கருகி எரிக்கிறாய், காற்றாய் வருகையில். பிடுங்கி எறிகிறாய். நீராய் வருகையில். நிறைக்கிறாய், மூழ்கவைக்கிறாய். மணிணாய் வருகையில்! இப்படி. தகர்க்கிறாய். சரிக்கிறாய், சுழிக்கிறாய், பஞ்ச ஷபூதங்கள்’ என்று
பெயர் வைத்தது சரிதான்
வானம்.? வானம் மட்டுமெனின இப்படி ரூபங்கள் பலவாய் நீ. கவர்ந்த உயிர்களை சேமிக்கும் கஜானாவே வானம் ஆனது. என்கிற. நம்பிக்கையை இதை எழுதும் இந்த நேரத்தில். நானும் நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறதே
பொறுமை நீ
"உலக இயற்கையில் நடைபெறுகிற ஆக்கம் அழிவு இழ வாழ்க்கையானது. அவைகளைக் காணாத ஒருவருடை 路 ஸவரஸ்ஸ - வக்கோ என்கிற தம்மபதத்து பாலி ( ஆ, ஆயிர வர்க்கம் என்கிற எட்டாம் பகுதியின் பதின்ற
 
 
 
 
 

பொங்கியெழுந்து பூகம்பமாகி முடிந்தாய். எனக்குள் எழும் பூகம்பத்துக்குத்தானி பொறுக்க முடியவில்லை.
எனக்குத் தெரியும். எழுதும் கவியில். இதற்கு ஏதும். லாபமில்லை. இனிமையிமேலும். இதுபோல் கவிதை. எழாதிருக்கட்டும். இறுதியாய். ஒன்று கேட்கிறேன்.
அடிப் பூமாதேவி. இனி உனை. எப்படிப் பூஜிப்பது.? இழுத்து எடுத்த. பிணங்களையா உன் கழுத்து மாலையென அணிவிக்க.?
அழுது கதறும். குரல்தனையா உன் மந்திர ஒலியென தெரிவிக்க. சொல்லடி. பூமாதேவி. சொல்.
இனி உனை. எப்படி பூஜிக்க.?
|களைக் காண்கிற ஒருவருடைய ஒரு நாளைய ய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது". மொழிப் பாடலின் தமிழ்ப் பெயர்ப்பான ான்காம் பாடல் வரிகள்.

Page 82
சமீபத்தில் மல்லிகைப் பந்தல் ஆதரவில் கொழும்பில் ெ தலைமையில் மணிவிழா நடைபெற்றது. அந்த விழாவி
T.
rLLGLLrrrrrL0LL000rrr0LrLLrLrELLLrSrSrrLrLLLLLLLLL
எங்கள் மகா எழுத்தாளனே! எங்கள் மெகா எழுத்தாளனே! மணிவிழா கண்டுவிட்ட
தனித்துவப் படைப்பாளியே எழுத்து நமக்கு வேள்வியானது அதனால் உனக்கான எண் வாழ்த்து சாத்தியமானது.
இது கவிதை ஆகுமோ
ஆகாதோ
நான் அறியேன்
ஆனால் இதர எண் ஆத்மாவின் சந்தோஷமானது உன்னை வாழ்த்த வந்தமையால்.
செங்கை ஆழியானே! எழுதிக் குவிப்பதில் ஆழியானவனே!
காட்டாறு போல் பாய்ந்து வந்த உன் எழுத்து வெள்ளத்தில் அரைக் காற்சட்டை போட்ட காலத்திலே அடியேன் படித்து சந்தோஷித்தவன்.
நானா உன்னை வாழ்த்தவதரி என்ன செய்வதரி நான் வளர்ந்து வந்த பண்ணை அப்படி
ஜீவிதத்தைச் செலவு செய்து எழுத்துக் காவியத்தை படைக்கும் எல்லோரையும் பாராட்டும் குணம் பிடித்த ஜீவாவின் சீராட்டில் வளர்ந்தவன்
என்பதால் வாழ்த்த வந்துள்ளேன். பிடித்த எழுத்தாளர்
 

சங்கை ஆழியானுக்குப் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் Iல் அவரைப் பாராட்டி மேமன்கவி வாசித்த வாழ்த்துப்
KNx«WxMox«8x6x8K«XK&XXX«»88«»8«X8
யார் என்று கேட்டபோது அன்று நம் நாட்டில் பொழுது போக்காய்ப் புத்தகம் படித்தவர்களை முதல்முதலாய் ஈழத்து எழுத்தாளன் பேரை சொல்ல வைத்தவன் நீ ஷெல் அடிகள் விழுந்த வண்ணம் இருக்கையிலே போரின் பயத்தால் செல்லரித்துப் போன மக்கள் மத்தியில் இருந்த எழுத்து யாகம் நீ வளர்ப்பதனால்தானே உன்னை வாழ்த்த எங்களுக்குச் சொல்லே வந்தது.
அகதிகளாய் எமக்காய் புலம்பல் கண்ணிர் வடிக்க புலம் பெயர்ந்த பலர் புறப்பட்டு போன பின்னும் புண்பட்ட உன் மண் விட்டு வராமல்

Page 83
B எழுதிய எழுத்துக்கள் பொன் எழுத்தக்கள் என்று சொன்னால் அது பொய் இல்லை என்பேன்.
மூன்று வரி ஹைக்கூ எழுதவே மூச்சு திணறுதையா எனக்கு முகடு முட்ட
எழுதிவிட்ட உன்னைக் காணும் வேளை ஆச்சரியத்தால் பேச்சே வருகுத இல்லை ஐயா. செங்கை ஆழியானே எம் முன்னோடிகளான ஈழகேசரிதனையும் மறுமலர்ச்சிதனையும் சுதந்திரன்தனையும் மறுபடியும் கண்டுபிடித்த கனதியான புத்தகங்களாய்த் தந்த இலக்கியக் கலாநிதி நீ உன் எழுத்துகளில் முரண் கண்டவர்கள் கூட நீ எழுதிக் குவித்ததை கண்டு சரண் அடைந்தார்கள். உன் எழுத்துக்களில் கோஷம் இல்லை
(9b607(T6)
எரியும் நம்
தேசம் இருந்தது. உன் எழுத்துக்கள் கடலிக்காரன் முதற்கொண்டு திறனாய்வு கொள்கைகளை கூவி நிற்கும் மனிதர்கள் வரை கூடி நின்று ஆராயும் உன் எழுத்தக்கள்தானே இன்று இங்கு கூடி நின்று உன்னை வாழ்த்தச் சொன்னத. நீ இடமா! வலமா! அதன்ை உன் எழுத்தை பார்ப்பவர்கள் நிற்கும் திசையே தீர்மானிக்கட்டும்.
ஆனால்
உன் எழுத்துக்கள் தரித்து இருக்கும் ஓர்
இடம் தன்ை நாங்கள் அறிவோம்
அததான்
மானுடம்.
புவியியல்தனை

எளிமையாய்
புதுமையாய்
கற்றுத் தந்த குணராசாவே - இன்று
நம் புவியியலே
போரின் சீதோஷ்ணநிலையில்
ಇಂತ್ಲಿ போவதைக் கண்டு
எழுதிய எழுத்துக்கள்
நம் ஃகளாகி
நிற்பதை நாங்கள் அறிவோம்.
உலக வரைபடத்தைத் தமிழாக்கி தந்த எங்கள் மெகா எழுத்தாளனே இன்று நம் நாட்டு வரைபடமே அழிவின் சிறைக்குள் சிக்கித் தவிக்கையில் உன் ப்டைப்புக்கள் நம் உரிமைகளுக்கு உயிர் சேர்ப்பதை நாங்கள் உணர்கிறோம். மணிவிழா கண்ட தனித்தவ எழுத்தாளனே வயதில் மட்டுமல்ல படைப்பிலும் நீ கண்ட மணிவிழாவுக்காய் நாங்கள் கண்ட இவ்விழாவில் உனக்கொரு வேண்டுகோள் வைப்பேன்.
எரியும் இந்த தேசத்தில் ஒவ்வொரு மனிதனும் அமைதி தரித்து நிற்க
எழுது நீ
6.
எங்கள் மகா எழுத்தாளனே எங்கள் மெகா எழுத்தாளனே. அன்னியமாய் இந்தப் பூமியில் எந்தவொரு
அகால மரணம் காணாத வரை எழுது,
புதை குழிகள் புனையப்பட்டு எம் உயிரின் கதைகள் சாவின் நிழல்கள் காணும் அவலம் காணாமல் போகும் வரை உன் கதை விழிகளைத் திறந்த நீ எழுது. செங்கை ஆழியானே எழுதி எழுதி சிவந்த உன் செங்கையால் உன் மூச்சு மை தீரும் வரை எழுது நீ
எழுத.

Page 84
வாழ்வை அர்த்தமுள்ள
வாசிப்பு வளத்தைப் பரம்பல் செய்யும் கருதுகோளோடு கல்வி அமைச்சினால் பெருவாரியான புத்தகங்களைக் கொள்வ னவு செய்யும் அதிமதுரமான செயல்பா டொன்று அண்மையில் செயலூக்கம் கண் டது. இதே முனைப்போடு தினக்குரல் பத்திரிகையும் நடமாடும் நூலக சேவை யொன்றைத் தொடக்கி இருப்பது, கல்வி, இலக்கியம் சார் சமூகத்திற்குக் கற்கண் டான சகுனமாகும். போரை அரவணைத்து அதன் அசுர விருத்திக்காகக் கோடிக்கணக்கான நிதியை அள்ளி இறைத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இத்தகைய தூறல்கள் விழுவது மானிட வர்க்கத்தில் இன்னமும் மூளை வறட்சி முனைப்புக் கொள்ளவில்லை யென்பதைத் துலங்க வைக்கின்றதெனலாம்.
கல்வி அமைச்சின் இப்பிரமாண்டமான கொள்வனவு, பாடசாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் நூலகங்க ளைப் புத்தகமயப்படுத்துவதற்கும், புதிய நூலகங்களை உண்டாக்குவதற்குமெனக் கூறப்படுகிறது. இன்றைய சமுதாயத்தை அறிவு மயப்படுத்தும் பொழுது, முழு மனுக்குலமுமே பாமரத்தனத்திலிருந்து மீட்கப் படுவது யதார்த்தமானதே! இந்த அறிவூட்டமானது நிச்சயமாக மூடத்தனங்களைக் கெல்லி எறியும் சம்மட்டி யாகப் பயன்படும்.
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு காலங்காலமாக எம்மோடு பயணித்துக் கொண்டிருக்கும் பேருண்மை இது. இது மறக்கப்படும் பொழுது தான் சாத்தானின் கரங்கள் வீரியம் பெறுகின்றன.
Reading Maketh a full Man 6JTfŮîGÖT LD5T i Gräsg)60Duu இப்படிச் சிலாகித்துக் கூறுகின்றனர். எனவே, தமது பிள்ளைகளுக்குப் போஷாக்கான உணவுப் பண்டங்க ளைத் தேடி அலையும் பெற்றோர் அவர்களது அறிவைக் கூர்மைப்படுத்தும் அரிய நூல்களையும் பெற்றுக் கொடுப்பதில் தயங்கக் கூடாது.
சுட்டப்பட்ட பாரிய நூல் கொள்வனவு மூலம் மாணவ சமுதாயத்தின் முன் அவர்கள் மலைக்கும்படியாக ஏராள மான புத்தகங்கள் குவிக்கப்படவிருக்கின்றன. அருமை யான இலக்கொன்றைக் காவி நிற்கும் இத்திட்டம் தேக்க நிலைப்படுத்தப்படாது துரித நடைமுறையைக் காண வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பாப்பு. களஞ்சியங் களில் புகலிடம் பெற்றுள்ள கறையான்களுக்கு இந் நூல்கள் விருந்தாக இருக்காதென்பதைச் சம்பந்தப் பட்டவர்களின் துரித செயல்பாடுகள் நிரூபிக்க வேண்டும். ஈழத்துப் புத்தகச் சந்தை வாசகர்களுக்கு ஓரளவு
 
 
 

ாதாக்குவது வாசிப்பு
- IDT. LITG) 35lb
திருப்தியைத் தந்து கொண்டுதானிருக்கின்றது. வெளி யீட்டகங்கள் அதிகரித்துக் கொண்டும் துரிதமாக இயங்கிக் கொண்டுமிருக்கின்றன. அவைகளிடமிருந்து நல்ல 'உருப்படிகள் அணிவகுத்து வருகின்றன. நூல் வெளியீட்டு விழாக்கள்களை கட்டுகின்றன. இதுகாறும் தாம் படைத்தவைகளைத் தொகுப்புக்களாகப் பார்க்கும் பேறு கிடைக்குமோவென அங்கலாய்த்துக் கொண்டிருந்த படைப்பாளிகளின் தொகுப்புக்கள் வெளிவந்து கொண்டிரு க்கின்றன. வாசகனது மனதை விட்டகன்று அமரர்களாகி விட்ட எழுத்தாளர்களது உன்னத படைப்புக்கள் புழக்கத் திற்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. காலத்தால் மூத்த படைப்புக்கள் இனங்காணப்பட்டு மறு பதிப்புகள் பெற்று இன்றைய தலைமுறையால் வாசிக்கப்ப டுகிறது. எனவே இக்கால கட்டத்தை ஈழத்து இலக்கியத் தின் மறுமலர்ச்சியுகமெனில் அது வெறும் பூச்சுற்றலாகாது.
இப்பிரமாண்டமான புத்தகக் கொள்வனவு ஈழத்துப் படைப்பாளிகளின் கனதியையும் வீச்சையும் வாசகனுக்குக் கொண்டு செல்கின்றது. இதில் வித்தியாசமான - பல்சுவையைத் தரும் நூல்கள் அடங்குகின்றன. காலத்தால் மூத்ததான ஈழகேசரிச் சிறுகதைகள் - ஒரு முழுமை பெறாத நாவலென்ற கணிப்பை உள்ளடக்கிய சுய வரலாற்று நூலான எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் - ஈழத்து நாவல் வளர்ச்சியின் மைற் கல்லாகத் திகழும் மரணங்கள் - மலிந்த பூமி, மனநதியின் சிறு அலைகள் - காற்றுப்புகாத இருட்டுக்குள்ளும் கவிதை புகுந்து வரும் சிறப்பம் சங்களைக் கொண்ட நான் எனும் நீ, மீண்டும் வசிப்பதற் காக - நேர் காணல்களின் கருத்துக் கோவையான சந்திப்பும் சிந்திப்பும் - ஒரு பிரதேசத்தின் சிறுகதை விழுமியங்களை அக்கறையோடு பேசும் மலையகச் சிறுகதை வரலாறு - வித்தியாசமான மனிதக் கோலங்களைச் சித்திரிக்கும் தோட்டத்துக் கதா நாயகர்கள் - தமிழ் இலக்கியத்தைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும், பின் நவீனத்துவமும் அழகியலும், ஆங்கிலச் சிறுகதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பில் நீதிபதியின் மகன் - வெகுஜன விருப்பைப் பெற்ற சினிமா சம்பந்தமான பொன்விழாக் கண்ட சிங்கள சினிமா - இப்படித்தான் சினிமாப்படம் இருக்க வேண்டுமெனத் துணிவோடு சுட்டும் தணியாத தாகம் - உருவகக் கதைகள் அடங்கிய இயற்கை, மணற்கோயில் - அரசியல் சட்டம் சம்பந்தமான இலங்கையில் அரசியல் - கலை உலகப் பயணத்தை அழகியல்படுத்தி ரசனையோடு தரும் ஒரு சருகிலிருந்து கசிந்த ஈரம் - மூத்த எழுத்தாளரது காலத்தால் சாகாத எழுத்தின் வாலிப வீச்சை இளைய தலைமுறைக்கு. அறிமுகப்படுத்தும்
لیفٹیننٹ

