கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.04

Page 1
'Mallikai
TV,
S S LaaSa L L S L LLLSLSLLLLLS ELELLLcLLLLL S LLLLLLLLS LL LLLLGLLS L LLLLLLLaaaS
April - 2008
Οι έλαβ δεν τέρας ορα DIGITAL OFFSET PRESS
у hp in dig Oa. KONICA MINOLTA
Digital Machine
קארלין.
ܘܐ܂
ܐ ཤཱ་ We haya introduced
ཀུ་ Plastie, Cards & Scratch Cards
(2UR PRODUCT
DATABASIL PRIMITING - --- | LLLL L LL LS GL L LLLS0S LLL LLLSS aa a L L S LS SLLL L0LL LLLS L EEEL L S 0 LLLLLLL LLLLLLLLS a S LLLa S L SS LLLLLLLLS
''A. F. A.R.L. R. E.I. LLLLLL SLLS SttS S S S S S S0S GGLLSLSKLLLLSCLSSLLLLLSS
LLSSLLSL L S L SS S LL SLLLL SLLLLLLSS LLSLSLLSS S LLSKSS LLLLLL LLLL0L "ாட்ட
0LSL KS L S SKL0 S KLaLa0LSSS SLL S LLLLLLLLS
HAPPY DIGITAL CENTRE (Pvt) Ltd
I-led Offic Brinch solo 75/I^1, Sri SuIrllIäliss Mwutlil, No. 107 B, IT, Gulle Rold, Colombo-1%, Sri Laykal, Culorill:- (),
e: ). || 23:3) web : WWW, happy digital centre. Coil
l: ; (11-5555) e. Imail : info@happy digitalocentre.com
 
 
 
 
 
 
 
 
 
 

50வது ஆண்டை நோக்கி. оѓараv — зо/=
iš LD6H6SSàES
GosnünslLlinkssčh Süllfl

Page 2
iiiiiiiiiiiiiiian ak
29. 30. 31.
32. 33. 34. 35.
36.
22.
23. 24. 25. 26. 27.
28.
ప్రశ్న
عرقیات ناحیه اتمها
மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ள நூல்கள் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜிவா(பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல் டொமினிக் ஜீவா இப்படியும் ஒருவன் (சிறுகதை) : மா. பாலசிங்கம் அட்டைப் படங்கள் சேலை (சிறுகதை) முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி) மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) : செங்கை ஆழியான் நிலக்கிளி (நாவல்) : பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) முன்னுரைகள் சில பதிப்புரைகள் : டொமினிக் ஜீவா தரை மீன்கள் (சிறுகதை) ச. முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) ப. ஆப்டீன் அப்புறமென்ன (கவிதை) குறிஞ்சி இளந்தென்றல் அப்பா (வரலாற்று நூல்) தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் - 25 : தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு Undrawn Portrait for Unwritten Poetry - டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) தலைப் பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) அக்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் மல்லிகை முகங்கள் : டொமினிக் ஜீவா -- பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா 120ஃ= எங்கள் நினைவுகளில் கைலாசபதி : தொகுத்தவர் - டொமினிக் ஜீவா நினைவின் அலைகள் எஸ். வீ தம்பையா முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் குறிப்புகள்)
250/= ܒ/40 1 75/-
110/= 100/=
110/- 150/= 135/- 150/- 175/- 150/s 275/= 350/= 140/= 80/= ܒ/150
80/= 100/- 20/=
150/=
175/- 150/= 120/= =ی/120 14.0/= ܒ/150 350/=
200/- 120/- 200/= 150/= 150/=
90/= 60/= 200/=

ஆய்வுத் தேவைகளுக்காக
மல்லிகை வெளிவரவில்லை. அறிவுத் தேவைக்காகவே வெளியிடுகின்றோம்
பலர் இன்று பல கோணங்களில் இருந்தெல்லாம் எம்முடன் தொடர்பு கொள் ளுகின்றனர். தமது ஆய்வுக்கு, உயர் கல் விப் படிப்புக்கு மல்லிகையின் கடந்த கால இதழ்கள் அவசியம் தேவை எனவும், அவ ற்றைத் தந்துதவ முடியுமா? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
நாம் ஆரம்ப கால இதழ்களிலேயே இதற்கான தெளிவான பதிலைப் பதிவு செய்து வைத்துள்ளோம். மல்லிகை வாசி த்து விட்டு, ஒதுக்கி வைக்கப்படவுள்ள சஞ் சிகையல்ல. அதன் ஒவ்வொரு இதழ்களை யும் பாதுகாத்து சேமித்து வைத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே தெளிவாகச் சொல்லியிருந்தோம்.
இன்று, திடீரெனச் சிலர் பழைய
இதழ்கள் தத்தமது ஆய்வுக்குத் தேவை என வற்புறுத்துகின்றனர்.
யுத்தக் கெடுபிடிகளால் இடம் பெயர்ந்
தது மல்லிகை. இதன் காரணமாகப் பல அரிய இதழ்கள் காணாமலே போய் விட்டன. இங்கோ, இடவசதி பற்றாக்குறை. இதழ்
களை மட்டுமல்ல, மல்லிகைப் பந்தல் வெளி
யீடுகளைக் கூடப் பாதுகாத்து எதிர் காலச் சந்ததியினருக்குப் பாரப்படுத்துவதே பெரிய தொரு இலக்கியச் சுமை நமக்கு.
சமீபத்தில் வெளிவந்துள்ள 43- வது ஆண்டு மலர் ஆய்வு மாணவர்களுக்குப் பல பல புதுத் தகவல்களைத் தருவதாயுள்ளது. இதையும் தவறவிட்டால் நாம் என்ன செய் யலாம்? தேடிப் பாதகாருங்கள்.
- ஆசிரியர்
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
sing resop வரலாற்றிலேயே இலங்கை நாடா gpiĝ49šo kontiĝgigi நான் ஜிஇலக்கியச் சத்திகை விதந்து ug: பெறுமதி As 8 வம் Sesama išsaison Berg o siste i en i GT Å (407200 பதிவு செய்ததுடன் எதிர்காலச் ಚಿನ್ತಿಲ್ಲGå
50 -வது ஆண்டை நோக்கி. ஏப்ரல் 347
ർഗ്ഗദ്ധe© للرمالح
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் i வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 2320721
mallikaijeevaGyahoo.com

Page 3
အ;&ာ်ဇံg. SÅ - 33-S2-0 KS 2004,
Tഭ് , LKT e 12 Mtfel -n e 2 Ο Ο 4 SLLLSY0SYekLLLLLL LLSLLLLLLSS LLLkLLLSgLLLkLSJLLkLaLaLLS LLLLL 0LG00 Pły*zote : 244 2373 3t 32 & 2&-&3 &: 84 CCYS0S00 0LkS00000eL YSLeMSLLLeeeLeLeeLLgesJAkLkLH HSHLH
- ૬UતO)૮ોર્ક છતિ
10. 01. 2004 ல் சென்னையில் திரு. எஸ். பொ. அவர்கள் முன் முயற்சி எடுத்து நடத்திய தமிழ் இலக்கியம் 2004 பெரு விழாவில் நான் கலந்து கொண்டேன். எஸ். பொ. அவர்களே நேரடியாக எனக்குக் கடிதமெழுதி, அழைத்தார்கள். மேடையில் பலருடன் சேர்ந்து கெளர விக்கப்பட்டேன். கெளரவ விருதும் தந்தார்கள். அந்த விருதை திருப்பிக் கொடுத்து விடுவோமா? என்று கூட, யோசிக்கின்றேன்.
பல ஆத்மார்த்திகமான நண்பர்கள் நான் இந்த விழாவிற்கே போயிருக்கக் கூடாது எனக் கண்டித்தார்கள், தடுத்தார்கள். ஆழமான இலக்கிய நேசிப்பும், மற்றவர்களைக் கனம் பண்ணிக் கெளரவிக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் எனது பிறவி இயல்பு.
ஆனால், எனது இந்த இலக்கிய நேர்மை, அணுகு முறையைக் கொச்சைப்படுத்தும் வகையில் நண்பர் எஸ். பொ. தொடர்ந்தும், இன்று வரைக்கும் என்மீதும், எனது இலக்கியப் பங்களிப்பின் மீதும் எழுத்தில் அவதூறு பொழிந்து வருகின்றார். நூல்களில் பதிவு செய்கின்றார். எதிர்காலத் தலைமுறையினரின் தெளிவிற்காக, அவர் 21, 11, 2003 சென்னையிலிருந்து எனக்கு எழுதிய் இக்கடிதத்தை எழுத்தில் ஆவணப்படுத்தி வைக்கின்றேன்.
சத்தியமான உண்மை இது. எத்தனை தான் அவதூறுபடுத்தினாலும், எஸ். பொ. மீது ானக்குக் கோபம் வருவதில்லை. இளமைக் கால நட்புக்கு நான் கொடுக்கும் விலை, இது.
وہ متنہکیجہ ہونے سے
۔ سح۔ خے عرصہ خسے یہوہ ------ہ N-ق ;خص دہشتے " > حهٔ ع شده یک خلاصر خبری بر شعبه و خاتمی 7۔ یہ حسحہ -بدص نہ کے لحہ بعه جهہ دحیح" یہ ایسے - خ - طه حی به تمام حیح ܣܶܫܝܒܝܗܝ- ܬܝܫܶܒ݁ܗ ܕܝܗܝ ܝܶܟ݂ ܨܲܝ ܝܝ ܕܐܝ S ܝܶܡ ܖ ܖܝܝܐ- ܕ݁ܝܢ ܝܺܣܛܪ ܟ- ܢܚܪܪܐܝܕܐ ·ܡܐ 2 g2,4- .ܟ݁ܶܟ݂ - --> ܗ ܝܢ ܝܠ ܫ ܓ݁ܶܝ ܓ݁ܶܪ - ܝܠ ܪܶ`6 ¬ܗ ܟܐܗ ܕܐ .
h *" ars Vcsag- 2Mt Ker ~ rap - Nu - M - . سے بیچی۔ نئے YM - 9 SAGA تا چه حسیمس-2؟ اسطہ حسب سے u { g ~ a>SNef s`rñ< ~n مخه
ط سکی۔ 5 ,'جنسی لمحمیہ تععه جیم) رخ لح وہ خسبس------ یہ“ یہ ہے حتمییے ک>حسسہسپہیے ججس بچے 3۔ مختصفح جب دیے جیسا کہ سجYسمبحیرہ ۔سحظ کہہ حقہ تمکھ حی حجت -- ܛ--- ܡܶܢ ¬ܬ ܝܶܒ݂ ܓ݁ܶܚܒܚܵܐ ܝ ܪ`f (ܐ
(نویسی ہد= نبیہ حماء
ーニマ ers ーイー ۔۔۔۔۔ ཡབ་ཁོ་
- =一ーー< "a y. -- ar ---r . - 7ހަހ_ހ&
k- .--~~ --صعسسسسس---سسسس"-"*"
حديثة يرجع \ \ کی۔
 

மாற்று வழிதான் என்ன?
W
f நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனரோ? என எண்ணத்
தோன்றுகின்றது.
பார்க்கப் போனால், இந்த நாட்டுப் படைப்பாளிகள் தான் பாரிய
கடந்த காலங்களில் அவர்கள் படைப்பாளிகளாகவே மாத்திரம் இயங்கி வந்துள்ளனர். தமது மனக் கருத்துக்களையும், அடி மன எண்ணங்களையும் எழுத்தில் வடித்து விட்டு, அச் சிருஷ்டிகளைத் தமக்குத் தமக்கு விரும்பிய சஞ்சிகை, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்து விட்டு, மிக ஆறுதலாகத் தமக்குத் தமக்குரியதான தினசரி வேலைகளில் தம்மைத் தாமே ஈடுபடுத்திக் கொண்டு இயங்கி வந்துள்ளனர்.
ஆனால், இன்றோ நிலைமை வெகு வேகமாக மாறி விட்டது.
தமது படைப்புக்களை நூலுருவில் வெளியாக்கம் செய்ய வேண்டி கட்டாயச் சூழ் நிலைக்கு உந்தித் தள்ளப்பட்டு விட்டனர்.
இன்று தமிழில் மட்டும், தேசம் பூராகவும் வாரமொரு நூல் வெளிவந்து கொண்டிருக் கின்றது.
அதே சமயம், போக்குவரத்து இடைஞ்சல்களால் தேசமே சுருங்கிச் சுருங்கி வந்து கொண்டுள்ளது. புத்தகங்கள் நாடு தழுவிய ரீதியில் விநியோகம் செய்ய முடியாதபடி தலை நகரிலேயே சில இடங்களில் மாத்திரமே தேங்கிப் போய் விட்டது.
பள்ளிக்கூடங்களுக்கோ, நூலகங்களுக்கோ ஒழுங்காகப் புத்தகங்கள் போய்ச் சேர முடியாத நிலை யில் போக்குவரத்துக்கள் சில பிரதேசங்களில் துண்டிக்கப்பட்டு விட்டன.
தத்தமது படைப்புக்களை நூலுருவில் வெளியிட்டு வைத்துள்ள படைப்பாளி, தேங்கிப் போய்த் தூசி படர்ந்துள்ள புத்தகப் பொதிகளைப் பார்த்துப் பார்த்தே ஏங்கிப் போயுள்ளான்.
கல்வி கலாசாரத்துறை இந்தத் தேக்கத்திலிருந்து எழுத்தாளன் விடுபட ஆவன செய்தாக வேண்டும்.
இலங்கையிலிருந்து பிரசுரமாகும் எந்தவொரு நூலையும் தனது நாட்டில் இறக்குமதி செய்வதைச் சட்டபூர்வமாகவே தடை செய்துள்ளது இந்திய மத்திய அரசு. அதே சமயம் பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்கள் தமிழ் நாட்டிலிருந்து வாரா வாரம் இங்கு குமிக்கப்பட்டு வருகின்றன. இவ்விறக்குமதியில் தரமற்ற பல வெளியீடுகளும் அடங்கும் என்பது யதார்த்த உண்மைகளில் ஒன்றாகும்.
இல்லாது போனால், மனச் சந்துஷ்டியை இழந்து பொருளாதார நெருக்கடியில் மனசு பம்மித்துப் போயுள்ள எழுத்தாளன், இறுதியில் படைப்பு உலகிலிருந்து காணாமலே போய் விடுவான்!- இது சர்வ நிச்சயம்

Page 4
2>Jeadlà ! Juë
மனித உரிமைப் போராளி முற்போக்குப் படைப்பாளிபா. செ.
- அந்தனி இவn
‘எழுத்தாளர் சமூகத்தின் மனச் சாட்சியாக இயங்க வேண்டும். என்பதை இலட்சிய நோக்கமாகக் கொண்டு செயற்படும் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் படைப்பாளி பா. செயப்பிரகாசம். அவரது எழுத்துக்களைப் போலவே அவரும் ஒரு மனித உரிமைப் போராளி.
கரிசல் காட்டுக்காரரான பா. செயப்பிரகாசம் கதைகளால் அறியப்பட்டவர். அவரது சிறுகதைகளில் கவித்துவமான நடையில், அனைவரையும் கவர்ந்து விடும் ஆற்றல் இவரது படைப்புக்குண்டு.
இவரது இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுத்தவர் தி. க. சி. பா. செயப்பிரகாசத் தின் கதைகளைத் "தாமரையில் வெளியிட்டுக் களம் அமைத்துக் கொடுத்தார். இவரது கதைகளில் அதிகமாகக் காணப்படுவது சமூக அக்கறை தான். இது பற்றி அவருடன் ஒரு தடவை நேரில் கேட்ட பொழுது.
"நான் அடிப்படையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். வறுமையின் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுத் திணறிய குடும்பம். அதற்குள்ளிருந்து தான் எனக்குச் சுவாசக் காற்றை எடுத்துக் கொண்டேன். ஆகவே, ஒரு சமூகப் போராளியாக உருவாகுவது என்பது மாண வப் பருவத்திலேயே எனக்கு நிகழ்ந்து விட்டது. பிறகு, நான் இலக்கியத்தில் இயங்கும் போது கூட, நான் ஒரு சமூக மனிதன் என்ற அடிப்படையில் இயங்க ஆரம்பித்தேன்" என்கிறார்.
'உங்களுக்குக் கை வந்த கவித்துவ நடை எப்படி வாய்த்தது?" என்று கேட்ட பொழுது, அவரே, அவரது எழுத்து நடை பற்றி மனம் திறந்து பேசினார்.
'அவ்வப்போது தமிழில் வந்த படைப்புக்களைக் காட்டிலும், மொழி ஆக்கங்களையே அதிகம் வாசித்தேன். உரை நடையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும் கவித்துவமான வரிகளை அதிகம் யோசிப்பேன். உதாரணமாக, நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் அந்தச் சிறைச்சாலை வெளியே இருக்கிற பொட்டல் வுெளியில், ஒரே ஒரு புல் மட்டும் அதிசயத்தோடு, இந்த இடத்தில் நாம் முளைத்திருக்கின்றோம்" என்ற வியப்போடு பார்ப்பதாக எழுதியிருப்பார். ஒரு புல் தாற்றில் ஆடுவதை அவர் அவ்வாறு குறிப்பிடுவார்.
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 4

