கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2007.09

Page 1
୩, 30 =
 
 


Page 2
இலங்கையில் நூல்கள் விநியோகம், விற்பனை ஏற்றுமதி இறக்குமதி பதிப்புத் துறையில் புதியதோர் சகாப்தம்
அன்புடன் அழைக்கிறது
do. CHEMÀMÀDU B00K CENTRE
Telephone : 011-2472362 Fax : 011 - 2448624 E-mail : chamamaduGDyahoo.com
is UG 49, 50. People's Park, Colombo - 11. Srilanka
தேெராடிேல்UதிWத்துறை, விற்பனைத்துறை (ూత€666, ேெதுடிகவிர்கள்.
N சேசசடு பெத்தகசாலை
C
க.சச்சிதானந்தன் - காந்தளகம், சென்னை - 02.
தொ.பே. : 044 - 28414505 E-mail : tamlinool(a)data.in
\; ; \ \ \ \ \ \ \ \; ; ; ; ;
கோ.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17
தொ.பே. : 044 - 24339030 E-mail : ta-pathippagam (a)Yahoo.co.in
六六六六六六六六六六六六六六六六六六六六六六六六六六六六六六六
அனைத்து வெளியீடுகளையும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்
2.6vast umgosudaörg MpangbgÓMkuu 8. Saynarodas runsvog upangu Srs á Goddu) o.foas e.g. ngnett. Gulio auge tála tribuaillib Etaparary. Onig Uyrelui. Aless toisiano abungimur o creò u0 a O Moden F. C09072001) uola Griggleh Gohakrévo
AuaCaNewGtu
முன்னது:
250 - og 9ärGDUநோக்கி. செப்டெம்பர் 340 !'ഠർര് ീg(le
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமுமாகும்.
Colombo - 13. Tel: 2320721 mallikaijeevaGyahoo.com
201/4, Sri Kathiresan St,
കക്ഷിத்திய )on5)دي
செப்ரெம்பர் மாதமென்றாலே ஒரே இலக்கியக் கொண்டாட்டங்கள் தான்! புத்தகச் சுவைஞர்களுக்குதேசியப் புத்தகச் சந்தை நடை பெறக் கூடிய காலமென்ற குதூகலத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த மண்ணில் இம் மாதம் நடைபெறப் போகும் புத்தகக் காட்சிச் சந்தையை எண்ணியெண்
ணியே, படைப்பாளிகள் தத்தமது
படைப்புகளுக்கு நல்ல ஆரோக்கிய மான சந்தைப்படுத்தும் சூழ் நிலை தோன்றும் என ஆவலுடன் காத் திருக்கின்றனர். புதிய தரமான நூல் கள் சந்தைக்கு வரவேண்டும் எனப் புத்தகச் சுவைஞர்கள் காத்திருக்கின் றனர்.
இன்றைய நமது நாட்டு நூல் வெளியீட்டு நிலவரப்படி, வாரம் இரண்டு
நூல்கள் வெளிவந்த வண்ணமாக
இருக்கின்றன. இது ஒர் ஆரோக்கிய மான இலக்கிய முன்னே ற்றமாகும். இப்படி வெளிவரும் நூல்களில் பெரும் பாலானவை தனி நபர் முதலி ட்டிலேயே சந்தைக்கு வருகின்றன.
இவர்களது முன் முயற்சிக்கும் முதலீட்டுக்கும் குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது! எனவே நமது நாட்டில் வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்கே முன்னு ரிமை தரப்பட வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளு கின்றோம்.
- ஆசிரியர் -

Page 3
യ്യാഴ്ച ഗ്രന്ധ്രത്തി NAZZ இலக்கில இழா
மலையகத்தில் இன்று புதிதாகவும் ஆக்கபூர்வமாகவும் தோன்றியுள்ள ஆரோக்கியமான கலை இலக்கிய விழிப்புணவைக் கண்டு நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
படித்த புதிதாகக் கல்வித்துறையில் தேர்ச்சி பெற்ற, சிந்திக்கத் தெரிந்த தலை முறையினரின் ஆக்கங்களை நாம் ஊன்றிக் கவனித்துப் பார்த்ததில் இருந்து எமக்கு மலைப்பே ஏற்பட்டு விட்டது. ஆச்சரியமாகவும் இருக்கின்றது.
இன்று மலையக இளம் கலைஞர்களின், படைப்பாளிகளின் உயர் வெளிப்பாடுகளைக் கண்டு நாம் பிரமித்துப் போய் விட்டோம்.
அதேநேரம் இத்தகையவர்களுக்கு வழிகாட்டி, நெறிப்படுத்த ஆழமான அமைப்புக்கள் மலையகத்தில் இயங்காது முடங்கிப் போய்க் காட்சி தருகின்றன என்பதும் நமக்கு ஏற்கனவே தெரியும். இந்தக் குறைபாட்டை நீக்கி, தகுந்த வழி நடத்தலும் ஆரோக்கியமான அணுகுமுறைகளும் இந்த இளந் தலைமுறையி னருக்குக் கிடைக்க வழி அமைக்கப்பட்டால், அற்புதமான கலைஞர்களும் சிந்தனாவாதிகளும், படைப்பாளிகளும் இவர்களிடையே இருந்து தோன்றி மலர்வார்கள் எனத் திடமாக நம்புகின்றோம்.
மலையகம் புதிய வரலாறே படைத்துவிடும்!
எனவே, இவர்கள் அத்தனை பேர்களையும் ஒன்றிணைத்து வழி அமைக்க மலையகத்தில் - குறிப்பாகப் பலவழிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள ஹற்றன் மா நகரில் - ஓர் இலக்கியப் பெரு விழாவை இந்த ஆண்டு முடிவதற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என ஆலோசனையை முன் வைக்கிறோம்.
மலையக மண் செழிக்க, மக்கள் மொழி சிறப்புப்பெற இளந்தலை முறையினரின் பல்வேறு சிறப்புக்கள் வெளி உலகத்திற்குத் தெரிய வர, திட்டமிட்ட முறையில் அந்த இலக்கிய ஒருநாள் சிறப்பு விழாவை நடத்தி முடிக்க முனவர வேண்டுமென மலையகத்தின் எதிர்காலச் சுபீட்சத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் உளமாரக் கேட்டுக் கொள்கின்றோம்.

குவலயக் குறிவைப்புகள் மனித யிெர்ப் பறிப்புகள்.
* & * நாய் கடந்து போக நாறிக் கிடக்கிறது மனிதப் பிணம்.
«به همه مه to
புத்தாண்டுத் தினத்தை வழமைக்கு மாறாக வரவேற்றன பிணங்கள்.
இறந்தவன் பிழைத்ததாகச் செய்தி செய்தி பிழை பிழைத்தவர்களை விட இறந்தவர்கள் அதிகம்.
0 «X» «X• •X»
0 នាំpuប្រព័ உரக்கக் கூவியது வானொலி *விமானக் குண்டு வீச்சு வெடித்துச் சிதறியர் அப்பாவி இனித உடல்கள்.
9 *o o oxo
பரிசோதனைகள் பரிச்சுத்தமானவர்களையும் சோதனை போட வைத்தது.
0 0 XoXo Xo
அகதிக் கோலம் ஆறார் சோகம் வெள்ளிக்கிண்ணழுதில் தண்ணீர் குடித்தவர்கள் சிரeபையில்ரீர்குடிக்கும் அவலம்
A 2 8 * x

Page 4
ஈழத்துப் புனைக்கதை வாசிப்பை இரசனைக்குள் கொண்டு வந்தவர்.
- செல்லக்கண்ணு
ஈழத்துப் புனைக்கதை வாசிப்பைப் பெருகச் செய்ததில், தமிழ் மணி ந. பாலேஸ்வரியின் பங்களிப்பும் வெகுவாக பேசக் கூடியதாகும். பதினொரு நாவல்களை நூலாக்கித் தமிழ் வாசகருக்குத் தந்திருக்கிறார். இரு நூல்கள் நூலாக்குவதற்கு இருப்பிலுண்டு. ஈழத்துப் பெண் படைப்பாளிகளைப் பொறுத்தமட்டில் இது பெருமைப் படக் கூடிய சாதனையே இதன் மூலமாக இவர் தான் பிறந்த திருகோணமலை மண்ணிற்கும் ஒரு காத்திரமான இலக்கியப் பதிவை ஏற்படுத்தியிருக்கிறார்.
“பூஜைக்கு வந்த மலர்” என்ற இவரது நாவலை ஒரு கலைமானிக் கல்வியாளர் புகையிரதத்தில் பயணித்த பொழுது ஒரே தடவையில் வாசித்து முடித்ததாகவும் தன் னையே எரித்து மற்றவர்களுக்கு ஒளியை நல்கும் மெழுகுவர்த்தியாக இச் சமூகத்தில் உள்ள இதயங்கள் மாறுமட்டும் “பூஜைக்கு வந்த மலர்' வாழ்ந்து கொண்டே இருக்கு மெனவும் கருத்துரைத்துள்ளார். ४ "
இந்நாவல் கதைஞருக்கு மட்டுமன்றி ஈழத்து நாவல் இலக்கியத்துக்கும் ஒர் உச்சக் கணிப்பை ஏற்படுத்தி இருப்பது ஈழத்து இலக்கிய உபாசகர்களுக்கு உவகையைத் தருகின்றது. நான்கு மாதங்களுக்குள் இரண்டு பதிப்புக்களைக் கண்ட ஒரேயொரு தமிழ் நாவல் “பூஜைக்கு வந்த மலர்” ஆகத்ததான் இருக்க வேண்டுமென இலக்கிய அவதானிகள் தெரிவிக்கின்றனர். 1972 ஆம் ஆண்டு மாசி, சித்திரைத் திங்களில் இந் நாவல் வீரகேசரி வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந் நாவலுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நாவல் 1994 இல் அதாவது 22 ஆண்டுகளின் பின் மித்திரனில் மீண்டும் பிரசுரம் பெற்று வாசகர்களைச் சென்ற டைந்தது. இத்தகைய தகுதியைக் கல்கியின் நாவல்களும் பெற்றதை வாசகர்கள் அறிந்திருப்பர். "அமலா உனக்காக ஜெயிக்கிறேன்”, “எங்கே நீயோ அங்கே நானும்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 4

உன்னோடு' ஆகியவையும் பாலேஸ்வரி யின் நாவல் புனைவின் திறனைக் காட்டு பவை. பின்னையது 1993 இல் சென்னை எழுத்தாளர் சங்க அறக் கட்டளையின Tால் சென்னையில் வெளியிடப்பட்டதாகும்.
இவரது முதல் நாவல் “சுடர் விள க்கு” 1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் தொடராக வெளிவந்தது. 1957 ஆம் ஆண்டு தினகரன் வார மஞ்சரி ஊடாக “வாழ வைத்த தெய்வம்" என்ற சிறுகதை யோடு புனைக்கதைத் துறைக்குள் பிர வேசித்த சிறுகதைச் சிற்பி ந. பாலேஸ்வரி இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதை களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இவரை ஒரு மெகா எழுத்தாளர் என வகைப்படுத்தினாலும் இவரது படைப்புக் கள் தமிழகத்து மெகா எழுத்தாளர்களது படைப்புக்களிலிருந்து விலகியே நிற்ப தைக் காண முடிகிறது. இன்றைய ரமணிச் சந்திரன் போன்ற தமிழ்ப் பெண் எழுத்தாளர்களைப் போலல்லாது மூத்த எழுத்தாளர் லசுங்டிமி (டாக்டர் திரிபுர சுந்தரி) போன்றோரது தடத்தில் நின்று பெரும்பாலும் குடும்பப் பாங்கான கதை களையே புனைந்திருக்கிறார். இவர்
பாடசாலை ஆசிரியைப் பணியில் இருந்த
படியால், தனது எழுத்துக்களுக்கு வாசக னை நெறியான வாழ்வுக்குத் தயார்ப் படுத்தும் பக்குவம் இருக்க வேண்டு மெனக் கருத்தூன்றி இலக்கியம் படைக் கிறார். மரபைச் சரியாகப் புரிந்து கொண்டு எழுத்துப் பணியைச் செய்கிறார். இன் றைய இலக்கிய உலகை பெண்ணியம் கவ்விப் பிடித்துக் கொண்டு தமிழ்
இலக்கியத்தை நெறிப்படுத்த முனையும் பெண் எழுத்தாளராக இருந்தும் அந்தப் பெண்ணியவாத என்ற சீருடையைப் போர்த்திக் கொள்ளாமல் தன் புனைவு களில் பெண்களுக்காக வாதிடுகிறார். தன்னை ஓரங்கட்டுவதாகவும் தன் சிறுகதைக்குச் சுவிஸ் பிராங்கில் சன்
மானத்தைப் பெற்ற பாலேஸ்வரி குறை
படுகிறார். இவரது பக்கம் சாராத் தன்மையே இதற்குக் காரணமாக இருக்கலாம்! இருந்தாலும் இவரது புனைவுகள் இலக் கியத்தில் இவரது இருப்பை உறுதிப்படுத் துபவையாக இருக்கின்றன.
ஈழத்தில் வெளியாகிய/ வெளியா கும் சகல பத்திரிகை, சஞ்சிகைகளிலும் சிறுகதைச் சிற்பி பாலேஸ்வரி தனது படைப்புக்களை வெளியிட்டிருக்கிறார். கல்கி, உமா. பூந்தொட்டி, குங்குமம் ஆகிய தமிழகத்துச் சஞ்சிகைக்ளும் இவ ரது புனைவுகளை விரும்பிப் பிரசுரித்திரு
க்கின்றன.
தனது முதல் சிறுகதையும் நாவலும் எதுவித ‘வெட்டுக் கொத்து'மின்றி வெளி யானதாகப் பொச்சடிக்கிறார். இது வாசக ருக்கும், எழுத்தாளருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்! ஆனால் அப்படி யும் இருக் கலாமென நம்பவைக்கின்றது பிரபல முற்போக்கு எழுத்தாளர் ந. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு) கூறியிரு க்குமொரு கருத்து. மறைந்த பேராசிரியர் க. கைலாச பதிபடைப்பாளியின் ஒரு எழுத்தைக் கூட வெட்டி மாற்ற மாட்டாராம். எனவே பாலேஸ்வரி சொல்வதை ஏற்கத்தானே வேண்டும்
மல்லிகை செப்ரம்பர் 2007 & 5

Page 5
பாலேஸ்வரி தன் எழுத்தை வழப்ப டுத்தும் ஆவேசத்தோடு அக்காலத்தில வானொலி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்கிய இசையும் கதை யும் என்ற நிகழ்ச்சிக்கும் எழுத்துப் பிரதி கள் மூலம் பங்களிப்புச் செய்துள்ளார். இந் நிகழ்ச்சியை மிகப் பிரபலமான அறிவிப் பாளர்களான எஸ். பி. மயில்வாகனம், நடராசிவம் எஸ். கே. பரராசசிங்கம், ராஜ குரு சேனாதிபதி கனகரத்தினம்,இராஜேஸ் வரி சண்முகம், புவனலோசினி நடராச சிவம் ஆகியோர் தயாரித்து ஒலிபரப்பிய துண்டு. இந்நிகழ்ச்சிக்கு வரும் கடிதங் கள் தன்னை மென்மேலும் எழுத்துத் துறைக்குள் இழுத்து வைத்தாகப் பாலேஸ் வரிகூறுகிறார். இந்நிகழ்ச்சியை இவர் கெட்டி த்தனமாகத் தனது எழுத்துப் புனைவுக்கு பயிற்சிக் களமாக்கியது. இலக்கியத்தில் இவருக்கிருந்த ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறது.
இத்தகையதொரு ஜனரஞ்சகம் படைப்பாளியை தமிழ் இலக்கியத்து க்குத் தந்த பெருமை இவரது குடும்பத்து க்குமுண்டு. இவரது குடும்பம் படிப்பறிவில் முன்னேற்றமானதாக இருந்துள்ளது. வீட்டினுள்ளோரது பொழுது போக்கு தமிழ் வாசிப்பாக இருந்திருக்கிறது.
அம்மா மகளை மடியில் வளர்த்தி வியப்புமிகு கதைகளாகச் சொல்லி சிறுமி பாலேஸ்வரியின் நெஞ்சில் புனைவுப் பயிருக்கான விதைகளை ஊன்றினார். அத்தோடு ஈழத்தின் முன்னோடி நாவ லான "மோகனாங்கி"யை எழுதியவரெனச் சுட்டப்படும் தி. த. சரவணமுத்துபிள்ளை,
பாலேஸ்வரியின் பெரிய தந்தை. அவர்
போலத் தானுமொரு நாவலாசிரியை யாக வரவேண்டுமெனத் தன் மனதில் ஓர் ஆசையை வளர்த்தார். அது விசுவரூப மாகி இன்று அக்கனவு நனவாகிவிட்டது நாடுபோற்றும் எழுத்தாளராக பாலேஸ்வரி பிரகாசிக்கிறார்.
பாலேஸ்ரியின் இலக்கிய ஆளு மையை இனங்கண்டு - திருகோணமலை எழுத்தாளர் சங்கத்துக்குத் தலைவராக்கிய பெருமை குறும்பாவின் பிதாமகர் மஹா கவியையே சாருகின்றது.
நாளொரு சிறுகதை என்றொரு
இலக்கியத் திட்டத்தை நடைமுறைப்படு
த்திய பொழுது சிறுகதைத் தெரிவு நடுவராக பாலேஸ்வரி பணிபுரிந்தார். இவர் மூலமாக சிறுகதை அரங்கிற்கு வந்தவர்கள் இன்று மிகப்பிரபலமாக விளங்குகின்றனர். இதழியலார்களான எஸ். ரி. சிவ நாயகம், செ. கதிர்காமநாதன், கனக செந்தி நாதன், பொன் ராஜகோபால் ஆகிய தகைசார் இலக்கியவாதிகளின் ஊர்க்குவிப் பால் எழுத்தில்- தான் மேன்மையும் கண்டதாயும் கூறுகிறார்.
ஆக- ஓர் எழுத்தாளனின் சிந்தனை
களைப் பலநூற்றாண்டுகளுக்குக் கொண்டு
செல்லக் கூடிய சூழ்நிலை இன்று நம் பெருவிளைச்சல் கண்டிருக்கின்றது. இதை எந்தவொரு எழுத்தாளனும் சிந்த னையாளனும் காணாதிருக்க முடியாது. புனைவிலக்கியத்தில் துறை போன ந. பாலேஸ்வரி இவைகளையெல்லாம் எடுகோளாக்கி நாளைய வாசகனுக்கு கொடுக்க வேண்டுமென்தே அவரது அபி மான வாசகரின் விருப்பமாகும்!
மல்லிகை செப்ரம்பர் 2007 * 6

22, qം്രീ qം്രഗ്രസ
தெணியான்
இளம் வயதில் பாடசாலை ஆசிரியராகி நீண்டகாலம் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த எனது ஆசிரியப் பணியுடன், மேலும் இன்னொரு கடமையினை ஏற்றுச் செயற்படும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தொலைக் கல்வி மூலம் ஆசிரியர்களாகப் பயிற்சி பெறும் பாடசாலை ஆசிரியர்களுக்குப் போதனாவாசிரியராக 25, 07, 1993இல் நியமனம் பெற்றேன். கரவெட்டி, விக்னேஸ்வராக் கல்லூரியில் இயங்கி வந்த தொலைக் கல்விப் பயிற்சி நிலையத்தில் சனி, ஞாயிறுகளிலும், விடுமுறை நாட்களிலும் வகுப்புக்கள் நடைபெற்றன. அந்த நாட்களில் ஒய்வென்பது எனக்கு இல்லாமற் போயிற்று. எதிர்காலத்தில் மாணவ சமுதாயத்தினைக் கட்டி எழுப்பி வளர்த்தெடுக்கப் போகும் இளம் ஆசிரியர்களுக்குக் கற்பிப்பதும், வழிகாட்டுவதும் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுத்தது.
மாணவர்கள் ஆரம்ப வகுப்புக்களிலேயே செம்மையான மொழி அறிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் மனக் கருத்து எப்பொழுதும் எனக்குண்டு. அந்த மாணவர்களுக்குக் கற்பிக்கப் போகும் ஆசிரியர்கள், அதற்குத் தகுந்த தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தினை மன அந்தரங்கத்தில் கொண்டு நான் செயற்பட்டு வந்தேன். அந்த எண்ணம் எனது உள்ளத்தில் உருவாவதற்கு, நீண்டகாலம் பாடசாலை ஆசிரியர்களுடன் நான் ஊடாடி வந்ததே காரணமாக அமைந்தது!
இந்தக் காலகட்டத்தில் "இன்னுமா..?" என்னும் எனது சிறுகதையினைப் பிரசுரிக்காது "மல்லிகை நிராகரித்தது. பின்னர் அந்தச் சிறுகதையினைக் கனடாவில் இருந்து வெளிவந்த "நான்காவது பரிமாணம்' சஞ்சிகை 1993 ஜூலை இதழில் வெளியிட்டு வைத்தது. "இன்னுமா..? என்னும் அந்தச் சிறுகதை பற்றி "ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற தனது நூலில் கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "நீங்கள் கவலைப் படாதையுங்கோ அண்ணே. எங்கடை ஆக்கள் ஒருத்தருமில்லை. அது. எல்லாம்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 7

Page 6
சமரவாகுப் பள்ளரும் இலந்தைக் காட்டு நளவரும்தானாம்' தெணியானின் ‘இன்னுமா..? சிறுகதை முடிகின்றது. மானிட
என்று
நேயத்தைச் சந்தேகிக்கின்ற சிறுகதை யாக எனக்குப் படுகின்றது. மானிடநேய த்தைச் சந்தேகிக்கின்ற சிறுகதையா கச் செங்கைஆழியான் நோக்குவதில் தவறில்லை. அவர் தனதுநிலை நின்று பார்க்கின்றார். ஆனால் அவ்வாறு கூறப்பட்டதை நான் எனது செவியினா லேயே கேட்டிருக்கின்றேன். அவ்வாறு கூறியவன் சாதிகளின் பெயரைக் குறிப்பிடாமலே சொல்லிப் போனான். வாசகர்களின் தெளிவுக்காக, கிராமங்க ளின் பெயரால் அவன் மறைத்துக் கூறியதனைச் சாதிப் பெயர்களைச் சொல்லி விளங்க வைத்துள்ளேன். அவ்வளவுதான். சாதீயத்தில் உறை ந்து போனவர்களிடத்தில் மனித நேய த்தை எதிர்பார்ப்பது, எவ்வளவு அபத் தம்? எனது சிறுகதையைச் செங்கை ஆழியான் நோக்கியது போல, எனது படைப்புக்களை நோக்குகின்றவர்கள் சிலர் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் சாதீயச் சமூகம் பற்றித் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டி யவைகள் பல இருக்கின்றன.
‘இன்னுமா..? சிறுகதையைப்
பிரசுரித்த சஞ்சிகையைக் கனடாவில் இருந்து
"நான்காவது பரிணாமம்’
எனது தம்பி நவம் வெளியிட்டு வந்தான். பிரான்ஸில் இருந்து வெளிவந்து
கொண்டிருந்த 'உயிர் நிழல்' என்னும் சஞ்சிகை, வடசால்வை க. முருகேசு ஆசிரியர் அவர்களின் பவள விழா மலரில் சாதீயம் பற்றி நான் எழுதி இருக்கும் விரிவான கட்டுரையை 2001 மே- ஆகஸ்ட் இதழில் மறுபிரசுரம் செய்தது.
எனது அன்புக்கும் நட்புக்கும் உரியவர் டொக்ரர் எம். கே. முருகானந் தன். இலக்கியந்தான் எங்களைப் பிணைத்தது. அறிவோர் கூடல் அந்தப் பிணைப்பினை மேலும் இறுக்கியது. அவர் பல நூல்களை வெளியீடு செய்தி
ருக்கின்றார். வடமராட்சியில் நடை
பெற்ற அவரது நூல் வெளியீட்டு விழாக்களில் வரவேற்புரை, அறிமுக வுரை, மதிப்பீட்டுரை என எதனையா வது ஒன்றினைச் செய்யும் சந்தர்ப்பத் தினை எனக்கு வழங்கி வந்திருக்கி றார். அன்னாரின் "வைத்திய கலசம்' நூல் வெளியீடு 25. 04. 1994இல்
பருத்தித்துறை வடஇந்து மகளிர்
கல்லூரியில் இடம் பெற்ற சமயம், அந்த விழாவுக்கு என்னைத் தலைமை தாங்கச் செய்தார். அந்த வெளியீட்டு விழாவினைச் சிறப்பாக நான் வைத்த தாகப் பல நண்பர்கள் நேரில் என்
னைப் பாராட்டினார்கள். '
ஆனால், அந்த விழாவை நடத்து
வதில் மாபெரும் தவறு ஒன்றினை டொக்ரர் செய்து விட்டார். யாழ்ப்பாணத்
துச் சாதீய சமூகத்தை முற்றாக விளங்
மல்லிகை செப்ரம்பர் 2007 & 8

கிக் கொண்டிருந்தால் தனது நூல் வெளியீட்டு விழாவுக்கு என்னைத் தலைமை தாங்கும்படி செய்திரு க்கமாட்டரல்லவா? தலைமைப் பொறு ப்பினை என்னிடத்தில் விட்டது மாத்திர மன்றி, ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையுள்ள ஆ. கந்தையா ஆசிரியரையுமல்லவா, அந்த விழாவில் பேச வைத்துவிட்டார்? நீறுபூத்த சாதீய’ மனங்களினால் இந்தக் கொடுமைக
ளைச் சகித்துக் கொள்ளத்தான் முடி’
யுமோ? அப்பகுதியிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின் அதிபர், "தலைமை தாங்க உங்களுக்கு வேறு ஆள் கிடை க்கவில்லையா?" என டொக்டரிடம் நேரில் கேட்டு, குறைபட்டுக் கொண்டார் என்பதனை பின்னர் நான் அறிந்து கொண்டேன். அதன் தாக்க வெளிப் பாடு வேறொரு நூல் வெளியீட்டு விழா வில் வெளிப்பட்டதனைப் பின்னர் பார்க்
856mb.
பருத்தித்துறையில் இயங்கி வந்த அறிவோர் கூடலில் நிகழ்ந்த இன் னொரு சம்பவம்பற்றி இங்கு சொல் லியாக வேண்டும். அறிவோர் கூடல் களில் உரைஞரின் பேச்சினைத் தொட ர்ந்து கலந்துரையாடல் இடம் பெறுவது வழக்கம். ஒருதினம் நடைபெற்ற அந் தக் கலந்துரையாடலின் போது சாதீ யம் பற்றிய பேச்சு மெல்ல மேலெழு ந்தது. அப்பொழுது தான் சாதி வேறு பாடு பார்த்து நடப்பதில்லை என்ப தனை நிரூபிக்கும் நோக்கத்துடன்
ஒருவர் என்ன சொன்னார் தெரியுமா? "தெணியானுக்கு எங்கள் வீட்டில் நான் தேநீர் கொடுத்தேன்' என்றார் அந்தப் பிராமணர். அவர் சொற் கேட்டு அந்தக் சபை ஒருகணம் மெளனித்து ஸ்தம்பித் தது. அந்த மெளனம் அவருடைய அப்பாவித்தனத்தை உணர்த்துவது போல, அங்கு உறைந்து கிடந்தது.
நான் அமைதியாகச் சிரித்துக் கொண்டேன். என்னோடு பழகிய, நெருக்கமான பிராமண நண்பர்கள் பலரை ஒருதடவை நினைத்துக் கொண்டேன்.
தனது வீடுதேடி வரும் ஒருவரை, வரவேற்று உபசரிக்க வேண்டியது நாகரிகம் அடைந்த ஒவ்வொரு மனித னும் செய்ய வேண்டிய ஒரு தாரியம். முன்னொரு காலத்தில் வீடுகளுக்கு வருகின்றவர்களை வெற்றிலை, பாக்கு முதலியன வழங்கி உபசரிக்கும் ஒரு வழக்கம் இருந்து வந்தது. இன்று அந்த
வழக்கம் முற்றாக மாற்றமுற்று, குறை
ந்தது ஒரு தேநீர் வழங்கி உபசரிக்கும் நடைமுறைபின்பற்றப்பட்டு வருகின்றது.
Y
அந்தப் பிராமணரின் பாசி படிந்த இல்லத்தில் ஒரு பிராமணப் பெண் போலத் தோன்றாத அவர் மனைவி தந்த தேநீரைப் பருகாது வேண்டா மென நான் நிராகரித்திருக்கலாம். அப்படிச் செய்வது அவரை நான் அவமதித்ததாக இருக்கும். அத்தகைய அநாகரிகமான பண்பாடு என்னிடத்தில்
மல்லிகை செப்ரம்பர் 2007 & 9