Page 85
குமாரி ரஞ்சிதம் - நகைச் சுவைப் பங்களிப்பான கவியாணம் முடித்துப் பார் - கிரிக்கட் விளையாட்டின் மேன்மையைப் புலப்படுத்தும் அஸ்கிரியாவிலிருந்து லக்னோ வரை - ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கத் துTணி டும் நீங்கள் நலமா சின்னஞ்சிறுவர்கள் சுவைப்பதற்கான சண்டியன் ஓநாய் சிறுவர் உலகம் - வெவ்வேறு கருத்துப் படையலாக விளங்கும் இந்தப் புத்தகப் புனத்துள் புகுந்து கொள்ளும் வாசகனுக்கு எந்தப் புத்தகத்தை எடுப்பது எதைத் தள்ளிவிடுவதென்ற சலன ஊற்று இயல்பாகவே பெருக்கெடுக்கும். எந்தவொரு விஷயத்திலும் முதலி திருப்திதான் கடைசி வரை நீடிக்கும். இது புத்தக வாசிப்புக்கும் பொருந்தும். பொழுதைப் போக்குப் பொருட்டோ அல்லது அறிவைப் பெருக்கும் எண்ணத் தோடோ வாசிக்க எத்தனிக்கும் மாணவனுக்கோ அல்லது வயது வந்த ஒருவருக்கோ அவரது கன்னி வாசிப்ட ஆத்ம திருப்தியைக் கொடுக்காவிட்டால் அவ வாசிப்பைத் தொடர்வது துர்லபம். கால் மாறி இந்த நேரத்தை வேறெதிலும் செலவிடவும் தூண்டப்படுவர் இது சினிமாவாகவோ அல்லது விளையாட்டாகவே இருக்கலாம். அல்லது அவப் பொழுதைப் போக்கிக் சோம்பேறியாகவும் மாறலாம்.இது சமுதாயத்துக்கு மிகவும் துரதிருஷ்டமான விளைவாகும். இந்த விபத்திலிருந்து மீட்டு ஒருவரை சிறந்த வாசகனாக்குவது சான்றோரது கடமையாக இருக்க வேண்டும்.!
ஈழமொரு வளர்முக நாடு சொகுசு வாழ்க்கையை ஆராதிப்பவர்கள் இந்த மண்ணை மறந்தவர்கள். எனவே ஈழப் படைப்பாளிகள் மிகுந்த அர்ப்பணிப்போடு தமது எழுத்தூழியத்தைச் செய்கின்றனர்.
போக்கிடம் தெரியாது பயணித்துக் கொண்டிருந்த ஈழத்து இலக்கியத்தைச் சரியான தடத்தில் மிதக்க வைத்தவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள்.இவர்களது பிரவேசத்திற்குப் பின்னர்தான் எமது இலக்கியத்திற்கு சர்வதேசக் கவனம் கிடைக்கப் பெற்றது. இவர்களது விதைப்புகளிலிருந்து வெடித்துச் சிதறிப் பெரு விருட்சமாக ஓங்கி நிற்பதுதான் எமது இன்றைய இலக்கியம். தேசிய இலக்கியத்தை முன்வைத் முற்போக்காளர்கள் சாதியம், பெண்ணியம், வறுமை தொழிலாளர் பிரச்சினை இவைகளுக்கு முக்கியத்துவ கொடுத்தனர். எழுத்தில் யதார்த்தத்தை வற்புறுத்தின இதனால், எமது படைப்புக்கள் போலிக் கற்பனைகளுல் அகப்பட்டுத் தரத்தை இழக்காமல் தப்பியது மென்மையான உணர்வுளைக் கிள்ளிவிடும் சினிமா தன்மை கொண்ட படைப்புகள் எம்மவரால் ஆக்கப்ப வில்லை. இருந்தும் எமது ஆக்கங்களைப் வெம்பல் வெதும்பலெனச் சிறுமைப்படுத்துவது பின்னுக்கு வந் கொம்பு மறைக்கப் போகிறதென்ற ஒரவஞ்சனையான ஒரு தலைப்பட்சமான வக்கரிப்பேயாகும்.
சமூக அக்கறையோடு சிந்திக்கும் கருவறைகளி சூல் கொண்ட நூல்கள், நூலகங்களின் ராக்கைகளி ஆரோகணிக்கப் போகின்றன. வாழ்க்கையின் ஆரம்ப படிகளில் நிற்பவர்கள் மாணவர்கள், அவர்களுக்கு செப்பமான வழியைக் காட்டக் கூடிய ஆலோசனைகள் புத்திமதிகள் தேவை. அவர்களது வாசிப்பு இத
கனுமஜாக இருக்க வேண்டும். அல்லாவிடில் புத்த

மேந்தும் அவர்களது கை வேறெதையும் ஏந்த ஏவப்படும்.!
வாசிப்பதற்கென ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? நூலின் தலைப்பு, அட்டைப்படம் ஆகியன ஒரு வாசகனுக்கு வலை விரிக்கும் வல்லமையைக் கொண்டவையா? ஈழத்துப் புத்தகங்கள் சினிமாக் கவர்ச்சி கொண்டவையாக ஆக்கப்படுவதில்லை. சிறுவர் நூல்களுக்கான அட்டைகள் சிறுவர் நூலாக்கத்தில் பெரும் பங்கைப் பெறுகின்றன. இதன் சூட்சுமம் சிறுவர்களை மயங்க வைப்பதே. படைப்புக்கு தலைப்பிடும் பொழுது கருத்தாழம் கொண்டதாக அமைய வேண்டுமெனப் படைப்பாளிகள் விரும்புகின்றனர். புத்தகத்தின் இந்தப் புறத் தோற்றத்தால் நல்லதொரு வாசகன் கவர்ந்திழுக்கப்படமாட்டான். நூலின் உட்புறப் பயன்பாடே வாசகரின் இச்சையை உருவாக்குகிறது எழுத்தாளர் சிலர் தமது படைப்புக்களின் மேம்பாட்டால் வாசகனின் இதயத்தில் நிரந்தரமான இடத்தைப் பெற்றுவிடுகின்றனர். அவர்களது பெயரைப் பார்த்தவுடன் அதை வாசகர்கள் படிக்க முனைவர். பெரிய பாப்பாக்கள் கூடச் சின்னப் பாப்பாக்களின் நூல்களைப் படிப்பதுண்டு. இது பழக்க தோஷமாகவும் இருக்கலாம். சிறுவர் நூல்களில் - கதைகளில் கதைத் தன்மை, திருப்பங்கள் ஏராளமாக வருவதுணி டு. இதனால் பெரிய பாப்பாக்களுக்கு சிறுவர் நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதுண்டு. நூல்களை வாசிப்பதற்குப் பற்பல காரணங்கள் கூறப்படுகின்றன. மொழித் தேர்ச்சியைத் தக்க வைப்பதற்கு வாசிப்பு உதவும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் பார்த்த நேரமெல்லாம் புத்தகமும் கையுமாகத் தோன்றுவது இதன் நிமித்தமே. கற்றதைக் கால நீட்டம் அள்ளிக் கொண்டு போகாமல் இருப்பதற்கு வாசிப்புக் கைகொடுக்கும். வாசிப்புத் தகவல் சேகரிப்பிற்கும் தோள் கொடுக்கிறது. நாவல்கள், சிறுகதைகள் வாசிப்பது தற்பொழுது வேகமாக அதிகரித்துவிட்டது. இதற்குக் காரணம் இவைகள் வாசகருக்கு ஆசிரியர்களாகவும் , ஆலோசகர்களாகவும், நீதிபதிகளாகவும் சிலநேரங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களாகவும் சேவிக்கின்றன. பொழுது போக்கைக் கருதி இவைகள் வாசிக்கப்படு வதாகச் சில குறுகிய வட்டங்கள் எல்லைப்படுத்து கின்றன. இருந்தும், ஒருவனது மனதை ஒருநிலைப் படுத்தும் மகாசக்தியைப் புத்தகங்கள் தம்பால் கொண்டிருக்கும் உண்மையை எவரும் மறுக்க முடியாது. வாசகனின் மனத்தைப் புத்தகங்கள் உழுகின்றன. மன இயல்பே ஒருவனது வாசிப்பைத் தீர்மானிக்கின்றது. எனவே அவன் பெற்றுள்ள அறிவும் இதைத் தீர்மானிக்கும். ஒரு பொம்மைக் கடைக்குள் விடப்பட்ட சிறுவனாக வாசகனொருவன் புத்தகக் கடைக்குள் நின்று முழுசுவான். விற்பனையாளன் புத்தகங்களைக் காட்டு வான். எடுத்துப் படித்துப் பார்க்கும்படியும் விற்பனை யாளன் கூறக்கூடும். இந்தச் சொற்ப நேர வாசிப்புக்கூட சிலருக்கு நல்ல புத்தகங்களைத் தெரிவதற்கு உதவு கின்றது. கவிஞர் மேமன்கவி அடிக்கடி சொல்வதுண்டு.
அறப்படித்தவர்கள் பேசிக் கொண்டு நிற்கும் பொழுது
தான் மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றுவிடுவாராம். பேசிக்கொண்டு இருக்கும்பொழுது சொல்லப்படும் புத்தகங்களை ஞாபகத்தில் வைத்து அவைகளை

Page 86
வாங்கிப் படிப்பாராம். இத்தகைய பரம பிரயத்தனங்களும் நல்ல புத்தகங்களை வாசிக்க உதவுகின்றன. சிறந்த வாசகர்களாக நண்பர்கள் இருந்தால்இது பெரும் பேறு. கதையோடு கதையாக விஷயத்தைப் பிடுங்கலாம். கதைச் சுருக்கத்தைக் கூடச் சொல்லி வாசிக்கத் தூண்டுவார்கள். பத்திரிகைகள் புத்தக அறிமுகங்களைச் செய்கின்றன. சிலர் ஒரவஞ்சகப்படுத்தியும் எழுதுகின்றனர். நேர்மையோடு உண்மையை வாசகனுக்குத் தருவது முண்டு. இப்படியும் புத்தகங்கள் இனங் காட்டப்படு கின்றன. இந்த விஷயத்தில் வாசகன் பசும்பாலைக் கண்டுபிடிக்கும் அன்னமாகச் செயல்பட வேண்டும்.
இன்றைய தலைமுறை பெரும்பாலும் தென்னிந்திய எழுத்தாளர்களினது வாசகராக இருப்பது வெட்கக்கேடான உண்மை. ஈழத்து இலக்கியத்தின் நாணயக் கயிற்றை முற்போக்காளர்கள் இழுத்துப் பிடித்து வழிப்படுத்தியும் அது இன்னமும் வேர்களைத் தேடி நிற்பது இலக்கிய நேசர்களுக்கு ஆதங்கமே! புத்தக விற்பனையாளரொருவர் ரமணி சந்திரனின் புத்தகத்தைத்தான் கேட்கிறார்களென ஒப்புக் கொண்டுள்ளார். இந்நாட்டில் நிலவும் துர்ப்பாக்கிய நிலையை கருத்திற்கெடுக்கும் பொழுது இப்படியொரு மிலேச்சத்தனமான போக்கு வாசகர் மத்தியில் இருப்பது வயிற்றை எரிய வைக்கிறது. இருந்தும் தற்போதுள்ள வாசகத் தரம் இலக்கிய வாசிப்புக்கு நிச்சயம் மாறும். அது இப்பாரிய கொள்வனவில் அடங்கும் புத்தகங்களால்
 

சாத்தியப்படுத்தப்படும். இப்படியாக இலக்கிய வாசிப்புக்கு வாசகன் பரிணாமம் பெறும் பொழுது அவனுக்கு வாசிப்புப் பசியை அடக்க சில புத்தகங்கள் தேவைப்படும். அப்பொழுது தன் இரசனைத் தளத்திற்கு ஏற்றாற்போல் அவன் சில புத் தகங்களைக் கேட் பாணி , வெளியீட்டாளர்களை அதிசயிக்க வைப்பான்.
இலங்கை சாகித்திய மண்டலத்தின் தமிழ் சிறுகதைக் கான முதலாவது பரிசைத் தட்டிக் கொண்ட டொமினிக் ஜீவாவின் “ தண்ணீரும் கண்ணிரும்" இன்று எத்தனை நூலகங்க்ளில் உண்டு? விற்பனையாளர்களிடம் தான் உண்டா? அதேபோல் ஒரேயொரு நாவலை மட்டும் படைத்து, தமிழ் நாவல் உலகில் அழியாத இடத்தைப் பிடித்த பாலமனோகரனின் “நிலக்கிளி'யை இன்றைய இளம் வாசகன் பார்த்திருப்பானா? கே.டானியலின் "பஞ்சமரை” தெணியானின் “பொற்சிறையில்வாடும் புனிதர்”, எஸ்.பொ.வின் “வீ இவைகள் வாசகர்களால் தேடப்படும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இதைக் கண்டு புத்தக விற்பனையாளர்கள், வெளியீட்டாளர்கள் புளகாங்கிதமடையப் போகின்றனர். இதன் நாற்றங்காலாக - இந்தப் பாரிய புத்தகக் கொள்வனவு விடிவெள்ளியாகப் பூத்திருக்கின்றது. எதிர்காலத்திலும் இது நீடிக்க வேண்டுமென இலக்கியவாதிகள் விரும்புகின்றனர்!
தட்டிக் கொடுப்பது தன்மானத்திற்கு என்றுமே பங்கமாகாது! Ο
N లై
KAMA S SYNSV
* Sr. 1A M
O. N. ーy PS)
w
খুঁজলে দলগতks

Page 87
கடிதங்கள்
மல்லிகை அவுஸ்திரேவியா சிறப்பு மலர் கிடைத் சிறந்த வடிவமைப்பு, சிறப்பான தாள்கள், பாராட்டப்படவேண்டிய உழைப்பு.
எதிர்பார்த்த அளவுக்கு விடயதானங்கள் இல்ை போராடுகின்றோம். அகதிகளாகப் போனவர்கள், அவு வரலாறு, சுதந்திரம் மறுக்கப்பட்டு கொன்று ஒ குடிகளின் புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கை துயரம்
அவுஸ்திரேலியா கண்டம் பூமிப் பந்தில் நிை வாழ்ந்து வந்ததும் உண்மை! ஆனபடியால், ! கொலம்பஸின் கொடுமைகளை மறைத்த வரல மறைக்கப்பட்டது. வஞ்சிக்கப்பட்ட சிவப்பு இந்தியர்க கொன்று ஒழிக்கப்பட்டனர். மண்ணின் மைந்தர்களி பிரிட்டனின் சர்வ அரசியின் ஆக்கிரமிப்புக்கு பரிச கொலம்பஸின் இரத்த வெறி கொலை சரித் தமிழர்க்கு வெளிப்படுத்தப்பட்டது!
அவுஸ்திரேலியா சரித்திரம் கப்டன் குக் கால் மைந்தர்களின் வரலாறு, சுதந்திரப்போராட்டம், நாடே இன்றைய சோக நிலை பற்றி நிறைய எதிர்பார்த் இந்த மண்ணில் போராட்ட சூழலில் வாழும் ம8 வாழ்ந்து போராடிக் கருகி மாண்டவர்களின் சோக வ
மல்லிகை" அவுஸ்திரேலியா மலர் கிடைத்தது. நூலொன்றை அனுப்புமாறு வேண்டுகின்றேன். பார தேடுதல், கிராமியக் கவிதைகளின் சார்பு, வ அத்திவாரங்களையும், அல்லது அவற்றிலும் கூடுதலி அதனால், இன்றும் தமிழ்க்கவிதை முயற்சிகள் ப மீறியெழும் தனித்துவம் இன்றும் நமது கவிஞர் மேமன்கவியும், ஜின்னாவும் மோதும் விடயங்களி புதுமை தேடிச் செல்கிறது. முன்னேயுள்ளவருள் ( வளர்ச்சிக்கு உலக இலக்கியங்களுடன் சமத்துவ என்பவர்கள் சொன்ன இடத்தில் குந்தி விடுவார் மனதில் கொள்ளாது மரபு, புதுமை பேசுதல் க சிறப்பு.

