கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2007.04

Page 1
50வது ஆண்டை நோக்கி.
&L)656
üöi前 ALT
மிகவும் அை - ஆனால் ஆ
 

ബിഞ്ഞു - 21 =
SeS). A
ព្រឹួ|
மதியானவர் ஆழமானவர்
ஏப்ரல் 2007

Page 2
இலங்கையில் நூல்கள் விநியோகம், விற்பனை ஏற்றுமதி இறக்குமதி பதிப்புத் துறையில் புதியதோர் சகாப்தம்
அன்புடன் அழைக்கிறது
சேமுமுடு பெத்தகசாலை
పా CHEMAMADUBOOK CENTRE
EFRJosJPGb.
Telephone : 011-2472362 Fax : 011-2448624 E-mail : chamamaduGDyahoo.com
UG 49, 50. People's Park, Colombo - 11. Sri lanka
தலித்ராடிேல் UஇWத்துறை, விற்பனைத்துறை முன்னோடிகள், ேெதுtyக்வீர்கள்.
க.சச்சிதானந்தன் - காந்தளகம், சென்னை - 02.
தொ.பே. : 044 - 28414505
E-mail : tamlinool(a)data.in
கோ.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17.
தொ.பே. : 044 - 24339030 E-mail : ta-pathippagam(a)Yahoo.co.in
அனைத்து வெளியீடுகளையும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலை, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை வித
நோக்கி.
ஏப்ரல் 23う
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை
மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te: 2320721
MallikaijeevaGyahoo.com
ரதுென்ென்ன் காத்திராேனUUைUUால்.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் நமது எழுத்தாளர் செ.கணேசலிங்கன் தமிழகத்தி லிருந்து கொழும்பு திரும்பியுள்ளார்.
பழம் பெரும் எழுத்தாளரான இவர் இலக்கிய உலகில் நன்கு தெரியப்பட்டவராவார். இவரது நல்லவன்' என்ற சிறுகதைத் தொகுதி தான் முதன்முதலில் நூல் வடிவம் பெற்று வெளிவந்த படைப்பு நூலாகும்.
ஈழத்து எழுத்தாளர்களில் மிக அதிகமதிக மான நாவல்களை எழுதி வெளியிட்டவரும், இவரே. டாக்டர் மு.வ.அவர்களினது மிக நெருங் கிய நண்பர்களில் ஒருவரான இவர், சென்னை யில் குமரன்" என்ற பெயரில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தையும் கடந்த பல ஆண்டுகளாக இயக்கி வருபவருமாவார்.
கடந்த வாரம் இவரது இலக்கியப் பேச்சு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. “அற்றைத் திங்கள் என்ற தலைப்பில் தனது இலக்கிய அநுபவங்களைச் சுவைஞர்கள் முன் எடுத் துரைத்தார்.
நமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது கலைஞர்களைக் கெளரவிப்பதே ஒரு சுக அநுபவம்தானே!
இவரது பவள விழாவையொட்டி மார்ச் 83இல் இவரது உருவத்தை மல்லிகை அட்டைப்படத்தில் வெளியிட்டிருந்தோம்.
தான் கொண்ட கொள்கையில் என்றுமே வழுவாமல் அதைத் தனது இலக்கிய வடிவ மாகக் கொண்டு இயங்கி வருபவர், இவராகும்.
W - ஆசிரியர்

Page 3
ல்ெல்கைலின் 42வது ஆண்டு \ംേ விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
உயர் கல்வி மாணவர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும், நாடு பூராவும் பரந்துள்ள கல்லூரி, மற்றும் நூலகங்களுக்கும் தேவைப்படும் இலக்கிய மலர்த் திரட்டு.
விலை 150/-
தேவையானோர் தொடர்பு கொள்ளவும்.
Dominic Jeeva 'Mallikai” 201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te 1 : 2320721
 

2 ബ്ലെമ2-§ീഴ്കിമീഴ്ക് ஞ்லிUன்
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி - சுப்ப 8 - இன்று நமது சர்வ தேசமெங்கும் வெகு உற்சாகமாக அவதானிக்கப்பட்டு வரும் ஓர் உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டுப் போட்டியாகும்.
தோற்கடிக்கப்படவே முடியாதவர்கள் எனக் கடந்த காலங்களில் விளையாட்டு ரஸிகர்களால் கணிக்கப்பட்டு, நம்பப்பட்டு வந்த விண்ணை முட்டும் பிரக்கியாதி பெற்ற நாடுகள் இன்று இடைநடுவில் மைதானத்தை விட்டு மாத்திரமல்ல, விளையாடும் நாட்டை விட்டே தமது தாயகத்திற்கே தொங்கு முகத்துடன் வெற்றிகரமாக வாபஸாகி விட்டன.
இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இந்தச் சர்வதேசப் போட்டியில் பின்னடைந்து விட்டது எதிர்பாராததாகும்.
இந்தியாவின் மிகப் பெரிய துரதிர்ஷ்டங்களில் ஒன்று சினிமா நடிகர்களின் அபரிமிதமான விளம்பரச் செல்வாக்காகும், அவர்கள் காட்டி வரும் பந்தாவும். இதற்கு உதாரணம், அமிதாப்பச்சன் குடும்பத்தில் நடைபெற இருக்கும் அவரது மகனுக்கு நடைபெறப் போகும் திருமணம் ஐஸ்வர்யா ராயின் சர்வதேச அழகுப் பிரபலம், பின்புலம்.
அடுத்து, விளையாட்டு வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த விளம்பர முக்கியத்துவம்.
மண்ணில் நடமாடித் திரியும் தேவதைகளைப் போலக் கணிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வந்த இந்தக் கிரிக்கெட் வீரர்களின் திடீர் வீழ்ச்சியும், மக்கள் புறக்கணிப்பும் இந்த நூற்றாண்டில் அவசியம் தேவைப்பட்ட ஒன்றாகவே நாம் கருதுகின்றோம். இப்படியான பின்னடைவு வரவேற்கத்தக்கதே
அந்த எழுச்சியும் வேண்டாம் - இந்த வீழ்ச்சியும் வேண்டாம் இவர்கள் மண்ணில் கால் பதித்து நடந்து பழகினாலே போதும். மக்களை மதிக்கக் கற்றுக் கொள்ளட்டும்.

Page 4
அட்டைப்படம்
சுயவிலUேரத்தை விருUோத இலக்கியவாதி யோகராசா
- ச.முருகானந்தன்
ஒருமுறை ஈழநாடு பத்திரிகையில் கருணை யோகன் என்பவரது சிறுகதை பிரசுரமாகியிருந்தது. கருணையூர் என்பது எமது கரணவாய் கிராமம் என்பதால், எமது ஊரவர் ஒருவர்தான் இந்தக் கதையை எழுதியிருக்க வேண்டும்! என நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, எனது இலக்கிய நண்பர் கருணையூரானும் இதையே என்னிடம் கேட்டார். உங்கள் தம்பியும் எழுதத் தொடங்கி விட்டாரா? என்று அவர் கேட்டதில் 'ஒரு நியாயம் இருந்தது. எனது தம்பியின் பெயரும் யோகன் - யோகானந்தன் என்பதால் ஒருமுறை அவனிடமே கேட்டுப் பார்த்தோம். அவன் சிரித்தான். நான் எழுதினால் சூரியன் மேற்கில் உதிக்கும் என்று கூறியதுடன், அது கரணவாய் மத்தியில் வசிக்கும் யோகராசா என்ற பல்கலைக்கழக மாணவன் என்ற தகவலையும் கூறினான்.
அன்று அறிந்த அந்த ஆரம்ப இலக்கிய கர்த்தாதான் இன்றைய பேராசிரியர் யோகராசா. செ.யோகராசா என்ற துடிப்புள்ள இளைஞன் ஆரம்பத்தில் ஓர் ஆக்க இலக்கிய கர்த்தாவாகவே இலக்கிய உலகில் கால்பதித்த போதும் பின்நாளில் ஒரு விமர்சகராகி விட்டார். பட்டப் படிப்பை முடித்ததும் ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டு நல்லாசிரியனாகப் பணியாற்றிய போது பல இளைய தலைமுறையினரின் கல்வி வளர்ச்சிக்குப் பாடசாலைக்கு அப்பாலும் வழிகாட்டினார். மலையக மக்களின் கல்வி மேம்பாட்டில் அவர் சுயவிளம்பரமின்றிக் காட்டிய அக்கறை விதந்துரைக்கப் படத்தக்கது. அவரது வழிகாட்டலில் கல்வியில் உயர்வடைந்து, உயர் பதவிகளில் சில மலையகத்தவர்கள் இருக்கிறார்கள். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கற்பித்த வேளை அங்குள்ள மாணவர்கள் சிறந்த பெறுபேறுகள் பெற்றுப் பல்கலைக்கழகம் சென்றனர். இவரைச் சுற்றி ஒரு பெரிய மாணவர் வட்டமே இருந்தது.
இதே காலகட்டத்தில் எம்.ஏ. சிறப்பு தேர்ச்சி பெற்ற இவர், கிழக்கு பல்கலைக் கழகம் ஆரம்பித்த வேளை அங்கு விரிவுரையாளராக இணைந்து கொண்டார். படிப்
4.

படியாக முன்னேறி இன்று பேராசிரிய ராகப் பணிபுரிகிறார்.
அதிகம் எழுதாத இவரது எழுத் துக்கள் அனைத்தும் ஆழமானவையாக இருக்கும். ஆக்க இலக்கியத்துறையி லிருந்து ஒதுங்கி ஒரு சிறந்த விமர்சக ராகத் தற்போது மிளிர்ந்து வரும் இவர் ஒரு நியாயபூர்வமான முதுகு சொறியாத விமர்சகர் என்றும் போற்றப்படுகிறார். பக்கம் சாராமல், படைப்பாளியைப் பாராமல், படைப்பின் சிறப்புகளையும், குறைபாடுகளையும் மட்டும் ஆராய்ந்து விமர்சிக்கும் இவர், எந்த அணியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாது நடு
நின்று விமர்சனம் செய்வது சிறப்பம்சம். பழைய எழுத்தாளராயினும் சரி, அறிமுக எழுத்தாளராயினும் சரி இவரை அணுகி னால், இவர் மனமுவந்து விமர்சனம்
நிலையாளராக நேர்மையான
செய்வார். குறை நிறைகளை நேரே சுட்டிக் காட்டத் தயங்குவதில்லை என்ப துடன் தனது மேதா விலாசத்தை ஆய்வு களில் பறைசாற்றுபவரும் அல்லர். இவர் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத் தவோ, விளம்பரப்படுத்தவோ விரும்பாத வராக இருக்கின்றமையால் பலர் இவரை அறியாதிருக்கிறார்கள். இவரது சகல ஆக் கங்களும் நூலுருப் பெற வேண்டியமை காலத்தின் தேவை. பல எழுத்தாளர் களின் நூல்களுக்கு அணிந்துரை எழுதி யுள்ள இவரது விமர்சனங்கள் ஒரு நூலாக உருப்பெற வேண்டியவை.
வடபுலத்தில் பிறந்து, மலையகத்தில் புகுந்து, கிழக்கிலங்கையில் பேராசானாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர் இலங்கையின் தமிழர் வாழ் பிரதேசங்கள்
அனைத்திற்கும் பொதுவானவராக இருக்
கின்றார். எழுத்தாண்மைக்கு அப்பால்
இவரிடமிருக்கும் பல்துறை ஆளுமை யும், மனிதாபிமானமும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
தனது சொந்த வாழ்வில் இடர் களைச் சந்தித்த போதும் தலை நிமிர்ந்து நின்று எதிர்கொண்டவர். வாகன விபத் தொன்றில் மனைவி, மகள் இருவரும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டமை, இவரது மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. எனினும் இவற்றை விட எமது மக்கள் நாளாந்த வாழ்வில் எதிர் கொள்ளும் இன்னல்கள் பற்றியும், சுனாமி தாக்கியழித்த வேளையில் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவு பற்றியும்
பெரிதும் வருத்தமடைவார்.
மல்லிகைக்கு ஓர் அட்டைப்படக் கட்டுரை எழுதுவதற்காக அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, என்னைப் பற்றி எழுத என்ன இருக்கிறது? நான் ஒரு சாமான்யன் என்று குறிப்பிட்டார். இன்று வரை நான் கேட்ட தகவல்கள் ஏதும் அவரிடமிருந்து எனக்குக் கிட்டாத போதிலும், இட் பேராசானைப் பற்றிய பதிவு, மல்லிகை போன்ற காத்திரமான சஞ்சிகையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவாவினால் இக்கட்டுரையை வரை கிறேன்.
பேராசிரியரது ஆய்வுப் பணிகளும், விமர்சனமும் ஈழத்து பழைமையான கலை இலக்கியங்களுக்கும், நவீன இலக் கியங்களுக்கும் புத்தொளி பாய்ச்சும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. O

Page 5
நான் ஆசிரியராகப் பணிபுரிந்த பாடசாலைகளில் எல்லாம் மாணவர் தமிழ் இலக்கிய மன்றங்களுக்குப் பொறுப்பாசிரியராக இருந்து வந்தேன். தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் அந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லூரியின் நிறுவுநர் சைவப் பெரியார் கா.சூரன் அவர்கள், வடபிரதேசத்திலுள்ள ஏனைய கல்லூரிகளை நிறுவிய நிலவுடைமையாளர் போன்ற ஒருவரல்லர். சைவ அபிமானம், கல்வியில் நாட்டம் என்பனவே அவரது சொத்துக்களாக இருந்து வந்தன. வேறு எந்தச் சொத்துடைமையும் இல்லாத அவர், காலப்போக்கில் வரலாற்றில் இருந்து ஓரங்கட்டப்படும் ஒரு நிலைமை, எமது பிரதேசத்தில் மெல்ல உருவாகிக் கொண்டு வந்ததை நான் உன்னிப்பாக அவதானித்து வந்தேன். தர்மம் ஒருபோதும் தோற்றுப் போகக் கூடாது என்பதில் எப்பொழுதும் தீவிரமாக இருப்பவன் நான். அதனால் அவர் ஆற்றிய சமயப் பணி, கல்விப் பணி என்பவைகளைத் தெளிவாக எடுத்து விளக்கி கட்டுரைகள் சிலவற்றைப் பத்திரிகைகளில் எழுதினேன். இச்சமயம் அவரின் பிறந்த நூற்றாண்டுக் காலம் வருவதைக் கவனத்தில் கொண்டு, அந்தச் சந்தர்ப்பத்தினை முறையாகப் பயன்படுத்தத் தீர்மானித்தேன். அவரது நூற்றாண்டு விழாவினை, கல்லூரி அதிபரின் அனுசரணையுடன் மாணவர் தமிழ் இலக்கிய மன்றச் சார்பில் நடத்தி முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து முடித்தேன். 21.05.1982இல் நடைபெற்ற அந்த விழாவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் நண்பர் கலாநிதி.நா.சுப்பிரமணிய ஐயர் எனது அழைப்பினை ஏற்று வருகை தந்து நினைவுச் சொற்பொழிவினை நிகழ்த்தினார். அதன் பின்னரே சூரனின் சொந்தக் கிராமத்திலும்
அன்னாரின் நூற்றாண்டை நினைவு கூரும் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
கல்வித்துறை சார்ந்த மேன்நிலைப் பதவியில் இருக்கின்றவர்கள் இன்று பணிப்பாளர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். சில காலங்களுக்கு முன்னர் அவர்கள் அதிகாரிகள் என அழைக்கப் பெற்றார்கள். கல்விப் பிரதேசங்கள் கோட்டங்கள், வலயங்களாகப் பிரிக்கப்
பகுக்கப்பட்டிருந்தன. ஒரு வட்டாரத்துக்குப் பொறுப்பாக இருந்தவர் வட்டாரக் கல்வி அதிகாரி என அழைக்கப் பெற்றார். எங்கள் கல்லூரி உடுப்பிட்டி வட்டாரத்தைச் சார்ந்தது. உடுப்பிட்டி வட்டாரக் கல்வி அதிகாரி
Ա | I 3:
 
 
 
 
 
 
 
 
 
 

அப்பொழுது க.ஈ.சுரபாதம் இருந்து வந்தார். கல்வி அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுடன் நெருக்கமான உறவுகளைப் பொதுவாக வைத்துக் கொள்வதில்லை. எங்கள் வட்டாரக் கல்வி அதிகாரி என்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். தனது வட்டாரத்தில் நான் ஆசிரியராக இருப்பது தனக்குப் பெருமையென ஒரு சமயம் மனந்திறந்து என்னிடம் சொன்னார்.
அவர் வட்டாரக் கல்வி அதிகாரியாக இருந்து வந்த காலத்தில், கல்லூரியில் இருந்து நான் மாற்றலாகிச் செல்ல வேண்டிய சூழ்நிலையொன்று உரு வானது. நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் போதுமான காலம் கடமையாற்றி இருப் பினும், ஒரே பாடசாலையில் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் சேவையாற்றி இருந் தால் சிலகாலம் கஷ்டப் பிரதேசங்களில் மீண்டும் சேவை செய்ய வேண்டுமெனப் பணிக்கப்பட்டது. எங்கள் கல்லூரியில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர் களுள் நானும் இன்னும் இருவரும் அங் கிருந்து மாற்றம் பெற்றுச் செல்ல வேண்டி யவர்களாக இருந்தோம்.
இந்தச் செய்தி அறிந்து ஒரு சனிக் கிழமை காலை நேரம் வட்டாரக் கல்வி அதிகாரியின் காரியாலயத்துக்கு நான் சென்றேன். வட்டாரக் கல்வி அதிகாரிக்கு எனது வருகையின் உள் நோக்கம் அப்பொழுது சட்டென்று விளங்கி இருக்க வேண்டும். "ஏன் தம்பி வந்தீர்?’ எனச் சிரித்த வண்ணம் என்னைப் பார்த்துக்
கேட்டார். அவர் முன்னால் உள்ள கதிரையில் மெல்ல அமர்ந்த வண்ணம், “எனக்கு மாற்றமாம்! அதுதான் அறிந்து கொண்டு போக வந்தனான்' எனச் ஒமோம். இங்கே இருந்து போக வேண்டியது தான்" எனச்
சொன்னபோது,
சட்டென்று கூறினார். 'போக வேண்டி வந்தால், போவேன்" என அசட்டுத் துணிச் சலுடன் நான் உடனே அவருக்குச் சொன்னேன். 'உந்தக் கதைகளை விட்டுப்போட்டு உம்மடை வேலையைப் போய்ப் பார் தம்பி” என அந்தக் கதைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இரண்டு வாரங்களின் பின்னர் என் னோடு கடமையாற்றிய ஒர் ஆசிரியர் கிளி நொச்சிக்கும், இன்னொருவர் வடமராட்சி கிழக்குக்கும் மாற்றஞ் செய்யப்பெற்று, எங்கள் கல்லூரியில் இருந்து வெளி யேறிப் போனார்கள்.
அரசியல்வாதி ஒருவருக்கு எனது அரசியல் கருத்துக் காரணமாக என்மீது அதிருப்தி தோன்றி இருந்தது. அரசியல் வாதிகள் ஆசிரியர்களைப் பகடைக் காயாகக் கணித்துத் "தண்ணியில்லாக் காட்டு'க்கு அனுப்பி வைப்பதுதான் அவர் களிடம் இருக்கக்கூடிய அதிகாரத் திறமை. என்மீது அதிருப்தி கொண்ட அந்த அரசியல்வாதி, என்னையும் ஏதோ வொரு காட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு மனங் கொண்டார். அந்த எண்ணத்துடன் வட்டாரக் கல்வி அதிகாரியைச் சந்தித்த சமயம், “தெணியான் எப்பிடி?" என அவரி டத்தில் விசாரித்தார். அந்த விசாரணை

Page 6
யின் உள்நோக்கத்தை வட்டாரக் கல்வி அதிகாரி தெளிவாகப் புரிந்துகொண்டு, 'பள்ளிக் கூடத்தில் ஒழுங்காகப் படிப்பிக் கின்றார், ரியூட்டரிகளிலும் நிற்கிறார். பட்டி மன்றங்களில் பேசிக் கொண்டு திரிகிறார். பத்திரிகைகளில் எழுதுகிறார். அவர் படிப் பித்த தமிழ்ப் பாடத்தில் தான் O/L பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறு பேறுகளைப் பெற்றிருக்கின்றார்கள். இவ் வளவையும் எப்படிச் செய்கிறார் என்று தான் எனக்கு விளங்கவில்லை" எனக் கூறிவைத்தார். அவர் விரிவாக எடுத்துக் கூறிய பதில் கேட்டு, அந்த அரசியல்வாதி தனது மனதில் இருந்த எண்ணத்தினை அவருக்கு வெளியிடாமல் மெளன .fחדס6חuD
நான் முப்பதாண்டு காலம் தொடர்ச் சியாகத் தேவரையாளி இந்துக் கல்லூரி யில் பணிபுரிந்து இறுதியில் அங்கிருந்து ஒய்வு பெற்றேன்.
ஒருநாள் காலை வேளை வட்டாரக் கல்வி அதிகாரி ஈ.சுரபாதம் கல்லூரிக்குத் திடீரென வருகை தந்திருந்தார். ஆசிரியர் கள் நேரம் பிந்தாமல் பாடசாலைக்கு வருகின்றார்களா? எனக் கண்காணிப் பதே, இத்தகைய வருகையின் நோக்கம். அன்று ஆசிரியர்கள் ஒவ்வொருவராகக் கல்லூரிக்கு வந்து தினவரவு ஏட்டில் கைச்சாத்திட்ட பின்னர், அவர்கள் அந்த வாரம் வகுப்புகளில் கற்பிப்பதற்குரிய பாடக் குறிப்புகளை அவர்களிடம் பெற்றுப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் கல்வி
அதிகாரி.
அந்தச் சமயம் நான் கல்லூரிக்குப் போய்ச் சேர்ந்தேன். நான் கைச்சாத்திட்டு முடிந்ததும், "தெனியான் பாடக் குறிப் பைக் கொண்டு வாரும்' என அவர் என்னை அழைத்தார். என்னிடம் பாடக் குறிப்பு இருக்கவில்லை. நான் பெரும் பாலும் எழுதுவதில்லை. நான் கற்பிக்கும் வகுப்புகளுக்கு எல்லாம் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் ஓர் ஆசிரியனாக நான் இருந் தேன். தமிழ் தொடர்ந்து கற்பித்துக் கொண்டிருந்ததினால் பாடக் குறிப்பு எழுதுவதனை நான் கைவிட்டு விட் டேன். ஆக்க இலக்கியம் படைக்கும் எனக்கு, இயந்திரமாகப் பாடக் குறிப்புகள் எழுதிக் கொண்டிருப்பது உபத்திரமாகத் தோன்றியது. பாடக் குறிப்பு எழுதாத ஆசிரியர்களைக் கல்வி அதிகாரி விசாரித் துக் கண்டித்துக் கொண்டிருந்தார். அவர் கள் மத்தியில் அவரால் கண்டிக்காமல் என்னை விட்டுவிட முடியாது என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்.
நான் சற்று நேரம் யோசித்தேன், ஆசிரியர்கள் சிலர் அவர் முன்னே நின்று கொண்டிருந்தார்கள். நான் எனது கை யில் இருந்த புத்தகங்களுக்கிடையில் வைத்திருந்த பழைய கொப்பி ஒன்றினை எடுத்து விரித்து, அவரிடம் அதனை நீட்டி னேன். அவர் அந்தக் கொப்பியைக் கை யில் வாங்கி, நான் விரித்துக் கொடுத்த பக்கத்தை நோட்டமிட்டார். பின்னர் மறு பக்கங்களைத் தட்டிப் பார்த்தார். அதன் பிறகு கொப்பியை மூடிக்கொண்டு என் னிடம் நீட்டிய வண்ணம், "நல்லா எழுதி இருக்கிறீர்’ எனச் சொன்னார். நன்றி சொல்லிவிட்டு அதனைப் பெற்றுக்

கொண்டு அங்கிருந்து மெல்ல விலகிப் (3unt (360Teist.
இனி, இக்காலகட்டத்தில் மல்லிகை யில் வெளிவந்த கட்டுரைப் பற்றிப் பார்க்கலாம்.
*கந்தையா நடேசனால் (தெனி யான்) கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட விமர்சனத் தொடரும் அதற்கு எழுந்த பதில்களும், மறுபதில்களும் மல்லிகை
யின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான மைல் கற்கள் என்று கூடச் சொல்லலாம்" என நண்பர் முருகபூபதியினால் குறிப் பிட்டுச் சொல்லப் பெற்ற விவாதத் தொட ரின் ஆரம்பக் கட்டுரையை 1982ஆம் ஆண்டு மல்லிகையின் 18வது ஆண்டு மலரில் எழுதினேன். எனது நீண்டகால அவதானத்தின் பின்னர் மனதில் எழுந்த கருத்தினை ஒரு கட்டுரையாக முன் வைத்தேன். விவாதத்துக்குரிய பொரு ளாக அந்தக் கட்டுரை அமையப் போகின் றது என்பதனை உணர்ந்து கொண்டே அதனை எழுதினேன். முன்னரும் எனது கட்டுரை ஒன்றினை மையமாகக் கொண்டு மல்லிகையில் விவாதமொன்று நடந்து முடிந்த அனுபவம் எனக்குண்டு. "இலங்கை முற்போக்கு இலக்கியமும்,
அதன் எதிரணியினர்களான மரபுப் பண்டி
தர்களும், மார்க்ஸியப் பண்டிதர்களும்" என்னும் இக்கட்டுரை நான் எதிர்பார்த்தது போலச் சர்ச்சைக்கு உள்ளானது. தங்கள் வழமையான எழுத்துப் பணியினை நான் குறிப்பிட்ட மார்க்ஸியப் பண்டிதர்கள் குறைவின்றிச் செய்தார்கள். கருத்து நிலையில் விவாதத்தினை முன்வைக்க
.
இயலாமல், தனிப்பட்ட முறையில் என்னைத் தரக்குறைவாகத் தங்கள் பத்திரிகையில் தாக்கி எழுதி, தங்கள் மேதாவித்தனத்தை என்றும் போல் பதிவு செய்து வைத்துக் கொண்டார்கள். இத் தகைய திருத்தொண்டினைச் செய்து வரு வது ஒன்றினையே தமது அந்தரங்க நோக்கமாகக் கொண்டு, காலத்துக்குக் காலம் ஒரு பத்திரிகையை இலக்கிய முலாம் பூசி வெளியிட்டுக் கொண்டு வருவது அவர்கள் வழக்கம்.
நான் அந்தக் கட்டுரையில் முன் வைத்த கருத்தினை நிராகரித்து முற் போக்கு அணியினர் சிலரும் மல்லிகை யில் எழுதினார்கள். சாதியப் பார்வையுடன் டானியல், ஜீவாவை முதன்மைப்படுத்தி, வர்க்கச் சிந்தனைக்கு முரணாக நான் எழுதி இருப்பதாகக் குற்றஞ் சாட்டி னார்கள். வர்க்கத்தை மீறிய சாதியம், டானியல், ஜீவா மீது தனது ஆதிக்க பார்வையைப் பதிக்கின்றது என்பதனை அந்தக் கட்டுரையில் நான் வலியுறுத்தி இருந்தேன்.
அன்று நான் தெரிவித்த அந்தக் கருத்துத் தவறானது அல்ல என்பதனை நிறுவும் வகையில், "டானியல், ஜீவா இருவரும் வெறும் கதை சொல்லிகள்’ என்னும் புதிய கண்டுபிடிப்பொன்று அண்மையில் முன்வைக்கப்பட்டிருக் கின்றது.
அந்த விவாதத்தினை மல்லிகை யில் ஆரம்பித்தவன் நான் என்ற காரணத் தினால், அந்த விவாதத் தொடரை முடித்து வைக்கும் பொறுப்பினை

Page 7
மல்லிகை ஆசிரியர் என்னிடத்தில் விட்டு வைத்தார். இனி இந்த விவாதத்தினைத் தொடரப் போவதில்லை என்னும் அவர் முடிவினை ஏற்றுக் கொண்டு, தொடரை ஆரம்பித்து ஓராண்டு காலத்தின் பின்னர் 1983ஆம் ஆண்டு நவம்பர் மல்லிகையில் இறுதிக் கட்டுரையை நான் எழுதினேன்.
என்ன ஆச்சரியம். அதன் பின்னர் கடிதங்கள் என்னும் போலி மகுடமிட்டு
விவாதக் கட்டுரைகள் இரண்டு மல்லி .
கையில் வெளிவந்தன. எனது கட்டுரை யின் அடிப்படைக் கருத்தினை முற்றாக நிராகரித்து, அந்த நிராகரிப்புக்கு மறுப் பெதுவும் என்னால் சொல்வதற்கு இயலா தென்னும் பாங்கில் எள்ளல் இழையோட அக்கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன. அந் தக் கட்டுரைகளில் தெரிவிக்கப் பெற்ற கருத்தினை மறுத்து கடிதம் என்ற பொய்மையில் தோய்த்து ஒரு கட்டுரை யினை நானும் ஒருவேளை எழுதி இருக் கலாம். அப்படி நான் எழுத விரும்ப வில்லை. இப்படி நடக்குமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மல்லிகை ஆசிரியர் ஒரு சஞ்சிகை ஆசிரியருக்குரிய தனது பொறுப்பில் இருந்து தவறி விட்டா ரென்றே நான் கருதினேன். அதன் பின் னர் மல்லிகையில் இனி எந்த விவாதக் கட்டுரையும் நான் எழுதுவதில்லையென அப்போது முடிவு செய்துகொண்டேன். அதன் பின்னர் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சில விடயங்கள் &#Lb|LusöE5LDra5 விவாதம் ஒன்றினை ஆரம்பிக்குமாறு மல்லிகை ஆசிரியர் கேட்டுக் கொண்ட ப்ோதும் நான் அதனைக் கவனத்தில் கொள்ளாது தவிர்த்து விட்டேன்.
1
O
அந்த விவாதத்தினைப் பிரதான மாகக் கொண்டு மல்லிகை விமர்சனங்கள்' என்னும் ஆய்
'எண்பதுகளில்
வினை மேற்கொண்டு யாழ்ப்பாணப் பல் கலைக்கழக மாணவி ம.தேவகெளரி தமது தமிழ் சிறப்புக் கலைமானி (1992) இறுதித் தேர்வுக்குக் கட்டுரை சமர்ப் பித்தார். நூலாக அந்த Ցչն6, பின்னர் வெளிவந்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து 'மக்கள் இலக்கியம்' என்னும் சஞ்சிகையொன்று வெளிவந்தது. அந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக தோழர் வீ.சின்னத்தம்பி இருந்தார். டானியல், அவரைச் சார்ந்த வர்கள் இணைந்து நின்று அந்தச் சஞ்சிகையை வெளியிட்டார்கள். அதன் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் 20.11.1982 பிற்பகல் வேளை இடம்பெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக வடமராட்சியில் இருந்து புறப்பட்டுச் சென்று யாழ். வைத்தியசாலைக்கு முன் னுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டியில் இருந்து இறங்கினேன். அப்பொழுது பேராசிரியர் க.கைலாசபதி அருகிலுள்ள கண்ணாடிக் கடைக்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருப்பது கண்டு வீதியிற் சற்றுத் தரித்து நின்றேன். அவர் என் அருகே வந்து, "மக்கள் இலக்கியம் வெளியீட்டு விழாவுக்குத் தானே!" என் வினவினார். பின்னர் தொடர்ந்து, "என்னை அழைக்க மாட் டார்கள், தெணியானுக்குத் தெரியுந் தானே!" எனக் கூறினார். அதனைத்
தொடர்ந்து, ‘கண்பார்வை சரியாக

