கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.02

Page 1
|| ||
| co.
" | || || || | VIII||||||||| |
|
|| || || ||||W | || W I AV | IM
L In
W | "7^\| (TTV"|"|"| || || ||
| I. | |
W|N|WT|||||||||\W||||||| |NNN \ / V|
If T TIII Wyw Y וחוד-החן
|I|||||W
| | ||
NM e Po I W
T, TM TIT YMIR IV, | || || WM
| || ||
|||||||| I V]
|W ||||W
| |
VIIIII SU 罐
R
 

OLTÓIRÍīči ট্রা ।
፫፻፶፫፻፷፰;
蕾 Smና է: NÄ *、
: ::: էինել է ܒ క్రైన్స్త
■ 2004 айырау — 20;" |

Page 2
'%രe ޕޯޗުޖ ഗ്ഗ് ( ീർ %ർ ീle ? 10 ബ്ര"
THE DIGITAC SERVICES WE PROUDE
Digita? Piet 12"X8” Maxiure size i 0 oli. Arafagatafie dust agud Benitatek eguruecifiegu.
Priget te Pitit seruiced.
Certaet Cauds ad laudex þPite. Ceeting Calds/Ftate Pitts/Caleude Pitts/Aguilt. Pitts. Ceispatible liput & 0uiput ledia (Floppy Disk, CD-Rom, CD-R,/RW, M0, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, Compact Flash, Smart Media) Digita2 Caserua Caiud Pitig. Celoguot Megative, Positive, B/U apud Sepia Megatiue Puigu tiug.
OTERSERUCES Develeping & Pitig e is i 20 Miyu Pitig e Endaugenets (5"?X7” te 2”XI8”) Pasóþeut / Uisa þkete / B/U þketos ir 0 iki.
| Fient Reeds / Canteus / Battelies / CD / Floppy / Aehuwt Sales.
Fasting of Pictures (lipoltted) 拳 ᏔᏕ" Caiguatig Sewice8. ჯაზ Ueddig AChu Bijdig. RYʼ ب"النع الأغنم F0R ALL Y0UR REQUIREMEWTS IM نام "اما"م Out Dept. Pataguapky & Uideography ."لأنيلي"أير Weddings. (s ۳لمی
Bittudag Poities / Petty Collegities »منلار Seacians / Asy Oiket Special Fuketisyus & Occasias.
 
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
பெப்ரவரி 2004
298
hallikai' Progressive tonthly flagazine
படைப்பாளிகளினி புதிய ஆக்கங்களை மலலிகை எதிர்பார்க்கின்றது.
Colombo - 13. Tel: 232O721
எஸ்.பொ.வும்
நானும்
இலக்கியம் 2004 சென்னை விழாவும்.
கனடாவிலிருந்து சென்ற சில மாதங் களுக்கு முன்னர் இளங்கவி அளவெட்டி சிறிசுக்கந்தராசா என்பவர் மல்லிகைக்கு எ6ஒனத் தேடி வந்திருந்தார்.
இனவரியில் சென்னையில் நடைபெற வுள்ள இலக்கியம் 2004 என்ற இலக்கிய விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்த இலக்கிய விழா வில் என்னைக் கெளரவிக்க விரும்புவ தாகவும் சொல்லி வைத்தார்.
3ழுத்தாளர் எஸ்.பொ.வினுடைய மகன் :ஸ்ளின்று நடத்தம் இந்த விழாவில் நான் :சியம் கலந்து கொள்ள வேண்டுமென : கேட்டுக் கொண்டார். போக்குவரத்துச் 8ேலவு சித்தாயங்களைத் தானே பார்த்துக் கொள்வதாகs:t சொன்னார்.
எஸ்.iெ என்ற பெயரைக் கேட்டதும் நான் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்:, ஒதுங்க நினைத்தேன். “இத்தக் காலகட்டத்தில் மலர் வேலைப் * ஃ:ங்கு வர வசதிப்படாது”
Jன்.
ኳ ;££Tፅ
6, 681 ડો. It is;';
“உங்களது வருகையை எஸ்.பொ. ரெ:வும் விரும்புகிறார். வேணுமென்றால் ஃi:ரே நேரடியாகத் தனது கைப்பட அழைப்புக் கடிதமே எழுதி உங்களை வரவேற்பார்!’ என்றார்.
அவர் கனடா சென்ற சில நாட்களின் பின்னர் சென்னையிலிருந்து திரு.எஸ். பொன்னுத்துரை அவர்களிடமிருந்து நேச

Page 3
பூர்வமான ஓர் அழைப்புக் கடிதம் எனக்குக் கிடைத்தது.
என்னுடைய கடந்தகால மல்லிகை அநுபவங்களும் வயது முதிர்ச்சியும் என்னை நிதானமாகச் சிந்திக்க வைத்தன.
நான் விழாவில் கலந்து கொள்ளச் சம்மதிப்பதாகப் பதில் கடிதம் போட்டேன்.
வல்லிக்கண்ணன், சிட்டி, விஜயபாஸ் கரன், தி.க.சி., மற்றும் லட்சுமி கிருஷ்ண மூர்த்தி ஆகியோருடன் சேர்த்து என்னையும் இவ்விழாவில் கெளரவிக்க இருப்பதாக அழைப்பிதழில் குறிப்பிட்டு அந்த அழைப் பிதழும் வந்து சேர்ந்தது.
பின்னர் பிராயாணத்திற்கு ஆயத்த மானேன். என்னுடன் பூபால புத்தகசாலை நண்பர் பூரீதரசிங்கும் இளங் கவிஞர் குறிஞ்சி இளந்தென்றலும் உடன் வந்தனர்.
சும்மா சொல்லக்கூடாது. நாவூறு பட்டு விடும்.
இரண்டு நாள் விழாவும் மிக மிகக் கோலாகலமாக நடந்தேறி முடிந்தது. அப்படியே பிரமித்துப் போய்விட்டேன்.
தமிழ் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தெல்லாம் எழுத்தாளர்கள் இந்த
இரண்டு நாட்களிலும் இவ்விழாவில் கலந்து
கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தனர். மல்லிகையின் கடைசிப் பக்கத் தொடர் விளம்பரதாரரும் எழுத்தாளர்கள் மீது தனி அபிமானம் கொண்டவருமான திருமதி. ஜெயந்தி விநோதன் அவர்களும் இவ்விழா வுக்கென்றே சென்னை வந்திருந்தார்.
விருது ஏற்பு நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்தினேன். அந்தச் சொற்பொழிவு என் வாழ்க்கையில் நான் மேடைகளில் பேசிய பேச்சின் உச்சக்கட்டம் என்றே பலரும் வியந்து பாராட்டினர். பூரீதரசிங் நான் மேடையை விட்டு இறங்கியபோது என்னைக்
கட்டிப்பிடித்துப் பாராட்டினார். அவரது கண்கள் பெருமிதத்தால் கலங்கிப் போயிருந்தன. “ஜீவாண்ணை ரொப்!” என்றார்.
அருமையான உச்சக்கட்ட உணர்ச்சி நிலை அது
இந்த விழாவில் சிறப்பம்சம் என்ன வென்றால் 25 புதிய புதிய நூல்களை ஒரே மேடையில் வெளியிட்ட புதுமைதான் அது
பின்னர் நான் பாலன் இல்லத்தில் தங்கியிருந்தபோது எஸ்.பொ. என்னைத் தேடி பாலன் இல்லம் வந்திருந்தார். விழாவில் வெளியிட்டிருந்த இரண்டு நூல் களையும் எனக்குக் கையெழுத்து இட்டுத் தந்தார். எஸ்.பொ. ஒரு பன்முகப் பார்வை என்ற நூலின் முன் பக்கத்தில் டொமினிக் gouT சென்னையில் நடைபெற்ற இலக்கியம் 2004-ல் கெளரவிக்கப்பட்டதன் நினைவாகவும் என தனது கைப்பட எழுதி யிருந்தார். அடுத்தது ‘வரலாற்றில் வாழ்தல்
என்ற நூலில் 'என் எழுத்து வாழ்க்கையின்
அடிநாள் தோழர் டொமினிக் ஜீவாவுக்கு அன்புடன்’ என எழுதியிருந்தார்.
பாலன் இல்லத்திற்கு அவர் வந்து நூல்களை தரும் சமயம் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஆர்.நல்லகண்ணுவும், தாமரை ஆசிரியர், தோழர் சி.மகேந்திரனும் என் கூட இருந்தனர்.
திரு.எஸ்.பொ. அவர்களை இளம் பருவத்திலிருந்தே எனக்கு நன்கு தெரியும்.
இந்த நெகிழ்ச்சி, புரிந்துணர்வு, சகோதர எழுத்தாளர்களைக் கெளரவித்துப் பாராட்ட வேண்டும் என்ற ஆரோக்கியமான அணுகுமுறை தொடர்ந்தும் நீடித்தால் இன்று பரந்துபட்டுப் பேசப்பட்டுவரும் புலம் பெயர் தமிழ் இலக்கியத்தற்கு ஓர் உந்து சக்தியாகத் திகழ்வார் என்பதே எனது எண்ணமாகும்.

தாமரை இணைந்து நடத்தும் ഗ്രാമിങ്വേ இலக்கிய விழா
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் இரண்டு நாட்கள் இலக்கிய விழாவை நடத்துவதெனத் தாமரை ஆசிரியரும் மல்லிகை ஆசிரியரும் சென்னையில் கூடி முடிவெடுத்துக் கொண்டனர்.
நடைபெற்று முடிந்த இலக்கியம் 2004 விழாவை முன்னுதாரணமாகக் கொண்டு நடக்கப் போகும் இவ்விழா சிறப்பாக அமைய வேண்டுமென ஒப்புக் கொள்ளப்பட்டது.
11-1-04ல் ஆனந்த விகடனில் 'சுஜாதா’ அவர்கள் மல்லிகையின் அர்ப்பணிப்பிலான தொடர் வரவைப் பாராட்டியுள்ளதைக் கவனத்தில் கொண்டுள்ள பல தமிழக எழுத்தாளர்களும் அதன் நீண்ட கால நண்பர்களும் இம்முடிவை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு சத்துழைப்பு நல்குவதாக ஒத்துக் கொண்டுள்ளனர். w
மல்லிகையுடன் நீண்ட காலத் தொடர்புள்ள புலம்பெயர் இலக்கியச் சுவைஞர்கள் பெரும்பாலோர் இவ்விழாவில் கலந்துகொள்ள அழைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
கருத்து முரண்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது, ஆரோக்கியமான சர்வதேசத் தமிழ் இலக்கிய ****சிர்கான ஒரு கண்க்கெடுப்பாகவே இவ்விழா
ܚ܆
அமைய வேண்டும் என நிச்சயிக்கப்பட்டது.
ஈழத்து, நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிகளையும் புலம்பெயர்ந்து சென்ற நமது இலக்கிய நபர்களின் இலக்கிய முன் முயற்சிகளையும் தமிழகத்து முற்போக்கு இலக்கியச் செல்நெறிகளையும் கணிப்பீடு செய்யும் முகமாகவே இவ்விருநாள் விழாவும் அமையவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
நீணடகாலத் தொடர் வரவால் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தாமரை - மல்லிகை இதழ்களினால் நடத்தப்படும் இவ்விழா வெற்றியாக அமைய சகலரினதும் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்புகின்றோம்.

Page 4
கலை இலக்கிய பன்முகச் செயற்பாட்டார்
அந்தனி ஜீவா
- நா.சோமகாந்தன்
கொழும்பில் இப்பொழுது தமிழ் நாடகங்கள் மேடையேறுவதென்பதே வெகு அபூர்வமாகிவிட்டது. 30 ஆண்டுகளுக்கு முன் கதிரேசன் மண்டபத்தில் நான் பார்த்த நாடகம் ஒன்றின் காட்சிகளும் வசனங்களும் என்னை வெகுவாகக் கவர்ந ண்தன. அது தொழிலாளர் பிரச்சினையை மையமாகக் கொண்ட நாடகம், முதலாளித்துவத்துக்கு எதிராக, செங்கொடிகளை ஏந்திக் கொண்டு, முஷ்டியை உயர்த்தியபடி அவர்கள் பொங்கி எழுகின்ற அந்த இறுதிக் காட்சி, பார்வையாளர் களின் மனதில் ஒரு உத்வேகத்தை, எழுச்சியை உண்டாக்கியது. அந்த வசனங்கள் சுளிர் சுளிர் என உறைக்கச் செய்தது.
'தொழிலாளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் அக்கினியில் பூத்த பூக்கள்; நெருப்பின் மக்கள்; நெருப்புச் சுவாலையை எதிர்த்து அக்கினிப் பிரவேசம் நடத்துபவர்கள். அவர்களின் உழைக்கும் கரங்களின் உறுதியையும் உரிமைப் போராட்டத்தினையும் முதலாளி வர்க்கம் உணரத்தான் போகிறது. துடிக்கும் இரத்தம் பேசட்டும், துணிந்த நெஞ்சம் நிமிரட்டும், உழைக்கும் வர்க்கம் சேரட்டும்”
நாடக முடிவில் சபை உணாசசக கொநதளிப்பில் பிரமித்து உறைந்தது.
அந்தனி ஜீவாவின் அந்த 'அக்கினிப் பூக்கள் அவர் யாருக்காக தமது கலைத் திறனையும் இலக்கிய ஆற்றல்களையும் பயன்படுத்துகிறாரென்பதைப் பட்டவர்த்தனப்படுத்தியது.
கலையும் இலக்கியமும் வெறும் சுவைப் பொருட்களல்ல, சமூகத்தைச் சிந்திக்க வைத்து செயலுக்குத் தூண்டுபவை என்பதை நன்குணர்ந்த அந்தனி ஜிவா, தனது நேரத்தையும், ஆற்றல்களையும் நலிந்துபோன சமுதாயத்தின் விடிவுக்காக, விழிப்புக்காகப் பயன்படுத்திவரும் பன்முக கலை இலக்கியச் செயற்பாட்டாளராக கடந்த மூன்றரைத் தசாப்தங்களாக அர்ப்பணிப்போடு பணிபுரிந்து வருபவர்.
கலை இலக்கியச் செயற்பாடுகள் எனக்களிப்பது ஊதியமல்ல, உயிர் என
முழுமன ஈடுபாட்டுடன் செயலாற்றி வரும் அந்தனி ஜீவா எதையாவது புதிது
4

புதிதாகச் சிந்தித்து, திடீரென அவற்றுக் குச் செயலுருவம் கொடுத்து விடுவார்.
பாடசாலை நாட்களிலேயே
பத்திரிகைத ண்துறை அவரை ஈர்த்துக் கொண்டது. பாடசாலையின் கரும்பு சஞ்சிகையின் சில இதழ்களுக்கு பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த் காலத்திலிருந்து எழுதத் தொடங்கிய அவரின் கை இன்னும் தொடர்ந்து
எழுதிக் கொண்டேயிருக்கின்றது. சம
சமாஜக் கட்சி வெளியிட்ட ஜனசக்தி பின்னர் ‘தேசபக்தன், ‘குன்றின் குரல்,
கொழுந்து எனப் பத்திரிகை ஆசிரியப் பணியிலிருந்து அவர் எழுதிய கட்டுரை காத்திர
கள், விமர்சனக் குறிப்புகள் மானவையாகவும், விழிப்புணர்வை ஏற்
படுத்தக் கூடியனவாகவும் மிளிர்ந்தன.
அந் தனி ஜீவா முற்போக்குச்
சிந்தனை கொண்ட கலை இலக்கிய வாதியாக திகழ்வதற்கு, நமது நாட்டின் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய அறிஞர் அ.ந. கந்தசாமியின் தொடர்பும், முற்போக்கு
எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டமையுமே காரணங்கள். இவர் இலங்கையில் மட்டுமல்ல பல் தமிழ் நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடு களிலும் உள்ள எழுத்தாளர்களால் நன்கறியப்பட்டவர். அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத் திருப்பவர். சிங்களத்தில் நன்கு பரிச்சய
முள்ளவர் என்பதால், சிங்களக் கலை இலக்கியவாதிகளாலும் நேசத்துடன் இலங்கையிலுள்ள
மதிக்கப்படுபவர். பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டிலு மன்றி, தமிழ் நாட்டிலும் மற்றும் புலம்
பெயர்ந்த பல நாடுகளில் நம்மவர்கள்
நடத்தும் வெளியீடுகளிலும் நறுக் கெனத் தகவல்களையும் கட்டுரைகளை யும் அடிக்கடி எழுதி வருபவர்.
பத்திரிகையாசிரியராக முகிழ்ந்து கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத் தாளர், நாடகாசிரியர், நாடக நெறி யாளர், பத்தி எழுத்தாளர், வெளியீட் டாளர் எனப் பன்முக வியாபிப்புப் பெற் றுள்ள அந்தனி ஜீவா, ஈழத்துத் தமிழி லக்கியத்தின் பிரிக்க முடியாத அங்க மாக விளங்கும் மலையக இலக்கியத் தின் மேம்பாட்டுச் செயற்பாட்டாளராகக் கணிசமான காத்திரமான பங்களிப்பை செயல் பூர்வமாகச் செய்து, மலையக இலக்கியம் பற்றி தமிழுலகு அறிந்து கொள்ளச் செய்தவர் என்பது மிகை யல்ல. தமிழ் நாட்டில் சென்னை, திருப் பூர். மதுரை போன்ற இடங்களில் மலை யக இலக்கியம் பற்றி இவர் ஆற்றிய உரைகள் அங்கு பல தெளிவுகளை
ஏற்படுத்தின.
மலையகத்தின் இலக்கிய வstர்ச் சிக்காகவும். அப்பகுதியில் வாழும் எழுத்தாளர்களின் நலவுரிமைகளைக் கப்பற்றுவதற்காகவும். விரைவில் விழாக் (e.g. TeoT LTL-6|6Tsm மலையக கலை இலக் கயப் பேரவையை 25 ஆண்டுகளுக்கு முன் நிறுவி, இலக்கிய விழாக்கள், நூல் வெளியீடுகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள், நாடகப் பயிற்சிப் பட்டறை bl.;;5 வருபவர்; மலையகத்தி ைதலைநகரா கிய கண்டியை மையமாக இந்நிறு 6u&göLİde கொண்டுள்ள போதிலும், அதன்
கள் போன்றவற்றைத் திறiபt
GIGGS

Page 5
பணிகள் மலையகம் எங்கும் சுவறி யுள்ளமை அப்பகுதியில் பல புதிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் தோன்றி யுள்ளதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. பிரதேச, சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டுப் பணி யாற்றி வருவதைக் கொள்கையாகக் கொண்ட அந்தனி ஜீவா, ஈழத்து எழுத் தாளர்கள், கலைஞர்களின் திறமை களை மதித்து, கண்டிக்கு அழைத்து கெளரவம் அளித்து மகிழ்வது அவரின் பொதுமை நோக்குக்கு எடுத்துக் காட்டாகும். இலங்கையின் எப்பிரதேசத் தில் இலக்கிய விழா நடைபெற்றாலும், தவறாமல் அதில் பங்குபற்றி துணி வோடு தமது கருத்துக்களை எடுத்துச் சொல்லிப் பாராட்டைப் பெறும் பேச் சாளராகவும் அந்தனி ஜீவா விளங்கு வது பெருமைப்பட வேண்டிய விடயம்.
மலையக இலக்கியம், மலையகப் பெரியார்கள், தமிழ் நாடகம் போன்ற துறைகளைப் பற்றி சுமார் பத்து நூல் களை எழுதி வெளியிட்டுள்ள அந்தனி ஜீவாவின் ‘அக்கினிப் பூக்கள்’ நாடக நூலை இலங்கை கலைக் கழகம் 1999ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தெரிவு செய்து அரச விருதளித்தது. அரச கரும மொழித் திணைக்களம் 1996ல் நடத்திய தமிழ்த்தின விழாவில் மலையகமும் இலக்கியமும் என்னும் இவரின் நூலுக்கு அரச இலக்கிய விருது வழங்கி கெளரவித்தது.
இலக்கியத்தைப் போன்றே, தமிழ் நாடகத்துறையிலும் தமது சுவடுகளை அந் தனி ஜீவா ஆழமாகப் பதிந் துள்ளார். 1970இல் “முள்ளில் ரோஜா
நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்து தனது நாடகப் பிரவேசத்தைத் துவங்கிய இவர், இதுவரை 14 நாடகங் களை நெறியாள்கை செய்து மேடை யேற்றியது நம் நாட்டுத் தமிழ் நாடகத் துறையில் பெரிய சாதனை. சோதனை களைக் கண்டு துவண்டு ஒதுங்கிப் போய்விடாமல் சாதனையையே குறி யாகக் கொண்டு செயல் புரிபவர் என்ப தால், இவரின் பல நாடகங்கள் வெற்றி நாடகங்களாக அமைந்து நாடகாபி மானிகளினதும் பத்திரிகைகளினதும் பாராட் டைப் பெற்றன. இவரின் 'அக்கினி " " க்கள் 15 தடவைகள் பல் வேறு இட. மேடையேற்றப் பட்டது. இவரின் லண் அழுகிறது நாடகம் பெரிய இடத்து அரசியல் வாதிகளின் தோலை உரித்துக்காட்ட முனைந்ததால், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அலைகள் நாடகம் இலங்கை கலாசா ராப் பேரவை 1978இல் நடத்திய தேசிய நாடக விழா வில் இரு விருதுகளைப் பெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக் களம் 1994இல் நடத்திய தமிழ் நாடக விழாவில் இவரின் ஆராரோ ஆரி வரோ நாடகம் விருதைச் சுவீகரித்துக் கொண்டது. மகாகவி சுப்ரமணிய பார்தியார் நூற்றாண்டையொட்டி
அவரின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து நாவலாசிரியர் இளங்கீரன் எழுதிய நாடகப் பிரதியை மிகச் சிறப் பாக நெறியாள்கை செய்து, இலக்கியத் தரமான நாடகமாக மேடை யேற்றிய பெருமையில் அந்தனி ஜீவாவின் பங் களிப்பு முக்கியமானது. கொழும்பிலும், மலையக நகரங்களிலும் வீதி நாடகங்

களை சிறப்பாக நடத்திய முன்னோடி யாக அந்த்னி ஜீவா விளங்குகின்றார். இதற்கான பயிற்சியையும் அறிவையும் தொழில் நுட்பத்தையும், தமிழ் நாட்டில் ഖgി நாடக முன்னோடியான திரு. பாதல் சர்க்காரின் பயிற்சிப் பட்டறை யில் பயின்றவர். புகழ் பெற்ற சிங்கள நாடகக் கலைஞர்களான தயானந்த குணவர்தன, ஹென்றி ஜயசேன மற்றும் மூத்த தமிழ் நாடக நடிப்பு விற்பன்னர் களான வீரமணி, சுஹைர் ஹமீட் போன் றோரின் தொடர்பு நாடகத்துறை பற்றிய நுட்பங்களை அறிந்து கொள்ள இவருக்குப் பெரிதும் உதவிற்று.
மலையகம் பொருளாதாரத் துறை யில் பின்னடைந்த பிரதேசம். அங்கு தோன்றிய பல எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை நூலுருவில் கொண்டு வருவதென்பது கல்லில் நார் உரிப்பது போன்ற நிலையிலிருந்தது. இந் நிலையை மாற்றியமைத்து, தான் செய லாளராக இருந்து பணியாற்றும் மலை யகக் கலை இலக்கியப் பேரவையின் துணை அமைப்பான மலையக வெளி யீட்டகம் வாயிலாக மலையகப் படைப் பாளிகளின் 24 நூல்களை வெளிக் கொணர்ந்திருப்பது இவரின் பெரிய சாதனை. மலையகத்தில் ஏனைய பிரதேசங்களைப் போலவே பல புதிய பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றியுள்ளனர். இவர்களின் இலக் கிய ஆற்றலையும் ஆளுமையையும் வெளியுலகம் அறிந்து கொள்ளச் செய் வதற்காக 'குறிஞ்சி மலர்கள் (சிறு கதைத் தொகுப்பு), குறிஞ்சிக் குயில் கள்’ (கவிதைத் தொகுப்பு) ஆகிய இரு நூல்களையும் சென்ற ஆண்டில் வெளி
யிட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும்.
எல்லாவற்றிலும் மேலாக அந்தனி ஜீவாவிடம் நான் காண்பது மனித நேயம். மானுட நேயன் ஒருவனே முற் போக்குவாதியாக இருக்க முடியும். சக எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர் கள் நலிவுற்றிருக்கும்போது, நோயுற்றி ருக்கும் போது, அவர்களுக்காக உணர்வு பூர்வமாகத் துடித்து ஓடோடிச் சென்று ஆறுதலும் உதவியும் புரியும் உள்ளம் அவருடையது. அவரிடமுள்ள சில குறைபாடுகளையும் மேவிக் கொண்டு, இந்த அற்புதப் பண்பு, அவரை ஒரு நல்ல மனிதராக நிமிர்ந்து நிற்கச் செய்கின்றது. ന്ന འཛོད་༽ மல்லிகைப் பந்தல் ‘曼江 வெளியிட்டிருக்கும் புதிய நூல்கள்
ப. ஆப்டீன்
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
(வரலாற்று நூல்) தில்லை நடராஜா
USGSGS5,

Page 6
கடந்த பத்துப் பதினைந்து நிமி A ட ங் களாக வே அவன் என் மேசை ܥܠ ܐ யின் முன்னாலுள்ள ཟིམ་ கதிரையில் உட்கார்ந்திருந்தான் இடை - வசந்தி விடாமல் தொலைபேசியில் எண்களை A அழுத்துவதும் , துணி டிப்பது {{ாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான்...." பக்கத்து மேசைச் சிறிசேனவுடன் சமரசிங்க அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். W N.
பாத்திரமறிந்து.
அவள், எனக்கும் சிறிசேனவுக்கும் இடையில் நின்று அகாண்டி டிருந்தாள். அறிக்கை ஒன்று தயாரிப்பது தொடர்பாக ஒரு முக்கியமான கோப்பினை நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம்.
அவன், அவளைச் சீண்டுவதும், வம்புக்கிழுப்பதுமாக இருந்தான். சமரேயும் இதை ரசித்தவனாகத் துணைக்கு நின்றான். காலையிலே வேலைகள் குவிந்து கிடக்கின்றன. "இவங்களுக்கு வேலையில்லையாக்கும்.” மனதுக்குள் புறுபுறுத்துக் கொண்டேன்.
அவனது தொந்தரவு ஓய்ந்தபாடாக இல்லை. அவளது கவனத்தை ஈர்ப்பதே அவனது நோக்கம் என்று பட்டது. இதற்கிடையில் அவன், சிறிசேன, சமரே மூன்றுபேருமாக ஏதோ குசுகுசுத்தார்கள். தொடர்ந்து ஒரு வெடிச்சிரிப்பு எனக்கு எரிச்சலாக இருந்தது. அவனை நிமிர்ந்து பார்த்தேன். தற்செயலாக. அவன் பார்வை. என் கண்களில் பட்டது. சீச்சீ. அவனது பார்வை அவளில் மொய்த்தபடி. அருவருப்பில் என் உடல் கூசியது.
மீண்டும் குபிர் சிரிப்பு. அப்போதுதான் அவன் அந்த மோசமான வர்ணனையைச் சொன்னான். அதைக் கேட்டதும் குளிரூட்டப்பட்டிருந்த அந்தக் காரியாலயத்தில். எனக்கு தலை கொதித்தது. சுள்ளென்று கோபம் ஏறியது. இவனுக்கு என்ன கொழுப்பு! நான் அவனை உறுத்துப் பார்த்தேன். கைகள் தொலைபேசியில் அழுத்திக் கொண்டிருக்க முகத்திலோ ஒரு கேவலமானச் சிரிப்பு நான் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் எதுவுமே பேசாமல். ஒரு ஜடம்போல நின்று கொண்டிருந்தாள்.
8
 
