கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2007.08

Page 1
Augu
S Malika
(Bangles, Chains, Wecklaces, Tar Tops, Guaranteed Items Etc.
قاي*
Salmaan Trading
'Santhosh Plaza Complex"
1st Floor, 229-1114, Main Street, Colombo - 11. Te: O11 2394512 Hot Line : O77 666 336
St. 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

以 cae 3 ? 创
CiligipL. Gill,
ஆ

Page 2
இலங்கையில் நூல்கள் விநியோகம், விற்பனை ஏற்றுமதி இறக்குமதி பதிப்புத் துறையில் புதியதோர் சகாப்தம்.
அன்புடன் அழைக்கிறது
சே99டு பெத்தகசாலை
Q:no, CHEMAXÀDU BOOK CENTRE
Telephone : 011 - 2472362 Fax : 011 - 2448624 E-mail : chamamaduGDyahoo.com
UG 49, 50. People's Park, Colombo - 11. Sri lanka
\ \ \ Uஇலத்துyை, விற்பனைத்துறை لخواح الدراجات (yséopayascii, ேெதுtyக்வீர்கள். க.சச்சிதானந்தன் - காந்தளகம், சென்னை - 02.
தொ.பே. : 044 - 28414505
E-mail : tamlinool(a)data.in
숭 \ \ \ \ \r \ \r
கோ.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17.
தொ.பே. : 044 - 24339030 E-mail : ta-pathippagam (a yahoo.co.in
அனைத்து வெளியீடுகளையும் எம்மிடம்
பெற்றுக்கொள்ளலாம்.
 
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்
நோக்கி. ஆகஸ்ட் 339 'ഠൂർഡ് ീgrue;
ഭർnർഗ്ഗ ദർgദ്ധe '
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமுமாகும்.
201/4, Sri Kathiresan St, Colombo - 13.
s Tel: 2320721
mallikaijeevaayahoo.com
sa GA? o
இந்தக் கால கட்டம் அச்சகத் துறை யில் புத்துக்கமும் புதுப் பொலிவும் திகழ்ந்து வரும் நவீன யுகக் காலகட்டமாகும். இந்தச் சூழ்நிலையில் மல்லிகையை நவீன கவர்ச்சிப் பொலிவுடன், உருவத்தைப் பெரு *ப்பித்து வெளியிடுவதுதான் சாலச் சிறந்தது என நமக்கு மிக நெருக்கமா னவர்கள் அடிக்கடி ஆலோசனை சொல்லி வருகி
ன்றனர்.
அவர்களுக்கு ஒன்று தெரிவதில்லை! எளிமையாகவும் தன்னடக்கமாகவும் இருப் பதே ஒரு பெரிய சாதனையாகும்.
காந்தியடிகளின் கதர் இதற்கு முன் னுதாரணமாகும். .
கையால் எழுத்துக் கோர்த்து, மல்லி கையை வெளியிட்ட காலத்திலிருந்தே இந்த எளிமையை நாம் மிகக் கவனமாகக் கைக் கொண்டு ஒழுகி வருகின்றோம்.
கவர்ச்சி அழகாகத்தான் இருக்கும். ஆனால், ஆழமாக இருக்காது. சினிமா நடிகைகளைப் போலப் பார்த்து ரஸிக்க லாமே தவிர, படம் போட்டு வீட்டுச் சுவரில் தொங்க விட இலாயக்கற்றதாகும்.
நடிகை சிங்காரிக்கலாம். அது அவளது வாழ்க்கை. ஆனால், மனைவிமார் அப்படித் தங்களைச் சோடித்துக் கொள்ள
(PLQuimbi.
இது மல்லிகைக்கு அநுபவப் பாடம்.

Page 3
பொன்னாடை, பூமாலைக்குப் பதிலாகப் புத்தகங்களைப்
பரிசளியுங்கள்.
தமிழ் நாட்டைப் பின்பற்றி, இங்கு நடைபெறும் பெரும்பாலான விழாக்களில் மேடையில் வைத்தே, பலருக்குப் பூமாலை போடுவதும், பொன்னாடை போர்த்துவதும் ஒரு மேடை நாகரிகமாகவே பழகி வந்துவிட்டது.
இதில் நுட்ப விசித்திரம் என்னவென்றால், தமக்கு, முன்னர் ஒரு விழாவில் போர்த்திய சால்வைகளை வெகு பவ்வியமாக மடித்து வைத்திருந்து, இத்தகைய விழாக்களில் தாமே போர்த்துவதாக ஒரு நடிப்பு நாடகத்தைச் சிலர் அரங்கேற்றியே முடித்து விடுகின்றனர்.
இதைத் தவிர்க்கும் முகமாகத் தமிழக முதல்வர் சமீபத்தில் ஓர் ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
இப்படியான மேடைப் பண்பாடுகளைத் தவிர்த்து, பூமாலை, பொன்னா டைகளுக்குப் பதிலாக நூல்களை அன்பளிப்புச் செய்யும் வண்ணம் ஆலோசனை நல்கியிருந்தார்.
இது வரவேற்கத்தக்கதொரு மாற்றமாகும்.
இந்த ஆலோசனையை நாமும் நமது பொதுச் சேவைகளில் வருங்காலத்தில் பின் பற்ற வேண்டுமென நாம் ஆலோசனை சொல்லுகின்றோம்.
இதை நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடைப்பிடித்து வந்தோமென்றால், புத்தகங்களின் வருகை பெருகும். படிப்பவர்களின் தொகை அதிகரிக்கும். அத் துடன் புத்தகங்களை வெளியிட்டு விட்டு அதனது விற்பனைக்குக் காவலிருக்கும் எழுத்தாளர்களுக்கு ஒரு விடிவு விமோசனம் கிடைக்கும்.
 

நானொரு ஆலோசனை சைால்கின்றேன்!
உங்களது கவனத்திற்கு ஆக்க பூர்வமான ஆலோசனை ஒன்றைச் சொல்லுகின்றேன்.
இது வரை புதிதாக வந்திருக்கும் 'முன்முகங்கள்' நூலுடன் அட்டைப்பட நாயகர்களாக இதுவரையும் 197 பேர்களுடைய வாழ்க்கைக் குறிப்பும் முன்பக்க உருவப் படப் பதிவும் வெளிவந்துள்ளன. இனித் தொடர்ந்து வெளிவருபவர்களின் படக் குறிப்புக்களையும் ஒன்று சேர்த்து- 250 பேர்களினதும் ஒரு பெரிய நூலாக அதனை வெளியிட்டால் என்ன?
பாதுகாத்து வைத்திருக்கவும் பிற்காலச் சந்ததிக்கு ஒர் இலக்கிய ஆவணமாகவும் அது விளங்குமல்லவா?
சும்மா சொல்லக் கூடாது, பாரிய வேலைதான் இது இருந்தாலும் சென்ற
நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த, நூற்றாண்டின் முற்பகுதி வரை எழுத்தில் வெளிவந்துள்ள கனம், தகுதி உள்ளவர்களின் ஆவணமாக அது பயன்படுமல்லவா?
ஏதோ அந்த அந்தச் சந்தர்ப்பத்திற்குப் படிச்சுப் போட்டு மடித்து வைக்காமல் இவற்றைச் சிரமம், பொருளாதாரச் சங்கடங்களைக் கவனத்தில் கொண்டு செயற்பாட்டில் மல்லிகையின் இலக்கியப் பணி காலம் காலமாகப் பேசப்படுமல்லவா?
அந்தத் தொகுப்பு நூலை நீங்கள்தான் தொகுத்தளிக்க முன் வரவேண்டும். அத்துடன் மல்லிகைப் பந்தல் வெளியீடாகவே அந்தப் பாரிய பதிப்பு வெளியிடப் பெற்றிருக்க வேண்டும். இது மிக முக்கியம்.
காரணம் அட்டையில் இதுவரை வெளிவந்துள்ள அத்தனை பேர்களினதும் குறிப்புகள் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் கட்டாயமுமானது, அவசியமுமானது.
உருவங்களைப் பதிவு செய்து மக்கள் சுற்றுக்கு விட்டதன் பின்னர், அவர்கள் சம்பந்தமாக உங்களுக்கு நேரடியாக ஏற்பட்ட அநுபவங்களை மனதிற் கொண்டு, சிலரை அதிலிருந்து அகற்றினால் கூட, அது உங்களது கணிப்பீடாகவே இருக்கட்டும்
கே. ஆர். ராமேஸ்வரன்.

Page 4
- S|-60)L-LLIL-lfb
ஒரு லிைதைைகவுல், கலைஞனாகவும் ணிைப் புலவர் ஜீைத்.
- செ. யோகநாதன்
முதற் பார்வையிலும், முதற் சந்திப்பிலும் நம்மைச் சிலர் வெகுவாக வசீகரித்து விடுவார்கள். இத்தகைய ஆளுமைச் சிறப்பு அவர்களுடைய ஆற்றலால்தான் சித்திக்க இயலும், இப்படியான ஆற்றல் சித்தித்தவர்களில் ஒருவராக மணிப் புலவர் மஜித்தை நான் அடையாளம் காண்கிறேன்.
மகா கவி பாரதி, "ரூபம் செம்மை செய்' என்று சொல்லியிருக்கிறான். எல்லோருடனும் தன்மையான புன்னகையுடன், தரிசனத்திற்கு இனியவராகக் காட்சியளிக்கும் மணிப்புலவரும் பாரதி கருத்தை முழுமனதாக வழி மொழி கிறவராக அனைவருக்கும் தெரிகின்றார்.
எம்மில் பல படைப்பாளிகள் இருப்பதால் தமது தராதரம் குறைந்து விடும் என்றும், பாராட்டுவதால் தமது பெயருக்கு இழப்பு வந்து விடும் என்றும் எண்ணுகின்றனர். படைப்பாளிகளுக்கு அடிப்படையாக இருக்கக் கூடாத இக்குணங்களையே தமது குணாம்சங்களாகக் கொண்டுள்ள இவர்களிடையே மனிதனுக்கு, படைப்பாளிக்கு உரிய இயல்போடு மஜீத் விளங்குவதே இவருக்குக் கம்பீரம் அளிக்கும் சிறப்பு.
பிஞ்சுப் பருவத்திலேயே எழுத்துத் துறைக்கு வீச்சோடு வந்தவர். நூல்களைத் தேடிப் படிப்பதில் காட்டிய மட்டற்ற ஆர்வம் பல்துறைகளையும் வளரிளம் பருவத்திலேயே தொட்டு எழுதத்தூண்டிற்று. கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு என எழுதித் தள்ளினார்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 4

ஆசிரியப் பணி இவரைப் புடம் போட்டது. அந்த அனுபவச் சாராம்சம் சிறுகதையிலும் இவரைப் புடம் போட்டு எடுத்தது. இவர் படிப்படியாக உயர்ந்து கல்விப் பணிப்பாளர் ஆனார். வெகுஜன ஊடகங்களுக்கு நன்கு தெரிந்த, தெளி ந்த முகம் ஆனார். பத்திரிகை உட்பட்ட வெகுஜன ஊடகங்களில் இவர் உருவா க்கிய ஆக்கங்கள் பிரபல்யம் பெற்றன. பலரையும் கவர்ந்து இவரைப் பின் தொடரச் செய்தன. இப்போதுந்தான்!
இவர் மானிடத்தை நேசிப்பவர். விரிந்த மனோபாவத்தோடு பிறரோடு பழகுபவர். இவரது படைப்புக்களைப் பற்றிய எந்தவிதமான விமர்சனங்க ளையும் இவர் தனக்கேயுரிய புன்னகை யோடு ஏற்றுக் கொள்பவர். தன்னைப் பற்றிய உறுதியான தீர்மானம் இவரிடம் உண்டு. இது சிறந்த குணாம்சம்.
தமிழ் மொழியைச் சிறப்புப் பாட மாகப் பட்டப்படிப்பிற்காகப் பயின்றதின் தேட்டம் இவரிடம் விதையுன்றி வளர்ந் ததை இவரது ஆற்றொழுக்கான பேச் சும், எழுத்து நடையும் துல்லியமாக மெய்ப்பிக்கின்றன. மனதை மகிழ்வுறச் செய்கின்றது.
இலக்கணம் தெரியாமலே சொற் களை அடுக்கிப் புதுக் கவிதை "செய் வோர்' இடையே, முறைப்படி இலக் கணம் பயின்ற இவர் மரபுக் கவிதை யோடு புதுக்கவிதையும் எழுதுகிறார் என்பது இங்கே கவனத்தில் கொள்ள த்தக்கதாகும். .
தான் தெரிந்து கொண்டதைப் பிறரும் அறிந்து கொள்ள வேண்டு மென்று விரும்பும் நற்பண்புகளில் ஒன்றாகும் அந்தப் பண்பு மஜித்திடம் உண்டு. நீரிழிவு பற்றி அவர் எழுதி வெளியட்ட நூல் இதற்கு நற்சான்
றாகும்.
1979இல் "பன்னீர் வாசம் பரவு கிறது என்ற இவரது சிறுகதைத் தொகு தியும், 1992இல் பன்னீர் கூதலும் சந்த னப் போர்வையும்" என்ற கவிதைத் தொகுதியும் வெளியாகின. இந்த ஆக்க இலக்கியங்களை விட ஆய்வு தொகுப் பாக ஐந்து நூல்களும் வெளிவந்து ள்ளன. இவற்றோடு பல நூல்கள் வெளி யாவதற்கு அவர் ஆணிவேராக நின்றி ருக்கின்றார், யாருக்கும் சொல்லா Lp(86\o!
விளையாட்டு வீரராக இருந்தமை யால் இப்போதும் எறும்பைப் போலச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிரு க்கிறார்.
ஆசிரியப் பணியினைப் பற்றி தமிழில் இன்னும் சரியான ஆக்கம் எதுவுமே வரவே இல்லை. இப்பணியில் தோய்ந்து நனைந்த மணிப்புலவர், தமது அனுபவ சாராம்சங்களைக் கொண்டு அருமையான படைப்பாக ஆக்கித் தரவேண்டுமென்பது என்போ ன்றோரின் ஆர்வங் கலந்த வேண்டு கோள்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 5

Page 5
ឧ1, ឬអ៊ីub பூச்சியமல்ல
- தெணியான்
ஒருகாலத்தில் எனது இலக்கிய நண்பர்கள் முன்கூட்டியே அறிந்து விடுவார்கள் நான் கொழும்பு வரவிருக்கும் செய்தியை அவர்கள் எல்லோருக்கும் சோவியத் தூதரகத்தின் தகவல் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த எழுத்தாளர் ராஜ முரீகாந்தன் அந்தச் செய்தியைத் தெரிவித்து வைக்கத் தவறமாட்டார். அவர் வதிரியைச் சேர்நதவர். அது எனது அயற் கிராமம். ஊரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே, என்னோடு நெருக்கமான உறவு பூண்டவர். எனக்குத் தம்பி போன்றவர். கொழும்பில் இருந்து ஊருக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தவறாது என்னை வந்து சந்திக்கும் ஒருவர் இலக்கியத்தினாலும் கொள்கையினாலும் என்னோடு இணைந்து நின்றவர். அவர் கொடுக்கும் தகவலைப் பெற்றுக் கொண்ட நண்பர்கள், நான் கொழும்பில் தங்கி இருக்கும் இடத்துக்கே என்னைத் தேடித் தேடிக் கொண்டு வந்து விடுவார்கள்.
எனது இனிய நண்பர் லெ. முருகபூபதி, அவர்களுள் மிக முக்கியமானவர். யாழ்ப்பாணம் வரும் சமயங்களில் எல்லாம் அவர் எனது இல்லம் வந்து எனது குழந்தைகளைக் கண்டு போகத் தவறாத நட்புரிமை கொண்ட பண்பாளர். கொழும்பு செல்லும் சந்தர்ப்பங்களில் நான் நீர்கொழும்பிலுள்ள அவர் இல்லத்துக்குச் செல்வதும் எனது திட்டங்களில் ஒன்றாக இருக்கும். அப்பொழுது நீர்கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த இளங்கீரனைக் கண்டு பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டும்.
முருகபூபதி 'வீரகேசரி'யில் பணிபுரிந்த காலம், அவரைத் தேடிக் கொண்டு ‘வீரகேசரி காரியாலயம் நான் செல்வதுண்டு. அந்தச் சந்தர்ப்பங்களில் ‘வீரகேசரி வாரவெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்த பொன். ராஜகோபலை நேரிற் சந்தித்துப் பேசுவேன். எனது இலக்கிய வரலாற்றுப் பயணத்தில் வீரகேசரிக்கும் பொன். ராஜகோபாலுக்கும் மிக முக்கியத்துவம்வாய்ந்த ஓர் இடமுண்டு. எனது சிறுகதைகளை அவர் தொடர்ந்து விரும்பி வரவேற்று வெளியிட்டு வைத்துக் கொண்டிருந்தார். எனது வளர்ச்சியில் அக்கறை; எனது படைப்புக்களில் நாட்டம்; அவருக்கு இருந்து வந்தது என்பதனை நன்றியுடன் நான் குறிப்பிட்டாக வேண்டும்.
வீரகேசரியில் இருந்து முருகபூபதி விலகி அவுஸ்திரேலியா சென்ற பிறகும் நான் நீர்கொழும்பு சென்று அவர் குழந்தைகளைப் பார்த்து வருவதுபோல், வீரகேசரிக்குப் போய் பொன். ராஜகோபாலைச் சந்தித்துப் பேசிவருவேன்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 6

வடமராட்சி இராணுவ நடவடிக்கை நடந்து முடிந்த பிற்பாடு அந்த ஆண்டு (1987) டிசம்பர் மாதம் நான் கொழும்பு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்தத் தாக்குதலின்போது எனது உடன் பிறந்தவர்களின் பிள்ளைகள் இராணுவ
த்தால் கைது செய்யப்பட்டு, காலிக்குக்
கொண்டு செல்லப் பெற்று, பின்னர் விடுவி க்கப்பட்டார்கள். அவர்கள் உளரீதியான பாதிப்புக்கு ஆளாகி, கல்வியிலும் வெறு ப்புற்று, இந்த நாட்டில் வாழும் விருப்பத் தையும் தொலைத்திருந்தார்கள். கனடா
வில் வாழும் எனது தம்பி செய்து கொண்ட்
ஏற்பாணைமூலம் (Sponsor) இருவரை யும் அந்தநாட்டுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவர்களு டன் கொழும்பு வந்தேன். பலநாட்கள் தங்கி இருந்தேன்.
முன்னர் போல ஒருதினம் வீரகேசரி சென்று பொன். ராஜகோபாலைச் சந்தி த்தேன். அந்தச் சமயம் நான் வீரகேசரி க்குச் சிறுகதை ஒன்றினை அனுப்பி வைத்து இரண்டு மூன்று மாதங்கள் கழி ந்து போய்விட்டது. பிரசுரத்துக்காக காத்து எனது சிறுகதைகள் அவ்வளவு காலம் இதற்கு முன்னர் இருந்ததில்லை. நான் ராஜகோபாலிடம் பேச்சோடு பேச்சா, “கதை ஒன்று அனுப்பி வைத்தேன்" எனக் கூறினேன். அவர் சிரித்துக் கொண்டு எழு ந்து தனக்கு அருகில் இருந்த அலுமாரி யைத் திறந்து, அதனுள் இருந்து இர ண்டு ஃபயில்களைத் தூக்கி எனக்குமுன் மேசைமீது வைத்தார். ஒரு ஃபயில் உண்டு பருத்த தனவந்தன் வயிறு போல ஊதிப் பருத்திருந்தது. மற்றைய ஃபயில் பல நாட்கள் பட்டினி கிடந்தவன் வயிறாக
மெலிந்து ஒட்டிப் போய்க் கிடந்தது. ஊதி ப்பருத்த ஃபயில்மீது கையினால் தட்டிக் கொண்டு, "இவ்வளவும் சிறு கதைகள்’ எனக் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுமார் ஐம்பது சிறுகதைக ளாவது அதில் இருக்கும். அடுத்த, ஃபயிலை எனக்கு முன் நகர்த்தி, "திறந்து பாருங்கோ' என்றார். அதற் குள்ளே எஸ். அகஸ்தியர், பெனடிற் பாலன், செ. யோகநாதன், நீர்வை பொன்னையன் ஆகியோரின் சிறுகதை களும் எனது அந்தக் கதையும் கிடந்தது.
அப்பொழுது அவர் சொன்னார், "தெணியான், உங்களுடைய கையிலே இருக்கிற ஃபயிலுள்ள கதைகளைத் தொடர்ச்சியாக நான் பிரசுரித்துக் கொண் டிருந்தால் , நிச்சயமாக என்னை வீட்டு க்கு அனுப்பி வைத்து விடுவார்கள். மற் றப் ஃபயிலில் இருந்து ஐந்தாறு கதைகள் வெளிவந்த பிறகு, இடையில் இந்தக் கதை ஒன்றை மெல்லத் தள்ளி விடு வேன். உங்களுடைய கதை வரும்.”
அவ்வளவுகாலமும் எனக்குப் புரி யாத ஒரு விடயம் அப்பொழுதுதான் மெல் லப் புரிந்து கொண்டது.
'தினகரன் பத்திரிகை மூலம் எனக்குக் கிடைக்கப் பெற்ற சுவாரசி யமான இன்னனோர் அனுபவம்.
'தினகரன் நிருபர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, பேராதனை யில் அப்பொழுது இருந்த எனது தம்பி, 'கழுகுகள் வட்டமிடுகின்றன” குறுநா வலை என்னிடம் பெற்று அந்த நிருபரிடம்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 7

Page 6
(28.06.1978) கொடுத்தான். ஆனால் நீண்டகாலமாக அது வெளிவரவில்லை. அந்த நிருபரைச் சந்தித்து அவன் விசா ரித்த பொழுது, "இடதுசாரிகளின் எழுத்து க்களைப் பிரசுரிக்க வேண்டாம் என்பது மேலிடத்து உத்தரவு' என அந்த நிருபர் தெரிவித்தார். பிரதியை மீளப் பெற்றுக் கொள்ளும் முயற்சியும் பயனளிக்காது போனது.
காலப் போக்கில் அந்தச் சம்பவம் எனக்கு மறந்து போயிற்று. ஆனால்
அந்தக் குறுநாவலைப் பின்னர் முழு நாவ
லாக எழுதி முடித்தேன். தமிழ்நாடு நர் மதா வெளuபீடாக 1981 இல் 'கழுகுகள்" என்ற பெயரில் அது நூலாக வெளி வந்தது. நூல் வெளிவந்து சில ஆண்டு களின் பின்னர் . ஆட்சிமாறிய பிற்பாடு - தினகரன் தினப்பதிப்பில் தொடர்ச்சியாக அந்தக் குறுநாவல் வெளிவரத் தொடங் கியது. ஆரம்பத்தில் அந்தத் தகவல் எனக்குத் தெரியாது. குறுநாவல் முடிவ டைந்த பின்னர், தினகரன் பிரதம ஆசிரி யர் இ. சிவகுருநாதன், "தெணியான் உங்களுடைய பிரதி ஒன்று இருப்பதாகக் கொண்டு வந்து தந்தார்கள்; அதனைப் பிரசுரித்திருக்கிறேன்' என தகவல் தந்தார்.
இப்படித் தடைகள் சில தாண்டி த்தான் எனது இலக்கியப் பயணத்தில் நான் பயணிக்க வேண்டி நேர்ந்திருக்கிறது.
நான் கொழும்பு செல்லும் வேளைக ளில் கொட்டாஞ்சேனையில் தம்பியின் இல்லத்தில் தங்கி இருக்கும் சூழ்நிலை அவன் திருமணத்தின் பின்னர் உரு
வானது. பிரேம்ஜியும் கொட்டாஞ்சேனை யில்தான் அப்பொழுது தங்கி இருந்தார். பணிமுடிந்து வீடு செல்லும் சமயங்களில் மாலை வேளைகளில் அவர் என்னைச் சந்திப்பார். நீண்டநேரம் இருவரும் உரை யாடிக் கொண்டிருப்போம். பெரும்பாலும் இலக்கியம் பற்றியதாகவே எங்கள் உரையாடல் அமைந்திருக்கும். அறிவி யல் நோக்கில் எதனையும் அணுகும் பிரேம்ஜியின் கருத்துக்கள் மிகுந்த பயனு ள்ளவைகளாக இருக்கும். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ் பாணக் கிளைச் செயலாளராக நான் இரு ந்த காலத்தில், பிரேம்ஜி எழுதும் கடிதங் களும் அத்தகையவைதான் கடிதங்கள் நீண்டவைகளாக, திட்டமிட்டு எழுதப் பட்டவைகளாக எப்பொழுதும் இருந்து வரும். நேரிற் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவர் உறவு கொண்டு பழகும் நடத்தைப் பாங்கு மனதுக்கு உவப்பாக இருக்கும்.
பிரேம்ஜியுடன் பணிபுரிந்த மு. கனக ராஜன் கொழும்பில் இடையிடை என் னைச் சந்தித்துப் பேசுவார். சுவைப்பட, நீண்ட கடிதங்கள் அக்காலத்தில் எனக்கு எழுதுவார்.
ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி கே. கணேஷை 17.17.1987 கொள்ளுப்பிட்டியில் சந்தித்தேன். தலத் ஒயாவில் இருந்து அங்கு வந்து தங்கி இருந்தார். ராஜ முீகாந்தன் என்னை அவரிடம் அழைத்துச் சென்றார். அவரு டனான எனது முதற் சந்திப்பு அது. ஆனால் முன் அறிமுகம் ஆகாத இரு வரது முதற் சந்திப்பாக அது அமைய வில்லை. மல்லிகை வாயிலாக முன்
மல்லிகை ஆகஸ்ட் 2007 $ 8

னரே என்னை அவர் நன்றாக அறிந்து வைத்திருந்தார். அதனால் நீண்ட காலப் பழக்கம் உள்ள இருவரது சந்திப்பாக அது அமைந்திருந்தது. வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த பயனுள்ள, பல இலக் கியத் தகவல்களை அவர் அப்பொழுது எடுத்துச் சொன்னார். நேரம் கடந்து போவது மறந்து, மனந்திறந்து நீண்ட நேரம் என்னுடன் உரையாடினார்.
அந்தச் சந்திப்பு மறக்கமுடியாத ஒன்றாக எனக்கு அமைந்தது. அதன் பின்னர் எங்கள் இருவருக்கும் இடையே கடிதத் தொடர்புகள் இருந்து வந்தன. நாட்டு நிலமைகள் காரணமாக எங்கள் கடிதத் தொடர்பு பின்னர் இடையில் தடைப்பட்டுப் போனது.
கொட்டாஞ்சேனையில் நான் தங்கி இருந்த சமயம் சிங்கள மொழியில் வெளி வரும் "விவரண" சஞ்சிகை உதவி ஆசி ரியர், ராஜமுநீகாந்தனுடன் என்னைத் தேடி வந்து செவ்வி ஒன்றினை அப்பொழுது என்னிடம் எடுத்துக் கொண்டார். பின்னர் 09.05.1988 ‘விவரண" இதழ் எனது புகை ப்படம் அறிமுகம் என்பவற்றுடன் அந்தச் செவ்வியைத் தாங்கி வெளிவந்தது.
கையெழுத்துப் பிரதியாக டானியல் என்னிடம் தந்துபோன "தண்ணீர்" நாவல் நூலாக்கம் பெற்று, யாழ். பல் கலைக்கழக கைலாசபதி அரங்கில் 14.08.1988 இல் பேராசிரியர் நா. சுப்பிர மணிய ஐயர் தலைமையில் அதன், வெளி யீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஆகியோரும் இன்
னும் சிலரும் பேசினர். நானும் அந்த விழாவில் பேசினேன்.
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக இலக்கியம் படைப்பதை இலக்காகக் கொண்ட டானியலின், சாதியம் பற்றிய இன்னொரு நாவல் வெளியீட்டு விழா, அந்த வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப் பெற்ற கருத்துக்களின் தொனிப் பொருள் சாதியத்துக்கு எதிரானதாக குறிப்பிடும்
பொழுது ஆறுமுக நாவலர் பற்றிச் சொல்
லாமல் விட்டு விட முடியாது. எனது பேச் சில் அன்று வன்மையாக நாவலரைக் கண்டித்துப் பேசினேன். அப்பொழுது சபையில் இருந்த நாவலர் பக்தர் ஒருவர், எனது பேச்சைக் கேட்டு வெகுண்டு, குறுக்கிட்டு என்னிடம் கேள்வி கேட்கப் போவதாகச் சொல்லி அவதிப்பட்டுக் கொண்டு இருந்திருக்கின்றார். அவர் அருகில் அமர்ந்திருந்த பேராசிரியர் சோ. கிருஷ்ணராசா, “சாதிக்கொடுமையினால் பாதிக்கப்பட்டவனின் மனநிலையை - மனக் கொதிப்பை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். மேடையில் நிற்கும் தெணியானிடம் வீணாக வாயைக் கொடு த்து அவமானப்பட வேண்டாம்" என அவரை எச்சரித்ததும் அவர் தன்னை அடக்கி வைத்துக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டேன். அந்தத் தகவலின் மூலம் தொட வேண்டிய இடத்தை எனது பேச்சுத் தொட்டு விட்டதென எண்ணி நான் உள்ளூர மகிழ்ந்தேன்.
அந்த விழாவில் நான் ஆற்றிய உரை வெவ்வேறு கோணங்களில் பலர் நெஞ்சங்களைத் தொட்டிருக்கின்றது
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 9

