கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.02

Page 1
、
| Malikai February 2008
No, p.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
K LLLL S S L S S L L L KLK HH K KK
, - Ա
S L L L L L L LS S LSL S S
- I'll I ( I ,
| . III As SS
M ԱնիկնեNUMBUDWնին
ா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

soos
Crimin Iningin

Page 2
இமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்த பேச்சுக் கவிதைப் போட்டிகள்- 2008
கொழும்புக் கம்பன் கழகம் ஆண்டு தோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குத் தலைநகரில் பெருவிழா எடுத்து வருகிறது. அவ்வொழுங்கில் இவ்வாண்டுக்கான கம்பன் விழாவினை எதிர்வரும் ரப்ரல் மாதத்தின் இறுதியில் நடாத்துவதற்கான ஆயத் நங்கள் தொடங்கியுள்ளன. வழமை போலவே, இவ் வாண்டும் இவ்விழாவினை ஒட்டி அமரர் துரை விஸ்வ நாதன் ஞாபகார்த்தப் பேச்சு, கவிதைப் போட்டிகள்
நடைபெறவுள்ளன.
உடன் வழங்கப்படும் பேசும், கவிதை இயற்றும் திறமையுள்ளோர் மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேற்படி போட்டிகளில், கடந்த ஆண்டு 5ளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றோர், தவிர்ந்த, ஏனையோரெவரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். இப்போட்டிகள் மேற்பிரிவு, ழ்ேப்பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளன. ழ்ேப்பிரிவில் 16 வயதுக்கு உட்பட்டோரும், மேற் விரிவில் 17 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட் டோரும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர், வெள்ளைத்தாளில் முழுப் பயர், பால், கலந்து க்ொள்ளும் போட்டி, பிறந்ததிகதி, முகவரி, தொலைபேசி இலக்கம் (இருப்பின்), அடையாள அட்டை இலக்கம், கல்வி கற்கும்/ கற்ற ாடசாலை அல்லது பல்கலைக்கழகம் ஆகிய விபரங்களை எழுதி கல்லூரி அதிபர் அல்லது சமாதான தவான் அல்லது கிராமசேவகர் ஆகியோரிடம் 5ம்தகைமைகளை உறுதிப்படுத்தி, கடித 2 681) பின் மேல், அமரர் துரை. விஸ்வநாதன் ஞாபகார்த்த $விதை/ பேச்சுப் போட்டி ச. ஆ பாலேந்திரன், கொழும் |க் கம்பன் கழகம், 11, இராமகிருஷ்ண தோட்டம், hasruptibly- 06. (S.A. Balendran. No. 1. Ramakrishna jarden. Colombo-06) 6Tsoup (passifig5 01.04.2008 $கு முன் கிடைக்கத்தக்கதாக விண்ப்பங்களை அனுப்பி வைக்கலாம். கல்லூரி, பாடசாலை ஊடாகக் $லந்துகொள்ளும் மாணவர்கள் ஒரே தாளில் கலந்து காள்ளும் அனைவரது விபரங்களையும் ஒருங்கி ணைத்து (தனிப்பட்ட முகவரி உட்பட) அதிபரின் டறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்கவும்.
கொழும்புக் கம்பன் கடிகல் நடாத்துரல்
"6x6)å»Ga»n" SiÖ2'5V ØØ»Omé)
Simäace -sosyÖ US சிறந்த கவிதைக்கான "மகரந்தச் சிற, விருதும் இருபத்தையாயிரம் @Urgugh
ઊઠ ாழும்புக் கம்பன் கழகம் ஆண்டு தோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்குத் தலை நகரில் பெருவிழா எடுத்து வருகின்றது. அவ் வொழுங்கில் இவ்வாண்டுக்கான கம்பன் வி வினை எதிர்வரும் மே மாதத்தின் இறுதியில் ந துவதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன.
கம்பன் புகழ் விருது பெற்ற தமிழகத் த:ை) மைக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் அர் கள் தம் விருதுப் பணம் கொண்டு ஈழத்தில் 6: வோர் ஆண்டும் தலைமைக் கவிதை ஒன்றி னைத் தேர்ந்தெடுத்து அக்கவிதைக்கு "மகரந்தச் சிறகு விருதினை வழங்குவதற்கான அறக் கட்ட ளையினை நியமித்துள்ளார். இவ் விருதுக்கான கவிதைத் தேர்வுக்குக் கவிதைகளை அனுப்பி வைக்கலாம். தலைமைக் கவிதையின் இறுதித் தேர்வு ‘கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் தெரிவு செய்யப்படும்.
இத்தேர்வுக்கு மரபுக் கவிதைகளும், புதுக் கவிதைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். கவிதை தமது சொந்த ஆக்கம் என்பதைக் கவிஞர் உறுதி செய்தல் வேண்டும்.
w தேர்ந்தெடுக்கப்படும் தலைமைக் கவிதை க்கு மகரந்தச்சிறகு விருதும் ரூபாய் இருபத்தை யாயிரம் பொற்கிழியும் கம்பன் விழா மேடையில் வழங்கப்படும்.
"மகரந்தச்சிறகு விருதுக் கவிதைத் தேர்வு ச. ஆ பாலேந்திரன், கொழும்புக் கம்பன்கழகம், 11, இராம கிருஷ்ண தோட்டம், கொழும்பு- 06. (S. A. Balendran, No. Il li, Ramakrishna Garcien, Colom ) -- 06.) எனும் முகவரிக்கு 15.04.2008 முன் கிடைக்கத் தக்கதாக அனுப்பி வைக்கலாம். மேலதிக விபரங் களுக்கு 2360525 எனும் இலக்கத்துக்குத் தொடர்பு Gas IT sit 61 sp.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#్యళ్ల 二一地
Ulff).
^_^ பல்கலைக்கழக
翠 ܢ.. .ܚ 'ஆடுதல் பாடுதல் சித்திரம் க்வி உபவேந்தர் ஆதியினைய கலைகளில் உள்ளம் & နွဲ န္တိမ္ပိ (3u ராசிரியர்
ஈடுபட்டென்றும் நடப்பவர் றர் ஈன நிலைகண்டு துள்ளுவர்’
பேரிசிரியர். நாகலிங்கன் சண்முக நா. சண்முகலிங்கன் லிங்கன் யாழ்ப்பாணப் பல் கலைக் கழகத் துணைவேந்தராக நியமனம் பெற்றமை கேட்டுப் பலர் மகிழ்ச்சியடைந்தனர். பழமைக்குப் பழமையாகப் புதுமைக்குப் புதுமையாக அமைந்திருப்பவர் பேராசிரியர் சண்முகலிங் கன். இதனால், பழமைவாதிகளும் மகிழ்ந்
தனர். புதுமைவாதிகளும் மகிழ்ந்தனர்.
கொழும்புப் பல்கலைக் கழகத்திலிருந்து இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வரக் காரணமாயிருந்தவர் பேராசிரியர் க. கைலாசபதி, சமூகவியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய போது, கலாநிதி சண்முகலிங்கன் அதனைப் பொறுப் பேற்று நடத்தி மிகச் சிறந்த துறையாக்கி யதுடன், பல சமூகவியல் பட்டதாரிகளையும்
50 -வது ஆண்டை நோக்கி. பெப்ரவரி
345 ീgeue محنچہ مجر%///o ഠ// o/awarene
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமுமாகும் .
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 2320721
i mallikaiJeeva@yahoo.com .
உருவாக்கியுள்ளார்.
பரராஜசிங்கம் என்னும் மெல்லிசைக்
கலைஞனை அறிந்தவர்கள், பேராசிரியர் சண்முகலிங்கனை நன்கறிவர். இருவரும் மெல்லிசைப் பாடகர்களாக பலரை மகிழ்வித் தனர். யாழ். மகாஜனக் கல்லூரி எமக்குத் தந்த கலைஞனாக, பேராசிரியராக, துணை
வேந்தராக சண்முலிங்கன் விளங்குகிறார்.
துணைவேந்தர் பேராசிரியர் சண்முக லிங்கன் ஒரு மானிடநேயமுடையவர். அவர் உள்ளிருக்கும் மனிதம் சிலவேளைகளில் அவரைத் தர்மாவேசம் கொள்ள வைப்ப துண்டு. இம்மனிதம் அவருடைய பாரிய பணி களுக்கெல்லாம் துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பணிசிறக்க நாமெல்
லோரும் மல்லிகை சார்பாக வாழ்த்துகிறோம்.
- பேராசிரியர். அ. சண்முகதாஸ்

Page 3
தததன்
ിs நீண்ட காலத்திற்குப் பின்னர் 'ரமணியின் ஒவியம் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.
43- வது ஆண்டு மலரை முழுவதுமாக வாசித்து விடவில்லை. மலரைப் பார்த்தவுட னேயே மனசை ஒரு சிலிர்ப்புச் சிலிர்க்க வைத்து விட்டது, அதன் வடிவமைப்பு.
தொடர்ந்து நான் மல்லிகையின் ஆண்டுமலர்களைப் படித்து வருவதுடன், அம் மலர்களைப் பாதுகாத்தும் வருகின்றேன்.
மலருக்காக நீங்கள் உழைத்த உழைப்பு அதன் ஒவ்வொரு பக்கத்திலுமே துலாம் பரமாகத் தெரிகின்றது.
உலகத்தைத் தனது துடுப்பாட்டப் பந்து வீச்சால் பிரமிக்க வைத்த நமது முரளிதரனைப் பற்றிய உங்களது ஆசிரியக் குறிப்பு, அற்புதமான படப்பிடிப்பு. உலகத்தில் வேறெந்த விளையாட்டு வீரனுக்குமே கிடைத்திராத பெரும் பேறு முரளிக்குக் கிடைத்தது வரலாற்று அதிசயங்களில் ஒன்று. தான் பிறந்த கண்டி மண்ணிலேயே அவர் இந்தச் சாதனையைச் செய்துள்ளதுதான்.
யுத்தம், அவலம், கொலை, நாசம், கடத்தல் எனப் பத்திரிகைச் செய்திகளுக்கு மத்தி யிலும் இந்தச் சர்வதேசச் செய்தி மனசுக்கு ஆறுதலைத் தந்த ஒன்றாகும்.
மல்லிகையின் இந்த ஆண்டு மலரைப் பார்க்கும் போது நெஞ்சுக்கு நிறைவாக இருக்கின்றது.
அட்டைப்பட அழகின் கச்சிதம், உள்ளே தரமான, பிரபலமான வியாபார நிறுவனங் களின் விளம்பரங்கள், அதிகம் அலட்டாமல் கொள்ளாமல் பக்கங்களை அழகுடன் மிளிர வைக்கும் அச்சமைப்பு, பல எழுத்தாளர்களும் தத்தமது படைப்புக்களை தொகுத்தளித்த கச்சிதம் எல்லாமே. எல்லாமே. நமது இலக்கியத்திற்குத் தனிப் புகழ் சேர்ப்பவையாக அமைந்துள்ளன. இது நம்மைப் பெருமைப்பட வைக்கின்றது.
.24D அமரச் சிந்திக்கும் வேளையில் ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றதுک அத்தனை வசதி வாய்ப்புக்களையும் பெற்றிராத ஒரு சிற்றேடுதான் மல்லிகை, அதன் தொடர் வரவுதான் அதனது பலமும் கூட. இன்னமும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் அரை நூற்றாண்டைக் கண்டு விடலாம். கடந்தும் விடலாம். இத்தனை சிறிய வட்டத்திற்குள் இருந்து வரும் சிற்றேடு ஒன்று, இத்தனை பெரிய ஆண்டு மலரை வெளியிட்டுள்ளதே என நினைக்கும் இந்தச் சமயத்தில் என்னால் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியவில்லை.
யாழ்ப்பாணம். கிருஷாந்தி செல்லத்துரை.

{ இன்னமும் இந்த மண் உயிர்ப்புடன் இடங்கி Y- 666%(9డ 2ாரனமே கலைஞர்கள்தான்
தினசரிகளில் செய்திகளைப் படித்தாலே நெஞ்சு நடுங்குகின்றது. கொலை, பேரழிவு, நாசம், குண்டுவீச்சு, பொதுமக்கள் கூட்டாகப் பலி, கடத்தல் என்ற செய்திகள்தான் நெஞ்சைத் திடுக்கிட வைக்கின்றது.
இந்தத் தேசியச் சீரழிவுநிலையிலும் இந்த நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இலக்கியச் செயற்பாடுகளும் இடையிடையே இடம் பெறாமலுமில்லை.
இந்த இலக்கியச் செய்திகளைக் கருத்தூன்றிப் படிக்கும் வேளையில்தான், இந்த மண் இன்னமும் உயிர்ப்புடன் இயங்கி வருவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஒன்றை நாம் நிச்சயமாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். இந்த நாட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்களினது ஆரோக்கியமான செயல்பாட்டின் பெறுபேறாகத்தான் இந்த யுத்த பூமி இன்னமும் ஆரோக்கியமாகச் செயல்பட்டு இதுவரை வருகின்றது என்பதை நாம் மெய்யாகவே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இல்லாது போனால், இங்கு சுடுகாட்டு அமைதிதான் முடிவில் மிஞ்சும்,
இந்தப் பின்னணியில்தான் நாம் இந்த நாட்டுப் படைப்பாளிகளைப் பற்றிச் சிந்திக் söTGSpril b.
இன்று இந்த இலக்கிய இயங்கு தளத்திலும் கூட, குறுங் குழுவாத மனப்பான்மை மெல்ல, மெல்ல ஊடுருவி வருகின்றதோ என நாம் நியாயமாகவே அச்சப்படுகின்றோம்.
முன்னைய காலங்களில் தத்துவார்த்த நிலை காரணமாகக் கன்னை பிரிந்து இயங்கி வந்தது என்னவோ உண்மைதான். அதன் பெறுபேறாகத்தான் இத்தனை தேசியப் பொருளாதாரச் சீரழிவுக்குப் பின்னரும் கூட, இன்று வாரம் ஒரு நூல் என்ற வகையில் இந்த மண்ணில் பிரசுரங்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன.
இந்த ஆரோக்கியமான துரித வளர்ச்சிக்குப் பக்கம் பக்கமாகக் குறுங் குழுவாதப் போக்கு மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றதோ என நாம் நியாயமாகவே அச்சப்படுகின்றோம்.
கருத்துப் போராட்டம், தத்துவ முரண்பாட்டுவாதம் அவசியம், வளர்ச்சிக்கு அத்தியாவசியம் தேவையானதொன்றுதான்.
அதே சமயம், அதையும் மீறிக் குறுங் குழுவாதக் கோஷ்டிகளாக இவை பரிமாணமடைந் தால், இழப்பு என்னவோ வளர்ந்து வரும் ஈழத்து இலக்கியத்திற்குத் தான். கவனம்

Page 4
39.60LLJLib
அகலக்கால் புதிக்காகு ஆற்றல் மிக்கப் புத்திரிகையாளன்
-முருகபூபதி
ஒருவரைப் பற்றி எழுத முற்படும் போது- முதலில் நினைவுக்கு வருவது அவரை முதல் முதலில் சந்தித்த அந்த நாளும், அக்கணங்களும் தான்.
தொலைவில் இருந்தாலும், எம்மை நெருக்கமாக வைத்திருப்பது தொலைபேசிதான் என்று நம்புகிறேன்.
நண்பர் தனபாலசிங்கம் தொடர்பாக நான் எழுத வேண்டும் என்று மல்லிகை ஜீவா எனக்குச் சொன்னதும், தொலைபேசி ஊடாகத்தான்.
நாமிருவரும் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்ற காரணத்தினாலா அல்லது, தனபாலசிங்கம் பற்றி எழுதுவதற்கு நான்தான் பொருத்தமானவன் என்று ஜீவா கருதியதனாலா, என்பது தெரியவில்லை.
நான் தினமும் நினைக்கும் பலருள் ஒருவர் தான் நண்பர் தனபாலசிங்கம். எனவே, எழுதுவதும் சுலபமானது.
வடமராட்சியில் கரவெட்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு தபால் ஊழியரின் தலை மகனாய் பிறந்து, தொடர்ச்சியான வாசிப்பிலும், தேர்ந்த ரஸனையிலும் ஈடுபட்டு ஒரு ஒப்பு நோக் காளராகத் தனது தொழில் வாழ்வைத் தொடங்கிப் பின்னர் உதவி ஆசிரியராகி, பாராளு மன்ற நிருபராகி, சர்வதேசச் செய்திகளைத் தொகுத்துத் தரும் ஆய்வாளனாகி, செய்தி ஆசிரியராகி, பிரதம ஆசிரியராகியுள்ள தனபாலசிங்கத்தின் வாழ்வும் பணியும் வளர்ந்து வரும் பத்திரிகையாளர்களுக்கு முன்னுதாரணமானது எனத் திடமாகச் சொல்வேன்.
தனபாலசிங்கம் குறித்து எழுத முற்படும் போது, எனக்கு மூன்று பேர் நினைவுக்கு வருகிறார்கள்,
அவர்கள்- மா. பொ. சி., விந்தன், ஜெயகாந்தன் இவர்கள் மூவரில், முதலிருவரும் அச்சுக் கோப்பாளர்களாகத் தமது தொழில் வாழ்வைத் தொடங்கிப் பின்பு பிரகாசித்தவர்கள். ஜெயகாந்தன் பெரிய படிப்பெதுவும் படிக்காமல் சிறுவயதிலேயே சென்னைக்கு வந்து,
9.
மல்லிகை பெப்ரவரி 2008 3, 4

கஷ்டப்பட்டு, ஒரு ஒப்புநோக்காளராக வாழத் தொடங்கி, தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர்.
தனபாலசிங்கம், ஊரிலேயே உயர் வகுப்பில் படிக்கும் போதே இடதுசாரிச் சிந்த னையில் ஊறிவிட்டார். இடதுசாரிச் சிந்தனை களையும் மார்க்ஸியக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டே வடக்கில் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டங்களையும், சிறு பான்மைத் தமிழரது மனித உரிமைப் போரா ட்டங்களையும் மாணவப் பராயத்திலேயே நேரில் பார்த்துத் தெளிவு பெற்றவர்,
இலங்கையில் பிரபல்யமான இடது சாரிச்சிந்தனையாளரும், கைலாசபதி போன்ற முன்னணி இலக்கிய விமர்சகர் கள், எழுத்தாளர்கள் பலரின் ஆசானுமாகிய ஜீவா, டானியல், பொன்னுத்துரை, போன்ற ஆக்க இலக்கியக் கர்த்தாக்களின் ஆதர்ச மாகவும் திகழ்ந்த கார்த்திகேசன் மாஸ்ட ரின் மகளை மனம் முடித்த சின்னத்தம்பி அவர்கள். தனபாலசிங்கத்தின் தாய் மாம னார் என்ற தகவல் எத்தனை பேருக்குத் ଗsfull b?
சின்னத்தம்பியை "பீக்கில் சின்னத் தம்பி’ என்றால்தான் பலருக்கும் தெரியும், பீக்கில் வானொலியில் அவர் பணியாற் றியவர். தோழர் சண்முகதாஸனுக்கு நெருக் கமானவர். இதனால், தனபாலசிங்கமும், சண்முகதாஸன் நாட்டை விட்டு, பிரித்தானி யாவுக்கு புலம் பெயரும் வரையில் - (ஏன் அவர் மறையும் வரையில் என்று கூடச் சொல்லலாம்.) நட்புறவைப் பேணியவர்.
சிறுவயது முதலே சண்முகதாஸ்னின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர்.
கரவெட்டியிலிருந்து எப்படி கொழும்புக்கு வந்தார், என்பதே ஒரு சுவாரஸ்யமான கதைதான்.
ያ
படித்துவிட்டு, வேலையோ, வருமா னமோ இல்லாமல், இடதுசாரிகளுக்குப் பின்னால் அலைந்து கொண்டிருந்த தன பாலசிங்கத்தின் எதிர்காலம் குறித்துப் பெற் றவர்களுக்குக் கவலை வந்தது இயல் பானதுதான்.
1977 இல் இனக்கலவரம் நடப்பதற்கு முன்பதாக இவரைக் கொழும்பிலிருந்த மற்றுமொரு மாமாவான கந்தசாமி அவர்க ளிடம் அனுப்பிவிட்டனர்.
அன்று ஒரு மழை நாள்.
வீரகேசரியில் ஒப்புநோக்காளர் பதவிக் கான நேர்முகத் தேர்வு. காலைப் பொழுது. அலுவலக முன்னறையில் பலர் கையில் கோவைகளுடன் அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன். கூடியிருக்கும் அனைவரில் எத்தனை பேருக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற கவலையில் நான் மூழ்கியிருக்கிறேன்.
ஒரு மெலிந்த உருவம், கையில் குடை யுடன் ஈரம் சொட்டச் சொட்ட வந்து மடித்த குடையை எங்கே வைப்பது என்று தெரியா மல் தயங்கிக் கொண்டிருந்தது. அந்த வேலைக் காக, நேர்முகத் தேர்வுக்காக காத்திருக்கும் பலருள் அந்த உருவமும் சேர்ந்து கொண்டது.
பின்னர், அனைவருக்கும் எழுத்துப் பரீட்சை நடந்தது. அதன் பிறகு, சிற்றுாழியர், ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அழைக்க நேர்முகத் தேர்வு அறைக்குச் செல்கிறோம்.
குடையுடன் வந்தவர் தனபாலசிங்கம்.
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 5

Page 5
அந்த அறையில், வீரகேசரியின் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், பொது முகாமை யாளர் பாலச்சந்திரன். தனித்தனியாக அழைக் கப்படுகிறோம். எனது முறையும் வந்தது. கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு வந்தேன்.
அந்தப் பரீட்சைக்கு வந்திருந்த கூட்டத் தைப் பார்த்தபோது, எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
என்னைப் போலவே, அன்று குடையு டன் வந்த தனபாலசிங்கமும் அந்த அறைக் குப் போனார். நேர்முகத் தேர்வுக்கு வந்தவர் கள் அனைவரும் அந்த வேலை கிடைக் குமா? என்ற கவலையுடன் தான் வீடு திரும்பி யிருப்பார்கள், அன்று உடனேயே முடிவு சொல்லப்படவில்லை.
1977 கலவரம் தொடங்கி விட்டது. நாடு அமைதி இழந்தது. எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போய் விட்டது.
திடீரென்று ஒரு நாள் எனக்கு வீர கேசரியிலிருந்து கடிதம் வருகிறது.
நான் தெரிவு செய்யப்பட்டு விட்டேன். வேலையைப் பொறுப்பேற்க வருமாறு அழைக்கப்பட்டேன்.
நிரந்தரமான தொழில் ஏதும் இன்றி இலக்கியவாதிகளுப் பின்னால் அலைந்து கொண்டிருந்த நானும், என்னைப் போலவே, வேலை ஏதும் இல்லாமல் இடதுசாரிகளுப் பின்னால் அலைந்து கொண்டிருந்த தன பாலசிங்கமும், ஒப்புநோக்காளராகத் தெரி வாகியிருந்தோம்.
அலுவலகத்தில்- ஒப்பு நோக்காளர் பிரிவில் மிகவும் அமைதியாக அதிகம் பேசாமல் மெளனமாக இருந்தவர் தனம் என்று எம் எல்லோராலும் அழைக்கப்பட்ட தனபாலசிங்கம் .
அப்பொழுது, என்வசம் எப்பொழுதும் மல்லிகை இதழ்களும், கொழும்பு மக்கள் பிரசுராலயத்தில் நான் வாங்கிப் படித்த சோவியத் இலக்கிய நூல்களும், சோவியத் தகவல் பிரிவினுடாகக் கிடைக்கும் பிரசுரங் களும் இருக்கும். அவற்றை கேட்டு வாங்கிப்
படிப்பார்.
பின்னர் தான் அவரை நான் முழுமை யாக இனம் கண்டு கொண்டேன். அவரைத் தெரிந்து கொண்டேன். புரிந்துணர்வு மிக்க நண்பர்களாகிக் கொண்டோம்.
1983 கலவரத்திற்குப் பின்பு- வீரகேசரி ஆசிரிய பீடத்தில் சில வெற்றிடங்கள் தோன்றின. பல புதிய முகங்கள் குறிப்பாக, பட்டதாரி இளைஞர்கள் அந்த வேலைக்கு வந்தார்கள். ஒப்புநோக்காளர் பிரிவில் இருந்து கொண்டே, வீரகேசரியில் "ரஸ் ஞானி' என்ற பெயரில் எழுதிக் கொண்டி ருந்த நானும் உதவி ஆசிரியர்களில் ஒருவ னாகிவிட்டேன்.
அப்பொழுது பிரதம ஆசிரியர் ஆ. சிவ நேசச்செல்வன், செய்தி ஆசிரியர் நடராஜா,
ஆசிரிய பீடத்தில் மேலும் சில வெற்றி டங்கள் இருந்தன.
ஒருநாள் மதியம்- சிவநேசச்செல்வனு டன் பேசிக் கொண்டிருந்த போது, தன
மல்லிகை பெப்ரவரி 2008 辜 6

பாலசிங்கம் பற்றிக் குறிப்பிட்டேன். "அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள். ஆள்கெட்டிக்காரன், நிறைய வாசிப்பார், ஆங்கில அறிவும் உள்ளவர், மொழிபெயர்ப்புக்களும் செய்யக் கூடியவர்." எனச் சொன்னேன்.
சிவநேசச்செல்வன் சற்றும் தாமதிக் காமல், தனபாலசிங்கத்தைத் தனது அறைக்கு அழைத்தார். நிச்சயம் அவருக்கு அந்த வேலை கிடைக்கும் என நம்பினேன்.
ஆனால், அந்த ஆசிரிய பீடத்திலிருந்த சிலருக்கு முகம் வாட்டம் கண்டது.
ஒப்புநோக்காளர்களையே அடுத்தடுத்து ஆசிரியப் பீடத்துக்கு தெரிவு செய்தால், தங் கள் தகுதிகள் என்னாவது என்ற அர்த்த மற்ற காழ்ப்புணர்வுக் கவலை அவர்களைப் பீடித்துக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.
தமது அதிருப்தியை பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வனிடமும், வார வெளியீட்டுக் குப் பொறுப்பான பொன். இராஜகோபாலிட மும் அழுத்தமாக வெளியிடத் தொடங்கினர்.
அந்த அழுத்தம் காரணமாகத் தனபால சிங்கத்திற்கு மொழி பெயர்ப்பு பரீட்சையை நிர்வாகம் நடத்தியது.
தனபாலசிங்கம், மிகச் சிறப்பாக அத னைச் செய்தார். காழ்ப்புணர்வால் வாடிய முகங்களில் அசடு வழிந்ததைக் கண்டேன்.
அவர்கள் இன்று எங்கே என்பதும் தெரியவில்லை. காலம் எதற்கும் பதில் சொல்லும். தனபாலசிங்கம் தனது ஆற்றல் மிக்க பணியினூடாக, அந்தக் காலத்
தினூடாகப் பதில் சொன்னார். ஆர்ப்பாட்ட மின்றி அமைதியாகச் சொன்னார்.
உலகச் செய்திகள் எழுதும் u60cuSeo அவர் ஈடுபடுத்தப்பட்டார். பி. ரி. ஐ., ராய்ட்டர் முதலான செய்திச் சேவைகள் வழங்கும் செய்திகளை உடனுக்குடன் மொழி பெயர்த்து மித்திரனுக்கும், வீரகேசரிக்கும் கொடுத்தார். அப்பதவிக்குப் பொறுப்பான எட்வேர்ட் அவர்கள் மேற்பார்வை பார்த்தார். தனபாலசிங்கம் எழுத்து அனைவருக்கும் திருப்தியாக இருந்தது.
இவரது மொழி பெயர்ப்பினால் பெரிதும் கவரப்பட்ட ஒரு வாசகர் இருந்தார். சொன் னால் ஆச்சரியப்படுவீர்கள். அவர்தான் பிரபல வழக்கறிஞர் குமார் பொன்னம்பலம்.
தனது எழுத்துக்கள் Lu 66 si60 D தமிழாக்கித் தருவதற்கு குமார் பொன்னம் பலம், தனபாலசிங்கத்தின் உதவியை நாடிவீரகேசரி வாசலில் காத்து நின்றதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இக்காலப் பகுதியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது.
வீரகேசரி வாரவெளியீட்டில் தனபால சிங்கம் தூண்டில்' என்ற பகுதியில் சத்தி யன் என்ற புனைப்பெயரில் அரசியல் ஆய்வுகள் எழுதிக் கொண்டிருந்தார்.
மல்லிகை ஜீவா என்னைச் சந்தித்த சமயம் தமது அதிருப்தியை வெளியிட்டார்.
தூண்டில்’ என்ற பெயரில் மல்லிகை யில் ஜீவா பல நாட்களாக கேள்வி- பதில்
மல்லிகை பெப்ரவரி 2008 率 7

Page 6
பகுதியைப் பிரசுரித்து வருகிறார். ஒரே காலகட்டத்தில் இப்படி ஒரு இதழிலும் ஒரு பத்திரிகையிலும் தூண்டில் இடம் பெறு வது பொருத்தமில்லை என்பது ஜீவாவின் surg5ub.
பின்னர், தனபாலசிங்கம் தனது 'பத்தி எழுத்துக்கு வேறு பெயர் சூட்டிக் கொண்டார்.
1987 இல் நான் அவுஸ்திரேலியா விற்கு வந்து விட்டேன். தொலைவில் இருந் தாலும் தனபாலசிங்கத்துடனான தொடர்பு விடுபடவில்லை. தொடர்கிறது.
தொலைவிலிருந்து அவரது வளர்ச்சியை அவதானித்தேன், பெருமையடைந்தேன்.
வீரகேசரியில் உதவி ஆசிரியராக இருந்து கொண்டே, நண்பர். அஸ்வருட னும் இணைந்து பாராளுமன்ற நிருபராக வும் பணியாற்றினார்.
பல சந்தர்ப்பங்களில் மித்திரன்- வீரகே சரி நாளிதழ்களின் ஆசிரியத் தலையங்கங் களுக்கும் இவரது கைவண்ணம் உதவியி ருக்கிறது.
தினக்குரல் தொடங்கப்பட்ட போது அங்கு பணியாற்ற தனபாலசிங்கமும் போய் விட்டார் என அறிந்து அதிர்ந்து போனேன். புதிய பத்திரிகை தாக்குப் பிடிக்குமா? என்ற கவலையில் மூழ்கிப் போனேன்.
தனபாலசிங்கத்தைத் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு, அசாத்திய துணிச் சலைப் பாராட்டிய அதேசமயம், எனது
கவலையையும் சொன்னேன்.
'நம்பிக்கைதானே வாழ்க்கையடாசாதகமாகச் சிந்திப்போம் மச்சான்'- என்று
மாத்திரம் சொன்னார்.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.
தினக்குரலின் செய்தி ஆசிரியராக இருந்து தற்போது அதன் பிரதம ஆசிரியரா கியிருக்கிறார். எனது சொந்தச் சகோதர னுக்குக் கிடைத்த வளர்ச்சியாக நினைத்து உள்ளம் பூரித்து வாழ்த்துச் சொன்னேன்.
இன்று- பல அரசியல் தலைவர்களுக் கும், தொழிற் சங்கவாதிகளுக்கும், தமிழ் பிரமுகர்களுக்கும், இலக்கியவாதிகளுக் கும், வெகுஜன அமைப்புகளுக்கும் மிகவும் வேண்டப்பட்ட ஒருவராகத் தனபாலசிங்கம் திகழ்ந்துள்ளார்.
அவர், அகலக்கால் வைத்து மேலே ஏறவில்லை. ஒவ்வொரு படிக்கல்லிலும் நிதானமாகவே ஏறி மேலே வந்தவர்.
இலங்கையில்- நாற்பது ஆண்டுகளுக் கும் மேலாக இலக்கியச் சிற்றிதழ் நடத்தி, சாதனை புரிந்துள்ள ஜீவா அவர்களுக்கு 80 வயது எனத் தெரிந்ததும்- தினக்குரலில் ஆசிரியத் தலையங்கமே எழுதி பல பத்தி ரிகைகளுக்கும் முன்னுதாரணமானவர் தனபாலசிங்கம். முன்னர் ஞாயிறு தின கரனில் ஜீவாவைப் பற்றி ஆசிரியர் தலை
யங்கம் தீட்டியவர் சிவகுருநாதன் அவர்கள்.
தனபாலசிங்கம் நல்லாரோக்கியத் துடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று உரிமையுடன் சொல்வதில் எனக்கும்
பெருமைதான்.
மல்லிகை பெப்ரவரி 2008 奉 8

