கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2007.11

Page 1
Ozzick Services on DIGITAL OFFSET PRESS
у hp indigo era KÓNICAMINOLTA .Digital Machine L پروري، إلا
* We have introduced ' ଧ୍ମା ●。 శ్రీ శ్లో
Cratch : இ ථුෆි
F== მ89 2ίίο
SN! s 令 عين" O 基 Z 9
C
需9 |下一ー 蝶? our PRODUCT പ ಸನ್ಮಿ- - ||T
LLLCLCL0S LLLLLLaS 0LLLLLLLLCSLCCTeLe rLLSSLLGLLLSLLLS
LLLLLL LL0S LLLLSSGaLLLL LLLL0S LLLL0aLLSLLL LLJSeASLLLLLLLLSL
LLGLLC LLLL0S LLLLLL LLLLCLL0LeLeeLLLLSLLLeLGGLLLLLLSLLLLLLLL LLLLLLLLS
LTeELLSLLL LL00S LLLLLLaLaL LELLLHHHSLLLLLL LLLLL zLLLLKS LLLLLL
La0LL LL0S SSLL0 0SLLaLLLLLLLS LLLLLLGLLG K LLLLLLS LS LLOuLLLLLL LLLLLLa0S | 5CRA ICHCARD5 : L'ISITIFIG (Air 25
HAPPY DIGITAL CENTRE (Pvt) Ltd
|-lead Office Brinth No: 75WIW1, Sri Sumanatissa Mawatta, No), TOWE, TW1 (alle Road, (lc)TbJq-19, Sri Lankal, Colomb)- (X, Tel:+).411.4957336 cl: 11255352)
Web : www.happy digital centre.com enail: infoghappy digital centre.com
 
 
 
 
 

Kč)6S6ŃS&S)è
ஆசிரிபிடாபிளிக்ரிவோ

Page 2
இலங்கையில் நூல்கள் விநியோகம், விற்பனை ஏற்றுமதி இறக்குமதி பதிப்புத் துறையில் புதியதோர் சகாப்தம்.
அன்புடன் அழைக்கிறது
BG N சே99டு பெத்தகசாலை
8 Fokas
CHEMAMADU BOOK CENTRE
Telephone : 011-2472362 Fax : 011 - 2448624 E-mail : chamamaduGDyahoo.com
UG 49, 50. People's Park, Colombo - 11. Sri lanka
Uஇலத்துறை, விற்பனைத்துறை لقواجأهراجات முன்னோடிகள், ேெதுடிகவிர்கள்.
க.சச்சிதானந்தன் - காந்தளகம், சென்னை - 02.
தொ.பே. : 044 - 28414505
E-mail : tamlinool(adata.in
| 승을
கோ.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17
Gigit.(3u. : 044 - 24339030 E-mail : ta-pathippagam (a yahoo.co.in
அனைத்து வெளியீடுகளையும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
* - ||,
 
 
 

~. ‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி 8 ஆதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்
pagtangregap nganbasdaan (Royaumeydagoško
0407200) un als antarev Goian OA ER ARROGAO ளது. * . . . .
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக் கமுமாகும். 201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 2320721
mallikaiJeeva@yahoo.com
எனக்கொரு புதிய அநுபவம்
சென்ற 19. 10, 2007 அன்று படைப்பை வாசித்தல்' என்ற தலைப்பில் பிரான்ஸ் தூத ரகத்துக் கலாசார மண்டபத்தில் எண்மர் தமது படைப்புக்களை கூடியிருந்தோர் மத்தியில் நேரடியாக வாசித்தனர்.
இந்த நேரடி வாசிப்பு நிகழ்ச்சியில் சிங்கள, ஆங்கில, தமிழ், பிரெஞ்ச் மொழிகளில் வாசிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழில் நானும் நண்பர் கே. எஸ். சிவகுமார னும் கலந்து கொண்டு வாசித்தோம். பலர் பங்கு கொண்டனர்.
இந்த நேரடி வாசிப்பு முறையே எனக் குப்புத்தம் புது அநுபவமாகும். அதிலும் பெரும் பான்மையாகத் தமிழ் இலக்கியக் கூட்டங் களில்தான் நான் கலந்து கொண்டிருக்கின் றேன். இங்கும் சரி, வெளிநாடுகளிலும், தமிழ் விழாக்களிலும் கூட்டங்களிலும் தான் நான் பங்கு பற்றி வந்துள்ளேன். '
இக்கூட்டம் எனக்கு வித்தியாசமாகப் பட்டது. அதேசமயம் புதிய களத்தையும் கற் றுத் தந்தது. தமிழர் அல்லாத பல்வேறு மொழி யினரின் அறிமுகத்தையும் ஈட்டித் தந்து உத வியது. எனக்கு நண்பர் மேமன்கவி உதவி னார். உலகப் பெரும் கலை இலக்கியப் பூமி எனக் கருதும் பிரெஞ்ச் நாட்டுத் தூதுவ ராலயக் கலாசார நிகழ்வில் நான் அழைக்கப் பெற்றுப் பங்கு கொள்ள வைத்ததை என் வாழ்வில் பெரும் பேறாகவே கருதுகின்றேன். இச்சந்தர்ப்பத்தில் 2000 ஆம் ஆண்டு தொடக்க நாளில் நான் ஐரோப்பாவிற்கு இலக்கியச் சுற்றுலா போய் வந்துள்ளேன். முதலில் போன நகரம் பாரிஸ் மாநகர். அந்த மண்ணில் காலடி வைத்ததும், நான் முதன் முதலில் செய்த காரியம் குனிந்து அந்த மண்ணைத் தொட்டு எனது நெற்றியில் திரு நீறாகப் பூசிக் கொண்டது எனது ஞாபகத் திற்கு வந்தது.
-டொமினிக் ஜீவா

Page 3
అeouరి లub
குேன் சிந்தும் மொழியின் நேசன் á5æa- ()a-dæ1ó aldrÚðr oIca-dr
இளவாலை அமுது
(லண்டனில் இருந்து)
'தமிழ் நேசன்' என்னும் பெயர் கொண்டு ஊடகத்துறையில் உலாவி வரும் அடிகளார், அற மார்க்கங்களையே ஆபரணமாய் அணிந்த அருட்பணியாளர். மன்னார் மாவட்டத்தில் பணி புரிந்து வரும் குருமணி. குருப்பட்டம் பெற்றுக் கடந்த 10 ஆண்டுகளாகத் தன் திருப்பணித் தேரை இழுத்து வருகின்றார். இவருடைய இயற்பெயர் கிறிஸ்து நேசரெட்ணம் என்பதாகும்.
அருந்தமிழும் பெரும் பயிரும் விளையும் முருங்கன் அவர் பிறந்த மண், அங்கேயுள்ள மகா வித்தியாலயத்தில் பயின்ற பின்னர், வரலாற்றுப் புகழ் வாய்ந்த யாழ். சம்பத்திரிசியார் கல்லூரியில் உயர்தரப் படிப்புகளை முடித்து, கண்டியிலும், யாழ். கொழும்புத்துறையிலும் மெய்யியல் மற்றும் இறையியல் என்னும் குருபதவிக்கான துறைகளில் பயின்று குருப்பட்டம் பெற்றவர்.
தேகசுகம், வருமானம், பணம், பொருள், இன்பம், ஒய்வு எல்லாவற்றையும் துச்ச மாய் மதித்து, சிலுவையின் பின்னால் சென்று மக்களுக்குச் சேவை செய்பவர்களே கத்தோலிக்க மதத் துறவிகள். 畅
17 வயது இளைஞனாய் இருக்கும் போதே, இவர் எழுதிய 'அகதிகளை அர வணைப்பீர்' என்ற கவிதை ஒன்று இலங்கையின் முதுபெரும் கத்தோலிக்க பத்திரி கையான பாதுகாவலன் பத்திரிகையில் வெளிவந்தது. முருங்கனைச் சேர்ந்த இவரு டைய தந்தையார் சீனியர் என்று அழைக்கப்படுகின்ற காலம் சென்ற திரு. சந்தான் பாவிலு அவர்கள் ஒரு நாட்டுக் கூத்துப் புலவரும், அண்ணாவியாருமாக இருந்தவர். பல கத்தோலிக்க நாட்டுக் கூத்துக்களை எழுதி முருங்கன் பகுதிகளில் அரங்கேற்றியவர். *விலையில்லாக் கலைஞானம் எனக்குத் தந்தாய் வித்தான கவிதைகளைக் கொத்தாகக் காட்டினாய்!”
மல்லிகை நவம்பர் 2007 奉 4.

என்று தன்து நூலொன்றில் அடிகளார் தனது தந்தையாரை நினைவு கூர்ந்து எழுதுகிறார்.
செந்தமிழ்த் தாகமும், சிந்தனை ஆற்றலும் நிரம்பிய அடிகளார் நீண்ட காலமாக இலங்கையில் வெளிவரும் எல் லாப் பத்திரிகைகளிலும் "தமிழ் நேசன்" என்ற புனைப் பெயரில் எழுதி வருகின் றார். கட்டுரைகள், ஆராய்ச்சிகள், கதை கள், சமூக விழிப்புக்கான சிந்தனைகள் என்பன அவருடைய கருப் பொருளாயுள் 66. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இவ ரது கைவரிசை தெரிகிறது.
மன்னார் மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் மன்னா' என்ற ழாத இதழு க்குக் கிடந்த ஏழு ஆண்டுகளாக ஆசிரிய ராயிருந்து அதனை வளம்படுத்தி வருகி றார், இன, மத வேறுபாடுகளில்லாமல் வெளி வரும் இவ்வெளியீடு உருவத்திலும், கரு த்துக்கோவையிலும், படங்களிலும், அச் சிலும் கவர்ச்சியுள்ளதாய் உள்ளூரிலும், வெளியூரிலும், வெளிநாடுகளிலும் மதிக் கப் பெற்று ஆறாயிரம் பிரதிகளுக்கு மேல்
அச்சிட்ப் பெறுவது அடிகளாருடைய
அற்புத ஆற்றலுக்கு அறிகுறியாகும்.
“மன்னா' என்பது மதச் சார்புள்ள பெயராய்- திருவிருந்து என்று சொல்ல ப்பட்டாலும் ‘அரசே!” என்று எங்களை அழைக்கும் குரலைக் கொண்டது. 'எல் லோரும் இந்நாட்டு மன்னர்' என்றார் பாரதியார்
செந்தமிழ்ப் பற்று, சிந்தனைச்
செல்வ்ம், படைப்பாற்றல், ஒயாத
உழைப்பு, மனித நேயம் என்பன அவரு ள்ளத்தில் கிளைகளாகப் பரந்து புஷ்பாஞ் சலி செய்கின்றன. y
பத்திரிகைகள் காலத்தின் கண் ணாடி மக்களின் குரல் பத்திரிகையின் சுக்கானைப் பிடிப்பவர், நிதானம் இழந் தால் மக்களுக்கும், அரசுக்கும் பதில் கூற வேண்டிவரும். சுவாமி தமிழ் நேசன் அவ ர்கள் அலையடிக்காத அமைதிக் கடல். தூரத்தில் நின்று பார்த்தால் சிரித்துக் கொண்டு ஒடும் ஒரு சிற்றாறு. அருகில் சென்று பார்த்தால் அன்பும், பண்பும், அமைதியும், அறிவும் நிரம்பிய ஒர் அருட் கடல். கிறிஸ்து பெருமானின் உண்மைத் தொண்டனாகவும், செந்தமிழ்த் தாயிடத் தில் சிந்தையைப் பறிகொடுத்த ஆழ்வார் களில் ஒருவராகவும் அவர் தெரிவார்.
அவர் வெளியிடும் மன்னா' 96 (D60) Lu சேவையின் காணிக்கை. இப்பத்திரிகையை இரு கைகளால் விரி க்கும் போது இருபது பக்கங்களிலும் ஞானத்தின் நட்சத்திரங்கள் கண் சிமிட்டு கின்றன. விவிலிய நூலின் முத்துக்கள் உள்ளத்தை முத்தமிடுகின்றன.
ஒரு தத்துவ ஞானியின் கருத்தைஒரு ஞான வைத்தியரின் வாகடத்தைஒரு பேராசிரியரின் அறிவு நிதியத்தைஒரு வேத போதகரின் சிந்தனைச் செல்வத்தை
தன் பேனாவுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் தமிழ் நேசன். அவ ருடைய ஆசிரிய வசனங்கள் போற்றத்
மல்லிகை நவம்பர் 2007 & 5

Page 4
தக்கவை. புல்வெளியில் பூக்கள் உதிர்வது போல், அவருடைய சொற்கள் மகிழ்ச்சி யைத் தரும். ஆனால் அந்தக் கட்டுரை களில் எல்லாள வேந்தனின் தராசு தெரியும். நீதி தேவன் அங்கே உட்கார்ந் திருப்பதைக் காணலாம்.
ஈழத்தில் நடைபெறும் அநியாயங் களையும் அக்கிரமங்களையும் ஆட்சியா ளர்களின் தகிடுதத்தங்களையும் கண்டும் கேட்டும் அறிந்தவர் அடிகளார். வீடுகள் இடிந்த போதும், தேடிப் போனவர் திரும்பி வராதபோதும், உள்ளம் உருக வெள்ளை வான் அள்ளிச் சென்ற போதும், இறை வனின் இருப்பிடமே தரைமட்டமான போதும், பெண்கள் பெருமை இழந்த போதும் மனம் குமுறிக் கொதித்ததோடு நாம் நின்று விட்டோம். ஆனால், சிலர் ஏன் என்று தலை நிமிர்ந்து கேட்டனர். சிலர் மரணப்படுக்கையில் கிடக்கும் நீதியைத் தண்ணிர் தெளித்து எழுப்பி அதை வாய் திறக்க வைத்தனர். அப்படியான எழுதுகோலைப் பிடித்தவர் களில் ஒருவர் அடிகளார்.
நமது சமுதாயத்துக்கு விழும் சவுக் கடிகளை என் போன்றவர்கள் பிற நாட் டிலிருந்து பார்க்கும் போது எங்கள் முதுகு புண்ணாகிவிடுகிறது. ஆனால், தாய் மண் னில் துன்புறும் மக்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு இயேசுவின் சிலு வைப்பாடுகளைத் தன் உடலிலும், உள்ளத்திலும் இவர் சுமந்து கொண்டிரு க்கிறார். இடம்பெயர்வு வறுமை, பட்டினி, அகதி வாழ்வு, மக்கள் கர்ணாமற் போதல்,
கொலை அச்சுறுத்தல். இந்த நீண்ட பட்டியலை அவர் கரைத்துக் குடித்தவர்.
மன்னா பத்திரிகை வாயிலாக சமாதானத்திற்கு இவர் வழங்கிய பங்க ளிப்பைப் பாராட்டி 2005 ஆம் ஆண்டு சர்வதேச சமாதானப் பேரவையும், உலக அமைதிக்கான சர்வமத, சர்வதேச அமை Lib (360600 fig (Universal Peace Federation and Interreligious and International Federation for Peace) '&LDT.g5mGot 5 grgsui' (Ambassdor for Peace) என்ற விருதை வழங்கி இவரைக் கெளரவித்தது. மன்னா பத்திரிகை ஊடாக இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பு ஆணைக்குழு ஒவ்வோர் ஆண்டும் வழங்கும் தேசிய கத்தோலிக்க ஊடகத் g560p 66cbg.jásassrs (National Catholic Media Awards) 36uc56oLu Quuñ பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மனதுக்கண் மாசிலனாக வாழ்வ தும், மனித நேயத்துக்காகத் தன்னை
அர்ப்பணம் செய்வதும் அவருடைய
சித்தாந்தம்.
மன்னார் கத்தோலிக்க திருச்சபை யில் காத்திரமான பொறுப்புக்களை அவர் கையேற்று சிறப்பாகப் பணியாற்றி வரு கின்றார். மறைமாவட்ட மறைக் கல்வி, விவிலிய ஆணைக் குழுவின் இயக்குந ராகவும், மறைப்பணிகளுக்கான இயக்கு னராகவும் கடந்த 4 ஆண்டுகளாகப் பணி
மல்லிகை நவம்பர் 2007 霹 6

யாற்றி வருகின்றார். மறை ஆசிரியர்கள், கத்தோலிக்க ஆசிரியர்கள், பொதுப் பணியாளர்கள் எனப் பல்வேறு குழுவி னருக்கு கருத்தமர்வுகளை, தியானங் களை நடாத்தி, அவர்களை வழி நடத்தி வரும் அடியார்க்கு அடியான் இவர்.
மூத்தோரைப் போற்றுவதும், முன் னோர் பண்பாடுகளைப் போற்றுவதும், கருகிப் போன கலைகளை வளர்ப்பதும் அடிகளாருக்குப் பிரியமான சேவைக ளாகும், வங்காலையைச் சேர்ந்த திருமதி பெப்பி விக்ரர் அவர்கள் எழுதிய ‘தமிழுக்கு வளம் சேர்க்கும் நாட்டார் பாடல்கள்." என்ற நூல், முருங்கனைச் சேர்ந்த அருட்திரு .செ. அன்புராசா அடிகளார் எழுதிய மன்னார் மாதோட்ட நாடகங்கள் - ஓர் ஆய்வு போன்ற நூல்களை வெளிக் கொணர இவர் காட்டிய முனைப்பும் எடுத்த முயற்சியும் இதற்குச் சான்றாகும்.
கவிதைகளில் கூட, அவருடைய கைவரிசை நீண்டு கிடக்கிறது. 'சவக் குழிகளிலும், சுடுகாடுகளிலும் சாதி வேலி
போடுகின்றார்கள்' என்று எங்கள் பரம்
பரை வியாதியைக் கண்டிக்கிறார்.
அண்மையில் அடிகளார் வெளியி ட்டிருக்கும் இரு நூல்களும் மக்கள் மத் தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிரு க்கின்றன. இறைவனின் இனிய இயல்பு
களை விவிலியக் கண்ணோட்டத்தில்
தரும் ‘தண்ணிருக்குள் தாகமா? என்ற நூலும் செபம் பற்றிய பல்வேறு பரிமாண ங்களை விளக்கும் வெளிச்சத்தின் வேர்கள்' என்ற நூலும் திருமறையின் இரு செந்தாமரைகள். மொழி ஆராய்ச்சி யாளர் தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்றும், இரக்கத்தின் மொழி என்றும் வியந்து போற்றியுள்ளனர்.
தேவார திருவாசகங்களும், ஆழ்வார்.
பிரபந்தங்களும் இதற்குச் சாட்சிகளாகும். மனங்கனிந்து இறைவனைப் பிரார்த்தி க்கும் செபங்களும், தியானங்களும்
மனித வாழ்வுக்கு ஒளடதங்களாகும்.
இந்த நூல்களை எழுதுவதற்கு விவிலிய நூலில் தனக்கு வேண்டிய அனைத்துக் கருத்துக்களையும் ஆசிரி யர் உறுஞ்சியிருந்தாலும், காந்தியடிகள் கழற்றி எறிந்த செருப்பும், அமேசன் நதி
முகத்துவாரத்தில் நின்ற கப்பலிலே
தண்ணிருக்கு ஏற்பட்ட தாகமும். இப்படியாக எழுத்தாண்டிருக்கும் செய்தி கள் உலக அந்தங்கள் வரை உள்ள நூல்களை அவர் தடவியிருப்பதை உச் சரிக்கின்றன. கவிதை தலையங்களைக் கொண்ட இந்நூல்கள் சமய சஞ்சீவிக ளாய் மக்களின் நல்வாழ்வுக்குப் பெரிதும்
Ju6öTUGb.
அடிகளாருடைய தமிழ்ப் பணிக ளையும் சமயப் பணிகளையும் கலைச் சேவைகளையும் பாராட்டி மகிழ்கின்
றேன்.
மல்லிகை நவம்பர் 2007 & 7

Page 5
24. பூச்சியம் பூச்சியமல்ல
- தெணியான்
27.12.2003 மாலைநேரம் நான் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த சமயம் எனது சின்ன மகன் அவசரமாக என்னைத் தேடிவந்து, கொழும்பில் இருந்து ஒருவர் என்னைக் கண்டு போக வந்திருப்பதாகச் சொன்னான். நான் உடனே வி,ைாவாக வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அவர் என்னைக் கண்டதும் எழுந்து ஓடிவந்து கட்டி அணைத்துக் கொண்டார். ஓயாது பேசிக் கொண்டிருக்கும் அவர் வாயிலிருந்து ஒருவார்த்தை தானும் அந்தக் கணம் வெளிவரவில்லை. எனக்கும் அது இயலவில்லை. "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? என வினவுவது காதல் கொண்ட உள்ளங்களுக்கு மாத்திரம் பொருந்தி, வருவதல்ல. நட்புக் கொண்ட உள்ளங்களுக்கும் பொருத்தமான கூற்றுத்தான். யார் அந்த நண்பர்? இருபது ஆண்டுகள் கழிந்த பின்னர் என்னைத் தேடிக் கொண்டு எனது வீட்டுக்கு வந்திருந்தார் எனது இனிய நண்பர் பா. ரத்நசபாபதி அய்யர்.
பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவலை நான் எழுதுவதற்கு பெருமளவு தகவல் தந்தவர் அவர். நாவல் வெளிவந்த சமயம் மட்டக்களப்புத் தபால் நிலையம் ஒன்றில் அவர் பணியாற்றிக் கொண்டிருப்பதாகத் தகவல் அறிந்து, பிரதி ஒன்றினை அனுப்பி வைத்தேன். பிரதி கிடைத்ததாகக் கூட எனக்கொரு தகவலும் வந்து சேரவில்லை. அந்த நாவல் அவருக்கு அதிருப்தியைக் கொடுத்து விட்டதோ என எண்ணி நான் மனதில் கவலை கொண்டிருந்தேன்.
இருபது ஆண்டுகளின் பின்னரும் அதே பேச்சு; அதே சுறுசுறுப்பு; அதே அவசரம்; அதே தர்க்க வாதம். எல்லாம் எனது பழைய நண்பனைக் கண்டு மகிழ்ந்தேன். அவரது மருமகன் டொக்டர் உமாசங்கர் உடன் வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது, கையோடு கொண்டு வந்த கமெராவினால் பல கோணங்களில் படம் எடுத்தார். இரவு நேரம் நீண்டு செல்வது மறந்து, நீண்ட நேரம் இருந்து உரையாடிவிட்டு மருமகனுடன் நண்பர் புறப்பட்டுச் சென்றார். இனி அடுத்த சந்திப்பு நிகழ, இன்னும் இருபது வருஷங்கள் நான் காத்திருக்க வேண்டுமோ? என்னவோ!
அடுத்த ஆண்டின் முற்பகுதியில் அதிர்ச்சிதரும் கொடும் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. எனது பேரன்புக்குரிய ராஜ ருநீகாந்தன் மாரடைப்பினால் 20. 04. 2004 கொழும்பில் காலமானார். அந்தச் செய்தி என்னைப் பெரிதும் கலங்கவைத்தது. அவர் எனது சொந்தச் சகோதரபை போல வாழ்ந்த இனிய தம்பி.
மல்லிகை நவம்பர் 2007 ஜ் 8

வடமராட்சி தெற்கு/ மேற்கு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும், பிரதேச கலா சாரப் பேரவையின் உபதலைவராக இருந்து, இரண்டாண்டு காலம் செயற் பட்டேன். பிரதேசக் கலைஞர்கள் பலரை ஒரே சமயத்தில் கெளரவிப்பதற்குக் காலாக இருந்தேன். கலை இலக்கிய விழா ஒன்றில், பிரதேச கலாசாரப் பேரவை என்னையும் கெளரவித்தது. யாழ். பல் கலைக்கழகத் துணைவேந்தர் அ. மோகன தாஸ் அவர்கள் 31.10.2004 நடைபெற்ற அந்த விழாவில் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி என்னைப் பெரு மைப்படுத்தினார்.
தேவரையாளி இந்துக் கல்லூரியின் தாபகர் சைவப் பெரியார் கா. சூரன் சிலை யைக் கல்லூரி வளாகத்துள் நிறுவுவதில் முன்னின்று உழைத்தவர் செ. கணேசன். ஆரம்பத்தில் சுமுகமாகச் செயற்பட்ட அந்த முயற்சி, பின்னர் பிரச்சினைக்குள்ளான போது, கணேசருக்குத் துணை நின்று 14. 06. 2004 இல் அந்தச் சிலையை நிறுவி (360TT b.
சத்தியம் ன்ன்றத் தவிர, மேலான தருமம் ஒன்றில்லையென உறுதியாக நம்பு கின்றவன் நான். அந்த நம்பிக்கையே சூரன் சிலை நிறுவுவதற்கு நான் அனுசரணை யாக இருந்து செயற்படக் காரணமாயிற்று.
எனது நண்பர்கள் சி. க. இராசேந் திரன், க. லோகநாதன் இருவரும் ஒரு தினம் அன்றைய பத்திரிகையைப் படித்து விட்டு, எனது வீடு தேடி வந்து என்னை வாழ்த்தினார்கள். அப்பொழுதுதான் எனக் குக் 'கலாபூஷணம்’ விருது கிடைத்துள்ள தகவலை நான் அறிந்து கொண்டேன்.
எனது பேரக்குழந்தை ஆரணியுடன் நான் கொழும்பு செல்லத் தயாரகிக் கொண்டிரு ந்த சமயம் அது. எனது மகள், மருமகனும் உடன் வந்தார்கள்.
கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, ஜோன் டீ சில்வா அரங்கில் 22. 01. 2005 இல் ‘கலாபூஷணம்’ விருதினைப் பெற்றுக் கொண்டேன். எனது குடுமபத்த வர்களும் அன்புக்குரிய வதிரி. சி. ரவீத்திர னும் அந்த வைபவத்திற்கு என்னுடன் வந்து கலந்து கொண்டார்கள்.
என்னைக் கெளரவித்து விருது வழங் கினார்கள். அதனைக் கெளரவித்து நான் அந்த விருதினைப் பெற்றுக் கொண்டேன். அதற்கு மேல் அதனைச் சுமந்து நிற்கும் பலம்- மனநிலை எனக்கில்லை. ஆனால், எனக்கு நெருக்கமான இளைய நண்பர்கள் என்னை விட்டு விடுவதாக இல்லை. பத்திரி கைகளில் பாராட்டுச் செய்தி வெளியி டுவோம் என்றார்கள்- பாராட்டு விழா நடத்து வோம் என்றார்கள். நான் எல்லாவற்றை யும் தட்டிக் கழித்துவிட்டேன். இறுதியில் மதியபோசன விருந்தென்று வந்தார்கள். அதனையும் என்னால் நிராகரித்து விட முடியவில்லை. ஆனால், ஒரு நிபந்தனை. என்னை யாரும் பாராட்டிப் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். உடன் பட் டார்கள். நண்பர்கள் ஐம்பது பேர் வரை ஒன்று கூடி, தே. இ. கல்லூரி தொழில்நுட்ப மண்டபத்தில் 29.01.2005 ‘கலாபூஷணம் தெணியானுடன் மகிழ்ச்சிகரமான மதிய போசனம் அளித்தார்கள். அந்தச் சமயம் கனடாவில் இருந்து வந்திருந்த எனது தம்பி யின் மனைவி வழியாமளா நவரத்தினம் அந்த விருந்தில் கலந்து கொண்டார்.
மல்லிகை நவம்பர் 2007 * 9

Page 6
நான் விட்டாலும், அது என்னை விடுகுதில்லை' என்பது போல சில நிகழ் ச்சிகள் தொடர்ந்தன. பருத்தித்துறை அறி வோர் கூடல் போல கலாநிதி. த. கலா மணி தனது இல்லத்தில் அவை (Forum) ஒன்றை உருவாக்கி மாதந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கலாபூஷ ணம் விருது பெற்ற நாடகக் கலைஞர் நீர் வேலி வே. சிதம்பரநாதனையும் என்னை / யும் 30. 01. 2005 அவையில் கெளரவித் தார்கள். அன்று எனது இலக்கியனுபவங் கள் பற்றி நான் உரையாற்றினேன்.
சமரபாகு சல்லியவத்தை அருள் மிகு முத்துமாரியம்மன் மீது கவிஞர் பொலிகை. ச. திருப்பதி யாத்த திரவுஞ்சல் பாடலை வெளியிட்டு வைக்குமாறு செயலாளர் சி. இன்பரூபன் வந்து என்னை அழைத்தார். அந்த ஆலயத்துக்கு 19. 04. 2005 இரவு வேளையில் நான் சென்று அந்த நூலினை வெளியிட்டு வைத்தேன். அதன் பின்னர் நான் எதிர்பார்க்காத வகையில் இவ்வா ண்டு கலாபூஷணம் விருது பெற்ற தெணி யான் பொன்னாடை போர்த்திக் கெளர விக்கப்படுவார்' என திடீரென ஒலிபெருக் கியில் அறிவித்து, ஆலயப் பிரதம குருக் களைக் கொண்டு அந்தக் கெளரவிப்பைச் செய்வித்தார்கள்.
கலாபூஷணம் விருதைக் கெளரவித்து ஞானம்' ஆசிரியர் தி. ஞானசேகரன் ஜூன் 2005 இதழில் அட்டைப் பட அதிதியாக எனது படத்தினை இடம்பெறச் செய்து, நண்பர் திக்குவல்லைக் கமால் எழுதிய அறிமுகக்கட்டுரையை வெளியிட்டு வைத்தார்.
மல்லிகை ஜூலை 2005 இதழ் பார்த்த பின்னர்தான் ஆ. கந்தையாவின் '6)
பூஷணம் விருது/ பன்முகப்பட்ட படைப் பாற்றலுக்கான விருது என்னும் கட்டுரை யைப் பிரசுரித்து ஜிவா பெருமைப்படுத்தி இருப்பதனைக் கண்டு கொண்டேன்.
நண்பர் முருகபூபதியின் ராஜ முீகாந் தன் நினைவுகள் நூலின் அறிமுக விழா வினை தே. இ. கல்லூரியில் 20, 03. 2005 இல் நடத்தி, நூல் விற்பனை மூலம் கிடை த்த பணத்தினை, நூலாசிரியர் விருப்பம் போல முரீகாந்தன் குடும்பத்துக்கு அளித் தேன்.
தினகரன் பிரதம ஆசிரியர் நண்பர் சிவா சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டதற் கிணங்க தவறிப் போனவன் கதை தொடர் நாவலை எழுதிக் கொடுத்தேன். அந்த நாவல் 24.04. 2005 இல் நிறைவு பெற்றது.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவி தி. கேதீஸ்வரி கலைமாணி சிறப்புத் தேர்வு ஆய்வுக்கட்டுரையாக, 'அறுபதுகளின் பின் ஈழத்துத் தமிழ் நாவல் களில் சாதிப்பிரச்சனைகள்- தெணியானின் நாவல்கள் ஒரு சிறப்பாய்வு என்னும் கட்டு ரையைச் சமர்ப்பித்தார். ஆனால், குடி இருப் பதற்கு சொந்த நிலமில்லாது அவலப்படும் மக்களின் வாழ்வுப் போரட்டம் பற்றிய 'பரம்பரை அகதிகள்" அவரது ஆய்வில் கவனத்தில் கொள்ளப்படாது தவிர்க்கப் பெற்றதற்கான நியாயத்தினை என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
யாழ். பல்கலைக்கழகத்தில் கற்ற மூவர் இதற்கு முன்னர் எனது படைப்புகள் பற்றிய ஆய்வினை மேற் கொண்டிருக்கி றார்கள். என். மீனலோஜினி, கலைமாணி சிறப்புப் பட்டத்துக்காக எனது சிறுகதை களை ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்
மல்லிகை நவம்பர் 2007 率 O

