கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2007.06

Page 1
50வது ஆண்டை நோக்கி.
*سمتیEEE
தாளிகை மூலம் த
 

லங்க வைப்பவர்
ஜூன் 2007

Page 2
  

Page 3
10.
11.
12.
13.
15.
16.
17
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30. 31.
32.
33.
34.
S
UNK-స్jని மல்லிகைப் பந்தல் சமீபத்தில் வெளியிட்டுள்ள நூல்கள்
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் : டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் கார்ட்டுன் ஓவிய உலகில் நான் : சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் . பல்கலைக்கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் டொமினிக் ஜீவா (பிரயாணக் கட்டுரை)
முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) :முனியப்பதாசன் மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) : பாலரஞ்சனி இப்படியும் ஒருவன் (சிறுகதை) : மா. பாலசிங்கம் அட்டைப் படங்கள்
சேலை (சிறுகதை) :முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் செங்கை ஆழியான் மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) செங்கை ஆழியான் நிலக்கிளி (நாவல்) : பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) மல்லிகை அவுஸ்திரேலிய மலர்
தரை மீன்கள் (சிறுகதை) :ச. முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) : ப.ஆப்டீன் அப்புறமென்ன (கவிதை) : குறிஞ்சி இளந்தென்றல் அப்பா (வரலாற்று நூல்) : தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம்.கே. முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் - 25 : தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு Undrawn Portrait for Unwritten Poetry - டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) என் தேசத்தில் நான் - பேராதனைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியரது கவிதைத் தொகுதி அக்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் கங்கை மகள் - முருகபூபதி பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா நானும் எனது நாவல்களும் - செங்கை ஆழியான்
250/= 140/= 175/=
110/= 100/=
110/= 150/=
60/= 150/= 175/= 150/= 275/= 350/= 140/= 180/= 150/=
80/= 100/=
75/=
150/=
175/- 150/= 120/= 120/= 140/= 150/- 350/=
200/=
140/= 200/= 150/= 175/= 120/=
80/=

இதை பாபிட்ே Gais G-3
இந்த நாட்டில் தயாராகி வரும் சிற்றிலக்கிய ஏடுகளுக்கு பெரிய நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.
புதிய வரவு - செலவுத் திட்டத்தில் தபாற் செலவுகள் கண்மண் தெரியாமல் உயர்த்தப் பட்டுவிட்டன.
அதிலும், கல்வித் தகைமைக்குட்பட்ட இலக்கியச் சிற்றேடுகளுக்கு இரண்டு மடங்குக்கு மேலதிகமாகத் தபாற்தலைப் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது, எமக்கெல்லாம் பேரிடியாக அது அமைந்துவிட்டது.
புதிய தபாலமைச்சர் கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் இயல்பாகவே ஒரு கவிஞர். கவிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த நாட்டு எழுத்தாளர்களையெல்லாம் மனதார நேசிப்பவர். சிற்றிலக்கிய ஏடுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்.
அவரது அமைச்சின் கீழ்த் தான் சிற்றிலக்கிய ஏடுகளுக்கு இந்தப் பொல்லாத பொருளாதாரச் சங்கடம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
சிற்றிலக்கிய ஏடுகளை வெளியிடுபவர்கள் தாம் தயாரித்து வெளியிடும் ஏடுகள் அத்தனையையும் விற்றாலும் கூட, கை நஷ்டப்படத்தான் செய்கிறார்கள். நஷ்டப்பட ஏன் சஞ்சிகைகள் தொடர்ந்து நடத்தவேண்டும்?' என்ற கேள்வி எழலாம். இந்தத் துறையில் தம்மை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு சும்மா கையைக் கட்டிக் கொண்டு இருக்க முடியவில்லையே! - அதுதான் காரணம்.
பெரும்பாலும் இத்தகைய சஞ்சிகைள் சந்தாதாரர்களை நம்பியே உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவை. அவர்களுக்கோ பலசோலி. ஞாபகம் வைத்திருக்கமாட்டார்கள். சந்தா முடிந்துவிட்டதை ஞாபகப்படுத்துவதே பெரியதொரு வேலை.
நேரடியாகச் சொன்னால், இத்தகைய ஏடுகளுக்கு அரச மானியம் தந்துதவப்பட வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் இது நடைமுறைச் சாத்தியமாக நடந்தேறி வருகின்றது. இவைகளுக்குச் சலுகை காட்டுவது கலை இலக்கிய வளர்ச்சிக்கு உதவியாச அமைந்துவிடும்.
நமது நாட்டில்தான் இத்தனை கிடுக்கிப் பிடி
நம்மை புரிந்து கொண்டுள்ள அமைச்சருக்கு இது புரியாதொன்றல்ல
எனவே, சிற்றேடுகள் மீது அழுத்தத்தைக் குறைத்தால், எதிர்காலச் சந்ததிக்கு இது பேருபகாரமாக அமையும் இதைச் சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும்,

Page 4
9|l 60 Llullb
பேசும் சித்திறங்களை വതpuൾ ഇവിuf
- உடப்பூர் வீரசொக்கன்
ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் ஓவியக் கலை மனத்திருப்தியையும், மன ஆறுதலையும் தரும் கலையாகத் திகழ்கின்றது. தனது எண்ண உணர்வுகளையும், மற்றவர் களின் எண்ண நேயங்களையும் அறிந்து, உணர்ந்து செயல் வடிவம் பெற்றதாகவும், உண்மைத் தன்மைகளை வெளிப்படுத்தும் தத்ரூபக் கலையாகவும் இந்த ஓவியக் கலை அமைந்திருப்பதென்றால் அது மிகையல்ல! w
இன்று ஈழத்து இலக்கிய பரப்பில் தனக்கெனத் தனித்துவமானதும் நவீனத்துவம் மிக்கதுமான பாணியில் ஒவியங்களைச் சிருஷ்டிக்கும் முன்னோடி ஒவியராக விளங்கும் அன்பர் ஏ.மொறாயஸ் ஓவியக் கலைக்குத் தன் பணியை அர்ப்பணித்து வருகிறார்.
தமிழர்களின் தனித்துவத்தைப் பறைசாற்றிக் கடந்த எழுபத்தைந்தாண்டு காலம் ஈழ மண்ணில் கால் பதித்து உலாவரும் வீரகேசரியில் கடந்த நான்கு தசாப்த காலம் காத்திர மான பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஏ.மொறாயஸின் கைவண்ணத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. பத்திரிகா தர்மத்தைக் கட்டிக் காத்து, மாற்றாரையும் ஈர்த்து தனது ஓவியக் கலை மூலம் வாசகர்களின் நன்மதிப்பைப் பெற்ற முதன்மை ஒவியர் என்ற தகுதிக்கு உரிமையாளராக மொறாயஸ் மதிக்கப்படுகிறார்.
ஒவியன் ஒருவருக்கு இருக்கக்கூடிய சிநேகயூர்வ உரையாடலும், உபசரிக்கும்
நேர்த்தியும், உதவி செய்கின்ற கொள்கையுமுடைய மொறாயஸையே நான் கடமை நிமித்தம் வீரகேசரி பணிமனைக்குச் செல்கையில் காண்பதுண்டு.
நண்பர் மொறாயஸ் பாரம்பரிய ஒவியங்களைத் தீட்டி உயிரூட்டும் அதேவேளை தற் கால நவீன பாணியின் பின்புலத்தைக் கொண்டும் நாளிதழுக்கு, தினசரி சஞ்சிகை களுக்குத் தனித்துவத்துடன் தனது ஒவியங்களை தீட்டி வருகின்றார்.
"மோனாலிஸா' இந்தப் பெயர் உலகப் புகழ் பெற்றது. லியானோ டாவின்சி வரைந்த அற்புதமான ஒவியம்.
மல்லிகை ஜன 2007 率 4

ஒவியத்தின் மேல் மையல் கொண்ட நம் மொறாயஸ் ஒவியக் கலையின் மேல் தணியாத தாகம் கொண்டு, தன் மகளுக்கு "மோனாலிசா என்ற பெயரைச் சூட்டியும், தன் மூத்த மகனுக்கு நவீன ஓவியத்தின் பிதாமகன் "பிகாஸோ'வின் பெயரைச் சூட்டி யும் தனது குடும்பம் ஒவியக் குடும்பம் என் பதை அம்பலப்படுத்தி வாழ்கின்றார். இது ஒவியத்தின் மேல் அவர் கொண்ட பற்று றுதியை எடுத்துக் காட்டுவதாக இருக் கின்றது.
ஒவியர் ஏ.மொறாயஸின் தந்தை சார்ள்ஸ் மொறாயஸ் கொழும்பில் பிரபல தொழிலதிபராகப் புகழ் பெற்றவர். கொழும் பில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு அதிபர். வெளிநாட்டில் இருந்து பல பொருட் களைக் கொள்முதல் செய்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த வியாபாரத்தை முன்னெடுத்துச் செய்யத் தனது இரு பிள்ளைகளும் உதவி யாக இருப்பார்கள் எனக் கனவு கண்டார் தந்தை. அவருக்கு இரு மகன்கள். ஒரே LDS sit.
ஆனால் இரண்டு பிள்ளைகளும் வியா பாரத்துறையில் ஈடுபடாமல் கலைத்துறை யில் அதித நாட்டம் கொண்டு கலையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்களில் மூத்த மகன் லெனின் மொறா யஸ் நாடகம், சினிமாத்துறையில் ஈடுபட்டு அதில் மூழ்கி விட்டார். சிங்கள சினிமாவில் முத்திரை பொறித்துள்ளார். இளைய மகன் அகஸ்தின் மொறாயஸ் ஓவியங்களில் நாட் டம் கொண்டு உயிர்த் துடிப்பான ஒவியங் களை வரையும் முன்னணி ஒவியக் கலை ஞராக இன்று அக்கலையில் அகலக்கால்
வைத்து அப்பணியைச் செவ்வனே மேற் கொண்டு வருகின்றார்.
தனது வியாபாரத்துறையை முன்னெ டுத்துச் செல்லத் தனது இரு புதல்வர்களும் இல்லையே என்றும், இவர்கள் கலைத் துறையில் ஈடுபட்டவர்களாக இருப்பதை யிட்டும் வேதனைப்பட்டார் தந்தை. தனது இரு பிள்ளைகளும் கலை, சினிமா என்று போய் விட்டார்களே என்று கவலைப்பட்டுத் தனது 47வது வயதில் இறையடியில் சங்க மித்தார்.
ஒவியர் மொறாயஸ் சென்னை ஓவியக் கல்லூரியில் ஒவியத்தை நேர்த்தியாகக் கற்றுத் தேறி அதில் டிப்ளோமா பட்டம் பெற்றுச் சில காலம் ஒவிய ஆசிரியராக கடமையாற்றினார். ஆசிரியப் பணியை விடப் பத்திரிகையில் இணைந்தால் பல சாதனைகளை படைக்கலாம் என எண்ணி வீரகேசரியில் 1970ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் களின் சிறுகதைகளுக்கு, தொடர் நவீனங் களுக்கு துடிப்புள்ள, மனதை விட்டகலாத ஒவியங்களைத் தீட்டினார். ஒவியங்கள் மூலம் கதையும், கதையின் மூலம் ஒவிய மும் வாசகர்களிடத்தில் பதியுமளவுக்கு உயிரோட்டம் கண்டன.
வீரகேசரி நிறுவனம் நாளிதழ், வார இதழ் மித்திரன், மித்திரன் வாரமலர் ஆகிய வற்றை வெளியிட்டது. தனது நவீனத்துவ மான ஒவியங்களால் பெரிதும் புகழ் பெற் றார். வீரகேசரி நிறுவனத்தின் கீழ் இயங்கிய வீரகேசரி பிரசுரம் ஜன மித்திரன் பிரசுரம் மூலமாக வெளிவந்த புகழ் பெற்ற படைப் பாளிகளின் நூல்களுக்கான முகப்பு ஓவி
மல்லிகை ஜூ 2007 & 5

Page 5
யத்தை இவரே வரைந்தார். அவைகள் இவ ரது ஓவியக் கலைச் சிறப்பும் நுணுக்கமும் அமைந்திருப்பதைக் காணலாம்.
அதுமட்டுமன்றி, வெளியுலகப் பிரசுர களங்களுக்கும், கதை, கட்டுரை, நாவல் களுக்கும் அட்டைப் படங்களை வரைந்து அவை உயிர்த்துடிப்பான படைப்புக்களாக மிளிர மொறாயஸின் பங்களிப்புகள் மூல வித்தாக அமைந்திருக்கின்றன.
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான தேவகெளரியினால் மல்லிகை சஞ்சிகை பற்றிய ஆய்வுப் புத்தகத்துக்கு இவரே அட்டைப் படம் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1973ஆம் ஆண்டு திருமணப் பந்தத் தில் தன்னை இணைத்துக் கொண்ட மொறாயஸ் அதே ஆண்டில் பிரபல எழுத் தாளர் கதிர்காமநாதன் வடித்த நான் சாக மாட்டேன்’ என்ற நாவலுக்கு அட்டைப் படம் வரைந்தார். நவீன ஒவிய முறையில் வடிக் கப்பட்ட அந்த அட்டைப் படம், அதே ஆண் டில் சிறந்த அட்டைப் படமாகத் தேர்ந்தெடுக் கப்பட்டது மொறாயஸின் ஓவிய வளர்ச் சிக்கு கோடிட்டுக் காட்டும் நிகழ்வாக அமைந்தது. இச்சாதனைக்காக முன்னாள் கல்வி அமைச்சரான பதுார்தீன் மொகமட்டி னால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரான வலம்புரிஜானை ஆசிரியராகக் கொண்ட தாய்' சஞ்சிகையில் ஒவியர் மொறாயஸின் நேர்காணல் பிரசுரிக்கப்பட்டதுடன், தானே எழுதிய சிறுகதைக்குத் தான் வர்ைந்த ஒவியத்தையும் "தாய்' சஞ்சிகை பிரசுரித் ததைத் தனது வாழ்வின் மறக்க முடியாத முதுசொமாகும் என்கின்றார்.
1983ஆம் ஆண்டில் இருந்து வீரகேசரி வெளியீட்டின் சினிமாப் பகுதியை காத்திர மான முறையில் தயாரித்து வருகின்றார். வீர கேசரியின் சினிமா பகுதி தற்பொழுது ஜன ரஞ்சமாகவும், சுவாரஸ்சியமாகவும், பல் சுவையாகவும் இருக்க ஓவியர் மொறாய ஸின் கலா வல்லமையே காரணமெனலாம். பலரின் பாராட்டுக்கள் விதந்துரைக்கப்படு கின்றன.
சினிமா பகுதியில் கேள்வி - பதில் பகுதியை ஆரம்பித்துத் தனது மகளின் பெய ரான மோனாலிஸா' என்ற பெயரில் பதில் களை வழங்கி வருகின்றார். தனது உயிர் துடிப்பான ஒவியங்கள் மூலம் "மோனா' என்று அன்புடன் அழைக்கப்படும் மொறா யஸ் தமிழ் வாசக நெஞ்சங்களில் இன்றும் - என்றும் பேசப்படும் நாயகனாக மதிக்கப்படு கின்றார்.
இதற்கெல்லாம் ஊன்றுகோலாகவும், தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கின்ற வீரகேசரி வார இதழ் ஆசிரியர் வீ.தேவராஜை நன்றியுடன் நினைவு கூறு கின்றார்.
எமது நாட்டின் ஒவியரான ரமணியின் ஒவியம் தன்னைக் கவர்ந்தது எனக் கூறும் மொறாயஸ், ரமணி முன்பு வீரகேசரியில் ஒவியராகக் கடமையாற்றியுள்ளார் என் பதை நினைவு கூறுகின்றார்.
மித்திரன் வாரமலரில் "உண்மைக் கதை', 'திரைக்குப் பின்னால்' என்ற ஆக்கங் களையும் மொறாயஸ் எழுதி வருகின்றார்.
அடக்கத்துடனும், ஆளுமை திறமை யுடனும், உயிரோட்டமுள்ள கற்பனை வளத் துடனும். யதார்த்த பூர்வமான சிந்தனை ஒட்டத்துடனும், துடிப்புடனும் இயங்கும் ஓவியக் கலைஞனை வளப்படுத்த வேண்டும். *
மல்லிகை ஜூ 2007 & 6

வழமையான பாதையால் போகாது வேறு பாதையில் வாகனங்கள் போவதைக்
கண்டு செல்வத்தம்மாவின் மனம் சஞ்சலித்தது.
"எங்கேயோ குண்டு வெடிச்சிட்டுதாக்கும்." “ஆரும் பெரிய மனிசர் இந்த றோட்டால வரப் போகீனமாக்கும்.”
நாட்டின் நிலைமையை நினைவுக்கெடுத்துப் பற்பல ஊகங்களைத் தலைக்குள் குவித்தா - செல்வத்தம்மா.
குறுநடையொன்றின் மூலமாகத் தேநீர்க் கடையொன்றைச் சென்றடைந்தா. தேநீர்க் கடை வானொலி பாட்டொன்றை இசைத்துக் கொண்டிருந்தது. இசை நிற்க விசேட அறிவிப்பொன்று ஒலிபரப்பாகுமெனச் செல்வத்தம்மா எதிர்பார்த்தா. வாகனங்களின் பாதை மாற்றத்துக்கான காரணம் அதில் சொல்லப்படுமென்பது அவவின் எதிர்பார்ப்பு! ஆனால் அறிவிப்பாளர் மஞ்சள் சம்பந்தமான அறிவியல் தகவல்களை இசை முடிந்ததும் தானே சொன்னார். மஞ்சளுக்கான அறிவியல் பெயர் "குர்மா லோங்கா" என்றார்.
புத்தகத்தின் புத்தகங்கள்!
- LDrt.LIT6vérslebLib
செல்வத்தமாவுக்கு விண் விண்ணெனத் தலை இடித்தது! ஏற்கனவே பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகப் பேருந்துக்காகக் காத்து நின்றவ! காலும் வலிக்கத் தொடங்கியது.
“கொஞ்சம் செண்டா வழமைக்கு வந்திடும்.” தன் மனதிற்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டா.
“அதுமட்டும் என்ன செய்யிறது." குழப்பத்தில் தடுமாறினா. கேள்வியைச் சுமந்தபடி மெல்ல நடந்து முன் சென்றா.
“பழைய தோட்டத்துக்குப் போய்க் கனகாலம்."
பழைய கூட்டாளிமாரைக் கண்ணில் வைக்கலாமென்ற நினைவொன்று அவவின் மனதில் தெறித்தது. சடுதியாக ஏற்பட்டு விட்ட சந்தர்ப்பமும் அதற்கு இசைவானதாக இருந்தது. மகிழ்ச்சிக் களைகள் முகத்தில் நிரம்பி வழியப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தானும் தன் குடும்பமும் வசித்த தோட்டத்தை நோக்கிச் செல்வத்தம்மா
5-1525ft.
மல்லிகை ஜச 2007 奉 7

Page 6
அத்தோட்டத்துக்குள் செல்வத் தம்மாவின் கால் பட்டு ஏறத்தாழ வருஷ மொன்றிருக்கும். அவவுக்கு நம்ப முடி யாதிருந்தது! இரு மருங்கிலும் இருந்த வீடுகளுக்கு மேலாக அடுக்குகள் பல முளைத்திருந்தன. இரு மருங்கிற்கும் இடையில் இருந்த பாதை சுருங்கி இருந்தது. ஒருவரையொருவர் முட்டா மல் போக்குவரத்துச் செய்ய முடியாத ஒரடிக்குச் சற்று வீச்சான அகலப் பாதை. அனைத்து வீடுகளின் சாளரங் கள் ஊடாகவும் மின்னொளிக் கீற்றுகள் தெரிந்தன. இருட்டை விரட்ட வெளிச் சம்! காற்றோட்டத்திற்கு மின்விசிறி! இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் தேவை! வீடுகளுக்குள் சூரிய் கதிர்கள் படுவதென்றால் ஆகக் கூடியது ஒரு கோழி தூங்கும் நேரம்தான்!
"சண்டைக்குப் பயந்து சனமெல் லாம் இஞ்ச வந்துதான் கொட்டுண்டுது கள். அதுகளுக்கு இருக்க இருப்பிடம் தேவை தானே.” நிலைமைக்கேற்ற வகையில் செல்வத்தம்மா தோட்டத்தில் தான் கண்ட மாற்றத்தை ஏற்றுக் கொண்டா. வீடுகளின் நெடுப்பிற்கான காரணத்தை உணர்ந்து கொண்டா.
இருமருங்கும் பார்த்துக் கொண்டே நடுப்பகுதிக்கு வந்துவிட்டா. அவவின் கூட்டாளியின் இலக்கம் மறந்து போய் விட்டாலும் அவவுக்கு அடையாளப் படுத்தச் சில தடயங்கள் இன்னமும் மனதில் இருந்தன. வாயுடைந்த ஆட்டுக் கல்! அதுதான் அடையாளம். வாசலின்
முன்பக்க ஒரத்தில் கிடந்தது. தன்
லக்கை அடைந்து விட்டதாகக்
அ து த குது
கலித்தா. சலனமெதுவின்றிப் பறபற் வோல் சுவரின் கேற்றைத் திறந்து கொண்டு, வீட்டு வாசல் கதவின் இடது பக்கத்தில் தெரிந்த அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினா.
“வாறன் செல்வத்தம்மா." முேல் மாடியிலிருந்து சத்தம் வந்தது.
'ஏமாத்தமில்லாமல் போச்சு. உமேசம்மா நிக்கிறா. ' தன் கூட்டாளி யின் குரலில் கூட்டாளியைக் கண்டது போல செல்வத்தம்மா சந்தோஷம் கொண்டாடினா.
“மொட்டை மாடியில் துணி காயப் போட்டுக் கொண்டு நிக்கேக்க நீங்க வாறதைக் கண்டன். வாங்க, வாங்க இம்பட்டு நாளா எங்க போயிருந்தீங்க?" கதவைத் திறந்தபடியே தனது வெற் றிலைக் காவி அப்பிய பற்களைக் காட் டிச் சிரித்தபடி உமேசம்மா தன் கூட் டாளியைக் கொள்ளை ஆனந்தத்தோடு வரவேற்றா.
'நான் நெனைச்சன் சண்டை இல்லைத்தானே நீங்க ஊருக்குப் போட் டீங்கன்னு. குசன் செற்றியில உட் காருங்க."
ஒ. என்ன சொன்னிங்க உமே சம்மா, சண்டை இல்லையா? பழையபடி என்ன நடக்கெண்டு தெரியாதா?’ செல் வத்தம்மாவின் முகச் செந்தளிப்பு எங்கோ ஒடி மறைந்து கொண்டது. துக்கம் முகத்தைப் போர்த்தியது.
"செவ்வாய்க் கிழமைகளில் கோயி லுக்க தேடுவன். கோல் எடுக்கலா மென்னா நீங்க தந்த விசிட்டிங் காட் டைத் தொலைச்சிட்டன்."
மல்லிகை ஜூ 2007 & 8

நனைந்திருந்த றெஸ்சிங் கவுணை உள்பாவாடை தெரிய முழங்காலுக்கு மேலாகத் தூக்கிக் கட்டியபடி உமே சம்மா குற்ற உணர்வு மேலோங்கச் சொன்னா.
“அது சரி. கண்டா ஐஸ்சாக் கரை வீங்க.." தொடர விடாது உமேசம்மா குறுக்கிட்டு, "அப்படி இல்லிங்க, செல் வத்தம்மா. ஒங்களை நாங்க எப்படி மறக்கிறது. இருங்க குடிக்க ஏதாச்சும் கொண்டு வாறன். மேல் தட்டுப் படிகளில் ஏறி உமேசம்மா விரைந்தார்.
స్త్ర స్ట్రో స్త్ర
ஸ்தோப்புக்குள் சோக்கேஸ் இருந் தது. டசினுக்கு மேற்பட்ட பீங்கான் கோப்பைகளும், கப் அன் சோசர்களும் தூசி படியாது பளபளத்தபடி மினு மினுப்பாக இருந்தன. தொலைக் காட்சிப் பெட்டியோடு றேடியோவும் இருந்தது. செல்வத்தம்மா ஏற்கனவே கண்ட கண்ணாடிச் சட்டமிட்ட புகைப் படங்கள் சுவர்களில் தொங்கின. சாமிப் படங்களும் பிளாஸ்ரிக் மாலைகளோடு தொங்கின.
"ஏனுங்க செல்வத்தம்மா தெரியாத வீடு மாதிரி உத்துத்துத்துப் பாக்கிறீங்க." கையில் கூல் றிங்ஸ் றேயோடு, மெத்த அவதானத்தோடு உமேசம்மா படிகளில் இறங்கிக் கொண்டிருந்தா.
'ஒடைச்சொடைச்சு கட்டி மாத்தி மாத்திப் பெயின்ற் அடிக்க அவரென்ன கடை மொதலாளியா? அல்லாட்டி வெளிநாட்டுச் சம்பாத்தியக்காரனா..? அடுத்த கிறிஸ்மஸ ஜூம் வரப் போகுது.
மல்லிகை ஜ0
போன பெருநாளுக்கு பூசின பெயின்ற் தான்.” கூல் றிங் றேயை நீட்டியபடியே உமேஸ் அம்மா தன் குடும்ப நிலையைக் கூட்டாளிக்குக் கூச்சமின்றிக் கூறினா.
செல்வத்தம்மா கப்பைத் தூக்கி ஒரு சொட்டு உறிஞ் சினா, சுவரோரத்தில் கிடந்த ரீபோயை எடுத்து முன்னுக்கு வைத்து விட்டு உமேஸ் அம்மா தானும் குசனில் குந்தினா.
கூல் றிங் ஸ்
"பஸ் ஒட்டம் சீருக்கு வராட்டி , ரெண்டு பஸ்தான் ஏறவேணும்."
"அப்ப நான் சொன்னான் தானே கல்கிசைக்கு போகோணாமெண்டு. இப்பதான் தூரத்தை யோசிக்கிறீங்க செல்வத்தம்மா."
"நாங்கென்னத்துக்கு அங்க போன மெண்டு விளங்காமக் கதைக்கிறீங்க. அங்க வாடை குறைவாக இருந்திது. அதுக்காகத்தான் போனம்.'
“அட அதப் பாத்தா அங்க ஒடீ னிங்க. கணக்குப் பண்ணிப் பாருங்க. ஒங்க மக்கள் ரெண்டு பேர் கொள்ளுப் பிட்டிக்கு ரியூசனுக்கு வாரோணும். நீங்கள் சேச்சுக்கு வரோணும். செல்வத் தப்பா கோட்டைக்கு டியூற்ரிக்கு வர ரோணும். இதுக்கெல்லாம் போக்கு வரத்து செலவு இல்லையா? இது எல் லாமே இங்க இருக்கே..." உமேசம்மா உரத்து அழுத்தமாகச் சொன்னா. தனது வதிவிடப் பிரதேசசத்தை சிலாகித்தார்.
"அதுவும் சரிதான் உமேசம்மா." “நான் எத்தினை பயணம் சொன்
னன் கேட்டீங்களா.” வீட்டின் அழைப்பு
2007奉9

Page 7
மணி ஒலித்து இரு கூட்டாளிமாரின் உரையாடலுக்கு இடக்குச் செய்தது.
"தாரு. தொறந்துதான் கெடக்கு. தள்ளுங்க..”
நிலையோடு, ஒட்டி நின்ற தேக்குக் கதவு பிரிந்து, எதிர்வீட்டு ஜன்னலைத் தெரியப்படுத்தியது. நடைபாதையில் சூரியன் தன் வெங்கதிர்களை விரித் திருந்தான்.
“சுமங்கலா இருக்காவா..? வந்த இளம் பெண் தன் பாதி உடம்பையும் தலையையும் அறைக்குள் நுழைத்து விசாரித்தாள்.
டெனிம் ஜீன்ஸ், ரீ சேட் அணிந் திருந்தாள். இரு அங்கிகளும் இணை யாமல் வயிற்றுக்கும் நாரிக்கும் இடை யில் ஒரு வெளிப்பை உண்டு பண்ணி இருந்தன. அந்த வெளிப்பினூடாக அவ ளது பொக்குள் பார்வைக்கு எட்டியது. விரதகாரர் முழுகி மயிரைக் குலைத்து விட்டிருப்பது போல் அவளது மயிரும் குலைந்து, தோளுக்குக் கீழ் நீண்டு கிடந் தது. காலொன்றை ஸ்தோப் பின் கட்டி லும் மற்றதை நிலத்திலும் வைத்து நின்றாள்.
"அவ எங்கதான் போவா, பொஸ் தகம் படிச்சுக்கிட்டு இருக்கா. ஏ. சுமங்கலா கூட்டாளி வந்திருக்கா..." முகத்தை மேலுக்கு நிமிர்த்தி உமேசம்மா உரத்துக் கூப்பிட்டா.
வந்த பெண்ணைப் பார்த்தபடி
செல்வத்தம்மா கடைசிச் சொட்டு
நெல்லி ரசத்தை உறிஞ்சினா.
"யாரவ.” தாயின் அதே ஸ்தாயி யில் குரலைக் காட்டியபடி சுமங்கலா மாடிப்படிகளில் வந்து கொண்டிருந்
தாள். அவள் எப்படி இருக்கிறாளென்
பதைச் செல்வத்தம்மா தனது பார்வை யால் அளந்து கொண்டிருந்தா.
“ஹாய் சுமங்கலா. என்னடி வேலையா..."
A
ஒ. அவாக்கு கொந்தாறாத்து வேலை . நாள் பூராவும் பொஸ்தகம் படிக்கிறது தான்." மகளை முந்திக் கொண்டு உமேசம்மா வந்தவள் கேட் டதுக்குப் பதிலளித்தா.
“எதுக்கடி விமோசனா?.” தனது கூட்டாளிக்கு அருகே வந்து சுமங்கலா
கேட்டாள்.
“டல்லா இருக்கடி, வாவேன் கேஎவ்சிக்குப் போய் பலுடா குடிச் சிட்டு எங்க வீட்டுக்குப் போய் கரம் அல்லாட்டி டாம் விளையாடுவம். எனக்குப் பாட்னர் இல்லடி” அலுத்துக் கொண்டு விமோசனா தன் வேண்டு கோளைப் பிரகடனப்படுத்தினாள்.
“என்னடி டாம் விளையாடவா? என்னடி பைத்தியமா உனக்கு. ரிவி கேம் விளையாடேன். அல்லாட்டி செல் போன்ல விளையாடேன். பாட்னர் தேவை இல்லைத்தானே. ஏலாது. நான் இந்த புக்கைப் படிச்சு முடிக்கோணும்.” கையில் வைத்திருந்த ஓரங்குலத் தடிப்பான புத்தகத்தைச்
சுமங்கலா காட்டினாள்.
எனக்கு
"அதை அப்புறம் படியேன்டி. ஒங்க பொஸ்தகம் தானே.”
மல்லிகை ஜூ 2007 & 10