-திக்குவல்லை கமால்
விடியும் வேளையில் ஆட்கொள்ளும் சைத்தான் தூக்கத்தோடு போராடி ஜெயித்து சுபஹ9 தொழுதுவிட்டேன். அப்பாடா. நெஞ்சுக்குப் பெரும் நிம்மதி.
இனி ஆடிப்பாடி ஒவ்வொன்றாகக் காலைக் கடன்களைச் செய்து முடிக்க நானென்ன தனிக்காட்டு ராஜாவா? மனவிை மற்றும் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போகவேண்டும். ஒன்றாக எழுந்துவிட்டால், பெரும் போர்க்களம் தான்.
அக்கம் பக்க நாலைந்து குடும்பத்தினர் சேர்ந்து செய்து கொண்டுள்ள பொது ஏற்பாடு. மோட்டார் போட்டு ஃபுல்டேங்க் அடித்து வைத்தாலும் கூட, சிலபோது தாங்கியில் தண்ணிர் முடிந்துவிடும். இந்த முன்யோசனையை மண்டைக்குள் போட்டுச் சுழல விட்டபடி குளித்து வெளியிறங்கி விட்டேன்.
காலைச் செய்தி அறிக்கை, அறிவித்தல்கள் செவிப்பறையில் முட்டியும் முட்டாமலும் ஏழு மணி நெருங்கி விட்டது. அடுத்த அரைமணி நேரத்தில் வீதிக்கு இறங்கிவிட வேண்டும். சுமார் அரைக்கிலோ மீற்றர் ஒட்ட நடை நடந்து, பத்துக் கிலோமீற்றர் பஸ்ஸில் தொங்கிச் சென்று அலுவலகத்துக்குள் நுழைய அப்படியும் இப்படியுமாக ஒன்பது மணியாகிவிடும்.
உடுப்பை அணிந்து கொண்டு பேனாவைச் சேப்பில் சொருகிய போது அது நழுவி விழுந்து விட்டது. குனிந்து அதனை எடுக்க முனைந்த போதுதான் பட்டென்று அது நடந்துவிட்டது.
எதிர்பாராத இக்கட்டுக்குள் நான் விழுந்து துடித்தேன்.
அறை முழுவதும் தேடிப் புரட்டினேன். நாளாந்த வீடு. பாடசாலை. அலுவலக மென்று ஒடியாடி அழுக்குப் படிந்த நாலைந்து உடுப்புக்கள் சுருண்டு கிடந்தன. இனி சனிக்கிழமை மனைவியின் கைபட்டுத்தான் அவை புத்தழகு பெறும். கழுவிய இரண்டொரு சேட்டுக்கள் தொங்கிக் கிடந்தன. அவசர அவசரமாக ஒன்றை அயன் பிடிப்போமென்று பார்த்தால் கரண்ட் அற்றுக் கிடந்தது. கெட்ட நேரம் வந்தால் எல்லாம் இப்படித்தான்.
போகிற போக்கில் டவுனில் இறங்கி. கடைகள் எங்கே திறந்திருக்கும். அது போக அதற்கு ஐநூறு ரூபாவாவது வேண்டுமே. உண்மையைச் சொன்னால் என்ன? என்கையில் அப்படியொரு தொகை இல்லவேயில்லை.
மல்லிகை பெப்ரவரி 2008 & 9

Page 7
லீவு போடவும் முடியவில்லை. அவசர மான அலுவலக வேலைகள் தலைக்கு மேல் குவிந்து கிடந்தன.
சமாளிப்பது தான் ஒரே வழி.
ஒஃபீஸ் பேக்கை வைத்துவிட்டு, முக்கிய மான ஃபைல்கள் இரண்டொன்றை மார் போடணைத்துக் கொண்டு வெளியிறங்கி னேன். கூடவே சுவர்க் கலண்டரில் குத்தியி ருந்த குண்டுசியொன்றை உருவியெடுத்துக் Glass(T6ööTC3L6ôT.
வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது. நிச்சயமாக இயல்பான நடையில் நான் அன்று நடந்திருக்க மாட்டேன் தான்.
முஸ்னி ஹோட்டல் பெடியன் “ஸேர்' என்று கையசைத்தான்.
கூட்டுறவு சமாஜ மெனேஜர் பண்டார புன்னகைத்தபடி சைக்கிளில் சென்றார்.
மத்திய கல்லூரிசிப்லிமாஸ்டர் "ஸ்லாம்"
சொல்லிக் கொண்டு கடந்தார்.
வின்ஸ் ஃபெக்டரி நீலக்குயில்கள் "க்ளுக்" சிரிப்போடு நடந்தனர்.
இவர்கள் அனைவரும் வழமையான சந்திப்புக்குரியவர்களான போதும், அன்று என்னை நுணுகிப் பார்த்து ஏளனித்துச் செல்வது போலவே எனக்குப் பட்டது.
நல்லகாலம் அன்று ஸ்கூல் விஸிட் செல்லும் திட்டம் இருக்கவில்லை. கல்லுப் பிள்ளையாய் காரியாலயம் முடியும் வரை அமர்ந்திருப்பதென்று உறுதி பூண்டுவிட் டேன். சாப்பாடு, தேநீரெல்லாம் கொண்டு வந்து தர ஜினே இருக்கிறான் தானே என்ற 60gsful b.
ஒஃபிஸில் எவருக்கும் முகம் கொடுத்து நாட்டு நடப்புப் பேசாமல், கையெழுத்துப் போட்டு விட்டு எனது அறைக்குச் சென்றேன்.
“ஸேர்" என்றபடி பின்னால் வந்தார் 656m5.
‘என்ன? என்று முகக்குறிப்பால் கேட்டேன்.
"நேற்று அல்மினா அதிபர் வந்தார். இன்னக்கி ஏ. எல் பாஸ் பண்ணின பிள்ளை யளுக்கு பாராட்டாம். கட்டாயம் வரச் சொன் 65 Tr.”
நீட்டிய இன்விட்டேஷனை வாங்கிக் கொண்டு அமர்ந்தேன்.
நாள் குறித்துக் கொள்ள முடியாத போதும், பல தடவை முன்னறிவித்தல் தந்து என்னைக் கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கேட்டிருந்தவர்தான். பாடசாலை அபிவிருத்தி தொடர்பாகப் பலதடவை அவரோடு கலந்துரையாடி, ஊக்க மூட்டியி ருக்கிறேன். தமிழ்மொழி மூலப் பாடசாலை களுக்கு பொறுப்பான பணிப்பாளர் என்ற வகையில் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் எனக்கிருந்தது.
இன்றைக்கென்று பார்த்து இப்படி யொரு இக்கட்டில் மாட்டிக் கொண்டேனே. என்னதான் செய்வது?
ग्री, ஏதாவதொரு சாட்டுச் சொல்வோம். இந்த நிலையில் நான் போய் இன்று இன்னும் அவமானப்பட முடியாது. போவ தில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
இனி ஒவ்வொருவராக வரத் தொடங்கு வார்கள். அவர்களுக்கு முகம் கொடுக் காமல் எப்படித் தப்பித்துக் கொள்ளலாம்
மல்லிகை பெப்ரவரி 2008 & 10

என்ற யோசனையில் ஆழ்ந்து போனேன். அடிக்கடி என் நெஞ்சைக் குனிந்து பார்த்துக் கொண்டேன். ஆறுதல் வேறு சொல்லிக் கொண்டேன்.
அப்போது இன்ரக்கொம் அடிக்கத் தொடங்கியது.
“ஹலோ” மறு முனையில் வலயக் கல்விப் பணிப்பாளர்.
‘இன்னக்கி பதினொரு மணிக்கு அல்மினா போறம். நீங்களும் கட்டாயம் வரணும்"
விழுந்தது இடி.
டிர்க்டரின் வேண்டு கோளை மீறி இனி நான் தப்பித்துக் கொள்ளவே முடியாது.
நேரம் நெருங்க நெருங்க பெரும் போராட்டமாகவே இருந்தது.
கொலைக் களத்துக்குச் செல்வது
போலத்தான் அந்தப் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
பயணத்தை
'முன்னுக்கு வரலாமே"
"இல்ல ஸேர் பின்னுக்கு வசதியாயி ருக்கு."
காரியாலய கெடுபிடிகளுக்கு மத்தியில் ஒரு பத்து நிமிடம் கூட நிம்மதியாக அமர்ந்து கதைக்க முடிவதில்லை. இப்படியான சந் தர்ப்பங்கள் எமக்கு நல்ல வரப்பிரசாதம் தான். அவர் என்னென்னவோ கதைத்தார். விசாரித்தார். அபிப்பிராயம் வெளியிட்டார். என்னால் 'ஆ. ஒ.” என்று சொல்ல முடிந் ததே தவிர, அதற்கு மேல் எதுவுமே ஒட வில்லை.
ஒரு மணி நேரப் பயணம் பாடசாலை
வாயிலில் முற்றுப் பெற்றது. பாடசாலை. விழாக்கோலம் பூண்டிருந்தது. அனைத்துத் தரப்பினரும் மிகுந்த உற்சாகத்துடன் காணப் பட்டனர்.
என் கழுத்திலும் ஒரு மாலை விழுந்தது.
பொதுவாக மாலை மரியாதைகளுக்கு எனக்கு விருப்பம் குறைவு. ஆனால், அன்று நான் அதனை அமோகமாக வரவேற்றேன். அந்த மாலை என் மார்பின் பெரும் பகுதியை மறைத்துக் கொண்டு மணம் வீசியது.
விழா மேடை வரை அதிபர், ஆசிரியர் கள் அழைத்துச் செல்ல, மாணவர்கள் இரு பக்கமாகவும்நின்றுமலர்தூவினர். மேடையை அடைந்ததும் பணிப்பாளர் மாலையைக் கழற்றி மேசையில் வைத்தார். அங்கிருந்து விடைபெறும் வரை அந்த மாலை ஏன் என் கழுத்தை அலங்கரித்தபடி இருந்திருக்கக் கூடாதவென்ற ஆதங்கம் எனக்கு.
நானும் மாலையைக் கழற்றி வைத்து விட்டு, தலைவரோடு நெருங்கி மேசைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டேன்.
மண்டபத்திலே மாணவர்கள், ஆசிரியர்
கள், ஊரவர்களென்று. எல்லார் கண்க ளும் எங்களையே மொய்த்திருந்தன.
பிரதம அதிதி சபைக்கு பூரணமாகத் தெரிய வேண்டுமென்ற கோதாவில் பூச் செண்டை நகர்த்தி எனக்கு நேரே வைத்துக் கொண்டேன். எனது முகம் மாத்திரம் தெரிந்தால் போதுமல்லவா?
எல்லோரும் பேசினார்கள். எனக்குத் தொண்டை வருத்தமென்று சொல்லித் தப்பிக் கொள்ள முயன்றேன்.
மல்லிகை பெப்ரவரி 2008 奉 11

Page 8
"பரவாயில்லை கொஞ்சம் பேசுங்க." என்று மிகுந்த எதிர்பார்ப்போடு கேட்டுக் கொண்டார், அதிபர்.
எனது மூட் குழம்பியல்லவா கிடக்கிறது.
பேசுவதற்கு வைத்திருந்த ஸ்டாண் டுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதனோடு நெருங்கி முழங்கைகளை ஊன்றிக் கொண் டேன்.
இப்படிப்பட்ட வைபவங்களில் கொஞ்ச நேரம் பேசினாலும், மனதைத் தொடக் கூடிய விதமாகப் பேசக் கூடியவர் என்ற பெயர் வாங்கியிருந்தேன். அந்த எதிர்பார்ப் போடு தான் ஆசிரியர்கள் என்னை அவதா னித்தபடியிருந்தனர். ஏதோ பேசினேன். என்ன பேசினேனென்று எனக்கே தெரியவில்லை.
கைதட்டுக் கிடைத்தது மெல்ல அமர்ந் தேன்.
ஒவ்வொரு கட்டத்திலும் தந்திரமாக என்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்து, எங்கே மாட்டி விடுவேனோ? என்ற பயம் மனதுக்குள் பூதாகரமாய் எழுந்து நின்றது.
சாப்பாடு வேறு ஒழுங்கு படுத்தியிருந் தார்கள்.
பணிப்பாளரும் நானும் இரு உதவிக் கல்வி பணிப்பாளர்களும் ஒரே மேசையில் அமர வேண்டியதாயிற்று.
உயரமான மேசை. பரத்தியிருந்த பீங் siT6i.T வகையறாக்களும் எனக்கு ஒத்து
ழைத்தன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புரியா
னிச் சாப்பாடு. அதைக் கூட ரசித்துச் சாப்
பிட முடியாத இக்கட்டான நிலையில் தத்த ளித்தேன்.
விருந்து முடிந்ததும் பலரும் ஆறுத லாக கதைக்க எத்தனிப்பது வழக்கம்.
'é9, · · · · · ரெடி' கெமராக்காரன்.
டக்கென்று இருகைகளையும் மார்புக் குக் குறுக்காகக் கட்டி புது ஸ்டைலில் ஃபோஸ் கொடுத்தேன்.
கமெரா கிளிக் என்றது.
ஸலாம் போட்டு விட்டு விடை பெற்றோம்.
சந்தர்ப்பம் கொடுக்காமல், எவருக்கும்
முகம் கொடுக்காமல் நேரே பிக்கப் அருகே
வந்துவிட்டேன். பணிப்பாளரும் என்னைத் தொடர்ந்து வந்தார்.
“ஸேர் ஸேர்" என்றபடி ஓடி வந்தார்
பிரதி அதிபர்.
"பாஸ் பண்னின பிள்ளையஸ் எங்க
ளோட படமெடுக்க விரும்புறாங்க."
"அப்படியா? அவங்க ஆசய ஏன் கெடுப் பான்" இது பணிப்பாளர்.
முன்வரிசையில் எங்களை அமர்த்தி னர். எங்களுக்குப் பின்னால் ஆசிரியர்கள் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் வாங்கு போட்டு மாணவர்கள் ஏறிநின்றனர். புகைப்படக் கலைஞர் முன்னும் பின்னு மாக ஒடியாடி கெமராக் கோணத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்.
பொல்லாத இடத்திலல்லவா மாட்டிக் கொண்டிருக்கிறேன். நாளை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் இதனைப் பார்க்கப் போகிறார்கள். பாதுகாக்கப் போகி றார்கள். வீடு வீடாக ஊரெல்லாம் உலவப் போகின்றது. கெமராக் கண்களிலிருந்து நான் தப்பிக் கொள்ள வேண்டுமே.
மல்லிகை பெப்ரவரி 2008 & 12

அலுவலகம் போய்ச் சேர எப்படியும் மூன்று மணியாகும். பாடசாலை விட்டதும் ஆசிரியர்கள் வந்து கொண்டிருப்பார்கள். இன்று போகாமல் விடுவதுதான் சரியாகப்
Jill-gs).
“என்ன இறங்குறதா?”
"கொஞ்சம் தலையிடிக்கிறாப் போலி ருக்கு. எண்ணெச் சாப்பாடு எனக்கு அவ்வ ளவாகப் பிடிக்கிறதில்ல."
"அப்படியா?"
“Lö”
"அப்ப வீட்ட போய் ரெஸ்ட் எடுத்திட்டு நாளக்கி வாங்க."
வாகனம் ஹோல்டில் நின்றது. அப்பா டாவென்று இறங்கிக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சேட்" டைக் கழற்றி எறிந்தேன்.
“இன்டக்கி எனத்தியனிது?" வித்தியா சம் தெரிந்து மனைவி வியந்து கேட்டாள்.
‘இனி இந்த சேட்டப் போடியல்ல'
முழுநாளும் படா தபாடு படுத்திய கடும் கோபம் எனக்கு.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
காலையில் பேனா விழுந்த போது அதை எடுக்கக் குனிந்த வேளையில் சேட்டின் நடு பொத்தான் பட்டென்று அறுந்து விழுந்ததல்லவா. அப்படி நடக்காதிருந்தி ருந்தால் இன்றைய நாள் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கும்!
மல்லிகை பெப்ரவரி 2008 13

Page 9
سمسمبی
( O O o (தங்கர் பச்சானின் பள்ளிக்கடம், S”。
பரபரப்பில்லாமல் வெளிவந்து கணிசமான வெற்றியை வணிகரீதியிலும் ஏற்படுத்திய பள்ளிக்கூடம்" திரைப்படம், தங்கர்பச்சான் சிறந்த ஒரு நெறியாளர் என்பதை மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது. சிறுபராய நினைவுகளை மீட்டி ஏற்கனவே வெளியான இவரது அழகி திரைப்படத்திலும் பள்ளிக்கூடக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. இப்போது வெளிவந்திரு க்கும் 'பள்ளிக்கூடம் திரைப்படம் முழுமையாக பாடசாலை நினைவுகளுடனும், பாடசாலையுடனும் நகர்ந்து செல்கிறது.
தங்கர் பச்சான் என்ற நாமறிந்த நெறியாளருக்கு மேலாக தங்கர்பச்சான் என்ற நடிகரை அவரது அற்புதமான நடிப்பாற்றலையும் இத்திரைப்படத்தில் தரிசிக்க முடிகிறது. ஏற்கனவே "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியாகத் திரையில் வந்துபோன தங்கர், பள்ளிக்கூடத்தில் அப்பாவிக் கிராமத்து விவசாயிக் குமாரசாமியாகவே மாறிவிடுகிறார்.
ஆரம்பக் காட்சிகளில் காட்சிப் படுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகரும் திரைப்படம், பின்னர் மாற்ற முடியாத தமிழ்த் திரைப்பட முறையாகவிருக்கும் வசனங்களில் மூழ்கிப் போவது குறையாக இருந்தாலும், நெகிழ்ச்சியான காட்சிகளுக்குப் படம் முழுக்கவே பஞ்சமில்லை. எமது ஆழ்மன நினைவுகளை உசுப்பி விட்டு, அவற்றோடு உறவாட வைத்து வெற்றிபெறுகிறார் தங்கர் பச்சான். ஏற்கனவே இவ்வாறான உத்தியில் இளமைக் காலக் காதல் உறவுகளைச் சொல்லி வெற்றி பெற்ற 'ஆட்டோ கிராப்' சேரனை விட ஒருபடி மேலே சென்று, காதலுக்கும் அப்பால் பல்வேறு பட்ட பாடசாலை நினைவுகளை மீளக் கொண்டுவந்துள்ளமை பாராட்டுக்குரியது.
சிறுவயதில் கிராமிய மட்டத்தில் படிப்பதிலிருந்த கள்ளமும், பாடசாலைக்கு மட்டம் போட்டுவிட்டு விளையாடச் செல்வதும், பாடசாலை ஆசிரியர்களே மாணவர்களை வீடு வீடாகத் தேடி வந்து விரட்டிச் செல்வதும், அடியாத மாடு படியாது என்பதுவாய், மாணவர்களை அணைத்துப் போகாது அடித்து ஏசி வசைபாடும் ஆசிரியர்களின் செயற்பாடு என்று எமது அம்மா அப்பாவினது பாடசாலைக் கால மீள் நினைவுகளை மீட்டி நினைவு மழையில் நனைய வைக்கும் இத்திரைப்படம் தமிழ்த் திரைப்பிடத்துறை இன்னமும் தரமான பாதையை நாடமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
திரைப்படம் என்பது வணிக ரீதியிலான தொழில் என்பதனால், கலைத்துவத்துள்
முழுமையாக மூழ்கினால் படம் தோல்வியடைந்து விடுமோ என்ற தயாரிப்பாளரின்
நியாயமான பயத்தினாலோ என்னவோ சற்று கவர்ச்சியான காதல் பாட்டும், மருத்துவ தாதி
பாத்திரத்தில் வரும் ஸ்ரேயாவின் கவர்ச்சியும் ஊட்டப்பட்டிருக்கலாம் என இக் காட்சிகளை
மன்னிக்க முடிகிறது. மேலும் ஸ்ரேயா, மாணவர்களின் அப்பழுக்கற்ற உறவும், ஏக்கமும் மல்லிகை பெப்ரவரி 2008 率 4.
 
 

யதார்த்தமற்றவையுமல்ல. ஸ்ரேயா பின்னர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டதான சித்த ரிப்பை மனம் தாங்கவில்லை.
மாடு பாடசாலையில் படுத்துறங்கிச் சானிபோடும் காட்சிகள் ஏற்படுத்தும் அதிர்வு களும், ஆசிரியை சினேகாவும் மாணவர் களும் சிதைவுற்ற பாடசாலையைத் துப்பர வாக்குவதிலும், மழையிலிருந்து நனையா மல் மாணவர்களையும், பதிவேடுகளையும் காப்பதையும் காணும் போது, ஏற்படும் அநுபவங்களில் எமது கிராமத்துப் பாடசா லையின் அந்த நாள் நினைவுகளும், இன் றைய அகதிகளின் பாடசாலைகளின் தரிசனங்களும் படத்துடன் அந்நியோன்னி யமாக்கி விடுகின்றன. பள்ளிக்கூடம் போ கலாம் பாடலில் நாமும் பள்ளிக்கூடம் போன அந்த நாட்களின் இனிமையும், கசப்பும் நிறைந்த நினைவுகளில் மூழ்குகிறோம். மாணவன் குமாரசாமியைத் திட்டித் திட்டியே படிப்பில் வெறுப்புக் கொள்ள வைக்கும் ஆசிரிய பாத்திரம், சில பழைய இடிஅமீன் அசிரியர்களை நினைவூட்டுகிறது. 1960க்கு முன்னர் இருந்த எமது நாட்டு பாடசாலை கள் சிலவற்றின் நிலையையும், மாணவர்க ளின் நிலையுைம் கூட நினைவு மீட்டுகிறது.
சிதைந்து போய் நிர்வாகத்தினால் கைவிடப்படும் ஒரு பாடசாலையை ஊரவர் கள் ஒன்று திரண்டு நிமிர வைத்திட எடுக் கும் முயற்சியின் ஒரு கட்டமாக தற்போது கலெக்டராக இருக்கும் இப்பாடசாலையின் பழைய மாணவனான நரேனை சந்திக்கத் திட்டமிடப்படுகிறது. நரேனுடைய பள்ளித் தோழன் தங்கர் பச்சானை நகரத்திற்கு அனுப்புகிறார்கள். சினேகாவுடனான காதலில் சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்பட்ட நரேன் ஊர்வர மறுக்கிறான். எனினும், வேண்டிய உதவிகளைச் செய்ய சம்மதிக்கி றான். விழாவில் கலந்து கொள்ள நரேனின் சம்மதத்துடன் வருவதாகக் கூறிய குமார சாமி ஏமாற்றமடைந்தாலும், எப்படியாயி
னும் நரேனை அழைத்திட முயற்சிக்கி றான். இந்தவேளையில் இன்னொரு நண் பனான பிரபல திரைப்பட இயக்குனர் சீமா னைச் சந்திக்கிறார்கள். மிகுந்த செல்வந் தனாகவும், பிரபல்யமானவனுமாக இருக் கும் சீமானும் இப்போது நரேனை ஊர் வரச் சம்மதிக்க வைத்திட முயற்சிக்கிறான். கடைசி வரை சம்மதிக்காத நரேனிடமி ருந்து கோபித்துக் கொண்டு ஊர் திரும்பும் தங்கர் பச்சான், நரேன் வருவானென்றும், அவனுக்குத் திருமணமாகிவிட்டதாகவும் பொய் கூறுகிறான். நரேனுக்காக நம்பிக்கை யுடன் காத்திருக்கும் சினேகா மனமுடை ந்து போகிறாள். எனினும், பாடசாலை அபிவிருத்தி, மற்றும் விழா தொடர்பாக உழைக்கிறாள்.
எதிர்பாராமல் விழாவுக்கு சீமானுடன் வந்து சேரும் நரேன் சினேகாவுடன் முகம் கொடுக்க மறுக்கிறான். சினேகா ஏமாற்றத் தின் மத்தியிலும் தொடர்ந்து உழைக்கி றாள். முடிவில் அவளது காத்திருப்பு வீணா கவில்லை.
படம் முழுக்க உருக்கமான பலகாட்சி களும். நகைச்சுவையும் இழையோடுகிறது. பிள்ளைகளை வீடுதேடி பாடசாலைக்கு விரட்டும் காட்சிகளும், படப்பிடிப்பில் தங் கரைப் பயன்படுத்தும் காட்சிகளும் சிரிப்பூட்டு கின்றன. பொய்யைச் சொல்லிவிட்டு கடைசி யில் உண்மையைச் சொல்ல முடியாமல் தங்கர் தவிப்பதும், இயக்குனர் பாவித்துக் கழித்த உடைகளைத் தன் பையில் எடுத் துப் பத்திரப்படுத்தும் காட்சியிலும், இறுதி யில் தனியே போயிருந்து பள்ளி வகுப்பறை யில் அழுதழுது, ஏசி வதைத்த ஆசிரியரை நினைத்துக் பொருமுவதுமாகத் தங்கரின் நடிப்பு அற்புதம். சினேகாவின் இயல்பான நடிப்பும், ஸ்ரேயாவின் இளமைத்தனமான நடிப்பும் தேறுகின்றன. பார்க்கக் கூடிய ஒரு கலைத்துவமான தமிழ்ப்படம் பள்ளிக்கூடம்.
மல்லிகை பெப்ரவரி 2008 & 15

Page 10
"எப்பிடியடா பிடிப்பது?". என்றான் குகன்.
*தோட்டத்திலை தேடுவம். இல்லாட்டில் பெத்தாச்சியின் ரை பழைய கொட்டிலுக்குள்ளை பாப்பம்." என்றான் அவன்.
"தோட்டத்திலை இந்த முறை கச்சான் நடயில்லை. பெத்தாச்சியின்ரை வீட்டதான் போகவேனும்.
"எப்படியாவது பிடிக்க வேணுமடா. இல்லையெண்டால் திங்கக்கிழமை வகுப்புக்கு வெளியிலை தான். சுந்தரமூர்த்தி மாஸ்ரர் சொன்னாச் சொன்னதுதான்.
எலி ஒன்று பிடிப்பதுதான் இப்போதைய பிரச்சினை. எட்டாம் வகுப்புப் படிக்கத் தொடங்கிய போது, இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என்று நாங்கள் ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. சுந்தரமூர்த்தி மாஸ்ரர்தான் "விஞ்ஞானம்' படிப்பித்தார். படிப்பு எழுப்பம்
'படிப்பு என்னடா படிப்பு. எல்லாம் அநுபவத்தோடை சேர்ந்திருக்க வேணும். மனுசனுக்குப் பயன்படாத படிப்பாலை ஒரு பிரயோசனமும் இல்லை." என்பார்.
திடீரென ஒருநாள். "எலிதான் நோய்க்கான முக்கிய காரணி. எலி பிடியுங்கோ. y என்றார். நாங்கள் சிரித்தோம்.
LL LL LL LLLLS SLL LL LLL LLL LLL LLLS LLS SLLL LL LL LLL LLLS SLLLL LL LL LL LLLLS SLL LLLL LLLL LL LLLS LLS SLLS SLLLL LLS LLS LLL SLLLS SLLL LL LLL LLL SLLLS LLL LLS LL LLL LL
-n incarnله.8سمionanc
எலி வால்
- பரன்
"சிரிக்க வேண்டாம். சீரியசாசச் சொல்லுறன். இந்தச் சனி, ஞாயிறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எலியாவது பிடிக்க வேணும். திங்கட்கிழமை வாலைக் கொண்டு வரவேணும். இல்லாட்டில் வகுப்புக்கு வெளியிலைதான் நிக்கோணும்."
'வகுப்புக்கு வெளியே நின்று என்ன செய்யிறது?. " வாமன் மெதுவாகக் கேட்டான்.
'எலி பிடிக்கிறதுதான்!. y
வகுப்பே சிரித்தது.
(3σή..... இரண்டு பேராகச் சேர்ந்து பிடிக்கலாமோ?. " தயங்கியபடியே வாமன் கேட்டான்.
"ஒம்."
எல்லோரும் சோடி சேர்ந்தோம். எனக்குக் குகன், பெத்தாச்சியின் கொட்டில் நிறையத்
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 16

தட்டுமுட்டுச் சாமான்கள். நாங்கள் உருட் டிப் பிரட்டிய சத்தம் கேட்டு, எங்கள் நாயும் சேர்ந்து கொண்டது. ‘புதையல் மாதிரி எலி ஒன்று ஓடியது. நாங்கள் கலைத்து அடிக்க. ஒரு மாதிரியாக நாய் அதைப் பிடித்து விட்டது. அந்தக் கிழமை நாயின் புண்ணியத் தில் பிழைத்துக் கொண்டோம்.
திங்கட்கிழமை காயவைத்த எலி வாலைக் காட்டியபோது, மாஸ்ரர். தலையை ஆட்டினார். கொஞ்சப் பேர் வகுப்புக்கு வெளியே போனார்கள். லோகநா தன் தான், "ஹீரோ, மூன்று எலி பிடித்திருந் தான். மாஸ்ரரே ஆச்சரியப்பட்டார்.இதுவும் ஒரு வகைச் சமூகத் தொண்டு என்று அவ னைப் பாராட்டினார்.
மாஸ்ரர் போனபின், ‘எலி பிடிப்பது சமூகத் தொண்டா?. ' என்று லோக
னைக் கேட்டேன்.
"இல்லையடா. அது பூனைத் தொண்டு.” என்று சிரித்தான்.
அடுத்த கிழமை பிரச்சினையில் முடிந் தது. ஒரு எலிதானும் அம்பிடவில்லை. எல்லாமே ஒடித் தப்பிவிட்டன. திட்டு வாங்கி வகுப்புக்கு வெளியே நிற்கவேண்டியதா யிற்று. இந்த முறையும் லோகன் மூன்று எலி பிடித்திருந்தான்.
‘எலி பிடிகாரன்' என்ற பட்டமும் கிடைத்
5š·
"என்னடா செய்யலாம்?." என்றான் குகன், அடுத்த கிழமையும் எலி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்க வில்லை.
"லோகனைக் கேட்டுப்பாரடா. உன்ரை கூட்டாளிதானே, ஒன்றாவது பிடித்துத் தருவான். ’ என்றான்.
அவனது யோசனை நன்றாகவே உதவியது. அடுத்த திங்கள் எங்களுக்காக லோகன் இரண்டு எலிவால் கொண்டு வந்திருந்தான். தனக்காக மூன்று.
"அவன் விண்னன்தான்ரா!...” என்று குகன் வியந்தான்.
"இப்படியே அவனைப் பிடித்துக்கொள் 6T-T........ ' என்று அட்வைஸ் வேறு.
தொடர்ந்து எலி பிடித்துத் தரும்படி லோகனிடம் கேட்க வெட்கமாக இருந்தது. "நானும் குகனும் வருகிறோம். சேர்ந்து பிடிப்போமா?..." என்று கேட்டேன்.
கொஞ்சம் யோசித்துவிட்டு. 'குகன் G366TT b..... p5 LDL, Gib surr........ என்றான்.
“என்ன கிழமை பிடிக்கலாம்?" என்றேன்.
"எலி பிடிக்கிறதுக்கு நாள் பார்க்க வேனுமோ?. இந்த வெள்ளிக்கிழமை பிடிப்பம்." ج
'வெள்ளிக்கிழமை வேண்டாமடா. கோவிலுக்குப் போகவேனும். yy
“சரி வியாழக்கிழமை பிடிப்பம். பள்ளிக் கூடம் முடிய என்னோடை வா. போகலாம்."
வியாழக்கிழமை கெதியாக வந்து விட் டது போல் தோன்றியது. லோகன் வீட்டிற் குப் போய்ப் புத்தகங்களை வைத்து விட்டு, எலி பிடிக்க வெளிக்கிட்டோம். ஒழுங்கை யால் நடந்து கடற்கரை ரோட்டிற்கு வந் தோம். மீன் மார்க்கட்டுக்குள் நுழைந்தான். பூனைகள் தான் நிறைய நின்றன. பூனை யுள்ள இடத்தில் எலி இருக்குமா? என்ற சந்தேகம் வந்தது. விறுவிறு என்று நடந்து போய் மீன் விற்கும் ஆச்சியிடம் ஏதோ கதைத்தான். கிட்டப் போன போது, ஆச்சி
மல்லிகை பெப்ரவரி 2008 率 17

Page 11
கடதாசியில் சுற்றியபடி ஏதோ அவனிடம் கொடுத்தது தெரிந்தது. விரித்துப் பார்த்த போது, எலிவால்கள் இருந்தன.
"வாடா போகலாம்." என்று வெளியே கூட்டி வந்தான்.
"நீ எலி பிடிக்கிறதில்லையாடா?. 辨别
"இல்லை. இந்த ஆச்சி வீட்டிலை நிறைய எலி இருக்குதாம். அவதான் பிடிச்சுத் தாறவ."
"காசு குடுக்க வேண்டாமோ..?"
"இல்லையடா. சும்மாதான்,' என்று சிரித்தான்.
"இந்தாடா உனக்கு Clp6öTD 6um 6ö.
எனக்கு இரண்டு போதும். ' என்று
கொஞ்சம் தாராளமாகவே கொடுத்தான்.
திங்கட்கிழமை நானும் குகனும் தான் 'ഖgr!' ケー
“மூன்று எலி பிடிச்சிருக்கிறாங்கள். கெட்டிக்காரன்கள்." என்று சுந்தரமூர்த்தி மாஸ்ரர் பாராட்டினார்.
வகுப்பு முடிய நானும், குகனுமாகப் போய் லோகனுக்கு நன்றி சொன்னோம்.
"அடுத்த முறை ஐந்து தருகிறேன்." என்றான்.
'அவ்வளவு எலி பிடிக்கலாமாடா. ?・
"D60Lust....... இது எலிவால் இல்லை. குஞ்சுத் திருக்கைமீன் வால். மாஸ்ரருக்கு விளங்காது.”
நானும் குகனும் ஆளை ஆள் பார்த் தோம். "பேய் முழி முழிக்காதையுங்கோ. பிறகு மாட்டுப்படுவியள்!.' என்றபடி லோகன் போனான்.
HLAPPY PHIOTO)
Excellent Photographers
Modern Computerized
Photography For Wedding Portraits & Child Sittings
Photo Copies of Identity Cards (NIC). Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Tel: 2526345
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 18
 