Page 7
என்பதனை பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.
கடற்படையினர் கடல்மீதிருந்து பீரங்கித் தாக்குதல் கரையை நோக்கி நடத்திய வேளை கடற்கரை ஓரமாக வாழ்ந்த கரையோரச் சமூகத்தைச் சேர் ந்த மக்கள், தங்கள் பாதுகாப்புத் தேடி கிராமத்துக்குள்ளே இடம் பெயர்ந்து ஓடி வந்தார்கள். அந்த மக்களுக்கு உயர் சாதியினர் எனப்படுகின்றவர்கள் சிரட் டையில் தேநீர் வழங்கிய வெட்கக் கேடான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அந்த அவமதிப்பினால் மனம் நொந்து போன ஒருவர் எனது தந்தையாருடன் நெருக்கமான உறவு வைத்திருந்தவர். தனது மனைவியுடன் அங்கிருந்து திரு ம்பி வந்து ஒருபகலும் இரவும் எங்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து பின்னர் திரும்பிப் போனார். இந்தச் சம்பவம் "தண்ணிர் வெளியீட்டு விழா நடை பெறு வதற்குச் சிறிது காலம் முன்னதாக இடம் பெற்றது. அந்தச் சம்பவத்தை மிகுந்த மனக் கொதிப்புடன் அந்த விழாவில் நான் எடுத்துச் சொன்னேன்.
நூல் வெளியீடு முடிந்து அந்த மேடையில் இருந்து நான் கீழே இறங்கி வந்தபோது, சபையில் இருந்த குறிப் பிட்டுச் சொல்லத் தகுந்த ஒருவர் என் னைத் தேடி வந்து "ஐயா, உங்களுடைய பேச்சைக் கேட்டு சிலரின் தலை கவிழ் ந்து விட்டது" என்று கூறிச் சென்றார்.
நான் எடுத்துக் கூறிய மனிதநாகரி கமற்ற, அநாகரிகமான அந்தச் செய லைக் கேட்டு அவர்கள் தலை குனிந்தி
ருந்தால் நான் நிச்சயம் மனம் மகிழ் ந்திருப்பேன். ஆனால் எனக்குத் தகவல் தந்தவர் அந்தப் பொருள்பட எனக்கு அத னைச் சொல்லவில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனது பேச்சு யாருக்காவது மனச் சங்கடத்தை ஊட்டு கின்றது என்றால், அதற்கு நான் காரண மாக இருக்க முடியாது. சங்கடப்படுகின் றவர்கள் சமூகத்தை எங்களை உள்நோ க்கி ஒருதடவை பார்த்துக் கொள்ள வேண்டும். மேடை நாடகங்கள் என்பது பொய்மையும் போலித்தனங்களுமாகப் பேசுவதல்ல.
'மழைவிட்டும் தூவானம் விடாத ஒரு நிலையை' எனது அன்றைய பேச்சு உருவாக்கி விட்டிருந்தது.
கே. டானியலின் "குறுநாவல்கள்" என்னும் தொகுதி ஒன்று 1989இல் வெளிவந்தது. அந்த நூலில் இடம் பெற் றுள்ள பதிப்புரையின் சில பகுதிகளை மீள இங்கு தருகின்றேன்.
"டானியலின் தண்ணிர் நாவல் சித்த ரிக்கும் கரவெட்டிப் பிரதேச அபிமானி கள், வடமராட்சி வாழ்நர் பேசிய கருத்துக் கள் டானியலின் மதிப்பீட்டை அளவிடும் அதேவேளையில் அவர் எழுதாது விட் டாலும் நாமும் அவரைப் போல எழுது வோம் என்ற தொனியில் அமைந்திருந் தன. எனவே அந்த அபிமானிகள் டானி யலைப் போல எழுதும் ஆற்றல் பெறும் வரையில், சிதறிக் கிடக்கும் டானியலின் குறுநாவல்களைத் தொகுத்து வெளியிட் டால் அது எல்லோருக்கும் பயன் தரும் என்று எண்ணினோம்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 O

டானியலின் தண்ணிர் நாவலை டானியல் எழுத முடியாமல் போனால் அதைத் தொடர்ந்து எழுதும் ஆற்றல் பெற்றவர் என டானியலால் மதிப்புரை வழங்கப்பட்ட திரு. தெணியான் அவர்க ளிடம் ‘கண்ணம்மா' பற்றிக் கூறியிருப் பார் என்று எண்ணுகிறோம். டானியலின் வாரிசு ஒன்றினை இனி எழுதப்படவிரு க்கும் ‘கண்ணம்மா' நாவல் இனங்காட் டும் என நம்புகின்றோம்.
LT6cusseil எழுத்து அவர் வாரிசு ஒன்றால் நிறைவேறலாம். அதன் பின் னர்தான் டானியலுடன் ஒப்பிடக் கூடிய ஆற்றலுடைய எழுத்தாளரையும் தமிழர் இனங்கண்டு கொள்ளவும் முடியும்.
அக்காலத்தில் இவைகளைப் படித் தபோது எனக்குச் சினம் மூண்டது என் பது உண்மைதான். இன்று மேலும் இது பற்றி நான் குறிப்பிடாமல் விட்டு விட லாம். ஆனால் எழுத்துருவில் இந்த விவகாரம் பதிவு செய்யப் பெற்றிருக் கிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட தனால் பதினெட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுபற்றி நான் குறிப்பிட வேண்டியது தவிர்க்க இயலாததாக்கப்ப ட்டிருக்கின்றது.
இவ்வாறு எழுதியவர்கள் பற்றி நான் குறிப்பிடப் போவதில்லை. வாசகர்கள் அவர்களை விளங்கிக் கொள்ளட்டும்.
சிதறிக் கிடந்த டானியலின் குறு நாவல்களைத் தொகுத்து வெளியீடு செய் தவர்களின் நோக்கம் அவைகளை இரு நூலாக்குவது மாத்திரமல்லாது, டானி
யல் அபிமானிகள் அவைகளைப் படித்து டானியலைப் போல எழுதும் ஆற்றலைப் பெற்றுக் கொள்வதற்கு Փ-56N6ն%ո56ւյս0 ல்லவா இருந்திருக்கின்றது எத்தகைய பெருந்தன்மை எத்தகைய சட்டாம்பிள் ளைத்தனம்
டானியல் போல எழுதுவதென்றால் 6T657 sp
டானியல் சாதிக்கொடுமையினால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இலக்கியம் படைத்தார். அந்தக் கொடு மைகள் தீரும்வரை தொடர்ந்து நானும் சாதிக்கு எதிராக எழுதுவேன் என 'தண் னிர் நாவல் வெளியீட்டு விழாவில் நான் சொன்னேன். இன்று வரை நான் எழுதி யும் வருகின்றேன். அவ்வளவுதான்!
டானியலின் பேரபிமானிகள் ஈழத்து நாவலாசிரியர்கள் மத்தியில் ஒருபோட்டி க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த போட்டியில் ஜெயிக்க முடியுமா உங்க ளால்? ஒரு சவாலும் விட்டப்பட்டிருக் கிறது. டானியல் எழுதுவதற்கு திட்டமிட் டுருந்த "கண்ணம்மா" என்னும் நாவலை எழுதி முடித்தலாகிய வில்லை வளை த்து நாவலாசிரியர் என்னும் மாலையைச் சூடிக்கொள்ளலாம். அந்த வில்லை
வளைக்க இயலாதவர்கள் நாவலாசிரிய
ராக இருக்க டானியலின் வாரிசாக இரு க்க தகுதியற்றவர்கள் என்பது அவர்க ளின் முடிந்த முடிவு.
ஓர் எழுத்தாளனின் கொள்கை யைக் கருத்து நிலையை இன்னொரு எழுத்தாளன் கொண்டவனாக இருக்
மல்லிகை ஆகஸ்ட் 2007 奉

Page 8
கலாம். அல்லது எழுத்தாளர் இருவர் இவற்றில் ஒன்றுபட்டவர்களாக இருக்க லாம். ஆனால் ஓர் எழுத்தாளனின் இலக்கியப் படைப்புப் போல இன்னொரு எழுத்தாளன் இலக்கியம் படைப்பது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த உண்மையை ஒரு படைப்பில க்கியவாதியினால் தான் உணர்ந்து கொள்ள இயலும், டானியலின் பேரபி மானிகள் எதற்காக இத்தனை காழ்ப் புடன் இவ்வாறெல்லாம் அடித்துக் கொண் டார்கள் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.
நான் எழுதுவதற்கு ஆரம்பித்து
இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவைக்
கவனத்தில் கொண்டு 1989 மார்ச் மாத "மல்லிகை" அட்டையில் எனது படத் தைத் தாங்கி வெளிவந்தது. அறிமுகக் கட்டுரையைப் பேராசிரியர் கா. சிவத் தம்பி எழுதினார். வீரகேசரி இலக்கியக் களம் "எழுத்துப் பணிக்கொரு விழா” என வெள்ளிவிழாக்காலம் பற்றிய செய்தியை வெளியிட்டு வைத்தது.
எனது வெள்ளி விழாவைக் கொண்டாடும் மனவிருப்பம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் என்னை அறியாமலே சில நிகழ்வுகள் அந்த கால த்துக்குப் பொருத்தமானவைகளாக நடந்தேறின.
நான் கொழும்பு சென்ற சமயம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் "கலைப் பூங்கா’ நிகழ்வுக்காக 16.12. 1989இல் செவ்வி ஒன்றினை ஒலிப்பதிவு செய்து பின்னர் இரண்டு தடவைகள்
ஒலிபரப்பியது. செவ்வியைப் பெற்று இரண்டு தினங்களின் பிறகு எனது இலக் கிய உரைகள் இரண்டினைப் பதிவு செய்து பின்னர் பல தடவைகள் ஒலிபரப் பியது.
நண்பர் ஆப்டீன் கொழும்பு விவே கானந்தாக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமை ஆற்றிக் கொண்டிருந்தார். அந் தக் கல்லூரி உயர்தர மாணவர் மத்தி யில் தனது தலைமையில் ஒருதினம்
பேசவைத்தார். பிறிதொரு தினம் மாலை
வேளை நான் தங்கி இருந்த இல்லத்துக்கு
ஆப்டீன் வந்து, என்.எஸ்.எம். இராமையா
கொட்டாஞ்சேனை
வைச் சந்திப்பதற்காக என்னை அழை த்துச் சென்றார். மலையகத்தின் மூத்த எழுத்தாளர் இராமையாவை அன்று (17.12.1989) சந்தித்து உரையாடினேன். ஒரு மூத்த படைப்பாளியின் சந்திப்பு எனக்கு மன மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதே சமயம் கஷ்டமான சூழ்நிலையில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதை நேரில் அவதானிக்க முடிந்ததினால் மனதுக்கு உறுத்தலாக, வேதனையாக அமைந் திருந்தது.
முரசொலி தினசரியில் தொடராக வெளிவந்த் எனது "பொற் சிறையில் வாடும் புனிதர்கள் நாவல்' முரசொலி வெளியீடாக வெளிவந்தது. அதன் வெளி யீட்டு விழா 03.12.1989இல் தேவரை யாளி இந்துக்கல்லூரியில் டொக்ரர்
எம்.கே. முருகானந்தன் தலைமையில்
நடைபெற்றது.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 12

எனது ஆசிரியர் சைவப்புலவர் சி. வல்லிபுரம் அக்காலத்தில் மறைந்தார். அன்னாரின் ஆக்கங்களைப் "புலவர் தேறல்" என்னும் நூலாகத் தொகுத்த ளித்தேன்.
எனது வாழ்வில் நான் மறக்க முடி யாத துயரமான சம்பவம் ஒன்று 14.06. 1991 நடைபெற்றதனைத் தவறாமல் இங்கு நான் சொல்லியாக வேண்டும்.
பருத்தித்துறை டொக்ரர் எம்.கே. முருகானந்தன் இல்லத்தில் அன்றைய தினம் மாலைவேளை அறிவோர் கூடல்' நிகழ்வொன்று நெைபற்றது. அந்த நிகழ் வில் “கதையின் கதை' என்னும் தலைப் பில் நான் உரையாற்றினேன். எனது உரையைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நண்பர் நெல்லை க. பேரன் சம்பிரதாயமாக நன் றியுரை ஆற்றினார். கூடலில் சந்தித்த பலரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகும் பேரன், நான், இன்னும் ஒருசிலர் சற்று நேரம் தங்கி இருந்து பேசிவிட்டு, பிற்பாடு பிரிந்து சென்றோம்.
நண்பர் பேரனிடம் நாங்கள் பெற்றுக் கொண்ட அந்தப் பிரிவு நிரந்தரமானது என்பது யாருக்குத்தான் அப்பொழுது தெரியும்?
அந்த இரவு இடம் பெற்ற ஷெல் குண்டு வீச்சுக்கு நண்பர் பேரன் குடும் பத்துடன் பலியாகி மறைந்து போனார்.
அறிவோர் கூடல் இருபதாவது நிகழ்வு. அதுவும் டொக்ரர் முருகானந்
தன் இல்லத்தில்த்தான் நிகழ்ந்து. தனிப் பட்ட முறையில் எனக்கு மிகமுக்கியத்து வம் வாய்ந்த நிகழ்வாக அது அமைந்தது. எனது குடும்பத்தில் முதல் முறையாக வீசை (மீசை) வைத்துக் கொண்டவன் நானேதான். அப்படியொரு இறுக்கம். எனது தந்தையாரின் தாராளப் போக்கு அந்தக் கட்டுப்பாடுகள் தளர்ந்துபோகக் காரணமாக இருந்தது.
ஒரு சமயம் சின்னமுத்து நோய் எனக்கு உண்டானது. உடல் வெப்பம் தணிய வேண்டும் என்பதற்காக, இனித்த பனங்கள்ளில் வெங்காயத்தை வெட்டிப் போட்டு காலைவேளையில் குடிக்கத்தந் தார்கள். நோய் முற்றாகச் சுகப்பட்டு தலைக்குத் தண்ணிர் வார்ப்பதற்கு முன் னரே, நான் அந்தக் கள்ளைக் குடிக்க மறுத்தேன். எனது மறுப்புக்கான காரண த்தைக் கேட்டார்கள். “காலை வேளை யில் உரிய நேரம் வரும் போது கள்ளுக் குடிக்கும் ஆவல் மனதில் எழுகின்றது. அது பழக்கத்துக்கு வந்துவிடும். எனக்கு வேண்டாம்” எனத் தெரிவித்தேன்.
இப்படி வளர்ந்த நான் சிகரெற் புகைக்கப் பழகிக் கொண்டுவிட்டேன். சந்தர்ப்பம் சூழ்நிலை ஒரு மனிதனை எவ்வாறு மாற்றி அமைக்கும் என்பது நான் சிகரெற்றுக்கு அடிமையானது
நல்ல உதாரணம். மலையக வாழ்க்கை
எனக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.
எழுத்துப் பணியில் ஈடுபடும் சமயங்களில் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகத் தொட
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 13

Page 9
ர்ந்து சிகரெற் புகைத்துக் கொண்டே இருப்பேன்.
அந்த அறிவோர் கூடல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை (23.02.1992) எனக்கு நெஞ்சில் இலேசாக
வலிப்பது போலத் தோன்றியது. டொக்ரர்.
முருகானந்தன் எனக்கருகில் அமர்ந்தி ருந்தார். அவருக்கு மெல்லச் சொன்னேன். அவர் நோயளரைப் பார்வையிடும் அறை க்கு என்னை அழைத்துச் சென்று பார் வையிட்டார். பின்னர் ஒரு டொக்ரர் என்ற நிலையில் மாத்திரம் இருந்து சொல்லா மல், ஒரு நண்பர் என்ற உரிமையுடன், "இப்போ பயப்படும் படியாக ஒன்றுமி ல்லை. ஆனால் சிகரெற் புகைப்பது நல்ல தல்ல. அதை விடுங்கோ!" என மெல்லக் கூறினார்.
நான் சிலகணம் மெளனமாக இருந் தேன். அது சிந்திப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரம். பின்னர் அரைப் பார் த்து, "சரி, இனி நான் சிகரெற்றைத் தொடமாட்டேன், டொக்ரர்" என உறுதி யுடன் கூறினேன். இதனைச் சொல்லும் போது எனது சேட் பையில் மூன்று சிக ரெற்டுக்கள் இருந்து கொண்டிருந்தன. இரவு எட்டு மணிசுமாருக்கு வீடு வந்து சேர்ந்தேன். எனது சின்னமகள் ஜான கியை அழைத்து, அந்தச் சிகரெற்றுக் களை அவள் கையில் கொடுத்து, "இனி நான் சிகரெற் புகைக்க மாட்டேன்' என வீட்டில் எல்லோருக்கும் பிரகடனப்
படுத்திக் கொண்டேன். முப்பதாண்டு காலப் பழக்கத்துக்கு அன்றே முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டேன்.
geÓG sunt ft son 666io 12.07.1992 டானியலின் 'கானல்’ நாவல் பற்றி நான் உரையாற்றினேன். எனது உரையின் பின்னர் வழக்கம் போல் நன்றியுரை ஆற் றுவதற்கு யாருமே முன்வரவில்லை. இறு தியில் நண்பர் து. குலசிங்கம் அந்தப் பணியைச் செய்து முடித்தார்.
அன்று நன்றியுரை ஆற்றுவதற்கு ஒருவரும் முன்வராததற்கு ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணந்தான் என்ன?
இதற்கு முன் நான் பேசிய கூட்ட த்தின் இறுதியில் நன்றியுரை கூறிய நெல்லை பேரன் அன்றிரவு ஷெல் விழு ந்து குடும்பத்துடன் இறந்து போனார ல்லவா? தங்களுக்கும் அப்படி நடந்து விடுமோ என்னும் மூடத்தனமான மரண பயம் காரணமாகவே யாரும் நன்றியுரை ஆற்ற முன்வரவில்லை என்பதனைப் பின்னர் நான் அறிந்து கொண்டேன்.
அறிவோர் கூடல் என்றால் அறிவுள் ளவர்கள் க்கூட்டம் என வெளியில் சிலர்
கருதினார்கள் என்பதனை நான் அறிவேன்.
அந்தச் சம்பவத்தின் பின்னர் அந்
தக் கருத்தினை நான் சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.
(su6Tibb)
மல்லிகை ஆகஸ்ட் 2007 季 14

6లోగోగీశ్రీజిరి Umag
- திக்குவல்லை கமால்
மனைவி போட்டுக் கொடுத்த இஞ்சிப் பிளேன்ரியைக் குடித்து விட்டு விறாந்தைச் சாய் கதிரையில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார் அஸ்லம் நானா.
முற்றத்தில் வேப்பமரம் காற்றுக்குச் சலசலத்தது. குடைபோல் சடைத்து வளர்ந்திருந்த அம்மரம் கூரையைத் தொட்டுக் கொண்டு நின்றது. வீடு, வளவு 'எல்லாம் சேர்ந்து ஒரு பத்துப் பேச்சர்ஸுக்கு மேல் போகாது.
இன்னும் பூச்சிட்டு முழுமைப் படுத்தப்படாத வீட்டோடு ஐம்பது வருடத்துக்குமேல் கடத்திவிட்டார் அவர்.
முட்டிமோதி உடனுக்குடன் சமாளித்து வாழ்க்கையை ஒட்டிக் கொண்
டிருந்தாரே தவிர, வசதிகளோடு வாழ்ந்தார் என்று சொல்வதற்கில்லை.
'ஏய் இஸ்ஸத்து என்ன பூனக்குட்டி யொன்டோடுது. அந்த மீன் கொஞ் சத்தேம் எடுத்து வெய்ங்கோ." s
என்ன இருந்தாலும் அஸ்லம் நானா பெரிய சாதனையாளர்தான் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்துக் கல்யாணம் செய்து கொடுத்து அவர் களைக் கண்கலங்காமல் வாழவைத்துவிட்டார்.
இன்றும் மகள்மாருக்கும் பேரன்- பேத்திகளுக்கும் தன்னால் முடிந்ததைக் கொடுக்கிறாரே தவிர அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கும் குணமே கிடையாது. "முத்தத்து லைட்டப் போடுபுள்ள, நல்லா இருட்டீட்டு. மஃரிபுக்கு பாங்கு சொன்னதும் கேக்கல்ல."
என்றுமே உடலுழைப்பை நம்பி வாழும் அஸ்லம் நானா இப்பொழுதெல்லாம்
சம்பாதிப்பென்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
டேவின் பாஸின் உதவியாளர்களில் ஒருவராகச் சேர்ந்து ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. வேலையில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. கிழமைக்கு ஒருநாள் லிவெடுப்பதென்றாலே.பெரிய கஷ்டம்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 率 15

Page 10
என்னதான் களைப்பு மேலிட்ட போதும் மாலையில் முன்னூறு நானூறு கையில் கிடைத்ததும் எல்லாம் பறந்து போய்விடும். மீன்கறி ஏதும் வாங்கி வரு வதோடு மிச்சத்தை மனைவியின் கை பில் கொடுத்து விட்டால், அவள் எல் லாம் பார்த்துச் சமாளிப்பதோடு ஆபத்து அந்தரத்துக்கென்று கொஞ்சம் சேமித் தும் வைப்பாள்.
ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்கு முன் வீட்டுக்கு வந்தால் அடு த்த நாள் ஏழெட்டு மணிக்குள் வெளி க்கிட்டு விடுவார். இடைப்பட்ட நேர த்தில் மருந்தும் விருந்தும் எல்லாமே மனைவிதான் அவருக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் பொருத்தமான் மனைவி அமைவது எவ்வளவு பெரிய கொடை யென்பது அவருக்கு நன்றாகவே புரி ந்திருந்தது.
அவருடைய வேலைத்தல நண்பர் களான சாந்த, உபாலி, கமகே போன்ற வர்களெல்லாம் காசு கையில் கிடைத் ததும் ஒரு அடி அடித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போவார்கள். உடற் களை ப்புக்கு ஈடுகொடுப்பது அதுதான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
“lë....... டக்"
தகரக் கேற்றில் யாரோ தட்டும் சத்தத்துக்கு அவர் நிமிர்ந்து பார்த் ததார்.
"டக். டக்' 'தாரோ புதிய ஆக்கள்
போலிக்கி என்றவாறு எழுந்து சென்று கேற்றைத் திறந்து பார்த்தார்.
அங்கே நாலைந்து பேர் நின்றனர். அவர்களுக்கு மத்தியில் எவர்கிரீன் இஸ்மாயில் ஹாஜியும் நின்று கொண்டி ருந்தார். தொப்பியும் தாடியும் அத்தர் கமகமப்புமாய் அவர்கள் தலையில் தொப்பியோ உடலில் சேட்டோ இல்
லாத அஸ்லம் நானா தடுமாறினார்.
முதலில் எல்லோரும் கைகோர் த்து ஸலாம் சொல்லிக் கொண்டனர்.
'அல்லாட தீன எத்தி வைக்க வேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் இருந்து கொண்டீக்கி. இந்தப் பொய் துணியாவில நாங்க வாழ்ந்து கொண் டீக்கியம். . உண்மையான வாழ்க்க ஆக்கிரத்திலதானிக்கி. ஒவ்வொரு த்தரும் சொர்க்கத்தோட பாக்கியத்த அடஞ்சி கொள்ள முயற்சி செய்யோ ணும்'. அந்தக் குழுவின் அமீராக வந்தி ருந்த ஹாஜி சொல்லிக் கொண்டு (3UIT6OTIT.
அஸ்லம்நானா தலையாட்டிக் கொண்டிருந்தார்.
"அது சம்பந்தமான நிகழ்ச்சியள் இவடிாக்குப் பொறகு பள்ளிவாசல்ல நட க்கிய. கட்டாயம் கலந்து கோங்கோ."
"இன்ஷா அல்லா" என்று வழமை போல் சொன்னார் அஸ்லம் நான்ா.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 16

அவர்கள் அடுத்த வீட்டை நோக் கிச் சென்றதும் கேற்றைப் பூட்டிக் கொண்டு வந்து மீண்டும் சாய் கதி ரையில் அமர்ந்து கொண்டார்.
கொஞ்ச நேரம் தன்பாட்டில் சிரித்தார்.
துணியா பொய்யாம். உலகத்த வாரிச் சுருட்டிக் கொளேலுமென்டா அதேம் செய்தொன்டும். ஏலாத மனிச ருக்கு ஒரு ஒதவில்ல. கோடிக் கண் க்கில் குடுக்கிய இதாலதான். ம். சொர்க்கத்துக்குக் கூட்டிக் கொணு பொக வந்தீக்கி எங்கள. '
அஸ்லம்நானா கால்களை நீட்டிச் சாய்ந்து பெருமூச்சு விட்டார்.
'ஆ இதப்பாரே. இந்த மனிசனுக்கு தூக்கம் பெய்த்து. ஒழும்புங்கொ. சோறு போடப் போற மொகத்தக் கழுவிக் கொண்டு வாங் கொ-' இஸ்ஸத்து தட்டி எழுப்பினாள்.
"சாட கண்ணசந்த-' என்றவாறு எழுந்து பின்பக்கமாகச் சென்றார்.
அவர் ரெடியாகி வர அரை மணித்தியாலத்திற்கு மேல் செல்லு மென்று அவருக்குத் தெரியும். பாய் விரித்து. சுப்புரா போட்டு சோறு கறி களை ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து பரத்தவும். அவர் வந்தமரவும் சரியாகி விட்டது.
இஸ்ஸத்தும் அருகே அமர்ந்து
கொண்டாள். சின்னப்பிள்ளை போல்
அவருக்குத் தின்னக் கொடுக்காமல் அவளுக்குப் பத்தியமில்லை.
சிவப்புச் சோறு, கெலவல்லன் மீன் ஆணம், வள்ளாரைச் இலைச் சம்பல், பருப்புக்கறி என்று பீங்கானை நிறை த்து விட்டாள். அதற்குச் சற்றும் குறை யாமல் அவளும் வேறு பகிர்ந்து கொண் LT6T.
இருவரும் சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட ஆரம்பித்தனர்.
"தாரன் வந்து பேசீட்டுப் போற?"
'இன்க்கி மஹல்லா நாளெப் பிடியோம். பள்ளிக்கி வரட்டாம்."
"அதியள் எந்தநாளும் வ்ந்து வந்து கூப்பிடிய. நீங்க அந்தப் பொக்கத் தாலும் போறா?"
'அதியளட ஜாதி செல்லிவே லில்ல. ஊட்டுக்குள்ள நிக்கிய பொம் புளப்பிளயஞக்கு ஒன்டும் வெளங் கியல்ல. பேசப்போனா நாங்க சண்டப் புடிச்சிக் கொளவாகிய,'
"அதென்டா மெய்தான். அந்தச் சம்புல போட்டுக் கொங்கோ. மிச்சம் வெச்சி தாரன் தின்னியா"
"செல்லியதொன்டு செய்ததொன்டு எங்களுக்கு அது சரிவாரல்லேன். பேசாம ஒதுங்கி நிக்கியது நல்லம்."
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 17