இல்லை. கண்ணாடி மாற்ற வேண்டி இருக்கு. செனற் மீட்டிங் முடிந்து வளா கத்தில் இருந்து நேரே இங்கே வந்திருக் கிறேன். எனக்குக் களைப்பாயிருக்குத் தெணியான். நான் வாறன்!" சொல்லிக் கொண்டு என்னிடம் விடைபெற்றுக் க்ொண்டு விரைவாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அந்தச் சந்திப்பு மிக முக்கியமான்
ஒரு சந்திப்பாக அமையுமென அப்பொழுது நான் அறிந்து கொள்ளவில்லை.
அந்தச் சந்திப்பு நிகழ்ந்து இரண்டு
வார காலத்தின் பின் 06.12.1982இல் கைலாசபதி கொழும்பில் காலமான செய்தி அறிந்து நான் அதிர்ச்சி அடைந் தேன். 'எனக்குக் களைப்பாயிருக்கு தெணியான். நான் வாறன்’ என இறுதி s அவர் சொல்லிப் போன வார்த்தை களுக்கு அப்பொழுது புதிய அர்த்தம் இருப்பதான புரிதலில் மனம் எண்ணி எண்ணித் தவித்துப் போயிற்று.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எடுத்த பாரதி நூற்றாண்டு விழா கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு
எனப் பரவலாக நாடெங்கும் நடை
பெற்றது. அந்தச் சங்கத்தின் யாழ்ப்பாணக்
கிளைச் செயலாளராக அப்பொழுது நான்
இருந்து வந்தேன்.
தமிழ்நாட்டில் இருந்து சிதம்பர ரகுநாதன், பேராசிரியர் எஸ்.இராம கிருஷ்ணன், நாவலாசிரியை ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் அந்த விழாவுக்கு வருகை தந்திருந்தனர். மூன்று தினங்கள்
11
யாழ்ப்பாணத்தில் அவர்கள் தங்கி இருந்த சமயம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் விழாக் குழுவினரால் ஒழுங்குபடுத்தித் தயாரிக்கப் பெற்றது. அந்தத் திட்ட ஒழுங் குக்கமைய வடமராட்சிப் பகுதியில் இரண்டு நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கு பற்றுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. வதிரி தமிழ் மன்ற நிகழ்ச்சியை அதன் செயலா ளருக்குத் தெரிவித்துவிட்டு நான் ஏற்பாடு செய்தேன். கம்பர்மலை நிகழ்ச்சி டானியல் மூலமாக என்னோடு தொடர்பு கொண்டபோது நான் ஒழுங்கு செய்து கொடுத்தேன்.
வடமராட்சித் தனவந்தர் ஒருவர் இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப் பட்ட பின்னர், தான் வாழும் பகுதிக்கு அவர்களை அழைத்து ஒரு விழாவினைத் தான் முன்நின்று செய்ய வேண்டுமென மனங்கொண்டார். அதன் மூலம் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கினை எதிர் கால அரசியல் நோக்குடன் பெருக்கு வதே அவரது அடிப்படை நோக்கம். தமது நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வ தற்காக யாழ். கம்யூனிஸ்ட் கட்சிக் காரி யாலயத்துக்கு ஒடோடிச் சென்றார். அவர்கள் ஜீவாவைக் கண்டு பேசுமாறு சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஜீவா, 'செயலாளர் தெணியான். அவரிடம் பேசுங்கள்” எனக் கூறி அனுப்பி விட்டார். அந்தத் தனவந்தர் நேரில் என்னிடம் வராது நெல்லியடியில் வாழ்ந்த கம்யூ னிஸ்ட் கட்சிப் பிரமுகர் பொன்.குமார சாமியை அணுகினார். பொன்.குமாரசாமி
யிடம் ஒரு கடிதத்தைப் பெற்று, அக்கடிதத்

Page 8
தினைத் தான் நேரில் கொண்டு வராது இன்னொருவர் மூலம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
நான் அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தேன். ஒரு சந்தர்ப்பம் அவருக்கு வழங்க முடியுமானால் அதனைச் செய்யு மாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எந்த வகையிலும் கட்டாயப்படுத்தாத மிகத் தந்திரோபாயமான கடிதமாக அது இருந்தது. நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப் பட்டு விட்டதால் இனிமேல் எதுவும் செய்ய இயலாதெனக் கடிதம் கொண்டு வந்த வரிடம் கூறினேன். வதிரி தமிழ் மன்ற நிகழ்ச்சியினை ரத்துச் செய்துவிட்டு, அந்தச் சந்தர்ப்பத்தினை தங்களுக்குத் தருமாறு கடிதம் கொண்டு வந்தவர் என் னிடத்தில் க்ேட்டுக் கொண்டார். அப்படிச் செய்ய முடியாதென நான் உறுதியாக மறுத்து விட்டேன். இத்தகைய நெருக் கடிக்கு மத்தியில்தான் வதிரி தமிழ்
மன்றத்தக்கு தமிழ்நாட்டு இலக்கிய
வாதிகளை நான் அழைத்து வந்தேன் என்பது பலருக்குத் தெரியவராது.
பின்னர் அந்த வடமராட்சித் தன வந்தரிடம், இப்பகுதியில் இடம்பெற்ற பாரதி விழாக்களுக்குப் போகவில்லையா என ஒருவர் வினவியபோது, “உவங்கடை இடங்களுக்கு நான் ப்ோகமாட்டேன்’ என இறுமாப்புடன் அவர் சொன்னாரென நான் அறிந்து கொண்டேன். 'உவங் கடை இடங்கள்’ என அவர் குறிப்பிட்டுச் சொன்ன இடங்கள், ஒடுக்கப்பட்ட மக்கள்
வாழும் பகுதி என்பதனை இங்கு விளங்
f
2
கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் எனது பெயரைப் பகிரங்கமாகச் சொல்லி மனக்காழ்ப்புடன் அவர் திட்டித் தீர்த்தார் என்பதனையும் நான் அறிய முடிந்தது.
பாரதி நூற்றாண்டு விழா நிகழ்வுகள், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 23.03.1983இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாயின. அன்று காலை ஊர்காவற்றுறையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. பிற்பகல் seus é 3g றிபேக் கல்லூரி தமிழ் மன்றத்தில் பேரா சிரியர் எஸ்.இராமகிருஷ்ணன் உரை யாற்ற இருந்தார். யாழ்.நகரில் இருந்து பேராசிரியரை ஒரு காரில் அங்கு நான் அழைத்துச் சென்றேன். அங்கிருந்து இரு வரும் வடமராட்சி திரும்பினோம். பாரதி யின் ஞானகுரு அருளம்பல சுவாமிகளின் சமாதியைத் தரிசிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். வியாபாரி மூலை வீரபத்திரர் ஆலயத்துக்கு அருகே அமைந் துள்ள சுவாமிகளின் சமாதிக்கு அவரை அழைத்துச் சென்றேன்.
தெய்வ ஆலயம் ஒன்றினை அடி யான் ஒருவன் தரிசனம் செய்வது போல அருளம்பல சுவாமிகள் சமாதியை பேராசிரியர் மிகப் பணிந்து அடக்கமாகச் சுற்றி வலம் வந்து வணங்கினார். அன்று இருவரும் ஒன்றாகக் காரில் பிரயாணஞ் செய்த சமயம் பேராசிரியர் என்னிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார். "இலக்கிய ரீதியாக இங்கு வெற்றி பெற்ற முற்போக்கு இயக்கம், அரசியல் ரீதியான வெற்றியை

ஏன் பெற்றுக் கொள்ள முடியாது போனது?" என்பதே அந்தக் கேள்வி. அந்தக் கேள்விக்கான முறையான பதி லினை அப்பொழுது உண்மையில் என் னால் எடுத்துச் சொல்வதற்கு இயலாது போயிற்று.
அன்று மாலையில் வதிரி தமிழ்
மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நாவலாசிரியை ராஜம் கிருஷ்ணனை அழைத்து வந்தேன். அதன் பின்னர் கம்பர்மலை பொன்.கந்தையா சனசமூக நிலையத்தைப் பேராசிரியர் இராம கிருஷ்ணன் திறந்து வைத்து உரை யாற்றினார். அங்கு நிகழ்ந்த அந்த உரை அரங்கில் டானியல் கலந்து கொண்டார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தமக்கிருந்த உறவுகளை முற்றாகத் துண்டித்து விட்டு இருந்த டானியல், அந்த நிகழ்வில் வந்து பங்கு கொண்டது நல்லதொரு சகுனமாக அமைந்தது.
மறுதினம் 24.03.1983 காலை ராஜம் கிருஷ்ணனைப் பலாலி ஆசிரிய கலா சாலைக்கு அழைத்துச் சென்றேன். ஆசிரிய மாணவர்கள், விரிவுரையாளர்கள் மத்தியில் அவர் அங்கு உரை ஆற்றி னார். அன்று பிற்பகல் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம் அவர்கள் தலைமையில் பிரதானமான பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. மட்டக் களப்பில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த
3.
சிதம்பர ரகுநாதனை நண்பர் முருகபூபதி
அந்த நிகழ்வுக்கு அழைத்து வந்தார்.
தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மூவரும் அந்த நிகழ்வில் அன்று உரை ஆற்றி னார்கள். இறுதியில் எனது நன்றியுரை அங்கு இடம்பெற்றது.
அடுத்தநாள் 25.03.1983 யாழ். வளாகத்தில் மூவரும் உரை ஆற்றி னார்கள். பிற்பகல் வேளை தோழர். R.R.பூபாலசிங்கம் இல்லத்தில் கலந் துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அன்று மதிய உணவை தான் எல்லோருக்கும் வழங்குவதாக டானியல்
உடன்பட்டிருந்தார். தமிழக எழுத்தாளர்
மூவரும் கொழும்பு திரும்பிச் செல்வதற் கான விமானப் பயணச் செலவினையும் அவரே ஏற்றுக் கொண்டார்.
மதிய உணவுக்கு யார் யாரை அழைக்கலாம் என நான் டானியலிடம் ஆலோசனை கேட்டேன். "அந்த ஒழுங்கு களை நீங்களே செய்யுங்கள். அழைப்பு உங்களுடையதாகவே இருக்கட்டும். நான் அழைப்பு விட்டால் என்னோடை நிற்கிறவையாலே எனக்குக் கரைச்சல்" என மிக அந்தரங்கமாக அவர் என்னிடம் அப்போது கூறினார். ஜீவா, பொருளாளர் கலா பரமேஸ்வரன் ஆகிய இருவருடனும் நான் கலந்தாலோசித்து விழா நடை பெறுவதற்கு வேண்டிய உதவிகள் செய்த வர்களை மதிய உணவுக்கு முக்கிய மாகத் தவறாமல் அழைப்பதெனத் தீர்மானித்தோம்.

Page 9
அந்த விழா நடவடிக்கையில் மிக உற்சாகமாக ஒடியாடிப் பங்கு பற்றிச் செயற்பட்டவர் புதுவை இரத்தினதுரை. டானியல் வழங்கும் மதிய போசனத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு அவரையும் அழைத்திருந்தோம். அந்த மதியபோசன
விருந்தினை நல்லூர் கோயில் வீதியி
லுள்ள மூத்த மகனின் இல்லத்தில் டானியல் ஒழுங்கு செய்திருந்தார். தனது சயிக்கிளில் மல்லிகைக் காரியாலயத்தி
லிருந்து என்னை அந்த விருந்துக்கு
ஏற்றிச் செல்வதாக முதல்நாள் இரத்தின துரை எனக்கு வாக்களித்திருந்தார். நான் மல்லிகைக்குச் சென்ற சமயம் அவர் என் வரவை எதிர்பார்த்து அங்கு காத்திருந் தார். வழமையாக எப்பொழுதும் அவரிடத் தில் இருக்கும் உற்சாகம் அப்பொழுது இல்லை என்பதனை எனது முதற் பார்வையிலேயே நான் உணர்ந்து கொண்டேன். அவர் என்னைக் கண் டதும், "தெணியான் அண்ணை, உங் களை ஏற்றிக் கொண்டு போய் விடு கிறேன். நான் விருந்துக்கு வரயில்லை” என மறுப்புத் தெரிவித்தார். டானியலுக் கும் அவருக்குமிடையே இருந்து வந்த நெருக்கமான உறவும், பின்னர் உண் டான மனக்கசப்பும் நான் அறியாதவை யல்ல. ஆனால் அதனை நான் வெளிக் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரையும் பழைய உறவு நிலைக்குக் கொண்டுவர
காட்டிக் கொள்ளவில்லை.
வேண்டுமென நான் விரும்பினேன். அத் தோடு அவரை விட்டு, நான் மட்டும் சென்று விருந்தில் கலந்து கொள்வதற்கு எனக்கு விருப்பமில்லை. விருந்துக்கு
4
அவர் என்னுடன் வரத்தான் வேண்டு மென நான் விடாப்பிடியாக நின்றேன். அப்பொழுது, "வந்தால் டானியல்." எனச் சொல்லித் தயங்கினார். "பிசகாக அப்படி ஒன்றும் நடக்கர்"தெனக் கூறி, வற்புறுத்தி அவரை அழைத்துக் கொண்டு புறப் பட்டேன்.
இருவரும் சயிக்கிளில் சென்றிறங்கி,
நான் முன்னே செல்ல எனக்குப் பின்
60T neo இரத்தினதுரை வந்து கொண்டி ருந்தார். விருந்துக்கு வருகின்றவர்களை வீட்டு வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த டானியல், இரத்தினதுரை வந்து கொண்டிருப்பதைக் கண்டு முகம் மலர்ந்து, "இரத்தினதுரை வா' என அன்பாக வரவேற்றார். இரத்தினதுரை யின் முகம் அந்தக்கணமே மலர்ந்தது. அங்கு வரும் போதில் அவருக்கிருந்த தயக்கம் எப்படிப் பறந்ததோ தெரியாது! அவருக்கே இயல்பான அந்தக் கலகலப் புடன் அதன் பின்னர் வெகு உற்சாக மாகத் தோன்றினார்.
கருத்து முரண்பாடுகள் இருந்தாலும ஒருவரை ஒருவர் அனைத்துப் போகும் சிறந்த பண்பாடு மூத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் அன்று இருந்து வந்தது. அவர்கள் தமக்குள் உரையாடும் ஒருவரை ஒருவர் விளிக்கும் வேளைகளிலும் அவர்களுக் குள் இருந்துவந்த போலித்தனமற்ற உறவின் நேர்த்தியினை நான் பல
சமயங்களிலும்,
தடவைகள் நேரிற் கண்டு வியந்திருக் கின்றேன்.
(வளரும்.)

தமிழில் நவீன கவிதை இன்று ஒருபுறம் மொழி வீச்சுள்ள ஆளுமை பொருந்திய தாக மிளிர்ந்து கொண்டிருக்கையில், இன்னொரு புறம் உப்புச் சப்பற்ற வசன அடுக்குகள் புதுக்கவிதை என்ற வரையறைக்கு உட்படாமல் சிதறுண்டு போயு முள்ளன. மரபுக் கவிதை வடிவோ, புதுக்கவிதை வடிவோ, முதலில் கவிதை என்று கருதுவதற்குக் கவித்துவம் இருக்க வேண்டும்.
இன்று கவிதை எவ்வளவு பேரால் விரும்பிப் படிக்கப்படுகிறது என்ற கேள்விக்கான பதில் ஒருபுறமிருக்க, கலை இலக்கிய வடிவங்களில் கவிதையின் வீச்சு நிராகரிக்க முடியாத ஒன்றே. கவிதை என்பது வெறும் இலக்கிய வடிவம் மட்டுமன்று. உணர்வுகளின் ஊற்று! அதற்கும் அப்பால் அது ஒர் இயக்கம் என்றால் அது மிகையாகாது. மேலும் கவிதை படைத்தல் என்பதும் ஒரு பிரசவம் தான். வலிகள் நிறைந்த சுகப்பிரசவம்!
மல்லிகை ஒரு காலத்தில் பல நல்ல கவிதைகளைத் தொடர்ந்து பிரசுரித்து வந்தது. எனினும் காலப்போக்கில் மல்லிகையில் கவிதைகளின் எண்ணிக்கை வலு வாகக் குறைவடைந்தது. ஒருவேளை தர நிர்ணயம் காரணமாக இருக்கலாம். எனினும் அண்மைக் காலமாக மீண்டும் மல்லிகையில் கவிதைகள் புத்துயிர்ப்பு பெறுவதை அவதானிக்க முடிகிறது. எட்டுக் கவிஞர்கள் 42வது மல்லிகை ஆண்டு மலரில் கவி வடித்துள்ளனர்.
மூத்த எழுத்தாளர் சட்டநாதன் வழக்கமாக மல்லிகை ஆண்டு மலர்களில் மல்லிகை நல்ல ஒரு சிறுகதையை எழுதுவார். இம்முறை தனது ஐந்து கவிதைகளை O O. O. எழுதியுள்ளார். ‘நினைவில் இவை ஆண்டு LDG) IT&5 நெருடலாய். என்ற முதற் கவிதையில் O யுத்த அழிவிலும் நிமிர்வதை கூறுகிறார். கவிதைகள் A s A O − பட்டுப்போன அம்மரத்தில் - ஒரு கண்ணோட்டம் - ஒற்றைச் சிறு கிளையில்
பசுமை இருக்கிறது டி இன்னும் பிரகலாத ஆனநத சில இலைகள் ஈரக்கசிவுடன்
என்ற வரிகள் இழந்த வாழ்விலிருந்து மீளும் நம்பிக்கைத் துளிர்களாயிருக்கின்றன. 'பிரபஞ்ச அதிர்வு',"துயரம்" ஆகிய சிறு கவிதைகளின் சொல்லாடல்கள் கச்சிதமாயிருக் கின்றன. 'பிணையாய் நான்தான்', 'துயரம் இன்னும் தூரமாய் ஆகிய கவிதைகளும் உணர்வோடு நகர்கின்றன.
15

Page 10
பூரீ பிரசாந்தனின் 'தீராத விளை யாட்டு கவிதை யுத்தத்தின் கொடுமையை கால்பந்தாட்டம் மூலம் அழகாக உருவகப் படுத்தியுள்ளது. கருத்தாழம் மிக்க,
'பாவம் கைதட்ட வந்த ரசிகர்கள்” என்ற வரிகளும், சேம்சைட் கோல்கள்', "ஊதிய
விசிலரிடம் இறுதியில் பந்து போயிற்று”
முதலான வரிகளும் யதார்த்தத்தை சிலேடையாகக் கூறுகிறது.
மல்லிகைக் கவிஞர் கனிவுமதியின் வெளிநடப்பு, உள்வெளி, சுமை கடந்து அறிதல், ஆகாயத்தைச் சுமந்த இரவு ஆகிய அழகான நான்கு கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. 'மனிதர்கள் இல்லாத தேசம் தேடி புறப்பட்டோம் நண்பரே" என்ற வெளிநடப்பு கவி வரிகள் மனதைத் தொடுகின்றன.
காற்றுக்கு ஈடுகொடுக்க சிறகுகளிலிருந்து சில இறகுகள் உதிரும்
என்ற வரிகள் அழகும் யதார்த்தமும் நிறைந்த வரிகள். அடுத்த கவிதையில் வரும் ஆகாயமெங்கும் ஒட்டிக் கிடந்த மேகக் குப்பைகளைக் கூட்டிக் கிணற்றுள் தள்ளினேன்' என்ற வரிகள் அற்புதம், இப்படியான வரிகள்தான் அதி நவீனத்து வக் கவிதைச் சிறப்போ?
லறினா - அப்துல் ஹக் மொழி பெயர்த்த றோஸ் அசெரப்பாவின் "எனது ub" கவிதை இன்றைய தமிழர் அவல நிலையைக் கூறுகிறது.
1
6
நான்
கப்பம் கட்டுதல் வேண்டும். இன்றேல். சுடப்படக்கூடும் என்ற வரிகள் யதார்த்தமாயும், மனதைத் தொடுவதாயும் உள்ள்ன.
இம்முறை ஆண்டு மலரில் இரண்டு அருமையான பெண்ணியக் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. முதலாவது அனுராத புர எழுத்தாளர் வாசிம் அக்ரம் எழுதிய இருப்பு கவிதை. ஒரு ஆண் கவிஞராயி னும், இன்றைய பெண்ணின் இயலா நிலையை இறுக்கமான வார்த்தைகளில் வடித்துள்ளார்.
இரும்புக் குரலால் உறுமும் இராட்சத உருவத்தால் என் மரபு வழிப்பட்டவியல்புகள் ஈய்ந்து விடுகின்றன என்ற துயர் மிகு வரிகள் அழகாக வந்துள்ளன. (இரும்புக் குரலால் இன்றைய பெண்கள் சிலரும் ஆண்களை அடக்கி வைக்கிறார்கள் என்பது வேறு கதை.)
மற்றைய பெண்ணியக் கவிதையைக் குறுகிய காலத்தில் சலன ஈர்ப்பைப் புெற்ற பெண்ணிய எழுத்தாளர் சந்திர காந்தா முருகானந்தன் புனைந்துள்ளார். 'மெளனங்களை உடைத்து மாறிவிடு பெண்ணே" என்ற இவரது அறை கூவல் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கும் ஒரு பெண் ணின் உணர்வுக் குரலாய் வெடித்துள்ளது.
மெளனத்துள் மெல்ல, மெல்ல நிரம்பித் தளும்புகின்ற நினைவுச் கழிக்குள்

விசும்பலாய் கனம் தாளாத துயர 6 Geiss6i
என்ற முதல் வரிகளிலேயே ஒரு பெண்ணின் மனத்துயரும், நிலையும் ஆழ
மாய்ப் பதிவாகிறது. அடர்ந்த தூக்க
ணாங் குருவிக் கூடு போன்று இறுக்க மாய்ப் பின்னப்பட்ட இல்லச் சிறை யிருப்பு" என்ற வரிகள் பெண்களின் அனுபவ அவலமாய்ப் புலனாகிறது. போராடாமல் எதையும் பெற்றதாக வர லாறு கிடையாது என உத்வேகமூட்டும் இறுதி வரிகள் வரை கவிதை இறுக்க மாகவும், கவித்துவத்துடனும் நகர்வது சந்திரகாந்தாவை சிறந்த பெண்ணியக் கவிஞராகத் தரிசனமாக்குகிறது. (அனார், மலைமகள், ஒளவை போல்)
இனியவன் இசாறுதீனின் "எல்லாத் தீயிலும் என் ஆத்மா' என்ற கவிதை சற்று வித்தியாசமான வார்ப்பு. இறுதியில் வரும் 'இன்னமும் எரிக்க என்னில் என்ன இருக்கிறது?’ என்ற கேள்வி வரி கள் படிப்பவர் மனதிலும் ஒலிக்கிறது.
இறுதியாக கலாமணியின் "விழிப்பு" ஒரு சுவையான காதல் கவிதை. காதல் மனித வாழ்வில் முக்கியமான ஒரு விடயம்தான்! அந்த வகையில் அழகாகக் காதல் உணர்வைச் சொல்லும் ஒரு கவிதை இடம்பெற்றுள்ளமையும் ஏற்புடையதே.
என் உலகமே அவன் விழிகளுக்குள் கட்டுண்டு கிடந்த போதும் நேர் நோக்கத் திராணியற்று முகம் சாய்த்தேன்.
எவ்வளவு இயல்பான வரிகள். காதலேதான் எல்லாம் என்றில்லா விட்டாலும் காதலில்லாத வாழ்வு உப்பில்லா உண்டி போன்றது.
இறுதியாக, ஒரு மரபுக் கவிதை கூட மலரில் பூக்கவில்லை. மரபுக் கவிதைகள் தனிச் சுவையானவை. அவை அழிந்து வருகின்றனவோ? கு
2006 முழு ஆண்டிற்கான மல்லிகை ஆண்டு மலர் உட்பட 12 இதழ்களையும் மல்லிகையில் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ளுங்கள்.
பரிசளிப்பவர்கள் ஈழத்துப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுங்கள். இப்படி நீங்கள் பரிசளிக்கும் போது நமது எழுத்தாளன் ஒருவன் மதிக்கப்படுகிறான். உற்சாகப்படுத்தப்படுகிறான்.
இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
17

Page 11
"சட்டி சுட்டதடா, கை விட்டதடா. நாலும் தெரிந்து நடந்த பின்னர் நல்லது கெட்டது புரிந்ததடா" என யாரோ ஒரு சினிமாக் கவிஞன் பாடிச் சென்றது போல, இன்று என் கதையும் ஆயிற்று. வறுமையான குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையோடு அல்லும் பகலும் போராடி, பெற்ற ஆறு பிள்ளைகளையும் இன்று மேல்தட்டு வர்க்கத்தினர் ஆக்கிய பின்தான், எனது சீவியத்தின் மற்றொரு கோணம் மிகவும் வேதனையான அங்கம், எனக்குத் தெளிவாகப் புலனாகிற்று.
கடுமையான குளிரில் உயிர்
குடிக்கும் பனிக் கூதலில் வாழ நேர்ந்தும், இந்த ബlട്ട്? இந்த வயதில் என் குடும்பத்தினரின் கொடூரமான, கேவலமான பணத் 凰üL贝 |.? தாசையை, ஈவிரக்கமற்ற நடத்தை களைக் கண்டு வெம்பியும் கூட, எனது எண்பத்தியைந்தாவது வயதில், பேரறிஞர் - (Surtsm பாலச்சந்திரன் Je souff - 5rt (upsh) (Albert Camus) சொன்னது மாதிரி, நிம்மதியான ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டு, பிறர் கண்களுக்குப் புரியாத ஒருவித இளவேனில் சுகத்தை, வெப்பத்தை அனுபவிக்கிறேன். நெஞ்சிலிருந்து உண்மையாகத்தான் சொல்கிறேன். 'கற்க கசடறக் கற்றவை கற்றபின், நிற்க அதற்குத் தக" என்று சொன்ன வள்ளுவன் குறளை மனப்பாடம் செய்த பிள்ளைகள், இன்று அந்தக் குறளின் பொருளுக்கு அப்பால் விலகி நின்று செயல்படும் அவலத்தைக் கண்டு சத்தியமாய் வேதனைப்படுகிறேன். அனுபவமற்ற நிலையில், தாம் படித்த படிப்பையும், தேடிய அறிவையும் கொண்டு தொழிலை, பணத்தை, அந்தஸ்தை தேடிக்கொள்கிறார்களே தவிர, பண்பாட்டை, மனுவடித்தனத்தை இன்றைய இளை. யோர் பலர் அறியாமல், புரியாமல், தெரியாமல் திண்டாடுகின்றனர். இப்படிப்பட்ட பிள்ளைகளினால், அவர்களை நம்பி சொந்த ஊரை விட்டு மேல்நாடுகளில் சொர்க்கம் காணலாம். இடாம்பீகமாய் வாழலாம் என்று தாயக மண்ணைத் துறந்தவர்கள் நாங்கள். நடந்தது எல்லாம் நடந்து முடிந்த கதை. இனி நடக்கப்போவது என்ன?
எல்லாப் பிள்ளைகளும் பொறுப்பற்று, பெற்றோரின் மதிப்பு, பெறுமதி அறியாத போலி மானுடர்கள் அல்ல. ஆனால் அநேகரின் குடும்பங்களில் பெற்றோர் படும் அவலம் சொல்லி மாளாது. வயோதிப காலத்திலும் பூமிக்குப் பாரமாய் வாழாமல், மானுட மேம்பாட்டுக்காய் எதையாவது கனதியாய்ச் செய்யக் கூடியவர்கள், என்னைப் போல துணிந்து குடும்பக் கூண்டுக்கு வெளியே வரலாம். புற்றுநோய் கண்டால் அதைக் குணப்படுத்த கை, கால், விரல், மார்பு என உடல் உறுப்புக்களைக் கூட வெட்டி விடுவதில்லையா? அதைப் போலக் கட்டின மனைவியோ, பெற்ற பிள்ளைகளோ எமக்கு
18

