கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.03

Page 1
I Malikai March 2008
=
Salmaan Tírading
'Santhosh Plaza Complex' 프 1st Floor,
W. 229-1114, Main Street, A. Y. Colombo - 11.
Te: O11 2394512 Hot Line : O77 6661336
 
 
 

Torrief aroos criandou - 3o/=

Page 2

43-வது ஆண்டு மலர் flöUč51975.
கணிசமான ஆண்டு மலர்களைச் சந்தாதாரர்களுக்குத் தபாலில் சேர்த்து விட்டோம்.
இந்தத் தடவை மலர்களைச் சம்பந்தப் பட்டவர்களுக்குச் சேர்ப்பதில் நாம் சற்றுச் சிரமப்பட்டு விட்டோம். உங்களுக்குத் தான் தெரியுமே, மல்லிகையின் பொருளாதாரப் பின்புலம். பல நல்ல இதயங்களின் தளராத அன்பளிப்பின் பலத்தைக் கொண்டு தான் துண்டு விழும் ஆண்டுக்கான நஷ்டக் கணக் கைச் சமன் செய்து சமாளிக்க வேண்டி யுள்ளது.
இடையே தபாற் கட்டணம் அதிகரிக் கப்பட்டுள்ளது.
ஒரு மலர் அனுப்ப ரூபா 65/- இரண்டு மலர்களைச் சேர்த்து அனுப்பினால் ரூபா 130/-. இந்தக் கட்டண அதிகரிப்பையும் சமா ளித்துக் கொண்டு அனுப்பினால், பலர் எமக்கு மலர் இன்னமும் கிடைக்கவில்லையே என்ற முறைப்பாடு வேறு. ஆர்வம் மிக்கவர் களுக்குத் திரும்ப மலர் அனுப்பி வைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
இத்தனை சிரமங்களையும், பொருளா தார நெருக்கடிகளையும் இலக்கிய மேன் மைக்காக ஏற்றுக் கொண்டு, சந்தாதாரர் களுடன் ஆத்மார்த்திகமாக உறவைப் பலப் படுத்தவே நாம் முனைந்து தெண்டித்து வருகின்றோம்.
இதைத் தயவு செய்து விளங்கிக் கொண்டால் நல்லது.
- ஆசிரியர்
S. மல்லிகை
‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
ஆதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு
துள்ளுவர்'
gritoso, sagragðlaut
இம்ற்ெறுள்ளது அங்கு பாப் சஞ்சிகை அல்லிகை இதனை நான்கு o sinta a si sunt 2400 பதிவு நெதுன் எதிர்கால ಆಟ್ತಿ assistics at Optists ళ్ల
நோக்கி. OT衍蒂 346
ീgable منہ z مج%///o
ർഗ്ഗdate© ر%/gری /C
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர |மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமுமாகும். 201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 2320721 mallikaijeevaayahoo.com

Page 3
ஒரு சாதனையாளன் ஒய்ந்தான்
தேசபசந்து வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை பற்றிய ஒரு குறிப்பு:
- aაბUიJიჩ8x &- 6lფ2სUეიჭ2
ஒரு மாமனிதன் மறைந்தான். - உழைப்பின் வெற்றியை உலகுக்குப் பறைசாற்றி நின்ற, ஒரு மாமனிதன் மறைந்தான். ஒரு கூலித் தொழிலாளியாய் இம்மண்ணிற்கு வந்தவன், இன்று இம்மண் முழுவதையும் வசீகரித்து மறைந்து போனான். நேர்மை, நம்பிக்கை, ஒயா உழைப்பு ஆகியவற்றின் வெற்றியை, இவனது வாழ்க்கை உலகுக்குக் கற்பித்தது. வறுமையால் நிமிர்ந்தவன் அவ்வறுமையின் வடுவையும் துடைத்து, பலருக்கும் வாரிக் கொடுத்தும் வள்ளலானான். செல்வத்தை மட்டுமன்றிக் கல்வியையும் போற்றத் தெரிந்தவன் அவன். இம்மண்ணில் வாழ் கற்றோரை மதித்தான். இம்மண்ணிற்கு அறிஞர் பலரை அழைத்தான். கற்றோர் கணிக்கும் கண்ணியனானான். பக்தியில் ஊறிப் புண்ணியன் ஆனான். முருகா' எனும் வார்த்தை இவன் வாயில் ஒட்டிக் கிடந்தது. எவரைக் கண்டாலும் இருகை கூப்பும் பண்பாளன். அதனால்தான் அவனைக் கண்டார் யாவரும் கைகூப்பினர். V இந்த மண்ணில் வாழ வந்தவன், இந்த மண்ணை வாழ வைத்தான். இவன் பெயர் சொல்லி இன்று இந்த மண்ணில், நாயகம்பிள்ளை. எத்தனையோ வீடுகளில் அடுப்புகள் எரிகின்றன. எத்தனையோ கோயில்களில் விளக்குகள் எரிகின்றன.
இவன் விதைத்த வியாபார வித்துகள் மட்டுமன்றி, இவன் விதைத்த வம்ச வித்துகளும், இன்று இந்த மண்ணில் விருட்சங்களாய் விரிந்து, பலருக்கும் நிழல் செய்து நிற்கின்றன. இனம் கடந்து, மதம் கடந்து எல்லோரையும் ஈர்த்து நிற்கும், இன்றைய இவனது வம்ச வலிமை, உலக அதிசயங்களில் ஒன்று. மதத்தலைவர்கள், அரசியலாளர்கள், தொழிலதிபர்கள், அறிஞர்கள், அறங்காவலர்கள் ஆகியோரோடு, சாதாரணர்களின் கண்ணிரையும் வாரி அள்ளிக் கொண்டு, அவனது இறுதிப் பயணம் நடந்தது. கடைசிவரை, ஒரு தொழிலாளியாகவும், முதலாளியாகவும் ஒருமித்து வாழ்ந்த, அவன் ஒரு அதிசயனே!
எதிர்காலச் சந்ததிக்கு அவன் வாழ்வு ஒரு பாடம். எதிர்காலச் சந்ததிக்கு அவன் வாழ்வு ஒரு இலட்சியம். எதிர்காலச் சந்ததிக்கு அவன் வாழ்வு ஒரு சரித்திரம். அழியாத் தடம் பதித்துச் சென்ற அவ் அற்புதனைப் போற்றுவோம்.
 

சர்வதேகுத்_தமிழமைப்பொன்று அவசியம்
VN
இதவை!
முன்னரெல்லாம் தமிழ், தமிழ்க் கலாசாரம், தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சி பற்றி யெல்லாம், தமிழகத்தைத்தான் எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவி வந்துள்ளது.
ஆனால், இந்த நிலை வேகமாக மாறி வந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மொழியை இந்திய மத்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்திருப்பதற்குப் பின்ன ரும் கூட, தமிழ்ச் சூழ்நிலை அப்படியொன்றும் ஆரோக்கியமான திசை வழியில் செல்வ தாகக் கூட, நமக்குத் தெரியவில்லை.
அரசியல், சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களின் குறுக்கு வழிப் போட்டி களும், சந்தைப்படுத்தும் அவசரங்களும், தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட அரசியல் அதி காரத்தைப் பெற்றுக் கொள்வதற்குமான ஒரு ஊடகமாகத் தமிழ் மொழி பயன்படுத்தப்படு கின்றதே தவிர, அதன் பழமை, வீரியம், இலக்கிய வீச்சு, அதனது ஆளுமை கொஞ்சம் கூடக் கவனத் தில் எடுக்கப்படவில்லை என மெய்யாகவே வருந்துகின்றோம். தமிழகம் தமிழின் ஆளுமை யைக் குறுக்கிவிடுகின்றதோ, என அச்சப்படுகின்றோம்.
இந்திய உபகண்டத்திற்கு வெளியே நமது மொழி சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுத் திகழுகின்றது. இதற்குப் புலம் பெயர்ந்து பூமிபந்தில் பரந்துபட்டு வாழும் தமிழர்கள் தான் மூலகாரணர்கள்,
தமிழ் இந்திய நாட்டின் பிரதேச பாஷைகளில் ஒன்று, என மத்திய அரசாங்கம் சட்டமி யற்றியுள்ளது. எனவே, அம்மொழி சார்ந்த கலை, இலக்கியங்கள் தம் நாட்டுக்குள் வரத் தேவையில்லை என அச்சட்டம் தெளிவாகக் கூறுகின்றது. வெளித் தேச இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி யுள்ளது.
தமிழ் என்ற மொழி, இன்று வெறும் இந்திய உப கண்டத்து மாநில மொழியல்ல. அது ஒரு சர்வதேசப் பாஷையாக இன்று புது வடிவம் பெற்று மலர்ந்து செழிக்கின்றது.
ஹிந்தி, உருது, வங்காளி, மராட்டிய, கேரள மொழி போல, ஒரு பிரதேசத்து மொழியல்ல, தமிழ், இன்றைய எதார்த்த நிலையை மத்திய அரசு கவனத்தில் கொள்வது நல்லது. சர்வ தேசம் தொட்டு வளர்ந்து, செழித்து வளரும் மொழியை ஒரு பிரதேசத்திற்குரிய மொழியாகக் கணித்து, அதை ஒரு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தி விடக் கூடாது. சட்டம் செய்யக் கூடாது.
இந்தச் சர்வதேச வியாபகத்திற்கான கணிப்பீடுகளை நடை முறைப்படுத்தவே, பரந்து பட்ட தமிழ் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பே எதிர்காலத் தமிழை வழி நடத்தி வரவும் வேண்டும். இது இன்று சர்வதேசத் தேவையும் கூட

Page 4
! ہٹ۱/ظ قnع%رح)(یعض) (قدم پ%ف9یG
- ഗ്ര6ഞ്ഞൺഗങ്ങി 2ങ്ങ്ഗ്രaംകൃ\്
LDக்கள் வங்கியில் ஒரு காலைப் பொழுது. முகாமையாளரைத் தேடிப் போகிறேன். முகாமையாளர் இருக்கையில் ஒரு பெண்மணி, ‘பாரதியின் புதுமைப் பெண்ணின் உருவம். அடக்கமான எளிய தோற்றம். ஆனால், பார்வையில் ஒரு ஆளுமைத் திறமை. உள்ளே சென்ற என்னை வரவேற்று, இருக்கையில் அமரும்படி கேட்ட குரலில் ஓர் இலக்கிய நயம் தொனித்தது. நீண்ட நாட்கள் பழகியவரைப் போல, நட்போடு வாய் திறந்து "நான் தான் யோகேஸ்வரி சிவப்பிரகாசம்' என்று பேசிய போது, என் உள்ளம் உவகை அடைந்தது. வங்கி முகாமையாளர் என்ற பதவி நிலையை மறந்து ஒரு உறவுநிலையான, உணர்வுடன் உற்றுப் பார்த்தேன்.
மிக எளிமையான தோற்றம். இல்லாளுக்குரிய அடக்கமான ஆடை, அணிகள், புன்னகையோடு மலர்ந்த முகம், ஒரு பெண் எழுத்தாளர் என்ற நட்புரிமையோடு பழகும் பண்பு, சிறுகதைகளைப் படிக்கும் போது, அவருடைய உருவத்தை என் உள்ளத்தில் வரைந் திருந்தபடி, நேரில் காட்சி தந்தார். அந்த யோகேஸ்வரியை அறிமுகம் செய்ய வேண்டிய ஒரு காலக் கடமையாகும்.
ஈழத்தில் ஆக்க இலக்கியப் பணியில் பெண்களின் பங்களிப்பு ‘கஞ்சியில் பயறு போலத் தான் எனக் கூறப்படுகிறது. எழுத்துப் பணியில் ஈடுபட்டவர்கள், வேலைப் பளுவாலும், குடும்பச் சுமையாலும் அதனைத் தொடர முடியாமல்போயினர். எனவே, எழுத்துத்துறையில் பெண்கள் ஈடுபடுவது கடினம் என்ற கருத்தை மாற்றப் பணி செய்யும் திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ஒரு திசைகாட்டியாய் திகழுகிறார். ஈழத்தில் விரல் விட்டு எண்ணும் நிலையிலுள்ள பெண் எழுத்தாளர்களில் ஒருவர் எனில், மிகையாகாது.
1948 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 13 ஆம் திகதி மலேசியாவில் பிறந்த இவர், பண்டத்தரிப்பு மகளிர் உயர்நிலைக் கல்லூரியில் கற்றுப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேர்ச்சி பெற்ற போது, ஈழத்துக் கல்வியாளர் வரிசையில் இணைந்து கொண்டார். கல்லூரியில் க. பொ. த உயர்தர மாணவியாக இருந்த போதே, "கடைசியாக ஒருமுறை" என்ற முதலாவது சிறுகதையை எழுதினார். அக்கதை 1965 இல் ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமானது. இப்பிரசுரம் அவரது
மல்லிகை மார்ச் 2008 ஜ் 4

எழுத்தார்வத்தைத் துாண்டியது. தொடக்க காலத்தில் "ஈஸ்வரி" என்ற பெயரில் எழுதினார். மூளாய் என்ற தான் வாழ்ந்த கிராமத்தின் பெயரையும் இணைத்துக் கொண்டார். பிறந்த நாடான மலேசியாவின் நினைவு கலைந்து போக, ஈழத்துப் பெண் ணாக எழுத்துலகில் நுழைந்தார். சுதந்தி ரன் பத்திரிகையின் மாணவர் பகுதியான வளர்மதி, வானொலியின் இளைஞர் மன்றம் என்பன இவருடைய எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஊக்கமூட்டின. எழுதும் ஆர் வத்தை ஏற்படுத்தின. தனது நெஞ்சில் கருக் கொண்ட ஆக்கங்களை எழுத்திலே வரையத் தொடங்கினார்.
பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்த காலத்திலேயே, மல்லிகை" சஞ்சிகை யின் சந்தாதாரராகி, இரசிகையாக ஆனார். அத்தொடர்பு இன்று வரையும் நிலைத்து நிற்கிறது. "ஈஸ்வரி என்ற பெயரிலேயும், மல்லிகையில் சிறுகதைகளை எழுதினார். மல்லிகை ஆசிரியர் ஜீவா இந்தப் பெண் எழுத்தாளரை நன்கு இனங்கண்டு கொண் டார். மல்லிகை நடத்தும் இலக்கிய விழா வுக்கு அழைப்பு அனுப்பிக் கலந்து கொள் ளச் செய்து, இலக்கிய ஆர்வலர்களிடையே இவரையும் அறிமுகம் செய்து வைத்ததை, இன்னும் பெருமையுடன் நினைவு கூரும் பண்பு நலம் இவர் பால் செறிந்துள்ளது.
இவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதி "உணர்வின் நிழல்கள்' என்ற பெயரில் 1997ல் மல்லிகைப் பந்தல் வெளி யீடாக வந்தமையால், மல்லிகையே இவரு டைய எழுத்துப் பணியை ஆவணப்படுத்தும் சஞ்சிகையாகவும் ஆதரவளித்தது. இத் தொகுப்புத் தஞ்சாவூர் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கில் ஆய்வு செய்யப்
பட்டது. முனைவர் ஆ. கார்த்திகேயனும், முனைவர் சா. உதயசூரியனும் இக்கருத்த ரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து வெளி யிட்ட "ஆய்வு நோக்கில் அயல்நாட்டுத் தமிழ்ச் சிறுகதைகள்' என்னும் நூலில் இக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. "உணர்வின் நிழல்களில் இடம் பெற்றுள்ள "சோகங் களும் சுமைகளாகி என்னும் சிறுகதை சார்க் மகளிர் அமைப்பு (இலங்கை) நடத் திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசை வென்றதாகும்.
1999ல் 'ஈன்ற பொழுதில்' என்ற சிறு கதைத் தொகுதியும், "கணநேர நினை வலைகள்' என்ற தொகுப்பு 2001லும் வெளி வந்தமை, இவருடைய தொடரும் எழுத்துப் பணிக்குச் சான்றாக உள்ளன. "கணநேர நினைவலைகள் தொகுதி, சிரித்திரன் சுந்தர் விருதைப் பெற்றுள்ளது.
சிறுகதையை விட, ஆன்மீகக் கட்டுரை கள் எழுதுவதிலும் இவருடைய பணி பரவலாக்கம் பெற்றுள்ளது. ஞானச்சுடர், நல்லைக் குமரன் மலர், அருளொளி, இந்து ஒளி என்னும் தொகுதிகளில் கட்டுரை களை எழுதியுள்ளார். ஞானச் சுடரில் இரண்டாண்டுகள் "ஆட்கொண்ட போது என்ற தலைப்பிலே தொடர்ச்சியாக எழுதிப் பக்தி நெறியை வளர்க்க எழுத்தைப் பயன்படுத்தியுள்ளார். முன்னோர் சொன்ன கதைகள்' என்ற தலைப்பில் கடந்த பல மாதங்களாக எழுதி வருகின்றார். 2005 இல் பக்தி நெறிப்படுத்தும் கட்டுரைகளைத் தொகுத்து "அரை நிமிட நேரம்’ என்ற தலைப்பிட்டு நூலாக வெளியிட்டுள்ளார்.
கவிதைப் பரப்பிலும், இவர் முயற்சி நடைபெற்றுள்ளது. அவ்வப்போது, சஞ்சி
மல்லிகை மார்ச் 2008 ஜ் 5

Page 5
கைகளிலும், பத்திரிகைகளிலும் அவை வெளி வந்துள்ளன. பல்கலைக்கழக நாடக விழாவிற்கு நாடகம் எழுதிப் பரிசில் பெற் றுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனமும், தேசிய ஒருங்கிணைப்புச் செயற் றிட்டப் பணியகமும் இணைந்து நடத்திய வானொலி நாடகப் பிரதியாக்கப் போட்டி யிலும் பரிசில் பெற்றுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவியொரு வரும், சப்ரகமுவப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், இவரது ஆக்கங்களை ஆய்விற்கு எடுத்துக் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
சென்ற ஆண்டு இவருடைய 18 சிறு கதைகளைத் தொகுத்து "மனம் விந்தை யானது தான்’ என்ற தலைப்பில் சென்னை மணிமேகலைப் பிரசுரம் நூலாக வெளியிட் டுள்ளது. இதன் மூலம் ஈழத்து "ஈஸ்வரி தமிழகத்திற்கு அறிமுகமாகவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த நூலின் ‘என்னுரை' என்னும் பகுதியில் இவர் தன்னுடைய எழுத்துப் பணியின் இலக்ககைத் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளார்.
'நான் எனது ஒவ்வொரு நூலிலும் எழுதுவது போல, எமது தேசத்தில் நடந்து வரும் போர், எனது ஆக்கங்களைக் கண் முன்னால் அழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததன் காரணமாகவே, அந்த ஆக்கங் களை நூலுருவில் வெளியிட்டால், எங்கோ
ஒரு மூலையிலிருந்தேனும் அதை மீளப்
பெறலாமென்ற நம்பிக்கையிலேயே அவற்றை
அச்சேற்றத் தொடங்கினேன். நாம் பாதுகாக்
கும் ஒவ்வொரு சிறு பொருளினதும், பெரு
மதிப்பு நமக்கு மட்டுந்தான் புரியும். மற்றவர்
களுக்கு அது தேவையற்றதாகக் கூடத் Qg5 fusorTLb."
தான் வாழும் காலத்திலேயே, தன்னு டைய ஆக்கங்களை நூலுருவில் பேணி வைக்கும் ஒரு மரபினை வளர்க்க முற்படும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். பல
முன்னைய எழுத்தாளர்கள் ஆக்கங்களை
இன்று தேடியலைய வேண்டியுள்ளது. அவற்றை அவர்கள் வாழும் காலத்தில் நூல் வடிவில் கொணர முடியாமையால், மன அழுத்தத்தோடு மறைந்தவரும் உளர். அவர்களுடைய நிலைக்கு ஆளாகாமல், தன்னுடைய ஆக்கங்களைத் தானே பேணி வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள இவருடைய செயற்பாடு சிறப்பானது.
சிறுகதை எழுத்தாளர் வரிசையில் இவரை மதிப்பீடு செய்பவர்கள், இவருடைய சிறு கதைகள் இன்னும், புடம் போடப்பட வேண் டியவை என்றே கருதக் கூடும். ஆனால், தனது கதைகளின் தோற்றம் பற்றி அவரே கூறுவதைச் செவிமடுத்தால் இக் கருத்து நிலை மாறக் கூடும்.
"எனது மனதில் தாக்கத்தை ஏற்படுத் திய சில நிகழ்வுகள் அல்லது கருத்துக்கள், கற்பனையுடன் கலந்து எழுத்துருவில் வெளிவருகின்றன. வாசகர்களாகிய உங்க ளுக்கு அவை ஏதாவது, பயன் நல்குமா யின், அது எனக்கும் மகிழ்ச்சியளிக்கும்."
இந்தக் கூற்று எழுத்தாளர் வாசகரோடு, தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதையே காட்டுகிறது. நூல்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வரும் நிலை யில், உணர்வுகளைப் பகிரத் தொடர் பாடல் நிலையில் தன் எழுத்தைப் பயன் படுத்த எண்ணும் இவருடைய பணி சற்று வித்தியாசமானதுதான். சமகால நிகழ்வு களால் ஏற்பட்ட அருட்டுணர்வு துணிவோடு
மல்லிகை மார்ச் 2008 率 6

அநுபவங்களை எழுத்திலே வரைய வைத் துள்ளது. அதன் பயன் வரலாற்று நிகழ்வு களை எதிர்காலத்தவர் தேடி வரும் போது, ஆவண நிலையில் கிடைக்க வகை செய்யும்.
பெண்மையின் மென்மையான எழுத்து நடையொன்றை, இவர் தன் வசப்படுத்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்பாணத் துப் பண்பாட்டு நடைமுறைகளில் ஊறிப் போன உணர்வுகளை மொழி நடையிலே கொணரும் போது, இவர் தன்னை இனங் காட்டுகிறார். வீடு, வளவு, தோட்டம், துரவு, நாற்சாரம், தலைவாசல், சாதி, சீதனம், பக்கவாதம், சதுப்பு நிலம், கொட்டில், குடில் என இவர் பயன்படுத்தும் மண்வாசனை நிறைந்த சொற்களின் விளக்கத்தைத் தமிழ் பேரகராதியில் தேட வேண்டியதில்லை. சிறுகதையில் வரும் பாத்திரங்களின் உரையாடல்களில் விளக்கம் உடனே கிடைக்கும். இதேவேளை, ஆங்கிலச் சொற்களின் பயன்பாட்டு நிலையையும், அவர் விட்டுவிடவில்லை. வங்கி முகாமை யாளராக இருந்த போது, தொடர்பாடல் மொழி நடையில் ஏற்பட்ட அநுபவம் சிறு கதையிலும், வந்து செறிந்துள்ளது. "பண் பாடு பேண வேண்டும்" என்ற தொலை நோக்கு. இயல்பான வாழ்வியல் அநுபவங் கள் இரண்டையும் இணைத்து ஒரு பாலம் அமைக்க எழுத்தைப் பயன்படுத்தும் இவரு டைய கதைகளையும், ஏனைய எழுத்தாக் கங்களையும், நவீன விமர்சன அளவு கோல்களைக் கொண்டு மதிப்பிடுவது சற்றுக் கடினமே.
இன்று யோகேஸ்வரி ஒரு வங்கி முகாமையாளர் பதவி நிலையிலிருந்து ஒய்வு பெற்றவர். குடும்பத் தலைவியாக, பாட்டியாக விளங்குபவர். இன்னும் எழுதிப்
பணி செய்கிறார். இவரை நேரில் காண் பவர், ஒரு கிராமத்துப் பெண்மணியாக எண்ணுவர். இவர் பேச்சைக் கேட்பவர், இவரை ஆசிரியர் கூட்டத்தில் இணைக்க எண்ணுவர். இவர் எழுத்தாக்கங்களைப் படிக்கும் வாசகர், ஒரு நெருக்கமான, மென் மையான தாய்மை உருவைக் கற்பனை யிலே காண்பவராவார். இவரை இனம் கண்ட மல்லிகையும், ஏனைய சஞ்சிகை களும் இவருடைய பல்திற ஆளுமையை இனங்கண்டவர்கள். படைப்பாளியை வர வேற்கும் பிரசுரிப்பாளர்கள் மிகக் குறைவு. வணிகப் பயன் பெற எழுத்துலகம் அவதிப் படும் வேளையில், யோகேஸ்வரி போன் றோர் வளர உரமிட்ட மல்லிகை தன்னை இனம் காட்டுகிறது. ஈழத்தில் இன்று சிறந்த எழுத்தாளர்களாக விளங்குகின்ற, பலர் மல்லிகைச் சாரலில் நடை பயின்ற குழந் தைகளே. அந்தப் பிள்ளைத் தமிழ்த் தலை முறையில் இவரையும் சேர்க்கலாம்.'
நிறைவான ஒன்று நினைவில் வைத்தி ருப்பதற்கு. இவர் மேடையில் பேசுவதும், எழுதுவது போலவே இருக்கும். சிந்தித்துக் கோவைப்படுத்திச் சொற்களை அளந்து நிறுத்திப் பேசும் போது சொல்லும், எழுத் தும், செயலும் ஒன்றிணைந்த ஒருவராக இவரைக் காணலாம். இப்படியானவர்கள் உருவாக்கப்படுவதில்லை. இயல்பாகவே உருவாகின்றார்கள். ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் ஒரு திசை காட்டி என நான் கருதுகிறேன். இவரைப் பற்றி ஒரு குறிப்பை எழுதுவது மனதை நிறைவிக்கின்றது. பொன் சுடச்சுட ஒளிரும். வைரம் பட்டை தீட்ட மிளிரும். எழுத்துப் பணிக்கும் இதுவே பொருந்தும்.
மல்லிகை மார்ச் 2008 & 7

Page 6
நினைலஜிஸ்ா நாeகள்- 12
ඊ"crෂිණාංග
“எனக்கும் ஒரு ரீ போடச் சொல்லடாப்பார். களைப்பா இருக்கு." என்றபடி கதிரையில்
அமர்ந்தான், குமார்.
ஆச்சரியமாக இருந்தது. சமறியில் பின்நேர ரீ போடுவதில் தன்னை ஒருவருமே மிஞ்ச முடியாது என்று தம்பட்டம் வேறு அடித்துக் கொள்பவன்.
"நீ, டொக்டர் வேலைக்குப் போகாமல். தேத்தண்ணிக் கடை வைச்சிருக்கலாம். y என்று இரகு அடிக்கடி நக்கல் அடிப்பான். ஆனால், யார் என்ன சொன்னாலும், பின்னேரத் தில் ரீ போடுவது குமார்தான். "சும்மா சொல்லக்கூடாது, அவன் போடும் ரீ. திறம்தான்!" என்று சமறியில் எல்லோருமே ஒத்துக் கொண்டார்கள்.
"ஏன் குமார் உடம்பு சரியில்லையா?”
'இல்லை தேவன். மனந் தான் சரியா இல்லை."
"ஏன் சாந்தாவோடை வழக்கம் போல பிரச்சனையா?"
'கலியாணம் கட்டிறதெண்டு தீர்மானம் ஆனபின், இரண்டு பேரும் சண்டை பிடிப்பதில்லை. ஆனால், இப்ப புதுப் பிரச்சனை."
எனக்கு எரிச்சல் வந்தது. இந்தக் கலியாணத்தை ஒப்பேத்த நானும் ரகுவும் பட்டபாடு எத்தனை சமாதான முயற்சிகள். சாந்தா வீட்டாரையும், குமாரின் தாய் தகப்பனையும் சம்மதிக்க வைக்கப்பட்ட பாடு
"காதலிப்பியள். வீட்டிலை வேண்டாமெண்டால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவியள். பிறகு எங்களட்டை வந்து மண்டாடுவியள். எல்லாம் சரி வர, வேறை பிரச்சனை எண்டு. y
'கோவிக்காதையடாப்பா. இது வேறை மாதிரிப் பிரச்சனை."
'டக். டக் என்று கதவைத் தட்டும் சத்தத்துடன். “D 67086T 6U 6oT DIT?....... " 6п6öпр குரல் கேட்டது. வாசலில் சாந்தா நின்றிருந்தாள்.
“என்னப்பா?. நீர் கிளினிக் முடிந்து ஹாஸ்ரலுக்குப் போகவில்லையா?." என்றான் (5LDITff.
“தேவன் அண்ணாட்டைச் சொல்லலாம் என்று வந்தனான்.
மல்லிகை மார்ச் 2008 ஜ் 8

"ஏன் நான் சொல்லமாட்டேனா?.
'சரி சரி சண்டையைக் கலியாணத்திற் குப் பிறகு வைச்சுக் கொள்ளுங்கோ. இப்ப விசயத்தைச் சொல்லுங்கோ?...' என்றேன்.
"தேவாண்ணை. எல்லாம் சரிவந் தாப் போல. g}|ÜU 6TEj&60L LDTLDT...... சாதகப் பொருத்தம் பார்க்க வேணுமென்று
"அதுக்கென்ன? பார்க்கட்டன்.
'பார்த்தாச்சு. நானும், குமாரும் பிள்ளையார் கோவில் ஐயரட்டைக் குடுத் துப் பார்த்தனாங்கள், துப்பரவாகப் பொருந்த வில்லை என்று சொல்லுறார். sy
“என்ன வேதாளம் பழையபடி முருங்கை மரமேறுது?. y
"அதுதான் தேவன் பயமாய் இருக்கு. நீங்கள் எல்லாரும் கஷ்டப்பட்டுக் கலியானத் திற்குச் சம்மதிக்க வைக்க, இந்தாள் வந்து குழப்பும் போல கிடக்கு. ' குமாரின் பேச் சில் கவலை தொனித்தது.
என்ன செய்யலாம் என்று தெரிய வில்லை. நிமிர்ந்து இரகுவின் முகத்தைப் பார்த்தேன். வழமையான சிரிப்புடன் தலையை ஆட்டினான்.
"நாங்கள் குழம்பிப் போய் இருக்கிறம். நீங்கள் சிரிக்கிறியள்." என்று அவன் மேல் கோபப்பட்டாள், சாந்தா,
"சாதகத்தைக் குடுங்கோ. உங்கடை மாமாவும் ஒருக்காப் பார்க்கட்டன்." என்றான் இரகு.
"ஐயோ!. பொருந்தவே இல்லை. பிள்ளையார் கோவில் ஐயர் பொருத்தம் பார்க்கிறதிலை வலு கெட்டிகாரர்.” என அழாக் குறையாகச் சொன்னாள், சாந்தா.
"அப்ப ஒண்டு செய்வம். இரண்டு சாதகத் தையும் என்னட்டைத் தாருங்கோ. நான் மாமாவோடை கதைச்சுச் சரி பண்ணுறன்."
‘ரகு எப்படியாவது சரி பண்ணடா ÜLuft. இல்லாட்டில் நாங்கள் தற்கொலை தான் செய்யோனும்' என்றான் குமார்.
"விசர்க் கதை கதையாதை. நீங்கள் இரண்டு பேருமே டொக்ரர். ஒரு டொக்ரர் கதைக்கிற கதையே இது? பேசாமல் சாந்தா வைக் கூட்டிக் கொண்டு போய் ஏறrஸ்ர லிலை விட்டிட்டு வா. எல்லாத்தையும் நான் பாத்துக் கொள்ளுறன்."
தாலி கட்டி முந்த பின்னர் தான், சாந்தா வினதும், குமாரினதும் முகத்தில் ‘களை" வந்தது. சாந்தாவின் மாமாவும் இரகுவும் கலியான மண்டப வாசலில் நின்று சிரித் துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கலி யான வேலை முழுக்க என் தலையில் விழுந் ததால் நான் தான் ஒடி ஆடித் திரிய வேண்டி இருந்தது. *
'J (5. . . . . . . கொஞ்சம் உதவி செய்ய L-ffÜLm!. மாப்பிளை பொம்பிளையைக் 'கால்மாற அனுப்ப வேணும்."
"அதுக்கென்ன? நாங்கள் செய்யிறம் கவலைப்படாதை. " என்றபடி இரகு வர, மாமாவும் விசிறி மடிப்புச் சால்வையுடன் பின்னே வந்தார்.
"சாப்பாடு முடிஞ்ச பின் அனுப்பினால் போதும் தானே மாமா?. இராகு காலத் திற்கு முந்தி அனுப்பிவிடலாம்.”
"சாத்திரம் நல்லாப் பார்க்கிறீர் தம்பி." என்று இரகுவை ஆசீர்வதித்தார் மாமா.
“தேவன் நீ போய்ப் பந்தியைக் கவனி. மாப்பிளை, பொம்பிளையைச் சாப்பிடப் பண்ணி நாங்கள் அனுப்பி வைக்கிறம்."
‘LOTLDT..... uDTLDT” 6Tesör DJ QUs5 snúLSGS
LŠeps pir 2008 霹 9.