Page 7
இல்லை என்பதனை, சாதியினால் தான் பெரியவனாகி விட்டதாக எண் னிக் கொண்டிருக்கும் அவருக்கு விள ங்கவா போகின்றது?
திகில் நிறைந்த கிளாலிப் பாதை ஊடாக நான் கொழும்பு சென்றேன். எனது தம்பி கனடாவில் இருந்து மனைவி, மகனுடன் கொழும்பு வந்தி ருந்தான். எனது "மரக்கொக்கு” நாவல் கணனியில் பதிவு செய்து கையோடு கொண்டு வந்திருந்தான். அந்த நாவல் தமிழ்நாட்டு நூல் வெளியீட்டாளர் ஒருவரிடம் நீண்டகாலம் உறங்கிக்
கிடந்த்து. தமிழ்நாட்டில், ஆடிக் கலவர
த்தின் பின்னர் சிலகாலம் தங்கி இரு க்க நேர்ந்தவேளை எனது தம்பியின் மனைவி வழியாமளா அதனை மீட்டெ டுத்து எனக்கு அனுப்பி வைத்தார். நான் அதனைத் திரும்பவும் எழுதி, பின் கனடாவுக்கு அனுப்பி வைத்தேன். கணனியில் பதிவு செய்யப் பெற்றிருந்த அந்தப் பிரதியை எனது அன்புக்குரிய பூபாலசிங்கம் முறிதரசிங்கிடம் கொடுத்து (01, 12. 1994) நூலாக்குவதற்கான ஏற்பாட்டினைத் தம்பி செய்தான். ஒருவார காலத்தில் நான்காவது பரி ணாமம் வெளியீடாக "மரக்கொக்கு" நூலுருப் பெற்றது. அதன் அட்டைப் படத்தினைத் தம்பியின் மகன் பன்னி ரண்டு வயதுச் சிறுவ் நரேன் வரைந்திரு ந்தான்.
நூல் வெளிவந்த சமயம் நான் கொழும்பில் இல்லாதபோதும், அதன் வெளியீட்டு விழாவை (13, 01. 1995) டொமினிக் ஜீவா, முறிதரசிங், ராஜ முரீகாந்தன் ஆகியோர் முன்னின்று கொழும்பு விவேகானந்தா சபை உள் மண்டபத்தில் நடத்திவைத்தனர். பின்னர் யாழ்ப்பாணம் வடமராட்சியில் தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் (14. 02. 1995)இல் பேராசிரியர் நா. ஞானகுமாரன் தலை மையில் ஓர் அறிமுக விழா நடை பெற்றது. கல்விப் பணிப்பாளர் சி. சிவ ராசா, பேராசிரியர். சோ. கிருஸ்ணராசா, பேராசிரியர் சபா. ஜெயராசா ஆகியோர் அந்த விழாவில் கலந்து கொண்டா isണ്.
"மரக் கொக்கு' நாவல் அந்த ஆண்டுக்குரிய (1995) முறிலங்கா சாஹித்திய மண்டலப் பரிசு, வடக்கு/ கிழக்கு மாகாண அமைச்சின் பரிசு, இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசு என்பவற்றைப் பெற்றுக் கொண் டது. பூபாலசிங்கம் புத்தக வெளியீடாக எனது 'காத்திருப்பு' நாவல் (1999) வெளிவந்தது. அந்த ஆண்டுக்குரிய, வடக்கு/கிழக்கு மாகாண அமைச்சின் பரிசினை அந்த நாவல் பெற்றுக் கொண்டது. எனது மணிவிழா நினை வாகப் பூபாலசிங்கம் புத்தக வெளியீட் டாளர் பூபாலசிங்கம் முறிதரசிங் எனது 'கானலில் மான்’ நாவலை 2002இல் வெளியிட்டு வைத்தார். அந்த நாவல்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 10

இலங்கை அரசின் சாஹித்திய மண்ட லப் பரிசு, இலங்கை இலக்கியப் பேர வைப் பரிசு என்பவற்றைப் பெற்றுக் கொண்டது.
நான் எழுதுவதற்கு ஆரம்பித்து சில ஆண்டுகளின் பின்னர் போட்டிகளு க்குக் கதை எழுதுவதை முற்றாகக் கைவிட்டேன். சுபமங்களா' வில் அறி விக்கப்பட்டிருந்த குறுநாவல் போட்டி பற்றிய விபரங்களை எனது சின்ன மகள் ஜானகி படித்துவிட்டு, அந்தப் போட்டிக்கு எழுதுமாறு கேட்டுக் கொண்டாள். ஒரு போட்டியில் பங்கு கொள்வது எனக்கு முக்கியமல்ல. ஆனால் ஒரு குறுநாவல் எழுதி முடித் ததாக இருக்குமென அப்பொழுது நான் எண்ணினேன். நான் எடுத்திருந்த தீர்மானத்தைத் தளர்த்திவிட்டு, குறுநா வலை அத்தியாயம், அத்தியாயமாக நான் எழுதிக் கொடுத்துக் கொண்டி ருக்க, சின்னமகள் அதனைப் பிரதி பண்ணிமுடித்தாள். அந்தக் குறுநாவல் "சுபமங்களா தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய அந்தப் போட்டியில் (1995) பாராட்டுப் பெற்ற படைப்புக்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப் பெற்றது. 'தினகரன் ஆசிரிய ராக ராஜ ருரீகாந்தன் பொறுப்பேற்ற பிறகு, ஞாயிறு தினகரனில் அந்தக் குறுநாவல் 26. 04, 1998 முதல் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வெளி வந்தது. பின்னர் அந்தக் குறுநாவ லுடன் "பரம்பரை அகதிகள்' என்னும்
குறுநாவலையும் சேர்த்து ஓவியர்
ரமணியின் சிறப்பான அட்டைப்படத்
துடன் மீரா வெளியீடு ஆ. இரத்தின வேலோன் ஒரு நூலாக 2003 இல் வெளியிட்டு வைத்தார்.
வலிகாமம் இடப் பெயர்வு இடம் பெற்றபோது யாழ்ப்பாணம் கொழும்பு த்துறையில் இயங்கி வந்த முதியோர் இல்லம், எங்கள் கல்லூரி (தேவரை யாளி இந்துக் கல்லூரி) தொழில்நுட்பப் பிரிவு கட்டடத்துக்கு இடம்மாற்றப் பெற்றது. அந்த இல்லத்தில் அ. செ. முருகானந்தம் தங்கி இருப்பதாக ஒரு
தகவல் எனக்குக் கிடைத்தது. உடனடி
யாக அவரைத் தேடிக் கொண்டு நான் அங்கு சென்றேன் அந்த முதியோர் இல்லத்துக்குப் பொறுப்பாக இருந்த ஒருவரிடம் அ. செ. மு பற்றி விசாரித் தேன். அவர் என்னை அழைத்துச் சென்று (15. 11. 1995) 'ஐயா உங்க ளைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்." என அ. செ. மு இடம் சிரித்துக் கொண்டே கூறினார். அந்தச் சிரிப்பு என் மனதுக்கு திருப்தியாகத் தோன்ற வில்லை. உங்களைப் பார்க்கவும், இன்றொருவர் வந்திருக்கின்றாரே! என இளக்காரமாக எண்ணுவதன் வெளிப் பாடாகவே அந்தச் சிரிப்பை நான் உணர்ந்தேன்.
அ. செ. மு. ஆஸ்மா நோயினால்
மிக இளைத்துப் போய் இருந்தார். அந்த நோய் அவரைப் பெரிதும் வருத்
மல்லிகை செப்ரெம்பர் 2007 率 11

Page 8
திக் கொண்டிருந்தது. ஓர் எழுத்தா ளனை இந்த நிலையில் நான் சந்திக் காமல் இருந்திருக்கலாம் என ஒரு கணம் நினைத்துக் கொண்டேன். நான் அவருக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர் தான் அவர் இனங் கண்டு கொண்டார். எதிர்பாராமல் உறவினர் ஒருவரைச் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியுடன் முகம் மலர்ந்து உரையாடினார். தொடர்ந்து பேசுவ தற்கு நோய் அவரை விட்டு வைக்க வில்லை. பேசுவதற்கு இயலாது மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். அவர் துன்பப்படுவது கண்டு எனக்கு மனம் சகிக்கவில்லை. அவரிடம் இருந்து விரைவில் விடை பெற்றுச் செல்ல
விரும்பினேன். "நான் உங்களுக்கு என்ன
செய்ய வேண் டும்?' எனப் புறப்படும் போது கேட்டேன். "வேறு ஒன்றும் வேண்டாம். ஆஸ்துமாவுக்குரிய மருந்து களை வாங்கித் தாருங்கோ." என்றார்.
அன்றே அவருக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வந்து கொடுத் தேன். அவர் தங்கி இருந்த முதியோர் இல்லம், எங்கள் கல்லூரியில் இருந்து பின்னர் திருகோணமலைக்கு இடம் மாறிச் செல்லும் வரை தொடர்ந்து நான் அதனைச் செய்து வந்தேன். அந்தச் சிறிய உதவியையாவது செய்யமுடி ந்தது என்பது தான் எனக்கு மனதில் இருக்கும் ஒரு திருப்தி. அதற்குமேல் என்னால் என்னதான் செய்யமுடியும்?
தன்னலம் கருதாது எனது இலக் கிய உறவு ஒன்றினை இங்கு குறிப் பிடுவது அவசியமெனக் கருதுகி ன்றேன். “கடலில் கலந்த கண்ணிர்' சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை ஒன்றினை நான் எழுதினேன். அந்தக் காலம் முதல் அந்த நூலின் ஆசிரியர் எஸ். வீ. தம்பையாவுடன் நெருக்கமான ஒர் உறவு இருந்து வந்தது. ஆனால்
அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசிக்
கொள்ளும் சந்தர்ப்பம் இருவருக்கும் இல்லாத போதும் நெஞ்சத்தால் நெரு ங்கி இருந்தோம். 1984இல் வெளிவந்த சொத்து சிறுகதையின் பின்னர், எனது இன்னொரு சிறுகதைத் தொகுதி வெளி வர வேண்டுமென அவர் விரும்பினார். அவர் தனது விருப்பத்தினை ஜீவ்ா விடம் தெரிவித்து, ரூபா ஐயாயிரத் தினைக் கொடுத்து "மாத்து வேட்டி" (1996) சிறுகதைத் தொகுதி 'மல்லி கைப் பந்தல் வெளியீடாக வெளிவரச் செய்தார் என்பது நினைவு கூரப்பட வேண்டிய ஒன்று.
சமூக விவகாரம் ஒன்றினை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகள் யாழ்ப்பா ணத்தில் அதிகரித்த பிற்பாடு, ஒடுக்கப் பட்ட சமூக விவகாரங்களில் ஈடுபடும் சூழ்நிலை இல்லாது போயிற்று. ஆயி னும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாதி காரணமாக இழைக்கப்படும் Gasst G60)LD களைக் பார்த்துக்கொண்டு சும்மா இரு க்க முடியவில்லை.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 12

ஒடுக்கப்பட்ட சமூகத்து ஏழைப் பெண் ஒருத்தியை உயர்ந்த சாதி வாலிபன் ஒருவன் காதலித்தான். அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று ஒரு வார காலம் சேர்ந்து வாழ்ந்தான். பின்னர் அவளைக் கை விட்டு விட்டான். இந்தச் செய்தியைச் சமூகக் காரியங்களில் முனைப்புடன் செயற்படும் ஒருவர் வந்து என்னிடம் தெரிவித்தார். மறுநாள் சமூக அக்கறை யுள்ளவர்களெனக் காட்டிக் கொள்ளும் ஒடுக்கப்பட்ட சமூகத்துச் சிலரை ஒன்று கூட்டி அதுபற்றி ஆலோசித்தோம். அப்பொழுது அதிகாரத்தில் இருந்தவர் களிடம் அடுத்தநாள் காலையில் எல் லோருமாகச் சென்று அவர்கள் கவன த்துக்குக் கொண்டு வந்து இழைக்கப் பெற்ற கொடுமைக்குத் தீர்வு காண் போமென ஏக மனதாகத் தீர்மானித்துக்
கொண்டோம்.
மறுதினம் காலை முதல் நீண்ட நேரமாக நானும் எனது கவனத்துக்குக் கொண்டு வந்தவரும் குறித்த சனசமூக நிலையத்தில் காத்திருந்தோம். முதல் நாள் தீர்மானம் எடுத்துக் கொண்டு போனவர்களுள் ஒருவர் தானும் அங்கு வந்து சேரவில்லை. அவர்கள் அவ்வள வுதான் என்பதனை விளங்கிக் கொ ண்டு உடன் நின்றவரை அழைத்துக் கொண்டு சென்று விவகாரத்தை எடுத் துச் சொல்லி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். எனது கோரி க்கையின் நியாயத்தை உணர்ந்த
வர்கள், மறுநாளே அந்த வாலிபனைத் தேடிப்பிடித்து வந்து, அந்தப் பெண்ணு க்குத் திருமணஞ் செய்து வைத் தார்கள்.
நான் இறந்து போன கதையை இங்கு தவறாமல் சொல்லியாக வேண்டும். இரத்த அழுத்தம் காரண மாக மூக்கில் இருந்து இரத்தம் வடிய ஆரம்பித்ததும் 06.08. 1996 அன்று பரு த்தித்துறை அரசினர் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டேன். அன்று இரவு பெரும் சிரமத்துடன் பல இராணுவ முகாம்களைத்தாண்டி யாழ்ப்பாணம் அரசினர் வைத்திய சாலைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க ப்பட்டேன். ஒருதினம் கழித்து பருத்தி த்துறை வைத்தியசாலையில் நான்
அனுமதிக்கப்பட்டிருந்த சமயம், அங்கு
நோயாளியாகத் தங்கியிருந்த ஓர் ஆசிரியர் (08.08.1996) காலமானார். ஆள்மாறாட்டம் காரணமாக நான் இறந்து போய்விட்டதான தகவல்
எங்கும் பரவியது. எனது கல்லூரியில்
அஞ்சலி செலுத்துவதற்கான மலர் வளையங்களை மாணவர்கள் கட்டினா ர்கள். அஞ்சலிப் பிரசுரங்களை எழுதத் தொடங்கினார்கள். பத்திரிகை நிருபர் களுக்குச் செய்தி கொடுத்தார்கள். எனது வீடு தேடிப் பலர் சென்றார்கள். நடுப்பகலின் பின்னர்தான் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியவந்தது. இரண்டு வார காலத்துக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து,
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 13

Page 9
பின்னர் வீடு வந்து சேர்ந்தேன். இரத்த அழுத்தத்துக்குத் தினமும் மருந்து ண்ணும் நிலைக்கு ஆளானேன்.
இந்தச் சமயம் எனது "மரக் கொக்கு நாவல் சாஹித்திய பரிசி னைப் பெற்றுக் கொண்டது. அந்தப் பரிசினைக் காரணமாச் சொல்லி, நோயினால் கடுமையாய்ப் பாதிக்கப் பெற்ற என்னை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் எனது நண்பர்கள் பல பாராட்டு விழாக்களை நடத்தினார்கள். டொக்ரர் முருகானந்தன் இல்லத்தில் அறிவோர் கூடல் சார்பில் (15. 09. 1996)இல் பாராட்டு விழாவொன்று நடைபெற்றது. எனது நண்பர்கள் பலர் சேர்ந்து எனது கல்லூரி மண்டபத்தில் (01, 12. 1996) ஒரு விருந்தினைத் தந்து கெSது வித்தனர். பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். செல்வராசா சமூகந் தந்து நண் பர்கள் சார்பில் பரிசிலை வழங்கினார். தொலைக்கல்வி நிலைய த்தில் அதன் தலைவராக இருந்த கே. தர்மசிறிராசா தலைமையில் 11, 01. 1997இல் ஒரு பாராட்டு விழா இடம் பெற்றது. அல்வாய் வடக்கு மக்கள் 02. 02. 1997 இல் முறிலங்கா வித்தியாலத் தில் பாராட்டு விழா ஒன்றினைச் சிறப் பாக நடத்திவைத்தார்கள். எங்கள் கல் லூரிப் பரிசளிப்பு விழா 14. 07. 1997 நடைபெற்ற சமயம் அதிபர். ம. குட்டித் தம்பி, பிரதம விருந்தினர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களைக் கொண்டு பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கிக் கெளரவித்தார்.
இந்த விழாக்கள், விருந்துகள், பாராட்டுகள், கெளரவிப்புகள் நடத்திய நண்பர்கள் பழைய நிலைக்கு மீண்டும் என்னைக் கொண்டுவர வேண்டு மென்னும் ஆதங்கத்துடன் இருந்ததை நான் அறிவேன். நான் இறந்து போன தான செய்தி பரவியது முதல், அதன் பின்னர் நடந்தவைகள் யாவையும் இன்று நான் எண்ணிப் பார்க்கின்ற போது, இந்தச் சமூகத்தின் மீது மேலும் அதீத அக்கறையும் நன்றியும் பொறுப்
பும் உள்ளவனாகின்றேன்.
பாரதிநேசன் (வீ. சின்னத்தம்பி) என்னிடத்தில் ஒரு செவ்வியை எடுத்து 'தினக்குரல்' பத்திரிகைக்கு கொடுத் திருந்தார். அந்தச் செவ்வி 11.01. 1998 வாரப்பதிப்பில் வெளிவந்தது. அந்தச் செவ்வியின் இறுதியில் டானியல் பற்றி ஒரு நூல் எழுதும் எண்ணம் எனக்கு மனதில் உண்டென்பதனைத் தெரிவித் தேன்.
அடுத்த வாரம் பலபக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கடிதம் பதிவுத் தபாலில் கொழும்பில் இருந்து எனக்கு வந்து சேர்ந்தது. அதனை அனுப்பி வைத்தவர் கடிதத்தின் மூலப் பிரதி யைத் தன்வசம் வைத்துக் கொண்டு, போட்டோ பிரதியை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கடிதம் டானிய லின் மனைவி ஒருவரைத் தவிர டானி யல் குடும்பத்திலுள்ள அத்தனை பேரை யும் பற்றித் தூவழித்து, கேவலப்படுத்தி
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 14

எழுதப் பெற்ற ஒரு வசைப் பட்டயம். நான் ஒரு தடவை மாத்திரம் அந்தக் கடிதத்தைப் படித்தேன். திரும்பப் படிப்பதற்குக் கூச்சமாக இருந்தது. நான் இவ்வாறான ஒரு கடிதத்தை முன்னர் ஒருபோதும் படித்ததில்லை. அல்லது வாயினால் யாராவது இப்படிச் சொல்லக் கேட்டதில்லை. இத்தனைக் கும் அதனை எழுதியனுப்பியவர் ஒர் ஆசிரியர்! தான் மாத்திரம் வெகு பரிசு த்தமான சத்தியவான் என்று பீத்திக் கொள்ளுகின்ற ஒருவர். அழுக்காறு பிடித்த படுநஞ்சன் அவர் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும்.
அவர் இப்படி ஒரு வசைக் கடிதம் எழுதி எனக்கு அனுப்பி வைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? டானியல் பற்றி நான் ஒரு நூல் எழுதுவதைத் தடுப்பதுதான்! அவர் எனது பதிலை எதிர்பார்க்கின்றார் என்பதனை அவர் எழுதிய கடிதத்தின் மூலம் நான் உண ர்ந்து கொண்டேன். அவருக்குப் பதில் ஒன்று எழுதுவது பற்றிச் சில தினங்கள் நான் சிந்தித்தேன். இறுதியில் அவ ரைப் போன்றவர்களை அலட்சியம் பண்ணுவது தவிர, அவருக்கு நான் கொடுக்கத் தகுந்த முறையான பதில் வேறொன்று இருக்க முடியாதென அமைதியாக இருந்து விட்டேன்.
நான் டானியல் பற்றி இதுவரை ஒருநூல் எழுதவில்லை. எழுதாததற்கு வேறு சில காரணங்கள் உண்டு. அவர் விரும்பியதுபோல எழுதாமலே இருந்து விடுவேன் என்று சொல்வதற்கில்லை. டானியலைத் தூற்றுவதையே தான்
எடுத்த புதுப்பிறவியின் நோக்கமாகக் கொண்ட அவர், டானியலின் நண்பர் களுக்கும் சேறடிக்கத் தவறவில்லை. டானியல் தனது நண்பர்களுக்குப் பணம் கொடுத்துத்தான் நெருக்கமான நட்புறவைத் தக்க வைத்துக் கொண்டா ரென வாய் கூசாமல் பிரசாரம் செய்யும் பிரகிருதி அவர். டானியலிடம் அவர் எதிர்பார்த்த பணம் அவருக்குக் கிடை க்காமல் போன ஏமாற்றத்தின் வெளி ப்பாடுதான் இது என்பது எல்லோரும் நன்கு அறிந்த ஒன்றுதான்.
இன்னொரு கல்விமான் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். படை ப்பாளி ஒருவர் தனது நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டு அந்த நூல் பற்றிய மதிப்பீட்டுரை ஒன்றினை ஆற்ற வேண்டுமென என்னிட் கேட்டுக் கொண்டார். அவர் எனது விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் நண்பர். அதனால் அவரது வெளியீட்டு விழா வில் பங்கு பற்றவதற்கு மகிழ்ச்சியுடன் உடன் பட்டேன். ஆனால் விழாவுக்கு முதல் நாள் வரை மதிப்பீடு செய்வற் குரிய நூலின் பிரதி ஒன்றினை அவர் எனக்கு அனுப்பி வைக்கவில்லை. என்னைச் சந்திக்கவுமில்லை. விழாவு க்கு முதல் நாள் அழைப்பிதழ் ஒன்று எனது கைக்கு வந்து சேர்ந்தது.
அந்த அழைப்பிதழில் எனது பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. அப் பொழுதுதான் என்ன நடந்தது? என்ப தனை ஆராய நான் முற்பட்டபோது, திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று என க்குக் கிடைத்தது. அந்த விழாவுக்குத்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 15

Page 10
தலைமை தாங்கிய கல்விமான் நூலா சிரியருக்கு ஒரு நிபந்தனை விதித்திரு ந்தார். அந்த விழாவில் நான் பேசுவ தாக இருந்தால், மேடையில் வந்து தங்களுடன் சமனாக அமர்ந்திருக்கக் கூடாது. சபையில் உட்கார்ந் திருக்க வேண்டும். பேசுவதற்கு அழை க்கப்படும் போது மேடைக்கு வந்து பேசி முடித்துவிட்டு, கீழே இறங்கிப் போய் விட வேண்டும். நூலாசிரியரினால் இந்த நிபந்தனைகளை எனக்கெடுத் துச் சொல்ல முடியுமா?
இது நடந்தது ஐம்பது, நூறு வருடங்களுக்கு முன்னரல்ல ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான்.சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற நான் முன்பு குறிப்பிட்ட நூல் வெளி யீட்டு விழாவுக்குத் தலமை தாங்கிய தன் எதிர் வினைதான் இது.
ஒருவருட காலத்தின் பின்னர் அந்தப் பகுதியில் இன்னொரு நூல் வெளியீடு. அந்த நூலை இருதடவை கள் படித்துச் செப்பனிட்டுக் கொடுத்த வன் நான். அதனால் நூலாசிரியருக்கு என்னைத் தவிர்த்துவிட இயலாது. வெளியீட்டு விழாவில் உரையாற்றுமாறு கேட்டு என்னிடம் வந்தார். அந்த விழாவுக்கு முன்னர் நான் குறிப்பிட்ட கல்விமான்தான் தலைமை தாங்குவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதனை வெளியில் காட்டிக் கொள் ளாது உடனே சம்மதித்தேன்.
பின்னர் சற்றுநேரம் நூலாசியரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, வெளியீ
ட்டு விழாவுக்கு யார் தலைவர்?’ என்று கேட்டேன். நூலாசிரியர் அந்தக் கல்வி மானின் பெயரைச் சொன்னார். அப் பொழுது நான் சிரித்துக் கொண்டு 'அப் படி என்றால் பேசமுடியாது" என மறுத் தேன். முன்னர் நடந்த சம்பவத்தை அறிந்திருந்த நூலாசிரியர், அவரிடம் முன்னதாகவே சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கும் தகவலைச் சொன்னார்.
எனக்கு உள்ளூரச் சினம் பொங் கிக் கொண்டு வந்தது. இதனை வெளி யில் காட்டிக் கொள்ளாது, "நான் பேசுகி ன்ற இலக்கியக் கூட்டத்துக்குத் தலை மை தாங்கும் தகுதி அவருக்கில்லை இதைப் போய் அவருக்கு நான் சொன் னதாகப் போய்ச் சொல்லுங்கோ!" என உறுதியாக மறுத்துச் சொல்லி அனுப்பி வைத்தேன். நிச்சயமாக இந்தத் தகவல் அந்தக் கல்விமானுக்குப் போய்ச் சேர்ந் திருக்கும்.
கல்விமான்கள் சிலர் பல்துறை ஆற்றல் உள்ளவர்களாக இருக்கின் றார்கள். ஆனால், குறிப்பிட்ட அந்தக் கல்விமான் அத்தகைய ஆற்றலுள்ள ஒருவரல்லர். தமிழ், கலை, இலக்கியங் களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல் லை என்பதனை அவர் மேடையில் வாயைத் திறந்ததும் சபையோருக்கு உணர்த்திவிடுவார். ஆனால் அந்தப் பகுதியில் நடைபெறும் விழாக்களுக் குத் தலைமை தாங்கும் குத்தகைக் காரனாக அவர் இருந்துவிடுகின்றார்.
(வளரும்)
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 16

நினைவழியா நாட்கள் - 7
ගීශනරි
- பரன்
‘சாப்பிடப் போகல்லையா. என்றான் திரு.
இன்றைக்குச் சிவபட்டினிதான்'
'ஏன்ரா..?
"இன்னமும் செக்'குக்குக் காசு போடுறார்களில்லை.!
மூன்றரை மணியாகிறதே.ஒன்றரை இரண்டு மணிக்காவது "செக் றிற்ரேன் அனுப்ப வேண்டாமா."
'அனுப்பத்தான் வேணும். ஆனால் இன்னும் சில கஸ்ரமர்களிட செக் கிடக்கிறது. கணக்கிலும் காசு இல்லை."
"அப்ப றிற்றேன் பண்ணிவிடு.
பிறகு வந்து அழுவார்கள். இல்லாட்டி. கத்துவார்கள்
கொஞ்ச நாளைக்கு இரண்டையும் செய்யவிடு. இல்லாட்டி மத்தியானச் சாப்பாட்டை மறந்துவிடு.
போதாக்குறைக்கு வைத்தியும் திட்டுறான். என்னால தன்வேலையும் மினக்கெடுதாம் . என் வயிறெரிச்சலைச் சொன்னேன், நான்!
ஏறக்குறைய மூன்று மாதங்களாக இதுதான் நடக்கின்றது. வங்கியில் நடைமுறைக் கணக்குப் பகுதிக்கு வந்தாலும் வந்தேன். இதே பிரச்சினை. எத்தனையோ தடவை கெஞ்சியாயிற்று. ஏசியும் ஆயிற்று. சிரித்துக் கொண்டே வந்து நிற்பார்கள். தம்பி, றிற்ரேன் பண்ணிப் போடாதை தம்பி. என்றபடி, இப்ப காசு அனுப்புறன் தம்பி. என்று முதலாளி ரெலிபோனில் கெஞ்சுவார். எனக்கும் பாவமாக இருக்கும். காசு வரும். வரும். என்று, சாப்பிடவும் போகாமல் நாலுமணிவரை மேசையிலேயே கிடந்து காய வேண்டியதுதான்.
பாவம் என்று பட்டபோதும். பல்லைக் கடித்துக் கொண்டு ஆறு பேரின் செக்குகளை ஒரு நாள் றிற்ரேன் பண்ணினேன். அடுத்த நாள் இரண்டு பேர் வந்து
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 17

Page 11
அழுதார்கள். மற்ற நான்கு பேரும் அழத் தொடங்கு முன்னர் நானே திட்டி
அனுப்பி வைத்தேன். அடுத்த நாள்
பிரச்சினை ஆரம்பமாயிற்று. மனேஜர் கூப்பிட்டு அனுப்பினார். போனேன்.
‘என்ன தேவன். நேற்றுச் செக்
றிற்ரேன் கனக்கவோ..?
'ஓம்.
'ஏன் அப்படி?. தொடர்ந்தார்.
"செக் குடுக்கிறாங்கள். ஆனால் கணக்கிலும் காசில்லை. காசும் போடவில்லை. அதுதான்.
சொல்லிப் போடவச்சிருக்கலாம் தானே."
சொல்லிக் களைத்தாயிற்று.
அப்படி விடமுடியாது. எங்கட கஸ்ரமற்றை செக்கைத் திருப்பினா. அவையின்ர வியாபாரத்தைப் பாதிக் கும். பிறகவை வேற வங்கிக்குப் போவினம். அதிலும் பலபேர் நல்ல கஸ் ரமர்! எப்படியாவது சமாளிக்க வே ணும். அதுதான் வங்கித் தொழில். இதுக்குத் தான் உங்களுக்குச் சம்பளம்.
எங்கேயோ தொடங்கி மனேஜர் அடிமடியில் கையை வைக்க. கோபம் வந்தது.
‘என்ன காலையிலேயே. ഥrട്ട ளமோ..? என்றான் திரு.
"சும்மா எரிச்சலைக் கிளப்பாத.
C8 Lu T . . .
“ G8 Lu T D 6õT 6Od JJ
மேசையடியில எல்லாரும் நிற்கிறான் கள்'
மேசைக்குப் பக்கத்தில் கந்தசா மியும் நாதனும் சிரித்துக் கொண்டே நிற்கிறார்கள். இரண்டு வியாபாரிமாரும் நாயும் பூனையும். ஒருவரை ஒருவர் கடித்துத் தின்னாத குறை ஆனால், இன்றைக்கு ஒற்றுமையாக வந்திருந்தா
TGS6.
தம்பி. என்ன தம்பி. செக்கைத் திருப்பிப் போட்டீர்..?
‘எங்களுக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா..? நசிந்தார்கள்
‘இன்றைக்கும் கணக்கில காசில்லா ட்டி செக் திரும்பும்' என்றேன் இல்லை. இல்லை. நாங்கள்
மனே ஜேரோட கதைச்சனாங்கள்
‘நானும் மனேஜேரிட்ட இருந்து தான் வாறன். இன்றைக்கும் திருப்பு வன் என்று சொல்லியிருக்கிறன்' என்று கடுகடுத்தேன்.
‘என்ரை தம்பி அப்பிடிச் செய் மாட்டுது. சிரித்தபடி, கந்தசாமி என் முதுகைத் தடவினார். கன்னத்தில் ஒரு அறை விடலாம் போல இருந்தது. வேலை போயிட்டால். ! பேசாமல் இருந்தேன்.
சீச்சி. நாங்கள் தம்பிக்குக் கரச்சல் குடுக்கமாட்டம். இந்த முறை கொஞ்சம் இறுகிப் போச்சு. எப்படியும் அண்டைக்கே காசு போடுவம் தம்பி. நாதன் தன் பங்குக்குக் கெஞ்சினார்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 18

