கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2007.07

Page 1
50வது ஆண்டை நோக்கி.
பதிப்புத் துறையிலு
566) - 30/-
 

b பதிவு செய்தவர்
ಲಿಡಿಟಿ) 2007

Page 2
  

Page 3
தினசரி உாடிஉே தீக்கித் தினற வைக்கின்றது.
வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. இது பாமர மக்களைப் பெரிதும் பாதிக்கத் தொடங்கி விட்டது. அன்றன்றாடு உடலால் பாடுபட்டு உழைக்கும் பாமர மக்கள் படும் துயரமும் மனக் கிலேசமும் சொல்லில் அடங்காதவை.
பாமர மக்கள் அன்றன்றாடு பாவிக்கும் மண்ணெண்ணையின் விலை திடீ ரென அதிகரித்தது, அம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. பெற்றோல், டீசல், காஷ் விலையேற்றத்தினால் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதையும், அது பெரும்பாலும் சாதாரண உழைக்கும் மக்களை பெரும்பாலும் பாதித்துள்ளதையும் நாம் இந்தக் கட்டத்தில் தீட்டிக் காட்ட விரும்புகின்றோம். பொதுவாக பாமர உழைக்கும் மக்கள் ரொம்பவும் சிரமப்படுகின்றனர்.
தொடர் உள்நாட்டு யுத்தம் அவர்களது இயல்பு வாழ்கையையே சீர்குலைத்து விட்டது. அதன் நேரடிப் பாதிப்புக் கொஞ்சம் கொஞ்சமாக பொது மக்களின் தினசரி வாழ்கையையே எத்துணை தூரம் சீர்கெடுக்கும் என்பதை இன்று நாம் நிதர்சனமாகக் கண்டு கவலையடைகின்றோம்.
இந்த வாழ்வுச் சங்கடத்தில் இந்த மண்ணில் வாழும் அனைவருமே சிக்கித் தவிப்பது எதார்த்த உண்மையாகும்.
இந்தச் சர்வ சங்கடங்களிலும் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழிதான் உண்டு. அது, இந்த மண்ணில் நடக்கும் சகோதரச் சண்டிை யுத்த நிறுத்தமாகும்.
உலகத்தில் பல்வேறு நாடுகளில் இதைவிடப் பாரிய பிரச்சினைகளைஉள்நாட்டு சிக்கல்களை பரஸ்பரம் பேசியே தீர்க்கின்றனர். உலகத்தில் பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்று கூட இல்லை.
எனவே, மூன்று தஸாப்தங்களுக்கு மேலாக இந்த மண்ணில் நடை பெற்றுவரும் பரஸ்பர இன அழிவுகளை நிறுத்தி, பேச்சு வார்த்தைகள் மூலம் ஒரு சுமுகமான சூழ்நிலையைக் கட்டியெழுப்பினால் தான் பாமர மக்கள் தமது சுய வாழ்வில் இன்று உள்ளாக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் எனத் தெளிவாக எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்.
 

பண்டிதத் தமிழைப்
படைப்பிலக்கியத்தில்
புகுத்திய முதல்வர் சு. வே.
தெளிவத்தை ஜோசப்.
ஈழத்து இலக்கிய உலகில் சி.வி என்ற இரண்டெழுத்தால் அன்புடனும், உரிமையுடனும், இலக்கியப் பெருமையுடனும் அழைக்கப்படும் அமரர் சி.வி. வேலுப்பிள்ளை போலவே சு. வே. என்னும் இரண்டெழுத்தால் ஈழத்து இலக்கிய உலகைப் பெருமைப் படுத்தியவர் பண்டிதர் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை.
ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்துவிட்ட சு.வே. அவர்கள் தனது 86ஆவது வயதில் கொழும்பில் அமரர் ஆனார். (22.06.2007).
24.05.1921இல் நாவற்குழியில் பிறந்த சு.வே மரபுவழிக் கல்விப் பாரம்பரியத்தில் வந்தவர். பண்டித மரபினுாடானத் தமிழாசிரியப் பரம்பரையைச் சார்ந்தவர்.
'திருநெல்வேலி சைவாசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்களின் ஆசிரியத்துவத்தின் கீழ் பழந்தமிழ் இலக்கியம், ஈழத்து இலக்கியம் என்னும் இரசனை உணர்வுடன் உருவானவர் திரு. சு.வே.
இலக்கியத்தை இரசனைக்காகச் சுவைப்பது என்பது ஒரு ஆரம்ப நிலை மட்டுமே. இரசனை என்கின்ற சுவைத்தலின் இயக்கம் இவரை எழுத்துலகிற்குள் நகர்த்துகிறது.
இருபது வயதில் எழுத்துப் பணிக்குள் இறங்குகின்றார். ஈழகேசரியின் இலக்கியப் பண்ணை அவரை இருகரம் நீட்டி வரவேற்றது. சிறுகதைகள்; சிறுவர்களுக்கான கதைகள், இலக்கியக் கட்டுரைகள், உருவகக் கதைகள், நாடகம் என்று இலக்கிய வகைகள் அவருக்குள் விரிவு பெறத் தொடங்கின.
நல்ல கருத்துக்களைப் பிரதிபலிப்பதால், ஒன்று இலக்கியமாகிவிடுவதில்லை. நல்ல கருத்தை நல்ல கலையழகோடு பிரதிபலிப்பதுதான் இலக்கியமாகும். என்னும்

Page 4
கருத்தியலுடன் மிகக் கவனமாக
ணைந்து செயற்பட்டவர் சு.வே.
邑j
இவருடைய சிறுகதைகள் ஒரு தொகுதியாக "மண்வாசனை" என்னும் மகுடத்துடன் எழுபதுகளின் பிற்கூறில் வெளிவந்தது. இக்கதைகள் பற்றி இந் நூலில் சு.வே இப்படிக் குறிக்கின்றார்.
இவைகள் என் குழந்தைகள். நான் இவற்றின் தாய். எண்ணமும் சிந்தனையும் யதார்த்தமும் பிணைந்த கற்பனையே இவற்றின் தந்தை. கற்பனையின் உள்ளிட்
டால் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பண்புகள்
சத்தாய் இறங்க அஃது உரிப் பொருளா கிறது. அதுவே விந்து. என் மனமே கருவறை. இக் குழந்தைகள் இம் மண் னின் குழந்தைகள். "இ" என்ற இவ்வண் மைச் சுட்டு எங்கள் நாட்டையும், உலகை யும் சுட்டும் சுட்டு. i.
குழந்தைகளை வாழ்க்கைத் தருவின் மலர்கள் என்பர். மலர்களைப் போன்றே குழந்தைகளையும் இரசிக்க வேண்டும். அந்த இரசனை எல்லார்க்கும் நல்லது.
தனது கதைகள் பற்றி இப்படிக் கூறும் சு. வே அவர்கள், இத்தொகுதி வெளிவர உதவிய ஈழகேசரி அதிபர் நா. பொன் னையா, மற்றும் மு. சபாரத்தினம் ஆகி யோர்களுக்கும் நன்றியும் கூறியுள்ளார்.
இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு 1972 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது.
சொக்கனின் "கடல் சு. வேயின் ‘மண்வாசனை' ஆகிய இரண்டு சிறு கதைத் தொகுதிகளும் அந்த ஆண்டு
க்கான (1972) சாகித்திய விருதைப்
பகிர்ந்து கொண்டன.
மல்லிகை ஜூலை 2007 3
1958இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. சு. வேயின் எழுத்து ப்பணிகள் கலைச்செல்வியுடன் நெருக்க மானவைகளாக இருந்தன. 1958 கார்த் திகை இதழ் கலைச்செல்வியில் இவர் எழுதிய மணற் கோயில்’ என்னும் உருவ கக் கதை மூதறிஞர் ராஜாஜி அவர்களால் வியந்து பாராட்டப்பட்டது.
"கடந்த சில வருடங்களில் நான் படித்த கதைகளுள் சிறந்த கதை இந்த "மணற் கோயில்", நீயும் படித்துப் பார் என்று மீ.ப. சோமசுந்தரம் அவர்களிடம் ராஜாஜி கூறினாராம்.
சு.வேயின் உருவகக் கதைகளை மணற் கோயில் என்னும் தலைப்பில் வெளியிட்ட "மித்ர' வின் எஸ். பொ. 'உருவகக் கதை பற்றிய தரிசனம் எனக்குத் தெளிவாகவும் இலகுவாகவும் வாய்ப்பதற்கு உபகாரிகளாய் அமைந் தோருள் சு.வே மட்டுமே ஈழத்தவர் என்பதை நன்றியறிதலுடன் நிதானிக்க முடிகின்றது. புண்டிதமணி வழி யாழ்ப்பாண மண்ணில் விழைந்த செழுமைத் தமிழைப் படைப்பிலக்கி யத்தில் புகுத்திய மூலவர் என்றெழுது கின்றார். (மணற் கோயில் மித்ர வெளியீடு 1999- முன்னீடு)
சு.வே யின் சிறுகதைகள் "மண் வாசனை', 'பாற்காவடி' ஆகிய இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாகாணக் கல்வி பண்
பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை
அமைச்சுக்காக செங்கை ஆழியான்
தொகுத்தளித்த மறுமலர்ச்சிக் கதைகள்
தொகுதியின் இரண்டு கதைகளும்; ஈழ
盛4

கேசரிச் சிறுகதைகள் தொகுதியில் ஒரு கதையும், பூபாலசிங்கம் புத்தகசாலை அதி பர் முநிதரசிங்கிற்காகச் செங்கை ஆழியான் தொகுத்த ஈழத்து முன்னோடிச் சிறு கதைகள் தொகுதியில் ஒரு கதையும், செ.
யோகநாதன் யோ. சுந்தரலட்சுமி தொகுத்த
‘இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறு கதைகள் தொகுதி இரண்டில் ஒரு கதை யும் இடம் பெற்றுள்ளன.
சிறுகதைத் துறையை விடவும் சு. வே அவர்களுக்கு வெற்றியையும், அழியாத ஒரு இலக்கியத் தடத்தினையும் பெற்றுத் தருபவை அவருடைய உருவகக் கதை s(36T.
சு.வே யின் இலக்கிய வெற்றி சங்கச்
சான்றோர் போற்றிய மரபுகளின்
மெய்ம்மை யையும் மீள் உயிர்ப்பையும்"
யாழ் மண்ணின் வனப்பிலும் வாழ்க்கை யிலும் கண்டு ஆனந்தித்தமையாகும். நவீன தமிழ் இலக்கியத்திற்கு உருவகக் கதை என்னும் வடிவத்தினை வகுத்த மைத்து உபகரித்தவர். சு. வே யின் இக் கதைச் சாதனை ஈழத்து இலக்கியத் துக்குப் பெருமை சேர்க்கும் வரலா றாகும். என்றெழு துகிறார் எஸ். பொ. (மணற் கோயில் முன்னிடு)
மானுடத்தின் தமிழ் கூடல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஒக்டோபர் 2002 இல் நான்கு நாள் விழாவாக நடந்தபோது கொழும்பிலிருந்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று நிறையப் பேர் கலந்து கொண்டனர்.
திரு. டொமினிக் ஜிவா, அமரர் கார்மேகம், படப்பிடிப்பாளர் மோசஸ், நான் ஆகியோர் ஒரு அறையில் தங்கினோம்.
பலவிதமான இலக்கிய உரையாடல் களுக்கு மத்தியில் கார்மேகம் கூறினார் ஜோ, எப்படியாவது சு. வேயை வீட்டுக்குப் போய்க் காணவேண்டும்' என்று.
எனக்கு வியப்பாக இருந்தது என்ன விஷேசம் என்று வினவினேன். அவர் எனது ஆசிரியர். என்னுடைய குரு. தமிழ் கற்றுத் தந்தவர் என்றார் கார்மேகம்.
ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியரான சு. வே மலையகத்தின் ஹற்றன், டிக்கோயா ஆகிய இடங்களில் ஆசிரியப் பணியா
ற்றியவர்.
"டிக்கோயா ஆசுப்பத்திரி வெளிவிறாந் தையில் கூண்டிலடைபட்ட புலி போல் கணமேனும் ஓயாது சுற்றிச் சுழன்று நான் அங்குமிங்குமாய் நடக்கின்றேன். என்று ஒருகதையில் எழுதுகின்றார் க. வே.
விறற்றன் சென்ட். பொஸ்கோஸ் கல்லூரியில் கற்றவர் திரு. கார்மேகம். அறுபதுகளில் வீரகேசரியில் இணைந்து ஒரு கால் நூற்றாண்டு காலம் பணியாற்றி மலையக எழுத்துக்கு வளமும் வாய்ப்பும் அளித்தவர். அவரின் தமிழுணர்வும், பத்திரிகையுலகச் சோபிப்பும் தமிழ் பண்டிதர் சு. வே யின் ஆசிரியத்துவத்தின் மாட்சியை நிரூப்பிக்கின்றன.
அமரர் சு.வேயின் ஆசிரியப்பணி, இலக்கியப்பணி ஆகியவை உயிர்ப்புடன் நிலைத்திருக்கும்.
என்றும்
பிறப்பு: 24.05.1921 (நாவற்குழி) இறப்பு: 22.06.2007 (கொழும்பு)
மல்லிகை ஜூலை 2007 & 5

Page 5
9|l 60llulb
திட்டமிடல், கடின உழை. விடாமுயற்சி =இரத்தினவேலோன்
— 6TLfb. G8a5. முருகானந்தன்
வளைந்தால் முறிந்து விடுவாரோ என்று பார்ப்பவர்கள்ைப் பதைபதைக்க வைக்கும் மெல்லிய உடல் கொண்ட அந்த இளைஞன் மிகுந்த சங்கோசத்துடன் வந்து கதிரையின் ஒரமாக அடக்க ஒடுக்கமாக அமர்ந்தார்; இடம் எனது பருத்தித்துறை டிஸ்பென்சரியின் பின்புறத்திலுள்ள வீட்டின் வரவேற்பறை. 1984ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருமதி கோகிலா மகேந்திரனுடன் இணைந்து வெளியிட்ட தனது முதலாவது நூலான ‘அறிமுக விழா'வின் வெளியீட்டு விழாவில் என்னையும் உரையாற்ற அழைக்க வந்து அறிமுகமானார்.
நினைத்துப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. சுமார் இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்டன. இவரோடு ஒத்த பலரும் வண்டியும், தொந்தியும் ல்வத்து, நடக்கவும் பேசவும் மூச்சிளைத்துத் திணறுகையில், இவர் அன்றைய அதே வேக நடையில் கொழும்பு வீதிகளை அடக்கி வெல்கிறார். மற்றவர்கள் கர்வ மூட்டைகளைத் தலை கொள்ளாமல் தூக்கிக் கொண்டு, ‘என்னை வென்றவன் யாருமில்லை’ போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு, பெரிய மனித தோரணையில் திரியும் போது இவர் அதே பழைய வேலோனாகத் தன் கருமும் தானுமாக’ என அமைதியாக இருக்கிறார்.
ஏ. எல் படித்து முடிந்ததும் கே. ஜி நிறுவனத்தில் கணக்கு இலிகிதர் பதவி வகித்தவர். பின் வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு முகாமையாளராக பணியாற்றிய திரு எஸ். பாலச்சந்திரன் பிரிண்ட் கிராபிக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தபோது அதில் இணைந்து முகாமையாளராகப் பணியாற்றிய வேலோன் தற்பொழுது தினக்குரல் பத்திரிகையின் விளம்பரப் பகுதியின் உதவி முகாமையாளராகப் பணியாற்றுகிறார். சிறுக ஆரம்பித்த அவரது தொழில் வாழ்க்கை இன்று உயர் பதவியை எட்டிவிட்டபோதும் இன்னும் அதே பழைய தோற்றம்தான். கண்ணைக் குத்தாத மென்நிற ஆடைகள், நீளக்கை சேட், எப்பொழுதும் முழங்கைக்கு மேல் குறுகலான மடிப்புகளாக ஒழுங்காக மடித்து
மல்லிகை ஜூலை 2007 奉 6

விடப்பட்டிருக்கும். இறுகக் கட்டிய பெல்ற், ரப்பர் செருப்பு. இவற்றிற்கு மேலாகக் கறுத்த குறும்பை தோளில் தொங்கிக் கொண்டிருக்கும்.
தொழில் ரீதியாக மேலெழுவது எவருமே எய்ய விரும்பும் இலக்கு த்தான். கால ஓட்டத்தில் அதில் பெரும் பாலானவர்கள் வெற்றி பெறவும் செய் வர். ஆயினும் இரத்தினவேலோன் மூன்று வெவ்வேறு துறைகளில் தன் தடங்களைப் பதித்ததுடன் நில்லாது, அவற்றின் முன்னணி நிலைக்குத் தன் னை வளர்த்துக் கெண்டதுதான் குறிப் பிடத்தக்கது. இலக்கியத்துறையும், நூல் வெளியீட்டுத் துறையும் (மீரா பதிப்பகம்) தான் ஏனைய இரண்டு துறைகளாகும்.
இலக்கியத்துறை இவரது உயி ரோடு பிறந்தது. உள்ளத்தோடு கலந்தது. தனது பத்தொன்பது வயது முதலே படைப்பிலக்கியத்துறையில் கால் வைத்தவர் இவர். இலக்கியத் திலும் சிறுகதைத் துறைதான் இவரது அக்கறைக்குரியதாகவும், இவருக்குக் கிளர்ச்சியும் ஆர்வமும் ஊட்டுவதா கவும் இருந்தது. இவரது முதல் சிறு கதையான 'சுமையின் பங்காளி கள்' தினகரன் ஞாயிறு இதழில் 1977 காலப் பகுதியில் வெளியானது. பத்தொன்பது வயதில் களத்தில் இறங்கிய இவரது படைப்புகள் ஈழநாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து வெளி வரலாயின. தினக்குரல் ஆரம்பமான பின்னர் அதிலும் இவரது சிறுகதைகள்
கணிசமான அளவு பிரசுரமாகின. இலக்கிய சஞ்சிகை களைப் பொறுத் தவரையில் சுடர், மல்லிகை ஆகியன இவரது படைப்பு களை ஆரம்ப காலம் முதல் வெளியிட்டு ஊக்குவித்ததைக் குறிப்பிட வேண்டும். இரத்தின வேலோனின் ஆரம்ப காலப் படைப் பாக்க முயற்சிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளான தானம்', 'பாரதி, புத்துணர்ச்சி, புதிய பயணம்' ஆகியன மல்லிகை யிலேயே வெளிவந்ததும்
நினைவிரு க்கிறது.
படைப்பிலக்கியத்துறையைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கிய பிரிவினராகப் படைப்பாளிகளை இனங் காணலாம்! இயல்பாகவே உயர் படை ப்பாற்றல் பெற்றவர்கள் சிலர். முரண் கள் நிறைந்த சமூகத் தளமும், ஆற்றுப் படுத்தும் குடும்பப் பங்களிப்பும், ஆக்க பூர்வமான விமர்சனங்களால் உந்தி உயர்த்தும் இலக்கியக்காரர்களின் தொடர்பும் கிடைக்க ஆரம்பத்திலேயே நல்ல படைப்புகளைத் தந்து கவ னத்தைப் பெறுவார்கள் இவர்கள். இர ண்டாவது பிரிவினர் ஆரம்பத்தில் ஒர ளவு படைப்பாற்றல் புெற்றிருந்தாலும் ஏனைய காரணிகள் ஒத்துழைக்கா ததால் ஆரம்பத்திலேயே ஜொலிக்க முடி யாதவர்கள். கூர்ந்த அவதானிப்பாலும்,
தேடித் தேடி வாசித்துத் தமது மொழி
யறிவை வளப்படுத்துவதாலும், நேர் மையான விமர்சனங்களை அக்கறை யுடன் கருத்தில் கொண்டு மேலும் கடு மையாக முயற்சிப்பதாலும் 5Log. Luéolப்பாற்றலை வளர்த்துக் கொள்பவர்கள்.
மல்லிகை ஜூலை 2007 辜 7

Page 6
இரத்தினவேலோன் இரண்டாவது வகையைச் சார்ந்தவர். 'ஒற்றைப் பனை', 'தனம்’ போன்ற சில நல்ல கதைகளை ஆரம்ப கட்டத்திலேயே தந்திருத்தாலும் நேர்ந்த படைப்பா ளியாகத் தன்னை இனங் காட்டுவதற்கு பதினைந்து வருடங்களுக்கு மேல் எடுத்தது. பிரபல எழுத்தாளரும் இவ ரது தாய் மாமனுமான டாக்டர் புலோ லியூர் க. சதாசிவம், இவரது இளமைக் காலத் தோழனும் மிகச் சிறந்த சிறு கதைப் படைப்பாளியுமான இரஞ்ச குமார், நண்பனாகிய நான் போன்ற பலரும் நேருக்கு நேர் முலாம் பூசாது கூறும் விமர்சனங்களை அக்கறை (3uuG Goasu. 6SLos 60 as6 Tsö துவண்டுவிடாது தன்னை நெறிப்படுத் திக் கொள்வார். நல்ல எழுத்துக்க ளோடு தன்னைப் பரிச்சயப் படுத்திக் கொள்வார். விடாது முயற்சி செய்வார். இவற்றின் பலனாக 'நிலாக் காலம்", 'நெஞ்சாங் கூட்டு நினைவுகள்", வேட்டை", "சரவணை" போன்ற மிகத் தரமான சிறுகதைகளை இவரால் படைக்க முடிந்திருக்கிறது. கால த்தால் நீர்த்துப் போகாது, வரவர தன்னை இவரால் மெருகூட்ட முடிந் திருக்கிறது. இந்த வகையில் வேட் டை' என்ற சிறு கதைக்குக் கணக செந்தி நாதன் கதா விருது கிடைத்த தும் குறிப்பிடத்தக்கது.
சிறுகதைத்துறையில் பரீட்சார்த்த முயற்சியாகச் சிறுகதையின் முதற் பாதியை ஒருவர் தொடங்க, மற்றொரு வர் மிகுதிப் பாதியை எழுதி முடிக்கும்
இணை கதை முய்ற்சியில் இவர் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளார். வீரகேசரி பத்திரிகையின் இலக்கிய முயற்சி.
புதிய பயணம்', 'விடியட்டும் பார்ப்போம்', 'நிலாக்காலம்', 'விடிய லுக்கு முன்', 'நெஞ்சாங்கூட்டு நினை வுகள்' ஆகியவவை ஐந்தும் இவரது சிறுகதைத் தொகுதிகளாகும். 'திக்கற்ற வர்கள் சென்னை மணிமேகலைப் பிர சுரமாகும்.
இலக்கியத்தில் இவருக்குக் கை வந்த இன்னுமொரு துறை பத்தி எழுத் தும் விமர்சனமுமாகும். சில வருடங் களுக்கு முன் ஞாயிறு தினக்குரலில் 'அண்மைக் கால அறுவடைகள்' என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதிய பத்தி, எழுத்தாளர்களிடமும் மிகவும் பிரபல் யமாக இருந்தது. சிறுகதை நூல்கள் தான் இவரால் பெருமளவு விமர்சிக் கப்பட்டாலும், நாவல், கவிதை, அழகி யல் நூல்களும் இவரது விமர்சனத்துக் குள்ளாகின. மிகுந்த தேடலுடன் எழுத ப்பட்ட குறுகிய விமர்சனங்கள் அவை. குறிப்பிட்ட நூல் பற்றி விமர்சனத்தோடு, நூலாசிரியர் பற்றிய குறிப்பு, அக்கால கட்டத்தில் எழுதிய ஏனைய படைப் பாளிகள், அவர்களின் நூல்கள் பற்றிய குறிப்பு, வரலாற்றுப் பின்னணி என ஒரு வரையறுக்கப்பட்ட கட்டமைப்புக்குள் எழுதப்பட்டவை. திட்டமிட்ட அடிப்படை யில் அக் கட்டுரைகள் எழுதப்பட்ட தால், பின்பு நூலாக அதே பெயரில் தொகுக்கப்பட மிக இலகுவாயிற்று.
மல்லிகை ஜூலை 2007 靡 8

ஆதவன், ஞானம், சரிநிகர் ஆகி யவற்றிலும் இவரது விமர்சனக் கட்டு ரைகள் வெளியாயின. இதன் பலனாக, புதிய சகத்திர புலர்வின் முன் ஈழச் சிறு கதைகள் என்பது இவரது அடுத்த பத்தி எழுத்துத் தொகுப்பாயிற்று.
மேற் குறிப்பிட்ட இரண்டு கட்டு ரைத் தொகுப்புகளும், முன்னர் குறிப் பிட்ட ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் கொழும்பு மீரா பதிப்பகப் பிரசுரங்க ளாகும். இரத்தினவேலோனுடைய ஏழு தொகுப்புகள் அடங்கலாக மொத்தம் 65 நூல்களை மீரா பிரசுரம் வெளியிட் டுள்ளது. இலங்கைத் தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் இது ஒரு அகர சாதனையாகும். இலங்கை நூல்க ளுக்கு குறைந்தளவே தமிழ் வாசகப் பரப்பே உள்ள இலங்கையில், விநி யோக வளமும், அரச ஆதரவும் குன் றிய நிலையில் நூல் வெளியீட்டுத் துறை மிகவும் சிக்கலானது. ஏழுத்தா ளர்கள் தமது நூல் களைத் தாமே வெளியிட்டுக் கையைச் சுட்டுக் கொள் வதுதான் வழமை. ஜீவாவின் மல்லி கைப் பந்தல், ஹல்கின்ன தமிழ்மன்றம் ஆகியவற்றுடன் மீரா பதிப்பகம் மட்டுமே தளராமல் நூல் வெளியீட்டில் தொடர்ந்து ஈடுபடுகின்றது. எனது நூலான "நீங்கள் நலமாக' சிறப்பாக வெளிவந்து , சாகித்ய விருது பெற்ற துடன் 4 மீள்பதிப்புகளைக் கண்டதும் மீரா பிரசுரத்திலேயே.
மீரா பிரசுரம் சாதனை படைப்பத ற்குக் காரணம் அதன் நிறுவுனரின்
திட்டமிடுதலும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான்! அந்த நிறுவுனர் வேறு யாருமல்ல எமது புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் அவர்கள் தான். மீரா பிரசுரத்தின் முதல் நூலான புதிய பயணம் வெளிவருவதற்கு வழி காட்டியாக இருந்ததுடன் ஒத்தாசை யும் புரிந்தவர் திரு. என். பாலச் சந்திரன் (வீரகேசரி, பிரிண்ட் கிரபிக்) அவர்கள்தான். வேலோன் அவரை எப்பொழுதும் நன்றிக் கடனுடன் நினைவு கூர்வது வழக்கம். கடந்த பதினொரு வருடங்களாக இயங்கி வரும் மீரா பிரசுரம் பலவகையான நூல் களை வெளியிட்டுள்ளது. சிறுகதை, குறுநாவல், கவிதை, நாடகம், விமர்ச னம், சினிமா, அறிவியல், அழகியல் எனப்பல்துறை நூல்களை வெளியிட்டு ள்ளது. அழகிய வடிவமைப்பு, நேர்த்தி யான கட்டமைப்பு, எழுத்துப் பிழைகள் அற்ற தட்டச்சு ஆகியவற்றால் தன்னி கரற்றுத் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இவற்றிற்கு மேலாக "லண்டன் பூபாளராகங்கள் நடாத்தும் உலகளா விய சிறுகதைப் போட்டிகளின் இல ங்கை இணைப்பாளராகவும் இவர் கட மையாற்றுகிறார். இதுவரை இவரது ஆதரவுடன் நான்கு சிறுகதைப் போட் டிகள் நடாத்தப்பட்டு, சிறந்த படைப்பு களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டு ள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு லண்
டனில் நடந்த அதன் பரிசளிப்பு விழாவில்
இவர் நேரிடையாகக் கலந்து கொண் டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவரது படைப்பாற்றலுக்கு அங்கீ
மல்லிகை ஜூலை 2007 奉 9

Page 7
காரம் அளிப்பது போல நிலாக்காலம்’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு வடகிழக்கு மாகாண சபையின் 'சாகி த்ய விருது' கிடைத்தது. மேலும் எம். திருமகள் எனும் யாழ் பல்கலைக்கழக மாணவி தமிழ்ச் சிறப்புக் கலைமானித் தேர்வின் நிறைவாண்டுப் பரீட்சையின் பொருட்டு இவரது சிறுகதைகளை ஆய்வு செய்து சமர்ப்பித்துச் சித்தி எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இரத்தினவேலோன் ਲLD இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக வெளியீட்டு விழாவில் பேச அழைக்க வந்த நண்பனானவர். மிக அமைதியா னவர். அதிர்ந்து பேசாதவர். அதிகம் பேசாதவரும் கூட. தலையாட்டி ஊக்கு வித்து மற்றவர் பேசுவதைக் கூர்ந்து அவதான்ரிப்பவர். மாற்றுக் கருத்துக் களுக்கும் மதிப்பளிப்பவர். இயேசு பிரான் பிறந்த மார்கழி 25இல் பிறந்த தால் அமைதியும், பண்பும், இரக்க உணர்வும் இயல்பாகவே உள்ளன போலும்!
ஆயினும் மனிதாபிமானம் நிறைந் தவர். மற்றவர் துன்பங்களைக் கண்டு வேதனைப்படுபவர். அக்கிரமங்களை யும், அடிமைத்தனங்களையும், அநீதி களையும் பொறுத்துக் கொள்ள முடியா தவர். அவற்றிற்கு எதிராகப் போராடவும் செய்வார். இதனால் தான் அவர் படைப்பாளியாக் முடிந்தது. ஆனால் அவர் ஆவேசமாகக் கிளர்ந்தெழுந்து, ஆக்ரோசமாகப் போராடும் போராளி
யல்ல முட்டாள்த் தனமாகப் போராடு பவர் அல்ல. அமைதியாக அவதா னித்து, நிதானமாகத் திட்டமிட்டு படிப் படியாகத் தன் இலக்கை அடையும் சாணக்கியன். இந்த இயல்பு இவரது சிறுகதைகளிலும் படிவதைக் காண லாம் தானம்' சிறுகதை இந்த இயல்பு க்கு ஒரு உதாரணம்.
சைவமும், தமிழும், விவசாயமும் செழித்தோங்கி தனக்கு வாழ்வளித்த தன் பிறந்த ஊருக்கு நன்றி சொல்லி கெளரவப்படுத்துவதற்காக தனது பெயருடன் புலோலியூர்' என்ற இலக் கிய வாழ்வுக்காக இணைத்துக் கொண் டார். சிறுவயது முதல் இவருக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்திய துடன், நெறிப்படுத்திய மாமன் புலோலி பூர் க. சதா சிவம், மற்றும் உறவினர் களான புலோலியர் கந்தசாமி, புலோலியூர் தம்பையா ஆகியோரை தன்னுரை தன் பெயரில் ஒட்டவைத்து முன்னு தாரணமாக கொண்டார் என லாம். இவரின் தந்தையார் புலோலியூர் ஆறுமுகம் ஒரு கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை வழி ஒற்றி இவரும் நினைவு மலர் கவிதைகள் ஆக்குவதில் வல்லவர் என்பதும் இவரது தயாரிப்பில் முப்பதுக்கு மேற்பட்ட நினைவு மலர்கள் உருவாகி யிருப்பதும் பலருக்கும் தெரியாத செய்தியாகும்.
சொல்வதாயின், ஆழ்ந்த அவதா னிப்பு, திட்டமிடல், கடின உழைப்பு, விடா முயற்சி இவற்றிற்கு இன்னு மொரு பெயர் எனில் அது இரத்தினவே (86FT66 6T66TCu6T.O
மல்லிகை ஜூலை 2007, 3 10

