கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2007.05

Page 1
| Waikai
ay - 2007
0% Sൂ 0
DIGITAL OFFSET PRESS
y h indig Osa KÖNICA MINOLIA
Digital Machine
====== Dı:TALATEPE İNTİNE
LLLLLLL LLLL SS K LK S K
يعني "S
ပါ” ation
|ာ်'
c
* OUR PRODUCT 下エ
-
- !'"El 만 GRE LLLLLL LL0S L LLL LLLLH L GGLLL0Y LLLL LLLLT HH LLYJ LLLLLLLLS LSKS L a S S KLLSYzSLLSLS REFERī5ĒīKāVEL AR LLLLLLL LLLLLL S LLLLLLK L KKLH0S LLL LLLLLLLLSL L L SKS LLLLLLLLS LL LLL LLLLLLLLS LL LL LLL LLLLLLLLS LL LLLLLLLLLL H LLLL LL LL LL LLL LLL 0S
LLLZZ S KLL S S L LL L LLLL K KL 0S
HAPPY DIGITAL CENTRE (Pvt) Ltd
ETlEle ARD.
Heild Office No. 7/I/1, SF SuImllIälissa Mawald Colla-2,5 LilIll. T +) || 73 Web : WWWhappy digitalCentre, Col
BIIIլի No. 107B, I, Calle Road Արիոյից- ():
(1455,55%) el mal infochappy digital centre, con
 
 
 
 

0 || 0:0) 0 L) I ZLIKUWI 50வது ஆண்டை நோக்கி.
Gabiñu sal TiñÍŘĞ SHIT
காவியப் புலவன்
(8|ი 92OO7

Page 2
  

Page 3
0. 1.
12.
3. 14.
1S.
16.
17
18.
19.
20. 21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30. 31.
32.
33.
34.
ససి క్షీ?.
மல்லிகைப் பந்தல் சமீபத்தில வெளியிட்டுள்ள நூல்கள்
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் : டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் கார்ட்டுன் ஓவிய உலகில் நான் : சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக மாணவ . மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் டொமினிக் ஜீவா (பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) :முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) : பாலரஞ்சனி இப்படியும் ஒருவன் (சிறுகதை) : மா. பாலசிங்கம்
960LL LILE186ir
சேலை (சிறுகதை) :முல்லையூரான் மல்லிதை சிறுகதைகள் செங்கை ஆழியான் மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) செங்கை ஆழியான் நிலக்கிளி (நாவல்) : பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
"டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை)
பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) மல்லிகை அவுஸ்திரேலிய மலர் தரை மீன்கள் (சிறுகதை) ச. முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) : ப.ஆப்டின் அப்புறமென்ன (கவிதை) : குறிஞ்சி இளந்தென்றல் அப்பா (வரலாற்று நூல்) : தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம்.கே. முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் - 25 : தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜிவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு Undrawn Portrait for Unwritten Poetry - டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்)
என் தேசத்தில் நான் - பேராதனைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியரது கவிதைத் தொகுதி அக்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால்
கங்கை மகள் - முருகபூபதி
பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா நானும் எனது நாவல்களும் - செங்கை ஆழியான்
250/= 140/= 175/=
110/= 100/=
110/= 150/=
60/= 150/= 175/= 150/= 275/= 350/= 140/= 180/= 150/=
80/= 100/=
75/=
150/=
175/= 150/= 120/= 120/= 140/= 150/= 350/=
20/=
140/= 200/= 150/= 175/= 120/=
80/=

தெளிவான தீர்வே தேசத்தைத் தக்க வைக்கும்!
சமீபத்தில் அரசாங்கத்தைப் பெரும்பான்மை பலத்துடன் நடத்திச் செல்லும் முீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் பகிரங்கமாக இந்த நாட்டு மக்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவித்தலில் எந்தவிதமான முன்னேற்றமான முன் முடிவுகளும், தீர்வுக்கான அணுகுமுறைத் திட்டங்களும் இருப்பதாகத் தெரியவில்லை எனப் பிரச்சினைக்கு உட்பட்டுள்ள சிறுபான்மை இனக்கட்சிகள் பகிரங்கமாகவே தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.
இந்த மேலோட்டமான அனுசரணையற்ற தீர்வுக்காகவா இந்த மண்ணில் இத்தனை இழப்புகளும், பேரழிவுகளும், சாவுகளும் இடம்பெற்றன என அவர்கள் கேட்பதில் நியாயம் இல்லாமலும் இல்லை. இந்தக் கேள்வியே நம்மிடமும் எழுகின்றது
எந்தத் தீர்வுத் திட்டமானாலும் பிரச்சினைக்குட்பட்ட மக்கள் தொகுதியினர் மனசு கோணாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரளவுக்கேனும் திருப்திப்பட வேண்டும்.
இத்தீர்வுத் திட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் திருப்திப்பட்டதாகத் தெரிய வில்லையே! அவர்களத கருத்துக்கள் அதைத்தானே சொல்லுகின்றன!
நாளுக்கு நாள் இனவாதிகளின் ஆதிக்கமும் வெற்றுக் கூக்குரல்களும் அதிகரித்தே வருகின்றன. -
அதேசமயம் ஆரோக்கியமான சிந்தனையாளர்களினது குரல் எடுபடவே முடியாமல்
ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் முடிவில் இந்த நாடே சீரழிந்து போய், பழையபடி அந்நியரின் ஆதிக்கம் மீண்டும் இங்கு நிலைபெற்று விடுமோ? என நாம் மெய்யாகவே அச்சப்படுகின்றோம். கவலைப்படுகின்றோம்.
தமிழில் பழமொழி ஒன்றுண்டு:
குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு இரைபோட்டு விடாதீர்கள்!

Page 4
SILSDLúLLíb
புலவர்மணி தந்த മഞ്ഞേബ്
- கலைவாதி கலீல்
பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் வானொலியில் 'பாவளம் நடத்திக் கொண்டிருந்த காலமது. நான் முஸ்லிம் சேவையில் கவிதைச்சரம்' நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள் அவரென்னை அழைத்து, ஒருவரின் கவிதைக்குப் பாவளத்தில் குரல் கொடுக்கச் சொன்னார். பாவகையில் கட்டளைக் கலித்துறைக்கு இலக்கணம் சொல்லி, அந்தக் கவிதையைப் படிக்கவும் சொன்னார். இறுதியில் “இவ்வாறான புலமை மிக்கவர்கள் பாவளத்திற்குப் பாட்டெழுதுவார்களாயின் பாவளம் இன்னும் சிறக்கும்" என்றார். அதுவே வானொலியில் ஒலிபரப்பப்பட்ட அந்தக் கவிஞனின் முதற் கவிதையுமாகும். தன் கவிதையை முதன்முதலில் கேட்டது என் குரலில் என்றும், அதற்குக் காரணமாக இருந்தவர் சில்லையூரார் என்றும் அவர் அடிக்கடி இன்றும் மகிழ்வோடு நினைவூட்டுவார்.
வசிட்டன் வாயால் பிரமரிஷி பட்டம் வாங்கிய அந்தக் கவிஞனை நான் அன்று அறிந் திருக்கவில்லை. இன்று அவரோ என் இனிய நண்பர். அவர்தான் இலக்கிய உலகில் தனது கவித்துவ ஆளுமையால் இன்று ஊன்றிக் கால்பதித்து நிற்கும் ஜின்னாவுற் வடிரிபுத்தீன். அந்தக் கவிஞனைப் பற்றி மில்லிகையில் ஒரு சிறிய குறிப்பெழுதக் கிடைத்ததை எண்ணி நான் பெருமகிழ்வடைகின்றேன்.
நாற்பது ஆண்டுகளைக் கடந்தும் தன் பேனாவின் ஊற்றுக்கண் வற்றாது இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் ஜின்னாவுற், இலக்கியத்தின் பல்துறைகளிலும் பாதம் பதித்தவர். ஒரு மரபுக் கவிஞனாகப் பெயர் குத்தப்பட்டிருப்பினும் (அதனை அவர் பெருமையாகக் கொள்கின்றார்.) சிறுகதை, சிறுவர் இலக்கியம், புதினம், கட்டுரைகள் என அவர் படைப்புத் தளம் மிக விரிவானது.
காவியம் படைப்பதைக் கனவும் காணாத இக்காலகட்டத்தில் ஆறு காவியங்களைப்
படைத்தளித்த் பெருமை ஜின்னாவுற்வுக்குண்டு. ஆறு காவியங்கள் படைத்தளித்த
புலவர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் இதுவன் ர எவரும் இல்லை எனலாம்.
காவியங்களுக்கு உரை எழுதுவதே மரபு. இந்த மரபையே மாற்றி உரைநடைக்குக் மல்லிகை மே 2007 & 4
 

காவியம் படைத்த முதல்வரே ஜின்னாவுற் தான் எனப் பேராசிரியர் டாக்டர். ம. மு.உவைஸ், டாக்டர் சிலம்பொலி செல்லப் பனார் போன்ற பேரறிஞர்கள் சொல்லி யிருப்பது ஜின்னாவுற்வின் ஆளுமைக்குக் கிடைத்த பொன்னாரமாகும்.
யாப்பறிந்து கவிதை புனைபவர்கள் அருகி வரும் (அறிந்தவர்களும் அதனைக் கைவிட்டுப் பேர் பெற முயலும்) இக்கால கட்டத்தில் யாப்புக்குள் நின்றே தன்னை நிலைபெறச் செய்யும் ஜின்னாவுற், புதுக் கவிதையிலும் நாட்டம் கொண்டவர். இது வரை மரபு குன்றாக் கவிதைகளாகத் தனது காவியங்களோடு கவிதைத் தொகுப்புகள், வானொலி, மேடைக் கவிதைகள் சேர சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான கவிதைகளை இவர் யாத் திருப்பினும், அவர் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருப்பது அவர் தம் குருவாக நேசிக் கும் பத்திரிகைத்துறை ஜாம்பவான் ஐயா எஸ்.டி.சிவநாயகம் மரணித்த போது அவர் எழுதிய யாப்பொடித்த சரமகவியே எனக் கண் கசியக் கூறுவார்.
தனது தந்தையார் புல்வர்மணி ஆ மு.வடிரிபுத்தீனிடம் முறையாகக் கவிதை இலக்கணத்தைக் கற்றுக் கொண்டவர் ஜின்னாவும் வடிரிபுத்தீன். கவிதையில் யாப்பைக் கையாள்வதில் இவர் வல்லவர். விருத்தமே இவருக்கு வாலாயமானது எனினும், நின்ற நிலையில் தளை தட்டாது வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் நினைத்ததும் பாடும் ஆற்றல் கொண்டவர் அவர் என்பதை நான் அறிவேன்.
நூல் வடிவில் இவரது படைப்புக்கள் பதிநான்கு வெளிவந்துள்ளன. இன்னும்
பல வெளிவரவுள்ளன. அகில இலங்கை ரீதியாகப் பதிநான்குக்கு அதிகமான பரிசுகளைப் பெற்றுள்ள இவரின் பண்டார வன்னியன் காவியம் 2005ஆம் ஆண்டுக் கான தேசிய சாகித்ய மண்டலப் பரிசில், கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசில், யாழ் இலக்கிய வட்டப் பேரவையின் இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசில் ஆகிய மூன்று பரிசில்களைப் பெற்றிருப்பது பெருமைப்படத் தக்கதாகும். மும்முறை இவர் படைப்புக்கள் யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசு பெற்றமை தன் படைப்பு
'களுக்குக் கிடைத்த உயர் அங்கீகாரமாக
ஜின்னாவற் கூறுவார்.
இலங்கை, இந்திய, அரச, தனியார் நிறுவனங்கள் மூலம் பல இலக்கிய விருது களும், பட்டங்களும் இவர் பெற்றிருந் தாலும் தன் பெயருக்கு முன்னால் எந்தவோர் அடை மொழியையும் இதுவரை இணைத்துக் கொண்டதில்லை. தன் தந்தை வடிரிபுத்தீனின் பெயர் தன் பெய ரோடு சேர்ந்திருப்பதே தனக்குப் பெருமை என்கின்றார்.
2002ஆம் ஆண்டில் அரச மட்டத்தில் கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீனின் முழுமை யான பங்களிப்போடு, கவிஞர் தாஸிம் அகமது, இசைக்கோ நூர்தீன் ஆகியோ, ரின் உதவியுடன் இலங்கையில் அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த உதவி னார். பேராசிரியர் அல்-ஹாஜ் எம். எம்.உவைஸ் அவர்களுக்குப் பின் இந்திய இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் இலங் கைப் பொறுப்பாளராகவும் ஜின்னாவுற் செயற்படுகின்றார்.
மல்லிகை மே 2007 & 5

Page 5
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக் கியச் செயலாளராகப் பணியாற்றியதோடு, இன்று இதன் துணைத் தலைவராகவும் இயங்குகின்றார். கொழும்பு கம்பன் கழகம் தனது ஆட்சிக் குழுவின் ஒருவராக இவரைச் சேர்த்துக் கொண்டது இவர் தமிழ்ப் பணிக்குக் கிடைத்த அங்கீகார மாகும்.
முன்னர் வானொலியில் இவர் குரல்
அடிக்கடி கேட்கும். வானொலிக் கவி
யரங்குகளில் அவர் தலைமையில் நானும், என் தலைமையில் அவருமாகப் பல அரங்குகளை நாம் கண்டவர்கள். தொடர்ச்சியாய் இரண்டரை வருடங்கள் 'கவிதைச்சரம்' என்னும் நிகழ்ச்சியை முஸ்லிம் சேவையில் ஜின்னாவற் நடத்தினார். தொலைக்காட்சியிலும் இவர் பங்களிப்பு கணிசமானது.
ஜின்னாவுற்வின் 'மவுற்ஐபீன் காவி யம்', 'புனித பூமியிலே காவியம் இரண்டை யும் ஆய்வு செய்து கவிமாமணி 'அகளங் கன் முன்னைய இலக்கியங்களோடு ஒப்பாய்வு செய்து ஒரு ஆய்வு நூலை வெளி யிட்டார். அதே இரு காவியங்களையும் இந்தியப் பேராசிரியர் முகம்மது அலி அவர்கள் "ஈழக் கவிஞர் ஜின்னாவுற்வின் இரு காவியங்கள் ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத் திற்குக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றிருப்பது அவர் பற்றிய புதிய தகவலாகும். இது இலங்கைப் படைப்பாளி களுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவம் எனலாம். அத்தோடு இவரது வேறு படைப்புக்களும் உயர் கல்விப் பீடங்களில் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மல்லிகை மே 2007 ஜ் 6
ஒரு சிறந்த படைப்பாளியாக மட்டு மல்லாது, பழகுதற்கினிய நண்பனாக, நல்லதோர் குடும்பத் தலைவனாக ஜின் னாவிற் இருப்பதோடு, எல்லோராலும் விரும்பியேற்கப்படும் காழ்ப்புணர்வற்ற ஒரு நல்ல மனிதனாகவும் அவர் இருப்பது இன்றைய இலக்கிய உலகில் அவரைத் தனித்து இனங்காண வைப்பதாகும். *
g516 firm IIT...
- செந்தமிழினியன்
★ காத்திருப்பில்
தெரிவதே இல்லை
காலத்தின் மகத்தவம்
★ குடை வியாபாரி
மழையில் நனைந்தான் விற்ற மகிழ்ச்சி
★ சகுனம் பார்த்தாள் மனைவி
நேரமே சரியில்லை கடிகாரக் கடைக்குள்
★ வானுயர்ந்த கட்டிடங்கள் விரைவில் வந்திடும் நிலநடுக்கம். -
* வெளியே шD60oр
வீட்டிற்குள் நெருப்பு الر !பசித்த வயிறுகள் ܓܰܠ

சென்ற இதழின் தொடர்ச்சி.
(8UTITArfur, கலாநிதிக. அருணாசலமும் ஆய்வு நெறிகளும்.
- கனகசபாபதி நாகேஸ்வரன்
தமிழியல் ஆய்வு முயற்சிகள்:
இந்நூல் அருணாசலம் அவர்களின் தகவல் தேட்டத்தின் பயனாக உருவான ஒரு தொகுப்புக் களஞ்சியம் எனலாம். ஈழத்திலக்கிய வரலாறு, படைப்பாளர் வரலாறு, புலமை வரலாறு, படைப்புக்களின், நூல்களின் தகவல்கள், திறனாய்வுச் செல்நெறி என்பனவற்றை அறியும் பொருட்டுத் தொகுத்துத் தரப்பட்ட பெரு நூலாக இது இலங்குகிறது. பன்முகத் தகவல்களையும் தொகுத்துத் தரும் வகையில் இந்நூல் களஞ்சியம்" எனத் திகழ்கிறது. பேராசிரியர் இந்நூலிலே குறித்துள்ள நூல்கள் பற்றிய நுண்ணாய்வுகள் இனிமேல்தான் நிகழ்த்தப்பட வேண்டிய விடயப் பரப்பையும் நிரற்படுத்தித் தந்துள்ள நூல் இதுவெனலாம். இந்நூலிலே அடியேனின் நுன்முயற்சிகள் பற்றியும் பேராசிரியர் அவர்களே முதன் முதலில் கல்வியுலகிற்குத் தகவல்களைத் தந்துள்ளார் என்ற செய்தியும் கவனிப்புக்குரியது. அவருக்கு எம்போரில் மேலும் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு எமது நன்றிகளையும் தெரிவித் துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். அவரது விசாலமான பார்வைத் திறன் மெச்சிப் பாராட்டுதற்குரியது. இவ்வாய்வு நெறிப்பண்பு பேராசிரியரின் செய லாண்மையுமெனலாம். இவை இவரின் தனிவழியெனலாம்.
தமிழில் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். (1942ஆம் ஆண்டு தொடக்கம் 1965ஆம் ஆண்டு வரையுள்ள தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றி ஆய்வு)
இந்நூல் 2000ஆம் ஆண்டிலே வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் விடயங்கள்
கலாநிதிப் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வாக 1978ஆம் ஆண்டு எழுதி முடிக்கப் பட்டது. 1979ஆம் ஆண்டு ஆய்வேடாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்
மல்லிகை மே 2007 & 7

Page 6
பிக்கப்பட்டது. பேராசிரியர் அருணா சலம் அவர்களுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டபோதே இவ்வாய்வுக் கட்டுரையை எவ்வித மாற்றமும் செய் யாமல் இதே வடிவில் நூலாக வெளி யிடுவதற்கும் பரீட்சகர் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டது என்றும் பேராசிரியர் இந்நூல் பற்றிக் குறிப்
பிட்டுள்ளார். இவ்வாய்வுப் பொருளைத்
தேர்ந்தெடுத்தமைக்கான காரணம்
பற்றிப் பேராசிரியர் மேல்வருமாறு
எழுதியுள்ளார்.
"ஆய்வறிஞர்கள் மத்தியில் பல தசாப்தங்களாகத் தமிழில் எழுந்துள்ள வரலாற்று நாவல்கள் பற்றி முரண்பட்ட கருத்துகள் நிலவி வந்துள்ளன. தமிழில் இல்லை. வரலாற்றுக் கற்பிதமான கதைகளே தோன்றியுள்ளன என ஒரு சாரார் ஏக
வரலாற்று நாவல்களே
வசனத்தில் ஒதுக்கித் தள்ளுவர். மறு
சாரார் கல்கி, அகிலன், பார்த்தசாரதி, கோவி மணிசேகரன், பெருமாள் முதலி யோரது வரலாற்று நாவல்களை வான ளாவப் புகழ்ந்துரைப்பர். இத்தகைய தொரு நிலையே என்னை இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு அதிகம் தூண்டியது. 1978ஆம் ஆண்டு வரை தமிழில் வெளிவந்த வரலாற்று நாவல் களையும், மொழிபெயர்ப்பு நாவல்களை யும், மேலைநாடுகளின் முக்கியமான வரலாற்று நாவல்களையும் கருத்தூன்றிப் படித்தேன். மேலைநாடுகளின் வரலாறு
களையும், இந்தியாவினதும் அதன் ஒரு 1.
கூறான தமிழகத்தினதும் வரலாற்றினை
யும் ஒப்புநோக்கினேன். இவற்றின்
விளைவாகத் தமிழில் எழுந்துள்ள வர
லாற்று நாவல்களின் குறைகளையும், நிறைகளையும் அவற்றுக்கான காரணங் களையும் பெருமளவிற்கு என்னாற் புரிந்துகொள்ள முடிந்தது. இவையாவற் றினதும் அறுவடையே இந்நூலாகும். இந்நூல் நான்கு இயல்களைக் கொண் டுள்ளது. முதலாவது இயல் வரலாற்று நாவலும், தமிழில் அதன் தோற்றமும் எனும் பொதுத் தலைப்பின் கீழ் ஐந்து பகுதிகளாக ஆராயப்பட்டுள்ளது. அவை மேல்வருமாறு அமைந்துள்ளன.
1.1 நாவல் இலக்கியம் - விளக்கம்
1.2 வரலாற்று நாவல் - விளக்கம்
1.3 வரலாற்று நாவலின் தோற்றமும் பரம்பலும் w
1.4 தமிழில் நாவல் இலக்கியம்
1.5 தமிழில் வரலாற்று நாவலின்
தோற்றமும் அதற்கான காரணிகளும்
இரண்டாம் இயல் தொடக்ககால வரலாற்று நாவல்கள் எனும் பொதுத் தலைப்பில்,
2.1 தொடக்ககால வரலாற்று நாவல்கள்
- விளக்கம்
2.2 கல்கியின் வரலாற்று நாவல்களும்
வரலாற்றுப் பின்னணியும்.
சிவகாமியின் சபதம்
பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன் குறித்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்றாவது இயல் தமிழில் வரலாற்று நாவலின் வளர்ச்சி எனும்
மல்லிகை மே 2007 ஜ் 8

பொதுத் தலைப்பில் மேல் வரும் விடயங்களைப் பற்றி ஆராய்கிறது.
தமிழில் வரலாற்று நாவலின்
வளர்ச்சி - விளக்கம்
தமிழ் வரலாற்று நாவல்களும், வரலாற்றுப் பின்னணியும்.
3.1 சங்க காலப் பகுதியை (மூவேந்தர் காலம்) வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்.
3.2 களப்பிரர் காலப் பகுதியை வரலாற் றுப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்.
3.3 பல்லவ, பாண்டியப் பேரரசர்கள் காலப் பகுதியை வரலாற்றுப் பின்னணி யாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்.
Yn 3,4 சோழப் பேரரசர் காலப் பகுதியை
வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்.
3.5 இரண்டாம் பாண்டியப் பேரரசர் காலப் பகுதியை வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்.
3.6 விசயநகர நாயக்கர் காலப் பகுதியை வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்.
3.7 பிறநாடுகளின் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட
வரலாற்றைப்
நாவல்கள் என்று இடம்பெற்றுள்ளன.
நான்காம் இயல் மதிப்பீடு என்ற பொதுத் தலைப்பின் கீழ்,
வும் பயின்றவர்.
4.1 தொடக்ககால வரலாற்று நாவல்கள்.
4.2 வளர்ச்சிக்கால வரலாற்று நாவல்கள்.
பேராசிரியர் அருணாசலம் அவர் கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாகவும், இந் திய வரலாற்றைத் துணைப் பாடமாக 1972ஆம் ஆண்டி லிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத் தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழ கத்தில் 1974ஆம் ஆண்டு தமது கலை மானிப் பட்டத்தினையும், 1979ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.
சுவாமி விபுலானந்திரின் சமயச் சிந்தனைகள் :
இந்நூல் தென்றல் பப்ளிகேசன் எனும் அமைப்பால் 18.11.1992இல் முதற் பதிப்பாகவும், 15.12.2002இல் இரண்டாம் பதிப்பாகவும் வெளியிடப் பட்டுள்ளது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சென்னைப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவரும் பேரா சிரியருமான முனைவர் சி.பாலசுப்பிர மணியன் மேல்வருமாறு குறிப்பிட் டுள்ளார். V
"சுவாமி விபுலானந்தரின் சமயச் சிந்தனைகள் என்னும் இந்நூலினை எழுதியுள்ள கலாநிதி க.அருணாசலம் அவர்கள் அறிவும், ஆற்றலும், ஆய்வு அணுகுமுறைகளும் சிறக்க எழுதி யுள்ளார். சுவாமி விபுலானந்தரின் சமயத்துறை சார்ந்த அரும்பெரும்
மல்லிகை மே 2007 & 9

Page 7
சாதனைகளை இந்நூல் தெளிவுபட விளக்கிச் செல்கின்றது. விபுலானந்தரின் பல்துறை ஆக்கங்களிலும் ஆசிரியர் மனம் ஒன்றி அவரது சமயச் சிந்தனை களையும், பணிகளையும் விளக்கிச் செல்கிறார்" (பக்.iv) என்று குறிப் பிட்டுள்ளார்.
இந்நூல் நான்கு இயல்களைக் கொண்டுள்ளது.
1. விபுலானந்தரின் சமயப் பணிகளும்,
சமயச் சிந்தனைகளும்,
2. விபுலானந்தர் நோக்கிற் பிற
&FLDurslassiT. -
3. விபுலானந்தர் நோக்கிற் சமயமும்
வாழ்வும்.
4. விபுலான்ந்தர் நோக்கிற் புலனடக்கம்.
இந்நூலின் முதலாம் பதிப்பின் முக வுரையில் மேல்வருமாறு பேராசிரியர் க.அருணாசலம் குறிப்பிடுகிறார்.
"விபுலானந்தர் தமிழிலும், ஆங்
கிலத்திலுமாக எழுதிய கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், மொழி பெயர்ப்புகள், கடிதங்கள், குறிப்புகள், அவரது சமகாலத்து அறிஞர்கள் அவரைப் பற்றி எழுதியவை, விபுலா னந்தரின் வரன்முறையான விரிவான வாழ்க்கை வரலாறு முதலியன பற்றி ஏற்ற பின்னணி விளக்கங்களுடனும்
ஆக்கங்கள் வெளிவந்த காலஇட ஒழுங்"
கிலும், வெளியிடப்படும் வரை அவரது சமயச் சிந்தனைகளை முழுமையாக ஆய்வு செய்தல் இயலாது. அவ்வகை யில் இந்நூல், விபுலானந்தரின் சமயச்
சிந்தனைகள் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகமேயாகும். இதுவரை நூல் வடிவம் பெறாத விபுலானந்தரின் பல கட்டுரைகளும் பிற ஆக்கங்களும் கணிச மான அளவில் உள்ளன என்பதை அறிய முடிகிறது. அவை யாவும் நூல் வடிவம் பெற வேண்டும்." (பக்.Vi) இக்கருத்துகள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவையாகும். சுவாமி விபுலா னந்தரது எழுத்துக்களின் பதிப்பு அவ சியம் பற்றிய நோக்குத் தேடல் முயற் சியை நாலாபுறத்தும் துரிதப்படுத்த வேண்டும் என்று மேலும் அழுத்தம் பெறுதலவசியம். தகவல்களினுண்மை அறிவதே நேரிய ஆய்வாக அமையத் தக்கது. இனி, சுவாமி விபுலானந்தர் பற் றிப் பேராசிரியர் அருணாசலம் குறிப் பிடும் சில செய்திகளை நோக்கலாம்.
"1892இல் பிறந்த விபுலானந்தர் ஏறத்தாழ 1914ஆம் ஆண்டினையடுத்தே கல்வி, சமயம், மொழி முதலிய துறை களில் தமது முயற்சிகளையும், ஆராய்ச் சிகளையும் முனைப்புடன் ஆரம்பித்து 1947ஆம் ஆண்டு தாம் மறையும் வரை ஓயாது உழைத்தார்" (பக் 38) என்று எழுதியுள்ளார்.
நாவலர் பெருமானையும், சுவாமி விபுலானந்தரையும் ஒப்பிட்டுத் தாரதம்மியம் காணும் பேராசிரியர் அருணாசலம் மேல்வருமாறு எழுது கிறார். அவை மிகச் சுவாரஸ்யமானவை. இன்னும் பலராலும் அறியப்பட வேண் டிய மெய்மைத் தகவல்களாயுள்ளன.
"நாவலர் காலச் சூழலும், அவர் நின்று செயற்பட்ட தளமும், அவரிடம்
மல்லிகை மே 2007 & 10

இயல்பாகவே குடிகொண்டிருந்த குண இயல்புகள் சிலவும் அசுரத் துணிச்சல், ஆவேசம், போர்க் குணம், எதிர்வுகளை மூர்க்க வேகத்தோடு தாக்குதல், சைவ சமயத்தாற் பாதுகாப்பு முயற்சியும், எதிர் நோக்கிய சவால்களும் அவரைத் தீவிர சைவ சமயவாதியாக்கிப் பிற மதக் காழ்ப்பையேற்படுத்திக் கிறிஸ்தவர் களின் வைரியாக்கியது. ஆயின் விபுலா னந்தர் காலச் சூழலும், அவர் நின்று செயற்பட்ட தளமும், அவரிடம் இயல் பாகவே குடிகொண்டிருந்த குண இயல் புகள் சிலவும், அமைதியான சுபாவமும், அளவு கடந்த பொறுமை, பகைவனுக் கும் இரங்கும் மனப்பாங்கும், இராம கிருஷ்ண மிஷனின் தொடர்பும் அவ ரைச் சமய சமரச சன்மார்க்கவாதியாக உருவாக்கிற்று. (பக். 38) சுவாமி விபுலா னந்தரது கட்டுரைகள் செந்தமிழ் நடை யிலானவை. விஞ்ஞானமும், மெய்ஞ் ஞானமும், கவித்துவமும் கலந்த கலவை யாகவே விளங்கினார். அவரது கட்டுரை வண்மையையும், விஞ்ஞான அறிவின் மேதா விலாசத்தையும், புதிய புதிய தமிழ்ச் சொற்பதங்களை ஆக்கும் நுட்பத் திறனும் போற்றற்குரியன." பேராசிரியர் மேல்வருமாறு விமர்சிக் கிறார்.
‘விஞ்ஞானப் பட்டதாரியான விபுலானந்தரோ "விஞ்ஞான தீபம்’ என்னும் அழகிய பெயரைச் சூட்டி யுள்ளார். விஞ்ஞான தீபத்தையும், மெய் ஞான தீபத்தையும் ஒருங்கேயுணர்ந்த
விபுலானந்தர் இக்கட்டுரையிலே நிரூ
பண முறையில் விஞ்ஞான - மெய்
ஞானத் தொடர்புகளை நுணுக்க
மாகவும், விரிவாகவும் ஆராய்ந்துள்ளார்.
சமயக் கல்வியும், ஒழுக்கவியலும், அறிவியற் கல்வியும் தனித் தனியாக வன்றி ஒன்றாக இணைக்கப்பட வேண் டும். உலகப் பெருஞ் சமயங்கள் எல்லா வற்றையும் உள்ளடக்கியதாகவும், வர லாற்றுடன் இணைந்ததாகவும் சமயக் கல்வி அமைய வேண்டும். அதேநேரம் அறிவியலையும், வேதாந்தக் கொள்கை களையும் இணைத்து நோக்க வேண்டும். பாரதியார், சுவாமி விவேகானந்தர் முதலியோரைப் போன்றே விபுலானந் தரும் இந்துக்கள் மத்தியில் நிலவிய குறைபாடுகள், அறியாமை, மூடப்பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள், மாயா வாதம் முதலியவற்றைக் கண்டித்தாார். காலத்தின் தேவைக்கேற்பச் சமயம் அறிவியல் அம்சங்களைத் தன்னகத்தே உள்ளடக்கிக் கொள்ளுதல் வேண்டும். அதேசமயம் ஆத்மிக நெறியினைப் போற்ற வேண்டும்" (பக். 8-9) என்று விமர்சித்துள்ளார் பேராசிரியர் அவர்கள். மேலும்,
"சமயமானது மக்களுக்கு நற்பயன் விளைக்க வேண்டுமெனில் அது குறு கிய வட்டத்துள் நில்லாது பழைமை - புதுமை சமய தத்துவ வேறுபாடுகள், மேலைத்தேயச் சிந்தனைகள், கீழைத் தேயச் சிந்தனைகள் என்ற வேறுபாடு களின்றி நல்லனவற்றைக் கொண்டு அல்லனவற்றை அகற்றி மக்கள் வாழ் வுடன் பின்னிப் பிணைந்து அவர்களை நல்வழியில் இட்டுச் செல்வதாக அமை
தல் வேண்டும் என்பதே விபுலானந்
மல்லிகை மே 2007 & 11