ஒரு கட்டத்தில் கலில் ஜிப்ரான் தத்து வார்த்தமாகக் கவித்துவத்தோடு எழுதிய தைப் போல, நானும் கல்லூரி நாட்களில் எழுதிப் பார்த்தது உண்டு. என் கதைக ளின் கவித்துவ நடையைப் பெரியவர் தி. க. சி, சேலம் தமிழ் நாடன் போன்றவர்கள் பாராட்டினார்கள். எனது மூன்றாம் பிறை யின் மரணம்" கதையில் அரிசிச் சோறு கிடைக்காததால், அந்த சிறுவன் இறந்து போன பிறகு, கையிலே அரிசிச் சோற்றை வைத்து இடுகாட்டிலே புதைப்பார்களாம். அது பற்றி எழுதுகிற போது, ‘ஒரு நிலா கைக்குள்ளே ஒரு நிலாவை வைத்துக் கொண்டு தூங்குவது போல இருந்தது' என்று எழுதியிருந்தேன். அதனை புவியரசு மிகவும் சிலாகித்து "அற்புதமான வரிகள் என்று கூறினார்.
எனது முதல் கதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கி. ராஜநாராயணன் 'இவ்வளவு கவித்துமாக எனக்கு எழுத வரமாட்டேங்கிறதே" என்று குறிப்பிட்டிருந் தார். இத்தகைய ஊக்கப்படுத்தல்களி னால் தான் அந்த மொழிநடையைத் தொட ர்ந்து கடைப் பிடித்து வந்தேன்” என்கிறார்.
எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்துடன் பேசிக் கொண்டிருப்பதே ஒரு சுகானுபவமா கும். ஒரு காலத்தில் அவரது 'ஒரு ஜெருச லேம்', 'காடு போன்ற சிறுகதைத் தொகுதி களைப் படித்த போது, அவரது கவித்துவ மான எழுத்துக்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. எண்பதுகளில் வீதி நாடகப் பயிற்சிக்காகத் தமிழகம் சென்றிருந்த பொழுது, பா. செ. வைப் பூமணி அறிமுகப் படுத்தினார். அதன் பிறகு, தமிழகம் செல் லும் போதெல்லாம், படைப்பாளி பா. செயப் பிரகாசத்தைச் சந்திக்கத் தவறுவதில்லை.
சிறுகதை, கவிதைகள், கதையில்லாத கதைகள், நாடகம், உருவகம், நூல் விமர் சனங்கள், பயண இலக்கியம் என்று படை
ப்புக்கள் மூலம் பன்முக ஆற்றலை வெளிப் படுத்தி உள்ளார். களப் பணியாளர், எழுத் தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், எல்லா வற்றிற்கும் மேலாக, மனித உரிமைப் போரா ளியாகப் பல போராட்டங்களில் நேரடியாகப் பங்கு கொண்டு சிறை சென்றவர்.
திராவிட இயக்கத்தின் மேடை பேச்சா ளராக, மொழிப் போரின் தியாகியாக இருந் தும், அதன் கலாசார சேற்றில் கால் நனை க்காமல், மார்க்ஸிய ஒளியில் தன்னைப் புத்துருவாக்கம் செய்து கொண்டவர். தீவிரமான செயல்பாடு கொண்ட அரசியல் இயக்கங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். இயக்கங்கள் மாறிய போதும், பாதை மாறவில்லை. காலம் பயிற்றுவித்த ஒவ்வொரு அநுபவத்தின் மூலமும் தனக் குரிய வெளிச்சத்தைப் பெற்றுக் கொண்டு, படைப்புக்களின் கலைத்திறனை நிலை நிறுத்திக் கொண்டவர் என்கிறார், இவரது படைப்புக்களை ஆய்வு செய்த களந்தை பீர் முகம்மது. அவர் தொகுத்த 'பா. செயப் பிரகாசம் படைப்புலகம்' என்ற நூலைப் படித்தால் பா. செ. யின் முதுமையான ஆற்றலை அறிந்து கொள்ளலாம்.
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ‘சூரியதீபன் என்ற புனைப் பெயரில் புரட்சிகரமான படைப்புக்களைத் தந் துள்ளார். இது பற்றிக் கேட்ட பொழுது. முகத்தில் ஒரு புன்னகையைத் தவழ விட்டவாறு. "நான் ஒரு இலக்கியவாதி என்பதன் அடையாளம் பா. செயப்பிரகா சம். நான் ஒரு சமூகப் போராளி என்பதன் அடையாளம் சூரியதீபன், புதிய இடதுசாரிச் சிந்தனையுடன் நான் எழுத ஆரம்பித்த பொழுது உருக் கொண்டதுதான் 'சூரிய தீபன்' என்ற பெயர். இளவேனில் நடத்திய கார்க்கி இதழில் தான் முதன் முதலில் சூரியதீபன் என்ற பெயரி எழுதினேன்’ என்கிறார்.
மல்லிகை ஏப்ரல் 2008 & 5

Page 5
பா. செயப்பிரகாசம் சிறுகதைகளை மட்டுமல்ல, சிறப்பான கவிதைகளும் எழுதியுள்ளார். 1982- இல் அவரது முதல் கவிதை வெளிவந்தது. 'பாரதி நடந்த தெரு' என்பது தான் அவர் எழுதிய கவிதை. சென்னைத் திருவல்லிக்கேணிப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன போது, இஸ்லாமியர்கள் மீது அவர்கள் நடத்திய வெறித்தாக்குதல்கள் பற்றிய கவிதை அது. 'மன ஓசை"யில் வெளி வந்தது.
மாஞ்சோலைத் தோட்டத்தில் தொழி லாளர்கள் நீதி கேட்டு ஊர்வலமாய்ச் சென் றவர்கள், நெல்லைத் தாமிரபரணி ஆற்றில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மரணம் என்கிறது அரசு. அது மரணமல்ல, படுகொலை, இந்தக் படுகொலை பற்றி மனித உரிமைப் போராளியான பா. செ.
"நதியோடு பேசுவேன்' என்ற தனது
உரிமைக் குரலைப் பதிவு செய்கிறார்.
அந்தக் கவிதாவரிகளில் சில வரிகள்.
உள்ளுர் நதி என்பதால் நதிநீர்ப் பிரச்சனை இல்லை நதியின் பிரச்சனை வெண்ணிலவும் வெள்ளை நடு வெய்யிலிலும் ஆயிரம் மினுக்கட்டாம் பூச்சிகளை அலைகளில் உருட்டும் ஆற்றோடு எந்தப் பிரச்சன்ையும் இல்லை எங்களுக்கு
தண்ணிரின் குழந்தைகள் தண்ணிர் குடித்துச் செத்ததாம் பிறகு என்ன? கொன்ற தாய்ச் சரித்திரம் போதும் பா. செ. எழுதுகிறார்
சரித்திரத்தின் ஆற்றங்கரையோரம் அடுக்கிய பிணங்களெல்லாம் தண்ணிர் குடித்துச் செத்ததாய்
சான்றிதழ் எவரெனும் தந்ததுண்டா?
இவ்வாறு படைப்பாளியான பா. செ. தனது மனக்குமுறலை வெளிப்படுத்து கிறார். நதியோடு பேசுவேன்', 'எதிர்காற்று என்பது இவரது கவிதைத் தொகுப்புக்கள்.
தலித் இலக்கியம். என்று தனியா கத் தனித்துவமாகப் பேசப்படும் முன்னரே, தலித் இலக்கியங்களைப் படைத்திருக்கி றார் செயப்பிரகாசம். இவரது படைப்புக்க ளில் பெண்ணியம், சாதிய ஒடுக்கு முறை, அரசியல் மற்றும் தொழிற் சங்கப் பிரச்ச னைகள் கையாளப்படுகின்றன. சமூகத் தில் புரையோடிப் போயுள்ள அனைத்துக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு மிக்கக் கருத்துக்கள் பா. செ. யிடமிருந்து வெளிவந்துள்ளன.
இவர் மானுடத்தின் ஒன்று கூடல் யாழ் நகரில் நடை பெற்ற பொழுது, இங்கு வருகை தந்து எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடியதுடன், மலையகத்திற்கு வருகை தந்து, உழைக்கும் மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடினார். அது மாத்திரமல்ல, இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர். நமது மக்களையும், மண்ணையும் நேசிப் பதில் முதன்மையானவர். இவர் படைப் பாளி மட்டுமல்ல, மனித உரிமைக்காகக் குரல் எழுப்பும் போராளியாக வாழ்கிறார்.
"பா. செ. யின் படைப்புகளில் நாம் காண்பது அவருடைய புரட்சி மனம். அவருடைய அக்கினி முகம், அவருடைய விமர்சனக் குரல். இவற்றிற்கு எல்லாம் ஊடகமாகி இருக்கிற மொழித் திறன், இயல்பான சொல்லாடல்கள் கலையம் சத்துடன் பொருந்திக் கொள்கின்றன.' என்கிறார் களந்தை பீர் முகம்மது. இது யதார்த்த பூர்வமான உண்மையாகும்.
மல்லிகை ஏப்ரல் 2008 & 6

െ ബ്രജക്റ്റെ- ീള
- ෙෙරිණිෆරෑණිගු) ඌෆිග්‍රීශී.
5ட்டாரின் பழம் பெரும் கிராமங்களில் (AlSamal) சமாலும் ஒன்றாகும். ஒரு நகரத்தில் என்னவெல்லாம் இருக்குமோ, அத்தனையும் பூரணமாய் சமாலில் உள்ளது. வைத்திய சாலை, பொலிஸ் நிலையம், பெட்ரோல் ஸ்டேசன், பாடசாலை என்று, எல்லா வகையான அத்தியாவசிய அரச நிறுவனங்களும் சமாலில் நிறுவப்பட்டுள்ளது.
சமால் ஒரு கடற்கரைக் கிராமமாகும். கட்டார் நாட்டின் சுதேசிகள், பழங்குடியினர் இந்தக். கடற்கரைக் கிராமத்தில் தான் ஆரம்ப காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். இங்குள்ளவர்களின் w ஜீவனோபாயத் தொழில் மீன் பிடித்தல் ஆகும். மட்டுமன்றி, பவற்ரைன் நாட்டுக்கும், கட்டாருக் கும் மிகக் கிட்டிய தூரம் இந்தச் சமாலிலிருந்து தான் கணிக்கப்பட்டுள்ளது. சமாலிலிருந்து, பவற்ரைன் நாட்டுக்கு வெறும் 40 km தூரம் தான்.
டோஹாவிலிருந்து, சமாலுக்கு சுமார் 160 Km தூரமிருக்கும். சொந்த வாகனத்தில் பயணம் செய்வதென்றால், சுமார் ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடலாம். பஸ்ஸில் என்றால், இரண்டரை மணி நேரம் எடுக்கும். இரண்டு மூன்று மாதங்களுக்கொரு முறை நான் சமாலுக் குச் செல்வது வழக்கம். அங்கே என் நண்பர்களான, ஏறாவூரைச் சேர்ந்த ராபீகும், அனுராத புரத்தைச் சேர்ந்த ஹாரூனும் உள்ளார்கள்.
சமால் ஒரு பாலைவனக் கிரமமாகும். ஒரு கிராமியச் சூழலை நினைவுபடுத்தும் அழகி யல் தன்மை சமாலில் அதிகமாகவே உள்ளது கட்டார் நாட்டின் வரலாறு பற்றிப் பேசும் போது, இந்தச் சமால் பிரதேசத்தைப் பற்றியும் கட்டாயம் பேச வேண்டும்.
ஆரம்ப கால அரேபியர்கள் குழுக்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். அவ்வப்போதான, கால நிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், தொழில் ரீதியான முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும், கடற்கரையோரங்களை அண்டிய பகுதிகளிலும், விவசாயம் செய்ய உகந்த பிரதேசங்களை அடையாளங் கண்டும், தமது வாழிடங்களை அமைத்துக் கொண்ட னர். இப்படி நாடோடிக் குழுக்களான இவர்கள் அவ்வப்போது, தமது வாழிடங்களை வெவ் வேறு பிரதேசங்களுக்கு மாற்றிக் கொண்டனர். இப்படி நாடோடிக் கூட்டமாக திரிந்த அரபிகள் Um Side, Al-Khor, Al- Samal (3LT6ögo 19luGgsg|Sieh6flso SLDg) 6)JTgp6ßlu9yéS 2-sßS தொழில் ரீதியான அமைப்புக்களைக் கண்டு, அவ்வப் பிரதேசங்களிலேயே வாழத் தொடங்கினர்.
ஒரு காலத்தில் கவனிப்பாரற்று, வெறும் மணல் முகடுகளாய் காணப்பட்ட கட்டார் இன்று, செல்வம் கொழிக்கும் வசந்த பூமியாய் மாறிப் போயுள்ளது. மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 7

Page 6
பொதுவாகவே சவுதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா போன்ற நாட்டவர்கள் இந்தக் கட்டார் மண்ணை முதன் முதலாகத் தமது வாழிடமாக அமைத்துக் கொண்டவர்கள். இவர்களில், சவூதி அரேபியாவிலிருந்தும், ஈரானிலிருந்தும் வந்தவர்கள் இங்கு நிரந்தர மாகவே தங்கிவிட்டனர். அவர்கள் தான், இன்றைய கட்டார் சுதேசிகளாகவும் கொள்ளப் படுகின்றனர்.
‘கட்டார் என்ற பெயர் இந்த நாட்டுக்கு எப்படி வந்தது என்று, பல அரபியர்களிடம் நான் கேட்டுள்ளேன். அவர்களுக்கு அது பற்றித் தெளிவான கருத்தோட்டம் இல்லை. நான் வாசித்த ஒரு சில கட்டார் பற்றிய புத் தகங்களிலும், அது பற்றிய குறிப்புக்கள் எது வும் தென்படவில்லை. எனவே, எனது கிரா மம் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புக்க ளைப் பகிர்ந்து கொள்வது இங்கு உசிதம் எனக் கருதுகிறேன்.
எனது கிராமமான நாச்சியாதீவு பற்றி ஆரம்ப காலங்களில் நான் பலரிடம் கேட்ட துண்டு. தனிப் பெரும் சிங்களப் பிரதேச மான அனுராதபுரத்தில் ஒரு பெரும் முஸ்லிம் கிராமமான நாச்சியாதீவும், அதன் அமைவி டமும் பல்வேறுபட்ட கேள்விகளை எனக்குள்
அவ்வப்போது முடுக்கிவிட்டுள்ளன. உண்மை
யிலேயே, தாம் வாழும் பிரதேசத்தின் அல் லது ஊரின் வரலாறும், அங்கு மக்கள் வாழத் தலைப்பட்ட ஆரம்ப காலங்கள் பற்றிய குறிப்பும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். இந்த வகையில், எனது பாடசாலைக் காலங்கள் இது பற்றிய ஆய்வுகளிலும், தேடல்களிலும் கழிந்துள்ளன எனலாம்.
நாச்சியாதீவுக்கு முஸ்லீம்கள் வந்த வரலாறும், நாச்சியாதீவுக் கிராமம் பற்றிய
சில வரலாறுகள் 1992 ஆம் ஆண்டு முஸ் லிம் கலாச்சார பண்பாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில மீலாத் விழாவை முன் னிட்டு அமைச்சினால் வெளியிடப்பட்ட, அநு ராதபுர மாவட்ட முஸ்லிம்கள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது. உண்மையிலே, அது மாவட்டம் தழுவிய ஒரு நூல் என்பதால், அதில் ஒரு தனிக் கிராமம் பற்றிய ஆழ மான அலசல்கள் சாத்தியப்படாமல் போயி ருக்கலாம் என்கின்ற எடுகோள் கூட, நியாய மானதாகவே படுகின்றது.
நாச்சியாதீவுக் கிராமம் பற்றிப் பல்வேறு பட்ட, மூத்த தலைமுறையினரிடமும் சில ஆய்வாளர்களிடமும் நான் பெற்றுக் கொண்ட அடிப்படையில், சில வரலாறுகள் புதைந்து போய்க் கிடக்கின்றன.
அநுராதபுர மாவட்டத்தின் கிழக்குத் திசையில் வெறும் 18 Km தூரம் பயணித் தால் அழகும், வனப்பும், வளமும் நிறைந்த நாச்சியாதீவுக் கிராமத்தை அடையலாம்! பச்சைப் போர்வை போர்த்தியதைப் போல், கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டுக்கும் அழ கிய வயல் வெளிகள், பரபரப்பான தெருக் கள், வளைந்தோடும் நதிகள், வானுயர்ந்த தென்னை மரங்கள், காலையிலும், மாலை யிலும், “கவிதை பாடும் கிளிகள்!. என்று, ஒரு அப்பட்டமான கிராமத்தை அடையாளம் கண்டு கொள்ளலாம்,
கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சியில், அரசனுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக் காரர்களின் உயிர்களுக்கு ஊறுவிளை விக்கும் வகையில் நிலைமை சீர்கெட்டுக் காணப்பட்ட போது, அரச குடும்பத்தினர் பாதுகாப்பான இடம் நோக்கி நகர வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பெரும் நக ரங்கள் தோறும் ஆங்கிலேயர்கள் ஆக்கிர
மல்லிகை ஏப்ரல் 2008 & 8