“போடி பைத்தியம். துணி கழுவ அம்மாவுக்குத் தொணைக்குக் கூடப் போகாம நான் படிச்சுக்கிட்டு இருக் வெளிய
கேன். நீ என்னாண்ணா. வரக் கேக்கிற."
"ஓங்க புக் தானே அப்புறமாப் படிச்சா என்ன?. றெஸ்சை மாத்திக்
கிட்டு வா."
"அதெனக்குச் சரிபோகாதடி. ஒரே மூச்சில் படிச்சு முடிக்கணும். பழகிப் போச்சடி.”
“போடி புறம்போக்கு. என்னடி நீயும் நாவலா எழுதப் போற.? விமோ சனாவின் முகத்தில் கடுகடுப்புப் படர்ந் தது. வாசல் கட்டில் வைத்திருந்த காலை இறக்கித் திரும்பி நடந்தாள்.
"பாய் விமோசனா..? புத்தகம் வைத்திருந்த கையை அசைத்தபடி சுமங்கலா சிரித்தாள்.
முதுகுப் பக்கம் கிடந்த மயிர் தோளில் பரவி நெஞ்சில் குவியச் சடுதி யாகத் திரும்பிச் சுமங்கலாவை எரிப்பது போல் பார்த்தபடி - "இனி உன்னைப் பார்க்க வரேன்டி.." எனச் சொல்லிக் கொண்டு விமோசனா நடந்தாள்.
இந்த நடப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வத்தம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுமங்கலாவின் பக்குவ நிலை குறித்து வியந்தா.
"இவளும் இந்தகப் காலத்துப் பொட்டைதானே.” சுமங்கலா படிக் கட்டுகளில் ஏறு மட்டும் அவளைப் பார்வையால் அர்ச்சித்தா.
"கிட்டீங்க...
“என்ன செல்வத்தம்மா அடக்கமா அவ அப்படித்தான். அவவுக்கு பொஸ்தகங்கள் தான் தன் கூட்டாளியின் பார்வையைத் திசை மாற்ற உமேசம்மா எத்தனித்தா.
கூட்டாளி...”*
“என்ன நீங்களும் அப்படியா..? எப்படி இந்தப் பழக்கம் வந்தது?"
"அவ எங்கிட்ட இருந்துதானே கத்துக் கொண்டவ. லென்சை மாத்திக் கிட்டு நானும் இன்னமும் எதையாச்சும் வாசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். மேலுக்கு வீட்டை ஒசத்தினதுக்யுறம் நீங்க இப்பதான் வந்திருக்கீங்க. வாங்களேன் உசக்க."
"துணி கழுவிக் கொண்டிருந்த உங்களை நான் வந்து குழப்பிப் போட்டன்." செல்வத்தம்மா எழுந்து சாறியைச் சரி செய்து கொண்டு நடந்தா.
(ွ) (အံ့) (ငှါ9
படிகள் முடிந்து, நடக்கும் தளத்தில் மிதந்தவுடன் கதவின் நிலையில் 'அருளம்மா என்ற பிளாஸ்ரிக் எழுத்துக்கள் செல்வத்
படிப்பகம்’
தம்மாவை மேற்கொண்டும் நடக்க
விடாது தடுத்தன. மீண்டும் எழுத்
தெண்ணி வாசித்தா.
“வாங்க.." உமேசம்மா அழைத்தா. குறுகிய நடைபாதையில் நடந்து மேல்தட்டு அறைக்குள் நுழைந்தா.
சுவரோரமாகக் கிறாதிகள் வைக்கப் பட்டிருந்தன. அனைத்திலும் இடை
மல்லிகை ஜூ 2007 奉 11

Page 8
வெளியில்லாது புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மூலை யொன்றில் வைக்கப்பட்டிருந்த கதிரை யொன்றிலிருந்து - யாதவள் போல் - சுமங்கலா வாசித்துக்
குழப்பமடை
கொண்டிருந்தாள். கீழுக்குக் கொண்டு வந்த அதே புத்தகம்தான்!
"இதென்ன உமேசம்மா?. எனக் குப் பாத்தா எல்லாம் புதுமையாகத்தான் இருக்கு. நல்லதுதானே. உங்கபாடும் கஷ்டந்தானே. ஒருநாளைக்கு ஐம்பது ரூபா கிடைச்சாலும் ஆரு தருவாங்க"
“என்னது ஒங்க பேச்சு.’ நயனங் களை அகலத் திறந்து உமேசம்மா தன் விருந்தாளியைப் பார்த்தா.
“இல்லை. புத்தகங்களை இரவல்
குடுத்து வாங்கிறீங்கதானே அதைச் சொன்னன்."
"சாய் அதெல்லாம் கெடையாது செல்வத்தம்மா. இதெல்லாம் நாங்க படிக்கிறதுக்குத்தான். இதால நல்ல பொழுதுபோக்கு. அறிவு அந்த வருமானந்தான்."
AA
ஆ. லோயர் மாற்ர வீடுகளில்
கூட இந்தளவுக்கு புத்தகங்கள் இருக்
காது." அடுக்கி இருந்த புத்தகங்களில் செல்வத்தம்மா கையை வைத்தா. அவ வுக்கு அருகே சுமங்கலா வந்து நின்றாள் பூனையைப் போல!
"அந்தா! அந்த ராக்கையைப்
பாருங்க. அது எங்க அம்மா வாங்கிப் படிச்ச பொஸ்தகங்கள்."
"என்னது அம்மாவா?"
"ஆமா! சுமங்கலாட பாட்டி. செவத்தில ஒசக்கப் பாருங்க. அதுதான்
அம்மா."
தலையை நிமிர்த்தி செல்வத்தம்மா பார்த்தா. முதுமை கண்ட பெண்ணொரு வரின் புகைப்படம். பிளாஸ்ரிக் மாலை யோடு தொங்கியது. அதன் கீழ் சிறிய மின்குமிழொன்று எரிந்து கொண்டி ருந்தது.
"அவதான் அருளம்மா. அதே பேரில தான் படிப்பகம். இந்த வாசிக் கிற பழக்கத்தை எனக்குப் படிப்பிச்சு கொடுத்தவ எங்க அம்மாதான்." ராக் கையிலிருந்த புத்தகங்களை ஒவ்வொன் றாக இழுத்து இழுத்துச் செல்வத்தம்மா நோட்டமிட்டா.
ராஜாஜி, கல்கி, கொத்தமங்கலம் சுப்பு, ஜெகசிற்பியன், நா.பார்த்தசாரதி, யாழ்ப்பாணம் தேவன், இலங்கையர் கோன், கசின் ஆகியோர் எழுதிய நூல்களோடு விக்கிரமாதித்தன் கதை, நல்லதங்காள், பசுவின் கதை, ஆயிரத் தொரு இரவுகள் என்பன இருந்தன. ஒரு புத்தகமொன்றை மட்டும் எடுத்துச் செல்வத்தம்மா கையில் வைத்துக் கொண்டா.
“இங்க வாங்க. இது நானும் அவ ரும் செலக் பண்ணினது." அடுத்த ராக்கை அருகே நின்ற உமேசம்மா குரல் கொடுத்து அழைத்தா. அந்த இடத்துக்கு செல்வத்தம்மா நகர்ந்தா. பூனை போல் நகர்ந்து நகர்ந்து சுமங்கலாவும் அவர் களை அடைந்தாள். அவளது கண்கள்
மல்லிகை ஜூ 2007 & 12

செல்வத்தம்மா கையில் வைத்திருந்த புத்தகத்திலேயே குத்தி இருந்தன.
பாவை விளக்கு, பெண்மனம், கள்ளோ காவியமோ. நீதியே நீ கேள், சடங்கு, பிரளயம், வாடைக் காற்று, வீடற்றவன், மலைக் கொழுந்து, குருதி மலை, நாமிருக்கும் நாடே, பாதுகை, குழந்தை ஒரு தெய்வம், போராளிகள் காத்திருக்கின்றனர் அந்த அடுக்குகளில் இருந்த நூல்களில் இந்தப் புத்தகங்கள் இருந்தன. அவைகளோடு வீரகேசரிப் பிரசுரங்கள் வரிசையாக வைக்கப் பட்டிருந்தன.
'இது சுமங்கலாவிட. அப்பா கொடுக்கிற பொக்கற் சல்லியில வாங்கினவ."
“என்ன அவளையும் புத்தகப் பூச்சி ஆக்கிப் போட்டீங்களா..?"
"அப்புற மென்னவாம். அப்பா அம்மா பழக்கந்தானே புள்ளேகளுக்கும்
வரும்."
சுமங்கலாவைப் பார்த்துச் சிரித்த படி செல்வத்தம்மா மூன்றாவது ராக் கைக்குச் சென்றா. மற்றைய ராக்கையி லுள்ள நூல்களைக் காட்டிலும் சிறிது கூடுதலான நூல்கள் இருந்தன. கன வெல்லாம் நீ, கனவுத் தொழிற்சாலை, ஒரு கோடை விடுமுறை, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, வாழ்க்கை ஒரு ம், குறள் வழிக் கோகிலா என்ன செய்து
வலைப்பந்தாட்டம், கதைகள், விட்டாள், மூலஸ்தானம், சாயத்திரை, உலா இப்படிப் பல நாவல்களும், சிறு கதைத் தொகுப்புகளும் காணப்பட்டன.
“ம். இனிச் சுமங்கலா தன் பிள்ளையஞக்கு இதைக் கற்றுக் குடுக் கட்டும்.” செல்வத்தம்மா சுமங்கலா
வின் முகத்தைப் பார்த்துச் சொன்னா.
"இல்லாம! நல்ல பழக்க வழக்கங்க சந்ததி சந்ததியா வரத்தானே வேணும். கொடி கொடியா நீண்டு கொண்டே போகணும்’ :
செல்வத்தம்மாவின் கைப்பைக்குள் விருந்த செல்லிடத் தொலைபேசி தன் இருப்பை மூவருக்கும் அம்பலப்படுத் தியது. பையின் சிப்பை இழுத்துப் பிரித்துச் செல்வத்தம்மா போனைக் கையில் எடுத்து பட்டினை நசித்தபடி காதில் வைத்தா.
4.
“என்ன அப்பா கதைச்சவரா. வந்திடுவன் பிரச்சின்ன இல்லை." போனைப் பைக்குள் ஒட்டியபடி -
"அவர் கந்தோரில இருந்து கதைச் சவராம். நான் போக வேணும்." செல் வத்தம்மா போவதற்கு அந்தரப்பட்டா. அருகே வந்த சுமங்கலா கையில் வைத் திருந்த புத்தகத்தைப் பறிக்குமாப் போல் இழுத்தாள். செல்வத்தம்மா தனது பிடியை வலுப்படுத்திக் கொண்டா. நூலின் முகப்புத் தெரிந்தது. மாயாவி எழுதிய 'துள்ளும் உள்ளம் நாவல்.
"அவரைக் கட்டின பிறகு முதல் படிச்ச புத்தகம் இதுதான். இன்னொ ருக்கா வாசிக்க வேணும். புள்ளை யளுக்கும் குடுக்க வேணும்.” புத்தகத் தைப் பின்னுக்கு மறைத்தபடி செல்வத் தம்மா சொன்னா.
மல்லிகை ஜூ 2007 & 13

Page 9
"ஐயோ அன்ரி: இதில பாட்டின்ர கையெழுத்து இருக்கு. தொலைஞ் சிட்டா அப்பா ஏசுவார்." புத்தகத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டு மென்ற நோக்கத்தில் சுமங்கலா தன் உயிர் போகின்ற மாதிரிப் பேசினாள்.
"நான் துலைக்க மாட்டன். அடுத்த செவ்வாய் சேச்சுக்கு வரேக்க திருப்பித் தருவன்.”
"சுமங்கலா அவ கொண்டு போகட் டும். நீ அவவுக்குப் பத்திரமா சொல் லிற, பார் அடுத்த பயணம் வரேக்க புத்தகம் எப்படி வருமிண்ணு. செல்வத் தம்மா கவர் போட்டுக் கொண்டு வருவா. உமேசம்மா காட்டமான
சிபாரிசு சுமங்கலாவின் வாயை அடைக்கச் செய்தது.
"நான் றுாட்டை மாத்தியாவது போகப் போறன் உமேசம்மா. சுமங்கலா யோசிக்காதடா. உங்கட இந்த செப்ப மான வாழ்க்கையை நான் குழப்ப மாட்டன். புத்தகம் பத்திரமா உன் கைக்கு வரும்." சுமங்கலாவின் நாடி யைக் கிள்ளியபடி செல்வத்தம்மா படி களில் இறங்கினா.
'அடுத்த செவ்வாய் எங்க
கூடத்தான் லஞ் சொல்லிட்டு வாங்க."
"அன்ரி வந்திடுங்க.." சுமங் கலாவும் ஒத்தூதினாள். *
/
வாழ்த்துகின்றோம்
பேராசிரியர் சிவத்தம்பி தம்பதியினரின் கடைசி மகள் வர்த்தினி அவர்களுக்கும், திரு.திருமதி இராஜகோபால் தம்பதியரின் புதல்வன் கார்த்திகேயன் அவர்களுக்கும் 18.06.2007 ஆம் திகதி சென்னையில் வெகு கோலாகலமாகத் திருமணம் நடைபெறவுள்ளது.
மணமக்களை இந்த நாட்டு எழுத்தாளர்கள் சார்பாக மல்லிகை வாழ்த்தி மகிழ்கின்றது.
NS
- ஆசிரியர்
夕
மல்லிகை ஜன 2007 率 14

கனவுக் கூட்டுக்குள் வாழ்க்கை உறங்கியது சுவடுகளற்று.
நகரும் பொழுதுகளில்
படிந்திருந்தது உனது நினைவுகள்
வெம்மை நிறைந்த தூதுப் படலம் கண்ணில் நிறைந்து கலவரப்படுத்துகிறது
உடல் முழுக்க உஷ்ணத்தின் வீச்சம்தான்
கையசைத்து
வரவேற்க கதகதப்பாக நிழல்தர மரங்கள் கூட இல்லாத மயான வெளியிது
மரணத்தை நோக்கிய அசைவுகளுடன் மனிதம் மெல்ல நகர்கின்றது
விளையாட்டு பொம்மைகளின் விம்பங்களாக. மனித உருவங்கள்
ஒரு மயான வெளி
- நாச்சியாதீவு பர்வீன்
சிலுவையில் அறையப்பட்ட நிஜங்களுக்கு உயிர்த்தெழ வழியே கிடைக்கவில்லை!
இருளின் போர்வைக்குள் சோம்பல் முறித்து கடைசி அத்தியாயத்தை எழுதுகிறது உலகம்
ஜீவிதம் முடியும்முன் ஊருக்குப் போய்விட வேண்டும் என அபலையின் உள்மன ஒலம் யாருக்கும் கேட்காமலே அடங்கிப்போனது
மல்லிகை ஜூ 2007 & 15

Page 10
சென்ற இதழின் தொடர்ச்சி.
(8UITArfur, கலாநிதி க.அருணாசலமும் ஆய்வு நெறிகளும்.
- கனகசபாபதி நாகேஸ்வரன்
சாதனையாளர் சாரல் நாடன் :
சாரல் நாடன்' என்ற புனைபெயரினையுடைய திரு. கருப்பையா நல்லையா அவர்களின் அறுபதாவது அகவை நிறைவை முன்னிட்டு 2005இல் இந்நூல் கண்டியிலே அச்சேற்றி வெளியிடப்பட்டுள்ளது. 40 பக்கங்களைக் கொண்ட இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியரும், உலகப் புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும், இக்கட்டுரையாளரின் பேராசானும் எனத் திகழும் முதுபெரும் பேராசிரியர், கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களது 'ஈழத்து இலக்கிய வரலாற்றின் மூலநாயகர்களுள் ஒருவர் சாரல் நாடன் பற்றிய ஒரு குறிப்பு" என்னும் பகுதியுடன் வெளிவந்துள்ளது. பேராசிரியர், கா.சிவத்தம்பி சாரல் நாடன் பற்றி மேல்வருமாறு கருத்துரைத்துள்ளமை காணத்தக்கது. w
(சாரல் நாடனிடம்),
"வரலாற்றுப் பூர்வமான தரவுகளை மிக விஸ்தாரமாகத் தந்து, அவற்றை இலக்கியப் போக்குகளுடன் இணைத்துக் காட்டும் ஓர் எழுதும் முறைமை இவரிடத்துத் துல்லியமாகக் காணப்படுகிறது. (ப.4) பேராசான், பேராசிரியர், கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களிடம் உள்முகமாக - அகமுகமாக நெருடிக் கொண்டிருக்கிற - அவாவிக் கொண்டிருக்கிற 'எதிர்கால இலக்கியச் செல்நெறி வேட்கை - பிரக்ஞை' அவரது மேல்வரும் எழுத்துக்களினால் வெளிப்படுவதனை உணர்ந்து கொள்ள முடிகிறது. பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதுகிறார் -
"ஈழத்தின் உண்மையான தமிழ் இலக்கிய வரலாறு அத்தகைய ஒரு பார்வையைக்
கோரி நிற்கின்றது. அதாவது ஈழத்திலே தோன்றிய தமிழ் இலக்கியங்களைக் குறிப்பாக
கி.பி. 19ஆவது தமிழ் நூற்றாண்டின் நடுக்கூற்றில் இருந்து தோன்றும் இலக்கியங்களை
அவற்றிற்குரிய வரலாற்றுப் பின்புலங்களில் நோக்கி, அந்த இலக்கிய ஒழுங்கு சேர்த்தல் மல்லிகை ஜூ 2007 & 16

எல்லாம் இலங்கையின் தமிழ் அடை யாளத் தேடலுக்கு இட்டுச் செல்கின்றது என்பதை நோக்குவது வரவிருக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்று எழுகையில் முக்கிய கடமைகளில் ஒன் றாக இருக்கும். அப்படி ஒரு வரலாறு எழுதப்படத் தொடங்கும்பொழுது சாரல் நாடன் அந்த இலக்கிய வரலாற்றிற்கான மூலவளங்களில் ஒருவராக அமைவார் (ப.6) என்பது பேராசிரியர் கா.சிவத்தம்பி யவர்களின் விமர்சனம். ●
பல்கலைக்கழக மட்டத்திற்குப் புறம் பாக வெளியிலும் அறிஞர்கள், மூலவள வாளர்கள், புலமையார்ளகள் இருக்கிறார் கள் என்பதனை மறந்தும் - தெரிந்தும் - தெரியாததுமாய்த் திரியும் அதி சிரேஷ்ட பல்கலைக்கழகக் கனவான் களுக்கும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அறிவுறுத்தல் செய்துள்ளமை இவ்விடத் திலே மனங்கொள்ளத்தக்கது. எனினும் வரன்முறையான ஆய்வொழுங்கினைக் கற்றிராத பல்கலைக்கழகத்திற்கு வெளி யில் உள்ள சில "கொம்பன்களும் இறு மாந்து பிதற்றித் திரிகின்றனர் என்பதும் மனங்கொள்ளத்தக்கதே! இக்கருத்துக் களுக்கெல்லாம் பேராசிரியர் அருணா சலம் அவர்கள் காலாகவுள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். கடும் உழைப்பினால் உயர்ந்து அறிவுப் புலத் தில், இலக்கிய உலகில் ஒளிகாணும் பேராசிரியர் அருணாசலத்தின் திடமான கொள்கைகள் அவருக்கு எக்காலும் பொன்றாப்புகழ் சேர்க்கும்.
சாரல் நாடன் எழுதியுள்ள வரலாறு, இலக்கிய வரலாறு சார்ந்த கட்டுரைகள்
மலையகத்தின் தனித்துவத்தையும் அதே வேளையில் ஒட்டு மொத்தமான ஈழத்துத்
தமிழ் இலக்கிய வரலாற்றுடன் இணை வதையுமே காட்டுகிறது. கருப்பையா நல்லையா என்ற தனிமனிதனின் சிறப்பு யாதெனில் இத்தகைய எழுத்து முறைக் கான புலமைப் பயிற்சியைத் தராதரப் பத்திர அடிப்படையில் பெறாவிட்டாலும் பெற்றவர்கள் அளவு சிறப்புடன், சில வேளை அதிலும் கூடிய சிறப்புடன் எழுதியுள்ளமையே ஆகும். (பக். 6-7) என்ற விமர்சனம் கவனத்திற்குரியது.
"சாதனையாளர் சாரல் நாடன் - ஒர் . அறிமுகம்" (ப.8) எனும் பகுதியில் பேராசிரியர் அருணாசலம் மேல்வருமாறு தகவல்களைத் தந்துள்ளார்.
'பல்கலைக்கழகக் கல்வியைப் பெறாதவர்கள் பலர் படைப்பிலக்கியத் துறையில் அதிகம் பிரகாசித்துள்ளனர். ஆயின் ஆய்வுத்துறையில் பிரகாசித்த வர்கள் வெகு சிலரேயாவர். அத்தகைய சிலருள் சாரல் நாடன்” மிக முக்கிய மானவர் என்பதில் ஐயமில்லை. 1986ஆம் ஆண்டில் தனது முதலாவது நூலை வெளியிட்ட அவர் இன்றுவரை சிறியன வும் பெரியனவுமாகப் பதினொரு நூல் 56 வெளியிட்டுள்ளார். மலையக வாய் மொழி இலக்கியம் (1993), மலையகம் வளர்த்த தமிழ் (1997), மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (2000)’ என்று வருவன காணத்தக்கன.
இந்நூலின் இறுதிப் பகுதியிலே "சாரல் நாடனும் ஈழத்துத் தமிழியல் ஆய்வு வளர்ச்சியும்" என்னும் அரியதோர் பகுதி காணப்படுகிறது. அதனை எழுதி யவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி செ.யோகராசா ஆவார்.
மல்லிகை ஜூ 2007 & 17

Page 11
இவர் மேல்வருமாறு சாரல் நாடனது 6 நூல்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
1. சி.வி. சில சிந்தனைகள் (1986)
i. தேசபக்தன் கோ.நடேசையர் (1988)
i. மலையக வாய்மொழி இலக்கியம்
(1993)
iv. மலையகம் வளர்த்த தமிழ் (1997)
V. பத்திரிகையாளர் நடேசையர் (1998)
wi. இன்னொரு நூற்றாண்டுக்காய் (1999)
என்னும் 6 நூல்களை மனங் கொண்டு இப்பகுதியிலமையும் கருத்துக் கள் சிலவற்றை ஈண்டு கவனிப்போம்.
கலாநிதி செ.யோகராசா மேல்வரு மாறு எழுதுகிறார்.
"ஈழத்திலே நவீன கவிதையின் தோற்றம் நாற்பதுகளிலே முகிழ்கின்ற தென்று கூறப்பட்டு வந்த சூழலில் (இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை என்ற நூலினது வருகையின் பின்னர்) ஏலவே முப்பதுகளில் மலை யகத்தில் தொடங்கியுள்ளமை பற்றியும் ஈழத்திலே முதற் பெண் கவிஞராக மீனாட்ஷியம்மாளை இனங்காண்பது பற்றியும் இக்கட்டுரையாளர் (செ.யோக ராசா) கவனஞ் செலுத்துவதற்கும் இந் நூல் வழிவகுத்திருப்பது குறிப்பிடத் தக்கது. (ப.35) கலாநிதி. செ.யோகராசா மேலும் எழுதுவதாவது, பத்திரிகை யாளரும், சஞ்சிகையாளரும் பலருளர். இவர்களது வரிசையில் முன்னோடி களுக்குள்ளொருவர் கோ.நடேசையர்.
எனினும் பத்திரிகைத்துறைக்கு நடேசை யர் ஆற்றிய பணிகள் இதுவரை வெளிச் சத்துக்கு வராமல் இருந்தது. தொழிற் சங்கவாதியாக மட்டுமே அறியப்பட்டி ருந்த கோ.நடேசையரின் பன்முக ஆற்ற லையும் ஆளுமையையும் தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்த சிறப்புச் சாரல் நாடனையே சாரும்". (ப.36)
கலாநிதி. செ.யோகராசா “பெண் ணிலைவாதம் தொடர்பாக எடுத்துக் காட்டும் பகுதிகள் மிக மிக முக்கிய மானதாகிறது. இங்கு எடுத்துக்காட்டப் பட்டுள்ள பகுதி (1920களில் இலங்கை யில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் அரசியல், வாக்குரிமைச் சிந்தனைகள்) என்ற சிறு நூல் முக்கியத்துவம் குறித்த தாயமைவது காணத்தக்கது. கலாநிதி. செ.யோகராசா எடுத்துக் காட்டும் மேற் கோள் மேல்வருமாறு :
“பெண் பற்றிய வரலாற்றுச் செய்திகள் காலத்தால் புதைக்கப்பட்டு விட்டன. ஒரு ஆணுக்கிருந்த வரலாற்று மகிமை பெண்ணுக்குக் கிடைக்ச வில்லை. தற்போது உலகெங்கும் பெண் ணிலைவாதிகள் பெண்களது ஆச் கங்கள், செய்கைகள் போன்றவற்றைத் தேடி எடுத்து இன்னுமொரு வரலாற்றை உருவாக்குகிறார்கள். சமூகத்தில்
மேலாண்மை படைத்த அரசர், மந்திரி
அவர்கள் வகுத்த அரசியல், போர் சமாதானம் போன்றவை மாத்திரம் வரலாறாக இருந்த காலம் போய் மக்க வரலாறு, சமூக வரலாறு போன்ற கவனத்தில் எடுக்கப்பட்ட காலத்தி
மல்லிகை ஜூ 2007 & 18

கூட பெண்கள் வரலாறு மையத்துக்கு வரவில்லை. இவ்வரலாறுகள் புதைந்து போனது, ஆண் நோக்கில் வரலாறு களைப் பார்ப்பதன் விளைவே தான் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் சாரல் நாடனின் இச்சிறுநூல் வரலாற் றில் ஒரு பெண்ணின் பங்களிப்பை ஆவணப்படுத்தியுள்ளது. "மூர்த்தி சிறி தாயினும் கீர்த்தி பெரிது’ என்பதில் உண்மையுண்டுதான்" என்கிறார் கலா நிதி. செ.யோகராசா. V8
‘மலையக இலக்கியமும் சாரல் நாடனும் என்பது குறித்து கலாநிதி செ. யோகராசா மேல்வருமாறு எழுது கிறார்.
"ஈழத்திலே தமிழ் பேசும் மக்கள் வாழ் பிரதேசங்கள் பரப்பளவிலே குறைந்ததாயினும் பிரதேச ரீதியான தனித்துவங்கள் கொண்டவை. உபபண் பாட்டு அலகுகளாக இவை காணக் கூ டியவை. சமத்தவ வளர்ச்சி பெற்றவை. இத்தியாதி நிலைமைகள் நவீன இலக்கிய உருவாக்கத்திலும் வளர்ச்சி யிலும் தளர்ச்சியிலும் எதிரொலிப்பது தவிர்க்க இயலாததே. இச்சூழலில் மலையக இலக்கியம் பற்றிய சிரத்தை அவசியம் வேண்டப்படுவது. இவ்வழி மலையக இலக்கியம் பற்றிய பன்முகப் பார்வைகளை வெளிப்படுத்தி வருபவர் வரிசையில் சாரல் நாடனுக்கு முக்கிய இடமுண்டு.
குறிப்பு : 'வரலாறு" என்று நோக்கும் வேளையில் 'அரசர் வரலாறுகளே பெருமளவிலே நூல்களிற் கிடைக்
கின்றன. அவ்வரசர்களும், மன்னர் களும் அரசிகளின் மணிவயிற்றில் உதித்தவர்களே என்பதும் சுட்டியுரைத் தற்குரியன. “பெண்ணிலைவாதம் ஆண் வர்க்கத்திற்கு, மாருக்கு எதிரான போராட்டமல்ல.
குறிப்பாகக் கணவன்
மாறாகப் பெண்களின் சமத்துவத்திற்
கெதிரான தோர் உந்துதல் என்பதனைப்
ஏற்றுக் கொள்ளும் நிலைமை உருவாக
வேண்டும். இயல்பிற்கெதிரான பெண்
ணிலைவாதிகளின் பிடிவாதத்தனமும், வல்லுடும்புப் பிடியும் இனியெதிர்
காலத்திலும் பாரிய நஷ்டத்தையும்,
அவலத்தையும், சமூகத் தீங்கையுமே
உண்டு பண்ணும் என்பது முற்றிலும்
அநுபவ உண்மை.
பெண்ணிலைவாதிகள்
இக்கட்டுரையினை எழுதுமாறு தூண்டிய பேராசிரியர் கலாநிதி. க.அருணாசலம் அவர்களுக்கு என் நன்றிகள். விழாக் குழுவின் தலைவ ராயும், என் பேராசானாயும் விளங்கும் கலாநிதி. துரை.மனோகரன் அவர்களது ஊக்குவிப்பும் உற்சாகமும் இத்தகு சிந் தனைகளை எழுத வேண்டும் என்று உந்தியது. இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளுரித்தாகுக. மணிவிழா நாயகர் பேராசிரியர் க.அருணாசலம் அவர்கள் குடும்ப சுகத்துடன் நீடு சுகத்தோடும் வளத்தோடும் நலத்தோடும் வாழ எம் குலதெய்வம் நயினை பூரீ நாகபூஷணி அம்மாளின் பாதாரவிந்தங்களைப் பணிந்து பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
(முற்றும்.)
மல்லிகை ஜூ 2007 & 19