கொடிய கைவிலங்குகளானால் உடைத் துக்கொண்டு வெளியேறுவதில் குற்ற மேதுமில்லை."
கனடா - வாழ் முதியோர் சங்கங்களின் கூட்டிணைப்பு மன்றத்தின் வருடாந்தக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய ஒய்வு பெற்ற அரசாங்க லிகிதர் திரு.சுந்தரமூர்த்தி மேற்கண்டவாறு ஆக்ரோஷத்தோடு பேசி முடித்தார். கரகோஷம் செய்யக் கூட மறந்து கலங்கிப்போய்க் காணப்பட்டனர் சபையோர். பின் சில நொடிகளில் பலத்த கரகோஷம். பல சோடி கண்கள் கலங்கிக் காணப்பட்டன. கேள்விகள் பல முகங்களிலும் கொப் பளித்தன.
தேநீர் இடைவேளைக்குப் பின் கருத் தரங்கு மீண்டும் கூடியது. சுந்தரமூர்த்தி தொடர்ந்து பேசலானார். (பலரின் வேண்டு கோளுக்கிணங்கி)
"நாற்பத்தியைந்து வருடங்கள் நாட்டின் பல இடங்களில் வேலை செய்து, ஆறு பிள்ளைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். ஒரு மகள் இன்று அமெரிக்காவில் பேர் பெற்ற விஞ்ஞானி. மகன் லண்டனில் புகழ் பெற்ற பல்கலைக் கழகமொன்றில் சூழல் கல்வி பேராசிரியர். மற்றொரு மகள் கனடா வன்கூவரில் வைத் தியக் கலாநிதி. மற்ற மூவரும் பட்டதாரிகள். கனடாவிலும், பிரான்ஸிலும், ஜேர்மனியிலும் சுகபோகமாக வாழ்கிறார்கள். எனது மனைவி ஒவ்வொரு பிள்ளையோடையும் மாறி மாறி வாழ்ந்து சுகபோகம் அனுபவிக் கிறார்.
நான் இப்போது ஒரு பிள்ளையோடை யும் இல்லை. கட்டின மனுசியோடையும்
9
இல்லை. எனது ஓய்வூதியப் பணத்தை அப் படியே மனைவியிடம் ஒப்படைத்தால் அல் லது பிள்ளைகளிடம் கொடுத்தால் நானும் அவர்களோடு சோற்றுக்காகவும், சுக சவாரி களுக்காகவும் வாழலாம். இதுதான் உண்மை நிலை.
முக்கிய பிரச்சினை இதுதான். எனது கிட்டின சொந்தக்காரர்களில் மிக மிக ஏழை யான உறவுவினர் சிலர் உள்ளனர். அடுத்த வேளை சோற்றுக்கே வழியற்றவர்கள். இன் றுள்ள யுத்தக் களேபரத்தில் சந்தை வியா பாரம் செய்துகூட சீவிக்க முடியாததுகள். அதுகள் எனது இரத்த உறவுகள். எனது ஓய்வூதியத்தை அவர்களுக்குக் கொடுத்துத வுவதை எனது மனைவியோ, பிள்ளைகளோ ஒருபோதும் வரவேற்கவில்லை. எனது ஒரு பேத்தி முறையானவளுக்குக் கலியாணம் செய்ய சீதனக் காசாக ஒரு இலட்சம் கொடுத் தனான். அது காதல் கலியாணம். அந்த மாப் பிள்ளை தனது தங்கைக்காக அந்தப் பணத் தைக் கேட்டார். அவர்களும் வசதி குறைந்த வர்கள்தான். தனது சகோதரிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு, கலியாணம் செய்கிறேன் என்று அவர் சொன்னதில் என்ன தவறு? நானும் சீதனத்துக்கு எதிர்ப்புத் தான். ஆனால் இந்த இடத்தில் அதை யெல்லாம் பேசிக் கொண்டு நின்றால், அந்த ஏழைப் பெண்ணின் வாழ்வு என்னாவது?
என்ர மனைவி, மக்கள் மட்டுமல்ல, எனது படிச்ச ஒரு பட்டதாரிமருமகள் ஒருத்தி கேட்கிறா, "காதல் கலியானத்துக்குச் சீதனம் கொடுக்க வேணுமோ?"
இதில விசித்திரம், வேடிக்கை என்ன
வென்றால், அந்த மருமகள் ஒரு பட்டதாரி மட்டுமல்ல, மனுச வாழ்வின் அநித்தி

Page 12
யத்தை, நொடியில் குடும்பங்கள் நிர்மூல மாகிப் போவதை, அனுபவரீதியாக கண்டு, உணர்ந்து, அனுபவித்தவள். அவளுக்கும் கூட, கலியாணம் கட்டி மேல்நாடு கண்டதும், காசு, பணம் பெரிதாகத் தோன்றுகிறது. அப்படித்தானே? காதல் கலியாணம் என் றால், வசதியானவர்களுக்குச் சீதனம் வேண் டாம்தான். ஒத்துக் கொள்கிறேன். என்ர பேத்தியின்ர நிலைமையில, சீதனம் இல் லாட்டில் ஒருவேளை வேறு வழியில்லாமல் கலியாணம் நடக்காமலே கூடப் போகலாம். அப்படியானால் அந்த ஏழைப் பெண்ணின் கதியென்ன?
இவற்றைப் பார்த்துப் பார்த்து சகிக்க முடியாமல்தான், நான் நானாக சாகப் போகிற காலத்திலேயேனும் சுதந்திரமாக வாழ முடிவெடுத்தேன். பிள்ளைகளும், பெண் டிலும் சுகமிாக, சந்தோசமாக வாழுங்கோ என்று சொல்லிவிட்டு வெளியேறினேன். நியாயமோ, இல்லையோ சொல்லுங்கோ பார்ப்பம்?"
பொறுத்த கேள்வியோடு சுந்தரமூர்த்தி நிறுத்தியதும் சபையிலிருந்து ஒரு கை மேலே உய்ர்ந்தது. கேள்வியோடுதான். மூர்த்தி, "ஒம் சொல்லுங்கோ." ஒரு முதிர் மங்கை - "ஐயா! நீங்கள் சொன்னவற்றில் நிறைய நியாயமுண்டு. ஆனால் உங்கள் உடல்நிலை தனியாக வாழ இடம் கொடுக் குமே? உங்களுக்கு நோய் நொடி - வருத்தம் ஒன்றுமில்லையே?’ மூர்த்தி, "அம்மா! இந்த வயதில் பலருக்கும் இருக்கும் உயர் இரத்த அழுத்தம், டயபெடிக்ஸ் எனும் சீனி வியாதி அதோடை சலப்பைக் கோளாறு எல்லாம் இருக்குது. அதுக்காக நான் துவண்டு போகத் தயாராக இல்லை. மருந்துகள் இருக்கு.
2
O
கடுமையெண்டால் டாக்குத்தரிட்டை போவன். செத்தால் சரி. எல்லாம் விதிதான்" கைகளை வானத்தை நோக்கி ஏத்தி இறக்கு
கிறார்.
மற்றொரு ஆண்மகன் கேள்வியோடு - "ஐயா! என்ர பேர் தர்மலிங்கம். உங்கடை குடும்பத்தை விட்டு நீங்கள் இந்த வயதில வெளியேறினது உங்கள் மனைவி, பிள்ளை களுக்கு நீங்கள் செய்த அவமானமாகத் தோன்றவில்லையா?" மூர்த்தி, - "இல்லை. அவர்களுக்கு என்ர உதவி, பராமரிப்பு தேவைப்பட்ட காலத்தில் எல்லாம் ஒழுங் காகச் செய்து போட்டன். படிப்பிச்சு, வளர்த்து ஆளாக்கி, கெளரவமாக வாழ வழிசெய்து. சகலதும் சம்பூர்ணம். இப்போது அவர்கள் என்னிலும் பெரியவர்கள். பேத்திக்கு காசு உதவினது அறிந்து மனைவி என்னை மகா கேவலமாக நடத்திய போதும் ஒரு பிள்ளை தானும், "ஒருதரும் ஒன்றும் பேசாதை யுங்கோ, ஐயா தன்ர காசைத் தன்னிஷ்டப்படி தான தருமம் செய்யட்டும். தன்ர இனத்திற் குள்ளதானே குடுக்கிறார்" என்று சொல்ல இல்லை.
வசதியோடு வாழும் ஒரு மகள் கேலி யாகக் கேட்கிறாள்,"எங்கடை பழைய காரை விற்றுப் போட்டு புதுக்கார் வாங்க காசு தாங் கோவன் ஐயா! நீங்கள்தான் இஞ்ச பெரிய பணக்காரன் என்று எல்லாரும் சொல்லு கினம்" எண்டு.
இன்னுமொரு கேள்வி சபையிலிருந்து - "என் பெயர் இந்திரகுமாரி. ஐயா, நீங்கள் குடும்பத்தோடை வீட்டிலிருந்து கொண்டே உங்கள் தருமப் பணியைத் தொடர்ந்திருக் கலாமே? மனைவி - பிள்ளையளின்ர நச்சரிப்புகள், கோபதாபங்களுக்குக் காது

பாராட்டுகிறோ!ே
நெஞ்சுக்கு நெருக்கமான கவிஞர் (7.ெேத்தா அவர்களுக்கு இவ்வாண்டு சாஹித்திய அகடமிப் பரிசு கிடைத்துள்ளது. மக்களைக் கவர்ந்த இந்த மண்ணின் கவிஞரை மல்லிகை மனநிறைவுடன் பாராட்டி மகிழ்கின்றது.
- ஆசிரியர் الد
கொடுக்காமல், கணக்கெடுக்காமல் வாழலாம் தானே?
மூர்த்தி, “ஓம் அம்மா! நீங்கள் சொல் லுற மாதிரி வாய் மூடி மெளனியாய், ஊமை யாய், ஜடமாய் அங்கே அவர்களோடு இருந் திருக்கலாம்தான். ஆனால் - ஒரு விஷ யத்தை நீங்கள் யோசிக்கயில்லை. அப்படி இருந்தால், இன்னுமொரு ஐஞ்சு வருஷமா வது வாழக்கூடிய நான், இப்பவே செத்திருப் பன். என்ர ஓய்வூதியத்தைக் கைப்பற்றக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தாயும் பிள்ளையஞம், ஏன் மருமக்களும் சேர்ந்து என்னை." மேலே தொடர முடியாமல் விக்கித்துப் போனார் மூர்த்தி,
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவ ரான திருமதி. பிலோமினா ஜோர்ஜ் பின்வரும் பாடலை பாடினார், பொருத்தமாக,
அன்னையே
"எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்.
2
பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பணியைப் போல நண்ணிய நின்முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய்"
நிறைவுரை நிகழ்த்தினார் முன்னாள் பேராசிரியர் நித்தியலிங்கம். "தன்னால் முடிந் தளவேனும் நொந்தோருக்கும், நைந்தோருக் கும் உதவி செய்யாமல், இறைவனைத் தேடி அங்குமிங்கும் ஓடியலைவதில் பயனில்லை என்கிறது மெய்ஞானம். இதுவே சகல சமய சன்மார்க்கங்களும் காட்டும், தெய்வத்தை காண்பதற்கான நேர்வழியுமாகும். இந்த உண்மையை மறந்து, புதிதாகக் கிடைத்த பணம், செல்வம், வசதிகள் மானிடரை மந்தைக் கூட்டமாக்கினால், எதிர்காலம் பொற்காலமாய்த் திகழாது. மேலும் மேலும் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு போகும் மனிதர்கள் மனுசத்தனத்தைக் கொஞ்சமா வது இழக்காமல் இருக்க வேண்டுமானால், சுந்தரமூர்த்தி அவர்கள் காட்டும் வழிகூட சிறந்ததுதான். அப்படியொரு நிலை இனி ஒருவருக்கும் வராமலிருக்க, ஆண் பெண் அனைவரும் பகுத்தறிவைப் பயன்படுத்து வோமாக!" எனக்கூறிச் சுபம் சொன்னார். கு

Page 13
கலாவிநோதன்
சித்தி அ3ரசிங்க3ே
- செங்கை ஆழியான்
கலாவிநோதன் சித்தி அமரசிங்கத்தின் திடீர் மறைவு தாங்கொணாத் துயரத்தைத் தருகின்றது. 1971ஆம் ஆண்டு இறுதியில் கிண்ணியாப் பிரதேசத்தின் காரியாதி காரியாகக் கடமையேற்ற வேளை, திருகோணமலையில் செம்பியன் செல்வனுடன் ஹஸ்கிசன் வீதியில் தங்கியிருந்த சொற்ப நாட்களில் சித்தி அமரசிங்கத்துடன் ஏற்பட்ட நட்பு, அவர் மறைவு வரை நீடித்தது. நான் கடமை நிமித்தம் திருகோணமலை வரும் போதெல்லாம், நான் இருக்கும் இடம் தேடி வந்து மணிக்கணக்கில் இலக்கிய உலகு பற்றி உரையாடிச் சென்ற இந்த எளிமையான தோற்றமும் நடத்தையும் கொண்ட இனிய மனிதனின் நினைவுகள் என்றும் என் மனதை விட்டு அழியப் போவதில்லை.
கலாவிநோதன் சித்தி அமரசிங்கம் பல் பரிமாணங் கொண்டவர். பல்துறை ஆற்றல் கொண்டவர். நாடக நடிகனாக, நாடகத் தயாரிப்பாளராக, நாட்டுக்கூத்தனாக, வில்லுப் பாட்டுக் கலைஞனாக, வானொலிக் கலைஞனாக, எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கிய ஆர்வலராக அவர் விளங்கியுள்ளார். தனது வாழ்க்கையைக் கலை இலக்கியப் பணிக்காக அர்ப்பணித்து இயங்கி வந்துள்ளார். 1937இல் திருகோணமலையில் தம்பிமுத்து என்பவரின் மகனாகப் பிறந்த அமரசிங்கம், ஆங்கில மொழி மூலம் தனது எஸ்.எஸ்.சி. பரீட்சையை 1957இல் சித்தி பெற்று, 1959இல் சென்னை மட்ரிக்குளேசன் சித்தியடைந்தார். அவருடைய கலையுலகப் பிரவேசம் பாடசாலை நாட்களில் ஐந்து வயதில் நிகழ்ந்தது. ஐந்து வயதிலேயே பாடசாலை நாடகம் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதன் பின்னர் 1952ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை நாடகங்களை நெறிப்படுத்தியும், அவற்றில் நடித்தும் வந்துள்ளார். அவற்றில் சர்வதேசச் சிறுவர் தினத்தில் முரீராம கிருஷ்ண இந்துக் கல்லூரியில் சித்தி அமரசிங்கம் மேடையேற்றிய The Man from China என்ற நாடகம் பலராலும் விதந்து பேசப்பட்டது. இந்துக் கல்லூரியின் மேடையில் பின்னர் காலத்திற்குக் காலம் மேடையேற்றப்பட்ட தொழிலுக்குத் தொழில், கீக்கிரட்டீஸ் ஆகிய நாடகங்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றன. அத்துடன் மேற்படி நிகழ்ச்சியை நெறிப்படுத்திக் கொண்டிருந்த இலங்கை வானொலி புகழ் சானா (சண்முக
22
 

நாதன்) இந்நாடகங்களைப் பெரிதும் பாராட்டிச் சித்தி அமரசிங்கத்தை வாழ்த்தி னார். நாம், பழிக்குப் பழி, இராவண தரிசனம் ஆகிய நாடகங்கள் வானொலி யில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. 1957களில் கேகாலையில் சித்தி அமர சிங்கமும், காலமாகிவிட்ட அவரது நண்பர் சச்சிதானந்தமும் இணைந்து, அமரன் ஆனந்தன் என்ற பெயரில் முதன் முதலாக றொக் அன் றோல் பாணியில் தமிழில் இசை நடன நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் பாராட்டைப் பெற்றார்கள். மட்டக்களப்பில் நடந்த முத்தமிழ் விழா விலும் இந் நிகழ்ச்சியை மீண்டும் அமர சிங்கம் மேடையேற்றினார். திருகோண மலையில் வள்ளுவர் கழகம் நடாத்திய விழாக்களில் சித்தி அமரசிங்கத்தின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன.
195896ს கலைவாணி நாடக மன்றம் ஆரம்பிக்கப்
திருகோணமலைக்
பட்ட போது அதில் இணைந்து கொண்டு அம்மன்றம் மேடையேற்றிய நாடகங்கள் அனைத்திலும் நடித்துள்ளார். இம்மன்றத் தில் நடிகனாக, நாடக ஆசிரியனாக, நெறி யாளனாக, ஒப்பனையாளனாக, மேடை அமைப்பாளனாக எனப் பல பணிகளைச் செய்துள்ளார். 'இராவண தரிசனம்' என்ற புகழ் பெற்ற நாடகத்தின் சகல பொறுப்புக் களையும் கலாவிநோதனே ஏற்றுப் பணி யாற்றியுள்ளார். 1960களில் அமரசிங்கம் 'அமரன் ஸ்கிறீன்' என்றொரு நாடக மன்றத்தை ஆரம்பித்து "குத்து விளக்கு" என்றொரு நாடகத்தை மேடையேற்றி
2
3
னார். இம்மன்றம் மேடையேற்றிய அமிர்த ஞானத்தின் சொற்பன வாழ்வில்' என்ற நாடகத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அபிநய சிகாமணி அமரர் விசுவலிங்கத்தின் அனேக நாடகங் களில் இவர் நடித்துள்ளார். கோணேஸ் பரமேஸ் சகோதரர்கள் கொழும்பில் மேடையேற்றிய கண்டசாலா நைற் என்ற நிகழ்ச்சியில் கொப்பரைக் கோட்டுக்கிழுப் பன்டா என்ற நகைச்சுவை நாடகத்தில் நடித்துள்ளார். வயதின் முதிர்ச்சியையும், நாடக அனுபவத்தையும் கவனத்துக்கு எடுக்காது, தமிழ் நாடக விற்பன்னர் களான மெளனகுரு, சிதம்பரநாதன், ஏ.ரி.பொன்னுத்துரை, ஜெயசங்கர் மற்றும் சிங்களக் கலைஞர்களான வசந்த பண்டார, ஜயல்ல றோகண ஆகியோரது நாடகப் பட்டறைகளிலும், கருத்தரங்கு களிலும் கலந்து கொண்டு பயிற்சி பெற் றுள்ளார். எனவே சித்தி அமரசிங்கம் நாடகப் பித்தனாகக் கடைசிவரை இயங்கியுள்ளார்.
1969 assissio அமரசிங்கத்தின் கவனம் வில்லிசையில் சென்றது. வில்லிசைக் கலைஞனாக ஆயிரம் மேடைகளுக்கு மேல் தன் வாழ்நாளில் வில்லிசை நடாத்தியுள்ளார். 1991இல் கலா விநோதன் வில்லிசைக் குழு என்ற பெயரில் பல வில்லிசைகளை நடாத்தி யுள்ளார். வில்லிசை மன்னன் கலா விநோதன் சின்னமனியின் வில்லிசைக் குழுவிலும் இருந்துள்ளார்.
கலாவிநோதன் அமரசிங்கம்,
மோகன், விணைவேந்தன் என்ற புனை

Page 14
செயற்பட்டுள்ளார். தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக இவர் இருந்துள்ளார். தென்றலும் புயலும் என்ற திரைப்படத்தில் ஹாஸ்யப் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். 1999இல் அரசு இவருக்குக் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவம் பெற்றது.
பெயர்களிலும் நாடகங்கள் எழுதியுள்ளார். அவர் ஈழத்து இலக்கிய முயற்சிகளுக்கு ஆற்றிய சேவை முக்கியமானது. 1954 - 1959 வரை யாழ்' என்றொரு கை யெழுத்துப் பத்திரிகையை நடாத்தி யுள்ளார். 1974இல் ஈழத்து இலக்கியச் சோலை என்ற அமைப்பை உருவாக்கி
கன் வெளியீடாக b60) fD'Lu60) 6OT, ஒறறை இவ்வாறு என் இனிய நண்பர் சித்தி 5945ے
அமரசிங்கத்தைக் குறித்து ஏராளம் சாதனைகளைக் குறிப்பிட்டு எழுதலாம்.
கோயிலும் சுனையும், கயல்விழி, சாரணர் புதிய செயல் திட்டம் மற்றும் 1993இல்
இராவண தரிசனம், கெங்கைக் காவியம்,
கடைசி வரை அவர் என் இனிய கழகப் புலவர் பெ.பொ.சி. கவிதைகள் O - O
நண்பராக விளங்கியுள்ளார். பூபாலசிங்கம் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
முரீதர்சிங் இவரது மரணச் செய்தியை அறிவித்த போது சற்று நேரம் கிரகிக்க முடியாது உறைந்து போனேன். கு
இலங்கையில் வெளியாகும் சஞ்சிகை கள், நூல்கள் என்பனவற்றில் பத்துப் பிரதிகளை வாங்கிச் சந்தைப்படுத்தி இலக்கியப் பங்காளியாகக் கடைசிவரை
ŞN
&ջՋԱՅԱ
Ana SRSS8QAR
N
24
 
 
 
 
 
 
 
 
 
 

“என்னடா வாங்கினாய் கடையிலை?" என்றான் அழகன்.
“பிறிஸ்ரல் இரண்டும், ஒரு சின்ன கச்சான் அல்வாவும்” என்றேன்.
“மத்தியான இன்ரெவெலில பள்ளிக்கூடத்தால வெளிக்கிட்டு பிறிஸ்ரல் அடிச்சுப் போட்டு, மணக்காமல் இருக்கக் கச்சான் அல்வாவும் தின்னுறிரோ - எவ்வளவு நாள் பழக்கம்?" என்றான் இந்திரன். "வகுப்புக்கு வாரும்! உம்மட நல்ல பழக்கம் பற்றி
எல்லாரிட்டையும் விளங்கப்படுத்திறன்."
நினைவழியா நாட்கள் - 3
VVI
பரன்' "ஐயோ உண்மையா நான் சிகரெட் குடிக்கிற இல்லை. இது."
“டேய். கதை விடாதையடா. நாங்கள் சிகரட் குடிச்சால் மாஸ்ரர்மாரிட்டைப் போய்ச் சொல்லுவீர். இப்ப நீரே நடத்துகிறீரோ."
"சத்தியமாக நான் சிகரட் குடிக்கிறயில்லை” என்றேன். பயத்தில் கண்களில் நீர் நிறைந்தது.
"அப்ப ஏனடா வாங்கிறாய்.” என்றான் அழகன்.
"கனகசபை மாஸ்ரர்தான் வாங்கச் சொன்னவர். அவருக்குத்தான்! எனக்குக் கச்சான் அல்வா வாங்கச் சொன்னவர்" விளங்கப்படுத்தி முடிக்குமுன் கண்களில் இருந்து நீர் வடிந்தது.
“சரி. சரி. அழாதை. பபா மாதிரி. ஒம்பதாம் வகுப்பெல்லே படிக்கிறாய்." என்றான் அழகன். அவன் கொஞ்சம் பரவாயில்லை. இந்திரன்தான் படுபாவி. வகுப் பிலை பயங்கரக் குழப்படி. பொடியளை வெருட்டுவது அவனுக்குக் கைவந்த கலை.
எல்லாம் கனகசபை மாஸ்ரரால் வந்தவினை! ரீச்சரும் எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிப்பிக்கிறா. இரண்டு பேருமே எங்கள் வகுப்புக்குப் பாடம் எடுப்பவர்கள். அப்பாவி யான என்னில் இரண்டு பேருக்கும் விருப்பம். அவர்களின் சில வேலைகளை நானும் செய்வது வழக்கம். மாஸ்ரர் சிகரட் குடிப்பவர். அவர் கடைக்குப் போனால் பக்கற்றாகவே வாங்கி விடுவார் என்ற பயத்தில் ரீச்சர்தான் இந்த ஏற்பாட்டைச் செய் திருந்தா. ஒவ்வொரு நாளும் மத்தியான இன்ரெவலில் நான் கடைக்குப் போய் இரண்டு 'பிறிஸ்ரல்’ வாங்கி மாஸ்ரரிடம் கொடுக்க வேண்டும். ஒன்று மத்தியானச் சாப்பாட்டின் பின், மற்றது இரவுக்கு. மருந்து மாதிரி
25

Page 15
'காசு குடுக்காமல் எப்பிடி வாங்கிறாய்?" என்றான் இந்திரன்.
“மாதம் முடியக் கடைப் புத்த கத்தைப் பார்த்து ரீச்சர் குடுப்பா..."
"அப்படியெண்டால் எங்களுக்கும் இரண்டு கச்சான் அல்வா வாங்கடா..."
"மாட்டேன்’ என்றேன்.
“வாங்கடா. இல்லாட்டில் என்ன நடக்கும் தெரியுந்தானே." என்று சயிக் கிளில் இருந்து இறங்கினான். பேசாமல் இரண்டு கச்சான் அல்வா மாஸ்ரரின் கணக்கில் வாங்கிக் கொடுத்தேன். இப்படித்தான் ஆரம்பம், பிறகுதான் நான் மாட்டிக் கொண்டது விளங்கியது. அந்தக் கிழமை அதுவே தொடர்ந்தது.
அடுத்த கிழமையும் இரண்டு பேரும் சயிக்கிளில் வந்தார்கள். "எங்களுக்கு இண்டைக்குக் கச்சான் அல்வா வேண் டாம். இரண்டு பிறிஸ்ரல் வாங்கடா' என்றான் இந்திரன். மறுத்தேன். வெருட்டினார்கள்
அன்றைக்கு நாலு பிறிஸ்ரலும், கச்சான் அல்வாவும் கேட்டபோது, கடைக் காரன் என் முகத்தைப் பார்த்தார். ஒன்றும் சொல்லாமல் எடுத்துத் தந்தார்.
"கனகசபை மாஸ்ரரிட்டைச் சொல் லாதை. சொன்னால் பல்லுக் கழரும்” என்றான் இந்திரன்.
திங்கட் கிழமை காலை பாடசாலைக் குப் போனபோது, கனகசபை மாஸ்ரர் கூப்பிடுவதாகப் பியூன் வந்து சொன் னான். கேள்விப்பட்டிருப்பாரோ. என்ற பயம் இருந்தது. ஆனால் மாதம் முடியாத படியால் கடைப் புத்தகத்தைப் பார்த்
2
6
திருக்க மாட்டார் என்ற தைரியத்தில் போனேன். ஸ்ராவ் ரூமில் கனகசபை மாஸ்ரருடன் ரீச்சரும் இருந்தா.
"வாரும். வாரும். நல்லா வளர்ந் திட்டீர் போல. புதுப் புதுப் பழக்கமும் பழகிவிட்டீர்” என்றார் மாஸ்ரர். எனக்குத் திக்கென்றது. பேசாமல் நின்றேன்.
"ஒருநாளைக்கு நீரும் இரண்டு சிக ரட் குடிப்பீரோ. உம்மை நல்ல பிள்ளை எண்டு நம்பி இருந்தம்..!” மறுமொழி சொல்ல முன் கன்னத்தில் பளீரென்று விழுந்தது. "கடைக்காரன் சொன்னான். நல்ல பிள்ளை கெட்டுப் போகுது சேர். உங்களாலை எண்டு என்னைக் குறை சொல்லுறான்."
அடுத்த கன்னத்திலும் அடி விழுந் தது. “அவனை அடியாதையுங்கோ." ரீச்சர் முன்னே வந்து மறித்தா. "அவன் நல்ல பெடியன். ஏன்ரா மேனை அப்பிடிச் செய்தனி. பார் நாங்களே
உன்னைக் கெடுத்துப் போட்டம்.”
"இல்லை ரீச்சர். உண்மையா நான் வாங்கவில்லை. இவன் இந்திரனும். அழகனும்தான் வாங்கிக் கொண்டு போனவங்கள்!" தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தேன்.
“சரி. சரி. நீர் இன்னமும் பபா மாதிரித்தான் இருக்கிறீர். போம் வகுப் புக்கு." ரீச்சருக்கு இந்திரனின் கெட்டித் தனம் தெரிந்திருந்தது.
என்னை வெருட்டி
இந்திரன் சொல்வது போல நான் இன்னமும் பபாதானோ. என்று நினைத் தபடி திரும்பி நடந்தேன். பின்னேரம் இந் திரனிடமும் அடி வாங்க வேண்டி இருக் கும் என்ற பயமும் கூடவே வந்தது. O

ந்ெதாரே اقا6 بارالمه همعقه
- மா.பாலசிங்கம
இருபத்தோராம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். இப்போதைக்கு இக்காலகட்டத்தை, உடல் உழைப்பை இலகுபடுத்தி இருக்கும் கணினி யுகம் என்கின்றனர். கற்காலத்தில் இருந்த இப்பூப்பந்து இந்த வியத்தகு மாற்றத்தைப் பெற்றது எப்படி? கண் மூடித் திறப்பதற்குள் இது நடந்ததா? இல்லை. இல்லவே இல்லை! எத்தனையோ அறிவாளிகள் தமது தொய்வு காணாத எத்தனிப்பு களாலேயே இதைச் சாத்தியப்படுத்தினர். இதற்கெல்லாம் அடிகோலியது அறிவுதான்! மனித சுயபுத்தி நாளுக்கு நாள் விருத்தியைப் பெற்றது. புது மெருகைப் பெற்ற இந்த அறிவு சமூகத்தில் பகிரப்பட்டது. ஒருவனது அறிவு, ஆற்றல் இன்னொரு வனிடம் சென்றடைந்த பொழுது அது புதிய பரிமாணத்தைப் பெற்று மேலும் விரிவு கண்டது. இந்த அறிவுப் பகிர்வை மானுடத்துள் விதைப்பதற்கு மனித குலத்துக்கு உதவியவைகளில் ஊடகமாக இருந்தவைகளில் எழுத்தும் ஒன்றாகும்! இன்னொன்றாக மேடைப் பேச்சைச் சுட்டலாம்.
எழுத்தின் மூலமே மனிதனது அறிவுத் தளம் கனதியானது. வாசிப்பு வீச்சு உச்சங் கொண்டது. இதனால் மூளைச் சலவையும் அரங்கேற்றம் பெற்றது. சமுதாயத்தின் மத்தியில் எழுத்தைப் பகிர்வதற்கு நூல்களே ஊடகமாகின. இந்த முறைமை கோள மயமானது வாழ்வை நெறிப்படுத்தும் அறிவாளிகள் தோன்றினர். மானுடத்தை இன்றும் வாழ்விக்கும் எழுத்தின் பிரவசந்தான் இலக்கியம்! இலக்கியத்தை ஆதியில் பொழுது போக்கெனக் கருதினாலும் - நாளடைவில் வாசகனின் அறிவுத்தளம் அகலிக்கவே அதை வாழ்வுக்கு வழி காட்டும் திசைமானியாக மக்கள் ஏற்றுக் கொண்டனர். "எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்” என மகாகவி பாரதியே பாராட்டினார்.
இலக்கியம் ஆரம்பத்தில் காவிய வடிவிலேயே கதை சொல்லும் பாணியில் மனித குலத்துள் விதைக்கப்பட்டது. பின்னர் உரைநடையும் பின் தொடர்ந்தது. இப்புது வருகை குறைந்த படிப்பாளிகளுக்கு அதிமதுரமானது.
27

Page 16
இலக்கிய எழுத்தை - ஒருவருக்குக்
கிடைக்கும் பெரு யோகமாக அறிவுலகு மெச்சுகின்றது. இதனால் அதைக் கை யாள்பவர்களும், சமூகத்தில் அதி உன்னத நிலையில் வைத்துக் கொண்டாடப்படு கின்றனர். இவர்களுக்குப் பரிசுகளும், விருதுகளும் பொலிகின்றன. இவர்களது சமகாலத்தில், வாழும் வேறொரு துறை யில் நிபுணத்துவம் பெற்றவர்களோடு இவர்களை ஒப்பு நோக்கும் பொழுது ஒர் இலக்கியவாதியின் பெயர் அதி சீக்கிரத்தில் மங்கிப் போகாது பாரில் நிலைத்து வருவதையும் காலம் உணர்த்து கின்றது. இதற்கு ஆதாரமாகச் சங்ககால இலக்கியவாதிகளைச் சுட்டலாம்!
இத்தகைய பயன்பாட்டைச் செய்து வரும் இலக்கிய எழுத்துக் கலையை இன்று சில பிரபல எழுத்தாளர்கள் ஒரங் கட்டி, தங்களது எழுதுகோல்களுக்கும், மூளைக்கும் ஒய்வு கொடுத்திருப்பதை மிகுந்த ஆதங்கத்துடன் நோக்க வேண்டி யுள்ளது.
இந்த விடயத்தில் இலக்கியவாதி களின் கண்களில் தைத்திருப்பவர் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன். இவரது இலக்கிய வழி வாசகருக்குத் தெரிந்ததே! மார்க்சிய இலக்கியத்தின் பிரசாரப் பீரங்கி யாக இருந்தவர். அந்த அணிக்குரிய ஏடுகளிலேயே தனது எழுத்து வாழ்வைத் தொடங்கியவர். இவரது சார்புநிலை அப்படி இருந்தும்கூட, ஜே.கே.இன் இலக்கியத் தரத்தை உள் வாங்கி ஆனந்த விகடன், தினமணிக்கதிர் போன்ற வணிக இலக்கிய ஏடுகள் அவரைத் தமது பக்கம் இழுத்தன. ஆனந்தவிகடன் சஞ்சிகை
2
8
யின் முத்திரைக் கதைத் திட்டத்தில் ஜே.கே.இன் கதைகள் அள்ளப்பட்டுப் பிரசுரமாகின. ஜே.கே.இன் இந்த வீச்சான ஆக்க இலக்கியச் செயற்பாடுகளின் தூண்டுதலால் அவருக்கு, உரத்த இலக்கிய விருதான பாரதீய ஞானபீடப் பரிசும் கிடைத்திருப்பது வாசகருக்குத் தெரிந்ததே.
“ஞானரதம்" என்ற இலக்கிய சஞ்சிகையையும் ஜெயகாந்தன் நடத்தி இலக்கியத்தில் நனைந்து தோய்ந்த அநுபவசாலி. ஏறத்தாழ அரை நூற்றாண் டுக்கும் மேலாக இலக்கியக் குடும்பம்" நடத்திய ஜே. கே. இன்று எழுதா நோன்பை நோர்க்கிறார். அவருக்கு இந்த ஒதுங்கல் எப்படிச் சாத்தியமானது?
“எழுத்தின் மீதுள்ள மதிப்பினா லேயே எழுதாமலிருக்கிறேன்.” அத் தோடு "எழுதுவதும் எழுதாததும் என் இஷ்டத்தைப் பொறுத்தது. அது என் தேவையைப் பொறுத்தது” எனவும் ஜெயகாந்தன் பேட்டியொன்றில் தனக்குச் சொன்னதாக லதா என்ற பத்திரிகையாளர் பதிவுகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஜே.கே.இன் இந்தப் பதில்களை வாசிக்கும் வாசகன் - இன்றைய தலை முறைகளின் படைப்புகளோடு தான் படைக்கப் போபவை தாக்குப் பிடிக்காது என்ற சபலத்தில் - அவநம்பிக்கையில் அவர் எழுதாதிருக்கிறார் - என ஏன் கருதக்கூடாது? எந்தெந்தத் தேவைகள் அவருக்கு தற்பொழுது உணரப்படாதிருப் பதால் அவர் எழுதாதிருக்கிறார்? பணமா? புகழா?