மித்து, வசப்படுத்தி அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கையில், காடு சார்ந்த பிரதேசங் களில் ஆங்காங்கே அரச குடும்பங்கள் பிரிந்து மறைந்து வாழ்ந்தனர். அதில் ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த தாய், தகப்பன், மகள் என்று மூவரும் முஸ்லிம்களின் பாதுகாப்பில் 'திரப்பன பிரதேசத்திற் கூடாக, அமைந்திருக்கும் காட்டுப் பகுதி யில் வாழ்ந்துள்ளனர். காலப் போக்கில், அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் வயல் களையும், குளங்களையும் உருவாக்கி ஒரு சிற்றரசாக வாழ்க்கை நடாத்தி வந்துள்ள னர். வெறும் மூன்று அல்லது நான்கு முஸ்லிம் குடும்பங்களும், சில சிங்கள, தமிழ் குடும்பங்களும் அரச குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்துள்ளன.
சிறு காலத்தில், மக்கள் தொகை பெரு கியது. அரச குடும்பத்தைச் சேர்ந்த தாயும் தந்தையும் இறந்து போனார்கள். தனியான ஒரு மகளும் தமது உறவினர்களுடன் போய் விட்டாள். ஆனால், அந்த மகள் போகும் போது, சில பிரதேசங்களில் இன்னினார் களுக்குத் தான் என்று பிரித்துக் கொடுத்து விட்டாள். அதில், கல்குளம் பிரதேசம் தமிழர் களுக்கும், திரப்பன பிரதேசம் சிங்களவர் களுக்கும், நாச்சியாதீவுப் பிரதேசம் முஸ்லிம் களுக்கும் எனப் பங்கிடப்பட்டது. இது வெறும் சம்பிரதாயபூர்வமான பங்கீடு என் றாலும், மூவின மக்களும் இந்தப் பிரதேசங் களில் ஒற்றுமையாகவும், பிரதேசவாரியா கப் பிரியாமல், எல்லாப் பிரதேசங்களிலும் பரந்து வாழ்ந்திருக்கிறார்கள். நாச்சிரே' என்ற சிங்களச் சொல்லுக்குத் தமிழில் அரசி, தலைவி என்கின்ற பொருள்கள் உண்டு. "நாச்சிரே துவ அரசி மகள் தந்த கிராமம் என்கின்ற வகையில், நாச்சிரே துவ' என்ற பெயர் ஆரம்பத்தில் வழங்கப் பட்டது. காலப் போக்கில் இது மருவி நாச்சியாரே துவ' என்று வழங்கப்பட்டது.
இப்போது நாச்சியதுவ' என்று சிங்களத்தில் வழங்கப்படுகிறது. நாச்சியார் என்பது தமி ழிலும் ஒரு கெளரவமான சொல்லாக முஸ் லிம்களிடத்தில் கணிக்கப்படுவதால், நாச் சியாதீவு’ என்று தமிழில் இது வழங்கப்படு கின்றது. உண்மையிலேயே, இங்கே எந்தத் தீவும் கிடையாது. ஆனால், சிங்களத்திலி ருந்து நேரடியாக மொழி பெயர்த்து எழுத முடியாமையினால், நாச்சியாதீவு' என்ற பெயர் வழங்கப்படுகிறது. ஏழெட்டு வருடங் களுக்கு முன் மரணித்த எமது கிராமத்தைச் சேர்ந்த 101 (நூற்றி ஒன்று) வயது மட்டுக் கும் வாழ்ந்த அஹமத் அப்பா என்பவருக்கு அவரது தந்தையின் தந்தை இந்தக் கதை யைக் கூறியதாகக் கூறினார். தவிரவும், சரித்திரங்களிலும், ஆய்வுகளிலும் இப் போது தீவிரமாக ஈடுபட்டு வரும் அபூ-நுஹா என்ற ஆய்வு எழுத்தாளரின் ஒரு சிறுகதை யும் மேற் சொன்ன வரலாற்றையே சுட்டி நிற்கின்றது.
இது தவிரவும், ஊரின் வரலாறு பற்றிய வேறு எந்தக் குறிப்புக்களும் கிடைக்கா விடினும், நாச்சியாதீவு’ எனும் பெயர் வந்த மைக்கு இன்னும் பல கதைகள் வாய் வழி யாக உலாவி வருகின்றது. «êA ".
அரச குடும்பத்தவர்களும், அவர்களுக் குப் பாதுகாப்பாக வந்தவர்களும் இந்தப் பிரதேசத்திலேயே தங்கிவிட்டதால், அவர் களது ஜீவனோபாயத்திற்காக விவசாயம் செய்ய முனைந்த போது, நீர்ப் பிரச்சனை ஏற்பட்டது. எனவே, மக்களை ஒன்றி ணைத்து ஒரு பாரிய குளமொன்றை அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நிறுவினார். குளம் கட்டப்பட்டு வேலைகள் பூர்த்திய டைந்ததன் பின்னர் குளத்தின் கட்டிலி ருந்து, நீரில்லாத குளத்தை நோக்கிய போது, ஒரு கிழவன் ஒடுவது போன்று, ஒரு மரம் குளத்துக்குள் காணப்பட்டது. உடனே, அங்கிருந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் "அன்ன நாக்கிய துவனவா” அங்கே பார்
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 9

Page 7
கிழவன் ஒடுகிறான் என்ற பொருள்படக் கூறிச் சிரித்துள்ளான். அதுவே, ஊரின் பெய ரும் ஆயிற்று. 'நாக்கியா துவனா என்பதி லிருந்து ‘நாக்கியா துவ' என்றும் பின்னர், நாச்சியா துவ' என்றும் காலவோட்டத்தில் மருவி, இறுதியில் நாச்ச துவ' என்று வழங் கப்படுகின்றது. இதுவே தமிழில் நாச்சியா தீவு' என்ற பெயரில் வழங்கப்பட்டுக் கொண் டிருக்கிறது.
இதையும் தாண்டி, இன்னும் பல கதை கள் நாச்சியாதீவு' எனும் பெயர் வந்தமைக் காகக் காலகாலமாக வாய் வழியாக ஒவ்வொரு பரம்பரைக்கும் ஊடு கடத்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு கதைக்குள்ளும் சுவாரசியமும், சுவையும்
நிறைந்த ரசிக்கத் தக்க சம்பவங்கள் புதை
ந்து காணப்படுகின்றன.
இன்றைய பொழுதுகளில் இளையவர் கள் தமது வரீழிடம் பற்றிய தெளிவான கருத்தோட்டம் கொண்டவர்களாக இருக்கி றார்கள். அதிலும், பாடசாலை மாணவர்கள் தீவிரமாய் தேடுகின்றார்கள். ஒரு சமூகத் தின் இருப்பையும், இறைமையையும் பல வீனப்படுத்த, இன்னொரு சமூகம் விளை வது என்பது தெளிவான வரலாறு தெரியா மையும், தெளிவற்ற சிந்தனைப் போக்கு மாகும். குறுகிய எண்ணமும், விசாலமற்ற பார்வையும், தேடல்கள் இல்லாத தன்மை யும் என்பது சர்வ நிச்சயம். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னரான அநுராதபுரம் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற மூவினத் தாலும், நிரப்பப்பட்டிருந்த வரலாறு தெளி வாய்ப் புரிகிறது.
வாழ்வியலில் அவ்வப்போது உயர்வும், தாழ்வும் நம்மை தழுவினாலும், நினைவு களில் இருத்தல் பற்றிய அங்கலாய்ப்பும் கனவுகளும் எப்பொழுதும் தழுவத் தவறுவ தில்லை. A
(இன்னும் பேசுவேன்)
Excellent Photographers Modern Computerized Photography For Wedding Portraits
& Child 5ittings
Photo Copies of ldentity Cards (NIC), Рааарort & Driving Licences Within 15 Minutes
300, Modera Street,
Colombo - 15. Tel: 2526345
மல்லிகை ஏப்ரல் 2008 & 10

இழவு ஆள்
எப்போதாவது வருவான்
இழவு சொல்ல சொக்கமுத்து
"சாமியேய்.” கதவிற்கு பத்தடி தூரம் நின்ற அவன் குரல் அடையாளமாய் ஒலிக்கஇப்போது யாரோ.? பயத்துடன் முகம் தூக்கும்.
“ші" попфьный шайлахотр போயிட்டாருங்க” என்பான்.
"அடப்பாவமே.” வேதனையில் வெடிக்கும் அப்பாவின் குரல்
"நேத்து ரவைக்கு பண்ணெண்டு மணிக்குங்க ஒரு வாரமா கெடையில கெடந்தாருங்க”
கையில் அஞ்சோ பத்தோ வாங்கிக் கொண்டு போவான் வழிச் செலவுக்கு.
அதற்குப் பின்னால்கிராமம் நோக்கிய பயன ஏற்பாடுகள்,
கல்வாழை இலையில் ஈர்க்குச்சிகள் கோத்து
(நம்முடைய கிராமப்புறங்களில் காலங்காலமாக உள்ள ஒரு வழமை, இழவுச் சேதியைத் தெரியப்படுத்த ஆள் அனுப்புவது. தகவல் தொடர்பு சாதனங்கள் இன்று போல இல்லாத அந்த நாள்களில் ஆளனுப்பித் தான் சொல்லிவிடுவார்கள். அப்படி வருகிற ஒருவரைப் பற்றிய சித்திரம் இது.)
சேதி சொல்லி வரும் சொக்கமுத்துவின் மறைவு சொல்லப்படாததாகப் போகிறது. அவர் மகன் அடுத்தாற் போல அந்த இடத்துக்கு வருகிறான். அவனிடம் விசாரிக்கையில் தான் விஷயமே
வெளியாகிறது.
அழகாகச் சாப்பிடுகிற சொக்கமுத்து. மொட்டையடித்து காது குத்திய சின்னவயதில் அதட்டி மிரட்டியது இன்னும் மனசுள் பயம் நிரம்பி நிற்கிறது.
இழவுசேதிக்கு மட்டுபIல்லாமல் எப்போதேனும் விசேசுவு? சேதிகள் சொல்லவும் வருகிறவன்தான்.
சொக்கமுத்துவின் வருகை நின்றுபோய் அவனை மறந்துபோய்
ஒருநாள் சொக்கமுத்து மகன் மாரிவந்தான்.
"தெக்கால காட்டு அத்தை காலமாயிட்டாங்க..” என்றான்.
"மாரி. சொக்கமுத்து வரலையா..? அப்பா கேட்டார்.
"அய்யா. அப்பன் செத்து ஒரு மாசம் ஆச்சுங்க..” என்றான்.
一5@T5DF言毁@、 (மவ்னம், ஜனவரி-1994)
ஒரு சிறுகதை, விஷயம் முரண் இங்கே கவிதையாகியிருக்கிறது. சாதாரணமாக, விவரிப்பும்
பேச்சுத் தமிழுமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எளிமையாக பாடு பொருள் புதிது, கவிதைக்கு.
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 11

Page 8
நினைலதிஸ்ன நாடிகள்- 13
தொழில் இரகசியம்
- பரன்
ைெசிக்கிளின் பெல் சத்தம் கேட்டுக் கதவைத் திறக்க, அம்மான் நின்றிருந்தான்.
"என்ன கதவு திறக்க இவ்வளவு நேரம்?. காலைச் சாப்பாட்டுக்குப் பிற நித்திரையோ? t
"இப்ப, என்ன நித்திரை?. சும்மா இருக்கப் பஞ்சி பிடிக்குது."
"ஏன். வீட்டில ஒருத்தரும் இல்லையா?”
“மூன்று நாள் லிவுதானே, அம்மாள் கோவில் பூசைக்காக, அக்கா குடும்பம் ஊருக்குப் போயிட்டினம்."
"9|| நீதான்'வீட்டுக்குக் காவலோ?. y
“6T6öT60TLIT?...... போலிஸ்காரனைப் போல, வாசலிலை நிண்டு விசாரிச்சுக் கொண்டு. முதலிலை உள்ளை வா."
அம்மான் என்னோடு வங்கியில் வேலை செய்பவன். அவன் பெயரை விட, 'அம்மான் என்ற பட்டப் பெயரே புழக்கத்தில் இருந்தது. ஆள் கொஞ்சம் 'திருவாலி. ஆனால், "பம்பல்"காரன். அவன் வந்ததால், பொழுது போவதற்குப் பிரச்சினை இருக்காது என்று Ull-Sl.
'மத்தியானமும் நிண்டு பின்நேரம் போகலாமே?" என்றேன்.
"அப்ப சாப்பாடு?. y
'கடை தான்!”
அம்மான் கொஞ்சம் யோசித்து விட்டு, "மத்தியானம் சமைப்பமா?" என்றான்.
எனது தயக்கம் புரிந்தாற் போல். "சோறு வேண்டாம். பானும், கறியும்" என்றான், தொடர்ந்து.
பின்வளவில் தோட்டத்தைக் கிளறும் கோழிகளின் ஞாபகம் வந்தது. 'அம்மானிடம் சொல்வதா?. விடுவதா?. சொன்னேன்.
"ஆற்றை கோழி?
மல்லிகை ஏப்ரல் 2008 & 12

“தெரியாது. நெடுக பின் வளவுக்கை தான் நிக்கும்."
"அப்ப ஒண்டை அமத்துவம். gy
"எப்படிப் பிடிக்கிறது?. gy
'அதெல்லாம் நானல்லோ பார்க்கி றன்." என்றபடி தோட்டப் பக்கம் போனான்.
பின் வளவில்தான் தோட்டம். ஏழெட்டுக் கோழிகள், கீரைப் பாத்தியைக் கிண்டிக் கொண் டிருந்தன. எங்களைக் கண்டதும், ஒடிக் கொக்கரித்து விலகின.
'பழைய சாக்கு ஏதும் இருந்தால் கொண்டு வா!” அம்மான் உஷாரானான். சாக் கைத் தூக்கிக் கொண்டு, பதுங்கிப் பதுங்கி மெதுவாகக் கோழிகளின் பின்னே போனான். ஒரு கோழியைச் சாக்கால் அமத்த, மற் றவை கொக்கரித்துப் பறந்தன. அந்த அம ளியில், கொஞ்சம் பிடி தளர, பிடித்த கோழி யும் தப்பி ஓடிப் போய் விட்டது.
அம்மான் இரண்டு மூன்று முறை ஒடிக் களைத்தது தான் மிச்சம். ஒன்றும் கைக்கு அகப்படவேயில்லை.
"6T6T60TLIT........ பிடிக்ககேலாதா?. 罗莎
"இல்லை முந்திப் பிடிச்சிருக்கிறன். இந்த முறை மாட்டுப் படுகுதில்லை."
'ஈரச் சாக்குப் போட்டுப் பிடிக்கலாம்
தானே?. " நானறிந்த சூத்திரத்தையும் சொன்னேன்.
திரும்பவும் பெல்’ சத்தம் காதை நோண் டியது. கதவைத் திறந்த போது, இராசன் நின்றிருந்தான்.
‘எவ்வளவு நேரமா 'பெல் அடிக்கி றன்?. அம்மான்ரை சைக்கிளும் நிக் 55. ..... என்ன செய்யிறியள்?"
*தோட்டத்துக்கை நிக்கிறம்"
“என்ன. தண்ணி மாறுறியளா?
என் முகம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ஒன்றும் பேசாமல், பின் வளவுப் பக்கம் போனான். இராசனும், எங்களோடு படித்தவன். பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் உதவி விரிவுரையாளன். பரம் பரைத் தோட்டக்காரன். எங்களது தோட்ட மேற்பார்வையும் அவன்தான்.
தோட்டப் பக்கமாகப் போனவன், சாக் குடன் வேர்த்து விறுவிறுத்து நின்ற அம்மா னைக் கண்டிருக்க வேண்டும்.
"என்ன. ரெண்டு பேருமா. கோழி பிடிக்கிறியளோ?. ’ புன்னகையுடன்
கேட்டான்.
"ஒண்டும் பிடிபடுகுதில்லை.” அம்மா னின் குரலில் விரக்தி தொனித்தது.
‘சாக்குப் போட்டுக் கோழி பிடிக்கிறது பழைய ரெக்னிக், இப்பத்தை கோழியள். உதுக்கு மசியுமே? ၃ မုိင္ငံမ္ဘ ’
இராசனின் அட்வைஸ் அம்மானுக்குக் கோபத்தை வரவழைத்து விட்டது.
‘இதென்ன?, கம்பஸ் பொடியளைப் பேய்க் காட்டுற மாதிரியே?. 姆列
சண்டை வேண்டாம் என்று, நான் சமா தானப்படுத்த வேண்டியிருந்தது.
'நீ தனிய இருக்கிறாய், எண்டு அக்கா சொல்லிப் போட்டுப் போன்வ. பாத்தி கட்டித் தண்ணி மாறுவம் எண்டு, வந்தானான். கோழியளோட சேர்ந்து நீங்களும், பாத்தி யைக் கிண்டிவைச்சிருக்கிறியள்." இராசன் அலுத்துக் கொண்டான்.
'மத்தியானம் நல்ல கறியாச் சமைப்பம் எண்டு பாத்தம். அதுதான் கோழி ஒண்டு
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 13

Page 9
பிடிப்பமெண்டு. " நான் விளங்கப்படுத்தி
G36CT6i.
“எங்கை. ஒண்டும் பிடிபடுகுதில்லை." அம்மான் எரிச்சலுடன் சொன்னான்.
"நான். பிடிச்சுத் தரவோ? இராசனின் கேள்வி எங்களை மடக்கியது.
“எப்படியடாப்பா. பிடிப்பாய்?.
"அதேன் உங்களுக்கு?. எனக் கும் சேத்துச் சமைப்பியள் எண்டாச் சொல்
லுங்கோ!"
அம்மான் தலையாட்ட, நானும் ஒத்துக் கொண்டேன்.
“தேவன். நீ போய் நாலு கிழங்கு
அவிச்சு. வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி ஆயத்தம் பண்ணு. அம்மான் நீ பாண் வாங்கப் போகேக்கை. 560LJunt
அண்ணையின்ரை கடையிலை ஒரு * அரை"யும் வாங்கிக் கொண்டு வா." என்ற்படி இராசன் வீட்டுக்குள் போனான்.
கோழி பிடியாமல் "கரடி விடுகிறானோ? என்ற சந்தேகத்தோடு எட்டிப் பார்த்தேன்.
'நீ போய் அடுப்படி வேலையைப் பாரன்ரா. நான், இவன் தூரன்ரை புத்தக அலுமாரியுக்கை ஒரு சாமான் தேட வேணும்." என்றபடி போனான், இராசன்.
கிழங்கும், கூடவே இரண்டு முட்டையும் அவித்து வைத்து, வெங்காயம் வெட்டி முடிக்க, அம்மானின் சைக்கிள் சத்தம் கேட் டது. இரண்டு பேரும் உள்ளே வந்த போது, பின் கதவால் உரித்த கேரழியும் கையுமாக இராசன் நுழைந்தான்.
"இந்தாங்கோ. கொண்டு போய் வெட்டிச் சமையுங்கோ."
நம்ப முடியவில்லை! கோழி பிடிச்ச சத்தமும் இல்லை. உரிக்கக் கத்தியும் கேட்கவில்லை.
“எப்படிப் பிடிச்சனி?"
"அதெல்லாம் தொழில் ரகசியம். அம்மான் கோழிச் செட்டைகளைத் தாட்டுப் போட்டு, நாலு கல்லு மேலால வை. நாய் கிண்டாமல்.’ என்றபடி, இராசன் கிணற்ற டிக்குப் போனான்.
“எப்படிப் பிடிச்சவன் எண்டு. உனக் கும் தெரியாதா?.” அம்மானும் ஆச்சரியப் ULT661
சாப்பிட்டு முடிந்து மெல்லிய "மிதப்பில்’ எல்லோரும். அம்மான் திரும்பவும் தொடங் கினான்.
‘எப்பிடிப் பிடிச்சாய் எண்டு, எங்களுக் கும் சொல்லித் தாவன்ராப்பா?"
“ஈரச்சாக்குப் போட்டுத் தான். 》弹
*சும்மா. கெம்பர் காட்டாதை சொல்லு"
இராசன் ஒரு மீன் பிடிக்கும் தங்கூசியை யும், நைலோன் நூல் உருண்டையையும் தூக்கிக் காட்டினான்.
"இதாலை தான்டா பிடிச்சன்."
எனக்கும், அம்மானுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
"எப்படியடா, இதாலை பிடிச்சனி?"
மல்லிகை ஏப்ரல் 2008 $ 14