தார். யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர் விமலா வேல்தாசன் தனது முது கலைமாணித் தேர்வுக்காக நந்தி, சட்ட நாதன், கோகிலா மகேந்திரன் ஆகியோர தும், எனதும் சிறுகதைகளை ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்தார். எனது தங்கையின் மகள் தேவகி ராமேஷ்வரன் தனது கலை மாணிச் சிறப்புத் தேர்வுக்குரிய ஆய்வாக எனது நாவல்கள் பற்றிய ஆய்வினைச் செய்து கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
எனது சின்னமகன் துஷ்யந்தன் பட்ட தாரி ஆசிரியராக இன்று பணியாற்றிக் கொண் டிருக்கிறான். ஈழத்து இலக்கிய உலகில் எழுத்தாளர்களாக சகோதரர்கள் சிலர் இரு க்கின்றார்கள். அந்தவகையில் எனக்குத் தம்பி நவரத்தினம் (க. நவம்) இருக்கின் றான். கல்லூரியில் படித்துக் கொண்டி ருந்த காலத்தில் மாணவர்களுக்கான சிறு கதைப் போட்டியில் பங்கு பற்றி சாஹித் தியப் பரிசினைப் பெற்றுக் கொண்டவன். ஆக்கவுரிமைகள், வியாபாரக் குறிகள் பதி வகம்1983 இல் அவனது உள்ளும் புறமும்' சிறந்த சிறுகதைத் தொகுப்பினைத் தேர்ந்தெடுத்து பரிசில் வழங்கியது. உள்ளும் புறமும், "உண்மையின் மெளன ஊர்வல ங்கள் இரண்டும் அவனது நூல்கள். பேராத னைப் பல்கலைக்கழக (M. Sc) பட்டதாரி யான அவன், இப்பொழுது கனடாவில் வாழ்ந்து வருகிறான். நான்காவது பரி மாணம்' சஞ்சிகை தடைப்பட்ட பின்னர், நான்காவது பரிமாணம் வெளியீடாகச் சில
நூல்களை வெளியிட்டு வருகின்றான்.
அல்வாய் மகேந்திரராஜா மயூரன் நினைவாக எனது 'பனையின் நிழல்' குறு
நாவல் 13, 06. 2006 நூலாக வெளியிடப் பெற்றது. பின்னர் அதன் இரண்டாவது பதிப்பாக மீள் பதிப்பினை 24, 07, 2006 இல் நான் செய்து பூபாலசிங்கம் புத்தக நிலையத்தாரிடம் ஒப்படைத்தேன்.
அமைச்சர் ஒருவர் ஐந்து லட்சம் ரூபாவை யாழ் இலக்கிய வட்டத்துக்கு ஒதுக்கி இலக்கிய நூல்கள் சிலவற்றை வெளியிடுவதற்கு வழி சமைத்துக் கொடுத் தார். அதனை முன்னுதாரணமாக் கொண்டு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பின்ர் ஒருவரை நான் அணுகிய போது, பொது நிறுவனம் ஒன்றுக்குத்தான் ஒதுக்கும் ஒரு இலட்சம் ரூபா நிதியினைக் கொண்டு எனது நூல் ஒன்றினை வெளியீடு செய்யு மாறு தெரிவித்தார். வடமராட்சியிலுள்ள கலாசார மன்றம் ஒன்றுக்கு அந்த நிதி யினை ஒதுக்குமாறு நான் கேட்டுக் கொண் டேன். அந்த மன்றத்தின் தலைவரைச் சந்தித்து தகவல் சொல்லி வைத்தேன்.
நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் தகவல் கிடைத்ததும் அந்த மன்றத் தலைவர் என்னை அழைத்துச் செய்தியைச் சொன்னார். ஒருவார காலத்தின் பின்னர் மன்ற உறுப்பினர்களை அழைத்து ஒரு கூட்டம் கூட்டினார். நிதி கிடைத்திருக்கும் செய்தியைச் சொல்லி, அதற்குக் காரணம் நான் என்ற தகவலையும் மெல்லத் தெரிவி த்தார். அந்த நிதி பிரதேச செயலருக் கூடாகவே வழங்கப்படும் என்னும் நடை முறையைக் கூறி, நூலக அபிவிருத்திக் காகவே அதனைப் பயன்படுத்த முடியு மெனச் செயலர் அறிவித்துள்ளார் என்று
மல்லிகை நவம்பர் 2007 & 11

Page 7
கூறினார். நூல் நிலையத்துக்கு நூல் களைக் கொள்வனவு செய்யவும் தள பாடங்கள் வாங்கவும் அந்த நிதி பயன்
படுத்தப்படுமெனவும் சொன்னார்.
நிதி கிடைத்திருக்கின்றது என்ற தகவலை எனக்குச் சொன்னவர், இப்படி யொரு நிலைமை உருவாகி இருக்கின்றது என்னும் தகவலை எனக்கோ, பாராளு மன்ற உறுப்பினருக்கோ முன்கூட்டிச் சொல்வதைத் தவிர்த்துக் கொண்டார். அவரைச்சுற்றி நின்று தமது சேவையை எக்காலத்திலும் குறைவின்றிச் செய்து கொண்டிருப்பவர்களும் எனக்கு அது பற்றித் தெரிவிக்கவில்லை.
அந்தக் கூட்டத்தில் நான் பேசுவ தையும் தந்திர்மாகத் தவிர்த்துக் கொண் டார். அந்த மன்றம் சிலரது நூல்களை த்தானே முன்னர் வெளியிட்டிருக்கின்றது. எனது நூல் வெளியீட்டுக்காக ஒதுக்கப் பட்ட நிதியைத் தனக்குரியதாக்கும் அந்த மன்றம், அதற்கு மாற்றீடாக எனது நூல் ஒன்றினை வெளியிடுவது பற்றிச் சிந்திக்க வும் தயாராக இல்லை. இதெல்லாம் பெரிய தந்திரோபாயமாகக் கருதிக் கொள்ளுகின் றது போலும் நிதியை ஒதுக்கிய பாராளு மன்ற உறுப்பினரிடம் அந்த நிதியைத் தடுத்து நிறுத்த வேண்டாமென விநயமான வேண்டுகோள் வேறு. ஒரு பழைய பாட சாலைப் பழைய மாணவர் சங்கத்துக்கு ஒதுக்கிய நிதியின் மூலம் ஆசிரியர் ஒருவ ரின் நூல் ஒன்று, இவ்வாண்டு வெளிவர
இருக்கின்றது என்பது கட்டாயம் அவர்கள்
அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
இன்றும் சமூகத்தின் பிரச்சினைகள் அடிப்படையில் ஒன்றாகவே இருக்கின் றன. அதன் வெளிப்பாட்டு வடிவம் காலத்து க்குத் தகுந்த வண்ணம் நவீனப்படுகின் றது. சில சமயங்களில் முற்போக்கான தாகப் போலி வேஷம் போடுகின்றது. அதிகாரம், அங்கீகாரம் என்பன உயர் கதிரைகளுக்கூடாக இன்றும் பாதுகாக்க ப்படுகின்றன. அடிமைத்தனம் நாகரிக மான அண்டிப் பிழைப்புச் செய்வோருக் கூடாக பேணப்படுக்கின்றது. இவைகள் யாவும் எனது அநுபவத்தில் நான் கண்டு விளங்கிக் கொண்டேன். இன்று யாவற் றுக்கும் மேலாக எனது பேரக் குழந்தை களுடன் சேர்ந்து வாழும் வாழ்வு ஆனந்த மயமான இன்னொரு தளத்துக்கு என்னை
இட்டுச் செல்கின்றது.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களின் பிரச்சினைகளைத் தொடர் ச்சியாக இன்றுவரை எழுதிக் கொண் டிருக்கும் இலங்கை எழுத்தாளன் நான். இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பெறுமதி அற்ற, மதிப்பற்ற பூச்சியங்களாவே சாதிய சமுகத்தினால் நோக்கப்பட்டு, வந்தி ருக்கின்றார்கள். அவர்களுள் ஒருவனாகிய எனது வாழ்வின் சுவடுகளையும் இலக்கிய அநுபவங்களை எடுத்துச் சொல்லி அவர்கள் பூச்சியங்களல்ல என்பதனை
உணர்த்தி இருக்கின்றேன்
(இத்துடன் நிறைவுற்றது.)
மல்லிகை நவம்பர் 2007 & 12

Uேnைவரில் Uேசுகிறேன்- 08
- நாச்சீயாதீவு பர்வீன் (கட்டாரிலிருந்து)
ஒவ்வொருவருடைய வாழ்க்கையோடும் ஒரு கதை ஒட்டிக் கொண்டேயிருக்கும். ஒன்றில், அது சந்தோஷமானதாக இருக்கும், அல்லது சோகமானதாக இருக்கும். ஆனால், அவர்கள் அதில் எதையும் வெளிக்காட்டுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே, தனது சோகங் களையும், சந்தோசங்களையும் சங்கடமின்றி அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுகின்றனர்.
மெய்யிலே, பகிர்தல் அலாதியானது. சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டால் அது இரு மடங்காகும். துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் அது நூறு மடங்கு குறையும். இதுதான் பகிர்தலின் மூலமான அனுகூலமாகும்.
இந்த வளைகுடாவின் வெவ்வேறு திசைகளில் தாங்க முடியாத சோகங்களைச் சுமந்து கொண்டு, வெறும் நடைப்பினமாக உலாவி வரும் எத்தனையோ ஜீவன்கள் நம்மால் அறி யப்படாமலே காலங்கடத்துகின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை இருக்கின்றது. அவர்கள் இந்தப் பாலைவனப் பூமியில் தம் சுயமிழந்து வாழ்வதற்கான வலுவான பின்னணி இருக்கின்றது. இந்த ஒவ்வொரு ஜீவன்களும் ஒவ்வொரு புத்தகம். துக்கம், சந்தோசம், கனவு, ஆசை என்ற அடிப்படை உணர்வுகள் கொண்ட மனிதர்கள். இவர்கள் வாசிக்கப்படாமலே காலாகாலமாக இருந்து வருவது கவலை தரும் நிஜமாகும்.
நான் அடிக்கடி சந்திக்கின்றவர்களில் ஒருவன்தான் சிவகுமார் காந்தி. இலங்கையில் வடபுலத்தைச் சேர்ந்தவன். இங்கு சுமார் ஒரு வருடகாலமாக ஒரு கம்பனியில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கின்றான். அவனது மாதாந்தச் சம்பளம் வெறும் (425 றியால்) 12,750 இலங்கை ரூபாவாகும். இதில்தான் சாப்பாடு மற்றும் இன்ன பிற வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கொளுத்தும் வெய்யிலில் கடுமையாக அவன் வேலை செய்துவிட்டு வரும் போது, எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருக்கும். பல நாட்கள் வெறும் பேச்சுக்கள்தான் எம்மிருவருக்கும் இடையில் இருந்தது. நாட்டின் சமநிலையற்ற தன்மைகள் பற்றியும், அவ்வப்போதான, அரசு- புலிகள் மோதல்கள், சமாதானப் பேச்சு, அரசியல் நிலைலவரம் இவைகள் அனைத்தையும் எமது கலந்துரையாடல் தொட்டுச் செல்லும். எப்போதும் சந்தோசத்தோடும், கலகலப்போடுமே சிவகுமார் பேசுவான். நாட்டின் அசாதாரண சூழ்நிலைதான் தன்னையும் இங்கே வந்து கஷ்டப்படத் தூண்டி யதாகக் கூறினான். மெய்யாகவே கட்டாரில் அன்றாட அத்தியாவசியச் சாமான்களின் விலை
மல்லிகை நவம்பர் 2007 & 13

Page 8
அடுத்த வளைகுடா நாடுகளுடன் ஒப்பிடு கையில் மிக அதிகமாகும். சாதாரணமாய் ஒரு நடுத்தரத்தை விடவும் குறைந்த வாழ் க்கை வாழ்வதற்கே சுமார் (200- 250 றியால்) 6000 ரூபா தொடக்கம் 7500 வரை யான இலங்கை ரூபாய்கள் ஒருவருக்கு அவசியமாகும்.
இந்தத் தொகையில்தான் சாப்பிட வேண்டும். அடுத்துத் தேவையான பாவ னைப் பொருட்கள், வீட்டுத் தொலைபேசி என்று அன்றாட அலுவல்களை மட்டுப்படு த்தப்பட்ட மட்டத்திலே திட்டமிட்டு நடாத்த வேண்டும். இல்லையேல் இங்கேயே விலை வாசி நம்மை விழுங்கி ஏப்பமிட்டு விடும். இந்த அடிப்படை நிலைவரங்கள் தெரிந்த தனால் பேச்சுவாக்கில் நான் கேட்டேன். "சிவகுமார் நீங்கள் இந்தச் சம்பளத்தில் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று' அதற்கு சிவகுமார் “என்ன அண்ணாச்சி செய்வது? நமது நாட்டில் சமாதானம் இருந்தா நாம இங்க வந்து நமது உழைப்பை ஏன் வீணா க்கணும். மாசம் வெறும் நூறு இருநூறு (கட்டார் றியால்)தான் மிஞ்சுது என்ன செய்ய?’ என்று அலுத்துக் கொண்டான்.
பல தடவைகள் இராணுவத்தினரால் தான் தாக்கப்பட்டதாகவும், எப்போது 2-ult போகும் என்று பயத்தில் நாட்களை கடத்துவதை விடவும், இங்கே நிம்மதியாக வாழலாம், என்றுதான் எதையும் யோசிக் கர்மல் இங்கு வந்ததாகவும் கூறினான். "ஆனால் ஒன்று அண்ணாச்சி எத்தனை வேலைக் கஷ்டமெண்டாலும் இங்கே நிம்ம தியாத் தூக்கம் போகுது, நம்மட நாட்டில யெண்டால் எப்ப செல் விழுமோ, குண்டு விழுமோ யாராவது வந்து கைது செய்து விடுவான்களோ என்ற பீதியே மனிசனை
பாதி சாகடிச்சிப் போடும். பிறகெப்படி தூங்கு வதும், நிம்மதியா இருப்பதும்" என்று பெரு மூச்சுடன் கூறினான், அவன் சொல்வ திலுள்ள நியாயங்கள் எனக்கு உறைத்தது.
இந்தச் சிவகுமாரின் நடவடிக்கைக அவனது குடும்பங்களைப் பற்றி ט6חדטh6ו6 கேட்பதற்கு எனக்கு ஆரம்பத்தில் தோன்ற வேயில்லை. அவனும் சொல்லவில்லை. ஒரு அதிகாலை சிவகுமாரின் முகத்தில் சில சோகத்தின் கோடுகளை அவதானிக் கிறேன். 'என்ன சிவகுமார் என்ன பிரச் சினை?" என்று அவனைக் அணுகிக் கேட்ட போதுதான், அவனது சோகக் கதையைக் கொட்டத் தொடங்கினான்.
இருபத்தைந்து வயது இளைஞனான சிவகுமாருக்கு அப்போது ஐந்து வயதிருக்கு மாம். ஐந்து வயதுச் சிறுவனாக, தனது இரு தம்பிகளுடன் ஒடியாடித் திரிந்த குமாரின் வாழ்வில் சந்தோசத்தைத் தவிர அதுவரை க்கும் எதனையும் பார்த்ததில்லை. வடபுலத் தின் ஏதோ ஒரு கிராமம் தான் அவர்களின் ஊராம். அவனது கிராமம் பற்றிய எந்த நினைவுகளும் இப்போது அவனுக்கு இல்லை. குமார் எப்போதும் தனது பக்கத்து வீட்டு நண்பர்களுடன் தான் தனது தம்பி களையும் அழைத்துக் கொண்டு சென்று விளையாடுவது வழக்கம். அன்றும் குமார் பக்கத்து வீட்டுக்கு விளையாடச் சென்று விட்டான். ஆனால் இன்று தம்பிகளுடன் அவன் செல்லவில்லை. தான் மட்டும்தான் சென்றிருக்கின்றான். அந்தப் பக்கத்து வீட்டுக்கு அந்த நேரத்தில் சில உறவினர் கள் வேறு இடத்திலிருந்து வந்திருந்திருக் கின்றார்கள். குமார் சுறுசுறுப்பானவன் எனவே, அவர்களுக்குக் குமாரைப் பார்த்த மாத்திரத்திலே பிடித்துப் போய்விடக் குமாரை
மல்லிகை நவம்பர் 2007 & 14

யும் அழைத்துக் கொண்டு போய்விட்டார் கள். இந்த நேரத்தில் எதிர்பாராமல் இந்திய இராணுவமும், புலிகளும் பல இடங்களில் மோதிக் கொண்டனர். இந்த அபாயகரமான சூழ்நிலை சிவகுமாரின் பிரதேசத்தில் திடீ ரென உருவாகியது. மக்களெல்லாம் செய்வ தறியாது தடுமாறினர். இறுதியில் சூழ்நிலை படுபயங்கரமாய் மாறியது. கால் போன திக்கில் மக்கள் ஒடித் தப்புவதைத் தவிர வேறு வழி அங்கு இருக்கவில்லை.
இந்த நேரத்தில் சிவகுமாரின் தாய் தந் தையர்களோடு அவன் இல்லாததினால் அவர்கள் என்ன ஆனார்கள், என்று ஐந்து வயதான சிவகுமாருக்குத் தெரியவில்லை. ஒன்றும் அறியாப் பாலகப் பருவம் எனவே, பக்கத்து வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் குமாரை அழைத்துச் சென்று தமது பிள்ளை போல வளர்க்கத் தொடங்கினார்கள். தாய் தந்தை தம்பிகளுக்கு என்ன ஆனதோ? அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கவலையும், ஆதங்கமும் குமாரின் பிஞ்சு மனதில் ஆரம்பத்தில் எழுந்தாலும், இந்த புதிய அம்மா- அப்பாவின் அன்பினாலும், அரவணைப்பிலும் குமார் எல்லாவற்றையும் மறந்து போனான்.
கால ஓட்டத்தில் சிவகுமார் அந்தக் குடும்பத்தில் ஒருவராகிப் போனான். அந்த வளர்ப்புத் தாய் தந்தை தமது சொந்தப் பிள்ளைகளை விடவும் தன்னை அன்புட னும், பரிவுடனும் பார்த்ததாகவும் இன்னும் அதே அன்புடனே இருப்பதாகவும் கூறி னான். நாட்டின் தொடர் அசாதாரண நிலை யில் தனது உண்மையான பெற்றோர்களை தேடவோ அல்லது, கண்டு கொள்ளவோ சிவகுமாரினால் முடியவில்லை. இந்த நிலையில் வளர்ப்புப் பெற்றோர்களே எல்லா
முமாகிப் போனார்கள். அவர்களின் சுயநல மில்லாத பேதமில்லாத உண்மையான அன்பில் சிவகுமார் எட்டாம் ஆண்டு மட்டு க்கும் படித்தான். பின்னர் வெவ்வேறு இடங் களில் தனது வளர்ப்பு அப்பாவுடனும், அண் ணன்களுடனும் வேலைக்குச் சென்றா னாம். காலப் போக்கில் நிஜ அப்பா அம்மா, தம்பிகள் எல்லாம் சிவகுமாருக்கு மறந்து போனார்கள். இந்த நிலையில் இரண்டாயிர மாம் ஆண்டளவில், இந்தியாவிலிருந்து வந்த சிலர் சிவகுமாரின் ஊர்க்காரர்கள் அவனது அப்பா அம்மா இந்தியாவில் எங்கோ ஒரு முகாமில் இருப்பதாகவும், அப்பா ஏலவே இறந்து விட்டதாகவும், சிவ குமாருக்கு இன்னொரு தம்பியும், தங்கை யும் இருப்பதாகவும் கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் சிவகுமாரின் அப்போதைய நிலை இந்தியா சென்று அம்மாவையும், தனது தம்பி தங்கைகளையும் பார்த்துவர இட மளிக்கவில்லை.
இடைப்ப்ட்ட காலத்தில் சிவகுமாரின் வளர்ப்பு அப்பாவும் இறந்துவிட்டார். அண் ணன்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட் டனர். அக்காக்கள் திருமணம் முடித்து விட் டனர். எனவே, அம்மாவுக்குக் குமார் மட்டுமே ஆறுதல். எனவே, அவனை வேறு எங்குமே அனுப்புவதற்கு அம்மாவுக்கும் மனசு வர வில்லை. அத்தோடு அம்மாவுக்கும் குமாரின் மீது அபார அன்பு. எனவே, அவனை வேறு எங்குமே அனுப்புவதற்கு அம்மாவுக்கும் மனசு வரவில்லை. எனவே, தனது இருபத்தி நாலு வயது மட்டுக்கும் சுமார் பத்தொன்பது வருட காலங்கள் தனது வளர்த்த பெற்றோருடன் அவர்களின் அன்பிலும், அரவணைப்பிலுமே சிவகுமார் வாழ்ந்து வந்துள்ளான்.
மல்லிகை நவம்பர் 2007 & 15

Page 9
அண்மைக்காலத் தீவிரமான யுத்தக் கெடுபிடிகளின் நிமித்தம், அப்பாவி இளை ஞர்கள் கடத்தப்படுவதும், இனந்தெரியா தாரால் சுடப்படுவதும், காரணம் தெரியா மலே கைதாவதும் என்ற மோசமான சூழலே குமாரின் வளர்ப்புத் தாயும் குமாரை வெளி நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற உந்து தலைக் கொடுத்துள்ளது. எனவே, குமாரின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும், நிம்மதிக் காகவும் நாங்கள் எந்தக் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை. நீயாவது போய் நிம்மதியாக இரப்பா என்று கண்ணிருடன் குமாரை இந்தக் கட்டார் மண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தன்னை இருபது வருடங்களாக எடுத்த வளர்த்துச் சொந்தப்பிள்ளைகளை விடவும் அன்பாகவும், கரிசனையாகவும் நடத்தித் தனது நல்வாழ்வுக்காகப் பிராத்திக் கும் அந்த வள்ப்புப் பெற்றோரைச் சிவகுமார் கண்ணிர் கலந்த நன்றியோடு நினைவு கூருகிறான். தனது இலட்சியம் தன்னை அவர்கள் பேணிக்காத்தது போலவே அவர்களையும், அந்தத் தாயையும் அன்பா கவும், சந்தோசமாகவும் வைத்திருப்பது தானாம்.
சினிமாக்களிலும், நாவல்களிலும் நாம் கற்பனையாகக் காண்கின்ற விடயங்கள் இன்று 'சிவகுமார்' போன்ற எத்தனையோ இளைஞர்களின் வாழ்வில் நிஜமாகவே நட ந்து போயுள்ளது. தனது கதையைச் சோக மாய்க் கூறி முடித்த சிவகுமாரிடம் ஏன் உனது சொந்த அம்மா, தம்பி தங்கைகளைப் பார்க்கின்ற ஆசை உனக்கில்லையா? என்று கேட்டேன். அவன் கண்கள் பனித் தன, உதடுகள் துடித்தன விம்மலுடன் அழுகை அவனிடத்திலிருந்து வந்தது.
அதை வலிந்தே கட்டுப்படுத்திக் கொண் டான். சிறிது நேரத்தின் பின் சொன்னான். ஏன் இல்லை. அம்மா, தம்பி, தங்கச்சிகள் எல்லோரையும் ஒரு நாள் கண்டுபிடித்துப் பார்ப்பேன். ஆனால் இந்த நிலைமையில் இல்லை. நான் உழைத்து நல்ல நிலைமை க்கு வந்த பிறகு, நிச்சயமாய்த் தேடிப்போய் அவர்களைப் பார்ப்பேன். அதற்குக் காலம் எடுக்கும். நான் கடவுளை நம்புகிறேன். எல்லாம் கடவுள் செயல் அண்ணாச்சி. அந்தக் கடவுள் ஒரு நாள் என் குடும்பத் தாரை என்முன் காட்டுவான். என் தாயின் முகம் மட்டுமே மங்கலாய் எனக்கு ஞாபகம் இருக்கிறது. எனது தம்பிகளை எனக்கு ஞாபகமில்லை. அவர்களின் சின்ன வயது முகம் என்றால் கொஞ்சமாய் நினைவில் உள்ளது. என் தங்கச்சியை நான் கண்ட தும் கிடையாது. ஆனால் நான் அவர்களை எப்போதாவது, எங்கேயாவது சந்திப்பேன். ஒரு வேளை நான் அவர்களை ஏற்கனவே சந்தித்திருக்கலாம். அடையாளம் தெரியா ததினால் கண்டு கொள்ளாமல் விடுபட்டி ருக்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணாச்சி நம்பிக்கைதானே வாழ்க்கை.
சிறிது நேரத்தில் அவன் என்னை விட்டு அகன்று விட்டான். ஆனால் என் மனதில் பெரியதொரு சுமை தானாகவே ஏறிக் கொண்டது. "ஒரு பானைச் சோற்று க்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள், இதில் சிவகுமாரும் ஒரு சோறு, எத்தனை சோறு கள் இப்படி பதம் பார்க்கப்படாமல் வெந்து கிடக்கின்றனவோ, சிவகுமாரின் அம்மா, தம்பி, தங்கையை அவன் சந்திக்க வேண்டும் என என் மனம் அவனுக்காகப் பிரார்த்தித்தது.
(இன்னும் பேசுவேன்.)
மல்லிகை நவம்பர் 2007 季 16

ஒவியங்களின் உள்ளுறைந்த அர்த்தங்களில் புதைந்து கிடந்து efóno UIDigo boordñbiéDóII DulóI இயல்பினால் உயிர்ப்பிக்கின்றேன்.
மைாழியின் உரத்த உச்சாடங்கள் துறந்த குநானவான்களின் இதழோரப் புன்சிfப்பில் எனது இருப்புத் துலங்கும்! சில பொழுதுகளில்ஆழ்கடல் மையத்தில் உறங்கி எழுவேன்!
ஓசைகளற்ற அமைதியுலகை சிருஷ்டிப்பதைன் தேடல் உயிரினங்காற்ற ஒரு கனிய 4))lsifierlso என்றாவதைன் தவங்கள் எட்டலாம்?
Guafl 3 left(See
ngpadů (Budáváů vD6uflžbáů விலங்கினத்தின் பேச்சுக்குக் கூட எல்லையுண்டு &DờHAIGUD6no ustjhờd D6ðliği (GuaIGUT இம் மண்ணில் கொள்கை பற்றி பிதற்றல்லதற்கு? g) L40Uлičđађарап бодоlátlöjućЂћећ மைாழியைான்றுதான் கருவியா? ஒரு ஆழமான பார்வை தரிசனத்தில் பல அர்த்தங்கள் துலாம்பரமாகி
விடாதா?
சிfப்பு- அழுகை- ஆர்ப்பரிப்புஇவைதான் வாழ் வென்றால் உள்மன எண்ணவோட்டங்களின்
ஆதார சுருதியாக தான்.
எந்தச் செயலின் உட்பிfவிலும் கட்சுமமாய் எனதுடுருவல் நிகழும் மழைக்கால மூடுபனியாக எனதியக்கம் நீரும்!
தனிமைச் சிறைக்குள் மகோன்னதங்கள் சித்திக்கும் அமைதிச் சூழல்கண் தகிப்பில் உயிர்ப்பான கவிதைபtணமிக்கும்!
சந்தையிரைச்சலில் ՀՀ மூச்சடைத்துத் துடிக்கிறது வெளி ஒசைகளற்ற நீள் பரப்பு மயில்ததகளால் மனதை வருடிக் கொடுக்கிறது!
இரு உடல் கலந்த புணர்ச்சி உச்சத்தில் மைாழியின் வல்வபங்களை உதைத்து
மலடாக்குவேன்! மரணம் கவியும் தேகங்களில் சீறாச் சர்ப்பமாக நிழலாடுவேன் (5/16...........................
GDUDGTGUTübl
மல்லிகை நவம்பர் 2007 & 17

Page 10
கனிஜழுதீயின்
கலிகுைகள்
பதிவு
நிலவு நனைக்கும் இருளின் அழகினை தூரிகையில் பதிந்து கொண்டிருந்தானவன்.
வைக்கும் ஒவ்வொரு வண்ணத்திலிருந்தும் வெள்ளைத் தாளைக் கிழித்து புன்னகைத்தது
வெண்னிரவு.
நீண்ட நிமிடங்கள் குடித்து இரவுப் படுக்கை சுருeடி
திடுமெனச் சிவந்தது கீழ்வான்.
வண்ணங்கள் குேங்கியிருந்தன சிகுறித் (குளித்திருந்கு துளிகளின் நடுவில் அயர்ந்திருந்கு அவனருகில் விடியல் முறிந்கு நேற்றைய கருமையின் மிச்சம்.
பேய்கள் உலகிற்கு போக நேர்ந்தது ஒருமுறை நினைத்தது போலில்லாது மிக வசீகரிக்கும் முகங்களோடு
வரவேற்று அன்புருக உபசரித்து வழியனுப்பின.
திரும்பினேன்.
கொருக்கிற கைகள் அவலடீசனத் தோற்றம் அதிகாரத் தோரணையுடன் அலைந்குபடி
மனிதர்கள்.
மல்லிகை நவம்பர் 2007 & 18
 

ബ്
பூக்கள் மேயும் பட்டாம்பூச்சிகள் பிடிக்கும் வேகத்தில் அதன் வருகையும் மகத்துவமும் மறந்து விடுகிறது.
சிறகுகள் நசுக்க உயிர்வலிதுடித்திரும் உணர்வுகளைப்புரிய முயன்றதில்லை.
இப்போதெல்லாம் சிறகுகளின் ஓவிய அசைவுகளை சேகரிக்கும்
கனவில் கூட பறக்க மறுக்கின்றன பeடாம்பூச்சிகள்.
മ2മ
PG | ബബ്ബേ சென்றுத்ஆம்பியவனை சந்திக்கப் போயிருந்தோம். தான் கடந்த && ( $('G கேட்கிற கேள்விகளுக்கும் நீதானமாகப் பதிலுரைத்தான். விடை பெற்றுப் புள்ளியாக மறைந்தான்.
චූසහඝඅධuසහ9taර් மரணத்தின் விளிம்பில் அமர்த்திவிட்டு.
ܩܺܝܙ�
ழயானத்தின் வழி கடக்கும் நிமிடங்களில் கல்லறைப் பூக்களின் 6J缸研@6了
நெஞ்சினை அறைந்துவிடீடோடும்.
офpug
குந்த இடமின்றி திரத்தியடிக்கப்பeட அகதிகளாகக் காற்றின் சாலைதோறும்
அலைகின்றன.
Uuestó
சிக்ாறுமில்லாதவாறு
CD6Dpluld D6Dp பூமியின் சகலமும் இரமாகியது.
விடும் வரை காத்து உடல் சில்ர்த்து வெளியில் மிதந்தன
பறவைகள்.
எரம் பூத்த மண்ணை நைஞ்சில் சுமந்து நகர்ந்தேன்.
மல்லிகை நவம்பர் 2007 & 19