Page 7
வதையும். இரகு. இரகு. என்று அவர் உருகுவதையும் பார்க்க ஆச்சரியமாக இருந் தது எப்படி இவ்வளவு கெதியிலை அவரை மடக்கினான் என்று பிடிபடவில்லை!
சனக்கூட்டம் போனபின்னர், மண்டபம் வெறிச்சோடிக் கிடந்தது. கலியாணக் களைப் புத் தீர ஒரு கதிரையில் சாய்ந்து உட் கார்ந்திருந்தேன்.
"என்னடா களைச்சுப் போனியா?. 5...... போட்டுத்தரக் குமாரும் இல்லை." என்றபடி வந்தான் இரகு.
“LDTDT. .... எங்கையடா?. y
'மாப்பிளை பொம்பிளையோடு அனுப்பி விட்டன்." என்று கண்ணைச் சிமிட்டினான்.
"எப்படியடா.. மாமாவைச் சரிக்கட்டி னாய்?" இவ்வளவு நாட்களாக மனதில் இருந்த கேள்வி டக்கென்று வெளியே வந்தது.
"கட்டாயம் தெரியவேணுமோ?. y9
“Gla Tsosol Tiit IT?....... தெரிஞ்சு கொள்ள ஆசையா இருக்கு."
"ஒண்டும் பெரிய வேலை இல்லை. மாமாவுக்குச் சாதகம் பொருந்த வேணும். அவ்வளவுதானே? என்ரை குருநாதர். அவர்தான் மாஸ்ரரிட்டைப் போய் விசயத் தைச் சொன்னன், எல்லாம் அவர் செய்து தந்தார். இரண்டு பேருக்கும் பொருந்திற மாதிரி . சாதகம் எழுதி. அதை நெல்லுப் பானையுக்கை போட்டு அவிச்சு. மாமாட்டைக் குடுத்தம். LDTLDT HD6sofGLb. முயல் பிடிக்கிற நாய் இல்லை. சும்மா குலைக்கிற ஆள்தான். எல்லாம் நம்பி sit LiTf.'
"ரகு எடே, இது வெளியிலை தெரிய வந்தால்?. s
'அடுத்த வருசம் பிள்ளை பிறக்க எல்லாம் சரியாப் போகும்" என்று சிரித்தபடி போனான் இரகு.
ELÄPPY PHOTO
Excellent Photographers
Modern Computerized
Photography For Wedding Portraits & Child Sittings
Photo Copies of
Identity Cards (NIC),
Passport & Driving Licences
Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Te: 2526345
மல்லிகை மார்ச் 2008 ஜ் 10
 

( ص ۔ ۔ ۔ ۔ ۔ بی۔ جے۔ ح
அது 1980 ஆம் ஆண்டு, நாங்கள் வெளி
2/Jaul దీని /ાઉના? நாடு போகவென்று, அணியணியாகப் புறப்
பட்டிருந்தோம். எந்த நாடென்ற இலக்கெல்
லாமில்லை. எந்நாடு எங்களை அனுமதிக்
கிறதோ, அங்கே முகாமிடுவதென்பது உத்
கருணாகரமூர்த்தி தேசம், ஐரோப்பா முழுவதும் அலைந்
6ຊຕ໌updf துழன்று அவ்வாண்டின் வசந்தத்தின் போது,
பெர்லினில் ஒதுங்கினோம். சோலைகளி
லும், பூங்காக்களிலும் கடந்த இலையுதிர்
காலத்தில் இலைகளை முற்றிலும் உதிர்த்து விட்டு, அலம்பல் விளாறுகள் மாதிரிச் சிலுப்
பிக் கொண்டும், விடைத்துக் கொண்டும் நின்ற மரங்களும்; வானத்தை நோக்கித் துடைப்பக்
குச்சிகள் மாதிரி நீட்டிக் கொண்டு நின்ற பைன், ஒக், தனன் வகையான மரங்களும் இனித்
துளிர்க்கலாமா? வேண்டாமா? என்று ஜெர்மனில் சிந்தித்துக் கொண்டு நின்றன. “குமாரப்பா
மட்டும் ஒரு சின்னக் கைக் கோடாலியுடன் வந்திருந்தால் (வேலணையில் மரக்காலை
வைத்திருந்தவராம்) எல்லாம் பட்டுப் போச்சென்று அத்தனை மரங்களையும் இந்நேரம் குறுக்காய்த் தறிச்சு அடுக்கியிருப்பார்." என்று ஜோக்கடித் தான் கூட வந்த ஒருவன்.
அப்போது, சூழலின் வெப்ப நிலை 10 இலிருந்து 15 பாகை செல்சியஸ் வரை இருந் திருக்கலாம். யாழ்ப்பாணத்தின் காங்கை வெய்யிலில் காய்ந்து விட்டு, விமானத்தில் ஏறிக் குந்திய எமக்குப் பெர்லினில் தரையிறங்கியதும், சில்லிட்டு வெட வெடத்தது. அப்போது "அது தான் அவர்களின் வசந்தம்' என்று யாரும் சூடம் கொளுத்திச் சத்தியம் செய்திருந்தாலுந் தான் நம்பியிருக்கமாட்டோம்.
எனக்குப் பத்து வயதிருக்கும் போது இலங்கையில் Shelt பெற்றோல் அடித்த ஸ்கூட்டர்கள் கடந்து செல்லும் போது, அதன் வாசனையை நுகரப் பிடிக்கும். பெர்லினில் (கிழக்கு) கார்கள் கமழ்ந்த மணம் என்னை என் பால்யப் பருவத்துக்குக் கொண்டு போயிற்று. காணுமிடமெங்கும் கார்களைத் தவிர, முயல்களும், வெண்பழுப்பு நிறத்தில் சிறுநரிகளும், Hedgehog gel எனப்படும் சிறியவின முள்ளம் பன்றிகளும் தம்பாட்டுக்குத் திரிந்து கொண்டிருந்தன. நகரத்தின் குறுக்கும் நெடுக்கும் குளிரால் தயங்கித் தயங்கி வழிந்து கொண்டிருந்த கால்வாய்களில் ஏராளம் வாத்துக்கள் வெள்ளை, சாம்பல், பிறவுண், கறுப்பு, நரைப்பச்சை, இன்னும் கலவன் நிறங்களில் மடக்கிக் குழம்பு வைப்போரின் பயமில்லாமல், குளிரா? எவன் சொன்னது? என்று தம்பாட்டுக்கு மிதந்து கொண்டிருந்தன. மற்றும்படி, குயில்கள் எதுவும் கூவவோ, மானோ, மயிலோ மருளவோ காணோம்.
விடுதலை ராணுவத்தினர் (இது எங்களை நாங்களே சொல்லிக் கொண்டது) எம்முள் அநேகமானோர் கோடை வரட்டும், வேலை தேடலாம் என்று கிடைத்த ஹொட்டல்களில் தலையை மூடிப் போர்த்துக் கொண்டு, குறண்டிப் படுத்துக் கொண்டிருந்தோம். துண்டறப் பிடிபடாமல் ஜெர்மன் மொழி ஐஸைவிட, வழுக்கிக் எமக்குப் போக்குக் காட்டிக்
மல்லிகை மார்ச் 2008 & 11

Page 8
Glasm5öoTu95bg5ff9Jlb “Guten Tag, Auf Wiede rseshen என்பனவற்றுடன், ‘ஒரு பக்கெட் பாண் வேனும், உருளைக்கிழங்கு சிப்ஸ் பிற்றே, ஒரு பால்ப் பெட்டி பிற்றே, ஒரு டிக்கற் பிற்றே" போலான பத்து வசனங்கள் கதைக்கக்(?) கற்றுக் கொண்டோம். தீ மிதிக்கத் துணிந்தவர்கள் போலும், போர் வையைத் தூர வீசிவிட்டுக் குளிரைப் பொருட் படுத்தாமல், வீதியில் இறங்கி வேலை தேடியவர்களில் ஒரு சிலருக்கு, சிறிய சிறிய வேலைகள் ஆங்காங்கே கிடைத்திருந் தமை, ஏனையோருக்கும் நம்பிக்கையூட்டு வதாக இருந்தது. Renault கார்க் கொம்பனி ஒன்றில் கார் சேர்விஸ் பண்ணிப் பொலிஷ் போடும் வேலை கிடைத்த ஒருவர், தான் gTeóT grC3s Chief office Assistant 67667pm fr. றெஸ்டோறண்ட் ஒன்றில் 'சலாட் போடும் வாய்ப்புக் கிடைத்த ஒருவர் தான் தான் 9 (3 as Kitchen Superviser 6T6T DITir. உண்மையில் அப்படியான பணிகள் அங்கி ருந்தனவா? என்பது கூட அப்போது நமக் குத் தெரியாது.
கோடைகாலம் பிறக்கவும், ஒருநாள் "இன்று தொடக்கம் புதிதாக வந்த Auslander (விதேசிகள்), மற்றும் பொருளாதார அகதி கள் எவருமே வேலைகள் எதுவும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என ஜெர்மன் அரசு பட்டவர்த்தனமாக அறிவித்தது. விதி விலக்காக ஒரு உபவிதியும் செய்யப் பட்டிருந்தது. அது: "இவர்கள் (ஜெர்மன் காரர்) செய்ய விரும்பாத கோப்பை கழுவு தல், அதிகாலையில் ஒரு மணிக்கு வீடுகளுக் குச் செய்திப் பத்திரிகைகள் விநியோகித்தல் போன்ற சிலவற்றைச் செய்யலாம்.' என்பதாகும். நூறு வருடிங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட லிஃப்ட் வசதிகள் இல்லாத
பழைய வீடுகளைக் கொண்ட குடியிருப்புக் களில் வேலை செய்வது துன்பம். சில வேளைகளில், பத்திரிகை வண்டியைத் தள்ளிக் கொண்டு போய் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு, ஒவ்வொன்றும் 2 கிலோ தேறக் கூடிய 2 அல்லது 3 சாவிக் கொத்துக் களையும், நூறு பக்கமுள்ள பேப்பரையும் காவிக் கொண்டு, நாலு அல்லது ஐந்து மாடி கள் வரை கூட, ஏறிப்போய் ஒரேயொரு பேப் பர் போட்டுவிட்டு, இறங்க வேண்டியிருக்கும்.
யாராவது தத்தாரிகளின் கண்ணில் வண்டி மட்டும் பட்டுவிட்டால், அதை ஒரு கி. மீட்ட ருக்குத் தள்ளிக் கொண்டு போய் விட்டு விட்டுப் போய்விடுவார்கள். வேலை முடிந்து வந்து படுத்தால் கால்கள் விண் விண்ணென்று
உளைந்து குத்தும், தூக்கம் வராது.
கொஞ்சம் வொட்கா"வின் உதவியுடன்
கால்களின் உளைவு, குத்தையும் மீறி
எப்படியோ நீங்கள் தூங்க முயலுகையில், உங்கள் மூத்த சகோதரியின் மாப்பிள்ளை யின் தங்கச்சியின் புருஷனின் சகோதர னின் சகலன் போன் செய்து 'புனிதா குந்திவிட்டாள், புட்டுச் சுத்திச் சடங்கெல் லாம் செய்யவிருக்கிறம். மினைக்கெடுத்தா மல் இரண்டு லட்சம் அனுப்பிவிடு" என்று எழுப்பித் திடுக்கிடுத்துகையில், உங்கள் முழங்கால் மூட்டுக்கள் தேய்ந்து கிறீச்சிட ஆரம்பித்திருக்கும். பேப்பர் வேலையின் சூட்சுமம், தாற்பரியம் முழுவதும் தெரியா மல் இளமை தரும் உசாரில் என்ன வேலை யென்றாலும், பரவாயில்லை என்று நம்மவர் குளிரில் முகமும், காதுச் சோனைகளும்
சிவக்கச் சிவக்கப் பேப்பர் விநியோகிக்கும்
அலுவலகங்கள் எல்லாவற்றையும் தினமும் போய்ப் போய் நூற்றுக்கணக்கில் முற்றுகை யிட்டு நிற்கையில், ஆரம்பத்தில் அங்குள்
மல்லிகை மார்ச் 2008 & 12

ளவர்கள் எம் ஆர்வக் கோளாறை அதிச யித்துப் பார்த்தாலும், பின்னர் சினந்து விழு ந்தார்கள்.
கண்களைச் சுழற்றித் திருமண்ணை இட்டுக் கொண்டோ, கொள்ளாமலோ, நாலு வர்ணங்களையும் படைத்தவன் அவனே, என்பதையொப்பும் எம் வருணாச்சிரம தர் மத்தின் இறுதி இணைப்பாய் பறையனாகச் சிங்களவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட, ஒரு தமிழனைத் திட்டுவதற்கு இன்னும் சிங்களவர் "பறத் தெமிளோ' என்னும் சீர்த் தொடரைக் கூறுவதைக் கேள்வியுறலாம். இன்னும் மாணிக்கதுவீபத்தில் அதன் தமிழ்ப் பகுதியோ, சிங்களப் பிரதேசமோ, எந்த வொரு நகரமோ, கிராமமோ அங்கே மலங் காவி அல்லது பொதுக் கழிப்பறை பேணும் உத்தியோகம் தவறாமல் ஒரு தமிழ் அருந் ததியனுக்கோ, பறையனுக்கோ தான் கொடுத் துக் கெளரவம் செய்திருப்பார்கள். இங்கு இப்பொழுதும் அதிகாலையில் பெர்லினின் எந்தப் பகுதியையாவது ஒரு ரவுண்ட் வந்தீங்களாயின், அங்கே எம் சாதிக் கொழுந் தொன்று பத்திரிகை விநியோகித்துக் கொண்டி ருப்பதைக் காண்டேகலாம்.
‘இதெல்லாம் வெளிநாட்டுக்காரரை வெளியேற்றுவதற்கான முதற்படி, இன்னும் அறமிஞ்சிப் போனால். ஒரு ஆறுமாதம். அதுக்கிடையில், எப்படியும் எல்லாரையும் பக் பண்ணி அனுப்பிவிடுவார்கள்’ என்றெல் லாம் நம்மவர்கள் மனப்பிராந்தியில் வதந்தி களை தமக்குத் தோன்றியவாறு ஜென றேட் செய்து பரவவிட்டுக் கொண்டுமிருந்தனர்.
பெர்லினில் Pensionகள் என்று சொல் லப்படும் ஹொட்டல்களாக ஒரு முப்பத் தைந்தைக் கண்டு பிடித்து அவற்றில் ஏறத் தாழ ஆயிரத்தி ஐந்நூறு பங்களாதேஷ்,
பாகிஸ்தானி, தமிழீழ அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தோம். சில ஹொட்டல் களில் மாத்திரம் சமைப்பதற்குக் கண்டிப் பாக அனுமதி இருந்திருக்கவில்லை. அவர்கள் தரும் குலாஷ் சூப்புடனும், சலாட் டுடனும், பானுடனும் காலத்தைக் கழிக்க வேண்டும். இத்தாலியினூடு தரை மார்க்க மாய் வந்து சேர்ந்திருந்த ஒருவர் மட்டும், "உந்த சூப் நான் மிலானில சாப்பிட்ட னான். உதங்கே குதிரை இறைச்சியில தான் காய்ச்சிறது!" என்று சொல்லிச் சாப் பிட்டுக் கொண்டிருந்தவர்களையும், அருக் குழித்து வாந்தியெடுக்க வைத்துக் கொண் டிருந்தார். எங்களில் சிலருக்கு, Blumeshof எனும் செஞ்சிலுவைச் சங்கக் ஹொட்டல் ஒன்றே தந்திருந்தார்கள். அங்கே சமைக்க அனுமதி கண்டிப்பாகக் கிடையாது. ஏனைய அறைகளில் எல்லோரும் தூங்கிய பிறகு, நாங்கள் கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத் திருக்கும் லுண்டாவில், வாங்கிய வெந்நீர் Gab IT Slás ab 60) 6uš (5Lb Water Cooker ge இரகசியமாக எடுத்து அதனுள் அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், உப்பு, மிளகுத் தூள் எல்லாவற்றையும் கலந்து, இட்டு ஒரே அவியலாக அவித்துச் சாப்பிட்டுவிட்டு, Cooker ஐயும் கட்டிலுக்குக் கீழே தள்ளிவிட்டு, சிவமேயென்று படுப் போம். எல்லாத்துக்குந்தான் ஜெர்மன் காரர்களைச் சும்மா அநியாயம் சொல்லக் கூடாது. சில ஹொட்டல்களில் நாமே சமை யல் செய்து கொள்ளத் தாராள வசதி செய்யப்பட்டிருந்தது. சமையல் பொருட்க ளுக்கான பணமும் தாராளமாகவே கொடுத் தார்கள். இருந்த இரண்டொரு பாகிஸ் தானி, இந்தியர்களின் கடைகளில் செத்தல் மிளகாய், மிளகாய்த் தூள், கொத்தமல்லி,
நற்சீரகம், அப்பளம், நெத்தலி, தயிர், புளி
மல்லிகை மார்ச் 2008 & 13

Page 9
தொன் கணக்கில் விலைப்படத் தொடங்க, அவர்கள் மேன்மேலும் கிளைகளை விஸ் தரித்துக் கொண்டார்கள்.
பெர்லினில் இருந்த ஈழ அகதிகளுள் அனலைதீவு, அல்லைப்பிட்டி, மண்டதிவு, கரம்பன் ஆட்கள்தான் விகிதாசாரத்தில் அதிகம் பேர் இருந்தனர். ஒவ்வொரு அகதி யும் தமக்கு ஏன் அரசியல் தஞ்சம் தரவேண் டும் என்பதை விளக்கி ஒரு "கேஸ் எழுதிக் கொடுக்க வேண்டும். அனலைதீவு வாசிகள்
எழுதிக் கொடுத்த "கேஸ்களில் அனேகமா
னோர் தான் தான் "அனலைதீவுTulfகிளை யின் செக்கிரட்டரி என்று தவறாமல் எழுதி னார்கள். அவர்கள் கேஸ்களைப் பெற்றுக் கொண்ட சட்டத்தரணிகளும் அடேங்கப்பா அப்போ, Tulfக்குக் கிளைகள் அனலை தீவில மாத்திரம் ஐநூறு வரையில இருந்தி ருக்கு." என்று'அதிசயப்பட்டார்களாம்!
மாலையானதும் ஒவ்வொரு ஹொட்டல் களிலிருந்தும், மற்றக் ஹொட்டல்களுக்குச் சனம் கூட்டங்கூட்டமாக விசிட்டுக்குத் திரி யும். குறிப்பாய் சமைக்க அனுமதியில்லாத ஹொட்டல் சனம் பொலீசில விசாவுக்கு நின்ற கியூவிலயோ, சோஷலில் கியூவிலயோ பழக்கம் பிடிச்ச சனமிருக்கிற ஹொட்டல் களுக்கு அணுக்கமாய் பச்சையரிசியென் றாலும், ஒருவாய் சோறு யாரும் கூப்பிட்டுத் தரமாட்டானொவென்ற நப்பாசையில், பியர் போத்திலும், கையுமாய்ச் சுழலும். எங்கேயோ, எப்படியோ சாப்பாடானதும், 'பிராங்போட் டில் பதினெட்டுப் பேர் டிப்போட்டாம், ஹைல் புறோணிலயிருந்து முப்பத்திமூண்டாம்.' என்பது போன்ற அமங்கலச் செய்திகளைத் தான் கொண்டு வந்து சேர்க்கும்.
'டிப்போட்டுகள் தவிரக் காணும் தமிழரி டையே வேறு கதைகளே இருக்கவில்லை.
இன்னும் துட்டும் துணிச்சலுமிருந்த சிலசனம் பரம இரகசியமாக, பிரான்சில் புதுச்சேரிக்காரரிடமும், சூரினாம்காரரிடமும் கடவுச்சீட்டுக்களைக் காசு கொடுத்து வாங் கித் தலைகளை மாற்றி ஒட்டிக் கொண்டு கனடா, அமெரிக்கா, அலாஸ்காவெனக் கண்டந் தாவும் முயற்சிகளிலீடுபட, மெய்யா லும் எம்மையுந் திருப்பி அனுப்பிவிடுவார் களோ? என்கிற பயம் லேசாகத் தொற்றிக் கொள்ள, மனம் விசராந்தியாகி மிதியுந்தில் ஃப்றீ. வீலில் (மிதிக்காமலே) போவது போல பிடிப்பெதுவுமின்றி உழன்று திரிந்தது.
ஒரு சனிக்கிழமை சரி லுண்டா'வுக் sitsugi (A Floor market for secondhand items) போய் வரலாமென்று, Uban ல் ஏறினேன். அதிலும், அன்று சற்றே நெரிசலாக இருந் தது. ஒரு தரிப்பில் ஒரு இடம் காலியாக அதற்கு ஓடினால், இன்னொரு இளம் ஜெர்மன்கார னும் அதுக்கே ஓடிவருகிறான். என் இயல் பான பின்னடிக்கும் சுபாவத்தால், அவ்வாச னத்தை அவனுக்கே விட்டுக் கொடுத்தேன். அவனோ உட்காராமல் தெளிவான ஆங்கிலத்தில், "Hi. Comrade! Why do you offer me the Seat?.... 616öTD G3s LIT66T."
எனக்கு அப்படித்தான், அப்போது Guthsi) Guisg, "it's your train know........... so it's your seat....."? 676tt (3D6it."
'Who say so?'
"You have the priority'
"Oh..... No! You are totally mistaken..... Personally think all Universal materials belong to everyone in the Universe and everyone has the equal right on them. I come from Such a School. Your attitude causes me a ter
rible pain'' 61661 priest.
மல்லிகை மார்ச் 2008 & 14

எங்கள் சம்வாதம் ஒரு முடிவுக்கு வர முதலே இடையில் ஒரு அகலமான பெண் மணி வந்து அவ்விடத்தில் வசதியாக அமர்ந்து கொண்டு கால்களை ஆட்டவுந் தொடங்கியிருந்தார்.
*Okay, That's good doctrine indeed. Bu who will appreciate it?'" 67667(3D66T.
"Let's change a Ten......... who Will change a Hundred and they will do a Thousand..... likewise a million!" 6T63 p6, gol60)Lu 6in)03L சன் அதற்குள் வந்துவிட்டது. இறங்கிப் போகும் போது, தன் விசிடிங்காட்டை நீட்டினான். அதில் அவன் பெயர் விபரங்
களைத் தவிர,
BREAD FOR THE WORLD
தனிப்பிரதி தேை
மல்லிகை ஆண்டுச் சந்தார் சுவைஞர்களுக்கு ფა(Ib வேண்டுகோள். மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள். வப்பருவோர் ரூபா 40க்கு முத்திரைதள் அனுப்பிப்வபற்றுக் கொள்ளவும்
ஆண்டுச் சந்தா 450/-
భ - *線 (தபாற் செலவு 100 ரூபா) X x^ காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva stors sistialloy b.c. காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Jeeva. Kotahena, P.O. sistä குறிப்பிட்டு அனுப்பவும். தொடர்பு கொள்ள வேண்டிய 家 முகவரி : శళ 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13.
தொலைபேசி 232O721
LETUS CREATE A WORLD WITHOUT BARRERS
என்று ஆங்கிலத்திலும் இன்னும் பல வாசகங்கள் ஜெர்மனிலும் அச்சிடப்பட்டிருந் தன. அநகாரிக தர்மபாலா போன்ற சில சரித்திராசிரியர்கள் திரித்த சரித்திரத்தை, சந்திரிகா விஜேகுமாரதுங்க படித்திருந் தாலும், அப்போதெல்லாம் அவர் இலங்கை யில் தமிழர்கள் வந்தேறு குடிகள்' என்று தென் ஆபிரிக்காவுக்குச் சென்று பேசியிருக் கவில்லை.
அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டிருந்தேன், வெகுநேரமாக,
8 3.
భ
மல்லிகை மார்ச் 2008 ஜ் 15

Page 10
Οιό, ήδηωλαΘαι!
ایالت به -
நீங்கள் பயந்தது போல் என்னை
அவர்களின் பீடத்தில் பலியிடத் தேடி வருவார்கள்
என்னைக் காப்பாற்ற உங்கள் துணை உள்ளதென்றாலும்
ஒளி பூக்கும் கிழக்கில்
மதி மேயும் இரவினிலும் பள்ளத்தாக்கெங்கும் பூத்திருக்கும் ஒவ்வொரு பூக்களிலும் வானத்தினை சுமக்கும் ஒவ்வொரு பறவைகளின் சிறகுகளிலும் மரங்களை அலங்கரிக்கும் வசந்தத்தின் வாசலிலும் உழைத்திடும் மக்களின் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும் காட்டுக் கொடிகளிலும்
மணல் வெளிகளிலும்
மலைத் தொடர்களிலும்
அடிவாரத்தின் புல்வெளிதனிலும் அருவிகள், சேனைகள், வயல்வெளிகள் மேச்சல் நிலங்களென காணுகின்ற எல்லா இடத்திலும், செயலிலும், அசைவிலும் என்னைக் கலந்து விட்டேன்
ஆம் நண்பர்களே!
பிரபஞ்ச வெளியில் கலந்து விட்ட என்னைப் பிணமாக்கி பார்த்திட துடித்த யாவரும்
இனி
ஏமாறப் போகிறார்கள்.
மல்லிகை மார்ச் 2008 & 16

Uல (OSை 3ேறறக் கடித்திருப்Uை தகர்த்திக் கெmருை நின்ற2) Ólom2Ö (8UgbÖbay
ഉ.ക്കgCിങ്ങ് ിഖUിങ്ങേjb 6Ushape. U(b32dshay 66).9306 புதைந்தmர்கள்
s 3്ക് ഉ_6\ട്
Uெருந் திறவm ைபக்தர்கள்
N திடலுக்குச் அற்றுத் தள்வி நின்று மூச்சு வnnங்கியJ2, வன்டி ܠܠ
弹 án bഗ്ര6ിഖങ്ങി കിടക്
திடல் 3ேருக்கி விறைந்தை
Un3ேறn ஒருத்திலின் கைக் குgற்தை கை தவறி ?Qu) കിടക്കഞ്ഞ_76\ ിക്കി
மூச்சைப் பறிகெmருத்தத
ക്തക്കുക._ (3ഖങ്Qu) ക്രിബവ്രി கவலை கsடி மூக்குச் சிந்தின்)
“ஆத்த! உன்ைைப் பnர்க்க வந்த
ാീേട്, 2.6തമ്) ധനപ്രQ3.J'ഝേ
Uழுத்த குறலென்றின் ஒப்UmறியJடில் 3ேஆnவில் திடல் இருகmடmஆை.
மல்லிகை மார்ச் 2008 & 17

Page 11
Guaran) 6ຫຽ່ສົGງຂຶ- ໄຂ
-நாச்சியரதீவுUர்லீன்
5ட்டார் விமான நிலையம், மிகுந்த பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவு 12.00 மணியிருக்கும், நானும் தம்பி பர்சாத் அஹமட், நண்பர்கள் ஹிசாம், முனல்பர், அன்வர் சதாத், பஸ்மிர் என்று நிறையப் பேர் என்னை வழியனுப்பி வைப்பதற்காய் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். முதன் முதலில், இந்தக் கட்டார் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, இருந்ததை விடவும், இப்போது அசுரமான தொழில் நுட்ப முன்னேற்றத்தை அடைந்திருந்தது, இந்த விமான நிலையம்.
ஊருக்குப் போகிறோம், என்ற உச்ச கட்ட சந்தோஷம் என்னை ஆட் கொண்டிருந்தது. இருந்தும், மெல்லிதாய் சின்னச் சோகமும் எனது இதயத்தில் அப்பியிருப்பதை என்னால் உணர முடிந்தது. இந்தக் கட்டார் மண்ணில் வாழ்ந்து கழித்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் நெருக்கமாய் பழகிய நண்பர்கள், ஒய்வு நேரங்களில் நான் மிகவும் விரும்பிச் சென்று அனுபவித்து வரும் கோர்னேஜ் கடற்கரைக் காற்று, அவ்வப்போது நிழலுக்காக ஒதுங்கும் ஈச்சமரங்கள், 15வது டோகா ஏசியன் கேமில் புதிதாகக் கிடைத்த நண்பர்கள், பழகிய இடங்கள், அடிக்கடி சென்று வரும், கட்டார் கெஸ்ட் சென்ரர் லைபிறரி என்று இந்தக் கட்டார் வாழ்வில் என்னோடு பின்னிப் பிணைந்த பல்வேறு பட்ட நபர்களையும், இடங்களையும் நான் பிரிந்து போகின்றேன்" என்ற கவலை தான் அதற்குக் காரணம். இருந்தும், ஊர் போகின்றோம் என்ற சந்தோஷமே துக்கத்தை மீறிக் காணப்பட்டது.
இலங்கை விமான நிலையம், தாமதங்கள் ஏதுமின்றி குறிப்பிட்ட நேரத்தில், பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தேன். விமானத்தில் பயணம் செய்த அந்த நான்கு மணி நேரமும் எப்படிக் கழிந்தது, என்று எனக்குத் தெரியவில்லை. காரணம், சுதாராஜ் அவர்களின் காற்றோடு போதல்’ என்ற சிறுகதைத் தொகுதியையும், டால்ஸ்டாய் பற்றிய ஒரு நூலையும் வாசிப்புக்காகத் டிேப்பிடித்து கட்டாரில் வாங்கிக் கொண்டேன். எனவே, எனது விமானப் பயணத்தில் எந்த விதமான இடையூறுகளையோ, அல்லது அலுப்பையோ நான் கண்டு கொள்ளவில்லை.
இலங்கையில் விமான நிலையத்திலும், ஏகப்பட்ட மாற்றங்கள், முன்னேற்றங்கள் என்பனவற்றை கண்களால் பருகிக் கொண்டேன். ஏலவே, நான் வருவது பற்றி மிக நெருக்கமானவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அன்பு ஜவகர்ஷா, வசீம் அக்ரம், கெகிராவ சஹானா சமான், உக்குவளை பஸ்மினா அன்சார், மஹோ சவுரீகா பர்வீன் என்று இலக்கிய ரீதியான நண்பர்களுக்கு ஏலவே, நான் வருவது பற்றி தெரிவித்திருந்தேன். தவிரவும்,
மல்லிகை மார்ச் 2008 & 18

டொமினிக் ஜீவா, மேமன் கவி போன்றோர் களுக்கு தொலைபேசியில் நான் வருவது பற்றி தெரிவித்திருந்தேன். எனது நீண்ட கால இலக்கிய நண்பன் பளலுவெவ அஸ்ரப் அலி அவ்வப்போது, என்னோடு பேசும் போது, எனது வருகை பற்றி விசாரித்துக் கொள் வார். எனவே, எனது ஊரையும், உறவை யும், இலக்கிய நண்பர்களையும் சந்திக்
கின்ற ஆவலும், சந்தோஷமும் இங்கே விமான
நிலையத்தில் கால் வைத்த போதே, என் னுள் ஆட்கொண்டு விட்டது.
விமான நிலையத்திற்கு, எனது தம்பி றியாஸ் அஹமட்டும், எனது தங்கை தில் சாத் றைகானாவும், அவரது கணவர் ரமீசும், எனது நானாவின் மகள் ஹப்சாவும், எனது சாச்சா ஜெசாயிலும் வந்திருந்தார்கள். பரஸ் பரப் பாதுகாப்புக் கெடு பிடிகளைத் தாண்டி வெளியேறி இலங்கையை இரண்டு ஆண்டு களின் பின்னர் தரிசிக்கின்றேன். ஆஹா எத்தனை அழகு இதமான தென்றல் காற்று வந்து என்னைத் தழுவி வரவேற்கின்றதே! பார்க்கும் முகங்களில் எல்லாம் பரபரப்புத் தொற்றிக் கொண்டிருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. சில முகங்களில் ஒப்புக்காகவேனும், புன்னகையைக் காண முடியவில்லை. எதோ, ஒரு சோகத்தைச் சுமந்துகொண்டு தான் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை நகருவதாய்ப் பட்டது, எனக்கு. இந்தப் புறச் சூழல் பற்றிய அவதானிப்பின் நடுவில், எனது தம்பி றியாஸ் அஹமட் என் னைக் கண்டு கொண்டார். எனவே, இயன் றளவு விரைவாக நாம் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினோம். சுமார், நாலைந்து மணிநேரப் பயணத்தின் பின்னர், வீடு வந்து சேர்ந்தோம். எனது கிராமத்தின் புழுதி படிந்த தெருக்கள் புதிதாகத் தார் ஆடை அணிந்திருந்தன!
பாதைகள் செப்பனிடப்பட்டிருந்தன, சில மரங்கள் வெட்டப்பட்டிருந்தன, பல மரங்கள் புதிதாய் உருவாகியிருந்தன, புதிது புதிதாய் வீடுகள் முளைத்திருந்தன. வெறும், இரண்டு வருடங்களில் சின்னச் சின்னதாய் ஏகப் பட்ட மாற்றங்கள்! எல்லாவற்றையும், உள் வாங்கிக் கொண்டேன். இன்னும், இரண்டு நாட்களில் என்னோடு கட்டாரில் வேலை செய்த நெருங்கிய நண்பன் ஹாரூனின் திருமணம். எனவே, அவனோடு பேச வேண் டும் என்ற என் உள்மன உந்துதல் காரண மாய், அவனோடு பேசினேன்.
நான் இலங்கuையில் கால் வைத்து வெறும் இரண்டு நாட்களில் நிறைய விடயங் களை அவதானித்தேன். நிம்மதியிழந்த பொழுதுகள், வாழ்க்கையோடு போராடும் பொதுமக்கள், எங்கே எது நடக்கும் என்று உணர்ந்து கொள்ள முடியாத ஒரு நிலை, பூதாகரமான பொருட்களின் விலையேற்றம், அரசியல்வாதிகளின் பச்சோந்தித்தனம் என்று இன்னும் என்னென்னவோ..!
நண்பன் ஹரூனின் திருமணத்திற்கு செல்கின்ற போதுதான், கட்டாரில் நான் கலந்து கொண்ட சில திருமணங்கள் பற்றிய நினைப்பு வந்தது.
உண்மையிலேயே கட்டாரில் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற சில மறக்க முடி யாத சம்பவங்களில் நான் கலந்து கொண்ட இந்த திருமணங்களும் குறிப்பிடக் கூடியவை அப்போது, நான் கட்டாருக்குச் சென்று சுமார் ஒரு வருடம் இருக்கும். அவ்வப் போது, கிடைக்கும் ஒய்வுகளில் நண்பர்களு டன் உலாவி வரும் போதுகளில், பாலை வனங்களில் நிறுவப்பட்டிருக்கும் கொட்டில் களை அவதானித்து நண்பர்களிடம் விசா ரித்த போதுதான், புரிந்தது. அது திருமணக்
மல்லிகை மார்ச் 2008 ஜ் 19

Page 12
காலங்களில் திருமணத்திற்காக நிறுவப் பட்டிருக்கும் கொட்டில்கள் என்று.
அராபிய திருமணங்களில் உள்ள சுவார சியங்களை நண்பர்கள் சொல்லக் கேட்டி ருக்கின்றேன். அவர்களின் அணுகுமுறை கள், மரபுகளை மதிக்கும் பண்புகள் பற்றி யெல்லாம் கேள்விப்பட்டிருந்த எனக்கு, ஒரு அரேபியத் திருமணத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏலவே, இருந்தது. இதனை நண்பர்களிடம் சொன்னேன். அவர்களும் அன்றிரவு நடக்க இருக்கும், திருமணத்திற்கு என்னை அழைத்துச் செல்ல இசைந்தனர்.
திட்டமிட்டபடி நண்பர்களுடன் திருமணம் நடை பெறும் அந்தக் கொட்டிலை நானும் நண்பர்களும் அடைந்தோம், திறந்த வெளி களில் பாலைவன நிலப்பரப்புக்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் கொட்டில் கள் அமைக்கப்பட்டே, திருமணம் நடை பெறும். எப்போதும், இரவிலே இந்தத் திரு மணங்கள் நடைபெறுவதனால், விளக்கா லான அலங்காரங்களுக்கு என்றுமே பஞ்ச மிருக்காது! அத்தோடு, இந்த அரேபியர்கள் இயற்கையிலே பந்தாவான போக்குடைய வர்கள். தம்மை அடுத்தவர்கள் பெரிதாய் நினைக்க வேண்டும் என்பதற்காகவே, பல ஆயிரங்களை, பல இலட்சங்களை அள்ளி எறியக் கூடியவர்கள். இதனைப் பல சந்தர்ப் பங்களில் நான் அவதானித்திருந்தாலும், இந்தக் கல்யாண வீட்டு அலங்காரங்களை யும், அவர்களின் நடத்தைகளையும் அவ தானிக்கின்ற போது, அதனை இன்னும் வலுவாக நம்பவே தோன்றியது.
பொதுவாகவே, பாலைவனங்களில் வைத்துக் கொண்டாடப் படக்கூடிய ஒரு சம்பிரதாய சடங்காகவே, திருமணங்களை
இந்த அரேபியர் கருதுகின்றனர். தமது உறவினர்களை மட்டுமே, அவர்கள் அழைப் பது வழக்கம். திறந்த வெளி அரங்குகளில் நடப்பதாலும், அவர்கள் திறந்த அழைப்புப் ப்தாதைகளைத் தொங்க விடுவதாலும், அரபியரும், அரபியல்லதவர்களும் இந்த விழாக்களில் கலந்து கொள்வார்கள். அரபி யல்லாதவர்கள் இந்தத் திருமணங்களில் கலந்து கொள்வது அனேகமாகச் சாப்பாட்டுக் காகவே. இதனையும் தாண்டி சிலர் அவர் களின் கலாச்சாரங்களைக் கண்டு கொள்வ தற்கும், அல்லது என்னதான் செய்கிறார் கள் பார்ப்போமே, என்ற தோரணையிலும் வந்து பார்ப்பதுண்டு. எப்படியோ, அன்றைய திருமண விழாவில் எந்த அழைப்பிதழும் இல்லாமல் நானும், எனது நண்பர்களும் கொட்டிலுக்கு முன்னால் போடப்பட்டிருந்த கதிரைகளில், அமர்ந்து நிகழ்வுகளை அவதானிக்கத் தொடங்கினோம்.
இந்தப் பாலைவனக் கொட்டில்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு ஆண்கள் மட்டும் தான், சமூகமளிப்பார்கள். பெண்கள் வீட்டோடு, அல்லது திருமணம் நடக்க விருக்கும் ஹோட்டலில் இருப்பார்களாம். ஆண்கள் மாப்பிளையை வாழ்த்தியும், குலப் பெருமைகளை ஞாபகப்படுத்தியும், தமது மூதாதையர்களின் வீரம் செறிந்த வரலாறுகளை நினைவு படுத்தியும், கவிதை வடிவில் பாடல்களை அழகிய இராகத்து டன் ஒரு மெல்லிய ஆட்டத்துடன் இசைப் பார்கள். அதில் எல்லோரும் சேர்ந்து பாடுவ தும் உண்டு. அல்லது, எசப்பாட்டுப் போல ஒரு குழுவினல் பாடி முடிக்க அடுத்த குழுவினர் பாடுவதுமுண்டு. இந்த வழக்கம், தொண்டு தொட்டு, காலம் காலமாகத் தமது பாரம்பரிய காலாச்சாரமாகச் செய்து வரு கின்றனர். அத்தோடு அதனை தமது அடுத்த பரம்பரைக்கு ஊடு கடத்த முனையும் வகையில், சிறுவர்கள், இளைஞர்களையும் இந்தப் பாடல் பாடும் நிகழ்வில் இணைத் துக் கொள்கின்றனர். இந்தப் பாடல்களை
மல்லிகை மார்ச் 2008 ஜ் 20