 
 
 
 
 
 
 
 
 

“பொம்பிளைகள் என்றால் உடனே எதையும் கதைக்கலாம். மோசமாக வர்ணிக்கலாம் என்ற எண்ணமா? ஏன் தான் இப்படிச் செய்யிறீங்கள்?. சீ! இப்ப நீங்கள் சொன்ன கதைக்காக. உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் இல்லையா? இதற்கு மேல் கீழ்த்
தரமான கதைகள் சொன்னா அவளை
விட என் கைதான் பேசும். பாருங் கோ’ எந்தத் தொனியில் சொன்னேன் எது
வுமே எனக்குத் தெரியாது. சொல்லி
முடித்ததும் நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது என் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் ஒரு ஆசுவாசம்! இப்போது கூட அவள் மட்டும் வாயைத் திறக்கவேயில்லை.
f
திடீரென்று சத்தம்
... . . . . . . . .
நின்றது. மூன்று பேரின் சிரிப்பும்
அடங்கியது. அவன் தொலைபேசியை
. : *
டக்கென்று வைத்தான். சூழலே
இறுக்கமாகி. அவனது முகம் சிறுத்
பேச்சுச்
துப் போயிருந்தது. ஓ! சுட்டுவிட்டது
போல! Frரே சத்தமாகக் கதிரையைத்
தள்ளிவிட்டு எழும்பித் தன் மேலக்குப்
போனார். அவள் விறுவிறென்று
 ைபல க3, 5 அளி எரிக் கொலர் ?
ö Աք Š}} Ñ,ኝኝሽ፲፫ ፳፻፫ .
அவன் என்னை கண் படி ஏசத்
. . . . . - ، س- سلس. ததtாகவே! மூன்றாவது மேசையில் இருந்து குசும் எட்டிப்பார்த்தாள். 613ண்று சைகையினால்
ܢܝ .k v r --ۓ۔ س۔ --- ٦کلا۔ ۔ ۔ ۔ -- --۔ ^محمد obí tla obí o)í 1 x)í. ه الاقاً 31 فة لرالونg|-
ன்ேன?
கே. டாள்.
அவள் எழும்பிப் போய் சிறிசேன வின் முன்னால் உட்கார்ந்து கொண்
படபடவென்று கோபத்தில்
சனங்களைக்
தது. விடாமல் ஏசிக் கொண்டே இருந்தான். குசும் எழும்பி வந்தாள்.
“என்ன நடந்தது?. எதுவெண் டாலும் மெதுவாகக் கதையும், கஸ்ட மர்ஸ் வாற இடம்.” مي"
உடனே அவன் குசுமைப் பிடித்துக் கொண்டான். சிங்களத்தில் திட்டின்ான். “பொம்பிளை என்றால் இவ்வளவு வாய் இருக்கக் கூடாது தலைவீங்கி. இலவுக்கு என்ன தேவையில்லாத ஒரு பாட் 1ம் திட்டித்
ைேல.”
தீர்த்தான்.
எனக்கு விளங்கியது. இந்த விமர் கேட்டு பெண்கள் ந1ணிைக்கோண வேணும். அதுவுமில்லா விட்டால் காதில் விழாதது போல இருக்க வேணும். அவன் தனது மன வக்கிரத்துக்குத் தீனி போடுவதை :ங்கள் தடுக்கக் கூடாதாம்.!
ஜெயராஜ் அப்போதுதான் ஷோட் லிவில் வந்தான். "என்னட மச்சான். என்ன பிரச்சினை? ஏனடா காமா சததம போடுகிறாய்." அவனின் தோளைத் தட்டியபடியே என்னைப் பார்த்து ஒரு விஷமப புன்னகை! இனி இந்த வ'டிேயத்தை பூதா கரமாக்காமல் விடவே மாட்டான்.
“டேய் மச்சான் ஜெயா! உனக்குத தெரியுமாடா. இங்க சில தலை வீங்கின பொம்பிளைகள் இருக் கிறாங்க மச்சான்.” அவன் நீட்டி முழக்கிச் சொல்லத் தொடங்கினான். சரி இன்றைக்கு ஜெயராஜுக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை. கம்மாவே
டான். அவனது சுருதி கூடிவிட்டிருந்
UD

Page 7
மெல்லுற வாய். இப்போ அவலும்
கிடைத்து விட்டது.
நான் வேலையில் கவனம் செலுத்த முயன்றேன். முடியவில்லை. "கூல் டவுன் மச்சான்” என்று ஒப்புக்குச் சொன்னபடியே ஜெயராஜ் கதை கேட்
டான். திறந்த வாய் மூடவில்லை.
“இப்படித்தான்டா. போன கிழமை யும். என்னை மரியாதையில்லாம.” பச்சைப் பொய்களைத் தாராளமாக. கண் முக்கு ஒட்டி.
எனக் குத் தலை வலித்தது.
இங்கே இருந்தால் விபரீதமாகிவிடும்
என்ற எச்சரிக்கை உணர்வில். எழும்பி அப்பால் சென்றேன்.
சாப்பாட்டு நேரம். பலருடைய கதிரைகள் வெறுமையாய் இருந்தன. காலையில் மீதம் வைத்த வேலை களை விறுவிறென்று செய்து கொண் டிருந்தேன். முன்னால் யாரோ. ஒ1. ஜெயராஜ்
"மிஸ்! நீங்க யோசிக்காதீங்க!
அவனைத் தெரியாதா. இப்பிடித்தான்
கத் துவானர் . நாண் ஆளைச் சமாதானப் படுத்திட்டன். கந்தோர்
களில இதெல்லாம் வழக்கமா நடக் கிறதுதானே..!” எனக்கு இவனைத் தெரியும். இவன் மிகவும் ஆபத்
தானவன். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுபவன்! பெரிய சண்டையில் எல்லோரையும் கொளுவி விடுவான். நேரத்தைப் பார்த்தேன். ஓ! ஒரு மணியாச்சுதா. சாப்பிட்டுட்டு வாறன்!”
65
O
சாப்பாட்டு மேசையில். கைவிரல் கள் சோற்றை அளைந்து கொண்டி ருந்தன. மனமோ. காலையில் நடந்த சம்பவத்தை இரை மீட்டி. அலைக் கழிந்தபடி இருந்தது! நான் ஏன்தான் இப்படி இருக்கிறேன். இவள் என்ன, எனது நெருங்கிய தோழியா. அல் லது சொந்தமா..! ஏன் அவளுக்காக நான் இவ வளவு காயப் பட்டு நிற்கிறேன்? அவளே பேசாமல் போகிறபோது. ஏன் அவர்களது கொச்சையான விமர்சனங்களை. பெண்களை இழிவாக நோக்கும் புன்மையை. என்னால் சகிக்க முடி யாமல் இருக்கிறது? அவள் பயந்து விட்டாளோ. அல்லது இதெல்லாம் பழகிப்போய் விட்டதோ..? அவளது நவநாகரிக உடைகளும். அடிக்கடி அவள் டச்சப்' செய்து கொள்ளும் முகப்பூச்சுகளும்.! அப்போ வெளித் தோற்றத்தில் மட்டுந்தான் நாகரிக நங்கையோ? நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நன்னடை. பாரதி, நீ பாடிய புதுமைப் பெண்கள் எங்கே இருக் கிறார்கள்..? எனக் குச் சிரிப்பும் கோபமும். கலந்து குழப்பி.!!
வேலையில என கவனம் ஒன்றியிருந்தது. ஜெயராஜ் கணினி யில் வேலை செய்து கொண்டிருந் தான். அவன் கையில் அன்றைய தினசரியுடன் வந்தான். கணினியின் அருகே ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தான். காலையில் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்.
“பொம்பிளை எண்டா வாயை
மூடிக்கொண்டு இருக்க வேணும். அவ

அதிகாரி எண்டா. எனக்கு என்ன
பயமா? இந்த விஷயம் மட்டும் வெளி
யில வச்சு நடந்திருந்தா. நான் வேற மாதிரி ஹன்டில் பண்ணியிருப்பன்! கந்தோர் எண்டபடியா விட்டுட்டு இருக்கிறன்."
என்னால் அவனது கதைகளைக் காது கொடுத்துக் கேட்க முடிய வில்லை! சிங்கள நண்பர்களுக்குப் புரியாது என்ற தைரியத்தில். அவன் பேசிக் கொணி டே போனானி ! இயலாமையில். எனக்குக் கண்ணிர் பொங்கியது.
ஜெயராஜ் சுவாரசியமாகக் கதை கேட் டானி இடைக் கிடை ஓரக் கண்ணால் என்னையும் பார்த்துக் கொண்டான். திருப்திப்பட்டான்! சே! இனி றைய நாளே வீணாய ப் போய்விட்டது.
குசும் வந்தாள். "என்ன. இண்க்டை க்கு முழுக்க முகம் வாடிக் கிடக்கு. வாரும் கன்டீனுக்குப் போவம்.” பேர்சைக்கூட எடுக்கவிடாமல் என்னை இழுத்துக் கொண்டு போனாள்.
L ם L7
தேநீரை உறிஞ்சியபடி குசும் கதைத்தாள். "நீர் என்ன அவளுக்கு வக்காலத்து வாங்குறே? சும்மா இருக்காம. இப்ப பாரும். வீண் பிரச்சினை!”
"என்ன குசும். நீரும் இப்படியா
கதைக்கிறீர்? நான் ஒன்றும் அவளுக் காகக் கதைக்கேல்லை! அவள் ஒரு
f
பெண் எனtடதுக்காக. என்னைப் போல. உம்மைப் போல. அவளும் ஒரு பெண் பெண்களை இழிவாப் பேசுறான். என்னால. இப்படியான விஷமங்களைப் பார்த்திட்டுச் சும்மா இருக்கேலாது!"
“சரி, சரி. நீர் இப்படியே போ
னால். உலகத்தில நடக்கிற எல்லாக் கூத்துகளுக்கும் சண்டை பிடிக்கப் போறிரோ? பெரிய வீராங்கனை. நீர் தன் கடைசில வாங்கிக் கட்டினீர்! உய்க்குச் சப்போட் பண்ண ஒரு குருவியுமில்லை.” குசும் சிரித்தாள். அவளது பேச்சில் இருந்த உண்மை எனக்கு உறைத்தது.
குசுமும் நானும் "லிப்ட்'டுக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். திடீரென குசும் என் கையில் சுரண்டினாள். அவள் கண்களால் சுட்டிய திசையைப் பார்த்தேன். அங்கே கன்டீனின் மறு மூலையில் மூன்று ஆண்களும் இரண்டு பெண களும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அங்கே. அவன். ஏதோ சொல்ல. சமரேயும் ஜெய ராஜூம் அதைக் கேட்டு ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். தலையை ஆட் டி. பt; கையால் வாயைப் பொத்தியபடி. ரசித்துச் சிரித்தவள். அவள்! ஆம் அவளேதான்! அவன் கண்களில் மின்னியது!!
நான் . திரும்பிக் குசுமைப் பார்த்தேன்! அவள் என் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள். அவள் என்னைப் பார்த்த பார்வையில் தெரிந்தது. இரக்கமா?. கேலியா?

Page 8
στώή δωή
அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளாக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலிலன்றே நினைத்தாளாம்.
5,1660, 8:6)606i கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.
ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது எண் கடடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆர்ம்பமானது. தண்ணிரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம்.
அவயோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு. மண்ணுடன் அவள் எனை வேரால் இறுகக் கட்ட முனைந்தும், நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன் எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம.
உண்மைதான் அவளை நொண்டியென்று விரக்தியில் வைதது. முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
வ.ஐ. ச. ஜெயபாலன்
கண்ட மரம் தந்தி, ஒடுகாலி
வெள்ளத்தில் மிதக்கும் நரகல் என்றாள்.
ஒரு வழியாக இறுதியின் இறுதியில் ԺiՐՄ ԺլոII601/Tլի. மாய உறவின் கானல் யதார்த்தமும் வாழ்வின் உபாயங்களும் காலம் கடந்தே வாய்த்தது நமக்கு. நம் காதலாய் அரங்கேறியதோ
9uilidb606uiu 1180) dhởb6f IT iii
பண்ணையார் என்றோ எழுதிய நாடகச் சுவடி.
இப்போது தெளிந்தேன். சந்திக்கும் போதெலாம் என் தங்க ஆலமரத்திடம் விசால்வேன். 'ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும் உன் கிளையன்றிப் பிறிதில் அம்ர்ந்திலேன்' y மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும் ‘என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள் என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டுந்தான்.”
இப்படித்தான் தோழதோழியரே ஒரு மரமும் பறவையும் காவியமானது.

3
Herðu6ð6 S.0°a MSðføðr ஈழத்துச் சிறுகுனுகு வரலாறு
ஒரு நோக்கு
- 'அன்புமணி’
ஈழத்து இலக்கிய வரலாறு பற்றி ஏற்கனவே கனக செந்திநாதன், கலாநிதி கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் மெளனகுரு முதலியோர் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தலைப்புகளில் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். இந்நூல்கள் 'ஈழத்து இலக்கிய. என்று தலைப்பைக் கொண்டி ருந்தாலும், அவை 'ஈழத்து இலக்கியப் பரப்பை பரவலாக்க நோக்கவில்லை. யாழ்ப் பாணத்து எழுத்தாளர்களையும், அவர்களது ஆக்கங்களையுமே மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, வவுனியா, மலையகம் முதலிய பிரதேசங்களின் இலக்கிய ஆக்கங்கள் பற்றிக் கஞ்சிக்குப் பயறு போட்ட்துபோல ஆங்காங்கே சில செய்திகள் இடம் பெற்றிருந்தன.
இவர்களுக்குப்பின் இவ்வாறான நூல் எழுதியவர்களும் பிரதேச நோக்கில் அவற்றை எழுதிவிட்டு, 'ஈழத்து.' என்று தலைப்பிட்டிருந்தனர். . . .
இத்தகைய ஒரு பின்னணியில், நாடறிந்த எழுத்தாளர் செங்கை ஆழியான 'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற தலைப்பில் ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்களை உள்ளடக்கியதாக காத்திரமான, நடுநிலையான, பரவலான நோக்கில் ஒரு இலக்கிய வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
இவர் ஏற்கனவே, இத்துறையில் 'மறுமலர்ச்சிச் சிறுகதைகள்', 'ஈழகேசரிச் சிறுகதைகள்', 'ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்’, ‘சுதந்திரன் சிறுகதைகள் முதலிய தொகுப்பு நூல்களை வெளியிட்டவர். ஈழத் தமிழ் எழுத்தாளர்களையும், அவர்களின் ஆக்கங்களையும் பரவலாக அறிந்தவர். கோட்பாட்டு வட்டங்களுக்குள் சிக்காதவர். முற்போக்கு, பிற்போக்கு வாதங்களுக்கு அப்பாற்பட்டவர்.
நூலாசிரியர் தனது முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார். “ ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற இந்நூலை ஆக்குவதற்குத் தகவல் திரட்டுவதிலும், அனைத்துச்

Page 9
GREGGE NAS
சிறுகதைகளையும், கூடியவரை படிப்ப திலும், அதிக காலத்தை நான் எடுத்துக் கொண்டேன். 400 சிறுகதைப் படைப் பாளிகளையும், 274 சிறுகதைத் தொகுதி
களையும், சுமார் 8000 வரையிலான பத்தி
ரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளையும் கொண்ட குறுகிய வரலாறுதான் ஈழத்துச் சிறுகதை வரலாறு எனினும் நமது சிறுகதை இருப்பினை
அடையாளம் காண்கின்ற முயற்சியும், |
அதன் மூலம் நாம் தமிழ் இலக்கியத்தில்
குறிப்பாகச் சிறுகதைத் துறையில் அடைந்துள்ள வளர்ச்சியையும் கணிப்பீடு செய்வதில் நிறைய இடர்பாடுகள் உள் ளன. இன்று வரையிலான சிறுகதை வர லாற்றையும் வளர்ச்சியையும் பற்றிய கணிப்பீடுகள், சார்புநிலை சார்ந்தவை யாகவே விளங்குகின்றன. சமநிலை சார்ந்தவையாகவில்லை' எனக்கூறுகிறார்.
இதையே இக்கட்டுரையின் முன்னு ரையாகவும் கொள்ளலாம். இந்நூலின் சிறப்புக்கள் வருமாறு
(அ) ஈழத்தில் இதுவரை வெளிவந்த 274 சிறுகதைத் தொகுதிகள் 400 எழுத்தாளர் கள் பற்றிய விபரங்கள் இடம் பெறு கின்றன.
(ஆ) இதுவரை புறக் கணிக் கப் பட்ட
மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி,
மலையகம் முதலிய பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
(இ) 1875 முதல் 2001 வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளின் விபரம் ஆண்டு வாரியாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
(ஈ) கால அடிப்படையில், சிறுதைப் போக்குகள் சமுதாய சீர்திருத்தக் காலம்
14
(1930-49). முற்போக்குக் காலம் (19501960), புத்தெழுச்சிக் காலம் (1961-1983), தமிழ்த் தேசிய உணர்வுக்காலம் (1983
க்குப் பின்னர்) என வகுக்கப்பட்டுள்ளது.
(உ) முற்போக்கு வட்டத்தினரால் மறைக்கப்பட்ட (மறுதலிக்கப்பட்ட) எழுத் தாளர்கள்”வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.
(ஊ) பேராசிரியர் கலாநிதி அ.சண்முக தாஸ் அவர்களின் அருமையான
முன்னுரை.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை நடுநிலை நின்று நோக்குபவர்கள் இவ் வளர்ச்சி, தமிழக இலக்கிய வளர்ச்சி யுடன் சமt; "மாக வந்திருப்பதை அவதானிக்கலாடி * கில் ‘மணிக் கொடி காலம் ஏற்படுத்து 1) திருப்பத்தை இங்கே மறுமலர்ச்சி ஏற்படுத்துகின்றது.
தமிழகத்து இலக்கிய முன்னோடி களுக்குச் சமாந்தரமாக இலங்கை முன் னேடி எழுத்தாளர்களும் பிரகாசித்துள் ளனர். சி.வைத்திலிங்கம், இலங்கையர் கோன் சம்பந்தன் ஆகியோர் ஈழத்தின் சிறுகதை மூலவர்களாகவும், முன்னோடிக ளாகவும் அமைகின்றனர். தமிழகப் பாணிக் கதைகளில் ஏற்பட்டிருந்த மயக் கத்தை முறிய்டித்த வகையிலும் இவர் கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
ஈழத்துச் சிறுகதை முற்போக்குக் ĐT 6Mouò ( 1950 - 1960)' 6T 6ÖT AMB SÐ gồ gố யாயத்தில் முற்போக்குவாதிகளின் நடு நிலையற்ற போக்கு நன்கு ஆராயப் பட்டுள்ளது. இக்காலகட்ட இலக்கியப் போக்குகள் (அ) மரபுவாதம் (ஆ) மார்க்சிய முற்போக்குவாதம் (இ) இடது சாரி எதிர்க்கருத்துவாதம் (ஈ) தமிழ்த் தேசியவாதம் என்ற தலைப்புகளின் கீழ் பகுப்பாய்வு செய்யப்பட்டிருப்பது மிகவும்

பயனுள்ளது.
ஒரு கட்டத்தில் முற்போக்குவாதி களின் அடாவடித்தனம் எல்லை மீறிப் போகவே, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து நற்போக்குவாதத்தை முன் வைத்த எஸ்.பொ.வின் கருத்துக்கள்
இன்றும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
அவ்வாறே தமிழ்த் தேசியவாதம், அதை வலுப்படுத்திய சுதந்திரன், ஈழ கேசரி, கலைச்செல்வி, புதினம் பற்றிய ஆசிரியரின் குறிப்புகள் முதலியன நூலா சிரியரின் நடுநிலையைப் பதிவுசெய் கின்றன.
1950-60 காலப்பகுதியில் நிலை
பெற்றிருந்த முற்போக்கு, நற்போக்கு
ஆகிய இரு செல்நெறிகள் பற்றி ஆசிரியர் தெளிவாக வரையறை செய்துள்ளார். சிந்தாந்தச் சிறைக்குள் தம்மை அடக்கிக் கொள்ளாது, மனிதகுல மேன்மைக்காக வும், தமிழ்த் தேசிய நலனுக்காகவும்
ஆக்க இலக்கியத்தைப் பயன்படுத்துகிற
எழுத்தாளர்களால் சிறுகதைகள் படைக் கப்பட்டன. வரதர், சு.இராசநாயகன், வ.அ. பித்தன், அ.முத்துலிங்கம், புதுமை லோலன், அன்புமணி, தேவன், சோம காந்தன், பவானி, புதுமைப்பிரியை, சிற்பி, அருள், செல்வநாயகம், நாவேந்தன், உதயணன் முதலானோர் இப்பிரிவில் அடங்குவர் என நூலாசிரியர் கூறுகிறார். (Llds. 100)
ஈழத்துச் சிறுகதைகள் புத்தெழுச்சிக் காலம் (1961-83) என்ற அத்தியாயத்தில், இக்காலகட்டத்தில் மேலெழுந்த இலக் கிய விமர்சனத்துறை பற்றி நூலாசிரியர் கோடி காட்டுகிறார். கலாநிதி, கைலாச பதி, கா.சிவத்தம்பி, எஸ்.பொ. முதலி யோர் விமர்சனத்துறையில் ஆதிக்கம் செலுத்தியபோது, அவர்களது விமர்சனத்
15
துறையில் ஆதிக்கம் செலுத்தியபோது, அவர்களது விமர்சனப் போக்குகளுக் கெதிராக எழுந்த குரல்கள் பற்றியும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். (பக் 158)
இதன் நிதர்சன நிலையை இன்று நாம்
கண்கூடாகக் காண்கின்றோம்.
ஆசிரியர் தனது முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ". என் சக்திக்கும், தேடலுக்கும் அப்பாற்பட்டு சில படைப்புகளும் படைப்பாளிகளும் விடுபட்டிருக்க வாய்ப்புண்டு.”
அது உண்மைதான். அந்த வகை
யில், அருள், சுப்பிரமணியம், செ.குண
ரெத் தினம், அ. ஸ. அப்துஸ் ஸமது. ஆதங்கராசா, மண்டுர் அசோகா, நவம், தங்கன், பொன்னுத்துரை (பொன்னு). கவிதா, யோகா பாலச்சந்திரன் முதலி யோர் பற்றி இன்னும் அதிகமான விபரங் கள் இடம் பெற்றிருக்கலாம்.
அவ்வாறே 2000ல் தோன்றிய சில இளம் எழுத்தாளர்களான த. மலர்ச் செல்வன், ஒட்டமாவடி அறபாத், அணு ராதா பாக்கியராசா, றுத் சந்திரிகா முதலி யோர் பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றி ருக்கலாம். •.
‘அன்புமணி'யின் இல்லத்தரசி வர லாற்றுச் சுவடுகள், சிறுகதைத் தொகுதி கள் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
எவ வாறாயினும் , இதுவரை இலங்கையில் வெளிவந்த ‘ஈழத்து சிறு கதை இலக்கிய வரலாறு' பற்றிப் பேசும் நூல்களில் இந்நூல் முதலிடம் வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
(நூல் விபரம் - ஈழத்துச் சிறுகதை வரலாறு 1/8 டிமை அளவு 300 பக்கங்கள் விலை ரூ.300/- கிடைக் குமிடம் கலாநிதி க. குனராசா, 75/10A, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.)

