கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2004.06

Page 1
Malikai June 2004
2A2A
EXPO PRODUCTS (PVT) LTD.
Exporters of Non Traditional Sri Lankan Foods
30, SeO AVenue,
COlOmbDO — O3, Tel: 2573717
 

\,
W
|-参参| 参 \\ 参 蒙ae
NoŴ saeWWsaesae|-参WNo
----
_ - _ _ _ |- | ( )! !! !! !!
啊—|-
■

Page 2
"ീർe d, you cര Cർ , മീറ്റർ
THE DIGITAL SERVICES WE PROVIDE Digital Print I2"X18" Maximum size in 10 Min. Automatic dust and scratch correction. Print to Print services. Contact Cards and Index prints.
Greeting Cards/Frame Prints/Calender Prints/Album Prints. Compatible Input & Output Media * (Floppy Disk, CD-Rom, CD-R, /RW, MO, ZIP DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia) Digital Camera Card Printing. Colour Negative, Positive, B/W and Sepia Negative Printing
OTHER SERVICES Developing & Printing of films in 20 Min Printing of Enlargements (5"X7" to I2"XI8") Passport /Visa photos /B/W photos in IO Min. . Film Rolls / Cameras / Batteries / CD / Floppy / Album Sales. Οι Framing of Pi Imported 11 ܐܠܘ
raming of Pictures (Imported) དC) Laminating Services. NO Wedding Album Binding. 8 لإضي لاکی
يمكن تشيلي : FOR ALL YOURREQUIREMENTS IN ཊC) CS NOSO مي CხO
AO ؟» لاج ぐ ხN Out Door Photography & Videography x NSOx
o ΟN \
Weddings. C ON Birthday Parties / Puberty Ceremonies \ટો
Seminars / Any Other Special Functions & Occasions.
ീഡe ? 10 ൨/l' :én cs
 
 

SIP (စင်္ဃသ်
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்'
ஆெண்டு کaلمه-39
யூன் 2004
309
Mallikai 2zoyzessive Monthly Mayay ine
படைப்பாளிகளின்
புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
Colombo- I3. Tel: 232O721
2OI-II/1, Sri Kathíresan Street,
விடை தருகிறோம்
அந்தத் திடீர்ச் செய்தியைத் தொலை பேசியில் கேட்டபோது யாழ்ப்பாணத்து முது பெண்கள் அடிக்கடி உச்சரிக்கும் 'அஞ்சுப கெட்டு அறிவும் கெட்டுப் ப்ோனேன்!"
முதல் நாளுக்கு முதல் நாள் வெள்ள வத்தையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தான் கடைசிமுறையாக அவரது இளைய மகள் அனோஜாவுடன் கண்டு கதைத்துவிட்டு வந்தேன்.
எண்ணி இரண்டு நாட்கள்கூட இல்லை.
நண்பன் ராஜழுநீகாந்தன் எம்மை விட்டு மறைந்து விட்டார்!’ என்ற செய்தி, என் நெஞ்சைப் பெரிதும் தாக்கிச் செயலிழக்க வைத்துவிட்டது.
வடபுலத்தில் வடமராட்சியிலுள்ள வதிரி என்ற சிற்றுாரில் பிறந்து, அங்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே சென்ற தலைமுறையின ரால் உருவாக்கப்பட்ட தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் பின்னர் சுன்னாகம் ஸ்கந்தவ ரோதயக் கல்லூரியிலும் கற்றுத் தேறிய ஓர் இளைஞன் படிப்படியாக முன்னேறி தின கரன் பிரதம ஆசிரியர் பீடத்தை அலங்கரித் தான் என்பது வெறும் செய்தியல்ல.
இன்றைய இளைஞர்கள் கற்றுத் தெரிய வேண்டிய வரலாற்றுப் பாடமிது.
அவரது இறுதிக் கிரிகையில் இந்த நாட்டு ஜனாதிபதி மலர்வளையம் அனுப் பியதும் விசேஷ அனுதாபத் தீர்மானத்தை அன்னாரது குடும்பத்தினருக்குத் தனது கை பட எழுதி தெரிவித்ததும் ஓர் எழுத்தாளனுக் குக் கிடைத்த பெரும் கெளரவமாகும்.
- ஆசிரியர்

Page 3
ராஜரீகாந்தன் அஞ்சலிக் கூடிடம்
- Ll. to
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 23.05.2004 மாலையில் மறைந்த ராஜழுநீகாந்தனின் அஞ்சலிக் கூட்டம் தமிழ்ச் சங்கம் விநோதன் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வஞ்சலிக் கூட்டத்திற்கு டாக்டர் எம்.கே. முருகானந்தன் தலைமை வகித்தார்.
தினகரன் பிரதம ஆசிரியர் திரு. சிவா சுப்பிரமணியம், தினக்குரல் ஆசிரியர் திரு. வி. தனபால்சிங்கம், உதவிக் கல்விப் பணிப்பாளர் திக்குவல்லை கமால், திரு. தி. திருலிங்கநாதன், இ.மு.எ.ச. சார்பில் மேமன்கவி ஆகியோர் கருத்துரைகள் வழங்கினார்கள்.
டாக்டர் ஜின்னா சரிப்தீன், திரு. வதிரி சி. ரவீந்திரன் ஆகியோரின் கவிதாஞ்சலி இடம்பெற்றது.
ஏற்புரையை திரு. கணேசன் அவர்கள் நிகழ்த்தினார்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று திரளாக சமூகந் தந்து இவ்வஞ்சலிக் கூட்டத்தைச் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தந்தையெனும் சொல்மிக்க.." என்னும் தலைப்பில் அழகிய ஞாபகார்த்த நூல் வெளியிடப்பட்டது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினை தனது மூச்சாகக் கொண்டிருந்த ராஜழுநீகாந்தன் அவர்கள் தனது இறுதி நாட்கள் வரைக்கும் முற்போக்குக் கலை இலக்கியக் கோட்பாடுகளையே மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடு : இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
 

சாதனை ஒரு புதுப்பொலிவைப் பெற்றுர்ரது.
சுழல் பந்து வீச்சாளர் முரளிதரனின் உலக சாதனையை நினைத்து, இந்த மண் நியாயமாகவே பெருமைப்படுவதில் அகந்தம் பலவுண்டு.
கிரிக்கட் என்பது உலகைக் கவர்ந்துள்ள சர்வதேச விளையாட்டுக்களில் ஒன்று.
இந்தச் சர்வதேச விளையாட்டில் நமது நாட்டைச் சேர்ந்த ஒரு மலை யகத்து மகன் சர்வதேசச் சாதனை ஒன்றைச் சமீபத்தில் நிலைநாட்டியுள்ளார் என்றால் இது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கத்தக்கதான சங்கதிதான்.
இந்தச் சாதனை மனுக்குலத்தின் சர்வதேசச் சாதனையாகவே நாம்
கருதுகின்றோம். இதை விடுத்து இதை ஓர் இனத்தின் மாபெரும் வெற்றியாகவோ உலகச் சாதனையாகவோ நாம் கருதத் தயாராகவில்லை.
அப்படி இந்தச் சாதனையைக் குறுகிய கண்கொண்டு நோக்குவதால் இதனது சர்வதேச மனுக்குலச் சாதனை வடிவத்தை நாம் குறுக்கிக் கொண்ட பார்வையில் பார்த்து வைத்தவர்களாகவே கணிக்கப்படுவோம்.
இப்படியான மனுக்குலச் சாதனைகள் குறுகிக் குறுகி ஓர் இனத்தின், பிரதேசத்தின், வட்டாரத்தின் சாதனையாகவே முடிவில் வந்துவிடும்.
இப்படியான சாதனை விவகாரங்களில் நாம் பரந்துபட்ட உலகப் பார்வையைக் கொண்டிருக்காது போனால் இத்தகைய சாதனைகள் கூட, தமது சர்வதேசச் சாதனையின் வீரியத்தையும் வடிவத்தையும் இழந்து விடலாம் என மெய்யாகவே அஞ்சுகின்றோம்.
நமது மண்ணில் புகழ் பரப்பி வரும் இளைஞர்கள் அத்தனை பேர் களையும் நாம் நெஞ்சார வாழ்த்துகின்றோம். முத்தையா முரளிதரனின் பெயர் அதன் தலையாய இடத்தைப் பெற்றுத் திகழுகின்றது.

Page 4
G1260:ՈՐՄՈՎի)
Gfി- δήΛ 2ܟ݁ܽܙܐyܙܗܺܝ نرالعتکیہ نتاڑی) لمc%وی)Gf
- புலோலியபூர் க.சதாசிவப
தெளிவத்தை.
மலையகத்தின் ஊவா மாகாணத்தின் பதுளை ஊரில் உள்ள ஒரு பெரு, தோட்டத்தின் பெயர் இது.
இன்று "தெளிவத்தை’ என்ற சொல் கலை இலக்கிய உலகின் ஆக்க இலக்கிய தின் குறியீடாக விளங்குகின்றது. தெளிவத்தை ஜோசப் என்ற படைப்பாளியின் ஆளுமையின் தாக்கம் அது. தெளிவத்தை ஜோசப் தொழில்நிமித்தம் தெளிவத்:ை தோட்டத்திற்கு வந்தவர். ஆனால் தெளிவத்தையில் பிறந்து, வளர்ந்து, க6ை இலக்கியம் வளர்த்து இன்னும் அதன் சாரலிலே வாழ்ந்து தொடர்ந்து எழுத்து பணியில் ஈடுபட்டுவரும் ஒருவர் உளர். அவர்தான்தமிழோவியன் என்னும் ரங்கள் ஆறுமுகம்.
மணிவிழாக் கண்டு கலாபூஷணம், தமிழ்மணி, கவிமணி போன்ற அரச கெளர விருதுகள் பெற்ற தமிழோவியனின் ஆக்கத்தினை, இலக்கிய ஆளுமையை வெல் உலகம் சரிவரத் தெரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவும் இல்லை. மலைய இலக்கிய வரலாற்றில் கடந்த நான்கு தசாப்தங்களாக சமூக அரசியல், பொருளாதா கூறுகள் நவீன இலக்கிய ஆக்கத்தில் ஏற்படுத்தியதாக்கத்தை உற்று உணரவேண் மாயின் தமிழோவியனின் இலக்கியச் செயற்பாட்டை, அவரது ஆக்கங்களின் உள்ளடக்கத்தை, ஒரு வெளிப்பாட்டை ஆழ அகலமாக நோக்க வேண்டும்.
பிரஜா உரிமை பறிக்கப்பட்ட வரலாற்றுக் கொடுமையில் இருந்து இன்றுள் பேரினவாத அமுக்கத்தால் அல்லற்படும் அவலம் வரை உள்ள நிகழ்வுகளை நேரி உற்று உணர்ந்து மலையகத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து பின்தங்கிய கல்வி சூழலில் கல்வி கற்று மலையகத்தின் பொருளாதார உற்பத்தியை ஆளும் வர்க்கத்தி நிர்வாக இயந்திரத்தில் களஞ்சியப் பொறுப்பாளராக பிழைப்பிற்காகத் தொழி புரிந்து தொழிலாளர்கள் அடிமையாக வாழ்வதை அனுதினமும் பார்த்துப் பார்த்
Lg6GE 4.
 
 
 

s
* عد سيما فيه
ATAs a A s fr.
சத்திய தரிசனமானது லெக்கியப்
மலையக வரலாற்றில் அறுபது களில் ஏற்பட்ட எழுச்சி ஒரு புதிய பரிமாணம் கொண்டது. எழுத்தை ஒரு உந்து சக்தியாக்கி பேனா எனும் பேரா யுதம் தாங்கி கலாச்சார போரிட்டு மலையகம் சமூக உணர்வு கோலோச் சும் இராச்சியமாக உருவாக்கிய புரட்சி அது. இலக்கிய வளர்ச்சியில் யுகசக்தி. இலக்கிய வளர்ச்சி ஒவ்வொரு கால கட்டத்திலும் அக்காலகட்டத்திற்கு முற் பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட- முயற்சி கள், பண்புகள் புதிய காலகட்டத்தில் தொடர்ச்சியாக இருப்பது இயல்பு. ஐம் பதிற்கும் அறுபதிற்கும் இடைப்பட்ட
ாலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மறு.
லர்ச்சிகள் ஆழமாக -2, TTuÜ ULவேண்டியது. கே.கணேஷ், சி.வே ஆகி யோரின் உதிரி முயற்சிகளை விட, பரந்த அளவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி களும் காரணங்களே. திராவிட இயக்க சிந்தனைகள் இலக்கிய நெஞ்சம் படை த்தவர்களின் சீர்திருத்த உணர்வை உருவாக்கியது. வடக்கு, கிழக்கு மாகா ணத்தில் இருந்து வந்த சில ஆசிரியர்கள் ஊட்டிய இலக்கிய இலக்கண அறிவு ஓரளவு வசதிபடைத்த பெரிய கங்காணி மார்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் தங்கள் பிள்ளைகளை வட- கிழக்கு மாகாணங்களில் உள்ள தரமான பாட சாலைக்கு அனுப்பிப் பெற்ற கல்வி அறிவு ஆகியவற்றினை பலர் மனங் கொள்வதில்லை. இந்தக் காலகட் டத்தில் எழுத்துத்துறையில் புகுந்து
வியனின் ஆளுமைக்கு அக்காலகட்டத்
கருத்தோட்ட ஆக்கிரமிபப்தம\யது.
யனின் ஆக்க ஆளுமையின் ஆரம்ப மாக மட்டுமல்ல ஆழவேர் பதித்த தள மும் ஆகும். தமிழோவியனின் மலைய கத்து நேசம் கலந்த சமூக உணர்விற்கு பகுத்தறிவு சிந்தனை தமிழுணர்வு, சாதி எதிர்ப்பு, சமதர்மநோக்கு, பெண்விடு தலை ஆகியன சத்துணவாக இருந்தன.
திராவிட இயக்கநூல்கள், சஞ்சிகைகள் மலையகத்தில் பரவலாக வாசிக்கப் பட்டன. இங்கும் பல இலக்கிய சஞ் ஒகைகள் வெளியாகின. மன்றங்கள் தோன்றி விழிப்புணர்வு தோற்றுவிக் கப்பட்டது. மலையகத்தில் துளிர்விட்ட விழிப்புணர்வின் வெளிப்பாடாக அறு பதின் ஆரம்பத்தில் மலையக நல்வாழ்வு வாலிபர் சங்கமும், மலைமுரசு’ பத்தி ரிகையும் தோன்றின. அந்த மலைமுரசு பத்திரிகையில் வெளியாகிய கவிதை களே தமிழோவியனின் ஆரம்ப காலப் படைப்புகள். பதுளையில் படித்த இளைஞர்கள் துடிப்புடன் செயற் பட்டனர். அவர்களில் ஒருவராய் முன் னின்றவர் தமிழோவியன். திருக்குறள் மன்றம் அமைத்து குறள் வகுப்புக்கள் நடத்தப்பட்டது. வள்ளுவர் விழாக்கள், பெரியார் விழாக்கள் கொண்டாடினர். தமிழகத்தில் இருந்து வருகை தந்த அறி ஞர்கள், கவிஞர் கண்ணதாசன், நாஞ் சில் மனோகரன், சிலம்புச் செல்வன் மா.பொ.சி.டி.கே. சீனிவாசன் போன் றோரும் - ஈழத்து அறிஞர்களும் சிறப்புச் சொற்பொழிவு விருந்தினராக அழைக்கப்பெற்றனர். இவற்றை
இன்னும் தொடர்ந்து எழுதும் தமிழோ
DESC 5 ܝ
ང་།

Page 5
எல்லாம் முன்னின்று நடத்திய துடிப் புள்ள இளைஞன் தமிழோவியன். விழிப்புணர்வு ஊட்டும் நோக்கின் நல்லதோர் பரிமாணமாக அமைந்தது இவர் எழுதி மேடை ஏற்றிய தி.மு.க. பாணியில் அமைந்த சமூக சீர்திருத்த நாடகங்கள். தோட்ட சூழ்நிலையை சித்திரிக்கும் நாடகங்களும் மேடை யேற்றப்பட்டன. இவரின் முயற்சியால் சூழ உள்ள தோட்டங்களிலும் மேடை யேறின. நாடக மேடை சீர்திருத்தக் கருத்து பரப்பும் சாதனமாகியது. தியாகி', 'மனமாற்றம்’, ‘மதி மயக்கம்", "ஏட்டிக்குப் போட்டி",
வெற்றி", "பிள்ளைமனம்",
"காதலின் “கலைப் பித்தன்’ போன்ற நாடகங்களை தமி ழோவியன் கதை வசனம் எழுதி இயக்கி தோட்டங்களில் மேடையேற்றி இருக் கிறார். இதுவெறும் கலையுணர்வு வெளிப்பாடு மட்டும் அல்ல. சமூகப் பணியாகக் கொள்ள வேண்டியது.
புனைகதைத் துறையில் தமிழோ வியனின் பங்கும் பணியும் விதந் துரைக்க முடியாவிட்டாலும் ஒதுக்கி விட முடியாது. ‘வீரகேசரி தோட்ட மஞ்சரி, மலைநாட்டு எழுத்தாளர் சங்கம், மலைமுரசு, சுதந்திரன் ஆகி யவை நடத்திய சிறுகதைப் போட்டி யில் பரிசு பெற்றவர். மலையக இலக்கி யத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துதமிழ் இலக்கிய செழுமைக்கு வலு சேர்த்த சிறுகதை எழுத்தாளர் பட்டியலில் இவர் முன்னிலையில் இல்லை என்பது உண்மையே. இதற்குக் காரணம் சிறுகதை இலக்கிய வடிவத்தில் மட்டும் அவர் தமது ஆற்றலையும், காலத்தையும் முடக்கிவிடவில்லை.
புனைகதை இலக்கியத்தில் புதிய போக் கினைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும் இல்லை. ஜனரஞ்சக போக்கினை சிறிது பற்றிக்கொண்டார். "ஞானம்' சஞ்சிகை யில் தனது எழுதுத்துலகைப் பற்றி எழுதுகையில் "எனது கதை மாந்தர்கள் இனிமை நினைவுகளில் இறுமாந்து கிடப்பதுண்டு. ஏறுமாறான பாத்திரங் களை நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடி யாது. ஏனென்றால் அவர்கள்தான் இன்று நமது சமூகத்திலே ஆட்டிப் படைக்கின்றனர். அவர்களின் அந்தரங்க விளையாட்டை அறிந்து கொள்வ தற்கே இந்தப் பகிரங்க வேலை” என் கின்றார்.
தமிழோவியனின் ஆற்றலையும் ஆக்கத்திறனையும் தொடர்ச்சியான அவரது நான்கு தசாப்த இலக்கியப் பயணத்தில் நாம் தரிசிக்கவல்ல ஆரோக் கிய இலக்கிய வடிவம் கவிதைகளே. ஐம்பதுகளில் கவிதைத்துறையில் கால் பதித்த இவர் பாரதிதாசனை ஞானகுரு வாகவும் துரோனராகவும் கொண்ட வர். "உன்னைக் குருவாக உள்ளத்தில் பதித்திட என்னைக் கவிபாட வைத்த புரட்சிக் கவிஞனே” எனக் கவி பாடிய அவர் பாரதியின் வழிவந்த பாரதிதாச னின் புதுமைக் கருத்துக்களால் கவரப் பட்டவராவார். பாரதியார் கரும்புத் தோட்டத்தில் படும் வேதனையைக் கவிதையில் படைத் ததை விஞ்சி நிற்கிறது இவரது கவிதை கள். அனுதினமும் மலையகத் தொழி லாளர்கள் படும் அவலங்களை பங்காளி யாக நின்று படைத்த இவரது கவிதை களில் தார்மீக ஆவேசம் எதிரொலிக் கின்றது.
பெண்கள்
ஒU4ை

தமிழோவியனின் சிறுகதைகளில் நாம் காணத் தவறிய யதார்த்தப் பண்பு கள் அவரது கவிதைகளில் பரவலாகக் காணலாம். பேச்சுவழக்குகள் கவிதை களில் ஒசைநயத்துடன் ஒலிக்கும். இதோ சில உதாரணங்கள்.
“வெட்டிப்பயல் மகளே! வீறாப்போ உந்தனுக்கு? வெட்டிப் புதைத்திடுவேன் வீட்டை விட்டுப் போனியானா?”
“மாட்டுக்குப்புல்லை அறுத்துவரும் மலையாண்டி எனும் தொழிலாளிக்கு தோட்டக் கணக்கில் கள்ளப்பேர்”
"சாராயத்திற்கும் சாப்பாட்டுக்கும் தலையைச் சாய்த்துப் போகும் தலைவரும்”
தமிழோவியனின் எளிய ஒசை குன்றாத சத்தம் தொனிக் கும், கேட்பதற்கு இனிக்கும். நெஞ்சை அள்ளும்.
கவிதைகள்
"கொட்டு மழை, கொடும் வெயிலில் உழைப்போர் கூட்டம் குடிப்பதற்கு கொடுப்பதுவோ தேயிலைத் தூசாம்’ எனக் கொதித் துப் பாடும் தமிழோவியன் மலையக மக்கள் அவலத்தினுாடே அபிலாசையு டன் வாழத் துடிக்கும் மனிதப் பண் பினை, அவர்களிடம் அரும்பும் ஆசை கள், கனவுகள், கற்பனைகள், காதல் உணர்வுகள் இவற்றையும் அழகாகப் பாடியுள்ளார். அவர் பாடு பொருளாக கொள்ளாத பொருளே இல்லை என லாம். மலையகத்தில் காலத்துக்குக்
காலம் எழும் எரியும் பிரச்சினைகள், சவால்கள் அத்தனையும் கவிதையாக
வடித்துள்ளார். மலையகத்தில் அதிக
தொகையான கவிதை பாடியவர்களில்
முன்னணியில் நிற்பவர்தமிழோவியன்.
மலையக கலாசாரத் தளத்தில் கடந்த நான்கு தசாப்த காலமாக காலூ ன்றி கவி படைத்துவரும் தமிழோவிய னின் கவிதைகள் மலையக சமுதாயத் தின் வரலாற்றை, வாழ்வியலை, உணர் வலைகளை, உள்ளக் குமறல்களை, அடிமையின் அவலங்களை, காலத்துக் குக் காலம் ஏற்படும் அரசியல் கொடுமை களை புத்திபூர்வமாக உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகக் கூறும் ஆவணங் களாகும். தமிழோவியன் மலையகத் தின் முன்னணிக் கவிஞர் என்று கூற லாம். அவரது கவிதைகள் மாணவர் களின் பாட நூல்களில் சேர்க்கப்பட வேண்டும்.
தமிழோவியனின் ஆளுமை பன் முகப்பட்டது. அருமையான பேச் சாளர். சிலவேளையில் அவரது உரை கள் எடுத்த பொருளின் எல்லையை தாண்டினாலும் பொறுமையுடன் கேட் டால் பல இலக்கிய பொக்கிஷங்களை பொறுக்கி எடுக்கலாம்.
புதிய எழுத்தாளரை இனங்கண்டு தட்டிக்கொடுத்து உற்சாகமாக எழுது வதற்கு துண்ை நிற்பார். பாடசாலை மாணவர்களுக்கு இடையே பதுளை யில் வாழ்ந்த அறிஞர்களின் நினைவு தினத்தையொட்டி இலக்கியப் போட்டி களை ஆண்டுதோறும் பெரும் முயற்சி எடுத்து ஒழுங்கு செய்வார். இலக்கிய மலர் தயாரிப்பதில் இ

Page 6
இவரேதான். ஊாவா மாகாண சாகித் திய மலர்கள் அனைத்தும் இவரது கை வண்ணத்தில் உருவாகியனவே. இலக்கி யத்தை நேர்மையாக நேசிப்பவர். இலக் கியக் கர்த்தாக்களை மதிப்பவர். தொட ர்ந்து தொடர்பு வைத்துக் கொள்பவர். மறைந்த இலக்கிய அறிஞர்களின் நினைவுதினங்களை காத்திருந்து அவர் களை பற்றிய கட்டுரைகளை பத்திரிகை களில் எழுதுவார். இளம் தலைமுறை யினருக்கு இலக்கிய உணர்வை பரப்ப வேண்டும் என்பது அவரது தனியாத தாகம், விடாமுயற்சி.
இன்று மலையகத்தில் எல்லாத் துறைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட வேண்டியுள்ளது. ஆனால் மலையக சமுதாயத்தில் உள்ள கட்ட மைப்புகள் இதற்கு உகந்ததாக இல்லை. அரசியல் இயக்கங்களும், தொழிற் சங் கங்களும் சீரிய முறையில் இப்பணி களைச் செய்வதாக இல்லை. சில வேளைகளில் விழிப்புணர்வு மழுங் கடிக்கப்பட்டு விடுகிறது. ஆகவே மாற் றுத்திட்டம் வேண்டப்படுகின்றது. இதனை கலை இலக்கிய கலாச்சார தளத்தில் ஏற்படுத்துவது ஒரு வழியா கும். தமிழோவியனின் இலக்கிய களப் பணிச் செயற்பாடு உச்சக்கட்டத்தில் இருந்து ஐம்பதுகளின் இறுதியில் பதுளையில் இடம்பெற்ற கலாச்சார மறுமலர்ச்சி முன் உதாரணமாகும். மன்றங்கள், விழாக்கள், நாடகங்கள் மூலம் சமூக நேச விழிப்புணர்வு உரு வானது. இந்தக் களத்தைப் பற்றிய வரலாறு ஊவா மாகாணம் மலையகத்
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய
நூலாக எழுதப்பட வேண்டும். பங்காளி யாகத் தொழிற்பட்ட பல்கலை வேந்த னுமான ஆற்றல் கொண்ட தமிழோவி யனால்தான் இப்பணியை முழுமை யாகவும் செழுமையாகவும் சீராகவும் செய்யமுடியும்.
இப்பணி மலையகம் பூராவும் ஒரு கலாசார மறுமலர்ச்சியினையும் விழிப் புணர்வினையும் ஏற்படுத்த வழிவகை களையும் செயலூக்கத்தையும் உண் டாக்குவதாக அமையும். தற்போது நோய்வாய்ப்பட்டு வாழ்க்கையில் பல சவால்களை எதிர்நோக்கி வந்தாலும் எழுத்துலகில் என்றும் வயது பதினா றுடன் தொடர்ந்து எழுதிக் கொண்டி ருக்கும் தமிழோவியனால் இப்பணியை செய்யமுடியும். கட்டாயம் செய்வார்.
தமிழோவியனின் எழுத்து ஒவியங் கள் ஈழத்து இலக்கியத்திற்கு வளமும் வனப்பும் சேர்த்துள்ளன என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ല്ക്ക്
டாக்டர்
எம்.கே. முருகானந்தனின் நூல்
ஒரு டாக்டரின் டயரியிலிருந்து பர பரப்பாக விற்பனையாகிக் கொண் டிருக்கிறது. இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு.
பங்கு இவைகள் நுணுக்க விபரத்துடன்
8
 

۶ مییابع "كيك لام داګر@
"الأهمية وv محصے بازیگر
Pன்று நீ அரும்பு - அரும் பூவல்ல. 2ஆனாலும் கரும்புதான் - கரும் பூவல்ல. எல்லோரும் விரும்பும்
அழகிதான். இன்று நீ கன்னி பூத்துவிட்டாய் - கண்குளிரப் பார்ப்பதற்குள்
ஏன் மறைந்து நிற்கின்றாய்? ாடில்லா உன்னழகை என் மனக்கண்ணால் பார்க்கிறேன் -
கொள்ளை அழகு. 2டனை நினைந்து வாடுகின்றேன் - நான் கறுப்பு நிறம் என்று
அலட்சியமா? 2Aன் உறக்கம் எதுவுமில்லை - இராதை மகன் கண்ணன் நிறம்
என்ன? என்னைக் கண் திறந்து பாராயோ - அயோத்தி இராமன் நிறம் என்ன? )ெனென்று ஒரு வார்த்தை கேளாயோ - ஏன் தேவயானையும்
கறுப்புத்தான்! 2யகோ ஏன் இன்னும் தயக்கம்? - தாமதமேனம்மா? 3ளித்து விளையாட இது நேரமல்ல - உண்மையில்
பைத்தியமாகின்றேன். 3ரக் கண்ணால் ஒளிக் கதிரவன் உன்னைப் பார்க்கின்றான்,
என்னன்பே
3Mஷதம் தருவேன் நான் - ஒடோடி வாடியம்மா!
(திடீர் வெள்ளத்தினால் தாமரைக் குளத்தண்ணிரில் சிறிது அமிழ்ந்துள்ள தாமரை மலரை வெளியே வரும்படி கருவண்டொன்று
9 - o Doo
கூவி அழைக்கின்றது.)