Page 11
ര)ക്ര00?
- ம. பா. மகாலிங்கசிவம்.
“சேர், நீங்களே! என்னால நம்பேலாமக் கிடக்கு. என்ன இதுக்குள்ள?
"அது கிடக்கட்டும் முதல்லை நீர் ஏன் இஞ்சை வந்தனிர் எண்டு சொல்லும்"
“என்ரை குழப்படிக்கார மச்சானைத் தெரியுந்தானே?
'ஆர் கண்ணன்ே?"
“ஓம் சேர் அவன் தான். கூடாத கூட்டத்தோட எல்லாம் கூடித் திரிஞ்சான். இப்ப ஆரோ
களவெடுக்கத், தான் மாட்டுப் பட்டுப் போனார். உள்ளுக்கை பிடிச்சு போட்டிருக்கிறாங்கள். அது தான் சாப்பாடு கொண்டு வந்தனான்."
"ஐயோ பாவமாக் கிடக்குதே?”
"அது இருக்கட்டும் சேர் நீங்கள். நீங்கள் ஏன் இதுக்குள்ள வந்தனிங்கள்?"
"அது ஒண்டுமில்லை. வகுப்பிலை ஒரு பெடியனுக்கு அடிக்கேக்கை அது தவறிக் கண்ணிலை பட்டிட்டுது. அது தான் வழக்காப் போச்கது. ஒரு லட்சம் ரூபா அவனுக்குக் கட்டினதோடை இரண்டு வருடச் சிறைத் தண்டனை."
'நீங்கள் பிள்ளையளோடை நல்ல மாதிரி எல்லே. பிறகேன் அவனுக்கு அடிச்சனிங்கள்?"
“பாடசாலைக்கு ஒழுங்கா வாறேல்லை. சொன்ன வேலையை ஒழுங்காகச் செய்யிறேல்லை. அது தான் அவனுக்கு அடிச்சனான்."
"ஏன் சேர் பிள்ளையஞக்கு அடிக்கக் கூடாது எண்டு திருப்பித் திருப்பிச் சொல்லினம் எல்லே? பிறகேன் அடிச்சனிங்கள்?
'அடிக்காமல் என்ன செய்யலாம்? அவனுக்குக் கணிப்பீட்டுக்காண்டி ஒப்படை குடுத்தனான். நாலஞ்சு தரம் சொல்லிப் பாத்தன். அசையவே மாட்டன் எண்டிட்டான். சரி ஆற்ரையும் கட்டுரையைப் பாத்து எழுதிக் கொண்டு வா எண்டு சொன்னன். அதுக்கும் நாளைக்கு நாளைக்கு என்று பேக்காட்டினான் அதுதான்."
'அவன் கொண்டு வராட்டி உங்களுக்கு என்ன? அவனுக்குத் தானே மாக்ஸ் இல்லாமப் போகும். நீங்கள் அப்சன்ற் போட வேண்டியது தானே?”
“ஓம். ஒம் கதைக்க நல்லாத்தான் இருக்கும். ஆனாப் பிரச்சனையள் வரேக்க தான் விளங்கும். இந்த முறை ஒஎல் எடுக்கப் போறான். மாக்ஸ் பதிய வேணும். அப்சன்ற்
மல்லிகை நவம்பர் 2007 & 20

போட்டரல் என்ன நடக்கும் எண்டு தெரியுமே?’
"என்ன நடக்கும்?"
"ரீம் வரும். என்ன கணக்க அப்சன்ற் போட்டிருக்கிறிங்கள் எண்டு கேப்பினம். பிறகு கள்ளமாக்ஸ் தானே போட வேணும்?" "அப்ப உங்களைக் காப்பாத்தப் பிள்ளையை அடிச்சிருக்கிறீங்களோ?
'இல்லை. இல்லை பிள்ளையைப் பெற்றவை எங்களை நம்பித்தான் அனுப் பீனம். அதுகளை திருத்திப் பொறுப்புள்ள பிரஜையாக உருவாக்க வேண்டியது எங் கடை பொறுப்புத் தானே? நீங்களும் ஆசி ரியர் தானே?"
"அந்தக் கதையை விடுங்கோ. வெளி நாடுகளிலை பிள்ளைக்கு அடிக்கிறே ல்லை. அதுகள் என்ன பொறுப்பில்லா மையே அலையுதுகள்? தாய் தகப்பன் கூட அடிக்கேலாது தெரியுமே?”
“ஓம் நல்லாத் தெரியும். அங்கத்தைத் தாய் தகப்பன் பதினாறு வயதோட வீட்டை விட்டுக் கலைக்கப் போகுதுகள். அதுகள் எப்படி வளந்தா என்ன? ஆனா இஞ்சை அப்பிடி இல்லை. எங்கட வயோதிப காலத் தில எங்களைப் பாக்க வேணும். அதுக் கேத்த மாதிரித் தான் அதுகளை உருவா க்க வேணும்."
"அடிக்கிறதால பிள்ளையன் வன்முறை யாளராகத்தான் வளருங்கள் எண்டு உள வியல் சொல்லுது. அது ஏன் உங்களுக்கு விளங்கேல்லை?”
"உது நல்ல கதை. மேலைத் தேசத்
தில பிள்ளைகளை அடிக்கிறேல்ல எண்டு இப்பத்தானே சொன்னிர். அப்பிடி எண்டால்
பிறகேன் அதுகள் வாத்திமாரை, சகமான வரைத் துவக்குக் கொண்டு போய்ச் சுடுகு துகள்? அமெரிக்க மாணவரைப் பற்றி அடிக் கடி பேப்பரில வாறதப் பாக்கிறேல்லையே? காதல் தோல்வி எண்டாச் சூடு. ஆசிரியர் பேசினாச் சூடு. தெரியுமோ?"
"ஓம். பேப்பரில பாக்கிறனான்."
"வன்முறையாளரை உருவாக்கிறது க்கும் தண்டனைக்கும் தொடர்பில்லை எண்டு விளங்குதே? அடிக்கக் கூடாது எண் டிறது மேலைத்தேயத் தத்துவம், அங்கத் தையான் ஐஸ்பெட்டிக் குழந்தையஞக்குச் சரி. இது கருங்கல்லுப் பூமி. இந்த உஷ்ண த்துக்கை பிறந்ததுகளுக்கு உந்த முறை சரிவராது. எங்கடை தத்துவம் தான் சரி, அடிக்காத மாடு படியாது.”
"அது சரி அடிக்கிறதெண்டாப் பிள்ளை யின்ரைநன்மைக்கெல்லோ அடிக்க வேணும். ஆடு மாடுகளுக்கு அடிக்கிற மாதிரியே அடி க்கிறது?’
"மற்றவை என்ன மாதிரியோ தெரியாது. நான் ஒரு நாளும் கோபத்தோடை அடிக்கி றேல்லை."
'உது பொய். நான் நம்பமாட்டன். கோபம் இல்லாம அடிச்சா ஏன் பெடியன்ரை கண்ணில படுகுது?"
'தம்பி விழுந்த மாட்டுக்குக் குறிசுடா தையும். நான் அவன்ரை கையில தான் அடிச்சனான். அவன் திடீரென்று கையை உயத்தினான். தடி வளைஞ்சு போய் இமை யில பட்டிட்டுது. சின்ன விஷயம் தான். தாய் தகப்பன் பெருப்பிச்சுப் போட்டுதுகள்."
"என்ன பெருப்பிச்சது எண்டு சொல்லு றியள்? பிள்ளையின்ரை கண்ணில படே
க்கை அவையள் சும்மா இருப்பினமே?”
Lipsiosólsos 56lbuño 2007 等 21

Page 12
“ஓம் அவையின்ரை நிலமை எனக்கு விளங்குது. எங்கட நிலையையும் மற்றவை விளங்க வேணும். பிள்ளையஞக்கு அடிக் காத தாய் தகப்பன் இஞ்ச எங்க இருக் கினம்? தாயும் தேப்பனுமாய் இரண்டு பேரும் சேர்ந்து ரண்டு மூண்டு பிள்ளை யளை அடிக்காமல் அன்பா நடத்தேலாமக் கிடக்குது. அப்படியான நாப்பது பிள்ளை யளை என்னெண்டு மேய்க்கிறது எண்டு யோசிக்கினம் இல்லையே?"
“ՖյլգԱյո67) தான் பிள்ளை திருந்தும் எண்டா முதல் அடியோட திருந்தியிருக்க வேணும் எல்லோ? பேந்தும் பேந்தும் குழப் படிதானே செய்யுதுகள்?"
"அப்ப என்னதான் செய்யச் சொல்லு ዐölu l6ክ?”
"அன்பாப் பிள்ளை உணரக் கூடிய விதமாச் சொல்லுங்கோ?”
"ஒம். ஓம். அருமையான யோசனை. 'தம்பி, ராசா குழப்படி செய்யாமல் இருங் கோ! எண்டாக் காணும். பெடியள் கப்சிப் எண்டு இருந்திடுவாங்கள். ஏதோ கதை யொண்டு சொல்லுறவை தெரியுமே?”
"சொல்லுங்கோ'
"அங்கை ஒரு வாத்தியார் பிள்ளைய ளுக்கு நெடுக அடியாம். ஒருக்காப் பிள்ளை நேயக் கல்விச் செமினாருக்குப் போன வராம். அங்கத்தைக் கதையள் எல்லாம் கேட்டுப் போட்டு வகுப்பிலை போய்ச் சொன் னாராம், நான் இனி உங்களுக்கு அடிக்க மாட்டன் எண்டு."
'நல்ல விஷயந்தரன்."
"ஓம் நல்ல விஷயந்தான். மிச்சக் கதையைக் கேளுமன். பிறகு பெடியளி ட்டைக் கேட்டாராம், காந்தியைச் சுட்டது ஆர் எண்டு? ஒரு பொடியன் கொலரை இழுத்து விட்டு அது நான் தான் சேர்!" எண்டு சொன்னானாம்."
"உதுகள் கற்பனைக் கதையள். உது களை விட்டிட்டு நிஜத்துக்கு வாங்கோ. எங் கடை சரஸ்வதி ரீச்சரைத் தெரியுந்தானே?"
"ஓம் தெரியும். நல்லாசிரியர் விருதும் கிடைச்சதெல்லே'
“ஓம். அவ சொல்லிறவா தான் ஒரு நாளும் பிள்ளையஞக்கு அடிக்கிறேல்லை எண்டு. அவவும் படிப்பிச்சு எத்தினையோ பிள்ளையளை முன்னுக்குக் கொண்டு வந்தவா தானே?"
"அப்ப பிள்ளையள் குழப்படி செய்தால் என்ன செய்வா?"
*சொல்லிப் பாப்பா, இல்லாட்டி நல்ல பேச்சுக் குடுப்பா. அவவின்ரை பேச்செண் டால் பிள்ளையஞக்குப் பயம்."
"எனக்கு அப்படிப் பேசத் தெரியாது அதுதான் அடி போடிறனான்."
*"அப்ப பக்குவமா எடுத்துச் சொல்லத்
தெரியாத உங்கடை பலவீனத்தை மறை க்கப்பிள்ளையஞக்கு அடிக்கிறனிங்களோ?”
s is a
“என்ன யோசிக்கிறியள்? இப்பவாவது அடிச்சது பிழையெண்டு ஏற்றுக் கொள்ளு p5rsjasG36Tmo?”
"அதுவும் சரி, தம்பி சொன்னதும் சரி."
மல்லிகை நவம்பர் 2007 & 22

சாத்தானின் முகம்
- ஆனந்தி
சொந்த மண்ணை விட்டுத் திசை திரும்பிப் போகின்ற சராசரி மனிதர்களுள் ஒரு வனாய் தானும் மாறிவிட நேர்ந்தது குறித்து, ராகவனுக்கு உள்ளூரப் பெரும் மனக்கவலை தான். உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவுக்கு இப்படித்தான் போக நேர்ந்தது. குறித்து ஓரளவுதானும் மகிழ்ச்சி கொண்டாட முடியாமல் அவனுக்குச் சதா, மிகவும் துயரமளிக்கின்ற வாழ்வனுபவங்களினால், களை இழந்து, உயிர் விட்டுக் கிடக்கும் தன் சொந்த மண்மீதான உயிர் ஞாபகமே பெரும் பாரமாய் நெஞ்சில் கனத்துக் கொண்டி
ருப்பதாய், அவனால் உணர முடிந்தது.
அவன் வெறும் டாக்டர் மட்டுமல்ல. தன்னலமற்ற சமூக சேவையின் பொருட்டு, இந்த யுத்த பூமியில் பல அழிவுகளுக்கு நடுவே, உயிரைப் பணயம் வைத்து, உன்னத சேவை யாற்றி வரும், மக்கள் தொண்டனும், இலட்சியவாதி இளைஞனுமான அவனுக்கு இப்போது என்ன நேர்ந்துவிட்டது? ஏன் இந்த வெளிநாட்டுப் பயணம்? பணத்துக்காகவா? புகழு க்காகவா? வெறும் வெளி வேஷமான வாழ்க்கையின் பொருட்டா? அவன் இப்படியெல்லாம் நேருமென்று கனவுகூடக் கண்டதில்லை.
முப்பது வயதில் மருத்துவப் படிப்பு முடிந்த கையோடு, எல்லோரையும் போல, வெளி மாவட்டங்களுக்கோ, கொழும்புக்கோ, போய்ப் பணியாற்ற வேண்டுமென்று விரும்பாமல், யாழ் ஆசுப்பத்திரியிலேயே, சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக, லட்சியப் பணிபுரிந்து வரும் அவனை, இப்படித் திசை திருப்பி விட்டவன் கூட, அவனைப் போல ஒரு டாக்டர் தான்.
டாக்டர் நந்தகுமார், சிறுவயதிலிருந்தே அவனோடு ஒன்றாகப் படித்த ஒர் இனிய நண்பன். இணைபிரியா நட்புக்கு இலக்கணமாக, அவனோடு உயிர் கலந்து இருப்பவன். இருவருடங்களுக்கு முன்பே, அமெரிக்காவுக்குப் போய், மேலும் பல சித்திகள் பெற்று உயர்நிலை மருத்துவனாக, உச்சத்தில் கொடி கட்டிப் பறக்கிற சொர்க்கத்துக் கனவுலக வாழ்க்கை வாழ்பவன்.
இங்கு சொந்த மண்ணுக்காகத் தீக்குளித்தே வாழப் பழகிவிட்ட ராகவனை நினைத்தால், அவன் மனதில் பரிதாபமே மேலிடும். இதெல்லாம் எதற்கு? நாம் யாருக்காகப் பிறந்தோம்? நீ உனக்காக வாழாவிட்டால், உன் வாழ்க்கை எடுபடுமா? உன் புகழ் வாழுமா? வேண்டாம் ராகவா! உனக்கு இந்த நரகம். நரகத்தை விட்டு நீயும் வெளியே வா? வரச் செய்வது என்கடமை. நான் உன்னை வாழவைப்பேன்.
மல்லிகை நவம்பர் 2007 ஜீ; 23

Page 13
இப்படி ராகவனை அமெரிக்கா வரச் சொல்லி ஓயாது அவன் நச்சரித்துக் கடித ங்கள் அனுப்பியதன் விளைவே, அவனது இந்த அமெரிக்காப்பயணமும், அதன் தொடர் பான மாற்றங்களும். இனியென்ன அதற் கான எல்லா ஏற்பாடுகளையும், தடங்க லின்றி செய்து முடித்த பின், அவன் கப்ப லேற இனியென்ன தடை?
இதை நினைத்து வீட்டிலே ஒரே கொண் டாட்டம் தான். வயதான அப்பா, அம்மா கூடவே கல்யாண வயதில் ஒரு தங்கை. இவர்களுக்குக் கூட இனித் தேர் ஒடும். யாழ் ப்பாண நகரத்துச் சிறை வாழ்க்கை இனி யில்லை. கொழும்பு நகரத்து வெளிச்சம் கண்ணில் ஒட்டிக் கொள்ள, அவர்களும்
காற்றில் கால் முளைத்துப் பறக்கவும்
கூடும். கொழும்பு போனால் எல்லாம் மறந்து போகும். ராகவனால் அப்படி இருக்க முடிய வில்லை. பொய்யில் உயிர் பிழைக்கத் தெரி ந்த, அப்படிப் போக விரும்புகின்ற தன்னையே இப்போது அவன் நொந்து கொண்டான். அந்தப் பொய் கேவலமென்று பட்டது. ஆனால் என்ன செய்ய? நண்பனைத் திருப் திப்படுத்த, ஆகக் குறைந்தது இருவருடங் கள் மட்டுமே, தன்னால் அங்கு இருக்க முடியுமென்று அவனுக்குத் தோன்றியது.
இந்த மண்ணை விட்டு, அவன் விடை பெறப் போகிற கடைசி நாள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவன் ஆசுப்பத்திரிக்குப் போய் வேண்டிய எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு திரும்பப் போகிறான்? அவனது இந்த இழப்பு, ஆசுப்பத்திரிக்குத் தான், மிகப் பெரிய நட்டம். இனி அவன் போல் நல்ல டாக்டர் கிடைப்பாரா?
அவன் கடைசி முறையாக விடை பெற்றுப் போக, ஆசுப்பத்திரிக்கு வந்திரு ந்தான். இங்கு மரண ஒலமே அபஸ்வர மாகக் கேட்டுக் கொண்டிருக்கும். தினம் தினம் சூடுபட்டுச் சாகிறவர்களே அதிகம்.
அப்படிச் சாகிறவர்களைக் காப்பாற்ற யாருமே இன்றி, நாதியற்றுக் கிடக்கிற இந்த மண், ஏன் இந்த சாபம் என்று புரியாமல், இதை விட்டுத் தப்பிப் பிழைக்க நினைப்பது கூடக் கேவலமென்று அவன் யோசித்த வாறே, வார்ட்டுகளைக் கடந்து, டாக்டர் களுக்கான அந்தப் பிரத்தியேக அறைக்கு வந்து சேர்ந்தான்.
அங்கு கூடியிரிந்த டாக்டர்களில் சிலர் ஆபரேஷனுக்காகத் தயாராகிவிட்ட நிலை யில், அவசரமாக அறைவாசலைத் தாண்டி வெளிப்படும் போது அவன் முகத்தில் சுரத் தின்றிக் கண்கலங்கியவாறே, கரம் கூப்பி அவர் களை வழியனுப்பி வைத்தான். பிறகு நடந் ததெல்லாம், மன உளைச்சலுடன் கூடிய, நம்பமுடியாத ஒரு கனவாக நடந்தேறியது.
அதன் பிறகு குடும்பத்தோடு கொழும்பு புறப்படுவதற்காக அவன் பிளேன் ஏறிய சம யம், பலாலியூடாகச் சுட்டெரிக்கின்ற, கொடிய பாலைவனம் போல், களையிழந்து அழுது வடியும், தன் உயிரினினும் மேலான யாழ் மண்ணைப் பார்த்து அவன் உள்ளம் உருகி இரத்தக் கண்ணிரே வடிக்க நேர்ந்தது.
கொழும்பு வந்து சேர்ந்த பின்னும் அவன் எதையோ பறி கொடுத்து விட்டவன் போல் நிம்மதியிழந்தே காணப்பட்டான். பம்பலப்பிட்டியிலுள்ள ஒரு அழகான தனி வீட்டில் அவர்கள் குடியேறியிருந்தார்கள். இது அவர்களுக்காக மட்டுமல்ல, தன் பெயர் விளங்குவதற்காகவும், ஏற்கனவே நந்தகுமாரால் அதிக விலை கொடுத்து வாங்கின வசதியான மிகப் பெரிய வீடு. அதுவும் பிள்ளையார் கோவிலுக்கு மிக அருகில் இருந்தபடியால், அம்மா அடிக்கடி கோவில் பூசை காண இது வசதியாக இருந்தது.
ஆனால் சொந்த மண்ணைப் போல், சிரஞ்சீவித்தனமான எவ்வித ஒட்டுதலுமி
மல்லிகை நவம்பர் 2007 &24

ன்றி, இந் நகரத்தின் மயக்க மூட்டுகின்ற வெளிச்சங்களோடு, ஒன்றுபட்டு உயிர் கலக்க முடியாமல் , தான் மிகவும் அந்நி யப்பட்டு நிற்பது போன்றதொரு வெறு மையை ராகவன் உணர்ந்தான். இந்த வாழ் வும் இனி எத்தனை நாளைக்கு?
நாளை மறுதினம் அவன் அமெரிக்கா
நோக்கிப் புறப்படப் போகின்றான். நண்பன்
ஆவலோடு அவன் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றான். இருளின் சுவடுகளேயறியாத அது ஒரு புது உலகம். இரவில் கண்சிமிட்டி அவனை அழைத்துக் கொண்டிருக்கும். ஒரு கந்தர்வலோகமாக அல்லவா அது திகழ்கிறது. அந்த மண் னில் கால் வைக்கிறவர்களே மிகப் பெரிய பாக்கியசாலிகளென நம்புகிற மூட உலகம் இது பணமும், நவீன வசதிகளும் அங்கு ஏராளம்.
அப்பா அருகிலுள்ள சந்தைக்குப் போய் வந்து மிகவும் சந்தோசமாகச் சோபா வில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டி ருந்தார். ஆங்கிலமும், தமிழுமாக ஏழெட்டுப் பேப்பர்கள் அவர் முன்னால் ரிப்போயில் பரவிக் கிடந்தன. அவன் ஒரு மன ஆறுதலு க்காக அதில் ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அது ஒர் ஆங்கில வார இதழ். மூன்றாம் பக்கத்தைப் பிரித்தபோது, ஓர் அரசியல் கட்டுரை கண்ணில் இடறியது. "சர்வதேச நாடுகளின் வருகையெல்லாம் இங்கு சமாதானத்திற்கல்ல! குறிப்பாக அதில் முன்னணியில் நிற்கிற ஒரு நாடு. அது சமாதானக் கதவைத் திறப்பதற்கா கவல்ல, இங்கு வந்து போவதெல்லாம். அப்படியானால் எதற்கு? தமது ஆயுத வியா பாரத்தைச் சந்தைப்படுத்தவே இந்தத் தலை யீடெல்லாம். அமெரிக்கா கூட அதன் வழி யில்தான். பெரிய வல்லரசாக நின்று, சிறு நாடுகளை இரை விழுங்கவே இந்த நாடக மெல்லாம். அதன் வலையிலகப்பட்டு, அழிந்து
போகிற உயிர்களுக்குக் கணக்கில்லை. இதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவ லையில்லை. பணத்தைச் சுரண்டினால் போதும்" ராகவன் அதை மேலும் வாசிக்கப் பிடிக்கா மல், அந்தச் செய்திகளை அறிந்து, மிகவும் துயரம் கொண்டவனாய், பேப்பரைத் தூக்கி வீசியெறிந்து விட்டுத் தீர்க்கமான ஒரு முடிவு
க்கு வந்தவனாய் அப்பாவை நெருங்கினான்.
அமெரிக்காப் பணம், கோடி கோடியா கக் கொட்டப் போகிற மகிழ்ச்சி அவருக்கு. அவனின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித் Sffff. “S{ÜLIm.... |''
“என்ன தம்பி?” "நான் ஒன்று சொல்லுவன். கோபிக் கக் கூடாது.”
"நான் கோபிக்க மாட்டன். சொல்லு." "நான் அமெரிக்கா போகேலை, போக மாட்டன், போனால், அந்த மண்ணின் பாவமே, என்னை முழுமையாக விழுங்கிட் போடும். நான் எரிஞ்சு போடுவன். வேண்ட மப்பா இந்தப் பணவேட்டையெல்லாம். அதைச் சம்பாதிக்க நானும் துணை போக வேணுமே? சொல்லுங்கோ அப்பா.”
"நீ என்ன சொல்லுறாய்?"
“எனக்கு எல்லாம் விளங்குதென்று சொல்லுறன். இதைப் படியுங்கோவப்பா எல்லாம் விளங்கும்."
அவன் அந்தப் பேப்பரை எடுத்துத் தான் வாசித்து மனம் உடைந்து போன, அப்பக்கத்தையே அவருக்குக் காட்டினான். அவர் முழுவதும் வாசித்து விட்டு, மீண்டும் அவனிடம் கேட்டார்.
"எனக்கு ஒன்றும் விளங்கேல்லை. அவர்கள் ஆயுத வியாபாரம் செய்தாலென்ன. நீ ஏன் இதற்காகப் போக மறுக்க வேண்டும்?"
"அப்பா ஆயுதம் பெருக்கி, அவர்கள் வாழலாம். அவர்களின் வாழ்வுக்காக, எங்
மல்லிகை நவம்பர் 2007 & 25

Page 14
கடை மண் இப்படிப் பற்றி எரிய வேண்டுமா? உயிர்கள் சாகவேண்டுமா? இது பெரிய பாவமில்லையா? நானும் இதற்குத் துணை போக வேணுமே சொல்லுங்கோவப்பா?
அவரால் பதில் கூற முடியவில்லை. இதைப் பற்றியெல்லாம், யார் சிந்தித்தார் கள்? இப்போது எல்லோருக்கும் வேண்டி யது பணத்தில் கப்பல் விட்டுப் பறக்கிற காட்சியுலகம் தான். அவனுக்கு அது தேவையில்லை. வெறுமையான, சத்திய மற்ற பொய்யில் உயிர் பிழைத்து வாழ் கின்ற, வெட்கம் கெட்ட காட்சியுலகம், கண் டதே காட்சி கொண்டதே கோலம். அவனு க்கு அது சரிப்பட்டு வராது. ஏனென்றால், அவன் உயிர்களை மதிப்பவன், வணங்கு பவன், வாழ்விப்பவன். அவனது மனம் ஒரு கோவில். இப்படிச் சகதி குளித்து, உயிர் வாழ, எப்போதுமே அவனுக்குச் சரிப்பட்டு வராது.
தாய்மண்ணின் காற்றோடு, மூச்சுக் கொண்டு வாழ்கிற அவனுக்கு, அந்த மண் னின் சோகங்களை மறந்துவிட்டு நண்ப ନୌଦୈt திருப்திக்காக, பாவக்கட்டையாய், உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா மண்ணில் கால் வைக்க
நினைப்பதே, பெரிய பாவமென்று இப்போது
ill-gil.
'இதுதான் உன்ரை முடிவே?"
"ஒமப்பா! நாங்கள் திரும்ப யாழ்ப் பாணம் போய் விடுவம். அங்கு எனக்காக எவ்வளவு புனிதப் பணிகள் காத்துக் கொண் டிருக்கு. உங்களுக்குத் தெரியுந்தானே. நான் இப்பவே, நந்தனை அழைத்து இந்த முடிவைச் சொல்லிவிடப் போறன்."
அம்மாவும், தங்கையுமாக அடுக்களை வாசலில் நின்றவாறே, இதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுப் பேயறைந்தது (3urtshorteoTITTs61. ராகவன் இப்படி ஏமாற்றி
விடுவான் என்று யார் நினைத்தார்கள்? அவர்களைப் பொறுத்தவரை இது பெரிய ஏமாற்றம் தான். இது வெறும் பணவரவுகள் குறித்த ஏமாற்றம் மட்டுந்தான். இதற்கு அப்பால் ஊடுருவி உயிர்பார்க்கிற நிலை யில், ஒட்டுமொத்தமான மனித நேயம் குறித்த, நடத்தைகளே பெரிதென்றுபடும். அதற்கு ஈடாகவே ராகவனுக்கு இந்த வாழ் க்கை முடிவும். பரந்த அளவில் அன்பு ஒன்று மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழப் பழகிவிட்ட அவனுக்கு அன்புக்கு எதிர் மறையாகத் தோன்றுகின்ற, தீயவிடயங்கள் கண்ணில் நிழல் விட்டு மறைந்துதான் போகும். நிழலை மறந்து விட்டு, நிஜத் தையே நம்பிப் பயணம் செய்கிற அவனுக்கு இது போதும்,
அவனது இந்தத் திடீர் மாற்றம் கேட்டு, நந்தகுமார் கோபம் கொண்டு எரிச்சலோடு கத்தியது, அக்கரையிலிருந்து பெரிய அலை யாய் வந்து அவனை அடித்து விட்டுப் போனது. அந்த அலையிலும் மூழ்கிப் போகாத வைராக்கிய சித்தி கொண்ட வனாய், ராகவன் மீண்டும் தன் சொந்த மண்ணுக்கே திரும்பினான். அங்கு அவன் வாழவல்ல, வாழ்விக்க, இந்த மண்ணை, மண்ணோடு வாழும் தீனமுற்ற மனிதர் களையே வாழ்விக்க வேண்டுமென்ற, பெரிய மனம் கொண்டபின், சிறுசிறு துரும்புகளாக மறைந்து போகும், வாழ்வியலில் தொடர் பான உறவுச்சங்கிலியில் இழுபட்டு, உயிர் விட இருந்த கேவலம் இப்போது அவ னுக்கு உறைத்தது. இனி உறவு இல்லை. வாழ்விக்க நினைக்கிற, அதுவே வாழ்வாகி வாழ்ந்து கொண்டிருக்கிற அவனது இந்த உயிர் வழிபாட்டு வாழ்க்கை வேள்விக்கு முன்னால், ஒன்றுபடாத, ஒன்றுபட மறுக் கிற, இப்படிப்பட்ட உறவுகள் கூடக் கருகி அழிந்துதான் போகும். போகட்டுமே. அன் புச் சமுத்திரத்தில் நீச்சலடித்துப் போகிற அந்தச் சுகமே அவனுக்குப் போதும்.
மல்லிகை நவம்பர் 2007 & 26

கெஞ்சி
பதிந்த ஆழக் கரைம்
83 ஆடிக் கலவரத்தை நினைத்துப் பார்க்கின்றேன்.
கால் நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த ஓர் இனச் சுத்திகரிப்புக் கொடுரம், மனித நேயம் எடுபட்டு, ஒரு பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மைச் சமூகத்தை அடக்கி ஒடுக்க எடுக்கப் பெற்ற அரசியல்வாதிகளின் ஒருகபட நாடகமே ஆடிக்கலவரம்.
அன்றைய ஆட்சியாளர்கள், ஒரே நாளில் இக்கலகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். மூன்று நாள் கால அவகாசம் கொடுத்து, உடல் பொருள் ஆவி அனைத்தையும் சூறையாடச் செய்து, எல்லாம் எரிந்து சாம்பலான பின் அமைதியை நிலை நாட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் பெற்றது.
அன்று, நான் பாடசாலைக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். எங்கள் பாடசாலையில் சிங்களம் கற்பிக்கும் தமிழ் ஆசிரியை ஒருவரின் வீட்டில், ஒரு வைபவத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப் பெற்றிருந்தன. அதற்குச் செல்வதற்கான ஆயத்தங்களோடு இருந்தோம்.
சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயம் பதுளையில் உருவான் முதல் தமிழ்ப் பாடசாலை ஆகும். நகரத்தின் மத்தியில் அமைந்தது. வித்தியாலயத்தை அடுத்து, பத்தினி தேவால கோவில். எதிரில் இரண்டு முஸ்லீம் வீடுகள். நான்கு சிங்கள வீடுகள். இன்னும் ஒரு தமிழ் வீடு. நகரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், தப்பிச் செல்ல வாய்ப்பில்லை.
ஒன்பதரை மணியளவில் ஒரு பதட்டமான நிலை. காலநிலையும் மந்தமாகவே இருந்தது. மக்கள் சீக்கிரமாகத் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பாடசாலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப் பெற்றன. பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரத் தொடங்கினர். “ஒருவன் ஓடினால் கேட்டு ஒடு; ஊரே ஓடினால் ஒத்தோடு” என்பதற்கு இணங்க எங்கள் பாடசாலையும் மூடப் பெற்றது. எல்லாம் முன்னேற்பாடோடு நடப்பது போல் இருந்தது.
என்னுடை வீடு மொடர்ன் படமாளிகைக்கு அடுத்தது. எதிரில் 'அப்போத்கிரி அதைத் தொடர்ந்து வரிசையாகத் தமிழ்க் கடைகள். அந்த வரிசையில் தான், ஊவா மாகாணத்தில் தலைசிறந்த புத்தக நிலையம் 'மீனாம்பிகா இருந்தது. நான் ஒருநாளைக்கு இரு தடவையாவது மீனாம்பிகா செல்லாவிட்டால் சீரணிக்காது.
அன்றும் பாடசாலையிலிருந்து வந்தவுடன் அங்கு சென்று சில நூல்களைத் தெரிவு செய்து எடுத்துவைத்துவிட்டு, வந்தேன். வீடு வந்து அரை மணிநேரத்தில் 'மீனாம்பிகா
மல்லிகை நவம்பர் 2007 * 27