"தங்கூசியில புண்ணாக்கைக் கொழுவி, நைலோன் நூலில தங்கூசியைக் கட்டி, நூலை மரத்தில கட்ட வேணும். பிறகு புண்ணாக்குக் கட்டியளை கொஞ்சங் கொஞ்சமா கோழியளுக்குக் கிட்டப் போட வேணும்.”
"பிறகு. ?・
'பிறகென்ன, அவ்வளவு தான்! கோழி, ஒவ்வொரு புண்ணாக்காக் கொத்திக் கொண்டு வரும். தானே நூலையும் இழு த்து, தொண்டையில தங்கூசியையும் DTL 2, . . . . . . கதை முடிஞ்சுது. தூக்கிக் கட்டி உரிக்க வேண்டியது தான்!”
*கத்தி ஒண்டும் இல்லாமல் உரிச்ச னியே?" அம்மானுக்கு ஒரே ஆச்சரியம்.
"இதுக்கெல்லாம் செவன் ஓ குளொக்" பிளேட்டுத் தான் சொல்லப்பட்ட ஆயுதம்."
"எங்கையடா உதெல்லாம் எடுத்தனி?” என்றேன்.
"எல்லாம் உன்ரை மருமேன் தூரன்ரை புத்தக அலுமாரியிலை தான்." என்று சிரித்தான், இராசன்.
'நீ கெட்டிக்காரன் தான்ரா!. ஆனால், ஆட்ஸ் பக்கல்ரிக்குப் போகாமல், மெடிக்கல் பக்கல்ரிக்குப் போயிருக்க வேணும்...' என்று நக்கலடித்தான் அம்மான்.
மல்லிகை ஆண்டுச் சந்தா சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். மல்லிகையுடன் தொடர்புகொள்ளுங்கள். தனிப் பிரதி தேவைப்பருவோர் ரூபா 40க்கு முத்திரைகள் அனுப்பிப் பெற்றுக் கொள்ளவும்
57
ஆண்டு மலர் 200
(தபாற் செலவு 100 ரூபா) காசோலை அனுப்புபவர்கள் 100minic Jeeva எனக் குறிப்பிடவும். TsásasLL606IT egpüLusirassiT Dominic Jeeva. Kotahena, P.O. ST60Tás
குறிப்பிட்டு அனுப்பவும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13.
தொலைபேசி : 2320721 一ノ
ಸ್ಲಿ
V
மல்லிகை ஏப்ரல் 2008 15

Page 10
3தியின் முடிகிப்ெ Cityawo
நிறம் மாறி அழுகிய புன்னகைகளை கோறி எடுத்து
துவட்டும் போது வதனம் நிரம்பிப் பாய்கிறது பீதியின் முடிவிலிப் பயணம்.
பிணங்களில் துழாவி விடுபடும் இலையான்களின் ரேகைகள் மேனியில் வமாய்க்கும் போது மெல்லிய கோடுகள் நகர்ந்து எச்சங்கள் உதிர்ந்து ஓவியமாய் போகின்றன.
பீதியின் முழு வடிவமும் என் நிழலில் ஊடுருவி என் சிரத்தை அணைத்து 65IIdgén)5)......
அருகில் அமர்வது யார் என்ற கேள்வியாய் எழ தோல்விகள் தந்த காயங்கள் உதிக்கின்றன. நம்பிக்கையின் பிம்பங்கள் கூட வேள்வியாய் மாறிப் போக
விசாரணை செய்யும் துணிவை
அழுத்திப் பற்றுகிறது ஒர்மம்.
- எல். ஒலீம் அக்ரம்
கால் தடங்களின் சலனங்கள் பீதியின் வம்சத்தை அழைத்தபடி தொடர u IITU56OLuI 60döusl6o ஆயுதம் இருக்கும் என்ற பீதியுடன் பிரம்மை கவியும்.
கனிவு முகிழ்ந்த மனங்களும் காதல் நிரம்பிய உயிர்களும் சந்தோசங்களின் உச்சத்தில் கொடி பிடிக்க தனிமையில் விழுந்து நடக்கிறது உடல்
எனது நண்பன் எனக்கு எதிரியாய்ப் போன கால சூத்திரப் பொறியில் நமது சிநேக நெறிகள் அமர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கவில்லை தான்.
இப்பொழுது
pišu IIIi?
e96)I6öru IIrir? என்ற கேள்விகளில் தான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்.
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 16
 

ஈழத்துத் தமிழ் நாவல்கள் 5
செங்கை ஆழியானிர் க. குணராசா
6.1 ஆரணி குப்புசாமி முதலியார் காலம்
நாவலிலக்கியத்தின் இருண்ட காலம்
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு ஆரம்பம் தமிழ் நாவல இலக்கி யத்தின் வீழ்ச்சிக் காலமாகும். இது ஆரணி குப்புசாமி முதலியாரின் காலமாகும். புற்றீசல் கள் போல ஆயிரக்கணக்கான கதைப் புத்தகங்கள் நாவல் என்ற பெயரில் வெளிவந்தன. இந்த யுகத்தை ஆரம்பித்து வைத்த பெருமை ஆரணியாருக்கே சேரும். வாசகர்களின் மலின உணர்வுக்குத் தீனிபோடும் நூல்களாக அவை அமைந்தன. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச்செயல்கள் நாவல்களின் கருப்பொருளாக அமைந்து துப்பறியும் கதைகாளகவும், தழுவல் நாவல்களாகவும், மொழிபெயர்ப்பு நாவல்களாகவும் மலிந்தன. இந்த வீழ்ச்சிக் காலத்தில் கதை உலகில் செங்கோலோச்சியர்கள் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் கே. துரைசாமிஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜ" ஆகிய மூவராவர். இவர்களின் நூல்கள் அக்கால வாகசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன.
ஆரணியார் ஒன்றன் பின்னொன்றாக 43 நூல்களை வெளியிட்டார். ராஜாமணி, கிருஸ்ண சின், உமர்பாஷர், அம்பாலிகை, கற்பகசுந்தரி, அழகானந்தன், ஆனந்தசின், பத்மாசனி, ரங்கநாயகி, மின்சாரமாயவன், மதனபூஷனி, கற்கோட்டை, ரத்னபுரி ரகசியம், லீலா என அவர் படைத்த நூல்களின் பட்டியல் விரியும். கற்பனாலோகத்தில் அவை சஞ்சரிக்க வைத்தன. வடுவூர் கே. துரைச்சாமி ஐயங்காரின் 47 நாவல்களும் இவ்வகையினவே. நவநீதம் அல்லது நவநாகரிகப் பரிபவம், சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளை பிடுங்கி, கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பரசாமியார் என அமைந்கன. இவையும் துப்பறியும் தழுவல் நாவல்களே. ஆனந்தகிருஷ்ணன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ராஜாம் பாள் என்பன ரங்கராஜூவின் நாவல்களாகும். இந்நாவல்கள் பலபல பதிப்புகளாக வெளி வந்துள்ளன. ராஜாம்பாள் இருபத்தேழு பதிப்புகள் வெளிவந்துள்ளது. இவர்கள் தம் கதைகளில் பயத்தையும் வியப்பையும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஊட்டும் வகையில் தம் கதைகளை எழுதிப்போயினர். வாசகர்களை விழுந்து விழுந்து படிக்க வைத்தார்கள். மிகமிக மலினமான படைப்புகளாக அவை அமைந்தன.
தமிழில் நாவல்கள் என்ற பெயரில் தங்கு தடையின்றி நூல்கள் பலராலும் எழுதப்பட்டு
வெளிவந்தன. மர்மப்பண்பு, பேய் பிசாசு, பாலுணர்வு, மாயாஜாலம், எனப் பலவும இவற்
றில் இடம் கொண்டன. யாரும் எழுதலாம் என்ற அபாயமான நிலை உருவாகியது.
பெண்மணிகளும் தம் பங்குக்கு இந்த நீரோடையில் சேர்ந்து கொண்டர்கள். பண்டிதை
விசாலாட்சி அம்மாள் நாவலாசிரியை எனக் கூறிக்கொண்டு கெளரி, ஞானரஞ்சினி, மல்லிகை ஏப்ரல் 2008 & 17

Page 11
ஆரியகுமாரி, வநஸ்தா, லலிதாங்கினி, ஜல ஜாச்சி முதலான பதினான்கு நூல்களைத் தந்தார். அவை இந்த மண்ணைவிட்டு கால தேசவர்த்தமானங்களைக் கடந்து உலவின. அறநெறி விரிவுரைகளை இந்தக் கதை களில் செய்தார். வை. மு. கோதைநாயகி அம்பாள் இவ்விடத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர். 65 க்கு மேற்பட்ட நூல் களை நாவல்களென வெளியிட்டு வாசகர் களைப் படிக்க வைத்தார். அவருடைய நூல்களிலும் துப்பறியும் பண்புகள் விரவி வந்தன. சாருலோசனா, தயாநிதி, வீரவசந்தா, சாமளநாதன், உணர்ச்சி வெள்ளம், அபராதி, பட்டமோ பட்டம், சாந்தகுமாரி, இதயஒலி என இவரின் நூற் பட்டியல் நீளும், 21 ஆம் நூற்றாண்டின் ரமணிச்சந்திரனுக்கு கோதைநாயகி அம்மாள் நிகரானவர். கோதை நாயகி அம்மாளின் நாவல்களில் விதவை கள் துயர், வயதான ஆண்களை மனம் முடிக்கும் பெண்களின் துயரம், நவநாகரிக மோகம், இளம் வயதுத் திருமணம், இலஞ்ச
ஊழல் போன்ற சமூகப்பிரச்சினைகள்
எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. அக்கால நாவல் அரசியாக அவர் கூறப்பட்டார்.
ஆரணியார் காலத்தில் தமிழ் நாவ லிலக்கியத்தில் பரவலாக வீழ்ச்சிப் போக் குக் காணப்பட்ட போதிலும் ஒருசில நல்ல நாவல்களும் வெளிவந்துள்ளன. சமூக அறி யாமை, சீதனக்கொடுமை, மூடநம்பிக்கை களைச் சாடும் விதத்தில் அமைந்த வர கவி அ சுட்பிரமணியபாரதியின் ஜடா வல்லபர் ஒரு குறிப்பிடத்தக்க நாவல். அதேபோல தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை அவர்கள் *கமலாச்சி சரித்திரம் முதலான ஆறு நாவல் களை எழுதித் தந்துள்ளார். இவை கிராமிய மணம் கொண்டனவாகவுள்ளன. பொன்னுச் சாமிப்பிள்ளை நாவலின் ஆக்கக் கூறுகளை நன்கு அறிந்தவராகவுள்ளார் என்பது அவரது நாவல்களைப் படிக்கும் போது , உணரலாம் மகாகவி பாரதியர் ‘சின்னசசங்கரன்
கதை, ‘சந்திரிகையின் கதை’ எனும் நாவல் களை எழுதியுள்ளார். விதவாமணம், தேசிய ஒருமைப் பாடு, சாதிய வேறுபாடு என்பன இந்நாவல்களில் கூறப்படுகின்றன. எனினும் இந நாவல்கள் அவரால் எழுதி முடிக்கப்பட வில்லை. மறைமலை அடிகள் இரண்டு நாவல களைச் சற்றுச் சிறப்பாக தமிழ் நாவல் உலகிற்கு வழங்கியுள்ளார். நாகநாட்டரசி குமுத வல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள என்பன அவையாம். நாகநாட்டரசி குமுத வல்லி லைலா என்ற ஆங்கில நாவலின் தழுவல் என்பர். இரண்டாவது நாவல் அக்
கால முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிய
விதவா திருமணத்தைப் பற்றிப் பேசுகின் றது. நாவலின் உத்தி கடிதங்கள் மூலம வளர்தது வதாக இருக்கின்றது. ஆங்கில நாவலாசிரி யர் றிச்சார்ட்டனின் பாமெலா என்ற நாவ லின் எத்தினை கடிதங்கள் மூலம் நாவலை விபரிப்பதாகும் அதே முறையை மறை மலை அடிகள் தனது கோகிலாம்பாள் கடிதங்களில் பின் பற்றியுள்ளார். சூழலை
யும் மக்களின் இயல்புகளையும் நன்கு
புரிந்து கொண்டு இந்த நாவல் எழுதப்பட் டுள்ளது. நாவல வரலாற்றின் இருண்ட காலத் தில் ஒரு ஒளிப் புள்ளியாக இந்த நாவல் அமைகின்றது. அதனால் மலின நாவல என்ற வகைக்குள அடங்காது இரசனை நாவல் என்ற வகைக்குள் அடங்குகின்றது. நவீன நாவல்களின் ஆக்கக் கூறுகள் சிலவற்றை மறைமலை அடிகள் புரிந்து கொண்டு இந்த நாவலை எழுதியுள்ளார்.
கல்விகற்ற மத்தியதர வகுப்பாருக்கு வாசிப்புப் பழக்கம் மிகுந்தேற்பட்ட நிலை யில் இலகுவாகவும், எளிமையாகவும தாமே படித்துணர்ந்து கொள்ளத்தக்கதும், இன் னொருவர் படித்துக் கருத்துச் சொல்லித் தெளிவுபடுத்த அவசியமற் றதுமான உரைநடையில் விபரிக்கும் கதை நூல களின் தேவை அதிகரித்த காலமாதலால்
மல்லிகை ஏப்ரல் 2008 * 18

புற்றீசல்க்ள் போல நாவலென்ற பெயரில் பலர் கதை நூல்களை எழுதி வெளியிட்ட காலமாக ஆரணியார் காலம அமைந்தது. ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் அவ் வகையில் வெளிவந்தன. டாக்டா இரா. தண்டாயுதம் அவ்வாறான நூல்களின பட்டி யல் ஒன்றைத் தனது சமூக நாவல்கள என்ற நூலின் பின்னிணைப்பாக வெளியிட்டுள் ளார். அதில் இந்த தமிழிலக்கிய இருண்ட காலத்தில் நாவல்கள் எழுதிப் பார்த்தவர் களாக, அந்தோணிப்பிள்ளை சுகுண சுந்தரி, அட்சர முதலியார் - மகுடவல்லி, அருண கிரிநாதன். ஆனந்த மனோகரன், அருணா சலம்கிள்ளை சிதம்பரதேவர் சரித்திரம் அருமை நாயகம் - ஆட்கொல்லி, இஸ்மாயில் பீம் சிங், இராமசாமிஜயர் வஸந்தசேனா முதலிய 5 நூல்கள், இராமலிங்க முதலியார். திரு மயிலை முதலிய 6 நூல்கள், எஸ். வையா புரிப்பிள்ளை ‘ராஜி எனப்பட்டியல் 400 ஐத் தாண்டும். அந்த இருண்ட காலத்தில் ஈழத் தவர்கள் பின்நிற்கவில்லை. 50 உக்கு மேற் பட்ட நாவல் புத்தகங்களை எழுதித் தந் தனர். சி.வை. சின்னப்பாபிள்ளை உதிர பாசம், விஜயசீலம், தம்பிமுத்துப்பிள்ளை சுந்தரன் செய்த தந்திரம், செம்பொற் சோதீஸ்வரன் செல்லம்மாள் - இராசதுரை, இராசாம்பாள் - சரஸ்வதி அல்லது காணா மற் போன பெண்கள், வரணியூர் இரா சையா’ பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் , அருணோதயம் அல்லது சிம்மக்கொடி, நல்லையா' சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு, காந்தா மணி அல்லது தீண்டாமைக்குச் சாவு மணி என விரியும். இவை அனைத்தும் மலின நாவல் வகைக்குள் அடங்கிவிடுவனவாம்.
6.2. கல்கி கிருஸ்ணமூர்த்தி
asπ6υ.ύο
தமிழ் நாவல் உலகில் கல்கி கிருஸ்ண
மூர்த்தியின் வருகையுடன் இருண்ட காலம்
மறைந்து ஒளி பரவலாயிற்று. தும்பறியும் கதைகளுடனும், வியப்புத் தரும் கொலை,
கொள்ளை, கற்பழிப்பு, மர்மக் கதைகளுட னும் மலினமான நாவல்களில் மயங்கிக் கிடந்த தமிழ் வாசகர்களை விழிப்படை யவைத்து, புதியதொரு தடத்தில் வழி நடாத் திய பெருமை கல்கிக்குரியதாகும். கல்கி யின் நாவல் காலத்தை கல்கியின் நாவல் யுகம் எனில் தவறில்லை. வாசகள்களை நாவ லிலக்கியத்தின் சரியான தடத்தில் திருப்பி விட்ட பெருமை அவருக்குரியதாகும் எனினும கல்கிக்கு முதல் இரு நாவலாசிரியர்கள் அதற்கான பாதையைச் செப்பனிட்டுத் தந் தாள்கள் என்பதை இவ்விடத்தில் நினைவு கூர்ந்தேயாகவேண்டும். ஒருவர் வ. ராம சாமி ஐயங்கார் எனப்படும் வ.ரா. ஆவார். மற்றையவர் கா.சி. வெங்கட்ரமணியாவார். இவர்களோடு நாராயண துரைக்கணணன் என்பவரையும் குறிப்பிடலாம். வ.ரா. அவர் கள் "சுந்தரி, விஜயம், கோதைத் தீவு, சின்னச்சாம்பு’ அகிய நான்கு நாவலகளை எழுதியுள்ளார். வ.ரா. அவர்கள் ஒரு சமூக வியலறிஞராகவும், சமூகப் புரட்சியாளராக வும் விளங்கியுள்ளார். தனது பூணுாலை அறுத்தெறிந்துவிட்டு தலித்துக்களுடன தன் னில்லத்தில் சமபோசன விருந்துண்டா என அறியக்கிடக்கின்றது. சாதி வேறுபாடற்ற சரிநிகர் சமானமான சமூகத்தை உரு வாக்க அவர் கனவு கண்டார். தமிழின ஆரம்ப நாவல்கள் அனைத்தும் உயர்குடிப பிறந்த, கல்வி வாய்ப்புப் பெற்றவர்களால் தான் எழுதப்பட்டன. வ.ரா. வின் வருகையோடு தலித்துகளின் துயரங்களும் பிரச்சினை களும் நாவல்களில் பேசப்படலாயின. அவரது நாவல்கள் ஒரு வகையில் சமூக அறிவூட்டல் செய்வனவாகவுள்ளன.
வ.ரா.வின் நாவல்களில், இளம் வித வையின் வாழ்வில் ஏற்படும் துயரங்களை, பெரிதும் யதார்த்தமாகச் சித்திரிக்கும் சுந்தரி தனித்தன்மையானது. தமிழின் முதலாவது இலக்கிய நாவலாகத் தன்னை இனங் காட் டிக் கொள்கின்றது. ஏலவே கூறியவாறு
மல்லிகை ஏப்ரல் 2008 & 19