Page 12
யாழ் குடாநாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்ட சூழ்நிலை 1983இல் ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணம் தனியார் கல்வி நிறுவனத்துக்கு வாரத்தில் மூன்று தினங்கள் நான் போய்வருவது தடைப்பட்டுப் போனது. அதன் பிறகு எங்கள் பகுதித் தனியார் கல்வி நிலையங்கள் சென்று கல்வி கற்பிப்பதையும் நான் முற்றாக விலக்கிக் கொண்டேன். பூரண மான மனவிருப்புடன் அதுவரை அங்கு நான் சென்று வரவில்லை. அதனால் அதனை விட்டு விலகியதில் உள்ளூர மனம் மகிழ்ந்தேன். அதேசமயம் முன்னர் போல நான் யாழ் நகர் போய்வரும் சந்தர்ப்பம் எனக்கு இல்லாமல் போயிற்று. ஜீவா, டானியல் இருவரையும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் சந்தித்து வந்த சூழ்நிலை விடுபட்டுப் போயிற்று.
இந்தச் சூழ்நிலையில் டானியலிடம் இருந்து ஒருதினம் எனக்கொரு தந்திச் செய்தி வந்து சேர்ந்தது. அந்தச் செய்தி டானியல் நோய்வாய்ப்பட்டிருப்பதனை எனக்கு அறியத் தந்தது. நான் உடனடியாகப் புறப்பட்டு (01.05.1985) யாழ் நகரம் சென்று நல்லூர் கோயில் வீதியில் இருக்கும் டானியல் இல்லம் போய்ச் சேர்ந்தேன். அப்பொழுது டானியல் படுக்கையில் கிடந்தார். அந்தச் சமயம் என்ன நடந்தது என்பதனை 'தண்ணிர் நாவல் w முன்னுரையுடாக டானியல் வாக்கு
மூலம் அறியத் தருவதே பொருத்த
S. பூச்சியம் l மானதெனக் கருதுகின்றேன். அதற்கு
முன்னர் வெளிவந்த, 'அடிமைகள்'
**Aատճնեմ நாவல் முன்னுரையில் அவர் குறிப்பிட்
Ա டுள்ளதனைக் கவனத்தில் கொள்
வதும், இரண்டு முன்னுரைகளையும்
தெணியான் ஒப்பிட்டு நோக்குவதும் அவசியமென
எனக்குத் தோன்றுகின்றது.
'அடிமைகள்' முன்னுரையில்; 14.04.1983இல் டானியல் பின்வருமாறு குறிப் G6T6TITs;
"தெணியான் சாதி விவகாரத்தின் வேர்களைத் துருவிப் பிடிக்கும் ஆற்றல் உள்ள படைப்பாளியாக வளர்ந்து வருகிறார். சமீப காலத்திலிருந்து அவரின் எழுத்து ஆளுமை விரிவடைவதையும் அவதானிக்கின்றேன். ஆயினும் இந்த மிகுதிப் பகுதியை பூர்த்தியாக்கும் பணிக்கு அவரைப் பொறுப்பாளனாக்க என்னால் முடியவில்லை. ஏனெனில் அரசியலில் அவர் என்வயப்படவில்லை. சூழ்நிலைகள் அவர் வரவைத் தடுக்கின்றன. காலஓட்டத்தில் அவர் அரசியல் நிலைப்பாட்டில் சரியான பங்கெடுப்பினை கொள்ளும் நிலை ஏற்படின் குறிப்பட்ட இருவருமே இதைப் பூர்த்தி செய்யப் பொருத்தமானவர்கள் என இதைப் பிரிசுரிக்க விரும்புபவர்களுக்கு ஆலோசனை கூற விரும்புகின்றேன்."
"தண்ணிர் நாவல் முன்னுரையை (24.01.1986) இனி நோக்கலாம்.
மல்லிகை ஜூ 2007 & 20

'இதைப் பத்தாவது அத்தியாயம் வரை எழுதிவிட்டு அதற்கு மேல் ஒருவரி கூட எழுத முடியாத நிலைக்குத் தள்ளப் பட்ட நான் மறுபடியும் படுக்கைக்குத் தள்ளப் பட்டேன். நாவலைத்தொடர்வது $עtpLo55ח விட்டது. படுக்கையில் கிடந்தபடியேயாவது நான் வாய்மொழியாகச் சொல்ல வேறொரு வரைக் கொண்டு எழுதுவிக்கலாமோ என்று யோசித்து, எனது கடைசி மகள் தாரகா வைக் கொண்டு எழுத முயற்சித்தேன். அவள் உலக ஞானம் அற்றவள். வயது பதின்மூன்றுதான். எனது உணர்வுகளைப் புரிந்து நாவலைத் தொட அவளால் இயல வில்லை. பின்பு எனது அன்புக்குரியவரான தெணியானை அழைத்து நாவலின் முடிந்த விபரத்தைக் கூறி, இரண்டு நாட்கள் அவரை எனது வீட்டோடு தங்க வைத்து, முடிந்ததை அவர் வாய் மூலமாகவே படிக்க வைத்து மிகுதியை இப்படி இப்படித்தான் செய்ய வேண்டுமென்று எனது அபிப்பிராயங் களையும் அவரிடம் கலந்து கொண்டபோது, அவர் அதை ஒப்புக்கொண்டு முடிந்த பகுதியை எடுத்துச் சென்றார்.
சில நாட்களில் மறுபடியும் படுக் கையை விட்டு எழுந்தேன். அப்போது வந் திருந்த அவர், "உங்களால் முடிந்தவரை
எழுதுங்கள். முடியாத நிலையில் நான்
தொடர்கிறேன்" என உறுதி அளித்தார்.
மறுபடியும் தண்ணிரைத் தொடர்ந் தேன்."
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 'அடிமைகள் நாவலைத் தொடர்ந்து எழுது வதற்கு என்னைப் பொறுப்பாளனாக்கு வதற்குத் தயக்கம் காட்டிய டானியல், தண்ணிர் நாவலைத் தொடர்ந்து எழுதிப்
பூரணப்படுத்தும் பொறுப்பினை என்னிடத்
தில் ஒப்படைத்தார். ஆனால் அவரே அந்த
நாவலை எழுதக் கூடியதான உடல்நிலை தேறிய பின்னர், மேலும் தொடர்ந்து ஒவ் வோர் அத்தியாயமாக எழுதி என்னிடம் தந்து கொண்டிருந்தார். இருபத்துநான்கு அத்தியாயம் வரை எழுதி நாவலை முடித்து அதற்கான முன்னுரையையும் எழுதி எனது கையில் ஒப்படைத்தார்.
அதன் பின்னர் மீண்டும் டானியல் நோயின் தாக்கத்துக்கு ஆளானார். சிறிது
தூரம் நடந்து செல்வதற்கே அவர் சிரமப்
பட்டார். சிறுநீர், இரத்தப் பரிசோதனைக் காக தனியார் வைத்திய நிலையத்துக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று, பின்னர் கைத்தாங்கலாகக் கூட்டிப்போய்ப் பரி சோதனைகண்ளச் செய்வித்தேன். இங்கு நடைபெற்ற வைத்திய சிகிச்சையினால் நோய்கள் குறைவதாக இல்லை. பின்னர் டொக்டர் நந்தி போன்றவர்களுடன் கலந் தாலோசித்த பிறகு, வைத்திய சிகிச்சைக் காக டானியல் தமிழ்நாடு செல்லத் தீர்மானித்தார்.
தமிழ்நாடு சென்ற பின்னர் அங்கிருந்து எனக்கு கடிதம் எழுதினார்.
நான் சற்றும் எதிர்பார்க்காத நிலை யில் தமிழ்நாடு தஞ்சாவூரில் 23.03.1986இல் காலை 8.40 மணிக்கு டானியல் கால மானார் என்னும் செய்தி மறுநாள் மாலை யில் எனக்குக் கிடைத்தது.
அடுத்தநாள் காலையில் யாழ்ப்பாணம் சென்று இல்லத்துக்குப் போனேன். அன்று (25.03.1986) டானியல் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வொன்று நடை பெற்றது. அந்த நிகழ்வு நடந்து முடிந்த பின்
டானியல்
மல்லிகை ஜூ 2007 & 21

Page 13
னரே வடமராட்சியிலுள்ள எனது இல்லத் துக்கு இரவு வந்து சேர்ந்தேன்.
அந்த நிகழ்வு சம்பந்தமாக இங்கு நான் குறிப்பிட வேண்டி இருக்கின்றது.
டானியல் காலமான போது வேறெந்த ஓர் எழுத்தாளனுக்கும் நடைபெறாத அளவு நினைவஞ்சலிக் கூட்டங்கள் யாழ் குடாநாடு முழுவதும் பரவலாக இடம்பெற்றன. வடம ராட்சி, யாழ்ப்பாணம், இணுவில் ஆகிய இடங்களில் டானியல் மறைந்த ஒருமாத காலத்துள் எட்டு நிகழ்வுகளில் அவற்றை ஏற்பாடு செய்தவர்களின் அழைப்பினை ஏற்றுச் சென்று அஞ்சலி உரை ஆற்றி னேன். ஆனால் டானியல் இல்லத்தில் நடைபெற்ற முதல் அஞ்சலிக் கூட்டத் திலும், 15.04.1986 அங்கு இடம்பெற்ற டானியலின் மணிவிழாவினை நினைவு கூரும் கூட்டத்திலும் பார்வையாளனாக மாத்திரம் நான் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்தவர்கள் என்னைத் தவிர்த்து விடுவதில் மிகக் கவனமாக இருந்து செயற்பட்டார்கள்.
இக்காலகட்டத்தில் 'அம்பலத்தரசன்' என்னும் பெயரில், 'ஈழமுரசு வார இதழில் வெளிவந்து கொண்டிருந்த சிறுகதைகளை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினேன். ஒருமாத காலத்தில் நான்கு வாரங்களும் வெளிவந்த சிறுகதைகளை மதிப்பீடு செய்து அடுத்த மாதம் மூன்றாவது வார ஞாயிறு இதழில் எனது கட்டுரை வெளிவந்து கொண்டிருந்தது. அப்பொழுது ‘அம்பலத் தரசன் யார்? என்பது பலருக்கும் தெரிய வராது. அந்தக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த போது அந்தப் புனைபெயருக்குரியவரை அறிவதற்குச்
சிலர் முற்பட்டார்கள். நடேசன் என்றால் அம்பலத்தரசன்தானே!” என மூதறிஞர் சொக்கன் ஒரு தினம் என்னிடம் கேட்டு வைத்தார். அதன் பின்னர் எனது சிறுகதை ஒன்றினை "ஈழமுரசில் கொடுத்து பிரசுரிக் கச் செய்தேன். அடுத்த மாதம் அந்தச் சிறுகதையினை மிகக் கடுமையாக விமர் சித்து எனது கட்டுரையில் எழுதினேன். அந்தக் கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் என்னைச் சந்தித்தபோது, 'உங்கட கதையைப் போட்டு அடிச்சிருக்கிறான்கள். பார்க்கவில்லையா?" எனச் சொல்லி, ஆர்
அந்த அம்பலத்தரசன்?’ என என்னிடம்
கேட்டார். நான் அப்பொழுதும் அம்பலத் தரசனைக் காட்டிக் கொடுக்கவில்லை.
அந்த ஆண்டு இறுதிப் பகுதியில் கட்டைவேலி / நெல்லியடி கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம் சிறுகதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டு வைத்தது. வடமராட்சியைச் சேர்ந்த பன்னிரண்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள் 'உயிர்ப்பு என்னும் அந்தத் தொகுதியில் இடம் பெற்றன. பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறு கதை இலக்கியம் பற்றி, "உயிர்ப்புகளின் உயிரைத் தேடி என்னும் தலைப்பில் மிக ஆழமும் விரிவுமான சிறப்பான கட்டுரை ஒன்றினை இத்தொகுதியை மையமாக வைத்து எழுதித் தந்தார். தொகுதியின் அட்டைப் படத்தில் தொகுதியில் இடம் பெற்ற சிறுகதைகளை எழுதிய கதாசிரியர் களின் நிழற்படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்தப் படங்களைத் திட்டமிடாமல் விசிறிப் போட்டது போல இடம்பெறச் செய்ய வேண் டும் என்னும் எண்ணமே எனக்கு மனதில் இருந்தது. ஆனால் திட்டமிட்டு வரிசைப் படுத்தியது போல படைப்பாளிகளின் படங் கள் இடம்பெறச் செய்து நூலின் அட்டை
மல்லிகை ஜூ 2007 & 22

தயாரிக்கப்பட்டது. சிறுகதைகளுடன் அவற்றை எழுதிய எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றிருந்தன.
அந்த நூலின் தயாரிப்பு வேலைகள் யாவும் தனியொரு மனிதனால் செய்யப்பட வில்லை. அதற்கென ஒரு குழுத் தெரிவு செய்யப் பெற்று அந்தக் குழுவினரே அந்த வேலைகள் யாவற்றையும் கலந்தா லோசித்துத் திட்டமிட்டுச் செய்தார்கள். அந் தச் செயற்குழுவில் நானும் ஒருவன். அந்தத் தொகுதியில் உவப்பு' என்னும் என் னுடைய சிறுகதை முதற்கதையாக இடம் பெற்றது. "மல்லிகை’ இதழில் மார்ச் 1986 இல் வெளிவந்த சிறுகதை அது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மதிப்பீட்டில் அந்தத் தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகளுள் மிகச் சிறந்த படைப்பெனக் குறிப்பிட்டுச் சொல்லப் பெற்றது. மிகச் சுருக்கமாக, இறுக்கமாகப் பேராசிரியர் தமது கருத் தினை வெளியிட்டிருந்தார். பலருடைய சிறுகதைகள் இடம்பெற்றுள்ள தொகுதி நூலில், எனது கதை பற்றி விரிவாக எடுத் துச் சொல்வதில் அவருக்கொரு தயக்கம் இருந்தது. எங்கள் இருவருக்குமிடையே இருக்கும் நெருக்கமான நட்புறவே அந்தத் தயக்கத்துக்கு அடிப்படைக் காரணம் என் பதனை நான் அறிவேன். பேராசிரியரே அதனை என்னிடம் சொல்லி இருந்தார்.
அந்தத் தொகுதியின் வெளியீட்டு விழா 14.12.1986இல் நடைபெற்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவதற்காக அந்த விழாவுக்கு வருகை தந்திருந்தார். படைப்பாளிகள் சார்பில் பேசு வதற்கு நானும், வெளியீட்டுக் குழுவில் ஒருவரான இன்னொரு எழுத்தாளரும் இடம் பெற்றிருந்தோம். அந்த எழுத்தாளர் தனக்
குரிய சந்தர்ப்பத்தில் பேசும் போது எழுத் தாளர்கள் பற்றிய குறிப்புகளுடன் அவர் களுடைய ஜாதகக் குறிப்பையும் இடம் பெறச் செய்திருக்கலாமெனக் கிண்டல் செய்தார். இவ்வளவுக்கும் அந்த நூலைத் தயாரித்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் தொடர்ந்து பேசும் போது எனது சிறு கதையை மிக மோசமாக விமர்சித்தார். பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருக்கும் மதிப்பீடு கண்டு அழுக்காறு கொண்ட அவர் மனம் அதனை ஜீரணிக்க முடியாத அவஸ் தையில் தன்னை வெளிப்படுத்தியது.
அந்த விழாவுக்குத் தலைமை தாங் கிக் கொண்டிருந்த தலைவர் அந்த நூல் வெளியீடு சம்பந்தமான சகல காரியங் களையும் அறிந்திருந்த ஒருவர். முன்ன ரெல்லாம் ஒழுங்காகக் கூட்டங்களை நெறிப் படுத்தி நடத்தி வந்தவர். வரம்பு மீறிக் கிண் டலும் கேலியுமாகப் பேசியவரின் கருத்துத் தொடர்பாக உண்மைகளைச் சபையில் அவர் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். அப்படிச் சொல்லித் தனது தலைமைத்துவப் பொறுப்பினைச் செம்மையாகப் பேணிப்பாது காப்பாரென நான் எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை!
அதன் பின்னர் நான் பேசவேண்டிய சந்தர்ப்பம் எனக்கு வந்தது. நடந்த சம்பவங் கள் எல்லாம் எனக்கு மனதில் சினத்தை மூட்டி விட்டன. என்னால் தவிர்க்க இய லாத நிலையில் கருத்து நிலையில் மிகக் காரசாரமாக எனக்கு முன் பேசியவருக்கு நான் பதிலிறுக்க வேண்டி நேர்ந்தது.
"எப்பொழுதும் முதற் கல்லை நாங்கள் போடக்கூடாது" என மந்திரம் போலப் பேரா சிரியர் கா.சிவத்தம்பி இடையிடையே சொல் லிக் கொண்டிருப்பார். வெளியீட்டு விழாவில்
மல்லிகை ஜூ 2007 & 23

Page 14
எனது கருத்துக்களை நான் தெரிவித்த துடன் அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டேன். அதுதான் எனது இயல்பு.
இரண்டாவது கல் நான் போட்டு விட்டேன் அல்லவா!
ஆனால் அந்த அதிருப்தியாளர் அதன் பிறகும் சும்மா இருக்கவில்லை. அவர்கள் இயல்புக்குரிய வழமையான காரியத்தை அவர் செய்தார். அவர்கள் கோஷ்டியில் இருந்து அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து ஒத்துாதிக் கொண்டிருந்த ஒரு கவிஞரைப் பிடித்து, எனது உவப்பு என்னும் அந்தச் சிறுகதை தரங்குறைந்த ஒரு படைப்பென விமர்சனம் ஒன்று எழுதுவித்து, அவர்கள் கோஷ்டிக்குரிய சஞ்சிகையில் பிரசுரிக்கச் செய்தார்.
ஆனால் அந்தத் தொகுதியில் இடம் பெற்ற சிறுகதைகளுள் உவப்பு என்னும் எனது சிறுகதை மாத்திரம் தேர்ந்தெடுக்கப் பெற்று, சிங்களத்தில் மொழி பெயர்க்கப் பெற்று, சிங்களச் சிறுகதைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது என்பது பலருக் குத் தெரியவராது பேராசிரியர் கா.சிவத் தம்பி எழுதிய கட்டுரை ஒன்றில் ஈழத்த இலக்கியங்களில் மெஜிகல் ரியலிசப் படைப்புக்கு முன்னோடியாக உவப்பு சிறு கதையைக் குறிப்பிட்டுள்ளார் என்பது கருத் தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
டானியலின் மறைவு இவ்வளவு விரை வில் நிகழும் என நான் எதிர்பார்க்க வில்லை. என்னை மிகவும் நேசித்த அவர் மறைவினால் நான் உள்ளே உறைந்து போனேன். எனது குடும்ப உறுப்பினர் ஒரு வரை நான் இழந்து போனதான துயரத்தில் சில காலம் தவித்துக் கொண்டிருந்தேன்.
டானியலின் "தண்ணிர் நாவல் கை யெழுத்துப் பிர்தியாகத் தொடர்ந்து என் னிடம் இருந்து வந்தது. அந்த நாவல் நூலாக்கப் பெறாமல் அப்படி இருந்தது எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது. எப்படியும் அதனை நூலாக்க வேண்டுமென நான் விரும்பினேன். டானியல் இறந்து ஆறு மாத காலம் கழிந்த பின்னர் அந்த எண்ணம் மனதில் தீவிரங் கொண்டது.
எனது மனதில் இருந்து வந்த எண் ணத்தினை ஒருதினம் ஜீவாவிடம் எடுத்துச் சொன்னேன். தமிழ்நாட்டுப் பதிப்பகம் ஒன்றி னுாடாக அதனை நூலாக்கலாம் என்னும் ஆலோசனையை ஜீவா அப்பொழுது எடுத் துச் சொன்னார். டானியலின் நாவலை நூலாக்குவதில் ஜீவா சம்பந்தப்படுவ தனைச் சிலர் விரும்ப மாட்டார்கள் என்பது நான் உணராததல்ல. ஆனால் அவர்கள் பற்றியெல்லாம் நான் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், என்னிடம்"ஒப்படைத்த பிரதி யினைப் பொறுப்புடன் நூலாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் செயற்பட்டேன்.
நாவல் பிரதியைக் கையில் எடுத்துப் படிப்பதில் எனக்கு மிகுந்த மனச்சங்கடம் இருந்து வந்தது. அதனால் அதனைப் படிப்ப தனைத் தவிர்த்து வந்தேன். நூலாக்கம் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மன தில் தோன்றிய பின்னர் அந்தப் பிரதியை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அப் பொழுதுதான் அந்த நாவலில் அவசியமான சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருப் பதனை நான் கண்டுகொண்டேன்.
தண்ணிர் நாவலில் மணியகாரன் பாத்திரமொன்று வருகின்றது. அந்த மணிய காரன் சராசரி மணியகாரர்களில் இருந்து சற்று வித்தியாசமான ஒரு பாத்திரம். குறிப்
மல்லிகை ஜூ 2007 & 24

பிட்ட மணியகாரனின் மருமகன் முதலியார். அவர் மணியகாரனுக்கு முரண்நிலையி லுள்ள ஒரு பாத்திரம். மணியகாரன், முதலி யார் இருவரையும் ஒருவராகவே டானியல் கருதி இருக்க வேண்டும். அதனால் முதலி யாரின் நடத்தைகள் மணியகாரனின் நடத்தைகளாக நாவலில் சித்திரித்திருக் கின்றார். மணியகாரன் பாத்திரம் குழப்ப மான முரண்பாடுள்ள ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தது. அந்தக் குறைபாட்டி னால் நாவலில் தொய்வும், யதார்த்தமற்ற தன்மையும் தூக்கலாக வெளிப்படுவதனை நான் உணர்ந்தேன்.
எந்தளவு குறைந்த மாற்றங்களை நான் செய்ய இயலுமோ, அதனை மாத்திரம் மிக நிதானமாகச் செய்து, மணியகாரன், முதலியார் ஆகிய இரண்டு பாத்திரங்களை யும் ‘தண்ணிர் நாவலில் நான் இடம்பெறச் செய்தேன்.
நிலவுடைமையாளன் ஒருவன் அடி
நிலை மக்களின் நலனுக்காக ஒரு காரி யத்தைச் செய்வதாயின் தனது வர்க்க நலன் பேணும் நோக்கம் அவனது செயலில் உள்ளார்ந்து மறைந்து கிடக்கும் என்பது உண்மை. அந்தக் கருத்தியலில் மிகத் தெளிவும் வலுநம்பிக்கையும் உடையவர் டானியல். ஆனால் நிலவுடைமையாளனின் நடத்தைகள் ஒரு சில இடங்களில் வெறும் கற்பிதமாகவே நாவலில் உருவாக்கப்பட் டிருந்தது. அந்தக் கற்பிதங்கள், குறித்த ஒரு பகுதி மக்களின் எதிர்ப்பினையும், அதிருப்தியையும் சம்பாதிக்கக் கூடியவை யாகத் தென்பட்டன. அதனால் நாவலில் இருந்து அதனை நீக்கி, பாதிப்பு ஏற்படாத வண்ணம் செப்பனிட்டேன்.
இவைகள் பற்றி யாருக்கும் தெரியாது;
யாரும் இவை பற்றிப் பேசுவதில்லை. ஆனால் நாவல் முடிவில் நான் செய்த ஒரு மாற்றம் பற்றியே சிலர் நெஞ்சில் அடித்துக் கொள்ளுகின்றார்கள். ஒர் எழுத்தாளனின் படைப்பில் நான் கை வைத்து விட்டதாக, சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு சஞ் சிகையில் கண்ணீர் வடித்திருக்கின்றார் கள். தமிழ் இலக்கியத்தின் மீது இவர்களுக் குத்தான் எவ்வளவு கரிசனை? இப்படி
எழுதுகின்றவர்களின் அந்தரங்கம் என்ன
என்பதை நான் புரிந்து கொண்டு அப் பொழுது மெளனமாக இருந்து விட்டேன்.
அந்த நாவல் இறுதியில் இப்படி முடிகின்றது.
தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு வேண்டிய நன்னிர்த் தேவையினை நிறைவு செய்வதற் காகக் கிணறு ஒன்றைத் தோண்டி முடிக் கின்றார்கள். முதன் முதலாக அந்தக் கிணற்றில் இருந்து புதிய நீரை அள்ளி எடுத்து, கிணற்றடியில் பொங்கலிடத் தீர் மானிக்கின்றார்கள், பொங்கலுக்குரிய நாளில் இருள் முற்றாகக் கலையாத வை கறை இருளில், அந்தக் கிணற்றைத் தோண்டி முடிப்பதில் பிரதான பங்காளியாக விளங்கிய மாதன், வீட்டில் இருந்து எழுந்து கிணற்றை நோக்கி வருகின்றான்.
அப்பொழுது கிணற்றுக்குள் இருந்து ஒரிருவர் வெளியே தாவி ஒடுகிறார்கள். மாதன் கிணற்றுக்குள் இறங்கியபோது அவனுக்குத் துர்வாடை வீசுகிறது. கிணற்று நீரைத் தொட்டபோது அதில் இருந்து வீசிய துர்வாடை அவனை ஒரு மாதிரிச் செய் கிறது. அதற்குப் பின்னரும் மாதன் அந்த நீரை அள்ளிக் குடிக்கிறான். இறுதியில் கட்டைப் பெருவிரலைக் கடித்துத் துப்பி
மல்லிகை ஜூ 2007 & 25

Page 15
விட்டு, இரத்தத்தினால் நஞ்சு' என கல்லின் மேல் எழுதிவிட்டு இறந்து போகின்றான்;
இவைகள் எனக்கு யதார்த்தமாகத் தோன்றவில்லை. டானியல் இல்லத்தில் இரு தினங்கள் நான் தங்கி இருந்தபோது, நாவலின் இந்த முடிவை அவர் எடுத்துக் கூறிய சமயம், எனது கருத்தினை அவரி டத்தில் எடுத்துச் சொன்னேன்.
அவர் முடிவில் உங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள் என்றார். பின்னர் அப்படியொரு சிறுகதை தான் எழுதி இருப்ப தினால் அந்த முடிவே இடம்பெறலாம் எனக் கூறினார். அது செயற்கையான - வலிந்து சொல்லும் முடிவாகத் தோன்றுகின்றதென நான் திரும்பவும் அவருக்கு விளக்கிச் சொன்னேன். நீண்ட நேரத்துக்குப் பின்னர் 'ஏதோ உங்கடை எண்ணம் போலச் செய்யுங்கோ' என்று மீண்டும் சொன்னார்.
தண்ணிர் நாவல் யதார்த்தமாக - சிறப் பாக அமைய வேண்டும் என்னும் நோக்கத் துடன், டானியலிடம் இது பற்றிச் சொல்லி இருக்கின்றேன் என்னும் நம்பிக்கையுடன், சிறிய மாற்றம் ஒன்றைச் செய்தேன். நீர் நிறைந்த குண்டுக்குள் மாதன் தலைகுப்புற விழுந்து, மீண்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இறந்து கிடந்தான் என்பதுதான் நான் செய்த அந்த மாற்றம்.
ஒரு படைப்பாளியின் படைப்பில் கை வைக்க வேண்டிய, மாற்றம் செய்ய வேண் டிய அவசியம் எதுவும் எனக்கில்லை. டானி யலின் தண்ணிர் நாவலில் தவிர்க்க இய லாது அவசியம் கருதி மாற்றங்கள் சில வற்றைச் செய்ய வேண்டி நேர்ந்தது. இந்த மாற்றங்களை 1986ஆம் ஆண்டு நான் செய் தேன். இதுபற்றி இதுவரை நான் வெளியில்
மல்லிகை ஜூ 2007 & 26
எடுத்துச் சொன்னதில்லை. இப்பொழுதும் சொல்ல வேண்டும் என்று நான் கருத வில்லை. ஆனால் பேராசிரியர் அ.சண்முக தாஸ் தேவரையாளி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற எனது மணிவிழாவில் (18.04. 2003) “தண்ணிர் நாவலில் பல திருத்தங் கள் தெணியான் செய்திருக்கின்றார் என் பது உண்மை’ என மேடையில் பகிரங்க மாக அறிவித்தார். அதன் பிறகே அந்த உண்மைகளை இன்று விளக்கமாக வெளி யில் எடுத்துச் சொல்ல மனங்கொண்டேன்.
நான் அந்த நாவலில் செய்ய வேண் டிய மாற்றங்களைச் செய்த பிற்பாடு, டானி யலுக்கு வேண்டியவரிடம் படிக்கக் கொடுத் தேன். அதன் பிறகு தட்டச்சில் பொறித்துத் தரும்படி கேட்டு அந்தப் பிரதியை ஒருவ ரிடம் ஒப்படைத்தேன்.
அந்தச் சமயம் டானியலின் மூத்த மக னிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. தங்கள் தந்தையாரின் நாவலை நூலாக்க விரும்புவதால் அந்தப் பிரதியைத் தன்னிடம் தருமாறு கேட்டிருந்தார். அந்தக் கடிதம் எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்து, பாரத்தைச் சுமக்க வேண்டியவர் பொறுப்பை உணர்ந்து நூலை வெளியிடு வதற்கு அவர் முன்வந்திருக்கின்றார் என எண்ணினேன். அந்த ஆண்டு க.பொ.த. (சாதாரண) பரீட்சை விடைப் பத்திரங்களை மதிப்பீடு செய்து புள்ளி வழங்கும் பணி கொழும்பில் இடம்பெற்றது. நான் அங் கிருந்து பத்துத் தினங்களின் பின் திரும்பி வரும்போது தட்டச்சில் பதிக்கும் வேலை முடிவுற்று விடும். அதனை உங்கள் கை யில் ஒப்படைக்கின்றேன் எனத் தெரிவித்து விட்டு 24.12.1986இல் கொழும்பு புறப்பட்டுச் சென்றேன்.
(வளரும்.)