அன்னை என்றொடு குெய்வம்.
- ச. முருகானந்தன்
கொடுர யுத்த அனர்த்தத்தினால் பிரதர்னபாதைகள் எல்லாம் மூடப்பட்ட பின் கடிதப் போக்குவரத்துக் கூட ஆமை வேகமடைந்து விட்டமையால், எப்போதாவதுதான் கடிதம் வரும். அப்படிக் கடிதம் வருகின்ற நாட்களில் உள்ளம் குதூகலிக்கும். அம்மா ஊர் புதினங்களையெல்லாம் எழுதி, பேரப்பிள்ளையினது சுகங்களையும் கேட்டு எழுதியிருப்பார். பேரனோடு கொஞ்சி விளையாட வேண்டும் போலிருப்பதாகவும், தாம் இருவரும் வயோதிப காலத்தில் தனிமையை உணர்வதாகவும் எழுதியதைப் படிக்கும் போது காயத்திரியின் மனதும் தவிக்கும்.
அப்பா பிடிவாதமாகத் தான் பிறந்து வளர்ந்த யாழ் மண்ணை விட்டு வன்னிக்கு வர மறுத்ததால் தான் எல்லாப் பிரச்சனைகளும் இல்லாது விட்டால் எல்லோரும் ஒரிடமாக மகிழ்வோடு இருந்திருக்கலாம். ம். கைகூடவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று கடிதம் வந்திருந்தது. குதூகலத்துடன் கடிதத்தை உடைக்கும் போது மனம் இன்னொரு புறம் திக். திக். என்று அடித்துக் கொண்டது. ஊரில் யுத்த அனர்த்தங்களில் யார் யார் இறந்திருப்பார்களோ என்று மனது குடைகிறது. இன்று கடிதத்தை அப்பா தான் எழுதியிருந்தார். அன்பு மகனுக்கும், மருமகளுக்கும் நலம் அறிய ஆவல். அம்மாவுக்குச் சுகமில்லை. மந்திகை ஆஸ்பத்திரியில் வைத்திருக்கிறோம், நெருப்புக் காய்ச்சலாம், காய்ச்சல் விடுதில்லை, டாக்குத்தர் திருப்தியாகச் சொல்லவில்லை. அம்மா உங்கள் எல்லோரையும் பார்க்க ஆசைப்படுறா. ஆறு பிள்ளையளைப் பெத்தும் அருகில் ஒருத்தருமில்லை, உன்னைத் தவிர எல்லோரும் வெளிநாடுகளிலை. எண்டாலும் போனிலை கதைக்க முடியுது. பக்கத்தில் இருக்கிற உனக்கு போன் வசதியுமில்லை. நீங்கள் எல்லோரும் வந்தால் அம்மாவின் மனசு ஆறுதலடையும். அருகிலை ஒரு பிள்ளையுமில்லையெண்டு அழுகிறா அம்மா. மருமகள் நின்டால் தன்னை வடிவாகப் பார்த்தெடுப்பர் என்டு அழுகிறா. w - /**
எனக்கு நெஞ்சை அடைக்கிறது. அம்மாவை நினைக்கும் போதெல்லாம் கடவுள் மாதிரி உணருவேன். தாய்க்குத் தலைமகன் என்டு சொல்லுவினம். நான் தலைப்பிள்ளைதான் ஆனா, அம்மா எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மாதிரித்தான் வளர்த்தா. ஆம்பிளைப்பிள்ளை, பொம்பிளைப்பிள்ளை என்டு பேதமில்லாமல் எல்லோரையும் ஒரே மாதிரித்தான் நேசிக்கிறார். அம்மா எண்டா எனக்கு கொள்ளை ஆசை. நிலாக் காட்டிச்
மல்லிகை ஜூலை 2007 奉 11

Page 8
சோறு தீத்தின அம்மா இப்ப சோறில்லாமல் படுக்கையில் கிடக்கிறா. பக்கத்தில் இருந்து தண்ணி பருக்கக் கூட அருகில் ஒரு பிள்ளையுமில்லை. இவள் காயத்திரிக்கு மாமி மேல சரியான பாசம். அம்மாவும் அப்படித்தான். மருமகள் எண்டு பாராமல் மகள் மாதிரித்தான் காயத்திரியிலை அன்பு செலுத்துவாள். வேலைப் பளுவின் மத்தி யிலும் அம்மாவின் நினைவுகள்.
அம்மா நான் எவ்வளவு குழப்படி செய்திருப்பன். கோயிலுக்குக் போய்வரே க்கை தும்புமுட்டாஸ் வாங்கித் தரேல்லை எண்டு அடம்பிடித்து அழுது உங்கட சில உரிஞ்சு விழுகிறளவுக்குக் குழப்படி செய்தி ருப்பன். நான் சின்ன வயசில சரியான
விசமம் எண்டு எல்லாரும் சொல்லுவினம்.
பால் குடிக்கேக்கை எத்தனையோ நாள் முலையைக்கடிச்சுப் புண்ணாக்கியிருக் கிறன் எண்டு ஆச்சி சொல்லிச் சிரிக்கிறவா. SDubLDrt உங்க்ட கையால என்ர விரலைப் பிடிச்சு ஆனா, ஆவன்னா எழுதப் பழகினது இப்பவும் எனக்கு நினைவிருக்கு. பிறகு சிலேற்றில் எழுதிப் பழகிறபோது துப்பல் போட்டு அழிக்கக் கூடாது எண்டு சொல்லு வியள். நான் கோபத்தில உங்களுக்கே துப்பினது ஞாபகமிருக்கு என்னுடைய குழ ப்படியளுக்கு அப்பா அடிப்பார். எத்தனை தடவை அடிவிழாமல் காப்பாற்றியிருக்கி றியள். அம்மா. வயிற்றோட்டத்திலை நான் கிடக்கேக்கை நீங்கள் அழுத அழு கையை நினைச்சால் இப்பவும் என க்கு அழுகை வரும். உச்சிலம்மனுக்கு அடியள க்கிறதெண்டும், காளிக்கு வடை மாலை சாத்திறனெண்டும், முதலைக் குழி முருக னுக்குக் காவுதண்டு செய்து தாறனெண்டும் நீங்க வைச்ச நேத்திக் கடன்கள் எல்லாம்.
ம். அம்மா நீங்க ஒரு தெய்வம் எனக்கு கடவுளிலை எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனா எனக்குத் தெரிந்த ஒரு கடவுள், ஒரே கடவுள் நீங்கதானம்மா.. உங்களுக்காக நீங்களெல்லாம் கும்பிடுற தெய்வங்களுக்கெல்லாம் நேத்தி வைக்கிற னம்மா. வறுமையோடும், நோயோடும் போராடி எங்களை வளர்த்து உருவாக்க அப்பாவும் நீங்களும் பட்ட கஷ்டங்களும், தியாகங்களும் அளப்பரியது. அம்மா. இப்ப உங்கட பிள்ளையஸ் டொக்ரர், இஞ்சினியர் என்டு பதவியாலையும், பணத்தாலையும் உயர்ந்திட்டம். ஆனால் என்னுடைய கவலையெல்லாம் கடைசிக் காலத்திலை பக்கத்திலை இருந்து உங்களைப் பார்க்க முடியவில்லையே எண்டதுதான். குத்தி இடிச்சு, சட்டை தைச்ச உங்களையும், தலைச்சுமையாக பொயிலைக் கட்டுச் சுமந்து ஈரொட்டி வியாபாரம் செய்த அப்பாவையும் எப்படி மறக்கமுடியுமம்மா? எங்களோடை வன்னிக்கு வரவும் மாட்டனெ
ண்டிட்டியள். காயத்திரிக்கு உங்களை
வைச்சுப் பார்க்க முடியவில்லையே எண்ட கவலைதான்.
அம்மாவின் நினைவுகள் மனக் கண்ணில் அலைமோதின. பொழுது சாய வும் நோயாளர்களைப் பார்த்து முடிக்கவும் சரியாக இருந்தது. வீட்டிற்குப் புறப்பட இருந்த வேளையில், வள்ளியம்மைப்பாட்டி க்குக் கடுமை எனத் தகவல் வந்தது. முதி யோர் இல்லத்திற்கு விரைந்தேன். இந்த முதியோர் இல்லம்தான் வன்னியில் இருக் கும் முதலாவது முதியோரில்லம். காலத் தின் தேவை கருதி யோக சுவாமிகள் திரு வடி நிலையத்தால், தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினரின் அனுசரணையுடன் அமை
மல்லிகை ஜூலை 2007 & 12

க்கப்பட்ட இல்லம். முதியோர் காவலர் கந்தசாமி ஐயாவின் அரும்பணியில், அனாதரவாக அல்லலுற்ற முதியவர்கள் பலர் இப்போது இங்கு ஆறுதலடை கிறார்கள். கந்தசாமி ஐயாவுடன் சேர்ந் தமையினால் எனக்கும் இவ்வில்லத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. மனிதநேயம் மிக்க இப்பணியில் ஒர் ஆத்ம திருப்தி கிடைத்து வருகிறது. இங்குள்ள முதியவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இல்லச் செயலா ளரும் நான்தான்.
முதியவர்கள் அடிக்கடி நோய்வாய்ப் படுவார்கள். எனது வேலைப் பளுவின் மத் தியிலும் அவர்களுக்குச் சிகிச்சையளித்து ஆறுதல் வார்த்தைகள் கூறுவேன். காயத்திரிக்கும் முதியோரைப் பேணலில் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. வள்ளியம்மைப் பாட்டியைப் பார்க்க விரைந்து வந்த போது அவரது நிலை கவலைக்கிடமாக இருந்தது. கடைசி நேர முயற்சிகளை மேற் கொண் டேன். பாட்டிக்கு 4 பிள்ளைகள் வெளிநாட்டி லென்றும், எல்லோரும் அவரை அநாதர வாக விட்டுவிட்டார்கள் என்பதையும் அறிய வந்தபோது நெஞ்சு பொறுக்காமல் வெதும்பி னேன். மகனே. மகனே. என்று எனது கைகளை இறுகப் பற்றியபடி பாட்டியின் ஆவி பிரிந்தது. இம் முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவே முதலா வது மரணம் என்பதால் எல்லோரும் கலங் கிப் போனோம். பராமரிப்பாளர் கீதா விம்மி விம்மி அழவே எனக்கும் அழுகை பிரிட்டுக் கொண்டு வந்தது. “அம்மா’ எனப் பாட்டி யின் கால்களைப் பற்றிப் பிடித்தபடி கதறி னேன். பாட்டியின் உடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வில், வேலைப் பளுவின்
மத்தியிலும் கலந்து கொண்டேன். முதியோர் இல்ல ஐயா கொள்ளி வைக்கும்படி என்னிடம் வேண்டினார்.
“டொக்ரர். நீங்கள் பாட்டிக்கு மகன் மாதிரி. கடைசி நேரத்தில் உங்கட கையைப் பிடிச்சபடிதான் போனவ. ஏதோ முற்பிறப்பு உறவு. நீங்களே கொள்ளி ஐயாவின்
வையுங்கோ.’ என்றார்.
வேண்டுதலை நிறைவேற்றினேன். மனதில்
ஏதோ ஒருவித ஆறுதல் ஏற்பட்டது.
அப்பாவின் கடிதம் வந்தமையால் லிவு
'ஒழுங்கு செய்து கொண்டு ஊருக்குப் போய்
வர எண்ணினேன். காயத்திரியும் உடன் வரப்போவதாகத் துடித்தாள். மிகுந்த சிரமத்தின் மத்தியில் பாஸ் எடுத்து லீவு ஒழுங்கு செய்து புறப்பட முயன்றபோது வள்ள ஒட்டம் தடைப்பட்டுப் போயிருந்தது. ஆறேழு நாட்களில் பின்னர்தான் மீண்டும் கிளாலிப் பிரயாணம் தொடங்கியது. நானும் காயத்திரியும் அம்மாவைக் கண்டு விட கோடில் இம் என்ா ஆசையுடன் புறப்பட் டோம். கரையிலே பெருங்க" ம், இன்று படகுச் சேவை நடைபெறும் எனக் கடற் போராளிகள் அறிவித்ததனால் சனங் களுக்கு மனதிலே நிம்மதி. மகிழ்வும், அவ சரமும் கூடிநின்ற ஆயிரக்கணக்கான மக் களைப் பார்த்ததும், இன்று படகு ஏறுவது சந்தேகம்தான் என்றாள் மனைவி. படகு கிடைத்தாலும் அக்கரைக்குப் போய்ச் சேர்ந்த பின்தான் நிச்சயம். கிளாலிக்கான படகுச் சேவை இரவில் மட்டும் தான் நடைபெறும். பகலில் கிளாலிக் கடலைக் கடப்பதென்றால் முடியாத காரியம். ஒரு புறம் பூநகரி முகாம், மறுபுறம் ஆனையிறவு முகாம். பகலில் கடக்க முயன்றால் கடற்
மல்லிகை ஜசலை 2007 器 13

Page 9
படையினர் வந்து துவம்சம் செய்துவிடு
வார்கள். இரவில் தான் படகுகளில் கடலே
ரியைத் தாண்ட வேண்டும். இரவிலும் கூடக் கடற்படை வருவதுண்டு. எனினும் கடற் போராளிகள் அவர்களை வரவிடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்.
முதற் தடவையாகக் கடற்பிரயாணம் காயத்திரிக்குக் கரைக்கு வந்ததும் கலங்கிய கண்களுடன் குடாக்கடலைப் பார்த்துப் பயந்தாள். “நேவி வருமா..?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு இருந்தாள். நான் ஆறுதல் சொல்லித்
தையிரியமூட்டினேன். நாம் கரையை" அடைந்தபோது மைமல் பொழுதாகி
விட்டது. அந்திசாயும் பொன்மாலைப் பொழுதில் இருள் மென்மையாகப் படர ஆரம்பித்தது. ஆலங்கேணிக் கரையில் படகுகள் கடற் பயணம் செய்ய ஆயத் தமான நிலைப்பில் நின்றன. “உச்சிலாம் மாளே. வெல்லன் பிள்ளையாரே. சன்னதியானே. வல்லிபுரக் கடவுளே.” என்று அடுக்கடுக்காகத் தெய்வங்களைக் குரல்விட்டு அழைக்கத் தொடங்கினாள் காயத்திரி. ஒருவாறு வள்ளத்தை அடைந்து, சிறிது தூரம் தள்ளிக் கொண்டு வந்து ஓடி ஏறி காயத்திரியின் அருகில் அமர்ந்து கொண்டேன். வள்ளம் சிறிது தூரம் கால்வாயில் ஒடி ஆழ்கடலை அடைந்து வேகமாக ஓடத் தொடங்கியது. இருபக் கமும் உப்பு நீர் அடித்து நனைத்தது. முதலில் குளிர்ந்தாலும் பின்னர் அதுவே
பழக்கப்பட்டு விட்டது. பூநகரிப் பக்கத்தி
லிருந்து அடிக்கடி வெளிச்சம் அடித்துக் கொண்டு இருந்தது. கடற்போராளிகளின் அதிவேகப் படகுகள் தண்ணிரைக் கிழித் துக் கொண்டு அதிவேகமாகக் குருவி பறப்
பது போல் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருந்தன.
காயத்திரி பயப்பட்டாள். “பயப்படா தயப்பா. அது பொடியளின்ர ஜெட்போர்ட்.” எண்டு தைரியமூட்டினேன். சாவாளை, மீனொன்று துள்ளி வந்து படகுக்குள் விழவே “ஐயோ.’ காயத்திரி.
எண்டு பதறினாள்
படகில் பதினைந்து பேர் இருந் தார்கள். சாமான்கள் வேறு. படகு வேகம் கொண்டு நீரைக் கிழித்துக் கொண்டு இருபுறமும் அலையடித்தபடி மிதந்து விரை ந்தது. கயிற்றில் கட்டித் தொடுக்கப்பட்ட இழுவைப் படகொன்றும் எரிபொருளின்றித் தொடர்ந்தது. படகு வெகு தூரம் வரவே கரையில் தெரிந்த வெளிச்சங்கள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது. ஆழ் கடலை அடைந்து அலையில் துள்ளி விழுந்து ஓடியது. பின் நிலவு போலும் சந்திரனைக் காணவில்லை. வானத்து நட்சத்திரங்கள் மட்டும் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அணியத்திலிருந்த ஒட்டி யின் வழிகாட்டி திடீரென்று பெருங்குரல் எடுத்தான். “அண்ணை நேவிக்காரன்
வாறான் போல கிடக்கு.”காயத்திரி என்
னைக் கட்டிக் கொண்டு தேவாரம் பாடத் தொடங்கிவிட்டாள். பக்கத்திலிருந்த இன் னொருத்தி செபம் சொல்ல ஆரம்பித்தாள். எனது இதயமும் பயத்தினால் வேகமாக அடித்தது. சிலர் அழத்தொடங்கினர். ஒரிருவர் அணியத்தின் கீழ் பாய்ந்து பதுங் கினர் “உள்ளுக்கு இறங்குங்கோ அப்பா” என்று கீழே இறங்கிவிட்ட காயத்திரி என்னை இழுத்தாள். பார்வையைப்
படரவிட்டேன். எமது படகும் சற்று வளைந்து
மல்லிகை ஜூலை 2007 شکل

திரும்பி, ஒடிய பாதையிலிருந்து வேறு பக்கமாக விலத்தி ஓட ஆரம்பித்தது.
தொடர் நெருப்புப் பொறிகள் வாண வேடிக்கை காட்டின. எதிர்த்திசையி லிருந்தும் விட்டு விட்டு நெருப்புக் கோள ங்கள் போல் சன்னங்கள் பறந்தன. “கடற் போராளி யஞக்கும் நேவிக்கும் கடும் சண்டை நடக்குது’ என்றான் அணியத்தில் நின்ற வழிகாட்டி. “கடற்போராளியள் வந்திட்டா இனிப் பயமில்லை இங்கால வரவிட மாட்டங்கள்’ என்றான் ஒட்டி. சண்டை தொடர்ந்து வள்ளங்கள் ஒருபக்கமாகப் பயணித்த
கொண்டிருக்க
வண்ணமிருந்தன. “கடற்போராளியள்தான் காயத்திரி இன்னும் உச்சில் அம்மனை விட்டபாடி
உங்கட கடவுள் என்றேன்” .
ல்லை. தூக்கக் கலக்கத்துடன் கிளாலிக் கரையை நெருங்கினோம். தூரத்தே வெளிச்சம் மங்கலாகத் தெரிய ஆரம்பித்து, பிரகாசமா கிக் கொண்டே வந்தது. படகின் வேகம் குறைந்து வந்தது. கரையைக் காயத்திரியின் முகம் மலர்ந்ததை அவ தானிக்க முடிந்தது. அவள் மட்டுமா. என் மனதிலும் ஒரு பெரும் நிம்மதி. கடற்போரா னிகளுக்கு மனதில் நன்றி சொன்னேன்.
கண்டதும்
காயத்திரி, அம்மாளைச்சிக்கு நன்றி
சொல்லியபடி வள்ளத்தை விட்டு இறங்கி
னாள். கடல் காற்றின் குளிர்மை இப்போது தெரிந்தது. உடல் நடுக்கம் எடுத்தது. இனி கிளாலியிலிருந்து எமது ஊரான கரண வாய்க்குப் பயணிக்க வேண்டும்.
நான் மோட்டார் சைக்கிள்காரனிடம் சென்றேன். கரையில் சில போராளிகள்
முதியவர்களுக்கு உதவி புரிந்தபடி நின் றனர். சுறுசுறுப்பாக இயங்கும் பெண் போராளிகளைப் பார்த்ததும் பெருமிதமாக இருந்தது. இண்டைக்கு இரண்டு தசாப்தங் களுக்கு முன்புவரை அடுப்படியிலை அடைபட்டுக்கு கிடந்த பெண்கள், இப்ப
எவ்வளவு முன்னேறிவிட்டார்கள். உண்மை
யான பெண்விடுதலை எங்கட தாயகத்தில தான் உருவாகி வருகிறது என எண்ணிப் பெருமிதமடைந்தேன். மோட்டார் சைக்கிள் காரனுடன் பேரம் பேசி ஒழுங்கு செய்தேன். மேடும் பள்ளமும் விழுந்து எழும்பி மோட் டார் சைக்கிள் விரைந்தது. வன்னேரியில் பழக்கப்பட்டதுதான். இந்த இரவிலும்
'றோட்டு சந்தடியாக இருந்தது. படகுச்
சேவை இருந்ததால் றோட்டில் வாகனங்
களைக் காணமுடிந்தது. பயணிகளை
நம்பித் தேநீர் கடைகளும், மண்ணெ ண்ணெய்க் கடைகளும் திறந்திருந்தன. பின் நிலவு மெல்ல மெல்ல மறைந்து, விடிந்து கொண்டிருந்தது. “கொடிகாம த்திலை தேத்தண்ணி குடிச்சிட்டுப்போவம். காலும் விறைக்குது. நாரியெல்லாம் விட்டுப்போய்ச்சு” என்றாள் காயத்திரி. கொடிகாமத்தில் நின்றோம். தேநீர் சுடச்சுட உடலுக்குத் தெம்பாக இருந்தது.
கொடிகாமம் முன்னர் பரிச்சயமான இடம். சந்தைக்கு அம்மா இங்கு வந்து போவதும், ஒரிரு நாட்கள் நான் கூடிவந் ததும் நினைவுக்கு வருகிறது. அம்மாவின் பிள்ளைப்பேறு நாட்களில் கோழிக்குஞ்சு வாங்க அப்பா வந்தபோது சைக்கிள் பாரில் அமர்ந்திருந்து வந்த ஞாபகம். பின் நாளில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் ரயில் ஏறக் கொடிகாமத்தி ற்குத்தான் வருவேன். இப்போது ரயிலும்,
மல்லிகை ஜூலை 2007 率 s

Page 10
போய்த் தண்டவாளமும் போய், எங்கட பிள்ளைகளுக்குப் படத்தில தான் ரயிலைக் காட்ட வேண்டிய நிலைமை உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வருவதால் காங்கேசன் துறையும் தெரியாது.
“வெளிக்கிடுவமே ஐயா?” என்றான்
மோட்டார் சைக்கிள் சாரதி. புறப்பட்டோம்.
கண்டிறோட்டிலையிருந்து பிரிந்து பருத்தித்
துறை றோட்டில் இறங்கினோம். இந்த றோட்டைப் பார்க்கிற போதெல்லாம் 59 வான்தான் நினைவுக்கு வரும், எத்தனை வருசத்துச் சாமான். இப்பவும் என்ன மாதிரி ஒடுது. “வெள்ளைக்காரன்ர சாமான் தான்’ என்பார் அப்பா. இப்ப அமெரிக்காக்காரன் யப்பானோட சேர்ந்து ஒரம்கட்டிப் போட் டான். உலகமயமாதல் போன்ற போர் வையில் அவன் சுரண்டுறது தெரியாமல் சுரண்டுறான். ஏன், எங்கட யுத்தம் கூட அவன் ஆயுத விற்பனைத் தந்திரம் தானே.? ஒ. இந்த யுத்தம் எல்லாரையும் கூடு கலைச்சுப் போட்டுது. பொழுது நல்லாய் விடிஞ்சிட்டுது. சுட்டிபுரக் கோயில், மோட்டார் சைக்கிள் தம்பி நிற்கிறான். “அம்மாளாச்சி, ஒரு மாதிரிக் காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்திட்டாய்” என்றபடி இறங்கிய காயத்திரி கோயிலுக்குச் சென் றாள்.
சுட்டிபுரம் திருவிழா எண்டால் காசைக் வீதியெல்லாம் ஏழெட்டுச் சிகரம், சோடனை, தண்டிகை, சப்பறம், நாலு வீதியிலையும் இரவிரவாக நிகழ்ச் மூர்த்தியிலையிருந்து இந்தியா காரைக் குறிஞ்சி அருணாச்சலம், சின்ன மெள
கரியாக்குவாங்கள்.
சிகள் நடக்கும்.
தட்சணா
லானா, சீர்காழி கோவிந்தராஜன் என்று பல
தரப்பட்ட கலைஞர்கள் வந்து போவார்கள். சின்ன மேளம், சதிர்க் கச்சேரி, வில்லுப் பாட்டு, இசைக்கச்சேரி என்று அளவுக்கு மிஞ்சிச் செலவழிப்பார்கள். கடன்பட்டெண் டாலும் போட்டிக்குத் திருவிழா செய்வினம். அம்மாவின்ர மடியிலை இருந்து சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரிக்கு வந்து இரவிரவாய் நித்திரை கொண்டது இப்பவும் நினைவுக்கு வருகுது. அப்பாவுக்குச் சீர்காழி என்றால் உயிர். அம்மாவோ செளந்தரராஜன் ரசிகை. என்னைப் போலவே அவையள் இரண்டு பேருக்கும் சங்கீத ஞானம் பூஜ்யம்.
மீண்டும் பயணம் தொடர்கிறது. அதே குலுக்கல், என்ன மாதிரிக் கெட்டித்தனமாக ஒடுறான். இரவிரவாக ஓடினால்தான் பகலில் அடுப்புப் புகையும். இந்த யுத்தம் எல்லோரையும் ஏழையாக்கிப் போட்டுது. வெளிநாட்டுக்குப் போனவை காசனுப் பாட்டில் எல்லாரின்ர பாடும் அம்போதான். றோட்டு நல்லாய்ப் பழுதாய்ப் போச்சு. இருபது வருசத்துக்கு முந்தி ஊத்தின தார், பொருக்காக தெட்டம் தெட்டமாக கண்ணில படுகுது. மற்றும் படி கல்லு றோட்டுத்தான்.
“நெல்லியடிக்குப் போகவேண்டாம் தம்பி, உதிலை வாற உப்பு றோட்டுப் பக்கமாகத் திரும்பிப் போவம்” என்றேன். “கொஞ்சத்தூரம் றோட்டு அறவே சரியி ல்லை. யாக்கரு சந்திக்கு அங்கால கொழும்பு றோட்டு மாதிரி. இந்தியன் ஆமி போட்ட றோட்டு. வல்லைச் சந்தி வரைக்கும் போட்டிருக்கிறான்.” என்றான் சாரதி.
உப்பு றோட்டு வெறிச் சோடிப் போய்க் கிடக்கு அந்த நாளையில் ஒரே சனம். நல்ல
மல்லிகை ஜூலை 2007 & 16

பம்பல். அலம்பல் வண்டில், எருவண்டில், குழைவண்டில் என்று ஒரே வண்டில்களாத் தான் போகும். சின்ன வயதில அம்மா களை பிடுங்கக் கப்பூது வயலுக்குப் போறபோது ஒருக்கா கூட்டிப் போனவ. மாரியில் றோட்டுக்கு அங்கால முழங்கா லுக்கு மேல தண்ணி நிக்கும். முந்தி கரணவாயில உப்பு மால் இருந்த தெண்டு அப்பா சொல்லுவார். இப்பவும். தண்ணி வத்திலை போற போது உப்பு விளையும் பூநகரிப் பக்கத்தில விளையுற மாதிரி.
அம்மா உப்புச் சுமந்து வந்து வித்திருக் கிறா. வலு பிரயாசை. அவை இப்படிக் கஷ் டப்படாட்டில் நாங்கள் இப்படி முன்னுக்கு வந்திருக்கமாட்டம், அம்மாவை நினைக்க அழுகையழுகையாக வருகிறது. ஆஸ்பத்தி ரியில்தான் இருப்பாவோ? இல்லாட்டி துண்டு வெட்டி வந்திருப்பாவோ? இல்லாட்டி ஏதும் அவலமாய். அதற்கு மேல் நினை த்துப் பார்க்க முடியவில்லை. போராளியள் சொல்லுறது மாதிரி எல்லோருக்கும் எப்ப வோ ஒரு நாளைக்குச் சாவு வாறதுதான். ஆனால், பாசம் எல்லோரையும் கலங்க வைத்துவிடும். அதிலும் தாய் என்றால் யாரால் தான் தாங்க முடியும்? தனது உதிரத்தை பாலாக்கி அன்பு பொழிந்து எம்மை வளர்த்த தெய்வமல்லவா?.
பயணம் தொடர்கிறது. றோட்டின் வலப்பக்கமாக இரண்டு சுடலை இருக் கிறது. முதலாவது சுடலையடியை நெருங்கு கிறோம். அந்த நாளையில் பேய், பிசாசு, முனி எல்லாம் இந்தச் சுடலைப் பிரதேச த்தில் இரவில் உலாவும் எண்டு ஆச்சி சொல்லிறவ. இப்ப பகுத்தறிவு வளர்ந்ததால பேய் பிசாசல்லாம் இல்லாமல் போட்டுது.
ஆனால் புதிய பேய்களும், முனிகளும், பிசாசுகளும் எங்கட உயிர்களைக் குடிக்க அலைஞ்சு திரியுது. அந்நாளிலை அப்படித் தான் சாதிப் பேயஸ் உலாவியிருக்கும். எங்கட தாத்தாவை முனியடிச்சுத்தான் செத் ததாக ஆச்சி கூறுவா. முன்னேறித் தலை யெடுத்து வந்த தாத்தாவைக் கொன்றது சாதிவெறி பிடிச்ச முனிதான் எண்டு அப்பா சொல்லுவார். அந்த முனியடிச்சதிலை அப்பா பிறக்கும்போதே தகப்பனைத் தின்னியாகப் பிறந்தார்.
சாந்தா, எங்க்ட தங்கச்சி, இப்ப கனடாவில் இருக்கிறாள். அவளின்ர பிள்ளையும் வயித்தில இருக்கிற போது காங்கேசன்துறைச் சீமெந்து பக்ரறியில துவக்கு முனி அடிச்சுத்தான் அத்தான் செத்தவர். இப்படி எத்தனை எத்தனை தெருவிலும், களத்திலுமாக இழந்திட்டம். இழந்து கொண்டு இருக்கிறம், சோனப்பு சுடலை யில் சடலம் ஒண்டு எரிந்து முடியும் நிலை யில் நீறுபூத்த நெருப்பாக இருந்தது. எங்கட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் மாதிரி இன் னும் கொஞ்சத் தூரம் போனால் எங்களது
உயிர்களை வீட்டிலும்,
கிராய்ச் சுடலை வரும், நாங்கள் அதற்கு முன்னர் வெல்லன் பிள்ளயைார் கோயில் பின் வீதியாலதான் திரும்ப வேண்டும். திக்குக் கூறினேன். நாம் திரும்பிய போது அதிகாலைப் பூசைக்கான ஆலயமணி அடிக்கிறது. சிறுபான்மைச் சாதியினரை
‘விடக்கூடாது என்பதற்காக, எல்லோரும்
வெளியே நின்று கும்பிட்டுச் சமத்துவம் கண்ட புதுமையான கோயில். எப்பவும் கதவு மூடியபடிதான். இப்ப எப்படியோ? பூசை நேரங்களில் கதவு திறந்தாலும் உள்ளே யாரும் போகமுடியாது.
மல்லிகை ஜூலை 2007 & 17