முன்னர் குடும்பத்திலுள்ள ஆண்கள் மட்டுமே, சேர்ந்து பாடுவார்களாம். அனால், இப்போது களில் இதற்கென்றே குழுக்கள் அரேபியப் பிரதேசம் முழுக்க காணப்படுவதாக ஒரு கத்தார் நண்பர் சொன்னார்.
வெள்ளை நிற நீண்ட ஜoப்பாக்களை அணிந்து கொண்டு, தலையில் அழகிய தலைப்பாகையும், இன்னும் சில அலங் காரங்களுடனும், இந்தப் பாடல் குழுவினர் தமது இசையோடு சேர்ந்த அசைவுகளுக்கு ஒத்த வண்ணம் பாடல்களைப் பாடும் போது, அதன் இனிமையும், புதுமையும் மொழி எனும் புரிதல் தொடர்பான சிந்தனை களை யும் தாண்டி மெய்யாகவே ரசிக்க வைக்கின் றது முன்னரெல்லாம் எமது கிராமத்துத் திருமணங்களில் பெண்கள் குழுக்கள், ரப்பான் என்ற ஒருவகை மேளத்தை அடித் துப் பாட்டுப் பாடுவது என் ஞாபகத்துக்கு வந்தாலும், வழக்கொழிந்து போன இந்த நிகழ்வுகள் இன்றும், இன்னும் அரேபியா வின் பாரம்பரிய சடங்காகப் பின்பற்றப் பட்டுக் கொண்டு வருவதை எண்ணி என் னால் வியக்காமல் இருக்க முடியவில்லை
அரேபிய இந்தக் கல்யாணங்களிலேயே பாடல்கள்தான் முக்கிய சங்கதியாகும். அதன் பின்னர், சகன்களில் உணவு பரிமாறப் படும். தொடர்ந்து, மாப்பிள்ளையை அழைத் துக் கொண்டு பெண் இருக்கும் வீட்டுக்கு அல்லது, ஹோட்டலுக்கு அழைத்துச் செல் வார்கள். வெறும் ஓரிரண்டு மணிநேரத்தில் ஒரு அலாதியான பொழுது போக்காக, இந்த அரேபியத் திருமணங்கள் கருத முடியும். என்றாலும், எல்லாத் திருமணங்களுக்கும், திறந்த அழைப்புக் கிடைப்பதில்லை. அதனால், சாப்பாட்டுக்காக மட்டுமே செல் லும் அரேபியல்லாதவர்களுக்குப் பெரும் சங்கடம் தான். கலையும், பண்பாடும், வெவ் வேறு பிரதேசத்தில் வெவ்வேறு வகையில் அரங்கேற்றப்பட்டாலும், கால, தேச வர்த்த மானங்களையும் தாண்டி, அதனை ரசிக்க முடியும் என்பதனை இந்த நிகழ்வுகள் எனக்கு நிறுவிக் காட்டியது.
(இன்னும் பேசுவேன்.)
மல்லிகை மார்ச் 2008 ஜ் 21

Page 13
CSLDLocirasci &. memonkavi (a yahoo. com
பெட்டைக்குப் பட்டவை
http://peddai.blogspot.com/
இம்மாத இப்பகுதிக்கான விடயங்களை தேட இணையத்தில் வலைப் பக்க பகுதியில் உலாவிய பொழுது ஒரு பொடிச்சி என்பவர் பெட்டைக்குப் பட்டவை எனும் தலைப்பில் அவர் உருவாக்கி இருக்கும் வலைப்பதிவில் பல முக்கிய விடயங்கள் வாசிக்க கிடைத்தன.) அவற்றில் சிலவற்றை மல்லிகை யின் இந்த இதழிலும் அடுத்த இதழிலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள லாம் போல் தோன்றுகிறது. முதலில் ஒரு பொடிச்சி தன் வலைப்பதிவில தன் குறிப்பில் சொல்வதை பார்ப்போம்.
“ஒரு Columnist (பத்தி எழுத்தாளினி) உருவாகுகிறார்! பராக் பராக் எல்லாவிடங்களிலும் பார்த்தால் அரசியல். இலக்கிய அரசியல். அவன் இவன், எக்ஸில் உயிர்நிழல், பின்நவீனத்துவம் செயமோகன், அமார்க்கஸ்சு, விடியல், அடையாளம், ரவிக்குமார், காலச்சுவடு உயிர்மை குழப்பமோ குழப்பம் என்னதான் செய்யிறது? பதிப்பு வசதி இருக்கெண்டிறாங்கள், பதியுங்கோவன் உங்கட எழுத்தையெண்டிறாங்கள். பாவி மக்கள் ஒன்று புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல. அதுகளுக்கெல்லாம் ஒரு சின்னப் பெட்டை காசுக்கு எங்க போவாள்? இதுகளை எல்லாம் எவங் யோசிக்கிறாங்? 2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும். என்ன
மல்லிகை மார்ச் 2008 ஜ் 22
 

வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள. நா. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் G3,6 6T655i (6 out of nowhere sc5 வாெைமெைப விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogM column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒணிடுங் கிடையாதுசிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையஞக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்க ரென்சன் வந்தா அதற்கு தாற்பரிய தாதி(?) நான் இல்ல."
இவ்வாறாக தன்குறிப்பில் குறிப் பிடும் ஒரு பொடிச்சி குட்டி ரேவதி ஆசிரிய ராக கொண்டு வரும் பனிக்குடம் எனும் சஞ்சிகையில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர் அம்பை யின் பேட்டியை பற்றி எழுதி இருக்கிறார். அதனை பார்ப்போம்.
1998இல் காலச் சுவடில் வந்த அம்பையின் நேர்காணல் என்னைப் பாதித்த நேர்காணல்களில் ஒன்று. உயிர்ப்பாக, இயல்பாக, பேச்சில் ஒருவர் தன்னை
வெளிப்படுத்துவது -அவர் உண்மையாய
வாழ்கிறாரா இல்லையா என்பதற்கு அப்பால்பிடித்திருந்தது. (பேச்சில் மட்டும்) தவறு ஆகிரக்கூடாதென்கிற கவனத்துடன் மிக நிதானமாக, வாக்கு சாதுர்யத்துடன் பேசப் பட்டுத் தரப்படும் ஆட்களின் பேட்டிகள், நேர்காணல்கள் அனேகம் அவற்றில் ஒரு ஆளு மையை அடையாளங் காணமுடிந்ததில்லை. அந்தவகையில் அம்பையிடத்தில் சொந்த வாழ்க்கையில் அவரது போலித்தனங்கள் பற்றிய கவனம் இன்றி பெண்ணியமோ எந்த
ஒரு தத்துவத்தையும் வரட்சியாக முன்வைக்காதது நேர்மறையான அம்சமாக
இருந்தது.
இன்று, அம்பையின் புனைவுகள் தொய்ந்து, சில ஆண்டுகளிற்குப் பிறகு, இதில் மீளச் சந்திக்கிற அம்பையின் பேட்டியிலும் அவர் தமிழில் ஒரு நிராகரிக்க இயலாத ஆளு மையாக எழுகிறார். பெண்ணிய மொழியாட லில் சமகாலத்து மாற்றங்கள் வரை அறிந் திருக்கிற தேடல் உள்ளதொருவளாய் கருத் தாடுகிறார். அவை சின்னச் சின்ன விடயங்கள் புதிய தலைமுறை - கவனத்தில் எடுக்க வேண்டியவை- அம்பையால் இயல்பாக எடுத்துச் சொல்லப்படுகின்றன, தன்னுடன் ஒன்றிக் கலந்திருக்கிற கருத்துக்களாலேயே அது சாத்தியமாகும் தொடர் வாசிப்பும அவசிய மாயின் எதிர்வினையாற்றுவதும் பெண்ணிய உரையாடல்களில் இயல்பாக வருகிற சமத்து வத் தேடலும் அம்பையின் பலங்கள அம்பைக் கும் குட்டி ரேவதிக்குமிடையே இடம்பெற்ற இந்த உரையாடல் பனிக்குடத்திலிருந்து
ஆரம்பிக்கிறது.
காலம், சரித்திரம் இவை தொடப் படாத உடல் இல்லை, பெண் உடல் குழந்தை உடல், இளம் பெண் உடல், தாயின் உடல், தாயாகாத உடல் வயோதிக உடல் நோய வாய்ப் பட்ட உடல், ஆரோக்கியமான உடல், உடலுக் கான இன்பங்களை அனுபவித்த உடல், அவற் றைத் தவிர்த்த உடல் சாதி அடையாளம உள்ள உடல், பலாத்காரத்துக்கு உட்பட்ட உடல் என்று உடல்கள் பலதரப்பட்டவை. உடல் பற்றிய உணர்வுகளும் பலதரப்பட்டவை. எந்தவித வித்தியாசமும் அற்ற ஒற்றை உடலாய், ஒரே குணங்கள் உடையதாய்ப்
tosiosssos Lonfs 2008 率 23

Page 14
பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தை புறக் கணிக்கும் செயல். ஷெலன் ஸிஸ்யூ போன்ற வர்கள் உடலில் ஊறும் ரசங்களால் எழுது வது - பால், மாதவிடாய்க் குருதி போன்றவைஎன்று கூறும்போது அதை ஓர் எதிர்வினைச் செயலாகவே நோக்க வேண்டும். அதாவது, இது பெண் என்று நீ என்னைக் குறுக்கினால் அதையே ஒரு பிரம்மாணி டமாக்கிக் காட்டுகிறேன் பார் என்று கூறும் செயலாக அதைப் பார்க்கலாம். ஆனால் அதில் ஏற்கனவே கருப்பையை மையப்படுத்தி அடையாளப்படுத்திய பெண் உடலில் மீண்டும் புகுந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்தக் குறுக்கலை ஏற்கும் நிலை இருக்கிறது. அது மட்டுமில்லை. இது தான் நான் என்று அடையாளப்படுத்திக் கொண்டு நிலைபட்டபின் அது இல்லாத மற்ற உடல்களை விலக்கும் உதாசீனம் இருககிறது. பால் இல்லாத மாத விடாய்க் குருதி நின்று போன பெண்கள் எதைக் கொண்டு எழுது வார்களாம்? இப்படிப் பெண்ணின் உடலைக் குறுக்குவது இதுவரை இருந்த விளக்கங் களுக்கு உள்ளேயே பெண்ணை இருத்தும் செயல்தான். ஒரு காலகட்டத்தில் பனிக் குடத்தை பிரதானப்படுத்துவது தவறு அல்ல. ஆனால் பனிக்குடமே பெண் உடல் அல்ல. பனிக்குடமே இல்லாத, பனிக்குடத்தை சுமக் காத ஏகப்பட்ட பெண் உடல்கள் உண்டு. புற்றுநோய்க்காக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு முலைகளை இழந்த பெண்கள உண்டு. ஒருவகை உடலையோ, ஓர் அங்கத்தையோ நாம் பிரதானப்படுத்தும்போது சிலரைக் கூட்டிக்கொண்டு சிலரை ஒதுக்குகிறோம. (பக். 17, 19)
இன்று பெண்களது எழுத்து தொடர்பாய் ஆண்களைப்போல எழுதுகிறார் கள் என்கிற அட்டவணையின் கீழ் நிறைய
விமர்சனங்களும் தூற்றல்களும் வந்தாலும் அவற்றால் இத்தகைய அவதானங்களை முன் வைக்க முடிந்ததில்லை. மாறாக, அம்பை போன் றவர்களிடமிருந்தே இயல்பாக வரக்கூடிய இப் பதில்கள் மனதை நெகிழ்த்திவிடுகின்றன. பெண்கள் தம் கர்ப்பப்பையை கையகப்படுத் துவது தொடர்பான உரையாடல்களில் எல்லாம் கர்ப்பப்பை அற்ற நம்முடைய ஒலம் இருக்கிறது என்பாள் தோழரொருவர (இதைப் பற்றி ஃப்ரீடாவை முன்வைத்து பிறிதொரு போது தொடரவேண்டும்). பனிக்குடம என்கிற போது அதில் சொல்லப்பட்ட பெண்மையின் குணாம்சங்களிற்கான அழகியல், கவித்துவம், சாந்தம், அமைதி என ஒரு பவித்திரமான உணர்வு வெளிப் படுகிறது (தமது வெளியீட்டிற்கும் 'சூ ல் பெண்ணிலக்கிய வெளியீடு' எனவே பெயரிட்டிருக்கிறார்கள்).
அம்பை தொடர்கிறார்
72 இல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய ஆராய்ச்சியை நான் மேற்கொண்ட போது, 'உங்களுக்கு வேறு முக்கியமான விஷயம் எதுவும் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியத்துவம் இல்லாதது என்றே
கருதப்பட்டது கருதப்படுகிறது. இப்போதும்
நாங்கள் சில பெண்களைப் பேட்டி காணப் போகும்போது அவர்கள் வீட்டார் அல்லது சுற்றியுள்ளவர்கள் 'இவள் என்ன செய்து விட்டாள் என்று இவளைப் பேட்டி காண் கிறீர்கள்?’ என்று கேட்பதுண்டு. அந்தப பெண் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாம. அல்லது நிலஉரிமைக்குப் போராடிய ஒர் ஆதிவாசியாக இருக்கலாம். ஓர் எழுத்தாளராக இருக்கலாம். தொடர்ந்து நடக்கும் ஏய்ப்பு இது. (பக். 18)
மல்லிகை மார்ச் 2008 & 24

பல ஆண்கள், பெண்களைச சுவைக் கும் ஒன்றாகப் பார்த்தனர். உதடுகள கோவைக் கனி, கண்கள் திராட்சைப் பழம், முலைகள் மாம்பழம் என்று எல்லாம் ஒரே சாப்பாட்டுச் சமாசாரம்தான் மணியம் ஒரு கதையில திருமண மாகாத முதிர்கன்னியை 'ஊசிப்போன பண் டம் என்று வர்ணிப்பர். பெண்கள் எழுத்தில் ஆண்களைச் சாப்பிடும் வகையில் எதுவும் இல்லை. அவர்களுக்கு விருந்து படைக்கும் வைபவம்தான் பின் தொடரும் நிழலின குரலில் ஒரு கதாபாத்திரம், தனியாக இருக்கும் பெண் பாலூட்டும் இரு முலைகளுடையவளாகவும் பல பெண்கள் கூடி இருக்கும்போது அவர் கள் பெருச்சாளிகள் போல் இருப்பதாகவும் கூறுவார். ஊட்டும் தொழிலைத் துறந்து விட்டால் பெருச்சாளிகளாவதுதான் வழி போலும(பக். 18, 17)
பின் தொடரும் நிழல் போன்ற நூல் களின் மீது பெண்ணினுடைய வாசிப்பே நிகழாதது ழலில் (சக்தி இதழில் ராஜினி என்ப விரஎழுதிய இயலாமையின்புகலிடம தாய்மையா? என்கிற கட்டுரை பிநிகுரல் மீதான நல்ல தொரு விமர்சனம்), அத்தகைய எழுத்தாளர் களின் தந்திரமான மொழியின் ஊடே இவற்றை பகுத்தறிவதும் சனாதனவாதியாய்அவர பெண்கள் மேல் -கட்டுரைகளிலும் பெரு நாவல், புனைவுகளிலும் - வைக்கிற பார்வைகளை அடையாளங்காணுவதென்பதும் சிக்கலானது (உ-ம் அதிநவீனக் கதையாடலில பெண்ணை சக்தி என்று அவளது இயலுமைகளை (தான் விரும்பிய வண்ணம்) முன்வைத்து. மேல ஏற்றி அவளைப் பிள்ளைபேற்றிற்காகவும் கட்டுப்பட்டதன்னை அச்சமூட்டாத காமத் திற்காகவும்- பரிந்துரைப்பது, அப்படி இருப் பவளே அற்புதமானவளென (புனிதத்திற்குப் பதில்சொல்லாய் சக்தி என) முன்வைப்பது
போன்றன) அம்பை அவற்றிற்கு இயல்பாக எதிர்வினையாற்றுகிறார்.
அம்பையைப் பற்றி எழுத ஆரம் பிக்கிறபோதே, மேலே.'உண்மையாய் இருத்தல் பற்றி எழுதியிருக்கிறேன். குரேவதி அம்பை யிடம், ‘இன்றைய தமிழ் சூழலில் பெண்க ளின் எழுத்துக்கள் எந்த அளவிற்கு உண்மை யாக உள்ளன? என்று கேட்கிறார்.
உண்மையாக இருப்பது என்றால் என்ன குட்டி? எண்ணங்களுக்கா, வாழ்க் கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மை யாக இருப்பது என்று நினைக்கிறாயா? போலி அல்லாத எழுத்து என்று நீ சொல்ல நினைக் கிறாய் என்றால் எது போலி, எது உண்மை என்பதைப் பாகுபடுத்தக் காலம்தான் உதவ முடியும். மேலும் சில சமயம் ஒரு வெளிப் பாட்டின் போலித்தனத்தை நம் நுண்ணுணர் வால் மட்டுமே நாம் உணர முடியும். உண்மை’ என்று நீ நினைப்பது சந்தை யுடன் உடன்படாமை என்ற அர்த்தத்தில் நீ சொல்லி இருந்தால், இது பெண், ஆண் இருவர் எழுத்துக்கும் பொதுவான அளவு கோல் இல்லையா? இந்த அளவுகோல் மிக வும் ஒழுக்க உணர்வை ஒட்டி இருக்கிறது. இதை நாம் வேறு மாதிரி பார்க்கலாம். இன்றைய சூழலில் பெண்களின் எழுத்தின் மொழியும், உள்ளடக்கமும் எவ்வளவு தூரம் அவர்கள் சுயதேர்வாக இருக்கிறது? விருதுக் கெடுபிடி பிரசுரிப்பதற்கான கெடுபிடி, புகழுக்கான கெடுபிடி, இவை எல்லாம் இல்லாமல் வெளிப்பாடு ஒன்றையே குறியாகக் கொண்டுள்ளது என்று வேண்டுமானால் பார்க்க முடியும். ஆனால் இதுவும் பாலதன்மை அற்ற ஓர் அளவுகோல்தான். ஏனென்றால் வாழ்க்கையில் உள்ள 'உண்மைகளைப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று
மல்லிகை மார்ச் 2008 ஜ் 25

Page 15
நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். மேலும் இந்த உண்மையின் தன்மை மாறிய படியே
இருக்கிறது. .(பக். 14, 15)
உண்மை பற்றிய இவ உரையாடல் சுவாரசியமானது எப்போதும் உண்மையாய் இருத்தல் என்பது உடலோடு -அதனால்ஒழுக்கத்தோடு சம்மந்தப்பட்டதாயே ஒலிக் கிறது அதை விசுவாசம, நன்றியாய் இருத்தல் இப்படித்தான் வாசிக்கிறார்கள். உண்மையாய் இருத்தல் என்பதை பாசாங்கற்று இருத்தலா கப் பார்த்தால், தாம் நம்புகிற கருத்துகளிற்கு, சேருகிற துணைக்கு உண்மையாய, நேர்மை யாய் இருத்தல் என்பதை உடம்பு, மனம எனப்
பிரிக்க முடியாதென்றே தோன்றுகிறது.
பல ஆண் எழுத்தாளர்கள் பெண் கள் வாழ்க்கை பற்றி, அவர்கள் உணர்வுகள் பற்றி சிறப்பாகவே எழுதி உள்ளார்கள். இதற் கும் பெண்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எழுது வதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு பிச்சைக் கிரன் தன்னைப் பற்றி எழுதினால் தன அழுக்குச் Fால்வை, பரட்டைத் தலை, வளைந்த நகம் இவை பற்றி எழுத மட்டான். அவை அவனுக்கு
தவை. ஆனால் அவன் வாழ்க்கை பற்றிய உண்மையை எழுத விரும்புபவர்கள் இதை எழுதாமல் விட முடியாது.(பக். 17)
பெண்கள் உரிமைகளைப் பற்றி எழுத விழைபவர்களுக்கு எவ்வளவோ விட யங்கள் உறுத்தலாம். அவர்கள் போடுகிற பர்தா, பின்னால் காவுகிற ஆண் பெயர். அவர்களிடம் இருக்கிற ஆணாதிக்கக் கருத்துக்கள் என்று. தேர்தல் சமயத்தில், கருணாநிதி ஜெயலலிதாவை மலடி எனத் திட்டியதைப்
பற்றி அம்பை (காலச்சுவடு 54 ஜூன் 2004) எழுதியிருந்தார் (அம்பை மட்டும்தான் எழுதியவர் என நினைக்கிறேன்) அவருக்குப் போல, நிறையப் பேரை 'இவை உறுத்தும் வரையில் அம்பை போன்றவர்களின் இருப்பு அவசியமானது.
தமிழகத்தின் முக்கிய பெண கவிஞர் களில் ஒருவர் சுகந்தி சுப்பிரமணியம் ஒருவர். அவரது மீண்டெழுதலின் ரகசியம் எனும் தொகுதியில் (யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப் பகம்- முதல் பதிப்பு டிசம்பர் 2003) இடம் பெற்றுள்ள கவிதைகளில் சிலவற்றை ஒரு பொடிச்சி தன் பதிவில் இட்டுள்ளார். அந்த
கவிதை களில் சில உங்கள் பார்வைக்கு.
உயிர்ப்பு
ஒவ்வொரு கணமும் அழுது கொண்டிருந்தேன் ஜண்னல்களும் கதவுகளும் மூடிக்கிடந்தன. அறைகள் இருட்டியிருந்தன. ότεύουιτώ όiupοιτάστυνίτεύ கதவு மெல்ல அழைத்தது.
அழாதே சாப்பீடு எண்நது விழுந்து போய்
திருந்தேன். பேரிரைச்சஆடண் நகரத்தை அதிகாலை தந்தது. புண்னகையுடன் தரையிறங்கினேன். எண்ணைக் கழுவு எண்றது வாசல் கோலம் போரு விண்றது மண் தண்ணீர் விரு எண்நழைத்தன ológases.
மல்லிகை மார்ச் 2008 & 26

எனது உலகம் எதுவும் செய்ய முடியாது.
கேலியாய்ச் சீரித்தான், உண்மைதான். உண்மையில்லை. இந்த உலகம் குறித்து லீன் நம்பிக்கைகள் இண்ணம் éFøGösug ஆனால் நாண் நம்பிக்கையுடனர். இந்திய ஜோக் என்நான் ஒருவன். விரலை எண் மூண் நீட்டி கண்களை உருட்டியபடி அவன். இருந்தாசிலண்ன? நாண் இன்னமும் எனதுலகத்தைத் தொலைக்கவில்லை. முரண்பாடுகளே வாழ்க்கை என்றானபின்
எதுதான் சரி?
லிதுதான் தவறு?
எனது உலகம் 2
யாரைப் பற்றியும் பேச லினக்கு உரிமையில்லை. ஆனால் எண்ணைக் குறித்துப் பேச லீல்லோருக்கும் உரிமையிருப்பதாக அவன் சொன்னான்.
u/rir? érú6u/rss? óráði? நிர்ணயித்தார்கள் விண்நேண். அது உனக்கு அநாவசியம் 6615/40. லினக்கு மிகவும் அவசியமானதாக விண் உலகை உணர்ந்தேன். இவர்களின் சிசயல்கள் எனக்கு 6666 asyl கேள்விகளற்று உறைந்து
u്ഞത്.
எனது தோழிகள்
அவ்வப்போது சண்டையிட்டாலும் நாங்கள் நல்ல தோழிகளாகவே இருந்தோம். அஸ்மாவும், ஆரலியாவும்,
Augasůørôugub, áổøeru freguid அவர்களைப் பந்நிநாண் பேசும் áốMAT
என்னைப் பற்றி அவர்கள் பேசுவார்களென நினைத்தேன். பெரியவர்களின் மதச் சண்டை எங்களுக்கு . அநாவசியமாய் தெரிந்தது. பெரும்பாலும் லிங்கள் சமையல் அவரகளுககும அவர்களது எங்களுக்கும் பிடித்திருந்தது. நகரத்தில் கலவரம் நேரும் போதெல்லாம் நாங்கள் கவலைப்பட்டோம், அதைத் தவிர வேறு விண்ண செய்ய уц2ццup? எங்களுக்கான நேரம் மிகக் குறைவாக இருந்தது.
bossyegb. லீங்களை எதுவும் செய்துவிடாதபடி எல்லோரும் பாதுகாத்தனர். நாங்கள் நல்ல தோழிகளாக இருந்தோம், தோழிகளாக இருப்பதையே விரும்பினோம். ஒருவரின் கருத்து மந்நவருக்குப் பிடிக்காவிட்டாலும்,
ပိ................................. 0................O அடுத்த இதழிலும் ஒரு பொடிச்சியின் வலைப்பதிவிருந்து சிலதுகள் வரும்.
மல்லிகை மார்ச் 2008 ஜ் 27

Page 16
LDல்லிகையின் 43வது ஆண்டு மலர் தாமதமாக வந்தாலும், மிகவும் தரமாக வெளி
வந்திருக்கிறது. அழகான ரமணியின் அட்டைப்படம் கச்சிதமான வடிவமைப்பில் 160 பக்கங்களில் காத்திரமான பல படைப்புக்கள் உண்மையிலேயே இது ஒரு தனி மனிதனின் அசுர சாதனை தான். அம்மனிதனுக்கு 80 வயது என்பது தான் இதில் இன்னொரு ஆச்சரியமான விடயம்
சாதனை வீரன் முரளிதரனின் சாதனையைப் புதிய பார்வையில் மனுக்குலச் சாதனையாக நோக்கியதுடன், இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இக்கட்டுரையில் கூறியுள்ள விடயங்களும், இந்திய சஞ்சிகைகளின் பாராமுகத்தை இடித்துரைத்தமையும் சிறப்பான அம்சங்கள்! அடுத்து, ஆசிரியரின் கட்டுரையில் மல்லிகை வரலாற்றுடன் வெளிப்படுத்தியுள்ள அம்சங்கள் சிந்திக்க வைப்பவை. எனினும், தனிமனித சாடல்கள் தவிர்த்திருக்கலாம். மல்லிகை மலரும் இன்னொரு சாதனைதான்.
மல்லிகை 43வது ஆண்டு மலர்
ஒரு ரசனைக் குறிப்பு
- ിൽg ിങ്ങ്
இவ் ஆண்டு மலரில் பிரசுரமாகிய, கட்டுரைகளில் செங்கை ஆழியானின் ‘ஈழநாடு இதழின் புனைக்கதைப் பங்களிப்பு கட்டுரை மகுடம் சூட்டப்படத்தக்கது. ஆசிரியரின் அயராத உழைப்பினாலும், தேடலினாலும் அற்புதமான பல தகவல்களையும், எழுத்தாளர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து ஆவணப்படுத்தியுள்ளார். ஏனைய கட்டுரைகளில், மேமன் கவியின் ஈழத்துப் பெண்ணியக் கவிதைகள், சந்திரகாந்தா முருகானந்தனின் நவீன இலக்கிய உருவாக்கங்களில் பெண் மொழி ஆகிய இரு கட்டுரைகளும் கனதியானவையும், சிந்தனையைத் தூண்டுபவையாகவும் அமைந்துள்ளன. மேமன் கவியின் கட்டுரை, அவரது வாசிப்பின் வளத்தைப் புலப்படுத்துவதுடன், கவிதைத் தொகுதியின் குறை நிறைகளை அலசுவதுடன், இன்றைய பெண் கவிஞர்களின் படைப்புக்களை நெறிப்படுத்துவனவாய் அமைந்துள்ளது. சந்திகாந்தாவின் கட்டுரை பின் நவீனத்துவம், பெண் மொழி என்பன வற்றின் சிறப்புகளைக் கூறியுள்ளதுடன், அவை ஏற்படுத்தக் கூடிய எதிர்விளைவுகளையும் சுட்டி நிற்கிறது. ஏனைய கட்டுரைகளில் கெகிறாவ ஸ்ைேலஹா மொழி பெயர்த்துள்ள ரசல் பிறீட்மனின் குருடர்களின் வெளிச்சம்' எமக்கு ஒரு புதிய உலகை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு கட்டுரையைச் சுவாரஸ்யமாக வடித்துள்ளமையும், சிறப்பு அம்சம். அடுத்து, அந்தனி ஜீவாவின் இலங்கைப் பெண் எழுத்தாளர்கள் தொடர்பான கட்டுரை பல தகவல்களைத் தருகின்றது. எனினும், மட்டுப் படுத்தப்பட்டளவில் அவரால் வெளியிடப்பட்ட, தொகுதியில் இடம் பெற்ற கதாசிரியர்களுடன் நிற்கிறது. பெண்ணிய எழுத்துக்கள் வீச்சுப் பெற்ற காலகட்டத்தை இன்னொரு கட்டுரையில் அவர் எழுதலாம். சிவசேகரத்தின் கவிதைகள் பற்றிய செ. யோகராசாவின் கட்டுரை, சிவசேகரத்தின் வெட்டு முகத்தைத் தரிசிக்க வைக்கிறது. ந. இரவீந்திரனின் ‘தமிழகத்தில் வீறு கொண்டு எழும் மார்க்சியம்" ஒரு உணர்வுப் பரிமாணம், கட்டுரையில் தமிழகத்தில் எழுச்சியுறும் மார்க்சியம் பற்றி
மல்லிகை மார்ச் 2008 ஜ் 28

ஆதாரபூர்வமாக வரைந்துள்ளார். பின் நவீனத்துவ மார்க்சிய அம்சங்களை அலசி விமர்சித்துள்ளமை பாராட்டத்தக்கதாகும். அரசியலாளர்களின் பார்வைக் குறிப்பும், நியாயமான சுட்டுதலே.
அடுத்து மல்லிகையில் தொடராக வரும் நாச்சியாதீவு பர்வீனின் 'பேனாவால் பேசுகி றேன் இம்முறையும் சுத்தம் பற்றிப் பேசுகி றது. உடப்பூர் வீரசொக்கனின் ‘தமிழரின் தனித்துவத்தைப் பேணும் உடப்பின் கலா சார, பண்பாட்டு விழுமியங்கள் கட்டுரை நாம் அதிகம் அறியாத தமிழ் காக்கும், தமிழ்ப் பிரதேசமொன்றை தரிசனமாக்கி றது. புத்தக வெளியீடு, விநியோகம், விற் பனை பற்றித் திக்குவல்லைக் கமால் கருத் துக்களை வெளிப்படுத்தியுள்ளார்: தீர்க்கப் படாத பிரச்சனைகளில் ஒன்றாகவே இவ் விடயமும் இழுபடுகின்றது. பத்மா சோமகாந் தன் தனது இளவயது இலக்கிய அநுபவம் பற்றி 'வெறி அரங்கேறியது மூலம் வெளிப் படுத்தியுள்ளார். கே. எஸ். சிவகுமாரன் திரு வனந்தபுரத்தையும், சினிமாவையும் தரி சிக்க வைக்கும் அதேவேளை, அந்தணி ஜீவா சென்னையையும், ஜெயகாந்தனை யும் நினைவூட்டுகிறார்.
மல்லிகை ஜீவாவின் மேடைப் பேச்சுக் களும், பேட்டிகளும் பல சமயங்களில் பர பரப்பை ஏற்படுத்துவதுண்டு. லங்காதீப பேட்டியில், தெற்கின் ஆட்சியாளர்கள் மட்டு மல்ல, இலக்கியவாதிகள் கூட, எம்மை ஏமாற்றிவிட்டார்கள், என்ற கருத்தை ஜீவா கூற, அடுத்த வாரமே பிரபல சிங்கள எழுத் தாளர் குணசேன விதான அதற்குத் தன் மறுப்பைத் தெரிவித் திருந்தார். ஜீவாவின் பேட்டியும், குணசேன விதானவின் பதிலும், திக்குவல்லை ஸப்வானால் மொழி பெயர்க் கப்பட்டு, ஆண்டு மலரில் பிரசுரமாகியுள்ளது. ஜீவாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து மாத்திரமன்று. இதுவே தமிழ் மக் களின் கருத்தாகவும் இருக்கின்றது. குண சேன விதான குறிப்பிட்டுள்ளது போல, சில விதிவிலக்குகள் இருக்கலாம். அண்மை
யில் சூரிய வட்டத்தினர் ஒழுங்கு செய்த, தமிழ், சிங்கள எழுத்தாளர்கள் ஒன்று கூடல் போல். எனினும், தமிழ் மக்களின் நிலையை வெகு சில சிங்கள எழுத்தாளர்களே புரிந்து கொண்டுள்ளார்கள். விதானவின் பதிலில் கூட, போராளிகளைப் பயங்கரவாதி என்று குறிப்பிட்டுள்ளமையை இதற்கு ஒரு உதார ணமாகக் கூறலாம். போராளிகள் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்று நான் கூற வரவில்லை. அதற்கான காரணி களையும், அரச பயங்கரவாதத்தினையும் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
ஆண்டுமலர்க் கவிதைகளில் போதாமை தெரிகிறது. பின்னிணைப்புக் கவிதைகள் மூன்றும், விமர்சனக் கட்டுரைகளில் வந்த கவிதைகளும் ஏற்படுத்திய எதிர்வினை, மலர்க் கவிதைகள் ஏற்படுத்தத் தவறிய போதிலும், முற்றிலும் தரம் தாழ்ந்தவை யுமல்ல. முரீபிரசாந்தனின் கவிதை மரபுப் பிரியர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. முத்து மீரானின் கவிதையில் கனதி இருப்பினும், கவித்துவம் குன்றியுள்ளது. மல்லிகாவின் மீண்டும் அங்கிருந்தேன் சுவையாக இருந் தது. கனவு மெய்ப்படும் என்றிருக்கையில், முடிவு கனவாகப் போனது சுவையாக உள்ளது. லுணுகலை ஹளபீனாவின் 'அம்மா வந்துவிடேன்’ நியாயமான ஆதங்கம் தான். "சிருஷ்டி" என்ற பத்மநாதன் மொழியாக்கம் செய்த கவிதை, மொழி மாற்றம் செய்யப் பட்ட போது, அதன் கவித்தும் குன்றியதா? சோ. பா. வின் சொந்தக் கவிதைகளில் கண்ட கவித்துவம் தொலைந்து போயிருந் தது. கெகிறாவ ஸஹானா, தாமரைச் செல்வி போன்ற சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் கவிதையில் சறுக்கியுள்ளமை தெரிகிறது. எதிர்காலத்தில் வளமான படைப்புக்களை எதிர்பார்க்கலாம். திலகபாமாவின் கவிதை கள் சற்று ஆறுதலளிக்கின்றன.
இம்முறை மல்லிகை ஆண்டு மலர் சிறுகதை சிறப்பு மலர் போல, பல சிறுகதை களைத் தாங்கி வந்திருக்கின்றன. தெணி யான், சட்டநாதன், சுதாராஜ், ச. முருகானந்
மல்லிகை மார்ச் 2008 ஜ் 29