ஏதோ அண்ணன்மார் தம்பிமாரைக் கெஞ்சு மாப் போல.
தம்பி. பார்த்துக் கொள்ளும்.'
பார்க்கப் பாவமாயும் இருந்தது.
போட்டுவாறம்
என் முகத்தைப் பார்த்த திரு சொன்னான். நீ இன்டைக்கும் பட்டினி தான்ரா.
ஒன்றரை மாத லீவின்பின் வந் தேன். நிலைமை. அப்படியே தான் இருந்தது. என் இடத்தில் வைத்தி. "மச்சான். நீ வந்திட்டாய்தானே. என்னைக் காப்பாத்து மச்சான். இந்த ஒன்றரை மாசமா விசர் பிடிச்சிட்டுது. இந்தா லெட்ஜர்ஸ் எல்லாம். ஆளை விடு". தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடினான்.
இரண்டு வருடமாக எடுக்காத லீவுகளை உடனடியாக எடுக்கச் சொல்லி தலைமை அலுவலகம் கடிதம் அனுப்பியதால் . ஒன்றரை மாதமாக நேரத்துக்குச் சாப்பிட்டேன். இனி.
வைத்தி. இனிமேல் மட்டும் உன்ரை வேலையை நான் மினெக் கெடுத்திறன் எண்டு திட்டாதே." என்றேன். Y
"சரியடா. சரி . அட, என்னில ஏதோ வித்தியாசம் தெரியுது மச்சான். வைத்தி தொடர்ந்தான்.
'C8UumTLIT.... G&L untuiu G8660d6d6Odului பார். இதென்ன குமுதத்தில ஆறு வித்தியாசம் கண்டுபிக்கிற மாதிரியே. வெட்டி அனுப்பினேன்.
லீவு முடிந்து வந்ததைக் கேள்வி
ப்பட்டு. கஸ்ரமர்கள் சுகம் விசாரித் தனர். கந்தசாமியும் நாதனும் வந்தார் கள். பேசினார்கள். ஆனால் கொஞ்சம் எட்ட நின்றே பேசினார்கள்
. 'தம்பி, தம்பி என் கின்ற கெஞ்சலுக்கு என்ன ஆயிற்று?
ஓயாமல்
நாதன் ஒருபடி மேலே போய், 'அண் ணை'. என்று மரியாதையாக வேறு அழைத்தார்!
அன்று மத்தியானம் இரண்டு மணிக்கே சாப்பிடப் போனேன்.
‘எப்படியடா முடித்தாய். செக் றிற் ரேன்...' என்று வைத்தி ஆவலா திப்பட்டான். 'இந்த ஒன்றரை மாதமும் நான் பட்டினியடா’ . என்று பிரலாபி த்தான். என் முகத்தைப் பார்த்தவன் திடீரென்று கதையை நிற்பாட்டினான். உற்றுப் பார்த்தான். 'இதென்னடா. ஒரு பெரிய மீசை வளர்த்திருக்கிறாய். முகத்தில கால்வாசியை விழுங்குதடா என்றான். "அதைவிடு. மீசை வந்தாலும் வந் தது. சாப்பாட்டு நேரத்தையே மாற்றி விட்டது பார்’ என்றான் திரு.
மனேஜரும் சாப்பாட்டு அறைக்கு வந்தார். ‘என்ன இது? கம்பளிப் பூச்சி மாதிரிப் பெரிய மீசையோடை நிற் கிறீர்?. ஏன்' என்றார். '. நடைமுறைக் கணக்கில வேலை செய்ய. என்றான் திரு. எல்லோரும் சிரித்தோம்.
எப்படியோ மீசை அதன்பின் நின்று நிலைத்து விட்டது. *
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 19

Page 12
தொடர்புடாத்துறை அதிர்நோக்கும்
புதிய தேடல்கர்
- ஆ. சிவநேசச் செல்வன்
மனித வாழ்க்கை, சங்கடங்களின் மத்தியில், சிக்கியுள்ளது மட்டுமன்றிச் சிதறிப் போய்க் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எவையுமே நடப்பதில்லை. “உலகம் முழுதுவதுமே ஒரு பெரிய பயங்கரமான சேரியாக" மாறிக் கொண்டிருக்கின்றது. சுயநல ஆதாயங்களைத் தேடிய படி வாழ்க்கையையே நழுவ விடும் வேடிக்கைகள், பல் வேறு விதமான சடங்காசரங்களுடன் நடந்தேறுகின்றன.
தொடர்பு சாதனங்களினது ஆக்கிரமிப்புக்களின் மத்தியிலே உலகமே இப்பொழுது ஒரு பெரிய குடும்பமாக மாறிவிட்டது. இனம், மதம், மொழி, கலாசாரம் என்ற வரிசையிலான யாவற்றையும் உள்வாங்கி, மனித ஒழுக்கத்தை ஒருமுகப்படுத்துவது இப்பொழுது ஒரு போராட்டமாகவே மாறிக் கொண்டிருக்கிறது.
வறுமை, அறியாமை, சாதி- சமூக முரண்பாடுகள், இனவர்க்க பேதங்கள், மதவாத அடிப்படையிலான பிரிவினை எழுச்சிகள், கொள்கை வெறியாட்டங்கள், மூடநம்பிக்கை கள், ஒடுக்கு முறைகள், சட்டங்களையெல்லாம் தூக்கி எறிந்தபடி அவமதிக்கும் போக்குகள், வன்முறைகளின் மூலமாகவே யாவற்றையும் சாதிக்க முடியும் என்ற மன அவசங்கள் என எல்லாமே ஒன்று கூடி வேற்றுமைகளின் மத்தியிலே “ஒற்றுமையைத் தேடுவது” என்ற பாதையிலே தளர்நடை போடுகின்றமை வரலாறாகிவிட்டது.
'மனித சமுதாயத்தையே மாற்றிவிடமுடியும்’ என்ற நம்பிக்கையை, ஒருபோதும் சிதைந்து போகவிடக் கூடாது. எத்தனை எத்தனை முரண்பாடுகள் வந்தாலும் அவற்றை எல்லாம் மேவி மூடியபடி வெளிப்படும் புதிய சிந்தனைத் தடங்கள், கவிதை மற்றும் இதரவகை இலக்கியங்களின் மூலமாக வெளிப்படுகின்றன. இவையெல்லாம் மனித வாழ்க்கை அவலங்களின் வெளிப்பாடுகள்.
பணம் இல்லாமல் போவது மட்டும்தான் வறுமை அல்ல. அன்பும் இரக்கமும் அமைதியைத்தேடும் போக்கும் இல்லாமல் இருப்பதுதான் வறுமை யிலும் வறுமை. வாழ்க்கையை எப்பொழுதும் எவருமே விலைக்கு வாங்க முடியாது. நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. மனிதத் தன்மை இப்பொழுது விலை பேசும் சரக்கு ஆகிவிட்டது. மனித வாழ்க்கையின் மதிப்புகளே சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது. தொடர்பு சாதனங்களின் ஆக்கிரமிப்புகளின் மத்தியிலே “மனிதம்' தான் செத்துக் கொண்டிருக்கிறது. இதனை
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 20

உணருவது மட்டு மல்ல உணர வைப்பது கூட இலேசான காரியம் அல்ல!
தொடர்பு சாதனங்கள் தொடர்பு கொள்வதை மையமாகக் கொண்டவை. கனமான அநுபவங்களின் அத்திபாரம் இல்லாவிட்டால் தொடர்பு சாதனங்கள் மட்டுமல்ல தொடர்பூடகக் கலாசாரமே மாறி விழுந்து போய்விடும். மொத்தத்திலே தொடர்பு சாதனங்கள் மட்டுமல்ல தொடர்பு கள்தான் நம்பிக்கையின் ஊற்றுக்கண் என்ற விடயம் தான் இனிமேல் அழுத்தம் பெற வேண்டும்.
உலகநாடுகள் யாவும் இப்பொழுது ஒட்டுறவு கலாசாரங்களின் மத்தியிலே சிக்கியுள்ளன. வயிற்றுப் பிழைப்புக்காக எதையுமே செய்யலாம் என்று சொல்ல முற்படும் உலகம் தன்னை மட்டுமல்ல சகல விதமான ஆளுமைகளை எல்லாம் இழந்து சீரழிந்த பாதையில் செல்ல முற்பட்டுள்ளது. உலகமே இப்பொழுது மனித வாழ்க்கை உறவுகளின் மத்தியிலே அந்நியமாகிப் போயுள்ளமை கணக்கெ டுக்கப்பட வேண்டியதொன்றாகும்.
இளைய தலைமுறையினரை ஆக்கி ரமிப்பதற்கான வேகங்களின் மத்தியிலே ஒரு புறமாக அறிவுலகத்தின் ஆன்மை வையே அழிக்கும் வகையிலான சமூக கலாசார அறிவியல் நடிவடிக்கை கள் புதிய பாதையிலே காலடி எடுத்து வைக்க முற்படுவதைப் பல்வேறு கோண ங்களில் இருந்து வெளிப்படும் நெருக்கு வாரங்கள் மத்தியில் கண்டு கேட்டு அறிந்து சலிப் படைவது சகல மட்டங்களிலும் தேசிய கலாசாரத்தைச் சிதற வைத்து அனுங்க வைத்துள்ளது.
இப்பொழுது ‘தொடர்புகள் மட்டு மல்லாத் தொடர்பு சாதனங்கள்தான் தேசிய
சமுதாயத்தில் மூச்சு என்பதை உணர்ந்து சிந்திக்க முற்படுவதுதான்’ நாட்டை நாடாக வளரவைத்து நிமிர வைப்பதற்கான ஒரே யொரு வழி. இனிமேல் இயற்கையின் கொந்தளிப்புகளைத் தேடுவதன் மூலமாக த்தான் வாழ்க்கை உணர முற்படுவது நடை பெறப் போகின்றது.
பொதுமக்களுக்கு பல்வேறு விடய ங்களை இடித்துரைக்கும் ஆற்றல் வாய்ந்த தொடர்பு சாதனங்கள் மக்களின் மனங் களை அசைய வைப்பதோடு சிதைய வைக்கும் தன்மை வாய்ந்தவை. பல்வேறு பட்ட தரவுகளையும் செய்திகளையும் அறிவிப்பது மட்டுமன்றி அறுவுறுத்தும் ஆற்றலும் வாய்ந்த தொடர்பு சாதனத்துறை தனியான தொரு துறையாக இப்பொழுது வளம் பெற்றுள்ளது.
எவை எவையெல்லாம் புதியன வாகவும் புதுமையானதாகவும் தெரிகி ன்றதோ அவை அவைதான் செய்திகள். எப்பொழுது செய்திகள் உண்மையா னதாகவும் அனைவரினதும் ஆர்வத்தி னையும் அக்கறைகளையும் தூண்டு வனவாகவும் உள்ளனவோ அவை தான் செய்திகள் ஆகின்றன. அச்சுச் சாதனமான பத்திரிகை முதலாக வானொலி தொலை க்காட்சி, தொலைத் தொடர்புகள், கணனி வழியான இணையத் தொடர்புகளின் கூடுகை இப்பொழுது தொர்பூடகத் துறை யிலே ஒரு புதிய பரிமாணத்தையே தோற் றுவித்துள்ளது.
பல்வேறு விடங்களை எல்லாம் கண்டு, கேட்டு உற்று உணர்ந்து அறியும் ஆர்வமும் நிறைந்த வெகுஜன சமூகம் இப்பொழுது உலகளாவிய நிலைமையிலே உருவாகியுள்ளது. தொடர்பூடகத் துறை யின் ஆளுமை இப்பொழுது விரிவாக்கம்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 21

Page 13
பெற்று விஸ்வரூபமே எடுத்துள்ளது. ஆனபடியினால் தொடர்பூடகத் துறையினர் பயில்திறம், செயற்திறன், பயிற்சி, தொழில் ஆளுமை என்றின்னோரன்ன விடயங் களில் அதிதீவிர கவனம் செலுத்த வேண் டியது இன்றியமையாதொரு விடயமாகி விட்டது.
தொடர்பூடகத்துறையின் தனித் திறமும் பயிற்சியும் தேவைப் படும் தொழிற் துறையாகி விட்டது. எந்தத் துறையும் திறம்பட அமைய வேண்டும். அல்லது செயற்பட வேண்டுமானால் துறைசார்ந்த செய்றபாடு அல்லது பணிபுரிய விரும்பு வோர் தத்தமது ஆற்றல்களை உரியவாறு வளர்த்துக் கொள்ள வேண்டும், பட்டறி வுகளோடு செயற்படுவதற்கு அப்பால் படிப்போடும் பயிற்சியோடும் செயற்படுவது தான் அவசியமானது. சகல திறன்களும் படிப்பறிவு அல்லது கற்றுக் கொள்வதன் மூலமாகத் தான் வளருகின்றது. சரி வரக் கற்றுக் கொள்ளாமல் எதையுமே சரிவரச் செய்ய முடியாது.
சற்று ஆழமாகவும் நிதானமாகவும் அவதானித்தால் செய்தியாளர்கள், "நிகழ்வு களில் இருந்து சாரத்தைப் பிழிந்து எடுக் கும்" பொறுப்பு வாய்ந்தவர்கள். எது தரம் எது சக்கையானது என்ற வகையிலான திறானாய்வுப் பார்வையை வளர்ப்பதற்கு வெறும் நீண்ட பயிற்சி அல்ல படிமுறை யான அறிவுறுத்தல்களும் கால மாற்றங்க ளிற்கேற்ற பயிற்சிகளும் தான் அவசிய மானது. செய்தியாளர்கள் எப்பொழுதுமே புதிய வற்றைத் தேடிய படி இருப்பார்கள். புதியனவற்றுள்ளே தரமானவற்றையும் கால நேரம் கருதியானவற்றையும் தேடித் தொகுத்து வகைப்படுத்தி அவற்றையெ ல்லாம் உலகளாவிய நிலையிலே
வழங்குவது தான் செய்தியாளர்களின் கூர்மையான பணியாக இருக்க வேண்டும்.
செய்தியாளர்களின் விருப்பு வெறு ப்புகளிற்கு ஏற்ப நிகழ்வுகள் அல்லது செய்திகள் உருவாவதில்லை. செய்தி களை யாரும் வெளிப்படுத்தலாம். ஆனால் செய்தியாளனின் பார்வை தான் முக்கிய மானது. செய்திகளை தொகுப்பதன் மூலவிசை கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் தீர விசாரித்துச் செயற்படுவதையும் அடிப்படையாகக் கொண்டது. நிகழ்கால பிரக்ஞை இல்லாது எந்தச் செய்தியாளனும் செயற்பட முற்ப ட்டால் அது வெறுமனே விழலுக்கு இறை த்த நீராகத்தான் போய் முடியும்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் செய்தி யாளனின் தேவைக்கேற்பச் செய்திகள் உருவாவதில்லை. செய்தித்துறை இப் பொழுது சீரழிவுகள் நிறைந்த துறை யாகி விட்டது. சீரழிவுகளின் மத்தியில் செய்தி களைத் தேடுவதும் அவற்றை யெல்லாம் அறுவடை செய்து பதப்படுத்தி வெளியிடு வதும் செய்தியாளர்களின் முன்னால் விரிந்துள்ள பாரிய பிரச்சினை களாக மாறிவிட்டன. சுருங்கக் கூறினால் நிகழ் கால நடை முறைகள் தான் செய்தி வெளிப்பாட்டின் மூல விசை. செய்திகளை வெளிப்படுத்துவதும் விமர்சன ரீதியாக அவற்றையெல்லாம் விளக்குவதும் மதப்பீடுகளைச் செய்வதுமே செய்தித் தேர்வின் அடிப்படை. இதனைப் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்து செய்றபடும் தொழில் ஆளுமை நிரம்பிய ஊடகவியளாலர்களை சரிவர வழிப்படுத்தி பயிற்றுவதன் மூலமா கத்தான் தொடர்பூடகக் கலாசாரத்தை ஆழமாக மட்டுமல்ல நிதானமாகவும் உருவாக்க முடியும்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 22

தொடர்பூடகத்துறையின் மூல விசை தொடர்புகளை நிதானமாகவும் நேர்மையா னகவும் வளர்த்துக் கொள் வதிலே தான் தொங்கிக் கொண்டிருக்கின்றது. உலகம் இப்பொழுது நீண்டு நிறைந்த எதிர்பார்ப்பு களை எல்லாம் தூக்கி எறிந்த படி அசுர வேகத்தில் நகர முற்படுகின்றது. எந்தவித
மான பாதையில் இனிமேல் உலகம் செல்லப் போகின்றது? தொடர் புகளை எல்லாம் வேகமாகவும் நிதன மாகவும் பார்த்துக் கொள்வதன் மூலமா கத்தான் உண்மைகளையும் உறுதி களையும் தேட முற்படும் பயணம் நிறைவடைய முடியும்.
ரீதியில் நடத்தப்பட்டது.
வினா இதுதான்.
பெயர்கள் தரப்பட்டிருந்தன.
நிச்சயம் அறிந்து வைத்திருப்பர்.
G8Umee (QÖ Uōce 6OD9WĴ)6V) (Oல்லிகை
தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களை நரபடவதற்காக,
இலங்கை ஆசிரியர் சேவைக்குப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை அண்மையில் பரீட்சைத் திணைக்களத்தினால் நாடு தழுவிய
இதில் பொது அறிவு வினாத்தாளில் இடம் பெற்றிருந்த பல் தேர்வு வினாவொன்று எமது கவனத்தை ஈர்க்கின்றது.
இலங்கையில் மல்லிகை என்னும் பெயரில் நீண்ட காலமாக வெளிவரும் இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர்.
டொமினிக் ஜீவா உட்பட நான்கு எழுத்தாளர்- சஞ்சிகையாளர்களின்
இலக்கிய அபிமானிகள் மல்லிகையையும் டொமினிக் ஜீவாவையும்
இலக்கிய எல்லையைத் தாண்டி, எல்லோரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய பொது அறிவுப் புலத்துக்குள் மல்லிகை தன்னை நிலை நாட்டியுள்ளதென்பதே இங்கு முக்கியத்துவம் பெறும் விடயமாகும்.
தகவல்:- எம்வீஎஃப். ஸoல்ஃபிகா.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 23

Page 14
வலைப்பதிவில் தாரா பாரதியின் கவிதை.
ஜெயப்பிரகாஷ் எனும் பாண்டிச்சேரி இளைஞர் தன் பெயரிலே ஒரு வலை பதிவு வைத்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் தனது சுய அறிமுகத்தில்
ஜெயப்பிரகாஷ்
Gender : Male
Industry : Communication or Media Occupation : Journalist
Location : Puducherry : India
About Me
நான் கடந்த 10 ஆண்டுகளாகப் பத்திரிக்கைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். தற்போது முன்னணிப்பத்திரிக்கை ஒன்றில் நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன். பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன். தமிழ், தமிழர்கள் மீதும், தமிழறிஞர்கள் மீதும் மிகுந்த பற்று உண்டு.
சமீபத்தில் அவரது வலைப்பதிவைப் பார்வையிட்ட பொழுது அவ்வலைப் பதிவில் இணைந்திருந்த கவிஞர் தாரா பாரதியின் கவிதை மனதைத் தைத்தது.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 24
 

அக்கவிதை உங்கள் பார்வைக்கு.
http://jayapragash . blogspot . com/2007/07/blog-post 29.htm
பாற்கடல் கடையும் பத்திரிக் கைகள்
கவிஞர் தாராபாரதி
நூலறிவுக்குத் துணைசெய்யாமல் நூற்றுக் கணக்காய் நம்நாட்டில் பாலுறவுக்குப் பரிந்துரை செய்யப் பத்திரிகைகள் பெருகிவரும்.
கத்தரிகளுக்குத் தப்பிய காட்சி பத்திரிகைகளில் வருகிறது சித்திரம், சிறுகதை, நாவல்களிலே சிற்றின்பம்தான் பெருகியது
ஆணெழுத்தாளர் எழுது கோல்களில் ஆடைகட்டாத எழுத்துக்கள் பெண்ணெழுத்தாளர் பிடித்திருந்தாலும் நானமில்லாத பேனாக்கள்!
உடலை மட்டும் வரைந்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும் தூரிகைகள் உடையை அதன் மேல் மூடுவதற்கு ஒப்புக் கொள்ள ஆசிரியர்!
துச்சாதனராய் இவர்கள் கூடித் துகிலைப் பறித்து விடுகையிலே அச்சு வாகனம் பருத்தி ஆலையா ஆடை கட்டி விடுவதற்கு? மூடியைத் திறந்தால் பேனா கூட முகத்தைக் கவிழ்த்துக் கொள்கிறதே! ஆடையைத் திறக்க அலையும் விரலோ அதையே துணைக்கு அழைக்கிறதே!
பால்போல் வெள்ளைத் தாளை இவர்கள் பாற்கடல் என்று கடைகின்றார் பாற்கடல் நஞ்சை வாசகக் கன்றுகள் பருகுவதற்குத் தருகின்றார்!
அழுக்கில்லாத கதைநாயகியை அடிக்கடி குளிக்க வைக்கின்றார் நிழலில் நடத்தும் உடலுறவுக்கு "நேர்முக வர்ணனை' செய்கின்றார்!
போதையைத் தூண்டும் மாத நாவல்கள் பொழுதைப் போக்கும் வியாபாரம் ஆதரவளிக்கும் வாலிபத் தொகுதியில் அச்சுக் காகித விபசாரம்
அன்னை நாட்டில் அன்னிய நாட்டின் அடையாளங்களைப் பதிக்கின்றார் தன்னை வளர்க்கும் எழுது கோலின் தர்மங்களையே துறக்கின்றார்!
மண்ணில் எழுதிக் கற்ற விரல்கள் மண்ணின் மரபை மறப்பதுவோ? கண்ணில் வளர்ந்த பண்பாடுக்ளைக் கண்ணிமை வந்து எரிப்பதுவோ?
கள்ளிச் செடியை வளர்க்கத் தானா காகித வயலில் ‘மைவிதைகள்? பள்ளியறையும் குளியலறையும் மட்டும் தானா வீட்டறைகள்?
ஒழுக்கம் உயிரெனப் பேசும் நாட்டில் உடல்கள் தானா மூலதனம்? அழுக்கை விற்றுச் செல்வம் திரட்டும் அந்தப் பலபேர் எந்தஇனம்?
பள்ளத்திற்குள் படிப்பவன் இருந்தால் படைப்பாளிக்குக் களியாட்டம் "கள்ளின் விசிறிகள் உள்ள வரைக்கும் காய்ச்சுபவர்க்குக் கொண்டாட்டம்
நன்றி (இது எங்கள் கிழக்கு)
மல்லிகை செப்ரெம்பர் 2007 率 25

Page 15
தமிழ்ப் பதிவுகளின் திரட்டி
இன்று இணைய உலகில் ஏற்றப்படும் தமிழ் வலைப் பதிவுகளைத் திரட்டித் தரும்
திரட்டி வலைப் பக்கங்களில் ஒன்றுதான்
தமிழ்ப்பதிவு
எனும் வலைப் பக்கம். அது திரட்டி வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான வலைப்
பதிவுகளிலிருந்து சிலவற்றின் விலாசங்கள்.
முகவரி
http://www.mugunth.tamilblogs.com/Thamizha http://blog.tamilsasi.com/index.html http://andaiayal.blogspot.com/index.html http://holyox.blogspot.com/index.html http://manaosai.blogspot.com/index.html Ma http://mahendhiran.blogspot.com/index.html http://hariharaputhran.blogspot.com/index.html http://vijayabharathi.blogspot.com/index. http://kumarlinux.blogspot.com/index.html http://vikatanbooks.blogspot.com/index.htm http://naganesan.blogspot.com http://anijaappu.blogspot.com/index.html http://en-kavithai.blogspot.com/index.html http://ramkumar-amuthan.blogspot.com http://palagai.wordpress.com http://mathumai.blogspot.com/index.html If http://kaalapayani.blogspot.com/index.html http://ramesh-stephen.blogspot.com/index.h http://saniyan.blogspot.com
தலைப்பு
தமிழனின் பார்வையில்.
சசியின் டைரி
அண்டை அயல்
உலகின் புதிய கடவுள்
naosai
கவிதைகள்
6usoTiglif
கவிதைப் பூங்கா
லினக்ஸ்
விகடன் பிரசுரம்
தமிழ்க் கொங்கு
குப்பத்தொட்டி
நீ. நான். என் கவிதை.
நான் முயற்சிக்கிறேன்.
U665
winter comes> can spring
என் பயணத்தின் பிம்பங்கள்
அட பார்வை
சத்தமில்லாமல் ஒரு சங்கு
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 26

http://winsea.blogspot.com http://hayath.blogspot.com/index.html Haya http://podakkudian.blogspot.com/index.html http://sankaraa-Sankaraa.blogspot.com sank http://tcritic.blogspot.com http://idhazhgal.blogspot.com/index.html http://thamizhoosai.blogspot.com/index.htm http://yugabharathi.blogspot.com http://tamilplant.blogspot.com/index.html http://osai.tamil.net Chella's Audio Blog http://dharumi.blogspot.com/index.html http://thiravidam.blogspot.com/index.html http://computervaathy.blogspot.com http://muftiblog.blogspot.com http://periyaarr.blogspot.com/index.html http://thamizsangam.blogspot.com/index.htm http://thiruvadiyan.blogspot.com/index.htm http://manggai.blogspot.com/index.html Lori http://thamizValaippoo.blogspot.com http://kadhalkalakal.blogspot.com http://eiyarkai.blogspot.com/index.html http://enularalkal.blogspot.com/index.html http://johan-paris.blogspot.com/index.html http://lkavithai.wordpress.com http://naadoodisaraa.blogspot.com/index.ht http://musicforhealth.blogspot.com ~~~~~~ http://satanblog.wordpress.com http://sankermanicka.blogspot.com/index.ht http://spvaishali.blogspot.com http://thooya.blogspot.com/index.html http://circuitsforu.blogspot.com/index.htm
winsea
6t
பொதக்குடியான்
ã፻ãa
திண்ணை
இதழ்கள்
தமிழோசை
யுகபாரதி
மரம்
in Tamil juk page Not Displayed வெல்லத் தமிழினி வெல்லும். கம்பியுட்டர்வாதி
ந. வீதியில்
பெரியார்
தமிழ்ச் சங்கம் திருவடியானின் பக்கங்கள்
ses 6,600Tsasib Welcome to my Thamizva காதல் கலக்கல் வெற்றிடப் புரிதல்
என் உளறல்கள் 6T66, urtist Guussi). Johan-Pa
ஒரு கவிதை
அட நாடோடி சரா. Music for Health ~~~~~~ Є
மைய நீரோட்டம் அட வஜ்ரா படித்த செய்திகள்
தேடித். தேடி.
'துர்யா"
எலக்ரானிக்ஸ் உங்களுக்காக
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 27

Page 16
விக்ரமின்-நிழல் ஒதுங்கிய நிஜங்கள்
தமிழ் இலக்கியக் குடும்பத்தில் மிகவும் மூத்தது கவிதை என்பார்கள். கதைகள், நீதி நெறி முறைகள்,
உள்ளத்து வெளிப்பாடுகள் என்பவற்றைப் பதிவாக்கு வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் நீண்டகாலமாக மனுக் குலத்திற்குக் கவிதையே கைகொடுத்து வந்தது. வெண்பா, விருத்தம், செய்யுள், கண்ணிகள், பிரபந்தம் போன்ற பல முகங்கள் இக்கவிதைக்கு உண்டு. தமிழின் மூத்த புலமையாளர்களால் வகுக்கப்பட்ட யாப்பிலக்கணத்துள் வைத்துக் கவிதை பேணப்பட்டு வந்தது. இதனால் இது முகட்டில் இருத்திப் பேணப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
a56ń60) 9560duu ĝi estas 6o தரத்தினருக்குமாக எட்டாத உயரத்திலிருந்து அடித்தளத்துக்குக் கொண்டு வந்த பெருமை மகாகவி சுப்ரமணியப் பாரதிக்கே உரியதாகும் கவிதைக்கு ஒரு புது வடிவத்தையும் மானுட வாழ்வு சார்ந்த நவீன பார்வையையும் கொடுத்தார். எல்லோருக்குமான தாக்கினார்! பாரதியைத் தொடர்ந்து பாரதிதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம், நா. பிச்சமூர்த்தி, நவாலியபூர் சோமசுந்தரப் புலவர், மஹாகவி ஆகியோரும் கவிதைப் புரிதலுக்கு இலக்குத் தன்மையை ஏற்படுத்தி தமிழ்க்கவிதையை மக்கள் மயப்படுத்தினர்.
இப்புதிய வார்ப்புக்கு பொழிப்புரையோ, விளக்கவுரையோ தேவைப்பட வில்லை. தமிழை வாசித்து அறியக் கூடிய அத்தனை பேரையும் இது சென்றடை ந்தது. இருந்தும், இருபதாம் நூற்றாண்டின் பிறபகுதியில் கிளர்ந்தெழுந்த ஒரு பரம்பரை மீண்டும் கவிதைக்குள் எடுகோளைப் பூடகமாக்கி, கவிதையைப் பயிலத் தொடங்கியது. இதனால் குழப்பமடைந்த கவிதா இரசனையாளர் இதைக் கண்டித்து நிராகரிக்க முனைந்தனர். இன்றும் அக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இருந்தும் இலகு வாசிப்பிற்கு உதவாத கவிதைகள் இன்னமும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. பின் நவீனத்துவம் என்ற கலசத்துள் இதைப் புகுத்தி புதுக்கவிதை எனச் செப்பினர். பழந்தமிழ்க் கவிதைகளை ஏற்றவர்கள் ஏன் இதனை ஏற்கக் கூடாதென்ற வலுவான
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 28
 

