கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2002.09

Page 1
Y MALLIKAI September 2002
மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள்
PARA EXPO PRODUCTS (PVT)LTD
Cxporters of Non Traditional 5ri Lankan Foods
30, Sea Avenue, Colombo - 3. Tel : 573717
ul Printers - 3406
 
 
 
 

ഖിഞ്ഞു :20/. செப்டெம்பர் 20ரு

Page 2

மல்லிகை
செப்டம்பர் 2002
37-வது ஆண்டு 曾
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவர்
aipantha.Gschneck
மல்லிகை 38-வது ஆண்டு மலர் தயாராகின்றது.
மல லி கை ஆணர்டு ான்றாலே தரம் மிக்கவை இலக்கிய
மலர்கள்
உலகில இம் மலர்கள் பலராலும் விதந்து பேசப்பட்டு வருபவையும்
பாதுகாக்கத் தக்கவையுமாகும்.
உள்ளடக்கக் கனதி மிக்காவையான இம் மலர்களைத் தயாரித்து முடிப்ப தெணிறாலே அத்தனை உழைப்புச் க்தியையும் நாம் அதற்காகவே செலவிட்டாக வேண்டி வரும்.
இந்த ஆணர்டு மலர் வழக்கமாக 1.வளிவரும் மலர்களைப் போலவே
அதற்குப் படைப் பாளிகளினி ஒத்துழைப்பு
வெளிவரவுள்ளது.
அவசியம் தேவை. அந்தப் பரிபூரண
ஒத்துழைப்பையும் ஆக்கபூர்வமான
நல்லாலோசனைகளையும் நமக்குத்
தந்துதவுங்கள்.
ஒரு காலத்தில் பிரதேச மட்டத்தில் பேசப்பட்டு வந்த இந்த இதழ், இன்று சர்வதேசமெங்கும் சென்று கால் பதித்து வருகினர் றது. இதனி உள்ளடக்கம் விரிவாக விவாதிக்கப் படுகினிறது.
அதற்கமைய மலர் உருவாக வேண்டும்.
ஆசிரியர்.

Page 3
மல்லிகையை மனதார வாழ்த்துகிறோம்
III 356)6O 9GOLII (6)60 LTLDIT?
தொடர்பு கொள்ளுங்கள்:
கூட்டுறஷே நாட்&பல்ஜ்
புத்தக நிலையமும்; நால் நிலையமும் இங்கு அறிமுகமும் விற்பனையும்
கட்டைவேலி - நெல்லியடி,
ப. நோ. கூ. சங்கம், கரவெட்டி
தொலைபேசி: 021-3263
 
 

தரமான படைப்புக்களை நாட்டுடைமையாக்குக!
இந்த நாட்டில் கடந்த காலங்களில் தமிழ் மொழியில் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர், தரமான படைப்பாளிகள்.
ஒழுங்கற்ற பதிப்பக வசதிகள் ஊடாகப் பல எழுத்தாளர்களினது சிருஷ்டிகள் வெளிவந்தது என்னமோ உணர்மைதான். அவைகளில் சில ஒதுக்கப்பட்டு, மறக்கப் பட்டுப் போய்விட்டன.
சில பிரபல எழுத்தாளர்களது எழுத்துக்கள் நிதி வசதியற்ற, விநியோகச் சீரற்ற அநாமதேயப் பதிப்பகங்களால் வெளியிடப் பெற்று, வெகுசனக் கவனிப்பாரற்றுப் போய் விட்ட துரதிஷடமும் இந்த மண்ணில் நிகழ்ந்து தான் இருக்கிறது.
இதில் இண்னொரு வேடிக்கையும் நிகழ்ந்துள்ளது. மக்களால் மதிக்கப் பெற்ற நூலாசிரியர்களின் கையெழுத்துப் பிரதிகள் எந்த விதமான கேள்வி நியாயங்களுமில்லாமல் சும் மா எழுந்த மானமாகப் பிரசுரிக்கப் பட்டுச் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்து ஒரு மோசடியைக் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் வெளிநாடுகளில் இங்கு வெளியிடப் பெற்ற நூல்கள் அதே அச்சமைப்பில், வடிவமைப்பில் அதை எழுதியவர்களுக்கோ வெளியிட்டவர்களுக்கோ தகவல் தராமல் வெளியிடப் பெற்று வியாபார ம பணி ணப படுகின்றன.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியான இலக்கிய மோசடிகளைத் தட்டிக் கேட்டுப் படைப்பாளிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர நமது நாட்டில வலுவான எழுத்தாளர் அமைப்புகளோ பதிப் புச் சட்ட நிறுவனங்களோ இல்லை.
படைப்பாளிகள் இந்த மணினில் வெறும் உதிரிகளாகவே நடைமுறையில் கணிக்கப் பெற்று, அவர்களது எழுத்து ஆளுமை விழுங்கப்பட்டுக் கொணர்டு வருகின்றது.
வாழும் போதே இத்தனை வசதிகளையும் பறிக்கப் பெற்றவன், முதுமையடைந்ததும் கவனிப் பற்றுப் போய் விடுகிறான். அவனது பிற் சந்ததியும் அவனுடைய படைப்புப் பெறுமதியை உணராமல் இருந்து விடுகின்றது.
எனவே இப் படியான தரமான படைப் பாளிகள் இந்தத் தேசத்தினர் நானா திசைகளிலுமிருந்து தத்தமது பங்களிப்பை நல்கி வந்துள்ளதை இந்த நாடே நன்கறியும்.
அவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. இன்னும் பலரோ முதும்ை நிலையடைந்து,
தளர்ந்து, தகுந்த கவனிப்பற்று முடங்கிப் போயுள்ளனர்.
இப் படியான வர் களைத் தகுதியறிந்து அவர்களது படைப் புகளைத் தேச உடைமையாக்குவதே அன்னாரை கெளரவிப்பதாகும்.

Page 4
Flpis, நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஒரு படைப்பாளி செம்பியன் செல்வன் ஆவார். நான்கு தசாப்தங்களா நவீன தமிழிலக்கியத்தின் பல்வேறு துறைகளில் ஆழமாய்த் தன்
கால்களைப் பதித்துக் கொண்டிருப்பவர். செம்பியன் செல்வனைக் குறிப்பிடாது சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வு, குறுங்கை உருவகத்தை, ஓரங்க நாடகம், இதழியல் முதலான இலக்கியத் துறைகள் பற்றிய வரலாற்றினை எழுதிவிடமுடியாது. 1943 ஜனவரி 1 இல் திருநெல்வேலியில் பிறந்த ஆறுமுகம் இராஜகோபால் என்ற செம்பியன் செல்வன், தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து தமிழ் ஆரம்பப் பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் திறன் மிகு ஆசிரியர்களான, கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைந்த கார்த்திகேசன், அற்புதரத்தினம், இலக்கியவாதிகளான
ஏரம்பமூர்த்தி, சிவராமலிங்கம் முதலானோரின் மாணவராகக் கற்க நேர்ந்த சந்தர்ப்பமும் - இலக்கிய ஆர்வமும் உத்வேகமுங் கொண்ட
மூத்த - இளைய மாணவ நண்பர்களான கவிஞர் சோ.பத்மநாதன், செங்கை ஆழியான், து.வைத்திலிங்கம், முனியப்பதாசன் ஆகியோரின் இனிய 7 நட்புறவுகளும் - செம்பியன் செல்வனை முளையிலேயே படைப்புலகத்தில்
நாட்டம் கொள்ள வைத்துள்ளன என்பேன். இளம் வயதிலேயே அவர் நிறைய நூல்களைக் கற்றார். வெறியோடும் வேட்கையோடும் பல்வகை நூல்களையும்
அவர் படித்தார் என்பது எனக்குத் தெரியும்.
 

1960-களில் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குள் செம்பியன் செல்வன் நுழைந்தார். அவர் நுழைந்த காலத்துடன் ஈழத் திணி நவீன இலக் கரியத் தனி புத்தெழுச்சிக் காலம் ஆரம்பமாகியது. தாய்மொழி மூலமான கல்வி போதித்தல் பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாகியது. தாய் மொழி மூலமான சிந்தனைத் தரமான படைப் பாளிகளைப் பல கலை கி கழகதி தினுள்ளும் வெளியிலும் உருவாக்கிவிட்டது. தனிச் சிங்களச் சட்டத்தால் இனங்களுக் கிடையே காணப்பட்ட முறுகல் நிலை - தமிழரசுக் கட்சி தன் சுயத்தை இழந்து ஏனைய இருகட்சிகளுள் இணைந்து அமைத்துக் கொண்ட கூட்டணியினர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் - சர்வதேச அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சியினது மொஸ்கோ பிரிவு, சீனப்பிரிவு என்ற பிளவு - முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயங்காமையும் - யாழ் இலக்கிய வட்டத்தின் எழுச்சியும் - இலக்கிய மரபு வாதப் பிரச்சினைகள் உச்சம் பெற்றமை - ஈழத்துத் தமிழிலக்கியங்கள் குறித்துத் தமிழக எழுத்தாளர்களின் மனதைப் புணி படுத்திய கூற்றுக் கள் முதலான இன்னோரன்ன சூழலின் மத்தியில் படைப் புலகத்தில் ஆக்கபூர்வமாகச் C& 15 (éé5/76usTë dfluJG)Jj Q& Lüüluj6öt Q&6ü6)6ö. ஆற்றல் மிக்க எழுத்தாளர் கூட்டமொன்று அக்கால வேளையில் பல்கலைக் கழகத்தில் இருந்துள்ளது. செங்கை ஆழியான், செ.யோகநாதன், துருவன், குந்தவை, அங் கையணி கயிலாசநாதனி , செ.கதிர்காமநாதன், நவசோதி, கலா
பரமேஸ்வரன் என அப்பட்டியல் நீளும். பல்கலைக் கழகக் காலத்தில் வெளி வந்த கவிதைப் பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் பிதாமகர்களில் இவருமொருவர். நவீன ஈழத்து இலக்கியத்தின் இரு வேறு கோட் பாடுகளையும் செல்நெறிகளையும் நன்கு புரிந்து கொண்டவர்களாகவும் தத்தமது கருத்து நிலைகளை விவாதத்துத் தமி மளவில் நிரூபிப் பவர்களாக வம்
எழுதுபவர்களாகவும் பல்கலைக் கழகத்தில்
இருவர் விளங்கினர். ஒருவர் செம்பியன் செல்வன், மற்றவர் செ.யோகநாதன். யோகநாதனின் பின்னணியில் விமர்சகர் கைலாசபதி நிற்க, செம்பியன் செல்வன* சுயமாக விளங்கினார்.
கருத்தியல் நிலைப்பாடு
செம்பியன் செல்வன் பேராதனைப் பல்கலைக் கழகச் சிறப்புப் பட்டதாரி தனித்துவமான ஓர் இலக் கரியச்
செல்நெறியைத் தனக்கென அமைத்துக்
கொண்டவர். 'இலக்கியம் என்பது ஒரு கலை சார்ந்த சமூக சீர்திருத்தமாகும். கலை சமூக மாற்றத்தை உருவாக்கும் சமூக மாற்றம் கலை வடிவங்களை மாற்றியமைக்கும்' என்பது அவரது கருத்து நிலை. 'என் எழுத்துக் காலத்தை உணர்த்தி நிற்க வேண்டும்' என்பதில் அவர் பிடிவாதமானவர்.
புவியியல் சிறப்புப் பட்டதாரியான செமி பியன செல் வன முதலில் திருகோணமலை செனி ஜோசப்
○

Page 5
கல்லூரியிலும் பின்னர் செட்டிகுளம் மகாவித்தியாலத்திலும் அதன் பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமை புரிந்தார். பின்னர் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்தில் சித்தியடைந்து யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி, இன்று யாழப்பாணக் கோட்டக் கல்வி அதிகாரியாக அமர்ந்திருக்கிறார். செம்பியன் செல்வனின் உத்தியோக அனுபவங்களும் கடமையாற்றிய பிரதேசங்களின் சூழல் தந்த படைப்புலகச் சிந்தனைகளும் அவரது படைப்புகளுக்கு செழுமையையும் தனித்துவத்தையும் தந்துள்ளன என்பேன்.
நாவல்துறை
செம்பியன் செல்வனின் இலக்கியத்
துறைகளில் முதன்மையானது சிறுகதைத் துறையாகும். அத்துறையில் அவரின் முதன்மையைப் புரிந்துகொள்ள அன்னாரின் ஏனைய துறைச் சாதனைகளை முதலில் நோக்குதல் அவசியம். அவர் ஈழத்தின் சிறந்ததொரு நாவலாசிரியர். கானகத்தின்
கானம், நெருப்பு மல்லிகை, விடிவைத் தேடும்
வெண்புறாக்கள் ஆகிய அவர் படைத்த நாவல்கள். முதலிரண்டும் முறையே மீரா பிரசுரமாகவும் வீரகேசரிப் பிரசுரமாகவும் வெளிவந்துள்ளன. கானகத்தின் கானம்' சமகாலப் பிரச்சினையையும், 'நெருப்பு மல்லிகை" சமூகக் களத்தின் எரியும் பிரச்சினை யொன்றையும் கருவாகக் கொண்டவை. வீரகேசரி நடாத்திய பிரதேச நாவல் போட்டியில் யாழ்ப் பாணப் பிரதேசத்தின் சிறந்த நாவலாகவும் அகில
இலங்கை ரீதியில் மிகச் சிறப்பான பிரதேச நாவலாகவும் தெரிவாகி முதற்பரிசினைத் தட்டிக் கொண்டது ‘நெருப்பு மல்லிகை" ஆகும். ஈழத்தின் சிறந்த நாவல்களின் வரிசையில் நெருப்பு மல்லிகை சேர்க்கப்பட வேண்டியதொன்றாகும். 'விடியலைத்தேடும்
வெண்புறாக்கள் ஈழமுரசில் தொடராக
வெளிவந்து, 300 பக்கங்கள் கொண்ட நுT லாக அச் சாகியிருந்தது. 1995 இடப்பெயர்வுக்குக் காரணமான யுத்த அரக்கன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கபளிகரம் செய்து கொணி டவற்றுள் விடியலைத் தேடும் வெணி புறாக்கள் நாவலின் அச்சான பிரதிகள் அடங்கி அழிந்து போயின. தாயக விடுதலைக்கு
வலுச் சேர்க் கும் நாவலாக இது மலர்ந்திருந்தது.
நாடகத் துறை
Q ở Lô Lf}|160ỉ செல் வனினர் நாடகத் துறைப் பணியைக் குறைத் து
மதிப்பிட்டு விட முடியாது. கலைக்கழக நாடக எழுத்துப் போட்டியில் தொடர்ந்து நான்கு வருடங்கள் முதற் பரிசினைத் தனதாக்கிக் கொண்டவர். 1965 ஆம் ஆண்டு அவரின் நாடகப் பிரதியான இந்திரஜித் முதற்பரிசினைப் பெற்றுக் கொன டது. 5 تا 6) 9ھ ஆணி டு "சினி ன மீன் கள் ' என்ற அவரின் நாடகப் பிரதக் குக் கலைக் கழகம் முதற்பரிசினை வழங்கியது. 1968 ஆம் ஆண்டு 'எரியும் பிரச்சினைகள்’ என்ற ஓரங்க நாடகமும், 1969 ஆம் ஆண்டு
'இருளில் எழும் பெருமூச்சு' என்ற ஓரங்க நாடகப் பிரதியும் முதற் பரிசுகளைப்

பெற்றுக் கொண்டன. ஈழநாடு தனது பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய ஓரங்க நாடகப்போட்டியிலும் செம்பியன் செல்வனின் 'விடிய இன்னும் நேரமிருக்கு நாடகம் முதற்பரிசினைப் பெற்றது. இவை காரணமாக 1977 இலிருந்து 1983 வரை இலங்கைக் கலாசாரப் பேரவையின் நாடகப் பிரிவுக்கான செயலாளராகச் செம்பியன் செல்வன் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. பேராசிரியர் வித்தியானந்தனுடன் இணைந்து - வெளித்தெரியா நாட்டுக் கூ தீதுக் கலைஞர்கள் பலரை கி கெளரவித்தமையில் இவரது பங்குமுண்டு.
உருவகக் கதை, குறுங் கதை, இதழியல்
சுவே, எஸ்.பொன்னுத்துரை (எஸ்.போ), எம்.ஏ.ரஹ்மான் ஆகியோரின் வரிசையில் உருவகக் கதைத்துறையில் கணிசமான பங்களிப்பு இலக்கியத்திற்குச் செய்திருப்பவர் செம்பியன் செல்வனாவர். கவித்துவமான சொற்கள் இவரது உருவகக்கதைகளில் படிந்திலங்கும். ஐம்பதுக்கு மேற்பட்ட உருவகக் கதைகளை இவர் படைத்துள்ளார். அவையும் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்ட நிலையில் இடப்பெயர்வின் இழப்புகளுக்கு இரையாகிப் போன நூலாகும். ஈழத்தில் குறுங்கதைகளைத் தரமாகவும் நிறைவாகவும் படைத்தளித்திருப்பவர் செமி பியணி செல் வன . அவருடைய 'குறுங் கதைகள் நுாறு' நூலுருப் பெற்றிருக்கின்றது. பலராலும் விதந்துரைக்கப் பட்ட படைப்பு இதுவாகும். உருவகக் கதைகள் வேறு, எனத் தெளிவான இலக்கண வரையறையைத் தன்படைப்புக்கள் மூலம்
காட்டியவர் செம்பியன் செல்வன். மல்லிகை சஞ்சிகையின் ஆரம்ப இதழ்களில் இவரின் குறுங்கதைகள் பலவும் வெளிவந்துள்ளன. செம்பியன் செல்வனின் இன்னோர் வகையான படைப்பு நாணலின் கீதம்' என்ற சிறு நூலாக வெளிவந்துள்ளது. தத்துவ விசாரணைகள் இதிலடங்கியுள்ளன. இவற்றோடு செம்பியன் செல்வன், 'விவேகி', 'அமிர்த கங்கை ஆகிய இரண்டு இலக்கிய இதழ்களில் முறையே இணையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றி இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளார். அமரர் எம்.வி.ஆசீர்வாதத்தினால் ஆரம்பிக்கப் பட்டு நடாத் தப்பட்ட விவேகியினர் இணையாசிரியர்களாகச் செம்பியன் செல்வனும் செங்கை ஆழியானும் விளங்கியுள்ளனர். 1968 தொடக்கம் 1971 வரையிலான விவேகி இதழ்களில் செம்பியன் செல்வனின் படைப்பாற்றலும் புதிய எழுத்தாளர்களைத் தக்கவாறு அறிமுகப்படுத்திய பணியும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஈழமுரசு மயில் அமிர்தலிங்கத்தினால் நடாத்தப் பட்ட "ஈழமுரசு தினசரியின் மாதாந்த இலக்கியச் சஞ்சிகையாக 'அமிர்த கங்கை' 1986-ல் வெளிவந்தது. பன்னிரண்டு இதழ்களே வெளிவந்திருந்தாலும் இச்சிறு சஞ்சிகையின் இக்கியப் பங்களிப்பு அதிகமாகும். செம்பியன் செல்வன் நல்லதொரு சிறு சஞ்சிகை எப்படியிருக்க வேணி டுமென பதற்கு இலக்கணமாக அதிர்தகங்கையை உருவாக்கி வெளியிட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பட்டப் பின் படிப்புக் கற்கையின் போது 'கலைஞானம்' என்ற சஞ்சிகையின் ஆசிரியராக விளங்கினார். செங்கை ஆழியானின் புவியியல், நுண்அறிவியல் ஆகிய சஞ்சிகைகளின் இணையாசிரியராகக் கடமையாற்றியதோடு பங்களிப்பும் செய்துள்ளார்.
○

Page 6
காணப்பட்டார்.
புத்தெழுச்சிக் காலச் சிறுகதைகள்.
செம்பியன் செல்வன் எழுதிய புத்தெழுச்சி காலகட்டத்துச் சிறுகதைகளில் பாரம்பரியம், வர்க்கங்கள், பாதிமலர், இதயக் குமுறல், அமைதியின் இறகுகள், நீரும் நிலமும், நெல், கிழக்கும் மேற்கும், நீரோட்டம், பூவும் கனியும், ஒரு ஞாயிற்றுக் கிழமை, பழங்கட்டில் என்பன குறிப்பிடத் தக்கன. கலைச்செல்வி நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினை இதயக் குமுறல்' என்ற சிறுகதை பெற்றது. அதன் பின்னர் செம்பியன் செல்வன் ஈழத்தின் சிறுகதையாளர்களில் ஒருவராக அடையாளங்
இதயக்குமுற்ல் அமைதியின் இறகுகள் நீரும் நிலமும், நெல் ஆகியன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறக்கின்றன. ஈழத் தமிழர் வாழ்வு, இன்றைய நிலைமைகள் இவை கதைகளுக்குப் புலமாகத் திறம் படக் கையாளப்பட்டிருப்பதே இக்கதைகளின்
சிறப்பிற்கு முக்கிய காரணம். நெல்லில் வரும்
மாப்பிள்ளைக் கந்தரையும், நீரும் நிலமும் சின்னரையும் படைத்த பாங்கு சிறப்பானது' 61 GT3 Ց I 80 60 இளந் திரையணி குறிப்பிட்டுள்ளார். ஈழநாடு தனது பத்தாவதாண்டு நிறைவின் போது நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் பூங்கனிகள் முதற்பரிசு பெற்ற சிறுகதைகளில் ஒன்றாகும்.
தமிழ்த் தேசிபவுணர்வுக்காலச் சிறுகதைகள
செம்பியன் செல்வனைச் சிறுகதை
வரலாற்றுக் காலகட்டத்தின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது மல்லிகையில் வெளிந்த
'சர்ப்பவியூகம்’ என்ற கதையாகும். வன்னிப் பிரதேசச் சூழலில் வீறுகொணி டெழும் தொழிலாளர்களை இயற்பண்பு மீறாது சர்ப்ப வியூகத்தில் சித்திரித்துள்ளார். இச்சிறுகதை மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ள மல்லிகைச் சிறுகதைகள்' என்ற தொகுப்பில்
இடம்பிடித்துள்ளது. புத்தெழுச்சிக் கால
கட்டத்தின் (1961-1983) முக்கிய சிறுகதை ஆசிரியராக இனங்காணப்பட்ட செம்பியன் செல்வன், தமிழ்த் தேசிய உணர்வுக் காலகட்டத்திலும் (1983 - 2000) தக்கதொரு சிறுகதைப் படைப்பாளியாக விளங்குகிறார். இக்கால கட்டத்தில் பல சிறு கதைகளைச் செமி பியன செல் வணி படைத்தளித்துள்ள போதிலும், காண்டீயம், வீடு திரும்புதல், வலை, ஓவர் லாண்ட் ஆகிய
சிறுகதைகள் அவற்றின் உருவ அமைதியிலும்
பொருள் அமைதியிலும் சிறந்து விளங்குகின்றன. அகவயப்பட் மானிடப் பெருமக்களை மிகத் தத்ரூபமாகப் புறச் சூழலோடு பின்னிச் சிறுகதைகள் தருவதில் செம்பியன் செல்வன் வல்லவர். அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவரும் 'சர்ப்பவியூகம்' போராட்டச் சூழலின் வாழ்வியல் நெருக்கடிகளையும், இந்திய அமைதிப்படை, இலங்கை இராணுவம் ஆகியவற்றின் அடக்கு முறை அட்டூழியங்களையும் போராளிகளின் தியாகங் கிளையும், க்ருப்பொருளாகக் கொணி டுருவாகியுள்ளன. அவற்ரில் துணிச்சலாகத் தம் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்திய இராணுவமும் தமிழ்த் தேசிய இராணுவமும் யாழ்ப்பாணத்தில் இருந்த காலவேளையை 'காண்டீபம்’ தத்ரூபமாகச் சித்திரிக்கின்றது. அக்கதையை விபரிக்க ஆசிரியர் பிரக் ஞை பூர்வமான

மொழிநடையைக் கையாண்டுள்ளார். இந்திய இராணுவம் கல்லூரி ஒன்றினுள் புகுந்து ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற அவலத்தைக் காண்டீபம் கலாபூர்வமாகச் சித்திரிக்கின்றது. போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட இளைஞர்களின் முடிவை நியாயப்படுத்தும் சிறுகதையாகக் காண்டீபம் விளங்குகின்றது.
செம்பியன் செல்வனின் அண்மைக் காலப் படைப்புக்களில் 'சுலோகப்பிரயோக' வார்த்தையாடல்கள் இருந்தாலும் அவற்றினை மே வி மனதைக் கவி விப் பிடிக் கும் பாங்கானவையாக அவை விளங்குகின்றன.
அயராது உழைத்தவர்.
வருந்துகின்றோம். நீண்ட காலமாக தமிழகச்
o a சூழலில் ‘சதங்கை’ சிறுசஞ்சிகையினை நடத்தியவர் என்ற சாதனைக்குரிய திரு. வனமாலிகை அவாகள் சமீபத்தில் காலமானார். 70 களில் தோன்றிய எந்தவொரு
சிறுசஞ்சிகையும், தொடர்ந்து வெளிவராத சூழலில், வனமாலிகை அவாகள் சதங்கையைத் தொடர்ந்து வெளிக் கொண்டு வருவதில்
அவரின் ‘சர்ப்பவியூகம்’ என்ற சிறுகதைத் தொகுதி 6 قگیl J is சிறுகதைப் படைப்பனுபவத்தினை நன்கு புலப்படுத்தகின்றது. தக்கதொரு விமர்சகராக இனங்காணப்படும் செம்பியன் செல்வனின் படைப்புக்களில் மிக்க அவதானிப்பும் முரண்படாப் பாத்திர வார்ப்பும் சமூக எதிர்வு நோக்கலும் கலைத்துவமாக
அமைந்துள்ளன.
ஈழத்து நவீன இலக்கியவுலகத்திற்குப் பெருமை சேர்க்கும் படைப்பாளி செம்பியன செல்வன்.
எனும்
水 水 永
வானம் பாடி கவிதை இயக கத் தன் அடையாளப்படுத்தி, ‘அன்னம்', 'அகரம் வெளி பிற படைப்பாளிகளை இனங்காட்டிக் கொண்ட ( டி. ராஜேந்திரன்) காலமானார்.
மூலம் , தன்னை யீட்டு நிறுவனங்களால் கவிஞர் மீரா அவர்கள்
வானொலி முஸ்லிம் நாடகங்கள் மூலமும், தனது இனிய குரலிலான அறிவிப்பு மூலமும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்ட திருமதி ஆமினா பேகம் பாரூக்
அவர்கள் 18-09-2002 அன்று காலமானார்.
மூவருக்கும் மல்லிகை தனது அஞ்சலியினைச் செலுத்திக்
கொள்கிறது.
-ஆசிரியர்

Page 7
---- -- το ............့်..............................................................................................---...---...--བབས།། கனடாவிலிருந்து வெளிவரும் ‘காலம்' என்ற சஞ்சிகை தனது 16~ / つーて ogy இதழை நண்பர் ஏஜே கனகரட்னா சிறப்பு மலராக வெளியிட்டுள்ளது, \ மிகச் சிறப்பாகவும் கனதியாகவும் வெளிவந்தள்ளது, இந்தச் சஞ்சிகை. {
\அட்டைப் படத்தை அலங்களிப்பத ஏஜேயின் புகைப்படம்.
ノ அந்தச் சிறப்பு மலரில் பலர் ஏஜே பற்றி எழுதிய கட்டுரைகள் வந்துள்ளன....
سمہ
( நண்பர் எம்.ஏ.நஃமான் அதில் எழுதிய கட்டுரை ஒன்றை இங்கு வெளியிடுகின்றோம்.
~.
---.
v
W
A
Ay ܝܝܝܚܖ--<ܗܝ كمــمسي ...--- --ܚܝܚܝ
எனக்குள் இருக்கும்
ஏஜே.
எம்.ஏ.நுஃமான்
ஏஜேயோடு எனக்குள்ள உறவு சுமார் 40 ஆண்டுகாலம் நீடித்த உறவு. 1960களின் முற்பகுதியில் இந்த உறவு ஏற்பட்டது. அது என் எழுத்துலகப் பிரவேசத்தின் ஆரம்பகாலம். அப்போது ஏஜே திருக்கோவிலில் ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். நீலாவணன், எஸ்.பொன்னுத்துரை ஆகியோருடன் கல்முனையில் ஏஜேயை இடைக்கிடை நான் சந்தித்திருக்கிறேன். சற்றுக் குள்ளமான, ரோஜாப் பூ நிறத்தில்
சிவல்ையான, இளம் ஏஜே இன்னும் என் மனதுள் இருக்கிறார்.
1967-ல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நான் ஒரு விரிவுரையாளனாகச் சேர்ந்த காலத்திலிருந்து ஏஜேயுடன் எனக்கு மிக நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. துரதிர்ஷ்டமாக 1990-ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற நேரும்வரை அன்றாடச் சந்திப்பாக அது தொடர்ந்தது. கடந்த பத்தாண்டு காலமாக யுத்தம் எங்களைத் தூரப்படுத்தியிருந்தாலும் எப்போதாவது ஒரு நாலுவரிக் கடிதம், அல்லது ஒரு தொலைபேசி உரையாடல் என்பவற்றுக்கு மேலாக மானசீகமாக ஏஜே எப்போதும் என்னுடன் இருக்கும் உணர்வு தொடர்கிறது. என்னைச் சூழ்ந்த வளிமண்டலம் போல, பிரக்ஞையற்ற சுவாசம் போல ஏஜே எப்போதும் என்னுள் இருக்கிறார் என்றே
நினைக்கிறேன்.
 