Page 17
தன், பவர், ஆப்டீன், கலாமணி, தில்லை நடராஜா, தெளிவத்தை ஜோசப் போன்ற சிறுகதை மன்னர்களோடு, ஆனந்தி, பரன், வசந்தி முதலானோரும், எழுத்தாளர் பால சிங்கம், மற்றும் புதியவர்களான பிரமிளா, சாந்தகுமாரி போன்றோரும் சிறு கதைகள் எழுதியுள்ளனர்.
க, சட்டநாதன், சுதாராஜ், கலாமணி, ச. முருகானந்தன், ஜோசப் ஆகியோரது, எழுத்துச் சுவையாக வடிக்கப்பட்டிருந்தது. சட்டநாதன் ஒரு சாதாரண காதல் கதை யையும், இவ்வளவு அழகாகவும், வித்தியா சமாகவும் எழுத முடியுமா? என வியக்க வைக்கிறார்! யதார்த்தமான ஆழமான காதல் வெளிப்பாடு. சுதாராஜ் முதுமையையும், மரணத்தின் வரவையும் சமகால யதார்த் தத்தையும், கதைக்கே உரிய பாணியில் கதையாக்கியுள்ளார். கலாமணியின் "புவ னேஸ்வரி சிறுகதையில் பாசம், ஊடல் என் பனவற்றை, ஒரு சிறு சம்பவத்தை வைத்து அழகாகக் கதை வடித்துள்ளார். குறிப்பிட்ட மூன்று சிறப்பாக எழுதப்பட்ட கதைகளிலும், இல்லாத ஒரு நல்ல கருவை ச. முருகானந் தனின் மனிதம் இன்னும் மரித்திடவில்லை’ கதையில் காண முடிகிறது. அழகாகச் செதுக்கப்பட்டிருந்த போதும், இன்றைய நிலையில் யதார்த்தமற்ற, அசாத்தியமான விடயமாகவே இக்கதை உள்ளது. சிறைச் சாலைக் கொடுமைகள் பதிவாக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சிறிய விடயத்தையும், சுவையான கதையாக வடிக்க முடியும் என்பதை தெளி வத்தை யோசப்பின் கதையிலும், தில்லை நடராசாவின் கதையிலும் காண முடிகிறது. உதவாக்கரையின் உதவிக் கரமும், உயி ரற்ற மரங்களின் உயிர்ப்பான விடயங் களும், சமகாலத்துடனான வர்ணனை களும் சிறப்பாக உள்ளன.
தெணியான் இம்மலரில் தனது வழமைக்கு மாறான விதத்தில், ஒரு சிறுகதையை வடித் துள்ளார். சாதாரண கிதைதான் எனினும், பண்பட்ட எழுத்தைத் தரிசிக்க முடிகிறது.
மா. பாலசிங்கத்தின் கதையில், அடையாள அட்டை உயிரை விட, முக்கியமாகப் போய் விட்டதையும், அது ஏற்படுத்தும் பதட்டத் தையும் இயல்பாக எழுதியுள்ளார். ஆப்டீனின் இராசநாயகம் மாஸ்டர் பழைய சேவை மனப்பான்மையுள்ள ஆசிரியர்களை நினைவு கூர்வதுடன், இன்றைய மலையகக் கல்வி வளர்ச்சி முயற்சிகளிடையே ஏற்பட்டுள்ள, சில பின்னடைவுகளையும் சுட்டி நிற்கிறது. பரனின் தொடரில் வரும் இம்முறைக் கதை சற்று வித்தியாசமான பார்வை. வசந்தி தயாபரனின் "கனவு மெய்ப்பட வெறும் கனவுதானோ? யதார்த்தமாகச் சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. சுவையாக எழுதி யுள்ளர். பவரின் வதை உண்மைக்கதையை எழுதியுள்ளார். முடிவில் வரும் கவிதை பொருத்தமாக உள்ளது. சாந்தகுமாரியின் கதை சாதாரணமான ஒன்று. பிரமிளாவின் செல்லாயிக் கிழவி தேறியுள்ளார். "எல்லாமே சரிதான்- பழத்தில் பாதி கொடுத்துச் சாப்பிட் டிருக்கலாமே?” என்கிற இடம் ஜோர். ஆனந்தி யின் சிறுகதை, நிஜ உலகைத் தரிசிக்க வைக்கிறது. எழுத்தோட்டத்தில் ஏதோ ஒரு இடறல். போதனம் தெரிகிறது. போலிகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளமை சிறப்பு.
மலரை வாசித்து முடித்த போது, ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. பிரமிப்பும் ஏற்படு கிறது! இன்றைய வாழ்வில் பிரித்துப் பார்க்க முடியாத சினிமா பற்றிய விரிவான கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கலாம், எனத் தோன்றுகிறது. கே. எஸ். சுருக்கமாகவே கட்டுரையை முடித்து விட்டார்.
ஆசிரியர் டொமினிக் ஜீவா, ஐம்பதாவது மலரையும் தான் வெளியிடுவேன்! என்று, கூறியமை அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. பேராசை அல்ல. அது பேராசை யாக இருந்தால் கூடத் தப்பில்லை. நியாய பூர்வமான ஆசைதான். மல்லிகை வாசகர் களுக்கு அது பெரு விருப்புத்தான். அவர் திட காத்திரமாகவும், உடல் நலத்துடனும், செயற்படக் கூடியவராகவும் 50வது மலர் வரை வாழ வேண்டும் என்பதே எமது (36600TsuiT.
மல்லிகை மார்ச் 2008 $ 30

( - இந்தவூல் விப்லி )
யார் செய்த சூழ்ச்சியிது? யாரிடம் போய்ச் சொல்லுவது? யாழ் மண்ணின் வீழ்ச்சியினை யாரிடம் போய்ச் சொல்லுவது?
கனவுகளைக் கானாவில்லை கண்ணிரண்டில் கண்ணீர் மழை இடம் பெயர்ந்த நாள் முதலாய் இம்மியளவும் உறக்கமில்லை
உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம் உறவிழந்தோம் உdைaாவிழந்தோம் உடன் பிறந்தோர் பலரிழந்தோம்
புயலழித்த பூவனமாய் புலம் பெயர்ந்தோர் நாமானோம் உதிர்ந்து விடீட பூவினிலே உறைந்து போன தேனானோம்
நிலம், வீடு பிளந்தம்மா நூலகமும் எரிந்ததம்மா பள்ளிகளும் கோயில்களும் பாழ்நிலமாய்ப் போனதம்மா .
காற்தடங்கள் பதிந்த இடம் கண்ணிவெடியில் புதைந்ததம்மா கனிமரங்கள் துளிர்த்த இடம் கல்லறையாய் போனததம்மா
அங்கொன்றும் இங்கொன்றாய் உறவெல்லாம் தொலைந்ததம்மா நிம்மதியின் நிழல் இழந்து நெடும் பயனம் தொடர்ந்ததம்மா
இகதி என்ற பெயர் எமக்கு அறிமுகமாய் ஆனதம்மா பனிமழையில் நனைந்த வாழ்க்கை எரிமலையாய்ப் போனதம்மா
யார் செய்த சூழ்ச்சியிது? யாரிடம் போய்ச் சொல்லுவது? யாழ் மண்ணின் வீழ்ச்சியினை யாரிடம் போய்ச் சொல்லுவது?
ぐ>ぐ>ぐ>
மல்லிகை மார்ச் 2008 ஜ் 31

Page 18
ருஷன்கு குடுைகளுக்,
குடிற்பது குேைகளுக் (கனடா, கியூபா, இங்கிலாந்து, தமிழ்நாடு)
- Q9ObabUU6
"எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம் தான் வாழ்க்கை" என்று அடிக்கடி பேசியும், எழுதியும் வந்திருக்கின்றேன்.
கடந்த 2007/2008 கோடை விடுமுறையில் (டிசம்பர் இறுதி முதல் ஜனவரி முழு மாதமும்) கனடா, கியூபா, இங்கிலாந்து, தமிழ்நாடு. என்று இலக்கிய யாத்திரை புறப்பட்டேன்.
தமிழ்நாட்டிற்கு 1984, 1990 ஆம் ஆண்டுகளில் சென்று வந்த அநுபவம் உண்டு. ஆனால், ஏனைய மூன்று நாடுகளுக்கும் இதுதான் முதல் பயணம்.
இந்தப் பயணத்துக்கு நிறையக் காரணங்கள் இருந்தன. காரணம் இன்றிக் காரியம் இல்லை' - என்பார்கள். நானும் சில காரியங்களைச் சாதிப்பதற்கு இந்தப் பயணத்தைக் காரணமாக்கினேன்.
"எனது எல்லையை விட்டு நகரமாட்டேன்" என்று, ஒரு காலத்தில் பத்திரிகையாளர் கார்மேகத்திடம் சொன்ன ஜெயகாந்தன், பின்னாளில் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் போய் வந்தார். அவருக்குக் கியூபாவுக்கும் போய் வரவேண்டும் என்ற ஆசை இருந்ததாக, இங்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும் எழுத்தாளரும் 'உதயம் மாத இதழ் ஆசிரியருமான டொக்டர் நடேசன் என்னிடம் சொன்னார்.
ஜெயகாந்தனும் எம்முடன் இணைவதாக இருந்தால், இந்தக் கோடை விடுமுறையில்
பயணிப்போம் எனச் சொன்னேன்.
ஆனால், ஜெயகாந்தனை அழைத்து வரவிருந்த நண்பர்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை.
இதற்கிடையில், நடேசனின் புதிய நாவல் உனையே மயல் கொண்டு சென்னையில் மித்ர வெளியீடாக வந்துவிட்டது.
கனடாவில் நடேசனின் தம்பி சபேசனும் மற்றும், நண்பர்களும் குறிப்பிட்ட நாவலை கனடாவில் வெளியிட நாள் குறித்துவிட்டனர்.
நாமிருவரும் புறப்பட்டோம். நாம் வசிக்கும் மெல்பனிலிருந்து கனடாவுக்கு நேரடியாக விமானப் போக்கு வரத்து இல்லை.
மல்லிகை மார்ச் 2008 * 32

சுமார், 900 கிலோ மீட்டர் தொலைவில் சிட்னியிலிருந்து தான் 'ஏயார் கனடா விமா னச் சேவை ஆரம்பிக்கிறது. அதுவும் ஒ வகையில் பயன்தான்.
இதயச் சிகிச்சைக்குப் பின்பு, ஒய்வு எடுத் துள்ள கவிஞர் அம்பியையும், காலில் சத்திர சிகிச்சைக்குள்ளான எஸ்.பொ. வின் மனை வியையும் ஒரு தடவை பார்த்து விட்டு, கனடா புறப்படலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தோம்.
திட்டமிட்டவாறு, 2007 டிசம்பர் 22 ஆம் திகதி இரவு உள்ளூர் விமான சேவையில் சிட்னி சென்றோம். அம்பி மகன் திருக் குமார் எங்களை அழைத்துச் சென்றார்.
அம்பி உற்சாகமாக எங்களை வரவேற் றார். இரவுப் பொழுது அவருடன் கழிந்தது. மறுநாள் எஸ். பொ. விடம் சென்றோம். அவரது மகன் டொக்டர் அநுரா அழைத்துச் சென்றார்.
எனது இலக்கிய வாழ்வில், எனக்குக் கிடைத்த பெரும் பேறு என்னவென்றால், நான் நேசித்த எழுத்தாளர்களின் குடும்ப அங்கத்தவர்களின் சகோதரத்துவமான வாஞ்சை கிட்டியதுதான்.
“எழுத்தாளர்களின்பிள்ளைகள் யாவருமே
எங்களது பிள்ளைகள் தான்' எனச் சொல்வ திலும் பெருமிதம் உண்டு.
அநுரா சிட்னி விமான நிலையத்திற்கு எம்மை வழியனுப்ப வந்தார். மல்லிகை ஜீவா அடிக்கடி சொல்வார்: "எஸ். பொ. வின் மகத்தான படைப்பு அநுரா" என்று.
தமிழ் நாட்டில் இன்று 'மித்ர' பதிப்பகம் வேரூன்றி பல புத்தகங்களை செம்மையாக வெளியிடுகின்றதென்றால், அதற்கு அநுரா
தான் முக்கிய காரணம். எஸ். பொ. வின் உழைப்புக்கு உந்து சக்தியாக விளங்கு u6.f seg|Jr.
சிட்னி விமானநிலையத்தில் எதிர் பாராத நிகழ்வு, கனடாவுக்கு விமானம் ஏறிய பய ணிகள் இறக்கப்பட்டார்கள். முதலில் மூன்று மணிநேரம் தாமதம் என்றார்கள். தங்கியிருந் தோம்.
பிறகு 24 மணி நேரம் தாமதம் என்றார் கள். சலிப்புடன், விமான சேவை நிர்வாகம் ஒழுங்கு செய்து தந்திருந்த ஹோட்டலில் காத்திருந்தோம்.
சுமார் 20 மணிநேரம் வித்தியாசத்தில், நாமும், கனடா வாசிகளும் காலத்தை g08تا கின்றோம். டிசம்பர் 22 புறப்பட்டு, அதே நாளில் அங்கே சென்று விடலாம், என நம்பி யிருந்த நாம்-23 இல் புறப்பட்டு அதே நாளில், அங்கு சென்றடைந்தோம்.
ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்துள்ள உலக நாடுகளில் கனடாதான் முன்னணி வகிக்கின்றது. பத்துக்கும் மேற்பட்ட செய்தி, விளம்பரத் தமிழ்ப் பத்திரிகைகள், ஏறக் குறைய பத்துத் தமிழ் வானொலிகள், 24 மணி நேரத் தொலைக்காட்சி சேவைகள்.
கனடா வாழ் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக் கோலங்களைச் சிறிய கட்டுரை யில் சித்திரிக்க முடியாது.
எனது பயணத்தின் நோக்கமே, அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் கலை, இலக்கிய வாதிகளையும், பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களையும் சந்திப்பதாக அமைந்திருந்தது.
என்னுடன் நீண்ட காலத்திற்கு முன்பு வீரகேசரியில் பணியாற்றிய நண்பன் வர்ணன்
0ல்லிகை மார்ச் 2008 * 33

Page 19
வீடே எனது இரண்டு வார காலத் தங்கு மட மாகியது. இவரது மனைவி சரோ- இலங்கை யில் பதுளையில் ஆசிரியையாக பணியாற்றி யவர். எழுத்தார்வமும், வானொலி ஊடக அநுபவமும் மிக்கவர்.
நான் இவர்களது வீட்டை அடைந்த நாள் முதல், அவர்களது தொலைபேசி ஓயாமல் இயங்கியது.
சியாமளா, நவம், முருகபூபதி, பிரேம்ஜி
பிரேம்ஜி, நான்காவது பரிமாணம் நவம், முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் நகேந்திரன், 'உதயன்' ஆசிரியர் லோகேந்திரலிங்கம், கவிஞர் சேரன், யாழ் மகாஜனாக் கல்லூரி முன் னாள் அதிபரும், இல க்கிய ஆர்வலருமான கனக சபாபதி, முரீ ரஞ்சனி, தமிழர் செந் ஆசிரியர் கனக அரசரட்ணம்,
தாமரை
டி. பி. எஸ். ஜெயராஜ்,
கமலா தம்பிராஜா, பூரணி மகா லிங்கம், sitsob G56) sulb,
வைகறை ரவி, சுமதி ரூபன், பவானி திரு
நாவுக்கரசு, வேலணை வீரசிங்கம், ஆத்மன், ஜயகரன், சபேசன், வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம், விநியோக, விளம்பர முகாமையாளர் து. சிவப்பிரகாசம், மூர்த்தி, கதிர். கிருஷ்ணலிங்கம், சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், செழியன். .. இப்படிப் பலரையும் சந்திப் பதற்கும், கடந்து போன வசந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதற்
துரைசிங்கம்,
கும் இந்தக் கனடாப் பயணம் உதவியது.
செந்தாரகை துளசிகாமணி, யோகா பாலச்சந்திரன், அ. முத்துலிங்கம் ஆகி யோருடன் தொலைபேசியில் தான் உரை யாட முடிந்தது. முத்துலிங்கம் அமெரிக்கா விலிருந்து புதுவருடப் பிறப்பன்று வாழ்த்துக் கூறிப் பேசினார். யோகா நீண்ட நேரம் உரையாடிச் சந்திக்க முடியாத தொலை வில் இருப்பதாகச் சொன்னார்.
டானியல் மகன் புரட்சிதாஸன் இல்லத் துக்கும் சென்று வந்தேன். 'பிரிந்தவர் கூடி னால் பேசவும் வேண்டுமோ? என்ற வார்த் தைகள் அநுபவத்தில்தான் பிறந்துள்ளது. அநுபவம் சிறந்த பள்ளிக்கூடம் என்பதை
இலக்கியப் பயணங்களில் புரிந்து கொள்ள முடிகிறது.
எங்குமே எமது எழுத்தாளர்கள், இலக்கிய வாதி கள் துருவங்கள கவே இயங்கிக் கொண்டிருக்கி றார்கள். பல நண் பர்களின் வீடுக ளில் நடந்த கிறி ஸ்மஸ், புத்தா
மல்லிகை மார்ச் 2008 ஜ் 34
 
 

ண்டு விருந்து களில் காரசாரமான இலக்கிய விவாதங்கள் நடந்தன.
இந்த இலக்கிய விவாதத்தின் அடிச் சரடாக புலப்படுவது அரசியல் தான்.
நண்பர் நடேசனின் ‘உனையே மயல் கொண்டு நாவல் ஸ்காபரோ சிவிக் சென்ட ரில் பூரணி மகாலிங்கம் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நானும், சுமதி ரூபனும், நாடக எழுத் தாளர் ஜயகரனும் உரையாற்றினோம். இந்த நாவலுக்கு அணிந்துரை எழுதியிருப் பவர்கள், லண்டனில் வதியும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சென்னையிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும்- எஸ். ராமகிருஷ் 650165T ஆகியோர்.
பாலியல் தொடர்பான மனப் பிறழ்வு களைச் சித்திரிக்கும், இந்நாவல் குறித்து விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.
விமர்சகர்கள், போதகர்களாக மாறி விடும் சூழ்நிலையில், படைப்பாளியின் எழுத்து தர்மசங்கடங்களை எதிர்நோக்கும் என்பதை இந்நாவல் அறிமுகக் கூட்டத்தில் புரிந்து கொண்டேன்.
அந்தக் கூட்டத்தில் "கனடா எப்படி இருக் கிறது?" என்று என்னைக் கேட்டார்கள்.
ஏ. பி. நாகராஜன் எடுத்த புராணப் படங் களில் காண்பிக்கப்படும் தேலோகம் போல் இருப்பதாகச் சொன்னேன்.
வெள்ளைப் பஞ்சுப் பொதிகள் போர்த்தப் பட்டது போன்று, கனடா வீடுகளையும், வீதி களையும், வாகனங்களையும் பனி மூடியி
ருப்பதை வர்ணிக்க அந்தத் திரைப் படக்
காட்சிகள் தான் உதவின.
தண்ணிர் மழை, ஆலங்கட்டி மழை பார்த் திருக்கின்றேன். பனி மழையைக் கனடா வில் தான் ரசித்தேன். பனிக்குள் நெருப்பாக அம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள்.
கனடா வானொலி, தொலைக்காட்சிப் பேட்டிகளின் முடிவில் ஒரு மாமூல் கேள்வி கேட்கப்படும். பெரும்பாலும், வெளியிலி ருந்து வருபவர்களிடம் மறந்து விடாமல் G3slurTirassif.
என்னிடமும் கேட்டார்கள்.
"விஞ்ஞானத் தொழில் நுட்பத்தினால், உலகம் சுருங்குகின்றது. அதற்காக, நாமும் சுருங்காமல், மனதை விசாலப்படுத்துவோம்’ என்றேன்.
நண்பர் வர்ணனின் வீட்டிலிருந்து காலை யில் புறப்பட்டால், வீடு திரும்புவதற்கு நடுசாமம் "கடந்து விடும். காலை உணவு ஓரிடத்தில், பகல் உணவு இன்னுமோரிடத் தில். இரவுணவு மற்றோரிடத்தில்.
மாத்திரைகளுடன் ஒய்வின்றி ஒடித் திரிந்
தேன். பனிமழை, பனிப் புகார் எப்படியிருந்த போதிலும், மக்கள் அங்கே இயங்கிக் கொண்டபடியே இருந்தார்கள்.
ஐந்து ஏரிகள் சங்கமமாகிப் பேரோசை யுடன் மக்களைப் பரவசப்படுத்தும் நயாகரா’ நீர்வீழ்ச்சியைக் கனடா எல்லைக்குள்ளி ருந்து ரசித்தவாறே, அமெரிக்காவின் எல் 606v6Զապb, அந்தக் கண்டத்தின் கட்டிடங் களையும் பார்க்க முடிந்தது. கனடாத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், அதன் தலைவர் லோகேந்திரலிங்கம் தலைமையில் எனக் கும், வேலணை வீரசிங்கம் தம்பதியருக்கும் vn ஒரு வரவேற்புக் கூட்டமும், இராப்போசன விருந்தும் ஒழுங்கு செய்திருந்தது. பல்'
மல்லிகை மார்ச் 2008 ஜ் 35

Page 20
இலக்கிய ஆர்வலர்களை இங்கு சந்தித் தேன்.
கனடாவில் இயங்கும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றும் பலர் ஏற்கனவே, இலங்கை யில் ஊடகங்களில் வேலை செய்த அநுபவம் மிக்கவர்கள்.
உள்ளார்ந்த கலை இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள். பூமி பந்தின் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும், அங்கும் தமது ஆற்றல்களை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டு தானிருப்பார்கள்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் திலும், ரூபவாஹினி தொலைக்காட்சிச் சேவையிலும், முன்னர் பணியாற்றிய பி. விக்னேஸ்வரனுடனும், வி. என். மதிய ழகனுடனும் தொலைபேசியில் தான் உரை யாற்ற முடிந்தது. நேரில் சந்திக்க முடிய வில்லை. அவர்களும் ஒய்வின்றி இயங்கு
கிறார்கள். நானும் ஒய்வின்றி ஒடித் திரிந்
தேன். நேரமும் பஞ்சமாகியது.
அவர்கள் முக்கிய பதவிகளில் இருக் கும், தொலைக்காட்சி சேவையில் எனது நேர்காணலை எப்படியும் ஒளிபரப்பாக்கிவிட வேண்டும் என்ற ஆவலில் இருந்தவர், எனது நீண்ட கால நண்பர் வி. என். மதிய ழகன். இலங்கை வானொலியில் தனது 'சங்கநாதம்' நிகழ்ச்சியூடாக, என்னை அறிமுகப்படுத்தியவர் மதியழகன்.
அவரது வேண்டுகோளை- ஒரு நாள் இரவு 9.30 மணிக்குத்தான், அந்தக் கலை யகத்துக்குச் சென்று நிறைவேற்ற முடிந் தது. "ஆத்மன்' என்னைப் பேட்டி கண்டார். நண்பர் லேகேந்திரலிங்கமும், மற்றுமொரு தொலைக்காட்சிக்காக அழைத்துச் சென்று கேள்வி கேட்டுப் பதில்களைப் பெற்றார்.
கனடா- தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் (CTBC) நடத்தும் வானொலிச்
சேவையில், சுமார் 45 நிமிடங்கள் நேரடி யாக எனது பேட்டி ஒலிபரப்பாகியது. அந்த பேட்டி மறு ஒலிபரப்புச் செய்யப்பட்டதாக அறிந்தேன். கிருஷ்ணலிங்கம் பேட்டி கண் டார். கனடா, “கீதவாணியும் ஓரிரவு சுமார் அரை மணிநேரம் எனது நேர்காணலை நேரடியாக ஒலிபரப்பியது. இந்த ஊடகங் களினுடாக, இன்றைய இலக்கிய நோக்கு கள் குறித்து எனது அறிவுக்குட்படத் தகவல் களைச் சொன்னேன்.
பெரும்பாலான நேர்காணல்களில் மல்லிகை, ஞானம் இதழ்கள் குறித்து பல கருத்துக்களை சொல்ல நேர்ந்தது.
கியூபா
1985 ஆம் ஆண்டு- சோவியத் ரஷ்யா வில், மேதை லெனினின் பொன்னுடலை நேரில் பார்த்து பரவசமடைந்திருந்த நான்கியூபா புரட்சியின் போது, பிடல் காஸ்ட் ரோவுடன் இணைந்து போராடி, பின்னர்காஸ்ட்ரோவின் அரசில் அமைச்சராகவும் பதவி வகித்து- பொலிவியா மக்களுக்கு விடு தலை பெற்றுக் கொடுக்கச் சென்ற விடத்தில், கொல்லப்பட்ட சேகுவேராவின் கல்லறையையும் பார்க்க வேண்டுமென்று நீண்ட நாட்கள் காத்திருந்தேன்.
எனது நீண்ட நாள் விருப்பமும், இந்தப் பயணத்தில் நிறைவெய்தியது.
3 பொருளாதாரத் தடைக்குள்ளான
A స్తో 85 (g ub ஏர்ணஸ்ட் சேகுவேர கி யூ ப ா வி ன் த  ைல ந க ர ம்
மல்லிகை மார்ச் 2008 ஜ் 36
 

ஹவானாவில் இறங்கியதும், மொழிப் பிரச்சனையை எதிர்நோக்க வேண்டியிருந்தது. பெரும்பாலான கியூபா மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர் களின் ஸ்பானிஷ் மொழியைப் புரிந்து கொள்ள முடியாமல், நான்கு நாட்களை அங்கு கடத்தினோம்.
ஆர்ஜெண்டீனாவில் பிறந்த ஏர்ணஸ்ட் சேகுவேரா, கியூபா புரட்சிக்கு உதவிய மைக்காகக் காஸ்ட்ரோவிடமிருந்து 1959 ஆம் ஆண்டு கெளரவ பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்டார்.
'சாந்தா கிளாரா" என்ற பிரதேசத்தில் பிரம்மாண்டமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள சேகுவேரா நினைவில்லத்தின் உச்சியில் அவரது கம்பிரமான தோற்றம் கொண்ட உருவச்சிலையை அண்ணாந்து பார்த்தேன்.
சேகுவேராவைப் பற்றிய புகைப்படங்கள், அவர் கல்வி கற்ற ஆரம்பப் பாடசாலையில் பெற்றுக் கொண்ட மாணவர் தேர்ச்சிச் சான் றிதழ், மருத்துவராகப் பணியாற்றிய பொழுது பயன்படுத்திய உபகரணங்கள், சீருடை, துப்பாக்கிகள், வானொலிப் பெட்டி யாவும், அந்த நினைவில்லத்தில், அந்தப் புரட்சியா ளனின் வாழ்வையும், பணிகளையும் நினை வுபடுத்திக் கொண்டிருக்கிறன.
பிடல் காஸ்ட்ரோவுக்கிருக்கும் மதிப்பும் மரியாதையும், வசீகரமான புன்னகைத் தரித்துடையவரான சேகுவேராவுக்கும் சரி சமமாக அந்த நாட்டில் வழங்கப்படுவதை அவதானிக்க முடிந்தது.
இங்கிலாந்து
கியூபாவிலிருந்து மீண்டும் கனடா வந்து ஒரு நாள் தங்கியிருந்து, மீண்டும் விமானம் ஏறினேன், லண்டன் ஹித்ரூவை நோக்கி. பனிபடர்ந்த கனடாவிலிருந்து, வெய்யில் எரிக்கும் கியூபா வந்து, மீண்டும் பனிப் படலத்துள் பிரவேசித்து, லண்டன் குளிரை
ஸ்பரிஸிக்க பயணமான பொழுது, என்னுட லில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த உறவி னர்கள் துயில் கலைந்து எழுந்தனர்.
அந்த உறவினர்களில் ஒருவர் ஆஸ்த்மா. பருவகாலமாற்றங்கள் ஏற்படுத்திய உபாதை களுடன் லண்டனில் சில நாட்கள் கழிந்தன.
நூலகவியலாளர் என். செல்வராஜா ஒரு இலக்கியச் சந்திப்பை எனக்காகவும், நண்பர் நடேசனுக்காகவும் ஒழுங்கு செய்தி ருந்தார். ஒருநாள் மாலை தேநீர் விருந்தில் இலக்கியம் பேசினோம். ஆனந்தராணி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தாளிலி யஸ், மு. நித்தியானந்தன், நவஜோதி ஜோகரட்ணம் (அகஸ்தியர் மகள்) நடா மோகன், தேசம் ஜெயபாலன், பாலசுகுமார், ஜெயக்குமார், பத்மநாப ஐயர், இளைய அப்துல்லா, பாலேந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கலை இலக்கியவாதிகளின், கருத்து முரண்பாடுகளை ஆரோக்கியமான திசை யில் நகர்த்துவது எப்படி என்பது தொடர் பாகவே, இந்த இலக்கியக் கலந்துரை யாடலும் நகர்ந்தது. நூல் வெளியீடுகளை சந்தைப்படுத்துவதில் நீடித்த சிக்கல்கள், புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் மத்தியில் உருவாக்க முடியாதிருக்கும் ஒருங்கிணைப்பு சம்பந்தமாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலியாவில் நாம் வருடாந்தம் நடத்தும், எழுத்தாளர் விழாவின் செயற் பாடுகளை நான் விளக்க நேர்ந்தது. நடேச னின் வாழும் சுவடுகள் (கதைகள்), வண் ணாத்திக்குளம், உனையே மயல் கொண்டு ஆகிய நாவல்களும், மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்த எனது "கங்கை மகள் கதைத் தொகுதியும் இச்சந்திப்பில் அறி முகப்படுத்தப்பட்டன.
மல்லிகை மார்ச் 2008 & 37

Page 21
'தீபம்’ நேர்காணல்
என். செல்வராஜா ஐ. ரி. பி. சி. வானொ லிக்காகவும், நவஜோதி சன்ரைஸ்" வானொ லிக்காகவும் தொலைபேசியூடாக என்னைப் பேட்டி கண்டனர்.
நண்பர் இளைய அப்துல்லா ‘தீபம்’ தொலைக்காட்சியிலும் ஒரு நேர்காணலுக் காக அழைத்திருந்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்
பானது.
எனது இலக்கிய உலகப் பிரவேசம் முதல், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வரையில்- பல காத்திரமான கேள்விகளை அவர் தொடுத்தார்.
நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தனால், பல ஐரோப்பிய வாழ் நேயர்கள் உடனுக்குடன் கேள்விகளைக் கேட்டு, அந்த நிகழ்ச்சியை உற்சாகப்படுத்தினர்.
அந்தக் கலையகத்தை விட்டு வெளியே வரும்போது, இளைய அப்துல்லா- நேர் காணல் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட DVD பிரதியொன்றை கையில் தந்து வழியனுப் பினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இன்றைய இலக்கியப் போக்குகள், ஈழத்து- புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள், முதலான பல விவகாரங்கள் இந்த நேர்காணலில் அலசப்
60t.
எந்தவித முன் தயாரிப்போ, ஒத்திகையோ இன்றி. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த 'தீபம்’ தொலைக்காட்சி நேர்காணல் பதிவாகி யுள்ள DVD பிரதியொன்றை மல்லிகைக் காரியாலயத்திற்கு அனுப்புவேன். இலக் கிய நண்பர்கள், ஜீவாவிடம் கேட்டுப் பெற்றுப்
பார்த்து விட்டு, எனக்கு தமது கருத்துக்
களை எழுதினால் அல்லது எனது மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொண்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
எனது மின்னஞ்சல்:- letchumananm(a)gmail.com
தமிழ் நாடு
ஜனவரி 15 ஆம் திகதி காலை லண் டனை விட்டுப் புறப்பட்டுச் சென்னை செல் லத் தயாராகினேன்.
சென்னையில் 17 ஆம் திகதியன்று முடி வடையவிருந்த, வருடாந்தப் புத்தகக் கண் காட்சியை இந்தப் பயணத்தில் எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று ஏற்கனவே, திட்டம் வகுத்திருந்தேன்.
தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாளலன் (கவியரசு கண்ண
தாஸனின் புதல்வர்) எனது இனிய குடும்ப
நண்பர். ஏற்கனவே, தொலைபேசி ஊடாகக் கண்காட்சியின் இறுதி நாளை அவரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தேன்.
சென்னையில் இறங்கிய மறுநாளே கண்காட்சியைப் பார்க்கப் புறப்படும் தரு வாயில், நான் தங்கியிருந்த விடுதிக்கு என் னைப் பார்க்க தாமரை இதழ் ஆசிரியர் மகேந் திரன் வந்துவிட்டார்.
எங்கள் இனிய நண்பர், கனடாவில் தற். போது வதியும் பிரேம்ஜியின் நூலொன்றை நண்பர் ‘நான்காவது பரிமாணம் நவம், கணினியில் பதிவு செய்து CD ஐ என்வசம் தந்துவிட்டிருந்தார். அதனைப் பெற்றுக் கொள்வதற்காகவும், ஏற்கனவே 'மல்லிகை" ஊடாக எனது எழுத்துக்களைப் பார்த் திருந்த மகேந்திரன், என்னுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கண்காட் சிக்குப் புறப்படும் முன்பே ஒடோடி வந்து விட்டார்.
பழகுவதற்கு இனிய தோழர் மகேந்திரனு டன், சுமார் ஒரு மணிநேரம் உரையாடிய பொழுதுதான், ஜெயகாந்தன் ‘அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக் கும் தகவல் தெரிந்தது.
மல்லிகை மார்ச் 2008 ஜ் 38

எனது பயணத் திட்டம் அன்று மாலை ராமேஸ்வரம் புறப்பட்டுப் பின்னர் மதுரை, தஞ்சாவூர் வழியாக மீண்டும் சென்னை வந்து, வேலூர் செல்வதாக இருந்தது. தமிழ்நாட்டில் நான் நின்ற இரண்டு வார காலத்துள் சுமார் ஐந்து ஆயிரம் கிலோ மீட்டர் காரிலும், ரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செய்திருக்கிறேன், என்று சொன் னால் யாரும் நம்பமாட்டீர்கள்
முன்பே சொன்னது போல், காரணம் இன்றிக் காரியம் இல்லை என்பதாக எனது யாத்திரை தொடர்ந்தது.
எனது மனைவியின் தம்பி விக்னேஸ் வரன் ஒரு கவிஞர். இரண்டு நூல்கள் எழுதியவர். அவர் இயற்றிய பாடல்களுக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் உட்படப் பல பாடகர்கள் பாடி வெளிவந்த "இறுவட்டு’ கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வெளியிடப் Lll-gs).
விக்னேஸ்வரன் சென்னை விமான நிலையம் வந்து என்னை அழைத்துச் சென்றார். தாமரை மகேந்திரனுடனான சந்திப்பை அடுத்து, புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார்.
எனது வாழ்நாளில் எனக்குக் கிட்டிய
மறக்க முடியாத அநுபவங்களில் ஒன்று இந்தப் புத்தகக் கண்காட்சி. தமிழ்நாட்டின்
அனைத்துப் பதிப்பகங்களையும் ஒரிடத்தில் ஒருங்கிணைத்து வைத்திருந்தார்கள்.
மரம் வெட்டுவதற்காகத் தச்சன் தோப் புக்குள் நுழைந்த கதைதான் நினைவுக்கு வந்தது. எதனை வாங்குவது, எதனை விடுவது என்ற மலைப்பு ஒரு புறம். மாலை 4 மணிக்கு ராமேஸ்வரம் புறப்படக் கார் வந்து விடுமே என்ற அவசரம் ஒருபுறம்.
'உயிர்மை" பதிப்பகத்தில் மானுஷ்ய புத்திரனை நேரில் கண்டு உரையாடினேன்.
கரிசல்காட்டு எழுத்துவேந்தன் கி. ராஜநாராயணன் சென்னையில் நிற்பதாகத் தகவல் அறிந்து அவரது நூல்களை வெளியிடும், அகரம் பதிப்பகத்தில்- என்னு டன் தொடர்பு கொள்ளக் கூடிய தொலை பேசி இலக்கத்தைக் கொடுத்தேன்.
என்ன ஆச்சர்யம். எமது வாகனம் செங்கல்பட்டைக் கடந்து கொண்டிருக்கும் போது, கி. ரா. தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அவரை 1984 ஆம் ஆண்டு கோவில் பட்டிக்கு அருகாமையில் இடைசெவல் என்ற விவசாயக் கிராமத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறேன். அந்தத் தகவல்களைப் பின்பு வீரகேசரி வாரவெளியீட்டிலும் பதிவு செய்துள்ளேன்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் முட்ட, சுமார் 23 வருடங்களின் பின்பு கி. ரா. வுடன் தொலைபேசியில் உறவாடினேன். நான் ராமேஸ்வரம் புறப்பட்டிருக்கும் தகவலைச் சொன்னேன். அவரும், தாம் பாண்டிச் சேரிக் குச் செல்லவிருப்பதாகச் சொன்னார். சந் திக்க முயற்சிக்கிறேன் எனச் சொன்னேன். ஆனால், முடியாமல் போனது வருத்தமே.
சென்னையிலிருந்து புறப்பட்டு, செங்கல் பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், பண்ருட்டி, வடலூர், கும்பகோணம், தஞ்சாவூர், புதுக் Gö&5ITL'60)L, (8g56hJG885ITL" 60)L, LD6ööTuLLJLíb, uFTLb பன், ராமேஸ்வரம். என்று பயணித்து, (இரவிரவாகப் பயணம்) பின்னர்- மதுரை வந்து, தஞ்சாவூர், திருவையாறு சென்றுஇரண்டாம் நாள் இரவுப் பொழுதை திருவையாற்றில் கழித்தோம்.
திருவையாறில் நடமாடிய பொழுது தி. ஜானகிராமனின் நாவல்கள் நினைவுக்கு வந்தன. தியாகையரின் கீர்த்தனைகள் உள்ளுணர்வில் ஊடுருவும் உணர்வு தோன்றியது.
வருடாந்தத் தியாகராஜர் உற்சவத்திற்கு
Losibsólsos LDITřtě 2008 83 39