Page 15
எரியத் தொடங்கியது. எனக்கு ஆச்சரியமா கவும் வேதனையாகவும் இருந்தது. ஒரே ஆரவாரம். அவிழ்த்து விட்ட வெறியர்கள் நகரத்தைச் சூழந்து கொண்டனர். ஒரு கூட்டம் தமிழ்க்கடைகளை எரித்துக்
கொண்டு வந்தது. கடைகளில் இருந்
தவர்கள் கடைகளை அப்படியே விட்டு விட்டு பக்கத்திலுள்ள முஸ்லீம் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
வீதியில் பேரினவாதக் காடையர்க 66tt நடமாட்டத்தைத் தவிர, வேறு எவரை யும் காண முடியவில்லை. எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற பீதி.
இரவு, ஏழு மணியளவில் சில வெறியர் கள்- தெரிந்தவர்களும் இருந்தனர். எங்கள் வளவுக்குள் நுழைந்து,
“தெமலுஇன்னவாத?” என்று அதட்டினர். 'எஹம கவுருத் நே! அபி தமய் இன்னே' என்றேன்.
அதில் வந்த ஒருவன், 'ஹங்ககன இன்னவாதோ தன்ன நே" என்றான்.
என்னைத் தூக்கி வாரிப் போட்டது. மீறி நுழைந்திருந்தால், அடைக்கலம் புகுந் திருந்த அப்பாவித் தமிழ்க் குடும்பங்களுக்கு என்ன நடந்திருக்குமோ? அடைக்கலம் அளித்த எமக்கு என்ன நேர்ந்திருக்குமோ? நினைக்கவும் பயமாக இருக்கிறது. அந்த அளவு வெறித்தனம் இருந்தது. ஒருவர் முகத்திலாவது இரக்கமென்பது இம்மி அளவும் இருக்கவில்லை.
பலாகன்னங்' என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.
எனது வீட்டுக்கு அடுத்திருந்த மொடர்ன்' படமாளிகை கப்பலொன்று தீப்பற்றி எரிவது போல் காட்சியளித்தது. அதன் எரிந்த பாகங்கள் என் வீட்டுக் கூரையில் விழுந்து
தீப்பற்றிக் கொள்ளுமோ வென்று அஞ்சி னேன். இறைவன் பாதுகாத்துக் கொண் டான்.
விடியலின் போது, படமாளிகை
முற்றாக இடந்தெரியாமல் அழிந்திருந்தது.
மொடர்ன் படமாளிகை, ஊவா மாகா ணத்தில் இருந்த முதல் தரப் படமாளிகை. அதன் உரிமையாளர் திரு. ரட்னசாமி. (அகரதன்ன) ஒரு ஜமீந்தார் போன்றவர். கதர் வேஷ்டி, சால்வை ஜிப்பா, கிரீச்சிடும் தோல் செருப்பு அணிந்தவராகவே எப்பொழு தும் காட்சியளிப்பார். அவரது அயராத உழைப்பில் உருவானதே மொடர்ன் பட மாளிகை. அதைக் கட்டுவதையும் கண் டேன்; அதுதீப்பற்றி அழிவதையும் கண்டேன்.
இன்று, மொடர்ன் கடைத் தொகுதி
யாக மாறியுள்ளது. இதே போன்று, என்
வீட்டிற்குப் பின்னால் இருந்த "லிபர்டி பட மாளிகையும் தீக்கிரையானது.
மறுநாள்,
"தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதி தங்குவதற்கு தற்காலிக ஒழுங்கு செய்யப் பெற்றுள்ளது. அங்கு செல்ல ஆயத்தமாக இருங்கள்." என்று பொலிஸ் அறிவித்த லொன்று விடுக்கப் பெற்றது. பத்தரை மணியளவில் பொலிஸ் வாகனங்கள் வந்து எல்லாரையும் ஏற்றிக் கொண்டு, சிங்கள மகாவித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப் பெற்ற இடத்தில் சேர்த்தது. மறுதினமே அங்கிருந்து சரஸ்வதி மகா வித்தியாலயத் திற்கு அனைவரையும் மாற்றிவிட்டனர். இதுவும் பாதுகாப்புக் கருதியே செய்யப் பெற்றது.
அகதிகளைப் பார்த்துப் பேசவோ உதவிகள் செய்யவோ அஞ்சினர். அந்த ளவுக்கு மிரட்டல் இருந்தது.
மல்லிகை நவம்பர் 2007 & 281

இவ்வேளையில், லிபர்டி பட மாளி
கைக்குப் பக்கத்தில் இரு வாலிபர்களைக் காரில் வைத்து எரித்து விட்டனர்.
மூன்றாம் நாள், இரண்டு மணியளவில் வீட்டில் இருக்கும் முஸ்லிம்களைக் கலைப் பதற்கு ஓர் அறிவித்தல் விடுக்கப் பெற்றது.
எல்லாரையும் முதியங்கன விகாரை வளவுக்கு வந்து விடுமாறு கேட்கப்பட்டனர். "எலதலுவ தோட்டப் பகுதியிலிருந்து பழி வாங்கத் தமிழர்கள் வருகின்றார்கள்' என் றொரு வதந்தியையும் பரப்பி விட்டனர்.
எங்கள் குடும்பத்தவர்களும் வீடுகளை விட்டு வெளியேற ஆயத்தமாயினர்.
“என்ன நடந்தாலும் இந்த இடத்தை விட்டு எவரும் செல்ல வேண்டாம். இதுவும் ஒரு சூழ்ச்சி. நாங்கள் வீட்டை விட்டு வெளி யேறியதும் கொள்ளையடிக்கப் போட்ட திட்டம்" என்று கூறித் தடுத்து விட்டேன்.
*கோப்பிவத்த வீதியில்தான் தனியார் மருத்துவமனை இருந்தது. அதன் ஆரம்ப கர்த்தாக்களில் பிரபல சத்திர சிகிச்சை டாக்டர் சிவஞானம் அவர்களும் ஒருவர். கிழக்கு, ஊவாமாகாணத்தைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் அவரிடம் வைத்தி யம் பார்த்து வந்தனர். அவரது இல்லம், சிங்கள மகாவித்தியாலய வீதியில் அமைந் திருந்தது. டாக்டரின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
வெறிபிடித்த கும்பல் டாக்டரின் வீட் டைக் கொள்ளையடித்ததோடு, அவரையும் கொலை செய்ய முயற்சித்தது. மனைவி தலையிட்டுத் தடுக்க முயற்சித்த போது, தூஷணத்தால் ஏசி அவமானப்படுத்திய தோடு, வீட்டையும் கொளுத்தி விட்டுச் சென் றனர். ஒருவாறு உயிர்தப்பிய டாக்டர் சிவ ரூானம் மறுநாளே எவருக்கும் தெரியாமல்
பதுளையை விட்டு வெளியேறி, அமெரிக்கா வில் வசிக்கும் தன் மகளோடு சேர்ந்து ΘέΕπ6υσπι πή.
பின்னர், தான் வசித்து வந்த வீட்டை ஒரு முஸ்லீம் மாணிக்கக்கல் வியாபாரிக்கு விற்றுவிட்டார். அதுவே இன்றுநர்ஸிங் ஹோம்" என்ற பெயரில் இயங்கி வருகின்றது.
ஆடிக் கூத்து ஒருவாறு தணிந்து, வீதியில் சனநடமாட்டம் இருந்தாலும் ஒரு வித அச்சம் இருந்து கொண்டே இருந்தது.
சில ஆண்டுகளின் பின் பதுளையில் புதிய முதலாளிமார்களும், பணக்காரர் களும் உருவாகினர். இக்கால கட்டத்தில், டாக்டர் சிவஞானம் இலங்கை வந்து, நண் பர்களைச் சந்திக்கக் கொழும்பிலிருந்து பதுளை வரும்போது, பண்டாரவளையில் வைத்து மாரடைப்பால் காலமானார். டாக்ட ரின் பூதவுடல் பதுளைக்குக் கொண்டு வரப் பட்டு, பதுளை நாடாளுமன்ற உறுப்பினரும் டாக்டரின் நண்பருமான எட்வின் விக்ர ரட்ண அவர்களின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பெற்று, அங்கி ருந்து பதுளை பொது மயானத்தில் நல்ல டக்கஞ் செய்யப்பெற்றது.
இதே போன்று, பதுளையில் வாழ்ந்து வந்த வழக்கறிஞர்கள், டாக்டர்கள், புத்தி ஜீவிகள் அனைவரும் புலம் பெயர்ந்து கனடா, அவுஸ்திரேலியா, மற்றும் ஐரோப் பிய நாடுகளுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை.
இன்று, பழையன மறந்து புதிய உறவு கள் முளைவிடத் தொடங்கினாலும், 83 இன் எதிரொலி உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கின்றது. '.
"இனியொரு விதி செய்வோம்- அதை
எந்த நாளும் காப்போம்!"
மல்லிகை நவம்பர் 2007 & 29

Page 16
༦༠༢་ཚིལ་
18 క్ష్మీః .
UDVIGATOTIGJ FT MthifilůT GHAÚlvING
- ஏ. எஸ். எம். நவாஸ்
ரஜனிகாந்தின் 'சிவாஜி படம் வந்ததுதான் வந்தது வசூலில் அந்தக்கால வசூல்மன்னன் எம். ஜி. ஆரை மிஞ்சிய 'சிவாஜியாகிவிட்டது. விமர்சனரீதியாக (இலங்கையில்) எதிர் அலசல்களையும் அள்ளிக் கொண்டு தலை குனிந்திருக்கும் 'சிவாஜி'யை மிகச் சிறந்த ஒரு கோமாளிப்படம் என நமது இலங்கைப் பத்திரிகையொன்று விமர்சித்துள்ளது.
சுஜாதா என்ற பேனா வியாபாரி, ஷங்கர், ரவுற்மான், விவேக், ரஜனி என்ற வியாபாரிகள், ஏ. வி. எம்' என்ற வியாபாரத் திமிங்கிலம் என்று எல்லாம் ஒன்றிணைந்து தந்திருக்கும் 'சிவாஜி' எனும் சரக்குச் சந்தையில் நல்ல விலை போயிருப்பதாகக் கருத்துப் பட அந்த வீரமான வாரப்பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. அது போதாதென்று "இருக்கிறம்" என்ற நவ F655-605 &nL"ஒரு சிங்கமும் சில பன்றிகளும்' என்ற பொறி கிளப்பும் தலைப்பில் தனித்துவமான ஒரு விமர்சனக் கட்டுரையை பதித்துள்ளது. "மானிடர்களுக்குப் பால் குடிப்பருவம் என்று ஒன்று இருக்கிறதாம் ரஜனி தனது வாயை வைத்துப் பண்ணுகின்ற சேட்டைகளைப் பார்த்தால் அந்தப் பால் குடிப் பருவத்திலிருந்து இன்னும் அவர் வளரவில்லையோ என்று ஐயமாக இருக்கிறது" என்று இருக்கிறம்' சஞ்சிகை கூறுகிறது. இவை உண்மையாகவே எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்கள். தமிழகத்திலோ வேறுவிதம். சிவாஜிக்கு கூஜா தூக்கி விமர்சனங்களை வணிகப்படுத்தியுள்ளனர்.
மல்லிகை நவம்பர் 2007 & 30
 
 
 

இவை தவிர கல்வித்துறைக்குப்
புறம்பான சினிமாப் படைப்புகளை
மாணவர்கள் திரையரங்கு சென்று ரசிக்கச் செய்யும் விளம்பர யுத்திகள் கூட இப்போது பரவலாக இடம் பெற்று வருவதை அறியலாம்! இது வெறுக்க த்தக்கது. தொலைக்காட்சியே அல் லாத அக்கால கட்டத்தில் மாணவர் களுக்கான விஷேட காட்சிகளாக "கப்பலோட்டிய தமிழன்', "ராஜ ராஜ சோழன்' ஆங்கிலப் படங்களான "பென்ஹர்', 'ரென் கொமான்மென் ட்ஸ்" ஆகிய படங்கள் திரையரங்கு களில் காண்பிக்கப்பட்டது. உண்மை ஆனால் குறிப்பிட்ட அத் திரைப்படங்களில் உள்ளடக்கப்பட்டி
தான்!
ருந்த விஷயங்கள் மாணவர்களின் பரீட்சை வினாத்தாள்களுக்கு உகந் தவையாக அறிவுமட்டத்தால் கணிக் கப்பட்டிருந்தன. எனவே பாடசாலை அதிபர் அனுமதியுடன் ஆசிரியர்களே மாணவ, மாணவிகளை இவ்வகை யான சிறந்த திரைப்படங்களைக் கண்டுகளிக்க திரையரங்குகளுக்கு விஷேடமாக அழைத்துச் சென்றும் உள்ளனர்.
இத்தகைய அறிவுசார் படங்களு டன் சமீபத்தில் வெளியான 'சிவாஜி யை ஒப்பிட முடியுமா? மாணவ, மாண விகளும் ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக் கூடிய படமா சிவாஜி? ஒட்டுத் துணியுடன் ஆடும் ஸ்ரேயாவை ஒட்டு மொத்தமாக அதற்
கென்றே பயன்படுத்தியிருக்கிறார்கள் சிவாஜியில். உலகமயமாக்கலைச் சொல்லப் போய் சுஜாதா தன் கதை 'கறுப்புப் பணத்தை கொஞ்சம் பதம் பார்த்தி
யிலே கண்ணதாசனின்
ருக்கிறார்.
திரையரங்கிலே இப்படத்தை குறிப்பிட்ட தினமொன்றில் பாடசாலை அட்டையுடன் வரும் மாணவ, மாணவி களுக்கு என்ற விளம்பரத்தை அண்மையில்
'விஷேட அரைக்கட்டணம்’
நமது தேசியப் பத்திரிகையொன்றில் பார்த்தேன். தலைநகர் "சிட்டி’ திரை யரங்கு ஒன்றே இவ்விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறது. இத்தகைய நச்சு விளம்பரங்கள் நமது வளரும் மாணவர் சமூகத்தைக் கெடுதலான பாதைக்கே அழைத்துச் செல்வது நிச்சயம்!
கல்விக் கருத்தரங்குகள் அவசி யமாக்கப்படும் மாணவர் சமூகத்திற்குத் திரையரங்குகளுக்கு அழைப்புக் கொடு ás (5Lb 96ij 660) sum 60T (3Lor a LDrt 60T சினிமா விளம்பரங்களைக் கூட நமது தேசியப்பத்திரிகை(கள்) ஒரு விளம்ப ரமாக ஏற்கிறதே அதுதான் வருத்தம்.
ஒத்துழையுங்கள்
மல்லிகை நவம்பர் 2007 * 31

Page 17
உறவுப் பாலம்
- ந. பாலேஸ்வரி
ராஜனின் வீடு தெருவோரமாக அமைந்திருந்ததால் அவன் பெரும்பாலும் முன்
கதவைத் திறந்து விட்டு முன் விறாந்தையில் அமர்ந்தபடிதான் வாசிப்பான். அவனுக்குப் புத்தகங்கள் என்றால் உயிர். படிக்கும் போது நல்ல அர்த்தமுள்ள வசனங்கள் உதாரணங்கள் இருந்தால் அவற்றை மனனம் செய்து விடுவான். அப்படி ஒரு ஈர்ப்பு.
“என்னப்பா ஏதோ பரீட்சைக்குப் படிப்பது போல் படிக்கிறீர்களே..? அப்படி என்னப்பா அந்தப் புத்தகத்தில் உள்ளது.?’ என்று அவன் மகன் அவனைக் கேலி செய்தான்.
“டேய் விசாகா. உங்களுக்கெல்லாம் இப்ப வாசிப்புப் பழக்கம் இல்ல. சப்பித்துப்புவது போல தொலைக்காட்சியைப் பார்த்து ரஸித்துவிட்டு உடனேயே அதை மறந்து விடுவீர்கள். நன்மை தீமை ஏதென்று தெரியாது. அது பற்றிய அக்கறையும் கிடையாது. இன்றைய வாழ்க்கை அப்படி மாறிவிட்டது. எல்லாமே இயந்திரகெதிதான். நாங்கள் சகலதையும் உண்டு ரஸித்து சுவைத்து தேவையற்றதை வெளியே உமிழ்ந்து விடுவோம்."
“சரி சரி. இப்ப உனக்கு என்ன வேணும்.? சொல்லு செய்து தாறன். அது என் கடமை. இது என் உரிமை”
"ஐயோ அப்பா. உங்கள வாசிக்க வேண்டாம் என்டு நான் சொல்லல்ல. ஆனா பழங்காலத்தை விட்டு, கொஞ்சம் உங்களை மொடனைஸ் பண்ணுங்கோ எண்டுதான் சொல்ல வந்தன்."
"ஓஹோ எஞ்ஜினியரிங் ஸ்ருடன்ற் அல்லவா..? என்னையும் புதுமையாக்கப் பார்க்கிறியா..? அது முடியாதடா தம்பி. நீ வேணுமெண்டால் உன்னை மாற்றிக்
கொள்."
"அதுசரி. நாளைக்கு எந்த பஸ்வண்டியில் கண்டி போக உத்தேசம்?"
“என்னப்பா இது புதுக் கேள்வி? வழக்கம் போல காலை ஆறுமணி பஸ்தான்."
"அப்ப இந்த வருடத்தோட உன் படிப்பு முடியப் போகுது. அதன் பின் நீ ஒரு பொறியியலாளர்."
‘கடமை நேர்மை, கண்ணியம், தாய்மொழிப் பற்று, இனப் பற்று என்று பல நல்ல விடயங்களைக் கடைப்பிடித்து நடந்து கொள்."
“என்னப்பா பொடி வைச்சுப் பேசிறியள்.? உங்க மகன்தானே அப்பா நான். உங்களப் போல மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடப்பன். சரி நீங்க
மல்லிகை நவம்பர் 2007 & 32

வாசியுங்க அப்பா. நான் கொஞ்சம்
வெளியால போட்டு வாறன்." .
கூறிவிட்டு வெளியே வாசலைக் கடந்து செல்லும் மகனைப் பார்த்தபடியே அமர்ந்தி ருந்தான் ராஜன்.
மகனைப் பற்றிய ஒரு சில விடயங்கள் அவன் காதுக்கெட்டிய போதும், ராஜன் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. ஆட்டம் ஏற்பட்டால் வீடே ஆடிவிடும் என்றொரு பயம் பீதி எதையும் தாங்கும் இதயம் இருப்பது போன்ற ஒரு போலித்தோற்றம் அவனில் நிழலாடியதை அவன் மட்டுந்தான் அறிவான்.
அவன் மனைவி சித்திராவும் அப்படி யான ஒரு போலி வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால் ஒன்றும் புரியாதவன் போல் நாடகமாடினான் அவன்.
விசாகன் பற்றிய அந்த விடயத்தை இருவருமே அறிந்திருந்தனர். ஆயினும் அவனிடம் அதுபற்றி நேரடியாகக் கேட்கும் துணிவு இருவருக்குமே இருக்கவில்லை. அவனாகக் கூறட்டும் என்று காத்திருந் தனர். எங்கள் மகன் விசாகன் இப்படி? இன் றைய சூழ்நிலையில் அவன் ஒரு பெரும் பான்மை இனப் பெண்ணைக் காதலிக்க அவனால் எப்படி முடிந்தது. அதனாற்தான் அதற்குக் கண்ணில்லை என்றார்களோ..? இது எப்படி அவனுக்குச் சாத்தியமாகியது? எங்கள் இருவரையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லையே.
ஒருவேளை நாங்கள் காதல் மணம் புரிந்ததால் அவனுடைய காதலையும் அனுமதிப்போம் என்ற நப்பாசையோ. அசட்டுத் துணிவோ தெரியவில்லை.?
திருமணத்தின் பின் மூன்று வருடங் கள் ஓடிய பின்னர்தான் விசாகன் பிறந் தான். அதனால் கொஞ்சம் செல்லமும் கூடவே வளர்ந்தது. அதன் விளைவுதான் இன்றைய நிலை.
சில விடயங்களை ஜீரணி சிலவற்றை அலட்சியப்படுத்து என்று அவன் எங்கோ படித்த ஞாபகம்.
ஆனால் இது. அந்த இரண்டி னுள்ளும் அடங்கக் கூடியதில்லையே..!
அவனால் இதை ஜீரணிக்கவும் முடிய வில்லை. அலட்சியப்படுத்தவும் முடிய வில்லை. −
ஜீரணிப்பதால் பல உபாதைகளை எதிர் கொள்ள நேரிடும். அலட்சியப் படுத்தினால் உறவே அறுந்துவிடும்.
பெரும்பான்மை மாணவி ஒருத்தியு டன் தனக்கு நெருங்கிய சிநேகம் உண்டு என்பதை அவன் தெரியப்படுத்தாமல் இல்லை. ஆனால் அது தாம்பத்திய உறவுவரை போய் நிற்கும் என்று அவனோ சித்திராவோ எதிர்பார்க்கவில்லை.
ராஜனும் சித்திராவும் விசாகனைப் பார்க்க மாதம் ஒருமுறை கண்டி சென்று வருவார்கள். ஆயினும் இவன் மனதில் பதிந்த பெண்பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. பாடசாலை சிநேகம் படலை வரை என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அது வாழ்க்கை வரை வந்ததை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
இத்தனைக்கும் அவர்கள் அந்தப் பெண்ணை இதுவரை கண்டதேயில்லை. ஆனால் கதை பலமாக அடிபட்டது. மகனி டம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
மல்லிகை நவம்பர் 2007 * 33

Page 18
G8 aEGS6L6oTb 6T 6öT MOT sio LD6oT Lb Quib கொடுக்கவில்லை.
விசாகன் அடுத்த நாள் கண்டி போய் விட்டான். இன்னும் நான்கு மாதத்தில் பரீட்சை. அப்புறம். அப்புறம். அவன் யாரோ. அவள் யாரோ என்றுதான் அவன் பெற்றோர் நினைத்து மனதைச் சாந்தப் படுத்தினர். விசாகனும் அதுபற்றி எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.
மகனும் போய் ஒரு மாதமாகிவிட்ட தைப் பெற்றோர் உணர்ந்தனர். அடுத்த வெள்ளிக்கிழமை மாலை கண்டி புறப்பட இருவரும் உத்தேசித்தனர். நினைத்தபடி போயும் விட்டனர். ராஜனின் தூரத்து உறவினரான கந்தசாமி என்பவர் வீட்டில் தான் அவர்கள் தங்குவது வழக்கம். இம் முறையும் கண்டியில் அவர்கள் வீட்டுக்குச் சென்று முகம் கைகால் கழுவிவிட்டு கந்த grtuó குடும்பத்தினருடன் கோயிலுக்கும் போய் விட்டு வந்தனர். அடுத்தநாள் மதியம் பேராதெனியா போவதற்கு உத்தேசித்தனர்.
அடுத்தநாள் மதியம்- எண்ணியபடி இருவரும் பேராதெனியா பஸ்வண்டியில் ஏறிப் பல்கலைக்கழகம் சென்றனர். வழக்கம் போல் அவர்கள் வந்திருப்பதை அறிந்து விசாகன் பெற்றோரைப் பார்க்க வந்தான். இம்முறை தனியாக இல்லை. கூட ஒரு பெண்ணும் வந்திருந்தாள்.
ராஜனுக்கு ஓரளவுக்கு எல்லாம் புரி ந்து விட்டது. அவன் சித்திராவைப் பார் த்தான். அவள் கண்களில் ஒரு குழப்பம்,
"அம்மா எப்பம்மா வந்தீங்க. LU ணம் எப்படி. ஒரு பிரச்சனையும் இல்ல த்தானே. அப்பா. பேசுங்களன். ஒ.
சொல்ல மறந்திட்டன். இவ என் உடன்
மாணவி. பெயர் பவித்திரா. நல்ல பிள்ளை
யம்மா... எனக்கு நல்ல பாதுகாப்பும் உதவியும்."
"பவித்திரா. மை பேறன்ட்ஸ்."
அறிமுகஞ் செய்தான்.
அவள் இருகரம் கூப்பி நமஸ்கரித் தாள். அவர்கள் தலையாட்டி ஆசீர்வதித் தனர்.
அவள் தமிழில் இரண்டு வார்த்தை சுகமா...?' கூறிவிட்டு
ஆங்கிலத்தில் உரையாடினாள்.
"வணக்கம்.
சித்திரா மகனைக் கேள்விக் குறி யோடு பார்த்தாள். எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா என்று கேட்பது போல் இருந்தது அவன் பார்வை.
'பரீட்சை எழுதிப் போட்டு வரேக்க தனியாகத் தானே வீட்ட வருவாய்...?
தந்தை மகனைப் பார்த்துச் சந்தேகத் துடன் வினவினார்.
"அம்மா கன்ரினில தேத்தண்ணி குடி ப்பம் வாங்களன். அப்பா போவமே..? மகன் கதையை மாற்றினான்.
“டேய் முதல்ல அப்பாட கேள்விக்கு விடை கூறிப் போட்டு ரீ பற்றிப் பேசுவம்." சித்திரா.
"கம் வீ வில் ஹாவ் ரீ’ வாங்க ரீ குடிப்பம். பவித்திராவின் அழைப்பு.
'தம்பி. நாங்கள் சனிக்கிழமை விரதமப்பா. இனி கோயிலுக்குப் போய்த் தான் எதுவும் சாப்பிடுவம். அப்ப நாங்கள் வாறம்..." சித்திரா பட்டும் படாமலும் கூறினாள்.
மல்லிகை நவம்பர் 2007 率34

ராஜன் தெருவாயிலை நோக்கி நடக்கச் சித்திரா பின் தொடர்ந்தாள். கூடவே விசாக னும் பவித்திராவும் அவர்களுடன் சென்று வழியனுப்பி வைத்தனர்.
ராஜனும் சித்திராவும் மெளனமாகச் சிறிது தூரம் நடந்த பின் “என்ன சித்திரா உன் மகனின் தோழி பற்றி என்ன நினை க்கிறாய். ?" என்று அந்த மெளனத்தைக் கிழித்தெறிந்தான் ராஜன்.
அவள் வாய்மூடி மெளனியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதில் ஆயிரம் வினா க்கள் தொக்கி நின்றதை ராஜனால் உணர முடிந்தது.
அவள் மெளனமாக மீண்டும் தன் நடையைத் துரிதப்படுத்தினாள். அவன் அவளை நிதானமாகப் பார்த்தான். ஒரு எரிமலையின் குமுறல் அவள் கண்களில் தென்பட்டது. அது எப்ப வெடிக்குமோ என்றொரு பயம் அவனுள் நிலவியது.
அது வெடிக்கும் பட்சத்தில் அவர்கள் குடும்பமே அதில் பஸ்மீகரமாய் விடும் என் பதை அவன் உணர்ந்தான்.
அதனால் அதை அப்படியே அவளை உள்வாங்கச் செய்யவேண்டும் என்ற நல் லெண்ணத்துடன் "சித்திரா வாய் திறந்து என் வினாவுக்குப் பதில் கூறு.” என்று அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் அவனை நிமிர்ந்து கூடப் பார்க் காமல் மெளனமாகவே நடந்தாள்.
'ஏன் இந்த மெளனம் அம்மா... அம்மா." அவன் தனக்குள்ளாகவே அவ ளுக்கு மட்டு கேட்கும்படி பாடினான். அவள் கோபத்தோடு அவனைத் திரும்பிப் பார்த்த போது அவனும் தற்செயலாகத் திரும்பினான்.
இருவர் நோக்கும் ஒரு முகமாக இருந்தது.
"உங்கள் அபிப்பிராயம் என்னவோ?" அவள் அவனைப் பார்த்து வெட்டொன்று துண்டு இரண்டாகக் கேட்டாள்.
அவன் எதிர் பார்த்த வினாதானே!
அவளைப் பார்த்தபோது அவள் முகம் எதிர்த் திசை நோக்கித் திரும்பியிருந்தது.
'பிள்ளையைப் பார்த்தால் கள்ளங்க படம் அற்ற தன்மை தெரிகிறது. கல்லூரி சிநேகம்தானே. அறியாமலா கூறி வைத் தார்கள். பாடசாலைச் சிநேகம் படலை வரையென்று. அப்படியே வைத்துக் Gasrsi (36 ITL b.”
"அப்ப நீங்கள் என்னை விடக் கூடச் சிந்தித்திருக்கிறீர்கள் போல...!"
“என்ன சித்திரா. என்னைப் போய் இப்படி. ஏன் என் பதிலில் சந்தேகமா..?”
'இல்லை.”
'சித்திரா இன்றைய நிலையில் பலதையும் சிந்தித்து வரையறைப்படுத்த வேண்டியுள்ளது. ஆயினும் நம்ம பையன் அந்த அளவுக்குப் போகமாட்டான் என் றொரு நம்பிக்கை எனக்கு, உமக்கெப்ப g(3urt?"
"என்ன பேச்சப்பா இது.? பாவம் விசாகன் அவன் தன் சிநேகிதியை எமக்கு அறிமுகஞ் செய்து வைத்ததும் போதும் நீங்க படுகிறபாடும் போதும்.”
"அப்ப உமக்கு."
'எனக்கென்ன? இதுவரை நான் ஏதா வது பேசினனானே? நீங்களே கேள்வியும் கேட்டு விடையும் சொல்லிப் போட்டியள்!"
மல்லிகை நவம்பர் 2007 率 35