இரசனைக் குறிப்பு :
செய்தி மஞ்சரியான ஒரு நூல்
- செல்லக்கண்ணு
கிளிநொச்சி மாவட்டக் கலை, பண் பாட்டுப் பேரவை, தனது முதல் வெளி யீடாகக் க.இரத்தினசிங்கம் என்பவரது "மண்ணின் வேர்கள்" என்ற செவ்வி களின் தொகுப்பை வெளிக்கொணர்ந் திருக்கின்றது.
இத்தொகுப்பில் இன்றைய போர்ச் சூழலிலும் தமது இதயத்தை இழக்காது, உறுதியோடும், உற்சாகத்தோடும் சொந்த மண்ணின் இலக்கியத்திற்கும், பொதுப் பணிக்கும், ஆன்மீகத்துக்கும் தமது உழைப்பை அர்ப்பணிக்கும் 31 சிறப்பு ஆளுமை யாளரது மனவோசைகள் பதிவாகி இருக்கின்றன. அத்தோடு அமரர் வன்னியூர்க் கவிராயர் பற்றிய குறிப்பொன்றுமுண்டு.
செவ்வி கொடுத்த பெரும்பாலோர் சொந்த மாவட்டத்துக்குள்ளும், வெளி யேயும், வெளிநாட்டிற்கும் புலம்பெயர்ந்த, அகதி நிலைப்படுத்தப்பட்டவர்கள். இருவர் தம் மண்ணில் இருந்து கொண்டே - தமிழ் பிரதேசத்தில் இருப்பதால் - தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பேசுகின்றனர்.
"இதயத்திலிருந்து குருதி வழிகையிலும் நம்பிக்கையோடு வாழ்கிறோம்." "இன்னல்களுக்கிடையே மீட்ட வாழ்வு கூட உறுதியானதாக இல்லை." "சமகால வாழ்வை எழுதுவதற்கு அடிப்படை வசதிகளேயில்லை." "வளமான மண், மிகையான நீர் இருந்தும் என்ன...”
'துரித வளர்ச்சி கண்ட் கிராமம் இன்று சின்னாபின்னமாகியுள்ளது."
மல்லிகை ஜூ 2007 & 27

Page 16
“மர நிழலிலும் குப்பி விளக்கு களிலும் படித்து வளர்ந்ததை மறக்க (урцgициот?” ܫ
"கிளிநொச்சியைச் சீரழித்த இடப் பெய்ர்வு"
“காடழித்துக் கழனியாக்கினோம். மீண்டும் காடழித்துக் கழனியாக்கு வோம்."
போருக்குத் தமது வாழ்வை ஆகுதி யாக்கிக் கொண்டிருக்கும் இச்செவ்வி யாளர் இப்படியாகத் தமது மனக் குமுறல்களைக் கொட்டி இருக்
கின்றனர்.
இச்செவ்விகள் 1998, 1999, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006 ஆகிய ஆண்டுகளில் தினக்குரல் வார வெளியீடு, நவமணி ஆகிய பத்திரிகை கள் ஊடாக வாசகனுக்குப் பகிரப் பட்டவை.
இத் தொகுப்பை வாசிக்கும் பொழுது ஒரு செய்தி மஞ்சரியைப் படித்தது போன்ற இரசனை சுரக் கின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு இலக் கிய அமைப்புகள், சிற்றேடுகள் சம்பந்த
மான விபரங்கள், எழுத்தாளரது வாழ்க்
கைக் குறிப்புகள் என்பனவற்றைப் பெற முடிகின்றது. எழுத்தாளரது உரு வாக்கத்திற்கு வாசிப்பும், வானொலியும் துணை நின்றிருப்பதை அறிய முடி கின்றது. இங்கும் நச்சல்பாரிகள் இருந் ததை 'புதினமாகத் தெரியப்படுத்தப்பட் டுள்ளது.
"எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் எனது தாகம்’ நாவல் பற்றி எழுதிய
விம்ர்சனம் வெளிவந்த பத்திரிகை எனக்குக் கிடைக்கவில்லை. வெகுநாட் களின் பின் ஒரு வாசகர் மூலமே அறிய
வேண்டி இருந்தது.' இது பிரபல பெண் எழுத்தாளர் தாமரைச் செல்வி
யின் ஆதங்கம்.
மற்றுமொரு பெண் எழுத்தாளரான “uomiogó) உடுக்க உடையின்றி, சொந்தச் சுகங்
மண்டைதீவு கலைச்செல்வி;
களை இழந்து, நான் பேணிக்காத்த என் உயிரைப் போன்ற எனது ஆக்கங்கள் எல்லாம் இழந்து நடுவிதியில் அனாதை யாக நின்றோம்" என்கிறார்.
3 பிரபல புனைக்கதை எழுத்தாள ரும், வானொலி நாடகப் படைப்பாளரு மான மூத்த எழுத்தாளர் அமரர் கச்சா யில் இரத்தினத்தின் மகளே எழுத்தாளர் மலரன்னை என்பது என்போன்றோருக் குப் பிந்திக் கிடைக்கும் செய்தியே! இவரது ஆங்கிலக் கவிதைகள் வெளி நாட்டு ஏடுகளில் வெளியாகி இருக் கின்றன. இவரது மகனும் ஓர் எழுத் தாளரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஹைகூத் தொகுதியொன்றும், சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய தொகுதியொன்றும் கடந்த ஆண்டில் வெளிவந்ததாம். வெளிவந்த நாவல் "போர் உலா', இவரது பெயர் குறிப்பிட வில்லை. மலரன்னை, "காலத்தின் பதிவுகளை அறுவடையாக்கத் துடிக்கும் எழுதுகோலுக்கு எழுதும் உபகரணங்கள் இருந்து எழுது வதற்கு தகுந்த இடவசதியின்றி, அடிப் படை வசதிகள் எதுவுமற்ற நிலை. எனினும் இவையனைத்தும் எமது பணிக்குப் பின்னடைவாக இருந்துவிட
கிடைக்காத நிலை,
மல்லிகை ஜூ 2007 ஜ் 28

முடியாது. மாறாக இந்நிலை எமது ஆர்வத்தை தூண்டி எதிர்நீச்சல் போட வைக்கிறது என்பதே என் மணமறிந்த உண்மையாகும்" எனக் கர்ச்சிக்கிறார்.
 ேகிளிநொச்சி மாவட்டத்தின் முதல் சிறுகதை எழுத்தாளர் இ.என்.ராசா என் பதை இத்தொகுப்புத் தெரிவிக்கின்றது. இவரொரு தொழிலாளி வர்க்கத்திற் குரிய எழுத்தாளர். "கொத்தனார் என்ற சொல் எமது வாசகருக்கு அந்நிய மானது. கட்டடத் தொழிலாளி அல்லது மேசன் எனச் சுட்டி இருக்கலாம்!
 ே"பல படைப்பாளிகளின் படைப் புக்களை படிக்கும்போது ஏற்பட்ட திருப்தியீனங்களும், திருப்தியும் - எழுது வதிலும் ஒரு தேவை கருதியதான சேவை இருப்பதான ஒரு உணர்வும், அன்றாட வாழ்வியல் தரிசனங்களின் குறைபாடுகளும், துயரங்களும் ஒருவித மான எழுச்சியும் என்னையும் எழுத வைத்தது” எனத் தான் எப்படி எழுத் தாளனாவதற்குத் தூண்டப்பட்டார் என் பதை விபரிக்கும் வளவை வளவன் -
“போலித்தனங்களுக்கும், வெறும் பாலியல் வக்கிரங்களுக்கும் முக்கியம் கொடுத்துப் படைத்து, அற்ப மவுசு தேடி நேரத்தை வீணடிக்காமல், கலைப் படைப்புகள் மக்களுக்காக என்ற கருத் தமைவோடு, யதார்த்தம் நிறைந்த சத்தி யத் தேடலாக இலக்கியங்கள் படைக் கப்பட வேண்டும்" எனவும், மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் இலக்கியம் எது என்பதையும் கூறி எழுத்தாளரை நெறிப்படுத்துகிறார்.
9 தனது வானொலி ஆக்கங்களுக்
காக மாதத்தில் குறைந்தது ஆயிரம் பெற்றதாக கவிஞர் செல்வந்தி மகா
லிங்கம் கூறி இருப்பது தித்திப்பானது!
அவர் இன்னுமொரு நற்செய்தியை இலக்கிய வாசகனுக்குத் தந்திருக்கிறார். தாமரைச் செல்வி முகப்போவியம் தீட்டிய தனது 'முத்துக் குவியல்" என்ற நூல் பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன ஊழியரது நிதியளிப்பில் அச்சேறியதாம்!
இது வர்க்க உறவின் முக்கியத்து
வத்தைப் பிரதிபலிக்கின்றதல்லவா!
"அழகியல் ஆக்கங்களுக்கு 6TLDgsi பத்திரிகைகளில் வாய்ப்புக் குறைவு. எமது நாட்டு எழுத்தாளர்களின் சிறு கதைகளில் அழகுணர்ச்சி குறைந்து காணப்படுவதற்கும் இது காரணமா கின்றது. ' ஈழத்துச் சிறுகதைகள் குறித்து இப்படியாக" அபிப்பிராயப் படுபவர் நாடறிந்த எழுத்தாளர் ச. முருகானந்தம். பத்திரிகைகளில் வாய்ப்புக் குறைவெனில் இலக்கியச் சிற்றேடுகளை அணுகலாமே. ஈழத்துப் படைப்புகள் நேரடியானவை என தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனும் ஏலவே கருத்துரைத்திருக்கின்றார். இக்குற்றச் சாட்டு நியாயமானதா? ஒரு காலத்தில் - முற்போக்கு இலக்கியம் வீறு கொண்ட காலத்தில் இந்த அழகியல் பிரச்சினை ஈழத்து இலக்கியத்தில் "சக்கை போடு’ போட்டதை இலக்கிய நோக்கர்கள் அறிவர். உருவமா? உள்ள டக்கமா? கலை கலைக்காகவா? மக் களுக்காகவா? என்ற வாதத்தில் முற் போக்கு இலக்கியம் மக்களுக்காகவே கலை என்பதை அங்கீகரித்து உள்ளடக்
மல்லிகை ஜூ 2007 & 29

Page 17
கத்தை படைப்புகளில் வற்புறுத்தியது. இதன் அழுத்தமே எமது படைப்புகளில் அழகியலை ஒரங்கட்டியது. அத்தோடு யதார்த்தத்தின் நுழைவும் இதைச் சாத்தியப்படுத்தியது. முற்போக்கு இலக் கியத்தை ஊக்குவித்த பேராசிரியர் க. கைலாசபதி தினகரன் ஆசிரியர் பீடத்தில் இருந்தபொழுது இக்கருத்து நிலையைப் பரம்பல் செய்ததை இலக் கிய உலகு நன்கு அறியும். அன்றுள் ளதை விட இன்றுள்ள தமிழனது வாழ்வு அப்படியென்ன செழிப்பான தாகவா இருக்கின்றது? நாம் இன்று வானத்தைப் பார்ப்பது கதிரவனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ இரசிக்கவல்ல! செல் வருகின்றதா? கிபீர் வருகின்றதா? என்ற தேடுதலுக் காகவே இருந்தும் எமது புனை கதைகள் மேன்மை பெறவில்லையா? ச. மு. வை இலக்கிய பாராட்டியதே! தேவையா? இது எமது ஆய்வறிஞர் களுக்குச் சமர்ப்பணம்!
சிந்தனை எனவே அழகியல்
இரண்டு மாதங்களுக்குள் இரண்டு பதிப்புக்களைக் கண்ட பூஜைக்கு வந்த மலர்' என்ற நாவலைப் படைத்தவர் பிரபல எழுத்தாளர் ந. பாலேஸ்வரி. இவர் “இப்ப திருமணம் செய்வது புத்த கம் வெளியிடுவதை விடச் சுலபம் என நினைக்கிறேன்’ என்றிருக்கிறார். இவர் இன்னமும் தனது மகனுக்கோ மக ளுக்கோ - மணமகளோ, மணமகனோ தேடி அலையவில்லைப் போலும்! அதற் காகப் புத்தகம் வெளியிடுவது சுலப மல்லவெனக் கூறேன்! இப்போதெல் லாம் ஈழத்து நூல்களை வெளியிடப்
பறந்தோடி வருகின்றனரே அவர்கள்
இந்தப் பிரசவ வேதனைக்குப் பரிகாரம் செய்யவில்லையா? செய்யமாட்டார்களா.
 ே‘டானியல் சிறுகதைகள்’ தொகுப் பைப் படித்த பின்னர்தான் முழுமை யான படைப்பாளியின் தன்மையைத் தான் பெற்றதாகப் பிரபல எழுத்தாளர் புரட்சிபாலன் கூறி இருக்கிறார். ஒரு காலத்தில் டானியலின் எழுத்துகளுக் குள் இலக்கணப் பிழைகளைத் தேடிச் சுழியோடியவர்கள் பலர் எதுக்கும் காலம் பதில் கூறும் என்பார்கள். அந்தக் காலத்தின் பதில் இப்பொழுது புரட்சி பாலன் வாயிலிருந்து வந்துள்ளது. இப் பொழுது அமரர் கே. டானியலின் படைப்புகளைப் பல்கலைக்கழகங்களும் கனம் செய்கின்றன. அன்று வீரகேசரி யின் சகோதரப் பத்திரிகையாக இருந்த 'ஜோதி" என்ற வார வெளியீட்டில் தனது முதல் நாவலை வெளியிட்ட அன்னலெட்சுமி இராசதுரை (யாழ் நங்கை, லக்ஷமி) தன்னை நாவலா சிரியராக்கப் பெரிதும் உழைத்தவரென ஒப்புக்கொள்ளும் புரட்சிபாலன் தனது எழுத்துலக முன்னேற்றத்துக்குக் கால் கோள் அமைத்தவராக ந. பாலேஸ் வரியைச் சுட்டுகிறார்.
“பாராட்டுகளை விட விமர்சனங் களே உந்து சக்தியாய் அமைகின்றன’’
என்கிறார் ஆதிலெட்சுமி சிவகுமார்.
"விமர்சனங்கள் நீதி தேவதையின் தரா சாக இருக்க வேண்டும். நிறைகளையும் குறைகளையும் கொண்டதாக அமைதல் வேண்டும். ஒரு இளம் எழுத்தாளனை முகவரியின்றி நசுக்கி விடுபவையாக அல்லாமல் அவனைக் காயப்படுத்தாமல்
மல்லிகை ஜூ 2007 & 30

கரையேற்றி விடக்கூடியவையாக அமைதல் வேண்டும்" என மற்றொரு கருத்தை முன்வைக்கிறார் எழுத்தாளர்
ஆனந்தராசா தர்சினி.
பரப்புரைகள், ஆலோசனைகள் என் பன மேலோர் மட்டத்துள் மட்டும் முடக் கப்படாமல் அடிமக்கள் மத்தியிலும் எடுத்துச் செல்லப்பட வேண்டுமென இரு வர் கருத்துரைக்கின்றனர். இவர்களது சமூக அக்கறை பாராட்டுதற்குரியதாகும். இவ்விருவரில் ஒருவரான கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்து, பேரா தனை பல்கலைக் கழகத்தில் முதன் முதல் பல் வைத்தியத் துறையில் பட்டம் பெற்ற புவனேஸ்வரி செல்லையா கூறுகையில்,
“பாமர மக்களைப் பொறுத்தவரை யில் வைத்தியர்களின் ஆறுதல் வார்த்தை களே பாதி நோய் குணமடையக் காரண மாகின்றது. கூடுதலாகப் பாமர மக் களுக்கே இது அவசியமாகின்றது” எனக் கரிசனை காட்டுகிறார். அடுத்தவரான நாடறிந்த பெண்ணிய எழுத்தாளர் சந்திர காந்தா முருகானந்தம் பெண்ணியம் பற்றிய கருத்துப் பரிமாற்ற
"முக்கியமாக
மானது பல்கலைப் படிகளை விட்டிறங்கி பாமர மக்களின் பக்கம் வர வேண்டும். மேலோர் வட்டத்தின் மத்தியிலான கலந் துரையாடல்கள் தீங்குறு பிரிவினரான சாமானியரை எட்ட வேண்டும்" எனப் பொறுப்புடன் சமூகத்தை நெறிப்படுத்த முனைகிறார். நோயாளிகளுக்குத் தானே மருந்து கொடுக்க வேண்டும்! நியாயமான கருத்து. இவர் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்தும் அபிப்பிராயங்களை வெளியிட் டிருக்கிறார். சந்திரகாந்தாவின் இரண்டு செவ்விகளையும் ஒன்றாக்கி இருக்கலா மல்லவா!
சஞ்சிகை வெளியீடு, கவிதை, மேடை நாடகம், விதி நாடகம், வானொலி நாடகம், அரசியல் ஆய்வு, வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு, விமர்
சிறுகதை,
சனம் ஆகிய பலகலை, இலக்கிய அலகு களில் முத்திரை பொறித்துச் சாதனை புரிந்துவரும் நா.யோகேந்திரநாதன் எனது எழுத்தும் அரசியலும் பிரிக்க முடியா தவை என்கிறார். "நான் 1966இல் இடம் பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டேன். தடை செய்யப்பட்ட மே தின ஊர்வலத்திலும் பங்கு கொண் டேன்” என மேலும் கூறி இருக்கும் இவர், நாகரெத்தினம், கே.டானியல் ஆகியோ
என் சண்முகதாசன், எஸ்.ரி.
ரது அரசியல் சகபாடியாக இருக்கலா மென ஊகிக்க முடிகின்றது.
யோகர் சுவாமிகள் திருவடி நிலை யத்தில் இயங்கும் முதியோர் இல்லம் குறித்து அதன் தலைவர் மு.கந்தசாமி விபரமாக விபரிக்கிறார். வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகள் தமது பெற்றோருக்குத் திவசம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் இந்நிலையத்தின் ஊடாக செய்வதாக அறிய முடிகின்றது. பாராட்டப்பட வேண்டியதுதான்! இத் தகவல் மேலும் பரம்பலாவது பலன் தரும்.
தொகுப்பிலுள்ள செவ்விகளைக் கண்டு - அவைகளை நூலாகத் தொகுத் துத் தந்திருப்பவர் க.இரத்தினசிங்கம். இவர் 'மல்லிகைப் பந்தலின் கொடிக் கால்கள்' என்ற, மல்லிகை சஞ்சிகையின் பத்தியின் பதிவைப் பெற்றவர். "எழுத் தாளர்களை நேரில் தேடிப் போய்ச் சந்திப் பதை இன்றுவரை ஒரு விரதமாகவே கடைப்பிடித்து ஒழுகி வருபவர்” என
மல்லிகை ஜூ 2007 & 31

Page 18
இவரது இலக்கிய நேசத்தை மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மிகவும் சிலா கித்துச் சொல்லி இருக்கிறார். "அவரு டைய சிறப்பு; அவருடைய நடத்தையால், செயற்பாட்டால் வருகின்றது. அவரொரு முதன்மை மிகு பத்திரிகையாளரோ, கவி ஞரோ, எழுத்தாளரோ அல்ல. ஆனால் அவர் ஒரு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர்” என இரத்தினசிங்கத்தின் சிறப்பாளுமைகளைச் சிறப்பித்துள்ளார் எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர செந்தி நாதன்.
தொகுப்பாசிரியர் குறித்து இரு இலக்கியவாதிகள் கூறி இருப்பவை மிக வும் சரியான மதிப்பீடே அவர் தன்னை குடத்துள் விளக்காக வைத்துக் கொண்டு இந்த மானுடத்து கலங்கரை விளக்கு களான பிரமுகர்களின் மன ஆவேசங் களை அம்பலத்திற்குக் கொண்டு வந்துள் ளார். எதிர்காலச் சந்நிதி கண்ணிர் விட்டே வளர்த்தோம் என்பதை அறிவதற் கும் வகை செய்துள்ளார். "யாரிடம் நோவேன். என அவலமான அகதி வாழ்வைச் சகித் துக் கொண்டு மானுட நேயப் பணி
யார்க்கெடுத்துரைப்பேன்’
களைச் செய்து கொண்டிருப்போரின் மனத்துயருக்கு வடிகால் அமைத்துக் கொடுத்திருக்கும் பரோபகாரி இரத்தின சிங்கம். இத்தற்றுணிபு அவரைத் தமிழ் நெஞ்சங்களில் நெடுநாள் உலவச் செய்யும்.
வன்னிப் பிரதேசத்தின் மண் வாச னையைக் கக்குகின்றது இணுவையூர் சிதம்பர செந்திநாதனின் முன்னுரை. "தான் போகும் ஒற்றைத் தட நாருருவி கள் ஏனைய முள்ளுச் செடிகள் கொழுவி இழுக்கும் பாதை வழியே தன் சகபாடி களை, தோழர்களை நாருருவிகள், முள் ளுச் செடிகள் கொழுவி இழுக்காமல்
அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தீவிரமான மனப்போக்கு மிக்கவர்." இப் படியாக வன்னி மண்ணின் அடையாளங் களை உவமித்து தொகுப்பாசிரியரின் பொதுநல நேசத்தை விளக்குகிறார் செந்திநாதன்.
"பின் மாலைப் பொழுதில் பறவை கள் மெல்லிசை இசைத்தபடி, கூடுகளை நோக்கிச் செல்லும் வேளையில், மாட்டு வண்டிகள், மணல் வலிந்த பாதை வழியே மணியோசை இட்டபடி செல் லும். வேலை முடித்த திருப்தியிலும், களைப்பிலும் 'காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே’ என்று பழைய கூத்துப் பாட்டினை மெய் மறந்து பாடிச் செல்வாரே ஒருவர். அந்த இசைக் கும் அது தரும் ஈர்ப்புக்கும் நிகர் எது?
அப்படியான ஒரு நிறைவினைத் தருவது தான் இரத்தினசிங்கத்தின் முயற்சி."
வன்னியில் தினசரி நிகழும் ஒரு மாலைக் காட்சியை இம்முயற்சிக்கு உவமிக் கின்றது முன்னுரை.
“எத்தகைய பெறுமதி மிக்க வெளி நாட்டுப் பழங்கள் இருந்தாலும் வன்னிக் காடுகளில் கிடைக்கும் பாலைப் பழம் போன்றது இது" எனவும் இந்நூலை முன்னுரை போற்றுகின்றது.
அட்டைப் படத்தில் தீட்டப்பட்டி ருக்கும் வானுயர் தென்னை மரங்கள் இன்றைய சந்ததியை அதிசயப்படுத்தும்! செல்லும் கிபீரும் எமது தென்னை வளத்தை சீரழித்து விட்டனவே! இரத் தினசிங்கத்தின் வேர் இன்னமும் கிளி நொச்சி மண்ணை விட்டுப் பாறவில்லை யென்பதை அட்டை ஓவியம் உறுதிப் படுத்தப்படுகிறது. ஆக, இந்நூல் நல்ல தொரு செய்தி மஞ்சரியாக வாசகனைத் திருப்திப்படுத்துமெனலாம். *
மல்லிகை ஜூ 2007 & 32

இலக்கிய மடல் :
дојrio56убои Ясóóó மூன்று நாட்கள் இலக்கியமும் ஊட்டச்சத்துத்தான்.
- முருகபூபதி
ஈஸ்டர் விடுமுறை பயனுள்ளதாகக் கழிந்தது. மூத்த தலைமுறைக் கவிஞர் - அம்பி அவர்கள் சிட்னியில் சுகவீனமுற்றிருந்தமையால் - கடந்த ஜனவரி மாதம் மெல்பனில் நாம் நடத்திய 7ஆவது எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்த விழாவில் நாம் பாராட்டிக் கெளரவித்து விருது வழங்கவிருந்த பவளவிழா நாய்கர் - காவலூர் ராசதுரை அவர்களும், விழாவுக்கு வந்த சமயம் திடீரெனச் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர்கள் இருவரையும் நேரில் சென்று பார்த்துச் சுகசேமம் விசாரிப்பதற்காகச் சுமார் எண்ணுாறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த சிட்னிக்குச் சென்று திரும்புவதற்கு இந்த ஈஸ்டர் விடுமுறையைப் பயன்படுத்த பெரிதும் விரும்பினேன்.
ஒரு கல்லில் இரண்டு மாங்கனிகள் அல்ல - பல மாங்கனிகளை அடித்து வீழ்த்தலாம் என்பார்கள். எனக்கு அடித்து வீழ்த்தி பழக்கம் இல்லை; விழுந்து கிடப்பவர்களைத் தூக்கி நிறுத்தி உற்சாகப்படுத்தும் பழக்கம் இயல்பிலேயே இருந்தமையால் - சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்துவோம் என்று எமது அவுஸ்திரேலியத் தமிழ்க் கலை இலக்கியச் சங்கத்தின் செயற்குழுவினரிடம் தெரிவித்தேன்.
இந்த விடுமுறை காலத்தில் பலருக்கும் பல அலுவல்கள். நானும் - முதிய எழுத்தாளரான சிசு,நாகேந்திரனும் (அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்னும் நூலை எழுதி யிருப்பவர். குத்துவிளக்கு திரைப்படத்தில் நடித்தவர்) சிட்னிக்குப் பஸ்ஸில் புறப்பட்டோம்.
பெரிய வெள்ளியன்று மாலை பலரும் தேவாலயங்களில் கூடி நின்ற வேளையில் - சிட்னியில் பல கலை இலக்கியவாதிகள் WESTMEAD 'புரோகிரஸ்' மண்டபத்தில் ஒன்று கூடி - காவலூர் ராசதுரையின் பவள விழாவை அமைதியாகக் கேக்" வெட்டிக் கொண்டாடி
(360TTLib.
மல்லிகை ஜூ 2007 & 33

Page 19
காவலூர் ராசதுரைக்கு இந்த (2007) ஆண்டு பவளவிழாக் காலமாகும்.
சிறுகதை, குறுநாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி என்று அகலக்கால் பரப்பி ஆற்றலுடன் இயங் கியவர்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் 'சங்க இலக்கியப் பேரவையில் - இவரது வீட்டு முகவரிதான் - சங்கத்திற்கும் முகவரி. இச்சங்கத்தின் மூத்த உறுப்பினர். 'பொன் மணி திரைப்படத்தின் கதை வசன கர்த்தா; தயாரிப்பு நிர்வாகி,
எனது தலைமையில் நடந்த இச் சந்திப்பு நிகழ்வில் - காவலூர் ராசதுரையின் பணிகளை நினைவு கூர்ந்து - அவரது அமைதியான செயற்பாடுகளைச் சிலா கித்து கூறினார் - திருமதி. ஞானம் இரத் தினம். இவர் - இலங்கை ஒலிபரப்பு கூட்டத் தாபனத்திலும், ரூபவாஹினியிலும் பணிப் பாளராக முன்பு பணியாற்றியவர்.
ராசதுரையை நன்கு அறிந்தவர், ராச துரையின் மனைவி, பிள்ளைகள், மரு மக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் இந்த விழாவுக்குத் திரண்டு வந்திருந்தனர்.
"பெற்றோருக்குத் தமது பிள்ளைகளை விட - பேரப்பிள்ளைகளில்தான் பாசமும் அக்களையும் அதிகம் என்பதை ராசதுரை சிட்னியில் தமது பெரும்பாலான நேரங் களைப் பேரப்பிள்ளைகளுடன் செலவிடுவ திலிருந்து கண்கூடாகக் கண்டு கொள்ள முடிந்தது' என்றார் திருமதி. ஞானம் இரத்தினம்.
இதில் ஒரளவு உண்மையும் உண்டு. எமது பார்வைக்குப் புலப்படாத இந்த உண்மையில் உள்ளத்துணர்வு ஊற்றெடுத் துப் பாயும்.
சிட்னியில் ATB.C. வானொலியில் ஊடகவியலாளராகவும் பணியாற்றும் கவிஞர் செ.பாஸ்கரன், இலங்கை பனம் பொருள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நடராஜா (இவர்தான் - நான் முன்பு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி யில் பயின்ற காலத்தில் எமது போர்டிங் மாஸ்டர்) ஆகியோரும் ராசதுரையின் எளிமையையும், ஆற்றலையும் விதந்து பேசினர்,
சிட்னி தமிழ் முழக்கம் வானொலி
ஊடகவியலாளரும், எழுத்தாளருமான
பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா எமது கலை, இலக்கியச் சங்கம் வெளியிட்ட பாராட்டுப் பத்திரத்தை வாசித்துச் சமர்ப்பித்தார்.
ஒவியர் ஞானம்' ஞானசேகரம் ராச துரைக்கு விருதினை வழங்கிக் கெளர வித்தார்.
சுமார் இரண்டரை மாதங்களாகப் படுக்கையில் இருந்த கவிஞர் அம்பி - ராச துரைக்கு விழாவென்றதும் தானும் வரப் போவதாக - உற்சாகத்துடன் வந்து கலந்து GasmecTLITs.
நடப்பதற்குப் பெரிதும் சிரமப்படும் அம்பியின் அருகிலேயே சென்று அவர் அணிவித்த பூமாலையை ராசதுரை ஏற்றுக் கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
மல்லிகை ஜன 2007 率 34