Page 22
அந்தச் சங்கீத நகரம் அப்பொழுது தயாரா கிக் கொண்டிருந்தது.
திருவையாறிலிருந்து திருச்சி வழியாகச் சென்னை வந்து, இரண்டு மணி நேரத்தில்வேலூர் செல்லத் தயாரானேன். மைத்துன ரும்,நண்பர்களும் ஒய்வெடுக்கச்சொன்னார்கள். "ம்ஹ9ம். ஒய்வெடுத்தால் - பல வேலைகள் தாமதித்து விடும்'- எனச் சொல்லிவிட்டு வேலூரில்- காட்பாடி என்ற ஊருக்குக் கிளம்பினேன்.
கேரளாவில் ஆலப்புழை என்ற இடத் திற்குச் செல்லும் இரவு நேரக் கடுகதி ரயில், மல்லிகை வாசகர்களுக்கு இந்த 'ஆலப் புழை ஞாபகத்துக்கு வரலாம். கேரள இலக் கியக் கர்த்தா தகழி சிவசங்கரன் பிள்ளை யின் 'செம்மீன்' நாவலின் களம் ஆலப்புழை. திருவையாறு எனக்கு ஜானகிராமனை நினைவு படுத்தியது போன்று, ஆலப்புழை
தகழியை நினைவு படுத்தியது.
காட்ப்ாடியில் தம்பியின் இல்லத்தில் தான் ஒய்வெடுத்தேன். அதுவும் இரண் டொரு நாட்கள் தான். பின்னர் கோயம் புத்துார், மதுரை என்று புறப்பட்டு மீண்டும் ର ୫ 66t 60) 60t
திரும்பினேன்
6 . பழனியில் நண்பர் செ. 8 (് ഞ ச லி ங் க ഞ ഞ1 & ச ந் தி த் து 2-60JuTigas
பொழுது , க வி ஞர் தமிழச் சி
தமிழச்சி தங்கபாண்டியன்
தங்க பாண்டியனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இவர் இன்று கவனத்துக் குள்ளான கவிஞர், எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி முதலான கவிதைத் தொகுப்பு களை தந்திருப்பவர்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணி யாற்றிய தமிழச்சியின் இயற்பெயர் சுமதி.
அண்ணாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த தங்கபாண்டியனின் புதல்வி. இவ ரது சகோதரர் தங்கம் தென்னரசு. தற்போது, கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவை யில் கல்வி மந்திரி.
'தகிக்குமொரு உக்கிரத் தனிமையில் தமிழச்சியின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர் பிராயத்தினருடையது போன்ற தனிமை அநுபவமல்ல, உணர்வுலகினைப் புரிந்து பகிர இயலாத கையறு நிலையால்
உணரப்படும் தனிமை தமிழச்சியினுடையது. பலர் கூடியிருக்கையிலும் ஒருவர் தன்னுணர்வு உணர்ந்து அறுபட்டுத் தொலைந்து போகும் மனநிலையது." - என்று, பிரம்மராஜன் தமிழச்சியைப் பற்றி வனப்பேச்சி நூலில் குறிப்பிடுகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு- தமது கல்விப் பணிநிமித்தம் ஆய்வுக்காக, அவுஸ் திரேலியா வந்த சமயம் எமது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த தமிழச்சியைத் 'தினக்குரல்' பத்திரிகைக்காக பேட்டி கண்ட போது, 'அப்பாவைப் போன்று, நீங்களும் அரசியலுக்குப் போவீர்களா? எனக் கேட்டி ருந்தேன்.
மல்லிகை மார்ச் 2008 & 40
 

'தம்பி செல்லும் வாய்ப்புண்டு. ஆனால்?.. " என்று இழுத்திருந்தது ஞாபகம்.
இப்பொழுது தம்பி அமைச்சர், தமிழச்சிகலைஞரின் வேண்டுகோளை ஏற்றுக் கழகத்தின் பணிகளுக்குச் சென்றுள்ளார்.
திருநெல்வேலியில் வெகு கோலாகல மாக கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடந்த, தி. மு. க. இளைஞர் அணி மகா நாட்டை கொடியேற்றித் தொடக்கி வைத்த வர், தமிழச்சி.
இவரது இல்லதில் நடந்த சந்திப்பில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்குத் தமிழகத்தில் சந்தை வாய்ப்பின்றியிருப்ப தைச் சுட்டிக் காட்டி விளக்கினேன். நீடிக் கும் சட்டதிட்டச்சிக்கல்களையும் சொன்னேன். ஈழத்துப் படைப்பாளிகளுக்கு, நாம் எதிர் பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் அங்கீ காரம் இல்லாதிருப்பதையும் விளங்கப் படுத்தினேன்.
"எவராவது ஒருவர் சென்னையில் இருந்து அதற்காக, ஆக்கபூர்வமாகச் செயல் பட்டால் ஏதும் உருப்படியாகச் செய்ய முடியும்." என்றார்.
எனக்கு உடனே, எஸ். பொ, கணேச லிங்கன் ஆகியோர் மனக்கண்ணில் தோன் றினர். சொன்னேன்.
"அவர்கள் பதிப்பகம் நடத்துகிறார்கள். அவர்கள் தமது பதிப்பக வெளியீடுகளை சந்தைப்படுத்துவதில் தான், தமது நேரத் தைச் செலவிட முடியும். ஈழத்து நூல்களை இங்கு விநியோகிக்க, எவராவது பொறுப் பேற்றால்- தாமும் தன்னால் முடிந்த வரை யில்- அச்செயல் திட்டத்துக்கு உதவ முடி யும்" என்றார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு- (கால் நூற்றாண்டுக்குப் பின்பு) செ. கணேசலிங்கனு
டன் இரண்டு நாட்கள் அடுத்தடுத்து, நீண்ட நேரம் உரையாடினேன். இயக்குநர் பாலு மகேந்திராவைப் பார்க்க விரும்பினேன். அவருக்கு- ஒரு புதிய படம் இயக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும், அது சம்பந்தமாக வெளியூர் சென்றிருப்பதாகவும் கணேசலிங்கன் சொன்னார்.
இவரது வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் பாலுமகேந்திராவின் வீடு இருக்கிறது.
ஜனவரி 30 ஆம் திகதி காலை ராஜம் கிருஷ்ணனுடன் பேசுவதற்காகத் தொலை பேசியை எடுப்பதற்கு எழுந்தேன். தங்கியி ருந்த ஹோட்டல் அறைக் கதவின் கீழே அன்றைய தினகரன்’ நாளிதழ் ( தமிழ் நாட்டில் வெளியானது) என்னை எடுத்துப் பார் என்று அழைத்தது.
இலங்கையில் செ. யோகநாதன் மறைந் தார் என்ற செய்தி அதில் பிரசுரமாகி யிருந்தது.
முதல் இரவு- செ. கணேசலிங்கனுடன் யோகநாதனின் வாழ்வும் எழுத்தும்" குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டி ருந்தோம். மறுநாள், அவரது மரணச் செய்தி அறிந்து- சற்று அதிர்ந்து போனேன்.
ராஜம் கிருஷ்ணனுக்குத் தற்போது 83 வயது. உடல் நலக்குறைவால் சற்றுத் தளர்ந்து விட்டாகவும், தாம்பரத்திலிருந்து இடம்பெயர்ந்து திருவான்மியூரில் வசிப்பதா கவும், தமிழ்ப் புத்தகாலயம் அகிலன் கண்ணன் எனக்கு ஏற்கனவே தகவலும், முகவரியும் தந்திருந்தார்.
ராஜம் கிருஷ்ணன் 1983 முற்பகுதியில் எமது இ.மு.எ.ச. பாரதி நூற்றாண்டு விழா விற்கு வந்து கலந்து கொண்ட நாள் முதல் நல்ல பழக்கம். பின்னர், 1984, 1990 இல் தமிழகம் சென்ற சமயங்களிலெல்லாம் இவரது தாம்பரம் இல்லம் சென்று அறு
Ld6io666apas Lomňré 2008 奉 4.

Page 23
சுவை உணவு அருந்தியிருக்கிறேன். இலக் கிய விருந்தில் திழைத்திருக்கிறேன்.
கலகலப்பாகப் பேசும் இயல்பு கொண்ட வர். ஈழத்து மக்களிடம் அபிமானம் மிக்க வர். மண்டபம் முகாமில் அகதிகளாக ஒதுங்கிய மக்களின் கதையை "மாணிக்க கங்கையில் சித்திரித்தவர்.
முதுமையிலும் அயராமல், 'தினமலர்' பத்திரிகையில் பத்தி எழுத்துக்கள் எழுதிக் கொண்டிருக்கும், ராஜம் கிருஷ்ணனைப் பார்க்க திருவான்மியூர் சென்றேன்.
நான் அவருடன் உரையாடிக் கொண்டி ருக்கையில், எதிர்பாராத விதமாக- "முருக அம்பை சென்னைக்கு வந்திருக் ......أگgلاوليا கிறா. பேசப் போறிங்களா?' எனக் கேட்டார்.
'அதெற்கென்ன பேசுவோமே. என்றேன். சிரமப்பட்டு எழுந்து (நடப்பதற்கு சிரமப்படுகிறார்) தொலைபேசியில் எண் களை அழுத்தினார்.
மறுமுனையில் அம்பை. சிறிது நேரம் உரையாடினோம்.
உலகிலே எந்தவொரு தமிழ் இதழும் பிரசுரிக்கத் தயங்கும் ஒரு சிறுகதையை அம்பை- பிரான்சிலிருந்து வெளியாகும் உயிர் நிழல் இதழில் எழுதியிருந்தார்.
அக்கதை 'கைலாசம்."
குறிப்பிட்ட இதழையும்- கதையையும் அவுஸ்திரேலியா உதயம்' பத்திரிகையில் கடந்த ஆண்டு, நூலகம் பகுதியில் பதிவு செய்திருக்கிறேன். இந்தத் தகவலைச் சொன்ன போது, ஆச்சரியத்துடன், 'அப்ப Լջաn!........... நன்றி!. நேரில் பார்க்க முடியாததுதான் வருத்தம்’ என்றார். திலகவதியின் தொலைபேசி இலக்கத்தை யும் ராஜம் கிருஷ்ணன் தந்தார்.
பொலிஸ் இலாகாவில் உயர் பதவியில் இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் திலகவதியை, ஏற்கனவே 1990 ஆம் ஆண்டு- சென்னையில் நடந்த சிவகாமி யின் பழையன கழிதல்’ நாவல் வெளியீட்டு விழாவில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது மல்லிகை ஜீவாவும் உடனிருந்தார்.
சுகவீனமுற்றிருந்த போதிலும், தமது வீட்டு பணியாளரான ஒரு மூதாட்டியிடம் சொல்லி என்னை அன்போடு உபசரித்த ராஜம் கிருஷ்ணன்- நீண்ட காலத்தின் பின்பு என்னைப் பார்த்து நெகிழ்ந்துவிட்டார்.
அன்று இரவு தமிழ்நாட்டுக்கு, விடை கொடுத்து விட்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க வேண்டியிருந்தமையால் எனது அவசரத்தைச் சொன்னேன்.
“எத்தனையோ அலுவல்களுக்கு மத்தி யில் நேரம் ஒதுக்கி என்னைப் பார்க்க வந்த தற்கு எப்படி நன்றி கூறுவது எனத் தெரிய வில்லை முருகபூபதி." எனச் சொன்ன ராஜம் கிருஷ்ணன் என் தலையைத் தொட்டு "எங்கிருந்தாலும் வாழ்க’ என வாழ்த்தி அனுப்பினார்.
பல வருடங்களுக்கு முன்னர் குரும்ப சிட்டியில் இரசிகமணி கனகசெந்தில்நாதன், எங்கள் மேமன்கவியின் தலையைத் தொட்டு ஆசிர்வதித்த காட்சிதான் என் நின்னவுக்கு வந்தது.
திருவான்மியூரிலிருந்து நேரே- தி. நகரில் அமைந்துள்ள 'பாலன் இல்லம் வந்தேன். அங்கே தாமரை மகேந்திரன் எனது வரவுக்குக் காத்திருந்தார்.
மகேந்திரன் தாமரை இதழ்களை எனக் குத் தந்து- ஜனசக்தி காரியாலயத்திற்கும் அழைத்துச் சென்று- ஆசிரிய பீடத்திலிருப் பவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அன்று அவருடன் மதிய உணவு அருந்திய பின்பு,
மல்லிகை மார்ச் 2008 ஜ் 42

மாலை இருவரும் அப்பல்லோ மருத்துவ மனைக்குச் சென்றோம்.
ஜெயகாந்தன் வழக்கமான கம்பீரத்து டன் சிறிய வெண்ணிற மீசையை முறுக்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தார்.
எம்மைக் கண்டதும், கைகூப்பி வணங்கி னார். கைகுலுக்கி என்னை அறிமுகப்படுத் திக் கொண்டு, பேசினேன்.
1990 ஆம் ஆண்டு- ஆழ்வார் பேட்டை யில் அவரது மாடி அறையில் சந்தித்து உரையாடியதை நினைவு படுத்தினேன்.
'உங்களைப் பார்க்க நான் வந்தேன் என்று, மல்லிகை ஜீவாவுக்கு சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்." என்று சொன்னது தான் தாமதம். "SLDT. ஜீவா எப்படி இருக்கிறார்?' எனக் கேட்டார் மீசையை முறுக்கியவாறே.
'உற்சாகமாக இருக்கிறார்." எனச்
சொன்னேன்.
'அவருக்கு வயது எண்பத்தைத் தாண்டியிருக்குமே?" என்றார்.
"ஆம், நாளை அவுஸ்திரேலியா சென்ற தும், ஜீவாவுக்கு கோல் எடுத்துச் சொல் வேன்' என்றேன்.
எங்களுக்கிடையில் உரையாடல் தொடர் ந்தது.
'என்ன? நீங்கள் இலங்கை வருவேன், வருவேன் என்று சொன்னிர்கள். வர வில்லை. சமீபத்தில் கூட உங்களை அழை க்க விருப்பதாக ஜீவா கலந்து கொண்ட கூட்டத்தில் பேசப்பட்டதாகப் பத்திரிகைச் செய்தி படித்தேன்." எனச் சொன்னதும்ஜெயகாந்தன், "அப்படியா? சரி அப்படியே இருக்கட்டும். ' என்று சொல்லிச் சிரித்தார்.
எப்பொழுதும், பல அர்த்தங்களுடன் பேசுவதில் வல்லவர் ஜெயகாந்தன்.
"ஒய்ல்ாக இருக்கச் சொல்லி விட்டிருக் கிறார்கள். ஒய்வாகத்தான் இருக்கிறேன்" என்றார், மீண்டும் சிரிப்புடன்.
அப்பொழுது திரைப்பட நடிகரும் இயக் குநருமான பார்த்தீபன், ஜெயகாந்தனைப் பார்க்க வந்தார். அறிமுகமாகி உரையாடி (360T FTLD.
"நேற்று, கமல் வந்தார்." என்றார் ஜே. கே. அந்த மருத்துவமனையில் ஜே. கே. இருந்த அறையில் ஒரு பதிவுப் புத்தகத் தைத் தந்தார்கள். அவரைப் பார்க்க வந்த வர்கள் அனைவரும் தமது பெயரையும்எழுதிக் கையொப்பம் இட்டிருந்தனர். நானும், மகேந்திரனும் அதில் எங்கள் பெயர்களைப் பதிவு செய்தோம்.
இலக்கிய, அரசியல், சினிமா உலகத் தைச் சேர்ந்தவர்கள் ஜே. கே. யை வந்து பார்த்த வண்ணமிருக்கிறார்கள்.
விடைபெறும் போது, அவரது கைக ளைப் பற்றி 'மேலும் பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும். உங்களையும் பார்த்து விட்ட மனநிறைவோடு அவுஸ்திரேலியா புறப்படுகிறேன். கியூபாவில் தான் நாம் சந்திக்க முடியவில்லை. இங்கே தமிழ் நாட்டிலாவது, சந்திக்க முடிந்தது, மகிழ்ச்சி யைத் தருகிறது. மீண்டும் சந்திப்போம்" என்றேன்.
ஜெயகாந்தன் கையசைத்து விடை
கொடுத்தார்.
சுமார் 40 நாட்களின் பின்பு அவுஸ் திரேலியாவில் வந்து இறங்கினேன். இந்த நாட்களில் நான் சந்தித்த மனிதர்களும், தரிசித்த காட்சிகளும் மறக்க முடியாத அநுபவங்களை என்னுள் விதைத்திருப்ப தாகவே உணருகிறேன்.
பயணங்கள் மீண்டும் தொடரும்.
மல்லிகை மார்ச் 2008 ஜ் 43

Page 24
gå --12 2ழியில் உாழ்ந்தழிந்த
*ტlტვეტწ"
G/s. G. முடுகானந்தன்
5ாமம், காமம், காமம் வேறு எதிலும், அக்கறையற்ற ஒருவன். ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாதோ, அப்படியாக வாழ்ந்தவன், அவன். அத்தகைய ஒருவனின் கதையை அண்மையில், திரைப் படமாகப் பார்க்கக் கிடைத்தது. கண்ணில் காணும் பெண்களை யெல்லாம் அந்த இடத்திலேயே கிடத்தி ருசித்து விட்டு, வீசி எறிந்து போகும், குரூர குணம் படைத்தவன். விபசாரிகள் முதல், இளம் பெண்கள், மற்றவன் பெண்டாட்டி, பிச்சைக்காரி வரை எங்கு கவர்ச்சி கண்டாலும் குறி வைப்பவன். அத்தோடு கோபமும், முரட்டுத் தனமும் கை கோத்துவர, நியாய அநியாயங்களை மதிக்காதவன். சொந்தப் பெண்டாட்டியோடும் வெறியோடு கீhடிய காமந்தான். காதலோடு கூடிய கூடல் அவன் அறியாதது.
காமமும், வெறியும் இணைந்த பாலியல் திரைப்படம் பற்றி ஏன் எழுத வருகிறேன் என எண்னத் தோன்றுகிறதா? அதிலும், அதிகம் விமர்சகர்கள் கண்ணில் படாத திரைப்படம் பற்றி ஏன் எழுதுகிறேன்? காரணத்தோடு தான். கிளுகிளுப்புக்களையும், ஆபாசங்களையும் அள்ளிக் கொட்டிப் பணப் பையை நிரப்பும் நோக்கோடு எடுக்கப்பட்ட அர்த்தமற்ற படம் இல்லை. மாறாக ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல வருகிறது. அதிலும், மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அக்கறை கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்பது தான் காரணம்.
事
காதல் புனிதமானது என்கிறார்கள். ஆனால், பெரும்பாலான காதல்கள் காமத்திற்கான ஆசாரப் பூச்சுக்கள் மட்டுமே. ஆனால், காமம் புனிதமானது என்றோ, எதிர் மாறாகக் கேவலமானது என்றோ சொல்ல முடியாது. எல்லா உயிரினங்களுக்குமே இயற்கையான உணர்வு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மட்டற்ற காமம், எல்லை மீறிய காமம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இவை அவர் இருவர் உணர்வு சார்ந்தவை இல்லையா? காமம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறைக்குள் நின்றாலும் சரி, அந்த எல்லையை மீறினாலும் சரி, அது இயற்கையான உணர்வு, விஞ்ஞான பூர்வமான செயல்.
இருந்த போதும், முறை தவறிய காமம் எமது சமூகம், நாகரிக விழுமியங்களுக்கு அப்பாற் பட்டது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால், விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும் போது, பாதுகாப்பற்ற காமம் மட்டுமே தப்பானது. அதனால், பல ஆபத்துக்கள் காத்திருக்கும்.
மல்லிகை மார்ச் 2008 ஜ் 44
 

இதைத் தான் இப்படம் சொல்ல முனை கிறது.
இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு வனுக்கு ஒருத்தி என்ற நியதி கிடையாது. காமம் அதிலும், சமூகக் கட்டுக்களை மீறிய காமம் மட்டுமன்றி, வன்புணர்ச்சி, பாதுகாப் பற்ற புணர்ச்சி இவை எல்லாவற்றையும் தனது வாடிக்கையாகக் கொண்டவன். அதனையே, தனது ஆண்மைக்கு அழகு என்று கொள்பவன்.
பொலி காளையைப் பசுவிற்கு விடும் தொழில் அய்யனாருக்கு, பொலிகாளை போலவே, தானும் பெண்களின் வேட்கை யைத் தணிப்பவன் என்ற திமிர் வேறு. இதனால், விலைமாதோடு கூடினால் கூட, அவளுக்குப் பணம் கொடுக்க மறுத்து, தான் கொடுத்த சுகத்திற்காக அவள் தான் தனக்குக் கூலி தர வேண்டும் என அடா வடித்தனம் பண்ணுகிறான். வெளி உறவுக்கு முன்னர் ஆணுறை (கொண்டோம்) அணிய மறுக்கிறான். தன் வைரம் பாய்ந்த உடம்பை நோய், நொடி அனுகாது என வீரம் பேசுகிறான்.
கிராமத்துச் சண்டியனான இவனுக்கு அழகும், துடுக்குத்தனமும் நிறைந்த அழ கம்மா மீது ஆசை வருகிறது. பணிய மறுக் கும் அவளைத் திருமணம் செய்து வழிக்குக் கொண்டு வர முயல்கிறான். முதலிரவில் பணிய மறுக்க, வன்புணர்ச்சி செய்கிறான். அழகுவாகப் பத்மப்பிரியா வருகிறார். அனா சயமாகப் பனை மரத்தில் விறுக்கென ஏறும் போதும், நுங்கு சீவும் போதும், சீண்டுப வனை ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டும் போதும், தோழிகளோடு ஆட்டம் போடும் போதும் பாத்திரமாகவே மாறுகிறார். அது போலவே, பின்னர் புருஷனுக்காக் கண் னிர் வடிக்கும் போதும், கோர்ட்டு வரை
சென்று போராடும் போதும், பிணத்தைத் தான் ஒருத்தியாகத் தோளில் சுமக்கும் போதும், மனத்தில் இடம் பிடித்துக் கொள் கிறார். தான் பெற்ற பிள்ளையைத் தூக்கி எறிந்து கொல்ல முயலும் கணவனான அய்யனாரை, ஆவேசம் கொப்பளிக்க ஓங்கி
உதைக்கும் காட்சியில் சுடருகிறார்.
அய்யனாராக வரும் ஆதி, ஒரு புதுமுகம். கருங்கல் போல திடமான மேனி, பனை போல நீட்டி நிமிர்ந்த நெடும் தேர்ற்றம், நிமிர்ந்த நடை, ஆவேசமும், வன்மமும், குரூரமும் தெறிக்கும் கண்கள். கதைக் கேற்ற தேர்வு, பிற்பாதியில் நோயால் துவண்டு வாடும் போதும், தன் செய்கைகளுக்காக வருந்தும் போதும் நன்கு தேறுகிறார். உப கதையான தண்ணீர்ப் பிரச்சனை படத் தோடு பொருந்துகிறது. ஊருக்குக் குடிப்ப தற்கு உகந்த தண்ணிர் இல்லாத போது, கிணறு வெட்ட ஊர் முடிவெடுக்கிறது. இவ னது நிலத்தில் தான் நல்ல தண்ணிர் இருக் கிறது, என அறிந்து கிணறு கிண்ட அணு மதி கேட்கும் போது, அலட்சியமாக விட் டெறிந்து பேசி மறுக்கிறான். ஆனால், பின் நோயுற்று மனம் திருந்திய நிலையில் தண் னிர்ப் பஞ்சத்தைப் போக்கத் தன் நிலத்தில் இடம் தருகிறான். ஆயினும், நோயுற்றவன் நிலத்துத் தண்ணிரைக் குடித்தால் தங்களுக் கும் நோய் வருமோ? என ஊர் மக்கள் தயங்குகிறார்கள். அந்தத் தண்ணிரை ஊரார் குடிக்கிறார்களா? என்று ஆவல் பொங்க மகனைக் கேட்கும் காட்சியில் அற்புதமாக நடித்துக் கலங்க வைக்கிறார்.
உணவு போட்டுக் கொடுக்கும் போது கூட, மகனிடம் அடியும், உதையும் வாங்கும் அம்மாவாக வருபவர், பெயர் தெரியாத போதும், மனதில் நிற்கிறார்.
மல்லிகை மார்ச் 2008 ஜ் 45

Page 25
அய்யனார் ஒரு பிரச்சனையில் அகப் பட்டுச் சிறை செல்ல நேர்ந்த போதும், திருந்தவில்லை. மாறாகக் கஞ்சா, ஓரினப் பாலு றவு ஆகியனவும் பழக்கமாகின்றன. ஊசி யால் போதை மருந்து ஏற்றுவதும், தொடர் கிறது. இறுதியில் ஆட் கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கு ஆளாகி உடல் மெலிந்து, காய்ந்து கருகிச் சருகாகிச் சிறிது சிறிதாக உதிர்கிறான். இப் பகுதி மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இயக்குநர், ஒப் U606ÜTurt6TTT, LULÜ பிடிப்பாளர் அனைவரும் அர்ப்பணிப்போடு செய்துள்ளனர். என்னைப் பொறுத்த வரையில், படத்தின் பிரதான அம்சமே இது தான். அந்த மிருகத்தின் அழிவு முழுப் படத்தின் மூன்றில் ஒரு பகுதி வரையே ஒடுகிறது என்ற போதும், செய்திப் படம் போல சலிக்க வைக்கவில்லை. கதை யோடும், காட்சிகளோடும் எம்மைப் பிணைத்து வைப்பதில் இயக்குநர் சாமி வெற்றி பெறு கிறார்! பாராட்டுக்குரியவர் இவரது முதல் திரைப்படம் உயிர் என்பதையும் சொல்லி
606 sessorTib.
இதற்கு மாறாக முன் பகுதி முழுவதும் குரூரமும், வன்மமுமே நிறைந்திருந்தன. மிருகமாக வாழ்ந்த ஒரு பாத்திரத்தின் அழி வைச் சொல்வதற்கு அதன் பின்புறமான அடாவடித்தனங்களைப் பதிவு செய்வது அவ சியமானது தான். அதன் மூலமே அப் பாத் திரத்தின் குணாம்சத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். ஆயினும், பல தருணங்க ளில் நிறையவே முகம் சுளிக்கச் செய்கிறது. பல காட்சிகள் குடும்பத்தோடு இருந்து பார்க்க அசூசையளிக்கக் கூடியவை. ஆயினும், அந்தக் குரூரமான செய்கைகளும், அதன் விளைவான அழிவும் மனத்தில் பதிந்து விடுவதை மறுக்க முடியாதுள்ளது.
இது விடயமாக, இயக்குநர் சாமி, ஒரு நேர்காணலில் கூறிய கருத்தைப் பதிவு செய்வதும் அவசியம் என நினைக்கிறேன். "நான் எடுத்துக் கொண்ட கதைக்குச் சொல்ல வந்த விஷயத்துக்கு தேவையான
அளவில் தான் காட்சிகளை வைத்திருக் கிறேன். நான் நினைத்ததைச் சொல்லி யிருக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்கு வலுச் சேர்க்கும் காட்சிகளையே வைத்தி ருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் சினி மாவுக்கான நேர்மையுடன் நூறு சதவிகிதம் சரியாகவே நடந்து கொண்டு, கதையைக் கையாண்டு இருக்கிறேன்’ என்கிறார். மேலும், "இது குடும்பத்தினருடன் பார்க்க எடுக்கப்பட்டது அல்ல என்றே வைத்துக் கொள்ளுங்களேன். வயது வந்த இளைஞர் களைக் குறி வைத்து எடுக்கப்பட்ட படம் தான். அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற் படுத்தவே, இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை எச்சரிக்கை செய்யவே இப் படம்.” எனவும், தெளிவு படுத்துக்கிறார்.
எம். ஆர். ராதாவின் ரத்தக் கண்ணிருக் குப் பின்னர், பிரதான பாத்திரத்தின் அழிவை மிகச் சிறப்பாகச் சித்திரித்த திரைப்படம் இது என, மதன் தன் பார்வையில் சொல்லியது உண்மையாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது. ரத்தக்கண்ணிர் நான் சிறு வயதில் பார்க்காத படம். பின்னர் பார்த்த சில காட்சிகள் அதை ஏற்க வைக்கின்றன. இதைப் படத்தின் சிறப்பு என்று கொள்ள லாம். மறுபுறத்தில், இப்படத்தின் கதையின் சில பகுதிகளும், வார்ப்பும் பல தருணங் களில் அண்மையில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை அப்பட்டமாக ஞாபகப்படுத் துவது முக்கிய குறையாகப் படுகிறது. குந்த வெச்ச குமரிப் பொண்ணு. uTulso அச்சொட்டாகப் பருத்திவீரன் காட்சி போலவே இருக்கிறது.
பம்புசெட் பம்புசெட் எனப் பட்டப் பெயர் சூட்டப்படும் அழகுவிற்கு அந்தப்பட்டம் ஏன் வந்ததென்பதை இறுதி வரை ஆவலைத் தூண்டிச் செல்கிறார் நெறியாளர். இறு தியில் அதை அறியும் போது, இவ்வளவு தானா? என எண்ண வைத்தாலும், மென் சிரிப்போடு ரசிக்கவும் முடிகிறது.
oso636oës torffé 2008 奉 46

இன்று உலகளாவிய ரீதியிலும், முக்கி யமாக இந்திய உபகண்டப் பகுதியிலும், ஆபத்தான மருத்துவப் பிரச்சனையாக உருவெடுத்துச் சமூக ரீதியாகப் பல பாதிப்பு களை ஏற்படுத்தி வரும் நோய் எயிட்ஸ். இது பற்றிய திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இயக்குநர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய வர்! நோய் பற்றிய பல செய்திகளைச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வந்தா லும், அதையும் ஒரளவு கலாபூர்வமாகச், சலிக்க வைக்காமல் பார்க்க வைத்ததற்குச் சபாஷ் கொடுத்தே ஆக வேண்டும் நோய் தொற்றுவது எப்படி, அது தொற்றாமல் இருக்க ஆணுறை அணிதல் போன்ற, பல விடயங்கள் செய்தியாக உறுத்தாமல் கதை யோடு நகர்கின்றன.
மிக முக்கிய விடயமாகச் சொல்லப்படும் செய்தி எயிட்ஸ் நோயாளியை எப்படிச் சமூகமும், வீடும் எதிர் கொள்ள வேண்டியது என்பது பற்றியதாகும். இதையே, இத்திரைப் படம் தெளிவாகச் சொல்ல முனைகிறது என்பேன். ஒருவருடன் நெருங்கிப் பழகுவ தாலோ, தொட்டுப் பேசுவதாலோ அது தொற்றுவதில்லை. உடலுறவால் மட்டுமே தொற்றும் நோய், இது. நோயாளியை ஒதுக்கி வைக்கக் கூடாது. வீட்டில் வைத்தே பராமரிக்க வேண்டும் என்பதை நோயாளி யின் டொக்ரர், அவனது மனைவி போன்ற பாத்திரங்கள் ஊடாகக் காட்சிப் படுத்துகி றது. கிராம மக்கள் அவனை ஒதுக்கி வைப்பதையும், அவனது வீட்டை நெருப்பு
வைத்து அழிப்பதையும் தவறு என்று
சுட்டுகிறது. அவனது வீட்டுக் குழாயில் நீர் எடுப்பதால், நோய் தொற்றாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இறந்து மடியும் அவனது உடலைத் தூக்கிச் செல்லக் கூட, ஊர் மக் கள் தயங்குவதை அவளது ஆவேச வார்த் தைகள் ஊடாகக் கண்டிக்கிறது. இறுதியில் அவள் ஒருத்தியாகவே அவனது உடலைச் சுமந்து செல்வதும் பதிவாகிறது. மொத்தத்
தில் நோய் பற்றிய வீண் பீதிகளை நீக்க முயல்கிறது.
இவை எல்லாம் எயிட்ஸ் பற்றிய தெரிந்த தகவல்கள் தானே எனச் சலிக்கிறீர்களா? உண்மை தான். படித்த உங்களுக்கும்,
எனக்கும் தெரிந்த பழைய தகவல்கள் தான்.
ஆனால், இவை கூடத் தெரியாத மெத்தப் படித்த மனிதர்களை இன்றும் கூடக் காணக் கிடைக்கிறது. என்பது நேரிடை யாக அறிந்த உண்மை. இந்நிலையில் காட்சிப் புலனுடாக, விழிப்புணர்வு ஏற்பட முயற்சித்தது கூடிய பலனளிக்கும் என நம்பலாம். முக்கியமாக பாமர மக்களுக்கும் எட்டும் ஊடகம் அல்லவா திரைப்படம்?
ஒளிப்பதிவு ராம்நாத் ஷெட்டி. அவரது கமராவின் கண்கள் எமது கண்களை நம்ப வைக்கின்றது. ஆயினும், நோயாளியின் உடலில் நோய் பரவுகிறது என்பதைக் காட்சிப் படுத்தும், கம்பியூட்டர்த் தொழில் நுட்பம் சோபிக்கவில்லை. சற்றே அபத்தம் போலவும், தோன்றியது. கலை நயத்துடன் மெருகூட்டியிருக்கலாம். இசை சபேஷ்முரளி, பாடல் வரிகள், நா. முத்துக்குமார். அவை வெற்று வரிகள் அல்ல, கருவோடு இணைந்தவை.
இந்தப் படம் பற்றிய எனது அக்கறை க்கு இன்னுமொரு காரணம், இது தமிழ் நாட்டின் முதல் எயிட்ஸ் நோயாளி பற்றிய படமாகும். திருவாரூர் மாவட்டம் களப்பால் அருகிலுள்ள குலமாணிக்கம் என்கிற ஊரில் வாழ்ந்த, உண்மைப் பாத்திரம் அது என்பது போலவே, இன்னொரு வகையில் தமிழ் கூறும் உலகில் மற்றொரு, எயிட்ஸ் பற்றி எழுதிய முதல் நபர் நானாவேன். அதாவது, தமிழில் முதலாவது எயிட்ஸ் பற்றிய நூலை எழுதியவன் என்ற வகையில். இலங்கை யில் இரண்டு பதிப்புகளைக் கண்ட எனது எயிட்ஸ்" நூல் தமிழகத்தில் என். சீ. பீ. எச். வெளியீடாக மூன்று பதிப்புகளாக வெளி வந்ததும், குறிப்பிடத்தக்கது.
மல்லிகை மார்ச் 2008 & 47