கேள்வியொன்றும் புதிய குழுமத்தால் கேட்கப்பட்டது. வேற்று மொழியற்ற தூய தமிழ் மொழியிலேயே இவைக ளும் பாடப்படுவதால், நம் முன்னோர் எதிர்க்கொண்ட சிரமத்தையும் நேரத் தையும் செலுத்தி இன்றுமேன் அவை களைப் படிக்கக்கூடாதென்ற நியாய மும் பிறப்பிக்கப்படுகின்றது. இத்த கைய கவிதைகளின் உள்ளிடுகள் மானுடத்தை வழி நடத்தக்கூடியவை யாக, வாழ்வை நெறிப்படுத்தக் கூடிய வையாக இருந்தால் வியர்வை சிந்திப் படித்துக் கிரகிக்கலாம்! அவைகள் சக்கைகளாக- வாழ்வை நச்சுப்படுத்தக் கூடிய வையாக இருந்தால் அவைகள் அவைகளை படைத்தவனைத்தான் சென்றடைய வேண்டுமென்ற நக்கீர வாதம் இன்னமும் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றது. இக் கவிதை களைப் புனைபவர்களுக்கே இவைகள் குறித்தான திருப்தியான விளக்கமில்லை யெனவும் குற்றமுரைக்கவும் படுகி ன்றது சமகால தமிழக- இலங் கைக் கவிதைகளை நயத்த பொழுது குவிந்த உணர்வுகளின் தளத்தில் இருத்தியே இளங் கவிஞர் விக்கிரமின் "நிழல்
ஒதுங்கிய நிஜங்கள்’ கவிதைத் தொகுப்பை இரசிக்க வேண்டி இருக்கின்றது.
ஆற்றல் மீது வைக்கும் அவநம்பிக் கைகள் குருத்துக்களைக் கருக்கக் கூடாதென்பர்! அத்தனை மாணவர் களும் பிழை வாங்கினவர்களும்
அல்லர். பிழை எடுத்தவர்கள் காலப் போக்கில் பல சரிகளைப் பெற்று சாத னையார்களானது வரலாறு! எனவே ஜனநாயக முறைமைகளின் உதைப்பி னாலேயே இத் தொகுப்பின் ஆற்றல் கொழித்துப் பார்க்கப்படுகின்றது. இதன் பின்னணியில் விக்ரமின் முன்னேற்ற மும் அழுத்தம் தந்திருப்பது குறிப்பிடத் தக்கதே
ஈழத்துக் கூத்துக் கலை வளர்ச்சி யில் மன்னார் மாவட்டத்தின் வகிபாகம் உரத்துப் பேசத்தக்கது. ஆனால் ஏனைய நுண்கலைப் பிரிவுகளில் அதன் பங்களிப்பு சொற்பமெனவே கூறப்படுகின்றது இத்தகைய சூழலில் - அதுவும்- இன்றைய அசாதரன நிலையில் - ஓர் இளங்கவிஞன் - தான் தோன்றியாக முகிழ்ந்தெழுந்து- ஒரு தொகுப்போடு- தமிழ் கவிதா உலகிற்கு வந்திருப்பது- ஏனைய மாவட்டங்களு க்கு ஒரு சவாலென்றே கூறவேண்டும்! இத் தொகுப்பில் காணப்படும் கவிதை கள் எந்தவொரு பத்திரிகையிலும் சஞ்சிகையிலும் பிரசுரம் பெற்றவை யல்ல! அது மட்டுமன்றித் தனது கவி தைகள் அச்சு வாகனமேறியிருப்பதை விக்ரம் முதன் முதலாக இத் தொகு ப்பில்தான் காண்கிறார். ஆகவே இவரது துணிவைப் புரட்சிகரமான தெனில் பூச்சுற்றலாகாது
‘என்னுள் ஒதுங்கிக் கிடக்கும் நிழல்களை நிஜங்களாக உங்கள்
மல்லிகை செப்ரெம்பர் 2007 ஜ் 29

Page 17
முன்னிலையில் சமர்ப்பிக்கிறேன்' என என்னுரையில் கூறி இருப்பது இவர் ஈழக் கவிஞர்களது அடியொற்றியே கவிதை படைக்கிறரென்பதை அம்பல ப்படுத்துகின்றது. ஈழத்துப் படைப்பாளி கள் கற்பனையைக் கண்டு கொள்ளாத வர்கள். இந்த நாட்டில் நாளாந்தம் கொட் டுண்டும் மனிதனின் மனதை அரிக்கும் எடுகோள்கள் அவர்கள் சிந்தனைக்குத் தீனி போடுகின்றன.
கவிதைகளுக்குள் தென்றல், விண்மீன், நிலவு, வண்டு, மலர்கள், காதல் என்ற பதங்கள் மலிந்து கிடந் தாலும், சமகால வாழ்வின் அசைவியக் கத்தைக் கவிஞர் காணாது விடவி ல்லை. அவர் கண்டு மனமுருகிய கோல ங்களை யதார்த்த வடிவில் வாசக னோடு பகிர்ந்திருக்கிறார். அவரது இளமைக் காலம் மிகச் செம்மையாகத் கவிதைகளுக்குள் புகுந்து நிற்கின்றது. சகல பருவத்தினருக்கும் தோதான உத்தியில்.
"சைக்கிளில் உருண்ட asmresuo(b)”
த்தை, தன் முதல் உருள்வுக்குக் கிடைத்த சைக்கிளைப் பார்த்தே பாடு கிறார்.
உன்னுடன் பலதடவை/
தரையை முத்தமிட்டும்/
பரிதாபம் புரிந்து/நினைக்கிறது
வரம்பு மீற என்றும்,
உன் சுவாசம்/இழந்த போதும்/
நான் உன்னைக் கவனியாது
இருப்பதேன்?
எனப் பாசத்தைச் சொரிகிறார். மனிதன் சுயநலமானவன் என்பதை அழுத்து கிறார்.
'இளசு தலைப்பில், இளவட்டத்தினரோடு
வட்டம்' என்ற
சேர்ந்து அணில், ஓணான், ஆனத் தும்பி, ஊசித்தும்பி, தாம்பளப் பூச்சி, பொன்வண்டு, சில்வண்டு என்பனவற் றைப் பிடித்து விளையாடிய நெஞ்சாங் கூட்டு நினைவுகளை இலக்கியச் சுவையோடு சுவாரசிய மாகத் தந்துள் ளார். வன்செயலாக இருந்தாலும் இக்காலத்தில் சுட்டும் வெட்டியும் தெருக்கரைகளில் எறிவதை ஒப்பிடு கையில் இந்தச் சின்னஞ் சிறுசுகளின் நல்லது கெட்டது தெரியாத விளை யாட்டுகள் வாசகரையும் அவர் களது இளமைக்காலத்துக்கு அழைத் துச் செல்லக் கூடியவையாக இருக்கி ன்றன.
ஆணத்தும்பி ஊசித்தும்பி புழச்சு/ ஆனத்தும்பிக்கு ஊசித் தும்பிய இரையா கொடுத்து/ ஆணத்தும்பி வால்ல ஈக்கு குச்சி செருகி வேடிக்கை பாக்குது/இந்த இளசு வட்டம், தும்பி பிடித்தவர்கள் அணில் பிடிக்கி றார்கள்
அம்மாவுக்குத் தெரியாம/ கொல்லப்புறத்து/ வேலிமட்ட நீக்கி கையில் கெற்றப் போலுடன்/ போட்ட சேட்டு கிழியாம/முள்ளுக்
மல்லிகை செப்ரெம்பர் 2007 * 30

கம்பிக்குள்ளால பூருது/ அணில் வேட்டைக்கு/றோட்டு கல்லு பொறுக்கி இத்தனைக் கஷ்டப்பட்டுப் பிடித்த அணிலை
பாதி அணிலை வேக முன்னரே/ எட்டா பிரிஞ்சுது சுட்ட அணில் பதமாக வருவதற்கு முன்னர், ஆளுக்கொரு பக்கமாக இழு த்து எட்டாகப் பிய்த்தனராம் அந்த அள விற்கு அணில் இறைச்சியில் கெடு சின் னஞ்சிறுசுகளின் இன்னொரு வேட்டை. அது ஒணான் வேட்டை
சுருக்குக் கண்ணி போட்டு / குடை மரத்துல கண்ட ஒனான் கண்டு/ எட்ட நிண்ணு தலைக்கு போட்ட/ சுருக்கில கிடந்து/துடிக்குது ஓனான்.
இப்போவெல்லாம் 'கண்ணி' என்ற சொல் மிகவும் பிரசித்தம் கண்ணி வெடியோடு இணைந்து உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த இளசு வட்டம் கண்ணி வெடி வைத்தா ஓணான் பிடித்தது? இல்லை விக்ரம் விபரிக்கிறார். படுத்துக் கிடந்த/மாட்டு முதுகு தடவி/ முலைக் காம்பு புடிச்சு இமுக்குது ஒண்ணு/ வால் புடிச்சு/ ஒற்ற மயிர் புடுங்கி தூண்டில் போட்ட/ மது கம்பு முனையில/சுருக்குக் கண்ணி போட்டு
விக்ரம் பாவித்திருக்கும் சுருக்குக் கண்ணியைச் சுருக்குத் தடமுமென்பர்.
இப்பொழுது சிறுவர்களின் துடின விளையாட்டுகள் தப்பித் தவறி பிழைத்திருக்கும் கிராமங்களுக்கே சொந்தமாகிவிட்டன. இனிப் பிடித்த ஒணானை என்ன செய்தனர்? காகத்து
க்கு எறிந்தனரா? இல்லை. இந்த இளசு
வட்டம் சுற்றுச் சூழல் மாசடைவதை விரும்பாதது! என்ன செய்தார்கள். என்பதை விக்ர மிடம் கேட்போம்
புழச்ச ஒணனுக்கு/ போயில குடுத்து/ கேலி பண்ணுது போதை ஏறிச் சுண்ணு/ஆடின ஒனான்/ போதை ஏறின மனுசன் நம்ம ஊருக்கு தேவையில்லை என்று/ அத site/lpais, Linoplast 42/
estiffs/6L6 இழுத்து வருது/இந்த இளசு வட்டம் ஓணானுக்குப் போதை ஏற்றி, மது விலக்கு சம்பவத்தை சாதகமாக்கும் நோக்கோடு போதையில் தள்ளாடிய ஒணானை கொன்று விடுகின்றனர். அதுமட்டுமன்றி ஊர் முறைப்படி பாடை கட்டி பிணமான ஒணானுக்கு இறுதிக் கிரியைகளும் செய்கின்றனர்.
விக்ரம் இக்கவிதையில் இளமைப் பருவத்தில் தான் வாழ்ந்த கிராமத்தை
அப்படியே பிரதி யெடுத்திருக்கிறார்.
அற்புதமான அவதானிப்பு.
சட்டமொரு இருட்டறை எனப்
பெரியாரொருவர் சொல்லி இருக்கிறார்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 * 31

Page 18
இன்றைய சட்ட நடவடிக்கைகள்
குறித்து விக்ரமின் நீதிக் கண்ணும்
விழிப்புற்றிருக்கிறது. இன்றைய "சட்டம்
போடும் வேஷ(ம்)’த்தை தனது கவிதா
வல்லமையால் சுட்டெரிக்கிறார்.
எதற்காக இந்தச் சட்டம்/ குற்றவாளியை விடுவித்து நிரபராதியை தூக்கு மேடைக்கு/அனுப்புவத நற்காகவா
ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்கிறார்.
வேலியே பயிரை மேயும் தன்மையைப்
புட்டுக் காட்டுகிறார்.
தலையில் விழுந்த/நீர்த்துளி/ காதோர கன்னத்தில் ஊர்ந்து வர/வன்டென/ அடித்த அடியில்/ சிதறி பூமியின்/இரண்டாம் தகட்டில்/ ஒழிந்து கொண்டது.
பூமியின் இரண்டாந்தகட்டில் ஒழி ந்து கொண்டதாம்! விக்ரம் கூறும் அந்த இரண்டாம் தகடு பூமியின் எந்தக் குச்சுக்குள் இருக்கின்றது? இப்படியா கப் புவியிலை க. பொ.த. சாதரண தர த்துக்கு மேல் படிக்காத வாசகர்கள் கேட்கலாம். பூமிக்குத் தகடு உண்டு. இதன் திருவிளையாடல்தான் அண்மை யில் உலகின் ஒரு பகுதியை ஒரு குலுக்குக் குலுக்கிய சுனாமி. ஈழத்தின் பிரபல இலக்கியவாதி செங்கை ஆழி யான் தனது "சுனாமி" நூலில் இத் தகடு குறித்து எழுதி இருக்கிறார்.
அதுவே விக்ரமுக்கு ஆதாரம். படித்துப் பாருங்கள். இத்தகைய ஒரு அறிவியல் பார்வையை கவிதையில் வார்த்ததுக்கு விக்ரமுக்கு நன்றி கூறுவோம்.
'தொலைந்து போகும் ஊற்று க்கள்' இத்தலைப்பில் பாடிய கவிதை யில் விக்ரம் அன்றைய வாழ்வின் விழு மியங்கள் இன்றைய வாழ்வில் வற்றிப் போவதைக் கட்டுகிறார். இன் றைய இளைஞனின் மனதில் இப்படி யொரு சிந்தனை ஊற்றெடுப்பது அதிசயம்தான்.
அன்று அலையை எதிர்த்து நிற்பவர்/அநியாயத்தை தட்டி கேட்பவர். இன்று- கட்டளைகள் பல போடுகின்றனர்/கதைத்தால் கட்டித் தொங்கவிடுகின்றனர். முதிர்ந்த பெரியாரொருவரின் அக்கறை யோடு, கடந்த காலத்தை மறக்கும் எந்த மக்களுக்கும் சமூகம் தமக்குரிய எதிர்காலத்தைப் பெறமுடியாதென் பதை இன்றைய சமூகத்துக்குச் சுட்டு கிறார். இது விக்ரமின் எழுத்தின் நோக்
கத்தையும் அறிய வைக்கின்றது.
"தோற்றுப் போன ஆடைக் காதல்." ஒரு சமகாலப் பிரச்சினை. வாலிபச் சேஷ்டை! இதே உள்ளி ட்டைக் கொண்ட சிறுகதையொன்றை அண்மையில் படித்ததுண்டு. வார்ப்பில் பெருத்த வித்தியாசம்.
நானும் நீயும்/திரும்பிப் பார்த்தோம்/நம் ஆடைகள் காதல் கண்ணிர் வடித்தன/ வியர்வைத் துளியால். வியர்வைத் துளியை ஓர் உவமானமாக
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 32

எடுக்கும் பொழுது வயது வந்தோருக்கு முகச் சுழிப்பை ஏற்படுத்தலாம்! விரசம் சுரக்கின்றது.
"கொதிக்கும் பணித்துளியின் உணர்ச்சி' என்ற பாடலில் கவிஞரின் வாலிபம் விசை கொண்டிருப்பது தெரிகி ன்றது.
அட்டனக்கால் போட்டு அடிமை ப்படுத்தும் அரசாட்சியடா அரியணை காக்க/அலையாய் எழுந்திடடா அவலக் குரல் கேட்டு/அலை LITufts LO607 g/ அவனியை இழந்து கிடக்குதடா. ஆளப்படுபவர்களின் இன்றைய அவல க்குரலாக கவிக்குரல் நெஞ்சை நெருடு கின்றது. தங்களை அரியணைக்கு ஏற்றி விடும் சாதாரண மக்களை மறக்கும் ஆட்சியாளருக்கு இப் புதுக் கவியின் துணிச்சலான எச்சரிக்கையே
இது
யுத்த கலாசாரத்தின் ஆத்மா 'நிழல் தேடும் சூரியன்' என்ற கவிதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கலாசாரத்தில் நம் நாடும் முங்கிக் கொண்டிருப்பதால் எமது வாசகருக்கும் இது உவப்பாக இருக்கும்.
ஆங்காரமும்/ ஆணவமும்/ வெறிபிடித்துப் போய் இருக்கிறது தலைவர் ஆனதும் இதற்காக த்தானா. எனவும்
கண்ணில்லா குண்டு துளைத்து வந்து/இரத்தம் குடித்து
அடங்கவில்லைத் தாகம்/ இலகப் கை தாய்க்கு இரத்தக் காட்டேரியாக/ வெறிபிடித்திருக்கும்/ இலங்கைத் தாயே. இப்படியாக, 54 தலைப்புகளில் விக்ரம் பாடிய கவிதைகள் இத் தொகு ப்பில் அடக்கப்பட்டுள்ளன.
நூல் வெளியீட்டுக் கலாசாரத்தில் அண்மைக்காலத்தில் புதிய நடை முறையொன்று ஊடுருவி வருவதைக் கவனிக்க முடிகின்றது. பக்கத்துக்குப் பக்கமாகப் படங்கள் காணப்படுகின்றன. இதே தடத்தை விக்ரமும் பின்பற்றி இருக்கின்றார். சஞ்சிகைக ஞக்குப் படங்கள் தேவையென்பதை நிராகரிக்க முடியாது! ஆனால் நூல் களுக்கு இத்தகைய சோடனைக ளைச் செய்து நூல் உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டுமா? இந்த விடயத்தில் சிறுவர் நூல்களுக்கு விலக்களிக்கலாம்! இதன் தாக்கத்தைச் சுமப்பவன் வாசகனல்லவா!
ஆக இளைஞர் விக்ரம் இத் தொகுப்பின் ஊடாக இளமையின் தித் திப்பையும் தன்னைச் சுற்றியுள்ள வாழ் வின் கிலிசுகேடுகளையும் ஆட்சியின் அரக்கத்தனத்தையும் வாசகனுக்குப் புகட்டுகிறார்.
அவர் மூத்த கவிஞர்களின் கவிதை களை வாசித்துத் தனது கவிதா ஆற்ற லை மேலும் ஆழமும் விரிவும் பெறச் செய்யலாம். பாராட்டுக்கள்.
, மல்லிகை செப்ரெம்பர் 2007 * 33

Page 19
கொழுந்து
(eg6060- 9,356ious 2007,
கண்டியிலிருந்து வெளியாகும் - எழுத்தாளரும் நாடகக் கலைஞருமாகிய அந்தனி ஜீவாவை ஆசிரியராகக் கொண்ட "கொழுந்து' என்ற சிற்றேட்டின் 24 ஆவது (ஜூலை- ஆகஸ்ட் 2007) இதழ் கிடைத்தது.
மலையகம் சம்பந்தமான கல்வி, இலக்கியம், நாடகம் சம்பந்தமான செய்திக்குறிப்புகள், சிறுகதை, கவிதை கட்டுரை என்பவைகளோடு வெளியாகி இருக்கும் இந்த இதழின் விலை ரூபா 10/=,
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவைகள் முழுத்தேசமுமே பின்பற்றக்கூடிய- சமுதாயத்தை முன்னேற்றும் அரும்பணி.
"புதுமைப்பித்தனும் இலங்கையும்" என்ற அமரர் க. கைலாசபதியின் கட்டுரை மறு பிரசுரமாகி இருக்கின்றது. கொழுந்தின் அடுத்த இதழ் புதுமைப்பித்தன் சிறப்பிதழ் என்ற செய்தியும் காணப்படுகின்றது.
வண்ணை தெய்வம், மாரி மகேந்திரன் ஆகியோரது கவிதைகள் பதிவகியுள்ளன. பண்ணாமத்துக் கவிராயரின் "ஒரு தொழிலாளி வரலாறு படிக்கின்றான்' என்ற மொழிப் பெயர்ப்புக் கவிதையுமுண்டு.
சிறு அறிமுகக் குறிப்புகளோடு புதிய நூல்கள், இதழ்கள் சம்பந்தமான விபரங்களுமுண்டு.
பெண் இன்றைக்கும் விடுதலையற்றே மாய்கிறாளென்பதை உள்வாங்கி என். விஜயலட்சுமி சுமைதாங்கியில் சோகிக்கிறார். சிறுகதைப் புனைவில் அவருக்கு நல்ல எதிர்காலமுண்டென்பதை "சுமைதாங்கி’ எண்பிக்கின்றது.
நம்பிக்கையைத் தந்துவரும் கவிஞரும் ஒவியருமான கனிவுமதியின் கவிதைத் தொகுப்பு "அப்புறமென்ன..' என்பதே 'அப்புரமென்ன' அல்ல! ஒரெழுத்து அர்த்தத்தை வேறுபடுத்துகின்றது. எழுத்துப்பிழைகளுக்குக் கழுகுப் பார்வை தேவை இளைய மலையக சந்ததியின் நன்மை கருதி இனி வரும் இதழ்களை உரிய முறையில் சரி பார்க்கலாம்.
அறுபதுகளில் வெடித்தெழுந்த மலையக இலக்கியப் பரம்பரையைப் போல் மற்றுமொரு சந்ததியை "கொழுந்து' வளர்த்தெடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 * 34
 

தாயகம்
(FP6ör- o,assiot. 2oo7)
கலை, இலக்கிய, சமூக, விஞ்ஞான காலாண்டிதழான
கிடைத்தது.
போர் நிறுத்தச் சிந்தனைகள் தொடரின் 03 கட்டுரையில் ஏகலைவா "அமைதி காத்தல்" என்ற விடயத்தைத் தொட்டிருக்கிறார். இதில் 1961 ஜனவரி 17 இல் செய்யப்பட்ட படுகொலை கொங்கோ நாட்டின் முன்னாள் பிரதமர் பற்றிஸ் லுமும்பாவின் கொலையையும் அமைதிப் படைகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளையும் ஒப்பு நோக்குகிறார். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அமைதிப் படையின் நடிவடிக்கைகள் புதிதாக இருக்காது! அவர்கள் அநுபவப் பட்டவர்கள். இதற்கும் மேலாக ஏகலைவா பற்றிஸ் லுமும்பா சம்பந்தமான பூரணமான கட்டுரையொன்றைத் தருவாராகில் இளைய சந்ததிக்கு
D-56LD.
உலகியல் ஞானத்தின் சாராம்சம் என்ற பொருளில் சீனப் பேரறிஞர் லூசுன் எழுதிய கட்டுரையை கே. சீவரெட்ணம் தமிழில் தந்துள்ளார்.
உலக மயமாக்கலில் இதுவுமொன்றா? என நினைக்க வைக்குமளவில் கொழும்பில் சாத்திரிமாரின் படையெடுப்புப் புழுத்து விட்டது தமிழகத்துச் சஞ்சிகை போல் அங்கிருந்து கொட்டுண்டுகிறார்கள். இங்குள்ள தொழில்முறைச் சாத்திரிமார் என்ன செய்வது? "எண் சோதிட மேதை சந்தர்' என்ற எழுத்துருவில், சோதிடத் தின் கடைக்குட்டியான எண் சாத்திரத்தை புவன ஈசுவரன் அங்கதச் சுவையில் பார்க்கிறார். தற்பொழுது காளான்கள் போல் சிலிர்த்தெழும் திருமணத்தரகர்கள் குறித்தும் அம்பலப்படுத்தலாம்! அதுவும் சமகாலப் பிரச்சினைதானே!
மூதறிஞர் அமரர் வ. இராசையாவின் வாழ்க்கை சிறந்ததொரு நூல் என்பது அறிவுசார் உலகின் ஏகோபித்த கருத்து இதுவரை அன்னார் குறித்து எழுதிய பேசிய தகைமையாளர்கள் பார்க்காத பக்கமொன்றை "சமூகத்தில் மாற்றங்களை வலியுறுத்தியவர் இராசையா மாஸ்ரர்" என்ற கட்டுரையில், அவரோடு மிக நெருக்க மானவரான- இலண்டன் சுடரொளி- இன் இலங்கைப் பிரதிநிதி வே. தருமலிங்கம்
மல்லிகை செப்ரெம்பர் 2007 奉 35
"தாயகம்" சஞ்சிகையின்- ஜூன்- ஒகஸ்ட் 2007- இதழ்
t

Page 20
பார்த்துள்ளார். எடுத்துக் கொண்ட விடயத்துள் இன்னமும் ஆழமாகச் சென்றிருக்கலாம்!
எமது ஓவியக் கலைஞர்களது பக்கம் தற்பொழுது எமது கலை உலகின் கண்கள் திறக்கப்பட்டிருப் பதைக் கலாபிமானிகள் அவதானித் திருப்பர். பாரபட்சம் காட்டாது ஒவியர் களின் சாதனைகளையும் மக்கள் மயப்படுத்துவது ஒவியக் கலையை முன்னேற்றுவதற்கு உதவும். அத்த கைய உணர்வோடு இவ்விதழில் 'விழுதுகள்' என்ற பத்தி தொடக்க ப்பட்டிருக்கின்றது. இப்பத்தியில் சித்திர மும் வடிவமைப்பும் போதனாசிரியர் ரமேஸ் பிரகாஸ் சம்பந்தமான குறிப்பு கள் வெளியாகி இருக்கின்றன. நாடக மும், அரங்கியலும் விரிவுரையாளர் க. ரதிதரனின் நெறியாள்கையில் உரு வான "வெட்டை' குறுந்திரைப் பட த்தைக் கீரன் சுருக்கமாக விமர்சித் துள்ளார். இத்தகைய குறுந்திரைப்படங் கள் உரிய முறையில் விளம்பரம் செய்யப்பட்டுச் சகல ஆர்வலர்களும் பார்ப்பதற்கு வசதி செய்து கொடுப்பது இத்துறையை மேலும் வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும். தமிழ்க் குறும் பட விழாவொன்றை ஏற்படுத்துவதும் இக்கலையை உயர்ச்சி காண வைக்கும்.
கவிதைகள் 13 ஐ படிக்க முடிகி ன்றது. சிவசேகரம் இரு வேற்று மொழிக் கவிதைகளை மொழி மாற்றம் செய்து தமிழ் வாசகன் படிக்கத் தந்திருக்கிறார்.
சிறுகதைகள் 4 உண்டு. "தடை கள்' இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதே சங்களில் உயிரற்ற சடலத்தை ஈமக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்வதற்கு ஏற்படும் தடைகளை சித்தரிக்கின்றது. தமிழனாய் பிறந்த தோஷம் "புல்லு வெட்டுவது யார்? கொழுந்தெடுக்கிறது யார்' என்ற கதை மலையக வாழ்க்கை யில் நிமிர எத்தனிப்பவர் களுக்கு ஏற்படும் சிக்கல்களின் ஒரு கீற்றைத் தொட்டுள்ளது. "உலகம் என்பது உயர்ந் தோர் மாட்டே' என்பது பாரம்பரியமாகி விட்டதெனச் சிந்திக்க வைக்கிறது.
குறுங் குறிப்புகள்- நூல்கள் 11 பற்றியும் சஞ்சிகைகள் 5 பற்றியும் சில பக்கங்களில் பெட்டி கட்டிப் பதிவாகி இருக்கின்றன. தமிழ் வாழ்வு நீளும் மாலையாகிவிட்ட, இக்கால கட்டத் திலும் அறிவுத் தேடலில் தமிழ்பேசும் மக்கள் சளைக்கவில்லை யென்பதை இந்தப் புத்தேடுகளின் வருகை உணர் த்துகின்றதல்லவா?
வழக்கமான தொடர் அம்சங்களும் வளர்ந்துள்ளன. பொதுவாக- பழையன வோடு புதியனவும் இணைந்து அறி வார்ந்ததும் ஆழமானதுமான வாசிப் பைத் தருகின்றன இவ்விதழில்.
இரசனைக் குறிப்புகள் மா. பாலசிங்கம்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 36

ஈழத்தத் தமிழ்நாவல்கள்
- செங்கை ஆழியான் க. குணராசா
1. ஆரம்ப ஈழத்து நாவல்கள் (1885- 1948)
1. ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வுகள்
ஈழத்தில் நாவலிலக்கியம் பயிலத் தொடங்கி ஒன்றரை நூற்றாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இத்துறை சார்ந்த பெறுபேறுகளைக் கால ஒழுங்கில் சீர்தூக்கிப் பார்க்கின்ற ஒரு முயற்சியாக இத் தொடர் அமைகின்றது. இத்துறை குறித்து ஏற்கனவே பல அறிஞர்கள் ஒரு சில நூல்களையும் கட்டுரைகளையும் பட்டியல்களையும் ஆக்கியளித்துள்ளனர். நவீன புனைக்கதை இலக்கியத்தில் நாவல் ஒரு முக்கியமான வடிவமாக இன்று அமைந்துவிட்டது. மனித குலத்தின் அநுபவங்களையும் உண்மைச் சம்பவங்களையும் சில நாவல்கள் எடுத்துரைக் கின்றன. வாழ்க்கையின் புறச் சம்பவங்களை அப்படியே சித்தரிக்கின்ற யதார்த்த நாவல்களும் வாழ்க்கையின் அகச் சிந்தனைகளையும் உணர்வுகளையும் சித்தரிக்கின்ற உளவியல் நாவல்களும் வெளிவந்துள்ளன. துப்பறியும் நாவல்கள், அறிவியல் நாவல்கள், மாயாஜால நாவல்கள் எனப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று நாவலாக்கப்பட்ட புனையாக்கதைகள் (NonFictional Novel) துறையில் முக்கியம் பெற்றுவரும் இக்கால கட்டத்தில் ஹரிப்பொட்டர் போன்ற விக்கிரமாதித்த அதி கற்பனாவாதக் கதைகள் மீண்டும் முக்கியம் பெறத் தொடங்கிவிட்டன. 1700 களில் மேலைத் தேசத்தின் இலக்கியச் சிந்தனையில் முகிழ்த்த நாவல் துறை 1800 களில் வளர்ச்சி பெற்று 1900 களில் ஆழமாகக் காலூன்றிக் கொண்டது. 1856 இலேயே ஈழத்து தமிழில் நாவல் ஒன்று வெளிவந்தது. அதன் பின்னர் 1876 இல் தமிழின் முதல் நாவலாக் கருதப்படும் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் வெளிவந்தது.
மேற்குறித்த காலகட்டங்களிலிருந்து தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பலர் நாவலாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈழத்தில் 1856 இலிந்து 1940 வரை ஏறத்தாழ
மல்லிகை செப்ரெம்பர் 2007 * 37