ஏஜேயை ஒரு எழுத்தாளன், விமர்சகன் என்ற பதக்கத்தை மட்டும் சூட்டிக் கெளரவிக்க முனைவது அவருக்குத் தகுந்த மரியாதையாகாது என்றே நினைக்கிறேன். கடந்த அரைநூற்றாண்டு காலத்துள் அவர் எழுதியது கைப்பிடி அளவுதான். அவர் சொந்தமாக எழுதியது, மொழிபெயர்த்தது எல்லாவற்றையும் ஒரு தொகுதியாக வெளியிட்டால் ஆயிரம் பக்கங்களைத் தாண்டாது. அப்படிப் பார்த்தால் வருடத்துக்கு இருபது பக்கங்களுக்குமேல் அவர் எழுதவில்லை. ஓர் எழுத்தாளன் எத்தனை பக்கங்கள் எழுதினான் என்பது ஒரு பொருட்டல்ல. அவன்"என்ன எழுதினான், எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தினான் என்பவை தான் முக்கியமானவை. அந்த வகையில் ஏஜே ஒரு முக்கியமான எழுத்தாளர். விமர்சகர் என்பது சர்ச்சைக்கு அப்பாற் பட்டதுதான். என்றாலும், ஏஜே அதற்கும் மேலானவர் என்பது தான் என்னுடைய கருத்து. அவர் ஒரு பொது நிறுவனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தனிமனிதர். வள்ளுவரின் உருவகத்தைப் பயன்படுத்திச் சொல்வதாயின் நீர் நிறைந்த ஊருணியாக இருப்பவர் அவர். அவருடைய அறிவும் உழைப்பும் ஓர் ஊருணிபோல் எப்போதும் பிறருக்குப் பயன்பட்டுக் கொண்டிருப்பது அவரது நண்பர்கள் யாவரும் அறிந்ததே.
எழுத்தாளர்கள் இலக்கிய வாதிகளைத் தாண்டி, பல்கலைக் கழக மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை, பத்திரிகையாளர் முதல் சமூகசேவை நிறுவனங்கள் வரை இடதுசாரி அரசியல் கட்சிகள் முதல் விடுதலை இயக்கங்கள்
வரை அவரிடமிருந்து பயணி பெற்றிருக்கின்றனர் அல்லது அவரைப் பயன்படுத்தி இருக்கின்றனர். ஒரு தகவல் அறிதல், அபிப்பிராயம் கேட்டல் ஒரு கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல், ஓர் அறிக்கை தயாரித்தல், ஆவணங்களை மொழிபெயர்த்தல் என இந்த உதவிகள் பலதரப்பட்டவை. ஏஜே தன் பெயரில் எழுதியவை சொற்பமாக இருக்கலாம். அது பற்றிய மனக்குறை அவரது நண்பர்கள் எல்லோருக்கும் உண்டு. ஆனால், அவர் உரிமை கோராத, அவர் கைப்பட்ட எழுத்துக்கள் பல ஆயிரம் பக்கங்கள் இருக்கும் என்றே நினைக்கிறேன். அது ஏஜேக்கு மட்டும் தான் தெரியும். பிறருக்குச் செய்த உதவியை ஏஜே ஒரு போதும் மற்றவருக்குச் சொன்னதில் லை. மற்றவருக்கு உதவுவதையிட்டு அவர் சலிப்படைந்ததும் இல்லை. அவர் இவற்றையெல்லாம் பிரதி உபகாரம் கருதிச் செய்ததும் இல்லை. எல்லாமே சிரமதானம் தான். அவ்வகையில், ஏஜே ஒரு முழுநேரத் தொண்டனாகச் செயற்பட்டிருக்கிறார், என்றே சொல்ல வேண்டும்.
ஆங்கில மொழி இலக்கிய பரிச்சயம் குறைந்த என் போன்றவர்களுக்கு ஏஜே தொடர்ந்தும் ஒரு ஜன்னலாக இருந்திருக்கிறார். உலக இலக்கியத்தின் பெரும் பகுதியை நாம் அவர் ஊடாகப் பார்த்திருக்கிறோம். ஏஜேயைச் சூழ இருந்தவர்களுள் ஏஜே அளவு வாசித்தவர்கள் யாரும் இல்லை என்று உறுதயாகச் சொல் லலாம் . வெறுங்கையுடன் நான் ஏஜேயைப் பார்த்த சந்தர்ப்பங்கள் இல்லை. எப்போதும் அவர்
கையில் சில புத்தகங்கள் இருக்கும் அவரது
CD

Page 8
சொந்த நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. பொது நூலகம், பல்கலைக் கழக நூலகம் என்பவற்றை அவரளவு பயன்படுத்திய பிறிதொருவரை அடையாளம் காண்பது சிரமம். ஏஜே எல்லோருக்குமாக வாசித்தார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
தனிப்பட்ட முறையில் நான் ஏஜேயிடம் இருந்து கற்றுக் கொண்டவை அநேகம். அறிவை மட்டுமல்ல, ஆளுமைப் பண்புகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு விமர்சனமாக வெங்கட் சாமிநாதன் எழுதிய " மார்க்சின் கல்லறையில் இருந்து ஒரு குரல்' என்று கட்டுரைக்கு மறுப்பாக நான் மல்லிகையில் எழுதிய நீண்ட கட்டுரையை எனது மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும் நூலில் சேர்ப்பதற்காகத் திருத்தி எழுதியபோது, ஏஜேயினர் ஆலேர்சனைகளும் தகவல்களும் எனக்குப் பெரிதும் பயன்பட்டன. அந்த நூலிலேயே நான் அதனைக் குறிப்பிட்டிருக்கிறேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்த போது வெளியிட்ட எனது மூன்று நூல்களிலும் - தாத்தாமாரும் பேரர்களும், பாரதியின் மொழிச்
சிந்தனைகள், பலஸ்தீனக் கவிதைகள் -
ஏஜேயின் பங்கு கணிசமானது. பலஸ்தீனக்
கவிதைகள் மொழி பெயர்ப்பு பலவற்றை
ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துத் திருத்தங்கள் செய்திருக்கிறார். ஏனைய இரண்டு நூல்களையும் அச்சாக்குவதில், Proof திருத்துவதில் ஏஜே அயராது உழைத்தார். அது அவருக்குத் தன்னுடைய சொந்த வேலை போன்றது. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள்
O2)
காலையில் ஏஜே என்னிடம் சொன்னார் . நான் Proof திருத்திக் கொடுத்துவிட்டேன் தயவு செய்து நீங்களும் ஒருதரம் பாருங்கள் என்று. எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது. அது எனது வேலை தானே! பின் ஏன் இந்தத் தயவு செய்து? அதுதான்
ஏஜே. அது அவருக்குத் தன்னுடைய
வேலை. என்னுடைய வேலையை, என்னிடம் உதவி கேட்பது போல் பணிவாக உணர்த் துவது தான் . அவருக்கு இயல்பானது. அருடைய உதவியை நான் எனது நுால களில் நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறேன். நன்றி என்ற வார்த்தை சம்பிரதாய பூர்வமானது தான். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள எனது உணர்வுகள் ஆழமானவை.
மல் லிகை யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் இயங்கிக் கொண்ருந்த காலத்தில் ஏஜேயை அடிக்கடி அங்கு காணலாம். ஏதாவது ஒரு Proof திருத்திக் கொடுத்துக் கொண்டிருப்பார். டொமினிக் ஜீவாவைத் தவிர்த்து மல்லிகைக்குப் பின்னால் இயங்கிய இருவரைச் சொல்ல வேண்டும். ஒருவர் அச்சுக் கோப்பாளர் சந்திரசேகரம், மற்றவர் ஏஜே சந்திரசேகரம் தான் மல்லிகை ஆசிரியர் என ஏஜே ஒரு நமுட்டுச்சிரிப்புடன் அடிக்கடி சொல்வார். மல்லிகையின் வளர்ச்சியில் இவர்களின் பங்கு சரியான முறையில் ஒப்புதல் பெறவில்லை என்றே நினைக்கிறேன்.
ஏஜே மிகச் சிறந்த பத்திரிகையாளராக இனங்காணப்பட வேண்டியவர். Daily News, Co-Operator, Saturday Review. திசை ஆகியவற்றில் அவர் ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றி

யிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அரசியல் கொந்தளிப்பு மிக்க காலத்தில் வெளிவந்து (ossT636TL9(b55 Saturday Review 61st J இதழில் அவர் பணியாற்றிய காலம் அவருக்கு மனநிறைவளித்தது என்று நினைக்கிறேன். அரசியல் ஒடுக்கு முறை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு எதிராக மிக வெளிப்படையாகப் பேசிய பத்திரிகை அது. அதன் ஆசிரியராக இருந்த காமினி நவரத் தன 9 (5 சிங் களவர். தென்னிலங்கையில் அரசியல் செல்வாக்கு மிக்க பிரபலமான ஒரு முற்போக்குப் பத்திரிகையாளர். அவருடன் பணியாற்றிய காலத்தை ஏஜே திருப்தியுடன் நினைவு கூர்வார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முக்கியமான எல்லாப் பத்திரிகைகளின் பதவிசாரா ஆசிரியர் குழு உறுப்பினராகச் செயற்பட்டார் என்று கூடக் கூறலாம். எல்லோருக்கும் ஏஜே ஏதோ ஒருவகையில்தேவைப்பட்டார். அவர் சில்லறைத் தனமாகத் தனிப் பட்ட மோதல் , முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர். அவ்வகையில் அவர் ஓர் ஞானி. அதனால் தான் எல்லாரும் அவரை மரியாதையுடன் வரவேற்றனர்.
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் யாருக்கும் எந்தவகையிலும் ஏஜே குறைந்தவரல்ல. ஆங்கில மொழி - இலக்கியத் துறையில் அவரது அறிவு பரந்தது, ஆழமானது. அவரும் ஓர் ஆங்கிலப் பேராசிரியராக இருந்திருக்க வேண்டியவர் தான். ஆயினும், பல்கலைக் கழக நிறுவன அமைப்பு அதன் விதரிமுறைகள் அவரை G (5
விரிவுரையாளராகத் தானும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. நிறுவன அமைப்பு அறிவாற்றலை மட்டும் பார்ப்பதில்லை. அதற்குச் சான்றிதழும்
வேண்டும். ஏஜேயிடம் அந்தச் சான்றிதழ்
இல்லை. இதனால் அடிப்படை ஆங்கிலம் பயிற்றும் ஒரு போதனாசிரியராகவே (Instructor) அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சேரமுடிந்தது. ஆயினும், ஆங்கில இலக்கிய விரிவுரையாளர்கள் தங்கள் ஐயங்களைத் தீர்ப்பதற்கும் ஆலோசனைக்கும் ஏஜேயையே நாடிச் செல்வர்.
இந்தவகையில், ஏஜேயை றெஜி சிறிவர்த்தனவுடன் ஒப்பிடலாம் என்று நினைக்கிறேன். இருவரும் பிரம்மசாரிகள் என்பதற்கு மேலாக பல்கலைக் கழக ஆங்கிலத் துறைகளால் உள்வாங்கப் படாத ஆங்கில இலக்கிய மேதைகள். ஏஜேக்கு றெஜியின் மீது அவ்வளவு ஈடுபாடும் மதிப்பும் உண்டு. றெஜியின் சில கட்டுரைகளை அவர் தமிழில் மொழி பெயர்த்தும் இருக்கிறார். செங்காவலர் தலைவர் ஏசுநாதர் என்ற கட்டுரை கூட றெஜியின் ஓர் உரையைத் தழுவி எழுதப்பட்டது தான். இத்தகவல் அதைத் தலைப்பாகக் கொண்ட தனது புத்தகத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது அவருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதை அண்மையில் தொலைபேசியில அவருடன் உரையாடியபோது அறிந்தேன். அந்நூலுக்கு எஸ்.வி.ஆர். எழுதிய முன்னுரையில் அக்கட்டுரை பற்றித் தெரிவித்துள்ள பாராட்டுக்கள் உண்மையில் தனக்கு உரியவை அல்ல என்றும் அக்கட்டுரையின்
(13)

Page 9
மூலம் பற்றிய தனது குறிப்பைப் பதிப்பாளர் நூலில் சேர்க்கத் தவறியதாலேயே இத் தவறு நிகழ்ந்தது என்றும் அவர் உணர்மையான மன உறுத்தலுடன் கூறினார். ஏஜே தனக்கு உண்மையாக இருக்க முயலும் சான்றோர் என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டும் தான்.
ஏஜேயின் இலக்கியப் பங்களிப்பு பற்றியும் நான் சிறிது சொல்லவேண்டும். 1960-களில் இலங்கை இலக்கியத்தில் LD (T ñt aö gfuu Lü u IT fT 60) 6hu 60) uu வலரியுறுத்தியவர்களில் ஏஜேயும் முக்கியமானவர். முற்போக்கு இலக்கியத்தின் ஆதரவாளராக அவர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறார். ஈழத்து முற்போக்கு இலக்கியம் அதன் ஆரம்ப காலத்தில் அழகியல் ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அதை அரவணைத்து நிற்க வேண்டிய தேவையும் கட்டுப்பாடும் தங்களுக்கு இருந்ததாக அவர் என்னிடம் கூறியிருக்கிறார். என்றாலும், இலக்கியத்தைப் பொறுத்தவரை விமர்சனக் கொமிசார் பார்வைக்குப் புறம்பானவராகவே அவர் செயற்பட்டிருக்கிறார். நெகிழ்ச்சியற்ற, கறாரான ஒற்றைப்பார்வை உடையவரல்ல
ஏஜே மார்க்சிய விமர்சனத்தில் காணப்பட்ட
வெவ்வேறு சிந்தனைப் போக்குகளை அவர்
தமிழுக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்.
மார்க் சிய சார்பற்ற சிந்தனைப் போக்குகளையும் அதேவேளை வலது சாரிக் கருத்துக்களை அவர் தொடர்ந்தும் விமர்சித்து வந்திருக்கிறார். மார்க்சியமும் இலக்கியமும், மத்து’, ‘செங்காவலர் தலைவர் ஏசுநாதர்' ஆகிய அவரது கட்டுரைத் தொகுதிகள் இதற்குச் சான்று.
C14)
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மொழி பெயர்ப்புகளாகவும், தழுவல்களாகவும் தமிழுக்கு நிறையப் புதுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஏஜே. அவ்வகையில் அண்மைக்காலத்தில் தமிழ் இலக்கிய உலகுக்கு வெளியில் இருந்து
வெளிச்சத்தைக் கொண்டு வந்தவர்களில்
ஏஜேக்கு முக்கிய இடம் உண்டு. அதேவேளை பின் நவீனத்துவ வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லாமல் தன்னைத் தற்காத்துக் கொண்டவராகவும், இந்த அதி நவீன மோஸ்தர்களை நிதானமாக விமர்சனத்துக்கு உட்படுத்துபவராகவும் அவர் நம்முடன் இருக்கிறார் என்பது நமக்கு ஆறுதலும் தெம்பும் தருகிறது.
ஏஐேயை ფ) ([b மொழி பெயர்ப்பாளராகவும் நோக்க வேண்டும். தமிழுக்கு வளமான நீண்டகால மொழிபெயர்ப்பு மரபு உண்டு. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலர் நம் மத்தியில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கிறார்கள். இவர்களால் தமிழ் வளமும் புதிய வலுவும் பெற்றிருக்கிறது. அதேவேளை பொறுப்பற்ற, திறனற்ற மொழி பெயர்ப்பாளருக்கும் நம் மத்தியில் குறைச்சல் இல்லை. ஏஜேக்கு மொழிபெயர்ப்பு ஒரு தொழிலல்ல. அது ஜீவனோப்யத்துக்குரியதல்ல. அது அவரது சமூகக் கடப்பாட்டின் ஒரு பகுதி. அதனால், தேர்ந்து, தேவை என்று தான் கருதுபவற்றை மட்டுமே அவர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார். மொழி பெயர்ப்புச் செம்மையில் அவர் எப்போதும் அக் கறை உள் ள வர் . மொழி பெயர்ப்பாளர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கத் தகுதி உள்ளவர். ஆங்கிலத்தின்

ஊடாக ஆக்க இலக்கியங்களை அவர் தமிழுக்குக் கொண்டு வந்தது மிகக் குறைவு. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு அவர் மொழிபெயர்த்த கவிதைகள், சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவானவை எனினும் முக்கியமானவை. இத்துறையில் அவர் தீவிரமாக ஈடுபடவில்லை என்ற மனக்குறை எமக்கெல்லாம் உண்டு. எனினும் ,
அண்மைக்காலத்தில் இதில் அவர் அதிக
அக்கறை செலுத்தி வருகிறார் என்பது நமக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
ஏஜேயைப் பற்றி எவ்வளவும் பேசலாம்,
எழுதலாம் அறிவுத் துறையைப்
பொறுத்தவரை வள்ளுவன் சொல்வது போல அவர் ஒரு பேரறிவாளன். அவரது அறிவுச் செல்வம் நீர் நிறைந்த ஊருணிபோல் அவரைச் சூழ உள்ள உலகுக்குச் சொந்தமானது. ஒரு மனிதன் என்றவகையில் அவர் உன்னதமானவர். நெஞ்சுக்கு இதமானவர். நல்லவர்களைப் பற்றிக் கிராமத்து மக்கள் சொல்வார்கள், ‘அவர் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது என்று. ஏஜே நடந்த இடத்தில் புதிதாகப் புல்முளைக்கும். பூப்பூத்துக் குலுங்கும் என்று சொல்லத் தோன்றுகின்றது எனக்கு.
முக்கிய குறிப்பு
மல்லிகையின் ஆரம்ப கால வளர்ச்சியில் ஆத்மார்த்திகமாக உழைப்பு நல்கிய
அச்சுக் கோப்பாளர் திரு.க.சந்திரசேகரம் அவர்களையும் மல்லிகைக்குப் படி திருத்தி உதவிய ஏஜே அவர்களையும் மல்லிகை கனம் பண்ணிக் கெளரவிக்கவில்லை என
நண்பர் நஃமான் இக்கட்டுரையில் குற்றச் சாட்டொன்றை வைத்தள்ளார். பல
ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரசேகரம் அவர்களின் உருவத்தை மல்லிகை அட்டையில் பதிய வைத்த அவரைக் கெளரவித்தள்ளோம். அத்தடன் அவருக்குப் பாராட்டு விழாவைத்து, பேராசியர் சிவத்தம்பி அவர்களால் பொன்னாடை போர்த்தி, பொற்கிரி வழங்கிச் சிறப்புச் செய்துள்ளோம்.
நண்பர் ஏஜேயின் கதையோ வேறு. அட்டையில் ஏஜே இடம் பெற்றுள்ளார். அவர் இந்தப் புகழ் நிகழ்ச்சிகளையே நிராகரிப்பவர். பல தடவை முயன்று தோற்றிருக்கிறேன். இருந்தும் அவரது மணிவிழாக் கொண்டாட்டம் நண்பர் சிவச்சந்திரன் இல்லத்தில் நடந்த சமயம் எம்மாலியன்ற ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். மல்லிகை வரலாற்றில் மறக்கப் பட முடியாதவர் நண்பர் ஏஜே.
ஆசிரியர்.

Page 10
மனித தரிசனங்கள்
ட சுதாரா8
15 - வந்தது எதற்கு?
* அறிமுகமாகிய ஓரிரு மணித்தியாலங்களிலேயே அவன் எனக்கு நெருக்கமாகிவிட்டான். அவனுடைய பெயர் இப்போது எனக்கு ஞாபகமில்லை. (ஏன், அப்போதுகூட ஞாபகமில்லைத்தான்) சட்டென மனதிற் பதியாததும் நீண்டதுமான பெயராயிருந்தது. நீங்களே சொல்லுங்கள். ரஷ்யமொழித் தொனியுள்ள ஒரு நீண்ட பெயரை உச்சரிக்கும்போது நாக்குக் கொளுவிக்கொள்ளும் சங்கடம் இருக்காதா, என்ன? ஒருவேளை நீண்ட காலம் அவன் எங்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவனது பெயரின் ஒரு குறுகிய பதத்தையாவது கண்டு பிடித்திருக்கலாம். உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவன் அவன். உயர்ந்த கம்பிரமான தோற்றம்.
அகன்று பரந்த நெஞ்சு. கப்பல் கப்டின் அவனை 'மார்க்கோணி'
என்றே அழைப்பார். அந்த ஆகு பெயரிலேயே நானும் அவனை அழைப்பேன்; மார்க்கோணி என்பது கப்பலில் ரேடியோ அலுவலராகப் பணி புரிபவரின் கிரேக்க பாஷையிலான பதவிப் பெயர்.
அவனை இன்னும் சரியாக அறிமுகப்படுத்துவதானால் இதற்கு முதல் எழுதிய அத்தியாயத்தின் தொடருக்குப் போகவேண்டும்.
O6)

வானலைக கருவி அலுவலரோ
முதன்மை என்ஜினியரோ பயிற்றப்பட்ட
மாலுமரிகளோ அற்ற கப் பலரில் யேமனிலTரு நீ து Uu 600fog அண்மையிலுள்ள நாடான ஜிபூர்ட்டியைச் சென் றடை நீ தோம் ğ560) 6\) 60) LD
அலுவலகத்துடன் தொடர்பு கொண்டதில்
ஒரு முதன்மை எனிஜினியரையும் ரேடியோ அலுவலரையும் (மார்க்கோணி) உடனே அனுப்பி வைத்தார்கள். எங்கள் பயணத் தைத் தொடர்ந்து மேற் கொள்வதற்கு இவர்கள் இன்றியமையாதவர்களாயிருந்தார்கள்.
தலைமை அலுவலகத் தரின் கட்டளைப் படி நாங்கள் அடுத் து ருமேனியாவுக் குச் செல்லவேண் டி யரிருந்தது. முதலில் சவு, தி அரேபியாவுக்குச் செல்லும்படியும் மாலுமி தரத்திலுள்ளவர்கள் அங்கு எங்களோடு சேர்ந்து கொள் வார்கள் என்றும் பணிப்புரைக்கப்பட்டது.
கம்பனியின் வேறு கப்பலில் இருந்து தற்காலிகமாகத்தான் மார்க்கோணியை இங்கு அனுப்பியிருந்தார்கள். ருமேனியா போகும்வரை இந்த மார்க்கோணி பணி புரிவான் . பின்னர் வேறு ஒருவர் மாற்றப்படுவார்.
மார்க்கோணி வந்த நேரத்திலிருந்தே அவனது பணியைத் தொடங்கி அதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். ஆர்வம் காரணமாக நானும் அவனோடு சேர்ந்து பல திருத்த வேலைகளுக்குக் கை
கொடுத்தேன். கப்பல் புறப்படுவதற்கு
முன்னர், வானலைக் கருவிகளை ஒரளவு சரிசெய்து இயங்கு நிலைக் குக் கொண்டுவந்தான். மார்க்கோணிக்குக்
பொழுதுகள்
கப்பலில் எல்லோரும் புது முகம். அதனால் கூடச் சேர்ந்து பழகிய
என்னுடன் இயல்பாகவே மிக நட்புணர்வு
கொணர் டான் வேலையற்ற நேரங்களிலெல்லாம் என்னுடன் வந்து பேசிக்கொண்டிருப்பான் இரண்டொரு நாட்களிலேயே உற்ற நண்பனைப்போல சொந்த விஷயங்களையும் மனம் விட்டுக் கதைப்பான்.
ஒரு சில நாட்கள்தான் இப்படிப் பகர்தலும் அமைதியானதுமான கழிந் தன. கப் பல ருமேனியாவை நோக்கிப் பயணித்துக் கருங் கடலை அடைந் தபோது, காலநிலையில் சடுதியான மாற்றங்கள்
தோன்றின. காற்று கடுமையாக வீசத்
தொடங்கிப் பெரும் புயலாக மாறியது. 85 LÜ U 6\Ö புயலறி சிக் குணர் டு அலைக்கழிந்தது. (இதைப் பற்றி இங்கு விபரமாக எழுதப்போவதில்லை.) ஆனால் அந்த இரண்டு நாட்களும் கண் துஞ்சாது கணத்துக்குக் கணம் கால நிலை மாற்றங்கள், காற்றின் வேகம், திசை போன்ற தகவல்களை சேகரிப்பதில் அவன் ஆற்றிய பணி ஆச்சரியமூட்டியது.
கப்பல் கப்டின்கூட பதட்டத்தின் உச்ச நிலையில் இருந்தார். Jej6)j fŤ தளர்ந்து போன நேரங்களிலெல்லாம் மார்க்கோணி பக்கத் துணையாய் நின்று அவரது பணியில் உதவினான். கப்பற் பயணத்தில் இது போன்ற முன் அனுபவம் இல்லாத எங்களின் நிலைபற்றிச் சொல்லத் தேவையில்லை. எங்களது பய த  ைதயும் பதட் ட த  ைதயும் தெளிவரிக் கும் முயற் சரியையும் மார்க்கோணி செய்தான்.
○