Page 11
"இந்தாங்கொ மீன்துண்டத் தின்டு போடுங்கொ. வெளணேலிந்து கஷ் டப்படுகிய, அது போல தின்னே மோ gojub"
எப்படியோ இருவருமாகக் காரிய த்தை ஒப்பேற்றிவிட்டார்கள். பல்லுக் குத்தியபடி மீண்டும் முன்விறாந்தை யில் வந்தமர்ந்து கொண்டார் அஸ்லம்
நானா.
சாப்பிட்ட இடத்தை ஒதுங்க வைத்து, பீங்கான்- கோப்பைகளை கழுவிக் கவிழ்த்து, முகம் கை கழுவிக் கொண்டு அவளும் முன்னே வந்து அமர்ந்து கொண்டாள்.
இஸ்ஸத்தின் முகம் பள்ச் சென்றி ருந்தது. மெல்லிய லக்ஸ் மணம் வேறு வீசியது. படுக்கைக்குத் தயாராகி உடுப்பு மாற்றியிருந்ததையும் அப்பொ ழுதுதான் அவர் கவனித்தார்.
சற்று உயர்ந்த பகுதி அது. காற்று
நன்றாக வீசியது. வேப்பமரம் சலசல த்து அதனை உள்வாங்கியது.
இன்னும் ஒன்பது மணி கூட ஆகவில்லை. ஆனால் அவளது நேர ஒழுங்கு இதுதான். ஒரு அரை மணி நேரம் அப்படி அமர்ந்து பலதும் பத்தும் கதைப்பது வழக்கமான சங்கதி.
'எளயவள்ட புள்ளக்கி காச்சலென்ட மருந்தெடுத்தோ தெரிய."
'அந்தீ டைமுக்கு நீங்க சும்ம தானே நிக்கிய, பெய்த்திட்டு வரிந்
தேன்."
'இந்த ஹல்மும்மட மகளுக்கு கலியாணம் வந்தீக்கேன். தீன்சாமன் சமச்சியென்டு கையொதவிக்கு வரச் சென்ன. இனிப் பொகா மேலுமா."
"ஆ. அந்த ஒட்டுத்தாள நெறச்சிக் குடுத்த ஒபுஸேருக்கிட்ட."
'அல்லா கேளு நெனவத்துப் பெய்த்தேன். நாளேக் குடுக்கியன். அன்ன கழுத்தடில பூச்சொன்டு.' என்றபடி எழுந்தாள்.
அவருக்கு என்னவோ போலிரு ந்தது, தட்டித் துடைத்து விட்டபோது ஒரு விதமாக அவர் பார்த்த பார்வை அவளைக் கொஞ்சம் அசைத்து விட்டது.
முறுக்கேறிப் போன கட்டுமஸ் தான உடம்பு அவருக்கு, கள்ளமாக ஒரு முறை பார்த்து ரசித்தாள்.
"வாங்கொ வாங்கொ படுக்கோம். நாளக்கி வேலக்கிப் பொகோனுமேன்.'
அவரை உள்ளே அழைத்து கதவை மூடித் தூங்கத் தயாரானாள்.
வந்த நேரத்துக்கு தூங்கிவிட வில்லை அவர்கள்.
சுபஹ0 க்கு பாங்கு சொல்லும் போதே எழுந்துவிட்டாள் இஸ்ஸ்த்து.
மல்லிகை ஆகஸ்ட் 2007 盛 1R

காலைச் சாப்பாட்டைப் பரிமாறிப் பகல் சாப்பாட்டைக் கட்டித் தயார் படுத்தினாள்.
ஏழரையாகும் போது அல்லாட காவல் சொல்லிக் கணவனை வழியனு ப்பி வைத்தாள்.
"அந்த ஒட்டுத்தாளக் குடுங்கொ' 'ஆ. சரி. சரி'
இந்தச் சில நாட்களாகப் பஜாரில் தான் வேலை. எஸ்கே கடையைத் தூண் எழுப்பி மாடியமைக்கும் வேலை B60) பெற்றுக் கொண்டிருந்தது.
பஸ்சுக்காகப் போக்கடிச் சந்தியில் வந்து நின்றார் அஸ்லம் நானா, ஜாபிர் நானா, மவுற்ரூபு, இன்னும் இரண்டொ ருவரும் அங்கு காத்திருந்தனர்.
"இப்ப பஸ் போக்குவரத்து மிச்சம் மோசம், பஸ்காரனியள் நெனச்ச நேரம் வருவானியள் போகுவானியள். செல்ல பேச ஆள்களில்லேன்."
"அதென்டா மெய்தான் எல்லாரும் அவங்கவங்கட வேலயல்லாம பொது விஷயத்தப் பாக்க ஒருத்தருக்கும் நேரமில்ல'
இதற்கிடையில் தனிப்பட்டவர்க ளின் வாகனங்கள் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டிருந்தன.
"சும்ம போற வாகனத்தில ரெணு மூணு பேர ஏத்திக் கொணு பெய்த்து பஜாரில எறக்கினா கொறஞ்சி போறா..."
"நாங்க கஷ்டப்பட்டுச் சம்பாரிச்சு வாகனம் வாங்கீக்கிய, கண்டநிண்ட வணியள ஏத்திக் கொணு பொகவான்டு க்ேகியொன்டும்"
மாறி மாறி அபிப்பிராயங்கள் வெளி வந்தன. அஸ்லம் நானாவுக்கும் வாய் துடித்தது. வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாமென்று மனம் துடித்தது.
அப்பொழுதுதான் பார்த்து ஒழுங் கைக்குள்ளால் பஜரோவென்று வந்து திரும்பியது. முன் ஆசனத்தில் எவர் கிரீன் பொஸ் இஸ்மாயில் ஹாஜி அமர் ந்திருந்தார்.
அவருக்கு யாருடைய முகமும் தெரியவில்லை. ஆனால் எல்லோரு க்கும் அவருடைய முகம் தெரிந்தது.
நேற்று மாலை வீட்டுக்கு வந்து பள்ளிவாசலுக்கு அழைத்த கதை அவ ருக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது.
'ம். சொர்க்கத்துக்கு கூட்டிக் கொணு போறதுக்கென்டா ஆள்களி க்கி. பஜாருக்கு கூட்டிக் கொணு பொக ஒத்தருமில்ல."
Šoჭ6fuა6საub [bm 60Tm சொல்லத் துடித்ததை ஜாபிர் நானா சொல்லி 6Sulmir.
"அதென்டா மெய்தான்." மவுற்ரூ பும் உறுதிப்படுத்தினான்.
அஸ்லம் நானா மெல்லத் தலை uurTLLçës Goat5 T6BoT LITT.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 19

Page 12
“lଞ। ଏଓଏଁ “ଓ
- ஏ.எஸ்.எம். நவாஸ்
இசை என்பது ஒரு மனிதனுடைய ஆத்மா சம்பந்தப்பட்டது. அதனாலோ என்னவோ இசையால் வசமாகா இதயமுண்டோ என ஒரு பாடகன் பாடியிரு க்கிறான். உண்மைதான்! ஆனால் காதுகளைத் துளைத்துக் காயப்படுத்தும் இன் றைய சினிமா இசை இதயத்தைப் பாதிக்கிறது. நோய்க்கு மருந்தாகின்ற இசை இப்போது இல்லை. வானொலிக் காதைத் திருகினால் ஆரோக்கியமான பாடல் களை இலங்கை வானொலியில் மட்டும் தான் கேட்க முடியும் அதை ரஸித்துக் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே என் சிறு வயது ஞாபகங்கள் என்னைத் தாலாட்டும். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி, கந்தசாமி சலூன் கடைப் படிக் கட்டில் அமர்ந்து கொண்டு அந்தச் சிறிய ஒலிப் பெட்டிக்கருகில் என் காதைத் தீட்டிக் கொண்டிருப்பேன். மயில் வாகனத்தின் செய்யது பீடி விளம்பர அறிவிப்போடு நேயர்கள் பெயர்களைச் சுமந்து கொண்டு ஒலிக்கும். அப் பாடல்கள் ஒவ்வொன்றும் ரஸனைக்குரியவை. நாட்டுப்பிரச்சனை இல்லை அப்படி இருந்தாலும் அரசியல் பற்றி ஒன்றும் தெரியாத வயது. தெருவோரம் இப்படி உட்கார்ந்து கொண்டு இரவல் வானொலியில் இனிய பழைய பாடல்களைக் கேட்கும் அந்தச் சுகமே தனிச் சுகமே தான்! இன்று வரை அந்தச் சுகத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை. என்றாலும் இப்பொழுது தெருவோரம் நின்று கொண்டு பாடல்கள் கேட்பதில்லை. கேட்பதைப் போல் பாடல்கள் ஒலிபரப்பாவதும் குறைவு. நம் நாட்டில் அலைவரிசை நான்கு இருப்பதால் இந்தப் பிரச்சினை. இன்றைய விசிலடிச்சான் குஞ்சுகளுக்குப் புதுப்பாடல் ஒலிபரப்பானால் மட்டும் போதும். அதன் அர்த்தம் தேவையில்லை. வர்த்தக சேவை தவிர மற்றதெல்லாம் வருத்தமேற்றும் சேவைதான்.
சக்தியாம், சூரியனாம் ஒன்றும் புரியவில்லை. பிழையாகத் தமிழைக் கையாள்கிறார்கள். இதில் ஆங்கிலக் கலப்படம் வேறு. அகப்படும் பாடல்களைச் சுழல விட்டுத் தொலைபேசியில் கதையோ கதையெனக் கதைத்துவிட்டு நேயர் களைக் குளிர்விக்கும் நேயமான வார்த்தைகள். சினிமாப் பாடல்களைப் பாட வைத்துவிட்டு இவர்களைச் சுப்பர் ஸ்டார்களாக்கவும் ஊடகங்கள் முயல்கின்றன. இன்றைய நேயர் நாளைய சுப்பர் ஸ்டார்! இது எங்கோ ஒரு சினிமா நடிகனுக்கு எந்த ஒரு அமைப்புகளின் துணையின்றி அரச அங்கீகராமின்றி யாரோ ஒருவர் கொடுத்த பட்டமாம்! இந்தப் பட்டம் படுகிற பாடு தனிப்பாடுதான். எவர் வாய்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 20

திறந்தாலும் 'சிவாஜி. சிவாஜி' என்று அந்தப் புராணம் வேறு.
இனி விஷயத்துக்கு வருவோம்! நாம் குறிப்பாகத் தலைநகரில் இருந்து சிற்சில இடங்களுக்குப் பஸ்களில் பய ணிக்கும் போது நம் காதையும் மீறி ஏதோ இசை இரைச்சல் இம்சை பண் ணும். வார்த்தைகள் அமுங்கி இசை மட்டும் 'டக் டக்' எனத் தாளம் போட்டுக் கொண்டே நம்மைத் தூங்க விடாமலும்
விழித்துக் கொண்டு பயணம் செய்ய
விஷமம் புரியும். இவ்வேளைகளில் பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் தரித்துச் செல்ல ஆரம்பிக்கையில் ஸ்ரீரியோ
இல்லாமல் சில குரல் ஒலிகள் கிளம்
பும், அந்த இரைச்சல் சத்தத்துடன் பாட்டையும் ஆரம்பிப்பான். எச். ஆர். ஜோதிபால அல்லது அவனாகவே இய ற்றிய ஒரு பாடல்அல்லது ஏதோ ஒரு கேட்ட ராகத்தின் சினிமாப்பாடல் இவன் குரலில் விளையாடும். ஏறிய அந்தப் பாடகனுக்கு ஏமாற்றம் இருக்காது. ஏதோ, ஐந்தோ, பத்தோ கிடைத்து விடும். இனி அடுத்த ஹோல்டில் இறங் கிவிட வேண்டியதுதான். அடுத்த பஸ் அதிலும் பாட்டு, கையில் காசு என்று காலம் இவர்களை சுகமாகச் சுமந்து செல்லவிே செய்கிறது. இ. போ. ச இவர் களுக்கு 'இலவச போக்குவரத்துச் சபையாக மாறி இவர்கள் பாடல்களை சில முகங்கள் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. தனியார் பஸ்கள் மட்டும் என்னவாம். ? நெருக்குமுட்டி பயணிகளை கோழிக்குஞ்சுகளாய் அத ற்குள் அடைத்து விடுவதைப் போல்
இந்தத் தெருப்பாடகனுக்கும் நெருக்கு தலில் சிறு இடம் கிடைத்துவிடும். நமது மனோநிலைக்கேற்பச் சில வேளை கேட்டு ரஸிக்கவும் செய்யும். அதே வேளை சில சமயங்களில் எரிச்சலில் முகத்தைத் திருப்பி வைத்துக் கொள் ளவும் வைத்துவிடும் அவன் பாடும் பாடல். இடைக்கிடை பஸ் கண்ட க்டரின் நகின்ட, பைன்ட. நச்சரிப்பு வேறு.
"இசை கேட்டால் புவி அசைந் தாடும்- அது இறைவன் அருளாடும்" என்றான் பாரசீகக் கவிஞன் தான் சேன்'. அப்படி இசைக்கு ஒரு அருளு ண்டு. பொருளுண்டு. ஆனால் நான் குறிப்பிட்ட இந்தத் தெருப்பாடகர்க ளால் ஒரு குறிப்பிட்ட மதத்தவரை திருப்தி கொள்ள வைக்க விஷப்பாட ல்களும் அரங்கேறி விடுவதுண்டு. அது என்ன விஷப் பாட ல்கள்...? அதற்கு முன்னால் ஒன்றை எழுத வேண்டியிரு க்கிறது. தரமான சினிமாப் படைப்புக்க ளின் தரமான விமர்சகராக விளங்கும் நமதிலங்கை எழுத்தாளரான மாரி மகேந்திரன் ஒரு விடயத்தை என்னிடம் சொன்னார். அதாவது இவ்வகை பஸ்சில் ஏறிப் பாடும் பாடல்களைக் கேட்டதும் மெய் மறந்து ஐம்பதோ,
நூறோ கையில் இருப்பதைக் கொடுத்
துவிடுவாராம்! ஏன் என்று நான் வினா எழுப்பியதற்கு "ரஸனைக்கு மொழி, இனம் கிடையாது! அவன் நமக்கு அந்தச் சொற்ப நிமிடங்களிலும் ஏதோ ஒரு ரஸனையை ஊட்டி விடுகிறானே.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 21

Page 13
அதற்கு விலை மதிப்புக் கிடையாது” என்றார் தன் பதிலில்.
உண்மையாக இவர்கள் பாடுகி ன்ற எல்லாப் பாடல்களையும் ரஸிக் கத்தான் முடியுமா?
இப்போது அந்த விஷப்பாடலுக்கு வருகிறேன். ஒரு நாள் பஸ்சில் போய்க் கொண்டிருக்கிறேன். கொழும்பை நோக்கிய படி, வத்தளையில் வைத்துப் பஸ் நிறுத்தப்பட்டது. பாடகன் ஏறி னான். பாடினான். அது ஒரு வகை யான கவிதைத் தொனியில் அமைந்தி ருந்தது. மாரி மகேந்திரன் சொன்னது என் ஞாபகத்திற்கு வந்தது. "அற்புத மாகப் பாடுகிறானே' ரஸித்தேன்.
மனித வாழ்வின் நிலைப்பற்ற சூன்யத்தைப் பாடிக் கொண்டிருந் தான். மலைப்பாகத்தான் இருந்தது.
"மரணம் வரும்
செத்த பிணம் சில நாட்கள் வீட்டில் கிடக்கும் சரீரம் தூக்கிச் செல்லப்படும் சதை வற்றி அழிந்து விடும் நிலையில்லை மனித உடல் பொய்யொன்றே."
என்பது அவன் பாடலின் அர்த்தம். இது வாழ்க்கையின் தத்துவம். வாழ் வின் அர்த்தம் கவிதையில் இருப்ப தாகக் கவிஞர் வைரமுத்து சொன்னது உண்மைதான். என் சட்டைப்பையைத் துளாவிய போது ஐந்து ரூபாய் தட்டுப் பட்டது. கையில் வைத்துக் கொண்
டேன்- காசை. அடுத்த வரிகளைப்
பாடினான் அந்தப் பேரினவாதி.
'அபே ரட்டே, கொட்டியீன்ர
நெவே.
மே அய்த்தி சிங்கள அபிட்டய்."
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. இந்த நாடு தமிழர்களுக்கில்லை என் பதை நாசூக்காக சொல்ல வேண்டும் என்பதற்காக "புலிகளுக்கில்லை' இத ற்கு உரிமையானவர்கள் சிங்களவர் தாமே. என்ற வக்கிரப் பாட்டை அவன் தாளம் தட்டிப் பாடினான். இதுதான் விஷப் பாடல் சாதாரணமாகப் பிச்சை யெடுத்துப் பாடும் பாடலிலும் இன வாதமா? புல்லரித்துப் போனேன். பாடி முடிந்ததும் அவன் கைகளை ஒவ்வொ ருவரிடமாக நீட்டப் பத்து, இருபது, ஐம்பது எனக் கிடைத்தது. இப்படிப் பாடினால்த்தான் பணம் நிறையக் கிடைக்கும் என அவன் எண்ணிவிட் டான் போல. அவன் முகத்தை ஒரு முறை பார்த்தபடி அந்த ஐந்து ரூபாயை மறுபடியும் சட்டைப்பைக்குள்ளே போட்டு விட்டேன். கொடுக்க மனம் வரவில்லை.
'இந்த நாடு எங்களுக்குரியது மட்டுமே! இதில் எந்த இனமும் வாழத் தகுதியற்றவை' என்று இன்றைய அர சில் இணைந்திருக்கும் ஒரு பேரின அர சியல்வாதியின் மேடைப் பேச்சுக் கும், அந்தத் தெருப்பாடகன் பாடிய பாடலு க்கும் எவ்வித் வித்தியாசமும் கிடை யாது 以
இனவாதமென்றால் அது இலங்கையாகி விட்டது.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 22

(புலம் பெயர்ந்து கொழும்புக்கு வந்து மல்லிகை
ஆரம்பித்த காலத்தில் மலருக்கு எழுதிய கடிதம்.)
அநுபவம்- நிமிர்ந்து நிற்க எனக்குக் கற்றுத்தந்துள்ளது!
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டு மலரிலும் இந்தத் தலையங்கப் பகுதியில் எனது
மன உணர்வுகளைப் பெய்து பெய்து உங்களுக்குக் கடிதமெழுதி வருகின்றேன். அப் படி எழுதுவதில் என்னையறியாமலே மனதில் ஒரு தனிச்சுகம் தோன்றும்.
கடைசியாக நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியது 30- வது ஆண்டு மலரிலாகும். இது நடந்து மூன்று ஆண்டுகள் மறைந்தோடிவிட்டன. அதன் பின்னர் இந்த 33-வது மலரில்தான் அந்தக் கடிதத் தொடர்பைத் தொடர்ந்து எழுதுகின்றேன். இடையே ஆண்டுமலர்கள் வெளிவரவில்லை. ஏன் மாத இதழ்கள் கூட யுத்தச் சூழ் நிலை காரணமாகவும் விட்டு விட்டு மலர்ந்து கொண்டிருந்தன, வெளிவந்தன.
இந்த இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய அவலங்களை, கஷ்ட நிஷ் டூரங்களை, வாழ்க்கை அநுபவங்களாகப் பெற்று நிமிர்ந்து வந்திருக்கின்றேன். அந்த அநுபவங்களோ அளப்பரியன. சொல்லி விளங்கப்படுத்த முடியாதன. நினைத்துப் பார் க்கவே நெஞ்சைத் திடுக்கிட வைப்பன.
ஒரு மனிதன் என்பதையும் மீறி, ஒரு படைப்பாளி என்கின்ற முறையில் இந்த அநுபவ ஞானம் வாழ்க்கைக்குத் தேவைதான் எனத் தனியாக இருக்கும் சந் தர்ப்பங்களில் எல்லாம் ஆழமாக யோசித்துப் பார்த்திருக்கின்றேன்.
முன்னர் வெளிவந்த ஆண்டு மலர்கள் அத்தனையும் யாழ்ப் பாணத்திலிருந்தேமல்லிகைக் காரியாலத்திலிருந்தே- வெளிவந்தவைகளாகும்.
அதற்கு மாறாக இந்த ஆண்டு மலர் கொழும்பிலிருந்து வெளிவருகின்றது. இதுவே எனக்கொரு புதிய அநுபவமாகும்.
கடந்து போன மூன்றாண்டு இடைவெளியில், குறிப்பாகச் சென்றுபோன இரண்டு என்னால் என்றுமே மறக்கமுடியாத வருஷங்களாகும்.
அந்த இரண்டு வருட கால கட்டத்தில்தான் நான் புதிதாக வரித்துக் கொண்ட கொழும்பு மாநகரில் வேர் விட்டுப் புதுவாழ்வு காண முயன்று உழைக்க வேண்டியிருந்தது.
மல்லிகை ஆகஸ்ட் 2007 * 23

Page 14
ஆரம்பத்தில் மனதில் அச்சம் நிழலாடியது.
இந்த மாநகரில் எப்படி எப்படி யெல்லாம் வாழ்ந்து குப்பை கொட்டப் போகிறேனோ என்ற மனக் கிலேசம்
இரவில் தூக்கத்தை கூடத் தடுத்து
வந்தது.
இந்த மனப்பிராந்தியை, மனச்சஞ் சலத்தைப் போக்க உறுதியாக முடிவெ டுத்தேன் நான். மல்லிகை ஆசிரியர் என்றே விளம்பர சாதனங்கள் எல்லாம் ஏற்கனவே எனது பெயரைப் பிரபலப்படு த்தியிருந்தன.
ஆனால் மல்லிகைச் சஞ்சிகை தொடர்ந்து வெளிவரமுடியாத அவலச் சூழ்நிலை முதலில் என்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்று உழைத் தேன். குந்தியிருந்து வேலை செய்வ தற்கு ஒரு புறாப் பொந்து ஒன்று உடன டித்தேவை என்பதை உணர்ந்தேன். கதிரேசன் வீதியில் மாடியில் ஒரு சிறிய
இடம் கிடைத்தது. சிக்காராகக் குந்தி
யிருந்து கொண்டேன்.
உழைப்பு- உழைப்பு- உழைப்பு என்பதே எனது தினசரி தாரக மந்தி ரமாக அமைந்தது.
இந்த இடைக்காலத்தில் இருப திற்கு மேற்பட்ட புதிய புத்தகங்களை வெளியிட்டு வைத்தேன். அதில் முக்கி யமாக குறிப்பிடத் தக்கதென்ன வென்றால், என்னுடைய ஐம்பது கதை களை நானே தொகுத்துத் திரட்டி வெளி
யிட்ட "டொமினிக் ஜீவா சிறுகதைகள்' என்ற பெயரில் வெளிவந்து பாரிய சிறுகதைத் தொகுதியாகும்.
சத்தியமாக இங்கு ஒன்று சொல் கின்றேன். இந்தத் தொகுதியை எப்படி நான் வெளியிட்டு வைத்தேன் என்பதை இப்போது கூட என்னால் நம்பமுடிய shsio60)6).
நான் பிரச்சனைகளின் அழுத்த த்தால் யாழ்ப்பாணத்தை விட்டுக் கொழும்பிற்குப் புலம் பெயர்ந்து வராது போயிருந்தால் இந்தப் பாரிய புத்தக வெளியீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல் நடத்தியிருக்க இயலாது என் பதை உண்மையாகவே இந்தக் கட்ட த்தில் ஒப்புக் கொள்கின்றேன்.
உண்மைகள் சில சமயங்களில் தற்பெருமை போல - தலைக்கணம் போல- தோற்றம் தரலாம். ஆனால் அது உண்மை என்பதே அடிப்படை
உண்மையாகும்.
இந்தப் பாரிய பொறுப்பை - பாரத்தை" என் தோள் மீது சுமக்க எத்தனித்த சமயம் நான் அப்படியே ஆடிப்போய், விட்டேன். இது உண்மை. அதே சமயம் என் தன்னம்பிக்கை விழித்துக் கொண்டு என்னை வழிநடத்த முன் வந்தது. எனது இலக்கிய நேர்மை மீது என்றுமே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வாழ்ந்து வருபவன் என்ற காரணத்தால் தொடர்ந்து முயன்று வந்தேன்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 率 24

வாழவேண்டும் இலங்கையின் தலைநகரில் இத்தனை நெருக்கடி களுக்கு மத்தியிலும் இலக்கியப் பாதை தடம் புரளாமல் வாழ்ந்து காட்ட வேண் டும் என்ற சவாலை ஏற்றுக் கொண்டு திட்டமிடத் தொடங்கினேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நல்நெஞ்சங் களின் முகவரிகளைத் தேடிப் பிடித் தேன். கடிதம் எழுதினேன். தொடர்பு கொண்டேன். அவர்களுடன் கடிதத்தில் (Sud-GeOT657.
நானே ஆச்சரியப்படத் தக்க வகையில் உதவிகள் கிடைக்கப் பெற்றேன். மலைத்துப் போனேன்! இந்த உற்சாக உதவிகளின் பங்குப் பணியால் செயலூக்கம் பெற்றேன்.
கொழும்பில் ஒரு புதிய வர லாறு சமைக்க அத்திவாரமிட் டேன். தான் வாழும் சமுதாயத்தி ற்காக எவனொருவன் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பு உணர் வுடன், தன்னை ஒப்புக் கொடுத்து உழைக்கிறானோ அவன் அந்தச் சமுதாயத்திடம் உரிமையுடன் உதவி கேட்டுப் பெற தார்மீக உருத்து டையவன், என முற்று முழுதாக நம்பிக்கை கொண்ட வன் நான்.
தொடர்ந்து மல்லிகைப் பந்தல் காரியாலயத்தை நோக்கிப் பலர் தினசரி
வரத் தலைப்பட்டனர்.
புது உற்சாகம் என்னுள் பிறந்தது.
"மல்லிகை ஆசிரியர் எனத்தானே இந்த நாடு உங்களை இதுவரை அறிந் துள்ளது. ஆனால் மல்லிகைப் பந்தல்
வெளியீட்டாளராக வல்லவா நீங்கள்
இப்பொழுது கருதப்படுகிறீர்கள்!" என ஒரு நாள் நடந்த நேர்ப் பேச்சில் நான் மதிக்கும் துரைவி பதிப்பக வெளியீட் டாளர் துரை விஸ்வநாதன் அவர்கள் கேட்டார். அதில் உண்மை தொனி த்தது. சட்டென்று இந்தக் கருத்து என் நெஞ்சில் பட்டது.
மல்லிகை ஆசிரியர் என்ற பெயர் காலப் போக்கில் ஈழத்து இலக்கிய உல கிலிருந்து மறைந்து போய்விடுமோ என்ற
பயம் என் நெஞ்சை ஆட்கொண்டது.
என்ன விலை கொடுத்தும் மல்லி கையின் பெயரை நிலை நிறுத்த வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு அன்று நான் வந்தேன். தொடர்ந்து மல்லிகையைக் கெழும்பில் வெளியிடத் தக்கதான ஆக்கபூர்வமான வழி முறை களை யோசிக்கத் தொடங்கினேன்.
இன்று உலகில் இரண்டு பெரும் துறைகள் வளர்ச்சியின் உச்சிக்குச் சென்றுவிட்டன. ஒன்று தகவல் சாதன sustiñé él, அடுத்தது அச்சக முன் னேற்றம்.
யாழ்ப்பாணத்தில் மல்லிகை சொந்த அச்சு வசதிகளுடன்தான் பல ஆண்டு காலம் வெளிவந்து கொண்டிருந்தது. இன்றைய அச்சுசாதன வளர்ச்சிக்கு மல்லிகை ஈடு கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாய தேவை ஒன்று குறுக்கிட்டது.
மல்லிகை ஆகஸ்ட் 2007 率 25