Page 21
ஐம்பது நாவல்கள் வெளிவந்துள்ளன. 1940 இலிருந்து இன்றுவரை (ஒகஸ்ட் 2005) நானுாறுக்கும் நாவல்கள் வெளிவந்துள்ளன. ஈழத்தில் நாவல்கள் தோன்றி 151 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற இச்சந்தர்ப்பத்தில் எமது வரலாற்றையும் வளர்ச்சியையும்
கணிப்பீடு செய்வது அவசியமாகின்றது.
என் பார்வைக்குட்பட்ட நாவல்களை யும் கூடியவரை என் சொந்த நூலகத்தி லுள்ள நாவல்களையும் பட்டியலிட்டுத் தந்துள்ளேன். 1954 ஆம் ஆண்டு க. கைலாசபதி வீரகேசரியில் 'தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்' என்றொரு தொடர் எழுதியுள்ளார். இவ்வகையில் 1964 இல் இரசிகமணி கனக செந்திநாதன் தனது 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்று ஆய்வு நூலில் ஈழத்தின் நாவல்கள் குறித்து விபரித்துள்ளார். அதன் பின்னர் 1967 இல் சில்லையூர் செல்வராசன் "ஈழத்து தமிழ்நாவல் வளர்ச்சி என்றொரு நூலை ஆக்கித் தந்துள்ளார். இந்நூல் 1962 இல் ‘புதுமை இலக்கியம் என்ற சஞ்சிகை யில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். எனினும், நாவல் துறையில் முதன் முதல் கவனத்தைக் கவரும் நூல் இதுவாகும். இந்நூலில் 1891 தொடக்கம் 1962 வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த 150 நாவல் கள் தொடர்பான தகவல்களைத் தந்து 6T6 TT.
1968இல் போராசிரியர் க. கைலா சபதி தமிழ் நாவல் இலக்கியம்' என் றொரு ஆய்வு நூலினை ஆக்கியளித்
من ساكالاضصاق)
துள்ளார். இந்நூலில் ஆங்காங்கு ஈழத்து நாவல் முயற்சிகள் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன. 1978இல் கலாநிதி கா. சிவத்தம்பியின் நாவலும் வாழ்க்கையும்" என்றொரு ஆய்வு நூல் வெளியாகியது. பல்வேறு காலகட்டங் களில் தான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்தாலும் ஈழத்து முயற்சிகள் குறித்து ஆங்காங்கு குறிப்புகள் உள்ளதாலும் ஈழத்து நாவல் வரலாற்றில் கவனத்தை எடுக்க வில்லை. இந்த இரண்டு பேராசிரியர் களும் தமிழக நாவல்களைத் தம் ஆய்வின் மையமாகக் கொண்டு தமி ழக விமர்சனத்துறையின் முக்கிய ஸ்தர்களாகத் தம்மை நிலைநாட்டு ஆவலால் அரிதாகவே இந்நூல்களில் ஈழத்து நாவல்கள் பற்றிய தகவல்கள் இடம் கொண்டன. 1978 இல் கலாநிதி. நா. சுப்பிரமணியன் எழுதி முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட 'ஈழத் துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்ற
நூல் இவ்வரிசையில் விதந்துரைக்கத்த
க்கது. 1885 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரையிலான ஈழத்து நாவல்களை ஒரு வரன் முறையில் ஆய்வு செய்திருக்கிறார் நா. சுப்பிரமணி யன். இன்று கனடாவில் வாழ்கின்ற சுப்பிரமணிய ஆய்வாளனின் இடத்தை நிரப்ப இங்கு எவருமில்லாதிருப்பது ஈழத்து இலக்கியத்திற்கு ஏற்பட்டிருக் கும் இழப்பாகும். காலத்திற்குக் காலம் ஈழத்தில் வெளியான நாவல்கள் குறித்
மல்லிகை செப்ரெம்பர்ட் 2007 * 38

துத் தன் திறனாய்வுக் குறிப்புக்கள்ை விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன் பத்திரி கைகளில் பதிவு செய்து வந்துள்ளார். அக்குறிப்புகள் ஈழத்து தமிழில் நாவல்கள் சில' எனும் நூலாக எமக்குக் கிடைத்துள்ளன. இவ்வரிசையில் புலோ லியூர் இரத்தினவேலோனும் அடங்கு வார். மலையகப் படைப்பாளி சாரல் நாடன் 2000 ஆம் ஆண்டளவில் 'மலை யக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சி யும்' என்ற நூலில் மலையக நாவல்கள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளார். இதுவரை இருண்டிருந்த மலையக நாவல்கள் பற்றி இந்நூல் மூலம் தெளி வாக அறிந்து கொள்ள முடிகின்றது.
'அயலகத் தமிழ்க் கலை, இலக்கி யம், -சமகாலச் செல் நெறிகள்' என்ற நூலைச் சென்னை உலகத் தமிழாராய் ச்சி நிறுவனம் 2001 ஆம் ஆண்டு வெளி யிட்டது. அதில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தமிழ் இலக்கியங்கள் குறித்த கா. சிவத்தம்பி, சோ. சந்திரசேகரன், மனோன்மணி சண்முகதாஸ், நா. சுப்பிரமணியன், செ. யோகராசா, செங்கை ஆழியான் க. குணராசா, எஸ். சிவலிங்கராசா, சித்திரலேகா மெளனகுரு, சி. மெளன குரு, தெ. மதுசூதனன், ஆ. சண்முக தாஸ் ஆகியோர் பங்களிப்புச் செய்துள் அந்நூலில் 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' பற்றிப் பேராசிரியர்
6H6OTr.
நா. சுப்பிரமணியமும், 'ஈழத்துத் தமிழ்
நாவல்' குறித்து கலாநிதி செ. யோக
ராசாவும் ஆய்வு செய்துள்ளனர். எல்லா வற்றிற்கும் மேலாக "இலங்கையில் ஆய்வியல்' என்ற தலைப்பில் பேராசிரி யர் அ. சண்முகதாஸ் ஈழத்தின் பல் துறை இலக்கியம் சார் ஆய்வுப்பங்க ளிப்பினைச் சுட்டிக் காட்டும் போது, ஈழத்து நாவல்கள் குறித்து எவரெவர் ஆய்வு நடாத்தியுள்ளனர் எனப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். எம் போன்ற வரலாற்று ஆய்வு செய்வோரு க்கு சண்முகதாஸின் இக்கட்டுரை சிறந்த ஓர் வழி காட்டியாகும்.
1972 இல் ஈழத்தின் மூத்த படைப் பாளி சோ. சிவபாதசுந்தரம், தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல் என்ற தலைப்பில் மோகனாங்கி நாவ லை அறிமுகப்படுத்தியுள்ளார். அதே யாண்டு ஊடகவியலாளர் ஆ. சிவனே சச்செல்வன் பாவலர் துரையப்பாப் பிள்ளையின் நூற்றாண்டு விழா மலரில் மங்களநாயகம் தம்பையாவின் நொறு ங்குண்ட இருதயம்' என்ற நாவல் குறித் தும், கலைக்கண் சஞ்சிகையில் 1973 இல் 'ஈழத்துத் தமிழ் நாவல் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். 1974 இல் தினகரன் இதழில் ‘அசன்பே கதைக் கோர் அறிமுகம்' என்ற கட்டுரையை எஸ். எம். கமாலுதீன் எழுதினார். பேரா சிரியர் அ. சண்முகதாஸCம் இந்நாவல் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளார். 1975 இல் 'அலை சஞ்சிகையில் "எழுபதுகட்குப்பின் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வை செ. யோக
மல்லிகை செப்ரெம்பர் 2007 தீ"39

Page 22
ராசா ஆற்றியுள்ளார். 1976 இல் சிந் தனை இதழில் மெள. சித்திரலேகா, ஈழத்து நாவல்களில் சமூக உணர்வின் தோற்றம் குறித்தும், அதே சிந்தனை இதழில் துரை, மனோகரன் பிரதேச நாவல்கள்: யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள்' பற்றியும் எழுதியுள்ளனர். 1976 ஆம் ஆண்டு மனோன்மணி சண் முகதாஸ், மல்லிகை இதழில் 'ஈழத்து நாவலாசிரியர் அ. நாகலிங்கம்பிள்ளை' குறித்தும், சிந்தனை இதழில் "பெண் களும் தமிழ் நாவலும் பற்றியும் எழுதியு ள்ளார். 1976 இல் கலா. பரமேஸ்வரன், 'முப்பதுகளில் சிறந்த தமிழாசிரியர்கள்' என்ற தலைப்பில் தேம்பால், ஞான பூரணி ஆகிய நாவல்களை ஆராய்ந்து அறிமுகம் செய்துள்ளார். 1977 இல் *துரை மனோகரன் கடந்த கால் நூற்றா ண்டுக் கால ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை மல்லிகையில் எழுதியுள்ளார். இரசிக மணி கனக செந்திநாதன் மல்லிகை இதழில் 'அழகவல்லி அல்லது பிறர்க் கிடு பள்ளம் நாவல் குறித்து ஆய்வு செய்துள்ளார். 1978 இல் செ. யோக ராசா, தமிழ் நாவல் இலக்கியத்தில் ஓர் இருண்ட காலம் என்ற நூலை வெளி யிட்டுள்ளார். 1979 இல் க. கைலாசபதி, மல்லிகையில் நாவலாசிரியர் நாக முத்து இடைக்காடர் குறித்த கட்டுரை வெறிவந்தது. யாழ்ப்பாணத்தில் நிகழ் ந்த நாவல் நூற்றாண்டு கருத்தரங்கில் நல்ல பல கட்டுரைகள் சமர்ப்பிக்கப்
பட்டன. 'ஈழத்துத் தமிழ் நாவலின் வளர்ச்சிக் கட்டங்கள் (மெள. சித்திர லேகா), ஈழத்துத் தமிழ் நாவலின் தோற் றம் (ஆ. சிவனேசச்செல்வன்), ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள் (நா. சுபபிரமணியன்), ஈழத்து நாவல்கள் ஒரு பொது மதிப்பீடு (சி. தில்லைநாதன்) என்பன குறிப்பிடத் தக்கவை. 1984 இல் ச. மனோன்மணி கே. டானியலின் அடிமைகள்' பற்றிய தனது ஆய்வை தோழமை வெளியீடாக வெளியிட்டுள்ளார். ஈழத்துத் தமிழ் நாவல்கள், ஈழத்தின் ஆரம்ப நாவல் கள், ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை மல்லிகையில் செங்கை ஆழியான் எழுதியுள்ளார். ஆரம்ப கால ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றி நல்லதொரு கட்டுரையைத் தெளிவத்தை ஜோசப் மல்லிகையில் வரைந்துள்ளார். அத்து டன் ம. வே. திருஞானசம்பந்தம் பிள்ளையின் நாவலான துரைத்தினம் - நேசமணி என்ற நாவல் குறித்து கட்டுரை ஒன்றினை தெளிவத்தை யோசப் எழுதியுள்ளார். இதே நாவலாசி ரியரின் கோபால நேசரத்தினம்’ நாவ லை கலாநிதி சொக்கன் ஆய்வு செய்து மல்லிகையில் எழுதியுள்ளார்.
1976 இல் மல்லிகையில் எழுபது க்குப்பின் ஈழத்தமிழ் நாவல்கள் பற்றி எழுதிய நா. சுப்பிரமணியம், அதே ஆண்டு சி. வை. சின்னப்பாபிள்ளை யின் வீரசிங்கன் கதை குறித்து எழுதி யிருந்ததோடு, அடுத்த ஆண்டில், 1978
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 40

ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழத்தின் தமிழ் நாவலியக்கம் என்ற ஒரு கட்டுரைத் தொடரை நா. சுப்பியமணி யன் மல்லிகையில் தொடராக எழுதியுள் ளார். 1978 இல் துரை மனோகரன் தன் முது கலைமானிப் பட்டப் படிப்புக்கு ஈழத்துத் தமிழ் நாவல்களில் கதைத் தலைவன் பாத்திரப்படைப்பு ஆய்வேட் டினைச் சமர்ப்பித்துள்ளார். 1984 இல் இராஜேந் திரம் சிவலிங்கம் என்பவர் 'வன்னிப் பிரதேச நாவல்கள் குறித்த ஆய் வினைப் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்.
1990 இல் செங்கை ஆழியானின் நாவல்கள் - ஓர் ஆய்வு என்ற கட்டு ரையை தி. செம்மனச்செல்வி எழுதியு ள்ளார். 1990 இல் சி. வன்னியகுலம் என்பார் தனது முதுகலைமாணிப்பட்ட ஆய்வாக 'ஈழத்து நாவல்களில் சமூக பண்பாட்டு விழுமியங்கள் சமர்ப்பித்து ள்ளார், நூலாகவும் வெளிவந்துள்ளது. 1994 இல் நா. சுப்பிரமணியன் கே. டானியல் ஒரு திறனாய்வு நோக்கு எனும் ஆய்வை மல்லிகையில் எழுதி யுள்ளார். செ. திருநாவுக்கரசு என்பார் தனது கலைமானி ஆய்வுக்கு 2000 ஆண்டில் டானியல் நாவல்கள் பற்றி முழுமையான ஓர் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வு தனி நூலாகவும் வெளி வந்துள்ளது. செங்கை ஆழியானின் நாவல்கள் குறித்து முருக நேசன் என்பவர் தனது முதுகலை மானிப்பட்ட த்திற்கான ஆய்வாகச் சமர்ப்பித்து
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து பட்டம் பெற்றுள்ளார். விரைவில் நூலுருப் பெற்று வெளி வரவுள்ளது. 2006 ஆம் ஆண்டில் அய்ய நாடார்ஜானகி அம்பாள் கல்லூரி, தமி ழாய்வு மையத்தின் எம். பில்ட் பட்ட த்திற்காக ஜெ. ரமாதேவி என்பவர் செங்கை ஆழியானின் இரு புதின ங்கள் காட்டும் சமுதாயம்' என்ற ஆய்வி னைச் செய்து எம். பில்ட் பட்டம் பெற்று ள்ளார். அவருடைய ஆய்விற்காக தமி ழகத்தில் காவியா பதிப்பகம் வெளி யிட்ட செங்கை ஆழியானின் காட்டாறு நாவலும், மரணங்கள் மலிந்த பூமி நாவலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவே ஈழத்தின் நாவல்கள் குறித்த ஆய்வுகள் நிறையவே செய்யப்பட்டு ள்ளன. அவற்றை ஒருங்கே பார்க்கின்ற பணியை இத்தொடர் போகின்றது.
செய்யப்
ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய விபரங்களை நால்வர் நூற்பட்டியல் களாக வெளியிட்டுள்ளனர். 1971 இல் இரசிகமணி கனக செந்திநாதனால் வெளியிடப்பட்ட 'ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டியில் முன்னோடி நாவல்கள் பற்றிய விளக்கங்கள் இல்லை. நவீன நாவல்கள் பற்றிய தகவல்கள் உள் ளன. இத்தமிழ் நூல் வழிகாட்டி, மூதறி ஞர் வரதரின் "பலகுறிப்பில்' இணைப் பாக உள்ளது. அதேயாண்டு க. கைலா சபதியும், எஸ். எம். கமாலுதீனும் தொகுத்து வெளியிட்ட 'ஈழத்துத்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 41

Page 23
தற்காலத் தமிழ் நூற்காட்சி- 19471970 தேர்ந்த நூற்பட்டியல்' என்ற ஆவணத்தில் தமிழ் நாவல்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. 1977 இல் நா. சுப்பிரமணியம் வெளியிட்ட 'ஈழத்துத் தமிழ் நாவல்கள்- நூல் விபரப்பட்டியல் 1885-1976 இல் விரிவான செய்திகளு ள்ளன. ஈழத்தின் ஆரம்ப நூல்கள் பற்றிய குறிப்புகள் சுப்பிரமணியத்தின் பட்டியலில் உள்ளன. 2003 இல் செங்கை ஆழியான் க. குணராசா ஈழத்து நாவல்கள் பட்டியல் ஒன்றினை மல்லிகையில் வெளியிட்டார்.
2. ஈழத்தின் தொடக்க
காலத் தமிழ் நாவல்கள்
ஈழத்துத் தமிழ் நாவலியக்கத்தின் ஆரம்பம் 1856 ஆம் ஆண்டு, காவலப் பன் கதை என்ற நாவலுடன் ஆரம்பமா கின்றது. தமிழின் முதல் நாவல் என எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் 1876 இல் வெளிவருவதற்கு இரு தசாப்தங்க ளுக்கு முன்னரேயே நாவலின் சாய லில் காவலப்பன் கதை வெளிவந்து விட்டது. ஆங்கிலப் புலமை வாய்ந்த கல்வியாளர்கள் மேலைத்தேய இலக் கியங்களான ஆங்கில நாவல்களைப் படித்த அருட்டுணர்விலும், தமிழக ஆரம்ப நாவல்களைப் படித்த அருட் டுணர்விலும் ஈழத்தில் நாவல்களை
எழுதியிருக்கிறார்கள் என்பதில் இர ண்டு கருத்துக்கள் இல்லை. இலக்கிய வரலாற்றில் உரை நடையின் வருகை யும் அதனோடு உரை நடையில் கதை கூறும் முறைமையும் தவிர்க்க இயலாத கால நிகழ்ச்சிகளாகும். ஈழத்தவர்கள் அக்கால ஓட்டத்தில் தம்மையும் இணைக்காது தனித்து நின்றுவிட வில்லை.
1856 இலிருந்து 1940 வரையி லான கால கட்டத்தில் ஈழத்தில் ஏறத் தாழ 60 நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் என்னால் நிச்சயமாகப் பட்டியலிட்டுக் காட்ட முடியும். அவை
66t
1. காவலப்பன் கதை (1856) 2. அசன்பே சரித்திரம்
(அசென்பே கதை) (1885) காசிம் சித்திலெப்பை மரைக்கார், முஸ்லீம் நேசன் அச்சகம், கொழும்பு. நான்காம் பதிப்பு 1990. முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, கொழும்பு. 3. ஊசோன் பாலந்தை கதை
(1891) எஸ். இன்னாசித்தம்பி 4. (3LDITs6OTTIsis (1896) g. s. sy
வணமுத்துப்பிள்ளை, இந்து யூனியன் அச்சுக்கூடம், சென்னை. 5. இன்பவதி (1902) த. கைலாசப்
பிள்ளை. 6. கமலாவதி (1904) சுவாமி
மல்லிகை செப்ரெம்பர் 2007 ஜீ 42

1 O.
11.
12.
3.
14。
15.
16.
17.
18.
சரவணமுத்து வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜெயம் (1905) சி. வை. சின்னப்பபிள்ளை நொறுங்குண்ட இதயம் (1914) மங்களநாயகி தம்பையா, தெல்லிப்பளை உதிரபாசம் அல்லது இரத்தினபவானி (1915) சி. வை. சின்னப்பபிள்ளை விஜயசீலம் (1916) சி. வை. சின்னப்பிள்ளை சம்சோன்கதை (1917) எஸ். தம்பிமுத்துப்பிள்ளை. சுந்தரன் செய்த தந்திரம் (1918) எஸ். தம்பிமுத்துப்பிள்ளை. பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் (1918) புலோலி சுப்பிரமணியம், LDG6)urt சொக்கநாத நாயக்கர் (1919) மோகனாங்கி நாவலின்
சுருக்கம், ஆதி அன்ட் தம்பி,
ਲ66ਹ60 நீலாக்வழி அல்லது துன்மார்க்க முடிவு (1923) எஸ். கே.
சுப்பிரமணியம்
மூலையில் குந்திய முதியோன் - (1924) கோ. நடேசையர்,
தேசபக்தன் தொடர் கதை.
காசிநாதன்நேசமலர் (1924) ம. வே.திருஞானசம்பந்தப்பிள்ளை, சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம். மறுபிரசுரம் 1929. இராசதுரை (1924)
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
செம்uொற்சோதீஸ்வரன் Gyeo6lbLDITsit நீலகண்டன் அல்லது ஒருசாதி வேளாளன் (1925) இடைக் காடர், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம். சித்தகுமாரன் (1925) இடைக் காடர், 2 பாகங்கள், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம். அரியமலர் (1926) மங்களநாயகி 5lb60LJuJIT சரஸ்வதி அல்லது காணாமற் போன ைெண்மணி - (1926) து. தொ. து. இராசம்பாள், சத்யமித்திரன் தொடர்கதை. அழகவல்லி அல்லது பிறர்க்கிடு பள்ளம் (1926) எஸ்.தம்பிமுத்துப் பிள்ளை. கோபாலநேசரத்தினம் (1927) ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை, உலகம்பலவிதக் கதை- 1, இர ண்டாம் பதிப்பு 1948. சைவப் பிரகாச யந்திரசாலை, யாழ்ப் UrtebOT b. புனிதசீலி (1927) ஞானச் சகோதரர் ஜோன்மேரி, கத்தோ லிக்க அச்சகம், யாழ்ப்பாணம். துரைத்தினம் நேசமணி, (1927) ம. வே. திரு. ஞானசம்பந்த பிள்ளை. உலகம் பலவிதக் கதை-3, அச்சு 1931. சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ் சியம், (1927) அ. நாகலிங்கம் SeleosT.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 43

Page 24
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
பாவசங்கீர்த்தன இரகசியப்பலி (1928) எஸ். ஆசீர்வாதம் (பதிப்பாசிரியர்), 2 ஆம் பதிப்பு : கத்தோலிக்க அச்சகம். யாழ்ப் Lunt 600Tb. சரஸ்வதி அல்லது காணாமற் போன பெண்மணி (1929) ச. இராசாம்பாள், கொழும்பு எஸ். செல்லம்மாள் பதிப்பு. தேம்பாமலர் (1929) சார்ள்ஸ் ரிக்னி, அமெரிக்க இலங்கை மிசன். அருமைநாதன் (1930) ஞான சகோதரர் ஜோன் மேரி. பூங்காவனம் (1930) வண்ணை மா. சிவராமலிங்கம்பிள்ளை, சோதிடவிலாச புத்தகசாலை, கொக்குவில். வீராம்பாள் அல்லது விபரீத மங்கை (1930) வ. மு. சின்னத் தம்பி, முரீ கணேச அச்சகம், யாழ்ப்பாணம். மேகவர்னன் (1930) வே. வ. சிவப்பிரகாசம், குலநாயகி திலகவதி (1930) ம. க. சின்னையா. பிரதாபன் (1931) எச். நல்லையா, வீரகேசரித் தொடர்
கதை, * பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் (1932) வரணியுர் ஏ. சி. இராசையா, தனலக்குமி புத்தக சாலை, சுன்னாகம். ஈழ கேசரித் தொடர், நூலுருப் பெற்றது 1936, அருணோதயம் அல்லது
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
சிம்மக்கொடி (1933) வரணியூர் ஏ. சி. இராசையா, தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம். ஈழகேசரித் தொடர். நூலுருப் பெற்றது 1936. ஞானபூமி (1933) சார்ள்ஸ் ரிக்னி. அரங்கநாயகி (1934) வை. ஏரம்பமுதலி, மூலம் ஆங்கிலம், சேர் வால்டர் ஸ்கொட், லங்கா வர்த்தமானி அச்சுயந்திரசாலை, மட்டக்களப்பு. சந்திரவதனா (1934), எச். நல்லையா, பாகம் 1,2. ராபர்ட் அச்சுக்கூடம், கொழும்பு. p -5 sld LoesoesoTeal (1935) GurT6T குமாரவேற்பிள்ளை, ஈழகேசரித் தொடர். செல்வரத்தினம் (1935) நல்லூர் வே. க. நவரத்தினம், சோதிடப் பிரகாசயந்திர சாலை, கொக்கு வில்.
இதயரத்தினம் (1935) ஞானசகோதரர் ஜோன் மேரி. காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936) யாழ்ப்பாணம் கந்தர்மடம் சி. வை. தாமோதரம் பிள்ளை. சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில். தேவி திலகவதி அல்லது குப்பையிற் குண்டுமணி (1936) க. இராசரத்தினம். காந்தாமணி அல்லது தீண்டா மைக்குச் சாவுமனி (1937) ஏச். நல்லையா, ராபர்ட் அச்சுக்கூடம், கொழும்பு. சாமளா அல்லது காதல்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 44

49.
50.
51.
52.
53.
54.
போதனை (1937) எஸ். செல்வ நாயகம், கண்டி. செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி (1938) எம். ஏ. செல்வராஜா. சந்தரவதனா அல்லது இன்பக் காதலர் (1938) மூத்ததம்பி செல்லப்பா. இரத்தினாவளி அல்லது காதலின் வெற்றி (1938), எச். நல்லையா, வீரகேசரித் தொடர்
கதை. சுந்தரமீனா அல்லது காதலின் வெற்றி (1938) ஏ. போல், மஸ் கெலியா. ஈனோக் அர்டன் (1939) இலங்கையர் கோன், ஆங்கில மூலம்- தாமஸ்கார்டி, அல்பிரட் ரெனிசன் ஈழகேசரித்தொடர். வெறும் கனவுதான் (1939) இலங்கையர்கோன், ஆங்கில
SSRSRSRs
১২২২ ܡܵܠ ܐ
N
స్టోNX
's
S. ९ S&S
S
கார்டி, ಙ್ಗತಿ O
55.
56.
57.
58.
59.
60.
அறுந்த தளைகள் (1939) ரவீந்திரன் (சி. வைத்திலங்கம்) வங்கமூலம்- ரவீந்திரநாத்தாகூர், ஈழகேசரித்தொடர் கிளாறாமிலிச் (1940). இலங்கையர்கோன், ருசிய மூலம்- ஐவன் துர்க்கனோவ், ஈழகேசரித் தொடர். மல்லிகை (1940) வில்லன், வங்க நாடோடிக் கதை ஈழகேச ரித் தொடர். கண்ணனின் காதலி (1940) ஜி. எஸ். எம். சாமுவேல், இரத்தின lf. சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு (1940), எச்.
56üb60d6 ou uT கோவிந்தன் அல்லது தேசிய ஊழியன் (1942) பி. எஸ்.
வரதராஜநாயுடு, இரத்தினபுரி,
SSSR**SR Š § ༄་r།། M է: [^
Nès ch s S& t
તેો
șYŞ
S
செப்ரெம்பர் 2007 & 45

Page 25
aanemaakođã suoseBot
நெஞ்சாங் கூட்டில் உந்து உந்து மோதும் ğserpso192Js»p6N9>s*h குலத்தின் விரால் மீன்கள்
ຮົມດes
முடிடி முடிப் பால் குடிக்கும் ப9க்கன்றின் Usie Ugdje (pte உடலெங்கும் வியாபித்து.
Usvně9>ngenijů பிடுங்கியெறிந்த தடாகத்துத் தாமரைத்தண்டின் தசைநார்கள் 6ીછn=(ઈ 6ીછnteLતા
கிந்தும் கண்ணீர்த்துலிகள்
நீரில்
அமுக்க சீமுக்க மேலெழும் பந்தில் 21ugng ஒஉடை விழுந்ததனால். பந்து நிறைந்து அடியில் புதைகிறது.
இரைதேடிச் ஒென்ற
காகம்
sareb ဗ်အမေဇံnu.-- போது.
முடிடைகளைக் கானாது அலறிய சிலறல் சிந்தக் குவிலுக்கும் கேடிடது.
eấécrou Jigüe eSecrolúo மரத்தையும் மடுவத்தையும் அற்றிச் சுற்றிக் கதறிக் கதறிக் தொண்டை உரண்டு GUncan பeவின்
நாசியில் ஒலியும் கண்கலில் இரத்தமும்.
கன்று
bassinues போய்விடீடது
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 46
 

குன்றில் ஏற்றியதீபம் ' குடத்தில் இட்ட விளக்குச் \s போல லுரழ்ந்த கதை
- எம். கே. முருகானந்தன்
ைெகதடி சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அவரில் மிகுந்த பிரியம். காரணம் அவர்களுடன் அத்துணை பிரியமாகப் புழங்குபவர். அவர்கள் தங்களுக்கு ஒரு ரீவி வாங்கித் தரும்படி அவரிடம் கேட்டர்கள். ரீவி பாவனைக்கு வந்த 80களின் முற்பகுதி. அவர் அவர்களுக்கு ஒரு கலர் ரீவி வாங்கிக் கொடுத்தார். இப்பொழுது அவர் வீட்டில் இருந்ததோ ஒரு கறுப்பு வெள்ளை ரீவி தான். அவர் வீட்டிலும் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கும் கலர் ரீவியில் பார்ப்பதற்கும் விருப்பம்தான். ஆயினும் அவர் கருப்பு வெள்ளை ரிவியைத் தங்களுக்கு வைத்துக் கொண்டு கலர் ரிவியை அன்பளிப்பாகக் கொடுத்தார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. நண்பர்களுக்குக் கூடத் தெரியவில்லை. யாருக்கும் தெரிவிக்காமல் விளம்பரப்படுத்தாமல் கொடுத்தார். இதைதான் இடது கை அறியாமல் வலது கை கொடுப்பது என்பதா?
இதைச் செய்தவர் யார்?
குன்றில் ஏற்றிய தீபமாக ஒளிர்ந்த ஒருவர், குடத்தில் இட்ட விளக்குப் போல தன்னை மறைத்து வாழ விரும்பினார். தன்னை எத்தனை தூரம் மறைக்க முயன்ற போதும் அந்த ஒளிப் பிரவாகத்தின் பிரகாசத்தை, காருண்யத்தை அனைவரும் புரிந்து போற்றவே செய்தனர். ஆம் புகழுக்கும் பெயருக்கும் ஆலாய்ப் பறக்கும் இந்த உலகில் தனக்கு நியாயமாகவே கிடைக்க வேண்டிய புகழைக் கூட வெளிக்காட்டாது மறைத்து வாழும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கவே செய்வர். நான் அறிந்த அத்தகைய ஒரே ஒரு மனிதர் எங்கள் சோமா ஒருவர்தான்.
சோமா, சோமர், சோமா அங்கிள், எக்கவுண்டன் அய்யா, எக்கவுண்டன் சோமா, இப்படி எத்தனையோ விதமாகப் பாசத்தோடு அழைத்து நேசத்தோடு நெகிழ்ந்த அன்புள்ளங்களைத் தவிக்க விட்டு விட்டு நிரந்தர விடை பெற்றுவிட்டார்.
பருத்தித்துறை சிவன் கோவிலடியில் பிறந்த அவர் தனது கல்விச் சிறப்பாலும், கடின உழைப்பாலும் ஹாட்லிக் கல்லூரி ஆசிரியராக, பட்டயக் கணக்காளராக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, மேர்சன்ட் பினானஸ் நிதி நிறுவன அதிபராக, பல்கலைக் கழக செனட்
உறுப்பினராக தன் தொழிற் தகைமைகளை வளர்த்துக் கொள்ள முடிந்தது.
மல்லிகை செப்ரெம்பர் 2007 ஜ் 47