“எனது பதிப்பகத்திலிருந்து ஒரு மாதம் லிவு வாங்கித் தருவீர்களென்றால், நான் நல்ல பல சிறுகதை எழுதித் தருகி றேன்" எனத் தன் நல்ல பல சிறுகதை களை வாசகர்கள் படிக்காமல் செய்ததற்கு தன் பக்க நியாயமாக - வாசகரது கவனத் தைப் பெற்ற ஈழத்து எழுத்தாளர் ரஞ்ச குமார் சொன்னதாக - தனது ஆழ்மனத் தூறலில் எழுத்தாளர் இளைய அப்துல் லாஹ் பகிரங்கப்படுத்தி இருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் இன்னொரு எழுத் தாளரதும் அநுபவத்தைத் தெரிவிப்பது உசிதமாக இருக்கும். தென்னிலங்கை எழுத்தாளரான செகுணரெத்தினம் தான் அதிகாலையில் புகையிரதத்தில் தனது அலுவலகத்திற்குப் பயணித்துக் கொண்டி ருக்கும் பொழுது எழுதும் பழக்கமுண்டு எனத் தெரிவிக்கிறார்.
“வெற்றுத் தோட்டாக்கள் - ஸ்ரொக் முடிந்து விட்டது” என்றெல்லாம் எழுது வதிலிருந்து ஒதுங்கி இருப்போரைத் தற்பொழுது சில இலக்கிய அபிமானிகள் கிண்டல் செய்கின்றனர். இந்தக் கிண்டல் கள், நக்கல் கூட இவர்களைக் கடைசி ஓர் எதிர்பிலக்கிய எழுத்தாளர்களாக்கா திருப்பது குறித்து வாசகர் வட்டம் விசனிக்கின்றது.
கவனத்தைப் பெற்ற எழுத்தாள ரொருவர் பேனாவைத் தனது வாயில் கெளவி அதனால் இலக்கியம் எழுதிய தாகவும், இன்னொருவர் கைகளற்ற நிலையில் கால்களைப் பாவித்து இலக்கி யத்திற்குத் தனது ஆற்றலைப் பகிர்ந்த தாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
29
இவர்களெல்லாம் ஏன் இப்படி இலக் கியத்திற்காக மாய்ந்தார்கள்?
ஈழத்து இலக்கிய உலகை நோக்கும் பொழுது மிக வீச்சாக எழுத்துப் பணி செய்த சில பேனாக்கள் தற்பொழுது உறைந்து கொண்டிருக்கின்றன. பிரபல எழுத்தாளர் காவலூர் ராசதுரை, ஜோர்ஜ் சந்திரசேகரன், கலாமணி, அம்பி, சிற்பி, மலரன்பன், ந.பாலேஸ்வரி, மண்டுர் அசோகா, அருண் விஜயராணி, பொ.சண் முகநாதன், என்.எச்-நிஹ்மத் ஆகியோரது ஆக்கங்களைக் காண்பதரிதாகி விட்டது! ஏன் இந்த முடக்கம்?
தமிழக இலக்கிய உலகோடு எமது இலக்கியச் சூழலை உரைத்துப் பார்க்கும் பொழுது வெளிப்பாடுகள் மகிழ்ச்சியாக இருக்காதுதான்! வணிகர் குழுவும், தீவிர சமுதாய அக்கறையுமுடைய இன்னொரு மாற்றுக் குழுவும் அங்கு எழுத்துலகை ஆதிக்கம் செய்கின்றன. எனவே அங் கிருக்கும் கணிசமான எழுத்தாளர் சிலர் குசேலர்களாக இல்லாது குபேரர்களாக வாழ்கின்றனர். ஆனால் ஈழத்து எழுத் தாளன் இன்னமும் ஒட்டாண்டிதான்! இங்கு எழுத்துத் தானந்தான்! மக்களின் அவலங்கள், மீட்பு என்பன குறித்தே எம் எழுத்துச் சமரிடுகின்றது. எழுதாமைக்கு ஆரோக்கியமே காரணமெனில் அத்தகை யோரைத் தெண்டிக்க முடியாது! எழுத்துக்கள் ஜனநாயகப் பார்வைக்கு அப்பாலாகி விட்டதெனில் அதுவும் கணிப்பிற்குரியதே! என்றாலும் அத் தகைய கடும்போக்கு இன்னமும் இந் நாட்டு இலக்கியத்திற்கு ஏற்படவில்லை யென்றே சொல்ல வேண்டும். ரஷ்ய

Page 17
எழுத்தாளர் போரிஸ் பஸ்ரநாக், ஆப்கானிஸ்தான் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஆகிய சர்வதேச இலக்கியவாதி களுக்கு ஏற்பட்ட - மானிடம் திட்டும் - ஈனமுறைமை இன்னமும் இந்நாட்டு எழுத்தாளருக்குப் பாவிக்கப்படவில்லை! வாழ்வைக் கொண்டிழுக்கும் - குடும்பத் திற்குக் கஞ்சி வார்க்கும் தொழிலொன் றோடேயே இங்கு இலக்கியவாதி இலக்கியம் படைக்கிறான். ஊதியத்தைக் கொடுக்கும் தொழில் முடிந்த ஓய்வு நேரத்திலேயே இது அவனுக்குச் சாத்திய மாகின்றது! எனவே அவனுக்கு தொழி அலுப்பு என்பனவற்றைப் போக்க நேரம் இல்லாது போகின்றது. எழுதுவதற்காக அவன் தூக்கத்தைக் கூட இழக்கிறான்.
லால் ஏற்பட்ட களைப்பு,
இதற்காகத்தான் ரஞ்சகுமார் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்!
வருமானத்தைப் பெய்யாத ஒன்றிற் காகக் காலத்தை மினக்கெடுத்த யார்தான் முனைவர்? இதற்கு வேர் வயிற்றைக் காய வைக்கும் இன்றைய வாழ்க்கைச் செலவே! கடைகளில் பொருட்களை அடுக்கிக் கொடுக்கும் கட்தாசிப் பை களில் காணப்படும் வெற்றிடங்களில் எல்லா எழுத்தாளர்களும் எழுத மாட் டார்கள். இங்கு வாசகனின் உச்சப் பிரபலத்தைச் சுகிக்கும் எழுத்தாளர் கூட கோடிட்ட தாள்களில்தான் தம் படைப்புகளை எழுதுகின்றனர். எழுதும் தாள், மை, பேனா இவைகளெல்லாம் இலவசமாகக் கிடைக்குமா? எனவே இலக் கியம் படைப்பதற்கு அறிவுத் தேவை மட்டுமன்றிப் பணத் தேவையுமுண்டு.
3
O
‘ஈழநாடு’ பத்திரிகை ஆக்கமொன் றைப் பிரசுரித்தால் தவறாது சம்பந்தப் பட்ட படைப்பாளிக்கு இதழொன்றை அனுப்பி வைக்கும் முறைமையைத் தனது சேவைக் காலத்தில் நடைமுறைப்படுத்தி வந்தது. ஆனால் இன்றைய பத்திரிகைகள் அப்படிச் செய்வதில்லையே! அன்பளிட் புக் கொடுக்கின்றனரென்றால் அதுவு மில்லை! தனது படைப்புப் பிரசுரமாகும் இதழைத் தனது பணத்திலேயே வாங்கிப் படிக்கும் - பாதுகாக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு எழுத்தாளன் தள்ளப்படுகிறான். இது எழுத்தாளனின் சுயகெளரவத்தைச் சுண்டிப் பார்க்காதா? இலக்கிய ஊக்கத்தைக் கீழிறக்காதா?
பொன். ராஜகோபால் ஞாயிறு வீரகேசரிக்குப் பொறுப்பாக இருந்த பொழுது பத்திரிகையில் பட்டிய லொன்றைப் பிரசுரித்தார். அதில் அக் காலகட்டத்தில் எழுதாதிருந்த சில பிர பல எழுத்தாளர்களது பெயர்களை அம்பலப்படுத்தி, அவர்கள் எழுதலாமே என்ற வேண்டுகோளையும் முன் வைத் திருந்தார். இத்தகைய இலக்கியம் நச்சிய - அக்கறை இன்றுள்ள பத்திரிகையாளர் எத்தனை பேருக்குண்டு!
வாசகர்கள் கடிதங்களைக்கூடப் பிரசுரிக்கிறார்களில்லையே! அவைகள் மூலமாக எழுத்தாளன் தனது தரத்தை அறிய முடியுமே! பி.பி.சி. ஒலிபரப்புச் சேவை கிரமமாக நேயர் கடிதங்களை
ஒலிபரப்புகின்றதே!
இத்தகைய தாக்கங்களும் எழுத் தாளனின் விரக்தியை உச்சப்படுத்தி

அவனை எழுதாதிருக்கச் செய்திருக்கக் கூடும். எனவே தனக்கு உள்ள “பெயர் போதும்!” என்ற முடிவுக்கு அவன் வந்து எழுதுவதை நிறுத்தி இருக்கலாம். இவை களை இலக்கிய அக்கறையுள்ளோர் மனங்கொள்ள வேண்டும்.
இலக்கியம் படைக்காது இவை களுக்காக எழுத்தாளன்’ என்ற பட்டயத் தோடு வாழ முடியுமா?
எழுத்தாளன் சமூகத்தின் ஆத்மா எனவும், கலை இலக்கிய முயற்சிகள் ஒரு சமூகத்தில் தேக்கமடையுமானால், சீரழிந்து போகுமானால் அந்தச் சமூகத் தின் ஆத்மாவே அழிந்து போகும் எனவும், இலக்கியத்தில், சமூகவியலில் ஆழக்கால் பதித்த அநுபவசாலிகள் கூறி இருக்கின்றனர். எனவே சமூகத்தில் எழுத்தாளன் அதி முக்கியம் பெற்றுப் பெரும் அந்தஸ்தைச் சுவீகரிக்கின்றான்.
பேனா எடுத்தவர்களுக்குச் சமூகம் கற் .
பித்த இந்த உண்மை தெரிந்திருக்க வேண்டும்!
புகழுக்காகவோ பணத்திற்காகவோ எழுதிக்கொண்டு தம்மை எழுத்தாள ரெனப் பிரகடனப்படுத்துபவர்களை நிச்சுயமாக மக்கள் ஏற்கமாட்டார்கள்!
அயலானை நேசிக்கும் மனப்பக்கு வம் ஒருவனிடம் துளிர்க்குமாகில் அவன் பிறரது இன்னல் கண்டு துடிப்பான். அதைத் துடைப்பதற்கான மார்க்கம் தேடு வான். முன்னர் குறிப்பிட்டது போல் அவனுக்கு எழுத்து ஆயுதமாகும்! PEN IS MIGHTIER THAN SWORD. Girar
பதைக் கடந்த காலம் எண்பித்திருக்
31
கின்றது. காலாதி காலமாக உலகத்தை வலம் வந்து கொண்டிருக்கும் சத்திய வாக்கு இது, இந்த எழுத்து மூலமாக கொடுமைகள், பழிவாங்கல்கள் என்பன சந்திக்கு வருகின்றன. இதுவே அதன் கலைத்துவ சிறப்பாலும், சமூகப் பண் பாட்டாலும் மக்களது அங்கீகாரத்தைப் பெற்று இலக்கியமாக உயர்கிறது. எழுத்தை, மானுடத்தை நேசிக்கும் சகலரும் கைக் கொள்ள வேண்டு மென்பதே மானுடத்தின் மனவோசை, இது கடமை! பொறுப்பு: இந்த எழுத்துக் கலை ஒரு சிலருக்கே பலிக்கின்றது. இதை உதாசீனப்படுத்துபவர்கள் தமது பொறுப்பை, கடமையைத் தட்டிக் கழிப்ப வர்களாகின்றனர். அத்தோடு இயற்கை தமக்கழித்த வரத்தை மதிப்பிறக்கம் செய் கின்றனர்.
எடுகோளுக்குத் தட்டுப்பாடா! இந் நாடு தானே பிரச்சினை, குழப்பங்கள் என்பவற்றின் வங்கியாகி துன்பக் கேணி யாக நுதம்புகின்றதே! இந்நாட்டவர்கள் சுமக்க முடியாத சுமைகளோடு மல்லுக் கட்டிக் கொண்டு வாழ்கின்றனர். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் சாகா வரம் பெற்ற பாடல்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்டம் ஊற்றுக் கண்ணாக இருக்க வில்லையா? அச்சூழலைப் பயன்படுத்தி அவர் எப்படி 'மகாகவி ஆனார். அந்தப் புத்தி ஏன் எமக்கும் ஏற்படக் கூடாது! லூசன், மார்க்கிம் கோக்கி போன்ற இலக்கிய ஆளுமைகள் எந்தச் சூழலில் தமது படைப்புகளை ஆக்கினர். ஆகா யத்தில் முப்பத்தெண்ணாயிரம் அடிக்கு மேலிருந்து தனது ஆழ்மனத் தூறல்” எழுதியதாக இளைய அப்துல்லாஹ் கூறி

Page 18
இருக்கிறார். அத்தகைய அக்கறை நமக்கு வேண்டும்!
ஆக, தம்மை நிழல் போலத் தொடர்ந்து கொண்டிருந்த எழுத்துக் கலையைத் துறந்து நோன்பு காக்கும் - தமது எழுத்துக்களால் சமூகத்தை நெறிப் படுத்திய எழுத்தாளர்கள் ஈழத்து இலக்கி யத்திற்கு ஒரு புதுமுகத்தைக் கொடுத்த ஆளுமைகள் - விபத்தாகத் தமக்கு ஏற் பட்டு விட்ட மந்தாரத்தைக் கலைத்து விரட்டி மீண்டும் தமது பேனாக்களைக் காகிதத்தில் உழச் செய்ய வேண்டும்.
அவர்களது மீள்வருகை இலக்கியத்தில் சிறகசைத்துக் கொண்டிருக்கும் புதிய சந் ததிக்கு ஊட்டத்தைப் பிலிற்றும். இலக் கிய உழைப்பில் தம்மை அர்ப்பணித்து இரத்தத்தை வியர்வையாக்கிக் கொண்டி ருக்கும் இலக்கிய ஏடுகளிலாவது இவர் கள் தமது எழுத்தியக்கத்தைச் செயல் படுத்த வேண்டும். இது அவர்கள் நாடு, மொழி, இனம் என்பவற்றிற்குச் செய்யும் பாரிய பணியாகும்!
எனவே, வாருங்கள்! ஊர் கூடித் தேர் இழுப்போம்! O
భఖక్షఃశ్మళళ్ల
நினைவுப் பேருரை நிகழ்த்துவதையும், தலைமை வகித்த மேமன்கவி, வரவேற்
துரைவியின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நினைவுப் பேருரை நிகழ்வில், கே.எஸ்.சிவகுமாரன் 'ஈழத்து ஆங்கில இலக்கியம்' எனும் தலைப்பில்
புரை நிகழ்த்திய ஜெயலஷ்மி விஸ்வநாதன் ஆகியோரும் படத்தில் காணப்படு
கிறார்கள்.
32
 
 

6a6516Ñi62S2a65
- ஏ.இக்பால்
சித்திரம் ஒன்று சிறப்புடன் தீட்டினேன் அற்புதம் அசைந்து உயிர் பெற்று வந்தது! விந்தைகள் கண்டு வியப்பில் அதிர்ந்திட்டேன் நத்தை போல் ஊர்ந்து நுணுகியே நோக்கினேன்!
கற்பிக்கவில்லை கவலை உனக்கல்ல கற்பவர் தேடுவார் அதைவிட்டு நீபெரும் அற்புதம் செய்துயர் அறிவொளி சுட்டினாய் இச்செயல் விரும்பாதோர் உனக்கெதிராகினர்!
அறிவையே நேசித்து அறிவினை ஊட்டினாய் அறிவற்ற போக்கினை அமைதிப்படுத்தியோர் பறிபோன தென்று பதறி விழுந்தனர் குறி வைத்துத் தாக்குதல் குறைவற்று நடந்தது!
இதையும் புரியாது இன்னும் பெருவிழாப் புதைபொருள் போல போற்றி நடத்தினாய் கதையை முடித்தவர் கட்டியங் கூறினர் நிதமிவை இருப்பதைக் கொள்கை நிமிர்த்துமா?
33

Page 19
தமிழியல் ஆய்வுநெறியில் மரபிலக்கியம், நவீன இலக்கியம், பக்தி இலக்கியம், நாட்டாரிலக்கியம், பிரதேச இலக்கியம், அறிவிலக்கியம், புலம்பெயரிலக்கியம், தனியாள் இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பிலக்கியம் என்னுந் துறைகளிலே விதந்துரைக்கத் தக்க முறையிலே பெரும் பணிகளாற்றியுள்ள பல்கலைக்கழக ஆய் வறிஞர் பேராசிரியர் கலாநிதி க.அருணாசலம் அவர்களாவார். பல்கலைக்கழகத்திற் குள்ளும், அதற்குப் புறம்பாயும், அப்பாலும் தமது கடும் பிரயாசைத் திறத்தினால் அறிவுப் பரம்பற் பணிகளை முன்னெடுப்பவர் பேராசிரியரவர்கள். தேடலும், ஆய்வும், பரப்புதலும் அவர்தம் கடமைகளெனக் கொண்டுள்ளவர். வரன்முறையான பல்கலைக் கழக ஆய்வறிவு நெறிகளைக் கடைப்பிடித்தும், ஆய்வறிவிலே தற்போது பேணப்படும் நெறிகளை அனுசரித்தும் தமது ஆய்வுகளை முன்னெடுத்து வருபவர். இக்கூற்றுக்கான சான்றாதாரங்களாக அவர் எழுதி வெளியிட்டுள்ள ஆய்வு நூல்கள் இலங்குகின்றன.
பேராசிரியர், கலாநிதி ക.eത്രത്തേif ஆய்வு நெறிகளும்.
- கனகசபாபதி. நாகேஸ்வரன்
பேராசிரியர் க.அருணாசலம் அவர்கள் இலக்கியத்துறைகளிலும், தமிழ் இலக்கியத் திறனாய்வுத்துறையிலும் மிகப் பிரபல்யம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களிடம் பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்றுச் சிறந்தவர். முறையான ஆய்வு அணுகுமுறை களையும், மேற்கிளம்பும் நவீன இலக்கிய இலக்கணக் கொள்கைகளையும், நசிந்து, அமிழ்ந்து, அடக்கப்பட்டுக் கிடக்கும் தரமான படைப்பாளர்களது எழுத்துக்களையும், அறிமுகங்களையும் கூட முன்னெடுத்து, வெளிக்காட்டும் நோக்குநிலை இயல்பாகக் கைவரப் பெற்றவர் என்பது அவரது எழுத்துக்களினாலும், ஆய்வுநூல்களினாலும் புலப்படுத்தப்பட்டுள்ளமை பெரிதும் மனங்கொள்ளத்தக்கது.
பேராசிரியர் அருணாசலம் அவர்களது ஆய்வுநெறிப் பண்புகள் பல திறத்தன வாயமையும். எடுத்துக் கொண்ட விடயத்தை முதலில் அதன் பின்புலத்தில், புறச்சூழல், காலம், ஏதுக்கள், காரணங்கள், முரண்பாடுகள், தேவைப்பாடுகள், வரலாற்று உந்துதல்கள், வேறு சூழ்நிலைத் தாக்கங்கள் என்பவற்றைத் துணை கொண்டு நிறுவும் பண்பினை முதலிற் சுட்டலாம்.
34

இலக்கியத்தின் பின்னணி என்பது அல்லது படைப்பொன்றின் தோற்றப் பின்னணி என்பது மிகுந்த சுவாரஸ்ய மானது. தமிழிலக்கியப் பாரம்பரியத்திலே மிக நீண்ட வரலாறும், முறைமைகளும், நெறிகளும் இது விடயத்தில் நிலவி வந் துள்ளன. இப்பின்னணியில் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் தமது விரிவுரை களிலும், ஆய்வு நூலாக்கங்களிலும், ஏனைய போதனைகளிலும் சமநோக்கு நிலை, நடுநிலை ஆய்வணுகு நெறியிலே கருத்துக்களைக் கூறுவதும், நிரற்படுத்து வதும் பெரிதும் அவதானத்திற்குரியது. சிந்தனைகள் பல்துறைசார் திறத்தன; பார்வை, நோக்குநிலை, அணுகுமுறைகள் பல திறத்தன. கண்ணோட்டங்களும் பற் பல. ஆளுக்காள் வேறுபடும் அணுகு முறைகளும், பக்கச்சார்பான குழு மனோ நிலையில் உள்ள கொள்கை கோட்பாடு களும் உள்ளன. இவற்றிலே ஆர்ப்பாட்ட மில்லாது பன்முக நோக்கிலே கருத்துக் குக் கருத்தினையே முன்வைத்து ஒரு விடயத்தை அலசும் ஆய்வுப் பண்பினைப் பேராசிரியரிடத்தில் கண்டுகொள்ள முடி கிறது. வளர்ச்சி, மாறுதல், புதுமை, காலத்தினதும், சூழ்நிலைகளினதும் தேவைகள் என்பன குறித்த உள்ளார்ந்த நோக்கு நிலைகள் உள் நின்றியங்க (அந்தர்யாமி நிலையிலே தொழிற்பட) எடுத்துக்காட்டுகளையும், களையும், ஆதாரங்களையும், சளையும், ஆய்வறிஞர்களையும் குறிப் பிடும் விசால நோக்கு ஆய்வணுகுமுறை யாளர் பேராசிரியர் கலாநிதி க.அருணா சலம் என்றால் அது முற்றிலும் பொருந் துவதாகும்.
மேற்கோள்
சான்று
3
5
கற்றலிலும், தேடலிலும், சிந் தனைச் சிறப்பிலும் ஊன்றி நின்று இலக் கிய, வரலாறு சம்பந்தமான விடயங்களை அணுகுந் திறத்தினால் இவ்வுயரிய ஆய்வு நோக்கு கைவந்துள்ளது என்றுங் கூறலாம் போலத் தோன்றுகிறது.
பேராசிரியர் அருணாசலம் அவர்
களால் எழுதி வெளியிடப்பட்டுள்ள நூல் கள் வருமாறு :
1. காலக் கண்ணாடி இளங்கதிர்.
பாரதியார் சிந்தனைகள்.
2
3. மலையகத் தமிழ் இலக்கியம்.
4. தமிழில் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.
சுவாமி விபுலானந்தரின் சமயச் சிந்தனைகள்.
மலையகத் தமிழ் நாவல்.
தமிழியல் ஆய்வு முயற்சிகள். இளந்தலைமுறையின் கல்வியும்.
சாதனையாளர் சாரல்நாடன்
6tsillusor 6Tib.
பேராசிரியர் அருணாசலம் எழுபதுக் கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒன்பது தடவைகள் இவ ரது ஆய்வு நூல்களுக்கான சாகித்திய மண்டலப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 1979ஆம் ஆண்டு கலாநிதிப் பட்ட ஆய்வுக்கான பொன்னம்பல முதலியார் நினைவுப் பரிசு இரட்ணதீபம்" வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. பேராசிரியரது ஆய்வுப் புலமைச் சாதனைகள் இவை யெனலாம்.

Page 20
பேராசிரியர் அருணாசலம் அவர் களது ஆய்வணுகு முறைகளையும், அவ ரது துல்லியமான பார்வைகளையும், இலக் கியச் செல்நெறிகளையுணர்த்துந் திறனை யும் அவரது படைப்புகளினூடே (மூல நூல்களினூடே) நோக்குவது இங்கு அவ சியமாகிறது. இக்கட்டுரைக்கெனத் தம் மிடமிருந்த மூன்று நூல்களை அடி யேனுக்கு உபகரித்து உதவினார் பேரா சிரியர் அவர்கள்.
இனி நூல்களினூடே இவரது புலமை நுட்பத்தினைத் தரிசிப்போம். பட்டப் படிப்பில் கற்கும் பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரிப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பட்டப்படிப்பின் கற்கை நெறிகளுக்கான (M.A., Ph.d) என்பவற்றுக்கும் பெரிதும் பயனளிக்கத் தக்க வகையில் இவரது நூல்கள் பல் பயன் நல்குவதாயமைந்துள்ளமை மனங் கொள்ளற்பாலது.
காலக்கண்ணாடி இளங்கதிர் :
பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் இளங்கதிர் என்னும் புகழ் பெற்ற அறிவியற் சஞ்சிகையை இன்றும் வெளியிட்டு அறிவைச் சமூக மயப் படுத்தி வருகிறது. பேராதனைப் பல் கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் இதன் வெளி யீட்டில் முனைந்து தொழிற்பட்டு வரு கிறது. கலாநிதிகள், பேராசிரியர்கள், அறி வியல் மேதைகள், நாட்டின் தலைவர்கள், தலைசிறந்த நிர்வாகிகள், சிந்தனை யாளர்கள், ஆன்மீகச் செல்வர்கள், வரலாற்றுத்துறை நிபுணர்கள் போன் றோரை உருவாக்குவதிலே மிகவும் பயன் தரு வகையில் பங்களிப்புச் செய்த
36
சஞ்சிகை இளங்கதிர் என்று கூறுதல் சாலும். 1948 - 49ஆம் ஆண்டிலே முதல் இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியர், மாவிட்டபுரம் அறிவொளி த.சண்முக, சுந்தரம் அவர்கள். தெல்லிப்பழை மகா ஜனக் கல்லூரியிலே அவரிடம் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பிலே கற்பதற்கான பெருவாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது 'பெருந் தவப்பேறு' என்பேன். தசம்" என்ற மூன்றெழுத்தில் நாம் அவரை அழைப்பதுண்டு. பேராசிரியர் சு.வித்தி யானந்தன் (துணைவேந்தருடன்) நெருக்க மான பிணைப்புடையவர் தசம்'. 'வித்தி" என்பது பேராசிரியர் வித்தியானந்தன். தசம்" என்பது அறிவொளி த.சண்முக சுந்தரம். 'வித்தி, சுருக்கக் குறியீட்டால் அழைக்கப்பட்ட
தசம்', 'விம்’ என்னும்
மூவரும் என் வாழ்விலே உயர்கல்வி யிலே பெருந் தாக்கங்களையும், பாதிப் புக்களையும் ஏற்படுத்தி உயர்த்தி நிறுத்தி யவர்களாவர். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலே எம்மைக் கற்பித்தவர் "விம்" என்றழைக்கப்பட்ட ச.விநாயகரத்தினம் ஆசிரியர். "விம்', 'தசம்', 'வித்தி’ என்ற ஈரெழுத்தும், மூவெழுத்துக்களுங் கொண்ட பேராசான்களுடன் கிடைந்த தொடர்புகள் நான் பூர்வ புண்ணியத்தில் செய்த தவப் பயனாலுண்டானவ்ை. க.பொ.த. (உயர்தரம்) கலைத்துறையிலே கல்வி கற்ற காலமாகையால் 1973, 74 ஆம் ஆண்டுகளிலே ‘இளங்கதிர் சஞ்சிகையின் கல்விப் பெறுமதியையும், அறிவாழ ஆராய்ச்சி நுட்ப நலன்களையும் கண்டுகொள்ளும் வாய்ப்பும் எமக்கு உண்டாகியது. இளங்கதிர் சஞ்சிகையின் பெருமையும், விடய வளமும் அறி