Page 10
69నిఎnడీ 2/2;
சூரன்.ஏ-ரவிவர்மா
“எத்தினை முறை சொல்லிப் போட்டன், பேப்பர் படிச்சது போதும். முதல்லை கோயிலுக்குப் போட்டு வாங்கோ.”
"இண்டைக்கு ஞாயிற்றுக் கிழமை கொஞ்சம் பொறுமப்பா. சும்மா மெலாலை பாத்துப் போட்டுப் போறன்.”
"அதுதான் நானும் சொல்லுறன் இண்டைக்கு ஞாய் சிழமை கோயிலிலை சனம் வரமுதல் போட்டு வாங்கோ. மூத்த பேத்தீன்ரை பேத் ') நாளிலை வேலையை மினக்கிடுத்தாதேங்கோ’
“சரி சரி குடையை எடுத்துவா கோயிலாலை வந்து மிச்சத்தைப் பாப்பம்"
கணேசமூர்த்தி வேண்டா வெறுப்பாக பேப்பரை மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்த போது அவர்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டுக்காரி முன்னால் நின்றாள்.
ஏதாவது வேலை இருந்தால் மட்டும் அவள் கணேசமூர்த்தியைத் தேடி வருவாள். என்ன வேலையாக இருந்தாலும் கோயிலாலை வந்துதான் செய்து குடுக்க வேண்டும் என நினைத்தபடி கணேசமூர்த்தி அவளைப் பார்த்துச் சிரித்தான்.
"குட்மோர்னிங் மிஸ்டர் மூர்த்தி நீங்கள் நேத்து தந்த காசிலை ஒரு ரென் ருப்பி சரியான டமேஜ்" எனக் கூறியபடி ஒரு பத்து ரூபாவைத் தூக்கிக் காட்டினாள். w
கணேசமூர்த்தி அந்தக் காசை வேண்டிப் பார்த்தார். கொஞ்சம் இறுக்கிப் பிடித்தால் கிழிந்து விடுவேன் என்று பயமுறுத்தியது அந்தப் பத்து ரூபா நோட்டு,
"இஞ்சருங்கோ பத்து ரூபா இருந்தா அன்ரிக்குக் குடுங்கோ’ என்று மனைவியிடம் கூறினார், கணேசமூர்த்தி
"நோ நோ மிஸ்டர் மூர்த்தி ஏமாத்துக்காரர்தான் இப்ப அதிகம், நாங்க

தான் கவனமா பாத்து நடக்க வேணும்" என்று கூறிய விட்டு உரிமையாளர்
/* 1ỹì w கணேசமூர்த்தியின் மனைவி கொடுத்த பத்து ரூபாவை வேண்டிக்கொண்டு சென்றாள்.
”கோயிலாலை வரேக்கை பத்து ரூபாவை மாத்திக் கொண்டு வாறன்’ என்று கூறிவிட்டு மனைவியின் பதிலை யும் எதிர்பாராது வீட்டை விட்டு வெளியேறினார். கணேசமூர்த்தி பத்து (ylJi பற்றப்படவில்006) என்றால் الزکیہ[ பெரிய சரித்திரமாகிவிடும். கணேச மூர்த்தி காசை மாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் மனைவி மனதுக்குள் சிரித்தாள்.
கணேசமூர்த்திக்கு மூன்று ஆண் பிள்ளைகள், கனடா, இத்தாலி, ஜேர்மன் நாடுகளில் மூவரும் குடும்ப மாக இருக்கிறார்கள், ஒருவன் அங் கேயே யாரே! ஒருத்தியைக் கட்டி விட்டான். ஒருவனின் திருமணம் இந்தியாவிலும், அடுத்தலினின் திரு மனம் சிங்கப்பூரிலும் நடந்தது.
கடைசி காலத்திலை பெற்றேர் சுகமாக இருக்க வேண்டும் என்பதற் }, t:} } :181191,3'; } வீடொ89ண்றில் அவர்களைக் குடிய மர்த்தினார்கள் பிள்ளைகள். வாரத் திலை ஒரு நாளைக்கு மூன்று பேரும் பெற்றோருடன் டேசுவார்கள். கணேச மூர்த்தியின் மனைவிதான் முதல் கதைப்பாள். ஆடு குட்டி போட்டது. வாழை குலை போட்டது. வேலி அடைச்சது, ஊரிலை நடக்கும் கலி யாணம். குழம்பின கலியாணம், காணி வாங்கினது.
δ. : , !
விற்றது ol o0l
d to o
செய்திகளும் தொலைவேசியில் கதைத் தடரின் கணேசமூர்த்தியும் அவற்றையே திரும்பவும் கதைப்பார்.
கொழும்பிலை நடக்கிற ஒரு
நிகழ்ச்சியையும் கணேசமூர்த்தி தவற
விடமாட்டார். புதுப்படம் வெளியான உடனை வீடியோ கடைக்காரன் வீடு” தேடிவந்து கொப்பியைக் குடுத்திட்டுப் போவான் சந்தியில் நிற்கும் ஆட்டோ ஒண்டு இவர்களை நம்பித்தான் நிறகிறது. இருமினால், தும்பினால் உ ன காத காட்டி முழுப் பரிசோத னையும் நடக்கும்.
கோயிலில் நிறைய சனம், என்
றாலும் அங்குள்ள குருக்கள்மார் எல் லோருக்கும்
கணேசமூர்த்தியைத் தெரியுமென்பதால் அவரை விஷே. மாகக் கவனித்தார்கள். அர்ச்சனைக்கு இருபத்தைந்து ரூபா ரிக்கெற். ஆனால் கணேசமூர்த்தி நூறு ரூபா தட்சணை கொடுப்பார் .
களஞ்சியை சொம்பிங் பாக்கில் போட்டுவிடடு உணடியலுககு காசு போட பெர்க்கற்றினுள் கையை விட்டு
காசை எடுத்த போது கிழிஞ்ச பத்து
* 11:ன் வந்கது. கையை பொத்திய படி காசை மடித்து உண்டியலினுள் செருகினார். மனசு கேட்கவில்லை. கிழிஞ்ச பத்து ரூபாவை வைத்துவிட்டு ஐம்பது ரூபாவை எடுத்து உண்பு
யளினுள் பேட்டார்.
செருப்புப் பாதுகாப்பவரிடம் துண்டையும் கிழிஞ்ச காசையும் கொடுத்துவிட்டு பரக்குப் பார்த்தார். அவன் செருப்பைக் கொடுத்துவிட்டு

Page 11
"ஐயா இந்தக் காசு சரியில்லை. இல் லாட்டி பிறகு வரேக்கை தாருங்கோ” என்றான்.
"ஓ தம்பி நான் க்வனிக்கேல்லை. ஆரோ கூடாத காசு தந்திட்டாங்கள்” எனக் கூறியபடி இரண்டு ரூபா நாணயத்தைக் கொடுத்தார்.
இரண்டு முயற்சியும் தோல்வி யடைந்ததால் பஸ்காரனிடம் மாற்றலாம் என கணேசமூர்த்தி நம்பினார். சனமில் லாமல் வந்த இரண்டு பஸ்களைத் தவற விட்டுவிட்டு சனம் நிரம்பி வந்த பஸ்ஸில் ஏறினார் கணேசமூர்த்தி
வெள்ளவத்தை எனக் கூறிவிட்டு மனம் படபடக்க கொண்டக்டரைப் பார்த்தார். கணேசமூர்த்தி கொடுத்த பத்து ரூபாவை கையில் வைத்துக் கொண்டு வேற ஆட்களிடம் காசை வேண்டிக் கொண்டு மிச்சக் காசையும்
கொடுத்தான்.
கணேசமூர்த்தி கொடுத்த பத்து ரூபாவைப் புரட்டிப் புரட்டிப் பார்த்த கொண்டக்டர் "மாத்தயா இந்த சல்லி நீங்க தந்ததுதானே. தெஹரிவல, கல கிஸ், பாணந்துற எல்லாம் தெரியுது” எனச் சிரித்தபடி கூறினான்.
கொண்டக்டரிடமிருந்து பத்து ரூபாவை வாங்கிக் கொண்டு மூன்று ரூபா கொடுத்தார் கணேசமூர்த்தி. பஸ்ஸில் இருந்த எவரையும் நிமிர்ந்து பார்க்காது கூச்சத்துடன் நின்ற கணேச மூர்த்தி வெள்ளவத்தை பஸ் நிலை யத்தில் இறங்கினார்.
கிழிந்த பத்து ரூபாவை மாற்று
8
வதற்கு கணேசமூர்த்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி யடைந்ததால் மனைவிக்கு என்ன கூறுவது எனத் தெரியாது தவித்துக் கொண்டிருந்தவருக்கு எதிரே கடவுள் போல சுவீப் ரிக்கெற்காரன் வந்தான்.
சுவீப் ரிக்கெற்காரன் கட்டாயம் மாற்றித் தருவான் என்ற நம்பிக்கையில் அவனை மறித்து சுவீப் ரிக்கெற்று களைப் பார்த்தார். அவன் ஒவ்வொரு ரிக்கெற்றையும் ಆn) அதற்குரிய பரிசத் தொகையையும் கூறினான். ஏதோ நினைத் தவராக சுரனர் டல் ரிக்கெற்றினை நகத்தால் சுரண்டத் தொடங்கினார்.
கணேசமூர்த்தி சுரண்டி முடிந்ததும்
ரிக்கெற்றைப் பார்த்த அவன் பத்து
ரூபா இருக்கு என்றான். இன்னொரு
ரிக்கெற்றைச் சுரன்ைடினர். அதில் இருபது ரூபா இருந்தது. கணேச
மூர்த்தி இரண்டு ரிக்கெற்றுகளைச் சுரண்டினார். ஒன்றில் எதுவும் இல்லை. இன்னொன்றில் ஐம்பது ரூபா இருந்தது.
சுவீப் ரிக்கற் விற்பவனுக்கு உற் சாகம் பிறந்து விட்டது. இன்னும் ஐந்து ரிக்கெற்களைச் சுரண்டுமாறு கூறினான். கண்ேசமூர்த்தி உசாராகி விட்டார். இனி ஏமாற்றப் போறானே எ லiற சந்தேகத்தில் நான்கு அதிர்ஷ்ட லாப ரிக்கெற்றுகளை எடுத்துக் கொண்டு ஒரு ரிக்கெற்றைச் சுரண்டினார்
சவீப் ரிக்கெற்காரன் “மாத்தையா ரண்டாயிரம் ரூபா கிடக்கு” என்று பெரிதாகச் சத்தம் போட்டான். கணேச

19 மூர்த்தி திரும்பிப் பார்த்தார். ரிக்கெற் காரன் ஏமாத்திப் போடுவானே என்ற சந்தேகமும் அவருக்கு ஏற்பட்டது.
கிடைச்சவரையில் இலாபம் இனி யும் தொடர்ந்தால் சிலவேளை இது வும் இல்லாமல் போய்விடும் என நினைத்த கணேசமூர்த்தி இரண்டா யிரம் ரூபா கிடைத்த ரிக்கெற்றை வேண்டிக்கொண்டு கிழிந்த பத்து ரூபாவைக் கொடுத்தார். V,
“என்ன மாத்தயா இவ்வளவு காசு கிடைச்சிருக்கு கிழிஞ்ச காசே தாஹி யள். சந்தோசமா காசு தரவேண் டாமோ?” என்று அவன் கேட்டான்.
அதை திருப்பி வாங்கிக் கொண்டு
நூறு ரூபாவைக் கொடுத்து விட்டு கணேசமூர்த்தி வீட்டை நோக்கிச் சென்றார்.
கணேசமூர்த்தி விட்டுக்குள் நுழைந்தது கூடத் தெரியாமல் அவரின் மனைவி தொலைக் காட்சியில் லயித்திருந்தாள்.
“இண்டைக்கு எனக்கு நல்ல முளுவியமப்பா” எனக் கூறியபடி
மனங்குளிர வ
தம்பதியினரின் திருநிறைச்
ழ்த்துகிண்மீ மல்லிகையின் அபிமான எழுத்தாளர் தெணியான்' அவர்களின் திருநிறைச் செப்வி ஐானகி அவர்களுக்கும் திரு.திருமதி நடேசன் செல்வன் அகிலன் அவர்களுக்கும் பொலிகண்டியில் வெகு சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது.
மணமக்களை மல்லிகை மனங்குளிர வாழ்த்துகின்றது.
சுரண்டல் ரிக்கெற்றில் இரண்டாயிரம் ரூபா விழுந்ததைக் கூறினார்
'காலமை கிழிஞ ச காசு வேண்டைக்க என்னை முறைக்கப் பாத்தனி இப்ப இரண்டாயிரம் ரூபா கொண்டந்திட்டன். இதுக்கு என்ன சொல்லப் போறாய்” என்று சவால் விட்டவாறு இரண்டாயிரம் ரூபா பெறு மதியான சுரண்டல் ரிக்கெற்றையும் கிழிந்த பத்து ரூபாவையும் கணேச மூர்த்தி மனைவியிடம் கொடுத்தார்.
இதை நீங்களே வைத்திருங்கோ என்று பத்து ரூபாவை அவள் திருப்பிக் கொடுத்தாள்.
o O o
O
" địồ ChíT செலுத்தி 'o.
* விட்ர்ேகளா ?
தயவுசெய்து மல்லிகையுடன் ஒத்துழையுங்கள். அசட்டை செய்வோருக்கு . முன்னறிவிப்பின்றி
制 4 p O
நிறுத்தப்படும். 9
O 's
جسس را ببینید:
豪 O
O 筠
麟 O
拳
攀
O
VN
ஆசிரியர்

Page 12
2000ஆம் ஆண்டு 'மல்லகை ஆண்டு
மலரைப் பற்றி 11-1-2004ல் வெளிவந்துள்ள ஆனந்த விகடன்’
இதழில் 'சுஜாதா இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
ஆசிரியர்
சொன்னது போல் டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை’ இதழின் முப்பத்தைந்தாவது ஆண்டு சிறப்பு மலரை (ஜனவரி 2000-ல் வெளியானதை இப்போதுதான் படித்து முடித்தேன். கொழும்பு நகரிலிருந்து வெளிவந்த சிற்றிலக் கியத் தமிழ் ஏடு முப்பத்தைந்து ஆண்டுகள் கண்டது ஒரு பெரிய விஷயம். இந்த மலரில் மல்லிகையை ‘சுமந்து சென்று தெருத் தெருவாக விற்றுத் திரிந்த அந்த SDT66 நாட்களைப் பற்றி டொமினிக் ஜீவா ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார். சிருஷ்டி வரலாற்றில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் வதிந்து பேசப்பட வேண்டும். அதற்கான பங்களிப்பை யார் செய்தாலும் அவர்களுக்குத் தலைவணங்குகிறேன் என்கிறார் ஜீவா.
மலரில் பா.ரத்னசபாபதி ஐயரின் ‘அரூபத்தின் ரூபம்' என்கிற கட்டுரை சிறந்தது. தருமு அரூப் சிவராம் பற்றியது. மெள்ளி கதைகளுக்கு அவர் எழுதிய முன்னுரையைப் படித்துவிட்டு திருகோணமலையில் தருமுவைத் தேடிச் சென் றதையும் வயசான ஒருவரை எதிர்பார்த்து இளைஞரைக் கண்டு ஆச்சரியப் பட்டதையும் மிக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். தருமு இவர்களிடம் ‘எழுத்து பிரதிகளின் பைண்டு பண்ணப்பட்ட புத்தகத்தைக் கொடுத்துவிட்டு ஐம்பது ரூபாய் கைமாற்றாகக் கேட்டாராம். எதற்கு என்று வினவியதற்கு ப்ரெஞ்சு கற்றுக் கொள்ள' என்றாராம்.
தருமு அருப் சிவராம் இலங்கையில் இருந்தபோது வரைந்த ஓவியங்கள்
20

2们 எல்லாம் எங்கு இருக்கிறதோ நான் அறியேன்.அவரிடமிருந்த நூல்களுக்கு என்ன நிகழ்ந்தது. கையெழுத்துப் பிரதி களை என்ன செய்தார். (800 பக்க ஆங்கில நாவல் ஒன்று எழுதி வைத்தி ருந்தாராம்.) இந்தியாவுக்கு எடுத்துச் சென்றாரா , திருகோணமலையில் ஏதாவது ஒரு உறவினர் வீட்டில் பெட்டி யில் இருக்கிறதா எனக்குத் தெரியாது.
(அவர் இருந்த) பானு என்கிற வீடு EXCELLENT அந்தப் பெயரில் இல்லை என்று அறிந் தேன். ஆனால், அந்தப் பெயர் என் FHOTOGRAPHERS
1990 S50505): ' MoDERN CoMPUTERIZED மூத்த மகளுக்கு தருமுவின் ஞாபகமாக பானு என்ற பெயர் வைத்துள்ளேன். PHOTOGRAPHY தருமு என்னுடனும் எங்களுடனும் Gurrubig, GETGärọbiệprii. Dout 595 FOR WEDDING PORTRAITS ஆழம் காணமுடியாத நிலவறைக் கிணறுதான். 8 CHILD SITTINGS
சமீபத்தில் நான் படித்த சிறந்த கட்டுரைகளில் ஒன்று இது.
இதே மலரில் செங் கை ஆழியான் ‘சிரித்திரன்’ என்கிற சஞ்சிகையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 1963-ல் சி.சிவஞான சுந்தரம் என்கிற தேர்ந்த கார்ட்டுனிஸ்ட் எழுத்தாளரினால் துவக்கப்பட்டு, 1987ல் இந்திய அமைதிப் படை ஈழத் து மண்ணில் தன் பாதங்களை வலுவாக அழுத்தும் வரையில் 24 ஆண்டுகள் நடைபெற்ற பத்திரிகை. அந் நிய அனுமதியுடன் இந்த மணி னில் சஞ்சிகையை வெளியிட சுந்தரின் தன் மானம் இடம் தரவில்லை. சிரித்திரனில் வந்த கார்ட்டுன்களில் மூன்றுதான் முந்தின பக்கங்களில்.
Uggas >

Page 13
அருந்ததி நோயின் ‘சிறிய பொருட்களின் கடவுள்'
தலித்தியக்கத்தின் சாயலும் உலக இலக்கியத்திண் தரமும்
- ஆர்.கந்தையா
அருந்ததி றோயின் சிறிய பொருட்களின் கடவுள் நா6. "கல் மீண்டும் அய்மனம் வந்தடைவதுடன் ஆரம்பமாகின்றது. காலம் பின்னகர்ந்து இருபது வருடங்களுக்கு மேற்பட்ட நிகழ்புல கள நிலையைக் கட்டவிழ்க்கின்றது. ராகேலின் வாழ்க்கை நீண்ட நெடிய பாதையினுாடாக ஒரு வட்டத்தை வரைகின்றது. இந்த வட்டத்துள் எத்தனை வட்டங்கள் வடிவங்கள், எத்தனை நெழிவு சுழிவுகள், எத்தனை ஏற்ற இறக்கங்கள், எத்தனை இடர் இழப்புக்கள். இவையெல்லாம் சங்கமித்து ஒரு முழுமையை, புதுமையை இந்நாவலுக்குத் தந்து விடுகின்றன.
இந்த நவீனத்தை வாசிக்க ஆரம்பிப்பவர்கள் அதிசய உலகின் அலிஸ்’ போன்று தடுமாறுவர். அவர்கள் இது0காறும் வாசித்திராத, அனுபவித்திராத ஒரு புதுமையை இப்புதினத்தில் கண்டு மயங்கி நிற்பர், மலைத்தும் போவர்.
இந்நாவலில் அருந்ததி றோய் ஒரு புதுவகையான நாவல் உத்தியைக் கையாளுகின்றார். கதையின் போக்கு முன்னோக்கியும், பின்நோக்கியும், விரைவாகவும், அழகாகவும் நாவலின் கட்டமைப்புப் பிசகாமல் மாலை போன்று தொடுக்கப்பட்டு அசைந்து செல்வதையும், கிட்டத்தட்ட 50 வருடங்களின் பதிவுகள் அங்கே அரங்கேறுவதையும் வாசகர்கள் கண்டு கொள்வர்.
அருந்ததி ஒரு நாவல்தான் எழுதியவர் என ஒரு விதமாகப் பார்ப்பவ்ர்கள் இந்நாவலில் அவரது இலக்கியப் பகைப்புலத்தில் நீண்டு பரந்திருக்கும் உலக இலக்கியத்தின் அனுபவங்களைக் கண்டு கொள்வர். இந்த நாவலில் உலக இலக்கிய வாதிகள் வலம் வருகின்றனர். ஆனால் அவர்களால் அருந்ததியின் ஆழப் பதிந்த இந்திய வேரை அசைக்க முடியாது போய்விடுகின்றது.
22

அருந்ததி தனது நாவலில்
எல்லைக்குள் நின்று புதிய எல்லை
களை வகுக்கின்றார், எல்லைக்குள்
நின்று எல்லைகளை மீறுகின்றனர், சொல்லக் கூடாதெனச் சமுதாயம் எதிர்பார்ப்பதைச் சொல்லி வைக் கின்றார், கேட்கக் கூடாதவைகளைக் கேட்டு வைக்கின்றார். எட்ட முடியாத
வைகளை எட்டிப் பிடிக்கின்றார், சக எழுத்தாளர்களது கண்டனக் குரலைக்
கேட்டும் அசட்டை செய்கின்றார். இவைகளுக்கெல்லாம் அவர் கூறும்
பதில் இதுதான்:
"இந்தியக் குடிமகன் என்ற வகை யில் உங்களிடமிருந்து விலகி எனக் குரியதாகிய ஒரு தேசத்தில் எனது கொடியை உயர்த்துகின்றேன். நான் யாருக்கும் அடிமையில்லை.”
அழிந்து கொண்டிருக்கும் இந்தியாவின் நவ சிற்பி அருந்ததி,
குளத்தின் நடுவே சிறு கல்லொன் றைப் போட்டால் ஒரு சிறிய அலை வட்டத்தை ஏற்படுத்தும். அது கரையை வந்தடையும்போது எத்தனை எத்தனை அலை வட்டங்களை ஏற் படுத்தும். அவ்வாறே கேரளத்தின் பழமை மிக்க
சிறியன் கிறீஸ்தவக் குடும்பமொன்றின்
சிதைவைக் கதைப் பொருளாகக் கொண்டு, இந்தியாவின் சிதைவை
உலகுக்குக் காட்டி விடு கின்றார்.
உலக் சிதைவும் இடையி டையே எட் டிப் கதையினூடாகப் பரந்துபட்ட மனித நேயத்தையும், அடக்குமுறைக்கெதி ரான போக்கையும் காட்டுகின்றார்.
பார்க் கின்றது. தனது
23
வகையில் பட்டவள். கடற்கரையில் வானொலிப்
கதை கூறுபவை சில, மெளனமாகத் தொக்கி நிற்பவையோ பல.
நாவல் இலக்கியம் பற்றிய திறனாய்வாளர்கள் நாவல எனபது வாழ்வின் முழுமையைச் சித்திரிக்க முயல வேண்டிய ஒரு இலக்கிய வடிவம்' எனப் பொதுவாகக் கூறுவர். ஆனால் அருந்ததியோ இதற்கப்பாலும் தனது பார்வையைச் செலுத்து கின்றார்.
இக்கதையில் பல பாத்திரங்கள் வருகின்றன. இருப்பினும் பிரதானமான பாத்திரங்களாக நாம் நான்கு பேரைக் குறிப்பிடுவோம். அம்மு, வெலுத்தா, ராகேல், இஸ்தா ஆகிய நான்கு பேருமே அவர்கள். ஏனைய எல்லாப் பாத்திரங்களும் இவர்களைச் சுற்றி அல்லது இவர்கள் எல்லாப் பாத்திரங் களையும் சுற்றி வருகின்றனர். சிறப் பாக வெலுத்தா என்ற பாத்திரம் பிரத் தியட்சமாக எமக்குத் தோற்றுவதற்கு முன்பே சூட்சுமமாக எல்லா இடங் களிலும் நிறைந்து நிற்கின்றான்.
இந்த நான்கு பாத்திரங்களும் ஒரு வகையில் touchable பாத்திரங்கள் அல்ல. அம்மு திருமணம் செய்த சாதியால் விலக்கப்
பெட்டியுடன் காலத்தைக் கழிப்பவள். ராகேல், இஸ்தா epoloog, two cggS twins. ஆகவே அவர்கள் மூவரும் சாதியால் கழிக்கப்பட்டவர்கள் வெலுத்தா ஒரு பரவன் நடந்து செல்லும் பாதச் சுவட்டை அழித்துச் செல்ல வேண்டிய தீண்டத் தகாதவன்.

Page 14
இவ்வகையில் இந்நாவல் ஒரு தலித்
திலக்கியமே.
தலித்திலக்கியம் பற்றியெல்லாம்
இப்பொழுது பரவலாகப் பேசப்படு
கின்றது. ஆனால் தலித்திலக்கியத்தின்
சாயலில் முழு உலகிற்கும் தலித்துக் களின் பிரச்சினைகளை அம்பலப் படுத்திய வகையில் இது புறக்கணிக் கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, வீசி எறியப் பட்ட மக்களைப் பற்றிப் பேசும் நாவல் என நாம் துணிந்து கூறலாம்.
இந்தியப் பாரம்பரியத்தில் சிறு
தெய்வ வழிபாடு - ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. சிறு தெய்வங் கள் சாதாரண மக்களது தெய்வங்க ளாகவும், ஆனால் மிகுந்த சக்தி படைத்தவைகளாகவும் கருதப்படு கின்றனர். மக்களது இன்னல்களை தீர்க்கும், கேட்கும், வரமளிக்கும், கூப் பிட்ட போதெல்லாம் குரல் கொடுக்கும் கடவுளர்கள் இவர்கள். இவைகளைக் கருத்திற் கொண்டோ என்னவோ அருந்ததி வெலுத்தாவைச் சிறிய பொருட்களின் கடவுளாக்கி விடுகின் றார். சாதாரண, சமுதாயத்தால் புறக் கணிக்கப்பட்டவர்களை அருந்ததி 'பொருட்களாக’க் காண கின்றார் போலும்.
அருந்ததி தலித்திலக்கியம் படைப் பவர் எனக் கூறுவதை விட தலித்துக் களின் உணர்வின் உயிராக விளங்கு பவர் என்பதே சாலப் பொருந்தும், எனவேதான் மனித எல்லைகளைக் கடந்து மானுடம் படைக்க அவரால்
முடிகின்றது. இறுக்கமான இந்திய
24
சாதிக் கட்டுப்பாட்டை உடைத்து அதன் கொடுமையை உலகறியச் செயப் கின்றார். உள் மனதின் உறுத்தல், உந்தல், வேதனை இல்லாது விட்டால் உணர்ச்சி ததும்பும் காவியம் படைக்க முடியாது. இவ்வகையில் இந்தப் புதினம் கால தேச எல்லைகளைக் கடந்து, சமய, சமூக, கலாச்சார வரம்புகளை உடைத்து மனித தரிசனம் தரும் உலக இலக்கியம் என நாம் கூறுகின்றோம்.
வெலுத்தா உண்யிைல் ಇ6 لاقيigbL|
தமால், !ாத்திரப் படைப்பு அமைதியே
உருவான, *றவர்களைக் கதைக்க விட்டுத் தான se து இருக்கும் பாத்திரம் அவன். பூவின் தடியால் அடித்து, கால்அணிகளால் மிதித்துக் கொல்லப்படும் வேளையில் கூட, முனகல் ஒலி ஒன்றைத் தவிர வேறு ኣ' ,~ ' ,¬ቭ፡‹‹ ، ، ، ܊” - ܖܗܝ ܗܳܐ ܐܳܬ݂ܶܐ v- ܀ -، அேெ به سبب را در سال روی را ه و وهن சின்னச் சின்னப் பொருட்கள் செய்யும் சிறிய கடவுள். சின்னச் சின்ன மனிதர் களால் நேசிக்கப்படுகின்ற சின்னக்
... / , , 41, கடவுள். பெரிய மனிதர்கள் புரிந்து கொள்ளாத சிறிய கடவுள்,
ܪܟ݂-܂ ، ܟܐ، rr rr ܝ، ܐ ، ܊ܐ ~ Lu V , “ u v LU Vivi .
ஊறுகாய்க் கம்பனியின் அச்சானி வெலுத்தா, அவன் கைபடாத இயந் திர்மோ, தள்பாடங்களோ இல்லை யெனும் அளவுக்கு அவனது முக்கியத் துவம் உணரப்படுகின்றது. அம்முவுக்கு விளையாட்டுப் பொருட்கள் செய்து கொடுத்திருக்கிறான். அம்முவின் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் செய்து கொடுத்திருக் கிறான். அய்மனம் குடும்பத்திற்குப் படுப்பதற்குக் கட்டில் செய்து கொடுத்

திருக்கிறான். இவைகள் யாவும் அவன் கைபட்டே உருவாகின. ஆனால் அவன் touchable" வகுப்பினன் அல்ல. இது வேடிக்கையல்லவா?
இதற்கென்னவோ அவன் மற்றவர் களைத் தீண்டியதாக அருந்ததி காட்ட வேயில்லை. அம்முவின் கையிலுள்ள பொருளை அவளது கையில் தன் கரம் படாமல் எடுப்பவன். அப்படிப் பட்டவன் காவல்துறையினர் தீண்டி’ இறக்கின்றான்.
இவ்வாறான சிறிய கடவுள் மேல் அம்மு காதல் கொள்கிறாள். இது அவளது வறண்ட வாழ்வின் வெளிப் பாடு எனக் கூறிவிட முடியாது. இது உண்மையிலேயே இந்தப் பரவன், அல்லது அய்மனக் குடும்பத்தின் கொத்தடிமை ஏற்படுத்திய இதய தாகத் தால் எழுந்த ஒரு காதல் உணர்வுதான்.
இவற்றைத் தீண்டக் கூடியவர் களால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. அதேவேளை இச்செயலைக் கண்டித்துக் கொதித்தெழுபவர்கள் உத்தம சீலர்கள் அல்ல. சாக்கோ 'ஆண்களின் தேவைகள்' என்) போர்வையில் நடத்தை பிசகியவர். அய்மனம் குடும்பத்தில் அனேகமா னோர் நடத்தை பிசகியவர்களே. ஆனால் அம்மு பரவனுடன் தொடர்பு ஏற்படுத்தியதைத்தான் அச்சமூகம் ஏற்கவில்லை. இவ்வாறான குறைவு கொண்ட மனிதர்களே நிறைவுடைய வெலுத்தாவைக் கொல்லுவதற்குக் காரணமாகின்றனர். அவனது மணம்' அவர்கள் வயிற்றைக் குமட்ட வைக்
25
கின்றது. போக்னரின் வறணி பு கோடை ஞாபகத்திற்கு வருகின்றது.
அம்முவை நிமிர்ந்து பார்க்காத வெலுத்தா அவளைக் காதலிக் கின்றான். இதற்கென்னவோ இச் செயலுக்கு அவன் உடந்தையாக இருக்கிறானென எண்ணிவிடக் Ժուng! அருந்ததி வெலுத்தாவை மிகவும் நிதானமாக ஆனால் சாதுரி யமாகக் கடவுள் நிலைக்கு உயர்த்து கின்றார். இருப்பினும் இந்தச் சிறிய கடவுள் தனது எல்லையைக் கடக் கின்றது. ஏனெனில வாழ்க்கை நாம் நினைத் தபடி இருந்து விடுவ தில்லையே. காதல் தரம் பார்த்து மலர் வதில்லையே. பேர்ணாட்சோ கூட கூறும் tite force' எம் எல்லோரையும் இழுத்து விழுத்தி விடுகிறது. இவர் களது காதல் அரங்கேற்றத்தை எவ்வளவு நாகரிகமாக அருந்ததி கூறுகின்றார்.
to love by night the man her children found by day'
வெலுத்தா காதல் வயப்பட்ட போதுமி கூட அவனது புனிததி
தன்மையை அருந்ததி மாசுபடுத்த
விரும்பவில்லை. பாலியல் சார்ந்த பல நடவடிக் கைகளை அப்பட்டமாகச் சொல்லக்கூடிய அருந்ததி மிகவும் பக்குவமாக நடந்து கொள்ளுகின்றார். உண்மையில் ஆண் செய்ய வேணடிய பாலியல் நடவடிக்கைகளை அம்முவே செய்கின்றாள். இதுகூட அருந்ததியின் எல்லைகளை மீறும் இயல்பைக் காட்டு
கின்றது. வெலுத்தா தெய்வமல்லவா?