Page 15
எனவே நவீன அச்சுச் சாதன வளர்ச்சியை என் வரை உள்வாங்கிக் கொண்டு மல்லிகையைக் கொழும்பில் நடத்த என்னாலான சகல முயற்சி களையும் செய்து வருகின்றேன்.
1997 மே மாதம் தொடக்கம் மல்லிகை புதுப் பொலிவுடன் கொழும்பில் மலரத் தொடங் கியது. இன்று தனது 33-வது ஆண்டு மலரை வெளியிட்டு
வைக்கின்றேன்.
இதிலும் ஒரு பிரச்சனை உண்டு. யாழ்ப்பாணத்தில் சொந்த அச்சகம், நிரந்தரமான கட்டடம், அச்சுக் கோப் பாளரின் ஒத்துழைப்பு இருந்த போதிலும் கூட, மின்சார வசதியீனம், பேப்பர்த்
தட்டுப்பாடு, விநியோகச் சுருக்கம் போன்ற இடர்பாடுகள் உண்டு. இங்கோ கணனி முறை வளர்ச்சி காரணமாக அடக்கவில்லை உயர்வு, புதிய பிரதேச ங்கள் தொடர்பு, கலண்டர் சீசன் போன்ற எதிர்பாராத சிக்கல்கள் உண்டு.
இத்தனையும் இங்கு ஏன் சொல்கின்றேன் என்றால் மல்லி கையை மனசார நேசிப்பவர்களின் மன
உணர்வுகள் ஏற்கனவே எனக்குத் தெரியும். அவர்கள் தெளிவு பெற வேண் டும், என்பதற்காகவே.
என்னுடைய நோக்கம் வாழ்வது, சும்மா உயிரோடு இருப்பது வாழ்வ ாகாது. அது அர்த்தமற்றதும் ne.
3፰:
福
*器
ခိန်းနှီးနှီးဇီ`````````
- டொமினிக் ஜீவா -
C ཅུང་ S. ३९९९६ फ्रू N N ÑSSNSRiNSN
மல்லிகை ஆகஸ்ட் 2007 率 26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எளிமை என்பது பிச்சைக்காரவேஷமல்ல!
நேற்று நான் செட்டியார் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தேன்.
தெருத்திருப்பத்தில் இரண்டு இடங்களில் புன்முறுவலுடன் என்னை இடைமறித்த அபிமானிகளில் இருவர் வழியில் வைத்தே மல்லிகைக்குச் சந்தாப் பணம் தந்தனர்.
நான் மனசுக்குள் ஒரு புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டேன்.
காரணம் அரை நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஓர் இலக்கியச் சஞ்சிகைக்கு வீதியில் வைத்தே சந்தா. சேகரிக்கும். ஒரேயொரு ஆசிரியர் நானாகத்தான் இருக்கும் என்பதற்கான புன்முறவலே அதுவாகும்.
சிலர் நினைப்பது போல, எளிமையாக இருப்பது அப்படியொன்றும் இலேசான வேலையல்ல! அதற்கொரு ஞானியின் நெஞ்சுத்ததமும் ஆத்ம பக்குவமும் தேவை.
என்னை அத்தகைய நிலைக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இலக்கிய வாழ்வில் இயங்கி வருகிறேன். −
இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சிலர் எனது எளிமையைப் பார்த்து வேவடிமென நினைத்துக் கிண்டல் பண்ணுகின்றனர். r
நான் இதைப் பற்றி என்றுமே கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் மல்லிகையையும் இதே பாணியில் நோக்குவதுதான் எனக்கு மன எரிச்சலைத் தருகின்றது. ஆண்டுக் கணக்காகப் பலருக்கு மல்லிகையை நானே தபாலில் சேர்ப்பிப்பித்து வருகின்றேன்.
எனது இந்தத் தனிமனிதச் சிரமத்தையும் உழைப்பையும் பலர் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. சந்தாவைப் புதுப்பிக்க வேண்டும் என நினைப்பதுமில்லை.
இந்த இயந்திர யுகத்தில் அவர்களுக்குப் பாரிய வாழ்வுப் பிரச்சினைகள் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளுகின்றேன். அதே சமயம் பலர் என்னைச் சந்திக்கும் வேளைகளில் எனக்கு வரவேண்டிய பணத்திற்கு அதிகமாகவே பணம் தந்து விட்டுச் செல்வதையும் நன்றியுடன் இங்கு குறிப்பிடுகின்றேன்.
இதற்குக் காரணமுண்டு. தபால் செலவு அதிகரித்துப் போயுள்ளது. மல்லிகையை இலவசமாகத் தந்துதவினாலும் தபாற் செலவை ஈடு செய்ய எம்மால் இயலாது.
எனவே எமது எளிமையைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தொடர்ந்து மல்லிகையை அனுப்பி வைக்க இயலாது என்பதை அவர்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
- டொமினிக் slimமல்லிகை ஆகஸ்ட் 2007 & 27

Page 16
வாழ்வை உபகரித்தது வாரிசுகளை (ந)ே வழிப்படுத்துறா
நினைவுகளைக் காலத்தால் நீக்க முடியாத- நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமானோரது அந்தியேட்டி, திவசம் போன்ற நிகழ்வுகளில் "கல்வெட்டு”
என்ற கைநூலொன்றை வெளியிடும் பழக்மொன்று தமிழர்கள் மத்தியில் நெடுங் காலமாகப் பேணப்பட்டு வருவதை வாசகர் அறிவர். இச் சிறு நூலின் உள்ளிடாக- பெரும்பாலும் அமரரது வாழ்க்கைக் குறிப்புகள், சாதனைகள், இரத்த உருத்தாளிகள், நண்பர்கள் ஆகியோரின் அஞ்சலிக் குறிப்புகள், தேவாரம் என்பன ஆதிக்கம் பெறும், ஆனால், இன்றைய புதிய தலைமுறை இம்முறைமையைச் சற்று வித்தியாசப்படுத்தி வருவதைக் காண முடிகின்றது! இத்தகைய நினைவு வெளியீடுகளில் தற்பொழுது நவீன இலக்கியம் ஊடுருவிக் கொலு விருக்கும்- நல்லதோர் சகுனமொன்று பரம்பலாகி வருகின்றதுஇ எம் மவரின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கும் இனம், மொழி, சமூகம், கலாசாரம் சார்ந்த
காத்திரமான திருப்பமாகவே இப்புத்துணர்வைக் கையேற்க வேண்டியுள்ளது
*வெளிநாட்டுக் கதைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பும் இப்புத்துணர்வின் தடத்தில் நின்றே உருவாக்கப்பட்டுள்ளது. மனதுக்கு நிறைவைத் தருகின்றது.
"ஐங்கரபதி' மயிலிட்டி, அல்வாய் என்ற முகவரியில் வாழ்ந்த- இராசையா தவமணிதேவி என்பவரது 31ஆம் நாள் (அந்தியேட்டி) நினைவு தினத்தையொட்டி இத் தொகுப்பு - இறந்தவரது மகன் இராசையா ஐங்கரன் (சுவிஸ்) என்பவரால் வெளி யிடப்பட்டுள்ளது. 64 பக்கங்களுடைய இந் நூலில் 8 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
"வெளிநாட்டுச் சிறுகதை' என்ற தலைப்பைக் கண்டவுடன் வாசகர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட- அந்நிய மொழிக்கதைகள் என எடுத்த எடுப்பிலேயே முடிவுக்கு வரக் கூடும்! ஆனால் அப்படியல்ல! தமிழ்த்தேசிய மண்ணிலிருந்து புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்களது புனைவுகளே இக் கதைகள். கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா, நோர்வே, லண்டன் ஆகிய தேசங்களில் இவற்றின் படைப்பாளிகள் தற்பொழுது வாழ்கின்றனர். தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 28
 

சிறப்பு மலர்களிலும் ஏற்கனவே வெளியாகி
தனிநபர் தொகுப்புகளிலும்,
யவையே
கதைகளைத் தேடி எடுத்து- தமிழ் வாசகருக்கு இத் தொகுப்பைத் தந்திரு க்கும் க. குணேஸ்வரன் தனது தொகுப் புரையில் கதைகள் சம்பந்தமான மேலோ
ட்டமான விமர்சனத்தையும் தந்துள்ளார்.
கண்டம் கடந்த புலப் பெயர்வு- ஈழத் தமிழர் நெஞ்சங்களில் பாலை வார்த்த தென்றால் அது வெறும் பூச்சுற்றலாக இருக்கமுடியாது இனவாதப் போர் விதை த்த- தொழில் முடக்கம், பொருள்ாதாரத் தடை இவைகளின் கழுத்து நெரிப்பிலும் "இனியும் வாழ்வுண்டு" என்ற நம்பிக்கை யைத் தந்ததும் இப்புலப் பெயர்வே அத் தோடு எமது தமிழ் மொழிக்கு, பண்பாட் டிற்கு, கலாசாரத்துக்கு விசாலமான தொரு உபரித்ததும் இதுவே. காலாதிகாலமாக வெள்ளைக்காரக் கிறிஸ் தவனின் ஜென்ம பூமியாக இருந்த மண்ணில் இந்து ஆலயங்கள் விதைக்
Lu J bu6oo 6o
கப்பட்டன. சைவத் தேர் ஒடுகிறது. பரத நாட்டிய, கர்நாடக வகுப்புக்கள் நடை பெறுகின்றன. நடன விழாக்கள், இசைக் கச்சேரிகள் என்பன நிகழ்கின்றன. இவை கள் தமிழுக்கு புகலிட வாழ்வு தந்த பேறு களே! இந்த நம்பிக்கை சுரக்கும் நெஞ்சுட னேயே இத் தொகுப்பின் கதைகள் பார்க்கப்படுகின்றன.
க. கலாமோகன் புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்ப கட்டப் படை
ப்பாளி. பிரான்சிய மொழியிலும் இலக்
கியம் படைக்கக் கூடியவர். "நிஷ்டை” என்ற சிறுகதைத் "தொகுப்பை வெளி யிட்டிருக்கிறார்.
இவரது "உருக்கம்” என்ற சிறுகதை புகலிடத்தில் தொழில் வாய்ப்பைப் பெற்ற
தமது வாழ்க்கையை ஒட்டுவதற்கு - புலம்
பெயர்ந்த தமிழர்கள் எந்தளவிற்கு தங் களது சுயமரியாதையையே 'கண்டும் காணாது" உதறி வாழ்கிறார்களென்பதை அச்சொட்டாகச் சொல்கிறது. இருந்தும், மேலைத் தேசத்தவர்களாகட்டும் கீழைத் தேசத் தவர்களாகட்டும் முதலாளிக்குரிய பண்பு ஒத்ததாகவே இருக்குமென்பதையும் உணர்த்துகிறது. வர்க்க ஒற்றுமையை சர்வதேச வியாபிப்பை மெய்ப்பிக்கின்றது.
இரவு ஒரு மணிவரை தன்னோடு ஒத்து நின்றதனது பணியாளனுக்குக்
"கொடுத்த சலுகைகளை மிரட்டல்களுக்கு
அஞ்சி - றெஸ்றோரென்டை மூட வேண்டு மென்ற பீதியில் - முதலாளி மீளப் பறிக் கிறார். மேற் கூறிய ஒற்றுமைக்கு இது பதச் சோறு
இக்கதையில் வரும் முக்கிய கதா பாத்திரத்தின் கடமை உணர்வு, விசுவாசம் என்பன அசல் யாழ்ப்பாணத் தமிழன் கட்டிக் காத்த பண்பாடுகளின் மறுவாசிப்
பாகவுள்ளது.
வாசகனுக்கு வாசிப்பில் முறிவைக்
கருத்துச் செறிவோடு- யாழ்ப்பாணத்து வட்டார
கொடுக்காத வகையில்
வழக்கில் கதை சொல் லப்பட்டுள்ளது.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 29

Page 17
'உழைத்துக் களைத்துப் போன அப்பாவும் ஒளவையாராகிக் கொண்டி ருக்கும் அக்காவும் துப்பாக்கிகளுக்குப் பயப்படும் அண்ணாவும் எதிர்காலக்
கனவுகள் பற்றிய ஆரம்பங்களுடன் தம்பி,
தங்கைகளுமே. பாலுவின் கடிதம்,
பணத்திற்காகக் காத்திருப்பார்கள்." என்ற குடும்பப் பாசத் தோடு ஜேர்மன் அகதியான பால கிருஷ்ணன் என்ற பாலு, "கறுப்பு வேலை" செய்து கிடைக்கும் பணத்தால் தன் குடும்பச் செலவைத் தாக்காட்ட முடியாதென்றதனர்ால் கனடா வுக்குச் செல்லப் பல தடவை எத்தனித்து, அது கை கூடும் கடைசி நிலையில் விமான விபத்தில் இறக்கிறான். இது பார்த்திபன் (ஜேர்மனி) புனைந்த "தெரிய வராதது" என்ற கதை. க. கலா மோகனின் அப்பா
விக் கதாபாத்திரத்தை நியாயப்படுத்து
கின்றது சொந்தநாட்டில் வாழும் குடும்ப ங்களை வாழ்விக்க பிறநாட்டு அகதிகள் படும் சிரமங்களைத் தருகின்றது.
வசகனின் நெஞ்சை நெகிழ வைக்
கிறார். "நடோடிகள்’ என்ற கதையில் கி. பி. அரவிந்தன்(பிரான்ஸ்) 'வீடு தரப் போறாங்கள் என்று ஒரு வீட்டிற்குத் தேவையான சாமான்கள் எல்லாத்தையு மல்லோ வாங்கிப்போட்டு, அந்த நம்பிக்கை யில் தானே வயிற்றுக் குழந்தையை வளரவிட்டன். ""ஊர், உறவையே விட்
டுத் தொலைச்ச நாங்கள் இங்க இல்லை
யெண்டால் இன்னொரு @LLb LDTODDS) பிரச்சனையே. எல்லாத்துக்கும் தயாராய் இருக்கோணும்..” “நடோடிகள் மாதிரிய
ல்லோ ஆகிப்போச்சு. இது இத்தாலியில்
உண்டாகியது. இங்கு பிறந்தது. இப்ப
ஒன்று இங்க உருவாகி இருக்கு எங்க பிறக்கப் போகுதோ..."
உருவாகி என்ற சொல்லுக்குப் பதிலாக "ஜனித்திருக்கு" என்பது பொருத் தமானது. புகலிட வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையைக் கதைஞர் சித்தரித்து அதைக் குறவர்கள், கிப்பிகளோடு ஒப்பிடுகிறார்.
காரும் அதை ஒட்டச் சாரதியையும் அமர்த்திச் சொகுசான வாழ்வைச் சொந்த மண்ணில் சுகித்த கல்விமான் (PHD) தனது மனைவியின் பேராசைக்கு எடுபட்டு அவுஸ்திரேலியாவுக்குப் பறந்து அங்கு தன் ԵiԱ ] கெளரவத்தைக் காப்பாற்ற முடியாது வாழ்வை இழப்பதை அருண் விஜய ராணியின் கதை வெளிப்படுத்து கின்றது. தஞ்சம் கோரும் அகதிகளின் கல்விசார் சான்றிதழ்களையோ அல்லது பட்டங் களையோ வெளிநாடு கணக்கெடுப்ப தில் லையென்பதையும் "ரகசிய ரணங்கள்' புலப் படுத்துகின்றது.
கதைஞர் அருண் விஜயராணி மல்லிகை வாசகர்களுக்கு அந்நிய மானவரல்ல. அடிக்கடி மல்லிகைக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். இக்கதையில் ஆங்கிலப் பதங்கள் ஆங்கில எழுத்து
க்களில் தரப்பட்டுள்ளன. இப் பதங்களைச்
சகல வாசகர்களாலும் வாசிக்க முடியுமா?
க. கலாமோகனும் "உருக்கம்" என்ற கதையில் பிரான்ஸியச் சொற்களை அதிகமாப் பாவித்திருக்கிறார். ஆனால் அச் சொற்களுக்கான தமிழ்ப் பதத்தை அடைப்புக்குறிக்குள் தருகிறார். படைப்பில்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 30

யதார்த்தைப் பேணும் பொழுது இவைக ளைத் தவிர்க்க முடியாதுதான்! இருந் தாலும் அந்நியப் பதங்களை அம் மொழிக ளுக்கான எழுத்துகளில் தராது உச்சரி ப்பை கூடியவரை தமிழிலேயே எழுதுவது சகல தர த்த வரையும் திருப்திப்படுத்தும்.
"ஒரு கோடை விடுமுறை' என்ற நாவலை வெளியிட்ட மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண் டன்). புலம் பெயயோர்ந்தோர் இலக்கிய த்துக்கும் மூத்தவர்தான். இவரது “எய்தவர் யார்?' என்ற கதையில் ஆங்கிலே யருக்கும் பிற இனத்தவகளுக்குமான
-D6) அலசப்படுகின்றது.
கதைக்குள் ஊடுபாலமாக, "இவர் களின் அரசாங்க மந்திரிமார்களை பார். எத்தனை பேர் ஹோமோ செக்சு வல்ஸ், எத்தனைபேர் லெஸ்பியன்ஸ் என்று தெரியும். "இவர்களுக்கு நாட்டுப்பற்று இருந்தால் குடும்ப உறவுகளில் அக்கறை இருந்தால் இப்படி வாழ்வார்களா. 9 கதையில் வரும் பீட்டரும் டாரனும் போதையில் தமது நாட்டை இப்படி விமர்சிப்பதாகக் கதைஞர் சித்தரித் துள்ளார். கதையின் பெயர் 'எய்தவர் uum?”
"குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு" என எம்மவர் கூறுவதுண்டு! எனவே இவைகள் போதையின் விசும்பலா? துவேசதத்தின் வாந்தியா? அல்லது கதைஞர் தமிழர் என்ற வகையில் அந்நிய நாடுகளில் நம்மவர்கள் மீது காட்டப்படும் "சேஷ்டை'களுக்குப் பழிக்குப் பழியா? வெளிநாட்டவரது வாழ்வைக் கிண்டல் செய்கிறாரா?
நோர்வேயைப் புகலிடமாகக் கொண்ட அகதிக் குடும்பமொன்று தனது வாரிசுகளை அந்நாட்டின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு ஏற்ப வளர்த்து பின்னர் வாரிசுகளின் நடத்தை தமிழ்க்கலாச்சாரத்தோடு மோதும் போது உறவுகள் நலிவுறுவதை சித்தரிப்பது "புதிய தலைமுறைகள்' என்ற கதை. தொடக்கத்தில் புகலிட வாழ்வில் துலங்கிய மண்பற்று, பண்பாடு கலாச்சாரக் காப்பு வருங்காலத்தில் இவ்வாழ்வைக் கை யேற்க இருக்கும் புதிய தலைமுறைகளில் துலங்குமா? பலத்த கேள்வியைத் தொடுக்கிறார் படைப்பாளி கோவிலுார் செல்வராஜன் (நோர்வே).
புலம் பெயர் வாழ்வில் அகதிகள் எதிர்க்கொள்ளும் அவலங்கள் குறித்துத் தண்டவாளமொன்றும், கசிந்துருகுவதாக “ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு முடியும்" என்று சுருதி (சுவிஸ்) எழுதுகிறார்.
இலக்கியமென்பது வாழ்க்கையின் இக்கோட் பாட்டுக்கமைய புலம் பெயர்ந்த எழுத் தாளர்கள் இவ்வாழ்வில் நிகழ்ந்து அவலங்களைச்
கண்ணாடி என்பார்கள்.
கொண்டிருக்கும் சித்தரித்துள்ளனர். புனைவாற்றல் பேசக் கூடியதாக இருப்பினும் புலம் பெயர்வு தமிழ் வாழ்வைத் தொடர்ந்து தக்க வைக்குமா? என்ற ஏக்கப் பெருமூச்சு இக்கதைகளின் வாசகனுக்கு ஏற்படுவதைத் தடுக்க முடியாது!
இத்தொகுப்பு எந்த நோக்கத்திற்காக வெளியிடப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவு செய்வதாக மூத்த எழுத்தாளர் அ.
மல்லிகை ஆகஸ்ட் 2007 率 31

Page 18
முத்துலிங்கத்தின் கதை அமைந்துள்ளது. கதையையொரு நினைவுப் பரிமாற கதைஞ்ர் நாடறிந்த இலக்கியவாதி லாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்துச் சஞ்சிகைகளிலும் எழுதுபவர். ஓவியர் அமரர் மாற்குவின் ஓவியம்
அட்டைப் படத்தில் காணப்படுகிறது. இதுவொரு மறு பிரசுரம் ஆக- கதைகள் எட்டும் பெருந்தாக்கத்தைத் தரக் தக்கவை. வெளியிட்டவர்கள் இத் தெகுப்பு
"அம்மாவின் பாவாடை" இவரது சிறுகதை. இளமைக் காலத்தில் தாம் பாவித்த பொருட்களில் சிலர் அலாதி ப்பிரியம் காட்டுவர். அத்தகைய ஒரு பாவா சகல வாசகர்கள் கைக்கும் கிடைப்ப
டையில் தாய் காட்டும் அக்கறையை ஒரு தற்கான ஏற்பாடுகளைச் செய்வது அவர்
மகன் கூறுவதாக கதைஞர் சித்தரிக்கி களது அரும்பணியை உச்சப்படுத்தும் றார். மண்வாசனை கமழுகின்றது. இக்
இருக்கிறம்
(15.07.2007)
நகைச்சுவைத் துணுக்குகளுக்கு இலங்கைப் பத்திரிகைகள்
சஞ்சிகைகள் கொஞ்சமேனும் முக்கியத்துவம் காட்டுவதில்லை என். வாசகர் குற்றச் சாட்டு- நீறு பூத்த நெருப்பாக இருப்பது- கண்டு கொள்ளப்படாமலே இருந்து வருகிறது. “சிரித்திரன்’ காலத்தில் துணுக்குகளுக்கு மவுசு இருந்ததுண்டு அச் சஞ்சிகையின் முடங்கலோடு இச் சுவையான வாசிப்பு அம்சமும் அருகிவிட்டது. இது ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை வாசகருக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்து வந்தது. அண்மையில் இச் சோகத்துக்கு விடிவு கிடைத்துள்ளது. புத்தகச் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் "இருக்கிறம்" சஞ்சிகையின் முதல் இதழ் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஏராளமான துணுக்குகளோடு வெளியாகியிருப்பது கண்டு வாசகர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டாடுகின்றனர்.
ஈழத்து இதழியல் துறை மற்றுமொரு குறைபாட்டையும் கொண்டிருந்ததை வாசகர்கள் சகித்து வந்ததுண்டு வடிவமைப்பில் அவை பல கிலோமீற்றர்கள் பின் நின்றன. இந்த விடயத்திற்கும் 'இருக்கிறம்’ நிறைவான பதிலைக் கொடுத்திருக்கின்றது. கணினி வடிவமைப்பில் - அட்டைப் படத்திலிருந்து அனைத்து 96 பக்கங்களும் மன வறை மணமகள் போல் கோலமிட்டுக் கண்களைக்கிறங்க வைத்திருக்கின்றன. ஆங்கில தமிழகச் சஞ்சிகைகளோடு ஈழத்துச் சஞ்சிகைகளும் போட்டியிடும் என்ற நம்பிக்கையை ஆழப்பதிக்கின்றது. இவ்விதழ் கணினி வடிவமைப்பாளர்களான க. மயூரன், கே. முஜரின் ஆகியோரது அச்சுத் தொழில் நுட்ப ஆற்றல் மெச்சத்தக்கதே ஈழத்து இதழியல் துறைக்குப் புதியதோர் முகத்தை இவ்விருவரும் கொடுத்திருக்கின்றனர்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 * 32
 

காகத்தை இலட்சினையாகக் கொண் டுள்ள இச் சஞ்சிகையின் ஆசிரியர் கவிஞர் இளையதம்பி தயானந்தா ஒலி, ஒளிபரப்புத் துறையில் ஆளுமை பெற்றவர். இதழியலும்
பல சுவைத் தகவல்களைத் தரும் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், இவ்விதழில் அடக்கப்பட்டுள்ளன. ஜனரஞ் சக வாசிப்புக்கு மட்டுமன்றி தீவிர வாசிப்புக்
அவரது தமிழ் வல்லமை செழிக்குமென்பதை கும் இரையுண்டு.
நம்பலாம்,
வாசகர்கள் தமது வாசிப்பை "இருக்
கிறம்" சஞ்சிகைக்கு நகர்த்துவது ஈழத்து இதழியல்த் துறைக்குச் செய்யும் பெருந் தொண்டாகும்.
"இருக்கிறம்" என்பது ஒரு வாசிப்பு, ஒரு கருத்துப் பகிர்வு, ஒரு பண்பாடு, ஒரு வகை இருப்பின் பிரதிபலிப்பு இவை எல்லாவ ற்றையும் ஜனரஞ்சகமாய் உள்ளடக்கும் தன்மையில் "இருக்கிறம்" வருகிறது. இச்சஞ்சிகையின் வெளியீட்டாளர்கள், எனவும், "இருக்கிறம்" சஞ்சிகை அரசிய சர்வதேசத் தமிழ்வாசகனும் வாசிப்பதற்கான லைக் கையிலெடுக்கவில்லை எனவும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். எமது இப்புத்தேட்டின் தமிழ் இலக்கியப் பணியின் சாதனைகள் குடத்து விளக்காக மறைக்
எல்லையை வகுத்துக் காட்டியுள்ளனர் &SJUL-85 &nlig).
ஆசிரியரும் பதிப்பகத்தாரும்.
Upasir
(ශීu..... ශ්‍රී”ගාv 2007)
ஐந்தாண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இரு
மாத இலக்கிய இதழான "படிகள்' சஞ்சிகையின் 16வது இதழை வாசிக்க முடிந்தது. அநுராதபுரம் நட்சத்திர நற்பணி மன்றம் (ASWA) வெளியிடும் இதன் ஆசிரியர் எல். வஸிம் அக்ரம். 'நல்லன காணவும் நல்லவற்றோடு இணையவும் முயல்பவர்களின் எண்ணிக்கை சிறியதாக இருப்பினும் முயற்சியின்மையிலும் பார்க்க அது மேலானது' என்ற குறிக்கோளில் தமிழ் இலக்கியப் பணியைச் செய்து கொண்டிருக்கிறது இச்சிற்றிதழ்,
இலங்கையின் புராதன சிங்கள நகரும் தமிழ் பேசும் மக்களை மிகக் குறைந்தளவில் கொண்டதுமான பிரதேசத்தில் ஒரு தமிழ் சஞ்சிகை வேர் கொண்டு ஐந்தாண்டு காலமாகத் தமிழ் இலக்கியப் பணி செய்து வருவது சற்று வியப்பானதே மன்றத்தின் துணிவு புகழத்தக்கது.
32 பக்கங்களைக் கொண்ட இச்சிற்றிதழின் அட்டையில் sLDs toos.g6öT
உக்கிரப் பிரச்சனையொன்று கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நாட்டில் சிறுவர்கள் பாலியல் வன்முறைகள், தொழில் கொள்ளல் மல்லிகை ஆகஸ்ட் 2007 率 33

Page 19
எனப்பவற்றிற்கு உட்படுத்தப்பட்டு வருவது அறிந்த சங்கதியே அதைப் பரம்பல் செய்யும் முனைப்போடு "மலி வான விலையில் மனிதக் குருத்துகள்" என்ற வரியோடு சிறுவனொருவனின் பின் புறத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. ஜயதிலக பண்டாரவின் படமும் சிறி தாக அட்டையிலுண்டு. பேருவளை ரபீக் மொஹிடீன், எம். சி. நஜிமுதீன், நாச்சியா தீவு பர்வீன் ஆகியோரது மொழி, சமகால இலக்கியம், பெண் னியம் சம்பந்தமான வாசிப்பை பய னுடையதாக்கும் கட்டுரைகள் இதழுக் குப் பெறுமதியைக் கொடுக் கின்றன.
எம். சி. ரஸ்மின் சந்தித்து எழுதி இருக்கும்- சிங்கள இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடல் குழுவின் நெறியாளர் ஜயதிலக்க பண்டாரவின் நேர்காணல் - சிங்கள இசைப்பாடல் களில் இனப்பிரச்சினை குறித்த கரிச
னையின் தன்மையை வெளிப்படுத்து கின்றது.
நேஹா, கனிவுமதி, பவர் புர்கான், பீபி, அக்கரைப்பற்று எம். எம். சுர் ஹசன், இப்னு ஆயிஷா ஆகியோரது கவிதைகளுமுண்டு.
'ஜேயுடனான உறவு முறிந்து மூன்று நிமிடங்களாகின்றன" என்ற கவிஞர் சேரன் கவிதை யொன்றும் மறு பிரசுரமாகி இருக்கின்றது.
ஆனந்தி, அபூநுஹா நாச்சியாதீவு ஆகியோரது சிறுகதைகளுமுண்டு. ஆக "படிகள்' மென்மேலும் படிகளை உயர்த்துவதற்கு எழுத்துப் பிழைகளி லிருந்து இதழ்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த வேண்டு கோளை ஆசிரியரும் சஞ்சிகைக் குழுவும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இரசனைக்குறிப்புக்கள் மா. பாலசிங்கம்
NY
N မျိုးခဲ့ချိမှိ၊
SNSSNSR
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 34
 