Page 11
-
‘சரியான முறையிற் கட்டப்பட்ட ஒரு கப்பல் எந்தப் புயலிலும் கடலில் மூழ்காது. பயப்படவேண்டாம்.'
ஆனால் எங்களுடைய கப்பலோ, கட்டப்பட்ட பின்னர் ஒரு தொழிற்சாலைக் கப்பலாக மாற்றியமைக்கப் பட்டது. பெரிய இயநீ தரங்கள் பொருத்தப் பட்டமையாலும் , தொழிற் சாலை அமைப்புக்களாலும் அதன் சமநிலை பாதிக்கப் பட்டிருக்குமோ என்ற பயம் எங்களுக்கு.
இந்த நேரத்தில் “சகல கப்பல் கப்டின்களுக்கும்’ என ஒரு அறிவித்தல் வந்தது - துறைமுக அதிகாரி பேசினார் - இரு கப் பல கள் அதிலிருந்த அனைவருடனும் கடலில் மூழ்கிவிட்டதாகவும், உங்களுடைய பாதுகாப் பை உறுதிசெய்து கொள்ளுங்கள் எனவும் கூறப்பட்டது. இதைக் கேட்டதும் கப்டின் செயலிழந்த நிலைக் குள் ளானவர் மார்க்கோணி கிட்டத்தட்ட அவரது பணிகளில் (up (up 60). LD uJIT (E (86) ஈடுபட்டதுபோல பக்கபலமாக நின்றான்.
காற்றின் வேகத்திற்கும் திசைக்கும் தகுந்த மாதிரி, எந்தத் திசையிற் கப் பலைச் செலுத்தலாம் எனத் தீர்மானிப்பதில் மார்க்கோணி கப்டினுக்கு உதவினான். காற்றின் திசையை ஊடறுத்துச் செல்லும் போதெல்லாம் நாங்கள் பின் நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை, வரைபடத்தில் நாங்கள் நரிற் கும் நிலையைக் குறிப்பெடுக்கும்போது தெரிந்தது.
. Lu TLņ6ð 60D6).
கொண்டிருந்தது. குளிர்.
போலானார்.
ருமேனியா நோக்கி வந்த நாங்கள் ரஷ்யப் பகுதியெல்லாம் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டோம். காற்று ஓய்ந்த எல்லோரும் அவரவர் தெயப் வங்களை வேணர் டிக் கொண்டிருந்தோம்.
இரண்டாம் நாள் நடு இரவில் பல பெருமூச்சுக் களுடன் காற்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து ஓய்ந்தது.
நாங்கள் ருமேனியா நோக்கி வந்து கொன் ஸ் ரான் ரா துறைமுகத்தில் நங்கூரமிட்டோம். அடுத்த நாள் கப்பல் துறைமுகத்துக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டுக் கட்டப்பட்டது.
அப்போது பனிமழை பெய்து கை நீள ஐக்கட்டுக்களுடனும் மூடிக் கட்டிய தொப்பிகளுடனும் மனிதர்கள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மரங்களிலெல்லாம் வெண் பஞ்சு பூத்திருந்தது. இந்தப் பனிக்குளிரும் வெண்பஞ்சுத் தூற்றலும் மூடிக்கொண்டிருக்கும் கொன்ஸ்ரான்ரா துறைமுக நகரைச் சுற்றிப் பார்க்கும் விருப்பத்தில் நானும் எனது என்ஜினிய நண்பர் ஒருவரும் வெளியே கிழம்பினோம்.
ரக்சியில் நகருக்கு வந்து, காலாறப் பல வீதிகளிலும் சுற்றிச் சுற்றி நடந்தோம். கடலிற் பல நாட்கள் பயணித்து வந்த பின் பூமியிற் கால் பதித்து நடப்பது ஒருவித இதம். சுகம். காலை பத்தோ பதினொரு மணிப் பொழுதானாலும் கரியன் இன்னும் தலை காட் டாமலTருந் தானி , அதைப் பொருட்படுத்தாது மக்கள் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

கோப்பி குடிப்பதற்காக ஒரு ரெஸ் ரோரன் டுக் குள் போனோம் . ஜக் கட்டும் சப்பாத்தும் அணிந்து குளிரிலTரு நீ து தங் களைப் பாதுகாத்துக்கொண்டு, சில சிறுவர்கள் எங்களிடம் கையேந்திப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கு ஏதாவது கொடுத்தால் இன்னும் சில சிறுவர்கள் கூடிக் கூடிப் பின் தொடர்ந்து வந்தார்கள். நாங்கள் ரெஸ்ரோரன்டுக்குள் நுழைந்ததே இந்தத் தொல்லையைத் தவிர்த்துக் கொள்வதற்காகத் தான். வாசலில் நான்கைந்து சிறுவர்கள் வந்து நின்று கையேந்தினார்கள்.
'அவர்களைக் கவனிக்க வேண்டாம். நாங்கள் எங்கள் பாட்டில் இருப்போம்.' என நண்பன் எனக்குப் புத்திமதி கூறினான்.
நாங்கள் மறுபக்கம் பார்த்தோம்.
கோப்பியை எடுத்துக் குடிப்பதும் பின்னர் கோப்பிக் கோப்பையை மேசையில்
வைப்பதுமாகப் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் நாங்கள் கோப்பையை மேசையில் வைத்தபோது சட்டென இரு சிறுவர்கள் பாய் நீ து எங்களது கோப்பியை எடுத்துத் தங்களது பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு பறந்து போனார்கள். கண் மூடி விழிப்பதற்குள் இது நடந்தது போலிருந்தது. வெறும் கோப்பைகள் என்னைப் பார் உன்னைப் பார்’ என்பது போல முன்னே கிடந்தன. ரெஸ் ரோரன்ட் சிப் பந்தி எதுவும்
நடக்காதது போல வந்து எங்களிடம் 'பில்லைத் தந்துவிட்டு க்ோப்பைகளை எடுத்துக்கொண்டு போனான். பணத்தைச் செலுத்திவிட்டு நாங்கள் வெளியேறினோம்.
(வாசகர்கள் மன்னிக்கவேண்டும். கதை g6 LLĎ LD T glü போவதாகக் கருதவேண்டாம். மார்க்கோணி சீக்கிரம் வருவான்.)
கடைகளின் ஷோ கேஸ்களைப் பார்த் தவாறு நடந்தோம் . சில கடைகளுக்குள் ஏறி இறங்கினோம். குளிர் உடுப்புக்கள் வாங்கினோம். 'இனித் தரும் பப் போகலாம் 66T
முடிவெடுத்துக் கொண்டு வெளியே
வந்தோம்.
நண்பன் கேட்டான்: தூரம் நடந்தே போவமா..?
"கொஞ்சத்
85 U665 பெனி களின் குரலையேனும் கேட்கமுடியாது அடைந்து கிடக்கிறவனுடைய மனநிலை எனக்குத் தெரியும். 曾
‘சரி!' என்றேன்.
சற்றுத் தூரம் தான் நடந்திருப்போம். எனது கைகளைப் பின்னாலிருந்து யாரோ பிடித்து இறுக் கதினார்கள். ஒருவரல்ல, இருவர் இரு பக்கமும், முன்னால் ஒருவன் வந்து எனது ஐக்கட்டின் பொக்கட்டினுள் கை விட்டான். நான் திமிறித் தடுத்தேன். அந்தப் பொக்கட்டினுள்ளிருந்த பேஸை (காசை) எடுத்துக்கொள்வதற்குப் பிரயத்தனப் LJ L. L-fl f 866s எனது நணி பணி திகைத்துப்போய் நின்றான். (என்னை
விட்டு ஓடவும் ஆயத்தம்) நான் இன்னமும்
திமிறிக்கொண்டிருந்தேன். அவர்கள்
விடவில்லை. வீதியிற் போய்க்
கொண்டிருந்த ஒருசிலருக்கும் எனது பரிதாப நிலை புரிந்த மாதிரித்

Page 12
தெரியவில்லை. அவர்கள் அவர்களது .
பாட்டிற் போய்க்கொண்டிருந்தார்கள்.
'இது சரிப்படாது. கைவிடவேண் டியதுதான் .' என்று தோன்றியது. அவர்களுடன் பிடுங்குப்
பட்டுக்கொண்டே பேஸிற்குள் சுமார் எவ்வளவு பணமிருக்கும் என மனதிற்
கணக்கெடுத்தேன். அவர்கள் கத்தியைக் கித்தியை எடுத்துக் காட்டுவதற்கு முன்னர் 'போகட்டும் !’ எனக் கை விட்டேன். போய்விட்டது.
எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஓடி மறைந்தார்கள்.
நாங்கள் வந்துவிட்டோம்.
‘அவர்கள் உங்களைத் தொடர்ந்து வநீ தருப் பார்கள் . நீங்கள் கவனிக்கவில்லை. நீங்கள் போன கடைகளுக்கெல்லாம் அவர்களில் ஒருவன் தொடர்ந்து வந்திருப்பான். நீங்கள் பொருட்களை வாங்கிவிட்டு பேஸை பொக்கட்டினுள் வைத்தபோது, கவனித்து. தனது சகாக் களு க் குக்
தொலைபேசியரில் தகவல்
கொடுத்திருப்பான். அதனாற் தான் சரியாக காசுள்ள பொக்கட்டினுள் கை
வைக்கிறார்கள். இவ்வாறு மார்க்கோணி
856).j60)6) JULLT66T.
வீதியில் இவ்வளவு இழுபறி நடந்தும் யாரும் பொருட் படுத்த வில் லையே. என எனது சந்தேகத்தைக் கேட்டேன்.
‘இவர்கள் ஒவ்வோரிடங்களாக அலைந்து திரியும் ஜூப் ஸிகள் முரட்டுத் தனமானவர்கள். இந்தத்
பேஸைக்
கைத்
துறைமுக நகருக் கு 6)] (5 LĎ வெளிநாட்டவர்தான் இவர்களது இலக்கு. பொலிஸ்காரர்கூட இதைக் கவனிகக்காத மாதிரித்தான் தெரிகிறது எல்லாவற்றுக்கும் வறுமைதான் காரணம். ஒரு காலத்தில் ஐரோப்பாவின் பனக் கார நாடாக இருந்தது ருமேனியா. இதை ஆட்சி செய்தவர்கள் எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டார்கள்.
என் மனக் கண்ணில் கையேந்திக் கொணி டு நரின் ற சிறுவர்கள். தோன்றினார்கள். அவர்களது எதிர் காலமும் இப் படித் தான் மாறிப் போகுமோ..?
அடுத்த நாள் மார்க்கோணி என்னை அழைத்தான்.
"ه
வெளியே (3UTuÜ ஒரு (38BTL Lî அருந்தி வரலாம். வருகிறாயா..?
"ஐயோ..!" ‘என்ன. பயப்படுகிறாய்ா..?
நான் வரவில்லை. நீ போய்விட்டு வா. முதல் நாளின் நடுக்கம் இன்னும் என்னை உலுக்கியது.
ஆனால் மார்க்கோணி என்னை வற்புறுத்தினான்.
"நாங்கள் அவதானமாகப் போய் வரலாம். நான் சில பொருட்களும் வாங்க வேண்டும். அவங்களுக்குப் பயந்துகொண்டு உள்ளே முடங்கிக் கிடக்கவேண்டாம் . வா!'
மார்க்கோணியுடன் சென்றேன். கடைத் தெருவில் நடந்தபோது எனக்கு மிரட்சி, மார்க்கோணி இங்கும் அங்கும்

ஒ வி வொரு கடையாக என் னை அழைத்துக் கொண்டு (அல்லது அலைத்துக்கொண்டு) திரிந்தான். எனக்கு அவன்மேல் எரிச்சல் கூட வந்தது.
மார்க்கோணி சில பொருட்களை வாங்கினான். நானும் (துணிவு வரப் பெற்றவனாக) தேவையான பொருட்களை வாங்கினேன். திரும்புவதற்காக ଘେନ୍ବା ମୌଞu ! வந்தபோது, ‘சுணங்காமல் ரக்ஸியைப்
பிடித்துக் கொண்டு போவோம்’ என மார்க்கோணியிடம் கூறினேன்.
'இல்லை. இன் னும் சில
அலுவல்கள் இருக்கு.
நாங்கள் வீதியில் நடந்தோம்.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்
என்றும் தெரியாது. எப்படி வருகிறார்கள்
ମୋ ମୌ [[}} | id தெரியாது. 675 TUTJ frg5 தருணத்தில் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். ஓநாய்களைப்போல சுற்றி
எழுதப்படாத கவிதைக்கு
வரையய்படாத
நின்றார்கள். நான் திமிறினேன்.
கண் இமைக்கும் நேரத்தில் கண்கள் மின்னும் படியாக ஒரு உதை விழுந்தது.
மார்க் கோணிதான் ! என்னைப் பிடித்துக்கொண்டவன் உதை பட்டு விழுந் தான் அவனது சகாக்கள் மார்க்கோணியை எதிர்த்து அடிக்க முயன்றார்கள்.
நடுச் சந்தியில் வாகனங்கள் அங்கும்
இங்கும் பிரேக் போட்டு நிற்க, தனியொருவனாக நின்று கைகளாலும் காலினாலும் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் மார்க்கோனி
Ꮿ!6)] Ꮎ0Ꭰ60Ꭲ எதிர்கொள்ளமுடியாது அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள்.
சரி. வா. இனிப் போகலம்.! என எனது கையைப் பிடித து அழைத்தான் மார்க்கோணி
ரக்ஸியில் ஏறினோம். ‘இவர்கள்தானே நேற்று உனது பேஸைப் பறித்தது.? என என்னிடம்
(85 LT66s,
‘இவர்கள்தான்.'
நான் வந்தது இதற்காகத்தான்.'
தனது கையில் விசேடமாகப் பூட்டி வந்த பெரிய இரும்பு மோதரத்தைக் காட்டினான்; இது அவர்களது அலகை உடைத்திருக்கும்!
நான் இன்னும் பிரமரிப்புடன் அவனைப் பார்த்தேன்.
s

Page 13
ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள்
மேமனர் கவி
சமீபத்தில் கொழும்பில் முக்கிய மூன்று நிகழ்வுகள் நடந்தன. அந்த மூன்று நிகழ்வுகளும் பல விதங்களிலும் முக்கியத்துவம் மிக்கவையாக எனக்குப் பட்டன.
அதன் காரணமாக, அந்த நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகளை இவ்விதழ்
ஒரு பிரதியின் முணுமுணுப்புக்களில் பதித்து விடலாம் என எண்ணுகிறேன்.
1
ஆகஸ்ட் 22-ந்திகதி போயா தினம் அன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அமைந்துள்ள குமாரசாமி வினோதன் நினைவு மண்டபத்தில் மல்லிகைப் பந்தல் ஏற்பாட்டில் எழுத்தாளர் தெணியானின் மணிவிழாவினை முன்னிட்டு ஒரு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியிட்டிருக்கும் தெணியான் அவர்களின் 'கானலில் மான்' என்ற நாவலும் வெளியிடபட்டது
தெணியான் அவர்கள், எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி நீண்ட காலமாக எழுத்துப் பணி செய்து வருபவர் தனது மண்ணை விட்டு அகல மனமும் - தேவையும் இல்லாதவர் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முக்கிய பங்காளியாகத் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் முற்போக்கு இயக்கத்திற்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட்ட பொழுதெலாம் அக்குரல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தயக்கம்
(22)

காட்டாதவர். ஈழத்து படைப்பிலக்கியத் துறையில் தனக்கான தனித்துவத்துடன் இயங்கி வருபவர் மார்க்ஸியப் பார்வைமிக்க எந்தவொரு படைப்பாளியும் அவனது பார்வையில் எந்தவொரு நசுக்கப்படுகின்ற, ஒதுக்கப் படுக்கின்ற, அடக்கு முறைக்கு ஆளாகின்ற வர்க்கத்தைப்பற்றிச் சிந்திக்கத் தவற மாட்டான் தெணியானும் தனது எழுத்துப் பணியினைத் தொடரும் யாழ்ப்பாணச் சூழலில், இன்றும் சாதியத்தியத்தின் பேரால் நசுக்கப்படும் வர்க்கத்தின் துயரும் போராட்டமும் தொடரத்தான் செய்கிறது, என்பதை அவர் தனது எழுத்துக்களில் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார். அவ்வர்க்கம் பிராமணச் சமூகமாக இருப்பினும் கூட.
அதே வேளை, இனத்துவ அடக்கு முறைக்கு ஆளாகிய தமிழ்ச் சமூகச் சூழலின் யதார்த்தத்தைத் தனது எழுத்துக்களில் மிகவும் நிதானத்துடனும், எழுத்துக் கலையின் அழகியல் சிதைக்கப்படா வண்ணம் பதிவு செய்வதிலும் அவர் பின் நிற்கவில்லை. தெணியானின் இத்தகைய எழுத்துச் செயல்பாடானது, தமிழ்ப் பேசும் சமூகம் இனத்துவ அடக்கு முறைக்கு ஆளான பொழுது முற்போக்கு இலக்கிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மெளனம் சாதித்து விட்டார்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கி விடும் விதத்தில் தென்னியானின் எழுத்துப் பங்களிப்பு அமைந்து இருக்கிறது என்று உரைப்பது ஒரு மிகையான கூற்று அல்ல என்பது தெணியானின் எழுத்துக்களைச் சரியாக உள் வாங்கியவர்கள் ஒத்து கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.
மிகவும் எளிமையான முறையில் அவரது மணிவிழாக் gilt. Lub நடைபெற்றாலும், அவரை மதித்த அவரது னதியினை உணர்ந்து கொண்ட இலக்கிய
நெஞ்சங்கள் வருகை தந்துதிருந்தமை, அக்கூட்டத்திற்கான வெற்றிகரமான அம்சம் எனலாம்.
தெணியான் அவரது மணிவிழாவை
யொட்டி நடைபெற இருந்த கூட்டம்
நடைபெற்ற நாளின் அன்றைய காலைப்
பொழுதில் மல்லிகை காரியாலத்திற்கு வந்திருந்த அவருடன் நீண்ட நேரம் உரையாட முடிந்தமையும், அன்று கூட்டம் நடைபெறுதற்கு முன்னதாக சுகவீனமுற்று இருந்த பேராசிரியர் சிவதம்பி அவர்களைப் தெணியான் அவர்களுடன் போய் பார்த்ததும் மனதுக்கு திருப்தியினை எனக்கு அளித்தது.
அவருடனான அந்த உரையாடலின் பொழுது,
முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கருத்துக்கள் காலாவதி ஆகி விட்டன என்றும், இன்றைய ஈழத்தில் முற்பேக்கு இயக்கம் மரணித்து விட்டது என்றெலாம் இன்று அறியாமையால் பலர் குரல் எழுப்பிக் கொண்டிருந்த வேளையிலும், எந்த வித உணர்ச்சிக்கும் ஆளாகாமல் மிகவும் நிதானமாக, முற்போக்கு இயக்கம் அன்று வலியுறுத்திய தேசிய ஒருமைப்பாடு என்ற சிந்தனைப் போக்கு இன்றைய நமது தமிழ் பேசும் சமூகச் சூழலில் உடனடியாகத் தேவையான ஒரு சிந்தனைப் போக்காக செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருப்பதை இன்று தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் யாழ்ப்பாணச் சமூகச் சூழலில் கண்கூடாகக் கண்டு கொண்டிருப்பதை எனக்கு அவர் எடுத்துக் காட்டினார்.
தமிழ் பேசும் சமூகம் நேற்று வரை
இலங்கையில் எதிர் கொண்ட நெருக்கடிகளுக்கான தீர்வில், முற்போக்கு இயக்கச் சிந்தனையின் தேவையை
C23)

Page 14
இனங்காட்டுவதில் தெணியான் போன்ற படைப்பாளியின் கருத்தியல் ரீதியிலான பங்களிப்பு இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் தேவைப்படும் என்பது நிச்சயம்.
2
அடுத்த நிகழ்வாக.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்
முன்னணி சென்ற ஆகஸ்ட் மாதம் 27-28 களில் நடத்திய
'முற்போக்கு வாதங்களும் ஆக்க இலக்கியங்களுக்குள்ள சவால்களும்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கு இக்கருத்தரங்கு சம்பந்தமான கருத்துகளுக்கு வருவதற்கு முன்னதாக அக்கருத்தரங்கை
ஏற்பாடு செய்த முஸ்லிம் பெண்கள்
ஆராய்ச்சி செயல் முன்னணியைக் பற்றிச் சிறிது சொல்லி. வேண்டும் இம்முன்னணி ஒர் அரச சார்பற்ற நிறுவனம். பல முஸ்லிம் பெண்கள் இணைந்து பல செயற்திட்டங்களை மேற்கொள்வதோடு, பெண் ணியம் சம்பந்தமான பல நூற்க்ளையும் வெளியிட்டும் ஆக்கபூர்வமான பணிகளை செயற்படுத்தி
வருகிறது. அம்முன்னணியில் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டு வரும் திருமதி
அன்பேரியா ஹனிபா அவர்களைப் பற்றி அறிந்து இருந்தேன் அவரது கணவர் கல் ஹின்னை தமிழ் மண்ற ஹனிபா அவர்களை நன்கு அறிவேன். அவரைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்று இருப்பினும், அன்பேரியா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. மேற்படி கருத் தரங்கில் தான் அவரை முதல் முதலாகச் சந்தித்தேன். இன்றைய நமது சமூக அமைப்பில் முஸ்லிம்பெண்கள் சந்திக்கும்
C24)
பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து அம்மு ன்னணியில் அயராது உழைத்துவருபவர் அவர்
அடுத்து அம்முன்னணியில் தீவிரமாகச் செயற்படும் இன்னொரு பெண்மணியான சுல்பிகாவை அவரது 'விலங்கிட்ட ம்ானுடம்" எனும் கவிதைத் தொகுதி மூலம் அறிந்து
வைச் ந்தே ன் பெண்ணிய
த்து இருந்தே
சிந்தனைக்குள் நின்று கவிதைத் துறையில் ஈடுபட்டு வருபவர் அவரையும் அக்கருத்தரங்கில் முதல் முதலாக சந்திக்க கிடைத்தது அவரது முன்னைய தொகுதியினை விடக் காத்திரமான முறையிலும் தரமான நிலையிலும் சமீபத்தில்
அவரது 'உயிர்த்தெழல்' எனும் தொகுதி
வெளி வந்து இருக்கிறது.
இம்மு ன்னணியின் இன்னுமொரு செயற்பாட்டாளராக இயங்கி வருபவர் முர்ஷிதா மீராலெப்பை அவர்கள். அவர்தான் என்னுடன் தொடர்பு கொண்டு மேற்படி கருத்தரங்கு பற்றி அறிவித்தார். அத்தோடு அக் கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து அம்பையும் சல்மாவும் வரப் போவதாக தகவலும் சொன்னார். என்னையும் அக்கருத்தரங்கில் ඉO கட்டுரை சமர்ப்பிக்குமாறு வேண்டி கொண்டார் ஆனால் எனது வேலைப் பளுவின் காரணமாக கட்டுரையினை சமர்ப்பிக்க முடியாத நிலையினை அவருக்குச் சொல்லி அக்கருத்தரங்கில் பார்வையாளனாகக் கலந்து கொள்கிறேன் என்று உறுதி அளித்தபடி அக்கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியில் பார்வையாளனாகக் கலந்து கொண்டேன்
அக் கருத்தரங்கின் தலைப்பாக
முற்போக்கு வாதங்களும் ஆக்க இலக்கியங்களுக்குள்ள சவால்களும்' என்று இருந்த பொழுதும், முதல் நாள் நிகழ்வு

பெண்ணியம் சம்பந்தமான சிந்தனைகளை யொட்டியதாக அமைந்து இருந்தது. மேற்படி கருத்தரங்கினை ஏற்பாடு செய்து இருந்த இம்முன்னணி முஸ்லிம் பெண்கள் என்ற அடை மொழியுடன் இருந்ததனால் என்னவோ அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட முஸ்லிம் எழுத்தாள நண்பர்கள் முஸ்லிம் பெண்கள் சம்பந்தமான கருத்தரங்கு அது என்ற நினைப்பில் சில கருத்துக்களை முன் வைத்து அக்கருத்தரங்கின் நோக்கத்தை புரிந்து கொள்ளாத நிலையில், அக்கருத்தரங்கின் நோக்கத்தைத் தங்களது தன்னுணர்ச்சி சிந்தனையால் திசைத் திருப்ப முனைந்தமையும் அக்கருத்தரங்கில் காணக் கூடியதாக இருந்தது.
இதற்கு காரணம் அக்கருத்தரங்கில்
விஷேசமாகக் கலந்து கொண்ட அம்பையும், சல்மாவும் முன் வைத்த கருத்துக்களால்
அவர்கள் பாதிக்கப்பட்டது ஒரு காரணமாக
எனக்கு பட்டது. அம்பையும், சல்மாவும் தங்கள் அளவில் அவர்களைச் சூழ்ந்து இருந்த ஆணாதிக்க சக்திகளாலும். அச்சக்திகள் மேலாண்மை செலுத்திய சமூக கட்டமைப்புகளாலும் அவ்விருவரும் எதிர் கொண்ட காயங்களுடனான அனுபவங்களை அங்கு பகிர்ந்து கொண்ட செயற்பாட்டில், அம்பையின் பேச்சில் பெண்ணிய அதிகாரமும் மேலோங்கி இருந்ததாகவும், சல்மாவின் பேச்சு ஒரு சமூகத்தைக் களங்ப்படுத்தும் ஒரு செயற்பாடாகவும் அங்கு சமூகம் அளித்த சிலரால் கருதப்பட்டது.
அச்சிலரில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள்
ஆண்கள் என்பது இங்கு குறிப்பாகச் சொல்ல வேண்டிய ஒரு குறிப்பாகும்)
ஆனால், அம்பையைப் பொறுத்த வரை, அச்சிலரின் கருத்துக்கள் அறியாமையைக் கண்டு ஏற்படும் வகையிலானக் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் சல்மாவைப் பொறுத்த
வரை அவரைப் பற்றி அந்தச் சிலர் கொண்டிருந்த கருத்தை பற்றி அவ்வளவாக அலட்டி கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்களையும் இலங்கைக்கு வந்த பின் இங்கு கணிசமான அளவு முஸ்லிம் பெண்கள் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டு இருப்பதைக் கண்டு இங்கு முஸ்லிம் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவிப்பதைக் கண்டும். ஒரு சீரியசான எழுத்தாளருக்கு ரொம்பவும் பிரமாண்டமான இங்கு அளிக்க்படும் வரவேற்பையும் கண்ட சந்தோஷமான வியப் பில் மூழ்கி இருந்தார். இந்த உணர்வுகளைஅக்கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வுகள் முடிந்த பின் அன்று மாலை மல்லிகைப் பந்தலால் தமிழ்ச் சங்கத்தில் குமாரசாமி வினோதன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யபட்ட அவர்கள் இருவர்களுடனான சந்திப்பின் பொழுதும் வெளிப்படுத்தினார்கள். அதே வேளை கருத்தரங்கு ஏற்பாடுகளும் அதன் பணிகளும் தந்த களைப்பையும் மீறி மல்லிகைப் பந்தல் ஏற்பாடு செய்த அந்தச் சந்திப்பில் அன்பேரியா அவர்கள், சுல்பிகா, முர்ஷிதா ஆகியோரும் கலந்து கொண்டது ஆக்க பூர்வமான உரையாடலில் கலந்து கொள்ளும் அவர்களின் சிந்தனைத் தாகத்தை நமக்கு எடுத்து காட்டியது.
முறையில்
3
மூன்றாவது நிகழ்வாக,
கார்த்திகேசன் மாஸ்டர் அவர்களின் ஞாபகமாக, சமீபத்தில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணா சிறிய மண்டபத்தில், நோர்வேயிலிருந்து வந்திருந்த திரு என் சண்முகரத்தினம் அவர்களின் தலைமையில்
(25)

Page 15
கலாநிதி செல்வி திருச்சந்திரன் அவர்கள் இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் நிலை பற்றிய ஒரு பேருரையை நிகழ்த்தினார். பல கேள்விகளை எழுப்பும் வகையில் அவரது உரை அமைந்து இருந்தது.
அக் கூட்டத்தில் இடதுசாரி இயக்கத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பல தோழர்களை காண முடிந்தமை சந்தோஷத்தை அளித்தது.
செல்வி திருச்சந்திரன் அவர்களின் உரை முடிந்த பின் ஓர் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடத்தும் அளவான கேள்விகளை சுமந்த வண்ணம் அங்கு சமூகம் அளித்திருந்த தோழர்களும் புத்திஜீவிகளும் அமர்ந்து இருந்தாலும், கூட்டத்தின் ஒழுங்கு கருதியும், அத்தகைய உரையாடல் நடத்த முடியாது என்று திரு என் சண்முகரத்தினம் கருதியதனாலும், செல்வி திருச்சந்திரன் அவர்களின் அப்பேருரை விரைவில் நூலாக வெளிவரும் 5( அத்தகைய ge لڑg gا) ITلا”ہ) لا|9ے கலந்துரையாடல் வைத்து கொள்ளலாம் என்ற அக்கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களின் முடிவின் காரணமாகவும், ஒரு கலந்துரையாடல் இன்றி அக்கூட்டம் இனிதே நிறைவேறியது. இன்றைய காலகட்டத்தில் இடதுசாரி இயக்கத்திற்காக தன்னை
அர்ப்பணித்துக் கொண்ட கார்த்திகேசன்
மாஸ்டர் அவர்களை நினைவு கூர்ந்து
இத்தகைய கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை
பாராட்டத்தான் வேண்டும்.
அப்பேருரைக் கூட்டம் முடிந்த பின் மண்டபத்திற்கு வெளியே செல்வி திருச்சந்திரன் அவர்கள் அவரது பேருரையில் வெளிப்படுத்திய கருத்துக்களையொட்டி இடதுசாரித் தோழர்கள் கலந்துரையாடி கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக
(26)
இருந்தது. நான் அறிந்த மட்டில் கடந்த காலத்தில் இலங்கையில் இயங்கிய அரசியல் இயக்கங்களில் இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் தான் ஆழமாகவும், தத்துவார்த்தத் தெளிவுடனும் விவாதிக்கின்றவர்களாக இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள். நான் அறிமுகம் செய்து கொண்ட மட்டில் அன்சாரி மரியதாசன் போன்ற தோழர்கள் மிகவும் நிதானத்துடனும் தெளிவுடனும் இன்றைய இடதுசாரி இயக்கத்தைப் பற்றி கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். இப்படி தெளிவாகவும், நிதானத்துடனும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த இத்தோழர்கள் எந்தவொரு கல்வி சார் பட்டங்களைப் பெற்றவர்களும் அல்ல. அவர்கள் புகழ் பூத்த படைப்பாளிகளாகவும் இல்லை.
எளிமையான நிலையில் வாழ்ந்து, இடதுசாரி சிந்தனைகளை இன்றும்
உயிர்ப்புடன் மக்கள் மத்தியில் கொண்டு
செல்வதில் இன்றும் அவர்கள் இயக்க வடிவத் தன்மையுடன் செயற்பட்டு கொண்டிருக் கிறார்கள் என்பது உண்மை.
இன்றைய காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனை பற்றிய கலந்துரையாடல்களில் புத்திஜீவிகளுக்குச் சமமாக இத்தகையத் தோழர்களின் பங்களிப்பும் பெறப்பட வேண்டும். அப்பொழுதுதான் இடதுசாரி இயக்கத்தின் இன்றைய உயிர்ப்பான சிற்சில குறைகளுக்கான சுய விமர்சனத்துடனான இருத்தலை நிருப்பிக்கக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் -
கார்த்திகேசன் மாஸ்டர் அவர்களின் ஞாபகார்த்தமாகச் செல்வி திருச்சந்திரன்
அவர்கள் நிகழ்த்திய உரை நூலாக வெளிவரப்
போவதை மிகவும் ஆவலுடன் அத் தோழர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் தான்.