Page 8
தரின் பேராவலாகும். (பக். 68) மானிட சமுதாயம் முழுமையாகவும், வளத்துட னும் வாழ்வாங்கு வாழ, சமயம் இன்றி யமையாதது. அது தனது செல்வாக்கைத் தொடர்ச்சியாகச் செலுத்த வேண்டும். அதி உயர்வான கற்கைப் பெறுமானங் களைக் கொண்டிருத்தல் வேண்டும். விஞ்ஞான முடிவுகளைச் சமயம் மறுதலிக்காமலும், சமய உண்மைகளை விஞ்ஞானம் அலட்சியம் செய்யாமலும் இரண்டும் இணைந்திருத்தல் வேண்டும். நவீன வாழ்வின் சிக்கலான பிரச்சினை களுக்குத் தீர்வு காணக்கூடியனவாக விஞ்ஞானமும் சமயமும் விளங்குதல் வேண்டும். (பக். 67)
பேராசிரியர் தமது ஆய்வின் முடி வாகச் சுவாமி விபுலானந்த ரது கொள்கைகளை மேல்வருமாறு சுருக்கிக் கூறுவர்.
"விபுலானந்தரது ஆக்கங்கள் முழு
வதையும் ஒட்டு மொத்தமாக நோக்கும்
போது அவற்றில் நிலையாமைக் கருத்து கள் முக்கியத்துவம் பெறவில்லையென் பதும், மனிதன் வாழ்வாங்கு வாழவும், வாழ்வைச் செம்மைப்படுத்தவும் இறை நம்பிக்கையும், சமய நெறிமுறைகளும் அவசியம் என்பதனை வலியுறுத்தியுள் ளார் என்பதும், தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்ப மிகவுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவமெய்திக் கொகுவ கூற் றுக் கிரையெனப்பின் மாயும் வேடிக்கை மனிதனாகவன்றி மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தமக்கும், சமூகத்
திற்கும் பயன்படுமாறு வாழ வழிகாட்டி
யுள்ளார் என்பதும் புலப்படும்." (பக்.86)
இவ்வாறு நிறைவு செய்கிறார்.
ஒரு விண்ணப்பம்! அன்பர்களே, அறிஞர்களே! சுவாமி விபுலானந்தரின் "யாழ் நூலைத் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தத்தம் திருக்கரங்களி னாலே தொட்டு எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது இக்கட்டுரை யாளரது பெரு விருப்பத்துடனான பணி வான விண்ணப்பமாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலே “யாழ் நூல் இருக்கிறது. அடியேன் ஒரு தடவை மட்டும் யாழ் நூலை முழுமைப் பட வரசித்தேன். பண்ணிசை ஆராய்ச்சி அபாரம். மேலும் இது குறித்து உன்னிப் பான "தேடல் தமிழ் அன்பர்கள் ஒவ் வொருவருக்கும் உதிரத்தோடொட்டிய தமிழுணர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதும் எமது பணிவான வேண்டுத லாகும். அத்துடன் சுவாமி விபுலானந் தரின் திருமுறைப்பண் ஆராய்ச்சி. குறித்த செய்திகள் பரப்பப்பட வேண் டும் என்பதுடன் தேவாரத் திருமுறைப் பண்களைத் தக்கவர்களிடத்துக் கற்று அதில் பெருமளவிலே ஈடுபாடு கொள்ள முன்வரவேண்டும் எனும் அவசியத்தையும் இக்கட்டுரையாளர் வலியுறுத்த விரும்புகிறார். இவை இனி யெதிர்காலத் தமிழ் கூறுநல்லுலகிற்குப்
பெரும் பயன்படத்தக்கவை.
இலக்கியங்கள் அருள் நூல்களல்ல; ஆனால் பக்திப் பனுவல்களான
தேவாரத் திருமுறைகள் அருள் நூல்கள். அவை ஆன்ம அமைதியை வளர்ப்
மல்லிகை மே 2007ஜ் 12

பவை. எனவே பெருமைக்குட் பெருமையுறுவன திருமுறைகளே. இவற்றின் பயிற்சியும், அறிவும், பண்முறை தெரிந்தொழுகுதலும் சமய நம்பிக்கையைப் பேணுதற்குதவுவன. நம்பிக்கையை வேரனுக்காது பாது காப்பது அவசியம்; நமது பெரும் பணி; சுவாமி விபுலானந்தருக்குச் செய்யும் பெருநன்றிக்கடனும் அஃதேயாம். நம்பிக்கையும், நாமார்க்குங் குடியல் லோம் என்ற பக்தி வைராக்கியமுமே தமிழர் சமுதாயத்தின் ஆணிவேர் களாகும். இவற்றைத் தகர்த்தெறிய முனையும் நவீன 'இரும்புத்தன
அரக்ககுலகிற்குத் திருமுறைகளே மாற்றுவழி காட்டி வெற்றிப் பாதை
யைக் காட்டவல்லது. அற்புதங்கள் மிக
நிரம்பியவை திருமுறைகளே. இறை யனுபவம் தொகுக்கப்பட்ட பனுவல்கள் திருமுறைகளே. இவற்றை ஆழமாக உணர்வதவசியம்; உணர்த்துவதும் அவ சியம். வேதாந்தம் உலகியல் நெறிக்கு, மானுடவியலின் நடைமுறைக்கு எளிமை போலத் தோன்றும். ஆயின் சைவ சித்தாந்தமே நடைமுறைப் பயன் களைப் பெருமளவிலே நல்கவல்லன என்பதனை உளத்திருத்திச் சைவ சித் தாந்தத்தை முதன்மைப்படுத்தியும் மேன்மைப்படுத்தியும் வாழ முயற் சிப்பது அவசியமாகும். இது நடை முறையில் சாத்தியமானது. அறிவிலே தெளிவு வேண்டும். சிந்திப்போமாக.
(தொடரும்.)
N
Ş.
་་་་་་་་་་་་་་་་་་་
ပျဲနဲ့နွဲ့ငဲ့၊ མ་ཡའི་མི་
N
SS §
སྔགས་སྔགས་སྔ་སྔགས་སུ་སྔགས་
மல்லிகை மே 2007 率13

Page 9
அவன் பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தான். எட்டாம் வகுப்பு. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு, மற்றுழ் லீவு நாட்களில் ஊர்ப்பக்கம் வருவான். வருவது அம்மாவைப் பார்க்க. அகாலத்தில் ஐயா காலமானதால் அவனுக்கு எல்லாமே அம்மாதான் என்று ஆகியிருந்தது.
ஐயாவின் மரணத்துக்கு அம்மாவின் அசட்டையும் - ஓரளவு உள்நோக்கமும் காரண மென்பது ஊர் சொல்லி, உறவு சொல்லி அவனுக்குத் தெரியும், தனித்து விடப்பட்ட அம்மாவுக்கு அவன் மட்டுமே தஞ்சமென்ற நிலையில், அவனது படிப்பில் அவளுக்கு அதிக ஆர்வமிருந்தது. அவனுக்காக இல்லாவிட்டாலும், அவளுக்காகவேனும் அவன் படித்தாக வேண்டும்.
அன்று வெள்ளிக்கிழமை. பாடசாலை விட்டதும் ஊருக்குப் புறப்பட்டான். பத்து மைல் தூரம், பஸ்ஸில் தான் பயணம்.
ஊரில் அவனுக்கு எத்தனையோ விஷயங்கள் காத்திருந்தன.
s
சிலுந்தா நீரின் குளிர்ச்சி. பெரிய பனந்தோட்டத்து நுங்கு. மாமி வீட்டு அம்பலவி மாம்
பழங்கள். அவனது செல்லப் பிராணிகளான மாடப்புறாக்கள். சோடியை இழந்து தவிக்கும்
ஒற்றை முயல்,அதன் சிவப்புக் கண்கள், பொசு பொசு வெள்ளை உடம்பென்று எல்லாமே அவனுக்குப் பிடித்தமானவைதான்.
பஸ்ஸில் இருந்தபோது - திருநெல்வேலி ஃபார்ம் ஸ்கூலில் வாங்கிய - பத்து வெள்ளை லெக்கோன் கோழி முட்டைகளும் அவனது ஞாபகத்துக்கு வந்தன.
குஞ்சி வீட்டுப் புள்ளிக் கோழியை இரவல் வாங்கி அடை வைத்தபோது, அம்மாவுடன் இவனும் கூட இருந்தான். அடை வைத்த பழைய பீலிப் பட்டையில் உமி அள்ளிப் போட்டது இவன் தான்.
O குண்டு குண்டான முட்டைகள். குஞ்சு النبی
களும் குண்டாகத்தான் இருக்குமென O W இவன் நினைத்துக் கொண்டான். W SW
பஸ்ஸில் இருந்து இறங்கி, மாமி வீட்டு ܘܙܐ* s6ნV ஒழுங்கையில் நடந்தபோது, தூரத்தில் O کلاقے விஜி. அவனது ஆசை மச்சாள். அவள் کے Wس
அவனை நோக்கி வந்து கொண்டி ருந்தாள்.
மல்லிகை மே 2007 & 14

விஜிக்கு இவனைவிட இரண்டு வயது −
குறைவு, இவனைப் போல அவள் கறுப் பில்லை. முற்றிய கோதுமை மாதிரி ஒரு வெள்ளை; அத்துடன் லேசாகக் குங்குமம் கலந்து விட்டது போலவுமிருக்கும். கொஞ்சம் அழுத்தித் தொட்டால், தொட்ட இடத்தில் அவள் சிவந்து விடுவாள். இந்த அதிசயம் அவனுக்கு அதிக வியப்பைத் தருவதுண்டு.
அவளது வாய் மட்டுமா மொலு
அவளது அந்தப் பெரிய கண்கள் அவற்றில் எவ்வளவு கதைகள்
மொலுக்கும் -
சொல்லக் காத்துக் கிடக்கின்றன.
அவனுக்கு அவளது தாழம்பூக் கால் களைத் தொட வேணும் போல இருக்கும். காற்சங்கிலிகளைத் தொட்டளைய வேனும் போல இருக்கும். அவை எழுப்பும் ஒலி யைக் கேட்க வேணும் போல இருக்கும்.
ஒரு சமயம், அவன் அவளது கால் களை ஆசையாய்த் தூக்கிய போது,
"தொடாத. ஆம்பிளப்பிள்ளை காலைத் தொடலாமா..? கூடாது. பாவம் கிடைக்கும்" எனக் கூறியவள், அவக் கெனத் தனது கால்களை இழுத்துக் கொண்ட்தோடல்லாமல், பெரிய மனிவழித் தனத்தோடு, அவனது கைகளை எடுத்துத் தனது கண்களில் ஒற்றிக் கொள்ளவும் செய்தாள்.
கடிந்து கொண்டதெல்லாம் ஒரு பாவனைதான் என்பதை அவளது முகத்தில் குதிரும் கள்ளச் சிரிப்பும், குரலில் இழையும் பரவசமும் அவனுக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.
அது ஞாபகம் வர, அவன் தன்னுள் சிரித்துக் கொண்டான்.
விஜி வளர்ந்ததும் - அவளைத்தான் இவன் சடங்கு முடிப்பான். அம்மாவுக்கும் மாமிக்கும் அதுதான் விருப்பம்.
விஜி அவனைக் கண்டதும் ஓடிவந்து, அவனது இடதுகையுடன் தனது வலக் கையைக் கோர்த்துக் கொண்டு நடந்தாள்.
இவன் களிசான் பொக்கற்றிலிருந்து, பட்டணத்தில் அவளுக்காக வாங்கி வைத் திருந்த இனிப்புக் கடலைகளை எடுத்துக் கொடுத்தான்.
பூ உதிரச் சிரித்தவள், அவனுடன் இன்னும் நெருக்கமாக நடந்தாள்.
'ஒண்டு சொல்லுவன் மாமியைக் கேக்காத." ደ
“என்ன. என்ன சொல்லுமன்."
*உன்ரை செங்கண்ணியை மாமி வித்துப் போட்டா..."
“என்ன முயலையா..?
தொண்டையில் கலவாய் முள்ளுக் குத்திக் கிழித்ததான ஒரு வலி அவனுள் திகைந்தது.
அவனது நடையில் அவனை அறி யாத ஒரு வேகம், அவனுக்கு ஈடுகொடுத்து அவளும் நடந்தாள்.
'ராசனுக்கு மாமியில கோவமா..? முயல் போனதில துக்கமா..? புறாக்கள் இருக்கு. கோழிக்குஞ்சுகள், வெள்ளை லெக்கோன் நாலு இருக்கு. அது போதும்."
மல்லிகை மே 2007 & 15

Page 10
"பத்து முட்டையளுக்கு நாலு குஞ்சுா பொரிச்சது. சேவல் படாத முட்டை யளாக்கும்."
கேற்றைத் திறந்த போது, அம்மா தோட்டத்தில் நிற்பது தெரிந்தது.
அவளை நோக்கிப் பாய்ந்து சென்ற ராசன், அம்மாவின் முந்தானைச் சேலை யைப் பிடித்துக் "கொற, கொற' என இழுத்தான்.
அலக்க மலக்கக் கத்தரிச் செடி களுக்கு மேலாக விழப்போன அம்மா, தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
"ராசன் பொறு. பொறப்பு. என்னை ஏன் இப்படி வதைக்கிற. நாரி முறியப் போகுதடா.”
"செங்கண்ணியை வித்தது தான் ராசனுக்குக் கோவம்."
விஜி தயங்கியபடி கூறினாள்.
“வந்ததும் வராததுமாய் மனிசனுக்குச் சொண்டுரைஞ்சியாச்சு போல. நாத்தலி,"
'நாத்தலியோ...? அம்மாற்டைச் சொல்லுவன்."
விஜியின் கண்கள் கலங்கி விடு கின்றன.
விஜியின் கண்ணிரைத் துடைத்த அம்மா, அவளையும் ராசனையும் ஆதர வாக அழைத்து வந்தாள். அவர்களது கரங் களில் மடியிலிருந்த பனம் பூரான்களை எடுத்துக் குவித்தாள். அம்மாவையே பார்த்த படி இருந்த அவனது கண்களில் கண்ணிர்
தாரையாய் வழிந்தது. அவனது கண்ணி ரைத் துடைத்தபடி அம்மா கூறினாள்:
"ராசன் அழா த. அழா தயப்பு. உன்ரை முயலிஞ்சை, பயிர் பச்சை எதை யும் விட்டு வைக்கேல்லையடா. கத்தரிக் கண்டுகளையும், வெள்ளரிக் கொடிகளை யும் போய்ப் பார்."
துக்கமும் தயக்கமும் அம்மாவின் குரலில் நிரலிட்டன.
விஜிதான் அவனைத் தோட்டத்தினுள் அழைத்துச் சென்றாள்.
"கொஞ்சம் குனியடா..." கூறியவள், தன்து பாவாடையைத் தூக்கி, அவனது கண்களைத் துடைத்து விட்டாள். அத் துடன் ஆதுரமாய் ஒரு சிரிப்பு வேறு சிரித்து வைத்தாள். அது அவனது உயிர்க்குருத்து வரை சென்று தொட்டது.
“எனக்கு அவவின்ரை பூரான் வேண் டாம். நீயே தின்." கூறிய ராசன், தனது கையில் இருந்தவற்றையும் விஜியின் கையில் திணித்தான்.
"அவரும் அவற்றை ரோசமும்."
தூரத்தில் நின்ற அம்மா முணு முணுத்தாள். ཁག་།
தோட்டம் கிடந்த நிலை அவனுக்குக்
கவலை தருவதாயிருந்தது. அதை மீறிய அளவில் செங்கண்ணியின் மீதான பரிவும்
அது பற்றிய நினைவுகளும் அவனை
அலைக்கழித்தன.
தோட்டத்தில் செங்கண்ணி - கண் பட்ட இடமெல்லாம் - கெலியுடன் கடித்துக்
குதறி இருந்தது. அநேகமாக எல்லாக்
மல்லிகை மே 2007 器 16

கத்தரிச் செடிகளிலும் - பூக்களையும் பிஞ்சு களையும் குறுக்காக வெட்டி, உள்ளால் கோதி, ருசி பார்த்திருக்கிறது.
‘துஷ்டை. பீடை. சனியன்." முயலைப் பலவாறு வைதபடி, விஜியைப்
பார்த்தான்.
விஜி கத்தரிச் செடிகளுக்கு அடியாக - I
முயல் கொறித்து, காய்ந்து கிடந்த பூக் களையும், பிஞ்சுகளையும் இரு கைகளா லும் கோலி, அள்ளியெடுத்து வந்து, அவ னது காலடியில் கொட்டினாள். வெள்ளரிப் பாத்திகளிலும் அதனது கூத்து நடந் திருந்தது.
அந்த அழிவைப் பார்த்த அவனுக்கு, அம்மாவிலிருந்த கோபம் சற்றுத் தணிந்தது. தராசின் நியாயக்கோல் சிறிது அவளது பக்கமாகச் சாய்வது போல அவனுக்குத் தோன்றியது.
"ஆனாலும் அதற்கு இப்படி. இப்
படியா. ஆசையா வளர்த்த பொருளை விற் ,
பார்கள் கூடு இருக்கிறது; கூட்டில் அடைத்து வளர்த்திருக்கலாம். இதுக்குச் சோடியாய் ஒரு கடுவனை வாங்குவதற்கு
நான் என்ன பாடுபட்டன்."
அலையும் மனதுடன் அம்மாவை
முகம் எடுத்துப் பார்க்க விரும்பாதவனாய்த்
தெற்கு விறாந்தைப் பக்கம் போனான்.
சித்திரை வெயில். அதை மீறிச் சிலு சிலுக்கும் காற்றின் வருடல், அதில் திழைத் தவன் - சேர்ட்டைக் கழட்டிக் கொடியில் போட்டு விட்டு, களிசானுடன் திண்ணை யில் படுத்துக் கொண்டான். படுத்தவனுக்
குச் சாணத்தால் மெழுகிய தரையின்
குளிர்ச்சி அடிவயிறு வரை சென்று சிலிர்த்தது.
"நான் போகட்டே. பிறகு வாறன்." விஜி அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டாள்.
முயலைப் பற்றிய நினைவே மீளவும் அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. வெப்பியாரத்துடன் விம்மினான்.
மொண்டித்தறைத் துரையரிடம், எவ்வளவு அலைச்சலுக்குப பின்னர் இந்த ஒற்றை முயலை வாங்க வேண்டியிருந்தது.
"அசல் முயலடா. சீமை முயல்.
சோடி தவறிப் போச்சு. இந்தா இதைக் கொண்டு போ. சோடி பிறகு தாறன்."
அவரிடம் அதை வாங்கி மாதக் கணக்
காகி விட்டது. சோடிதான் கிடைத்த
பாடில்லை.
விடுதி வார்டனுக்கு லீமா கொடுத்து விட்டு, அவனது நண்பன் ரவியுடன் செட்டித் தெருவெல்லாம் அலைந்தான். ரவியின் நண்பர்களான முறி, வரதன், சுதன் என எத்தனை பேரிடம் பல்லிளித்தான். ஒற்றை
முயல், அதுவும் ஆண் முயல் தர எவரும்
தயாரில்லை. ரவியின் சிபார்சும் எடுபட வில்லை. எல்லாரும் சோடி முயல் தருவ தற்குத் தயாராக இருந்தார்கள். ஒற்றை முயலென்றதும் முகத்தைத் திருப்பியபடி ஒதுங்கிக் கொண்டார்கள்.
துரையர் தான் தஞ்சமென ஊர் வந்தான். அவரிடம் கெஞ்சி மண்டாடி "ஒரு செலுட்டுக் கடுவனையாவது இம்முறை வாங்க வேணும்."
மல்லிகை மே 2007 & 17

Page 11
மனதளவிலான அவனது தீர்மானம்.
அவனது தீர்மானம் நிறைவேறும் அளவுக்கு, ஊரில் நிலைமைகள் இல்லை என்பது தெளிவானதும் - அம்மா மீதான அவனது கோபம் மீளவும் சடைப்புக் கொண்டது.
உழன்று உழன்று படுத்துக் கிடந்த
வன், மனம் தளர்ந்த நிலையில் அயர்ந்து தூங்கினான்.
மூடு திரை போர்த்தியது போல ஒரு LoTulu AbsiT அவனைச் சூழ்ந்து கொண்டது. அதனிடையே ஒளிப்பொட்டாக மிகச் சிறிய அளவில் அவனது முயல், பஞ்சுக் குவிய லாய் உருண்டு வந்தது. வந்த முயல், அவ னது மடியில் ஏறிச் சொகுசாக உட்கார்ந்து கொண்டது. அவன் ஒரு வெள்ளிக் கிண் ணத்தில் பாற்கஞ்சி வார்த்து அதற்குத் தந் தான். அது மிகுந்த ஆர்வத்துடன் அவனது மடியில் இருந்தபடிக்கு, கஞ்சியைச் சுவைத்
தது. சப்புக் கொட்டியது. மனிதர்களைப்
போல ஒரு வகையான சந்தோஷ ஒலி எழுப்பியது. பின்னர், தனது தாடைகளை
நாக்கால் சுத்தம் செய்து கொண்டது.
முயலின் நெருப்புத் தகட்டை ஒத்த
நாக்கும் - சற்றுப் பெரிதாகத் தோற்றம் காட்டிய அதன் வெட்டுப் பற்களும் அவ
னுக்கு மிகுந்த மனக்கிளர்ச்சியை ஊட்டின.
பாந்தமுடன் அவன் அதனை முத்த மிட்டான். முயலின் மூக்கு நுனியில் இருந்த ஈரம் அவனது உதடுகளைக் கூசச் செய்தது.
பன்னீர்ப் பூக்களைப் போன்ற விஜி யின் கைகள் பட்டதும் அவன் விழித்துக்
கொண்டான்.
நெகிழ்ச்சியாகச் சிரித்தபடி அவள் கேட்டாள்;
''6T676OT... இன்னுமெழுப்பேல் லையா..? சரியான செக்கலாய்ப் போச்சு.
எழும்பு. எழும்படா..!"
'கண்டது வெறும் கனவுதானா?"
ஏமாற்றத்துடன் ராசன் எழுந்து உட்கார்ந்து கொண்டான்.
'கண்ணை முழி. முகத்தைத் கோவத்தில நீ கோழிக்குஞ்சு களைக் கூடிப் பாக்கேல்லை. வா.
60L. . .
வாடா..? அங்க குஞ்சுகள் எலுமிச்சை மரத்துக்குக் கீழ் நிக்குதுகள்."
ராசன் எழுந்து, விஜியுடன் வீட்டுக்கு முன்னால் வந்தான். முற்றத்துக்கு அப்பால் எலுமிச்சை மரம். அதன் கீழாக, குஞ்சுகள் தங்கள் பாஷையில் உரத்துப் பேசியபடி - தாய்க் கோழியுடன்.
ஏதோ சரசரக்கக் கோழி லேசாகக் கழுத்தைத் தூக்கிய வாகில் எச்சரிக்கைக் குரல் கொடுத்தது. குஞ்சுகள் உசாராகித் தாயுடன் பதுங்கின.
எல்லாமே ஒரு கணப்பொழுதில் அங்கு நடந்தேறின. குஞ்சி வீட்டுக் கடுவன் பூனை பதுங்கிய நிலையில் இருந்தது. பின்னர், காற்றில் பறப்பது போல ஒர் எத்தனம் காட்டியது. மின்னலென வெட்டித் திருப்பிய அதன் வாயில் கவ்விய நிலையில் ஒரு கோழிக்குஞ்சு, துடித்தபடி.
அப்பொழுது அங்கு வந்த அம்மா பூதா காரமாய்த் தோற்றம் காட்டினாள். ஒரு
மல்லிகை மே 2007 & 18

மாதிரியான விஸ்வரூபம் அது.
பூனையை இறுக்கமாகப் பற்றிய அம்மா, அதைத் தூக்கி மிகுந்த குரோதத் துடனும், பலத்துடனும் தரையில் அறைந் தாள்.
ஸ்சாய். ஸ்சாய்." என மெலிதாக ஒலி எழுப்பிய பூனை மூச்சிழந்து சரிந்தது. பூனையின் வாயிலிருந்து விடுபட்ட குஞ்சு, பக்கத்தில் துடிதுடித்தபடி கிடந்தது. அதன் அடிவயிற்றில் கீறலாய் இரத்தம் பூனை யின் கடைவாயிலும் இரத்தம் வடிந்தது.
அம்மாவை இவன் பார்த்தான். அவ ளது கண்களில் வன்மம் அடர்ந்து, பரவி, உறைந்து போயிருந்தது. கண்களின் வெள்ளை விழி பருத்து வெளித்தள்ள, அவளது உதடுகள் பிளந்து துடித்தன.
கடைவாய் வழியாக அவளது கோரைப் பற் "
களும் சற்று வளர்ந்து, வெளியே தெரிந்தன. அந்தப் பற்களிலும் துளியாக இரத்தம்.
மனங்கிறங்கி, பயப்பிராந்தியுள் சிக்கித் தவித்த அவனை விஜி அன்புடன் அணைத் துக் கொண்டாள்.
பாதி மயக்கமாக இருந்த அவனுக்கு - மிகவும் கலங்கலாக, தெளிவேயில்லா திருந்த ஐயா, அம்மாவினது தாம்பத்தியத் தின் அழிந்த பகுதிகள் லேசாக ஞாபகத் துக்கு வந்தன.
'அம்மா குமராக இருந்தபோது அவளது சொந்த மச்சான் சிவராசாச் சித்தப்
பாவில அவளுக்குச் சரியான விருப்பம்,
அவருக்கும்தான். சாடையாக அவர்களது அந்த மயக்கம் தெரியவர, அப்புவும் ஆச்சி யும் அசராமல் - பசையுள்ள மனிசனென்று
- ஐயாவுக்கு அம்மாவைச் சடங்கு செய்து தந்தார்கள். சடங்கு முடித்த் பின்னரும் - சிவராசாச் சித்தப்பாவை நினைத்து அம்மா உருகுவதாக எண்ணிய ஐயா, அவளை அடித்தார். நாளது தப்பாமல் நார் நாராய்க் கிழித்தார்."
"ஐயா கிணற்றில் விழுந்து செத்தது நல்லதுக்குத்தான். அது அம்மாவுக்கு ஆறுதல் தந்தது. அவளால் மனிவழியாகத் தலைநிமிர முடிந்தது. பின்னர் ஒரு நிதானம், ஆழ்ந்த லயிப்பு, அவளுக்கேயான ஆர்வங்கள் என எல்லாமே அவளிடம் கூடி வந்தன. ஒதுக்கங் கொள்ளாமல் எல்லாரிட மும் இணக்கமாக அவளால் பேச முடிந்தது. பழக முடிந்தது. சித்தப்பாவைப் பார்க்கும் வேளைகளில் - இறுகிப் போயிருந்த அவள், இப்பொழுதெல்லாம் அவரைப் பார்த்து, லேசாகச் சிரிக்கவும், கனிவாகப் பேசவும் செய்கிறாள்.' 影
‘சிறிது சிறிதாக மாறிவந்த அவளை, குஞ்சி வீட்டுக் கடுவனின் கூத்து - மீளவும் முருங்கை மரத்தில் ஏற வைத்திருக் கிறதா..? அந்தக் கடுவன் பூனையின் உரு வத்தில் ஐயாவை. அவளது வக்கிரமான மீறல்களை, அவள் மீளவும் தரிசனம் கொள் sśprtsm.?”
"அதீதமான கொலை வெறியும் பத்திர காளித்தனமும் இவளிடம் எங்கிருந்து வந்து ஒட்டிக் கொண்டின."
அவனுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது.
அவனும் விஜியும்தான் கிடங்கு வெட்டிப் பூனையைப் புதைத்தார்கள்.
மல்லிகை மே 2007 & 19

Page 12
அத்துடன் விஜி காயப்பட்ட குஞ்சை ஆதரவாக எடுத்து, நோ எண்ணெய் தடவி, தாய்க் கோழியுடன் கூட்டில் அடைக்கவும் செய்தாள்.
அம்மா அடுப்படித் திண்ணையிலிருந் தாள். அவள் கொண்ட வேஷம் இன்னும் கலைந்தபாடில்லை. மிகவும் அழுத்தமாக பனசின் உட்குகையெல்லாம் செறிந்த இருள் அகலாதவளாய் இருந்தாள்.
அவளைப் பார்க்காமல், கிணத்தடிப் பக்கமாக இவன் நகர்ந்தான். கூடவே விஜியும்.
“பூனை ரோமம் கழண்டாளே ஆயிரம் பிராமணனைக் கொண்ட பாவம். இந்தப் பூனை செத்ததால மாமிக்கு என்னென்ன வரப்போகுதோ..?”
விஜி அம்மாவைச் சீண்டுவது இவனது காதில் விழுகிறது.
அம்மாவிடமிருந்து எதுவித எதிர் வினையுமில்லை. ஆனால், அவள் லேசாக விம்முவது போலிருந்தது. அம்மாவை அவன் நிமிர்ந்து பார்த்தான். அவளில் அப்படியொன்றும் அதிக மாற்றம் தெரிய வில்லை. முகம் சிவப்பேறிக் கிடந்தது. கோப அடைசலின் கீறல்களும் மிக
லேசாகத் தெரிந்தன.
'அம்மா என்ன துஷ்ட நிக்கிரகியா..?
அவள். அவள் இன்னொரு கொலை செய் வாளா..? அது. அது ஆராயிருக்கும்.!
அவனுக்குப் பயமாக இருந்தது. உடல் பதற வீட்டினுள்ளே போனவன், போட்டி
ருந்த கotசானுக்கு மேலாகத் தனது சட்டையை அணிந்து கொண்டான்.
புத்தகங்களும் உடுப்புகளும் அடங் கிய பையுடன் வெளியே வந்த ராசனை, கண் வெட்டாமல் விஜி பார்த்தபடி நின்றாள். அவனுக்குச் சற்றுக் கிட்டவாக வந்தவள், அவனைப் பார்த்துக் கேட்டாள் :
“என்னடா இது. பட்டணமா..? மாமி யில கோவமா..? வந்தனி சாப்பிடக்கூட இல்லை. தலைகூட இழுக்கேல்லை. பவுடரும் அலங்கோலம். கொஞ்சம் குனி. குனிஞ்சு நில்."
(3 UT C8 L 6io 6oo 6o... 6T66T60T
கூறியவள், அவனது கழுத்தை வளைத்துப் பிடித்தபடி, சிலும்பிக் கிடந்த அவனது தலையைச் சரி செய்தாள். ஈரத் துடன் அப்பியிருந்த விபூதியையும் அழுத் தித் துடைத்து விட்டாள்.
"அடுத்த வெள்ளி வருவைதான. ! . . . L}5{ Lu T 6J LDLT חפL
மறந்திடாத."
என்னையும்
"இந்த நரலுக்கை இனியும் எனக்கு என்ன வேலை இருக்கு."
மெளனத்தைக் கலைத்தவனை, விஜி கண் கலங்கப் பார்த்தபடி நின்றாள். அவன் மேலும் ஏதாவது பேசி விடுவானோ என்ற பயம் அவளைத் தொட, அவனது வாயை அழுத்தமாகப் பொத்தினாள்.
அவன் லேசாக விம்மினான். அது விஜியைப் பாடாய்ப் படுத்தியது. குலுங்கி அழுதவள், அவன் போவதையே பார்த்தபடி நின்றாள். *
மல்லிகை மே 2007 & 20

இருUதாே நூற்றாண்டு ஈழத்துத் தலித்க் கவ்விதைகள்UITgul GăHéñu. நேரிய tylvyim
- ம.ஸ்கந்தரூபன்
இலக்கியங்களுக்கு ஊற்றுக் கண்ணாகவும், உயிரோட்டமாக வும் விளங்குபவை கவிதைகள். மனிதனுக்கு உணர்ச்சி எப்படி முக்கியமோ, அப்படியே இலக்கியத்திற்கும் கவிதைகள் முக்கியம். கவிதைகள் தன்னம்பிக்கையூட்டுகின்றன; நசிந்து கிடக்கும் சமுதாயத்திற்கு நம்பிக்கை கொடுக்கின்றன; தோல்விகளைத் துடைத்துத் தூக்கி நிறுத்துகின்றன; வாழ்வின் வெற்றிடங்களில் தம்மை ஊற்றி நிரப்புகின்றன. சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடியே இலக்கியங்கள். அவற்றுள்ளும் சமுதாயப் பிரதிநிதிகளின் உணர்ச்சிகளைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றவை கவிதைகள். இத்துணை ஆற்றல் வாய்ந்த கவிதைகளை ஒரே தொகுப்பாகக் காணுகிற பொழுது ஏற்படும் மகிழ்ச்சி உன்னதமானது.
இவ்வாறே, இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் எனும் கவிதைத் தொகுப்பைக் காணுகிற பொழுதும் உன்னதமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதைத் தொகுத்த விரிவுரையாளர் பூரீ பிரசாந்தனை இப்பணிக்காக மனமுவந்து பாராட்டலாம். இருபதாம் நூற்றாண்டு ஈழத்துச் சமூக வரலாற்றைப் பெரும்பான்மையும் இங்கு தொகுக்கப்பட்டுள்ள கவிதைகள் மூலமும் அறிந்து கொள்ள முடிவது இத் தொகுப்பிற்கு மேலதிகப் பலம் சேர்க்கின்றது.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை இருபதாம் நூற்றாண்டு மிக் முக்கியமானதொரு காலப்பகுதியாகும். இக்காலகட்டத்தில் ஈழத்தில் இடம்பெற்ற
மல்லிகை மே 2007 * 21