ö, GUIT, ö (öIT/ ö) 6962) 8GGVößLLIÓ எனது அநுபவம்
-பஞ்சதாட்சாயினி
'மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்து துதான் கல்வி, என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு. கல்வியின் இறுதி இலக்கு கற்பவ ருக்கு மெய்யறிவையும் ஆத்ம ஞானத்தையும் அளிப்பது என்ற நிலை மாறி இன்று தொழிற் துறையில் சிறந்த வல்லுநர்களை உருவாக்கும் இயந்திரமாகக் கல்வி வர்த்தகமயப்படுத்தப் பட்டு வருகிறது. கல்விச் சான்றிதழ்கள் பயன்தருவனவாயினும் மனிதன் சான்றோன் ஆதலும் வேண்டும். எனவே, பொருளிட்டும் வழியுடன் ஆத்மார்த்தமான திருப்தியைத் தரக் கூடிய வகையில் கல்வி அமைதல் வேண்டும். ஆத்மதிருப்தியை நாம் பெறத் துணை நிற் பவை இலக்கியம், சமயம், கலை சார்ந்த கற்கைகள் ஆகும்.
அந்தவகையில் க. பொ. த. (சா/த) இல் ஆங்கில இலக்கியத்தை விருப்பத்திற்குரிய பாடங்களுள் ஒன்றாகத் தெரிவு செய்து கற்றமையானது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாகவே கருதுகின்றேன். "இப்பாடம் உமது இறுதிப் பெறுபேற்றைப்புாதிக்கும், அதைக் குறைத்து விடும்.” என்று அக்கறையுடன் பலரும் எனக்கு அறிவுறுத்தினர். உண்மையில் இன்றைய மாணவர்களாகிய நாமும், எம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் O/L இல் 10A என்று சொல்வதிலுள்ள சொற்சுவையைத் தானே பெரிதும் விரும்புகிறோம். ஆனாலும், சிறுவயதில் இருந்தே மொழி சார்ந்த விடயங்களில் இயல்பாகவே எனக்கிருந்த ஈடுபாடும், எனது பெற்றோரின் வழிகாட்டலும் ஆங்கில இலக்கியத்தை விருப்போடு கற்பதற்கு என் னைத் தூண்டியது. அது மட்டுமல்லாது, நாம் விரும்பும் துறையில் புதியதொரு விடயத்தைக் கற்பதற்கு எமக்குக் கிடைக்கின்ற எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடக் கூடாது என்ற சிரத்தையும் காரணமாக அமைந்தது.
ஆங்கில இலக்கியத்திற்கான எமது பாடத்திட்டம் மிகவும் கனதியான விடயங்களை உள்ளடக்கியிராவிடினும், இலங்கையில் இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைக் கற்கும் ஒரு மாணவனுக்குத் தேவையான விடயங்களைப் போதியளவில் உள்ளடக்கி இருந்தது. சுருங்கக் கூறின், பரந்துபட்ட ஆங்கில இலக்கிய உலகிற்குள் பிரவேசிப்பதற்கான அழைப்பிதழ் அது எனலாம். இருபது கவிதைகள், இரு சிறுகதைகள், மூன்று கட்டுரைகள், இரு நாடகங்கள், இரு நாவல்கள் என்பவற்றை உள்ளடக்கியதே எமது பாடத்திட்டம். இவ்வளவு விடயங்களுக்கூடாகவும் எமது மொழியறிவையும், சிந்தனை ஆற்றலையும்
மல்லிகை பெப்ரவரி 2008 & 19

Page 12
பரந்தளவில் விருத்தி செய்வது என்பது எமதும், எமக்கு அமையும் ஆசான்களின தும் கைகளிலேயே தங்கியிருந்தது.
இந்த இடத்தில் எனக்கு ஆங்கில இலக்கியத்தைக் கற்பித்த ஆசிரியர் பற்றி அவசியம் நான் குறிப்பிடவே வேண்டும். தாரமும் குருவும் தலைவிதிப் பயன்' என்று பெரியோர் கூறுவர். எனது அம்மாவின் பெரு முயற்சியின் விளைவாகத் தனிப்பட்ட முறை யில் இலக்கியம் கற்பித்த ஆசான் திரு. பீற்றர் அவர்களின் வழிகாட்டலே எனக்கு அப்போது பெருந்துணையாக அமைந்தது. இதிலே குறிப்பிடத்தக்க விடயம் யாதென் றால், நான் ஒருமுறை ஆங்கில பாடப்பரீட்சை யில் மிகக் குறைவான புள்ளிகளைப் பெற்ற மறுநாளே எனக்கு ஒரு ஆசிரியரை அம்மா தேடிப் பிடித்துவிட்டார். ஆசிரியரின் இலக் கிய வகுப்புக்களில் அன்றைய நாளுக்குரிய பாடத்தை வாசித்தல், விளக்கமளித்தல், வினாக்களுக்கு விடையளித்தல், பாடக் குறிப்புக்களைப் பிரதி பண்ணுதல் என்ற வழமையான செயற்பாடுகள் ஒரு போதும் நடைபெற்றது கிடையாது. எனது சிந்த னைக்கு எட்டியவரை அவ்வகுப்புகள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு இலக்கியக் கலந்துரை யாடல் என்றே சொல்வேன். குறித்த படைப் பில் என்ன செய்தி சொல்லப்படுகிறது? என்பதிலிருந்து அப்படைப்பைத் திறனாய்வு செய்வது வரை பலதரப்பட்ட கோணங்க ளில் ஆழமாகக் கலந்துரையாடுவோம். அவற்றை வினா. விடை வடிவில் எழுதி நான் பதிவு செய்து வைப்பேன்.
ஆரம்பத்தில் ஆங்கிலம் ஓர் அந்நிய மொழி என்ற அடிப்படையில் எழுதும்போது, சொற்களை இட்டு நிரப்பவே பெரும் பாடு பட்டு நின்ற சந்தர்ப்பங்களும் உண்டு.
ஆனால், என் ஆசிரியர் எனக்கு அடிக்கடி &D surff "Keep on Writing" Gigsmli ibg. எழுத எழுத ஒரு தெளிவு ஏற்பட்டதை என் னால் உணர முடிந்தது. கஷ்டப்பட்டு முயற்சி செய்து திருப்தி காணும் போது கிடைக்கின்ற சந்தோஷத்திற்கு ஈடேது?
ஆசிரியரின் வழிகாட்டலும், ஆர்வமும் அதிவிசேஷ சித்தியை (A) ஆங்கில இலக்கி யத்தில் பெற்றுத் தந்தது என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பாடசாலையிலும் எனது வகுப்பில் நான் உட்பட மூன்று பேர் மட்டுமே ஆங்கில இலக்கியத்தைக் கற்றோம். அதனால், பாட சாலை வகுப்புகளும் சுவாரஸ்யமாகவே அமைந்தன. தவனைப் பரீட்சைகள் தவ றாது நடைபெற்றதால் எம்மை அடிக்கடி பரீட்சித்துப் பார்க்கும் களமாக அவை அமைந்தன. ஆங்கில இலக்கியப் பாடத் திற்கு அதிக புள்ளிகளை ஆசிரியர்கள் வழங்க மாட்டார்கள். அப்பரீட்சை விடைத்தாள் களை மிக நுணுக்கமாக மதிப்பீடு செய்து புள்ளி வழங்க வேண்டும் என்பது ஆசிரியர் கள் எமக்குத் தரும் விளக்கம். ஆனால், அதை விட இன்னொரு காரணமும் இருக்க முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இலக்கியத்தில் தர்க்க ரீதியாக வினாக்கள் அமைவதும், விடைத்தாளை மதிப்பீடு செய்பவரின் கருத்தும், விடை எழுதியவரின் கருத்தும் ஒரு புள்ளியில் சந்திப்பது சாத்திய மற்றுப் போவதும் இதற்குக் காரணங்களாக இருக்கலாம். அனாலும், இது எம்மைப் பல கோணங்களில் சிந்திக்கவும், பரந்துபட்ட
விளக்கத்துடன் விடைகளை விரிவாக
எழுதவும் மிகவும் உதவியாக அமைந்தது.
ஆங்கில இலக்கிய உலகம் பரந்து விரிந்தது. எமக்கு முற்றிலும் புதிய சூழல்
மல்லிகை பெப்ரவரி 2008 率 20

அது. அதில் நாம் கற்றது மிகச் சிறிதே என்றாலும், பல விடயங்களை அறிய முடிந் தது. என்னதான் வேறு வேறு இனத்தவராக இருந்தாலும், பகுத்தறிவு கொண்டு எழுகின்ற சிந்தனை பொதுவானதே. ஆனால், அவற்றை வெளிப்படுத்தும் விதம் தான் பாரிய வேறு பாடுகளைக் கொண்டிருக்கிறது. இந்த வேறு பாட்டை ஏற்படுத்துவது தான் எமது பண் UTG. -grg GOOTLDras The proposal 6T667 afgo Anton Chekhov SQ6ÖT 5 TL85ğëgâIGŝ6) ஒரு காட்சி வருகிறது. அதாவது திருமண வயதுடைய ஓர் ஆண், தனக்குப் பொருத் தம் என்று தான் கருதிய ஒரு பெண்ணின் வீட்டிற்குத் தானே தனியாளாகச் சென்று பெண் கேட்பதாக அக்காட்சி அமைகிறது. இது ரஷ்ய நாட்டில் இடம்பெறும் ஒருகதை, ஆனால், எமது தமிழ்ச் சமூகத்திற்கு இச் செய்கை முற்றிலும் விநோதமானது அல் லது ஏற்க முடியாதது எனலாம். இங்கு குறிப்பிட்ட ஆண் தனக்கு ஒரு துணை தேவை, அத்துணைக்கு அப்பெண் பொருத்தமாக இருப்பாள் என்று எண்ணுகிற இடத்தில் ஒற்றுமை ஏற்படுகிறது. ஆனால், அதை வெளிப்படுத்தும் விதமோ இரு சமூகங் களுக்குமே வித்தியாசமானது.
நான் ஆங்கில இலக்கியப் பாடத்தில் படித்த சிறுகதைகளில், நாவல்களில் இடம்பெறும் உரையாடல்களிலும் நீண்ட வசனங்களோ, உணர்ச்சிப் பிழம்பான சொற் களோ குறைவாகவே இருந்தன. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாங்கை அவை கொண்டிருந்தன. கதையை நகர்த்திச் செல் லும் பாங்கிலும், சம்பவங்களுக்கு முக்கி யத்துவம் கொடுக்கும் விடயத்திலும் தமிழ்ச் சிறுகதைகளுக்கும், ஆங்கிலச் சிறு கதைக ளுக்கும் வேறுபாடுகளை என்னால் உணர முடிந்தது. சில வேளைகளில் ஆங்கில இலக்கியப் படைப்புகளிலே உள்ள உணர்ச்சி வெளிப்பாடுகள்/ மெய்ப்பாடுகளை உள்வாங்
குவது என்பது ஒரு அந்நிய மொழி என்ற் ரீதியில் எனக்குக் கடினமாகவே இருந்தது. உணர்வுபூர்வமான ஒரு விடயத்தைத் தாய் மொழியில் உள்வாங்குவதற்கும், வேற்று மொழியில் உள்வாங்குவதற்கும் வேறுபாடு இருக்கும் என்பது எனது கருத்து வாழ்க்கை முறை, மற்றும் பொருளாதாரப் பின்புலத் தில் வேறுபாடு இருப்பதால், அவ் வேறுபாடு கள் இலக்கியத்தில் நிச்சயம் வெளிப்படும்.
இலக்கியம் படிப்பதற்குக் காலவரை யறை ஏற்படுத்த முடியாது. எமக்குப் பாடசாலையில் ஒரு வாரத்திற்கு எண்பது நிமிடங்கள் மட்டுமே ஆங்கில இலக்கியப் பாடத்திற்கு ஒதுக்கப்பட்டது. இது நிச்சயமா கப் போதாது. ஆனாலும், எமது பாடத்திட் டம் இவ்வாறு தானே வகுக்கப்பட்டிருக் கிறது?! பாடசாலையில் கற்றதை விட வீட்டில் கற்றதே அதிகம் எனலாம். இலக்கி யம் படித்ததால், ஆங்கில மொழிப் பாடத் தைத் தனியாகக் கற்க வேண்டிய தேவை யும் அதிகமாக எனக்கு ஏற்படவில்லை. இலக்கிய அறிவுடன், மொழி வளத்தையும் பெருக்க அதிக வாய்ப்பாக அமைந்தது.
இப்படியாக, இருவருடக் கல்வியை மூன்று மணி நேரத்தில் முழுவதுமாக வெளிப்படுத்தும் இறுதிப் பரீட்சையும் நெருங் கியது. அந்த இருவருடங்களும் நாம் என்ன தான் திறமையாகச் செயற்பட்டாலும் இறுதி மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே எமது திறமை அளவிடப்படும். இதுதான் எமது பரீட்சை மையக்கல்வியின் குறைபாடு. ஆனாலும், முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கிணங்க, இருவருட கால முயற்சி க்கு நல்ல பயனைப் பெற முடிந்தது. பரீட்சையுடன் எனது இலக்கியத் தொடர்பு துண்டிக்கப்படாது, இன்றும் எனது வாழ் வில் நல்ல வழிகாட்டுவதாகவும், சிந்த னையை விருத்தி செய்வதாகவும் அமைந்து ள்ளது என்பதனை நான் தெளிவாக உண ரக் கூடியதாக உள்ளது.
மல்லிகை பெப்ரவரி 2008 率 21

Page 13
வாணமெங்கும் வட்டமழத்து வந்தமர்ந்தது பெயர் தெரியாப்பறவையொன்று அண்ணாந்து பார்த்தேன் வாணமெங்கும் என் சிறகுகள்
২% » %
அருக்குமாழ மேலேறி எட்ழப் பார்த்தேன் காலழயில் பூமி கிடப்பதாக ஓர் பரவசம் மேலே பார்த்தேன் வானத்தின் கீழ்
uT6) b
$% $
மீன் தொட்ழயைப் பார்த்தவாறிருந்தேன் திடீரெனக் கால்கள் குளிர்ந்தன நீர் மட்டம் கூழற்று இப்போ தொட்ழக்குள்
நான்
శ్రీ శ్రీ స్త్రీ
தும்பிகள்
பறவைகள்
சருகுகள் பறந்து திரிந்த வான்வெளியில் ஏவுகணைகள் என் வானம் இறந்து போனது
ஊருக்கு ஒதுக்குப்புறம் அருவியின் ஒசைக்கழயில் மூழ்கிக் கிடக்கிறது அமைதி பூத்திருந்த முந்தைய ஊர்
དང་༡༡་༡
கூப்பிருதுரத்தில் இருக்கிறேன் கூப்பிடாமலேயே நிற்கிறாய்
தூரப் போனதும்
நீ கூப்பிடுவதான மாயை
இருந்தும் காதல் தந்த ரணங்களுடன் புதைந்து போனேன்
இனியாவது என் கல்லறையில் அமைதி பூக்கட்டும்
இறப்புக்குப்பின்பும் என்னை நினைத்துப் பார்க்க
வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் -
கவிதைகள் கொஞ்சம்
மல்லிகை பெப்ரவரி 2008 & 22

6Uഞnഖnഴെ ബക്ട്രൂ- //
- நாச்சியாதிவு பர்வீன்
இரண்டு வருடங்கள் இத்தனை சீக்கிரத்தில் நகர்ந்து போகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அப்பப்பா. மனசு பூராகவும் ஒரு இனம் புரியாத பூரிப்பு, ஏகப்பட்ட அநுபவங்களை, நிஜங்களை, அவலங்களை இந்த இடைப்பட்ட காலத்தில் சேமித்துக் கொண்ட பெருமிதம், என்னுள்.
"இந்தக் கட்டார் மண்ணில் இரண்டு வருடங்கள் கழித்து விட்டேனே? என்று எனக்குள்ளே அவ்வப்போது சந்தேகம் எழுவதும் உண்டு. இருந்தும் என்ன? அதுதான் C TTL Y TMTLLLLLT TTSK TTLLLLLLLLH LT0L TTTTTTTMLLS LL TTTHLLLLH LT0 TLLTTTLLS உறவுகளின் உந்நதம் என்று எல்லாவகையான அநுபவங்களையும் அள்ளித் தந்தது இந்த வளைகுடா வாழ்க்கை தான்.
என் பாலைவன வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க இன்னும் ஒரு வாரமே எஞ்சியிருந்தது. என்னுள் இனம் புரியாத ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. நான் நேசிக்கின்ற, எனது சொந்த மண்ணை தரிசிக்கப் போகின்றேன் என்கின்ற சந்தோஷம் ஒருபுறம், இந்த இரண்டு வருட காலத்தில் வெவ்வேறு பிரதேசத்திலிருந்து வந்து சேர்ந்த போதும், நட்பின் பிணைப்பில், அன்பால் இணைந்து கொண்ட சில நல்ல, உள்ளங்களைப் பிரிய போகின்றோமே என்கின்ற மெல்லிய சோகம் மறுபுறம், என்று
என்னை மாறிமாறி அலைக்கழித்தன.
கட்டாரில் கழித்த நாட்களில் எனது சோகத்திலும், சுகத்திலும் ஆறுதலாயும், ஆனந்தமாயும் இருந்தவர்கள் எங்களுர் நண்பர்கள். ஆம்,. ஊரிலே இருக்கின்ற போதுகளில் இல்லாத ஒரு அந்நியோன்ய உறவும், அன்பும், எங்கள் கிராமத்து நண்பர்களுக்கு என்மேல் இருந்தது. இந்த ஆரோக்கியமான உறவினால் இந்த இரண்டு வருடகால கட்டார் வாழ்வு சோகங்களை விடவும், சந்தோஷங்களைத்தான் எனக்கு அள்ளித் தெளித்தது எனலாம். எனது கிராமமான நாச்சீயாதீவைச் சேர்ந்த சுமார் எண்பத்தைந்து பேர் இந்தக் கட்டார் மண்ணில் வெவ்வேறு துறைகளில் தொழில் புரிகின்றார்கள். அதில் பலர் நல்ல நிலைமையில், திருப்தியளிக்கின்ற வருமானத்தைக் கொண்டிருக்கின்றமை என்ற செய்தியை, எமது அமைப்பின் இறுதிக் கூட்டத்தில் நான் சொன்னேன். (அமைப்புப் பற்றிப் பின்னர் சொல்லுகின்றேன்) எல்லோரும் ஆடிப் போனார்கள். இன்னும் ஆறுமாதமோ, ஒரு வருடமோ இருந்துவிட்டுச் செல்லும்படி
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 23

Page 14
கோரினார்கள். முடிவில் என் நிலைமை யைப் புரிந்து கொண்டு, என் பயணத்திற் கான ஏற்பாடுகளை நான் செய்வதற்கு உதவி செய்தார்கள். அதிலும், குறிப்பாக முனல்பர், ஹாரீஸ், தஸ்லீம் (உதுமான்) போன்றவர்கள் சுமார் ஒரு வார காலத்திற்கு தமது வாகனங்களை எனது பயணத்திற்கு என்று மட்டுமே ஒதுக்கிவிட்டனர். இறுதி வாரம் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் தான் கழிந்தது. நண்பர்களைப் பார்க்கச் செல்லு தல், அவர்களிடமிருந்து விடைபெறுதல், தேவையான பொருட்களை வாங்குதல் என்று அந்த இறுதி நாட்கள் கடும் பரபரப் பாகிப் போனது. பஸ்மீர் என்கின்ற நண்ப னும் மேற் சொன்னவர்களோடு இணைந்து எனது பயண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிரவும், எனது கிராமத்தைச்
சேராத பலர் வேறுவகையில் எனது
பயணங்களை ஒழுங்கு செய்வதற்கும், பொதி களை ஒழுங்கு செய்வதற்கும் சிரமத்து டன் உதவினார்கள். அழுத்கம- வறியாதுல் லாவுற், கலாவெவ- ஹிம்சாம், நிதிகம- நளிர், இர்சாத், இஸ்ஹாக், மவுற்ரூப், குருநாகல்நூர் என்று. பலர் அதில் அடங்குவர், அத்தோடு மன்சில் என்ற நண்பர் அடிக்கடி கலங்கி "மச்சான். போகப் போறிங்களா?” என்று சோகம் தொனித்த குரலில் கேட் பது மனசைப் பிசைந்து எடுக்கும்.
அமைப்பு ஒன்றைப் பற்றி முன்னர் கூறுவதாகக் கூறியிருந்தேன். எனது கிராமமான நாச்சியாதீவைப் பிறப்பிட மாகக் கொண்ட சுமார் (80) எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கட்டார் மண்
னில் தொழில் புரிவதாக ஏலவே, கூறியி ருக்கின்றேன். எனக்கான ஒய்வு நாட்க ளில் அவர்களைச் சந்தித்துப் பல்வேறு பட்ட விடயங்களைப் பற்றி கதைப்பது வழக்கம், இப்படித்தான் ஒரு நாள் எனது வகுப்பு பாடசாலை நண்பர்களான ரொசான், அன்வர் ஆகியோர் வசிக்கின்ற ரூமுக்குச் சென்றேன். அங்கு தஸ்லீம் (உதுமான்),
ஹாரீஸ் என்போர்கள் ஏலவே வீற்றிருந் தார்கள். பிறகென்ன? எமது கலந்துரை
யாடல் பல்வேறுபட்ட விடயங்களையும் தொட்டுச் சென்றது. அதில் பெரும்பாலும், எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சி பற்றிய
கவலையே, பெரும்பாலும் பேசப்பட்டது.
அந்தக் கலந்துரையாடலின் போதுதான் எமக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பெரும்பாலான திறமையான மாணவர் கள் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொள் ளாமைக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று வறுமை, பொருளாதாரச் சிக்கல் என்பதுதான், இந்தப் பிரச்சினை பற்றி உதிரியாக எமது கிராமத்து நண்பர்கள் தனித்தனியாக கதைத்துள்ளோமே. தவிர, அதையும் தாண்டிய செயற்பாடுகளுக்கு யாரும் முனையவில்லை. எனவே, எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு திட்ட மிட்டு உதவுவதன் மூலம் ஒரு பலமான அடித்தளத்தை இடுவது பற்றிய ஆலோ சனைகளை வலுப்படுத்தினோம். முடிவுஎமது கிராமத்தவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு அமைப்பு ரீதியில் இயங்கு வதன் மூலம், ஒர் ஆரோக்கியமான கல்விப் பரம்பரையை உருவாக்க முடியும் என்ற திடமான நம்பிக்கையை எம்முள் விதைத்தது மட்டுமன்றி உடனே அதனை
மல்லிகை பெப்ரவரி 2008 & 24

செயற்படுத்தவும் முடிவு செய்தோம். அதற்கான மிக முக்கிய காரணங்கள் எனது கிராமத்து கட்டார் வாழ் நண்பர் களால் புரியப்பட்டிருந்தது.
இலங்கை தாண்டிய நாடுகளில், ஏன் இன்று இலங்கையிலும் ஆங்கிலப் பா ைவடிக்கு ஒரு உயர்ந்த இடமும், வலுவான பின்னணியும் உண்டு. ஆங்கிலம் தெரிந்தவர்கள் தான் அடிமட்ட வேலைக்குக் கூட லாயக்கானவர்கள் என்கின்ற நிலைமை இன்று பொதுவான ஒன்றாக இருக்கின்றது. எனவ்ே, எனது நண்பர்கள் ஆங்கிலக் கல்வியின் முக்கியத் துவத்தை அநுபவ ரீதியாக இந்தக் கட்டார் மண்ணில் கண்டு கொண்டார்கள். எமது கிராமத்தின் ஒரு பலம் பெறும் ஆங்கில ஆசிரியர் சுமார் இரண்டு தசாப்தங்கள் கடமை புரிந்தும் ஆகக்குறைந்தது ஒரு மாணவனையாவது ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற வைக்கவில்லை. அவரது el S560) LD இந்த எதார்த்த உண்மையை இங்கே வேலை
அவ்வளவுதான்,
செய்யும் நண்பர்கள் உணர்ந்திருக்கின் றார்கள். மட்டுமன்றி, குறிப்பிட்ட ஆங்கில ஆசிரியரிடம் இவர்கள் ஆங்கிலம் கற்றதன் பயன் ஆங்கிலம் வேப்பங் காயாகிப் போனது என்ற ஒரு சமாச்சார மும் இங்குண்டு. எனவே, இனிமேல் எந்தத் தொழிலுக்கு எமது கிராமத்தவர் கள் வந்தாலும் ஆங்கிலம், கணினி, அறி வுடன் வந்தால் மட்டும்தான், அவர் களது பொருளாதார மட்டத்தில் குறிப் பிட்ட அடைவுகளை அடைய முடியுமே தவிர, அவை தெரியாவிட்டால் எதிர்காலப் பரம்பரை நம்மைப்போன்று சங்கடப்பட
நேரிடும் என்கின்ற எதார்த்தம் அவர்க ளுக்கு தெளிவாகப் புரிந்தது. எனவ்ே, சொன்ன மாத்திரத்திலே எமது கிராமத்து பெரும்பாலான நண்பர்கள் ஒரு அமைப்பு ரீதியாக இயங்க ஒத்துக் கொண்டார்கள்.
ஒரு சிலரைத் தவிர. (இப்போது அந்த
அமைப்பு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது உதிரிச் செய்தி)
எனவே, எனக்கும் எனது கிராமத்து நண்பர்களுக்குமிடையான இடைத் தொடர்பு வலுப்பெற்றது. முன்னர் ஊரில் நான் கண்டு கொள்ளாதவர்கள் கூட, இப்போது என்னால் தவிர்க்க முடியாத நெருக்கமானவர்கள் ஆனார்கள். இந்தக் கால எல்லையில் எனது செல்போன் பிஸியாக இயங்கிக் கொண்டே இருந்தது. குசலம் விசாரிப்பவர்களும், அன்போடு எனது பயணத்திற்காய் வாழ்த்துச் சொல்பவர்களும், தமது எண்ணங்களை மனசு விட்டுப் பகிர்ந்து கொள்பவர்களும் என்று நாட்கள் நெருங்க நெருங்க, என்னுள் பரபரப்பு அதிகரித்ததே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. அந்த நாளுக்கான காத்திருப்பில் இன்னும் சில இரவுகளைக் கழிக்க வேண்டியிருந்தது. எனது கண்கள் உறங்க மறுத்தன. இரவுகள் மிக நீளமாகத் தெரிந்தன. இவைகளைத் தவிர்ப்பதற்கு நானும் நண்பன் கலாவெவ ஹிசாமும், எப்போ துமே இணையத்தின் பக்கமே. எஞ்சிய
சில இரவுகளைக் கண்விழித்துக்
கழித்தோம், அந்த நாள் வரும் வரை.
(இன்னும் பேசுவேன்)
மல்லிகை பெப்ரவரி 2008 : 25

Page 15
வெள்ளவத்தையில், மிகவும் பிரபல மான ஒரு துணிக்கடை அது. வெறும் பருத்தி
யென்பதெல்லாம் கனவு போலாகி விட, நிழல் حیlw 0
இப்போது கண்ணில் வெளிச்சம் கொண்டிருக் கிற பட்டுக்கே கிராக்கி அதிகம். அப்படிப்பட் O O O O டில் பொன்னிறக்கை கட்டிப் பறக்கிற காலம் ஒற்றை7 பிழ0ஆல் இது, அது மட்டுமல்ல, பவுண் கடலில் குளித்தே தேர்விட்டுப் போகலாம். ஆனால், இந்தத்தேர் ஒடமிழந்தது எதனால் என்று, அறிவு புரியாத - විශ්‍රයෙනtiෂිෂී மயக்கமாக இருந்தது.
சாரதா மகளுக்குப் பஞ்சாபி வாங்க, அன்று அந்தக் கடைக்கு வந்து படியேறிப் போய்க் கொண்டிருந்த போது தான், இதெல்லாம் நினைவு கொள்ள நேர்ந்தது. நினைவு என்பது வாய் திறந்து வெளிப்படையாய் பேச முடியாமல் போன, வெறும் பிரமைதான். வாழ்க்கை எங்கே போய்க் கொண்டிருக்கிறதென்று ஒரே குழப்பமாக இருந்தது!
பஞ்சாபிக்கென்று மூன்றாவது மாடியில் பிரமாண்டமான காட்சியறை. அதைக் காட்சிக்குவிடவென்றே வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் விற்பனைப் பையன்கள், பொட்டு வைத்த முகத்துடன் முகம் சிரித்து அவளை வரவேற்றார்கள்.
அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாழ்வின் பாரம், கனதியாக நெஞ்சை அடைத்தது. தினம் தினம் சாவுகள். அது ஒன்றுதான் நிச்சயமென்றாலும், கையில் கொலைவாளோடு, மிரட்டி உயிர் தின்னுகிற, இந்த மண்ணை நினைத்தால், அழுகை தவிர வேறொன்றும் மிஞ்சாது. இந்நிலையில் வாழ்க்கை இப்படியெல்லாம் களிப்பதற்காக பட்டிலும் பொன்னிலும் தேர்விட்டுப் போகவா? போகிறதே உலகம்!
“என்னம்மா யோசிக்கிறியள்? என்ன வேணும்?” பையன் கேட்டான்
கறுப்பாக, ஒல்லியாக இருந்தாலும் இருபது வயது கூட நிரம்பாத அந்த இளம் பையனின் முகத்தில், சிரிப்பு நிறைவுடன் கூடிய வசீகரக் களை, மின்னலெனப் பார்வையைக் கீறிக் கொண்டு போனது.
அவள் வரண்ட புன்னகையுடன், இன்னும் நிழலாகவே நின்றிருந்தாள். பேச வாய் வராமல், பெரும் துக்கம் கனப்பது போல் உணர்ந்தாள். இது ஏன் என்று புரியாமல், ஒரே கனவு மயக்கமாக இருந்தது. இதனு டனேயே, விழிப்பு வந்தது போல், மிருது வாகச் சொன்னாள்:
"பஞ்சாபி வேணும். இருபது வயது மகளுக்கு. எடுத்துப் போடுறியளே, பாப்பம்."
மல்லிகை பெப்ரவரி 2008 $ 26

“எவ்வளவு விலைக்கு வேணும்?" “பெரிய விலையிலும் இருக்கு" "அதென்ன, பெரிய விலை?" "இருபதினாயிரம். முப்பதினாயிரம், ஏன் எழுபத்தையாயிரம் விலையிலை கூட இருக்கு!"
அவள் இதை எதிர்பார்க்கவில்லை. இதெல்லாம் இந்தியாவிலிருந்து, வருகிற பட்டுகள் தான். இவ்வளவு விலை கொடுத் துக் கூட பஞ்சாபி வாங்குவார்களா?
அவள் இதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, அவனே சொன்னான்.
"நீங்கள் கேட்க நினைக்கிறது எனக் குப் புரியுதம்மா. இதையெல்லாம் இப்ப சாதாரணமாய் வந்து வாங்கிக் கொண்டு போகினம். உங்கடை பொடியன்கள், குளி ரிலை விறைச்சுக் கஷ்டப்பட்டு வேலை செய்து அனுப்புகிற காசு இப்படிப் பட் டிலை கரையது. எனக்கு மனவருத்தமாக இருக்கு."
'ஓம் நானும் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறன். எல்லாம் எல்லை மீறிப் போனால், கடவுளுக்கே கோபம் வரும். இப்ப அதுதான், நடக்குதோ வென்று, எனக்குக் கவலையாக இருக்கு. தம்பி! உமக்குப் புரிந்த இந்த உண்மை எங்கடை மனதைத் தொட்டால், பெரிய சந் தோசம் தான். தொட வேணும்.'
ஆகா! அந்தக் கடைக்குள் நுழைந் தால், உலகமே எங்கள் காலடி என்றாகி விடுகிறது. இதில் பணம் முளைத்த கதை பற்றி எப்படி யோசனை வரும்? ஒரு போதும்
நடக்காது. சந்தி சிரிக்க, எல்லாமே வீதிக்கு வந்தபின், இந்தப்பகட்டு வாழ்க்கை எடுபடு மென்று, எப்படி நம்புவது? அதுவும் யார் முன் நடிக்கிறேர்ம், வேடம் கட்டியாடுகி றோமென்று, விவஸ்தை கூட இல்லாமல், என்ன ஆட்டம் போட்டு வாழ்கிறோம்!
இழப்பு வாழ்க்கை கூட மறந்து போய், எப்படி நடிக்க முடிகிறது? மண்ணை இழந்தது பெரிய சோகம், இனி வருங் காலத் தலைமுறை வாழ்வே, திரிசங்கு சொர்க்கத்தில், இரண்டும் கெட்டான் நிலையில், தமிழ் வாழவில்லையென்று w தானே அழ வேண்டியிருக்கிறது.
தமிழ் வாழவில்லையென்று யார் . சொன்னது? இதைக் கேட்கிற திராணி யாருக்குண்டு? கேட்டால், உண்மை உறைக்கவில்லையென்றுதானே படும்."
அவளிடம் அப்படி உண்மையையே நம்புகிற சக்தி, அபாரமாக இருந்தது. அவளால் அதைப் பற்றி யோசிக்காமல், இருக்க முடியவில்லை. முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியவர்கள் நாங்களே என்று பட்டது. இந்தப் படுதலின், தீக்காய் ச்சலில், உடலே கருகி வீழ்வது போல், உணர்வு மயங்கிய நிலையில், எதுவுமே பேச வராமல், வாய் அடைத்துப் போய் அவள் நீண்ட நேரமாய் நிற்பதைப் பார்த்துவிட்டு, மீண்டும் அவனே கேட்டான்:
‘என்னம்மா பேசாமல் நிற்கிறியள்? எவ்வளவு விலைக்கு வேணுமென்று சொன்னால்தானே எடுத்துப் போடலாம்.'
“எனக்கு அதி கூடின விலைக்கு வேண்டாம். ஆகக் குறைந்த விலை யிலை, இரண்டாயிரம் ரூபாய்க்குள்ளே தான் பார்க்க வேணும். இருக்கே?"
மல்லிகை பெப்ரவரி 2008 率 27