4
குமுதம் வெளியிட்டு வரும் தீராநதி பற்றியும். சுந்தர ராமசாமி அவர்களைப் பற்றியும். கடந்த மல்லிகை இதழ் ஒன்றில் நான் எழுதிய குறிப்புக்களைப் படித்த இங்குள்ள சுந்தர ராமசாமி அவர்களின் பக்தர்கள் சிலர் மனக்கிலேசம் அடைந்து இருப்பதாக காற்று வாக்கில் என்க்கு செய்தி கிட்டியது.
அந்த பக்தர்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக நான் சொல்ல விரும்புவது இதுதான்
சுந்தர ராமசாமி அவர்களின் ஆளுமையின் மீது எனக்குச் சந்தேகம் வந்ததில்லை. என்னுடைய கேள்வி எல்லாம் சுந்தர ராமசாமி அன் கம்பெனியினது இலக்கிய நேர்மையைச் சார்ந்தது. அத்தோடு அவர்தம் சந்தர்ப்பவாதப் போக்கினைப் பற்றியதுதான்.
இன்றைய உலக கலை இலக்கியச் சிந்தனா உலகில் ஓர் துரதிஷ்டகரமான ஓர் அம்சம் என்னவென்றால், கல்ை ஆளுமைக்கும். நேர்மைக்கும் இடையில் பரந்த ஓர் இடைவெளி இருப்பதுதான் இச்செயற்பாடுக்கு உதாரணங்களாக விளங்கும் பல படைப்பாளிகளை உலக கலை இலக்கியச் சூழலிருந்தும். நமது கலை இலக்கியச் சூழலிருந்தும் பட்டியல் போடலாம். அத்தகைய ஒரு பட்டியல் போடுவதல்ல எனது குறிப்பின் நோக்கம்.
படைப்பாளியின் தனிமனிதச் சுகந்திரம் ଗT ଦୈt [D வகையில், எந்தவொரு படைப்பாளியின் மீதும் கட்டுப்பாடு விதிக்க கூடாது என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால், ஊருக்த்தான் உபதேசம் எனக்கில்லை என்ற வகையிலான
நடவடிக்கைகளை ஒரு படைப்பாளி மேற்கொள்ளும் பட்சத்தில் அவர்மீது
விமர்சனங்கள் வைக்க வேண்டி இருப்பதோடு
அவரது போலித்தனத்தை அடையாளம் காட்ட வேண்டியும் இருக்கிறது
வணிக எழுத்துக்களை வளர்க்கின்ற நிறுவனம் என்று பிறருக்கு குமுதத்தை இனங்காட்டி, கூடவே மகனின் மூலம் குமுதத்தின் சிறு சஞ்சிகை இயக்கத்திற்கு எதிரானப போக்கினை எடுத்துக் காட்டிய பின்பும்.அந்த நிறுவனத்தின் சந்தர்ப்பவாத ஞான உதயத்தின் காரணமாகவும், வியாபார தந்திரத்தின் காரணமாகவும்.(அதாவது, இன்றைய காலகட்டத்தில், சீரியஸான இலக்கியமும் பணம் பண்ணுவதற்கான வழிகளில் ஒன்று என்ற கோதாவில்) அதுவொரு இலக்கிய இதழ் வெளியிட்டு விட்டது என்பதற்காக பூரித்து நின்று, அதில் எழுதுவது என்பது எத்தகைய இலக்கிய நேர்மை சம்பந்தப்பட்டது என்பதுதான் என் கேள்வி)
மற்றப்படி ஏற்கனவே குறிப்பிட்டபடி இலக்கிய ஆளுமைக்கும் இலக்கிய நேர்மை க்கும் நில வும் இடைவெளியை பற்றி ஒரு விரிவான தளத்தில் விவாதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை இலக்கிய ஆளுமை மீது குறையாத மதிப்பு வைத்திருப்பவன் என்ற வகையில் சுந்தர ராமசாமி அவர்களின் இலக்கிய ஆளுமை மீது என்றும் மதிப்பு இருக்கிறது என்பதை அந்த பக்தர்களுக்கு மீண்டும் ஒரு முறை அழுத்திச் சொல்லி, அந்த பக்தர்களின் பார்வைக்குக் காலச்சுவடு 42-வது இதழில் (ஜூலை-ஆகஸ்டு 2002) வெளி வந்து இருக்கும் ஒரு கடிதத்தைக் காலச்சுவடுக்கு நன்றி கூறி, முன் வைத்து இக்குறிப்பை முடித்து கொள்கிறேன். O
நான,
(27)
s

Page 16
பொன்முட்டையிடும் வாத்துகள்!
- Uத்மா சோமகாந்தனர்
பெண்கள் உரிமை வட்டத்தின் சார்பில் அந்தக் கருத்திரங்கு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. வெளிநாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாகத் தொழில்புரியும் பெண்கள் எதிர்நோக்கும் அவலங்கள் பற்றி ஆராய்வதற்கும், அதற்கான தீர்வு மார்க்கத்தை எப்படி ஏற்படுத்துவது என்பது பற்றிக் கலந்துரையாடுவதற்காகவும் ஒழங்கு செய்யப் பெற்ற நிகழ்ச்சி அது வெளி நாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சில நிர்வாகிகள், பெண்ணிய மன்றங்களின் பிரதிநிதிகள், அக் கறையுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் சில: பார்வைாளர்கள் எனக் கூடியிருந்தனர்.
அந்த வட்டத்தைச் சார்ந்தவர்கள் வெறும் உபதேசிகளாக மட்டும் செயலாற்றவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப் பெற்ற பெண்கள், அகதி முகாம்களில் வாடும் பெண்கள். பாலியல் வலலுறவு, துன்புறுத்தல களால பாதிக் கப் பெற்ற பெண்களுக்கு உதவிகளையும் ஆலோசனைகளையும், தமது சக்திக்கு உட்பட்ட வகையில் செய்து வருபவர்கள். அவசியமான விடயங்களில் தமது செயலில் அவசியமான விடயங்களில் தமது செலவில் சட்டமூலமாக நிவாரணமும்

பயனும் பெற்றுக் கொடுத்துள்ளனர். பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைச் சமூகத்தின் மனச் சாட் சிக் கு முனர் நிறுத் தி விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் முன்னிற்பவர்கள்.
நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்த வட்டத்தின் தலைவி மாலதி தனது முன்னுரையில் உணர்ச்சிகரமாகப் பல விடயங்களை எடுத்துக் கூறினாள்.
‘வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களே எமது நாட்டுக்கு மிகக் கூடுதலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பொன் வாத்துக்களாக விளங்குகிறார்கள். அந் நாடுகளில் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பெரும்பாலும் மூடிமறைக்கப் பட்டு விடுகின்றன. இப்போது சிலகாலமாகப் பத்திரிகைகள் வாயிலாகக் கசியும் செய்திகளும், அங்கு போய் வந்த பெண்கள் தரும் தகவல களும் மனிதநேயத்தைத் திடுக்கிடவைப்பவை. நெஞ்சை உருக்குபவை. பணியாற்றும் வீடுகளில் ஆண்களினால் பாலியல் வல்லுறவு, எஜமானிகளினால இழைக்கப் படும் மனிதாபிமானமற்ற கொடுமைகள் ஏன் தற்கொலை எனக் கூறிச் சாகடித்துவிட்டு, உடல
உறுப்புகளையே கொள்ளையிட்டு
விடும் கொடுரம். இப்படிப் பல கொடுமைகளுக்கு உள்ளாவதைத் தடுப்பதற்கு உறுதியான
நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை. ஆனால் இந்த ஏழைப் பெண்களை ஏமாற்றி. அவர்களை இரத்தப் பலிகொடுத்து, குறுகிய காலத்தில் தங்கச் சுரங்கத்தைக் கண்டெடுத்ததைப் போல திடீர்ப் பணக்காரர்களாகிவிடும்
ஏஜன்சிகள் அலங்கார வார்த்தைகளால் பத்திரிகைகளில பெரிய விளம்பரங்களை வெளியிட்டு விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்வது ஏழைப் பெண்கள் மததசியசில தொடர்ந்து கொணி டே இருக்கது. இதற்கு ஏழ்மைதான் காரணம் .'
'அரசு கூட எதிர்த்துக் குரல் எழுப்பினால வருமானம் கெட்டுவிடுமோ என அஞ்சி. கைகட்டி வாய் பொத்தி கண்துடைப்புக்காக அடக்கி வாசிக்கிறது. இப்பெண்களின் அவலங்களைத் துணிச்சலாக வெளிச்சம் போட்டுக் காட்ட முன் வந்துள்ள சில பத்திரிகைகளைப் பாராட்ட வேண்டும். வெளிநாட்டில் பணிப்பெண் தொழில் பார்க்கச் சென்று அதிர் ஷ டவசமாக உயிருடன் திரும்பிவந்த சில பெண்கள் இரத்த சாட் டசிகளாக இங்கு சமூகமளித் துள்ளனர். எனது உரையிலும் பார்க்க அவர்களே அச்சோக அனுபவங் களைச் சொல்வதை நீங்கள் கேட்பது 8 - 607 60). LD 60) உணரக் கூடியுமாயிருக்கும்’ என முன்னுரை வழங்கிவிட்டு மாலதி உட்கார்ந்தாள்.
மும்தாஜி என்ற புெணிணை மேடைக்கு அழைத்தாள். தலையை நெற்றிக்குமேல் துணியால் மூடியபடி சோகமே உருவாக அந்த மெல்லிய உருவம் மேடையிேறயது. உடம்பில் இலேசான பதற்றம். வெட்கத்தினால் நிலத்தைப் பார்த்தபடி திக்கித் திணறிப் பேசினாள். நெற்றியில் ஏற்பட்ட
காயத்தின் தழும்பு பளிச் சென பார்வையாளர்களின் கணிகளை உறுத்தியது.
(29)

Page 17
"எண்ட வாப்பாவும் உம்மாவும் ஏழைகள், மூத்த மக நான் என்பதால் பதினாறு வயதிலேயே நிக் காஹற் செய்து குடுத் தாங்க. {5 Lố tD மாப்பிளைக்கு நிரந்தர தொழிலில்ல. அப்படி ஏதாச்சும் தொழில் பாக்கிற அக்கறையுமில்ல. நூறு ரூபா கடன் வாங்கி மீன் வியாபாரத்திற்கென அனுப்பினா. சில நாக்களில கடன்காசு போக மீதச் செல்லில அரிசி, உப்பு. புளி சாமானு வாங்கிச் சமாளிப்பம். ஆனா பல நாள் ள ஒணி டும் கொண்டு வர மாட்டார். எல்லாச் சல்லியையும் கூட்டாளிமாரோடை தண்ணிபோட்டுச் செலவாகிகிட்டு வெறியோட ܢ ܚ ܢܝ -- -- -- - ܚ - - ܝ - ܢ ܝ மல்லிகை ஆண்டுச் சந்தா ...!
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
37வது ஆண்டு மலர் தேவையானோர்
தொடர்பு கொள்க.
ஆண்டுச் சந்தா 250/
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி f 201 -1/1, பூரீ கதிரேசன் வீதி, \ கொழும்பு-13.
N தொலைபேசி: 320721
F-Gunuses: panthal(Q)sitnet.ik.
|
(காசுக் கட்டளை அனுப்புவோர்
f
ܢܠ
། ། །
y
\ எனக் குறிப்பிடவும்)
~
---- سمجسمہ سنس ۔
\ மாளிகை.
Dominic Jeeva, Kotahena. P.o
வந்து என்னை அடிச்சு அட்டகாசம் பண்ணுவாரு என்ரை ஏழு வயசுப் பையன் வாப்பா உம்மா வூட்டுக்குப் பயந்து ஓடிப் போய் ஒட்டிக் கொள்ளுவான். பையன் படிச் சு முன்னுக்கு வரோணும எண்டு ஆசை எனக் கு. வாப் பா. உம் மா வின் வறுமையும் பட்டினியும் தாங்கேலா, பாக்கப் பரிதாபமா இருந்திச் சு. பழகினவங்க கொஞ்சம் சல்லி பிரிச்சுக் கொடுத்து ஏஜன்சி மூலம் சவூதிக்கு வேலை பாக்கப் போக உதவினாங்க. அங்கை போனாப் பணம் கிடைச்சு எல்லாப் பிரச்சினையும் தீக்கலாம். சின்ன வீடொன் டைப் போடலாம். பையனையும் படிக்க வைக் கலாம் எண்டு நம்பித் தான் கவலையோடை புறப்பட்டுப் போனன்.
அங்கே துரை வீடு பெரிய துரையும் அவங்க அம்மாவும். நல்லவங்களாய்த் தான் \ தெரிஞ் சாங்க . ஆனா 4 \ மணிக்கெல்லாம் எழுந்து இரவு பதினொணி னு பனிரெண்டு | வரை 6) u_j TLD வேலை பணி ணனும் நாளாக ஆக
நம்மஞக்குப் பழவிப் போச்சுது / அந்தப் பெனி னம் பெரிய | பங்களாவைச் சுத்தப் படுத்தனும். உடுப்புத் தோய்க்கனும், சமைச்சு வைக்கனும் இப்படி. இடுப்பே \ வலி எடுக்கும். மூண்டு நாலு \ மாசங்களாக ஒழுங்காய் ச் \ சம்பளம் தந்தாங்க. வாப்பாக்கு
| நான் சல்லி அனுப்பிக் கடனை அடைக்க வைச்சேன். மகனை
- ஸ்கூலுக்கு விடச் சொன்னேன்
அப்புறம் அவங்க சல்லி தரேல்ல.

பாஸ் புக் கில போடு றோம் அப்படின்னுட்டாங்க.
துரைக்கும் அந்த அம்மாவுக்கும் 18, 19 வயசில ஒரே ஒரு மகனு, கொஞ்ச்லாக அவங்க பார்வையும்
போக்கும் சரியிலல. மாலை வேளையில அம்மாவும் துரையும் காரில் வெளியே போனா நடுராத் திரிக்கு அப் புறம் தான் வீடு வருவாங் க. படிக் கறதா ச் சொல லரிட்டு அந்தப் பையனர்
வீட்டிலேயே இருப்பான். தேநீர் கொண்டா. அப்பிடி, இப்பிடின்னு சாட்டுச் சொல்லி அடிக்கடி தன்ரை றுாமுக்கு என்னைக் கூடப்பிடுவான். நம்மைக் கிள்ளுவான். கன்னத்திலை தட்டுவான். மார்பில் தடவுவான். ஆனா
இதொணி டுக் குமே நான் இடம்
வைப்பதில்லை
ஆனா ஒரு ந்ாள் என ரை கை யைப் பரிடிச்சு இழுத்து,
படுக்கையில் விழுத்தி. என்னாலை அழத்தான் முடிஞ்சுது. ஆத்திரம் தீர அறைய முடியவில்லை.
நான் ஒரு நாள் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்த எசமானி அம்மா ஏனெண்டு கேட்டா. நான் நடந்த விசயத்தைக் கூற முடியாமல் விம்மிக் கொண்டிருந்த
வேளை அவன் முந்திக் கொண்டு
விட்டான். 'படிச்சுக் கொண்டிருந்த தன்ரை றுாமுக்கு வந்து தன்னைக் கட்டிப் பிடிச்சுக் கையை இழுத்தக் கட்டிலுக்கு வரும் படி நான் தான் தன்னைக் கூப்பிட்டதா’ தாயிடம் சொன்னான்.
எசமானி அம்மாண்ரை கோபம்
உக்கிரமாகப் போச்சு
"கொழுப்புப் பிடிச்ச நாயே என்ரை பிள்ளையைக் கெடுக்கவா வந்தாய்?’ என வாயில் வந்தபடி திட்டித் துடைப்பக் கட்டையால அடிச்சு வெளியே தள்ளிவிட்ட
சுவரில் மோதி நெற்றியில வழிஞ்ச ரத்தத்தை நான் துடைக்க முந்தியே
என ரை உடுப்புகள், 5 πLD πουί
எல லாத்தையும் துரக் கியெறிஞ்சு
என்னை இழுத்துக் கொண்டு போய் தெருவில் விட்டு கேற்றைப் பூட்டிப் போட்டா. 8 மாசம் சம்பளம் சல்லி
தரோணும்.
ஏழை சொன்னா அம்பலம் ஏறாதெனுவாங்க. அங்கை எம்மட அதிகாரிகள் விசாரணை ஒண்ணும் பண்ணாம, என்னை வெறுங்கையோட ஊருக்கு அனுப்பிவிட்டிட்டாங்க.
நான் வெளியூர் போய் இரண்டு
மாசத்தில நம்ம மாப்பிளை வேறை
கலியாணம் பண்ணிட்டாரு. பையன் ஒரு மாசம் ஸ்கூல் போனதோட சரி வாப்பாவும் உம்மாவும் இப்போ அதே வறுமையில், அவங்களுக்கு சுமையா இப்போ நானும்.
அவள் விம்மியபடி சபையை நிமிர்ந்து பார்த்த போது அவள் கண்களில் கவ்வியிருந்த சோகமும், திக்குத் திசை தெரியாத ஏக்கமும் துல்லியமாகத் தெரிந்தன.
சொந்த நாட்டில் கெளரமாகத் தொழில் புரிய வாய்ப்புபில்லாமல்,
அதற்காகக் கையேந்தி வெளிநாடு
(3D

Page 18
செல்லும் பெண்களின் வாழ்வின் ஒரு காட்சி அரங்கேறி முடிந்தது.
சபை மும்தாஜின் சோகத்தினுள் மெளனித்துக் கிடந்தது. பாவம் இந்தப் பெண். புருஷன் ஒழுங்காயிருந்தால்
இவளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதே ஒருவர் இரக் கத்தால முணுமுணுத்தது
இலேசாகச் சபையில் கேட்டது.
“ச்சே! பாவம் ஓரிடம் பழி ஓரிடம். பெணி களைப் பாலியல வலலுறவுக் குள் ளாக் கி விட் டு, பிடிபட்டதும் ஆண் அதனைப் பெண் மீது சுமத் தரித் தப் பரித்துக் கொள்ளுகிறானே. அதற்குச் சட்டமும் நீதியும் கூடத் துணை நிற்கின்றன. குற்றவாளி தப்பிவிடப் பாதிக்கப் பட்டவள் பழியைச் சுமக்கிறாள். கண்கெட்ட சமுதாயம் இது?’ ஒரு நடுத்தர வயதுப் பெண் ஆத்திரம் தாங்க முடியாமல் பற்களை நறநறவென்க் கடித்துக் கொண்டாள்.
அடுத்து ஜானகி என்ற பெண்
விம்மி வெடித்தபடி ஊன்று கோலின் உதவின் உதவியுடன் மேடையில்
ஏறினாள்.
பரிசாசு அறைந்தது போல ஏக்கமான கணிகள். முறுவலிக்க முடியாத உதடுகள். கன்னத்திலும் கூட பல இடங்களில் விசர் நாய் கடித்தது போன்ற தழும்புகள்.
அவள் பேசத் தொடங்கினாள்.
"நான் யாழ்ப்பாணம் கரையூரைச்
சேர்ந்தவள். பெயர் ஜானகி எனக்கு வயது 20 கூடப் பிறந்தவர்கள் மூன்று
(32)
அக்காமார். அப்பா கூலித் தொழிலாளி
ராணுவமுகாமுக்கு அருகில் தான் நாம் வாழும் குடிசை
மூத்த அக்காவை இரவோடிரவாக ஒரு நாள் விசாரணைக் கென நாலைந்து இராணுவத்தினர் வந்து கூட்டிச் சென்றார்கள். அடுத்த நாள், துடையெல்லாம் இரத்தம் வழிய, கடற்கரையில் அக்காவின் சடலம் அலங்கோலமான நிலையில் கிடந்தது.
ஆத்திரம் கொண்ட மற்ற இரு
அக் காமாரும் இயக்கத்துக் குப் போவதாகக் கடிதம் எழுதி
வைத்துவிட்டுக் காணாமல் போயினர்.
அப்பு கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஷெல்லடி பட்டுச் சிதறிச் செத்துப் போனார். எனது படிப்பும் தொடர முடியவில்லை. அம்மாவுக்கு எந்நேரமும் என்னைப் பற்றிப் பயமாக இருந்தது. அப்புவின் ஞாபகமாகப் பாதுகாத்து வைத்திருந்த தாலியை விற்றாவது எங்கேனும் வெளிநாட்டுக்குப் போய் உயிர் தப்பிப் பிழைக்குமாறு கெஞ்சினாள்.
ஒமானில் பணிப் பெண்களுக்கு வேலை வாய்ப்பிருப்பதாயும் உடனே பயணம் மேற்கொள்ளலாம் எனவும் முஸ்லிம் பெண்களுக்கு முன்னுரிமை என்றும், அப்படியில் லாவிடினும் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பத்திரிகையில் பெட்டிகட்டிப் பெரிய, விளம்பரத் தை ஒரு ஏஜன் சி பத்திரிகையில் போட்டிருந்தது.
தொடர்பு கொண்டபோது, புனித இஸ்லாமைத் தழுவி பாத்திமா' எனப் பெயரை மாற்றிக் கொள்ளுமாறு

கூறினர். அப்படியே பத்திரிகையில் வெளியிட்ட பின் அதே பெயரில் என்னை அனுப்பிவைத்தனர்.
உழைத்து அம்மாவுக்குப் பணம் அனுப்பவேணும் என்ற அவா என் நெஞ்சில் மிதந்தபடியே இருந்தது.
அங்கு நடுத்தரக் குடும்பம் ஒன்றில் வேலை.
அக் குடும் பத்தில நடுத் தர வயதுள்ள தம்பதியினர் மட்டுமே. பிச்சல் பிடுங்கலின்றி ஒரு வருடம் வரை நல் லாகப் பார்த்தார்கள். அவர்களின் சாப்பாட்டில் எனக்கும் ஒரு பங்கு கிடைக்கும். ஆனால் சம்பளம் சேமிப்புப் புக் கல போட்டிருப்பதாகக் கூறினர்.
ஒரு நாள் திடீரென எசமானி வாந்தி எடுத் தாள். மருத்துவப் பரிசோதனையில் புற்றுநோய் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர்.
அதற்குப் பிறகு தான் எனக்குச் சனி பிடித்தது.
எஜமானும் நானும் மட்டுமே அந்த வீட்டில்,
கையில் தொட்டு. இடுப்பைத் தடவி. அவரது பிள்ளைக் குச் 9 DD (1607 வயதுள் ள என  ைன ஒவ்வொரு இரவும் மாறி மாறி. நான் கதறக் கதற. தாங்க முடியாமல் ஒருநாள் இரவு தற்கொலை செய்வதற்காக மாடி யன்னலூடாகக் குதித் து விட டேனர். உயிர் போகவில்லை. மருத்துவச் சாலையில் வலது முழங்கால கழற்றிவிட்டு, முடமாக இலங்கைக்கு அனுப்பி
விட்டனர். நானே தற்செயலாக சறுக்கி விழுந்ததாகக் கதையும் பின்னப் பட்டது. பெரிய கனவுகளோடு வேலைக்குச் சென்ற நான் ஊனமாக வந்து சேர்ந்துள்ளேன். இழப்பீடு இல்லாவிட்டாலும் எனது சம்பளப்
பணத்தையாவது அரசு பெற்றுத்
தந்திருக்கலாம் . மகளிர் அமைப்பொன்று நடாத்தும் அனாதை இலலத்தில் இருக்கிறேன்.”
நிற்க முடியாமல் நடுங் கி. கண்ணிர் மல்கி அவளைப் பரிவுடன் மாலதி கையைப் பிடித்து உட்கார வைத்தாள்.
சபையிலிருந்த இளகிய மனதுள்ள சிலர் கைக் குட்டையை எடுத்துத் தமது கண்களைத் துடைத்துக் கொண்டனர்.
“பெணி கள் அழகாக . இளமையாக, செழிப்பாக இருந்தால், கழடு தட்டிய ஆம் டரிளை கூட மேயுறது சமுதாயத்தில சம் பிரதாயமாகி விட்டது. இதை உடைக்க வேண்டும்.” - ஆவேசமாக ஒருத்தி எழுந்து கோபமாகக் கூறினாள்.
அரசாங்க அங்கீகாரத்துடன் தானே இந்தப் பெண்கள், அயல் நாடுகளுக்கு வேலைக் குப் போகறார்கள் ? இவர்களுக்குப் பாதுகாப்பும் சம்பளத் தைப்
பெறுவதற்கு உத்தர வாதமும் செய்ய
வேணி டியது அரசாங் கக் கடமையல்லவா? - மனக் கொதிப்பை அடக்கிக் கொண்டு மற்றொருவர் நியாயமான கருத்தை முன்வைத்தார். சபையிலிருந்த ஒரு இளைஞர் கூறிய
(33)