Page 15
பக்தி பூண்டவளுக்கு அருள் சுரக் கின்றான்.
அம்முவுக்குத் தன் காதலின் பின் விளைவு நன்றாகத் தெரியும்.
வெறுமையான பார்வையும், கட் டாயமாகத் தலை சவரம் செய்யப்பட்ட பெண்களும் (வேசியர்) இம்மண்ணில் நடமாடுவதை அவள் அவதானித்திருக்
கிறாள். இங்கு நீண்ட தலைமயிர் |
நடத்தை பிசகாதவர்களுக்கே உண்டு. தானும் இந்தப் பட்டியலில் ஒருவளாக மாறச் சமுதாயம் சந்தர்ப்பத்தைப் பார்த்திருக்கின்றதென்பதும் அவளுக் குத் தெரியும்.
பெண்மையின் சிதைவுகள்தான் |
அவளது வாழ்விக் முகிழ்ப்பு ஆணிண் அத்துமீறல்கள் தான் வாழ் வின் பூரணத்துவம், ஆனால் touchable
s
மனிதர் இவற்றை உணரும் நிலையில்
இல்லை. ஏனெனில் சாதிப் பெருமை யில் ஊறிய இவர்கள் நளினமான உணர்வுகளைப் பொறுத்தவரையில் ஜடங்களே.
இதன் விளைவு வெலுத்தாவின் இறப்பு இவ்விடத்தில்தான் அருந்ததி
6ઈી க்கி லி f :¶ | ?:'?'T
லிருந்து விலகி பல பரிமாணங்களைத் தழுவி நிற்பதைப் பார்க்கின்றோம்.
வெலுத்தா அநாகரிகமாகக் கொல் லப்படுவதை அருந்ததி அருவருக்கத் தக்க முறையில் எழுது கின்றார். மனிதத் தன்மையற்ற முறையில் இக் கொலை சட்டத்தின் காவலர்களான பொலிசாரால் செய்யப்படுகின்றது.
Politeness
Obedience
Loyality
Intelligence
Cocrtesy Efficiency இவ்வளவு தகைமை
களும் கொண்ட பொலிசாரே வெலுத்
தாவை மிருகத்தனமாகக் கொலை செய்கின்றார்கள். இக்கொடிய கொலை பற்றிய விபரங்களைப் 6)
பக்கங்களில் அருந்ததி எழுதுகின்றார்.
எடுத்துக் காட்டாகச் சில வரிகள்:
மரத்தின் 'பொத்' என்ற அடி
தசையில் விழுவதை அவர்கள் கேட்
டார்கள். எலும்பில் பூட்ஸ் உதை, பல்லின் மேல் வயிற்றில் உதைக்கும்
போது மூச்சடங்கிய உறுமல் சத்தம்.
சீமெந்து நிலத்தில் மண்டை ஒடு பட்டு நொருங்கும் அமுங்கிய சத்தம் முறிந்த விலா எலும்பு முனை நுரைஈரலைக்
கிழித்ததனால் மனிதனின் மூச்சில்
குமிழ் விட்டு வரும் இரத்தம் இக் கைங்கரியத்தைச் செய்தவர்கள் யார்? சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் காவல் படையினர். இது எங்கே நிகழ் கின்றது? மனித அடக்குமுறைக்கெதி ராகவும், சாதியத்துக்கெதிராகவும்
காந்தி வாழ்ந்த இந்தியாவில் இதுதான்
நவ இந்தியா என உலகத்தவருக்குக்
காட்டுகின்றார். அத்துடன் பொதுவுட மையாளர்கள் கூட தமது நலனுக்காக மற்றவர்களை வஞ்சிக்கும் அரசியல்
விபச்சாரத்தையும் உலகத்திற்குக் காட்டுகின்றார்.
'மிக அகன்ற வன்முறையோடு

கூடிய, சூழல் மிக்க, புத்தி பேதலித்த, முடிவு பெற்ாத கொந்தளிக்கின்ற ஒரு தேசத்தின் கதைதான் , ,
இந்தியாவின் சிதைவை ஒரு குடும்பத்தின் சிதைவுடன் காட்டுவது எவ்வளவு அர்த்தமுடையதாக இருக் கின்றது. இக்குடும்பத்தின் சிதைவால் அம்மு கண்காணா இடத்தில் இருக் கின்றாள். ராகேல் அமெரிக்காவுக்கு ஒடுகின்றாள். இஸ்தா மனநோயாளி ஆகின்ற16ள். دن روبر0ن{ کہ نع (قویک இன்றைய இந்தியாவுக்கும் பொருத்தமுடைய தாகும்.
மகாத்மா காந்தி தனது வாழ்வில் சாதியத்தைப் பூண்டோடு அழிக்க விரும்பினார். அவர் வெற்றி :ண்டார் என உலகம் நம்பிக் கொண்டிருக் கின்றது. உண்மை அதுவ R ல, உலண்டை: இதுதான் 61னச் சுட்டிக் கட்டு கின்றார் அருந்ததி
இக் கதை நிகழ்வது 1969ஆம் ஆண்டில், அன்று அல்ல இன்றும் இந்தியா திருந்தவேயில்லை. பெண் ணடிமை. அரசியல் விபச்சாரம் அதி -ჩ ! iჭo ჭკ& نہین ، { | تارف, } را:{0 تا 91 ناشند. விட்டன என்பதையும் தனது நாவலி னுாடாக உலகத்திற்குச் சொல்லி வைக்கின்றார்.
இந்தப் புதிய நாட்டில் சரித்திரம் செத்து விட்டது. புராணங்கள், இதி காசங்கள் ஏட்டளவில் நின்று விட்டன. மகான்கள் மேடைப் பேச்சுக்கு உதார
ணங்களாக மட்டும் மாறிவிட்டனர்.
பயங்கரம், அநீதி என்பவை கோலோ
ச்சும் நாடு இந்தியா எனும் பெரிய பரிமாணத்தை இந்நாவலினுாடே காட்டுகின்றார்.
இந்தப் பரிமாணத்தை 60வதற்கு அவர் பல எல்லைகளை மீற வேண்டியுள்ளது. சிறப்பாக ஆங்கில மொழியின் எல்லையை அவர் மீறு கின்றார். இது காறும் வாசித்த, எழுதிய, பேசிய மொழிநடையை உ6 டத்த பெருமை அருந்ததியையே சாரும் றஜ ரவேட் கூட இவருக்கு அருகே வரமுடியாமல் போய்விடு கின்றது. ஆங்கில மொழியை உடைத்த தன் மூலம் இலக்கிய ஆர்வலர்க்கு இங்கும் ஒரு ஆங்கிலம் உண்டு, அது எல்லையைக் கடந்து எல்லா மொழிச் சேர்க்கையுடன் மனிதம் பேச வரு கின்றது எனக் கூறுகின்றார்.
உ85ண்மையில் வாசகன் முதலில் 11வசமடைவது கதையிலோ, கருப் பொருளிலோ, பாத்திர வார்ப்பிலோ அல்ல. சொலிலும் வகையில் , செ1 லலும் மொழியில அவன் சொககிப போகின்றான, அருநததியின் மொழி இருக்கின்றதே, அது ஒரு பு:பல்கே அவரது மொழி சில இடங்
களில் ஆங்கில மொழி அமைப்பை
உடைக்கும், சில இடங்களில் பல சொற்களை இணைக்கும், இன்னும் சில இடங்களில் சுதேச மொழியை அப்படியே மொழி பெயர்க்கும், மீண்டும் சில இடங்களில் இரண்டு மொழிகளையும் இணைக்கும்.
அருந்ததியின் ஆங்கிலத்தை வாசிக்கும் போது கவிதை நய்த்தோடு

Page 16
மொழி எமது மனதை, ஆத்மாவை வருடிச் செல்லும். ஒரு இனிமையான தாலாட்டு எம்மைக் கிறங்க வைக்கும். இம்மொழியினூடாக நாம் புதிய உலக தரிசனம் பெற்று நிற்போம். அருந்ததி யின் மொழியில் மேலைத் தேய இலக்கிய கர்த்தாக்கள் வந்து போகின் றார்கள். புராண இதிகாச மாந்தர்கள் வந்து போகின்றார்கள். மலையாள எழுத்தாளர்கள் எட்டிப் பார்க்கின்றார் கள். இவைகளெல்லாம் கலந்த திரவ மொழியே அருந்ததியின் மொழி' சில சொற்றொடர்கள் எம்மை கொண்டு சென்று விடுகின்றன. உதார ணத்திற்குச் சில வரிகள்:
எங்கோ
- automobile islands in a river of people .
- la Viable die - able age - past the people, watching the people watching the people.
- prepare to prepare to be preopared - Dark of heartness tiptoed to the heart of darkness
இந்த வாக்கியங்கள் நிறை வசனங்கள் அல்ல, குறை வசனங் களும் அல்ல. நிறைவும் குறைவும் உள்ள வசனங்களும் அல்ல. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. மொழி என்பது ஒரு ஊடகம் எழுதுவோன், வாசகன் என்போரால் நிர்ணயிக்கப்படு கின்றது. அருந்ததி உலக இலக் கசிய வாதிகளுக்கெல்லாம் இலக்கியம் சொல்லித் தருகின்றார்.
ஓடில்லாத ஆமைகளும்’ |செங்கை ஆழியானின் சிறுகதைத்
தொகுதி வெளிவந்துள்ளது.
 
 

29
மாற்றுச்சினிமாவாக பீதாமதண்’
- பாலைநகர் ஜி.ப்ரி
தமிழ்ச்சினிமா உலகு இன்று தன் அசிங்கமான முகத்தை மிகத் தீவிரமாக வெளிப் படுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கான முக்கிய பின்புலமாக அமைந்திருப்பது எதுவெனில், சமூகமட்டத்தில் ஆரோக்கியமான விளைவு மாற்றங்களை ஏற்படுத்தவல்ல கலையின் ஓர் வடிவமான சினிமாவை தமிழ்ச்சினிமா ஜாம்பவான்கள் தவறாக எடைபோட்டுக் கொண்டமை தான் எனத் துணிந்து கூறமுடியும். இதற்கு புற்றீசல் போல வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள் நல்ல உதாரணம். இதற்குப் பின்னான அரசியல் என்னவென்றால். தமிழ்ச்சினிமா இயக்குனர்கள் சினிமாவை சமூகமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு உன்னத கலை வடிவமாகவோ அல்லது நடைமுறை உலகின் மறுக்கமுடியாத யதார்த்தமான தத்துவார்த்த அம்சங்களை மக்கள் முன் நிறுத்துவதற்கான சிறந்த ஓஊடகமாகவோ இதனைக் கருதவில்லை. மாறாக, புகழும். செல்வமும் ஈட்டுவதற்கான தொழில் முயற்சி யாகவே பார்க்கத் தலைப்பட்டு விட்டனர். இது. இன்று எமது தமிழ்ச்சினிமா உலகைப் பீடித்துள்ள மிகப்பெரும் அவமானமும், தலைகுணிவுமாகும்.
ஈரானிய சினிமாக்களை நல்ல முன்னுதாரணமாகக் கொண்டு, அண்மையில் இலங்கைச் சிங்களத் திரையுலகிலும் சில ஆரோக்கியமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தமிழ்ச்சினிமா உலகு அறிந்திராத விடயமொன்றல்ல; ஆயினும் அது குறித்து தமது கவனத்தைச் செலுத்தாமல் தன்பாட்டில் போய்க் கொண்டிருப்பதுதான் தமிழ்ச்சினிu: குறித்த அக்கறையாளர்களின் மிகப்பெரும் கவலையாகும். தமிழ்ச் சினிமாஃபுக்கான தேை மிகப் பன்னெடுங்காலமாகவே உணரப்பட்ட அதேவேளை அதற்கான அடித்தள முயற்சிகளு மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய நம்பிக்கைதரும் முயற்சிகளில் கன்னத்தில் முத்த மிட்டால், ஆளவந்தான். நந்தா, சேது. காசி, அழகி, காதல் கொண்டேன் போன்றவை குறிப்பிட்டுக் கூறத்தக்கவை. இந்த வரிசையில் இப்போது இடம்ப்டித்திருப்பதுதான் பிதாமகன்' இவை தமிழ்ச்சினிமா உலகில் மாற்றுச் சினிமாவின் இருப்புக்கான தளத்தைச் சுட்ருகின்ற துரதிஷ்டமென்னவென்றால், மற்றுச் சினிம 1 நோக்கிய நகர்வு தமிழ்ச்சினிம உலகில் மந்தகதியிலேதான் இருக்கிறது.
காதல் எனும் ஒற்றைத் தளத்தில் நகர்த்தப்பட்டு வந்த எமது தமிழ்த் திரைப்படங் களிலருந்து பிதாமகன் உண்மையில் வித்தியாசமானதுதான். கதையில் மட்டுமல்ல. அதற்கப்பாலான நடிப்பு. காட்சிப் படுத்துகை, கதை மாந்தர்களின் நடவடிக்கை போன்றவற்றில் ஒரு தனித்துவம் துளிர்க்கிறது. பிதாமகன் எம்மை ஒரு வித்தியாசமான உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. புதுமையான செய்தி ஒன்றைச் சொல்ல முற்படுகிறது. நாம் கண்டுணர்ந்த கேட்டுணர்ந்த ஒரு மனிதனின். நாம் இதுவரை கண்டிராத, கே. டிர த வாழ்க்கையைச் சொல்கிறது. காட்டில் பிறந்து. கவனிப்பாரற்ற முறையில் வளர்ந்து நிற்கும் ஒரு வெட்டியாவின் உ500ர்வு சார்ந்த உலகம். ஒரு சராசரி பனிதனின வாழக்கை.

Page 17
66es Q
அவனின் உணர்வினது உலகத்திலிருந்து பெரிதும் வேறுபட்டு நிற்கிறது என்ற யதார்த்தம சினிமாத்தனத்தை மறைத்து தத்ரூபமாக வெளிப்படுத்தப்படுகிறது.
இங்கு, வெட்டியானாக வருபவர் விக்ரம். எதிர்பாராத விதமாக, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் படுகிறார். சிறையில் ஏற்பட்ட சூர்யாவின் நட்பு விக்ரமை நடவடிக்கை சார்ந்த மாற்றத் திற்கு இட்டுச் செல்கிறது. இருவரும் விடு தலையான பிறகு, சூர்யா விக்ரமுக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகம் செய்கிறார். அந்த உலகத்துச் சராசரி மனிதர்களின் நடைமுறை உலகத்துள் விக்ரமால் சாவ காசமாக நுளைய முடியவில்லை. ஏன்? ஏனையோர்கள்கூட விக்ரமின் உணர்வுல கத்துள் பயணிப்பதில், தோற்றுப் போய்விடு கிறார்கள். இதற்கு சூர்யா அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட பின்பும், அது பற்றிய கவலையின்றி விக்ரம் இருந்ததாகக் கருதி சங்கீதா விளக்குமாற்றால் அடித்து விரட் டும் காட்சி நல்லதொரு உதாரணமாகும். துரதிஷ்டமென்னவென்றால், இங்கு விக்ர மின் உணர்வுகளை சங்கீதாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது நண்பனின் இழப்பையிட்டு, வாய் பேச முடியாத, புத்தி சுயாதீனமற்ற வெட்டியானொருவனின் உள் ளக் குமுறலை, அவனது வெப்பிசாரத்தை உணர்ந்து கொள்வதில் அவனைச் சுற்றி இருந்த அனைவருமே தோற்றுவிடுகிறார்கள். இம்முரண்பாடுகளை கதை நகர்வின் சில கட்டங்களில் கண்டு கொள்ள முடியுமான அதேவேளை யதார்த்தமான ஒரு கதைப் பண்ணலும், நடிப்பும் இதற்குள் இருக்கிறது. தான் உயிருக்குயிராக நேசிக்கும் காதலனான சூர்யாவை தன் கண் முன்னா லேயே அடித்துக் கொள்ளும் காட்சியை லைலாவால் ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை. இதனை லைலா, சங்கீதாவிடமும், விக்ரமிடமும் முறையிடுகின்ற காட்சி யதார்த் தமானது. அதனை நேரடியாகக் கண்ணுற்ற
30
லைலாவால் சங்கீதாவிடம அதனை இயல பாகச் சொல்ல முடியவில்லை. அழுது கொண்டே திசையை நோக்கி சைகை செய் கிறாள். ` என்ன நடந்தது சொல்லுடி.' என்ற சங்கீதாவின் பதட்டத்துடனான அதட்டல் தொனிக்கு அவ்வளவு இலகுவில் லைலாவால் பதிலளித்து விடமுடியவில்லை. அங்கேயே. மயங்கி விழுந்து விடுகிறாள். உண்மையும் அதுதான். தன்னுயிரோடு ஒன்றிவிட்ட காதலனை தன்னெதிரிலேயே அடித்துக் கொல் வதை கண்ட ஒரு உண்மையான காதலியின செயறபாடுகள இப்படித்தான் அமைந்து விடுகிறது.
ஈற்றில் பொய், களவு, கொலை. சூது நி:ைத்த போலியான உலக வாழ்க்கை யோடு வ8, "ல் ஒன்றித்துப் போக முடிய வில்லை. இ6, கி" ஈக் கொண்டு வாழ் வதும் அவனுக்குச் . 1. Fi Tfu 1 b... gegħ னால், அவன் தன் பழைய வாழ்க்கைக்கே மீண்டு. மயானத்துக்கே போய் விடுகிறான். இந்தக் காட்சி எம் விழியோரங்களில் நீர்த் துளிகளை எட்டிப் பார்க்க வைக்கிறது. சினி மாத்தனம் வெளிப்படக்கூடாது என்பதற்காக பாடல் காட்சிகள் இடம்பெறவில்லை. சிம்ரன், சூர்யாவோடு இடைநடுவில் வந்து ஆடும் பாடற்காட்சியும் கூட பழைய பாடல்களின் தொகுப்புத்தான். இதுதான் படத்தின் சற்று மிகையான கட்டமும் கூட
இத்திரைப்படத்தின் இயக்குனர் பாலா ஏற்கனவே சேது. நந்தா போன்ற குறிப் பிடத்தக்க திரைப்படங்களைத் தந்தவர் இவ்ரது மற்றுமொரு முயற்சிதான் பித மகன்' என்றளவில் நாம் திருப்திபட்டுக் {&#{{##&# (!!2!ọt}{tỉ}. ệ##55:2 #;}} சினிமாக்களை அவ்வப்போதாகிலும் தந்து கொணடிருக்கும பாலா போன்ற இயககுனர் களிடமிருந்து தமிழ்ச்சினிமா உலகம் தன் சுய அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வேணி டி. இன்னும் நிறையவே எதிர்பார்த்திருக்கிறது.
I rri ri, rry (i. 4 u li وولیو

3.
இலங்கைத் திரையுலகம் எங்கே செல்கிறது?
- தம்பிஐயா தேவதாஸ்
சென்ற வருடம் இலங்கையில் ஒரு ஆங்கிலப் படம் காண்பிக்கப்பட்டது. அத்திரைப் படத்தின் 7 பிரதிகள் இங்கு திரையிடப்பட்டன. அதைப்போல் தென்னிந்தியத் திரைப்படங்களும் அதிகமாக திரையிடப்படத் தொடங்கி விட்டன.
உள்நாட்டு திரைப்பட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆங்கிலப் படமானாலும், இந்திப் படமானாலும் ஒரு பிரதியும், இந்தியத் தமிழ்ப் படமானால் இரண்டு பிரதிகள் மட்டும் திரையிடப்பட வேண்டும் என்ற சட்டத்தை திரைப்படக் கூட்டுத்தாபனம் நடைமுறைப்படுத்தியது. ஆனால் திரைப்பட இறக்குமதி தனியார் மயமானதும் அந்தச் சட்டம் எல்லாம் விடுபோடியாகி விட்டது. எனவே வெளிநாட்டுத் திரைப்படமொன்றின் பல பிரதிகள் இங்கு திரையிடப்படுகின்றன. இதன் மூலம் உள்ளுர்ச் சினிமாத் தொழில் பாதிப்படையத் தொடங்கியது.
இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கு என்னநிலை ஏற்பட்டதோ அதே நிலை இப்பொழுது சிங்களத் திரைப்படங்களுக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது.
சிங்களப் பட்ங்கள் பொருளாதார ரீதியில் தோல்வி அடைகின்றனவோ இல்லையோ ஆனால் சர்வதேச ரீதியில் அவற்றின் புகழ் வளர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையான வெற்றிப் படங்களில் ஒன்று 'சரோஜா' ஆகும். பங்களாதேஷில் நடைபெற்ற 21வது டாக்கா சர்வதேச திரைப்பட விழாவில் அது சிறந்த ஆசியத் திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறே வடகொரியாவில் நடைபெற்ற பியோஸ்யாங் திரைப்பட விழாவிலும்
பரிசு பெற்றது. உண்மையில் “சரோஜா சிங்களத் திரைப்படமானாலும் அது தமிழும் பேசியது. இலங்கையின் இனப்பிரச்சினையை ஓரளவு தொட்டுச் சென்றது.