Page 11
கோயிலின் பின் தெருவில் ஊரிப்
பாதையில் மெதுவே செல்கிறோம்.
இன்னும் கொஞ்சத் துரம்தான். வேதக் கோயிலுக்கு முன் ஒழுங்கையால் திரும்ப வேண்டும். ஒரு பக்கம் உச்சில் வயல் வெளியும், தொலைவில் அம்மன் கோவி லும் தெரிகிறது. றோட்டின் இடப் பக்கம் ஒரு குளம், எதிர்ப்பக்கம் ஒரு கோயில். அங்கே யும் எமது கடவுள்தான் இருக்கிறார். எனி னும் சிறுபான்மையினர் மட்டும்தான் போவார்கள். எனக்குச் சிரிப்பு வருகிறது. இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது அந்த வேதக் கோயில் பரவாயில்லை. அங்கு யாரும் போய் வழிபடலாம். சாதி பேதங்கள் எதுவும் ஆலயத்தில் பார்க்கப்படுவதில்லை. ஒருமுறை அப்பா இது பற்றி என்னோடு கதைத்திருக்கிறார். இந்து சமயத்தவர் சாதி பேதம் பார்ப்பதனாலும், சமூகப் பணிகளில் ஈடுபடாமையும் தான் எமது மதத்தி லிருப்பவர்கள், மதம் மாறிச் செல்வதற்கான முக்கிய காரணம் எனச் சொல்லியிரு க்கிறார். அம்மாவும் அப்பாவும் அதிகம் படித் தவர்களல்ல, ஆனால் அவர்கள் எமக்குப் படிப்பித்த பாடங்கள் எண்ணிலடங்கா. நான் ஓரளுவுக்காவது மனித நேயம் மிக்க ஒருவனாக இருப்பதற்கு அவர்கள் தான் காரணம். மோட்டார் சைக்கிள் உச்சில ம்மன் கோயில் பின் வீதியால் திரும்பி எமது வீடிருக்கும் வீனஸ் வீதிக்குச் செல்லும் போது காயத்திரி, ‘அம்மாளாச்சி’ என்று
கையெடுத்துக்கும்பிட்டாள்.'போய்க் குளிச்
சிட்டு உடன் கோயிலுக்கு வரவேணும்.”
என்றாள். வீடு வந்து விட்டது. இறங்கி
உள்ளே சென்றோம்.
“ஐயோ ராசா அம்மா எங்களை விட்டுட்டுப் போயிட்டா..” என்று பெரியம்மா
கதறிக் கொண்டு வந்தா. அம்மா செத்துப் பத்து நாளாச்சாம். வைச்சிருந்து பார்த்திட்டு மூன்று நாளைக்கு முந்தித்தான் எடுத்த வையாம். என்னால தாங்க முடியவில்லை. காயத்திரியையும், அப்பாவையும் கட்டிக் கொண்டு அழுதேன். எல்லோரும் வந்து ஆறுதல் சொல்லிச்சினம். என்னாலை தாங்க முடியவில்லை. கடைசி நேரத்தில்
நான் இல்லாமல் போயிட்டேனே.
‘அம்மா எப்ப செத்தவ?’ குரல் தளுதளுக்கக் கேட்டேன்.
“ஐந்தாம் திகதி, வெள்ளிக்கிழமை பின்னேரம் ஐந்து மணிக்கு.’ என்று அப்பா சொன்னபோது என் மனதில் ஒரு மின்னல் தோன்றியது. அண்டைக்கு அதே நேரம் தானே முதியோரில்ல 6u 6T 6suub6Od Lou பாட்டியும் செத்தவ. “மகனே. மகனே’ எண்டு என்ரை கையைப் பிடிச்சுக் கொண்டு கண்களை மூடியது மனதில் திரையோ டியது. “அம்மா. அம்மா. நீங்கள் என்னைக் கண்டுதான் செத்திருக்கிறியள். வள்ளிய கொள்ளி உங்களுக்கு வைச்ச கொள்ளி தானம்மா.”
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்.
ம்மைக்கு நான் வைச்ச
“அம்மா. நான் அதிகம் கோயில் களுக்குப் போறதில்லை. ஆனா தெய்வ நம்பிக்கை இருக்கு. நீங்கள் தானம்மா இனி எங்க
உங்களைக் காணுவேன்.” எனது இதயம்
என்னுடைய தெய்வம்.
பொருமி வெடிக்கிறது.*
மல்லிகை ஜூலை 2007 率 18

பதட்டமும் சினிமாவும்.
- செ. கணேசலிங்கன்
ஆவலும் அதிர்ச்சியும்
ஆவலூட்டி அதிர்ச்சியும் ஏற்படுத்தக் கூடிய கலைவடிவம்; பார்வையாளரை "ரென்ஸ்"னில் ,மன அழுத்த நிலையில் வைக்கக் கூடிய நவீன கலைவடிவம்; கலைகளையும் உள்ளடக்கித் திணிக்கும் முதலாளித்துவக் கலைவடிவம் சினிமா ஆகும்.
V திரையரங்குகளில்- கதையிலும் விறுவிறுப்பூட்டும் சம்பவங்களிலும் ஈடுபடுத்தி இருக்கையில் கட்டுப்பட்டுப் பார்வையாளரை இருட்டு மண்டபத்தில் வைத்திருப்பதைக் காணலாம். இருப்பது என்பதிலும் பார்க்க பார்வையாளர் இருக்கைகையைவிட்டுத் திரையோடு ஒன்றிவிடுவதையும் காணலாம்.
இத்தைகையதோர் பதற்ற நிலையைச் சினிமா என்ற நிழற்படக்கலை ஏற்படுத்துவதை அழகுணர்ச்சியின் பாற் பட்டது என்று கூறமுடியுமா?
சஸ்பென்ஸ், வியப்பூட்டல் பார்வையர்ளரை அச்சத்துடனும் அதிர்ச்சியுடனும் கட்டிவைக்கும் சினிமா தயாரிப்பில் உலகில் பிரபலமானவரும், வழிகாட்டியாகவும் கொள்ளப்படுபவர், அல்பிரைட் ஹறிச்கொக் என்ற ஹொலிவுட் திரைப்பட டைரக்டர் ஆவார்.
சஸ்பென்ஸ் மறைமுகமாக பதற்றத்துடன் ஆவலைத் தூண்டிடும் காட்சிகளை ாளிமையாகப் புரிந்து கொள்வதற்குஉதாரணமாகப் பலரும் கூறும் பின்வரும் இரு காட்சிகளைக் கவனத்தில் கொள்ளலாம்:
1. ஒரு ஒட்டல் மேசையில் நால்வர் உட்கார்ந்து அப்பாவிகளாகத் தேநீர் அருந்து கின்றனர். மேசையின் கீழே பந்து வடிவத்தில் ஒரு பொருள் இருக்கிறது. கமராவில் அதுவும் காட்டப்படுகிறது. எதுவும் நடக்கவில்லை. திடீரென ஒரு வெடிச்சத்தம் புகையும். சினிமா பார்வையாளர் அதிர்ச்சியடைகின்றனர், தேநீர் அருந்தியவரின் நிலை என்ன?
2. தேநீர் அருந்துபவர் எவரும் கவனிக்காதபோது வில்லனின் அணிசேர்ந்தவர் பந்து போல ஒரு உருண்டையை மேசைக்குக் கீழே வைத்து விட்டுச் செல்கிறார்.
மல்லிகை ஜூலை 2007 & 19

Page 12
எதுமறியாத அப்பாவிகளாகத் தேநீர் அருந்துபவர்கள் பல்வேறு விசயங்கள் பற்றி உரையாடிக் கொண்டிருக்கலாம். இடையிடை பேச்சாடலிடை கீழேயுள்ள
வடிவத்தையும் "ஃபோக்கஸ்" செய்து காட்டிக் கொண்டி
ருக்கிறது.
உருண்டை &5 LDJ T
பார்வையாளர் ரென்ஸ்னில், மன
அழுத்த அச்சநிலையில் வலுப்படுத்தப்
படுகிறார்கள். 10- 15 நிமிடம் கழித்தே குண்டின் வெடிஓசை கேட்கிறது. முதல் குறிப்பிட்ட காட்சியில் 10,15 செக்கன் நேரமே வெடி ஓசையின் பின்னர் பார்வை
யாளர் அதிர்ச்சியடையலாம்.
ஆனால் இரண்டாவது காட்சியில் 1015 நிமிடம் வரை ரென்ஸ்னில் பார்வை யாளர் பதட்டத்துடனும் பயத்துடனும் வைக்கப்படுகின்றனர். பின்னர் வெடி யோசை அதிர்ச்சியுட்டுவதாக அமைகிறது.
இக்காட்சி சினிமா என்ற ஊடகத்தில் தொழில் நுட்பம் சார்ந்த தேர்ந்த காட்சி என 6)mb.
9(HDT 9ggarດ້ຂຶກົບດ?
கலைகள் தரும் இத்தகைய சஸ்பென்ஸ், வியப்பூட்டும் காட்சியின் நிலை என்ன? பார்வையாளரை ரென் ஸனில் பதட்ட நிலையில் வைத்து ஏமாற்றி விடுவதனால் நேரக் கொல்லி" தவிர வேறு பயன் என்ன? மகிழ்ச்சி ஆர்வத்தோடு ઠી6ઈીuom வந்த அநாவசியமாக ரென்ஸனில், பதட்டத்தில்
பார்க்க ഥ, 6 ഞങ്
வலுவூட்டி வைபபது அழகுணர்ச்சியின் பாற்பட்டதன்று. சினிமா ரஸிகர்களை இருட்டறை மண்டபத்தில், திரையில்
தோன்றும் காட்சிகள் மூலம் பல்வேறு
உணர்ச்சிகளை எளிதில் ஏற்படுத்திவிட முடியும். பால்உணர்ச்சியுட்பட பயங்கரக் குரூர ஆத்திர உணர்சிகளையும் அதீதக் கற்பனையான "auоGєотgyпоп” epsolb எளி தில் ஏற்படுத்திவிடலாம். இந்தக் குறை பாடுகளைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் தொழிலான சினிமாத்துறையில் நம் நாட்டிலும் ஏராளமானோர் ஈடுபட்டு இதுதான் அழகுணர்ச்சி க்கலை என்றும் நம் நாடடு ஊடகங்கள்
D 6T 6T 6UT r.
மூலமாகவும் நிலைநாட்ட முயல்
கின்றனர்.
ஆடை குறைத்து பாலுந்தலூட்டும் பெண்ணின்அவயங்களை ஆண்கள் கட்டி அணைப்பதை, மறைமுகமாக முத்தமிடு வதாகவும் படுக்கையறையில் பாலறுவு கொள்வதாகவும் காட்சிகளை அமைத்து, பார்வையாளரை வெண்திரையில் ஈர்த்து பாலுணர்ச்சியயூட்டி மகிழ்வூட்டவும் செய் வதைப் பெரும்பாலான திரை படங்களில் காண்கிறோம்.
* சினிமா என்ற தொழில்நுட்ப ஊடகம், முதலாளித்துவம் கண்டுபிடித்த நிழற்பட ஊடகம். இங்கு மட்டுமல்ல உலககெங்கும்
பணம் பறிக்கும் தொழிலாகவே நிலைப்பதையும் வளர் வதையும் காணலாம்.
மேலும் எளிதில் கவனமீர்க்கும் அடிபிடி சண்டை, அக்சன் காட்சிகளையும்
மல்லிகை ஜூலை 2007 * 20

வணிக சினமாவின் வாய்ப் பாடாகக் காட்டப்படுகிறது. வெறும் ஒசை, ஒலிமூலம் சண்டைக் காட்சிகள் மெய் மறக்கச்
செய்யும் ஏமாற்று வித்தைகளை மக்கள்
உணர்ந்தறிவதில்லை. கதா நயகன் .
காதலி பாடுவது இரவல் குரல் என்பதையும் பார்வையாளர் உணர்வ தில்லை. தாம் ஏமாற்றப்படுவதையும்
உணர்வதில்லை.
ஆவலூட்டும் நாவல்
கவிதைக்கு அடுத்ததாகத் தோன்றிய நவீனத்துவமான நாவல் தனிமனிதராகப் படித்து பல்வேறு உணர்வுகள், அனுபவ ங்களை அனுபவிக்க உதவுகிறது. நாவல் களையும் ஆர்வமாய்த் தொடர்ந்து படிக்கும் வேளையில், சுற்றாடலைத் தற்காலிகமாக மறந்து நாவல் மாந்தரின் சம்பவங்களுடன் ஒன்றிவிடலாம். சினிமா இருட்டான மண்டப அரங்கில், பலர் கூட இருந்து பார்ப்பதாகும். நாவலிலும் சஸ்பென்ஸ், ஆவலூட்டும் படிமங்களில் படிப்போர் ஈடுபட்டுவிடலாம்.
சஞ்சிகைகளில் தொடர் நாவல்கள் எழுதுபவர் அடுத்துவாரத் தொடரைத் தொடர்ந்து படிப்பதற்காகக் கதையை, சம்ப வங்களைப் பதட்டத்தோடு முடிப்பதைக் கவனிக்கலாம். இத்துறையில் 'கல்கி" கிஷ்ணமூர்த்தி மிகத்திறமையானவர். மற்றும் அகிலன், சாண்டில்யன், பார்த்த சாரதி போன்றோரும் விற்பனை நோக்கிய சஞ்சிகைத் தொடர்கதைகளில் இப்போக்
கைக் கடைப்பிடித்து வெற்றிகண்டனர்.
மேல்நாட்டுக் 85 60) 6xა , இலக்கிய
மாக்கிவிட வல்லது. assoort,
மதிப்பீட்டாளர் யதார்த்தப் போக்கின்றி செயற்கையாகக் காட்டப்படாத இவற்றை ஒதுக்கி வந்தனர். அதேவேளை மேல் நாட்டு நாவல்களில் சஸ்பென்ஸ், வியப் பூட்டும் போக்குகள் 18ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலிருந்து 19ஆம் நூற்றாண்டு நடுப் பகுதிவரை எழுதப்பட்டு வெளிவந்த நாவல்களில் இருந்தே இத்தகைய போக்கு நுழைந்ததாக மேல்நாட்டு இலக்கிய ஆய்வாளர் கூறுவர். செலிக்கோவ் போன்ற வரின் துப்பறியும் நாவல்களையும் கருத் தில் கொள்ளலாம். மேலும் இதே நாவல் கள் பின்னர் சினிமாக்களாக வந்து பன மீட்டும் தொழிலாக வெற்றிபெற்றதையும்
கவனிக்கலாம்.
ω600ήό 6διώυωωτύ υώτυώ
பின்னர் சஸ்பென்ஸ், வியப்பூட்டும் சம்பவங்கள் வன்முறைக்காட்சிகளுடன் இணைத்து சமூக அமைப்பைத் தூக்கி வீச வலுவாக உதவலாம். ஆனால் முதலாளித் துவம் சமூக அமைப்பை மாற்றியமை ப்பதை விரும்பமாட்டாத தன் வளர்ச்சிக்குப் பயன்படாத நிலப்பிரபுத்துவம் மதிப்புகளை மாற்றுவதில் முன்நிற்கலாம். முதாலளித் துவம் எப்போதும் "ஜனநாயகம்’ என்ற போர்வையில் நாஸிஸப் போக்கை சார்ந்து நிற்கும்; மக்கள் புரட்சியை எதிர்க்கும்.
முதலாளித்துவம் அனைத்தையும் விற்பனைப் பண்டமாக்கவல்லது. சஸ்பெ ன்ஸ், வியப்பூட்டும், பதட்டம் ஏற்படுத்தும் சம்பவங்களையும் கலை, இலக்கியத்தில் புகுத்தி. குவிக்கும் விற்பனைப் பண்ட ரி.வி
மல்லிகை ஜூலை 2007 率 21

Page 13
நாடகங்களில் மட்டுமல்ல அவற்றுடன் இணைந்த விளம்பரங்களில் மக்களுக்கு ஆர்வமூட்டியும் கவர்ச்சி தரவும் வல்ல சஸ்பென்ஸ் திகைப்பூட்டும் காட்சிகளைத் தயாரித்து விற்பனைப் பண்டமாக்கி விடுகிறது.
சஸ்பென்ஸ் வியப்பூட்டுவதுடன்
பதட்டமும் அச்சமும் ஏற்றபடுத்தும் சினிமா,
.s um frü3uri திரையில் நடைபெறும் கோரச் சண்டைகள், துப்பாக்கிச்சூடுகள், நிலக்கண்ணி வெடிகள், குண்டு வீச்சால்ப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் என்ன பலன், பதட்டம் ஊட்டும் அதிர்ச்சிக்கு
உட்படும். உண்மையில் திரையில்
ஒடும் அதீத சம்பவங்களுக்கு அந்நியப்பட்ட நிலையிலேயே அவற்றைத் தரிசிக்கின் றனர். ஆயினும் அக்காட்சிகளுக்கு அந்நிய
ப்பட்ட நிலையில் தாம் உள்ளதாக :
எண்ணிக் கொள்வதில்லை. அதனால் அழகுணர்ச்சிக் கோட்பாட்டில் நின்று கலைகளின் தாற்பரியத்தை அறிந்துணர முடியாதவராகின்றனர். கலைகள் புத்து ணர்வு தராது தீமைகளைப் பரப்புவதாக மாறிவிடுகிறது என்பதை உணரமாட்டார்.
மன அழுத்தம் வரன்ஸன் βωώτυπώ
கலைகளின் அழகுணர்ச்சிக் கோட் பாட்டில் ரென்ஸனும் மன அழுத்தமும் அச்சமும் பதட்டமும் தரும் கற்பனைக் காட்சிகள் எத்தனை தூரத்தில் உள்ளன என்பது ஆராய்ச்சிக்குரியது. இயல்பாகவே
ரென்ஸன் வாழ்க்கை வேண்டாம்; இரத்தக் w
கொதிப்பாக ஏற்படுத்த வேண்டாம்;
உங்கள் உடல் நலமே ரென்ஸனால் பாதிக்கக் கூடியது. டாக்டர்கள் அனை வரும் ஆலோசனை கூறுவர்; அறிவுரை வழங்குவர். (ரென்ஸன் என்ற சொல் மருத்துவர் மூலமாகவே தமிழில் நிலை பெற்றுவிட்டது. அதனால் மாற்றாக அதே அர்த்தத்தைக் குறிக்கும் சொல் தேடுவதே கஷ்டமாகி விட்டது. கலாநிதி சிவத்தம்பி யாழ்பாணத்துக்கு வழக்குச் சொல்லாக நெருக்குவாதம் என்ற வார்த்தையைக் கூறுவார். இதுவும்
வழக்கொழிந்த வார்த்தையே.)
இத்தகைய மருத்துவர்களது நல்லு ரைகளிடை கலைகள் தரும் உணர்வு, உணர்ச்சியூட்டும் வடிவங்களின் எல்லை
கள்தான் என்ன?
தீவிரமான அடிபிடி சண்டைகளைக் கொண்ட சினிமாக் காட்சிகளைப் பார்ப் பதன் மூலம் அறிவை, அழகுணர்ச் சியைப் பெற முடியுமா? சினிமாத் தியேட்
டரை விட்டு வெளியே வந்ததும் அக்
காட்சிகளை மறந்து விடலாம். தியேட் டரில் கிட்டியது வெறும் நேரக் கொல்லிக் காட்சிகளே. அவை அறிவபூட்டுபவைய ல்ல. வெண்திரையில் கவர்ச்சியூட்டப் பட்ட பெண்களின், ஆண்களின் உருவங் களில் பார்வையாளர் மயங்கியிருக் கலாம். பிடித்தமான கனவுக்கன்னியரை கனவுக் காதலரை தனிமையில் அனுபவிப்பதற்கு மேலாக கற்பனையில்
மீள நினைவில் கொணர்ந்தும் பாலுந்தல்;
மல்லிகை ஜூலை 2007 & 22

இன்ப மூட்டியும் மகிழலாம்.
அழகுணர்ச்சியின் பாற்பட்ட தன்று.
அது
சினிமாவின் மறுபக்கம்
பதட்டமும் அச்சமும் ரென்ஸனும் ஏற்படுத்தக் கூடிய கலைகளில் சினிமா
க்கலை முதன்மையானது. சினிமா பற்றி
மேலும் சில குறிப்பு.
மற்றெல்லாக் கலைகளிலும் பார்க்கச் சினிமா என்னும் தொழில் நுட்பம் கொண்ட முதலாளித்துவம் சிருட்டித்துத் தந்த கலையே சாதாரண மக்களுக்கும் மன
அழுத்தம் தரும் புதிய கலை வடிவமாகும்.
உழைப்பினால் சோர்வுற்ற மக்களைத் தமது துன்ப வாழ்வைச் சிலமணிநேரம்
மறக் கச் செய்வது உண்மையே. ஆயினும் அவ் வேளை அவர்கட்கு அறிவுபூட்டாது d 6 அழுத்தம் ஏற்படுத்துவதே கவலைப்பட வேண்டிய விடயமாகும்.
חhLDס86
உள்ளடக்கியது. வேகமாக மாந்தருடன்
பல்வேறு கலைகளை
கூறும் கதை, நாவல் படிப்பதை பின் தள்ளுகிறது. பாடல்கள் சிறந்த இசை வல்லுனரால் இசை அமைக்கப்பட்டு, பிரபலபாடகர்களால் பாடப்பட்டு, புகழ் பெற்ற நடிகர், நடிகைகளின் உதட்டால், அல்லது காட்சியுடன் முப்பரிமாணம் பெறுகிறது. மற்றும் படத்தின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு, சம்பவங்களுக்கு உயிரூட்டுகிறது. கவர்ச்சிமிக்க கதாநாய
கன் கனவுக்கன்னிகள் மூலம் பேச்சாட லுடனும் கதை நகர்த்தப்படுகிறது. காட்சிகள் ஆங்காங்கே தேர்ந்தெடு க்கப்பட்டும் ஒவியரால் அமைக்கப்பட்டுச் செட் மூலமும் பயிற்சி பெற்ற சிறந்த காமரா மானினால் படம்பிடிக்கப்பட்டு, எடிற் செய்து
காட்டப்படுகிறது.
காட்சிகளும் கதையும் வேகமாக சஸ்பென்ஸ், வியப்பூட்டுவதாக 'எடிற்” செய்யப்பட்டுக் கோர்க்கப்படுகின்றன. மேலும் கவர்ச்சியூட்டத்தக்க உடைகள், வர்ணங்கள் யாவும் மேலும் மெருகூட்ட ப்படுகின்றன.
கலைகளில் அழகுணர்ச்சி
அழகுணர்ச்சி என்பது யதார்த்த உண்மைகள் கலைகள், காட்சிகள் மூலம் வெளிப்பட வேண்டும். அவற்றின் மூலம் உங்கள் அறிவு மேம்பட வேண்டும்; புத்தறிவு பெறப்பட வேண்டும். கலைகளைச் சுவைக்கும் வேளைகளில் ஏற்படும் புத்துணர்ச்சியை ஆங்காங்கே நீங்கள் தரிசித்திருக்கலாம். அவற்றைப் பிரித்துப் பயன் தந்தவற்றைக் காண்பதே பெரும்பாலானோரின் பிரச்சனையாகும்.
உலகப் புகழ் பெற்ற ஜெர்மனிய அறிஞர், பிராட்ஸ் (Brecht) மற்றொரு நிறையாக,
கலைஞர், நாடகாசிரியர்
கலைகள் மூலம் கிட்டும் அழகு ணர்ச்சியை நல்லறிவைப் பிரித்தறியக்
மல்லிகை ஜூலை 2007 率 23

Page 14
கூடியதன் கோட்பாட்டை முன்வைத்தார். சினிமா நாடகக் கலைகளைச் சுவைப் u6Jrrassif- அக்கலைகளில் முற்று முழு தாக ஈடுபடாது, அந்நியப்பட்டவராகப் பார்க்க வேண்டும். யதார்த்த உண்மை களைக் கலைகள் முழுமையாகப் பிரதிபலிப்பதல்ல. நீங்கள் மூன்றாவது நபராக, காட்சியிலிருந்து அந்நியப்பட்டுக் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண் டும். தவறிக் கலைகளின் தாற்பரிய ங்களைத் தவற விட்டு ஏமாற்றப்பட்ட வராவீர்.
உலகப் புகழ்பெற்ற பிராஞ்சு திரை ப்பட டைரக்டர் கொடா(Godat) என்பவர் தமது படங்களில் பார்வையாளர் முற்று முழுதாக அமிழ்ந்துவிடாது ஒடும் கதை யிடையே சில புள்ளி விபரங்கள், அறிவுக் கருத்துகள் கொண்ட சம்பவங்களைக் கொணர்ந்து பார்வையாளருக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவார். உதராணமாக அவரது கதைப்படம் ஒன்றில் திடீரெனப் பார்வையாளருக்கு விழிப்புணர்வுபூட்டக் கதையை நிறுத்தி பாரிஸ் நகரிலுள்ள பாலியல் தொழிலாளரர் பற்றிய புள்ளி விபரங்களைக் கூறுவார்.
அழகுணர்ச்சி என்பது தியேட்டரில் மக்களை மெய்மறக்கச் செய்வதல்ல, யதார்த்த உண்மைகளைக் கூறுவ தோடு மக்களின் அறிவை மேம்படுத்த
வேண்டும். *
HAPPY iPHOTΌ
3. Excellent
Photographers
Modern Computerized Photography For
மல்லிகை ஹூலை 2007 * 24
 
 
 
 
 
 
 
 

பரீட்சை விடைப்பத்திர மதிப்பீடு கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் இடம்பெற்றது. தமிழ்மொழிப் பாட மதிப்பீட்டுப் பணியில் நான் ஈடுபட்டேன். அந்தக் கல்லூரி அதிபராக அப்பொழுது தோழர் மாணிக்கவாசகர் இருந்தார். அவரை மாணிக்ஸ்’ எனத் தோழர்கள் அன்பாக அழைப்பார்கள். அவருக்கும் எனக்கும் முன்னரே பழக்கமும் உறவும் இருந்து வந்தது. எனது தம்பி நவரத்தினம் (க, நவம்) கனடா போய்ச் சேருவதற்கு முன்னர் இறுதியாக அந்தக் கல்லூரியில் தான் ஆசிரியராகப் பணியாற்றினான். அதனால் அந்தக் கல்லூரியுடன் எனது ஈடுபாடு பெருமளவு இருந்து வந்தது. மதிப்பீட்டுப் பணியுடன் தோழர் "மாணிக்ஸை" தினம் சந்தித்துப் பேசும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் நான் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்தேன்.
மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் அந்தக் கல்லூரிக்கு அண்மையாயுள்ள ஹமீட் அல் உசைனியா மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். அந்த மகா வித்தியாலத்தில் ஆசிரியராக இருந்த கலைவாதி கலீலுடன் ஒவ்வொரு இரவும் நீண்ட நேரம் இருந்து மகிழ்ச்சியாக இலக்கியம் பற்றிப் பேசினேன். மதிப்பீட்டுப் பணிகள் முடிந்த மாலைவேளையில் இலக்கிய நண்பர்கள் யாராவது என்னைத் தேடிக்கொண்டு தினமும் அங்கு வருவார்கள். அவர்களுக்காக, நான் தங்கி இருந்த இடத்தில் மூன்று கதிரைகள் எடுத்துப் போட்டு வைத்திருந்தேன்.
ஒருநாள் மாலை நேரம் எழுத் தாளர் திக்குவல்லை கமால் என் னைத் தேடிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். அவரோடு சேர்ந்து ஒர் இளைஞரும் வந்திருந்தார். அவர்கள் இருவரையும் அன்போடு வரவேற்று விட்டுக் கமாலுடன் பேசிக் கொண்டிருந்தேன். சற்று நேரம் கழித்த பின்னர்தான் அந்த இளைஞர் கதிரையில் உட்காராது நின்று கொண்டிருப்பது திடீரென்று எனது கவனத்துக்கு வந்தது. யாராக இருந்தாலும் அவர்களை நிற்க வைத்து, நான் அமர்ந்திருந்து பேசும் சமூக நாகரிகம் அறியாதவனல்ல நான். அதனால் குற்ற உணர்வு மனதை உறுத்த, அந்த இளைஞரைப் பார்த்து கதிரையில் அமருமாறு கேட்டுக் கொண்டேன். அவர் எனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாது பணிவுடன் மறுத்தார். அப்பொழுது கமாலுக்கு மரியாதை கொடுத்து அவரோடு சமனாக உட்காருவதற்கு மறுக்கின்றார் என மனதில் எண்ணிக் கொண்டேன். ஆயினும் இலக்கியக்காரர்கள் சந்தித்துவிட்டால், அவர்களுக்கிடையேயான உரையாடல் 'பிலாக்காய்ப்பால்' போல அறாமல் நீண்டு நீண்டு செல்லு மல்லவா! நாங்கள் இருவரும் பேசி முடியும்வரை அந்த இளைஞர் தொடர்ந்து நின்று கொண்டி ருப்பதனை நான் கொஞ்சமும் விரும்ப வில்லை.
அதனால் மீண்டும் அந்த இளைஞரைப் பார்த்து உட்காருமாறு கூறினேன். அவர் உட்கார முடியாதென உறுதியாக மறுத்தார். அந்த மறுப்பில் இருந்த உறுதி என்னை அதிசயப்பட வைத்தது. அதற்கான காரணத்தை உடனே அறிந்து கொள்ள வேண்டுமே
மல்லிகை ஜூலை 2007 率 25