Page 26
ஈழத்துத் தமிழ் நாவல்கள் 5
- செங்கை ஆழியான் க. குணராசா
5.1. நாவலாசிரியர் ம.வே. திருஞானசம்பந்தம்பிள்ளை
ஈழத்தின் ஆரம்பநாவல் இலக்கியத்துக்கு அணி சேர்த்தவர்களில் ம.வே. திருஞான சம்பந்தம்பிள்ளை குறிப்பிடத்தக்க ஒருவராவார். ஈழத்தின் பழம் பெரும் பத்திரிகை யான இந்துசாதனத்தின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர். இப்பத்திரி கையில் 'உலகம் பலவிதம்' என்ற பொதுத்தலைப்பில் காசிநாதன் நேசமலா (1924), கோபால நேசரத்தினம் (1927), துரைத்தினம் நேசமணி (1927) என மூன்று நாவல் கள் எழுதி ஆரம்ப நாவல் இலக்கியத்தில் இடம் பிடித்துக் கொண்டார்.
அவருடைய நாவல்களில் கோபால் நேசரத்தினம்’ சிறந்த நாவலாகக் கணிக்கப் படுகின்றது. இந்த நாவல் 1921 இல் இந்துசாதனப் பத்திரிகையில் தொடராக வெளி வந்தது. பின்னர் 1927 இல் நூலுருப் பெற்றது. ஆசிரியரே சில திருத்தங்களுடன் பதிப்பிததிருந்தார். சில மாதங்களில் அச்சிட்ட பிரதிகள் விற்றுத் தீர்ந்தமையால 1948 இல் இரண்ட்ாம் பதிப்பு வெளியிடப்பட்டது. 'படித்தவர்கள் வாசிக்க, படியாதவர்கள் தாமும் கேட்டு விளங்கக் கூடிய இலகுவான வசன நடையில் இந்நூல் ஆக்கப்பட்டி ருப்பதோடு, ஆண்பாலார் பெண்பாலார் எவரும் கூசாது படிக்கவும், கேட்கவும தக்க தாகக் காமசிருங்காத வருணனை அசாத்திய நிகழ்ச்சிகளின் வரலாற்று என்னுமி வைகளின்றி, எழுதப்பெற்றதாகும் இந்நூலின் நூண்முகத்தில் ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார். இந்நாவலின் கருப்பொருள் வித்தியாசமானது. கோபாலன் என்ற சைவப் பையனை தன் விதவை மகளுடன் குட்டித்தம்பி பேதாகள் பழகவிடுகின்றார். குட்டித தம்பிப் போதகரின் மகள் மதம் மாறிக கோபாலனை மணந்து கொள்கிறாள். தம்முடைய கல்விக் கூடங்களுக்கு வரும் சைவப் பிள்ளைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ மிஷனரிமாரின் சமயப் பிரச்சார நோக்கைக் கண்டிக்கும் எழுந்த இந்நாவல் அக்காலப் பகுதியில் நிலவிய சமயப் போட்டிச் சூழ்நிலையைத் தெளிவாக இந்நாவல் சித்திரிக்கின்றது' என நா.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். இந்நாவலில் ஆற்றொழுக்கான உரைநடை கையாளப்பட்டுள்ளது. பேச்சு வழக் கின்றிச் செந்தமிழிலேயே கதை விபரிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் திருஞான சம்பந்தம்பிள்ளை இந்த நாவலை வெகுசீராக வளர்த்துச் செல்லும் பாங்கும், முரண் பாடற்ற பாத்திரவார்ப்பும், யதார்த்த பூர்வமாகக் கதைசொல்லும் நேர்த்தியும் கோபால
நேசரத்தினத்தை ஆரம்ப நாவல்களுள் சிறந்த ஒன்றாகக் கருதவைக்கின்றது.
5.2. ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள்
ஈழத்தின் ஆரம்பநாவல்களாக ஏறக் குறைய 50 நாவல்கள் வெளிவந்துள் ளன. இந்த நாவல்கள் எழுதப்பட்டு வெளிவந்த காலகட்டத்தில் அவை தமிழ மல்லிகை மார்ச் 2008 ஜ் 48

நாட்டுத் தமிழ் நாவல்களின் போக்கோடு ஒத்திருந்துள்ளன. தமிழ்நாட்டின் ஆரம்ப கால நாவல்களாக 500 மேல் வெளி வந்துள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்துறைக்குள் புகுந்த புதியதொரு வடிவம் நாவலாகும். செய் யுள் வடிவில் தனி நூறு தனிப் பாடல்க ளாகவும் காவியங்களாகவும் தமிழ இலக் கியத்தை ஆக்கிரமித்திருந்த வடிவம் சிலப்பதிகாரத்தில் 'உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகி' இன்று நாவல் என்று சொல்லப்படுகின்ற வசன காவிய LOTE (Prose Epic) 56b6g, p 60J நடைக் காவியமாக அல்லது நவீன காவி யமாக உரை நடை வடிவமாக இலக் கியத்தை இன்று ஆக்கிரமித்துள்ளது. நாவல் உட்பட புனைகதைவடிவங்கள் மேலைதேயத்து இலக்கிய வடிவம் என்பதை மறுக்க முடியாது. 16 ஆம நூற் றாண்டில் இத்தாலியில் தோன்றிய உரை நடைக காவியமாக டெக்காமாரன் என்ற நாவலின் பிறப்புடன் புதியதொரு வடிவம் இலக்கியவுலகிற்கு அறமுகமாகியது. 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் டீ போ என்பவர் 'ராபின்சன் குரூசோ' என்ற உரைநடை நூலை எழுதி நாவலின தந்தை யானார். 18 ஆம் நூற்றாண்டில் கீழைத் தேசத்தில் ஆங்கிலேயரின் மேலாதிக் கத்துடன் இந்த இலக்கிய வடிவம் அறிமுகமாகியது. இதனை நமது நாட்டு ஆய்வாளர் பேராசிரியர் கைலாசபதி அழகாகக் கூறுவார். எந்தவொரு துறை யையும் நிகழ்வையும் மார்க்சின் கண்க ளுடாகப் ஊடாகப் பார்க்கின்ற கைலா சபதி, தமிழ்க்காவிய மரபினின்றும் பொருளிலும் நடையிலும் மாறுபட்ட வசன காவியம் மேலைத தேசத்தில் நிலமானி யச் சமூகம வலிமை இழந்த நிலையில், புதிய சமூக வர்க்கங்கள் தோன்றிய நிலை யில், கல்வியறிவு பெற்ற மத்தியதர வர்க் கத்தின் உதயத்துடன் கீழைத்தேசத்தில் அறிமுகமாகியது என்பதாகும். உழுது
வித்துண்போரான உயர்குடி மக்கள ஆற அமர இருந்து இன்புற உதவிய எழுத் திடப்பட்ட காவியமரபு இலக்கியங்கள். உழுதுண்போரின் அதாவது சாதாரண எளிய மக்களின் எழுத்திடப்படாத இலக் கியங்களுக்கு மாற்றீடாக வசன காவி யங்களாக நாவல் என்ற வடிவில் வெளிவரத் தொடங்கின என்பதாகும். கல்வியறிவு படைத்த மத்தியதர வகுப்பார் அதில் முழுமூச்சுடன் ஈடுபடத்தொடங் கினர். மன்னர்களையும் தன்னிகரில்லாத் தலைவர்களையும் பாடுபொருளாகக் கொண்ட காவியமரபு மாற்றமடைந்து, சாதாரண மக்களும் அவர் தம் உணர் வுகளும் பொருளாகி உரைநடையில் நாவல்கள் அமைந்தன. இதனையே 3J.G.E.356, "An Intrioduction to the English NoVal’ 66ổTAB ab (660DJ ufað பின்வருமாறு கூறுவதாக கைலாசபதி தனது நுT லில் குறித்துள்ளார் 'நிலமானிய அமைப்புச் சமுதாயத்தி னது சிதைவின் விளைவாக உருவாகிய புதிய வாழ்க்கைத் தத்துவமே நாவலி லக்கியம் தோன்றுவதற்கு வழி வகுத் தது. பூர்வா எழுத்தாளர்கள் கனவுலக நோக்கை உதறித் தள்ளித் தன்னம் பிக்கையுடன் காணப்பட்டனர்.'
5.3 நல்லதொரு நாவலின் ஆக்கக் கூறுகள்
பொதுமக்கள் விரும்பிப் படிக்கும இலக் கிய வகையாக இன்று நாவல் மாறி விட்டது. உரைநடை தமிழுக்குப் புதிய சங்கதியாக 17 ஆம் நூற்றாண்டின இறுதிப் பகுதிவரை இருந்தது. அக்கால வேளை யில் வீரமாமுனிவர் முதன முதல் உரை நடையில் பரமர்த்தகுரு கதையை எழுதி உரைநடையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். எனவே நாவல என்பது உரைநடையிலானது. உலகானுபவத்தை ஒட்டியது. சாதாரண மக்களின் வாழ்க்
மல்லிகை மார்ச் 2008 ஜ் 49

Page 27
கையையே நாவலின் பொருளாக அமை யும். சாதாரண மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் பாத்திரங் களைக் கொண்டமையும். உரையாடல் கள் பழகு தமிழில பெரிதும் காணப்படும். எனவே தான் மரபு மீறும் விபரீதப் போக் குகள் நவீன நாவல்களில் காணப்படும் என்பர். நல்லதோர் நாவலில் பாத்திர வார்ப்பு உண்மையான மனிதரின் சித்திரங்களாக அமைய வேண்டும். பாத் திரங்களின் உரையாடல்கள் காலதேச வர்த்தமானங்களுக்கும் பாத்திரங்களின் இயல்புக்கும் அமைய உயிர்த் துடிப் புள்ளதாக அமைய வேண்டும். தொகுத் துக் கூறின் நல்லதொரு நாவலிலன் ஆக்கக் கூறுகளாக கதைப் பின்னல், கதைக்கரு, பாத்திரப்படைப்பு. கதைப் பின்னணி அல்லது கதைக்களம், கதை விபரிக்கும் மொழி நடை, கதைஞர் நோக்கு நிலை என்பன அமைகின்றன. பாத்திரவார்ப்பும் ஏற்ற உரை நடையும் ஆகிய இவ்விரு ஆக்கக் கூறுகளும நாவல் களில் சிறப்பாக அமைவது அரிதும் அற்புத அனுபவமுமாகுமென்பர்.
தமிழகத்தில் ஆங்கில நாவலகளைப் படித்ததன் அருட்டுணர்வில் ஆரம்பத தமிழ் நாவல்கள் எழுதப்பட்டன. மேலைத்தேய ஆங்கில நாவல்களையும் தமிழகத் தமிழ் நாவல்களையும் படித்த அருட்டுணர்வில் ஈழத்தில் தமிழ் நாவல்கள் எழுதப்பட் டுள்ளன. ஆனால, ஈழத்தில் 1856 ஆம் ஆண்டிலேயே அதாவது 1876 ஆம ஆண்டு தமிழகத்தின் முதலாவது தமிழ் நாவல் வெளிவருவதற்கு இரு தசாப்தங்களுக்கு முதலே "காவலப்பன் கதை வெளிவந்து ள்ளது. ஈழத்து நாவல்கள் வெளிவந்த காலவரன முறையில் 1856 இல் வெளி வந்ததாகக் கூறப்படும் காவலப்பன் கதையை தமிழின் முதல் நாவல் எனக் கொள்ளலாமா? ஹன்னா மூர் என்பவர்
ஆங்கிலத்தில் எழுதிய பர்லே தி பேர்ட் டர் என்ற நூலின் தமிழாக்கமே காவலட் பன் கதையாகும். இந்த நூல் தமிழகத் தில் 1869 இலும் 1876 இலும் இரு தமிழாக் கங்கள வெளி வந்துள்ளன என சுப்பிர மணிய ஜயா குறிப்பிட்டுள்ளார். எவ்வா றாயினும் நாவல ஒன்றுக்குரிய ஆக்கக் கூறுகளைக் கொண்ட தாகத் தமிழிலில் வெளிவந்த முதல் நாவல் 1876 இல் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம் என்பதற்குரியதாகின்றது.
5. 4 தமிழ் நாவல்களின் கால ஒழுங்கு
1876 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையிலான தமிழ் நாவலகளை அவற்றின் உள்ளடக்கம், முக்கியத்து வம், உருவம், இயற்பண்பு, உலகியல் முதலானவற்றினை அடிப்படையாகக் கொண்டு பின் வருமாறு வகுத் து
94. JIT u J6DITD:
1. மாயூரம் வேதநாயகம்பிள்ளை
காலம் , ‘
2. ஆரணி குப்புசாமி முதலியார் 85 (6) b
3. கல்கி கிருஸ்ணமூர்த்தி காலம்
4. ஜெயகாந்தன் காலம்
5. நடப்பியல் காலம்
ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழ் நாவல் வரலாற்றில் ஒவ்வொருவர் முத ன்மை பெற்று விளங்கியிருக்கிறார்கள். அவர்கள் தம் எழுத்துக்களின் சமூக த்தாக்கத்தினால் அல்லது நாவல்களின்
மல்லிகை மார்ச் 2008 & 50

எண்ணிக்கையால் அல்லது சமூகத்தில் அவர்களுக் கிருந்த எழுத்துலகச் செல்வாக்கினால் அவ்வாறு கருத வைத் துள் ளார்கள் . ஆனால் அவர் க ளையொத்த வகையில் அல்லது வேறான பணி படிப்படையில் பல எழுத்தாளர்கள் அவ்வக்காலத்தில் இருக்கின்றனர்.
தமிழில் வழங்கிவருகின்ற நாவல் களை மூன்று தரத்தனவாக வகுத்து நோக்க முடியும் ஒன்று இலக்கிய நாவல் கள், இரண்டு இரசனை நாவல்கள், மூன்று மலின நாவல்கள் என அவ்வகுப்புக்கள் அமைகின்றன. இலக்கிய நாவல்கள காலத்தால் அழியாது மக்களால என்றும் பேசப்படுகின்றவையாகவும் நாவல இலக் கியத்தின் ஆக்கக் கூறுகளைச செழுமை யாகக் கொண்ட இலக்கிய முழுமையா கவும், தமிழிலக்கியத்தில் காலத்தை வென்று நிற்கின்ற இன்றைய பழந்தமிழ் காவியநூல்கள் போன்றும் நாவலாசிரி யர் ஹார்டி சொல்வது போல இந்த உல கத்தை ஆட்டுவிக்கின்ற அந்த குரூர சக்தி'யைச் சீர்ப்படுத்துகின்ற வகையில் சிருஷ்டிக்கப்பட்ட வசனகாவியங்களாம். இவை மீண்டும் மீண்டும் வாசித்துச சுவைக் கத் தூண்டுவன. இவை புகழ் பெற்ற நாவல்களாக இருக்கின்றன. இரசனை நாவல்களோ மக்களின் மனங்களைக் கவர்ந்து, வாழும் சமூகத்தின் குற்றங் குறைகளை வாசகனுக்கு ஓரளவாவது உணர்த்தி உலக வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ள வைத்து, மனிதத் தோடு வாழவும், பயனள்ளதாகப் பொழு தைச் செலவிடவும் வைப்பவை இரசனை நாவல்களாகும். இவையும் நாவல இலக் கணத்தின் ஆக்கக்கூறுகளை ஒரள வேணும் கொண்டமைந்திருக்க வேண் டும். வாசிப்பதால் வியப்புணர்வு, பாலு ணர்வு போன்ற உணர்வுகளை ஏறபடுத்தி
கனவுலகில் சற்று வேளை உலவவிடும் கதைகள் மலினநாவல்களாகவுள்ளன. அவை வாசித்துவிட்டுத் தூக்கி அப்பால் வீசிவிடும் புத்தகங்களாக உள்ளன.
5.5மாயூரம் வேதநாயகம் பிள்ளை காலம்
5.5.1 பிரதாபமுதலியார் சரித்திரம்
தமிழ் நாவல் உலகின் தந்தையாக மாயூரம் வேதநாயகம்பிள்ளை தனது 'பிரதாபமுதலியார் சரித்திரம' என்ற நாவலை 1876 இல் தந்த செயலினால் விளங்குகிறார். ஆங்கிலக் கல்வியின பயனாக மேலைத்தேய நாவலிலக் கியத்தில் பரிச்சயமான வேதநாயகம் பிள்ளை நாவல்கள் எழுத ஆரம்பித்தார். 'பத் தொன் பதாம் நுாற் றாணி டின் இறுதிக்காலம், தமிழிலக்கியத்தில் நூற்று .நெடுங்காலமாக இருந்ததன்றி அறுவடை செய்யும் காலமாக இல்லை' என டாக்டர் இரா.தண்டாயுதம் தன் நூலில் குறிப்பீடுவார். ஆந்நாற்று நடுங் கால கட்டத்து ஆரம்பநாவலாகப் பிரதாபமுதலியார் சரித்திரம் அமைந் துள்ளது. தமிழின் முதலாவது நாவ லாக இனங்கண்ட இந்நாவலே நாவலின் ஆக்கக் கூறுகளைச் சிறப்பாகக கொண்ட மைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வசன காவியத்தை ஆக்க நேர்ந்தமைக்கான காரணங்களை வேதநாயகம்பிள்ளை மிகத் தெளிவாக அந்நாவலின் முன்னுரையில் எடுத்துக் கூறியுள்ளார். 'தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்ற குறையைப் போக்குவது, வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம்,' என்பனவாம். பிரதாப
மல்லிகை மார்ச் 2008 & 51

Page 28
முதலியார் சரித்திரத்துக்கு முன்னர் தமிழில் உரைநடை நவீனம் இது போல ஒருபோதும் அளிக்கப்படவில்லை என அறியக்கிடக்கிறது. ஆங்கிலப்புலமை, கவிப்புலமை, அனுபவ விரிவு என்பன அன்னாரை பாத்திரவார்ப்பைச் சிறப் பாகவும் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்களைக் கூடியவரை இயல் பாகவும் நடாத்த உதவியுள்ளன. கிறிஸ்தவரான ஆசிரியர் தான் படைத்த நாவலிலன் பாத்திரங்களை இந்துக் களாக வரித்துக் கொண்டு, பிரதாபன் - ஞானாம்பாள் ஆகியவர்களின் வாழ்க் கையைச் சுற்றிக் கதை நகர்கின்றது. மெல்லிய நகைச்சுவையோடு பிரதாப முதலியார் சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. தமிழின் முதல் நாவலாகவிருந்தும் முதல் நாவல் உரைநடை வரவாகவிருந் தும் சோடை போகாத படைப்பாக அமைந் துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரின் நாவலாக்கத்தின் நோக்கின் படி' படிப்பவர் களை மகிழ்வு, ட் டவும் அறிவுட்டவும் தவறவில்லை எனலாம். மாயூரம வேதநாயக முதலியாரின் இரண்டாவது நாவலாக 1887 இல் எழுதப்பட்ட சுகுணசுந்தரி சரித்திரம் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது போல அமையவில்லை. நீண்டதொரு நீதிக்கதையாக நன்னெறிபோதிப்பதுடன் சலிப்பூட்டுவதாகவும் உள்ளதென்பது ஆய்வாளரின் கருத்தாகும். ஆனால் நவீன தமிழிலக்கியத்தின் பிறப்பு பிரதாபமுதலியார் சரித்திரத்திலிருந்தே தோன்றுகின்றது.
5.5.2 கமலாம்பாள் சரித்திரம்
1893 ஆம் ஆண்டு தமிழின் இரண்டா வது நாவல் என்று கொள்ளத் தக்க கமலாம்பாள் சரித்திரம் வெளிவந்தது. அதனை பி ஆர். ராஜாமையர் எழுதி
வெளியிட் டார் , "வேதநாயகம் பிள்ளைக்குப் பிறகு ஒரு மேதையைக் காண்பதற்குத் தமிழர்கள் பத்தாண்டு காலம் தவமியற்ற வேண்டியிருந்தது. என்கிறார் டாக்டர் இரா. தண்டாயுதம். பிரதாபமுதலியார் சரித்திரத்துக்கும் கமலாம்பாள் சரித்திரத்துக்குமிடையில் தமிழ் நாவலின் இலக்கியப் போக்கில் ஒரு வீழச்சி காணப்பட்டது. இக்கால கட்டத்தில் நாவல்கள் என்ற பெயரில் ஏராளமான நூல்கள் வெளிவந்தன. யதார்த்தப் பணி பில்லாத வினோத வியப்புக் கதைகளாக அவை அமைந் தன. மஜா ஜாலக் கதைகளாகவும மன்ன ரைத் தலைமைப் பாத்திரமாகவும் கொண்ட கதைகளாகவும் அமைந்தன. ஈழத்தமிழ் நாவலியக் கியத்திலும் இக்காலகட்டத்தில் அத்தன்மைகள் காணப்பட்டன. முகமது காசிம் சித்தி லெப்பையின் அசன்பேயுடைய கதை (1885), எஸ். இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதை (1881), என்பவை அவ்வாறானவை. தமிழகத் தில் வெளிவந்த சந்திர கெளசிகன், சின்னமணி கதை, சத்தியாம்பாள் கதை, அடிமைப்பெண், அரசியும் பையனும், அன்பின் கதை, இளைய அந்தணன், கெடுவான் கேடு நினைப்பான் என நூற் றுக்கணக்கானவை வெளிவந்து தமிழ கத்தை நிரப்பின. ஏராளமானவை மொழி பெயர்ப்புக் கதைகளும் அவற்றில் இருந் தன. இவற்றையெல்லாம் படித்து படிததுக் களைத்துப் போயிருந்த தமிழ் மக்க ளுக்கு ராஜாமையரின் கமலாம்பாள சரித்
திரத்தின் வருகை புது நீர்ப்பாய்ச்சியது.
ஆரம்பநாவலாக இருந்தாலும் நவீன நாவலின் ஆக்கக்கூறுகளைச் சிறப்பா கக் கொண்டமைந்த நாவலாக கமலாம் பாள் சரித்திரம் அமைந்தது. அக்கால வழமைக் கு ஏற்ப இருபெயர் த்
மல்லிகை மார்ச் 2008 ஜ் 52

தலைப்பை அதாவது 'ஆபத்துக் கிடமான அபவாதம் அல்லது கமலாம் பாள் சரித்திரம்'எனக் கொண்டிருந் தாலும் தமிழ் நாவலிலக்கியத்தின் ஒரு திருப்பு முனையாக அமைந்த நாவலாகும். ஒரு கிராமத்தின் வாழ்வும் வளமும் ஒர் உயர்குலக்குடும்பத்தின் வாழ்வையும் இந்நாவல் இயல்பாக நன்கு சித்திரிக்கின்றது. ஆசிரியர் தாம் வாழ்ந்த காலத்தின் களத்தை இந் நாவலில் சிறப்பாகக் காட்டியுள்ளார். ஒரு கிராம சமூகமே அவருடைய நாவலில பலத் தோடும் பலவீனத் தோடும் நடமாடுகின்றது. சீதா என்றொரு நாவலை யும் ராஜாமையர் எழுதியுள்ளார் எனத் தெரிகின்றது. கமலாம்பாள சரிததிரத்தை அடுத்து 1895 இல் ஈழத்தில் மட்டுமன்றி முதன்மதல் தமிழில் சரித்திர நாவல் ஒன்றினைப் படைத்த பெருமை திரு கோண மலையைச் சேர்ந்த தி.ச. சரவண முத்துப்பிள்ளை என்பவரைச் சேரும், ஈழத்தவரிகன் நான்காவது நாவல் மோகனாங்கி ஆகும். சென்னையில் கீழைத்தேய சுவுடிகள் திணைக் களத்தில் கடமையாற்றிய சரவண முத்துப்பிள்ளை நாயக்கமன்னர்களின் சரித்திரத்தை 'மோகனாங்கி' என்ற நாவலாகப் படைத்தார். இந்த நூலின் சுருக்கப்பதிப்பாக சொக்கநாதநாயக்கள்' என்ற பெயரில் அவரே மோகனாங் கியை எழுதி வெளியிட்டார். தமிழுக்குச் சரவணமுத்துப்பிள்ளையின் வரலாற்று நாவல் முதன் முயற்சியாகும். காவியநயன் கொண்டதாக இந்த நாவல் இருந்தாலும் வசனகாவியத் துக்கு இந்நூல் தரமான ஒரு ஆவணமாகும்.
5.5.3 பத்மாவதி சரித்திரம்
அ.மாதவையா என்பவரின் வருகை யோடு தமிழ் நாவலிலக்கியம் புதிய
தொரு அரங்கில் பிரவேசித்தது. சமு தாயத்தைப் படம் பிடிப்பதில் மாதவையா அவருகி கு முன் னைய இரு நாவலாசிரியர்களின் அடியொற்றி தன் நாவல்களில் தன் திறனை வெளியிட் டார். தனது நாவல்களில் சமுதாய
சீர்திருத்தவாதியாக அவர் தொழிற் பட்டார். இலக்கியம் சமுக அநீதிகளை எதிர்ப்பதற்ககுப் குரல் கொடுக்கமுடியும் என்பதைத் தன் எழுத்துக்கள் மூலம் நிரூபித்தார். சாதிய அநீதிகளையும
ஆங்கில மொழி மோகத்தையும் கண்
டித்துத் தனது நாவல்களில் எழுதினார்
அ.மாதவையா மூன்று நாவல்களை எழுதினார். பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்துமீனாட்சி என்பவை அவையாம். அ.மாதவையா வைத் தமிழ் நாவல் உலகம் பத்மாவதி சரித்திரத்துக்காகப் போற்றுகின்றது. இதுவே அவருக்குப் புகழ் தேடித்தந்த நாவலாகும். தான் வாழ்ந்த காலகட் டத்துச் சமுதாயத்தைத் தன் நாவலில் சித்திரித்தார். பண்பாட்டுத் தகவல்கள், சமுகவியற்றகவல்கள், பாத்திரங்களின் உளவியல் குணவியல்புகள் என்பன தத்ருபமாகப் பத்மாவதி நாவலில் அறி முகமாகின்றன. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் இயல்பு வாழ் நிலையோடு ஒத்து வருகின்றன. நம்ப கத்தன்மை காணப்படுகின்றது. கதா சிரியர் இந்நாவலில் இடையிடையே தத்துவ விசாரனைகள் செய்கின்றார். ஆனால் இந்த நாவலில காணப்படுகின்ற சிறப்பு யாதெனில் உரையாடல்கள் பேச்சுத் தமிழில், கொச்சை மொழியில் அ ைமந் தருகி கன் றமையாகும். ராஜாமையர் கமலாம்பிகை நாவலில் பயன்படுத்தியுற்ற உரையாடல்களின் பேச்சுத் தமிழிலும் சிறப்பாக இவரது நாவலில் உரையாடல் உள்ளது. அ.மாத வையாவின் ஏனைய இரண்டு நாவல் களும் பத்மாவதி சரித்திரம்' போன்று
மல்லிகை மார்ச் 2008 & 53

Page 29
சிறப்பானவிடத்தைப் பெறவில்லை. முத்து மீனாட்சி தன் கதையைச் சுய சரிதையாகத் தானே விபரிப்பது போன்ற உத்தியில் முதன் முதலாக எழுதப் பட்டுள்ளது. ஓர் அந்தணப்பெண்ணின் விதவை வாழ்க்கையை இந்த நாவல் விபரிக்கின்றது. பொதுவாகப் பிரதாப முதலியார் காலத்தில் பால்ய விவாகம், விதவாதுயரம், சமூக ஒழுக்கம் சார்ந்த படைப்புகள் வெளிவந்தன. அவற்றில் தத்துவஞானிகளின் மேற்கோள்களும் இடையிடையே காட்டப்பட்டுள்ளன.
5.5.4 தீனதயாளு
1900 ஆண்டு பண்டிதர் ச.ம.நடேச சாஸ்திரி 'தீனதயாளு' என்றொரு நாவலை வெளியிட்டு தமிழ் நாவலுல கில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தி னார். தீனதயாளு என்ற ஓர் அந்தண இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றி இந்த நாவல் நடக்கின்றது. பிராமணக் கூட்டுக் குடும்பம் ஒன்றின் குறை நிறை களை இந்நாவலில் ஆசிரியர் இயல்பாக விபரிக்கின்றார். பாத்திரங்களின் பெயர் கள் அவற்றின் குணவியல்புகளுக் கேற்ப இடப்பட்டுள்ளன. ஸ்வதேச மித்திரன் என்ற புனைப் பெயரில் இந்தநாவலை முதலில் எழுதிய மையாலும் பாத்திரங்கள் நிஜவாழ்வில் வாழ்பவர்களாக அமைந்தமையாலும் இவ்வாறான பெயர் மறைப்பு அவசியமா கியிருக்கும். எவ்வாறாயினும் நாவலில் பாத்திரங்களின் வளர்ச்சி நிலையில அப் பெயர்கள் தடையாகவுள்ளன. நடேச சாஸ்திரி தீனதயாளுவுடன், கோமளம் குமரியானது (1902), திக்கற்ற இரு குழந்தைகள் (1902) எனுமிரு நாவல் களை எழுதியுள்ளார். இவை தமிழ் நாவலிலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பனவாகா.
வேதநாயகம்பிள்ளை காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், வேறும் பலர் நாவலாக்க முயற்சிக ளிலீடுபட்டுள்ளனர் என அறியக் கிடைக் கின்றது. பரிதிமாக்கலைஞர் எனப்படும் சூரியநாராயண சாஸ்திரியார், தமிழில நாவல் எழுதுவதற்கு நமது தமிழறிஞா சிவை தாமோதரம் பிள்ளையால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார். மதிவாணன், புதுவது புனைந்தோர் செந்தமிழ்க் கதை என்பன அவரின் நாவல்களாம். மதிவாணன் நாவலின் நடை பண்டயத் தமிழில் உள்ளது. இந்நாவலில் காவிய மரபு மீறப்படவில்லை. இதனை அடுத்து விநடராஜஐயரின் ஞானபூஷணி, வி.ஏ. கோபாலகிருஷ்ணஐயரின் குணசீலன் என்பன வெளிவந்தன. இலங்கையில் அக் காலகட்டத்தில் த. கைலாச பிள்ளையின் 'இன்பவதி'(1902), சுவாமி சரவணமுத்துவின் 'கமலாவதி'(1904),சி. வை.சின்னப்பாபிள்ளையின் வீரசிங்கன் (1905) முதலான படைப்புகள் வெளி வந்தன. இவற்றில் வீரசிங்கன் கவனத் துக்குரிய நாவலாகும். இந்த நாவலை சி.வை. தாமோதம்பிள்ளையின் சகோதரர் எழுதியுள்ளார். 'ஈழத்துப் பின்னணியில் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற வகையில் வீரசிங்கன் நூல் முதன்மை பெறுகின்றது' என் கறார் சுப்பிரமணியஐயர்.
5.5.5 நொறுங்குண்ட இருதயம்
1914 ஆம் ஆண்டு இலங்கையில் மங்களநாயகி தம் பையாவினால் 'நொறுங்குண்ட இருதயம்' என்றொரு அற்புதமான படைப்பு வெளிவந்தது. ஈழத்தின் முதல் பெண் எழுத்தாளர் மங்களநாயகி தம்பையா ஆவார். 1928 ஆம் ஆண்டுடன் ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்களுடன் தமிழ்
மல்லிகை மார்ச் 2008 & 54

நாவல் இலக்கியத்தில் ஓர் இருண்ட காலம் ஆரம்பமாகின்றது. ஆனால் இக் காலகட்டத்தில் ஈழத்தில் காத்திரமான நான்கு நாவல்கள் தமிழ் நாவலிலக்கி யத்துக்குப் பெருமை சேர்ப்பனவாக வெளிவந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. மங்களநாயகி தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் (1914), இடைக்காடரின் நீலகண்டன (1925), எஸ் தம் பிமுத் துப் பிள் ளையரின் அழக வலி லி (1926), ம. வே. திருஞானசம்பந்தம்பிள்ளையின் கோபால நேசரத் தரினம் (1927) எண் பன அப்பெருமை தரும் நாவல்களாகும்.
இந்த நாவல்கள் இந்த மண்ணின் பல்
நிலைகளையும், சமூகத்தின் யதார்த் தநிலையையும் மண்வாசனையையும் பேசியுள்ளன. இந்தச் சமூகம் எப்படி யிருக்க வேண்டும் என்ற தொலை நோக்கினை அவை தம்முள் கொண்டி
ருக்கின்றன. கலை நயத்துடன் கூடிய சமூகத்தேடலும் செய்திகளும் இந்த நாவல்களில் விரவிக் காணப்படுகின் றன. நல்லதொரு நாவலின் ஆக்கக் கூறுகளை நொறுங்குண்ட இருதளம் கொண்டிருக்கின்றது. ஒழுக்கம் சார் அறநெறிகளை வேதநாயகம்பிள்ளை
கால நாவல்களில் காணக் கூடிய
பொதுப்பண்பாகும். மாயூரம் வேத நாயகம்பிள்ளையின் காலத்தில் தமிழில் ஆரம்பநாவல்கள் தோன்றின. நூற் றுக்கணக்கான நாவல்கள் எழுதப்பட்ட வெளிவந்துள்ளபோதிலும் பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித் திரம், பத்மாவதி சரித்திரம், தீனதயாளு என்பன தமிழ் நாவல் இலக்கியத்தின் ஆரம்ப நாவல்களாகத் தேறுகின்றன. அவற்றோடு நொறுங்குண்ட இருதயமும் சேர்த்து நோக்கப்படலாம்.
- தொடரும்
நம்மை விட்டு மறைந்து விட்டார்.
A J2U川 மல்லிகையின் இறுதி அஞ்சலி
தமிழ் மொழியை விஞ்ஞான யுகத்திற்குள் நுழைய வைத்தவரும், தமிழ் நடையை ஒரு புதிய கோணத்தில் பயன்படுத்தியவரும், சகலராலும் படிக்கத் தக்க பல்வேறு நூல்களைத் தமிழுலகத்திற்குத் தந்துதவியவருமான எழுத்தாளர் 'சுஜாதா'
அன்னாரது இழப்பிற்கு மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது. நவீன தமிழிலக்கியத்திற்குப் பேரிழப்பு, இது
- ஆசிரியர்
மல்லிகை மார்ச் 2008 ஜ் 55

Page 30
கீதை சொன்ன சேதி
~ රි". ශල්‍යතී>Iශද්රිව්ශේර්‍ද
இரவு முழுவதும் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தேன். மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம், எனது தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தது. தற்செயலாக என் மனதில் விழுந்த ஒரு சேதி தான் மனதை அலைத்துக் கொண்டிருக்கிறது. "உண்மையாக இருக்குமா?. சீ. இருக்காது. என்னுடைய நண்பன் பொன்னம்பலம் அப்படிச் செய்திருக்க மாட்டான்.' கேள்விப்பட்ட சம்பவம் வெறும் கனவாக இருக்கக் கூடாதா? என்று கூட, நினைக்கத் தோன்றியது.
பள்ளிப் பருவத்தில் தொடங்கி, இன்று பொன் விழாக் கண்டு விட்டது எமது நட்பு. பிறந்து, வளர்ந்தது முதல் அவனைப் பற்றித் தெரிந்த எனக்கு, இந்தச் செய்தி அதிர்ச்சியாகத் தானிருந்தது. பன்னெடுங் காலமாக ஆழ்ந்த அன்புடனும், நட்புடனும், மதிப்பும் மரியாதை யுடனும் பழகிய ஒருவனிடமிருந்து இப்படியான ஒரு அற்பத்தனத்தைத், துரோகத்தனத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
மரியாதை கொடுக்கத் தோன்றும் தோற்றம் சிலருக்கு இயல்பாகவே அமைவதுண்டு. ஒடிப் பிடித்து விளையாடிய பள்ளிப் பருவத்திலும் சரி, குடும்பஸ்தன் ஆன பின்னரும் சரி, இப்போதும் சரி பொன்னம்பலம் என்ற பெயருக்கே அயலட்டையில் பெரு மதிப்பு இருந்து வருகிறது. யாருக்கும் உதவி செய்யும் மனப் போக்கு, எல்லோருடைய சந்தோஷம், துயர் துக்கம் என்பனவற்றிலும், பங்கு கொண்டு செயலாற்றும் பண்பு பொது நலச் சேவை, ஆலயப் பணிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவனா இப்படி ஒரு துரோகத்தனத்தை, அதுவும் நண்பனான எனக்குச் செய்தான் என்பதை மனம் ஏற்க மறுத்தது. 'பொய்யான தகவலாகத் தான் இருக்கும். s
பொன்னம்பலத்திடம் இருந்த நேர்மையும், நிதானமும், பேராசையற்ற தன்மையும் தான் மற்றவர்களிடம் அவனது மதிப்பை உயர வைத்திருந்தது. ஊர்ப் பிரச்சினை எதுவானாலும், அவனது சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கும் நிலை இருந்தது. அவனை எனது நண்பன் 6.165 typ சொல்வதில் எனக்கும் பெருமை தான். அத்துடன், எனக்கும் அவ்வப்போது பல உதவிகள் செய்திருக்கிறான். மூத்தவளின் கலியாணத்திற்குக் கடன் தந்து பின்னர், இரண்டு வருடங்களில் திருப்பிக் கொடுத்த போது, ஒரு சதம் கூட, வட்டி வாங்க மறுத்துவிட்டான். இப்படிப் பல.
வயதுகள் கடந்து விட்ட நிலையிலும், எமது நட்பின் ஆழத்தில் மாற்றமில்லை. குடும்பச் சுமைகள் கூட, எமது இனிய நட்பைப் பாதித்திருக்கவில்லை. ஒருவரை ஒருவர் வாடா, போடா, என்று விழிப்பதைத் தவிர்த்துக் கொண்டோமே தவிர, எங்கள் நட்பு இன்னமும்
, மாறாமல் இறுக்கமாகவே இருந்து வருகிறது.
மல்லிகை மார்ச் 2008 ஜ் 56
 