Page 13
சாதிக்கொடுமைக்கு எதிரான போராட் இனமுரண்பாட்டிற்கொதிரான சிறுபான்மையினத்தவரின் விடுதலைப்
டம்,
போராட்டம் போன்ற பல சமுதாய முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைகள் இந்நூற்றாண்டிலேயே இடம்பெற்றன. அகதிகளாக இடம் பெயர்ந்தும், குண்டு வீச்சு முதலியவற்றால் உறவினர்களை யும், சொத்துகளையும் இழந்து அவதிப் பட்டும் மக்கள் பெருந் துன்பமடைந் தனர். இவ்வாறு, மக்களது உணர்ச்சி களின் வெளிப்பாடாகவும், வடிகாலாக வும் பல கவிதைகள் தோற்றம் பெற்றன. இவையெல்லாம் நல்ல கவிஞர்களின் வாயில் சிறப்பாகவும், படைப்பாற்ற லோடும் வெளிப்பட்டன. இந்நூல் அத்தகைய நல்ல கவிதைகளை வெளிக் காட்டும் தொகுப்பாக நிற்கிறது. இத் தொகுப்பை வாசிக்கிற ஒருவர் ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் தேடல்கள், ஏக்கங்
க்ள், சோகங்கள், உள்ளக் கிடக்கைகள்
ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இதனால் எதிர்காலச் சந்ததி ஈழத்தமிழர் களது இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை இலக்கியத்தினூடாக அறிந்து கொள்ளும் பயனைப் பெறும் என்பதிற் சந்தேக மில்லை.
. '' s நூலாசிரியர் தமது முன்னுரையில்,
இத்தொகுப்பிலே கூட சில முக்கிய கவி
ஞர்கள் விடுபட்டிருக்கக் கூடும். அவ்
வாறு, விடுபட்டுப்போன கவிஞர்களது
தரமான கவிதைகளை வாசகர்கள் சுட்டிக்"
காட்டினால் நூலின் இரண்டாம் பதிப்பில்
அமைத்துக் கொள்ளலாமெனத் தெரிவித் துள்ளார். சில இதழ்களிலும், பத்திரிகை
களிலும் இந்நூல் பற்றி வெளிவந்துள்ள விமர்சனங்களில் கட்டுரையாசிரியர்கள் விடுபட்டுப் போன சில சில கவிஞர்
களின் பெயர்களை முன்மொழிந்துள்ள னர். அவ்வாறு தரப்பட்டுள்ள கவிஞர் களின் பட்டியல்களிலிருந்து உண்மை யாகவே அவசியமாகச் சேர்த்துக் கொள் ளப்பட வேண்டியவர்கள் இருந்தால், அவர்களையும் இணைத்து விரைவில் தொகுப்பின் இரண்டாம் பதிப்பை வெளி யிடுவது ஆக்கபூர்வமானதாக இருக்கும். மேலும், தொகுப்பில் வேறும் தவறுகள் இருந்தால் அவற்றைக் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள்
சுட்டிக்காட்டுவதன் மூலம் இரண்டாவது
பதிப்பை இன்னும் செம்மையாக்க உதவலாம் அல்லவா!
இத்தொகுப்புக்கான கவிதைகள் ஊடகங்கள் வாயிலாகவே கோரப்பட் டன. அப்போது கவிதைகளை அனுப்ப மறந்துவிட்டு இப்போது தொகுப்பாசிரி யரைக் குறை கூறுகிறவர்களுக்குக் கூட இந்த இரண்டாம் பதிப்பு மேலதிகமான தொரு வாய்ப்பை வழங்க முடியுமெனக் கருதுகிறேன். ஒரு திருமணம் நடக்கிற பொழுது சிலருக்கு அழைப்பிதழ் கிடைக்காமல் போகலாம் அல்லவா! உண்மையான அக்கறை இருந்தால், அழைப்பிதழ் இல்லாமலும் திருமணத் திற்குச் செல்லலாமே. அவ்வாறு தான் இத்தொகுப்பில் விடுபட்டவர்கள் கூட பூரீபிரசாந்தனை உங்களுக்கு நெருங்கிய வராகக் கருதி உங்கள் தரமான கவிதை களை இரண்டாம் பதிப்புக்காக அனுப்பி வைக்கலாமே.
இந்நூலைத் தமிழரின் இருபதாம் நூற்றாண்டுச் சமூக வரலாற்றின் ஆவண மாகவும் கொள்ளலாமென மேலே குறிப் பிட்டேன். 2000ஆம் ஆண்டு வரை ஒரு ஒழுங்கு முறையிற் தொகுத்திருந்தால்
மல்லிகை மே 2007 & 22

வரலாற்று ஆவணமாகவும் இந்நூல் இன் னும் சிறந்திருக்கும். இல்லையெனின்
அகர வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளின் கீழே கவிதைகள் வெளி
வந்த ஆண்டுகளையேனும் இணைத்திருத் தல் நலம்.
மேலும், இத்தொகுப்பில் தெரிகிற
மற்றொரு குறைபாடாக ஆன்மீகத்திற்குப்
போதிய முக்கியத்துவம் வழங்காமை யைக் குறிப்பிட வேண்டும். இத்தொகுப் பில் ஆன்மீகம்சார் கவிதைகளுக்குக் குறைந்தளவு முக்கியத்துவமே கொடுக் கப்பட்டுள்ளது. இதையும் தொகுப்பா
சிரியர் இரண்டாம் பதிப்பில் நிவர்த்தித்
தல் வேண்டும்.
மற்றபடி உசாத்துணை விபரப் பட்டி யல் மிகுந்த பயன் தருவதாகும். தமிழ் நாட்டில் வெளிவந்துள்ள ஈழத்துக் கவி ஞர்கள் பற்றிய மிகப் பழைய அல்லது தவறான விபரப் பட்டியல்கள் போலல்
லாமல் இரத்தினச் சுருக்கமாகக் கவிஞர்
களை அறிமுகப்படுத்தும் கவிஞர் விபரப் பட்டியல் ஒரு நன்முயற்சியே. தொகுப் பிலுள்ள கவிதைகள் பல முன்பு எமது வாசிப்புக்குக் கிடைதவையே. ஆனால்
அவற்றையெழுதிய கவிஞர்களையும்
நமக்கு அறிமுகப்படுத்துவதால் இத்
தொகுப்பு தன் பெறுமதியை அதிகரித்
துள்ளது.
இறுதியில் இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதை ஒரு நோக்கு எனும் தலைப்பில் தொகுப்பாசிரியர் ஆய் வொன்றை வழங்கியுள்ளார். கிட்டத்தட்ட
இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துக் கவி
தைகளை முறைப்பட அறிமுகப்படுத்தத் தக்க ஓர் ஆய்வேட்டின் சுருக்கப் பிரதி யாக இதைக் கருதலாம். கவிதை உள்ள
டக்கமும், நிர்ணயித்த காரணிகளும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஈழத்துக்
கவிதை வரலாற்றை அறியாத தமிழகத்து
வாசகருக்கு இது மிகவும் பயன்படத் தக்க ஆய்வுக் கட்டுரையாகும்.
இந்நூலுக்கு மிகவும் அழகு சேர்ப் பவை ஒவியர் மதிபுஷ்பாவின் படங்க
ளாகும். அதுவும் புகழ் பெற்ற 'மஹாக
வியின் தேரும் திங்களும் கவிதைக்கான அட்டைப்படம் தமிழகத்துப் பிரபலமான ஒவியர்களுடைய படைப்பையொத்துச் சிறந்துள்ளது. நூலின் வெளியீட்டு விழா வன்று இந்த ஓவியம் ஒரு மத்த்தின் அடையாளமாக இருப்பதாக விமர்சிக்கப்
பட்டது. எனினும் அந்த விமர்சனம்
பொருந்தாது. மஹாகவியின் படைப்பை இந்த அட்டைப் படத்திற்கு மதச்சாயம் பூசுவது சரியானதல்ல.
உள்ளவாறு பிரதிபலிக்கும்
நிறைவாக, தமது வைரவிழாவை
முன்னிட்டு காத்திரமான ஒரு பணியை
நிறைவேற்றியுள்ள பூபாலசிங்கம் புத்தக
சாலையினருக்கு எமது பாராட்டுகள்.
அதுவும் ஈழத்துக் கவிதைகளைத் தமிழ் நாடு உள்ளவாறு அறிந்துகொள்ள வேண் டும் என்பதற்காக இத்தொகுப்பைத் தமிழ்நாட்டில் வெளிட்டமைக்காகவும், இளைஞர் என்னும் போதும் பூரீபிரசாந்த னிடம் தொகுக்கும் முயற்சியை ஒப் படைத்தமைக்காகவும், புத்தகசாலை அதி பர் பூயூரீதரசிங்கை பாராட்ட வேண்டும். நேர்த்தியான அச்சமைப்புத் தமிழ்நாடு கவிதா பதிப்பகத்தினருக்கு மிகுந்த பெருமை தருவதாகும். இத்தகைய பதிப் புத் தரம் ஈழத்துப் பதிப்புலகிலும் உரு வாக வேண்டுமென்கின்ற ஆவலே
பெருக்கெடுக்கிறது.
மல்லிகை மே 2007 & 23

Page 14
னெது மாணவப் பருவத்தில் வீடு தேடி வந்து என்னைச் சந்தித்தவர் டானியல். அரசியல், சமூக நோக்கங்களுக்காக அப்பொழுது என்னைத் தேடிவந்த போதும், ஏதோ ஒருவகையில் என்னைச் சரியாக இனங்கண்டவர் அவர். என் மீது நம்பிக்கை வைத் திருந்தார். நான் அப்பொழுது எழுத்தாளனல்ல. வெறும் வாசகன்தான். ஆனால், அக்காலத் திலேயே இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள் என்பவற்றுக்கெல்லாம் எனக்கு அழைப்பனுப்பி வைத்துப் பங்குபற்றச் செய்தார். சமூகம் பற்றிய கருத்து நிலையில் இருவரும் ஒன்றுபட்டு நின்றோம். ஆனால், அரசியல் நோக்கில் எங்கள் இருவருக்கும் வேறு பாடு இருந்து வந்தது. அந்த வேறுபாட்டையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகக் கொண்ட வேட்கை எங்கள் இருவரையும் இறுக்கமாக இணைத்து வைத்திருந்தது.
டானியல், ஜீவா இருவருக்கும் இடையே உறவுப்பாலமாக ஒருகாலத்தில் நான் இருந்து வந்தேன்.
இருவரும் நண்பர்களாக, தோழர்களாக, சக எழுத்தாளர்களாக உறவு பூண்டு வாழ்ந்து வந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்தவர்கள். கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட சமயம் (1964) இருவரும் வெவ்வேறு அணி சார்ந்தவர்களாகப் பிரிந்து நின்று தீவிரமாகச் செயற்பட்டார்கள். அரசியல் முரண்பாடு - கருத்து முரண்பாடு என்ப வற்றைச் சுயமுரண்பாடா கக் கருதிச் செயற்படும் தீவிரத் தன்மை அக் காலத்தில் கட்சி சார்ந் தவர்களிடம் இருந்து வந்திருக்கின்றது. இ த ன ல் இ ரு வ ரு க் கு மி  ைட  ேய இறுக் க ம | ன உ ஸ் மு ர ண் ப ா டு க ள் இ ரு ந் து வந்தன.
18. பூச்சியம்
ந Iா ன் வி ரு க் கு ம் முறை யைச் எழுத் தா ள ன் . போலவே ஒடுக்கப் பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன். அரசி யலில் ஜீவா சார்ந்து நின்ற அணியைச் சார்ந்த வன். ஒடுக்கப்பட்ட சமூகம் பற்றிய சிந்தனைப் போக்கில் டானியலுக்கு மிக நெருக்கமானவன். இந்தக் காரணங் களினால் இவர்கள் இருவரினதும் அன்புக்குப் பாத்திரமானவன். இருவருடனும் நான் மிக் நெருக்கமான உறவுடன் பழகி வந்தவன். நான் டானியலைத் தேடிச் செல்லும் சமயங்களில், "ஜீவா என்ன செய்கிறான்?" என மிக உரிமையுடன் விசாரிப்பார். ஜீவாவைச் சந்திக்கும் வேளைகளில் "டானியல் என்னவாம்?" எனக் கேட்டு வைப்பார். இவர்கள் இருவருக்கும்
இவர்கள் இரு அடுத்த தன்ல  ேச ர் ந் த
பூச்சியமல்ல.
- தெணியான் -
இ வர் க  ைள ப்
மல்லிகை மே 2007 & 24
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்தியில் முரண்பாடுகள் மேலும் வளராத வண்ணம் வெகு நிதானமாக நான் நடந்து கொண்டேன்.
டானியல், ஜீவா இருவரினதும் வயது முதிர்ச்சி, அனுபவம், அரசியல் மாற்றங்கள் என்பவற்றுடன் எனது உறவு, முயற்சி
என்பன காரணமாக, ஜீவாவின் பிறந்த
தினத்தில் அவரை வாழ்த்துவதற்காக டானியல் மல்லிகை காரியாலயத்திற்கு வந்தார். இந்த முயற்சியில் 'முரசொலி ஆசிரியர் எஸ்.திருச்செல்வத்திற்கு (எஸ்தி) பங்குண்டு என்பது மறுப்பதற்கில்லை. பின்னர் டானியலின் படத்தினை அட்டை யில் தாங்கி மல்லிகை இதழ் 1983 டிசம் பரில் வெளிவந்தது. டானியலிடம் படத் தைப் பெற்று, பேராசிரியர் கா.சிவத்தம்பி யிடம் டானியல் பற்றிய அறிமுகக் கட்டுரையை வாங்கி, மல்லிகைக்கு நான் அவற்றைக் கொடுத்தேன். அல்வாயூர் கவிஞர் ulb மல்லிகை அட்டையில் 1982 நவம்பரில் இடம்பெறுவதற்கும் காரணமாக இருந்து, அவர் பற்றிய அறிமுகக் கட்டுரையைப் பேராசிரியர் கா.சிவத்தம்பியிடம் பெற்றுக் கொடுத்தேன் என்பதும் இங்கு குறிப்பிடுதல் அவசியமாகிறது.
மு.செல்லையாவின்
எண்பதுகளின் ஆரம்பத்தில், ஜீவா, டானியல் இருவரும் தமக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் ஒரளவு தீர்ந்து ஒருவர் மீது
ஒருவர் மதிப்புடன் இருந்து வந்தார்கள்.
ஆனால் டானியலின் 'அடிமைகள் (ஒக்டோ பர் 1984) நாவல் வெளிவந்த சமயம் அவர் மீது ஜீவா ஒரு தினம் தனது அதிருப்தியை என்னிடம் வெளிப்படுத்தினார். அந்த அதிருப்தி தோன்றுவதற்கு நான் காரண மாக இருந்தேன். டானியல் தனது
'அடிமைகள்' நாவல் முன்னுரையில் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது "அரசி யலில் அவர் என் வயப்படவில்லை. சரி யான நிலைப்பாட்டுக்கு வரவில்லை. சூழ் நிலைகள் அவர் வரவைத் தடுக்கின்றன’ என எழுதி இருக்கின்றார். அதனைப் படித்த ஜீவா, "உங்களைத் தடுக்கிறது
யார்? நான்தான் என்று நினைக்கிறாரோ?
எனச் சினந்து கொண்டார். ஜீவா இப்படி நடந்து கொண்டாரென நான் போய் டானி யலிடம் இதனைச் சொல்லி வைக்க வில்லை. அப்படிச் சொல்வதனால் மீண்டும் மனக்கசப்புத்தான் இருவர் மத்தியிலும் தோன்றும் என்பதனைக் கருத்தில் கொண்டு நான் மெளனமாக இருந்து விட்டேன்.
டானியல் கருதியது போல என்னை யாரும் எந்த வகையிலும் தடுக்கவில்லை. யாருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக எந்தக் காலத்திலும் நான் இருந்ததில்லை. எனது சுயத்தை இழந்து விடாமல் நான் நானாகவே இருந்து வருவதுதான் எனக் குரிய இயல்பு.
ஜீவா அந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறு சினந்து கொண்டாலும், டானியலிடத்தில் அவர் கொண்டிருந்த மதிப்பினையும், டானியலுக்கும் எனக்குமிடையே இருந்து வந்த உறவினைக் கெளரவிக்கும் குண இயல்பினையும் நான் நன்றாக அறிந்து வைத்திருந்தேன்.
எனது முதலாவது சிறுகதைத் தொகுதி சொத்து தமிழ்நாடு என்.சி.பி.எச். வெளியீடாக ஜூனில் வெளிவந்தது. அந்தப் பிரதியை என்னிடம் பெற்று, அதனைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சென்று நூலாக்
மல்லிகை மே 2007 & 25

Page 15
கித் தந்தவர் ஜீவா, அந்த நூலை நான்
தொகுத்துக் கொண்டிருந்த சமயம் அதற்
குரிய முன்னுரையை யாரிடம் பெற்றுக் கொள்ளலாம் என ஜீவாவிடமே ஆலோ சனை கேட்டேன். ஜீவா எந்தவிதத் தயக்க முமின்றி உடனே, "டானியலிடம் வாங்
குங்கோ" எனக் கூறினார். அவர் தெரிவித்த
கருத்து எனக்கும் உடன்பாடானதாக, மனதுக்கு உவப்பானதாகத் தோன்றியது. அதன் பின்னர் டானியலிடம் முன்னுரை
வாங்கி அந்தத் தொகுதியில் இடம் பெறச்
செய்தேன்.
எனது இலக்கிய வாழ்வின் வளரிளம் பருவத்தவனாக நான் இருந்த காலத்தில், என் மீது அன்பும் அக்கறைமுள்ளவர்களாக
டானியல், ஜீவா ஆகிய இருவரும் இருந்து
வந்தது போல, எனக்கு மிக நெருக்கமான
இன்னொருவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி. இவர்கள் மூவரையும் எனது நண்பர்கள் என்று நான் ஒருபோதும் அழைப்பதில்லை. அப்படி அழைப்பதில் ஒரு தயக்கம் மன தளவில் இப்பொழுதும் எனக்குண்டு.
பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய விவரணக் குறும்படம் , ஒன்று சிலகாலத் துக்கு முன் தயாரித்தார்களல்லவா! அந்தப் படம் தயாரித்த சமயம் பேராசிரியர் கா.சி. உடன் தொடர்புள்ள பலரை நேரிற் சென்று சந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் சென்று சந்தித்த பலருள் கலாநிதி சொக்கனும் ஒருவர். இலங்கை இலக்கியப் பேரவை நல்லூர் ஆதீனத்தில் 06.06.2004இல் நடத்திய பரிசளிப்பு விழாவுக்கு கலாநிதி சொக்கன் வருகை தந்திருந்தார். அந்த விழாவில் என்னை அவர் சந்தித்த வேளை, 'சிவத்தம்பி பற்றி விவரணப் படம் தயாரித் தவர்களை, உங்களைப் போய்ச் சந்திக்கு
மாறு திரும்பத் திரும்ப நான் சொன்னேன். அவர்கள் வந்து சந்திக்கவில்லையா?" என வினவினார். அவர்கள் என்னைச் சந்திக் காதது அறிந்து பெரிதும் விசனப்பட்டார். கவலைப்பட்டுக் கொண்டார்.
G8 u mré fuur கா.சிவத்தம்பிக்கும் எனக்குமிடையே இருந்துவரும் நெருக்க மான உறவினை நன்கறிந்தவர்களுள் கலாநிதி சொக்கனும் ஒருவர். அதனால் தான் பேராசிரியர் பற்றிய விவரணப் படம் தயாரித்தவர்கள் தவறாமல் என்னைச் சந்திக்க வேண்டுமென அவர் அக்கறைப் பட்டுக் கொண்டார்.
விவரணப் படம் தயாரித்தவர்கள் பேரா சிரியருக்கும் எனக்குமிடையேயுள்ள உற வினை அறியாதவர்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் சந்திக்க வேண்டிய முக்கியமான ஒருவராக நான் அவர்களுக் குத் தோன்றாமல் போயிருக்கலாம். அல் லது வசதியீனம் காரணமாகச் சந்திக்க முடி யாது தவிர்த்திருக்கலாம். எதுவாக இருட் பினும் இங்கு அது முக்கியமல்ல. இந்த விவகாரத்தை இங்கு குறிப்பிட வேண்டும் என்பது எனக்கு அவசியமுமல்ல. பேராசிரி *யருக்கும் எனக்குமிடையே இருந்து வரும் உறவு எத்தகையது என்பதனை அறியத் தருவதற்காகவே இங்கு அதனைக் குறிப் பிடுகின்றேன்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப் பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளராக (01.08.1978) வந்த பின்னரே அவருடன் நெருக்கமாகப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதற்கு முன்னரே அவரை நான் நன்கு அறிந்து வைத்திருந்தேன். எனது 'விடிவை நோக்கி நாவலின் வெளி
மல்லிகை மே 2007 & 26

யீட்டு விழா தேவரையாளி இந்துக்கல்லூரி யில் நடைபெற்ற போது, பேராசிரியர் கா.சிவத்தம்பி அந்த விழாவில் கலந்து கொண்டு, அந்த நாவல் பற்றிக் கருத்துரை வழங்கினார். அரசினர் நூல் அபிவிருத்திச் சபை 'சங்கப்பலகை" என்னும் அமைப்பின் மூலம் புதிய எழுத்தாளர் அறிமுகக் கூட்டம்
ஒன்று யாழ். நூல் நிலையக் கேட்போர்
கூடத்தில் 12.05.1975இல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எனது 'விடிவை நோக்கி நாவல் மதிப்பீடும் அறிமுகமும் இடம்பெற்றன. எனது நாவலை ஏ.ஜே.கனக ரட்னா மதிப்பீடு செய்வதற்கான ஏற்பாட் டினை கா.சி. ஒழுங்கு செய்து வைத்திருந் தார். ஏ.ஜே.கே. பொதுவாகவே மேடை ஏறிப் பேசுவதற்கு விரும்பாத ஒருவர். எனவே தனது மதிப்பீட்டுக் கட்டுரையினைப் பா.சத் தியசீலனிடம் கொடுத்து விழா மேடையில் அக்கட்டுரையினை வாசிக்கும்படி செய்தார். அறிமுகம் செய்து வைக்கப் பெற்ற புதிய எழுத்தாளர்களும் அந்த விழாவில் பேசுவ தற்கான வாய்ப்பு வழங்கப் பெற்றது. அன்று அந்த விழாவில் நானும் பேசினேன். பேரா சிரியர் கா.சி. விழாவுக்குத் தலைமை தாங் கினார். விழா முடிந்த பின்னர் தனது காரில் என்னை ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பின்ார்.
இந்தச் சமயத்தில் ஏ.ஜே. கனகரட்னா பற்றி நான் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமானது. ஏ.ஜே.கே, உடன் நான் மல்லிகையில் எழுத ஆரம்பித்த காலம் முதல் தொடர்ந்து நட்புறவு இருந்து வந் திருக்கின்றது. சந்திப்பதற்கு வாய்ப்புக் கிடைத்த வேளைகள் எல்லாம் அவருடன் அந்நியோன்னியமாகப் பேசிப் பழகி வந் திருக்கின்றேன். உடல்நிலை சரியில்லா மல் திருநெல்வேலியில் அவர் தங்கி இருந்த சமயம் அவரைச் சந்திக்க வேண்டும்
என்பதற்காகவே நேரில் சென்று கண்டு பேசி இருக்கின்றேன். அவருடன் பழகிய சில சந்தர்ப்பங்களில் சுவாரசியமான அனுப வங்களையும் நான் பெற்றிருக்கின்றேன். எனது சிறுகதை ஒன்றினை ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்க்க விரும்பி மல்லிகை யில் பிரசுரமான நான் ஆளப்பட வேண்டும்' என்னும் கதையினை மொழிபெயர்த்தார். லண்டனில் வெளியிடப்பட இருக்கும் தொகுதி ஒன்றுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்ததுடன், அதன் பிரதி ஒன்றினையும் எனக்கு அனுப்பி வைத்தார். இன்று அந்தப் பிரதியை மிகக் கவனமாக நான் பேணி வைத்துக் கொண்டி ருக்கின்றேன்.
பேராசிரியர் கா.சி. யாழ்ப்பாணப் பல் கலைக் கழகத்தில் பதினெட்டு ஆண்டு களுக்கு (01.08.1978 - 30.10.1996) மேல் பணியில் இருந்திருக்கின்றார். அந்தப் பதி னெட்டு ஆண்டுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச் சியும் பயனுமுள்ள காலமாகக் கழிந்து போயிருக்கின்றது. வாரத்தில் ஒரு நாள் - பெரும்பாலும் மாலை வேளைகளில் - வல் வெட்டித்துறையில் இருக்கும் அவர் இல்லத் தில் சந்திப்பேன். சில நாட்களில் காலை நேரம் நான் செய்வதுண்டு. நீண்ட நேரம் இருவரும் அமர்ந்து உரையாடுவோம். இலக்கியம், சமூகம், அரசியல், சாதியம், கல்வி எனப் பலதுறை சார்ந்த விடயங் களையும் இருவரும் பேசிக்கொண்டிருப் போம். சிலசமயம் எங்கள் குடும்ப விவகாரங் களையும் மனந்திறந்து நாங்கள் பேசுவ துண்டு. பேராசிரியரின் மனைவி (அக்கா) ஒய்வாக இருக்கும் சில சமயங்களில் வந்து எங்கள் உரையாடலில் கலந்து கொள்வார்.
மல்லிகை மே 2007 & 27

Page 16
எங்கள் சந்திப்பும் உரையாடலும் நாங் கள் வேலை செய்யும் இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ நிகழாமல் பேராசிரியர் இல்லத்தில் இடம்பெற்று வந்ததினாலும், ஒவ்வொரு வாரமும் நான் அங்கு சென்று
வந்ததினாலும் காலப்போக்கில் அந்தக்
குடும்பத்தில் ஒருவனாகக் கருதப்பட்டேன். அக்காவும் பிள்ளைகளும் (மருமக்கள்) எப் பொழுதும் என்னை அன்போடு வரவேற்று உபசரிப்பார்கள். அதனால் தயக்கமின்றி உரிமையுடன் நான் அங்கே போய்வந்து கொண்டிருந்தேன்.
பேராசிரியரும் நானும் அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டால் காலங்கடந்து போய்க் கொண்டிருப்பதனை நாங்கள் மறந்து போவோம். நிலாக் காலமாக இருந்தால் எங்கள் உன்ரையாடல் இரவு பத்து மணி தாண்டியும் நீண்டு கொண்டு செல்வதுண்டு. வல்வெட்டித்துறையிலுள்ள பேராசிரியர் இல்லத்தில் இருந்து பொலிகண்டியில் இருக்கும் எனது வீடு சுமார் இரண்டு கிலோ மீற்றரிலும் அதிக தூரம், அந்தவேளையில் அக்கா வந்து மெல்லிய ஒரு கண்டிப்புடன் எங்கள் உரையாடலைத் தடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அந்தக் காலத் தில் நான் சிகரெற் புகைக்கும் பழக்க முள்ளவன். தேநீர் பருகியவுடன் பேராசிரி யருக்கு முன் அமர்ந்திருந்து சிகரெற் புகைப்பேன். ஆனால், அக்கா வந்திருக்கும் சமயங்களில் சிகரெற் புகைப்பதற்கு 2 sit ளூரத் தயங்குவ்ேன். எப்பொழுது அக்கா என்னைக் கண்டிப்பாரோ என்ற அச்சம் மனதில் என்றும் இருந்து வந்தது.
பேராசிரியரின் வீடு கடற்கரைக்கு மிக
இருக்கிறது. நாட்டு நிலைமை குழப்பமடைந்து யுத்த சூழ்நிலை
அண்மையில்
உருவான பின்னர் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் சில சமயங்களில் கடலில் இருந்து பீரங்கித் தாக்குதல் ஆரம் பித்து விடும். உடனே இருவரும் எழுந்து வீட்டுக்குப் பின்னுள்ள பதுங்கு குழிக்குள் போய் இருப்போம். அந்த வேளைகளிலும் மெளனமாகப் பதுங்கி இருக்க முடிவ தில்லை. அங்கும் பேசிக்கொண்டே இருந் தோம் என்பதனை இன்று நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வியப்பாகத்தான் தோன்றுகின்றது.
ஒரு தினம் நான் பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்த என்னிடம் கூறினார்; "தெணி, நீங்கள் எனக் குக் கிடைத்தது நான் செய்த பாக்கியம். நான் சொல்வதைக் கேட்பதற்கும் தகுந்த
சமயம் அவர்
ஒராள் தேவையல்லவா!'
பேராசிரியர் இப்படிச் சொன்னாரா யினும், உண்மையில் பாக்கியம் செய்த வன் நான்தான். நான் அவரிடத்தில் பல விடயங்களை நேரில் நிறையக் கேட்டு அறிந்து கொண்டேன். சிறுவயது முதல் இன்றுவரை நல்ல நூல்களைத் தேடி வாசிக்கும் பழக்கமுள்ளவன் நான். அத ன்ாலும் வேறு வழிகளிலும் எனக்குள் வரும் சந்தேகங்களைத் தீர்த்துத் தெளிவுபடுத்தும் ஆசானாக அவர் இருந்து வந்தார்.
அவர் நடத்தையில் நயக்கத்தக்க நாகரிகங்கள் பல இருப்பதனை நான் அவ ருடன் பழகிய அக்காலத்தில் கண்டுகொண் டேன். அவை எல்லோரும் பின்பற்ற வேண் டிய சமூக நாகரிகங்களாக எனக்குத் தோன்றுகின்றன. அவரைத் தேடி வீட்டுக்கு யார் வந்தாலும் வயது வேறுபாடின்றி எழுந்து நின்று வரவேற்பது அவரிடத்தி
மல்லிகை மே 2007 & 28