Page 7
கடிதங்கள்
மல்லிகை மல்லிகைதான்
விளம்பரம் உட்பட எல்லாப் பக்கங்களையும் ஒன்றுவிடாமல், நான் படிக்கும்
ஒரு சஞ்சிகை மல்லிகை. ஆசிரியரின் அச்சுத்தாள். கட்டுரைத் தொடர் உள்ளத்தை
உருக்கும் நிகழ்வாகவே இருக்கிறது.
விடாமுயற்சியும் வைராக்கியமும் ஒரு மனிதனை எந்தளவுக்கு உயர்வடையச் செய்யும் என்பதைக் கட்டுரை நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
சாஹித்திய பரிசு கிடைத்த சமயம், அதை விமர்சித்து வக்கணை கதைத்த வர்களைப் பற்றி நினைக்கும் பொழுது இப்படியும் (படித்த - பெரிய) மனிதர்கள்
இருப்பார்களா என்று எண்ணத் தோன்றியது.
ஈய எழுத்துக்கள் பாதையில் சிதறியபோது, பட்ட வேதனையை மனக்கண்
முன்நிறுத்திப் பார்த்தேன். கண்கள் பனித்துவிட்டன.
மல்லிகை ஒவ்வொருவர் கை களிலும் மணப்பதற்கு எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது என்பதை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
மல்லிகையில் அவ்வப்போது இடம்பெறும் ப. ஆப்டீன், மு.பவுர், திக்குவல்லை கமால், செங்கை
ஆழியான், சுதாராஜ் ஆகியோர்களின்
ஆக்கங்கள் இனிய விருந்தாக அமைகின்றன. M
தூண்டில் கேள்வி பதில், கருத்தும் இலக்கியச் சுவையும் கொண்டதாகவிருக்கிறது.
மேமன்கவியின் 'ஒரு பிரதியின்
முணுமுணுப்புக்கள் ஒரு தேடலின் தெறிப்பெனக் கொள்ளலாம்.
"மல்லிகை" செடியல்ல, மரம்.
حمي
பொதுவாகச் சொன்னால்,
மல்லிகை மல்லிகைதான்.
- சாரணா கையூம்
பதுளை.
ğ? UG565Goo?
 

பிறக்கின்ற மனிதர் ஒவ்வொருவருக்கும் அவரது குடும்ப அமைப்பின் காரண மாகவும், அவர் வாழுகின்ற சூழலின்காரணமாகவும், பயிலுகின்ற கல்வியின்காரண மாகவும் ஒரு சில தனித்துவமான தனிமனிதப் பண்புகள் உருவாகி விடுகின்றன. அவ்வாறாக உருவாகும் தனித்துவமானப் பண்புகள் அம்மனிதரின் சமூக ஊடாடலின்பொழுது வெறுக்கத்தக்கப்பண்புகளாகவும் அமைவதுண்டு. போற்றத் தக்கப்பண்புகளாகவும் அமைவதுண்டு.
அதிலும் சமூகத்தினால் போற்றப்படும் பண்புகளை வளர்த்துக்கொண்டமணி தரிடம் கலை இலக்கிய ஆளுமையும் சேர்ந்து பொழுது அந்த தி
உணர்வும், படைப்பாக்க
அமையப் பெறும் மனிதர் உலகால்
மி க வு ம் வி த ந் து r fp றப்படுபவח נG L ராகவும , என்றென் றும் அந்த மனிதன் ம ர னத திற்கு ப் பின்னும் நினைவு கூ ர ப் படும் ஒரு சிறப்பான\ LD Gof 5
பெறுகிறார். அ வ வாறான ஒரு தைப் பெற்ற ஒரு மனிதராகத் திகழ்ந்தவர் தான் நண்பர் ராஜபூரீ காந்தன் அவர்கள்.
அவருடனான எனது தனிப்பட்ட உறவுக்கும், சக கலை இலக்கியவாதிகள் சிலருடன் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட ரீதியான உறவுக்கும் மிகவும் காரணமாக இருந்தது.அவர் கொண்டிருந்த கலை இலக்கிய உணர்வும், முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்துடனான அவருக்கு இருந்த தொடர்பே காரணமே ஆகும். அவ்வுணர்வும், அத்தொடர்பும் மட்டுமே காரணமாக அமையாது அதற்கு மேலாக தனிமனித ரீதியாக அவர் கொண்டிருந்த போற்றத்தக்க பண்புகள்தான் முதன்மையான காரணமாக இருந்தன என்பேன்.
அவருடனான தனிமனித ரீதியாக நான் கொண்டிருந்த உறவை நினைவு
கூருகின்ற இத்தருணத்தில் அவரைநான்முதல் முதலாகச்சந்தித்த சந்தர்ப்பத்தை மீட்டிப்பார்க்கிறேன்.
강 강 W강 sSG D G D G.
11 Ecco:

Page 8
1976ஆம் ஆண்டு இறுதிப்பகுதி!
இலங்கை முற்போக்கு எழுத்
தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட் டுறவுபதிப்பக வெளியீடாக எனது முத லாவது கவிதைத் தொகுதியான யுக ராகங்கள் வெளிவந்த காலகட்டம். அத் தொகுதிக்கான அறிமுகவிழா யாழ் வீர சிங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
யாழ் செல்லும் சந்தர்ப்பமாக அவ் விழா அமைந்தது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அது எனக்கு முதல் பயணமாக இருக்க வில்லை. ஏற்கனவே என் சின்னம்மா ஒருவர் எனக்கு எட்டு வயதாக இருக்கும்பொழுது யாழ்ப் பாணத்தில் இருந்த ஒரு மேமன் சமூக குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு இருந் தார். அவரது திருமணத்திற்காக போனதுதான் எனது முதல் யாழ் விஜயம். ஆனால், இலக்கியத்துறையில் ஈடுபட்டபின்முதன்முதலாக அவ்விழா வுக்காகத்தான் போனேன். நண்பர் பூபதிதான் யாழ் தேவியில் என்னை அழைத்துச் சென்றார். அப்பயணத்தின் பொழுதுதான்கணகசெந்திநாதன் ஐயா அவர்களைச்சந்தித்து ஆசீர்வாதம் பெற முடிந்தது.
அந்தப் பயணத்தின் ஒரு நிகழ்ச்சி யாக வடமராட்சி சென்று தெணியான் அவர்களைச்சந்திப்பது எனஜிவா அவர் கள் திட்டமிட்டு இருந்தார். அவரது திட் டப்படிவடமராட்சி தெணியான்அவர் களின் வீடு சென்று அவரைச் சந்தித்து, அவரோடு பொலிகண்டிச்சந்தி என்று
நினைக்கின்றேன். அங்கு வந்தபொழுது இரண்டு பேர்களைச் சந்தித்தோம். அவர்களில் ஒருவரை நான் ஏலவே சந்தித்திருந்தேன். அவர்தான் வதிரி சி.ரவீந்திரன். மற்றவர் குள்ளமான உருவம். காக்கி கலர் காற்
கொழும்பில்
சட்டை, வெள்ளைநிறச்சேட் அணிந் திருந்தார். தெணியான் சேர்அறிமுகப் படுத்தினார். இவர்தான் ராஜபூரீ காந்தன் என்றார்.
அதுதான் நண்பர் ராஜபூரீ காந்தனை நான் முதன் முதலாக சந்தித்த அனுபவம்.
豆豆 E
s
W E A ES
அந்த முதல் அறிமுகத்திற்கு பிற கான சிறிது காலத்திற்குப்பிறகுநண்பர் ராஜபூரீகாந்தன் சோவியத் தூது தக வற்ப்பிரிவில் பணியாற்ற கொழும்புக்கு வந்த நாள் தொடக்கம் எங்களது நட்பு நெருக்கமானது. அவருடனான அந்த நட்பின் மூலம் அவரது விசேஷமான குணவியல்புகளை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
* எப்பொழுதுமே மெல்லமாகத் தான் பேசுவார். அவருக்கு கோபம் வந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த கோபமான நேரத்திலும் அவரது முகபாவம் மாறாது. அவருக்குக் கோபம் வரும்போதெல்லாம் சொல்ல நினைக்கின்ற கருத்துக்களை அழுத்த மாகச் சொல்லி அடங்குவாரே தவிர ஆர்ப்பாட்டமான ஒரு சிறிது அதிகரித்த சப்தமும் அவரிடமிருந்து வராது. எந்த
তত্ত্ব

விடயத்தையும் நிதானமாக எடுத்துச் சொல்வார். அந்தக் காலகட்டத்தில் புதி தாகநான் ஏதாவது எழுதினால் முதலில் அவரிடம் காட்டி விடுவேன். சில கருத்துக்களைச் சொல்வார்.
அவர் சோவியத் தகவற் பிரிவில் சேர்ந்த காலகட்டத்தில், பிரேம்ஜி அவர்களும் நான் வசித்த மட்டக் குளிக்கு வந்து சேர்ந்திருந்தார். அவரை காண பூரீஅதிகாலையிலே வரும்போ தெல்லாம் என்னைச் சந்தித்துத்தான் போவார். என்னைச் சந்திக்க வரும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நூலு டன்தான் வருவார். பிற்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறை சம்பந்தமான கற்கை நெறியினை நான் மேற்கொள்கிறேன் என ஒருநாள் சொன்னபோது மிகவும் மகிழ்ந்து போனார். மீடியா சம்பந்தமான நூல் களை என்னைக் காணவரும் பொழு
தெல்லாம் கொண்டு வருவார்.
இப்படியான பழக்கத்தில் அவ ருக்கு எனது கலை இலக்கிய வளர்ச்சி பற்றிய கவலைமட்டும் இருக்கவில்லை. அதற்கு மேலாக எனது வியாபார வளர்ச்சி பற்றியும் அக்கறைபடுவார். எனது தந்தையாருடன் மிகவும் மரி யாதையாகக் கதைப்பார் எனது தந்தை யார் சுகவீனமுற்ற பொழுது மருத்துவ -மனைக்கு வந்து பார்த்துப் போனது
மட்டுமல்லாமல் மருத்துவரீதியாக சில
சொல்லிப்
ஆலோசனைகளைச் "போவார்.
எனது வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்ததன் காரணமாக என் வீட்டுப்
பெயர்பாபு என அறிந்துகொண்ட பின் அன்று தொடக்கம் என்னைபாபு என்று தான் அழைப்பார். கலை இலக்கிய உலகில் என் வீட்டுப் பெயரை பாபு என்று சொல்லி அழைத்த ஒரேயொரு கலை இலக்கிய நண்பர் அவர் ஒருவர் மட்டுமே. (நண்பர்பூபதி அப்படித்தான் அழைப்பார்) இடைக்கிடையே மேமன் என்று வேறு அழைத்துக் கொள்வார். ஆனால் நண்பர் ராஜபூரீகாந்தன் இ.மு. எ.ச அமைப்பு கூட்டங்களில் கூட பாபு என்றுதான் என்னை குறிப்பிடுவார்.
நண்பர் காந்தனைப் பொறுத்த வரை ஒருவருடன்பழகிவிட்டால் அந்த நண்பரின் சகல விதமானநலன்களிலும் ஒரு குடும்ப அங்கத்தினர் போல் அக்கறைகொண்டு செயற்படுவார். அந்தவகையில் எனக்காக மட்டுமல்லா மல் நண்பர் பூபதி வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து போனபின் தவறாது நீர்கொழும்புக்குச் சென்று நண்பர் பூபதியின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர் தம் குறை நிறைகளை அறிந்து கொண்டு இருந்தார். அதே போல் இளங்கீரன் அவர்களும்நீர்கொழும்பில் இருந்ததினால் அவர் மறையும்வரை மாதத்திற்கு இரண்டு மூன்றுமுறை அவரைச்சந்திப்பதில் தவறியதில்லை.
தினகரன் ஆசிரியராக அவர் பணி யாற்றிய காலத்திலும் பதவி ரீதியான எந்தவிதமானபந்தாவுமின்றிதனக்குக் கீழ் பணிபுரிந்த சகல பணியாளர்களு டனும் மிகவும் கனிவாகப் பழகுவார். இதனை தினகரன் ஆசிரியப் பீடத்தில் பணிபுரியும் எல்லோரும் என்னிடம்
—红3}

Page 9
ராஜபூரீகாந்தனை பற்றிய நேரடி உரை யாடலில் குறிப்பிட்டார்கள். அதே வேளை தினகரன் ஆசிரியராக அவர் பணியாற்றிய காலத்தில் ஒவ்வொரு பணியாளர்களும் வகித்த பதவிக்கு கெளரவம் செய்தார். அந்தக் கால கட்டத்தில் அவருக்கு நெருக்கமான வர்கள்கூட ஏதாவது விடயத்தனத்தை தினகரனுக்கு அனுப்ப அவருடன் தொடர்பு கொண்டால் அந்த விடய தானத்திற்கு பதவி வழியாக பொறுப் பாக இருப்பவர்களுக்கு அனுப்பச் சொல்வார். அதாவதுஅவருக்கு இருந்த பதவிவழியான செல்வாக்கை வைத்துக் கொண்டு அவருக்கு கீழ் பணிபுரிந்தவர் களை கெளரவ குறைச்சலுக்கு ஆளாக் கியதில்லை.
அதைப்போன்று எல்லா விடயத் தையும் செய்வதையே பண்பாகக் கொண்டிருந்தார். அவரது ‘காலச் சாளரம் சிறுகதைத் தொகுதியின் பின் அட்டை எழுத எனக்கு சந்தர்ப்பம் கொடுத்தார். பின் அதே குறிப்பை அவர் மொழிபெயர்த்த அழகு சுப்பிர மணியம் அவர்களின் நீதிபதியின்மகன் கதைத் தொகுதியின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டபோது பயன் படுத்தும் நோக்கத்துடன் என்னோடு தொடர்புகொண்டு அனுமதி கேட் டார். அதற்கு என்னிடம் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இருக்க வில்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நேச உரிமை அவருக்கு முழுமையாக இருந்தது. ஆனாலும் முறையாக எதையும் செய்யவேண்டும் என்ற அவரது இயல்பின் காரணமாகத்
தான் அவர் என்னிடம் அனுமதி கேட் டார் எனத் தெரிந்தது. இவ்வளவுக்கும் தனக்கு நெருக்கமான நண்பர்களின் நலன்களில் அக்கறைகொண்டு இயங் கிய நண்பர் பூரீ எப்பொழுதுமே தனக் கென்று எந்தப் பிரச்சினைகள் வந்தா லுமே அதனைதன்முகத்தில் காட்டிக் கொண்டதே இல்லை. அந்தரங்கமான நெருக்கமான நண்பர்களிடம் கூட சாடை மாடையாக தனக்கான பிரச் சினைகளையிட்டு அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். நாங்களாகவே அவரது பிரச்சினைகளை அறிந்து வலிந்து கேட்டால் மட்டும் சாடையாக சொல்லி பேச்சை பொதுப் பிரச்சினைக் குத்திருப்பிவிடுவார்.
போர்நிலைமை உக்கிரமடைந்து யாழ்ப்பாணத்திற்கு போவது என்பது ஒரு கடினமான விடயம் என்ற நிலை தோன்றி இருந்த காலகட்டத்தில் அவரது குடும்பத்தைப் போய் பார்க்க முடியாத நிலையிலும்கூட அவர் மன தளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டவ ராக இருந்தும், அந்த மனக்கவலையை வெளிக்காட்டாது பொதுப்பணிகளில் எந்தவிதமானசோர்வையும் காட்டாது பணிபுரிந்த மனத்திடம் இன்னும் மறக்க முடியாத ஒன்றாகும். அந்த காலகட்டத் தில் மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்த அவருக்குள்ளான சோகத்தை 15.02.1997அன்று பூபதிக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் கடிதத்தில் கூட எடுத்த எடுப்பிலே தனது மனச் சோகத்தைக் கொட்டாது, பல பொது விடயங்களை எல்லாம் எழுதியதோடு,

பூபதிக்கு வந்த பிரச்சினைகளின் காரண மாக அவர் தன்னம்பிக்கை இழக்காத வகையில் அவருக்கு நம்பிக்கை ஊட் டும் விதத்தில் எழுதி கடிதத்தின் இறுதிப் பகுதியில் தனக்கான மனப்பிரச்சினை பூபதிக்கு தெரிவிக்கும் வகையில் பின் வருமாறு சில வரிகள் எழுதியிருந்தார்.
1. ஊருக்குப் போய் மூன்றாண்டு
களாகிறது. குழந்தைகளென்றால் உயி ரெனக்கு. உங்கள் குழந்தைகள் நீர் கொழும்பிலிருந்தபோது சென்று பார்த்து ஆறுதலடைந்தேன்.
. மூன்றாண்டுகளுக்கு முன்னர் இரண்டு குழந்தைகளையும், ஓர் இளம் மனைவியையும், வயதான அம்மாவை யும், ஐயாவையும் ஊரில் விட்டு வந்தேன். இனி ஊர் போனால் இரண்டு குமரி களையும், ஒரு வயோதிக மனைவி யையுமே பார்க்க முடியும்.
மேசையிலுள்ள அவர்களுடைய புகைப்படங்களுடன் பேசுவேன்; சிரிப்பேன்; அமுவேன்; சிலபோது நெஞ்சில் வைத்துக் கொண்டு தூங்குவேன்.”
மேற்கண்ட வரிகள் குடும்பத்தை
பிரிந்திருந்த காலகட்டத்தில் நண்பர்
ராஜபூரீகாந்தன் சோகத்தை காட்டும் ஒரு மனிதனின் கடித வரிகளாக இருந் தாலும், போர் அரக்கனின் கொடூரத் தால் அன்றைய மக்களின் மனோ நிலையை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருந்தன.
や2.○ み豆
ESA ENA E
s
SK) fa
நண்பர் காந்தனை நான் கடைசி யாக சந்தித்த முழுநாள் ஒன்றுதான் தான் அவருடன் கழித்த நாளாக அமைந்தது.
13.3.2004 அன்று அவரது இல்லத் தில் இலங்கையிலிருந்து சிறுவயதில் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்துபோய், சமீபத்தில் ஒர் ஆய்வாளராக வந்திருந்த பிரசாந்தி சேகர் அவர்களை தமிழ்ப் பத்திரிகைகளைச்சார்ந்த இளம்நிருபர் கள் பேட்டி காண்பதற்கு ஒழுங்கு செய் திருந்தார். அந்தநிகழ்வுக்கு என்னையும் வரச்சொல்லியிருந்தார். அந்த நிகழ்வு முடிந்து அப்படியே நண்பர் டாக்டர் ஜின்னாஅவர்களின் இல்லத்திற்கு பகல் சாப்பாட்டுக்கு பிரசாந்தி சேகர் அவர் களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு.
அவ்வாறே பேட்டிநிகழ்வுமுடிந்து டாக்டர்ஜின்னா அவர்களின் வீட்டில் பகல் சாப்பாட்டை முடித்து நீண்ட நேரமாக உரையாடினோம். அன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தமிழ் பதிப்பாளர் ஒன்றியத் திற்கான அங்குரார்ப்பன கூட்டத்தில் கலந்துகொண்டு பிரிந்தோம்.
அதுதான் நண்பர் காந்தனை நான்
சந்தித்தது.
ராஜபூரீ
கடைசியாகச்
இவ்வாறாக பல விடயங்களில் என்னை இணைத்துக்கொண்டு எனது வளர்ச்சியில் அக்கறைகொண்டு செயல் பட்டவர் அவர். நான் செய்த இலக்கி யப் படைப்புக்களில் சிறப்பைக்
তত্ত্ব

Page 10
கண்டுவிட்டால் உடனடியாக தொலை பேசியில் தொடர்புகொண்டு
பாராட்டிவிடுவார். Yp أما O
கடைசியாக அவரைச்சந்தித்து ஒரு வாரத்திற்கு பிறகு மல்லிகையில் நான் 01v p p எழுதும் ஒரு பிரதியின் முணுமுணுப்புக் கள் பகுதியில் துரைவி விழாவைப் பற்றிய குறிப்பைப் படித்து ரொம்பவும் நன்றாக இருந்ததுஎனப்பாராட்டினார். EXCELLENT
அந்த பாராட்டுதான் அவருடன் FHOTOGRAPHERS நான்நடத்திய கடைசிப் பேச்சு!
MODERN COMPUTERIZED இவ்வாறாக ஆத்ம சுத்தத்துடன் நேசம் பாராட்டிய தோழமை மிக்க PHOTOGRAPHY
படைப்பாற்றல் மிக்க உன்னதமான மனிதரான ராஜபூரீகாந்தனின் இழப் for WEDDING FORTRAITS பானது, அவருட்ன் ஆழமாக நட்புப் ஐ CILD STTINGs பாராட்டியவர்களின் இதயத்தில் அவருக்கான இடத்தை இனி யாரும் நிரப்ப முடியாது என்பதை உறுதிசெய் திருக்கிறது.
ஆம்! ராஜபூரீகாந்தன்நட்புக்கான அழியாத மனித எழுத்துதான்.
சந்தா செலுத்தி
ஒத்துழையுங்கள் அசட்டை செய்வோருக்கு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும்.
ÈF 666):
 
 
 
 
 
 
 
 
 

கிழக்கிாைங்கையின் இக்ைகியத் தேரை
/ககர்த்துவதில் முன்னின்று உழைத்தவர்
"மருதூர் கொத்தன்
اةdالارات ولا -
பிரபல முற்போக்கு எழுத்தாளர்'மருதூர் கொத்தன்” என்ற வி.எம்.இஸ்மாயில் அண்மையில் காலமான செய்தி அனைத்து இலக்கிய நெஞ்சங்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
மூத்த எழுத்தாளரான 'மருதூர் கொத்தன் இலக்கிய உலகில் பல தஸாப் தங்களாக தனது காத்திரமான இலக்கியப் பதிவுகளை ஏற்படுத்தி வந்தார். இவருடைய சிறுகதைகள் வெறும் கதைகளாக இல்லாமல் ஆழ்ந்த கருத்துவளம் உள்ளவையாக மிளிரும். அத்தோடு இலக்கிய உணர்வோடு இன, சமுதாய தாக்கத்தையும் பிரதிபலிக்கும். இவருடைய தமிழ்நடை தனித்துவம் வாய்ந்தது. இவரது படைப்புகள் கலையம்சம் நிறைந்த படைப்புகளாக சிறப்புற அவரது தமிழ் நடையே காரணமாகும். வட்டாரவழக்கைத்தூக்கலாகக் காட்டும்.
இவரது பெரும்பாலான கதைகள்தனது சொந்தக்கிராமமானமருதமுனையை அப்படியே புகைப்படம் பிடித்ததுபோல் வாசகனுக்குப்பிம்பம் காட்டும்.
சகாத்” என்னும் ஏழைவரியைப் பற்றிக் கூறும் "வெட்டு முகம் சிறுகதையில், பிச்சைக்காரப்பட்டாளத்தை உருவாக்க ஏழைவரிவிதிக்கப்படவில்லை. ஏழைவரி வாங்குவோரும் காலக்கிரமத்தில் ஏழைவரி வழங்குவோராக மாறவேண்டும்." என்னும் கருத்தை மிக அற்புதமாகச்சித்திரித்துக்காட்டுகிறார்.
வர்ணனைச்சிறப்பும் இவருக்குக் கைவந்த கலை. உதாரணமாக பாலைவனக் காற்றுமணலை வாரி இறைத்துக் கோரமாக வீசுங்குணமுடையது. அதற்குக் குளிர் இரவின் பணிச்சுமையினால் அழுத்தம் பெற்ற மயக்கம் போலும் படுக்கையை விட்டெழும் சோம்பிய பெண்ணாக மெல்ல நெழிந்தது."என்ற வரிகளைச் சுட்டிக்
காட்டலாம்.
முற்போக்கு இலக்கியத்தில் ஆளுமை பதித்த இவர், கல்முனைப் பிரதேசத்தில் முற்போக்கு இலக்கியம் செம்மை பெறக் கவிஞர் மருதூர்கனியோடு இணைந்து
- 17