Page 19
"ஒஹோ அப்ப தவறு முழுக்க என் மேலதான்! இனி இது பற்றி வாயே திறக்க Lost LLsö SlbLDT..."
"ஐயோ! ராஜன் ஒரு சின்ன விடய த்தை ஏன் இப்படிப் பூதாகரமாக்கிறீர்கள். அடுத்த நான்கு மாதங்களின் பின் அவள் யாரோ. அவன் யாரோ.”
‘ஆமாம் நீர் கூறுவதும் சரிதான் சித்திரா. இறுதிப் பரீட்சைக்குப் பின்னர் தான் உமக்கு பரீட்சை ஆரம்பமாகப் போகிறது. அப்பதான் நீர் புதிய சிலபஸ் படிக்க வேண்டிவரும் என்று மனதுக்குள் நினைத்தவனாய் 'கோயிலுக்கு எப்ப போவம் என்றான்.”
'நாம கோயிலுக்குப் போயிற்றே வீட்டுக்குப் போகலாம். கந்தசாமி அண் ணனை ஏன் அலைக்கழிப்பான்."
“sif D bipl.- 6Subrub!"
சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசா மல் மெளனமாகவே நடந்தனர்.
"ஹலோ ராஜ்' அந்த அழைப்பு இருவரையும் திகைக்க வைத்தது.
“என்னடா எத்தனை வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறன், பேயறைந்த LDחg8jh நிற்கிறாய். அது சரி இப்ப கண்டியிலேயே..!"
'இல்ல நடேஸ் சும்மா வந்தனான். ஒரு சின்ன அலுவல், அது சரி. நீ இங்க?"
*நான் இப்ப கண்டி வாசியாகிட்டன்."
‘அப்படியா. அப்ப மலையகப்
GustoT60ort 2'
'இல்லடா. பெரும்பான்மையினம்.
கண்டிதான் பிறப்பிடம். ஆனா நல்ல பெண்'
"அப்ப. லவ் மறிஜ்எண்டு சொல்லு.?
“ஒரு தமிழ்ப் பண்டிதற்ற மகன். இப்ப? அதுசரி இதுக்கு அப்பா சம்மத்திச் சிட்டாரே. ?・
"உனக்கு அப்பாவைப் பற்றித் தெரியு ந்தானே. அம்மா எவ்வளவோ சொல்லியும் அப்பா என்னைக் கை கழுவிப் போட் டார்." அவன் நாக்குழறியது.
'அம்மா. படிதாண்டாப் பத்தினி தானே. அப்பா எவ்வழி அவளும் அவ் வழிதான்! முட்டாள் பிடிவாதத்தால் இப்ப எல்லாரும் கண்ணிர் வடித்துக் கொண்டிரு க்கிறம்."
“சரி அப்பாவோட ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணப் பார். காலம்தான் பதில் சொல் லோனும், கண்டிக்கு ஏன்டா வந்தனி.? படிக்க வந்து மாட்டிக் கொண்டன்டா..."
'சரி இப்ப முடிஞ்ச கதையைப் பற்றிப் பேசி என்ன பலன். அதுதான் விதிடா..!"
“சரி ராஜ் நேரமாகுது நான் வாறன். விடைபெற்றுச் செல்லும் நடேசனையே பார்த்துப் பெருமூச்செறிந்தான் ராஜ்”
"இரண்டடி எடுத்து வைத்த நடேஸ் திரும்பி வந்தான். ஆமாம்! உன் மனை வியை அறிமுகம் செய்யல்லேயடா..."
珍
“ஒ சொறி. பெயர் சித்திரா. என்ர ஊர்ப் பெண்தான். ge 6ft 60601 C3 unts விரும்பித்தான் செய்தம். நல்ல காலம் நம்ம இனம்”
"டேய் ராஜ். எதிர்காலத்தில நிச்சயம் எங்கட நாட்டுக்கு ஒரு உறவுப்பாலம் தேவை. அதற்கு நானும் ஒரு அத்திவார க்கல் வைத்திருக்கிறன் என்று நினைத்துக்
மல்லிகை நவம்பர் 2007 * 36

sk
S3-3
++++++++ -----------------------------------
தியார் விழா வாழ்த்துக்கள்
தனது நா வன்மையாலும் அயராத சிந்தனை வளத் தாலும் தமிழ் கூறும் நல்லுலகமெங்குமே தனக்கென் றொரு பாணி இலக்கியப் பேச்சுத் தளத்தை நிறுவியது டன், அதைப் பேணிப் போற்றிப் பாதுகாத்து வரும் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களுக்கு 24. 10, 2007 அன்று பொன் விழா ஆண்டாக மலருகின்றது.
மல்லிகையின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வெய்துகின்றோம்.
水水米水水水水水米米米米米米米米米米米米米米水米米水米水水水水水水米水米水水来米米水米水水米米水米水来水水米米米来来
-ஆசிரியர்
கொள். ராமர் பாலத்துக்கு அநுமான் போட்ட கல் மாதிரி.”
சித்திரா சிரிக்க மூவரும் சிரித்த சத்தம் அந்தத் தெருவையே அதிர வைத்தது.
'டேய் நடேஸ் ராமர் பாலமே இத் தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னும் ஆட் டம் காணுதேடா..."
"ஆனா இது அசையாது." சிரித்தபடி
கூறிச் செல்லும் நடேசைப் பார்த்து இரு
வரும் கூடவே சிரித்தனர்.
மீண்டும் ஓடி வந்தான் நடேஸ் "டேய் உனக்கு ஒரு மகன் எண்டுதானே சொன் னாய். தற்செயலாக அவனும் இந்த உறவுப் பால அங்கத்தவனானால் நீங்கள் இருவ ரும் சேர்ந்தே அத்திவாரக் கல்லை எடுத்துக் கொடுங்கள்."
'காரணம் உங்கள் எதிர்ப்பு இந்த உறவுப் பாலத்தை நிறுத்தி விடமுடியாது. இது ஒரு தொடர்கதை."
"ஆக உங்கள் இருவரின் எதிர்கால நிம்மதியையும் மகனின் எதிர்கால வாழ்க் கையையும் பாழாக்கி விடாதே என் அப்பா
Lorrgfl!”
"உறுவுப் பாலக்கல் இடும் போது எனக்கும் ஒரு அழைப்பு விடு. நடேஸ் 115 பேராதெனிய வீதி, கண்டி. என் முகவரி."
கூறிவிட்டு விரைந்து செல்லும் நடே சைப் பார்த்து இருவரும் மெய்மறந்து நின்றனர்.
அவர்கள் உறவுப் பாலத்துக்கு அத்திவாரக்கல் இடுவதா. எறிவதா..? அதுதான் தற்போது அவர்கள் சிந்தனை:
மல்லிகை நவம்பர் 2007 & 37

Page 20
நினைவழியா நாட்கள்- 9
அரிச்சந்திறன்
- பரன்
சைக்கிளில் இருந்து இறங்கியபடியே சபா சொன்னான், "தேவன், காத்துப் போகுது போல." என் சைக்கிளில் இருந்து இறங்கி அருகே போனேன். எந்தச் சில்லு என்று கேட்கமுன்னரே பின்சில்லின் வால்கட்டையைக் கழற்றினான். "புஸ்." என்ற சத்தத்துடன் மிச்சக் காற்றும் போனது.
"மடவேலை. இன்னும் கொஞ்சத் தூரம் போயிருக்கலாம்.' என்றேன். "பரவாயில்லை, வாடா. இரண்டு பேருமே உருட்டிக் கொண்டு போவம்' என்றான்.
"எவ்வளவு தூரமடா உருட்டுறது?’ எனக்கு எரிச்சலாக இருந்தது.
சபாதான் நெருக்கிக் கூட்டிக் கொண்டு வந்தான். ரவீந்திரனிடம் போய் நோட்ஸ் வாங்கிக் கொண்டு வருவோம், என்று. முதலில் மாட்டேன் என்றுதான் சொன்னேன். ஒரு சின்னப் பிரச்சினையில் ரவிக்குக் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டேன். என்னில்தான் பிழை என்று எனக்கும் தெரிந்திருந்தது. இருந்தாலும். மன்னிப்புக் கேட்க வெட்கமாக இருந்ததால் பேசாமலே இருந்துவிட்டேன்.
பின்புதான் என் முட்டாள்தனம் உறைத்தது. ரவியின் நோட்ஸ் கொப்பிதான் எங்கள் எல்லோருக்கும் வேதப்புத்தகம். மணியான கையெழுத்தில் அழகாக எழுதியிருப்பான். அவனது கொப்பியைப் பார்த்து எங்களது கொப்பியில் எழுதுவது தான் வழமை.
"நீயே போய் நோட்ஸ் கேட்டால். மன்னிப்புக் கேட்டமாதிரி இருக்கும்." என்று சொல்லித்தான் சபா கூட்டி வந்தான்.
குமரேசன் மாஸ்ரரின் ரியூற்றரி, பக்கத்து ஒழுங்கையில் இருப்பது ஞாபகம் வந்தது. அங்கே போய், "சைக்கிள் பம்ப் கேட்போம்" என்றேன்.
'போடா உந்த ஒழுங்கை வழியே போனால். இன்னும் கொஞ்சம் முள்ளுக்குத்தும். பிறகு ரியூப் தான் மாற்ற வேணும். இங்கை மெயின் ரோட்டிலேயே யாராவது தெரிந்தவர் வீட்டில் சைக்கிளை விட்டிட்டு, ரவி வீட்டில் போய் பம்ப் எடுத்து வருவம்."
அதுவும் சரி என்று பட்டது.
"இன்னமும் கொஞ்சத் தூரம் போனால் காயத்திரி வீடு வரும், அங்கே சைக்கிள்ை விட்டிட்டுப் போவம்' என்றான்.
மல்லிகை நவம்பர் 2007 * 38

எனக்குத் 'திக்கென்றது. உண்மை யாத் தான் ரியூப்பில் காற்றுப் போயி ற்றோ. அல்லது இவன்தான் கழற்றி விட்டானோ என்ற சந்தேகமும் வந்தது. காயத்திரி எங்கள் பாடசாலைக்குப் பக்க த்துப் பாடசாலையில் படிப்பவள். பாட சாலைகட்கிடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள வருவதால், அவளுக்கு என்னையும் சபாவையும் தெரியும். இவனும் பல தடவைகள் சைக்கிளில் 'கலைத்துத் திரிந்திருக்கிறான். கனக சபை மாஸ்ரர் ஒருமுறை "படிக்கிறதை விட்டிட்டு ஆருக்கும் பின்னாலையும் சுத்தாதையும்" என்று எச்சரித்தார். பிறகு தெரிந்தது, அவரின் தமையன் மகள்தான் காயத்திரி என்று.
“டேய். வேணுமெண்டே காத்தைப் போக்காட்டினனி.?"
“மடையன் மாதிரிக் கதையாதை. இப்ப செய்யிறதைப் பார். அந்தப் பெரிய கேற் போட்ட வீடுதான். போய் பெல்லை
".والموك
இனி அவனிடம் கதைப்பதில் பிரயோ சனமில்லை என்று பட்டது. சைக்கிள் பெல்லை அடித்தேன். சின்னப் பொடியன் ஒருவன் எட்டிப் பார்த்து, "என்ன வேணும்" என்றான்.
"காயத்திரி இருக்கிறாவா..?"
உள்ளே போனவன் இன்னொரு மனுசியுடன் வந்தான். சாடையில் காயத்தி ரியின் அம்மா போலிருந்தது.
'ஆர் தம்பி நீர்..?”
"நான் தேவன். génifr & UT....
காயத்திரியின்ரை பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துப் பள்ளியில படிக்கிறம். அவவுக் கும் எங்களைத் தெரியும். சைக்கிளுக்குக் காத்துப் போட்டுது. அதுதான்."
"யாரம்மா." என்றபடி காயத்திரியும் வந்தாள்.
'9. . . . . தேவனோ. உள்ள
வாங்கோ. என்ன விசயம்?"
"இல்லை. சைக்கிளுக்குக் காத்துப் போட்டுது. "பம் இருக்குமோ..? என்று இழுத்தேன்."
'பிள்ளை இவையளைத் தெரி யுமோ..?" காயத்திரியின் காதுக்குள் குசுகுசுத்தார் தாய்.
"ஒம். ஓம். தெரியும். ஆனால் இஞ்சை சைக்கிள் "பம் இல்லை."
"சைக்கிளை இஞ்சை விட்டிட்டு. மாலுசந்தியில ரவீந்திரன் வீட்டை போய் "பம்’ எடுத்திட்டு வரலாம் எண்டு பாக் கிறம்." என்றான் சபா. t
"அதுக்கென்ன தம்பி. விட்டிட்டு போங்கோ' என்றார் காயத்திரியின் தாய்
வெளியே வரும் போது கொஞ்சL யோசனையாக இருந்தது. இதுவும் மாஸ் ருக்குத் தெரிய வந்து எனக்கும் மங்களL கிடைத்தால். சபாவிடம் சொன்னேன்
"சும்மா பயப்பிடாதை. இப்ப என்ன செய்து போட்டம்.? காத்துப் போட்டுது. சைக்கிளை வைக்க இடம் கேட்டம். என்ன பிழை?
"நீதானேயடா காத்தைப் போக்காட்டி
SOT Tuul'
மல்லிகை நவம்பர் 2007 & 39

Page 21
"சத்தம் போடாம வாடா. பெரிய அரிச்சந்திரன்தான் நீ."
ரவீந்திரன் வீட்டை போனதும் அவன் ஓடி வந்து வரவேற்றான். "வாடா இப்ப வெண்டாலும் வழி தெரிஞ்சுதே." என் றான். எனக்கு வெட்கமாக இருந்தது. "நான் எப்பவோ மறந்திட்டன். நீதான்." என்று சிரித்தான். இவனைப் போய் அடித் தேனே என்று மனம் சங்கடப்பட்டது.
ரவியும் அவனுமாக சைக்கிள் "பம்" பையும் எடுத்துக் கொண்டு ரவியின் சைக் கிளில் போனார்கள். நான் ரவியின் ക്രസut தந்த தேநீரைக் குடித்து முடிய, இருவரும் திரும்பி வந்தார்கள்.
'தம்பி. நீரும் தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப்போம்." ரவியின் தாய் சபா வை கூப்பிட்டார்.
"நாங்கள் காயத்திரி வீட்ட குடிச்சிட் டம் அம்மா” என்றான்.
சபாவைப் பார்த்தேன். முகத்தில் பெருமிதம் ‘எப்பிடி என் வேலை" என்று கேட்குமாற் போல. கேற்றடியில வைத்து ரவியிடம் சொன்னேன், "மச்சான். இவன் என்னையும் உன்னையும் சேர்த்துப் பேக்காட்டுறான். கவனமா இரு. பிறகு எங்கட தலைதான் உருளும்"
"போடா. காயத்திரி இவனுக்கு மசியமாட்டாள்." ரவி சிரித்தான்.
ஏ. எல் சோதனையின் போதுதான் மீண்டும் காயத்திரியைக் கண்டேன். ரிசல்ட் வந்தது. நான் பெயில் என்று உறுதி யானது. அதற்காக என்னைவிட ரவிதான் அதிகம் கவலைப்பட்டான். அவன், சபா, காயத்திரி எல்லோருக்கும் யூனிவேசிற்றி க்கான புள்ளிகள் கிடைத்திருந்தன.
“சபா.யூனிவேசிற்றியில போய் அவ ளிட்டைச் சான்ஸ் கேளடா" என்றான் ரவி.
'இல்லையடா.. நான் லண்டனில அண்ணாவிட்டப் போறன்."
"அப்ப காயத்திரி. விஷயத்தை. விட்டிட்டியா?" சபா ஒன்றும் சொல்லாமல் கொஞ்சநேரம் இருந்தான். 'என்னடா சொல்லன்ரா..? ரவி கிண்டினான்.
: 'இல்லை மச்சான். அவளைக் கேட்டன், மாட்டன் எண்டிட்டாள். படிக்கிற வயதில இதென்ன விசர் வேலை எண்டு திட்டினாள்." 两
'அப்ப என்ன. லண்டனுக்குப் போய் பாதிரியாராகப் போறியோ..?" என்று சிரித்தான் ரவி.
சபா லண்டன் போனதாக அறிந் தோம். தனக்கும் சொல்லவில்லை. என் றான் ரவி. திரும்பவும் ரியூற்றரி, ஏ. எல், ரெக்னிக்கல் கொலிஜ், சம்பந்தமே இல் லாத தொழில். ஆறு வருடங்கள் ஒடி ஒளி ந்தன. கொழும்பில் ரவியைச் சந்தித்தேன். பல்கலைக்கழக விரிவுரையாளனாக இருந் தான். மேற்படிப்புக்காக அமெரிக்கா போக இருப்பதாகச் சொன்னான். இனிமேல் அவ ன்னயும் சந்திக்கும் வாய்ப்பு இராது என்று மனம் சொன்னது.
தேரசைவது போல, வாழ்க்கை ஆற அமர உருளுகையில் காலம் ஓடியே விடுகிறது. மீண்டும் தொழில் மாறி, நண் பர்கள் சேர்ந்து. பிரிந்து. ஆனால் சபா வும் ரவியும் தட்டுப் படவே இல்லை.
மழை காரணமாக, எல்லா விமானங் களும் பிந்தி வந்தன. பயணிகளின் கூட்டம்
மல்லிகை நவம்பர் 2007 & 40

எக்கச்சக்கமாக இருந்தது. பெரிசுகளும் குஞ்சு குருமன்களும் கியூவில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. பரிதாபமாக இருந்தது. விரைவாகப் பயணிகளை அனுப்புமாறு கூறிவிட்டுத் திரும்புகையில் ஏதோ கசமுசா சத்தம்
பார்க்கப்
கணவன், மனைவி, மகன் என்று ஒரு
குடும்பம். அலுவலருடன் ஏதோ தர்க்கம் எட்டிப் பார்த்தேன். தெளிவில்லாத அறி விப்புப் பலகைகளால் ஏற்படும் வழமை யான சிக்கல்
தெரிந்த முகம்போல இருந்தது. "சபாவோ...' மனதின் மூலையில் மெல் லிய உற்சாகம், கிட்டப் போனேன். விசாரி த்துப் பார்க்க மனம் உந்தியது. Furt(86. தான் நம்பிக்கை வலுத்தது. நல்லாய்ப் பெருத்துச் சிவந்திருந்தான்.
"..... மன்னிக்கவும். நீங்கள் சபாநாதன் தானே...!" திடுக்கிட்டுத் திரும்பினான். என்னை மட்டுக்கட்ட அவனால் முடியவில்லை.
". நீங்கள் யார்.?" என்றான்.
பெயரைச் சொன்னதும் திகைத்துப்
போனான்.
"தேவன். சரியா மாறிட்டாய். முந்தி இருந்த பால்வடியும் முகம் இல்லை. பெரிய மீசை பொலிஸ்காரன் மாதிரி இருக்கிறாய்." என்று சிரித்தான். ஏறக்
குறைய இருபது வருடங்களின் பின் சந்திக்
கிறோம் என்று வியந்து கொண்டான்.
"எப்பிடி இருக்கிறாய்..?" திரும்பவும் என்னையறியாமலே ஏகவசனத்திற்கு தாவியிருந்தேன்.
'நல்லாய் இருக்கிறன். குடியும் குடித்தனமுமாக." அதே பழைய சிரி
ப்பு. நக்கல்
"இப்ப லண்டனில் பேர் சொன்னால் தெரியும் அளவுக்கு ஒரு வழக்கறிஞர், நான். மறந்துவிட்டேன். இது என் மகன் அசாந்த். மனைவி காயத்திரி'
காயத்திரியா. அதே காயத்திரியா. எப்படி மாறிவிட்டாள். என்னால் நம்ப முடியவில்லை.
எப்படி, என்று கேட்பது நாகரிக மில்லை என்று பட்டதால் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தேன்.
'வழக்கம் போல பேசாமல் இருக் கிறாய். எப்படி என்று கேளன்’ என்றான்
EFlls •
'எண்பத்துமூன்றுக் கலவரத்தில் இலங்கை அகதிகள் பலர் இலண்டனில் கொட்டுப்பட்டனர். அவர்களுக்கு உதவுகிற வழக்கறிஞனாக வேலை செய்தேன். காயத்திரி குடும்பமும் அப்படித்தான் வந்து சேர்ந்தவை. பிறகு இப்பிடி முடிஞ்சுது!”
"சைக்கிளுக்கு வால்கட்டை கழட் டின மாதிரி, இதுக்கும் ஏதும் பிளான் வைச் சிருந்தனியோ..?" என்றேன்.
சபாவும் காயத்திரியும் வாய்விட்டுச் சிரித்தனர். . நானுந்தான்! எங்கள் சிரிப்பின் காரணம் புரியாமல், அசாந்த் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மல்லிகை நவம்பர் 2007 * 41

Page 22
கருத்துல் களம்
ஜீவாவைக் சூளங்கப்படுத்தாத்ர்
உதயம் ஜூலை இதழில் முருகபூபதியவர்கள், ஜீவாவைப் பாராட்டி எழுதியுள்ள கட்டுரையிலுள்ள, சில முரண் நிலைகளை ஜீவாவை அறிந்தவன் என்ற வகையில் மிகச்சுருக்கமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பல ஆண்டுகளாக ஒரு தமிழ்ச் சஞ்சிகை இலங்கையில் தொடர்ந்து வெளிவருவ தென்பது ஒரு சாதனைதான். இந்த வகையில் ஜீவா பாராட்டுக்குரியவர். மறு கருத்தில்லை. மெச்சத் தகுந்தவர்களைப் பாராட்டும் போது தமது வக்கிர மன- உள்- எண்ணங்களை வெளியிடுவது வருந்தத்தக்கது, விரும்பத்தகாதது. ஜீவாவை தமிழ், தமிழென்கிற கட்சிகள், தமிழ் தேசியலாளர்கள், இயக்கங்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. விருதுகள் வழங்கவில்லை. மாறாக, சிங்கள அரசே வழங்கிக் கெளரவித்துள்ளது என்று, திரு பூபதியவர்கள் ஆயாசப்படுகிறார். இது மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற கதை. உண்மையென்ன? திரு பூபதியவர்கள் குறிப்பிட்ட எவையுடனும், ஜீவா என்றுமே தன்னை இணைத்துக் கொண்டவரல்ல. அதேபோல் அவைகள் எவையுடனும் எந்த நிலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவருமல்ல,
ஜீவாவின் அரசியல் பின்புலம், தளம், பணிகள் யாவும் தமிழ்தேசியலாளருடன் மாறுபட்டவை. தமிழ் எல்லோருக்கும் பொதுவானதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் இவர்களின் தளங்களும் பணிகளும் வேறானவை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கு, பெளத்த சிங்களப் பேரினவாத சூழலும், காலமும் நமக்குப் பொருத்தமான களமாக அமைகிறது. தெளிவாக அடையாளம் காட்டுகிறது.
t f
ஜீவா கொழும்பிலிருந்து எழுத்துப்பணி, வெளியீடு, விற்பனை சகலதையும் சுதந்திர மாகச் செய்கின்றார். உண்மைதான். ஆனால், இதே கொழும்பில்தான் மாமனிதர் சிவராம் எழுத்துப் பணியாற்றினார். அவருக்கு நடந்ததென்ன? கொடூரமாகக் கொலை செய்யப்பட் டார். மட்டுநகரில், நெல்லை நடேசன், அவரின் பணிமனை முன்பாகச் சுட்டுக் கொல்லப்பட் டார். யாழ்ப்பாணத்திலோ கான மயில்நாதன், தெருவில் கால் வைத்தால் கொலை நிச்சயமென்றாகிவிட்டது. பணிமனைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்.
மல்லிகை நவம்பர் 2007 * 42

ஜீவாவுக்குச் சாகித்திய பரிசு. அதே பரிசு சிபார்சு செய்யப்பட்ட அமரர் நெல்லை நடேசனுக்கு வழங்க மறுப்பு. ஜீவாவுக்குப் பரிசுகள், விருதுகள், பாராட்டுகள், பாதுகா ப்பு என்று அனைத்தும், மற்றவரர்களுக்கு மரணத்தை தவிர வேறு எதனையும் மறுப்பு. ஜீவாவுக்குத் தண்ணிர். மற்றவர்களுக்குக் assoT60ff.
மேற்படி, உண்மைகளை அடையாள ப்படுத்தும் கூர்மையான வேறுபாடுகளின் தொகுப்பு என்ன? இவர்களின் தளங்களும் பணிகளும் முற்றிலும் வேறுபட்டவையே. மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து முனைப்பு டன் பணி செய்யவிருந்த தன்னலமற்ற தமிழ்தேசியலாளர்களை, பேரினவாதம் இளமையில் பலியெடுத்துக் கொண்டது.
அனைத்து நிலைகளிலும் வழிகளி லும் பேரினவாதத்தால் வஞ்சிக்கப்பட்டு, மரணத்தையும், மரணத்துள்ளும் வாழும் அந்த மாமனிதர்களை காப்பதும் அவர்க ளின் தியாகத்தைப் போற்றி கெளரவிப்பதும் அவர்கள் சார்ந்த மக்களினதும் அவர்களின் விடுதலை அமைப்புகளினதும் தவிர்க்க முடி யாத தலையாய தேசியகடமையாகிறது.
இந்நிலையில், தமிழில்தான் பணி செய்கிறோம் என்ற போர்வைக்குள் அடிப் படையில் வேறுபட்டவர்களும் பெளத்த, சிங்கள பேரினவாதத்தால் போவழிக்கப்பட்டு பட்டங்கள் வழங்கி படங்காட்டப்படுபவர்களு க்கு, அதற்கு நேர் எதிர்திசையில் நிற்கும் உண்மையான, தமிழ் தேசிய விடுதலை அமைப்புகளிடமிருந்து, எந்த கெளரவிப்பை யும் எதிர்பார்க்கலாமா?
சாதாரண அறிவு படைத்த எவருமே இதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கமாட்
டார்கள். நாம் அறிவுபூர்வமாக சிந்திக்கத் தவறிவிட்டோம். அதன் எதிரொலியே திரு பூபதியவர்களின் இந்த மன அங்கலாய்ப்பு. இதற்கும் ஜீவாவுக்கும் எந்தத் தொடர்பு மில்லை.
மதிப்புக்குரியவர்களுக்கு மாலை போடுகிறோம் என்று எண்ணி மண்னை அள்ளி வீசாதீர்,
வாசகன்
ஜெகன்.
உதயம் வாசகர் ஜெகன் எழுதிய - 'ஜீவாவை களங்கப்படுத்தாதீர்' என்ற கடிதத்தை- முருகபூபதியிடம் காண்பித் தோம். அவரது பதிலையும் இங்கு பிரசுரிக் கின்றோம். உதயம் மாத இதழ் ஆகையி னால் பதிலையும் தாமதமின்றிப் பெற்று வெளியிடுகின்றோம்.
(உதயம் நிர்வாக ஆசிரியர்)
கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது- "இருக்கு மிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே" - என்றுதான் ஜெகன் சொல்ல வருகிறாரா? தமிழ்தேசியலாளர் களின் பக்கம் ஜீவா இருக்காதபடியால்தான் சிங்களத் தேசியவாதிகளின் விருதுகளைப் பெற்றார் எனவும்- சிவராம், நடேசன் போன் றவர்கள் தமிழ்த்தேசியலாளர்கள் பக்கம் இருந்ததால்தான் சிங்களப் பேரினவாதி களால் அல்லது அவர்களது துணைக் குழுக்களால் கொல்லப்பட்டார்கள் எனவும் சொல்ல வருகிறாரா?
யாழ்ப்பாணத்தில் செல்வி என்ற கவிஞரைக் கொன்றதும்- ரஜனிதிரணகம (பல்கலைக்கழக விரிவுரையாளர், டாக்டர்) கொன்றதும் யார்- என்று இப்போது நாம் கேட்க வரவில்லை. மொட்டந்தலைக்கும்
மல்லிகை நவம்பர் 2007 & 43

Page 23
முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது ஜெகனே தான் என்பது ஜெகனின் கடிதம் மூலம் தெளிவாகிறது.
ஜீவாவை மட்டுமல்ல, டானியல், எஸ். பொ, இளங்கீரன், செ. கணேசலிங்கன் உட் பட பல ஈழத்தின் முன்னணி மூத்த தலை முறைப் படைப்பாளிகளைக் கூட அந்த தமிழ் காங்கிரஸோ, தமிழரசுக்கட்சியோ, கூட்டணியோ, இதர தமிழ் இயங்கங்களோ கண்டு கொள்ளவில்லை. இவர்கள் யாவ ருமே தமிழ்தேசிய இலக்கியத்திற்கு சிறந்த பணியாற்றியவர்கள்.
V,
"உதயம்" வாசகர் கடிதம். முருகபூபதி
அவுஸ்திரேலியா
இதற்கான எனது பதில்
டொமினிக் ஜீவா
என்ன்னப் பற்றித் தனிப்பட்ட முறை யில் பலரும் பலவிதமாக விமர்சிப்பதை நான் தகவல்கள் மூலம் அறிந்து வைத்திரு க்கின்றேன். இங்கும் வெளிநாட்டிலும் இந்த விமர்சனத் தாக்குதல்கள் இடம் பெற்று வந்துள்ளது.
நான் இந்தத் தனி மனிதப் பொச்சரி ப்புக்களையும், கண்டனங்களையும் எந்தக் கட்டத்திலும் கவனத்தில் கொண்டதில்லை.
தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த இந்த நாட்டுப் பாராளுமன்றத்தில் உங்க ளைப் பற்றியும் மல்லிகையின் சேவைபற்றி யும் பாராட்டிப் பேசிய குறிப்புகள் பற்றி மல்லிகையில் மாதாந்தம் பெட்டி கட்டிப் பிர சுரித்து வருகிறீர்களே?- இது தேவைதானா? எனக் கேட்டுக் கடிதங்கள் வருகின்றன.
இதே சட்டத்தை மிக வன்மையாகக் கண்டித்துத் தனது உரையை நிகழ்த்தியவர், வட மாகாணத்தின் முதன் முதல் இடது
சாரித் தோழர் கந்தையா என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இலவசக் கல்வித்திட்ட த்தை அரங்கேற்றிச் சட்டமியற்றியதும் இதே பாராளுமன்றந்தான். வரலாற்றுப் பெருமை மிக்க தேசியத் தலைவர்களின் குரல் ஒலித் தது கூட, இதே மக்களவையில்தான்.
எனவே தமிழ்மக்களின் தற்காலிகமான நியாயமான கோபதாபங்களை வைத்துக் கொண்டு எனது நீண்ட கால வரலாற்றுப் பதிவுக்கான செயல்களை நாம் எடை போட்டு விடக் கூடாது.
நான் நாளையைப் பற்றி யோசிப்பவ னல்ல. வரலாற்றை நோக்கிச் சிந்திப்ப வன்! நடைபோடுபவன்!
என்னைக் குறை கூறுபவர்கள் தாரா ளமாகத் தமது கண்டனங்களைப் பதிவு செய்து கொள்ளட்டும். அதனால் வரலாற் றுக் கறை எம்மீது படிந்து விடாது.
இது வரையும் உலகப் பாராளுமன்றத் தில் அது லண்டனாக இருக்கட்டும்; அல் லது பாரிஸ் மாநகரமாக இருக்கட்டும், ஒரு நாடாளுமன்றத்தில் அதனது பதிவேட்டில் இப்படியான ஒரு பாராட்டை எந்தச் சிற் றேடாவது அல்லது அதன் ஆசிரியராவது இதுவரை காலமும் பாராட்டிப் பதிவு செய்த வரலாறு ஏதாவது உண்டா?
இதுதான் அர்ப்பணிப்பு உழைப்பினது சர்வாங்க வெளிப்பாடு. மற்றும்படி கல்லெறி பவர்கள் எறிந்து கொண்டே இருக்கட்டும். வல்லை வெளியில் கைக் குண்டு எறிந்து எம்மை அழித்து, நமது கருத்தை முடக்கப் பார்த்தார்கள். அடுத்து யாழ். புது பஸ் நிலை யத்தில் நடந்த மேடைநிலைக் கூட்டத்தில் யு. என். பியின் புதுக் காதலர்களான தமிழரசுக் கட்சியினர் என் மண்டையைப் பிழந்தார்கள்.
இந்த ஜிவா மறையலாம். ஆனால், வரலாறு இந்த ஜீவாவையும், மல்லிகை யையும் என்றுமே ஞாபகத்தில் வைத்திருக் கும். அதற்கான அத்தாட்சியே பாராளுமன் றப் பதிவேடான “ஹன்ஸார்ட்!
மல்லிகை நவம்பர் 2007 & 44