வொளி த.சண்முகசுந்தரம் அவர்களின் வாயாலேயே கேட்டபதற்குரிய பெரும் பேறு கிட்டிற்று. பேராசிரியர் அருணா சலம் அவர்கள் எழுதிய காலக்கண் ணாடி இளங்கதிர் நூல் 1994ஆம் ஆண்டு முதற் பதிப்பாக வெளியிடப் பட்டுள்ள இந்நூலை எஸ்.எம்.ஹனிபா அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள இராஜகிரிய, கொஸ்வத்தை விதியிலமைந் துள்ள தமிழ் மன்றத்தினரால் சென்னை யில் கண்ணப்பா ஆட் பிரிண்டர்ஸ் மூலம் கணினிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. 22.02.1994இல் இந்நூலுக்கு முன்னுரை எழுதிய இந்நூலாசிரியர், பேராசிரியர் அருணாசலம் மேல்வருமாறு எழுதுகிறார்,
"பேராதனைப் பல்கலைக்கழகத் துடன் கடந்த 27 வருடங்களாக மாணவ னாகவும், விரிவுரையாளராகவும் தொடர்பு கொண்டுள்ளவன் என்ற வகையில் பல் கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்க நடவடிக் கைகளையும், சங்கத்தின் ஆண்டு மலரான இளங்கதிரின் இதழ்களில் வெளிவரும் ஆக்கங்களையும் அவதானித்து வந்துள் ளேன். இந்நாட்டினதும், தமிழ் பேசும் மக்களினதும், பேராதனைப் பல்கலைக் கழகத்தினதும், ஈழத்துத் தமிழ் இலக்கி யத்தினதும் வரலாற்றுடன் அவை பின் னிப் பிணைந்தனவாகவும், அவற்றைப் பிரதிபலிப்பனவாகவும் விளங்கி வந்துள் ளன. 1948ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை வெளிவந்து கொண்டிருக் கும் இளங்கதிர் இதழ்களில் இடம்பெற்று வரும் ஆக்கங்களைக் கருத்தூன்றிப் படித்தபோது அவை தமிழியலின் பன் முகப்பட்ட வளர்ச்சியைப் பெருமளவிற்
3
7
குப் பிரதிபலித்து நிற்பதை உணர்ந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளமை நுனித்து நோக் கத்தக்கது. இந்நூலிடம் பெறும் சில தகவல்கள் வருமாறு :-
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் 1926ஆம் ஆண்டு புகழ் பூத்த கணிதப் பேராசிரியராக விளங்கிய சுந்தரலிங்கத்தின் தலைமையில் நிறுவப் பட்டது. 1926ஆம் ஆண்டு தொடக்கம் 1940ஆம் ஆண்டு வரை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியாக இயங்கிய நிறுவனம் 1941ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகமாக மாறியது. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பெரும்பகுதி 1952 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேரா, தனைக்கு இடமாற்றம் பெற்ற பொழுது தமிழ்ச் சங்கமும் பேராதனையில் இயங் கத் தொடங்கியது. 1948ஆம் ஆண்டு, இளங்கதிர் முதலாவது இதழ் (1948/49) தோன்றியது. இளங்கதிர் முதலாவது இதழாசிரியராகத் த.சண்முகசுந்தரம் விளங்கினார். (ப.13) இளங்கதிரில் தமிழ் இலக்கியம், மொழியியல், வரலாறு, அரசறிவியல், மெய்யியல் எனப் பல துறைகள் சார்ந்த அரிய கட்டுரைகள் இடம்பெற்றமையும், பல்கலைக்கழகத் தின் கசல பீடத்தினருக்கும் சொந்தகமாக அமைவதும் நோக்கற்பாலது. இந்நூல் இளங்கதிர்களின் விமர்சனமாயமைவதும் காணத்தக்கது.
மலையகத் தமிழ் இலக்கியம் :
பேராசிரியர் அவர்களின் ஆய்வுப் பார்வைகளுள் முனைப்புற்றுள்ள துறை

Page 21
"மலையக இலக்கியம்’ என்று கூறினால் அது மிகைக் கூற்றல்ல. பேராசிரியர்கள் சுவாமி விபுலானந்த அடிகள், க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம், சு.வித்தியானந்தன், சிங்கம், பொ.பூலோகசிங்கம், செ.குண சிங்கம், கா.இந்திரபாலா, சி.பத்மநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, அ.சண்முக
தனஞ் செயராச
தாஸ், பொ.பாலசுந்தரம்பிள்ளை, புவியியற் பேராசிரியர் வி.செல்வநாயகம், இ.பாலசுந்தரம், பேர்ட்றம் பஸ்தியம் பிள்ளை, சி.தில்லைநாதன், நா.சுப்பிர மணியன், சித்திரலேகா மெளனகுரு, நுஃமான், துரை.மனோகரன், வி.மகேஸ் வரன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் இன்னும் பலர் "மலையக இலக்கியம் தொடர்பாகக் கவனஞ் செலுத்தியுள்ளாராயினும், "மலையக இல்க்கியத் தளத்தில் ஆழமான செய்தி களையும், ஆய்வு ரீதியான கொள்கைக ளையும் வகுத்துத் தந்துள்ளார் பேரா சிரியர் க.அருணாசலம் என்பதில் எந்தத் தவறும் இருக்க முடியாது என்பது திட மான நம்பிக்கையாகும். சாரல்நாடனும், முரளிதரனும், லெனின் மதிவாணனும், அந்தனி ஜீவாவும், மாத்தளை சோமுவும், தமிழன்பனும், மாத்தளை வடிவேலனும், கண்டி இராமனும், இக்பால் அலியும், சி.வி.வேலுப்பிள்ளையும், லெ.சாந்தி குமாரும், இரா.சிவலிங்கமும், என்.எஸ். எம்.இராமையாவும், மாத்தளைக் கார்த்தி கேசுவும், நந்தியும், டொமினிக் ஜீவாவும், பொன்னுத்துரையும், நுரளை சண்முக நாதனும், நுவரெலியாக் கல்விப் பணிப் பாளர் மகாலிங்கன், பாலா சங்குப் பிள்ளை, சி.அழகுப்பிள்ளை போன்ற
3
8
இன்னும் பல மலையக, பிற எழுத்தாளர் களில் சிறுகதை, நாவலாசிரியர்களில் குறிப்பிடும் வர்ணனைகளும், விமர்சனங் களும் ஒருபுறமிருந்தாலும், பேராசிரியர் அருணாசலம் அவர்களின் ஆழமான அகலமான விமர்சன நோக்குக்குப் பின் னர்தான் கருத்திருத்தத்தக் கனவாகும் என்பதே உண்மை என்பதனை அனை வரும் ஒப்ப ஏற்றுக்கொள்வதுண்டு. இன்றும் 'மலையக இலக்கியம்’ என்னும் நூலை வெளியிட்டார். தென்றல் வெளி யீடாக வெளியிடப்பட்டுள்ளது இந்நூல். தென்றல் வெளியீட்டகத்தின் பிரதான வளவாளரும், பேராசிரியர் அருணாசலம் அவர்களின் M.A. வகுப்பு மாணவரும், எமது உறவினரும், கல்வி ஆலோசக நிபுணராயும் உள்ள க.சிவஞானசுந்தரம் M.A. அவர்கள் இவ்வெளியீட்டினைச் செய்துள்ளார். நூலாசிரியர் பற்றி" என்று சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ.மகேஸ்வரன் எழுதிய விடயத்தில் மேல்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"நவீன இலக்கியங்களிலும், விமர் சனத்திலும் அதிகளவு ஆர்வம் கொண்ட பேராசிரியர் அவர்கள், கடந்த இருபத் தெட்டு ஆண்டு காலமாகத் தான் வாழு கின்ற மலையக மண்ணின் மீதும் தோட் டத் தொழிலாளர் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இயல்பாகவே சமூகத்தின் அடித்தள மக்கள் மீது அவர் கொண்டி ருக்கும் ஈடுபாடு மலையகத்தின் மீது ஆழப் பதிந்தது. இதனால் மலையகத் தொழிலாளர் குறித்த வரலாறும், அத னுாடு அவர்களது அல்லது அவர்கள் தொடர்பான இலக்கிய வரலாறும் எழுதப் பட வேண்டும் என்பது வெறும் கோஷ

மாக மட்டும் அமையாது, அது எழுதப் பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர். இதனால் கடந்த ஒரு தசாப்த காலமாக மலையக இலக்கியம் பற்றியே அவர் கூடுதலாகச் சிந்தித்தும், எழுதியும் வந் துள்ளனர். அவற்றின் அறுவடையே இந்த நூலாகும். இன்றும் மலையகப் புனைகதைகள், மலையக சஞ்சிகைகள், மலையகத் தொழிலாளர் பற்றிய ஆய்வு கள், மலையக நாடகங்கள் முதலியன தொடர்பாக விரிவாக ஆராய்ந்து வரு SairpTi.” (u.V)
1975 முதல் 1979ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளிலே யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்திலே பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கா.இந்திர பாலா, எஸ்.பாலகிருஷ்ணன், மு.நித்தி யானந்தன் போன்றோர் விரிவுரையாளர் களாகப் பணியாற்றிய வேளையிலே மத்திய மலையகத்தைச் சேர்ந்த மாண வர்களும் அங்கு பட்டதாரிப் படிப்பினை மேற்கொண்டனர். நானும் அவ்வேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை மாணவனாகத் தமிழ் மொழியைச் சிறப்புப் பட்டப்படிப்பாகக் மேற் கொண்ட வேளைகளிளெல்லாம் மலை யக இலக்கியம் குறித்தும், அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிய காரசாரமான விவாதங்களும், சர்ச்சை களும், கருத்தியல் பேதங்களும் ஏற்பட்ட மையைத் தற்போதும் நினைத்து கொள் கிறேன். மு.நித்தியானந்தனின் கருத்துகள் இன்றும் லண்டனிலிருந்து முழக்க மாகவே வெளிவருகின்றன. சிந்தனை யாளர் மத்தியில் பிரபல்யம் பெறும்
7.
39
வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் விடை தரும் வகையில் பேராசிரியர் கலாநிதி க. அருணாசலம் அவர்களது நூல் அமைந்துள்ளது என்று கூறுவது சாலப்பொருந்துவதாகும். மலையகத் தமிழ் இலக்கியம் குறித்த பேராசிரியர் அருணாசலம் அவர்களது எதிர்காலத்துக் கணிப்பீடுகளும், நோக்கர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துறையிலே பேராசிரியரது பங்குப் பணிகள் பெரிதும் பாராட்டத்தக்கன. மலையக இலக்கியத்திற்கே வலுச் சேர்ப்பன.
பாரதியார் சிந்தனைகள் :
தமிழாய்வு நோக்கிலே வரலாற்று ரீதியான இலக்கிய நோக்குடன் வெளி யிடப்பட்டுள்ள நூல் பாரதியார் சிந்தனை கள் (1984) என்பது. இந்நூல் ஒன்பது தலைப்புக்களிலே பாரதியாரது பன்முகச் சிந்தனைகளையும் ஆய்வு செய்கிறது. இந் நூல் மேல்வரும் இயல்களைக் கொண்ட மைந்துள்ளது.
1. பாரதியாரின் கவிதைகளும், உரை
நடை ஆக்கங்களும்.
2. பாரதியார் ஆஸ்திகன், முற்போக் காளன், பொதுவுடைமையாளன்.
3. பாரதியாரும் அரசியலும்.
4. சாதி ஏற்றத்தாழ்வும் விளைவுகளும்,
தொழிலாளரும் தொழிலும்.
6. கல்வியும் அறிவியலும்.
சமயமும் வாழ்வும்.

Page 22
8. பாரதியரும் கதை இலக்கியமும்,
9. தமிழ்ச்சாதி.
புரட்சிக்கவி, நவயுகக்கவி பாரதியார் பற்றியும், அவரது இலக்கியப் படைப்பு கள் பற்றியும் குறித்த வினாக்கள் க.பொ. த. (உயர்தரம்) தமிழ்மொழி இலக்கிய்ப் பாடத்திற்கும், பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கும், M.A., M.Phic, Ph.d støbn IsrappløSib, தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் (இணையப் பல்கலைக்கழக) பாடத்திட்ட வினாக்களையும் பெரும் பயனுடையதா யமைந்துள்ளமை ஈண்டு சுட்டிக்காட்டப் படத்தக்கது. பாரதியாரின் படைப்புகள் பற்றிய ஆய்வில் பல்வேறு அறிஞர் களும், ஆய்வாளர்களும், Gugmg')fluti களும் பல்வேறு சிந்தனைக் கண்ணோட் டங்களிலும் கருத்துக்களைத் தெரிவிக்க முன்னந்துள்ளாரென்பது சுட்டப்பட வேண்டியவையாயினும் அருணாசலம் அவர்களுடைய ஆய்வு தனிகரமானது என்பது அவரது நூல் முழுமையையும் படித்தபோது எம்மால் உணரப்பட்டது. பாரதி பாட பேதம் பற்றியும், பாரதியும் தாகூரும் என்ற நூலும் பேராசிரியர் க.கைலாசபதியினால் எழுதப்பட்டவை. அவை எனது பட்டப் படிப்பின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கற்றவை. வ.ரா. முதல் பெ.க.மணி, பி. பூரீதூரன், பேராசிரியர்கள் சி.தில்லை நாதன், சிவத்தம்பி, நுஃமான், சித்திர லேகா மெளனகுரு, நா.சுப்பிரமணியன் இன்னும் பலர் பாரதி ஆய்வுகள் குறித்து ஆழம்பட எழுதியுள்ளனர். ஆயினும்
40
'பாரதியார் சிந்தனைகள்’ என்னும் பேரா சிரியரின் நூல் பரந்துபட்ட வாசிப்பிற் குரியதாயும், பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்புகளுக்குகந்ததாயும் பேணப்பட்டு மதிப்பும் மாண்பும் பெற்றிருப்பது மனங் கொள்ளத்தக்கது. மேல்வரும் எடுத்துக் காட்டு ஒன்றின் மூலம் பாரதியாரது இலக்கியப் படைப்புகளில் க.அருணா சலம் அவர்கள் கொண்டுள்ள நுட்ப
நோக்குத் துலக்கம் பெறுகிறது.
“எவ்வளவுதான் உணர்ச்சியின் கொடுமுடியில் நின்று கனல் தெறிக்கும் ஆவேசமிக்க கவிதைகளைப் பாடி னாலும், பாரதியார் மிக்க நிதானத்துடன் தெளிந்த வரலாற்றுக் கண்ணோட்டத் துடனும் கடந்தகால நிலைமைகளையும், நிகழ்காலப் பிரச்சினைகளையும், எதிர் காலப் போக்குகளையும் நோக்கி யுள்ளமை ஊன்றிக் கவனிக்கத்தக்க தாகும்’ (ப.3) என்றெழுதுவது மனங் கொள்ளத்தக்கது. பேராசிரியரின் நூலி னுாடே அவரது தெளிந்த வசனநடை எளிமைப் பண்புடனும், ஆர்ப்பாட்ட மின்றியும் இயல்வது, நடப்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கது. நுன்மாண் நுழை புலத் துடனான ஆய்வணுகு முறையும், தாம் நினைத்ததைத் துல்லியமாகப் பிறருக்குப் புரியும்படியாக எழுதும் எழுத்துத் திற னும் ஒருங்கே வாய்க்கப் பெற்றுள்ள பேராசிரியரின் சாணக்கியமும், ஆளுமை யும், அவதானிப்புகளும் போற்றியுரைக் கப்படத்தக்கன.
(தொடரும்.)

இன்றைய சமுதாய நிலையும் எழுத்தாளர்களின் பங்களிப்பும்.
- த.சிவா
21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் எம்மவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில், தமிழ் இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக இருக்கின்றதா? யதார்த்த நிலவரம் எவ்வாறு உள்ளது? என்ற கேள்விகள் ஒரு இலக்கியக்காரனைச் சூழ்ந்து நிற்கின்றன. எமது நாடு விடுதலை பெற்று ஐம்பத்தொன்பது ஆண்டுகள் கடந்து விட்டன. 1956ற்குப் பின் தோன்றிய இலக்கிய உத்வேகம் 1980ற்குப் பின் சோர்வடைந்து விட்டது. உள்நாட்டுப் போர், இடப்பெயர்வுகள், இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார முடைகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால் உளரீதியான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வரலாற்றுப் பின்னணியில், இங்குள்ள கலாசார நிலவரம் எவ்வாறு உள்ளது? இலக்கிய வளர்ச்சிப் போக்குகள் எத்திசையில் செல்கின்றன? இன்றைய இலக்கியச் சூழலில் சந்தைக் கலாசாரத்தின் ஆதிக்கமே மேலேங்கியுள்ளது. அதாவது வணிகக் கலாசாரத்தின் பிடிப்பும் அதன் பாதிப்புமே நாம் காணுகின்ற காட்சிகள்.
உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் அதன் காரணமாகப் பல்தேசியக் கம்பனிகளின் வருகையும் போன்ற பொருளாதாரக் கொள்கையின் செல்வாக்கால் - தமிழ் இலக்கிய உலகில் ஊடகங்களின் செல்வாக்குகள் அதிகரித்துள்ளன. நுகர்வு கலாசார மோகம் (Consumer's Culture) இங்கே நாளுக்கு நாள் வீச்சும் வேகமும் பெற்று வருகின்றது. இது இன்றைய வணிக ஏடுகளாலும், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி முதலிய வெகுஜன ஊடகங்களாலும் கவனத்துடன் திட்டமிடப்பட்டு வளர்க்கப்படுகின்றது.
வெளிநாட்டு கலாசாரமும், ஆட்டங்களும், பாட்டுகளும் எம் இன்றைய தலைமுறை யினரை ஆட்டிப்படைக்கின்றன. ஊடகங்கள் அவைதான் நாகரிகம் என்று இளசுகளைத்
41

Page 23
திசை திருப்பிய வண்ணம் செயற்படு கின்றன. இதற்கு நகரங்கள் மட்டுமன்றிக் கிராமங்களும் மெல்ல மெல்ல இரையாகி வருகின்றன.
இத்தகைய போக்கு நம் வாழ்க்கை யின் உன்னதமான மதிப்பை அழித்து நிற்கின்றது. மனித நேயத்தைக் கருவறுக் கிறது. சுதந்திர தாகத்தின் குரல்வளையை நெரிக்கிறது. மனிதனை உளவியல் ரீதி யில் அடிமையாக மாற்றுகிறது. சுருங்கச் சொன்னால், நமது பண்பட்ட நெறி களுக்கு எதிராக, சீரிய விழுமியங்களுக்கு விரோதமாக, நம்மீது ஒர் உளவியல் யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது. உள் நாட்டு, அயல்நாட்டுத் தகவல் தொடர்பு சாதனங்களும், அவற்றின் உரிமையாளர் களும், ஆதரவாளர்களும் இந்த யுத்தத்தை நடாத்துகிறார்க்ள். இலாப நோக்கும், அதி கார வெளியுமே இதன் அடிப்படை! கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தப் போக்கு வலுப்பெற்றுள்ளது. இந்த உளவியல் போருக்கு ஒட்டு மொத்த சமுதாயமே பலியாகி வருகின்றது. தமிழ்ச் சமுதாயம் இதற்கு விதிவிலக் கல்ல. இத்தகைய போக்கின் விளைவாக, நமது இளந்தலைமுறையினரின் நல் லெண்ணங்களும், நற்பண்புகளும் நாச மாக்கப்படுகின்றன. நமது இளைஞனும், அவன் குடும்பமும், அவன் வாழும் சமு தாயமும், பொதுநலச் சிந்தனைகளில் இருந்து அந்நிய்மாக்கப்பட்டு, சுயநலச் சிந்தனைகளில் மூழ்கடிக்கப்படுகின் றனர். சுருங்கச் சொன்னால், அவர்களது மனிதம் அழிக்கப்படுகின்றது. மானிடம் சிதைக்கப்படுகின்றது.
இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்து வது எவ்வாறு? ஒரு மாற்றுக் கலா சாரத்தை படைப்பது எவ்வாறு? இதில் கலை இலக்கியவாதிகளின் பங்களிப்பு என்ன? இது குறித்து மிகுந்த கவலை யுடன் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் நமக்கு ஒரு மாற்றுக் கலாசாரம், மனிதநேயக் கலாசாரம், புதுமைக் கலாசாரம், புரட்சிக் கலாசாரம் தேவை. எனவே நல்லெண் ணம் கொண்ட எமது எழுத்தாளர்களின் பேனாக்கள் இவற்றுக்காகச் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
సS
மNஃந்தN நீங்கள் தரமான இலக்கியச் சுவைஞரா? ஒருதடவை மல்லிகைப் பந்தலுக்கு வந்து போங்கள்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல ஆக்கங்களையும் அவ ரிடமிருந்து நேரில் பெற்றுக் கொள்ள லாம். அவரே கையெழுத்திட்டுத் தருவார்.
மற்றும் பள்ளிக்கூட. பொது நூல கங்களுக்கும் தேவையான நூல் களையும் மல்லிகை ஆண்டு மலர் மல்லிகைப்
களையும் பந்தலில்
பெற்றுக் கொள்ளலாம்.
42

காலத்தை வென்ற மக்கள் கவிஞர்
- கனிவுமதி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ்த் திரைப்பட உலகின் புதிய சகாப்தத்தின் பெயர். பாட்டாளி மக்களின் பாடுகளை, மக்களின் உணர்வுகளை, தேவைகளைத் தனது கவி வீச்சால் எழுதி, மக்கள் உள்ளங்களில் நிறைந்து அனைத்துத் தரப்பட்ட வயதினருக்கும் புரியும் படியான பாடல்கள் புனைந்து, தமிழ் உலகில் புகழ் உச்சியைத் தொட்டு மக்கள் கவிஞர் என அனைவரும் கொண்டாடிய ஒரு மகத்தான கவிஞனின் 77ஆவது பிறந்த தினம் ஏப்ரல் மாதம் 13ஆம் திகதியாகும்.
உலகில் தோன்றிய அரும்பெருங் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மகாகவி பாரதியார் ஆவார். இருபதாம் நூற்றாண்டில் மனிதனையும், மனிதத்தையும் சிறப்பாகப் பாடியவர். மனித சமூகத்தை முன்னிலும் மேலாக உயர்த்திப் பாடியவர்; பாடுபட்டவர். அவருடைய கவிதை களையும், ஏனைய கட்டுரைகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவரது கூரிய பார்வை மனித சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி உள்ளதை நன்கு உணரலாம். அரசியல், பொருளியல், மெய்யியல், இலக்கியம் போன்ற பல துறைகளையும் நுனித்து நோக்கி அதன் வெளிச்சத்தில் சமூகத்தை முன்னேற்றத் துடித்தவர். சமூகத்தில் மண்டிக் கிடந்த மூடப்பழக்க வழக்கங்களையும், பெண்ணடிமைத்தனத்தையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்க முரசு கொட்டியவர். புதுமை எண்ணங் கொண்டோருக்கு வழியாக விளங்கி முற்போக்குச் சிந்தனை யாளர்களும், கவிஞர்களும் தோன்ற உந்து சக்தியாக விளங்கியவர். அதனாற்தான் அவரை நீடு துயில் நீங்க பாடி வந்த நிலா" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
பாரதியாரின் இலக்கிய ஆக்கங்களில் ஊக்கங்கொண்ட கனக சுப்புரத்தினம் தன்னை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். பாரதியாரின் அனைத்துக் கருத்துக்களையும் கண்மூடி ஏற்றுக்கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியவற்றை ஏற்றுப் புதுப்பாதை கண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் கருத்துக்களில் ஏற்க வேண்டியனவற்றை மட்டும் ஏற்று தமிழ்த் திரை உலகில் புத்தாக்கம் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாரதிதாசனிடத்தில் நெருங்கிப் பழகித் தம் கவித்துவத்தை வளமாக்கிக் கொண்டவர் பட்டுக் கோட்டையார். பாரதி, பாரதிதாசன் ஆகியோரை இரு கண்களாகப் போற்றிய பட்டுக்
43

Page 24
கோட்டையார் மார்க்சிய சிந்தனையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு புதுயுகக் கவிஞ ராக மலர்ந்தார். இளமையில் விவசாய இயக் கத்தில் முழுமையாக ஈடுபட்டதனாலும், தோழர் ப.ஜீவானந்தம் போன்றோரிடம் நெருங்கிப் பழகிப் பொதுவுடைமை இயக்கத் தில் தன்னை இணைத்துக் கொண்டதாலும், மார்க்சிய சிந்தனைகள் அவர் உள்ளத்தில் உரம் பெற்றன. இதன் விளைவாகப் பொரு ளியல் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும், அதன் வழியாகச் சுரண்டலற்ற ஒரு புதிய சமுதா யத்தை உருவாக்கவும், சமூக அநீதிகளை ஒழிக்கவும், பொருளாதார விடுதலையை முன்னிறுத்தி மார்க்சிய சிந்தனைகள் மிளிரப் பாடல்கள் புனைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
பொதுமக்களிடத்தில் பல நூற்றாண்டு களாக வழங்கிவரும் சொற்றொடர்களும், மரவுத் தொடர்களும், கொச்சை வார்த்தை களும், இசை வடிவங்களும், கிராமியப் பண் ணோடு நடப்பியல் சிந்தனைகளும் மக்கள் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் பயின்றுவரும் பாடல்களே நாட்டுப் புற இலக்கியம் எனலாம். ஐங்குறு நூற்றில் வரும் புனலாட்டுப்பத்து, வேழப்பத்து, எருமைப்பத்து, வெள்ளாங்குருகுபத்து, சிறு வெண்காக்கைப்பத்து முதலிய தலைப்புகள் எல்லாம் நாட்டுப்புற இலக்கியம் என்றே ஆய் வாளர் கூறுவர். மற்றும் சித்தர் பாடல்களும், குறம், குறவஞ்சி, பள்ளு ஆகிய பிற்காலத்து இலக்கியமெல்லாம் நாட்டுப்புற பாடல்களின் ssä(3u.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ்க் கவிதை கள் இன்றும் நம் முன்னோரின் வாழ்வியல் முறைகளை எண்ணிப் பார்த்து இன்புறத்
44
தக்க கருத்துக் கருவூலங்களாக உள்ளன. நம் நாகரிக வளர்ச்சியின் சமுதாய அமைப் பின் பல்வேறு பரிணாமங்களை அகம் - புறம் எனப் பிரித்து அற்புதமான பாடல்களைச் சங்கப் புலவர்கள் யாத்துள்ளனர்.
பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தனித்துவம் பெற்று மிளிர்வதற்குப் பெருங் காரணமாக இருப்பனவற்றுள் ஒன்று அப் பாடல்களில் மணக்கும் மண்ணின் மணமே ஆகும். அதாவது, தொல்காப்பியக் காலத் திற்கு முற்பட்டு இன்றுவரை மக்களால் தொடர்ந்து கடைபிடித்து வரும் நாடோடி இலக்கிய மரபே அதுவாகும். இதனை கிராமத்துப் பாடல் என்றும், நாடோடி இலக் கியம் என்றும், நாட்டார் இலக்கியம் என்றும், வாய்மொழி என்றும், நாட்டார் வழக்கியல் என்றும், நாட்டுப்புற இலக்கியம் என்றும் பலவாறாக அழைப்பர்.
பாரதியாருக்குப் பின் நாட்டுப்புற இலக் கியத் தாக்கத்தைப் பெரிதும் பெற்றவர் பட்டுக் கோட்டையாரே. தமிழ் திரைப்பட உலகில் நாட்டுப்புற இலக்கிய மரபைப் புகுத்தியவர் களுள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, தஞ்சை இராமையாதாஸ், கம்பதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கண்ணதாசன், பட்டுக் கோட்டையார் போன்றோர் குறிப்பிடத்தக்க வர்கள். இவர்களுள் பெரிதும் கையாண்டவர் கள் கொத்தமங்கலம் சுப்புவும் பட்டுக் கோட்டையாருமே ஆவர். இவ்விருவருள்ளும் நாட்டுப்புற மணத்தை வலிவாகவும், பொலி வாகவும் பாடிய பெருமைக்குரியவர் பட்டுக் கோட்டையாரே ஆவர். நமது காலத்தில் நாட்டுப்புற மணத்தை தமிழ் திரையில் சிறப் பாகப் பாடிய ஈடிணையற்ற கவிஞர் இவரே. இது அவரின் தனி ஆளுமை என்றே கூறலாம்.