இப்போது கேள்விப் பட்ட செய்தி, எமது நட்பின் அத்திவாரத்தையே உலுப்புவதாக இருக்கிறதே!. “சீ.. Cunt 6öIT 60 LbLu6uoLib இப்படி நடந்திருக்க மாட்டான் மனைவிக் குத் தவறான தகவலே கிடைத்திருக்கும்."
நானும் பொன்னம்பலமும் ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே எஸ். எஸ். சீ. சித்தி யடைந்து, பருத்தித்துறை வாத்தியாரிடம் கிளரிக்கல் பரீட்சைக்கான வகுப்பில் கற்று, ஒன்றாகவே எடுபட்டு இலிகிதர்களான நாட் தொட்டு பல சமயங்களில் வெவ்வேறு இடங் களில் பணியாற்றினாலும், எமது நட்புக் கடிதம் மூலமும், திருவிழா, கொண்டாட்டங் கள், பண்டிகைகளுக்கு லீவில் ஊர் வரும் போது, சந்திப்பதிலும் தொடர்ந்தது. பொன் னம்பலம் விரைவாகவே தனது சேவையில் பதவி உயர்வுகள் பெற்று, மேலே மேலே சென்ற போது, நான் பின் தங்கிவிட்ட போதிலும், எமது நட்பில் பின்னடைவு ஏற்பட்டதே இல்லை. பொன்னம்பலம் நிர் வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து வேகமாகத் தனது வசதிகளைப் பெருக்கிப் பணக்காரன் ஆகிவிட்ட பின்னரும், கண்ணன்குசேலர் போன்ற நட்பு எம்மிடையே தொடர்ந் தது. குசேலரைப் போலவே, நானும் பொரு ளதவி கேட்டு என்றும் அவனிடம் அதிகம் சென்றதில்லை.
அருகே மனைவி இராசம்மா அசைந்து படுப்பது தெரிந்தது. அவளையும் இந்தச் சேதி பாதித்திருந்தாலும், என்னைப் போல அதிகம் குழப்பமடையவில்லை. மணமான காலத்திலிருந்து எமது நட்பை அவள் மறுக்காவிட்டாலும், பெரிதாக நினைப்ப தில்லை. அதற்குக் காரணம் பொன்னம் பலத்தின் மனைவி தவமணியின் போக்குத் தான் என்பது எனக்குப் புரிந்தது. எனினும்,
கணவனின் நண்பன் என்ற முறையில் தவமணி எனக்குரிய மரியாதையைத் தருவதில் என்றுமே தவறியதில்லை. தனது கணவனின் அந்தஸ்தால் தலைக்கணம் அவளிடம் இருந்தது. கூடவே, அவளும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள் தான் என்பதாலும், அப்படியான சுபாவம் இருக்கும் என்பதை என் மனைவியிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.
எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் சாந்தி, இளையவள் வசந்தி. இரு வரையும் படிக்க வைத்துப் பட்டதாரியாக்கி, ஆசிரியைகளாக வலம் வர வைத்த பின்னர் தான், அரசனையும் ஆண்டியாக்க வைக் கும் சம்பவங்கள் அச்சுறுத்தின. எங்கு திரு மணம் பேசிச் சென்றாலும் தனி வீடு, சீதனப் பணம், ரொக்கம் என்று பயம் காட்டியது. அந்த வேளையில் தான் பொன்னம்பலத் தின் மகன் சுரேசின் நினைவு மனதில் பொறி யாகத் தட்டியது. மனைவியிடம் சொன்ன போது, அவர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்று பதிலளித்த போது, எனக்குக் கோபம் வந்தது. அதைக் கண்ட மனைவி "வேணு மெண்டால் கேட்டுப் பாருங்கோவன்' என் றாள். எப்பொழுதும் அவள் என்னுடன் முரண் பட்டுப் பிடிவாதம் பிடிப்பதில்லை. தனது கருத்தை மட்டும் சொல்லிவிட்டு, அனுசரித் துப் போவது வழக்கம்.
நம்பிக்கையோடு நான் நண்பனின்
வீட்டுக்குச் சென்றேன். நீண்ட நேரமாகப்
பேசிக் கொண்டிருந்த போதும், என் மனதில் உள்ளதைச் சொல்ல முடியாத தயக்கம், எனக்கே வியப்பினை அளித்தது. நான் எதையோ சொல்லத் தயங்குவதை நண்பன் பொன்னம்பலம் கவனித்ததும், நேராகவே என்ன விசயம்' என்று என்னிடம் கேட்டான்.
மல்லிகை மார்ச் 2008 & 57

Page 31
தயங்கித் தயங்கி எனது மூத்த மகள் சாந்தியை அவரது மகன் சுரேசுக்குப் பேசு வோமா? என்று கூறி முடித்தேன். "இதுக் கேனடா அப்பா இவ்வளவு தயங்கினனி? சரி பார்த்தாப் போச்சு. நல்ல விசயம் தானே? சாதகக் குறிப்பைக் கொண்டு வந்து தா. பொருத்தமெண்டாச் செய்வம்.” என உற்சாக மாகப் பொன்னம்பலம் பதிலளித்த போது, மனது உருகியது. சா. எவ்வளவு நல்ல நண்பன்."
நான் இப்படி நினைத்தற்கு முக்கிய காரணம், அவர்களுடைய தற்போதைய உயர்ந்த நிலைதான். சுரேஸ் மின் பொறி யியலாளராக அரச கூட்டுத்தாபனத்தில் பணி யாற்றிக் கொண்டிருந்தான் வாகனம், குவாட்டேர்ஸ் எனப் பல வசதிகள். கூடவே, கண் முன்னால் வளர்ந்த நல்ல பையன். மனது குதூகலத்தில் மிதந்தது.
கடவுள் புண்ணியத்தில் எனது இரண்டு மகள்மாரும் அழகிகள் மட்டுமல்ல, பண்பான வர்கள். இந்தச் சந்தோசச் செய்தியை மன்னவியிடம் வந்து கூறிய போது, "நீங்கள் மாப்பிள்ளையின்ர குறிப்பைக் கேட்டு வாங்கி வந்திருக்கலாமே?’ என்று ஒரு போடு போட்ட போது, எனக்கு அவள் மீது கோபம் தான் வந்தது. "உனக்கு எப்பவும் நம்பிக் கையீனம் தான். சாதகக் குறிப்பை எடு. கொண்டு போய்க் கொடுத்திட்டு வாறன்." உடனே செயலில் இறங்கினேன்.
பவ்வியமாக நான் கொடுத்த ஒலையை வாங்கிய பொன்னம்பலம், பொருத்தம் பார்த்து வைப்பதாகக் கூறினான். மூன்றா வது நாள் நான் போனபோது, பொருத்தம் காணாது எனக் குறிப்பைத் திரும்பத் தந் தான். மனைவி, "எனக்கு அப்பவே தெரியும்' என்று கூறியபோது, மீண்டும் கோபம் தான் வந்தது.
மனைவியின் சந்தேகத்தைப் பொய்யாக் குவது போல, சில நாட்களின் பின் தனக்
குத் தெரிந்த, அரச இலிகிதராகப் பணி புரியும் மாப்பிளையின் தகவல் தந்தான். அதுமட்டு மல்லாமல், சீதனப் பேச்சில் தடங்கல் ஏற் பட்ட போது, சமரசம் பேசியதுடன், எனக்குத் தேவைப்பட்ட பணத்தைக் கடனாகத் தந்து தவிய போது, மனைவியின் முன்னர் நான் மார்பை நிமிர்த்தி, அற்பமாய் அவளை நோக்கினேன்.
சாந்திக்கு வாய்த்த மாப்பிள்ளை குணத் தில் குன்று. சாந்தியோடு மட்டுமன்றி, குடும் பத்தவர் அனைவருடனும் அனுசரித்து நடந்தபோது, எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது. கூடவே, வெகு விரைவிலேயே சுப்பர் கிறேட் பரீட்சையில் தேறி ஏ. ஒ’ ஆகப் பதவி உயர்வும் பெற்றபோது, பொன்னம் பலத்தையே எனது மனது வாழ்த்தியது.
பொன்னம்பலத்தின் மகன் கரேசுக்கு மிகவும் வசதியான இடத்தில் பெரும் சீத னத்துடன் கலியாணம் நடந்போது, என்னை அழைக்கத் தவறவில்லை. இப்படியே இனிமையாகத் தொடர்ந்த நட்பில், குட்டை யில் கல்லெறிவது போல, மனைவி கொண்டு வந்த தகவல் மனதைக் குடைந்து கொண்டி ருந்தது. "இஞ்சேருங்கோ. நீங்கள் வெளுத்ததெல்லாம் பாலெண்டு நினைக்கி நீங்கள். உங்களைப் போல நல்ல மனசு உங்கட நண்பருக்கு இல்லை. எங்கடை சாந்திக்குப் பொருத்தமில்லை எண்டு சொன்னதை நம்புறியளே?. ნT6ზ6umbio பெரிய இடத்திலை செய்யிற நோக்கத் திற்காகத் தான். இப்ப வசந்திக்கு வந்த வாய்ப்பை இப்படிச் செய்து போட்டினம்.” அவள் ஆதங்கத்தோடு கூறிய போதும், என்னால் நம்ப முடியவில்லை. இப்போது இந்த நினைவுகளால் தாக்கப்பட்டுத் தூக்க மின்றித் தவிக்கிறேன்.
தூரத்தே சேவல் கூவியது கேட்கிறது. காலை நெருங்கி வருவதை அது தெரிவிக் கிறது. சாந்தியின் திருமணத்தோடு, எமக்கி
மல்லிகை மார்ச் 2008 ஜ் 58

ருந்த ஒரே வீடு சீதனமாக எழுதியாயிற்று. கையிருப்பும் இல்லை. எப்படியோ கடனை அடைத்ததில் நிம்மதி. இனி வசந்தியின் காரியங்களைப் பார்க்க வேண்டும் என்று முனைப்பாக இறங்கிய போது தான், இந்த டாக்டர் மாப்பிள்ளை எதிர்பாராமல் தட்டுப் பட்டது. வசந்தியைக் கோயிலடியில் மாப் பிள்ளையின் தாயார் பார்த்திருக்கிறார். பிடித் திருக்க வேண்டும். அவர்கள் தரகர் மூல மாக எங்களை அணுகினார்கள்.
"எங்கட பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந் தவை. உங்களுக்குப் பொருத்தமான இடம். பொடியனும் வலு நல்ல குணசாலி. இனி டாக்குத்தர் உத்தியோகம் எண்டால், சொல் லவும் வேணுமோ? உங்களட்ட அதிகம் சீதனம் ஆதனம் எதிர்பார்க்கவில்லை. வீடு நகை நட்டோடை கொஞ்சச் சீதனப் பணம்
நன்கொடையாகக் கேட்கினம். Tä5 குத்தர் மாப்பிளைக்கு இப்பதையில கேட்கிற திலை பாதி கூட, கேட்கயில்லை. 66o
லாம் பிள்ளையின்ர நல்ல காலம் தான். பொருத்தம் பார்த்துச் சரியெண்டால் மேற் Gas T600TG (3u86) Tub..... இந்தாருங்கோ குறிப்புப் பிரதி. பிள்ளையின்ர சாதகக் குறிப்பிலையும் ஒரு பிரதி தாங்கோ. y
என் காதுகளையே என்னால் நம்ப முடியாமலிருந்தது. டொக்டர் மாப்பிளை. அதுவும் லண்டனிலை. இப்ப லீவிலை வந்து நிற்கிறானாம். as 65uum 600T b முடிச்சுக் கொண்டு தான் பயணமாம். b...... எல்லாம் சரி, இப்ப வீடு வாசல், பணம், பொருள் தேடுறது தான் கஷ்டம் எனப் பலவாறு யோசித்தபடி குறிப்பை வாங்கிப் பொருத்தமும் பார்த்தேன்.
அப்படி ஒரு அற்புதமான பொருத்த மெண்டு சாத்திரியார் சொன்னதும், உள்ளம் எல்லாம் பூரித்தாலும், வழி வகை தெரியா மல் திணறினேன். உடனே நண்பன் பொன்னம்பலத்தின் நினைவு தான் வந்தது.
பொன்னம்பலத்திடம் சகலதையும் கூறி னேன். மூத்தவளுக்கு தானாகவே கேட்டுப் பணம் உதவி செய்தது போல், இம்முறை செய்யவில்லை. இப்போது பணம் கேட்பதா, விடுவதா என்ற குசேலரின் தயக்க நிலை எனக்கு. வீட்டுப் பிரச்சனை எதிர்பாராமல் இலகுவாகத் தீர்ந்து விட்டது. மருமகனும் சாந்தியும் தமக்குச் சீதனமாகக் கொடுத்த வீட்டைத் திரும்ப எழுதித் தருவதாகக் கூறிவிட்டார்கள். பணமும் பொன்னம்பலத் திடமிருந்து கிடைத்து விடும் என்ற நம்பிக் கையுடன் தான் வந்திருந்தேன். விபரம் எல்லாம் கேட்ட பின்னரும், அவன் இன்னும் வாய் திறக்கவில்லை. எனினும், கேட்கா மல் வேற வழியில்லை. கேட்டேன்:
"என்ர மகளுக்கும் கலியாணம் பேசித் திரியிறன். நல்ல தராதரமான மாப்பிள்ை யாகப் பார்க்கிறதால, கையில நிறையக் காசு தேவைப்படுகுது. அது தான் இந்த முறை உனக்கு உதவி செய்யேலா மலிருக்கு. " பொன்னம்பலத்தின் பதில் ஏமாற்றம் அளித்தாலும், அதிலுள்ள நியாயத் தன்மை எனக்குப் புரிந்தது.
இதற்குப் பின்னரும், பல இடங்களில் பணத்திற்காக அலைந்தேன். கிடைக்க வில்லை. மருமகன், தம்மிடமிருந்த சேமிப் பைத் தருவதாகவும், மேலும் லோன் எடுத் துத் தருவதாகவும் கூறினார். எல்லாமாகச் சேர்த்தும் பணம் சற்றுக் குறைந்ததால், மறுபடியும் பொன்னம்பலத்திடம் ஒடினேன். இம்முறை நான் கேட்கும் தொகை குறைவு என்பதால் அவன் உதவி செய்யக் கூடும் என நம்பினேன். எனினும், அவன் கையை விரித்து விட்டான்.
நல்ல ஒரு சம்மந்தம் கைநழவிப் போகி றதே என்ற கவலை எனக்கு. மறுபடியும், தரகருடன் சீதனப் பணத்தைக் குறைத்துப் பேசும்படி கூறினேன்.
மல்லிகை மார்ச் 2008 ஜ் 59

Page 32
“அவைக்கும் உங்கட நிலைமை விளங் குது. சிலவேளை குறைக்கச் சம்மதிப்பினம். மாப்பிளையின்ர லிவும் முடியப் போறதால, கைகூடி வரும் எண்டு நினைக்கிறன். எதற் கும் கதைச்சிட்டு வாறனே." தரகர் நம்பிக் கையூட்டி விட்டுச் சென்றார். எப்படியும் சரி வரும் என வீட்டில் எல்லோரும் நம்பி னோம். கடவுளையும் வேண்டினோம்.
இந்தக் கலியாணப் பேச்சு ஆரம்பித்த நாளிலிருந்தே வசந்தியின் முகத்தில் தெரி யும் மலர்வைக் கவனித்தேன். 'கடவுளே அவளது கனவைக் கலைச்சிடாதை. எனப் பிரார்த்தித்தேன்.
மறுநாள் தரகர் வந்த போது, எல்லோ ரும் ஆவலோடு அவரை எதிர்கொண்டோம். அவரது முகத்தில் சந்தோசம் இல்லை. என்னைத் தனியே அழைத்துக் காதோடு சொன்ன சேதி மனதைக் கலங்க வைத்தது.
வசந்திக்கும் பெரிய மாப்பிளைக்குமிடை யில் தொடர்பு என்றும், அதனால் தான் அவர் உதவிகள் செய்கிறார் என்றும், அநாமதேயக் கடிதம் மாப்பிள்ளை வீட்டாருக் குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் குழம்பிப் போய்விட்டார்களாம்.
என்னால் தாங்க முடியவில்லை. எல் லாம் சரிவரும் என்றிருக்கையில், இப்படி ஒரு அபாண்டமான பழியால் திருமணம் குழம் பிப் போய்விட்டதே கலியாணம் குழம்பிப் போன கவலையை விட, வீண் பழியைத் தான் தாங்க முடியவில்லை. வீட்டில் எல்லோ ருக்கும் பெரும் கவலை. வசந்தியைப் பார்க் கவே முடியாதளவு வாடிப் போயிருந்தாள்.
அடுத்த ஒரு வாரமாக வீடே மரண வீடு போல் சோபையிழந்து இருந்தது. வானொலி, தொலைக்காட்சி கூட, போடவில்லை. மனைவி தனது கவலைக்கு மத்தியிலும் என்னைத் தேற்றினாள். “விடுங்கோ எல் லாம் நன்மைக்கே எண்டு நினையுங்கோ.
ஒவ்வொருத்தரின்ர தலையில எது எழுதி யிருக்கோ, அது தான் நடக்கும். எழும்பிச் சாப்பிடுங்கோ. நாங்கள் கவலைப் பட்டால் பிள்ளையும் ஆற மாட்டாள்.'
மெல்ல மெல்ல மனது ஆறிக் கொண்டி ருந்த போதுதான், இந்தப் பேரிடியான செய்தி கிடைத்தது. பொன்னம்பலத்தின் மகளுக்கும், வசந்திக்குப் பேசிய டாக்டர் மாப்பிளைக்கும் யாழ் நகரிலுள்ள அவர் களது வீட்டில் இன்று காலை கலியாணம் நடந்தது என்ற, அந்தத் தகவலை என்னால் சீரணிக்க முடியவில்லை. அது தான் இன்றைய தூக்கமின்னைக்குக் காரணம்.
"இஞ்சாருங்கோ. உங்கட உயிர் நண்பன், எங்கட பிள்ளைக்கு நாங்கள் பேசின மாப்பிளையைச் செய்ததைப் பற்றி பரவாயில்லை. ஆனால், எங்களுக்குக் கலியான வீட்டுக்குச் சொல்லவில்லை எண்டதிலை தான் கள்ளமிருக்கு."
மனைவி எடுத்துச் சொன்ன போதுதான், முதன் முதலாக எனது நண்பன் மீது எனக்குச் சந்தேகம் எழுந்தது. நான் இடிந்து போயிருக்கையில், மனைவி தொடர்ந்து கூறினாள்:
'உந்த மொட்டைக் கடித விசயம் வேற ஒருத்தரின்ர வேலையும் இல்லை. பொன்னம் பலழ் பகுதியின்ர வேலைதான்’ மனைவி இடித்துரைத்த போது, அது உண்மையாகத் தான் இருக்கும் என்று எனது மனமும் எண்ணியது.
இன்னமும் தூக்கம் வராததால், எழுந்து தண்ணிர் குடித்தேன். எனது அசைவில் மனைவி அருண்டு எழுந்தாள். 'என்ன ங்கோ, இன்னும் நித்திரை கொள்ளயில் லையோ?. ஒண்டுக்கும் யோசிக்காதை யுங்கோ. எது நடக்குமோ. அதுதான் நடக்கும். எங்கட பகவத்கீதையில சொல்லி யிருக்கு. எது நடந்ததோ அது நன்றா
மல்லிகை மார்ச் 2008 & 60

உடல்நலம் விசாரித்தனர்
நடிப்பு, கவிதை, ஓவியம் போன்ற துறைகளில் தனித்து மிளிர்ந்தவரான, கலைஞர்.
முறிதர் பிச்சையப்பா கடும் சுகவீனமுற்று, இப்பொழுது தேறி வருகின்றார்.
முறி கதிரேசன் வீதியிலுள்ள அன்னாரது இல்லம் சென்று, செங்கை ஆழியான், கம்ாவாரிதி இ. ஜெயராஜ், திக்குவல்லை சமால் டொமினிக் ஜீவா, மேமன்கவி, முரீதரசிங், தயானந்தா போன்றோர் சுகம் விசாரித்தனர். கலைஞனுக்கு இது பெரிய மன நிறைவு
தானே.
கவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும். ஒண்டுக்கும் யோசிக்காமல் படுங்கோ. 3 y
மனைவி ஆறுதல் சொன்ன போதும், முழு இரவுமே தூக்கம் வரவில்லை.
崇 盗 崇
காலம் கவலைகளை மெல்ல மெல்ல மறக்கடித்தது. எனினும், வீட்டில் முன் னைய கலகலப்பில்லை. நூலிழையாக ஒரு வித சோகம்.
மேடும், பள்ளமும், இன்பமும், துன்ப மும் நிறைந்தது தானே வாழ்க்கை. ஒன்று மாறி ஒன்று வருவது போல், விரைவிலேயே மகிழ்ச்சியான விசயம் வீட்டில் ஏற்பட்டது. வசந்தியின் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த ஆசிரியர் ஒருவருக்கு, வசந்தியைப் பிடித்து விட்டது. வசந்தியிடம் நேரே கேட்ட போது, அவள் வீட்டில் கேளுங்கள், தனக் குச் சம்மதம் என்றிருக்கிறாள். எம்மிடமும் விசயத்தைச் சொன்னாள்.
எல்லாம் நல்ல முறையில் நிறைவேறித்
திருமண நாளும் குறித்தாகி விட்ட வேளை யில், அழைப்பு அட்டைகள் கொடுத்த
போது, பொன்னம்பலத்தின் நினைவு வந்தது.
'அழைப்பதா? விடுவதா? என்ற தடுமாற்றம், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண்"
நன்நயம் செய்திடல்' என்பதாலும், நட்பின் எண்ணத்தினாலும், அவனுக்கு அழைப் பிதழ் கொண்டு யாழ் நகருக்குச் சென்றேன். செய் நன்றியை நான் மறக்கவில்லை.
என்னைக் கண்டதும் பொன்னம்பலத் திற்குச் சங்கடமாகப் போய் விட்டது. எனினும், வரவேற்று உட்கார வைத்து உரையாடி னான். முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. குற்ற உணர்வினால் அவன் தத்தளிப்பது தெரிந்தது. தவமணியும் மெலிந்து ஒடுங்கிப் போயிருந்தாள்.
பொன்னம்பலம் என்னை நேரே பார்க்க முடியாமல் தத்தளித்தான். கண்கள் கலங்கி
யிருந்தன. ஏதோ கதைக்க முயன்றும் முடி
யாமல் தவிப்பது தெரிந்தது.
‘என்ன கடுமையாக யோசிக்கிறாய்,
பொன்னம்பலம்? உன்னுடைய மகளின்ர
கலியான வீட்டுக்குச் சொல்லாமல் விட்டதை யோசிக்கிறியே? நான் அதை அப்பவே மறந்திட்டன். எல்லாம் தலையெழுத்துப் படிதான் நடக்கும்." என்று கூறினேன்.
'ஓம் சண்முகம். தலைவிதியை யாரா லும் மாத்த முடியாது தான். நான் பெரிய இடம் எண்டு ஓடினன். மருமகனுக்கு ஏற்கனவே லண்டனிலை வெள்ளைக்காரப் பொம்பிளை இருக்காம்.'
நான் அதிர்ந்து நண்பனை நோக்கி G36O165T.
மல்லிகை மார்ச் 2008 & 61

Page 33
மணிவிழாக் ாறும் தங்களது மருத்துவர்
டொக்டர் எம். கே. முருகானந்தன் பற்றிய சில குறிப்புகள்
- புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
என்னிடம் ஒரு பழக்கம் உண்டு.
எனது தனிப்பட்ட தொலைபேசி இன்டெக்ஸ்' இல் நெருங்கிய நண்பர்களது தொலை பேசி இலக்கத்தின் கீழே, எப்போதோ எங்கோ தேடலில் அகப்பட்டுக் கொள்ளும், அவர்களது பிறந்த தினத்தையும் குறித்து வைத்துக் கொள்வேன். அதிகாலையிலேயே தவறாது அவர் களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு வசதியாக இந்த வகையில், அண்மையில் ஏதோ தேவைக்கு டொக்டர் எம். கே. முருகானந்தனின் தொலைபேசி இலக்கத்தைப் பார்ப்பதற்காக இன்டெக்ஸ்'சைப் புரட்டிய போது, மார்ச் 27 என்பதுடன், அவர் பிறந்த ஆண்டு 1948 என்பதும், என் கண்களில் ஒர் கணம் மின்னி ஒளிர்ந்தது. டொக்டருக்கு மார்ச் 27 ஆந் திகதி வரும் பிறந்தநாள் பத்தோடு பதினொன்றாகக் கழிய வேண்டியதல்ல, அது மணி விழாவாகக் கொண்டாடப்பட வேண்டியது எனும் செய்தி மூளையில் பொறி தட்டவே உசாராகிக் கொண்டேன்.
எங்களூரான பருத்தித்துறையில் புகழ் பெற்ற கிராமங்களில் ஒன்றான வியாபாரிமூலை யில் முத்தையா கதிரவேற்பிள்ளை- பரமேஸ்வரி தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகளுள் மூத்தவராகப் பிறந்து, மேலைப் புலோலி சைவப் பாடசாலை, மேலைப் புலோலி சைவப் பிர காச வித்தியாசாலை ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியையும், பருத்தித்துறைக் ஹாட் லிக் கல்லூரியில் உயர் கல்வியையும் கொழும்பு வளாக மருத்துவ பீடத்தில் எம். பி. பி. எஸ் பட்டப் படிப்பையும் மேற்கொண்டு, பதுளைப் பொது மருத்துமனையில் உள்ளகப் பயிற் யினை முடித்த பின்னர், மீகவுறசியுல கிராம வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை ஆகியவற்றில் சில காலங்கள் சேவையினையும் ஆற்றிய பின்னர், தனது முப்பத்தி யிரண்டாவது வயதில் பருத்தித்துறை மருதடியில் தனியார் மருத்துவமனை ஆரம்பித்த 1980 ஆம் ஆண்டே டொக்டர் எம். கே. முருகானந்தனின் வாழ்வில் திருப்பு முனை நிகழ்ந்த மிக முக்கியமான காலகட்டம் எனக் கொள்ளலாம்.
நான் முதன் முதலில் அவரைச் சந்தித்துக் கொண்ட காலமும் அதுதான். எனது ஆரம்ப காலச் சிறுகதைகளின் தொகுப்பான அறிமுக விழா இணைக் கதை நூலாகக் கோகிலா மகேந்திரனின் முயற்சியில் வெளிக் கொணரப்படுகிறது. புலோலியில் புற்றளை மகா வித்தி யாலயத்தில் அதற்கோர் அறிமுக விழா வைப்பதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்ட போது, விழாவிற்குப் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதற்காக ஒரு மத்தியானப் பொழுதில் மருதடியில் உள்ள அவரது மருத்துவமனையின் பின் புறத்தே அமைந்த அவரது வரவேற்பறைக்குள் நுழைகின்றேன். ஒரு வைத்தியரிடம் நோயாளி யாகவன்றி வேறொரு விடயம் பற்றிக் கதைப்பதற்காகச் செல்லும் முதலனுபவம். ‘என்ன
மல்லிகை மார்ச் 2008 & 62
 
 

சொல்லுவாரோ? எப்படிப் பழகுவாரோ? எனும் கேள்விகள் மனதிலெழ, இனம் புரியாத பதட்டத்துடன் அவர் முன்னால் இருந்த இருக்கையின் நுனியில் பட்டும் படாமலும் அமர்ந்தவாறே 'டொக்டர், என்னுடைய புத்தக அறிமுக விழாவுக்கு உங்களைப் பிரதம விருந்தினராக அழைக் கலாம் எண்டு வந்திருக்கிறன்" என்றேன், சிரமப்பட்டு வார்த்தைகளைக் கூட்டியலாறே.
முகத்தில் மலர்ச்சியுடன் 'உங்கடை பெயர்” என்று கேட்டார். எனது பெயரைச் சொன் னதும் "ஒ நீங்கள் தானா அவர்? மல்லிகை, சுடர், வீரகேசரியளிலை உங்கடை கதை யளை நிறைய வாசிச்சிருக்கிறன். நல்லா எழுதிறியள். அண்டைக்குத் தெணியானோ டையும் உங்களைப் பற்றிக் கதைச்சனான். நேரிலை சந்திச்சது நல்ல சந்தோசமாக இரு க்கு" என நீண்ட நாட்கள் பழகியதைப் போன்ற நட்புணர்வுடன் கதைக்க ஆரம்பித்தார்.
அந்த ஆரம்பம், அதே மாறாத உணர்வு டன் 25 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் தொடர்கிறது என்பதற்கும் அப்பால், டொக் டரின் இப்பேர்ப்பட்ட பண்புகள் தான் அவரின் பலமாகத் திகழ்ந்து, அவர் அர்ப்பணிப்புடன் உழைத்த மருத்துவ மற்றும் இலக்கியத் துறைகளில் அவரைச் சாதனையாளனாக் கியது என மிகத் தாராளமாகவே கூறலாம்.
பருத்தித்துறையில் அவர் பணிபுரிந்த எண் பதுகளிலிருந்து தொண்ணுாற்றாறு வரை யிலான பதினாறு வருட காலமே ஈடுபாடு காட்டிய் இருதுறைகளிலும் அவர் தன்னை அடையாளப்படுத்திய கால கட்டமென நான் கருதுகிறேன்.
‘சிறுவரின் கண்களைக் காக்க வாரீர்", பாலியல் நோய்கள்', 'போதையைத் தவி ருங்கள்', 'தாயாகப் போகும் உங்களுக்கு", எயிட்ஸ்', 'வைத்தியக் கலசம்', 'சாயி காட் டிய ஆரோக்கிய வாழ்வு ஆகிய ஏழு நூல் கள் இக்கால கட்டத்திலேயே வெளியாகின. இதில் 'தாயாகப் போகும் உங்களுக்கு" தேசிய சாகித்திய விருதினை வென்றதோடு,
இலங்கையிலும், தமிழகத்திலும் நான்ஷிற் கும் மேற்பட்ட பதிப்புக்களையும், எயிட்ஸ் எனும் நூல் நான் அறிந்தவரையில் ஐந்து பதிப்புகளையும் கண்டிருக்கின்றன.
ஈழத்திலே மருத்துவத்துறை சார்ந்தவர் கள் புனைக்கதைத் துறையில் உதாரனைப் படுத்துமளவிற்கு பலர் ஈடுபட்டு வந்தாலும், பேராசிரியர் நந்நிக்குப் பின்பு, நலவியல் பற்றி அரிதாக எழுதியவர்களுள் எம். கே. (էpՄ5 கானந்தனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. தான் அன்றாடம் சந்திக்கின்ற நோயாளர் களை அவர்களது பிரச்சினைகளை ஆழ்ந்து புரிந்து, அவர்களது கேள்விகளுக்குப் பதிலா கவே தன் மருத்துவக் கருத்துக்களை அவர் களுக்குப் புரியத்தக்க மொழியில் எடுத்து ரைத்தமையினாலேயே முருகானந்தன் மக்களால் பெரிதும் விரும்பி வாசிக்கப் படலானார். இந்த வகையிலேயே தாய்லமை யுற்ற ஒவ்வொரு யுவதியும் முண்டியடித்து வாங்கிய ஒரு நூலாகத் தாயாகப் போகும் உங்களுக்கு நூல் அமைந்திருந்தது. அக் கால கட்டத்தில் தாய்மையுற்றிருந்த லின் துணைவியாருக்குக் கூட, யாராலோ அந் நூல் பரிசளிக்கப்பட்ட சம்பவமும் இப்போது என் ஞாபகத்திற்கு வருகிறது.
எயிட்ஸ் எனும் ஆட்கொல்லி நோய் பற்றிப் போதிய அறிவினை பெற, உகாத் துணை நூல்கள் தமிழில் இல்லாத குவிறை முதன் முதலாக டொக்டர் முருகானந்த
னால் தான் நிவர்த்திக்கப்பட்டது எனலாம்.
பின்னர் தான் தமிழ்நாட்டில் கூட, பல
நூல்கள் எயிட்ஸ் பற்றி வெளிவரலாயின.
முரசொலி என்பது குடாநாட்டில் அந்தக் கால கட்டத்தில் பிரசித்தமான ஒரு பத்தி ரிகை, வைத்தியக் கலசம்" எனும் மகுடத் தில் தொடராக அப்பத்திரிகையில் டொக்ட
ரால் எழுதப்பட்ட நலவியல் சார்ந்த பத்தி
எழுத்துக்கள் மக்களிடையே மிக்க அபிமா னத்தைப் பெற்றிருந்தன. அப்பத்திக்காகவே அப்பத்திரிகையை அன்று கேட்டு வாங்கி யோர் அநேகர், சில காலங்களின் பின்னர் அப்பத்தி அதே மகுடத்தில் நூலாகவும்
மல்லிகை மார்ச் 2008 & 63

Page 34
வெளிக் கொணரப்பட்டு அமோகமாக விற் பனையுமாகிற்று.
டொக்டர் முருகானந்தனின் அறுவடை களில் அவரது நலவியல் சார்ந்த எழுத்துக் கள் தான் அதிகாரப்பட்டு நின்றாலும், இலக்கியம் சார்ந்த எத்தனிப்புக்களும் தேடி வாசிக்கும்படியானதாகவே அமைந்தி ருந்தன. பாடசாலை நாட்களில் ஆரம்ப நிலை வகுப்புக்களிலேயே தினகரன் பத்திரி கையில் கட்டுரைகள் எழுதியதோடு, மேடைப் பேச்சுகள், நடிப்புகளிலும் ஆர்வங்காட்டி, வித்துவான் க. ந. வேலனது பாராட்டையே பெற்றிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை, யாழ்ப் பாணன் என்ற புனைப் பெயருக்கும், இவ ருக்கும் சொந்தக்காரரான வே. சிவக் கொழுந்துவே. தா. சிவகுருநாதன், தீபம் பார்த்த சாரதி, ரசிகமணி கனக செந்தி நாதன், டொமினிக் ஜீவா ஆகியோரைத் தனது இள மைக் கால ஆகர்சிப்புக்களாகக் கொண்டு விளங்கி மல்லிகை, விவேகி, தீபம், அஞ்சலி, தாமரை, அலை, கலைச் செல்வி உள்ளிட்ட தரமான இலக்கிய ஏடுகளைத் தேடி வாசித்து இலக்கியப் பிரக்ஞையுடன் ஈழத்துப் பத்தி ரிகை சஞ்சிகைகளில் நூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சிறுகதை, நாவல்களுடன் மட்டுப்படுத்தி நிற்காது, ஒவியங்கள், நாடகங்கள், சினி மாக்கள் பற்றியும் அவ்வப்போது இரச னையுடன் எழுதி, இலக்கியக் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த வகையில் பருத்தித் துறை மருத்துவமனையில் பணிபுரிந்த நாட் களில் புனைக்கதைத் துறையிலும், இதழி யல் துற்ைபயிலும் ஈடுபாடு காட்டிய முரு கானந்தன் ஐந்து சிறுகதைகளை எழுதிய தோடு "சாயி மார்க்கம்’ எனும் இருமாத ஆன்மீகச் சஞ்சிகையின் ஆசிரியராகவும்
இரண்டு வருடங்கள் இருந்துள்ளார், என்பது
வும் எத்தனை பேருக்குத் தெரியும்?
இத்தனைக்கும் மேலாக அந்நாட்களில்
மாதாந்தம் டொக்டர் பின்னணியில் நின்று
நடாத்திய இலக்கிய சந்திப்புத் தொடர் ஒன்று
பற்றியும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். 'அறிவோர் கூடல்' என்ற மகுடத்தில் நடாத்தபட்ட அச்சந்திப்பின் ஒவ்வொரு நிகழ்விலும், வேறுபட்ட இலக்கிய ஆளுமை கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டு, தமது கலையனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்படுவர். வடமராட்சி லிபறேசன் ஒப்பறேசனுக்கு அண்மித்த நெருக்கடி நிறைந்த அந்தக் கால கட்டத்தில் கூட, அப்பேர்ப்பட்ட இலக்கியக் கூடல் நிகழ்வினை அசாதாரண துணிச்சலுடன் செய்து முடித்தமை உண்மையில் முரு கானந்தனின் சாதனைகளில் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.
முருகானந்தனின் இலக்கியப் பக்கம் இந்தளவிற்குப் பளிச்சிட்டதென்றால், அவர் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட வைத்தியர் என்ற மறுபக்கமும் அதேயளவிற்குப் பிரகாசிக் கவே செய்தது. பருத்தித்துறை, புலோலிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, துன்னாலை, அல்வாய், கரவெட்டி, உடுப்
பிட்டி, வல்வை, நாகர்கோயில் என வடம.
ராட்சி முழுவதுமே மருதடி மருத்துவமனை க்கு முண்டியடித்துக் கொண்டு வந்தமை அவரது சேவைக்குச் சாட்சியாகவல்லது. எப்பேர்ப்பட்ட கொடிய நோயால் பீடிக்கப் பட்டு, அவரை அணுகினும் உடலைப் பரி சோதித்து விட்டு, "பயப்பிடாதைங்கோ, அப்படிப் பிரச்சனையாக ஒண்டுமில்லை" என்று முதலில் அவர் கூறும் வார்த்தை யிலேயே பாதி நோய் பறந்து விடும் போல,
உளவியல் ரீதியாகவும், அன்புடனும், ஆதர
வுடனும் தனது நோயாளர்களை அவர் அணுகும் முறைமையே கைராசியான டொக்டர்' என்று அவரைச் சொல்ல வைத் தது. வடமராட்சி தாண்டியும் அவரது பெயரை ஓங்க வைத்தது.
பிரதான பாதைகள் மூடிப் பொருளாதாரத் தடை அமுல் படுத்தப்பட்டு, உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைந்ததன் விளைவால், குடாநாட்டு மக்களில் பெரும்பான்மையினர் இடம் பெயர்ந்து தெற்கே வந்த தொண்று
மல்லிகை மார்ச் 2008 & 64