வாழ்த்துகிற்றோம்
திரு. எஸ். பொ. அவர்களுக்குப் பவளவிழா
ஆண்டு. மல்லிகையின் வாழ்த்துக்களைத் தெரி பவளவிழாக் விப்பதில் மல்லிகை மகிழ்ச்சியடைகின்றது.
கண்ட எஸ். பொ. - ஆசிரியர்
- - - - - - - - - - - - - - - --------
இலக்கிய உலகின் தலதக்காரன்
- முருகபூபதி
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வி. சி. கந்தையா என்பவர் எழுதிய மட்டக்களப்புத் தமிழகம்' என்ற 500 பக்கங்களுக்கு சற்றுக் குறைவான ஒரு புத்தகம் வெளிவந்தது. அந்தக் காலத்தில் தமிழில் வெளியான பெரிய புத்தகம் தான் மட்டக்கள ப்பிலிருந்து கொழும்புக்கு ரயிலில் பயணமாகும் போது உறக்கம் வந்தால் தலைக்கு வைத்துக் கொள்வதற்கு அந்தப் புத்தகம் தோதானது' எனச் சொன்னவர் எஸ். பொ. எனத் தமிழிலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எஸ். பொன்னுத்துரை.
தன்னை ஒரு கலகக்காரனாகவே தனது எழுத்திலும் மேடைப் பேச்சிலும் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இவரைக் காட்டு மனிதன் என ஒருசந்தர்ப்பத்தில் வர்ணித்தார் பிரபல தமிழக விமர்சகர் கோவை ஞானி. காட்டு மனிதன் என்றால் "சுதந்திரமானவன்" என்பது அர்த்தம்.
வி. சி. கந்தையாவின் பெரிய புத்தகத்தைப் பார்த்து அங்கதமாக அவ்வாறு சொன்ன எஸ். பொ. 1924 பக்கங்களில் தமது சுயசரிதையை இரண்டு பாகங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். கந்தையாவின் புத்தகத்துக்கு அன்று அப்படிச் சொல்லிவிட்டு, இப்பொழுது நான்கு மடங்கு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறீர்களே? எனக் கேட்டோம். கந்தையா தலைக்கு மாத்திரம் வைத்துக் கொள்ளப் புத்தகம் தந்தார். நான் தலைக்கும் காலுக்கும் வைத்துக் கொள்ள இரண்டு பெரிய புத்தகம் தந்திருக்கின்றேன்
மல்லிகை நவம்பர் 2007 奉 45

Page 24
எனறு கவடிக்கையாகச் சொன்னார் எஸ். பொ. இவ்வாறு வேடிக்கையாகவும் சுவாரஸ் யமாகவும், காத்திரமாகவும், அங்கதமாக வும், நக்கலாகவும், பேசவும், எழுதவும் வல்லவர்தான் எஸ். பொ.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் எஸ். பொ. வுக்கு இப்பொழுது எழுபத்தைந்து வயது என்பது ஆச்சரியமானதுதான். ஏனென்றால், அவர் தமது பதினைந்து வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். அவரது மொழியில் சொல்வதானால் "எழுத்து ஊழியத்தை" ஆரம்பித்துவிட்டார். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் விற்பன்னர், இலங் கையில் பிறந்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான போதிலும் தமிழ்நாட்டிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளி லும் மிகுந்த கவனிப்புப் பெற்றவர். சர்ச்சைக் குரிய வீரியமிக்க எழுத்துக்களினால் விமர்ச கர்களின் பார்வையில் வித்தியாசமான படைப்பாளியாக இனங்காணப்பட்டவர்.
*புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற சொற்றொடர் இன்று பேச்சுப் பொருளாகி யிருப்பதற்கும் வித்திட்டவர் இவரே. தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வுக்குட்படுத்தப்படும் போதெல்லாம் அங்கே எஸ். பொ. வுக்கு பிரத்தியேகமான பக்கங்கள் நிச்சயமிருக்கும்.
நூலுருவான எஸ்.பொ.வின் படைப்புக்கள்:-
தீ (நாவல்) சடங்கு (நாவல்) வீ (சிறுகதை) அவா (சிறுகதை) ஆண்மை (சிறுகதை)
பூ (சிறுகதை)
வலை (நாடகம்) முறுவல் (நாடகம்) ஈடு (நாடகம்- அ. சந்திரகாசனுடன் இணைந்து எழுதியது.) 10. எஸ். பொ அறிக்கை (கட்டுரை) 11. நனவிடை தோய்தல் (கட்டுரை)
12. இஸ்லாமும் தமிழும் (கட்டுரை) 13. கீதை நிழலில் (குறுங்கதைகள்) 14. அப்பாவும் மகனும் 15. நீலவாணன்- எஸ். பொ. நினைவுகள் 16. இனி (நேர்காணல்களின் தொகுப்பு) 17. ஹால (மொழிபெயர்ப்பு நாவல்) 18. தேம்பி அழாதே பாப்பா
(மொழிபெயர்ப்பு நாவல்) 19. மாயினி (புதினம்) 20. மணிமகுடம் (புதினம்)
டென்மார்க்கில் வதியும் த. தர்மகுல சிங்கம் தேடல்- சில உண்மைகள்' என்ற நூலில் எஸ். பொ. வின் கருத்துக்களைத் தொகுத்து பதிவு செய்துள்ளார். இவை தவிர சில எழுத்தாளர்களுடன் இணைந்து மத்தா ப்பு, சதுரங்கம் முதலான நூல்களையும் எழுதியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு வெளிவந்த எஸ். பொ ஒரு பன்முகப் பார்வை (இந்திரன்- لا. தி. அரசு தொகுத்தது) நூலில் 76 பேர் இவரைப் பற்றி விரிவாக விமர்சனப் பார்வை யுடன் எழுதியிருக்கின்றார்கள். நவீன இலக் கியத்திற்குப் பல புதிய சொற்களையும் எஸ். பொ அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் “மித்ர' பதிப்பகத்தைத் தொடங்கி பல நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் எஸ். பொ. தொடர்ந்து எழுத்தாளராகவும் பதிப்பாளராகவும் இயங்' குகின்றார். நூல் பதிப்புத்துறைக்கோ அல்:
மல்லிகை நவம்பர் 2007 & 46

லது சஞ்சிகை வெளியீட்டுத்துறைக்கோ சென்றுவிடும் எழுத்தாளர்கள் தமது சுய படைப்பு முயற்சிகளைப் பெரும்பாலும் கை விட்டு விடுகிறார்கள். ஆனால், எஸ். பொ. தமது உள்ளார்ந்த ஆற்றலை வற்றச் செய் யாது எழுத்து ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இச்சாதனையாளரை இலங்கை சாஹித்திய மண்டலம் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஈழத்து இலக்கிய உலகில் நீடித்துக் கொண்டிருக்கிறது.
எஸ். பொ. வின் படைப்புக்கள் சாஹி த்திய மண்டல தேர்வுக்குழுவின் எதிர்பார் ப்புக்களுக்கு ஏற்ப அமையவில்லையா?
அல்லது எஸ். பொ. வின் எழுத்துக்கள்.
அந்த அளவுகோல்களுக்குட்படவில்லையா? என்ற கேள்விகள் இன்றும் அவிழ்க்கப் படாத முடிச்சுக்களாகத்தான் துருத்திக் கொண்டிருக்கின்றன.
எஸ். பொ. வுக்கு இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்துடனும் இலக் கிய விமர்சகர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோருடனும் நிரம்பக் கோபம் உண்டு. இந்தக் கோபம் நியாயமானது. நியாய மற்றது என்ற வாதப்பிரதிவாதங்கள் நீடித் துக் கொண்டுதானிருக்கின்றது.
முற்போக்கு வட்டார விமர்சகர்களை யும் ஆக்க இலக்கியகாரர்களையும் தமது எழுத்துக்களில் கடுமையாகச் சாடியிருப்ப வர் எஸ். பொ. எனினும், அவர்களை நேரில் சந்திக்கும் பொழுது அந்தக் கோபங்களை யெல்லாம் மறந்தவராகப் பேசுவார். அந்தச்
சிநேக மனப்பான்மையை வைத்து அவர்,
அவர்களைப் பற்றி இனிமேல் சாடி எழுத
மாட்டார் என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது.
சந்தர்ப்பம் வரும் போது "வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான்." இதுகூட எஸ். பொ. வின் தனித் துவப் போக்குத்தான்.
இலங்கையில் முற்போக்கு இலக்கி யம்- பிற்போக்கு இலக்கியம் என்ற பாகுபாடு தோன்றிய பொழுது நற்போக்கு இலக்கி யம் என புதிய போக்கைத்தாம் தேர்ந்தெடுத் ததாகச் சொன்ன எஸ்.பொ. அது அந்தக் கால கட்ட தீர்மானம் எனவும் அறிக்கையிட்டார்.
எஸ். பொ. விடம் விசேடமான சிறப்பு ஒன்றுள்ளது. அதாவது, அவரை ஏதேனும் ஒரு இதழுக்காக பேட்டி காணும் போது கேள்விகளைக் கேட்பவருக்கு எந்தவித மான சங்கடங்களும் கொடுக்காது தெளி வாக அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல் வார். அவருடைய சொற்பொழிவையே எந்த வொரு மாற்றமும் செய்யாமல் ஆவணப் படுத்திப் புத்தகமாக வெளியிடலாம். அவரது பனிக்குள் நெருப்பு நூல் அத்தகையதே.
ஈழத்தமிழர்களின் புதியதான புலப் பெயர்வுகளின் விளைவாக முகிழ்ந்துவரும்
தமிழ் இலக்கிய வகையான புலம்பெயர்ந்
தோர் இலக்கியம் தொடர்பாக எஸ், பொ.
தமிழ்நாட்டில் நிகழ்த்திய பேருரைதான் பணி assisi, Gusoil. The Tamil Diaspora 6T66TD கருத்துவம் குறித்து விளக்கமளிக்கும் நூல்.
எஸ். பொ. வின் வாழ்வும் பணியும் அவர் வாழ்ந்த காலத்திலேயே பதிவாகியிரு
மல்லிகை நவம்பர் 2007 * 47

Page 25
ப்பதும் சிறப்புத்தான் எஸ். பொ. தனது வர லாற்றின் சாரத்தினை பின்வரும் கவிதை வரிகளில் விபரிக்கின்றார்:- மனம் என்ன சொல்லியும் என்ன? என் குருதி எழுத்தினைக் கலைத்து விட்டதே. பிரபஞ்சம் முழுதுமான நட்சத்திரப் பகைவர்கள் என்னை எரிக்கிற போதும்,
அதில் நான் பிடி சாம்பலாய்ப் போனாலும்,
என் ஆவேசம் அப்பொழுதும் உயிர்க்கும்
எப்பொழுதும் எழுகின்ற பீனிக்ஸ் பறவை
யாய்.
வாழ்வு பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடை urfeoTs606).
தொடவென்று
தொடுவானம் வரை நான் நடந்து கொண்டிருக்கும் பொழுதும் புராண விலங்குகளுக்கூடும் புகுந்து செல்வேன், புறாவின் இறகினைச் சுமந்தபடி.
எந்த வரலாற்றில் இருக்கிறது எரிகற்கள் கருகியதாக. ? வரலாற்றில் வாழ்ந்தோர் வீழ்ந்ததாக. ?
எஸ். பொவின் எழுத்தே அவரது சுவாசம் தான். ‘புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்தான் எதிர்காலத்தில் தமிழ் இலக்கியத்தில் தலைமை ஏற்பார்கள் என அறிக்கையிட்ட எஸ். பொ. இதுவரையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக் கோலங்களைச் சித்தரிக்கும் விரிவான புதினமொன்றை இதுவரையில், எழுதவில்லை. எனினும், அதற்கான தூண்டுதலை அவர் விதைத்துள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் எஸ். பொ. வின் நாமம் அழியாது.
நன்றி. உதயம், (மறுபிரசுரம்) அவுஸ்திரேலியா,
A. R. R. HCAIR DRESSERS 89, Church Road, Mattakuliya,
Colombo - 15. Te F O 6021 33791
முற்றிலும் குளிரூட்டப் பெற்ற சலூன்
மல்லிகை நவம்பர் 2007 &48

மேமன்கவி
memonkavi (a yahoo.com
டாக்டர் எம். கே. முருகானந்தனின் வலைப்பதிவு
ஹாய் நலமா?- இது ஒரு நலவியல் இணைய இதழ்.
LITässr 6Tb. G8ës.
முருகானந்தன்
இது கம்/காட்டு தமிழ் எழுத்தாளரும் வைத்திய காைநிதியுமான எம். கே. முருகானந்தன் அவர்களின் வைைப்பதிவின் தலைப்பு.
வாழ்க நலமுடன்
வணக்கம்,
ஹாய் நலமா இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்தத் தளம் உடல் நலம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்காகவே முழுமையாக அர்ப்பணிக்கப்படுகிறது. எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய மொழியில் எழுதப்படுவதால் பல தரப்பட்டவர் களுக்கும் பயன்படும் என நம்புகிறோம். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு மருத்துவத் தலைப்பில் உள்ள ஒரு விடயத்தை மட்டுமே மையப்படுத்தி எழுதப்படுகிறது. உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
எனும் வரவேற்புக் குறிப்புடன் தனது வலைப்பதிவைத் தொடங்கி இருக்கும் டாக்டர் எம். கே. முருகானந்தன், ஒரு படைப்பானியாகவும், ஒரு மருத்துவராகவும் இருப்பதனால் அவரது வலைப்பதிவில் இக்ைகிய நடை கர்ைந்த வைத்தியக் குறிப்புக்களை இணைத்துள்ளார்.
மல்லிகை நவம்பர் 2007 & 49

Page 26
அவரது வலைப்பதிவில் இணைத் துள்ள இடுகைகளின் தலைப்புக்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:
* ஆஸ்த்மா, அன்ரிபயோடிக், நாய்
* ஏப்பமும், வாய்வு பறிதலும்,
ஏப்பத் தொல்லை மானத்தை
வாங்குகிறது.
எவ்வளவு உடற் பயிற்சி நீரில் இறங்காமல் நீச்சலா?
தைரொயிட் நோய்கள். தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா?
திடீரென வந்து மறையும் பக்கவாதம்Minor Stroke
காதுக்குடுமி நாட்பட்ட இருமலும், காதுக்குடுமியும்
அந்த வகையில் ஊசிப் பீதி நோய் எனும் தலைப்பில் இணைத்திருக்கும் பதிவு எல்லோருக்கும் பொதுவான ஒரு குறிப் பாகும்.
இரசிப் (தி நோய் இரசியா? வேண்டவே வேண்டாம்
ஊசி போடுவதென்றால் யாருக்குத்தான் பயமில்லை? எத்தனை நெஞ்சுத் துணிவு உள்ளவராயினும் ஊசி என்றவுடன் மனதிற் குள் சற்றுத் துணுக்குறவே செய்யும். ஆயினும் அந்தப் பீதியானது சாதாரண நிலைக்கும் மேலாக, நியாயப்படுத்த முடியாத அளவி ற்கு அதீதமாகத் தொடர்ந்து நீடிப்பதாக இருந்தால், அதை ஒரு வகைப் பீதி நோய் 6T60TsorTib. psils.) Sgs (&pitti (Belone phobia) என்றும் கூறுவார்கள்.
இந்த ஊசிப் பீதி என்பது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சினை யாகும். எந்தவொரு சமூகத்திலும் 3.5 சத வீதம் முதல் 10 சதவீதம் ஆனவர்களிடம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் பெரும்பாலும் 5 வயதாகும் முன்னரே இந்தப் பயப் பிரச்சினை ஆரம்பித்து விடுகிற தாம். இது ஒரு பரம்பரை நோயல்ல என்ற போதும் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற் பட்டவருக்கு வருவதற்கான வாய்ப்பு அதி கமாகும். ஊசிப் பீதி உள்ளவர்களில் 80 சத வீதமானவர்களின் நேரடி உறவினர்களில் (தாய், தந்தை, சகோதரர்கள்) வேறு யாருக் காவது இப் பிரச்சினை ஏற்கனவே இருந்தி ருக்கும் என்று சொல்கிறார்கள்.
ஊசிப் பீதி என்பது பயப்படக் கூடியதோ அல்லது ஆபத்தானதோ இல்லை. ஆயி னும் ஊசி பற்றிய வீண் பீதி காரணமாகத் தங்களது உடல் நலத்திற்குத் தாங்களா கவே கேடு விளைவித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கவலைக்குரியது. உதாரண மாக அன்றொரு நாள் விழுந்து உரசல் காயப்பட்டு வந்தவரைச் சொல்லலாம். காயத்தைச் சுத்தப்படுத்தி மருந்து கட்டிய பின்னர் ஏற்புத் தடை ஊசி போட வேண்டும் என்று சொன்னோம். “இந்த ஊசி போடுற வேலை என்னட்டை வேண்டாம். இது வேண்டாம் எண்டுதானே கொலஸ்ட்ரோலு க்கு இரத்தம் சோதிக்கக் கூடப் போகாமல் இருக்கிறன்." என்று சொல்லிக் கொண்டு எழுந்து ஓடத் தயாரானார். மிகவும் ஆபத் தான நோயான ஏற்பு வராமல் இருக்கட் போடப்படும் தடை ஊசியை வேண்டாம் என்கிறார். அத்துடன் பக்கவாதம், மார டைப்பு ஆகியன வராமல் தடுப்பதற்கான இரத்தப் பரிசோதனைகளுக்குச் செல்லத்
மல்லிகை நவம்பர் 2007 * 50

தவறியிருக்கிறார். அறிவுபூர்வமற்ற வீண்
பயம் என் உங்களுக்கும் எனக்கும் புரிகி
றது. அவருக்குப் புரியவில்லை. இல்லை! அவருக்கும் புரிந்திருக்கும், ஆனால் ஊசிப் பீதி நோய் அவரது கண்களை மறைத்தி ருக்கிறது.
இப் பீதி நிலையின் போது உடல் வெளி றலாம், கடுமையாக வியர்க்கலாம், கை,
கால்கள் குளிரலாம், வாந்தி வரலாம், மூச்
செடுப்பதில் சிரமமும் தோன்றலாம், தன்னு ணர்வு இன்றிச் சலம் மலம் வெளியேறவும் கூடும், மயங்கி விழவும் செய்யலாம், நாடித் துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும் எனவே இப் பிரச்சனையுள்ளவர்கள் வைத் தியரிடம் செல்லும் போது அதனைத் தெரி விப்பது அவசியம். பிரச்சினையிருப்பது தெரிந்தால் அவர் நோயாளிக்கு உளவளத்
துணை மூலம் மனத்தென்பளிப்பதுடன் பீதி ஏற்படாத வகையில் ஊசி போடவோ, இரத்தம் எடுக்கவோ கூடும்.
இத்தகையவர்களில் பலருக்கு இரத்த த்தைக் கண்டாலும் பீதி, மயக்கம் ஆகியன ஏற்படுவதுண்டு, மிருகங்களைக் கண்டால்
பயம், கரப்பான் போன்ற பூச்சிகளுக்குப்
பயம், இருட்டறைக்குள் செல்லப் பயம்,
உயரங்கள் ஏறுவதில் பயம், லிப்டில் செல்லப் பயம், நோய்கள் பற்றிய பீதி போன்றவையும் ஊசிப் பீதி போன்றவையே. (5,55560)6. IssassistTuujib (Specific Phobia) என மருத்துவத்தில் இவற்றைப் குறிப்பிடு வார்கள். இவையாவும் வெட்கப்படவோ, மறைக்கப்படவோ வேண்டிய பிரச்சினை கள் அல்ல. இருந்தால் உங்கள் வைத்திய ருடன் கலந்தாலோசியுங்கள்.
மேலும் சில வலைப்பதிவுகளின் விலாசங்கள்
தமிழ்ப்பதிவுகள் எனும் தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டித் தொகுத்து வைத்திருக்கும் தமிழ் வலைப்பதிவுகளின் விலாசங்களில் மேலும் சில
விலாசங்கள்.
List
http://tamildesiyam.blogspot.com தமிழ் http://bharathtvr.blogspot.com O உங்கள் நண்பன் http://enkirukal.blogspot.com . ஜிகர்தண்டா http://chellammah.blogspot.com/index.html GeF6)6) bupri
http://yazhsudhakar.blogspot.com/index.html
http://orrvambu.blogspot.com
http://isaiyinmadiyil.blogspot.com/index.html
நேயர்கள் எழுதிய கடிதங்கள் Զ6նf 6ւյլճւ இசையின் மடியில்.
மல்லிகை நவம்பர் 2007 & 51

Page 27
http://vanakkathudan.blogspot.com http://karthikramas.net/pathivu http://enathu-paathai.blogspot.com/index.html http://techtamil.blogspot.com/index.html
http://blackboards.blogspot.com/index.html http://cherankrish.blogspot.com/ http://nilamuttam.blogspot.com/index.html http://gnanakoothan.wordpress.com http://filmentertainment.blogspot.com http://pavanitha.blogspot.com http://www.viruba.com/valaippathivu
http://arabickadaloram.blogspot.com http://thamizmandram.blogspot.com/index.html
http://aidsindia.blogspot.com
http://adadaa.blogspot.com/index.html http://sambu2.blogspot.com http://naveenabaratham.blogspot.com/index.html http://varalaaru-ezine.blogspot.com/index.html
http://jillendru-oru.blogspot.com/index.html http://www.manoranjan.co.in http://maruthanizal.blogspot.com/index.html
வணக்கத்துடன். Karthik's nothing but blogs
எனது பாதை
குறிப்புகள்
கரும்பலகை
Cherankrish
நிலாமுற்றம் ஞானக்கூத்தன் கவிதைகள் ஃபிலிம் என்டர்டெய்ன்மன்ட் சிதறல்கள் தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு
அரபிக் கடலோரம்
வங்கி Aids in India giguT66so எய்ட்ஸ்
9|LLIT சாம்பு. சாம்பு. சாம்பு. நவீன பாரதம் Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History மழைத்துளி Manoranjan.co.in
மருதநிழல்
LULU:-
இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தாம் உருவாக்கி இருக்கும் வலைப்பதிவுகளின் விலாசங்களை எனக்கு பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவியுங்கள்.
memonkavi(a)yahoo.com
Losos86os 56ubLño 2007 率 52

நாவலt-தர. இளஞ்சி)சழியனரின்
ό)ιατρό)ώ οιόΟυfαίb
- அந்தனி ஜீவா
"மனிதன் எத்தகைய அறபுதமானவன" ரஷ்ய இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கி.
அத்தகைய அற்புதமான மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் தான் பெரியாரின் பெருந்தொண்டராக, சுயமரியாதைச் சுடரொளியாக வாழ்ந்து மறைந்த நாவலர் ஏ. இளஞ்செழியன்.
பெரியாரின் சுயமரியாதைப் பகுத்தறிவுக் கருத்துக்களை நாடெங்கும் பரப்பிய நாவலர் ஏ. இளஞ்செழியன் தமது 95வது வயதில் 09.09.2007 இல் கண்டியில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் அவரது விருப்பப்படி எவ்விதமான சடங்குகளுமின்றி, செங்கொடியால் மரணப்பேழை போர்த்தப்பட்டு, இறுதி மரியாதைகளுடன் அவரது உடல் தகனம் Թ&մյաւնւսւ-ւ-Ցl.
அமரர் இளஞ்செழியன் ஆற்றல் மிகுந்த பேச்சாளர், மேடைகளில் பாவேந்தர் பாரதிதாசனின் தென்திசையைப் பார்க்கிறேன். என் தோழா. என்ற பாடல்வரிகளை கூறிவிட்டு, மலையகத்தைப் பார்க்கின்றேன். என்று கூறிவிட்டுத் தான் தனது பேச்சை ஆரம்பிப்பார்கள். அவரது நாவன்மை காரணமாக நாவலர்' என்று அழைக்கப்பட்டார். மலைநாடு, மலையகம் என்ற சொற்களை மக்களிடையே பரப்பிய புகழ் நாவலர் ஏ. இளஞ்செழியனைப் போய்ச்சாரும்.
பெரியாரின் சுயமரியாதைப் பகுத்தறிவுக் கருத்துக்களை மலையகத்தில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கும் எடுத்துச் சென்றார். வடக்கில் சாதி ஒழிப்பிற்கு எதிராகப் பெரியார், அம்பேத்காரின் கருத்துக்களை இளைஞர்களிடத்தில் எடுத்துரைத்தார். 1958 இல் ருநீ எதிர்ப்பு போராட்டம் நடத்தி, வடக்கில் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராகச் சத்தியா கிரகப் போராட்டம் நடத்திய பொழுது, மலையகத்திலிருந்து நாவலர் இளஞ்செழிய6 தலைமையில் இளைஞர் கூட்டம் அந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டது.
தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வநாயகம் இளஞ்செழியனின் செயற்பாடு களைப் பெரிதும் மதித்தவர். அதனால் இளஞ்செழியனின் அழைப்பை ஏற்று, மலையக மக்களின் பிரச்சனைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக அமிர்தலிங்கம், திருச்செல்வம் போன்றவர்களுடன் மலையகத்திற்கு வருகை தந்து ஹற்றன் டன்பார் மைதானத்தில்
மல்லிகை நவம்பர் 2007 率 53

Page 28
நடைபெற்ற இலங்கைத் திராவிடக் கழக மாநாட்டிலும் பங்கு பற்றி உரையாற்றினார்.
1969 ஆம் ஆண்டு சீனாக்கொல்லைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நோர்வுபூட் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்ட த்தில் பாலா தம்பு, விஜயவீர போன்ற வர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதன் காரணமாக, 1970 இல் நடந்த ஏப்ரல் கிளர்ச்சி யின் போது நாவலர் ஏ. இளஞ்செழியன்
கைது செய்யப்பட்டு 45 நாட்கள் தடுப்புக்
காவலில் வைத்து விசாரணை செய்யப்பட் LITT.
எழுபதுகளுக்குப் பின்னர்- நாவலர்
இளஞ்செழியன் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறிச் சமதர்ம நோக்குடன் ரஷ்ய
கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு சமசம
ஜக் கட்சியிலிருந்து வெளியேறிய எட்மண்ட்
சமரக்கொடி, மல்லவராய்ச்சி போன்றவர் களுடன் நெருக்கமாக இணைந்து செயல் பட்டபோதிலும் "புதிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டார்
ஓர் இலட்சிய நோக்கத்துடன் மலை யக மக்களுக்கு ஓர் அரசியல் தேவை என்ற செயற்பாட்டுடன் கொள்கைப் பிடிப்போடு இயங்கிய இளஞ்செழியன் ஓர் இயக்கமாக தனிமனிதராக தன் இறுதி மூச்சை விட்டார் அவர் எழுதிய “பெரியார் முதல் அண்ணா வரை” என்ற நூலும் பெ. முத்துலிங்கம் அவரைப் பற்றி எழுதிய "எழுதாத வரலாறு என்ற நூலும் அவரின் வாழ்வையும் பணி யையும் எடுத்துச் சொல்லும்,
| བུ།༽
.Y ܢᎬᏗᏓᏗᎠ;
வி .ܶܐ
lliwiau RSSESSENGERFC8A.
$处、6
r
မျိုဋ် SSS KAO
怒
২ং
மல்லிகை நவம்பர் 2007 & 54
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முறி2ணத்தனன் அத்தரத்து/உணவுகிற சேதி
ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி பல்வேறு கருத்தியலாலும், சமூகத்தாலும் வந்தவர்களால் செழுமை அடைந்து வருகிறது. அதேவேளை, இன்றைய இலங்கையில்- அதுவும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வுத் தகவல்கள் பெரும்பாலாக ஒரே மையப்புள்ளியின் மையமாகக் கொண்டு சுழன்று கொண்டிருப்பதனால், பல்வேறு கருத்தியல், மற்றும் சமூகத்தவர்களிலிருந்து வந்தவர்களால் படைக்கப்படும் தமிழ்க் கவிதை பாடுபொருளில் ஒத்ததன்மை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவ்வகையில் கம்பன் கழகத்தை தனது கருத்தியல் முக அடையாளத்துடன் ஈழத்து கவிதைத் துறையில் தன்னை இனங்காட்டிக் கொண்டு, இன்று தமிழகத்து விளிம்பு வெளியீடாக இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அந்தரத்து உலவுகிற சேதி வெளியிட்டு இருக்கும் முரீபிரசாந்தனுக்கு இக்கூற்றுப் பொருந்தும்.
அதற்கு மேலதிகமாக முரீபிரசாந்தனின் இத்தொகுதி (அவரது முதலாவது தொகுதி நமக்கு கிடைக்கவில்லை) பலருக்கு ஒருவிதத்தில் ஏமாற்றத்தை அளித்து இருக்கும். அதாவது முறிபிரசாந்தன் இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கி இருக்கும் கவிஞர் வ. ஐ. ச ஜெயபாலனின் கூற்றும் அமைந்துள்ளது. அவர் தம் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.
“பிரசாந்தன் மரபு இலக்கியச் செல்வங்களுள் திளைத்து, நவீன இலக்கியப் பாதையை நோக்கி நகருகிறார். இத்தகைய புதுவரவுகள் மரபு இலக்கியத்தின் செழுமையில் இருந்து எமது நவீன தமிழ் இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கக் கூடியவை." எனக் குறிப்பிடுகிறார்.
உலகமயமாக்கல் எனும் வலியும், வலியில் சிக்கி, இழந்து கொண்டிருக்கும் இறந்த காலத்தை பற்றிய அழுகையின் உரத்த குரல் சமீபகால நவீன தமிழ்க் மல்லிகை நவம்பர் 2007 & 55