Page 11
பெரும் வியூகமிட்டு இலக்கியப் பணி செய்தார்.
“மருதூர் கொத்தன் கதைகள்” என்ற தலைப்பில் இவரது சிறுகதைத் தொகுப்பு 1985ஆம் ஆண்டு வெளியா
கியது. இதைச் சாய்ந்த மருது இஸ்லா
மிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியிட்டது.
இத்தொகுதியில் அடங்கியிருக் கும் சிறுகதைகள் அனைத்தும் மருதூர்க் கொத்தன்"எமதுநாட்டின்காத்திரமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் என்பதை நிரூபிக்கின்றன. மூத்த எழுத்தாளரான இவர் தனது எழுத் தாற்றல் மூலம் இலக்கியத்துறையில் முத்திரைபதித்தவர்.
மருதூர்க் கொத்தன் ஒரு சிறந்த படைப்பாளி மட்டுமல்ல. சிறந்த கல்வி மான். மாணவர்களின் கல்வி முன் னேற்றத்திற்காக அரும்பணியாற்றிய ஆசிரியர், ஒரு மகாவித்தியாலயத்தின் அதிபர், சிறந்த சமூக சேவையாற்றிய தொண்டர். நாட்டின் பல பாகங் களிலும் சேவையாற்றியுள்ளார்.
'கலாபூஷணம்", தாஜூல் அதீப்” போன்ற பட்டங்களும், ஆளுநர் விருதும் பெற்ற இவர் கவிதை, ஆய்வுக் கட்டுரை,நாடகம் என்றுநவின இலக்கி யத்தின் பல வடிவங்களில் வேரூன்றிச் சிறப்பித்தவர். நாவல் இலக்கியத் துறையிலும் ஈடுபட்டுக்கொண்டிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன்பே "மல்லிகை அரிய இலக்கியக் குறிப்பு களுடன்'மருதூர் கொத்தனின் புகைப் படத்தை அட்டையில் பிரசுரித்து கெளரவித்திருக்கிறது. இது மருதூர் கொத்தன் மூலமாக கிழக்கிலங்கை பெற்ற இலக்கிய அங்கீகாரமாகும்.
மருதூர் கொத்தன்” என்ற புனைப் பெயரைக் கொண்ட வி. எம். இஸ் மாயில் அவர்களைப் பற்றி பலரும் பலவிதமானகருத்துக்களைக் கூறியிருக் கின்றனர்.
“மருதூர் கொத்தன்” என்னும் பேரில் குளிர் தமிழில் நம் புதுமைப் பித்தனையே வெல்லுமுயர் பீடுநடை சித்தி வரப் பெற்றவனே...!" என்று கவிஞர்நீலாவணன் கூறியுள்ளார்.
“கொத்தனது சிறுகதைகள், ஈழத்து முஸ்லிம் சிறுகதை வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான தொண்டினைச் செய் துள்ளன. கலாபூர்வமான கரிசனை யுள்ள அவருடைய சிருஷ்டிகள் காலத்தை வென்றும்நிலவக்கூடியன.” இது எழுத்தாளர் வை. அகமத்தின் கருத்து.
“போர்க்களத்துச்சஞ்சயன் போல் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கையைத் தெளிவாக அறிந்து நிர்த்தாட்சண்ய மாகச் சொல்லக் கூடிய ஒருவர் வெளி வந்துவிட்டார். அந்த ஒருவருக்குநிச்சய மாக ஓர் இடம் இருக்கிறது. மலையாள இலக்கியத்தில் வைகம் முகம்மது பவுருக்குள்ளதைப் போல என்பதில்
எனக்குச் சந்தேகமில்லை.” என்பது
yeese):

கிழக்கிலங்கையின் இலக்கிய முன் னோடிவ.அ.இராசரெத்தினம் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளி யிட்ட கருத்து.
இனி பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அன்று வெளி யிட்ட ஒரு கருத்து:
“மட்டக்களப்பின் சிறுகதைத் துறைக்குப் பெருமை சேர்த்தவர்களுள் பித்தன் ஷாவுக்குப் பிறகு மருதூர்க் கொத்தனே முக்கியமானவர்.”
இறுதியாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்ட கருத்துவருமாறு:
“கவிவளம் மிக்க கிழக்கிலங்கை மண்ணைஜிவத்துடிப்புடன்கதைகளில் படைக்கும் சிருஷ்டி கர்த்தா இவர். நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் மிக்க மருதூர்க் கொத்தன்
இலக்கியம் மக்களுக்காகப் படைக்கப் பட வேண்டும் என்ற இலட்சிய
வெறியுடன் சிருஷ்டித்துக் கொண்டி
ருப்பவர்.”
அன்னாரின் மறைவினால் துய ருறும் குடும்பத்தினருக்கும், நண்பர் களுக்கும் "மல்லிகை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
n
பரிசளிப்பவர்கள்
30 எழுத்தாளர்களினது தரமான சிறுக
உள்ளடக்கிய இரண்டா

Page 12
ஜானதிபதியின் அனுதாபச் செய்தி
ராஜ ருரீகாந்தல் மறைவுக்கு ஜ9ாதிபதி அனுதாபம்
தினகரன்பத்திரிகையின்முன்னாள் பிரதம ஆசிரியர் ராஜ பூரீகாந்தனின் மறைவுச் செய்தி
கேட்டு தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ராஜபூீரீகாந்தனின் மறைவையொட்டிஜனாதிபதி அவரது மனைவி லீலாவதி பூரீகாந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
"தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்திலிருந்து ராஜபூணூரீகாந்தனை நன்கறிவேன். நற்பண்புகளும் இனியக்பாவங்களும் கொண்ட இவர் இலங்கை அரசியல் தொடர்பாக ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார்.
மேலும் இவர் தமிழ் இலக்கியத்துறைக்கு அரிய சேவைகளை வழங்கியிருக்கிறார். அத்தோடு,ஆங்கிலத்திலிருந்துதமிழுக்குப்பல நூல்களை இவர் மொழிபெயர்த்திருந்தார். இவரது சில படைப்பு களுக்கு சாகித்திய விருதுகளும் கிடைத்தன. ராஜபூரீகாந்தனின் மறைவுதமிழ் வாசகர்களுக்குப் பாரியதொரு இழப்பாகும். இவர் மறைந்தாலும் இவரது எழுத்துக்கள் என்றும் உயிர் வாழும். இவரது ஆத்மா சாந்தியடையட்டும் என
பிரார்த்திக்கின்றேன்.
எனதுஆழ்ந்த அனுதாபங்களை உங்கள் இரு புதல்விகளான அபர்ணா மற்றும் அனோஜா ஆகியோருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“umலைவனமாக இருந்த யுத்தளம் மண் இன்று இலக்கிய உலகில்
சோலைவனமாக மிளிகின்றது”
- உடப்பூர் வீரசெரிக்கன்
தலைநகர் கொழும்பு, வடகிழக்குப் பகுதிகளில்தான் வெளியீட்டு விழாக்கள், பிரசுர விழாக்கள் என்பனநடைபெற்று வந்தன. வந்துள்ளன என்பதை இதுவரையும் நாம் கேள்விப்பட்டோம். கண்டுள்ளோம்.
ஆனால் இதற்கு மாறாக வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் நகரிலும் பல புத்தக வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன. இது இப்பிரதேசத்திலுள்ள கலை, இலக்கிய புத்திஜீவிகளின் ஆர்வத்தையும் ஆற்றலையும் கோடிட்டுக் காட்டுகிறது.
ஆம்! அண்மையில் புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தின் மண்டபத்தில் புத்தளம் எழுத்தாளர் அமிவிக்டர் எழுதிய "ஓய்வூதியம் என்று வருமோ என்ற வெளியீட்டு விழாவை கூறுகின்றேன்.
இவ்வெளியீட்டு விழா நவமணி வாசகர் வட்டம், அறிவுச் சுடர் கல்வி மேம் பாட்டு அமைப்பு ஆகியவற்றின் புத்தளம் தலைவர் எஸ்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக நவமணி வார இதழ் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.அஸ்ஹர் ஜே.பி. கலந்து கொண்டார்.
கெளரவ அதிதியாக கலாபூஷணம் ஜவாத் மரைக்கார், கலாபூஷணம் ஏ.என். ஏம். ஷாஜகான், கலாபூஷணம் எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப் மற்றும் எழுத்தாளர் களான சுதாராஜ், கே.வேலாயுதம், அன்டன் செல்வகுமார், தமிழ் நிலா, ஜயந்தி சிதம்பரம், டாக்டர் ஏ.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நூல் அறிமுகமும், விமர்சன உரையும் புத்தளம் கல்விவலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் ஆர்.எஸ்.ஈ.புஷ்பராஜன்நிகழ்த்த, முதல் பிரதியை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.பரீத் பெற்றுக்கொண்டார்.
நவமணி பிரதம ஆசிரியர் அஸ்ஹர்
இவ்விழாவுக்கு நவமணி வார வெளியீட்டின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் பேசுகையில்:-

Page 13
“கடந்த 25 வருடங்களின் பிற் கூற்றில் புத்தளம் கலை, இலக்கியத் துறையில் வரண்ட பாலைவனமாகி இருந்தது. இன்று கலை, இலக்கிய வாதி களின் உருவாக்கத்தால் புத்தளம் இலக்கிய உலகில் சோலைவனமாக
மிளிர்கின்றது.
இந்த சோலைவனப் பூங்காவில் நல்ல கவிதை மலர்கள், நறுமணம் வீசும் பூத்துக் குலுங்கும் கட்டுரை மணிகள் என பல ஆக்கப்
சிறுகதைகள்,
படைப்புக்கள் மலர்கின்றன. வெளி வருகின்றன. அந்த வகையில் கனிதரும் மலராக விரிந்துள்ளதுதான் அமிவிக்டர் தந்த 'ஓய்வூதியம் என்று வருமோ என்ற சிறுகதைத் தொகுதியாகும்.
எழுத்தாளன் எப்போதும் மக் களின் நெளிவு சுழிவுகளை அறிந்தவ னாக இருக்கவேண்டும். இன்பதுன்பங் களை தெளிந்த உணர்வுகளுடன் உணர்ந்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் சகா வரம் பெற்ற இலக்கிய சிருஷ்டிகளை படைக்க (ւՔւգեւյւն.
அந்த வகையில் புத்தளம் மண் வாசனையின் பகைப்புலத்தை அமி விக்டர் காத்திரமாக தந்துள்ளார். எழுத் தாளர் அமிவிக்டரின் கதைகள் யதார்த் தம் நிறைந்து காணப்படுகின்றன. மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக் க்ளை முன்வைத்துள்ளார்.”
கவிஞர் ஜவாத் மரைக்கார் 68രുങ്കൾ :-
“புத்தளம் மண்ணின் இலக்கியப் பயணத்தின் வளர்ச்சியை சற்று பின்
நோக்கிப் பார்க்கின்றேன. அனறு இலக கிய கூட்டங்கள் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆர்வலர்களே வரு Gaur Triag66it.
இந்தக் கூட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் எல். முருகபூபதி, மு.பவுர், நிலாம் ஈழத்து நூன், தில்லை யடிச் செல்வன், ஜவாத் மரைக்கார் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அன்று ‘விடிவெள்ளி என்ற கவிதை ஏட்டை ஆரம்பித்தோம். பொருளா தாரச் சிக்கல், வாசகர் ஆதரவு இன்மை யினால் இடையில் கைவிட்டோம்.
அன்று பயணித்த இந்த இலக்கியப் பயணம் இன்று பல எழுத்தாளர்களை, கவிஞர்களை, அறிவுஜீவிகளை, ஆய் வாளர்களைத் தந்துள்ளது. பல எழுத் தாளர்கள் சாகித்திய பரிசுகளையும் பெற்றுள்ளனர்.”
a fo.1eri). 167655 огогоlo 2 голиблi:
“எழுத்தாளர் அமிவிக்டர் ஆரம் பத்தில் படப்பிடிப்பாளராக எமது அமைப்பில் இணைந்தார். பின்னர் கவி அரங்குகளில் கவிதை பாடினார். அதை யடுத்து பல சிறுகதைகளை புனைந் துள்ளார்” எனக் கூறினார்.
நூலாசிரியர் அமிவிக்டர் ஏற்புரை நிகழ்த்தினார்.
"சாஹித்திய புத்தக இல்லம்’ என்ற நவீன தமிழ் நூல்கள் விற்பனை செய்யும் புத்தக நிறுவனம் சமீபத்தில் புத்தளத்தில் வந்து நிலை கொண்டு ள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
GG)

உங்களைப் பயமுறுத்துவதற்காக இந்தக் கதையை எழுதவில்லை. உண்மை யிலேயே பாம்பு வந்தது. அந்தப் பாம்பு வந்தது எங்கள் வீட்டுக்கல்ல. ஜசீலா அன்ரியின் வீட்டுக்கு. எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறமாக மூன்றாவதாக உள்ளது ஜசீலா அன்ரியின் வீடு.
இரவு ஒன்பது மணியைப்போல எனது அறையில் சற்று ஆற அமர்ந்திருந்தேன். அப்போதுதான்மனைவி ஓடிவந்து கூறினாள்.
"ஜசீலா அன்ரி வீட்டுக்குள்ள ஒரு பாம்பு வந்திருக்கு. உங்களவரட்டாம்!”
பாம்பு என்ற சொல்லைக் கேட்டதுமே, எட்டு வயதும், பத்து வயதுமான எனது பிள்ளைகள் இரு படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை அந்தப்படியே போட்டுவிட்டு ஒடத் தொடங் கினார்கள். ஜசீலா அன்ரியின் வீடு நோக்கித்தான். அவர் களுக்கு இது விளையாட் டாயிருந்தது. (அதிலும் சின்னவன், ஒருநாள் வீதி ஒரத்தில் போன குட்டிப் பாம்பு ஒன்றை வாலிற் பிடித்துத் தூக்கி வந்தான். "அப்பா நல்ல வடிவான ட்டிப் பாம்பு. பார்த் - சுதாராஜ தீங்களா?" என்று! அந்தக் குட்டியும் என்ன நினைத்ததோ அவனைக் கடித்துப்பதம் பார்க்கவும் இல்லை.)
வரும்
நான் இருந்த இடத்திலிருந்துஅசையவில்லை. மனைவியின் முகத்தை அலட்சி யமாகப் பார்த்தேன். ஏதாவது ஒரு குட்டிப்பாம்பு அவர்கள் வீட்டுக்குள் வந்திருக் கலாம். சிறிய வகையறா பாம்புகள்தான் பொதுவாக இரவில் இந்தப் பக்கத்தில் புழங்குகின்றன. அதைக்கண்டு இவர்கள் வெருட்சியடைகிறார்கள். ஒரு பூனைக் குட்டியை விட்டாலே அதன் கதையை முடித்துவிடும். இதற்குப் போய் என்னைக் கூப்பிடுகிறார்களே!
“என்ன பாம்பு?” என மனைவியிடம் கேட்டேன்.
“தெரியாது. போய்ப் பாருங்கோ!”
23 -

Page 14
எனக்குக் கொஞ்சம் தயக்கமா யிருந்தது.
“என்னை எதுக்குக் கூப்பிடு Saori 2"
"பாம்பை அடிக்கிறதுக்குத்தான்!”
எனக்குத் திடுக்’ என்றது. பாம்பு குட்டியாக இருந்தாலும் சரி, கிட்டியாக இருந்தாலும் சரி அடிக்க வேண்டியது நான்தான் என்றதும் கிடு நடுங்கியது. பாம்பு அடிப்பதில்நான் பெரியநிபுணத் துவம் பெற்றவனும் அல்ல! (என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.)
"ஏன் அவர் இல்லையா?”
நான் அவர் எனக் குறிப்பிட்டுக் கேட்டதுஜசீலா அன்ரியின் கணவரைத் தான். அவர் வீட்டில் இல்லை போலிருக் கிறது. அதனால்தான் பெண்கள் பயப் படுகிறார்கள்.
"அவர் நிக்கிறார்! ஆனால் உங் களைத்தான் வரட்டாம்!” மனைவி இதைச் சற்றுப் பெருமையுடன் கூறு வது போலிருந்தது.
நான் அவ்வப்போது ஒரு சில பாம்புகளை அடித்துக் கொன்றிருக் கிறேன் என்பது உண்மைதான். அவை ஏதோதற்செயலாகநடந்த சம்பவங்கள் என்றுதான் கூறவேண்டும். சாரைப் பாம்பு, கோடாரிப் பாம்பு, பச்சைப் பாம்பு போன்ற பாதகமற்ற பாம்பு வகைகள் எங்கள் வீட்டுத் தோட்டத் துக்குள் வந்திருக்கின்றன. கோடை காலங்களில் வெளியே நிலச்சூடு அதிக மாக இருக்குமாகையால் குளிரிடம் தேடி வருவதாயிருக்கலாம். வந்தால்
(என் பாடு) அதோகதிதான். அந்தப் பாம்பை அடிக்கிற அல்லது விரட்டுகிற பொறுப்பு குடும்பத் தலைவன் எனும் ரீதியில் என்தலையில் விழுந்துவிடும்.
சுற்றுமதிலைக் கொண்ட வளவுக் குள் கேற்றினூடாக பாம்பு நுழைந்து விட்டால் திரும்பப் போகும் வழியை நினைவு வைத்திருக்காது. விரட்ட விரட்ட இந்தப்பக்கம் அந்தப்பக்கமாக ஒடும். பெடியளுக்கு அது நல்ல விளை யாட்டாயிருக்கும். ஒடி ஒடி விரட்டு
Iso
பாம்புகளை அடிப்பதிலுள்ள நுணுக்கம் பல தடவை அடித்து அனு பவம் பெற்றவனுக்குத்தான் தெரியும். தலைக்குக் குறிவைத்து ஓங்கினால் அடி வாலில் விழக்கூடும். அடிபடும் முன் னரே அது இடம் மாறிவிடும். ஓங்கிய அடி அதன் தலையிற் பதியக்கூடியதாக ஒர் அனுமானம் தெரிந்திருக்க வேண் டும். தலையடி போடா விட்டால் பாம்புதப்பித்துவிடும். அடி வேண்டித் தப்பிய பாம்புகள் பிறகு தேடிவந்து கொத்துமாம்! (இப்படியொரு கதை காலம் காலமாய் வழங்கப்பட்டு வருகிறது.) இதனாற்தான் பலர் பாம்பு அடிக்கத் துணிவதில்லையோ? ஆனால் அடிக்கும்போது குறிதவறினால் பாம்பு கள் மிரண்டு அடிக்கிறவனையே கடிக்க வும் கூடும். இவ்வாறு பாம்பு அடிக்கப் போய்துண்டைக்காணோம்துணியைக் காணோம் எனத் தப்பிப் பிழைத்து ஒடியவர்களின் கதைகளும் உண்டு. பச்சைப் பாம்புகளின் கதையே வேறு! மரக்கிளைகளில் புடலங்கொடி படர்ந் திருப்பது போல் அது மறைந்திருக்கும். அதன் தலை பூ மொட்டுப் போலி
Geo:

ருக்கும். அடிக்கப் போனால் பெரிதாக வாயைப் பிளக்கும். அதுரோஸ் வர்ணத் தில் ஒரு பூபூத்ததுபோலிருக்கும். பிறகு அதை அடிக்க மனமே வராது!
இன்னும் நான் அறையிலிருந்து வெளிப்படாது இருக்கவே, மனைவி
திரும்பவும் தேடிவந்தாள்.
“பாவங்கள் அதுகள் பயப்படுது கள். கெதியாய்ப் போங்கோ!”மனைவி யின் பரிந்துரைக்கு மதிப்பளித்து அறை யிலிருந்து வெளிப்பட்டு வந்தேன். ஏதா வது ஒரு தடி கிடைக்குமா எனத் தேடி னேன். ஒரு பக்கத்தில் சாத்தி வைக்கப் பட்டிருந்த கட்டையொன்றைமனைவி காட்டினாள். மனைவியின் முகத்தை ஏளனமாகப் பார்த்தேன். “இந்தப் பெரிய மரம் எதுக்கு? (இவனை எவன் என்றுநினைச்சீங்க?)” என்ற ஸ்டைலில் ஒரு கையாற் தூக்கக்கூடிய தடி யொன்றை எடுத்துக்கொண்டு, "சரி இவ்வளவு நேரத்திற்குள் பாம்பு ஒடிப் போயிருக்கும்’ என்ற தெம்புணர் வுடன்ஜசீலா அன்ரி வீட்டுக்குப் போக முற்பட்டேன். சாரத்தை மடித்துசண்டி யன் கட்டாகக் கட்டிக்கொண்டு புறப் பட்டேன்.
ஜசீலா அன்ரி வீட்டில் அநேகமாக எங்கள்தெருவிலுள்ள பலரும் வந்திருந் தார்கள். ஒரு சிலர் அங்கும் இங்கும் ஒடிக்கொண்டிருந்தார்கள். (இவர்கள் தடியை தேடிக்கொண்டிருக்கிறார் களோ. அல்லது பாம்பு ஓடி வந்து விட்டதோ.. அதைத் தேடுகிறார் களோ?) என்னைக் கண்டதும் விலகி வழிவிட்டார்கள்.
"எங்கை பாம்பு"
அங்குமுங்கும் பரபரப்பாக ஒடிக் கொண்டிருந்த ஜசீலா அன்ரிதான் காட்டினாள்.
"அந்தா. அந்த ஜன்னலிலை சுற்றிக் கொண்டிருக்கு!”
எனக்கு ஒன்றும் தெரியவில்லை. வெளிச்சம் அவ்வளவு இல்லை. உற்றுப் பார்த்தேன். யன்னலுக்கு அப்பால் ஒரு பக்கத்தில் ஜசீலா அன்ரியின் கணவர் ஒரு பெரியதடியைநிலத்திலுரன்றியபடி யன்னற்பக்கமாகவே பார்த்துக்கொண் டிருந்தார்.நான்வந்ததுகூட அவருக்குத் தெரியவில்லைப் போலிருக்கிறது. திரும்பிப் பார்க்கவுமில்லை. அவரது முகம் மிகவும் சோகமாகக் காணப்பட் டது. அவரது உடம்புக்கும் தோற்றத் துக்கும் பாம்பையல்ல, ஒரு யானை யையே அடிக்கலாம்!ஆனால் மென்மை யான இதயம் கொண்டவர். அதனாற் கவலைப்படுகிறார். . . . .
எனது சின்ன மகன் கிட்ட ஒடி வந்தான்.
பாருங்க
“அந்தா அப்பா.
பெரீசாய்."
"ஸ். ர். ர்.” பெரிதாக சத்தம் கேட்டது. பாம்பு சீறும் சத்தத்தை அப்போதுதான் கேட்டேன். அது கோபம் கொண்டு சீறுகிறது. அடே
யப்பா!பாம்பாஅது?. மலை!
மலைப் பாம்பு என்று சொல்வார் களே அந்த வகையாக இருக்குமோ! இது போன்ற பாம்பை மிருகக்காட்சி சாலையிற்தான் பார்த்திருக்கிறேன்.

Page 15
வெங்கடாந்தி என்று ஒரு பாம்புக்கு குறிப்பிட்டிருப்பார்கள். இது அது தானோ?சைஸ் அப்படி இருந்தது.
எனது கையிலிருந்த தடியை மெல்லநழுவ விட்டேன்.
பாம்பு அசைந்து அசைந்து சீறிக் கொண்டிருந்ததே தவிர,நகரவில்லை. ஜன்னற் கம்பிகளுள் மாட்டுப்பட்டு விட்டதோ?
தன்னைச் சுற்றிலும் (தாக்கு வதற்கு) ஆட்கள் நிற்பதை காலடி ஓசைகளிலிருந்து பாம்பு உணர்ந்து விட்டது. அதனாற்தான் வெளியே இறங்கிவராமல் கோபம்கொண்டு சீறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தாக்குவ தற்குத்தான் யாரும் தயாராயில்லை. (என்பது அதற்குப்புரியவில்லை.)
ஜசீலா அன்ரி சற்றும் மனம் தளரா மல் வேறு வீடுகளுக்குப் போய் செய்தி யைச் சொல்லியாராவது ஆண்களைக் கூட்டிவரும் முயற்சியில் ஈடுபட்டிருந் தார். இந்தத் தெருவில் பாம்பு அடிக்கக் கூடிய ஒரு ஆணாவது இருக்கக் கூடு
மல்லவா?
யாராவது ஒருவர். பாம்பை அடிப்பார்தானே என(மற்றவர்களைப் போலவே)நானும் எண்ணிக்கொண்டி ருந்தேன். ஆனால் யாரும் அடிக்கக் காணோம்! -
எல்லோருடைய முகங்களும் படு சீரியஸாகவே தென்பட்டன. பாம்பை எப்படியாவது அடித்து முடித்து விடுபவர்கள் போல் காணப்பட்டார் கள். அடிப்பதற்கு ஆமான (பொருத்த
மான) தடி கிடைக்காதவர்கள் போல் அங்கும் இங்கும் ஓடினார்கள். இன்ன மாதிரியான பெரிய தடியாக இருக்க வேண்டும். அடிக்கும்போது தடி முறிந்துவிடக்கூடாது போன்ற விடயங் களைப் பரிமாறிக் கொண்டார்கள். (இவர்களது உரையாடல்களில்நானும் கலந்துகொண்டேன்.)
அது என்ன வகைப் பாம்பாக இருக்குமென்று ஒவ்வொருவரும் அபிப் பிராயம் தெரிவித்துக் கொண்டிருந்தார் கள். “விரியன்” என்று சிலர் 93,1526öTTrif கள். இப்படி உடல் முழுதும் செதில் களும் டயமன்ட் வடிவத்தில் முத்திரை யும் உள்ள பாம்பு விரியன்தான் என வாதிட்டார்கள். ,
"அப்பா. இதுதான் ஆனா கொண்டாவா?” என்று சின்ன மகன்
தனது சந்தேகத்தைக் கேட்டேன்.
"இல்ல அந்தப் பாம்பெல்லாம் இங்க இல்ல.”
எப்படி இருந்தாலும் இது பொல் லாத பாம்புதான். இது எங்கிருந்து இங்கு வந்தது?
ஜசீலா அன்ரி ஒரு சந்தேகத்தைக் வெள்ளிப்படுத்தின்ார். பக்கத்தில் உள்ள வெறும் வளவு பற்றையும் புதருமாகக் கிடக்கிறது. முழங்கால் உயரத்துக்குப் புல் வளர்ந்திருக்கிறது. மாலை நேரம் பிள்ளைகள் கிரிக்கட் விளையாடிய போது பந்து அடிபட்டுப்போய் அந்தப் பக்கம் விழுந்துவிட்டது. இவர்கள் எல்லோரும் போய் பற்றையையும் புதரையும் கிண்டிக் கிளறித் தேடிப் பந்தை எடுத்திருக்கிறார்கள்.
ye GSG)

"...அங்கேயிருந்துதான் பாம்பு வந்திருக்கும். பாம்பு இந்தப்பிள்ளை களின் காலில் மிதிபட்டிருக்கலாம். அப்படி மிதிபட்டால். மிதித்தவரைத் தேடிப்பாம்பு வருமாம்! உண்மையா?. அதனாற்தான்பாம்பு இங்கு வந்ததா?” ஜசீலா அன்ரிதனது மகனை அணைத்த படியே கலக்கத்துடன் கேட்டார். அவன் மிரள விழித்துக்கொண்டு நின்றான்.
"இல்லை. இல்ல. அதெல்லாம் பொய்க்கதை!. பாம்புகளுக்கு அவ் வளவு நினைவாற்றலும் மோப்ப சக்தி யும் இல்ல. பழிவாங்கும் குணமும் இல்ல. மிதிபடும்போது. தற்பாது காப்புக்காகக் கடித்தால் சரி. மற்றப்படி தேடிவந்து மனிதரைக் கடித்து ருசி பார்க்காது.” பாம்புகளைப் பற்றிய மேதமையான அறிவுள்ளவன் போல ஜசீலா அன்ரியை ஆறுதற்படுத்தினேன்.
விளையாட்டு முடிந்து, பொழுது பட வீட்டுக்கு வந்த சின்ன மகன் என்னிடம் கூறியது இப்போதுநினைவு வந்தது; "அப்பா. விளையாடயிக்க. பந்து அந்தப் பத்தைக்குள்ள போய் விழுந்திட்டுது. நாங்கள் எல்லாருமாய் போய் புல்லுப் பற்றைகளையெல்லாம் விலத்திப் பார்த்து. ஒரு பந்தில்லை. நாலு பந்துகள் எடுத்து வந்திட்டம்!”அப் போதே அவனை எச்சரித்தேன். "அதுக் குள்ள பாம்பு. பூச்சி ஏதாவது கிடந்து கடித்துவிடும். இனிமேல் அங்க போக வேண்டாம்” என்று. இப்போது அதை மீண்டும் நினைவூட்டினேன். தான் அந்தப் பாம்பை மிதித்திருக் கிறீங்கள். நல்ல காலம் கடி வேண்
够部
ங்கள்
டாமல் தப்பியிட்டீங்கள்.” சற்று பய முறுத்தலாகக் கூறினால் இனிமேல் அந்தப் பக்கம் போகமாட்டான் என்று தான்திரும்பவும் அதையே கூறினேன்.
"ஸ்ர்ர்ர்”பாம்பு சீற்றம் அதிகரித்த உச்சத்தாயியில் சீறியது. அப்போது கடைக்காரக் கனகு வந்துசேர்ந்தார். அவரது திருநீற்றுக்குறிஅந்த இரவிலும் பளிச்சிட்டு வெள்ளையாய்த்
தெரிந்தது.
"எங்கை? எங்கை பாம்பு?” எனக் கேட்டவாறே ஓடிவந்தார்.
ஆள் ஓடிவந்த வேகத்தைப் பார்த் தால் எப்படியும் ஒரு முடிவுகாண்பார் என்றே தோன்றியது. பரபரப்புடன் அங்கு போடப்பட்டிருந்த (நழுவவிடப் பட்டிருந்த) ஒவ்வொரு தடியாக எடுத் தார். அவருக்கு எதுவும் சரிப்பட்டு வர வில்லை
"இதுக்கு ஒரு பெரிய வாள் இருந் தாற்தான்நல்லது. சதக்கென்று ரெண்டு துண்டாக வெட்டிவிடலாம்!”
அவரது துணிச்சலான பேச்சு எனக்குநம்பிக்கை அளித்தது. கொஞ்சம் ஊக்கமளித்தால் காரியத்தை மேற் கொள்வார் எனநினைத்தேன்.
எனக்கு ஒரு யோசனை உதித்தது. எங்கள் வீட்டில் ஓர் உலக்கை இருக் கிறது. உரலில் அரிசிகுத்துகிற சமாச்சார மெல்லாம் இப்போது அருகிவிட்ட தால், உலக்கை ஒரு பக்கமாகப் போடப் பட்டு தேடுவாரற்றுக் கிடக்கிறது. துரும்பும் பல்லுக்குத்த உதவும் என்று சொல்வார்கள். இது உலக்கையல்லவா?