Page 15
என்னும் ஆவல் அப்பொழுது மனதில் எனக்குத் தோன் றியது. "இருக்கிறதுக்கு ஏன் மறுக்கிறீர்? சொல்லும்?' என வற்புறுத்திக் எனது வற்புறுத்தலின் பின்னர் அந்த இளைஞர் மிகுந்த பணிவுடன், “ஸேர், நான் நவம்
கேட்டேன்.
ஸேரின்ரை மாணவன் நீங்கள் அவரின்ரை அண்ணா. எப்படிச் ஸேர் உங்களோடை சமனாகக் கதிரையில் நான் இருக்கிறது." எனக் கேட்டார்.
உண்மையில் நான் அதிர்ந்து போனேன். இப்படி ஒரு குருபக்தி இப்படி ஒரு பண்பாடு இதனை வட பிரதேசத்துக்கு வெளியில்தான் கண்டு கொள்ளலாம் என்பதும் தெளிவாக எனக்குத் தெரியும்.
O கொழும்பில் எனது பணியை 谷
முடித் துக் கொண்டு அந்தப் புதுமையான அனுப வத்துடன் - யாழ்ப்பாணம்- வீடு திரும்பிய சமயம் (06. 01. 1987) இன்னொரு புதுமை அனுபவம் என்னைக் காத்திருந்தது. ட r னி ய லி ன் 'தண்ணிர்' நாவல் பிரதி- அதன் தட்டச்சுப்பிரதி என்பவற்றை நான்
U6:
தட்டச்சுப் பதிக்கக் கொடுத்தவரிடம் இருந்து டானியலின் மூத்தமகன் எனக்குத் தகவல் தராமல் எடுத்துச் சென்று விட்டார் என்பதுதான் அந்த அனுபவம்.
டானியலின் நாவல் என்ற சொத்து க்குச் சோந்தையுள்ள தத்துவக்காரன் அவர் புதல்வன்தான். ஆனால் அந்தப் பிரதியை டானியல் என்னுடைய கையில் தான் ஒப்படைத்திருந்தார். "டானியலுடன்
a.
நெருக்கமான உறவு எங்களுக்குண்டு; டானியலின் கொள்கையைப் பின்பற்று கின்றவர்கள் நாங்கள்' என்று சொல்லிச் சொல்லி, அதனையே தங்களுக்குரிய
பெரிய இலக்கிய அந்தஸ்தாக நிறுவிக்
கொள்ள அவரைச் சுற்றி நின்ற சிலர் எத்த னித்தார்கள். அந்த நிலையில் நான் இல்லை என்பதனை டானியல் உணர்ந் திருந்தார். அதனால்தான் அந்தப் பிரதியை எனது கையில் தந்திருக்க வேண்டும். பிரதியை என்னிடம் இருந்தே டானியல் மகன் பெற்றுச் சென்றிருக்க வேண்டும். நான் தட்டச்சுப் பதிக்கக் கொடுத்தவரிடம் இருந்து எனக்கு எந்த விதத் தகவலும் தெரிவிக்காது பிரதியை அவர் எடுத்துச்
*్య
Q స్థ ళ్ళ
'१'
சென்றரீர். த்துப் பிரதியைத் தட்டச்சில் பதிக்குமாறு யாரிடத்தில் கொடுத்திருந்தேனோ, அவர் நேர்மையாக எனது கையில் அந்தப் பிரதியைத் திருப்பித் தந்திருக்க வேண்டும். அவர்கள் முறையாக, நேர்மையாக நடந்து கொள்ளத் தவறி விட்டார்கள். என்பதனை நான் கண்டு கொண்டேன். இவ்வாறெ ல்லாம் நடப்பதற்கான ஒரு பின்னணி
நான் டானியலின் கையெழு
மல்லிகை ஜூலை 2007 奉 26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்பொழுது இருந்தது என்பதையும் நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.
"தண்ணிர்’ நாவல் நூலாக வெளி வருவதற்கு எந்தவகையிலும் நான் இடை யூறாக இருக்கக் கூடாது என்னும் எண்ண த்துடன் நடந்தவற்றை மனதுள் புதைத்து விட்டு மெளனமாக இருந்துவிட்டேன்.
அந்த நாவல் நூலுருப் பெற்று உடன டியாக வெளிவரும் என நான் எதிர் பார்த்தேன். அதற்காகத்தான் அத்தனை அவசரமாகப் பிரதியை எடுத்துச் சென்றிரு க்கின்றார்கள் என அப்பொழுது எனக்கு நானே சமாதானம் தேடிக் கொண்டேன்.
ஆனால் ஒரு வருடம் எட்டு மாதங் களின் பின்னரே அந்த நாவல் நூலாக வெளியிட்டு வைக்கப் பெற்றது.
வடபிரதேசத்தில் போர்க்காலச் சூழ் நிலை உருவான பின்னர், வீடுகளைவிட்டு அடிக்கடி இடம் பெயர்ந்து ஓடிக் கொண்டிரு ந்தவர்கள் வடமராட்சி மக்கள்தான். கடற் கரையை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கே அவலமான அந்த நிலைமை பெரும்பாலும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. எனது விடும் கடற்கரையில் இருந்து அதிக தூரமில்லை. நாங்களும் அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டிருந்தோம். இலங்கை இராணுவத்தின் வடமராட்சி “ஒப்பரேஸன் லிபரேஸன்" நடவடிக்கைகள் 26.05. 1987 காலையில் ஆரம்பமானது. இராணுவம் பலாலி முகாமில் இருந்து வெளியேறி முன்னேறிக் கொண்டு வந்தது.
அந்த நடவடிக்கைகள் ஆரம்பித்த பின்னர் ஒருநாள் மாத்திரம் குடும்பத்துடன்
வீட்டில் தங்கி இருந்தேன். இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருப்பதை அறிந்து மறுநாள் இரவோடு இரவாக வதிரி பூவற்கரைப் பிள்ளையார் கோயிலுக்குக் குடும்பத்துடன் போய்ச் சேர்ந்தேன். எங்க ளைப் போலக் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்துக்கு வந்து தங்கி இருந் தார்கள். வடமராட்சிப் பகுதியிலுள்ள ஆல யங்கள் பலவற்றில் மக்கள் இவ்வாறு ெ அகதிகளாகச் சென்று தஞ்சமடைந்திருந் தார்கள். உண்பதற்கு உணவு, சுகாதார வசதி தங்கி இருப்பதற்கு வசதி இவைகள் எதுவும் இல்லாது, அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற பீதியுடன் மக்கள் கலங்கிக் கொண்டிருந்தார்கள். காசு - கையில் இருந்தபோதும் பிள்ளைகள் உண்பதற்கு வேண்டிய உணவை வாங் கிக் கொடுப்பதற்கு உணவு எதுவும் கிடை க்காத பரிதாப நிலைமை.
கோயிலில் தங்கி இருந்த குழந்தை கள் முதல் நோயாளிகள், முதியவர்கள் வரை உண்பதற்கு உணவு ஒன்றுமே இல் லாது தவித்துக் கொண்டிருந்தார்கள். மக்கள் பட்டினியாகக் கிடந்து தவிப்பத னைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்ப தற்கு முடியவில்லை. ராஜ ருரீகாந்தனின் உறவினர்கள் இல்லங்கள் அந்த ஆலயத் துக்கு அண்மையில் நெருக்கமாக இருந் தன. ஆனால் அவர் குடும்பத்துடன் வந்து மக்களுடன் மக்களாக அங்கு தங்கி இருந் தார். அவரும், நண்பர்களான சி.க. இரா சேந்திரன், க. லோகநாதன் ஆகியோரும் நானும் இன்னும் சிலரும் சேர்ந்து அந்த ஆலயத்தில் கூடியிருக்கும் மக்கள் பசி 6oduul'u GBUTäsas 6T 6T 6UT GgFuiuuu6uomTb? 6T6IT
மல்லிகை ஜூலை 2007 奉 27

Page 16
ஆலோசித்தோம். இறுதியில் ஒரு முடிவு க்கு வந்தோம். ஆலயத்துக்கு அண்மை யில் இருக்கும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளையின் கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை உடைத்து, அங்கி ருந்த அரிசி மூட்டைகளைத் தூக்கி வந் தோம். கோயில் கிடாரங்களில் அரிசியைப் போட்டு கஞ்சி காய்ச்சிப் பசியினால் வாடிக் கொண்டிருந்த மக்களுக்குப் பகிர்ந்தளித் தோம். இதனை வெற்றுப்புகழ் பாடித்திரி வதற்காக அன்று நாம் செய்யவில்லை. பசிக் கொடுமையினால் வயிறு கொதித்த மக்களுக்கு எங்களால் முடிந்தவற்றைப் பொறுப்புடன் செய்தோம். இந்தக் காரிய த்தை எல்லோருடன் இணைந்து நின்று செய்த நான், முண்டி அடித்து கஞ்சி பெற் றுக் கொண்ட மக்கள் மத்தியில் எனது பிள் ளைகளுக்குச் சிறிய அளவிலாவது அந்த உணவை வாங்கிக் கொடுக்க எனக்கு இய் லவில்லை. இதனை அவதானித்த ராஜ ருநீகாந்தன் எப்படியோ முயன்று அந்தக் கஞ்சியில் சிறிதளவு வாங்கிவந்து எனது பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுத்தார்.
எனது இளையமகனுக்கு அப் பொழுது வயது ஏழு. அவன் உண்பதற்கு உணவில்லாது தாயின் மடியில் மயக்க முற்றவனாக சோர்ந்து படுத்துக் கிடந்த கொடுமையான காட்சி என் நெஞ்சை உலு க்கியது. அவனுக்கு எந்தக் குறையுமில் லாது அவனைப் பேணிப்பாதுகாத்து வளர் க்க வேண்டிய நான் அப்பொழுது எதுவும் செய்வதற்கு இயலாத கையறு நிலையில் கலங்கிக் கொண்டு நின்றேன். ஆனால் இன்று அந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது, ஒரு வகையில் அது எனக்குக் கிடைக்கப் பெற்ற பெரும்
பேறாகவே தோன்றுகின்றது. புத்தன் பெற்ற ஞானம் போல எனக்கு அப்பொழுது கிடைக்கப் பெற்ற போதங்கள் அமைந்தன. நட்பு, உறவு என்பவற்றின் போலித்தனங் களை நான் தரிசிக்கும் வாய்ப்பினை அந் தச் சந்தர்ப்பம் எனக்கு வழங்கியது. நேரந்த வறாது உணவுகளைச் சமைத்து உண்டு முடித்துவிட்டு, முகத்தில் பவுடர் தடவிக் கொண்டு கண்ணிர் சிந்தித் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் பொய் முகங்களுடன் சிலர் நடமாடிக் கொண்டிரு ந்தார்கள். என்னை நேரில் சந்திக்க நேர்ந்த போது சிலர் போலித்தனமான அனுதாப த்தை வெளிப்படுத்தினார்கள். சிலர் கண்டு போலியாகச் சிரித்தார்கள். வேறு சிலர் கண்டும் காணாதவர்கள் போல மெல்ல விலகிப் போனார்கள். இவர்கள் எல்லாரும் ஒரளவு வசதி படைத்தவர்கள். ஆனால் தனது பல குழந்தைகளுடன் அங்கு தங்கி இருந்த ஏழைப் பெண்ணொருத்தி எனது உறவுக்காரி- என்னைக் கண்ட சமயம் காகிதத்தில் சுருட்டி வைத்திருந்த புழுக் கொடியல் இரண்டினை எடுத்து "அத்தான் சாப்பிடுங்கோ' என என்னை நோக்கி நீட்டி னாள். எனக்குப் பசி பிறந்தது. உறவு, மனி தநேயம் என்பவைகளை அந்த ஏழைப் பெண்ணிடம் தான் நான் கண்டு கொண் ட்ேன். வயிற்றுப் பசியின் கோரக் கொடுமை அறிந்தவளல்லவா, அந்த வறிய பெண்
நான் வீடு விட்டுப் புறப்பட்ட நேரம் முதல் எந்த ஒரு உணவும் சில தினங்கள் உண்ணவில்லை. எனக்குப் பசி இல்லை. 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்" என் பது பொய்க் கருத்தென நான் கொண்டி ருந்த நம்பிக்கை பொய்த்துப் போயிற்று, உயிரச்சம், மனக்கலக்கம், ஏக்கம் என்பன
மல்லிகை ஜூலை 2007 & 28

இருளாக மனதில் கவிந்து கிடக்க வயிறு எங்கே பசிக்கப் போகிறது.
மூன்றாவது நாள் இராணுவம் அந்த ஆலயத்துக்கு வந்து சேர்ந்தது. இளை ஞர்கள் பலரைக் கைது செய்து கொண்டு போனது. அதன்பிறகு ஒரு வாரகாலம் கழி
த்துக் குடும்பத்துடன் வீடு திரும்பி வந்
தேன்.
அதன்பிற்பாடு ஒரு மாதகாலம் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயத்திலும், வீட் டிலுமாக இரவுவேளைகளில் அயலில் இரு க்கும் அனைவரும் ஒன்றாகத் தங்கினோம். நெல்லியடி மத்திய மகா வித்தியாலய இராணுவமுகாம் 06.07.1987 தகர்க்கப்
Lll-gil.
மீண்டும் அகதி வாழ்வு. எங்கள் கிராம த்தில் தங்கியிருப்பதிலும் பார்க்க, அல்வாய் வடக்கில் எனது தாயார் வழிவந்த இல்ல த்தில் போய்ப் பாதுகாப்புத் தேடி தங்கி இரு ந்தேன். அந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை என்பனை உணர்ந்து, ஒருவார காலத்தின் பின்னர் வடமராட்சிக்கு வெளியே வலிகாமப் பகுதியில் (09.07.1987) தாவ டிக்குச் சென்று குடும்பத்துடன் தங்கினேன். எனது சகோதரிகள் மூவரும் குடும்பங்க ளுடன் அங்கு வந்து தங்கி இருந்தனர். வேறு சில குடும்பங்களும் அங்கே இருந்தன.
நாங்கள் வாழத் தகுந்த அடிப்படை வசதிகள் தானும் இல்லாத பழைய நாற் சார் வீடு அது. நான் அந்த வீட்டில் தங்கியி ருப்பதை அறிந்து நண்பர் பேராசிரயர் சோ. கிருஷ்ணராசா என்னைத் தேடிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். வசதிகள்
அற்ற கஷ்டமான சூழ்நிலையில் நான்
வாழ்ந்து கொண்டிருப்பதை நேரிற்கண்டு, நான் குடும்பத்துடன் தங்கி இருப்பதற்கு வசதியான ஒரு வீடு ஒழுங்கு செய்து தரலா மெனவும், அங்கு வந்து தங்கி இருக்குமாறு நட்புரிமையுடன் கேட்டுக் கொண்டார். ஆனால் நான் அவர் வேண்டுகோளை ஏற்
றுக்கொள்ள மறுத்து விட்டேன். நெருக்கடி
மிகுந்த அந்தச் சூழ்நிலையில் எனது சகோ தரிகள், பிள்ளைகளை விட்டுப் பிரிந்து விலகி இருப்பதற்கு இயலாதென அவருக் குத் தெரிவித்துவிட்டுத் தொடர்ந்து அந்தப் பாழ்மண்டபத்தில் தங்கி இருந்தேன்.
தாவடியில் நான் தங்கி இருந்த சமயம் தினமும் "மல்லிகை 'க்குச் சென்று வந் தேன். ஜீவாவின் மணிவிழாக் காலம் அது. மணிவிழாமலர் "மல்லிகை ஜீவா’ தொகுப் பாசிரயர்களாகப் பேராசிரயர் நந்தியும் நானும் இருந்து செயற்பட்டோம். நான் தாவ டியில் தங்கி இருந்ததும், நித்தமும் 'மல்லி கைக்குப் போய் வந்து கொண்டிருந்ததும் மணிவிழா மலரைத் தொகுப்பதற்கு வெகு வசதியாக இருந்தது. ஆனால் நான் அமர்ந் திருந்து அந்த வேலைகளைச் செய்வதற் குத் தகுந்த ஆசன வசதிகள் அந்த பழைய வீட்டில் எனக்குக் கிடைக்கவில்லை. எனது முதற் சிறுகதையை எழுதும்பொ ழுது மடிமீது தலையணையை வைத்து அதன்மேல் ஒரு பயிலை வைத்து எழுதி முடித்ததுபோல மணிவிழாக் கட்டுரை களை வாசித்து தொகுக்கும் வேலைக ளைச் செய்து முடித்தேன். அதன் பின்னர் கட்டுரைகள் யாவையும் நந்தி அவர்களின்
பார்வைக்குக் கொடுத்தேன்.
இந்திய இராணுவத்தின் வருகை யுடன், சுமார் ஒருமாத காலத்தின் பின்னர்
மல்லிகை ஜூலை 2007 * 29

Page 17
03. 08. 1987இல் தாவடியில் இருந்து நாங்கள் வீடு திரும்பினோம்.
அன்றைய தினம் 'முரசொலி தினசரியில் எனது "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்' நாவல் வெளிவரத் தொடங் கியது. ஈழத்துப் பிராமணர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு வெளிவந்த முதல் நாவல் அது. அந்த நாவலை நான் எழுத வேண்டி நேர்ந்த சூழ்நிலைகள் எவ்வாறு உருவாகின என்பதனை நூலின் முன்னு ரையில் (என்னுரை) தெளிவாக எழுதி இருக்கின்றேன். அதனை நான் எழுதி முடி ப்பதற்கான பெருமளவு தகவல்களை எனது நண்பர் பா. ரத்தினஸபாபதி அய்யரும், சில தகவல்களை மதிப்பிற்குரிய எழுத்தாளர் கே. டானியலும் எனக்குத் தந்தார்கள்.
அந்த நாவல்பற்றிக் குறிப்பிடுகையில் அதனோடுதொடர்புபட்ட முக்கியமான தக வல்கள் சிலவற்றை இங்கு நான் தெரி வித்தாக வேண்டும்.
தனியார் கல்வி நிலையங்களுக்கு நான் சென்று வந்த காலத்தில், வடம ராட்சியில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு கல்வி நிலையத்துக்குப் போய் வந்து கொண்டி ருந்தேன். நான் கற்பித்துக் கொண்டிருந்த கல்லூரி வகுப்புகள் முடிந்தபின்னர் அவசர அவசரமாக அந்தத் தனியார் கல்வி நிலையம் போய்ச் சேருவேன். வகுப்புகள்
ஆரம்பிப்பதற்குச் சுமார் பதினைந்து
நிமிடம் முன்னதாக நான் அங்கு சென்றுவிடுவது எனது வழக்கம். அந்தக் குறுகிய கால இடைவெளி எனக்கு மிகவும் தேவை ப்பட்டது. சயிக்கிளில் வேகமாகச்
செல்லும் நான் சற்று நேரம் ஒய்வெடுத்து,
தண்ணிர் குடித்து, சிகரெற் புகைத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வேன்.
அந்தச் சமயம் அங்கு நிற்கும் மாண வர்கள் யாரையாவது அழைத்து நான் குடிப்பதற்குத் தேவையான தண்ணிரை எடுப்பிப்பது வழக்கம். அப்பொழுது அங்கி ருந்த க.பொ.த. சாதாரண தர வகுப்பில் அந்தணர் குடும்பத்து மாணவன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அவர்க ளுக்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் கற்பிக்கும் ஆசிரயராக நான் இருந்தேன். குறிப்பிட்ட அந்த மாணவன் மிகச் சுறு சுறுப்பானவன். கெட்டிக்காரன், ஆனால் அவனுக்குச் சில வசதிக் குறைவுகள் இரு ந்து வருவதனை நான் அவதானித்து வைத்திருந்தேன். அதனால் அவன் மீது வெளியில் சொல்லிக் கொள்ளாத அனுதா பமும் அக்கறையும் எனது மனதில் இரு ந்து வந்தது.
அவனுக்கு மிகப் பிரியமான ஒர் ஆசி ரியனாக நான் இருந்தேன். அதனால் வெகு நெருக்கமாக, அன்பும் மதிப்பும் பூண்ட மாணவனாக என்னோடு அவன் நட ந்து கொள்வான். எனது தண்ணிர்த் தேவை அறிந்து, தான் முந்திக் கொண்டு விந்து, செம்பொன்றில் தண்ணிர் எடுத்து வந்து பெரும்பாலும் அவனே எனக்குத் தரு வான். தண்ணிரைத் தந்துவிட்டு அங்கி ருந்து அவன் போய் விடமாட்டான். அடக்க ஒடுக்கமாக எனக்குமுன் நின்று வகுப்பு ஆரம்பிக்கும் வரை பேசுவான்.
ஒருதினம் அவன் என்னுடன் பேசிக் கொண்டு நின்ற சமயம் அவனைப் பற்றி


Page 18
நாவல் ஒன்று எழுதித் தருமாறு அதன் ஆசிரியர் என்னிடம் கேட்டுக் கொண்டார். எனது கைவசம் இருந்த "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்' நாவலைத் தினசரியில் வெளியிடுவதற்குத் தகுந்த வண்ணம் திரும்ப எழுதிக் கொடுப்பதற்குத் தீர்மானி த்தேன். ஆனால் நாவல் பிரதி அப்பொழுது என்னிடத்தில் இல்லை. அது எனது வீட்டில்! நான் தாவடியில் வீட்டிலுள்ள பிர திக்கும் என்ன நடந்ததோ! எனக்குத் தெரி யாது. வடமராட்சியில் முதியவர்கள் சில ரும், வளர்ப்பு மிருகங்களும் தவிர, ஏனை யவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளி யேறிவிட்டார்கள். அங்குதினமும் பல சம்ப வங்கள் நடை பெற்றுக் கொண்டிருப் பதாகப் பயங்கரச் செய்திகள் காதுக்கு வந்து கொண்டிருந்தன.
நான் வீட்டிற்கு ஒரு தடவைபோய் அந்த நாவலின் பிரதியை எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்குத் தீர்மானி த்தேன். எனது குடும்பத்தவர்களுக்கு அது விருப்பமில்லை. அவர்கள் எல்லோரையும் சமாதானப்படுத்தி விட்டு ஒரு நாள் காலை சயிக்கிள் வண்டியில் அங்கிருந்து புறப்ப ட்டேன். வல்லைவெளி தாண்டி வடமரா ட்சிக்குள் நுழைந்தபோதுதான் அங்கு நிலவிய பயங்கரச் சூழ்நிலை நெஞ்சில் உறைத்தது. ஆடுகள், மாடுகள், நாய்கள் தவிர மனிதத் தலைகளைக் காண்பது அரிதாக இருந்தது. முதியவர்கள் இரண் ட்ொருவரைத் மாத்திரம் காண முடிந்தது. பிரதான பாதைகளைத் தவிர்த்துக் குச்சொ ழுங்கைகளில் புகுந்து ஒருவாறு வீடு வந்து சேர்ந்தேன். வீடு மனிதர்கள் வாழும் இட மாக அப்பொழுது தோன்றவில்லை. காடா கக் கிடந்தது. மரங்களில் இருந்து இலை
கள் கொட்டி, முற்றமெங்கும் குப்பை கூழம் நிறைந்து கிடந்தது. வீட்டுக்குள்ளே கால் எடுத்து வைக்க இயலாதபடி அழுக்கும் தூசியும் படிந்திருந்து தடித்துக் கிடந்தது. ஆனால் வீட்டுக் கதவுகள் திறக்கப்படாது பூட்டிய வண்ணமே கிடந்தன.
எனக்கோ நீண்ட தூரம் சயிக்கிள் ஓடிவந்த களைப்பு. குடிப்பதற்குத் தண்ணிர் தானும் வீட்டில் இல்லை. கிணற்றில்தான் தண்ணிர் அள்ளிக் குடிக்க வேண்டும். கிணற்று நீரும் என்ன நிலையில் இருக்கி ன்றதோ! என்ற நினைப்பு மனதில்.
நான் வீட்டுக் கதவைத் திறந்த சத்தம் கேட்டு அயல் வீட்டில் தங்கி இருந்த வய தில் மூத்த சிவகுரு உடனே அங்கு வந் தார். அவர் தனது மனைவி மக்களை வட மராட்சிக்கு வெளியே பாதுகாப்பாய் அனுப்பி வைத்துவிட்டு தான் மட்டும் வீட்டில் தங்கி இருந்தார். நான் அவரிடம் தண்ணிர் கேட்டு வாங்கிக் குடித்துத் தாகம் தீர்த்தேன். "உடனே போகப் போறியளா?" என அவர் வினவியபோது, "வெயில் தணி ந்த பிறகுதான் போக இருக்கிறேன்,” எனச் சொல்லி அனுப்பி விட்டு வீட்டு விறாந்தை யில் ஒரு துண்டை விரித்து சரிந்து படுத்து விட்டேன். எனக்கோ சயிக்கிள் ஓடி வந்த
களைப்புடன் பசிக்களையும் சேர்ந்து
கொண்டது. நான் சூழ்நிலை மறந்து என்
னை மறந்து உறங்கிப் போனேன்.
ஒருசமயம் என்னை யாரோ அருட்டி எழுப்புவது போல உணர்ந்து கண்விழித் தேன். அயல் வீட்டு முதியவர் - எனது உற வுக்காரர் சிவகுரு ஒருகையில் தண்ணிர்
மல்லிகை ஜூலை 2007 & 32

நிறைந்த செம்பும், கோப்பையில் சோறு மாக நின்று கொண்டிருந்தார். வெள்ளைச் சோறும் முருங்கைக் காய்க் கறியும். அமு தம் என்று சொல்வார்களே! அதனை யாரும் உண்டதுமில்லை. எப்படி ஒன்றி ருப்பதான நம்பிக்கையும் எனக்கில்லை. நான் உண்ட அமுதம் அன்று நான் உண்ட அந்த உணவுதான். நான் பங்கு பற்றிய எந்தப் பெரிய விருந்தும் அதற்கு ஈடாகாது. சுவை என்பது நாவில் இல்லை. பசி, தேவை, உணர்வு என்பனதான் சுவை யைத் தீர்மானிக்கின்றன.
அந்த நாவலை அத்தியாயம் அத்தி யாயமாக நான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருக்க நாவல் முரசொலியில் பிர சுரமாகிக் கொண்டிருந்தது. நாற்பத்தைந்து தினங்கள் தொடர்ச்சியாக அது வெளிவந்து நிறைவு பெற்றது. ஆனால் அந்த நாவலின் ஒரு அத்தியாயத்தை முரசொலி ஆசிரியர் தந்திரமாக மெல்ல நீக்கிவிட்டார். அந்த அத்தியாயம் தவறிப்போய்விட்டதாக மன மறிய எனக்குப் பொய் கூறிவிட்டார்.
ஆழ்ந்த துயரமடைகின்றோம்
oo e o oo e o oo e o oo e o o oo e o oo e o oo e o oo e o
திரு. சு. வேலுப்பிள்ளை என்றழைக்கப் பெற்ற எழுத்தாளர் சு. வே. நம்மை விட்டு மறைந்துவிட்டார். அவரது மறைவையொட்டி மல்லிகை சகலருக்கும் தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
வீட்டுடன் அடங்கிக் கிடக்கும் பிராமணக் குடும்பத்துப் பெண்கள் பாலியல் ரீதியாக எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பத னைச் சித்தரிக்கும் அத்தியாயம் அது. 'முரசொலி ஆசிரியர் தமிழ்ச் சமூகம் பற் றிக் கொண்டிருந்த பொய்ம்மையான சமூக மேன்நிலை உணர்வினை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனது ஆட்சேபனையை அப்பொழுதுநான் அவருக்குத் தெரிவித்தேன்.
w f அந்த நாவல் நூலாக வெளிவந்த சமயம் நண்பர் ரத்தினஸபாபதி அய்யர் மட் டக்களப்பிலுள்ள தபாற்கற்தோர் ஒன்றில் கடமை ஆற்றிக் கொண்டிருக்கிறார் என அறிந்தேன். அவருக்கு அந்த நாவல் பிரதி ஒன்றை தவறாது அனுப்பி வைத்தேன்.
ஆனால் அவரிடம் இருந்து எந்த வொரு தகவலும் எனக்கு வந்து சேரவி ல்லை. அந்த நாவல் அவர் மனதில் எதிர் வினையான பாதிப்பை உண்டாக்கி விட்டதோ! என எண்ணி, நான் கவலைப்ப
ட்டுக் கொண்டேன்.
(வளரும்)
- ஆசிரியர்)
மல்லிகை ஜூலை 2007 率 33

Page 19
கவனிக்கப்படாத, கவனிக்கப்பட வேண்டிய ஈழத்து விமர்சகர்; எம். எம். எம். மஃரூப்.
- செ. யோகராசா
"...... அவருடைய தமிழ் இலக்கிய விமர்சன எழுத்துக்கள் ஒரு சக விமர்சகர் என்ற வகையில் அதி முக்கியம் உடையவை என்பதை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்."
- பேராசிரியர் கா. சிவத்தம்பி
1.0 ஈழத்து இலக்கிய வரலாற்றினைப் பீடித்துள்ள நோய்களுள் முக்கியமானது, படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் பலரது இலக்கிய முயற்சிகள் பற்றி நீண்ட காலதாமதத்தின் பின்னே அறியக்கூடியதாயிருப்பதாகும். (அல்லது அறிய முடியா திருப்பதாகும்) இதற்கான முக்கிய காரணங்களுளொன்று, அவை வெளிவந்த பத்திரிகைகள், மலர்களில் அவை உறங்கிக் கிடப்பது. அதனால் பின்னர் அவை நூலுருப் பெறும் போது, ஈழத்து இலக்கியச் செல் நெறி பற்றி மறுமதிப்பீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பித்தன் (ஷா), ஆவார். 1948இல் எழுத ஆரம்பித்த பித்தனின் ஆக்கங்கள் 1992 அளவிலேயே நூலுருப் பெற்றன. அவற்றை இக்கட்டுரையாளர் ஆழ்ந்து வாசித்த போது ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் முக்கிய புள்ளிகளுள்- முழுமைப் புள்ளிகளுள் அவர் முக்கியமானவர் என்பது புலனாகியது. (இது பற்றிய கட்டுரையாளரது ஆய்வு, உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு 'ஆய்வுரைக் கோவை'யில் இடம் பெற்றுள்ளது.) துர்ப்பாக்கியசாலிகளான இத்தகைய படைப்பாளர், ஆய்வாளர் வரிசையில் எம். எம். எம். மஃரூப் விமர்சகரென்ற விதத்தில் முக்கிய இடம் பெறுவதைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுவதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.
2.0 மஃரூப் ஈடுபாடு காட்டிய விமர்சனத்துறைகளுள் முக்கியமானவை புனைகதை (நாவல், சிறுகதை)யும் புதுக்கவிதையுமாம். இவ்விடத்தில் புதுக்கவிதைத்துறை பற்றியே கவனத்தில் எடுக்கப்படுகிறது.
2.1 அன்னார் புதுக்கவிதை பற்றி எழுதியுள்ள ஆறு கட்டுரைகள், ‘புதுக்க விதைத்த சிந்தனைகள்' என்ற மகுடத்தில் அண்மையில் நூலுருப் பெற்றுள்ளன. மல்லிகை ஜூலை 2007 * 34

(வெளியீடு: கன்ஷoல் உலூம் எம். எம். எம். மஃரூப் நினைவு மன்றம், கொழும்பு- 2002). இக்கட்டுரைகள் ஈழத்து விமர்சன உலகிலும் தமிழ் விமர்சன உலகிலும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.
2.1.1 ஈழத்து விமர்சன உலகினைப் பொறுத்த வரையில், நவீன இலக்கிய வகைகளுள் நாவல், சிறுகதை ஆகிய இரண்டுமே கூடிய கவனத்திற்குட்பட் டவை. க. கைலாசபதி (தமிழ் நாவல் இலக்கியம்) கா. சிவத்தம்பி (தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்,
நாவலும் வாழ்க்கையும்) ஆகிய இருவ
ருமே இவ்விதத்தில் இன்று வரை நன் கறியப்பட்டவர்கள். இவர்கள் இருவ ருமே புதுக்கவிதைத் துறை பற்றி ஆர் வம் காட்டவில்லை. மு. சிறீபதி, ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' பற்றிய கட்டுரைத் தொடரொன்றினைத் தினகரனில் (1970களில்) எழுதியிருப் பினும் அது முற்றுப் பெறாது போய்
விட்டது. ஆக இங்கு வற்புறுத்தப்பட
வேண்டியது, ஈழத்து விமர்சன வரலா றில் விதைந்துரைக்கப்பட வேண்டிய
*திக்கவிதை பற்றிய விமர்சன ஆய் கள் மஃரூப் அவர்களால் எழுதப் ட்டன என்பதே.
2.2 தமிழக, புதுக்கவிதை விமர் சன வளர்ச்சிப் பின்புலத்தில் மஃரூப் பெறும் இடம் எத்தகையது?
2.2.1. இவ்வழி, தமிழக புதுக் கவி தைக் கவிஞர்களான மு. மேத்தா, நா.
2.2.2
காமராசன், அப்துல் ரகுமான், இன்குலாப் ஆகியோர் பற்றி மஃரூப் எழுதிய கட்டுரைகள் முதற்கண் கவனி
ப்பிற்குள்ளாக வேண்டும்.
மேற்குறித்த நான்கு கவிஞர்க ளுமே தமிழகத்திலும், நவீன தமிழ்க் கவிதை வரலாற்றிலும் பிரபல்யம் பெற் றவர்கள். முக்கியமான கவிஞர்களாக வுள்ள அதே வேளை ஜனரஞ்சகக் கவி ஞர்களுமாகின்றவர்கள். (உ-மாக, மு. மேத்தாவின் ஊர்வலம் தொகுப்பு 17 பதிப்புக்களைக் கண்டது) தமிழக விமர்சகர்களால் இவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதே நம்முன் னுள்ள கேள்வி ஆகும்.
2.2.2.1 எனது கவனிப்பிற்குப் பின் வரும் நூல்கள் எடுத்துக் கொள்ளப் படுகின்றன.
* புதுக்கவிதை-முற்போக்கும்
பிற்போக்கும்- நா.வானமாமலை (1975)
*புதுக்கவிதை-நாலு கட்டுரைகள்
தமிழவன் (1977)
w
* புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை
UTGIOTT (1977)
*புதுக்கவிதை-ஒரு திறனாய்வு
ஆ. செகந்நாதன் (1978)
*தமிழ்ப் புதுக்கவிதை- ஒரு
திறனாய்வு- அக்கினி புத்திரன் (1990)
மல்லிகை ஜூலை 2007 & 35