 
 
 
 
 
 
 

நினைவழியா நாட்கள் - 6
ფაéfბაcზr éწcdf
- பரன்
புதிய இடம். கொஞ்சம் அந்தரமாக இருந்தது. கொழும்பில். தலைமை அலுவலகத்தில் இருந்த அன்னியோன்யம் இந்தக் கிளை அலுவலகத்தில் இல்லைப் போல் பட்டது. ஆளோடு ஆள் கதைக்க நேரமில்லை. வேலை தலைக்கு மேல் இருந்தது. போதாக் குறைக்கு எல்லோரும் பள்ளிக்கூடப் பெரடியள் மாதிரி வெள்ளைச் சேட் போட்டிருந்தார்கள். இரண்டொருவர் மெல்லிய கலர் சேட்"டில் இருந்தார்கள். எல்லோருடைய தலைமயிரும் அளவாக வெட்டப்பட்டு, நன்கு வாரப்பட்டு இருந்தது.
நான் ஒரு அந்நியன் போல உணர்ந்தேன். பிடரிவரை நீண்டு வளர்ந்த தலைமுடியும், அழுத்தமான கலரில் கட்டம் போட்ட சட்டையும், பெல் பொட்டம் காற்சட்டையும் அவர்களுக்குப் புதிதாக இருந்திருக்க வேண்டும். ஒரு மாதிரிப் பாத்தார்கள். "சால்ாவுதீன் மட்டும், கிட்ட வந்து பேசினான். தலைமை அலுவலகத்தில் வேலை செய்த நட்பு.
‘என்னடா எல்லோரும் இப்படிப் பேய் பிடித்தவர்கள் மாதிரி இருக்கிறீர்கள்?’ என்றேன்.
'கொஞ்ச நாள் போனால் உன்னையும் பேய் பிடிக்கும். மனேஜர் லீவில் நிற்கிறார். வந்தி பின் பார்.
f
போடா. எத்தனை மனேஜர்மாரை என் யூனியன் அநுபவத்தில் பார்த்திருக்கிறேன். இவர் என்ன கொம்போ' என்றேன். அவன் சிரித்தான்.
முதல்நாள் என்பதால் விரைவில் வேலையை முடித்துவிட்டு அறைக்குப் போக முயற்சித்தேன். உதவி மனேஜர் அருகில் வ்நதார். காலையில் என்னை எதிர்க் கொண்டு வேலையுைம் பாரம் தந்தவர் அவர்தான்.
போக ஆயத்தமா?' என்றார்.'ஓம்' என்றேன்.
'சாந்திகுமாரின் வேலை முடியவில்லை. நீரும் சேர்ந்து செய்யும்."
'ஏன், சாந்திகுமார் செய்யமாட்டாரா?
இல்லை அது கொஞ்சம் கஸ்டமான வேலை
"அப்பயானால் நாளையில் இருந்து நான் அவரின் வேலையைச் செய்கிறேன். என் வேலையை அவர் செய்யட்டும். மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு நீர் போம்" என்றார்.
வெளியே வந்து சிகரட் பற்ற வைத்து இரண்டு இழுப்பு இழுத்த பின் பதற்றம்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 35

Page 20
அடங்கியது. முதல்நாளே கொழுவியி ருக்கத் தேவையில்லையே. சரி, இப் போது அறைக்குப் போயும் ஒன்றும் செ ய்யப் போவதில்லை., திரும்பப் போய் வேலை செய்தால்தான் என்ன. என்று யோசித்தேன். சிகரெட்டை முடித்துவிட்டு சாந்திகுமாரிடம் பேனேன் 'பன்ஸ் சீற்றை வைத்து இன்னமும் பிணைந்து கொண்டிரு ந்தான்.
‘என்ன அவுட்டா?
'. ஓம். ஐம்பது சதம் அவுட்'
கொண்டு வா ரேப்பை...' என்று
இலக்கங்களை நோட்டமிட்டேன், ஐந்து நிமிடத்தில் பிழை பிடிபட்டது. செக்கில் 25
சதமாக இருந்ததை "லெட்ஜரில் 75
சதமாகப் பதிந்திருந்தான்.
‘எப்படி இவ்வளவு கெதியாய்க் கண்டு பிடித்தாய்..?' என்று சாந்திகுமார் (3a5L LIT6öT.
'உது மாதிரி நிறையப் பிழை நானும் விட்டவன்தான்." இருவரும் சிரித்தோம். சினேகம் முளைவிட்டிருந்தது. சத்தம் கேட்டு உதவி மனேஜர் வந்தார்.
நீர் போகவில்லையா.
'பலன்ஸ் சீற் அவுட். அதைச் சரிப்படுத்தினேன்."
அவரது பார்வையில் வித்தியாசம் இருந்தது.
அடுத்தநாள் 'சலாவுதீன் வந்தான். மனேஜர் வந்துவிட்டார், உன்னோடு பேசவேண்டுமாம் என்றான். போனேன். அறை, மேசை எல்லாமே சுத்தமாக இரு ந்தன. மேசையில் ஒரு பைலையும் காண வில்லை. ஆள் ஆறடி உயரம். கஞ்சி
போட்ட சேட், "ரை தலைமயிர் ஒழுங்காகப் படிய வாரியிருந்தது. ஐம்பது வயதிலும் கண்ணாடி இல்லாமல் சின்ன எழுத்து surrassrs.
நிமிர்ந்து பார்த்து. ஏன் இந்தத் தலைமயிர். கதிர்காமத்துக்கு நேர்த் தியா...' என்றார். நக்கல் என்று புரிந்தது.
1.இல்லை. திருப்பதிக்கு
சரி. இந்தக் கிளை அலுவலகத் தில் தலைமயிர் நீளமாக வளர்க்க முடியாது. மெல்லிய கலர் சேட் தான் போட
வேணும். நீரும் மாற்றிக் கொள்ளும்!
ஏதாவது புதிய சட்டம் இருக்குதோ? தலைமை அலுவலகத்தில் இதே கோலத் தோடுதான் வேலை செய்தேன். யூனியன் ஒபிசுக்கும் அப்படியொருகடிதமும் வரல்லை.
‘ஓ. கொழும்பில் நீர் யூனியன் லீடரோ? என்றார்."
'ஓம்' என்றேன்.
மெதுவாகச் சிரித்தார்.
கொழும்பில சேனநாயக்கா மனேஜர். இங்க நான் நான் சொல்றதை நீர் கேட்க
வேண்டும். ஒரு கிழமை அவகாசம் தரு கிறேன். மாறிக்கொள்ளும்!
கோபம் தலைக்கேறியது. ஒரு யூனி யன் லீடரோடு இப்படிச் சண்டித்தனம் காட்டு
கின்ற மனேஜரைச் சும்மா விடக்கூடாது.
இவருக்கு நான் யார். எனது சல்வாக்கு என்ன. எல்லாவற்றையும் புய வைக்க வேண்டும்!
பின்னேரம், "திருக்குமா. உமக்கு யூனியன் ஒபிசில் இருந்து கேல்..' என்று உதவி மனேஜரின் அழைப்பு
மல்லிகை ஆகஸ்ட் 2007 奉 36

கொழும்பு யூனியன் ஒபிசில் இருந்து சில்வா! அடுத்த சம்பள அதிகரிப்பு. யூனியன் தேர்தல். கூட்டு ஒப்பந்தம். அலசுவதற்கு நிறைய விடயங்கள் இருந் தன. மனேஜரின் கெடுபிடியைச் சொன் னேன்.
'நீ கொழும்பில கூட்டத்துக்கு வா வேன். எல்லாம் விபரமாய்ப் பேசுவோம்.' என்றான் சில்வா.
உதவி மனேஜர் சிரித்துப் பேசினார். "நீங்கள் யூனியன் லீடரா. ? புதிய மரியாதை தெரிந்தது.
கொழும்பில் சில்வாவுடன் என் கொதிப்பைப் பகிர்ந்து கொண்டேன். எனது புதிய கிளை மனேஜருக்கு, ஒரு யூனியன் காரனைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. கதைக்கிற முறையும் தெரியவில்லை. என்றேன்.
f 'கணக்கெடுக்காதை. விட்டுவிடு."
என்றான் சில்வா.
நீயும் இப்ப மனேஜ்மண்டுக்குப் பந்தம் பிடிக்கத் தொடங்கிட்டியோ'
'இல்லையடா. அந்த ஆள் நல்ல மாதிரி. தேவை இல்லாமல் ஏன் உரசி றாய். பிறகு பிரச்சினை தொடரும்."
'சில்வா! நீ நிறையவே மாறிவிட்டாய்! இந்தக் கிளைகளின் மனேஜர்கள். சும்மா தனிக்காட்டு ராசாக்கள் மாதிரி
நான் இல்லை என்றேனா. ஆனால் உன்ரை மனேஜர் கொஞ்சம் வித்தியாசம். நான் அவரோட வேலை செய்திருக் கிறன்!. ஆ1 இன்னொரு விசயமும் சொல்ல வேனும்,
‘என்ன. என் கேள்வி தொடர்கிறது.
"உனக்குத் தெரியுமோ தெரியாது. இன்றைக்கு எமக்குக் கிடைக்கிற இந்தச் சம்பள உயர்வுகளுக்கு 70ஆம் ஆண்டு வங்கிகளில நடந்த வேலை நிறுத்தந்தான் காரணம்.
சரி. அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?
‘எல்லா வங்கிகளும் 91 நாள்தான் ஸ்டிரைக். ஆனால் எங்கட வங்கி. விடாமல் 107 நாள் ஸ்டிரைக்! அதாலை தான் இண்டைக்கு நானும் நீயும் இந்தச் சம்பளம் எடுக்கிறம்.
'சில்வா. நீ திரும்பவும். தேவை இல்லாமல் அலட்டுறாய். பொறுமை என்னை விட்டுப் போகத் தொடங்கியது.
கொஞ்சம் பொறு. காரணம் இருக்
குது. உன்ரை இப்பத்தைய மனேஜர்தான்
அப்ப எங்கட யூனியன் தலைவர். அது தான்!
திங்கட்கிழமை வேலைக்குப் போன தும். எல்லோரும் அதிசயமாகப் பார்த்தா ர்கள். கட்டையான தலைமயிர் வெட்டு. வெள்ளை நிற நீளக் கைச் சேட்டு. அவர்களைத் திகைக்க வைத்திருக்க (sustTGLb.
திருக்குமார்."
திரும்பிப் பார்த்தேன், கூப்பிட்டவன் சாலாவுதீன்.
“என்ன விசயம்? என்றேன்.
பார்த்தியா. உன்னையும் பேய் பிட்டிச்சிட்டுது. என்று சிரிக்கபடி போனான்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 * 37

Page 21
விற்பனைக்குத் தயாராகின்றது.
V
ܘ2
e.
4.
&ラ。
5.
Z
e.
9.
v2.
A.
(மல்லிகையில் வெளிவந்த அட்டைப்படத் தகவல்கள்)
53தகைமையாளர்களைப்பற்றிய நால்
தாமரைச்செல்வி
- க.இரத்தினசிங்கம்
ஏன்,எம்.ஹனிபா
- பொ.ஆனந்தலிங்கம்
Dr.awab.eas, dpasanaisar
- பா.இரகுவரன்
ராஜமுநீகாந்தன்
- பேரா. சோ.சந்திரசேகரம்
ബu പ്രേമമuഴ്സ്
- மருதூர்க் கொத்தன் செம்பியன் செல்வன்
- செங்கை ஆழியான்
Øuasa27ae syntaf?
- தெளிவத்தை ஜோசப் செ.பெற்றால் மயில்
- வன பிதா.பி.எம்.இம்மானுவல்
கவிஞர் இரத்தினதுரை
- இ.ஜெயராஜ்
அ.பா ைமனோதரன்
- முல்லைமணி
ബ്, ആമസ്ക
- அன்புமணி
2. unr6Beacoffafriffm
- பா.இரகுவரன்
ፆጋ ፴ኑqpUጮfiañffØw
- சாரல் நாடன்
j4. évibÚ7”
- முருகையன்
கு. ஏ. இக்பால்
- திக்குவல்லை கமால்
ரவி. இ.சிவகுருநாதன்
மேமன்கவி
ፖz 6ነፀሩ መ@aመw∂ ̆ጪ9ጦöመö”
- தேவகாந்தன்
veg. p. uatř
- எம்.ஏ.எம்.நிலாம்
፶e ጨLa.∂ሩ6gguሠሀn@ወö”
. அஷ்ரப் சிகாப்டீன்
20. அந்தணிஜிவா
2.
- நா.சோமகாந்தன்
துரை மனோகரன்
- தி.ஞானசேகரன்
மல்லிகை ஆகஸ்ட் 2007 * 38

22. அறிவுமதி
- குறிஞ்சி இளந்தென்றல்
23. தித்தவல்லை கமால்
- லெ.முருகபூபதி
24. தமிழோவியன்"
- புலோலியூர் சதாசிவம்
25. 'upg5gó/”
- டொமினிக் ஜீவா 2eS. Øofyaðir
- எஸ்.எழில்வேந்தன் 27. சாந்தன்
--கே.எஸ்.சிவகுமார் 24, a.o.defamatisfit
- செங்கை ஆழியான் 29. ஆர்.பத்மநாப ஐயர்
- அ.இரவி Jo. asi. சரவணமுத்து
- மா.பாலசிங்கம் ச7, புரவலர்ஹாஷிம் உமர்
- இ.ஜெயராஜ்
○ 2。 yâranumdör
- உடப்பூர் வீரசொக்கன் தகு. கே.ஆர்.டேவி
- சுதாராஜ்
ó伞。 ஜெயகாந்தன்
- டொமினிக் ஜீவா குச. செ.யோகங்ாதன்
- செங்கை ஆழியான் 3ses. avüb... 6vvb... ōfio dupa5übupø/
- மலரன்பன் 37. eupupatiaa’
- தெணியான்
<芬é。
42.
4.
22,
ه22
G.
伞台。
47,
,
9,
○万2。
5み。
ー2。
○エラ。
ப. ஆப்கன்
- நந்தி 07, 08ബ6ിബff
- மா.பாலசிங்கம் சிதம்பூரதிருச்செந்திகாதன் - கா.இரத்தினசிங்கம் அன்பு ஜவஹர்ஷா
- நாச்சியாதீவு பர்வீன் முத்துயிரான்
- இளைய அப்துல்லாவும் பூ.முநிதரசிங்
- இ.ஜெயராஜ் கே.வி.சிவாசுப்பிரமணியம் - கே.எஸ்.சிவகுமாரன் Dr. ச.முருகானந்தன்
- தாமரைச் செல்வி
"சுதராஜ்"
- மேமன்கவி
கயிறாசித்திக்
- கே.பொன்னுத்துரை Cബ് அப்துல்லாஹ்
- ஒட்டமாவடி அரபாத்
afted
- அ.அ.அந்தோனிப்பிள்ளை 67. g. asaziwayatazwant
- டொமினிக் ஜீவா øa.6ænadíagnað
தெளிவத்தை ஜோசப்
6. Curatina/7
- ச.முருகானந்தன் ஜின்னா சாபுதீன்
- கலைவாதி கலீல்
மல்லிகை ஆகஸ்ட் 2007 தீ 39

Page 22
இசாதாரனமான பேர் (9a/Gojóos ஐம்பது வருஷமாகின்றது அவரைக் கண்கு இந்த ஐம்பது வருஷ காலத்தில் வைஞரியம் என்ற பேருடைய இன்னொருவரை நான் சந்தித்தின்ைை!
6ിഖിഞ്ഞുണ്ണ് ബി வேறெந்த நிறமும் அணிவதில்ைை அவர் நினைவில் நிற்க இது அருத்த கரணம் இதாலைத் தொடர்பு பணியில் நாம் என்ைோரும் இணை7ஞர்கள் அவர்/கருத்துர வயதினர் திடகாத்திரமான தேகம் ஆ7ை7ல் வாயில் பல்ைொன்றும் இல்ாைத რofმმჩმრქმეrub இது மூன்றாவது காரணம்! இத்தனைக்கும் மேலே இளைஞர்கன் கானும் படி இயன்Uாக
of67ups765 aposepsfluibosmuilei) Uu77gpsub தூஷனச் சொற்கள்! இச்சிறப்பியல்புக7ைால்
ിuഗ്രb uffഞup ố?rūô6/76)/ap/7ổ 6ìđố/7ớỏrtஎங்கள் தொழிற் சங்கத்துக்கு வைகுரியம் தலைவர்
ஆண்குப் பொதுக் கூட்டத்தில் ஆங்கினத்தின் அவர் ஆற்றும் தைைமையுரை அனலைக் கக்கும்!
ஆரம்பத்தின்
எட்ட நின்று
ճւժԺՍՍլ:ժ, մյժléծ ഞഖebffuമഞ്ഞുമ அனுகத் தொடங்கிய காலத்தின் ஒரு நான் கேட்டேன்: "ബ്ബ്, உங்களுக்கு எப்படி என்ாைப் பல்லும் போச்சு?”
இரண்ரு மந்திரச் சொற்கள் abugui ai.) வந்தது மறுமொழி:
"67L, öbü? சுபாஸ் சந்தியோஸின் அறைகூவலைக் கேட்டு இந்திய தேசிய இராணுவத்தோரு பர்மாவில் இருந்து கால் நடையா வந்தன் பல்லுப் போச்சு!"
spasupasasa D67 6.7- உயர்ந்த ფ2Üüმრp/rupazრu//7ai/ நெஞ்சில் ஒளி விசுகிறார் რOრი/ტ/f7u/0ჩ!
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 40

சிங்கள மொழிச் சிறுகதை
புலல் பெயர்ந்தவர்கள்.
- உபாலி வணிகசூரியதமிழில்:- திக்குவல்லை ஸப்வான்.
கட்டிலில் சாய்ந்து கிடந்த பொடிஹாமினே திடீரென்று ஒலித்த இடி முழக்கத்தினால் திடுக்கிட்டுப் போனாள். குமுறலோடு மின்னல் மின்னிப் பெரும் மழை கொட்டியது. கணவரின் வற்புறுத்தலினால் படுக்கைக்கு வந்தாலும், பகலில் தூங்கும் பழக்கம் அவளிடம் கொஞ்சமும் இல்லை.
கட்டிலால் இறங்கி, ஜன்னலுக்கு அருகே போய்ச் சீலையைச் சிறிது விலக்கி வெளியே நோட்டமிட்டாள். மழைக்கு முன்னர் வீசிய பெருங்காற்று அள்ளிக் கொணர்ந்த சருகுகளினால் தோட்டத்தின் அழகிய புற்றரை மூடப்பட்டிருந்தது. அவள் தனது பார்வையைச் சுவர்க்கடிகாரத்தின் பக்கம் செலுத்தினாள். சூழல் இருண்டிருந்தாலும் நேரம் இன்னும் நான்கு மணியைக் கூடத் தாண்டவில்லை.
பொடிஹாமினேயின் மனதில் தோன்றும் தனிமை உணர்வு கணத்திற்குக் கணம் அதிகரிப்பது போன்று தெரிந்தது. அதனை அவளால் எந்த விதத்திலும் தாள முடியவில்லை. ஐம்பது வருடங்களுக்கு மேல் கிராமத்துச் சூழலுக்குப் பழக் கப்பட்டுப் போன அவளுக்கு நகரப்புற வாழ்க்கை ஒத்துவரவில்லை.
வாசலில் சாய்வு நாற்காலியின் மீது உறங்கிக் கிடக்கும் கணவரின் பக்கம் பார்வையைத் திருப்பினாள். பத்திரிகையைப் பார்த்தவாறே உறங்கிப் போயிருந்தார். கண்களில் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி நழுவி, மூக்கில் தங்கியிருந்தது. வயசாகிப் போன அவரைப் பார்க்கும் பொழுது ஆழ்ந்த பரிவோடு பரிதாபமும் சேர்ந்து எழுந்தது.
இவர்தான் எவ்வளவு உத்தமமான கணவர். தனது முழு வாழ்க்கையையும் இரு பிள்ளைகளுக்குமாக அர்ப்பணம் செய்த தியாகி அல்லவா இவர்."
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 41

Page 23
ஆசிரியராகப் பணிபுரிந்த கணவர் தனது முயற்சியினால் பிள்ளைகள் இருவரையும் சமூகத்தில் உச்சநிலை க்குச் கொண்டு வந்ததை நினைக்கும் பொழுது பொடிவுறாமினேயின் உள்ளத் தில் பெருமிதம் பெருக்கெடுத்தது.
மூத்தமகன் நிபுணத்துவ வைத் தியர். அவனால் சமுதாயத்திற்கு எவ்வ ளவு பெறுமதியான சமூக சேவை நடக் கிறது. சின்னமகன் மின்பொறியி யலாளர். அவனால் முழுநாடுமே மிகச் சிறந்சேவையைப் பெறுகிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு இருவரையும் இருபக்கத்திலும் வைத்து அனைத்தபடி நித்திரை கொள்ளும் வரை கதை சொன் னமை ஞாபகத்திற்கு வந்த பொழுது கண்களில் நீர் முட்டியது. சில நாட் களில் கதை சொல்லிக் கொண்டிருக் கும் பொழுதே இடையில் பிள்ளைகளு க்கு முன்பாகவே பொடிஹாமினே தூங்கிவிடுவாள். விழித்துப் பார்த்தால் அண்ணன், தம்பி இருவருமே முற்றத் தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
காலந்தான் எவ்வளவு அதிசயமான
முறையில் பறந்து போயுள்ளது.
'ஒத்து வராத சூழலில் தனித்துப் போகாமல் நன்கு பழகிப் போன வீட்டி லேயே இருந்தால் எப்படி இருக்கும்." பொடிஹாமினே தனக்குள் நினைத் துக் கொண்டாள். மூத்த மகனின் பல த்த வேண்டுகோளினாலேயே கிராம த்தில் தமக்குச் சொந்தமான பரம்பரை வீட்டைக் குத்தகைக்குக் கொடுக்க
வேண்டி ஏற்பட்டது. மூன்று தலை முறையினர் அங்கு வாழ்ந்த போதும், ஒருவர் கூடக் குத்தகைக்குக் கொடுக்க வில்லை. அதிக வேலைப் பளுவினால் பெற்றோரை அடிக்கடி வந்து பார்க்க முடியாமையினால், அவர்களைத் தான் இருக்குமிடத்திற்கு அழைத்துக் கொள்ள மூத்தமகனுக்குத் தேவைப்பட்டது. அதனால் அவனது கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியாமல் இங்கு வந் தாலும், கிராமத்தை மிகவும் கவலை
யுடனேயே கைவிட நேர்ந்தது.
மீண்டும் கணவன் இருந்த பக்க மாய்க் கண்களைச் செலுத்தினாள் பொடிஹாமினே. அவரது மூக்கில் கிடந்த கண்ணாடி இறங்கி நாடியில் தங்கியிருப்பதைக் கண்டார். இன்னும் சிறிது நேரத்தில் அது கீழே விழுந்து நொருங்கி விடும் என்று நினைத்த அவள், அருகே போய்க் கண்ணாடி யைக் கழற்ற முயற்சித்தாள். ஆனால், கண்ணா டியில் கை வைத்ததுமே திடுக்கிட்டு எழுந்த அவர், பொடிஹாமி னேயைப் பார்த்துச் சிரித்து விட்டு மீண் டும் கண்ணாடி யைச் சரிப்படுத்திக் கொண்டார்.
"நல்லா தூங்கிட்டீங்க போல இரு க்கு. இப்போ மணிநாலாகப் போகுது."
பொடிஹாமினே சிரித்தப்படியே கூறினாள்.
" என்ன. நீங்க தூங்கலியா..?” அவர் ஆதங்கத்துடன் கேட்டார்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 率 42

'பகல்ல தூங்குறது எப்படிப் போனாலும். இரவைக்கும் எனக்கு தூக்கம் வருகுதில்ல. இடம் மாறிய தாலேயே என்னவோ எனக்கென்றா என்னென்றே தெரியல்ல."
அவளது முகத்தில் இருந்த புன் னகை வேகமாய் மறைந்து தொய்ந்து போனது.
"கொஞ்சம் நாள் ப்ழகினால் ன்ல் லாம் சரிப்பட்டுப் வந்திடும்." அவர் அவ ளைத் தேற்ற முயன்றார்.
"சரிப்பட்டு வரும் என்று நானென் றால் நினைக்கல்ல." அவள் விரக் தியுடன் கூறினாள்.
"நீங்க எதுக்கு இப்படி அலுத்துக் கணும். இது பிறத்தியார் வீடில் லையே. நம்மட மூத்த மகன்ட வீடு."
'எனக்கென்டா எங்கட வீடுதான் வசதி. திரும்பவும் அங்க போகலாம்னு தோணுது."
"நீங்க என்ன உளர்றிங்க. அந்த வீட்ட மூன்று வருடங்களுக்கு குத்தகை க்கு கொடுத்தத மறந்திட்டீங்களா..?
நீண்ட பெருமூச்சுவிட்ட பொடிஹா மினே மெளனமானாள். அவளது அை மதியை அவரால் தாங்க முயவில்லை.
"இந்தாங்க மருமகள் மனம் நோகு ம்படி ஏதாச்சும் பேசினாவா..? சொல் லுங்க."
அவர் வார்த்தையைத் தழைத் தபடி மிகவும் மெதுவாக வினாவினார். அவள் இல்லை என்பது போல் தலை யை இருபக்கமும் ஆட்டினாள்.
"அப்படின்னா என்ன..?"
அவர் வியப்புடன் கேட்டார். அப் பொழுதும் பொடிஹாமினே பேசாமல் இருந்தாள்.
'மகனும் மருமகளும் எங்க கானோம். " அவர் மீண்டும்
கேட்டார்.
"அவங்க ரெண்டு பேரும் நல்ல தூக்கம். சாப்பிட்ட பிறகு கொஞ்சம் சாய்றதுக்கு படுக்கைக்குப் போனா ங்க. மழையினால தூக்கம் போயி ருக்கும்- காலையில இருபது நோயா இருபது நோயாளிகள பார்க்கிறது என்றா
ளிகள- மாலையில
சாமான்யபட்ட விஷ யமா என்ன..! அசதி இருக்காதா பின்னே." பொடிஹாமினே சொன்னாள்.
'மழை பெய்றதினாலே இன்றை க்கு நோயளிங்க வரமாட்ளாங்க போலி ருக்கு." கணவர் பொடிஹாமினே யைப் பார்த்தபடி கூறினார்.
வீட்டில் என்றால் இந்நேரத்திற்கு இஞ்சித் தேநீர் தயாரித்து கணவரு க்குக் கொடுத்திருப்பாள்.தீபாவளிக்குக் கிராமத்துக்குப் போன வேலைக்காரி இன்னும் வரவில்லை. மருமகளும்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 43