Page 29
கவிதையில் பரவலாக (ஈழம் உட்பட) கேட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், இழந்து கொண்டிருக்கும் நிகழ்காலம் என்பதற்கான அழுகையும் ஏக்கமும் ஈழக் கவிதையில் உரத்துக் கேட்டு கொண்டிருக்கிறது. முீ பிரசாந்தனின் இத் தொகுப்புக்கான சிற்சில கவிதை களிலும் அந்த குரல் பதிவாகி இருப் பதை நாம் உணர்கிறோம்.
ஒருசில கவிதைகளில், அவரும் பேசும்பாடுபொரும்களிலிருந்து வெளியே நின்று பேசும் இடத்தில்தான், அக் கவிதைகள் பலவீனமான வரிகளின் தொகுப்புக்களாக மட்டுமே வெளிப்பட்டு நிற்கின்றன. இவ்விடத்தில், இன்னொ ன்றையும் சொல்ல வேண்டும். முரீ பிரசாந்தன் தான் சாராத எந்தப் பிரச்ச னையையும் தனது கவிதைகளுக் கான பாடுபொருளாக கொள்ளவில்லை
என்பதுதான். இத்தேர்வில், இவர் மிகவும் கவனமாக இருக்கிறார் என்பது இத்தொகுப்புக்கான கவிதைகளின் தேர்விலிருந்து தெரிகிறது.
இவரது முதலாவது தொகுப்பும் நமக்குப் படிக்கக் கிடைக்கும் பட்ச த்தில் மட்டுமே முறிபிரசாந்தனின் கவி தைகள் பற்றிய ஒரு விரிவான விமர்ச னத்தை முன் வைக்கக் கூடியதாக
இருக்கும்.
அதுவரையில்
இத்தொகுப்பில் அமைந்துள்ள ஒருசில கவிதைகளைத் தவிர்த்திரு க்கலாம். நமக்கு படிக்கக் கிடைக்கும் கவிதைகள் தரும் திருப்தி இத்தொகு ப்பின் வரவை பாராட்டவே சொல்லு கிறது.
- கவிபாய்
ཡ───།།
வாழ்த்துகிற்றோம்
பவளவிழா நாயகன் முகம்மது சமீம்
வருகின்றது.
ஆரம்ப காலத்திலிருந்தே தம்மை முற்போக்கு எழுத்தாளர் வரிசையில் இணைத்துக் கொண்டவரான எழுத்தாளர் முகம்மது சமீம் அவர்களுக்கு 15. 11. 2007 அன்று தொடக்கம் பவளவி மிக்கிறது. அன்னாரை மல்லிகை மனதாரப் பாராட்டு கின்றது. வாழ்த்துகின்றது. பவளவிழாத் தொடர்பான பணிகளை சல்லிகைப் பூந்தல் ஒழுங்கு செய்து
ா ஆண்டாகப் பரிண
-ஆசிரியர்ل
மல்லிகை நவம்பர் 2007 & 56
 

சம்பந்தர் லிருது cெறும்
பேராசிரியர் கலாநிதி
a LoirboSréjasio சத்தியசீலன்
2006 ஆம் ஆண்டுக்கான சம்பந்தர் விருதுக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்ட படைப்பாளி பேராசிரியர் ச. சத்தியசீலன் ஆவார். இவரது "மலாயக் குடிப்பெயர்வும் யாழ்பாணச் சமூகமும்' என்ற ஆய்வு நூல் விருதுக்கும் பரிசுக்குமுரியதாகத் தெரிவாகியு ள்ளது. இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவாக ஈழத்தின் முன்னோடிச் சிறுகதைப் படைப்பாளி சம்பந்தர் பெயரால் வருடாவருடம் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் அவ்வாண்டில் வெளிவந்த நூல்களுள் தனித்தன்மை கொண்டதாக விளங்கவேண்டும். யாழ்ப்பாணச் சமூகத்தின் மலாயக் குடி ப்பெயர்வு குறித்த ஆய்வாக இந்நூல் அமைவதால் சமூக வரலாற்று ஆவணமாக அமைகி ன்றது. கடந்த காலங்களில் பேராசிரியர் சண்முகதாஸ், கலாநிதி பண்டிதர் க. சச்சிதானந் தன், எழுத்தாளர் தெளிவத்தை யோசப், பேராசிரியர் எஸ். பத்மநாதன், படைப்பாளி சு. வே, பேராசிரியர் சி. மெளனகுரு, பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா ஆகியோர் இவ்விரு தினைக் கடந்த காலங்களில் பெற்றுள்ளனர். 2006 ஆம் ஆண்டுக்குரிய விருது பேராசிரியர் ச. சத்தியசீலனுக்குரியதாகின்றது. அன்னார் கடந்த 32 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக விளங்கி வருகின்றார். இவர் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்ற வர். அதன் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். கடந்த எட்டு ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவராக இருந்து வருகின்றார். தன்துறை சார்ந்த ஏழு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
பல்துறை ஆளுமை கொண்ட பேராசிரியர் இவ்வாண்டுக்கான சம்பந்தர் விருதினைப் பெறுகின்றார். எழுத்தாளர் சம்பந்தனின் மகள் திருமதி திரிவேணி கஜன் இவ்விருதுக்கான பணப்பரிசில் 10000 ரூபாவை வழங்கி சத்தியசீலனைக் கெளரவிக்கிறார். இம்மாதம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் விழாவில் சம்பந்தர் விருது வழங்கப்படவுள்ளது. பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில், பேராசிரியர் பொ. பாலசுந்தரம், செஞ்சொற் செல்வன் ஆறு திருமுருகன், பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, செங்கை ஆழியான், நயினை கிருபானந்தா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். சம்பந்தர் விருது அறக்கட்டளை சபையினர் இந்நூலினை விருதுக்குரியதாகத் தெரிவு செய்துள்ளனர்.
செங்கை ஆழியான் க. குணராசா, இணைப்பாளர், சம்பந்தன் விருது.
மல்லிகை நவம்பர் 2007 & 57

Page 30
ജെസ്മെൻ ട്രൂ ലെയ്യ 6ഗ്രnd രമ, ക്രം കൃ'.ംnര "9eழுதி/ம் இல்/க்கி/தேதி”
2006 ஆம் ஆண்டுக்கான அ. பொ.
செல்லையா விருதை பேராசிரியர் எம். ஏ. நுஃமான் பெறுகின்றார். அமரர் அ. பொ. செல்லையா ஆசிரியர் ஈழத்தின் பெருமைக் குரிய கட்டுரையாசிரியர், சமூகவியலாளர். திருக்குறள் குறித்து கவனிப்புக்குரிய நூல் கள் எழுதியுள்ளார். அன்னாரின் நினை வாக ஒவ்வொரு ஆண்டும் தமிழில் எழுதப் படுகின்ற கட்டுரையியல் சார்ந்த சிறந்த நூலுக்கு செல்லையா விருது வழங்குவ தென யாழ் இலக்கிய வட்டம் முடிவு செய்தது. அந்த விருதுக்கான பணப்பரி சிலை ரூபா 10 ஆயிரத்தை அ. பொ. செல்லையாவின் மகன் செந்தில் வழங்குகி றார். செந்தில் இப்போது கனடாவில் தமி ழன் வழிகாட்டி என்ற டிறக்டரின்ய ஆண் டுக்காண்டு வெளியிட்டு வருகின்றார். விருது வழங்க முடிவு செய்த முதலாமாண்டே சான் றோர் அவ்விருதினைப் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களுக்கு வழங்கத் தெரிவு செய்திருப்பது அவ்விருதுக்குக் கெளரவ மாகும். அவர் எழுதிய மொழியும் இலக்கி யமும்' என்ற நூல் விருதினைப் பெற்றுக் கொள்கின்றது. பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் எம். ஏ. நுஃமான் ஒரு புகழ் பூத்த கவிஞர். ஈழத்தின் இலக்கிய விமர்சகராக வும் ஆய்வாளராகவும் உள்ளார். அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் மொழியிய லில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார். ஆசி ரியர், இணைப்பாசிரியர், பதிப்பாசிரியர், மொழி பெயர்ப்பாளரர் என்ற வகையில் 27 நூல்கள் வெளியிட்டுள்ளார். இவரது கவி
தைகள் ஆங்கிலம், சிங்களம், கன்னடம் முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. பேராசிரியர் நுஃமானுக்குரிய விருது கொழும்பில் நடைபெறவிருக்கும் விழாவில் கெளரவித்து வழங்கப்படவுள்ளது.
எஸ். சிவதாசன், இலங்கை இலக்கியப் பேரவைச் செயலாளர்,
யாழ் இலக்கியவட்டம்
සඤ{ණිගණéෂි නිෂqණිෂේත්‍රී ගංග්‍රාහී
சிறுகதைகள் 92OO6-92OO7
யாழ் இலக்கியவட்டம் கடந்த ஐந் தாண்டுகளாக, ஈழத்துப் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற சிறுகதைகளில் மிகச்சிறப் பானவற்றைக் காலத்துக்குக் காலம் தெரிவு செய்து ஈழத்தின் மூத்த புனைக்கதைப் படைப்பாளி, விமர்சகர், யாழ் இலக்கிய வட்டத்தின் பிதாமகர் அமரர் இரசிக மணி கனக செந்திநாதனின் நினைவின் பெயரால்
கதா விருது' வருகின்றோம். முன்னைய காலங்களில்
'கனகசெந்தி வழங்கி
ஸ்ம். என். அமானுல்லா, புலோலியூர் ஆ. இரத்தினவேலோன், எ. எஸ். உபைது ல்லா, சி. கதிர்காமநாதன், ஜூனைதா வெடிரீப், செம்பியன் செல்வன், சாந்தன், நீர் வைப் பொன்னையன், குந்தவை, க. சட்ட நாதன் ஆகியோர் பெற்றுள்ளனர். இம் முறை பின்வரும் படைப்பாளிகளும் அவர் களின் ஆக்கங்களும் கனக செந்தி கதா விருதுக்குத் தெரிவாகியுள்ளன.
மல்லிகை நவம்பர் 2007 & 58

1. ஒ வெள்ளவத்தை : 8ടങ്ങs
ஆழியான் (தினக்குரல் 29.10.2006) 2. பெரியவன் : பன். பாலா (வீரகேசரி, 14.
01. 2007) 3. சம்ஹாரம் திருமலை வீ. என்.
சந்திரகாந்தி (வீரகேசரி, 21. 01, 2007) 4. நெஞ்சாங்கூட்டு நினைவுகள் :
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் (தினக்குரல், 25. 02, 2007) 5. காணவில்லை : யோகேஸ்வரி
சிவப்பிரகாசம் (ஞானம், 04, 2007) 6. பிணங்கள் விற்பனைக்கு : கனகசபை
தேவகடாட்சம் (தினக்குரல், 27 05.
2007) 7. என் இனிய தோழனே : திருமதி
பவானி தேவதாஸ் (வீரகேசரி, 03.06. 2007).
கனகசெந்தி கதாவிருது பெறும் 17 சிறுகதைகளையும் முழுமையான ஓர் தொகுதியாக வெளியிட மீரா பதிப்பகம் முன் வந்துள்ளது. பரிசளிப்பு விழாத் திகதி சம்ப ந்தமான விபரங்களை உங்களுக்கு அறியத் தருவதற்கும், புகைப்படம், பிரசுர அனுமதி பெறுவதற்கும் உங்கள் சரியான முகவ ரியைத் த. சிவதாசன், இலங்கை இலக்கியப் பேரவைச் செயலாளர், சரஸ்வதி கோயில் வீதி, அரியாலை என்ற முகவரிக்கு அறியத் தருமாறு கோருகின்றோம்.
தகவல்:
த. சிவதாசன், இலங்கை இலக்கியப் பேரவை,
யாழ் இலக்கியவட்டம்
நாலேந்தன் லிருது) ළැණීෂී ඌණීféණී ශීග්‍රහීණී ණිග්‍රාණිනජිණී ද්‍රාශ්‍රීරෝළාහී
ஈழத்தின் மூத்த புகழ் பூத்த ஒரு படைப்பாளி அமரர் நாவேந்தன் ஆவார். சிறு கதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரை யியலாளர், ஆய்வாளர், விமர்சகர் என்ற பல பரிமாணங்கள் கொண்டிருந்தவர். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் நிறையவே எழுதியவர் நாவேந்தன் என்ற தம்பிராசா திருநாவுக்கரசு. ஏராளமான பல்வகை நூல்களை வெளியிட்டவர். முக்கி யமாக அவரின் சிறுகதைத் தொகுதிகளான வாழ்வு, தெய்வமகன் ஆகியவை ஈழத்திற் குப் பெருமை சேர்ப்பன. அன்னாரின் நினைவாக ஆண்டு தோறும் அவ்வாண்டில் வெளிவந்த சிறந்த சிறுகதைத் தொகுதி ஒன்றுக்கு 'நாவேந்தன் விருது ஒன்றினை வழங்குவதென யாழ், இலக்கிய வட்டம் முன்வந்துள்ளது. முதன்முறையாக 2005, 2006 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுதிகளிலிருந்து நாவேந் தன் விருதுக்கான தொகுதியைத் தேர்ந் தெடுக்கவுள்ளோம். இந்த விருதுக்கான ரூபா 10 ஆயிரத்தை நாவேந்தனின் சகோத
ரர் பிரபல கவிஞர் த. துரைசிங்கம் வழங்க
முன்வந்துள்ளார். இந்த விருதுக்கான தேர் வுக்குத் தங்கள் சிறுகதைத் தொகுப்பில் ஒரு பிரதியை, ச. சிவதாசன், இலங்கை இலக்கியப் பேரவைச் செயலாளர், சரஸ்வதி கோயில் வீதி, அரியாலை என்ற முகவரி க்குத் தபாலிலேயோ நேரிலோ சேர்ப்பிக்கு மாறு அல்லது அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகின்றனர்.
த. சிவதாசன் இலங்கை இலக்கியப் பேரவைச் Gyuusurfeitfir, யாழ் இலக்கிய வட்டம்.
மல்லிகை நவம்பர் 2007 & 59

Page 31
ஈழத்துத் தமிழ் நாவல்தள்
செங்கை ஆழியான் க. குணராசா
3. ஆரம்ப நாவல்கள்
நொறுங்குண்ட இருதயம
ஈழத்து ஆரம்ப நாவலிலக்கிய வரலாற்றில் மங்களநாயகி தம்பையாவின ‘நொறுங் குண்ட இருதயம்’ (1914) நூலுக்குள்ள அதிமுக்கியத்துவத்தினை மறுதலிக்க முடி யாது. ஈழத்தின் முதல் நாவலாசிரியையான மங்களநாயகி தம்பையாவை முதன் முதல் தக்கவாறு வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை ஆசிவனேசச்செல்வ னுக்குரியதாகும். புரவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலரில் 1972 இல் விரிவான ஆய்வுக்குறிப்புகள் தந்துள்ளார். மங்களநாயகி தம்பையா அரியமலர்’ என் றொரு நாவலையும் எழுதியுள்ளார். ஈழத்து நாவல் வரலாற்றில் தான் எழுதிய நாவலு க்கு அந்நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாகச சூட்டு வார்கள். அந்த மரபினை மாற்றியமைத்த பெருமை மங்களநாயகிக்குள்ளது. கதாபா த்திரத்தின் பெயரை நாவலின் தலைப்பாகக் கொள்ளாது, கதாபாத்திரத்தின் உணர் வையே தன் நாவலின் பெயராக மங்களநாயகி இட்டுள்ளார். எப்பொழுதும் இரட்டைட் பெயர்களுடன் அறிமுகமாகிய நாவலின் தலைப்பு ‘நொறுங்குண்ட இருதயம்’ என முதன்முதல் உணர்வு ரீதியாக மாறுகின்றது.
‘கதையமைப்பிலும் சூழல் சித்திரிப்பிலும் யாழ்ப்பாண மண்வாசனை வீச எழுதப்பட்ட நாவல் ‘நொறுங்குண்ட இருதயம் என்பது சிவனேசச்செல்வனின் கணிப்பு தப்பான கணிப்பன்று! 'சன்மார்க்க சீவியத்தின் மாட்சிமையை உபதேசத்தால் விளக்குவதிலும் உதாரணங்களால் உணர்த்துவது மேல் என்றும், சில காரியங் களைப் போதனையாகவும் புத்திமதியாகவும் கூறுவது நன்றென்றும் மங்களநாயகி தம்பையா கூறியுள்ளமை அவரது நாவலின்முன்னுரையிலிருந்து தெரிய வருவதாகச் சிவனேசச்செல்வன் சுட்டியுள்ளார். கண்மணி என்ற பெண்மணி வாழ்க்கையில் கணவனால் படுகின்ற துயரங்களை இந்நாவல் எடுத்துரைக்கின்றது. சந்தோசமான வாழ்க்கைக்குத் தடையாக அமைகின்ற பொருளாசை, அந்தஸ்துணர்வு என்பன கதையில் எடுத்தாளப்படுகின்றன. நொறுங்குண்ட இருதயத்தை அடைந்த கண்மணி கிறிஸ்தவப பாதிரியார் ஒருவரின் போதனையால் அமைதி காண்கிறாள்.
"கல்விக்குடும்பப் பின்னணியும் கிறிஸ்தவ நம்பிக்கையும் கொண்ட மங்கள்
நாயகியின் நூல்களில் கிறிஸ்தவப் பிரசாரப் பண்பும் போதனை மனோநிலையும தெளி
வாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணச்சூழலின் சித்திரிப்பும் கதை நிகழுமிடமாகிய
தெல்லிப்பழை, கீரிமலை ஆகிய இடங்களின் வருணனையும ஆசிரியையின் சிறந்த
மல்லிகை நவம்பர் 2007 & 60

எழுத்து நடையினுடே இழையோடிச செல் வதைக்காணலாம் என்கிறார் சிவனேசச செல்வன்.
நொறுங்குண்ட இருதயம் என்ற நாவல் பின்வரும் பண்புகளினடிப்படை யில் ஈழத்து நாவல்களில் குறிப்பிடத் தக்கதாகின்றது.
1. முதன்முதல் ஈழத்தில் பெண எழு த்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட தமிழ் நாவல் என்ற பெருமை இதற்குண்டு.
2. யாழ்ப்பாணத்தின் மண்வாசனை இந்நாவலின் கதையாடலிலும் பாத்திரங் களிலும் விரவிக் காணப்படுகின்றமை சிறப்பான பண்பாகும்.
3. ஏற்றவிடங்களில் பேச்சுத் தமிழும் வழங்கு தமிழும் இந்நாவலிற் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
4. பாத்திரங்கள் யாழ்ப்பாண மண்ணில் உலாவுகின்ற குணச்சித்திரங் களாக உள்ளன.
5. சமூகப்பிரச்சினைகளுமஆவற்றி ற்கான சமயரீதியான தீர்வுகளும் சமூகச் செய்திகளாகவுள்ளன.
மங்களநாயகியின் நொறுங்குண்ட இருதயம் வெளிவந்த காலகட்டத்தை வைத்து நோக்கும்போது நல்லதொரு கணிப் புக்குள்ளாகும் படைப்பாகின்றது. ஆனால் ஆசிரியரின் உரைநடை, வாக்கிய அமை ப்பு, சொல்லாட்சி என்பன ஆற்றொழு க்காக இந்நாவலைப் படிக்க உதவுகின் றனவெனக் கொள்ள முடியாது. சிலவிட ங்களில் மண்வாசனைவிகம் சொற்கள ஆற் றொழுக்காக அமைந்து சுவை தருகின்ற பண்பினைச் சிவனேசச்செல்வன் குறிப்
பிட்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்து கதை யினை மீறிஆசிரியையின் சமயப் பிரச் சாரக் கருத்துக்கள் மிகுந்து தெரிகின் றன. சமூகத்தில் மேலோங்கி நிற்கின்ற சீதனக்கொடுமை, பொருளாசை, பக்தி மார் க்க அசட்டை, தீயசிந்தனை, ஆங்கிலப் போலி நாகரிகத்தின் மோகம் என்பன வற்றைக் கண்டிக்கின்ற நிலமை கதைப் போக்கோடு இணையாது நிற்கின்றன. நொறு ங்கிய இருதயம் என்ற நாவல் கணமணி என்ற பாத்திரத்தின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டது. கண்மணி, அருளப்பு, அப்பா துரை, பொன்னுத்துரை, பொன்மணி, பூரணம், பாதிரியார் என முரண் நிலைப் பாத்திரங்கள் பலவற்றினைச் சுற்றிப் பின் னப்பட்டுள்ளது. வாழ்க்கை துயரமானது, துன்பமானது, அதன்போக்கில் வாழ்ந்து முடித்துவிடவேண்டும் என்ற உணர்வை இக்கதை ஏற்படுத்துகின்றது. வாழ்க் கையில் நம்பிக்கையை ஏற்படுத்துவ தாகவோ துணிவுடன் போராடுவதற்கான மார்க்கத்தையோ கூறத்தவறி விட்டது. இறைவனிடம் பாரத்தை ஒப்படைத்து விடுவது ஆற்றாமைக்கு விடிவல்ல. ‘அறவியல் கோட்பாடுகளை வலியுறுத் துவனவாகவே ஆரம்பநாவல்கள் அமை ந்தன’ என்ற க.கைலாசபதியின் கருத்து நொறுங் குண்ட இருதயத்துக்கும் பொருந்தும்.
மங்களநாயகியின் பின்னர்.
மங்களநாயகி தம்பையா தொடக் கிவைத்த பெண் எழுத்துலகப் பரம்பரை இன்று ஈழத்திலக்கியத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. நொறுங்குண்ட இருதயத் தின் பின்னர் 1915 இல் சி வை. சின்னப பபிள்ளை உதிரபாசம் அல்லது இரத்தின பவானி என்ற நாவலையும் 1916 இல விஜய சீலம் என்ற சரித்திர நாவலையும் எழுதியுள்ளார். ஈழத்தின் குறிப்பிடததக்க நாவல்களில் ஒன்றாகிய ‘வீரசிங்கன் இதே
மல்லிகை நவம்பர் 2007 & 61

Page 32
சின்னப்பபிள்ளையால் எழுதப்பட்டது என் பது குறிப்பிடத்தக்கது. உதிரபாசம அல்லது இரத்தினபவானியில் இரத்தினம் என்ற வாலி பனின் வீரசாகசங்கள் தமிழ்நாட்டின பகைப் புலத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. 1918 இல் எஸ் தம்பிமுத்துப்பிள்ளை என்பவா ‘சுந்தரன் செய்த தந்திரம் என்றொரு நாவலை எழுதி வெளியிட்டார். இவர் 1911 இல் ‘சமசோன் கதை’ என்றொரு நாவலையும் எழுதியி ருந்தார். ஈழத்தின் முதல் நகைச்சுவை நாவலொன்று என்ற பெருமை தம்பி முத்துப்பிள்ளையின் சுந்தரன் செய்த தந்திரம் பெறுகின்றது. யாழ்ப்பாணப் பின்னணியில் எழுதப்பட்ட இந்நாவலில் சுந்தரன் என்ற போலித்துறவியின் ஏமாற்று வாழ்க்கை சித்திரிக்கப் படுகின்றது. ஏராளமான பழமொழிகள இந் நாவல் எங்கும் கையாளப்பட்டுள்ளன. இப்பண்பு சுந்தரன் செய்த தந்திரத்தில் மட்டுமில்லாது, ஈழத்தின் ஆரம்ப நாவல் கள் பலவற்றிலும் ஒரு பொதுப் பண்பாக இருப்பதனைப் பார்க்கலாம.
எம்.கே. சுப்பிரமணியம் என்பவர் 1923 இல் நிலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு' என்றொரு நாவலை வெளியிட் டார். 1924 இல் இரண்டு நாவல்கள வெளி வந்தன. ஒன்றினை ஈழத்தின் முக்கிய முன்னோடி நாவலாசிரியர்களில் ஒரு வராகக் கருதப்படும் ம.வே. திருஞான சம்பந்தம்பிள்ளை எழுதிய காசிநாதன் நேசமலர் நாவல், மற்றையது செம் பொற்சோதீஸ்வரன் செல்லம்மாள் எழு திய இராசதுரை என்பனவாகும்.-ஈழத் தின் ஆரம்பகால நாவல் இலக்கியத் துறையில் மங்கள நாயகி தம்பையா, செம்பொற்சோதீஸ்வரன் செல்லம்மாள், ச. இராசாம்பாள் ஆகிய மூன்று பெண் படைப்பாளிகள் பங்கேற்றிருக்கின்றனர். செம்பொற்சோதி செல்லம்மாளின் இராச துரை, இராசாம்பாளின் ‘சரஸ்வதி அல்
லது காணாமற்போன பெண்மணி’ (1927) எ6 பன மர்மப்பணிபுகள் நிறைந்த நாவ6 களாகும். இவ்வகையில் எம்.கே. சுப்பி மணியத்தின் நீலாக்ஷி அல்லது துை மார்க்க முடிவு’ என்பதும், வ.மு. சின்ன த்தம்பியின் ‘வீராம்பாள் அல்லது விபா மங்கை’ (1930) என்பதும், சார்ள்ஸ் ரிஸ்க யின் "தேம்பாமலர்(1929), “ஞானபூரணி (1933), என்பனவும், மூத்ததம்பி செல்ல பாவின் ‘சுந்தரவதனா அல்லது இன்ப காதலி’ (1938) என்பதும், வரணியூர் ஏ.சி இராசையாவின் ‘பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்’, (1932) ‘அருணேதய அல்லது சிம்மக்கொடி (1933) என் னவும், இனங்காணலாம். இவை தமிழக த்தில் அக்காலத்தில் நிறையவே வெளிவர திருந்த ஆரணி குப்புசாமி முதலியர், ரெங்க ராஜூ முதலானோரின் மர்மப்பண்புகள நிறை ந்த துப்பறியும் கதைகளின் சாயலில் ஈழத்துப் படைப்பாளிகளால் எழுதபபட்டிரு க்கின்றன. அவற்றில் முக்கியமாகக குறி பிடத்தக்க அம்சம் யாதெனில் இந்த நாவல் களில் அவை இலங்கையை முக்கிய மாக யாழ்பாணத்தைக் களமாகக கொண்ட 60)LDu JT(5b.
நீலகண்டன் ஈழத்தின் ஆரம்பநாவல்களில விதந்து ரைக்கத் தக்கதொரு நாவல் நீலகண்டன் அல்லது ஒரு சாதி வேளாளன் என்பதாகும யாழ்ப்பாணத்தின் சாதியத்தைத் தொட்டு *எழுதப்பட்ட மூன்று நாவல்களில் நீல கண்டன் (1925) முதன்மையானது. எச் நல்லையாவின் ‘காந்தமணி அல்லது தீண் டாமைக்குச் சாவுமனி"(1937), எம். ஏ செல்வராசாவின் ‘செல்வி சரோஜா அல் லது தீண்டாமைக்குச் சவுக்கடி’ (1938 என்பன ஏனைய இரண்டு நாவல்களாம் நீலகண்டன் என்ற நாவலை நாகமுத்து இடைக்காடர் எழுதியிருந்தார். இடைக் காடர் ‘சித்தகுமாரன்’ என்றொரு இரண்டு பாகங்கள் கொண்ட நாவல் ஒன்றை
மல்லிகை நவம்பர் 2007 霹 62

யும் எழுதித் தந்துள்ளார் என அறியப்படு கின்றது. ‘இது சாதியபிமானம இன்னதென்று விளங்காது தம்மிற்றாழ்ந்தவர்களை
இம்சை செய்பவர்களுக்குப் புத்தி புகட்
டும் நோக்கமாகவும், ஏனையவர்களுக்கு நமது சாதி நிலை இன்னதென்று உணர் த்தும் நோக்கமாகவும் எழுதப்பட்ட ஒரு கற்பனா கதை. அனைவருக்குமுபயோக மாக இருக்குமெனவெண்ணிச் சன்மார் க்கம், சற்போதனை முதலியனவற்றைப் பற்றி சான்றோர் கூறியிருக்கும் உண்மை கள் ஆங்காங்கு கொடுக்கப்பட்டிருக்கி ன்றன. . இக்கதை சாதிபேதம் பாராட்டு வதில் ஆரம்பமாகி அதை விடுவதில் முடிவாகின்றது என நூலின் முகவுரை யில் ஆசிரியர் கூறியிருக்கின்றார். சாதி யம் பற்றி ஆசிரியரின் முகவுரையில ஆசிரி யரின் உணர்வு பூர்வமான இக்கூற்று நாவ லின் நோக்கையும் போக்கையும் ஒர ளவு தெளிவாக்குகின்றது என க.கைலா சபதி குறிப்பிடுவதுபோல நாவல் அமையவில்லை.
நீலகண்டன் என்ற தலைப்பு இந்த நாவலுக்கு மிகப்பொருத்தமானது. ஆனால் ‘அல்லது ஒரு சாதி வேளாளன்’ என்ற உபதலைப்பு இந்த நாவலுக்கு ஒரு சதவீதமும் பொருந்தவில்லை. இந்த நாவலில் ஆசிரியர் கூறுவது போல சாதி யப்பிரச்சினைகள் எதுவும் எடுத்து ஆழ மாக ஆராயப்படவில்லை. இக்கதையின் ஓட்டத்திற்குச் சாதியம் ஒரு பெரும பிரச்சி னையாகவோ திருப்பு முனையாகவோ அமை யவில்லை. ஆக இடையிடையே வீரசிங்கன் சற்றுச் சாதி குறைந்த பிறப்பினைக கொண்ட வன் என்று கூறப்படுகின்றது. இறுதியில் கடைசி அத்தியாயத்தில் சாதி குறித்து நாவலுக்குப் பொருத்தமேயில்லாமல ஒருபெ ரும் பிரசங்கம் செய்யப்படுகின்றது
“வேளான்குலத்து புவிமன்னனுக்கும் பண்டாரக் குலத்துப் பெண் கமலாவதி
க்கும் பிறந்த நீலகண்டன் தந்தையின சொத்துக்களைப் பெறுவதில் தடை யேற்படுகின்றது. தடை செய்த தியோரைத் தன் வீர சாகசங்களால் வெற்றி பெற்று நீல கணி டன் முதலிப்பட்டம் பெற்று உயர் வாழ்வு வாழ்கின்றான். (நா.சுப்பிரமணியம்). 'மனப்புலி என்ற பிரபுவின் கையாட்கள் அவனைக் கொல்வதற்குத் திட்டங்கள் தீட்டுகின்றனர்.
ஒன்றன் பின் ஒன்றாகப் பல சூழ்ச்சி களிலிருந்து நீலகண்டன் தப்பிக் கொள் கின்றான். அவனது பட்டறிவும் கற்ற றிவும் துணை செய்கின்றன. இறுதியில் அவன் உண்மை நிலை தெளிவாகி ன்றது. தருமம் வெல்லும் என்ற சம்பிரதா யமான நம்பிக்கையோடு பிரித்தானியர் புகுத்திய புதிய சட்டங்களின்படியும தியோர் தண்டனை பெறுவர் என்ற கருத்து நாவ லில் இழையோடுகின்றது. கதைச் சுருக்கம் அது தான். எளிமையான இக்கதைக்கருவை வைத்துக் கொண்டு சுவையும் விறுவிறுப்பும் கலை நயமும் அமைந்த இந்த நாவல் ஒன்றை ஆசி ரியர் அளித்திருக்கிறார்.' (க.கைலாச பதி). இந்த நாவலில் சுவையும் விறு விறுப்பும் கலைநயமும் காணப்படுவ தாகக் கைலாசபதி குறிப்பிடுகின்றார். நாட்டு நடப்பு, பிரதேச நடப்பு, அவற்றின் வளம் என்பனவற்றை விபரித்து சுற்றி வளைத்து கதைக்கு வர இடைக்காடரு க்குப் பதினொரு பக்கங்கள் தேவைப் பட்டிருக்கின்றன. அத்தியாயத்துக்கு ஒவ் வொரு பழமொழி தலைப்பாக அமை கின்றது. பழமொழிக்கும் அத்தியாய விடய த்துக்கும் ஏதாவது இணைப்பு இருப்ப தாகத் தெரியவில்லை. மனப்புலி என்ற தீயோன் வீரசிங்கனை அழிப்பதற்காக கள்ளர்களையும் தூமகேது, ஐயன போன்ற பாதகர்களையும் தொடர்ந்து அனுப்பு கின்றான். அவர்களிடமிருந்து வீரசிங்கன்
மல்லிகை நவம்பர் 2007 & 63