Page 16
அவள் அப்படிக் கேட்டதும், அவனு க்கு என்னவோ போலிருந்திருக்க வேண்டும். யதார்த்தமாகத் தான் சந்தித்து வரும் மனி தர்கள் போலன்றி, மிகவும் வித்தியா சமான அவளின் இந்த எதிர்மறைக் குணங்கள், அவன் நம்ப முடியாத ஒரு புதிய செய்தியாகவே, அவன் மனதைக் குளிர வைத்தது. இந்த ஆச்சரிய கணத் தின் உள்ளேறிய சிலிர்ப்புடன், அவன் அவ ளைக் பார்த்து, முகம் மலரச் சிரித்தவாறே, தன்பாட்டில் பேசிக் கொண்டு, அவள் கேட்டபடி, அலுமாரியிலிருந்து, பஞ்சாபி களைத் தரம் பிரித்து, எடுத்து மேசை மீது பரப்பிப் போட்டான்.
அவள் பிரமிப்போடு அவைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். எதை எடுப்ப தென்று புரியாமல் ஒரே குழப்பமாக இருந் தது. இவை கூட எவ்வளவு அழகாகச் சரிகை இழைக்கப்பட்டுக் கண்ணைக் கவரும்படி தானே இருக்கின்றன. இதற்கும் மேலே, அதிக பட்ச விலை கொடுத்துப் பஞ்சாபி வாங்கிப் போட வேண்டிய அவசியம் எத னால் வந்தது? அது பாதகமான ஒரு பாவச் செயல் போல படவில்லையா? என்ன தான் பணம் வந்து குவிந்தாலும், கேவலம் வெள்ளைக்காரனுக்கு அடிமை வேலை செய்து, கடும் குளிர் தின்ன, எங்கள் பிள்ளைகள் கஷ்டப்பட்டு, உழைத்து அனுப்பும் பணத்தின் மகிமையே இவ்வ ளவுதானா? இதை மகிமை என்று சொல் வதற்கு நாக்கூசுகிறது. ஒரு சாதாரண, படிப்பறிவு குறைந்த இந்தப் பையனுக்கு வந்த தார்மீக உணர்வு கூட, இல்லாமல் தடம் புரண்டு போனது. மாசு படிந்த இதன் நிழல் கூட அவளுக்குக் கரித்தது. மீண்
டும் ஒருமுறை எல்லாவற்றுக்காகவும் அழ வேண்டும் போல் தோன்றியது.
அவனோ, இன்னும் சிரித்தபடியே, அவள் முன்னால் ஒளி கொண்டு நின்றி ருந்தான். அவன் பேசிய வார்த்தை எவரும் அறியாத ஒரு புதிய தேவவாக்குப் போல், திரும்பத் திரும்ப அவள் மனதில் சத்திய முழக்கமிட்டு ஒலித்தபடியே இருந்தது. அப்படிப் பேசுகிற அவன்னப், பூரண இதய சுத்தியோடு நிமிர்ந்து பார்க்க முடியாதவ ளாய், அவள் மனம் கூசினாள். அவனிடமி ருந்து கற்றுக் கொள்ளவேண்டிய இந்த வாழ்க்கைப் பாடம், அவளுக்கு நன்றா கவே உறைத்தது. அவனைச் சந்திக்க நேர்ந்த அந்த அரிய தருணத்தை அவள் பெரும் பேறாகவே உணர்ந்தாள்.
நல்ல வேளை, மிகவும் அறிவுபூர்வ மாகச் சிந்திக்கும் திறன் பெற்ற சாரதாவிடம் மட்டுமே அவன் மனம் திறந்து, அதனைக் கூறிவிட்டதால், இது விடயமாக எந்தவொரு
விபரீத முடிவும் ஏற்படாமல், அவன் தன்
னால் காப்பாற்றப்பட்டிருப்பது குறித்து சாரதா உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு, அதை நினைவு கூர்ந்தாள். எனினும் தன் போலல்லாமல் வெறும் பகட்டு வாழ்க்கை யிலேயே, மிதப்புக் கொண்டு கொடி விட்டுக் கனவுலகில் பறக்கும் ஒரு சாதாரண பெண் இதைக் கேட்க நேர்ந்திருந்தால், என்ன நடந்திருக்கும்?
இப்படிச் சொல்லிவிட்டதற்காக, அவன் மீது பெரும் கோபம் கொண்ட வளாய், நேராக முதலாளியிடமே சென்று, அவனைப்பற்றிக் கோள்மூட்டி, அவள் வத்திவைத்துவிட நேர்ந்தால், பாவம்
மல்லிகை பெப்ரவரி 2008 & 28

இந்தப் பையனின் நிலைமை மோசமான நிலைக்கே தள்ளப்பட்டிருக்கும். பண வரவு ஒன்றில் மட்டுமே குறியாக இருந்து, கடைவிரித்து, வியாபாரம் பண்ணும் அவர் பிழைப்பில், மண் அள்ளிப் போடும் வித மாக, அவன் பேசியிருக்கிறானே? வரிந்து கட்டிக் கொண்டு, அவனை வேலையி ருந்து தூக்கி எறிந்து விடமாட்டாரா?
இதையெல்லாம் யோசித்து, இவன் மீது பரிதாபப்படுகிற, கருணை உணர் வோடு குரல் உருகி அன்பாக அவனை நோக்கி, அவள் பேச வாய் திறந்த போது, அவன் தூரத்தில் எதையோ ஊடுருவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கவனத்தைத் திருப்பி, உரத்து அவள் சொன்னாள்.
*தம்பி! இந்தப் பேச்சு, என்னோடு போகட்டும்.”
"ஏன் இப்படிச் சொல்லுறியள்?"
‘எல்லாம் நல்லதுக்குத்தான். ஆரும் என்னைப் போல இருக்க மாட்டினம். எல்லாவற்றையும் அன்பு மயமாய், யோசித் துப் பார்க்கிற தகுதி, எவ்வளவு பேரிடமும்
இருக்கென்று, எனக்குப் புரியேல்லை. உங்கடை இந்தக் கருத்தை, உணர்வு பூர்வமாய் ஏற்றுக் கொள்கிறது. இப்ப உள்ள நிலையில் மிகவும் கஷ்டமென்று, எனக்குப் படுகுது. வரட்டுக் கெளரவ வாழ்க்கையே பெரிசென்று நம்புகிறவர் களுக்கு, இது புரியப் போறதுமில்லை. அதனால்தான் சொல்லுறன். நீங்கள் கவனமாகப் பேச வேணும். இல்லாவிட் டால் உங்களுக்கு வேலையே போய்விடும்.”
“சரியம்மா. இனி நான் கவனமாய்
பேசுறன்."
பிறகு நிழல் கூட ஆடவில்லை. ஒளி விட்டுப் பிரகாசிக்கும் உந்நத உயிர் சோதி யின் ஏக தரிசனமான ஒற்றைப் பிழம்பின் கவனம் கூட, மறந்து போன நிலையில் மாறுதலாய் மயங்கிச் சரியும் நிழல் கூட்டத்
தினிடையே, தானுமொருவளாய் ஆகித்
தான் வந்த வேலையில், அவள் அப்ப
டியே மூழ்கிப் போனாள். உயிர் விட்டு அல்லது மறந்து போன, அந்த நிழல் சரி வோடு ஒன்றுபட்டு, ஒற்றை வடம் பிடித்து, இப்போது அவனும் நிலை மறந்து போய்க் கொண்டிருப்பது போல் பட்டது.
தெரிவித்துக் கொள்ளுகின்றது.
ஆழ்ந்த துயரம் அடைகின்றோம்
புரவலர் ஹாஸிம் உமர் அவர்களின் துணைவியார் சமீபத்தில் கொழும்பில் காலமானார். அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத்
- ஆசிரியர்
ஸ்லிகை பெப்ரவரி 2008 & 29

Page 17
gേ كالمارو
பிரமிளாவின் பீலிக்கரை?
-ஏ. எஸ். எம். நவாஸ்
"நமது நாட்டினைப் பொறுத்தவரை தமிழ் இலக்கிய உலகில் சிறுகதைத் துறையில் இன்று பெண் எழுத்தாளர்கள் தோன்றுவது
மிகக் குறைவாகவே உள்ளது. அவ்வாறு சிலர் வெளிப்பட்டாலும்
காத்திரமான படைப்புக்களைக் காண்பதும் அரிதாகவே உள்ளது. பிரமிளா செல்வராஜாவின் "பீலிக்கரை’ சிறுகதைத் துறைக்கு புதுப் பாய்ச்சலைக் கொடுத்திருக்கிறது.’ இவ்வாறு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் துரை மனோகரன் அண்மையில் "பீலிக்கரை வெளியீட்டு நிகழ்வின் போது கூறினார். அவரது கருத்தியல் அடிப்படையில் பிரமிளாவின் "பீலிக்கரையை நுகர்ந்தபோது புரிந்து கொள்ள முடிந்தது.
சிறுகதை நூலுக்கேற்ற படைப்பழகை இதில் காண முடிந்தது. ஆங்காங்கே ஆனா திக்க பிடிகளைத் தகர்க்கும் வெடிகுண்டாக பிரமிளாவின் எழுத்துக்கள் வீறிட்டு எழுகிறன. இந்நூலில் அடக்கப்பட்டிருக்கும் 12 சிறுகதைகளும் தெளிவான எல்லையைத் தொட்டு நிற்கிறது. சிந்திக்கத் தூண்டும் இச்சிறுகதைகளில் மனிதாபிமானம் வெளிப்பட்டு நிற்பதையும் வாசிக்கும் போதே உணரலாம்.
சில மாதங்களுக்கு முன் குமுதம் இதழில் தாமரை செந்தூர்ப்பாண்டி (பெண் எழுத் தாளரோ தெரியவில்லை) எழுதிய ‘ஆசை என்ற சிறுகதையை இருதடவைகளுக்கு மேல் வாசித்தேன். அப்படைப்பின் புனைவாகக் காகம் என்ற பறவையின் குணம் சொல்லப் படுகிறது. தாமரை செந்தூர்ப்பாண்டியின் பெண் கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது.
"அவனவன் கிளி. புறா.மைனா. கோழி வளர்ப்பது போல நான் காகம் வளர்த்து விட்டுப் பெயர் வாங்கிப் போகிறேன்."
இக்கதையின் உள்ளடக்கம் 'காகத்தைக் கூட நட்பின் பறவையாக வளர்க்க முடியாதா? என ஆதங்கிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தின் உள் உணர்வு பரிதவிக்கிறது. நாலைந்து நாட்கள் நகர்ந்தும் காகம் அப்பாத்திரத்துடன் தோழமையுடன் பழகி அவள் போடும் முறுக்குத் துண்டுகளை அச்சப்படாமல், கழுத்தை உயர்த்திப் பார்க்காமல் கொத்தித் தின்னும் தெருப்பறவையான காகத்தை நேசிக்கும் அக்கதாபாத்திரத்தின் வாஞ்சையான அணுகு முறையை அச்சிறுகதை தொட்டுக் காட்டியது.
மல்லிகை பெப்ரவரி 2008 & 30
 

நம் நாட்டிலும் நல்ல சிறுகதைகளைப் படைக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். மு. பவரீர் கூட அத்தகையதொரு சிறந்த சிறு கதைப் படைப்பாளியாவார். இத்தகைய பறவை மிருகங்கள் கதைக் கருக்களாக பவரின் எழுத்துக்களிலும் மிளிர்ந்திருக் கின்றன. இவ்வாறான அநேகமான சிறு கதைகள் படைக்கப்படுகின்றனவா என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்த போது பிரமிளாவின் "பீலிக்கரையில் பார்வைக்குத் தேடியபோது "பக்கி கதை அகப்படுக் கொண்டது. இந்தப் பக்கி சிறுகதையில் கூட, அதன் தலைப்பு வீட்டு நேசிப்புப் பறவையான கோழியைக் குறிக்கிறது.
ஆசையாய், அருமையாய் சிறுகுஞ் சாக இருந்தது தொடக்கம் நேசிப்பாக வளர்த்த பக்கியை வீட்டார் நேர்த்திக் கடன் கொடுக்க முற்படும் போது. "பக்கி"யை ஆதரவாய் வளர்த்தெடுத்த ஒரு பெண் கதாபாத்திரம் மிகவும் கிலேசத்துக்குள்ளா வதை இக்கதை உணர்த்துகிறது. பக்கி திடீரெனக் காணாமல் போய்விட அது காணாமல் போனதை நினைத்துக் கவலை யடையாமல் சந்தோஷிக்கும் அக் கதாபாத் திரம் பக்கி பிடிபட்டால் நேர்த்திக்கடனுக்கு பலியாகி விடுமே எனவும் சிந்திக்கிறது. கதையின் முழுமை பக்கி என்ற கோழி யையே சுற்றிச் செல்கிறது. உரைநடையில் இக்தை எழுதப்பட்டிருப்பது சிறப்பு. இத் தகைய உரை நடையில் எழுதுவோர் இப் போது மிகக் குறைவு.
அது போன்று இந்நூலின் தலைப்பாக அமைந்துவிட்ட "பீலிக்கரை கதை கூட சமூகம் பல விடயங்களிலும் தமது பழைய நிலைகளிலிருந்து மாறுபட்டுப் போவதை
யும், மறந்து போவ தையும் உணர்த் திற்று. "பீலிக்கரை அகற்றப்படும் போது அழுது நோகும் அக் கதாபாத்திரம் யாதா ர்த்தமாய் உள்ளது.
இதோ என்
நெஞ்சோடு கண வனை இழந்து வாழாவெட்டியாக வாழும் ஒரு விதவையின் கதையைப் படம் பிடித்தி ருக்கிறது. அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க முன்வரும் மாஜி நண்பன், அதையே விரும்பும் விதவை. எனக்கதை முற்றுப் பெறும் முன்னே நல்ல முடிவைச் சொல்லி விடுகிறது. எதிர்பாராத முடிவுதான்.
ஆண்களின் அசிங்கமான மனக் கோணல்களை யாரைத்தான் நம்புவதோ? கதை அம்பலப்படுத்துகிறது. பஸ்ஸிலே பெண்ணை உரசும் ஒரு கிழம். பரமசிவன் என்ற பெரியமனிதர், நாகேந்திரன் மாஸ்டர் என்ற அக் கதாபாத்திரங்கள் ஆண் வக்கிரங் களை வெளிப்படுத்துகிறன.
"சில ஆண்வர்க்கங்களை அங்கீகரிக் கவே முடியவில்லை. வெளியே எத்தனை மரியாதையாக நடந்து கொள்கிறார்கள்.? மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் எங்க ளுக்குத்தானே தெரிகிறது. அவர்களின் அந்தரங்கமான அசிங்கம். ’ எனக் கதாசிரியரது எழுத்து நடை தொடர்கிறது. அசத்தல் கதை.
"அப்பம்மாவின் மூக்குத்தி கதை அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறது. இக் கதையை வாசித்த பொழுதில் நாமும் அப்பம்மாவுடன் சேர்ந்து அழுது விடுகிறோம்.
மல்லிகை பெப்ரவரி 2008 率 31

Page 18
மிக இயல்பாக அப்பம்மா கதாபாத் திரம் படைக்கபட்டடிருக்கிறது. அப்பம்மா வின் மரணச் சோகம் நம்மிடையே மனச் சோகத்தை இறுக்கிக் கொள்கிறது. மிக லாவகமாக இக்கதைகள் ஊடாக தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தியிருக் கிறார் பிரமிளா செல்வராஜா, கதை சார்ந்த உரையாடல்களைக் கூட மிகக் கவனமாக வும், சுருக்கமாகவும் கையாண்டிருக்கிறார். கலாநிதி துரை மனோகரன் அன்று "பீலிக் கரை விழாவில் கூறியதைப் போன்று 2007 ஆம் ஆண்டின் சிறந்த எழுத்தாளராக பிரமிளா சுவடு பதிப்பது நிச்சயம் என்பதற்கு இந்நூலின் கதைகள் ஒரு எடுத்துக் காட்டு. இவரது ஏனைய கதைகளான ‘கண்ணாடிப் பிம்பம்', 'மனதிற்குள் ஒரு மெளன வலி, பெளர்ணமி நிலவு', 'ரவை உருண்டை, "இன்னாம்பி’, ‘கோடிப் பக்கத்தில் ஒரு பலாமரம்' ஆகிய கதைகள் கூட சமூகத் தைச் சார்ந்த பகுதிகளாகவே தென்படுகின் றன. சமூகத்தின் ஒவ்வொரு திசைகளை யும் தரிசித்துள்ள எழுத்தாளர் பிரமிளா அதன் ரணங்களையும், பலவீனங்களையும்
தன் மனக் கூட்டுக்குள் கைப்படுத்திச் சிந்தித்து எழுதியிருப்பது தெளிவாகிறது. "பீலிக்கரை" முதல் கோடிப் பக்கத்து பலா மரம் வரை கதைகள் ஒவ்வொன்றும் வாச கர்களின் மனச் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறது.
ஞானம் பதிப்பகத்தின் ஊடாக புரவ லர் புத்தப் பூங்கா சுமார் 62 பக்கங்களில் தனது முழுச் செலவில் இந்நூலை அச்சிட் டுள்ளது. நூலாசிரியருக்கு எத்தகைய பொருள் ரீதியான சுமையையும் சுமத்தாது எழுத்தாளனை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முகமாக இந்த இலவசப் புரட்சியை புரவலர் புத்தகப் பூங்கா நிறைவேற்றி யிருப்பது தெரிகிறது. "இலங்கை புத்தக உலகில் இது புதிய சாதனை' என கம்பவாரி தியால் கொடுக்கப்பட்ட முத்திரையும் கூட, புத்தகப் பிரதிகள் விற்பனையாகும் தொகை யும் எழுத்தாளனுக்கே போய்ச் சேர்கிறது. அயல் மண்ணான தமிழகத்தில் கூட நிக ழாத ஒன்று. நினைக்க முடியாத ஒன்று.
N
மல்லிகை பெப்ரவரி 2008 & 32
 

@ుళfర్రీ లిrశ్రీOరిశీ'Oశీతలమీggdgరీ (Oరg' : භික්‍රනථි ද්‍රා(fඹී> 6kඉ60&ඊශ්‍රී ක්‍රග්‍රd
-எம். சி. நஜிமுத்ன்
ஈழத்து இலக்கியப் பரப்புக்கும், பகைப்புலத்திற்கும் பல்வேறு 8. பிரதேசங் களில் இருந்தெல்லாம் *. * *్క படைப்பாளி களை, விமர்சகர்களை உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரே இலக்கிய இதழாக மல்லிகை முகிழ்ந்து கொண்டிருப்பது சர்வ நிச்சயமான உண்மையாகும். மல்லிகையை தவிர் த்து ஈழத்து இலக்கியச் செல்நெறியை அணுக முடியாது. இதனை பேராசிரியர் கா. சிவத்தம்பியும் வலியுறுத்தியுள்ளார். மல்லிகைக்கு தனித் துவமான அடையாளமும் அடைவும் உண்டு. மல்லிகைக் குடும்பம், மல்லிகை கொடிக் கால்கள் என்ற பாரிய வீச்சில் மல்லிகை கடந்த நான்கு தசாப்தத்திற்கு மேலாக வெளிவந்து கொண்டிருப்பது, உலக இலக்கிய உலகில் ஒரு சாதனையென்றே குறிப்பிடலாம்.
இவ்வாறு மல்லிகைக் குடும்பம் வரிசையில் தன்னை இருத்திக் கொள்ள நகரும் வளம்ே அக்ரமின் "மண்ணில் துழாவும் மனது கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் (13.01. 2008) அன்பு ஜவஹர்ஷா தலைமையில் அநுராதபுரம் ஸாஹிரா மகாவித்தியாலயத்தில் படிகள் இலக்கிய இதழின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
அன்பு ஜவஹர்ஷா அவர்களின் தலைமையுரையில் அநுராதபுர மாவட்டத்தில் இருந்து வெளிவருகின்ற நூல்கள் பற்றியும் அதன் தரவுகளையும், அவை தேசிய இலக்கிய நீரோட்டத்தில் ஏற்படுத்தும் பங்களிப்புகளையும் குறிப்பிட்டுச் சொன்னார். மேலும் இன்றைய சமூக, அரசியல், பொருளாதார காரணிகளையும், நூல் வெளியீடுகளில் உள்ள உள்ளார்ந்த சோகங்களையும், துயரங்களையும் விதந்து குறிப்பிட்டார்.
அத்தோடு வளிம் அக்ரமின் கவிதை நூல் வெளிவரும் காலப் பரப்பு. அதன் பரிமாணம், அதன் அடையாளம் போன்றனவற்றையும் குறிப்பிட்டார். தவிர இராசரட்டையின் முதலாவது கவிதை நூல் 1929 ஆம் ஆண்டு "சிக்கந்தர் மகத்துவ கும்மி என்ற பெயரில் வெளியானது. 2008 ஆம் ஆண்டு இப்பிரதேசத்தின் 12வது கவிதை நூலாக "மண்ணில் துழாவும் மனது' வெளிவருகின்றது என்று பல்வேறு அரிதான தகவல்களையும் புள்ளி விபரங்களையும் குறிப்பிட்டார்.
பேராதெனிய பல்கலைக்கழக தமிழ் விசேட துறைப் பட்டதாரியும் இளம் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான எம். சி. ரஸ்மின் நூல் அறிமுகவுரை நிக்ழ்த்தினார். அறிமுக மல்லிகை பெப்ரவரி 2008 率 33

Page 19
உரையில் "வளிம் அக்ரம் முத்துக்கள் சிறுவர் இலக்கிய இதழின் மூலம் இலக்கிய உலகில் புகுந்தவர். இவரது படைப்புகள் மல்லிகை உட்பட பல்வேறு இதழ்களில் வெளிவருகின்றன. வளிம் அக்ரமின் கவிதை நூல் புதிய பரம்பரைக்கான பரிமானத் தைக் காட்டுகிறது. பன்முக நோக்குடனான கவிதைகளை வளிம் அக்ரமின் "மண்ணில் துழாவும் மனது கவிதை நூலில் நுகரலாம்” எனக் குறிப்பிட்டார்.
நூலாய்வுரையினை கெக் கிராவ ஸ்ஹானா, நாச்சீயாதீவு பர்வீன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இன்று அநுராதபுரமாவட்டத்தில் கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல் பரிமாணங்க ளில் எழுதிவரும் கெக்கிராவஸ்ஹானா தனது ஆய்வுரையில் 'வஸிம் அக்ரம் இக்கவிதை நூலின் வருகையின் மூலம் நம்பிக்கை தரும் படைப்பாளியாக மாறுகின்றார். மானு டம், போர், தேசியம், யதார்த்தம் போன்ற பண்புகளிலான கவிதைகள் இந்நூலில் காணலாம். மல்லிகையில் உதிரி உதிரி யாக கவிதைகளை நுகரும் போதுள்ள பலம், பலவீனங்களை விட கவிதைகளை நூலுருவில் நோக்கும் போது சிறப்பும், கவித்து வமும் மிளிர்கிறன. இதனை உறுதிப்படுத் துவதாகத் தென்கிழக்குப் பல்கலைகழக மொழித்துறைத் தலைவர் றமீஸ் அப்துல் லாவுற்வின் அணிந்துரை அமைந்துள்ளது. வஸிம் அகரமின் சில கவிதைகளில் அப்துல் றகுமான், வைரமுத்து, மேமன்கவி போன் றோரின் தாக்கம் தெரிகிறது.
வளிம் அக்ரம் தனித்துவமாகப் பயணிப் பது நல்ல எதிர்காலத்திற்கு வழி சமைக்கும்" எனக் குறிப்பிட்டார்.
மல்லிகையில் 'பேனாவால் பேசுகி றேன்' என்ற பத்தி மூலம் மத்திய கிழக்கு நிகழ்வுகளை (கட்டார்) பதிவு செய்து, நாச் சீயாதீவு பிரதேசத்தினை சர்வதேச மயப் படுத்திய நாச்சீயா தீவு பர்வீன் தனது
ஆய்வுரையில் 'வஸிம் அக்ரமின் கவிதை கள் சிலதை அடையாளப்படுத்தி, கவிதை களின் வீச்சு, பேசுபொருள், எளிமை என்பன வற்றை சுட்டிக்காட்டினார். மேலும் அவர், வளிம் அக்ரமின் "மண்ணில் துழாவும் மனது' எளிமையாகவும், அழகாகவும், நவீனமாகவும் வெளிவந்திருக்கிறது. வளிம் அக்ரமின் நூலின் உள்ளடக்கத்திலும், தளக்கோலத்திலும் கவனம் செலுத்தியுள் ளார்" எனக் குறிப்பிட்டரர்.
ஏற்புரையில் வளிம் அக்ரம் விமரிச னங்களை மனங்கொண்டதுடன், இன்று உலகில் சிறுபான்மை இனமக்களில் 70 வீதமான மக்கள் தமது பூர்வீக மண்ணை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். எனவே, மண்ணில் துழாவும் மனது சொந்த மண்ணை நோக்கிய கதையாடல் பிரதியாக தான் கருதுவதாகக் குறிப்பிட்டார். நூல் வெளிவர வும், விழா சிறப்புடன் அமையவும் உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் சொன்னார்.
விழாவில் நூலின் முதற்பிரதியை வர்த்தகரும், சமூக சேவையாளரும், அகில இலங்கைச் சமாதான நீதவானுமாகிய அல்ஹாஜ் H. S. A. முத்தலிப் அவர்கள் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகளை சிவசிறி பா. ஞானச்சந்திரன் குருக்கள் உட் பட வேறும் சில பிரமுகர்களும் பெற்றுக் கொண்டனர். நிகழ்வுகளை எம். ஏ. றிஸ் வான் மொஹமட் தொகுத்து வழங்கினார்.
இக்கூட்டத்திற்கு வந்த இலக்கிய ஆர் வலர்களின் எண்ணிக்கையும், படிகளின் இடைவிடாத வருகையும் இலக்கியச் செயற் பாடுகளும், விரைவில் வெளிவரவுள்ள நூல் களும் அநுராதபுர மாவட்ட மண்ணின் இலக்கியச் செல்நெறியின் வளர்ச்சியினை g56vT tibLuupn & அடையாளப்படுத்தியது. மல்லிகையும் அநுராதபுர மாவட்ட இலக் கிய வளர்ச்சியில் கணிசமான பங்களிப்புக் களை வழங்கி வருகின்றமை இந்தச் சந்த ர்ப்பத்தில் நன்றியுடன் குறிப்பிடத்தக்கது.
மல்லிகை பெப்ரவரி 2008 * 34

நினைவுக் குமிழ்கள்
-m. L. pöT6bääseb
“என்னம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாய்? அவர் பார்த்துக் கொண்டடெல்லே இருக்கப் போறார். போவணனை'
“ஓம் அம்மா, போப்போறன்.'
“என்ன பயமாக்கிடக்கே? முகமெல்லாம் வேர்க்குது'
'இல்லையம்மா, எனக்கு ஒரு பயமும் இல்லை"
'பிள்ளை நெடுகத் திருப்பித் திருப்பிச் சொல்லேலாது. நடந்ததையெல்லாம் பழங்கனவா மறந்திடு. அவர் நல்ல மனிசன். எல்லாந் தெரிஞ்சும் உன்னைத் தேடிவந்தவர். அந்த நன்றியை மட்டும் நினைச்சியெண்டாக் காணும், மிச்சம் எல்லாம் சரியா நடக்கும்."
"சரி, சரி, நான் போறன் அம்மா" தாயின் மனம் நோகக் கூடாது எண்டு கதைத்துவிட்டு வந்தாலும், அவளுள் ஏதோ ஒரு பூமியதிர்வு மையங் கொண்டிருப்பதை நடையே காட்டியது. எல்லாப் பெண்களுக்குமே முதலிரவு என்பது பதற்றம் நிறைந்த ஒன்றுதான். அவளுக்கும்.
கடலுக்குள் விழுந்த நீச்சல் தெரியாதவன் எப்படிக் கைகளையும் கால்களையும் அசைத்து முயன்று கொண்டிருப்பானோ, அந்த மாதிரியான ஒரு முன்னேற்றந்தான் அவளுடையதும் என்பதை நடைகாட்டியது. இத்தனைக்கும் புறப்பட்ட இடத்துக்கும் போகுமிடத்துக்குமிடையே பெரிய தூரம் இல்லை. சமையலறைக்கும் படுக்கையறைக் குமிடையேயான இடைவெளிதான்.
இருபத்தைந்து வருடம் வாழ்ந்த வீட்டின், சுவாமியறைக் குமுழியை இன்றுதான் முதலிற் கண்டது போன்ற உணர்வுடன் மெல்லத் திருகிச் சத்தமின்றித் திறக்கிறாள். அவர் கட்டிலிற் சாய்ந்தவாறு அவள் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவும் நடந்த தூரத்தை விடக் கதவுக்கும் கட்டிலுக்கும் இடையேயான தூரம் அதிகமானதாகவும், அவஸ்தைமிக்கதாகவும் தோன்ற, ஒவ்வோர் அடியிடலுக்கும் மனமானி'யின் சக்கரம் பெரிதாகச் சுற்றத் தொடங்குகிறது. புவியீர்ப்பற்ற தளத்திற் கால்பதிப்பதான எச்சரிக்கையும் சமனிலையின்மையும் தானாகவே தொற்றிக் கொள்கின்றன.
"வாங்கோ ஜோதி, இவ்வளவு நேரமும்?. sy
“என்ன தள்ளி இருக்கிறீர்? கிட்ட வாருமன்." அவரது கட்டளைக்குக் கீழ்படிந்து கிட்டச் சென்ற போது, அது, எதிர்பாராத தொடுகையுடன் கூடிய நெருக்கமாக அமைந்து விடுகின்றது.
மல்லிகை பெப்ரவரி 2008 * 35

Page 20
கொழுகொம்பற்றுத் துடித்த கொடிக்குக் கிடைத்த மரமாக அவரைப் பற்றிப்படர மனம் துடித்தாலும், அந்தப் பற்றிப் படர லுக்குள் ஏதோ நுழைந்து இறுக்க முடியா மல் தடுப்பதான பரிதாப உணர்வு அவள் கண்களில்.
'உம் இப்பதான் நல்ல பிள்ளை. எண் டாலும் கதை ஒண்டையும் காணேல்லை?"
"என்ன கதைக்கிறதெண்டு தெரியா மக் கிடக்குது. உங்கடை உதவி பெரிய உதவி. அதுதான் மனம் முழுக்க நிறைஞ்சிருக்கு."
'ஏய், அதை விடும். இப்ப நன்றி சொல் லிப்போட்டீர் எல்லே. இனிமேல் அதை நினைக் கக் கூடாது. சரியே, அதையே நினைச்சுக் கொண்டிருந்தீர் எண்டா, நான் பெரிய ஆளா யும் நீர் சின்ன ஆளாயும் போடுவம். பிறகு மனம் விட்டுப் பழகேலாது, என்ன?”
மாட்டன்." கணவன் விருப்பப்படி நடக்க
அவசரமும் அவ்வார்த்தைகளுக்குட் குதித்து வீழ்ந்தன.
"இப்பத்தான் என்ரை செல்லம் மாதிரிக் கதைக்கிறீர். மணவறையில் இருக்கேக்கை எவ்வளவுவடிவா இருந்தீர், தெரியுமே? எனக்குப் பெரிய அதிஸ்டம் எண்டுநினைச்சு உம்மையே கடைக்கண்ணால பாத்துக் கொண்டு இருந் தனான்."
"ஒம், நீங்க களவாப் பாத்ததை நானும் கண்டனான்."
"அடிசக்கை, எண்டானாம். நீரும் என் னைக் கடைக்கண்ணால பாத்திருக்கிறீர்
662'
"ஐயோ, இல்லை! நான் தற்செயலாப் பாக்கேக்கை தான் கண்டனான்.'
'பொய் சொல்லுறீர். எண்டாலும் நீர் நல்ல வடிவுதான். நல்ல வெள்ளை முகம். சிவப்புச் சொண்டு. நீட்டுத் தலைமயிர். மிச்சமும் சொல்லட்டே?”
‘என்ரை ஜோதிக்கு நல்ல வெள்ளை முகம். சிவப்புச் சொண்டு. நீட்டுத் தலை மயிர். மிச்சமும் சொல்லட்டே? மனப்புதரின் எங்கோ ஒரு மூலையில் ஒழித்திருந்து ஒலித்த அதே மாதிரியான வார்த்தைகள் அவளது மகிழ்ச்சித் தூற்றலைத் துடைத் தெடுத்துச் சென்றன. அது வசந்தனின் குரல் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும், நீருள் அமிழ்த்திய பந்து மாதிரி எதை மன துள் அமுக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்பத் துள்ளி எழுவதாய் அவள் உணர்ந்தாள். இந்த நினைவுகளை எவ்வாறு இல்லாதொழிப்பதென்பதுவே முக்கிய பிரச்ச னையாக இருந்தது. அதுமட்டுமன்றி ஆண்கள்
விடயங்களை, ஒரே மாதிரித்தான் புகழ்வார் களோ? என்றும் வியந்தாள்.
“என்ன யோசிக்கிறீர்? எப்பன் புழுகின உடனை தலைக்கணம் ஏறிவிட்டுதோ?
"ஒண்டுமில்லை. கவிஞர் மாதிரி நல்லா வருணிக்கிறியள். அதுதான் யோசிச்சனான்."
'உம்முடைய வடிவைப் பாத்து நான் பத்தாம் வகுப்புப் படிக்கேக்கையே ஆசைப் ULL607 IT6T.'
"அப்ப ஏன் கேக்காம விட்டனிங்கள்?"
"அப்ப சின்னவயது கேக்கப் பயம், அதுக்குள்ளை அப்பா செத்தார். வெளிநாட் டுக்குப் போக வேண்டி வந்தது."
"எண்டாலும் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் மறக்காம வந்திட்டீங்கள் தானே?"
மல்லிகை பெப்ரவரி 2008 $ 36