Page 20
*புதுக்கவிதைகளில் படிமங்கள்
ந. முருகேசு (1986)
*புதுக்கவிதைகளில் குறியீடுஅப்துல் ரகுமான் (1999)
* புதுக்கவிதைகளில் நான்கு
போக்குகள்- ஹெச். ஜி. ரசூல் (1990)
2.2.2.2 முற்குறிப்பிட்ட நூல்களுள் சில, முக்கியமான நமது நான்கு கவிஞ ர்கள் பற்றியும் எதுவுமே குறிப்பிடப் படவில்லை. வேறு சிலவற்றில் சுருக் கமான குறிப்புக்களே இடம் பெற்றுள் ளன; சிலவற்றில் மேலோட்டமான குறிப்புக்களே உள்ளன. சுருங்கக் கூறின் மேற் கூறப்பட்ட நூலாசிரியர் களும் சரி ஏனையோரும் சரி முற்குறி த்த நான்கு கவிஞர்களையும் விமர்சன த்திற்குட்படாத பிறவிச் கவிஞர்களா கவே கருதியுள்ளமை, தமிழக ஆய்வு நூல்களை வாசிக்கும் ஆர்வலர்களால் நன்கு உணரமுடிகின்றது.
3. ஆக, முன்குறித்த நான்கு கவிஞ ர்கள் பற்றியும் ஆய்வு நூல்களிலோ, தனிக்கட்டுரைகளிலோ பக்கசார்பற்ற, நுண்ணிதான, விரவான விமர்சனப் பார்வை இடம்பெறாத தமிழக விமர் சனச் சூழலில் மஃரூப் தமது கட்டுரை களுடாக ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
3.1 நா. காமராசனின் கவிதைகள் வார்த்தைக் குவியல்கள் என்பதும்
அவரது இலக்கியக் கோட்பாடுகள் வெறும் இயந்திரமயமான உவமேய ங்களையும் இரு வெவ்வேறு பெயர்ச் சொற்களை மாட்டி, கொக்கிழுக்கும் குறுகூலத்தையும் உட்கொண்டவை என்பதும் மஃரூப்பினால் நிறுவப்படு கின்றன.
3.2 மேத்தாவின் கவிதைகள் பொருள்
அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு அவற்றின் போலித்தன்மைகள் அம்ப
லப்படுத்தப்படுகின்றன.
3.3 அப்துல் ரகுமானின் சிந்தனைக் கோட்பாடுகள் இனங்காணப்பட்டு அவ ற்றின் குறைபாடுகள் வெளிப்படுத்த ப்படுகின்றன.
3.4 இன்குலாப்பின் யதார்த்தமற்ற கற்பனைகள், சொற்பாவனைகள் முதலியன எடுத்துக் காட்டப்படு கின்றன. ஆக, தமிழ் நாட்டில் கொடி கட்டிப் பறந்த- பறக்கின்ற- நான்கு பிர பல்யமான கவிஞர்கள் மஃருப்பினால் 'அதி சப்தமிடும் வெறுமைகளாக முதன் முதலாக இனங்காட்டப்படுகி ன்றமை விதந்துரைக்கப்பட வேண்டிய தாகும்.
4. மஃருப்பின் விமர்சனப்பார்வை செழுமையுற அவரது அபாரமான மேலைத்தேய இலக்கியப் புலமை ஒப்பியல் வழியில் கைகொடுத்துத வியுள்ளது. எடுத்துக் இவ்விடத்தில் பின்வரும் பகுதியை எடுத்தாள்வது பொருத்தமானது.
st tes
மல்லிகை ஜூலை 2007 * 36

"...... இங்கு மேத்தாவின் 3 1/4, சூர்ப்பநகை என்ற கவிதையை நோக்
கலாம். சூர்ப்ப நகைக்கு ஒரு முத்தத்
தை எடுக்க முடியாமற் போய் விட்டுது. எனவே, அவள் ஒர் யுத்தத்தை வரவ ழைத்துவிட்டாள். இது ஒரு சமத்தகா ரமான பேச்சு. ஹைகூ அல்ல."
g60Tm 6io W. B. Yeats (C3uuu-sino) என்ற பிரபல ஆங்கிலேய (உண்மை யில், ஐரீஷ் நாட்டுக் கவிஞர், தமது கவிதை ஒன்றில் இவ்வாறு எழுதினார்.)
" Was it the face. lauched a thousandships. And burnt the topless towers at Iliyam"
சாமானிய இரசிகர்களுக்கு அதன் பொருள் தெட்டத் தெளிவாகப் புரிந்து விடுகிறது. "இவள் முகம் தானா ஆயி ரம் கப்பல்களை யுத்தத்தில் இழுத்தது. உன்னத நகரமான இலியம் நகரத்தின் கோட்டை கொத்தளங்களை இடித் " . . . . .تعیی
5. தமது கருத்துக்களைக் கலைநய த்துடன் வெளியிடும் பாங்கு ஈழத்து விமர்சகர்களிடம் அரிதாகவேயுள்ளது. மாறாக, மஃரூப்பிடம் இப்பண்பினையும் அவதானிக்கின்றோம். கட்டுரைகளு
க்கு இடப்பட்டுள்ள தலைப்பே இதற்குச்
சிறந்த எடுத்துக்காட்டுகளாகின்றன. நா. காமராசனது கவிதைகள் பற்றிய கட்டுரைத் தலைப்பு வீடு இல்லாத கூரை இது அன்னாரது கவிதைகளின் அடிப்படைப் பண்பினை எளிதாக
உணர்த்தி விடுகிறது. இன்குலாப்பின் கவிதைகள் பற்றிய கட்டுரைக்கு இடப் பட்ட தலைப்புச் சுவராஸ்யம் மிக்கது. பொதுவுடமை சார்ந்த அவரது கட்டு ரைத் தலைப்புக் காற்றிலே கலந்த புரட்சி என்றமைகின்ற போது அது ஆழமான அர்த்த புஷ்டியுடையதாகி விடுகின்ற தல்லவா?
6. அங்கதப் பார்வையின் உச்சத் தையும் மஃரூப்பிடம் கண்டுகளிக்க முடியும். நா. காமராசனின் கவிதை பற்றி ஒரு இடத்தில் இவ்வாறு கூறுவார்; ‘மூன்றாவது பிரிவாக அமைவது உலகத்தின் ஜடப் பொருட்களான செம்மண், புல், நடைபாதை, தளிர், பகல் மேகங்கள், வானவில், எதேச்சை யாகப் பார்த்தால், சிறுவர்களுக்கான கவிதை இலக்கியமோ என்ற ஐயப்பாடு தோன்றும். அது தப்புக்கணக்காகும். உண்மையில் சிறுவர் கவிதைகளில் கிடைக்கும் நேரடித்தகவல். செழுமை, வீரியம் ஆகியவை இவரது கவிதைத் தொகுப்பில் இல்லை என்றேபடுகிறது."
7. மஃரூப், ஈழத்து விமர்சன வரலா ற்றில் மட்டுமன்றி, தமிழக தமிழ் விமர் சன வரலாற்றிலும் முக்கிய இடம் பெற த்தக்கவர் என்பதினை வெளிப்படுத்து வதற்கு இக்கட்டுரை விரிவான ஆய் வினை வேண்டி நிற்கிறது. அதைவிட முக்கியமானது, தினகரனிலே அவர் தொடராக எழுதி வந்த தமிழ்நாட்டுப் புனைகதையின் தோற்றமும் வீழ்ச் 9uqub" (Guo 16, 1967- Lomirš 6, 1968) என்ற விமர்சன ஆய்வு நூலுருப் பெறுவ தாகும். அம் முயற்சி காலத்தின் கட் டாயக் கடமை என்றே கருதுகின்றேன்.
மல்லிகை ஜூலை 2007 * 37

Page 21
நினைவழியா நாட்கள். 5
ஞாபகம்
பரன்
இணக்கமான சிரிப்பு. எங்கேயோ பார்த்திருக்கின்றேன் என்று மனதுக்குள் பல்லி சொல்லிற்று. கதைக்கலாம் போல இருந்தது.
என்னைத் தெரியுமா..?
ஒமண்ணை. தெரியும்.
எப்படித் தெரியும்.?
O இந்தப் பள்ளிக்கூடத்தில உங்களைத் தெரியாதவை இருக்கேலாது.
மனம் சந்தோஷத்தில் கிளர்ந்தது. பாடசாலையை விட்டு ஐந்து வருடங்களாகி விட்டன. ஏறக்குறைய பாடசாலையையும் மறந்தாயிற்று. இவனுக்கு. இப்போதைய
மாணவன் ஒருவனுக்கு இன்னமும் என்னை ஞாபகம் இருக்கிறதே. பெருமையாக இருந்தது
நல்லாய்ப் படிச்சு முன்னுக்கு வரவேணும்.
தாங்கஸ் அண்ணை. என்று சொல்லிவிட்டுப் போனான்.
பாடசாலையினுள் நுழையும் போது கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பழைய கணித
ஆசிரியர் வரும்படி அழைப்பு விடுத்து இருந்தார். ஆசிரியர்கள் சிலரைத் தவிரத்
தெரிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்றுதான் நம்பியிருந்தேன். இப்போது தயக்கம் விட்டுப் போயிருந்தது.
பாடசாலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. முன்னர் “ரெனிஸ்’ விளையாடிய இடத்தில் புதிதாக இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று. பரிசோதனைச் சாலையின் பின்பக்கத்தே நெடிது வளர்ந்த நான்கு மாடிக் கட்டடம். அவ்வளவுதான்!
மல்லிகை ஜூலை 2007 38

அதிபரின் அலுவலக அறை அப்ப டியே மாற்றமின்றி இருந்தது. விறாந்தையில் அதே வாங்கு. சாய்மனைக் கதிரை போன்ற வசதியுடன் இருக்கும் நீளமான வாங்கு. அதை எப்படி மறக்க முடியும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான ‘தண்டனை வாங்கு அல்லவா!
உயர்தர வகுப்பில் குழப்படிக்குத் தண்டனை வித்தியாசமானது! அந்த வாங்கில் உட்கார வேண்டியதுதான். தண் டனையின் தரத்துக்கு அமைய வாங்கில் உட்காந்திருக்க வேண்டிய நேரம் கூடும். குறையும். பாடசாலைக்கு வருவோர், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோருமே வாங்கில் இருப்பவரைப் பார்த்துக் கொண் டுதான் போவார்கள். அதுவே பெரிய தண்டனை. அதிபர் மாறினாலும் தண்
டனை முறையில் மாற்றம் இல்லை
போலும் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது
“என்ன தேவன் சிரிக்கிறீர்கள்’ . என்ற குரல் கேட்டது. புதிய அதிபர். அவரும் என்னுடைய பழைய ஆசிரியர்
தான்!
“பாடசாலை நாட்களை மறக்க
(Մ»ւ9պԼDIT? ..... வேலைக்குப் போனா
லென்ன . அவை மனதில பகமையா
த்தான் இருக்கும். ”
ஸ்ராவ் றுாமிற்குள் போனபோது நல்ல வரவேற்பு இருந்தது. பழைய முகங்கள் ஆர்வமாகச் சுகம் விசாரித்தன. புதிய முக ங்களையும் அறிமுகமாக்கிக் கொண்டேன்.
GG
என்ன. கொழும்புக்குப் போனதால
எங்களையெல்லாம் மறந்துவிட்டாயோ என்று நினைத்தேன்’ என்றார் கணித ஆசிரியர். ஆளனுப்பிக் கூப்பிட்டவர் அவர் தான். "
பேச்சு மதிய இடைவேளை வரை நீண்டது. புறப்பட்டு வெளியே வந்தேன். அதிபரின் அறை எதிர்ப்பட்டது. அந்த நீளமான. சாய்மனைக் கதிரை போன்ற 'தண்டனை வாங்கு. மண்டபத்தைக் கடந்து வாசற்பக்கம் வந்தபோது, அதே மாணவன்தான் மீண்டும். கையில் நோட்டுப் புத்தகங்களோடு. மொனிற் றராக இருக்க வேண்டும். திரும்பவும் அதே இணக்கமான சிரிப்பு எப்படி என்னை ஞாபகத்தில் வைத்திருக்கிறானோ . . ஒருவேளை. பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்றதைப் பார்த்திருப்பானோ அல்லது கால்பந்து விளையாட்டில் என் மனதில் புதியதொரு உற்சாகம் கேட்க வேண்டும் என்று மனம் உன்னியது.
ரசிகனோ.
தம்பி. என்னண்ணை.?
எப்படி என்னை அவ்வளவுதூரம் ஞாபக வைத்திருக்கிறீர்...? அவன் உருகணம் தயங்கினான். மெல்லிய சிரிப்பொன்று எட்டிப் பார்த்தது.
“நீங்கள் அடிக்கடி இந்த வாங்கிலை. இருக்கிறனிங்கள் தானே. அதுதான் நல்ல ஞாபகம் இருக்குது”
எனக்குள் நட்சத்திரங்கள் மின்னின.
மல்லிகை ஜூலை 2007 牵 39

Page 22
முகம் சிவந்த அதிகானையின் அவதிக்குரத இழுத்துக் கொண்டு விரைஜிற @ffബ്രബ് ീuന്നു.
亲举举 பூக்கன் உத7கிற அழுகை அணைப்பதற்கு மனதின் இரைகணைத் 6ത്രക്ര இராணுவச்சிப்பார். துப்பாக்கியின் நுனியின் எச்சமிடும் கழுவிரை
70Gന്ന്7 குறியார்த்துக் குண்டுகனைர் ബശ്രീ.ബരീമ0 ഗ്രീക அதிவேகமாகத்தயாராக W c2S60ld?65
இறந்து போனது ക0൬ിഡ്വൈ’ ഗ്രഞഖം
姿姿姿
2- 2-602)/2days அன்னதுதார்
எனது உறவுக் கொடியின் இன்னாத போதும் ൬) ഉ-ത്സു @ബc.dീ @ബിന്നു ബ്ര ഗ്രബസ് ©മ്രക്രിസ്ത്രഞ്ച நிச்சயமாக அது ക്രൈ நியமம் இன்ைை.
நீயோநானோ ♔മ്ര് ഗബ് czég? ൦്മിറ്റബ நானும் நீயும்
ീഗസ്ത്രി മസ്കീബ ബീബ് 2டனது கரத்தின் கர்ப்பமான குண்டின் பிரசவத்தின் நீயும் நானும் 7ந்த விதத்திலும் 0ഞ്ഞില്ക്കക്രീഗ്ഗ് ലേ ീഗ്രബത്രബ്
染染姿 /%D72%29 ിഗ്ഗ്രസ്മെ മൃതജ?
மல்லிகை ஜூலை 2007 ஐ 40

இரசனைக் குறிப்பு.
வாழ்வின் செம்மைகளையும் ரேழிவுகளையும் பேசும் கதைகள் - மா. பாலசிங்கம்
இலக்கிய நேசர்கள் மத்தியில் வேலோன் என நன் மதிப்பைப் பெற்று
ஆ. இரத்தினவேலோர் ό வரும் ஆ. இரத்தினவேலோன் தமிழ் 委つ இலக்கியத்தின் இரு முக்கிய கூறுகளில்
தன் உழைப்பைப் பெய்து வருகிறார். அக்
கூறுகளாவன படைப்பு, திறனாய்வு என்பனவாகும். படைப்பிலக்கியத்தில் சறுக்கி விழும் கதைஞர்களே, திறனாய்வுக்குப் பாய்வதென்ற கருத்தொன்று இன்றும் இலக்கிய உலகில் வலம் வருவதை இலக்கிய அக்கறையாளர்கள் அறிவர்! ஆனால் இக்கணிப்புத் தறவறென்பதைத் தமது இலக்கியப் பேராற்றலால் எண்பித்திருக்கும் சில எழுத்தாளர்களை இலக்கிய வரலாறு இனங்காட்டும். அத்தகைய பன்முக ஆற்றல் மிக்கோராகச் க. நா. சு, சிதம்பர ரகுநாதன், சுந்தர ராமசாமி, தருமு சிவராமு, மு. தளையசிங்கம், எஸ். பொன்னுத்துரை, தெளிவத்தை ஜோசப் ஆகியோரைச் சுட்டமுடியும். இந்த முன்னோடிகளின் வாரிசாகி, இந்தப் பட்டியலை நீட்சி பெற வேலோன் முன் வந்து உழைப்பது பாராட்டுக்குரியதே
இவரது தன் நூல் தோட்டத்தில் ஒன்பது நூல்கள் இருப்புக் கொண்டுள்ளன. இதில் ஐந்து சிறுகதைத் தொகுப்புக்கள். எஞ்சிய நான்கும் திறனாய்வுகள். இவைகளும் சிறுகதை சம்பந்தமானவையே இயல்பாகவே மிக மென்மையான சுபாவத்தையுடைய வேலோனின் இந்த ‘விசுவரூபத்தைக் காணும் பொழுது மலைப்பாகவே இருக்கின்றது
'நெஞ்சாங்கூட்டு நினைவுகள்’ சிறுகதைத் தொகுதி இவரது அண்மைக் கால அறுவடையாகும். ஒன்பது சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பாசம், சாதி, கலாசாரம், எழுத்தாளனின் நிலை என்ற எடுகோள்களை அடக்கி, மரபுடைப்புச் செய்யாமல,நகர, கிராம வாழ்வின் கோல விரிப்புக்காக இக்கதைகள் புனையப்பட்டிரு க்கின்றன. இதில் ஐந்து கதைகள். “எனது வாழ்க்கைக் கோலத்தினுடே எம் தேசியத்தின்
மல்லிகை ஜூலை 2007 奉 41

Page 23
சமூக மாறுதல்களை சித்தரித்துச் நிற்க”
கடைசி நான்கு கதைகளும் 'புது அனுபவச் சித்தரிப்புகளாக அமைந்து.” இருப்பதாகக் கதைஞர் நேர்மையாகக் கூறியுள்ளார். நிஜத்தை எழுதும் பொழுது படைப்பின் தாக்கம் அதிகரிக்கும் இதை உணர்ந்து அநேக படைப்பாளிகள் மாட்டிக் கொள்ளாமல் தமது வாழ்வின் கோலங்க ளையே படைப்புக்களில் பிரதி செய்வ துண்டு. ஆனால் அதை வெளிப்படையாக கூறுவதில்லை! அந்த வகையில் ஆ. இரத்தினவேலோன் துணிச்சல்காரரே!
'நெஞ்சாங் கூட்டு நினைவுகள்' தொகுப்பின் தொடக்கக் கதை. குடும்பப் பாங்கான இரசனையைத் தருகின்றது. தான் கிணற்றில் தண்ணிர் அள்ளிக் குளிக்க முடியாத அகவையில்- தாய்க்கு உதவியாக இருந்த- தாரத்தால் கைவிட்ட நடுவில் அம்மான் குறித்து வேலோன் 2006இல் எழுதியது. தாய் மாமன் அல்லவா! பாசத்தின் வேர்கள் கருகாதிருப்பது எழுத்தில் தெரிகின்றது.
Lull
நாவலப்பிட்டி மாமாவும் நடுவில ம்மானும் சென்ற பின்னர் முகம் வீங்க அம்மா அழுகின்றார். இரத்த பாசக் கசிவு.
நாவலப்பிட்டி மாமாவும் நடுவில ம்மானும் யாழ் தேவியில்த் தான் பயணம் அதிகாலை நேரப் பயணம். சிறியவனாகிய செல்லத்தம்பி வோலன் எப்படிப் பயணம் அனுப்ப எழும்புவான்? தூக்கத்தில் கிடந்த மருமகனின் கையில் நடுவிலம்மான் தனது பயணக் காசாக ஐம்பது சதத்தை வைத்துவிட்டுச் செல்கிறார். உறவுப் பசையின் அழுங்குப்பிடி இதை வாசிக்கும் எந்தவொரு வாசகனும் ஒரு மனச்சித்தி ரத்தைப் பெறுவான்.
நாளாந்தம் தம்மை ஊட்டி வளர்த்த நடுவிலம்மான் பயணம்சென்ற திக்கை நோக்கி, மூன்று மாடுகளும் தமது பாசத்தை வார்த்தைகளில் வார்க்க முடியாவிட்டாலும்; "ம்மா. ம்மா' ஒலி எழுப்பி வெளிப்படுத்துகின்றன. இவ்விரு நிகழ்வுகளும் கதைக்கு ஊட்டத்தைக் கொடுத்து கதையை மனதில் உறைய வைக்கின்றன.
"சரவணை' என்ற கதை சாதீயம் சம்பந்தமானது. சரவணையின் மகன் உயர் சாதிப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடியதால் கிராமம் கொந்தளிக் கின்றது. மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளிலொன்றான வதிவிடங்கள் கொழுத்தப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் அகதிகளாக்கப்படுகின்றனர்.
சாதீயத்தின் கதை என்பதற்கான தடயங்கள் இதில் மிகவும் குறைவு. சரவணை என்ற பெயர் உயர் சாதியின ருக்கும் உண்டே! எனவே இப்பெயரைத் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான குறியீ டாகக் கொள்ள முடியாது. "உவர்தான் என்ர ஒரே மகன் ரவுணில வேலை பார்க்கிறார். ஒவ்வொரு புதனும் அவருக்கு வீலு." இது சரவணை கூறுவது. இதில் ஓர் உண்மை தொக்கி நிற்கின்றது. வேலோன் கடதாசிக் காற்றாடி புடித்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் புதன் கிழமைகளி ல்தான் சிகை அலங்கார நிலையங்கள் மூடப்படும். எனவே இத் தடயத்தை வைத்துச் சரவணையை நாவிதராக ஏற்கலாம். அடுத்தது- "எங்கை யெங்கை கை நனைக்கிறதெண்டு. ” єп6üт др அம்மாவின் கூற்று யாழ்ப்பாண வட்டார வழக்கில் சரவணையை ஒடுக்கப்பட்ட
ہر 4 جنتیجہ nn7دہ (مہ سمہ --سے ۔۔ حبہ مہرہ مہم ،

சமூகத்துக்குள் தள்ளுகின்றது. இவ்விரு தடயங்களிலும் சாதி நேரடியாகக் காட்ட ப்படவில்லை குறியீடாகவே காட்டப்பட்டி ருக்கின்றது. இளைய தலைமுறை வாசகர்களுக்கு இவைகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா?
தனது சிறுவயதில் தனது சூழலில் ஏற்பட்ட நிகழ்வொன்றை 2005இல் பதிவதெனில் கதைஞர் தன் சூழலிருந்த சமூகத்தை நுணுக்கமாக அவதானித் திருப்பது புரிகின்றது. அத்தோடு, சாதி அனுட்டானத்தை அவர் முற்போக்கு நிலையில் நின்று பார்ப்பது அம்பலமா கின்றது. இன்னும்- தமிழ்ச் சூழல் பற்பல தாக்கங்களை உள்வாங்கி அவலப்பட்டுக் கொண்டிருந்த 2005இல் கூட சமூக விடுதலை உறுதிப்படுத்தப் படவில்லையெ
ன்பது தெளிவாகின்றது அதற்கு அனுசர
ணையான கதையே "சரவணை"
'பரிசுகளும் விருதுகளும் ஆனை சேனை போல சனமும் எழுத்தாளர் கையைக் காலை ஆட்டும் வரைதான்." இப்படியான அபிப்பிராயம் நடைமுறையில் சாத்தியப்பட்டிருக்கின்றது. புகழ் பூத்த தமிழ் எழுத்தாளர்களான மகாகவி சுப்பிரமணிய பாரதியார், புதுமைப் பித்தன் ஏன் அண்மையில் அமரரான நகுலன் ஆகியோரது இறுதி ஊர்வலங்கள் இதை எண்பித்திருக்கின்றன! இதனால் மனஞ் சோர்ந்த சிந்தனையாளர்களும் உண்டு இருந்தும் "தந்தையுமாக" என்ற சிறுகதை வாசிக்கும் பொழுது நம்பிக்கையை
மனதில் கவிய வைக்கிறது. எழுது கோலை எடுக்கத் தூண்டுகிறது.
"முதுபெரும் எழுத்தாளரைக்
கடற்கோள் காவு கொண்டது" எனப் புதினப் பத்திரிகை தலையங்கம் தீட்டு மளவிற்கு இலக்கியத்தில் ஆழக்கால் பதித்து இலக்கிய உலகைக் "கலக்கி யவர்" தா. தாமோதரம். சுனாமியால் பாதிக் கப் பட்டுத் தர்மாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டரை
மாதங்கள் அவருக்குப் பார்வையாளர்களே
கிடையாது! தேடிவருகிறான் ஒருத்தன். அவன் ஒரு சிறந்த கதைஞனாக உதவி யவர் தாமோதரம். தேடிக் கண்டுவிட்டான். மூத்த எழுத் தாளர் தாமோதரத்தின் மூன்று நாவல் களை நூலாக்குவதாக வாக்களிக்கிறான். அந்த இனிய செய்தியைக் கேட்டபின்னர் எழுத்தாளர் தாமோதரம் வரலாறாகிறார். இது இன்றைய எழுத்துலகில் எழுத்தாளனுக்கு நம்பிக்கையை ஊட்டவும், இலக் கிய சந்ததி தொடர்வதற்கு உந்துதலைக் கொடுக்கக் கூடியதுமான சிந்தனை! வோலானிள் நடைமுறையை வாழ்வில் நிகழ்ந்த உண்மையாக இருந்தாலும் ஈழத்து இலக்கிய உலகுக்கு இதைக் குறைந்தளவிலாவது சாத்தியப் படுத்தி இருக்கிறது.
'அறிமுக விழா' என்ற சிறுகதை மூலமாகக் கதைஞர் இன்றைய எழுத்து லகம் மீது எரிசரம் தொடுக்கிறார். எழுத்தா ளர்கள் சமூகத்துக்குப் புகட்டும் போதத் திற்கு அமையத் தமது வாழ்வின் அசை வியக்கத்தை நெறிப்படுத்துவதில்லை யென வெகுண்டெழுகிறார். இலக்கிய த்தைப் படைப்பாளிகளின் 'டோப்பு" ஆக்குவதை பதிவு செய்துள்ளார். தவறி ழைப்போருக்கு எச்சரிக்கை தரும் கதை
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங் கொல் என வேண்டா-நின்று
மல்லிகை ஜூலை 2007 奉 43

Page 24
தளரா வளர்த் தெங்கு தாழுண்ட நீரைத் தலையாலே தான் சொரிதலால்.
இன்றல்ல பல்லாண்டு காலமாக இப்பாடல் தமிழ்வாழ்வைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னொன்று
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” இதுவும் எமது ஆன்றோர் தமது சந்ததிக்காக விட்டுச் சென்றிருக்கும் வழிகாட்டி. இவ்விரு நன்நெறிகளையும் மறுவாசிப்புச் செய்யும் வாய்ப்பு "அம்மா” என்ற கதையில் கிடைக்கின்றது.
கட்டிய கணவன்- வாஞ்சையோடு வளர்த்த உடன்பிறப்புகள் ஆகியோரால் கைவிடப்பட்டுத் திக்கற்றவளாக்கப்பட்ட வயோதிய மாது மானுடத்துக்குச் சவால் விடும் வகையில் பிற நகரங்களில் மாவட்டங்களிலிருந்து வந்து கல்விகற்கும் மாணவர்களு க்குச் சமைத்து உணவு
கொடுத்துத் தன் சீவியத்தைத் தொடர்
கிறாள். பருவமாற்றம் அவளது வைராக் கியத்தை நொருக்கு கின்றது. தொடர்ந்து தொழில் செய்யமுடியாத நிலை. நிவாரண அட்டையில் காலத் தைப் போக்காட்டு கிறாள். இயற்கையின் தொடர்ச்சி நீளுகின்றது. நோய் ஆதிக்கம் பெறுகி ன்றது. தர்மாஸ்பத்தரியில் கிடக்கிறாள். பல்கலைக்கழக மாணவனாக இருந்த பொழுது அம்மாவிடம் உணவருந் திய டாக்டர் ஒருவர் அதிர்ஷ்ட வசமாக அம்மாவுக்குச் சிகிச்சை அளிக்க வருகி றார். அவளது நிலை கண்டு மனமுருகி அவள் தனக்குச் செய்த உதவிக்குக் கைமாறாக அவளைத்தானே பொறுப் பெடுத்துத் தாபரிக்க முன்வருகிறார்.
கதைஞரின் ஜீவகாருண்ய மனம் இக்கதையில் பதிவாகி இருக்கின்றது. சுயநலத்தையே தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கிவரும் இக் காலச் சமூகத்துக்கு இதுவொரு சிறந்த மாத்திரை. முதியோர் பக்கம் அன்பைச் சொரிய வைக்கும் எத்தனம்
பருவக் கோளாறை மையமாக வைத்து விர சந்தட்டாத வகையில்ப் புனையப்பட்ட இருகதைகள் தொகுப்பில் உண்டு.
ஒன்று 'பிறந்தநாள்' மற்றது "புத்துணர்ச்சி’ இவ்விரண்டும் "தனிப்பட்ட எனது வாழ்க்கைக் கோலத்தினுரடே." எனக் கதைஞர் கூறியிருப்பதன் மூலம். a a அவரது சொந்த வாழ்வின் அநுபவச் சிதறல் இருக்கலாம்
பாலியல் கற்கைக்குத் தற்பொழுது பூபாளம் இசைக்கப்படுவதை வாசகர்கள் அறிவர். கல்வித்திட்டத்தில் அதுவுமொன்றாக வேண்டுமென்ற தெண் டிப்பு அறிஞர்கள் வட்டாரங்களிலிருந்தும் கூட பெருக்கெடுத்துக் கொண்டிருக் கின்றது. இது உலக மயமாதலின் உதைப்பாகவும் இருக்கக் கூடும்
எமது
வாலிபச் சேஷ்டைகளுக்கு தன்னை வசப்படுத்தும் வாலிபன் பற்றியது 'பிறந்த நாள்'. பெண்களோடு உரசி ஸ்பரிச சுகம் காண்பதில் தமது சிற்றின்ப உணர்வுகளு க்குத் தீனி போடும் ஆசாமிகளும் நம்மத்தியில் உண்டு. இத்தகையோ ருக்குச் சமூகம் "வழிஞ்சோடிகள்", "பெண் பொறுக்கிகள்" என முத்திரை குத்தி அவர்களை ஒதுக்கியும் வைத்திருக் கின்றது. இத்த கைய ஒரு கதை மாந்தனை வேலோன் 'பிறந்தநாள்' என்ற
மல்லிகை ஜூலை 2007 季 44