Page 18
புதுடில்லியில் நடைபெற்ற 21வது சர்வதேச திரைப்பட விழாவில் லெஸ்டர் (8 g, Lò 6m uff Gi aš g5 * Life Time Achivment' என்ற விருது கிடைத் திருக்கிறது.
இவை மட்டுமன்றி லெஸ்டர் ஜேம்ஸ்பீரிஸ் இன்னுமொரு படத்தை இயக்கியிருக்கிறார். இத் திரைப் படத்தை தயாரித்திருப்பவர் ஒரு தமிழர். அவர் பெயர் சந்திரன் ரத்தினம் ஆகும். "லேகந்த வளவுல அத்திரைப் படம். இன்னும் இலங்கையில் திரை யிடப்பட வில்லையாயினும் வெளி நாடுகள் சிலவற்றில் வெளியிடப்பட்டு விட்டது. இத் திரைப்படத்துக்கும் வெளிநாட்டுப் பரிசுகள் கிடைத்துள்ளன.
தமிழர்கள் ஆரம்பித்து வைத்த
திரைப்பட நிறுவனமான சிலோன்
தியேட்டர்ஸ் நிறுவனம் தனது 75வது ஆண்டு நிறைவு விழாவை இப்பொழுது கொண்டாடுகிறது. இதையிட்டு ஒரு சிங்களத் திரைப்படத்தை தயாரித்து வழங்கியுள்ளது. சக்மன் மலுவ' என்ற அந்த திரைப்படத்தை சுமித்திரா பீரிஸ் இயக்கியுள்ளார். சுமித்திரா பீரிஸ் பிரபல சிங்கள திரைப்பட நெறியாளர்
லெஸ்டர் ஜோம்ஸ் பீரிஸின் மனைவி
யாவார். திரு.பீரிஸம் திருமதி பீரிஸ"ம் தற்கால சிங்களத் திரைப்படங்களின்
காவலர்கள் என்று கருதப்படுகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் பல்வேறு
திரைப்பட விழாக்கள் இலங்கையில் நடைபெற்றன. அவற்றில் 'இந்தியத்
32
yet ge):
தமிழ்த் திரைப்பட விழா முக்கிய மானது. இத்திரைப்பட விழாவுக்காக பல இந்திய சினிமாக் கலைஞர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு கெளர விக்கப்பட்டார்கள். அவர்களில் பழம் பெரும் சினிமா இயக்குனர் ஏ.பி.ராஜ், சினிமா விமர்சகர் ரண்டர்கை, பூனா திரைப்பட காப்பகத் தலைவர் எஸ். சசி தரன் ஆகியோர் முக் கய மானவர்கள்.
உயர்ந்த சிங்களப்படங்கங்கள் வருவது போலவே சினிமா பற்றிய பல புத்தகங்கள் சிங்கள மொழியில் வெளி வந்தன. இ *றில் இரண்டு தமிழ்ப் புத்த கங்களும் * ஆங்கிலப் புத்தகமும் அடங்கும. பங்களச் சினிமா அறிமுகம்', 'இலங்கைத் திரையுலக முன்னோடிகள்’ என்பன தமிழ்ப் புத்த கங்களாகும். இலங்கைத் திரையுலக முன்னோடிகள் புத்தகத்தில் இலங்கை திரையுலகில் பணியாற்றிய 40 தமிழ் முஸ்லிம் கலைஞர்களின் பங்களிப்பு விளங்கப்படுத்தப்படுகிறது.
ஒரு காலத்தில் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப் பட்ட போது அவற்றை ஒடுக்குவதற் காக் இந்தியத் தமிழ் திரைப்படங் களை இறக்குமதி செய்து அதே திகதியில் வெளியிட்டு இலங்கைத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியை தடுத்து நிறுத்தினர்.
அண்மையில் காலமான திரைப் படத் தயாரிப்பாளர் பி.எஸ்.கிருஸ்ண குமார் சொன்னது போல “ஓட ஓட

விரட்டினார்கள். எங்கள் இலங்கை தமிழ்ப்படங்களை பெட்டிக்குள் சுருண்டு படுக்க வைத்தார்கள்’ என்று கூட GG T6d6d6M) TLD.
இவ்வாறான தர்மசங்கடமான நிலை இப்பொழுது சிங்கள படங் களுக்கும் ஏற்பட்டு விடுகிறது.
முன்பு வரிசையில் நின்று தியேட்டர்கள் இல்லாது தடுமாறிய சிங்களப் படங்களின் நிலை போய் இப் பொழுது திரையிடுவதற்கு சிங்களத் திரைப்படம் இல்லாத நிலை ஏற்பட்டி ருக்கிறது.
1993ஆம் ஆண்டு இலங்கையில் கடைசியாக இலங்கை தமிழ்த் திரைப் படம் திரையிடப்பட்டது. இப்பொழுது 2004ஆம் ஆண்டாகி விட்டது. இந்த 10 ஆண்டு இடைவெளியில் இலங்கை யில் ஒரு தமிழ்ப்படமானது தயாரிக்கப் படாதது கவலைக்குரியதே.
பிரபல திரைப்பட இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நெறியாண்ட திரைப்படங்களில் சில பிரதிகள் இப் பொழுது இல்லை. அவை அழிந்து விட்டன அல்லது தொலைந்து விட்டன. அவரது படங்கள் இரண்டின் பிரதிகள் வெளிநாடு ஒன்றில் - அதாவது செக் கோஸ்லோவியாவில் கண்டு பிடிக்கப்
பட்டுள்ளன. அதை இலங்கைக்கு
கொண்டு வரும் முயற்சிகள் நடைபெறு கின்றன. -
இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பிரதிகள்
33
இப்பொழுது திரைப்படக் கூட்டுத் தாப னத்தில் இல்லையாம். தயாரிப்பாளர் களிடமும் இல்லையாம். இவ்வாறான பழைய தமிழ் திரைப்படப் பிரதிகளை
| நாம் எங்கு போய்த் தேடுவது?
1993ஆம் ஆண்டு திரையிடப்பட்ட சர்மிளாவின் இதயராகம்' என்ற படமே இலங்கையில் கடைசியாக வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படமாகும். இன்று 10 வருடங்களை கடந்த பின்பு கூட இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் உரு வாகாதது கவலைக்குரியதே. திரைப்படத் தொழில் நுட்பம் இப் பொழுது அதிகமாக வளர்ந்து விட்டி போதும் இலங்கையில் ஒரு தமிழ்த் திரைப்படமும் வெளிவராமல் இருக் கிறதே ஏன்?
இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையினர் பிரமாண்டமான தயாரிப்பு களை உருவாக்க முடியா விட்டாலும் குறும்படங்களையாவது உருவாக்கலா மல்லவா. இலகுவாக உருவாக்கக் கூடிய விவரணத் திரைப்படங்களை உருவாக்கலாமே! எமது நாட்டில் உள்ள எத்தனையோ பழம் பெரும் எழுத்தாளர்களின் முயற்சியை கவனிக் கப்பட வேண்டியவை யாகும். அவர் களைப் பற்றியும் அவர்களின் பணிகள் பற்றியும் உருப்படியான விவரணப் படங்களை உருவாக்கினால் அவை எமக்கும் எமது சந்ததியினருக்கும் உதவியாக அமையுமல்லவா?
பூனைக்கு யார் மணி கட்டுவது?
y stage) is

Page 19
திறனாய்வின் சமூக அடிப்படைகள்
- சபா. ஜெயராசா
திறனாய்வு தொடர்பான நவீன கோட்பாடுகளின் ஆக்கத்துக்கும் சமூகவியற் கோட்பாடுகளின் ஆக்கத்துக்கும் சமாந்தரமான தொடர்புகள் காணப்படுகின்றன. சமூகவியல் சார்ந்த கோட்பாடுகள் சமூகத்தின் இயல்பை விளக்கும் அறிகை அமைப்புக்களை உருவாக்கியதுடன் கலை, இலக்கியப் புலக்காட்சிகளை கூர்மைப் படுத்துவதற்குரிய பளிச்சீடுகளையும் ஏற்படுத்தின.
பிரஞ்சுப் புரட்சி, தொழிற் புரட்சி ஆகியவை தனித்த சம்பவங்கள் (Single Events) அன்று அவற்றோடிணைந்த பல வாழ்வியல் நிகழ்ச்சிகளும், அறிவார்ந்த நிகழ்ச்சிகளும்’ தொடர்ச்சியாக ஏற்படலாயின. தொல்சீர் கலைச் சிந்தனைகளின் தொட்டிலாக விளங்கிய பிரான்ஸ் சமூகவியற் சிந்தனைகளினதும் விளைநிலமாக விளங்கியமை திறனாயப்வுக் கோட்பாடுகளின் ஆக்கத்துக்கும் இலக்கியக் கோட்பாடுகளின் ஆக்கத்துக்குமுள்ள தொடர்புகளைக் காட்டுகின்றன.
சிமோன் (1970-1825), ஒகஸ்தே கொம்தே (1798-1857), எமில் டுர்க்கைம் (1858-1917) முதலியோரது சமூகவியற் சிந்தனைகள் இலக்கிய நோக்கிலும் அணுகு முறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் 36) p6ùTLD.
1. தனிமனித நிலைப்பாடுகளில் இருந்து ப்ரந்த தள நோக்கை அதாவது சமூகத்தை நோக்கிய அறிகை வளரலாயிற்று. கடந்த கால ஆழ்ந்த வேர்களில் உருவாகிய பல விதிகளை அடியொற்றி சமூக இருப்பும் சமூக அசைவும் ஆக்கம் கொள்ளுகின்றன என்ற கருத்து வலியுறுத்தப்படலாயிற்று.
2. தனிமனித இயல்புகளைச் சமூகமே உருவாக்குகின்றது என்ற வாதம் உறுதி பெறலாயிற்று. 3. சமூகமயமாக்கல், சமூகத் தொடர்புகள் இடைவினைகள், அமைப்புக்கள், நிறுவனங்கள் முதலியவற்றை விளங்குவதிலும் அறிந்து கொள்வதிலும் முனைப்பு
34

மேலோங்கத் தொடங்கியது.
4. மாற்றத்துக்குரிய விசைகள் சமூகத் துக்கும் அதன் கூறுகளுக்கும் மாத்திர மன்றி தனிமனிதர் மீதும் அறைகூவல் களை ஏற்படுத்துதல் அறியப்புடலா யிற்று.
5. சமூகத்தின் பெரிய கூறுகள் மட்டு மன்றிய, குடும்பம், தொழில் சார்ந்த சிறிய கூறுகளும் முக்கியம் பெறும்
அழுத்தங்கள் கொடுக்கப்படலாயிற்று.
6. கைத்தொழிலாக்கம், நகரவாக்கம், U60sfull du T 53 Ls ( Bureaucr atization) முதலியவை தனிமனித அவலங்களையும் பதகளிப்பையும் ஏற்படுத்தியுள்ளமை ஆய்வு வீச்சுக்குள் கொண்டு வரப்பட்டது.
பிரான்சில் முகிழ்த்த சிந்தனை களுக்குப் பின்புலமாக நிகழ்ந்த சமூக நிகழ்ச்சிகள் பிரித்தானியா மற்றும் ஜேர்மனி முதலிய நாடுகளிலும் காணப் UL i 507. (32gff ud6sfuså GHit It ( 19641920), (3ệgHử ở ouhQup6ò ( 1858-1918) முதலியோரும் , பிரித்தானியாவில் அடம் சிமித் (1723-1790), கேர்பர்ட் ஸ்பென்சர் (1820-1903) முதலியோரும் முன்வைத்த சமூகவியற் கருத்துக்கள் இலக்கியம் திறனாய்வுக்குரிய சமூகப் பரிமாணங்களுக்கு முன் னுரிம்ை கொடுக் கலாயின. இவையனைத் துடனும் அறிகை நிலையில் முரண் பாடு கொண்ட வகையில் மார்க்சின் கருத்துக்கள் நிலைபேறு கொண்டன.
வெபர் முன்மொழிந்த செயல் முறை பற்றிய பகுத்தறிவு வாதம் அல்லது நியாயவாதமி ( Ration alization) கலை இலக்கிய ஆய்வு
களை நியாயித்தல் எல்லைகளுக்குள் கறாராக இட்டுச் சென்றது. மெய்யி யலாளர் கான்ற் முன்வைத்த காரணம் விளைவுக் கருத்துக்கள் சமூகவியலில் வெப்ரால் ஆழப் பதிய வைக்கப்பட்டன.
fA@LD6ů (Simmel) (yp6OST 6M 6N15:55 சமூகவியல் கருத்துக்கள் அமெரிக்க முதலாளித் துவ இயல புகளுக்கு ஏற்புடையதாக இருந்தமையால் அவரை அடியொற்றிய சமூகவியற் கருத்துக் களும், அதே தளத்தில் எழுந்த கலை இலக்கியப் பார்வைகளும் ஐக்கிய அமெரிக்காவில் வளரலாயின. சமூகம தொடர்பான சிறிய விடயங்கள் அவரால் முன்னெடுக்கப்பட்டன. இருவர் சேரும் குழு (Dyad) மூவர் சேரும் குழுவாக மாறும் பொழுது மூன்றாம் நபர் இருவருக்குமிடையே சமாதானம் செய்பவராக இருக்கலாம் அல்லது இரு வரும் சேர்ந்து மூன்றாம் நபர் மீது ஆதிக்கம் செலுத்தலாம். இவருடைய கருத்துக்களுக்கு ஆதாரமாக மெய்யியல் அமைந்தது. பணத்தின் ஆதிக்கம் மேலோங்க தனிமனித ஆதிக்கம் வீழ்ச்சியடைந்து விடுவதா கவும் அவர் குறிப்பிட்டார். தனிமனித உழைப்பின் முக்கியத்துவமும் பின தள்ளப்படுகின்றது கருத்துக்கள் ULL-67.
՝ Լյ6ԺԾ1
bbன்ற குழப்பL1163
அவரால் முன்மொழியப்
பிரித்தானிய சமூகவியற் சிந்தனை மரபில வளர்ச்சியுற்ற மனிதமிகல் 6.TdLib (Ameliorismu) 560d6M) SM6ldi கிய ஆக்கத்தில் தனிமனிதச் சீர்திருத் لل اروع زل و لG 60|| 5 u L) امرلا با b1 ر6۵ دل نطا در இலட்சிய நிலைத் தூண்டல்களை வழங் கின. மனிதமிகல் வாதம் என்பது தனி

Page 20
yet gigs):
StZ மனிதரை நெறிப்படுத்திச் செப்பனிடு வதன் வாயிலாக சமூகப் பிரச்சினை களைத் தீர்க்கலாம் என்ற இலட்சி யத்தைக் கொண்டது. பிரச்சினைக்கு உள்ளான மனிதரையே திட்டும் (Blaming the Victim) (o 3 up UT (6 களை முன்னெடுத்து பிரித்தானிய சமூகவியலாளர்கள் மார்க்சியக் கோட் பாடுகளை மறுதலிப்பதற்கு பல்வேறு விதமான சிந்தனை நுட்பங்களைப் பற்றி எண்ணத் தொடங்கினர்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளி லும் , ஐக்கிய அமெரிக் காவிலும் மார்க்சிய கோட்பாடுகளை மறுதலிப்ப தற்குரிய முயற்சிகளின் ஓங்கலும், மறு புறம் மார்க்சிய சிந்தனைகளை வலு வுட்டுவதற்குரிய அணிகளும் என்ற வாறு வளர்ச்சியுற்ற கருத்து மோதல் கள் மூன்றாம் உலக நாடுளிலும் விரி வாக்கம் பெறலாயின.
இவற்றை அடியொற்றிய திறனாய் வுக் கோலங்களும் வளரலாயின. 1923ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி ஜேர்மனியில உள் ள
பிராங்போட்டில் உருவாக்கப்பட்ட சமூக
ஆய்வு நிறுவகம் மார்க்சிய ஆய்வு முறையின் படிமலர்ச்சியையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தியது. மார்க்சியம் இறுகி உறைந்த பிடித்து வைத்த தத்துவம் என்று கூறியவர் களுக்கு பிராங்போட் சிந்தனைக் கூடம் அறிகைக் கூவல் விடுத்தது. பிலிக்ஸ் ஜேவியில் , மக்ஸ் ஹெர்கிமெர், தியோடர் அடோர்னோ, எறிக் புறோம், கேர்பர்ட் மார்க்கோளில் என்றவாறான ஆய்வாளர்களின் மார்க்சியத்தை அடி யொற்றிய சிந்தனை வீச்சுக்கள் அங்கு
வளரலாயின. பொருளாதார முனைப்பி லிருந்து பல துறைப்பட்ட பண்பாட்டு அலசல்களை பிராங்போர்ட் சிந்தனா கூடத்தினர் முன்னெடுத்தனர்.
மார்க்சிய மரபிலிருந்து இணைந் தும் விலகியும் எழுந்த பிறிதொரு சிந்தனை வீச்சாக முரணுறு கோட்பாடு (Conflict theory) 6u6TJ6)Tuipp. 3ë சிந்தனை மரபை முன்னெடுத்தவர்களும் லிவிஸ் கொசர் குறிப்பிடத்தக் கவர். மார்க்சிய மரபை ஒட்டிய பிறிதொரு வளர்ச்சி நவ மார்க்சிய சிந்தனை களாகும்.
நவமார்க்சிய சிந்தனை மரபில் ஜேர்ச் லுTக்கஸ் , அன்ரோனியோ கிறாம் ஸ்கி, ஜர்யென் ஹபெர்மாஸ், இமானுவல் வல்லர்ஸ் ரெயின் முதலி யோர் குறிப்பிடத்தக் கவர். கலை இலக்கியம், உளவியல், சமூகவியல், பண்பாட்டியல் , முதலாம் பலதுறை களில் மார்க்சியம் தழுவிய சிந்தனை கள் வளர்ச்சியுறுவதற்குரிய ஆக்கங் களை இவர்கள் வழங்கினார்கள்.
மார்க்சியத்தின் அகவயமான பாங்குகளை லூக்கஸ் ஆராய விழைந் தார். வர்க்க உணர்வு மற்றும் பொருள் ß60)60 QuHas6ö' (REIFICATION) முதலாம் துறைகளில் இவரது ஆய்வு கள் ஆழந்து சென்றன. மனிதரால் ஆக்கப்பெறும் பொருள்நிலை அமைப் புக்கள் பற்றியும், அவ்வமைப்புக்கள் மனிதரால் மாற்றப்பட முடியும் என்பது பற்றியும் ஆராயும் போது விளங்கு கின்றது. மக்கள் சூழலோடு பண்டங் களை உற்பத்தி செய்கின்றனர்.
ஆனால் அப்பண்டங்களுக்குரிய பெறு மானத்தைத் தீர்மானிப்பதில் அரசு,

சட்டங்கள். பொருளாதார சூழல் முதலி யவை பங்கெடுப்பதைப் பொருள்நிலை இயங் கல வா பரிலாக லுT க்கஸ் விளக்கினார்.
சமூக அமைப்புக்கள் அவற்றின் இயல் புக் கேற்றவாறு வாழ் க்கை நீட்சியைக் கொண்டிருக்கும் என மக்கள் நம்புகின்றனர். தங்களால்தான் அந்நிலை உருவாக்கப்பட்டது என்பதை மறந்து அது இயற்கையான தோற்றப்
பாடு என மனிதர் எண்ணி விடு கின்றனர்.
வர்க்க உணர்வு பற்றிய ஆழ்ந்த
சிந்தனையையும் லுக்களில் வெளி யிட்டார். வர்க்க உணர்வு என்பது தொழிலாளர்கள் அனைவரதும் கூட்டு மொத்தமான உணர்வன்று அல்லது அவர்களின் சராசரியான உணர்வு மன்று. உற்பத்தித் தொகுதியின் குறிப் பிட்ட ஒரு கட்டத்திலுள்ள குறித்த குழு வினரது உனாவே வாக்க உணாவு என்ற கருத்தும் அவரது உரையின்பாற் பட்டது அரசு, சமூகநிலை அந்தஸ்து போன்றவை வப்க்க உமைப் புெகளுக்கு முகமுடியிட்டு விடுகின்றன. இதனை மேலும் விளக்கமாகச் சொல்வதானால் சிறுசிறு முதலாளிகள் . மத்தியதர வகுப்பினர். விவசாயிகள் முதலியோரி Lத்து வர்க்க உணர்வுகளை வளர்த்தல் மிக்க சிரமமானது. ஆனால் தொழிலா ளர்கள் வர்க்க உணர்வுகளை வளர்ப்ப தில் சாதகமான நிலையில் உள்ளனர்.
வர்க்க உணர்வு. தனிமனித சிந்
தனை, தனிமனித செயலூக்கம் தொடர்
பான தனித்துவமான கருத்துக்களை மார்க்சிய அடியாதாரங்களைத் தழுவி லூக்கஸ் விளக்கினார்.
3.
குறித்த
எழுதி தாளர்களின்
பொருளாதார அடியாதாரங்களைத் தழுவி சமூக நிலவரங்களை விளக்கி யவர்களுள் அன்ரோனியோ கிராம்ஸ்கி யும் தனித்துவமானவர். போறிமுறைப் பண்புடன் மார்க்சிய வியாக்கியானங் கள் கொடுக்கப்படும் நிலையை அவர்
சாடினார். புரட்சிகர உணர்வுகளை வளர்ப்பதிலும், நெறிப்படுத்துதலிலும்
பொதுமக்கள் மேற் கிளம்பியோரை நம்பியிருக்கும் நிலை தோன்றியுள்ளது. இதனால் அவர்கள் தம்மைப் பற்றிய குன்றியவர்களாகவுள்ளனர் இவை பற்றிய தெளிவான உணர்வு களை ஏற்படுத்தும் பொழுது அவர் களின் எழுச்சி மேலோங்கும் என்பது கிராம்ஸ்கியின் கருத்து.
உணர்வு
மார்க்சியக் கருத்துக்களை அடி யொற்றி நியாயவாத அடிப்படையில் நவீன சமூகத்தை ஆராய்ந்தவர்களுள், up TT (35T 6in) ( Marcause ) 676tus (bub. சிறப பிடம் . பெறுகின றாா நவீன முதலாளித்துவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி ஏதேச்சாதிகாரத்துக்கு இட்டுச்
செல்வதை அவர் தெளிவுபடுத்தினார்
தனிமனிதரைக் கட்டுப்படுத்துவதற்குரிய
மகிழ்ச்சி ததும்பிய முறைமைகளைத் தொழில் நுட்பம் கொண்டுள்ளது. அவை ஒரு பரிமானமுள ள சமூகத 60) த" ஏற்படுத்தி விடுகின்றன. அச்சமூகத்தில்
திறனாய்வு நோக்கில் சிந்திக்க முடி
யாதவர்களாக தனிநபாகள் மாற்றப்படு கின்றார்கள். இன்றைய கலைஞர்களும் எழுத்தாளர்களும் இத்தொடர்பில் நோக்
கப் படத்தக்கவர்கள். சுயதெறிப்பின்றி பத் திரிகைக் காகவும் , தொலைக்காட்சிக்காகவும் எழுதும் தோற்றமும்

Page 21
வளர்ச்சியும் நோக்கற்பாலானவை.
மேற்கூறிய நியாய மரபில் வந்த வர்கள் ‘அறிவுக் கைத்தொழில் பற்றிய கருத்துக்களையும் வெளியிடலானார் a56f . (Schroyer - 1970) SÐ Aj6o 6 உற்பத்தி செய்யும் பல்கலைக்கழகங் களும் ஆயப் வு நிறுவனங்களும் சமூகத்தில் வளர்ச்சி யுற்றிருப்பது மட்டு மன்றி ஒடுக்குமுறை வடிவங்களாகவும் மாற்றமடைந்துள்ளன. மார்க்சிய கோட் பாட்டினை, பிராய்டிசக் கோட்பாட்டுடன் இணைத்துப் புதிய புலக்காட்சிகளை ஏற்படுத்தியமை, கலை இலக்கிய ஆக் கங்களுக்குரிய வளமான தளத்தை ஏற் படுத்திக் கொடுத்தன. நவீன சமூகத் தின் எதிர் மறைத் தாக்கங்களை விளக் குவதற்கு உளவியலறிவு, மார்க்சிய அறிவுடன் இணைந்து வளமான காட்சியை ஏற்படுத்தியது. உளவியல் afts b55 65(65606) (F'svchic liberation) என்ற எண்ணக் கருவும் வளர்ச்சி பெறலாயிற்று.
நவமார்க்சிய சிந்தனை மரபில் வந்த ஹபர்மாஸ் என்பார் உழைப்பு மற்றும் இடைவினை என்ற இரு செயற் பாடுகளையும் வேறுபடுத்தித் தமது சிந்தனைகளைக் கட்டியெழுப்பினர். உழைப்பு என்பது இலக்குடைய பகுத் தறிவு பூர்வமான செயற்பாடு. இடை வினை என்பது தொடர்பாடல் நிலைப் LuLL G3Fu usò uT (6. (Communicative action) பகுத்தறிவு பூர்வமான செயற்
பாட்டினை மேலும் இரண்டு பிரிவுகளாக 966)6)Juusi 6).J60T:.
அவர் பிரிக்கின்றார். ஒன்று, கருவி சார்ந்த செற்பாடும் மற்றையது தந்திரோபாய நிலைப்பட்ட செயற்பாடு. இலக்குகளை நோக்கி
கின்றது.
தனியொருவர் பகுத்தறிவுடன் செயற் படுவது கருவி சாாந்த செயற்பாடா இலக் குகளை நோக்கி ஒன்றுக்கு ஒன்று மேற்பட்டவர்கள் தொழிற்படுவது தொடர்பாடல் நிலைப்
பட்ட தொழிற்பாடாகின்றது. தொடர்
பாடல் நிலைப்பட்ட புரிந்துணர்வு இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. கார்ல் மார்க்ஸ் உழைப்பின் மீது கொடுத்த முக்கியத்துவத்திலிருந்து வேறுபட்டுச் உருத் திரிந்த தொடர்பாடல் மீது அதீத முக்கி யத்துவத்தை வழங்குகின்றார். உருத் திரிந்த தொடர்பாடலை ஏற்படுத்தும் சமூக அமைப்பியல் மீது இவர் ஆழந்த கவனத்தைச் செலுத்துகின்றார். கார்ல் மார்க்ஸ் உருத்திரிந்த உழைப்பை உரு வாக்கும் சமூகக் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்த இவர் உருத்திரிபுபட்ட
* - గR ܟ݂ܪܶܐ • ܕ܆ ܕ܇ ܪܕܝ ܫ ` ̄f čÀò fou i همدال بیع اما oت ها
தொடர்பாடலை ஏற்படுத்தும் சமூக நிலைகள் பற்றிச் சிந்திக்கலானTர். உருத்திரிந்த தொடர் பாடலை விளக்கு
வதற்கு இவர் பிராய்டின் உளப்பகுப்புக் கோட் (1ாட்  ை (ார்க் சித் துt ன்
இணைத்துப் பயன்படுத்தல1Stர்.
கலை இலக்கிய நோக்கில் மார்க் சிசத்தின் சமூக மூலாதாரங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்,
*
1. உற்பத்தி உறவுகள் உற்பத்தி விசைகளுக்கு சtநகராகத் தொழிற் படும்.
2. மேற்கூறியவற்றின் அடித்தளமா கக் கொண்டு அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைப்பட்ட மேற்கட்டமைப் புக்கள் எழுகின்றன.
3. பொருண்மிய உற்பத்தி நிலை
38

களோடு நிபந்தனைப்பட்டதாக நுண் மதிச் செயற்பாடுகளும் , கலை
இலக்கிய ஆக்கங்களும் முனைப்புக்
கொள்ளும்.
4. சமூக இருப்பின் வழியாக மனித உள்ளுணர்வுகளும், மனச்சான்று களும் முகிழத்தெழும்.
இவற்றை மறுத்து மார்க்சிசத் துக்குப் பிற்பட்ட நிலை என்ற மகுடத்
தில் கருத்துக்களை முன்வைப்போர்
(Arnald Aronson - After MarSciSam, 1995) பின்வருவனவற்றைச் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
1. தொழிலாளர் வகுப்பு என்பதைத் தொகுத்துத் துல்லியமாக இனங்காட்ட முடியாமலிருக்கின்றது.
2. தொழில் நுட்பவளர்ச்சி காரண மாக தொழிலாளர் எண் ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது.
3. தொழிலாளர்கள் என்றும் முத லாளிகள் என்றும் இரு துருவப்பட்ட நிலைகளை இனங் காண முடியா துள்ளது.
4. தொழிலாளர்களிடையே வர்க்க
உணர்வு வீழ்ச்சியடைந்து வருகின்றது.
தொழிலாளர்கள் பற்றிய மேற் கூறிய கருத்துக்கள் எவ்வளவு தூரம் போலியானவையாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன என்பதை அணி மைக் காலத்தையப் பின்வரும் உலக நில வரங்கள் தெளிவுபடுத்தும்.
1. உலகமயமாக்கல் பின்னணியில் செல்வக்குவிப்பு பெரும் நிறுவனங் களின் கைகளில் ஓங்கி வருதல்.
39
2. பெரும் நிறுவனங்களின் கட்டுப் பாட்டின் கீழ் பொது சனத்தொடர்பு
சாதனங்களும், கலையாக்க நடவடிக்
கைகளும் பெருமளவிலே கட்டுப் பட்டிருத்தல்
3. உலகம் முழுவதும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதல்
4. 15 கோடி ஏழைச் சிறுவர்கள் பள்ளிக் கூடங்களுக்குச் செல்லா திருத்தல்
5. பெரும் முதலாளித்துவ விவசாய நிறுவனங்களோடு போட்டியிட்டுத் தமது உற்பத்திப் பொருள்களை விற்க முடியாத இந்தியாவின் குறுநில விவ
சாயிகள் உளநெருக்கீடுகளுக்கு உட் பட்டு வருதல்.
6. பொருள்களின் விலை ஏற்றங்
களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை யில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் பின்தள்ளப்படுதல்.
7. மிகையான செலவுகளை உள்ள டக்கிய நவீன மருத்துவ வசதிகளும், நவீன திறன்களை உள்ளடக்கிய கல்வி யும் தொழிலாளர்களுக்கு எட்டாத பொருள்களாக இருத்தல்.
இந்நிலையில் நவீன முதலாளித்து வத்தின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்வதற்கு மார்க்சிசமே நுண்மதி விசையாக அமையும் என்பதை நிரா
கரிப்பதற்கில்லை. மார்க்சியம் மீண்டும்
வரும் (BurWoy 1990) என்ற கருத்து புத்துயிர்ப்புடன் நோக்கப்படுகின்றது.