லுள்ள மிகச் சிறந்த ஒரு பண்பு. வீடு வந்தவர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படும் சமயம், இருக்கை விட்டு எழுந்து வெளியே அழைத்துச் சென்று வழியனுப்பி வைப்பார். இவை மாத்திரமன்றி இன்னும் பல சிறப்பான குணங்களைச் சொல்லலாம்.
நான் அவருடன் பேசிக்கொண்டிருந்து
விட்டு, அங்கிருந்து புறப்படும் சமயங்களில் என்னுடன் கதைத்துக் கதைத்து வெளிக் 'கேற்’ வரை தவறாமல் வந்து வழியனுப்பி வைப்பார். நாட்டில் குழப்பமான சூழ்நிலை கள் உருவான பின்னர், என்னை வழி யனுப்பி வைக்கும் போது ஆயிரம் தடவை கள், ‘தெனி கவனம். தெனி கவனம்." எனத் திரும்பத் திரும்பச் சொல்லியே அனுப்பி வைப்பார். சிலவேளைகளில், ‘தெனி நடு றோட்டாலே போக வேணும். றோட்டோரத்தில் என்னென்ன புதைச்சு வைச்சிருக்கிறான்களோ தெரியாது...!" எனச் சொல்லிக்கொண்டு, சயிக்கிள் வண்டியில் ஏறிவந்து கொண்டிருக்கும் நான், அவரது கண்பார்வையில் இருந்து மறையும் வரை பெற்ற பிள்ளையை வெளியே அனுப்பி வைத்து விட்டு கவலை யுடன் வழி பார்த்து நிற்கும் தாயைப் போல வீதியில் நின்று கொண்டிருப்பார்.
LUTUö. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு சென்னைப் பல்கலைக் கழக உபவேந்தர் சுப்பிரமணியம் சிறப்பு அதிதியாக வருகை தந்து கலந்து கொண் டார். பேராசிரியர் கா. சிவத்தம்பி தமது இல்லத்தில் ஒருநாள் காலை நேரம் அவருக்கு விருந்தளித்துக் கெளரவித்தார். அந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர் பாலகிருஷ்ணனுடன் என்னை
யும் அழைத்திருந்தார். விருந்து நடந்து முடிந்த பின்னர் சிறிது நேரம் பேசிக் கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தில் உப வேந்தர் சுப்பிரமணியம் தொடர்ந்து என் னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நான் அதனை அவதானித்து விட்டு, ‘என்ன ஸேர், நாங்கள் இருவரும் மாத்திரம் பேசிக் கொண்டிருக்கிறோம்" எனச் சொல்லி அவர் கவனத்தைத் திசை திருப்ப எண்ணினேன். "பரவாயில்லை, ஒரு எழுத்தாளருடன் பேசு வதையே நான் விரும்புகிறேன்" எனக் கூறிக்கொண்டு தொடர்ந்து என்னுடன் உரையாடினார். பின்னர் அங்கிருந்து புறப் பட்டுச் செல்லும்போது, சென்னைக்கு வரும் சமயத்தில் தவறாது தன்னை வந்து சந்திக்குமாறு கூறிச்சென்றார்.
இந்த அனுபவம் பேராசிரியர் கா.சி. இன் உறவு காரணமாக நான் பெற்றுக் கொண்டதுதான்.
பேராசிரியர் கா.சி. உடன் டானியல், ஜீவா ஆகிய இருவருக்கும் சுமுகமான உறவு இருந்து வந்தது.
நான் பட்டிமன்றப் பேச்சாளனாக மேடைகளில் ஒரு காலத்தில் பேசிக் கொண்டு திரிந்ததைப் பேராசிரியர் கா.சி. சிறிதும் விரும்பவில்லை. பேராசிரியரைப் போலவே டானியலுக்கும் அதில் உடன் பாடு கொஞ்சமும் இருக்கவில்லை. பேரா சிரியர் ஒருதினம் உறுதியாகச் சொன்னார்
"மேடையில் நின்று காற்றோடு யுத்தம் பு
வதை விட்டு விடுங்கோ தெணி! உங்கள் டம் ஒரு பேனா இருக்கு, போயிருந்து எழு துங்கோ" இந்தக் கருத்தினையே டானிய லும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
மல்லிகை மே 2007 & 29

Page 17
அவர்கள் இருவரும் அக்கறையுடன் தெரிவித்த கருத்தினை ஏற்றுக்கொண்டு அதன் பிறகு நான் பட்டிமன்றங்களில் பேசு வதை முற்றாக நிறுத்திக் கொண்டேன்.
ஒரு தினம் டானியலின் கராஜில் இருந்து அவருடன் நான் பேசிக்கொண்டி ருந்த போது, ‘ஈழநாடு சபா அங்கு வந்து சேர்ந்தார். மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கையில் ‘ஈழநாடு வாரப் பதிப்பில் தொடர்ச்சியாகச் சில வாரங்கள் வெளியிடத் தகுந்த நாவல் ஒன்று எழுதித் தருமாறு அவர் என்னிடம் கேட்டார். அவர் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு நாவல் ஒன்று எழுதும் வண்ணம் டானியல் என்னை வற்புறுத்தத் தொடங்கினார். அவரை நான் சந்திக்கும் சமயங்களில் எல்லாம் தொடர்ந்து அவர் வற்புறுத்தி வந்தார். .شد
அதன் பின்னர் பரம்பரை அகதிகள் நாவலை எழுதுவதற்கு ஆரம்பித்தேன். அந்த நாவலின் முதல் ஐந்து அத்தியாயங் களை எழுதி முடித்த பின்னர், அவற்றைக் கொண்டு வந்து டானியலிடம் (02.06.1984) கொடுத்தேன். படித்துவிட்டு, ‘ஈழநாடு சபா விடம் கொடுக்குமாறு தெரிவித்தேன், நான்கு நாட்கள் கழித்து மீண்டும் நான்
யாழ்ப்பாணம் சென்ற சமயம் (06.06.1984)
டானியலைச் சந்தித்தேன். அந்தச் சமயம் எனது நாவலில் முதல் அத்தியாயத்தை
மாத்திரம் டானியல் படித்து முடித்திருந்தார்.
அவர் என்னைக் கண்டதும் தானாகவே எனது நாவலின் முதல் அத்தியாயம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். இறுதியில், "நான் சாகிறதுக்கு முந்தி, நீங்கள் வந்து விடு
வியள்" எனப் பெருமையுடன் கூறி, மகிழ்ச்சி பொங்க என்னை நோக்கினார்.
டானியல் கூறிய பாராட்டு எனக்கு மன மகிழ்ச்சியைக் கொடுத்ததேதோ உண்மை தான். அதேசமயம் தனது மரணம் பற்றி அவர் உள்ளத்தில் இருந்த எண்ணத்தின் வெளிப்பாட்டையும் நான் கண்டு கொண் டேன். அதனால் அவர் எனக்குத் தெரிவித்த பாராட்டு எனக்கு முழுமையான மகிழ்ச்சி யைக் கொடுக்கவில்லை. அந்த மகிழ்ச்சிக் கிடையே மனநெருடலையும் அது எனக்கு ஊட்டியதென்பதே உண்மை.
அந்த ஒரு அத்தியாயத்தைத் தான் படித்துப் பாராட்டி எனக்குச் சொன்னதுடன் மாத்திரம் நின்று விடாமல் தன்னுடன் வேலை செய்த வீ.சின்னத்தம்பியிடமும் அதனைச் சிலாகித்துக் கூறி படித்துப் பார்க்கும் வண்ணம் அவரிடம் கொடுத்தார் என்பதனைப் பின்னர் சின்னத்தம்பி என்னிடம் தெரிவித்தார்.
அதுதான் டானியல் என்பதனை அப்பொழுது நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.
"ஈழமுரசு’ ஆசிரியர் எஸ்.திருச்செல் வம் நாவல் ஒன்று தருமாறு என்னிடம் கேட்டார். 'பனையின் நிழல்' நாவலை எழுதி அவருக்கு அப்போது கொடுத்தேன்.
அந்த நாவல் 01.07.1984 முதல் "ஈழமுரசு'
வார இதழில் டானியலின் அறிமுகத்துடன் ஆரம்பமானது. அதே தினத்தில் டானி யலின் 'சொக்கட்டான்' நாவல் ‘வீரகேசரி வாரப் பதிப்பில் வெளிவரத் தொடங்கியது.
மல்லிகை மே 2007 & 30

தனியார் கல்வி நிலையத்துக்கு கஸ் தூரியார் வீதியால் நான் சிலசமயம் நடந்து செல்வதுண்டு. அப்படிச் சென்று வரும் வேளைகளில் சிரித்திரன் ஆசிரியரைச் சில நாட்களில் சந்திப்பேன். அந்தச் சந்திப்புகளின் போது சிரித்திரனுக்கு ஒரு கதை தருமாறு அவர் என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் வேண்டுகோளுக்கு இசைந்து "காவல் அரண்கள் சிறுகதையை எழுதி அவருக்குக் கொடுத்தேன். கோயில் பூசகர்களாக இருக்கும் அந்தணர்கள் கோயிலை ஆளும் நிர்வாகிகளினால் - முகாமையாளர் - ஆதீன கர்த்தாவினால் எவ்வாறு வஞ்சிக்கப்படுகின்றார்கள் என்ப தனைத் தெளிவாகச் சித்திரிக்கும், சிறு கதை அது. ஆனால் என்னிடம் கேட்டு கதையைப் பெற்றுக் கொண்ட சிரித்திரன் அதனைப் பிரசுரிக்காது காலம் கடத்தி வந்தார். ஒருவருட காலம் கடந்த பின்னரும் சிரித்திரன் அதனை வெளியிடாது தன் னிடம் வைத்துக் கொண்டிருந்தார்.
ஒருதினம் டானியலை யாழ்ப்பாணத் தில் நான் சந்தித்த போது, "மாஸ்ரர் சிரித் திரனுக்கு ஒரு கதை குடுத்தனிங்களா?" என என்னிடம் அவர் கேட்டு விட்டு, "அவர் களுக்கு சோலி சுறட்டில்லாத எழுத்துகள் தான் குடுக்க வேணும். கேட்டு வாங்கிப் போட்டேன். என்ன செய்கிறது என்று அறி யாமல் முழிக்கிறாராம்" எனத் தொடர்ந்து கூறி மெல்லச் சிரித்தார்.
“உங்களுக்கு இந்தத் தகவலெல்லாம் யார் சொன்னது?" என நான் அப்பொழுது விசாரித்தேன். "நேற்று செம்பியன் வந்தார். அவர்தான் சொன்னார்’ என அவர் தெரி வித்தார்.
அதன் பிறகு சிரித்திரனுடன் தொடர்பு கொண்டு சற்றுச் சிரமத்தின் பின்னர் அந்தப் பிரதியை நான் மீளப் பெற்றுக் கொண்டேன். அப்பொழுது "ஈழமுரசு’ ஆசிரியராக இருந்த எஸ்.தி. இடம் அந்தப் பிரதியைக் கொடுத் தேன். அவர் 08.09.1985 வார இதழில் அதனை வெளியிட்டு வைத்தார்.
இன்னொரு நாள் நான் டானியலைச் சந்தித்த வேளை, “யாழ்ப்பாணத்தில் இலக் கியக்காரர்கள் சில பேர் சேர்ந்து அறக் கட்டளை ஒன்று நிறுவி இருக்கிறார்களாம். அந்த அறக்கட்டளை மூலம் பரிசுகள், பட்டங்கள் வழங்கி கெளரவிக்க இருக் கிறார்களாம். பரிசு, பட்டங்கள் பெறுகின்ற வர்களைத் தேர்வு செய்வதற்குச் சான்றோர் குழு ஒன்றை நிறுவி இருக்கின்றார்கள். அந்தச் சான்றேர்ர் குழுவில் நானும் ஒருவ னாக இருக்க வேணுமென்று என்னிடம் வந்து கேட்டிருக்கின்றார்கள்" எனச் சிரித்த வண்ணம் கூறினார். "நீங்கள் அந்த நிய மனத்தை ஏற்றுக்கொண்டு விட்டியளா?” என அப்பொழுது நான் அவரிடத்தில் கேட்டு வைத்தேன்.
அவர் முகத்தில் இருந்த மெல்லிய புன்னகை கொஞ்சமும் மாறாமல், "நான் சான்றோரல்லவே! யாழ்ப்பாணத்தார் எப்போது என்னைச் சான்றோராக ஏற்றுக் கொண்டார்கள்?! என வந்தவர்களிடம் கேட்டதாக எனக்குச் சொல்லிப் பலமாகச்
சிரித்தார்.
(வளரும்.)
மல்லிகை மே 2007 & 31

Page 18
தாயகம்
டிசம்பர் 2006 - பெப்ரவரி 2007
- செல்லக்கண்ணு
மேற்படி சஞ்சிகை இதழைப் படித்து முடிந்ததும் எழுந்த உணர்வுகள் பேசக்
கூடிய தரத்தினையுடையவையாக இருந்தபடியால் அவைகளை வாசகரோடு பகிர் கிறேன்.
சிறுகதைகள் 4, கவிதைகள் 8, கட்டுரைகள் 3, கிரேக்க நாடகம், நடைச்சித்திரம், தொடர்கதை என்பவற்றை உள்ளடக்கி இருக்கின்றது.
பேராசிரியர் நா.வானமாமலை. வித்யா, யாதவன், தி.கலைச்செல்வி, மாவை
வரோதயன், கனிவுமதி, ஏகலைவா, இரா.சடகோபன், ஜெகதல பிரதாபன், த.தர்மேர்
திரா, குழந்தை ம.சண்முகம், பூரீ, சோ.பத்மநாதன், ராளினி, த,ஜெயசீலன், அனந்தன்,
மஹ்முட் டர்வின், றோசியோ அமெரிக்கா, நிலங்கோ ஆகியோரது படைப்புகள் மல்லிகை மே 2007 & 32
 

இந்த இதழின் உருவாக்கத்திற்குத்
துணை நின்றுள்ளன.
ஆதிக்க வெறி படைத்தவர்கள்
யுத்தத்தை நியாயப்படுத்துவதற்கு
மொழியை வசப்படுத்திப் பொய்
யுரைத்தல்; ஆள் கடத்தல்; உள்நாட்டு,
வெளிநாட்டு போக்குவரத்தின் தன்மை கள், தொலைந்த அடையாள அட்டைக் கான பொலிஸ் அறிக்கை, பாண் என்ப வற்றைப் பெறுவதற்கு அப்பாவிப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங் கள் என்பவை குறித்து ஆக்கங்கள் நியாயச் செறிவோடும் அலசுகின்றன.
இதழுக்குச் சிகரமாக ஆசிரியத் தலையங்கம் விளங்குகின்றது. மானுடத் தின் மனச்சாட்சியைத் தொடும் கருத்துக் கள் பெய்யப்பட்டுள்ளன. பாலும் பொருளாதார ஒடுக்குதலாகவே இருந்தபோதும் அதைத் தேசிய, இன, மத, சாதிய, பால், வர்க்க, கலாசார ஒடுக்குமுறைகளாகப் பல்வேறு வடிவங் களில் வெளிப்பட்டு நிற்கின்றன" என
“பெரும்
அநாகரீகமான ஒடுக்குமுறைகளைச் சாடு கின்றது.
“புத்தர் கண்ட போரின் துயரம் இன்றும் தொடர்வதைக் காண்கிறோம்" எனப் போரின் ஆத்மாவைக் கண்டு கொள்வதற்கு 2550 ஆண்டுகளாகியும் முடியாதிருக்கும் ரியூப் லைற் புத்தியை எள்ளி நகையாடுகிறது.
"அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட பலத்தை மீண்டும் அதிகாரத்துவ நலன் களுக்குப் பலியாக்கிக் கொள்ளாமல் தேசத்தினதும் மக்களினதும் நலன்களி லிருந்து நீதியான அரசியல் தீர்வை
விரைவில் எட்ட அரசு முன் வரவேண்
டும்" என இன்றைய அரசியல் சூழலை,
மக்கள் விமோசனத்திற்கான நகர்வாக மாற்ற ஆளும் வர்க்கத்துக்கு மதியுரை செய்துள்ளது.
"ஒரு தண்டனையும் ஓயாத குற்றவ களும்" என்ற தலைப்பில் - இஸ்ரேலின்
அடாவடித்தனமான போர்க் கெடுபிடி
களை, இலங்கையின் வடக்குக் கிழக் குப் பகுதிகளில் தொடுக்கப்பட்டிருக்கும் போருடன் இணைத்துப் பார்க்கப்படு கிறது.
உலக நாடுகளின் நலன்கட்குத் தீங் கானவை அல்ல, என்ற வகையில் மட்டும் இங்கு நடக்கும் போர், கொலை கள் என்பவற்றிற்கு அவைகளின் ஆசி’ கிடைக்கு மெனப் பாதிக்கப்படும் மக்களுக்காக உலக நாடுகளின் 'உதவு கரம் எப்படி இருக்குமென்பதைப் புட்டு வைக்கின்றது. நமது விடுதலை இன்னுமொரு அடிமைத்தனத்துக்கு இட்டுச் செல்லாதபடி உறுதிப்படுத்தப் பட வேண்டும் - எனவும் தலையங்கம் அறிவுறுத்துகிறது.
தமிழ் மக்களது போராட்டம் சன நாயகப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப் படுவது மட்டுமே முக்கியமானது என் பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பத்திரிகைகளின் கருத்துக் கட்டுரைகளுக்கு முக்கியத்து வம் கொடுத்து மீள் பிரசுரம் செய்யும் எமது தேசிய பத்திரிகைகள், இத்தகைய நல்ல ஆசிரியத் தலையங்கங்களை எமது சஞ்சிகைகள் வெளியிடும் பொழுது ஏன்
மல்லிகை மே 2007 & 33

Page 19
அவைகளையும் பிரசுரித்து மக்களை வாசிக்கச் செய்யக் கூடாது?
மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், ‘சுயம்வரம்' என்ற கவிதையில் நம் முன்னோர் பெண்ணை மனையாளாக் குதவற்கு முகம் கொடுக்கும் பரீட்சை யொன்றை நாசுக்காகக் காட்டி இருக் சிறார்.
பந்தியில் பெண் வீட்டாரால் இலை யில் வைக்கப்பட்ட எள்ளை எண்ணை யாக்கியும், தேங்காயை உடைத்துச் சொட்டாக்கியும் பெண்ணை அடைய விரும்பும் வாலிபன் சோற்றோடு உண்ண வேண்டும். நியாயப்படுத்துவதற்குக் கவிஞர் இக் காலத்து கராத்தே வீரர்கள், சாமிமார்
இப்பரீட்சையை
ஆகியோரது சில வியத்தகு செயல்
களைக் கவிதையில் சிந்தியுள்ளார். அறிய வேண்டியதொரு விடயத்தை
மிகவும் தெளிவாகத் தந்துள்ளார்.
மறுபிரசுரத்திற்குத் தகுதியானதே பேரா.நா.வானமாமலையின் "பூமியை வாழ்த்தும் பொங்கல் விழா' பொங்க
லோடு தொடர்புபடும் பாவை நோன்பு,
கரவைக் கூத்து, குரவைக் கூத்து, வள்ளைக் கூத்து என்பவை குறித்தும்
கட்டுரை பேசுகின்றது.
கவிதா அரங்க ஆற்றுகையாக்கப் பட்ட சடாகோபனின் 'நானுமோர் களவோ? கோள மயமாக்கலின் நய வஞ்சகத் தன்மைகளைப் புட்டுக் காட்டு
கிறது. ஆற்றுகையை நேரில் கண்டு
களிக்காதோருக்கு கவிதா அதிர்வுகளை உறைக்க வைக்கின்றது.
இப்படியாக எழுத்துருக்கள் அனைத்தும் கருத்தாழமும் அடர்த்தியும் கொண்டவையாக வாசகனின் கருத்து
நிலையைச் சுரண்டிப் பார்க்கின்றன.
பேரா க.கைலாசபதி இன் 24ஆம் அகவை நினைவு விழா சம்பந்தமான தகவல் படங்கள் - தாயகம் 51 இதழ் பற்றிய 'வாசகர் அநுபவ அரங்கம்’ தகவல் படம் - அண்மையில் தமிழ்ச் சமூகத்திடமிருந்து பிரியாவிடை பெற்ற படைப்பாளிகளான மறுமலர்ச்சி வரதர், கவிஞர் சு.வில்வரத்தினம், மலையக மூத்த கவிஞர் தமிழோவியன் ஆகியோர் சம்பந்தமான புகைப்படங்களோடான குறிப்புகள் என்பனவும் காணப்படு
கின்றன.
ஒவியர் ஆ.இராசையாவின் முகப்பு ஒவியம் இன்றைய ஈழத் தமிழ் பிர தேசங்களின் இயல்பு நிலையை உயிர்ப் போடு உணர்த்துகின்றது. மதிபுஷ்பா வின், ஆக்கங்களின் விபரப் படங்கள் சிறப்பாகப் பதிவாகி இருக்கின்றன. பக் கங்கள் 46இலும் 48இலும் ஒரே ஓவியம் காணப்படுகிறது!
ஆக, இத் தாயகம்" இதழ் பல வகைகளில் இன்றைய சஞ்சிகைகளின் போக்கிலிருந்து விலகித் தனித்துவமாக நிமிர்ந்து நிற்கிறது! இதே நிலை தொடர்ந்தும் பேணப்படுமா? *
மல்லிகை மே 2007 & 34

ரான் இரசித்த ரான்ஞ் திரைப்ULங்கள்
- பிரகலாத ஆனந்த்
சினிமா என்ற ஊடகம் மனதைத் தொட்டு இலகுவில் ஈர்ப்பது போல வேறு வடிவங்களால் முடிவதில்லை என்பதைச் சான்று பகர்வதாக இன்றைய தலைமுறையினர் சினிமாவில் மூழ்கிப் போயிருப்பதை உதாரணமாகக் கூறலாம். கட்புலனுாடாக இலகுவில் மனத்திரையில் பதிந்து அதிர்வுகளை ஏற்படுத்தும் சினிமா மூலம் உயர் கலா ரசனையையும், நல்ல கருத்துக்களையும் சமூகத்திற்குக் கொடுக்க முடியும். எனினும் இன்றைய தமிழ்ச் சினிமா தடம் புரண்டு போய் சமூகச் சீரழிவுகளுக்கு இட்டுச் செல்வது மனவேதனையை அளிக்கிறது. அந்த நாளில் உப்புச்சப்பற்ற எம்.ஜி.ஆர். படங்கள் கூட சில நல்ல கருத்துக்களைச் சமூகத்திற்குக் கூறியது. ஆனால் இன்று வெறும் வன் முறையும், டப்பாங்குத்து நடனமும், காதல் மாயையுமாகத் தமிழ்ச் சினிமா மாறிவிட்டது. முக்கால் நூற்றாண்டு தமிழ்பட வரலாற்றில் அபூர்வமாகவே சில நல்ல படங்கள் வெளி யாகியுள்ளன. பொதுவாக உயரிய கலைப்படங்கள் தமிழ் ரசிகர்களால் புறம் தள்ளப்படுவது கவலையளிக்கிறது. தேசிய தமிழ் சினிமா என்றதும் எமது நாட்டவர் முகத்தைத் திருப்புவது இன்னொரு சாபக்கேடு.
அண்மையில் நான் பார்த்த திரைப்படங்களில் ஒரளவாவது என் மனதைக் கவர்ந்த நான்கு படங்கள் பற்றி அளவளாவுவதே இக்கட்டுரையின் நோக்கம். இவற்றில் மண், சங்காரா என்ற இரண்டு படங்கள் ஈழப் படைப்புகள். தவமாய்த் தவமிருந்து, வெயில் என்ற இரு இந்தியப் படங்கள்.
முதலாவதாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியிடப்பட்ட ஈழத்தவர்களின் படைப்பான "மண் திரைப்படம், பிறநாடுகளை விட, இலங்கையில் மண் கவ்வியமை சோகமான நிகழ்வாகும். மலையக மக்கள் சிலரின் அபரிதமான அர்த்தமற்ற எதிர்ப்பும், வழமை போல மக்கள் ஆதரவின்மையும் இப்படத்தை வியாபார ரீதியில் பின்தள்ளிய போதிலும், இத்திரைப்படம் ஈழத் திரைப்பட வரலாற்றிலே ஒரு முன்னேற்றகரமான
மல்லிகை மே 2007 * 35

Page 20
படைப்பு என்பதை நிராகரிக்க முடியாது. சிலர் குறிப்பிடுவது போல் இப்படம் மலை
யக மக்களை இழிவுபடுத்தவில்லை.
இழிவுபட்டிருந்த மலையக மக்களின்
எழுச்சியைக் கூறுகிறது என்றால் மிகை
யாகாது. வடபுலத்தவர் தயாரித்தமையி னாலும், மலைய மக்களை இழிவான வார்த்தைகளால் விழித்தமையாலும், இது மலையக மக்களுக்கு எதிரான படம் என்ற முடிவு அவசரமானதும், மேலோட்டமான தும், விவேகமற்றதுமாகும், அப்படிப் பார்த் தால் டானியல், ஜீவா போன்றோரின் கதை கள் தலித்துகளை இழிவுபடுத்துகின் றனவா? அண்மையில் நான் 'கள்ளத்
தோணி என்ற சிறுகதையை எழுதி
யிருந்தேன். இந்த சிறுகதை மலைய
மக்களை சிறப்பிக்கின்றதேயன்றி இழிவு
படுத்திடவில்லை. கள்ளத்தோணி என்ற பதம் ஒரு காலகட்டத்தில் இழிவாகப் பயன் படுத்தப்பட்ட வார்த்தைகள்தான். எனது சிறுகதையிலே, அன்று களவாகக் கடல் மார்க்கமாக தொழில் தேடி இந்தியா விலிருந்து மலையகத்தோர் வந்தது போல
இன்று களவாக யுத்தத்திற்குப் பயந்து
கடல் தாண்டிப் போகும் ஈழத் தமிழர் நிலையை ஒப்பிட்டு எழுதியிருந்தேன். மண் திரைப் படத்திலும் மகன் பாத்திரம் மீள வந்து தந்தையைப் பழிவாங்குவதன் மூலம் மலையகத்தவர்கள் உயர்த்தப்படு கிறார்கள்:
இப்பிரச்சினைகள் ஒரு புறமிருக்க, தொழில் நுட்பம் மற்றும் படப்பிடிப்பு, கதை நகரும் முறை என 'மண் திரைப்படம் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளதுடன், ஏறுமுக வளர்ச்சிக்கு வழியும் திறந்துள்ளது
6T60Tsomb.
எனது பார்வையில் பட்ட அடுத்த சிறந்த கலைப்படைப்பு சங்கார, ஒரு சிங்களப் படமெனினும், படம் முழுவதும் பேசப்படும் வசனங்கள் ஒரு சிறுகதை அளவுகூட இல்லை. ஒன்றரை மணித்தி யாலம் நகரும் இத்திரைப்படத்துடன் நாம் முழுமையாக ஒன்றிப் போகிறோம் என்றால் அது மிகையாகாது. சர்வதேச விருது வென்ற இப்படம் பிரசன்ன ஜெயக்கொடி யின் நெறியாள்கையில் உருவான அற்புத மான கலைப்படம். பாடல்களோ, நடனங் களோ, சண்டைக் காட்சிகளோ, மிகை யான காதல் காட்சிகளோ, வசனங்களோ இல்லாமல் எளிமையான காட்சிப்படுத்தல் மூலம் மிகக் குறைந்த செலவில், விரலுக் குள் அடங்கும் நடிகர்களின் துணையோடு ஒர் அற்புதமான கலைப் படைப்பை பிரசன்ன தந்துள்ளார். எழில் கொஞ்சும் கிழக்கிலங்கையில் கரும்புத் தோட்டப் பிரதேச விகாரை ஒன்றில் முழுவதுமாக நடக்கும் மனிதர்களின் பாலியல் சலனம் பற்றிய கதை. துறவிகளும் மனிதர்களே. எனினும் அவர்கள் உணர்ச்சிகளை வென்று துறவறம் பூண்டுள்ளமையை இப் படக்கதை இயல்பாக ஒளிவு மறைவின்றி, ஆப்ாசமின்றி கூறுகிறது. ஒரு முக்கிய பாத் திரம் படம் முழுவதும் வசனமே பேச வில்லை.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற துறவி ஆனந்த தேரர் தனது உதவியாள ருடன் கரும்புச் சேனை நிறைந்த அந்த கிராமத்திற்கு வந்து இறங்குவதுடன் தொடங்கும் கதை, விகாரை புனருத் தாரணம் நிறைவுறுவதுடன் நிறைவடை கிறது. படம் பார்த்து விட்டு எழுந்து வந்த
மல்லிகை மே 2007 & 36

பின்னரும் நீண்ட நேரம் எம் மனது அதிலேயே மூழ்கிக் கிடக்கிறது. இவ்விரு இளம் கதாபாத்திரங்களுடன் விகாரதி பதியான மூத்த தேரர், அருகாமையிலுள்ள வீட்டின் இளம் பெண் ஆகிய நான்கு பாத்திரங்களைச் சுற்றியே கதை நகர்கிறது. சிங்கள மக்களின் கிராமிய கலாசாரமும், விகாரையுடன் அவர்களுக்கிருக்கும் உற வும் அழகாக வார்க்கப்பட்டுள்ளன.
சிற்பங்களையும், சிலைகளையும் அழிவிலிருந்து மீட்டுப் புனருத்தாரணம் செய்ய வரும் துறவி, சித்திரங்களிலுள்ள பெண்களின் மூலைகளில் லயிப்பதும், ஒரு சிலையில் உடைந்த கொங்கையொன்றை பிடித்துப் பார்த்தபடி சலனமுறுகையில் ஜன்னலூடே இரு இளம் பெண்கள் இக் காட்சியைக் கண்டு சிரித்துவிட்டு நகர்வ தும், இளம் பெண்ணின் தலையில் அணி யும் கிளிப்பை இளந்துறவி எடுத்து அவளிடம் கொடுக்காமல் பத்திரமாக வைத் திருப்பதும் போன்ற பல இயல்பான காட்சிகள் மனதை வருடிச் செல்கின்றன. தண்ணிர்த் தொட்டியில் துளிகள் விழுந்து
கலங்கும் நீர் மூலம் மனச் சலனத்தைக்
காட்டுவது, பாலூட்டும் தாய் தனது மார்
பகங்களிலிருந்து பால் எடுத்து பெயின்ற்
பட்ட துறவியின் கண்களுக்கு கொடுப்
பதற்கு மறைவிலிருந்து எடுப்பதை மறை விலிருந்து பார்க்கும் துறவியின் உதவி
யாளன். அவன் அயல்வீட்டு இளம் பெண் மீது கொள்ளும் சலனம். இப்படி பல காட்சிப்படுத்தல்கள்.
ஆம்! இலங்கையின் சிங்களப் படங்கள் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் காலத்தி
லிருந்தே சிகரத்தை நோக்கி நகர்வதை அவ்வப்போது தரிசிக்க முடிகிறது. இப்போது சங்காரா!
அடுத்து சேரனின் 'தவமாய் தவ மிருந்து' படத்திற்கு வருவோம். பாரதி திரைப்படம் போலவே இதுவும் இலங்கை யில் திரையிடப்படவில்லை என்பது ஏமாற்றமே. (நீண்ட இடைவெளிக்குப் இப்போதுதான் திரைக்கு வந்துள்ளது.) இத்திரைப்படத்தின் கதை யில் புதுமை எதுவும் இல்லையெனினும்,
SesöT 6oT fir
காலம் காலமாகத் தொடரும் முதியோர் பிரச்சினையை வெகு உருக்கமாக அணு கியுள்ள கதை. எனது தீர்க்க சுமங்கலி கதையின் பேசு பொருளும், கதை வடிவம் கூட இதை ஒத்ததுதான். பொதுவாகவே சேரனின் படங்கள் மனதோடு ஒன்ற வைக்கும் எமது நாளாந்த பிரச்சினைகள் பலவற்றை நாம் தரிசிப்பது போலவே உணர வைத்து வெற்றி கொள்வது சேரனின் திறமை என்பதை அவரது முன்னைய படங்களிலும் நாம் தரிசித் திருக்கிறோம். அந்த வகையில் இந்தத் திரைப்படமும் மனதோடு கலந்து வெற்றி கொள்கிறது. வழமையான தமிழ்ச் சினிமா பாணியிலிருந்து முற்று முழுதாக விடுபடா விட்டாலும்; வழக்கமான மரபின் மீதான பல மறுதலிப்புகள் மூலம் இத்திரைப்படம் மேல் நிலையை அடைகிறது. கதைக் கரு சாதாரணமாக இருந்தாலும் அதைச் சொன்ன முறையும், கதை நடக்கும் கிராமிய களமும், கதாபாத்திரங்களும், உணர்ச்சிகரமான நடிப்பும் மனதைக் கசிந் துருக வைக்கிறது. முற்று முழுதான கலைப் படைப்பிலிருந்து வேறுபட்டிருந்
மல்லிகை மே 2007 * 37