"ஓம் நான் மறக்காம வந்திட்டன்தான். அதுக்குள்ள நீ வேறை ஒருத்தனை லவ் பண்ணிபிறகு அவனையும் ஏமாத்தி, எத்தினை கெட்டித்தனம் காட்டிப் போட்டாய்."
"அதெல்லாம் முன்னுக்கே கதைச்சுத் தீத்துப் போட்டம் தானே? பிறகேன் அதை நினைக்கிறீங்கள்?"
"அதை மறக்க வேணும் எண்டுதான் நினைக்கிறன்.ஆனாமனம் ஆறுதில்லையே?"
'உங்கடை, கால்லை விழுந்து கும்பிடுறன். அதை விட்டிட்டு வேறை ஏதாவது கதைப்பமே?”
"சொறி மன்னிச்சுக் கொள்ளும். தெரி யாமக் கதைச்சுப் போட்டன்."
"சரியப்பா. தயவுசெய்து அதைத் திருப் பியும் கதைச்சு என்ரை மனசைப் புண்படுத் தாதேங்கோ."
"இனிக் கதைக்கவேமாட்டன். எனக்கு உடம்பு அலுப்பாக் கிடக்குது. பேசாமப் படுப்பம்."
இந்த மனநிலையில் எதுவும் முடியாது
அவர் புரண்டு படுத்துக் கொள்கிறார்.
அவள் முன்னே இருண்ட எதிர்காலமே
பரந்து விரிந்து கிடக்கிறது. காதலன் கொண்ட சந்தேகம் தவறென்று உணர்த்த முயன்றும் அவன் புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற வேதனை தணிவதற்குள், வெளிநாட்டிலிருந்து
தினான். இன்னொரு திருமணத்துக்கு மன தளவிலே தயாராகாத இவளைக் குடும்பத் தின் வறுமை சிந்திக்க வைத்தது.
'பிள்ளை நீ கலியாணம் செய்து வெளிநாட்டுக்குப் போனியெண்டால் ரண்டு
தங்கச்சிக்கும் கலியாணம் செய்யேலாட்டி யும் வயிறு நிறையச் சாப்பாடாவது கிடைக் குமெல்லே?"
‘பாத்தா நல்ல பிள்ளை மாதிரிக் கிடக் குது. சின்ன வயசிலை இருந்து ஆசைப்பட் டவர் எண்டுஞ் சொல்லிறார். உன்ரை காதலைத் தெரிஞ்சு கொண்டும் கலியாணம் கட்ட வேறை ஆரும் ஒமெண்ணுவினமே?”
அறிவுரைகளாலே தாய் கரைத்தாள்.
'நீர் பயப்பிடாதையும். உம்முடைய லவ்வைப்பற்றி ஒண்டுமே கேட்கமாட்டன், நானும் ஒருத்தியை "லவ்' பண்ணிப் பெயி லியர் ஆனவன்தான். இதிலை ரண்டு பேரும் சமம், பிறகேன் யோசிக்கிறீர்?"
'சின்ன வயதிலை இருந்தே உம் மிலை ஆசைப்பட்டனான். இப்ப உம்மைப் பாத்தாப்பிறகு நீர் இல்லாம எனக்கு வாழ்க் கையே இல்லை எண்டு முடிவெடுத்திட்டன்."
வாக்குறுதிகளாலும் நம்பிக்கையுட்டல் களாலும் அவர் வளப்படுத்தினார்.
அவள் சம்மதித்தாள்.
எனினும். மனதிற் பலவிதமான பயங்கள் இருந்து கொண்டே இருந்தன.
சீதனம் வேண்டாமென்று இப்போது சொல்லிவிட்டுப் பின்னர் அதையே காரணங் காட்டித் துன்புறுத்துவாரா?
அம்மாவுக்கும் தங்கைகளுக்கும் உதவி செய்யாமல் தடுப்பாரா?
காதல் விடயங்களைக் குத்திக் காட்டி வாழ்க்கையை நரகமாக்கி இடையிலே கை விட்டு விடுவாரா?
நல்லவரா? கெட்டவரா? குடிப்பழக்கம் இருக்குமா?
மல்லிகை பெப்ரவரி 2008 * 37

Page 21
வெளிநாட்டில் வேறு திருமணம் செய்திருப்பாரா?
சிந்தனை அலைகள் மனக்குன்றைச் சுற்றிச் சுற்றித் தாக்கி மூழ்கடிக்க முயன் றன. எனினும், வருவது வரட்டும். தான் துன்பப்பட்டாலும் தாய், சகோதரிகளாவது வசதியாக இருக்கட்டும் என்று தான் துணிந்து முடிவெடுத்தாள்.
முதலிரவே முடியாத இரவாகி விட.
கண்ணிர்க் கோடுகள் வளைந்தபடியே உறங்கிப் போனாள்.
«Х» «Х• «Х» 'அப்பா, கெதியா எழும்புங்கோ, ஏழு மணிக்கு நாட்கடைக்குப் போகவேனும், போட்டு வந்து முத்தத்து வைரவருக்கு அம்மா பொங்கிறா. படைச்சுக் கும்பிட
வேணும்."
"ஏன் விடியப் பொங்கிறா?"
“எனக்குக் கலியாணம் கட்டிமுடிஞ்சா
அடுத்தநாள் பொங்கிறது எண்டு நேந்தவ 6 uTL b.ʼ'
'படையலுக்கே வாழையிலை?"
"ஒமப்பா'
'படையலுக்கு ஏன் கிழிஞ்ச வாழை யிலை? உதை எறிஞ்சு போட்டு நல்லதா வெட்டிக் கொண்டாரும்.'
'நல்ல காலம் நான் கவனிக். வார்த்தை முடியும் முன்னரே அவளுக்குள் ஊசித் தைப்பு. 'படையலுக்கேன் கிழிஞ்ச வாழை இலை?" என்றதைச் சற்று அழுத்திச் சொன்னது போலப்பட்டது. ‘இன்னொரு வனைக் காதலித்த நான் புனிதமான இல்லற விடயங்களுக்குத் தகுதியற்றவள்
என்பதைத்தான் குத்திக் காட்டுகிறாரோ? கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாகக்குடைய மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற உணர் வினால் வியர்த்துக் கொட்டியது.
‘என்ன யோசிக்கிறீர்? நான் உடனை குளிச்சிட்டு வாறன்’
கணவன் முகத்தையே கவனமாக ஆராய்கிறாள். இரட்டை அர்த்தத்துடன் கதைத்ததற்கான எந்த அறிகுறியும் அதில் இல்லை. மனம் ஆறுதல் கொள்கிறது. தேவையில்லாமல் தன்தைத் தானே குழப் பியதாகக் கடிந்து கொள்கிறாள்.
கடைக்குச் செல்வதற்காக கணவனின் மோட்டார் சைக்கிளின் பின்புறம் ஏறி அமர்ந்து கொண்டு, தோளிற் கைபோட்டுக் கொள்கிறாள். புறப்படும் வேளையிலேதான், முன் வீட்டு மாணிக்கம் அக்கா தங்களைப் பார்த்துக் கொண்டு நிற்பது கண்ணிற் படுகிறது. கை தன்பாட்டிலேயே விலகிக் கொள்கிறது.
"நாள்க் கடைக்குப் போறம்."
"நல்லது. போட்டு வாங்கோ'
வெளியே சந்தோசமாகச் சொன்னா லும், உள்ளுக்குள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்ற சிந்தனை கூடுகட் டத் தொடங்கியது. முன்னர் ஒரு தடவை ரெளணுக்குள் வசந்தனின் மோட்டார் சைக் கிளில் தோளிற் கைபோட்டபடி தான் போன தைக் கண்டு விட்டுத் தாயிடம் கோள் மூட்டிய ஞாபகம் வர, இன்னும் கலவரம் அதிகரித்தது.
‘என்னைப்பற்றி என்ன நினைப்பா? வசந்தனோடை ஆடிப்போட்டு, இப்ப கற்புக் கரசி மாதிரி மனிசன்ரை மோட்டார் சைக்கி ள்ளை போறாள் எண்டு நினைப்பாவா?
மல்லிகை பெப்ரவரி 2008 & 38

'அல்லது பாவம், அது அப்பாவி ஒண்டும் விபரம் தெரியாம வந்து மாட்டுப்பட்டுப் போச்சுதெண்டு நினைப்பாவா?
காலை நேர மங்களக் காரியத்தைக் கூடக் கணவனுடன் சந்தோசமாகச் செய்ய முடியவில்லையே என்ற உணர்வு மனதுள் உறுத்துகிறது.
"என்ன இருந்தாப்போலை கையை எடுத்துப் போட்டீர்? ஆக்களைக் கான வெக்கமாக் கிடக்கோ?"
“சீ.. அப்பிடி ஒண்டும் இல்லை."
தான் வெட்கப்பட்டது இவருக்கு எப்ப டித் தெரியும் என்ற நினைவு பதற்றத்தை அதிகரித்தது. தான் வசந்தனின் மோட்டார் சைக்கிளிற் சென்றதை யாரும் சொல்லியி ருப்பார்களோ? அதுதான் ஆக்களைக் கான வெட்கமாக் கிடக்கோ என்று கேட்டி ருப்பாரோ?
கல் விழுந்த நீருக்குள் எழும் அலை கள் போல, முடிவில்லாமல் கேள்விகள் பிறந்து கொண்டே இருந்தன.
“6JFT EKSEST. 6JT EGBESIT! தம்பி, அந்த நாட் சாமான் பார்சலை எடுத்து இஞ்சாலை வை."
இவர்கள் வருகையை எதிர்பார்த்து மஞ்சள், பாக்கு, வெற்றிலை முதலியவை மண்சட்டிக்குள் வைக்கப்பட்டுத் தயாராக இருந்தன.
முதலாளி தருமர் அதனைச் சுவாமிப் படத்தின் முன் கொண்டு சென்று வைத்துத்
யின் கைகளிற் கொண்டு வந்து கொடுத்தார்.
'இரவைக்கு மாமி விட்ட சாப்பிடப் போகோனும் எல்லே. ஒரு பிஸ்கற் பக்கற் வாங்குங்கோ'
'ஐயா, ஒரு பிஸ்கற் பக்கற் தாங்கோ."
'பிறசன்ற் குடுக்கவோ? இல்லாட்டி வீட்டுத் தேவிைக்கோ?
'பிறசன்ற் குடுக்கத்தான்"
'தம்பி, பிறசன்ற் குடுக்கவாம். பிறவுண் பேப்பரிலை சுத்திக் குடு.'
முதலாளி ஏன் பிறசன்ரோ? என்று கேட்டவர் என்ற சந்தேகம் அவள் மனதில் ஏற்பட்டது. வசந்தனின் பேத்டே" என்றால் எப்போதும் இந்தக் கடையிலேதான் பிறசன்ற்’ வாங்குவாள். அதைத்தான் முதலாளி நக்க லாகக் கூறுகிறாரோ? அப்படி என்றால், இவருக்கும் அந்த நக்கல் விளங்கி இருக் குமோ? அந்த இடத்தில் கூனிக் குறுகி நிற்பதான உணர்வு. எப்போது கடைக்கு வெளியில் வந்தோம்? எப்போது மோட்டார் சைக்கிளில் ஏறினோம் என்பதெல்லாம்
அவளுக்கு நினைவில் இல்லை.
வழியில் அவள் எப்போதும் கும்பிடும் விநாயகர் கோயிலை வணங்கிவிட்டு, நிமிர் ந்தபோதுதான் தூரத்தில் வசந்தன் வருவ தைக் கண்டாள். அவன் வருகைக்காக முன் னர் ஆசையுடன் காத்திருந்த காலங்கள் நினைவில் வர, அவனைப் பார்க்க வேண்டு மென்ற ஆவல் எழுந்தது. எனினும், தான் பார்ப்பது அவனுக்குப் பிழையான எண்ணங் களைத் தோற்றுவித்து, மீண்டும் உறவு கொண்டாடுவதற்கான ஆரம்பமாக அமைந்து விடுமோ என்ற எண்ணத்தால் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள். அவன் கிட்ட வந்த போது அவனறியாதபடி கடைக் கண்ணாற் பார்த்தாள். சோகம் அப்பித் தாடி வளர்ந்த முகம், எதையோ பறி கொடுத்தது போன்ற ஈரப்பதன் மிக்கக் கண்கள்.
அவள் உயிர் துடிதுடித்தது. மடியில்
மல்லிகை பெப்ரவரி 2008 率 39

Page 22
வைத்து ஆறுதல் சொல்லமனம் அவாவியது. எனினும், இன்னொருவன் மனைவி என்ற நினைப்போடு கட்டுப்படுத்திக் கொண்டாள். அவன் பற்றிய அச்சங்களும் படிப்படி யாக வளரத் தொடங்கின. 'தன் கணவனு டன் வந்து சண்டை பிடிப்பானா? தமக்குள் பரிமாறப்பட்ட அன்பளிப்புப் பொருட்களை யும், கடிதங்களையும் கணவருக்குக் காட்டி இழிவாகப் பேசுவானா? என்னும் ஐயங்கள் அவளை அலைக்கழித்தன.
'வயிரவா நான் அவனை ஏமாற்ற வில்லை. அவன்தான் தவறான சந்தேகத் தால் பிரிந்து போனான். என்னை நினைத் துக் கவலைப்படாமல், விரைவில் அவனுக் கும் திருமணம் நடக்கச் செய் மனம் உருகிப் பிரார்த்தித்தாள்.
‘என்ன வயிரவரிலை அவ்வளவு
நம்பிக்கையோ?"
"ஒமப்பா. எங்கடை குலதெய்வம் வயிர வர்தான். வடிவாக்கும்பிட்டாக் கேட்டதெல் லாம் கிடைக்கும் எண்டு அம்மா சொல்லுறவா."
'5m 67 g) becop (3urf 6) 696 ft 60T பொம்பிளைப் பிள்ளை பிறக்க வேணு மெண்டு கும்பிட்டனான். நீர் என்ன கேட்டனிர்?"
‘என்ன கும்பிட்டனிர் எண்டெல்லோ (3.5L6GT T667?'
“நானோ. நான். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேணும் மெண்டு கும்பிட்டனான்."
முதல் நாள் குழம்பிப் போன முதலிரவு அவர்களுக்கு இரண்டாம் நாள் ஆரம்பித்தது.
"நீதான் என்ரை உயிர், எவ்வளவு
கஷ்ரத்துக்குப் பிறகு எனக்குக் கிடைச்சி ருக்கிறாய். உன்னை ஒரு நாளும் கைவிட LomTL"6öIT.”
என்னும் வார்த்தைகளில் மனம் கசிந்து, உணர்வுச் சுழியுள் தானும் இழுக்க பட்டாள். அன்பான வார்த்தைகளையே அதிகம் எதிர்பார்த்த அவளை, உடல்ரீதி யான செயற்பாடுகளிலேயே ஆர்வம் காட்டிய அவன் முடிந்தவரை தன்னோடு அழைத் துச் சென்று கொண்டிருந்தான்.
'ஜோதி உண்மையிலேயே சொர்க்கம் எண்டா என்னெண் டதை இப்பதான்
பாக்கிறன்."
'சொர்க்கம் எண்டா என்னெண்டு இப்பதான் விளங்குது."
உயரப் உயரப் பறக்கத் தொடங்கிய வளின் இறக்கைகளை உள்ளிருந்து எதி ரொலித்த குரலொன்று அறுத்துத் தள்ளி யது. தள்ளாடியபடியே நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தாள். உடல் விறைத் துப் போய் வியர்வை பெருக்கெடுத்தது.
கயிறுழுத்தற் போட்டியில் ஒருவர் திடீரெனக் கையைவிட, முதுகு அடிபட விழுந்தவனின் கோபத்தோடு நெருப்பெழ அவர் விழித்தார்.
"ஏன்? என்ன நடந்தது உமக்கு?"
"ஒண்டுமில்லை. yy
அவன்ரை நினைவு வந்திட்டுதோ?" அவளது காதுகளைத் துளைத்துச் சென்று உடலையும் உயிரையும் அசைத்து எடுத்தன அல்வார்த்தைகள், ஏற்கனவே மனங்குழம் பிப் போயிருந்த அவள் இவ்வார்த்தைக ளால் மேலும் குறுக்கப்பட்டாள்.
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 40

இன்னொருவனை, நினைத்துக் கொண்டு இவரோடு வாழ முயல்கிறேனோ? இவரை ஏமாற்றுகிறேனோ? என்ற குற்ற உணர் விற் குழைந்த எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி வளர்ந்தன.
'அவனது நினைவுகளை வேரோடு பிடுங்கி எறிவது எவ்வாறு? என்ற கேள்வி யால் அழுத்தப்பட்ட அவளால் நித்திரை அனைத்துக் கொண்டதையும் உணர முடியவில்லை.
{ { 0. “Ko oko 4xo
"அப்பா, எங்கடை மாமாவும் மகனும் வந்திருக்கினம். சேட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு வாங்கோ."
"ஏன் முந்தநாள் எங்கை போனவை
ԱյIIլb?''
“அவை கொழும்புக்கு ஏதோ அவசர மெண்டு போய் நேற்றுத்தான் வந்தவை.
வாங்கோவன்.'
மாமன் மச்சானுக்கும், கணவனுக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்த போது, உறவினரிடம் கணவனை அறிமுகம் செய்வதில் ஒரு பெருமிதத்தை உணர்ந் தாள். அந்த ஆனந்த அநுபவத்தில் இருந்து விடுபடுவதற்கிடையில், கணவன் எவரிட மும் எதுவும் கதைக்காமல் திடீரென உள்ளே எழுந்து சென்று விட்டான். வந்திருந்தோர் முகங்களிற் கேள்விக் குறிகள். அவர் தாய் வீட்டுக்குச் செல்வதற்காக அவசரமாக வெளிக்கிடுகிறார்,எனப் பொய் கூறி அவர்களை அனுப்புவதற்குள் படாதபாடு பட்டு விட்டாள்.
எதற்காக அவர் இடையிலே முகத் தைத் திருப்பிக் கொண்டு போனார்? என்னும் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. மச்சான்
எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவான். சின்ன வயதில் இருந்தே தன்னில் நல்ல விருப்பம். அவன் நெருக்கமாகக் கதைத் ததைத்தான் அவர் பிழையாக விளங்கி யிருக்கவேண்டும் என அவள் தீர்மானித்தாள்.
தனது காதலைத் தெரிந்தவர்களைக் கண்டபோது ஏற்பட்ட தடுமாற்றங்களால் கலங்கிப் போயிருந்தவளுக்கு, இது மற் றோர் தாக்குதலாக அமைய, நிலை குலை ந்து போனாள். கணவனிடம் காரணம் அறிய விரும்பியும் தாங்க முடியாத வார்த்தைகள் பதிலாகக் கிடைத்தால் என்ன செய்யலாம் என்ற உணர்வால் மெளனமாகிப் போனாள்.
«Х» «Х» «Х»
பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்கள் கூட்டம் ஒன்று கேற்றைத் திறப்பது தெரிகிறது. அவ்வபூர் வழக்கம் அது. திருமணச் சடங்கின் போதும் அவர்கள் வந்தாலும் 'வம்பு கதைப்பதற்காகவும் புது மணத் தம்பதிகளை நக்கலடித்துக் குவழிப் படுத்துவதற்காகவும் அடுத்தடுத்த நாட்க ளிற் கூட்டமாக வருவார்கள். வீடு ஒரே கலகலப்பாக இருக்கும். "தப்பித்தவறித் தனது முந்தைய கதைகளை உளறிக் கொட்டி விடுவார்களோ? என்ற உதறல் உள்ளுக்குள் உதைக்கிறது. எனினும், மறைத் துக் கொண்டு, கணவனை நன்றாக வெளிக்கிடுத்தி அழைத்து வந்து அவர்களின் நடுவில் இருத்துகிறாள்.
நெருப்பின் மேல் இருப்பது போன்ற அவஸ்தை நிலை,
'கனடாவிலை எந்த இடத்திலை இருக்கிறியள்?"
'ஒன்ராறியோ
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 41

Page 23
"அங்கதான் எங்கட்ை அக்கா சாந்தினி இருக்கிறா. அத்தான் பெயர் ஜெயக்குமார் தெரியுமே?
"அது பெரிய இடந்தானே கண்டிருப்பன். வடிவாத் தெரியாது."
"என்ன சின்ன வயசிலை இருந்தே ஜோதியை லவ் பண்ணினிங்களாம்?"
"சறோக்கா, ஏன் அண்டைக்கு வந்தி ட்டுப் போட்டோவுக்கு நிக்காமல் போட்டி யள்?’ அவக்கென்று குறுக்கே விழுந்து கதையை மாற்றினாள். வந்தவர்களின் ஒவ்வோர் கதையின் தொடக்கமும் எங்கே போய் முடியுமோ? என்ற பயத்தால், வெவ் வேறு கதைகளைக் கொடுத்து உரையா டல்கள் நிறைவு பெறாமல் தடுத்துக் கொண் டிருந்தாள்.
“ஜோதி நல்ல பிள்ளை. சின்ன வயதிலை இருந்தே எங்களுக்குத் தெரியும்' பக்கத்து வீட்டுச் சறோக்கா உரிமையுடன் சொல்லி வாய் மூடுவதற்கிடையில் கணவனின் முகம் விகாரமடைவதைக் கண்டாள். அடுத்த கணமே, அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றார்.
'அவர் தாய் வீட்டை போகவேணு மெண்டு வெளிக்கிட்டவர். நான் தான் மறிச்சு உங்களோடை கதைச்சுப் போட்டுப் போகச் சொன்னனான்." சமாளித்தாலும் மற்றவர் கள் நம்பவில்லை என்பது முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது.
அதன் பின் அவர்கள் என்ன கதைத் தார்கள், தான் என்ன பதில் சொன்னோம் என்ப தெல்லாம் அவளுக்கு மனதில் பதியவில்லை.
அவர்கள் ஒருவாறு போய்ச் சேர்ந்தனர்.
மச்சான் வந்து எழுந்து போனபோது சந்தேகம் என்று நினைத்தேன். இப்போது வந்தவர்கள் பெண்கள் தானே? ஏன்
போனார் என்ற கேள்வி மனதில் எழுந்தது. இவற்றுக்குக் காரணம் சந்தேகம் இல்லை. வேறு ஏதோ இருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். அது என்னவாக இருக்கு மென ஆராயத்தொடங்கினாள்.
'ஜோதி நல்லபிள்ளை. சின்ன வய திலை இருந்தே தெரியும்" இந்த வசனம் தானே அவரைக் குழப்பியது.
அப்படி என்றால்?.
தான் மற்றவர்களைக் காணும் போது, தனது காதலைத் தெரிந்தவர்கள் இப்போது என்ன நினைப்பார்களோ என்று பயப்படு Slgi Gšī6i.
அவரும் இன்னொருத்தனைக் காத லித்தவளைத் திருமணம் செய்த தன்னைப் பற்றியும் என்ன நினைப்பார்களோ என்று பயப்படுகிறாரா?
ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். இதனை எவ்வாறு தீர்ப்பதென்ற வினா அவள் நெஞ்சில் வியாபித்தது.
தாய், சகோதரிகளைப் பார்க்க வேண் டும். தன்னை வெளிநாட்டுக்கு அழைக்கக் கூடாது என்று கணவரிடம் சத்தியம் பெற் றது நினைவில் வந்தது.
தாய்க்குத் தேவையான பணத்தை அனுப்பினால் அவர்கள் ஒருவாறு சமாளித் துக் கொள்வார்கள். தன்னை நம்பி வந்த கணவனது நிம்மதியும் சந்தோசமும் கூடத் தன்னிலேயே தங்கியுள்ளதையும் இங்கிருக் கும் வரை அது சாத்தியப்படாது என்பதை யும் இப்போது உணர்ந்தாள்.
கணவன் இருக்குமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினாள். அந்த நடையில் இப்போது தள்ளாட்டம் இல்லை. தடுமாற்றம் இல்லை.
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 42

Sport எனக்குள்ளே நான் சென்று என்னொரு நான் இருந்து என்னைநான் அறிய வேண்டும்.
எனக்குள்ளே ஒரு வமளனப்புயல் எழுந்து வீசியது அடிப்படையான சில கேள்விகள் விடாப்பிடியாக என்னைத் துரத்தின.
நான் யார்? எங்கிருந்து இங்கு வந்தேன்? இங்கிருந்து எங்கு செல்வேன்?
என்னை நான் இழந்து உன்னோரு கலந்து என்னை நான் உணர்ந்து உன்னில் நான் தெளியும் பொது வினாக்கள் அனைத்திற்கும் விடை எனக்குக் கிடைத்துவிடும்!
என் இதயத்தின் தாகத்தை யாரும் தணிக்க முடியாது. என் இதயத்தின் பசியை யாரும் ஆற்றி விட இயலாது.
S-S
',
` êa.
*6్క
ෆ්
நீமபருவம இறைவா நீமபருமெ.
ஆழ்ந்த இருள் என்னைச் சூழ்ந்து கொள்கையில், வீழ்ந்து கிடந்து நான் விம்மி அழுகையில், என் வரமாக நீ வரவேண்டும் என் உரமாக s உறுதியைத் தரவேண்டும்.
பயம் என்னைப் பற்றிக் கொள்கையில், அங்கலாய்ப்பு என்னை ஆட்கொள்கையில், éoggioTL6).JIT நீ என் அருகில் வரவேண்டும்.
அலைந்து திரிந்து தொலைந்து அழிந்த என் வாழ்வில் வழியாக ஒளியாக நீ வரவேண்டும்.
மல்லிகை பெப்ரவரி 2008 辜 43

Page 24
விந்தானி பவ்லோவின் eftype,
நோக்கும் பங்களிப்பும்
- G ട്രളയ്ക്കുറഞ്ഞs
உளவியல் என்பது உள்ளத்தை பற்றி விஞ்ஞான ரீதியான அறிதலாகும். உளவியல் பற்றிய சிந்தனைகள், கோட்பாடுகள் காலத்திற்கு காலம் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வந்துள்ளன. அவற்றினை வளர்த்தெடுப்பதில் உளவியல் அறிஞர்களுக்கு முக்கிய பங்குண்டு. அவ்வறிஞர்கள் காலத்தின் போக்கை பிரதிபலித்ததுடன் காலத்தினை உருவாக்குகின்ற பணியினையும் மேற்கொண்டுள்ளனர். அத்தகைய சிந்தனையாளர்கள் வரிசையில் ரசிய நாட்டு உயிரியல் விஞ்ஞானி ஐ பி பவ்லோவ் (1 B, Pavlov) அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இவரது மேதா விலாசத்தின் அடிப்படைகளையும் பலவிதமான வரம்புகளையும் கடந்து சென்ற அவரது அணுகு முறைகளையும் தர நிர்ணயம் செய்வதற்கு பொருள்- மனம்- உணர்வு என்பனவற்றின் தோற்றம் குறித்தும், அவற்றுக்கிடையிலான உறவு குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும்.
ஆத்மா. சிந்தனை- உணர்வு என்பன குறித்து பலரால் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மனதை விட பொருளின் முதன்மையை ஏற்றுக் கொள்பவனே பொருள் முதல்வாதி. சிந்தனை என்பது பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகும். உதாரணத்திற்கு மாம்பழம் குறித்த சிந்தனை எண்ணம் தோன்றுகின்றது. இங்கு பொருளே சிந்தனைக்கு அடிப்படையாக உள்ளது. எனவே சிந்தனை இன்றி பொருள் இருக்க முடியும் பொருளின்றி சிந்தனை இருக்க முடியாது. இதனடிப்படையில் பொருளை புறநிலையாக கொண்டு தோற்றம் பெற்ற சிந்தனையானது பொருள் முதல்வாத சிந்தனை என அழைக்கப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து லெனின் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“புற நிலை யதார்த்தத்தைக் குறிப்பிடுகின்ற தத்துவார்த்த வகையே பொருளாகும். மனிதனுக்கு உணர்வுகளால் தரப்படுகின்றது. பொருளை நம் உணர்வுகளால் நகல் எடுக்கலாம்; புகைப்படம் எடுக்கலாம்; பிரதிபலிக்கலாம். எனினும், இவற்றிற்கு அப்பால் பொருள் சுயற்சையாக இருக்கிறது." பொருள் என்பது இடையறாது மாறிக் கொண்டே இருக்கும். மாற்றங்கள் யாவும் இயக்கத்தையும் இயங்கும் அனைத்தும் மாற்றத்தையும் உள்ளடக்கி நிற்கும். அவ்வகையில் இயக்கம் என்பது ஒரு வகையில் முரண்பாடாகும். பொருள்களிலே காணப்படும் இயல்பான முரண்பாடுகளின் வெளிப்பாடாக இயக்கமும் மாற்றமும் நிகழ்கின்றது என்பது யதார்த்த நியதி. பொருள்களில் இயல்பாகவே காணப்படும்
மல்லிகை பெப்ரவரி 2008 & 44

எதிர்மறைக்கு இடையிலான முரண்பாடு பற்றி தேடலானது இயக்கவியல் என அழைக்கப்படும்.
இங்கு இயக்கம் என்பது ஒருவகை யில் முரண்பாடாகும். பொருள்களிலே காணப்படும் இயல்பான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இயக்கமும், மாற்றமும் திகழ்கின்றது. புறநிலையுலகின் அனைத்து இயங்கியல் போக்குகளும், உடனேயோ அல்லது சற்று தாமதமாகவோ மனித அறிவில் எதிரொலியாகக் காணப்படும். சமு தாய நடைமுறையில் ஒரு நிகழ்வு தோன்றி வளர்ந்து மறைதல் என்பது இடையறாது தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதைப் போலவே, மனித அறிவின் வளர்ச்சியிலும் நிகழ்வுகள் தோன்றி, வளர்ந்து, மறைதல் என்பது இடையறாது தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதைப் போலவே, மனித அறிவின் வளர்ச்சியிலும் நிகழ்வுகள் தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம். மனிதன் தன் நடைமுறை களினால் சில குறிப்பிட்ட கருத்துக்கள், கோட்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றிற்கு இணங்க புறநிலை யதார்த்தத்தை மாற்றி, அதை மேலும் மேலும் வளர்த்தெடுத்தி ருக்கின்றான். இவ்வாறு செய்வதன் வாயி லாக, புறநிலை யதார்த்தத்தைப் பற்றிய அவனது அறிவு ஆழமாகிக் கொண்டே செல்லும், புறநிலை யதார்த்த உலகை மாற்றுவதற்கான நிகழ்வுகள் தொடர்ந்து இடையறாது நடந்து கொண்டே இருக்கும். அதைப் போன்றே நடைமுறையின் மூல மாக உண்மையை அறியும் மனிதனின் முயற்சிக்கும் எப்போதும் முடிவில்லை. (மாசேதுங்- தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பு கள் 1.306, லெனின் தொகுப்பு நூல்கள் 38, 165)° பொருள்களில் இயல்பாகவே காணப்
படும் எதிர்மறைகளுக்கு இடையிலான முரண்பாடு பற்றிய தேடலானது இயக்கவிய லென அழைக்கப்படும். இந்த நியதியானது பெளதிக பொருள்களில் மட்டுமன்றி, மனித சமுதாயத்திற்கும் பொருந்தக் கூடிய ஒன்றா கும். சமூக அசைவியக்கமும் அதனடியாக எழுகின்ற சிந்தனைகளும் கருத்தோட்டங்க ளும் இத்தகைய இயக்கம்- மாறுதல் என்ற அடிப்படையான விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. இந்த மாற்றத்தின் இயக்க வியலை புரிந்து கொள்வதன் மூலமே, சமு தாய மாற்றத்திற்கு முழுமையான பங்களிப் பினை வழங்க முடியும், மாறாக, இதனை புரிந்து கொள்ளப் பின் நிற்கின்ற அல்லது புரிந்து கொள்ளாதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிவிடும் என்பதனை கடந்த கால நிகழ்வுகள் எமக்கு எடுத்துக் காட்டி யுள்ளன.
இதற்கு மாறாகப் பொருள்களின் இயக் கம், மாறுதல்கள் அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் யாவும் புல காட்சியால் பெறப் படும் மாயை. இவர்கள் பொருளை விட சிந்த னைக்கும், உடலை விட, ஆன்மாவிற்கும், அறிவை விட, நம்பிக்கைக்கும் முதலிடம் கொடுக்கின்றார்கள். இவர்கள் கருத்து முதல்வாதிகள் என அழைக்கப்பட்டனர்.
இத்தகைய தத்துவம் குறித்து காரல் மார்க்ஸ்
பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“தத்துவவாதிகள் இந்தப் பிரச்சனைக்
குக் குறித்த விளக்கங்கள் அவர்களை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றனர்.
அவற்றிலே இயற்கையை விட, ஆத்மாவி ற்கு முதலிடம் கொடுப்பவர் உளர். இதன்
மூலமாக உலகமானது ஒரு வடிவத்தில்
அல்லது இன்னொரு வடிவத்தில் u60)Lds கப்பட்டது என்ற கருத்தை இறுதியாக
மல்லிகை பெப்ரவரி 2008 $ 45