Page 22
6.
IO.
II.
I2.
3.
I4.
S.
I6.
I.
18.
I9.
2O.
2. II,
22.
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு - புதிய அநுபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது)
எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் அநபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் - : (யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) நானும் எனத நாவல்களும் - செங்கை ஆழியான் கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்தல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் - (பிரயாணக் கட்டுரை) டொமினிக் ஜீவா முனியப்ப.தாசன் சதைகள் - முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் (ஹைக்கட) - பாலரஞ்சனி கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ 'சிரித்திரன் சுந்தர்' அட்ட்ைப் படங்கள் (மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) சேலை - முல்லையூரான் மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (இரண்டாவது தொகுப்பு) (41 எழுத்தாளர்களின் படைப்பு) நிலக்கிளி - பாலமனோகரன் நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் - தொகுப்பு: டொமினிக் ஜீவா நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) - ப.ஆப்டீன் தரை மீன்கள் ~ ச.முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும் ~ செங்கை ஆழியான் அப்புறமென்ன ~ குறிஞ்சி இளந்தென்றல்
அப்பா - தில்லை நடராஜா
விலை:
விலை:
650so:
விலை:
விலை:
விலை:
விலை:
65606):
விலை:
விலை:
விலை:
விலை:
68'sosu:
விலை:
விலை:
விலை:
விலை:
விலை:
6iᏡᏍ06u:
விலை:
விலை:
விலை:
மல்லிகைப் பந்தல் சமீபத்தில் மேெல வெளியிட்டுள்ள நூல்கள்
25of= 14o/F 180/=
I 75/=
IIo/F 80/-
1oo/-
II off I5of
6 off
17 S/-
175/- I 50/- 27S/=
3 soft
14 of F 1sofar I5o/r 15o/F I5o/F 120/- I3of-F
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்
A. வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
40
 

அச்சுத்தாளில் ஊடாக ஓர் அநுபவம் பலவும்
— спuлtбсfi 8ол
11-1-2004 ஆனந்த விகடனில் சுஜாதா தன் பக்கங்களில் மல்லிகையின் தொடர் வரவைச் சிலாகித்து எழுதியிருந்தார். அத்துடன் அதன் ஆசிரியரின் விடாமுயற்சி பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
‘சொன்னது போல டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழின் முப்பந்தைந் தாவது ஆண்டு சிறப்பு மலரை (ஜனவரி 2000-ல் வெளியானது) இப்போதுதான் படித்து முடித்தேன். கொழும்பு நகரிலிருந்து வெளிவந்த சிற்றிலக்கியத் தமிழ் ஏடு முப்பத்தைந்து ஆண்டுகள் ஒரு பெரிய விஷயம். இந்த மலரில் மல்லிகையைச் சுமந்து சென்று தெருத் தெருவாக விற்றுத் திரிந்த அந்தச் சுகமான நாட்களைப் பற்றி டொமினிக் ஜீவா ஒரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார். சிருஷ்டி வரலாற்றில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் விதந்து பேசப்பட வேண்டும். அதற்கான பணியை யார் செய்தாலும் அவர்களுக்குத் தலை வணங்குகின்றேன் என்கிறார் ஜீவா.”
இப்டியே தொடர்ந்து அந்த மலர் பற்றி அவரது கருத்துக்கள் நீண்டு கொண்டு செல்கின்றன.
இதைப் போலவே பலரும் எனது அர்ப்பணிப்பு உழைப்பையும் மல்லகையின் இத்தனை கால தொடர் வரவையும் பாராட்டிப் புகழ்ந்துள்ளனர்.
கவிக்கோ அப்துல் ரஹற்மான், மேத்தா, அறிவுமதி போன்ற கவிஞர்கள் தமிழகத்தில் என்னைக் காணும்போது எனது அயராத இலக்கிய உழைப்பைப் பாராட்டிப் புகழ்ந்துள்ளனர். V
அதைப் போலவே இந்த மண்ணிலும் பல தோழர்கள் குறிப்பாகச் சிங்களப் புத்திஜீவிகள் என்னைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் என்னைப் பாராட்டிப் புகழத் தவறுவதில்லை.

Page 23
ଦ୍ଯୁମ D&G GEGEE
நான் எங்கேயோ ஓரிடத்தில் எழுத்தில் குறிப்பிட்டுள்ளது போல, புகழ் புனுகைப் போன்றது. அதை வெளியே பூசிக் கொள்ளலாமே தவிர, உட்கொண்டு விடக்கூடாது. அது பின்னர் அபாயத்தைக் கொண்டு வரக் கூடும்! இந்த வார்த்தை உபதேசத்தை மல்லிகை ஆரம்பித்த காலத்திலிருந்தே கடைப்பிடித்து ஒழுகி வருகின்றவன், நான்.
நெருங்கிய நண்பர்கள் பலருக்கு எனது எழுத்து உலகத்தைப் பற்றியும் மல்லிகையின் தொடர் வரவு பற்றியும் இன்னுஞ் சிலருக்கு, குறிப்பாகப் புலம் பெயர்ந்து வாழும் இலக்கிய நண்பர் களுக்கு மல்லிகைப் பந்தலின் வெளி யீடுகள் சம்பந்தமான தகவல் தான் தெரிந்திருக்கும். இதற்குமப்பால் அவர் களுக்கு ஒன்றுமே தெரிந்திருப்பதில்லை. என்னுடைய சுய வரலாற்றில் கூட, நான் என்னுடைய குடும்பக் கதை களையோ, மனைவியைப் பற்றிய எது விதமான குறிப்புக்களையோ மகன் திலீபனைத் தவிர ஏனைய என் குழந்தை களைப் பற்றி எந்த விதமான செய்திக் குறிப்புக்களையோ, எழுத்தில் ஆவணப் படுத்தவில்லை எனப் பலரும் என்னைக் கேட்பதுண்டு. பெரும்பாலோர் கடிதம் மூலம் என்னிடம் விசாரிப்பதுண்டு.
இலக்கிய உலகில் என் எழுத்துச் சாதனைகளைப் புகழ்பவர்களுக்கும் குறிப்பாக முதன் முதலில் இலங்கைச் சாஹித் திய மணி டலப் பரிசைப் பெற்றவன் என்கின்ற முறையில் நாடு தழுவிய ரீதியில் ஊடகங்கள் என்னை பரவலாகக் கொண்டு சென்று அறி
42
முகப்படுத்திய வேளையிலும், பின்னர் மல்லிகை மூலம் நான் பேசப்பட்டு வரும் சமயங்களிலும் பெரும்பாலோர் எனது ஒரு பக்கத்தைத்தான் இதுவரைக்கும் கண்டு வந்துள்ளனர். பாராட் டிப் பெருமைப்படுத்தியுள்ளனர்.
மிக நெருங்கிய இன சன சுற்றத்த
வர்களைத் தவிர, பொரும்பாலோருக்கு
எனது மற்றப் பக்கம் தெரியவே தெரி யாது. நான் அதை இதுவரை எழுதில் ஆவணப்படுத்தவேயில்லை. நேர்ப் பேச்சில் கூட, எனது மறுப்பக்கத்தைப் பற்றி யாருடனும் கதைத்ததாகக் கூட ஞாபகம் இல்லை. அதைப் பொத்திப் பொத்தி கவனமாக வைத்திருந்தேன்.
எனக்கேற்பட்ட குடும்பச் சங்கடங் களை எழுத்தில் ஆவணப்படுத்தி, பிர கடனப்படுத்த எனது மகன் திலீபனுக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை.
அதற்கு எதிரான மனோபாவம் எனக்கு.
என்றைக்குப் பேனா பிடித்துத் தமிழ்ப் படைப்புக்களைச் சிருஷ்டிக்க ஆரம்பித்தேனோ அன்றே நான் பொது மக்களின் சொத்தாகி விட்டேன். மல்லிகையை ஆரம்பித்து அதன் முகப் பில் ஆசிரியர் டொமினிக் ஜீவா’ என எனது நாமத்தைப் பொறித்துக் கொண் டேனோ, அன்றே நான் மானுடச் சொத் தாக என்னை நானே உய்த்துணர்ந்து உலகிற் குப் பிரகடனப் படுத் திக் கொண்டேன்.
அதற்கு நான் எனது இள வயதில் மனசார வரித்துக் கொண்ட சர்வதேச

தத்துவமும் முற்று முழுசாகத் துணை நின்று உதவின. என்னைக் கட்டம்
கட்டமாக வளர்த்தெடுத்து வந்துள்ளன.
அதிலிருந்து எப்பொழுதுமே தடம் புரண்டதில்லை. வழி பிறழ்ந்து பாதை மாறியதுமில்லை.
எனது மனைவியின் பெயர் ராணி. மூத்த மகளின் பெயர் சுவர்ணலதா, மற்ற மகளின் பெயர் பிரேமலதா.
எனக்கு ஒரேயொரு மகன். அவரது பெயர் திலீபன்.
எனது குடும்பத்தினரின் பெயரை ஒரு கணம் மனதில் நிறுத்திப் பாருங்கள். அவை அனைத்தும் இந்த மண்ணில் எங்கு போனாலும் செல்லு படியாகும் நாமங்களாகும். தமிழ் மீது எனக்கு அபாரமான பக்தியம் பாசமும் சிறுவயதி லிருந்தே மனசில் ஆழமாகப் பதிந்து போயுள்ளன. ஆனால், நான் தனித் தமிழ்வதியல்ல. தனித் தமிழ் கோஷத் தின் பின்னே ஒருவகை பாஸிஸத்தலம், ஆதிக்க மனப்பான்மை, உலக உயர் குடிச் சிறப்புத்தனம் பொதிந்து போயுள் ளதை நான் சிந்திக்கும் வேளைகளில் புரிந்து கொண்டதுண்டு.
கல்தோன்றி மணி தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்! எனப் பழைய பஞ்சாங்கச் சுலோகத் தைத் திருப்பித் திருப்பி இசைத் தட்டுப் போட்டுக் குது கலிப்பவர் களைப் பார்த்து நான் அடிக்கடி பரிதாபப்படுவ துண்டு. இப்படியான கோஷமெழுப்பிகள் ஆக்கபூர்வமாகத் தமிழ் வளர எதுவுமே செய்து தொலைத்திருக்க மாட்டார்கள்.
m
43
வளைந்து
இவர்களைப் பலர் தமது தேர்தல் மேடை களுக்குப் பயன்படுத்தியதுதான் தமிழ் கண்ட பொதுப்பலன். -
எனது இளம் வயசில் யாழ்ப்பாணப் புகையிரத வளவில் ஒருவரைப் பார்த் திருக்கிறேன். சற்று மதுவெறிக் கலக் கத்தில் அல்லது மயக்கத்தில் அவர் தனது வலது கையை ஹிட்லர் பாணியில் உயர்த்திப் பிடித்த வண்ணம் 'நான் யாரு தெரியுமா டா? ஏழு கிணற்றடி ஆறுமுகத்தின்ரை பேரனடா,
நான்!” எனப் புலம்பிக் கொண்டு
நிற்பார். அக்கம் பக்கம் பார்த்த
வண்ணம் திரிவார்.
1ாராவது வெள்ளைச் ஈட்டை
போட்டவர்கள் கண்களில் தென்பட்டால் அவர்கள் பக்கம் நெருங்கி. பலலை இழித்துக் கொண்டு, முன்னர் பின்னர் தெரிந்து பழகியவர் போல, இன்மொழி (3 u jaf b (up) u (6ó f' fi Li qċji நெளிவார். "
சித் து
எல்லாமே திற்குத்தான்!
ஒரு மிடறு
#TJ Tu];},
இப் படி 11ான குணம் கொண்ட வர்கள் தாண் தனித் தமிழ் வாதிகள் என்பது எனது எண்ணம்.
இன்றைய நவீன சாதனங்கள். கணனி உட்பட தொலைத் தொடர்புச் சாதனங்களுக்குத் தமிழ் மொழி
நெகிழ்ந்து ஈடுகொடுத்துச் சர்வதேசப் பரப்பில் தனது மொழித் தகைமையை நிலைநாட்டிப் பவனிவரும் இவவேளையில், இவர்கள் இன்னமும் ஒலைச் சுவடிகளையும் எழுத்தாணி

Page 24
களையும் இன்றும் விழுந்து கும்பிட்டுக் கொண்டு, மூலையிலிருந்து முனகி வருகிறார்கள்.
நான் உலகத் தரத்திற்குத் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல வேண்டு மென காலம் காலமாகச் சிந்தித்து வருபவன்.
உலகத்தைத் தமது செயலால் புரட்டிப் போட்ட மேதைகளின் சுய வர லாற்றுக் குறிப்புகளைக் கருத்தூன்றிக் கற்றவன். அவற்றிலிருந்து தினசரி வாழ்வில் பல பாடங்களைப் படித்து, ஒழுகி வருபவன்.
தத்துவ மேதை சோக்கிரட்டீஸ் தனது வீட்டிலிற்கு வந்திருந்த இன் னொரு கணித மேதையுடன் உரை யாடிக் கொண்டிருந்தாராம். அவரது மனைவி சமயலறையில் இருந்து கொண்டு விாய்க்கு வந்த வண்ணம் தத்துவ மேதையைச் சாடை சாடையாக உரத்தக் குரலில் திட்டித் தீர்த்தாராம். இதைப் பொறுமையாகக் கேட்ட வண்ணம் உரையாடிக் கொண்டிருந்த அவர், மனைவியின் நச்சரிப்புத் தாங்க மாட்டாமல் உச்சக்கட்ட நிலையில்
நண்பனையும் அழைத்துக் கொண்டு
வெளித் தாழ்வாரத் திண்ணையில் அமர்ந்த வண்ணம் தமது உரை யாடலைத் தொடர்ந்து நிகழ்த்தினாராம்.
இதைக்கூடச் சகித்துக் கொள்ளாத அவரது திருமதி அவர்கள் பாத்திரம் அலம்பிய தண்ணிரை அவர்களுக்கு மேலால் இருந்த சாளரம் வழியே
இலக்குப் பார்த்து சாக்கிரட்டீஸின்
உடல் முழுவதும் குளிப்பாட்டும் வகை
44
யில் தண்ணிரை ஊற்றி, தனது மனக் கிலேசத்தை ஆற்றிக் கொண்டாராம். இதைக் கண்டு திகைப்புற்ற நண்பர் ‘என்னப்பா, இதெல்லாம்?”
அதற்குத் தத்துவ மேதை வெகு ஆறுதலாகப் பதில் சொன்னாராம். ‘அப்போ உள்ளே இடி இடித்தது! இப்போ மழை பெய்கிறது!’ என்றாராம்.
உலகத்தைப் புரட்டிய பெருஞ் சிந்தனையாளர்களுக்குச் சொந்த வாழ்வு ஒன்றும் சுபீட்சம் நிரம்பியதாக அமைந்து விடவில்லை. அவர்களை வெளிச் சமூகம் மாத்திரமல்ல, சொந்த இன சனங்கள், குறிப்பாகக் கட்டிய மனைவிமார்கள் பெரும்பாலும் அவர் களின் தினசரி வாழ்வில் அவர்களைப் புரிந்து கொள்ளவேயில்லை. தெரிந்து கொள்ள முயற்சித்ததுமில்லை.
அபூர்வமாகச் சில மேதைகளின் துணைவிமார்கள் சமகாலத்தில் அவர் களின் முன் முயற்சிகளுக்கு உந்து சக்தியாகத் திகழந்து வந்துள்ளார்கள் என்பது என்னமோ உண்மைதான், அவர்கள் வரலாற்றில் ஒரு சிலர்தான்.
அந்த மேதைகளுடன் ஒப்பிடா விட்டாலும் என் வரைக்கும் தினசரி வாழ்க்கையோ இலக்கிய வாழ்க்கையை விடப் போராட்டமாக அமைந்துவிட்டது
1957-ல் எனக்கும் எனது அம்மானின் ஒரோயொரு புத்திரிக்கும் யாழப்பாண நகரில் திருமணம் நடந்தேறி விட்டது எனது துணைவியார் எனது தாயாரின் மூத்த அண்ணனின் மகள். எனது தகப்ப னாரின் சொந்தச் சகோதரியின் மகள். குண்டு மாத்துக் கலியாணம் என

யாழ்ப்பாணத்தில் பரவலாகச் சொல்லப் படும் மாற்றுச் சம்பந்தம் இது. எனது தாயாரின் மூத்த தமையனை எனது தகப்பனாரின் சகோதரி மணம் செய்து கொண்டார். எனது தந்தையார் எனது மூத்த அம்மானின் ஒரேயொரு சகோதரி யான எனது அம்மாவைத் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
எனக்கு நான்கு சகோதரர்களும், ஒரு பெண் சகோதரியும் உண்டு.
குறும்புக்காரனும், விவேகியுமான
என்மீது அம்மாவுக்கு விசேட பிடித்தம். எனவே ஏனைய சகோதரங்களைவிட, எனக்கு எதிலும் தனிச் சலுகை காட்டி வந்தார்.
இந்தத் தனிக்கவனிப்பில் எனக்குப் பிடித்தம் இல்லை.
இந்தத் தனிக்கவனிப்பின் அர்த்தம் எனது இளந்தாரி வயசில்தான் எனக்கு விவரமாகப் புரியத் தொடங்கியது.
நான் இன்னொரு மாமாவின் மகளைத் தானி மனசார விரும்பி வந்தேன். எனது குணங்குறிகளுக்கு ஈடு சோடாக அமைந்திருந்தவள் அந்தக் குணவதி.
எனது இளவயசுக் காதல் இழப் பால் மனஞ் சோர்ந்து பற்றற்று இருந்த என்னை, என் மனசைத் தனது செயல் களால் குளிப்பாட்டிக் குளிரச் செய்து வந்தாள், அவள்.
நானும் அவள் மனதில் மெல்ல மெல்ல இடம்பிடித்தேன்.
45
பெரிய பிரச்சினை. ஒண் றும் இடையே இல்லை. நம்மிருவரது இணை வைத் தடுத்து நிறுத்தக் கூடிய எத்தகை
யதான இடையூறுகளும் நமக்கிடையே
இல்லை.
நம்பிக்கைகள் வெகு சுமுகமாக நடந்தேறி வந்தன.
ஒருநாள் இரவு என் அம்மா சாப்பா, டெல்லாம் தந்த பின்னர் எல்லாரும் படுக்கைக்குப் போனதன் பின்னர் நான் படுத்துறங்கும் சாய்ப்புக் கொட்டிலுக் குள் கைவிளக்கைக் கையிலெடுத்துக் கொண்டு நடந்து வந்து என் தலை மாட்டில் குந்தினார். சாய்ப்புக் கொட்டில் என்பது தனியாக அமைக்கப்பட்டுள்ள தனிக் குடிசை. ஒலைக் கொட்டில்.
எனக்குச் சடாரென்று மண்டைக் குள் பொறிதட்டியது.
ஏதோ வில்லங்கமான செய்தி சொல்லத்தான் அம்மா இப்படித் தனி யாக இரவு நேரத்தில் என் படுக்கை யைத் தேடி வந்துள்ளார் எனப் புரிந்து கொண்டேன். எனது உள் மனசும் இதையே ஆமோதித்தது.
'பொடியா உன்னட்டை நானொரு முக்கியமான சேதியைத்தான் இப்போ கதைக்கப் போறன். உண்ரை கலி யாணம் சம்பந்தமாகத்தான் உன்ரை விருப்பத்தை இப்போ கேக்கப் போறன். நீ ஆராவது பொடிச்சியை விரும்புறாயா எண்டதை இப்ப எனக்கு விளக்கமாகச் சொல்லு?’ என ரொம்பவும் வினயமாகக் , கேட்டு வைத்தார்.
6 GG)

Page 25
戦ー நானும் நெருங்கிய நண்பனொரு வனுடன் உரையாடுவது போல, நெஞ்சைத் திறந்து உண்மையை எனது தாயார் முன் திறந்து வைத்தேன். நான் அந்த மாமனாரின் மகள் பூமாவை விரும்புவதாகவும், அவளும் சாடை மாடையாக என்னைத்தான் கட்டிக் கொள்ள நினைத் திருப்பதாகவும் விவரமாகச் சொல்லி முடித்தேன்.
அம்மா நீண்ட பெருமூச்செறிந்தார்.
அம்மாவின் அந்தப் பெருமூச்சு எனக்கு வித்தியாசமாகப்பட்டது. இதில் ஏதோ பிசகு இருக்கிறது என என் மனசுக்குள் புரிந்து கொண்டேன்.
‘தம்பி, எட பொடியா, நானுன்னை இண்டைக்கு ஒன்று கேட்கப் போறன். அதைச் செய்வியா?”
நான் ப்ெரிசாக ஆன்றும் நினைத்துக் கொள்ளவில்லை. அம்மாவின் மனத் திட்டங்கள் எனக்குத் தெரியும். எனது மன உணர்வுகளும் என் அம்மாவுக்குப் புரியும்.
இருந்தாற் போல, எனது இரு கரங்களையும் பொத்திப் பிடித்து தனது நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்தபடி அம்மா எனது கண்களை உற்றுப் பார்த்தார்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
‘ப்ொடியா சத்திய வாக்கா இப்ப ஒணி டை உணி னட் டைக் கேக் க
விரும்புறன். உன்ரை மூத்த அம்மான்,
என்ரை அண்ணாவின்ரை பெட்டையை எனக்காக நீ முடிக்கத்தான் வேணும்!” என்றார், அம்மா.
46
இதைக் கேட்டதும் என் சிரசே சிதறிப்போய்விடும் போல, இரத்த மெங்கும் மண்டைக்குள் புகுந்து கொண்டது.
‘நான் சின்ன வயசிலிருந்தே தாயைத் தின்னி. என்னை ஆளாக்கி உண்ரை கொப்பருக்குக் கட்டிக் குடுக்கும் வரை என்னை மனுசியாக்கி ஆளாக்கியவர் எண்ரை அண்ணன், உன்ரை கொம்மான். உன்னைப் பெத்து வளர்த்து ஆளாக்கிய எனக்கு நீ கடைசியாக ஏதாவது செய்ய விரும்பி னால் என் ரை மூத்தணி ணற் ரை மகளைத்தான் நீ முடிக்க வேணும். தம்பி உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன், உன்ரை பெத்த தாயின்ர ஆசையைக் கைவிட்டு விடாதை!”
பெற்ற தாயிடமிருந்து இப்படியான தொரு கோரிக்கை வருமென நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவேயில்லை,
நான் மெளனமாக இருந்தேன்.
“பொடியா இது என்ரை கடசி விருப்பம், என்ரை மூத்த சகோதரம் காலங்காலமாக இந்தத் தாயைப் பறி கொடுத்த தி:த் தின்னியை 3:க் கிறதுக்கு செய்த நன்றியை நான் உன்னை என் அண்ணன்ர மகளுக்குக்
கட்டிக் குடுக்கிறதின் மூலம்தான் என்ர
நீண்ட நாள் ஆசை நிறைவேறும். மகன் இதைக் குழப்பிப் போடாதை, ஐயா! அழுவதைப் போல, என்னைப் பெற்ற தாயார் இரங்கல் குரலில் எண் சம்மதத்தை வேண்டி நின்றார்.
(மீண்டும் சந்திக்கின்றேன்)
 
 

47
எழுதிக் கொண்டிருந்தேன்
ஜன்னல் வழியே 7 . அறைக்குள் பறந்து வந்தது (768 كو” ஒரு சிட்டுக்குருவி al óQ物。
வழிமாறி வந்ததை உணர்ந்திருக்க வேண்டும் சிறகுகளை படபடக்கவிட்டு திரும்பும் வழிதேடி வெளியேற எத்தனித்தது
குறிஞ்சி இளந்தென்றல்
குருவியைப் பிடித்து கூண்டில் அடைத்துவிட்டால் குழந்தை அழும்போது காட்டி அழுகையை நிறுத்தலாம்
குருவியைப் பிடிக்க எத்தனித்தேன் எண்ணத்தைப் புரிந்து கைகளுக்குள் அகப்படாமல் மற்ற ஜன்னலினூடாக வெளியே பறந்தது
கைகளுக்குள் சிக்காத குருவியை சபித்தப்படி மறுபடியும் வந்தமர்ந்தேன் முன்பு போல எழுத முடியவில்லை உடம்புக்குள் ஏதோ பறப்பது போலிருந்தது என்னவாக இருக்கும் உற்று நோக்கினேன்
மனதுக்குள் பிடிப்பட்ட குருவி வெளியேற துடிதுடித்து சிறகுகளை படபடத்தது என்னை வெளியே விடு குழந்தையாய் சிணுங்கியது திடுக்கிட்டேன்!