கிராமத்தில் பிறந்து, அந்த சூழலி லேயே வளர்ந்து, பல காலம் உழைப்பாளரா கவே உழன்று, உழைக்கும் மக்களின் இயக் கங்களில் பங்கு கொண்டு போராடிய ஒரு வருக்கு இளமையில் இயல்பாகவே கவிதை பாடும் திறன் அமைந்துவிட்டால் அவருக்கு
நாடோடி மரபு இயல்பாக அமைவதில் வியப்
பில்லை அன்றோ
கிராமியப் பண் என்பது பாரம்பரியம் மிக்கது. காலங் காலமாக நாட்டுப்புற மக் களின் உழைப்போடும், வாழ்வோடும் இணைந்து நின்று அம்மக்களின் உணர்ச்சி களை வெளிப்படுத்தும் பண்களாகவும், சிந்தாகவும், கும்மியாகவும், குறவஞ்சியாக வும், பள்ளாகவும், வில்லுப்பாட்டாகவும், தாலாட்டாகவும், ஒப்பாரியாகவும் இப்படி எத்தனை எத்தனையோ இசைச் சுரங்களாக வும் பரிணமித்துக் கிடக்கின்றன. இந்தப் பண்ணின் தன்மையை அறிவதென்பது நமது கிராமப்புறத்தின் ஆத்மாவை அறி வதற்கு ஒப்பாகும்.
கவிஞர் பட்டுக்கோட்டையாருக்கு இசை ஞானம் உண்டு என்பது ஒருபுற மிருக்க, கிராமியப் பண்பும், பண்ணும் அவ ரது உதிரத்துடன் இரண்டறக் கலந்துநின்ற ஒன்றாகும். தனது உள்ளத்தில் உருவெடுத் துப் பெருக்கெடுத்துப் பரிமளிக்கும் கிராமியப் பண்ணிலேயே பாடலைப் பாடிக்காட்டியும் விடுவார்.
பட்டுக்கோட்டையாரிடம் காணப்பட்ட முக்கியமான அம்சம் என்னவென்றால் தான் எடுத்துக்கொண்ட கருத்துக்குப் பண் கட்டியம் கூற வேண்டுமே அல்லாமல் சொல்ல வேண்டிய கருத்துக்குப் பண்
இடைஞ்சலாக நிற்குமானால் மெட்டையே
மாற்றுவதற்கும் கவிஞர் தயங்குவதில்லை.
45
இசையும் சிந்தனையும், உயிரும் உடலும் போல இணைந்து பிணைந்திருந்த காரணத் தால் பட்டுக் கோட்டையாரின் காலத்துக்குப் பிறகு திரைப்பட இசைக்கும், கிராமிய பண்புக்கும், மண்ணுக்கும் மதிப்பும் வர வேற்றும் ஏற்பட்டிருக்கின்றன.
நாட்டுப்புற இலக்கிய வகைகளான சிந்து, தெம்மாங்கு, தாலாட்டு, கதைப்பாடல், கோணங்கிப்பாடல், தெருக்கூத்து, பண்டாரப் பாட்டு, காவடிப்பாட்டு, பழமொழி, விடுகதை போன்றவற்றைப் பட்டுக்கோட்டையார் பாடல்களில் ஆங்காங்கே காணலாம். நாட்டுப்புறக் கூறுகளால் தம் பாடல்களை மணக்க வைத்தவர், நம் மக்கள் கவிஞர். உழைப்பையும், உழைப்பாளரையும் தமிழ் திரைப்படத்தில் பரக்கக்கூறிய பெருமை கவிஞருக்கு உண்டு.
சுருங்கக் கூறின், சிறிய கண்ணாடியில் பெரும் தோற்றத்தைப் புலப்படுத்துவது போன்றும், சிறிய கல்லில் பெருமைமிகு சிலையை வடித்தது போன்றும் ஐந்தாண்டு களுக்குள் (1954 - 1959) உழைப்புப் பற்றி மிகச் சிறந்த பாடல்களை இயற்றிய பெருமை பட்டுக்கோட்டையாரேயே சாரும்.
உழைப்பைப் பற்றியும், உழைப்பாள ரைப் பற்றியும் திரும்பத் திரும்பப் பாடியவர்; சளைக்காமல் பாடிச் சாதனை படைத்தவர் நம் மக்கள் கவிஞர். தமிழ் இலக்கிய நெடு வரலாற்றிலும், தமிழ் திரைப்படப் பாடல் உல கிலும் பட்டுக்கோட்டையாரைப் போன்று உழைப்பைப் பற்றியும், உழைப்பாளர் பற்றி யும் மிகப் பெரிதும் பாடியவர் வேறொருவர் இலர். காலத்தை வென்று நிற்கும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் புகழ் சுற்றும் பூமி உள்ளவரை வாழும், நம் உள்ளங்களை Joseptib. O

Page 25
கொழும்புத் தமிழ்ப் பெண்களின் ஓவியக் கண்காடீசி
- கே.எஸ்.சிவகுமாரன்
கொழும்பில் வாழும் சில இளம் பெண்கள் திரு. கொஸிகன் நடத்தும் ஒவியப் பயிற்சிக் கல்லூரியின் மாணவிகள். ஒவியக் கலை ஆசிரியர் கொஸிகன், நாடறிந்த நாடகாசிரியரும் (குறிப்பாக வானொலி நாடகங்கள்) சிறந்த சிறுகதை ஆசிரியருமான
அமரர் என்.எஸ்.எம்.ராமையாவின் புதல்வராவர்.
நவீனத்துவமும், இயற் பண்பும் கொண்ட ஒவியங்களை இவரும், இவருடைய துணைவியாரும், ஆற்றல் மிகுந்த இளம் பெண்களுக்கும், (இவர்களுள் ஒருவர் சிங்களப் பெண்) இளைஞர்களுக்கும் கற்றுத் தருகின்றனர்.
குடத்திலிட்ட விளக்காய் இருந்துவரும் இந்த இளைஞர்களின் கவினாற்றலை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சி பெப்ரவரி மாதம் கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்டபத்தில் இடம்பெற்றது. அத்தகையதொரு ஓவியக் கலைக்களரியில் தமிழ் மக்களின் ஓவியக்களம் இடம்பெறுவது வரவேற் கத்தக்கதே. பிறமொழி பேசுவோரும், நமது இளம் பராயத்தினரின் ஓவியச் சித்திரிப்பு களைக் கண்டு வியப்புறுவதற்கு இது வாய்ப்பாய் அமைந்தது.
இவ்ஓவியங்களின் தனிச்சிறப்புகளை கலாரீதியாகத் திறனாய்வு செய்யும் பக்குவம் எனக்கில்லை; ஆயினும் காட்சிகளைக் கண்டு பரவசமுற்றேன்.
பல கலைகளிலும் இயல்பாகவே ஈடுபாடுடையவரும், கவிஞருமான நண்பர் மேமன்கவி, அக்கண்காட்சியின்போது உற்சாகமாக விளக்கம் அளித்து, சம்பந்தப் பட்டவர்களுக்கு ஊக்கம் அளித்தமை பாராட்டத்தக்கது.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஓவியர்கள், கொழும்பு சேகர் போன்றோரும் அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளைக் கொழும்பில் நடத்திவருவதை நாம் பாராட்டவே வேண்டும்.
46

ரடைவிதிக் குறிப்புகள் பெயரற்ற போத்திரி கன்
வலைப்பதிவு உலகம் சுவாரசியமானது. பல்வேறு அனுபவங்களையும் செய்தி களையும் நமக்குத் தருகிறது. இன்றைய காலகட்டத்தில் இணைய உலகில் உலாத்தும் ஒருவர் தமிழ் மொழி மூலம் இன்று பெருகி வரும் வலைப்பதிவுகளின் தொகையினையும் வகையினையும் அறிந்து கொள்வார். அவ்வாறு உலாத்திய பொழுது ஒரு வலைப் பதிவு கண்ணில் பட்டது.
அந்த வலைப்பதிவின் பெயர் - நடைவழிக் குறிப்புகள்
ஆனால், இந்த வலைப்பதிவாளர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை. பெயரற்ற யாத்திரீகன் என மட்டும் தன்னைச் சொல்லிக் கொள்ளும் அவரது ரசனை வீச்சானது. அந்த வலைப்பதிவின் அறிமுகத்தில் இப்படிச் சொல்லுகிறார்.
வலைப்பதிவிற்கு வருகை தரும் தோழமைக்கு, நன்றாய் இல்லையென்று சொல். வாசித்துவிட்டு ஒதுக்கப்பட வேண்டியவை என்று கூறு. நிராகரிக்காதே. கூர்விமர்சனம் தீட்டி மீண்டும் வர வேண்டும் நீ. காத்திருப்பேன். நன்றி.
அவ்வாறான இரசனை மிக்க அவர் தனது அவ்வலைப்பதிவில் தந்திருக்கும் ஆங்கிலக் கவிஞர் ஒருவரின் கவிதைகளை உங்கள் இரசனைக்கு.
47

Page 26
மகத்தான கவிஞர்கள் : றொபேர்ட் லி ஃபொரஸ்ட் வென்றிலன் என்றபோதும்.
(Robert Lee Frost. 1874-1963)
1874ல் அமெரிக்காவின் சென் பிரான் ஸிஸ்கோ பிரதேசத்தில் பிறந்தவர். பதி னொரு வயதில் தந்தையின் மறைவு அவரைப் பாதித்தது. மிக இளமையி லேயே சக பெண் ஒருவரை (காதல் வயப்பட்டு) மணந்து கொண்டார். 26வது வயதில் அவர் நியூ இங்கிலாந்துப் பண்ணைகளின் விவசாயி கவிஞன் என்கிற பாத்திரத்தின் தொடக்கமாக, நியூ ஹாம்ப்ஷயரின் சிறியதொரு பண்ணையில் தன்னை நிறுத்திக் கொண்டார். அவரின்
குடும்பத்தினரின் மரபணுக்களில் ஏதோ
குறைபாடிருந்தது. நாற்பதாண்டு கால ஆழமும், வேட்கையும் கொண்டிருந்த திருமண வாழ்வு, அவரின் மனைவியின் மறைவிற்குப் பின் திரு. 'பொரஸ்ட்டை இங்கிலாந்து பயணிக்கச் செய்தது. அங்கு அவரது முதல் தொகுப்பு "A Boy's Will' GessfuTá, 6LDJs 601 ff. யிலான வெற்றிகண்டது. எஸ்ரா பவுண்டின் கவனமும் இவரின் மேல் படிந்தது.
1914ல் இரண்டாவது தொகுதி "North of Boston' Lias Gu(BLD வெற்றியை ஈட்டித் தந்தது. அடுத்த ஆண்டு நாடு திரும்பினார். மிக்சிகன் - அம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக விளங்கினார். கதே, தோமஸ் ஹார்டியை விடவும் நீண்ட ஆயுள் கொண்டிருந்த அவர், தன் இலக்கியத் தரங்களைக் காப்பாற்றினார்.
4.
8
அதிலே அவர் எளிமையாயும், உன்னத மாகவும் இருந்தார். நகர்கின்ற மணல் திட்டின் கீழ் மட்டத்தில் எங்கோ ஓரிடத் தில் திடமான பாறை காணப்பட்டது. அவர் மடியும் மட்டும் அது நீடித்தது. அதுபோலவே, ஒரு போதும் திருப்தியுறாத அதீத வேட்கையும் இருந்தது. மாபெரும் கவிதைகள் எழுத விரும்பினார். டி.எஸ். எலியட் பெற்றிருந்த அங்கீகாரம் தனக்கு வேண்டுமென விரும்பினார். வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத அறுதி அங்கி காரம் எலியட்டுக்கு கிடைத்திருந்தது. எலியட் நோபல் பரிசை வென்றிருந்தார். எனவே 1960ல் நோபல் பரிசு தனக்குக் கிட்டவில்லையென மிகவும் வருந்தினார், பிற்பாடு கலகலப்பாகி விட்டார். அவரது 88ஆவது வயது வரையிலும் அவரைக் கெளரவங்களும், பதக்கங்களும் தேடி வந்த வண்ணமிருந்தன. நான்கு புலிட்ஸர் பரிசுகள் கிடைத்திருந்தன. ஆனால் நோபல் பரிசை இன்னும் வென்ற பாடில்லை. 1963ல் அவரது பெயர் நோபல் பரிசுக்காக ராபர்ட் க்ரேவ்ஸ் முன்மொழிந் திருந்த கடிதத்தை அவரது நீண்டகால நண்பர் அண்டர் மேயர் வாசித்துக் காட்டினார். அதன்பின் ஒருவாரம் கழித்து இறந்துபோனார் 'பொரஸ்ட்.
"Variety of men' (C.P. Snow / Mc Millen, 1967 - BT6Sabibig) றொபேர்ட் லி ஃபொரஸ்ட்
மொழியாக்கம் : சா.தேவதாஸ்
போகாத பாதை
மஞ்சள் வனமொன்றில் இரு பாதைகள் பிரிகின்றன

இரண்டிலும் போக முடியாதது
வருந்த வைக்கிறது ஒரு பயணியான நான் நீண்டநேரம் நின்று என்னால் முடிந்த மட்டும் ஒன்றையொன்று உற்று நோக்கினேன். ஒன்று புதரில் எங்கே வளைந்து திரும்புகிறதென்று மற்றொன்று சீரியதாய் இருந்தது இன்னும்
தடங்கள் படியாது புல் நிறைந்ததாயும் அக்காலையில் இரண்டும் சமமாகக் கிடந்தன. எந்தக் காலடியும் பதிந்திராத இவைகளில் முதல் பாதையை இன்னொரு தினத்துக்கு ஒதுக்கினேன்! ஒரு பாதை இன்னொன்றாகக் கிளைத்துச் செல்வதறிந்ததும் திரும்பி வருவேனா? என்று சந்தேகித்தேன். இதனைப் பெருமுச்செறிய கூறிக் கொண்டிருப்பேன் பல யுகங்கள் கழித்தும் வனமொன்றில் இரு பாதைகள் பிரிந்தன,
நான இதுவரை போகாத பாதையைத் தெரிவு செய்தேன். அதுதான் உண்டாக்கியது எல்லா வித்தியாசங்களையும்.
4.
9
தொலைவாகவும் இயலாது ஆழமாகவும் இயலாது
கடற்கரை ஓரமாய் உள்ளவர்கள் திரும்பி ஒரே திசையில் நோக்குகின்றனர் எல்லோருமாக. தம் முதுகைத் திருப்புகின்றனர் நிலத்திற்கு நாளெல்லாம் நோக்குகின்றனர் கடலினை.
கப்பலொன்று தன் உடற்பாகத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஈரத்தரை பிரதிபலிக்கிறது புல்போல நிற்கும் கடற்காகத்தை.
நிலம் வேறுபடக் கூடும் மேலும் ஆனால் நிஜம் எதுவாயினும் நீர் வந்து சேர்கிறது கரைக்கு மக்கள் பார்க்கின்றனர் கடலினை.
அவர்களால் தொலைவாக பார்க்க முடியாது அவர்களால் ஆழமாகப் பார்க்க முடியாது ஆனாலும் எப்போதேனும் தடையிருந்தா அவர்களின் கவனிப்புக்கு.

Page 27
பனிப்பாலைப் பகுதிகள்
பனி விழ்வும் இரவு கவிழ்தலும் விரைவாகக் கடந்த காலத்துள் போய்க் கொண்டிருந்ததாக நான் 45600il 62/L1656) தரை அநேகமாயப் பணியால் முடுண்டது மிருதுவாய் ஆனாலும் தலைகாட்டும் சில புல்வண்டுகள் அதனைச் ஆழ்ந்திருந்த வனங்கள் கொண்டிருந்தன அவற்றினுடைவைகளை விலங்குகளெல்லாம் அடைந்து கிடக்கும் தம் குகைகளில் எண்ணிப் பார்க்க மறந்தவனாய் இருக்கின்றேன் நானறியாதபடி என்னை
உள்ளடக்கிக் கொள்ளும் தனிமை,
தனித்திருக்கும் அத்தனிமை தான் தணிவதற்குள் மேலும் தனிமை கொல்லும் இருளார்ந்த பனியின் வெண்விரிப்பாக உணர்வு பலமற்று, வெளிக்காட்ட ஏதுமின்றி
வெற்று வெளிகளில் அவை கலவரப்
படுத்த இயலாது என்னை
மானுட இனம் இல்லாத நட்சத்திரங்
களுக்கிடையே என் வீட்டருகே கொண்டிருக்கிறேன் அதனை இப்பாலைவனப் பகுதிகளாலேயே என்னைக் கலவரப்படுத்த,
5
O
(525/
பருத்த வெண்சிலந்தி ஒன்றைக் கண்டேன் வெள்ளை முலிகைச் செடிமேல் பூச்சியொன்றைக் கவ்வியபடி கெட்டியான வெண்பட்டுத் துணிபோல மரணம் மற்றும் நோயின் பாத்திரங்கள் ஆயத்தமாயுள்ளன. காலை நாடகத்தை ஆரம்பிக்க துனியக்காரியின் கஷாயத்தில் சேர்ந்திருப்பவைபோல ஒரு பனித்துளி சிந்தி, மலர் நீர்க் குமிழியாக மற்றும் காகிதப் பருந்தெனத் தூக்கிச் செல்லப்படும் உயிரற்ற சிறகுகள்
வெண்மையாய் இருப்பதற்கும் பாதையோரத்து நீலத்திற்கும் மற்றும் மாசற்ற முலிகைக்கும் அம்மலருக்கும் என்ன சம்பந்தம்? உச்சியில் சிலந்தியை நிறுத்தி அப்புறம் இரவில் வெண்பூச்சியை அங்கு செல்ல வைத்தது எது? திகைப்புறச் செய்யும் இருளின் துதன்றி வேறென்ன? எவ்வளவு அற்பமானதெனினும் கட்டுப்படுத்தும் துது
ஒப்பீடுகள்:
... www.wikipedia.org
Princeton University Library Website
3. புது எழுத்துச் சிற்றிதழ்

மல்லிகைக்கான வலைப்பதிவின் முகப்பு இது,
ussia Microsoft Ilettet Xiolet
Fregysig Ringtones Go () Bxkinas S243 blocked Y check - sérgy ಸ್ಲಿ*
Y Sesh Web vo ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ į jį Messener "... Ý choose B ktors að Welkorne Tour
* 86ąajcie:
W ក្ត{}
V sisäys
క్లట్ల#########
#**ళ్ల 莎然瑙
மல்லிகை இதழ்கள்
:ே శిక్షణ్ణి லேக் ši つー  ைமல்லிகை இதழ்கள்
攀 V {&#ಟ್ಗ
42வது மல்லிகை ஆண்டு மலர் நிகழ்வுகளும் இவ்வலைப்பதிவில் இணைக்கப் பட்டுள்ளன.
http://mallikaimaikai.blogspot.com/
5

Page 28
முதல் முறையாக நேருஜி, மனைவி மகள் சகிதம் 1931ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை வந்தார். அதுபற்றி ‘சுயசரிதையில் விபரமாக எழுதியுள்ளார். அதன் பின்னர் 1939ஆம் ஆண்டிலும், 1962ஆம் ஆண்டிலும் விஜயங்களை மேற் கொண்டார். பின்னைய இரு விஜயங்கள் பற்றி அவர் எதிலும் விபரம் எழுதியதாகத் தெரியவில்லை. அவரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில்தான் சிறிதளவு செய்திகளைப் பெறலாம்.
அவரின் முதல் விஜயம் பற்றி அவர் வார்த்தைகளிலேயே அறிவதற்கு இனி, ‘சுயசரிதையின் முப்பத்தாறாம் அத்தியாயத்திற்குச் செல்வோம். அவர் கூறுகிறார்; "எனது மருத்துவர்கள் என்னைச் சிறிது ஒய்வெடுக்கச் சொன்னதால், இடமாற்றம் தேவை எனக்கருதி, ஒரு மாதம் இலங்கையில் கழிக்க எண்ணினேன். இந்தியா பெரிய நாடுதானென்றாலும், என்னைப் பொறுத்தவரை இடமாற்றம் என்பது இந்தியாவினுள் சாத்தியமல்ல. ஏனெனில், எங்கு சென்றாலும் அரசியல்வாதி நண்பர்களைச் சந்தித்தே ஆக வேண்டும். அதே பிரச்சினை தொடரும். இலங்கைதான் இந்தியாவின் அருகே இருந்த நாடாகையால் நான், கமலா, இந்திரா ஆகிய மூவரும் அங்கு சென்றோம். 1927ஆம் ஆண்டு ஐரோப்பாவிலிருந்து வந்த பின் எடுக்கும் ஒய்வு அதுதான். என் மனைவி, மகள் ஆகியோருடன் நான் விடுமுறையாக ஒய்வெடுத்து, யார் தலை யீடுமில்லாமல் அமைதியாய் இருந்தது அப்போதுதான். அதற்குப் பின்னர் அப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிட்டவேயில்லை. இனிக் கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தான். இருப்பினும் நுவரெலியா என்னுமிடத்தில் இரண்டு வாரம் இருந்தபோது கிடைத்த ஒய்வைத் தவிர, பின்னர் அங்குகூட எனக்குப் பூரண ஒய்வு கிடைக்கவில்லை. அங்கிருந்த அனைத்து மக்களின் அன்பும் உபசாரமும் எங்களைத் திணற வைத்து 6illsUT.
இRங்ஷ 2خالہاڑ
- எஸ்.எம்.ஹனிபா
நுவரெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் நேருஜியிடம் காட்டிய பாரிய அன்பு பற்றி இவ்வாறு எழுதியுள்ளார். நல்ல மனங்களைக் காண்பது இனிமையாயிருந்தாலும், அது தர்மசங்கடத்தில் ஆழ்த்திற்று. நுவரெலியாவில் தொழிலாளர் கூட்டம் கூட்டமாய் வருவார்கள். தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிவார்கள். மற்றும் பலர் தினசரி பார்க்க வருவார்கள். பல மைல் தூரம் நடந்து வருவார்கள். வரும்பொழுது, காட்டு மலர்கள்,
52

காய்கறிகள், வீட்டில் தயாரித்த வெண் ணெய் என்று பல பரிசுப் பொருட்களை எடுத்து வருவார்கள். நாங்கள் ஒருவரோ டொருவர் பேசக்கூட முடியாது. ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைப்போம். நாங்கள் தங்கியிருந்த சிறிய வீடு முழுவதும் அந்த ஏழை மக்கள் அளித்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் நிறைந் திருந்தன. அருகேயிருந்த மருத்துவ மனைகளுக்கும், அனாதை இல்லங் களுக்கும் அவற்றை அளித்தோம்.' நேருஜி ஒரு சாதாரண மனிதனாக இருந்த காலமது அவர் சுதந்திரப் போராட் டத்திலும், மற்றும் பலருடன் ஈடுபட்டிருந் தாரே தவிர, அவருக்கென்று தனி அந்தஸ்து ஒன்றுமிருக்கவில்லை. அவர் இந்தியாவுக்கு அப்பொழுது சுதந்திரம் பெற்றுக் கொடுக்கவுமில்லை. அந்தப் பெரிய நாட்டின் பிரதம மந்திரியாகி இருக் கவுமில்லை. பெரியதொரு செல்வந்தரா யிருக்கவுமில்லை. அப்படியிருந்தும், ஏழைத் தொழிலாளி கூட அவரில் எத்தனை அன்பு செலுத்தி, மரியாதை காட்டியுள்ளார்கள். கல்வியறிவுள்ளவர் களாகக் கூட இல்லாத பாமர மக்களிடம் அந்நாட்களிலேயே அவர் செல்வாக்குப் பெற்றிருந்தார். கல்வியறிவு உடையவர் களுக்கும், செல்வந்தர்களுக்குமிடையில் இலங்கை, இந்தியாவில் மாத்திரமல்ல, உலகெங்கும் அவருக்கு மதிப்பிருந்தது. உண்மையில், அவர் தன் தந்தையின் செல்வங்களில் எதையும் தனக்கென ஒதுக்கி வைத்துக்கொள்ளவில்லை. தந்தை கட்டிய மாடமாளிகையான 'ஆனந்த பவன் தேசிய காங்கிரசுக்காக அர்ப்பணிக்கப்பட்டது போல், ஏனைய
5
3
செல்வங்களும் இந்திய மக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. என்னே தியாகம்
தமிழ் மொழிபெயர்ப்பு 36ம் அத்தி யாத்தின், 290ம் பக்கத்தில் அவர் மேலும் இலங்கை விஜயம் பற்றிக் கூறுவதாவது: "அந்தத் தீவின் பல புகழ் பெற்ற காட்சிகளையும், வரலாற்றுச் சிதைவிடங் களையும் கண்டு களித்தோம். புத்த விகாரைகளையும், செழித்து அடர்ந்த காடுகளையும் கண்டோம். அனுராத புரத்தில் உட்கார்ந்த கோலத்திலிருந்த பெரிய புத்தர் சிலையைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். ஒராண்டிற்குப் பின் டேராடூன் சிறையில் இருந்தபோது, இலங்கையிலிருந்த ஒரு நண்பர், இந்தச் சிலையின் புகைப்படம் ஒன்றினை அனுப்பியிருந்தார். அதனைச் சிறையில் ஒரு மேஜையின் மீது வைத்திருந்தேன். அந்தப் புகைப்படம் எனக்கொரு இனிய தோழன். அமைதியான அந்தப் புத்தரின் உருவத்தைப் பார்த்தாலே என் மனம் அமைதி பெறும். எனக்கு அது மன வலிமையைத் தந்து, சோர்வினை வெல்லும் திறத்தையளித்தது."
இலங்கையில் கண்ட காட்சிகள் சில பற்றியும் நேருஜி எழுதியிருக்கிறார். புத்த மதத் துறவிகளை விகாரைகளிலும், பாதை களிலும் கண்டபொழுது, அவர்களில் சாந்தம், அமைதி குடிகொண்டிருந்ததை அவதானித் ததாகச் சொல்கிறார். அப்போதிருந்த தன் மனநிலைக்கு ஏற்றதாக இலங்கை விளங்கி யது எனும் அவர், "அந்தத் தீவின் இயற்கை யழகு என்னைப் பெரிதும் கவர்ந்தது" என்றும் சிலாகித்திருக்கிறார். "ஒரு மாத ஓய்வு முற் றுப் பெற்று மனத்துயரத்துடன் அங்கிருந்து

Page 29
கிளம்பினோம். அந்த நாட்டையும் அதன் மக்களையும் நினைக்கும்போது பல நினைவுகள் எழுகின்றன” எனக் குறிப்பிட்ட பின், யாழ்ப்பாணம் சென்று விட்டு, பம்பாய் போய்ச் சேர்ந்தது பற்றி இவ்வாறு தெரிவிக் கிறார்; "பம்பாயிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டு ஏழு வாரம் கழித்து, மீண்டும் பம்பாய் வந்து சேர்ந்தோம். வந்தவுடனேயே காங்கிரஸ் அரசியலின் சூழலில் ஆழ்ந்து போனேன்." இலங்கையிலிருந்து போய் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் சுமார் மூன்று வாரம் பயணித்த பின்னரே, பம்பாயைச் சேர்ந்தனர்.
நேருஜியின் பின்னைய இரு விஜயங் கள் பற்றி "சோனியா சரிதை” என்ற எனது நூலின் முன்னுரையில் இவ்வாறு கூறப்பட் டுள்ளது. "...1939ஆம் ஆண்டில் (எனது சின்னஞ்சிறு வயதில்) இலங்கை இந்திய காங்கிரஸைத் தொடக்கி வைப்பதற்கு ஜவ ஹர்லால் நேரு இலங்கை வந்து, கண்டி போகம்பர மைதானத்தில் சொற்பொழி வாற்றிய சமயம், அவரின் பேச்சைக் கேட்ட இலட்சக்கணக்கானோரில் நானும் ஒருவனா யிருந்தேன். எனக்கு அவர் மீது பெரும் பற்றுதல் ஏற்பட்டது. அவர் பற்றிய பல நூல் களையும், பத்திரிகைகளில் பிரசுரமான கட்டுரைகளையும் திருப்பித் திருப்பிப் படித்த துடன் பத்திரப்படுத்தியும் வைத்தேன். அவர் கண்ட முன்னேற்றங்கள் என்னைக் குது கலிக்கச் செய்தன. 1962ம் ஆண்டில் அவர் இலங்கை வந்தபோது கொழும்பு, வெள்ள வத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத் தில் நிகழ்த்திய பேச்சையும் கேட்டேன். தந்தையுடன் இலங்கை வந்திருந்த ஒரே புதல்வி இந்திரா காந்தி, கொழும்பு மகளிர் கல்லூரி மண்டபத்தில் நிகழ்த்திய சொற்
5
4.
பொழிவையும் கேட்டேன். இந்திரா மீதும் எனக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது."
'நேருஜி வாழ்க்கை வரலாறு' என்ற தமிழ் நூல், 1964ம் ஆண்டு (அவர் காலமான பின்னர்) ஆகஸ்ட் மாதம் 15ந் திகதி, சுதந்திர தின வெளியீடாக வந்துள்ளது. சென்னை தியாகராய நகரிலுள்ள வானதி பதப்பகம் இதனைப் பிரசுரித்துள்ளது. பிரசுர கர்த்தா, இவ்வாறு கூறுகிறார்; 'ஒவ்வொருவர் இல் லத்திலும் இதயத்திலும் அண்ணல் நேருஜி யின் வரலாறு இருக்க வேண்டும். அவரு டைய உயர் நெறிகள் ஒவ்வொருவர் உள்ளத் திலும் நன்கு பதிய வேண்டும் என்ற நோக்கத் துடன் இந்நூலை மலிவான விலையில் வெளியிட்டுள்ளேன். மக்களிடையே படிக்கும் பழக்கம் பரவ வேண்டும் என்று திட்டம் வகுத்து உழைக்கும் தென்னிந்தியப் புத்தகத் தொழிற் கழகத்தினர் இச்சிறந்த நூலை அவர்கள் திட்டத்தில் சேர்த்துள்ளனர்."
வானதிபதிப்பகம் ஒரு பிரமாண்டமான
வர்த்தக நிலையம். சுமார் இருபது ஆண்டு களுக்கு முன் நான் அங்கு சென்றபோது, வர்த்தக நிலையக் கட்டிட முன் வாசலி லிருந்து, கிட்டத்தட்ட இருநூற்றைம்பதடி நீளமும், எண்பதடி அகலமும் கொண்டி ருந்தது. கட்டிடத்தின் பின்பகுதி, சுமார் இருப தடி வரை மேலும் அகலமாக நூற்றைம் பதடிக்குக் குறையாமல் விசாலமாயிருந்தது. அங்கு உரிமையாளர் திரு. ஏ.திருநாவுக்கரசு வைச் சந்தித்தேன். மிக, மிக எளிமையான வர். பெரிய மனம் கொண்டவர். "நானும் இலங்கையில் புத்தகம் பிரசுரித்து வருகி றேன்" என்று கூறியதும், விரிந்த புன்னகை யுடன் என்னைத் தன் முன்னால் அமரும்படி செய்து, வெகுநேரம் கதைத்தார். சுமார்

மூன்று மணி நேரம் அவருடன் கதைப்ப திலும், புத்தகங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப் பதிலும் செலவிட்டேன். இறுதியில் வடை, காப்பி தந்து உபசரித்தார். மூவாயிரம் புத்தக வகைகளைத் தான் பிரசுரித்துள்ளதாகவும், வியாபாரம் நன்றாயுள்ளதாகவும் கூறிய திரு. திருநாவுக்கரசு தனக்கு வேறு எதுவித அலுவலுமில்லை. புத்தகம் பிரசுரிப்பதொன் றையே செய்து வருவதாகவும் சொன்னார். தமிழ்நாட்டின் தலை நகரங்களான திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி போன்ற இடங்களுக்குத் தனது பிரசுரங்களில் கணிச மான தொகைப் பிரதிகள் அனுப்பப்படுவ தாகவும் சொன்னார்.
நேருஜி காலத்தில் காங்கிரஸ் கட்சி தான் மாநிலங்களில் அரசாங்கம் நடத்தியது. சென்னை மாநிலத்தின் காங்கிரஸ் அர சாங்க முதல் அமைச்சராயிருந்த திரு. எம்.பக் இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார். நேருஜி பற்றிய அவரின் முக்கியமான அவதானமொன்று வருமாறு :
தவத்சலம்,
'நேருஜியின் இளமைப் பருவத்தைச் சுவை பட எழுதியிருக்கும் ஆசிரியர், பின்னால் அவரது அரசியல் வாழ்வைச் சிக்கலில் லாமல் வரைந்திருக்கிறார். அதைப் படிக்கும் பொழுது, நேருஜியின் வாழ்க்கை - காங்கிரஸ் மகாசபையின் வளர்ச்சி - இந்திய நாட்டின் சுதந்திரம் ஆகிய மூன்றும் தனித் தனியே இல்லாமல் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பது போல் தெரிகிறது. இது ஆசிரியருக்கு ஒரு வெற்றி.”
நூலின் ஆசிரியர் சம்பந்தம் எழுதியுள்ள முகவுரையில், நல்லதொரு விளக்கம் தரு கிறார்; "இளமை முதல் எல்லா வளங்களை யும் பெற்று வளர்ந்த நேருஜிக்கு, ஆண்ட
5
5
வனும் பல அரிய பண்புகளைப் பரிசாக அளித்திருந்தான். இன்றேல், பெருஞ் செல்வக் குடும்பத்தில் பிறந்து, கல்விகேள்வி களில் சிறந்து, எவ்வகையிலும் எவ்விதக் குறைவுமின்றி வாழ வகை படைத்த நேருஜி, தேச சேவையின் காரணமாகத் தம் சுக போகங்களனைத்தையும் துச்சமெனத் தியா கம் செய்திருக்க முடியுமா? தேச விடுதலை யின் காரணமாக அநேக ஆண்டுகள் அவர் சிறைக்கோட்டத்தில்தான் துன்புற்றிருக்க (Քւգս-ԼՕn?
பாரெல்லாம் புகழ்ந்து கொண்டாடும் அரும்பெரும் குணங்கள் பல வாய்க்கப்பெற்ற வர். ஒப்பற்ற பெருந் தலைவர் நமது நேருஜி. நமது பாரத நாடு எல்லாத் துறைகளிலும் மேம் பட்டு, உலகத்தாரது நன்மதிப்பிற்கு உரிய தாகி நிலவ வேண்டுமென்று அல்லும் luasib உழைத்து வந்தார். என்றும் தமக்கென வாழாது பிறர்க்கென்று வாழ்ந்து வந்த உத்தமர்."
நேருஜியின் தந்தை மோதிலால் நேரு, 1931ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ம் திகதி காலை காலமானார். அவரின் உடல்நிலை மோசமடைந்த பொழுது, இடம் மாறினால் சிலசமயம் உடல் தேறலாம் என வைத்தியர் ஆலோசனை கூறியதால், அவர் லட்சுமண புரிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். மரணமான பின் அவருடல் அலகாபாத்தி லிருந்து 'ஆனந்த பவனுக்கு எடுத்துச் செல் லப்பட்டது. அங்கிருந்து நான்கு மைல் தூரத் திலிருந்த கங்கைக்கரைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடை பெற்றன. ஜவஹர்லால்தான் தன் கண்களில் நீர் தாரை தாரையாக வழியத் தன் அருமை அப்பாவின் சிதைக்குத் தீ மூட்டினார்.