தது. நன்றி?
அச்சமைப்பு எல்லாம் வெகு நேர்த்தி. மிகவும்
ல. ஏன் இந்த வறுமை? நாம் இங்கு சுதந்திரத்திற்காக ஸ்திரேலியா நாட்டின் உண்மைக் குடிகள் வஞ்சிக்கப்பட்ட க்கப்பட்ட துயர சரித்திரம், இன்றைய உண்மைக் பற்றி ஒரு வரி இல்லையே? லத்து இருந்தது. அங்கு ஜீவனுள்ள மனித கூட்டம் பாரும் அவுஸ்திரேலியாவை கண்டுபிடிக்கவில்லை! ாறு போல் தான் அவுஸ்திரேலியாவின் வரலாறும் ள் போல் தான் அவுஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களும் lன் தலைகள் துண்டிக்கப்பட்டன. தலைவனின் தலை ாக அனுப்பப்பட்டது. திரம் சுப மங்களாவில் எஸ்.வி. இராசதுரையினால்
எப்படி அமைக்கப்பட்டது? அவுஸ்திரேலியா மண்ணின் கபளிகரம் செய்யப்பட்ட வரலாறு மண்ணின் மைந்தர்களின்
தோம். ஒன்றும் இல்லை! க்களால் தான் இன்னொரு நாட்டின் போராட்ட சூழலில் ரலாற்றை உணரமுடியுமா? யாரும் பதில் கூறுவார்களா?
இராஜ தர்மராஜா
Dகிழ்ச்சி. 'கிழக்கிலங்கைக் கிராமியம் ரமீஸ் உடைய தியிடம் மரபு, மரபுமீறல், மரபைப் புதுப்பித்தல், புதுமை சனகவிதை, என்பன காணப்படுகின்றன. இவ்வாறு ாகத் தமிழ்க்கவிதை முயற்சி செய்ய யாரும் எழவில்லை. ாரதியின் அத்திவாரத்தில் தான் நிற்கின்றன. இவற்றை களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படியிருக்க ல் புதுமையும் இல்லை, ஆராக்கியமுமில்லை. காலம் மறையாக இப்போது தெரிவதாகயில்லை. தமிழிலக்கிய மடைய இன்னும் புதுமைகள் தேவை. தேவையில்லை கள். இலக்கியம் புதுமையுடன் ஒட்டி வளரும். இதை ாலத்தை வீணாக்குதல். செயல் முறையில் துணிதல்
ஏ. இக்பால்

Page 88
வரைவிலக்கணம் பற்றி
எஸ்.வன்னியகுலம்
"ஒரு கலையாக்கத்திலிருந்து தான் பெறுகின்ற அனுபவ உணர்வைத் தெளிவுபடுத்தி, மதிப்பிட்டு, மற்றையோர்க்கு உணர்த்துகிற செயற்பாடே திறனாய் வாகும்.இது அழகியல் அனுபவத்தில் இயற்கையாகவும் தவிர்க்கமுடியாததாகவும் அமைகின்ற ஒன்று என அமெரிக்க கலைக்களஞ்சியம் திறனாய்வு பற்றிக் குறிப்பிடுகின்றது. ‘இலக்கியத்தில் அல்லது நுண்கலைகளில் உள்ள அழகியல் கூறுபாடுகளின் பண்பையும் மதிப்பையும் பற்றித் தீர்ப்பளிப்பதே திறனாய்வு' என பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் திறனாய்வை வரையறை செய்கின்றது.
மதிப்பிடுவதும், தீர்ப்பளிப்பதுவுமே திறனாய்வாகும் என அக்ஸ்போட் புதிய அகரமுதலிலே குறிப்பிடப்பட்டுள் ளது. உலக இலக்கிய அகரமுதலியிலே, சிப்ளேயும் இதே கருத்தினையே வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால், பிரெஞ்சு மொழிக் கலைக்களஞ்சியம், 'திர்ப்பளிப்பதும் திறனாய்வாளரின் கடமைதான் ஸ்ன்று கருதினாலும், ஒரு படைப்பை விரித்து விளக்குவதே திறனாய்வின் இன்றிய மையாத பணியாக மாறியுள்ளது எனச் சுட்டிக் காட்டியுள் ளது. ஜெர்மன் மொழிக் கலைக்களஞ்சியம் ஒன்று 'ஒப்பிட்டு ஆயும் தன்மையே திறனாய்வின் முக்கிய கூறென வலியுறுத்தியிருக்கின்றது.
திறனாய்வு பற்றி ஆய்வாளர்கள் முன்வைத்துள்ள மேற்காட்டிய கருத்துக்களிலே, திறனாய்வு என்பது படைப்பை விளக்குவது, மதிப்பிடுவது, என்ற அளவிலே யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே அமைந் திருக்கின்றது. இதுபற்றிக் கருத்து முரண்பாடுகள் பெரிதாக ஏதுமில்லை. ஆனால் தீர்ப்பளித்தல்' என்ற நிலையிலேயே பெரும் முரண்பாடுகள் எழுந்துள்ளன. ஐ.ஏ. றிச்சாட்ஸ், ஆரம்பகாலத்திலே தீர்ப்பளிக்கும் திறனாய்வுமுறையை வரவேற்றார். ஆயினும் பின்னர் அவர் பகுத்தாராயும் முறையையே பின்பற்றினார். ஆனால்
 

லக்கியத் திறனாய்வு
ரிய சர்ச்சைகள்
டி.எஸ். எலியட் தீர்ப்பளிக்கும் திறனாய்வு அணுகுமுறை க்கு அதிக அழுத்தங் கொடுத்தார். டி.எஸ். எலியட்டின் தீர்ப்பளிக்குந் திறனாய்வு அணுகுமுறையை, நர்தாராப் ப்ரை கண்டிக்கின்றார். அது தேவையற்றது எனவும், பல சமயங்களிலே அது சிறுபிள்ளைத்தனமானதாக அமைந்து விடுகின்றதெனவும் அவர் கூறுகின்றார்.
தீர்ப்பளிக்கும் திறனாய்வாளர், தம்மை முதன்மைப் படுத்துகிறார். பகுத் தாய்கின்ற திறனாய்வாளர் படைப்பையே முதன்மைப்படுத்துகிறார். இத்தகைய ஒரு சூழலில், ஓர் இலக்கிய ஆக்கத்தைப் பகுத்தாராய்வதும், விளக்குவதும், மதிப்பிடுவதும், தீர்ப்புக் கூறுவதும் ஆகிய அனைத்துச் செயற்பாடுகளும் இலக்கியத் திறனாய்வே ஆகும். இது தவிர்க்கமுடியாதபடி ஒரு தளத்தில் இயங்கும் செயற்பாடாகும் எனத் திறனாய்வு பற்றிய சர்ச்சைக்கு முத்தாய்ப்பு வைத்திருக்கின்றார் தமிழ்நாட்டறிஞர் பஞ்சாங்கம்.
எமது நாட்டின் திறனாய்வாளர் பேராசிரியர் க. கைலாபதி திறனாய்வுபற்றிச் சற்று வித்தியாசமான நோக்குடைவராகக் காணப்படுகிறார். டீ.எஸ். எலியட் கூறுவதை க. கைலாசபதி வழிமொழிந்திருக்கின் றார். எலியட்டின் இவ்வரைவிலக்கணத்தை முற்றாக ஏற்றுக் கொள்ளாதவரும் இப்பணியை உள்ளடக்கி, வேறு சிலவற்றையும் சேர்த்துக் கொள்ளுவரேயன்றி இதனை நிராகரிக்க மாட்டார் என்பதுறுதி எனக் கைலா பதி கூறுகின்றார். "வேறு சிலவற்றையும் சேர்த்துக் கொள்வர் என்ற கூற்றின் மூலம் கைலாபதி டீ. எஸ். எலியட்டின் கூற்றோடு முற்றிலும் உடன்பாடு கொண்டவரல்ல என்பது தெளிவாகின்றது. வேறு சில' என்ற கூற்று எவற்றைக் குறிக்கின்றது?
தமிழிலக்கியம் நீண்டதொரு பரம்பரியமும் மரபுகளும் கொண்டது. அந்தப் பாரம்பரியங்கள் இற்றைவரைடிஎமது தமிழ் இலக்கியத்தையும் திறனாய்வையும் வழிநடத்தி

Page 89
வருகின்றன என்பது பேராசிரியர்கள் க. கைலாசபதியி னதும், கா. சிவத்தம்பியினதும் உறுதியான நிலைப்பாடா கும். தமிழில், தொன்றுதொட்டு விளங்கிவரும் கதாகாலாட் சேப மரபு இன்றைய விமர்சனத்துறையையும் தொடர்ந்து வருவதாக கா. சிவத்தம்பி குறிப்பிடுவர். பேராசிரியர் கைலாசபதி திறனாய்வு, கலை இலக்கியத்துக்கு மட்டும் வேண்டப்படுவதன்று. அது நவீன கல்வித்துறைகள் அனைத்துக்கும் பொருந்துவது எனக் கூறுகின்றார். நமது முன்னோர் கலை இலக்கியங்களை விவரிக்கையில், அவற்றின் இலட்சியப் பண்புகளாகச் சத்தியம், சிவம், சுந்தரம் என்பவற்றைக் கூறினர். உண்மை, நன்மை, அழகு என்பனவே இம்மூன்றுமாம். இவை இன்றும் போற்றக்கூடியன என்பதில் ஐயமில்லை' எனக் கைலாச பதி குறிப்பிடுகின்றார். பேராசிரியர் கா. சிவத்தம்பி கலை, இலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் 'மார்க்ஸிய அழகியலின் இன்றியமையாமையை வற்புறுத்தி வருகின
’றார். (க. கைலாசபதி திறனாய்வு என்ற சொல்லையும், CRTICSM என்ற ஆங்கிலப் பதத்தின் தமிழ் வடிவமாகப் பயன்படுத்தி வருகின்றார்.)
திறனாய்வு / விமரிசனம் பற்றிய மேற்குறித்த வாதப் பிரதிவாதங்கள் சில உண்மைகளை உணர்த்துகின்றன. திறனாய்வு பற்றிய வரைவிலக்கணம், எக்காலத்தும் ஒரே
தன்
8BIT6 வந்
ԱT6
 

மை கொண்டதாயிருக்கவில்லை. அது காலத்துக்குக் ம், மாற்றம் பெற்று வந்துள்ளது, வளர்ச்சியடைந்து துள்ளது என்பது தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. திறனாய்வு / விமரிசனம் பற்றிய முழுமையான ஒரு ரவிலக்கணம் இதுகாலவரை முன் வைக்கப்பட லை என்பது இன்னொரு முக்கியமான விடயம். வபற்றி சம்பூரணமான ஒரு வரைவிலக்கண த்தை காலத்தும் வகுத்துவிடமுடியாது என்பது இவற்றின் ம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகாலை க்கியத்திற்கும் பொருத்தமானது. கலை இலக்கியத்தி D சம்பூரணமான ஒரு வரைவிலக்கணம் இதுகாலவரை க்கப்படவில்லை. காலத்துக்குக் காலம் வகுக்கப்படும் ரவிலக்கணங்களை உடைத்துக் கொண்டு புத்தம் ப இலக்கியங்கள் பிறக்கின்றன. படைப்புத்துறையில் று போல மற்றொன்று என்றுமே இருந்ததில்லை. வொன்றும் மற்றதிலிருந்து ஏதோ ஒரு வகையில் றுபட்டே நிற்கின்றது. திறனாய்வுத் துறைக்கும் அது ருந்துவதே. ஒரு இலக்கியத்தைப் பகுத்தாராய்வதும், ப்பிடுவதும், தீர்ப்புக் கூறுவதும் விளக்குவதும் ஆகிய ]னத்து செயற்பாடுகளும் திறனாய்வின்பாற்படும் றாலும், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோர் அணுகுமுறை நிக்கஞ் செலுத்துவதாக இருக்கும் என்பதே யதார்த்த பமானதாகும்.

Page 90
முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி. அவர்களுக்கு, இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் விருது கிடைத் துள்ளதைப் பற்றிச் சில விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இதில் விண்நாயகன் இதழில் வெளியான ஜெயமோகன் விமர்சனம் தி.க.சி. க்கு அநீதி இழைக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டதாக வாசித்தவுடன் நான் உணர்ந்து கொண் டேன். தி.க.சி. 75 ஆண்டுகள் வாழ்ந்து நிறைவு பெற்றவள். இந்த முதிர்ந்த வயதிலும், தி.க.சி. யின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற மனநிலை ஜெயமோகனுக்கு ஏன் வந்தது என்பது என்னை யோசிக்க வைத்தது.
தி.க.சி. க்கு வழங்கப்பட்டது முதியோருக்கு வழங்கப் பட்ட பென்சன் போன்றதுதான். விருதுக்கான தகுதியாக க் கொள்ள இயலாது என்பதில் ஜெயமோகன் விமர்சனம் அமைக்கப்பட்டுள்ளது. நேர்மையான எழுத்தாளராக இதுநாள் வரை வாழக் கூடிய தி.க.சி.யின் மனதை எந்த அளவிற்கு இது வேதனைப்படுத்தியிருக்கும்? இதைப் போன்ற மோசமான போக்குகள் தமிழில் ஏன் வருகின்றன என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
எந்தவொரு படைப்பைப் பற்றியும் விமர்சனம் செய்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கக் கூடியதுதான். இது படைப்பாளியின் மீது தனிப்பட்ட தாக்குதலாக வரும் போதுதான் ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. ஜெயமோகனின் விமர்சனத்தில் வயதானவர் என்பது இலக்கிய அளவுகோ லின் முக்கிய அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. தி.க.சி வயதானவர் என்பதைக் கிண்டலடித்துத்தான் தனது இலக்கிய விமர்சனத்தைத் தொடங்கியிருக்கிறார். இது ஜெயமோகனின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. வயதானவர்களைக் கிண்டல்டித்து; அவமதிப்பது பாசிசத்தின் ஆரம்பநிலை. வயதானவர்களைக் கொலை செய்வது பாசிசத்தின் முதிர்ந்த நிலை. ஹிட்லர் வயதானவர்களால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. வெறும் சுமைதான் என்று கொலை செய்ய உத்தரவிட்டான்.
முதியோர்களை வழிபடுவது நமது மரபு. அவர்களது உயிர்ப்புள்ள அனுபவம், புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. இது தமிழ் நெடும் பரப்பில் ஆழமாகவே உணர்த்தப்பட்டே வந்துள்ளது. இந்தப் பாதையை ஜெயமோகன் இழிவுபடுத்த விரும்புகிறார். இதைத்தான் தி.க.சி. யின் அர்ப்பணிப்பு மிக்க எழுத்தின் மீதான கேள்வியாக்கியுள்ளார். இந்த கேள்வி, தி.க.சி. படைப்பாக்க அர்ப்பணிப்புக்குச் சம்பந்தமில்லாத வெறும் வயதானவர் மட்டும் தானா? என்ற எதிர்கேள்வியை உருவாக்குகிறது.
 