Page 25
ஏற்றவர்களும் உள்ளனர். கிறிஸ்தவ சமயத் தில் சொல்வதைக் காட்டிலும் கூட உலகப் படைப்பானது சிக்கலானது, சாத்தியமில் லாதது என்று சொல்லும் தத்துவவாதி 'களும் உள்ளனர். உதராணமாக ஹெகலைச் சொல்லலாம். இவர்கள் எல்லாம் கருத்து முதல்வாத பிரிவைச் சேர்ந்தவர்களாவார் கள், இயற்கையை முதன்மைப்படுத்துபவர் கள் எல்லாம் பல்வேறு கருத்து குழாமை சேர்ந்தவர்கள் ஆவார்கள்."
அந்த வகையில் பொருள்- சிந்தனைஆத்மாவுக்கு இடையிலான உறவு குறித்து கருத்து முதல்வாதிகள் பொருள் முதல் வாதிகளுடன் முரண்பட்ட கருத்தினை கொண்டுள்ள அதே சமயம், இரு எதிர் முகாம்களாக பிரிந்து இதுவரை தத்துவ போராட்டத்தை நடத்தி வருகின்றார்.
இச்சூழலில் பவ்லோவ் அவர்களின் ஆராய்ச்சியானது வயிற்றுச் சுரப்பிகளைப் பற்றியும் உமிழ் நீருக்கும் மூளையின் இயக் கத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியதாக வுமே அமைந்திருந்தது. மிருகங்களுக்கு (நாய்) உணவு வழங்குவதை அவர் பரி சோதனைக்குட்படுத்தி அதிலிருந்து ஆன்மா பற்றி உடல்களது நியதிகளை விளக்கியுள் ளார். இதற்காக அவர் நாயின் ஆசைகளை யும் அதன் எதிர்பார்ப்புக்களையும் பற்றி தெரிவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்த விஞ்ஞான ஆய்வில் தம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார். அவரது ஆய்வு கட்டங்கள் பின்வருமாறு அமைந்திருக் கின்றன.
ஆய்வின் முதல் கட்டம்
ஒரு நாயின் கன்னத்தினுாடாக குழாய் ஒன்றினைப் பொருத்தி அதனூடாக உமிழ்
நீரின் அளவை கணிப்பிடுவதற்கான ஏற் பாடுகளைச் செய்து கொண்டார். நாயின் கவனம் சிதறாத வகையில் அதனை இருட் டறை ஒன்றில் வைத்துத் தன்னியக்க கருவி யினுாடாக உணவு (இறைச்சி) வழங்க ஏற்பாடு செய்தார். இந்தச் செயற்பாடுகளின் போது கிடைக்கும் தகவல்களை மிகவும் கவனமான முறையில் பதிவு செய்து கொண் டார். ஆரம்பத்தில் இறைச்சியைக் கண்ட தும் நாயின் உமிழ் சுரக்கப்பட்டதை அவதா னித்தார். இச்செயற்பாட்டை பின்வரும் முறையினூடாக விளக்கலாம்.
இறைச்சித்துண்டு (S}-உமிழ் நீர் (R)
இங்கு இறைச்சித் துண்டை கண்ட தும் பசியுள்ள நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. இங்கு இறைச்சித் துண்டு தூண்டி யாகும். (Stimnius) உமிழ்நீர் சுரத்தல் துலங்க ளாகும், (Respunse) இச் செயற்பாடானது நிபந்தனைக்குட்படுத்தப்படாத ஒன்றாகும்.
பரிசோதனையின் இரண்டாவது
கட்டம்
இங்கு நாய்க்கு இறைச்சித் துண்டை வழங்கும் போது மணி ஒலிக்கப்பட்டது. இவ்வாறு மீண்டும் மீண்டும் இறைச்சித் துண்டை வழங்கும் போது மணி ஒலிக்கப் பட்டது. பின்னல் இறைச்சித் துண்டு வழங்கா மலே மணி ஒலிக்கப்பட்ட போது நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. இதனைப் பின் வருமாறு வரைபடத்தின் மூலமாகக் காட்ட 6 or b.
இறைச்சித்துண்டு
மிழ்நீர் சுரத்தல் (R)
மணி ஒலி (S
மல்லிகை பெப்ரவரி 2008 46

பரிசோதனையின் மூன்றாவது Sir Lib
இங்கு இறைச்சித் துண்டை வழங்கா மலே மணி ஒலிக்கப்பட்டபோது நாயின் வாயில் உமிழ் நீர் சுரந்தது. இங்கு இயற்கை யான தூண்டிக்கு (இறைச்சித் துண்டு) பதிலாக வேறொரு தூண்டி (மணி ஒலி) நிபந்தனைப்படுத்தப்பட்டது. இங்கு மணி ஒலியைக் கேட்டவுடன் நாயின் வாயில் உமிழ் நீர் சுரத்தல் இயற்கையானதொன் றல்ல, அது நிபந்தனைக்குட்படுத்தப்பட்ட gJT 6toT? 6.OTT sio (Conditiunal Stimnilns - CS) ஏற்படும் நிபந்தனைப்படுத்தப்பட்டதுலங்க 6voT (g5Líb. (Conditiunali Reponse- CR) Ld60offa ஒலிக்கு உமிழ் நீர் சுரக்கும் துலங்கல் களைப் போல, வேறு தூண்டல்களினாலும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை u6(86)ITs பல்வேறு பரிசோதனைகளின் மூலமாகக் கண்டறிந்தார்.
மணி ஒலி (CS}-உமிழ்நீர் சுரத்தல் (CR) பரிசோதனையின் நான் காவது கட்டம்
மணி ஒலித்த பின்னர் இறைச்சித் துண்டைக் காட்டாது விட்டால் காலப் போக் கில் நாயின் வாயில் உமிழ் நீர் சுரக்கின்ற தன்மை இல்லாது போய்விடும். இவ்வாறு துலங்கல் காட்டா திருத்தல் துலங்கல் அழிதல் அல்லது தடைப்படல் என்றழைக் கப்படும், இவ்வாறு அழிந்த துலங்கல் சில சந்தர்ப்பங்களில், மீண்டும் தானாகவே ஏற்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. எடுத்துக் காட்டர்க மணி ஒலிக்கு மட்டும் நாயின் உமிழ் நீர் சுரத்தல் தடைப்பட்டு பிறிதொரு சந்தர்ப்பத்தில் மணி ஒலிக்கு உமிழ்நீர் சுரக்கும். இதனை பவ்லோவ் சுயமாகத் தோன்றும் துலங்கல்'என்ாேர்.அவ்வாறே சமமான தூண்டிகளைத் தெரிவு செய்து ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றை நிபந்
தனைப்படுத்துவதன் மூலமும் துலங் களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டாத மணி ஒலிக்குச் சமமான ஒலியை ஏற்படுத்துவதன் மூலம் நாயின் உமிழ் நீர் சுரந்தது. இவ்வாறு ஒரு தூண்டியி லிருந்து மற்றொரு தூண்டிக்குத் துலங் களை மாற்றுதல் தூண்டியின் பரவல் என அழைக்கப்படும்.
LD60s 965 (CS
உமிழ் நீர் (CR) 96fi (CS
பயிற்சியின் பின்னர்
96f (CS)-d Lólyp Šři Big 556ů (CR
உணவுப் பொருட்கள் உண்மையிலே வாய்க்குள் போடுவதற்கு முன்னோ அல் லது போடாமல் இருக்கும் போதோ, உமிழ் நீர் சுரக்கப்படலாம்.
நாம் ஏற்கனவே அறிந்ததைப் போல, உணவைக் கண்ணால் காண்பதாலோ அதன் வாசனையை முகர்வதாலோ கூட, சில நேரங்களில் உமிழ் நீர் சுரந்து விடுவதை யும் பார்க்கிறோம். சில காட்சிகளை அல் லது சில வாசனைகளை நாம் சில உணவுப்
பொருட்களோடு இணைத்து எண்ணுவதற்
குக் கற்றுக் கொண்டுள்ளோம். 'கற்றுக் கொள்ளுதல்’ என்றால் என்ன பொருள்? பாவ்லோவ் ஆராய்ச்சிக்குட்படுத்திய ஒரு நாய், குறிப்பிட்ட நேரத்திற்கொருமுறை உணவருந்தியது; உணவு அருந்துவதற்கு முன்னால் மணியடிக்கப்பட்டது. எனவே மணியடித்தவுடனே வரும் உணவை உட் கொள்ளும் பழக்கத்திற்கு நாய் ஆட் படுத்தப்பட்டது. அதன்பின், மணியோசை கேட்ட அளவிலேயே நாயின் உமிழ் நீர் சுரக்க ஆரம்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையால் உண்டு பண்ணப்பட்ட நிலை மைகளுக்கு இணங்க, நாயின் உணர்வு, மணியோசைக்கேற்ப மாறிக் கொண்டுள்
மல்லிகை பெப்ரவரி 2008 & 47

Page 26
ளது. அடுத்த கட்ட ஆய்வில், மணியடிககப பட்டது, ஆனால், நாய்க்கு உணவு ஏதும் தரப்படவில்லை. இச்சோதனையைத் தொடர் ந்து செய்தபோது- மணியடிக்கப்பட்ட பின் னும் உணவு ஏதும் தராதபோது- நாயின் உமிழ்நீர் சுரத்தல், நின்றுபோனது. அது தடுக்கப்பட்டு விட்டது. அதாவது, மாறிய புதிய நிலைமைகளுக்கு ஏற்ப, தூண்டு தலும் மாறிவிட்டது. இதற்கு முந்தைய நிலைமையில் ஏற்பட்ட செயல்கள் தடை செய்யப்பட்டன. மேலும் பாவ்லோவ், மூளை யின் புறப்பகுதி (Cortex) சரியாக வேலை செய்யாதபோது, இத்தகைய இச்சைச் செயல்கள், நடைபெறாது எனவும் கண்டு பிடித்தார்.
ஒரு குறிப்பிட்ட விலங்கின் இச்சைச் செயல்கள், அனிச்சைச் செயல்கள் ஆகிய இரண்டும் அகவயக் குறியீடுகளாக உள் ளன. இந்தக் குறியீடுகளின் மூலமாகவே இவை புறவுலகின் மீது செயல்படுகின்றன. இதைத்தான் பாவ்லோவ் முதல் அடை uT67 is essfu5G 960LDIL (First Signalling system) என்கிறார். விலங்குகளைப் பொறுத்த மட்டில் உள்ள இந்த அடையாளக் குறியீட்டு அமைப்பு முறையின் வளர்ச்சி, அந்த விலங்குகளின் பரிணாம வளர்ச்சி அளவி ற்கு ஏற்றாற் போன்று கூடியும் குறைத்தும் காணப்படும். மனிதனிடத்தில், இந்த அக வயக் குறியீடுகள், முழுமையும் புதிய செயல்களுக்கான அடிப்படையை உண்டு பண்ணும் அளவிற்கு விரிவடைந்து கூட்டுக் கலப்பாக்கிவிடுகின்றன. இதை இரண்டாம் (5sfuSG 960LD) (p60, D (Second Signaiting system) 6T66Tuff.
பவ்லோவின் மாணவர்கள் இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்கள். அவற்றுள் முக்கியமானதொன்று ஒரு குழந்தையின் விரல் மீது மின்சாரம் பாய்ச் சப்பட்ட பரிசோதனையாகும், முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட போது குழந்தை விரலை இழுத்துக் கொண்டது. பின் மின்
e) u L Lj uzor-LLL- (BLJITE LO60of sp6SláćњLI பட்டது. இச் சந்தர்ப்பத்தில் மணி ஒலிக்கப் பட்டதும் குழந்தை விரலை இழுத்துக் கொள் கின்றது. மணி என்ற சொல்லை உச்சரித்து மின்சாரம் பாய்ச்சப்பட்டு பின் மணி என்ற சொல்லைக் கேட்டதுமே விரலை இழுத்துக் கொண்டது. இறுதியாக அட்டை ஒன்றில் மணி என எழுதி அதனைக் காட்டிய போது மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின் மணி என்ற சொல்லைக் கண்டவுடனேயே கையை இழுத்துக் கொண்டது. இவ்வாறு வெவ்வேறு தூண்டிகளுக்கு இவ்வகையான பரிசோ தனைகளின் மூலமாக தூண்டுதலானது புலன் உறுப்புகளின் மீது செயற்படும் புற வுலக இயல்பான தூண்டுதல்கள் மட்டு மல்ல, புலன் உறுப்புக்களின் மீது செயற் படும் அக உணர்வு கொண்ட செயற்கை யான ஒசை தரும் தூண்டுதல்களாகவும் அமைகின்றது.
இவ்வகையான ஆராய்ச்சியினுடாக வும் பரிசோதனைகளின் மூலமாகவும் பவ்லோவ் வயிற்றுச் சுரப்பிகளுக்கும் மூளைக் கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராயத் தலைப்பட்டார். அவரது ஆராய்ச்சிகள் வாழ்விலிருந்து அந்நியப்பட்டு தொலைதூர தீவுகளுக்குள் ஒதுங்கிவிடாமல் விஞ்ஞா னத்தின் துணை கொண்டு புறவுலக யதார்த் தத்தை உயிரியல் துறையில் விளங்கிய மையே பவ்லோவின் முக்கிய பங்களிப்பு களில் ஒன்றாகும். பிரதிபலிப்புக் கோட்பாடு குறித்து லெனின் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்.
'தவறான தத்துவத்தால் வழி நடத்தப் படாதீஅறிவியல் அறிஞர்களையும் பொருள் முதல்வாதிகளையும் பொறுத்தமட்டில் d 600Tire (Sensation) 6T6tug bub 5616015 விற்கும் (Conscious) புறநிலை உலகிற்கும் இடையிலான நேரடி உறவாகும்; உணர்வு என்பது புறநிலை தூண்டுதல் சக்தி மனித னின் தன்னறிவிற்கு மாறிச் செல்வதாகும்." (லெனின் தொகுப்பு நூல்கள் 14 51)
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 48

இதனை பவ்லோவின் ஆய்வு முடிவு கள் தர்க்க ரீதியான ஆதாரங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. இத்தகைய மகத்தான பங்களிப்பினை மனித குலத்திற்கு வழங்கிய மையால் உழைக்கும் மக்களும் அதன் நேச சக்திகளும் அவரை வரவேற்றனர். அவரது ஆராய்ச்சிகள் உழைக்கும் மக்கள் திரளினரின் விடுதலைப் போராட்டத்திற் கான வழிகாட்டல் தத்துவமாக விளங்கின.
இது இவ்வாறிருக்க, பவ்லோவின் கோட்பாடுகளாலும் தத்துவங்களாலும் பல முகாமைகளிலிருந்து பல விதங்களில் தாக்குதல் தளர்க்கபட்டன. குறிப்பாக பல் லோவை மார்க்ஸியத்தின் விரோதியாகக் காட்ட முனைய வரட்டு மர்ஸியர் சிலர் பின்வரும் விடயத்தைத் தமக்குச் சாதகமா கத் தூக்கிப் பிடிப்பர்.
பாட்டாளி வர்க்கம் பாராள முடியும் என்பதில் பாவ்லோவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சிறப்பான எதிர்காலத்தை, அது மனிதகுலத்திற்கு அளிக்க முடியும் என்பதில், அவர் நம்பிக்கை கொள்ள வில்லை. ஆராய்ச்சி சாலைக்குள்ளேயே அவர் இருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் வீரப் போராட்டத்தையோ, அதன் வெற்றி யையோ, அதன் நிர்மான வேலையையோ அவர் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கில்லை. சோவி யத் சர்க்காரை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. இக்கருத்தை அவர் மூடி மறைக் கவும் இல்லை. பாட்டாளி வர்க்கச் சர்வ்ா
திகாரத்தின் மீது தனக்குள் வெறுப்பைக்
காட்டுவதற்கான எல்லாவற்றையும் அவர் செய்தார். கடவுள் என்ற கருத்தை எதிர்க் கும் மனோபாவமுள்ள பொருள் முதல்வாதி யான அவர், மாதா கோவிலுக்குப் போகத் தொடங்கினார். மாதா கோவிலைக் கண்ட மாத்திரத்தில் தன்மீது சிலுவை அடையா ளம் செய்து வணங்கினார். வழிபாடு நடக் கும் மாதா கோவிலாக இருந்தாலும் சரி,
அல்லது, மாத கோவிலாக இருந்தும், பின் னால் தொழிலாளிகளின் கிளப்' அல்லது காட்சி சாலையாக மாற்றப்பட்டிருப்பினும் சரி, அவர் அஞ்சலி செய்தார். தனது இலக் கிய சிருஷ்டியை அவர் கடவுளுக்குச் சமர்ப் பித்தார். சோவியத் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்ற அவர் மறுத்தார். எவை யெல்லாம் தொழிலாளிகள் விவசாயிகள் சர்க்காருக்கு அவமரியாதை என்று கருதி னாரோ, அவற்றைச் செய்வதில் முனைந் தார். எனினும், அவர் விஞ்ஞான ஆராய்ச் சியை நிறுத்தவே இல்லை. −
இக்காலச் சுழலில் ஐரோப்பிய நாடுக ளில் மார்க்ஸியம் சமூக மாற்றப் போராட்டத் திற்கான பிரதான தத்துவமாக மட்டுமன்றி, செயற்திறனுக்கான உந்துதலையும் வழங் கியிருந்தது. குறிப்பாக லெனின் தலைமை யிலான போல்ஷ்விக் கட்சியானது, புதிய தோர் பரிமாணத்தை எட்டியிருந்தது. மனித வரலாற்றை புதிய கோணத்தில் இட்டு செல்லும் ஆதர்சனமாக அங்கீகரிக்கப் பட்டும் தன்னை அங்கீகரித்துக் கொண்டது மான நிலைப்பாடுகன்ளயும் ஸ்தாபன வேலைத் திட்டங்களையும் இவற்றின் அடி யாக எழுகின்ற பல பக்க முரண்பாடுகளை யும் இவ்வியக்கம் பிரதிபலித்து நின்றது.
1917 ஆம் ஆண்டின் ரசியப் புரட்சியின் வெற்றியுடன் கூடிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மாற்றமும் புவியியல் ரீதியில் பெரும்பகுதியை புரட்சிகர அமைப்பின் கீழ் கொண்டு வந்தது. உலகளாவிய ரீதியில் உழைக்கும் வர்க்கமும், அதன் நேச சக்தி களும் சகல ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து போராடினர். இப்போக்கின் தாக் கத்தை அறிவியல், மெய்யியல், வரலாறு, தத்துவம், விஞ்ஞானம் முதலிய துறைக ளில் காணலாம். இவை யாவும் பொது மக்களின் சொத்துக்களாக்கிக் கொண்டிருந் தன. விஞ்ஞானி பவ்லோ அவர்கள் இப் போக்கினை அறிவாலும் உள் உணர்வா
மல்லிகை பெப்ரவரி 2008 & 49

Page 27
லும் தமதாக்கிக் கொண்டமையின் காரண மாக அவரது ஆய்வுகள் இத்தகைய மானுட அணியில் தடம் பதித்து நின்றார்.
இவ்வாறாகக் காலப்போக்கில் அவரது விஞ்ஞான ஆய்வுகளின் ஊடாக ஏற்பட்ட அநுபவத்தின் ஊடாக, விஞ்ஞானம் குறித்து மட்டுமல்ல, சமூகம் பொறுத்தும் அவரது பார்வை தெளிவாகியது. இத்தகைய விஞ் ஞான ஆய்வுகளும் அதன் மக்கள் சார்பு தன்மையும் ஜெர்மனியர் போன்ற பாஸிஸ்ட் டுகளை ஆத்திரம் கொள்ளச் செய்ததுடன் அதற்கு எதிரான மனிதப் படுகொலைகளை யும் செய்தனர். இது தொடர்பில் விஞ்ஞானி பவ்லோ 'மனித நாகரிகத்தின் மீது மனிதக் குரங்குகள் நடாத்தும் படையெடுப்பே பாஸி
ஸம்" எனச் சரியாகவே வரையறை செய்தார்.
மேலும் விஞ்ஞானம் சமூக வாழ்வுகளில் எத்தகைய முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது என்பது குறித்து, அவரது சொந்த ஊரான நியாசனிலிருந்து வந்தி ருந்த கூட்டுப் பண்ணை விவசாயிகளிடம் அவர் கூறிய கருத்து முக்கியமானதாகும். "விஞ்ஞானம், வாழ்க்கையிலிருந்து விலகி நின்றதுண்டு, மக்களிடமிருந்து தனித்தி ருந்ததுண்டு. நான் இப்பொழுது காண்பது வேறு; நாட்டு மக்கள் அனைவரும் விஞ் ஞானத்தை மதிக்கிறார்கள், பாராட்டுகிறார் கள். உலகில் இக்காரியத்தைச் செய்துள்ள ஒரே சர்காரை நான் வாழ்த்துகிறேன்.'
உலகின் படைப்பில் யாவும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்ற தத்துவத்தி னால் கருத்து முதல்வாதிகள் மனிதனின் சிந்தனையை ஊனப்படுத்தியுள்ளனர். மூளைக்கான வேலையின் அளவை குறை த்ததுடன் சிக்கலான பிரச்சனைக்கான தீர்வை மிகத் தெளிவாக முன் வைத்தனர். ஒரு வகையில் கருத்து முதல் வாதமானது மனித குலத்தின் வரலாற்றினை பின்நோக் கித் தள்ளியதுடன் அதிகாரச் சார்பானதாக மாறி கோடா கோடி உழைக்கும் மக்களை
அடக்கி ஒடுக்குவதற்கு பயன்பட்டு வந்துள் ளது. இந்தச் சூழலில் மனிதன் தன்னை தானே தெரிந்து கொள்வதற்கான விஞ் ஞான ஆய்வொன்றினை முன் வைத்ததன் மூலமாக மனித குலத்தின் மகத்தான மருந்துவகை திகழக் கூடிய பெருமை பவ்லோவுக்குக் கிடைத்தது.
அவர் விலங்குகளில் செய்த இந்த ஆராய்ச்சி நியதிகளை மனித இனத்திற்கு பொருத்திப் பார்த்துக் கருத்துத் தெரிவிக்க முற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மரணம் அடை ந்தமை உயிரியல் ஆய்வுலகில் ஏற்பட்ட பேரிழப்பாகும். இவரது கோட்பாடுகள்,
ஆய்வுகள் கடும் தாக்குதல்களுக்கு உட்பட்
டன. மாறாக அறிவியல் உலகம் அவரது ஆய்வுகளை வரவேற்றன.
அடிக்குறிப்புகள்
மனித சமூகசாரம், சென்னை புக் ஹவுஸ் (பி) லிட்.
1. தாம்ஸன் ஜார்ஜ் (1990)
சென்னை, பக், 1, 2
2. அதே நூல் பக். 83, 84 3. மார்க்ஸ், ஏங்கல்ஸ் தேர்ந்தெடுக்கப் பட்ட நூல்கள், லெனின் தொகுப்பு நூல்கள். 4. தாம்ஸன் ஜார்ஜ் (1990) மனித சமூகசாரம், சென்னை புக் ஹவுஸ் (பி) லிட். சென்னை, பக். 27.
5. ஜூலியஸ் பூசிக் (1997), வீரநினைவு கள், நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட். சென்னை பக். 36. 6. அதே நூல் பக். 38.
7. அதே நூல் பக். 38.
பயன்படுத்தப்பட்ட ஆங்கில நூல்
IVAN P PAVLOV. (1994), PSYCHOPA
THOLOGY AND PSYCHATRY TRANSACTION PUBLISHERSNEW BRUNSWICK (U.S.A.) AND LONDON (UK)
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 50

நாட்டார் இலக்கியம் பற்றிய ஆய்வுகள் அண்மைக்காலத்தில் பலவாறான ஆய்வுப்பரப்புக்குள் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. தவிரவும், நாட்டுப்புறவியல் சார்ந்த சமூக வரலாற்று ஆய்வுகள் ஆய்வாளர்களால் ஆங்காங்கே மேற் கொள்ளப்படுகின்றன. நாட்டார் பாடல்கள் தனித்து ஒரு சமூகத்துள் அடித்தள மக்களின் உள்ளங்களில் இருந்து பிறப்பெடுத்து உள்ளத்து உணர்வுகளாக மேற் கிளம்புகின்றன. நாட்டார் பாடல்கள் காதல் பாடல்களாகவும், உரிமை, போராட்டக் கீதங்களாகவும் வாழ்க்கையின் துன்பியல் சம்பவங்களைத், தாலாட்டுக்களாகவும் எடுத்து இயம்புகின்றன.
FF Up ğ göl' இலக்கிய
பலவாறான
ப தி த் த , LD60)6).usgs த மி ழ இங்கியமனது
நாட்டார் பாடல்களினூடாக ஆரம்பமாகின்றது. சமூக விளை நிலத்தின் பயிராக
இருக்கின்ற இந் நாட்டார் பாடல்கள் இம்மக்களின் அநுபவங்களை அடையாளப்படுத்துகின்றது. கடந்து வந்த பாதையைச் செப்பனிடுகின்றது. உழைக்கும் மக்கள் பரம்பரையினரின் உதிர கீதங்களாக இம்மலையக நாட்டார் பாடல்கள் தனித்துவ மிக்கதாய் மிளிர்கின்றன.
மலையக நாட்டார் பாடல்கள் பெரும்பாலும், பெண்களின் அவலங்களையும், ஆளும் வர்க்கத்தினருக்கு எதிரான தொழிலாளர்களின் கீதங்களாகவும், துரைமார்களின் அடக்கு முறைக்கு எதிரான பாடல்களாகவும் காணப்படுகின்றன.
மலையக நாட்டார் இலக்கியம் காட்டும் பெண்களின் நிலை நோக்கும் போது, அது பல முனைகளில் வெளிக்கொணரப்படுகின்றது. குடும்ப உறவில் ஏற்படும் அவலங்கள், சந்தோசங்கள், வேலை செய்யும் போது உழைக்க வேண்டி பாடுவதும், ஏமாற்றத்தின் வெளிப்பாடு, இடையிடையே வந்து போகும் காதல் அம்சங்கள், இம்மலையக நாட்டார் இலக்கியத்தில் முக்கிய அம்சத்தினைப் பெறுகின்றன.
மல்லிகை பெப்ரவரி 2008 & 51

Page 28
கரடுமுரடான் காட்டுப் பாதையினை வெட்டி, அதனை வளம்படுத்தி முதலாளிக ளின் அடிமைக் கூலிகளாக வேலை செய்து மலையக மண்ணை வளமாக்கிய தொழிலாளர்கள் உழைப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்ட வர்க்கமாக அதிகார வர்க்கத்தினரின் கீழ் இருந்தனர். குறிப்பாக பின்வரும் பாடல் அதனை நினைவுபடுத்து கின்றது.
கோன கோன மலையேறி கோப்பிப் பழம் பறிக்கையிலே ஒரு பழம் தப்பிச்சுன்னு ஒதச்சானைய்யா சின்ன தொர.
மேலும் தேயிலைச் செடிகளுக்குச் சென்று நிறை பிடித்துக் கொடுத்தெடுக்க வேண்டும். இத்தகைய நிலையில் பெண் கள் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு, கணவனுக்குப் பணிவிடை செய்து, கொழு ந்து மலைக்குச் செல்வதற்கு மணிநேரம் சுணங்கிவிட்டால், கணக்குப்பிள்ளையின தும், கங்காணியினதும் அடாவடித்தனத் தைக் கண்டு பெண்கள் இவ்வாறு கிளர்
ந்தெழப் பிரவாகம் கோர்க்கின்றனர்.
ஓடி நெரே புடிச்சு ஒரு சுடே கொழுந்தெடுக்க பாவி கணக்கு புள்ளே பத்து ராத்த போடுறானே
என்ற ஏக்க உணர்வு வெளிப்படு கின்றது.
மேலும் மலையக சமூகத்தின் பெருந் தோட்டத் தொழிலாளர்களை மையமாகக் கொண்டே தோட்டச் சமூகக் கட்டமைப்
பில் கங்காணிக்கு அடுத்த படியாகக்
கணக்குப்பிள்ளை காணப்படுகின்றார். இவரின் அடக்குமுறைகள், இதற்கு முகங்கொடுக்க முடியாத மக்கள் புலம்புவது இவ்வாறு எழுகின்றது.
அந்தி கொழுந்தெடுக்க ஆசை வைச்சு நான் போயி சந்தியில் நிக்கிறேனே. ஒரு சாவு வந்து நேரலியே
பிந்தி வந்தேனென்று பில்லு வெட்டப் போட்டுட்டானே
எனப் பாடுவது மலையக மக்கள் எவ்வாறான அடக்குமுறைக்கு உட்பட்டு, கூலிப்படையினராக இவர்களின் வாழ்வு இன்றும் காணப்படுவதனை யாரும் மறுப்பதற்கில்லை.
எம்மவர்கள் வருகின்றபோது, பல இன்னல்களையும் பட்டு இம்மலையக மண்ணை பிரித்தானியர்களின் சுவர்க்க பூமி ஆக்கினார்கள். இந்த பூமியை வளமாக்கி, உரமாக்கி இம்மண்ணை வளம் படுத்திய மக்கள் பாம்புக் கடிக்கும், கொடிய விலங்கு களுக்கும், இயற்கைக்கும் இரையாகினார் கள். அந்நிலையில் தன் உறவுக்காரர், கணவன் இறந்த புலம் பலை வெளிப்படுத்தும் பாடல் ஒரு புறமும், அடக்குமுறைக்கு உட்பட்டு இருக்கின்ற சமூகத்தில் கணக்குப்பிள்ளையின் துன்பிப்பல் வாழ்க் கைக்கு ஈடுகொடுக்க முடியாத மலையக மக்கள் சொந்த நாட்டிற்கு சேர்த்திடும்படி ஏங்குவது, மலையக வரலாற்றை மறு பரிசீலனை செய்கின்றது.
மஞ்சம் போட்ட மவராசன்
மலை சரிஞ்சு செத்துப் போனான்
மல்லிகை பெப்ரவரி 2008 & 52

கஞ்சிக்கு வழியுமில்லை காக்காக கையிலில்லை காபேறா அரைப்பேறா கண்டபடி மாத்திப் போட்டு மூடுறானே செக்குறோலை சிறழிஞ்ச சீமையிலே செத்துப் பொழைக்கிறோமே சேர்த்திடுங்க ஊருப்பக்கம்.
கங்காணி என்பவர் தோட்டத்தில், உயர்ந்த நிலையில் வைக்கப்படுபவர். இவரின் வருகையோடு ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்ட னர். இந்நிலையில், கங்காணி அடக்கு முறையை விவரிப்பதற்கே பல பாடல் களைப் பெண்கள் பாடியுள்ளனர். அதில் பின்வரும் பாடல் இவ்வாறாக வெளிக் கொணரப்படுகின்றது.
கண்டி கண்டி ஏங்காதீங்க கண்டி பேச்சு பேசாதீங்க சாதி கெட்ட கண்டியிலே கண்டவனெல்லாம் கங்காணியாம்.
இங்கு சாதியைக் குறிப்பிட்டுக் கங் காணி மீது பெண்கள் கோபம் கொள்கின் றனர். வேலை செய்து வீட்டிற்கு வந்து எல்லோரும் தன் உறவுகளை விசாரித் துக் கொண்டு, இக்கண்டி எனக்கு விருப்ப மாக இருக்கின்றது எனக் கூற இழிசினர் குலச் சாதியை முன்னிலைப்படுத்தி அக்குலத்தில் பிறந்த கங்காணி என பெண்கள் குறிப்பிடுவது ஒரு வகையில் தன் மன உணர்வினையும், மறுபுறம் இந்திய பண்பாட்டு கலாசார, சாதிய போராட்டத் தினை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
இவ்வாறாக மலையக நாட்டார் பாடல்களில் பெண்களின் அவலங் களாலும், அவர்களின் சொல்லொணாத் துயரங்களாலும் அழியாதவை. இம் மலையக மக்கள் இலக்கியம் இறந்தும் இறவாது வாழும் உயிரோட்டமானவை என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை.
செ. யோகநாதன்
மல்லிகைலின் அஞ்சலி.
இறுதி வரையும் முற்போக்கு இலக்கிய ஆக்க வழி களில் நடைபோட்டு வந்த எழுத்தாளர் திரு. செ. யோகநாதன் சமீபத்தில் நம்மை விட்டு மறைந்து விட்டார்.
அன்னாருக்கு மல்லிகையின் இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- ஆசிரியர்.
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 5