Page 30
காந்திஜி தம் அலுவல்கள் அனைத்தையும் ஒத்திப் போட்டு விட்டு, ஆனந்த பவனிலேயே சில நாட்கள் தங்கியிருந்து, ஜவஹருக்கும், அவரின் தாயார் சொரூபராணியாருக்கும் ஆறுதல் கூறித் தேற்றி வந்தார். ஜவஹரின் மனம் நிம்மதியடையவில்லை. சில நாட் களின் பின்னர், வைத்தியர்களின் அறிவுறுத் தலை மதித்து, அவர் இலங்கை வந்தார். இது பற்றி, சம்பந்தம் எழுதிய தமிழ் நூலின் 116, 117ம் பக்கங்களில் இவ்வாறு கூறப் பட்டுள்ளது;
சில நாட்களுக்குப் பிறகு குடும்பத் துடன் இலங்கை சென்று தங்கி ஒய்வு பெற் றார் ஜவஹர். அங்குள்ள இயற்கை வனப்பு கள் அவருடைய நொந்த மனதிற்கு எத் தனையோ இதமளித்தன. தேயிலைத் தோட் டங்களில் பணிபுரிந்து வந்த பலவித மக் களையும் கண்டு அளவளாவினார். அவர்கள் கொத்துக் கொத்தாக நானாவித காட்டு மலர் களையும், காய்கறிகளையும், வீட்டில் தயாரித்த வெண்ணெயையும் அவருக்கு அன்புப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தனர். அவ்வளவையும் அவர் என்ன செய்வார்? அங்கிருந்த அனாதை இல்லத்திற்கும், வைத்தியசாலைக்கும் அவைகளை அவர் அனுப்பி வைப்பது வழக்கம்.
ஒருதடவை ஜவஹர் யாழ்ப்பாணத்திற் கருகில் சென்று கொண்டிருந்த பொழுது, சில பள்ளிப் பிள்ளைகளும், ஆசிரியர்களுமாகச் சேர்ந்து கொண்டு, அவர் சென்ற காரை வழி மறித்துநிறுத்தினர். உடனே ஜவஹரும் காரி லிருந்து வெளியே வந்தார். அனைவரும் அவருக்கு வணக்கம் செலுத்தி, அன்பு மொழி உரையாடினர். அப்பொழுது ஒரு மாணவன் வெகு தைரியமாக அவரிடம் சென்று கை
56
குலுக்கிவிட்டு, "நான் இனிமேல் எந்தத் தப்பி தமும் செய்ய மாட்டேன்" என்றான். அந்தப் பையனுடைய நேர்மையையும் உறுதி யையும் அவர் என்றும் மறக்கவே இல்லை.
பிறகு அவர் கன்னியாகுமரியிலிருந்து, ஹைதராபாத் வரை முக்கியமான இடங் களையெல்லாம் பார்த்துக்கொண்டு ஊர் திரும்பினார்.
தமிழ் நூலில் முதல் விஜயம் பற்றி இவ்வளவுதான் கூறப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு விஜயங்கள் பற்றி எதுவும் எழுதப்பட வில்லை.
வானதி பதிப்பக நூல். சம்பந்தம் எழுதி யது. 192 பக்கங்களில், முதல் அமைச்சர் கூறுகையில், "சரளமான தமிழ் நடை, விஷ யங்களைச் சுருங்கச் சொல்லும் முறை. இவற்றின் துணை கொண்டு ஒரு நல்ல நூலை திரு. சம்பந்தம் உருவாக்கியிருக் கிறார். அவரைப் பெரிதும் பாராட்டுகிறேன்' என்கிறார். நாமும் நூலைத் தேடிப்படித்தால், அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
மேலும் பல வாழ்க்கை வரலாற்று நூல் கள் நேருஜியின் திறமைகளை எடுத்துக் காட்டுவனவாக ஆங்கிலத்திலும். தமிழிலும் வெளிவந்துள்ளன. அவை அனைத்தையும் பற்றி விபரம் எழுதுவதானால் நூலையெல் லாம் தேடிப் பிடிப்பதிலும், ஆற அமரப் படித் துத் துருவிப் பார்த்து எழுதுவதிலும் பல் லாண்டு காலம் உழைக்க வேண்டும். அது தனிமனிதனுக்குச் சாத்தியமா? (மேலும் சுவையான சம்பவங்கள் பற்றி அறிவதற்கு, எஸ்.எம்.ஹனிபா எழுதியுள்ள நேருஜி ஒரு மாமேதை" எனும் நூலை வாசியுங்கள். இந்நூல் மல்லிகைப் பந்தல் பிரசுரம்.)

கடிதங்கள்
குறுகிய காலி அவகாச?ே
முநீ.பிரசாந்தனால் தொகுக்கப்பட்டு பூபாலசிங்கம் புத்தகசாலையினரால் பதிப்பிக்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்' என்ற நூல் பற்றி புதிய பூமி 100ஆவது இதழில் சிவா எழுதியுள்ளார். 'தரமான கவிதைகள் தொகுப்பில் சேர்க்கப்படாமைக்குக் காரணம் குறுகிய கால அவகாசம் எனக் குறிப்பிடும் பிரசாந்தன் இப்படிப்பட்டதோர் அரிய முயற்சியை அவரை நம்பி ஒப்படைத்த பதிப்பகத்தாரை கைவிட்டுள்ளதாகவும் சிவா குறிப்பிடுகிறார். மேலும் சிவா, இவ்வாறான ஒரு நூல் அவசர அவசரமாகத் தொகுக்கக் கூடிய ஒன்றல்ல. ஒரு ஆண்டோ, இரண்டு மூன்று ஆண்டுகளோ செலவிட்டிருப்பினும் நல்லதொரு நூலுக்கு அது தகும்’ எனத் தொடர்கிறார்.
உண்மையில் பிரசாந்தன் இந்நூலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தைச் செலவிட்டுவிட்டுத் தரமான கவிதைகள் சேர்க்கப்படாமைக்கு குறுகிய கால அவகாசமே காரணம் எனக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார். மல்லிகையின் 40ஆவது ஆண்டு மலரில் (ஜனவரி 2005) ஈழத்துத் கவிதைத் தொகுப்புக்களும் நடுவு நிலைமையும் புதுவை இரத்தினதுரையை முன்வைத்துக் கிளம்பும் சர்ச்சை" என்ற கட்டுரை பிரசாந்தன் எழுதியுள்ளார். 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்' என்ற நூலைத் தொகுப்பதற்காகப் பல கவிதைத் தொகுப்புகளை வாசித்ததன் விளைவாகவே மேற்படி கட்டுரை எழுதியதாகவும் பிரசாந்தன் 2005ஆம் ஆண்டில் வெளியான பிறிதொரு மல்லிகை இதழில் குறிப்பிட்டுள்ளார். எனவே 2005 ஜனவரிக்கு முன்பே கவிதைத் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. இரண்டு வருட காலத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியைப் பிரசாந்தன் குறுகிய காலப்பகுதி எனத் தெரிவித்துப் பூபாலசிங்கம் பதிப்பகத்தாரைக் கைவிட்டது பரிதாபகரமானது. இதை மழுப்ப பிரசாந்தன் பட்டிமன்றப் பாணியில் பல காரணங்களைக் குறிப்பிடலாம். சிவா போன்றவர்களுக்கே கால அவகாசம் 2 வருடங்களுக்கு மேற்பட்டது என்பது தெரியாத
57

Page 31
நிலையில் மற்றவர்கள் பிரசாந்தனின் கால அவகாசம் இன்மை எனும் கருத்தை நம்புவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. பதிப்பகத்தார் மீது அபாண்டப் பழி ஏற்படக் கூடாது என்பதற் காகவே இதனை மல்லிகையில் எழுது கிறேன்.
- தேவமுகுந்தன்
ஆண்டு மலர் கண்டேன். அற்புதம் போங்கள் கணினி பற்றிய கட்டுரைகள் புதிய முகம் காட்டி நின்றன. பயனுடை
யது. ஆண்டு மலர் தாமதித்தே வந்தது;
அதனால் எதிர்பார்ப்பை அதிகரித்தது. எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அற்புத மாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள். வாசித்து முடித்தபின் உங்கள் முகம் தான் தெரிந்தது.
பல பிரபல எழுத்தாளர்கள் கட்டுரை கள் எழுதி இருந்தார்கள். நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும் சிறுகதைகளைத் தவிர்த்துச் செல்வது ஏன் என்று புரிய வில்லை. சமகால இலக்கிய சுவைஞர் களை சிறுகதை இலக்கியம்தான் பெரிதும் கவர்கின்றன எனும் இரகசியம் அவர்கள் புரியாத ஒன்றல்ல.
இருக்கட்டும்.
ஒன்றைக் கூறவேண்டுமே
கோகிலா மகேந்திரனின் எழுத்துக் கள் எதனையும் நான் படித்ததாக ஞாபகம் இல்லை. "விழுதலும் எழுதலும்
தான் நான் வாசித்த அவரது முதற் சிறுகதை என்று நினைக்கிறேன்.
5
8
ஐயா, குறித்துக் கொள்ளுங்கள். சமீட பத்தாண்டுகளில் வெளியான சிறுகதை களுள் இதுவும் பேசப்படத்தக்க இலக் கியம். என்னை இன்னும் கேட்டால், உலகத் தரம் வாய்ந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று என்பேன்.
சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
மிகக் குறுகிய நேரத்துக்குள் தொடங்கி முடிகின்ற கதையும், கதைப்
பின்னணியும் வாசகனை வெளியில்
புலன் செலுத்தாமல் கட்டிப்போட்ட எழுத்துநடை, கூறவந்த அப்பால் ஒரு சொல்லைக்
கதைக்கு sa L& செருகாத இலாவகம். நாமாவது சென்று "கவர்சில் கார்ட்டை வாங்கிக் கொடுப்போமா? என அனுதாபப்பட வைக்கும் மன ஈர்ப்பு. வாசகனை கட்டிப் போட்டு விட்ட பின்னல் நடை. கடைசிப் பந்தியில் நம்மையும் பதைபதைக்க வைக்கும் நடை வேகம் மனதைத் தொட்டு நின்றது. சகோதரியின் மணி முடியில் மேலும் ஒரு மயிலிறகு. தொடர்ந்தும் நல்ல இலக்கியம் த" வாழ்த்துகிறேன்.
ஓர் அன்புக் குறிப்பு :
அறுபதுகளில் ஆனந்த விகடனில் வாராந்த முத்திரைக் கதை என ஒரு திட்டம் இருந்தது. 'சாவி விகடனில் இருந்து விலகி தினமணிக்கதிரில் ஆசிரியர் பொறுப்பு ஏற்றபோது எழுபது களில் "நட்சத்திரக் கதை திட்டத்தை அறிமுகம் செய்தார். நல்ல சிறுகதைகள்

கிடைத்தன. ஜெயகாந்தனின் பெருமளவு சிறுகதைகள் முத்திரைக் கதைகளா கவே வெளிவந்தன. மல்லிகையிலும் இவ்வாறான திட்டம் ஒன்றை ஆரம்பி யுங்களேன். அந்த மாதத்து இதழில் வெளியாகும் சிறுகதைகளுள் சிறந்த ஒன்றுக்கு 'ஜீவா முத்திரை பதித்து விடுங்கள். அதுவே ஒரு இலக்கிய விருதுதான். ஜிவா விருது. ஆண்டு முடி வில் 12 சிறுகதைகளையும் தொகுத்து "மல்லிகைப் பந்தலில் பரப்பி விடுங்கள். பேசப்படும்.
2004இல் யாழ். நல்லூர் ஆதின மண்டபத்தில் 'கனக செந்திநாதன் கதா விருது பெற்ற புளகாங்கிதம் இன்னும் நெஞ்சில் இனிக்கிறது. ஜிவா விருது பெறும் நாட்டமும் , துளிர்க்கிறது - என்னைப் போலவே பலருக்கும்.
- எம்.எஸ். அமானுல்லாவற் மூதூர். 2006ஆம் ஆண்டுச் சஞ்சிகையில் 48ஆம் பக்கத் தில் திரு. ஏ.எஸ்.எம்.நவாஸ் எழுதிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் கேள்வி' -
மல்லிகை டிசம்பர்
பதில்க்ள் ஒரு பார்வை' என்ற கட்டுரை யில் சில தகவல்கள் விடுபட்டுள்ளன. அவற்றையும் இணைத்தால் அக்கட்டுரை சிறப்புற்றிருக்கும். அவர் குறிப்பிடாத சில "கேள்வி - பதில் மல்லிகையில் பிரசுர மாகும் என்ற எதிர்பார்ப்புடன் எழுதி அனுப்புகிறேன்.
ஜூனியர் விகடனில் வெளியான ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி
es
9
பதில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. சுஜாதாவின் பதில்கள் வாசகர்களை கேள்வி கேட்க வைத்தன. ஏன்? எதற்கு? எப்படி? மூன்றும் புத்தகமாக வெளியாகி சாதனை படைத்தது.
கவியரசு கண்ணதாசனின் புகழ் கூறும் 'அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் தொடர் வெளியான போது பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தச் சந்தேகங்களுக்கு கண்ணதாசன் பதில ளித்திருந்தார். பின்னர் அது புத்தகமாக வெளியானது. w
கல்கியில் பிரசுரமாகும் தராசு பதில் கள், சாவியில் பிரசுரமான சாவி பதில்கள், பாக்கியாவில் நடிகர் பாக்கியராஜின் பதில்கள் என்பனவும் வாசகர்களின் பெரு வரவேற்பைப் பெற்றவை.
தமிழ்க முதல்வர் கருணாநிதியின் கேள்வி பதில் சற்று வித்தியாசமானது. தான் சொல்ல வருவதை கேள்வி பதி லாக பத்திரிகைகளுக்கு அனுப்பி விடு வார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி களுக்கு கலைஞரின் பதில் போல் அது அமைந்து விடும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி யாகும் உதயன் பத்திரிகை வெள்ளி
தோறும் சஞ்சீவி என்ற பெயரில் வார
வெளியீடு ஒன்றை வெளியிட்டது. அதில் பிரசுரமான பதில்கள் வரவேற்பைப் பெற்ற அதேவேளை சில சிக்கல்களையும் ஏற் படுத்தியது. -
சுடர்ஒளி பத்திரிகையில் சித்தன் பதில்கள் வெகு சுவாரஸ்யமாக உள்ளன.

Page 32
குமுதத்தில் சுஜாதாவைக் கேளுங்கள் என ஒரு சில மாதங்கள் கொம்பியபூட்டர், அறிவியல், விஞ்ஞானக் கேள்விகளுக்கு எழுத்தாளர் சுஜாதா பதிலளித்தார்.
தினக்குரல் ஞாயிறு இதழில் சினிமாப் பகுதியில் சீஸர் பதிலளித்தார். தினக்குரலில் புதன்கிழமை வெளியாகும் புதன் வசந்தத் தில் என்ன பதில் என்ற தலைப்பில் கேள்வி பதில் வெளியானது.
மெட்ரோ நியூஸ் எனும் வெள்ளிக் கிழமை வெளியாகும் பத்திரிகையில் சீனியர் பதில்கள் வெளியாகின்றன. மிகவும் Ցհ6)]] ரஸ்ப்மாக உள்ளன. அதே மெட்ரோ நியூ ஸில் மிகவும் வித்தியாசமான ஒரு கேள்வி பதில் வெளியாகிறது. கேள்வி கவிதையில் பிரசுரமாகிறது. பதில்களும் கவிதை வடிவி லேயே பிரசுரமாகின்றன. வாசகர் கேள்வி கேட்க, அதற்குப் பதிலளிப்பதும் வாசகர்கள்
தான். ஒரு கேள்விக்கு பல வாசகர்கள் பதில ளிப்பது சுவாரஸ்யமாக உள்ள அதேவேளை புதிய கவிஞர்களையும், சிந்தனையாளர் களையும் அறியக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஏ. எஸ்.எம்.நவாஸ் அவர்களின் பார்வையில் படாத சில கேள்வி பதில்களை
இங்கே தொகுத்துத் தந்துள்ளேன். அதே
வேளை அவருடைய பார்வையில் பட்டு அவர் குறிப்பிடாத கேள்வி பதில்கள் பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. மித்திரன் வாரமலரில் பிரசுரமாகும் பூரம் பதில் பற்றி ஏ.எஸ்.எம். நவாஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதே பத்தி ரிகையின் சினிமாப் பகுதியில் பிரசுரமாகும் "சினிப்பிரியன் கேள்வி பதில்கள் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.
கே.வடிவேல்
கிரிலப்பனை.
S ২ DÈSÈSÈ મેો SE V− நிதி
གང་གི་སངས་ NN N ခဲ့`ဗဲ့ဖွဲဖွဲ၊
$২২ இே ܬܵܐ NQSSl ချွဲနွှဲခဲ့ချဲ့ဖွဲ
60
ရှို့ရွဲ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டொனால்டின் لههعاقة لكأسياتهده
சி.சுதந்திரராஜா
மகிழ்ச்சிப் பிரவாக வெள்ளம் எனக்குள் கரை புரண்டோடியது. எனது குரல் வளத்தை மிகுதியாக மெச்சி நேசரத்தினம் டீச்சர் கொயர் - மெம்பராக்கி நிதம் தேவனைப் பாடவே வைத்து விட்டார். எனது கையுங் காலும் ஆனந்தக் கூத்தாடியது. என்னைப் பூோன்ற பலருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்து விட்டது. வானத்தைத் தொட்டு விட்ட உவகை உணர்வை ஊட்டியது. டொனல்ட் வேதக்காரன் ஆனபோதிலும் சேர முயன்று தோற்றே விட்டான். பலசாலியான உடம்பினன். குரல் வளம் தோதில்லை. பாடும் போதெல்லாம் வரட்சியே தொனிக்கும். தேனைக் குழைக்கும் கணிவை குரலால் வரவழைக்க முடியாதவனாகவே போனான்.
அசெம்பிளி ஹோலிலும் சேர்ச்சின் பியானோ வகையிலானது எப்போதும் மூடி வைக்கப்பட்டிருக்கும். அதன் ஓரத்தில் உட்கார்ந்து இசை மீட்டுகிற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ரோசனி மட்டுமே அசெம்பிளிக்கும் சேர்ச்சுக்கும் அமர்நத படி ரம்மியமாக இசை எழுப்புவாள். அவளுக்கு ஓவென்ற வாய். ஒசன் வேவ்ஸ் பாட மாட்டாள். ரில் ஐ வான்ற் நோ மோ மட்டுமே ரீங்காரிப்பாள். கோரஸ் குரலில் கூட்டாக மட்டுமே தொனிக்கும். சேர்ச்சில் மட்டுமே வர்ணக் கண்ணாடி யன்னல்கள். அசெம்பிளி ஹோலில் வெறுங் கண்ணாடி யன்னல்கள். வெள்ளை யூனிபோம் மாணவிகள். வர்ணச் சட்டைகள் அணிந்தபடி வந்ததே கிடையாது. வகுப்பு மாணவர்கள் அசெம்பிளிக்கு வந்து நின்றால் ஹோல் நிரம்பிப் போகும். நிற்பதற்குக் கூட இடமிராது. காலையிலேயே வேர்த்துக் கொட்டும்.
போதகரைப் பின்னாலிருத்தி டீச்சர் தானே மொறிஸ் மைனரிலே போய்விடுகிற துண்டு. டீச்சரின் முகத்துக்கு அழகு மெருகூட்டி விடுவது கண்ணாடி என்பேன். அத்தனை கச்சிதமாகக் கண்ணாடி பொருந்தி நிற்கும். தேவாலயம் போலவே வெகு கிட்டடியில் அமைந்தது எங்களது டொமற்றரி. அதனது பக்கவாட்டுச் சுவர்களிலே பட்ட வர்த்தனமாக மற்றப் பக்கமெல்லாம் தெரிகிற கண்ணாடி யன்னல். எனது கட்டிலை ஒட்டிய யன்னலைத் தண்ணிரில் நனைத்த தடித்த துணியால் அழுத்திப் பளிச்சிடப் பண்ணியதுண்டு. கலங்கலில்லாத என்னுடைய யன்னல் ஊடாக வெளிப்பக்கம்
61

Page 33
எல்லாமே துலக்கமாகத் தெரிந்திடும். மற்றைய யன்னல்கள் அப்படியிராது. கண்ணாடி யன்னலில் கரும்புள்ளி, செம்புள்ளி படர்ந்தபடி தெரிந்திடும்.
மூலையில் எல்லாருமே குப்பை
கூளங்களை, குவித்து வைத்திருப்பது எனக்கு எப்போதும் கவலையை ஊட்டியது. வாரக் கணக்கில்
பணிஸ் துண்டுகளைக்
வருத்தத்தை வரவழைத்தது. அசெம்பிளி
ஹோலுக்கு ஐம்பது அடி தூரத்திலே பருத்த தூண்களிலான நூலகம். முகப்பிலே மாணவ மன்றங்களின் கூட்டங்கள் பற்றிச் செயலரின் அறிக்கைகள் மாணவர் கையெழுத்தில் அழகுற எழுதி அறிவிப்புப் பலகையின் கண் ணாடிப் பெட்டிக்குள் குத்தப்பட்டிருக்கும். எல்லா வகுப்பு மாணவருமே அறிவிப்புக் களை உன்னிப்பாகச் சூழ்ந்து குவிந்து நின்றபடி படிப்பார்கள். பங்குபற்றும் மாணவர் விபர்ங்கள் தொங்கிக் கொண்டிருப்பதன் காரணத்தாலே பங்கு கொள்ளும் மாணவர் பெருமை தாளாது புளகாங்கிதம் அடை வார்கள். புகழ் உச்சியில் மிதப்பார்கள். கிரிக்கட் ஆடும்வேளை விக்கட் கீப்பராக நின்றவரின் மேல் உதட்டில் வெகு வேகத் தில் வந்த பந்து தாக்கி இரத்தச் சிராய்ப்பு
ஏற்படுத்தித் தோலைக் கிழித்து உரித்தது.
அவனைத் தூக்கிக் கொண்டே வந்து நூலக முன்றலின் தூணோரத்தில் கிடத்தி வைத் தார்கள். தொடைக்குக் கட்டி விட்டிருந்த தடுப்பு மட்டைகளை எல்லாம் கழற்றி னார்கள். விகாரமாகக் கோரமாகச் சொண்டு வீங்கிப் போய் கிழிந்திருந்தது. கிரவுண்டில் இறங்கிட கிலியூட்டி முன்னெச்சரிக்கை பண்ணித் தீர்த்தது.
2
எனது கட்டிலுக்கு நேரெதிரில் டொனால்ட் கட்டிலைப் போட்டிருந்தான். ஸ்ரடி ஹோல் செல்வதற்கு மணியடிப்பதே அவன்தான். அதற்காகவே அவன் இடக் கையிலே பேபலுவா ரிசிலெற் கட்டியிருப் பான். நேரந் தவறாமை தொனிக்க அவன் மணியடிக்க ஸ்ரடி ஹோலில் எழும்பிப் போக மற்றவர்கள் எல்லாரும் புத்தகங்களை மூடி அடுக்கிக் கொள்ளுவார்கள். நூலக மறு முனையில் மணிக்கயிறு தூணில் கட்டப் பட்டிருக்கிறது. பள்ளிக்கூடப் பாடங்கள் முடிவையும் இதே மணிதான் அறிவித்து ஒலிக்கும். வெளி மாணவர்கள் கலைந்து சென்ற பின்னர் டொனல்ட் ராஜ்ஜியம் தொடங்கும்.
குறோட்டன் செடிகளை நீள்வரிசையில் விதவிதமாகக் கத்தரித்து விட்டிருப்பார்கள். தென்னோலைகளால் பாதி வகுப்பறைகள் வேயப்பட்டிருக்கும். நீண்ட கரும்பலகை கொண்ட சுவர்கள். ஒவ்வொரு வகுப்பறைக் கும் சிறு மர அலுமாரியிருக்கும். தேர்வின் விடைத் தாள்கள் எல்லாம் அதனுள் அடுக்கப்பட்டிருக்கும். தோய்த்து மினுக்கி எடுத்த ஆடைகள் றங்குப் பெட்டிகளில் ஒவ் வொரு டொமற்றரி கட்டிலோடும் Փւ-ւգա
படியே தெரியும். சதா கண்காணிப்பிலுள்ள
வார்டன் மாஸ்ரர் மிகுந்த கட்டுப்பாடுள்ளவர்.
வெளி மாணவர் எவரையும் உள்ளே வந்திட
அனுமதிக்கவே மாட்டார். வெளிச் செல்ல
முன்னால் சிட்டையில் எழுதி அவரிடம்
ஒப்பம் கோருவதுண்டு. டிஸ்பென்சரிக்கு மட்டும் அனுமதிப்பார். கேலியும் கிண்டலும்
செல்லுபடியாகாது. படிக்கிற நேரத்தில் தலை
யிடிக்காரருக்கும்கூட டொமற்றரி பூட்டித்தான்
கிடக்கும்.

பத்தமேனி பக்கத்திலிருந்து ஐவர். அட்டன் பக்கத்திலிருந்து ஒருவர். வவுனி யாவிலேயிருந்து கூட ஒருவர் என்று பதினெட்டுப் பேரும் ஒவ்வொரு திக்கி லிருந்து வந்தவர்கள். ஒவ்வொருத்தரை
யும் அவரவர் ஊர்ப்பேரைச் சொல்லியே
அழைப்பதுண்டு. அவர்களின் இயற்பெயர் எவர் நாவிலேயும் வருகிறதாயில்லை! பழக்கதோஷம். வளலாய் என்ற இடப் பெயர் வாயால் அவருக்கு இட்டிருக்கும் பெயரை விட துருத்திக் கொண்டு முன்னிலையில் வந்தே விடும்.
புதன் கிழமைகளில் மத்தியானச் சாப்பாடு எல்லோருக்கும் பலே ஜோராகி விடும். அன்றைய தினமே இறைச்சியிருக் கும். சாமியார், தாடியோடு சமையலில் தூள் கிளப்புவார். வெறுமேலும் கரி பிரட் டிய பீடித்துண்டுடன் சமைத்துத் தள்ளு
வதில் மகா சமர்த்தர். கன்ரீன் மட்டும்
காசு விற்பனையில் சோக்கான தின்பண் டங்களை அடுக்கி வைத்திருக்கிறது. 6)IITuyAD6\)TLfb.
பெளதீகம் புரியாத குறைபாட்டைப் போக்குவதற்கும் லையிட் மக்னெட்டிசம் என்றெல்லாம் பலவித குறுக்கங்களாகப் பாடம் பிரிந்து போயிருந்த சர்ச்சையைத் தீர்க்கவும் ஒரேயொரு வைற்ஸியின் பொதுப் பெளதீகம் புத்தகத்தைப் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு புதிதாகவே வாங்கி எனது புத்தக வெடில்பிலே அடுக்கி
யிருந்தேன். அட்டன் வாசியின் முட்டை
கள் களவு போனது மாதிரியே எனது அருஞ் சொத்தான வைற்ஸியும் பறி போயிற்று.
6
3
சொல்லவொண்ணாத் துயர் மனசில் படர்ந்து வாட்டியெடுத்தது. எல்லோரிடமும் முறையிட்டாயிற்று. புத்தகம் கைக்கு வந் தால் முழுப் பெளதீகமும் புரிந்து கொண்டது போலாகும் என்ற எண்ணக் கோட்டை மீது இடி விழுந்தது. வைற்ஸி மறுபடியும் களவுச் சுரங்கமானது. தீர்க்க முடியாத பெளதீகப் புதிர் மேலும் சிக்கலாகிக் கொண்டது.
எல்லாமே எல்லோருக்கும் விலா வாரியாகத் தெரிபவையே. டொமற்றரியில் இருக்கிற பதினெட்டுப் பேரின் உடமை, உடுபுடைவை முதலிய சகலதுமே எல் லோரது மூளையிலும் பதிவாகிப் போன வைதாம். டொனல்ட்டிடம் இருந்த புத்த கங்களும் அவனுடைய ஷெல்பில் அடுக் கப்பட்டுத்தான் ஆகவேண்டும். விநோத மாக ஏதாவது துருத்திக் கொண்டிருந் தால் பளிச்சென கட்டிலிலே கிடந்தபடி பார்வையிடத் தெரியும், கைப்புண்ணுக் குக் கண்ணாடி தேவைப்படாது. என் னுடைய வைற்ஸியின் பொதுப் பெளதீகம் தடித்த மாட்டுத்தாள் மேலாடை போட்ட படி புத்தகங்களுள் மறைக்கப்பட்டுப் பத்தோடு பதினொன்றாகக் கிடந்தது. அதில் தனது பெயரைக்கூட எழுதி விட்டி ருந்தான். என்னால் அதனை அடை யாளம் கண்டுகொள்ள அதிக உளைச் சல்பட வேண்டி இருப்பதாயில்லை. பாவை பூச்சட்டை போட்ட மாதிரியே
இருந்ததில் அவனது களவு வெட்ட
வெளிச்சமானது. இதனை வார்டன் மாஸ் ரருக்குச் சொல்லிச் சிக்கலாக்கி விடாது அவனே ஒப்புக்கொண்டு வைற்வியை மீட்டுத் தந்தும் கொண்டான். காயப்படுத் தாமல் களங்கத்தை கழுவித் தீர்த்தான்.