Page 16
பாம்பு அடிக்க உதவப் போகிறது. அதைக்கொண்டு வந்து கனகுவிடம் கொடுத்தால் பாம்பின் கதையை முடித்துவிடுவார்.
"கனகு! கொஞ்சம் பொறுங்கோ! உலக்கை ஒன்றிருக்கு கொண்டு வாறன்!” என்றவாறே ஒடத்தொடங்கி னேன். கனகு இதை எதிர்பார்க்க வில்லை. சட்டென என்னைத் தடுத்து நிறுத்தினார். குரலைத்தாழ்த்தி எனக்கு
மட்டும் கேட்கக் கூடியதாகச் சொன்னார்,
“வேண்டாம். விடுங்கோ!
பாம்பை அடிக்கக்கூடாது. தோஷம்!”
அட, அப்படியொரு சங்கதி இருக் கிறதா? செத்த பிறகாவது பாம்புக்கு இரண்டு போடு போடலாம் என்ற எண்ணத்துட்னிருந்த நான் அந்தக் கணமே இதைக் கைவிட்டேன்.
அக்கம்பக்க வீடுகளிலிருந்து வந்த பெண்கள் வீட்டுக்குள்ளும் வெளி ஒர மாகவும் நின்று எட்டி எட்டிப் பார்த் தார்கள். இந்தக் கட்டத்தில் 'பாம்பை அடிக்க முடியாது’ எனப்பின்வாங்குவது ஆண்மைத்தனமான செயலல்ல என்று
தோன்றியது.
“யாரைப் பிடிக்கலாம் என்ற யோசனையுடன் வெளியே தெருவுக்கு வந்தேன்.
பக்கத்து வீட்டு குணவர்த்தனா அங்கிள் வீட்டுக்காரர் தங்கள் வீட்டு வாசலில் கூடிநிற்பது மேர்க்கூரி வெளிச் சத்திற் தெரிந்தது. புத்த சமய தர்மத் துக்கு அமைய உயிர்களைக் கொல்வது
தகாத செயலாகையால் இந்தப் பக்கம் வருவதை தவிர்த்துக்கொண்டார்கள் என ஊகித்துக் கொண்டேன். அதிலும் அவர்கள் பாம்புகளைக் கொல்வேமாட் டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்
முன் வீட்டிலிருக்கும் சிஃபானும் அவரது நண்பரும் அப்போதுதான் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்கள். இவர்கள்தான் சரியான ஆட்கள் என்று எனக்குத் தோன்றியது. இளந்தாரிப் பெடியள்!துணிச்சலுடன் அடிக்கக்கூடி யவர்கள். நான் அவர்களைக் கடித்துக் கொண்டேன். (மன்னிக்கவும் பிடித்துக் கொண்டேன்.)
"பாம்பொன்று வந்திருக்கு. கடிக்க வேண்டும்!" கூறினேன். (மீண்டும் மன்னிக்க; நா தடுமாறுகிறது. நிலைமை அப்படி. கடிக்க வேணும் என்பதை அடிக்க வேணும் எனத் திருத்திக் கொள்க.)
என அவர்களிடம்
அவர்களை உள்ளே கூட்டிச் சென் றேன். ஒவ்வொரு புதிய முகம் வரும் போதும் அனைவரும் மிக எதிர்பார்ப் புடன் காணப்பட்டார்கள்.
பிள்ளைகள்'இந்தாபாம்புக்கு அடி விழப்போகிறது!’ எனக் கிட்ட ஒடி வரு வார்கள். நான் அவர்களை அப்புறப் படுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந் தேன். “ஸ் ர் ர் ர்!”
சிஃபான் (பாம்பைக் கண்டதும்) வந்த வேகத்திலேயே திரும்பினார்.
"வீட்டுக்கு போயிட்டு வாறன்!”
அவரது சைக்கிள் தெருவில் நின் றது. அதை வீட்டில் விட்டு வரப்

போகிறாராக்கும் என எண்ணி னேன். அவர் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றேன். சைக் கிளிலேயே திரும்ப வந்தார். வந்து
வெளிப்படையாகவே கூறினார்.
“அந்தப் பாம்பை எங்களால
அடிக்கேலாது. கூட்டிட்டு வாறன்."
வேற ஆளைக்
நான் அவரை அவநம்பிக்கை யுடன் பார்த்தேன். ஆள் மெல்ல நழுவப் போகிறாரோ!
“ஆரைக் கூட்டி
வரப் போறிங்கள்?"
"கசிப்புக் கடைப்பக்கம் யாரை யாவது." எனக் கூறிக்கொண்டே விரைவாகப் போனார், சிஃபான். அது நல்ல ஐடியாதான் என்று எனக்குப் பட்டது. வெறியிலுள்ள வன் பயமறிய மாட்டான்! (பாம்பு தற்செயலாகக் கடித்தாலும் அவ னுக்கு விஷமும் ஏறாது!)
பார்த்துக் கொண்டேயிருக்க சிஃபான் சைக்கிளிற் திரும்ப வந்தார். கிட்டத்தட்ட அதே வேகத்தில் ஒரு வன் ஒட்டமும் நடையுமாக வந் தான். உருக்கொண்டு வந்தவன்; போல் காணப்பட்டான். முற்றத்தி லிருந்து ஒரு தடியை எடுத்தான். இது நீளம் அதிகமான தடியும் அல்ல. அதை ஒரு சுழற்றுச் சுழற்றி பரி சீலித்துக் கொண்டான். பாம்புக்குக் கிட்ட, மிக அண்மையாகப் போ னான். ஓங்கினான்.
“ah)... ri... fj. ri”
“பொட்டக் இன்ட! (கொஞ்சம் பொறுங்க)" என்றேன். இவன் வெறி மயக்கத்தில் செய்வது என்ன வென்று அறியாமல் பாம்பை மிரட்டி விட்டால். அது இங்கிருந்து கிளம் பினால் எங்கெங்கு போகுமோ. எங்கள் வீட்டுக்குத்தான் வரு மோ..!" என்ற கவலை எனக்கு. அவன் ஓங்கிய கையைச் சோர விட்டு என்னைத் திரும்பிப் பார்த்தான். இப்போது அவனே கோபத்திற் சீறு வான் போலிருந்தது! “அடித்தால் ஒரே அடியாக அடிக்க வேணும்! பாம்பு தப்பக் கூடாது." சற்று அதி காரத் தோரணையுடன்தான் கூறி னேன்.
“எனக்குத் தெரியாதா? இந்தா பாருங்க. மாத்தையா.” கண் இமைக்கும் நேரத்தில் ஓங்கி ஒரே போடாகப் போட்டான். பாம்பு "தொப்'பென ஜன்னலிலிருந்து விழுந்தது. தலைக்கு சற்று இந்தப் பக்கமாக அடி விழுந்திருக்கிறது! இரத்தம் சிதறியது.
உடனே ஜசீலா அன்ரியின் கணவர் பாய்ந்து இன்னும் சில அடி களைப் போட்டார். பாம்பு மறுபக்க மாகப் பிரண்டு நெளிந்தது. பிறகு அசைவற்றுக் கிடந்தது.
"பாம்பு செத்துப் போயிட் டுதா?” எனது சின்ன மகன் பக்கத் தில் நின்று கேட்டான். அவனது முகம் ஏங்கிப் போயிருந்தது.
அடித்தவன் பாம்பை அதன் வாலிற் பிடித்துத் தூக்கினான். ஒரு
29- (Dec

Page 17
கையாற் தூக்க முடியவில்லை. இரு கைகளாலும் தூக்கி உயர்த்திப் பிடித் தான். எல்லோரும் கிட்ட ஓடிவந்து பார்த்தார்கள். அதைத் தெருவுக்குக் கொண்டு சென்றான். அதன் தலை நிலத்தில் இழுபட்டுப் போனது. தெருவின் முனையில் பாம்பைப் போட்டான்.
"இதைக் கொளுத்திவிடவேண் டும். இப்படியே விடக்கூடாது!” எனக் கூறியவாறு நெருப்பு மூட்ட ஆயத்தம் செய்தான். தீப்பற்றியதும் பாம்பு இன்னும் பலதடவை பல வாறு துடித்தது.
சின்னவன் இந்தப் பக்கம், அந்தப் பக்கம்ாக நிலையின்றி ஒடி ஒடி பாம்பின் கதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்னும் சாகவில்லையா. அப்பா? துடிக்குது?”
நான் இன்னொரு முறை கூறினேன். “பாத்தீங்களா.. எவ் வளவு பெரிய பாம்பு?. இனிமேல் அந்தப் பத்தைக்குள் வேண்டாம். பந்து போனால் போக பட்டும். நீங்கள் போக வேண்டாம்.”
போக
பாம்பு நெருப்புடன் சங்கமித்து அடங்கிப்போவதை பார்த்துக்
கொண்டேயிருந்தான் மகன். பெரு
மூச்செறிந்தான்.
"அப்பா!' தொண்டை அடைத்
துக்கொண்டவன் போல. மிகக்
கரகரத்த குரலில் அழைத்தான்.
“என்ன மகன்?”
"நாங்க. விளையாடயிக்க. பந்து தேடிறதுக்கு போனாங்க தானே..? நாங்கள் கரைச்சல் படுத்தின படியாலா. வெளியில வந்தது?"
וL מLחוL
அவனது முகத்தைப் பார்த் தேன். கண்களில் மிரட்சி தெரிந்தது. பிள்ளை பயந்துவிட்டான் போலி ருந்தது.
“இல்ல. மகன் நீங்க பயப்பட
வேண்டாம். பாம்பு செத்திட்டிது தானே?"
“பாவம். அப்பா, அந்தப்
பாம்பு. எவ்வளவு நேரம். ஒரு பக்க மும் தப்பிப் போக வழியில்லாமல் நிண்டது.? அதை அடிச்சுக் கொண் டது பாவம்தானே?”
இதற்கு எனக்குப் பதில் சொல் லத் தெரியவில்லை. கருணையும் கவலையும் கலந்து அந்தச் சிறிய கண் கள் கலங்குவதைக் கண்டேன்.
மல் லி கையினி அபிமான எழுத்தாளர் திரு. ச. முருகானந்தன் அவர்களின் புத்தம் புதிய சிறுகதைத் தொகுதி தரைமீன்கள் எங்கும் விற்பனையாகின்றது. : . .
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடாகும்.
A.
 
 
 
 

எவ்வளவு விரைவில், இலகுவாய் பிறரில் குறை சொல்கின்றோம்! பழியைப் போடுகின்றோம்!
ஏன்? எம்மீது தவறே இல்லையெனப் பிறரை மட்டுமன்று எம்மைக்கூட நம்பவைக்கும்
ஒரு நடத்தையா இது?
எந்த நிலையிலும் எச்சந்தர்ப்பத்திலும் நான் வாழவேண்டும் எனக்குப் பின்னர்தான் எவருமே என்று நினைப்பது தவறா?
கண்கள் திறக்காத இறக்கை முளைக்காத ஒரு பறவைக் குஞ்சு தன் பலத்தைப் பயன்படுத்தி உடன் பிறந்த குஞ்சுகளை உதைத்தும், ஒதுக்கியும் கூட்டிலிருந்து வெளியே தள்ளி வீழ்த்துகின்றதே! இந்தச் சின்னக் குஞ்சுக்கு எப்படி வந்தது இந்தச் சுயநலம்?
சிந்தித்துப் பார்த்தால் இது சுயநலமே அல்ல. இதுதான் இருப்பியல் இதுதான் இயற்கை
இயல்பை, இயற்கையை எவர்தான் வெல்லுவர்! வெல்பவர் எவரோ அவர்தான் மனிதரோ?
அ. பாலமனோகரன்
66.3685 তত্ব

Page 18
అసినీరాజు ပÁဝှ%ဇံဃ ဓဇိပဒံခြုံ&ယ
ேெல ിഷ്ട്രീം 261 دنما
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு - புதிய அநுபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளத) 65606u: 250/- 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் 65606): I 40/- 3. அநபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் விலை: 180/= 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் ~ (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தள் 656Osu: 175/- 5. மண்ணின் மலர்கள் -
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரது சிறுகதைகள்) 6560su: I of
கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்துல்லாஹற் δύοO)6υ: Ioo/- 7. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் - (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா ബിഞ്ഞുസൈ: t I of
முனியப்பதாசன் கதைகள் - முனியப்பதாசன் விலை: 150/=
மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) - பாலரஞ்சனி விலை: bo/= 10. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) ബിഞ്ഞ: 175/- 11. சேலை - முல்லையூரான் விலை: 150/= 12. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் விலை: 275/=
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 13. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (இரண்டாவத தொகுப்பு) விலை: 350/=
(41 எழுத்தாளர்களின் படைப்பு)
14. நிலக்கிளி - பாலமனோகரன் ബിഞ്ഞുണ്ഡ: 14o/= 15. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் - தொகுப்பு:டொமினிக் ஜீவா விலை: 150/- 16. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) ~ ப.ஆப்டீன் விலை: 150/- 17. தரை மீன்கள் - ச.முருகானந்தன் விலை: 150/- 18. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான் விலை: 150/- 19. அப்புறமென்ன ~ குறிஞ்சி இளந்தென்றல் - (கவிதைத் தொகுதி) விலை: 120/- 20. அப்பா - தில்லை நடராஜா விலை; 130/- 21. ஒரு டாக்டரின் டயறியில் இருந்து ~ எம்.கே.முருகானந்தன் 6560so: 140/- 22. சிங்களச் சிறுகதைகள் 25 - தொகுத்தவர் செங்கை ஆழியான் விலை: 150/=
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் s வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
六
S. GGS) 8
 

முற்போக்கு இயக்கம், மொழிப்பெயர்ப்புத்துறைக்கு
அளப்பரிய இழப்பு எழுத்தாளர் .
ராஜமுநீகந்தன் மறைவு
- 65eofurtest
ஐந்தாண்டுக் காலம் (1997-2002) தினகரன் தினசரியின் பிரபல ஆசிரியராக இருந்தவர் எழுத்தாளர் ராஜபூரீகாந்தன். யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியைச் சேர்ந்த இராஜரத்தினத்தின் மூத்த புதல்வனாக 30.06.1948ல் பிறந்தவர் இந்த பூரீகாந்தன். தந்தையாரின் பெயரிலுள்ள 'ராஜ’ என்பதை முன்னொட்டாகக் கொண்டு ராஜபூரீகாந்தன்ஆக தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகம் ஆனார்.
கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி, விக்னேஸ்வராக் கல்லூரி என்ப வற்றில் இவர் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிற் சேர்ந்து தொடர்ந்து கல்வியைப் பெற்றார். இவரது எதிர்கால வாழ்வின் அடித்தளமாக அமைந்தது சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி. இக்கல்லூரியின் அதிபராக ஒரேற்றர் சுப்பிரமணியம் அமர்ந்து புகழ் பூத்து விளங்கிய காலத்தில் மாணவனாக இருந்து கல்வி கற்கும் பேறுபெற்றவர்பூனிகாந்தன். அத்துடன் தோழர் வி.பொன்னம்பலம் (வி.பி), வித்துவான் ஆறுமுகம் ஆகிய கல்வி மான்கள், இலக்கியவாதிகளிடத்தில் கல்விகற்கும் வாய்ப்பும் இவருக்கு அக்காலத்தில் வந்து வாய்த்தது. இது மாத்திரமல்லாது அக்காலத்தில் தோழர் வி.பி.யின் இல்லத்தில் தங்கியிருந்தே இவர் தனது கல்வியைக் கற்று வந்தார். இக்காலகட்டத்தில் தோழர் வி.பி.யின் வழி காட்டலின் கீழ் "கலைமதி என்னும் கலை இலக்கியச் சஞ்சிகை ஒன்றும் வெளிவந்துகொண்டிருந்தது. இத்தகைய ஒரு சூழலில் தோழர் வி.பி.யைக் குருவாகக் கொண்ட பூரீகாந்தன் கொள்கை சார்ந்த நிலையில் ஒரு கம்யூனிஸ், டாகவும், கலை, இலக்கியம் சார்ந்த நிலையில் ஆக்க இலக்கிய கர்த்தாவாகவும் உருவாவதற்கான பலமான ஓர் அத்திவாரம் அங்கு இடப்பெற்றது.
பூரீகாந்தன் தமது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு கைதடியிலுள்ள விசேட தேவைகளுடைய பின்னணிகளின் (கட்புலன், செவிப் புலனற்ற) கல்வியில் அக்கறை உடையவராகக் கைதடிலுள்ள அவர்கள் பாடசாலையிற் சில காலம் ஆசிரியராகக் கடமையாற்றினார். அதன் பின்னர் குடும்ப நிலை காரணமாகச் சில ஆண்டு கப்பலில் வேலை செய்துவிட்டு நாடு திரும்பினார்.
3 ±

Page 19
ஆங்கில அறிவும், இலக்கிய ஆற்ற லும் மிக்க பூஜீகாந்தனுக்குத் தகுந்த ஓர் இடத்தினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்னும் அக்கறையுடன் இருந்து வந்த வடபிரதேசக் கம்யூனி ஸ்ட் கட்சியினர், அக்காலத்தில் தெங்கு பணம்பொருள் உற்பத்தி விற்பனைச் சங்கத்தில் தமக்கிருந்த செல்வாக் கினைப் பயன்படுத்தி கரவெட்டிச் சங்கத்தில் காசாளராக நியமனம் பெறச் செய்தார்கள். இந்த நியமனத்தினால் வடபிரதேச கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த எழுத்தாளர்கள் பூரண மனத் திருப்தியைப் பெற்றுக் வில்லை. "மல்லிகை"யில் எழுத ஆரம்பித் திருந்த இளம் எழுத்தாளரான ராஜபூரீ காந்தனைமிகச்சரியாக எடை போட்டு வைத்திருந்த டொமினிக் ஜீவா, தமது மனஉளைச்சலைத் தெணியானிடம்
கொள்ள
இடையிடையே சொல்லிக் கொண்டி ருந்தார். இதன் பேறாக, டொமினிக் ஜீவா, பிரேம்ஜி, தெணியான் ஆகியோ ரின் கருத்துக்களுக்கிணங்க வடபிர தேசக் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை யினரின் சிபார்சின் வழி சோவியத் கலா சார நிலையத்தில் ஊடகவியலாளராக நியமனம் பெற்றார்.
இந்த நியமனம் ராஜபூருரீகாந்தனின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் மா பெரும் மாற்றங்களையும் தோற்றுவிக்க லாயிற்று. இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் செயலாளரான பிரேம்ஜியுடன் மிக நெருங்கிப் பழகு கின்ற வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத் தது. இதனைப் பேராசிரியர் சோ.சந்திர சேகரம் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்:-
"முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேம்ஜியுடன் இவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.
இலக்கியக் பொறுத்தவரையில் பூரீகாந்தன் அவர் கள் இலங்கையில் வளர்ச்சியுற்று நவீன
கொள்கையைப்
இலக்கியப் பாங்குகளில் பெருஞ் செல் வாக்குச் செலுத்திய முற்போக்கு இலக் கிய அணியுடன் தம்மை இணைத்துக் கொண்டவர். இவ்வணியினரின் கோட் பாடுகளுக்கு அமையத் தனது எழுத்துக் களில் சமூக நேயத்தையும், சமூக யதார்த்தங்களையும் கலையழகுடன் காட்டி இலக்கியத்தினுரடாகச் சமூகத் தில் அடிப்படையான மாற்றங்களைக் காணவிழைந்தவர் ராஜபூரீகாந்தன் அவர்கள்” (மல்லிகை ஜூலை 2002)
சோவியத் கலாசார நிலையத்தில் நியமனம் பெற்ற ராஜபூஞரீகாந்தன் வாழ் வில் பல மாற்றங்களைப் பெறுவதற்கு அந்த நியமனம் காரணமாக அமைந்தது. அத்துடன் அவரது சொந்த வாழ்விலும் இந்தக் காலகட்டம் மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. கர வெட்டி வைத்தியர் வ.சிலம்பு அவர் களின் மகன், வடபுலத்து இடதுசாரி முன்னோடி சி.தர்மகுலசிங்கம் (ஜெயம்) அவர்களின் கொள்கை வழி நடந்த டாக்டர் சி.மாசில்லாமணி அவர் களின் புத்திரி லீலாவதியை நேசித்து திருமணம் புரிந்து கொண்டார்.
சோவியத்நாடு கலாசார நிலையத் தில் இணைந்து கொண்ட பின்னர் "சோவியத்நாடு", "சோஷலிஸம் தத்து

வமும் நடைமுறையும் சஞ்சிகைகளின் ஆசிரிய பீடத்தில் பிரேம்ஜியுடன் இணைந்து பணியாற்றினார். இக்கால கட்டத்தில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியை முழுமூச்சுடன் செய்யவேண்டியவர் ஆனார். இப்பணியானது இவரது தொழில் சார்ந்த பணியாகவும் அமைந்தது. இவரிடத்தில் காணப் பெற்ற சிருஷ்டி இலக்கியத் திறன் இதனால் வளம் பெற்றது என்று சொல் வதற்கில்லை. உண்மையில், மொழி பெயர்ப்புத்துறை சார்ந்த தவிர்க்க இய லாத இவரது செயற்பாடுகள் இவரது சிருஷ்டித் திறனை மழுங்கடிக்கச் செய் தன என்று கூறலாம். அதனால் குறிப் பிட்டுச் சொல்லத் தகுந்த குறைந்த தொகையிலான சிறுகதைகளையே இவரால் படைக்க முடிந்தது. எழுபது களின் ஆரம்பத்தில் (1974) மல்லிகையில் எழுத ஆரம்பித்த ராஜபூரீகாந்தன் கடந்த முப்பதாண்டு காலத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குத் தந்திருக்கும் படைப்பிலக்கியங்கள் தொகையில் குறைவானவையாகவே காணப்படு கின்றன.
ஆனால் இவரது படைப்பிலக்கிய
உந்தல் உள்ளே உறங்கிக் கிடக்க இய
லாது வேறொரு வழியில் வெளிப்பட லாயிற்று. ஆங்கிலத்தில் அழகு சுப்பிர மணியம் எழுதிய சிறுகதைகள் இவரது கவனத்தை ஈர்த்தன. தமது படைப்பு உந்தலைத் தணிக்கும் பணியாக அழகு சுப்பிரமணியத்தின் பிரபல்யம் மிக்கச் சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தார். இவரது ஆக்க இலக்கிய ஆளுமையும், தமிழ், ஆங்
கிலம் ஆகிய இருமொழிப்புலமையுமே இவரது சிறுகதை மொழிபெயர்ப்புக்குக் காரணமாக அமைந்தன எனலாம். மொழிபெயர்ப்புத்துறையில் ஈடுபடு கின்றவர்களின் தொகை மிகக் குறை வாக இன்று காணப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் வே.சாமிநாத சர்மா போன்ற அறிஞர்கள் தமிழுக்கு மிக அருமையான நூல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்துத் தந்தார்கள். கா.ந.சு. போன்றவர்கள் நல்ல இலக்கி யங்களை மொழிபெயர்த்து உதவினார் கள். இடைக்காலத்தில் மொழிபெயர்ப் புத்துறை மந்தமடைந்த போதிலும் அண்மைக்காலத்தில் இத்துறையானது மீண்டும் புத்துயிர்ப்புப் பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த வகையில் மிக முக்கியமான ஒருவர் ராஜபூஞரீகாந்தன். மொழி பெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கும் இயந்திரத்தனமான ஒரு வேலை அன்று. குறிப்பிட்ட ஒரு சொல் எங்கு பயன்படுத்தப்படுகின் றதோ, அந்த இடத்தில் அந்தச் சொல் ஒரு பொருளைத் தரும். அச்சொல்லா னது இன்னோரிடத்தில் வரும்போது அதன் பயன்பாடு வேறொரு பொரு ளைத் தருவதாக இருக்கலாம். மொழி நுட்பங்களை நன்கு உணர்ந்து, மொழி யைப் பயன்படுத்தும் படைப்பாளியின் ஆக்கங்களில் இத்தகைய சிறப்பான இயல்புகளை உணரலாம். இது தமிழ் மொழிக்கு மாத்திரம் உரிய இயல்பு அன்று. உலகிலுள்ள எல்லா மொழி களுக்கும் இந்த இயல்பு பொருந்தி விடும். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு
மொழிபெயர்க்கும் சமயத்தில் ஆங்கில 35