இந்தியாவில் வெங்கட்ராமன் ஜனாதி பதியாக இருந்த காலகட்டத்தில் பிரபல திரைப்பட நடிகர் ராஜ்கபூருக்கு விருது வழங்கும் நிகழ்வு ஒன்று நடந்தது. இந்திய திரைப்பட மேதை "தாதாபால்கே ஞாப கார்த்த விருது. அதியுயர் விருது.
ராஜ்கபூர் அச்சமயம் மேடைக்குச் சென்று அதனை வாங்குவதற்கு முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். நடக்கவும் முடியாத சூழ்நிலையில் உடல்நலம் குன்றி - மேடை யேற முடியாத சங்கடத்தை உதவி யாளரிடம் சொன்னார்.
ஜனாதிபதி வெங்கட்ராமன் - தானே மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து முன் வரிசையில் அமர்ந்திருந்த ராஜ்கபூருக்கு விருதினைக் கொடுத்தார். மண்டபத்தில் அனைவரும் (ஜனாதிபதி உட்பட) எழுந் திருக்க - ஆசனத்தில் அமர்ந்து கொண்டே அந்த உயர் விருதை ராஜ்கபூர் பெற்றுக் GoatsT6BoT LITr.
இச்செய்தி அக்காலப்பகுதியில் சற்று பிரபலமாகவிருந்தது.
இத்தகவலை அப்பொழுது சொன் னேன். இங்கு கதை வேறு விதமாக அமை கிறது. விழா நாயகன் நடப்பதற்குச் சிரமப் படும் மூத்த தலைமுறைக் கவிஞரின் அருகிலேயே சென்று அந்த மாலையை ஏற்றுக்கொண்டார்.
கலை இலக்கியவாதிகள், ராசதுரை யின் குடும்பத்தினர் அனைவரும் புடை சூழக் கேக் வெட்டினார் விழா நாயகன்.
சிறிய "ஸ்ரோக்' வந்தமையால் பேசுவ தற்கு சிரமப்பட்ட ராசதுரை - இரத்தினச்
சுருக்கமாகவே தமது ஏற்புரையை வழங் கினார்.
எமது சங்கத்தின் உறுப்பினரான திருமதி. உஷா ஜவகார் எழுதிய 'அம்மா என்றொரு சொந்தம் கதைத் தொகுதியை இலங்கை கம்பன் கழக ஸ்தாபகர்களில் ஒருவரான திரு. நந்தகுமார் விமர்சித்துப் (3ué6OTITs.
கன்பராவில் வசிக்கும் ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி யின் "துவிதம்' கவிதைத் தொகுப்பைக் குலம் சண்முகம் விமர்சித்தார்.
எமது சங்கம் வெளியிட்ட 20 எழுத் தாளர்களின் கதைத் தொகுப்பான "உயிர்ப்பு' நூலை நான் அறிமுகப்படுத்தி னேன். சங்கத்தின் பிறிதொரு நூலர்ன ‘வானவில் கவிதை நூலை டொக்டர் இள முருகனார் பாரதி அறிமுகப்படுத்திக் கவிதை வரிகளிலேயே விமர்சித்தார். இவர் ஒரு கவிஞர். நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பேரன். மறைந்த சமயப் பேச் சாளர் இளமுருகனாரின் மகன்.
வானவில் கவிதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வதியும் 31 கவிஞர் களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
எனினும், இந்த நூல் வெளிவரும் இக் காலத்தில் இரண்டு கவிஞர்கள் உயிருடன் இல்லை. ஒருவர் பிரிஸ்பேனில் வாழ்ந்த வாசுதேவன். மற்றவர் சிட்னியில் வசித்த கலாநிதி வேந்தனார் இளங்கோ.
மறைந்த இவர்களையும் நினைவு கூர்ந்து அத்தொகுப்பை உருவாக்கியிருந் தோம்.
மல்லிகை ஜூ 2007 & 35

Page 20
2001ஆம் ஆண்டு மெல்பனில் தொடக் கப்பட்ட எழுத்தாளர் விழா கடந்த 2007 ஜனவரி வரையில் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் நடந்து வருகிறது.
2008ஆம் ஆண்டு சிட்னியில் நடத்துவ தற்குத் தீர்மானிக்கப்பட்டமையால் அதனை சிறப்பாக ஒழுங்கு செய்வதற்கு ஒரு உபகுழுவை இந்த இலக்கியச் சந்திப் பில் தெரிவு செய்தோம்.
குறிப்பிட்ட உபகுழு கூடி விழாவுக் கான இடம், காலம், நிகழ்ச்சிகள் குறித்து ஆராயும் என முடிவு செய்ததுடன் அன் றைய இலக்கியச் சந்திப்பு இனிதே நிறை வடைந்தது.
மறுநாள் சனிக்கிழமை - எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இருந்தன.
ஒன்று, அவுஸ்திரேலிய அரசின் தேசிய ஒலிபரப்பான SBS வானொலியின் தமிழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரேமன்ட் செல்வராஜா அவர்களுடன் சந்திப்பு.
இரண்டாவது, அன்று மாலை நடக்க விருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் கற்கை நிலையத் திறப்பு விழாவும், கலா நிதி ஆகந்தையா எழுதிய "ஆஸ்திரேலியா வில் தமிழர் நிகழ்வுகள் நூல் வெளியீட்டு விழாவும்.
ரேமன்ட் செல்வராஜா தமிழ்நாட்டில் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர். இவரைப் பற்றியும், இவரது SBS வானொ லிப் பணி குறித்தும் பிறிதொரு சந்தர்ப் பத்தில் எழுதலாம்.
இவர்தான் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தொலைபேசி ஊடாக பேட்டி கண்டு அடுத்தடுத்து இரண்டு வாரங் கள் ஒலிபரப்பியவர். இந்த வானொலி அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங் களிலும் மாத்திரமன்றி நியுசிலாந்திலும் கேட்கும்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி, தமிழக கவிஞர்கள் மேத்தா, வைரமுத்து, மற்றும் சாருநிவேதிதா, பாலுமகேந்திரா, மகேந் திரன் உட்படப் பல இலக்கிய, கலை, திரை யுலகத்தினரின் நேர்காணல்களை ஒலி பரப்பிய வானொலி.
செல்வராஜாவுக்கு வானொலிப் பெயர்
'ரெய்செல்."
இவரைப் பார்க்க நான் புறப்படுகிறேன்
என்றதும் அதுவரையில் வீட்டில் முடங்கி யிருந்த அம்பி உற்சாகத்துடன் எழுந்து எம்முடன் வந்தார்.
முதல்நாள் நடந்த இலக்கியச் சந்திப்பு அவருக்கு ஊட்டச்சத்து கொடுத்திருக்க வேண்டும்.
பச்சைப் பசேலென மரங்கள் அடர்ந்த சோலைப் பகுதியில் ரெய்செலின் வீடு அமைந்திருந்தது. கண்களுக்குக் குளிர்ச்சி யாக இருந்தது.
அந்தக் குளிர்மையுடன் வீட்டினுள்ளே பிரவேசித்த போது - எமக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.
அவரது ஜப்பானிய மனைவியும் - புதல்வனும் எமக்கு வீட்டுக்குள்ளே அணி வதற்கான பிரத்தியேக “கன்பஸ்" பாதணி களைத் தூக்கி வந்தனர்.
மல்லிகை ஜூ 2007 & 36

அந்தப் பாதுகைகளை விருந்தினர் 4ளிடம் வீட்டினுள் பிரவேசிக்கும் சமயம் தருவது ஜப்பான் நாட்டின் பண்பாடு என அறிந்து கொண்டோம்.
இன்முகத்துடன் வரவேற்ற அச்சிறிய குடும்பம் எமக்குப் பிரமாதமான தேநீர் விருந்தையே வழங்கி மகிழ்வூட்டியது.
ஒடி ஒடி எம்மை உபசரித்த அச்சிறு
வனின் பெயர் என்ன என்று கேட்டார் அம்பி.
அவன் "தமிழ்” என்றான்.
நாமனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்,
ரெய்செல் சொன்னார், "ஆமாம் அவன் பெயர் 'தமிழ்"தான். அப்படித்தான் பெயர் வைத்திருக்கிறோம்."
ரெய்செலின் மனைவியும் தலையாட்டி ஆமோதித்தார்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு ஜப்பான் மாதுவுக்கும் - தமிழகத்தவருக்கும் பிறந்த குழந்தையின் பெயர் 'தமிழ்".
அவுஸ்திரேலியாவில் வெள்ளைக் காரன் இலகுவாக உச்சரிக்க உதவுமாப் போன்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் எம்மவர்களுக்கு மத்தியில் ஊடகவிய லாளரின் குடும்பம் - வீட்டிலே, வெளியே 'தமிழை நடமாடவிட்டிருக்கிறது. அச்சிறு வன் தமிழும் படிக்கிறான். மிருதங்கமும் கற்றுக் கொள்கிறான்.
அன்று மாலை நடந்த நிகழ்வுக்கு நானும் சிசு,நாகேந்திரனும் போயிருந்தோம்.
அவுஸ்திரேலியாவில் தமிழர் நிகழ்வு கள் நூலின் சிறப்புப் பிரதியைப் பெற்று பேச
வேண்டிய பொறுப்பை என்வசம் தந்து விட்டார் கலாநிதி ஆகந்தையா,
இந்த நூல் வெளியீட்டில் கலந்து கொள்வதைவிட, சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் சில வேண்டு கோள்களை மேடையிலேயே விடுக்க வேண்டும் என்ற அக்கறைதான் எனக்கு மேலோங்கியிருந்தது.
துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.இரா மச்சந்திரன் தமது பாரியாருடன் வந்திருந் தார். மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக் கழகமொன்றில் பணியாற்றும் பேராசிரியர் ஜெயராமனும் விழாவில் கலந்து ΘεSποδοτι πή.
மேள, நாதஸ்வர வாத்தியங்களுடன் மங்கள இசை முழங்க விழா ஆரம்பமான்து.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆண்டு நிறைவு குறித்து விரிவாகப் பேசிய துணைவேந்தர் அவுஸ்திரேலியா விலும் அதன் கற்கை நெறியொன்றைத் தொடக்கி வைப்பது குறித்தும் விபரித்தார்.
நூலின் சிறப்புப் பிரதியை பெற்றுக் கொண்டு, பேசுகையில் எனது வேண்டு கோளைத் தெரிவித்தேன்.
"எமது ஈழத்து இலக்கியம் பல பரி மாணங்களைப் பெற்றுக் கொண்டு வளர்ச்சி யடைகிறது. மண்வாசனை, தேசிய இலக் கியம், முற்போக்கு இலக்கியம், போர்க்கால இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் என்று இந்தக் கணனி யுகத்தில் தமிழ் எங்கெங்கோ செல்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை வைத்து அங்கு பயிலும் மாணவர்களுக்குச் சிறந்த
மல்லிகை ஜூ 2007 & 37

Page 21
அறிமுகத்திற்கு வாய்ப்பளியுங்கள். தஞ்சா வபூர் பல்கலைக்கழக மாணவர்கள் ஈழத்து, புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்பு களைத் தமது பட்டப்படிப்பு ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்வது போன்று சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களும் இந்தத் திசையிலும் சிந்திக்கத்தக்க வழிமுறை களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளு கிறார்கள்.
எனது வேண்டுகோளுடன் பல நூல்கள் அடங்கிய பொதியொன்றையும் மேடையில் வைத்து துணைவேந்தரிடம் ஒப்படைத்தேன்.
எனது வேண்டுகோள் கவனத்தில் எடுக்கப்படுமா? அந்த நூல்கள் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் செல் லுமா? என்பதெல்லாம் எமக்குத் தெரியாது.
எனினும், எமது தார்மீகக் குரலை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுப்ப வேண்டியது படைப்பாளிகளின் கடமை யென்று கருதுகின்றேன்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நண்பர் திரு. நந்தகுமார் இல்லத்தில் - 2008ஆம் ஆண்டு சிட்னியில் நடக்கவிருக்கும் எழுத் தாளர் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.
தமிழர்கள் செறிந்து வாழும் ஹோம் புஷ்' என்ற பிரதேசத்தில் அவரது இல்லம் அமைந்துள்ளது. அப்பகுதியில்தான் "சிட்னி தமிழ் அறிவகம்" என்ற நூல் நிலையம் இயங்குகிறது.
திரு. நந்தகுமார் இல்லத்தினுள் பிரவேசித்ததும் எம்மை வரவேற்ற அவர், "பூபதி. உங்களுக்கு மிகவும் பிடித்தமான
ஒருவரை - அவரது நீண்ட பேச்சை தொலைக்காட்சியில் காண்பிக்கப் போகின்
றேன்" என்றார்.
யார் அவர்?
லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் 'தீபம்’ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அவுஸ்திரேலியாவுக்கும் வருகிறது.
எனது மெல்பன் வீட்டு அன்ரெனா வில் சிறு கோளாறு. அதனால் "தீபத்தை தொடர்ந்து தரிசிக்க முடியாமல் போய் விட்டது.
தீபத்தில் ஒளிபரப்பான அந்த நிகழ்வை திரு. நந்தகுமார் VCDயில் பதிவு செய்து வைத்திருந்தார்.
எங்கள் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா - அந்த சின்னத்திரையில்
தோன்றினார்.
மல்லிகை 42ஆவது ஆண்டுமலருக்கு ஆக்கம் அனுப்பிவிட்டு - அந்த மலரின் வரவுக்காகத் தினம் தினம் ஏங்கித் தவ மிருக்கும் நான் - இந்த செய்தி மடல் எழுதும் வரையில் அதனைப் பார்க்கவே இல்லை.
ஆனால் - அந்த ஆண்டு மலரின் முகப்புத் ‘தீபம்’ சின்னத்திரையில் தெளி வாகக் கண்ணைக் கவர்ந்தது. முகப்பைப் பார்த்து ஆனந்தமடைந்த நான் ஜீவாவின் உணர்ச்சி பொங்கிய உரையையும் கேட்டேன். அந்த ஆலோசனைக் கூட்டத் தில் கலந்து கொண்ட நண்பர் காவலூர் ராசதுரை உட்பட அனைவரும் பார்த்து இரசித்தோம்.
மல்லிகை ஜூ 2007 & 38

ஜீவாவின் உரையை அச்சமயம் இலங்கையில் நின்ற இளைய அப்துல் லாவற் பதிவு செய்து எடுத்து வந்து லண்டன் தீபத்தில் ஒளிபரப்பியிருக்கிறார்.
தீபத்தை லண்டனிலிருக்கும் தமிழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரே லியா வாழ் தமிழர்களும் பார்த்து இசிக்கலாம்.
ஒரு இலக்கியச் சஞ்சிகை ஆசிரி யனுக்கும் - அந்த இலக்கிய இதழுக்கும் இப்படி ஒரு விரிவான அறிமுகம் தொலைக் காட்சி ஊடாக, அதுவும் சர்வதேச தொலைக்காட்சி ஊடாக முன்பு கிடைத் திருக்குமா? என்பது ஐயப்பாடுதான்.
மிகுதி அடுத்தவாரம் ஒளிபரப்பாகும் என்று திரு. நந்தகுமார் தெரிவித்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
இளைய அப்துல்லாவற்வுக்கு ஈழத்து இலக்கிய உலகமும், மல்லிகையும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் முகத்தை அடிக்கடி காண்பிக்கும் - மூன்றாம்தர மசாலா சினிமாக்களின் நடிக, நடிகை களின் பேட்டிகளை ஒளிபரப்பிக் கொண்டி ருக்கும் சண் டி.வி. ‘தீபம்’ தொலைக் காட்சியிடம் தெரிந்து கொள்ள வேண்டியது அநேகம்.
ஜீவாவின் முழுப் பேச்சும் பதிவு செய் யப்பட்ட VCDயின் பிரதி ஒன்றை எனக்கு அனுப்பி வைப்பதாகத் திரு.நந்தகுமார் எனக்குச் சொன்னார்.
பிரதி கிடைத்ததும் அதில் ஒரு பிரதியை நான் வைத்துக் கொண்டு ஜீவா
வுக்கும் அனுப்பலாம் என்று தீர்மானித் துள்ளேன்.
இந்த விஞ்ஞான யுகத்தில்தான் எவ்வளவு வசதிகள்.
அந்த ஈஸ்டர் ஞாயிறு கோகிலா மகேந் திரனின் புதல்வன் பிரவீனன் மகேந்திர ராஜனின் கணிரென்ற அறிமுக அறிவித்தல் களுடன் விழா நிகழ்ச்சிகள் மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தன.
அண்ணாவியார் இளைய பத்ம நாதனின் அண்ணாவியத்தில் கவிஞர் அம்பியின் யாழ்பாடி' (கவிதை நாடகம்) நாட்டுக்கூத்துப் பாணியில் அரங்கேறியது. இதனை ஏற்கனவே எமது எழுத்தாளர் விழாவில் மெல்பனில் மேடையேற்றி னார்கள் சிட்னிக் கலைஞர்கள்.
சிட்னி இரசிகர்களின் வேண்டு கோளுக்கிணங்க நடிப்பிலும், ஒப்பனை யிலும் மெருகேற்றி யாழ்பாடி அந்த அந்தகக் கலைஞன் எமது கண்களையும் கருத்தையும் கவர்ந்தான்.
யாழ்பாடியாகத் தத்ரூபமாக நடித்தவர் அண்ணாவியார் இளைய பத்மநாதன்.
சபையில் முன்வரிசையில் எனது அருகில் அமர்ந்திருந்த கவிஞர் அம்பியின் கண்களில் கண்ணிரைக் கண்டேன். அது ஆனந்தக் கண்ணிர்.
"இலங்கை வானொலியில் ஒலிபரப்பு வதற்கு அப்துல்ஹமீட் ஒரு கவிதை நாடகம் எழுதித் தருமாறு கேட்டார். அப்பொழுது எழுதியதுதான் இந்த யாழ்பாடி'.
மல்லிகை ஜூ 2007 & 39

Page 22
இலங்கை வானொலியில் ஒலிபரப் பாகிய இக் கவிதை நாடகம், பின்பு சிட்னியில் இன்பத் தமிழ் வானொலியிலும் மறுஒலிபரப்பு செய்யப்பட்டதாக அறிந்தேன்.
இப்பொழுது எங்கள் அண்ணாவியார் அதனை கூத்து வடிவில் மெல்பனிலும் மேடையேற்றி, சிட்னியிலும் காண்பிக் கிறார். பார்க்கப் பரவசமாக இருக்கிறது" என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் அம்பி.
மேலும், "எனது உடல்நலம் தேறு வதற்கு எத்தனையோ மருந்துகளை யெல்லாம் பாவித்து விட்டேன். உடலிலும் சோர்வு, மனதிலும் களைப்பு இருந்தது. இந்த மூன்று நாட்களும் நான் தரிசித்த காட்சிகள் அனைத்தம், இந்த இலக்கிய, கலை நிகழ்வுகள் யாவும் எனக்கு தெம்பை, ஊக்கத்தை அளித்திருப்பதாக நிஜமாகவே
நம்புகிறேன்" என்று எனது கையைப்
பற்றியபடி சொன்னார்.
கலையும், இலக்கியமும் ஒருவகை யில் ஊட்டச்சத்து நிரம்பிய மாத்திரைகள் தான்.
இந்த விழாவிலும் அண்ணாவி
யாருக்கு வழங்க வேண்டிய பரிசினை
சிட்னி அறிவகத்தினர் அம்பியிடம் தான் கொடுத்து அம்பியின் கையால் வழங்க விரும்பினார்கள். அம்பிக்கோ மேடை ஏற
(p19Umgl.
யாழ்பாடி ஒப்பனைக் கோலத்தி லிருந்த அண்ணாவியார் இளைய பத்ம நாதன் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து அந்தப் பரிசினைப் பலத்த கர கோஷத்திற்கு மத்தியில் அம்பியிடம் பெற்றுக் கொண்டார்.
N
N 8
ત્રિો :
மல்லிகை ஜன 2007 等 40
 

இ லேசான மழைத்தூறல்.
பூமி நனைந்து, கிளம்பிய மண்வாசனை நாசியைக் கவ்வியது. தவிட்டு அரிசியின் புழுங்கல் மணம் எங்கும் பரவியது. ஈரலிப்புத் தன்மையில் பாதை பிசு பிசுத்தது. மன்சூர் முதலாளி என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தார். குடையும் கையுமாக நான் கடைக்குள் பிரவேசித்த போது, அவர் முகத்தில் மலர்ச்சி தென் பட்டது. அந்தப் பென்ஸிக் கடை குறுகலான பழைய மார்க்கட் ஒழுங்கையில்
இருந்தது.
அங்கு பெண்களுக்கான வியாபாரம் இயல்பாய் நடந்தேறிக் கொண்டிருக்கும் சந்தை நாளான ஞாயிற்றுக்கிழமை தான் கச்சோடம் களை கட்டும். மற்ற நாட்களில் சுமாரான விற்பனைதான் நடக்குமெனக் கணிக்கலாம். கடையில் சம்பளக்காரனும்,
முதலாளியும் அவர்தான்.
குறுகத் தறித்து வெட்டிய வெள்ளைத்தாடி, தலையை மறைக்கும் தொப்பி, கருநிறத்தில் சிறு சிறு காய்ப்புகளாய்த் தொழுது தழும்பேறிய நெற்றி, மார்க்கத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்ட பக்திப் பிரகிருதியாய் மன்சூர் முதலாளியை அடையாளப் படுத்திக் கொள்ளலாம். நமக்குள் பால்ய காலம் தொட்டு, தோழமை.
வெளிநாடு சென்று திரும்பியருந்த நான் நிரந்தர வேலையின்றிப் பொழுதை
வெறுமனே கழித்துக் கொண்டிருந்தேன். சில பொழுது
களில், நட்பின் காரணமாக, அவரது
கடைக்குச் சென்று கூடமாட ஒத்தாசை لیںلاری
ஒ92தி 6آنک புரிவேன். நான் எத்தனை மறுத்தாலும்
பலவந்தமாகச் சிகப்பு நோட்டுக்கள் شارل
சிலதை எனது சட்டைப் பொக்கட்டி னுள் திணிப்பார்.
"நீங்க இப்ப வந்தது, நல்லதாப் பெயித்திட்ட, இண்டைக்கு நான் கொழும்புக் குப் போவோணும். நீங்க இருந்து கடையப் பாத்துக் கொள்ளுங்கோ!” என்று அன்புக் கட்டளையிட்டார். சிறு புன்னகையினால் சம்மதம் தெரிவித்தேன்.
“எந்த நாளும் கடைக்கு வந்து, யாவாரத்தப் பாருங்க. மாசம் ஒரு சம்பளத்தப் பாத்து தாரேன்” என்றார். நான் அவரை விரக்தியோடு பார்த்தேன்.
"நான் ஒருபோதும் சொந்த பந்தங்களிடமோ, நண்பர்களிடமோ ஊதியத்திற்கு வேலை செய்ய மாட்டேன், மன்சூர் இது நான் எப்பவோ எடுத்த முடிவு."
என் கடந்தகாலக் கசப்பான அனுபவங்களை மூடி மறைத்தவாறு, அவருக்குக் கூறினேன்.
மல்லிகை ஜூ 2007 & 41

Page 23
"சம்பளத்துக்கெண்டு இல்ல, அடிக் கடி வந்து எனக்கு ஒதவியா இரி யுங்கோ! நான் வெளில போர நேரம்
வைச்சிட்டுப் போவ நம்பிக்கையான
ஒரு ஆளில்ல."
எனக்கிது கஷ்டமான காரியமாய் இருக்கவில்லை. மலையாளத்தின் பிர பலமான கவிஞர் ஒ.என்.வி.குறுப், சொன்னார்,
"கவிதை எழுத இயலாத இடம் சொர்க்கமாக இருந்தாலும், அது எனக்கு வேண்டாம்!” என்று. மன்சூர் முதலாளி யின் கடையில் மின் விசிறியின் கீழ், அமர்ந்து ஒய்ந்த பொழுதுகளில் கவிதை மட்டுமல்ல, கதைகள் எழுதும் சாத்திய மும் எனக்கமைந்தது மனதுக்குப்
பெரும் திருப்திதான்.
ஒருநாள், பன்றியொன்றினை மோட்டார் சைக்கிள் பின் சீட்டில் கட்டிக்கொண்டு சின்னான் கடைக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந் தான். இக்காட்சியைக் கண்ணுற்ற மன்சூர் முதலாளி கடும் சினத்தோடு பாய்ந்து சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார்.
"இதுக்குப் பொறகு, இந்த நஜிஸை என் கடைக்கு முன்னால் கொண்டு வரப்படாது, படுவா வந்தாய் என்றா, எனக்கிட்ட அடிபட்டுச் சாவாய், பாத் துக்கோ!”
உஷ்ணம் தலைக்கேறி அவனை எச்சரித்தார். "இது அரசாங்க றோட்டு, நான் வேற எங்கால கொண்டு போற?" எனக் கூறியவாறு முறைத்து விட்டுச்
சென்றான் அவன். அந்தக் குறுக்குப் பாதையில் முன்பு தொட்டே பன்றி இறைச்சிக் கடை நிலைகொண்டிருந்தது, பெரும் இடையூறாகத்தான் இருந்தது.
இதை அங்கிருந்து அகற்றக் கடைக் காரர்கள் பெரிதும் முயன்றனர். என்றா லும் விவகாரம் கைகூடவில்லை. அந்த இறைச்சிக்கடை குறித்து மன்சூர் முத லாளிக்குக் கடும் எதிர் விமர்சனம் இருந் தது. அவரது கோபம் இன்னும் தணிய வில்லை.
“செருப்பு தைக்கிற நாய்கள். முந்தி யெண்டா முதலாளி எண்டு மரியாதை செய்வான்கள். இப்ப அவனுகள்ட பழைய நெலமைய மறந்து மொறக் கியானுகள்” சீறினார் அவர்.
"இப்ப முந்தின காலமில்ல மன் சூர். ஜாதி வித்தியாசமெல்லாம் கிடையாது. படித்தவன் அதிகாரியாக வும், காசுள்ளவன் முதலாளியாகவும்
இருக்கிறாங்க."
அவர் எனது பதிலில் திருப்தி யடையவில்லை. சின்னான் ஊருக்குள் அலைந்து திரிந்து கால்நடைகளை வாங்கி வந்து, இறைச்சிக் கடை களுக்குக் கூடுதல் விலைக்கு விற்பான். இந்தத் தொழிலால் அவனுக்குப் பெருத்த வருமானம் கிடைத்தது.
மீண்டும் ஒருநாள் பன்றியைப் பின் சீட்டில் கட்டிக்கொண்டு சின்னான் வரு வதை மன்சூர் முதலாளி அவதானித்து விட்டார். அவருக்குக் கோபத்தால் இருப்புக் கொள்ளவில்லை. ஒடிச் சென்று வண்டியை நிறுத்தி, அவனது
மல்லிகை ஜன 2007 率 42

கன்னத்தில் சரமாரியாக அறைந்தார். அவனும் திருப்பித் தாக்க முற்படும் போது இருவரும் கட்டிப் பிடித்துப் பாதையில் விழுந்தனர்.
இருவருக்கும் மேலாக மோட்டார் கட்டியிருந்த கயிறு கழன்று தளர பன்றி அவர்கள் மீது புரள, அது தப்பினோம், பிழைத்தோ
சைக்கிள் விழ,
மென வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடி தெரு வழியே வேகமாக ஓடியது.
கும்பல் கூடி வேடிக்கை பார்த்தது. சின்னான் கருவிக் கொண்டே அதன் பின்னால் ஓடினான். நான் செய்வதறி யாது திகைத்து நின்றேன். மன்சூர் முதலாளியின் மேனியிலும், உடையிலும் சேறும் அழுக்கும் படிந்து விட்டது.
பன்றி மேனியில் புரண்டதினால் அவர் அசூயையில் துடித்துப் போனார். பரபரப்போடு லக்ஸ் சோப் கட்டி சகிதம் சமீபத்திலுள்ள அம்பகஹாவத்த ஆற் றுக்குக் குளிக்கச் சென்றார்.
மன்சூர் முதலாளி இப்பிரச்சி னையை வேறொரு கோணத்தில் நிதான மாக அணுகியிருக்கலாம் என்று எனக் குத் தோன்றியது. பன்றி விலக்கப்பட்ட ஒரு விலங்காக மார்க்கம் கூறியிருக் கின்றது என்பது மட்டுமல்லாமல், அது அசுத்தமான ஒரு பிராணி என்பதினா லேயும் அதைக் கடுமையாக வெறுக் கிறார்கள்.
"ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்" என்ற நூலை எழுதிய ஜெயகாந்தன் கீழ்க்கண்டவாறு சில வரிகளைப் பதித்துள்ளார்.
"பன்றியை மூர்க்கத்தனமாக எதிர்க் கும் முஸல்மானின் அறியாமையைப் போல” - என்று பன்றியை எதிர்ப்பவர் எல்லாம் அறியாமையில் இருப்பவர்கள் என்றால், அதை விரும்புகிறவர்கள் எல் லோரும் அறிவுஜீவிகளா? என்று கேட் கத் தோன்றுகிறது. முன்னரெல்லாம் வாய் ஓயாமல், இன்ஹா அல்லாஹ்! கூறும், இந்த ஜே.கே.சாரிடம் சேற் றிலும், மலத்திலும் புரளும் அசுத்தமான வராகங்கள் மனிதனது சுகாதாரத்திற்கு எத்தகைய தீங்கு விளைவிக்கின்றன என் பதை மருத்துவ உலகம் நிரூபித்திருக் கின்றது.
நான் வராகம் பற்றிய ஒரு குட்டி ஆராய்ச்சியில் இறங்கலானேன். உலகத் தில் எந்த விலங்குகளுக்கும் இல்ல்ாத வித்தியாசமான தோற்ற அமைப்பு அவற்றுக்கு.
உடலின் எல்லா அவயவங்களும் குட்டை குட்டையாக சிலிர்த்த மயிர்க் காடாய் மேனி. தாடையும் மூக்கும் அசிங்கமாய், உடம்பு மட்டும் கொழுத் துப் பெருத்திருக்க, கைகால், கண், வால் எல்லாம் சின்னச் சின்னதாகப் பக்கத்தில் அண்டவியலாத அளவிற்கு துர்நெடி; குரூரப் பார்வை. இத்தனைக் கும் மேலாக எப்போதும் புணர்ச்சி செய்தல், இனவிருத்தி செய்வதில் சளைக்காத வேட்கை இவையும், இன்னும் அவற்றிற்கே உரித்தானவை.
எனக்கு மகாவம்சக் கதையொன்று ஞாபகத்திற்கு வருகிறது. முனிவர் ஒரு வர் கிராமத்திற்கு வந்து, குன்றின் மேல்
மல்லிகை ஜூ 2007 & 43