களின் பிற் கூற்றில், டொக்டர் முருகானந்த னும் கொழும்பை வந்தடைந்து, வெள்ள வத்தை ராஜசிங்க வீதிக்கு அண்மித்த பகுதியில் தனது சேவையினைத் தொடர் கின்றார். வடமராட்சியில் அவருக்கிருந்த நற்பெயரின் காரணமாக இங்கும் நோயாளர் கள் அவரைத் தேடி வந்தனர். சிறிய அறை ஒன்றில், சிறுக ஆரம்பித்த அவரது சேவை நவீன வசதிகளுடனும், தாதி உதவியா ளர்களுடனும் சிறிய மருத்துவமனையாக விஸ்தரிக்கப்பட்டது. குடும்ப வைத்தியத் துறையில் டிப்ளோமாப் பட்ட மேற்படிப்பை மேற் கொண்டு இவர் தனது அந்தஸ்தினை உயர வைத்துக் கொண்டதும், இந்த மருத்து வமனையில் பணிபுரிந்த நாட்களில் தான்.
வைத்தியத் துறையில் ஏற்பட்டது போலவே, முருகானந்தனின் இலக்கிய முயற்சியும் அச்சு ஊடகத்திலிருந்து இலத் திரனியல் ஊடகம் வரை வளர்ச்சியுறு கின்றது. இந்த வகையில், ரூபவாஹினியில் தொண்ணுாறுகளின் கடைக் கூற்றில் இருந்து பல வருடங்களாக ஞாயிறு தோறும், நலவியல் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியதையும், சக்தி தொலைக்காட்சி யில் பல மருத்துவத் தகவல்களைத் தந்த மையையும் நலமாக வாழ்வோம்’ என்ற மகுடத்தில் இலங்கை வானொலி தேசிய சேவையில் தொடர்ந்து இவராற்றிய நலவி யல் உரைகளையும் குறிப்பிட்டுக் கூறலாம்.
ஊடகத்துறையில் விஞ்ஞானப் பரப் புரைக்காக இவர் ஆற்றிய இத்தகு சேவை யினைக் கெளரவித்து இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் விருது வழங்கிக் கெளர வித்ததும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மல்லிகை அட்டைப் படத்தில் அதிதி யாக முருகானந்தனை அவரது இலக்கியச் சேவைகளுக்காகக் கெளரவித்ததும், இவரது ஆற்றலுக்கு தக்க அங்கீகாரங்களாக அமையவல்லன.
இக்கால கட்டங்களில் தலைநகரில் நடைபெற்ற இலக்கிய நூல் வெளியீட்டு
விழாக்களிலும், இலக்கியக் கருத்தரங்கு களிலும் தலைவராகவும், நயவுரையா ளராகவும் முருகானந்தன் ஆற்றி வந்த உரைகள் இலக்கிய ஈடுபாடு கொண்டவர் களை வெகுவாகக் கவர்ந்தது. இச் சந்தர்ப் பங்களில் எல்லாம், பல்கலைக்கழகப் பராயத்தில் இருந்தே அவரிடம் இருந்து வந்த அரங்கத் தலைமைத்துவத் திறன் புலனாகி நின்றது.
இக்கால கட்டத்து நூல் முயற்சிகளாக, 'நீங்கள் நலமாக கொழும்பு மீரா பதிப் பகத்தினால் வெளிக் கொணரப்பட்டு, அவ் வாண்டிற்கான அறிவியலுக்கான சாகித்திய மண்டலப் பரிசினையும், யாழ் இலக்கிய வட்டத்தினரின் விருதினையும் வென்ற தோடு, ஐந்து மீள் பதிப்புக்களையும் காண் கின்றது. மல்லிகைப் பந்தலூடாக "டொக் டரின் டயறியிலிருந்து நூல் வெளிவந்தது. நீரிழிவுடன் நலமே வாழுங்கள்' எனும் நூல் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீனி யாக அமைகின்றது. தனது சொந்தப் பெயரி லும், எம். கே. எம்., அழகு சந்தோஸ் போன்ற புனைப் பெயர்களிலும் எழுதிய இலக்கியக் கட்டுரைகளை மறந்து போகாத சில' எனும் நூலாகப் பதிவு செய்கிறார். இந்நூலில் இவரது இலக்கிய ஆளுமை பளிச்சிட்டு நிற்பதை அவதானிக்கலாம்.
எட்டு வருடங்கள் கொழும்பில் வைத்திய சேவை ஆற்றிய பின்னர், சமாதானக் காலத் தைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டில் தனது பருத்தித்துறை மருதடி மருத்துவ மனையில் மீண்டும் பணிபுரியச் சென்றவர், பிரதான பாதைகள் மூடியதைத் தொடர்ந்து, 2006 மார்கழியிலிருந்து வெள்ளவத்தை தர்மராம வீதியில் அமைந்துள்ள மெடிக் குயிக் மருத்துவமனையில் தனது பணி களை ஆற்றி வருகின்றார்.
அச்சு ஊடகத்திற்கு சமாந்தரமாக இணை யத்தளங்களிலும் இலக்கிய, அறிவியல் பத்திகளும் கட்டுரைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில்
மல்லிகை மார்ச் 2008 & 65

Page 35
எம். கே. முருகானந்தனின் நலவியல் பத்தி களும் இணையத்தில் களங் கொள்ளத் தவறவில்லை என்பதும் மனங் கொள்ளத் g5és&gs). Pathivukal.com g6 36Jug B66S யல் பத்திகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரசித்தமானவை.
அண்மைக் காலங்களாக "ஹாய் நலமா? என்ற மகுடத்தில் எமது தினக்குரல் பத்திரி கையில் இவர் எழுதிவரும் நலவியல் பத்தி களும், சொந்தப் பெயரிலும், புனைப் பெயர் களிலும் மல்லிகை, ஞானம், இருக்கிறம், ஜீவநதி, போன்ற சஞ்சிகைகளில் எழுதி வரும் இலக்கியப் பத்திகளும், கட்டுரைக ளும் இன்றைய சமூகத்தில் மேற் கிளம்பிக் கொண்டிருக்கின்ற புதிய பரிமாணத்தினூடு வெளிவருவனவாக அமைந்திருப்பது மகிழ் வைத் தருகின்றது.
தனது நூல்கள் வெளியிடும் வைபவங்க ளினை வெளியீட்டு விழாக்களாகவோ அல் லது முதற் பிரதி வாங்குவதற்கு வர்த்தகப் பிரமுகர்களை அழைத்தோ ஒரு போதும், அவர் ஒழுங்கமைப்பது கிடையாது. மிக எளிமையாக ஒரு கருத்தரங்குக் கூட்டம் போலவே, நூல் வெளியீட்டு வைபவத்தினை முருகானந்தன் நடாத்தத் திட்டமிடுவார். அதிலும், நூலின் முதற் பிரதியினைப் பெறுபவர் இவரது பெற்றோர்களாகவோ, அல்லது மதிப்பிற்குரிய ஒரு மதத் தலை வராகவோ தான் இருப்பதையும் பல சந்தர்ப் பங்களில் நான் அவதானித்திருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்னர் தனது தாயார் மறைந்த போது, அவரது நினைவாக முருகானந்தன் வெளிக் கொணர்ந்த நினைவு மலர் கூட, விடயங்களில் அவர் கையாளும் வித்தியாசமான அணுகு முறை யைச் சுட்டி நின்றது. புலம்பல்கள், தேவார திருவாசகங்கள் என்ற வழமையான வாய்ப் பாட்டின்றும் விலகி, அம்மலருக்கு 'அம்மா என்ற மகுடமிட்டு, அம்மா சம்பந்தப்பட்ட பிறரது தரமான ஆக்கங்களையும், சிந்தனை களையும் அதில் உள்ளடக்கி வித்தியாச
மான முறையில் அம்மலரினை வடிவமைத்து வெளியிட்டிருந்தார்.
எங்கள் குடும்ப வைத்தியர், பத்து வய திற்கு மேல் எனக்கு மூத்தவர் என்ற பய பக்தி கலந்த நட்புடனேயே கடந்த கால் நூற் றாண்டு காலமாக டொக்டர் முருகானந்த னுடன் நான் பழகி வருகின்றேன். பட்ட மேற் படிப்புப் படித்திருந்தும், புகழ் பூத்த வைத்திய ராக இருந்தும், எந்தவித பந்தாவும் இன்றிப் பள்ளித் தோழனைப் போலவே அன்றும் இன்றும் மாறாத அன்புடன் பழகி வருகின்ற அந்தப் பண்புதான் முருகானந்தன் அவர்க ளிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
டொக்டர் முருகானந்தன் கடந்த முப்ப தாண்டு காலங்களாக எழுதுகிறார் என்று பார்த்தாலும், இதுவரை பதினொரு நூல் களை எழுதியிருக்கிறார். அவற்றுள் இரு நூல்கள் சாகித்திய விருதினைப் பெற்றிருக் கின்றன. மூன்று நூல்கள் ஐந்திற்கும் மேற் பட்ட பதிப்புக்களைக் கண்டிருக்கின்றன. சகல நலவியல் நூல்களும் பட்டப் படிப்பிற் காக, செல்வி சிறிதரன் போன்றவர்களால் ஆய்விற்குள்ளாகியுள்ளன. இந்த வகையில் பார்க்கும் போது, ஈழத் தமிழில் நலவியல் துறையில் இது டொக்டர் முருகானந்தனுக் குக் கிடைத்த ஒரு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
இத்தகைய வெற்றிகளை இரு துறைக ளிலும் எம். கே. எம். அடைவதற்கு அவரது துணைவியார் திருமதி மணிமாதேவி முரு கானந்தனுக்கும், பிள்ளைகள் ரம்யன், எழில் ஆகியோருக்கும் கணிசமான பங்குண்டு என்பதனை நீண்ட காலமாக அக்குடும்பத் துடன் பழகியவன் என்ற வகையில் நான் நன்கறிவேன்.
தான் ஈடுபட்ட இரு துறைகளிலும் மேன் மேலும் பிரகாசித்து டொக்டர் எம். கே. முரு கானந்தன் பல்லாண்டு காலம் வாழ வேண் டிப் பிரார்த்தித்து, என் அபிமான மல்லிகை யூடு மனதார வாழ்த்துவதிலும், பெருமகிழ் வடைகின்றேன்.
மல்லிகை மார்ச் 2008 & 66

29*2
மல்லிகை இதழில் வெளியாகிய இளைய அப்துல்லாவற் எழுதிய 'இன்ரர்நெட் காதல் இன்னும் அபாயங்களும்’ எனும், தலையங்கம் கொண்ட பகுதி இன்றைய இளைய தலைமுறையினர்க்கு மிக அவசரமானதும், அவசியமானதுமான கருத்துக் களம் ஆகும். உல கத்தை உள்ளங் கைக்குள் அடக்கி விட்ட கணினி யுகம், வாழ்க்கையையும் அதற்கு வேண்டிய தகவல் தொடர்பாடல்களையும், இலகுபடுத்தித் தந்துள்ளமையும் அதன் பயன்பாடும் இன்றும் மக்களுக்கு கிடைக்கப் பெற்ற அதிசய அதிர்ஷ்டம் எனலாம்.
இவ்வாறு எவ்வாறான வாழ்க்கைக் கோணங்களையும் இலகுபடுத்திய இத்தகைய கணினி வலையமைப்புக்களில் நண்பர்களைத் தேடும் வழிகளும், அதுமட்டுமன்றி காதலர்களை தேடும் புதிய முறைகளும் தோற்றம் பெற்றுள்ளன. இவை ஒரு புறம் நன்மை தரும் விடயமாக இருக் கலாம். ஆனால், இவைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமது தகுதிகளையும், வசதிகளையும் உண்மைக்கு புறம்பாகக் கூறி, தமது வலைகளில் மற்றவர்களை வீழ்த்தி, மெதுவாக தமது இலக்குகளை எட்டி வருகின்றனர். இதற்கு இளம் வயதினர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான அணுகுமுறைகளும், வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துக் கூறி, இதிலி ருந்து இளைய தலைமுறையினரைக் காப்பாற்றிக் கொள்ளும் விளக்கமும், அறிவுரைகளும் இன்ரர்நெட் காதல் இன்னும் அபாயங்களும்' என்னும் தொகுப்பினுாடாக, ஆழமாகவும், அகல மாகவும் விரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டுரை இளைய தலைமுறையினருக்கு பெரிதும் பயன்பாடுடையனவாகவுள்ளதனால், இவ்வாறான கட்டுரைகள் தொடர்ந்தும் மல்லிகையில்
மணம் பரப்ப வேண்டும்.
மணிவண்ணன். முல்லைத்தீவு.
நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒவியர் 'ரமணியின் ஒவியத்தை மல்லிகை 43-வது ஆண்டு மலரின் முகப்போவியமாகக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தேன்.
ஏனோ தெரியவில்லை, இவ்வாண்டு மலரைப் பார்த்ததும், மனசுக்குள் குதுாகலமொன்று ஒடி நிறைவு தந்தது.
ஒவ்வொரு பக்கத்திலும் உங்களுடைய அயரா உழைப்பும், அர்ப்பணிப்பும் துலாம்பரமா கவே தெரிந்தது.
மொத்தமாக எனது அபிப்பிராயத்தைச் சொன்னால், இந்த மலரைத் தரமான வாசகன் ஒருவன் தன்வசமே வைத்திருக்க வேண்டும் என இறுக்கமாகவே சொல்லி வைக்க விரும்புகின்றேன். செங்கை ஆழியானின் பெருங்கட்டுரை ஓர் ஆவணம், இலங்கைத் தமிழ் இலக்கியத் துறைக்கு. பல எழுத்தாளர்களினது பெயர்களையும், படைப்புக்களையும் தெரிந்து வைத்துள்ள என்னைப் போன்ற இலக்கிய இளந் தலைமுறையினருக்கு, அன்னாரது உருவங்களைத் தெரிந்திருப்பதில்லை.
மலர்க் கட்டுரையில் பலரது உருவங் களைப் படமாகப் பார்த்ததில் பரம திருப்தி எனக்கு. அன்னாரது இரத்த உறவினர்கள் இன்று நாடு கடந்து போய், பல்வேறு தேசங்களில் வாழ்ந்து மல்லிகை மார்ச் 2008 & 67

Page 36
வரக் கூடும்! இந்த மலரில் வெளிவந்த அத்தகையவர்களின் உருவப் படங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காகவாவது, கடல் கடந்து வசிப்பவர்கள் இந்த மலரை அவசியம் தமது கைவசம் வீடுகளில் வைத் திருக்க வேண்டும் என விரும்புகின்றேன்.
மண்ணற்று, வேரற்று, வெளித் தேசங்க ளில் பிறந்து, படித்து வரும் தமது இளைய தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்தும் நிமித்தமாகக் கூட, இம் மலர் அவர்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என வரலாற் றாய்வாளன் என்கின்ற முறையில் நான் பெரிதும் விரும்புகின்றேன்.
எஸ். ராஜசேகரன். வெள்ளவத்தை.
மல்லிகை ஆண்டு மலர் பார்த்தேன். மிகவும் எளிமையாக இருக்கின்றது.
இந்த முறை கட்டுரைகளை விட, பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. செங்கை ஆழியானின் ‘ஈழநாடு இதழின் புனைக் கதைப் பங்களிப்பு' என்னும் தலைப்பில் மிகச் சிறப்பாக ஒரு கட்டுரை அமைந் துள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட படைப் பாளிகளின் புகைப்படங்களுடன், குறிப்புக் களும் இடம் பெற்றுள்ளன.
இது போன்று வேறு சில ஆய்வுக் கட் டுரைகளும், மிகத் தரமான தகவல்களை உள்ளடக்கியுள்ளன.
கவிதைகளைக் பொறுத்த வரையில் இன்னும் சிலவற்றைச் சேர்த்திருக்கலாம். குருடர்களின் வெளிச்சம்' என்னும் கட்டுரை கெக்கிராவ ஸரலைஹா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளது. இக் கட்டுரை சற்று நீளமாக அமைந்திருந்தாலும், நிறையத் தகவல்களை உள்ளடக்கியுள்ளன.
செ. யோகராசாவின் அவதானிப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
தமிழகத்தில் வீறு பெற்று எழும் மார்க் சியம் ஒரு உணர்வுப் பரிமாற்றம்' என்னும் ந. இரவீந்திரன் அவர்களின் ஆய்வுக் கட்டு
ரையை, இளைய தலை முறையினர் கட் டாயம் படித்துச் சிந்திக்க வேண்டுமென்பது எனது அபிப்பிராயம்.
மணியான சிறுகதைகள் இடம் பெற் றுள்ளன. அவற்றை நீண்ட ஆய்வு செய்த பிறகே கருத்துக்கள் பரிமாறிக் கொள்ள (փԼ9պլb.
முடிவாகச் சென்ற ஆண்டைப் போல, இவ்வாண்டும் புதிய பல தகவல்களை மல்லிகை ஆண்டு மலர் பரந்த இலக்கிய உலகில் பதிவு செய்துள்ளது. அனைவரும் கட்டாயம் படித்து வைத்திருக்க வேண்டிய ஒரு சிறப்பு மலர் இதுவாகும்.
ஏ.எம். ஷம்சுதீன். கல்முனை.
மல்லிகை ஒழுங்காகக் கிடைக்கிறது. (மலர் உட்பட) நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவது சிரமமாக உள்ளது.
செங்கை ஆழியான் ஈழநாடு கட்டுரை யில் மீண்டு என்னைத் தவிர்த்துக் கொண்டு ள்ளார். ஈழநாடு 10 ஆண்டு நாவல் போட்டி யில் அகஸ்தியருக்கும், எனக்கும் 2ம் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. அகஸ்தியரின் நாவல் எரிகோளம்', எனது நாவல் மேகங்கள்.
சுமார் 56 வாரங்கள் அந்நாவல் ஈழநாடு வார மலரில் வெளி வந்தது. 56 வாரங்களில் ஒரு வார மலராவது அவருக்குக் கண்ணில் சிக்கவில்லையா? திட்டமிட்ட இருட்டடிப்பு இது. "மகாகவியைப் பேரா. கைலாசபதி இருட்டடிப்புச் செய்ததாகக் கூறும் இலக்கி யக் கூட்டத்தைச் சேர்ந்த செங்கை ஆழியா னுக்கு, மனது வருவதில்லை.
இதனை அந்தக் காலத்திலிருந்தே நான் அவதானித்து வருகிறேன். ஞானம்' பேட்டி அதனை மேலும் உண்மையாக்கி உள்ளது.
தெணியான் கடிதம் எழுதியிருந்தார். மல்லிகை அட்டைப்படக் கட்டுரைகளில் மிகச் சிறப்பான ஒரு கட்டுரையாகத் தனக் குத் தோன்றுவதாக, என்னைப் பற்றிய கட்டுரையைப் குறிப்பிட்டு எழுதியுள்ளார். நந்தினி சேவியர். திருகோணமலை.
மல்லிகை மார்ச் 2008 & 68

- டொமினிக் ஜீவா
இன்று சகல மட்டங்களிலும் பல்கிப் பெருகி வரும் கைத் தொலைபேசி பற்றி என்ன کیے கருதுகிறீர்கள்?
நீர்கொழும்பு. ஆர். சிவநேசன்.
அதீத விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வெளிப்பாடு தான் இது. ஆனால், இந்த வளர்ச்சியின் “ޗަހި பெறுபேறுகள் தான் எப்படிப் போய் முடியப் போகின்றதோ? என யோசிக்க வேண்டியுள்ளது.
கைத் தொலைபேசியை அடிக்கடி பாவித்து வருவதால், தோலின் புரதச் சத்துக் குறைந்து விடுமாம். ஆண்மைக் குறைவு ஏற்படும். மூளையில் கட்டிகள் தோன்றுமாம். எதிர்விளைவுகள் இவை.
வீதியோரம் இளசுகள் காதோரம் கையை வைத்துக் கொண்டு, மெல்லிய புன்னகை யுடன் நீண்ட நேரமாகக் கிசுகிசுக்கின்றனர். பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. காத லின் பெரிய தாக்கமே, ஏக்கமும் தவிப்பும் தான்.
இந்தத் தொடர் கிசுகிசுப்புகள் அந்த நுட்பமான உணர்வை முழுமையாகச் சாக டித்து விடுகின்றன. அத்துடன் இடைவிடாத தொடர் பேச்சால், முரண்பாடுகளும் பெருக வாய்ப்புண்டு. காதல் முறிவுகளும் ஏற்படக் கூடும்.
சமீபத்தில் ஒரு மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். மெளன ஊர்வலம் வீதி வழியாகப் போய்க் கொண்டிருந்தது. ஒருவர் சட்டென்று சட்டைப் பையிலுள்ள கைத் தொலைபேசியை எடுத்துக் காதில் வைக்கிறார். ஒரு தடவையல்ல. இன்னொரு தடவையும் இப்படியே செய்தார். எனக்குக் கடும் கோபம் மூண்டது. விஞ்ஞான வளர்ச்சி மானுடப் பண்புகளையே சாகடித்து விடுமோ? என மனதார அச்சப்படுகின்றேன்.
பல்கலைக் கழகங்களின் இலக்கியச் செயற்பாடுகள் பற்றி, உங்களது அபிப்பிராயம் کے
என்ன?
தென்கிழக்குப் பல்கலைக் கழகம். மொஹமட்,
அறுபதுகளில் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து இலக்கியப் பேரெழுச்சி ކަރި ஒன்று ஆரம்பித்தது. அதிலிருந்து பல்வேறு பட்ட எழுத்தாளர்கள் தோன்றி, தமது
மல்லிகை மார்ச் 2008 & 69

Page 37
தொடர் உழைப்பால் பின்னர் பிரகாசித் தனர்.
இடையே ஒரு இயல்பான தொய்வு ஏற்பட்டது.
இன்று மறுபடியும் புதிய எழுச்சியும், வீச்சும் பல்கலைக் கழகங்களில் தோன் றும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதனைப் போலத் தோன்றுகின்றது.
கொஞ்சக் காலம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே!
தீராத நோய்கள் திர இறை வழிபாடு کے அவசியம் எள்நு ஆங்கில வைத்தியர்களும் கறுகிறார்கள். உங்களது கருத்து என்ன? நீங்களும் இறைவழிபாடு செய்வதுண்டா?
கல்கிசை. சி. குமாரலிங்கம்.
வழிபாட்டில் ஒரு மனத் தத்துவ ކަރި நுட்பமுண்டு. உள்ளுணர்வுகள் ஒருமுகப் பட்டு, ஆழ்ந்து தியானிக்கும் போது, அந்த ஆன்மீக தியானத்திற்கு ஒரு விடிவு கிடைத்தே தீரும். இதைச் சிலர் தெய் வீகத்துடன் இணைத்துப் பார்ப்பார்கள். நவீன மனத் தத்துவம் இதை ஆழ் மனது டன் இணைத்துப் பார்த்துக் கண்டடை கின்றது. இந்த ஆழ் மன நிதானத் தத்து வத்தை நானும் கடந்த அரை நூற்றாண் டுக் காலத்திற்கும் மேலாகக் கடைப் பிடித்து ஒழுகி வருபவன் தான். என்னுடைய தனி மனித வளர்ச்சியில் கட்டம் கட்டமாக, அநு
பவரீதியாக இதை உணர்ந்து வருகின்றேன்.
3 சென்ற இதழ்த் தலையங்கம் படித்துப் பாரித்தேன். தேவையான எழுத்து; காலத்
துக்கான கருத்து.நீங்கள் இன்னும் இன்னும் விரிந்து, விரிந்து சிந்தியுங்கள். இத்தகைய எழுத்துக்களை எந்த நேரத்தில் எழுதுகிரி கள்?
வவுனியா. க. மயிலரசன்.
எழுதுவதற்கு நேரகாலம் என்பது ޗަރި கிடையாது. மல்லிகை அந்த மாத இதழ் முடிவடைந்தததும், அவசர அவசரமாக எழுதி முடிப்பவைதான் இவைகள். அதே சமயம் அத்தகைய கருத்துக்கள் அவசர
கோலமானவையல்ல. நீண்ட வெகு நாட்
களாக எனது அடி நெஞ்சில் ஊறப் போட்டு வைத்திருந்த கருத்துக்களே, எழுத்து வடிவமெடுத்துப் பிரசவமாகின்றன.
துரண்டில் பக்கத்தைத் தான் நான்' کے மல்லிகையை எடுத்தவுடன் படிப்பது வழக்கம். இந்தத் தூண்டில் கேள்வி- பதில் பகுதி களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட் LTல் என்ன?
தெஹிவளை. எம். ராமநாதன்.
முன்னரும் ஒரு தடவை யாழ்ப் ވަރި பாணத்திலிருந்தும், பின்னர் சென்னையி லிருந்தும் இரண்டு கேள்வி-பதில் தூண்டில் புத்தகங்கள் வெளி வந்துள் ளன. உங்களது ஆலோசனையைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றேன். அதைத் தொகுக்க எனக்கு நேரமில்லை. யாராவது தரமான- நின்று நிலைக்கக் கூடிய கேள்வி பதில்களைத் திரட்டித் தந்தால், அதைப் புத்தகமாக வெளியிட லாம் என நினைக்கின்றேன்.
மல்லிகை மார்ச் 2008 & 70

இந்த ஆண்டு மல்லிகைக் கலண்டர் ایسے
எங்களைப் போன்ற, மல்லிகையின் நிரந்தர ரஸிகர்களுக்கும் கிடைக்குமா? உங்களைப் பற்றிய சகல நூல்களையும் பாதுகாத்துச் சேமித்து வைத்திருப்பவன், நான். எனக்கு
O 356I dipiguqIDET?
ஹட்டன். ஏ. எஸ். ராகவன்.
உங்களது அபிமானத்திற்கு எனது ޗައި மனமார்ந்த நன்றிகள் கலண்டர்களை ஒரு குறிப்பிட்டளவு தான் தயாரித்தேன். நீங்கள் முன்னரே தொடர்பு கொண்டிருக் கலாம். இவைகளைத் தபாலில் அனுப்பு வது சிரமம். நேரடியாகக் கை வசம் பெற் றுக் கொள்வது தான் சாத்தியமானது. உங்களது பெயரைப் பதிவு செய்து வைக் கின்றேன். அடுத்த ஆண்டு நிச்சயம் உங்க ளுக்கு, உங்களது விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும்.
21 43-வது ஆண்டு மலரில் இதுவரையும் எந்தவொரு ஆண்டு மலர்களிலுமே காணாத ஒரு புதுமையைக் கண்டுணர்ந்தேன். மலருக் கென்று கனமான, தரமான விளம்பரங்கள் மல்லிகையை அலங்கரித்தன. மலருக்கென விளம்பரங்கள் சேகரிப்பதில் அதிக சிரம மெருத்திருப்பீர்களே- அப்படித்தானே?
வத்தளை. மா. அருள்நேசன்.
வியாபார உலகில் நல்ல இலக்கிய ޗައި நெஞ்சம் கொண்டவர்கள் பலர் இருக்கின் றனர். வியாபாரிகள் ஒட்டப்பிடாரம் ஆ குரு சுவாமி, திருச்சிஎம், ரெங்கநாதன்,துரை விசுவ நாதன், ஜனாப் எம். ஏ. கிஷார், மாத்தளை பீர் முகம்மது, மில்லர்ஸ் பாலச்சந்திரன்,
கே. எஸ். மணியம், Happy திலீபன், முரீதர சிங் போன்றவர்கள் எனக்கு அறிமுகமா னது, எனது தேடல் முயற்சி காரணமாகத் தான். இப்படிப் பலர் கொழும்பு மாநகரத் திலும், இன்னும், தேசமளாவிய பிரதேசங் களிலும், இலை மறை காயாக இருக்கவே செய்கின்றனர். அவர்களினது இலக்கிய இதயங்களை நாம் கண்டடைய வேண்டும். இப்படியான முயற்சிகளுக்கு மனப்பூர்வ மாக உதவ வேண்டும் என்னும் மனப் பாங்குடையவர்களை நாம் தேடித் தேடித் தான் சிரமப்பட்டுக் கண்டு பிடிக்க வேண் டும். சென்ற மலரில் நான் இப்படித் தான் சிலரைக் கண்டு பிடித்துள்ளேன். இது எனது விடா முயற்சிகளில் ஒன்று.
2 கொழும்பில் நடைபெறும் இலக்கியக்
கட்டங்களில் ஒன்றை நான் அவதானித்துப் பார்த்திருக்கின்றேன். எழுத்தாளர்கள் திட்ட 53LLISD இலக்கியக் கட்டங்களுக்கு வருகை தருவதேயில்லை. ஆனால், ஆரோக்கிய மான ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றித்தாம் கடட்ரும் கட்டங்களில் வாய் கிழிய உபதேசம் பண்ணுவார்கள். இது பற்றி என்ன நினைக் கிறிர்கள்?
வெள்ளவத்தை. எஸ். பாஸ்கரன்.
2 சொல்லி வரும் நிகழ்ச்சிகளுக்கெல் லாம் பொல்லுக் கொடுத்து அனுப்பி வைத்த உடையார், இறந்த பொழுது வீடெல்லாம் கைத் தடிகள் நிறைந்து வழிந்த கதை, பழைய கதை.
நமக்குள்ளே முரண்பாடுகள் கூர்மை யடைந்திருக்கலாம், சிலரது குணாம்சங் கள் நமக்கு ஒத்து வராமல் கூடப் போயி
மல்லிகை மார்ச் 2008 & 71

Page 38
Loesos66opas Lpmirė 2008 €৮ • -
ருக்கலாம். எழுத்தில் காரசாரமான தாக் குதல்கள் கூட, நடை பெற்றிருக்கலாம். அதே சமயம் சகோதர எழுத்தாளன் ஒருவனைக் கனம் பண்ணி, மதிக்கத் தெரிந்திருக்க வேண்டியது முக்கியம். எத்தனை சிரமங்களுக்கு உட்பட்டாலும், கலைஞன் ஒருவனது நிகழ்ச்சிக்குப் போய்த்தானாக வேண்டும். கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக, எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும், சிரமங்களுக்கு இடையேயும், தான் இன்று வாரம் ஒரு நூல் தேசத்தின் சகல பாகங்களிலும், இந்த யுத்த நெருக்கடிகளுக்கு மத்தியி லும் கூட, வெளி வரும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம். இதற்குச் செலவு செய்த உழைப்பின் பெறுமதி அபாரமானது. இதன் பெறுபேறு களை இன்று அனுபவித்துக் கொண்டிருக் கும் பலர் இதை உணருவதேயில்லை. தாங்கள் மற்றவர்களதுநிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள மாட்டார்கள். ஆனால், தமது நிகழ்ச்சிக்கு மாத்திரம் அழைப்பு அனுப்பு வார்கள். நீ முதலில் மற்றவர்களைக் கனம் பண்ணப் பழகு. அப்புறம் உனது அழைப்பை ஏற்று உன்னை நாங்கள் மதித்து வந்து போகிறோம்.
' கலைஞனுக்கு, எழுத்தாளன் ஒருவ ணுக்கும் ஒழுக்கம் முக்கியமா?
ஜாஎல. ஆர். சிவசோதி.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு ޗަރި வனுக்கும் ஒழுக்கம் இன்றியமையாத தொன்று. தனிமனித ஆரோக்கியத்திற் கும், சமூக ஒழுங்குக் கட்டுமானத்திற்கும் ஒழுக்கம் அவசியமானது. ஆனால்,
கலைஞனைப் பொறுத்த வரை நாம் அதை இறுக்கிப் பிடித்து விட முடியாது. நாமறிந்த பல உலகக் கலைஞர்கள் இந்த விவகாரத்தில் நெறி பிறழ்ந்தே தமது சுய வாழ்வில் தினசரி இயங்கி வந் துள்ளனர். சமூகமும் அதைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. காரணம், நெறி பிறழ்ந்து வாழ்ந்து வந்த வன் எனக் குற்றஞ் சாட்டப்பட்ட அந்தக் கலைஞன், தான் பிறந்த நாட்டிற்கும், தனது தாய் மொழிக்கும், மனுக் குலத் திற்கும் தனது ஆக்கங்கள் மூலம் மகத் தான பங்களிப்பைச் செலுத்தியுள்ளான். , எனவே, தனிமனித ஒழுக்கம் சம்பந்தமாக வரலாறு கலைஞனைக் கண்டும் காணா மலே தான் இருந்துள்ளது.
சந்தாக்கள்மூலம்,விற்பனையின் மூல,ே کے விளம்பரங்களின் மூலமும் வரும் பொருளா தாறு வருவாய்களைக் கொண்டு தானே இத் தனை காலமும் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு வருகின்றிர்கள்?
நெல்லியடி. கா. ஞானதேவன்.
உங்களது கேள்விக்கு விரிவாகப் ޗަހި பதில் சொல்ல வேண்டும். தூண்டில் இடந் தராது. சந்தா, விற்பனை, விளம்பரம் ஆகிய இந்த மூன்றையும் வைத்து ஒரு வெகு சன இதழை வெளியிடலாம். இங்கல்ல, தமிழ்நாட்டில், இங்கோ நிலமை வேறு அசுர உழைப்பு, அர்ப்பணிப்பு, வெகுசனத் தொடர் புடன் கூட, இந்தப்பணியை மனசாரப் புரிந்து கொண்ட நல்லிதயங்களின் அன்பளிப் பும், அத்தியாவசியம் தேவை. தேவை வரும் போது, உதவும் கரங்கள் பற்றிப் பின்னர்,பதிவு செய்கின்றேன்.
201/4, முரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

উ৯:5
Wahls shopping Centre
(Dealers in Video Cassettes, Audio Cassettes, CD's, Calculators, suxury & Fancy
152, Bankshall Street, Colombo - 11. Tel: 2446028, 2441982 Faχ : 323472