Page 26
ஆனால் அவரது பெருமைக்கும், புகழுக்கும், காரணம் அவரது கல்வித் தகைமைகளோ உயர் பதவிகளோ அல்ல. மக்களை மதித்தவராக, துன்பப்பட்டவர் களின் துயர் தீர்க்க உதவிக்கரம் நீட்டிய வராக, உயர் விழுமியங்களைக் கடைப்பிடி த்தவராக வாழ்ந்த மனித நேயம் மிக்க இயல்புதான் காரணம்.
கடந்த 27 ஆண்டுகளாக அவரோடு ஒரளவு நெருங்கிக் புழங்கிய காரணத்தால் தான் அவரை நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. நான் பருத்தித் துறையில் குடும்ப வைத்தியனாக தொழில் புரிய ஆரம்பித்த 1980களிலேயே அவரது நட்புக் கிடைத்தது எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என் நண்பர் என்று சொல்வது வெறும் பேச்சுக்
குத்தான். உண்மையில் அவரை என் வழி
காட்டி எனலாம். அல்லது குரு என்று கூட மகுடம் சூட்டலாம். காரணம் நான் உண்டு என் தொழில் உண்டு என்று வாழ்ந்த என் முன் ஒரு புதிய உலகை திறந்து வைத் தவர் அவர். மற்றவர்களுக்கு உதவுவதும், துன்பப்பட்டவர் துயர் தீர்ப்பதும் எமது கடமை. அதில் மனம் நிறைய வேண்டும் என்பதை தனது வாழ்வின் திறந்த அத்தியா யங்கள் ஊடாக எங்களுக்குச் சொல்லாமல் சொல்லித் தந்தவர் அவர். தன்னை ஒறுத் தாவது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியதற்கு முன்பு கூறிய ரீ. வி சம்பவம் ஒரு நல்ல உதாரணமாகும்.
அவரோடு இணைந்து செயற்பட்ட காலங்களை நினைவுத் தட்டுகளில் இருந்து இறக்கி வைத்து நினைந்து பார்ப் பதில் ஆனந்தம் கொள்ளும் பல நண்பர்க ளில் நானும் ஒருவன் என்பதில் பெருமை
கொள்கிறேன். அரிமா கழகத்தின் ஊடாக ஆரம்பத்தில் செயற்பட்ட போது டொக்டர் பாலகிருஸ்ணன், பேராசிரியர் கணேச லிங்கம், வெற்றினரி டொக்டர் கதிரவேற் பிள்ளை, நடனசபாபதி, ஞானசம்பந்தர் கலை மன்ற அங்கத்தவர்கள், சிவலிங்க ராஜசிங்கம், சிவயோகன், போன்ற பலரும் சேர்ந்து இயங்கினோம். மதுபானம் பாவிக் காத, ஆடம்பர உணவுகளில் செலவழிக் காத, கேளிக்கைகளில் ஈடுபடாத, சேவைப் Lu6oofias6ńlsio LDLIGSub FFGSUL", sfSğögu umTsutom6oT களமாக அன்றைய பருத்தித்துறை அரிமா கழகம் இயங்கியதைப் பலரும் இன்றும் நினைவு கூர்கிறார்கள். அகதிகளுக்கு உதவி, மருத்துவ முகாம்கள், பரமானந்த ஆச்சிரம மாணவர்களுக்கு வருடா வருடம் பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டன இதற்கு வழிகாட்டியாக, இயக்கு சக்தியாக விளங்கியது எமது சோமாதான் என்பதை கூறித்தான் தெரிய வேண்டுமா?
பரமானந்த ஆச்சிரம மாணவர்களுக் கும் வயோதிபர்களுக்கும் உணவு வழங்கு வது ஒரு இனிய அநுபவம் ஆகும். குறிட் பிட்ட ஒரு நாளுக்கு ஒரிரு நாட்களுக்கு முன் னரே பொருட்களை வாங்கிச் சேர்ப்பது சோமாதான். அரிசி, பருப்பு, மரக்கறிவகை கள், தேநீர் தயாரிப்பதற்கான பொருட்கள், சிற்றுண்டி வகைகள் மட்டுமன்றி, சமைய லுக்குத் தேவையான உப்பு புளி விறகு எது வும் தப்பாது சேர்த்து விடுவார். காலையில் அவரது காரில் முதல் கோஷ்டி போய்விடும். மற்றவர்கள் ஏனைய சிலரின் கார்களில் போவோம். எல்லோரும் கூடி நாங்களே சமைத்து நாங்களே அவர்களுக்கு வயிறார உணவு பரிமாறுவோம். இறுதியில் அவர்க
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 48

ளில் சிலர் பரிமாற நாங்கள் உண்போம். எத்துணை இன்பமான நாட்கள். மற்றவர் திருப்தியில் மகிழ்வுறக் காட்டி வைத்தார்.
ஆச்சிரம மாணவர்கள் திருமண வயதடையும் போது அப் பெண்களுக்கு தாலி கூறை போன்றவற்றை நண்பர்கள் உதவியுடன் வழங்குவதற்கு திட்ட மிட்டு நிதி சேகரித்து அளிப்பார். அவரது பங்களி ப்பு எப்பொழுதுமே கணிசமான அளவு இருக்கும். நாட்டு நிலமைககளால் பருத்தித் துறை அரிமா கழகம் செயலிழந்த போதும் எல்லாப் பணிகளுமே தொடர்ந்தன. சில நண்பர்கள் ஆதரவுடன் இவற்றைச் சோமா கொண்டு நடத்தினார்.
பருத்தித்துறை சாரதா ஆச்சிரம சுவாமி சித்ரூபானந்தாவை எனக்கு அறிமுகப்ப டுத்தி வைத்து அதனூடாக இலவச மருத் துவ முகாம்களை நடாத்தியதும் கூட அவ ரது முயற்சியால்தான். இலக்கியம், சமூகம், ஆன்மீகம் எனப் பல தளங்களில் நான் கால் ஊன்றிய போது எனது வாழ்வின் அடித் தளமே குடும்ப வைத்தியன் என்ற என் தொழில்தான் என்பதை நினைவூட்டி அதில் தான் முதற் கவனம் இருக்க வேண் டும் எனப் போதித்தவர். இன்று வரை அக் கூற்றை வேத வாக்காக ஏற்றுக் நடக்க முய ன்றுகொண்டிருக்கிறேன்.
இலக்கியவாதிகளிடமும் அவருக்கு மிகுந்த பாசம் உண்டு. மல்லிகை ஜீவா அவரது அன்பிற்கு பாத்திரமானவர். ஜீவா வை அழைத்து ஞானசம்பந்தர் கலை மன்ற த்தில் விழா எடுத்ததற்கு அவரது ஆர்வமும் ஒரு முக்கிய காரணமாகும். மல்லிகையின் வளர்ச்சிக்கு அவர் பல வழிகளில் உதவி செய்துள்ளார். மல்லிகைப் பந்தலின் கொடி க்கால்களில் ஒருவராகக் கணித்த ஜீவா
அவரைப் பற்றி மல்லிகையில் பதிவு செய் தது நினைவிருக்கலாம்.
ஆன்மீக வாழ்வைப் பொறுத்த வரையில் சடங்கு சம்பிரதாய பூசை புனஸ் காரங்களில் ஈடுபாடற்றவராக இருந்த போதும் ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு கொண் டவர் அவர், எனது வாழ்விலும் கூட பக வான் சத்திய சாயி பாபாவின் ஒளி வெள் ளத்தில் திளைத்து நல்வாழ்வு வாழ வழி காட்டியதில் அவரே முதல் காரணியாவார்.
தாய் மண்ணை நேசித்தவர் அவர். வெறும் வாய்ப் பேச்சு வீரர் அல்ல. அதன் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபாடு காட்டி யவர் அவர். கடல் வளத்தைப் பெருக்கி பொருளாதார அபிவிருத்தி காண்பது அவ ரது கனவுகளில் ஒன்று. இது தொடர்பாக அவர் செய்த ஆய்வுகளும் சிபார்சுகளும் நூலாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான ஒரு நிறுவனத்தையும் ஆரம்பித்த போதும் நாட்டு நிலைமைகளால் தொடர முடியவில்லை என்பது வருந்தத் தக்கது. தாய் மண் மீதான அவரது நேசம் வாய்ச் சொல்லால் பேச முடியாதது. சூழ் நிலைகளின் தாக்கத்தால் முழுக் குடும் பமுமே புலம் பெயர்ந்து சென்ற போதும் மண்ணை விட்டுவெளியேறாதவர் சோமா, அவரது ஆசைப்டி பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சையும் தனது மண்ணில், தனது வீட்டிலேயே விட்ட சோமா அங்கேயே தகனமாகி யாழ் மண் பூராவும் காற்றோடு கலந்து சங்கமமாகி விட்டார்.
அவர் வாழ்ந்து காட்டியதை நாம் கடைப்பிடிப்பதே நாம் அவருக்குச் செய்யக் கூடிய கைமாறாகும். அவர் ஆன்மா சாந்தி யடைய பரம் பொருளை வேண்டுகிறேன்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 49

Page 27
பேனாவால் பேசுகிறேன் - 06
- நாச்சீயாதீவு பர்வீன் டோவுறா, கட்டார்
அன்று வெள்ளிக்கிழமை, எனது ஒய்வு நாள், எனது ஒய்வு நாட்களில் அவ்வப்போது எனது நண்பர்களின் றுாம்களுக்கு நான் செல்வது வழக்கம். அதிலும் ஜனிஸ்கான், ரொஷான், நஸ்வர், அமீன், ஹாறுான் ஆகியோரில் யாராவது ஒருவரின் றுாமுக்கு நான் செல்வதுண்டு. ஜனிஸ்கானின் றுாமுக்கு என்றால் ஜனிஸ்கான் நேரம் கிடைக்கும் போது வந்து தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போவான். ஜனிஸ்கான் எனது நண்பன் என்பதோடு உறவுக்காரனும் கூட. அடுத்தவர்களின் றுாமிற்குச் செல்ல வேண்டுமென்றால், கர்வா (Karawa Taxi) அல்லது (KarawabuS) இல்தான் செல்ல வேண்டும். இப்போது கட்டாரில் எமது நாட்டைப் போல பஸ் சேவை போட்டுள்ளார்கள். எனவே, விரும்பிய இடங்களுக்கு பஸ்ஸில் போய் வரக் கூடிய சாத்தியம் இன்றைய கட்டாரில் உள்ளது. அன்றைய எனது பயணம் அமீனுடைய றுாமை நோக்கியதாகும்.
அமீனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டும். அமீன் எனது நாநா (அண்ணன்) பர்ஹானின் சிறுவயது நண்பராவார். இயற்கையிலே நகைச்சுவை உணர்வு கொண்ட அவர் எனது நானாவுடன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். எங்களது தோட்டத்துப் பின்பக்கம் நாலைந்து மாமரங்கள் காணப்பட்டன. மாம்பழக் காலத்தில், அவை காய்த்துக் குலுங்கும். பூப்பிடித்து, பிஞ்சாகி (வடு), காய் பெரிதாகத் தொங்கும் போதே, மாமரம் கல் அடிவாங்கத் தொடங்கிவிடும். அதிலும் ஒரு சீனி மாமரம் இருந்தது. அந்த மரத்தின் மாங்காய் பழுக்கத் தேவையில்லை. பச்சைக் காயாக இருக்கும் போதே தனி இனிப்புத்தான். எனவே, பெரும்பாலும் சிறுவர்களாகிய எங்களது ஒட்டு மொத்த அபிமானமும் அந்த சீனி மாமரத்திலேயே இருந்தது. இந்த மாங்காய்ச் சீசனில்தான், எனது நானாவின் நண்பர்களான அமீக், றிஸ்வான் ஆகியோர்கள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.
அப்போதுகளில் எனது அபிமான வாசிப்புத் தீனியாக அம்புலிமாமா விளங்கியது. அம்புலிமாமா கிடைத்து விட்டால், அதை முற்றாக முடிக்கும் வரைக்கும் நான் கீழே வைப்பதில்லை. தவிரவும் "ராணி காமிக்ஸ்" சிறுவர் நாவல்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 50

கல்கண்டு ஆகியவற்றையும், எனது சாச்சா (சித்தப்பா) ரஷ்யூப் அவர்களின் உதவியோடு வாங்கிப் படிப்பதுண்டு. அமீன் எங்கள் வீட்டுக்கு வரும் போது, எனது அம்புலிமாமாப் புத்தகங்களை
வாசிப்பார். காலப் போக்கில் இருவரும்
புத்தகங்களைப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தோம். அமீன் வவுனியாவில் இருந்து வாங்கி வரும் புதிய அம்புலி மாமாப் புத்தகங்களைத் தந்துதவுவார். நானும் என்னிடம் உள்ள சிறுவர் கதைப் புத்தகங்களை கொடுத்து உதவுவேன். இவ்வாறு இருவரும் பரஸ்பரம் புத்தகங்களை மாற்றிக் கொள்வோம். காலப் போக்கில் இருவரும் நண்பராகிப் போனோம். நான் நாச்சீயாதீவு முஸ்லீம் மஹா வித்தியாலயத்தில் படிக்கின்ற போது அமீனும் அங்கே தான் படித்தார்.
அப்போதுகளில் நாம் இணைந்து பல நாடகங்கள் மேடை யேற்றியதை நான் முன்னர் சொல்லியி ருக்கிறேன்.
பின்னர், நான் சியம்பலா கஸ்கொடுவ,
மதீனா தேசிய பாடசா லைக்குச்.
சென்றவுடன், எம்மிருவரு க்குமான தொடர்பு அறுந்து போயிருந்தது.
நான் உயர்தரப் பரீட்சை எழுதி
விட்டு வீட்டிலிருந்த காலப்பகுதியில்
தான் பத்திரிகைகளுக்கு மீண்டும் எழுத ஆரம்பித்தேன். அப்போது எங் கள் ஊருக்குப் பத்திரிகை காலை 10 மணிக்குப்பிறகுதான் வந்து சேரும். எனவே, காலை 9.00 மணி தொடக்கம்,
ஜோன்சன் அண்ணனுடைய சலூனில் பத்திரிகைக்காக நான் காத்திருப்பது வழக்கம். அப்போதுகளில் அமீனும் அங்கு வந்து காத்திருப்பார். இருவரும் பல விடயங்களை உரையாடுவோம். பத்திரிகை வருமட்டுக்கும், உட்கார்ந் திருந்து அதைப் படித்து முடித்து விட்டுத்தான் இருவரும் செல்வோம். அவ்வப்போது எனது கவிதைகள் வெளிவரும் போது வீடு தேடிவந்து அதுபற்றிச் சொல்லி ஆதங்கப்படுபவர் களில் அமீன் முதன்மையானவர். இடைப்பட்ட காலத்தில் அமீனும் சில கவிதைகள் எழுதியுள்ளார். ஆனால் கவிதைகளை விடவும் சித்திரங்களில் தான் அமீனுக்கு நாட்டம் அதிகம். நிறையச் சித்திரங்கள் வரைந்துள்ளார். இப்போதுகளில் அமீன் நெருங்கிய நண்பர் களில் ஒருவர்.
எனது
நான் கட்டார் வந்து சுமார் நாலு மாதங்களில் அமீனும் கட்டார் வந்து சேர்ந்தார். அவ்வப்போதான எமது சந்தி ப்புக்களில் "இலக்கியம் தான்' கருப் பொருளாக இருக்கும். அமீன் இங்கே 65: G 60p6uir (House Driver) gas வேலை செய்வதினால் இந்த மண் னில் ஆங்காங்கே பரவிக் காணப்படு கின்ற அவலங்களை அவதானிக்கவும் மெய்யான தகவல்களைத் தன்னைப் (3urt 6öTp House Driver as 6f Lib பெற்றுக் கொள்ளவும் முடிகின்றது. எனவே, அமீனைச் சந்திப்பதன் மூலம் பல தகவல்களைப் பெற்றுக் கொள்ள
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 51

Page 28
முடியும். மட்டுமன்றி, கட்டாரில் எனக்கு இலக்கிய ரீதியான தொடர்பாடல் களுக்கும், கருத்துப் பரிமாறல்களு க்கும் அமீன் மட்டுமே இருக்கின்றார். அடுத்த நண்பர்கள் ஒய்வில்லாமல் ஒடுபவர்கள். சிலர் வாசித்து விட்டு அது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. சிலர் இலக்கிய ரீதியான ஆர்வம் இல்லா விட்டாலும், வாசிப்பில் ஆர்வமிருக்கும். ஆனால், அமீன் இலக்கிய ரீதியான ஆழமான ஆர்வமுள்ளவர். எனவே அமீனைச் சந்திப்பதன் மூலம், சில இல க்கிய ரீதியான கருத்துப் பரிமாறல் களை மேற்கொள்ள முடியும், என்ற தோரணையில் தான் அன்று அந்த வெள்ளிக்கிழமை அமீனைச் சென்று பார்ப்பதற்குத் தீர்மானித்தேன்.
கட்டார் பஸ் ஸ்டான்டில் இருந்து புறப்படும் 34ம் இலக்க பஸ் அமீனின் றுாமுக்கு அண்மையினால் செல்வ தாகும். எனவே 34ம் இலக்கு பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். இங்கே பஸ் கண் டிக்கடர் என்று யாரும் கிடையாது. நாம் பஸ்ஸில் ஏறும் போதே இரண்டு கட்டார் றியாழ் (2 QR) கொடுத்து றைவரிடம் பயணச்சீட்டைப் பெற்றுக்
கொள்ள வேண்டும். அப்படியே நான் செய்து ஒரு ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொண்டேன். பொதுவாகவே பஸ்பயணங்களில் நான் ஜன்னல் ஒர இருக்கையைத் தான் விரும்புவது வழக்கம். நம் நாட்டில் என்றால், வானு யர்ந்த மரங்களையும், பச்சைப் பசே
லென்ற அழகான வயல் வெளி களையும், வளைந்தோடும் நீரோடை களையும் வழி நெடுகிலும் அநுபவி த்துக் கொண்டே போகலாம். இங்கே அதற்குரிய சந்தர்ப்பமேயில்லை. அவ்வ ப்போது சில பச்சை மரங்களைக் காண லாம். தவிரவும் வழிநெடுகிலும் ஈச்ச மரங்களின் அணிவகுப்பைக் காண லாம். இவைகளில் பசுமை தெரிவ தில்லை. இந்த அழகுகள் செயற்கை த்தனமாய் இருக்கும். நம் நாட்டைப் போல அநுபவித்துப் பருகும் அழகுகள் இந்தப் பாலைவனத்துப் பூமியிலே இல்லை எனலாம். இருந்தும், பழக்க தோஷம் ஜன்னல் ஓர இருக்கையிலே நான் தொடர்ந்தும் இருக்க விரும்பு வதற்கு உந்துதல் தந்தது.
கட்டாரின் தலைநகர் டோஹா அடர்த்தியான சன நெருக்கத்தைக் கொண்டதாகும். பின்நேரப் பொழுது களில் வாகனங்களில் டோஹாவுக்குள் நுழைந்துவிட்டால், வெளியேறுவது பெரும்பாடாகிப் போய்விடும். எறும்புகள் ஊருவதைப் போல மெல்ல, மெல்ல நகர்ந்து தான் டோஹாவை விட்டு வெளியேற வேண்டும். அப்படித்தான் அந்த 37ம் இலக்க பஸ்ஸoம் மெதுவாக நகர்ந்து டோஹாவை விட்டு வெளியேறி LDigit (Meaither) (31BIT isé Salwa road இல் புறப்பட்டது. இடையில் (AZeeziya) அஸிசியா எனும் இடத்தில் உள்ள பஸ் நிறுத்துமிடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. 15 நிமிடங்க
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 52

ளுக்கு ஒரு தடவை அந்தப் பாதையில் பஸ் சென்ற போதும் அன்று அவ்வளவு கூட்டம் பஸ்சிற்காக காத்திருந்தது. அதிசயமாக இருந்தது. பின்னர்தான் புரிந்தது இன்று முன்னர் வரவேண்டிய இரண்டு மூன்று பஸ்கள் வரவில்லை என்று. எனது பக்கத்திலிருந்த வெற்றுச் சீற்றிலும் ஒரு பயணி வந்து உட்கார்ந் தார். ஒருவாறு எல்லோரும் பஸ்சில் ஏறியாகிவிட்டது. ஆனால் ஒருவர்
மட்டுமே ஒட்டுனரோடு ஏதோ கெஞ்சிக்
கொண்டிருப்பதும், ஒட்டுனர் அவரை இறங்குமாறு கூறிக்கொண்டிருப்பதும், பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.
ஒட்டுனரின் இருக்கையில் இர ண்டு இருக்கை பின்னால் நான் இருந் ததனால் அவர்களின் உரையாடல் பற்றி என்னால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. டிக்கட்டுக்கான விலை 2 QR ஆகும். ஆனால் அந்த நபர் 100 QR பெறுமதியான தாளொ ன்றை நீட்டிக் கொண்டிருந்தான். ஆனால் அந்தப் பிலிப்பைன்ஸ் நாட் டைச் சேர்ந்த பஸ் ஒட்டுனர், அதை மாற்றத் தன்னிடம் பணமில்லை என்றும் அடுத்த பஸ்ஸில் வரும்படியும் கூறிக் கொண்டிருந்தான். ஆனால் அந்தப் பயணி எப்படியாவது இந்த பஸ்ஸிலே போய்விட வேண்டும் என்ற பிரயத்தனத்தில் இருந்தான். அவன் ஏதோ அரபு மொழியில் பேசினான். அவ னுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரி யாது என்பது அவனது பேச்சிலிருந்து
புரிந்தது. பஸ் ஒட்டுனருக்கு ஆங்கில த்தைத் தவிர அரபு பாஷை தெரியாது என்பது புரிந்தது. நீண்ட விவாதம். ஏலவே பஸ்ஸினுள் உள்ள பயணிகள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பஸ் ஒட்டுனர் பிடிவாதமாக நின்றான். எப்படியாவது அந்தப் பயணியை இறக்கிவிட்டுப் போய்விடுவதிலையே குறியாக இருந் தான். பயணியும் எப்படியாவது தன் னையும் ஏற்றிக் கொண்டு போகும்படி கெஞ்சிக் கொண்டிருந்தான். அந்த நிமிஷத்தில் அவனிடம் பெறுமதியான 100 QR இருந்தும் அது பெறுமதி அற்றதாகவே இருந்தது. அவனது கெஞ்சுதலைப் பார்க்கும் போது அவசரமாய் எங்கோ செல்ல வேண்டும் போலிருந்தது. அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. வெறும் இரண்டு கட்டார் (றியால்) க்காக அவன் பரிதாபமாய்க் கெஞ்சுவதிலிருந்து அவ னது அவசரம் புரிந்தது.
நான் முடிவெடுத்து விட்டேன் அவனுக்கு உதவி செய்வதற்கு. என் உள்மனம் அவனுக்கு உதவி செய்ய உத்தரவு போட்டது. நான் தீர்மானமாய் முடிவெடுத்து எனது பர்சிலிருந்து இரண்டு QR ஐ எடுக்க முயற்சித்த போது, என்னருகில் ஏலவே அமர்ந் திருந்த அந்த நபர் சடுதியாக எழும்பிச் சென்று அந்தப் பயணிக்கான பயணச் சீட்டை பெற்று அவரிடம் கொடுத்து விட்டு மீண்டும் என்னருகிலேயே வந்த
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 53

Page 29
மர்ந்தார். டிக்கட் கிடைத்த சந்தோச த்தில் அந்தப் பயணியும் எங்களது பக்கத்திலேயே வந்து நின்று கொண் டான். தனக்கு டிக்கட் பெற்றுத் தந்த அந்த முன்பின் தெரியாத நபரை நன்றி யுடன் பார்த்தான். நன்றி சொன்னான். அவன் ஒரு சிரியா நாட்டுக் கார அரபி. இங்கே ஒரு கம்பனியிலேயே வேலை செய்கின்றான். இன்று அவனது நண்ப ரொருவரை அவசரமாகப் பார்க்கச் செல்கிறான். ஏலவே, சுமார் ஒன்றரை மணி நேரம் பஸ்ஸாக்காகக் காத்தி ருந்து வெறுத்துப் போனதாய்ச் சொன் னான். இன்று வெள்ளிக் கிழமையா தலால் டெக்சி (Texi) பிடிப்பதும் மிகச் சிரமம், டெக்சிக்காய்க் காத்திருந்து ஏலவே ஒரு மணிநேரத்தை கடத்தி விட்டதாகவும், இந்தப் பஸ்ஸில் போகா விட்டால் நண்பரைப் பார்க்க முடியாது என்றும், இன்று தனது அந்த நண்பர் நாட்டுக்குச் செல்வதால் தனது மனைவி பிள்ளைகளுக்குக் கொஞ்சம் சாமான் வாங்கிக் கொடுக்கவே தான் செல்வதாகவும் அரபியிலும் கொச்சை ஆங்கிலத்திலும் அவன் சொல்லி முடித்தான். அவனது உண்மையான ஆதங்கமும், அதனைப் புரிந்து கொ ண்டு உரிய நேரத்தில் உதவி செய்த எனது பக்கத்து இருக்கைக் காரரும் என் மனதில் உயர்ந்து நின்றனர்.
இப்போதுதான் அவதானிக்கி றேன், எனது பக்கத்திலிருப்பவரை, அவரைப் பார்த்தால் நமது நாட்டுச்
சாயலும் தெரிந்தது. இந்தியா, பங்க ளாதேஷ் சாயலும் தெரிந்தது. சரளமாய் அரபு பேசினார். இடைக்கிடை ஹிந்தி யிலும் தனது சஹாக்களுடன் பேசி னார். அவரை நான் தொடர்ந்து உற்று நோக்குவதை அவர் அவதானித்து விட்டார். என்னை அதிசயமாகப் பார்த் தார். நான் புன்னகைத்தேன். பதிலுக்கு அவரும் புன்னகைத்தார். மின் அய்ன அன்ந்த? எனக்குத் தெரிந்த அரபியில் நீங்கள் எந்த நாடு? என்று கேட்டேன். புன்னகைத்தார். நீங்கள் சிறீலங்காவா? திடுமெனத் தமிழில் கேட்டார். ஆம் என்றேன், பின்னர் அவருடனான உரையாடல் எனக்கு அவரைப் பற்றிய பூரண விபரத்தைத் தந்தது. பெயர் காசீம், சுமார் ஆறுவருடங்களாக இங்கே கட்டாரில் கட்டிட வேலை செய்யும் ஒரு கொம்பனியில் றைவராக இருக்கின்றார். சம்பளம் பரவாயில்லை. ஆனால் தான் ஆரம்பத்தில் கடும் கஷ்டங்களை இந்த மண்ணில் அநுப வித்தாகக் கூறினார். அவரது சொந்த இடம் கண்டி. தன்னோடு தனது அறை யில் இரண்டு சிறீலங்காவைச் சேர்ந்த நண்பர்கள் இருப்பதாகக் கூறினார். ஒருவர் கொழும்பைச் சேர்ந்த சிங்கள வர். அடுத்தவர் மட்டக்கிளப்புத் தமிழர். ஆனால் மூவரும் இலங்கையர்கள், சுமார் இரண்டரை வருடமாகத் தாங்கள் ஒற்றுமையாக, புரிந்துணர் வோடு இருப் பதாகக் கூறினார். காசிம் அவர்களின் கருத்துக்கள், மிகுந்த ஆழமாக இருந்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 54

தது. எமது நாடு பற்றிய அரசியல் நகர்வு களை வெகுவாக விமர்சித்தார்.
பச்சோந்தி அரசியல்வாதிகள் தான் இனங்களுக்கிடையிலான கசப்பு ணர்வுகளைத் தூண்டிவிட்டு, துவேஷ நெருப்பை எரியவிட்டு அதில் குளிர் காய்கின்றார்கள் என்றார். இங்கே வேறொரு நாட்டில் பல்லாயிரம் மைல் கள் கடந்து நாம் எந்த துவேசமும் இல்லாமல் சிங்களம், முஸ்லீம், தமிழர் களென ஒற்றுமையாக வாழும் போது ஏன் நமது நாட்டில் அப்படி வாழ முடி யாது? என்ற அவரது கேள்வியிலே நியாயமிருந்தது. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அவ ரைப் போல இன்னும் எத்தனையோ படிக்காத மேதைகள் எதார்த்தம் புரிந்து
எதனையும் செய்யமுடியாமல் விரவிக் கிடக்கின்றார்கள்.
காசிம் அவர்களின் பேச்சின் சுவாரசியத்தில் நான் இறங்க வேண்டிய இடம் கடந்துவிட்டதை பின்னர்தான் உணர்ந்து கொண் டேன். காசீம் அவர்களோடு இன்னும் பேச வேண்டும் போலவே இருந்தது. எனவே அவரது செல்போன் இலக்கத் தைப் பெற்றுக் கொண்டு விடைபெற மனமின்றி விடை பெற்றேன். மனிதம் அழிந்து காலாவதி யாகிக் கொண்டி ருக்கும் இன்றைய பொழுதுகளில் மனிதம் சாகவில்லை என்பதை இவ்வாறான மனிதர்பன் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்னும் பேசுவேன்)
SY\
(f
வாழ்த்தி மகிழ்கின்றோம்.
மலையகத்தின் இளங் கல்விமானும் மக்கள் எழுத்தாளருமான திரு லெனின் மதிவானம் அவர்களுக்கும் செல்வி சசிகலா ஆசிரியை அவர்களுக்கும் சமீபத்தில் ஹற்றன் மாநகரில் வெகு சிறப்பாகத் திருமணம் நடந்தேறியது.
புது மணத் தம்பதியை மனமார
வாழ்த்தி மகிழ்கின்றது மல்லிகை.
(மல்லிகை ஆசிரியரும் நேரில் சென்றிருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார்)
- ஆசிரியர்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 55