Page 12
விதவையின் துயரங்கள், பாசாங்கான போலி நடவடிக்கைகள், பொருளற்ற பழக்க வழக் கங்கள், பெண் விடுதலை, சாதிய வேறு பாடு என்பன இந்நாவலில் விவாதிக்கப்படு கின்றன. 'ஆயிரம் சொற்பொழிவுகள விதவை யின் துயரம் பற்றி எடுத்துரைத்துச் சாதிப் பதை விட இந்த நாவல் ஆற்றலுடன சாதிக் கின்றது. அந்நியரின் அடிமைத் தளையிலி ருந்து நாட்டை விடுவிக்க நாம் முயலும் முன் நம் வீட்டை நாம் சீர்திருத்தியாக வேண்டும். பெண்ணுக்கு விடுதலை அளிக் காமல் நாம் நாட்டு விடுதலை கேட்க நமக்கு அருகதையில்லை' என சுந்தரி மூலம் வ.ரா. தெளிவுபடுத்துகிறார் என்கிறார் டாக்டர் இரா. தண்டாயுதம், சுந்தரி ஒரு கிராமத்தைப் படம் பிடிக்கும் நாவல். பாத்திரங்கள் மண் வாசனை கமிழ இந்த நாவலில் நட மாடுகின்றனர். நாவலின போக்கில் புதுமை யாக நனவோடை உத்தியை ஆசிரியர் கையாளுகின்றமை சிறப்பாகவுள்ளது. நாவலில் வரும் உரையாடல்கள் பாத்தி ரங்களுக்கிணைந்தனவாக இயல்பாகவு ள்ளன. அவ்வ்கையில் நாராண துரைக் கண்ணனின் ‘உயிரோவியம்’ நவீன நாவ லின் ஆக்கக் கூறுகளை அறிந்து ஆக்கப் பட்டுள்ளது. கா.சி. வெங்கட்ரமணியின நாவல் களான “முருகன் ஒர் உழவன், தேசபக்தன் கந்தன்' எனும் அற்புதமான இரண்டு நாவல் களை ஆக்கியுள்ளார். அவரின் நாவலக ளுடன் அரசியல் நாவல்கள் தமிழில் தோன்ற ஆரம்பிக்கின்றன. தேசியப் பற் றுள்ள படைப்புகள். ஒரு சிலகிராமங்களை யும் தனிமனிதர்களையும் சுற்றி நின்ற நாவல் இலக்கியம் தனது சிந்தனைப் பரப்பை வெங்கட் ரமணியின் நாவல்கள் மூலம் அகல்வித்துக் கொள்கின்றது. இச் சூழலில் தான் கல்கியின் நாவல் பிரவேசம் அமைகின்றது.
1937 களில் கல்கி நாவலுலகில் கால் பதித்தார். திசை கெட்டு இருந்த தமிழ்
வாசகர்களை ஒரளவு சரியான தடத்தில் திருப்பி விட்ட பெருமை கல்கிக்குரியது நாவலுலகில் அவர் சாதித்தவை அனந்தம். யார் எதைக் கூறினாலும் அந்த மனிதனின் அசுர சாதனைகளை தமிழ் நாவல் உலகி லிருந்து ஒதுக்கி விட முடியாது. நாவல் என்பது நெடுங்கதை என்றும், அதுவே தலையாய சிறப்பியல்பு என்றும் மனதில் கொண்டு கதை எழுதினா கல்கி. காவிய மரபில் கதையை எழுதிக்கொண்டு நாவ லுக்குரிய உரை நடையையும் ஏக காலத் தில் எழுதுவது நடவாத காரியம்' என்பார் பேராசிரியர் கைலாசபதி. உண்மையில் தமிழின் கவிதை மரபைத் தெரிந்து, காவி யக்கதை ஒழுங்கைப் புரிந்து கொண்டு வசன காவியத்தைக் கல்கி படைத்தார் எனலாம். கல்கி சமூக நாவல்களையும், வரலாற்று நாவல்களையும் படைத்த ளித்தார். வரலாற்று நாவல்களாகப் பார்த் திபன் கனவு, சிவகாமியின் கனவு, பொன்னி யின் செல்வன் ஆகிய மூன்று மகோன்ன தமான படைப்புகளைத் தந்தார். தமிழில் முதன் முதல் வரலாற்று நாவலை எழுதிய பெருமை திருகோணமலைச் சரவண முத்துப் பிள்ளையையே சாரும். மோகனாங்கி என் பது அந்நாவலாகும். வரலாற்று நாவல் களை எழுதுவதற்கு மிக்க கூடிய ஆய் வும், வரலாற்றுணர்வும், பொறுப்புணர்சசியும், கற்பனைத் திறனும் தேவை. அவை கல்கிக்கு நிறையவே இருந்தன. 1938 இல் முதன் முதல் அவர் எழுதிய நாவல கள்வ னின் காதலி என்பதாகும். தியாக பூமி, சோலை மலை இளவரசி, அலை ஓசை, மகுடபதி, அமரதாரா முதலான சமூக நாவல்களை ஆக்கினார். அலை ஓசை யில் நாட்டின் விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாக வைத்துச் சித்திரித்தார். காந்தியக் கொள்கைகளைத் தன் சமூக நாவல்களில் அவள் ஆங்காங்கு முன வைத் தார். கல்கியைப் போலப் பரந்ததொரு
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 20

6) ΠέrέΕτ கூட்டத்தைத் தக்க வைத்துக கொள்
வதற்கு எவராலும் இயலவில்லை. பெரும்
பாலானவை பத்திரிகையில் தொடர்கதை களாகக் கல்கியால் எழுதப்பட்டன. வார வாரம் எதிர்பார்ப்பை வாசகனுக்கு ஏற் படுத்தும் வகையில் அவை அமைவதால் நாவல் என்ற கட்டுக்கோப்புக்குள் அவை வரா என்பாா உளர். கல்கியின் சித்திரிப்பு உரை நடையிலுள்ள இனிமையும எளிமை யும், தத்ரூபமும், வரலாற்று நாவல்களிலு ள்ள செம்பாங்கான பாத்திர உரையாட லும் சமூக நாவல்களிலுள்ள கிராமிய உரை யாடல்களும் நாவலிலக்கியத்தின் ஆக்கக் கூறுகளைக் கொண்டுள்ளன. கிராமப்புறங் களிலுள்ள பேச்சு வழக்கிலுள்ள கொச்சை களை அவர் தவிர்த்தார்.
கல்கியின் காலத்தில் தமிழ் நாவல் உலகில் குறிப்பிடத்தக்க இன்னொரு நாவ லாசிரியர் தேவன் ஆவார். ஆனந்தவிகடனின்
ஆசிரியராக இருந்த தேவன் தன் நாவல்
களைத் தொடர் கதைகளாக ஆனந்த விகடனில எழுதித் தள்ளினார். லக்சுமி
கடாட்சம், மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும்
சாம்பு, கல்யாணி, கோமதியின் காதலன் என அப்பட்டியல் விரியும். அவர் எழுதி யவை வெறும் இரசனை நாவல்களாக
அமைந்தன. இக்காலத்தில் தமிழ் நாவ
லிலக்கியத்தில் காத்திரமான ஒரு எழுத் தாளர் கூட்டம் எழுத ஆரம்பித்தது. சங்கர ராம், பி.எம். கண்ணன், க.நா.சுப்பிரமணியம், தி. ஜானகிராமன், ஆர். வி. கு. ராஜவேலு, அகிலன், மாயாவி, மு. வரதராசன், ஜெக சிற்பியன், நா.பார்த்த சாரதி (மணிவண்ணன்), ஆர் சண்முகசுந்தரம், சிதம்பர ரகுநாதன், மணியன், அனுத்துமா, லக்சுமி, விந்தன், ராஜம் கிருஸ்ணன், லா.சா. ராமாமிர்தம், சோமு, ரா.கிரங்கராஜன், கி.ராஜநாரா யணன், கோவி மணிசேகரன், விக்கிரமன், சாண்டில்யன், எனப்பலர் ஈடுபட்டுள்ளனர்.
இக்காலத்தில் இலங்கையில் இளங்கீரன், செ.கணேசலிங்கம் ஆகிய இருவன் குறிபபி டத்தக்கவர்கள். இவர்களில் ஒவ்வொரு வரும் தத்தம்மளவில் சிறப்பான படைப் புகளைத் தந்துள்ளனர். நாவலிலக்கியத் தின் ஆக்கக் கூறுகளைப் புரிந்து கொண்டு இவர்கள் நாவல்களை எழுதினர். இவர்கள் எழுதியவைகளில் பெரும்பாலானவை இரசனை நாவல்கள் என்ற வரையறைக் குள் அடங்கின. ஒரு சில இலக்கிய நாவல் களாகவும் விளங்குகின்றன.
சங்கரராமின் மண்ணாசை, க.நா.சுப்பிர மணியனின் பொய்த்தேவை, ஜெகசிற்பி யனின் ஜீவகீதம், லக்சுமியின் பெண்மனம, விந்தனின் பாலும் பாவையும என்பன சிறப் பான நாவல்களாகும். பொய்த்தேவை ஒரு வகையில் நனவோடை உத்தியில் கூற முயற்சித்துள்ளார். நாகரிகம் படியாத கிரா மம் ஒன்றையும், சிதையும் ஒரு குடும்பத் தையும் நாகம்மாளில் சண்முகசுந்தரம் இயல்பாக எழுதியுள்ளார். விந்தனின பாலும் பாவையும் நாவல் சற்று வித்தியாசமான நாவல். மார்க்சியச் சிந்தனை கொண்ட விந்தன், பாலையும் பாவையையும் ஒப் பிட்டுக் கலைத்துவமாக நாவலைப் படைத் துள்ளார். அகிலன் பத்தொன்பது சமூக நாவல்களையும் ஐந்து வரலாற்று நாவல் களையும் எழுதியுள்ளார். நெஞ்சின அலை கள், சித்திரப்பாவை, பாவை விளக்கு, புது வெள்ளம், எங்கே போகின்றோம்? எனும் குறிப்பிடத்தக்க சமூகநாவல்களை யும், வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றித் திருநகள் எனும் வரலாற்று நாவல்
களையும் தந்துள்ளார். மு.வரதராசன நிறை
யவே நாவல்களைத் தந்துள்ள போதிலும் அவை அறிவியல கூறும் நாவல்களாக அமைந்துள்ளன. கயமை, நெஞ்சில் ஒரு முள், அகல்விளக்கு என்பன விதநதுரைக் கப்பட்டுள்ளன. எனினும் மு. வரதராசனின்
மல்லிகை ஏப்ரல் 2008 & 21

Page 13
பாத்திரங்களின் உரையாடல்கள் அவர்க ளின் தகுதிக்கும் மிஞ்சிய உரையாடல் செய்பவர்களாக அமைந்துள்ளனர். நா.பார்த்த சாரதியின் குறிஞ்சிமலா குறிப்பிடத்தக்க ஒரு நாவல் படைப்பாகவுள்ளது. கோவை வட்டார வழக்கைத் தன் நாவல்களில் கொண்டு வருவதில் ஆர் சண்முகசுந்தரம்
முக்கியமானவர். அவர் எழுதிய நாகமமாள், !
மாயத்தாகம் என்பன இலக்கிய நாவல் களாகும். அதேபோல சமூகப் பிரச்சி னைகளை யதார்த்தமாகச் சித்திரித்து நாவல்
படைப்பவர்களில் சிதம்பர ரகுநாதன முக்கிய
மானவர். அவர் எழுதிய ‘பஞ்சும் பசியும் நெசவுத் தொழிலாளர்களின் இன்னல் களை அலசுகின்றன. புதியதொரு தத்து வார்த்த நடையில் பொருள் மரபிலும் ஒரு தேடலைச் செய்து லா.சாராமாமிர்தம் புத்ர, அபிதா, கழுகு முதலான நாவல்களைத் தந்துள்ளார். க.நா.சுப்பிரமணியத்தின் பொய்த்தேவு போல, ஒருநாள், பெரிய மனிதன், ஆட்கொல்லி என்பன தமிழ் நாவலுக்குப் புதியதொரு வரவுகளாகும் ராஜம் கிருஷ்ணனின் “வேருக்கு நீர் தக்க நாவ லாக அமைகின்றது. அதேபோல அவரின் ‘குறிஞ்சித்தேன நாவலும் குறிப்பிடததக்கது. இலங்கை நாவலாசிரியரான இளங்கீரனின் நீதியே நீ கேள், கணேசலிங்கனின் செவ் வானம், நீண்ட பயணம் என்பன தரமான நாவல்களுள் வைத்து எண்ணப்படத்தக் கவை. இவற்றை கைலாசபதி யதார்த்தமான மக்கள் இலக்கியம் என்பார். கல்கியைப் போன்று தனக்கென ஒரு வாசகள் சாமராஜ் யத்தைச சாண்டில்யன் தனது வரலாற்று நாவல்களுக்காக வைத்திருந்தார்.
6.3 ஜெயகாந்தன் காலம்
தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் ஒரு கால கட்டத்தில் பலராலும் பேசப்பட்ட வரும் விதந்துரைக்கப்பட்ட வரும் ஜெய காந்தன் ஆவார். தமிழ் நாவலிலக்கியத்
தில் ஜெயகாந்தனின் பங்களிப்பு மிக அதிகம். நாவலாக்கக் கூறுகளைக் கலைத்துவத் தோடு தனது படைப்புகளில் அவர் கை யாண்டார். நாவலிலக்கியத்துக்குச் சரியான படிமம் கொடுத்த பெருமை அவருககுரியது. சிறுகதைத்துறையிலும் சரி நாவலிலக் கியத் துறையிலும் சரி ஜெயகாந்தனின் இடத்தை இன்னமும் எவராலும் தகர்க்க முடியவில்லை. சிலநேரங்களில் சில மனிதர்கள், பாரிஸ"க்குப் போ, சினிமா பார்த்த சித்தாளு, ஜயஜயசங்கரா போன்ற தரமான படைப்புகளைத் தந்துள்ளார். கதைகளின் களமும், பாத்திரங்களின் முரண்பாடுகளற்ற ஊடாட்டமும் இயல்பான பாத்திரங்களின் உரையாடல்களும் அவ ருக்குக் கைவந்திருந்தன. முற்போக்குச சிந் தனைகளால் பீடித்திருந்த ஜெயகாந்தனின் நாவல்களில் வருகின்ற பாத்திரங்கள் அடி மட்ட மக்களிலிருந்து வசத படைத்த மாந்தள் வரை இருந்தனர். ஜெயகாந்தனின் காலத் தில் எழுத்துத்துறையில ஈடுபட்டவர்கள் உண்மையில் காத்திரமான படைப் பாளிகளாக இருந்தனர். இந்திரா பார்த்த சாரதி, தி.ஜானகி ராமன், நீலபத்மநாதன், சா.கந்தசாமி, ஹெப்சிபா யேசுதாசன், கு.சின்னப்பபாரதி, சு.சமுத்திரம், சுஜாதா, ர.சு.நல்லபெருமாள், டி.செல்வராஜ், பொன் னிலன், ப.சிங்காரம், பா.செயப்பிரகாசம், சிசு செல்லப்பா, அசோகமித்திரன் சிவசங்கரி, இந்து மதி, பால்குமரன் இலங்கையில் கே. டானியல் செங்கை ஆழியான், செ.யோகநாதன், தி.ஞானசேகரன் என அப்பட்டியல் நீளும்.
சமகால வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு இந்திரா பார்த்தசாரதியின ‘குருதிப் புனல்' திரைகளுக்கு அப்பால்’, ‘கால வெள்ளம்' என்பன பாத்திர வார்ப்பிலும் உருவ அமைப்பிலும் சிறப்பாக அமைநதவை. அன்னாரின் தந்திர பூமி, சுதந்திர பூமி ஆகிய நாவல்களும் குறிப்பிடத்தக்கன.
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 22