Page 24
இருந்து தவத்தில் ஈடுபட்டாராம். வரு பவர் எதைக் கேட்டாலும் பலிக்கும் விதமாய் வரம் கொடுப்பார். ஒரு குடும் பஸ்தருக்குக் கடுமையான வறுமை.
அவரது மனைவி சொன்னாளாம், "எங்கட கஷ்டம் நீங்க சாமியிடம் போய் வரம் கேட்டுப் பாருங்க!” என்று. கணவரும் ஆர்வத்தோடு முனிவரைச் சந்திக்கச் சென்றார். அவர் பெரும் தவத்தில் ஈடுபட்டிருந்தார்.
"சாமி! நான் பெரும் கஷ்டத்தி லிருக்கிறேன். செல்வந்தன் ஆக வரம் தாருங்கள்" எனக் கத்திக் கொண்டு அவர் காலில் விழுந்தார். முனிவருக்குச் சினம் பொங்கி யெழுந்தது. தன் தவத்தை முட்டாள்தனமாகக் கலைத்த மனிதனைப் பார்த்து, "நீ விரைவிலேயே பன்றியாகக் கடவது!’ எனச் சாபமிட் டார். அந்த மனிதன் ஆதங்கத்தோடு வீடு திரும்பி நடந்தவற்றைக் கூறினான். தன் பிள்ளையிடம்,
"மகனே! நான் சீக்கிரமே பன்றி யாய் மாறிப் போவேன். தெருவில் நான் மேய்ந்து கொண்டிருப்பேன். அப்போது வீட்டிற்குக் கூட்டிவந்து தினமும் குளிப் பாட்டி, உணவு தந்து கூட்டில் அடைத்து விடு!" என்று வருத்தமுடன் கூறினார்.
சில நாட்கள் கழித்து, மகன் பாதை யில் செல்லும் போது, "மகனே!" எனும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த் தான். பன்றிகள் தெருவோரத்தில் கூட் டாக மேய்ந்து கொண்டிருந்தன. ஆண்
பன்றி,
அப்பா!' எனக் கூறியது.
"மகனே! நான் தான் உனது
மகன் விட்டுக்குக் கூட்டிச் செல்ல அழைத்தபோது, அது கூறியது,
“வேண்டாம்! மனித ஜென்மத்தை
விட, இப்போது நான் குடும்பத்தோடு நிம்மதியாக இருக்கிறேன். என்னை
விட்டுவிடு! இந்த வாழ்க்கை எனக்குச்
சந்தோஷத்தைத் தருகிறது!"
மன்சூர் முதலாளி, அழகாக உடை
யணிந்து கொண்டு வெளியில் போகப்
புறப்பட்டார்.
"இந்த இறைச்சிக் கடை விஷயமா மந்திரியைப் பார்க்கப் போறேன். கடை யைப் பார்த்துக் கொள்ளுங்க!" அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் தென் பட்டார். ஒவ்வொரு தேர்தலின் போது, தன் குடும்ப வாக்கு வங்கியை,
மந்திரிக்கு மன்சூர் முதலாளி தாரை
வார்ப்பவர்.
மந்திரி தரிசனம் முடித்து, மன்சூர் முதலாளி வெற்றிக் களிப்போடு திரும்பி யிருந்தார்.
'இன்னம் பத்து நாளையில பாருங்க! இந்த நரகம் பிடித்த, கின்ஸிர் கடை வேற ஏரியாவுக்கு மாறப் போவுது!”
என்றுமில்லாத மகிழ்ச்சி அவர் முகத்தில் பளிச்சிட்டது. *
மல்லிகை ஜூ 2007 & 44

Виболол76о பேசுகிறேன் - 03
- கட்டாரிலிருந்து நாச்சியாதீவு பர்வீன்
கலாசாரத்தைப் பிரதிபலிப்பதற்கும், பேணுவதற்கும் - அடுத்த சந்ததிக்கு ஊடு கடத்துவதற்கும் இலக்கியம் ஒரு நல்ல தளமாகும். இலக்கியத்தினூடாகப் பாரம் பரியங்கள், கலாசாரம் நினைவுபடுத்தப்படுவதும், புதிய தலைமுறையினருக்கு அதனை அறிமுகப்படுத்துவதும் இந்த அரேபிய பிரதேசத்தின் வழமையாகும். இதற்காக வருடம் தோறும் மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களை அவர்கள் வரையறுத்து வைத்துள்ளார்கள். இந்த இரண்டு வாரத்தில், அரேபிய இலக்கியம் சார்ந்த எல்லா ஆழ, அகலங்களையும் பிரமாண்டமாய் வெளிப்படுத்தும் திருவிழாவாகக் கொண்டாடுவது வழமைக்கு வந்துள்ளது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைப் போலவே, இந்த அரேபிய இலக்கியத்திற்கும் இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்று தளங்களையும், தமது உணர்வுகளையும், உள்வாங்கல்களையும் வெளிப்படுத்தும் களமாகப் பயன்படுத்து கின்றனர். அப்படித்தான் கடந்த மார்ச் மாத முதல் இரண்டு வாரங்களும், கட்டாரில் அவர் களது கட்டார் கலாசாரத் திருவிழா (Qatar Cultural Festival) கோலாகலமாகய் நடை பெற்றது.
மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களும், கட்டாரின் பல்வேறு இடங்களில் இந்தக் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. பாடல்கள் (கஸிதாக்கள்), கவியரங்கம், நாடகம், விவாதம் என்று ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் வெவ்வேறு இடங்களில் நடை பெற்றன. சில நிகழ்ச்சிகள் கலையரங்கங்களிலும் (Auditoriam) இன்னும் சில நிகழ்ச்சிகள் பாலைவனங்களில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்குகளிலும் நடாத்தப் பட்டன. இதிலே சில நாடகங்களைக் காணக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்த நாடகங்களை அவதானித்த போது, எமது நாட்டு மேடை நாடகங்களுக்கும் இங்கே மேடை யேற்றப்படும் நாடகங்களுக்குமான வித்தியாசங்கள் புரிந்தன.
மெய்யாக நாடகங்கள் பற்றிய பூரணமான ஆழமான அறிவு எனக்குக் கிடையாது. இருந்தும் எனது பாடசாலைக் காலங்களில் சில நகைச்சுவை நாடகங்களை நானும்
மல்லிகை ஜூ 2007 & 45

Page 25
நண்பன் அன்பு அமீனும் எழுதி நடித் துள்ளோம். இதற்காக, எமது விஞ்ஞான ஆசிரியர் அஸ்ரப் அவர்களும், இன்னும் சில ஆசிரியர்களும், எமக்குப் பின்னுாட்டங் களாக (Feed Back) இருந்தனர். அப் போது நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தி யாலயத்தில் மாணவர் மன்றங்களில் எங்களது நாடகங்கள் மிகுந்த பிரசித்தம்
சுமார், முப்பது வருடங்களுக்கு முன் னர் எனது கிராமமான நாச்சியாதீவில் சிறந்த பல நாடகங்கள் மேடையேற்றப் பட்டுள்ளதாக இன்னும் பலர் சிலாகித்துப் பேசுகின்றனர். அது மட்டுமன்றி, அன் றைய நாடகங்களின் கதாநாயகர்கள் இன் னும் வாழ்ந்து கொண்டும் இருக்கின் றார்கள்.
எனக்குச் சின்னதாய் ஞாபகமிருக் கின்றது. எனக்கு ஐந்து வயதாக இருந்த போது 1982ஆம் ஆண்டு என நினைக்கின் றேன். எமது ஹஜ்ஜனப் பெருநாளை முன் னிட்டுப் பிரமாண்டமான ஹஜ் திருவிழா நிகழ்ச்சியொன்று எமது கிராமத்தில் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. அதில் ஒரு சிறந்த நாடகமும் மேடையேற்றப் பட்டது. அதற்கு முன்னர் நீதியே நீ கேள்", டிங் டிங் நோனா டுபாய் பயணம்', 'ஒரு தாயின் சபதம்’ என்று பல நாடகங்கள் எனது கிராமத்தில் மேடையேற்றப்பட்ட தாக அதில் பங்கு பற்றியவர்கள் கூறக் கேட்டுள்ளேன். இவர்களில் நஜிமுதீன், சஹாப்தின் முனாப் (வாஹிட் மாஸ்டர்), ஹாஜா மொஹிதீன், செய்யது, தாஜிதீன், அஸிஸ் (அதிபர்), இப்ராகீம் ஆசிரியர் ஆகியோரின் பங்களிப்புகள் அதிகமாய் இருந்துள்ளதாய் இன்றும் கூறப்படு
கின்றது. இதில் முனாப் (வாஹிட் மாஸ்டர்) எனது உம்மாவின் தாய்மாமாவாகும். மிகச் சிறந்த பாடகர். "பங்களி வளலுவ’ எனும் ஒரு சிங்களப் படத்திலும் இன்னும் சில விவரணப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு தகவல் பெட்டகமாகும். கலை இலக்கியத்தின் மீது மிகுந்த காதல் கொண்டவர். பல சந்தர்ப்பங்களில் சிங் களத் திரைப்படங்களில் நடிக்கச் சந்தர்ப் பம் கிடைத்தும், அப்போதையப் குடும்ப நில வரங்களின் நிமித்தம் அதனை தவற விட்ட வர். நாடகங்கள், திரைப்படங்கள், திரைப் படப் பாடல்கள் பற்றி அலுக்காமல் பேசக் இந்தியாவுக்குச் சென்று பி.சுசீலா, எஸ்.ஜானகி என்று பல திரை
Ցուջա 6նf.
யுலகப் பிரபலங்களைச் சந்தித்து வந்தவர். இவரோடான எனது இளமைக் காலங்கள் கூட எனக்கு இந்த எழுத்துத்துறைக்கு வருவதற்கான உந்துசக்திகளில் ஒன்று எனவும் கூறலாம்.
தவிரவும், வானொலி நாடகங்கள் என் றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முன்னர் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒலிபரப்பப்படும் இஸ்லாமிய நாடகங் களை நான் விரும்பிக் கேட்பதுண்டு. அதில் எம்.அஸ்ரப்கான் எழுதி, தயாரித்து வழங்கும் பிரமாதமான பல நாடகங்களை நான் கேட்டுள்ளேன். பிற்காலத்தில் எனது நண்பனும் பேராதெனிய பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவனுமான எம்.சி.றஸ் மின் எழுதி நடித்துள்ள நாடகங்கள் பல வற்றைக் கேட்டுள்ளேன். ஒருதடவை, ரஸ்மின் "இடி பத்திரிகையிலே வேலை செய்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அது
மல்லிகை ஜூ 2007 & 46

ஒரு மாலைப்பொழுது. அவரது அலுவல் களை முடித்துக் கொண்டு வெள்ளவத்தை யிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு நடந்துவரும் முகமாக ரயில் பாதைகளில் அந்த மாலைப்பொழுதின் கடற்கரைக் காற்றை யும், அழகான கடல் அலைகளையும் இரசித்த வண்ணம் இருவருமே பேசிக்
கொண்டு வந்தோம். எமது பேச்சு முழு
வதிலுமே நாடகமே கருப்பொருளாய் இருந் தது. இருவரும் பல விடயங்களில் ஒத்துப் போனாலும், சில பொழுதுகளில் முரண் பட்டுப் போனோம். பேச்சுச் சுவாரசியத்தில் நாம் பயணிப்பது தண்டவாளத்தில் என் பதை மறந்திருந்தோம். ரஸ்மின் தனது நாடக அனுபவங்களையும், எம்.அஸ்ரப் கானின் திறமைகளையும் இன்னும் சில நமது வானொலி, தொலைக்காட்சி, நாடக நடிகர்களையும் பற்றி விவரித்துக் கொண்டே வந்தார். திடீரென ஏதோ உந்து தலில் இருவருமே ஏககாலத்தில் பின்னால் (திரும்பிப் பார்த்த போது எம்மை மிக நெருங்கியதாக ஒரு ரெயில். ஒரு செக்கன் கூட தாமதிக்காமல் இருவரும் தண்ட வாளத்திலிருந்து வெளியே பாய்ந்து விட் டோம். எங்களைக் கடந்து அந்த ரயில் கூவிக்கொண்டே சென்று விட்டது. இருந் தும் அந்த நிமிடத்தில் எங்கள் இருவரின (தும் இரத்தம் ஒரு நிமிடம் உறைந்து தான் போனது. அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடு வேதற்கு அரைமணி நேரம் எடுத்தது. அதன் வின்னரும் எங்கள் பயணம் தொடர்ந்தது. இதனை இந்த இடத்தில் எழுதுவது பொருத்தமில்லைத்தான். இருந்தும் இதனை விட வேறு சந்தர்ப்பம் அந்த அதிர்ச்சியான சம்பவத்தை ஞாபகப்படுத்த கிடைக்குமென்று நான் நினைக்க
வில்லை. தவிரவும், எஸ்.ராமதாஸின் நகைச்சுவை நாடகங்கள் பலவற்றைக் கேட்டும், பார்த்துமுள்ளேன்.
எமது அநுராதபுர கலை இலக்கிய வட்டத்தின் மும்மாத வெளியீடான அநு - ராகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஏ.பீ.எம்.அன்சார் ஒரு நல்ல நடிகர். மேடை நாடகங்களில் தூள் கிளப் பக் கூடியவர். அடிக்கடி மேடை நாடகங் களை எழுதித் தனது கிராமமான கிரி பாவையில் விஷேட தினங்களில் தனது குழுவோடு மேடையேற்றி வருபவர். இப்போது தாகம்' எனும் ஒரு பல்சுவை இதழை வெளியிட்டுக் கொண்டிருக்கின் றார். இவரோடு அடிக்கடி நாடகங்கள் பற்றிப் பேசி விவாதிப்பதுமுண்டு.
எனது பிரதேசத்தில் நான் அவ தானித்த, கண்டு அநுபவித்த மேடை, வானொலி, தொலைக்காட்சி நாடகங் களின் ஆழமான பார்வைக்கும், இங்குள்ள நாடகங்களின் கருத்தியலும் முற்றிலும் வித்தியாசமானவை.
தொலைக்காட்சி நாடகங்களை எடுத் துக் கொண்டால் ஆசியாவிலேயே சிங்கள நாடகங்களில் மின்னும் அந்த எதார்த்த நோக்கு வேறு எதிலுமே காணப்படுவ தில்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். ஒரு ஏழைக் குடும்பத்தை
அதேநிலையில் வைத்துப் படம் பிடித்துக்
காட்டுவதுதான் சிங்கள தொலைக்காட்சி
நாடகங்களின் தன்மை. எதார்த்த சாளரத்
நகர்த்தப்படும் சிங்கள
தொலைக்காட்சி நாடகப் பரப்பானது நிஜத்
திற்கூடாக
தைப் பேசி நிற்பதோடு வாழ்க்கையின் நிறங்களை எமக்கு இனங்காட்டுகின்றன.
மல்லிகை ஜூ 2007 & 47

Page 26
தமிழ் நாடகங்களில் (இந்தியா) நிறைய தொழில் நுட்பமும், தரமான தயாரிப்பும், மிகுந்த பொருட் செலவும் இருந்த போதும், அரைத்த மாவையே அரைக்கின்ற தன்மையும், சென்டிமன்' ஒன்றையே கதைக் கருவாகக் கொண்டு வருகின்ற பல வீனமும் இன்னும் நிறைந்தே காணப்படு கின்றன. இவைகளையும் தாண்டிச் சில நல்ல நாடகங்கள் வெளிவராமலும் இல்லை. ஆனால் சிங்கள் நாடகங்களோடு ஒப்பிடுகையில் அதில் உள்ள எதார்த்தம் தமிழ் நாடகங்களில் இல்லை.
ஆங்கில நாடகங்கள் பெரும் மெகா தொடர்களாகவே காணப்படும். (Knight Rider, Street Hook) ge06.jssit assiusO)6O7 கலந்த எதார்த்தத்தை மீறிய செய்தி களைச் சொல்வனவாகவும், ஹிரோ (Hero) அதிக புத்தி சாதுரியமும், வீரமும் உள்ளவனாக Gjib தொடரான மரபு ரீதியில் உருவாக்கு கின்றார்கள். பார்ப்பவர்களின் மத்தியில் அந்த நாடகங்களின் ஹிரோக் களின் சாகசங்கள் பெருமதிப்பைப் பெறுவ தென்னவோ உண்மையென்றாலும் அவை தொழில் நுட்பத்திற்கான வெற்றி ஒன்றே தவிர, அங்கே எதார்த்தம் புதைக் கப்படுகின்றது. ஆனால் சில அறிவியல், துப்பறியும் மெகாத் தொடர்கள் கொஞ்சம் எதார்த்தத்துடன் ஒன்றிப் போகின்றன.
ஆனால், உலக நாடகங்களின் பாரிய பரப்பிலிருந்து இந்த அரேபிய நாடகங்கள் முற்றிலும் வேறுபடுகின்றன. ஒன்று அரேபி யாவின் ஆரம்பகால அரசர்களின் கதைகளை நாடகங்களாகப் போடுகின் றார்கள். அல்லது நகைச்சுவை நாடகங் களை மேடையேற்றுகிறார்கள். மெய்யா கவே வானொலி, தொலைக்காட்சி நாட
கங்களை விடவும், மேடை நாடகங்களில் அபாயம் அதிகமாகும். முன்னைய இரண் டையும் பார்த்துப் பார்த்துச் செதுக்க முடியும். எத்தனை தடவையானாலும் பிழையைத் திருத்தி செப்பனிட முடியும். ஆனால் மேடை நாடகங்களில் இது முடி யாதவொன்றாகும். நடித்துக் கொண்டிருக் கும் போது வசனம் மறந்து போனால் பார்வையாளர்கள் கல்லால் அடிப்பார்கள், இன்னும் ஏகப்பட்ட சங்கடங்கள் நிகழும். இந்தத் தவறு இங்கு தென்படவில்லை. ஒரு நாடகம் அரைமணி நேரமோ, அல்லது நாற்பத்தைந்து நிமிடமோ மாத்திரமே மேடையேற்றப்படுகின்றது. கூடினால் ஒரு
மணி நேரம். அதைத் தாண்டி இங்கு
நாடகங்கள் மேடையேற்றப்படுவதில்லை.
கடந்த மார்ச் மாதம் மேடையேற்றப் பட்ட பல நாடகங்கள் வெறும் நகைச்சுவை நாடகங்கள்தான்! பிரமாண்டமான அரங்குகளில் மிகுந்த தொழில் நுட்பத் துடன் மேடையேற்றப்படும் இந்த நகைச் சுவை நாடகங்களை அரங்கம் நிறைய அரேபியர்கள் வந்து பார்த்து இரசித்து பாராட்டிச் சென்றார்கள். இதிலிருந்து இவர் களின் நகைச்சுவை உணர்வு மட்டுமே எனக்குத் தென்பட்டது. அத்துடன் அன் றாடம் மூன்றாம் மண்டல நாடுகளில் அவதியுறும் அப்பாவி ஜீவன்களின் கஷ்டங்களைக் கடுகளவும் உணராத வர்கள் என்ற உண்மையும் புலப்பட்டது. நகைச்சுவை நாடகக் குழுக்களை பல ஆயிரக்கணக்கான டொலர்களை கொடுத்து ஜோர்தான், டுபாய், லெபனான், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வர வழைத்துத் தமது கலாசார விழாக்களைக் கொண்டாடிய போதும், அதில் வெறும்
மல்லிகை ஜன 2007 率 48

நகைச்சுவை மாத்திரமே அவர்களது தேடு பொருளாகவும் அவர்களது மூலதனத்திற் கான ஆதாரமாகவும் கொண்டிருக்கின்றது. சமூக சிந்தனையும், எதார்த்தப் போக்கு மற்ற ஒரு பலவீனமான நடுநிலையை இது உருவாக்கியுள்ளது. இலக்கியம் காலத் தின் கண்ணாடி என்ற மரபிலிருந்து இன்றைய அரேபிய நாடக உலகம் முரண் பட்டுப் போவதாய்த் தான் எனக்குப்பட்டது. இலக்கியங்கள் வாழ்க்கையின் கூறு களைப் பிரித்துப் போடும், பிரச்சார தளங் களில் காலத்தின் நினைவுகளை இலக் கியம் சுமந்து வந்து நம் முன்னால் கொட்டி விடும் எதார்த்தம் நிறைந்ததாகும். ஆனால் இவைகளிலிருந்து விடுபடுகின்ற அல்லது விலகிப் போகின்ற ஒரு நிலை இன்று இங்கு விரவியிருப்பது கவலைக்கிட
மானதே. கலையையும், இலக்கியத் தையும் வெறும் பொழுது போக்காகவே இங்கே நினைக்கின்றார்கள் போலும். ஆத்மார்த்தமாய் நேசிக்கப்படக் கூடியதாய் அவை இன்றுகளில் இல்லாமலிருப்பது கவலையே. இருந்தும் இந்தப் பாலை வனத்து நினைவுகளையும், உணர்வு களையும் இன்னும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் கலாசார விழாக் களில் - எதிர்காலத்தில் ஒரு தரமான இலக்கியப் பரம்பரையும் சமூக அக்கறை கொண்ட மேடை நாடகங்களும் உருவாக லாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கை இந்த நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் அரேபியர்களைப் பார்ப்பதன் மூலம் துளிர்கின்றது.
இன்னும் பேசுவேன்.
স্থাৎ
R
மல்லிகை ஜூ 2007 & 49
སུ་རིགས་སུ་སྡུག་སྔགས་སུ་
NN §
S.Š
སུ་ཞུགས་སུ་ཞུགས་སུས་སུ་ས་
JšR
ܐܸܠ
ချဲ့နဲ့နဲ
V R
N
s
N
manama,\mw

Page 27
கடந்த மல்லிகையில் இப்பகுதியில் வழங்கப்பட்ட மதி கந்தசாமி தொகுத்த தமிழ் வலைப்பதிவாளர்களின் ஆ வரிசை பட்டியலின் தொடர்ச்சி.
ஆசாத் http://ennam.blogspot.com/, எண்ணங்களை எழுதுகிறேன்.
ஆசிப் மீரான் http://asifmeeran.blogspot.com/ ஒரு கிராமவாசியின் புலம்பல்கள். அவனது அடர்த்தியான மெளனம்
56)6).
ஆச்சி மகன் http://achimakan.blogspot.com/ கல்வி, அறிவியல், சமுதாயம் குறித்த எனது பார்வைகள்.
ஆதிபன் http://aathipansiva.blogspot.com/ நான் கவிதை என்று கிறுக்கியவை.
ஆதிரை http://ullal.blogspot.com/ ஆதிரையின் எண்ணங்கள்.
ஆந்ரேயி http://kadamban.blogspot.com/ தெரியவில்லை. குழப்பமாக
இருக்கிறது.
ஆனந்தன்
http://jaffna.yard.net/
Tamil -
ஆனந்த் http://anandvinay 1.blogspot.com, எனது புகைப்படங்கள்.
ஆனந்த் விநாயகம் http://anandvinay.blogspot.com/ எனது புகைப்படங்கள்.
மல்லிகை ஜூ 2007 * 50
 

10. ஆரோக்கியம்
http://ennamopo.blogspot.com/ எண்ணம் ரீ ஒ போ
1. ஆராக்கியம் உள்ளவன்
http://sampiraani.blogspot.com/ ஒடுக்கப்பட்டவனின் உரிமைக்குரல்
12. ஆர்.வெங்கடேஸ்
http://www.tamiloviam.com/ mesamudan மடல் இதழ்
3. ஆற்றல்
http://aatral.blogspot.com/ ஆற்றல் பொதுவாக மறைந்திருக் கும். மிகவும் பிரயத்தனம் செய்து.
4. ஆழியாள்
ஆனந்த் விநாயகம் http://aazhiyaal.blogspot.com/
சத்தியாவின் நிசப்தம் சத்தியா எனும் ஒரு பெண் வலைப்பதிவாளர் பிரான்ஸில் வசிக் கிறார். அவரும் ஒரு வகையில் புலம் பெயர்ந்தவர்தான். நிலாமுற்றம் எனும் இணைய மன்றத்தின் முக்கிய உறுப் பினர். இவர் தனது வலைப்பதிவுகளை அழகாக வடிவமைப்பவர். அதிக அள வில் கவிதைகளைத் தனது பதிவுகளா கப் போட்டு வருபவர். முதல் வாசிபபில் அவை காதல் கவிதைகளாக தோன்றி னாலும் இன்றைய வாழ்வின் நெருக் அடிகளின் இடையில் காதல் வெளிப் பாட்டின் மாறுப்பட்ட தன்மையை மெலி தாகச் சொல்லி வருபவர். உங்கள் இரசனைக் கு அவரது மூன்று கவிதைகள்.
லக்கினர் கோலம் !
உலகம் சுற்றும் வேகத்தில் இருள் ஆழ்வதுவும் காலை மெல்லப் புலர்வதுவும் காலச் சக்கரத்தின் சுழற்சியில் சரியாகத்தான் நகர்கின்றது!
ஆனாலும் இருளும் இரவுகள் நீளமாய்க் கழிந்து செல்ல.
சுமைகள் எல்லாம் இமைவரை முட்டி மோத இமையோடு இமை ஏனோ இணைய மறுத்து விடும்!
புலர்வுகள் கூட புலராத பொழுதுகளாயப் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும்!
காலத்துக்கு கட்டுப்படாதவர்களும் கூட கடிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்களாய்.
நாளை என்பது நிச்சயமில்லாத நாட்டில் அவசரகால விதிகளின் கீழ் அன்றாடச் சீவிப்பு.
நேற்றைய முகங்களை இன்று பொருத்திப் பார்க்கின்றேன்.
உடைந்த கண்ணாடியில் உருவமைத்த பிம்பமாய் எல்லாமே வெடிப்புச் சிதறல்கள்!
மல்லிகை ஜூ 2007 & 51

Page 28
மனங்களே மண் தூவும் வெறுமையாய்த் தெரிய சோகங்களின் இரகசியத் தரிப்பிடமாய் நெஞ்சமும் வெந்து சாகும்.
மனமென்னும் பெட்டகத்துக்குள் மண்டியிட்டுக் கிடக்கும் நேசத்தின் பரிமாற்றங்கள் கூட Dബffക്ര மொட்டுக்களாய் வாடிக் கருகி விடும்.
வாழ்க்கையின் பயணங்களும் ஆழக் கடலில் வீசும் காற்றோடு போராடும் படகினைப் போல் போராட்டம் போட.
நெஞ்சமும் இங்கு புலம்பித் தவிக்க விடியலைத் தேடி ஆன்மாவும் ஓலமிடும்!
இது
காலத்தின் கோலம்!
பாலைவனத்தில் விழுந்த பனித்துளி !
இயந்திர வாழ்க்கைக்குள் அகப்பட்டு இன்பமெல்லாம் தொலைந்து விட.
பாலைவனப் பிரதேசத்தில் பசுமை தேடி
பரிதவிக்கும் பாவப்பட்ட ஜீவனாய் நான்!
பணத்திற்காக மட்டும் பந்தமாய் சிலர்.
தேவைக்காக மட்டும் தேடி வரும் சிலர்.
சுயநலத்தோடு சுற்றி வரும் சுற்றமெல்லாம் ஆனியமாய்த் தெரிய.
உயிரென்று சொல்ல
உறவென்று யாருமின்றி நட்பென்று சொல்ல நண்பரென்று யாருமின்றி
வாழ்க்கை வரம்பில்
கட்டிய கனவுகள் எல்லாம் ஜன்னல்களைத் திறந்து பறந்து போகக் காத்திருக்கையில்.
திடீரெனத்
தூரத்தில் இருந்து துள்ளி விழுந்த ஓர் ஒளிச் சிதறலாய் நீ!
பார்த்த மாத்திரத்தில் உன் பார்வைகள் என்னுள் சாமரம் வீசின!
உன் வார்த்தைகளின் வீச்சு என் வாட்டத்தைப் போக்கின!
அன்பின் ஈரத்தை மன மேகங்கள் மீண்டும் உணர்ந்தன.
என் கண்ணுக்குள் விழுந்து என் கண்ணிரை நிறுத்தினாய் உனக்குள் எனைத் தொலைத்து உன்னில் எனைக் கண்டேன்.
சலனமின்றி
நாளும் அமைதியாய்
மல்லிகை ஜூ 2007 & 52