Page 19
கருத்து மனதைக் குத் துவது
போலிருந்தது.
“ ‘ப ணபி பட் பெ ண க ள |ா க வெளிநாட்டுக் குச் செல லும் பெண்களில அனேகமானவர்கள் பாலியல் வல லுறவுக்கு
ஆளாகிறார்கள் என்பது பகிரங்க
ரகசியம். செலாவணி
அந்நியச்
வருகிறதே என இதை எவரும்
மூடிமறைத் து மழுப் பத் தேவையில்லை. இந்த நிலையில் விபச்சாரத் தடைச்சட்டம் என்பதை நாட்டில் இறுக்கிக் கடைப் பிடிக்க வேண்டும் என்பது இரட்டை முகத்தைக் காட்டும் வெறுங் கேலரிக் கூத்து, பம்மாத்து.”
சபை சில நிமிடங்கள் துணுக் குற்ற போதும் அக் கருத்தில் ஆவேசமும், அர்த்தமும் இருக்கிற தெனச் சபையில் சிலர் தலையசைத்து ஆமோதிப்பதைக் கண்ட மாலதியின்
மனம் கூசியது.
சபையினி கவனத் தைக் குவிமையப்படுத்துவதற்காக, அடுத்து சோமலதா என அறிவித்தாள்.
“ஐயோ! என் ரை மகளைக் கொன்று போட்டான்களே! என்ரை செல்லத்தை இனி எப்படிக் காண்பேன். தாமரைப் பூப் போன்ற உன் ரை முகத்திலை நான் முழித்தாலே நாள் முழுவதும் ஒரு கவலையும் வராது. நாசமாய்ப் போவான்கள் கொன்று போட்டான்களே!”
சபை ஒரு நிமிடம் , தலையிலடித்துக் குழறிய அந்த
G4)
வயோதிப மாதின் கதறலைக் கேட்டுத்
திகைத்துப் போய்விட்டது.
“என்ரை மேள் சோமலதா இப்ப உயிரோடில்லை. நான் அவளின் தாய் குணவதி எங்கடை ஊர் அம்பாந் தோட்டை. ஒ/எல் படிச்சு முடிச்ச பிள்ளை. ஒரு வருமானமுமில்லை. சிறிய தொழிலும் கிடைக்கேல்லை. ஊரில தண்ணியும் இல்ல. பயிர் பச்சை எல லாம் பாழாப் போய் ச் சு. வெளிநாட்டில உழைச்சு எங்கடை கஷடத்தைப் போக்கிறேன் எனப் போனவள், பரிணமாத தான் அனுப்பினார்கள். இங்கை உடம்பை வெட்டிச் சோதிச்சுப் பார்த்த போது,
வயிற் றரில் ஆறு மாசக் கரு இருந்ததாம் . கட்னி, கனர் எல்லாத்தையும் அங்கை வெட்டி எடுத் திட்டாங்களாம். கழுத்தை நெரிச் சுக் கொலை செய்யப் பட்டிருப்பதாக டொக்டர் ரிப்போர்ட் கொடுத்தார்.
"ஐயோ! என் ரை செல்லமே உனக்கு இந்தக் கதியா?” - பெற்ற வயிறு எரிந்து கதறியது.
எல்லோரையும் தேம்ப வைத்தது.
ஐயோ! இப்படியும் கொடுமையா? எனப் பலர் உறைந்து போய் விட்டனர். சிலர் விம்மலும் பொருமலுமாக.
அந்த இளைஞன் மீணடும் ஆவேசமாக எழுந்தான்.
"கபடத்தனமாகப் பறித்த உயிரை மீட்டுத் தர முடியாது தான். பரிதவித்து நிற் கிற இத் தாய் க்குப் பதில் சொல்லுபவர் யார்? நிவாரணம் மூலம்

நிம் மதியை ஏற் படுத்த முடியாவிட்டாலும் , குற்றம் புரிந்தவர்களுக்கு என்ன தண்டனை? கால் ஊனமாகிப் போன பெண். பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிப் போய் எதிர்காலத்தையே இழந்து நிற்கும் பெண்கள். இவர்களின் கதி என்ன? இங்குள்ள சட்டம் இவ்வாறான அநியாயங்களையும், ஆத்திரங்களையும் தட்டிக் கேட்பதற்கு அங்கே நீளாதாம். அதை நீளச் செய்ய வேண்டும்!” - ஆணித்தரமாக அடித்துச் சொல்லி மேசையில் முஷ்டியால் குத்திவிட்டு அவன் உட்கார்ந்தான்.
துன்பகரமான மன நிலையிலும் சபை பெருத்த கரவொலி செய்து அவன் கூற்றை ஆமோதித்தது.
மாலதி தொகுப் புரை கூறி கருத்தரங்கை நிறைவு செய்வதற்காக எழுந்தாள்.
வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்களாகச் செல்லும் நம்நாட்டுப் பெண கள் ஒரு இனத்தையோ, மதத்தையோ பிரதேசங்களையோ சார்ந்தவர்களல ல, Lu 5 l (6) வாழ்க கைக் கு ஆசைப் பட்டுச் செல் பவர்களுமல ல அவர்களின் செல் கை க்கு வறுமையும் தொழிலின்மையுமே மூல காரணம். வெளிநாடுகளில் அவர்கள் அனுபவித்த அனுபவித்துக் கொணி டிருக் கன ற பல வேறு 660) S L 60 கொடுமைகள் களையப்பட வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்குப் போதிய நட்டஈடு பெறப் பட வேணடும் . வெளி
நாடுகளுக்கு இனிமேல் வேலைக்குச்
செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு. உயிர் உடற் சேதங்கள். சம்பளங்கள் முதலியவற்றின் சட்டபூர்வமான உத்தரவாதம் ஏற்படுத்தப் பட வேண்டும்.
அதுவரைப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்வது பற்றிப் பெண்களும் சமுதாயமும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அரசாங்கம் ஆக்கவேண்டிய சட்டங்களை இயற்றிப் பாதுகாக்க வேண்டும். அல்லது அழிவும். இழிவும் தொடர்ந்த படி இருப்பதைத் தவிர்க்க முடியாது. இவ் விழிப் புணர்வினை இந்நிகழ்ச்சி ஓரளவாவது ஏற்படுத்தியிருக்குமென நம்புகிறோம்.” மாலதி தெளிவாகக் கூறிமுடித்தாள்.
-
இங்கே கருத்தரங்கம் நிகழ்ந்து கொணி டிருந்த வேளையில நூற்றுக்கணக்கான அப்பாவி ஏழை இளம் பெண்கள். தமது உடுப்புப் பெட்டிகளை முச்சக்கர வண்டிகளில் வைத்துத் தள்ளிக் கொண்டு எத்தனையோ எதிர்ப்
பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும்
மனதில் சுமந்த படி கட்டுநாயக்க
விமான நிலையத்தில் மத்திய கிழக்கு
நாடுகளுக்குச் செல்லும் விமானத்தை
நோக்க வரிசையில் போய் கி
கொண்டிருந்தனர்.
(35)

Page 20
ஒரு கிழவரும்
இரு கிளிகளும் "வரைவி
குநேரமாகத் தங்கராசர் அந்தக் கிளிகளையே பார்த்துக் கொண்டிருந்தார். நேற்றுக் காலையில், அவருடைய மகனும், மனைவியும், மக்களும், யூலண்டுக்குப் போனதுமே, அவர் அக்கிளிகளை அப்படியே கூண்டோடு
மேல் மாடிக்கு, தன்னுடைய அறைக்குக் கொண்டுவந்திருந்தார்.
யாரோ நண்பர்கள் வீட்டுத் திருமணமாம். தங்கராசருக்கு அவர்களைத் தெரியாது தான். இருந்தாலும் மகளோ, மருமகளோ நீங்களும் வாருங்கோவன்' என ஒரு கதைக்காகவேனும் கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், 'நானேன் புள்ளையஸ் உந்தத் தூரத்துக்கு. ஆக்களையும் எனக்குத் தெரியாது. அதோடை அஞ்சாறு மணித்தியாலம் காருக்குள்ள காலை மடக்கிக் கொண்டிருக்கவும் என்னாலை ஏலாது!’ எனத் தான் நிச்சயமாகச் சொல்லியிருப்பேன். என, தங்கராசர் இப்போ நினைத்துக் கொண்டார்.
யூலண்டுக்குத் தன்னைக் கூட்டிக் கொண்டு போகாததைத் தங்கராசர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வில்லைத் தான். ஆனால், அவர்கள் முகமனுக்காயினும் தன்னை அழைக்காதது இதயத்தின் ஒரு மூலையில் உறுத்தவே செய்தது.
冰冰 米
மகனையும், அவனுடைய குடும்பத்தினையும் பார்ப்பதற்கென, இரண்டு வருடங்களுக்கு
முன்னர் டென்மார்க்குக்கு வந்த தங்கராசர் ஏதேதோ காரணங்களுக்காக மகனுடனேயே
C36)

வசிக்க நேரிட்டது. இந்த இரணடு ஆணிடுகளுக்குள் இப்படி எத்தனையோ சின்னச் சின்னச் சம்பவங்கள். இலேசாகச் சுடும் சொற்கள். ஆனால் அவர் அவற்றைப் பொருட்படுத்திக் அவருடைய சுபாவம் அப்படி, ஊரிலும் அவர் பிறருடன் புழங்கியது குறைவு. தன் வாழ்வின் அறுபதி தெட்டு வருடங்களையும் விவசாயியாகவே வாழ்ந்துவிட்டவர். தன்
கொள்வதிலலை.
வயலிலி தோட்டதி திணி வாழைகளுந்தான் அவருக்கு உற்றமும் கறி றமும் . பயிர் பச்சைகளுடனேயே
மானசீகமாக உரையாடி மகிழிபவர்.
பயிரும் ,
அவருடைய மனைவி பாக்கியங் கூட அப்படித்தான். ஆனால் கூடவே உலக விவகாரங்களும் தெரிந்தவள். அவளுக்கு மூளைக் காய்ச்சலி வந்து திடீரென இறந்தபோது அவர் திகைத்துத்தான் போனார். திருவிழாவில் தொலைந்துபோன குழந்தை போல. அப்போதுதான் அவருடைய மகன் டென்மார்க்குக்கு வரும்படி பயணச்சீட்டு அனுப்பியிருந்தான்.
இங்கு வந்தது பிழையோ என்று தங்கராசர் இந்த இரண்டு ஆண்டுகளிலும்
அடிக்கடி நினைத்த போதும், நான் திரும்பிப்
போகப் போறன் என்று சொல்ல அவரால்
இயலவில்லை. பாக்கியம் இல்லாத வீடும், ஊரும் அவரை அந்த அளவிற்கு ஈர்க்கும் சக்தியாக இருக்கவில்லை. ஆனாலும் அந்தப் பிணைப்பிலிருந்து அறுந்துபோய் இங்கு வந்து, ஏதோ அந்தரத்தில் தவிப்பது போன்ற நிலை.
தங்கராசருக்கு பேரப்பிள்ளைகள் அருகில் வாழ்வது ஆறுதலாக இருந்தது.
அவர்களைத் தன் மடியில் தூக்கி வைத்தி
ருப்பார். கொஞ்சுவார். ஏதோவெல்லாம் அவர்களைக் கேட்க வேண்டும் என்று ஆனால் அது
பேரனாவது அப்பப்பா
ஆசைப் படுவார். முடிவதில்லை. இந்தாங்கோ என்று ஏழெட்டுத் தமிழச் சொற்களாவது பேசுவான . ஆனாலி இளையவளான பேத்தியோ அதுவுமில்லை. முழுக்க முழுக்க டனிஷ் தான்.
இதோ அவர் முன்னே அந்த அழகிய கூண்டிலிருக்கும் சின்னக் கிளிகள் போன்ற, அழகிய இரணிடு பேரக்குழந்தைகள். தங்கராசரைப் பொறுத்தவரையில் இந்தக் கிளிகளின் மொழியும், அவரது பேரக் குழந்தைகளின் பாஷையும் ஒன்றே. மிக இனிமைதான். ஆனால் புரியாது!
முதலாவது குழந்தை பிறந்ததுமே மகனும் மருமகளும் செய்துகொணிட தீர்மானமே இன்று அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் டன்ஸ்க் மொழியை மட்டுமே பேசுவதற்குக் காரணம் என்பதை வந்த சில நாட்களிலேயே தங்கராசர் உணர்ந்து கொண்டார். தனது மகனும் மருமகளும், தமிழர்கள் மிகக் குறைவாக உள்ளதொரு வசிப் பதறி குதி தேர்ந்தெடுத்திருந்தனர். தமது பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே முழுமையான டன்ஸ் சூழலிலேயே வளர்ந்தால் தான்
பட்டண தி தையே
அவர்கள் எதிர்காலத்தில் இங்கு உள்ள வாய்ப்புக்களை மற்றவருடன் சமமாகவும், முழுமையாகவும் பயன்படுத்த முடியும் என்று அவர்கள் நிச்சயமாக நம்புவது சரியா? தவறா? என்று சொல்ல, சாதாரண
விவசாயியான தங்கராசருக்குத் தெரியவில்லை.
(37)
:

Page 21
சுற்றுப் புறத்தில் தமிழரே இல்லாத காரணத்தினாலும், ஆங்கிலமொழிப் பரிச்சயம் சொற்பமும் இல்லாத படியினாலும், தங்கராசர் இடைககம் வெளியே உலவப் போனாலும், அவரால் எவருடனும் பேசவோ, பழகவோ முடியவில்லை. காலை ஏழுமணிக்கே வெறுமையாகிப் போகும் வீடு, மாலை ஆறுமணிக்குத்தான் மறுபடி உயிர்க்கும். அதனாலி தனிமை தங்கராசருக்குப் பழகிப்போயிற்று. நாளடைவில் அதுவே அவருக்குப் பிடித்தமாயும் போயிற்று.
தனிமை பிய்த்துத் தின்னும் அந்தப் பகற் பொழுதுகளில், அவர் கீழே இறங்கி, வரவேற்புக் கூடத்தின் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிளிக்கூண்டையே, அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பார். கிளிநொச்சியில் இந்தமாதிரிக்
உட் கார்ந்து
கிளிகள் இல்லைத் தான். அவருக்குத் தெரிந்தவரை அங்கு எவர் வீட்டிலும் இல்லை. ஆங்கிலத்தில் லவ் பேட்ஸ் என்பார்களாம். பேரப்பிள்ளைகள் உண்டுலேற் என்பார்கள். பேரண் அவற்றுக்கு வைத்துள்ள பெயர்கள் தங்கராசருக்குத் தெரியும். காயாம்பூப்போல இள நீலக்கிளி ஆண். அதன் பெயர் லாஸ் . நிறத்தில் பச்சை கலந்த மஞ்கள் கிளி, பெண். அதற்குப் பெயர் இஸபெல்லா. இரண்டுமே ஆனால் அவையிரண்டும். பேசிக்கொள்ளும் மொழி
டன் ஸ்க் பெயர்கள் தானாம்.
டன்ஸ்க் அல்ல என்பது தங்கராசருக்கு நிச்சயமாகத் தெரியும்.
எந்த நாய் எங்குதான் போனாலும், எந்த நாய் எந்த நாட்டில் குட்டிபோட்டாலும், அவற்றின் தாய்மொழி எப்போதுமே நாய்
G8)
வைதீத கணி
கதலிவாழைக் குருத்து
மொழிதானே! மட்டும்
எதற்காக இந்த மனிதர்கள் இப்படி என்று தங்கராசரால் வியக்காமல் இருக்க முடியவில்லை. டென்மார்க்கில் உள்ள மைனாக்களும், மாதிரியே பாடுகின்றனவே! ஏன் காகங்கள் கூட இங்கும்
கிளிநொச்சி மைனாக்கள்
காகா எனறு தானே கதீதுகினறன ! என்னுடைய பேரப்பிள்ளைகள் மட்டும் ஏன்
இப்படித் தாய்மொழி தெரியாமல்?.
அதுமட்டுமல்ல. பேரனுக்குப் பெயர் டனுஷன், பேத்திக்குப் பெயர் டனிஷா! தங்கராசர் தனக்கிசைவாக தனு, தனி என்று
தனக்கிசைவாகச் சொல்லிக் கொள்வார்.
ܐ ܐ ܐ
அந்தக் காதற் கிளிகளைத் தங்கராசர் வாங் காமலே பார்த்தவாறிருந்தார். அவற்றின் மொழி தெரியாவிடினும், அவருக்கு அவற்றைப் பார்ப் பதில தன னை மறக்க கி கூடியதாகவிருந்தது. அவை பெரும்பாலும் ஒன்றையொன்று அணைந்தபடி, கூண்டின் நடுவே இருந்த உட்கார்ந்திருக்கும். ஒன்றுக்கொன்று தலை
கிடைக கம்பியில்
சீவிக்கொள்ளும். ஒன்றின் சிறகை மற்றது. உயர்த்தித் தலையை நுழைத்து இதமாகக் கோதிவிடும். இப்படியான வேளைகளில் அவை ஒன்றையொன்று உணர்ண முயற்சிப்பது போலவும் தங்கராசருக்குத் தோன்றும். லாஸ், அதுதான் அந்த ஆணர்கிளி, கூணர்டினுள் தொங்கவிடப்பட்டிருந்த சின்னஞ்சிறு மணியின் நாக்கைத் தன் அலகால் மெல்லத் தட்டிவிடும்.

அதிலிருந்து எழும் ஒலி தங்கராசருக்குக் கேடகாவிடினும், இஸபெல்லா தன் அழகிய சாய்தீது விழிகளைப் பாதிமூடி ரசிக்கும்போது, அவிவொலி மிக
சிறுதலையை நளினமாகச்
இனிமையாகத் தாணி இருக்கவேண்டும் எனத்தங்கராசர் நினைத்துக் கொள்வார். இப்படி, அன்னியோன்யமாக, பாசமாக இருக்கும் அவை, இருந்தாற் போல் காச்சுமூச்செனக் கத்திக்கொண்டு, நாலுதரம் சிறகடித்துப் பறக்கமுடியாத அந்தச்சிறு கூண்டுக்குள், பறக்கமுயற்சித்து, ஒன்றிலொன்று அடிபட்டும், கூண்டுக்கம்பிகளில் மோதியும் அவஸ்த்தைப் படும்போது தங்கராசரும் தவித்துப் போவார்.
பாதுகாப்பான கூணர்டு, அழகான கிணர்ணத்தில் பலவகைத் தானியங்கள், தாகத்துக்குத் தண்ணிர், இசைகேட்க மணி, இப்படியெல்லாம் இருக்கப் பின்பு ஏன்தான் இந்தக்கிளிகள் பறந்தடிக்கின்றன? குடும்பச் சண்டையா என்று கலவரப்பட்டவராகத் தங்கராசர் சோபாவை விட்டெழுந்து கூண்டருகில் போவார். அவரை அருகில் கணிடதுமே, அவை அவரிடமிருந்து எவி வளவு துTரத்துக் குதி தம் மாலி விலகமுடியுமோ அவ்வளவுக்குக் கூண்டின் ஒருபக்கத்தில் ஒதுங்கி முடங்கிக் கொள்ளும். லாஸ் சிலசமயம் இவருடைய பக்கமே திரும் பாது தலையைச் சிறகுக்குள் புதைத்துக்கொள்ளும். அப்போதெல்லாம் தனுவையும், தன்தனிமையையும் அவரால் நினைக்காமல் இருக்கமுடிவதில்லை.
தனியையும், தன்னையும்,
லாஸையும், இஸபெல்லாவையும்
தங்கராசர் தன்னுடைய அறைக்குக் கொண்டு
வந்து அங்கிருந்த சிறிய மேசை மீது வைத்தது. தனது படுக்கையில் படுத்தவாறே அவற்றைப் பார்த்திருக்கத்தான்.
இப்போதெல்லாம், பெரும்பாலும், தனது இந்தச் சிறு அறையிலேயே தரித்திருப்பது தான் தங்கராசருக்குப் பழகிப்போன சுகமாக ஆகிவிட்டிருந்தது. கனதியான மரச்சட்டமிட்ட ஒருமெத்தைக் கட்டில். அதன் எதிர்ச் சுவரோரமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஒரு அலுமாளி. வீட்டின் சாய்வான கூரையிலே வெட்டிப் பதித்ததுபோல ஒரு நீள்சதுர,
கண்ணாடிச் சாய்சன்னல். அதன் கீழ் ஒரு '
சிறிய தவிர
மேசையும் கதிரையும். இவற்றைத் அநீதச் சிறு அறையில
குறிப்பிடக்கூடிய பொருட்கள் வேறு இல்லை.
ஆனால் எப்போதுமே ஆகாயம் தெரியும். மிதந்து செல்லும் மேகத்திரள்கள் தெரியும். இரவில் நட்சத்திரங்கள் கணிசிமிட்டும். அவ்வப்போது ஆகாய விமானங்களும் வானில் வெள்ளைக் கோடு போட்டுக் கொண்டு போகும். குறுக்கு வைத்துப் பறக்கும் கரிக குருவிகளைக் காண முடியும் . வெண மையான இறக் கைகளை அகலவிரித்து, பருந்துபோல வட்டமிடும் ஏதோ ஒருவகை நீர்ப்பறவைகளையும் தெரியும். நித்திரை வராமல் தவிக்கும் நீண்ட இரவுகளில், கிளிநொச்சி வயலும் அதன் காவறி குடிலும் தெரியும் . பாக்கியத்தையும் அவர்
மனைவி அந்த சின்ன ஆகாயத் துணி டில், அந் நேரங்களில் தேடுவதுணி டு. `v காணமுடிவதில்லை.
அவளைக் ஆகாயத்துக்கும் அப்பால் போய்விட்டவள் எப்படி இங்கு வருவாள். அதுவும், நான் டென்மார்க்குக்கு
මේ
s

Page 22
வந்த விஷயம் அவளுக்குத் தெரியுமோ
எண்னவோ எனவும் அவர் எணணிக்
கொணர்டே படுத்திருப்பார்.
இப்போதும், படுக்கையில் வசதியாகப் படுத்துக் கொண்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் மடித்து வைத்தவாறே, தங்கராசர் சாய்சன்னலூடாகத் பார்த்துக
அக் கிளிகளையும், தெரிந்த வானத்தையும் கொணர்டிருந்தார்.
அப்போதுதான், அந்தச் சாய்சன்னலின் வெளி விளிம்பில் இரண்டு கரிக்குருவிகள் பறந்து வந்து அமர்ந்தன. டென்மார்க் கரிக்குருவிகளைத் தங்கராசர் ஒரு நாளுமே இவ்வளவு அணிமையில் கணிடதில்லை. அவற்றின் கறுப்பு இறகுகள் படுகறுப்பு என்று தான் அவர் நினைத்திருந்தார். ஆனால் இப்போது, காலை வெய்யிலில் அவற்றின் முதுகின் மீதும், விாலின்மீதும், மயிலிறகில் காணப்படும் கருநீலமும், கரும்பச்சையும் பளிச்சிடுவதைக் கண்டு அவர் குழந்தை போலச் சிரித்துக் கொண்டார். உள்ளம் முழுவதுமே சந்தோஷம் வெள்ளமாய் நிறைப்பதை அவர் உணர்ந்தார். பாக்கியம் இறந்தபிறகு இன்று தான் அவர் மறுபடியும்
அப்படியொரு மனநிலையை அனுபவித்தார்.
அந்த இன்பத்தில் அவர் தன்னை மறந்திருந்த போது, அக் கரிக்குருவிகள் இரணிடும் ஜிவ்வென்று மேலெழுந்து, வானில் வட்டமிட்டு, மீண்டும் தாழப் பறந்து வந்து, சாய் சன்னல் விளிம்பில் உட்கார்ந்து சிறகுகளைக் கோதி விட்டுக் கொண்டன.
எதி தனை சநீ தோஷமாக அப்
பறவைகள் இரண்டும் பறந்து சுகிக்கின்றன!
G40)
சிறகுகள் இருப்பதே பறப்பதற்கல்லவா! விரும்பும் திசையெல்லாம் விண்ணென்று பறந்து மகிழமுடியாது விட்டால் பின் என்ன மணர்ணாங்கட்டிக்கு வாழ்க்கை! என னரிய
கூண்டுக்கிளிகளில் பதிந்தது.
என்று
தங்க ராசினி பார்வை,
மறுகணம் அவருக்கு ஒரு எண்ணம் பிறந்தது. அந்த எண்ணத்தை உடனே செயலாக்க வேண்டுமென ஒரு உத்வேகமும் கூடவே எழவே, வாயில் ஒரு குறும்புச் சிரிப்புடன் படுக்கையிலிருந்து எழுந்தார் தங்கராசர். துடிப்பு மிக்கவராய் கதிரையில் ஏறிநின்று முதலில்
ଗଣ, ாழுக்கிகளைக்
சாய் சனினலினி கழற்றி, அதனை முடியுமான அளவிற்கு உயர்த்தித் திறந்து வைத்தார். பின், கீழே இறங்கி, கிளிக்கூண்டின் கதவைத் திறந்து வைத்தார்.
கூண்டில் அவரது கை பட்டதுமே கிளிகள் இரண்டும் கத்திச் சிறகடித்து, ஏதோவோர் மூலையில் ஒளிய முயற்சித்தன. கையைக் கூண்டுக்குள் உள்ளே நுழைத்த தங்கராசர். முதலில் இஸபெல்லாவைப் பிடித்து, கொண்டுபோய்க் கைப்பிடியைத் தளர்த்தினார்.
கையைச் சனி ன ல ருகே
சடசடவெனச் சிறகடித்த இஸபெல்லா சன்னலுக்கு வெளியே பறக்கவில்லை! அது பறந்து அந்த அறையினுள் இருந்த அலுமாரியின் மேல் அமர்ந்து கொணர்டு மலங்க மலங்க விழித்தது. இதற்குள் லாஸ் உயிரே போவது போல் கீச்சிட்ட வாறே கூண்டுக்குள் சூறாவளிபோல் சுழன்றடித்துக் கொணடிருந்தது. மீணடும் கையைக் கூண்டினுள் நுழைத்து ஒருவாறாக அதைத் தங்க ராசர் பிடித்த போது, அது

ஆவேசங்கொணர்டு அவருடைய கையை மூர்க்கமாகக் பொருட்படுத்தாது, லாசை வெளியே எடுத்து, கதிரையில் ஏறி நின்று கொண்டு, சன்னலின் வெளியே கையைப் புகுத்திக் கிளியை
விடுவித்தார் தங்கராசர்.
e 9 6u (5 60) . U கைய்ைவிட்டு
விசுக்கெனப் பறந்த லாஸ், கணி மூடி
முழிப்பதற்குள் மறுபடியும் சன்னலினூடாக
அறையினுள் நுழைந்து விட்டது.
இதைக் கண்ட தங்கராசர் அதிசயித்துப்
போனார். வெளியில் விட்ட கிளி ஏன் உள்ளே
வந்தது?. இஸபெல்லா போவதற்கு அதன் துணைக்
ஒகோ!. அதனி சோடி
கென்ன விசரா என எண்ணிக் கொண்டே
கீழே இறங்கினார் தங்கராசர்.
இறங்கி நின்று பார்த்த போது, அலுமாரியின் மேல் அடைக்கலந் தேடிக் கொணட கிளிகளை அவருக குதி தெரியவில்லை. அவை அவலமாகக் கத்திக் கீச்சிடுவது மட்டுமே கேட்டது.
எப்படியாவது அவை இரண்டையும்
அங்கிருந்து வெளியேற்றி விடவேண்டுமென்ற ஒரு
விரட்டி சன்னலினுTடாக
அவசர்த்துடனும், தவிப்புடனும் தங்கராசர் கதிரையை இழுத்து ஏறிநின்று அலுமாரிமேல் பார்வையைச் செலுத்தினார்.
லாஸும், இஸபெல்லாவும் அவருடைய
வழுக்கைத் தலையைக் கணிடதுமே
பறந்தடித்துக் கொண்டு சுவருடன் ஒதுங்கி,
தங்கள் மொழியில் அவரைத் தாறுமாறாகத் திட்டின. தங்கராசர் தன் முயற்சியைக்
கை விடவில்லை. கதிரையை
கொத்தியது. அதைப்பு
நுழைநீது அமைதியாக
அலுமாரிக்கருகில் இழுத்து நிறுத்தி அதில் ஏறிநின்று, தன் கரங்கள் இரண்டையும் மேலே உயர்த்திக் கிளிகளைப் பிடிக்க முயன்றபோது தான் ஆவர் சமநிலை குலைந்து சரிய நேரிட்டது. கதிரையின் விளிம்பிலிருந்து
அவரது இடப் பாதம் சறுக்கியது. திடீரென
ஏற்பட்ட் அச் சறுக்கல் காரணமாக
அவருடைய கைகள் பிடிமானம் தேடிக்
காற்றைத் துழாவின. இந்த முயற்சியில்
அவர், உடல் ஒருபக்கமாகத் திரும்பிய நிலையில், கீழேயிருந்த கட்டிற் சட்டத்தில் அவருடைய பிடரி பலமாக மோதும்
வகையில் விழுந்து விட்டார்.
தடால் எனப் பிடரியில் விழுந்த அகர அடியில் துடித்துப் போன தங்கராசர் கட்டிலின் பக்கத்திலே தரையில் துவண்டு போய்க் கிடந்தார்.
அப் போது, அநீதச் சினி ன சனினலினுTடாகத் தெரிந்த நிர்மலமான
நீலவானத் துர்ண்டில், மனைவி பாக்கியத்தின்
சிரித்த முகம் தெரிவதுபோலவும் , அவள் 'வாருங்கோ வீட்டை போவம் !" என அன்புடன அழைப்பது போன்றும்
தங்கராசருக்குத் தெரிந்தது.
எல்லாச் சந்தடியும் அடங்கிய பின்னர், லாஸும் இஸபெல்லாவும் அலுமாரியிலிருந்து தாமாகக் கீழேவந்து, தமது கூண்டுக்குள் அமர்ந்து கொண்டன.
அக் கூண்டின் கதவும், சாய்சன்னலும்
திறந்தே கிடந்தன.
G4 DI
s