தி. ஜானகிராமனின் திருநெல்வேலி வட்டார
மொழிகளில் அமைந்த "மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள், செம்பருத்தி' என்பன தமி ழுக்குப் பெருமை தந்த நாவல்கள். அவற்றில் 'மோகமுள்' பாலியல் சிந்தனை களை பக்குவமாக கலை அழகோடு விபரிக் கப்பட்டடுள்ளது. ர.சு.நல்ல பெருமாளின் ‘போராட்டங்கள், கல்லுக்குள் ஈரம், டீசெல்வ ராஜின் 'மலரும் சருகும், தாகம், தேனிா என்பனவும், பொன்னீலனின் ‘கரிசல், சா. கந்த சாமியின "சாயாவனம்’, கு.சின்னப்பபாரதி யின் தாகம், சங்கம், சு.சமுத்திரத்தின் ‘சத் திய ஆவேசம்’, சுஜாதாவின் “பதவிக்காக, என் இனிய இயந்திரா. சுந்தர ராமசாமியின்
‘ஒரு புளிய மரத்தின் கதை, பா.செயப்
பிரகாசத்தின் ‘தெக்கத்தி ஆத்மாக்கள', நீல பத்மநாதனின் ‘தலைமுறைகள், பள்ளி கொண்டபுரம், ப.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால், புயலில் ஒரு தோணி', அசோக மித்திரனின் 18 வது அட்சக்கோடு, தண்ணி,
தனுஸ்கோடி ராமசாமியின 'தோழர், ஜி.
நாகராஜனின் நாளை இன்னுமொரு நாளே, கி. ராஜநாரயணனின் “கோபல்ல கிராமம', நகுலனின் நாய்கள்’ என்பன இலக்கிய நாவல் வகைக்குள் அடங்குவன. ர.சு.நல்ல பெருமாளின் கல்லுக்குள் ஈரம் இந்தியப போராட்டத்தையும், தீவிரவாதப் புரட்சியை யும் விபரிக்கின்றது. அகிம்சையே நாவலின் செய்தியாகவுள்ளது. லா.சா.ராமாமிர்தத் தின் நாவல்கள் அனுபவப் பாதிப்பாகவும், அவரின் தரிசன அனுபவமாகவுமுள்ளன. நகுலனின் நாய்கள் உண்மையில் கதை யில்லாத நாவலாகும். நீல பத்மநாதனின் பள்ளிகொண்டபுரம் கிராமம் ஒன்றின் விபரங்கள் யாவையும் வெகு நுட்பத்தோடு விபரிக்கும கலைத் துவப் படைப்பு. அவவகையில் கோபல்ல கிராமத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆதவன் தனது காகித மலர்கள் நாவலில் பாத்திரங்களின் உள் மன இயககங்களைத் தனித்துவமான
உரை நடையில் சித்திரித்துள்ளார். வர்க்க முரண்பாடுகளை முதன் முதல் சிறப்பாக முன்வைக்கும் ‘புத்தம் வீடு' என்ற நாவலை எழுதிய ஹெப்சிபா யேசுதாசன் நாவல் இலக்கியத்தில் கணிப்பிற்குள்ளாகும் படைப்பு. தலித் நாவல்களுக்கு இந்த நாவல் ஒரு முன்னோடியாகும். சுல்லிக் கட்டுக் கிரதமம் ஒன்றின் மண்ணையும் மக்களையும் தத்ருபமாகக் காட்டுவது சி.சு.செல்லப்பாவின வாடி வாசல் ஆகும். ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும் போல ஒரு நீண்ட கதையின் தன்மைகளைக கொண்டது. சுஜாதாவின் நாவல்கள் அறிவியல் சார்பானவை. அவர் கையாளும் சொற்கள தனித்துவமானவை.
இந்த நாவலாசிரியர்கள் அனைவரும் நாவல் இலக்கியத்தின் ஆக்கக் கூறுகளை நன்கு அறிந்துள்ளனர். அவர்கள் தம நாவ லுக்கு எடுத்துக்கொண்ட சூழல் களங்கள் தத்ரூபமாகச் சித்திரிக்கப்படுகின்றன. தனி மனித சிந்தனைகளிலிருந்து விடுபட்டு சமூ கம், நாடு, உலகம் என்ற பரந்த சிந்த னைக்குள் பாத்திரங்கள் செல்கின்றன, புதுமை நோக்கமும் புரட்சிகரச் சிந்தனை களும் கொண்ட பெண்கள் இந் நாவல்க ளில் வருகின்றனர். பாலுறவையும பக்கு வமாகப் பயன்படுத்தும் எழுத்துக்கள வெளி வந்துள்ளன. உளவியல், அறிவியல சம்பந் தமான சிந்தனைகள் நாவல்களில புகுத்தப் பட்டுள்ளன. சமூகக் கட்டவிழ்ப்பு நாவல் கள் இவற்றில் உள்ளன. காந்தியக கொள் கைகள், மார்க்சியக் கோட்பாடுகள், பெரி யாரிசம் முதலான சிந்தனைகள் இந்த நாவல்களில் காணலாம். மக்களின் பேச்சு மொழி சிறப்பாக இந்த நாவல்களில் பயன் படுத்தப்பட்டுள்ளன. வட்டாரத் தமிழ் இந் நாவல்களில் சிறப்புற்றிருக்கின்றது. உத்தி, உருவம், நடை என்பனவற்றில் புதிய போக் குகளை இந்நாவல்களில் காணலாம்,
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 23 .

Page 14
சமூகத்துக்கும் பிரதேசத்துக்கும் ஒட்டிய பாசாங்கற்ற உரையாடலை இந்த நாவல் களில் காணலாம். பாத்திர வார்ப்புககேற்ற உரையாடலைக் காணலாம்.
கல்கி (அலை ஓசை), நாரணதுரைக் கண்ணன் (சீமான் சுயநலம்), எம்.எஸ். கல்யாணசுந்தரம் (இருபது வருஷங்கள்), வல்லிக்கண்ணன் (வீடும் வெளியும்), ந.சிதம்பரசுப்பிரமணியம் (மண்ணில் தெரியுது), ராஜம்கிருஷ்ணன (வளைகரம்), நா.பார்த்தசாரதி (ஆத்மாவின் ராகங்கள்), ர.சு.நல்லபெருமாள் (கல்லுக்குள் ஈரம்), சங்கரராம் (இன்ப உலகம்) ஆகியோரின் நாவல்களை நாட்டு விடுதலையை கருப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள புகழ் பெற்ற நாவல்கள் என சிட்டியும சிவபாத சுந்தரமும் தம் தமிழ் நாவல் என்ற நூலில் வகைப்படுத்தியுள்ளனர். அவ்வாறே விடுதலைக் குப் பிந்திய இந்தியச் சமூகத்தை, கிருத்திகா (புகைநடுவே). ஜெகசிற்பியன் (ஜீவகீதம்), இந்திரா பார்த்தசாரதி (சுதந்திர பூமி), உமாசந்திரன் (முள்ளும் மலரும்), ர.சு.நல்லபெருமாள் (போராட்டங்கள்) என்போரின் நாவல்கள் நன்கு சித்திரிப்பதாகக குறிப்பிட்டுள்ளனர். புதுமைப்பெண்கள் எப்படியிருக்க வேண்டும் என்று வ.ரா.வின் கோதைத்தீவு என்ற புதுமையான நாவல் சுட்டிக் காட்டுகிறது. பாலுணர்ச்சி நாவல்களாக ஆனால் பக்குவமாக கத்தி மேல் நடப்பது போல தி.ஜானகி ராமன் (மோகமுள், அம்மா வந்தாள்), கிருத்திகா (வாசவேச்சரம்), கோவி மணிசேகரன் (தென்னங்கீற்று), எஸ்.பொன்னுத்துரை (சடங்கு) ஆகியோள் சித்திரித்துள்ளனா என்கின்றனர். இனம், வர்க்கம், வட்டார நாவல்களை இந்திரா பார்த்தசாரதி, சிதம்பர ரகுநாதன், விந்தன், டி.செல்வராஜ், ஜசெக் அருமைராஜன்,
ஹெப்சிபா யேசுதாசன் முதலானோர் படைத்தளித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். கதைப் பொருளில் புதுமை தெரிய 5° - 5 - (oì5 6ò 60 LÎ LJ T ( 6u T lọ 6u fĩ 5 6ù ), சுந்தரராமசாமி (ஒரு புளிய மரத்தின் கதை), அசோகமித்திரன் (தண்ணீர்), டேவிட் சித் தையா (சிறைச் சாலை என்ன செய்யும்), பொன்னீலன் (கரிசல்), நீல பத்மநாதன் (பள்ளிகொண்டபுரம்), கிராஜ நாராயணன் (கோபல்ல கிராமம்) ஆகியோர் நாவல்களை எழுதியுள்ளனர் என சோ.சிவ பாதசுந்தரமும் சிட்டியும் குறித்துள்ளனர். இவை ஏற்புடைய வாதங்களாகும்.
6.4 நடப்பியல் காலம்
நடப்பியல் காலத்தில் தமிழ் நாவலில க்கியத்தில் எண்ணிக்கையில் அதிகமான படைப்புகள் வெளி வந்துள்ளன. இக காலத் தில் மேலோங்கி நிற்கின்ற இயல்பு தலித் சிந்தனைகளாகவுள்ளன. ஆதலால் இதனைத் தலித் காலம் எனவும் வகுக்கலாம். சாதியச் சிந்தனைகள் தமிழகத்தில் இன்று முனை ப்புப் பெற்ற சமூகப் போராட்டமாகவும் இலக்கிய அம்சமாகவும் விரிவடைந்துள்ளது. நடப்பியல் காலப் படைப்பாளிகளில் ஜெய மோகன், வண்ண நிலவன், அஸ்வகோ’, வண்ணதாசன், அம்பை, பிரபஞ்சன், பாவண்ண்ன், தோப்பில் முஹம்மது மீரான், ஐசெக் அருமை ராசன், ராஜ் கெளதமன், பூமணி, இமயம், பாமா, அறிவழகன், மேலா ண்மை பொன்னுச்சாமி, எஸ். ராமகிருஸ் ணன், அழகிய பெரியவன், ஆ.மாதவன், ஷோபா சக்தி முதலானோரைக் குறிப்பிட லாம். மார்க்சியப் பார்வையுடன் இந்தப் படைப்பாளிகள் சமூகத்தைப்பார்த்தார்கள். தமது ஏமாற்றங்களையும் வேதனைகளை யும் வலிகளையும் தம் படைப்புகளில் விமா சித்தார்கள். வர்க்க முரண்பாடுகளையும்
மல்லிகை ஏப்ரல் 2008 & 24

சாதிய இழி நிலைப் பிரச்சினைகளையும் தம் நாவல்களின் பொருளாகக் கொண் டார்கள். அருவருப்போடு இது வரை பயன படுத்தாது ஒதுக்கிவிடப்பட்ட சில சொற்கள் இவர்களின் நாவல்களில் பயன்படுத்தப் பட்டன. தீட்டுப்பொருள் என்பது இவர்க ளிடம் இருக்கவில்லை. இவர்களின தேடலி லும், பார்வையிலும், அவதானிப்பிலும முன் னைய படைப்பாளிகளிடம் காணாத சங் கதிகள் என்பன அடங்கியிருந்தன. கதா பாத்திரங்கள் உயிரோட்டமானவையாக அமைந்திருக்கின்றன. இக் காலத்தில் ஈழத்தைப் பொறுத்தமட்டில் கே.டானியல், செங்கை ஆழியான், செ. யோகநாதன், தெணியான், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி, தேவகாந்தன் முதலா னோர் நவீன நாவல் இலக்கியத்தில் தம் பங்களிப்பினைச் செய்துள்ளனர்.
எஸ். ராமகிருஸ்ணனின் நெடுங்குருதி, அறிவழகனின் கழிசடை, ஷோபாசக்தியின் கொரில்லா, ராஜ கெளதமனின் காலச் சுமை, பாமாவின் வன்மம், கருக்கு, சங்கதி, இமை யத்தின் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், மணியின் பிறகு, பா.செயப்பிரகாசத்தின் னவோசை, அழகிய பெரியவனின் தங் ப்பன் கொடி, ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து, வண்ணநிலவனின் கடல் புரத்தில் முதலானவையும், இலங்கையில் டானிய லின் கானல், தண்ணி, செங்கை ஆழியா னின் காட்டாறு, செ.யோகநாதனின் ஜானகி. தி.ஞானசேகரனின் குருதிமலை, தெணியா னின் கழுகு என்பன குறிப்பிடத்தக்கன.
6.5 மிகச்சிறந்த நாவல்கள்
தமிழில் வெளிவந்திருக்கும் இலக்கி யத் தரமான மிகச்சிறந்த நாவல்களுடன்
ஈழத்தில் இன்று எழுதப்படுகின்ற நாவல்கள் இவை ஒப்பிடத்தக்கனவா என்று பார்க்க வேண்டும். நாவல் இலக்கியத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆக்கவுறுப்புக்களைக் கொண்டமைந்தனவா என்று பார்க்க வேண்டும். 18 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன. சொரிந்து கிடக்கின்ற ஏராளமான சருகுகளிடையே நாவல் மலர்களாக எஞ்சியிருப்பவை வ.ரா.வின் சுந்தரி, சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, ஜெயகாந்தனின சிலநேரங்களில் சில மனிதர்கள், ரகுநாதனின் பஞ்சும் பசியும், நீல பத்மநாதனின் பள்ளிகொண்டபுரம், சா. கந்தசாமியின் சாயாவனம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, கு. சின்னப்பபாரதியின் தாகம், சு. சமுத்திரத்தின் சத்திய ஆவேசம். தி.ஜானகிராமனின் மோகமுள், பொன் னிலனின் கரிசல், அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு போன்ற இலக் கியத் தரமான நாவல்களை பெருமைப் படும் வகையில் நாம் பெற்றுள்ளோம். ஈழத்தில் கானல், காட்டாறு, குருதிமலை, செ.யோகநாதனின் கிட்டி என்பன குறிப் பிடத்தக்கவை.
அதேவேளையில் பூலினமான நாவல் களைப் படைப்பவர்கள் தமிழில் இல்லாது போய்விடவில்லை. ஆரணியாரும் வடுவூ ரரும் கோதைநாயகி அம்மாளும் , சிரஞ்சிவியும், மேதாவியும் எங்களுடன் இன்றுமுள்ளனர். புஸ்பா தங்கத்துரை, இராஜேஸ் குமார், ராஜேந்திரகுமார், ரமணிச் சந்திரன் போன்ற நுாற்றுக் கணக்கான எழுத்தாளர்கள் உள்ளனர்.
- தொடரும
மல்லிகை ஏப்ரல் 2008 & 25

Page 15
படிகள் இதழ் 18 இன் அறிமுகமும், மறைந்த செ. யோகநாதனுக்கான இரங்கல்' கூபீடமும்
நாச்சியாதீவு பர்வின்
நட்சத்திர நற்பணி மன்றத்தினரின் வெளியீடான படிகள் இதழ் - 18 இன் அறிமுக விழாவும், மறைந்த பழம் பெரும் எழுத்தாளர் செ. யோகநாதனுக்கான இரங்கல் கூட்டமும் கடந்த 2008. 03.01 சனிக்கிழமை, நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலய மண்டபத்தில் பாடசாலை அதிபரும், இலக்கிய ஆர்வலருமான ஐ. ஏ. உசனார் தலைமையில் நடைபெற்றது.
அதிபர் ஐ. ஏ. உசனார் இலக்கியம் பற்றிய ஆழமான கருத்தாடல் ஒன்றைத் தமது தலைமை உரையில் முன் வைத்தார். ‘இலக்கியவாதிகள் இதயமுள்ளவர்கள் அதனால் தான், அவர்களது விரிந்த, ஆழமான பார்வை இயற்கையில் வெவ்வேறு திசைகளைத் துழாவிப் படம் பிடித்து நம்முன்னே ஒரு ரசிக்கத்தக்கக் கலைப் படைப்பாகக் கொண்டு வந்து நிறுத்துகிறது. மனிதம் அழும் போது, அவர்கள் அழுகின்றார்கள். அடுத்தவர்களின் சுகம், துக்கம் பற்றிய தமது தூய்மையான எண்ணங்களை எழுத்துருப்படுத்துகிறார்கள். ஒரு தனிமனிதனின் பிரச்சினையை ஒரு இலக்கியவாதியால் தான் இலகுவில் உண்ர முடியும். என்று தனது உரையில் அதிபர் விவரித்து உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து, படிகள் இதழ்- 18 இன் விமர்சனத்தை நாச்சியாதீவு மூத்த இலக்கியவாதியும், ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்களில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தியவருமான எஸ். எச். நஜிமுதீன் நிகழ்த்தினார். மிக ஆழமான அவரது விமர்சனமும், இறுதியில் அவர் வாசித்த கவிதையும் உண்மையிலே மெய் சிலிர்க்க வைத்தது சிறந்த நாடக நடிகர், இயக்குநர், இலக்கிய ஆர்வலர் என்ற நிஜங்களையும்தாண்டி, ஒரு நல்ல கவிஞர் என்பதை அந்தக் கதையின் மூலம் நிரூபித்திருந்தார் எஸ். எச். நஜிமுதீன் அவர்கள்.
இன்றைய கால கட்டங்களில் வெகுவாக விமரிசனம், சிறுகதை போன்ற துறைகளில் தடம் பதித்துக் கொண்டிருக்கும் நாச்சியாதீவு அபூ-நுஹாவுக்கு, நடப்பியல் நாடக நகர்வுகள் பற்றிய தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக அவரால் அந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும், அவரது மனைவியும், பேராதனைப் பல் கலைக்கழகப் பட்டதாரியுமான ஆசிரியை சவாஹிரா நிகழ்வுகளில் கலந்து கொண்டது மட்டுமன்றி, அபூ- நுஹாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பிலான குறிப்புக்களையும் அவரே எழுதிக் கொடுத்திருந்தார். அது என்னால் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, 1970களின் பிற்பாடான நாச்சியாதீவின் ஒரு ஆரோக்கியமான நாட கப் பரம்பரைக்கு வித்திட்டவரும், பல மேடை நாடகங்களை எழுதி, தயாரித்து, அன்றைய காலகட்டத்தில் ஒரு காத்திரமான பங்களிப்பினை நாடகக் கலையின் வளர்ச்சிக்குச் செய்த,
மல்லிகை ஏப்ரல் 2008 & 26

ஒய்வு பெற்ற ஆசிரியர் ஏ. எம். இப்ராஹீம் தனது அந்தக் கால நாடகம் பற்றிய இனி மையான நினைவுகளைச் சுவைபட இரை மீட்டினார். இன்றைய காலகட்டத்தில் மேடை நாடகங்கள் வெற்றி பெறாமைக்கும், இளம் பரம்பரை அதை விட்டுத்தூர விலகிச் செல்லும், ஆரோக்கியமற்ற நிலையும், சின்னத் திரையின் ஆக்கிரமிப்புமே கார ணம் என்பது அவரது உணர்ச்சி ததும்பிய பேச்சிலிருந்து தெளிவாகியது.
அடுத்து, மறைந்த செ. யோகநாதனுக் கான இரங்கல் நிகழ்வுகள் நடை பெற்றன. உண்மையிலேயே எழுத்தாளர் யோகநாத னுக்கு இப்படி ஒரு இரங்கல் கூட்டம் வைக்க வேண்டும் என்ற, எண்ணக் கருவைத் தூண் டியவரே மல்லிகை ஆசிரியர் தான். அவரை மல்லிகைக் காரியாலயத்தில் சந்தித்த போது, செ. யோகநாதன் பற்றிய கருத்துக் களை முன் வைத்தார். இது பற்றி நானும், படிகள் ஆசிரியர் வசீம்அக்ரமும் ஆலோசித் தோம். முடிவில் படிகள் இதழ்- 18 ஆனது, ஐந்தாவது ஆண்டுச் சிறப்பிதழாக வருவ தனால் இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றாய் வைத்து விடுவதென்று தீர்மானித்தோம்.
출
எழுத்தாளர் யோகநாதன் பற்றிய ஒரு கருத்துரை என்னால் வழங்கப்பட்டது.
"1960களின் பின்னர் எழுத ஆரம்பித்த வர்களில் யோகநாதனும் முக்கியமானவர். 1962 களில் சிற்பியின் கலைச் செல்வியில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரிக்கப் பட்டது. தொடர்ந்து, சோளகம், வடு, கலை ஞன், மலரும் கொடியும், நிறங்கள், புதிய நட் சத்திரங்கள் போன்ற சிறுகதைகள் வெளி யாகின. தமிழ் இலக்கியத்தின் எல்லாக் கூறு களிலும் கால் வைத்து வெற்றி பெற்ற ஒரு படைப்பாளியாக, இலங்கையிலும், இந்தியா விலும் பரிணமித்தவர்’ என்ற தகவல்களை எனது உரையில் உள்ளடக்கியிருந்தேன்.
இறுதியாக எல். வசீம் அக்ரம், நன்றி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளை எம். சி. நஜிமுதீன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள், இலக்கிய ஆர்வ லர்கள், பட்டதாரிகள் என்று பல தரப் பட்டவர்கள் நிகழ்வில் பூரணமாய் கலந்து கொண்டனர். இயற்கையோடு பின்னிப் பிணைந்த நாச்சியாதீவில் ஓர் இலக்கிய நிகழ்வு அன்றைய தினம் வெற்றியுடன் முற்றுப் பெற்றது.
மல்லிகையின் அஞ்சலி
தினக்குரல் பிரதம ஆசிரியரும், எழுத்தாளர்களின் உற்ற நண்பரு மான திரு. வீ. தனபாலசிங்கத்தின் தாயார் திருமதி மீனாட்சி வீரகத்தி அவர்கள் சமீபத்தில் கொழும்பில் காலமானார்.
இவரது இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினர்க்கு மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
- ஆசிரியர்
மல்லிகை ஏப்ரல் 2008 & 27