Page 20
மொழியூடாக அதனை விளங்கிக் கொள்ளும் ஆங்கில மொழிப் புலமை, பின்னர் அதனை தமிழில் சொல்வதற் கான தமிழ்மொழிப் புலமை என்பன கைவரப் பெற்றவர்களே சிறந்த மொழி பெயர்ப்பாளர்களாக விளங்கலாம். மொழி பெயர்க்கும் கால், குறிப்பிட்ட ஒரு மொழிக்கூடாக வெளிப்படுத்தப்படும்
படைப்பிலக்கியங்களை
உணர்வுகளை, இன்னொரு மொழிக் கூடாக வெளிக்கொணர்வதென்பது சாமானியக் காரியமல்ல. எழுத்தாளர் களாக இருக்கின்றவர்கள் தமது சொந்த மொழிக்கூடாகவே உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இந்தநிலை யில் ஆக்க இலக்கியங்களை மொழி பெயர்ப்பது என்பது பெரிதும் சிரம மான ஒரு செயற்பாடு. ராஜபூரீகாந்தன் அந்தச் செயற்பாட்டினை மிக இலாவக மாக சிறப்பாகச் செய்திருக்கின்றார்.
எந்தக் காலத்திலும் தாம் வரிந்து கொண்ட தமது கொள்கையில் இருந்து கம்யூனிஸ்ட் ராஜபூரீ காந்தன். இலக்கியத்தில் உறுதியான முற் போக்கு இலக்கியவாதி. சோவியத் கலா
தளம் பாத
சார நிலையத்தின் நியமனம் பெற்றுக் கொண்ட பின்னர் பிரேம்ஜியின் மிக நெருக்கமான சகாவாக இருந்து வந்திருக் கின்றார். பிரேம்ஜியின் அரசியல், இலக் கியப் பணிகளுக்கு உறுதுணையாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றார். இவர் கட் டுரைகள் எழுதுகின்றபோதும், செயற் படுத்த வேண்டிய செயற்திட்டங்களை வகுக்கின்றபோதும் அவற்றை நன்கு அவதானித்தால் அவற்றுக்கூடாகப் பிரேம்ஜியின் தாக்கம் வெளிப்படு
SLEகை--
வதை அவதானிக்கலாம். இன்னொரு வகையில் இவரது சிறுகதைகளை நோக் கினால் இவரது இருமொழிப் புலமை
யையும் கண்டு கொள்ளலாம்.
ராஜபூரீகாந்தன் சிறுகதைகள் பெரும்பாலும் மல்லிகை மாசிகையில் வெளிவந்திருக்கின்றன. இவரது சிறு கதைகள் பன்னிரண்டினை உள்ளடக்கி 'காலச் சாளரம்" (1994) தொகுதி வெளி வந்ததுடன், அவ்வாண்டுக்குரிய வடக் குக் கிழக்கு மாகாணசபையின் இலக்கி யப் பரிசினையும் பெற்றுக்கொண்டது. அழகு சுப்பிரமணியத்தின் சிறுகதை களின் தமிழ் மொழிபெயர்ப்பு நீதிபதி யின் மகன்"ஆக (1999) வெளிவந்து, மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய பரிசினையும் பெறலாயிற்று.
ராஜபூரீகாந்தனின் மாமனார்நாட கக் கவிமணி நா.சண்முகநாதன் கலை, இலக்கிய ஆர்வமுள்ள ஒருவராக வாழ்ந் தார். புத்திரப்பேறு இல்லாத அவர்கள் பூgரீகாந்தனைத் தமது குழந்தைபோல, தமது வாரிசாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவர் வழிவந்த கலை, இலக்கி யத் தாக்கமும் ராஜபூஞரீகாந்தன் உருவாவ தற்குக் காரணமாக அமைந்தது எனலாம்.
சோவியத் கலாசார நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த காலகட்டத் தில், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கற்றுபத்திரிகைத்துறை சார்ந்த சிறப்புப் பட்டத்தினை1987இல் ராஜபூரீகாந்தன் பெற்றுக் கொண்டார்.
சோவியத் கலாசார நிலையம் செயல் இழந்துபோன காலகட்டத்தில்
36

ராஜபூரீகாந்தன், பிரேம்ஜி உட்பட அங்கு பணிபுரிந்த அனைவரும் தவிர்க்க இயலாது தமது தொழிலை இழந்தனர்.
ஆனால் எந்தக் காலகட்டத்திலும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங் கத்துக்கும் ராஜபூரீகாந்தன் மீது மிகுந்த நம்பிக்கையும் பற்றும் இருந்து வந்திருக் கின்றது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங் காரணமாக ஏரிக்கரைப் பத் திரிகை நிறுவனத்துக்குள்ளும் சில மாற்
றங்கள் உருவாகின. அந்த மாற்றத்தைச்
சாதகமாகப் பயன்படுத்தி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ராஜபூஞரீகாந்தன் தினகரன் பிரதம ஆசிரியராக நியமனம் (1997) பெறும் வாய்ப்பினைத் தேடிக் கொடுத்தது. ராஜபூgரீகாந்தன் வாழ்வில் கம்யூனிஸ்ட் கட்சி தேடிக்கொடுத்த மிக உன்னத இடம் இது என்று சொல்ல லாம். ராஜபூரீகாந்தன் தினகரன் பிரதம ஆசிரியராக இருந்தார் என்பது பெரு மைக்குரிய ஒன்று எனச் சொல்வதிலும், கைலாசபதி இருந்த கதிரையில் இவரும் இருந்தார் என்று சொல்வதுதான் மிகப் பெருமைக்குரியதாகும். ஈழத்து இலக் கிய வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் சந்தர்ப் பங்களில் 'மறுமலர்ச்சிக் காலம்', 'ஈழ கேசரிக் காலம்’, ‘சுதந்திரன் காலம்' என் றெல்லாம் பேசப்படுகின்றது. அந்தக் காலகட்டங்களுக்குரிய சிறுகதைகள் தொகுக்கப் பெற்று நூல்களாக வெளி யிடப்படுகின்றன. அவற்றைப் போல 'கைலாசபதியின் தினகரன் காலம்" என ஒரு காலம் ஆய்வுக்குட்படுத்தித் தொகுத்து வெளியிடப்பட வேண்டும். பேசப்பட வேண்டும். ஆனால் இன்
றைய காலகட்டத்தினைத் தமக்கு
வாய்ப்பாகக்கொண்டு முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் மீது சேறடிப் பதை நோக்கமாகக் கொண்டு செயற் படும் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் இதனை எதிர்பார்க்க முடியாதுதான். தினகரன் பிரதம ஆசிரியர் பீடத்தில் சில ஆண்டு காலம் பணிபுரிந்து விலகியகால கட்டத்தில் 2002 ஜூலை மல்லிகை இவரை அட்டைப்படத்தில் இடம் பெறச்செய்து கெளரவித்துள்ளது. மல்லிகையின் அட்டைப்படக் கெளர வத்துக்குரியவராக இவரை அறிமுகம் செய்திருக்கும் பேராசிரியர் சோ.சந்திர சேகரம் இவர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:-
“எழுத்துலகில் எவ்வளவுத7ன் புகழ் பெற்றிருந்தாலும், பேச்சிலும், செயலிலும் அடக்கம், எளிமை, A 2A ருக்கு உதவும் மனப்ப7ங்கு, மனித وی 42زal|42/ Gz ۸/zz ) رهبر A از 7a27zقه /%6z/z 7z/aoazz) தக்க குணாதிசயங்களைக் கொண்டு படைபடவிலக்கிய வாசகர்களுக்கு எழுதி ஒரு முயீன் ضےayے 7 قوت برے ہے //zز%7گ60 تھیضeayzترکی மாதிரியாகத் திகழ்ந்தவர் திரு. ராஜ பூனகாந்தன் அவர்கள்"
பேராசிரியரின் கூற்று எந்த வகை யிலும் மிகைப்படுத்தப்பட்ட ஒன் யsன்று. முற்றும் அது 2.9ண்டி0பய.
ராஜபூரீகாந்தன் சில ஆண்டுகள் தொடர்ந்து தலைநகர் கொழும்பு வாழ்க்கையையே வாழ்ந்து வந்ததினால் அங்குள்ள சூழ்நிலையின் தாக்கம் அவ ருள் உறங்கிக் கிடந்த இசை ஆர்வத் தைத் தட்டி எழுப்பி மேலும் வளர்த் தது. அதன் வெளிப்பாடாக அண்டிபைக் காலத்தில் கர்நாடக இசை தொடர்பான
DaGGDES

Page 21
கட்டுரைகள் சிலவற்றை அவர் எழுதி னார். அவைகள் மாத்திரமல்லாது இலக் கியம், சமூகம் சார்ந்த வெவ்வேறு கட்டுரைகளையும் அவ்வப்போது இவர் எழுதி வந்திருக்கின்றார்.
அண்மையில் 20.04.2004இல் தமது 56வது வயதில் காலமான ராஜபூg காந்தன் வயது வந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை. ராஜபூரீகாந்த னின் நூல் உருப்பெறாத கட்டுரைகள், சிறுகதைகள் என்பவற்றோடு மல்லிகை யில் வெளிவந்த அழகு சுப்பிரமணியத் தின் குறுநாவல் "மிஸ்டர் மூன்’ (Mr. MOOn) இன்னும் நூலாக்கம் பெற வில்லை. தேவரையாளிச் சூரனின் சுய சரிதை "சூரன் சரிதை பதிப்பிட்டு வெளி யிடும் பணியினையும் மேற்கொண்டி ருந்தார். இவைகள் யாவும் நூல்களாக உருப்பெற்று வெளிவருவதில் இவரைச் சார்ந்தவர்கள் முன்னின்று உழைப்பார் களேயாயின் ராஜபூரீகாந்தன் தமிழுக் கும், தமிழ் இலக்கியத்துக்கும் செய் திருக்கும் பங்களிப்பு மேலும் விரிந்து காத்திரமானதாகக் கணிக்கப்பெறும்.
ராஜபூரீகாந்தன் தமக்கென்று பிரத்தியேகமாகச் சொத்துக்கள் சேர்க் காத ஒருவர். சொத்துக்களுக்குப் பதி லாக இவர் நல்ல நண்பர்கள் பலரைச் சேர்த்துக் கொண்டவர். அந்த நட்பு, கொள்கை, ஆற்றல் என்பன இவரை மிக உயர்ந்த இடத்தில் தூக்கி வைத்தன என்று சொல்வது தவறாகாது. கம்யூனிஸக் கொள்கையில் மிகுந்த பற் றுறுதி கொண்டவர்களாக வாழ்ந்து, ஆக்க இலக்கியத்துறையில் மிகப் பிர பல்யம் பெற்ற எழுத்தாளர்களாக தமிழ் நாட்டில் ஜெயகாந்தன், ஈழத்தில் டானியல், ஜீவா ஆகியோரைக் குறிப் பிடலாம். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி யினால் மிக உயர்ந்த ஸ்தானத்தில் தூக்கி வைக்கப்பெற்ற ஒர் எழுத்தாளர் உண்டென்றால் இது ராஜபூரீகாந்தன் தான். அவரது மறைவு ஈழத்து ஆக்கி இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கி யத்துறைகளுக்கு மாத்திரமல்லாது முற் போக்கு இயக்கங்கள் அனைத்துக்குமே பெரிய இழப்பென்றே கூறலாம்.
எழுதப்படாத கவிதைக்கு
*;
வரையய்படாத சித்திரம்
 

அழகொழுகும் ஆளுயரப்பூச்
சாடிக்குள் பசுமையை விரித்
ଔଦ୍ଧି தாட்டும் பச்சிலைப் பூஞ்
go செடி. அருவியாகிக் கொட்டு கிற ஆளளவுத் தொட்டி யுடன் பன்னீராய்க் கொப் لاقگري
彦· 6. பளிக்கின்ற சீலிங் ஷவர் இரட்டிப்புக்
குளியவுை போட்டு போட்டு ஊட்டிட ஜனக வாடிவீடு கொடுத்த சிறப்புக் சொகுசில் திளைத்தேயெழுந்தான்.
மாமலேற்றை மொறுமொறுவென (Syறுக்கிக் கருகியளிலைஸ் ரோஸ்ட்டில் தடவிகட்டித்துண்டுபட்டரைஅதற்கும் புேல் பூசியபடி முள்ளுக்கரண்டிகொண்டு பேக்கனில் குத்தி காலை ஆகாரத்தை ஆரம்பித்தான். முட்டைக்கே மாத்திரம் பொருந்தும் சிறு கிண்ணத்தில் அரை Sவியல் முட்டை தயாராக வைக்கப் பட்டேயிருக்கிறது. தக்காளிப் பழச்சாறு ஆகதகவெனத்தளம்பி ஒரு இழுப்புக்குக் காத்திருந்தது. அன்னாசிப் பழத்தின் வட வடிவ வெட்டுத்துண்டு பீங்கான் கோப்பையின்நட்டநடுவில் ஸ்கிராம்ப்ள்ஸோடு இடத்25gil.
சந்தானம் பெரியதுரையின்பஐரோஜி எடுத்துவந்து வாடி வீட்டின் வாசல் ஒரத்தில் காத்துநின்கிறார். அவருடையதோட்டப் பிரதம எழுத்தர் சீவியத்திலே இப்படிப்பட்ட மூளைவதை அறிந்ததேயில்லை. ஸ்பிறிங்வெலி அப்படி பூதாகர மான பிரச்சினை கிளப்பி வைத்திருந்தது.
குழந்தை மடுவத்தில் ஆயா வேலை Nார்த்த குசுமை குலம் கோத்திரம் விசாரி யாதே தன் வாழ்க்கையின் துணையாக்இவர் சந்தானம். அதனால் வந்ததை யெல்லாம்தாங்கிக் கொண்டவர்.
துரைசாணி அந்தஸ்தை குசுமுக்குத் ஆந்திடவோ எவரு மே தயாராயில்லை. சந்தானம் மனமொடிந்தாலும் தோட்டத்தை விட்டகன்றதுமில்லை. LD Gjørrr கலைக்கு இடமாற்றம்நாடி வந்தும்நிராகரித் தார்.
குசும் குறை வைக்காமல் குடும்பம் பேனலனள் கோப்பி மரத்தின் விளைச்சல் விருந்தாளிகளாக வருகிறவர் கைகளில் கொடுத்துச்சிரித்துமகிழ்ந்தாள்.
ஜம்புப் பழங்கள் மீதோ சந்தானத்தின் ஒரே மகனுக்குத்தீராத மோகம். நேரங் காலம் கருதாமல்நறநறவெனக் கடித்துச் *வைத்திடச் சளைக்கான். பட்டர்புறுட் மரமேறி ஏழெட்டுக் காய்களை ஒரே ஒஒல் பிடுங்கி விடுவான். நன்றாகக் கனிந்ததுமே அச்செட்டாக தேங்காய் பிளந்தெடுப்பது போலவே வெட்டி உள்ளேயிருக்கிற பருத்த விதையை வீசிே விடுவான். கரண்டிநிறைந்த சீனியை

Page 22
பச்சைநிறப் பழச்சதையுடன் கோதிப் பிரட்டி அடிநாக்கில் நீரூறப் பார்த் திருந்துவிட்டே உண்பான்.
ஏழு டிவிசன் தேயிலை. இரண்டு பெரிய பக்ரரிகள். நுழையும் போதே பாதை மருங்கில் தெரிவது ஒன்று. மலை முகட்டில் ஆறேழு மைல்கள் தொலை விலே விழுந்து விடும் போலத் தெரிவது மற்றது. இரண்டில் ஒன்றை நிரந்தர மாகவே மூடிவிடநிர்வாகம் தீர்மானித் திருந்தது. உற்பத்திக் கிரயம் பற்றி எஸ்.டி. படுமோசமாக சந்தானம் மீதே வசைபாடிப் பொரிந்து தள்ளினார்.
மேலும் குடைந்து துருவி ஆரா யவே ஜனக அங்கே வந்திருக்கிறான். சந்தானம் விழுந்து விழுந்து உபசரிக்கிற கட்டியக்காரர் மாதிரித் தொழிற் பட்டார். ஜனக புரிந்து கொண்டான்.
“யாருப்பா அவரூ?”
"கொழும்புப் பெரியவரூ. கையில மந்திரக்கோல் கொண்டந்தேயிருக் கிறாரூ.”
சந்தானம் தனது மகனுக்கு ஜனக பற்றி இப்படி வியாக்கியானம் சொல்லி வைத்தார்.
சூரியன் சாய்வதில்லை என்று எழுதி பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும் போல் பாடுமாறும், மலைச்சாரல்களும், கொட்டும் குளிரருவியும் சந்தானத்தின் மகனைத்தூண்டிக் கொண்டிருந்தது.
தலைப்பிட்டுக் கவிதை
சந்தானமோ கிங்க்ஸ்வூட்டிலே அவனைப் படிக்க வைக்கக் கனவுகள் கண்டார். அட்டன் ஹைலன்ஸில் தன்னும் இடம் கிட்டாமல் அவரது சமூகநிலைப்பாடு குதிரைக் கொம்புக் ஏங்கவும் கானல் நீர்தேடித் தத்தளித்திடவுமே வைத்தது. ஓயாமல் அலைக்கழிப்புஞ் செய்தது.
ஜனக பட்டயக் கணக்கு நிறு வனத்தையே முன்பு ஆக்ரோசத்துடன் பகிஷ்கரித்தவன். பெரிய பிரித்தானியா ஈயடிச்சான் கொப்பியாகக் கிள்ளித் தந்த பட்டயக் கணக்குப் படிப்பு நமக் கெதுக்கு என்றெல்லாம் பலத்த வாதம் புரிந்து தேசிய உணர்வைக் கிளறிய வனே. இந்த மண்ணிலே அந்த நிறு வனம் வேரூன்றிடவிடப் போவ தில்லை போட்டவனே.
என்றெல்லாம் சவால்
உள்ளத்தில் உரமேற்றியபின்புலம் இருந்த சுவடே தெரியாமல் மறைந்தது.
சேர்ந்த உற்றார் உறவினர் எல்லோரும் உதவாக்கரை
அவனைச்
என்று கைவிட்டு ஒதுக்கி வைத்தனர். அவனைச் செயலிழக்கப் பண்ணினர். நட்ட் நடுக்கடலிடை தத்தளிக்க உத் வேகம் கொடுத்தனர்.
துரும்பு ஆயுதமாவது போல் ஜனக ஏ.சி.ஏ. என்றதாரகமந்திரப்பட்டத்தை பறித்தெடுக்கநிர்ப்பந்திக்கப்பட்டான். பீனிக்ஸ் பறவை சாம்பல் மேட்டில் துளிர்த்தெழும்நிலைப்பாட்டினுள் இக்
கட்டில் வைக்கப்படுவதானான். அதற்
E3 uvgoSads

குப் பின் விருப்பு வெறுப்பு இற்றுப் போய் மனசு இறுகிப் போயிற்று.
இரவும் பகலும் தெரியாமல் பிரிட்டிஷ் கவுன்ஸில் செய்முறை அப்பியாசங்களோடு மாத்திரம்மாரடித் தான். அரசியல் செய்திகள் அறியாத இருளின் பிரகிருதியாகி மூடிய அறைக் குள் அடைபட்டான். அவனை வலி யவே வளைத்த வாலைக்குமரிகள் பலர் கண்ணிலிருந்து மங்கி மறைந்தனர். அக மெல்லாம் அதே ஒளியிழப்பு. உடுப்பு களிலும் அதே அக்கறையீனம்.
அவன் பெயருக்குப் பின்னால்
ஏ.சி.ஏ. இனிஷல் ஆகிக்கொண்டது.
திட்டித் தீர்த்த அதே நிறுவனத்தில் அவனுக்கு அங்கத்துவம் கிடைத்தது. அத்துடன் குபேரயுரியின் கதவெல்லாம் திறக்கப்படுவதாயிருந்தது.
எல்லா வகை முதலாளிகளுமே ஜனகவின் அடிவருடிகள் போல எடு பிடிகள் போல குசலம் விசாரிப்பதில் தேவைகள் நிரப்புதல் செய்வதில் முனைப்பானார்கள்.
முன்பின் அறியாத அனுபவம் ஜனகவை மேலும் மன இறுக்கத்துள் இறக்கி விட்டது.
ஒருவழிப் பாதை மளமளவெனத்
தெரிவதை அவன் அறியும் அவகாசம் அவனுக்கு ஏற்படவில்லை.
இத்தியாதி பின்புலம் கொண்ட ஜனக சர்ச்சைத் தீர்வை அதிவிரைவில் கண்டு கொண்டான். இந்த இரண்டு
தொழிற்சாலைகளின் தேயிலை உற் பத்திக் கிரயத் தரவு ஒன்றே போது மாயிருந்தது. அவன் தீர்மானித்தே விட்டான்.
ஸ்பிறிங்வலித் தோட்ட நுழை வாசலில் தென்பட்ட தேயிலைத் தொழிற்சாலை அத்தோடு மூடப்பட்டு மூளியானது. தேயிலைக் கொழுந்து வாசனை வீசுவது எல்லாம் இல்லாத சூழலே அதன்பின் திரண்டது. மலை மேகம் நிர்ச்சலனத்துடன் இவற்றைப் பார்த்தபடிதானிருந்தது.
ཡ─།༽ மல்லிகைப் பந்தல் வெளியிட்டிருக்கும் புதிய
நூல்கள் r
(சிறுகதைத் தொகுதி) ப. ஆப்டீன்
(கவிதைத் தொகுதி) குறிஞ்சி இளந்தென்றல்.
(வரலாற்று நூல்) தில்லை நடராஜா ܓܠ

Page 23
ஆரம்ப காலகட்டங்களில் இறுக்கமடைந்து தோன்றும் யாழ்ப்பாணச் சமூகம் என்னையோ, என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மல்லிகையின் தொடர் வரவையோ அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ தொடர்ந்து மறுத்து வந்தது.
அங்கீகரிக்காது போனாலும் பரவாயில்லை. எனக்கு எதிராகவும் மல்லிகையின் வளர்ச்சிக்குப் பாதகமாகவும் எதிர்ப் பிரசார ஈடுபாட்டில் திட்டவட்டமாகச் செயலாற்றி வந்தது.
இருமரபும் துய்ய யாழ்ப்பாணத்து மேட்டுக் குடிமக்கள் நல்லை நகர் நாவலர் மரபில் வழி வழி வந்தவர் கள்தான் தமிழை (p 6o puu T 5 ஒதக் கூடிய வர் களர் , LITUD UJ60ổT6001 gb gbéis 35 வர் களர் 66
- உறுதியாகவே நம்பினர். அத ன டிப் படையி லேயே செயல் பட்டனர். இந்த 9d - uu ff (85 19. Li பரி ற ப பரி ன டி ப படையாக வந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த م. தாங்கள்தான் வரண்முறையாகத் தமிழை கற்றுத் தேறியவர்கள், தமிழ்மொழியின் பரம்பரை முதுசக்காரர் என மெய்யாகவே நம்பினர். அதன் பிரகாரம் ஆண்டாண்டுக் காலமாகக் கருமமாற்றி வந்துள்ளனர்.
ஒருபக்கம் உயர்குடிப் பிறப்பின் மமதை. இன்னொரு பக்கம் சாதிக் கொழுப்பு! சாதித் தடிப்பு!
இதற்கு இணையாக எந்த விதமான சமூகப் பின்புலங்களோ கல்வித் தகைமை யோ அற்ற நான் நாடு தழுவிய முறையில் இலக்கியத்திற்கு அரச அங்கீகாரம் பெற்று மிளிர்ந்ததை அவர்களால் ஜீரணிக்கவே இயலவில்லை. பூரீலங்கா சாஹித்திய மண்டலப் படைப்பு இலக்கியப் பரிசை முதன் முதலில் பெற்றுக் கொண்டவன் நான். எனவே படித்த கூட்டத்தினர் எனப் பம்மாத்துக் காட்டி வந்த பலர், பகிரங்கமாகவே தமக்குக் கிடைத்த மேடைகளில் எல்லாம் என்னைக் கிண்டலடித்து, மோசமான வார்த்தைகளால் என்னை அர்ச்சித்துவரத் தலைப் LL- t - 60 . مسیر
இதில் முக்கியமாகக் குறிப்பிடக்கூடிய சங்கதியென்னவென்றால் எங்களது அரசாங்க வரிப்பணத்தில் ஆசிரியச் சம்பளம் பெற்று வயிறு வளர்த்து வந்த
2ه متهمت تاتهاU
 
 
 
 
 
 
 
 
 