Page 24
நல்ல தூக்கம். அவள் மெதுவாக எழு ந்து அடுக்களைக்குப் போய்த் தண்ணிர் கேத்தலை அடுப்பில் வைத்தாள். தண் னிர் கொதித்துக் கொண்டு வரும் போது, நிலைத் தட்டின் மேல் இருந்த சீனிப் போத்தலையும், தேயிலைப் போத்தலையும் எடுக்கக் கையை நீட்டி னாள் எட்டவில்லை. கால்விரல்க ளினால் எம்பி ஊன்றினாள், கைவிரல் களுக்குத் தட்டுப்பட்ட சீனிப் போத்தல் கீழே விழுந்து நொருங்கி எல்லா இட ங்களிலும் சிதறிப் போனது. திக்குக் காடிப் போன பொடிஹாமினே செய்வத றியாமல் சிலைபோல சமைந்து நின் றாள். சிறிது நேரத்தில் மருமகள் சகுந் தலா வேகமாக அவ்விடத்தை நோக்கி
வருவது தெரிந்தது. கைகளை இடுப்
பில் ஊன்றியபடி, கீழுதட்டினைக் கடித்
தபடி சிறிது நேரம் மாமியாரை வெறி த்துப் பார்த்த சகுந்தலா எதுவுமே பேசா மல் மீண்டும் தன் அறைப் பக்கமாக விர்ரென விரைந்தாள். அறைக்குள் இருந்து ஒலித்த சகுந்தலாவின் பேச்சுக் குரல் பொடிவுறாமினேக்குத் துல்லிய மாகக் கேட்டது.
'அஜித் உண்மையிலேயே உங் கட அம்மாவுக்கு என்ன பிடிச்சிருக்கு. நான் எழும்பி வரும் வரையில் கொஞ் சம் பொறுமையாக இருக்கத் தெரி யாதா என்ன. தேநீர் ஊற்றப் போய்ச் சீனிப் போத்தலக் கீழே போட்டு உடை ச்சுப் போட்டா. இவங்க ரெண்டு பேரும் இங்க இருந்தாச் சீக்கிரமாகவே எங்கட
குடும்ப வாழ்க்கையும் உடைஞ்சிடும். அவங்கள இங்க கூட்டி வர ஆலோசன கேட்ட போது நான் எவ்வளவு எடுத்துச் சொன்னன். கேட்டீங்களா. உங்கட அப்பாவும் அப்படித்தான். முழு ஊரு க்குமே கேட்கிறாப் போல மாலையில் "பன்சில் எடுக்கிறாரு. இது பன்சா லையா என்ன. "கன்ஸ்சல்டேசனு' க்கு வருகிறா சனங்க ஒருமாதிரியா சிரிக் கிறத நான் பார்த்திருக்கிறன்."
நிறுத்தாமல் தொடர்ந்து அவள் குரல் எதிரொலித்தது. அவள் பேசுவது உடைந்த போத்தலைப்பற்றி மட்டு
மல்ல; மனதில் அடங்கியிருந்த அனை
த்தையும் கொட்டுவதற்குச் சீனிப் போத் தல் உடையும் வரை காத்திருந்தது போல பேசத் தொடங்கினாள். மகன் ஏதாவது பதலளிக்கின்றானா என்று பொடிஹாமினே சிறிது உன்னிப்பாகக் காதுகளைத் தீட்டினாள். அவன் வாயைத் திறக்கக் காணோம்.
அவள் மீண்டும் தன் கணவன் இருந்த பக்கமாக வந்தாள். உள்ளே இருந்து சகுந்தலாவின் குரல் இன்னும் கேட்டது, என்றாலும் அவள் என்ன சொல் கின்றாள் என்பது தெளிவாக விளங்க வில்லை. பொடிஹாமினே கண்களில்
பொத்துக் கொண்டு வந்த நீரைத்
துடை த்துக் கொண்டாள்.
'சகுந்தலா எதுக்கு அப்படிச் சத்தமா பேசுறா..?' பொடிஹாமி னேயின் பக்கமாகத் திரும்பிய கணவர் கேட்டார்.
W. மல்லிகை ஆகஸ்ட் 2007 辜 44

'உங்களுக்குத் தேநீர் ஊற்றப் போய் என் கையால சீனிப் போத்தல் தவறி விழுந்திட்டுது. அதுதான் இப் படிப் பெரீசாச் சத்தம் போடுறா. அவள் குரலை மிகவும் தாழ்த்தியபடி சொன் 60TT6it.
‘சகுந்தலா தேநீர் ஊற்றிக் கொண்டு வரும்வரையில் காத்திருக்காமல் நீங்க எதுக்கு குசினிக்குப் போனிங்க. சரி...சரி. அத விட்டிடுங்க. மனம் நோகுற அளவுக்கு இங்க ஒன்றும் பெரீசா நடக்கலியே."
பொடிஹாமினேயின் கண்களில் நீர் பெருகுவதைக் கண்ட கணவர் ஆறுதல்படுத்தியபடியே கூறினார்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சகுந்தலா சிரித்த முகத்துடன், தேநீர்க் கோப்பைகளைத் தட்டில் ஏந்திய படி வாசலுக்கு வந்தாள். அவர்களிடம் தேநீரை நீட்டினாள். சிறிது நேரத்திற்கு முன்பு அவளின் முகத்தில் காணப்பட்ட கோபத்தின் estus) in L- இப்போது இல்லை.
சகுந்தலா தன்னிடம் பெரும் அபூத்திரத்தோடு இருந்தாலும், கண வரின் முன்னிலையில் அதனை வெளி க்காட்டாமல் சிரமப்பட்டு அடக்கிக் கொள்ளும் ரகசியம் பொடிஹாமினே க்குத் தெரியாதா என்ன? கணவரின் ாதிரே தன்னோடு சிரித்துப் பேசுகிற அவள், அவர் இல்லாத சந்தர்ப்ப ப்களில் முகங் கொடுப்பதே இல்லை
என்பதை அவள் நன்கு அறிவாள். தனது கணவர் கூட அதைத் தெரிந்தும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறரே எனப் பொடிவுறாமினே நினைத்தாள்.
ஒருநாள் சுற்றுலா செல்வதற்கு ஆயத்தமான மகனும், மருமகளும் விடை பெறுவதற்காக அவர்களின் அருகில் வந்தார்கள்.
"பகலைக்குச் சாப்பாடு சமைச்சி
வெச்சிருக்கிறன், பங்கிட்டுச் சாப்பி
டுங்க. இரவைக்கு நாங்க வரும்போது ஏதாச்சும் எடுத்திட்டு வாரம்."
சகுந்தலா சொன்னாள். அவர்கள் மோட்டார் வண்டியில் ஏறிச் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்த இரு வரும் வீட்டிற்குள் வந்தார்கள்.
"நான் இப்படியே இருந்தா கூடிய சீக்கிரத்தில நோயாளியாகி விடுவன். சும்மா இருந்து. சாப்பிட்டு தூங்கி எனக்குப் பழக்கமில்ல. அந்த ஆட்க ளுக்குச் சல்லியத் திருப்பிக் கொடுத் திட்டு எங்கட வீட்ட திரும்பவும் எடுக்க முடியுமான்னு பாருங்க."
சாய்வு நாற்காலியில் கிடந்த கணவரைப் பார்த்தபடி பொடிஹாமினே கூறினாள். அவர் பதிலளிக்காமல் பரிகாசமாய்ச் சிரித்தார். அந்தச் சிரிப்பி னால் அவள் மனம் நொந்து போனது.
“எதுக்கு இப்படிச் சிரிக்கிறீங்க.?
மல்லிகை ஆகஸ்ட் 2007 奉 45

Page 25
"பொடிஹாமினே. ஓங்கட பேக்சு க்குச் சிரிக்காமல் இருக்க முடியுமா..? நொத்தாரிசுட முன்னால ஒப்பமிட்ட குத்தக ஒப்பந்தத்த அவ்வளவு லேசா ரத்துச் செய்ய முடியுமா என்ன..? அதோட திரும்பவும் கொடுக்க எங்களு க்கு காசு எங்கால.?"
அவர் சொன்னார். பெருமூச்சு விட்ட பொடிஹாமினே மீண்டும் கண வரை ஏறிட்டாள்.
'நாங்கள் ரெண்டு பேருமே சிறையில் விழுந்திட்டதா நெனைக் கிறன். எந்தவித சுதந்திரமுமே இல்ல. மாலையில நீங்க "பன்ஸில்" எடுக்கிறதப் பற்றிக் கூட மருமகள் குறையா சொன்னத நான் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தன்."
"அது எனக்கும் விளங்கிட்டிது. அவ சொல்லும் வரையில் நிற்காமல் நேற்றில் இருந்தே பன்ஸில் எடுக்கிறத நிறுத்திட்டன். பஞ்சமா பாவங்கள் செய் யாமல் தவிர்ந்து நடக்கிறதா இருந்தா பன்ஸில் எடுக்கவில்லையென்பது அப்படி ஒன்றும் பெரியதப்பு இல் லை."
அவர் அமைதியாகப் பதிலளி த்தார். எப்பொழுதும் ஆழமாக சிந்தித் துச் செயற்பட அவர் பழக்கப்பட்டிருந் தார்.
இரவுப் பொழுதும் நன்றாகக் கடந் தும் மகனும், மருமகளும் வந்தா பாடி ல்லை. அடக்க முடியாத பசி எழுந்
தாலும், பொடிஹாமினே அது பற்றிக் கணவருக்கு வெளிப்படுத்தாமல் இருந் தாள். என்றாலும், கணவரைப் பட்டினி யில் கிடத்தியமைக்காக மூத்தமகன் மீது கோபம் பொங்கி எழுந்தது.
'பசியின்னா ரொட்டியொன்று சுட்டி ட்டு வரட்டுமா. கோதுமை மா இருக்கிற
இடம் எனக்குத் தெரியும்." அவள்
அநுதாபம் மேலிடக் கேட்டாள்.
"வேணாம். அவங்க வழியில் வந்துகிட்டு இருப்பாங்க. எதுக்கும் கொஞ்சம் பார்ப்பம்." அவளது கோரிக் கையை மறுத்துப் பேசினார்.
"எனக்குத் தூக்கமா இருக்குது. நானென்றா படுக்கப் போறன்." அவள் சோர்வுடன் கூறினாள்.
"சரி. நீங்க போய்ப்படுங்க. பிள் ளைங்க வந்ததும் நான் எழுப்புறன்."
பொடி ஹாமினே அறைக்குள் போய்க் கட்டிலில் சாய்ந்தாள். ஒரு நாளாவது கணவரை இதுபோல பட்டி னியில் போட்டதாக அவளுக்கு ஞாப கத்தில் இல்லை. தானும், கணவரும் சந்தோஷமாக அமைதியாக இருந்து நாட்களைக் கழித்தமை நினைவில் வந்து மோதியது. கிழமைக்கு இரண்டு மூன்று தடவையாது தனது கைகளி னால் தயாரித்த இலைக் கஞ்சியைக் கரிசனையோடு கொடுப்பாள். விருப்பமான ஒன்றைப் பற்றிப் பேசி னால் இயன்றளவு தரமாக, வாய்க்குச் சுவையாகச் சமைத்துக் கொடுப்பாள்.
சாப்பிட
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 46

அதற்கு முற்றாக மாறுபட்ட ஒன்றே தற்போது நிகழ்ந்துள்ளது. மருமகளி னால் வழங்கப்படும் உணவு வகையறா க்களுக்கு எல்லைப்பட்டு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
நள்ளிரவு நேரம் மூத்தமகனின் மோட்டார் வண்டி கராஜ0க்குள் நுழை யும் சத்தம் கேட்டது. அதைத் தொடர் ந்து கணவர் கதவைத் திறக்கும் சத் தம், மகனும் மருமகளும் வீட்டிற்குள் புகுந்து கதைக்கும் சத்தம் அனைத்தும் பொடிஹாமினேக்குக் கேட்டது.
"அம்மா தூங்கிட்டாவா..?”
"தூக்கமாயிருக்கும்னு நெனைக் கிறேன்."
மூத்தமகனுக்குக் கணவர் அளி த்த பதில் கூட துல்லியமாகக் கேட்டது.
தூக்கம் கண்களைத் தழுவிக் கொண்டிருந்தபோது கணவர் தமது தோள்களை அசைப்பது விளங்கியது.
"பொடிஹாமினே . எழும்புங்க -
வாங்க போயி சாப்பிடுவம்."
“எனக்குப் பசியில்ல. நீங்க போய் சாப்பிடுங்க."
பசியை எந்தவழியிலாவது அடக் கிக் கொள்ள வேண்டும் என்ற உறுதி யோடு பதிலளித்தாள். பலதடவை முயன்ற கணவர் அவள் எழும்பா ததினால் அறையிலிருந்து வெளியே சென்றார்.
பீறிட்டு
சிறிது நேரங்கழித்து வந்த அவர் தனக்கு அருகாமையில் உறங்கிக் கொண்டிருப்பது பொடிஹாமினேக்கு விளங்கியது.
*சாப்பாட்டுக்கு என்ன கொண்டு வந்திருக்காங்க..?" பொடிஹாமினே இரகசியக் குரலில் கேட்டாள்.
“தெரியல்ல. நானும் பசியில்லை ன்னு சொல்லிட்டன். நீங்க பட்டினியில இருக்கிறபோது நான் எப்படி ஹாமினே சாப்பிடுவன்."
அவர் குரல் தளதளக்கக் கூறி னார். கணவர் மீது ஏற்பட்ட பரிவினால்
எழுந்த sഞ്ഞ് கன்னங்களில் கோடிட்டது.
மறுநாள் பொடிஹாமினே குளிய லறைப் பக்கமாக செல்லும் போது சகுந்தலாவினதும், மகனினதும் பேச்சு க்குரல் கேட்டது.
"எங்களுக்குப் Lunt Llib La5 Loll-ġ5 தான் ரெண்டு பேரும் சாப்பிடாமல் இருந்திருக்காங்க. சல்லி செலவழிச்சு கொண்டு வந்த சாப்பாடெல்லாம் வீண்."
சகுந்தலாவின் குரலில் கோபம் கொந்தளித்தது.
‘சகுந்தலா. குற்றம் எங்கட மேல தான் - நாங்க நல்லா சுணங்கிட்டம்.
அப்பாவும், அம்மாவும் நேரம் பிந்திச்
சாப்பிட்டுப் பழக்கமில்ல. நான் கூட சாப்பாடு வாங்கிறதா. இல்லையா
மல்லிகை ஆகஸ்ட் 2007 &47

Page 26
என்று ரெண்டு மனசோடுதான் வாங்கி வந்தேன்." மகன் சமாதானப்படுத் தினான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை பொடி
ஹாமினேயைப் பார்ப்பதற்காக இளைய மகன் வந்திருந்தான். அவ னது வருகை எல்லோருக்கும் பெரும் உவகையை ஏற்படுத்தியது. குறிப்பாக பொடி ஹாமினே பூரித்துப் போனாள்.
'தம்பி. சுரங்கனிய ஏன் கூட்டிட்டு வரயில்ல?’ அண்ணன் ஆதங்கத்து டன் கேட்டான்.
'அவக்கு நாள் கிட்டத்தானே அண்ணா- இந்த நாட்கள்ல பயணம் போறது அவ்வளவு லாயக்கில்ல - கவனமா இருக்கச் சொல்லி டொக்டர் வேறு சொல்லியிருக்காரு."
"அப்போ தம்பி எதுக்கு திடீரென்று வந்தீங்க- என்ன விஷேசம்."
'அம்மாவ கொஞ்ச நாளைக்கு எங்கட வீட்டுக்குக் கூட்டிட்டு போக உங்கக்கிட்ட கேட்கலாம்னு வந்தன். பரவாயில்லதானே. இந்த நாட்களில் சுரங்கனிட அம்மாவும் கனடாவில தங்கச்சிட வீட்டுக்குப் போயிருக்கா. '
"பரவாயில்ல. பரவாயில்ல. இந்த மாதிரி நேரத்தில பெரியவங்க கட்டாயம்
கிட்ட இருக்கணும்."
சகுந்தலா குறுக்கிட்டு அவசரமாகக் கூறினாள்.
பொடிஹாமினேயின் மனதில் ஆயிரம் பூக்கள் பூத்தன.
சகுந்தலாவிடமிருந்து விடுபட்டு, கணவரோடு எந்தத் திக்கிற்குப் போனாலும் நிம்மதி என்று பொடிஹா மினே ஒரு நாளைக்குப் பல தடவை நினைத்துக் கொள்வாள். அத்தோடு மூத்த மருமகளை விட சின்ன மரு மகள் ரொம்ப பாசம் மிகுந்தவள் என்ற உறுதியான நம்பிக்கை அவளுக்குள் வேரூன்றியிருந்தது.
'அப்படின்னா. நாங்க அங்க போக ரெடியாகுவம்." கணவரின் அருகே சென்ற பொடி ஹாமினே அவரை அவசரப்படுத்தினாள்.
"நான் அங்க போறதுக்கு மூத்த மகனுக்கு விருப்பமில்ல. அதனால ஹாமினே - நீங்க போங்க- நான் இங்க நிற்கிறன்." அவர் குழறியபடியே கூறினார்.
'நீங்க இல்லாமல் நான் என் றைக்கும் இங்கிருந்து அசைய மாட் டன். நீங்க வாரதென்றா மாத்தி ரம்தான் நான் போவன் ஆமா." அவள் உறுதியாகப் பதிலளித்தாள்.
"அப்படிச் சொல்லாதீங்க பொடி ஹாமினே. நீங்க போங்க. நான் இங்க நிற்கிறன். நாங்க ரெண்டு பேருமே போனா மூத்த மகன்ட முகத்தில அறைஞ்ச மாதிரி இருக்கும்." அவர் அவளைத் தேற்ற முயன்றார்.
"நாங்க ரெண்டு பேரும் இதற்கு
முந்தி ஒருபோதுமே பிரிஞ்சி இருந் ததில்ல. இப்போ பிள்ளைங்க் ரெண்டு
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 48

பேராலும் நாங்க ரெண்டு பேரும் பிரியும்படியா ஆகிட்டுது. பார்த்தீர் களா.." அவள் நாத் தளுதளுத்தது.
"பொடிஹாமினே. நாங்க பிள்ளை களுக்கு சுமையா இருக்கிறது நல்ல தில்ல. நீங்க கொஞ்ச நாளைக்கு இளைய மகன்ட வீட்டில தங்கிட்டு வாங்க. நீங்க வந்த பிறகு நான் அங்க போறன்."
பொடிஹாமினே அறைக்குள் நுழைந்து சேலையை அணியத் தொட ங்கினாள். இவ்வளவு காலமும் சுதந் திரமாக வாழ்ந்த தானும், கணவரும்
பிள்ளைகளினால் ஆட்டப்படுகின்ற く
இரு பொம்மைகளாக மாறிவிட்டதை நினைத்தாள். சின்ன மகனுடன் வீட் டை விட்டு வெளியேற முன்பு கண வரின் பக்கமாய் நெருங்கினாள். கண் களிலிருந்து வழிகின்ற கண்ணிரோடு விம்மலும் சேர்ந்து அவளால் பேச முடியவில்லை. கீழுதட்டைக் மென்ற படி சிறிது நேரம் கேவினாள். கணவ ரின் கண்களிலும் நீர் குளம் கட்டியிரு ந்தது.
"மூன்று வருடங்களும் அவசரமா கழிஞ்சிடும். அப்புறம் நாங்க திரும் பவும் எங்கட வீட்டுக்குப் போகலாம்."
விம்மல் நின்று பேச முடியுமான கட்டம் வந்தபோது, அவள் வாய் மெது வாகப் பிரிந்து அசைந்தது.
|-ELRPPY
錢糧
PHOTO
'. Excellent
Photographers Modern Computerized
... Photography
...For edding Portraits స్టీ & Child Sittings
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 49

Page 27
இருe அந்இது துழ்ே தேசில் இடிகிவிரிஞ்இட0) இதில்ரு ஹில்இiல் இல்லீeரு விழரி
நூல் வெளியீட்டு விழாவின்போது சிறப்புப் பிரதியை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்களிடமிருந்து மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு. எம். ஆபேல் றெவல் அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்.
மன்னர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர் தமிழ்நேசன் அவர்கள் எழுதிய "தண்ணிருக்குள் தாகமா?" மற்றும் வெளிச்சத்தின் வேர்கள்' என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த யூன் மாதம் 30ம் திகதி மன்னாரில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவுக்கு மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். மன்னார் அரசாங்க அதிபர் உயர்திரு. ஏ. நீக்கிலாப்பிள்ளை, மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் உயர்திரு. எம். ஆபேல் றெவல், மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து
கொண்டனர்.
இவ்விழாவுக்கு மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணியாளர் பி. யேசுராஜா அடிகளார் தலைமை தாங்கினார். நூல் வெளியீட்டு உரையை அருட்பணியாளர்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 50
 

அன்பு ராசா (அமதி) அவர்கள் நிகழ் த்தினார். முதல் பிரதியை முத ன்மை விருந் தினர் மேதகு மன்னார் ஆயர்
6T6).
அவர்கள் நூலா சிரியரின் மூத்த சகோதரர் திரு. பி. ஆசீர்வாதம் அவர்களுக்கு வழங் கினார். நூல்களுக்கான நயப்புரை
களை மன்னார் மறை மாவட்ட பொதுநிலையினர் பேரவைத் தலைவர் திரு. ஏ. அந்தோனிமுத்து அவர்களும் மன்னார் வலயக் கல்விப் பணிப் பணிமனையின் தமிழ்ப்பாட ஆசிரியர் ஆலோசகர் திருமதி பெப்பி விக்ரர் அவர்களும் நிகழ்த் தினார்கள். தொடர்ந்து முதன்மை விருந்தினரும் சிறப்பு விருந்தினர்களும் ஆசியுரைகளை வழங்கினார்கள். இறுதி நிகழ்வாக முருங்கனைச் சேர் ந்த கலாபூசணம் கலைஞர் குழந்தை
G6ub (3 ul.
அவர்களின் நாடகம் இடம்பெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் 600க்கும் அதிகமான மக்கள் கலந்து சிறப்பித்தனர். அண்மைக் காலத்தில் இலங்கையில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாக்களில் அதிக தொகையான மக்கள் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழாவாக இந்நிகழ்வு
நூலின் விலை
அமைந்திருந்ததென விழாவில் பங்
கேற்ற பலரும் கருத்துத் தெரிவித்திரு ந்தனர்.
"மன்னா" வெளியீடாக வெளியிட ப்பட்ட இந்நூல்கள் கிறிஸ்தவ மக்களி டையே பெரும் வரவேற்பைப் பெற்றுள் ளன. தண்ணிருக்குள் தாகமா? என்ற நூல் இறைவனின் இனிய இயல்பு களை விவிலியக் கண்ணோட்டத்தில் வெளிக் கொணரும் நூலாக அமைந்து ள்ளது. வெளிச்சத்தின் வேர்கள்' என்ற நூல் செபம் பற்றிய புரிதல்களை விவிலிய இறையியல் பார்வையில் வழங்கும் நூலாக உள்ளது.
"தண்ணிருக்குள் தாகமா? என்ற 1 00.00 eburt. வெளிச்சத்தின் வேர்கள்' என்ற நூலின் விலை 200.00 ரூபா. இந் நூல்களை அனைத்து மறைமாவட்ட மறைக்கல்வி நிலையங்களிலும் மற் றும் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள றண்ஸ்கா கிறீற்றிங்ஸ் கடையி லும், சென் மைக்கல் கடையிலும் பெற்றுக் கொள்ளலாம்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 51

Page 28
பேனாவால் பேசுகிறேன்-SS
- நாச்சியாதீவு பர்வீன் EEL”LITT
எல்லாவற்றையும் தீர்மானிக்கவும், தீர்க்கவும், ஆராயவும் கற்றுவிட்ட மனிதன் மரணத்திடம் மட்டுமே மண்டியிட்டுத் தோற்று நிற்கின்றான் மரணம் என்ற அந்தப் புள்ளியால்த்தான் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகின்றது. மரணம் நிச்சயம் என்று பூரணமாய்த் தெரிந்து கொண்டே பேயாட்டம் போடுகின்ற மனிதன், மரணத்தை வென்று விட்டான் என்றால், அவனைப் பிடிக்கவும் முடியுமா? எல்லாம் வல்ல இறைவனின் மிக நுட்பமான அறிவிற்கு மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்றாக மரணத்தைக் கொள்ளலாம்.
மரணம் நிகழ்வது நிஜம். அதுவும் மறுக்க முடியாத நிஜம். இந்த நிஜம் மனிதன் என்ற வகையில் நமக்குப் பெரிதாய்ச் சந்தோஷத்தைத் தருவதில்லை. இருந்தும் தினமும், மரணங்கள் நிகழ்ந்து கொண்டும், ஏதாவது ஒரு வகையில் மனித உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டுமுள்ளதை நாம் அன்றாடங்களில் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சில மரணங்கள் நமக்குச் செய்தியாகின்றன, சிலரது மரணங்கள், நம்மை அதிர்ச்சிக்குள்ளாகின்றன, சிலரது மரணங்கள் நம்மை அழவைக்கின்றன. இன்னும் சிலரது மரணங்கள் நம்மை பாதித்து விடுகின்றன! நமக்குள் ஒரு முள்ளாய் உருவெடுத்துத் தினம் தினம் நினைவுகளால் நம்மை உராய்ந்து பார்க்கும். இந்த மாதிரியான நம்மைப் பாதிக்கும் மரணங்களிலிருந்து நாம் விடுபடுவது என்பது எப்போதும் மறக்க முடியாத ஒன்றாகும். இப்படி என்னைப் பாதித்த மரணங்களில் ஒன்றுதான் இங்கே கட்டாரில் புஸ்பா அய்யாவின் மரணம் ஆகும். z
எனது உம்மம்மா (அம்மம்மா), அம்மப்பா, ஆகிய இருவரின் மரணங்கள் இன்னும் எனக்குள் வேதனையையும், சொல்லொணாத் துயரத்தையும் தந்து கொண்டுதான் இருக்கின்றன. எனது அம்மம்மா மிக அன்பானவர். எனது சிறுபராயத்திலே அவரது மடியிலே நான் படுத்துக் கொள்வேன். எனது தலையை
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 52

அன்பாக வருடிவிட்ட வண்ணம் ராஜா ராணிக் கதைகள் சொல்லுவார். நிலாக் கால நாட்களில் எங்கள் குடும்பத் தவர்கள் எல்லோரும் முற்றத்தில் இருந்து சுவாரசியமாகக் கதைத்துக் கொண்டிருப்போம். அப்போது எனது அம்மம்மா அவரது காலத்தில் நடந்த தாகப் பேய் பற்றிய பல கதைகளைக் கூறுவார். அவரது பெயர் சேகுஉம்மா. நாங்கள் ஆச்சா ஆச்சா என்றுதான் கூப்பிடுவோம். கதை வேணுமா ஆச்சா விடம் போய்விடுவோம். காசு வேணுமா! ஆச்சாவிட்ம் போய்விடுவோம். எதற்கும் எப்போதுமே அவர் சலித்துக் கொண்ட தேயில்லை. அவ்வப்போது குடும்ப த்தில் எழுகின்ற சின்னச்சின்னப் பிரச் சினைகளுக்கு எத்துணை சாதுரிய மாய் அவர் தீர்ப்பு வழங்குவார் தெரி யுமா? அப்போது எல்லாம் அது புரிய வில்லை. ஆனால் ஆச்சாவின் (அம்ம ம்மா) மீது எனக்கு அபார அன்பு இருந் தது. முன்னர் ஆடு, மாடு என்று والثالا பட்டியாய் அவர்களிடமிருந்தது. சில வேளைகளில் ஆடு ஒட்டுவதற்கு என் னையும் ஆச்சா கூப்பிடுவாங்க, அப் போதுகளில் எல்லாம் நபித்தோழர் களின் வரலாறுகளையும், நல்ல புத்தி
மதிகளையும் எனக்குப் போதிப்பார்.
வீட்டில் சில பொழுதுகள் நாங்கள் குழப்படி செய்ததற்காக உம்மா அல் லது வாப்பா அடிக்க வந்தால் எங்க ளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாப்பது
ஆச்சாவின் முந்தானைதான். சத்தம் போட்டுப் பேசத் தெரியாதவர். நல்ல பய ஐந்து நேரமும் தவறாமல் தொழுகின்றவர். பக்கத்து
பக்தி ஆனவர்.
வீடுகளில் என்ன பிரச்சனை என்றா லும் ஆச்சாதான் சென்று சமாதானப் படுத்தி விடுவார். என் வயதை ஒத்த எல்லாப் பிள்ளைகளும் அப்போது
அவரைச் சேகுமாச்சா என்றுதான்
அழைப்பார்கள். அதிர்ந்து நடக்கவோ, அவசரத்தில் காரியமாற்றவோ முனை யாதவர். மிக மென்மையானவர். நான றிந்து அவர் யாரிடமும் சண்டை பிடித்த தில்லை. இத்தனை நல்ல குணங் களையும் கொண்ட எனது ஆச்சா ஒரு நாள் இறந்து போனார். என்னால் அந்த மரணத்தை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை என்பதை விடவும், நம்ப முடியவில்லை என்பதே நிஜம். சம்பிர தாய பூர்வமான மதச் சடங்குகளை நட த்தி ஆச்சாவின் இறுதிக் கிரிகைகளை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்த போதும், என்னால் ஆச்சாவின் மரண த்தை நம்ப முடியவில்லை. அதனால் எனது கண்களிலிருந்து கண்ணிர் கூட வரவில்லை. ஆச்சாவின் மரணத்தி னால் எனது முழுக் குடும்பமுமே சோக த்தில் அழுது ஆர்ப்பரித்துக் கொண்டி ருந்தது. யாரையும் யாராலும் அறுதல் படுத்த முடியவில்லை. தினமும் 6Trissi குடும்பத்தவர்கள் கூடுவதும்
அழுவதும் ஆர்ப்பரிப்பதுமாக நாட்கள்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 53