sf uqib 5 ஜெயமோகனும்
தாமரை - மகேந்திரன்
தி.க.சி. எழுத்தாளராகும் உந்துதலில் தான் பணியாற் றிய பொருளாதாரத்தில் மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட வங்கி ஊழியத்தை உதறித் தள்ளி விட்டு எழுத்தாளராக மாறியவர். இதைப் போலத்தான் வல்லிக்கண்ணன் அவர்களும், எழுத்தாளராகப் பிரகடனப்படுத்தி, தனது அரசாங்கப் பணியைத் துறந்தவர். வேலையை விட்டு வெளியேறியவர். முழுநேர இலக்கியப் பணியை இந்த நாள் வரை செய்து வருகிறார் தி.க.சி. இலக்கியத்தில் பெரும் புகழ் பெறுவதற்கு அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை எதுவும் செய்யாமலிருக்கும் துரோகத்தை தி.க.சி. செய்யவில்லை. ஜெயமோகன், தொலைத்தொடர்பு துறையில் சம்பளம் பெறும் பணியா ளர். இரண்டு/மூன்று மாதங்களுக்கு ஒன்று என்று ஆயிரம் பக்கம் கொண்ட நாவல்களாக எழுதிக் கொண்டிருக்கிறார். இது எப்படி ஜெயமோகனுக்குச் சாத்தியமாகிறது. ஆழமாக யோசித்துப் பார்த்தால் யாருக்கோ துரோகம் செய்கிறார். அது தொலைத் தொடர்புத் துறைக்கா? அல்லது இலக்கியத்திற்கா? என்பதுதான் புரியவில்லை. இதையொட்டி, மிக நேர்மையான இலக்கியப் பயணத்தில் ஈடுபட்டு வரும் தி.க.சி. யை விமர்சிக்கும் தார்மீகம் ஜெயமொகனுக்கு உண்டா? என்றக் கேள்வி எழுகிறது.
இலக்கிய மதிப்பீடு பற்றி ஜெயமோகன் அடிக்கடி கவலைப் படுவதாகக் காட் டிக் கொள்கிறார் . சமூகத்திலுள்ள பெரும்பான்மையினரின் விருப்பங்களைத் தரம் தாழ்ந்தவை என்று கருதுகிறார். 'இல்லை அவர்களின் அனுபவம், குளிர்சாதன அறைகளுக்கிடையே அமர்ந்து, மேலான விஷயங்களை கொரித்துக் கொண்டிருக்கும் உயர்குடி மக்களின் இலக்கியத்தை விட ஜீவனுடையது என்றால் ஜெயமோகனுக்கு ஆத்திரம் வருகிறது. வியர்வை மனிதர்களுக்கும் உலகத்திற்குமான உழைப்புப் பந்தம் மறுக்கக் கூடியதா? இதை மறுத்தால் தாயை மறுக்கும் தறுதலைகளை போலல்லவா மனித குலம் அனாதையாகி விடும். இந்த நன்றி கெட்ட செயலுக்கு இலக்கிய அந்தஸ்தை அளித்து, இதுதான் மேலானது என்று முடி சூட்டிக் கொள்கிறார் ஜெயமோகன். இது ஒரு எழுத் தாளனுக்கு மேன்மை அளிக்கக் கூடியதாக முடியாது.
கம்யூனிசத்தையும், இதன் அடிப்படைத் தத்துவமான மார்க்சீயத்தையும் ஜெயமோகன் மிக மோசமாக வெறுத்து ஒதுக்குவது நன்றாகவே நமக்கு புரிகிறது. மார்க்சீயம் வெறுக்கக் கூடியது தானா என்று பலமுறை நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சிகளோடு ஆழமான கருத்து வேறுபாடு கொண்டவர்கள் கூட
Ricrenas 9

Page 91
மார்க்சீயத்தை வெறுப்பதில்லை. ஆதிக்கக்காரர்கள் மட்டும் வெறுக்கிறார்கள். கீழவெண்மணியில் 44 மனித உயிர்களைத் தீயிட்டுப் பொசுக்கிய நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு கம்யூனிசத்தை எதிர்த்தான். இப்படி சிலரைமட்டுமே கூற முடியும், ஜெயமோகனும் எதிர்க்கிறார். இவர் நிலப்பிரபுவோ / ஆலை அதிபரோ அல்ல. ஜெய மோகனைப் போன்றே, கம்யூனிசத்தை அருவெறுப்போடு நோக்கிய வேறு சிலரை நான் பார்த்திருக்கிறேன். இவர்களும் வயிற்றுக்குக் கைநீட்டிச் சம்பளம் வாங்கும் ரகம்தான். ஆனால் இவர்கள் ஆதிக்க சக்திகளின் எடுபிடிகளாக வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்து வந்தவர்கள். ஜெயமோகனின் கம்யூனிச வெறுப்பு எந்த வகையைச் சார்ந்தது என்று இன்னமும் புரியவில்லை.
கம்யூனிஸத்தின் மீதான வெறுப்புதான் தி.க.சி. யிடம் குறை கண்டு பிடிக்க காரணமாயிற்று. இவருடைய எழுத்து உழைக்கும் மக்களுக்குச் சொந்தமானது. உழைக்கும் மக்களுக்காக எழுதும் தலைமுறையை ஊக்குவிக்கக் கூடியது. குழந்தையை வளர்த்தெடுக்கும் பொறுப்போடு கூடிய தாய்மையின் விமர்சனம் இது. நச்சு இலக்கியங்களுக்கெதிரான இவருடைய விமர்சன ங்கள் புகழ் பெற்றவை. இவையெல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு சார்பு நிலையில் வந்த தாக்குதலாகவே இவர் மீதான விமர்சனங்கள் அமைந்துள்ளன.
ஜெயமோகன் மற்றொரு கருத்தையும் முன் வைத்துள் ளார். இது மிகவும் வேடிக்கையாகத் தெரிகிறது. மிக மர்மமான முறையில் குழு அமைத்து, நுட்பமாக செயல்பட்டு, சாகித்ய அகாதமியினை வளைத்து, விருதுகளை கம்யூனிஸ்டுகள் பறித்துக் கொள்கிறார்கள். தங்கள் நண்பர்களுக்கும் பறித்துக் கொடுக்கிறார்கள் என்கிறார். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பதாக, இதனைக் குறுக்கிப் பார்க்கிறார். ஜெயமோக னின் இலக்கியப் பயிற்சி வித்தியாசமானது. இத்தகைய பயிற்சியைப் பெற்றவர்கள் இப்படித்தான் யோசிக்க முடியும். மார்க்சீயம் உருவாக்கிய முற்போக்கு இலக்கிய முகாம் பலவீனமானதல்ல. கவி ரவீந்திரநாத் தாகூர் முதல் பிரேம்சந்த், முல்க்ராஜ் ஆனந்த், சரத்சந்திர சட்ட ர்ஜி உள்ளிட்ட அனைவரின் தொடர்புகளைக் கொண்டது. இப்பொழுது. இந்திய மொழிகளுக்கு வழங்கப் பெறும் அகாதமி விருதுகளில் ஆண்டுதோறும் நான்கு அல்லது ஐந்து விருதுகளை மார்க்சீய - இலக்கியங்கள் தான் பெற்று வருகின்றன. இதனை வெறும் தந்திரத்தால்
வருந்துகின்றோம்
ஈழத்து இலக்கிய உலகில் பரவலாகத் தெரிந் இராசரத்தினம் அண்மையில் நம்மை விட்டு ம6 பெரிய இழப்பு இது.
அன்னாரினது இழப்பை எண்ணி மல்லிகை த தெரிவித்துக் கொள்ளுகின்றது.
 
 
 
 

அடைந்தது என்று பிரச்சாரம் செய்வது எவ்வளவு ஏமாற்றுத்தனமானது.
இதைப் போலவே இலக்கியத்திற்கான நோபல் பரிசை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் தான் பெற்று வருகிறார்கள். 1996 ஆம் ஆண்டு பரிசு லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் எழுத்தாளர் மார்க்கூஸ், 1997 ஆம் ஆண்டில் இத்தாலி மார்க்சீயர் கூரிய்ஃபா, 1998 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கவிஞர் சஜியாகோ ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவை கூட ரகசியக் குழு அமைத்துத்தான் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றினார்கள் என்று ஜெயமோகன் சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன்.
தி.க.சி. யிடம் கண்டறிந்த மற்றொரு குறைபாடாக ஜெயமோகன் தபால் கார்டு எழுதுவதைக் கூறுகிறார். சக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள எத்தனையோ முறைகள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகின்றன. நவீன யுகத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். தி.க.சி. காலத்தில் தபால் கார்டு முக்கிய பங்காற்றியுள் ளது. அன்றைய மனிதர்களைப் போன்றே இது எளிமையா னது. எந்தவிதமான ரகசியங்களையும், இது மறைத்து வைத்துக் கொள்வதில்லை. மிக வெளிப்படையான ஊடகம், இதன் மீதும் ஜெயமோகனுக்கு அருவெறுப்பு வந்துள்ளது. பெரும்பாலான உழைக்கும் மக்களின் அபிப்பிராயங்களை தகுதியில்லாதவை என்று வெறுத்து ஒதுக்கக் கூடியவருக்கு விலைக் குறைந்த தபால் கார்டும் மதிப்பிழந்ததாகவே தோன்றுகிறது. இதனால் தான் தி.க.சி. யைப் போலவே தபால் கார்டையும் இழிவுபடுத்து கிறார். இவர் தபால் கார்டு எழுதக் கூடிய ஆசாமி. இவருக்கு சாகித்திய அகாதமி விருது பெற தகுதி இல்லை என்ற கருத்து நிலையை வளர்த்துக் கொண்டுள் ளார். இது எவ்வளவு வேடிக்கை மிக்கது.
கடைசியாக ஒன்று, தமிழில் எதுவுமில்லை என்ற கருத்து ஜெயமோகனுக்கு வலுவாக இருக்கின்றது. தமிழை தாம் தாழ்த்த இவர் செய்த முயற்சிகளுக்கு இலக்கிய உலகில் பெரும் எதிர்ப்பு உருவானது.
ஆனால், அதே சமயம் தமிழுக்கான சாகித்ய அகாதமி தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இப் படிப் பட்ட குழப் பங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜெயமோகனின் போலித்தனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. O
தவரும் தரமான படைப்பாளியுமான திரு.வ.அ. ]றந்து விட்டார். ஈழத்து இலக்கிய உலகிற்குப்
னது ஆழ்ந்த துயரத்தை இலக்கிய உலகிற்குத்
Szܘ
- ஆசிரியர்
భXళ:్యళ్ల

Page 92
பெரியவர்கள் என்ற சொல்லிற்கு எல்லா விதத்திலும்
தகுதி பெற்ற இருவரோடு நெருங்கிப் பழகவும், தோழமை
கொள்ளவும் கிடைத்த வாய்ப்பினை எனக்குக் கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகின்றேன்.
அன்புடமை, ஒழுக்கம், துணிவு, சான்றாண்மை, அறிவு த்தேடல், பிறரை மதித்தல் என்ற அருங்குணங்கள் அமை யப்பெற்ற இவர்கள் இருவரும் இன்றைய தமிழியலுக்கும், படைப்புக்கும் வாய்த்துள்ள அரும் பொக்கிஷங்களாகும்.
ஒருவர் முத்து விழாக் கண்ட வல்லிக்கண்ணன். மற்றவர் காலம் பிந்திச் சாகித்திய அகாதமிப் பரிசைப் பெற்றுள்ள தி.க, சிவசங்கரன். இவர்களை தமிழ் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணங்கும்.
இவர்களோடான என் பரிச்சயம் 1978ல் உண்டாயிற்று. இந்த ஆண்டிலே நான் தமிழகம் சென்றிருந்தேன். இது முற்றிலும் ஒரு இலக்கியப் பயணமே. நான் மிகவும் மதித்துப் போற்றிய பேராசிரியர் நா. வானமாமலையைச் சந்திப்பதற்காகப் பாளையங்கோட்டைக்குச் சென்றிருந் தேன். அங்கே உடனடியாகவே இலக்கிய ஒன்றுகூடலு க்கு பேராசிரியர் ஒழுங்கு செய்திருந்தார். இதில் வல்லிக்கண்ணன், திரு. க. சி, தோத்தாத்ரி, பொன்னிலன், மங்கை போன்றோர் கலந்து கொண்டிருந்தனர். முதல் சந்திப்பிலேயே இவர்கள் அனைவரும் என் அன்புக்கும் அபிமானத்துக்கும் முற்றிலும் பாத்திரமானார்கள்.
நான் இலங்கை திரும்பியதும் இந்த அன்பு நெருக்க மும் இறுக்கமும் மேலும் வலுப் பெற்றன. வளர்ச்சியடை ந்தன. கடிதத் தொடர்பால் கலை இலக்கியம் அரசியல் என்பன பற்றி விவாதித்தோம். இவர்களோடான கடிதத் தொடர்பு எனக்குப் பல விளக்கங்களையும் தெளிவையும் உண்டாக்கின.
வல்லிக்கண்ணன் சிறந்த படிப்பாளி. படிப்பையே தவமாகக் கொண்டவர். இலக்கிய வாழ்வு கருதியே கிராமத்தை விட்டு நடையாகப் புறப்பட்டவர். பத்திரிகையா ளராக இருந்து எண்ணற்ற புனைப்பெயர்களில் காரசார மாக எழுதியவர். “கிராம ஊழியன்’ இதழினால் முதல்தரமான படைப்பாளிகளுடன் நட்புக் கொண்டவர். நாவலாசிரியர், சிறுகதையாளர். புதுக்கவிதையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர்.
பாரதிதாசனின் கவிதைகளைப் பற்றிய முதல் திறனா ய்வு நூல் இவராலேயே எழுதப்பட்டது. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்', 'தீபம்யுகம்' பற்றிய இவரது ஆய்வு நூல்களை சிறந்த உசாத்துணை நூல்களாக இன்னும் பல காலத்திற்குக் கொள்ளலாம். 'பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை' என்ற அண்மைய வெளியீடும் இவற்றுள் அடங்கும்.
 