கதையில் நிறுத்தி இருக்கிறார். இவர் பேருந்துக்குள் தன் தாயையொத்த இல்லத்தரசி ஒருவரோடு உரசல் சுகம் பெறமுனைந்து பகிரங்கமாக நல்ல "கிழி' வாங்குகிறார்: ஜென்ம எண் ஏழு (7)க் சிற்றின் பத்தில் * “ 6ás "" கானவர்களாம்! இதை எண் சோதிடர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும்!
காரர்கள்
பாலியல் செயற்பாடுகளைச் சித்தரி க்கும் "புளுஃபிலிம்" என்ற திரைப்பட வகை களில் இச் செயற்பாடுகளை யதார்த்த வடிவில் காணலாம். "சொல்லித் தெரிவதி ல்லை மனமதக் கலை" என்ற அறிவுறு த்தல் இருக்கும் போதும் இப்படங்களைப் பார்ப்பதற்கு இளசுகளோடு முழுப் பழசுக ளும் திரள்வதுண்டு இதன் மூலமாக எமது கலாசாரமும் இளைய சமுதாயமும் சீரழியுமென்பதை இதன் இரசிகர்கள் கருத்திலெடுக்கமாட்டார்கள். இத்தகைய ஓர் இரசிகனைக் கதைஞர் 'புத்துணர்ச்சி” என்ற கதையில் அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தை திரையிட்டிருக்கும் திரை அரங்குள்ள முடுக்கைத் தேடிப் போவது; திரை அரங்கின் கோலம் என்பவை, கண் னால் கண்டதைப் போலக் கதையில் வார்க் கப்பட்டிருக்கின்றன. படம் பார்க்கச் சென்றவர் தழம்பல் மனத்தவர். பிரயத்தன ப்பட்டுத் திரை அரங்கைக் கண்டு பிடித் தவர் படத்தைப் பார்க்காது தமிழக்கத் ப்போடு வெளியேறுகின்றார் பாவம்
இருபது வருடம் கலிபோர்னியாவில் புகலிடம் பெற்ற அகதியொருவர் சொந்த மண்ணிற்குத் திரும்பிய பொழுது அதன் தன்மைகளை அவருக்கு உணர்த்துவது "புதிய தரிசனங்கள்.” மானுடத்தோடு வழிவந்த பண்புகளைக் கொடிய யுத்தத்
தாலும் தகர்க்க முடியாதென்பதை உணர் த்துகின்றது. தவத்தான் சீலன் நீட்டிய இரண்டு மயில் தாள்களையும் ஏற்க மறுக்கிறான். இரண்டாவது முறையாகத் தனக்குக் கிடைத்த பிச்சைக்காசை பிச்சைக்காரி திருப்பிக் கொடுக்கிறாள். இவ்விரு நிகழ்வுகள் மூலமாகக் கதைஞர் யுத்த கள வாழ்வின் செம்மையை வாசகனு க்குப் புகட்டுகிறார். ஆழ வேர் ஊன்றிச் சொந்த மண்ணில் நிற்கும் மக்களின் மனத்திடத்துக்கு வலுவூட்டும் கதை
"சாதிக்குள்ளும் சாதிகள்" என்பதைச் தொட்டுச் செல்கிறது. "ஒற்றைப்பனை" இதைப் புற அனுபவச் சித்தரிப்பு என வகைப்படுத்துகிறார் கதைஞர். தாழ்த்த ப்பட்ட மக்களுக்குள்ளும் ஏற்றத் தாழ்வு
பார்த்து வாய் கை நனைக்காமை, சம்ம
ந்தம் எடுக்காமை இன்னமும் பேணப்படு கின்றது! இக்கதையில் வடலித்திடலாரும் செம்பாட்டுத் திடலாரும் அத்தகைய போக்குடையவர்களென்பதற்கான உணர்த்தல் பொட்டாகவே தெரிகின்றது. ஆனால் விரிவான புரிதலுக்கான விபரிப்பு இல்லை! கதைஞர் வாசகனின் சிந்தனை க்கே விட்டிருக்கிறார்.
தொகுப்பிலுள்ள ஏனைய கதைகளை விட இக்கதையில் கதைவளம் தூக்கலாக இருக்கிறது. கணவன் வெளிநாடு சென்ற பின்னர் மலர்விழி மாணிக்கனோடு தனது கற்பைப் பகிர்ந்து கொள்கிறாள். அவள் எதிர்பாராத தருணத்தில் திரும்பி வந்து அவளோடு வாழ்ந்து, sഞ ഖങ് இறந்தபின்னர் புனிதவதியாகி மாணிக்க னோடு வாழ மறுக்கிறாள். கள்ள உறவு தொடராமல் நின்று போனது நல்லதுதான்! இருந்தும், விதவா மறுமணத்தை கதைஞர்
மல்லிகை ஜூலை 2007 & 45

Page 25
சிந்தித்திருந்தும் அது கதையில் ஆட்சி பெற வைக்கவில்லை. இன்றைய ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு மிகத் தேவையான ஓர் இனம் சார்ந்த பிரச்சினை கணக்கெடுக் கப்படாத போது கதையில் சமகால நோக்கு தேய்வைப் பெறுகின்றது.
இக்கதை 1982இல் புனையப்பட்டி ருக்கிறது. இக்காலகட்டத்தில் அடிமட்ட வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களி லாவது தேத்தண்ணிச் சிரட்டையும் பனங் கட்டிக் குட்டானும் "புழக்கத்தில் இரு ந்ததா?" அல்லது தொடர் யுத்தம் விதைத்த வறுமையின் குறியீடா, இது? பனங்கட்டிக்
வருகினறன. ஒத்தாப்பு, வட்டில், அப் பிராணி, வாழ்மானம், சத்தகக் கத்தி, வார ப்பாடு, கண்டாயம், ஐதாக இச் சொற்கள் இளைய சந்ததிக்கு அந்நியமானவை. மொழியிலாளரின் தேவைகளைத் தீர்க்கக் Ցուցա6626\l.
பொதுவில்- ஜனரஞ்சக நச்சலோடு இலக்கிய இலயிப்பைத் தரும் சொற்கள் கொண்டு சரளமாகச் சொல்லப்படும் கதைகளே இவைகளெனலாம்.
கொழும்பு- 6 மீரா பதிப்பகத்தின் 65ஆவது வெளியீடாக இத் தொகுப்பு
குட்டான் இருந்திருக்கலாம். வெளிவந்திருக்கிறதென்பது ஈழத்து லக்கிய உலகிற்கு நல்ல நடுவர் தான்.
{5 புழக்கத்துக்கு ஒறுப்பாகிவிட்ட வட் டார வழக்குச் சொற்கள் கதைக்குக் கதை
N
岑 等 மனும் நிறைந்த
苯 平 竿 孚 வாழததுககள
நம்ம முருகபூபதியின் மூத்தமகள் பாரதி அமெரிக்க- அவுஸ்திரேலியா ஆசிரியத் தம்பதிகளின் புதல்வர் ஜேம்ஸ் ஆகியோருக்கு 9.06.2007 அன்று அவுஸ்திரேலியாவில் வெகு சிறப்பாகத் திருமணம் நடை பெற்றது.
புதுமணத் தம்பதிகளை ஈழத்து எழுத்தாளர்களின் சார்பாக மல்லிகை வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர்夕
மல்லிகை ஜூலை 2007 率 46
 

ஜம்ஸ் எனும் ஆளுமையும், அவதானிப்புக்களும்
- நாச்சியாதீவு பர்வீன்
(15.07.2002 அன்று எம்மை விட்டகன்ற மர்ஹாம் எம். எச். எம். வடிம்ஸ் அவர்களின் நினைவுக் கட்டுரை)
தத்துவங்கள் எழுதுவது இலகு. அவை செயற்பட வேண்டும் என்று எதிர்பார் க்கப்படும் தளமே சமூகம். சமூக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசப்படும் தத்துவங்கள் கல்லில் தூவப்படும் விதைகள் போன்றவை.
'இல்லாத மாயைகளை எழுதிக் கற்பனையாக எழுதி எழுத்துலகை ஏமாற்றுவது படைப்பாளியின் பணியல்ல. வேஷங்களை முகங்கிழித்துக் காட்டி சமூக அநீதிகளை ஒழிக்கும் பாரிய கடமைப்பாடு எழுத்தாளனுக்குண்டு. எனவே தான் எழுத்தை ஒரு தவம் என்பர்' என்ற ஆழமான எண்ணச் சிதறல்களை 30.03.2002ஆம் திகதி தினகரனில் ‘புதுப்புனல்" பகுதியில் அருவிக்கரை எனும் இடத்தில் எம்.எச்.எம்.ஷம்ஸ், பதித்து வைத்தார்.
வடிம்ஸ் எனும் பல்கலை வித்தகன் நம்மைவிட்டுப் பிரிந்து இன்று ஐந்தா ண்டுகள் கடந்து போய்விட்ட நிலையிலும், ஈழத்து இலக்கிய உலகில், அவரினால் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி அலையின் ஒசை இன்னும் இனிய இராகமாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
1997ஆம் ஆண்டு 'புதுப்புனல்’ எனும் பகுதியைச் சனி தினகரனில் தயாரித்து வழங்கி நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்களையும் சிந்தனாவாதிகளையும், இனங்கண்டு, அவர்களைப்பட்டை தீட்டி, பதப்படுத்தி இன்று வீரியமாக எழுதிக் கொண்டிருக்கும் பல புதிய படைப்பாளிகள் உருவாக காத்திரமான அடித் தளமொன்றை இட்டவர் எம்.எச்.எம் வடிம்ஸ் என்றால் அதுமிகையாகாது அவர் தட்டிக் கொடுத்து, பிழைதிருத்தி, சிந்தனை மாற்றங்களை உருவாக்கி எழுத வைத்த எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்பதில் நான் இன்னும் சந்தோஷம் கொள்கின்றேன்.
ஆரம்பத்தில் ஆக்கமொன்றை எழுதத் துடிக்கும் இளசுகள் தமது பெயர் ஏதாவது ஒரு சஞ்சிகையில் அல்லது, பத்திரிகையில் வரவேண்டும் என்ற அருட் டருணர்வுடனே எழுத ஆரம்பிக்கின்றனர். இதற்கு விதிவிலக்கும் இருக்கலாம்
மல்லிகை ஜூலை 2007 牵 47

Page 26
எனினும், அதிகமானவர்கள் தனது எழுத்துப்பயணத்தை இப்படித்தான் ஆரம்பிக்கின்றனர். அப்படித்தான் நானும், ஏதாவது ஒரு பத்திரிகை யிலோ! சஞ்சிகையிலோ! படைப்பு பெயரும் வர வேண்டும் என்ற ஆதங் கமும் தவிப்பும் எனக்கும் இருந்தது.
எனது மாவட்ட எழுத்தாளர்களான,
அன்பு ஜவ ஹர்ஷா, கெகிராவ சஹானா ஆகியோரது ஆக்கங்களைப் பத்திரிகை களில் பார்க்கும் போது எப்படியாவது எனதும், எனது ஊரின் பெயரும் பத்திரிகையில் வரவேண்டும் என்ற ஆர்வமேலிட்டால், பல பத்திரிகைகளுக்கு நானும் கவிதை களை எழுத ஆரம்பித்தேன். ஆனால், எனது எண்ணம் நிறைவேறவில்லை. கார ணம் எந்தப் பத்திரிகையும் எனது ஆக்கங்களை உள் வாங்கிக் கொள்ள வில்லை. சிறிது காலத்தில் அலுத்துப் போய்விட்ட்ேன். இருந்தும், தொடர்ந் தும் கவிதை, நாவல் கட்டுரை என்று எனது வாசிப்பைத் தீவிரப்படுத்திக் கொண்டே இருந்தேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் எனது சில
கவிதைகள் "ஜனனி இதழ்களில் பிரசுர மாகின. இருந்தும், தேசிய பத்திரிகைக ளுக்கு நான் எத்தனை எழுதியும் எனது ஆக்கங்கள் பிரசுரமாகவேயில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில்தான், 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் தினகரன் சனி இதழில் 'புதுப்புனல்’ எனும் பகுதியை எம்.எச்.எம். வடிம்ஸ் ஆரம்பித்து நடா த்தத் தொடங்கினார். புதுப்புனல் முற்று முழுதாக எழுதத் துடிக்கும் இளைய புதிய எழுத்தாளர்களின் இதய வீணை
யாக இருந்ததையுணர்ந்து ஆர்வ த்துடன் எழுதத் துவங்கினேன். பல கவிதைகள் புதுப்புனலுக்கு அனுப் பியும் எனது கவிதைகளில் ஒன்றேனும் பிரசுரிக்கப்படவில்லை. சுமார் ஆறு மாதகாலம் தொடர்ந்து எழுதியும் பயணி ல்லை. ஆனால் ‘புதுப்புனல்" இன் கவர் ச்சியும், வசீகரமும் என்னை அதன்பால் கவர்ந்திருந்தது. அத்துடன், "அருவிக் கரை' எனும் பகுதியின் மூலம் எம்.எச். எம் ஷம்ஸ் அவர்கள் வழங்கி வந்த ஆலோசனைகள், குறிப்புகள் என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்ததோடு எனது எழுத்துக்களை மீள்பரிசோ தனை செய்யும் களமாகவும் அது அமைந்தது.
'அருவிக்கரை எழுதத்துடித்துக் கொண்டிருந்த என் போன்ற ஆர்வலர் களை நிற்கவைத்து, சிந்திக்க வைத் தது. பட்டை தீட்டியது. ஆம் எனது முதலாவது கவிதை சில திருத்தங் களுடன் புதுப்புனலில் பிரசுரமாகியது. மிகமிக நீண்டகால எத்தனிப் புக்களுக்கு மத்தியில் ஏலவே, சில பத்திரிகைகளில் எனது கவிதைகள் பிரசுரமாகியிருந்தாலும், புதுப்புனலில்' எனது கவிதை வெளியாகிய போது எனக்கிருந்த சந்தோஷமும், உணர் வும் வார்த்தைகளில் வடிக்க முடியா தவை. இப்படித்தான் எனக்கும் கவி தைக்குமான தொடர்பு ஆரம்பத்தில் புதுப்புனலினால் ஆரம்பிக்கப்பட்டது. அன்று தொடக்கம் எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களுடன் ஒரு அன்னியோன்ய தொடர்பு எனக்கு ஏற்பட்டது. பின்னர் தான் தெரிந்து, என் போலவே, நூற்றுக்
மல்லிகை ஜூலை 2007 & 48

கணக்கானவர்களை அவர் மெல்ல மெல்ல எழுத்தாளர்களாய் மாற்றிவிட் டிருக்கின்றார் என்கின்ற மாபெரும் உண்மை.
மர் ஹoம் எம்.எச்.எம். ஷம்ஸ் அன்று என் போன்றவர்களை புறக்க னித்திருந்தால் இன்று அவர் பற்றிய இந்தக் கட்டுரை எழுதும் எண்ணமும், ஆர்வமும் எனக்கு ஏற்பட்டிருக்காது என்பது வெளிப்படையான உண்மை யாகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய மென்றால், வட-கிழக்கு, மலையகத் தைத் தாண்டி சிங்களம் செறிந்து வாழும் நிலப்பரப்புகளில் தமிழ் இலக் கியம் படைத்தவர்கள் முஸ்லிம்கள் என்று திரு டொமினிக் ஜீவா அடிக்கடி சொல்வார். அவரது அந்த வாதம் மெய்யானதும், மிகச் சரியானதும் ஆகும். அநுராதபுரத்திலிருந்து அன்பு ஜவ கர்ஷா, திக்குவல்லையிலிருந்து எம். எச்.எம்.ஷம்ஸ், திக்குவல்லைக் கமால், மினுவாங்கொடையிலிருந்து மு. பவர் என்று பலராலும் அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்கள், பெரும்பான் மைச் சிங்களவர்களையும், அந்தக் கலாசார சூழலையும் அண்டிய பிரதே சத்தவர்கள் அல்லது அவர்க ளோடு கலந்து வாழ்பவர்கள். இவர்கள் மட்டு மன்றி சிங்களப் பிரதேசத்திலிருந்து செந்தமிழ் இலக்கியம் படைக்கும் இன்னும் பல ரையும், நாம் சுட்ட (լpւգալb.
ஷம்ஸ் அவர்களின் படைப்புக் களில் ஆழமான விமர்சனப் பார்வை
இருக்கும் கண்டனங்கள் தெரிவிக்கப் படும். மதத்தின் பெயரால் நடத்தப்படும் மடத்தனமான மூடக்கொள்கைகளைச் சாடும் துணிகரமிருக்கும், சமயத்தின் பேரால் நடாத்தப்படும் அனாச்சார ங்களை வெளிக்காட்டி அம்பலப்படு த்தும் திறமையும், வன்மையும் இருக் கும். இதனால் பல்வேறுபட்டவர்களின் கோபத்திற்கும், விமர்சனத்திற்கும் அவர் உள்ளாகியிருந்தார்.
ஷம்ஸ்- ஆக்க இலக்கிய கர்த்தா பாடகர், முஸ்லிம் பாரம்பரியக் கலை யின் விற்பன்னர், மொழிபெயர்ப்பாளர், எனப் பன்முகத்தளத்தில் தீவிரமாக இயங்கியவர். அதேவேளை சகோதர மொழியான சிங்கள மொழியின் கலை இலக்கிய முயற்சிகளைப் பற்றி தமிழிலும், தமிழ் பேசும் மக்களின் முயற்சிகள் பற்றி சிங்களத்திலும் எழுதித் தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்ப்டுத்தும் வகை யில் அயராது உழைத்தவர் என்கின்ற அடையா ளங்களே வடிம்ஸ் பற்றிய தெளிவான சிந்தனைகளை உண்டு பண்ணிக் கொள்ளப் போதுமானவை களாகும்.
முற்போக்குச் சிந்தனைகளை மையமாகவும், பிரதானப் படுத்தியும் சமூக அவலங்களைச் சாடும் ஒரு உன் னத படைப்பாகத் தனது ‘கிராமத்துக் கனவுகளை தந்ததன் மூலம் சமூக மட்டத்தில் பலத்த விமர்சனங்களை எதிர் நோக்கியவர் ஷம்ஸ். எதற்கா கவும், யாருக்காகவும் தான் கொண்ட இலக்கியக் கொள்கையிலிருந்து வளை ந்து கொடுக்காத கம்பீரப்போக்கு வடிம்சுக்கே உரிய தனித்தன்மையாகும்.
மல்லிகை ஜூலை 2007 奉 49

Page 27
1970களின் பிற்பகுதியில் எச்.எம். பி.மொஹிதீன் அறிஞர் அஸிஸ் நினை வுகள்' எனும் நூலை எழுத அதற்குப் பதிலாக ஏ. இக்பால், எம்.எஸ்.எம். இக் பால் ஆகியோருடன் சேர்ந்து வடிம்ஸ் அவர்களும் ஒரு நூலை வெளியிட்டு இலக்கியப் பரப்பில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்கள். இதில் ஷம்ஸின் பங்கும் அளப்பெரியது. இந்த நூலின் முன்னுரையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெகுவாக விமர்சிக் கப்பட்டது. இதில் பிரேம்ஜி, கைலாச பதி, எஸ். பொன்னுத்துரை, கமால்தீன், டொமினிக் ஜீவா முதலானோர் விமர்சிக்கப்பட்டி ருந்தனர் (சிலேடை யாக) என்பதும் குறிப்பிடத்தக்கது.
டொமினிக் ஜீவாவுடன் இலக்கிய ரீதியான கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்த் அவர் மெய்யாகவே ஜீவாவின் இலக்கியப் பணிகளைப் பாராட்டவும், விமர்சிக்கவும் தவறவி ல்லை. ஜீவாவும் அப்படித்தான்! திக்கு வல்லையில் நடந்த வடிம்ஸ் அவர் களின் கிராமத்துக் கனவுகள்' நாவல் வெளியீட்டு விழாவுக்கு டொமினிக் ஜீவா கொழும்பிலிருந்து சென்றிருந் ததும், தன்னோடு இலக்கிய ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஷம்ஸ் அவர்களின் அட்டைப்படத்தை மல் லிகை அலங்கரித்ததும் மூத்த எழுத்தா ளர்களின் பெருந்தன்மைகளையும் தூய இலக்கிய நடத்தைக் கோலத் தையும் புலப்படுத்தி நிற்கின்றது.
இலக்கியத்தையும் தாண்டித் தனது பரந்துபட்ட தேடலின் பயனாக
மெல்லிசை, இஸ்லாமிய கீதம், நாட் டாரியல், போன்றவற்றிலும் கவ்வாலி கசல் போன்ற இசை மரபுகளையொற்றி அவர் பாடல்களை இயற்றி இசையமை த்துப் பாடும் வல்லமையும் ஷம்ஸ் பெற் றிருந்தார். இவரது மெல்லிசைப் பாடல் திறனுக்கு உதாரணமாக "வெள்ளைச் சிறகடிக்கும் வெண்புறாவே' எனும் பாடல் இன்று மட்டுக்கும் மங்காப் புகழோடு எம்மத்தியில் உலா வருகி ன்றது. சமாதானத்தை வலியுறுத்தும் அப்பாடலானது பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டாலும், இப்போது அந்தப் பாடலைக் கேட்க முடியாதது எமது துரதிர்ஷ்டமே!
குறிப்பாக முஸ்லிம்களின் கோலா ட்டம், களிகம்பு ஆட்டக்கலையில் அவருக்கு ஆழமான அறிவும் பயிற்சி யும் இருந்தது. மரபுரீதியாக இதனை அறிந்திருந்ததோடு தற்காலத்திற்கு ஏற்றவாறு ஆட்டங்களிலும் நடன அசைவுகளிலும் மாற்றங்களை ஏற். படுத்தி அதனை நவீனப்படுத்துவதி லும் அவரது திறமைகள் வெளிப் பட்டன. அருகிச் சென்று கொண்டிரு க்கும் இக்கலையைத் தென்பகுதியில் இளைஞர்கள், மாணவ, மாணவியர் மத்தியில் உயிரோட்டமுள்ளதாக வைத்திருப்பதற்கு அவர் மேற்கொண்ட பணிகள் தனி அத்தியாயத்திற்குரிய விடயங்களாகும்.
பல வருடங்களாகச் செயலற்றுக் கிடந்த இலங்கைக் கலாசாரப் பேர வையின் முஸ்லிம் நுண்கலைப் பிரிவை மீண்டும் செயற்பட வைப்பதற்கு நடந்த
மல்லிகை ஜூலை 2007 & 50

முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங் கினார். கலைக்குழு அமைக்கப்பட்டு அது தொடர்ந்தும் இயங்குவதற்கு இடையறாது பாடுபட்டார். நுண்கலைப் பிரிவு அவருக்குப் பெரிதும் கடன்பட் டுள்ளது என்கின்ற முஸ்லிம் நுண் கலைக் குழுத்தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்களின் கூற்று இங்கே நினைவு கூரத்தக்கது.
மொழி பெயர்ப்பு இலக்கியத்தின் பால் மிகுந்த அவதானம் செலுத்திய எம்.எச்.எம். வடிம்ஸ் அவர்கள், தனது சிங்கள மொழிப் புலமையினூடாகப் பல நூறு கட்டுரைகளைச் சிங்கள நாளிதழ்களிலும் எழுதினார். 'சாளரம்" எனும் பகுதியின் Cyp 6No LDT 5 மிகத்தரமான சிங்கள இலக்கியங் களையும், இலக்கியக் கர்த்தாக்களை யும் எமக்கு அறிமுகம் செய்து வைத்து அந்த இலக்கிய த்தையும் இரசிக்க வைத்தவர்.
1974ஆம் ஆண்டு "தென்னில ங்கை முஸ்லிம் பேச்சு வழக்கு' எனும் ஆம் வுக் கட்டுரையை "மலர்'
சஞ்சிகையில் எழுதினார். தான் சார்ந்த
சமூகத்தின் மொழியியலின் நகர்வுக ளையும், மொழி ப்பயன்பாட்டையும் இங்கே அவர் கட்டியிருந்தது குறிப்பி டத்தக்கது.
1977ஆம் ஆண்டு கொழும்பு பல் கலைக்கழக மாணவர் மன்ற ஆண்டு மலர் "யதார்த்தாவில்” சிங்கள இலக்கி யத்தில் திமிழின் செல்வாக்கு' எனும் ஆய்வுக் கட்டுரையை எழுதி தனது சிங் கள இலக்கியம் சார்பான பரந்த ஆளு
மையை நிறுவினார் மர்ஹாம் ஷம்ஸ் அவர்கள்.
1988களில் ராவய சஞ்சிகையில் மடிகே பஞ்சாசீஹ தேரர் எழுதியிருந்த “சிங்கள பெளத்தத் தன்மைக்கு எதி ரான ஐந்து தீய சக்திகள்” எனும் இனத் துவம்சக் கட்டுரைக்கு 1989- மார்ச் ‘ராவய பத்திரிகையிலும் 'வினிவித சஞ்சிகையிலும் சரியான பதிலடியை மறுப்புக் கட்டுரை மூலம் கொடுத்தார்.
1992ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் வெளியிட்ட இரண்டாவது விருது விழா மலரில் "சிங்கள இலக்கியத்தில் முஸ்லிம் களின் பங்கு' என்ற ஆய்வுக்கட்டு ரையை எழுதினார்.
1995களில் ஈரானியத் திரைப்படங் களை எமக்கு அறிமுகப்படுத்தி, அத்துறையின் மேம்பாடுகள் பற்றி தினகரனில் விரிவாக அலசினார். இன்றும் ஈரானிய திரைப்படத்திற்கு நிகரான எதார்த்தப் போக்குடைய திரைப்படங்கள் உலகளாவிய ரீதியில் தயாரிக்கப்படுவது மிக அரிதாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஷம்ஸ், பாஹிரா, நீள்கரை வெய் யோன், முல்லையூர் வல்லவன், இஸ் திராக், அபூபாஹிம், ஷானாஸ், இப்னு ஹமீட் ஆகிய பெயர்களில் மறைந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகள் மொழி பெயர்புகள் என்றும் தனது ஆழமான தேடல்களை எழுத்துப்படுத்தினார். மர்ஹoம் எம்.எச்.எம் வடிம்ஸ் சிறுவர் இலக்கியத்தின் பால் அதீத ஈடுபாடு கொண்டதன் பயனாக வண்ணத்துப்
மல்லிகை ஜூலை 2007 & 51

Page 28
பூச்சி சிறுவர் பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிறார்களின் செவிகளுக்கு விருந்தாக்கினார். இன்றும் வண்ணத் துப் பூச்சிப் பாடல்கள் சில பாடசாலை களில் மாணவர்களுக்காக ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. சிறு கதை, கவிதை, விமர்சனம், என்று அவர் கால் பதித்த ள்ல்லாத் துறைக ளிலும் தேடலும், ஆர்வமும் ஆழமான அறிவும் கொண்ட ஒருவராக எம்.எச். எம். வடிம்ஸ் விளங்கினார்.
மர்ஹ0ம் எம்.எச்.எம். ஷம்ஸ், சமாதான பூமியாய் எமது இலங்கைத் தீவு மலர வேண்டும் என்றும் அதில் மக்களெல்லாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் கனவு கண்டவர். எம்.எச்.எம். வடிம்ஸ் அவர்களின் மறை வின் பின்னால் நானும், சகோதரி உக் குவளை பஸ்மினா அன்சாரும் சேர்ந்து ஒரு நினைவுக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டோம். ஆனால் அது வடிம் ஸின் இலக்கியப் புலம் பற்றியும், ஆழம்
பற்றியும் ஆராயும் வகையில் இல்லை.
அது வெறும் நினைவுக் கவிதைத் தொகுதிதான். ஆனால் மர்ஹ0ம் ஷம்ஸ் அவர்கள் பற்றிய ஆழமான தேடலும், அவதானமும் கொண்ட ஒரு பூரணமான ஆய்வு நூலொன்று அவசி யம் வெளியிடப்பட வேண்டும். அது எதிர்கால இலக்கிய நகர்வுகளுக்குப் புதிய, இளைய தலைமுயிைனருக்கு உந்து சக்தியாகவும், ஆவணமாகவும், அமையும் என்பதில் வேறு கருத்தி ல்லை.
கவிஞர் ஏ. இக்பால், திக்கு வல்லைக் கமால் போன்ற மூத்த எழுத்தாளர்கள் வடிம்ஸ் அவர்களுடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர்கள் இந்த அரும் பணியை மேற்கொள்ள லாம். ஷம்ஸ் அவர்களின் மறைவின் பின்னால், நாடளாவிய ரீதியில் ஷம்ஸ் மன்றம் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் கவிதை, கட்டுரைப் போட்டி கள் இப்போது நாடளாவிய ரீதியில் நடாத்தப்படுகின்றன. இவைகளையும் தாண்டியும் மர்வுற0ம் எம்.எச்.எம். ஷம்ஸ், ஆழ்ந்து நோக்கப்பட வேண்டி யவர். சமாதானாத்தை யாசித்த அவர் இப்படிப் பாடினார்.
ஈழச் செழுங்காவில் இளந் தென்றல் தீப்பிடிக்க வாழச் சகியாமல் மலரினங்கள் புலம்பினவே.
《》《》《》 தீப்பிடித்த தென்றல்
சிறகெல்லாம் கொலை நகங்கள்
கூப்பிட்ட பூக்களுக்கும் கொடுமை விலக்கல்ல.
《》《》《》 மேகம் கருக்கட்டும் மின்னோடு இடிக்கட்டும் வேகும் கனம் வெப்பு விலகல் பொழியட்டும்.
《》《》《》 ஈழச் செழுங்காவில் இனங்கள் இணையட்டும்
'ஊழி ஊழிவரை
ஒற்றுமை ஒலிக்கட்டும்.
மல்லிகை ஜசலை 2007 盛52

சிவப்பு துரியனைத் தேடிச் செல்லும்
எம் &gsöglir Luuuooogišglaló சிறகுகள் இரண்டான போதிலும் நாம் V
பறப்பது ஒரு திசையில் தான்
எனும் அறிவிப்புடன் கண்டி ரா. நித்தியானந்தனை ஆசிரியராக கொண்டு காலாண்டு இணைய இலக்கிய சஞ்சிகையாகச் சிறகு தனது முதலாவது
மல்லிகை ஜூலை 2007 率 53