Page 26
முகங்களில் மூகங்கள்
- சுதாராஜ்
2. இளமையின் ரகசியம்
குண்டுகளில் பலவகை உண்டு. வெடிக்கக் கூடிய குண்டுகளைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. இது ரகசியக் குண்டு. அழகிய குண்டு. அந்த வகையைச் சேர்ந்தவள்தான் அசியா. வழமையாக அவள் அணியும் உடலி. றுக்கமான காற்சட்டையும் மேற்சட்டையும் அவளது குண்டு போன்ற தோற் றத்திற்குக் காரணமாயிருக்கலாம்.
அசியாவை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது இந்தோனேசியாவில்!
தினமும் மாலை ஐந்து மணியளவில் அவள் வேலை செய்யும் ரெஸ்ரோரன்ட் டிற்கு முன்னே, அசியா காணப்படுவாள். ஒரு பெண், தான் பணிபுரியும் ரெஸ்ரோரன் டின் முன்னே தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற் காணப்பட்டால், அதற்கு என்ன காரணமாயிருக்கும், அது அவளது ஓய்வு நேரமாயிருக்கலாம். அல்லது குறிப்பிட்ட யாரையாவது கவர்வதற்காயிருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தான் நானும் அவ்வழியாற் போவேன். ஆனால் அது அசியாவை பார்ப்பதற்காக அல்ல. உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி செய்வது என் வழக்கம்.
இந்தோனேசியாவில் அசியாவின் வயதையொத்த (பதினெட்டுக்கும் இருபத்தைந்திற்கும் இடைப்பட்ட வயதுப்) பெண்கள் இதுபோன்ற வியாபார நி'ை யங்களிற் பணி புரிகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளமும் மிகக் குறைவு. எங்கள் நாட்டுக் காசில் குறிப்பிடுவதானால் மாதாந்தம் ஆயிரம் ரூபாய்க்கும் கீழே இந்தோனேசியச் சனத்தொகையில் ஐம்பத்துமூன்று சதவிகி தத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள். தங்கள் குடும்பங்களின் வறுமை நிலையைச் சரிக்கட்ட அவர்கள் குறைந்த சம்பளத்திலேனும் வேலை செய்ய வேண்டியிருக் கிறது. சொற்ப சம்பளத்திற்காக நாள் முழுதும் கடைகளிற் காய்ந்து கொண்டிருக்கும் இளம் குருத்துக்களைக் காண எனக்கு ஒருவித அனுதாபம் பிறக்கும். அவ்வித அனுதாபம் அசியாவின் மேலும் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் பாளித்தீவையும் ஜாவாவையும் இந்து சமுத்திரத்திலிருந்து
48

ஜாவா க் கடலுக்கு இடைபிரித்துச் செல்லும் கடலோரத்தில், ஜாவாப் பகுதியில் கெட்டப்பாங் எனும் கிராமம்
உள்ளது. மலையும் மரங் களும், அதனால மழையும் நிறைந்த
செழிப்பான கிராமம். இங்குள்ள சிறிய துறைமுகத்துக்குத்தான் நான் பணி யாற்றி சிமெந்துத் தொழிற்சாலைக்
கப்பல் வந்து சேர்ந்தது. கப்பல் வந்து
தரிப்பதற்காக துறைமுகம் விசேடமாகத் திருத்தி அமைக்கப்பட்டது. அதனால் கப்பல் வருவதற்கு முன்னரே இங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பலருக்கு இங்கு வேலைகள் கி ைக்கும். இங் கிருந்து இந்தோனேசியாவின் பல நகர் களுக்கு சிமெந்து விநியோகம் நடை பெறப் போகிறது. ஒரு யானையொன்று நுழைந்தது இந்தக் கப்பல் இங்க வந்து சேர்ந் ததும் கிராம மக்கள் கிண்டு வந்தி ருந்தனர். வெடி கெ'ருத்தி ஆரவாரம் செய்தார்கள். Ꭵ_] ᏰᎲfᎢ 6Ꭳi ᎯᏂ 6Ꮫ 6YᎢ [i தங்கள் கிராமிய நடனம் ஆடி எங்களை வரவேற்றனர்.
குடிசைக்குள்
வானத்தில் வர்ண
பறச் விட்டார்கள்
ஏனைய துறைமுக 1b க ை61 ப் போல இங்கு கதவுகள கடுப்பாடுகள் கூட இல்லை. சரியாகச் சொல் வ தானால் இது வெளிநாட்டுக் கப்பல்கள் வந்து போகும் துறைமுகமே அல்ல. இங்குள்ள ஏனைய தீவுகளிலிருந்து அரிசி, பருப்பு, ஆடு, மTடு போன்ற வற்றை இறக்கி ஏற்றும் துறையாக இது பயன்பட்டு வந்திருக்கிறது,
எங்கள் கப்பல் இடத்துக்கு
தரித்து நின்ற அன்ைமையில் பயணிகள்
49
கடற் போக குவரத்து இறங்கு துறை இருந்தது. 1ாளித்தீவுக்கு இங்கிருந்து வாகனங்களையும் பயணிகளையும் ஏற்றி இறக்கும் கப்பற்சேவை நடக் கிறது. பல உல்லாசப் பயணிகள் நாள் தோறும் சஞ்சரிக்கும் பகுதி இது, இள்.
விறங்குதுறையைச் சூழ உள்ள பல
ரெஸ் ரோரன்ட்டுகளில் ஒன்றிற் தான்
அசியா பணி புரிந்தாள்.
ரெஸ்ரோரன்ட் வாசலில் சில பூச்
சாடிகள் இருந்தன. நான் போகும் பே
தெல்லாம் அவற்றுக்குத் தண்ணிர் விடு வது இலைகளின் தூசியைத் துடைத்து விடுவது, சாடிகளை இடம் மாற்றி வைப்பது போன்ற வேலைகளில்
அசியா ஈடுபட்டிருப்பாள். பொறுமையாக அவள் எப்போதும் அதே களைச் செய்வதைக் காண வேடிக்கை யாயிருக்கும். ஒவ்வொரு முறை அவ் விடத்தை அடையும்போதும் (எதேச்ரை யாக) ஒருமுறை திரும்பிப் பார்ப்பேன். (சத்தியமாக் ஒரே ஒருமுறைதான்!) அசிபாவும் சிலவேளைகளில் என்னைப் பார்த்திருக்கிறாள். அது தற்செயலான u ibo) o Juui do bloன்றுதbன்
முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவள எனனைக குறிபபாகவே பார்க கிறாள் எனர் பதை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே புரியக்கூடியதாயி, ருந்தது.
ക് ഉ]ബ്
இருக்கலாம்
அன்றாடம் ஒருவரை ஒருவர் காண
கிறோம். முகத்துக்கு முகம் பார்க் கிறோம. ஆனால எதுவுமே பேசுவ தி ல லை. எனக் குச் சங் கடமாக இருந்தது. எங்களுக்குள் ஏதோ ஒரு புtயாத அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
Ia

Page 27
எனினும் ஏதும் பேசாமற் போவது இங் கிதமல்ல என்ற சங்கடம். ஒன்றில் அசியாவுடன் பேசவேண்டும். அல்லது அவளைத் திரும்பிக் பார்க்காமலே போய் விட வேண்டும். ஆனாலும் பார்வை திரும்பிவிடும். வேறொன்று மில்லை. சும்மா ரசனையுணர்வுதான்! எனது தர்ம (மற்ற) சங்கடத்தைப் புரிந்து கொண்டாளோ என்னவோ. அவளிடத்தில் புன்னகை பூத்தது. இத மான நட்புணர்வுடனான புன்னகை!
அடுத்த சில நாட்களில் பாதையில் இறங்கிக் கிட்ட வந்துவிட்டாள். `தயவு டன் உள்ளே வாருங்கள்.!’ கையை ரெஸ்ரோரன்டிற்குள் காட்டினாள்.
உள்ளே சென்று, மரங்களின் கீழ் காற்றோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கதிரையில அமர்ந்தேன்.
é.
‘என்ன தடிக்கிறீர்கள்.? பியரா..? மென்பானமா..?” m
‘நான் இங்கு குடிக்க வரவில்லை. உன்னோடு பேசத்தான் வந்தேன்!”
‘நானும் பேசுவதற்காகத்தான் உங்களை அழைத்தேன்.”
இந்த உரையாடல்கள் ஆங்கிலத் திற் தான் நடந்தன, அவளுக்கு
ஆங்கிலம் பேசுவதற்கு சரியாகத்
தெரியாமலிருந்தது. சிரமப் பட்டு ஓரிரண்டு வார்த்தைகளையும் கைப் பாஷையையும் பயன்படுத்தி தான் சொல்லவேண்டியவற்றைப் புரிய வைத்தாள். (ரெஸ்ரோரன்ட்ற் பணி
செய்வதால் "ப்ளிஸ் கம் இன்.! போன்ற
வார் தி தைகளைத் தெரிந்து
50
வைத்திருந்தாள்.)
;
சைனா முகம், சிறிய கண்கள்.
“உங்களைப் பார்த்தால் சைனாக்
காரி போலத் தெரிகிறது.”
அசியா சிரித்தாள். ` எனது மூதாதையர்கள் சைனாவிலிருந்துதான் வந்தார்கள்.” (இதை அவள் எனக்குக் கூறிய விதம் வேடிக்கையானது. ) ‘மதேர்ஸ் மதேர்ஸ் மதர் கம் ட்றொம் சைனா.” அதாவது அவள் அம்மாவின் அம்மாவின் அம்மா வந்தது சைனா விலிருந்து என்பதை எனக்கு புரிய வைக்க முயற்சித்தாள்.
நான் எனது முகத்தை மிகவும் சோகமாக மாற்றிக் கொண்டேன். அது. ஆங்கில மொழியிற் பேசும் அவளது கஷ்டத்தை நினைத்தல்ல. பிற மொழி
யொன்றை இந்த அளவுக்காவது பேச
எத்தனிக்கிறாளே என்பது சந்தோஷப் படக்கூடிய விஷயம்தான். ஆனால் எனது (33 sI 85 Gud 6ú 6U T lf அசி 11  ைவ நினைத்துத்தான். சொற்ப சம்பளத்துக் காகக் கடைகளிற் காய்ந்து கொண்டி ருக்கும் பெண்கள் பற்றிய அனுதாபம் தான். என் அனுதாப அசியாவுக்கு வெளிப்படையாகவே காட்ட வேண்டுமென்று தோன்றியது. தனது நிலைக்காக இன்aெபருவப் இரங்குவது அவளுக்கு ஆறுதலாக இருக்குமல்லவா?
( t ) |
‘அசியா. நீங்கள் இங்கு கஷ்டப் பட்டு வேலை செய்வதைக் கவனித்தி
ருக்கிறேன். உங்களுக்குச் சம்பளம் மிகக் குறைவு என்பதும் எனக்குத் தெரியும் , உங்களுக்காக நான்

கவலைப்படுகிறேன்.”
`இல்லை. நான் இங்கு சம்பளத் துக்கு வேலை செய்யவில்லை. இந்த ரெஸ்ரோரன்ட் எங்களுக்குச் சொந்த மானது.!” தன்னைத் தொட்டுக் காட்டிக் காட்டினாள். (தனது சொந்தக் கடை என்பதற்கு அடையாளமாக)
"அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். இல்லாவிட்டால் நீ இவ் வளவு குணி டாக இருப் பாயா?’ சமாளித்தேன்.
அவள் சிணுங்கினாள். 'இல்லை. நான் நிறையச் சாப்பிடுவதில்லை.!’
‘அப்படியானால் மிகுதிச் சாப் பாட்டை என்ன செய்யிறீங்க..?”
சிரித்தாள். நான் எந்த நாட்டைச் சேர்ந்தவன், என்ன அலுவலாக இங்கு வந்திருக்கிறேன் போன்ற விடயங்களை விசாரித்தாள். பிறகு எண் னிடம் கேட்டாள்,
‘வெயர்யூ கோ அன்ட் கம். திஸ் ஸைட் ஒல்வேய்ஸ்.?”
அவளுடன் பேசிக்கொண்டிருந்த சொற்ப நேரத்துக்குள்ளேயே அவளது ஆங்கிலப் புலமையின் பொருளு ணர்ந்து புரிந்து கொள்ளும் திறமை எனக்கு வந்துவிட்டது.
உடற்பயிற்சிக்காக நடப்பதாகக் கூறினேன். அவள் கண்கள் விரிந்து வியப்படைந்தாள். ' உடற்பயிற்சிக்காக யாராவது இப்படி வேலைமினக்கெட்டு நடப் பார்களா?’ என்பது போலக் கேட்டாள்.
5
‘உடற்பயிற்சி செய்யூபாவிட்டால் நானும் உன்னைப் போலக் குண்டாகி விடுவேன்!” எனது இரு கைகளையும் அகட்டி, அவளது சைஸை அபி நயித்துக் காட்டினேன்.
அதற்கும் சினுக்கம். அசியா சிணுங்கும் ஸ்டைலிலுள்ள மருட்டும் சக்தியை புன்முறுவலுடன் ரசித்தேன். அப்போது என் முகத்தை வைத்த கண் வாங்காது பார்த்தாள் அசியா,
‘ஹாவ் வை.ப்?”
* உனது மனைவியும் இங்கு இருக்கிறாளா?” என அசியா கேட்ட தாக எண்ணி, ‘நோ.!’ என்றேன்.
சற்று நேர மெளனத்திற்குப் பின், “லைக் மீ..” எனத் தன்னைத் தொட்டுக்
காட்டினாள்.
என்ன இது? தன்னை விரும்பு கிறாயா என்று கேட்கிறாளா? எந்த அர்த்தத்தில்? நானும் சமாளிப்பாகப் பதில் கூறினேன். 'நீ அழகான பெண். நல்ல பெண் . குண்டுப் பெண் . அதனால் எனக்கு விருப்பம்தான்.”
மூன்றாம் தடவையாகவும் குண்டு என்ற பதத்தைக் கூறியதும் அசியா (பொய்க்) கோபம் காட்டினாள்.
“ஐ நோ ரோக் யூ.’
சரி!” என நான் எழுந்து
வந்துவிட்டேன்.
நடந்து வரும்போதுதான் பொறி தட்டியது. அசியா தவறாகப் புரிந்து விட்டாளோ என்று தோன்றியது. ‘ஹாவ்
De Geo.35

Page 28
வை.ப் என அசியா கேட்டதற்கு, இல்லை’ எனப் பதில் கூறினேன். ஆனால் அவள் கேட்டது, ‘மணம் முடித்துவிட்டாயா என்பதாக இருக்க லாம். அதனாற்தான் ‘என்னை விரும்பு கிறாயா? என்று கேட்டாளோ?
ஐயையோ. எனக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறாளே.!
அடுத்த நாள் நடைப் பயிற்சி போகும்போது அசியாவுக்கு இந்த விஷயத்தைத் தெளிவு படுத்தலாம் என எண்ணிக் கொண்டேன். பொழுது படும் போது குளித்து அறையில் ஒய்வாக இருந்தேன். செக்யூரிட்டி கார்ட் வந்து கூறினான்.
‘’ உங்களைத் தேடி இரண்டு பெண்கள் வந்திருக்கிறார்கள்.”
எனக்கு" இங்கு எந்தப் பெண் களையும் அறிமுகம் இல்லையே. அசியாவாக இருக்குமோ எனத் தோன் றினாலும், வந்திருப்பது ஒன்றல்ல. இரண்டு பேர். யாராக இருக்கும்? வெளியே வந்தேன். கப்பல் மேற்தளத் தில் நின்று பார்த்தேன். அசியாதான்! இன்னொரு பெண்ணுடன் வந்திருந்
தாள். என்னைக் கண்டதும் குதூகலத்
துடன் கையசைத்தாள். மேலே வரும்படி கை காட்டினேன். ஸ்கூட்டரை நிறுத்தி விட்டுப் படியேறி வந்தாள்.
பெரிய கப்பல். படியேறி வந்ததில் அவளுக்கு மூச்சு வாங்கியது. அறைக்கு அழைத்துப் போனேன், அடுக்கு மாடி வீடுபோல அமைந்திருந்த கப்பலின் இருப்பிட உள்ளமைப்பை
52
ஆச்சரியத்துடன் பார்த்தாள். உள்ளே வந்து அமர்ந்தாள். தனது ரெஸ்ரோரன் டிற் பணி புரியும் பெண் என மற்றப் பெண்ணைக் கூறினாள்.
“வந்தது ஏன்?’ எனக் கேட்டேன்.
எனக்குச் சற்றுப் படபடப்பாகவும்
இருந்தது. அசியா வேறு பாதையில் மாறி வந்திருப்பாளோ என்றும் தோன்றியது.
“உங்களைப் பார்க்கத்தான்..!’
நான் சந்தேகித்தது சரிதான். அவளது பதில் என்னை ஒருமுறை தடு மாற்றியது. எனினும் நிதானித்தேன். எனது மனைவியின் போட்டோவை எடுத்து வந்து அசியாவின் முன் வைத்தேன். ‘என் மனைவி!” (இப்படி யாருக்காவது காட்டிப் பெருமைப்படு வதற்காகவாவது மனைவிய னி போட்டோவை கைவசம் வைத்திருப்பது நல்லது.)
அசியாவின் முகமாற்றத்தை உடனே கவனிக்கக் கூடியதாயிற்று. ‘‘வை.'ப் இல்லை என்று சொன்னிங்க?”
‘’ அது தவறு அசியா. என் மனைவி இங்கே இல்லை என்றுதான் சொண்னேன்.”
அசியா மெளனமாயிருந்தாள். என் பிள்ளைகளின் படங்களைக் கொண்டு வந்து காட்டினேன். மூத்த மகள் முதல் கடைசி மகன் வரை, எல்லோரையும் ஒவ்வொருவராகப் பார்த்தாள். மகன் அப்போதுதான் பிறந்திருந்த பால்குடி வயது. அவனைப் பார்த்ததும் அசியா முகம் மலர்ந்தாள்.

'நம்ப முடியவில்லை!’ எனக் கூறினாள். ட்யூ. லுக் யங்..” என்றாள். ஏதோ இந்தோனேசியப் பெயரைக் கூறுகிறாளோ என உன்னிப்பாகக் கேட்டேன். மீண்டும் கூறினாள்.
‘யூ. லுக் யங்.!”
அட, அப்படியா..? 'நான் இளம் ஆள் அல்ல. இளமையான ஆள்.”என ஜோக் அடித்து அசியாவின் மன நிலையை மாற்ற முயன்றேன்.
நன்றாக ஆங்கிலம் பேசப் பழக விருப்பம் என்றும், வோக்கிங் போகும் போது ரெஸ்ரோரன்டிற்கு வந்து போகும் படியும் கேட்டாள்.
“சரி” என்றேன்.
(இனிவரும் இரு பந்திகளும் சுமார் ஒரு வருடக் கதையின் சுருக்கம்)
அசியா மிக நட்புணர்வுடன் பழகி
னாள். தனது பெற்றோரை அறிமுகப் படுத்தினாள். சிலவேளைகளில் கப்ப லுக்கும் வந்து போவாள். அவர்களது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. என் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பப் புதினங்களை அடிக்கடி விசாரித்தறிவாள். அவளது ஆங்கில ஞானமும் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்தது.
அசியாவுடனான நட்பு இந்தோ னேசியாவில் நான் இருக்கும்வரை நீடித்தது. அங்கு நாணயப் பெறுமதி சரிவடைந்து, பொருளாதாரக் குழப்பங் கள் காரணமாக, சடுதியாக எங்கள்
53
வேலைத்திட்டத்தை மூடிக்கொண்டு போக வேண்டி வந்தபோது, எனக்குக் கன அலுவல்கள் செய்யக் கிடந்தன. நடைப் பயிற்சிக்கும் அசியாவைப் பார்ப்பதற்கும் நேரம் கிடைக்கவில்லை. நாட்டை விட்டுப் போவதற்கு முன்னர் அசியாவை சென்று பார்க்கலாம் என எண்ணியிருந்தேன்.
ஆனால் அதற்குக் கூட நேரம் கிடைக்காமற் போய்விட்டது.
இந்தோனேசியாவை விட்டுக் கப்பல் புறப்படவேண்டிய நாள். அன்று தான் நான் இலங்கைக்கு விமானத்திற் பயணமாக இருந்தேன். கப்பல் பயணிக்க முதல் நாள் காலையிலேயே ஏழு மணிபோல, நான் விமான நிலை யத்திற்குப் போகவேண்டும். அதற்கு முதல் நேரத்துடன் எழுந்து போனால் அசியாவிடம் சொல்லி வரலாம் என எண்ணியிருந்தேன்.
முதல் நாள் உடுதுணிகளை அடுக்கிவிட்டுப் படுக்கச் சாமமாகி விட்டது. வீட்டுக்குப் போகப் போவது, மனைவி பிள்ளைகளின் நினைவு, பிறந்த நேரத்திற் பிரிந்து வந்த
மகனைக் காணப்போகும் பரவசம்.
எல்லாம் எனது தூக்கத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. அதிகாலையிற்தான்
நான் உறங்கியிருக்க வேண்டும். '
யாரோ கதவைத் தட்டினார்கள். திற்ந்தேன். செக்யூரிட்டிக் கார்ட் அசியாவை என் முன்னே விட்டுப் போனான். அவள் உள்ளே வந்தாள்.
‘‘ஏணி வநீ தாய் ? யாருடன்
yetterse):

Page 29
வந்தாய்?’ எனக்குச் சரியாக உறக்கம் கூடக் கலையவில்லை. தடுமாறினேன்.
‘இன்றைக்குப் போகிறீர்களா?” அவளிடத்தில் இப் படியான ஒரு முகத் தை இதற்கு முனி நான் பார்த்ததில்லை. அது கலக்கமா? தயக்கமா?
‘இந்த நேரத்தில் யாருடன் வந்தாய்?” எனக்குக் கோபமும் வந்தது.
é.
அப்பாவுடன். அவர் வெளியே நிற்கிறார், !’
“இப்ப இங்கு வருவதற்கு என்ன அவசரம் அசியா...'
` அசியா தன் கையிலிருந்த பார்சலை என்னிடம் தந்தாள். அவளது கணி களில் கலக்கம் தெரிந்தது. ‘திரும்ப வரமாட்டீர்களா..?’
‘தெரியாது. அநேகமாக வர மாட்டேன்..!” அது அவள் எதிர் பார்த்திராத பதிலோ என்னவோ? அவளது சிவந்த முகம்
இன்னும்
சிவந்தது.
அசியா சட்டென எனக்கு மிக நெருக்கமாக வந்து என் கன்னத்தில் முத்தமிட்டாள்! அது நட்பு ரீதியான, பிரிவாற்றாத முத்தமல்ல. வித்தியாச மானது.
நான் திகைத்து நிற்க, என்னைத் திரும்பிப் பார்க்காமலே வெளியேறிப் போனாள். அவள் தந்த பார்சலைத் திறந்து பார்த்தேன். அழகிய வெண் பஞ்சுப் பொம்மை. அதில் ஒரு துண்டு எழுதப்பட்டிருந்தது.
` உங்கள் குழந்தைக்கு!’ என்று!
அந்த வெண்பஞ்சுப் பொம்மையின் முகத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் போலிருந்தது எனக்கு!
லஞ்சம் வாங்கிய பண நோட்டில் காந்தி சிரித்துக்கொண்டிருக்கிறார்.
எழுதப்படாத கவிதைக்கு வரையய்படாத சித்திரம்
 
 
 
 
 
 
 

55
ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள்
- மேமன்கவி
كالدرع ک86 દ્વ૭ 1. ఖనలో భ్ర్య
அண்மையில் ஞானம் சஞ்சிகையின் இலக்கியப் பண்ணையின் ஆரம்ப நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. ஈழத்து சிறுசஞ்சிகை வளர்ச்சியில் ஞானம் தனக்கான சுவடுகளைப் பதிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை அதன் 44 இதழ்கள் நிரூபித்திருக்கின்றன. சந்தோஷமாக இருக்கிறது. பொதுவாக சிறு சஞ்சிகை என்பதன் வெளிப்பாடு தனிநபர் அல்லது ஒரு குழுவின் அர்ப்பண உழைப்பில்தான் உருவாக்கம் பெறுகின்றன. ஞானமும் அதற்கு விதிவிலக்கல்ல.
ధ్యలో
பொதுவாக சிறுசஞ்சிகை என்ற அடைமொழிக்குப் பின்னாலான அர்த்த பரிமாணம் ஆழமானது. அந்த வகையான சஞ்சிகைக்கு பிரத்தியேக குணங்கள், நடத்தைகள் இருக்கின்றன. அந்தவகையில் சிறுசஞ்சிகை என்ற இயக்கம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக பல்வேறான சிந்தனைப் போக்குகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கினை வகித்து வருகிறது.
இன்று தமிழகப் பெரும் சஞ்சிகையான குமுதம் போன்ற நிறுவனங்கள் கூட ஒரு சிறுசஞ்சிகையினை நடத்தினால்தான் அதற்குரிய வாசகர்களை அடையலாம் என்ற எண்ணத்துடன் தீராநதி கொண்டு வந்திருக்கிறது.
தமிழகத்திலும் இலங்கையிலும் இன்று பல சிறுசஞ்சிகைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ܖ
சிறுசஞ்சிகை நடத்த முன்வருபவர்கள் பின்வரும் விடயங்களை மனங் கொள்வது நல்லது.