Page 16
மேமன்கவி memonkavi (a yahoo.com.
all IL BILaipaji ILILLBull-g விடுபடங்களிள்அரசியல்
கொங்குதேர் வாழ்க்கை தொகுதி2 புதுக் கவிதைகளின் தொகுப்பு 3 கவிஞர்களின் 893 கவிதைகள் யுனைடெட் ரைட்டர்ஸ் (2004) தொகுப்பு: ராஜமார்த்தாண்டன்
பெப்ரவரி காலச்சுவடு இதழில், சித்தார்த்தன் என்பரால், இத்தொகுப்பில் ‘விடுபட்ட கவிஞர்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது (தி.சோ. வேணுகோபாலன், நாரணோ ஜெயராமன், பிரம்மராஜன், லஷ்மி மணிவண்ணன், என்.டி. ராஜ்குமார்)
நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிஞர்கள் உள்படச் சிலரை நான் சேர்க்கவில்லை. தி.சோ.
வேணுகோபாலனைப் பொருத்த வரை பிச்சமூர்த்தியைப் படித்த கவிதை வாசகனுக்கு
வேணு கோபாலனைப் படிக்கவேண்டியதில்லை. அதுபோலவே பசுவய்யாவின்
அபரிமிதமான பாதிப்புக்கொண்டவர் நாரணோ ஜெயராமன் என்பதாலேயே சேர்க்கப்
படவில்லை. பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியும்
பேசியும் உள்ளேன். அந்த நவீனத்துவம் தமிழ் மனம் சார்ந்ததாக இல்லாமல் மேலை மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 28
 

நாட்டுக் கவிதைப் போக்கின் அதீதத் தாக்க த்தாலும் படிப்பறிவின் மூலமான அனுபவ வெளிப்பாட்டினாலும் உருவானது. சோதனை முயற்சிக்காகவே சோதனை என் றானதாலும் திருகலான மொழி நடையினா லும் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிப் பது போன்ற உணர்வை, அந்நியத் தன் மையை இவரது கவிதைகள் தோற்றுவித்து விடுகின்றன.”
‘இன்றைய கவிஞர்களில் லஷ்மி மணி வண்ணனை ஏன் சேர்க்கவில்லை’ என்று சிலர் கேட்கின்றனர். அவரது கவிதைகளை முழுமையாகப் படித்த பின்னர்தான் இத் தொகுப்பில் சேர்க்காமல் நிராகரித்துள் ளேன். இன்றைய கவிதைக்கான மொழி நடையும் உருவமும் அவரது கவிதைக ளில் சாத்தியமாகவில்லை. இதேபோலத் தலித் கவிஞர் எனப் பரவலாக அறியப் படுகிற என்.டி. ராஜ்குமார் கவிதைகள்கூட எதையோ பிரமாதமாகச் சொல்லும் பாவ னையில் ஆரம்பித்து எந்த அனுபவத்தை யும் தராமல் சிதைந்துபோய்விடுகின்றன.
"தமிழில் வெளிவந்துள்ள அனைத்துக் கவிதைத் தொகுதிகளையும் கவனமாகப்
படித்துத் தான் தேர்வுசெய்துள்ளேன். இவ்விடுபடல்களில் எவ்வித அரசியலும்
இல்லை.” என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து எழுத முன், சில விடயங் கண்ளக் குறிப்பிடவேண்டும். இத் தொகுதி யில் கடந்த காலங்கள் போலன்றி, ‘புறக் கணிப்புக்குள்ளாகிற' அல்லது தவிர்க்கப் படுகிற’ (19) ஈழத்துக் கவிஞர்கள், (10) பென் கவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். அது அவர்களை தவிர்க்க முடியாத கால மாற்றத்தை காட்டுகிறது. இக் கவிஞர்கள் தமது வாழ்வை அடையாளப்படுத்தி னார்க்ளா என்பது ஒருபுறமிருக்க மறுபுறத் தில் தலித் அடையாளங்களை கொண்ட
தாய் எவ்வொரு படைப்பும் இதில் இல்லை யென்பதை அவர்களது பட்ைப்புகள் புறக்கணிக்கப்படமுடியாதளவு வீர்யமாக வெளிப்படுகிற இந்தக் காலத்தில்- எப்படி எதிர்கொள்வது?
இன்றைய கவிதைகள் குறித்த ராஜ மார்த்தாண்டனது -சுரா போன்றவர்களை ஒத்த- நிலைப்பாட்டில் எனக்கு உடன் பாடில்லை. நவீனக் கவிதையின் "வரை யறுப்பு' ஒத்ததொனியிலான (monotonous) பரந்த அனுபவங்களைத் தராத கவிதை களையே தந்துகொண்டிருக்கிறது. இந் நூலிலேயே ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்: ‘நல்ல கவிஞன் மொழியிலிருந்து தனக் கேயானதொரு கவிதை மொழியை உரு வாக்கிக்கொள்கிறான்.
கவிதை என்றும் புதியதாக இருக்க வேண் டும். கவிஞனின் தனித்துவம், அவனுக் கேயான பார்வை, அவனது சிறப்பான மொழி யாளுமை, எல்லாவற்றுக்கும் மேலாக அவனது அபூர்வமான கற்பனையாற்றல் காரணமாகக் கவிதையில் இந்தப் புதுமை
சாத்தியமாகிறது.’
இவற்றினடிப்படையின்படி பர்த்தால் இதில் விடுபட்ட கவிஞர்கள்தான் இந்த எதிரபார்ப்பை பூர்த்திசெய்பவர்களாக படுகிறார்கள். ஏனெ னில் அவர்களுடைய எழுத்து இன்றைய ‘நவீனக் கவிதையின் வரையறுப்பைத்' தாண்டியது. அதனால்தான், ராஜமார்ததாண்ட னது பிரம்மராஜன் மற்றும் ஏனையவர்கள் பற்றிய கருத்தோடு உடன்பட முடிகிற போதும், என்.டி.ராஜ்குமாரை அந்த சட்ட கத்துள் அடக்க முடிய வில்லை.
என்.டி.ரா வுடன் இக் குறிப்பிட்ட நேர்
காணலில் கேட்கப்படாத விடுபட்ட இன்
னொருவர் வ.ஐ.ச.ஜெயபாலன்.
மல்லிகை ஏப்ரல் 2008 & 29

Page 17
ஈழத்தின் ஆதிக்க சமூகமான யாழ்ப் பாணம் அல்லாத, பகுதிகளின் அடையாளம் வ.ஐ.ச.வின் கவிதைகள். அது மட்டுமலலாது, அவரது ‘நமக்கென்றொரு புலவெளி’ யோ பிற பல அரசியற் கவிதைகளே பாதிபபடை யாத தமிழக தீவர வாசகர்கள் குறைவு ஈழ எழுத்திலேயே, அவரது பாதிப்பிலே இன்ன மும் ஒரு தலைமுறையே இருக்கிறது! அப் படி இருக்கிறது போது அவரது புத்தகத் திற்கு (நூலின் பெயர்: பெருந்தொகை?) மதிப்புரை எழுதியுள்ள ராஜமார்த்தாண்டன் அவரை இதில் தவிர்த்திருப்பது என்ன அடிப் படையில் என்பது தெரியவில்லை (பிற ஈழத் துக் கவிஞர்களது இதில் சேர்க்கத் தேர்ந் தெடுத்த கவிதைகளும் அவர்களது ‘சிறந்த கவிதைகளல்ல!).
வ.ஐ.ச.ஜெயபாலனின் பிம்பங்கள் உடைந்து வெறும் எழுத்துக்கள் மட்டுமே எஞ்சியிருக்கிற அதுவும் கேள்விக்குட் படுத்தப்படுகிற காலமிது. எனினும், ஈழத்துக் கவிதைகளை பற்றிப் பேசுகிறபோது அதன் அடையாளங்களை அதன் தடங்களைப் பதிய விழைகிறபோது அவர் இல்லாமல் அது சாத்தியமில்லை. அவரை நன்கே படைப்புகள் ஊடாக நேரிலும் அறிந்திருக் கக்கூடிய ஒருவர் அவரைத் தவிர்ப்பதில் அரசியல் இல்லையா?
மதிவண்ணனுடைய (நெரிந்து) கவிதைத் தொகுதியும் ராஜமார்த்தாண்டன் கவன மாகப் படித்த கவிதைத் தொகுதிகளில் அடங்குமா என்பது தெரியவில்லை. அவரு டைய ரசனையில், அவை ‘கவிதைகள்’ இல்லை என்றால்கூட, அந்த வாழ்வியல் ஒலிக்கவேண்டும் என்கிற தேவையின்படி யேனும் அவைகள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது, தனியே, தனிப்பட்டொருவரின ரசனை சார்ந்த தேர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்
தால் அதில் ஒன்றும் பிரச்சினையில்லை, அதையே ‘அரசியலற்று தேர்கிறேன்’ எனுகிறபோது அது பிரச்சினைக்குரிய தாகிறது. Simply, அது சாத்திய மில்லை என்பதால்! உதாரணமாக, அவரைப் போல ன்றி, பலருக்கு ராஜ்குமாரது கவிதைகள் ‘பிரமாதமாக’ எதையோ சொல்லத்தான் செய்கின்றன. அதேபோல, வாசகியாய் எனக்கு’ பிரமாதமாய் எதையும் சொல்லாத, எந்த அனுபவத்தையும் தாராத கவிதைகள் இத் தொகுதியில் நிறைய இருக்கின்றன, ஈழக் கவிதைகள் உட்பட. அத்துடன், இந்தத் தொகுதியில் வந்த அனைவரும் ராஜமார்த் தாண்டனதே ‘பிடித்தமாய் இருப்பரென்றும் தோன்றவில்லை. அப்படியல்லாதபட்சத்தே என்.டிராவையும் இன்ன பிறரையும் தன் னைப் ‘பிரமாதப்படுத்தாவிட்டாலும் வேறு சிலர் பிரமாதப்படுத்துவதாய் நினைக் கிறார்கள் என்கிற அடிப்படையில்கூட போட்டிருக்கவேண்டுமே!
ராஜமார்த்தாண்டனது, தேர்விலும் -எல் லோருடைய தேர்விலும்போலவே- அரசியல் இருக் கிறது. எண் டி.ரா அவரைப் பிரமாதப்படுத்தாததற்கும் அதுவே காரணம் இதை திட்டமிட்டு வன்மத்துடன் ராஜ மார்த் தாண்டன் செய்தார் என குற்றுஞ்சாட்ட வில்லை. இவ் அரசியலை நடைமுறைப் படுத்த, வெளிப்படையான - அவருக்கே தெரி யாத அவரது இதுகால்வரை படித்த, ரசித்த பழக்கப்பட்ட, ‘நல்ல கவிதை ‘பிரமாதமாய் சொல்கிற கவிதை’ குறித்த நிலைப்பாடு களே போதுமானது. இந்த நிலைப்பாட்டில் பசுவய்யாவின் தத்துவ விசாரக் கவிதைகள் படிப்பதற்கும் ரசிப்பிற்கும் உகந்ததாய பழக்கப்பட்டிருக்கும் (பசுவய்யாயின் பாதிப்பை ராஜமார்த்தாண்டனது கவிதை களில் காணலாம். அவர் இத் தொகுதியில் தனது கவிதைகளை உள்ளடக்கவில்லை). பசுவய்யா கவிதைகளை ஒத்த தொனியே ‘நவீனக் கவிதை மாதிரி’ என நினைப்பதும்
மல்லிகை ஏப்ரல் 2008 & 30

மற்றவைமிதான ஒவ்வாமையும் ரசனை
சார்ந்ததே.
மற்றப்படி, இக் கவிஞர்களின் விடு படல் கள் குறித்து வருத்தமில்லை! இத்தகைய விடுபடல்கள் இல்லாமல் தொகுப்பொன்று வருவதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது (என்னுடைய தேர்வுகளில் எனது அரசியல் இல்லாமல் போவதெப்படி? என்னை எதிர்க்கிற ஒன்றை தேர்கிற நான் எனது கருத்தை வலியுறுத்துகிற இன்னொன்றைப் போடாவிட்டால் எனது இரும்பை சமன்செய்ய,"காக்க முடியுமா!?).
6ിബസ്ത്രി,_ീ പ്രസ്ത്ര്)
eiyarkai.blogspot.com
வெற்றிடப் புரிதல் எனும் தலை ப்பில் சென்னையைச் சார்ந்த ஜான் பாபுராஜ என்பவரின் வலைப்பதிவில் சினிமா விமர்ச னத்தை பற்றிய ஒரு பதிவை சேர் தி துள்ளார் . அது உங்கள்
பார்வைக்கு.
சினிமா விமர்சனம் -ஒர் ஆய்வு
கலைக்கும், கலை விமர்சனத்துக் குமான உறவை எளிமையாக, தடாகத்திலி ருக்கும் தாமரை தண்டுடன் ஒப்பிடலாம். தடாகத்தின் நீரின் அளவே தாமரை தண்டும் இருக்கும். அதே போன்ற ஒரு கலையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக அக்கலை மீதான விமர்சனம் திகழ்கிறது. தீர்க்கமான விமர்சனங்களுக்கு உள்படாத எந்தக் கலையும் சவலை குழ்ந்தையாகவே பலவீனப்படும்.
சினிமா விமர்சனத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் முதல் படியையே தாண்ட வில்லை. சினிமா தமிழில் அறிமுகமான காலத் தில் அறிவுஜீவிகள் அதனை எதிர கொண்ட விதமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
தமிழில் சினிமா அறிமுகமான முப்பது களில் வர்க்க ரீதியாகவும் சாதி ரீதியாகவும் சமூகம் பிளவுபட்டு கிடந்தது. ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் என்று பிரத்யோகமான கேளிக்கைகள் இருந்தன. சாதாரண குடி யானவர்களின் கேளிக்கைகளை மேல் வர்க்கத்தினர் என்று தங்களை கூறிக கொண் டவர்கள் கீழ்த்தரமானவையாக கருதி ஒதுக்கி வந்தனர்.
இந்த சூழலில் மேல் கீழ் என்ற பாகு பாடில்லாமல் அனைவரும் பார்த்து ரசிக்கிற கேளிக்கை சாதனமாக சினிமா அறி முகமானது. இதனை மேட்டுக் குடியினரால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அன் றைய எழுத்தாளர்களிடமும் பத்திரிக்கை யாளர்களிடமும் இந்த மனநிலையே பிரதி பலித்தது. அவர்கள் சினிமா குறித்து எழுது வதை அவமானமாக கருதி அதனை தவிர் த்து வந்தனர்.
அப்படியே எழுத முன்வந்தவர்களும சினி மாவை எதிர்மறையாக தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். 1935-ல் கே.பி. சுந்த ராம்பாள் நடிப்பில் வெளியான 'நந்தனார படத்திற்கு விமர்சனம் எழுதிய எழுத்தாளர் கல்கி, "படத்தில் எருமை மாடும், பனை மர மும் நன்றாக நடித்திருக்கின்றன” என்று குறிப்பிட்டார். அன்றைய எழுத்தாளர்களின் சினிமா மீதான துவேத்திற்கு கல்கியின் எழுத்து ஒரு சான்று.
ஜி.என். பாலசுப்ரமணியம், ராஜரத்னம் பிள்ளை, தண்டபாணி தேசிகர், எம். எஸ். சுப்புலட்சுமி போன்ற கர்நாடக இசைக்
மல்லிகை ஏப்ரல் 2008 * 31