ரியவர்கள்
செ. யோகநாதன்.
இருட்டுராஜா', 'நினைவுச்சரங்கள்’ என்ற இவரது நாவல்கள் இரண்டும் பாத்திரவார்ப்பு, சம்பவக்கோவை, கலாநேர்த்தி என்ற தன்மைகளால் முழுமையும் சிறப்பும் பெற்ற காலப்பதிவு ஆக்கங்கள். வல்லிக்கண்ணன் எழு திய பல சிறுகதைகள் இன்னமுமே முழுமையாக நூலு ருப் பெறவில்லை. புதுக்கவிதைகளும் அப்படியேதான். மொழிபெயர்ப்புத் துறையிலே ஆக்கபூர்வமான பங்களி ப்பைச் செய்தவர் வல்லிக்கண்ணன். ரொபர்ட் ரூர்க்கின் "தாத்தாவும் பேரனையும் அற்புதமாக மொழியாக்கம் செய்தவர் இவர். ஏ. கே. ராமானுஜனின் இந்திய நாட்டுப் புறக் கதைகளை அழகிய நடையில் மொழிபெயர்த்தார். எண்ணற்ற குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்பட்ட தமிழ்க் கதைகளை ஆங்கிலத்திற்கும் ஆங்கிலக் கதைகளை தமிழிற்கும் மொழிபெயர்ப்பாக இவர் கொண்டு சென்றார். எமிலிஜோலாவின் நாவல், 'நிலம்' - மற்றும் சிறுகதைகளை மொழிபெயர்த்தார்.
(தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது)
சிற்றேடுகள் பற்றிய முழுமையான ஞானமுள்ளவர். சிற்றேடுகளில் தொடர்ச்சியாகவே எழுதுபவர். இவரது உற்சாகப் படுத்துதல் சிற்றேட்டு எழுத்தாளர்களை முழுமையாகச் செயற்பட வைத்தது.
இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதிலே வல்லிக்கண்ணனும், தி. க. சி யும் மேன்மையான மனிதர்கள். தரமான எதைப் படித்தாலும் அதற்குப் பாராட்டு எழுதுவதும் உற்சாகப்படுத்துவதும் இவர்கள் இருவரதும் தனித்துவமான குணங்கள். இவர்களால் தாம் உருவாக்கப்பட்டு பெருமையடையவர்கள் பலரில் இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் நிறையப் பேர் அடங்குவார்கள்.
தமிழின் எலி லா விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர் வல்லிக்கண்ணன்.
அமைதியானவர். மென்மையானவர். அடக்கமானவர். ஆனால் அநீதிகளைக் கண்டு பொறுமையாயிராமல் சினந்தெழுந்து எதிர்க்குரல் கொடுத்து விறோடு இயங்குபவர். அண்மையில் இந்திய சாகித்திய அகாதமியின் சில நூல் வெளியீட்டு முறைகேடுகள் சம்பந்தமாக ஆணித்தரமான எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டு ஓர் இயக்கமாகவே செயல்படுகின்றார் இவர். உண்மையிலே இவர் ஒரு இலக்கிய இயக்கம். தமிழக முற்போக்கு இயக்கப் பிதாமகர்களில் ஒருவர் திரு.தி.க.சி. இந்தியாவின் சிறந்த படைப்பாளரான முல்க்ராஜ் ஆனந்த், எமது கே. கணேஷ், தி. க. சி ஆகிய மூவரும் சேர்ந்தே முற்போக்கு எழுத்திாளர்

Page 93
JAYARAM B
DeClers in Impol * Jute Gunny Bags * Tea Chest * TWine * Polythene
118[7, S.R. Saravanamuttu MW, Wolfendhal Steeet, Colombo.13,
SriLanka.
H
 

BROTHERS
ferS Of
* Al Jute temS * Paper * Pearl Brand Cellophane (Chinese & Japanese)
Tel : 445615, 348430 Stores: 345099 Fax : 00941-330164 E-mail : jayaram(Oslt.net.lk
ل-----

Page 94
இயக்கத்தினைத் தமிழ கத்தில் ஆரம்பித்தனர். சகல பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகவும் படைப்பாளிகளைக் கிளர்ந்தெழச் செய்தனர். வங்கிப் பணியாளரான தி. க. சி, அர்ப்பணிப் புள்ள தொழிற்சங்கவாதியாகப் பரிணமித்தார். இதனால் பல இடங்களுக்கும் இடமாற்றம் என்ற பெயரில் பந்தாடப்பட்டார்.
சிறந்த மொழிபெயர்ப்பாளர். மார்க்சிய சித்தாந்த நூல் களையும், இலக்கிய, சிறுகதைகளையும் களைப்பின்றி உயிர்த்துடிப்போடு மொழிபெயர்த்தவர். "சீனத்துப் பாடகன்' 'போர்வீரன் காதலி' என்பன அருமையாக இவரால் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்கள்.
"சோவியத் நாடு' என்ற இதழிலே இவர் கடமை யாற்றிய போது, மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் உச்ச நிலையை எய்தின. தமிழ்ப் படைப்பிலக்கியத்திலும் உத்வேகமும் செழுமையும் உண்டாயிற்று.
தாமரை மாத இதழின் ஆசிரியராக இவர் இருந்த காலம் தமிழப் படைப்பிலக்கியத்தின் பொற்காலம். பூமணி, பொன்னிலன், பிரளயன். பா. செயப்பிரகாசம், பரிணாமன், சூரிய தீபன். தனுஷ்கோடி ராமசாமி, ராஜநாராயணன், வண்ணநிலவன். கே. டானியல், டொமினிக் ஜீவா, அகஸ்தியர், செ. கதிர்காமநாதன், பெனடிக்ற் பாலன், செ. யோகநாதன், டி. செல்வராஜ், சின்னப்பபாரதி என்ற பெரிய படைப்பாளர் அணியே எழுதுவதற்கு உற்சாகமும் தளமும் கொடுத்தார் தி. க. சி.
 

இளம் எழுத்தாளரின் படைப்பு வெளியானால் அதைப் படித்துவிட்டு, பத்திரிகைக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுவ தோடு படைப்பாளிக்கும் நேரடியாகவே கடிதம் எழுதும் உயர்ந்த பண்பாளராயிருக்கின்றார் இன்றுவரை தி.க.சி.
திறனாய்வுத் துறையில் நிறையக் கட்டுரைகள் எழுதி யிருக்கின்றார் தி. க. சி. அவர் எல்லோருடனும் வெகு அன்பாகப் பழகுபவர். ஆனால் தனது கொள்கை, சித்தாந் தம் என்பவற்றில் உறுதியாக இருந்தார். அவரது எழுத்தும் அத்தகையதே. இந்தக் கட்டுரைகள் யாவும் இப்போது நூல்களாக வெளியாகிவிட்டன. சிறந்த காலப் பதிவான திறனாய்வு இலக்கியங்கள் இவை.
தி. க. சி அருமையான தோழர். தோழமையின் அர்த்தம் உணர்ந்த மனிதாபிமானி. நான் இருதய அறுவை சிகிச்சைக்கு அவசரப்படுத்தப் பட்டபோது, எனக்காக தமிழகம் முழுதும் உதவிக்கான குரலை ஒலிக்க வைத்து, தமிழின் படைப்பாளிகள் யாவரும் எனக்காக கைகோர்த்து உதவுவதற்குக் காரணமானவர் தி. க. சி. இவரோடு அருந்துணையாக நின்றவர் வல்லிக்கண்ணன்.
தி. க. சிக்கு சாகித்திய விருது கொடுக்கப்பட்டதால் அந்த விருது பெருமை பெற்றது. இவ்வேளையில் நுணலொன்று இதற்கு எதிர்ப்புக் கூறியுள்ளது. அந்த நுணலின் பெயர் ஜெயமோகன். அறியாமையினால் பிதற்றும் நுணல். இதைப்பற்றி யாரும் அக்கறைப்பட வேண்டியதில்லை.
曹
ή
katreptajo.

Page 95
|
323 altxan
ஈழத்து இலக்கியப்புனைகதைத் துறையின் ஈழகேசரிக் காலகட்டத்துச் சிறுகதை நாற்பத்திரண்டினைச் செங்கை ஆழியான் தொகுத்து வழங்க, வடக்கு - கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சு பெரியதொரு நூலாக வெளியிட்டுள்ளது. 1930 - 1958 காலகட்டத்தில் ஈழகேசரியில் வெளிவந்த 513 சிறுகதைகளுள் தெரிந்தெடுத்த முத்துக்களாக ஈழகேசரிச் சிறுகதைத் தொகுதியுள்ளது. ஈழகேசரிக் காலம் மூன்று இலக்கியக் காலகட்டங்களைக் கொண்டது. முன்னோடி கள் காலம் (1930 - 1945), மறுமலர்ச்சிக் காலம் (1946 - 1949), முற்போக்குக் காலம் (1950 - 1958) ஆகிய மூன்று காலத்து இலக்கியப் படைப்பாளிகளின் சிறு கதைகள் ஒருங்கே இத் தொகுதியிலுள்ளன.
ஈழத்தின் சிறுகதை முன்னோடிகள் காலத்தில் நவீன சிறுகதை வடிவத்திற்கு அத்திபாரமிட்ட ஆனந்தன், பாணன், சுபா, சி.வைத்திலிங்கம், சம்பந்தன், இலங்கையர் கோன், இராஜ அரியரத்தினம், சோ.சிவபாதசுந்தரம் ஆகி யோரின் மணியான சிறுகதைகளும், மறுமலர்ச்சிக் கால கட்டத்து வரதர், அ.செ. முருகானந்தன், கனக செந்தி நாதன், அ.ந. கந்தசாமி, சொக்கன், கசின் ஆகியோரின் சிறுகதைகளும், முற்போக்குக் காலகட்டத்து வ.அ. இராச ரத்தினம், சிற்பி, டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், எஸ். பொன்னுத்துரை, புதுமை லோலன், இ. நாகராஜன் ஆகியோரின் சிறுகதைகளும் இத் தொகு தியிலிடம் பிடித்துள்ளன. இவற்றுக்கும் மேலாக மிக அற்புதமான சிறுகதைககள் சிலவற்றை அதிகம் அறியப் படாத பரிதி, நவாலியூர் சோ. நடராஜன், நாவற்குழியூர் நடராஜன், ந. பாலசுப்பிரமணியம், ராதா கிருஸ்ணன், செ. நடராசா முதலானோர் படைத்தளித்துள்ளனர் என்பது ஈழகேசரிச் சிறுகதைகள் மூலம் அறிய வருகின்றது.
 
 

நூலகம்
குறிப்புக்கள்
- நீலவண்ணன்ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியின் இருப்பினை அறிய இத்தொகுதி உதவுகின்றது. ஈழத்துச் சிறுகதை இலக்கிய த்திற்குப் பெருமை சேர்க்கக் கூடிய உன்னதமான சிறுகதைகளான தண்ணிர்த்தாகம், வண்டிற்சவாரி, ஒரு பிடி சோறு, வெள்ளிப் பாதசரம், தோணி, கற்சிலை, வயலுக்குப் போட்டார் என்பன இத்தொகுதியிலுள்ளன். ஈழகேசரிச் சிறுகதைகள் குறித்து அதன் தொகுப் பாளர் செங்கை ஆழியான் நீண்டதொரு முன்னுரை எழுதியளித்துள்ளார். ஈழகேசரி பற்றிய அதன் சமூக, இலக்கியப் பணிகளை விளக்கமாக அந்த முன்னுரை சுட்டி நிற்கின்றது. ஒரு காலகட்டப் பணிகளை ஆவணப் படுத்தியுள்ள இத் தொகுதியைத் தொகுத்தளித்த செங்கை ஆழியானும் அதனையேற்று நூலுரு வழங்கிய கல்விச் செயலாளர் க. பரமேஸ்வரனும் பாராட்டுதலுக்
குரியவர்கள்.
- கமலன் -
“欲
B S
羲 蟹、唱 毛三 日 图片 覇弱 Pa * = E 像雪翡 @活 盤掌み望適
கு)
麗 靈標鹽記
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் மணி விழாவை முன்னிட்டு, ஒராண்டு கழிந்த நிலையில், இவ்வாண்டு வெளியிடப்பட்ட மலர் சண்முக தரிசனம் ஆகும். தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்கவிலக்கி யங்களும் சம்பந்தமான பதினாறு ஆய்வுக்கட்டுரைகள் சண்முகதிரிசனத்திலிடம் கொண்டுள்ளன. பேராசிரியர் அ. சண்முகதாசின் முழு ஆளுமையை வெளிப்படுத்து வனவாக சண்முகதரிசனம் மலரமையவில்லை. தமிழில் ஆய்வுக் கட்டுரைகளும் ஆக்கவிலகியங்களும் என்று மலரில் குறிப்பிட்ட வகையில் அமைந்த கட்டுரைகளென சண்முகதரிசனம் (நாச்சியார் செல்வநாயகம்), சங்க இலக்கிய ஆய்வும் தனிநாயக அடிகளாரும் (அ. சண்முகதாஸ்), சூழற்கல்வியும் எதிர்கால இளந்தலை

Page 96
முறையினரும் (மனோன்மணி சண்முகதாஸ்), திருக் கோயில் பண்பாட்டில் இராமேஸ்வரம் (ப. கோபால கிருஸ்ண ஐயர்) ஆகிய கட்டுரைகளே அமைந்துள்ளன. ஏனையவை சாதாரண தகவற் கட்டுரைகளாகவே விளங்குகின்றன.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் மணிவிழாக் காணும் தகுதி கொண்டவர். அவருடைய வெற்றி அவரின் சமூக அக்கறையிலும் கல்வியுலகக் கரிசனையிலும் தங்கியிருக்கின்றன. கிராமியக் கலைகளை அவர் , தன்னுள் வாங்கிக் கொண்டார். அவற்றை அட்சரம் பிசகாது நாட்டாரியலாகச் சமூகத்தின் முன் வைக்கும் திறனைப் பலரும் விய்ந்துள்ளனர். தமிழிலக்கியத்தினை 'அ' விலிருந்து 'அஃகேனம் வரை துறைபோகக் கற்றவர். ஈழத்து இலக்கியத்திற்குப் பல்கலைக்கழக உயர் அந்தஸ்து வழங்கியவர்களில் சண்முகதாஸ் முக்கிய மானவர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு படைப் பாளி. சிறுகதை, கவிதை, ஆய்வுக் கட்டுரைகள் ஆகிய பல் துறைகளிலும் காலூன்றியவர். அவரின் பல பரிமாணங்ளைத் தரும் மணிவிழா மலரொன்று அவசியம் போலப் படுகின்றது. அவரின் கல்விப்புலமை, புனை கதைத்திறன், ஆய்வுத்திறன், நூலாக்க வல்லமை, பேச்சுத்திறன், கற்பித்தல் திறன், நாட்டாரியற்திறன், இசைப்புலமை, கல்வி நிர்வாகம் என அவரின் ஆளுமை ரியும். அவை சீராக ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.
- விஷ்ணுவர்த்தனன் -
'중
影
‘융
●
虽
帝爱嘉简 3 ・強sè 家 ܊ ܙ ܝܶܩܶܕ݂܂ 8 ܦ 钱撰囊s * 魯器魯甥系
ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன ஓவியராக, நாடகவியலாளராக, சிறுகதை எழுத்தாளராக எனப் பல்வேறு துறைகளில் அமைதியாகத் தடம் பதித்து வருபவர் முத்துக்குமாரு இராதா கிருஸ்ணன் ஆவார். இவர் இலங்கைக் கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். திருகோணமலை வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக் களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார். கல்வி பற்றியும் சமூகம் பற்றியும் மிகத் தாக்கமான சிந்தனை கொண்டவர். அரங்கின் மூலம் உணர்வுகளுடன் பேச முடியும் என்பதை ஆணித்தரமாகக் கொண்டு அரங்க
 

வேலைகளில் ஈடுபடுபவர். இவரது மானிடச் சிக்கல் என்ற நாடக இலக்கிய நூலிற்கு 1998 ஆம் ஆண்டுக்குரிய தேசிய சாகித்திய விருதும், வடக்கு - கிழக்கு மாகாண இலக்கிய விருதும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘உதிரவேர்கள் முத்து இராதா கிருஸ்ணனின் முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். இதிலுள்ள சில சிறுகதைகள் கணையாழி, தாமரை, புது ஊற்று, புதிய வசந்தம், சரிநிகர் போன்ற, சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. வழிந்து போன வாழ்க்கையும், அந்த ஓவியக் களமும், வீடுபேறு தர்மசக்கரம், ஒரு முடல் மட்டும், உதிரவேர்கள், பயணத்தில் பதிந்த கண்கள், அந்தப் பெட்டைக் குட்டிகள், வலி, கறுப்புச் சப்பாத்து ஆகிய ஒன்பது சிறுகதைகள் இத்தொகுதியிலிடம் பெற்றுள்ளன. பேராசிரியர் கா. சிவத்தம்பி இத்தொகுதிக்கு முன்னுரை அளித்துள்ளார்.
இலங்கையின் இனக் குழுப் பிரச்சினை வழி வரும் இன்னல கள் . தமிழிலக் கண வழிகாட் டி, வரும்முறைமைகளுக்கும், உணர்வாழத்துக்குமான இலக்கியப் பதிவுகள் 1980 கள் முதல் ஒரு புதிய இலக்கிய வரலாற்றுக் காலகட்டத்தை அறிமுகம் செய்யும் வகையில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த அனுபவங்களின் மேலும் ஒரு சிறுகதைத் துறைப் பதிவாக முத்து இராதா கிருஸ்ணனின் இத்தொகுதி உள்ளது. போர்ச்சூழல் வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களையும், நுணுக்கமாக அவதானிக்கும் சக்தியும் உள்ளது. இராதா கிருஸ்ணனின் சிறுகதைகள் விமர்சன வாசிப்புக்குச் சுவாரசியமாகவே அமைந்துள்ளன எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி தனது முன்னுரையில் குறித்துள்ளமை ஏற்கக் கூடியவையே.
‘உதிரவேர்கள் சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தையும், ஒவ்வொரு சிறுகதைகளுக்குமான நவீன சித்திரங்களையும் கதாசிரியரே வரைந்துள்ளார். 'கோமாளி என்ற பெயரில் முதன் முதல் ஓவியராக அறிமுகமாகிய ஆசிரியர், ராதா என்ற பெயரில் இந்தச் சித்திரங்களைத் தந்துள்ளார். அவருடைய கதைகளைப் புரிந்து கொள்வது போல, அவருடைய நவீன பாணி ஓவியங்களை இலகு வில் புரிந்து கொள்ள முடியாது. முத்து இராதா கிருஸ்ண னின் ‘உதிரவேர்கள் ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் புதியதொரு படைப்பாளியை அறிமுகப்படுத்துகின்றது.
- கமலநாதன் -
"மல்லிகை நூலக மதிப்புரைக் குறிப்புகளுக்கு படைப்பாளிகள், தமது நூற்பிரதி ஒன்றினை அனுப்பி வைத்தல்
அவசியம்’
முகவரி: மல்லிகை, 2011/1, புதிய கதிரேசன் வீதி, கொழும்பு - 13.