Page 30
1. உங்களுக்கென ஒரு கருத்தியல் இருக்க வேண்டும். 2. சிறுசஞ்சிகைச் சூழலுடன் உங்களுக்கு பரிச்சயம் இருக்க வேண்டும். 1. உங்கள் கருத்தியலுக்கேற்ப நல்ல படைப் புக் கள் கிடைக் காவிடில் சஞ்சிகையை வெளியிடாதீர்கள்.
4. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு
யோசனை. நடு நிலையுடன் சஞ்சிகை நடத்துகிறோம் எனச் சொல்லி ஒரு சஞ்சிகையை நீங்கள் நடத்துவதாக இருந்தால் அது சிறுசஞ்சிகை ஆகாது. அத்தோடு அப்படிச் சொல்லுகின்ற உங்களுக்கு ஒரு கருத்தியல் இல்லை என்பதும், கருத்தியலைப் பற்றிய தெளிவு உங்களுக்கு இல்லை என்ப தும் நிருபணமாகி விடும். ஏனெனில் நடுநிலை என்ற விடயம் உலகில் இல்லை என்பதுதான் உண்மை.
ğv
٩ک N1 འུར་ཉའི་
) 6ک(
68 O ફૂછછ హో
(کلا$
ஈழத்து தனிப் படைப்பாளிகளைப் பற்றிய ஆய்வு ரொம்பவும் அரிதா கவே நட்ைபெற்று இருக்கிறது என எனக்குப்படுகிறது. பல்கலைக்கழக மட்டத்தில் பட்டமேற் படிப்புக்கு அவ் வாறான ஆய்வுகள் நடைபெற்றாலும், அவை ஆய்வு பார்வைக்கான தரவு களின் அடுக்குகளாகவே இருக் கின்றன. (ரொம்பவும் அபூர்வமாக ஒரு சில ஆய்வுகள் விதிவிலக் காக) அமைந்து விடுகின்றன.
ஆழ்ந்த விமர்சனப் பார்வை அடிப்படையில் ஒவ்வொரு படைப் பாளியின் ஆளுமையானது நம் முன் கொடுக்கப்பட்ட அவனது படைப்புக் கள் மூலம் எவ்வாறு வெளிப்பட்டு இருக்கிறது என்ற நோக்கில் ஒவ் வொரு படைப்பாளியைப் பற்றியும் ஆய்வுகள் நமக்குத் தேவை.
அந்த ஆய்வுகளுக்கு முன்னதாக
படைப்பாளி, பிரதி, விமர்சகன், வாசகன் என்ற தளங்களுக்கிடையில் நிலவும் உறவைப் பற்றியும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஒரு படைப்பாளியை சந்திக்க முன் அவரது படைப்புக்களை படிக் கும் பொழுது ஏற்படும் உணர்வுகள். படிமங்கள் வித்தியாசமானவை. அதே வேளை அவரைச் சந்தித்த பின் அவரது படைப் பைப் படிக்கும் பொழுது ஏற்படும் உணர்வுகள் படி மங்கள் வித்தியாசமானவை. ஒரு படைப்பில் அப்படைப்பைப் படைத்த படைப்பாளியின் பெயரை அழித்து ஒரு தீவிரமான வாசகனுக்கு கொடு த்து அது யாருடைய படைப்பு என்று சொல்லச் சொன்னால் அவனால்

சொல்ல முடியுமா? முடியாது என்று தான் எனக்குத் தோன்றுகின்றது. ஒரு படைப்பை அப்படைப்பைப் படைத்த படைப்பாளியின் பெயரை மட்டும் கொடுத்து படிக்கச் சொன்னால், வேண்டுமானால் அப் 1டைப்ாளியின் மதம் சார்ந்த கருத்தியலை மட்டுமே ஒரு வாசகன் அறியக் கூடியதாக இருக்கும். ஆனால் அப்படைப்பாளி சார்ந்த கலாச்சார சூழலை அறிந்தும், அப்படைப்பாளியைச் சந்தித்தும் அவரது படைப்பை வாசிக்கும் பொழுது கிடைக்கின்ற அனுபவம் வேறுபட்டு நிற்கும்.
py U|U ತ ತ ಏರು 8ಶ! கட்டத்தில் பல்வேறு படைப்பாளிக ளால் கையாளப்படும் பொழுது. அப் பிரச்சனைக்கான நோக்கும். அப் பிரச்சினையை அப்படைப்பாளி கை யாண்டு இருக்கும் விதமும் மாறு படுகிறது. இங்கு அந்தந்த படைப்பாளி
யின் அனுபவம், கருத்தியல் போன்
றவை பங்கு பொறுகின்றன என்பதை ஒத்துக் கொண்டால், அத்தகைய பிரதி களை வாசிக்கும் வாசகனில் அப் பிரச்சினை பற்றிய நோக்கில் ஏற்படும் தாக்கத்தையும் நாம் மனங்கொள்ள வேண்டி இருக்கிறது.
இக்கருத்துக்குச் சற்று ஆதரவா னது போல் தோன்றும் வகையிலான இன்றைய காலகட்டத்தில் வேறு ஒரு புதிய கருத்து ஒன்றும் நம்முள் இருக்கிறது. பின்-நவீனத்துவகாரர் களின் வருகைக்கு பின் ஒரு படைப் பின் பிரதியை வாசகன் தனக்கான ஒரு வழியில் வாசிக்கிறான்
என்ப
" J ᏭᏏ {Ꭲ 6uyاث (ن
தாகும். அந்தப் பார்வைய்ன் அடிப்
படையில் படைப்பாளி இறந்து விட் டான் என்ற திடுக்கிடும் செய்தியும் நமக்கு கிடைத்திருக்கிறது.
மேலும் ஒரு படைப்பை வாசிக கின்ற வாசகன் அடைகின்ற அனுபவம்,
உணர்வு. அதே படைப்பைப் படிக்
கின்ற இன்னொரு வாசகன் அதே
| அனுபவத்தை அடைகின்ற சாத்தியம்
எந்த அளவானது என்பதையும், ஒரு
படைப்பைப் படைக்கும் பொழுது
படைப்பாளி அடைகின்ற அதே மனோ
நிலையை அப்படைப்பை வாசிக்கின்ற
6υ π σ கன்
ஒரு பிரதியை அர்த்தப்படுத்துவதில்
வாசகனின் பங்கும் இருக்கிறது
என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இவ்விடத்தில்தான் ! பின்நவீனத்துவக்
காரர்களின் கருத்து பலம் பெறுவது தெரிகிறது.
இப்பொழுது மேலும் ஒரு கேள்வி எழுகிறது. ஒரு படைப்பைப் படைத்த பின் அப்பை til Jiř5655(f) : J GOD ’N 1ாளிகளு மான உறவு என்ன?
இப்படியாக படைப்பாளி, பிரதி விமர்சகன், வாசகன் என்ற தளங் களுக்கிடையில் படைப்பு என்ற வடி வில் ஓர் அனுபவம் இடப்பெயர்ச்சி
ஆகும் பொழுது ஏறபடும தாக்கங்
களையிட்டும் உறவுகளையிட்டும் விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.
அடைகின்றானா? எண் , றெல்லாம் நாம் யோசிக்கும் வழியில்

Page 31
இன்று மனித குலத்தின் அழி
வானது பலவற்றின் பேரால் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. வாழ்வின் மதிப்பீடுகள் எனச் சொல்லப்படும் அனைத்தையும் வியாபாரமாக்கி விட்ட நிலையில், அதிகாரத்தைத் தக்க வைத் தலும், பொருள் ஈட்டுதலுமான நிலை யில் வன்முறை எந்த விதமான இரக்க சுபாவமுமின்றி மனித குலத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. அதிலும் தனி மனித நடத்தையைவிட குழுவாக சேருகின்ற பொழுது உற்சாகப்படுத்தப் படும் வெறியானது, தன் சக மனி தனாக வாழ்ந்தவன் என்பதை மறந்து தான் கொண்டிருக்கும் வெறிக்கு பலி யாக வேண்டியவனாகக் கருதி சக
மனிதன் மீது வன்முறை செலுத்து
வதில் தயக்கம் காட்டத் தயங்குவ தில்லை. அதிலும் நமது கலாசாரம், பண்பாடு, மதம், இனம் என்ற கூட்டு நிலையே அதிகளவான வன்முறைக்கு வழிவகுத்து இருக்கிறது. அதிலும் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் மனித குலத் தின் மேன்மைக்காகவும் மோட்சத்திற்
காகவும் வந்ததாகச் சொல்லப்படும் சக
மதத்தின் பேரால் மனிதன் மனிதனைக் கொல்வதுதான். இவ்வா றான சூழலுக்கு ஆட்பட்டு இருக்கும் நமக்கு அண்மையில் தமிழகத்தி
Հ8
லிருந்து வெளிவந்திருக்கும் 'மழை சஞ்சிகையில் குவளைக் கண்ணண் எழுதியிருக்கும் கவிதை ஏதோ ஒரு செய்தி சொல்வது போல் எனக்குப் பட்டது. பார்வைக்கு அந்தக் கவிதை தலைப்புடன்.
கலந்துரையாடல்
எனக்கும் ஒரு கடவுள் இருக்கிறது
நான் தூங்கும் பொழுது
என்னைப் பார்த்துக் கொள்கிறது.
அதுதான் தினமும் உறக்கத்தில இருந்து விழிக்க வைக்கிறது. உலாவப் போகும்போது உடன் வருகிறது. எனக்கு நான் பகையானபோது காரணங்களை விளக்கி மீண்டும் நண்பனாக்கியது. எனக்குப் பிடிக்காததைச் செய்யச் சொல்லாது. தீனக்குப் பிடிக்காாதைச் செய்ய
விடாது. ஆமாம். உனக்கும் ஒரு கடவுள் இருக்கிறதல்லவா
அடுத்தமுறை சந்திக்கும்போது எனது கடவுளோடு நீயும் உனது கடவுளோடு நானும் பேசிக்கொண்டிருக்கலாம் அல்லது கடவுள்கள் பேசிக் கொள்வதை
கேட்டுக் கொண்டிருக்கலாம்.

a 4A
படித்தோம் சொல்கின்றோம். நடேசனின் ‘வாழும் சுவடுகள்’
- ரஸஞானி
வழக்கறிஞர்களிடமும் வைத்தியர்களிடமும் உண்மையை மறைக்க முடியாது. இவர்களும் தம்மிடம் வருபவர்களின் உண்மைகளை அந்தரங்கங்களை பகிரங்கப் படுத்தக் கூடாது என்பது மரபு.
இந்த Client Confidentiality - அவுஸ்திரேலியாவில் மிருக வைத்தியராக இயங்கும் டொக்டர் நடேசனை கட்டுப்படுத்தாமையால் அவரது தொழில்சார் அனுபவங்கள் கதைகளாக வெளிவந்துள்ளன.
நடேசன், அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி, முன்னர் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் மிருக வைத்தியத்துறையில் பணியாற்றியவர்.
1983ஆம் ஆண்டு ஜூலை வன்செயல்களைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று தஞ்சமடைந்த தமிழ் மக்களின் மருத்துவ தேவை d5(65d35T 356 b suijst g (38.606).JuJIT issOTITs. Medical Unit for Service of Tamils (Must) தமிழர் நல மருத்துவ நிலையம் என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் குறிப்பிட்ட அகதி மக்களுக்கு உதவினார். நடேசனின் மனைவி சியாமளாவும் ஒரு டொக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவுக்கு நடேசன் புலம்பெயர்ந்த பின்பு தமிழ் அகதிகள் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலான அமைப்புகளுடன் இணைந்து ஆக்கபூர்வமான பணிகளைத் தொடர்ந்ததுடன், 'உதயம்' என்ற இருமொழி (தமிழ், ஆங்கிலம்) மாதப் பத்திரிகையை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார். இந்த இதழ் தொடர்ந்து வெளிவருகிறது. அதில் பிரசுரமான கதைகளின் தொகுப்பே ‘வாழும் சுவடுகள்’.
சென்னையில் எஸ்.பொ. ஸ்தாபித்த ‘மித்ரா வெளியீடு இந்நூலை வாசகர்

Page 32
S. 666),
களுக்கு வழங்கியுள்ளது. இக்கதை களில் யானை, பூனை, நாய் உட்பட பல பிராணிகளே முக்கியமான கதாபாத்திரங்கள். அனைத்துக் கதை களுமே உண்மைச் சம்பவங்களின் சித்திரிப்புகள்.
இவ் விதமொரு படைப் பை
உருவாக்குவதற்கு நடேசனுக்கு
ஆதர்சமாக இருந்தவர் Dr. James Harriot 6760Tu6)ff.
இவர் தனது மிருக வைத்திய
அனுபவங்களை இரண்டாவது உலக
மகா யுத்த காலத்தில் புத்தகமாக வெளியிட்டதாகவும் பின்னர் அந்த அனுபவங்கள் தொலைக் காட்சித்
தொடர்களாக வெளியானது எனவும்
நடேசன் தெரிவிக்கின்றார்.
அவுஸ்திரேலியாவில் மனிதர்களுக் குரிய வாழ்வுப் பாதுகாப்புக்கு 'மனித உரிமை பேணும் சட்டங்கள் இருப்பது
போன்று உயிரினங்களின் பாதுகாப்புக்
கும் உத்தரவாதம் வழங்கப்பட்டிருக் கிறது.
வீடுகளில் பராமரிக்கப்படும் ஜீவ
ராசிகளுக்காக விசேட உணவு வகை
களும் இங்கே விற்பனைக்குண்டு. இந் நாட்டில் பெரும்பாலானவர்கள் நாய், பூனை உட்பட பல ஜீவராசிகளை வீட் டிலே வளர்ப்பதனால் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி ஒரு மிருக வைத்திய நிலையத்தைக் காணலாம். இந்த ஜீவ ராசிகளுக்கென பெரிய வைத்திய சாலைகளும், அவை தங்கிச் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவ விடுதிகளும்,
60
அவை உயிரிழந்தால் அடக்கஞ் செய்யப்பட்ட இடத்தில் கல்லறைகளும் காணப்படுகின்றன.
நாய் நன்றியுள்ள மிருகம் மட்டு மல்ல, மோப்ப சக்தியும் மிக்கது. அதன் படைப்பின் உன்னத அம்சம் குறிப்பிடத் தகுந்தது. தனது எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும் நாய், தனது இனத்தைச் சேர்ந்த மற்றொரு நாயைக் கண்டால் குரைத்துச் சண்டைக்குத் தயாராகும். தேவையின் நிமித்தம் இணையவும் விரும்பும்.
வீட்டில், காட்டில் வளரும் ஜீவராசி களிடம் விநோதமான குணங்களும் உண்டு. இவற்றுக்கு நோய்வரும் போது, விபத்தினால் காயங்கள், முறிவுகள் ஏற் படும் போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பலவகையான அனுபவங் களைச் சந்திப்பார். ஆனால் அனை வருமே அவற்றை இலக்கியமாக பதிவு செய்வதில்லை.
வாய் பேசமுடியாத இந்தப் பிராணி
களைப் பற்றி நடேசன் பேசுகிறார்.
அதனால் இலக்கியத்திற்கு அவரது அனுபவங்கள் புதிய வரவாகின்றது.
39-வது ஆண்டுமலர் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
பாதுகாக்கத் தக்கதான எழுத்துப்படைப்பு இது.
 
 
 
 
 
 
 
 
 

6
சமீபத்தில் வெளிவந்த ஆனந்த விகடனில் 'சுஜாதா' பக்கத்தில் மல்லிகை யையும் அதன் தொடர் வரவையும் உங்களது அர்ப்பணிப்பு உழைப்பையும் பாராட்டிக் கட்டுரை எழுதியுள்ளாரே, அதன் பிரதிபலிப்பு என்ன? '
தெஹிவளை ம.இரகுநாதன் சென்னையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலக்கியம் 2004 இருநாள் விழாவில் முன்னர் பின்னர் தெரிந்திராத நண்பர்கள் பலர் நேரில் பாராட்டுத் தெரிவித்தனர். பின்னர் நான் தங்கியிருந்த இடத்திற்கு நேரில் வந்து என்னையும் மல்லிகையின் இலக்கிய சேவையையும் பாராட்டிச் சென்றனர். சுஜாதாவின் பாராட்டு மொழிகள் தமிழகத்தில் என்னைப் புதுப்பிக்க உதவி செய்துள்ளன.
- 39-வது ஆண்டு மவர் படித்தேன். முன்னர் மலர்களுக்கு எழுதிய சிலர் இம்மலரில் எழுதியிருக்கவில்லையே, என்ன காரணம்? கொக்குவில் ச.சிவதாசன் தொடர்ந்து மல்லிகைப் பக்கங்களை யாருமே குத்தகைக்கு எடுத்துவிட முடியாது. அதற்கு நான் உடந்தையாகவும் இருக்க விருப்பமில்லை. மல்லிகையில் எழுத விரும்பும் அனைவரையும் அரவணைத்துப் போகவே மல்லிகை விரும்புகின்றது.
சமீபத்தில் சென்னைக்குச் சென்று வந்தீர்களே, பிரயாணம் எப்படி இருந்தது? நீர்வேலி க.சண்முகநாதன் இந்தத் தடவை தமிழகம் சென்று வந்த பிரயாணம், பிரயாணம் போலத் தெரியவில்லை. அத்தனை அலுப்புத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்திற்குப் போய் வந்த திருப்தி எனக்கு எஸ்பட்டது. அங்கு இரவுச் சாப்பாட்டுக்கு ஒரு ஹோட்டலுக்கு

Page 33
இட்லி சாப்பிட நானும் நண்பர் ரீதரசிங்கும் சென்றி ருந்தோம். வரிசை யில் பலமணிநேரம் காத்திருந்துதான் ஹோட்டலுக்குள் நுழைந்தோம். இது ஒரு புது அநுபவம் நம் இருவருக்கும்.
п o a a
உங்களுடைய சுயசரிதையைப் படித்ததன் பின்னர் உங்களைப் புதிய கோணத்தில் தரிசித்து வருபவன் நான். இப்பொழுது மல்லிகை அனுபவங் களைத் தொடர்ந்து எழுதி வருகிறீர் கள். இதை எழுதி முடித்து, எப் பொழுது ஒரு முழு நூலாகத் தரு வீர்கள்?
நாவலப்பிட்டி. எம்.சரவணன்
இந்தச் சஞ்சிகை வெளியீட்டு
அனுபவத்தை எழுத்தில் முடித்துவிட்டு, வெகுவிரைவில் அதை ஒரு கனத்த நூலாக உங்களுக்குத் தருவதுதான் எனது தற்போதைய நோக்கம். அதற்கு அனுசரணையாக இந்தத் தடவை நான் சென்னை சென்றிருந்த சமயம் பல தடவைகள் அலைந்து ‘அமுதோன்’ என்ற ஒவியரிடம் அதற்கான அட்டைப் படத்தையும் வரைந்து கையுடன் கொண்டு வந்துள்ளேன். அமுதோன் என்ற ஓவியர் எனது நீண்டகால நண்பர். கவிஞர் கண்ணதாசனின் ஆஸ்தான ஒவியர் என்பது தமிழகத்தில் வெகு பிரசித்தம்.
D D
உண்மையைச் சொல்லுங்கள். தமிழகத்தின் இன்றைய நிலை என்ன?
மருதானை. க.சிவநேசன்
62
உண்மையைச் சொல்லுகிறேன். அரசியலும் சினிமாவும்தான் இன்றைய தமிழகத்துச் சுவர்களை ஆளுகின்றன. அனைத்து ஊடகங்களும் இவை இரண்டையும் வைத்துக் கொண்டே தமது பிழைப்பை நடத்திக் கொண்டு வருகின்றன. இவை இரண்டிலும் ஈடு பட்டவர்கள் இரு கன்னையாகப் பிரிந்து அரசியல் ஆதிக்கப் போட்டி நடத்தி வருகின்றனர். கலை, இலக்கியம் சம்பந் தப்பட்டவர்களே வலுகுறைவு. இருந்தும் இலக்கிய, சினிமாத்துறை சம்பந்தப்பட்ட ஒரு சிலர் தம்மை அர்ப்பணித்து வரு வதையும் என்னால் அவதானிக்க முடிந் தது. வெகு சிலர்தான் இவர்கள். இருந்தும் தமிழகத்தைப் பற்றிய எதிர்கால ஆரோக்கியமான நம்பிக்கை கள் இடையிடையே ஏற்படாமலு மில்லை. காத்திருப்போமே.
உங்களை உருவாக்கி, இலக்கிய உலகத்திற்குத் தந்துதவிய யாழ்ப் பாணத்தை, மல்லிகையைப் பிரபலப் படுத்தி ஊர் உலகிற்கெல்லாம் அறி முகம் செய்து வைத்த உங்களுடைய பிறந்த மண்ணை, இன்று மறந்து விட்டீர்களா?
கொக்குவில் எம்.எஸ்.கந்தசாமி
நான் யாழ்ப்பாணத்தையே மறந் தாலும் யாழப்பாணம் என்னை மறந்து விடாது. நம்புங்கள். நானும் யாழ்ப் பாணத்தவன்தான்! எனது மனைவி, முத்தமகள், குழந்தைகள் இன்னமும் நான் பிறந்த மண்ணில் இதுவரை வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

மல்லிகை வெளியீட்டுடன் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளையும் பெருமள வில் நான் இன்று நிர்வகித்து வருகின் றேன். ஐம்பெரும் கண்டங்களில் வசிப்ப வர்கள் எமது படைப்புகளுடன் இன்று வசதியாகத் தொடர்பு கொண்டு பயனடைந்து வருகின்றனர். யாழ்ப் பாணத்தில் இருந்திருந்தால் இந்த வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும். தயவு செய்து என் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். பெப்ரவரி மாதம் செங்கை ஆழியான் மகளது திருமணத் திற்கு யாழ் வருகிறேன். கொக்குவில் பக்கம் தானே? சந்திக்க முயலுங்கள்.
மல்லிகைப் பந்தல் வெளியீடு களின் இன்றைய பொருளாதார நிலை என்ன?
மிருசுவில்.
ச.நாகநாதன்
வெளிநாடுகளிலிருந்து கொழும்பு நோக்கி வரும் இலக்கிய தாகம் கொண்ட இளம் நண்பர்கள் மல்லிகைப் பந்தலுக்கு வந்து நூல்களைப் பெற்றுச் செல்லுகின்றனர். அத்துடன் ஆண்டு மலர்களையும். பழைய பிரதிகளையும் கேட்டு எனவே ஒகோ கூடிய நிலையில் இல்லாது போனாலும், 5u60õ96ü (36 ubi65äbö0)b 3 bTopo2ä சீரான பாதையில் சவாரி போகத் தொடங்கியுள்ளது.
வ1ங்கிச் செல்லுகின்றனர்.
فہ t-u Jرمین 6T601 6siu utut I
மல்லிகைப் பந்தல் வெளியீடு களில் எல்லாப் புத்தகங்களும்
என்னை அவசியம்
63
உங்களிடம் இருக்கின்றனவா?
t திருமலை. எஸ்.மகாதேவன்
மாதாந்தம் மல்லிகை இதழ்களில்
நம்மிடமுள்ள புத்தக விற்பனவுப் பிரதி
களின் பெயர் விலைகளை விளம்பரப் படுத்தி வருகின்றோம். அப்பட்டியலில் இடம்பெறாத நூல்கள் எம்மிடம் கை வசம் இல்லை.
ஆண்டு மலரில் வெளிவந்துள்ள முருகபூபதியின் சிறுகதை அதே வாரம வீரகேசரியின் வார மலரில் வெளி வந்துள்ளது. இது இலக்கிய நியாயமா. என்ன? இதற்கு நீங்கள் என்ன சொல்லு கிறீர்கள்? இதை இலக்கிய மோசடி 61633), ¿jonpon) H DA1 ?
கொழும்பு 6. எஸ்.ஆர்.பாலச்சந்திரன்
மோசடி என்ற சொல் பெtய வார்த்தை. அதேசமயம் முருகபூபதி மல்லிகையின் நீண்டகால அபிமானி என்பதைவிட, ஒரு பத்திரிகையா என். அவர் ஒரே கதையை இரு பிரசுரத் தளங்களுக்கு அனுப்பி வைத்திருககவே
கூடாது. இது அவருக்குத் தெரியாத
ஒன்றல்ல. முன்னர் ஒன்றுக்கு அனுப்பி அது பிரசுரிக்கப் பிந்தினால் பின்னர் அனுப்பிய பிரசுரத் தளத்திற்குத் தகவல் தந்திருக்க வேண்டும். இதுவே நியாய மும்கூட, பூபதி ஒரு தேர்ச்சி பெற்ற எழுத்தாளன். ஆரம்ப எழுத்தாளன் գ9 Ս Եll b}] LL bởi bofia, 36òTLD. தொலைபேசியில இத்தகவலை நான் நேரடியாகச் சொன்னோன். அவர் சில சமாதானங்களைச் சொல்லிச் சமாளித்
b bol „L)|| bů
ஏநம T

Page 34
KON
தார். அவர் கூறிய சமாதானங்களில் எனக்கு உடன்பஈடு இல்லை.
உங்களது சுயசரிதை நூலைப் படித்துப் பார்த்தேன். அதை மனச் சுத்தியோடும் திறந்த மனசோடும் எழுதியுள்ளிர்கள். ஆனால் அதிலொரு குறை எனக்குத் தென்பட்டது. உங்களு டைய மனைவியைப் பற்றி எந்த விதமான தகவலும் இல்லை. அத் துடன் உங்களது மகன் திலீபனைப் பற்றிக் கட்டம் கட்டமாக எழுதியுள் ளிர்கள். உங்களுக்கு வேறு பெண் குழந்தைகள் இருப்பதாகக் கேள்வி ஏன் இந்த ஒரவஞ்சகமான நிலை என்பது எனக்கு விளங்கவில்லை. இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
ஜி.பீற்றர்
இது நியாயமான கேள்வி. அவுஸ் திரேலியாவில் இருந்து வந்த நண்பர் சபேசன் ச்ண்ைமுகம் என்பவரும் இதே கேள்வியை முகத்துக்கு நேரே கேட்டு வைத்தார். திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யும் நோக்கில் அல்லது ஒர வஞ்சகமான போக்கில் இந்தச் சுய வரலாற்றை நான் எழுத்தில் பதிய வைக்கவில்லை. முதலில் மல்லிகை இதழ்களில்தான் இத்தொடரை எழுதி வந்தேன். ஒருவருமே இதைச் சுட்டிக் காட்டவில்லை. இப்பொழுது எழுதிவரும் மல்லிகை அநுபவங்கள் என்ற தொடரில் இந்தக் குறையைத் தீர்த்துக் கொண்டி ருக்கிறேன்.
கொழும்பு 15.
o o o p
மல்லிகையின் 39-வது ஆண்டு மலர் எங்கும் பரவலாக அதனது தொடர் வாசகர்களுக்கு இம்முறை கிடைக்கவில்லை எனக் குறிப்பிடுகி றார்களே. இதற்கு அடி ஆதாரமான பிரச்சினை என்ன?
பதுளை மா.கருணாகரன்
மல்லிகையின் ஆண்டுச் சந்த' 250/- மலரின விலை 135'-, தபால செலவு 12.50/- எனவே தொடரான சந்தாதாரர்களுக்கு மலர் அனுப்பி வைக்க இயலாது என வரிக்குவரி மல்லிகை இதழ்களில் சொல்லி வந்துள் ளோம். பலர் இத்தகவலை கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு தடவை சந்த செலுத்தினால் அகை ஆயுள் சந்தாவாகப் பலர் எண்ணிக் கொணர் டுள்ளனர். உண்மைய க இலக்கிய ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களை இனங்கண்டு (δη,τι ή ι கொள்ள இந்தக் கணக்கெடுப்பு 2.தவு கின்றது. ஆண்டு மலர் இன் 39 மும் கிடைக்கவில்லை என அங்கலாய்ப்பவர் களிடம் ஒன்றை கேட்டு வைபங்கள். மலர் பெறுவதற்கான பணத்தை மு: கூட்டியே செலுத்தியுள்ளீர்களா கேட்டுப் பாருங்கள், பதில் எப்படி வரு கிறது என்பதைக் கொண்டு அவர்களது அங்கலாப்ப்பைத் தெரிந்து கொள் வீர்கள். கடிதமாவது எழுதியிருக்கலாம்.
ଶtଙt $,
201 - 1/1, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த பேடு. 98.புஇ இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

\52 புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம்
சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல. 4, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்)
புததளம. தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும் பாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.