Page 29
கடந்தன. சுமார் இரண்டு மூன்று மாதங் கள் கடந்த பின்னால் எனது குடும்ப த்தினர் மெல்ல மெல்ல சகஜநிலைக்கு திரும்பி போனார்கள். இருந்தும் ஆச்சா வின் நினைவுகளை அவர்கள் தினமும் அசைபோட்டுக் கொண்டும், மனதுக்கு ள்ளால் அழுது' கொண்டும் தான் இருந்தார்கள். இந்தக் காலப்பகுதியில்
எனக்குள் வெளிப்படுத்திக் கொள்ள
முடியாத ஏதோ ஒரு வேதனை, உருக் கொண்டிருந்தது. வாய் விட்டு அழ வேண்டுமென்று தோன்றும் ஆனால் காரணம் புரியாது.
ஒரு நாள் கெக்கிராவயில் இருக் கும் எனது சாச்சி (அம்மாவின் தங்கை) யின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். எனது சாச்சியின் சின்ன மகள் அஸ்ரிபாவுக்கு அப்போது 3 அல்லது 4 வயது இருக்கும். என்னோடு மிகவும் இரக்கமான அந்தப் பிள்ளை எனது ஆச்சா பற்றி நானும் பேசிக் கொண் டிருந்த போது வாய்விட்டு அழுது விட்டாள். 'உம்மம்மா, உம்மம்மா' என்று அந்தப் பிஞ்சு அழுததைப் பார்த்தவுடன் என்னால் என்னையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணிர் திரள் திரளாக என் கண்களை நிரப்பிக் கன்னங்களில் வழிந்தோடியது. அன்று தான் எனது உள்மனம் ஆச்சாவின் மரணத்தை ஒப்புக் கொண்டது. என் னால் தாங்கிக் கொள்ள முடிய
வில்லை. இதயம் கனத்தது. அன்று இரவு முழுக்க ஒ. வென்று அழுது முடித்தேன். இருந்துமென்ன எனது ஆச்சா பற்றிய பசுமையான நினைவு
களையும் அசை போடுகின்ற போது
இன்னும் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியவில்லை.
இப்படித்தான் எனது உம்மப் பாவும், அவர் ஒரு சரித்திரம் குணத் தில் ஆச்சாவுக்கு எதிர்மாறனவர். ஆனால் நேர்மையானவர், கடுமையான உழைப்பாளி. உழைப்பை நம்பியே வாழ்ந்தவர். அவரது சொந்த இடம் ‘கெக் கிராவ' என்பதாகும். எனவே அவரை கெக்கிராவ முதலாளி என்று தான் அழைப்பார்கள். அவரது முழுப் பெயர் அப்துல் காதர் ஜெய்னுல் ஆப்தீன். ஊரார் காலப் போக்கில் S96u6ODU '6Jáfuuř'(Abdul cader) 676ôTG3gp அழைத்து வந்தனர். ஊரிலே "ஏசியார் அல்லது கெக்கிராவ முதலாளி என்று சொன்னால் மட்டும் தான் தெரியும். விரல் விட்டு எண்ணக் கூடியவர்களு க்கு மட்டுமே அவர் பெயர் தெரியும். அவருக்குப் பத்துப் பிள்ளைகள். ஆறு பெண்கள், நாலு ஆண்கள். இவர்க ளைப் படிக்கவைத்து நல்ல இடத்தில் கல்யாணம் முடித்துக் கொடுத்து விட்டு, தனியாளாய் நின்று சாதித்தவர் அவர். அவரை நினைக்கும் போது எனக்குப் பொறாமையாக இருக்கும். ஊரிலே
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 54

கொடுக்கல் வாங்கல் விசயத்தில் நேர்மைக்குப் பேர் போனவர். எனது அம்மா அவரது மூத்த பிள்ளையாகும்.
96.Jgs எங்களுக்கும் நல்ல மதிப்பு இருந்தது. ஆரம்பத்தில் மிகவும் கஸ்டப்பட்டவர். உழைத்து உயர்ந்து சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தவர். அவருக்கு முன்னால் நின்று எதிர்த்துப் பேசவே முன்னர் பயப்
6T607 (36, பேரர்களான
լճ681 601 if Lւgւնւսւգաn &
படுவார்களாம். கடைசியில் அவருடன் சில வருடங்கள் கழித்தேன். அவரது un 6Ùա நினைவு களை எனக்குச் சுவைப்படச் சொல்வார். ஆச்சாவின் மரணம் அவரை ரொம்பவும் பாதித்தி ருந்தது. அடிக்கடி அதை ஞாபகப்படு த்திக் கொண்டிருப்பார், ஒரு சிங்கமாய் எங்கள் ஊரில் வலம் வந்த எனது உம்மப்பா ஒருநாள் படுத்த படுக்கையா கிவிட்டார். சில நாட்களில் மரணித்தும் போனார். ஆனால், அவரது மரணம் நிறையப் பாடங்களைக் கற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் என்னைக் கண்ணிர் விட்டும் அழவைத்தது.
ஒரு சரித்திரம் முடிந்து போன அந்தக் கணங்களை இற்றை வரை க்கும் என்னால் மறக்க முடியவில்லை.
என் ஒவ்வொரு அசைவுகளிலும், உம்ம
ப்பாவின் கடுமையான உழைப்பையும், தைரியத்தையும் எதையும் எதிர்க்
கொள்ளும் நெஞ்சுரத்தையும் நான் (
வியந்து கொண்டுதான் இருக்கின் றேன். என் அன்றாடங்களில் உம்மப் பாவை நான் நினைக்காத நாளேயி
6,606) 6T60TsorT. b.
இப்படித்தான் புஸ்பா அய்யா என்கின்ற சிங்கள நண்பனின் மரண மும் என்னுள் தாங்கவொனா வேத னையை உண்டு பண்ணிப் பல நாட்க ளாக என் இரவுத் தூக்கத்தைக் கெடுத் துக் கொண்டிருக்கின்றது.
புஸ்ப அய்யாவின் முழுப் பெயர் மஹறிந்த புஸ்பகுமார என்பதாகும்.
ஹற்றன் ஏரியாவில் பிறந்து வளர்ந்து
பெஹலிய கொடையில் திருமணம் முடித்து நேவி (Navy)இல் 12 வருட ங்கள் தொழில் புரிந்து விட்டு கடந்த மூன்று வருடங்களாகக் கட்டாரில் வந்து வேலை செய்து கொண்டிருந்தார். ஹற்றணில் பிறந்ததினால் தமிழ்
மொழியை நன்றாகப் பேசுவார். அதிகம்
யாருடனும் ஒட்டிக் கொள்ளாத புஸ்ப அய்யா, காலப் போக்கில் சில சந்திப் புக்களின் பின்னால் என்னோடு நண்ப னாகிப் போனார். பிற்பாடு எனது நண் பர்கள் எல்லோருக்கும் புஸ்ப அய்யா நண்பர் ஆகிப்போனார். மஹிந்த புஸ்ப குமார என்ற அவரது முழுப் பெயரை நாங்கள் புஸ்ப அய்யா என்பதுதான silsillyCBuTub.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 55

Page 30
புஸ்ப அய்யாவுடனான நெருக்க மான உறவுக்கு 15ஆவது ஆசிய விளையாட்டு விழாவும் ஒரு காரண மாகும். ஆம் ஆரம்பத்தில் புஸ்ப அய்யா எங்களோடு குறிப்பாக என்னோடு நெருங்கிப் பழகியவுடன் எங்கள் எல்லாச் செயற்பாடுகளிலும் புஸ்ப அய்யாவையும் சேர்த்துக் கொள்வோம். எங்கள் வேலை நேரம் காலை 6.00 மணி தொடக்கம் 2.00 மணி மட்டுமாகச் சில காலம் இருக்கும். இந்தக் காலப்பகுதியில் பின்னேரப் பொழுதுக ளில் நாங்கள் கிரிக்கெட் விளையா டுவது வழக்கம். ஆரம்பத்தில் வெறும் பார்வையாளராக இருந்த புஸ்ப அய்யா மற்றும் அவரது றுாமில் வசித்த ரிஸ்வி, விஜேந்திரன் ஆகியோர் போக்கில் எம்மோடு இணைந்து விளை
5 T6)ü
யாட ஆரம்பித்தனர், தினமும் பின் னேரம் 4.00 மணியிலிருந்து 6.00 மணி மட்டுக்கும் எங்களது விளையாட்டுக் களை கட்டிவிடும். இந்தியா- பாகிஸ் தான் மேச்சில் மோதுவதாய் எங்கள் அணிகள் மோதிக் கொள்ளும். அந்த மாலைப் பொழுதுகள் எத்துணை சுக மானவை என்று வார்த்தைகளால் சொல்ல முடியாதது. என்ன விடய மென்றாலும் புஸ்ப அய்யா என்னோடு கலந்தாலோசிப்பார். கருத்துக் கேட் பார். இப்படித்தான் 15ஆவது ஆசியன் விளையாட்டு விழா கட்டாரில் நடக்கப்
போவதையும், அதற்காகத் (Volun
teers)
கொள்ளப்
தொண்டர்கள் சேர்த்து போகின்றார்கள் என்பதையும் புஸ்ப அய்யாவும் அவரது வந்து சொன்னார்கள். ஏலவே, இது பற்றிப் பத்திரிகையின் மூலம் நான் அறிந்து வைத்திருந்தாலும், புஸ்ப அய்யாவி னதும் ரிஸ்வியினதும் தூண்டல்
நண்பர் ύείυ 6θluιο
காரணமாக நானும் எனது நண்பர் களும் எங்களது பெயர்களையும் பதிந்து கொண்டோம்.
ஆனால் எங்கள் கம்பனி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆசியன் கேமுக்கு பெயர் பதிந்தவர்களை எல் 6uom ub உடனடியாகத் தமது பெயர் களைக் கென்சல் செய்யுங்கள் என்று எங்கள் மேற்பார்வையாளர்கள் மூலம் அறிவி த்தது. இதற்குக் காரணம் விளையாட்டு நடக்கும் S. 6) எல்லையான 15 நாட்க ளுக்கும் அதற்கு முன்னான சுமார் ஒரு காலப்பகுதிக்கும் எமது கம்பனியிலி ருந்து (Release) வேலை விடுப்புக்கு அதிகமானவர்கள் கம்பனிக்கு விண் ணப்பித்திருந்தமையே. கம்பனியின் கடுமையிான கட்டளைக்கிணங்க அனைவரும் அவசர அவசரமாகத்" தமது பெயர்களைக் கென்சல்' பண்ணி விட்டார்கள். இந்த நேரத்தில் நானும்
புஸ்ப அய்யாவும், இன்னும் சில நண்ப
ர்களும் எது நடந்தாலும் பரவாயில்லை என்று பெயர்களைக் கென்சல் பண்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 56

ணாமல் விட்டு விட்டோம். இறுதியில் 15ஆவது ஆசியன் விளையாட்டில், நானும் , புஸ்ப அய்யாவும் , எனது நண்பர்கள் சிலரும் தொண்டர்களாகப் பணியாற்றினோம். கம்பனிக்கு இது தெரிந்தும் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை.
இந்தக் காலப் பகுதியில் எனக்கும் புஸ்பா அய்யாவுக்குமான உறவு
வலுத்தது. என்னோடு மனம் விட்டுப்
பேசும் புஸ்பா அய்யா, எப்போதும் நமது நாட்டு யுத்தம் பற்றியே பேசுவார். பெறுமதியான உயிர்கள் தினமும் அழிவது பற்றிக் கவலைப்படுவார். அவரது சமூகம் பற்றிய பார்வையும், அறிவும் ஆழமானவையாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பாகு பாடு களையும் தாண்டி, மனிதர்களை நாம் மனிதர்களாக மதிக்காத வரையில் சமாதானம் பற்றிச் சிந்திக்க முடியாது என்பார். என்னை எழுதத் தூண்டு வார். இன்றைய எமது நாட்டின் அத்தி யாவசியத் தேவை சகல இனங்க ளுக்குள்ளும் புரிந்துணர்வை வளர்க்க வேண்டும் என்பார். ஆரம்பத்தில் சிங் கள, தமிழ், முஸ்லிம் உறவுகள் ஆரோ க்கியமாக இருந்ததையும், பின்னர் அரசியல் சதிகளினால் அந்த உறவு கள் இன்று துருவங்களாக பிரிந்திருப் பதையும், கோடிட்டுக் காட்டினார். இப்படி இப்படி எத்தனையோ, முற்
போக்குச் சிந்தனைகளின் சொந்தக் காரன் தான் புஸ்பா அய்யா.
தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பாகுபாடுகளையும் தாண்டி எல்லா இனங்களை சமமாக மதிக்கத் தெரிந்த வர் புஸ்ப அய்யா. நாட்களின் நகர்வில் புஸ்பா அய்யாவின் வேலைத்தளம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது. அவரது விடுதியும் மாற்றப்பட்டது. கவலையோடு எம்மிடம் விடைபெற்றுச் சென்றார். இருந்தும், ஒவ்வொரு நாள் காலையும் நானும் புஸ்பா அய்யாவும் தொலைபேசியில் நாட்டு நிலவரங் களைக் கதைப்பது வழக்கம். தினமும் ந்ாம் கதைப்பதினால் நாங்கள் வெவ்
வேறு இடங்களில் வேலை செய்லவதும்
பெரிய இடைவெளியாக்த் தெரிய
வில்லை.
அன்று ஒரு சனிக்கிழமை, உல கக் கிண்ண கிரிக்கெட் சுற்றில் நமது அணி இறுதிச் சுற்றுக்குத் தெரிவா கியிருந்தது. இறுதிப் போட்டியை புஸ்பா அய்யாவின் விடுதிக்குச் சென்று பார்ப்பதாக நான் ஏலவே புஸ்பா
அய்யாவிடம் கூறியிருந்தேன். வெள்ளி
க்கிழமை முழுக்க எமது பேச்சு இறுதிப்
போட்டியில் எது வெல்லும் என்பது பற்றித்தான் சனிக்கிழமை காலை 8.00 மணியிருக்கும் புஸ்பா அய்யாவின் Cell phone lusio Galiudlei, G.D66T. ரிங்ஸ் போகவில்லை. அவரது Moblie
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 57

Page 31
Switch of பண்ணி வைக்கப்பட்டு
ள்ளது. எனக்கு அது அதிசயமாக்கப் பட்டது. 24 மணி நேரமும் ஒன்னில்" இருக்கும் அவரது மொபைல் இன்று. ஏன் இப்படி? எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள். அவரது நண்பர் விஜேந்திர னுக்கு டயல் செய்கின்றேன். ரிங்ஸ் போகிறது. ஆனால் நீண்ட நேரமா கியும் ஆன்சர் இல்லை. என்ன இது இவர்களுக்கு என்ன நடந்தது? உட னே புஸ்ப அய்யாவின் இன்னொரு நண்பர் பிரதீப் பிரசங்கவின் மொபை
லுக்கு தொடர்பு கொண்டேன். பிரதீப்
பால் பேசமுடிவில்லை. "புஸ்ப அய்யா ஆபு வான எக்சிடன்ட் பங்’ ‘புஸ்ப அய்யாட அமறுலு" புஸ்ப அய்யா வந்த ஆகிப் போய்விட்டதையும், புஸ்ப அய்யாவுக்கு
வாகனம் எக்சிடன்
மிச்சம் சீரியஸாக இருப்பதையும் திக் கித் திணறி அழுது சொல்லி முடித் தான் பிரதீப்.
புஸ்ப அய்யாவுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது. எனது மனம் மானசீகமாகய் பிரார்த்தனை புரிந்தது. ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை, நண்பன் ரிஸ்வி தான் அந்த மரணச் செய்தியை அழுகையுடன் சொன்னான். புஸ்ப அய்யா நம்மல விட்டுப் பெய்தார் பர்வீன். ‘தாள முடியாத சோகம் எனக்கு. குலுங்கிக் குலுங்கி அழு
தேன். என்னோடு வேலை செய்ப
தெரிந்து கொண்டு என்னை ஆறுதல் படுத்த
வர்கள் விசயத்தைத்
முனைந்தார்கள். அன்றைய எட்டு
மணி நேர வேலையில் ஆறு மணி நேரம் அழுதுதான் கழிந்தது எனக்கு. வெறும் 35 வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்டு புஸ்ப அய்யா போய் விட்டதை என்னால் ஜீரணிக்க முடிய வில்லை. ஆனால் அதுதான் உண்மை.
ஒவ்வொரு மனிதனும் யாராவது ஒருவருக்கு அல்லது ஏதாவது ஒரு வகையில் முக்கியமானவன்தான். அவனது மரணத்தின் போதுதான் இது வெளிப்படுகின்றது. மரணங்கள் நமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத் தருகி ன்றன. இருந்தும் மனிதன்தான் பிடிவா தமாய் எதனையும் கற்றுக் கொள்ள மாட்டேன். என்று அடம் பிடித்துக் கொண்டே இருக்கிறான். புரிந்துணர் வும், விட்டுக் கொடுப்பும் மட்டுமே நம்மை வலுப்படுத்துமே, தவிர மோத ல்கள், எதனையும் பெற்றுத் தந்துவிடா என்ற புஸ்ப அய்யாவின் கூற்று இன்னும் என்னுள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது ஒரு காலை நேரக் காற்றையும் போல
(இன்னும் பேசுவேன்.)
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 58

கரதங்கள்
மல்லிகையின் தொடர் வாசகன் நான். யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளிவந்த ஆரம்ப காலத்திலிருந்தே நான் மல்லிகையைப் படித்து வருபவன்.
அதன் ஒவ்வொரு ஆண்டு மலரையும் வெகு பத்திரமாகச் சேமித்து வருட வன்."
ஆரம்பகாலத்தில் பலர் எழுதினார்கள். இடையே அவர்கள் மறைந்து, வேறு பலர்கள் எழுத வருகிறார்கள். இது இயல்புதான். இருந்தாலும் மல்லிகைப் பரம்பரையின் தொடரை நாம் இழந்து விடக் கூடாது. மல்லிகையின் அட்டையில் இதுவரை 395 பேர்களுடைய உருவங்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளீர்கள். நான் நினைக்கின்றேன், தமிழ் இலக்கிய இதழ் வரலாற்றில் இத்தனை பேர்களினு
டைய உருவங்களைப் பதிப்பித்து வெளியிட்டது மல்லிகை ஒன்றுதான் என்பது
என் கருத்து.
இன்னொரு சாதனையையும் பக்கம் பக்கமாகச் செய்து வருகிறீர்கள். மல்லிகைப் பந்தல் வெளியீடுகள். இந்தத் தொடர் சாதனையை எதிர்காலத்திலும் முன் கொண்டு செல்ல ஆக்க பூர்வமான திட்டமொன்றை உருவாக்குங்கள்.
உங்களது 80ஆவது வயதுப் பாராட்டு விழாவில் உங்களது மகன் திலீபன் மேடையில் பேசிய பேச்சை நான் மனசார மெச்சி, என்னுள் மகிழ்ந்து கொண்டேன். அத்துடன் அன்று வெளியிட்டுள்ள பலர் எழுதிய கருத்து மடலில் அவர் உங்களைப் பற்றிச் சொன்ன கருத்துக்களையும் மனமூன்றிப் படித்து என்னுள் நானே பிரமித்துப் போய்விட்டேன். உண்மையை மனம் திறந்து சொல்கின்றேன். "மல்லிகை தான் என்னுடைய உயிர் நாடி என அடிக்கடி சொல்லி மகிழ்வீர்கள். நான் சொல்கிறேன் உங்கள் மகன் திலீபனை இந்தத் துறைக்குள் வென்றெடுத்தது தான் உங்களினதும் மல்லிகையினதும் தனிச் சிறப்பென்பேன்."
மல்லிகை, மல்லிகைப் பந்தல் வெளியீடுகளில் இனிமேல் திலீபன் ஜீவாவின் பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 59

Page 32
இதைச் சொல்லும் பொழுது மன தில் ஒரு தனி நிறைவு ஏற்படுகின்றது.
செல்வ கணேசன். தெஹிவளை
மே மாத மல்லிகை இதழில் வெளிவந் திருந்த சட்டநாதன் அவர்களின் 'அம்மா
செய்த கொலை' என்னும் சிறுகதை
யில் உள்ள ஒரு சிறிய குறைபாட்டை எடுத்துக் கூறலாம் என்று எண்ணி இக் கடிதத்தை எழுதுகின்றேன்.
கோழிக் குஞ்சைக் கெளவிப் பிடித்த ஒரு பூனையைச் சற்றுத் தூர த்தில் இருந்த ஒரு பெண் ஓடி வந்து கையினால் அதைப் பிடித்து அதைத் தரையில் அறைந்து கொன்றதாக அக்கதையில் ஒரு சம்பவம் வருகின் றது. இது நம்பக் கூடிய ஒரு நிகழ்ச்சி யாக இல்லை. கோழிக் குஞ்சைப் பிடி த்த பூனை ஒருவர் வந்து அதன் கழு த்தை தன் கையால் பிடித்து தரையில் அடிக்கும் மட்டும் அங்கு நின்று கொண் டிருக்கும் என்பது நம்பத்தக்கதாக இல்லை. ஒரு ஆள் அதன் அருகில் வந்து அதைப் பிடிக்கும் மட்டும் அப் பூனை ஒடித்தப்பாமல் இருக்காது. இந் நிகழ்வு கதையை எடுத்துச் செல்வதற்காகபூனையைச் சாகடிக்க வேண்டும் என்ப தற்காக- வலிந்து புகுத்தப் பட்டதாக இருக்கின்றது.
கதையை அப்படித்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்றிருந்தால் அப்
பெண், பூனை கோழிக் குஞ்சைப் பிடித்தவுடன் தனது கையிலோ அல் லது அருகிலோ இருந்த ஒரு கடின மான பொருளை வீசி அப்பூனையைக் கொன்றிருப்பதாகச் சொல்லி இருக்க லாம். அப்படிக் குறிவைத்து எறிந்திரு க்க மாட்டார் என்றிருந்தாலும், ஒரு கிரிக் கெற் ரெஸ்ட் விளையாட்டின் போது
மேற் கிந்திய வீரர் ஜோ சொலமன்
மூன்று விக்கெற்றுக்களும் பக்கவாட் டில் நின்று பார்த்த பொழுது ஒரு விக் கெற் ஆகத் தோன்றிய போதும் சுமார் முப்பது நாற்பது யார்களுக்கு அப்பாலி ருந்து பந்தை வீசி அவ்விக்கெற்றுக் களை வீசியது போல நடந்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் குருட்டு வாக்கில் வீழ்த்திய தாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கோழிக் குஞ்சை பிடித் திருந்த பூனை யை ஒருவர் எங்கிருந்தோ ஓடிவந்து அதன் கழுத்தைப் பிடித்திருந்தார் என் பது நம்பக் கூடியதாக இல்லை. பூனை ஒரு உயிரற்ற பொருளல்ல ஒடித்தப்பா மல் அல்லது முற்சிக்காமல், இருப்பத ற்கு சிறு விடயத்திலும் நம்பகத் தன்மை இல்லாமல் போய் விட்டால் முழுவதும் நம்பகத்தன்மை இல்லாமல் போய்
விடும்.
இச் சிறுகுறிப்பை சட்டநாதன் மீது குற்றம் காண வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. இப்படியான தவறு எதையும் தவிர்த்து எழுதினால் அவரு டைய கதைகள் மேலும் சிறப்படையும் என்பதற்காகவே எழுதி இருக்கிறேன்.
sig5i.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 60

சென்ற ஜூலை இதழில் தெணி யான் அவர்களது தொடர் கட்டுரையின் தலைப்பு பூச்சியம் பூச்சியமல்ல திரும் பின முறையில் அச்சாகி இருந்தது. இத்தகைய அடிப்படைத் தவறுகள் கடந்த காலங்களில் மல்லிகையில் இடம் பெறவில்லை என்பதே நமது எண்ணம், கொஞ்சம் கவனமெடுங்கள்.
செல்வி. ராஜ மனோகரி, வெள்ளவத்தை
இதைப் பலரும் சுட்டிக் காட்டியிரு
ந்தனர். இது வேண்டுமென்றே செய்யப் பட்ட எழுத்துத் திருப்பம் வாசகர்களின் வாசிப்பு உயர்வைக் கண்டு கொள்வதற்
கென்றே திட்டமிட்டு நாம் செய்த
எழுத்துத் திருப்பம்தான் அது.
பெர்னாட் ஷாவிடம் ஒருவன் ஒரு தலைசிறந்த ஒவியத்தைக் கொண்டு போய் அபிப்பிராயம் கேட்டான். அந்த ஒவியம் ஒரு சிங்கத்தின் மார்பிலிருந்து மனிதன் அதன் மார்பைக் கிழிக்கும் மனித வீரத்தைப் பறை சாற்றும் ஒவி யமே அது. ஷா ஒவியத்தைப் பார்த்து மெச்சி விட்டு, ஆனால் இதில் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். இந்த ஒவி யத்தை வரைந்தவன் மனிதன்! இதே ஒவியத்தை ஒரு சிங்கம் வரைந்திரு ந்தால்.எப்படி இருக்கும் என நான் சிந்தி க்கிறேன். என்றாராம் பெர்னாட்ஷா.
அதையொட்டித்தான் நாம் அந்தத் தலைப்பைப் பிரசுரித்தோம். நாவலர் காலத்திற்கு முற்பட்ட நந்தன் காலத் திலிருந்தே இழிவானவர் என நம்மை வேண்டுமென்றே தரம் தாழ்த்தி வந்த
கூட்டத்திற்கு எதிராக நமது சொந்தச் சித்திரத்தை வரையத் தொடங்கி விட் டோம். அந்த மாற்றுச் சித்திரம் வரை பவர்களில் ஒருவர்தான் தெணியான். டானியலைப் பற்றியும் அவரது பிரசித்தி பெற்ற நாவலைப் பற்றியும் வந்த கட்டு ரைத் தலைப்பில்த்தான் நாம் இந்த மாற்றுத் தலைப்பை வெளியிட்டு வைத் துள்ளோம்.
(ஆசிரியர் கூறுகின்றார்)
திடீரென்று தபாற் கட்டண அதிக ரிப்பைப் பற்றி உங்களது தலையங்கம் படித்தேன்.
மல்லிகையைப் போன்ற இந்த மண்ணை நேசிக்கும் இலக்கியச் சஞ் சிகைகளுக்கு இது பொருளாதார ரீதி யாக எத்தகைய சங்கடங்களை விளை விக்கும் என்பதை யூகிக்கும் போதே எங்களால் உணர்ந்து கொள்ள முடிகி ன்றது.
ஒருவகையில் பார்த்தால் தமிழகத்
திலிருந்து இங்கு வந்து குவியும் குப்பை, கூளங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து நல்ல இலக்கியச் சூழலை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை நமக்கேற்படுகின்றது. அடுத்து இந்த நாட்டில் மெல்ல மெல்ல அரும்பு கட்டி வளர முயற்சிக்கும் சிற்றேடுகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை எம் முன்னால் இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் இதைப் போன்ற செயல்களுக்கு ஆதரவு நல்கி வருபவர்கள்தான் மேலும் மேலும் bl LLD60L6JTfres61.
எம். தேவமனோகரன். புத்தளம்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 季 6