ஒடிக்கொண்டிருந்த வாழ்க்கை நதியில் மனசில் கல்லெறியப்பட்டுச் சட்டெனத் தடுக்கி விழ.
வரண்டு போன இதயத்தில் திரண்டு நிற்கும் ஏக்கமாய்.
ஒரு பொழுதேனும் உன் பாசக் காற்றுக்காய் பரிதவிக்கும் பாய்மரமாய் நான்!
விழி முடித் துரங்கும் போதும் உன் வண்ணம் தேடும் என் விழிகள்!
உன் தோள் சாய்ந்து கொள்ளத் துடிக்கும் என் மனசு!
உன் மடி சாய்ந்து உறங்கத் துடிக்கும் இதயம்!
ஒற்றையாய்.
ஓர் ஓரமாய். ஓர் தனிமரமாய்.
உன்பார்வைக்காயப் ஆலாய்ப் பறந்து அன்றாடம் அழும் என் இதயம்!
நதிகள் கண்ணிர் விட்டு அழுதால் கூட யாருக்குத் தெரியப் போகிறது?
ம்.
9/65/T...
நீ வருகின்றாய்
உன்னைக் கண்டபோதே என் கர்ைகள் உன்னை ஆராதனை செய்கின்றன!
...لP&
நீயும்
என்னைக் கண்டும் காணாதது போல் கடந்து செல்கின்றாய்!
பார்த்தும் பாராதது போல் LITFTIBÍS 6lguýæýlp/T6u IT பாவி எனக்குத் தெரியவில்லை!
என் கண்ணுக்குள் விழுந்த முதல் பனித்துளியும் நீதானே!
என் கன்னத்தைத் தழுவிய,
உயிரே!
உன் ஓரக் கணினால் ஒரு பார்வையோ.
அல்லது
எப்போதாவது
நீ உதிர்க்கும் அந்த ஒற்றைப் புன்னகையையோ.
மறவாமல் என் மீது வீசியெறிந்து விட்டுப் போ!
நீ வினாடி நேரத்தில் விட்டெறியும் அந்தப் புன்னகையை.
அந்தப் பார்வையை. பாலை வனத்தில் விழுந்த பனித்துளியாய்ப் பத்திரப்படுத்தி வைக்கிறேன்!
மல்லிகை ஜூ 2007 & 53

Page 29
எங்கள் முற்றத்து வேப்பமரம்!
நாடு விட்டு நாடு வந்து கூடு தன்னில் வாழ்ந்து கொண்டு வாடுகின்ற வாட்டமிது நீங்கிடும் நாள் எந்நாளோ..? நாடுதன்னில் நாம் வாழ்ந்த கோடுகள்தான் அழிந்து வந்து கூடுதன்னில் அடைபட்டுக் கோலங்களைச் சிதைக்கின்றோம்! வீடு ஒன்று அழகாகச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள பாடுகின்ற பறவையெல்லாம் பாங்காகக் கொஞ்சிக் கொள்ள கூடுகின்ற வேப்பமரம் முற்றத்தில் படர்ந்து கொள்ள நாடுகின்ற தென்றல்தான் மெல்லத் தழுவிக் கொள் பாடு பட்டுப் பகலெல்லாம் உழைத்து விட்ட பெரியவர்கள் நாடுகின்ற சுகந்தங்களை அந்த வேப்ப மரம் கொடுத்துவிட வாடுகின்ற மனங்களுக்கு வசந்தங்கள் வாழ்த்துச் சொல்ல வீடு அதன் முற்றமதில் இள வேனிலதாய் நின்றதுவே! கூடுகின்ற சிறுவரெல்லாம் குதூகலமாய்த் துள்ளி நின்று பாடுகின்ற பாட்டுக் கேட்டு பரவசத்தில் மகிழ்ந்திருக்க வாடுகின்ற மனங்களிலே வாட்டங்கள் பறந்து செல்ல நாடுகின்ற சுகங்கள்தான் நம் மனதின் கோலங்கள்! நாடுகின்ற வெண்ணிலவு தள்ளி வந்து முற்றமதில் - நம்மைக் கூடுகின்ற வரவு சொல்ல களித்திருந்து வேப்பமரத்தடியில் நாடுகின்ற நயம் மிக்க நற்கதைகள் நாட்டு நடப்புக்கள் கூடுகின்ற வேப்ப மரத்தடியில் களித்திருந்த காலங்கள்! நாடு விட்டு நாடு வந்து நாம் கண்டு கொள்ள முடியவில்லை கூடுவிட்டுக் கூடுகளில் அகதிகளாய் வாழ்கின்ற கேடுகெட்ட வாழ்வு நீங்கி நமது சொந்த நாடு சென்று வாடுகின்ற வாட்டம் தான் நீங்கும் நாள் வந்திடாதோ.. ? வாடுகின்ற வாட்டமதைத் தீர்த்து நின்ற வேப்பமரம் - நம் நாடு நாடுகின்ற போதினிலே நமது வீட்டு முற்றத்திலே தேடுகின்ற தென்றல்தனைக் கொடுத்து நம்மை வரவேற்க ஒடுகின்ற காலம்தான் பதில் சொல்லுமா பார்த்திருப்போம்.
மல்லிகை ஜூ 2007 & 54

"நோட்டீஸ் ஒட்டத்தான் வேணுமா?" என்றான் ரகு. வருசா வருசம் ஒட்டுறதுதானே. பிறகென்ன கேள்வி?" குகன் கேட்டான்.
"போனமுறை சண்டையில முடிஞ்சது ஞாபகம் இல்லையோ..?
"ஏன் இல்லை. இந்த முறை சண்டை வராமல் சமாளிப்பம்."
கோயில் திருவிழாவுக்கு நோட்டீஸ் ஒட்டுவதில்தான் இந்த இழுபறி. ஊர் முழுக்க நோட்டீஸ் ஒட்டுவதுதான் வழமை. குணசிங்கம் வீட்டுக் கேற்றில் போனமுறை ஒட்டிய நோட்டீசால் தான் பிரச்சினை வந்தது. அடிதடியில் முடிந்து நோட்டீஸ் கட்டும் எரிக்கப்பட்டது.
நினைவழியா நாட்கள் - 4
சண்டியர்
குணசிங்கம் ஊர்ச் சண்டியன். திருவிழா அன்றைக்கும் கோயிலில் வந்து முரண்டு பிடித்தான். தேவனுக்கும் சபாவுக்கும் அடியும் விழுந்தன. மாஸ்ரர்தான் ஒருமாதிரிக் குணசிங்கத்தைச் சமாளித்து அனுப்பி வைத்தார். இனிமேல் நோட்டீஸ் ஒட்ட எவனாவது எங்கட பக்கம் வந்தால் கைகால் முறியும் என்று எச்சரித்து விட்டுப் போனான்.
ー பரன்'
"குணசிங்கம் தண்ணியில நிப்பான். நீங்கள் போய் நோட்டீஸ் ஒட்டுங்கோ. வாங்கியும் முறியுங்கோ. எனக்கென்ன.." என்றான் இரகு.
"அப்பிடிச் சொல்லாதை மச்சான். எல்லாருமாய்ப் போய் ஒட்டுவம். அப்ப அவனால என்ன செய்ய ஏலும்?” என்றான் குகன்.
"விசர்க்கதை கதையாதை. அவன் சண்டியன் எண்று பேரெடுத்தவன். அடி பிடிக்குப் பயப்படான், நாங்கள்தான் மானம் கெடவேணும்." சொல்லும் போதே இரகுவின் குரலில் எரிச்சல் தெரிந்தது.
'சரி சரி. கனக்கக் கதைச்சு ஏன் பிரச்சினைப் படுவான். இராமலிங்கத்தையும்
நாதனையும் கூட்டிக் கொண்டு போவோம்" என்றான் குகன்.
இராமலிங்கமும் நாதனும் ஒரு சயிக்கிளில். குகனின் சைக்கிளில் நான் ஏறிக் கொண்டேன். இரகுவும் தேவனும் இன்னொன்றில். வழியெல்லாம் நோட்டீஸ் ஒட்டி, பள்ளிக்கூட ஒழுங்கைக்கு வரும்போது இரவு பதினொரு மணியாகி விட்டது.
மல்லிகை ஜூ 2007 & 55

Page 30
'மச்சான் நான் இறங்கி ஓடப் போறன்’ என்றான் தேவன். போனமுறை அடி இன்னமும் ஞாபகம் இருந்திருக்க
8ഖങ്ങ്(Sb.
பேசாமல் வாடா.." என்றான் இரகு. ஒழுங்கைத் துவக்கத்திலேயே குண சிங்கம் நின்றான். கூட இரண்டு பேர்.
t
'டேய். போனமுறை சொன்னது
ஞாபகம் இல்லையோடா."
'உங்கட கேற்றில இந்த முறை ஒட்டமாட்டம்.”
"அதென்னடா என்ரை கேற். இந்த இடம் முழுக்க எங்கட ஏரியாதான்ரா. உடனை திரும்பிப் போங்கோ."
“இல்லை. நாங்கள் &LDrtër 60TLDITë தான் வந்தனாங்கள். கொஞ்சம் நாங்கள் சொல்லுறதையும் கேளுங்கோ." என்றபடி முன்னே போனான் குகன். ஒரே உதை யில் குகனின் கையில் இருந்த பசைவாளி தெறித்து விழ, அவன் வேலியோரம் விழுந்து கிடந்தான்.
"குணசிங்கம், உன்னோட கொளுவ வரேல்லையப்பா." என்று கிட்டப் போன இரகுவிற்கு விழுந்த உதையில் நோட்டீஸ் கட்டுகள் பறக்க, இரகுவும் எகிறி விழுந் தான.
திரும்பிப் பார்த்தேன். இராமலிங் கத்தையும் நாதனையும் காணவில்லை. அவர்கள் வந்த சைக்கிளும் இல்லை. காவ லுக்கு வந்தவர்கள் காற்றாகப் பறந்திருந் தார்கள். கீழே விழுந்தவர்களை விட்டு விட்டுத் திரும்பி ஓடுவதா. இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முன் குண
சிங்கத்தின் -கால் என்னை நோக்கி நீண்டது.
இடது பக்கம் சரிந்து, உடம்பை வளைத்து நிமிர்ந்ததால் என் தலை தப்பி யது. குணசிங்கத்தின் கால் வானம் தேடி யது. துரையண்ணனிடம் பழகிய விசயங் கள் ஞாபகத்திற்கு வந்ததும், என் கால் உயர்ந்து குணசிங்கத்தின் காலை
உதைத்ததும் ஒன்றாகவே நடந்தன.
அவன் கரணமடித்து விழுந்தான். விழுந் தவன் எழும்பவில்லை. அவனோடு கூட நின்றவர்கள் ஒடிப்போயிருந்தார்கள்.
"அவன் குடித்திருந்தது உனக்கு வசதியாய்ப் போய்ச்சுது” என்றான் இரகு. நோட்டீஸ் கட்டையும், பசை வாளியையும் தூக்கிக் கொண்டோம். அன்றைக்கு மாதிரி வாழ்நாளில் நான் என்றைக்குமே சைக்கிள் உழக்கவில்லை. அப்படி ஒரு ஒட்டம்.
அடுத்த நாள் சனிக்கிழமை. பள்ளிக்கூடப் பக்கமோ, ரவுண் பக்கமோ பேர்க வேண்டிய தேவை இருக்கவில்லை. குட்டி போட்ட பூனை மாதிரி வீட்டையே சுற்றி வந்தேன். பின்னேரம் மாஸ்ரர் வந்த போது குட்டு உடைந்தது. நடந்ததை எல்லாம் காலையிலேயே தேவன் சொல்லி விட்டதாகக் கூறினார். மாஸ்ரருக்கு விசயம் தெரிந்ததில் நிம்மதி. எப்படியும் வீட்டாருக்குத் தெரிய வேண்டியதுதானே!
"இவனுக்கு ஏன் இந்தத் தேவை இல் லாத வேலை..?" என்று அக்கா பேசினா. அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அவரின் பார்வையே எல்லாவற்றையும் பேசியது.
மல்லிகை ஜூ 2007 ஜ் 56

மாஸ்ரருடன் வெளியே வந்தபோது, ‘என்ன குணசிங்கத்தை அடிச்சு விழுத்திப் போட்டியாம். துரை அண்ணனிட்ட நல் லாப் பழகித்தான் இருக்கிறாய் போல.” என்றார். அவரின் குரலில் சின்னப் பெருமையும் இருந்தது. அவர்தான் துரை யண்ணனிடம் சேர்த்து விட்டவர்.
திங்களும் செவ்வாயும் பள்ளிக்கூடம் போவதில்லை என்று நானும் இரகுவும் முடிவெடுத்தோம். செவ்வாய் இரவுதான் நிருவிழா. தேவை இல்லாமல் ஏன் திரும்ப உரசிக் கொள்ள வேண்டும் என்று பட்டது. அடிமனதில் ஒரு பயமும் இருந்தது. திரு விழாவில் எல்லோரும் ஒரு கூட்டமாகவே திரிந்தோம்.
"மச்சான். குணசிங்கம் வந்திருக் கிறான்ரா.” என்றபடி பதட்டமாகத் தேவன் வந்தான். எனக்குப் பயத்தில் வேர்த்தது.
“சரி. இனியென்ன இன்னொரு திரு விழாத் தான்.” என்றான் இரகு, மெதுவாக ான் கண்கள் மாஸ்ரரைத் தேடின. அவரை ரயும் காணவில்லை.
குணசிங்கமும் கூட்டாளிகளும் கிட்ட வந்தனர். ஒடுவதில் பிரயோசனமில்லை ான்று பட்டது. வருவது வரட்டும் என்று முன்னே போனேன்.
“என்னடாப்பா. திருவிழாவுக்கு வந் தால் எங்களைக் கண்டு கொள்ளவும் மாட் டியளோ..?" என்றான் குணசிங்கம். அவன் குரலில் கோபம் இருக்கவில்லை.
"இல்லையண்ணை. நீங்கள் வரு வியள் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை." என்றேன்.
“சரி. சரி. நடந்ததை எல்லாம் விட்டி டுவம், வாங்கோ போய்த் தேத்தண்ணி குடிப்பம்" என்றான்.
கிட்ட வந்து தோளில் கைபோட்டுக் கூட்டிப் போனான். என்னால் நம்ப முடிய வில்லை. எல்லாருமாய்ப் போய். பெட்ரோ மாக்ஸ் வெளிச்சத்துடன் வீதியோரம் இருந்த கடையில் தேநீர் குடித்தோம். வடையும் வாங்கித் தந்தான். நான் காசு குடுக்க வெளிக்கிட்டாலும் தடுத்து அவனே குடுத்தான். எனக்குப் புது அநுபவமாக இருந்தது.
“என்னவும் பிரச்சினை வந்தால் எனக் குச் சொல்லுங்கோ. எங்கட கோயில் திருவிழாவை நாங்கள் தானே நடத்த வேணும்.” என்றான். எல்லாரும் தலை யாட்டினோம்.
'அண்னை. அண்டைக்கு நடந் ததை. மறந்திடுங்கோ. நாங்கள் வேணு
மென்று செய்யவில்லை." என்றேன்.
*“母。。。 சீ. அண்டைக்கே மறந்திட்டன்." என்றான்.
அதையெல்லம்
கிட்டே வந்து என் முதுகைத் தட்டி "நான் போறன் சரிதானே!" என்று சொல்லிவிட்டுக் கூட்டாளிகளுடன் போனான்.
"மச்சான் எழும்பி விட்டான்” என்றான் இரகு.
“என்ன நீரும் சண்டியர் ஆகிவிட்டீர் போல..." என்று பின்னாலிருந்து குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன். மாஸ்ரர் சிரித்துக் கொண்டு நின்றார்.
மல்லிகை ஜூ 2007 & 57

Page 31
ச7ந்திநகரம்
சமாதியானது!
人 فر خر
உகைம் போற்றும் இரண்டாம் துறைமுகம்.
இஒற்றெருக்கும் ീഴിഞ്ഞ്
வெங்ங்க் கிணறுகள்.
ஆற்றொழுக்காய் அமைந்த கடற்கரை, - நேஹா சான்றோர் போற்றிய சர்வதாைங்கள்.
மேல் நாட்டார்
a 4· خار فر خار abus guu (Bosgpy656wstij65*
யாவும் கொண்ட 5/76D6D, D/76D6D வணிகப் பதியே வேனைகளெல்ாைம் வணமை மிகுந்த ՔՃաi ՓԺքճմg/մ» திருமலை நகரம். சைக்கிளின் சுற்றி, 人 人 人 ஆறுவதற்காய்
முற்ற வெளியின் ളിbpഞ്ഞു0ഞ6് ● ●
& 4 d முன்னுள்7ை மதிலில் რიჩტupmai/dნ მნრrflü(მu/777, A
4- A & தூறியமர்வோம். விழாக்களுக்க/7ய் {Y
4Y A. வெயிலின் கோரம் safezilip 66 liv6off777, A 4
4X & A. afeoffraid565627/ பொறியியல், மருத்துவம், &» 

Page 32
கடிதங்கள்
தங்கள் மல்லிகை ஆண்டு மலர் இப்பாேதுதான் பூபாலசிங்கம் புத்தக சாலையில் இருந்து கிடைத்தது. அச்சமைப்பு மிகவும் தரமாக உள்ளது. சிறு கதைகள் அனைத்துமே குறிப்பிட்டுச் சொல்லக் கூடியனவாக உள்ளன. தற்காலத் தமிழ்மொழியின் தேவையான கணினித் தமிழ்மொழியின் தேவையான கணினித் தமிழ்பற்றி விரிவான கட்டுரைகள் இடம்பெறுவது தனிச்சிறப்பான விடயம். வாழை யடி வாழையென வாரிசுகள் தொடரட்டும், என்றும் மா. பாலசிங்கத்தின் கட்டுரை ஈழத்து இலக்கியப் பரம்பரைகள் தொடர்பான, தகவல்திரட்டித்தரும் முதற்கட்டுரை என்றே நினைக்கிறேன். ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
எனினும் இக்கட்டுரையில் விடுபட்டுப்போன பரம்பரை ஒன்று பற்றிய தகவலைத் தர விரும்புகிறேன். இதனைத் தற்புகழ்ச்சியாகக் கொள்ளளாமல் தகவல் தரவாக மட்டுமே கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மட்டுவிலைச் சேர்ந்தவர் ம. க. வேற்பிள்ளை. ஈழத்தில் வரலாறு கூறும் ஈழ மண்டல சதகம் இயற்றியவர். திருவாதவூரடிகள் புராணம், புலியூரந்தாதி, போன்ற நூல்களுக்கு உரை எழுதியவர். மருமகனான வித்துவ சிரோமணி பொன்னம்பல பிள்ளையால் "உரையாசிரியர்” என்றும் சிறப்புப்பட்டம் அளித்துக் கெளரவிக்கப்
ul L6 isf.
ம. க. வேற்பிள்ளையின் ஐந்து புதல்வர்களில் மூத்தவர் பண்டிதர். ம. வே.திரு ஞானசம்பந்தப்பிள்ளை. இந்துசாதனம் பத்திரிகையாசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர். ஈழத்தின் ஆரம்ப கால நாவலாசிரியாராக விளங்கிய கோபால நேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம் நேசமணி ஆகிய மூன்று நாவல்களையும் எழுதியவர். நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியும், உரை எழுதியும் பதிப்பித்தவர். யாழ்ப்பாணம் சரஸ்வதி விலாச சபையின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்ததுடன் எட்டு நாடகங்களை எழுதி இச் சபையூடாக மேடை யேற்றியவர்.
மல்லிகை ஜூ 2007 * 60

ம.க.வேற்பிள்ளையின் மூன்றவது மகன். பரீட்சை எடாத பண்டிதர் என்றும், குருகவி என்றும் போற்றப்பட்ட ம.வே. மகாலிங்கசிவம். பன்னிரண்டு வயதிலேயே பழனிப் பதிகங்கள் பாடி யவர். கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர். ம. வே. மகாலிங்க சிவத்தின் மகனே புலவர் ம.பார்வதி நாதசிவம். இருவேறு உலகம், இன்றும் ஒரு திங்கள், இரண்டு வரம் வேண்டும், 'பசிப்பிணி மருத்துவன் ஆகிய கவிதைத் தொகுப்புக்களை வெளி யிட்டவர்.
இவர்களுடன் புலவர். ம.பார்வதி சிவத்தின் மகனாகிய என்னையும் தாங்கள் விரும்பினாற் சேர்த்துக் கொள்ள லாம். என் பெயர் ம.பா. மகாலிங்கசிவம். பாடசாலை மட்டத்திலும், கோட்டவலய மட்டங்களில் நடைபெற்ற கவிதை, சிறுகதைப் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளேன். 1994இல் யாழ்.பல் கலைக்கழகக் கலைப் பீடத்தால் நடத்தப் பட்ட கவிதை, சிறுகதைப் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளேன். 2006 இல் ஞானம் சஞ்சிகையால் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் கிடைத்துள்ளது. இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட கவிதைகள் பத்திரிகை களிலும் சஞ்சிகைகளிலும் வெளி வந்துள்ளன.
D.un. LD5ft similahdaib. இறுவில்
மல்லிகை அபிமானிகள் அனை
வருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
ஈழத்திற்கும் மலையக இலக்கியத்தி ற்கும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓர் இலக்கிய இதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்ற ஆரோக்கியமான செய்தி ஒன்றே போதும் அதன் கனங் காத் திரத்தைப் புரிந்து கொள்வதற்கு.
மக்களின் நலன் சார்ந்தும் மக்களுக் கான இலக்கியம் படைப்பதும் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.
42-வது ஆண்டு மலர் சென்னையில் கிடைக்கப் பெற்றேன். படித்துப் படித்துப் பரவசமுற்றேன். தமிழிலும் இப்படியொரு இதழ் முன்னோடிகள் இன்று இல்லையே என மனதுக்குள் கவலைப்பட்டேன்.
மேலும் இங்கு வாழும் மலையகத் தமிழர்களைப் பற்றியதொரு விவரணப் படமும் எடுத்து வருகின்றேன். இப்படம் இலங்கையிலுள்ள மலையக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது வேணவாவாகும். இது போன்ற தொரு முயற்சிக்கு மல்லிகையினூடாக ஆதரவும் ஆலோசனையும் மிக மிகத் தேவை.
தேவமுதல்வன். நீலகிரி
மே 2007 இதழ் கண்டேன். அட்டைப்
படம் அருமை. கவிஞர்/புலவர் ஜின்னாவுற்
ஷரிப்புதீன் அவர்களது ஆற்றல்களை - நாமறியாத அவரது பெருமைகளை - கலைவாதி கலீல் அவர்கள் பிட்டு வைத் துள்ளார். நன்றி!
மல்லிகை ஜூ 2007 * 61

Page 33
இம்முறை அதிகமான நூல்களின், திரைப்படங்களின் திறனாய்வுக் கட்டுரை கள் வெளிவந்துள்ளன. ‘பூச்சியம் பூச்சியமல்ல தெணியான் அவர்களது இந்த இதழ் தொடர் முன்னைய வரலாற் றின் பக்கங்களை நம்முன் புரட்டி வைக் கிறது. இதுநாள்வரை கே. டானியல், டொமினிக் ஜீவா என்ற பெயர்களை இணைத்தே படித்தும், எழுதியும், பேசியும் வந்திருக்கிறோம். ஆனால், அந்தப் பெயர் களுக்கிடையில் ஓர் இடைவெளி இருந் தது. ஆனாலும் அது கெளரவமான இடை வெளி என்பதை இத்தொடர் எடுத்துக் காட் டியது. மேலும், மூத்த எழுத்தாளர் தெணி யான் குறிப்பிட்டுள்ள கா.சிவத்தம்பி அவர் களைப் பற்றிய விபரங்களும் நமக்கு மிக அவசியமானவை. "நான் சொல்வதைக் கேட்பதற்கும் தகுந்த ஓராள் தேவை யல்லவா? பேராசிரியர் வரிகள் உண்மை யிலும் உண்மை, அந்தப் பாக்கியம் பெறாத எழுத்தாளன் சிலவேளை மன நோயாளியாக மாறவும் கூடும்.
‘புத்தகப் பக்கங்களையும் புரட்டு வோம்' - ஏ.எஸ்.எம்.நவாஸ் அவர்களது கட்டுரை மிகப் பயனுள்ளது மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டவல்லது. கல்விப் பக்கத்தை எடுத்துக் கொண்டாலுமே இந் தத் தொலைக்காட்சி கொடுக்கின்ற எரிச் சல் தாள முடியாதது. மாணவர்கள் சதா வும் தொலைக்காட்சிப் படங்களைப் பார்த்துவிட்டு வந்து வகுப்பில் அரட்டை யடிப்பதும், மஜா,போக்கிரி போன்ற மட்டகரமான சொற்களைக்கூட, வகுப்பு களில் கொஞ்சமும் வெட்கமின்றி உப யோகிப்பதும் அருவருப்பானவை.
உயர்தர வகுப்பில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இலக்கியத் தரம் மிக்க பழைய பாடல்கள் பற்றி எதுவுமே தெரிய வில்லை. "அத்திக்காய் காய் காய்’ தெரி யாத அம்மாணவர்கள் வைரமுத்து வின் "தீப்பிடிக்க, தீப்பிடிக்க.."என்ற பாடலைப் பற்றி பேசும் போது, நாம் கூனிக் குறுகிப் GLImaß(SDrrLö.
இதுதவிர, சமூக, பண்பாட்டு, கலா சார, சமய சீர்கேடுகளையும் எண்ணிப் பார்க்கும் போது தொலைக்காட்சி என்ற தொல்லை தேவையேயில்லை என்ற முடிவுக்கே என்னால் வரமுடிகின்றது. 'ஒரு பொருளால் கிடைக்கும் நன்மைகளை விட, அதனால் கிடைக்கும் தீமைகள் அதிக ഥഞിങ് தவிர்த்துவிடு' என் பது எமது அறிஞர் வாக்கு. அதை உத் தேசித்துப் பார்க்கும் போதும், நமது பிள்ளைகளின் எதிர்கால
அப்பொருளை
கல்வி அபிவிருத்தியை நோக்கும்போதும் தொலைக்காட்சியின் பயன் கேள்விக் குரியதே. சென்ற வருடம் க.பொ.த. உ.த. வகுப்புப் பரீட்சை யில் நான்கு பாடங்களிலும் ஏ எடுத்து சித்தி பெற்ற ஒரு சிங்கள மாணவியின் பேட்டி சிங்களப் பத்திரிகையில் வந்திருந்தது. அந்தப் பேட்டியின் தலைப்பு - "எனது வீட்டில் ரீ.வி. இல்லை.
இப்போது எனது வீட்டிலும் ரீ.வி. இல்லை. தொலைத்து விட்டேன். வர்த்தக சேவை ஒலிபரப்புகளை எனது பிள்ளை களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறேன். ரேடியோவில் ரி.எம்.எஸ். பாடும் போது எனது ஆறு வயது மகள் அருகிருந்து கேட்டு விட்டுக் கூறுகிறாள், "உம்மா! இது சிவாஜியின் பாட்டுத்தானே.?"
மல்லிகை ஜூ 2007 & 62

இப்போது என்னால் நிறையப் படிக்க, எழுத, சிந்திக்க முடிகிறது. டென்ஷன் இல்லை. எனது தோழிகள் என்னைப் பழைமைவாதியாகப் பார்க்கின்றனர். தொலைக்காட்சி காலத்தின் தேவை யல்லவா? என்று வாதிடுகின்றனர். அவர் களுக்கு ஜெயகாந்தன் சேர் பாணியில் பதில் கொடுக்கிறேன். “எனது நிம்மதியான வாழ்க்கைக்கு முன்னோர் காட்டிய பாதை களே போதுமானவை.!"
‘எல்லாக் காலங்களிலும் வாசிப்பவர் களது எண்ணிக்கை குறைவாகவே இருந் திருக்கிறது என்று ஜெயகாந்தன் திலக வதியுடனான தனது பேட்டியில் (கணை யாழி) குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இது போன்று மிக மிகக் குறைவான எண் னிக்கை முன்னொரு போதும் இருந்திருக் காது என்பது எனது அபிப்பிராயம். மாண வர்கள் தமது தமிழ் பாடப் புத்தகத்தைக் கூட வாசிப்பதற்கு என்னமாய் சோம்பேறித் தனம் காட்டுகிறார்கள்
"தந்தை பாதம் போற்றி எனும் மொழி பெயர்ப்புக் கதை கூட இந்த விஷயத்திற்கு மிகவும் தொடர்புள்ள ஒரு கருவையே பேசுகின்றது. வெறும் அறிவு, வெறும் கல்வி, வெறும் பட்டம். இவற்றால் என்ன பிரயோசனம்? “வீதிதோறும் இரண்டொரு பள்ளி, வீடுகளெங்கும் கலையின் விளக்கம்." பாரதி எதை உத்தேசித்து - எதைக் கனவு கண்டு - எதை இலட்சியமாகக் கொண்டு கூறினான்?
மற்றும், "அகிலனுடன் முதற் சந்திப்பு', 'மின்வெளிதனிலே ஆசிரியர் தலையங்கம் என்பனவும் மிக நன்று.
- கெகிறாவ ஸஹானா
Excellent
Photographers
Photography For Wedding Portraits
Child Si tings
மல்லிகை ஜூ 2007 率 63
Modern Computerized
4.