Page 29
சுரேஷ் கண்ணன் பிச்சைப்பாத்திரம்
pitchaipathiram.blogspot.com/index. எல்லாம் எல்லோருக்கும் Tuesday January 15, 2008 சுரேஷ் கணிணன் எனும் தமிழகத்தைச் சார்ந்த வலைப்பதிவு இது இவ்வலைப்பதிவில் அவர் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த புத்தகக் கண்காட்சியைப் பற்றியும, மறந்து போன படைப்பாளிகளைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொன்ன கருத்துக்கள் நமக்கு பயன்மிக்கவை. இவரை பற்றிய மேலதிக விபரங்கள அவ்வலைப்பதிவில் இல்லை என்பதுதான் குறை.
நானும் புத்தகக் கண்காட்சியும் சில எழுத்தாளர்களும்
இரண்டு மூன்று நாட்களாக கை நடுக்கம் கொண்டிருந்தது. போதைப் பொருள் உபயோகிப்பாளன் அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியின் ஆரம்ப நிலை போல் உணர்ந்தேன். இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு போகவே கூடாது. எந்தப் புத்தகத்தையும் வாங்கக்கூடாது என்று முடிவு செய்ததிலிருந்து, மறுபுறம் சென்றே ஆக வேண்டும் என்று என் ஆல்டர் ஈகோ எனக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டேயிருந்தது. சரி புத்தக
மல்லிகை பெப்ரவரி 2008 & 54
 

வாசனையை மாத்திரம் முகர்ந்துவிட்டு திரும்பி விடலாம்' என்று சமாதானம் செய்து கொண்டு ஒரு வழியாக இன்று கீழ்ப்பாககத் திற்கு(1) கிளம்பினேன். என்னை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. போன முறை "காணும் பொங் கலன்று' சென்று விட்டு இலவச தொலைக் காட்சி வாங்க முண்டியடிக்கும் கூட்டத்தில் சிக்கியவன் போல் தவித்துப் போனேன்.
பொதுவாகவே எனக்கு கூட்டம் என்றால் அலர்ஜி. எனக்கு திருமணம் நடந்த நாளன்று கூட பகலெல்லாம் உறவினர் கூட்டத்தில் சிக்கி a த்தில் இரவன்று உள்ள கூட்டமா இருக்காதுல்ல என்று கேட்டுவிட்டு பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
அரங்கினுள் நுழைவதற்கு முன் வலது, இடது புறங்களில் வரிசையாக வண்ண விளம் பர பலகைகள். நடிகர்களின் பந்தாக்களுக்கு எந்தவித குறைச்சலுமில்லாமல் எழுத்தாளரகளின் கவிஞர்களின் பிரம்மாண்ட புகைப்படங்கள். பில்லா திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்று போல் கவிட்பேரரசு வைரமுத்துவுமசூளிர் கண்ணாடி அணிந்து கொண்டு விநோதமாக காட்சியளித்தர் பர்வையாளர்கள் உள்ளே நுழைய நிறைய வாசல்களை ஏற்படுத்தி வைத்திருந்த தும், ஒவ்வொரு நுழைவிலும் அந்தப்பகுதி யில் அமைந்திருக்கின்ற பதிப்பகங்களின பட்டி யலை வைத்திருந்ததும் வசதியாக இருநதது. எந்தவொரு வரிசையிலும் மனம்மாறி அடுத்த வரிசையை சென்றடைய இடைவெளிகள ஏற்படுத் தியிருந்ததும் இன்னொரு வசதியான ஏற்பாடு. வளப்பமான சில பெண்களை அதிகம நோட்ட மிடாமல் நாகரிகமானவனைப் போல செல்வது
சற்றே சிரமமான காரியமாக இருந்தது.
எல்லாக் கடைகளையும் ஒரு பறவைப் பார்வையில் பார்க்கலாம் என முடிவு செய தேன். மக்கள் எந்தமாதிரியான புத்தகங்களை
அதிகம் விரும்பி வாங்குகிறார்கள் என்றொரு சர்வே எடுத்தால் பலருக்கு உபயோகமாக இருக் கும் என்று தோன்றியது. அன்னம் பதிப்பகத் தில் இயக்குநர் தங்கர் பச்சான் நின்று கொண்டி ருந்தார். பொதுவாக சினிமா பிரபலங்களை முறையான அறிமுகம் இல்லாமல் சென்று பேசு வது எனக்கு இயல்பில்லாத ஒன்று. ஆனால், அவரே என்னைப் பார்த்து மந்தகாசமாக புன்னகை செய்ததால், 'உங்கள் திரைப்படங் களை தொடர்ந்து கவனிக்கிறேன். ஒரு சிறு விமர்சனம் சொன்னால் தவறாக எடுத்துக கொள் வீர்களே?’ என்றேன்."சொல்லுங்க ஐயா’ என்றார் கனிவாக. அந்த தைரியத்தில் "உங்களின படங் களில் பொதுவாக நிறைய இரைச்சலாக இருக் கிறது. கதாபாத்திரங்கள் தேவையேயின்றி உரக்கப் பேசுகிறார்கள் அல்லது கத்துகிறார் கள். இது என்னை அசெளகரியமாக உணரச் செய்கிறது' என்றேன். "உங்களுக்கு எந்த ஊர்?’ என்றார். ”சென்னைதானி.
‘என்னுடைய படங்களில் வருகிறவர்க ளில் கிராமப்புறங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள். அவர்களின் பேச்சு அப்படித்தான இருக் கும்’ என்றார் சற்றே ஆவேசமாக. "இல்லீங்க. நான் அதச் சொல்லல. அத என்னால புரிஞசுக்க முடியுது. ஆனா செயற்கைத்தனமாக கத்தறாங் களே' என்றதற்கு"எங்கே ஒரு உதாரணம சொல் லுங்க” என்றர் நான் தொலைக்காட்சியில'ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படக்காட்சிகளில பார்த்த அர்ச்சனா நடித்த ஒரு காட்சியை சொன்னேன். நான் சொன்னதுலயே எல்லாப் பதிலும் இருக் குது. உங்களுக்குப் புரியல. நீங்க இதுவரைக் கும் பார்த்த தமிழ் சினிமாவ வெச்சுக்கிட்டு என் படத்த புரிஞ்சுக்க முடியாது’ என்றார். நான் சர்வதேச திரைப்படங்களை பார்ப்பவன் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டு, என கேள்வியை சற்றே மாற்றி மீண்டும் கேட்க அவரும் சளைக்காமல் முந்தைய பதிலையே சொன்னார். 'இல்லீங்க. நான் டெக்னிக்கலா." என்றவுடன் குறுக்கிட்டு "சினிமாவில் டெக்
மல்லிகை பெப்ரவரி 2008 & 55

Page 30
னிக்கே கிடையாது’ என்றார் அதிரடியாக. எங்கள் இருவருக்குள்ளும் ஏதோ மொழிப் பிரச்சினை இருப்பதை உடனடியாக உணர்ந் தவனாக அவிடமிருந்து புன்னகையுடன அவசர மாக விடைபெற்றுக் கொண்டேன்.
கை நடுக்கம் அதிகமானதால் அதை குறைப் பதற்காக சில சிற்றிதழ்களையும் புத்தகங்களை யும் வாங்கிக் கொண்டேன். எனி இந்தியனில் ஹரன் பிரசன் னா தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஜெயகாந்தன் புத்தகங்களும் ஆனந்தவிகடன் பதிப்பக புத்தகங்களும் அதி களவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதை கவனிக்க முடிந்தது. அவர் ஆசுவாசமடைந் தவுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந் தோம். பிரசன்னா சில முக்கியமான எழுததாளர் களின் அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்திக கொடுத் தர்மிக இயல்பாக உரையாடின யுவன சந்திரசேகரி டம், கதைக்குள் கதை' என்று அவர் எழுது கிற பாணி எனக்கு பிடித்திருப்பதை தெரிவித்தேன.
மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த இரா.முருகனிடம் செலவழித்த சுமார் 15 நிமிடங் கள் உபயோகமானதாயிருந்தது. வலைப்பதிவு உலகம், ராயர் காப்பி கிளப், ஜெயமோகனின் சமீபத்திய கட்டுரைகள், காலத்தைக் கடந்து நிற்கும் சில சிறுகதைகள், அரசூர் வம்சத்தின் மொழிபெயர்ப்பு, தேவதாசிகள். என்று ஒரு மினி ரவுண்டு வந்தாகிவிட்டது. அவரிடம் நான் பேசினதின் சுருக்கமான அம்சம் 'We miss you'. 363)630Tujis iss35(Sih isfy மாக இயங்கும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். நவீன தமிழ் இலக்கியத்தின சிறுகதை ஆசிரியர்களில் மிக முக்கியமான வராக அவரைப் பார்க்கிறேன். சுஜாதாவை சற்றே நினைவுப்படுத்தும் ஆனால், வேறு தளத்தில், மொழியில் இயங்கும் அவரின் சிறுகதைகள் -சமீப கால கட்டத்தில் - நிறைய வெளிப் படாதது நமக்கு இழப்பே. "நாவல் என்கிற பெரிய வடிவத்தில் கை வீசி நடந்த பிறகு,
சிறுகதை என்கிற குறுகிய வடிவத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது சிரமமாய் இருக் கிறது. பார்க்கலாம்' என்றார்.
பிறகு வந்தார்கள் சுரேஷ் கண்ணனும், வ.ஸ்ரீனிவாசனும், இணையக்குழு மூலமாக கிடைத்த சமீப நண்பர்கள். இதில் சுரேஷ் கண்ணன் உயிர்மையில் இளையராஜா இசை குறித்து எழுதிய கட்டுரை வெளியான போது நீங்கள் எழுதியத?" என்று என்னை பலர விசாரித் தர்கள். பெயர் குழப்பம் வேணு வனம் என்று சமீப காலமாக எழுதிவரும் இவரின் வலைட் பதிவில் பிரத்யேகமான சுவையுடன் கூடிய நகைச்சுவைக் கட்டுரைகளை வாசிக்கலாம். முதல் சந்திப்பிலேயே நீண்ட நாட்கள் பழகின வரைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தி விட்டார். வஸ்ரீனிவாசன் பிரமிள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்று சமீபத்திய உயிர் எழுத்து'வில் பிரசுரமாகியிருக்கிறது.
சூத்ரதாரி என்கிற எம்.கோபாலகிருஷ்ண னிடம் சற்று நேரம் பேச முடிந்தது. மிக எளிமை யான அவரிடம் போன வருட உயிர்மை விழா வில் சுதேசமித்திரனின் நாவல் குறித்து அவர் ஆற்றின அறிமுக உரை மிகச்சிறப்பாக இருந் ததை நினைவுகூர்ந்தேன். அவரின் படைப்பு களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் படியும் இணையத்தில் எழுதும்படியும் பிரசன்னா கேட்டுக் கொண்டதற்கு உடனே ஒப்புக் கொண்டார். சிற்றிதழ்களில் மாத்திரப அறியப்பட்டிருக்கும் குறுகிய வட்டத்தில் இயங்கும் எழுத்தாளர்களை இணையச செயல் பாடுகளில் ஈடுபட வைப்பதின் மூலம் வேறு வகை வாசகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற பிரசன்னாவின் திட்டத்தில் எனக்கு உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது.
ஜெயமோகனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் சுகா. ஒ. பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்தானே' என்று அவர் என்னுடைய
வலைப்பதிவின் பெயரோடு கூறியது ஆச்சரி
மல்லிகை பெப்ரவரி 2008 * 56

யமாக இருந்தது. கண்களை focus செய்து கொண்டு என்னை அவர் கூர்ந்து கவனித்த போது, சமீபகாலமாக அவரின் இன்னொரு பக்க மான நகைச்சுவை கூடின எழுத்தை அறிந்து கொள்ள முடிந்த காரணத்தினால் "என்னைப் பற்றி என்ன கிண்டலான வரி இப்போது அவர் மனதில் ஒடுகிறதோ’ என்று தேவையில்லாத கலக்கம் ஏற்பட்டது. ஜெயமோகன் என்றாலே மிக கடுமையான மொழியுடன் தீவிர இலக் கியப் பரப்பில் இயங்குபவர் என்று என்னுள் ஏற்பட்டிருந்த பிம்பம், அவருடைய சமீபத்திய கட்டுரைகளினால் சிதைந்து போனது. சற்றே இளைப்பாறிக் கொள்ள இவ்வாறு எழுது கிறாரோ என்று தெரியவில்லை. என்றாலும இவ் வாறு தன்னுடைய பிம்பத்தை தானே சிதைத்து அல்லது உருமாற்றிக் கொள்வதென்பது இன்றைய பின்நவீனத்துவ காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனுக்கு மிக தேவையான ஒன்று தான் என்று எனக்குத் தோன்றுகிறது.
எஸ்.ராமகிருஷ்ணனிடம் தமிழ் வலைப் பதிவாளர்கள் குறித்து சன் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பற்றி கேட்டேன். "சுமார் 15 நிமிடம் பேசினதை எவ்வாறு எடிட் செய்து போட்டார்கள் என்று தெரியவில்லை’ என்றார். வலைப்பதிவுலகில் ஏற்கெனவே புழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் புதிதான எந்தத் தகவலுமில்லை. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வலைப்பதிவு லகத்தைப் பற்றின எளிமையான, முழுமையான ஒரு அறிமுகத்தை அந்த நிகழ்ச்சி ஏற்படுத்த வில்லை என்கிற என் கருத்தை அவரோடு பகிர்ந்து கொண்டேன். எஸ்ராவின் சில சிறு கதைகள், புத்தக மதிப்புரைகள், முழுமையான நேர்காணல்கள் கொண்ட இணையத்தளம் விரைவில் வெளியாகவிருக்கும் தகவலை தெரிவித்தார். நாஞ்சில் நாடனை சந்திக்க முடியாமற் போனது ஒரு குறை.
எழுத்தாளர்கள் என்றால் தலைக்கு பின் னால் ஒளிவட்டத்தை சுமந்து கொண்டு பக்தர்
களுக்கு அருளும் கடவுள் போன்ற பார்வை யுடன் வாசகர்களை அணுகுவர்கள் என்று முந் தைய சில அனுபவிங்களினால் எண்ணியிருந்த என்னை மேற்சொன்ன எழுத்தாளர்களுடனான சந்திப்பு முற்றிலுமாக கலைத்துப் போட்டது.
ஏறக்குறைய எல்லாக் கடைகளிலும மக்கள் கூட்டம் கூட்டமாக புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள் அல்லது பார்வையிடடுக் கொண்டிருந்தார்கள். சுஜாதா சொன்ன மாதிரி என்ன மாதிரியான புத்தகம் வாங்குகிறார்கள் என்பதைவிட புத்தக வாசிப்பு என்கிற விஷயமே கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டி ருக்கும் நிலையில் இத்தனை புத்தக விரும்பி 66 ஒருசேரப் பார்ப்பதே நிறைவான விஷய மாக இருந்தது. நிறைய சிறு கடைகளில் ஆனந்தவிகடன், கிழக்கு பதிப்பக புத்தகங் களையே பிரதானமாக வைத்துக கொண்டிருந் தார்கள். குறுகிய காலத்தில் ஏற்பட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க தாக எனக்குத் தோன்றுகிறது. மணிமேகலைப் பிரசுரத்திற்கு போட்டியிடுகிறாற் போன்று ஆழமில்லாமல் இருக்கும் அவர்களின் புத்தகங்களின் உள்ளடக்கம் குறித்து எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும், எளிமையான மொழியோடு, வாங்குகிற ஆர்வத்தை ஏற்படுத் துகிற சிறப்பான வடிவமைப்போடு, ரயில்வே புத்தகக் கடைகளிலும் கிடைக்கக்கூடிய அளவிற்கு சாமானியனை சென்று சேரும வசதி என்று அவர்களின் மார்க்கெட்டிங் உத்தி வியக் கவே வைக்கிறது. ஆரம்பக்கட்ட அறிமுக புத்தகங்களை படிக்கும் ஒரு வாசகன், மெள்ள ஆழமான வாசிப்பிற்கு உந்தித் தள்ளப்படக் கூடும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகங் கள் ஏற்படுத்துகின்றன. நான் வாங்கிய சில புத்தகங்கள்
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் -
ஜெயமோகன் - உயிர்மை - ஜி.நாகராஜன் - காலச்சுவடு
மல்லிகை பெப்ரவரி 2008 & 57

Page 31
நினைவோடை வரிசை சுந்தர ராமசாமி - தி.ஜானகிராமன் - காலச்சுவடு ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - தமிழில்: இரா.முருகவேள் - விடியல் ரஜினியின் சினிமா, ரஜினியின் அரசியல் - அ.ராமசாமி - பாரதி புத்தகாலயம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - கந்தர்வன் - பாரதி புத்தகாலயம் பெண் ஏன் அடிமையானாள் - பெரியார் - பாரதி புத்தகாலயம் கதை சொல்லும் கலை - ச. முருகபூ பதிபாரதி புத்தகாலயம் நான் வித்யா - ‘லிவிங் ஸ்மைல் வித்யா - கிழக்கு வேலைக்காரிகளின் புத்தகம் - ஷோபாசக்தி - கருப்புப் பிரதிகள்
தமிழினி இதழ் - நிழல் - திரைப்பட இதழ் - பெர்க்மன் சிறப்பிதழ் r நிழல் - திரைப்பட இதழ் - எம்.ஆர்.ராதா சிறப்பிதழ்
புனைகளம் - இதழ் எண்.4
வீடு சென்று அடைந்ததும் என்னுடைய ஏழு வயது மகளிடம் நான் வாங்கின புத்தகங் களை காண்பித்தேன். ”எனக்கு என்ன புத்தகம் வாங்கி வந்தீங்க?’ என்ற அவளின் எதிரபாராத கேள்வயில் என்னைக் கேவலமாக உணர்ந்து
தலையை குனிந்தேன்.
அறியப்படாத எழுத்தாளர்களின் வரிசையில்
சுப்ரமணிய ராஜு என்கிற எழுத்தாளரின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளதை நினைத்து உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய இளம் வாசகர்களில் எத்தனை
பேருக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அறிமுகமாயிருக்கும் என்று தெரியவில்லை.
சுப்ரமணிய ராஜுவின் நினைவாக பால குமாரனும் மாலனும் இணைந்து அன்புடன் என்கிற பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதியை வெளியிட்டனர். அதில் ராஜூவின் நண்பரான தேவககோட்டை வா.மூர்த்தியின் நெடிய முன்னுரையில் ராஜுவைப் பற்றின பல்வேறு நினைவுகள, சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டி ருக்கிறன. அசோகமித்திரனும் இவரை சில கட்டுரைகளில் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் ராஜுவைப் பற்றி அறிய வருகிறது. அவர் நட்பைப் பேணுவதில் மிகவும் கரிசனத்துடனும் கவனத்துடனும் இருந்துள் ளார். இலக்கியத்தை விட நட்பே அவருக்கு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.
ராஜுவின் படைப்புகள் எனக்கு அதிகம் படிக்கக்கிடைக்கவில்லையெனினும் படித்த சிறுகதைகள் ஒன்றும் அவ்வளவு சிலாக்கிய மாக இல்லை. (மறைந்து போன படைப்பாளி என்பதற்காக அவரை புகழந்தே ஆக வேண் டும் என்கிற சம்பிரதாயத்தில் எனக்கு உடன் பாடு இல்லை) வெகுகாலத்திற்கு முன்பு.
கணையாழியில் சுஜாதா'காலத்தை வென்று நிற்கக்கூடிய சிறுகதைகள் அடங்கிய ஒரு பட்டி யலை வெளியிட்டர் புதுமைப்பித்தனையே வெகு தயக்கத்திற்குப் பின் மட்டுமே சேர்த்துக் கொண்ட அந்தப்பட்டியல் அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராஜூவின் பெயரை பார்த்த பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டாமை தீர்ப்ப மாத்தி செல்லு என்னுமளவிற்கு பலத்த குரல்கள இலக்கிய வாதிகளின் மத்தியில் ஏற்பட்ட ஒரு பிரமை,
மல்லிகை பெப்ரவரி 2008 & 58

esgrusö asu see 9Jariššäss ei இடைத்சல் தான்!
– GLntölailä, ean
நீண்ட நெடுநாட்களாகவே என் அடி நெஞ்சில் எனக்கென்றொரு மன ஆதங்கமுண்டு.
அதை எழுத்தில் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் என்ற விருப்பம் நேரம் கிடைக்காமல், நடைமுறைப்படுத்த முடியாமல் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது.
இன்று அதை எழுத்தில் பதிய வைத்து விடுகின்றேன்.
கொழும்பிற்கு வந்ததன் பின்னர், சமீப காலமாகவே எனக்கு என்னையறியாமலே ஒரு வகைப் புகழ் அல்லது பிரபலம் தேடித் தேடி வந்து கொண்டேயிருக்கின்றது.
இது பல வழிகளிலும் எனக்குப் பலவிதமான சங்கடங்களை இயல்பாகவே ஏற்படுத்தி விடுவதுண்டு.
இதை எனது தினசரி இயல்பு வாழ்க்கை நடமாட்டத்திலேயே நேரடியாகத் தெரிந்து வைத்திருக்கிறேன், நான்.
இந்தப் புகழுக்கும் பிரபலத்திற்கும் காரணமாக அமைந்தவை இந்தக் கொழும்பு மாநகரில் இயங்கி வரும் பத்திரிகைகள், மற்றும் ஊடகங்கள் என்பதே எனது கருத்தாகும்.
வழி தெருக்களில் நான் அவசரமாக நடந்து செல்லும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இடையே என்னை இடைமறித்து, எனது சுக சேமங்களைப் பலர் விசாரிக்கின்றனர்.
"என்ன நடந்து போகிறீர்களே?" எனக் குசலம் விசாரிப்பும் நடைபெறுகின்றது. ஏதோ என்னிடம் வாகனம் இருப்பது போன்ற நினைப்புடன் சம்பாஷணை தொடருகின்றது. தாங்கள் கேள்விப்பட்ட நான் கொழும்பில் வாகனத்தில்தான் நடமாடித் திரிவேன் என்ற நினைப்பு வேறு. அதை மனப்பூர்வமாக நம்பி இந்தக் கேள்விகளைப் கேட்டு வைப்பார்கள், அவர்கள்.
இன்னுஞ்சிலரோ “உங்களை அடிக்கடி பேப்பரிலை பார்க்கிறோம்! படம் கூடப் பார்த்தோம்!" என உசுப்பேற்றுவார்கள்.
வேறு சிலர் நடுத்தெருவிலை நிறுத்தி வைத்து "ரீவியிலை நேத்தும் உங்களைக் காட்டினார்கள்' என வியந்து பாராட்டி மகிழ்வார்கள்.
எனக்கோ மனச் சங்கடம் வேறு. இடையே அவசர வேலை இருக்கும். இம்மாத மல்லிகைத் தலையங்கத்தை மனசுக்குள் மனனஞ் செய்து கொண்டு போய்க் கொண்டிருப்பேன். அத்தனைக்கும் இந்தப் புகழ் மொழி முத்தாய்ப்பு வைத்து விடும்.
மல்லிகை பெப்ரவரி 2008 59

Page 32
அரசியல்வாதிகளுக்கும், சினிமாக் காரனுக்கும் பொதுமக்கள் புகழாரம் வசதி களைப் பெருக்கித் தரும். என்னைப் போன்ற எழுத்தாளனுக்கு அதீத புகழ் கிடைத்தால் அவன் கடைசியில் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில்தான் கொண்டு போய் முடிக்கும்.
இத்தனைக்குமே யாழ்ப்பாணத்தில் ராஜா தியேட்டர் மூத்திர ஒழுங்கைக்குள் இருந்து இயங்கி வந்த மல்லிகையின் ஆசிரியராகத்தான் கொழும்பிலும் இன்று வரை, தினசரி இயங்கி வருகின்றேன். இன்றும் நடமாடித் திரிகின்றேன்.
சமீபத்தில் ஒருநாள் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்று விட்டு, காலை நேரம் செட்டித்தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தேன்.
அந்த வீதியில் எனக்கொரு அநுபவம் ஏற்பட்டது.
சாலை ஒரமாக பெரியதொரு புத்தம் புதுக்கார் நிறுத்தப்பட்டிருந்தது. கதவோரம் ஒரு கனவான் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றார். காரைத் தாண்டி நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். திடீரெனக் கை தட்டும் ஒசை கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். சிகரெட்டை வீதியோரமாக வீசி எறிந்து விட்டு அந்த வெள்ளை வேட்டிக் கனவான் என்னைச் சுட்டிக் காட்டி, கையால் தன்னிடம் வரும்படி சைகை காட்டி அழைத்தார்.
தவறுதலாகத்தான் அழைக்கின் றாரோ? என ஊகித்த வண்ணம் நான் சற்றுத் தாமதித்துநின்றேன். மீண்டும் சைகை காட்டி அழைத்தார்.
எனது இயல்பான இலக்கியத் திமிர்க் குணம் மண்டைக்குள் ஏறிவிட்டது.
நானும் நின்று கொண்டே அவர் அழைத்தது போல, கைச் சைகை காட்டி அவரை அழைத்தேன்.
அந்தத் தெருவோரக் கனவான் சற்றுக்
கூட இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது முகபாவம் காட்டியது.
அழைத்தகையை மடக்கிக் கொண்டார். கார்க் கதவைத் திறந்து ஓசை எழும்பக் கதவைச் சாத்தினார்.
போடா பேயா! உன்ரை காரும், உன்ரை திமிரும் முதலில் மரியாதையைப்
படி என மனசுக்குள் புறுபுறுத்துக் கொண்டே
நான் நடையைக் கட்டினேன்.
இந்தத் திமிர்தான் என்னுடைய நிரந் தரச் சொத்து பலமும் கூட
மல்லிகையை ஆரம்பித்த காலகட்ட ஆண்டுகளில் தெருத் தெருவாக அவ்விதழ் களைக் கொண்டு அலைந்திருக்கின்றேன். கள்ளுக் கொட்டில், சாராயத் தவறனை, பஸ் நிலையம், தியேட்டர் வாசல் போன்ற இடங்களில் விற்றுத் திரிந்தவன்தான், நான் அது வியாபாரம். ஒரு பலமான, ஆழமான இலக்கிய நோக்கத்திற்காக என்னை நானே ஒப்புக் கொடுத்து உழைத்த உழைப்பு அது. ஒர் இதழின் விலை இருபது சதம். அந்தக் கால கட்டத்தில் பஸ்ஸின் உள்ளேயிருந்து ஒரு வளையல் கரம் கைதட்டி என்னை அழைத்து, ஜன்னல் ஊடாக மல்லிகை இத ழொன்றை வாங்கினாலே அகமகிழ்ந்து போயிருப்பேன். அந்தக் கைதட்டலுக்கு மதிப்புக் கொடுத்து, அடுத்த பஸ்ஸைத் தேடியிருப்பேன். அது எனது தொழிற் கடமை. அந்த இடத்தில் பணிவு நான் எனது உழைப் பிற்குக் கொடுக்கும் மரியாதை. அந்தப் பணிவுக்கு நானே ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்
மல்லிகை பெப்ரவரி 2008 & 60

தேன். அதற்குப் பெயர் 'ஜீவ எளிமை" எனது பணிவையும், எளிமையையும் பார்த்து விட்டு, என்னை மதிப்பிட்டு விடக் கூடாது.
பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் என் முகத்தை அல்லது சொற்பொழிவைப் பார்த்து விட்டு, என்னை அடையாளம் கண்டு கொண்டதற்கடையாளமாக வழி தெருக்களில் நிற்க வைத்து, அல்லது கைதட்டி நிறுத்தி வைத்து என்னைப் பாராட்டுவது என்பது எத்தனை பேதைமை
எனக்கொரு முகவரி உண்டு. எனக் கென்றொரு தொலைபேசி எண் உண்டு. மல்லிகை என்றொரு சிற்றிதழைப் பலகால மாக வெளியிட்டு வருகின்றேன். மல்லிகைப் பந்தல் என்றொரு புத்தக வெளியீட்டு நிறு வனம் பல நூல்களை வெளியிட்டும் வருகின் றது. இத்தனை முகவரி கொண்டவன், நான்
இத்தனைக்கும் மத்தியில் என்னைச் சந்தித்துத் தொடர்பு கொள்வது ரொம்ப ரொம்பச் சுலபம். அதே சமயம் எனது எளிமையயை மலினமாகப் புரிந்து கொள்ப வர்களுக்கு ரொம்ப ரொம்பக் கஷ்டம்
இந்த ஊடகப் பிரபலத்தினால் இன் னொரு புதிய சங்கடமும் எனக்கு ஏற்பட்டுள் ளது. முன் கூட்டியே என் அனுமதி பெறாமல் விளம்பரங்களில் எனது பெயரைப் பொறித்து விடுகின்றனர். பின்னர் அதைக் கூட நேரில் என்னிடம் சேர்ப்பதில்லை. என்னைத் தெரிந்தவர்களிடம் என்னிடம் கொடுக்கும் படி கொடுத்துவிடுவார்கள். அது பிந்தித்தான் கைவசம் கிடைக்கும். இவர்க ளினது இந்தப் பொறுப்பற்ற செயலால் என்னுடைய பெயர்தான் கெடும்.
அடுத்ததுதான் மிகப் பெரிய சங்கடம்.
இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பார் கள். நான் படைப்பாளி மாத்திரமல்ல,
சபையறிந்து, மனசைத் தொட்டுப் பேச்க் கூடிய சொற்பொழிவாளன் வேறு. கூட்டம் வெள்ளவத்தையில் நடைபெறும். காத்து நின்று பஸ்பிடித்து, கூட்டத்திற்குப் போய் சேர்ந்தால், அறிவிக்கப் பட்ட நேரங்களில் நிகழ்ச்சி தொடங்காது.
நேரம்பிந்தித்தான்கூட்டமே ஆரம்பிக்கும்.
கூட்டம் முடிந்து நடந்து வந்தால் 155 மட்டக்குளி பஸ் கிடைக்காது. நானிருப்பது மோதரையில், அந்தப்பஸ் புறப்பட்டால் கொழு ம்பு மாநகரையே சுற்றிக் காட்டும். இடை யில் ஆமர் வீதியில் நிறுத்தப்படும். நேரம் போய்க் கொண்டே இருக்கும். பஸ் நகராது. ஒட்டுநர் சிறு தூக்கமடிப்பார். அதிலும் மழை பெய் தால் பிரயாணம் நரக வேதனை தான். இலக் கியத்திற்காக இத்தனையையும் சகித்தக் கொண்டு, வாரா வாரம் இயங்கி வரவேண் டிய இலக்கியத் தேவை எனக்கிருந்தது.
இப்படியே ஒடிக் கொண்டிருக்க இனி மேலும் முடியாது.
எனது 18வது வயதிலிருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு உழைத்து வருபவன் 62 ஆண்டுகளாக கதிர்காம கூேடித்திரத்தைத் தவிர, நாடு பூராகவும் சென்று மேடையேறியி ருக்கின்றேன். தேசம் பூராகவும் சுழன்று சுழன்று இலக்கியம் பேசி இருக்கின்றேன்.
இனிமேலும் தொடர்ந்து இலக்கிய சேவை செய்துவர உடல் இடங் கொடுக்காது.
எனவே, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்.
தகுந்த கவனிப்பும் கண்ணியமான அழைப்பும் கிடைக்கப் பெறும் நிகழ்ச்சி களில்தான் இனிமேல் கலந்து கொள்ள உத்தேசித்துள்ளேன்.
- நான் உங்களை விட்டுத் தூரம் போய் விட மாட்டேன். த்யவு செய்து சிரமம் தராதீர்கள்.
மல்லிகை பெப்ரவரி 2008 & 6