Page 30
శిశిగిJషిజిగి
தங்களுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பாகத் தொடர்புகொண்டேன். ாங்கள் அன்புடன் அனுப்பி வைத்த டொமினிக் ஜீவா சிறுகதைகள் மற்றும் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' ஆகிய நூல்களைப் பெற்றும் தங்களோடு தொடர்பு கொள்ள முடியாத ஒரு வெறுமைச் சூழல் ஏற்பட்டுவிட்டது. வாழ்வின் அலைக்கழிப்புகளின் ஊடான இலக்கியப் போராட்டங்களின் மத்தியில் ஜீவிக்கின்றபடியினால் சில பொழுதுகளில் இவ்விதம் நிகழ்ந்துவிடுகின்றது. தங்களுக்கு நீண்ட நெடிய கவிதை மடல் எழுதியும், 'சுனாமி சமயத்தினில் 'என்ன ஆனிர்களோ.." என்று பதறிப் போய் கண்ணிர்க்கடிதம் அனுப்பியும் அன்பு செய்தவன் இத்தனை பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் புதிய முகவரியிலிருந்து இதனை எழுதுகிறேன்.
எனக்கெழுதிய கடிதத்தில் தாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மிகுந்த சிரமங்களின் மத்தியில் என் வீட்டுப் பழைய புத்தகக் குப்பைகளில் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த தங்கள் நேர்காணல் வெளிவந்த ‘தலித் முரசு' இதழைத் தேடிக் கண்டு பிடித்து இத்துடன் அனுப்புகிறேன். 'எனது நேர்காணல் வந்திருந்த ‘தலித் முரசு’ சஞ்சிகையை நான் படிக்கவில்லை. இருந்தால் படியெடுத்து அந்தப் பக்கங்களை எனக்கு அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். என்று தாங்கள் கடிதத்தில்" குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு படைப்பாளியின் நேரிய மனவுணர்வு இதில் இழையோடுவதை நான் உணர்ந்திருந்த வேளையிலும், அதே படைப்பாளியின் இலக்கியக் குரலைப் பதிவு செய்யும் நேர்காணல்கள் அடங்கிய இதழைக்கூட பத்திரிகைகள் தொடர்புடைய படைப்பாளிகளுக்கு அனுப்புவதில்லை என்பதை அறிய நேர்கிற கணம், நானும் ஒரு படைப்பாளி என்கிற வகையில் எனக்குள் பெரிய அதிர்வுகளை ஏற்படு த்துகிறது. இத்தகைய பின்புலமான இலக்கியச் சூழல்களில் இருந்து கொண்டுதான் நம்மைப் போன்றவர்கள் எழுதிக் கொண்டும், இயங்கிக் கொண்டும் வாழ்ந்து தொலைக்க வேண்டிய இலக்கிக் கட்டாயம் இங்கே இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுச்சேரியில் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிற ஒரு தமிழ் எழுத்தாளனாய், ஒரு தலித் கவிஞனாய்ப் பரவலாய் அறியப்பட்டிருக்கிற என் னைக் குறித்து க.நா.சு முதல் கலைஞர் வரை எனும் தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவர விருக்கிறது. அதில் நவீன இலக்கிய விமர்சகரான அமரர் க. நா. சு. அண்மையில் காலமான வல்லிக்கண்ணன், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் மற்றும் தி.க.சி, திருமாவள
மல்லிகை செப்ரெம்பர் 2007 露 56

வன், பிரபஞ்சன், வலம்புரி ஜான், லேனா தமிழ்வாணன், பழ. நெடுமாறன் போன்றவர் களும், அறிஞர் பெருமக்களும், தமிழின் முன்னணி பத்திரிகைகளின் விமர்சன
திறனாய்வுகளும், கடிதங்களுமாய் என் எழுத்தாளுமை பற்றி எழுதியிருப்பவை அனைத்தும் ஒரே தொகுப்பாக வெளி வரவிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் நான் பெரிதும் மதிக்கும் என் அன்புக் குரிய தங்களின் விமர்சனமும்
ங்களும், வாசகர்
இடம் பெற வேண்டும் என்று விரும்பு கிறேன்.
அதற்கேற்ப தற்சமயம் கைவசம் இருக்கும் 'தனி மரம் தோப்பாகும்", "யாதெனில்" ஆகிய என் இரண்டு கவி
தைப் புத்தகங்களும், எழுத்தாளர் திரு
பிரபஞ்சன் அவர்களோடு நான் இணைந்து தொகுத்த "20- ஆம் நூற்றாண்டுப் புதுவைக் கதைகள்’ நூலில் இடம் பெற்ற
என் சிறுகதையும், என் வாழ்க்கைக்
(essfullb Indian Express'- 6i Geusseubs என்னைப் பற்றிய கட்டுரையும், குங்குமம்' வார இதழில் வெளியான என் நேர்காண லுடன், கடந்த வாரம் தின மலரில் பிரசுரமான நேர் காணலும் இணை த்துள்ளேன். இதில் 20- ஆம் நூற்றாண்டுப் புதுவைக் கதைகளில் இடம்பெற்ற 'தம்பலா’ எனும் என் சிறுகதை தமிழின் மிகச் சிறந்த சிறுகதை என்று இலக்கிய உலகத்தினரால் பெரிதும் பாராட்டப் பட்டதுடன், இந்திய அரசின் 'சாகித்திய அகாதெமி நிறுவன வெளியீடான Indian Literature'- எனும் இலக்கிய இதழில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு மார்ச், ஏப்ரல் 2007 இதழில் வெளிவந்தி ருக்கிறது.
தலித் இலக்கியச் சிறுகதையான இதனைத் தமிழுடன் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய 3 மொழிகளில் ஒரே புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். தமிழில் ஒரே ஒரு சிறுகதை மட்டும் இப்படி இரண்டு மொழிகளில் மொழி பெயர்த்து ஒரு புத்தமாக வருவது இதுவே முதல் முறையாக இருக்குமென்று நினைக் கிறேன். இச் சிறுகதையின் 'சாகித்திய அகாதெமி' ஆங்கில மொழிபெயர்ப்பும் தங்கள் கவனத்திற்கு வருகிறது.
தாங்கள் சிரமம் பாராது என் எழுத்துகள் குறித்த தங்கள் கருத்து களை - விமர்சனங்களை- அபிப்பிரா யங்களை எழுதி அனுப்பினால் என் புத்தகத்தில் அதனைப் பதிவு செய்வது இத்தனை ஆண்டுக்கால என் தமிழ் உழைப்புக்கு மிகப் பெரிய இலக்கிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்புகிறேன். நான் பெரிதும் மதிக்கும் என் அன்புக்குரிய மூத்த எழுத்தாள சகோதரர் நீங்கள். தாங்கள் கடல் கடந்து வாழ்ந்தாலும், தங்களைக் போன்றே ஒடுக்கப்பட்ட Լճles 6ւյtb எளியவனாக வாழ்க்கையிலும், இலக் கியத்திலும் இடைவிடாது போராடிக் கொண்டிருக்கிற என் வேண்டு கோளினை ஏற்று இதனைக் கட்டாயம் செய்வீர்கள் என்கிற தோழமையின் அடிப்படையில் காத்திருக்கிறேன்.
மேலும் ஒன்று: 'மல்லிகை’ இதழ் களைத் தொடர்ந்து அனுப்புங்கள் என்று முன்பு ஆண்டுக் கட்டணம் அல்லது வாழ் நாள் கட்ட ணத்தை மறவாமல் குறிப்பிட்டு எழுது
கேட்டிருந்தேன்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 奉 57

Page 31
ங்கள். இந்த முறை கட்டாயம் பணம்
அனுப்பி 'மல்லிகை'யைப் பெற்றுக் கொள்கிறேன்.
இத்துடன் "மல்லிகை" இதழுக்
கென்று "காகிதப் படகு' எனும் தலைப்பில் 10 ஹைக்கூ கவிதைகள் அனுப்புகிறேன். இவை விரைவில் வெளிவர விருக்கின்ற போன்சாய' எனும் என் ஹைக்கூ தொகுப்பில் இடம்பெற்றவை. பிரசுரித்து "மல்லிகை"யின் என் முதல் படைப்பினை ஆதரியுங்கள், தொடர்ந்து பிறவகை படைப்புகளையும் அனுப்பி வைக்கிறேன்.
நமது 'மல்லிகைப் பந்தல்' நிறுவனம் வெளியிட்டு பாலரஞ்சினி எழுதிய மனசின் பிடிக்குள் ஹைக்கூ புத்தகத் தினை படிக்க மிகவும் வாஞ்சிக்கிறேன். கிடைக்க வழி செய்யுங்கள். அதற்குரிய தொகை இந்திய ரூபாய் எவ்வளவு என்றும் குறிப்பிடுங்கள். அனுப்பி வைக்கிறேன். தங்களுக்கு என் அன்பும், வணக்கமும் என்றென் றும் உரித்தாகட்டும். மீண்டும் சந்திப் போம்.
பாரதி வசந்தன். பாண்டிச்சேரி.
காகிகுப் படகு
தீபங்களா பறக்கின்றன இரவுகளின் அதிசயம் காற்றுத்தான் கண்சிமிட்டுகிறதோ?
தமிழன் பூசிகிறான் கொம்புகளில் காட்சி வண்ணம்
முதலமைச்சர் கனவுகளில் மாடுகள்
பெருக்கெடுத்து ஒடும் ഥഞ്ഞഴ காகிதப் படகைப் பார்த்தபடி
தனிமையில் அந்தக் கிழவன்
புல்லாங்குழல்காரன் வந்துவிடுவானோ எட்டிப் பார்க்கும் பாம்புகளோடு அசையாதிருக்கும் மூங்கில்புதர்
ஹரிக்கேன் விளக்கை
ஏற்றிய அந்த இரவின் நாள்கள் ஒ. வறுமைதான் எத்தனை இன்பம்
கடந்து போகும் வாத்துகள் அன்னத்தைப் பழிக்கிறதென்று சொல்கிறாய்
அழகிருக்கும் இடத்தில் திமிர்
சந்தேகமே இல்லை பழனி முருகன் தமிழர் கடவுள்தான் கோவணத்துடன் நிற்கிறானே!
கீசக்கி எறிந்த பின்பும் விட்டுச் செல்கிறது மலர்
மணக்கும் கைகளில் வாழ்வு
சோர்ந்து போகாதே காயங்களே மேலே உயர்த்தும் தென்னை மரங்களில் தழும்புகள்
கடிதம் எழுதியாயிற்று எந்த முகவரிக்கு அனுப்புவது கல்லறை மனிதருக்குத் தெரியுமா?
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 58

"மல்லிகை" இதழ்களும், தங்க ளது அழைப்பிதழ்களும் செவ்வனே கிடைக்கின்றன. நன்றி. மல்லிகை எப்போது என் கரம் கிட்டும் என்ற மனச் சஞ்சலமும், ஊடாட்டமும் மாதத்தின் முதல் நாளே எழுவது என்னால் தவிர் க்க இயலாதிருக்கிறது.
மல்லிகையின் தனித்துவமும், எளிமையும், உள்ளடக்கங்களும் என் னை நீண்ட நாட்களாகவே கவர்ந்திரு க்கிறது. இதழின் வடிவத்தை நவீனத் துவ அடையாளங்களுடன் பிரசவிப்பது தொடர்பாக எழுகின்ற மாற்றுக்கு கருத்துக்களுக்கு நான் உடன் பட வில்லை. இவ்விமர்சனத்திற்குத் தாங் கள் ஆகஸ்ட் இதழில் குறிப்பிட்ட பதில் களே என்னையும் கவனிக்கத் தூண் டின. அக் கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன்.
கடந்த சில இதழ்களைக் கூர்ந்து அவதானிக்கும் போது "தூண்டில் பகுதியில் மாட்சிமை ஒளிர்கிறது. மகிழ்ச்சி. பாராட்டுகள். புதிய தகவல் களை, இலக்கியக் கருத்தாடல்களை அப்பகுதியில் பதிவு செய்வதே சாலச் சிறந்த அணுகு முறையாகும் என்பது எனது கருத்தும், அவாவும்.
கடந்த இதழில் அட்டைப்பட அதிதி பற்றிய விளக்கங்கள் நிறை வைத் தந்தன. அவ்வாறே திக்வல்லை கமால், பரன், ஸப்வான் ஆகியோர்களின் கதைகளும், இதர கட்டுரைகளும் புதிய
அநுபவப் பகிர்வாக முகிழ்ந்தன. நீண்ட இடை வெளிக்குப் பின் சாரணாகையூ மின் படைப்பை இதழில் படித்தேன். மேமன் கவியின் தேடல்கள் வாசிக்கத் தெவிட்டாமல் இருக்கின்றன. மேலும் படிகள்- இதழ்- 16 பற்றிய மா. பால சிங்கத்தின் கருத்துக்களையும் விமர் சனங்களையும் மனங் கொள்கிறேன். இருந்தும் இவ்வாறான விமர்சனம் மல்லிகையில் வரும் என எதிர் பார்க் கவில்லை. உங்களின் (ஆசிரியர்) கடித ங்களும் அருமையாக இருந்தன. "
எல். வஸிம் அக்ரம் அநுராதபுரம்.
பயனுள்ள ஆலோசனை
கே. ஆர். ராமேஸ்வரன் மல் லிகை ஆகஸ்ட் இதழில் தெரிவித் துள்ள ஆலோசனை மிகவும் வரவேற் கத்தக்கது. மல்லிகை வெளியீடுகளை விரும்பு வாங்குவோர் எந்த நூலையும் (விலையையும் பொருட்படுத்தாது) வாங்கவே செய்வர்.
வேண்டுமானால் இப்புத்தகம் வேண்டுவோர் முன்கூட்டியே பதிவு செய்யவும் என 'மல்லிகை"யில் ஒரு குறிப்பு வெளியிட்டால், எத்தனை பிரதி கள் அச்சிடலாம் என்பதை முன்கூட் டியே அனுமானித்துக் கொள்ளலாம். ஆவன செய்க.
அன்புடன், அன்புமணி.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 59

Page 32
ததிங்கினதோம்
- கே. எஸ். சுதாகர்
சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம், உடம்பில் ஒன்றிரண்டு பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூன்றாவது மகனுடன் அந்திமக் காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம்- சுப்புலசுடிமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள், ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில், ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவநேசச் செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில், சிவநேசச்செல்வன் நாட்டிற்காகப் போராடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர்மரணம் அவனை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறதுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டு வந்திருந்த பண்டங்களை 'காப்பெற்றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.
"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா? கீரை, முருக்கங்காய் கிடைக்குமா? நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பார்க்கிறியா? இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா? சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே விட்டுத் துலை
அதை."
நியூசிலாந்தில் சிவநாயகத்தின் பழைய கடன்காரன் அந்தோனி இருக்கிறான். அவனிடம் வட்டியுடன் தனது முதலையும் சேர்த்து வாங்கி மகன் மருமகளுடன் இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கும் மேலாகத் தனது அந்திமகாலம் நல்லபடியாக நீடுழிகாலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் கவலையும் கூட, வந்தகளை ஆறமுன் அந்தக் குருவி நாராசமாக எழுப்பிய ஒலி, சிவநாயகத்தை இறப்பு என்ற பிசாசின் முன் தூக்கி நிறுத்தி திடுக்கிட வைத்தது. நாசம்- சர்வநாசம், பயத்தின் விதை நெஞ்சுக் கூட்டுக்குள் விழ, நெஞ்சு அடைப்பது போலத் திணறியது.
'தம்பி! தம்பி பன்னீர்ச்செல்வன். கிட்டடியிலை ஏதாவது சுடலை இருக்குதே? கடலைக்குருவி ஒண்டு கத்திக் கொண்டல்லே உங்காலையும் அங்காலையுமா பறக்குது" என்று அந்தரப்பட்டார்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 60

மருமகள் சுமதி வெளியே எட்டிப்
பார்த்துத் தலையிலே கையை வைத்தாள்.
மாலைக் கருக்கலில் நீண்ட வாலும் பெரிய கொண்டையுமாக ஒரு சுடலைக்குருவி பறந்து திரிந்தது.
‘மாமா, இஞ்சாலை 'ஹாவ் எ
கிலோமீற்றர் பக்கமாகப் போனா 'புறுவேவா
எண்டொரு சிமெற்றி இருக்கு. உங்கை
பாருங்கோ ஒரு தாய் இரண்டு பிள்ளையளை இணைச்சுக் கொண்டிருக்கிற மாதிரித் தெரியு தல்லே, அதுதான் மிசன்பேய் (Mis
sion Bay)"
“என்னது பேயோ? அட உதையேன் முந்திக் கடிதத்திலை எழுதேல்ல?
விஷயத்தோட விஷயமா சாடை மாடை யாய்ப் போட்டிருந்தியள் எண்டா இஞ்சை வந்தல்லே இருக்க மாட்டன். உம் கனடா விலை அவள் செல்வி வெளியிலை போக விட மாட்டாள். வீட்டக்குள்ளை சென்றல் கீற்றிங்கிலை அவியுங்கோ எண்டு விடுவாள். அதெண்டாலும் பரவாயில் லைப் போலதான் கிடக்கு." K
"அதுதான் பிள்ளை உங்கை வீடு 'சீப் எண்டு நீங்கள் சொல்லேக்கையே யோசிச்ச னான், உதிலை ஏதோ சூட்சுமம் இருக் கெண்டு. அங்கை யெண்டாலும் கொத்தி யால் சுடலை எவ்வளவு தூரத்திலை இரு க்கு.கடல் கடந்து இஞ்சை வந்தா வீட்டுக்குப் பக்கத்திலை அதுவும் கூப்பிடு தூரத்திலை ஒரு புறுபுறுக்கிற சுடலை” என்று சுப்புலசுஷ்மி சுருதி சேர்த்தாள்.
* சுடலைக் குருவி கத்தினா சாவு
நிச்சயம்" சிவநாயகம் பதறினார்.
"இஞ்சை பாருங்கோ! உங்கடை பேர், லிஸ்றிலை எனக்குப் பிறகாலை தான் கிடக்கெண்டு மயில் வாகனச் சாத்திரி
சொன்னதை மறந்து போனியளே? எனக்கும் முன்னாலையும் இஞ்சை நிறையப் பேர் இருக்கினம். ஏன், உவள் சுந்தரி இப்பவும் திடுமன் மாடு மாதிரியெல்லே இன்னமும் லேடீஸ் கிளப்புக்குப் போய் வாறாள். கிறுதண்ட வாயு பிடிச்ச மாதிரிய ல்லே நீங்கள் நிக்கிறியள். போங்கோவன், போய்ப் பேசாமல் படுங்கோவன்' என்று சமாதானம் சொன்னாள் சுப்புலசுடிமி.
'இஞ்சாரும் இதைக் கேட்டீரே! மயில்வாகனச் சாத்திரிக்கு இப்ப கனடா விலை ஒகோவெண்டு பிவழினஸ். 'ஒல்ட் பீப்பிள் ஒண்லி எண்டு போட்டும் போட்டு க்கொண்டும் கை ரேகை சாத்திரம் பாக்கி றான். அவையஞக்குத் தான் பாக்கிற சாத்திரம் பலிக்குதாம்."
நீண்ட நேரமாகச் சிவநாயத்திற்கு உறக்கம் வரவில்லை. இப்படியே அஞ்சி அஞ்சி இரவு முழுவதும் இருக்க வேண்டுமா? மனைவி பிள்ளைகளின் பேய்த் தூக்கத் தைக் காண அவரால் சகிக்க முடிய வில்லை. குசினிக்குள் பானை சட்டிகளை உருட்டினார். "ஹோல் லைற்றை அடிக்கடி கிளிக் செய்து வினையாடினார். குருவி கீச்சி ட்டுக் கீச்சிட்டுக் கத்தியது. பன்னீர்ச் செல்வ னைத் தட்டி எழுப்பினார்.
'தம்பி, உவன் அந்தோனி எங்கை இருக்கிறான் எண்டு விசாரிச் சனியேடா?
"அவர் அப்பா முந்தி ஹமில்லடனிலை இருந்தவர். இப்ப எங்கை இருக்கிராரோ தெரியேல்லை. எல்லாரிட்டையும் ரெலி போன் நம்பர் குடுத்திருக்கிறன். அனேக மாக கண்டுபிடிச்சிடலாம் அப்பா'
சிவநாயகத்திற்குப் பதிலில் திருப்தி இல்லை. 'சூ சூ' என்று குருவியைத்
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 61

Page 33
துரத்தினார். போதாக் குறைக்கு அடுத்த ஃபிளற்றினில் இருந்து பூனையொன்று
கூட்டணி அமைத்து மனித வடிவில் நாத
மெழுப்பியது. கையிற்கு கிடைத்த மாத்திரம் வீசி எறிந்தார்.
"ஐயோ மாமா, இஞ்சை பூனை “பெற்’ மாமா. நீங்கள் எறிஞ்சு பூனை செத்துப் போச்செண்டா பிறகு “கோட் கீட் எண்டு அலைய வேண்டி வரும்."
மருமகளின் முணுமுணுப்பையும் கவ னியாமல் ஃபிளற்றுக்குப் ஃபிளற் தாவி எறிந்தார் சிவநாயகம், தாயுமானவவர், அப்பர் சுவாமிகளின் பாடல்களை ஒரு மூலையில் முடங்கிக் கிடந்து பாடத் தொடங்கினார்.
பலித்தது.
பிரார்த்தனை சுடலைக்
குருவியை எட்டியது. அது இன்னமும்
பலத்துச் சத்தம் போட்டது. நடுங்கிய படியே
வெளியில் எட்டிப் பார்த்தார். பொடுக்கென்று
'காலிலே பல்லி விழ, அதைச் சுழட்டி தூர உதறி விட்டார். ஒரு தேவாரம் பாடியிருக்க மாட்டார். சுப்புலசுடிமி எழும்பி வந்தாள். நாலைந்து மிளகாய், கொஞ்சம் மிளகு எடுத்து எல்லாரையும் ஒரு சுத்துச் சுத்தி பின் தன்னையும் சுத்தி "சனியனே துலைஞ்சு போ' என்று குசினித் தொட்டிக்குள் எரித் தாள். நெடி குபுக்கென்று எழுந்து வீடு முழு க்கச் சனியன் பரவியது.
இந்தக் கலாட்டாவைக் குழப்பி, அம்புலன்ஸ் ஒன்று அலறியடித்துக்குக் கொண்டு எதிர்புற வீட்டைச் சேர்ந்தது. நேரத்தைப் பார்த்தார். இரவு மணி ஒன்று. ஒருவன் ஸ்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு
அடுத்த வீட்டுச் படிகள் மீது ஓடினான். முன்
வீட்டு வெளிச்சம் போட்டது. வயதுபோன "கிவி லேடி ஒருத்தியைத் தள்ளிக் கொண்டு
அம்புலன்ஸில் ஏற்ற, அது திரும்ப அலறிக் கொண்டு புறப்பட்டது. சிவநாயகத்திற்கு மெல்லத் தெம்பு வந்தது. கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். "கிவி லேடியோ? போகப் போறா போல கிடக்கு. நாளைக்கு ஒருக்கா பல்மோறல்' கோயிலுக்குப் போக வேணும். இருப்பத்தைஞ்சு டொலருக்கு ஒரு அரிச் சனை செய்ய வேணும்."
விடியப்புறம் மூன்று அல்லது மூன்றரை இருக்கலாம் சிவநாயகம் சுப்புலசுஷ்மியைத் தட்டி எழுப்பினார்.
ஒருக்கா முன் உயிரோடை
'இஞ்சாருமப்பா, வீட்டிலை போய் லேடி இருக்கிறாவா அல்லது போயிட்டாவா எண்டு ஒருக்கா பாத்திட்டு வரட்டே?”
*சீ! இந்த மனிசன் நித்திரையும் கொள்ள விடுகுதில்லை. ஐயோ! சாய் ராம் சாய் ராம்!" திரும்பிப் படுத்துக் கொண்டாள் சுப்புலசுடிமி.
சிவநாயகம் வீட்டிற்குள் மாறி மாறி நடந்தார். மழை தூறத் தொடங்கியது. ஜன்னல் சீலையை விலக்கிப் பார்த்தார். ஊர் ஞாபகம் வந்தது. ஏதோ நினைத்துக் கொண்டவர் திரும்பி அறைக்குள் போய் படுத்துக் கொண்டார். பூனையொன்று சுடலைக் குருவியைத் துரத்திக் கலைக்க அது அழுது அழுது நிலா முற்றத்தில் விழுந்தது.
"லுக் பன்னீர்! இந்த மனிசன் வீட்டை இரண்டாக்கிப் போடும் போல கிடக்கு. சீ ஐயோ’ சுமதி பன்னிர்ச்செல்வனுக்குத் தலையணை மந்திரம் ஓதினாள். ‘இனி என்ன செய்யிறது? வந்திட்டினம். ஏதோ ஒரு மூலையிலை இருந்திட்டுப் போகட்டும்."
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 62

கதவு தட்டும் சத்தம் கேட்டு ஏதோ வெறுப்புடன் எழுந்து போனார் சிவநாயகம். போன வேகத்தில் திரும்பி வந்தார். "ஆரோ வெள்ளக்காரன் போல கிடக்கு. "டோன்ற் சவுற்’ எண்டிட்டுப் போறான். என்னடா புதினமிது. தேவாரம் பாடினால் டோன்ற் சவுற்றாம். சும்மா கிடந்த எங்களைக் கதவைத் தட்டித் திறப்பிச்சு, டோன்ற் சவுற் எண்டிட்டுப் போறான். நாய்க்கு நடுக்கட லிலை போனாலும் நக்கத்தண்ணி நக்குத் தண்ணிதான். தமிழன்ர பாடு இப்படி யாப் போச்சு" புறுபுறுத்தபடியே போய்ச் சரிந்தார்.
பன்னீர்ச் செல்வனுக்குக் குபுக்கென்று சிரிப்பு வந்தது.
"பன்னீர், ஃப்போர் ஒக் குளொக்கிற்கு எழும்பி சன்னதம் ஆடினா ஆர்தான் விடுவினம். இது ஃபிளற் எண்டதை ஞாபகம் வைச்சிருக்க வேணும். பிறகு எங்களை ஃபிளற் ஆக்கிப் போடுவான்கள். இந்த மனிசனுக்கு- ஐ டோன்ற் நோ வட் கி இஸ் டுயிங்."
தொணப்பு விழுந்தது. மெளனமாக இருந்து கொண்டார். மழை
அவளின் தொண
சிவநாயகத்தின் காதில்
பலக்கத் தொடங்கியது. 'ஏதோ நடக்கத் தான் போகுது" வாழ்க்கையின் இருண்ட கண்டம் இது என நினைத்துக் கொண்டார். பின்னர் வருவது வரட்டும் என்ற நினைப்பில் தூங்கி விட்டார். கொண்டிருந்த சிவநாயகத்தை அம்புலன்ஸ் சத்தம் எழுப்பியது. "ஐயோ! கிழவி
ஆழந்து தூங்கிக்
செத்திட்டாள்" என்று பதறியடித் துக் கொண்டு எழும்பினார். ஏதாவது உதவி செய்யலாம் என்ற நினைப்பில் மாடிப்படி களில் இருந்து விறுவிறெண்டு கீழே இறங்கினார். காலிற்குள் ஏதோ பிசுபிசு த்தது. கவனித்துப் பார்க்கும் நிலையில் அவர் இல்லை. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அம்புலன்ஸிற்குக் கிட்டப் போய் விட்டார். அம்புலன்சிலிருந்து தொபுக்கென்று குதித் தாள் கிழவி. ஒருவருடைய துணையுமின்றி கிழவி அந்தச் சரிவு மீது கிடுகிடுவென்று ஏறினாள். வீட்டு வாசல் வரை போனதும், திரும்பி இவர்களை நோக்கி தங்கியூ. பாய் பாய்' என்று இராகமிழுத்தாள்.
தடீரெனத் தன்னைச் சுற்றி ஒப்பாரியும் அழுகுரலும் கேட்பது போல உணர்ந்தார் சிவநாயகம். பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி தனது வீட்டைப் பார்த்தார். அங்கே மகனும் மருமகளுமாக பூச்சாடிக்குள்ளி ருந்து ஏதோ ஒன்றைத் தூக்கி "டஸ்ற் பின்"னுக்குள் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். மெதுவாக நடந்து வந்து ເomgdug களின் கம்பியில் கைகளை ஊன்றி டஸ்ற் பின்னைத் திறந்து பார்த்தார். அங்கே அந்தச் சுடலைக்குருவி செத் துக் கிடந்தது.
இரவு முழுக்கக் கத்தினாய். செத்துப் போனியே!" அடக்க
**இதுக்காக வா
முடியாமல் சிரித்தார்.
பீமாமா, மாமா கம் குயிக். கிறைச்
(3s it gé606) (Christchurch)uS (disg) உங்களுக்கு ஒரு கோல். ஆரோ அந்தோ
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 63

Page 34
னியாம்' என்று மருமகள் சுமதி கதவைத் திறந்து சிவநாயகத்தைக் கூப்பிட்டாள்.
'ஆர் பிள்ளை அது?"
"அந்தோனியாம் மாமா'
"சேர்ச்சிலையிருந்தோ?"
"ஐயோ! கிறைச்சேர்ச் எண்டால் மாமா ஒரு இடம்" என்று சுமதி சொல்வதையும் பொருட்படுத்தாமல், அந்தோனியைக் கண்டு பிடித்துவிட்ட புளுகத்தில் ரெலிபோனை நோக்கி ஓடினார் சிவநாயகம்.
“சரி, சரி, இந்தா வந்திட்டன், ஹலோ! அந்தோனியா கதைக்கிறது?"
"ஓ! நான் நல்லா இருக்கிறன். இப்பதான் ஒரு கண்டம் கழிஞ்சு இருக்கிறன். எப்பவடா சேர்ச்சிலை போய்ச் சேர்ந்தனி? எவ்வளவு திருக் கூத்து ஆடியிருப்பாய். கடைசியிலை பார், ஃபாராகப் போய்விட்டாய். ஆரோ நீ கடை வைச்சிருக்கிறாய் எண்டெ ல்லே எனக்குப் பொய் சொல்லிப் போட்டா ன்கள். நீ எந்தச் சேர்ச்சிலை இருந்தாலும் பரவாயில்லை. என்ர காசை மாத்திரம்
உடனை அனுப்பிப் போடடா."
Photographers Modern Computerized Photography For Wedding Portraits &
Child S
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 64
 