Q9 (5 சில பண்டிதப் பெருமக்களே ஆசிரிய மாணவர்களை உருவாக்கும் ஆசிரிய கலாசாலைப் பாட மேடை களில் கூட, என்னையும் எமது சாதியின் பின் புலத்தையும் வம் புக் கிழுத்து நையாண்டி செய்து மகிழ்ந்திருந்தனர்.
எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டே தங்கள் குலப் பெருமையை வளர்த்துக் கொண்ட இவர்கள் எங்களது பரம்பரையையே சாதிப் பெயர் சொல்லி திட்டித் தீர்த்து, தமக்குள் தாமே திருப்திப்பட்டுக் கொண்டனர்.
இந்தப் பரிணி னணியில் தானி என்னைப் பற்றிய விமரிசனம் வெகு சிக்காராக நடைபெற்று வரும் சூழ் நிலையில அட் டையில எனது பெயரைக் கலரெழுத்தில் தாங்கி மல்லிகை வெளிவரத் தொடங்கியது.
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரு நாள் சனிக்கிழமை என நினைக் கிறேன். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி வழியாகச் சைக்கிளில் வந்துகொண்டி ருந்தேன். கையில் கர்ணனின் கவச குண்டலம் போல, புத்தகப் பை தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவர் கை காட்டி என்னை மறித்தார். “எடே தம்பி! கொஞ்சம் நில்லடா!’ எனச் சொல்லி, நான் சைக்கிளை விட்டு இறங்கியதும் கிட்டே நெருங்கினார்.
` மல்லிகை இருக்கா? இருந்தா எனக்கொண்டு தாடாப்பா!” என்றார்.
அப்பொழுதுதான் அவரை உற்றுப் பார்த்தேன்.
வித்வான் வேந்தனார் அவர். மல்லிகை இதழை அவரது கரங்களில் சேர்ப்பித்துவிட்டு நிமிர்ந்தேன். அப் பொழுது மல்லிகையின் விலை ஐம்பது சதம் மட்டுமே. பணத்தை எடுத்து நீட்டி னார். அவரிடம் கைநீட்டிப் பணத்தைப் பெற்றுக்கொள்ள எண் மனம் பின் வாங்கியது.
வேந்தனார் வற்புறுத்திப் பணத்தை என் கைக்குள் திணித்தார். நாணயக் குற்றியை எனக்குத் தந்துவிட்டு, “எடே தம்பி! ஆர்ஆரோவெல்லாம் உன்னைப் பற்றியும் நீ கொண்டு நடத்தும் மல்லி கையைப் பற்றியும் ஏதோ ஏதெல்லாம் புலம்பித் திரிவான்கள். நீ ஒண்டுக்குமே கவலைப்பட்டு தொட்ட காரியத்தை விட்டு விடா தை, தைரியமாகக் கொண்டு நடத்து!’ எனச் சொல்லிவிட்டு பஸ் நிலையப் பக்கமாக விறுக் விறுக் கென நடந்து சென்றார்.
அப்படியானவர்கள் வாழும் இந்தப் புண்ணிய பூமியிலே இப்படியானவர் களும்தான் வாழ்ந்து வருகின்றனர் என அந்தக்கணத்தில் நெஞ்சில் நினைத்துக் கொண்டேன்.
மல்லிகை தொடர்ந்து இத்தனை ஆணி டுக் காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது!’ எனப் பத்திரிகை களிலும் மேடைகளிலும் வியந்து பாராட்டும் பாராட்டுக்கள் இன்று பரம்ப 65 இடம்பெற்று வருகின்றன. இதைக் கேட்கும்போது, வாசிக்கும்போது மன நிறைவு ஏற்படும் அதேசமயம் மல்லிகை யின் வேருக்கு அடிப்பசளையிட்டு நீர்வார்த்து மனநிறைவு கொண்ட இத்
kurgola ང་། །

Page 24
தகைய பெரும் மனிதர்களின் செய லூக்கம் மிக்க ஆதரவுச் செயல் களையும் அடிமனதில் நினைத்துப் பார்த்து அவர்களது நாமத்தை நாவால் இன்றைக்கும் மெல்ல உச்சரித்துக் கொள்ளுகின்றேன்.
நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் தூண்டில் கேள்வி பதிலில் ஒரு கேள்விக்கு இப் படியாகப் பதில் சொன்னதாக ஞாபகம்.
இந்தக் கேள்வி பதில் பகுதியைப் படித்துப் பார்த்து ரசித்துச் சுவைத்த அப்பொழுது யாழ். பல்கலைக்கழக உப வேந்தராகக் கடமை புரிந்த பேராசான் வித்தியானந்தன் ஒருநாள் யாழ்ப்பாணம் பூபால சிங்கம் புத் தகசாலையில் எண் னைச் சந்தித்த சமயம் புன்
முறுவலுடன் என்னை நேரடியாகவே
புகழ்ந்து பாராட்டினார்.
யாழ்ப்பாணத்தான் என்பவன்
அப்படியொன்றும் இலேசுப்பட்டதொரு பிறவியல்ல. அவன் அடிப்படையில் சிவ பெருமானைப் போன்றவன். தன்னை நெஞ்சுருகத் தொழுது சேவிக்கும் பரம பக்தனைப் பல்வேறு வழிகளில் கடைசி வரையும் சோதனை செய்து பார்த்து விடும் சிவன், வதைத்துக் கொடுமைப் படுத்திவிட்டு, இவைகள் அனைத்திலி ருந்தும் தேறிவிடும் பக்தனைக் கடைசி யில் ஆட்கொண்டுவிட்டு, அவனை விழித்து ‘புக்தா, உன் பக்திக்கு மெச்சினேன். என்ன வரமோ கேள்!” எனக் கடைசியில் மனமுவந்து ஆசீர் வதித்துவிட்டு, பக்தனுக்கு அருள் பாலிப்பாரோ அப்படிப்பட்டவன்தான்
தான் யாழ்ப்பாணத்தானும் தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாடுகள் மீதும் அயராத பக்தியும் ஈடுபாடும் கொண்டவர்களைக் கடைசிவரையிலும் சோதனை மேல் சோதனை செய்து பார்த்து விடுவான். அவன் அத்தனை சோதனைகளிலு மிருந்து தேறிவிட்டால் முடிவில் அவனுக்குக் கைலாசம்தான்! இதுதான் உண்மையான யாழ்ப்பாணத்தானின் பரம்பரைக் குணம் என அந்தக் கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தேன்.
இதைப் படித்துப் பார்த்துவிட்டு, அந்த உட்கருத்தை ரசித்து மகிழ்ந்த வித்தி அவர்கள் என்னைப் பகிரங்க மாகவே பாராட்டினார்.
ஒருகாலத்தில் எனது தகப்பனாரின் இளமைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தகரக் கொட்டகை என அந்தக் காலத் தில் அழைக்கப்பட்டுப் பின்னர் சினிமாக் கலாசாரம் உட்புகுந்த வேளையில் வின்ஸர் தியேட்டர் என நாமகரணம் சூட்டப்பட்ட பழைய கூத்துக் கொட்டகை யில் தமிழகத்திலிருந்து வந்த பிரபல மேடை நாடக நடிகர்களெல்லாம் வந்து வந்து கூத்தாடிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் பிரதிபலிப்பாகக் கூத்துக் கொட்பகை பெரிய துரைராஜா என்ற பெயரும் அந்தக் காலத்தில் ரொம்ப ரொம்பப் பிரபலமாகப் புழங்கி வந்தது. அவரது கூத்து நிகழ்வுகளுக்கெல்லாம் எனது தகப்பனாரும் இடையிடையே உதவி ஒத்தாசைகள் செய்திருக் கின்றார்.
வாய்ப் பேச்சுச் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்தத் தகவல்களை வாயோ
யாழ்ப்பாணத்தான். அதனடிப்படையாகத்
5 gigs M

தியாக அவர் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பிரபல நாடக மேதைகளான கிட்டப்பா, சுந்தராம்பாள் போன்ற கூத்து மேடை நடிகர்களெல்லாம் யாழ்ப்பாணம் வந்து நமது மண்ணின் கலா ரசிகர் களால் அங்கீகரித்து மெச்சப்பட்டதன் பின்னர்தான் தமிழகத்தில் அவர்களது மேடை நடிப்பிற்குத் தனிப் பிரபல்யம் கிடைக்கப்பெற்றது என அந்தக்காலத்தி லேயே இவர்களுடன் ஒரே மேடையில் நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்த நமது மண்ணின் பிரபல நகைச்சுவை நடிகர் சொல்லிப் பெருமைப்பட்டதை அவரது வாய்மொழி மூலம் நான் நேரில் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தேன்.
எனவே என்னதான் என்னைப் பற்றி யும் மல்லிகை பற்றியும் குறை குற்றங் கள் சொல்லப்பட்ட போதிலும் கூட, நான் நிமிர்ந்து நின்றுகொண்டு காரிய மாற்றப் பழகிக்கொண்டேன்.
நானுமொரு யாழ்ப்பானியல்லவா!
எனவே இதன் அடிப்படையான யுக்தி எனக்கு விளங்கியிருந்தது.
ஒன்றை வெகு தெளிவாகவே நான் புரிந்து வைத்திருந்தேன். நான் இப்படி யான வைதீக வெறியர்கள் வியந்து கொண்டாடிப் போற்றப்படும் உயர்குடி மட்டத்தில் பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்தவனல்ல. அடுத்து முறையான கல்வியை வரண்முறையாகக் கற்றுத் தேறியவனுமல்ல.
என்னுடைய பாஷையில் சொல்லப் போனால், நான் சாதாரணன்! - மிக மிகச் சாதாரணன்!
ஆனால், ஆசாதாரண நெஞ்சுரங் கொண்டவன்!
எனவேதான் இத்தகைய அடிநிலை யைப் பெயர்க்க வைக்கக் கூடிய கடுந் தாக்குதல்களுக்கெல்லாம் இதுவரையும் முகங்கொடுத்து வந்திருக்கிறேன்.
புதிதாக மல்லிகைக் காரியாலயம் ஸ்தாபிதமான அந்தக் குச்சொழுங்கைக் கூடாக, யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபல மான கல்விமான்கள் எனக் கருதப்பட்ட பலர் என்னைத் தேடி வந்து வந்து சென்றிருக்கின்றனர்.
பேராசிரியர் வித்தி வந்திருக்கிறார். கைலாசபதி அவர்கள் யாழ் வளாகத் தலைவராக இருந்த சமயம் பல தடவை கள் வந்திருக்கிறார். ஒருதடவை அவர் மோட்டார் சைக் கிளில் கட்டுரை கொண்டுவந்து தந்த சமயம் அவர் சொல்லிச் சிரித்தது இன்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது.
*ஜீவா, உங்களைப் போன்றவர் கள் நான் தினகரன் ஆசிரியர் பீடத்தில் இருந்த சமயம் ஆசிரியர் என விலாச மிட்டு எனக்கு விஷயதானங்களை என் மூலம் தினகரனுக்கு அனுப்பி வைப்பார் கள். அது வெளிவரும் . இன்று வேடிக்கை என்னவென்றால் அதே தின கரன் பிரதம ஆசிரியர் பீடத்தில் இருந்த நான், உன்னைத் தேடி, கட்டுரையுடன் மல்லிகைக் கந்தோருக்கு வந்திருக் கிறேன். இது உனக்கு விசித்திரமாகத் தெரியவில்லையா?” என வேடிக்கை யாகச் சொல்லிச் சிரித்தார்.
நானும் அவரது நகைச்சுவையில் பங்குகொணி டு சிரித்து விட்டுச்

Page 25
சொன்னேன், ‘இதுதான் காலத்தின் கோலம். வண்டியும் ஒருநாள் ஒடத்தில் ஏறும். ஒடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். இது நமது காலம். சிறறிலக்கிய ஏடொன்றின் காலம் இது. இதற்காத் தானே இத்தனை காலமும் பாடுபட்டு
வந்திருக்கிறோம். ஏன் இதை இப்படிச்
சொன்னால் என்ன? உங்களைத் தேடி நீங்களே இங்கு வந்திருக்கிறீர் எனவும் சொல்லலாம் தானே?’ எனக் கூறி வைத்தேன்.
இதன் உட்கருத்தைப் புரிந்து கொண்ட அவர் திரும்பிச் சென்று விட்டார். அவர் அன்று வந்து சென்றது தான் கடைசித் தடவை. இரண்டு வாரங்களுக்குள் அவர் சடுதியாக மறைந்து விட்டார்.
பேராசிரியர் சிவத்தம்பி வருவார். அவர் வந்தால் பக்கத்தேயுள்ள தாமோ தர விலாஸ் கபேக்கு இருவரும் உரை யாடிக் கொண்டே கோப்பி அருந்தச் செல்வோம்.
வாரத்தில் பல நாட்கள் ஒழுங்காக வருபவர் ரசிகமணி கனகசெந்திநாதன் தான். அவர் வந்தால் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம்.
இந்த குறுஒழுங்கையில் பக்கம் பக்கமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் இருந்தார். கள்ளச் சாராயம் விற்பனை செய்வது தான் அவரது சீவனோபாயம். ஆனால் மிக மிக அருமையான பிறவி. நண்பர் ஏ.ஜே.கனகரெட்னா வந்தால் அவர் கடைக்குள் நுழைந்து தாக, சாந்தி செய்த பின்னர்தான் மல்லிகைக்குள்
நுழைவார். அந்தத் திடீர் உத்வேகத்தில் மல்லிகையின் அச்சுப் படிகளை பிழை திருத்தம் செய்து தரத் தவறுவதில்லை.
எனது பிறந்த தின நாளன்று ஒரு நாள் ஈழநாடு திருச்செல்வம் தோழர் டானியலை அழைத்துக் கொண்டு, எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரி விக்க வந்து சென்றார். நமது வரதர் இடைக்கிடையே வருவார். ஒருதடவை ஊர் வந்த சமயம் இத்தனை இலக்கிய விரோத அபிப்பிராய சூழ்நிலையிலும் எழுத்தாளர் எஸ்.பொ. மல்லிகையைத் தேடி வந்தார்.
வடபகுதியில் பரந்து வாழும் எழுத் தாளர்கள் யாழ்ப்பாண நகருக்கு அலுவல் நிமித்தமாக வரக் கூடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் மல்லிகைக்கு ஒருதடவை வந்து செல்லத் தவற மாட் டார்கள். இப்படித் தவறாமல் வந்து போகிறவர்களில் நண்பர் தெணி யானைக் குறிப்பிடலாம். இலக்கிய நண்பர்கள் நு.மான், மெளனகுரு, கிருஷ்ணராஜா, சண்முகதாஸ், சிவச் சந்திரன், சிவலிங்கராஜா போன்றவர் கள் இடையிடையே வந்து போவார்
கள். சிலவேளைகளில் ஏ.ரி.பொன்னுத்
துரை “ போன்றவர்களும் வந்துபோன
ஞாபகம். நண்பர் டிவகலாலாவும் வந்திருந்தார்.
கவிஞர் புதுவை இரத்தினதுரை
வந்தாலே அவருடன் சேர்த்துக் கவிக் கோலாகலமும் உடன் வந்து கல கலப்பை ஊட்டும். தொடர்ந்து கருணா கரன் வருவார் என நம்பியிருக்கலாம். சபா ஜெயராசா அடிக்கடி விஜயம் செய்யமாட்டார். அவர் வந்தாரென்றால்
* "*

நிச்சயம் அடுத்த மாத மல்லிகைக்கான கட்டுரை ஒன்று அவரது கைவசம் இருக்கும். முருகையன் இரண்டொரு தடவைகள் வந்து போனதாக ஞாபகம். ‘நந்தி மல்லிகைக்காகவே தொடர்ந்து எழுதி வந்தவர். ஏதாவது நிகழ்ச்சி
நடைபெற்றால் கண்டிப்பாக அவரை
மல்லிகையில் காணலாம்.
கருத்து முரண்பாடுகளால் சற்று எட்ட நின்ற செங்கை ஆழியான் அந்தக் கால கட்டத்தில் மல் லி கையுடன் நெருங்கி வரக் காணப்பட்டார்.
கொழும்பிலிருந்து லீவில் ஊர் வந்து போகும் இலக்கிய நெஞ்சங்கள் அந்த வாரம் கண்டிப்பாக மல்லிகைக் கும் விஜயம் செய்யத் தவறுவதே யில்லை.
இன்று நாற்பதாவது ஆண்டை நெருங்கி, அதன் ஞாபகார்த்தமாக
மலரொன்றைத் தயாரித்துக் கொண்டி
ருக்கும் இந்த வேளையில் இவர்கள் அத்தனை பேர்களையும் நெஞ்சார்ந்த நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
இன்று நான் வாழும் காலத்தி லேயே பல ஊடகங்களின் ஊடாக என்னைப் பற்றியும் மல்லிகையின் கடந்த காலச் சாதனைகள் பற்றியும் விதந்து விதந்து பேசப்படுகின்றன.
மனசார, நெஞ்ச நெகிழ்ச்சியுடன் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை எழுத்தில் என் கைப்படப் பதிவு செய்து கொள்ளுகின்றேன்.
மல்லிகையில் இந்த தொடர் வரவுக் கும் ஈழத்து இலக் கிய
வளர்ச்சியில் எனது பங்குப் பணியைச் சாதித்து நிகழ்த்தியதற்கு நான் மேலே குறிப்பிட்ட நண்பர்கள்தான் இதற்கு முழு முதல் காரண கர்த்தாக்களாகும். இவர்கள் மாத்திரமல்ல, என்னைத் திட்டித் திட்டியே பெரும்பான்மை மக்கள் மத்தியில் எனது நாமத்திற்கு ஓர் எதிர் பார்ப்பை நல்கிய தோன்றாத் துணை நல்கிய நண்பர்களுக்கும் நான் கடமைப் பட்டவனாகின்றேன்.
அவர்களினது பாதங்களில் எனது எழுத்து மலர்களை இதன் மூலம் அர்ப்பணிக்கின்றேன்.
மல்லிகைக் காரியாலயத்திற்கு நேர் முன்னால் நீண்ட நெடிய மல்லி கைப் பந்தலைக் கொண்ட வீடொன்று இருந்தது. அதன் உரிமையாளர் முரு கேசு என்பவர் காரை நகரைப் பிறப் பிடமாகக் கொண்ட அவர் என் மீதும் எனது இலக்கிய ஈடுபாடுகள் மீதும் தனி அபிமானம் கொண்டவர். என் மீது தனி யானதொரு மதிப்பு வைத்திருந்தவர்.
சில சமயங்களில் மல்லிகைக் காரி யாலயத்திற்குள்ளேயே இடையிடையே சில இலக்கியச் சந்திப்புக்களை நிகழ்த்துவது எனது வழக்கமாக அமைந் திருந்தது.
கூட்ட நெரிசலையும் இட நெருக் கடியையும் தொடர்ந்து அவதானித்து வந்த பெரியவர் முருகேசு ஒருநாள் என்னைக் கண்டு, தனது மல்லிகைப் பந்தலின் கீழேயே வெகு தாரளமாக இலக்கியக் கூட்டங்களை இனிமேல் நடத்தலாம் எனக் கேட்டுக்கொண்டார். (மீண்டும் சந்திக்கிறேன்)
upg:GSG985

Page 26
தெளிவு
2-aroLouis 2łmyś Plട്ടത്? பெட்டியின் அrைy%ஆக்குள் Plവg G9ത്തമ്പ്ര???
2-loon осогу32м வைத்திருக்கும் ivതry( 9-ത്തമ്പ്
கலிவெடுத்திருக்கி7ேள் EBEspawory G് رۃaترکمل
9-holon 2-liunilio Gha-niveV
93csstellie Glitaross Plar 9turn அடித்துவிட்டார்
இப்போதும்
2-arololev 2łmyś அஞ்சrைyப் பெட்டி இருக்கிரது இன்றும் 9-houon
Svevory?, not تهguه و2
Lorrory32. வைக்கிyாள்
2 artTV 232 Púur2rtới SúaTov.
- குறிஞ்சிஇளந்தென்றல்
ம3ை-48)

4. தேவன் - யாழ்ப்பாணம்
ஈழத்து இலக்கிய வரலாற்றில் தேவன் - யாழ்ப்பாணம் என்ற எழுத்தாளனுக்குரிய இடத்தினை மதிப்பிட்டு நிறுவுகின்ற ஒரு தேவை இருப்பதை எவரும் மறுக்க முடியாது. இலக்கியத்துறையில் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்,நாடகாசிரியர், விஞ்ஞானக் கட்டுரையாளர் எனப் பல பரிமாணங்கள் இருப்பதுபோல, சமூகமட்டத்தில் பேச்சாளர், நாடக இயக்குனர், நாடகத் தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், அறிவிப்பாளர், ஆசிரியர் எனப் பல பரிமாணங்கள் தேவன் யாழ்ப்பாணத்திற்குள்ளன. அவர் பேச்சிலும் எழுத்திலும் தனித்துவம் இருந்தமையால் அவர் பிரச்சினைக்குரியவராகத் கணிக்கப்பட்டார். தான் வரித்துக்கொண்ட கருத்துக்களையும் கொள்கைகளையும் துணிந்து எடுத்துக் கூற அவர் எப்பொழுதும் தயங்கியவரல்ல. அதன் காரணமாக ஆய்வாளர்களின் மதிப்புரை எல்லைகளுள் அவரால் அனுசரித்துப் போகமுடியவில்லை. படைப்புச் செருக்கு அவரிடம் நிறையவே இருந்தது என்பதை நான் நன்கறிவேன்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியராக தேவன் விளங்கினார். நான் அங்கு கல்வி கற்ற காலத்தில் அவர் அங்கு
பணியாற்றினார். அவர் இயக்கிய கூடப் பிறந்த குற்றம்’ என்ற நாடகத்தில் கூடப்பிறந்தவனாகப் பாத்திரம் ஏற்றுநடித்தவன் என்ற வகையில் அவர் படைப்புக்களில் காலூன்றி வளர்ந்தவன் என்ற வகையிலும் அவரை நன்கறிவேன். பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, து. வைத்தி லிங்கம், தபாலதிபர் சுரேந்திரன், க.பரமேஸ் வரன் என்போரேல்லாம் அவரிடம் நாடகம் பயின்றவர்கள். நடித்தவர்
கள். தேவன் - யாழ்ப்பாணத் திடம் நிறையவே சுயதெளி வோடு கூடிய தன்னம் பிக்கையும் படைப்புச்
செருக்கும் இருந் r s
துள்ளன. ཉོ) 27.09.1924இல் لیکم
பிறந்த இளையப்பா تم
ப  ைட ப் ப ா ஸ்ரி ,
மகாதேவா எனும் தேவன் என்ற முப்பத்தெட்டு நீண்ட ஆண்டுகள் பணியாற்றியவர். தனது ஐம்பத் 1982இல் ஆசிரியப் பணியிலிருந்து ஒய்வு பத்தொன்பது வயதுகளில் லண்டன் மற்றிக்
49 böАЈазбо8
ஆ சி ரி ய ர |ா க ப் தெட்டாவது வயதில் பெற்றார். தனது

Page 27
குலேசன் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் 1944 ஜனவரி 31இல் உடுவில் மான்ஸ் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து கொண்டார். அங்கிருந்து மஹரகம ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிக் குச் சென்று பயிற்சி பெற்ற விஞ்ஞான ஆசிரியராகத்திரும்பிவந்து உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஆசிரியப் பணியை ஏற்றார். அங்கு அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியாது போனது.
“பல்லுடைக்கும் தமிழ் என்று பண்டிதத் தமிழில் எழுதியவரை சஞ்சிகையில் சாடியதால் அருமையான ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குக் கிடைத்தார். உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி யாற்றிக் கொண்டிருந்த அவர் ஆண்டிற் கொரு முறை வெளிவரும் கல்லூரிச் சஞ்சிகையை வெளியிட்டார். அதே பாடசாலையில் கற்பித்துக் கொண்டி ருந்த இன்னொரு ஆசிரியர் எழுதிய ஆக்கத்தை, வெளியீட்டாசிரியர் குறிப் பில் வாய்க்குள்நுழையாத அவர் தமிழ் நடையைக் கிண்டல் செய்துவிட்ட தால் அது விரோதமாக வளர்ந்து வேறொரு பாடசாலைக்கு அவர் போக வேண்டியநிலை ஏற்பட்டது.” (ஆதாரம் - ஈ.கே.ஆர். ஈழநாடு 26.9.1982) இருபத் தாறு வருடங்கள் அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி யாற்றினார்.
அவர் அங்கு தன் தனித்துவத்தை யும் முக்கியத்துவத்தையும் தாபித்துக் கொள்வதற்கு அவர் திறனை நன்கு உணர்ந்து அதிபர் வி.மு.ஆசைப்பிள்ளை வழங்கிய சுதந்திரமும் கெளரவமும் கனமாக அமைந்தன. எந்தவொரு
Daar
:غب.ت
கல்லூரி விழாவும் தேவன் அறிவிப்பாள ராகவும் வழிகாட்டியாகவும் இல்லாது நடந்தேறியதில்லை. ஸ்கொடா காரில் தேவன் வருவார். அந்தக் கார் கல்லூரிக் குள் நுழைந்ததும் கல்லூரிகளை கட்டி விடும். தேவன் யாழ்ப்பாணம் அவர்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளராக விளங் கினார். அவரின் ஆங்கில அறிவும் தமிழ றிவும் மிகமிக உச்சமாகவிருந்தன. எப் பிரமுகர்கள் யாழ்ப்பாணம் வந்தாலும் அவரின் சொற்பெருக்கினைத் தமிழில் மொழிபெயர்ப்பதும், தமிழ்ப் பேச் சினை ஆங்கிலத்தில் கணிரென மொழி மாற்றம் செய்வதும் அவருக்குக் கை வந்த கலை.
தேவன் - யாழ்ப்பாணத்தின் எழுத் துலக வாழ்க்கை 1944ஆம் ஆண்டளவில் ஆரம்பமாகியது. அவர் ஆசிரியத் தொழிலில் புகுந்ததும் ஒருநாவலையும் ஒரு மொழிபெயர்ப்பு நாவலையும் எழுதி முடித்தார். தேவனின் எழுத் துலக நுழைவு நாவலாகத்தான் அமைந் தது. பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுகதைகளை எழுதிய பின்னரே நாவல் துறையில் புகுந்துள்ளனர். அதற்கு மாறாக தேவன் தன் பரீட் சார்த்த முறையில் கன்னிப் படைப்பாக ஒரு நாவலையே ஆக்கினார். அவர் முதலில் எழுதிய நாவல் "வாடிய மலர்கள்’ என்பதாகும். தான் ஏன் எழுத்துலகிற்கு வந்தாரென அவர் கூறும் விளக்கம் முக்கியமானது.
“எனக்குத் தெரியாதது எனக்குப் பிடிக்காதது எனச் சில விடயங்கள் உள்ளன. வேறு சிலவற்றினைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறேன். இன்னும் சிலவற்றினைப் பற்றி அறிய
a