Page 21
தாலும் பார்க்கும் எவரையும் ஈர்ப்பதுடன், படம் முடிந்து வெளியே வந்த பின்னரும் அதன் நினைவிலேயே எம்மைத் தரித் திருக்க வைக்கிறது. இப்படியான பல கதைகள், திரைப்படங்கள் வந்தும்கூட குருத்தோலைகள், காவோலைகளைப் புறக்கணிப்பதை நிறுத்திட முடிய வில்லையே ராஜ்கிரனின் அற்புதமான நடிப்பும், சேரனினதும், தாய்ப் பாத்திரத்
தினதும் இயல்பான உணர்வு வெளிக்
காட்டல்களும் சிறப்பாகக் கூறக் கூடியவை. கதையாடல், ஒலி, ஒளி, காட்சிப்படுத்தல் என எல்லாம் நன்றாக இருந்தாலும், படம் சற்று நீண்டுவிட்டது. (எனினும் சலிக்கவில்லை.)
அடுத்த படம் வெயில். சங்கரின் தயாரிப்பில் பெரிதும் பேசப்பட்ட "காதல்" திரைப்படம்;"சமூக மட்டத்தில் ஏற்படுத்திய அதிர்வை இத்திரைப்படமும் ஏற்படுத்தி யுள்ளது. சின்னஞ்சிறு பராயத்தில் தண்டிக் கப்படும் ஒருவனின் வாழ்வின் திசை மாறலையும், ஒரு மனிதன் சமூகத்தால் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் வலியை யும், வேதனையையும் ஒரு அழகாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட களத்தில் சொல்லப் பட்டுள்ள வித்தியாசமான படம். இத்திரைப் படமும் தமிழ்ச் சினிமாவின் வழமையான வார்ப்பின் கூறுகளை மறுதலித்து நிற் கிறது. மசாலாக் காட்சிகளை இயலுமான வரை தவிர்த்துள்ளமை, தமிழ் ரசிகனை சரியான திசையில் அழைத்துச் செல்ல ஒரு பாதையைத் திறந்து விட்டுள்ளது. ஒரு மனிதனின் யதார்த்த வாழ்வின் முன்பாக, அவனது இயலாத் தன்மையையும், அதனால் அவனடையும் குழப்பங்
களையும், குற்ற உணர்வுகளையும், கழிவிரக்கத்தையும் முக்கியப் பத்திரமான பசுபதியூடாகச் சொல்லும் கதை.
வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், வாழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் விதித்திருக்கும் நிஜ தரிசனத்தை அழ காகச் சொல்லி இயக்குநர் வெற்றி இத்திரைப்படத்திலும் தொழில்நுட்ப அம்சங்கள் நன்றாக அமைந்
யீட்டியுள்ளார்.
துள்ளன. கமரா, ஒளிப்பதிவு, ஒலி - ஒலிப்பதிவு என்பன நேர்த்தியாக வந் துள்ளன. பரத், பசுபதி ஆகியோரின் நடிப்பு இயல்பாக, உணர்வுகளை அழகாகச் சித்தரிப்பதாக அமைந்துள்ளது.
வெயில், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களை அவை வழமையான டப்பாங் குத்து, அடிதடி அராஜகம், தனிமனித ஹிரோயிசம் எதுவும் பெரிதாக இல்லா விட்டாலும், இரசிகர்கள் பெரிதும் வரலாற்று வெற்றியடைய வைத்துள்ளமையை நாம் கவனிக்க வேண்டும். இனிமேலும் ரசிகர் களுக்காகத்தான் வன்முறை, அதீத காதல் பிரமை கனவுக் காட்சிகள், குலுக்கல் பாட்டு, தனிமனித வீரசாகசம் என்பவற்றை முன்னிலைப்படுத்தி பட மெடுக்கிறோம் என்று தமிழ்ப் படத் துறையினர் ஏமாற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தமிழ் இரசிகர்களை ஒரு மோசமான மாயைக்குள் சிக்க வைத் திருக்கும் இவர்கள் திருந்துவார்களா? திருந்த வேண்டும். இதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் *
மல்லிகை மே 2007 & 38

“நிம்மதி. ஹோ. நிம்மதி."
இதுவொன்றும் கவிதையல்ல! நமது தமிழ்த் தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகமொன்றின் தலைப்புப்பாடல்.
காலை ஒன்பது, பத்து மணியானதும் நிம்மதியாகப் பெண்கள் தங்கள் கடமை களைச் செய்யவிடாது அன்றாட குடும்பங்களின் நிம்மதியைத் தொலைக்கும் ஒரு மெகா சீரியலின் பெயர்தான் நிம்மதி. காலையில் வேலைக்குப் புறப்படும் கணவன் மார்களை குதூகலமாக அனுப்பி வைக்கக்கூட நேரம் இன்றி தவித்துப் போகும் பெண்களில் சிலர், ‘நிம்மதி”யைப் பார்த்துவிட்டு குடும்பத்தில் நிம்மதியிழக்கும் சிக்கலான சூழ்நிலைக்கும் ஆட்படுகின்றனர். இது பொய்யில்லை. பெண்கள் இதில் பெரிதும் ஆர்வம் காட்டி ரஸானுபவத்தை உச்சக் கொம்பில் ஏற்றி வைத்து, தற் போதைய மின்சார கட்டண உயர்வையும் கூட பொருட்படுத்தாது தமது வாழ்வின் நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்து எங்கோ ஒரு குறுகிய கூட்டுக்குள் அடைந்து கொள்கின்றனர் என்பதே உண்மை. இதனால் வெளிமுகப் பண்பாடுகள், உறவினர் சந்திப்புகள், உபசரிப்புகள் என்பன குறைந்து சதாவும் தொலைக்காட்சிக் கோடு களுக்கு முன்னால் குந்திக் கொண்டிருப்பதால் தொலைத்த நேரங்களே அதிகமா கின்றது. சேமித்த நேரங்கள் சாப்பிடுவதற்கும், உறங்குவதற்கும் போதுமாகிறது. சிலருக்கு அதுவும் போதாமல் இருக்கின்றது. இரவிலும் தூங்க விடமாட்டோம் என்பதைப் போல் கேபிள் சனல்களின் 24மணி நேர சேவை அத்தகையது.
புத்தகப் uർക്കതുനut புறeடுவோம்.
- ஏ.எஸ்.எம்.நவாஸ்
தமிழகத்தின் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் அந்நாடகங்களின் தலைப்பு களுக்கேற்ற வகையில் தொடர்புபட்டதாக உள்ளனவா என்றால் அப்படியொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ‘நிம்மதி" என்னும் நாடகத்தின் நாயகனின் தன்மைகூட நிம்மதியற்ற நிலையொன்றையே சித்தரிக்கிறது. சதாவும் அழுகை, குமுறல், பிரிவு என்றே இந்நாடகம் தொடர்வதாக ஒரளவு அறிய முடிகிறது.
மல்லிகை மே 2007 & 39

Page 22
காலையிலேயே ஒரு வீட்டில் அழுகையா? அதன் பிறகு ஒளிபரப்
பாகும் 'ஆனந்தம் தொடரும் அப்
படியே! அழுகை, அழுகை, அழுகை, கடைசி வரைக்கும் இந்த நாயகிக்கு
எப்போதுதான் ஆனந்தம் கிட்டப் போகிறதோ?
பெண்ணுக்குப் பெண் சூழ்ச்சி புரி வதை இந்நாடகம் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. தவிர, இதனை ரசிக்கும் பெண்களும் கூட அத்தகைய ஒரு நிலைக்குத் தம்மை மாற்றிக் கொள்ளும் நிலைகூட வீடுகளில் ஏற்படலாம்! அதற் கான விலையே இவ்வகையான தரமற்ற சினிமாப் பாங்கான நாடகங்கள். சுமார் 3 1/2 வருடங்களாக ஒளிபரப்பாகி பெண்கள் குலத்தை பைத்தியமாக்கி தொடர்ந்தும் தொடரும் நிலையில் உள்ள ‘கோலங்களைப் பார்த்தால் பெண்கள் வீட்டை விட்டு ஒடுவதும், சிறை செல்வதும், மாமியார் - மரு மகளுடன் சண்டை போடுவதும், கண வன் மனைவி பழி தீர்த்துக் கொள் வதுமாக ஏட்டிக்குப் போட்டியான இந் தக் கதைகூட மாலை நேரத்தில் அழுது அழுது மாய்கிறது. ஒரு வீட்டில் மிக முக்கிய நேரங்களாகக் கணிக்கப்படுவது தான் காலையும், தாகும். காலை நேரத்தில் முன்பெல்லாம் தமிழ்ப் பெண்கள் சாம்பிராணி புகைப்
மாலையும் என்ப
பார்கள். சாமி கும்பிடுவார்கள். கோலம் போடுவார்கள். மஞ்சள் கலந்த நீரை வாசலில் தெளிப்பார்கள். இஸ்லாமிய இல்லங்களில் ஒதல், பாத்திஹா மணக்கும். ஊதுபத்தி மணம்
தொழுகை,
வீசும். சலவாத்தும், முக்காடுமாகத் தம்
பணிகளைத் திருந்தச் செய்வார்கள். அந்த வீடுகளில் ஆனந்தமும் அதிகரித் துக் காணப்பட்டது. மாலைப் பொழு தும் அவ்வாறே ! மணக்கும் சாம் பிராணிப் புகைதான் எல்லா இல்லங் களிலும் கலக்கும். பொதுவாக எல்லா இனத்தவர்க்கும் வணக்க நேரமாகக் கருதப்படும் சுகமான நேரம் மாலை
WM நேரம், வானொலிப் பெட்டி மட்டுமே
வீடுகளில் இருந்த அக்காலத்தில் நிகழ்ந் தவை இவை. அன்று ஒரு மயில் வாகனம், பீ.எச், கே.எஸ்.ராஜா போன் றவர் குரல்கள் மட்டுமே வீரியமாக ஒலிக்கும். அறிவூடகமாக விளங்கியது
அன்றைய வானொலியும், நிகழ்ச்சி
களும். தொலைபேசித் தொல்லைகள்
இருக்கவில்லை. காலைச் செய்திகளின் பின்னர் ஈழத்துப் பாடல்கள் காதுகளில் கலக்கும். கேட்டதும் இனிக்கும்.
இன்று அவையனைத்தும் மாறி, வழக்கங்கள் வழி தவறி, அழுகை
வாசலை மட்டுமே திறக்கிறது. மாலை
நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் 'கோலங்கள் இவ்வகையான நாடக மாகும். நாடகமென்றால் நாடகத் தன்மை இல்லை. வெறும் நடிப்பு மாத்திரமே இருக்கிறது. காட்சிகளில் கூட ஏதோ ஒரு பொய் அழகு பூசப் பட்டிருப்பது புலப்படும். ஏழையான ஒரு கதாபாத்திர முகம் நாகரிகமான அலங்கரிப்புகளுடன், அசல் மேக்கப் புடன் தோற்றமளிக்கின்றது. அந்த வகையில் சிங்கள தொடர் நாடகங்கள் சில இந்த வகையிலிருந்து விலகி யதார்த்த அசைவுக்கு இடமளிக்கிறது. பேசப்படும் விதம், கிராமியத் தன்மை,
மல்லிகை மே 2007 & 40

உலவும் பாத்திரங்கள் மிக உன்னதமாக எடுத்துக் காட்டப்படுகிறது. கலை மிளிர் வுத் தன்மையைச் சிங்களத் தொடர் நாடகங்கள் சிலவற்றில் காணலாம்! தமிழகத்து நாடகங்கள் இதற்கு விதி
விலக்கு. நேரத்தை வீணடிக்கும் வாணிப
நோக்குடன் பணம் சம்பாதிக்கும் பணி யில் இத்தகைய சினிமாத்தனமான நாட கங்கள் உருவாக்கம் பெறுகிறது. அந்த வகையில் திருமுருகனின் 'மெட்டிஒலி குடும்பப் பாங்கான சற்று யதார்த்தம் மின்னிய தொடர் என்பதால் இல்லத் தரசிகளைக் கவர்ந்ததில் ஆச்சரிய மில்லைதான். அதேநேரம் விளம்பர அனுசரணையாளர்களைத் திருப்தி கொள்ள வைக்கும் வகையில் மக்களின் நேரங்களைச் சுரண்டும் கைங்கரியமும் இந்நாடகங்களை ஒளிபரப்புச் செய்யும் நிறுவனங்களால் நடைபெறுகிறது. தொடர்ந்து இவ்விதமான தொடர்களை, வீட்டுப் பெண்களை விடாமல் பார்க்கச் செய்ய வேண்டும் என்ற குறுகிய நோக் கில் சில விளம்பரத் தந்திரங்களையும் இந்நிறுவனங்கள் செய்கின்றன.
தங்கக் காலை” என்று பரிசு அறி விப்புச் செய்து, இந்நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களை விவரித்து இவை ஏன்? எதற்காக? என்ற கேள்விகளைக் குவித்துக் கண்டுபிடித்துப் பதில் தருப வர்களுக்கு தங்க நாணயங்கள் கொடுப் பதாக ஆசை காட்டும் யுத்தியுடன் பெண்கள் மத்தியில் மூளைச்சலவை புரி வதையும், பெண்களுக்கு வேறு வேலை யே வேண்டாம். தங்கக் காலைதான் முக்கியம் என்று எடுத்துக் காட்டு கிறதோ? இதனால் தங்கள் காளை"
களின் பணிகளைக்கூட நாடகம் ரசிக் கும் பத்தினிகளால் ஒழுங்காகச் செய்ய முடிவதில்லை தான். வது? இது கோலங்களில் விழுந்த அலங் கோலம் என்றே உரைக்க எண்ணுகிறது
என்ன சொல்
மனம்,
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு மக்களிடையே இருந்த வாசிப்புப் பழக்கம் இன்று அற்றுப்போய்விட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தங்கள் கண்களை விற்ற நிலையில் ஒருவித மோகத் தீனி போடப்பட்டிருக் கிறது. இதில் பெரிதும் மாட்டிக் கொண் டவர்கள் பெண்களே! கதைப் புத்தகம், கதைப்புத்தகம் என்று தேடித் தேடி வாசித்த ரசனை மிகு பெண்களை இன்று காண்பதற்கில்லை.
சுஜாதா, ராஜேந்திரகுமார், ராஜேஷ் குமார், புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பட்டுக்கோட்டை பிரபாகர், ரமணிச் சந்திரன் போன்றவர்களின் குடும்ப, மர்ம நாவல்களை விரும்பி வாசித்த வாசக உள்ளங்கள் அந்த அரிய சுகானுப வத்தை விட்டும் விலகிய ஒரு சூழலில் காட்சிப் படைப்புகளுடன் ஒன்றியுள் ளமை வருந்தத்தக்கது. வாசிப்பும், எழுத்தும் ஒரு மனிதனை முழுமை யாக்குகிறது என்பது மட்டுமல்ல அதிக ஆயுளுடன் வாழவும் செய்கிறது என்ற மேல்நாட்டு ஆய்வாளரின் கருத்தை நாம் அலட்சியம் செய்கிறோமோ எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது. வாசிப்பு உலகமானது சுகமான ஒரு தனி உலகம் என்று அதைச் சுகித்து உணர்ந்தவர்களுக் குத் தெரியும். ஒளிக்காட்சியூடாகச் செலுத்தப்படும் படைப்புகள் விரிந்த
மல்லிகை மே 2007 & 41

Page 23
அறிவைத் தராது என்ற விளக்கத்தை அறிய இன்னும் சிலகாலம் பிடிக்கலாம்!
உலகிலேயே அதிக நாவல்கள் எழுதியவராகப் பெயர் பெற்றவர் தமிழக எழுத்தாளர் ராஜேஷ்குமார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல் கள் எழுதியுள்ளார். 1978களில் சாவி, ராணி, மாலைமலர் போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்த ராஜேஷ்குமார் இனிய நந்தவனம்" என்ற தமிழகத்து சிற்றி தழில் கூறியிருப்பதாவது - "சினிமா உலகில் மலிந்திருக்கிற பொய்யும், புரட் டும் என்னை அதிர வைத்த விஷயங் கள்” என்று ஆரம்பித்து அவர் தொட ரும்போது - "தொலைக்காட்சி சேனல் கள் பெருகப் பெருக வாசிப்பு ஆர்வம்
சுருங்கி வருகிறது. வார இதழ்களில்
மூன்று, நான்கு தொடர்கதைகள் கூட வெள்ளிவந்தன. ஆனால் இன்று அவை யெல்லாம் காணாமல் போய்விட்டன. டி.வி.யில் மாலை நேரங்களில் எந்தச்
சேனலைத் திருப்பினாலும் மெகா சீரி யல்களே ஒடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் குழந்தைகளுக்கான மாத இதழ்களான அம்புலிமாமா, ரத்னபாலா, பூந்தளிர் புத்தகங்கள் வெளிவரும் சுவடே தெரியவில்லை. டி.வி.யிலேயே நிகழ்ச்சிகள் வருவதால் புத்தகங்கள் தேவையில்லாமல் ஆகிவிட்டன. நூல் வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக் குச் சொல்லிக் கொடுக்க பெரியவர் களுக்கும் நேரமில்லை. இதை ஆரோக் கியமான வளர்ச்சியாக சொல்ல முடி யாது!" என்கிறார். உண்மையில் தமிழ கத்தை மட்டுமன்றி நமது நாட்டையும் இந்த மெகா சீரியல்கள் தமிழ் வாசிப்பு பழக்கத்தை தகர்த்துக் கொண்டே வரு கிறது. நாம் ஓரளவுக்கேனும் புத்தக
எழுத்துக்களுடனும் தொடர்பு கொண்டு
அறிவுசார் சிந்தனைகளைத் திரட்டு வோமாக! அதற்காக வேனும் புத்தகப் பக்கங்களைப் புரட்டுவோமாக! *
RŞI
A. Şზ
மல்லிகை மே 2007 & 42
 

சிங்களத்தில் : உபாலி வணிகசூரிய
தர்தை UITS இUாற்.ெ!
தமிழில் திக்குவல்லை ஸப்வான்
பிரதான வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில், இயந்திரம் மூலமாக மூச்சை மேலே கீழே விடும் அப்பாவை மிகவும் சோகம் ததும்ப நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரின் முகம் தொய்ந்து இழுபட்டுப் போய்க் கிடந்தது. கன்னங்கள் குழி விழுந்திருந்தன. அந்த சுருட்டை விழுந்த தலைமயிருக்குப் பதிலாக, நரைத்துப் போன சில மயிர்கள் மாத்திரம் ஆங்காங்கே எஞ்சிக் கிடந்தன.
சில மாதங்கள் புற்றுநோய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்து, பிறகு மாரடைப்பு ஏற்பட, மீண்டும் பிரதான வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். அந்தச் செய்தியை அம்மா எனக்கு அறிவித்த போதிலும், அப்பாவைப் பார்க்கச் செல்லும் அளவுக்குத் துணிச்சல் பிறக்கவில்லை. அவரின் நிலைமை அபாயக் கட்டத்தை அடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த செய்தியைக் கேள்விப்பட்ட பிறகே, இன்று நான் பmப்பட்டு வந்தேன்.
அப்பாவின் தொண்டைக் குழியிலிருந்து "கர்கர்" என்ற கமறல் கிளம்பிக் கொண்டி ருந்தது. அவர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டார் என்பதை அது உணர்த்தியது. ஒரு வீச்சான கண்ணிர்க் கொத்து கண்களிலிருந்து சிதறியது. அதனை மறைப்பதற்கு முயற்சித்தேன்.
"லவறிரு. என்ன இந்தப் பக்கம்..?"
யாரோ எனது தோளில் கையை வைப்பதை உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினேன். கையில் ‘ஸ்டதெஸ்கோப்புடன் பாடசாலை நண்பன் சந்தன ஆச்சரியம் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தான். எனது உடம்பு சில்லிட்டு, கால்கள் செயலிழந்தது போன்ற உணர்வு. நான் வெலவெலத்துப் போனேன்.
இவர்தான் எனது அன்பு அப்பா என்று இவனுக்குச் சொல்ல வேண்டி ஏற்படுமோ? அப்பிடின்னா இவ்வளவு காலமும் மறைத்து வைத்த இரகசியம் அப்பாவின் மரணப் படுக்கையில் வெளிப்படப் போகிறதோ?
மல்லிகை மே 2007 & 4

Page 24
நான் முகம் வெளிறிப் போனேன்.
"அவர் உங்கட அப்பான்னு நெனக் கிறன். அவரோட உயிர் கடவுள்ட கையில தான் இருக்கு. வுற்ம் கவலப்படாதீங்க. வாழ்க்கைன்னா அப்பிடித்தான். மனச தேற்றிக்குங்க. அப்போ லஹிரு நான் கொஞ்சம் அவசரமா வெளியில போகனும் வரட்டுமா..?”
சந்தன கவலையுடன் சொல்லிக்
k
கொண்டிருந்தான்.
"சரி. சந்தன. போயிட்டு வாங்க."
நான் மெதுவாக வாயசைத்தேன். அவன் அவசரச் சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறும் வரை காத்திருந்த நான், ஆள் மறைந்ததும், குனிந்து அப்பாவின் முகத்தை யும், தலையையும் முத்தமிட்டேன். அவரிட மிருந்து விலகி, வைத்தியசாலைக்கு வெளியே நிறுத்தியிருந்த வாகனத்திற்கு அருகே வந்தேன்.
அப்பாவிடமிருந்து எழுந்த அந்த வாசனை நாற்பது வருடங்களுக்கு முந்திய கடந்த காலத்தை நோக்கி என்னை அழைத்துச் சென்றது.
அப்பா எங்களுக்காக எவ்வளவு கஷ்டப் பட்ட மனுஷன். எங்கள் பசியைத் தணிக்க, கற்பித்துப் பெரியவர்களாக்க என்னமாய் பாடு பட்டார்? நான் உய அரசாங்க அதிபராவ தற்கு, மூத்த தங்கை வழக்கறிஞராவதற்குக் காரணமே அப்பாவின் அந்த அயராத முயற்சியைத் தவிர வேறென்ன? சின்னத் தங்கை கூடக் காலா காலத்திற்கு முன்பே வீட்டை விட்டு ஓடிப் போய், களவில் திரு மணம் செய்யாமல் இருந்திருந்தால், அவ ளுக்கும் நல்ல காலம் பிறந்திருக்கும். கடித மொன்றை எழுதி வைத்துவிட்டு, அவள் ஓடிப்
போன அன்றைய நாள் அப்பா சாப்பிடாமல், குடிக்காமல் தனியே நின்று புலம்பிக் கொண் டிருந்தார். பல நாட்கள் செல்லும் வரை துக்கத்தை அடக்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்த விதம் இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம்.
அந்த நாட்களில் ஒரு வெள்ளைக் காற்சட்டையும், வேடிர்ட்டும் மாத்திரமே அப்பாவிடம் இருந்தது. மூன்று நாட்களுக்கு ஒரு தடவைதான் அதனைத் தோய்த்து உலர்த்துவார். துணி தோய்க்கிற நாளில் அம்மாவின் வேண்டுகோளின் படி அப்பா சற்று நேரகாலத்துடன் வீட்டுக்கு வருவார். மறுநாள் தாமதித்தே வீட்டிலிருந்து செல்வார்.
காற்சட்டையையும், வேடிர்ட்டையும் ஒழுங்காகத் தோய்த்து உலர்த்த முடியாத நாட்களில் ஈரத்துடன் அணிந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அரைகுறையாகக் காய்ந்த அந்த ஆடைகளிலிருந்து ஒருவித பூவடிண வாடை வீசும். மழைக் குணம் உள்ள நாட்களில் அப்பாவின் ஆடைகளை அம்மா அடுப்பில் காட்டி உலர்த்தி எடுக்கும் அந்தப் பிரயத்தனம் இன்றும் எனக்கு நன் றாக நினைவில் இருக்கிறது. அச்சந்தர்ப்பங் களில் அம்மாவின் கண்களிலிருங்க -- னிர் பெருவகைடுக்கக் காரணம் புகையின் நமைச்சலா? அல்லாவிட்டால் அப்பா மீது ஏற்பட்ட அனுதாபமா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அம்மாவிடம் கூட இரண்டே இரண்டு கவுண்கள்தான் இருந்தன. அதில்கூட ஆங் காங்கே ஒட்டுக்கள் காணப்பட்டன. அவசரப் பயணங்களின் போது சாரி, சட்டை தேவைப் பட்டால் அக்கம் பக்கத்தில் நெருங்கியவர் களிடம் அம்மா இரவல் கேட்பார்.
அந்நாட்களில் நாங்கள் ஜாளல பிரதே சத்திற்குப் பக்கத்தில்தான் குடியிருந்தோம்.
மல்லிகை மே 2007 ஜ் 44

அங்கே பன்றிக் கொட்டில்கள், கீரைப் பாத்தி கள் நிறையக் காணப்பட்டன. 'கொரியா" என்ற பெயரிலே நாம் வாழ்ந்த பகுதி பிரசித்த மாகியிருந்தது. அங்கே வாழ்ந்தவர்கள் கூலி வேலை, எடுபிடி வேலை என அன்றைய பொழுதை சமாளித்தார்கள். எல்லா இடங் களிலும் பன்றிகளின் நடமாட்டம் தென்பட்ட தால் சூழல் மொத்தமாக நாறிக் கிடந்தது. சிறுபிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப்பட் டார்கள். அதனால் பன்றி வளர்ப்போருக்" கும், குடியிருப்பாளருக்குமிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. அடிக்கடி பொலி ஸார் அங்கே வந்து போனார்கள்.
காலையிலேயே தொழிலுக்குப் போகும் அப்பா, கொரியாவை இருட்டுக் கப்பிக் கொண்ட பிறகே வீட்டுக்கு வருவார். இவர் தொழிலுக்காக வீட்டை விட்டுச் சென்றாலும், எங்கே போகிறார், என்ன தொழில் செய் கிறார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. அப்பாவின் தொழில் பற்றி அம்மாவிடம் பல தடவை கேட்டாலும், ஒழுங்காகப் பதில் கிடைப்பதில்லை. தேர்தல் இடாப்பினை, பாடசாலையில் கிடைக்கும் பலதரப்பட்ட படிவங்களை நிரப்பும் போது, 'அப்பாவின் தொழில்' என்ற இடத்தில் 'வியாபாரம்' எனக் குறிப்பிடும்படி அம்மா சொல்லுவாள்.
நாங்கள் வளர்ந்து ஆளாகும் வரை அப்பா ஒரு நாளாவது எங்களை பட்டினியில் போட்டதில்லை. எங்களுக்குச் சாப்பிடத் தந்து விட்டு அம்மாவும், அப்பாவும் பட்டினி கிடந்த தடவைகள் ஏராளம்.
நான் ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, கொழும்பு றோயல் கல்லூரிக்குத் தெரிவான நாளில் அப்பாவும், அம்மாவும் அளவு கடந்த மகிழ்ச் சியினால் திக்குமுக்காடிப் போனார்கள்.
"எங்கட முயற்சிக்குப் பலன் கெடைச் சிருக்கு. எப்படியாவது பிள்ளைகள படிக்க வைக்கணும். இன்னும் கொஞ்ச நாளைக் குத்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அப்புறம் பிள்ளைங்க எங்க ரெண்டு பேரை யும் உட்கார வெச்சி பார்த்துக்குவாங்க."
அன்று அப்பா என்னை முத்தமிட்ட படியே கூறினார். நான் கண்களில் நீர்மல்க அப்பாவைக் கட்டியனினத்தபடி நின்றேன். அவரது வியர்வை வாசனையில் எனது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெற்றது போன்ற உணர்வு. அந்த வாசனையினால் உத்வேகத்தோடு கூடிய ஆத்ம சக்தி எனக் குள் அதிகரித்தது.
றோயல் கல்லூரிக்குத் தெரிவான பிறகு எனக்குத் தேவையான ஆடை அணிகளை மகிழ்ச்சி பொங்க அப்பா கொண்டு வந்தார். அவரது கஷ்டம் பற்றி நன்கு அறிந்திருந்த நான், பாடசாலைக்குப் பஸ்ஸிலேயே செல்வ தாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் அப்பா அதற்குச் சம்மதிக்கவில்லை. கொழும்புப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகள் செல்லும் வேன் வண்டியொன்றை எனக்காக ஏற்பாடு செய்தார்.
அதிகாலையிலேயே எழுந்திருக்கும் அம்மா, அப்பாவுக்கும் எனக்கும் சேர்த்து இரண்டு சாப்பாட்டுப் பார்சல்களைக் கட்டித் தருவாள். என்னோடு சந்திவரை வரும் அப்பா, வேன் நிற்கும் இடத்தில் என்னை நிறுத்திவிட்டு, பஸ் தரிப்பிடத்திற்குச் செல் வார். எத்தனை பஸ் வந்தாலும், நான் வேனில் ஏறும் வரை அவர் ஏறமாட்டார். தான் இருக்கும் இடத்திலிருந்து நான் இருக் கும் பக்கத்தைப் பார்த்துக் கொண்டே இருப் பார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனது உள்ளம் பாசத்தினால் நிறைந்து போகும். கண்களில் நீர் பெருகும். அப்பா
மல்லிகை மே 2007 & 45

Page 25
என்ற வார்த்தைக்குச் சுத்தமான அர்த்த முள்ளவராக அவர் திகழ்ந்தார். வேன் வரும் வரையில் என்னோடு சேர்ந்து நிற்காமல், விலகி நின்று பஸ் தரிப்பிடத்தில் நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தமை
சிலவேளைகளில் எனக்குப் புரியாத புதிராக
இருக்கும்.
றோயல் கல்லூரிக்குச் செல்ல எனக் குத் தேவையான ஆடை அணிகளை வாங்க, அப்பா ஜாஎலச் சந்தியில் உள்ள தேங்காய் எண்ணெய் முதலாளியிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த விவகாரத்தைப் புதிய பாடசாலைக்குப் போய் ஆறுமாதங்கள் கழிந்த பிறகே நான் அறிந்து கொண்டேன். கடன் பணத்தைக் கேட்டு தேங்காய்
எண்ணெய் முதலாளி கடைக்குச் சிப்பந்தி
யின் கையில் ஒரு கடிதத் துண்டை அனுப்பி யிருந்தார்."
"சின்னவன் புலமைப் பரிசில் பரீட்சை யில் சித்தியடைந்து றோயல் கல்லூரிக்கு தெரிவானத்ாகச் சொன்ன ஒரே காரணத் திற்காகத்தான் வட்டியைக்கூடப் பார்க்கா மல் பணம் தந்தேன். ஒரு மாதத்தில திருப்பி தருவதாக வேறு சொன்னிர்கள். இப்போ ஆறு மாதம் கடந்து விட்டது. இந்த மாதம் கடைசியில பணம் கிடைத்தால் நல்லது."
கடிதத் துண்டில் அவ்வாறு குறிப்பிடப் பட்டிருந்தது.
புதிய பாடசாலையில் எனக்கு அறிமுக மான நண்பர்களில் அநேகர் உயர்தர, மத் தியதர வர்க்க குடும்பத்தினரின் பிள்ளைகள். அவர்களோடு பழக ஆரம்பத்தில் எனக்குள் கூச்சநாச்சம் இருந்தாலும், படிப்படியாக அது இல்லாமற் போயிற்று. ஆடை அணிகளி னால் ஏழ்மை மூடப்பட்டு இருந்தமையினால் எனது தகுதியையோ, வர்க்கத்தையோ எவ
ராலும் அறிந்து கொள்ள முடியாமற் போயிற்று. அத்தோடு எந்தச் சந்தர்ப்பத்திலும் நண்பர்களை வீட்டுக்கு வரும்படி நான் அழைப்பு விடுக்கவில்லை. குடியிருக்கும் பகுதி பற்றி மூச்சுவிடவில்லை.
‘என்றைக்காவது ஒருநாள் பெற் றோரை நல்ல முறையில் பராமரிக்க வேண் டும். அவர்கள் சுகமான, செளகரியமான வாழ்க்கை நடாத்த வசதி வாய்ப்புக்கள் அளிக்க வேண்டும்' என்ற ஒரே குறிக்கோள் எனது உள்ளத்தில் வேரூன்றிக் கிடந்தது. அதனால் மிகவும் பொறுமையுடனும், விவே கத்துடனும் கற்பதில் தீவிர கரிசனை காட்டினேன்.
நான் பயணம் செய்த பாடசாலை வேனின் "டயர் கண்வார்டு சந்திக்கருகில், தெவடமர பள்ளிவாசலுக்கு முன் வெடித்த நாளில்தான் எனது இதயத்தில் ஊன்றி யிருந்த அந்த உறுதி, அமைதியெல்லாமே முற்றாகச் சிதறிப் போனது. 'டயரை மாற்று வதற்காக ட்ரைவரின் வேண்டுகோளின் படி நாம் வண்டியிலிருந்து இறங்கினோம். வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்குச் சற்று அப் பால் மக்கள் கூடிநின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எமக் குத் தெரிந்தது. அத்தோடு ஒருவித தாள
லயத்துடன் அசையும் சலங்கைக் கோர்வை
யின் இனிமையான ஒசையும் கேட்டது.
"லஹறிலு. டயர் மாற்ற கொஞ்ச நேரம் எடுக்கும் போல இருக்கு. அதுவரையில நாங்க அங்க போய் என்ன் ST 6ঠাml LurrñruC3uITLontr?”
ஒரு நண்பனின் பலத்த வேண்டு
கோள். V−
“eġja G3LJmresnub...”
மல்லிகை மே 2007 & 46

மக்கள் கும்பலாய் நின்ற அந்த இடத்தை நோக்கி நண்பனோடு சென்றேன். சனத்தைக் போனோம். இவ்வளவு ஆர்வமாய் மக்கள் எதைத்தான் ரசிக்கிறார்கள்?' ஆவலாய் stillgG36OTITLB.
"நைஸ் விக்கிறவன்"
நண்பன் எனது காதுக்கருகில் மகிழ்ச்
சியோடு கூறினான். நான் மீண்டும் எட்டிப்
பார்த்தேன். நைஸ்காரனைக் கண்ட, அவன்
குரலைக் கேட்ட எனக்கு கண்களிரண்டை யும் நம்ப முடியவில்லை. எனது சர்வாங்க
மும் செயலிழந்தது போன்ற உணர்வு. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இரு கால்களும் வெடவெடத்தன. கண் கொட்டாமல் அந்தப் பக்கத்தையே மலங்க, மலங்கப் பார்த்தேன்.
பல வர்ண நிறங்களாலான ஆடை அணிந்து, தலையில் கிரீடமும் வைத்து, பாடலொன்றைப் பாடி ஆடி நடித்துக் கொண் டிருந்தார் அப்பா. அவரது கால்களில் சலங் கைக் கோர்வை கட்டப்பட்டிருந்தது. நிலத் தில் காலடி வைக்கும் பொழுது அதிலிருந்து இனிமையான ஓசை எழுந்தது. அவரது பக்கத்தே நைஸ் பெட்டி. பார்வையாளர்கள் அப்பாவைக் கிண்டல் செய்து குழப்பத் தொடங்கினார்கள். அவர் அதனை சிறிதும் சட்டை செய்யவில்லை.
ஒரு சில விநாடிகளில் நடிப்பதை நிறுத் திய அப்பா, கதையொன்றைச் சொல்லத் தொடங்கினார். அதில் நகைச்சுவையும், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தை களும் நிறைந்து கிடந்தன. அதைக் கேட்டுப் பார்வையாளர்கள் கெக்கலி போட்டுச் சிரித் தார்கள். அத்தோடு சிலர் அப்பாவிடம் நைஸ் விலைக்கு வாங்கினார்கள்.
கீறிக்கொண்டு முன்னே
நான் அப்பாவைப் பார்த்தேன். அவர் அணிந்திருந்த கிரீடத்தின் கீழாக வழியும் வியர் வைத் துளிகள் கன்னங்களில் கோடிட்டு ஓடின.
"லவுறிரு நைஸ் சாப்பிடுவமா?"
அருகில் நின்ற நண்பன் கேட்டான்.
“வேணாம் சுணங்கிட்டுது. இப்போ டயரை மாற்றி முடிச்சிருப்பாங்க. வா (3LT6 Jub...."
நான் திருதிருத்தவாறு சொன்னேன். எனது உதடுகள் அசைந்து துடிப்பது எனக்கே புரிந்தது. கண்களிலிருந்து வெளியேற முயற்சிக்கும் கண்ணிரை சிரமத் துடன் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றேன். தொடர்ந்தும் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தால் நினைவிழந்து சாய்ந்து விடுவேனோ என்ற பயத்தினால் நண்பனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேனுக்கருகில் வந்தேன். அச்சமயம் ட்ரை வர் டயரை மாற்றி முடிக்கும் கட்டத்தில் இருந்தார். நான் அருகே காணப்பட்ட மதி லில் சாய்ந்தேன். சலங்கையின் கதம்பமான ஒலி மிகத் துல்லியமாக நான் இருக்கும் இடத்திற்கும் கேட்டது.
அப்பாவைப் பற்றிய ஆழ்ந்த அனுதாப மும், கவலையும் எனக்குள் எழுந்தது. வியர்வை வழிந்தோட அவர் இவ்வளவு பாடு படுவது எங்கள் மூவரையும் பராமரிப்பதற் காக அல்லவா? அதனை நினைக்கும் போது வேதனை பல மடங்காக அதிகரித் தது. அதேவேளை பெரிதான வெட்கமும் என்னைத் தொற்றிக் கொண்டது. எனது அப்பா நைஸ் வியாபாரி என்ற சமாச்ச ாரத்தை வகுப்புப் பிள்ளைகள் அறிந்து கொண்டால் பெரிய வெட்கக்கேடு. பேசாமல் கிராமத்துப் பாடசாலையிலேயே இருந்திருந்
மல்லிகை மே 2007 ஜ் 47 !