Page 23
ரியாவிடை பெறக் கே.எஸ். பாலசுப்ரமணிய ஐயரிடம் சென்ற 葬 பொழுது "இந்தப் பிரிவில் சண்டை சோலி இல்லாமல் கடமை *፳ግ புரிந்து மாற்றலாகிச் சென்றவர்களில் பாலாவும் ஒருவர்" 6JT60T U) என ஐயர் மனந்திறந்து சகலருக்கும் கேட்கும் படியாகச் சொன்னார். எனது சரீரம் புல்லரித்தது! கண்கள் 61 ன் பனித்தன. இதைவிட - இந்த அமுத வார்த்தைகளை விட U(T(26 s - அவர்களிடமிருந்து மேலதிகமாக எதையும் நான் lf எதிர்பார்க்கவில்லை. இந்த வார்த்தைகள் எனது சுய விபரக் G கோவைக்குப் போகாதிருந்தாலும் இதை அரச பணியில் எனக்குக் கிடைத்த ந 6 6) Commandation ஆகவே இன்றும் நான் கருகிறேன். கடைசிவரை இத்தகைய வார்த்தைகளை எனது சேவையில் கேட்க வேண்டுமெனவே g f
எனது பணியைப் பேணினேன். இதற்கு நான் எப்படித் தகுதியானேன்! நச்சாதார்க்கும் இனியவனாக
இருந்தேன். குழுமங்களில் கூடி மற்றவர்களை 61 60) i யி ல் அநாகரிகமாக விமர்சிப்பதை வெறுத்தேன். gp62 CD கு இவைகள் தான் என்னைக் கெளரவப் படுத்தின.
அவர்களது மனதில் என்னை ஆழமாகப் படர
வைத்தன. அதன் அறுவடைதான் ஐயர். உதிர்த்த வார்த்தைகள், \ ups.UsT6afs கம்
முஸ்லிம் சேவையில் கடமை புரிந்த எனக்குத் தமிழ் தேசிய சேவைக்கு மாற்றம் கிடைத்த பொழுது, எனது நண்பர்கள் சிலரிடம் அதைச் சொன்னேன். தமிழ் ஊழியர்களோடு கடமை புரிவது மகா கஷ்டமென அந்த மூத்த அநுபவ சாலிகள் எனக்கு உபதேசித்தனர். இது ஸ்னக்கு குருவியின் தலையில் பனங்காயை ஏற்றியது போலிருந்தது! யோசனையாக இருந்தது. இப்படியான உத்தியோக இடம் கிடைப்பது என்போன்றோருக்கு அபூர்வ நிகழ்வு தான் கிடைத்ததைப் பிடித்துக் கொள்ளாமல் அதிகாரிகளோடு முரண்படுவது முறையல்ல. அதுவும் சேவையில் தகுதிகாணர் நிலையில்
பெரிய இடங்களை அண்டி, விருப்பத்திற்கேற்ற வகையில் வேலை இடத்தை மாற்றுவதற்கு, எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஆளணியோ, பிரமுகர்களோ, அரசியல் செல்வாக்கோ இருக்கவில்லை. நாம் தானே தமிழ்ச் சமுதாயத்தில் தனித்த தீவாக நிற்கிறோம் கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்திபெற்ற கையோடு வேலை எனக்கு வீடு தேடி வருவமெனத் தான் எனது குடும்பத்தினர் நம்பி இருந்தனர். அந்தளவிற்கு சமகால நடை முறை வாழ்க்கையிலிருந்து நாங்கள் தள்ளி இருந்தோம். மிகக் கடுமையாக யோசித்தேன்! எனக்கு வழுக்கலில் ஊன்று கோலாக, ஏற்கெனவே கற்றிருந்த அப்துற் றஹிமின் சத்தான வரிகளும், தமிழ் வாணனின் நெம்பு கோலான கட்டுரைகளும் துணிவே துணையென உணர்த்தின. நண்பர்களால் சுமத்தப் பட்ட அசதி, பஞ்சாகப் பறந்தது. அச்சுறுத்தல்கள் பொசுங்கின. உழைப்பின் மறுவடிவம் நானல்லவா. ஒருவரது உயர்ச்சியும், வீழ்ச்சியும் அவரவர் நடவடிக்கையைப் பொறுத்தே உண்டாகின்றதென்பதை நம்பினேன். தமிழ் தேசிய சேவைக்குள் நுழைந்தேன். முடிவு சாதகமாக அமைந்தது. வானொலித் தமிழர்கள் என்னை உதைப் பார்களென ஆரூடம் சொன்னவர்கள் வியக்குமளவிற்குத் தமிழ்த் தேசியசேவை
(42)

என்னை அரவணைத்தது. வாழ்க்கை என்பது
பெயர் தெரியாத ஊருக்கு வழி தெரியாப் பயணம் ,
என்பதன் ரிஷிமூலத்தைக் கற்பிதம் செய்து எனது அபிமானிகளுக்கும் உணர்த்தும் படியாக எனது வானொலிப் பணியை அமைய வைத்தேன்.
வெளியுலகத் தில் லு முல்லுகளை அறிந்திராத ஒரு சாதாரண வறுமைக் கோட்டிற்குள் அடங்கிய குடும்பத்தில் பூத்த எனக்கு உத்தியோகம் கிடைத்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.
க.பொ.த.(சா) பரீட்சைத் தகைமையோடு கொடுர வறுமையின் தாக்கத்தால் கல்வியை இடைநிறுத்தி வீட்டில் முடங்கினேன். வீட்டில் தொட்டாட்டு வேலைகளைச் செய்தேன். அப்போதைய ஒரு நாளில் நணர் பணி எம்.ஏ.தியாகராசா சைக்கிளில் என்னைத் தேடி வந்தார். யாழ்ப்பாணத்தில் இவர் மிகவும் பிரபலமானவர். மிஸ்ரர் யாழ்ப்பாணம் என்ற பட்டத்தை வென்றெடுத்தவர். வெளிநாடான டோகாலில் பணிக்குச் சென்று மிஸ்ரர் டோகா என்ற விருதையும் பெற்றவர்.இவைக்கெல்லாம் மேலாக மிஸ்ரர் சிலோன் என்ற பட்டத்தைப் பெற்று இலங்கைத் தமிழரைத் தலை நிமிரச் செய்தவர். புனித பத்திரிசியார் கல்லூரியின் கிரிக்கெட் அணிக்குத் தலைவராக இருந்து அக்கல்லூரியை வெற்றிப் பாதையிலிட்டவர்.
சிறந்த வேகப் பந்து வீச்சாளர், நா. எதிர்வீரசிங்கத்திற்குப் பின் யாழ் குடா விளையாட்டுத் துறையை ஏனைய
மாகணங்களும் திரும்பிப் பார்க்க வைத்தவர். விளையாட்டு அமைச்சால் தற்பொழுது ஒழுங்கு செய்யும் உள்ளூர் கிரிக்கெட் குழுக்களின் போட்டிகளுக்கு நடுவராக விளங்குகிறார். திறந்த மனத்தவர். .
என்னைத் தேடி வந்த பொழுது ஒரு விண்ணப்பப் பத்திரத்தையும் கொண்டு வந்தார். "மச்சான் பாலா கிளரிக்கல் சோதினை நடக்கப்
போகுது. நீயும் அப்பிளை பணிணு எனச் சொல்லியபடி விண்ணப்பப் படிவத்தை என்னிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டேன். கொஞ்ச நேரம் அதையுமிதையுமாகக் கதைத்தபடி நேரத்தைக் கழித்தோம். சைக்கிளைத் திருப்பியபடி நான் வாறன் மச்சான். அப்பிளிகேசனைக் கட்டாயம் அனுப்பு. தெண்டிக்காத குறையாகச் சொல்லிச் சென்றார்.
சங்கீத பூஷணம் திலக நாயகம் போல், ஆரோக்கிய நாதர் (சிறாப்பர்) எம்டிஎவ் சேவியர் (கணக்காளர்) நாகநாதி (சிரிபி) டைனிசியஸ் (சிரியி) விசிகுஞ்சிதயாதம் (நாடகக் கலைஞர்) ஆகியோர் எனது கல்லூரி நெருக்கமான நணர் பர்கள். இவர்களைக் காட்டிலும் எம்.ஏ.தியாகராசா எண்னோடு மிகவும் அந்யோன்னியமாக ஊடாடினவர். வலிய வந்து தன்னை அடையாளப் படுத்தி என்னோடு தோழமை கொண்டவர்.
முத்திரைக் கட்டணத்தை எனது சிற்றன்னையரிடம் பெற்று விண்ணப்பித்தேன். பரீட்சை எழுதினேனர். மாதங்களாகிக் கொண்டிருந்தன. காணும் போதெல்லாம் - சந்திக்கும் போதெல்லாம் தியாகராசா "மச்சான் கட்டாயம் எடுபடுவ பயப்படாத" எனத் தைரிய மூட்டினார்.
அப்பொழுது எங்களது குடும்பம் யாழ்ப்பரணத்தாரின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த வரலாற்றைத் தோற்றுவித்த வில் லூன்றி மயானத்திறகு முன்பாகவுள்ள விசாலமானதொரு தென்னந்தோட்டக் காணியில் வசித்தது. இக்காணியைக் காட்டுவளவென அழைப்போம். தற்பொழுது இதுவொரு குடியேற்றத் திட்டமாக இருக்கிறது. தென்னைகளில்லை. இக்காணியில் ஒரு கிணறு இருக்கின்றது. தற்போதைய உள்ளூராட்சி மன்ற கிணறுகளைப் போன்றது. இப்போது முள்ளது. அதில் நான் குளித்துக் கொண்டிருந்தேன்.

Page 24
s
தெருக்கரையில் சைக்கிள் பெல் சத்தம் தொடர்ந்து கேட்டது. பாலசிங்கம் என
அழைப்பதும் கேட்டது. குளிப்பதை நிறுத்தி
வாளியைக் கட்டில் வைத்த பின் திரும்பிப் பார்த்தேன். தெருக்கரையில். திறந்த கம்பி
வேலிக்கப்பால் எனது பாடசாலை நண்பர்
கனகசபாபதி நின்றார்.
இவர் ஒட்டி சுட்டான் உதவி அரசாங்க அதிபராக இருந்தவர். அமரராகி விட்டார்.
உடம்பிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட அவரை நோக்கி நடந்தேன். பாலசிங்கம் உம்மட பேர் கசற்றில வந்திருக்கு. நீர் கிளறிக்கல் பாஸ் வெண்ணிறப் பற்களைக் காட்டிய படி நண்பர் சொல்லிக் கொண்டு வர்த்தமானியை (கசெற்) நீட்டினார்.
பிரித்துப் பார்த்தேன். திறைசேரிக்கு எனது பெயர் அனுப்பப் பட்டிருப்பதாகவும். விரைவில் நியமனக் கடிதம் அனுப்பப் படுமென்ற மகிழ்ச்சியான செய்தி அதில் இருந்தது. மனதை நிறைத்திருந்த ஏக்கமும் ஏமாற்றமும் கழுவப் பட்டது போலிருந்தது. என்னை விடத் தான் மகிழ்ந்தது போல் வேர்த்த முகத்தோடு நின்ற அந்தத் தன் நலமற்ற இனிய நண்பருக்கு நன்றி சொல்லி வழி அனுப்பினேன். இந்த விஷயத்தை நண்பர் தியாகராஜாவுக்கும் தாமதப்படுத்தாது சொன்னேன். அவர் தனது ஆரூடத்தை
அக்கறையோடு திரும்பவும் சொன்னார்."மச்சான்
எடுபடுவ" இப்பொழுது நணர் பனின் வார்த்தைகளில் எனக்குக் கூடுதலான நம்பிக்கை கனிந்தது.
சின்ன இடைவெளிக்குப் பின்னர் கல்விச் சான்றிதழ்களை அனுப்பும் படி திறை சேரியிலிருந்து கடிதமொன்று வந்தது. எனக்கு உத்தியோகம் சுவறிய மாதிரியுமிருந்தது.
அயலிலும். வீட்டிலும் பெரு மகிழ்ச்சிபூத்தது!
கேட்டிருந்த அனைத்துச் சான்றிதழ்களையும்
பதிவுத் தபாலில் அனுப்பினேன். இதற்கும் தியாகராசாவின் உதவி கிடைத்தது!
மீண்டும் கொக்குத் தவம் தியாகராசாவின் இடைவிடாத சத்திய வாக்கு
நாட்கள் நகர்ந்து கொணர்டிருந்தன. மாதங்கள் பிரசவமாகிக் கொண்டிருந்தன. நானும் என்னைச் சார்ந்தோரும் எதிர்ப்பார்த்த அந்தப் புருஷ லெட்சணம் என்னை வந்தடையவில்லை.
இந்த ஊருக்குளர் செல்வாக்குள்ள பெரிய மனிதரொருவர் இந்த
விஷயத்தில் தனது மூக்கை நுழைத்தார். எனது இன பந்துக்களை இவர் எடா, எடி எனத்தான்
வேளையில
அழைப்பார். படித்தவர். பென்சன்காரர். மடிப்புக்
கலையாத உடை அணிந்திருப்பார். குங்குமப் பொட்டுக்காரர். சைவப் பழம். சங்கிலிக் கழுத்தர். விஷயகாரன். எனது மனச் சோர்வை அவரிடம்
சொன்னேன்.
"என்ன பேய்வேலையடா செய்த நீ. சேட்டுப்பிக்கட்டுக்களை அனுப்பிப் போட்டியா. அதில்லாம இனி என்ன செய்யப் போற. திருப்பி அனுப்பச் சொல்லி கடிதம் எழுது. நாளைக்குக்
கடிதம் கொண்டு வாறன்."
அந்தப் பெரிய மனிதர் வெடுக்கென என்னில் பாய்ந்தார். வெலவெலத்துப் போனேன். பிழை செய்து விட்டேனோவென விழி பிதுக்கினேன். அன்றிரவு கண்ணோடு கண் இமைக்கவில்லை.
மறுநாள் அரிச்சந்திரனாகக் கடிதத்தோடு வந்த அவரை மனதார மதித்தேன். "இண்டைக்கே அனுப்பிப் போடு. இந்தா. தட்டச்சில் பதித்த கடிதத்தை நீட்டினார். எனக்குக் கையும் ஒடல்ல. காலும் அசையவில்லை. பொடி நடையில்
விசுக்கு விசுக்கென தியாகராசா வீட்டிற்குச்
சென்றேன். கடிதத்தைக் காட்டி நடந்ததைச் சொன்னேன். கடிதத்தை இமை வெட்டாமல் தியாகராஜா படித்தான். எனக்கு முன்னால் அதை தாறு மாறாகக் கிழித்து வேலிக் கரையில

கொட்டுண்டு கிடந்த சருகுக்குள் எறிந்தான்.
"அவன் வெறியன். அவன்ர கதையையா கேக்கிற். சும்மா இரு மச்சான். ஆரையும் நம்பி அவைக்குப் பின்னால ஓடாத. உனக்குக் கெதியில அப்பொயிண்மென்ற் லெற்றர் வரும் பாலா. கசற்றில பேர் வந்திட்டுது மச்சான்"
ஆத்திரம் கொணர்டவனாக நணர்பன் பார்வையால் என்னை எரித்தான். எனக்குத் தர்ம
சங்கடமாக இருந்தது!
கொஞ்ச நாளாக அந்தப் பெரிய மனிதரின் கண்ணுக்கு எத்துப் படாமல் நான் மறைந்து திரிந்தேன். நண்பன் தியாகராசா வாயோரியாகச் சொன்னது போல் இந்தச் சம்பவத்திற்குச் சில
நாட்களின் பின்னர் எனக்கு நியமனக் கடிதம்
வந்தது. அன்று நண்பனின் வழிநடத்தல் எனக்கு
இல்லாதிருந்திருப்பின் நிச்சயமாக நான் வாழ்வில் இடறுப்பட்டிருப்பேன். தியாகராசா எனக்குத் திசை காட்டியாகச் சேவித்தான்.
எம்மீது அனுதாபப் பட்டு எமக்காக இரங்கும் பெரிய மனிதர்கள்’ எத்தகைய பாசாங்குக் காரர்களென்பதை இச்சம்பவம் எனக்கு வர்சித்தஆழி. தமிழனது புராணங்களும் நீதிநூல்களும் காவியங்களும் இப்படியான சமூக விரோதிகளைத் தான் யாழ் மணி னில் விதைத்திருக்கிறது!
இந்தக் கசப்பானி சம்பவத்தின் உரசல் தான் ஏற்கெனவே படித்திருந்த கேடானியல். டொமினிக் ஜீவா. எனி.கே.ரகுநாதனி ஆகியோரினர் படைப்புகளில் அவர்கள் சித்திரித்திருந்த பஞ்சமர் விரோதிகளின் மெய்ம்மைத் தன்மைகளை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பையும் எனக்கு உமிழ்ந்தது. இப்படியான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப் படும் அப்பாவிப் பஞ்சமரின் முன்னேற்றத்திற்காக எனது பங்களிப்பும் இருக்க வேணடுமெனச் சதிய வேட்கை
கொண்டேன்.அதற்கான ஆயுதமாக எழுத்தையே ஏந்தினேன். எனது படைப்புக்களில்இறுக்கமான சமூகப்பார்வையைச் சிந்தினேன். யாழ்ப்பான நகரத்தின் மையமாக விளங்கும் கொட்டடியில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கே இப்படியான சோதனை என்றால குஉா நாட்டினர் குக்கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பஞ்சமர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப் பட்டிருப்பார்கள்! எனவே எமது ஆத்திரம் நியாயமானது தானே!
இப்படியான கட்டங்களைச் சந்தித்த பின்னர் தான் எனக்கு உத்தியோகம் கனிந்தது சாப்பிட்ட இலையை வீசுவது போல் இதை வீச முடியுமா! மனதோடு போராடிக் கொண்டுதான் எனக்குத் தாய் வீடு போலிருந்த இலங்கை வானொலியை விட்டகன்றேன். இது எனது சொந்தக் காய் நகர்த்தல்
இதை வாசிக்கும் எனது அபிமானிகளுக்கு நெருடலொன்று ஏற்படலாம்! N
இப்படியெல்லாம் பொச்சடிக்கிறாரே, அந்தப் பிரய்லமான இடத்தில் இவரொரு தாழ்வாரத்திலாவது ஒதுங்கி இருக்கலாமே என மனம் சலனம் கொள்வது இயல்புதான்! ஒரு மகோன்னதமான உயர்வை நச்சாத முன்னேற்ற
பிரக்ஞை இல்லாத பெக்கோ நானல்ல. கால்களை
நிமிர்த்தி நீட்டத் தெரியாத சவலையுமல்ல.
வஞ்சிக்கப் பட்டுக் கொணர்டிருக்கும் எனது இரத்த உருத்துக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த உத்தியோகம் எனக்குக் கனிந்துவிட்ட பின்னர் கூட எனது குடும்பத்தில் வேர் விட்டிருந்த வறுமை வடுக்களை அழிக்க முடியவில்லை. குடும்பமும் புளுகக் கூடிய அளவிற்று மாற்றத்தைப் பெறவில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் தான் கிடயாய்க் கிடந்தது. யாழ்ப்பாணத்தாரின் தொத்து
வியாதியான கல்யாணப் பேச்சுத் தான் என்னை
(45)

Page 25
வட்ட மேசைக்கு இழுத்தது! ஒட்டு வீடுகளெல்லாம் ஒலைக் குடிசைக்குப் படையெடுத்தன.
அப்பொழுது எனது மாதாந்தச் சம்பளம் ரூபா 190/= இருந்தாலும் மரமேற் புறாவைக் காட்டிலும் கைப்புறா பெறுமதியான தென எனது உத்தியோகத்தை ஓம்பினேன்.
மாணவனாக இருந்த பொழுது ஆசிரியர்கள், வகுப்பில் வாசிப்பதற்கு என்னையும் எழுப்புவர். ஆங்கிலத்திற்குந் தான் குடியியல் புத்தகத்தில் பாடமொன்றை வாசித்ததைக் கேட்ட அந்தோனிப்பிள்ளை (பாசையூர்) மாஸ்டர். தான் இத்தகைய சிறந்த வாசிப்பைத் தனது ஆசிரிய சேவைக் காலத்தில் கேட்க வில்லையெனப் புகழ்ந்தார். எனக்கு மெய்சிலிர்த்தது. அது மட்டுமன்றி. எனது அன்னையாரின் தந்தையார் - எனது பாட்டன் - புதினப் பத்திரிகைகளைத் தந்து என்னை உரத்து வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பார். நல்ல தங்காள் கதை. விக்கிர மாதித்தன் கத்ை, புரந்திரன் கழகு மாலை, பசுவின் கதை. வாலிமோட்சம் இவைகளைத் தத்தும் வாசிக்க வைப்பார்கள். இவையெல்லாம். வாசிப்புக் கலையில் நான் துறை போனவன் என்ற விதைதி திருந்தன. வாசிப்பதென்றால் எந்த இடத்திலும் துணிந்து எழுவேன்.
நினைவறியாப் பராயத்திலே என்னுள்
கர்வத்தை என்னுள்
விதைக்கப் பட்டிருந்த இந்தக் கர்வ உந்தலால் எனக்கு அக்கிரகாரம் தேவை இல்லை ஒரு தாழ்வாரத்தைத் தந்தால் போதுமென்ற அடக்கத்தோடு பகுதிநேர அறிவிப்பாளனாக எனது தொடர்பை றேடியோ சிலோனோடு நீடிக்க எத்தனித்தேன்! நிரந்தர அறிவிப்பாளருக்கான வெற்றிடங்கள் அறிவிப்பாளர்கள் விடுமுறையில் செல்லும் நாட்களில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் படுவதுணர்டு. இவர்கள் வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் நியமிக்கப்
பாவிக்கப்
G46)
படுவார்கள். கொடுப்பனவும் கிடைக்கும். அந்த இலக்கு எனக்குக் கணியவில்லை. மனதில் சஞ்சலமிருந்தது தான்! இதற்காக எந்தவொரு அதிகாரியின் செல்வாக்கையும் இரக்கவில்லை. மென் போக்கைக் கடைப் பிடித்தேன். திறமையால் சாதிக்க நம்பினேன். பொய்த்து விட்டது! சுத்துமாத்துகள் மலிந்துவிட்ட எம்மவர்கள் மத்தியில் திறமை திறந்த வெளிக் கைதி தானே! விவியன் நமசிவாயத்திற்குச் சற்று ஆதங்கமே! மென்மையான குரலெனச் சொல்லி என்னுள் அதுவரை அடக்கமாகி இருந்த ஒரு சம்பவத்தை உயிர்ப்பித்தார். நினைத்துப் பார்த்தேன்.
அன்றைய கால கட்டத்தில் மக்களின் கூடுதலாக ஈர்த்ததிருந்த உலகத்தலைவரொருவர் இறந்து விட்டார். இவர் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு எனத்தான். நினைக்கிறேன். இத் தலைவருக்கு அஞ்சலி செய்வதின் பொருட்டு அப்போதைய உலகத்
கவனத்தைக்
தலைவர்கள் பலரது அனுதாய்ச் செய்திகளை ஒன்றிணைத்து நிகழ்ச்சியொன்று தயாரிக்கப் பட்டது. இதற்குப் பொறுப்பாக A.சுப்ரமணிய ஐயர் இருந்தார். அப்பொழுது பிரதி ஆக்கல் (Script Writer) 9-55Gut 555g its gali இருந்தார். மற்றவர்களது சுரட்டுகளுக்கும் போக மாட்டார். பிரபல சங்கீத
மிகவும் அடக்கமானவர்.
எந்தவிதமான சோலி
வித்தகி பாலம் லட்சுமணனின் சகோதரர் ல கூடிமணஐயரின் மைத்துனர்.
நேயர் கடிதங்களுக்கு பதில் சொல்லப் போகும் போதெல்லாம் கடிதங்களை வாசிக்க எனினை அழைப் பார். வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி, விவேகச் சக்கரம் ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பினவர். அறிவிப்பாளொருவர் இல்லாத சந்தர்ப்பமொன்றில் தன்னைத் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி அழைத்துச் செய்தி பணித்ததாக
வாசிக்கப்

என்னிடமொருமுறை சொன்னார். தேசிய ஒலிபரப்பைப் பொறுத்தவரை இது ஒரு அபூர்வ நிகழ்வு. இந்த விஷயத்தில் அறிவிப்பாளர்கள் கடும்போக்காளர்களாகவே செயற்படுவர்.
முன்னர் இலங்கை வானொலி என்ற தலைப்பில் வெளியாகிக் கொண்டிருந்த வானொலி வெளியீட்டின் தமிழ்ப் பகுதிக்கு இவரே பொறுப்பாக இருந்தார். இச் சஞ்சிகை அன்று நேயர்கள் மத்தியில் மட்டுமின்றி, மாணவர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாகவிருந்தது. கல்வி ஒலிபரப்பு, தேசிய ஒலிபரப்பு ஆகியவற்றில் ஒலிபரப்பாகும், மாணவர்களுக்கு கற்பதற்கு உதவியாக இருக்கக்கூடிய பயனுள்ள கட்டுரைகள் இதில் பிரசுரமாகின. இதனால் இச்சஞ்சிகையை மாணவர்கள் தேடிப் படித்தனர். நேயர் விருப்ப விணர்ணப்பமுமிருக்கும். இருவாரங்களுக்கு ஒலிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிகள் வெளியாயிருக்கும் தமிழ் ஆங்கிலத் தினசரிகளில், தேசிய ஒலிபரப்பின் நாளாந்த நிகழ்ச்சிப் பட்டியல் வெளிவருவதற்கான ஒழுங்குகள் அப்பொழுது செய்யப்பட்டிருந்தன. இதற்கான பிரதியை சுப்ரமணிய ஐயரின் பணிப்பிற்கமைய நானே தயாரிப்பதுண்டு. அத்தோடு நின்று விடாது இன்னொன்றையும் எனது நாளாந்தப் பணிகளில் கிரமப் படுத்தினேன். ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் கொட்டாஞ்சேனை நூலகத்திற்குச் சென்று அனுப்பிய விபரங்கள் பிழை இல்லாது பிரசுரமாகி இருக்கின்றதாவென புறூப் றீடர் (Proof reader) ஒருவரது அவதானத்தோடு பத்திரிகைகளைக் கிளைந்து கிளைந்து படிப்பேன். எனது சிறுகதைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகும் பொழுது அவைகளைப் பார்ப்பது போல் எனக்கு அப்படியொரு நப்பாசை! நான்
எழுதியவைகள் பிழைகளற்று வெளியாக
வேண்டுமென்ற தடிப்பு
இத்தகைய நடைமுறை இப்பொழுது இல்லையென நினைக்கிறேன்! நேயர் கடிதங்களை
கேட்கும் பொழுது தான் தமிழ் தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை அறிய
முடிகின்றது. நகரங்களில் தொலைக்காட்சியின்
ஆதிக்கம் இருப்பினும், கிராமம் இன்னமும் றேடியொவைத் தான் நம்பி இருக்கின்றது!
அந்த மறைந்த தலைவரின் அஞ்சலி நிகழ்ச்சியில் உலகத்தலைவர்களின் உரைகளை வாசிக்க நிரந்தர அறிவிப்பாளர்கள். பகுதி நேர அறிவிப்பாளர்களோடு சேர்த்திருந்தனர். இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது! உலகத்தின் முதல் பெண் பிரதமரான பூரீமாவோ பண்டார நாயக்காவின் அநுதாபச் செய்தி எனக்குத் தரப்பட்டது இப்படிச் செய்யப்ட்டது எனக்குச் சற்று தென்பை இழக்க
என னையும்
வைத்தது. ஓர் ஆணின் உரையைத் தந்திருக்கலாமே! என மனம் சலனப்பட்டது. இருந்தாலும், அநுதாபச் செய்திக்குரியவரின் காத்திரத் தன்மையை எண்ணிப் பார்த்தேன். இத்தகைய சந்தர்ப்பத்தை நழுவ விடுவது மிலேச்சத்தனமானது என முடிவு செய்தேன். இந்த நாட்டின் ஏழை பாட்டாளி மக்களுக்கு ஒரு விலாசத்தைக் கொடுத்த SWR.D. பண்டார நாயக் காவினி துணைவியாரல் லவா பூரீமாவோபண்டார நாயக்கா கரும்பு திண்னக் கைக் கூலியா! மனக் குழப்பமெதுவுமின்றி அனுதாபச் செய்தியை வாசித்தேன். ஒலிப்பதிவு செய்தனர். ஒலிபரப்பிய பொழுது றேடியோவில் கேட்டேன் தடங்கலெதுவுமின்றி வாசித்திருந்தேன். கேட்கத் திருப்பதியாக இருந்தது. ஆனால் அந்த அஞ்சலி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் வானொலிக் காரர்கள் எனது குரலுக்கு மதிப்பெண்ணிட்டுக் காட்டினர் என்ற சங்கதியை எனக்கு விவியன் நமசிவாயத்தின் ஆறுதல் மொழிகள் விடிய
வைத்தன. ஒரு கசப்பான சம்பவத்தோs
சுப்ரமணிய ஐயரைச் சம்மந்தப்படுத்தியது அவரை எந்த விதத்திலும் குற்றப்படுத்து வதற்காகவல்ல. அவரை நான் மனதார நேசித்து மதித்தவன். அதே போல் அவருமென்னை.
@