Page 34
பவள விழா ஞாபகார்த்தமாக.
"அந்த இருவரும் "இந்த இருவரும்
- OLMladá žYM,
பேராசிரியர் சிவத்தம்பியை நான் எனது ஆர்த்மார்த்திக நண்பனாகவே B60L. முறையில் கருதி, அவருடன் இன்று வரையும் பழகி வருகிறேன்.
நானவரை அவரது பல்கலைக்கழக மாணவப் பருவத்திலேயே ஒரு நாடக விழாவில் யாழ். நகர மண்டபத்தில் சந்தித்தேன். பக்கத்தே நின்ற பேராசிரியர் வித்தியானந்தன் எனக்கு முதன் முதலில் " இவர்தான் சிவத்தம்பி!” என அறிமுகம் செய்து வைத்தார்.
அன்று தொட்டு நானவரை மனசுக்குள் கனம் பண்ணி இன்றுவரைக்கும் அவருக்குத் தனிமரியாதை செலுத்திவருகின்றேன். இது அவருக்கே கூடத் தெரியாத ஒரு சங்கதி யாகக் கூட இருக்கலாம்.
நான் பல தடவைகள் எழுத்தில்கூடப் பதிவு செய்து வைத்துள்ளேன். கைலாசபதி அறிஞன், சிவத்தம்பி சுய முயற்சி சிந்தனையாளன். இதில் என்ன வேறுபாடு என வினவலாம்.
அறிஞன் தனது நுண் ஆய்வு அறிவினாலும் படிப்புப் பயிற்சியினாலும் தேடல் களினாலும் கண்டடைவதே அறிவு. ஆனால், சிந்தனை அப்படிப்பட்டதல்ல. அடியாதார மான மண்ணின் செழுமையையும் ஊறல்களையும் பிறப்பு வளர்ப்பிலேயே உள்வாங்கி, உள்வாங்கித் தன்னைக் கட்டம் கட்டமாக வளர்த்தெடுத்துச் செழுமைப் படுத்திக் கொள்வதே சிந்தனை.
கரவெட்டி மண்ணின் முழுச் செழுமையையும் அதனது, அடியாதாரப் புலமையையும்
தன்னகத்தே கொண்டு முகிழ்ந்தெழுந்தவர்தான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள்.
இதைப் பரிபூரணமாகப் புரிந்து கொண்டவன் நான்.
இன்னொன்றையும் இந்தக் கட்டத்தில் உயிர்ப்புடன் நான் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியமாகும்.
நண்பர் டானியல் இன்று உயிருடன் இருந்தால், அவர் பேராசிரியரைப் பற்றிச் சொல்லும் கருத்தும் நான் இங்கு பதிவு செய்யும் அவரைப்பற்றிய கருத்துமே காலா கால
மாகவே நின்று நிலைக்கும் என மெய்யாகவே கருதுகின்றேன்.
மல்லிகை ஜன 2007 奉 64

எத்தனைதான் கல்விமான்கள், மேதைகள் அவரைப்பற்றிச் சொல்லட்டுமே. நாம் இருவரும் அவரைப் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் தான் ஜிவத் துடிப்புள்ள வாழும் கருத்தாக நின்று நிலைக்கும் என் பதே எனது தீர்ககமான அபிப்பிராயமாகும்.
நம் இருவரையும் யாழ்ப்பான உயர் குலச் சமுதாயமும், அதில் முகிழ்ந்து வந்த பண்டித நாவலர் பரம்பரையினரும் மிகமிக இழிந்த மொழிகளில் எமது சாதியைச் சொல்லி அவ தூறு பொழிந்த காலத்தில், கைலாசபதியும், சிவத்தம்பியும்தான் நிமிர் ந்து நின்று எங்களுக்காக குரல் கொடுத்த இருவருமே கல்விமான்களாகும்.
இதில் கைலாசபதிக்கு இந்த மண் மர பின் தாக்கம் புதுசு. அவரைப் பெரிதும் பாதிக்காத ஒன்று. அவர் பிறந்தது மலேசி யாவில். படித்து வாழ்ந்து, வளர்ந்தது பட்டி னங்களில் எனவே டானியல் - ஜீவா பிரச் சினையில் அறிவியல் தனத்தில் நின்று ஆதரவு காட்டியவர் கைலாசபதி. அது கூட, ஓர் அசுரத் துணிச்சல்தான். ஆனால், சிவத் தம்பி அவர்களின் நிலையோ வேறு.
பிறந்தது, படித்தது, புழங்கியது எல் லாம் கரவெட்டி. அத்துடன் தகப்பனார் ஒரு பண்டிதர். சூழ்நிலைக் கைதியாகவும் மண் ணுக்கேற்ற திமிர்க் கல்விமானாகவும் முகிழ்ந்தெழும்ப வேண்டிய சிவத்தம்பி, முடி வில் ஒரு தோழராகப் பரிணமிக்கிறார் இது அவரினது வளர்ச்சி நிலை.
கரவெட்டி மண்ணுக்கே வரலாற்றில் ஒரு தனிப் பெருமை உண்டு. காலங் கால மாக அது பதியப்பட்டும் வரும் செய்தி!
தோழர் பொன்.கந்தையா என்ற இடதுசாரியை முதன் முதலில் வடபிரதே
சங்கந்துலிருந்தே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்த நாம் வணங்கும் பூமியது!
அங்கிருந்துதான் பேராசிரியர் சிவத் தம்பி அவர்கள் தோன்றினார். இந்தப் பின்னணியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பேராசிரியர் கைலாசபதியும், சிவத் தம்பியும் முற்போக்கு இலக்கிய இயக்கத் திற்குப் பெருந் தூண்களாக வந்தமைந்தார் கள். இவர்களின் உழைப்பும் வழிகாட்ட லும் இல்லையென்றால் முற்போக்கு இலக்கிய இயக்கம் இந்த அளவிற்கு இந்த நாட்டில் இத்தனை பலம் பெற்றுத் திகழ்ந் திருக்க முடியாது.
இந்த இயக்கத்திற்கு தம்மை அர்ப் பணித்து உழைத்தவர்கள் இவர்கள் இரு வரும். எனவே இவர்களை இலக்கிய இரட் டையர்கள்' என்றே இன்றுவரை கருதிக் கனம் பண்ணிவருகின்றோம்.
"முற்போக்கு இலக்கியம் செத்துப் போய்விட்டது!" எனச் சொண்டுக்குள் நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே சிலர் மேடைகளில் கருத்துச் சொல்லிப் பரவச மடைகின்றனர். .
இப்படி மேடைகளில் கருத்துச் சொல்ல மேடையமைத்துத் தந்ததே நமது இயக்கத்தின் வல்லமைதான். இல்லாது போனால் கல்கியையும் அகிலனைப் பற்றியுமல்லவா இவர்கள் பேசிக்கொண்டி ருப்பார்கள். இது கூட நமது இயக்கத்தின் வெற்றிப் பெறுபேறுதானே!
மல்லிகையை எடுத்துக் கொள் ளுங்கள். முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்
தின் தொடர் வளர்ச்சிதானே அதன் வரவு.
ஏதோ ஒரு நப்பாசையால் முற் போக்கு எழுத்தாளர் இயக்கத்தைக் கொச்சைப்
மல்லிகை ஜூ 2007 & 65

Page 35
படுத்திக் குதூகலமடையும இவாகளைப பகிரங்கமாக ஒன்றை நாம் கேட்க விரும்பு கின்றோம். சரி. உங்களால் ஏன் இதுவரை யும் ஒரு கைலாசபதியையோ, சிவத் தம்பியையோ உருவாக்கி இலக்கிய உல கில் உலவ முடியவில்லை? செய்து காட் டட்டுமே பார்க்கலாம் மக்களும் உங்களது முடிவை அங்கீகரிக்கட்டுமே, காத்திருக் கின்றோம்.
இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று மாணவன் மேற்கோள் காட்டும் வாக்குமூலத்தை இங்கு எழுத்தில் பதிவு செய்து வைக்கின்றேன்.
டானியலும் டொமினிக் ஜீவாவும் தத் தமது திறமை, ஆற்றல் காரணமாக முகிழ்ந்தெழும்பிப் பெயர் பதித்திருந்த போதிலும் கூட, அன்றையப் யாழ்ப்பாணச் சமுதாயச் சூழ்நிலையில், இவர்கள் இரு வரது ஆளுமைகளையும் பாதுகாத்து நின்று நிலைக்க வைத்தவர்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பேராசிரியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியுமே! தமிழ் நாட்டில் கூட, தலித்தெழுத்தாளரை வளர் தெடுத்த பேராசிரியர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
சிவத்தம்பி /*றவர்களைக் கணம் பண்ணுவதில் முதன்மையானவர். எளிமை யானவர், இனிமையாகப் பழகும் தன்மை கொண்டவர். கைலாசபதியிடம் நுட்பமாகப் பழகிப்பார்த்தால் மெல்லியதொரு மெத்தனம் தெரியும். பந்தா தென்படும்.இது அவரது குடு ம்ப முதுசம் ஆனால், வித்வத் செருக்குச் சிறிதுமேயில்லாதவர். இவர்கள் இருவரும் வேறெந்த இலக்கியச் சாதனைகளுக்காக நினைவு கூரப்படா விட்டாலும் கூட, யாழ்ப் பாணத்து அடி மட்டத்து மக்களிடமிருந்து
உழைப்பாலும் போராட்டத்தாலும் முகிழ்ந் தெழுந்து பெயர் பதித்து வந்த இந்த இரு வரையும் இனங்கண்டு, பலவிதமான இருட் டடிப்பு குற்றச்சாட்டு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எம்மிருவரையும் பாதுகாத்து வளர்த்தெடுத்த தற்காகவே வரலாறு என் றென்றும் இவர்கள் இருவரினது நாமங் களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் பேச வைத்திருக்கும்.
இந்தச் சுயவாக்கு மூலத்தை எழுத் தில் பதிவு செய்யும் இந்த வேளையில் பேரா சிரியர் கா.சி அவர்களைப் பற்றிய எனது முந்தைய கணிப்பீடு பற்றித் தெளிவாகவே இன்னும் இருக்கிறேன்.
அவர் பற்றிய எனது கருத்துக்கள் நான் சிந்தித்து, மனநிறைவுடன் எழுதிய மாற்று கருத்துக்களே தவிர, விரோதமான எண்ணத்துடன் பதியப்பட்ட எழுத்துக்க ளல்ல, அவை. சர்ச்சைகளை நாம் விரோ தக் கண்கொண்டு நோக்கக்கூடாது.
அன்று மல்லிகையின் ஆரம்ப கட்டங் களில் கஸ்தூரியார் வீதியில் காரை விட்டு இறங்கி, ஜோசப் சலூன் கேற்றைத் தள்ளித் திறந்து வந்து, உள்ளே ஏதோ வேலை ஒன் றில் ஈடுபட்டிருந்த என் தோள் மீது கை போட்டு அணைத்த வண்ணம் “ டேய். ஜீவா!” என்று அணைத்து என்மீது பரிவு காட்டிய அந்தச் சிவத்தம்பியை நான் எந்தக் காலத்திலுமே மறந்து விட மாட்டேன்!
அத்துடன் டானியலின் கராஜ0க்குச் சென்று வாங்கில் இருந்தபடி அவருடன் தேனிர் அருந்தியதையும் என் சீவிய ப்ரியந்தம் நான் மறக்கமாட்டேன். இதில் ஒருவர் மறைந்து விட்டார். மற்றவருக்கு இன்று பவள விழா. எனது வார்த்தைப் பூக் களால் அவரை அர்ச்சித்து மகிழ்கின்றேன்.
மல்லிகை ஜூ 2007 & 66

7.
○。
5.
7.
9.
nr.
விற்பனைக்குத் தயாராகின்றது.
ஒன்முகங்கள்
(மல்லிகையில் வெளிவந்த அட்டைப்படத் தகவல்கள்)
53தகைமையாளர்களைப்பற்றியநால்
தாமரைச்செல்வி
- க.இரத்தினசிங்கம்
எல்.எம்.ஹனிபா
- பொ.ஆனந்தலிங்கம் Dr.எம்.கே.முருகானந்தன்
- பா.இரகுவரன்
ராஜமுநீகாந்தன்
- பேரா. சோ.சந்திரசேகரம்
evativu dpa Daudav
- மருதூர்க் கொத்தன்
6.articular 67aribafav
- செங்கை ஆழியான்
ØLa7de fyrrgo
- தெளிவத்தை ஜோசப்
செ.பெற்றால் மயில்
- வன பிதா.பி.எம்.இம்மானுவல்
கவிஞர் இரத்தினதுரை
- இ.ஜெயராஜ்
SY. unrao upØBazavimasyaživ - முல்லைமணி
செ.குரைத்தினம் - 966TD60
மல்லிகை ஜ0
un76Bazofâ66ffinir
A2.
- பா.இரகுவரன்
乃,历.d27氹7á
- சாரல் நாடன்
y42. “Wibas?”
- முருகையன்
vs. Sy. eBáðumráid
- திக்குவல்லை கமால்
76. இ.சிவகுருநாதன்
- மேமன்கவி
7 செ.கணேசலிங்கன்
- தேவகாந்தன்
74. dp. uspoř
- எம்.ஏ.எம்.நிலாம்
79. a. 89. cf. 67æguurzapadãy
- அஷ்ரப் சிகாப்டீன்
22. அந்தணிஜிவா
- நா.சோமகாந்தன்
27. துரை மனோகரன்
- தி.ஞானசேகரன்
2007率 67

Page 36
مجھے
2.
之伞。
ふぐ列。
266.
27.
2幻。
29。
2.
ó。
32.
ごごラ。
@伞。
ごごラ。
こッaタ。
57.
அறிவுமதி
- குறிஞ்சி இளந்தென்றல்
திக்குவல்ைை கமால்
லெ.முருகபூபதி
தமிழோவியன்”
- புலோலியூர் சதாசிவம்
'ഝേ'
- டொமினிக் ஜீவா Betfair
- எஸ்.எழில்வேந்தன் Öገnägjär
- கே.எஸ்.சிவகுமார் க.சச்சிதானந்தன்
- செங்கை ஆழியான் ஆர்.பத்மநாபல்யர்
- அ.இரவி எல்.சரவணமுத்து
- Dmt. umrsoárů&SLb புரவர்ை ஹாஷிம் உமர் - இ.ஜெயராஜ் udávamuunuför
- உடப்பூர் வீரசொக்கன் Øyas. Sii. Buadá?
- சுதாராஜ் ஜெயகாந்தன்
- டொமினிக் ஜீவா செ.யோகநாதன்
- செங்கை ஆழியான் arab.artb. di dipasburg/
- மலரன்பன் 'ppമബി’
- தெணியான்
மல்லிகை ஜூ
ごó。
Jee
42.
4.
12.
*ご。
4,
9,
6,
7.
1.
伞9。
○列2。
KjZ.
○エ2。
○エジ。
ப. ஆப்ன்ே
- நந்தி 07, Gഖിമബീ
- omt. umresorasid சிதம்புரதிருச்செந்திங்ாதன் - கா.இரத்தினசிங்கம் அன்பு ஜவஹர்ஷா
- நாச்சியாதீவு பர்வீன் dpigs/ulmar
- இளைய அப்துல்லாவற் பூ.முநீதரசிங்
- இ.ஜெயராஜ் கே.வி.சிவாசுப்பிரமணியம் - கே.எஸ்.சிவகுமாரன் Dr.
- தாமரைச் செல்வி
'aôg6rggpntaÄèʼ
- மேமன்கவி
ச.முருகானந்தன்
கயிறாசித்திக்
- கே.பொன்னுத்துரை இணைய அப்துல்லாஹ்
- ஒட்டமாவடி அரபாத்
upstatDo - அ.அ.அந்தோனிப்பிள்6ை
øy. Ølg. asaziwayataWrity
- டொமினிக் ஜீவா øas. ØBasmøóližšøgmað
- தெளிவத்தை ஜோசப்
67. Gustaff7f7
-ச.முருகானந்தன் ஜின்னா சாபுதீன்
- கலைவாதி கலீல்
2007霹68

()
--- 三三三三コエ
s - - - Z - Z.O.
།----____-
டெnகிெக் ёoул
ΣK சமீபத்தின் நீங்கள் படித்த தகவல் ஒன்றைச் எங்களுடன் பகிர்ந்து கொள்.ை
இயலுமா?
தெகிவளை ஆர். சரவணன்
இல் இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான மாநிலம் உத்தரப் பிரதேசம். இந்தியப் பிரதமர்களை உருவாக்கும் மாநிலம் எனச் சொல்வார்கள். நேருவின் மாநிலம் எனவும் சொல்லுவார்கள். அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மாயா வதி என்பவரின்கட்சி ஆட்சி நடத்த அறுதிப் பெரும்பான்மை பெற்று முன்னணி வகிக்கின்றது. இதில் அதிசயம் என்ன வென்றால் மாயாவதி ஒரு தலித். ஒடுக்கப் பட்ட சமூகத் தலைவி. பெரிய அதிசயங்களில் இதுவும் ஒன்று . நாளைய நவ இந்தியா எந்தத் திசைவழியில் போகப் போகின்றது என்பதைக் கோடி காட்டிச் சொல்லுகின்றது இந்தத் தேர்தல். இந்தியா புதிதாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டது
ΣΚ. கலைஞர் கருணாநிதி குரும்பத்திற்குள் என்னதான் நடக்கிறது? தயவு செய்து விரிவாகக் கறுங்கள்.
வவுனியா எஸ். தவயோகம்
'2 கருணாநிதி ஆரம்ப காலத்திலிருந்தே மகா சுழியன். தந்திரசாலி. பெரியாரின் பெறாமகன் சம்பத்தை ஒரங்கட்டினார். அடுத்து நெடுஞ்செழியன். பின்னர் மதி
பழகன். தொடர்ந்து கண்ணதாசன். மெல்ல மெல்ல இவர்களையெல்லாம் ஒதுக்கி துக்கி, அண்ணாவிடம் நெருக்கம் வைத்துக் கொண்டார். அண்ணாவுக்கும் கலை
மல்லிகை ஜூ 2007 率 69

Page 37
ஞரின் நரித்தந்திரம் அனைத்தும் நன்கு தெரியும். மெளனமாக இருந்தார். அவர், நடவடிக்கை எடுக்க முனைந்திருந் தால் அண்ணாவின் பாடே கட்சியில் அந்தரத்தில் முடிந்துவிடும். அத் தனையையும் தன் கையகப்படுத்திக் கொண்ட கருணாநிதி, கடைசியில் எம். ஜி. ஆரிடம் வசமாக மாட்டிக் கொண்டு கலைஞரின் தந்திரம்
திரும்பித் தாக்கத் தொடங்கி விட்டது. மூத்த மகன் முத்துவை வளர்த்தெடுக்க முற்பட்டார். மற்ற மகன் அழகிரி, அப்பன் பெயரை
விட்டார். அவரையே
வைத்தே மதுரையில் சண்டியனாக உருமாறினார். சமீபத்தில் மதுரையில் நடந்த கலவரத்திற்கும் அதன் பெறு பேறாக நடந்த மூன்று படுகொலைகளு க்கும் இவரே சூத்திரதாரி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை நிகழ்ச்சிகள் தொடர்பாக பேரன்களுடன் மோதல். அதன் பின் விளைவாக "சன்' தொலைக்காட்சி நிறுவனத்துடன் தொடர்பு துண்டிப்பு. தயாநிதி மாறனின், அசுர வளர்ச்சியைக் கண்டு மனசுக்குள் அச்சம். கனிமொழியை டில்லிக்கு அனுப்பி வைப்பிலுள்ள அரசியல் சூத்திரம். இன்னும் நிறைய நிறைய உண்டு, தகவல்கள். கலைஞர் டி. வியின் புது வரவு.
பார்த்துக் கொண்டே இருங்கள் கடைசியில் கலைஞர் படப்போகும் பாட்டை, வரலாறு பொறுத்திருந்து தனது கடமையைச் செய்தே முடிக்கும்!
凶 சமீபத்தின் கொழும்பில்/கடந்த கம்பன் விழா பற்றி என்ன நினைக் கிறிர்கள்?
சிலாபம் ப. கணபதி.
மி யாழ்பாணத்திலும் சரி, கொழும் பிலும் சரி, நான் கம்பன் விழாவில் கலந்து கொள்வதைத் தவறவிடுவ தில்லை. ஆயிரக்கணக்கான புதிய முகங்களைத் தரிசிப்பது என் வழக்கம். "மல்லிகைப் பந்தல்" நூல்களைக் காட்சிக்கும் விற்பனைக்குமாக வைத் திருந்தேன். அந்த நான்கு நாட்களும் பல பேருடன் பழகும் வாய்ப்புக் கிட்டியது. விழா அமைப்பாளர்கள் காட்டிய உழைப்பும் உபசரிப்பும் என்னைப் பிரமிக்க வைத்து விட்டது. ஒரு நல்ல ஆரோக்கியமான இலக்கிய விழாவில் கலந்து கொண்ட மன நிறைவு எனக்குள்.
678uvamõõgaduv fzõva mõõr தோழர், நீங்கள். அவர் ஒருதடவை கட்ட நமது காட்டுக்கு வந்து சென்றதில்ைை. நீங்கள் மனதார முயற்சித்தால் அவரை இங்கு அழைத்துக்கெனவிக்காைம். இந்த எனது யோசனையைக் கவனத்தின் தொன்விர்க7ை72
ரத்மலானை. ஆர். ஜெகதீசன்.
2 எனக்கும் அவரை அழைக்க வேண்டும் என்பதே நீண்ட நாள் விருப்பம். “ஞானபீட விருது பெற்ற நம்மவர் அவர். சூழ்நிலை சாதகமாக
மல்லிகை ஜூ 2007 & 70

இருந்தால் இந்தவருடத்துக்குள்ளேயே அவரை அழைத்துக் கெளரவிக்க முயலுகின்றோம்.
ΣΚ. நண்பர் ஏஜேயை நீங்களெல்ாைம்
மறந்து விட்டீர்களா?
யாழ்ப்பாணம். எஸ். ஜெபநேசன்.
2 அப்படி நீங்களெல்லாம் நினைத்து விட வேண்டாம். அவரைப் பற்றித் தினசரிநண்பர்கள் கூடுமிடங்கிளில்
பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அவர் மறைந்த முதலாவது ஆண்டில் அவரது ஞாபகார்த்தமாகப் பொறுப்பான ஒர் இலக்கிய நிகழ்வை நடத்திவைக்க விரும்புகின்றோம்.
உதிைல் ஆகப் பழைய பத்திரிகையின் பெயர் என்ன? அது எங்கிருந்து எந்த ஆண்டில் என்ன பெயரில் வெளிவந்தது? d9ya) (29urto, ayara?aib uWasdi aj7u
பத்திரிகையின் பெயர் என்ன?
கல்முனை. எம். ராமதேவன்.
23 உலகிலேயே ஆகப் பழமை வாய்ந்த பத்திரிகை ஜெர்மனியிலிருந்து
வெளிவந்தது. விகாைேமா என்ற
அந்தப் பத்திரிகை 1470ம் ஆண்டு
வெளிவந்ததாகும்.
உலகிலேயே மிகச் சிறிய
பத்திரிகை பிரேஸிலில் இருந்து வெளியாகும் வேறாயா என்றபத்திரிகை யாகும். பக்கங்கள் 10 கொண்ட அதன் உயரம் ஓரங்குலம் மட்டுமே.
X நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கி றோமே இந்தப் பூமி. இதன் எடை என்ன?
மூதூர். க. மனேகரி.
சி நாம் வாழும் இந்த பூமியின் மொத்த எடை 50 கோடியே 88 லட்சத்து 50 ஆயிரத்து 160 டன்கள்.
X மல்லிகை கொழும்பில் இருந்து வெளிவரத் தொடங்கிய ஆண்கு என்ன?
ஜாஎல. எஸ். ராமதாஸ்,
2 5.2.97ல் இருந்துதான் மல்லிகை
கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கிய
காலமாகும்.
>< இன்று இக்ைகிய உதிைல் பலராலும்
விதந்தோதப்பரும் "மணிக் கொடி’ எந்த
ஆண்டில் வெளிவந்தது.
நெல்லியடி. ஆர். முகுந்தன்.
இ 17, 9, 1933ல் சென்னையில்
இருந்து வெளிவந்தது, இந்த இலக்கிய இதழ்.
区 புதுமைப் பித்தனை ாேகரில் பார்த்து
விட வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு
அப்போது ஏற்பட்டதுண்டா?
கிளிநொச்சி.
இ வளர்ச்சியடையாத வயது அப்போது
எனக்கு. அத்தகைய ஆசைகள் அரும்பு விடாத காலம். ஆனால், பிற்காலத்தில்
எம். ராஜேஸ்வரன்.
அவரது மனைவி கமலாவையும் மகள்
மல்லிகை ஜூ 2007 & 71

Page 38
தினகரியையும் சென்னையில் சென்று பார்த்திருக்கிறேன். வித்தனை ஒருதட வை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் ஈடேறவில்லை. முடிவில் ஜெயகாந்த னைத்தான் சென்னையில் பார்த்தேன். பழகினேன்.
தொடர்ந்து மல்லிகை அட்டைப்ப டங்க7ைாக இந்த நாட்குக் கலைஞர்கள், சாதனையாளர்களாகப் பிரசுரித்துவருகின் றிர்களே, அதன் நோக்கம் என்ன?
நல்லூர், ஆர். எஸ். தவன். மி எனது நோக்கம் நீண்ட நாளைய திட்டம். இன்று இது பலருக்குப் புரியா மல் கூட, இருக்கலாம். வருங்கால ஆய்வு மாணவர்களும் ஆராய்ச்சியாளர் களும் மல்லிகை இதழ்களைத் தேடிக் கண்டடைவார்கள். ஆய்வு செய்வார்கள். அப்பொழுதுதான் மல்லிகை ஆசிரியரின் தீர்க்கதரிசனம் பலருக்கு விளங்கும்
42-வது ஆண்கு மர்ைவெளிவந்ததன் பின்னர்அதனதுஅனுபவங்கள்என்னென்ன? ஆர். மகேந்திரன்.
23 வெளிநாடுகளில் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்தன. வேறெந்த ஆண்டுமலர்களையும்விட, இந்த ஆண்டு மலர்தான் துரிதகதியில் விற்றுத் தீர்ந்தன. 43-வது ஆண்டு மலருக்கான அடிப்படை வேலைகளை இப்போதே ஆரம்பித்து விட்டேன். வெகு உற்சாகமாகக் காரியங்கள் நடந்தேறி வருகின்றன.
கொழும்பு - 6.
X மல்லிகையின் ஆரம்ப மூஸ்ைதானமே வட பிரதேசம்தான். குறிப்பாக யாழ்பான நகரம் மட்கும்தான். இன்றைய இந்தப் போர்க்கால நெருக்கடியில், போக்குவர
த்துக் கஷ்டமான நிைையில் மன்லிகையின் ஆரம்ப காரைலிகர்களுக்கு ஒழுங்காக மல்லிகை இதழ்கள் பேராய்ச் சேருகின்ற
6zo76afr72
மாத்தளை. செல்வி சரோஜினி.
2 இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வதென்றே புரியவில்லை.
மல்லிகைக்குப் பசளையிட்டு, நீர்
பாய்ச்சி வளர்த்தெடுத்த பெருமக்கள் வட பிரதேசத்து மக்களே. இன்று போக்குவரத்து இடைஞ்சல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் திண்டாடும் மக்களும் இப் பிரதேசத்து மக்களே. என்னால் இயன்றவரை மல்லிகையை ஆரம்ப காலம் தொட்டு நேசித்து வரும் இலக்கியச் சுவைஞர்கள் கரங்களுக்கு மல்லிகை போய்ச்சேர ஆவன செய்து
வருகின்றேன். காலம் சற்றுச் சுணங்கி
னாலும் நிச்சயம் மல்லிகை அவர்களது கைகளைச் சென்றடைந்து விடும் எனத் திடமாக நம்புகிறேன்.
மல்லிகைக்காக-அதன் இதுாடர்லூவுக்காகsilizeirutdooiboff Diaowróutiunasoof நான் மனப்பூர்வமாகப் புரிந்து கொள்கின் றேன். என்னைப் போன்றவர்கள் எந்த வழிதுறையின் உங்களுக்கு உதவி
pinfluoraaibo
நீர்கொழும்பு. எஸ். நவநீதன்.
மெய்யாகவே நீங்கள் எனது சிரமத்தைப் புரிந்து கொண்டால் மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் விற்பனைக்கு உதவலாம். சந்தா சேர்த்துத் தரலாம். அதற்குத்தான் வழிமுறைகள் எத்தனையோ உண்டே
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Ouick Services on
DIGITAL OFFSET PRESS hp indigo skôNICA MINOLTA
AiS SSLLLAAAAASSAASAASS SSSAAA S S AAA S S SAAAAAAAAq ALAAS S SHALSAAAA ޙީ&;%ޒކީ
Dicital Machine
Y. wers. . . صب
ترتيب
We have introduced
ouR PRODUCI
DATABASE PRINT NG %భ్యళ BRocHuREs, CATALOGUES, SQuVENRS, BOOKMABKS, SRtt in A* NAMETAGs, CD/DVD covers colougBioDATASTickeRs
NviTATION CARDs, ProjecTREPORTSBOOKeoVERMENucARD GARMEN TAGS, THANKING CARDS, CERTIFICATES, Books * POSTERS, CD STOMMER TRANSPARENCY SHEET, PLASTIC CARDS, SCRATCH CARDS. VISTING CARDS,
(OHAPPYDIGITAL CENTRE (Pvt) Ltd
Head Office Branch No: 75/1/1, Sri Sumanatissa Mawatta, No. 107 B, 1/1, Galle Road, Colombo-12, Sri Lanka.
lel: +94 11 493733ó Tel: 0119553590
web : www.happydigital centre.com email: infoGhappy digitalcentre.com

Page 39
1: ܒܵ
-
|- ! -|- |-
 

2007