Page 26
தால் ஒரு பிரச்சினையுமே இல்லை என்று மனம் எண்ணியது.
அன்று மாலை வீடு திரும்பிய நான் அப்பாவையே பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். சனங்களின் கேலி, சகித்துக் கொண்டு, எங்களை வாழ வைக்க அவர் செய்வது
கிண்டல்களைச்
சாமானியப்பட்ட செயலா? அப்பா அரச உடுப்போடு நடிப்பை வெளிப்படுத்திய விதம் எனக்குள் மேலோங்கித் தெரிந்தது.
"என்ன மகன்? ஒருநாளும் இல்லாமல் இன்றைக்கு வந்த நேரத்தில இருந்து என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிகே?"
அப்பா தோளில் கைவைத்தபோது நான் திடுக்கிட்டுக் கற்பனை உலகில் இருந்து விடுபட்டேன்.
“ஒன்றுமில்லை அப்பா.”
"இல்லாமல் இல்ல. ஏதோ ஒன்னு இருக்கு. ஏன் மகன் ஸ்கூல்ல ஏதாச்சும் பிரச்சினைகளா..?"
"இல்ல அப்பா."
'இல்லையென்றா பரவாயில்லை. எதையும் மனசுக்குள்ள வெச்சி மறைச்சிட்டு இருக்க வேணாம். ஏதாவது இருக்குன்னா கேளு. எனக்கிட்ட சொல்ல முடியலின்னா அம்மாக்கிட்ட சொல்லு." r
அப்பா மீது எழுந்த ஆழ்ந்த பாசத்தி னால் எனது கண்கள் நீரினால் நனைந்தன.
"அம்மா. நான் இன்றைக்கு அப்பா வக் கண்டன்...' இரவு படுக்கைக்குப் போகும் வேளையில் நான் அம்மாவிடம் சொன்னேன்.
“எங்கே..? அவள்மலைத்தபடி வினா எழுப்பினாள்.
"தெவட்டமர பள்ளிவாசலுக்கு அருகில நைஸ் விற்கிறாரு. வேன்ட டயர் பெச்சாகிப் பள்ளிக்கிட்ட நிற்பாட்டினாங்க. அப்போ நான் கண்டன்."
நான் சொன்னதும் அம்மா நெடிதாய் பெருமூச்சு விட்டாள்.
"அப்பா அப்படியெல்லாம் செய்றது உங்களுக்கெல்லாம் சாப்பிடத் தரவும். படிப்பிக்கவும் தானே மகன்." அம்மா சொன்னாள்.
அன்றிரவு நான் அப்பாவைக் கனவில் கண்டேன். எங்கள் பாடசாலை மேடையில் நாடகம் ஒன்றை நடித்துக் கொண்டிருந்தார். மேடையிலே எரிகிற வண்ண வண்ண மின் குமிழ்களின் ஒளியில் அப்பாவின் இராஜ உடை பளபளத்தது. மாணவர்கள் அதையும் இதையும் சொல்லி அப்பாவை பரிகாசம் செய்தார்கள். பட்டப் பெயர்கள் சூட்டினார் கள். பணிஸ் துண்டுகளினால் வீசி அடித் தார்கள். அப்பா அனைத்தையும் சிரித்துக் கொண்டே சமாளித்தார். அவர் மீது ஏற்பட்ட அனுதாபத்தினால் அழுதேன்.
நான் as 6OTs66)
அந்தக் கனவுக்குப் பிறகு 6T6óT Ld60Tub கல்லாய்க் கனத்துப் போனது போன்ற
உணர்வு. ஏனைய நாட்களை விட நேர
காலத்துடன் எழுந்து, அடுக்களைப் பக்கம் நின்ற அம்மாவை நெருங்கினேன்.
'என்னடா என்ர தங்கமகன். என்ன வேணும்.?" என்னைக் கண்ட அம்மா, அன்பும் கரிசனையும் கொப்பளிக்கத் தலையை வருடியபடியே கேட்டாள்.
"அப்பா படுகிற கஷ்டத்த பார்க்கிற போது என்னால தாங்க முடியல்ல அம்மா. நான் திரும்பவும் கிராமத்து ஸ்கூலுக்கே
மல்லிகை மே 2007 & 48

போறன். கொழும்பு ஸ்கூலால என்ன
விலக்கச் சொல்லி அப்பாக்கிட்ட சொல் லுங்கோ." நான் சொன்னேன்.
*சும்மா விசர் கத கதையாதீங்கோ மகன். அப்பா சந்தோஷத்தோடதான் எல் லாம் செய்றாரு. நீங்க நல்லா படிச்சி ஆளான பிறகு அப்பாவ கவனிக்க முடி
யாதா என்ன?. அதனால இப்போ அதை
இதையெல்லாம் மனசுக்குள்ள போட்டுக் காமல் படியுங்கோ."
அம்மா எனது நாடியை விரல்களால் ஆட்டியபடியே கூறினாள். கண்ணுக்குப்
புலப்படாத அந்த எதிர்காலம் பற்றிய அபரித
மான எதிர்பார்ப்புகளினால் அவள் மனம் நிறைந்து இருந்தது.
அடுத்த பெற்றார் ஆசிரியர் கூட்டத் திற்குச் சகல மாணவர்களினதும் தாய் அல் லது தந்தை கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒருநாள் காலைக் கூட்டத் தில் அதிபர் வற்புறுத்தினார். இதற்கு முன்பும் இதுபோன்ற கூட்டங்களுக்கு அழைப்புக் கிடைத்தும், அம்மாவோ அப்பாவோ கலந்து கொள்ளவில்லை. அதிபரின் கோரிக்கையி னால் நான் செய்வதறியாத நிலைக்கு ஆளா னேன். அப்பாவை எப்படிப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வது? நைஸ் வாங்குகிற மாணவர்கள் அப்பாவை நிச்சயம் அடை யாளம் கண்டுகொள்வார்கள். அப்புறம் எனது
மானம், மரியாதை எல்லாம் கப்பல் ஏறிடும்.
அன்று முழுவதும் அந்தப் பிரச்சினைக் குத் தீர்வு தேடி மூளை வேலை செய்தது. முடிவில் கூட்டத்திற்கு அம்மாவை அழைத் துச் செல்வதென தீர்மானித்தேன்.
நான் பல்கலைக் கழகத்திற்குத் தெரி
வான பிறகு கொரியாவைக் கைவிட்டு, அங்
கிருந்து சற்றுத் தூரத்தில் ஒரு வீட்டை வாட
கைக்கு எடுத்துக் குடியேறினோம். அந்த வருடமே மூத்த தங்கை சட்டக் கல்லூரிக் குத் தெரிவானாள். படிப்பில் அவ்வளவு கரி சனை காட்டாத இளையவள் பாடசாலை செல்லும் போது காதலித்த பாபர் சலூன் பையனோடு ஒடிப்போய், இரகசிய திருமணம் புரிந்து கொண்டாள்.
நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் வரை அப்பா நைஸ் வியா" பாரத்தைக் கைவிடவில்லை. நண்பர்க ளோடு செல்லும் போது அப்பா இடைவழி யில் எதிர்ப்பட்டால், நான் அந்தத் திக்கைக் கூட பார்க்க அஞ்சினேன். இயன்றவரை அப்பாவைத் தவிர்த்தே நடந்தேன். சமூக நடப்புக்காக, சுயகெளரவத்தைப் பேணுவதற் காக அப்படியெல்லாம் நடந்து கொண்டா லும், அப்பா' மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும், பக்தியும் இருக்கத்தான் செய்தது.
மூத்த தங்கை கூட தோழியருடன் போகும்ப்ோது, அப்பாவைச் சந்திக்க நேரிட் டால் வழிவிட்டு நடக்கப் பழகியிருந்தாள். என்றாலும் அவள்கூட அப்பா மீது உயி ரையே வைத்திருந்ததை நான் அறிவேன். சின்னத் தங்கை மாத்திரம்தான், எந்தவித தயக்கமோ, பயமோ இல்லாமல் அப்பாவுடன் பலர் முன்னிலையிலும் பகிரங்கமாகப் பேசி னாள். அவள் வீட்டிற்கு வராவிட்டாலும் இடைவழியில் அப்பாவைச் சந்தித்துக் கை மாற்றுக்குப் பணம் கேட்கப் பழகியிருந்தாள்.
நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி அரச நிர்வாக சேவைக்குத் தெரி வான பிறகு எனது பலத்த வேண்டுகோளின் பிரகாரம் அப்பா நைஸ் வியாபாரத்தை விட்டு விட்டார். மூத்த தங்கை வழக்கறிஞராகிச் சத்திய பிரமாணம் கொடுத்தபிறகு, கொழும்பு விடுதியொன்றிலேயே தங்கி விட்டாள். அவள் வீட்டிற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகே வரு
upsio66 sodas 03Lo 2007 率 49

Page 27
வாள். நான் கூட உப அரசாங்க அதிபரான
பிறகு வீட்டிற்குப் போவதையும், வருவதை
யும் இயன்றளவு குறைத்துக் கொண்டேன்.
என்றாலும் ஒவ்வொரு மாதமும் வீட்டுச் செலவுக்கு அம்மாவுக்கு பணம் அனுப்பத் தவறவில்லை.
மூத்த தங்கை ஒரு சட்டத்தரணியின் கீழ் கனிஷ்ட வழக்கறிஞராக சேவை புரிந் தாள். அதனால் அவளது வருமானம் வள மாக இருக்கவில்லை. சில மாதங்களில் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தும் அளவுக் குக்கூட அவளின் வருமானம் போதியதாக
இல்லை. அதனை அவள் எனக்கு எழுதும்
கடிதங்களின் மூலம் அறிந்து கொண்டேன். அவ்வாறு கடிதம் எழுதும் போதெல்லாம் சிறுதொகைப் பணத்தை அவளுக்கும் அனுப்பி வைத்தேன். நேர்மையான முறை யில் தொழில் புரிந்தமையால் எனக்கு சம்பளத்தைத் தவிர வேறு வருமானமும் இல்லை. வீடு வாசல் கட்டிக் கொண்டு, அறி முகமில்லாதவர்கள் வாழும் பகுதியில் பெற் றோருடன் சேர்ந்து சந்தோஷமாய் வாழ நானும், பெரிய தங்கையும் திட்டமிட்டிருந் தோம். அந்த எதிர்பார்ப்பு கனவுகளோடு மட்டும் நின்றுவிட்டது.
நிர்வாக சேவையில் பலதரப்பட்ட பதவி களை வகித்த எனக்குத் திருமண வரன்கள் மளமளவென்று வரத்தொடங்கின. அவற்றுள் தனவந்த முதலாளிகளின் புதல்விகளதும், நிர்வாக சேவையிலிருந்த யுவதிகளதும் விண்ணப்பங்களே ஏராளம். எவ்வளவுதான் sugetTassiT வந்து குவிந்தாலும், பெரிய இடத் தில் திருமணம் புரிய நான் தயங்கினேன். என்றாவது ஒருநாள் அவர்களின் கையி னால் அப்பாவுக்கு அவமானம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எனக்குள் இருந்தது. ஆயினும் ஒருதடவை யதேச்சையாகச்
சந்தித்த மஹரகம புற்றுநோய் வைத்திய சாலை நிபுணத்துவ வைத்தியர் சுதர்மா மீது என் மனம் என்னையறியாமலேயே இழு பட்டுச் சென்றது. என்னைப் பற்றி அவளின் மனதில் ஒர் எண்ணம் இருப்பதாக முதலில் வெளிப்படுத்தியது சுதர்மா தான்! நான் அதனைக் கனவில் கூட எதிர்பார்க்க வில்லை. நானும் அவளின் அன்பை மன தார ஏற்றுக் கொண்டேன்.
பெரும் பணக்காரப் பெற்றோரின் ஒரே மகளான சுதர்மாவுடன் காதலில் கட்டுண்ட பிறகு, ஒருவகையான புதுமையான உலகத் தில் நான் சஞ்சரித்தேன். என்றாலும் எனது பெற்றோரைப் பற்றிய விபரத்தை அவள் அறிந்து கொண்டால் உதறி விடுவாளோ என்ற பயமும் எனக்குள் இருந்தது. அத னால் அவர்களைப் பற்றிய உண்மைகளை மறைத்தேன். அவர்கள் நான் சிறு வயதாக இருக்கும் போதே இறந்து விட்டதாக புழுகினேன்.
அம்மாவையும், அப்பாவையும் பார்க்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீட்டுக்குச் செல்லும் நான், சுதர்மாவை சந்தித்த பிறகு அந்தப் பயணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத் தேன். என்றாலும், சகல மாத முடிவிலும் சிறு கடிதத்தோடு அம்மாவுக்குக் காசுக் கட்டளை அனுப்ப மறக்கவில்லை. முக்கிய தேவை களுக்கு மட்டும் கடிதம் அனுப்பும்படி கூறி அலுவலக முகவரியையும் அவளுக்கு எழுதி அனுப்பினேன்.
திருமணத்திற்குப் பிறகு சுதர்மாவும், நானும் அரசாங்க அதிபர் அலுவலகத்தி லிருந்து ஒரு மைலுக்கு அப்பால் அமைந்
திருந்த அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தில் குடியிருந்தோம். இடை யிடையே அப்பா, அம்மாவைப் பற்றிய நினைவு தோன்றும் போதெல்லாம் துக்கத்
மல்லிகை மே 2007 & 50

தைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டேன். அவ்வாறான சந்தர்ப்பங்களில் என்றாவது ஒருநாள் இரவு வேளையிலாவது போய் இருவரையும் பார்த்து விட்டு அவசரமாகத் திரும்ப வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
இருவரையும் போய் பார்த்துவர வசதி யான நாளைச் சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான், வைத்தியசாலையிலிருந்து சுதர்மா கொண்டு வந்த செய்தி என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. அவளின் ஒரே சகோதரனுக்கு ஜாஎல தேங்காய் எண்ணெய் முதலாளியின் மகளை நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், திரு மணம் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக வும் அவன் தொலைபேசியில் அறிவித்ததாகச் சுதர்மா சொன்னாள். அவள் கூறிய தகவலுக் குப் பிறகு நான் எப்படி அங்கு போவேன்? குட்டு வெளிப்படாதா என்ன? எனது இரு கால்களும் செயலற்றது போன்ற உணர்வு. உமிழ்நீர் வற்றித் தொண்டை வாய் வரண்டு போனது. அம்மாவையும், அப்பாவையும் களவிலாவது போய் பார்த்து வர திட்டமிட்ட அந்தப் பயண மும் நின்று போனது.
வைத்திய நண்பன் வாகனத்திற்கு அருகில் வந்தபோதுதான் எனது சிந்தனை உடைந்து போனது. நான் அவன் முகத்தை ஏறிட்டேன்.
“லவறிரு. வாங்க. உள்ள போவம்." அவன் கவலை பொங்கக் கூறினான். நான் அவனது பின்னால் தீவிர சிகிச்சைப் பிரிவுக் குள் நுழைந்தேன். அப்பாவின் உடல் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. துணியை விலக்கி அவரின் முகத்தைப் பார்த்தேன். மூடியிருந்த கண்களிலிருந்து பெருகி வந்த கண்ணிர்த் துளிகள் அப்பாவின் கன்னங்களில் தேங்கி இருந்தன. மனதின் ஆழத்தில் இருந்து எழுந்த வேதனையால் முழு உடம்பும் குலுங்குவது போல உணர்ந்தேன்.
ஊறிக் கொண்டு கண்ணிர் விழிக்கடையில் அலர்ந்தது. கைகளினால் முகத்தை மூடியபடி அழுதேன்.
"லவறிரு. அப்போ நாங்க போவமா..?" மீண்டும் சந்தனவின் குரல். நான் குனிந்து அப்பாவின் தலையையும், முகத்தையும் முத்த மிட்டேன். எப்பொழுதும் நான் விரும்பிய அப்பாவின் அந்த வியர்வை வாடை மேலெ ழுந்து என் மனதைக் குடைந்தது. அவரது காற்சலங்கைக் கோர்வையின் இனிய ஓசை' எங்கிருந்தோ எனக்குக் கேட்டது. அந்த ஒசை என்னைத் துளைத்தெடுத்தது.
சந்தனவிடமிருந்து விடைபெற்று வெளியே வரும்போது சிறிய தங்கை, அவள் கணவன், அம்மா மூவரும் தீவிர சிகிச்சைப் பிரி வின் நுழைவாயிலுக்கருகில் நின்றார்கள். அம்மாவும், தங்கையும் சோகத்துடன் அழுது கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்களது முகங்களை ஏறிட்டுப் பார்க்கவும் சிரமமாக இருந்தது. ஏதோ அவர்களுக்கு பெரும் குற்றம் , இழைத்து விட்டதாக மனம் சொன்னது. அழுதழுது வீங்கியிருந்த தங்கையின் முகத் தைப் பார்த்தேன். அவள் தோளை இடித்துக் கொண்டே மறுபுறம் திரும்பினாள். முகம் கோபத்தினால் குமுறியது. நான் அம்மாவின் அருகில்போய் நின்று கொண்டேன். தங்கை அழுதபடியே என்னை குறை கூறத் தொடங்கினாள்.
"எங்களுக்கென்றா அப்பா செஞ்ச ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. செய்ற மட்டும் செஞ்சது அவங்களுக்குத்தான். அப்பாவோட வியர்வையால உழைப்பால அரசாங்க அதிப ரான பிறகு. எட்வகேட். ஆன பிறகு மனு வடின் இருக்காறா. செத்தாரா என்று பார்க்க யாருமே இல்ல. இவங்களுக்கு அப்பா நைஸ் காரன் என்று சொல்லிக்க வெட்கம். சாவு வீட்டுக்கு அவள் எட்வகேட் நோனா வரட்டுமே பாப்பம். தும்புக்கட்டையால அடிச்சித்தான் வெரட்டுவன். இங்க பாருங்க அம்மா. அவள
மல்லிகை மே 2007 $ 51

Page 28
மட்டும் வாசற்படிய மிதிக்க விடக்கூடாது சொல். லிட்டன். கடைசி காலத்தில அப்பாவோட அழுக்கு சிலுக்கெல்லாம் அளைஞ்சது பாப ரோட பாஞ்சி போன இந்த ரஸ்தியாதுகாரி தான். வாய்காரிதான். ரேடியோவுல மரண அறிவித்தல் போற நேரம் இந்த எட்வகேட்
மகளோட. அரசாங்க அதிபர் மகனோட பெரிய
தனத்த பெரீசா பேசிக்குவாங்க."
பிரளய வெள்ளமாக வார்த்தைகள் வந்து விழுந்தன. அதில் பொதிந்திருந்த கோபம் விநாடிக்கு விநாடி அதிகரித்தது. அவளுக்கு
இயன்றளவு பேச இடமளித்து விட்டு அமைதி
யாக இருந்தேன். அவளுடைய கணவனும், அம்மாவும் பலதடவை அடக்கப் பார்த்தாலும் அவள் தனது அதிரடித் தாக்குதலை நிறுத்த வில்லை.
"அப்பா வியர்வ வழிய வழிய இவங் களுக்கு படிப்பிச்சதற்கு பதிலா கொரியாவுல பன்றிப்பட்டி வெச்சிருந்தா இதவிட எவ்வளவோ நல்லா இருந்திருக்கும். இன்றைக்கு மட்டும் எதுக்கு வரணும். வராம விட்டா போச்சே. அப்பா மஹரகம புற்று நோய் ஹோஸ்பிடல்ல மூன்று மாசம் இருந்தாரு. ஒருத்தர் கூட எட்டிப் பார்க்க வரல்ல. ராவு பகலா தேஞ்சது நானும் இந்த மனுஷனும்தான்."
நான் அப்பாவைப் பார்க்க புற்றுநோய் ஆஸ்பத்திரிக்குப் போகாத உண்மையான காரணத்தை அறியாத தங்கை தொடர்ந்து எனக்கு ஏசினாள். அவளது காட்டமான கோபம் நியாயமானதுதான் என்று மனம் தீர்ப்புக் கூறியது. அம்மா பகிர்ந்து தந்த பாண் துண்டு களைப் பருப்புக் கறியோடு தொட்டுத் தொட்டு மூவரும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக சாப்பிட்ட அந்த யுகம் நினைவில் தோன்றி மறைந்தது. "படிக்காமல் கொரியாவுக்குள் ளேயே இருந் திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சாகும் வரை எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்' என் மனம் எண்ணியது.
‘என்னவோ தெரியல்ல தொஸ்தர் நோனாவ கூட்டிட்டு வரல்ல. ஒருவேள எங்களை எல்லாம் காட்ட தோரைக்கு வெட்க மாயிருக்கும்."
சின்னத் தங்கையின் வார்த்தைகள் என் இதயத்தைக் கீறின. நான் அம்மாவின் பக்கம் திரும்பினேன். அவளின் முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. பாவம், அப்பா இறந்ததுகூட
அவளுக்குத் தெரியவில்லை. அம்மாவுக்குக்
கொடுக்கும் நோக்குடன் கொண்டுவந்த பண
நோட்டுக் கட்டை அவளது கைகளில்
வைத்தேன்.
‘எங்களையெல்லாம் சல்லியத் தந்து
ஏமாற்ற முடியும்னு நெனப்பாயிருக்கும்."
மீண்டும் தங்கையின் குரல் சன்னமாய்
ஒலித்தது. அவளின் பக்கம் கோபத்துடன்
பார்த்த அம்மா, என்னை நோக்கினாள்.
"அவள் சொல்றத கணக்கெடுக்க
* வேணாம் மகன். அவள் அப்படியெல்லாம்
பேசினாலும் உங்களோட நல்ல இரக்கம். பெரிய அண்ணாவ கனவுலகூட காணக் கெடைக்கிறதில்லைன்னு கொஞ்ச நாளா சொல்லிச் சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தா. இருக்கிற மனவருத்தத்துக்குத் தான் இப்படி யெல்லாம் பேசுறா. அதையெல்லாம் கணக் Ga5(6áss (3suscotrub LDassiT..."
அம்மா தழைத்த குரலில் கூறினாள். எனது கண்களைக் கீறிக்கொண்டு கண்ணிர் பொங்கியது.
"அம்மா. நான் போயிட்டு வாரன்."
அம்மாவிடமிருந்து விடைபெற்ற நான் மிகுந்த வேதனையுடன் வாகனத்தில் ஏறி னேன். அப்பாவின் அந்தக் காதுக்கினிய பாடல் எங்கோ தூரத்தில் இருந்து எனக்குக் கேட்டது. பாடலோடு சேர்ந்து ஒலிக்கும் சலங்கைக் கோர்வையின் இனிய நாதம் செவிகளைத்
துளைத்தது.
மல்லிகை மே 2007 & 52

இரசனைக் குறிப்பு : Q_თყgüüმ)
வருமmனங்கள்
- LOm.Lum6vérolæLb
கலை, இலக்கியத்தில் ஒரு கால கட்டத்தில் விஞ்ஞானக் கல்வி யாளர்கள் அக்கறை காட்டா திருந்ததை தமிழ் இலக்கிய வரலாறு எண்பிக்கும். ஆனால் இன்றோ கலை, இலக்கிய உற் பத்தியில் இவர்கள் முன்னணி யில் நிற்பதை நோக்கர்கள் அவ தானிப்பர். இதற்கு அரசியலில் மொழி முக்கியத்துவம் பெற்ற தும் காரணமாக இருக்கலாம்! இத்திருப்பத்தால் அந்நிய மொழியின் ஆதிக்கம் சற்று இறங்கத் தொடங்கியது. தமிழ் வாசிப்பு உச்சம் கண்டது. பத்திரிகைகள்,
சஞ்சிகைகள், அரிய நூல்கள் என்பன தமிழ் இல்லங்கள் தோறும் பரம்பலாகின. இந்த வாசிப்பின் உதைப்பால் தமிழ் இலக்கிய எழுத்துக் கலையும் புதிய பரிமாணத் தைக் கண்டது. எழுத்தாளர்களுக்குச் சமூகத்தில் கெளரவம் கிடைத்தது. இத்தாக்கத் தின் செறிவு விஞ்ஞானக் கல்வியாளர்களையும் எட்டவே, அவர்களும் தமிழில் எழுதுவது, வாசிப்பது பின்னடைவைத் தருமென்பதை விடுத்து, தமிழில் இலக்கியம் படைக்க முனைந்தனர். இந்தப் பெருக்குத்தான் சுஜாதா என்ற பொறியியலாளரைத் தற்கால இலக்கியத்துக்குத் தந்தது. அத்தோடு, கர்ப்பிணித் தாயருக்கென 'அம்மா” என்ற சிறந்த வைத்திய ஆலோசனைகளை அடக்கிய நூலை தந்த டாக்டர் திரிபுர சுந்தரி என்ற அரிய தமிழ் நாவல்களை படைத்த "லசுஷ்மி"யைத் தமிழ்ப் படைப் பிலக்கியத்துறைக்கு ஆற்றுப்படுத்தியது. இதே தடத்தை எமது விஞ்ஞானக் கல்வி யாளர்களும் பின்பற்றினர். நந்தி, முருகையன், திக்குவல்லை கமால், கலாமணி, எம்.கே.முருகானந்தம் போன்ற நாடறிந்த எழுத்தாளர்கள் இந்நாட்டின் விஞ்ஞானக்
மல்லிகை மே 2007 & 53

Page 29
கல்விக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் / இருப்பவர்கள். இன்று தமிழ் இலக் கியப் படைப்பாளிகளாகப் பிரகாசிக் கின்றனர் எழுபதுகளின் ஆரம்பத்தில் இக்குழுமத்தோடு இணைந்தவர் தான் சுதாராஜ். இவரொரு மின்பொறியி
யலாளர்,
சுதாராஜின் எழுத்து வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் இவர் 'சிரித்திரன்' பண்ணையில் மலர்ந்தவர். சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் என்ற தளங் களில் தனது எழுத்தாளுமையை வாச கருக்குப் பகிர்பவர். இவரது எழுத்தாற் றல்கள் உரிய முறையில் பாராட்டப் பட்டிருக்கின்றன. இலக்கியவாதிகளை மனிதநேயத்துடன் மதிக்கும் சிறந்த பண்பாளர். தன் படைப்புகளுக்குத் தக்க முறையில் பரம்பலைச் செய்த சிரித் திரன் சுந்தரின் ஞாபகார்த்தமாக "சிரித் திரன் சுந்தர் விருது' என்ற இலக்கிய விருதுத் திட்டமொன்றை நிறுவி, வரு டாந்தம் சிறந்த சிறுகதை, கவிதை, சிறு வர் இலக்கியம் என்பவற்றிற்குப் பரிசு கொடுத்து, ஈழத்து இலக்கியப் படைப் பாளிகளையும் மேன்மைப்படுத்தி, தன்னை ஏற்றிவிட்ட ஏணியான சிரித் திரன் சுந்தரின் நாமமும் இலக்கியவாதி களின் மனங்களில் நீங்காதிருக்க உதவுகிறார்.
நாவலொன்றையும், 6 சிறுகதைத்
தொகுப்புகளையும், நான்கு சிறுவர் இலக்கிய நூல்களையும் வெளியிட்டிருக்
கிறார். இலக்கிய நூல் உற்பத்தியில்
மட்டுமன்றி, நூல் விற்பனையிலும் நிறு வக ரீதியாக ஊக்கம் காட்டி வருகிறார். தேனுகா பதிப்பகம், சாகித்ய புத்தக
இல்லம் என்பன இவரது சொந்த நிறுவனங்களே.
ஈழத்தின் ஏனைய சிறுவர் இலக் கியப் படைப்பாளிகளிலிருந்து சுதாராஜ் வித்தியாசப்படுவதை, இவரது சிறுவருக் கான ஆக்க இலக்கியங்கள் உணர்த்து கின்றன. இப்படைப்புகளில் சமகாலத்து சமூகப் பிரக்ஞைகளைத் துலாம்பரமாகச் சிறுவர்களுக்குக் காட்டுகிறார். பிசாசு கள், ஆவிகள் வாழும் இல்லங்கள், ஆந்தை அலறல், நடு ஜாமத்துப் பயங்கர ஒலிகள் என்பன இவரது சிறுவருக்கான படைப்புகளில் தலைகாட்டா இந்த உன் னதத்தை உள்வாங்கித்தானாக்கும் இவ ரது படைப்பான "காட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்கு வந்த கதை’ என்ற நாவலைத் தொலைக்காட்சி நாடகமாக்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாகச் செய்தி கள் வருகின்றன. இதில் சிங்களக் கலை ஞர்களும் கலந்து கொள்வது குறிப் பிடத்தக்கது. ‘வா வாத்தியாரே வா’ என்ற தொலைக்காட்சி நாடகத்தில் கதா மாந்தரின் பேசுமொழி பட்டபாடு இந் நாடகத்திலும் வராதிருந்தால் தொலைக் காட்சி நாடக இரசிகன் பாக்கியவானே!
சுதாராஜின் இலக்கிய உழைப்பிற்கு மகுடமிடுவது போல் தமிழகத்து 'ஆனந்தவிகடன்" சஞ்சிகை இவரது படைப்பான அடைக்கலம்" என்ற சிறு கதைக்குப் பரிசளித்துப் படைப்பாளியை யும் மகிமைப்படுத்தி, ஈழத்துச் சிறுகதை யின் வளத்தையும் பிரசித்தப்படுத்தியது. இச்சிறுகதையின் தொனிப்பொருளே - பிரபல தயாரிப்பாளரும் நெறியாளரு மான மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்” என்ற சினிமாத் திரைக்
மல்லிகை மே 2007 & 54