Page 97
1940 களின் இறுதிக் காலத்தில் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைத்த வ.அ. இராசரத்தினம், 2001 இன் ஆரம்பகாலம் வரை திறந்த தன் பேனாவை ஒரு போதும் மூடி வைத்துவிடவில்லை. ஈழத்திலக்கியத்தின் எல்லாக் காலகட்டங்களிலும் அவர் தன் இலக்கியப் படைப்புக்களைத் தந்து புனைகதைத் துறைக்கு அளவி லாப் பங்களிப்புச் செய்துள்ளார். 1925 இல் கிழக்கிலங்கையின் ஒரு கோடியிலமைந்திருக்கும் மூதூர்க் கிராமத்தின் மகாவலி கங்கையும் கொட்டியாரமும் கலந்த மண்ணில் பிறந்து, அப்பிராந்தியக் காற்றையும், களத்தையும் நுகர்ந்து அவற்றின் அழகையும் அவலங் களையும் தன் படைப்புக்களில் பதிவு செய்திருக்கும் படைப்பாளி அவர், அவர் படைப்பிலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பினை மெச்சித் தமிழ் கூறும் நல்லுலகம் அவருக்கு 2000 ஆண்டு ஜூன் மாதம் 5 ஆந் திகதி பவள விழா எடுத்து அரிய மலரொன்றினையும் வெளியிட்டுத் தன்னைக் கெளரவப்படுத்திக் கொண்டது.
வ.அ. இராசரத்தினத்தோடு எனக்கான உறவு மிக நெருக்கமானது. கிண்ணியா காரியாதிகாரியாக நான் விளங்கிய 1971 களில் அவரை மூதூரில் அடிக்கடி சந்திக்கும் பேறு பெற்றவன். அவர் பவள விழா முடிந்த கையோடு எழுதிய கடிதத்தில், "எனது பவள விழா மலர் வெளிவந்துவிட்டது. மலர் 200 பக்கங்களையுடைய கனதியான மலராகத்தர்ன் இருக்கிறது. மலர் வெளியீட்டு விழாவுக்குக் கண்டியிலிருந்து வந்திருந்த திரு. ஞானசேகரன், ஈழத்தில் பவள விழா கொண்டாடிய ஒரேயொரு தமிழ் எழுத்தாளர் நான்தான் எனச் சொல்கிறார். சரியா பிழையா என எனக்கத் தெரியாது. கொஞ்சத் தூரம் நடந்தாலே களைக்கிறது. அத்தோடு சமீப நாட்களில் புறங்கால் வீங்கியுள்ளது. ஏதோ குளிசைகளோடு வாழ்கிறேன். ஆனாலும் இருந்து எழுதுவதற்கோ படிப்பதற்கோ சிரமமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். பெப்ரவரி 2001 இல் மறையும் வரை எழுதிக் கொண்டிருந்தார் என்பது அவர் குறிப்பிடுவது போல, "எழுத்து என் தவமானது. அது என் வேள்வி.
 

அ. இராசரத்தினம்
செங்கை ஆழியான
அது என்னுள் கருமயோகமாகவும் சித்தித்தது” என்ற சுய மதிப்பீட்டிற்கு மிகவும் பொருத்தமாகின்றது.
இலக்கியய் பின்னணி
ஈழத்துத் தமிழ்ப் புனைகதை வரலாற்றில் 1936 தொட்டு 1949 வரையிலான கால கட்டத்தினை முன்னோடி கள் காலம் என வரையறுக்க முடியும். உண்மையில் இது ஒரு சமூக சீர்திருத்தக் காலமாகவும் மறுமலர்ச்சிக் காலமாகவும் விளங்கியது. அக்காலகட்டத்தில் ஆனந்தன், சுபா, பாணன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர் கோன், இராஜ அரியரத்தினம், சோ. சிவபாதசுந்தரம், அ.செ. முருகானந்தன், கசின், சொக்கன், கனக. செந்திநாதன், சு.வே.வரதர், தாழையடி சபா ரத்தினம், கு. பெரியதம்பி முதலான இலக்கிய ஜாம்பவான் கள் புனைக் கதைத் துறைக்கு கருக்கட்டி புதுநீர் பாய்ச்சி விட்டனர். அவர்களின் படைப்புக்கள் கலைநயத்தோடும் இலக்கியச் செழுமையோடும் ஆக்கப்பட்டிருந்தன. இந்த மண் சார்ந்த பிரச்சனைகளை மண்வாசனையோடு யதார்த் தமாக அவர்களின் பல புனைகதைகள் சித்திரித்துள்ளன. 1950 தொட்டு 1960 வரையிலான காலகட்டத்தை முற் போக்கு இலக்கியக் கால்மென வரையறுக்கலாம். சமூகத் தின் புற்றுநோயாகவிருக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் குடிமை முறைகளுக்கும் அடக்கியொடுக்கலுக்கும் தீண் டாமைக்கும் எதிராக படைப்பாளிகள் போர்க் கொடியுய ர்த்தி, தம் படைப்புக்களை இவற்றிற்கு எதிரான கருவியா கப் பயன்படுத்திய காலமிதுவாகும். கலையழகிலும் தாம் வரித்துக் கொண்ட கருத்து வளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த படைப்புக்கள் இக்காலகட்டத்தில் வெளி வந்தன. உண்மையில் இக் காலகட்டம்தான் வ.அ. இராச ரத்தினம் புனைகதைத் துறைக்குள் நுழைந்த வேளையா கும். 1950 ஒக்டோபர் 1 ஆந் திகதி வ.அ. இராசரத்தினத தின் ஆரம்பச் சிறுகதையான "இதயதாகம்'. நவீன இலக்கியத்திற்கு ஆரோக்கியமான தடமும் தளமும் அமைத்துக் கொடுத்து ஆக்கவிலக்கிய கர்த்தாக்களை இனங்கண்டு வெளிக் கொணர்ந்த ஈழகேசரியில் வெளி வந்தது. அதன் பின்னர் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் முன்னோடி எழுத்தாளர்கள் புனைகதை களின் கலாபூர்வத் தாக்கமும் முற்போக்குக் காலகட்டத்து கருத்துவளத் தாக்கமும் தெளிவாக இடங்கொண்டிருந் தன. இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய அம்சம் யாதெனில் வ.அ. இராசரத்தினம் குறித்த கால கட்டத்துள் தன்னை ஒடுக்கிக் கொள்ளாது, ஈழத்துப் புனைகதை வரலாற்றின் புத்தெழுச்சிக் காலத்திலும் (1961 -1982), தமிழ்த் தேசியவுணர்வுக் காலத்திலும் (19832000) தொடர்ந்து எழுதியுள்ளார் என்பதாகும்.

Page 98
மல்லிகையின் ஆரம்ப காலம் கொட்டே வருகின்றோம். 38-வது ஆண்டுச் சி மகிழ்ச்சி அ
VEGETAR
சுத்தமான, சுவையான, சுகாதார மு வகைகளுக்கு கொழும்பு மாநகரி எப்பொழுதும் நினைவில் 6
BITL - 98, பாங்வு கொழுL
エ。
譽:
 

நாம் அதன் சுவைஞர்களாக இருந்து றப்பு மலர் மலர்வதையிட்டு மட்டற்ற டைகிறோம்.
AN HOTEL
றைப்படி தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி ல் பிரசித்தி பெற்ற ஹோட்டல். ' வைத்திருக்கத்தக்க பெயர்
w ன் கபே
நால் வீதி, ம்பு 11. 324712

Page 99
மல்லிகையின் ஆரம்ப காலம் தொட்டே வருகின்றோம். 38-வது கிருண்டுச் சீ மகிழ்ச்சி அ
VEGETARI
சுத்தமான, சுவையான, சுகாதார மு வகைகளுக்கு கொழும்பு மாநகரி
எப்பொழுதும் நினைவில்
BITL
*
エ。
酋:
 

நாம் அதன் சுவ்ைஞர்களாக இருந்து றப்பு மலர் மலர்வதையிட்டு மட்டற்ற டைகிறோம்.
AN HOTEL
1றைப்படி தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி ல் பிரசித்தி பெற்ற ஹோட்டல், வைத்திருக்கத்தக்க பெயர்
ன் கபே ால் வீதி, ம்பு 11. 324712

Page 100
இலக்கிய முன்னோடிகள்
வ.அ. இராசரத்தினத்தின் படைப்பு முயற்சிக்கு உந்து சக்தியாக விளங்கியவர்களெனத் தமிழகத்தில் மணிக் கொடி எழுத்தாளர்களையும் ஈழத்தில் ஈழகேசரிப் பண்ணையையும் மறுமலர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர் களையும் குறிப்பிடலாம். மணிக்கொடி எழுத்தாளர்களே தமிழ்ச் சிறுகதைகளுக்கு இலக்கிய அந்தஸ்து தேடித் தந்தவர்கள் என்பது வ.அ. இராசரத்தினத்தின் கருத் தாகும். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கிய மாகப் புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் அவர் மிகவும் கவரப் பட்டிருந்தார் என் தெரிகிறது. "புதுமைப்பித்தனையே துரோணாச்சாரியாராக வரித்து ஏகலைவனாகச் சிறுகதை வித்தை பயின்றவர்’ என எஸ். பொன்னுத்துரை ஒரிடத் தில் குறிப்பிட்டுள்ளார். புதுமைப்பித்தனின் உரைநடைப் பாங்கையும் விபரணச் செல்வாக்கினையும் இராசரத்தினத் தின் சிறுகதைகளில், குறிப்பாக ஆரம்பகாலச் சிறுகதை களில் அவதானிக்க முடியும், புதுமைப்பித்தனின் திருநெல் வேலி வட்டாரப் பேச்சு வழக்கும் தாமிரபரணிக்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரிப்புகளும் அவரைக் கிறங்க வைத்துள்ளன. அதனால்தான் வ.அ. இராசரத்தினத்தின் சிறுகதைகளில் கொட்டியாரக்கரை மக்களின் வாழ்க்கைச் சித்திரிப்பு திறம்பட அமைந்துள்ளது போலும்.
புதுமைப்பிததனுக்குப் பின்னர் இராசரத்தினத்தை மிகவும் கவர்ந்த தமிழகப் படைப்பாளிகளாக வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன், கு. அழகிரிசாமி என்போர் அமைந்தனர். இவர்களின் ஆழமான எழுத்துக் களை இரசித்தது போலவே கல்கியின் அகலமானதும் எளிமையானதுமான எழுத்துக்களும் இராசரத்தினத்தைக் கவர்ந்திருந்தன. உலகரீதியாக இராசரத்தினத்தை மிகவும் பாதித்த எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் ஆவார். அவருடைய பாணியிலும் இவர் சில சிறுகதைகளைப் படைத்துள்ளார். மேலும் கிட்ஸினுடைய கவிதைகளில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய கவிதை யொன்றின் அருட்டலால்தான், உன்னதமான சிறுகதை யாகப் பலராலும் கருதப்படுகின்ற தோணியை எழுதிய தாக அவர் குறிப்பிட்டார்.
ஈழத்து எழுத்தாளர்களில் சம்பந்தன், சி.வைத்திய லிங்கம், இலங்கையர் கோன் ஆகியோரின் எழுத்துக்கள் அவரை எழுதத் தூண்டியுள்ளன. மேலும் 1946 களில் யாழ்ப்பாணத்தில் தோன்றிய மறுமலர்ச்சிக் குழுவின் முக்கிய படைப்பாளிகளான தி.ச. வரதராசன், அ.செ. முருகானந்தன், அ.ந. கந்தசாமி ஆகியோரின கடித முயற்சிகள் தனக்கு உந்துதலாக விளங்கியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிக்குழு செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஈழத்தின் கிழக்குக்கரைக் கிராமம் ஒன்றிலிருந்து தானும் சிறுகதைகள் எழுத ஆரம்பித்ததாக அவர் நினைவு கூர்ந்துள்ளார். இலங்கையர் கோனுடன் ஏற்பட்ட நட்பு, வ. அ. இராசரத் தினத்தின் எழுத்துப் பணிக்கு வழிகாட்டியாகவும் இலங்கையர் கோனைத் தன் குருவாக மதிக்கவும் வைத்தது. நாற்பத்தாறுகளில் இலங்கையர் கோன் கொட்டியாரபபற்றுக் காரியாதிகாரியாக கடமை
யேற்றிருந்தார். பணிமனை மூதூரில் இருந்தமை யால் இலங்கையர் கோனின் நட்பும் வழிகாட்டலும் வ.அ.