Page 33
இந்த மகத்தான ஒவியனை நான் இரண்டு தடவைகள் சென்னையில் நேரில் சந்தித்து அளவளாவியுள்ளேன். ஒவியர் மருது அறிமுகப்படுத்தி வைத்தார். நெஞ்செல்லாம் நிறைந்த திருப்தி எனக்கு என் உருவத்தைக் கோட்டோவிய மாகவும் வரைந்து தந்தார். கோட்டோவியர் ஆதிமூலத்தின் ஞாபகார்த்தமாக இந்தக் கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- டொமினிக் ஜீவா
ஆதிமூலம் நினைவுக் கோருகள்
தொகுப்பு: மேமன்கவி
தமிழின் நவீன ஓவியர் ஆதிமூலம் அவர்களின் மறவை யொட்டி, புதுவை கோ. சுகுமாரன் தனது வலைப்பதிவில் இட்ட பதிவு இது.
- கோ. சுகுமாரன் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் கே.எம்.ஆதிமூலம் (வயது70), 1501-2008 செவ்வாய் இரவு 700 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு மனைவி. இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு 16-01-2008 அன்று மாலை 4.00 மணியளவில் பெசண்ட் நகர் சுடுகாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1938-ஆம் ஆண்டு திருச்சி துறையூர் அருகேயுள்ள கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் பருவம் முதற் கொண்டே ஒவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இவர் பாடத்தை விட படத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்.
1959-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த உடினேயே சிற்பி தனபால் தொடர்பு ஏற்பட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் சேர்ந்தார். 1961-66 வரை அக்கல்லூரியில் பயின்று டிப்ளோமா பெற்றார்.
சென்னையில் இருந்த காலகட்டத்தில் தான் ஒவியர் ஆதிமூலத்திற்கு தமிழின் நவீன இலக்கியவாதிகள் பலரோடு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுபத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள், கதைகள். கட்டுரைகள் ஆகியவற்றில் அவரது ஓவியங்கள் இடம்பெற்றன.
மல்லிகை பெப்ரவரி 2008 & 62
 

1966-இல் காந்தியாரின் நுாற் றாணி டு விழா வையொட்டி காந்தி }{ భ யாரின் பல்வேறு பரிமா
că ணங்களைக் வெளிப்
భ? படுத்தும் வகையில் 100 ஒவியங்களை வரைந்தார். அவர் அன்றைக்கு வரைந்த காந்தியாரின் ஒவியங்கள் இன்றைக்கும் பேசப்படு கின்றன. அதன்பின்னர், தமிழ்ச் சூழலில் ஒவியர் ஆதிமூலம் வரைந்த ஒவியங்கள் வலம் வந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
லலித் கலா அகடாமியின் தேசிய விருது, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய மாநிலங்களின் ஓவிய சங்கங்களின் உயர் விருதுகள் உள்ளிட்டு ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஒவியத்துறை சார்ந்த பல்வேறு பதவிகள் வகித்தவர்.
نفر از
இவரது ஓவியங்கள் பல உலகப் புகழ் பெற்றவை. இவர் துருக்கி, சிங்கப்பூர், இங்கிலாந்து. பிரான்சு உள்ளிட்ட நாடுக ளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஓவியக் கலையைப் பரப்பியவர்.
இவரது ஓவியங்கள் தேசிய ஓவியக் கூடம் சென்னை அருங்காட்சியம உட்பட பல இடங்களில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. இவர் ஏராளமான ஒவிய முகாம்கள், பட்டறைகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு தன் ஆற்றலை வெளி உலகிற்குக் காட்டியுள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் வெகுமக்கள் இதழ்களான 'ஜீனியர் விகடன்' 'ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும் இவரது ஓவியங்கள்
இடம்பெற்றுள்ளன. இது போன்ற இதழ் களில் இவரது ஓவியங்கள் வெளிவந்தது இவரை மேலும் பிரபலப்படுத்தியது.
வண்ண ஒவியங்களிலும், ബബ]$ബ്ബ யிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஒவியர் ஆதிமூலம். நான் துரத்தும் நிலம என்ற தலைப்பில் வெளிவந்த அவரது தைல வண்ண ஒவியங்கள் வண்ணத்திற்கு வண்ணம் தீட்டியவை. அவரது கோட்டு ஒவியங்கள் மிகப் பிரபலமானவை.
நான் நேரிடையான எனது படைப் புச் சக்தியை மட்டுமே சார்ந்திருக்கிறேன். இந்த அழகின் காட்சிப்படுத்துதலை அடிப் படையாக வைத்துதான் நான் பிறரது படைப் புகளைப் புரிந்துக் கொள்ளவும். எனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று அவர் படைப் பாக்கம் பற்றி கூறியது அவரது அறிவடக் கத்தைக் காட்டுகிறது. .
புள்ளிகளில் தொடங்கி கோடுகளில் உருவம் பெற்ற ஒவியர் ஆதிமூலத்தின் படைப்புலகம் கவனம் பெற்றவை. அவரின் கோட்டோவியங்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாதது.
இதுபற்றி, அந்திமழை இணைய இதழில் வெளிவந்த அவரது நேர்காண SSs), "A Line immediately breaks the Space" ஒரு வெள்ளைப் பேப்பர்ல ஒரு dot வைச்சா அது
A planet in the སྐུ་ཚེ་ Space'ன்ற மாதிரியாயிடு , துல்ல. அந்தக கோட்டை ' Horizontal M left to ?, e.
right நீட்டினா தானா
மல்லிகை பெப்ரவரி 2008 & 63

Page 34
கவே மேலேயிருக்கிறது *Space fĜypusî (bjf றது "landனு ஆயிடுது. ஒரு பேப்பர்ல புள்ளி வைச் சவுடனேயே அதோட flat Surface (SuTuscg. ஆதி மனிதன் அவனை கோடுகளில்தான்
வெளிப்படுத்தினான். குகை ஓவியங்கள்.
அவன் வரைந்த விலங்குகள் வேட்டைக் கருவிகள் எல்லாமே கோடுகள்தான். கோடு, கோடுகளுக்கப்புறம்தான் எழுத்து, மொழி, இலக்கியம் எல்லாம். ஒவிய வெளிப்பாடுதான் மனித நாகரிகத்தின முதல் படி, எறும்புகள் எப்படி வரிசையா போகுதோ அது மாதிரிதான் புள்ளிகளெல்லாம ஒன்றாகி 54571–ISS). L16v 6IC56) slå 6III Commu nicate பண்ணுது என்று கூறியுள்ளார். புள்ளியும், கோடும் அவரை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஒவியர் ஆதிமூலம் அவர்களின இழப்பு என்பது ஒவிய சமூகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் வெகுமக்களுக்கும் தான்.
திண்ணை இணையத்தளச் சஞ்சிகை யில் மலர்மன்னன் எழுதிய ஆதிமூலம் பற்றிய கட்டுரையில் சில பகுதிகள். ஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வழுத்தவர்
- மலர்மன்னன்
நண்பர் கே. எம். ஆதிமூலம் இனி நேரில் சந்திக்கப்பட முடியாதவராகி விட்
டர் என்ற தகவல் ஜனவரி 15 அன்று குறுஞ் செய்தியாக எனக்கு வந்தபோது தமிழ நாட்டி ற்கு வெளியே இருந்தேன். தனக்கு உடல் நிலை சரியாக இல்லை என்பதைக் கூட அவர் பிறருக்குத் தெரிவிக்காமலேயே இருந்து விட்டார் எனவும் கேள்வியுற்றேன். பிறரைச் சந்திப்பதையும் அவர் தவிர்த்து வந்திருக் கிறார்.
எனது கவனங்களும் பணிகளும திசை மாறிப் போனதால் அவரைச் சந்திப்பதே மிக வும் அரிதாகி அவருடனான தொடர்பு விட்டுப் போய் பல ஆண்டுகளாகிவிட்டி ருந்தன. 1995ல் என் மகள் தனது வீட்டின் வரவேற்பறையில் வைப்பதற்கு ஆதிமூலம் தீட்டிய ஒவியம் ஒன்றை வாங்க வேண் டும் என்று ஆசைப்பட்டதால் அவளை யும் அழைத்துக் கொண்டு சோழமண்ட லத்திற்கு அருகாமையிலுள்ள அவர வீட்டிற் குச் சென்றதுதான் அவரைக் கடைசி யாகச் சந்தித்தது. அதன் பிறகு நான் தமிழ் நாட்டிற்கு வெளியே சென்று விட்டதோடு சில ஆண்டுகள் வரை திரும்பியும் வராததால் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமற் போயிற்று.
சென்னையில் உள்ள அரசினர் கவின் கலைக் கல்லூரி ஆசிரியர்கள். மாணவர் களுடனான எனது பழக்கம் நாற்பது ஆண்டுகளுக்கும் முற்பட்டது. அங்கு பயின்ற பல மாணவர்களே பிறகு அங்கே ஆசிரியர்களாகப் பொறுப்பேற்ற பிறகும் அவர் களு ட னா ன தொடர்பு தொடர்ந்தது.
ஆதிமூலமும் அங் கேயே ஆசிரியராக இருந்து அவரது தாக்கத்தை நேரடியாகப் பல மாணவர்
மல்லிகை பெப்ரவரி 2008奉 64
 
 

களுகு ஏற்படுத்த வேண் டும் எனக் கல்லுTரி முதலவராகப் பொறுப் பேற்ற தனபால் உள்ளிட்ட பலரும் விரும்பியதுண்டு.
ஏனெனில் அவரிடம் சரக்கு நிரம்ப இருந்தது. அவரது மாணவப் பருவத்திலேயே வெளிப்படத் தொடங்கி விட்டிருந்தது. ஆனால், ஆதிமூலம் சென் னையிலேயே மத்திய அரசின் நெசவுததுறை யைச சேர்ந்த நெசவாளர் மையத்தில் ஒரு வடிவமைப்பாளராகச் சேர்ந்துவிட்டார். அங்கு அவர் நெசவாளர்கள் திரைச் சீலை கள், போாவைகள் முதலனாவற்றை நெய்வ தற்கான பல வரிவடிவங்களை உரு வாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் நுண் கலைகளில் ஈடுபட்டுள்ளவர்களிடையே நெருக்கமான புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சிலர் முனைப்பாக இயங்கலானோம். ந. முத்து சாமி சா. கந்தசாமி, பிற்பாடு க்ரியா என்கிற பதிப்பகத்தைத் தொடங்கிய எஸ். ராம கிருஷ்ணன் ஆகியோருடன் நானும் ஒரு முதல் கட்டமாக இலக்கியப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சித்திரம். ஒவியம், சுடுமண் சிற்பம், செராமிக் எனப்படும் பீங்கான் மண் கலை வடிவம் ஆகிய துறைகளில் இருப்பவர்க ளுக்கும் இடையே நெருக்கமான பிணைப்பு ஏற்படச் செய்வதில் தீவிரம் காட்டலானோம். இவ்வாறான முயற்சிகளின் பயனாக எங்களுடன் அதிக அளவில நெருக் கமாகப் பழகத் தொடங்கியவர். ஆதிமூலம். எங்கள் மூலமாகத் தற்காலத் தமிழ் இலக் கிய முயற்சிகளைப் பரிச்சயம் செய்து கொள்ளத் தொடங்கி காலப் போக்கில படைப்
பிலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொள்ள லானார்.
ஆதிமூலத்தின் அழுத்தமான வரை கோடு களில் எடுத்த எடுப்பிலேயே நாங்கள மனதைப் பறிகொடுத்தோம். எங்களை மேலும் மயக் கத் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்குச் சித்திரத் தோற்றம் அளித்து உயிர் கொடுக் கலானர் ஆதிமூலம் மிகவும் அனாயாசமாக அவர் அதைச் செய்தர் அதனாலேயே அவை அழகு மிகுந்தன. தமிழ் எழுத்துகளுக்குக கலை வடிவங்களாகத் தோற்றம் கொள்ள இப்படியும் ஒரு சாத்தியக் கூறு உள்ளது என எங்களுக்குப் புரியவைத்தர் ஆதிமூலம்.
பொதுவாக அரபி பாரசீக எழுத்து களைக் கலாபூர்வமாக வரைவதறகென்றே தேர்ச்சிபெற்ற கலைஞர்கள் உண்டு உருவங் களை வடிக்கலாகாது என்கிற சமயக கட்டுப் பாட்டின் காரணமாகத் தங்களுடைய படைப் பாற்றலுக்கும் தூண்டுதலுக்கும் வடி காலாக எழுத்துகளைக் கலை வடிவங் களாய் அவர்கள் உருவாக்கத் தொடங்கிய தாலேயே எழுத்துகளை வடிப்பது ஒரு தனிக் கலையாக அந்த கலாசாரங்களில வளர்ச்சி பெற்றது. அரபி, பாரசீக எழுத்துகளும இயல் பாகவே சித்திர வடிவம் பெற்றிருந்ததால் அவை கலை வடிவங்களாக மிளிர்வது வெகு இயல்பாக அமைந்தது.
தமிழில் இதற்கான வாய்போ அவசியமோ, தூண்டுதலோ இல்லை. எனவே அன்றைய சித்திரக்கார்கள் எவரும் வழகி கதி தரிலுள் ள எழுத்துக் களுக்குக் கலை வடிவம தர வேண்டும் என்கிற எண் ணம் ஏதுமின்ற அவ ற்றை அவற்றின்
மல்லிகை பெப்ரவரி 2008 & 65

Page 35
வடிவம் உள்ளவாறே தான வரைந்து வந்தனர்.
இதற்கு மாறாக ஆதி மூலம் தமிழ எழுத்து வரி வடிவங்களின் அமைப்பு குறித்து மானசீகமாக ஒர் ஆய்வையே மேற கொண்டிருந்தார். ஒவ்வொரு எழுத்தின் வடிவும் எந்த வளைவில் அல்லது கோட்டில் பிற எழுத்துகளிலிருந்து மாறுபட்டுத் தனது தனித்தன்மையை நிறுவிக் கொள்கிறது என்கிற நுட்பத்தை அடையாளம் கண்டு கொண்டார். அந்த உள்ளிருப்பை அப்படியே வைத்துக் கொண்டு அதற்குக் கலைவடிவம் தரலானார். அவர் படைப்பில் தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் ஒரு புறம் தனது உள்ளார்ந்த அடையாளததைத் தக்க வைத்துக்கொண்டு, இன்னொரு பார் வையில் அதுவரை கண்டுகொள்ளப் படாத புதிய வடிவத்துடன் உயிர்த் துடிப்போடு காட்சியளித்தது.
ஆதிமூலம் தமிழ் எழுத்து வரிவடி வங்களுக்குப் புதிய தோற்றத்தை அளிக் கும் பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்துவருவதைக் கண்டு உத்வேகம பெற்ற பலர் தாமும் அவ்வாறே எழுத்துகளைப் புதிய தோற்றத்தில் வரைய முற்பட்டனர். ஆனால் அவர்களால் படைக்கப்பட்ட எழுத்துகள் அவற்றுக்குள்ள இயல்பான வடிவங்களின் சிதைப்பாகவே அமைந்தன. ஏனென்றால் அவர்களுக்கும் ஆதிமூலத் திற்கும் பார்க்கிற நோக்கில், உள்வாங்கிக் கொள்கிற சிரத்தையில் வித்தியா மிருந்தது.
ஒவ்வொரு எழுத்தின் ஜீவாதாரப் புள்ளி எது என்பதைக் கண்டறிந்து அதை அப் படியே வைத்துக்கொண்டு அதன் வெளிக் கட்டமைப்பில் மாத்திரம் சில மாற் றங்களைச் செய்து வரைவதில் ஆதி மூலம் கவனமாக இருந்தார். மற்றவர் களுக்கு அது ஒரு முக்கியமான அம்ச மாகத் தோன்றவில்லை. ஆகவே அவர்கள் ஒரு தமிழ் எழுத்தைப் புதிய வடிவில் வரைந்தபோது அதில ஜீவன் காணாமற் போனது.
ஆதிமூலம் ஒவ்வொரு எழுத்தின அகத் தையும் அறிந்து, அதை அதன் புறத தோற் றத்தில் வெளிப்படுத்தினார். ஏனென்றால் அகத்தின் அழகை முகத்தில் வடிக்கத தெரிந் தவர் ஆதிமூலம்.
ஆதிமூலத்தின் மனித வடிவங்களும் இதனால்தான் இனம் புரியாத தத்ரூபத் தோற்றங் கொள்கின்றன. 1969ல் காந்தி நுாற்றாண்டையொட்டிப் பல்வேறு கோணங்களில் அவர் வரைந்த காந்தி சித்திரங்கள் அவரை மிகவும் பிரபலப் படுத்தின. அந்தச சித்திரங்கள் ஒவ்வொன்றும் காந்தியின பாவங்களை மட்டுமின்றி அவரது குணாம்சத்தையும் வெளிப் படுத்துவதால்தான் நம்மை அதில் லயிக்கச செய்து முக்கியத்துவம் பெறுகின்றன.
புகைப்படங்கள் காட்சியைப் பிரதி யெடுத்துக் காட்டுவதோடு தமது எல்லை யைக் குறுக்கிக் கொள் : శ్లో பவை. அதனால்தான கலை * జ్య స్థ ஞன் வரையும் சித்திரமோ தீட்டும் ஒவியமோ வெறு மனே பிரதியெடுப்பவை R யாக இல்லாமல் உள்ளு றையும் கட்டமைப்பை
மல்லிகை பெப்ரவரி 2008 & 66
 
 

வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கி றோம். அந்த உள் கட்டமைப்பானது சித்திரம் அல்லது ஒவியம் செய்தவனின் உ ள ஞ  ைற யு ம உறக்க நிலையை எழுப்பிவிட்டு இரண்டின் சங்கமமாகப் படைப்பு வெளிப்படுகிறபோது அது சிறப்பாக அமைந்து பார்வையாளனை ஈர்த்துக் கொள்கிறது. ஒவியமோ சித்திரமோ அழகாக இருப்பது மட்டும் தெரிகிறது. எதனால் எப்படி அழகாக இருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாறு அமை வதால்தான் அது நமது கவனத்தைக் கவர்ந்துகொள்கிறது.
ஒரு தடவை ஆதிமூலத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கையில அவர் வரைந்து தள்ளிய காந்தி சித்திரங் களைப் பற்றிப் பேச்சு வந்தது. காந்திஜி யின் சித்திரங்களை வரைவதற்கு எப்படி யும் அவர் புகைப்படங்களைத்தான சார்ந்தி ருக்க முடியும். அப்படியிருக்க அவரால் எப்படி காந்திஜியின் முகபாவம், உடல் மொழியின் தோரணை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் கொண்டு வர முடிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
காந்தியின் சத்திய சோதனை. அவர் தொடர்பான செய்திகள் ஆகியவற்றைப்
படித்தும், பழைய செய்தி ஆவணப் படங்
களைப் பார்த்தும் காந்தியை உள்வாங்கிக் கொண்ட பிறகுதான் காந்தியைப் பல கோணங்களில் வரையத் தொடங்கியதாகச்
சொன்னார். சில படங்களை எவ்வித வெளி ஆதாரங்களும் இன்றி மனதில் பதிந்த வடிவத்தின் ஆதாரத்திலேயே வரைந்த தாகவும் தெரிவித்தார்.
கால் என்கிற பெயரில் ஒரு காலாண்டு இதழைத் தொடங்க முடிவு செய்தபோது மாஸ்ட் செஷட் என்று ஆங்கிலத்தில் சொல் வர்களே அந்தப் பெயர்த் தலைப்பை ஆதி மூலம்தான் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும் என்று எவ்வித யோசனைக்கும் இடமின்றித் தீர்மானித்தேன். எனது விருப்பத்தைத் தெரிவித்ததும் 1.4 என்கிற எண்ணுருவைப் பல கோணங்க வில் வரைந்து கொடுத்தார். எல்லாமே மிகச் சிறப்பாக இருந்த போதிலும் ஏதாவது ஒன்றைத்தானே பயன்படுத்திக் கொள்ள முடியும் இருப்பவற்றுள் மிகவும் அழ காகத் தோன்றியதைப் பயன்படுத்திக கொண டேன். கால் முதல் இதழின் அட்டையில் போடுவதற்கும் தமிழ் நாட்டின் கிராமியக் கலைகளுள் ஒன்றான நாட்டியக் குதிரை ஆட்டத்தை அவரே வரைந்து தந்தார். மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை தமிழில் வெளியிட்டு வந்த திட்டம் என்கிற மாத இதழுக்கு நண்பர் சொக்கு கப்பிரமணியம் ஆசிரியராக நியமனம் பெற்றதும் அவர் செய்த முதல் நல்ல காரியம். ஒவ்வொரு மாதமும் இதழின் அட்டைப் படம் ஆதிமூலம் வரைந்த தாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்ததுதான். ஆதிமூலம் என்ன வரைந்திருக்கிறார் என்று பார்த்து
மகிழ்வதற்காகவே இதழ் தயாராகும்
நாட்களில் திட்டம் அலுவலகத்திற்குச் செல்வதை அப்போதெல்லாம் வழக்கமாகக் கொண்டுவிட்டிருந்தேன்.
மல்லிகை பெப்ரவரி 2008 等 67

Page 36
சொக்கு சுப்பிரமணியமும் ஆதி மூலமும் அந்தக் கால கட்டத்தில சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு பொதுப் பணித் துறை அரசு அலுவலர் குடியி ருப்பில் வசித்து வந்தனர். அதனால் திட் டம் இதழுக்கு ஆதிமூலத்திடமிருந்து தவறாமல் சித்திரம் வரைந்து வாங்குவது சொக்குவுக்கு எளிதாக இருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஆன்மிகத்தில் ஈடுபட்டுப் பலரைச்
சீடர்களாகப் பெற்றிருந்த ஒருவரின் படத்தை வரைந்து தருமாறு ஆதி மூலத்தைக் கேட்டிருந்தேன். அவரும் வரைந்து கொடுத்தர். ஆனால் அந்த அரு மையான சித்திரம் தனக்கு வேண்டாம் என்று அந்த ஆன்மிகவாதி கூறிவிட்டார். காரணம் நான் முன்னரே குறிப்பட்ட மாதிரி ஆதிமூலம் அகத்தின் அழகு முகத்தில் வெளிப்படுமாறு சித்திரத்தை
வரைந்துவிட்டிருந்ததுதான். ஆதிமூலம் அவர்களின் கோட்டோவியம் பெற உதவிய புதுவை. கோ. சுகுமாரன், திண்ணை மற்றும் That's Tamil இணையத்தளங்களுக்கு நன்றி.
That's Tamil இணையத்தளத்திற்கு ஆதிமூலம் வழங்கிய நேர்காணலின் பொழுது.
மாடர்ன் ஆர்ட் - பலருக்கு இது ஒரு புதிராகவே இருக்கிறது. ஒரே படத்தைப் பலர் பார்க்க பலவிதமான தோற்றத்தை காட்சியைப் பார்ப்பவர்களாகவே யூ கித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மாடர்ன் ஆர்ட்டும் தீட்டப்படுவதற்கு முன்பு, ஒவியர் இந்த படம் தான் வரையப் போகிறோம். இதுதான் மக்களுக்குத் தெரிய வேண்டும்- என்கிற முடிவில்தான் வரையப்படுகிறதா?
மாடர்ன் ஆர்ட் என்பதனை நவீன ஒவியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படம் வரையப் போகிறோம் இந்தக் கோடு மலை, ஆறு, பூ - இப்படித்தான் வரையப்பட வேண்டும் என்கிற வரைமுறை ஏதும் தேவையே இல்லை. இந்த நிலை மாற்றம்தான் மாடர்ன் ஆர்ட் என்பது புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ரிலாக்ஸ்டாக ஒவியனுக்கென்று கட்டுப்பாடு இல்லாமல் அதே நேரத்தில் ஒரு குறிக்கோளோடு வரைவது. அப்படி வரையும் போது ஒவியனுக்கே புதிது புதிதாக ஏதாவது தோன்றும். அதை அப்படியே வைத்து மேலும் மேலும் வரைவது. முழுப்படமும் வரைந்து போதும் என்று துரிகையை கீழே வைத்து படத்தைப் பார்த்தால், அந்த ஒவியனே வியக்கும் அளவிற்கு அதில் புதிதாக ஒரு காட்சி இருக்கலாம். மாடர்ன் ஆர்ட் ஆரோக்கியமான விஷயம்தான்.
மல்லிகை பெப்ரவரி 2008 事 68
 

- டொமினிக் ஜீவா
யாழ்ப்பான மண்ணில் இருந்துதர்ன் மல்லிகைச் செடி படர்ந்து வளர்ந்தது' எனப் பெருமை“ مجھے
பேசி வந்த நீங்கள், கடந்த பல காலமாக எங்களது மண்னை மறந்து விட்டீர்களே, என்ன
BITIOTរិ?
கொக்குவில். ஆர். கங்காதரன்.
மல்லிகையை விடுங்கள். என்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியதே. அந்த ރަހި se ഖ്യഖരാണ് திட்டமிடுவேன் சூழ்நிலைஒத்துவராது வந்தால்விமானத் தான் வரவேண்டும். மல்லிகைப் பொருளாதாரம் அதைத் தாங்கிக் கொள்ளது. TT CM T TTTTLLLLLLL LLLLTMMLMLe TL TLTT TGGT TT LLL LLTTL LYz
பரிசளிப்புவிழாவுக்குப்பூரண ஒத்துழைப்புக் கொடுத்து, அதை வெற்றிகரமாக நடத் டிக்க ஆவன செய்தேன். எந்த மண்ணில் வாழ்ந்தால் என்ன? காலை 8 மணியிலி
ாலும் அது நான் பிறந்த மண்ணுக்குத் தானே.கடைசியில் சுவறும். இந்த மனஓர்மம் தான் மல்லிகையின் பலம் என்பதைப் புரிந்து கொண்டால், அதுவே போதும்
நான் எழுக்காளனாக விரும்புகின்றேன். இது நீண்ட நாள் ஆசை. நான் அப்படி ஒரு کبھی எழுத்தாளனாக வருவதற்கு என்ன, என்ன செய்யலாம்?
வவுனியா. எஸ். தனேந்திரன்.
Ø Se ognos-s মািন C { E. 99 நெஞ்சில் இது வளர உதித்த கனவுகளை, அடி ஆழமான பிம்பங்களை எந்த விதமான விமரிசனங்களுமின்றி எழுத்தில் பதிவுசெய்து விடுங்கள். பின்னர் அதை ஒரு பக்கம்
மல்லிகை பெப்ரவரி 2008 & 69

Page 37
பத்திரமாக வைத்து விடுங்கள். அதைப் றியேசிறிதுகாலத்திற்கு எந்தவிதமான கரிசனையும் எடுத்துக்கொள்ளாதீர்கள் னர் சாவகாசமாகஒருநாள் அந்த எழுத் துப்பிரதியை எடுத்து ஆற அமரவாசித் துப்பாருங்கள் உங்களை அறியாமலேயே அங்கேஓர் எழுத்தாளன்ஒளிந்துகொண்டி பதை முடிவில் கண்டவீைர்கள்
உங்களது டிசம்பர் மாத மல்லிகை ஆசிரியர் தலையங்கத்தைப் படித்தபோது, என்னையறியாமலே என் நெஞ்சுநிமிர்ந்தது! ‘வெட்ட வெட்டத் தளைக்கும் ராவணன் தலையடா, நாங்கள்!” என நீங்கள் எழுதியுள் ளதைப் படித்தபோது, என் நெஞ்சு ஒரு கணம் விம்மித்தணிந்தது. யாராவது அத்தலையங் கத்தைப் படித்துப் பார்த்தவர்கள், கருத்தே தும் தெரிவித்தார்களா?
&96ör 6oTTa6 Lb.
Liewï Ceir con av GuRussi அதைப் ޗަރި ற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்
வனின் பெயரை அத்தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என ஆலோ சனை சொன்னார்கள். அதுசரி, என்றே என் மனதுக்குப்பட்டது. அது ஒரு பிற்கால ஆவணமாகப் பேசப்படும் எனவும் சொன்
cosans הפתיע25תפמן התתן
திருப்பெயர்: திருமாறன். ஈழமாறன்"
எம். இரத்தினதாசன்.
4. நீங்கள் உட்பட முற்போக்கு எழுத்தா ளர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய முட்டை படித் திருவிழா எந்த ஆண்டு, எந்தத் திகதி யில் அரங்கேறியது?
அராலி. அ. சர்வேஸ்வரன்.
தேரின் ളഞ്ഞുഥി சிங்களக் கிரா ம்கொரஸவில் நடந்த Kalib, போன்ற
ற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றி அவதூறு சொல்பவர்களுக்கே ஞாபகம் പ്രഖട്ടിര அந்த урс боLuл0ё வம் தானே ஞாபகம் வருகின்றது. 5. io. 1963- இல் தான் அந்த முட்டையடித் திருவிழா நடந்தேறியது போதுமா?
சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றில் گھب புதுமை ஒன்றைக் கவனித்தேன்.இந்த ஆண்டு மல்லிகைக் கலண்டர் கொழும்பில் சில இடங் களில் தொங்குவதைக் கண்டு அதிசயித் தேன். இந்த யோசனை உங்களுக்கு எப்படி உதித்தது?
கொட்டாஞ்சேனை. கா. செல்வநாதன்.
களுக்கு விநியோகித்ததுண்டு. இந்த
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 70
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விளங்கும் என்பதும் கண்மை
2 சமீபத்தில் உங்களது கவனத்தைத் தொட்ட, அல்லது வியந்த நிகழ்ச்சி ஒன்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
கல்முனை. ஆர். நவநீதன்.
2எனது நெஞ்சைத்தொட்டு
மனஇலக்கியச் சாதனை இதுவேயாகும்
گھبرا
மல்லிகை என்ற இலக்கிய மாத இதழை 666sfö 6libra III வேண்டுமென்ற எண்னம் ஓ ங்களுக்கு ஆரம்பத்தில் எப்படித் தோன்றி Juĝiĝi?
வவுனியா, க. வரதராஜன்.
T உங்களது செயற்பாடுகளை ஆதரித்து
எழுதினால் தான் மல்லிகையில் வெளியிரு விகளா? அதற்கு மாறாகக் கருத்துக்களை முன் வைத்தால் அவைகளையும் மல்லிகை பிரசுரிக்குமா?
கோப்பாய். எம். தவயோகம்.
a sease கருத்துக்களின் பரிமாற் றத் தளமே தவிர, என்னைப் பிரபலப்படுத் துவதோ எனது கருத்துக்களைப் பி சரம்செய்வதோஎனதுநோக்கமல்லநா எந்தக் கட்டத்திலும் எனது ஆசிரிய ஆகு மையை மல்லிகையில் வெளிவரும் எந்தக் கட்டுரைகளிலுமே திணிச்சது மில்லை. இருட்டடிப்புச் செய்ததுமில்லை. எனவே ஆரோக்கியமான கருத்துக்கை யாருமே எழுதலாம்; விவாதிக்கலாம்.
தீ உங்களது மனத்திரையில் இன்று
வரை மறக்கப்பட முடியாமல், நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கும் மகத்தான கலை ஞன், யார்?
வத்தளை. எஸ். சாரங்கன்.
மல்லிகை பெப்ரவரி 2008 હિંદુ 7.1

Page 38
மல்லிகை பெப்ரவரி 2008 ஜ் 72
றுச் சம்பவங்களில் இதுவுமொன்று.
புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புதிய بی ஆண்டில் என்ன திட்டம் உங்களுடையது? இந்தப் புதிய ஆண்டில் என்ன் செய்ய உத்தே சித்துள்ளிகள்?
(35 stoods). எஸ். தவேந்திரன்.
தினம் தினம் எனக்குப் புத்தாண்டு ރަހި ESTIGT ESITGANGANGG 666 soos srásum லயத்திற்கு வருவதிலிருந்துமாலை வீடு
ஆண்டு முடிந்தால் என்ன? இலக்கிய வரலாற்றில் இந்த நாட்டு எழுத்தாளர்கள்
எனது அடிப்படையான அபிலாஷைகள்
எழுத்தாளர் லா. ச. ரா அவர்களைப் نسب பற்றி அஞ்சலிக் குறிப்பு எழுதிய போது *பத்தாம் பசளித்தனமான பார்ப்பானப் பின்னணியைக் கொண்டு அந்தக் காலத்தில்
சிறுகதை படைத்தவர் என நீங்கள் குறிப்பிட் டது பற்றி ஒரு சர்ச்சை நிலவுகின்றதே, இதைப் பற்றி என்ன சொல்லுகின்றீர்கள்?
வெள்ளவத்தை. எம். சரவணன்.
2.இது ClCOo sese கணிப்பு.
அவரது எழுத்தின் உள்ளடக்கம் பற்றி எனது மதிப்பீடு. புதுமைப்பித்தன் சாதா ரணமக்களைப்பற்றிபஇலக்கியம்படை
தேவை. பின்னர் அவரது படைப்புக்கள் மங்கிப் போனதற்கும் இந்த் எழுத்துப் போக்குத்தான் காரணமாக அமைந்தது. சமீபத்தில் புதுமைப்பித்தனின் நூற்றா ண்டு விழாவை மலையக இலக்கியக் கழகம் கொழும்பில் பெருவிழாவாகக் கொண்டாடியதையும் நாம் விமரிசனக் கோணத்தில் நோக்க வேண்டும். இதில் sтguti umirosu (also6060. четвртео புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் எனப் புலம்பித் திரிகிறீர்கள்? மெளனியையும் சேர்த்துச் சொல்லுங்கோவன்? எனக் s. Era tras casterés CSILL கொண்டதையும் நாங்கள் அறியாதவர்
201/4, சூரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு,
w
103 இலக்கத்திலுள்ள {k, அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்ெலிகையின் 42வது ஆண்டுலெர் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது, இம் மலர்.
உயர் கல்வி மாணவர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும், நாடு பூராகவும் பரந்துள்ள கல்லூரி, மற்றும் நூலகங்களுக்கும் தேவைப்படும் இலக்கிய மலர்த் திரட்டு.
விலை : 200/-
தேவையானோர் தொடர்பு கொள்ளவும்.
Dominic Jeeva “Maikai? 201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te l : 2320721