கதைக்கு ஊட்டமாக இருந்ததெனச் சல சலபொன்று வெடித்ததை வாசகர் மறந் திருக்கார்! இருந்தும், அதைக் காவித் திரிந்து, செல்லும் இடமெல்லாம் பறை சாற்றாமல், அமைதி காக்கும் சுதா ராஜின் பக்குவம் அவருக்குள் வாழும் தமிழ்ப் பண்பின் தன்மையைப் புலப் படுத்துகிறது. இவர் தேசிய பத்திரிகை களுக்கு எழுதாதிருப்பது ஏனோ! எனவே, இத்தகையவொரு படைப் பாளியின் நூலொன்று வாசகனின் மனதைக் கெளவிப் பிடிப்பது இயல்பே அந்த வகையில் சுதாராஜின் 'மனித தரிசனங்கள்" என்ற நூல் மனதில் நிலைத்து நிற்கின்றது. . அது குறித்த மனப்பதிவுகளை வாசகரோடு பகிர்ந்து கொள்வதில் மகாதிருப்தியே!
கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப் பலில் சீமெந்தைப் பொதியாக்கி ஒப்பந் தக்காரருக்கு விநியோகிக்கும் வேலைத் திட்டத்தில் பொறியியலாளராகப் பதவி நிலை பெற்றிருந்தவர் சுதாராஜ். ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, இந்தோனேசியா, யேமன், ருமேனியா, ஆசிய நாடுகளில் இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பல தேசங்களின் ஊழியர்கள் இத்திட்
டங்களில் பணி செய்திருக்கின்றனர்.
இத்திட்டங்களில் கதாராஜ் ஆளணி முகாமைத்துவப் பொறியியலாளராகப் பதவி வகித்திருக்கிறார். இவருக்கு
மேலாகவும் நிர்வாக அதிகாரம் பெற்ற
அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். இடைநிலை ஊழியர்களும், சிற்றுாழியர்
களும் உண்டு! இக்களத்தில் / சூழலில்
தனது கடமையைப் புரிந்து கொண்டி
ருந்த பொழுது, தொழில் நிமித்தம் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பிரச் சினைகள், அவைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைத்து, வேலை இடை நிறுத்தப் படாது தொடரக் கையாண்ட மனித நேயம் மிக்க தந்திரோபாயங்கள் என்பன வற்றை மீட்டிப் பார்த்துச் சுதாராஜ் தானொரு எழுத்தாளரென்ற தளத்தில் நின்று 16 தலைப்புகளில் இந்நூலில் விபரித்திருக்கிறார்.
இந்நூலில் காணப்படும் எழுத் துருக்களை "ஒவ்வொரு சிறுகதையைப் போலவே எழுதி இருக்கிறேன்" எனக் கூறும் சுதாராஜ், "இது கதையுமல்ல, கட்டுரையுமல்ல" எனவும் கூறுகிறார். இருப்பினும், ஒரு தீவிர சிறுகதை வாச கனுக்கு இவ்வெழுத்துருக்களில் சில சிறுகதைகளையும் காணமுடியும். தமிழ் இலக்கிய நூல் வெளியீட்டுத் துறைக்கு இந்நூலொரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது. நிருவாகப் பொறுப்பு களில் நாளாந்தம் ஊடாடும் ஒரு வாசகன் இந்நூலைப் படிக்கும் பொழுது இதற்குள் ஆளணி முகாமைத்துவத்தின் கீற்றுக்களையும் தரிசிக்க முடிகின்றது. சுதாராஜ் என்ற ஆளணி முகாமைத்துவப் பொறியியலாளர் தனது அதிகாரிகள், ஊழியர்களோடு ஏற்படுத்தும் தொடர் பாடல்கள் இளம் நிருவாகிகளுக்குச் சிறந்த கற்பிதங்களைச் செய்கின்றன.
யேமன் நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்த தகவல்களை இலத்திரன் ஊடகங்கள் மூலமாக அறிந்து, பதட் டத்தில் உறைந்து போன ஊழியர்களின் பதகளிப்பைச் செல்வராசா மாமாவின் ஆரூடம் ஊதிப் பெருப்பிக்கின்றது. இந்
மல்லிகை மே 2007 奉 55

Page 30
தக் குழப்ப நிலையிலும் சொந்த நாடான இலங்கையின் யுத்தம் இலங்கை யரின் மனதில் உறைக்கின்றது. அச்சம யத்தில் யேமன் யுத்தத்தால் தாம் பாதிக் கப்படுவது அர்த்தமற்றதென உணரும் சிங்கள இனத்தவருக்கு, இங்கும் - இலங்கையிலும் - யுத்தத்தால் பாதிக் கப்படுபவர்கள் அப்பாவிகளே என்பது தனது சொந்த ஊரில் பெற்ற அநுபவத் தின் மூலமாக சுதாராஜ் உணர்த்துகிறார். சிங்கள ஊழியரின் மனம் இதன் மூலம் கழுவப்படுகிறது! “இலங்கையில் பத்தி ரிகைகள் எல்லாம் தமிழர்களை விரோதி களாகக் காட்டுகின்றன. வவுனியாவுக்கு அந்தப் பக்கத்தில் இருக்கிறவர்களெல் லாம் புலிகள் என்றுதான் நினைத்திருந் தோம். உங்களோடு வேலை செய்த பின்னர் தரன் உண்மை புரிகிறது." இப் L u quunt895 மனம் மாற வைப்பது பட் டறிவுதான்! உண்மையில் அதுவொரு பல்கலைக்கழகம்தான்!
தான் கேட்காதிருக்கவே தனக்குப் பதிவு உயர்வும், சம்பள அதிகரிப்பும் வழங்கிய வெளிநாட்டு அதிகாரிகளின் பெருந்தன்மையை சுதாராஜ் விதந்துரைத் துள்ளார். அதேநேரம் ஏலவே தான் சொந்த மண்ணில் கடம்ை புரிந்த பொழுது தனக்கு அதிகாரிகளாக இருந் தவர்கள் "கோபுரத்தில் இருப்பவர் களாகக் கருதிக் கொள்பவர்கள்" என அதிருப்தி கொண்டிருக்கிறார்.
கோபாலன் விடயத்தில் கல்லுக்குள் விருந்த ஈரத்தை வெளியே கொப் பளிக்க வைத்து, அவன் குடும்பத்தை வாழ வைத்தது ஒரு நிருவாகிக்கு இருக்க வேண்டிய மனித நேய அணுகு
முறையைச் செப்புகின்றது. மேலதி
காரிகள் சிற்றுாழியர்களுக்கிடையே உறவு நெருக்கமாக இருப்பின் அதனால் பயன் அதிகம்! வேலைக் கொள்வனவு அதிகரிக்கும். அத்தோடு சார்ந்த நிறு வனத்திற்கும் கெளரவத்தை ஏற்படுத் தும். இந்த அணுகுமுறைக்குச் சட்டத் தின் விதிகளின் வலுவை விடச் சக்தி அதிகம்! இதில் சுதாராஜ் வெற்றி கண் டுள்ளார். ஏனைய பணியாளர் மத்தி யிலும் ஒரு விழிப்பு நிலை ஏற்படுவ தற்கு விதையை ஊன்றி இருக்கிறார்.
உயர் அதிகாரியின் முன் நிலையில், சுதாராஜ் யானைக் கதை கூறி ஊழியருக் குச் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கிறார். அனைத்து நிருவாகி களுக்கும் இந்த உத்தி பொருந்துமா?
என்ற கேள்வி வாசகனுக்கு எழக்கூடும்!
பொருந்தக் கூடும் என அறிந்தே அவர் அதைக் கையாண்டிருப்பார். அவரது ஏனைய அணுகுமுறைகளை நோக்கும் பொழுது இந்த உண்மை புலப்படுகிறது! தனது அதிகாரியை அவர் நன்கு எடை போட்டிருக்கிறார்!
தனது நெருநாள் வைரியான ரசூலுக்கு ஈரானிய லோடர்கள் அடித்த பொழுது சரத் பெரேரா கிளர்ந்தெழுந்து அடித்தவர்களைத் தாக்குகிறான். இங்கே வர்க்க உணர்வை விட தேசாபிமானம் மேலோங்கி நிற்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது! வர்க்க உணர்விற்கு சர்வ தேச வியாபிப்புவது உண்டென்பதை இது உணர்த்துகிறது. கடந்தகால ரஷியத் தாரகையை நூலாசிரியர் இன்னமும் மறக்கவில்லை போலும்!
மல்லிகை மே 2007 & 56

பெற்றோர்கள் சுதாராஜ் குடும்பத் தோடு முரண்பட்டுக் கொண்டிருந்த பொழுது நெருக்கமாக இருந்தவர்கள் அமலதாசனின் பிள்ளைகள். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அமல தாசன் தொலைபேசி மூலமாகக் குசலம் விசாரிக்கிறான். கால ஓட்டத்தில் குழந்தைகள் தமது இளமைக்கால நட்பை மறந்தனரா? அப்போ! 'சிலை
மேல் எழுத்தாக்கும் அந்த இளமைப்
பாரம்பரியம் எங்கே? புத்தகப் பூச்சி களுக்கும் இந்த எழுத்துருக்களில் ஒரு செய்தி இருக்கின்றது! தனது கேற்றிலை அபகரித்துச் சென்றவர்கள் விட்டுச் சென்ற புத்தகத்தைச் சிரியா நாட்டு முனீர் கொண்டு வந்து கொடுக்கிறான். எதுவித வன்மமும் பாராட்டாது அவன் அப்படிச் செய்ததற்கு அவனுமொரு தீவிர வாசகனாக இருந்ததே காரணம்! எனவே தான் புத்தகத்தின் அருமையை அவன் விளங்கிக் கொண்டான்!
இப்படியாக ஒவ்வொரு எழுத்
துருக்களுள்ளும் நுழையும் பொழுது பல
சுவாரஸ்யமான தகவல்களைத் தரிசிக்க முடிகின்றது.
பொது மொழியான ஆங்கிலத்தை யும் தாய்மொழியான சிங்களத்தையும் தமிழையும் கலந்து இயல்பாகவே அலு வலகப் பணியாளர்கள் உரையாடுவது இந்த இயல்பு நிலையை சுதாராஜ் அனுசரித்திருப்பது தெரிகிறது! ஆங்கிலச் சொற்கள் நிறையவே இருக் கின்றன. தவிர்த்திருந்தால் படைப்பின்
வழக்கம்!
வீரியத்தை 'காயடித்த நிலைக்குத் தள்ளி இருக்கும்!
ஒராட்டு, நட்டா முட்டித்தனம், நாண்டு கொண்டு ஆகிய மண்வாசனை கக்கும் வட்டார வழக்குச் சொற்களு முண்டு! இத்தகைய எழுத்துருக்களுக்கு மண்வாசனை ஊட்ட வேண்டுமா?
இந்த எழுத்துருக்களில் சிலவற்றை ஆங்கில மொழி மாற்றப்படுத்தி வேற்று மொழிச் சினிமாப்பட இயக்குநர்களிடம் கொடுத்தால் நிச்சயமாக சிறந்த சினிமாப்படமொன்றை ஆக்கித் தரு
வார்கள்.
இந்நூலைச் பூரீலங்கா சாகித்ய மண்டலம் கண்டுகொள்ளவில்லை! எமது கலை, இலக்கிய வல்லவர்கள், புதிய விளைச்சல்களுக்கு இப்படித்தான் மதிப்புக் கொடுக்கின்றார்களாக்கும்!
'மனித தரிசனங்கள்" என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எழுத்துருவும் சுதாராஜின் உழைப்பிற்குக் கிடைத்த வருமானங்கள். வாசித்துப் பாருங்களேன்.
సన
ேெந்தல்
நீங்கள் தரமான இலக்கியச் சுவைஞரா? ஒருதடவை மல்லிகைப் பந்தலுக்கு வந்து போங்கள்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல
ஆக்கங்களையும் அவரிடமிருந்து நேரில் பெற்றுக் கொள்ளலாம். அவரே கையெழுத்திட்டுத் தருவார்.
மற்றும் பள்ளிக்கூட, பொது நூலகங்களுக்கும் தேவையான, நூல்களையும் மல்லிகை ஆண்டு மலர் களையும் மல்லிகைப் பந்தலில் பெற்றுக் கொள்ளலாம்.
~ல்லிகை மே 2007 & 57

Page 31
இழந்தது என்னவென்று தெரியவில்லைத்தான் ஆனாலும். எதையோ இழந்ததான வலியில் உயிர் துவண்டு கசிகிறது. வாழ்தல் பற்றிய கனவுகளின் விலையாய் எதனை இழந்திருக்கக் கூடும் நான்? தெரியவில்லை.
உள்ளார்ந்த எந்தன் விம்மலின் சத்தம் உன் ஆழ்ந்த மெளனத்துள் அமிழ்ந்துதான் போயிற்று! 6 6660 இருள்களின் எல்லை தாண்டிய BööjöONI பயணம் பற்றிய 事 என்னுடைய கனவுகள் Ö6O1666l... நடுவானிலேயே தம் சிறகுகளை இழந்துவிட்டனவா? என்ன! - லறினா ஏ.ஹக்
எழுந்து தொடரும் பெருமூச்சுகளின் நீளத்தை நீ என்றேனும் அளந்து பார்த்திருக்கிறாயா, நண்பனே?
உனக்கான வாழ்க்கையில் எனக்கான மணித்துளிகள். அந்தோ! உன் வேலைப்பளுவுக்குள். களைத்துறங்கும் உன் கணங்களுக்குள் கரைந்துதான் போயிற்று!
இழந்தது என்னவென்று புரியவில்லைதான் என்றாலும்.
எதையோ இழந்ததான வலியில் ஆன்மா விம்மி விம்மியழுகிறது!
மல்லிகை மே 2007 & 58

கடிதங்கள்
பDல்லிகை 42ஆவது ஆண்டுமலர் படித்தேன். அது சம்பந்தமாக எனது
கருத்துக்களைச் சொல்லலாமென நினைக்கிறேன்.
முதலாவது பக்கத்தைப் பிரித்ததுமே என்னைக் கவர்ந்தது உங்களது தலையங்கம் தான். ஐ.நா.சடையை அமெரிக்க மண்ணிலிருந்து நகர்த்த வேண்டும். கன கச்சிதமான வரிகள். சட்டென்று பொட்டில் அடித்த கருத்துக்கள். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் தங்களை விருது வழங்கிக் கெளரவித்த செய்தியும் இனிப்பானது.
'வாழையடி வாழையென. மா.பாலசிங்கம் அவர்களது கட்டுரை, சப்ரகமுவ பல்கலைக்கழகம் பற்றிய கனக.நாகேஸ்வரன் கட்டுரை, பேனாவால் பேசுகிறேன் - நாச்சியாதீவு பர்வீன் கட்டுரை, நீலபத்மநாபன் பற்றிய கே.எஸ்.சிவகுமாரன் அவர்களது கட்டுரை, "தமிழ் இலக்கிய உலகிற்கு Copy Editor தேவை' எனும் முருகபூபதி அவர்களது கட்டுரை ஆகியன பயன் மிகுந்தவை. அனைத்துக்கும் மேலாக 'தமிழ் - கணினி, இணையம்' எனும் சிறப்புப் பகுதி மலருக்கு அணி சேர்த்தது என்று சொல்லின் அது மிகையன்று. சிறுகதைகள் சில வாய்த்தன. குறிப்பாக கோகிலா மகேந்திரன் அவர்களது கதையை A One எனலாம் Diaspora எனப்படும் போர்க்காலச் சூழலின் அலைந்துழலும் அனுபவங்கள் எமது கற்பனைக்கு எட்டாதவை. அவற்றை அற்புதமாக இலக்கிய நயத்துடன் படைத்தல் வெகு சிரமமே. அவலங்களை அனுபவித்து எழுதுகையில் அங்கே இலக்கியச் சுவை எங்கே கொட்டப் போகிறது? ஆனால், திருமதி. கோகிலா அதில் தேறிவிட்டார் என்றே கூறலாம். கவிதைகள் எதுவும் சரியாக அமைய வில்லை என்பது ஒரு குறையே. இது தவிர மலர் நிறைவானது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!
கெகிறாவ ஸ்ஹானா.
மிக நீண்ட நாட்களுக்குப் பின் மல்லின்கயுடன் தொடர்பு கொள்ளக் கிட்டியுள்ளது. மிக்க மகிழ்ச்சி.
மல்லிகையின் தொடர் வரவில் ஆனந்தமாகி விட்டேன். அதிலுள்ள படைப்புக்களை ஒவ்வொன்றாக வாசித்து விடுவதே எனது பணியாக இருக்கிறது.
எனது பல்கலைக்கழகத்தில் (தென் கிழக்குப் பல்கலைக்கழகம்) மல்லிகையின் புதிய, பழைய இதழ்கள் மிக நன்றாக ஆவணமாக்கப்பட்டிருக்கின்றன. மொழித்துறை மல்லிகை மே 2007 & 59

Page 32
(பொது - விசேட) மாணவர்களின் தேடலுக்கு மல்லிகை போன்ற சிறு சஞ்சிகைகள் எத்துணை பெறுமதி மிக்கவை என்பதைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு மலரும் மொழித்துறை மாணவர்களின் பரீட்சை உள்ளிட்ட அவர்களது இதர ஆக்கச் செயற்பாடுகளுக்கு உசாத் துணை யாகப் பரிணமித்திருக்கின்றன. என்னிடம் விரிவுரையாளர்கள் தொட்டு மாணவர்கள் எனப் பலர் மல்லிகை பற்றியும், தங்களைப் பற்றியும் வெகு விஸ்திரமாக விசாரித்தனர். எனக்கு நம்ப இயலாத பிரமிப்பு.
ஆனால், அவர்கள் மல்லிகை பற்றி வினாவி இது தொடர்பாகக் கருத்துப் பரிவர்த்தனை செய்கையில், பின்வரும் விமர்சனங்களைத் தவறாமல் முன்வைத் தனர். அதாவது; மல்லிகையில் வெளி வரும் தூண்டில் பகுதி உள்ளிட்ட சில விடயங்களில் டொமினிக் ஜீவா என்ற தனி மனிதன் பற்றித் தேவையற்ற விடயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இது இதழ் மீது விசனத்தை ஏற்படுத்துகிறது. தவிர, டொமினிக் ஜீவாவின் உழைப்பு மீது உள்ள அந்த பிரக்ஞை தவறாக கருதத் தோன்றுகிறது என்கின்றனர். இந்த விமர்சனங்களை நோக்குகையில் யதார்த் தம் இல்லாமலுமில்லை. ஆனால் ஜீரணிக்க இயலவில்லை. எனவே இந்த விமர்சனங்களை முன்னிறுத்தி மல்லிகை எதிர்கரலத்தில் செயற்படும் என நம்பு கிறேன்.
எல். வளம்ே அக்ரம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,
Excellent Photographers Modern Computerized Photography For Wedding Portraits &
hild Sittings
மல்லிகை மே 2007 & 60
 
 
 
 
 
 

அகிலனுடன் முதற் சந்திப்பு
- மா.பார்வதிநாதசிவம்
'பாவை விளக்கு என்ற அகிலனின் நாவல் கல்கியில் வாரம் தோறும் தொடர்ந்து வெளிவருவதற்கு முன்னர் அகிலனின் பாவை விளக்கு கல்கியில் வெளிவரும் என்ற விளம்பரம், தமிழ்நாடு முழுவதும் செய்யப் பட்டது. மக்கள் கூடும் இடங்களில் உள்ள சுவர்களிலும், கல்கி விற்பனைக் கடைகளிலும் விளம்பரச் சுவரொட்டிகளைக் காணக்கூடியதாக இருந்தது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல்களுக்குப் பிறகு கல்கியில் வெளிவந்த அகிலனின் பாவை விளக்குப் பெருமளவு வாசகர்களைப் பெறும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்தது.
அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் தவிர்ந்த ஏனையோர் வெளி இடங்களில் இருந்து சிதம்பரத்திற்குப் பஸ்ஸில் வருவார்கள். பின்பு அண்ணாமலை நகர் பஸ்ஸில் ஏறிப் பல்கலைக்கழகம் வருவார்கள். ஞாயிறு இதழாகிய கல்கி தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமையே கடைகளுக்கு வந்துவிடும். வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகம் வரும் மாணவர்கள் சிதம்பரம் பஸ்நிலையத்தில் இறங்கியதும் பாவை விளக்கு நாவலின் ஆர்வம் காரணமாகக் கல்கியை வாங்கிக் கொண்டே அண்ணாமலை நகர் பஸ்ஸில் ஏறுவார்கள். மாணவர்களிற் பலர் வகுப்பு முடிந்து சிறிது ஒய்வு கிடைத்தாலும் அந்த ஒய்வு நேரத்தில் அகிலனின் நாவலைப் படித்து விடுவார்கள். அகிலனின் நாவலில் அவ்வளவு ஈடுபாடு மாணவர்களுக்கு இருந்தது. மாணவர்களுள் ஒருவனாக இருந்த நானும் அவர்களைப் போலவே ஈடுபாட்டுடன் நாவலைத் தொடர்ந்து படித்து வந்தேன்.
நாவல் நிறைவு பெற்றதும் நாவலைப் படைத்த ஆசிரியரை நேரிற் கண்டு நாவல் பற்றிக் கலந்துரையாட ஆவல் கொண்டேன்.
விடுமுறைக்குச் சென்னைக்குச் சென்ற நான் அகிலனுக்கு நன்கு அறிமுக மான புலவர் மாணவர் ஒருவருடன் சென்னையில் உள்ள அகிலன்
மல்லிகை மே 2007 & 61

Page 33
வீட்டிற்குச் சென்றேன். அகிலனைப் ܫ
பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பல இலட்சம் வாசகர்களையும் பெரும் புகழையும் தனது எழுத்தி னால் பெற்றிருந்த அகிலன் காட்சிக்கு மிகவும் எளிமையான வராகக் காணப்பட்டார். எழுத் தாளன் என்ற கர்வம் அவரிடம் சிறிதும் இல்லை. தன்னுடைய திறமையையும், தன்னுடைய புகழையும் அதற்குக் கிடைத்த பெருமையையும் கண்டு அவர் மாற்றம் அடையவில்லை. நாங்கள் பாவை விளக்கில் சுவைத்த சிறப்பம் சங்களையும் பாத்திரச் சிறப்பினை யும், நாவலின் நடை அழகினையும் பாராட்டிய போது நன்றி என்று *சிரித்த முகத்துடனும் அன்புடனும்
கூறினார்.
அந்த முதற் சந்திப்பைத் தொடர்ந்து அகிலனைப் பலமுறை
சந்தித்தேன். பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து நான் யாழ்ப் பாணம் வந்து சில ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்த கலை வாணி அச்சகத்தினர் "கலைவாணி என்ற மாத இதழைத் தொடங் கினர். அதற்குப் புலவர் வேல்
மாறன் ஆசிரியராக இருந்தார்.
நான் பின்பு ஒருமுறை தமிழ் நாட்டிற்குச் சென்றபோது கலை வாணி ஆசிரியராக இருந்த புலவர் வேல் மாறன் சில கலை வாணி இதழ்களை என்னிடம் கொடுத்து அவற்றை அகிலனிடம் சேர்க்கும் படியும், அவரைப் பேட்டி கண்டு பேட்டிக் கட்டுரையுடன் வரும் படியும் கூறினார். அகிலனின் பேட்டிக் கட்டுரை யாழ்ப்பாணம் கலைவாணி இதழில் வெளிவந்தது. அது 1965ஆம் ஆண்டு என எண்ணு
文っ
/*
r 2006 முழு ஆண்டிற்கான மல்லிகை ஆண்டு மலர் உட்பட
12 இதழ்களையும் மல்லிகையில் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளுங்கள்.
ནོ༽
பரிசளிப்பவர்கள் ஈழத்துப் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுங்கள். இப்படி நீங்கள் பரிசளிக்கும் போது நமது எழுத்தாளன் ஒருவன் மதிக்கப்படுகிறான். உற்சாகப்படுத்தப்படுகிறான். .இதைக் கவனத்தில் கொள்ளுங்கள் ܓ
ر
மல்லிகை மே 2007 * 62

மதி கந்தசாமி தொகுத்த வலைப்பதிவுகளின் விலாசப் பட்டியல
மதி கந்தசாமி! இணைய - வலைப் பதிவு உலகில் பிரபலமான இலங்கைப் பெண்மணி! கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர். ஆற்றலும் ஆர்வமும் மிக்க பெண்மணி! தமிழ் கலை இலக்கியப் பிரக்ஞை மிக்கவர். குறிப்பாக ஈழத்து தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அக்கறை உள்ள ஆர்வமான பெண்மணி. இலங்கை மின் நூலகத்திட்டமான நூலகம் குழுமத்தில் பங்கு வகிப்பவர். பல இணையப்பக்கங்களுக்கும் வலைப்பதிவுகளுக்கும் சொந்தக்காரர். இவரை பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.
இம்மாத மின்வெளிதனில் பகுதிக்காக இவர் உருவாக்கி இருக்கும் வலைப்பதிவு ஒன்றின் தகவல்களை அவருக்கு நன்றிகள் கூறிப் பயன்படுத்தி இருக்கிறேன். இந்த வலைப்பதிவின் முக்கியத்துவம் என்னவென்றால், சுமார் 450 அளவான வலைப்பதிவுகளின் விலாசங்களை அவை களின் அறிமுகத்துடன் அகர வரிசையில் பட்டியல்படுத்தி இருக்கிறார். அவ்வலைப்பதிவின் விலாசம். http://tamilblogs.blogspot.com/இம்முறை அப்பட்டியலில் உள்ள அ வரிசையில் அவர் தந்திருக்கும் 58 வலைப்பதிவுகளின் விலாசங்களை மல்லிகை வாசகர்களின் பார்வைக்கு தந்திருக்கிறேன். இப்பட்டியலை ஆழ்ந்துப் பார்த்தால், வலைப்பதிவு உலகில் எத்தகைய, அதுவும் வித விதமான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
1. அ. ரா. மணிகண்டன்
http://flashmani.blogspot.com/ 4. அகஸ்டாலின் கோயில் போஸ்
சிறுகதைகள் - கவிதைகள் http://agastalin.blogspot.com/ 2. அ.பசுபதி எழுதப்போகிறேன்
http://kalapathy.blogspot.com/ 5. அக்கினிக்குஞ்சு
kalapathy http://akkinikunchu.blogspot.com/ 3. அ.விஸ்ணு நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலை
http://vishnul.blogspot.com/ கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சி
மனம்கவர்ந்த திரைப் பாடல்கள் சில. யஞ்சிச் சாவார் . இவர் அஞ்சாத பொரு
மல்லிகை மே 2007 & 63

Page 34
O.
12.
3.
ளில்லை அவனியிலே, வஞ்சனைப் பேய்
கள் என்பார் . இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட் டில் என்பார் - மிகத் துயர்ப்படுவார் எண் ணிப் பயப்படுவார்.
அக்பர் பாட்சா http://www.suvatukal.blogspot.com/ கதை, கவிதை, சமூக, அரசியல் மற்றும் ஆன்மீகக் கட்டுரைகள் அஜீவன்
http://ajeevan.blogspot.com/ சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.
அஞ்சலி
http://anjalisplace.blogspot.com/ எனது சின்னத் தோட்டம்
菇菇壶表演
அண்ணா கண்ணன் http://www.annakannan.blogspot.com/ அதிமானுட நெடும்பாதையில் வழிப் போக்கனின் குறிப்பேடு, http://annakannan-kavithaigal. blogspot.com/ அன்னா கண்ணன் கவிதைகள் http://amudhasurabi-ithazh. blogspot.com/ "புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்”. பாரதி http://www.annakannan-interviews. blogspot.com/ செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் http://annakannanphotos. blogspot.com/ காலத்தை அறிவிக்கும் காட்சிகள்
அதிரைக்காரன் http://vettippechu.blogspot.com/ இதுதான் என்று இல்லை அனைத்தையும் பற்றி விவாதம் LJ60ö68906)TLib அனாதை ஆனந்தன் http://anathai.blogspot.com/
Anathaiyin Valaip pathivukal
8.
9.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
அணி http://thoughtsforblog.blogspot.com/ குடும்ப மேன்மைக்கு பாடுபடுவோம் அனிதா http://ani-anithaa.blogspot.com/ என்னை கவர்ந்த பாடல்வரிகள் அனுராக் http://akaravalai.blogspot.com/ மனவெளித் துளிகளும் சில மதிவழிப் பதிவுகளும். http://anuragan.blogspot.com/ . கதையும் கவிதையும் எழுத்தில் வணைந்த இன்னும் சிலதும். http://valaimedai.blogspot.com/ என் உள்ளம் எழுப்பிய வினாக்களுக்கு விடை தேடி வலையில் கட்டிய விவாத மேடை http://blog.360.yahoo.com/cisrofs இணையத் தமிழோடு இயங்கும் மனசு.
裘兹杂安表
அன்பு * http://kuppai.blogspot.com/ குப்பை - குப்பை மட்டுமல்ல. http://thilleepan.yarl.net/ தமிழரசன் அபிமன்யு http:puthagavimarsanam. blogspot.com/ book review http://gsgovindarajan. blogspot.com/ மனதில் தோன்றியவை அபூ ஆதில் ஆசாத் http://ennodu.blogspot.com/ என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு. அபூ உமர் http://pleasingpath.blogspot.com/ இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள் http://kalvi.blogspot.com/ நபிமொழிகளின் தொகுப்பு http://nihalvu.blogspot.com/ ஒடுக்கப்பட்டோருடன் இணை, ஒட்டுக மதவெறி
மல்லிகை மே 2007 & 64

30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
4.
42.
9|L, (!pഞ്ഞള http://puthagavimarsanam. blogspot.com/ இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டு களும் பதில்களும் - தமிழில் அப்துல் குத்தூஸ் http://abdulkuddus.blogspot.com/ விழிப்புணர்வுக் கட்டுரை அப்துல் குத்தூஸ் http://kuddusa35.blogspot.com/ 96)6OTub
அப்துல்லாஹற் http://islamicreply.blogspot.com/ விமர்சனம், விளக்கம்
அப்பாவி http://appaavi.blogspot.com/ தெரியாததைக் கேட்டு தெரிஞ்சுக் கணும்கிறதுதான் நம்ம பாலிசி! அடப்பாவி http://adappavi.blogspot.com/ எனக்குத் தெரிந்த நியாயம்
http://amaran.rediffblogs.cum/ Yennoda Yennangal
அமல சிங் http://amalasingh.blogspot.com/ தமிழர் ஒருங்கிணைப்பு அமைதிநேசன் http://peacenesan.blogspot.com/ இஸ்லாம் பற்றிய நிகழ்கால விமர் சனங்களுக்குத் தக்க பதில்கள்
அரசு http://arrasu.blogspot.com/ ரசிகன் ஒரு சோமாறி
அரவிந்தன்
http://nattunadappu.blogspot.com/ A life of a Tamilian in Karnataka state அருட்பெருங்கோhttp://arutperungo.blogspot.com/ ஆத்தங்கரைப் புலம்பல்கள்
அருணன் http://arutperungo.blogspot.com/ என் உணர்வுகளும் பத்திகளும்
43.
45.
46.
47。
48.
5.
52.
53.
54.
அருணா ஸ்ரீனிவாசன் http://arunaš2.blogspot.com/ Aruna's Writings in Tamil அருண் கிருஸ்ணன் http://thamizhthondan.blogspot.com/ தமிழ் தொண்டன் அருண் வைத்யநாதன் http://arunhere.com/pathivu Infotainment page for Politics-Cricket>Poems and Articles அருண்குமார் http://vrgroups.co.uk/amma/ தமிழை வளர்க்க என்னால் முடிந்த சிறு முயற்சி!
அருமை http://apaththam.blogspot.com/ Jubutib அருள் குமார் http://arul76.blogspot.com/ எண்ணிலடங்கா உணர்வுகளில் என்னை பாதித்த, சொல்ல முடிந்த சில. அருள் செல்வன் லந்தசுவாமி http://aruls.blogspot.com/ கரவா கரைந்துண்ணும் காக்கை அருள் செல்வன் கந்தசுவாமி http://www.livejournal.com/users/ arulselvan/ கரவா கரைந்துண்ணும் காக்கை அருவி http://arruvi.blogspot.com/ அறிந்து கொண்டவைகளும் அவை தொடர்பாக என்னுள் எழுபவைகளும். அலெக்ஸ் பாண்டியன் http://alexpandian.blogspot.com/
அக்கம் பக்கம்
அல்வாசிட்டி அண்ணாச்சி http://halwacity.blogspot.com/ குற்றம் சொல்லித் திரிவதே எம்
560p6ou UTu u luGuf. அல்வாசிட்டி அண்ணாச்சி http://halwacity.com/blogs/ தசையினை தீச்சுடினும்
மல்லிகை மே 2007 & 65