இராசரத்தினத்திற்கு அவரின் படைப்பிலக்கியங்களைச் சமைக்க ஏற்ற ஊக்கிகள்ாக அமைந்தன. 1944 களில் ஈழகேசரியில் இலங்கையர் கோனின் வெள்ளிப்பாதசரம் சிறுகதை வெளிவந்தது. அச் சிறுகதை வ. அ. இராசரத்தினத்தை இலங்கையர் கோன் பால் அப்படியே கட்டிப் போட்டுவிட்டது. 1953 களில் வ.அ. இராசரத் தினத்தின் "தோன்’ என்ற சிறுகதை ஈழகேசரியில் வெளிவந்தது. அதனைப் படித்துவிட்டு இலங்கையர் கோன், “நீ என்னை விஞ்சிவிட்டாய்” என வ.அ. இராச ரத்தினத்திடம் கூறிப் புளங்காகிதமடைந்தார். எனவே வ.அ. இராசரத்தினத்திற்கும் இலங்கையர்கோனிற்கும் இடையிலான இலக்கிய உறவு நெருக்கமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்துள்ளது.
வ.அ. இராசரத்தினத்தின் சிறுகதைப் படைப்புக் களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பிரசுரித்தவர்களில் இராஜ அரியரத்தினம், அ.செ. முருகானந்தன் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். அவர்கள் ஈழகேசரியின் ஆசிரியர்களாக விளங்கிய காலவேளையில் வ.அ. இராசரத்தினத்தின் சிறுகதைகள் வெளிவரக் களமமைத ’துக் கொடுத்துள்ளனர். அக்காலகட்டத்தில் கண்க செந்திநாதனுடனான இலக்கிய உறவும், பிற்காலத் தில் எஸ். பொன்னுத்துரையுடனான நட்பும், வ.அ. இராச ரத்தினத்தின் படைப்புக்களில் அவர் வரித்துக் கொண்ட இலக் கிய நோக்கிலும் போக்கிலும் பெரும் செல்வாக்கினைச் செலுத்தியுள்ளன.
இலக்கியக் கோட்பாடு
நான் எழுத ஆரம்பித்த காலத்தில் எனக்கு எந்த இசம்களும் தெரியாது. இயல்களும் தெரியாது. ஆனால் மகாவலிகங்கை கடலோடு கலக்கும் எனது வட்டாரத்து மக்களின் வாழ்க்கையையும், காவும் பெர்ழிலும் கழி முகமும் புள்ளவிந்த ஏரியும் மல்கிய கொட்டியாபுரப்பற்றின் அழகையும் என் கதைகளிற் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை, என்னுள் வெறியாகவே உருவெடுத் திருந்தது. அந்த வெறியோடு தான் எழுதினேன்’ என தனது நூலொன்றில வ. அ. இராசரத் தினம் குறித்திருக்கிறார். எனினும் அவருக்குத் தெளிவானதொரு இலக்கிய நோக்கு இருந்துள்ளது. யதார்த்தம், தேசியம், மண்வாசனை என்பன சம்பந்தமாக இலக்கியக் கருத்தியல்புகள் இக்கருத்துக்கள் முன் வைக்கப்படு வதற்கு முன்னரேயே அவரது படைப்புக்களில் முன் வைக்கப்பட்டிருந்தன. மேலும் சாதித்திமிரையும், வறுமையின் கொடுமையையும், அதிகார மமதையையும் மட்டுமே எழுத வேண்டுமென்பதில் அவருக்கு உடன் பாடிருந்ததில்லை. இவ்வாறு வரம்பு வகுத்து எழுதுவதால் அழகியல் அந்நியப்படுகின்றது. மென்மையான உணர்வுகள் புறந்தள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனிலும் ஏதோ ஒரு கணமாவது வெளியாகும் மனிதநேயத் தெறிப்புக்கள் மறுக்கப்படுகின்றன. கலாபூர்வமான சாத்தியங்கள் சுருங்கிப் படைப்புக்கள் பிரசாரங்களாக மலினப்படுத்தப்படுகின்றன என அவர் தெளிவாகக் கூறி வைத்துள்ளார். வாசகனிடம் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் திணிக்க விரும்பவில்லை. மாறாக தான் காணும் மக்கள் வாழ்க் கையை வாசகனோடு பகிர்ந்து கொள்ளவே விரும்பியிருக்

Page 101
கிறார். இவ்வாறு கூறினாலும் மாக்ஸிம் கோர்க்கியையும் மாயா கோவ்ஸ்கியையும் அவரால் ஒதுக்கி விட முடியவில்லை. அவரது படைப்புக்கள் தொழிலாளரின் இடர்ப்பாடுகளையும் ஏக்கங்களையும் பேசின. அவர்களது அடக்குமுறை வாழ்க்கையையும் அதற்கான மூலவேர் களையும் பேசியுள்ளன. ஆக அவருக்கு மார்க்சிய முற்போக்கில் வெறுப்பிருக்கவில்லை. ஈழத்து முற்போக்காளரிடம் தான் வெறுப்பிருந்திருக்கிறது.
ஐம்பதுகளின் பிற்கூற்றில் இலங்கை முற்போக் கெழுத்தாளர் சங்கத்தில் அவர் அங்கத்தவராக விளங்கினார். திருகோணமலை வட்ட அமைப்பாளராக அவர் பதவி வகித்துள்ளார். அவருடைய ஆளுமையை மதிக்காமையும். முற்போக்கு தலைமைத் திறனாய் வாளர்களின் கருத்துக்களுக்கு எதிர்வாதக் கருத்துக்கள் ஏற்கப்படாமையும் அவரை முற்போக் அணியிலிருந்து விலகவைத்ததென அவள் குறிப்பிடுகிறார். முற்போக்காளர் எழுத்தாளர் சங்கத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் எஸ். பொன்னுத்துரையின் நற்போக்கு அணியினருடன் வெளியேறிய வர்களில் வ.அ. இரரசரெத்தினம் ஒருவர். எனினும் பொன்னுத்துரையின் கருத்துக்களை முற்றாக ஏற்றுக் கொண்டவருமல்லர்.
ஆசிரியத் தொழிலில் உயர்வு பெற்றுப் பட்டதாரியாக வரவேண்டுமென்ற அவர் பெற்றார். கூறியதையெல்லாம், பாராதி பாடியது போல தேடிச் சோறு நிதம் தின்பதற் காகச் சொல்லும் சின்னஞ் சிறு கதைகளாகவே அவருக்குப்பட்டன. ஆசிரியத் தொழிலை இலக்கியம் படிப்பதற்கான கருவியாகவே அவர் வரித்தார். வேறெந்த ஈனக்கவலைகளும் தன்னை அண்டாமற் பார்த்துக் கொண்டாராம்.
சிறுகதைய்படைய்புக்கள்
வ.அ. இரரசரெத்தினம் சிறுகதைத்துறையினுள் தன் காலடிகளை எடுத்து வைத்த காலம் அவரின் பதினைந் தாவது பராயத்திலாகும். அவரின் முதலாவது சிறுகதை மழையால் இழந்த காதல் / 1948 இல் செப்டெம்பர் மாதம் தினகரனில் பிரசுரமாகியதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் சிறுகதையின் வடிவத்தினைச் சரிவரப்புரிந்து கொண்டு அவர் தனது முதலாவது சிறுகதையை 1950 ஒக்டோபர் முதலாம் திகதி 'இதயதாகம் என்ற தலைப்பில் ஈழகேசரியில் எழுதினார். வ.அ. இராசரெத்தினத்தின் சிறுகதை வரலாறு அக்கதையிலிருந்து ஆரம்பமாவதாக நான் கருதுகிறேன். முன்னோடிச் சிறுகதை ஆசிரியர்களின் வழியொற்றி முற்போக்குக்கால உதயத்தின் பிதாமக ராகவே இவரை நான் கருதுகின்றேன்.
ஈழகேசரிப் பண்ணையில் முகிழ்ந்த எழுத்தாளர் அவரென்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. 1930 தொட்டு 1958 வரையிலான ஈழகேசரியின் கால கட்டத்தில் 514 சிறுகதை ஈழகேசரியில் வெளியாகி யுள்ளன. ஈழகேசரித் தளத்தினை நன்கு பயன்படுத்திக் கொண்ட வ.அ. இரரசரெத்தினம் 1950 இலிருந்து 1957 வரையிலான ஏழு வருடங்களில் 29 சிறுகதைகளை ஈழகேசரியில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க சாதனை. வாழ்க்கை, பிரிவின் துயர், பென், ஒற்றைப்பனை, தோணி, அறுவடை, உலகநியதி, வீடு, தலாக் முதலான வை ஈழகேசரியில் அவர் எழுதிய நல்ல சிறுகதைகளாம்.

1950 களிலிருந்து 1953 நவம்பர் வரை ஈழகேசரியில் இரரசரெத்தினத்தின் 13 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் அவர் வெறும் கதைசொல்பவராகக் காணப்படுகிறார். ஆனால் 1953 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் அவரின் உன்னதமான சிறுகதையான தோணி ஈழகேசரியில் வெளிவந்தது. அக்கதையுடன் ஈழத்துச் சிறுகதை இலக்கியம் ஒருகணம் தன்னைச் சிலிர்த்துக் கொண்டது. தோணி மூலம் அவர் தன்னை ஒரு படைபாளியாக இனங் காட்டிக் கொண்டார்.
தேசிய ரீதியாக இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த சுதந்திரன் பத்திரி கையில் வ.அ. இரரசரெத்தினத்தின் பத்திற்கு மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன. சிருஷ்டி கள்த்தா, தாலி. உள்ளும் புறமும், பிரிவுடிசாரம், அண்ணன் பாசம், தோழரின் மனமாற்றம், சரிவு என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கன. சரிவு என்ற சிறுகதை வ.அ. இரரச ரெத்தினத்தின் இன்னோர் சிறந்த ஒரு சிறுகதையாகும். ஈழகேசரியிலிருந்து விலகிய இராஜ அரியரத்தினத்தை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் ஈழநாடு என்ற பத்திரிகை தொடங்கிய போது வ.அ. இரரசரெத்தினம் அதில் வீரன்துயர், வெந்தணலால் வேகாது ஆகிய சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவற்றோடு தினகரன், வீரகேசரி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் ஈழத்தில் வெளிவந்த பல்வேறு சஞ்சிகைகளிலும் (விவேகிமலர், கலைச்செல்வி, சுடர்) அவருடைய சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
வ.அ. இரரசரெத்தினம் தனது ஐம்பது வருட இலக்கிய வாழ்க்கையில் முன்னுாறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார். அக்கதைகளைத் தொகுத்தும் வகுத்தும் பத்துத் தொகுதிகளாக கோவைகள் வைத்திருந்தார். அத்தொகுதி களை அவருக்குச் சொந்தமாகவிருந்த அமுதா அச்ச கத்தில் அச்சிட்டுப் புத்தகமாக்க எண்ணியிருந்தார். ஆனால் தொண்ணுாறாம் ஆண்டில் மூதூரில் நிகழ்ந் தேறிய வன்செயல்களால் அவரது அத்தனை எழுத்துக் களும் அச்சகமும் எரிந்து சாம்பலாகியது. வ.அ. இராசரத்தினத்திற்கு மட்டும் இந்த அவலமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களின் படைப்புக்கள் இவ்வாறு இன்று நமது நாட்டில் நிகழ்ந்த வன்செயல்களால் தீக்கும் வெள்ளத்துக்கும் ஷெல்களுக்கும் இரையாகிவிட்டன.
நாவல் படைய்புக்கள்
ஈழகேசரியின் தளத்தைச் சிறுகதைகள் எழுதுவதற்கு மட்டும் வ.அ. இராசரத்தினம் பயன்படுத்திக் கொள்ள வில்லை. ஈழகேசரியில் அவர் தொடராக எழுதிய "கொழுகொம்பு ஈழத்தின் ஆரம்ப நாவல்களில் முக்கியமானதாக இன்று கணிப்பீட்டிற்குள்ளாகி யிருக்கிறது. அவரால் நாவலாக எழுதி வீரகேசரிப் பிரசுர மாக வெளிவந்த “கிரெளஞ்சப் பறவைகள்” வரலாற்று நவீனமொன்று எவ்வாறு உருவாக்கப்பட வேண்டுமென்ப தற்குத் தக்க உதாரணமாக அமைந்தது. (1975) திருகோணமலை ஆலங்கேணிக் கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்கள் இனக்கலவரத்தால் இடம் பெயர்ந்து படும் அவதிகளை "ஒரு வெண்மணல் கிராமம காத்துக் கொண்டிருக்கிறது” என்ற நாவலாக

Page 102
எழுதி வெளியிட்டார். அவருடைய இன்னொரு நாவல் “மண் சமைந்த மனிதர்கள்” ஆகும். மேலும் ஈழநாடு பத்திரிகையில அவர் எழுதிய ‘துறைக்காரன்” நூலாக வெளிவரின், ஈழத்து நாவலிலக்கியத்திற்குப் புதியதொரு பரிமாணம் சேரும்.
வ.அ. இராசரத்தினம் நாவல்களோடு இலக்கியத் திற்குப் பெருமை சேர்க்கும் சில குறுநாவல்களை எழுதியுள்ளமை தவிர்க்கமுடியாத தகவலாகும். அவற்றில் 'விவேகி' சஞ்சிகையில் அவர் எழுதிய "தேய்பிறை" குறிபபிடத்தக்க குறுநாவலாகும். நனவோடை உத்தியில் குரூஸ்' வாத்தியாரின் குடும்ப அவலங்களைச் சித்திரிப்பதன் மூலம், மீனவ வாழ்வின் முழுப் பரிமாணத் தையும் தேய்பிறையில் அவர் கொண்டுவந்துள்ளார். அவர் படைத்த இன்னொரு குறுநாவல் "ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது” என்பதாகும். அது அவரின் சுய வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்ட கலாபூர்வமான சிருஷ்டி, அவருடைய மனைவிக்கும் அவருக்குமிடையிலான உறவுமேன்மையும் அந்த மாதரசி அவரின் பணிக்கு எவ்வாறு உந்து சக்தியாக விளங்கினாள் என்பதையும் அளவிலாப் பாசத்தாடு அக்குறுநாவலில் அவர் சித்திரித் துள்ளார். படைப்பாளி ஒருவன் நேர்மையுடன் தன் பலத்தையும் பலவீனங்களையும் இக்குறுநாவலில் அவலச் சுவையோடு நனவோடையில் கலைத்துவமாக அவர் சிததிரித்திருக்கினறார். இக்குறுநாவல் "சுடர் சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. சாலை இளந்திரையன் இக் குறுநாவலைப் படித்துவிட்டு மிகவும் பாராட்டுதலாக ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். “அதனை மலரில் சேர்க்க விரும்பினேன். சுவடிகள் திணைக்களததிற்குப் போனேன். நான் திரும்பி வந்ததே போதும் போலிருந்தது. அத்தனை கெடுபடி, இன்னும் ஐந்தாண்டுகளில் சுவடிகள் திணைக்களத்தில் தமிழ்ப் பிரிவு இல்லாமற் போனாலும் ஆச்சரியமாக இராது' என வ.அ. இராசரத்தினம் எனக் கெழு திய கடிதத் தில் வருத் தத்துடன் குறித்திருந்தார். ஏனைய இலக்கிய முயற்சிகள்.
சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளோடு வ.அ. இராசரத்தினம் மொழிபெயர்ப்பு, நாடகம், கவிதை, இலக்கியக் கட்டுரைகள் முதலான துறைகளில் கால் ஊன்றியிருக்கிறார். அவர் "ஈழநாகன்” என்ற புனை பெயரில் ஈழகேசரியில் பக்தி இலக்கியக் கட்டுரைகள் பலவற்றினைப் படைத்துள்ளார். அதே புனைபெயருடன் இரண்டு கவிதைகளையும் ஈழகேசரியில எழுதியுள்ளார். மாப்பசானின் எழுத்துக்களின் மீது வ.அ. இராசரத்தினத் திற்கு அளவற்ற பற்று இருந்தமையால், அவரின் இன்பம், விஷப்பரீட்சை, பாவமன்னிப்பு முதலான சிறுகதைகளை அவர் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். ஜேம்ஸ் ஜோய்ஸின் இரு நண்பர்கள் என்ற சிறுகதையையும் தமிழாக்கம் செய்து வழங்கிள்ளார். அவர் ஏராளமான வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். தந்தையின் காதலி குறிப்பிடத் தக்க ஒரு நாடகமாக எனக்குப் படுகின்றது. பொச்சங்கள் என்ற தலைப்பில் தனது நினைவுகளையும் தான் சந்தித்த மனிதர்களையும் சுவைபட அவர் தினக்குரலில் தந்துள்ளார். அல்லாமா இக்பாலின் கவிதைகளைப் "பூவரசம் பூ" என்ற தலைப்பில்