Page 29
இதழைக். கடந்த தை 2007 முதல் இணையத்தில் விரித்திருக்கிறது. இலங்கை யிலிருந்து தற்பொழுது தமிழ் இலக்கிய இணைய இதழாகச் சிறகு தனித்து நிற்கிறது.அதன் இரண்டாவது இதழ் ஜூன் மாதம் தளம் ஏறி இருக்கிறது. ஒரு நல்ல முயற்சி என்றே சொல்லத் தோன்றுகிறது. இதுவரை தளமேறிய இரண்டு இதழ்களிலும் சிறுகதை நூல் விமர்சனம், கவிதை, பத்தி எழுத்து, கட்டுரை எனப் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன. சிரமமான ஒரு முயற்சிதான். முதலாவது இதழில் இடம் பெற்றுள்ள பின் திரும்பும் பின்நவீனத்துவம் எனும் அனுகூலனின் கட்டுரையும் இளைய அப்துல்லாவுக்கு ஒரு கடிதம் எனும் தலைப்பில் ஆர்.பரமேஸ்வரன் எழுதி இருக்கும் விடயதானமும் நம் கவனத்தைக் கவர்கின்றன. அத்தோடு இரண்டாம் இதழில் இடம் பெற்றுள்ள இளைய ஒவியர் தினேஷ் பற்றிய குறிப்பும் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்ப்போம் எனும் குறிப்பும் முக்கியத்துவமிக்கவையாக இருக்கின்றன வரும் இதழ்களில் கடந்த இதழ்களுக்கான தொடுப்புக்களை இணைப்பதன் மூலம் கடந்த இதழ்களை தவற விட்டவர்களுக்கு உதவியாக இருக்கும். அத்தோடு இன்றைய காலகட்டத்தில் இணையத்தை பொறுத்தவரை தமிழ் இணையத் தளங்கள் பெரும்பாலானவை யுனிக்கோட்டுக்கு மாறி விட்ட சூழலில் சிறகும் தன்னை யுனிக்கோட்டுக்கு மாற்றி கொள்ளவதன் மூலம் இலகுவாகவும் பரவலாகவும் இணைய வாசகர்களைச் சென்றடையக் கூடியதாக இருக்கும். இத்தகைய தமிழ் மொழி மூலமான இணைய முயற்சிகள் இலங்கையை தளமாக கொண்டு மேற்கொள்ளுதல் என்பது குறைவான நிலையில் ரா.நித்தியானந்தன் அவர்களின் ஆர்வமிக்க முயற்சியினை நாம் பாராட்டத்தான் வேண்டும். சிறகு இதழ்களை விரிவாகப் பார்க்க பின்வரும் இணைய விலாசத்திற்குப் போகவும்.
www.siragu.com
Email: editor(a)siragu.com
மல்லிகை ஜூலை 2007 奉 54

என்.சொக்கன்
இணையத் தளங்களில் விஷயங்களைத் தேடுவதற்கு பயன்படும் முறையான தேடு பொறிகளில் பல உள்ளன. அத்தேடு பொறிகளில் இன்று இணையத்தளத்தில் பிரபலமாக விளங்கும் கூகுள்(Google) தேடுபொறியினை உருவாக்கிய இரு இளைஞர்களான லாரி பேஜ் (Larry Page), மற்றும் செர்கி பிரின் (Sergey Brin) ஆகிய இருவரை விரிவான முறையில் அறிமுகப்படுத்தும் ஒரு நூல் வெளி வந்துள்ளது. தமிழகத்தைச் சார்ந்த என்.சொக்கன் என்பவர் இந்த நூலை எழுதி இருக்கிறார். தேடு எனும் தலைப்பில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலை எழுதியுள்ள சொக்கன் கணணித்துறை சம்பந்தமான பல நூல்களையும், இன்றைய உலக அரங்கில் சர்ச்சைக்குரிய பல பிரபலங்களை பற்றியும் பல நூல்களையும் வெளியிட்டுள ளார். அத்தோடு அவர் ஒரு சிறுகதையாளரும் கூட.
கூகுள் தேடுபொறியை உருவாக்கிய லாரி பேஜ (Barry Page) ,மற்றும் செர்கி பிரின் (Sergey Brin) ஆகிய இருவரைப் பற்றிய விரிவான அறிமுகமாக இந்த நூல் அமைவதோடு, தேடுபொறி தொழில் நுட்பத்தை பற்றிய அறிதலும் இந்த நூலின் மூலம் நமக்குக் கிடைக்கிறது.
இந்த நூலைப் பற்றிய பதிப்பகக் குறிப்பு இவ்வாறு கூறுகின்றது.
“ஒரு ப்ராண்ட் மிகவும் பிரசித்தி பெறும் போது, அதன் பெயரே ஒரு காரியத்தைச் செய்யும் வினைச் சொல்லாக மாற்றப்படுகிறது. ஜெராக்ஸ் என்பது நகலெடுக்கும்
இயந்திரம் செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயர். இன்றோ நகலெடுப்பதையே ஜெராக்ஸ் எடுப்பது என்று நாம் சொல்கிறோம் அதைப் போன்றே இன்டர்
மல்லிகை ஜூலை 2007 率 55

Page 30
நெட்டில் ஒரு விஷயத்தைத் தேடுவது என்பதையே 'கூகுள் செய்வது' என்று சொல்லும் அளவுக்கு கூகுள் ஒரு புரட்சியைச் செய்துள்ளது.
இந்த நிறுவனத்தை உருவாக்கியவர்கள் அமெரிக்காவின் ஸ்டான்.போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து தமது படிப்பை முடிக்காமல் வெளியேறிய இரண்டு மாணவர்கள். -
லாரி பெஜ், செர்கி பிரின் எனும் இவ்விருவரின் புத்திக்கூர்மை, விடாமுயற்சி, உழைப்பு, ‘கெட்டதைச் செய்யாதே' எனும் வேதவாக்கு ஆகிய அனைத்தும் சேர்ந்து இன்று கூகுளை அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவும், இன்டர்நெட்டைப் பயன்படுத்த நினைக்கும் அனைவரும் முதலில் பரிச்சயம் செய்து கொள்ளும் சேவையாகவும் மாற்றியுள்ளது.
திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைச் சுவைபட எழுதிய சொக்கனின் சொக்கும் எழுத்தில் இந்தப் புத்தகம் படிப்போரைப் புது உலகுக்கு அழைத்துச் செல்லும். அந்த உலகில் அமெரிக்காவின் பல்கலை கழகங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அமெரிக்காவில் தொழில் முனைவர்கள் எவ்வாறு ஊக்குவிக்கபடுகின்றனர் என்று புரிந்து கொள்ளலாம். மிகக் குறுகிய காலத்திலேயே முனைந்து செயலாற்றும் 30 வயதுக்கும் குறைவான சில இளைஞர்களால் உலகையே ஆட்டிப் படைக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இணையம் சம்பந்தமான தமிழில் வெளி வந்திருக்கும் நூல்களில் இந்த நூல் பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. அதற்குக் காரணம இன்று இணையத்தில் உலாவும் எந்த மொழிக்காராக இருப்பினும் எல்லோருமே கூகுளைத் தவிர்த்து இணையத்தில் உலாவுதல் என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது. அவ்விரு இளைஞர்கள் கணனித்துறையில் புதிய ஒரு தொழில் நுட்பத்தைக் கண்டு பிடிப்பதற்காக எதிர் கொண்ட சவால்களும், புரிந்த முயற்சிகளும் கணனித்துறை சார்ந்த பல இளையதலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டும் அம்சங்களாக அமைகின்றன.
இவ்வளவு விரிவாக அவ்விரு இளைஞர்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ள சொக்கன் அவ்வ்ரு இளைஞர்களின் புகைப்படங்களை சேர்த்திருக்கலாம்
சொக்கன் போன்றோரின் இத்தகைய முயற்சிகள் தமிழ் சமூகச் சூழலில் கணணி பற்றியதும் இணையத்தை பற்றியதுமான அறிதலை அதிகரிக்கச் செய்யும் பணிகளாக அமையும்.9
மல்லிகை ஜூலை 2007 & 56

G327677627625 ലേശത്ല. O42
- நாச்சியாதீவு பர்வீன்(டோக்ா, கட்டார்.)
வேகமான கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் வாழ்க்கை பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் துரிதமான கால நகர்வில் நாம் பல சுவராசியங்களை கண்டுகொள்ளாமலே காலங்கடத்தி வருகின்றோம். நமது அன்றாட அலைச்சல்கள் அடுத்த நாள் பற்றியே இருப்பதனால், இன்று நமக்கு அண்மையில் நடக்கின்ற சில நல்ல விஷயங்களையும், நல்ல மனிதர்களையும், நாம் அவதானிக்கத் தவறி விடுகிறோம். தினமும் நாம் சந்திக்கின்ற எண்ணற்ற மனிதர்களைப்பற்றி நாம் எதுவுமே தெரியாதவர்களாக இருந்து விடுகின்றோம். ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கின்ற, மனித முகங்களின் விலாசங்களை நாம் அறிந்திருப்பதில்லை. இதனால் நமது சந்திப்புக்களில் நாம் சில பெறுமதி மிக்கவர்களையும், உயிரோட்டமுள்ள சிந்தனைவாதிகளையும் நமக்குத் தெரியா மலேயே கடந்திருக்க நிறையவே வாய்ப்பிருக்கின்றது.
பார்த்த மாத்திரத்திலே, ஒருவரின், பின்புலம் தெரியாமல் உணர்வுகளின், உள்வாங்கல்களின் ஆழம் தெரியாமலே சிலரை மட்டமாய் கணக்கிட்டுக் கொள் வதுமுண்டு. ஆனால் பார்ப்பதற்கு அப்பாவியாய், சாதுவாய் ஒன்றும் தெரியாதவ னாய் தெரியும் சிலரிடம் ஆழ்ந்த அறிவும், விசாலமான பார்வையும் இருப்பதுண்டு
அப்படித்தான், (DOMNADORCORTEZ) டொமினடோர் கோர்டஸ் என்கின்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த எனது நண்பன்.
"கோர்டஸ்'ஐப் பற்றி கடந்த ஒரு வருடகாலமாக நான் சாதாரணமாய் அறிந்து வைத்திருந்தேன். அளவுக்கதிகமாக யாருடனும் பேசமாட்டான். தானுண்டு தனது வேலையுண்டு என்று அவன் பாட்டுக்கு இருந்து விடுவான். முன்னரெல்லாம் தேவைக்கதிகமாய் அவன் அடுத்தவர்களோடு பேசியதை நான் கண்டதேயில்லை. ஹாய் ஹலோ, ஹவ்வாயூ? Fine என்று சுருக்கமாகவே அவனது பேச்சு இருக்கும். இதனால் கோர்டஸ் இன் மேலதிக நகர்வுகள், பொழுது போக்குகள் பற்றி எங்களில் யாருக்கும் எதுவுமே தெரியாது. அத்தோடு அவனை யாரும் பெரிதாய் அலட்டிக் கொள்வதுமில்லை. நானும் தான்.
மல்லிகை ஜூலை 2007 & 57

Page 31
கோர்டஸ்' இன் வித்தியாசமான நடத்தைகள் சிலவேளைகளில் எங்க ளுக்குள் முரண்பாடுகளை விதைத்திரு க்கின்றன. யாருக்கும் வளைந்து கொடுக்காத, எதற்கும் தர்க்கிக்கும் அவனது சில பண்புகள் அவனைப் பற் றிய சில மட்டமான எண்ணங்களுக்கு ஏது வாக அமைந்தன. ஆனால் கோர்டஸ்' இன் விவாதங்கள் பெரும்பாலும் நேர் மையாவே இருந்துள்ளதைத் தனி மையில் இருந்து சிந்திக்கும் போது என் உள்மனம் சொல்லிக் கொள்வதுண்டு. காலநகர்வுகளில் அடுத்தவர்களுக்கும் கோர்டஸ்' இற்குமான இடை வெளி யைப் போலவே எனக்கும் கோர்டஸ்'
இற்குமான இடைவெளியும் இருந்து
வந்தது.
சிறிது காலத்தில் கோர்டஸ்' பற்றி அறியும் ஆவல் எனக்குத் தானாகவே
ஏற்பட்டது. மெல்லப் பேச்சுக்களின் மூலம் அவனை அவதானமாய் அணு கினேன். அவ்வப்போதான எனது அன்
றாடக் கேள்விகளுக்கு அவன் சுவாரசி யமில்லாமலே பதில் தருவான். இருந்
தும் நான் விடவில்லை. அவன் பற்றிய எனது அவதானத்தையும், தேடலையும்
விசாலப்படுத்தினேன். அடுத்தவர்கலும் காட்டி வித்தியாசமாய்த் தெரியும் கோர்டஸ்' பற்றி முழுமையாய் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தது.
சில நாட்கள் கோர்டஸ்' மெல்ல மெல்ல இயல்பாகவே அடுத்தவர்க ளைப் போல என்னோடு கதைக்கத் தொடங்கினான். அதுவும், என்னோடு
மட்டுமே. அடுத்தவர்களோடு ஆரம்ப த்தில் அவன் இருந்தது போலவே நடந்து கொண்டான்.
அவ்வப்போது கிடைக்கும் அலுவ லக ஒய்வுகளின் போது நான் ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பேன். என்ன எழுதுகிறாய் என்று வினாத் தொடு ப்பான். கவிதை என்றால் வாசித்துக் காட்டச் சொல்வான். நான் வாசித்துக் காட்டுவேன். அவதானமாய்க் கேட் பான், கருத்துச் சொல்வான். ஆங்கில த்தில் கவிதை எழுதச் சொல்வான். இப்படியான சில சந்தர்ப்பங்களின் போது அவனோடு நானும் பேச்சுக் கொடுத்து அவனையும் பேசவைத்து அவன் பற்றி அறிந்த போது ஆச்சரியப் பட்டுப் போனேன்.
எமக்கான பொது மொழி ஆங்கில
மாகும். ஆங்கிலத்தில் ஆழ்ந்த அறிவும்,
புலமையும் கோர்டஸ்' இற்கு இருந் தது. அவனொரு பட்டதாரி இலக்கியம் பற்றிய எந்த ஆழமான கருத்தோட்ட மும் அவனிடம் இல்லை. ஆனால் மிகச் சிறந்த வாசகன். ஆங்கில நாவல் களின் ரசிகன்’ உலகப் புகழ் பெற்ற (J.K. Rowling) Gg. 35. (8gnt6Sleist 366T (Harry Potter) 6Yof GLImLL-fr Bir6)]6060 ஐந்து தடவை வாசித்தானாம். அந்த மாயாஜால மந்திரத்தை பற்றி It's not realism but we can enjoy. 6T6öTDIT6öT.
அவனுக்குத் தீவிரமான வாசிப்புப் upāsassic bibgigs). Readig is a way to learning 6T6Tum 66T. (Dan Brown) (Lm 6i Sysj600T) (John Grisham) (8groit disib),
மல்லிகை ஜசலை 2007 季 58

(Sydney sheldon) (d. 60 Gy so LeóT) இவர்களின் நாவலை சிலாகித்துப் பேசினான். மக்களின் உணர்வு களோடு தொடர்புள்ள எழுத்துக்களை பொதுவாக நாவல்களைத் தான் விரும்பி வாசிப்பதாக அவன் கூறினான். நாவல்கள் பற்றி ஒரு குறிப்பிடத்தக்க அறிவு அவனுக்கு இருந்தது.
இச்சந்தர்ப்பங்களில் நாவல்கள் அல்லது கவிதைகள் பற்றிய பேச்சுக் கள்தான் அதிகம் இடம் பிடிக்கும். ஒரு நாள் "பேய்கள்' என்ற கவிதையை வாசித் துக் காட்டினேன். அது முதலாளித்துவ த்திற்கு எதிரான ஒரு கவிதையாகும். மல்லிகை டிசம்பர் 2005 Sgsglei) Geu6ssujbg5g). Realy good poem, I hate capitalism 6T6örspiteóT, 955 இதங்கள் பற்றியெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆனால் ஒரு படைப்பு எதைப் பேசுகின்றது என்றும் அது சமூகத்தில் ஏற்படுத்துகின்ற பாதிப்பு கள் பற்றியும் "கோர்டஸ்' நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். அவனுட னான இலக்கியப் பரிவர்த்தனைகளில் நான் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டேன். எனது ஆங்கில அறிவின் மட்டத்தை அதிகரித்துக் கொள்ளவும் ஆங்கில நாவல்களினுடனான எனது பரிச்சயத்தை தீவிரப்படுத்திக் கொள் ளவும் கோர்டஸ் உதவினான்.
(b BIT6it assroo6 have a gift to you நான் உனக்கொரு பரிசு தர இருக்கி றேன் என்று முகமலர்ச்சியோடு கை குலுக்கினான். அத்தோடு ஒரு ஆங்கில pit 6606)uilh 5.55 modT. The lost boy
என்ற அந்த நாவல் பிரபல மேலத்தேய 6Tupg55m 6Tiff (Dave Pelzer) (356. Gusiosit என்பவரால் எழுதப்பட்ட சிறுவர்களுக் கான ஒரு நூலாகும். இந்நூல் பன்னி ரண்டு தொடக்கம் பதினெட்டு வயதுக் (5LDIT60T Teenage g6Tsiss6061T 60LDudmas வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகும். இருந்தபோதும் அன்றா டங்களில் பெற்றோருக்கும், பிள்ளை களுக்கும் நடக்கின்ற புரிந்துணர்வற்ற கசப்பான சம்பவங்களின் மூலம் ஏற்படுகின்ற கசப்பான பின் விளைவு களை அழகாக சொல்கின்றார். (Dave Pelizer) டேவ் பல்சர். இந்த நாவலின் முதலாவது பக்கத்திலிருந்து ஒன்பது suust 60T (David) ((365 L) 36öT தாயுடனான முரண்பாட்டு அனுபவங்க ளோடு, கதை நகர்கின்றது. வாசக னையும் கதைக்களத்துள் ஒரு பாத்திர மாக ஆக்கிப் போடுகின்ற அதீத சக்தி gibg. The lost boy 6T6öTailsörp serialso நாவலில் இருந்ததை உணர்ந்து கொண்டேன். அத்தோடு சகல தரப்புக்கும் பொருந்தக் கூடிய அந்த நாவல் பொருத்தமான உள்ளிடு களைக் கொண்டிருந்ததும். எனது கணிப்பாக இருந்தது.
கோர்டஸ்' இன் இளமைக்காலம் தொடக்கம் அவன் நாவல்களின் ரசிகன். அவனது வாசிப்புக்கு அடித்தளமிட்டது அவனது சகோதரி என்றான். அவனது சகோதரி மிகச் சிறந்த வாசகர் என்றும் அவ்வப்போது கவிதை, கதைகள் எழுதுவார் என்றும் அவனுடன் பழகியதிலிருந்து அறிந்து
மல்லிகை ஜூலை 2007 率 59

Page 32
கொண்டேன். அவனது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றிய ஒரு நாள் கதையாடலில் பூனை, நாய் என்பவ ற்றையும் அவன் உணவில் சேர்த்துக் கொண்டுள்ளதைச் சொன்னான். அதிர்ந்து போனேன். பிலிப்பைன்ஸில் பொதுவாக நாய்களை விரும்பிச் சாப்பிடுவர்ர்களாம். கோர்டஸின்
குடும்பத்தில் வழமையாக நாய்க் கறிக்கு பிரதான இடமுண்டாம். பூனை பரவலாகச் சாப்பிடப்படாவிட்டாலும், கோர்டஸ் தனது நண்பர்களுடன் இணைந்து பூனை சாப்பிட்டுள்ள அனுபவத்தை விவரித்தான். இங்கே கட்டாரில் அதற்கான அனுமதியில்லை என்று கவலைப்பட்டான். நாய், பூனைகளை நமது நாட்டில் வீட்டின் செல்லப் பிராணிகளாகவும், பொதுவாக நாய்களை வீட்டின் காவலுக்குத்தான்
பயன்படுத்துவார்கள். ஆனால் பிலிப்
பைன்ஸில் இவைகளைச் சாதார ணமாய் உணவில் சேர்த்துக் கொள்கி றார்கள் என்பதை அறிய முடிந்தது.
கோர்டஸ் நாய்களை சர்வசாதார ணமாய் உண்பது பற்றி நான் அதிர்ந்து போயிருந்த இந்த வேளைகளில் இதைவிட அதிர்ச்சிதரும் சம்பவம் ஒன்று இந்தக் கட்டாரில் நடந்தது.
அண்மைக் காலமாகக் கட்டாரில் வியாட்னாமிகளின் வரவு அதிகரி
த்துள்ளது. அமெரிக்காவுடனான
யுத்தத்தில் வென்று தனது சுயத்தைக் காப்பாற்றிக் கொண்டாலும் அந்தப் போரினால் ஏற்பட்ட பின்விளைவு
களின் தாக்கத்திலிருந்து "வியாட்னாம்"
இன்னும் விடுபடவேயில்லை. வியாட் னாமின் பொருளாதாரம் நலிந்து, வறும்ை, வேலையில்லாத் திண்டா ட்டம், பசி, பட்டினிச் சாவு, என்று நாளு க்கு நாள் வியட்னாமிய மக்கள் சொல்லொண்ணா நெருக்கடியில் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக் கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் கட்டார் அரசு வியாட்னாமிகளை
வேலைக்கமர்த்தும், நோக்கில் அவர்க
ளுக்கு வீசா அனுமதியை வழங்கியது. வியாட்னாமின் கல்வித் தரம் மிக அடிமட்டத்திலிருப்பதனால் அந்த மக்க ளால் உயர் தொழில் வாய்ப்புகளுள்
நுழைய முடியவில்லை. எனவே, பெரும்
பாலானவர்கள் கட்டிட வேலைத் தளங் களுக்கு Labourer வேலைக்கே வந்து குவிந்தார்கள். அவர்களின் சுதேச மொழி தவிர வேறு எந்த மொழியினதும் சிறிதும் பரிச்சயமோ அல்லது அறிவோ அவர்களுக்கு இருக்கவில்லை.
இப்படி Labourcr வேலைக்கு வந்த
* ஒருகுழுவினர் ஒரு நேபாளி நாட்டு
இளைஞனைப் பிடித்து கொலை செய்து அவனது பாகங்களை அழகாக பார்சல் பண்ணி பிரிஜில் வைத்து விட்டு ஒரு பகுதியை சமைத்துச் சாப்பிட்டும் விட்டார்கள். இந்தச் சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின்னர் அந்தக் குழுவிலுள்ள ஒருவன் வயிற்றுவலி என்று மருத்துவமனைக்குச் செல்ல, மருத்துவப் பரிசோதனைகளின் மூலமும், X-Ray இன்மூலம், மனிதக் கைவிரல் துண்டொன்று வயிற்றில்
^^க ஜூலை 2007 ஜீ 60

சமிபாடு.அடையாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுது. பின்னரான மேலதி கமான விசாரணைகளின் போது நடந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
மயிர் கூச்செறியும் இந்தச் சம்பவத்தை நாம் மாய மந்திரக் கதைக ளில்தான் படித்துள்ளோம். நரமாமிச உண்ணிகள் பற்றிய எமது அறிவு தெளிவற்றதாகவே காணப்பட்டது. இந்த வியாட்னாம் வாசிகளின் இந்தச் செயல் என்னைச் சிந்திக்க வைத்தது. இப்போது 'கோர்டஸ் நாய்க் கறி தின்பதைப் பற்றி நான் அலட்டிக்
கொள்ளவில்லை. அது பெரிதாயும் தெரியவில்லை. மனிதனை மனிதன் கொன்று தின்னும் இன்றைய உலக நிலை பற்றி என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. எப்படியோ sLLITfsöT 96öT60pDu Hot news gigs5. சம்பவம்தான்! வியாட்னாமிகள் என் றால் இப்போது நோயாளிகளுக்கு குலை நடுக்கம்.
இந்தச் சம்பவத்தைக் கோர்டஸ்' என்னிடம் சிரித்துக் கொண்டே snottmett. Mr. Farveen take care 6766Top என்னையும் எச்சரித்தான். *
SS
Š
ܐܸܠ
S
SS
NY
மல்லிகை ஜூலை 2007 魏

Page 33
கடிதங்கள
(அகிலனின் கடிதம்) அன்பின் திரு அருள் இராசேந்திரன் அவர்களுக்கு, வணக்கம். பலமாதங்களுக்கு முன்பு, தங்கள் 'தினகரன்' கட்டுரையையும் கடிதத்தையும் படித்தவுடன் எழுதியிருக்கு வேண்டிய கடிதத்தை இவ்வளவு தாமதமாக எழுதுகின்றேன். மன்னியுங்கள். வெளிநாடு, வெளிமாநிலங்கள், தமிழ்நாட்டின் தென்பகுதிகள்- இப்படி ஊர்சுற்றும் வேலைகள் மிகுந்துவிட்டன. எனினும் தங்களுக்கு எழுத வேண்டியதை மறக்கவில்லை.
தங்கள் கட்டுரை மிகச் சிறப்பானது. ஞானபீட நிறுவனத்தின் முழு வரலாறும் வளர்ச்சியும் கொடுத்து, அத்தோடு சித்திரப் பாவையையும் அகிலனையும் சிறப்புற இணைத்திருக்கிறீர்கள். தெளிந்த ஆழமான ஒர் ஆய்வுக் கட்டுரையைப் படித்த மன நிறைவு ஏற்படுகிறது. திரு கி. வா. ஜ அப்போதே தங்கள் கடிதத்தையும் கட்டுரையையும் எனக்கு அனுப்பியிருந்தார்கள். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.
தங்களன்புள்ள, @Hវិលវាំ.
26.5.1978.
ம்ே மாத மல்லிகையில் மா. பார்வதிநாதசிவம் அவர்கள் எழுதிய 'அகிலனுடன் pதல் சந்திப்பு” என்னும் தலைப்பில் ஒரு குறிப்பு எழுதி இருந்தார்கள்.
அகிலன் அவர்கள் பற்றிய குறிப்பு ஒன்றை இங்கு தர விரும்புகின்றேன்.
அகிலன் அவர்களின் சித்திரப் பாவை என்னும் நூலுக்காக அவருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்திருந்த பொழுது அதையிட்டு நான் ஒரு கட்டுரை எழுதி தினகரனுக்கு அனுப்பி இருந்தேன். தினகரன் அக்கட்டுரையை தனது 20.09.1977 இதழில் வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையின் பிரதி ஒன்றை அகிலன் அவர்களுக்கு, அவரின் முகவரி தெரிந்திராத படியால், கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜெகநாதன் அவர்கள் மூலம் அனுப்பி இருந்தேன். அக் கட்டுரைக்காக நன்றி தெரிவித்து அகிலன் அவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்கள். அக்கடிதத்தின் பிரதி ஒன்றை இத்துடன் அனுப்பி இருக்கின்றேன்.
அருள். மா. இராசேந்திரன்.
மல்லிகை ஜூலை 2007 奉 62 .

கலை இலக்கியம், அரசியல் என்று சகல துறையிலும் அனுபவரீதியாக
ஊறிப் போன தாங்கள், பத்திரிகைத் துறை
மூலம் இங்கு மட்டும் அல்ல, தமிழர்கள் வாழும் உலகம் முழுவதும் பேசப்படு கிறீர்கள், மல்லிகை மூலமாக, 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இந்த மாத சஞ்சிகையை வெளியிட்டு வரும் உங்களை நான் பலமுறை நினை த்து அதிசயத்திருக்கிறேன்.
மாபெரும் சாதனையாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து, உங்கள் சஞ்சிகை யின் முதல் பக்கத்தில், அட்டையில் பிர
சரித்து கெளரவித்து வருகிறீர்கள். ஆனால்
நான் நினைத்தும் பார்க்காத விஷயம், என்னை உங்கள் சஞ்சிகையில் முதல் பக்கத்தில் அட்டையில் பிரசுரித்துக்
கெளரவித்து இருப்பது ஆனால், இதற்கு
நான் தகுதியானவனா? என்று எனக்குத் தெரியவில்லை, மிக்க நன்றி.
பல வருடங்களுக்கு முன் காலம் சென்ற சிரித்திரன் ஆசிரியர் சுந்தருடன் ஒரு முறை உங்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு உங் களை நேரிற் சந்தித்துப் பேசச் சந்தர்ப்பம் கிட்டவில்லை. நான் இத்தனை காலம் வீரகேசரியில் ஒவியனாகக் கடமையற்றி வந்ததுப் பற்றி உலகத்தினருக்கு அறிய தந்தமைக்கு என் நன்றியைத் தெரிவி த்துக் கொள்கிறேன். மல்லிகை இன் னும் சிறப்பாகத் தொடர்ந்து வெளிவர என் வாழ்த்துக்கள்.
SLDniprusio, 8.
அட்டைப்படக் கெளரவிப்பிற்காக
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
மிகுந்த மகிழ்ச்சியும் கூட, இதனால் என் முகத்தைப் பலரறிந்தமைக்காகவும் என்னுடன் தொடர்பு கொண்டமைக் காகவும். இத்தியாதி அனுபவங்கள் தங் களது இம்முயற்சியின் முக்கியத்துவம் பற்றியும் உணரச் செய்துள்ளது.
எனது புகைப்படம் தொடக்கம், எழுத நண்பர்கள் தேடியதுவரை, தாங் கள் வேறெவருக்காகவும் இவ்வாறான கஷ்டங்களைப் பெற்றிருக்கமாட்டீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இச் செயலூடாக நண்பர்களும் நானும் பெறும் மகிழ்ச்சிக்கெல்லாம் தங்களது இடை
விடாத போராட்டமே காரணமானதை
நினைக்கும் போது மனநெகிழ்ச்சி ஏற்படு கின்றது.
எனக்கு முருகானந்தன் எழுதியது ஆத்ம திருப்தியைத் தந்துள்ளது. குறிப் பாக, எனது கல்வித்துறைச் செயற்பா டுகள் பற்றியும் எழுதியமைக்காகவும் அளவாகப் புகழ்ந்தமைக்காகவும் சுருக் கமாகவும் செறிவாகவும் அனைத்தை யும் எழுதியமைக்காகவும் முருகானந்தனு டன் தொடர்பு கொள்ள இயலவில்லை
அண்மைய பத்திரிகைக் குறிப்புச் சற்று வருத்தத்தையும் எரிச்சலையும் தருகின்றது. அதாவது "மல்லிகை"யின் தொடர்ச்சி பற்றி. யார் ஆசிரியர்களா வார்கள்? என்று எழுதியது பற்றி.
தங்களது நீண்ட ஆயுளுக்காகவும் தேகசுகத்திற்காகவும் பிரார்த்தன்ை
செய்கின்றேன்.
செ. யோகராசா.
மல்லிகை ஜூலை 2007 率 63