Page 35
55. அல்வாசிட்டி சங்கர்
http://thamizarasu.blogspot.com/ இது என் வாழ்க்கை !!!
56. அல்வாசிட்டி விஜய்
http://digitalhalwa.blogspot.com/ தமிழில் டிஜிட்டல் அல்வா துண்டுகளாக
57. அழகப்பன்
http://etheytho.blogspot.com/ அழகப்பன்,
58. அவலங்கள் ܚܝܼܵܪ
http://sathriii.blogspot.com/ அவலங்கள் (தொடரும்.)
மடத்துவாசல் பிள்ளையாரடி
நம்மூர் வாசிகசாலைகள் ر: ' • ' '
கானா பிரபா! இவரும் வலைப் பதிவு உலகில் பிரபலமானவர். இலங்கை யாழ்ப் பாணம் இணுவிலைச் சேர்ந்தவர் மதி கந்த சாமியை போல் தமிழ் கலை இலக்கியப் பிரக்ஞை மிக்கவர். குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய அக்கறை உள்ள ஆர்வ மான இளைஞர். இவரும் புலம்பெயர்ந்து கனடா வில் வாழ்பவர். இவர் தனது வலைப்பதிவான மடத்துவாசல் பிள்ளையாரடி வாசிக்கசாலை களைப் பற்றிய ஒரு அருமையான பதிவு இட்டு இருந்தார். அதுவும் உங்கள் பார்வைக்கு.
ஊர்களுக்கே இருக்கிற ஒரு தனித்துவ மான விசயம் இந்த வாசிகசாலைகள் ஊருக்கு ஊர் குறைஞ்சது ஒரு வைரவர் கோயில் இருப் பது போல இந்த வாசிகசாலைகளும் விதிவிலக் கல்ல. என்ர சிறு வயசு வாழ்க்கையில் ஒன்றிப் போன சில வாசிகசாலைகள் நினைவுக்கு வருகுது இப்ப
கே.கே.எஸ் றோட்டில. கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் தாண்டினாப் பிறகு வருவது தான் மக்கள் முன்னேற்றக் கழகம் நல்ல பெயர் வைச்சுத் தொடங்கின இந்த வாசிகசாலை வெறும் பேப்பர் படிக்கும் இடமாகத்தான் கனகாலம் இருந்தது. ரீவியும் வீடியோவும் முதன் முதலில யாழ்ப்பாணம் வரேக்க (அதைப் பற்றி ஒரு பெரியகதை சொல்ல இருக்கு) இந்த வாசிகசாலைகள்தான்
மக்களுக்கு அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்த் தவை. 80களின் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு வாசிகசாலையிலும் வச்சு விடிய விடியப் படம் காட்டினவை. தலைக்கு அஞ்சு ரூபா எண்டு நினைக்கிறன்
ஒரு நாள் உந்த வாசிகசாலைப் பெடியள் மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு முகப்பில இருக்கும் கே.கே.எஸ் ரோட்டுக்கு அங்காலை உள்ள பற்றைக் காணியை நல்லாச் சுத்தம் பண்ணி ட்றக்டரில கொண்டு வந்த குருமணல் பறிச்சு கிழுவந்தடிப் பொட்டுக்குள்ளால நுளை வாயில் விட்டுச் சாமம் சாமமாய்ப் படம் போட் டவை. போட்ட படங்களில அண்ணன் ஒரு கோயில் மட்டும் ஞாபகத்தில இருக்கு. அந்தப் படத்தில வரும் நாலுபக்கம் வேடருண்டு பாட்டு கனநாள் என்ர ஞாபகத்தில இருந்தது. அந்தப்
பாட்டுக் கட்டத்தில பொலிஸ் துரத்தத் துரத்த
ஏன் ? :ைன் ரிஷ/ாசிம் சுயாதாவும் பத்தை களுக்குள்ளல ஓடி ஒளயமை” என்று எ6:க்கு நானே கேட்ட விபரம் புரியாத வயசு அது. எனக்குத் தெரிஞ்சு இந்த மக்கள் முன்னேற்றக் கழகம் செய்த பெரிய வேலை உந்த வீடியோப் படம் காட்டினதுதான் உத விட இன்னுமொரு விளையாட்டும் நடந்தது. பெரிய ஸ்கிரீனைக் கொண்டு வந்து வாசிகசாலை முகப்பில வச்சு படறில் பெட்டியால மலேரியா, வாந்திபேதி வகை யறா சுகாதார விழிப்புணர்வுப் படங்கள் போடு வினம் செக்ஸ் படம் ஓடுதடா எண்டு பெடியள் சொல்லுவாங்கள் சனத்துக்கு விழிப்புணர்வு வருகுதோ இல்லையோ விடுப்புப் பாக்கிறதுக்கு எண்டு ஊர்முழுக்க இருந்து வந்து குந்தி இருப்பினம்
அந்தக் காலத்தில வாசிகசாலைக்குப் பின் னேரம் போல வந்து பார்க்கோணும் நீங்கள், பற்பமின்ரன் ஆடுற பெடியள் ஒருபக்கம் குமுதம் பேசும் படத்தில நடிகை ராதாவைத் தேடுறவை ஒருபக்கம், உவன் சே யார் செயவர்த்தன7 என்ன சொல்லுறான்? என்ற முனைப்போட கொடுக்குக்குள்ள சுருட்டை வச்சுக் கக்கினபடி தினபதிப் பேப்பரை நோட்டம் போடுற வயசாளி
யள் ஒருபக்கம், எப்ரைலுக்காக சண் ஆங்கிலப்.
பேப்பர் பார்க்கிற லோங்க்ளப் போட்ட மாமாமார் ஒருபக்கம் எண்டு வாசிகசாலையே நிறைஞ்சிருக் கும் ஒரு தினப்பத்திரிகையின்ர ஒவ்வொரு பக்க
மல்லிகை மே 2007 & 66

மும் தனித்தனியா ஒவ்வொரு ஆளிட்ட இருக் கும் ஆக்களின்ர முகங்களைப் பேப்பர் தான் மறைச்சிருக்கும் வாசிகசாலைச் சுவரில மில்க் வைற் அச்சடிச்ச வாசிப்பதால் மனிதன் பூரண மடைகின்றான்' எண்ட வாசகமும், அமைதி பேணவும் எண்ட அன்புக்கட்டளையும் இருக்கும்
80 களின் ஆரம்பத்தில் என்ர அண்ணரும் கூட்டாளிமாரும் உறுப்பினராக உந்த வாசிக சாலையில் இருந்தவை. 83இல் திண்னவேலிச் சந்தியிலை வச்சுப் பொலிஸ்காரருக்கு விழுந்த அடியோட், அவங்களும் சுடுதண்ணி குடிச்ச நாயஸ் போல கண்ட நிண்ட பெடியளையும் றோட்டில கண்டா அடிக்கிறதும் மறியலுக்குக் கொண்டு போவதுமாக மாறிவிட்டது எங்கட் யாழ்ப்பாணம் ஒருநாள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின்ர முகப்பில அண்ணராக்கள் நிற்கேக்க் ஜிப்பில இருந்து பொலிஸ்காரன்கள் துவக்கால சுட்டுக்கொண்டு வந்தவன்கள். அதோட சரி அண்ணரும் கூட்டாளிமாரும் மெது மெதுவாக வெளிநாட்டுக்குப் பறந்துவிட, மக்கள் முன்னேற்
றக்கழகமும் கவனிப்பார் இன்றிப் போனது.
பிறகு அடுத்த தலைமுறை இளவட்டங்கள் வந்து மக்கள் முன்னேற்றக்கழக ஆட்சியைப் பிடிச்சினம் சரஸ்வதி பூசை நேரங்களில அவல் சுண்டல் படைக்கிறதும், காளிகோயில் சுவாமி கே.கே.எஸ் றோட்டால வரேக்க பொங்கல் பொங் கிப் படைக்கிறதும், ஈழநாடு, ஈழமுரசு பேப்பர் போடுவதுமாகத் தங்கட பங்கையும் செய்தினம்
கிட்டத்தட்ட இதே மாதிரித்தான் தாவடி பரமானந்த வாசிகசாலையும் இருந்தது. என்ர அப்பாவின்ர ஊர் எண்ட உரிமையில அடிக்கடி அந்த வாசிகசாலைக்கும் நான் செல்வதுண்டு. பரமானந்த வாசிகசாலை தாவடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில இருந்த பிரமாண்டமான வாசிகசாலை. அந்த வாசிகசாலைப் பெடியள் நல்ல முனைப்பாக இருந்து அந்த வாசிகசாலை யில் ஒரு நூல் நிலையத்தையும், முகப்பில இருந்த கோவில் வீதியில வச்சு ஒரு பற்றின்ரன்
கோட்டையும் வச்சுப் பராமரிச்சவை வாசிக
சாலைக்குப் பக்கத்தில ஒரு பெரிய கலையரங்
கும் இருக்கிறது. முந்தி நடிகவேள் வைரமுத்து
வின்ர சத்தியவான் சாவித்திரி நாடகம் ஒருமுறை
தாவடிப் பிள்ளையார் பூங்காவன நாளில நடந்தது ஞாபகமிருக்குது.
இணுவில் சந்திக்குப் பக்கத்தால கந்தசாமி கோயில் போற வழியில, வெங்காயச் சங்கம் இருந்தது. அதுக்குப் பின் வளவில ஒரு சின்ன வாசிகசாலை இருந்தது. 1987ஆம் ஆண்டு அந்த வாசிகசாலையில இருந்த பெடியள் ஒரு நூல
கத்தை ஆரம்பிச்சினம் 1987ஆம் ஆண்டு இந்தி
யன் ஆமிச் சண்டை நடக்கிறதுக்கு முதல் கிழமைதான் ஒரு புத்தகத்தை இரவல் எடுத் திருந்தன்.மகாத்மா காந்தியின்ர வாழ்க்கையில நடந்த நிகழ்வுகளைப் போட்டோக்களோட வெளி யிட்ட பெரிய ஒரு புத்தகம் அது இந்தியன் ஆமிச் சண்டைக் காலத்தில கோயில் அகதி முகாமில் இருக்கேக்கையும் வச்சிருந்து அதை வாசிச்சனான்.
ஒருமாதிரி இந்தியன் ஆமிச் சண்டை ஓய்ஞ்சுபோன நேரத்தில அந்த நூலகம் நடத் தின பெடியனைக் கண்டுபிடிச்சுப் புத்தகத்தைக் கொடுத்தேன். ஒரு மாதிரி வியப்போட பார்த்து விட்டு வாங்கித் தன் சைக்கிள் கரியரில் வச்சுக் கொண்டு போனான் என்னவோ தெரியேல்ல எங்கட ஊர்களுக்கும் நூலகத்துக்கும் வெகு துரம் போல அந்தச் சின்ன நூலகமும் பாதியில
-செத்துப் போனது.
ஏ.எல் பரீட்சைக்குப் படிக்கிற காலத்தில தொந்தரவில்லாமல் படிக்க நான் தேர்ந்தெடுத் தது சுன்னாகம் நூலகம் எங்கட் ஊர்களுக்குள் ளேயே பெரிய நூலகம் அது அங்கிருந்து படிப்ப வர்களுக்குத் தனியாகவும். தினப்பத்திரிகை பார்ப்போருக்குத் தனியாகவும் நூல்களுக்குத் தனிக்களஞ்சியம் எண்டு வெள்ளைச் சுண்ணாம்பு நிறத்தில அடுக்குமாடிக் கட்டிடத்தில இருந்த
அரசாங்க நூலகம் அது எங்கட கிராமத்து
வாசிக சாலைகள் ஏதோ ஏழை போலவும் தான் பெரிய பணக்காரன் போல கன்னாகம் நூலகம் பாவனை பிடிப்பது போலத் தோன்றும் . தினத் தந்தி ஜூனியர் போஸ்ட் போன்ற இந்தியப் பத்திரிகைகளும் வருவதுண்டு படிக்கப் போர சாட்டில செம்பருத்தி படத்தில பிரசாந்துக்கு யார் ஜோடி எண்டு தேடினதுதான் மிச்சம்
மல்லிகை மே 2007 & 67

Page 36
கொக்குவிலில் வளர்மதி சனசமூக நிலை யம் எண்டு ஒண்டிருக்கு. அந்த வாசிகசாலை இளைஞர்கள் உள்ளம்’ எண்ட சஞ்சிகையையும் வெளியிட்டவை நல்ல தரமான கதை, கட்டுரை களையும் நல்ல முகப்போவியங்களை அட்டைப் படமாகவும் கொண்டு அந்தக் காலத்தில அழ காக வந்துகொண்டிருந்தது உள்ளம் அதுக்கும் பின்னாளிலை இருதய நோய் கண்டுவிட்டது.
மருதனார் மடச்சந்தியில இருந்த வாசிக சாலை உள்ளுராட்சிச் சபைக்குச் சொந்த மானது. சந்தைக்குப் பக்கத்தில இருந்த இந்த வாசிகசாலையில ஒப்புக்குச் சில பத்திரிகை களும் சந்தையில் நைய்ந்து போன கறிச்சாமான் போல சில நாவல்களும் இருந்தன. எனக்கு வேற வழி கிடைக்காத நேரத்தில இந்த வாசிக சாலைக்கும் போவதுண்டு
வாசிகசாலைகள் தவிர இருக்கும் நூல கங்கள் இளைஞர்களின்ர மேற்பார்வையில்லாம அரசாங்கச் சம்பளத்துக்கு வேலைபார்க்கும் ஊழியரைக்கொண்டவை அப்பிடியிருந்த நல்லூர் நூலகத்துக்கும். நாச்சிமார் கோயிலடி நூலகத் துக்கும் நான் அடிக்கடி போவதுண்டு. ஆனால் 'பிரச்சனை என்னவெண்டால், புத்தகம் இரவல் தரமாட்டினம் அந்த நூலகங்கள் அந்தப் பிரதேச மக்களுக்கு மட்டும் சொந்தமானவையாம் வெளி யாட்கள் எண்டால் அதிக பணம் கொடுத்து உறுப்பினர் ஆகவேனுமாம் இணுவில் சிவகாமி அம்மன் கோயிலுக்குப் பின்னால சிவகாமசுந்தரி சனசமூக நிலையம் எண்டு ஒரு வாசிகசாலை இருக்குது. புறாக்கூடு போல சரியான சின்னன் அது 93ஆம் ஆண்டு கோயில் திருவிழாக் காலத் தில அந்த வாசிகசாலைக்குப் பொறுப்பா இருந்த பெடியள் ஆரம்ப வகுப்புப் படிக்கிற பிள்ளை யளுக்கு ஒரு சைவசமயப் பரீட்சையை வச்சுப் பரிசெல்லாம் கொடுத்தாங்கள்
மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் பக்கத் தில இருந்த சைவப்பிரகாச வித்தியாசாலையின் முகப்பு அறையில கொஞ்சநாள் ஒரு வாசிக சாலை இருந்தது. இந்தியன் ஆமிச் சண்டைக்குப் பிறகு அதுவும் போட்டுது . பொறுப்பா இருந்த தயா அண்ணை கனடாவிலையாம். 90ஆம் ஆண்டு வாக்கில எங்கட மடத்துவாசல் பிள்ளை யாரடிப் பெடியளும் கோயில் முகப்புப் பக்கமா உள்ள டிஎப்பெண்கறிக்கு அருகில இருந்த கடை
யில ஒண்டைத் திருத்திப் புத்தகம் எல்லாம் போட்டு இணுவில் பொதுநூலகம் எண்டு தொடங் கினவை. கலாநிதி சபா ஜெயராசா. செங்கை ஆழியான் உட்படப் பல பிரபலங்கள் வந்து அந்த நூலகத்தைத் திறந்தது இப்பவும் கண் ணுக்குள்ள நிக்கிது. அதுவும் 95ஆம் ஆண்டு சந்திரிகாவின்ர சண்டை தொடங்கினாப் பிறகு முடுவிழாக் கண்டது.
போனவருசம் ஊருக்குப் போனபோது இணுவில் பொது நூலகம் இப்ப டிஸ்பென்சறியா இருந்த கட்டிடத்தில இயங்குது. நூலகம், சின் னப் பிள்ளையருக்குப் பூங்கா. பிள்ளைப் பரா மரிப்பு. சைவ சமயப் போட்டிகள் என்று இந்த வாசிகசாலை நிறையவே செய்யுது. வெளி நாட்டுக்காரரும் நல்லா உதவி செய்யினமாம்
தட்டாதெருச் சந்தியில ஒரு வாசிகசாை
இருந்தது. நல்லூர்த் திருவிழ7 நேரத்தில் கே. கே.எஸ் ரோட்டை மேவி ஒரு பெரிய தண்ணர்ப் பந்தல் வச்சு கலாதியா இருக்கும் அது இந்த வருசம் நான் ஊருக்குப் போனபோது பார்த்தேன் வாசிகசாலை இடிபாடுகளுக்குள்ள புதர் மண்டிக் கிடக்குது. பக்கத்தில ஆழிக்காறன் சென்றி போட்டிருக்கிறான்.
இண்டைக்கு ஒரு அறைக்குள்ள இருந்து இன்ரநெற் பார்த்துப் புதினம் அறிவது எண்டு உலகம் சுருங்கிவிட்டது. ஆனால் இந்த வாசிக சாலைகளின் செயற்பாடுகள் பரந்துபட்டவை. ஒரு ஊருக்குத் தேவையான அறிவுக்கண்ணாக அவை இருப்பதோடு காலத்தின் தேவை கருதிச் செயற்படும் ஒரு சமுக முன்னேற்ற அமைப்பாக வும் அவை இருக்கின்றன. ஆனாலும் இந்த ஈழத்தமிழினத்தின் நிச்சயமற்ற வாழ்க்கை முறை தான் எங்களுர் வாசிகசாலைகளுக்கும் வாய்த்
திருக்கின்றது.
இந்த வாசிகசாலைகள் எல்லாம் ஒரு குறிப் பிட்ட காலகட்டத்து இளைஞர்களின் நிலைக்கள னாக இருந்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத் திலும் காற்சட்டை போட்ட ஒரு புதிய தலைமுறை இதைத் தாங்கிப்பிடிக்கக் காத்திருக்கும் யுத்தம் என்ற புயல் அடிக்கும் போது பொட்டிழந்து போகும் பாவை போலச் சிதைந்து போகும் இந்த வாசிக சாலைகள். ஆனால் இன்னொரு தலைமுறை வந்து இதைப் பூச்சூட்டி அலங்கரித்து அழகு பார்க்கும் அடுத்த யுகம் தொடங்கும்
மல்லிகை மே 2007 & 68

டெலிசிக் &ыл
区 நீங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளன் என்ற ரீதியில் போய் வந்துள்ளிர்கள். முன்னரைவிட, தற்போது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடியிருப்பதை ஒத்துக்கொள்ளுகிறீர்களா?
ஹட்டன். பாலா சங்குப்பிள்ளை
சி இந்தச் சர்வதேசப் பிரபலம் இங்கு எழுதிவரும் எழுத்தாளர்களால் ஏற்பட் டுள்ளது என்பதைவிட, இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற நம்மவர்களால் ஏற்பட் டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கிருந்து நாடு கடந்து சென்றவர்களில் அநேகர் கலைஞர்கள், எழுத்தாளர்கள். இன்று 32 நாடு களில் நம்மவர்கள் நமது மொழியில் அங்கு எழுதி வருகின்றனர். சிற்றேடுகளை நடத்தி வருகின்றனர். எப்பவோ ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் உலகில் விதந்து பேசப்படுமானால் அதைச் சாதனையாக்கியவன் நிச்சயம் இலங்கைத் தமிழனாகத்தான் இருப்பான்! இன்று தமிழகப் பிரபல சஞ்சிகைகளில் நம்மவ. களின் படைப்புகள் இடம்பெற்று வருவது நம்மவர்களின் எழுத்துத் தகைமையைக் கருதியல்ல. தம்மைச் சர்வதேசச் சந்தைக்குத் தயார்ப்படுத்திச் சந்தையை அகலப் படுத்துவதே அவைகளது உட்சூத்திரமாகும். இதில் நம்மவர்கள் முன்னெச் சரிக்கையாக இருக்க வேண்டும்.
Σ.Κ. எழுத்தாளர் பலரின் உருவங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு வருகிறீர்களே? எந்த அடிப்படையில் இதைத் தேர்வு செய்கிறீர்கள்?
ഖഖങ്ങധ്. - கு.வேல்முருகு
மல்லிகை மே 2007 & 69

Page 37
இ அறுபது ஆண்டுக்கால இலக்கிய அநுபவம் எனக்குப் பின் துணையாக இருக்கிறது. எந்தவிதமான காழ்ப் புணர்ச்சியுமில்லாமல் வெகு தெளி வாகச் சிந்தித்து வெளியிடப்பட வேண்டியவர்களின் உருவப் படங் களைத் தெரிவு செய்கின்றேன். ஒரு
தடவை வரிசையாக நான் வெளி யிட்டுள்ளவர்களின் உருவங்களையும்,
தகவல்களையும் எண்ணிப் பாருங்கள். இன்று அவை வெறும் புகைப்படங்கள் - தகவல்களே. நாளை அவையே வரலாற்று ஆவணங்களாகக் கணிப்புப் பெறும்.
நான் ஒரு மாணவன், எழுத்தில் ஆர்வமுள்ளவன். மல்லிகையின் தூண் டில் பகுதிக்குக் கேள்வி ஒன்றை எழுதிக் (385 Les விரும்புகின்றேன். இதற்கு நானென்ன செய்ய வேண்டும்?
புத்தளம். எஸ்.சரவணன்
இ வேறு ஒன்றும் செய்ய வேண் டாம். இப்பொழுது இந்தக் கேள்வி யைக் கேட்பதற்குச் செலவளித்த நேரத்தைப் பயன்படுத்தி உங்களது மன சிலுள்ள கேள்வியை எழுதியனுப் புங்கள். அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை!
X தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எல் லாச் சஞ்சிகைகளையும் நீங்கள் படிப்பு
துண்டா?
நெல்லியடி, க.லோகேஸ்வரி
23 எல்லாவற்றையும் படிப்பதில்லை. படித்துக் கிரகிக்க வேண்டிய எழுத்துக் களையும் கவனமாகப் படித்து மனப் பதிவு செய்து கொள்வேன். தேவை ஏற்படும் போது மல்லிகைக்காகக் கிர கிக்கப்பட்டவைகளில் சிலவற்றைப் பயன்படுத்துவேன்.
மல்லிகை ஆரம்பித்த காலத்தில் தொடர்ந்தும் இத்தனை ஆண்டுகளாக மல்லிகை இதழ் வெளிவரும் என நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?
மட்டக்களப்பு. எஸ்.மகாதேவன்
இலி நான் என்னளவில் திட்டமிட்டு இயங்குபவன். எதையுமே ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்றுபவன். காலத்தை யும் எனது ஆற்றல்களையும் கணக்கி லெடுத்துக் கொண்டு இயங்கி வருப வன். எனவே மல்லிகை தொடர்ந்தும் இத்தனை ஆண்டுக் காலங்களாக வெளிவந்து கொண்டிருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. எனது ஆழத்தையும் II) GT ஒர்மத்தையும் சரியாக எடை போடத் தெரியாதவர்கள்தான் இதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.
ΣΚ. நீங்கள் இதுவரையும் எழுதிய எழுத் துக்கள் அத்தனையும் ஒருங்குசேர பாது காப்பாக வைத்துள்ளிர்களா?
கல்முனை. க.தவயோகம்
இ எனது எழுத்துக்களுக்கும் கருத்துக் களுக்கும் எதிர்காலத்தில் எத்தனை
மல்லிகை மே 2007 & 70

தூரம் மதிப்பு இருக்கும் எனத் தெளிவா கவே எனக்குத் தெரிந்துள்ளது. அதற் e ஆயத்தங்களைச் செவ்வனே செய்து வைத்துள்ளேன்.
ΣΚ. இத்தனை அவலங்கள், யுத்தச் சந்தடி கள், குண்டுவீச்சு அமளிகளுக்கு மத்தி யிலும் கலாசார நிகழ்ச்சிகள், நூல் வெளி யீடுகள், இலக்கியக் கூட்டங்கள் நடை பெற்று வருகின்றனவே, இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?
மருதானை. ஆர்.கேதாரநாதன்
2 இத்தனை கஷ்ட நிஷ்டுரங்களுக்கு மத்தியிலும் இந்த மண்ணில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் ஜீவத்துடிப் புடன் இயங்கி வருவதைத்தான் இத் தகைய செயல்பாடுகள் உலகிற்கு நிரூ பித்துக் காட்ட முனைகின்றன. நிச்சய மாக நீங்கள் ஒன்றை நம்பலாம். இத்த கைய ஆத்மத் துடிப்புக் கொண்ட ஒரு மொழியினரை எந்தக் கொம்பன் வந்தா லும் அடக்கி, ஒடுக்கிவிட முடியாது. முடிவில் அந்த ஆற்றல் மிக்க மொழி யினர் தத்தமது குறிக்கோள்களை வெற்றிகரமாக அடைந்தே தீருவர்.
ΣΚ. எழுத்தாளர் டானியல் பற்றி இலக்கிய உலகில் பல்வேறு கருத்துக்கள் சொல்லப் பட்டு வருகின்றன. ஆரம்பகால நண்பரும், தொடக்ககாலத் தோழருமான அவரைப் பற்றி நீங்கள் விரிவாகக் குறிப்பிட்டால்
என்ன?
ஹற்றன். எஸ்.தேவராஜன்
மாத்தளை.
* நாம் இருவரும் இலக்கிய ഖ கிற்கு ஒன்றாக வந்தவர்கள். ஒன்றாக இருந்தவர்கள். அரசியலிலும் பரஸ்பரம் தோழர்களாகக் கனகாலம் இயங்கியவர்
கள். இருவருமே ஒடுக்கப்பட்ட சமூ
கத்தின் விடியலிற்காக இடையறாது உழைத்தவர்கள். ஆனால், இருவரினது அணுகுமுறைகளுமே வேறு வேறு. ஆரம்ப இளவயதுக் காலத்தில் இரு வரிடமும் இலக்கியப் போட்டி உணர்வு இருந்தபோதிலும் கூட, ஒருவரை ஒரு வர் மதித்துப் பழகி, கெளரவித்து வந் துள்ளோம். அவரது இலக்கிய நட்பு வட்டம் வேறு. என்னுடைய தொடர்பு வட்டம் வேறுபட்டது. நான் சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற சமயத்தில் என்னைத் தேடிவந்து பாராட்டியவர். வேறு சில இலக்கிய நண்பர்களைப் போல, என்னை எந்தக் காலத்திலுமே கொச்சைப்படுத்தியவரல்ல, அவர். அவரைப் பற்றி எழுத வேண்டுமென் பதே எனது மன அவாவாகும்.
X மல்லிகை போன்ற சிற்றேடுகளின் அடிப்படைப் பலமே அதன் சந்தாதாரர்கள் தான். இச்சந்தாதாரர்கள் தொடர்ந்தும்
மல்லிகைக்கு ஒத்துழைப்பு வழங்கி
வருகின்றனரா?
எம்.என்.இக்பால்
2 வெறும் மார்க்கட் விற்பனவுப்
பண்டமல்ல, மல்லிகை. மக்களின் பேராதரவும், ஒத்துழைப்புமே அதன் நிரந்தப் பலமாகும். சந்தாதாரர்கள் சந்
தாவை மட்டும் அனுப்பி உதவுவ
റയ്ക്കെ ഛേ 2007 & 71

Page 38
தில்லை. அதில் பலர் மல்லிகையின் மீது பேரபிமானம் கொண்டவர்கள். சிலர் நான் எதிர்பார்ப்பதற்கும் அதிக மாகவே மல்லிகைக்கு அன்பளிப்பு நல்கி வருகின்றனர். அவர்களினது நாமங்கள் எனது நெஞ்சின் எங்கோ ஒரு மூலையில் பத்திரமாகச் சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன. தேவை ஏற்படும் போது இலக்கிய உலகிற்கு
அத்தகையோரது பெயர்களைத் தெரி
வித்து, அவர்களது பிற்சந்ததியினரைப் பெருமைப்பட வைப்பேன்.
அண்மையில் சென்னை மணி மேகலை பிரசுரத்தினர் இலங்கை எழுத் தாளர்களின் 40 நூல்களைப் பதிப்பித்து
வெளியிட்டுள்ளனர். அதில் மலையக
எழுத்தாளனான எனது நூலும் அடங்கு கின்றது. இது ஓர் ஆரோக்கியமான விஷயம் அல்லவா?
ஹற்றன். unsortefrig, sireo6T இி ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். 'குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டு வாங்க வேண்டும்!" என்பது பழமொழி. இது மோதிரக் கையல்ல. சர்வதேச வியாபாரி யின் கரம். கடந்த ஐம்பது ஆண்டு களுக்கு மேலாக நானும் என்னைப் போன்றவர்களும் இந்த மண்ணை நா வால் உழுதிருக்கின்றோம். பேனாவால் கொத்திக் கொத்திப் பசளையிட்டு வளப்படுத்தி வந்துள்ளோம். அதன்
பெறுபேறுதான் உங்களைப் போன்ற இளந்தலைமுறை எழுத்தாளர்கள். நீங்கள் யாரைக் கொண்டும் தற்காலிக ஆசை கருதி, உங்களது படைப்புக் களை நூலுருவில் வெளியிடலாம். ஆனால், அது நிரந்தரமாக நின்று நிலைக்காது. நாங்கள் வெகு சிரமப் பட்டுத் தோண்டிய குளத்தில் இன்று ரவி தமிழ்வாணன் மீன் பிடித்து மகிழப் பார்க்கிறார். இது தொடராது. எங்களது கடந்தகால உழைப்பைக் கொச்சைப் படுத்தி, குறுக்கு வழியில் புகழ் தேடி விடலாம் என நினைப்பவர்கள் தயவு செய்து எங்களையும், எங்களது இலக் கியப் பாதைகளையும் தடைசெய்து விடாதீர்கள். உங்களது பாதை அடைக் கப்பட்டு விடும்.
区 தேர்ந்தெடுத்த தூண்டில் கேள்வி -
பதில்களை ஒழுங்குபடுத்தி அவையனைத் தையும் ஒன்றிணைத்து ஒரு நூலாக வெளி யிட்டால் என்ன?
கொக்குவில். ஆர்.முத்துவேல்
2 முன்னரும் தூண்டில் என்ற பெய ரில் சென்னையில் நூலொன்றை வெளி யிட்டிருந்தேன். எனது கருத்துக்கள் தமிழகத்தில் பரவுவதற்கு அந்நூல் பேரு தவியாக அமைந்தது. இங்கு விற்பனை யாகியதை விட, அந்நூல் தமிழகத்தில் விற்பனையாகியதுதான் அதிகம் உங்களது யோசனையை நடைமுறைப் படுத்த முயற்சிக்கின்றேன்.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
மல்லிகை மே 2007 & 72

animanan
ல்ெலிகைலின் 42வது ஆண்டுலெர் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
உயர் கல்வி மாணவர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும், நாடு பூராவும் பரந்துள்ள கல்லூரி, மற்றும் நூலகங்களுக்கும் தேவைப்படும் இலக்கிய மலர்த் திரட்டு.
66606) : 150/- ܫ
தேவையானோர் தொடர்பு கொள்ளவும்.
Dominic Jeeva 'Mallikai” 201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te 1 : 2320721