தரைலிலே ଏsaଞଵିତିl-ଓଁ
தாரகைகள்
- மருதூர். ஏ. மஜித்
ரம்மியமான இன்றைய காலைப் பொழுதோடு முழுநாளும் நன்றாக அமையட்டும், என்ற பிரார்த்தனையோடும், நல்லெண்ணத்தோடும் பல எதிர்பார்ப்புக்களைச் சுமந்தவனாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை நோக்கிப் பயணித்த எனக்கு ஒலிப்பதிவுக்குப் பொறுப்பான தயாரிப்பாளர் தவிர்க்கமுடியாத காரணத்தால் வரமுடியாதுள்ளது என்றும், ஒலிப்பதிவு வேறு ஒருநாள் நடைபெறும் என்றும் கிடைத்த தகவல் எனது எதிர்பார்ப்புக்களையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது. . .
இன்றைய எனது குடும்பச் செலவுகள் அனைத்தும் ஒலிப்பதிவினால் கிடைக்கும் சன்மானத்தை எதிர்பார்த்தே இருந்தன.
இனியென்ன செய்யலாம் என்று யோசித்தே இரண்டு மூன்று மணித்தியலாங்கள் அங்கேயே வீணாகிவிட்டன. "என்ன செய்ய எல்லாம் அவன் செயல்" என இறைவன் மீது பாரத்தைச் சுமத்தி விட்டு லேக் கவுஸ் பத்திரிக்கை நிறுவனத்தில் சிறுகதை எழுதிய வகையால் வரவேண்டிய சன்மானத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தேன்.
கையில் ஐந்து ரூபாய் மட்டுமே மீதமாய் உள்ளதால் லேக்கவுஸ் மட்டும் பஸ்ஸிலே போகமுடியாதென்பது எனக்குத் தெரியும். அதனால் கொஞ்சத் தூரத்தை நடந்தும் மீதியை பஸ்ஸிலும் பயணிக்க நினைத்து நடைப் பயணத்தை ஆரம்பித்தேன்.
சாந்திவிகார் சந்திக்கு வந்து அங்கிருந்தி இலங்கைப்பல்கலைக்கழக சட்ட பீடத்தைக் கடந்து மத்திய நகர மண்டபம் வரை வந்துவிட்டேன்.பாதையில் இரண்டு மருங்கிலும் விசாலித்து வளர்ந்துள்ள மரங்கள் களைப்பில்லாது நடக்க உதவின. அங்கிருந்து காமினி ஹோல் பஸ்தரிப்புவரை உள்ள பாதையின் இருமருங்கிலும் மரங்கள் குறைவு ஆனபடியால், வெய்யிலின் தாக்கத்தை உணருகிறேன். தாகம் வேறு தொல்லை தந்தது.
கையில் இருந்த பைல் மட்டையை குடையாகத் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு பாதை ஒரத்தால் நடந்து கொண்டிருக்கிறேன். எனக்கு வேர்த்துக் கொட்டுகிறது.நெற்றியை வழித்து நிலத்திலே வீசியவாறு நடக்கிறேன்.
பாதையோரத்தில் தெம்மிலிக்காரி என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டுகிறாள். பல்லைப் பார்த்து இரசிக்கும் மனோரீதியிலா நான் இருக்கிறேன்.கண்டும் காணாதது போல் நடக்கிறேன்.
சூரியன் உச்சிக்கு வந்து விட்டான். எனது களைப்பிற்குச் சூரியன் மட்டும் காரணமாக இருக்க முடியாது. எதிர் பார்த்தது நடவாமையும் கூட்டுச் சேர்ந்திருக்க வேண்டும் என எண்ணியவாறு நடக்கிறேன்.
1 மனைவி வரும் பொழுது வாங்கிவரச் சொல்லித் தந்த சாமான் பட்டியலைச் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒருதரம் எடுத்துப் பார்த்துக் கொண்டேன்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 65

Page 35
வேர்வையில் கொஞ்சம் நனைந்திருந்தது. எவ்வளவோ புதிய பதிய கண்டு பிடிப்புக்களை எல்லாம் கண்டுபடித்த மனிதன் இதற்கும் எதனையாயினும் கண்டு பிடித்திருக்கலாம். 6 Tuum sib assioTuņs sóT G3s , 6 TuuTäsas 6toT Lņas 6ör காற்சட்டை என்று கண்டுபிடித்திருந்தால் இப்படி வேர்த்துக் கொட்டத்தேவையில்லையே!
அப்படிக் கண்டுபிடித்து இருந்தாலும் வாங்குவதற்கு ஏழைகளிடம் வசதியாயிருக் கிறது. ஒரு குடை வாங்குவதற்கு வசதியில் லாத எனக்கு இதெல்லாம் தேவையில்லாத சிந்தனை.
லெதர் பேக் வாங்கும் எண்ணம் கூடக் கை கூடாமல் போனது நல்லதாய்ப் போச்சு பைல் மட்டையை என்றாலும் தலைக்குமேலே இலேசாகப் பிடித்துக் கொண்டு Ghaf6b6u6urtub. லெதர் பேக் என்றால் எவ்வளவு பாரம், சிரமம்.
“எது நடந்ததுவோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்க இருக்கிறதோ அது நன் றாகவே நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்"
"உங்களின் ஊதாரித்தனம் தான் இத்த னைக்கும் காரணம்" நல்ல காலம் மனைவி இல்லை. அசரி மட்டும் தான். நான் என்ன ஊதா ரியா? பத்திரிகைகள் புத்தகங்கள் வாங்குவது ஊதாரித்தனமா? இப்பொழுதெல்லாம் இவை களைக் கூட மட்டுப்படுத்திக் கொண்டேனே.
டீ. பிளேன்ரி என்பவற்றையும் நிறுத்திக் eas TsoT G36öT. ésuo G36u6oo6TT as Tuub Lo”GSb குடிப்பேன். யாரும் கேட்டால் நீரிழிவு, கை கொடுத்துதவும். ஒவ்வொரு சதத்தையும் கன க்குப் பார்த்துத்தானே செலவு செய்கிறேன். இன்றைய உச்சி வெயில் நடைப் பயணமும் அதன் பாள்பட்டதே.
"வறுமையும் புலமையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்' திருவிளையாடல் Lulத்திலே நாகேஸ் சொன்னது ஞாபகம் வரு கிறது.
"வாப்பா ரேடியோ சிலோனில் இருந்து வரும்பொழுது எனக்கொரு ஸ்கூல்பேக்கும் “றிங்ஸ்'போத்தலும் வாங்கி வாங்க. பக்கத்து வீட்டுப் பையன் அழகான ஸ்கூல் பேக் வைச்சிருக்கான்."
எனக்கு முதல் தேதி படத்தில சிவாஜி கணேசன் சொன்ன 'எனக்குப் பணக்காரங்க வீட்டுக்குப் பக்கத்திலே குடியிருப்பதும் டேஞ் சர்' என்ற வசனம் ஞாபகம் வருகிறது.
வெய்யில், அவசரம், களைப்பு, எதிர்பார் ப்பு, கடமை, எல்லாவற்றையும் சுமையாக்கி, தோழிலும் தலையிலும், சுமந்தவனாக நடந்து கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் தைரியம் இருந்திருந்தால், வெய்யிலில் நடக்கும் இந்தச் சிரமத்தைக் குறைத்திருக்கலாம். கொழும்பில் சிலர் இப்படித்தான் செய்கிறார்கள். өп 6іп 60тпт6No இப்படிச் செய்யத் தைரியம் இல்லையே. பெரிய பிரபலமான எழுத்தாளர் பஸ்ஸிலே டிக்கட் இல்லாமல் பிரயாணம் செய்து. என்று கட்டம் இடப்பட்ட செய்தியாக வந்துவிடும்.
பத்திரிகைகளில் வரவிட்டாலும் பஸ்ஸி னுள்ளே எப்படியும் தெரிந்தவன் ஒருவன் இருந்தால் நிலைமை என்னாகும். இத்தனை க்கும் மனசாட்சி இடம் தருமா? தேவையில் லாத எண்ணங்கள்.
‘என்ன சேர், வெய்யிலில் நடந்து போநீங்க' எனது மாணவன் ஒருவனை நிஜமாகவே சந்திக்கிறேன்.
"லேக்கவுசுக்குக் கொஞ்சம் அவசரமாகப் போக வேண்டும், அந்தச் சந்திக்குப் போய் விட்டால் இரண்டு மூன்று பஸ் பல பக்கத்தில் இருந்தும் வந்து சேரும். அதுதான் அந்தச் சந்திமட்டும் நடக்கிறேன்.'
"அப்போ நான் வாரன் சேர்' "நல்லது போயிட்டு வாங்க" துபாய்க் காசு மோட்டார் சைக்கிளாய்ப் பறக்கிறது.
மல்லிகை செப்ரெம்பர் 2007 * 66

என் நிலையை அவன் அறியாவிட்டாலும்
சம்பிரதாயத்திற்காயினும் "அவரசமென்றால்
வாங்க சேர் நான் கொண்டு போய் விடுகிறேன்"
சொல்லியிருக்கலாம்.
"படிக்கும் போது மொக்கன். இப்பொழு
தும் அப்படியேதான் இருக்கிறான். மொக்க
னிடம் தான் பணம் போய்ச் சேருமோ? மரி
யாதை தெரியாத நன்றியில்லாத பயல்கள்."
"அதுசரிதான் அவனிடம் உண்மையைச் சொல்லவில்லையே. உள்ளக் கருத்தை வெளி ப்படுத்த உதவும் ஊடகம் மொழி என்ற கருத்து இருபத்தியோராம் ஆண்டிற்குப் பொருந்தாது.
உள்ளக் கருத்தை மறைப்பதற்கான ஊடகம் ,
தான் மொழி” என்று எண்ணியவாறு நடக்கிறேன்.
காமினி ஹோல் பஸ்தரிப்பைக் கடந்து விட்டேன். இவ்வளவு தூரம் நடந்த எனக்கு இனி இருப்பது கொஞ்சத் தூரம்தான் இருந்தும் அலுப்ப அசதியாக மாறி எதிரே உள்ள அரச மரத்தடியில் தங்கி விட்டுப் போக வேண்டும் போலத் தோன்றியது.
அரச மர நிழல் அலுப்பைப் போக்கி அமைதியாக்கி ஞானத்தைக் கொடுக்கக் கூடிய மரம்தான். பல தடவைகள் அநுபவப்பட்டு ள்ளேன்.காற்றுப் பட்டதும் அரச மரத்தில் இருந் துவரும் கலகலப்பான ஒலி சகல கவலை களையும் மறக்கடித்துவிடும்.
அரச மரநிழலிலே பத்துப் பன்னிரண்டு பேர் கூடி நிற்கிறார்கள்.
புல்லாங்குழல் இசைக் காற்றிலே மிதந்து வந்து என்னைத் ஆரத் தழுவி வரவேற்கிறது.
என் உள்ளத்திலே ஒரு மகிழ்ச்சிப் பிர வாகம். நானும் கூட்டத்தோடு கூட்டமாகி விட் டேன். இசையோடு இரண்டறக் கலந்து விட்
GEL61.
என்னில் ‘நான்' எங்கிருக்கிறேன் என் பது தெளிவாகத் தெரியவில்லை. அதனால் அந்தஸ்தென்னும் மாயையும் மறைந்து
விட்டது. "நான்' தான் அந்தெஸ்தென்னும் மாயைக்குக் காரணமா?
புல்லாங்குழல் இசையினூடே என் மயக்கதைத் தெளிய வைத்தானா?
அவன் புல்லாங்குழல் இசைக்கு இவ்வ ளவு சக்தியா?
அவன் ஆடையும், காலிலே அணிந்திரு க்கும் பாதரட்சைகளும், சவரம் செய்யப்படாத முகமும், அவன் கையிலே இருக்கும் புல்லா ங்குழலின் வெடிப்புக்கள் மேலும் வெடித்து விடாதிருக்க நூலால் போடப்பட்டுள்ள கட்டும் அவனது வறுமையை எடுத்துக் காட்டி நின்றா லும், அவன் புல்லாங்குழல் இசைமட்டும் அவ னைச் செழிப்புள்ளவனாக்கி நிற்கிறது. வயதும் ஐம்பதைத் தாண்டியிருக்கும்.
என் உள்ளத்திலே அவனைப் பற்றி இனந்தெரியாத இரக்க உணர்வு.என்னிடம் இருந்த ஐந்து ரூபாயை அவன் கையில் கொடுக்கிறேன்.
அவன் என் கைகளைப் பிடித்து அவன் கண்களில் ஒற்றியவாறு "பாருங்கையா என் னுடைய புல்லாங்குழல் இசையைக் கேட்டு விட்டு ஒன்றும் தராமல் போகிறார்களே அவர் களை நான் குறை சொல்லமாட்டேன். அவர் களிடம் இரசனை இருக்கிறது ஆனால் கை யில் காசு இல்லாமல் இருக்கலாம். காசு இருந் தும் அதனை என் கையிலே கொடுத்து "நன் றாய் இருந்தது' என்று இரண்டு வார்த்தை கூறிச் சென்றால் எவ்வளவு சந்தோஷப் பட் டிருப்பேன்"பிச்சைக்காரனுக்கு வீசியெறி வதைப் போன்று காசை வீசி எறிந்து விட்டுச் செல்கிறார்களே அவர்களை நினைக்கும் போதுதான் மன வேதனையாய் இருக்கிறது.
இற்றைக்கு ஒரு மாதத்திற்கு முன் கோல்பேஸ் திடலில் நான் புல்லாங்குழல் வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரன் நான் வாசித்து முடிந்ததும் எனக்குக் கைதந்து சந்தோஷத்தைத் தெரி
மல்லிகை செப்ரெம்பர் 2007 * 67

Page 36
வித்து விட்டு எனது புல்லாங்குழலை வாங்கி வாசித்துப் பார்த்து விட்டு 'இந்தப் புல்லாங்குழ லிலே இப்படி வாசிக்கிறாயே நல்லதொரு புல் லாங்குழல் இருந்தால் எப்படி வாசிங்பாய்” எனக் கூறி எனது கையிலே பத்து டொலர் பணத் தைக் கொடுத்து நல்லதொரு புல்லாங்குழல் வாங்கிக் கொள்' எனக் கூறிவிட்டுச் சென்றான்.
மாலை நேரமாகியதும் எனது தங்கு மிட த்தை நோக்கி பாதையோரத்தால் நடந்து கொண்டிருந்தேன் பின்னால் வந்த ஒருவன் என்னை நிற்கச் சொல்லிக் கத்தியைக் காட்டி “கொடுத்த பத்து டொலரையும்” பறித்துச் சென்று விட்டான். இதை நினைத்தால் இன்னும் கவலையாக இருக்கிறது.
புல்லாங்குழல் வாசிப்பது எனது தொழில் அல்ல. இதனை ஒரு பொழுது போக்குக் கலை யாகவே கற்றுக் கொண்டேன். நண்பர்கள் மத்தியில் வாசித்துக் காட்டுவேன். நான்றாக இனி 0) UDUUT85 வாசிக்கிறாய் எனக் கூறி என்னை
உற்சாகப்படுத்தி டீ, சிகரெட் எல்லாம் வாங்கித் தருவார்கள். சந்தோசமாகப் பொழுது போகும் எனது தொழில் கடலுக்குச் சென்று மீன் பிடித்தல், சொந்தமாக தோணி வலையெல் லாம் இருந்தது. சுனாமியில் எனது தொழிலிலே அடிபட்டுப் போய்விட்டது.
நான் பழகி வைத்திருந்த பொழுது போக்காலை இப்பொழுது எனது வயிற்றைக் கழுவிக் கொள்ள உதவுகிறது.
நான் ஒரு காலத்தில் என் புல்லாங் குழலை நேசித்தேன், புல்லாங்குழல் இன்று என்னை நேசிக்கிறது அவ்வளவுதான்.
என் கதையைக் கேட்டதற்கு உங்களு க்கு நன்றி ஐயா," என அவன் விடை பெற்றான்.
இப்பொழுதுதான் களைப்பு, மனப்பாரம், வெய்யில் எதுவும் தெரியாமல் நடக்கிறேன்.
སུས་ནས་
NSSSS N
ལྔ་ ংৰ্ষ
மல்லிகை செப்ரெம்பர் 2007 ஜீ 68
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as - - He-as kwam AgRRF
LS SSGSLS ~wys malus --~~~~
..." es usahawr
M r ar نحس سے 2 حصہ حکم سے تتے ۔
டொலிக் еёыл
区 ஒருவரை மோசமாகத்திட்டித்தீர்க்கும் போது, "வெறும் வாய்க்கிலை கெட்டவன்’ எனத்திட்குகின்றார்களே. இந்தத்திட்டலுக்குச் சரியான அர்த்தம் என்ன?
பதுளை ம. ரவீந்திரன்.
E இந்தத் திட்டுத் தொடர் மொழியை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். "வெறும் வாய்க்கு (வெற்றிலை கேட்டவன்! என்பதே சரியான அர்த்தமாகும். அதாவது ஒரு வாய் வெற்றிலைக்குக் கூட வக்கற்ற சோம்பேறி மாடனே என்பதுதான் இந்தத் திட்டலுக்குச் சரியான அர்த்தமாகும்.
இக்ைசிய உதிைல் உங்களது மனதைத் தொட்ட ஒரு சம்பவத்தை இங்கு ஞாபகப்ருத்த முடியுமா?
மானிப்பாய் க. சர்வேஸ்வரன்
2 அப்பொழுது உடல் நலம் இன்றி மானிப்பாய் ஆஸ்பத்திரியில் இருந்தார், ரஸிகமணி செந்திநாதன். அவர் எழுந்து நடமாட முடியாத நிலையை அவதா னித்துக் கொண்ட எழுத்தாளர் டானியல் அவரது தினசரிப் பாவனைக்காக ஒரு சக்கர நாற்காலியைத் தன் கைப்படவே செய்து, அவருக்கு அன்பளிப்புச் செய்தார். இந்தச் செய்தியை ரஸிகமணி எனக்கு நேரிடையாக விபரிக்கும் பொழுது அவரது
மல்லிகை செப்ரெம்பர் 2007 தீ 69

Page 37
கண்கள் கலங்கிச் சிலிர்த்ததை நேரில் கண்டவன் நான். கருத்து வித்தியா சங்கள் ஆயிரம் இருக்கலாம். ஓர் எழுத் தாளன் முதலில் மனிதனாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக் குப்பல எழுத்தாளர்களை நேரில் அணுகி அவர் களிடம் சுகம் விசாரிப்பது எனது வழக் கம். அதே இலக்கிய ஆற்றல் கொண்டவர்கள் எனத் தம்மைத் தாமே நம்பும் சில எழுத்தாளர்கள் சிரித்தால்
கூட, சிரிக்க மறந்து போய்விடுகின்ற
னரே! இத் தனைக்கும் 'மானுடத்தை நேசிக்கின்றோம்!" எனக் கதையள க்கின்றனர்.
துண்டில்" கேள்வி - பதின்களை
இத்தனை ஆண்குக் காமைாகத் தொடர்
*ந்து செய்கின்றிர்களே, இதில் குறிப்பிடத்
ai guv coboča25ă* 676/Taboo gpgu/prr P
666tfum ஆர். தவராசன்
இல் தூண்டில் கேள்வி - பதில்களால் நானும் என்னை - எனது அறிவைவளர்த்தெடுத்து வந்துள்ளேன். சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல நானும் என்னைப் புதுப்பித்துக் கொள் வதுண்டு. அதே சமயம் கேள்வி கேட் கிறவர்கள் நீண்ட கடிதம் கூட எழுதி வைக்கின்றனர். எழுதும் போது இது தூண்டிலுக்கு என்பதையே மறந்து போய் விடுகின்றனர். எனவே புதுமை யான, அறிவுபூர்வமான, சுருக்கமான கேள்விகளையே தூண்டில் எதிர்
பார்க்கின்றது.
ΣK மல்லிகைச் சந்தாதாரர்களுக்கு அனுப்பும் அஞ்சல் முத்திரைச் செவுை அதிகரித்து விட்டதாக ஒரு மல்லிகை இதழ்த் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந் தீர்கைே7, அதை எந்தளவிற்குச் சமாளி த்து வருகின்றிர்கள்?
ஹட்டன் ச. சகாதேவன்.
2 அந்த நெருக்கடியின் சுமையின் தாக்கத்தை ஏன் கேட்கிறீர்கள்? விபரி த்துச் சொன்னால் வயிற்றைப் பற்றி எரியும். சிற்றிலக்கிய ஏடுகளுக்கு அரசு எந்த வகையான சலுகையையும் காட் டவில்லை. பார்க்கப் போனால் மல்லிகை இதழ்களை இலவசமாகக் கொடுத்து விடலாம் போல இருக்கின்றது. தபாற் செலவு கட்டு படியாகவில்லை. எனவே சந்தா செலுத்துவோரில் அசமந்தமாக இருந்தவர்களில் பலருக்குச் சென்ற இதழில் இருந்தே அவர்களினது முகவ ரிக்கு இதழ்கள் அனுப்புவதை நிறுத் திக் கொண்டு விட்டோம்.
சமீபத்தில் ைெனின் மதிவானம் திரு மனத்திற்கு நீங்கள் சென்றிருந்த சமயம் 6)ørstj6laðrragð- orstjøð øm/furrou/ Gð5óð திரு ஒ. ஏ.ராமையாவின் அவசர ஏற்பாட் டில் ஓர் இலக்கியக் கூட்டம் கவிஞர் சு. முரளிதுரன்தைைமயில்/நடைபெற்றதாகவும் நீங்களும் அதில் கர்ைந்து கொண்கு கருத் துத் தெரிவித்திருந்ததாகவும் விரகேசரிப் uேப்பரின் செய்தி ஒன்றைப் படித்துப்
மல்லிகை செப்ரெம்பர் 2007 * 70

676/UDsaid 6orf76iboo gpupuyup/r?
பதுளை எம். கே. குமரன்.
இ லெனின் இன்று மலையகத்தில் வளர்ந்து வரும் கல்விமான்களில் ஒருவர். எழுத்தாளர், ஆய்வாளர். இவரது திருமணத்தில் கலந்து கொ ள்ள வேண்டும் என நண்பர் முீதர சிங் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். எனது வயதுக்குப் பஸ் பிரயாணம் ஒத்து வராது. முரீ தனது வாகனத்தில் அழைத்துப் போவதாகக் கூறி, அழைத் துச் சென்றார்.
இத் திருமணம் வெறும் ஒரு குடும்பக் கலியாணம் அல்ல. மலைய கத் திருமணமும் அல்ல. இது ஒரு தேசியத் திருமணம். சகல இன மக்க ளும் கூடிக்களித்த திருமணமிது. இலக்கிய ஆசீர்வாதம் பெற்ற இளைஞ ர்களையும் நண்பர்களையும் இங்கு கண்டு கதைத்தேன். பிரமிப்பாகவும் ஆச் சரியமாகவும் இருந்தது.
பின்னர் நடந்த இலக்கியக் கூட்ட நிகழ்ச்சிகளைத் தான் நீங்கள் பேப்பரில் படித்துவிட்டீர்களே. இந்த மாதத் தலையங்கத்திலும் அதைத் தொட்டுக் காட்டி எழுதியுள்ளேன். இந்த மலையக இலக்கிய விழா மிகச் சிறப் பான முறையில் நடந்தேறி முடிய, சகல தரப்பினரும் முன் வந்து உதவ வேண்டும். ஏனெனில் இந்தக் கால
கட்டத்தில் நடைபெறும் இந்த வெற்றி
கரமான இலக்கிய விழா, ஒரு வரலா ற்றுக் கால கட்டத்தின் பிரதிபலிப்பாக அமைய வேண்டும் என்பதே எனது
9്ഞ്.
ΣΚ βιώσοή அடிக்கடிநினைவுகூருகின்ற வட புலத்தில்- இன்று பெரும் பாைோர்க்கு மல்லிகை இதழ்கள் தொடர்ந்து கிடைப் பதில்லை. ஒரு பக்கம் புகழுகிறீர்கள், மற்றப் பக்கம் எங்களையெல்லாம் முற் றாத மறந்து போய் விeeர்கனே இது மல்லிகை வளர்ச்சிக்குக் குந்தகமல்
ബffP
நல்லூர் எஸ். தவச்சந்திரன்.
இ உண்மையாகவே எனக்குப் பெரும் மனக்கவலை. என்னையும் என் ஊடாக மல்லிகையையும் வளர்த்தெடு த்த யாழ் பிரதேச மக்களு க்குத் தொடர்ந்து மல்லிகை கிடைப்ப தில்லை என்பதே மிகப் பெரிய சவால் எனக்கு. இருந்தும் சந்தாதாரர்களுக்கு எனது கவனிப்பில் நேரடியாகவே இதழ் களை அனுப்பி வைக்கிறேன். எதற்கும் சிரமத்தைப் பாராமல் சந்தாவைச் செலுத்திச் சந்தாதாரராவதுதான இந் தக் கட்டத்தில் சாத்தியமான முடிவு. X நீண்டகாலத்திற்குப்பின்னர் நீங்கள் ஹற்றன் மாநகருக்கு வந்து போனதாகப் பேப்பர்களில் படித்தறிந்துள்னேன். எங் கன்பிரதேசத்திற்கு எப்பொழுது/இக்ைகியப் பிரவேசம் செய்யப் போகிறிர்கள்?
நுவரெலியா எஸ். தர்மராஜன்.
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 71

Page 38
மல்லிகை செப்ரெம்பர் 2007 & 72
சி பல ஆண்டுகளுக்கு முன்னர் நுவரெலியா வந்த ஞாபகம். இலக்கிய நண்பர் சமீம் உயர் அதிகாரியாக இரு ந்த சமயம் வந்திருக்கிறேன். அன்று இரவு தூக்கம் வராமல் குளிர் விறைப்பினால் நான் பட்ட கொடுந் துயரம் இன்றும் மறக்க முடியாதவை. அது சரி, நான் வரவில்லை என்று குறைபடுகின்றீர் களே,யாழ்ப்பாணத்திலல்ல, கொழும்பி லிருந்து மல்லிகை வெளிவருகின்றது. மலையகத்து எழுத்தாளர்கள், கலை ஞர்கள் எத்தனையோ பேர்கள் கொழு ம்பு வந்து திரும்புகின்றனர். யாராவது மல்லிகையின் பக்கம் எட்டிப் பார்க்கின் றார்களா? என நான் கூடக் குற்றங் சாட்டலாமல்லவா?
ΣΚ. ஹற்றன் மாநகரில் நடைபெற
யோசிக்கப்பரும் இக்ைகியப் பெருவிழாவு க்குப் பிரபல எழுத்தா7ைர் ஜெயகாந்தனை அழைக்க இருப்பதாகச் பத்திரிகை செய்தி களில் பார்த்தேன். இது சாத்தியமானதாக உங்களுக்குத் ፴öfföወròወnመff? உண் ഞ0ഞu് ിffബg/ിമി,
ஹற்றன் எம். சிவநாதன்.
இனி இந்த யோசனையை நான் தான் முன்மொழிந்தேன். காரணம்- ஜெயகாந் தன் பல தடவைகளாக இங்கு வருவதா கத் தகவல் வந்தும் அவர் ஏனோ இந்த மண்ணுக்கு வந்து போகவில்லை. அவர் மலையக மண்ணுக்கு ஒரு
தடவை வந்து போனால், அது மல்ை யக இலக்கிய வரலாறாகப் பதிவு பெறும். அத்துடன் இவ்விழா தேசமெங் கும் பேசப்படும். அத்துடன் திலகவதியை யும் அழைத்தால் விழா தனிச்சிறப்புப் பெற்றுத் திகழும்.
தோழர் இராமையாவுக்குத் தமிழ் நாட்டில் நிறையத் தொடர்புண்டு. தோழர் நல்லக்கண்ணுவை அணுகிக் கேட்டுப் பார்க்கலாம். அவர் சொல்லை ஜெயகாந்தன் தட்டமாட்டார். நானும் கடிதம் எழுதிகிறேன். எதற்கும் விழாக் குழுவினர் சிறப்பாகச் செயற்பட்டால் நாம் நிச்சயம் சாதித்து முடிப்போம். இதை மலையகம் செய்து முடிக்குமா னால் வரலாற்றில் இவ்விழா என்றுமே பதியப்பட்டுப் பேசப்பட்டு வரும் என்பது திண்ணம்.
ாகமது//காட்டில் புதுப்புத்துச் சஞ்சிகை கன் என்ாைம் தோன்றி வருகின்றனவே, இவை நிலைக்குமா?
கெர்மும்பு- 6 செ. அருள்நங்கை
* தமிழ்நாட்டிலிருந்து நமது நாட் டைத் தமது சந்தைக் கடையாக நினை த்து வாரா வாரம் வந்து குவிகின்றனவே சினிமாச் சாக்கடைகள். இவைகள் தடு க்கப்பட்டால் தான் நமது மண்ணில் தளிர் விடும் இதழ்கள் வாழும், வளரும்.
201/4, முரீகதிரேசன் விதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

POOBALASINGHAM
BOOKDEPOT
ISMCPO RTERS, EXPO RTERS, SEs (TESRS & (PUGBs, ISHERS O'F BOOKS, STATIONERS AND NEWS AGENT
Head office: Branches: 340, 202 Sea street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri lanka. Colombo 06/Srilanka. Te: 2422321 Tel: 4-515775, 2504266 Fax : 2337313 E-mail: pbdho(asltnet.lk 4A/Hospital Road,
Bus Stand, Jaffna,
பூபாலசிங்கல் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி,
இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்.

Page 39
Ομίοβ S DIGITAL o
ards & Scratch Cards
blArt ETAGs, CD/DVD COWERS regg
LLLLLL LLLLLLLL0c LSLSLLLLLSLLLKLLLLLLS LLLLLLG0HLS A. RP-DIPAT TÅG, THANKI PJ: CA, RC5, L0LLL LLLLLSSLLL0 SLSZLKLYSLLZSZkLKZKSLLLS KLLLLLLL S SLLLLS KKLLLLSLLLSKLLLLLLS
(OHAPPY DIGITA
No: 75/TW1, Sri Sumalinalissa Mwall!|
(l'ITU-12, Sri Llıkl.
TC: +4 11 4957550 Web : WWW.happy digitlce tre, Coll
 
 
 
 
 
 

September 2007
FSET PRESS
у KONICA MINOLIA al Machine
S.
C
蠶9
ܒܒܕܒܒܒ 5
エ エー
| FEB. I: EK 5. GREE I ING CAFE 35 LIEBIJLAT-sTICKERS T5ñCook’Eco WERP- EN LICARDS, "ERTIFILA I Es. EL i H.S. --ட Pl- 5HIET, PLASTIC CAFL3,
AL CENTRE (Pvt) Ltd
נwlווBru |id, No. 107 B. 11. Gille Rold, Colomlo- Ili, |t| : (111425535ջ() e mail: infoghappy digital centre.com