மொழி பெயர்த்துள்ளார். இவற்றோடு திருக்கரசைப் புராணம், மூதூர் அந்தோனியார் கோயிலின் பூர்விக சரித்திரம் ஆகிய நூல்களையும் ஆக்கியளித்துள்ளார்.
வெளிவந்த நூல்கள்
ஈழகேசரியில் தொடராக வெளிவந்த வ.அ. இராசரத்தித்தின் நாவலான "கொழுகொம்பு’ ஈழகேசரித் தளத்திற்குச் சொந்தமான வடவிலங்கைத் தமிழ் நூற்பதிப்பகத்தினால் முதன் முதல் வெளியிடப்பட்டது. அவ்வேளையில் நவீன படைப்பாளியொருவரை இனங்கண்டு வெளியிட்ட பெருமை குரும்பசிட்டி பொன்னையாவிற்குரியதாகும். 1954க்கு முன்னர் வ.அ. இராசரத்தினம் எழுதிய பதினான்கு சிறுகதைகளைத் தொகுத்து, 1962 இல் அரசு வெளியீட்டினர் "தோணி” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டனர். அரசு வெளியீட்டின் உரிமையாளரான எம்.ஏ. ரஹற்மான் தனது வெளியீட்டின் முதலாவது நூலாக தோணியை வெளியிட்டமை விதந்துரைக்கத்தக்க பணியாகும். வ.அ. இராசரத்தினத்தின் சிறுகதைத் தொகுதியான தோணி அவ்வாண்டின் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுக் கொண்டது. கிழக்கிலங்கையில் சாகித்திய மண்டலப் பரிசில் பெற்ற முதலாவது படைப்பாளி வ.அ. இராசரத்தினமாவார். 1975இல் அவருடைய “கிரெளஞ்சப் பறவைகள்” என்ற வரலாற்று நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. இதனை அடுத்து 1992இல் “ஒரு வெய்மணல் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது” என்ற நாவலும், 1996 இல் ‘மண் சமைந்த மனிதர்கள்” என்ற நாவலும் வெளியாகின. 1996 இல் எஸ். பொன்னுத் துரையின் மித்ர வெளியீடாக “ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது” என்ற தலைப்புடன், வ.அ. இராசரத் தினத்தின் படைப்பாற்றலை முழுமையாக இனங் காணக்கூடிய நாற்பத்தொன்பது சிறுகதைகளையும் ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது என்ற குறுநாவலையும் உள்ளடக்கிய பெரும் சிறுகதைத் தொகுதியொன்று வெளியாகியது. இத்தொகுதியை வெளியிட்டதன் மூலம் மித்ர வெளியீட்டினர் ஈழத்து இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள் என்பேன். வ.அ. இராசரத்தினத்தின் சிறுகதைகள் யாவும் தொலைந்து போன நிலையில் மித்ர வெளியீட்டினர் தந்த ஊக்கத்தால் வ.அ. இராசரத்தினம் தனது நண்பர்கள் மூலம் அரிதிற் தேடிய சிறுகதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தோணிச் சிறுகதைத் தொகுதியிலிடம் பெற்றிருந்த எட்டுச் சிறுகதைகளும், வேறு தேடிப் பெற்ற சிறுகதைகளும் தன் நினைவிலிருந்து மீட்டெழுதிய சுமை என்ற சிறுகதையும், கோலங்கள் மனை கோலின, கோயில் மணியோசை, ஓர் ஆலமரத்தின் கதை, பெண்ணியம் ஆகிய புதிய சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம் பிடித்திருக்கின்றன.
கொட்டியாரச் சிறுகதைகள், ஐந்திணைக் கதைகள் என்பன வ.அ. இராசரத்தினத்தின் ஏனைய சிறுகதைத் தொகுதிகளாம். ஐந்திணைக் கதைகளில் நற்றிணையை வைத்து எழுதிய ஆறு கதைகள் உள்ளன. ஐந்திணைக் கதைகள் தொகுதியை எம்.டி. குணசேன நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. அவ் வகையில் அந்த நிறுவனத்தின் தமிழப்பிரிவு ஆசிரியர் செ. யோகநாதன்

Page 103
பாராட்டிற்குரியவர். வ.அ. இராசரத்தினத்தின் பவள விழாவின்போது அவரது பணிதனை தொகுத்து பவள விழா மலராக வெளியிட்ட கேணிப்பித்தன் அருளானந்தம் ஆற்றிய சேவை மூலம் படைப்பாளி ஒருவரின் படைப்பாற் றலையும் தரிசனத்தையும் தமிழுலகம் அறிய முடிகின்றது. இலக்கியக் கணிப்பீடு
“சிறுகதைகளை இவர் சிருஷ்டித்தது ப்ோல மற்றவர்கள் செய்யவே முடியாது. ஈழத்துச் சிறுகதைத் தொகுதியொன்று வெளியிட விரும்பும் எவரும் இவருடைய தோணியை விட்டுவிட்டு ஒரு தொகுதியை வெளியிட முடியாது. நிதர்சன இலக்கியம், வாழ்க்கை யோடு ஒட்டிய இலக்கியம் என்று துடியாய்த் துடிக்கும் முன்னேற்ற எழுத்தாளர்கள் கூட அதிசயப்படும் படியாக அது அமைந்திருக்கின்றது" என இரசிகமணி கனக செந்திநாதன் குறிப்பிட்டுள்ளமை ஏற்கக் கூடியதாகும். வ.அ. இராசரத்தினத்தின் தோணி, தமிழக மஞ்சரியில் மறுபிரசுரமானது. சிற்பியின் ஈழத்துச் சிறுகதைகள், செ. யோகநாதனின் வெள்ளிப் பாதசரம், இந்து சமய கலாச்சா ரத் திணைக்களத்தின் பொன்விழாச் சிறுகதைகள், செங்கை ஆழியானின் ஈழத்துச் சிறுகதைகள் முதலான தொகுதிகளில் துோணி இடம் படித்திருக்கின்றது. வ.அ. இராசரத்தினத்தின் உன்னதமான சிறுகதையாகத் தோணியைக் கருதலாம்.
“கலையழகுடன் யதார்த்த வாழ்வைச் சித்திரிக்கும் நல்ல கதை தோணி" என வல்லிக்கண்ணன் குறிப்பிட்டு ள்ளார். "இதில் அவரின் எழுத்தாற்றலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் முற்போக்குச் சிந்தனையும் மனித நேயமும் நம்பிக்கை மனோபாவமும் புலனாகின் றது” என வல்லிக்கண்ணன் விதந்துரைத்துள்ளார். மீனவனுக்குத் தோணி சொந்தமில்லை: நாளை அது அவனுக்குச் சொந்தமாகும் என்ற கருவை வெகு நேர்த்தியாக வ.அ. இராசரத்தினம் இச் சிறுகதையில் சித்திரித்திருக்கின்றார்.
தோணியின் பின்னர் வெகுவாகப் பேசப்படும் வ.அ.
359
தமிழ் இனி - 2000 விழாவில் உங்களைச் சந்தித்து மகி பார்த்துக் கொள்ள முடிந்தது. கெளரவம், அலைச்சல் எதுவுபே ஒளிமயமான சித்திரமாக உள்ளது. அன்பையும் முடிந்த எல்லா
உங்களது மணிவிழா மறுபதிப்பு வெளியீடு சிறந்த முறையில் வரலாற்று நூல் ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சி அதே சமயம் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்லியுள்ள் வேண்டும் என்ற உத்திகள் இல்லை.
மல்லிகை 35 - வது மலரும் ஆச்சரியமளிப்பதாகவே இ கொணர்ந்து எப்படிச் சாத்தியமானது .?
மகன் அறம், அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இ முடிவானதின் பின்னர் திகதி அறிவிப்பேன். உங்களது வரு அமையும்.
201-1/1 றி கதிரேசன் வீதி, கொழும்பு முகவரியைக் கொண் ஜீவா அவர்களுக்காக கொழும்பு 13 விவேகானந்தா மேட்டி

இராசரத்தினத்தின் புனைகதைக்கான கருத்தியல் நிலை மிகத் தெளிவானதாகும். வர்க்கியம், தலித்தியம், பெண்ணியம், இனத்துவம், சூழலியம் மதலிய கருத்தியல் நிலைகளுக்கு அப்பால் தான் வாழும் பிரதேசத்து மக்களது வாழ்க்கை, பிரதேச அழகு, அவர்களின் வாழ் க்கையின் பலமும் பலவீனமும் என்பவற்றினை எழுத்தில் தந்துவிடும் ஆவலும், அவற்றினுடாகத் தான் வாழ்கின்ற சமூகத்தின் மேம்பாட்டிற்குச் சில கருத்துக்களைச் சொல்லிவிடும் ஆதங்கமும் அவரது படைப்புக்களில் காணப்படுகின்றன. 1954 களில் மண் வாசனை, தேசியம், யதார்த்தம் என்பன முக்கிய அம்சங்களாக வலியுறுத்தப் படுவதற்கு முன்னரேயே வ.அ. இராசரத்தினத்தின் சிறுகதைகளில் அவை விரவி வந்துள்ளன.
“தத்துவங்களைப் போட்டுக் குழப்பாமல் பிறந்த கொட்டியாரப்பற்று மண்ணையும், அதன் இயற்கை லாவண்யங்களையும், அதில் வாழும் மக்களையும் ஆத் மார்த்தமாக நேசிப்பவர். இந்த நேசிப்பின் சம்பாவனையாக அந்த மண்ணின் மக்களுடைய வாழ்க்கையிலுள்ள மனிதநேய ஒற்றுக்களை, தமக்கு வாலாயமான ஒரு நடையிலே கதைகளாகப் பதிவு செய்தவர். அவருடைய கனவுகளையும், ஆசைகளையும், இன்பங்களையும், நிமிர்வுகளையும் பங்கிட்டுக் கொண்ட பரவசத்தினை அவர் கதைகளில் காணலாம்” என எஸ். பொன்னுத்துரை குறிப்பிட்டுள்ளார்.
வ.அ. இராசரத்தினத்தின் படைப்புக்கள் இந்த மண்ணைத்தான் பேசுகின்றன. பாசாங்கற்ற சகாயமான மொழியில் சமூக முரண்பாடுகளையும் சமூக அவலங்க ளையும் அனுபவ ரீதியாகத் தன் படைப்புக்களில் தந்துள் ளார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் படைப்பனுபவ ங்களை நாம் அவர் படைப்புக்களில் தரிசிக்க முடிகிறது. நிறைவாக " ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது என்ற குறுநாவலின் இறுதி வரிகள் பின்வருமாறு வ.அ. இராசரத்தினத்தினால் எழுதப்பட்டிருக்கின்றது.
“என் சிருட்டி காலத்தாற் சாகாது. காலத்தின் ஏலத் தால் மலியாது”
ந்தது பெரிய இனிய அனுபவம். மூன்று நாட்களும் நிறையப் பார்க்காமல் நீங்கள் நேய மயமாகத் தேடி வந்தது மனதில் பற்றையும் வாரி வழங்கினீர்கள். வியந்து பார்த்து மகிழ்ந்தேன். பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. உங்களது வாழ்க்கை த்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. துணிச்சலாக, கள். மிகைப்படுத்தல் இல்லை. வாசகர்களைக் கவர்ந்துவிட
ருக்கிறது. இவ்வளவு காத்திரமான விஷயங்களை வெளிக்
ன்னும் நான்கு மாதத்தில் அவருக்குத் திருமணம் திருமணம் கை என் வாழ்நாளில் நேர்ந்த சிறந்த பேறுகளில் ஒன்றாக
சாத்தூர் தனுஷ்கோடி ராமசாமி.
-வரும், ஆசிரியரும், வெயளியிடுபவருமான திரு. டொமினிக் லுள்ள யு.கே. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது.

Page 104
ܪܐܗ ܐܗܪ6ܐܗܪܐܗܝܪܐܗܝܪܐܗܝܪܐܗܠ ܐܐܗܪܐܗܪܐܗܪܐܗܝܪܐܗܪ6ܗܪܐܗܝܪܐܗ
ܐܠܠ [ቧNሀለ፴በ0ለó]
பித்தன் கதைகள் - கே. எம். எம். ஷா (சிறுகதைத் தொகுதி) 2. மல்லிகை முகங்கள் - சிடாமினிக் ஜீவா
(85 தகைமை சான்றவர்களின் அட்டைப்படத்
201-1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13.
தகவல்கள்) 3. அந்நியம் - நாகேசு. தர்மலிங்கம்
(சிறுகதைத் தொகுதி) 4. தலைப் பூக்கள் - டொமினிக் ஜீவா
(55 மல்லிகைத் தலையங்கங்களின் தொகுப்பு நூல்) 5. விடை பிழைத்த கணக்கு -
திக்குவல்லை கமால் (சிறுகதைத் தொகுதி) 6 மாத்து வேட்டி - சிதணியான
(சிறுகதைத் தொகுதி) 1. அனுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா
(வாழ்க்கை அனுபவங்கள்)
8. ஈழத்திலிருந்து ஒா இலக்கியக் குரல்
(பல்வேறு பேட்டிகள்) - சிடாமினிக் ஜீவா
9. fysü856st - op. uøgst (சிறுகதைத் தொகுதி) 10. எங்கள் நினைவுகளில் கைலாசபதி
(தொகுப்பு நூல்) - டொமினிக் ஜீவா
1. எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்
(விமர்சன நூல்) - ம. தேவசிகனரி
2
டொமினிக் ஜீவா - சிறுகதைகள் (தேர்ந்தெடுக்கப் பெற்ற 50 சிறுகதைகளின் தொகுப்பு)
'S
కరకరకరకరకరకరకరకరకంకర
 

مینمایندی مینمایندی میان مینمایندهای نمایندی مینامیدنی
4M
巴U活员爪以 பீடுகள்
13. ஒரு தேவதைக் கனவு
(சிறுகதைத் தொகுதி) - சிதக்கிராசிவ ஸஉருானா
Te: 320721
14. தெரியாத பக்கங்கள் . சுதாராஜ்
(சிறுகதைத் தொகுதி) 15. உணர்வின் நிழல்கள்
(சிறுகதைத் தொகுதி)
- யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 16. தூண்டில் - சிடாமினிக் ஜீவா
(கேள்வி - பதில்) 11. அந்தக் காலக் கதைகள் - தில்லைச் சிவன்
(நடைச் சித்திரம்) 18. நினைவின் அலைகள் - எஸ். வீதம்பையா
(தன் வரலாற்று நூல்) 19. பாட்டிசொன்ன கதை - முருபுைபதி
(சிறுவர் இலக்கியம்) 20. முன்னுரைகள் - சில முகவுரைகள்
• - ólu-/rúðarö ag-U/r 2. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத
சித்திரம் (சுயவரலாறு) - டொமினிக் ஜீவா 22. நானும் எனது நாவல்களும்
-செங்தை ஆழியான் 23. கார்டுன் ஒவிய உலகில் நான்
டசிரித்திரண் சுந்தர்' 24.எழுதப்பட்ட அத்தியாயங்கள் -சாந்தண் 25. கிழக்கிலங்கைக் கிராமியம்
(நாட்டார். இயல்) - நமீஸ் அப்துல்லாவூர்
oKQV OKRVoKeVoKeVoKelv oIIKQYooKooKeVoKevorkeoloKooKeyoKQV OKRVoKelo
སྙི

Page 105
36வது ஆண்
மனமார்ந்த
SUR
TEXTILEMIL
32/34, 3rd Colom
T.P 336977, 4384944.
I I I I I I I I I I
 
 
 

ாடு மலருக்கு
வாழ்த்துக்கள்
IYA
SpVT) LTD.
Cross Street, bo-11
49105 Fax 4.38531
I I I I I I I I I II I

Page 106

Exporters. Of | קרןd:Chiiloחן הסואן Si Lankan Foods