Page 33
தமிழச்சியின் வலைப்பதிவும் பெரியாருமி.
వ్లో
தமிழச்சி
www.thamilachi. blogspot.com
“வணக்கம்! தோழர்களே நான் தமிழச்சி பேசுகிறேன், எனது தைரியமும். அதைரியமும். என்ற நூலின் மூலம் உங்களில் சிலர் என்னை அறிந்திருக்கலாம்.
சாதிய, ஆணாதிக்க கலாசாரக் கறைகளுக்குள் மூழ்கிக் கிடக்கும் தமிழ்ச்சாதியின் அடிமடியில் கைவைத்து உலுக்கிய புரட்சியாளர்களில் இருபதாம் நூற்றாண்டு கண்டெடுத்த இணையற்ற சிந்தனையாளர், போராளி தந்தை பெரியார்.
பெரியாரைக் கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற எல்லைகளுக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது. பெண்விடுதலை,
இலக்கியம், பண்பாடு போன்ற எண்ணற்ற தளங்களில் தன் காலத்தையும்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 62
 
 
 
 
 

தாண்டிச் சிந்தித்தவர் பெரியார். இன்றைய நவீன தமிழ் பெண்ணியர்கள் பேசத் தயங்கும் கருத்துக்களைக் கூட தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமங்களுக்கும் எடுத்துச் சென்றவர் பெரியார். கற்பு, காதல், திருமணம், குடும்பம் போன்ற ஆணாதிக்கக் கற்பிதங்களை போட்டுடைத்ததவர் அவர்.”
எனப் பெரியாரை முக்கியத்துவப்படுத்தி March 27, 2007 தொடக்கம் ஒரு வலைப்பதிவை உருவாக்கி இருக்கிறார். பிரான்சில் வசிக்கும் தமிழச்சி எனும் பெண்மணி.
(இவர் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்ற தகவல் இல்லை. அத்தோடு ' தமிழச்சி எனும் பெயரில் எழுதும் பெண் கவிஞரும் இவரும் ஒருவரல்ல)
அந்த வலை பதிவில் கணிசமான அளவுக்குப் பெரியாரின் கருத்துக்களை இணைத்திருக்கிறார்.
முதலில் அவர் அவ்வலைப்பதிவில் இணைத்திருக்கும் பெரியாரின் சில கருத்துக்களை பார்ப்போம்.
* அப்படியே நம்பி விடாதீர்கள்! - பெரியார்.
சகோதரர்களே!
நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தான்."ஒரு பெரியார் உரைத்து விட்டார்” என நீங்கள் கருதி, அப்படியே அவைகளைக் கேட்டு நம்பி விடுவீர்களானால், அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!
(விடுதலை-08.10.1951)
* பெண் விடுதலை! பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 63

Page 34
உறுதியுடையதாய் இருக்கிறது. தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது மானிட வர்க்கம் விருத்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்தத் தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை.
(குடியரசு 12.08.1928)
* ஆண் போல நடக்க வேண்டும்!
பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்றே அழையாமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போலக் கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டு பிடிக்காத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்ணும் தன்னைப் “பெண் இனம்” என்று கருத இடமும், எண்ணமும் உண்டாகும் படியாக நடக்கவே கூடாது.
( திருப்பத்தூரில்-15.09.1946 அன்று பெரியார் சொற்பொழிவு)
* கற்புப் பற்றிப் பெரியார் சொல்கிறார்!
பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களைக் கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது!
(தந்தை பெரியார் - சமுதாய சீர்திருத்தம் என்ற நூல் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு)
* திண்டாமை. பெரியார் சொல்கிறார்.
“தீண்டாமையை ஒழிக்க வேண்டிய கடன் பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின்
மல்லிகை ஆகஸ்ட் 2007 奉 64

முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்.”
(“குடிஅரசு’- 15.11.1925)
* பத்தினி என்பது முட்டாள்தனம்!
பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும், மூர்க்கத்தன த்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.
(விடுதலை- 04.05.1973)
* கற்பு விபச்சாரம் என்ற வார்த்தைகள்.
கேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?
பதில் : கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ,அன்றுதான் பெண்கள் மூழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபச்சார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதா லேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.
(குடியரசு 29.10.1933 - 'விடுதலை" வெளியிட்ட தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்)
* தயங்கும் பெண்களுக்கு அறிவுரை!
ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா
போட வேண்டும். நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத்
தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்
தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி,
ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது, அநாகரீகமும் தேவையற்ற மல்லிகை ஆகஸ்ட் 2007 & 65

Page 35
தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.
(பெரியார் ஒரு வாழ்க்கை நெறி' என்ற நூலிலிருந்து)
* நாளை என்ன நடக்கும்?
நாளை, ஒரு சமயம் சமதர்ம காலத்தில்,பிராமணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம்' என ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால், நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.
(குடியரசு- 11.10.1931)
பெரியார் அன்று சொன்ன கருத்துக்கள் இன்றும் நமக்குக் கசப்பானவை என்ற நிலையிருந்து தம் மனோநிலை மாறவில்லை என்பது உண்மைதான்.
எனக்கு ஆச்சரியப்பட வைத்தது என்னவென்றால் பெரியார் இன்றும் பலருக்குத் தேவைப்படுகிறார். பயன்பாடுமிக்கவராக இருக்கிறார்.
இன்று உரத்துப் பேசப்படும் பெண்ணியம், தலித்தியம் போன்ற கருத்தியல் இயக்கங்களுக்கான தேவையான பலமான பல கருத்துக்களை சொன்னவராகத் திகழ்கிறார். இவ்விரு கருத்தியல் சார்ந்தவர்களுக்கு
பெரியார் பயன்பட்ட அளவுக்கு பெரியார் காலத்திலும் சரி, அவருக்கு முன்னதாக வாழ்ந்தவர்களும் சரியாரும் பயன்படவில்லை என்றே
சொல்லவேண்டும். இன்றைய தமிழ் வலைப்பதிவு தளத்தில் பன்முக தன்மைமிக்க கருத்தாடல் பரிமாறப்படுகின்றன என்பதற்குத் தமிழச்சி போன்ற இளம் தலைமுறையினர் பெரியாரை முக்கியத்துவப்படுத்தி அமைத்திருக்கும் இவ்வலைப்பதிவு சிறந்த உதாரணம்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 66

ár
ளிெரிே
كنيكتيبي
空三
i
- சாரணகையபூம்
புதன் கிழமை கிளினிக்’ நாள். மாதம் ஒருதடவை போய்த்தான் ஆக வேண்டும். முறை தவறிப் போனால், டாக்டர்களின் முனிவுக்கு ஆளாக நேரிடும்.
காலையில் எட்டு மணிக்கு முன் இலக்க விநியோகம் நடைபெறும், குறைந்தது இருநூறு பேருக்கு பரிசோதனை நடைபெறும்.
நூறு டம்ரோ கதிரைகள். சினிமாக் கொட்டகைகளில் போட்டிருப்பது போல வரிசையாகப் போடப்பட்டிருந்தது. இலக்க ஒழுங்குப்படி நோயாளர்கள் அமர்ந்து கொண்டனர். ஏனையோர் அங்கு மிங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
எனக்குக் கிடைத்த இலக்கம் நூற்றிப் பதின்மூன்று. நானும் ஒரு மூலையில் எதிர் பார்த்திருந்தேன். வரிசை பதுளை. கொழும்பு இரவு ரயில் போல மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
ஒருவரைச் சோதித்து முடிய ஐந்தோ பத்தோ நிமிடம் எடுத்தது. இடையில், திடீரென்று ஒருவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டார். ஒரு பரபரப்பு எல்லாருடைய கதியும் இதுதான். உடனடியாக அவருக்குச் சிகிச்சை, அதற்கு அரை மணி நேரம் போல் ஆகிவிட்டது.
இடையிடையே ஊழியர்களின் நண்பர்கள், உறவினர்கள் ஊடுருவல், தட்டிக் கேட்கவா முடியும்? இது காத்திருப்பவர்களுக்கு ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தியது. சிலர் நெற்றிக் கண்ணையும் காட்டிப் பார்த்தனர். பலிக்கவில்லை.
நேரம் பன்னிரண்டை அண்மித்துக் கொண்டிருந்தது. என்ன ஆவேசமோ தெரியவில்லை. டாக்டர்கள் சுறுசுறுப்பாகி விட்டனர். "கியூ யாழ்தேவு போல் கடுகியது. அரை மணி நேரத்தில் அத்தனை பேரையும் சோதித்துச் சீட்டுக் கொடுத்தாகிவிட்டது.
உள்ளத்திற்கு ஒர் ஆறுதல். ' கியூ அப்படியே மருந்துக் கவுண்டரை மொய்த் துக் கொண்டது. அதைக் கண்டதும் பழைய உளைச்சல் மீண்டும்.பசி வேறு. பக்கத்தில் இருந்த ஒருவரிடம் தண்ணிர் கொஞ்சம் கேட்டுக் குடித்துக் கொண்டேன். "கிளினிக் வருபவர்களுக்கு ஒரு வியாதியா என்ன? கேஷ்டிக், பிரஸர், ஸ்கேர், கொலஸ்ரோல், வாதம் எல்லா வருத்தங்களுக்கும் மாத்திரை தரப்படும். குறைந்தது
மல்லிகை ஆகஸ்ட் 2007 薛 67

Page 36
ஒரு வேளைக்குக் கைப்பிடி அளவு வில்லைகளை உட்கொள்ள வேண் டும்.விலை கூடிய வில்லை களைக் கடையில் வாங்க வேண்டும். வில்லை களால் இல்லாத வருத்தங்களும் வரச் சந்தர்ப்பம் உண்டு.
இதற்கிடையில் பிளட், யூரின், கொலொஸ்ரோல் பரிசோதனை வேறு செய்து ‘ரிப்போட்டை டாக்டரிடம் காட்ட வேண்டும்.
வாலிபத்தில் ஆடிய ஆட்டங்களை நினைக்கும் போது, இப்படியெல்லாம் வருமென்று தெரிந்திருக்கவில்லை கல்லை விழுங்கினால் கூடச் சீரணித் துக் கொள்ளும். இப்போது, கஞ்சியைக் குடித்தாலும் சீரணிக்க மறுக்கின்றது.
"கியூ இன்னும் அப்படியே 'சிக் னல் விழும் வரை காத்திருக்கும் ரயில் போலத் தாமதித்து நிற்கின்றது.
ஆஸ்ப்பத்திரியில் நாலுபேரைத் தெரிந்திருப்பதன் அவசியத்தை உணர் ந்தேன். இனித் தெரிந்தால் என்ன? தெரியாவிட்டால்த்தான் என்ன?
ஒருவாறு மருந்துக் கவுண்டர்’ வாயிலில் மூன்றாம் ஆள் நான். மகிழ்ச்சி. ஏதோ எவரஸ்ட் சிகரத்தைத் தொட்டது போன்றிருந்தது.
இடைவேளை, மதிய உணவுக் காக மருந்தாளர்கள் போய்விட்டார்கள். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்லும். இவ்வளவு நேரத்தைக் கடத்தி விட்டோம். இது என்ன பெரிதா?
இரண்டு மணிக்குக் கவுண்டர்’ மீண்டும் திறக்கப்பட்டது. திறந்தவு டனே வேலையை ஆரம்பித்து விடுவார் களா என்ன? சாப்பாட்டைப் பற்றிய ஓர் அலசல், கியூ' வாசிகள் முணுமுணு த்துக் கொண்டார்கள்.
இன்னும் என்னென்ன தடங்கல் கள் வந்துவிடுமோ என்றிருந்தேன். நினைத்தது போல், மருந்தாளர்களுக் கிடையே கசமுசா.
கண்டி, ஆஸ்ப்பத்திரியில் மருந்தா ளர் ஒருவரை அடித்து விட்டார்களாம். ტქ60),5 விசாரிக்கும் வரை "ஸ்ட்ரைக்' காம். இவர்கள் அந்த 'யூனியனைச் சேர்ந்தவர்களாம்.
அதற்கு, 'சப்போட்' பண்ணுமுக மாக இவர்களும் 'ஸ்ட்ரைக்' பண்ணத் தீர்மானித்து விட்டனர்.
மூன்று மணிக்கே எல்லோரும் வெளிநடப்புச் செய்து விட்டனர். எனக்குப் பின்னால் இன்னும் ஒரு தொடர். காலையிலிருந்து கால் கடுக்க நின்றும் காரியம் ஆகவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை,
யாரை நொந்து கொள்வது? யாரி டம் முறையிடுவது? எல்லாத் தொல் லைகளையும் மக்களே அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை!
எனக்கு எழுதித் தந்த மருந்துச் சீட்டை "பாமஸி'யில் கொடுத்து மருந் தை வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தேன்.
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 68

தூண்
- டொயிெல் 8ъул
ΣK எமது ஈழத்து சி ைஇ67ம் எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்களை அதிசயப் பிறவிகளாகப் பார்க்கிறார்களே, நூன்2 தமிழக எழுத்தாளர்களுக்கு fff); elഖfഞ67 விடவும் எதார்த்தத்தை அனுஅனுவாயப் பேசும் எமது எழுத்தாளர்களை இவர்கள் ஏன் கண்கு கொன்வதேயில்லை?
டோகா, கட்டார். நாச்சியாதீவு பர்வீன்,
சி இளம் வயதில் என்னைப் போன்றவர்களுக்கும் இதே மயக்கம் இருந்தது. இது இயல்பானது. அதே சமயம் அந்தக் காலத்தில் இந்த மண்ணிலிருந்து எழுதிய அநேக எழுத்தாளர்கள் மவுண்றோட்டையும், மரீனா பீச்சையும் கற்பனை பண்ணிப் பண்ணியே கலைமகள் கதைகளை இங்கு பண்ணிக் கொண்டிருந்தனர். ஆகவே எமக்கு அந்தக் காலத்தில் முன்னோடிகள் எவருமேயில்லை.
இன்றோ தேசங்கடந்தும் சர்வதேமெங்கும் வியாபித்துள்ள நம்மவர்கள் எழுதும் எழுத்துக்களைப் படித்து நான் வியந்த போகின்றேன்.
பொறுத்து இருந்து பாருங்கள், கடைசியில் தமிழ்நாட்டில் சினிமாக் கலா சாரம்தான் மிஞ்சும்
hi Σ.Κ. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்றைய தேவை கருதி இயங்குவது அத்தியாவசியமில்லையா? அச்சங்கத்தின் வட பிரதேசத்தின் முக்கிய பொறுப்புத்தாரியாகத் திகழந்த உங்களுக்கு இது தெரியாமல் போனது ஏன்?
வத்தளை ந. நவநீதன்.
கி உண்மையில் இன்றைய காலகட்டத்தின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று
தமிழ் எழுத்தாளர்களிடையே பரஸ்பரப் புரிந்துணர்வாகும். முற்போக்கு எழுத்
தாளர்களையும் விட, சகல தமிழ் எழுத்தாளர்களும் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப மல்லிகை ஆகஸ்ட் 2007 & 69

Page 37
வேண்டிய கால கட்டமிது. சகோதரச் சிங்கள எழுத்தாளர்கள் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டுச் செயற் பட்டுவருதால் கலாசார அமைச்சிடமி ருந்து பல நன்மைகளையும் இலக்கிய உதவிகளையும் பெற்றுக் கொள்கின் றனர். துரதிர்ஸ்டம் என்னவென்றால் நம க்காக ஜனநாயகக் குரல் கொடுத்து எமது உரிமைகளை வென்றெடுக்க எந்த வொரு தமிழ்த் தலைவரும் இல்லாமை தான் நமக்குள்ள பெரு நஷ்டம், அப்புறம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் LUFTÜGİLurTub.
எங்களது விட்டருகே ஒரு தாத்தா இருக்கிறார். அவர் எந்த நேரமும் "இந்தக் azsrr62ögöyü 67ur742, 67urrealou azsair 67&ö6onrüb மகா மோசம், அந்தக் காலத்தில் 5mijas 6676.6/7tb &duceus afowii.625/7tb2 doub பின பக்கமென்ாைம் ஒரே இரைச்சன், அதி லும் இந்த டிவி வந்ததற்குப் பிறகு நாடே கெட்குப் போய்க் கிடக்கு. "எனப்புறுபுறுத்துக் கொண்டேயிருப்பார். எங்களது விட்டிற்கு அடிக்கடி வந்து யோவார். காரணம் எங் கனது விட்டிலுள்ள டிவிuார்க்கத்தான். இந் தக் கிழரு கடைகளின் நச்சரிப்புக்குக் கார ணம் 67ative/2
656furt. எஸ். ஜானகி.
2 இது ஒரு பரவணி நோய். ஏதோ தாங்களெல்லாம் புனிதமான ஆழ்நிலை யில் அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்த தாகக் காட்டும் வாய் ஜம்பம்தான் இது.
எங்களது பரம்பரை யாழ்ப்பாணப்
புகையிரத நிலையத்திற்கு வெகு அண் மையில் உள்ளது. அந்தக் காலத்தில்
ரயில் வண்டி யாழ்ப்பாணத்திற்கு வர ஆயத்தப்படுத்திய வேளையில் இந்த "ரயில் அரக்கன் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். இது ஊருக்குள் ஒடினால் பெண்களின் கற்பம் சிதைந்து விடும். பிள்ள்ைகள் அடிக்கடி அலறும். பால் குடி க்காது. மாடு பால் சுரக்காது. ஒருவருக் குமே நித்திரை கொள்ள இயலாது. அதன் ஒட்ட அதிர்ச்சியால் பிள்ளை களால் படிக்க முடியாது. எனவே இந்த ரயில் என்ற அரக்கன் எங்கள் பகுதிக்கு
வேண்டவே வேண்டாம்." என அந்தக்
காலத்துக் கவர்னருக்குப் 'பிட்டிசம்' போட்ட மனுவில் கைநாட்டுப் போட்ட வர்களில் எனது பாட்டனாரும் ஒருவர். ஒவ்வொரு தலைமுறைக்கும் இப்படி யான ஒவ்வொரு குணாம்சங்கள் இருந்து கொண்டே இருக்கும் போலும்
மறைந்துவிட்ட ப ைஎழுத்தாளர்கனி னது ஞாபகங்களை முற்றாக மறந்து விட் டோமோ? என்ற ஐமிச்சம் எனது நெஞ்சின் நிழாைகுதிறன்து. இந்த ஞாபகங்கள் உங்க ருக்கும் அடிக்கடிஏற்பருவதுண்டா?
நீர்கொழும்பு. கே.தனபாலன்.
இ அட்டைப்பட நூல்களை அடிக்கடி புரட்டிப் பார்க்கும் சமயங்களில் எனக்கு இத்தகைய உணர்வுகள் ஏற்படுவது ண்டு. இதற்கு ஒரே வழிதான் உண்டு அன்னாரது இனசனங்களைச் சேர்ந்தவ ர்கள் மறைந்தவர்களினது ஞாபகார்த்த தினங்களை ஞாபகமூட்டி, நிகழ்ச்சி களை ஒழுங்கு செய்ய வேண்டும் என்னைப் போன்றவர்கள் அதற்கு ஒத்து ழைப்புத் தரலாம். உதாரணமாக சுத
மல்லிகை ஆகஸ்ட் 2007 $ 70

திரன் எஸ். ரி. சிவநாயகம், பெனடிக்ற் பாலன் போன்றோரை நாம் ஞாபகப் படுத்துவது சாலச்சிறந்தது.
ΣΚ. மக்கன் மத்தியின் செல்வாக்குன்ன മഞങ്ങക്രമത്തെണ്ട, ബബupuിബ്ബണുff தா மாதம் அட்டையில் பதித்து, அவர்கனை மக்களுக்கு அறிமுகப்பருத்தி விடுகிறிர் கனே, அதைத் தொகுத்து நூல்களாகவும் வெளியிட்கு வருகின்றிர்கைே7, அகுத்த கட் Łlubówów?
யாழ்ப்பாணம். எம். ராஜேஸ்வரன்.
23 அட்டைப்படம் உருவப் பதிவு சம்பந்தமாக இதுவரை நான்கு நூல்கள் வெளிவந்து விட்டன. கணிசமான தொ கையினர் அரங்கேறியுள்ளனர். நேற்று ஒரு நண்பர் ஆலோசனை ஒன்று சொன் னார். "இதுவரையில் அட்டையில் வெளி வந்தவர்களின் சகல தகவல்களையும் ஒன்று சேர்த்து, ஒரேயொரு நூலாக வெளியிட்டால் என்ன?" என்று ஒரு கேள் வியொன்றைக் கேட்டார். நானும் அதை யோசித்தேன். இதற்கு எக்கச்சக்கமான பணத்தை முதலீடு செய்ய வேண்டும். எனக்கு இப்போ, அத்தகைய வசதி இல்லை. இதை நடைமுறைப் படுத்த ஆக்கபூர்வமான உதவிகள் தேவை. அது கிடைத்தால் நிச்சயம் அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரே நூலை நான் வெளியிட்டு வைப்பேன்.
ΣΚ. நீங்கள் நீண்டகாலமாகச் g/മഞ്ഞമ് ஒன்று கூட எழுதவில்லையே, ஒரு கதை 67d26%zwr7oö 67ezwarw?
AsortuŁb.
என். முறிபதி.
இி சிற்றேடொன்றைத் தொடர்ந்து நடத்தி வந்தால்தான் தெரியும் அதன் பாரிய சிரமங்களை. அந்தச் சிரமங்க ளுக்கு முகம் கொடுக்கவே எனக்குப் போதிய நேரம் இருப்பதில்லை. இருந் தாலும் உங்களது கதையல்ல, நாவல் ஒன்று எழுதி வெளியிட வேண்டும் என் பது எண்ணம். கூடிய வரை முயன்று நாவலொன்றை எழுதி முடிக்க முயற்சி செய்கின்றேன்.
凶 தற்போது எழுதிவரும் 86trub எழுத்தாளர்களில் உங்கனைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?
பதுளை. எம். சுசீதரன்.
இலி மேலாண்மை பொன்னுச்சாமி. Σ.Κ. மாணவர்கள் மத்தியில் மல்லிகை பற்றிய அபிப்பிராயம் என்ன நினவுகின்றது? அவர்கனை எதிர்கா ைஇக்ைகிய உதிைற்கு அணிதிரட்கும்திட்டமேதும் உண்டா?
கண்டி. ஆர். தயாபரன்.
2 மல்லிகையின் அடிப்படை நோக் கமே இளந்தலைமுறையினரை இலக் கியத் துறையில் வளர்த்தெடுப்பதுதான். சென்ற வாரம் யாழ், பல்கலைக் கழகத் தைச் சேர்ந்த இருபதுக்கும் அதிகமான மாணவ மாணவியர் மல்லிகைக்கு நேரில் வந்து எம்முடன் பரஸ்பரம் மனந்திறந்து உரையாடிச் சென்றனர். புகைப்படமும் பிடித்தனர். இன்றைய மாணவர்களைப் பற்றி நான் நிறைவு கொள்கின்றேன். பாட நூற்களையும் தவிர்த்து ஏனைய துறைப்புத்தகங்களையும் மனமொன்றிப்
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 71

Page 38
மல்லிகை ஆகஸ்ட் 2007 & 72
படித்து வருகின்றனர். இது இளந் தலை முறையினரின் வளர்ச்சிகளில் ஒன்றா கும். எனக்குத் தெரிய ஏராளமான இளை ஞர்களும் யுவதிகளும் எழுத்துத் துறை யில் நாட்டம் கொண்டு பேனா பிடித்து உழைத்து வருவதை நானறிவேன்.
upafai,670.5/7ty' 6767 420 - 6wod256ö பேசப்பருகின்றதே சென்னையில் இருந்து வெளிவந்த ஓர் இக்ைதிய இதழ், அந்த இதழைப் படித்துப் பார்த்திருக்கிறிர்களா?
நீர்கொழும்பு. எஸ். சடகோபன்.
2 பல ஆண்டுகளுக்கு முன்னர் ரஸிகமணி கனக செந்திநாதன் குரும்ப சிட்டி வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனது நீண்ட நாளைய ஆசை மணிக் கொடி இதழில் ஒரு பிரதியையாவது பார்த்து விட வேண்டுமென்று. ரஸிகமணியிடம் எனது ஆசையைச் சொன்னேன். அவர், அந்த இதழின் இரண்டு பிரசுரங்களைத் தேடியெடுத்துப் பார்க்கத் தந்தார். பார்த் தேன். படித்தேன். இன்று பேசிப் பேசியே அதனது மகத்துவத்தை மேன்மைப் படுத்திவிட்டார்கள். அன்று, அத்தகைய காலத்தில் அந்த இதழ் வித்தியாசமாகத் தான் தென்பட்டிருக்க வேண்டும்,
நீங்கள் பிற சஞ்சிகைகளில் வரும் கேள்வி - பதில்களைப் படிப்பதுண்டா? அக் கேள்வி- பதின்களின் எவருடைய கேள்வி, பதில் உங்களுக்குப் பிடிக்கும்?
சுன்னாகம், ஆர். சபேசன்.
6,660furt.
இ? சஞ்சிகையாளன் என்ற முறையில் சகல சஞ்சிகைகளையும் நான் கருத் தூன்றிப் படிப்பேன். கிரகித்துக் கொள் வேன். 'சுஜாதா' எழுதுவதற்காகவே எழுதுகின்றார். ஆறிப்போன பழங்கஞ்சி. கவிஞர் வைரமுத்து குமுதத்தில் எழுதி வருபவை படிக்கும் படியும், ரஸித்துச் சுவைக்கும் படியும் இருக்கின்றன.
ΣΚ. யாழ்ப்பானத்தின் சஞ்சிகை நடத்திய அநுபவத்திற்கும் , கொழும்பில் சஞ்சிகை நடத்திவரும் அநுபவத்திற்கும் இடையே
உன்ன வேறுபாடுகள் என்ன?
எம். முத்துவேலன்.
2 அங்கு வீடு எனக்கொரு பாதுகாப் புக் கவசம். ஸைக்கிள் போக்குவரத்துச் சுலபம். அத்துடன் மல்லிகைக் கென்றே சொந்தக் கட்டடம். செலவு சுருக்கம். இங்கோ நாலுக்கும் பணம், பணம். நான் தினசரி படும் அவஸ்தையை நெருங்கிய நண்பர்கள் என என்னால் கணிக்கப்படுப வர்கள் கூடப் புரிந்து கொள்கின்றார்கள் இல்லை. என்னையும் எனது உழை ப்பையும் நெஞ்சார நேசிக்கும் சில உத்தம நெஞ்ச ங்கள் ‘காதும் காதும்' வைத்து உதவுவதின் மூலமே நான்
எனது பொருளாதார நெருக்கடிகளிலி
ருந்து மாதா மாதம் விடுப்டமுடிகின்றது.
(தூண்டிலுக்குக் கேள்வி கேட்பவர்கள் அஞ்சல் அட்டையில் எழுதவும்.)
2g/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியிட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

Q'zuick Serzvices oʻña
DIGITAL OFFSET PRESS
基,援 囊 у hp indigo era KÓNICAMINOLTA
--- - - e.
Digital Machine
ః
We have introduced
OUR PRODUCT
མ་ཨ་མས་ང་ལ་ཤ་ཚ་བ་དགག་གང་ཡང་མ་བ་ཡང་ས་ཁག་ལ་གསལ་ལ་མ་མཁལ་གཏང་པ་མ་ {DATABASE3 PRiNftNG --_%ళ స్ట్ స్టభ BROCHuRES, CATALOGUES, SOUVENIRS, BOOKNARKS, GREETING C NAME TAGS, CD/DVD covers; seolour.Bio DATA Stickers inviTATIon CARDS, Project reportsBookcover, MENucARDs, GARMENT TAGS, THANKING CARDS, CERT FiCATES, BOOKS *இை POSTERS, CD SOMMER TRANSPARENCY SHEE, PLASIC CARDS, SCRATCH CARDS, visiriNG CARDS,
HAPPYDIGITAL CENTRE (Pvt) Ltd
-ead Office Branch No: 75/1/1, Sri Sumanatissa Mawatta, No, 107 B, 1/1, Galle Road, Colombo-12, Sri Lanka, Colombo-06.
lel: +94 11 493753Ó el : 011.95535:20
web : www.happydigitalcentre.com email: infoQhappydigitalcentre.com