Page 34
நவீன இலக்கியத் திறனாய்வின் முன்னோடி ஐ.ஏ.ச்ெசேர்.ே
- ஆகந்தையா
"உண்மையான மனிதக் கருத்தோட்டத்தை நடுநிலைமை தவறாது உண்மையான தீர்வை வழங்க வல்ல ஒரு பொதுமையான தேடலே விமர்சனமாகும்." - மத்தியூ ஆர்னேல்ட் -
“திறனாய்வு எப்பொழுதும் முடிவை இலக்காகக் கொண்டு பேசப்படல் வேண்டும். பொதுவாகக் கூறுவதாயின் அது கலை ஆக்கத்தைத் தெளிவுபடுத்துவதாகவும்,
இரசனையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் வெளிப்படுத்தப்படல் வேண்டும்."
w - ரீ.எஸ்.எலியட் -
தேவை கருதியே இவ்விரு திறனாய்வாளர்களின் மேற்கோள்களும் இங்கு தருகின்றோம்.
திறனாய்வு பற்றிய மேற்படி கருத்துக்கள் ஐ.ஏ.ஹிச்சேர்ட் தனது விஞ்ஞான ரீதியான கோட்பாட்டை முன்வைப்பதற்கு உறுதுணையாக அமைந்தன எனும் உண்மை பின்புலனாகும். -
இன்று இலக்கியத் திறனாய்வு என்பது ஒரு வரையறைக்குட்படுத்தப்பட்ட, விஞ்ஞான ரீதியில் அணுகப்பட்ட, பெரு வளர்ச்சியடைந்த துறையாக மாறியுள்ளது. படைப்பிலக்கியவாதி தன்னை, தன் படைப்பை எடை போடுவதற்கு இத்துறையைப் பெரிதும் நம்பியிருக்கிறான்.
படைப்பவனே திறனாய்வாளனாக இருந்த காலம் மாறி, சுவைஞனே விமர்சக்னாக இன்று மாறி வருகின்றான். இது ஒரு ஆரோக்கியமான நிலையென்றே கூற வேண்டும்.
திறனாய்வின் மூலம் படைப்பாளி தனது ஆக்கம் எவ்வாறு பார்க்கப்படுகிறது;
எவ்வாறு அணுகப்படுகிறது; இன்னும் கூறுவதாயின் திறனாய்வு படைப்பாளியை எவ்வாறு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்பதைப் பதம் பார்க்க உதவுகின்றது.
64

இன்று எம்மிடையே ஆரோக்கிய மான திறனாய்வு வளராமல் இருப்பதற் குரிய அடிப்படைக் காரணம் படைப் பாளியைத் திறனாய்வாளன் திருப்தி செய்ய முனைவதாகும். படைப்பாளி இருக்கும் மேடையில் அவன் இத்தர்ம சங்கடமான நிலைக்குள் மாட்டிக் கொள் வான். இது தவிர்க்க முடியாத காரணி யாக இருப்பினும், தல்லவே.
விரும்பத்தக்க
திறனாய்வு செய்பவன் நடுநிலை நின்று தனது பாணியைச் செய்யும் போது படைப்பாளியின் ஆக்கம் ஒரு சரியான மதிப்பீட்டுக்குட்படுகின்றது. ஆசிரியன் தன்னைப் பிறர் கண்ணுரடாகக் காண் கின்றான்.
திறனாய்வாளன் சில சமயங்களில்
நடுநிலை பிறழ்ந்து தனது வித்துவத் தன்மையை வெளிக்காட்ட விரும்பி,
தனது சாய்வு நிலையை பாரம்பரியங்
களில் தான் கொண்ட பற்றை விரும்
புகுத்தித் தனது வார்த்தை ஜாலங்களால் திறனாய்வை மழுங்கடித்து விடுவதையும் நாம் பார்க்கின்றோம்.
விரும்பாமலோ திறனாய்வில்
இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்து திறனாய்வு செயற்பட வேண்டுமாயின் அணுகுமுறையில் மாற் றம் வேண்டுமென உணரப்பட்டது. திற னாய்வு ஒரு சமூக விஞ்ஞானமாகினும், அதுவும் ஒரு விஞ்ஞான அணுகு முறைக்குள் கொண்டுவர வேண்டிய தேவையும் திறனாய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
6
5.
மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை, இலக்கியமும், இலக்கியத் திறனாய்வும் இரட்டைக் குழந்தைகள். இலக்கியம் பிறந்தவுடன் திறனாய்வு தொடங்கி விடும். இவ்வகையில் திறனாய்வும் இலக் கியம் போன்று தொன்மை மிக்கதே. படைப்பிலக்கியத்தை அதன் உள்ளார்ந்த தன்மைகளை உள்வாங்குவதற்கும், இலக் கியத்தின் அழகு, வலிமை, செழுமை, உண்மைத் தன்மை போன்றவைகளைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் திறனாய்வு பெரும் பங்களிப்பைச் செய்கின்றது.
திறனாய்வு இன்றேல், குறிப்பாக மெளனி, எலியட் போன்றோரை இலகு வில் அணுகுவது துர்லபமே. இதனாலோ என்னவோ சோக்கிற டீஸ் ஆக்க கர்த்தாவை விழித்து, “படைப்பிலக்கிய வாதி தனது படைப்புகளைப் பற்றிப் முன் வைக்கும் விமர்சகர்களை ஊமை போன்று
பல ரகப்பட்ட விமர்சனங்களை
கேட்டிருப்பான்' என்பார். இதனால் விமர் சகன் சொல்லும் அத்தனையையும் அவன் கேட்டுக் கொண்டிருப்பான் என்பதல்ல! அதாவது அவன் மெளனமாக எல்லோரது விமர்சனங்களையும் உள்வாங்கி ஊக்கம் பெறுவான்.
மேற்குலக விமர்சனம் பிளேட்டோ, அரிஸ்டோட்டல் தொடக்கம் ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப் பின்னணி யைக் கொண்டது. இவ்வகையில் ஆங் கிலத் திறனாய்வு மரபென்பது மேலைத் தேயப் பாரம்பரியத்துடன் இரண்டறக் கலந்த, தன்னைக் காலத்துக்குக் காலம் புதுப்பித்துக் தளர்வுறாத செழிப்பைக் கொண்டதாகும். இது எப்பொழுது ஒரு

Page 35
முடிவைக் காணும் என்றல்லாது, என்
றுமே முடிவைக் காணமுடியாத அசை வியக்கத்தைக் கொண்டிருப்பதுவே இதன் சிறப்பம்சமாகும்.
இவ்வாறான ஒரு நேர்த்தியான, தொடர்ச்சியான வளர்ச்சி மரபு இத்தாலிய மரபு வழி வந்து சிட்னி யோன்சன், கோல்றிஷ், லாம், ஆர்னேல்ட், யேம்ஸ் போன்றோரால் செம்மைப்படுத்தப்பட்டு, எலியெட்டின் ஆளுமையில் வலிமை பெற்று ஐ.ஏ.ஹிச்சேட்டின் கைகளில் புனி தப்படுகின்றது. இதன் காரணமாகவே றிச்சேட்டை எதிர்ப்பவர்களும், ஏற்பவர் களும் அவரை நவீன விமர்சனத்தின் முன்னோடி என்பர்.
இவர் காலத்துத் திறனாய்வு அவரது வார்த்தைகளில் கூறுவதாயின், "ஒரு சில உண்மைகள், பொதுவான எச்சரிக்கை கள், சில உபாயங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமான புத்தி சாதுரியமான அவதானிப்புக்கள், புத்திக் கூர்மையான ஊகங்கள், சுமாரான கோட்பாடுகள், விளையாட்டுத்தனமான வேடிக்கைப் பேச்சுக்கள் என்பவைகளையே மூலதன மாகக் கொண்டிருந்தது.
றிச்சேட் இவ்வாறான திறனாய்வு முறையை நிராகரித்து விஞ்ஞான ரீதியில் ஆராய்வதற்குரிய பரிசோதனைக் கருவி களைக் கைக்கொண்டார்.
றிச்சேட் பன்முக அறிவுப் பின் புலத்தைக் கொண்டவர். கூடவே அவ ரிடம் காணப்பட்ட ஆழ்ந்த நோக்கு, கூரிய பார்வை, நெறிப்படுத்தப்பட்ட அணுகு முறை என்பவைகளைத் துணையாகக்
கொண்டு தனது விஞ்ஞான ரீதியிலான
66
திறனாய்வு முறையை அறிமுகப்படுத்து கின்றார்.
நாம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்குச் சொற்களையே துணை கொள்கின்றோம். இவ்வகையான சொற் கள் எம்மிடையே ஏற்படுத்தும் விளைவு களை விஞ்ஞான ரீதியிலான, உணர்வு ரீதியிலான சொற்களென வகைப்படுத்தி, இவைகளுக்கிடையேயான வேற்றுமை ஒற்றுமையை ஆராய்கின்றார். ஒரு கவிதையை வாசிக்கும் போது அக் கவிதையின் சொற்கள் கவிஞனின் ஒரு அனுபவத்தின் புலப்பாடாகத் தோன்றும். உண்மையில் அந்த அனுபவம் அவன் மனதில் ஏற்கனவே படிந்த பல அனுப வங்களின் தொகுதியின் புலப்பாடாகும். இவ்வகையில் சொற்கள் கருத்து, கருத் தின் கருத்து எனும் இரு தளத்தில் இயங் கும். அவ்வாறே இச்சொற்கள் ஏற்படுத்து கின்ற தொடர்பும், தொடர்பினூடான தொடர்பாகும். திறனாய்வு இங்கேயே தனது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
‘தேன் வந்து பாயுது காதினிலே எனும் சொற்றொடர் விஞ்ஞான ரீதியில் பார்க்கையில் பல சிக்கல்க்ளை ஏற் படுத்தும், தேன் ஒரு திரவப் பொருள். காதில் பாய்ந்தால் வேதனைதான் மிஞ் சும். கருத்தின் கருத்தைப் பார்த்தால் தேன் வாயில் பாயும் போது எவ்வளவு இன்பத்தைத் தருமோ அதை விட இனிமையைத் தரும் தன்மையுடைய தெனும் கருத்து எமக்குக் கிட்டும். கவிதையில் சொற்கள் அர்த்தமற்றுக் காணப்படுகின்றன என யாரும் சொல்வ தில்லை.

சொற்கள் யாவும் நான்கு வகையான கருத்துக்களைக் கொண்டிருக்குமென றிச்சேட் கூறுவார். அவையாவன அர்த்தம், உணர்ச்சி, தொனி, மனக்கருத்து என்பவையாகும். இவைகள் தொழிற் படும் போதுதான் தொடர்புடனான தொடர்பு நிகழும்.
இலக்கியம் படிப்போர் அங்கே பல கருத்துக்கள் புதைந்திருப்பதைக் காண்பர். நாம் என்ன நிலையிலிருந்து பேசினா லும், எழுதினாலும் அவை பல மட்டங் களில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஒரே நேரத்தில் மொழி பல பணிகளைச் செய்ய வல்லது.
தொடர்பை
திறனாய்வாளன் பல மட்டங்களிலான மொழியை உணர்வதனூடாகவே தனது திறனாய்வுப் பணியைச் செவ்வனே செய்ய முடியும். ஆகவே திறனாய்வாளன் சகல திறமைகளும் கொண்டவனாக இருத்தல் வேண்டும்.
நாங்கள் ஏதாவதொன்றைச் செய் ஏதாவ தொன்றைச் செய்வதற்காக அவதானிக்
வதற்காகப் பேசுகின்றோம்;
கின்றோம். எமது எண்ணங்களைப் புலப் படுத்த நாம் சொற்களைப் பயன்படுத்து கின்றோம். இங்கே சொற்கள் அர்த்தம் பொதிந்தவையாக விளங்கும். அர்த்த மற்ற சொற்கள் தொடர்பை ஏற்படுத்த
lDTLLlT.
சொற்கள் எம்மில் அல்லது எம்மைக் கேட்பவர்களில் ஒரு உணர்வை ஏற்படுத் தாத வகையில் கிரகிப்பு மட்டுமல்லாமல் தொடர்பும் அற்றுப் போய்விடும். பேசு பவன் தன் முன் இருப்பவனைக் கவரு வதற்கு அல்லது தன்னைக் கவனிக்க
6
7
வைப்பதற்கு தனது பேச்சின் தொனி யைத் தக்கவாறு அமைத்து விடுவான். மேடைப் பேச்சாளன், சிறப்பாக அரசியல் வாதி ஒருவன் தனது தொனியை மாற்று வதனூடாகத் தான் எவற்றைச் சாதிக்க விரும்புகின்றானோ அவற்றைச் சாதித்து விடுகின்றான்.
இப்பொழுது அவன் தனது எண் ணக் கருத்தை இலகுவில் மக்களிடையே ஏற்படுத்தி விடுகின்றான். ஆக பல்வேறு மட்டத்திலான சொற்களின் செயற் பாட்டின் சங்கமம் தொடர்பை மக்களி டையே பலவேறு மட்டங்களில் ஏற்
படுத்தி விடும்.
படைப்பிலக்கியவாதி தனது சொற் களைச் செம்மையாகப் பயன்படுத்தும் போது எமது மனதில் பலவிதமான கருத்துக்களை, உணர்வலைகளை ஏற்படுத்தி விடுகின்றான். சொற்களில் காணப்படும் நான்கு மட்டங்களையும் உணர்ந்த திறனாய்வாளன் படைப்பிலக் கியத்தைப் பிரதிக்கோ, ஆசிரியனுக்கோ கேடு விளைவிக்காமல் பார்க்க முடியும்.
ஒரு இலக்கியத்திற்கு படைப்பாளி, பிரதி, வாசகன் எனும் மூன்று கூறுகள் வேண்டப்படுகின்றன. இது காறும் திறனாய்வு செய்த பலரும் ஆசிரியனை முதன்மைப்படுத்திப் பிரதியை அணு கினர். அவர்கள் வாசகனைக் கவனத்திற் கெடுக்கவில்லை. இவற்றால் புகழ் வாய்ந்த ஒருவர் எழுதிய மட்டமான படைப்புக்கூட ஆசிரியர் மேல் கொண்ட மதிப்பால், அவர் மட்டமான படைப் பொன்றை எழுத மாட்டார் எனும் நம்பிக் கையில் வலிந்த ஒரு திறனாய்வுக் குட்படுத்தப்பட்டு விடுகின்றது.

Page 36
றிச்சேட் இவற்றை நன்கு உணர்ந்த வர். படைப்பிலக்கியவாதி தனது படைப் புத் தொழில் முடிந்தவுடன் பிரதியை வாசகனிடம் தந்துவிடுகின்றான். இப் பொழுது பிரதியின் சொந்தக்காரன் வாச கன் ஆகிவிடுகின்றான். வாசகனே இப் பொழுது ஆசிரியன் ஆகின்றான். இப் பொழுது அவனைப் பொறுத்தவரையில் படைப்பாளி இறந்து விடுகின்றான். வாச கன் படைப்பை மட்டுமே பார்க்கின்றான்.
விவரணைத் திறனாய்வாளர்கள் ஐ.ஏ.ஹிச்சேட்டை மட்டமான திறனாய் வாளன் என்றே கருதினர். இருப்பினும் ஒரு கோட்பாட்டை முன் வைத்ததனுா டாக அவர் ஒரு திடமான அத்தி வாரத்தை இட்டுத் தந்தார் என்பதில் அவர் களும் பெருமைப்படுவர்.
ஆரம்பத்தில் தந்த இரு மேற்கோள் களும் றிச்சேட் முன் வைத்த கோட் பாட்டுக்கு எவ்வாறு துணை போயின என்பது புலனாகும்.
ஐ.ஏ. ஹிச்சேட் விஞ்ஞான ரீதியி லமைந்த விமர்சனத்தை அறிமுகப்படுத்தி ஒரே வடிவிலான விடைகளைத் தரவல்ல விமர்சனத்தைப் புறந்தள்ளி ஒர் உயிர்த் துடிப்பான உணர்வையும், தவறு ஏற்படா ஊகத்தையும் விமர்சனத் துறைக்குத் நந்து, தனக்கும் பின்வரும் திறனாய் வாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிய வகையில் அவர் நவீன விமர்ச கர்களால் தட்டிக் கழிக்கவோ, தட்டிக் கேட்கவோ முடியாத இடத்தை இன்றும் பிடித்துள்ளார்.
Excellent Photographers Modern Computerized
68
 
 
 

- டொகிெல் &ыл
Σ.Κ. சமீபத்தில் நீங்கள் படித்துச் சுவைத்து, ரசித்துச் சிரித்த நகைச்சுவைத் துணுக்கொன்றை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
சிலாபம். s ஆர்.முகுந்தன்
இல் ஒரு விமானத்தில் ச பேர் பயனம் செய்துக்கொண்டிருந்தனர். திடீரென்று என்ஜின் பழுதாகிவிட்டது. விமானத்தில் இருந்ததோ4 பரத்தான்!
முதல் நபர், "நான் இரானால்டோ, உலகின் சிறந்த கால்பந்து விரன். என் உயிர் ரசிகர்களுக்கு தேவை. எனவே..."என்று கூறிவிட்கு ஒரு பரதட்டை எடுத்துக்கொண்கு குதித்தார். இரண்டாவது நபர், "நான்ஹிலாரி கிளின்டன். முன்னாள் அமெரிக்க அதிபர் பின் கிளின்டனின் மனைவி. பிற்கானத்தின் அமெரிக்க ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு எனக்கு உண்டு. எனவே." என்று சொல்லிக் கொண்டே இரண்டாவது பரதட்டை எருத்துக்கொண்கு குதித்தார். மூன்றாவது நபர், "நான் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். மிகவும் புத்திசாலி. அரசியல் சாசனங்களை கரைத்துக் குழுத்தவன். என்னை நம்பிஎன் நாட்கு மக்கள் உள்ளனர். அவர்களுக்கு கான் பாதுகாப்பு தரவேண்கும். எனவே." என்று அவரும் குதித்தார்.
எஞ்சி இருந்தது ஒரு முதியவரும், சிறுவனும், முதியவர், "நான் வாழ்ந்து முடித்து விட்டேன். நீவாழவேண்டியவன். எனவே எஞ்சியபாரதமடைநீஎகுத்துக்கொண்”என்றார். உடனே சிறுவன் சிரித்தான். "கவலை வேண்டாம். நம்மிடம் 2 பரதகள் உள்ளன. ஆளுக்கு ஒன்றை எருத்துக் கொன்னாைம்”என்றான். முதியவருக்கு ஆச்சர்யம், "எப்படி?” என்று கேட்டார். சிறுவன் சொன்னான், "தன்னை புத்திசாலிஎன்று சொல்லிக் கொண்ட புஷ், என்னுடைய ஸ்கூல் பையை பாரசூட் என்று நினைத்து எடுத்துக் கொண்டார்” என்றான்.
69

Page 37
தூண்டில் பகுதியில் தங்களின் சுயம் பற்றிய கேள்விகளுக்குத் திரும்பத் திரும்ப விடையளிப்பதற்குக் காரணம் என்ன?
அபுரம். எம்.சி.நஜூமுதின்
இ சில பதிவுகள் பிற்காலத்தில் ஆவன
676769.6/ என்னைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்து விருகிறேன். அருத்து, இத்தகைய கேள்வி கேட்பவர்கள் இனந்தலைமுறை யினர்.தமது பெயரும் மல்லிகையில் இடம் பெற வேண்குமென்ற கப்பாசையில் கேட்கு
மாகக் கணிக்கப்படலாம்.
apadšáFažzpazvrř. eBarb 67vazžv6azvm, ஆனோ பேப்பரெருத்து, இருந்து, எழுதி அதைத்தuாலின் சேர்க்க முனைகிறார்கள் என்றால், நான் அந்த உழைப்பிற்குக் கொதிக்கும் இக்ைகிய மரியாதை òሃ፴/! தொடர்ந்து இத்தகைய கேள்விகளுக்கு இனிமேல் பதில் சொல்லாமல் தவிர்த்து விருகிறேன்.
凶 ஆண்டு மலர்களை வெளியிடும் போது நீங்கள் இயல்பாகவே இயங்க முடி கிறதா? அந்தச் சமயங்களில் நீங்கள் படும் பெரும் பாடுகளை நாமும் தெரிந்து கொண்டால் என்ன?
நல்லூர். க.தவஞானம்
இ8 ஆண்கு மலர்களைத் தயாரிக்க dpapavuyb 8u725 do667urcqu dljejo சினைகளும் தைைகாட்டத் தொடங்கி விரும். ஆனால், மனதில் ஓர் உற்சாகம்.
|
70
மலருக்கு விளம்பூரம் சேகரிப்பதே ஒரு தனிக்கதை. அத்துடன் அந்த மைைரத் திறம்பட வடிவமைத்து, வெளிக்கொணர் வதற்கென்றே தனி உழைப்புத் தேவைப் பகும். மூத்த மகளுக்கு வெற்றிகரமாகத் திருமணம் செய்து முடிக்கும் வேைைதான் அது. அப்பாடா! மர்ை வேலை முடித்து, வெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்து விரும்போது ஏற்படும் ம்ேமதி இருக்கிறதே, அது ஒரு தனிச் சுகம் நிரம்பிய மன
് ബി.ബി.
நானொரு இளம் எழுத்தாளன். மலையகத்தைச் சேர்ந்தவன். நான் மல்லிகைக்கு எழுத வேண்டும் என நினைக்கிறேன். நானென்ன செய்ய வேண்டும்?
நாவலப்பிட்டி, ஜி.மகேந்திரன்
இ மல்லிகைக்கு எழுத வேண்கும் என upørögðø/wma, söæværásagð7æ67rr? Svöveg யானால் மல்லிகைக்கு எழுதுங்கள்.
பழம் பெரும் எழுத்தாளர், முன்னை நாள் சுதந்திரன் ஆசிரியர் எஸ்.ரி.சிவநாய கத்தை இன்று யாருமே நினைவு கூருவதில்லையே, இதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
மன்னார். ஆர்.தேவநேசன்
* என்னைப் போன்றவர்களை evaölgy உருவாக்க உற்சாகமளித்தவர்சிவகாய கமவர்கள். நாமவரை மறந்து விட

வின்ைை. சூழ்நிலை அப்படி, சென்ற வரம் கவிஞர் ஜின்னாவைச் சந்தித்த போதும் இதை அவரிடம் ஞாபகப்பருத்தினேன். சிவ நாயகத்தின் மீது தனி அபிமானம் வைத் திருப்பவர், ஜின்னா. நிச்சயமாக அவர் சிவநாயகத்தின் ஞாபகார்த்தமாக ஏதா வது உருப்படியாக ஒன்றைச் செய்து ՓւջմՄոհ,
凶 சென்ற இதழில் அட்டைப்படத்தில் உங்களைக் கனம் பண்ணிக் கெளர வித்து மாலையணிவித்து, விருது தந்து காட்சியளிக்கும் பேராதனைப் பல்கலைக் கழக உபவேந்தர் எச்.அபயகுணவர்த் தனாவின் புகைப்படக் காட்சியைப் பதிவு
செய்துள்ளிர்கள். இதன் நோக்கம் உங் .
களை விளம்பரப்படுத்துவதாக நான் நினைத்தால், அது சரியா? தப்பா?
கொழும்பு 6.
சி நீங்கள் இதைப் பற்றி எதுவுமே நினைக்காைம். ஆனால், அந்த அட்டைப் பதிவு ஓர் ஆவணம். பின்வரும் சந்ததி யினருக்கு ஒரு பாமர எழுத்தாணனின் இடயர் வ7ைர்ச்சியைச் சுட்டிக்காட்டி சான் astoi/1765g/Lóruday6erticululesalawi படமது. நான் மறைந்து விட்ட போதும் அந்த ஆவணத் தகவல் காம்ை காமைாக நிலைத்து நிற்கும்.
முன்னர் ஒரு கட்டத்தில் பதிப்பாளர் கள் ஒருங்கு சேர்ந்து பதிப்பாளர் ஒன்றியம் ஒன்றை ஆரம்பித்திருந்தீர்கள். அவ்
அ.கங்காதரன்
வொன்றியம் இயங்காமலே போய்விட்டது. அத்தகைய இயக்கம் இன்று மிக மிக அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. காாரணம், இன்று புதிய புதிய பதிப்பாளர் கள் நம்மிடையே உருவாகி வருகின்ற னர். ஏராளமான புத்தகங்களும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
வத்தளை. க.ந.சதாசிவம்
இலி நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. வேறெந்தக்கானத்தையும் விட, இன்றுதான் எமக்கு அத்தகைய அமைப் பொன்று தேவை. எழுத்தான7ர்கள் தமது சொந்தக் கைப்பனத்தை முதலிகு செய்து/ புத்தகம் வெளியிட்டு விட்டு, அதை ஒழுங் காக விநியோகிக்குத் தெரியாமல் திகைத் துப்போயிருக்கின்றனர். காைசார அமைச் சும் இவர்களுக்குக் கைதந்து உதவுவ தாகுத் 6தரியவில்ைை. நிச்சயமாக இதற் கொரு வழிகண்டேயாக வேண்கும்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தைத் திரும்ப இயங்க வைத்தால் என்ன? அதைத் திரும்பவும் இயங்க வைக்கும் ஆற்றல் முன்னை விட, இன்று உங்களிடம் அதிகரித்துள்ளதாக நான் கருதுகின்றேன். திரும்ப இயங்க வைத்தால் என்ன?
வெள்ளவத்தை. எஸ்.ரஞ்சன்
இ இணந்தைைமுறையினரின் செயற் பாடாகவே அது அமைந்திட வேண்டும்.

Page 38
இக்ைகியத் தத்துவார்த்த வழிகாட்டன் அமைப்பொன்று இன்றைய இனம் படைப் un76wfflascw5aiöczy developoffiwdio 63,66D60/676w/7/7aiŵ கருதுகின்றேன். அப்படியொரு வழிகாட் டன் அமைப்புத்தங்களுக்குத் தேவைஎனக் கருதுவோர் பழைய படியே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இயக்க முன் வராைம். அது அவசியத் தேவையும் கட!
X கவிஞர் வைரமுத்து குமுதத்தில் எழுதி வரும் கேள்வி - பதில் படித்து வரு கிறீர்களா? அதைப் பற்றி என்ற நினைக் கிறீர்கள்?
வவுனியா, ச.பத்மநாதன்
இ தொடர்ந்து படித்து வருகிறேன். பல புதுப் புதுத் தகவல்களை அதன் மூலம் அறிய முடிகிறது. இக்ைகியம் சம்பந்தமாக எவர்என்ன கருத்தைக்கறினாலும் அதை இணந்தைைமுறையினர் தெரிந்து வைத் திருப்பது அவசியமானதாகும்.
சமீபத்தில் வெளிவரும் தமிழ் சினிமாப் படங்களைப் பார்ப்பதுண்டா? இன்று வெளியாகும் படங்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
நீர்கொழும்பு. எஸ்.தவநேசன்
E சஞ்சிகைகளில் வெளிவரும் இன்றைய faifunraf2upferoniasaparuas fonovuonasty படித்துப்பார்ப்பேன். ஈ, மொழி, பருத்திவிரன்
போன்ற படங்களை உருவாக்கிய இ7ைந் தலைமுறையினரின் கூட்டு விவேகத்தையும், உழைப்பின் ஆழத்தையும், புதுமை வேட்கை யையும் கண்கு வியந்திருக்கிறேன். என்ன தான் சொன்னாலும் ஒரு நல் ைதிரைப் படத்தைச் சின்னத்திரையில் பார்த்து அதன் தொழில்நுட்பத்தை ரசித்துச் சுவைத்துவிட இயலாது. ஒரு தரமான படத்தை ரசிக்க வேண்குமென்றால்தியேட்டரில் போய்த்தான் அப்படங்கனைப் பார்க்க வேண்கும். கொழும் Úleð6%utu göðøö 6unitöULúð Uniðg/ð abao7a:Sr7oouprafo avớ?e:(Bø!
நம்மை விட்டு மறைந்த பழம் பெரும் எழுத்தாளர்களை இன்றைய இளம்தலை முறையினர் அறியாது இருக்கின்றனரே, அவர்களைத் திரும்ப நினைவூட்ட என்ன செய்யலாமென்று கருதுகிறீர்கள்?
ରୋଈର୍ଷାu୩. ச.பத்மநாதன்
இலி மறைந்த படைப்பாளிகளின் இசைனத் தவர்கள் அன்னரது ஞாபக தினங்களை ைேனவு வைத்து குதாயகக் கூட்டங்கனை கடத்தாைம். அவர்களினது படைப்புகள் கை வசம் இருந்தான் அவற்றை நூலுருவாக்க ாைம். கந்தி” என்ற கமது எழுத்தாளருக்கு நாவர்ைபிட்டி எழுத்தா7ை நண்பர்கன் ஞாய கார்த்தமர்ைவெளியிட இடத்தேசித்து, அதை /கடைமுறைப்பகுத்த உழைத்துவருகின்றனர். அப்படிச் செய்து, நமது நினைப்பை உறுதிப் பருத்தாைம். செய்யத்தான் எத்தனையோ வேலைகள் இருக்கின்றனவே!
201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72

Ouick Services on DIGITAL OFFSET PRESS
у , hp indigo sea KÓNICAMINOLTA
Digital Machine ܕ݁ܶܝܢ ܕ݂݁ 霧。 懿షేఖ بی
s We have introduced S5%. Plastic Cards & Scratch Cards ဏွှိုဋ်၊
DATABASE 8 . ప్రజ్ఞా BRochurES CATALOGuEs, souvENRS. BookooAo ..W. NAME TAGS, cD/DVD CovERS, GQLou ÄřÄSTEKER NviTATION CARDs, Project RE6RS666KGG5VERMENu GARMENT TAGS, THANKING CARDS, CERT FICATES, BOOKS
POSTERS, CD STOMMER, TRANSPARENCY SHEET, PLASTC CARDS, SCRATCH CARDS WISTING CARDS,
HAPPYDIGITAL CENTRE (Pvt) Ltd
Head Office Branch No: 75/1/1, Sri Sumanatissa Mawatta, . No, 107 B, 1/1, Galle Road, Colombo-12, Srí Lanka. Kభ Colombo-06, ဒွိဒ္ဓိ Tel: +94114937336 lel: 011-2553590 web : www.happy digitalcentre.com email : infoGhappy digitalcentre.com

Page 39
|s.sae
|- sae***|--- |off).
F ... .. |- |-|-|-, , . _|- |- |-|- |- ·|-├ |-| |-|-
 
 

| E