Page 34
முதற்கண் ஜசன்- 27ம் திகதி
தங்களின் பிறந்ததினம் வருகின்றதென் பதால் அந்த வாழ்த்துக்களுடன் இத னை ஆரம்பிக்கின்றேன். தங்களின் நல் வாழ்வுக்கும் ஆழமான இலக்கியப் பங்களிப்புக்கும் எனது வாத்ஸல்ய வாழ்த்துக்கள்
மல்லிகை மே- 2007 இதழ் வாசித் தேன் ஜின்னா ஷரிபுதீன் அவர்களின் அவர் பற்றிய காத்திரமான குறிப்புடன் அழகாக இருந் தது. கலைவாதி கலில் மிகச் சிறந்த முறையில் ஜின்னா ஷரிபுதீன் அவர் களின் ஆளுமையைப் புடம் போட்டுக்
அட்டைப்படத்துடன்,
காட்டியிருந்தார். 2003ஆம் ஆண்டு மர்ஹ0ம் ஷம்ஸ் அவர்களின் முதலா வது நினைவுதினப் பரிசளிப்பு விழாவில் அவரைச் சந்தித்தேன், மெய்யாகவே வளரும் இளைய தலைமுறையினரைத் தட்டிக்கொடுக்கும் மூத்த படைப்பா ளிகள் வரிசையில் அவரும் சுட்டப்பட வேண்டியவர். இலக்கியங்களில் ஆழ, அகலங்களைத் தெரிந்து வைத்துள்ள தோடு, அவை பற்றிய சுவையான கருத்துப் பரிமாறல்களுக்கும் மிகவும் பொருத்தமானவர்.
"பூச்சியம் பூச்சியமல்ல' தெணியா னின் தொட்ர் அற்புதம். இலகு நடையில் பேசும், அவரது பாணியை அடிமட்ட வாசகனையும் கவரும், வல்லமையும், உள்ளிடை யும் கொண்டுள்ளது என்பது எனது அபிப்பிராயம்.
மொழி பெயர்ப்புத்துறையில் அவதானிக்க
அண்மைக்காலத்தில்
த்தக்க ஈடுபாடுகளைக் காட்டிவரும் திக்குவல்லை ஸப்வானின் மொழிப் "தந்தை பாதம் போற்றி" எதார்த்தத்தைப் பேசிநிற் கின்றது, மொழி பெயர்ப்பும் இலக்கி
பெயர்ப்புச் சிறுகதை
யமே! ஒரு ஆழமான விடயம்தான். அதற்கு இரு மொழியாற்றல்கள் அவசி யம். அந்தவகையில் திக்குவல்லை
ஸப்வான், அவதானிக்கத்தக்கப் படைப்
புக்களைத் தந்து கொண்டிருப்பது பாரா ட்டுக்குரியது.
சுதாராஜின் மனிதரிசனங்கள் (சிறு கதைகள்) இரசனைக்குறிப்பாக மா. பாலசிங்கம் வழங்கியிருப்பது நன்றாக உள்ளது கட்டுரைகள், கதை கள் மற்றும் மேமன் கவியின் மின்வெளி தனிலே வலை ப்பதிவுகள் பற்றிய தக
வல்கள் எல்லாம் அற்புதம்,
“லரீனா. ஏ. ஹக்'ன் "இருத்தலுக் கான கனவுகள்" நிஜம் சொல்கின்றன. தூண்டில் பகுதிகூட புதிய மாற்றங்க ளுடன், மனந்திறந்த இலக்கியப் பரி மாற்ற மேடையாக அமைந்துள்ளது, மொத்தத்தில் மே மாத மல்லிகை மணம்
வீசுகிறது.
நாச்சியாத்வுபர்வீன், டோஹா கட்டார்.
மல்லிகை ஜூலை 2007 & 64

மல்லிகை ஜீவாவின் 80வது அகவை பாராடீடு
விழாத் தொகுப்பு
- தொகுப்புசெல்லக்கண்ணு. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அகவை 80 என்ற தகவல் இப்பொழுது இலக்கிய உலகுக்கு ஒரு புதினமாக இருக்க முடியாது ஏன் என்றால் செங்கம்பள வரவேற்புக் கொடுத்து வெகுஜனத் தகவல் ஊடகங்கள் அதைப் பரம்பல் செய்துவிட்டன. பத்திரிகைகள், வானொலி ஆகியன முக்கிய செய்தியாக்கி மக்களை எட்ட வைத்தன. 80 ஆவது அகவைப் பிறந்தநாளன்று (27.06.2007) தினக்குரல் தினசரிப் பத்திரிகை 'வாழ்த்துவோம் ஜீவாவை’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டி'வசதி படைத்த மேல் நிலை வர்க்கத்தவரும் சமூக, அரசியல் செல்வாக் குடையவர்களும் பல்கலை சமூகப் பிரமுகர்களுந்தான் ஈழத்து இலக்கிய த் துறையில் ஈடுபட முடியுமென்று ஒரு காலத்தில் இருந்த நிலையை மாற்றியமைத்தவர்களில் ஜீவா முக்கியமானவர்." என வாழ்த்தியது.
இலக்கிய நண்பர்கள் பிறந்த நாளன்றே (27. 06, 2007, மாலை) கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் பாராட்டுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்தனர். உளவளத் துறை ஆலோசகரும் எழுத்தாளருமான கோகிலா மகேந்திரன் தலைமை தாங்கினார். மண்டபம் நிறைந்த ஜீவாவின் அபிமானிகள் குழுமி இருந்தனர். கல்வி இலக்கியம் ஆகியவற்றில் தமது ஆளுமையை ஆற்றுப்படுத்திய பெரியார்கள் டொமினிக் ஜீவாவை வாழ்த்திப் பேசினர். அவைகள் கீழே பதிவாகி இருக்கின்றன.
எதையும் எப்படிச் செய்வதென்ற தடுமாற்றம் அற்றவர் மல்லிகை ஜீவா. மறை உணர்வுகள் ஆதிக்கம் கொள்ளாததால் ஆரோக்கியமாக வாழ்கிறார். ாேதமஸ் அல்வா, ஆப்ரகாம் லிங்கன், இப்சன் போன்ற எந்தவிதமான பின்புலச் செல்வாக்கும் இல்லாது தங்களது சொந்த உழைப்புச் சாதனையால் மக்கள் மனதில் பதிந்துவிட்ட சாதனையாளரது பட்டியலில் மல்லிகை ஆசிரியரும் சேர்க்கப்பட வேண்டியவர். மற்றவர்கள் சறுக்கி விழுந்த விடயங்களில் அவர் சாதனையை நிலை நாட்டி இருக்கிறார்.
- தலைமையுரையில், கோகிலா மகேந்திரன்.
மல்லிகை ஜூலை 2007 & 65

Page 35
புலம் பெயர்ந்து விட்டேன் என
மனமுடைந்து தனது பலத்தைக் கரைக்காது மல்லிகையைத் தாபரித்து எமக்குத் தந்து கொண்டிருக்கிறார். 42 ஆண்டுகளாக இந் நாட்டில் ஒரு
சஞ்சிகை வந்து கொண்டிருக்கின்ற
தெனில் அது பெரும் சாதனையே! மல்லிகைப் பந்தல் சர்க்கரைப் பந்தல்,
- அல்ஹாஜ் எம்.எச்.எம். அஸ்வர்
(ஜனாதிபதி ஆலோசகர்)
தமிழ்த் தாயை வளர்ப்பதில் தனி மனிதகளே நிறுவனங்களாக விளங்கு கின்றனர். ஜீவாவின் சாதனைகளை நிராகரிக்க (Up 19 Ulu T 35 . பழைமையை மறக்காது உயர்ந்தவர். ஒருவன் முன் னேற
முயல்கின்றானெனில் அவ னைத்
தட்டிக் கொடுப்பதை விட்டு விட்டு எமது சமூகம் அவனுக்குத் தடை களைப் போட்டுக் கொண்டிருக்கும். அல்லது மிதமாகப் புகழ்ந்தே அவ னைச் சாகடிக்கும். ஜிவா எந்தப் போரா ட்டத்தை வைத்து இயங்கிக் கொண்டி ருக்கிறாரோ அது இன்னமும் எம் மக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. சாதிக் கொடுமை- ஆமை தனது தலையை இழுத்துப் பின் வெளிவி டுவது போல்- இன்னமும் நமக்குள் ஊடாடிக் கொண்டுதான் இருக்கின்றது.
ஜீவாவின் இலட்சியப் பாதை இன்ன
மும் வெறுமையாகத்தான் இருக்கி ன்றது. ஜீவாவின் இந்த வளர்ச்சிக்கு வேராக இருந்தவர் அவரது மனைவி தான். இப்பின்புலத்தை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. கஷ்டங்களைத் தனதாக்கிக் கொண்டு ஜீவாவைச்
அவர்
சமூகப் பணியலும் இலக்கிய பணியி லும் ஈடுபட வழி விட்ட அவரது மனை வியை நான் பாராட்டுகிறேன்.
- கம்பவாரிதி இ. ஜெயராஜ் (கொழும்பு, கம்பன் கழகம்.)
ஜீவாவின் தேக ஆரோக்கியம், நாம் அவரது 100வது அகவையையும் கொண்டாட இடம் கொடுக்கும். உரிய நேரத்தில் தூங்கச் சென்று உரிய நேரத்தில் எழுந்து கொள்வார். அன்றை க்குக் கண்ட மாதிரியே இன்றும் இருக் கிறார். அவரது சாதனைகளை நாள் முழுவதும் பேசலாம். மல்லிகையை வாசித்த பின்னரே எமது திசையை உணர்ந்து கொண்டோம். இளம் எழுத்தாளரை வளர்க்கிறார். மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டாக விளங் குபவர். மல்லிக்ைகு அச்சுக் கோர்த்த சந்திரசேகரத்துக்கு விழாவுெடுத்து பாராட்டியவர்.
- வைத்திய கலாநிதியும் எழுத்தாளருமான எம். கே. முருகானந்தம்.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இரத்தத்தைச் சூடாக்கி மனிதனை வேக்ப்படுத்தும். இலக்கிய அபிமானி கள் மற்றும் சந்தாதாரரின் ஆதரவை மூலதனமாக வைத்து அரை நூற்றா ண்டை நோக்கி மல்லிகையை வளர் த்து வருகிறார். இதற்கு அவர் கொடுத்த விலை மிகவும் உச்சமானது. தமிழ் மொழிக்கு மீசை முளைக்க வைத்தவர் சுப்ரமணிய பாரதியார். அவரால் இதழி யலில் சாதனை படைக்க முடிய வில்லை. அதே போல்தான் கவிஞர்
மல்லிகை ஜூலை 2007 率 66

கண்ணதாசனும் தடக்கி விழுந்தார். ஆனால் ஜிவா சாதித்து விட்டார்.
-இலக்கிய ஆர்வலர் மாத்தளை பீர் முஹம்மது.
கலைஞன் ஒருபோதும் கண்ணிர் வடிக்கக் கூடாது. சமூகத்தில் கொடை யாளிகளும் கலைஞர்களுமே உச்ச மான மதிப்பைப் பெறுகின்றனர். விதந்து பேசத்தக்க கதாபாத்திரங் களைப் படைக்கக் கூடிய படைப்பாளி கள் குறைவு. ஆனால் ஜீவா படைத்தி ருக்கிறார். அவரது திட்சித்தம் மகத் தானது.
- மில்லேர்ஸ் எஸ்.
ஆர். பாலச்சந்திரன்.
சகலரும் பின்பற்றக் கூடிய பண்பாளர் ஜீவா. 1967 இல் மல்லிகைப் பணி மனையில் அவரைச் சந்தித்தேன். அன் றைய அதே பண்புகளும் இன்றும் அவரிடமுண்டு. சகல தராதரத்தி னரையும் மதிப்பவர்.
- அன்பு ஜவஹர்ஷாஅநுராதபுரம்.
தானே யாத்த வாழ்த்துப் பாவை
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும்
பிரபல கவிஞருமான வேலணை வேணியன் பாடினார். பொன்னாடை போர்த்த வேண்டாமென அழைப் பிதழில் வேண்டுகோள் விடுக்கப்பட்டி ருந்தது. ஆ. சிவநேசச் செல்வன் (இதழி யல் விரிவுரையா6ர்), பூ முரீதரசிங்
(கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை),
செல்வம் தம்பதியர் நாகலிங்கம் (தலைவர் சங்கலிகணன் சமாஜம்) ஆகியோர் மலர் மாலை சூட்டினர்.
'கொழுந்து' சஞ்சிகை ஆசிரியர் அந்தனி ஜீவா, மாத்தளை பீர் முஹம்மது ஆகியோர் வாழ்த்து மடல் வழங்கினர்.
கவிஞரும், ஒவியருமானகனிவுமதி டொமினிக் ஜீவாவை ஒவியத்தில் வரைந்து அதைக் கவிஞரும், ஒலிபரப் பாளருமான இளையதம்பி தயானந்தா மூலம் வழங்கினார்.
'என்றும் தனியா எண்பதின் உழைப்பு' என்ற கைந்நூலை புரவலர் ஹாஸிம் உமர் வெளியிட்டு வைத்து முதல் பிரதியை துரைவி ராஜ் பிரசாத்திற்கு வழங்கினார். தொடர்ந்து டொமினிக் ஜீவா திலீபனிடமிருந்து கோகிலா மகேந்திரனும் கே.எஸ். மணியத்திடமிருந்து டொமினிக் ஜீவாவும் பிரதிகளைப் பெற்றன்ர்.
வரவேற்புரையை கே. எஸ். மணியம் நிகழ்த்தினார். நன்றியுரையை டொமி னிக் ஜீவா திலீபன் கூறினார்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது ஏற்புரையில்
பாரதீய ஞானபீடப் பரிசைப் பெற்ற பிரபல தமிழக எழுத்தாளர் ஜெயகாந்த னுக்குக் கூடப் பதிவுகள் இல்லை. நான் சாஹித்திய மண்டலத்தின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கான பரிசைப் பெற்றமை, இலங்கை நாடாளு மன்றத்தில் எனக்குக் கிடைத்த ஹன்சார்ட் பதிவு, இன்றைய தினக் குரலின் தலையங்கம் ஆகியன எனது இலக்கிய அங்கீகாரத்துக்குக் கிடை
மல்லிகை ஜூலை 2007 ஜீ 67

Page 36
த்த உயரிய பதிவுகள். எனது வாழ்வு முழுதும் எழுதுவதிலும் பேசுவதிலும் கழிந்தது. எண்பது வயதில் இத்தகைய பிரமாண்டமான கூட்டத்தில் பேசிய தமிழன் இல்லை! இக்கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்த மேமன்கவியும் மகன் திலீபனும் எதிர் கொண்ட சிரமங்களையும் நானறிவேன். அவர் கள் இருவிரினதும் உழைப்பில் உரு வாகி இன்று வெளியிடப்பட்ட கைந் நூல் எனது இலக்கிய உழைப்பிற்குப் பதில் சொல்லும். எனது சொந்தத் துயரங்களிலிருந்த விடுபட எழுத்தைப் பயன்படுத்தினேன்.
அடிப்படை நிதி வளமற்ற மல்லி
கைச் சஞ்சிகையின் முகப்புஅட்டையில் 197 தமிழ் ஆளுமைகள் இடம் பெற்றிரு க்கின்றனர். இதற்குத் தமிழ்நாட்டில் கூட உதாரணம் காட்டமுடியுமா? இனி வரப்போகும் சந்ததிக்கு ஆய்வுகளு
க்குக் கை கொடுக்கப் போவது
மல்லிகைதான் கொடுமையான அரசி யல் நெருக்கடிகளிலிருந்து நான் நிமிர்ந் தேன். எனது மகத்தான சொத்து மகன் திலீபன். எனது அம்மாவின் ஆணை க்குக் கட்டுப்பட்டு வாழந்துதான் நான் என்னை இந்நிலைக்குக் கொண்டு வந்தேன். எனக் கூறினார்.
கவிஞர் மேமன் கவி நிகழ்ச்சிகளைத்
தொகுத்து அறிவிப்புச் செய்தார். ே
১৯৯৯
NÀ
ܠܐ
N ཐ་སས་པ་ Sドベド NỳSSNS N IIIFð Sd Y SAN `နွှဲ SSSSSSSSSNSNSSNS ડ્ઝ SRNINN
SN §§
மல்லிகை ஜூலை 2007 & 68
 
 
 
 
 
 
 

- ി_േ, ജപa
X ஞானபீட விருது பெற்றதங்களின் நண்பன் ஜெயகாந்தன் தற்போதுகளில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரியப்பகுத்துவதன் மூம்ை ஒரு சர்சைக்குரிய எழுத்தாளராக மாறி யுள்ளாரே. அவரது அண்மைக் கா ைஇந்த முரண்பாட்டு நிலைக்குக் காரணம் என்ன? வகுப்பு வாதம் தேவையென்றும், அப்போதுதான் மக்களைப் பிரித்தறிய முடியுமென்றும் கறியுன்னதோகுதன்னைவிடவும் இக்ைகியவாதி ஒருவர் இல்ைை என்ற மமதையின் கடந்து こ* × கொள்கிறாரே? இதன் மூம்ை ஏதாவது புரிகிறாதா உங்களுக்கு?
டோகா, கட்டார். நாச்சியாதீவு பர்வீன்.
23 ஒரு தடவை நான் பிரபல எழுத்தாளர் மு. வரதராசன் அவர்களைச் சந்தித்த வேளையில் கவிஞர் பாரதிதாசனைப் பற்றிக் கேட்டு வைத்தேன். அதற்கவர் “ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுகிறீர்கள். அன்று சாப்பிட்ட உணவு உங்களுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. மகிழ்ச்சியுடன் பணத்தைச் செலுத்திவிட்டுத் திரும்பி விடுகிறீர்கள். இதை அடுத்து, அந்த உணவு வகைகளைத் தயாரித்தவரை ஒருதடவை நேரில் பார்க்க வேண்டும் என நீங்கள் முயலக் கூடாது" என்றார்.
ஜெயகாந்தன் விவகாரத்திலும் எனது கருத்து இதுவேதான். அவரது படை ப்புக்களைச் சுவையுங்கள். ரஸியுங்கள்! அதை விடுத்து அவரது தனிப்பட்ட கருத் துக்களையும் ஆளுமையையும் விமரிசனத்திற்கு உட்படுத்த முனையாதீர்கள்.
X நீங்கள் எரிச்சல் பட்டு, மனசு நிறையக் கோபப்பட்ட சம்பவம் ஒன்றைக் கூறுங்கனேன்?
வவுனியா. XN-- எம். நவஜோதி
23 சினிமா என்பது மனிதன் கண்டு பிடித்த அதி அற்புதமான சாதனங்களில் ஒன்று. நான் எப்பொழுதும் சினிமா பற்றி நினைக்கும் பொழுதும் அதன் சர்வதேச
மல்லிகை ஜூலை 2007 * 69

Page 37
ஆளுமையையும் வீச்சையும் கண்டு அதிசயத்திருக்கிறேன். ஆனால், ரஜனி தமிழ் சினிமா என்பது இருக்கிறதே, அது அவ் விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கான சமகாலச் சாபக் கேடு!
சமீபத்தில் வெளிவந்த சிவாஜி என்ற ரஜனியின் சினிமாக் கட்டவுட்டுக்கு தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் ஒன்று சேர்ந்து பாலாபிஷேகம் செய்து கொண் டாடிக் களித்தார்களாம்! திரையரங்குகளில் படங்கள் வெளிவந்துள்ளன. உலகத் திற்கே விளம்பரப் புத்தி சொல்லும் அந்த ரஜனி இதைத் தடுக்கவோ தடை செய்
யவோ ஒருவிதமுயற்சியுமே செய்யவில்லை!
தமிழ்நாடு எங்குதான் போய் முடியப் போகிறதோ, ஒன்றுமே விளங்கவில்லை!
கலைஞர் கருணாநிதி பற்றிக் கடந்த இதழின் வெகு கடுமையாக 67ou6ÍFŮ Øurau:
eர்கள். இதைச் சரி என்று இப்பொழுதும் வாதிருதிறிர்களா?
வத்தளை எம். தர்மசீலன்.
2 பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ ந்து வரும் யாரையுமே புண்படுத்துவது எனது தேவையல்ல. அதே சமயம் வீர வழிபாடு செய்வதும் எனது நோக்கமல்ல. நான் காமராஜரை மன சார மதிப்பவன். அவர் அன்றும் இன்றும் காமராஜர்தான் கருணா நிதி வெறும் டப்பாக் கூட்டத்தின் வெறியாட்டத்தை நம்பித் தனது சொந்த நாமத்தையே மறந்து போனவர். தன்னைச் சகலரும் கலைஞர் என்றே அழைக்க வேண்டும் என பெரு விருப்புக் கொண் டவர். அதை அரசு முறையிலும் செயற்
படுத்தி வருபவர். நான் ஜீவானந்தம் என்ற மகத்தான தலைவருடன் பழகிய வன். கே.டி.கே. தங்கமணி, பால தண்டாயுதம், கல்யாணசுந்தரம், ப. மாணிக்கம், தோழர் நல்ல கண்ணு போன்றோருடன் கட்டம் கட்டமாகப் பழகிப் பார்த்தவன். எத்தகைய மகா மனிதர்கள் எனப் பல தடவை கள் வியந்துமிருக்கிறேன். தோழர் நல்ல கண்ணு போன்றோர் தமிழ் உலகின் தனிப் பெரும் தோழமைச் சொத்து. இந்தப் பின்னணியில்தான் நான் கருணாநிதியை விமர்சனக் கண்கொண்டுபார்த்துவருகிறேன். அத்துடன் கவிஞர் கண்ணதாசனும் தனது சுயசரிதையில் கருணாநிதியைப் பற்றிக் கூறிவைத்துள்ளார். ப்டித்திருக்கிறேன்.
ஒன்றை முறையாக நம்புங்கள். கருணாநிதி என்னதான் தலையால் நின்று அசுர முயற்சி செய்துவிட்டு மறை ந்துபோனாலும் அவரால் வரலாற்றில் நின்று நிலைத்திருக்க முடியாதென்பதே எனது கருத்தாகும். அவர் முயற்சிக்கின்றார் தெரிகிறது. அது நின்று நிலைக்காது
மலையகத்தில் மிகச் சிறந்த எழுத்தா ளர்கள் இருக்கிறார்கள். அதிலும் நன் ைபல கவிஞர்கள். புதிது புதிதாகத் தோன்றியுள் 7ைார்கள். ஆனால் இவர்களுக்கு இன் னமும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கா மைக்கு என்ன கரணமாக இருக்க முடியும்?
அட்டன் பாலா. சங்குப்பிள்ளை.
2 மலையக்தில் தரமான எழுத்தா ளர்கள் உள்ளார்கள் என்பது முற்றிலும் உண்மை! மலையகம் காலத்திற்குக்
மல்லிகை ஜூலை 2007 率 70

காலம் அவர்களைப் போற்றிப் பாராட்டி மகிழ்ந்திட வேண்டும். மக்களிடம் அன் னாரது பெருமைகளைக் கொண்டு செல்ல வேண்டும். நம்மிடம் தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்ற சுயதிருப்தி மக்களிடம் சென்றடைந்து விட முடியாது. அரசியல் தலைவர்களும் மக்கள் எழுத்தாளர்களைக் கனம் பண்ணி மக்களுக்கு எடுத்துக் காட்டிட முயலவேண்டும்.
X உங்களுடைய சி0ஆவது வயதுக் 6)ørraivu-/7c-LmvascGöðøö ólæð7æti 67öug இருக்கிறிர்கள்?
யாழ்ப்பாணம் எஸ். சத்தியசீலன்.
இல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விழா மண் என்னைக் கனம் பண்ணிக் கெளரவித்துள்ளது. அதுவே போதும். உலகம் பூராவுமிருந்து என்னை மனதார நேசிக்கும் நெஞ்சங்கள் பல என்னை வாழ்த்தி மகிழ்ந்தன.
இன்று இந்த மண்ணில் மிக மகிழ்ச்சியாக இருக்கும் சீவன்களில் நானும் ஒருவன். யுத்த, அரசியல் சூழ் நிலை மனதைத் தடுமாற வைக்கின்றதே தவிர, இலக்கியச் சூழ்நிலை மனங்கொள் ளத்தக்கதாக இருக்கிறது.
ΣK சமீபத்தில் உங்களுடைய சி0ஆவது வயதைக் கொண்டாகும்தினத்தின் இத்தனை 63uriašai 63upoluodio Ao-lin/asazovů ur1777gů பேசும் போது என்ன நினைத்தீர்கள்?
வத்தளை க. மயில்வாகனன்.
இலி நான் பல மட்டங்களில், பல
கட்டங்களில் இத்தகைய விழாக்களை
ரஸித்துச் சுவைத்து மகிழ்ந்திருக்கி றேன். இன்று இத்தகைய விழா, எனது மனப் பக்குவ காலத்தில் நடை பெற்று முடிந்திருக்கின்றது. இந்த விழாக்களி னால் நான் அதீத மகிழ்ச்சியடைய வில்லை. ஆனால், அதே சமயம் மனதில் ஒரு நிறைவு நிரம்பி வழியத் தான் செய்தது.
உங்களுடைய பிறந்ததினமன்று (27. o6.2oo7O 6762ưewfouốiøs mburg/ störr:dö தமிழ் தினசரியான தினக்குரன் உங்களைப் பாராட்டி ஆசிரியர் தைையாங்கம் தீட்டியிரு ந்தது. அதைப் பார்த்தீர்களா?
வெள்ளவத்தை ஆர். தேவராஜன்.
* பார்த்தது மாத்திரமல்ல, மனசார மகிழ்ந்தேன். ஞானபீடப் பரிசைப் பெற் றுக் கொண்டபோது கூட, தமிழகத்தில் வெளிவரும் எந்தத் தினசரிப் பேப்பர்க ளும் நண்பர் ஜெயகாந்தனைப் பாராட்டி ஆசிரியர் தலையங்கம் எழுதவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. முன் னர் ஒருநாள் மறைந்த தினகரன் ஆசிரி யர் ஆர். சிவகுருநாதன் அவர்கள் என் னைப் பாராட்டி ஞாயிறு இதழில் ஆசிரி யத் தலையங்கம் எழுதியது எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. வெகு நுட்பமாக ஒன்றைக் கவனித்தீர்களா? இந்த மண்ணில் எழுத்தாளன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு இந்த நாட்டுப் படைப்பாளிகள் எத்தனை தூரம் பாடுபட்டுள்ளார்கள் என்பதை இதிலிரு ந்தே நாம் புரிந்து கொள்ளலாம். தினக் குரல் வெளியீட்டாளர்களுக்கும், ஆசிரி யர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மல்லிகை ஜூலை 2007 & 71

Page 38
மல்லிகை ஜூலை 2007 & 72
X ரஜனியின் சிவாஜி சினிமா வைப் பற்றி இத்தனை கடத்தடிப்புக்களும் நடை பெறுகின்றனவே. இது பற்றி என்ன நினைக்கிறிர்கள்.
மருதானை
2 சினிமா என்பது ஒருமகத்தான கலை. அதை எந்தளவிற்குக் கொச்சைப் படுத்த முடியுமோ அந்தளவிற்கு ரஜனியும் அவரது கூட்டாளிகளும் தரம் தாழ்த்தி விட்டார்கள். ரஜனி கால கட்டத்தின்
கடைசிக் கந்தாயம் இது. அவருடைய
கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இதில் பெரிய சோகம் என்னவென்றால் தமிழ் கலை, இலக்கியங்களைப் பற்றி உலகத் தரத்திற்கு அடிக்கடி பேசி எழுதி வரும் சுஜாதா இந்த வியாபாரக் கும்பலின் ஏஜெண்டாகக் காட்சி தருவது தான். பணம் சம்பாதிப்பது என வந்து விட்டால் தமிழகத் தமிழனுக்குக் கலையாவது கத்தரிக்காயாவது.
ஒன்றைக் கவனித்தீர்களா? தமிழகத்
திலிருந்து இங்கு வந்து சேரும் சஞ்சிகை
கனின் விைை எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டதே. இதனால் ஒழுங்காக அவற்றை வாசித்துப் பழக்கபடகுன்ன சுவைஞர்கள் 67ufgifth a 6.2Ltjudd5pmtias 667, &aitjof Graitor 6aviuontp2
புத்தளம் ஆர். தவநேசன்.
2 இந்த அதீத விலையேற்றம் என்னையும் பாதிக்கத்தான் செய்கிறது. இப்படியே வந்து சேரும் சஞ்சிகைகளின் விலைகள் ஏறிக்கொண்டே போனால், முடிவில் நமது வாசகர்கள் அவற்றைத்
ஆர். மோகன்தாஸ்.
தொடர்ந்து வாங்கி வாசிப்பதை இயல் பாகவே நிறுத்தி விடத்தான் செய்வார்கள். விற்பனையாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவது நல்லது.
凶 "மல்லிகைப் பந்தல்" வெளியிருகள் சமீபத்தில் வெளிவந்ததாகத் தெரியவில் ைையே, என்ன காரணம்?
தெஹிவளை மு. செந்திவேல்.
2 தொடர்ந்து பல காலமாக மல்லி கைப் பந்தல், நூல்களை வெளியிட்டு வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இன்றோ ஒரு நூலை வெளியிடுவ தென்றால் அதனது அடக்கச் செலவு எக்கச் சக்கமானதாக இருக்கின்றது. நாட்டு யுத்த நிலை காரணமாக விற்ப னையிலும் மந்த மேற்பட்டுள்ளது. இலங் கையின் வட பிரதேசத்திலிருந்து தொடர்
புகள் துண்டி க்கப்பட்ட ஒர் அவலநிலை.
மாத இதழ் மல்லிகையே தங்களுக்கு ஒழுங்காக கிடைக்கவில்லை என்ற சுவைஞர்களின் குற்றச்சாட்டு வேறு. எனவே நமது நூல் வெளியிடும்
திட்டத்தை மிக மிக நிதான மாகவே
கடைபிடித்து வருகின்றோம். மல்லிகை யின் அட்டையை அலங்கரித்த 53 பிரமுகர்களின் அறிமுகக் கட்டுரை களின் முன்முகங்கள் வெகு விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. உங்களைப் போன்றவர்களின் பூரண ஒத்துழைப்புத் தான் நமக்கு இப்போதைய தேவை.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 00LE TiqtG GqTSLSgrLiLiLLHLHHL SSS LLL MLTSTTSLTtt HtCyTSS SLL OMrrtr L EEHLHHLS
t

ܢܠ
r
சுத்தமான சுவையான சுகாதாரமுறைப்படி தயாரிக்கப்படி சிற்றுண்டி வகைகளுக்கு
கொழும்புமாநகரில் பிரசித்தி வடற்ற
வேறணலeஉல்
எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கத்தக்க பெயர்
'VEGETARIASN HOTEs.
98, பாங்ஷால் வீதி, கொழும்பு- 11. தொலைபேசி இல 2324712
ン

Page 39
Naikai
Ozzick Se
DIGITAL 嘯
hp in dig O and K Digital
V, التي 等 We have introduced
Plastic Cards & Scratch Cards ܨܠܐ
था ।
D
U
CUR PRODUCI LIFE", GER INTIF
HLIFEs. CAIE, LOGLIES, 531.IVE.! Ag5 CD DVD CovEFS:012 FIT-TIF AR DI 5, "REPET EFFT AFET EħTTħ, li, TH., F. C., RDS,
51LR. s. CD 5T}h- MER, "I"R Ah*4% P"/"AREl LLLSKLLLLLLL LLLLHHS LLLLLLL LLOLaSS
HAPPY DIGIT!
Head Office No: 75/1/T, Sri SI Tlalna tissel Ma'Wall Colombo-12, Sri Lal Tıkl. TL. 11433 web: www.happydigitalceiltre.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

July - 2007
FSET PRESS
у 0 NICA MINOLTA Machine
苓 。 లో aio 3༽ كي"
○ 、
· ශ්‍රී == O F. C. 蔷 7。
IR5, BöçKilotAER5, GREETING CARD5, LIEBESTAIKERS iiiiiiiik"ċċWER MEN LI CARDS, ERIFICATES, B.C.'s il
- IEE I, PLASTIC CARD*,
AL CENTRE (Pvt) Ltd
Brullith til, No. 107 13, 1/1, Galle Road, Colombo-CX.
Tel 012553590 e IThail: info(Chappy digitalcentre.com