Page 26
:
நேசித்தவர். இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டிருந்த
ஏனைய உரைஞர்கள் தங்களது சிரேஷ்ட நிலையைக் கேடயமாகக் கொண்டு தமக்குப்
பிடித்தமானதை கிண்டி எடுத்து எஞ்சியதை
எனக்குத் தள்ளி இருக்கலாம். எனவே பொருத்தமான சந்தர்ப்பத்தில் தான் அவரை சொல்ல வேணர்டுமெனக் காத்திருந்தேன் வேதெற்காகவுமல்ல!
இருந்தாலும் இன்றுவரை காற்றலைகளில்
மிதந்து கொணர்டிருக்கும் அறிவிப்புகளை
முடிந்தவரை கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன். விவியன் சொன்ன அந்தத்தகதியீனந்தான் என்னைத் தகுதியற்றவனாச்சிய தென்றால் அதை நான்
நாகரீகமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
எனது மூத்த சகோதரர்களான வானொலி அலுவலர்களைக் கேள்வி கேட்கவில்லை.
அவர்கள் மூலமாக வளர்த்தெடுத்த எழுத்துக் கலையை முன்னேற்ற ஊக்கம் கொண்டேன். இந்தப் பிரபஞ்சத்தில் நடமாடும் உயிர்கள் எனக்கு ஊட்டிக் கொணர்டிருக்கும் உணர்மைகளை எழுத்தில் வடித்துக் கொடுக்கிறேன். அதுவே என் பலம்! புகழுக்கு வீங்கமாட்டேன்! என்னைப்
புரிந்தவர்களுக்கு இது தெரியும்.
நான் தமிழ்ப் பிரிவில் ஒருநாள் காலை
வேகமாக எனது ஆசனத்தை நோக்கிச் சென்று
கொணர்டிருந்தேன் அப்பொழுது தனது
இருக்கையில் இருந்தபடி சானா சொன்னார் தம்பிக்கு இரத்தினபுரிக் கக்சேரிக்கு மாற்றம் வந்தது. நாங்கள் நிப்பாட்டிப் போட்டம் ஒன்பது மணி போல நீரும் ஒருக்காப் போய் சப்ஜெக்ற் கிளார்க்கோடை கதையும் சானா சொன்னபடி ஒன்பது மணிக்கு நிருவாகக் கிளைக்குச் சென்ற பொழுது அங்கு தமிழ் நிகழ்ச்சி அதிகாரி கே.எஸ். நடராஜா நின்றார். 'எதைச் சொன்னாலும் முணுமுணுக்காமற் செய்வார். ஒழுங்கான ஒப்பீசர் இப்படியவர் ஆங்கிலத்தில் சொல் லிக்
G48)
கொணர்டிருந்தது என் காதில் விழுந்தது மாற்றமும் நிறுத்தப்பட்டது. இப்படி எனக்கு அன்பு செய்தவர்களை எப்படி விகல்பமாக எணர்ண முடியும் எதிராக வில்லத்தனம் தான் புரிய முடியுமா?
இக் கட்டுரை சுட்டும் (1961 ஒகஸ்ட் - 1987 ஜனவரி) காலத்தில் ஈழத்தில் தேசிய இலக்கியம் முளை கொண்டிருந்தது. இருந்தும் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக் கலை, இலக்கியவாதிகளை எனது பிரிவுக்குள் என்னால் காணமுடியவில்லை. மலையகத்தவரைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன். அப்பொழுதே சி.வி.வேலுப்பிள்ளை. தெளிவத்தை ஜோசேப். என்.எஸ்.எம். ராமையா போன்ற மலையகப் படைப்பாளிகளை அடையாளங் கண்டிருந்தேன். ஆனால், என் சுப்பிரமணியம் என்பவரை மட்டுமே என்னால் சந்திக்க முடிந்தது. இவர் பார்லிமென்ட் சுப்ரமணியம் எனவும் நண்பர்களால் அழைக்கப் படுபவர். வீரகேசரியில் தமிழ் மூலம் சிங்களம் எழுதியவர். இவர் சேர்ந்தரென்பதைத் தெளிவுபடுத்தியவர், மாத்தளை கார்த்திகேசு.
மலையகத்தைச்
இந்த ஆறாண்டு காலத்தில் நான் சந்தித்த அபூர்வ பிறவி இன்னொன்றும் இன்னமும் எனது மனசின் பிடிக்குள் இருக்கிறது. இன, மத. அரசியலால மனித நேசங்கள் விளைச்சலாவதில்லை. மனிதரோடு மனிதர் கொண்டிருக்கும் ஊடாட்டமே அவைகளைத் தோற்று விக்கின்றன. அதற்கு இந்த விஷயம் உரைகல்லாகுமென நினைக்கிறேன்.
கொட்டாஞ்சேனையில் ரொலி பஸ் எடுத்து பொறளையில் இறங்கி அடுத்த பஸ்சிற்கு மாறியே றேடியோ சிலோன் செல்வேன். கொட்டாஞ்சேனை ரொலிபஸ் தரிப்பு நிலையத்தில் நடத்துனர் ஒருவர் நின்று ரிக்கற் வழங்குவார். தமிழரல்ல இவர். முதியர் என்னைக் கண்டதும் பொறளைக்கான ரிக் கற்றையும் ரூபா இரணி டிற்கான

மிச்சத்தையும் நீட்டுவார். எனது வாய் முறைப்பாட்டைக் கேட்டிருக்க மாட்டார். நான் ரிக்கற்றை நோட்டமிடுவேன். சரியாக இருக்கும். மிச்சமாகக் கொடுத்ததை எண்ணிப் பார்ப்பேன் பிழை இருக்காது. என்னிடமிருந்து இரண்டு ரூபாய்த் தாளைப் பெற்றுக் கொள்வார். தோழமையான புன்னகை என்னை அணைக்கும். இவைகளுக்கெல்லாம் முன்னதாக எனக்குக் குட் மோனிங் சொல்வார். இந்த அதிசயப் பிறவியை இன்றும் நினைக்கிறேன். நான் கொண்டு வரும் பணத்தின் பெறுமதி இவருக்கு எப்படித் தெரியும் நானொரு சிக்கனப் பேர்வளியென்பதை எப்படித் தெரிந்து வைத்திருந்தார். அப்போதை வாழ்க்கை செலவுக்கு கொட்டாஞ்சேனையிலிருந்து பொறளை ஊடாக பொறளை ஊடாக ரொறிங்ரனில் இருக்கும். இலங்கை வானொலி நிலையத்திற்குச் செல்வதற்கு ரூபா இரண்டு போதும். பத்து மணி, மூன்று மணிக்கான தேநீர் செலவும் இதற்குள் அடங்கும். நணர்பகல் போசனம் பம்பலப்பிட்டி தவளகிரி ஹோட்டலில் மாதக் கொடுப்பனவு அடிப்படையில் கிடைக்கும். ஏதோ மனிதர்களைக் காண கிறோம் கடக்கின்றோம்! இந்த நடத்துனர் போல் எத்தனை பேர் நம்முள் கலந்திருக்கிறார்களென்பதை நாம் எப்பொழுதாவது நினைக்கிறோமா? அவர் எப்படி
என்னைக் கணக்கிட்டு வைத்திருந்தார்! பார்த்தீர்களா அந்த இதய வளத்தை கணிப்பீடு
செய்ய எந்தவொரு பொறிக்குத் தான் ஆற்றலுண்டு!
நிறைவாக,
கம்பனி வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமெனவும் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுமெனவும். பட்டறிவை மையப் படுத்தி எதிர்வு கூறுவதுண்டு. அப்படியாகில். என்னைப் போல், தற்பொழுது கட்டுத்தறிகளாகவும் நார்களாகவும் இலங்கை வானொலியை வட்டமிட்டுக் கொணர்டிருக்கும் ஊமைக் குயில்களான அடிநிலை உத்தியோகத்தர்களுக்கும். அவர்களது சொந்த முயற்சிகளால் கலை ஞானம் ஊற்றெடுத்து. என்னைப் போல அவர்களும் இந்நாட்டின் கலைவேள்வியில் பங்கெடுக்க வேண்டுமென அவாவுறுகிறேன். அதற்கான ஊக்கக களர் அவர்களது மேலிகாரிகளிடமிருந்தும் பிரவகிக்க வேண்டும்! மேலதிகாரிகள் புளிய மரங்களாக இருக்காத பட்சத்தில் நிச்சயமாக இது சாத்தியமாகும்.
இக் குறுங் கட்டுரைத் தொடர் பிரசுரமாவதற்குக் களம் தந்த மல்லிகை
ஆசிரியருக்கு நன்றி.
(முற்றும்)

Page 27
spUj
risisir முணுமுணுப்புக்கு
GARLIJGafsir Llibù
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான எம். எச். எம். ஷம்ஸின் மறைவையொட்டி நகரில் இடம் பெற்ற பல அஞ்சலிக் கூட்டங்கள் பற்றி நண்பர் மேமன்கவி மல்லிகையில் ( ஆகஸ்ட் இதழில்) எழுதியிருந்தார். இதில் விபவி கூட்டத்தில் இடம்பெற்ற எனது உரை அவரை அதிர்ச்சி கொள்ள வைத்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில் அதைப் படித்ததும் நான் தான் அதிர்ந்து போனேன்.
விபவி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கே. விஜய்ன் தனது உரையில், 60களில் ஈழத்தில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர்கள் தடம் மாறிவிட்டார்கள் என்றும் ஈழத்து இலக்கியத்தில் மார்க்ஸியம் தோற்றுவிட்டது என்றும், ஷம்ஸின் ஒரு கிராமத்தின் கனவுகள் நாவல்
இஸ்லாமிய சீர்திருத்த நாவலாக முடிந்துவிட்டது என்ற தொனியில்
பேசினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1.முற்போக்கு எழுத்தாளர்கள் தடம் மாறிவிடடார்கள். 2.மார்க்ஸிசம் தோற்றுவிட்டது. 淤
3.கிராமத்தின் கனவுகள் ஒரு இஸ்லாமிய, சீர்திருத்த நாவல்.
இப்படி மூன்று குற்றச் சாட்டுக்கள் என்மீது சுமத்தப்பட்டு விஜயன் உணரவேண்டும், உணரவேண்டும் என திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த கிராமப் போனைப் போல முனு முணுத்திருக்கிறார் மேமன்.
G50)
 

ஒரு பத்திரிகை எழுத்தாளனுக்கு ஒரு பொது நிகழ்வைக் குறித்து
எழுதுவதற்கும் விமர்சிப்பதற்கும் பூரண
சுதந்திரம் இருக்கிறது. அதனை எதிர்த்துப் பதில் எழுதுவதற்கு வரிந்து கட்டிக்கொண்டு போருக்கு கிளம்பக் கூடாது என்ற பத்திரிகா தர்மத்தை என்னுள் வளர்த்துக் கொண்டிருப்பவன் நான். ஒரு பிரதியின் முணுமுணுப்பை வாசித்த போது பதில் எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை. வெறும் முணு முணுப்புத் தானே என்றிருந்தேன். என்ற போதும் ஒரு நிர்பந்தம் எழுதத் தூண்டி விட்டது.
"விஜயன் இதென்னடா உன்மேல் இப் படி ஒரு குறி றச் சாட் டு விழுந் திருக்கிறதே, என்று சில நண்பர்கள் கேட்டார்கள். எனது இலக்கிய உரைகளையும், வீர கேசரியில் எழுதி வரும் ரீமான் சஞ்சாரி உட்பட பத்தி எழுத்துகளையும் தொடர்ச்சியாக செவிமடுத்தும், படித்தும் வருபவர்கள் இந்த நண்பர்கள். (மேமனுக்கு இந்த அனுபவமும், என் எழுத்துக்களை வாசிக்கும் பண்பும் இல்லை என்பது அவர் குறிப்பிலிருந்து தெரிந்தது) இவர்களுடன் அடிக்கடி இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவதும் உணி டு. எனது வாதங்களினது அடிப்படையில் என்னை லேபல் ஒட்டிக் கொள்ளாத மாக்ஸிஸ்ட், முற்போக்கு குழாமைச் சேர்ந் தவ னி என று வரையறை செய்து கொண்டவர்கள்எனது அரசியல், இலக்கியம் ஆகிய சகலவற்றிலும் எனது சித்தாந்தங்களை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள் இவர்கள். அவர்களின்
நிர்ப் பந்தம் ஒரு பிரதியின் முணுமுணுப் பிற்குப் பதில் எழுத வேண்டிய நிலைக்கு என் னைத் தள்ளிவிட்டது.
ஒரு கவிதையில் ஒரிரு வரிகளை அல்லது ஒரிரு சொற்களை எடுத்து விட்டால் அந்த கவிதை எப்படி பூரணத்துவம் பெறாமல், பிழையான கருத்தை கொடுக்குமோ? அது போலத் தான் ஒரு பந்தியிலிருந்து சில வரிகளை, அல்லது சில சொற்களை நீக்கி விட்டால் அது பிழையான அர்த்தத்தைக் கொடுக்கும். (இது ஒரு மார்க்ஸிச விதி. விஜயனின் எழுத்திலும், பேச்சிலும் இந்த அணுகுமுறையைக் காணலாம்)
ஒரு பிரதியின் முணுமுணுப்பில் நான் பேசியதாகக் காட்டப்பட்ட பந்தி இருக்கிறதே நான் எப்படிப் பேசினேனோ
அப்பந்தியுை அப்படியே தருகிறேன்.
தமிழ் புனை கதைத் துறையைப் பொறுத்த வரையில் இலங்கையில் 1960காலகட்டம் மிகவும் முற்போக்கான் தாகும். சர்வதேச அரங்குகளில் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிகழ்வுகள் இலங்கை எழுதி தாளர்களையும் பாதித்தன. முற்போக்குத் திசையில் அவர்களுடைய சிந்தனை வளர்ந்தது. சமூகப் பிரக்ஞையுடன் அவர்கள் இலக்கியம் படைக்கலானார்கள். அன்று தோன்றிய படைப்பிலக்கிய வாதிகளில் ‘ஒரு சிலர் இன்று ரசனைக்காகத் தான் இலக்கியம் என்று தடம் மாறிப் போனாலும் அப்துல் நசார் என்ற ஏகாதிபத்ய விரோத தலைவனைப் பற்றி எழுதிய முதல் கவிதை முதல், தனது
(5)

Page 28
இறுதி நாவலான கிராமத்துக் கனவுகள் வரை அமரர் ஷம் ஸ் சமூக பிரக்ஞையுடன் எழுதினார். இது தான் அந்தப் பந்தி. இதில் எத்தனை வரிசயங்களை இந்த (p500 முணுப்புக்காரர் மேய்ந்து விட்டார் எண் பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.
ஒரு சிலர் தடம் புரணி டு விட்டார்கள் என்பதற்கும் முற்போக்கு இயக்கமே தடம் புரண்டு விட்டது என்பதற்கும் ரொம்பவும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா.
விஜயன் அவசரப் பட்டு விட்டார் என்கிறார் முணுமுணுப் புக் காரர். விசயத்தைப் பார்த்தால் அட இழவே * பிரதி' அல்லவா அவசரப் பட்டு 6f LTs எணர் டு சொல் லதி தோன்றுகிறது.
முணுமுணுப் பின் இனி னொரு சுவையான அம்சம் என்னவென்றால் மாக்சிஸம் என்ற ஒரு சொல்லையே
நான் எனது உரையினி போது உச்சரிக் காத போது 35 காலாவதியாகி விட்டது என்று
கூறினேனாம். அடப்பாவமே ஒருவன்
தான் நிற்கும் மேடைக்கே கண்ணி வெடி
வைப்பது போன்ற வார்த்தை அல்லவா
இது!
‘கரிராமதி தின் கனவுகள் உன்னதமானதொரு வர்க்க நாவலாக பரிமாணம் பெற்றிருக்க முடியும். இங்கே தான் இடது சாரி இயக்கத்தின் பிழைகளின் தாக்கம் ஷம்ஸையும்
பாதித்து அதனை ஓர் இஸ்லாமிய
C52)
சீர்திருத்த நாவலாக தோற்றமுறச் செய்து விட்டது என்றும் எனது உரையினி இறுதிப் பகுதியில கூறினேன்.
இது எனது கருத்து. ஷம்சுடன் இது குறித்து நான் வாதாடியது உண்டு. அது நட்பு ரீதியிலானதொரு வாதாட்டம். எனது இந்தக் கருத்துச் ஷம்ஸை மட்டம் தட்டும் கருத்தல்ல. இடது சாரி இயக்கம் குறித்தவொரு விமர்சன வரி. கிராமத்தின் கனவுகளை வரிக்கு வரி வாசித்து ரசனையுடன் உள்வாங்கி யிருக் கலிறேனர் . ஆணித தரமாக முன்வைக்கப்படும் எனது கருத்துகள் நமது படைப்புகளின் எதிர்கால இலக்குகள் குறித்த ஒரு சிந்தனையின் தெளிவிற்காக முன்வைக்கப் படும் கருத்துகளாகும். இதே கருத்தை எனது மனநதியின் சிறு அலைகள் நாவல் குறித்தும் ‘மூன்றாவது மனிதனில் நான் முன் வைத் திருக்கிறேன் என்பதை முணுமுணுப் புக் காரர்’ தெரிஞ்சு கொள்ள வேணும். மேற் சொல்லப் பட்ட விசயங்கள் கிரகிக்கப் படுகின்ற போது முணுமுணுப்புக் காரர் என் மீது சுமத்திய மூன்ற குற்றங்களில் இரண்டும் அவர் எனக்கு வழங்கிய உன்னதமான போதனைகளும் சாக் கடைக் குள் எறியப்படவேண்டியவை ஆகின்றன.
இனி ஆதங்கத்தோடு இன்னொரு விசயத்தைச் சொல்ல வேண்டும்.
விஜயன், கவனிப் புக்குரிய எழுத்தாளன்' என்று கூறும் பிரதி, மல்லிகைப் பந்தல் நடத்திய அஞ்சலி கூட்டத்தில் நான் அழுதே விட்டேன் என்று நக்கல் வேறு அடித்துள்ளார்.

நான் ԼՕւ (6ւք அலி ல நண்பர்களான ராஜழரீகாந்தன், மு.பஷர் ஆகியோர் கூட இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பேச முடியாமல் நா தளதளத்துக் கணிகள் கலங்கிப் போனார்கள்.
மல்லிகைப் பந்தல் கூட்டத்திற்கு எனக்கு அழைப்புக் கூட விடுக்கப்
பட்டிருக்கவில்லை. பல அலுவல்கள் மத் தியிலும் அதில கலந்து கொணி டேனி திடீரென, பேசச்
சொன்னார்கள். எனக்கும் ஷம்ஸ"க்கும் இடையிலான மன நெகிழ்வு தரும் சில சம்பவங்களைச் சொன்னேன். கண்கள் பனித்து விட்டன. உறவும் பிரிவும் தரும் வேதனை இது. இது ஒர் இயல்பான விசயம். எழுத்தாளர்களாகிய ராஜ ரீகாந்தனோ, பவழிரோ, நானோ, இதற்கு விதி விலக்கானவர்கள் அல்ல.
விபவி கூட்டம் விவகாரமே வேறு ஆணித்தரமான கருத்துகளை முன் வைக்கின்ற இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருபவர்கள் அவர்கள் . ஷம்ஸ்"க்கு அஞ்சலியாகவும், அதே நேரத்தில் அவருடைய படைப்புகள் குறித்த கருதி துக் களையும் மேலோட்டமாகப் பேசும் படியாகவும் கேட்டிருந்தார்கள். அதனால் உரை ஆய்வுரீதியாக அமைந்து விட்டது. ஓர் அஞ்சலி கூட்டத்தில் இதெல்லாம் அநாவசியம் எனிறு எண் ணிடம் குறைபட்டுக் கொண்டவர்களும் உண்டு. அது வேறு. நான் பேசாதவற்றைப் பேசியதாகக் கூறி முகத்தில் சேறு 3, 6) g5 வேறு. என்ன்ைக கவனிப் புக் குரிய எழுத தாளணி
என்கிறார். இது வெறும் ஜாலவார்த்தை என்பதை அறிவேன். விஜயன், அவர்களால் கவனிக்கப் படாமலே போய்விட்டதொரு எழுத்தாளன் என்பது தான் உண்மை.
எனது 'மன நதியின சிறு அலைகள்’ நாவல குறித் துப் பேராசிரியர் கா. சிவதி தம் பி,
செ.யோகநாதன், கவிஞர் இக்பால் போன ற நல ல விமர்சகர்கள் நல்லதொரு சிறந்த நாவல் என மகுடம் சூட் டி விட்டார்கள் . ஆனால , மல் லி கையோ, மல லிகை யரில் தொடர்ந்து எழுதும் மேமன் கவியோ, மற்றைய பத்திரிகை எழுத்தாளர்களோ இதுவரை ஒருவர் கூட, அதுபற்றி எழுதவில்லை.
இதற்காக விஜயன் கவலைப் படவில்லை. ஏனெனில் ஒரு போதும் காலாவதியாகாத DIT stas 6mig உரைகல்லில் இன்றைய படைப்புகள் பரீட் சிக் கப் படுகினி ற போது பிரகாசிக்கின்ற படைப்புகளில் மன
நதியின் சிறு அலைகள் ஒளிர்வுடன்
மிளிரும் என்ற படைப்புக் கர்வம் எனக்கு இருக்கிறது. ஏனெனில் மார்சிஸம் காலாவதியாகிவிட்டது என்ற குழுவைச் சேர்ந்தவன் அல்ல விஜயன். அதன்
தளத்தின் மீது நின்று அதனை
உளர் வாங் குபவனி என பதை
முணுமுணுப்புக்காரர் உணர்ந்தால் சரி.
இதை நான் அழுத்தமாக ச் சொல்வதற்குக் காரணம் எனக்கு
மார்கஸிசத்தின் மீதுள்ள உறுதியான
பற்றை வெளிப்படுத்துவதற்காகத் தான்.
O
(53)

Page 29
IO.
Il II.
12.
3.
14
IS.
6.
.
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு ~ புதிய அநபவத் தகவல்கள், தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநபவ முத்திரைகள் ~ டொமினிக் ஜீவாவின் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர்
மண்ணின் மலர்கள் ~ (யாழ்ப்பாணப் பல்கலைக கழக 13 மாணவ - மாணவியரத சிறுகதைகள்)
நானும் எனது நாவல்களும் ~ செங்கை ஆழியான் கிழக்கிலங்கைக் கிராமியம் ~ ரமீஸ் அப்தல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை) டொமினிக் ஜீவா
முனியப்ப தாசன் கதைகள் ~ முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) ~ பாலரஞ்சனி
இப்படியும் ஒருவன் - மா. பாலசிங்கம்
அட்டைப் படங்கள் (மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) சேலை ~ முல்லையூரான் மல்லிகைச் சிறுகதைகள் ~ செங்கை ஆழியான் (30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) நிலக்கிளி ~ பாலமனோகரன் நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் ~ தொகுப்பு: டொமினிக் ஜீவா மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) தயாராகின்றது. தொகுப்பு ~ செங்கை ஆழியான்
மல்லிகைப் பந்தல் சமீபத்தில் மேெல வெளியிட்டுள்ள நூல்கள்
விலை: 250/-
ഖിഞ്ഞുബ: 14o/= விலை: 180/=
விலை: 175/=
விலை: 11 of-r விலை: 80/-
விலை; 100/-
650so: I. I. off
55,06): 1so/F
விலை: 80/-
6550so: Iso/F
விலை: 175/=
55soso: 1soff
விலை: 275/=
விலை: 140/=
55,06): 1sof
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
G54)
 
 

ஒரு கருத்து
நான் தோழர் ஜீவானந்தத்தைச் சந்திக்கவேயில்லை எனத் திருவாளர் எஸ்.பொ. சாதிக்கிறார். சென்னையில் மறுபடியும் 1961ல் ஜீவாவைச் சந்தித்த சமயம் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி எனச் சந்தோஷப்பட்டார்.
கட்சித் தோழர் ஒருவர் எத்தனை பெரிய தலைவராக இருந்தாலும் வேறொரு பிரதேசத்திற்கு வந்தால் முதலில் அப் பிரதேசச் செயலாளரைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும். இது கட்சியினரின் எழுதப்படாத மரபு. அதற்கமைய அன்று யாழ்மாவட்டக் கட்சிச் செயலாளராக இயங்கியவர் தோழர் கார்த்திகேசன், அவர் வீட்டுக்கும் எனது இல்லத்திற்கும் ஐந்து நிமிஷ நடை துரம்,
அவரது வீட்டிற்கு வந்த தோழர் ஜீவாவைச் சந்தித்தது ஒரு இயல்பான நிகழ்ச்சி. μου தோழர்கள் இருந்தனர். அவர்களில் அநேகமானோர் இன்று இல்லை. இருப்பவர் தோழர் கணேஷ்,
அவர் இப்படிச் சொல்கிறார். நம்புவது உங்கள் பொறுப்பு, சந்தித்தது மாத்திரமல்ல, யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டத்தில் முன் வரிசையிலிருந்து அவரது பேச்சை ரசித்தவர்களில் நானும் ஒருவன். இதையொட்டியே எனது பெயரில் கூட மாற்றம் ஏற்பட்டது. இது சம்பந்தமான முழுத் தகவல்களையும் ஞானம் சஞ்சிகை டிசம்பர் இதழில், பேட்டியில் கூறுகின்றார் 8as, கணேஷ் அவர்கள். •
மற்றும் தினசரி அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்கி வருபவன் நான். ஊத்தைத் தனமான அவ துறுகளுக்கு நான் எப்பொழுதுமே பதிலளிப்பவனுமல்ல, என் மன நேர்மையைத் தெரிந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். -
டொமினிக் ஜீவா
கே. கணேஷ் சொல்லுகின்றார்:-
கருமமே கண்ணாக இருந்த கே. ராமநாதன், நம் மதிப்புக்குரிய மாஸ்டர் கார்த்திகேசன் போன்றோர் குறித்து விரிவான கட்டுரைகளை உரியவர்களைக் கொண்டு எழுதச் சொல்லலாம். அவ் வகையில் நமது அன்பர் த. இராஜகோபாலன் உதவுவார், என எண்ணுகிறேன். இவருடனும் அவர் நெருங்கிப் பழகியவர். அவர் அண்மையில் தான் என்னுடன் தொடர்பு கொண்டார். அவருடனும் எஸ். பொ. உடனும் அரியமுடனும் நீங்களும் நானும் நல்லுார்த் திருவிழாச் சந்தடியில் முதன் முறையாக அரசியல் சுலோகங்களை யாழ் நகர்ச் சந்தைச் சாவடியிலும் பேரூந்து, தொடர் வண்டி நிலையங்கள்
எதிரிலும் சுவர்களில் காவிநிறப் பூச்சில் வரைந்ததையும் மாஸ்டர் கார்த்தியின் இல்லத்தின்
முன் முகப்பறை விறாந்தையில் ப. ஜிவானந்தம், மற்றும் நீர்வேலி எஸ். கே. கந்தையா கார்த்தி ஆகியோருடன் தோழர்கள் அரியரத்தினம், மாஸ்டர் மகாலிங்கம் குறிப்பிட்ட அன்பர் த. இராஜகோபாலன், நீங்கள உட்பட பலருடன் இலக்கிய, அரசியல் விவாதங்கள் நடைபெற்றமையும் நினைவுக்கு வருகின்றன. W
கே. கணேஷ்,
(55)

Page 30
്റ്റ്യ് മറ്റു திான்"ழுேதுகோலை
്യ ില്ക്കര് :(?:
。い りD o poog)'
பள்ளத்தே வீழ்ந்தோர்மேல் பரிவு கொண்ட படைப்பாளி ‘பொற் சிறைப்ரில் வாடு வோரை
உள்ளத்தால் நேசிக்கும் உயர்பண்பாளார். ஓயாத உழைப்பாளி உறவாய் நாடிக் 66്698്ത് ഉt) pgതീ Upaി. 19ത്u് சுடட்டத்தே கலகலப்பரின் மையம். அன்பு. வெள்ளத்தான் தெணயார்பல் வாாண்டு வாழ வேஜம் அவன் பேரென்றும் நிலைக்க வேணும்!
 