ஆவலாகவுள்ளேன். தெரியாததைப் பற்றிப் படிக்கவும் தெரிந்தவர்களிடம் கேட்டறியவும் நான் பின்நிற்பதில்லை. பிறருக்குச் சொல்வதற் கென்றே என்னிடம் விசயங்கள் நிறைய விருந்தன. அவற்றைப் பற்றிய அறிவு
ஆகவே
விசாலமாகிக் கொண்டு வந்ததுடன்
அவற்றின் எண்ணிக்கையும் வரவர அதிகரிக்கலாயிற்று. மனிதர்களின்
பலதரப்பட்ட சகவாசத்தாலும் அவர்களுக்குகந்த விஷயங்களில் ஈடு பட்டுப் பகிர்ந்து உறவை வலுப் படுத்துவது எனக்குச் சிரமமாகவிருக்க வில்லை. எனக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்குச் சொல்வது எதையும் என் ஞாபகத்தில் நன்கு பதித்துக் கொள்ள இலகுவான முறை என்பது என் அனுபவம்.” (சுதந்திரன், 30.08.1964)
அவர் மேலும், “எனக்குத் தெரியா ததைத் தெரியாது என்கிறேன். தெரிந் ததைத் சொல்வதற்கு ஆட்களைத் தேடுகின்றேன்." என்கிறார். தேவ னின் படைப்பிலக்கிய நெஞ்சம் இவ் வாறு வெளிப்படுகின்றது. “ஆகவே சொல்வதற்கு நிறையவிருந்து அவை நல்லவையாகவும் அமைந்தமையால் அதற்கு ஏற்ற தேடிய முயற்சியே நான் எழுத ஆரம்பித்த கதை. ஆகவே 1944 என்னால் தமிழுக்கு ஒரு விபத்து ஏற்படவில்லை. அந்தச் சம்பவத்திற்கு வேண்டிய சூழ்நிலை என் பெற்றாராலும் கல்வியினாலும்
உருவம்
போதித்த ஆசிரியர்களினாலும் படிப் படியாக உருவாக்கப்பட்டது.” என் பதை தேவன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். (சுதந்திரன் மேற்படி)
தேவன் - யாழ்ப்பாணம் என்ற புனைப்பெயரை அவர் தாங்கியமைக் குக் காரணம் எதுவும் பெரிதாகவில்லை. மகாதேவா என்ற தனது பெயரின் இறுதிப் பெயரை தனது புனைப் பெயராக்கியப்போது, அதே பெயரில் தமிழகத்தில் ஆனந்தவிகடன் ஆசிரியர் தேவன் எழுதி வருவது மனதில் உறைத்த தன்மையால் தன் புனைப் பெயருடன் யாழ்ப்பாணம் என்ற ஊர் பெயரையும் சேர்த்துக் கொண்டார். ஆனந்தவிகடன் தேவன் மீது தேவன் - யாழ்ப்பாணத்திற்கு அளவிட முடியாத பற்றுதல் இருந்துள்ளது. அதனால்தான் தான் எழுதிய "கேட்டதும் நடந்ததும்" என்ற நாவலிற்கு ஆனந்த விகடன் தேவனிடமிருந்து ஒரு முன்னுரை பெற்றுள்ளார். தேவன் - யாழ்ப்பாணம் அவர்கள் வேறு சில புனைப் பெயர்களிலும் தம் எழுத்துக்களைத் தந்துள்ளார் என அறியப்படுகின்றது. LD5n Göt என்ற புனைப்பெயரில் இளம் பிறை" சஞ்சிகையில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தேவன் ஆக்கிய நூல்கள் என்று பார்க்கும்போது அவர் எழுதிய 'வாடிய "கேட்டதும் நடந்ததும்" என்பனவாம். இன்னொன்று அவன்
மலர்கள்",
சுற்றவாளி என்ற குறுநாவலாகும்.
‘மணிபல்லவம்’ என்ற இன்னொரு ஆங்கில நாவலையும் தமிழாக்கம் செய்துள்ளார். (புதையல் தீவு) ஸ்ரிவின் சனின் புகழ்பெற்ற நாவல் மணி பல்லவம் என்ற பெயரில் தமிழாக்கம் பெற்றது. இந்த ஆங்கில நாவல் அக்கால கட்டத்தில் சிரேஷ்ட தராதரப் பத்திர
51
të vegla

Page 28
விளங்கி
வகுப்பின் பாடநூலாக புள்ளது.
வாடிய மலர்கள், மணிபல்லவம் ஆகிய இரண்டு நூல்களும் தமிழ் நாட்டில் "சுதர்சன் காரியாலயம்" என்ற நிறுவனம் அச்சிட்டுப் பிரசுரித்தது. "யுத்தக் காலத்தில் ஏராளமான தமிழ் நூல்கள் வெளிவந்த காலம். இங்கிருந்து கேரளாவில் குடியேறி காரியாலயம் என்ற பிரசுரநிலையத்தை நிறுவியவர் என் இலக்கிய ஈடு பாட்டினைக் கண்டு 'புதையல் தீவு என்ற நாவலை மொழிபெயர்க்கும்படி பணித்ததோடு என் கைவசமிருந்த 'வாடிய மலர்கள்’ என்ற பரீட்சார்த்த
சுதர்சன்
நாவலையும் எடுத்துச் சென்று பிர
சுரித்தார்” என தனது நூல் அச்சில் வந்த கதையைத் தேவன் விவேகியில் எடுத்துக் கூறியுள்ளார். (விவேகி - 01.10.1967) மணிபல்லவம் இரண்டாம் பதிப்பினைக் கண்டது.
"கேட்டதும் நடந்ததும்" என்ற நாவல் ஈழகேசரியில் தொடர்நவீனமாக வெளிவந்தது. ஈழகேசரிக்கு அச்சுக் கோர்க்கும் போதே அதனை நூலாக் கத்திற்கு ஏற்ற விதமாக அச்சுக் கோர்த்தனர். அதனால் பத்திரிகையில் வெளிவரும் அத்தியாயங்களும் உடனுக் குடன் நூல் வடிவத்திற்கும் அச்சிடப் பட்டது என அறியவருகின்றது. "ஈழகேசரியில் கேட்டதும் நடந்ததும் வெளிவந்து கொண்டிருந்தபோது மிகவும் சலுகையான சுருக்கமான செலவில் மேலதிகப் பிரதிகளை அச்சிட்டுத்தர திரு. இராஜஅரிய ரெத்தினத்தின் அறிமுகத்தினாலும் என்
மீதிருந்த அபிமானத்தினாலும் திரு. அப்பாக்குட்டி முன்வந்தார். அதற்கான பணம் கொஞ்சமாயினும் என்னுடை யது" என்கிறார் தேவன். (விவேகி மேற்படி)
தேவன் - யாழ்ப்பாணத்தின் இன் னொரு வெளிவந்த நூல் ‘வான வெளியிலே’ என்ற விஞ்ஞானக் கட்டுத் தொகுதியாகும். தமிழுக்குப் புதிதான துறையான வானவெளிப்பயணம் டற்றி தேவன் ஈழகேசரியில் எழுதிய கட்டுரை களின் தொகுப்பு இந்நூலாகும். இதனை சுப்பிரமணியம் புத்தகசாலை அதிபர் திரு. குமாரசுவாமி அவர்கள் வெளியிட்டார். தேவனுக்கு எதனை ஏற்றுக் கொள்ளும் பக்கவம் இருந்தது. வான வெளியிலே விற்பனையில் படு தோல்வி கண்டது. அதனை, “ஆசை
யும் நகைச்சுவையோடு
யோடு மக்கள் வாங்கிப் படிப்பார்கள் என்று நான் தெரியாத் தனமாக்கூட கணக்கிட்டுப் போட்ட நூல் அது ஒன்றே. நானும் குமாரசுவாமியும் ஏமாந்தோம் என்பதுதான் உண்மை’ என்கிறார். ஈழத்து நூல்கள் வாசகர் களால் விற்பனை ரீதியில் வரவேற்கப் படுவதில்லை. என்பது அவர் கருத்து. "ஈழத்தில் வெளிவந்த நூல்களில் புத்தக நிலையங்கள் மூலமாக விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையைக் கணக் கெடுக்க முடிந்தால் நாங்கள் - இரண் டாவது பிரமாக்கள் - உலகை என்ன கலக்குக் கலக்குகிறோம் என்பது புல னாகும்” என்கிறார் தேவன். (விவேகி - மேற்படி)
نباتات تاتهاU

தேவன் யாழ்ப்பாணத்தின் நூலுருப் நூல்
"தென்னவன் பிமராயன்' என்பதாகும்.
பெற்ற நாடக
இதனை விவேகியின் தாபகரான அமரர் மு.வி.ஆசீர்வாதம் அச்சுவாகன மேற்றி வெளியிட்டார். "பிற மதத்தவ ரான அவர் இந்து மதஞானி ஒருவரின் வாழ்க்கை நாடகம் வெளியிட்டது எவ்வளவு பெரிய காரியம்” என தேவன் வியப்படைந்தார். "இந்த நாடகத்தை மேடையேற்றும் எண்ணம் எனக்கு இருக்கவில்லையென்பதனாலேயே அதை வெளியிட வேண்டுமென விரும் பினேன். அந்த விருப்பத்தை நிறை வேற்றிய திரு. ஆசீர்வாதம் அதை நஷ்டக் கணக்கில் எழுதியிருப்பார் என்றே நினைக்கிறேன்” என்று தேவன் இரங்கத் தவறவில்லை. (விவேகி - மேற்படி)
தேவனின் எழுத்துலகில் வெளி வந்த அவரது குறுநாவல் அவன் சுற்ற வாளி என்பதாகும். விவேகியின் இணையாசிரியர்களாகச் செம்பியன் செல்வனும் செங்கை ஆழியானும் விளங்கினர். அவ்வேளை எழுத்தாளர் களிடம் நூல் பிறந்த கதை பற்றி எழுதித் தருமாறு வேண்டுகோள் விடுத்த வேளையில் தேவன் அத்தொடரில் எழுதினார். அதில் “ஒரு நல்ல மர்மக் கதை இன்றுவரை என் வீட்டில் உறங்கு கிறது. என் பணத்தைச் செலவு செய்து வெளியிட வேண்டிய அளவு தரக்குறை வானதுமல்ல" என குறித்திருந்தார். அந்தக் குறுநாவலை தேவனிடமிருந்து வாங்கி 'விவேகி'யின் ஒரே இதழில் முழுமையாக வெளியிட்டவர் செம்பி யன் செல்வன் ஆவார். அதேவேளை
அக்குறுநாவலை நூலுருவாக்கி தேவனிடம் வழங்கினோம்.
எனவே தேவன் - யாழ்ப்பாணம் ஆக்கிய படைப்புகளில் வாடிய மலர்கள், கேட்டதும் நடந்ததும், மணிபல்லவம், அவன் சுற்றவாளி, வானவெளியிலே, தென்னவன் பிரம ராயன் ஆகிய ஆறு நூல்கள் வெளி வந்திருக்கின்றன. தேவன் -
பாணம் சிறுகதைகள் எட்டாவது நூலாகும்.
யாழ்ப்
இலக்கியம் பற்றிய தேவனின் கருத்துக்கள் எவையெனப் பார்க்கில் அவரின் படைப்புக்கள் எவ்வளவுதூரம் அவற்றினைப் பிரதி வெனப் புரிந்து கொள்ளலாம். கருவைப்
பலிக்கின்றன
படைப்பாளி கையாளும்போது உருவ அமைப்பின் பொருத்தம் பற்றி நன்கு சிந்திக்க வேண்டுமெனத் தேவன் கருதினார். அதனால்தான் உருவ அமைப்பின் பொருத்தம் பற்றிய பரிசோதனைகள்தான் தன் ஆரம்ப எழுத்துக்கள் என்கிறார். மனிதனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளை, கோட்பாடுகளை, மனித மேம்பாட்டிற் கான சிந்தனைகளை தன் படைப்புக் களில் படைப்பாளி பெய்தெழுத வேண்டுமெனத் தேவன் அவாவு கிறார். வெறும் படப்பிடிப்பு வேலை யல்லவே எழுத்தாளனின் தொழில் என்பது தேவனின் கருத்து. மக்களின் பேச்சு மொழியை அவ்வாறே பயன் படுத்த தேவன் விரும்பவில்லை. கேட் கிற பேச்சை வடிகட்டித் துப்பரவாக்கி செய்துதான் சம்பாஷணையாக்கத் தேவன் விரும்பினார்.
க*ருகை

Page 29
தேவன் யாழ்ப்பாணத்தின் ‘கேட்டதும் நடந்ததும் நாவல் ஈழ கேசரியில் தொடராக வெளிவந்துநூலு ருப்பெற்றதென முன்னர் குறிப்பிட் டேன். ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் 148 வருடங்கள் கடந்து விட்டன. ஈழத்துத் தமிழ் நாவலிலக் கியத்தின் ஆரம்பம் 1856இல் "காவலப்பன் கதை" என்ற நூலுடன் ஆரம்பமாகின்றது. 1856இலிருந்து 1940 வரையிலான என்பத்திநான்கு வருட இடைவெளியில் ஈழத்தில் ஏறத்தாழ ஐம்பது நாவல்கள் வெளிவந்திருக் கின்றன. இந்த ஆரம்ப நாவல்கள் இட்ட நாவல் மனையின் அத்தி வாரத்தில் 1949/50களில் க.சச்சிதானந் தன் (அன்னபூரணி), கசின் (குமாரி ரஞ்சிதம்), சம்பந்தன் (பாசம்), வ.அ. இராசரெத்தினம் (கொழுகொம்பு), தேவன் - யாழ்ப்பாணம் (கேட்டதும் நடந்ததும்) முதலான நவீன வடிவ நாவல்கள் வெளிவந்தன. இவர்களின் பின்னர் இளங்கீரன், செ. கணேச லிங்கன், டானியல், செங்கை ஆழியான் முதலானோர் ஈழத்து நாவலிலக்கியத் தினைப் புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆரம்பநாவல்களுக்கும் இடைப்பட்ட நிலைமாறு காலத்தில் தேவன் - யாழ்ப்பாணத்தின் "கேட்டதும் நடந்ததும் நாவல் வெளிவந்துள்ளது. இது ஒரு பரிசோதனை நாவலே. இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற் பாகம் காது, இரண்டாம் பாகம் கண். மொத்தமாக முப்பத்தொரு அத்தி யாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனிச் சிறுகதைகளாக எண்ணத் தக்க விதத்தில் இந்த நாவலைத் தான்
ஆக்கியுள்ளதாக தேவன் - யாழ்ப் பாணம் குறிப்பிட்டாலும் எல்லா அத்தி
யாயங்களுக்கும் அது பொருந்தாது.
தேவனின் இந்த நாவலிற்கு ஆனந்த விகடன் தேவன் முன்னுரை வழங்கியுள்ளார். பெரிய மனிதர்கள் கெளரவமாக எழுதிவிடும் முன்னுரை போலவே ஆனந்தவிகடன் தேவனின் முன்னுரை அமைந்து விடுகின்றது. நாவலிற்குள் ஆழமாகச் சென்று தக்க தொரு முன்னுரையாக அது அமைந் திருக்கலாமென்ற ஆதங்கம் ஏற்படு கின்றது. எனினும் மிகச்சிறப்பான இடங்களை அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆனந்தவிகடன் தேவன் யாழ்ப்பாணம்
எவ்வாறாயினும்
தேவனின் இந்த நாவலைச் சிலாகித் ஈழத்து நாவலிலக்கி யத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.
துள்ளமை
தேவனின் நாடக உலகப் பணி களைக் கலையுலகம் சரிவர மதிப்பிட வில்லை எனவே படுகின்றது. பல நாட கங்களை எழுதி, இயக்கி மேடையேற்றி ஈழத்தின் நாடகக் கலைக்குத் தேவன் - பணிபுரிந்துள்ளார். நளதமயந்தி, விதி, பத்தினியா? பாவையா?, கூடப்பிறந்த குற்றம், வீரபத்தினி, இரு சகோதரர்கள் முதலான பல நாடகங்களை அவர்
யாழ்ப்பாணம் கற்புக்கனல்,
றபுகக
எழுதி மேடையேற்றியிருக்கின்றார். 1956/65களில் தேவனின் நாடகங்கள் கல்லூரிகள் பலவற்றில் மேடையேறிப் பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருக் கின்றன. 1944இல் உடுவில் மான்ஸ் கல்லூரியில் ஆசிரியரான ஆண்டே அவர் ஒரு நாடகத்தினை எழுதி
ye GS63
-54

மாணவர்களைக் கொண்டு நடிப்பித்து மேடையேற்றியிருக்கின்றார். நவீன அரங்கியல் பற்றிய பரிச்சயம் அக்கால வேளையில் தேவனுக்கு அறிமுகமாகி யிருக்கவில்லை. ஆனால் நவீனநாடகம் பற்றிய செல்நெறி, பார்வையாளரின் புரிந்துணர்வு தேவனுக்கு நல்ல தெளிவான பார்வை
என்பனவற்றில்
யிருந்துள்ளது. அகில இலங்கைக் கலைக் கழக நாடகப் போட்டியில் அவரின் ‘தென்னவன் பிரமராயன்' என்ற எழுத்துரு பெற்றது. தேவனுக்கு மேடைக்குரிய நாடகப் பிரதி எப்பிடியிருக்க வேண்டும், படிப்
பரிசினைப்
பதற்குரியநாடகப்பிரதி எப்பிடியிருக்க வேண்டும் என்பதில் தெளிவான வரை யறை தெரிந்திருந்தது. சமூகத்தினை இரக்கத்தோடு பார்த்து விமர்சிக்கவும்
அதனுாடாக அவர்களுக்கு மேம்
பாடான வழி சுட்டவும் அவருக்குத்
தெரிந்திருந்தது. வெறுமனே யாழ்ப் பாணப் பேச்சு மொழியை அவர் தனது நாடகங்களில் வலிந்து பயன்படுத்த வில்லை. பேச்சு மொழியைச் செம்மைப் படுத்தியே தனது நாடகங்களில் அவர் பயன்படுத்தியுள்ளார்.
தேவன் - யாழ்ப்பாணம் தனது முத்திரையைத் தான் எழுதிய சிறுகதை களிலும் பதித்துள்ளார் என்பேன். அவர் பல சிறுகதைகளை ஆக்கியுள்ள போதிலும் அவற்றினை முற்றாகத்
தேடியெடுக்க முடியவில்லை. எனினும்
அவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழ நாடு, பிரசண்டவிகடன், கலைச்செல்வி முதலான பத்திரிகைகளில் வெளிவந்
துள்ளன. மனச்சாட்சியின் தண்டனை,
பேரில என்ன கிடக்கு?, நேர்வழி, மாமி முதலான கதைகள் சுதந்திரனில் வெளி வந்துள்ளன. இருதாரமணம் என் றொரு சிறுகதை ஈழநாட்டில் வெளி வந்துள்ளது. கொடுத்து வைக்காதவன் என்றொரு கதை கலைச்செல்வியில் பிரசுரமாகியுள்ளது. சத்திய சாதனை என்றொரு சிறுகதை அரசு வெளி யீட்டாளர் வெளியிட்ட காந்தியக் கதைகள் என்ற தொகுதியில் இடம் பிடித்துள்ளது. தேவன் - பாணத்தின் மனச்சாட்சியின்
யாழ்ப்
தண்டனை என்ற சிறுகதை செங்கை ஆழியானால் தொகுத்து வெளியிடப் பட்ட "சுதந்திரன் சிறுகதைகள்’ என்ற பாரிய சிறுகதைத் தொகுதியில் இடம் பிடித்திருக்கின்றது.
பெரிய பணக்காரர் வீட்டில்
மாடாக உழைத்து நேர்மையாக வாழ்ந்த வேலாயுதம் தன் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டபோது தற் கொலை செய்து கொள்கிறானென்பது மனச்சாட்சியின் தண்டனை. இச் சிறுகதையைத் தேவன் - யாழ்ப்பாணம் மிகச் சிறப்பான முறையில் தந்துள்ளார். கொழும்புப் பெரிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளை நகைச்சுவை யோடு விபரித்துள்ளார். யாழ்ப்பாணச் சமூகத்தில் அடக்கியொடுக்கப்பட்ட ஒருவன் ஆலயப் பிரவேசம் குறித்துக் கொள்ளும் அபிப்பிராயமும், பின்னர் பெளத்த மதத்தில் சேரவெடுக்கும் முடி வும் அவர்களைப் பயன்படுத்திய தலை வர்களின் ஏமாற்று என்பனவற்றினை பேரில் என்ன கிடக்கு என்ற சிறுகதை யில் சித்திரிக்கிறார். மாமி என்ற சிறு கதை தேவன் - யாழ்ப்பாணத்தின் ஒரு
55

Page 30
எடுப்பான சிறு கதையாக விளங்கு கின்றது. மாமா பிரமச்சாரி. அவருடன் வாழ்ந்த மருமகன் ஒரு நடனக்காரி மீது மனதைப் பறிகொடுக்கிறான். "சீச்சி விட்டுத் தள்ளு. மேனி மினுக்கியவள். தேவடியாச் சாதி” என்கிறார் மாமா. பிறகு அந்தப் பெண் மாமாவிற்கு மனைவியாகிறாள். பஸ் கொண்டக்டர் ஒருவனின் மனப்போராட்டத்தினை யும் அவன் எவருக்கும் கொடுக்காத சத்திய வாக்கினைக் காப்பாற்றும் உறுதியையும் சத்தியநாதனை என்ற சிறுகதை விபரிக்கின்றது.
தேவன் - யாழ்ப்பாணத்தின் சிறு கதைகள் மொழிநடை எளிமையும் இனிமையும் வாய்ந்தவை. பேச்சு வழக் கினை அவ்வாறே பயன்படுத்த விரும் பாதவர். பயன்படுத்தும்போது அவற் றினைச் சீர்செய்தே எழுதுவார். பாத்தி ரங்களின் உரையாடல்களில் ஒரளவு பேச்சு வழக்கிருந்தாலும் எழுத்தாளன் கூற்றுக்களில் பேச்சு வழக்குப் புகுந்தால் அதனை தேவன் - யாழ்ப்பாணம் தவி ர்த்து விடுவார். அவர் வார்த்தைகளில் கூறுவதானால் “பாத்திரங்களின் சம் எழுத் தாளன் கூற்றுக்களில் “கொச்சை புகுந்
பாஷனைகளுக்கிடையில்
தால் எனக்குக் கசக்கிறது” என்கிறார். தேடலும் ஆளுமையும் கொண்ட படைப்பாளியாக விளங்கும் தேவன் - யாழ்ப்பாணம் தான் கருத்தில் கொண்ட கோட்பாட்டினை நெகிழ்த்தும் இயல் புடையவரல்லர். தான் வரித்துக் கொண்ட இலக்கிய கோட்பாடுகளுக் காக இறுதி வரை குரல் எழுப்பியவர். அவருடைய இலக்கியக் கருத்துக்கள் எனக்கு முற்றாகச் சம்மதமில்லை
யென்றாலும் ஒரு காலகட்டத்தின் இலக்கியக் குரலை அவர் எழுத்துக்களில் தரிசிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
1963களில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகுவதற்கு தேவன் - யாழ்ப்பாணம் முக்கிய காரண ராக விளங்கினார். அதன் தலைவராக பூீரீநிவாசன் வரதர், மு.செல்லையா ஆகியோர் விளங்கியுள்ளனர். அதன் செயலாளராகத் தேவன்- யாழ்ப்பாணம் கடமையாற்றியுள்ளார். கலைத்துறை யில் இருந்த ஈடுபாடு காரணமாச பரமேஸ்வரி என்ற சங்கீத ஆசிரியை யைத் தேவன் விரும்பி மணந்து கொண் டார். மூன்று ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் இவர் பெயர் கூறவுள்ளனர்.
பேராசிரியர் க.கைலாசபதியும் தேவன் - யாழ்ப்பாணமும் இலக்கியக் கருத்தியல்நிலைகளில் முரண்பட்டவர் கள். முன்னவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவராகவும், பின்னர் அதே கல்லூரியின் ஆசிரியராகவும் விளங்கியுள்ளனர். ஒத்த வயதுடைய வர்கள். பேராசிரியர் க.கைலாசபதி மார்க்சிஸ்ட்டாக விளங்கி, தனது இலக் கியக் க்ருத்துக்களை அதனுரடாக நோக் கினார், எழுதினார். தேவன் - யாழ்ப் பாணம் தமிழ்த் தேசியம் என்ற கருத் தியல்நிலையில் நின்று சமூகத்தினையும் இலக்கியத்தினையும் பார்த்தார். இலக் கியக் கருத்துக்களில் முரண்பட்ட இரு வரும், மரணத்தில் ஒருநாள் இடை வெளியில் ஒன்றுபட்டனர். இருவரது இறப்புக்களும் இலக்கியத்தின் இழப்புக் களாகச் சடுதியில் அமைந்து போயின.