Page 33
எவ்வாறு தப்பிகின்றான் என்பது நாவ லின் முக்கால் பகுதியை அடக்குகின்றது.
நீலகண்டன் நாவலில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களும் வருணனை க்குள்ளாகின்றன. ஆசிரியரின் பல பிர தேச அனுபவங்கள் சிறப்பாக இந்த நாவ லில் வந்துள்ளன. "சமூக சீர்திருத்தக கருத் துக்களும் சைவசித்தாந்தக் கருத்துக் களும் இந்நாவலில் விரவிவருவதாகக் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். 1915 காலகட்டத்து யாழ்ப்பாணத்தைத் தெரிந்து கொள்ள இந்த நாவல் ஓர் ஆவணமாகவுள்ளது. அக்காலத்தில் கள்ளர்கள், (சுழிபுரத்துச் சுங்கன், சங் கானைச் சாணையன், கைதடிக் கறுப்பன், அளவெட்டி ஆறன், வண்ணைச்சாளி யன், வல்லுவெட்டி வைரவன், சரசாலைச் சாட்பையன் ...), காடையர்கள (தூமகேது, சீத்தையன் அல்லது ஐயன் என்ற சீதா பதிப் பிராமணன்) போன்றவர்களினால் இரவுகளில் தூக்கம் இழந்து தவிக்கும் யாழ்ப்பாண மக்களின இன்றைய சூழலை உணர்ந்துகொள்ள வைக்கின்றது. இக்கால யாழ்ப்பாணக் கொள்ளையர் களுக்குக் கொஞ்சமும் அக் காலத்துக் கள்ளர்கள் சோடை போகவில்லை. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கின்ற அவல முடிவுகள், துர் மரணங்கள் எக்காலக் கொள்ளையர்களுககும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.
அழகவல்லி
ஈழத்தின் ஆரம்ப நாவல்களில் என். தம்பிமுத்துப்பிள்ளையின் ‘அழகவல்லி அல்லது பிறர்கிடு பள்ளம்’ (1926) நாவலின் முக்கியத்துவத்தினைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தமபிமுத்துப் பிள்ளை ஏற்கனவே சம்சோன் கதை, சுந்தரன் செய்த தந்திரம் என்ற இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். ஆனால் அவரின்
நாவல்களில் ஒன்றாகிய ‘அழகவல்லி ஈழத்து நாவல்களில் ஒரு முக்கியமான படைப்பாகவுள்ளது. அழகவல்ல நாவலை முதன் முதல் இரசிகமணி கனக செந்திநாதன் 1977 இல் மல்லிகை சஞ்சிகையில் அறிமுகப்படுத்தி வைத் துள்ளார். ‘பச்சைப்படியான யாழ்ப்பாண வாழ்க்கையையும், சிவ ஆசாரங்களை யும் தெட்டத் தெளிவாக எடுத்துக்கூறும் இந்த அழகவல்லி நாவலைப்போல வேறொரு நாவலையும் நான் கண்ட தில்லை’ என்ற கனக செந்திநாதனின் கூற்று மிகைக் கூற்றாக எனக்குப் படவில்லை. ஐம்பத்தொரு பக்கங்க ளைக் கொண்ட இந்நூல் அளவில் ஒரு குறுநாவலாக இருப்பினும் மிகச்சிறந்த நாவலாகும். செண்பகமழவன் என்ற வாலிபன் பணத்தினால் பெருமைபேசும் அழகவல்லியை மணந்துபடும் அவ ஸ்தையை அந்த நாவல் சித்திரிப்பதைக் காணலாம். அழகவல்லி அக்குடும்ப த் திற்குத் தங்கு புரியும் ஒரு பாத்திரமாகக் காட்டப்படுகின்றாள் ‘முழுக்க முழுக்க யாழ்ப் பாண மண்வாசனை கொண்ட இந்நாவலின் கருப்பொருள் கூட மிகச்சிறப்பானது. உயர் சாதி வேளாளருக் கிடையே இருக்கும் சாதிக்குள் சாதி பார்த்தல் என்ற விடயத்தை எழுதியிருப்பது வியப் புக் குரியது' எனக் கனக
செந்திநாதன் குறிப்பிடுகின்றார்
யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சிறப்பாக இந்த நாவலில் கையாளப்பட்டிரு க்கின்றது. நாம் மறந்துவிட்ட பண்பாட்டுச் சொற்கள் (முகங்குறாவி, தடாமுட்டி ஒப்புக் கலப்பு) இந்த நாவலில் காணமுடிகின்றனவெனக் கனக செந்தி நாதன் குறித்துள்ளார்.
தொடரும்
மல்லிகை நவம்பர் 2007 ஜ் 64

ஒக்கன் ச. முருகானந்தன்
ஆயுதங்களின் ஆர்ப்பரிப்பால் விரியும் மரணப்படுக்கைகளுக்கப்பால்
பூக்கள் நிறைந்த பூமியாய்
象 புன்னகை தேசம் ஒன்றாய் ஆயுதங்கள் பேசுகின்ற : மரண அழைப்புக்களிடையே புரிந்துணர்வு வரமாட்டாதாவன கலைந்துபோகிறது புல்லரிக்கிறது தேகம். வாழ்க்கை பற்றிய இனிய கனவுகள்.
என்னதான் on-նն ժpyեւյծ?
օIdra օժնեւյ? GTfü5 டூதனல் யுத்தத்தினடைய தேசத்தின் புத்தநிலைமை எங்கும் கேட்டோயும் முனகலிடையே தேய்பிறையாய்ச் சுருக்குகிறது இனிய கீதம் இசைப்பது எங்ங்னம்? தேசத்தவர் வாழ்வை.
யுத்த அனர்த்த கொடூரத்துள் கரைந்துபோகிறது
மரணத்தை வவன்று வாழ்வதென்பது வாழ்தலுக்கான &upry prie Llori
மன்பிடிந்து சிறு விதையைான்று மனிதத்தின் அடிகோவியம் காலன் வந்துதட்டுகிறான் கதவை sforlords பாதிவழிபயணிக்கும் முன்னே இப்போது விழுதுகள்தாங்கும் வலிகளைப் பகிர முடியவில்லை sáGl°Florif----- யார் யாருக்கு ஆறுதல் சொல்வது?
இன்னமும் நாங்கள் எம் வலிகளுக்குச் செலிசாய்க்காத டிே தேசத்தின்தலைமைகளும் வய்யிலில்நிற்கிறோம். சர்வதேசத்தின் கயமைகளுமாய். 9واهه إதிநிழலையும் சமாதானi நாம்தாழ்வுநிலைதான்டி காற்றையும் எப்போநிமிர்ந்தெழுவது? ஏதிர்பார்த்து ஏங்கியபடி.
மல்லிகை நவம்பர் 2007 率 65

Page 34
அவுஸ்திரேலியா தேசிய வா னொலி SBS தமிழ்ச்சேவையில் "சாதித் தடம் தேடி' என்ற நிகழ்ச்சியில் தங்களதும்- சிவத்தம்பியினதும் குரல் கேட்டோம். தமிழ் நாட்டிலிருந்தும் பல முக்கியமானவர்கள் கருத்துச் சொன் னார்கள். கடந்த இரண்டு வாரமாக ஒலி பரப்பாகியது. தொடர்ந்தும் உங்கள் குரல் கேட்கும் வாய்ப்புண்டு. இந்த வானொலி தமிழ் நிகழ்ச்சித் தயாரிப் பாளர் ரேமண்ட் செல்வராஜா மிகவும்
தரமாக இச்சேவையை நடத்துகிறார்.
எனக்கு மூட்டுவாதம் வந்து தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறேன். எனது மூத்தமகள் பாரதியின் திருமணச் செய்தி படத்துடன் பிரசுரித்தமைக்கு நன்றி. மகளுக்கும், மருமகனுக்கும், அவரது பெற்றோருக்கும்- என் மனைவி மாலதிபிள்ளைகளின் தாய்க்கும் காண்பித்தேன். அனைவரும் தங்கள் நன்றியைச் சொன்னர்கள்.
எனது இரண்டாவது மகள் பிரியா- கணவனுடன் லண்டன் பயணமாகிமீண்டும் இலங்கை வந்து திரும்புவார்கள். மல்லிகைப் பந்தல் புதிய வெளியீடு “முன் முகங்கள்” ஒரு பிரதியும்- மல்லிகை- ஆகஸ்ட்- செப்- அக்டோபர் பிரதிகளையும்நண்பர் கந்தசாமி மூலம் நீர்கொழும்புக்குச் சேர்த்து விட்டால் எனக்கு அவை கிடைக்கும்.
"ஞானம்’ இதழில்- (செப் 2007) செங்கை ஆழியானின் நேர்காணல் கருத்துக்கள் (புலம் பெயர்ந்தவர்கள் பற்றி) உவப்பானதாக இல்லை. புலம் பெயர்ந்த படைப்பாளிகளினால் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்துள்ள சாதகமான அம்சங்களை அவர் சொல்வதை விடுத்து நீங்கள் கொழும்புக்கு இடம்பெயர் ந்ததையும் அநாவசியமாக சுட்டிக் காட்டி எல்லாவற்றையும் அரசியலாக்கப் பார்க்கிறார். எமது இடம்பெயர்வு, புலம்பெயர்வு அனைத்துமே அரசியல்தான். தமிழ் மக்களின் அவலம், அங்கு நடக்கும் போர் மாத்திரமல்ல, தமிழ் மக்களின் புலப் பெயர்வும் அவலம்தான்.
புலம்பெயர்ந்தவர்கள் தமது படைப்புகளில் தமிழர்களின் அவலத்தைச் சித்த
ரிக்கிறார்களேயன்றி- தமது இருப்புக்காக அந்த அவலங்களைப் பயன்
மல்லிகை நவம்பர் 2007 & 66
 

படுத்தவில்லை. அந்த அவலம் யாழ்ப் பாணத்து எழுத்தாளர்களுக்கு மாத்திரம் சொந்தமான முதிசம் அல்ல. அனைத்து மனிதநேயவாதிகளுக்கும் அந்த அவ லம் சவால்தான். தமிழக இதழ்கள் புலம் பெயர்ந்தவர்களின் பேட்டிகளை வெளியிடுவது- அந்த இதழ்களின் தேவையின் அடிப்படையில் அமைவது தமிழகத்தின் அங்கீகாரத்தை நம்பி நாம் பேனை பிடிக்கவில்லை. செங்கை ஆழியான் எமது இனிய நண்பர். அவரு
க்கும் இந்த வயதில் இப்படியெல்லாம்
சிந்தனை வருவதுதான் கவலை தருகிறது. இங்கு பலர் தமது கண்டன த்தைச் சொன்னார்கள். செங்கை ஆழி யான் தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொள்ளும் போது- "அவலம்" என்பதன் சரியான அர்த்தம் கிடைக்கும் (அவருக்கு) என நம்புகிறேன். (எஸ். பொ. இம்மாதம் அவுஸ்திரேலியா திரும்பு கிறார்.)
அவுஸ்திரேலியா, முருகபூபதி.
ஒக்டோபர் 2007மல்லிகையின் அட்டையில் நந்தினி சேவியரின் படமும், செ. யோகராசாவின் அவர் பற்றிய கட்டுரையும் நிறைவைத் தந் தன. அதிகம் கவனிக்கப்படாத அற்புத மான படைப்பாளி சேவியர். வெளிச்ச மிட்ட மல்லிகைக்கு நன்றி. முருகையன் சாஹித்திய ரத்நா விருது பெற்றது மன நிறைவைத் தருகிறது. எமது தலை முறை எழுத்தாளர்களின் வாழ்த்துக்
கள். செங்கை ஆழியானின் தேடல்க ளும் பதிவு செய்தலும் அதற்கான கடும் உழைப்பும் உன்னதமானவை. களம் அமைக்கும் மல்லிகையின் பங்கும் எதிர் கால ஆய்வுகளுக்கு உதவிடும். இன் னொரு வகையான மேமன்கவியின் தேடலும் பதிவும் பாராட்டுக்குரியதே. கதைகள் கவிதைகள் சிறப்பாயுள்ளன. தூண்டில் பகுதியில் ஆசிரியரின் குறிப்பு ஆரோக்கியமானது.
பரிசு பெறும் பெண் எழுத்தாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இலங்கை எழுத்தாளர் சந்திரகாந்தா முருகானந்தன் பாராட்டுப் பரிசு பெற்றுள்ளார். இவ்வருடத்தில் இதற்கு முன்னரும் இவர் பூபாளராகங் கள் சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பரிசும், அரச ஊழியர்களுக்கிடையே கலாச்சார அமைச்சு நடாத்திய சிறு கதைப் போட்டியில் இரண்டாம் பரிசும், கம்பன்விழா கவிச்சிறகு கவிதைப் போட்டியில் பாராட்டுப் பரிசும் பெற்று ள்ளமை குறிப்பிடத்தக்கது.
ச. முருகானந்தன்.
அண்மைய சில நாட்களாக மல்லி கையைத் தொடர்ந்து படித்து வருகி றேன். நாற்பது ஆண்டுகளைத் தாண்டி ஒரு சஞ்சிகை வருவதைக் கடந்த ஆண்டுதான் அறிய முடிந்ததை ஒரு குறையாக கருதுகின்றேன். உங்களின்
மல்லிகை நவம்பர் 2007 * 67

Page 35
வீரியம்மிக்க உழைப்பை கண்டு மனம் நெகிழ்கின்றேன்.
கடந்த இதழில் நந்தினி சேவியர் பற்றித் துலாம்பரமாக, செ. யோகராசா எழுதியிருந்தார். ஒரு இலக்கியக் கரு த்துப் பற்றி மிக விரிவான விளக்கம் இருந்தது. தெணியான் அவர்களது வாழ் நிகழ்வுகளும், அநுபவங்களும் சுவாரஸ் யமாக இருக்கின்றன. பரன் அவர்களது ஒப்படைச் சிறுகதை தீர்க்கம் மிக்கப் படைப்பு சிந்திக்கவும், சிரிக்கவும் வைத் தது. அவ்வாறே ஆனந்தியின் கதையும் (பெரியவன்), நல்ல கதைகள். கடந்த இதழைப் போலவே சிறுகதைகள் அதிகமெனக் கருதுகின்றேன். ஆனால் இவ்விதழில் கவிதைகளும் நிறைவாக இருந்தன. மல்லிகையில் கவிதைகள் வழமையாக குறைவாக இருப்பது பற்றி ஆசிரியர் கவனம் செலுத்தலாமே?
இறுதியாகத் தூண்டில் பகுதியும் மன
நிறைவைத் தந்தது. புதிய தேடல் பகுதியாக அப்பகுதி அமைவதே சிறப்பு.
மல்லிகை ஜீவாவும், மல்லிகையும் சர்வதேசப் பதிவைத் தந்திருக்கிறது. அவ்விதழுக்கு இனி விளம்பரம் தேவை இராது என நினைக்கிறேன். மல்லிகை தொடர்ந்து செம்மையாக வெளிவந்தது உங்களாலேயே. 50வது ஆண்டை அடைய வாழ்த்துக்கள்.
ஹொரவப்பத்தானை.
பாத்திமா சசிமா.
ELÄPPY PHIOTO
疹、 Excellent
Photographers
Child Sittings
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes 300, Modera Street,
Colombo - 15. Te: 2526345
மல்லிகை நவம்பர் 2007 & 68
 
 
 
 
 

ஆரம்பக் காந்ைதிலிருந்து மல்லிகையு శKRS டன் ஒத்துழைத்தவர்களும் இன்று பும்ை *********ta2ষ্ট্রম
பெயர்ந்து வாழ்ப்வர்களுமான இக்ைகிய கண்பர்களுடன் அடிக்கடி தொடர்பு ஒற்பகுத் திக் கொன்விர்க7ை2
புத்தளம். ஆர். சரவணன்.
மல்லிகையை நெஞ்சார நேசிக்கும் பல புலம் பெயர்ந்த நண்பர்கள் அடிக்கடி சுகம் விசாரிப்பார்கள். அவர்களின் ஊடாக, அந்தந்த நாடுகளில் வசிக்கும் எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வேன். மற்றும் கடிதங்கள் மூலமும், தொலைபேசி ஊடா கவும் அந்தந்த நாடுகளில் வசிக்கும்
AA A NA மல்லிகைச் சுவைஞர்களுடன் அடிக்கடி GOT26) பேசிக் கொள்வது இயல்பானதொன்றே.
X உங்களை இலக்கிய உலகைச்சார்ந்தவர்கள் பர்ைநீதியினமாகத் தாக்குகின்றனரே, இதைப் பற்றி உங்களது கருத்து என்ன?
வவுனியா. எஸ். சண்முகநாதன்.
Es) எனது ஆரம்பகாலப் பள்ளிக்கூட வகுப்பறையிலிருந்து பலபல கட்டங்களில், அவதூறுகளுக்கும், தரக்குறைவான தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்தே வளர்ந்து வந்தவன் நான். ஒரு வகையில் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், அந்தத் தாக் தல்களும், அவதூறுகளுமே என் வளர்ச்சிக்குப் பசளையாக அமைந்துள்ளன என்பதை இன்று உணரக் கூடியதாக இருக்கின்றது.
அதுசரி, என்னைப் பற்றிய தனிப்பட்ட கேள்விகளைத் தூண்டில் பகுதியில் வெளியிட நான் விரும்புவதில்லை.
凶 மல்லிகை 4ச- வது ஆண்டு மர்ை தயாராகின்றது, எனக் கடந்த இதழில் எழுதியிருந்தீர்கனே, ஆண்டு மரிைன் உள்ளடக்கம் எப்படி இருக்கும்?
கண்டி. ப. ரா. லிங்கம்.
மல்லிகை நவம்பர் 2007 & 69

Page 36
கிே மல்லிகையின் ஆண்டு மலர்களை
இதுவரையும் படித்திருப்பீர்கள்தானே, அதே வகையில் இலக்கியத் தரம் மிக்க தாக இம் மலர் அமையும்.
ΣΚ. இாைங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு நான் ஜனாதிபதியாக உங்க ளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அத னைப் பயன்பகுத்தி தமிழ் இக்ைகிய உை திற்கு நீங்கள் வழங்கப் போகும் மாபெரும் பெறுமதி மிக்க செயல் யாதாகவிருக்கும்?
கொழும்பு- 12. ப. லட்சுமி.
கிே ஜனாதிபதியான எனது முதற் பிரக டனமே, இந்தத் தேசத்தில் ஆண்டுக்கு ஆண்டு நோபல் பரிசுக்குச் சமனான ஒர் இலக்கியப் பரிசை இந்த மண்ணில் ஆர ம்பித்து வைக்க அத்திவாரமிட்டு வைப்பேன்! 図 பிரபல எழுத்தானர் சுஜாதாவின் எழுத் துப் பற்றிய உங்களுடைய இன்றைய கணி Ủớồ 67ảrao/?
ஜி. மூர்த்தி.
கோப்பாய்.
ரஜனிகாந்தின் சினிமாவிற்குப் பின்
னால் ஒடித் திரியும், வாழத் தெரிந்த ஓர் எழுத்துப் புத்திசாலி
ΣΚ. தமிழகத்துப் பெரும்பாாைன எழுத்தா 7ைர்களின் பர்ை இாைங்கை எழுத்தானர்களின் படைப்பாக்கங்கனைப் படிப்பதுமில்ைை,ரவி ப்பதுமில்லை. ஆனால், அபிப்பிராய விமரி சனம் செய்யும் வேளைகளின் மாத்திரம் மeடந்தட்டிப் பேசி வருகின்றனரே, இதுற்கு ഞെf ബേമ്ff്ബ?
சிலாபம். இ. குணசீலன்.
} இதற்கு அடிப்படைக் காரணமே காலங் காலமாக நமது முன்னவர்கள் அவர்களைத் தாய்நாடு என்றும் நாம் வாழும் இந்த மண்ணைச் சேய்நாடு என மனனம் செய்து பழக்கப்படுத்தி வந்ததன் பெறுபேறுதான் இது. நம்மை மதித்துக் கனம் பண்ணுகின்றவர்களும் ஏராளம் உண்டு, தமிழ்நாட்டில். இன்று இந்த மண்ணில் பேனா பிடிப்பவன் அநுபவத் தில் அநுபவித்த ஏதாவது ஒரு கஷ்ட நஷ் டங்களைக் கூட, இவர்களில் ஒருவர் தானும் அநுபவித்தறிந்திராதவர்களே. சொல்லட்டும். சொல்லட்டும். நாளை இங்கிருந்து புலம் பெயர்ந்த படைப்பாளி கள் இதற்குப் பதில் சொல்வர்.
இக்ைகிய உதிைன் தினசரி கடuைur
நீற்றும்போது மன நிறைவடைகின்றிர்களா?
பதுளை. ஆர். குருநாதன்.
臺} வேறு எந்த தொழில்களையும் விட, இந்தப் படைப்புத் தொழில் சார்ந்த ஊடக த்துறையில் தினசரி இயங்கி வரும் போது, ஒர் ஆத்ம திருப்தி இருக்கின்றதே, அத்தகைய சுயதிருப்தியும் மன ஆனந்தமும் வேறெந்தத் தொழிலிலும் கிடையவே கிடையாது என அறுதியிட்டுக் கூறுவேன்.
தமிழ்நாட்டின் இன்றைய அரசியன் நெருக்கடி பற்றிஉங்களது கருத்து என்ன?
கொழும்பு. சு. இரகுபரன்.
} தமிழகம் முழுவதற்கும் முதலமைச் சராக சத்தியப் பிரமாணம் செய்து பதவி வகிக்கும் முதலமைச்சர், வெறும் தி.மு.க
மல்லிகை நவம்பர் 2007 率 70
 

கட்சியின் தலைவராகப் பேசிக் கொண்டு திரிகிறார். அடிக்கடி அறிக்கைகளும் விடு கிறார். எனக்குத் தெரிந்தவரைக்கும் இங் கிருந்துதான் சிக்கல் தோன்றுகின்றது.
இத்தனை பென்னாம் பெரிய தமிழ்த் தைைவர்கள் நம்மிடையே தோன்றி மறைந் துள்ள வேளையிலும் தோழர் கார்த்தி கேசனது காமம் அடிக்கடி ஞாபகப்பருத்தப் பகுகின்றதே என்ன காரணம்?
அளவெட்டி. ஆ. அகிலன்.
} அதுதான் தோழர் கார்த்தியினு டைய தனிப்பெரும் சிறப்பு. அவரைப் போன்ற ஒரு மானுடன் எம்மத்தியில் தோன்றுவது அரிதிலும் அரிது. ஒன்றை அவதானித்துள்ளிர்களா? எனது சுயவர லாற்று நூலான எழுதப்படாத கவிதை க்கு வரையப்படாத சித்திரம் புத்தக த்தை நான் அன்றே மனப்பூர்வமாக அவரது ஞாபகத்திற்கே அர்ப்பணித்திருக்கின் றேன். என்னைப் போன்ற மண்புழுக் களை மனிதர்களாக உருவாக்கி உலவ விட்டவர், அவர்தான். 50 ஆண்டுகளுக்குப்
பின்னரும் தோழர் கார்த்திகேசன் பிற்சந்த
தியினரால் நினைவுகூரப்படுவார். அப்பொ ழுது நீங்களும் நானும் இருக்கமாட்டோம்.
Σ.Κ. பேட்டி ஒன்றில் பும்ைபெயர்ந்தவர்களு டன் சேர்த்து ஊர் மாறிய உங்களையும் இணைத்துச் செங்கை ஆழியான் கருத்துச் சொல்வியிருக்கிறாரே, அதைப் பற்றிய
உங்களது கருத்து என்ன?
வெள்ளவத்தை. ஆர். சிவநேசன்.
கிே இலக்கிய உலகில் எவருக்குமே
கருத்துச் சொல்ல பரிபூரண உரிமை உண்டு. கருத்துச் சொல்பவர்கள் கொஞ் சம் நிதானமாகச் சிந்தித்துச் சொல்ல வேண்டும். நான் புலம் பெயரவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு இடம்மாறி வந்துள்ளேன். பாதுகாப்பு வலயத்திற்குள்தான் வீடும், மல்லிகைக் காரியாலயமும் அடங்கியிருந்தன. 24 மணி நேரத்தில் துப்பாக்கி முனையில் அப்புறப்படுத்தப்பட்டோம். போக்கிடம் இல்லை, வருமானம் இல்லை. இருந்தும் நரகத்திற்குப் போயாவது மல்லிகையை வெளியிட வேண்டுமென்ற மனவெறிக்கு ஆட்பட்டிருந்த அந்தச் சமயத்தில் மல்லி கைக்காகவே இடம்மாறினேன். இது சகலருக்கும் தெரியும்.
செங்கை ஆழியான் கட்டாயம் ஊரில் இருந்தேயாக வேண்டிய உத்தி யோக நிலை. ஒய்வுபூதியம் கிடைக்கக் கூடிய காலகட்டமது. எனவே எதிர்கால வாழ்க்கைப் பாதுகாப்பு, அவருக்கு ஊர்ப் பாசமாக மிளிர்ந்தது. நான் இடம்மா றாமல் இருந்திருந்தால் மல்லிகை வெளி வந்திருக்க மாட்டாது. மல்லிகைப் பந்தல் வெளியீடாக அவரது பல நூல்கள் வெளி வந்திருக்கவே மாட்டாது. இறுதியாக அவருக்கு மல்லிகைப் பந்தல் வெகு கம் பீரமாகவும், சிறப்பாகவும் நடத்திய மணி விழாக் கூட நடைபெற்றிருக்காது. கருத் துச் சொல்பவர்கள் நிதானமாகவும், கவ னமாகவும் இருப்பது அவர்களது எதிர் கால வளர்ச்சிக்கே நல்லது.
ヌマ
^ சமீபத்தில் சென்னையில் நமது எஸ்.
பொவிற்குப் பவன7விழா நடைபெற்றதாகச்
மல்லிகை நவம்பர் 2007 * 71

Page 37
மல்லிகை நவம்பர் 2007 ஜீ 72
செய்திகளின் பார்த்தேன். இது பற்றி உங்க னது அபிப்பிராயம் என்ன?
கொழும்பு- 6. ரி. முகுந்தன்.
திே இந்த மண்ணில் பிறந்த எந்தக் கலைஞனுக்கும உலகத்தில் எந்தப் பகுதியில் பாராட்டு நடந்தாலும் மனமறியக் குதுாகலித்து மகிழ்ச்சியடைவதே எனது இயல்பாகும். அந்தச் சமயத்தில் நான் சென் னையில் இருந்திருந்தால் அழைப்பே இல் லாது போனாலும் அவ்விழாவுக்குச் சென்று அவரை வாழ்த்தியிருப்பேன். எஸ். பொ. பல தடவைகள் என்னைப் பற்றி பல அவ தூறுக் கண்டனங்களைப் பொழிந்து தள்ளி னவர்தான். அவற்றை நான் என்றுமே கண க்கில் எடுத்துக் கொண்டவனல்ல. பல பெரும் பெரும் எழுத்தாளர்களுக்கு மத்தி யில் என்னையும் அழைத்து, தனது முத் திரை விழாவில் பலருக்கு மத்தியில் கெளரவித்து மகிழ்ந்தாரே, அதற்காகத் தான் நான் எஸ். பொவை இன்றும் மதிக்கின்றேன்.
என்மீது தான் வைத்துள்ள குற்றச் சாட்டுக்களைத் தனது இந்தச் செயல் மூலம் அவரே மறுதலிக்கின்றாரே அதுவே போதும்- வாழ்க! வாழ்க!
ΣΚ. /கல் ைநண்பர்கைை7எப்படி இனங்கண்கு பழகுகிறிர்கள்? புத்தளம். எஸ். எஸ். ரஹிம். இ அது மிகவும் சுலபம். நீங்கள் ஒரு நல்ல நண்பனாக இருக்கத் தகைமை யுள்ளவரா? நிச்சயம் உங்களைத் தேடி நல்லவர்களே வந்து வந்து போவார்கள். ΣX இன்று இந்த நாட்டின் புதுப்புதுச் சஞ்சிகைகள் அழகழகாகத் தோன்றி,
மர்ைகின்றனவே. இதனால் மல்லிகைக்குப் 8usic; 676igy oglig/d5udio6m2
பம்பலப்பிட்டி. கே. எஸ். ராகுலன்.
国 "ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்பதே எனது வாழ்த்துக்களாகும். இந்த மண் னில் பலப்பல கருத்துக்களுடன் பலப் பல வடிவங்களில் சிற்றேடுகள் பல பிர தேசங்களிலுமிருந்து வரவேண்டுமென்பதே எனது பேரவாவாகும். ஆனால், ஒன்று வரும் சிற்றேடுகள் தொடர்ந்து வெளிவர வேண் டும். அதற்கான பொருளாதாரத் தளத்தை அவை அவசியம் கொண்டிருக்க வேண் டும். அது மிக மிக முக்கியம்.
X இந்த முதிர்ந்த வயதில் தொடர்ந்து உழைத்துவரும் உங்களுக்கு, இடையி டையே சோர்வுதடிகுவதில்ைையா?
கண்டி. ஏ. கண்ணன்.
)ே எப்படிச் சோர்வு தட்டும்? நான் தின சரி என்னை நானே புதுப்பித்துக் கொண் டிருக்கும் ஒரு படைப்பாளியல்லவா? நேற் றுக் குளித்த ஆற்றில் இன்று நான் நீராட வில்லை! என்று சொல்வார்கள். நேற்று இருந்த ஜீவா வேறு, இன்றிருக்கும் ஜீவா வேறொருவர். இதுதான் எனது வேலைத்
திட்டத்தின் தாரக மந்திரம் நான் வேலை
செய்யும்போது என்னை நானே அடிக்கடி புதுப்பித்துக் கொள்ளுகின்றேன். ஆத்ம சுத்தமான நண்பர்கள் என நான் கருதுப வர்களை அடிக்கடி சந்தித்து, என்னிட முள்ள கறைகளைப் போக்கிக் கொள்ளு கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் மல்லிகைக்காக உழைப்பை அர்ட் பணிக்கின்றேன். தரமான இலக்கிய நண்பர்கள் தினசரி என்னைச் சந்தித்து சுத் திகரிக்கின்றனர். இவைகள் இருக்கும் போது சோர்வு எப்படி என்னை அண்டும்?
201/4, ரு கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

NNNNNNNN Jo II
POOBALASINGHAMI BOOKDEPOT
IEMPORTERS, EXPORTERS, SEAC LC9ERS e, (PU(B CIS/HERS O F (BOOKS, STATIONERS ASND NEWS Agge:NT
Head office: Branches: 340, 202 Sea street, 309 A-2/3, Galle Road, ('olombo 11, Sri lanka. Colombo 06/Srilanka.
le: 2422321 Tel: 4-515775, 2504266
X: 23.37313 E-mail: plbdho(a).sltnet.lk 4A/Hospital Road,
Bus Stand, Jaffna,
பூபாலசிங்கல் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்.