 
 
 
 

மல்லிகை நூலகம்
IDதிப்புரைக் குறிப்புகள்
-செல்லக்கணினு
தரிசனம்
சிறுகதைத் தொகுதி நூலாசிரியர்: நந்தி (பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்) வெளியீடு குமரன் புத்தக இல்லம், சென்னை
காத்திரமான சிறுகதைகளை படித்த மனப்பூரிப்பை தரக்கூடிய தொகுப்பு தரிசனம். புத்தகத்தின் வடிவமைப்பு, நந்தியின் பரந்த விசய அடக்கம், நான்கு தசாப்தங்களுக்கு மேலாக புனைகதைத் துறையில் பெற்று வரும் அனுபவம் என்பன கையாண்டுள்ள நடையில் பொலிந்து முழுப் புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடிக்கத் துாண்டுகின்றன!
படைப்பைப் புனைவு செய்த தமிழ் மொழியில் ஆசிரியருக்குள்ள வ* ச’ சு க கதைகளில் அங்குமிங்குமாகத் தூவப் பட்டுள்ள உவமானங்கள், நளினங்கள், நயங்கள் என்பவற்றால் துல்லியமாகத் துலங்குகின்றது.
Z
கருப்பையில் நோயுற்ற ஒரு பெண்ணின் மாத சுகவீனம்”. ‘சொற்கள் பூக்களாகவும், கற்களாகவும் வந்து விழுந்தன”. ‘உடுக்கத் துண்டில்லாதவன் பிச்சையாகக் கிடைத்த எந்தச் சீலையையும் சுற்றி
அழகு பார்ப்பது போல.’ இவைகள் கதைகளின் ஓட்டத்திற்கு விசையாக அமைகின்றன.
1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே கதைகள் பிரசுரமாகியிருப்பதைக் * கவனிக்க
முடிகின்றது. இருந்தும், சில கதைகள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய கருத்துப் பொதுமையைக் கொண்டவையாகப் பின்னப் பட்டிருக்கின்றன. தீர்க்கப் படாத எந்தவொரு பிரச்சனையும் சமகாலப் பிரச்சினை தான்! திருப்பித் திருப்பி எழுத்தாளர்கள் ஒன்றையே கையாளுகின்றனர் என மேல் தட்டு விமர்சகர்கள் குறைகாண்பது அர்த்தமற்றது. இத்தகைய அடிகளை சாதி, வறுமை என்பன பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
நகமும் சதையுமாக ஈழத்து முற்போக்கு அணியில் ஒட்டி விட்ட நந்தியின் தரிசனம் தொகுப்பில் சாதியச் சாடலான இரு கதைகள் இடம் பிடித்திருக்கின்றன. காலங்கள் ராகங்கள், இருட்டில் இருந்து. ஆகியவை சாதி அநுட்டானத்தின் உச்சக் கட்டத்தைச் சொல்கின்றன. கம்பன் கழகம் மலசலகூடமிருந்த இடமொன்றில் அமைக்கப் பட்டிருப்பதாக காலங்கள் ராகங்கள் என்ற கதையில் சொல்லப் பட்டிருக்கின்றது. இப்போதைய வாசகனுக்கு இதுவொரு
@
s

Page 31
:
அபூர்வமான செய்தி அல்ல! யாழ் நகரின் மேற்குப் பகுதியிலிருந்த கடற்கரை வீதி இப்பொழுது “முத்தமிழ் விதி'யாக நாமம் பெற்றுள்ளது. இதை வீதியைச் சார்ந்த சூழலில் அன்றும் இன்றும் ஒடுக்கப் பட்ட பஞ்சம மக்களே வாழுகின்றனர்! மலமெடுத்த அந்தோனியின் மகன் கிரகோரியை மேர்ப் பார்வையாளனாகவும், அவனுடைய மகன் மரியதாசனை பூந்தோட்டப் பராமரிப் பாளனாகவும் ஆசிரியர் கரிசனையோடு புனைந்து பறையர் சமூகத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றார். இந்த நிலையில் சவேரி நடராசா சர்மாவிடம் தான் சங்கீதம் கற்கவேண்டுமா? என்ற வினா வட புலத்து சமூக நிலையை நன்கு புரிதல் செய்துள்ள வாசகனுக்கு ஏற்படாதா! ஈழத்துச் சங்கீத உலகை ஆட்டிப் படைத்த துரோணர்கள் துரத்தப் பட்டு விட்டனர்.இதுதான் இன்றைய ஈழத்துச் சங்கீத
உலக நிலை!
‘இருட்டிலிருந்து.’ என்ற சிறுகதையில் டாக்டர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் அனுபவ ரீதியாகக் காட்டப் பட்டுள்ளது. சமகாலத் தமிழ்ச் சூழலுக்குப் கோதை போன்ற இளம் பெண்கள் மிகவும் அவசியம். சொல்லப்படும் தொனி மிகவும் விரிந்திருப்பதால் இதுவொரு எல்லை தாண்டிய சிறுகதை என்ற மயக்கத்தைப் பிறப்பிக்கின்றது.
தேடப் பட்ட நாய் உயிரோடு திரும்ப காணாமல் போன மணிவண்ணனின் உடல் பிரேதமாக வருவதாக மீண்டும் கேள்விகள் உருவாகின்றன’ என்ற சிறுகதையில் காட்டப் பட்டிருப்பது தமிழ் வாசகரை தம்னிலை குறித்து எண்ணவைக்கிறது.
ஆசிரியரின் முற்போக்குத் தடத்தின் 'இருத்தலை நிறுவி நிற்கின்றது நந்தியின்
தரிசனம்’ சிறுகதைத் தொகுதி.
சத்திய தரிசனம்
சிறுகதைத் தொகுதி gbfltlulă : dirii வெளியீடு : வடக்குப்புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் தமிழ் மொழி
அமுலாக்கல் அமைச்சின் அனுசரணையுடன் யாழ் இலக்கிய வட்டம்.
முன்னோடிகள், மறுமலர்ச்சியாளர்கள், புத்தெழுச்சியூட்டியோர், தமிழ்த் தேசியவாதிகள் இன்னோரன்ன இலக்கிய பரம்பரைகளைக் கண்ட, எழுத்துக்களை அனுபவித்த மூத்த எழுத்தாளர் சிற்பியின் சிறுகதைத் தொகுப்பு சத்திய தரிசனம் இதில் பதினொரு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தென்னிந்தியச் சஞ்சிகையான தீபம் உட்பட ஈழத்துப் பல்வேறு ஏடுகளில் பிரசுரம் கண்ட சிறுகதைகளோடு சொந்த மண்’ என்ற புதிய கதையொன்றும் இடம் பிடித்துள்ளது.
அதிபர் சந்தானலெட்சுமி, வழுக்கி விழுந்தவள் என்ற சங்கதி அம்பலமானதையிட்டுத் தனது அதிபர் பதவியை ராஜினாமாச் செய்யத் தீர்மானித்ததான சிற்பியின் ‘இழப்பு என்ற கதைப் புனைவைப் பெண்ணிலைவாதிகள், ஆணின் குற்றத்தை தவறாகவும்’ பெண்ணினுடையதை ‘பிழை யாகவும், கணக்கிடும் சமூக அமைப்பிற்கு இக்கதை மேலும் காற்றுாதி எரியவைக்கின்றது எனக் குழம்பலாம். ஆனால் சந்தான லட்சுமி நாளாந்தம் புழங்கவேண்டிய சூழலை மனங்கொள்ளும் பொழுது ஆசிரியர் தீர்ப்பு சரியெனவே படுகிறது.
@

ళ్ల வாசகனின் மனதில் தைக்கும் கதை இழப்பு மானிட
அக்கறையான புனைவு!
‘’ என்னுடைய மான, அவமானத்திற்கு நான் கொடுத்த முக்கியத்துவம், மற்றவர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப் புக் களைப் பற்றிச் சிந்திப்பதை தடுத்துவிட்டதே!' பண்டிதர் பரமசாமியின் மன அழுத்தத்தை ‘புரை தீர்ந்த நன்மை’ என்ற கதையின் மூலமாக இப்படியாக வெளிப்படுத்தி, வாசகனை ஆசிரியர் மானுட நேசத்திற்குத் திசைதிருப்ப எத்தனித்துள்ளார்கள்.
மக்கள் தொண்டு, சத்திய தரிசனம், ஒரு திருட்டின் கதை, மறத்திற்கும் அன்பே துணை ஆகிய கதைகள் தொகுப்பை மேலும் மேன்மைப் படுத்துகின்றன. 'சொந்த மண்' என்ற கதையில் சமகாலப் பதிவுகள் நிறையவே இருக்கின்றன. ஜனரஞ்சகத்தைத் தூண்டும் சிறந்த தொகுப்பு
அணிதிரளும் சிறு அலைகள்
16Mb in 6fl : 6gb6bi nobilišlöbio வெளியீடு : யாழ்மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம். விலை : சாதாரண பதிப்பு: டூபா - 110 of6ơLjólin: (ita — 130
ஒரு சலூன் உரிமையாளனின் பார்வையில் சொல்லப்படும் ஈழத்தின் வடபுலக் கடலோரக் கிராமமொன்றில் வாழும் மீனவச் சமூகத்தின் வாழ்வியல் நாவலே அணிதிரளும் சிறு அலைகள். அறுபதுகளின் கடைக் கூற்றையும், எழுபதுகளின் முற் கூற்றையும் நிகழ்வுக்குரிய காலமாக ஆசிரியரால் சுட்டப் பட்டுள்ளது.
மீனவத் தொழிலாளர்கள் பெரும்பாலும் இரவையே தமது தொழில் புரி காலமாகப் பாவிப்பதுண்டு. பகல் நேரம் அவர்களுக்கு ஓய்வு.
தாயம் விளையாடுதல், கடதாசிக் கூட்டம் விளையாடுதல், உதைபந்தாட்டம், சினிமா பார்த்தல் ஆகியவற்றிலும் மற்றும் போதைப் பொருட்களைப் பாவிப்பதிலும் ஓய்வு நேரத்தைக் கழிப்பதுண்டு. இந் நாவலின் பிரதான பாத்திரமாக விளங்கும் கணபதியர் இந்
நிலைப்பாட்டிலிருந்து மீனவர்களை விடுவித்து, அவர்களைப் புதியதோர் தடத்தில் பயணிக்க
வைக்க எத்தனிக்கிறார். எத்தனிப்பு சாத்தியமானதாக நாவல் புனையப் பட்டிருக்கின்றது. இதற்கான குருசேத்திரமாக கணபதியரின் சலூன் விளங்குகின்றது. தொழில் செய்யும் பொழுதும், ஓய்வாக இருக்கும் பொழுதும் கணபதியரின் பேச்சு மீனவத் தொழிலாளிகள், அவர்களது உன்னத வாழ்வைச் சம்மாட்டி மாருக்குத் தாரை வார்ப்பதை உணர்த்துகின்றது. தொழிலாளரின் மனதில் முற்போக்கான சிந்தனைகள் கருக்கட்டுகின்றன. இதனை உணர்ந்த
(59)

Page 32
சம்மாட்டிமார் அதன் சூத்திர தாரியான கண்பதியரைப் பழிவாங்க அணிதிரளுகின்றனர். அவரைப் பகிஷ்கரிக்கின்றனர். கணபதியர் தனது இலக்கிலிருந்து சென்ரி மீற்றர் கூட ஒதுங்காமல் செயல்படுகிறார். தொழிலாளர் அணி பெரும் அலையாகக் கெம்பி எழுகின்றது. இததான் கதை!
வளர்த்தெடுக்கும் களத்தில் ஏற்படும் சித்திரமாகப் பதியும்படியாக காற்றுக் காலத்தில் வியாபார நிலைய அனைத த லுமி சித்திரிப்பது ஒரு
d5LiqujLD 365 T35, சோழகக் காற்றுக் நினைவு படுத் தும்
பருவகாலங்களில கதை மாற்றங்களை வாசகனின் மனதில் ஆசிரியர் சித்திரிக்கிறார். சோழகக் சிறுவர்களது கைகளில் மட்டுமன்றி, ங்கள், பொட்டுக் கடைகள் பட்டங்கள் காணப்படுவதாகச் கரையோரக் கிராமத்திற்குக் அமைவதாக மட்டுமின்றிச் A காலத்தையும் வாசகனுக்கு பதிவாகவும் சேவிக்கிறது.
னுக்குச் சிகை அலங்காரம் தொழிலாளிக்கு ஏற்படும் யதார்தி த L!. ff 6ìi tDT đ6
சிறுவனொருவ செய்வதில் , ஒரு & சிரமங்களை விபரிப்பது இருக்கின்றது.
* சமைந்தவளாக’, இத்தகைய மண்சார் பதப்பிர விடுவது போன்றிருக்கின்றது.
“கழுத்தாங்கட்டை’, ‘சலார்’ யோகங்கள் மனப் புழுதியைத் தட்டி
நாவல் வளர்ப்பில் பாத்திரங்களின் உரையாடல் ஒறுப்பாகவும், ஆசிரியரது உரை மிகுவாகவும் இருக்கின்றது. படைப்பை எந்தவகையிலும் சிங்காரப் படுத்தாமல், வாழ்வின் மெய்ம்மை நிலையை காட்டுவதில் ஆசிரியர் மிகவும் மினக்கெட்டுள்ளார். கவிதை நடை வாசக ரஞ்சகத்தைத் தூண்டுவதாகவுள்ளது.
இந்நாவலின் ஆசிரியர் தேவிபரமலிங்கம் இலக்கியத்தின் பல கூறுகளில் தனது எழுத்தைப் பயணிக்க வைத்தவர். கவிஞர், கதாசிரியர், இதழியலாளர், விமர்சகர் இந்த அனுபவ ஆளுமை இந்நாவலில் அவரால் நிறுவப்பட்டுள்ளது.
படைப்பொன்றிற்கு யூலியஸ் சீஸரின் வித்துடலின் முன் மார்க் அன்ரனி நிகழ்த்திய சொற் பொழிவின் சக்தி இருக்க வேண்டும். இந் நாவலில் உலாவும் கணபதியரை இன்னுமொரு மார்க் அன்ரனியாகக் கருதலாம்!
இந்நாவலின் வெளியீட்டாளர்களான, யாழ் மாவட்டச் சிகை ஒப்பனையாளர் சங்கத்தினரைப் பாராட்ட வேண்டும். தனது உறுப்பினரொருவரின் நாவலைத் துணிந்து வெளியிட்டதன் மூலாமாக அவர்கள் ஈழத்து இலக்கிய உலகிற்கு பெருந்தொண்டு புரிந்திருக்கின்றனர். w w
வர்க்கிய நாவல்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியது அணி திரளும் சிறு அலைகள்
@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம்பவாரிதி ஜெயராஜ் ஞானம் சஞ்சிகையில் எழுதியிருந்த 'கிளாக்கர் புத்தி கட்டுரையைப் படித்துப் பார்த்தீர்களா? அவர் கருத்தின் உள்ளடக்கம் பற்றி என்ன கருதுகிறீர்கள்? சங்கானை ஆர்.அர்ச்சுனன்.
ஒரு சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை பற்றிய கருத்துக்கள் அதே சஞ்சிகையில் வெளி வருவதுதான் இலக்கிய நியாயம். ஆனால், கேள்வி தூண்டிலில் அல்லவா கேட்கப்படுகின்றது? பதில் சொல்வது என்து தார்மீகக் கடமையாகி விட்டது. கருத்துச் சொல்வது யாருக்குமே ஜனநாயக உரிமை, எதிர்க் கருத்துகள் கூறுவது கூட அதே ஜனநாயக உரிமைதான்.
நட்பாகப் புழங்குவது - பழகுவது - மதிப்பது என்பது குறைந்தபட்ச நாகரிகங்களில் ஒன்று. அதற்காக சகல வற்றிலும் கருத்தொற்றுமை உண்டு எனக் கருதுவது சரியான வாதமாகப் படவில்லை. ஜெயராஜ் அவர்களது ஞானம் கட்டுரையில் மாத்திரமல்ல, அவரது மேடைக் கருத்துக்கள் பலவற்றிலும் எனக்கு உடன் பாடில்லை. அதற்காகத் தனிப்பட்ட பகை உணர்வும் இல்லை.
பாரதி, புதுமைப் பித்தன் ஏன் ஜெயகாந்தன்கள் கூட நம் மண்ணில் தோன்றவில்லையே என ஆதங்கப் படுகிறார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தரும சிவராமு அவர்கள் சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் செய்த இலக்கியச் சாதனைகள் பிரமிப்பூட்டுவன. நமது தளைய சிங்கம் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுத் தடம் பதித்து, புதிய தத்துவ தரிசனத்திற்குத் தமிழ்ப்
படைப்பு மொழியை அழைத்துச் சென்றவர். இவர்களது
கருத்துக்கள் எனக்கு உடன் பாடானவை அல்ல. நான் மதிக்கும் டில்லித் தமிழ் எழுத்தாதளர் அம்பை ஒரு நேர்ப் பேச்சில் ‘டானியல் அவர்களுடன் நான் ஒர் ஐந்து நிமிடம்
மனம் விட்டு உரையாடி, அவருடன் தேநீர் அருந்த
வில்லையே என்ற கவலை என் நெஞ்சை அரிக்கிறது'. எனக் குறிப்பிட்டுள்ளார். ‘தலித் இலக்கியத்தின் முன்னோடி' என அவர் தமிழகப் புத்தி ஜீவிகளால் பாராட்டப் பட்டுள்ளார். உலகத் தரத்திற்கு நம்மிடையே ஒருவரும் இல்லையே என அங்கலாய்ப்பது சரியான பார்வையாகாது. ஏன் மல்லிகையையே எடுத்துக்

Page 33
சிலாபம்
கொள்ளுங்கள். வல்லிக் கண்ணன், ரகுநாதன், செல்லப்பா, விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன் ஆகியோர் நடத்தித் தோல்வி கண்ட சிற்றிலக்கிய ஏடுகளின் வரிசையில் இன்னும், இன்றும் தொடர்தும் வெளிவந்து கொண்டிருக்கும் ஒர் இலக்கிய ஏடு மல்லிகை தானே!
85.5 T. di
நான் சில சமயங்களில் ஆழமாக யோசிப்பதுண்டு. இந்த மண்ணுக்குச் சில பிரத்தியேக குணாம்சங்கள் உண்டு. உலகமே நமது ஆற்றலைப் பார்த்து வியந்து பூரித்துப் போய் புள காங் கசிதம் அடைந்து மகிழ்ந்தாலும், நம்மவர்கள் சிலர் இதை ஏற்றுக் கொள்வதில் ஏனோ பின் நிற்கின்றனர். இந்த மண்ணுக்கு இப்படியான மகத்துவமும் உண்டு.
‘சோனியா காந்தரி வெளி நாட்டுக்காரி. அவர் இந்திய அரசியல் தலைமைக்கு லாயக்கற்றவர்.' என ஜெயலலிதா கூறியிருக்கின்றாரே, இது பற்றி என்ன கருதுகிறீர்கள்.
5. FL(Satuett.
பிறப்பால் மாத்திரம் ஒருவரை எடை போடுவது பரந்து வரும் இன்றை சமுதாயக் கருத்தோட் டத்திற்கு உகந்ததல்ல. சோனியா இந்திய மக்களாலேயே பாராளு மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர். ஒர் அரசியல் கட்சியின் தலைவர். இந்தியக் குடிமகனின் மனைவி. இந்தப் பின்னணியில் தான்
நாம் சோனியாவின் பிரச்சனையை
நோக்கவேண்டும்.
சரி, சோனியா இத்தாலிக்காரி. வெளியே இருந்து வந்தவர்.
ஜெயலலிதா மாத்திரம் மண்ணின்
மகளா, என்ன? ஆரியர்கள் என்பவர்கள் வந்தேறு குடிகள். மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் உள்நுழைந்தவர்கள். அந்த வந்தேறு குடிகளின் பரம் பையில் வந்தவர் தான் ஜெயலலிதா. இவர் முன்னர் வந்து இடம் பிடித்தவர். சோனியா பின்னர் வந்து சேர்ந்தவர். பார்க்கப் போனால் சோனியா அந்நியர் எனக் குற்றம் சாட்ட ஜெயலலிதாவுக்குத் தார்மீக உரிமையேதுமில்லை.
சமீபத்தில் மறைந்த பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களை நேரில் சந்தித்துள்ளிர்களா? அவரைப் பற்றிய உங்களது அபிப்பிராயம் 6T6Greor?
தெஹிவளை எஸ்.சடகோபன்.
தமிழ் உலகில் இவரொரு சைவப் பெருங்கடல் . ஆழ்ந்த புலமை மரிக் கவர். இவரது மறைவு தமிழருக்குப் பேரிழப்பு. இவரைக் கம்பன் விழாவிலே ஜெயராஜ்
அவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தி
வைத்தார். பார்வையற்ற நிலையிலும் கடல் கடந்து வந்து இலக்கிய விழாவில் கலந்து கொண்டுள்ள இந்த மூதறிஞரின் தமிழ்ப் பற்றை
(62)

நினைத்து வியந்து போனேன். அன்னாரின் இழப்பிற்காக மல்லிகை தனது ஆழ்ந்த துயரத் தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
سلسمسمحسخة
நீண்ட நாட்களாக நீங்கள் தமிழகத்திற்குச் செல்லவில்லையே, என்ன காரணம்?
வெள்ளவத்தை ம.மதுசூதனன்.
காரணம் ஒன்றுமில்லை. நினைத்தவுடன் இன்று ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வரலாம். ஆனால், தமிழகத்திற்கு அப்படிப் போய் வர முடியாது. அத்தனை விசாக் கெடுபிடிகள். இந்திய அரசு நம்மைப் போன்ற எழுத்தாளர்கள் தமது நாட்டிற்குச் சென்று வர,
கெடுபிடிகளைத் தளர்த் திக் கொண்டால் நல்லது. அது தமிழுக்கு ஆக் கபூர்வnr ன உதவி
செய்ததாகவும், அமையும்.
மல்லிகையின் வளர்ச்சி இன்று எந்த நிலையிலுள்ளது?
கண்டி ஆர்.முருகவேள்
புதிய புதிய பிரதேசங்களை Guiu só 6) mr Ló மல் லரிகை செனர் றடைகிறது. மெத்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. புதுப் 니 இளந் தலைமுறைப் படைப்பாளிகள் மல்லிகையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மல் லரிகை இன்று அடுத்த தலைமுறையினைப் பற்றித்த தான்
வெள்ளவத்தையில் விநோதன் ஞாபகார்த்த மண்டபத்தில் தெணியான் அவர்களுக்கு மணி விழாக் கொண்டாடப் பெற்றது. அந்த மாலி விழாக் காட்சிகளில் ஒரு சம்பவம் இது.
சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
ԼO Այl ւ ւգ Ա ԼD ஐரோப்பாவுக்குப் போகும் அழைப்புக்கள் ஏதாவது க ைட த துளி எா தா ? அப்படியானால் எப்பொழுது போவதற்கு உத்தேசம்?
வத்தளை ச.ஈஸ்வரன்.
சுவிஸ0க்கு வரச் சொல்லி ஒர் அழைப்பு. கனடா வரும்படி இன்னோர் அழைப்பு: ஜனவரியில் மெல்போனில் இலக்சிய விழாவில் கலந்துகொள்ள

Page 34
வேண்டி ஒரு கடித அழைப்பு எனக்கு ஊர் உலகம் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற மன ஆசை இல்லை. அத்தியா வசியமேற்பட்டால் தட்டிக் கழிக்க வேணர் டு மென் ற மனப் பான்மையுமில்லை. நாட்கள் இன்னு மிருக்கின்றன. பார்ப்போமே.
கடல் கடந்தும் , கணி டம் தாணர் டியும் இனி னும் சிலர் உங்களைத் திட்டமிட்டுத் தாக்கித்
திரிகின்றனரே, என்ன காரணம் அதற்கு? வவுனியா ப.சித்திரவேல்.
இடையறாது இயங் கரிக்
கொண்டிருக்கிறேன் என்பது தான் அதற்குக் காரணம். உங்களுக்கு ஒர் ரகசியம் சொல்லட்டுமா?
இப்படியாக என்னைத் தாக்கி அபிப்பிராயம் சொல்பவர்களால் தான் நார்ை இனி னும் இன்னும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறேன். ஒரு வயதிற்கு மேலே, ஒரு பிரபலத்திற்கு மேலே சிலர் என்னைத் திட்டுவதில் கூட, ஒர் ஆத்ம சுகம் தெரிகிறது. அந்தத் திட்டுப் புராண நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . சமீபத் தில் கூட, கனடாவிலும் ஜேர்மனியிலும் இருந்து வந்தவர்கள், 'உங்களை பூராவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்’ எனச் சொல் லசி எனது ஆக்கங்கள் அத்தனையையும் அள்ளிக் கொண்டு
போனார்கள். இந்தப் புகழும் பிரபலமும் என்னைத் தொடர்ந்து திட்டி வருகிறவர்களால் தானே எனக்குக் கிட்டி வருகிறது!
வரும் அக்டோபரில் கொழும்பில் நடைபெறவுள்ள அகில உலகத் தமிழ் இஸ்லாமிய விழாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீர்கொழும்பு எஸ்.நூர்தீன்
வெறும் வர்த்தகச் சமூகமாகக்
கணிக்கப் பட்டு வந்த முஸ்லிம்
சமூகத்தைக் கல்விச் சமூகமாகப் புனர்நிர்மானம் செய்வித்தவர். பதுரு தீன் முஹமட் அவர்கள் அந்த வளர்ந்து வந்த கல்விச் சமூகத்தை அரசியல் சிந்தனையுடன் இலக்கிய ஆளுமை கொண்ட சமூகமாக உருமாற்றியவர் அஷரஃப் அவர்கள். அவர் வழி வந்தவர்கள் இவ்விழாவுக்கு முன் கையெடுத்து உழைத்து வருகின்றனர், மிக்க மகிழ்ச்சி. இந்த இஸ்லாமிய இலக்கிய விழா மெய்யான இலக்கிய விழாவாக வெற்றிகரமாக நடந்து முடிந்தால், இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல, தமிழ்ச் சமூகத்துப் புத்தி ஜீவிகளும், கலைஞர்களும் அதனர் பெறுபேறுகளை வருங் காலத் தில் Ց ՈI6ն 6Ծ» ւசெய்வார்கள் என்பது மட்டும் உறுதியிலும் உறுதி.
201 - 1/1, ஜீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U. K.பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
(64)

ல. 4.குருனாகல் வீதி,
வப் நிலையத்திற்கு அன்ைமை
ட்டளர்களும் தயவுசெய்து தொடர்
காட்சிக்கு வைத்து விற்பனை ெ