ஜேம்சுக்கு உறவென்று சொல்லிக் கொள்ள எவருமில்லை. மலைநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த அவனது குடும்பத்தில் அவன் மூத்தவன். தம்பியர் இருவர். மலை யகத் தமிழர்கள் அங்கு ஒரு சில பகுதிகளில் தொகையாக வாழ்வது, அரசியல் சக்தி யாகப் பரிணமிப்பது, மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு கொள்வது "தேசத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் எனக் கருதிய "தேசபிதா'அவர்களின் வாக்குரிமையில் கைவைத்தார். பின்னர் வந்த புதல்வர்களில் ஒருவர் தேயிலை இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக இருக்கும்வரை மலையகத் தமிழர்களில் கூடுதலாக உள்ள தோட்டத் தொழிலாளர் கள் ஒருசில பிரதேசங்களில் குவிந்திருப்பது தவிர்க்க முடியாததது எனக் கண்டறிந்து கொண்டார். ஆக தேயிலையின் முக்கியத்துவத்தைக் குறைத்து அதற்கு மாற்று வழி யொன்றைத் தேடித் திரிந்த அந்த 'சாணக்கிய அதிபருக்குக் கைகொடுக்க முன் வந்தது சுதந்திர வர்த்தக வலயம்.
குறைந்த விலையில் தொழிலாளர்களின் உழைப்பைப் பெறுவதில் குறியாக விருக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் மற்றும் முதலாளிகளுக்கும் இவ்வலையத்தில் இடமளித்து அங்கு உற்பத்தியாகும் பொருட்களைத் தேயிலைக்குப் பதிலாக ஏற்றுமதி செய்வதன் மூலமாகத் தேயிலையின் முக்கியத்து வத்தைக் குறைத்தால் அதனை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் ஒன்றில் இந்தியா திரும்ப முற்படுவர் அல்லது வேறு தொழில் தேடி பலவிடங்களுக்கும் சிதறிப் போய் விடுவர் என்ற கணக்குப் பிழைத்தது. சுதந்திர வர்த்தக வலையம் எதிர்பார்த்தபடி செயற்படாமற் போனதால் இலங்கையின் ஏற்றுமதியில் தேயிலையின் இடம் முக்கியமானதாகத் தொடர்ந்தும் இருந்து வரலாயிற்று.
இந்நிலையில் 1983 கலவரத்தைத் திட்டமிட்டவர்கள் எதிர்பார்த்தபடி மலைய கத்தவர்களில் ஒரு தொகையினர் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களை நாடியோடினர். இவ்வாறு ஜேம்சின் குடும்பம் கிளிநொச்சியில் குடியேறியது. அங்கு ஒரு வருட முடி விற்குள் தேயிலைச் செடிகளுக்கு உரமாக வேண்டிய ஜேம்சின் பெற்றோர் வன்னி
மண்ணுடன் சங்கடயமாயினர்.
காலிமுகக் கடற்கரையில் ஆயுத மின்றி எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப் பட்டது. உரிமைக்கான பதில் ஆயுதங்கள் மூலம் கொடுக்கப்பட்டது. ஒருமுறை மட்டுமல்ல. முதன்முறை தென்னி லங்கையில் அரசியல்வாதி களின் கையாட்களான ஏவல் பேய்கள் அத னைச் செய்தன. பிரமத

Page 31
பூசாரி அதனைச் சற்றுத் தொலைவில் இருந்து குட்டிப் பூசாரிகள் புடைசூழப் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். இரண்டாவது முறை அந்த மக்களின் பிர தேசத்தில் காவல் பேய்கள் அதனைச் செய்தன. சுணையிலலாத ஒரு தலை முறை இவற்றைச் சகித்துக் கொண்ட தால் உரிமைக் குரலை ஆயுதங்கள் மூலம் அடக்கி விடலாம் எனக் கனவு விரிந்தது. ஆனால் அடுத்த தலைமுறை உரிமைக் குரலுடன் ஆயுதங்களையும் உயர்த்தியது. இவ்வாறு ஆயுதங்களை உயர்த்தியோருடன் ஜேம்சின் தம்பியர் இருவரும் இணைந்து கொண்டனர். இந்தியாவில் பிறக்கவில்லை; இந்தியா வைத் தெரியாது. ஆனால் 'இந்தியாக் காரன்” என நம்மவர்களால் அழைக்கப் பட்ட ஜேம்சின் தம்பியர் போராட்டக் களத்தில் இறங்கினர். குடியுரிமை உள்ள வர்களுக்காக குடியுரிமை பறிக்கப்பட்ட வன் போராடப் போகிறான். யாரு டைய உதவியுடன் குடியுரிமை பறிக்கப் பட்டதோ அவர்களின் உரிமையை இவர்கள் கேட்கப் போகிறார்கள். ஜேம்சின் முன்னோருக்குச்சூட்டுவதற் காவே நம்மவர்கள் 'கள்ளத்தோணி? என்ற சொல்லையே உருவாக்கினர். (சமீப காலத்தில் பெருந்தொகையாகத் தோணிகளில் ஏறித் தமிழ்நாடு சென் றவர்கள் இதுவரை இலங்கையர் என்ப தற்கான எந்தவித ஆவணங்களுமின்றி அங்கிருக்கும் நம்மவர்கள் 'கள்ளத் தோணிகள் என அங்கு முத்திரை குத்தப்படவில்லை என்பதனை நாம் செளகரியமாக மறந்து விட்டோம்.)
தனியனான ஜேம்ஸ் லொறி :
யொன்றில் உதவியாளனாகச் சேர்ந்து
கொண்டான். வேலையில் சேர்ந்து ஒரு
வருடமாகவில்லை பிரச்சினையொன்று
எழுந்தது. ஜேம்சின் முதலாளி ஒரு பெரிய வியாபாரி வவுனியாவில் இருந்து புறப்பட்ட லொறியில் அநுராதபுரப் பகுதியில வைதது மூலிகைகள் கொண்ட சில மூடைகள் ஏற்றப் பட்டன. இதுவொரு வாடிக்கையான விடயம். முதலாளியோடு தொடர் புடைய ஒருவர் இப்பொருட்களை லொறியில் அனுப்பி வந்தார். அன்றைய தினம் வழியில் லொறியை மறித்துச் சோதனையிட்ட காவல்துறையினர் மூலிகை மூடைகளுக்குள் கஞ்சாவைக் கண்டுபிடித்தனர். தடுத்து வைக்கப் பட்ட சாரதி, ஜேம்ஸ் லொறி நாலைந்து மணித்தியாலங்களில் விடுவிக்கப்பட்ட போதுதான் தனது முதலாளியின் செல் வாக்கு ஜேம்சுக்குத் தெரியவந்தது. ஆனால் அநுராதபுரத்தில் வைத்து கஞ்சா ஏற்றப்படுவது பற்றிய தகவலைச் கொடுத்தவன் விடயத்தை அத்துடன்
விடாதபடியால் ஜேம்சின் முத லாளிக்கு ஒரு சிக்கலெழுந்தது. வழக்கில் சம்பந்தப்படுத்த ஒருவர் வேண்டும். முதலாளிக்குத் தெரியாமல் மேலதிக
வருமானத்துக்காக ஜேம்ஸ் அந்த
மூடைகளை லொறியில் ஏற்றிக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரி விக்கவேண்டும். விதிக்கப்படும் அபரா தத்தை முதலாளி கட்டுவார். ஜேம்ஸ் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டான். அநியாய வழியில் பணம் சம்பாதிக்கும் ஒருவன் கெளரவமாக வெளியில் நடமாட கஷ்டப்பட்டுழைக் கும் நான் கேவலமானதொரு குற்றத் தைப் பலரறிய நீதிமன்றத்தில் ஏற்றுக்
FSU-----
^.,,

கொள்வதா? ஜேம்சின் மறுத்புவேன்ஸ் நீக்கத்துடன்நின்றுவிடவில்லை.
கஞ்சா இருந்தது தெரியாமல் ஏற்றிக் கொண்டதாக சாரதி கூறியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவருக்கு 5000 ரூபா அபராதமும் உடந்தையாக இருந்தமைக்கு ஜேம்சுக்கு 3000ரூபா அபராதமும் விதித்தது. தனக்குப் பதி லாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட சாரதியின் குற்றப் பணத்தை முதலாளி பெருந்தன்மையுடன் கட்டினான். பண மில்லாத ஜேம்ஸ் இரண்டு மாதங்கள் அரச விருந்தாளியாக இருந்தான். "உடந்தையென்ற குற்றம் எங்கிருந்து வந்தது? ஜேம்சையும் சிக்க வைப்பதற் காக முதலாளி விட்டெறிந்த சில தாள்கள் உடந்தை யென்ற குற்றச் சாட்டை வழக்குப் பிரதியில் சேர்க்கும் பணியைச் செய்தன.
இரண்டு மாதங்கள் கழித்து வெளியே வந்த ஜேம்ஸ் வேலை தேடிக் கொண்டிருந்தபோது ஒரு நள்ளிரவு அவனை இருவர்தாக்கினர். கால் முறியு மளவுக்குப்பலத்த அடிநினைவுதப்பிய ஜேம்ஸ் வைத்தியசாலையில் கண் விழித்தபோது எழுந்த வினாக்கள் யார் அடித்தார்கள்? ஏன் அடித்தார்கள்? இவற்றுக்கான விடை அவனுடன் முன்பு வேலை செய்த லொறிச் சாரதி அவனைப் பார்க்க வந்தபோது கிடைத் தது. “விசர்ப் பொடியா, முதலாளி சொன்னபடி செய்திருக்கலாமே. வீண் தொந்தரவுகள் வந்திருக்காது. குற்றக் காசையும் கட்டி எனக்குமொரு இரண்டாயிரம் தந்தார் முதலாளி.” ஜேம்சின் சந்தேகங்கள் விலகின.
வெள்ளை வேட்டியுடன் காட்சி தரும் முதலாளி எத்துணை பயங்கரமானவன் என்பது தெளிவாகியது ஒரு சதத்துக் கும் வழியில்லாத ஒரு பரதேசிப் பயல் தன்னைப் போன்ற ஒரு செல்வந்தன் சொல்வதைக் கேட்கவில்லையென்ற ழு கலாளித்துவ கர்வம் சில ஆயிரங் களை விட்டெறிந்து ஜேம்சின் காலை முடமாக்கியது. ஜேம்சினால் இப்போது சரிவரநடக்கமுடியாது. காலை இழுத்து இழுத்துத்தான் நடக்கலாம். தொழில் எதுவும் கிடைக்காதநிலையில் குப்பைத் தொட்டிகள் ஜேம்சுக்கு வழிகாட்டின. அவற்றில் கிடைக்கும் கடதாசிகளைச் சேகரித்து விற்று உலகில் தன் இருப்பை ஒருவாறு தினமும் நிலைநிறுத்திக் கொண்டிருந்தான். திங்கள் எப்போதும் ஜேம்சுக்கு வருவாய் கூடிய நாள். சனி, ஞாயிறு களில் சேரும் குப்பைகளைத் திங்கள் அதிகாலையில் கிண்டினால் அதிக பலன் கிடைக்கும்.
அவ்வாறு ஒரு அதிகாலையில் கிண் டியபோது கனமானதொரு பொருள் குப்பைக் குவியலுக்குள் இருப்பதாகத் தெரிந்தது. ஜேம்சின் நாலைந்து வருட குப்பை கிளறும் வாழ்க்கையில் இப்படி யாக எதுவும் தட்டுப்பட்டதில்லை.
"இது என்னவாக இருக்கும்? ஒரு வேளை றேடியோவில் சொல்றது மாதிரி யாராவது குண்டைக் குப்பைக் குள்ளை வைச்சிருப்பானோ? ஐயை யோ! அப்படியெண்டால் இதை அள்ள வாறவங்கள் செத்துப் போவார்களே”
தன்னுடைய குப்பை அள்ளு கிற சாக்கை அங்கேயே வைத்த ஜேம்ஸ்

Page 32
சற்றுத் தொலைவிலிருந்த பொலிஸ் நிலையத்துக்கு விரைந்தான். கடமையில் இருந்த பொலிஸ்காரன் ஜேம்சைப்
பார்த்து ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த் தான். எனினும் குறிப்பைக் கேட்டுக்
கொண்ட அவன் ஜீப் வந்ததும் வந்து பார்ப்பதாகக் கூறி ஜேம்சை அனுப்பி விட்டான். ஜேம்ஸ் திரும்பவும் குப் பைத் தொட்டிக்கு வந்து பொலிசுக் காகக் காத்திருந்தான். அவர்களைக் காணோம். ஜேம்சுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. “இனி சனநடமாட்டம் தொடங்கிவிடும். அந்நேரம் குண்டு வெடித்தால் நிறையச் சனம் செத்துப் போம்”. ஒரு முடிவுக்கு வந்த ஜேம்ஸ் குப்பைகளை விலக்கி அந்தக் கனத்த பொருளை மெதுவாக எடுத்தான். ஒரு பொதியாகச் சுற்றப்பட்டிருந்த அது மிகவும் பாரமாக இருந்தது. ஒருவாறு அதனைத் தனது சாக்கினுள் வைத்த ஜேம்ஸ் சாக்கைத் தூக்கிக் கொண்டு பொலிஸ் நிலையத்தை நோக்கிநடக்கத் தொடங்கின்ான்.
திடீரென்று சைரன் ஒலி கேட்டது. மோட்டார்ப் பவனி ஒன்று வந்து கொண்டிருந்தது.நடந்து கொண்டிருந்த மக்கள், ஒடிக் கொண்டிருந்த ஏனைய வாகனங்கள் யாவும் நிறுத்தப்பட்டன. மக்களுக்குச் சேவை செய்வதற்காகப் பெற்ற வாக்குகளை வைத்து தனது வசதி களைப் பெருக்கத் தெரிந்த ஒருவர் பவனியில் போய்க்கொண்டிருந்தார். வாக்களித்த மக்கள் வீதியில் நிறுத்தப் பட்டிருந்தனர்.
"ஏய், அங்கே போ” ஜேம்சை ஒரு பொலிஸ்காரன் அதட்டினான். ஒரம்
போக எத்தனித்த ஜேம்சுக்கு ஊன மான கால் ஒத்துழைக்க மறுத்தது. பவனியாகச் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கிடையில்
ஜேம்ஸ் விழுந்தான்.
பலத்த வெடியோசையுடன் சாக்கி லிருந்த குண்டு வெடித்தது.
சற்று நேரத்தில் செய்திகள் ஒலி, ஒளிபரப்பாகின.
“பவனியில் வந்த அமைச்சரைக் கொல்லச் சதி குண்டுதாரி உடல் சிதறி மரணம். அமைச்சர் காயங்களுடன் உயிர் தப்பினார். அதிகாரிகள், பொது 20பேர்வரை
LD is 95 Gir D L. L. Lul –
மரணம்".
இதே செய்தியைப் படங்களுடன்
வெளியிட பத்திரிகை
நிறுவனங்களும் துரிதமாக இயங்கின.
விபரமாக
r . \
சகோதர எழுத்தாளர் திக்கு வல்லை கமால் எழுதி, கடந்த இதழில் ஆரம்பமான தொடர் கட்டுரையில் மல்லிகையையும் குறிப்பாக அதன் ஆசிரியரையும் தொடர்ந்து விதந்து போற்றுவதால் அக்கட்டுரையை மல்லிகையில் வெளியிட நாம் விரும்பவில்லை. நிறுத்தியுள்ளோம். அதன் ஆசிரியர் அதனைத் தனி நூலாக வெளியிட ஆவண செய்து வருகிறார்.
- ஆசிரியர்
لـ ܢܠ
t 666):
-60

X மல்லிகையை ஆரம்பித்த காலத்தில் அச்சஞ்சிகை இத்தனை ஆண்டுக் காலத்தைத் தாக்குப்பிடித்து நின்று நிலைக்கும் என நம்பினிர்களா?
Usonor daras rr03gCancür
இபி என்னைப் பற்றி எனக்கே ஓர் அசாதாரண நம்பிக்கையுண்டு. நான் சும்மா பிறந்து, ஏதோ வளர்ந்து வயதைக் கழித்துவிட்டுப் போகப் போகின்ற சாதாரண மனிதப் பிரகிருதியல்ல என்ற மன நினைப்புச் சின்னஞ் சிறுவயதிலிருந்தே என் அடி வநஞ்சில் நன்றாக வேரூன்றி விட்டது. எனவே என்னால் ஆரம்பிக்கப்பட்ட மல்லிகை என்ற இந்தச் சஞ்சிகையும் ஈழத்து இலக்கிய உலகில் வரலாறு படைத்தேதீரும் எனத் திடமாக நம்பி, அதற்காகவே உழைத்து வந்தேன். என் நெஞ்சார்ந்த நினைவுகள் என்றுமே தோல்வியைத் தழுவிக்கொண்டது கிடையாது.
X இந்தத் தடவை தமிழகம் சென்றிருந்த சமயம் உங்களுடைய "சரஸ்வதி காலத்து
நண்பர் ஜெயகாந்தனைச் சந்தித்தீர்களா?
கிளிநொச்சி கதவமோகன்
இலி நான் மனதார நேசிக்கும் நண்பர்களை என்றுமே மறந்திருந்தது கிடையாது. தமிழகம் செல்லும் சமயங்களில் எல்லாம் ஒவ்வொரு தடவையும் ஜெயகாந்தனை மாத்திரமல்ல. நான் நேசிக்கும் சகல இலக்கிய நண்பர்களையும் சந்திக்கத் தவறுவதேயில்லை!
X மல்லிகையில் தொடர்ந்து இந்த நாட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், திறமை மிக்கோரின் உருவப் படங்களையெல்லாம் பிரசுரித்து வருகிறீர்களே, இதன் நோக்கம்
6া6টা GOা ?
виабеталлирала, I.GguLuéerfi55cir

Page 33
இ எனது இந்தத் திட்டத்தின் நோக்கம் இன்றைய இளந்தலைமுறையினருக்குப் புரி யாது. நாளை என்றொரு நாள் வரும். அன்று இதன் அருமை பெருமைகள் எல்லாருக்குமே புரியும். இவை உருவப் படங்களல்ல, ஆவணங் கள். வரப்போகின்ற நாளைய சந்ததியின் பல்கலைக்கழக ஆய்வு வல்லுநர்களின் தேவை கருதிய இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றேன். இதன் சோக மயமான சங்கதி என்னவென்றால் என்னாலும் மக்களாலும் மதிக்கப்படும் கலைஞர்கள் சிலர், இலக்கியப் பதிவு முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங் குவதில்லை. இருந்தும் மிகப் பொறுப்புணர்ச்சி யுடன் எனது கடமையைச் செய்துகொண்டே வருகின்றேன். அட்டைப்படப் பதிவுகள் மாத இதழ் மல்லிகையுடன் முற்றுப்பெற்று விடுவதில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவைகள் தொகுக்கப்பட்டு, தொடர் நூல் களாகவும் தொடர்ந்து வெளிவருவதை நீங்கள் உங்களது அவதானத்தில் வைத்திருங்கள்.
யாழ்ப்பாணத்து மல்லிகைக்கும் இன்று கொழும்பிலிருந்து வெளிவரும் மல்லிகைக்கும் என்ன வித்தியாசத்தை காணுகிறீர்கள்?
உரும்பிராய் எஸ்.சகாதேவன்
E யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை ஒரு பிரதேசத்தினது வெளியீடு. இன்று வரும் இவ்விதழ் ஒரு தேசத்தினுடைய
மாத இதழ்.
2பி இன்று இந்தத் தேசத்தில் எழுத் தாளர் வரிசையை எடுத்துக் கொண்டால்
حمبر
6696):
உங்களுடைய பெயர்தானே ஊடகங்
களில் அதிகமாக அடிபடுகின்றது. இதற் கான காரணம் என்ன?
σταύταυτπ85ιο ஆர்.குணேந்திரன்
29 உழைப்பு. இடையறாத உழைப்பு. இந்தப் பிரபலத்திற்கு நான் மாத்திரம் காரணமல்ல, என்னை வெகுவாக நேசிக்கும் பல்வேறு வகைப்பட்ட இலக்கிய நண்பர்களின் ஒத்துழைப் பும் இதற்குக் காரணம். உண்மையைச் சொல்லட்டுமா? எனது பெயர் ஊடகங்களில் அடிக்கடி பிரபலப்படுத்துவதை விட, எனது சகோதர எழுத்தாளர்களினது நாமம் இப்படி இடம்பெறுவதையே நான் பெரிதும் விரும்பு கின்றேன். அபிப்பிராய முரண்பாடுகள் இருந்த போதிலும்கூட, மானுடநேசிப்புமிக்க எழுத்தாளர் களினது வபயர்கள் இப்படி ஊடகங்களில் வெளிவருவதையே நான் பெரிதும் விரும்பு கின்றேன்.
நீண்ட நாட்களாகவே உங்களைக் கேட்க வேண்டுமென எண்ணிக் கொண் டிருந்த கேள்வி இது. இந்த நாட்டில் யாழ்ப்பாணம், பேராதெனியா, கிழக்கு, தென்கிழக்குப் பல்கலைக் கழகங்கள் இன்று பிரபலமாக உயர்கல்வித்துறை யில் இயங்கி வருகின்றனவே, நானும் கனநாளாகப் பார்த்துக் கொண்டு வரு கின்றேன், இத்தகைய பல்கலைக்கழகங் கள் இந்த மண்ணில் முளைவிட்டுப் பிர காசித்துக்கொண்டு வரும் எழுத்தாளர் களை அழைத்து, தமது மாணவர்களுக்கு இப்படைப்பாளிகளின் கருத்துக்களைக் கேட்டுவைக்க ஒழுங்கு செய்யவில் லையே, என்ன காரணமாக இருக்கும்?
贈又

LrrpüLuntcUuri கதவநேசன்
23 நீங்கள் குறிப்பிட்ட சகல பல்கலைக் கழகங்களிலும் நம்மவர்கள்தான் பேராசிரியர் களாகவும் விரிவுரையாளர்களாகவும் கடமை புரிகிறார்கள். ஏக காலத்தில் சேர்ந்து வளர்ந்த வர்கள். இவர்களுக்கு வெளி இலக்கியத் தொடர்புகளுமுண்டு. இருந்தும் எம்மைப் போன்றவர்களை அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாட வைக்க ஏனோ பயம். குறைந்த பட்சம் மல்லிகையின் நாற்பது வருஷ அநுபவங் களையாவது உயர்கல்வி மாணவர்கள் தெரிந்து கொள்ளலாமல்லவா?
உயர் கல்வியையும் இலக்கிய அனுபவங் களையும் இணைத்துப் பார்க்க ஏனோ பயப்படு கிறார்கள். இந்த இருட்டடிப்பு நீண்ட நாட் களுக்கு விலை போகாது.
பல்கலைக்கல்வி என்பது புத்தகங்களும் நோட்டுக்களும் விரிவுரைகளும்தானா? இந்தப் பேராசிரியர்களையும் விரிவுரை யாளர்களையும் மீறி இன்றைய பல்கலைக்கழக அறிவுலக மாணவர்கள் சிந்திக்கத் தலைப் ul-G6irsTarf.
மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்த யாழ். பல்கலைக்கழக மாணவ, மாணவியரது ‘மண்ணின் மலர்கள் சிறுகதைத் தொகுதியில் நான் இதன் அருட்டுணர்வை அவதானித்தேன்.
இம்மாதம் நமது வெளியீடாக வெளிவர வுள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவ. மாணவியரது கவிதைத் தொகுதியாக ‘என் தேசத்தில் நான் என்ற நூலில் இதற்கான வெளிச்சம் எனக்குத் தென்படுகிறது.
ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங் கள். தரமான படைப்பாளிகளைப் புறத்திக்கிடம் பண்ணி எந்த உயர்கல்விப் பீடமும் அறிவை விருத்தி செய்துவிட முடியாது. இது சர்வ நிச்சயம்.
மல்லிகையைச் சிலர் குறை கூறித் திரிகின்றனரே, இவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
கோப்பாய் எஸ்.சிவதானம்
* அவர்கள் கூறுவதில் நியாயமிருந்தால் என்னுடன் அதைப் பகிர்ந்து கொள்ளலாம். எனக்கும் அவர்களது ஆலோசனைகள் பயன் படும். மற்றம்படி இப்படிக் குறை கூறிக் கொண்டி ருப்பதே ஒருவகை மனநோய். விட்டுப் பிடியுங் கள். இத்தகையவர்களின் நடியோ நேசமோ இல்லாத காரணத்தால்தான் போலும் இத்தனை ஆண்டுக்காலமாக என்னால் மல்லிகையை வெளிக்கொணர முடிகிறது போலும்!
X நாற்பதாவது ஆண்டு மலரில் யார்
யார் எழுதுகின்றனர்?
தெவறிவளை unrcucucür
23 கடந்த காலங்களில் யார் யாருடைய எழுத் தாக்கங்களையெல்லாம் விரும்பிச் சுவைத்துப் படித்து வந்தீர்களோ அவர்கள் அத்தனை பேரும் மலரில் எழுதுகின்றனர்.
அட்டைப்படக் கலைஞர்களை
எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
ருெல்லியடி стib.archucuллсбт
23 அரை நூற்றாண்டு இலக்கிய அநுபவம் இதற்குக் கைதந்து உதவுகின்றது.
63 ༧
stee)

Page 34
உங்களுடன் கருத்து முரண்பாடு
கொண்டவர்களை நீங்கள் கனம்
பண்ணிக் கெளரவிப்பதுண்டா?
{u}:lụ. எஸ்.ஆர்.கந்தையா
elsheir வெளிப்பாடுகளே தவிர. அது பகைமையை
இ கருத்து முரண்பாடுகள்
வளர்க்கும் குறியீடுகள் அல்ல. நான் எந்தக் காலத்திலுமே பகையை வளர்த்துக் கொண்ட வனல்ல. இந்தப் பண்பு என்னிடம் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளது. அதன் காரணமாகத்தான் மல்லிகையை என்னால் ஒழுங்காகக் கொண்டு வர முடிகின்றது. வெறும் கெட்டித்தனத்தாலும் திறமையாலும் மாத்திரம் இதனைச் சாதித்துவிட
முடியாது.
தெருத் தெருவாக அலைந்து உங் களைப் போல'சஞ்சிகை விற்று இலக்கிய அர்ப்பணிப்பு ஊழியம் செய்த வேறு யாராவது தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?
கொக்குவில்
2 என்னைப் போல மாதஇதழைத்தொடர்ந்து விதி வீதியாக விற்றுத் திரிந்த எவரும் தமிழ் நாட்டில் நானறிய ஒருவருமில்லை. ஆனால், தான் வெளியிட்ட நூல்களைப் பொட்டணமாகக் கல்லூரி சுமந்துசென்று அறிமுகப்படுத்திய ‘எழுத்து சி.சு.செல்லப்பா அவர்களை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். இத்தகைய அர்ப்பணிப்பு உழைப்புகள்தான்
கல்லூரியாகச்
பின்னர் இலக்கிய வரலாறாகப் பேசப்பட்டு வரும்.
எம்.ரஞ்சிதமலர்
X சமீபத்தில் கொழும்பில் ஸ்தாபித மான இலங்கை தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியத்தினால் படைப்பாளிகளுக்கு ஏதாவது லாபம் கிட்டுமா?
éfcurrLib circiu.cunchuu unrLrf
2 பொறுத்திருந்து பாருங்கள். அந்த அமைப்பின் வேலைத் திட்டங்கள் வெற்றிகரமாக அமுலாகும்போது இந்த மண்ணில் பதிப்புத்துறை சம்பந்தப்பட்டவர்கள் மாத்திரமல்ல, அது தொடர் பான சகல மட்டத்தினரும் பெரும் பயனடை வார்கள். நிச்சயமாக நம்புங்கள். வபரிய பெரிய சாதனைகளை அது செய்து முடிக்கும்!
நான் உங்களை நேரில் பார்த்துப் பேச ரொம்பவும் ஆவலாக இருக்கிறேன். இது நீண்டகால ஆசை. முன்னர் இந்த எனது ஆசை சாத்தியப்படாமல் இருந்தது. காரணம் நம்மிருவரிடையே இருந்த தூரம். நீங்கள் யாழ்ப்பாணம். நான் ரத்ம லானை. எனவே என்னால் யாழ்ப்பாணம் வர இயலாமல் இருந்தது. இன்று பஸ் ஸில் வரும் தூரம்தான். நான் வந்தால் ஒய்வாக என்னைச் சந்திப்பீர்களா?
ரத்மலானை. க.கருணைநாதன்
23 ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகைாள்ளுங் கள். எனக்குப் பக்தர்களைப் பிடிக்காது. சம தோழர்களாக என்னைத்தேடி வந்தால் எனக்குச் சம்மதமே. இது தமிழ்நாடல்ல. பல அநுபவங் களாலும் இந்த அர்ப்பணிப்புகளாலும் உருவாகி யுள்ள தேசமிது. இதை விளங்கிக் கொண்டால் சந்திக்கச் சம்மதமே.
201 - 111 ரூர் கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
ஒUடை

TNUla புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் சாஹித்தியபுத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இல, 4, குருநாகல் வீதி, (பஸ்நிலையத்திற்கு அண்மையில்)
புததளம. தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும்,
பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.