Page 18
கலைஞர்கள் சினிமாவில் நுழைந்தபிறகு
எழுத்தாளர்களின் மனோநிலை மாறத தொட
ங்கியது. அவர்கள் பெரும் உற்சாகத்துடன்
திரைப்பட இசை குறித்து எழுத முற்பட்
L-6015).
காந்திய கருத்துக்களை தாங்கி சினி மாக்கள் வர ஆரம்பித்த பின் பத்திரிககை கள் சினிமாவுக்கென அதிக பக்கங்கள ஒதுக் கின. மணிக்கொடி எழுத்தாளர்களான வ. ரா. பி.எஸ். ராமையா போன்றோர் சினிமா குறித்து எழுதத் தொடங்கினர்.
ஆயினும் இந்த விமர்சனங்கள் அனைத் தும், சினிமா ஒரு தனித்த கலை வடிவம், அதற்கென்று தனித்துவமான கலை அம்சம் உண்டு என்பதை உள்வாங்கிக் கொள் ளாமல் எழுதப்பட்டவை. திரைப்படத்தின் கதையை, அதன் உள்ளடக்கத்தை இலக் கிய ரீதியாக அணுகி எழுதப்பட்டது. காட்சி ஊடகமான சினிமாவை புரிந்து கொள்ள வும், அதன் அதிகபட்ச சாத்தியத்தை நோக்கி நகரவும் இந்த விமர்சனங்கள் துணை புரியவில்லை.
75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த தருணத்திலும் சினிமா குறித்த தீவிரமான விமர்சனங்கள், கட்டுரைகள் காணக்கிடைப்பது அரிதாகவே உள்ளது. நிழல்', 'கனவு’, ‘உயிர்மை" முதலான சிறு பத்திரிக்கைகளில் மட்டும் தீவிரமான கட்டுரை கள், நேர்காணல்கள் அவ்வப்போது வெளி யாகின்றன. பெரும் பத்திரிக்கைகளில வெளி யாகும் விமர்சனங்கள் மேலோட்டமானவ்ை அபத்தம் நிறைந்தவை. சினிமா குறித்த புரித லின்றியே அதிகமும் இப்பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் ஒரு புரொஜெக்டரை வைத்தே சினிமா காண்பிக்கப்பட்டது. இதனால் ஒரு ரீல் முடிந்து அடுத்த ரீலை மாற்றுவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.
மேலும், தீப்பிடிக்க சாத்தியமுள்ள பிலிம் என்பதால் புரொஜெக்டர் ஆடாகும் நேரங்க ளில் படம் நிறுத்தப்படும். இதன் காரணமாக ஒரு படத்திற்கு ஐந்து முதல் ஏழு இடை வேளைகள் வரை விடப்பட்டன.
இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. தொடர்ச்சியாக படத்தை திரையிடுவதில் உள்ள பழைய சிரமங்கள் களையப்பட்டு விட்டன. இருந்தும் இடைவேளை என்பது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
மேலை நாடுகளில் இடைவேளை என் பது பெரும்பாலும் கிடையாது. முழுப் பட மும் இடைவேளை இன்றியே காண்பிக்கப்ப டுகிறது. மாறாக, இந்தியாவில் நடைமுறை சிக்கல்களால் ஏற்பட்ட ஒரு பழக்கம் ஒரு விதியாகவே இன்றளவும் கடைபிடிக்கப்படு கிறது. மேலும், இடைவேளையை முன் வைத்தே திரைக்கதை உருவாக்கப்படுகி றது. திரைக்கதை குறித்து புத்தகம் எழு தும் எழுத்தாளர்களும் கதையின் எந்தப் பகுதியில் இடைவேளை வரவேண்டும், இடை வேளைக்குப் பிறகு படம் எப்படி வேகம் பிடிக்க வேண்டும் என இடைவேளையை முன்வைத்தே திரைக்கதையை விளக்க முற்படுகிறார்கள்.
இந்த அபத்தம் சினிமா விமர்சனத்திலும் பிரதிபலிப்பதை காணலாம். இடைவேளை வரை படம் சூப்பர், இடைவேளைக்குப பிறகு சொதப்பல' என இடைவேளை எனும சினிமா வுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை வைத்து நாம் விமர்சனங்களை உருவாக்கி வருகி றோம். இந்தியா தவிர்த்த பிற உலகமொழி திரைப்படங்களை இப்படி இடைவேளையை வைத்து விமர்சிக்க இயலாது. ஹாலி வூட்டிலும் கூட இந்த அபத்தத்தை காண் பது அரிது.
இடைவேளையை மனதில் வைத்து திரைக்கதை அமைக்காததே இதற்கு
மல்லிகை ஏப்ரல் 2008 & 32

காரணம். உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெறும் தமிழ் படங்கள் இடைவேளை இன்றியே திரையிடப்படுகின்றன. இதனால் படத்தில் இடைவேளை ஏற்படுத்தும் ஜம்ப பை புரிந்து கொள்ள முடியாமல் பார்
வையாளர்கள் தடுமாறுவது தொடர்கதை
யாகி வருகிறது.
இது போன்று சினிமாவுக்கு தொடர்பு இல்லாதவை சினிமாவில் விதிகளாக மாறுவதை முதலில் கண்டறிந்து களைய வேண்டும்.
சினிமாவுக்கான விமர்சன மொழி தமி ழில் உருவாகாதது இன்னொரு குறை. சினி மாவுக்கான கலைச் சொற்கள் உருவாக்கப் படாததே இதற்கு காரணம். மான்டேஜ், "பேட் அவுட், "பேட் இன், டிஸ்ஸால்வ என பிரெஞ்சு, ஆங்கில பதங்களையே இன் னும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற் றிற்கான தமிழ் கலைச் சொற்களை உரு வாக்க வேண்டியது சினிமா விமர்சனத்தின் முதல் தேவை. s
கலாச்சாரம் சார்ந்த பார்வைகளும் சினி மாவை பாதிக்கின்றன. தமிழகம் குடும்ப உறவு களை பிரதானமாக கருதும் நாடு. குடும்பம் எனும் அமைப்பை பெரியார் தவிர்த்து தமிழ கத்தில் யாரும் கேள்விக்குட்படுத்திய தில்லை. தவிர, அப்படி கேள்விக்குட்படுத் தும் நபரை எந்த கேள்வியும் கேட்காமல் ஒதுக்கிவிடும் மனோபாவம் கொண்ட சமூகம் நம்முடையது. இப்படி கேள்விக்குட் படுத்த முடியாத குடும்பம்’ எனும் அமை ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள் ளது தமிழ் சினிமா.
ஒரு திரைப்படம் என்பது முதலில் குடும் பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்க வேண் டும். தமிழர்களில் அனேகமாக அனைவருக் கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப் பில்லை. மேலும், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படங்களை மட்டுமே நான்
எடுப்பேன்’ என பெருமை பேசும் இயக்கு னர்களும் இங்கு அதிகம்.
ஒரு வீட்டில் குடும்பமாக வசிப்பவர் களும் சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப் பது தவிர்த்து அனேகமாக மற்ற அனைத்து
வேலைகளையும் மறைவாக அல்லது தனி
யாகவே செய்கிறார்கள். பெரியவர்களுக்கு தெரியாமல் சிறுவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் பல இருக்கின்றன.
பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கு தெரியாமல் தனியாக செய்யக்கூடிய வேலைகள் நிறைய உண்டு. ( மறைவான, தனியான என்றவுடன் ஒழுக்கக்கேடான செயல் களாகத்தான் இருக்கும் என்று கருத வேண்டி
யதில்லை) வீட்டிற்கு வெளியில் நண்பர்
களுடன் பகிர்ந்து கொள்ளும் பலவற்றை நாம் வேறு நபர்களிடம் வெளிப்படுத்து வதில்லை. இப்படி குளிப்பது முதல் இரவு உறங்குவது வரை நாம் குடும்பமாக சேர்ந்து செய்யாத எத்தனையோ செயல்கள் இந்த உலகில் இந்க்கின்றன.
நடைமுறை வாழ்க்கை இப்படியிருக்க வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கூறும் சினிமா மட்டும் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மிகப் பெரிய முரண். இப்படி கூறுவதன் பொருள், சினிமா என்பது குடும் பத்துடன் பார்க்கக்கூடியதாக இருக்கக் கூடாது என்பதல்ல அனைத்துப் படங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர் பார்க் கக்கூடாது என்பதே. மேலும், குடும்பத்துடன் பார்க்கக்கூடியதாக இருப்பதால் மட்டுமே ஒரு படம் சிறந்த படமாகிவிடாது. இதை புரிந்து கொள்ளாமல், அனைத்துப் படங் களும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும்படி இருக்க வேண்டும் என வாதிடுவதும் அதற்கு தகுந்தாற்போல் திரைக்கதை அமைப்பதும், 'குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் என்பதால் கூடுதலாக ஐந்து
மல்லிகை ஏப்ரல் 2008 33

Page 19
மதிப்பெண்கள் என விமர்சனம் எழுதுவதும் சினிமா எனும் கலையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கும் செயலே அன்றி வேறில்லை.
குடும்பம் அளவிற்கு தமிழ் சினிமாவை பிடித்து ஆட்டும் மற்றொரு விடயம், யதார்த் தம். நல்ல சினிமா என்பதை யதார்த்தம் என்ற தராசில் வைத்தே எடை போடுகி றார்கள் நம் விமர்சகர்கள். உண்மையில் யதார்த்தம் என்பதே ஒரு கற்பிதம் மாயை சமீபத்தில் யதார்த்தத்திற்காக கொண்டா டப்பட்ட திரைப்படம் ‘காதல். இந்தப் படத் தில் வரும் இளம் காதலர்கள் இணைய வேண்டும் என படம் பார்த்த அனைவருமே விரும்பினர். ஆனால், அப்படி விரும்பிய ஒருவர் தனது பத்தாவது படிக்கும் மகள் மெக்கானிக் ஒருவனை காதலிப்பதை அனுமதிப்பாரா? இல்லை ஒரு அண்ணன் தனது தங்கை" மெக்கானிக் ஒருவனை இழுத்துக் கொண்டு ஓடுவதை அனுமதிப் பானா? நிச்சயமாக மாட்டார்கள். ஆனால் 'காதல்' படத்தின் காதலர்கள் இணைய வேண்டும் என மனதார விரும்பியவர்கள் இவர்கள், திரையில் விரும்பிய ஒன்றை சொந்த வாழ்க்கையில் வெறுக்க என்ன காரணம்?
இரண்டரை மணி நேர படத்தில் மெக்கா
னிக்கிற்கும், மாணவிக்கும் உள்ள காதல் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கிறது. பல வருட காதலை இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக பார்க்கும்போது உச்ச
நிலைக்கு பார்வையாளர்கள் தள்ளப்படு
கிறார்கள். காதலர்கள் ஒன்றிணைய வேண் டும் என பிரார்த்திக்கிறார்கள். திரையில் அது சாத்தியமாகாமல் போகும்போது கண்ணீர் விடுகிறார்கள்.
நிஜ வாழ்க்கையில் காதல் இப்படி தொகுக்கப்படுவதில்லை."உடல் ரீதியிலான பிரச்சனைகள், பொருளாதார மற்றும்
தொழில் பிரச்சனைகள் உள்பட பல்வேறு அன்றாடப் பிரச்சனைகளுக்கு நடுவில் பகுதியாக மட்டுமே காதல் வந்து போகி றது. திரைக்காதல் உருவாக்கும் மன எழுச்சி இதனால் நிஜத்தில் ஏற்படுவதில்லை.
திரையில் காதலர்கள் இணைய வேண் டும் என விரும்பியவர்கள் நிஜத்தில் அதை வெறுப்பதற்கு இதுவே காரணம். மேலும், மெக்கானிக்கின் காதலை தொகுத்தது போல் அவனது பொருளாதார, தொழில நெருக் கடிளை தொகுத்து அதையும் ஒரு படமாக எடுக்க இயலும். ஆக, பன்முகத்தன்மை கொண்ட ஒருவரின் வாழ்க்கையில் காதல் எனும் ஒரு அம்சத்தை மட்டும் தொகுத்து அளிப்பதை எப்படி யதார்த்தம் என கூற இயலும்?
மேலும், பள்ளிக்கு சீருடை அணிந்து செல்வது, திருமணத்திற்கு பட்டுச்சேலை அணி வது, நேர்முக தேர்வுக்கு டக்-இன செய்வது, காலையில் டிபன், மதியம் என்றால் அரிசி சோறு சாப்பிடுவது என நம் வாழ்க்கையில் கடைபிடிக்கும் அனைத்தும் நம் சுய விருப்பத்தில் செய்வதில்லை.
ஏற்கனவே யாரோ ஒருவர் அல்லது பலர் உருவாக்கி வைத்த நடைமுறையை பின்பற்றுகிறோம், அவ்வளவுதான்! சிஸ்ட த்தை பின்பற்றுவதை யதார்த்தம் என்று எப்படி கூற முடியும்? ஆக, நிஜ வாழ்க்கை யில் நாம் மேற்கொள்ளும் செயல்களை உண்ண்மயாகவே விரும்பி இயல்பாக, அதா வது யதார்த்தமாக நூறு சதவீதம் சுயத் தன்மையுடன் செய்கிறோமா என்பதே கேள்விக் குறி! இதில் நிஜவாழ்க்கையின் ஏதேனும் ஒரு அம்சத்தை மட்டும் தொகுத்தளிக்கும் சினிமாவை யதார்த்தம் என்ற பார்வையுடன் அணுகி விமர்சனம் செய்வது தவறாகவே ജ|ങ്ങഥullb.
தமிழ் சினிமா விமர்சனத்தின் மற்றொரு பலவீனம், துறை சார்ந்த அறிவின்மை. திரைக்கதை, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என பெரும் துறைகளை உள்ளடக்கியது
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 34

சினிமா. சினிமா விமர்சகர்கள் அனைவரும் இந்தத் துறைகள் குறித்த அடிப்படை அறி தல் கொண்டவர்களா என்றால், இல்லை! இதனால் மட்டையடியாக ஒளிப்பதிவு அபாரம் என்றோ படுமோசம் என்றோ ஒரே வரியில் முடித்துக் கொள்கிறார்கள்.
அத் துறையின் நுட்பங்களுக்குள் சென்று ஆராய்வதில்லை. இந்த பலவீனம் நிருபர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக இசையமைப்பாளரை பேட்டி காணச் செல் லும் நிருபர் இசை குறித்து, குறிப்பிட்ட இசை யமைப்பாளரின் இசை பங்களிப்பு குறித்து சிறிதளவாவது அறிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. அதனால், இசைகுறித்து கேட்காமல், நீங்கள் இரவில் இசையமைத்து விட்டு எப் போது தூங்கச்செல்வீர்கள்?', 'ஒரு பாடல் ஹிட்டாகவில்லையென்றால் உங்கள் மன நிலை எப்படியிருக்கும்? என இசைக்கு சம்பந்த மில்லாத சவசவ கேள்விகளால் பேட்டியை நிரப்புகிறார்கள். பிரபலங்களின் துறையை
விட அவர்களின் அந்தரங்க வாழ்க்கையில்
ஆர்வம் காட்டும் வாசகர்களும் இத்தகைய பேட் டி மற்றும் விமர்சனங்களால் திருப்தியடைந்து விடுகிறார்கள்.
இந்த ஆழல் மாற்றமடைய பார்வையா ளர்கள் தொடங்கி எழுத்தாளர்கள், பத்தி ரிக்கைகள், அரசு நிர்வாகம் உள்பட இயக் குனர்கள், தயாரிப்பாளர்கள் வரை அனை வரும் தத்தமது பொறுப்பு உணர்ந்து பங்க ளிப்பு செய்ய வேண்டியது அவசியம் முக்கி யமாக புகழுரைகள், ஜோடனைகள், பாடம் செய்யப்பட்ட பழைய விதிமுறைகள் தவிர் த்து, சினிமா என்பது தனித்த கலை வெளிப் பாடு என்ற புரிதலுடன் தீவிரமான விமர்ச னங்கள் உருவாக வேண்டும். நல்ல சினிமா உருவாக இதுவே சரியான ஒரே வழி!
இப்பதிவை பற்றி விஜய் என்பவர் தெரிவித்துள்ள கருத் தும் உங்கள் பார்வைக்கு.
இதனை மேட்டுக் குடியினரால் ஜீரணி த்துக் கொள்ள இயலவில்லை. அன்றைய எழுத்தாளர்களிடமும் பத்திரிக்கையாளர் களிடமும் இந்த மனநிலையே பிரதிபலித் தது. அவர்கள் சினிமா குறித்து எழுதுவதை அவமானமாக கருதி அதனை தவிர்த்து வந்தனர்.
அக்காலத்தில் எடுக்கப்பட்ட படங்களும் வெறும் பிதற்றல்களாகவே இருந்தன. மாய மந்திரங்கள் நிறைய மலிந்திருந்தன. பக்தி யின் பெயரால் மூடப்பழக்க வழக்கங்களும் திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தன என்பதை நண்பர் மறத்தல் கூடாது. அதே சமயம், அப்போதைய பத்திரிக்கை உலகம் நல்ல சிந்தனையாளர்களால் பண்பட்டு இருந் தது என்பதும் மறுப்பதற்கில்லை என்பதை நண்பர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகி றேன். அதனால் எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்திருந்ததில் ஆச்சர்யமல்லவே!
இருந்தும் இடைவேளை என்பது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி
விட்டது
இந்திய திரைப்படங்களில் இடைவேளை என்பது வியாபார நோக்கோடு அணுகப் படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதா வது, திரையரங்க கேன்டீன் வளர்ச்சியே இடைவேளையின் முக்கிய குறிக்கோள். இடைவேளை இல்லாத திரைப்படங்களை வினியோகஸ்தர்கள் வாங்க முன்வருவார் கள் என்று கூறமுடியாது, அதேபோல திரைய
ரங்க முதலாளிகள் அத்திரைப்படங்களைத்
தொடர்ந்து ஒட்டுவார்கள் என்றும் கூற (UPI9UJTg5).
நல்ல கட்டுரை, பாராட்டுக்கள். புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். ஆனால் அந்தகாலப் படங்களைப் போல மிக நீளமாக இருப்பது தவிர்க்க வேண் டியதாகக் கருதுகிறேன். இதைப் படிக்கும் போது நானும் நிறைய இடைவேளைகளை எடுக்க வேண்டி இருக்கிறது. இடைவேளை இல்லாமல் படிக்க வழி செய்யுங்கள்.
மல்லிகை ஏப்ரல் 2008 & 35

Page 20
கதைப் பாடல்கள் வெளிக் காடும் சமுதாயக்
கூறுகள்- ஒரு றேலோடம்
-முஃபீக் ஒமாஆறிeன்
கதையூைப் பாடலாகப் பாடுவது அல்லது பாடலில் கதை குறிப்பிடுவது கதைப் பாடல் என அழைக்கப்படுகிறது. இது ஒரு கதையாகவோ, அல்லது உட் கதைகள் கொண்ட ஒரு கூட்டுக் கதையாகவோ இருக்கலாம். நாட்டுப்புற இலக்கியத்தின் ஒரு கூறாகவே இக்கதைப் பாடல்கள் விளங்குகின்றமையால், நாட்டுப்புற இலக்கியக் கூறுகள் அனைத்தும், இதற்கும் உண்டு எனலாம். 'குறிப்பிட்டதொரு பண்பாட்டில் குறிப்பிட்டதொரு சூழலில் வாய் மொழியாக ஒரு பாடகனோ அல்லது ஒரு குழுவினரோ சேர்ந்து, நாட்டார் முன் எடுத்துரைத்து இசையுடன் நிகழ்த்தும் அல்லது நிகழ்த்திய ஒரு கதை தழுவிய பாடல் கதைப்பாடல் ஆகும்." என இக்கதைப் பாடலை நா. இராமச்சந்திரன் வரைவிலக்கணப்படுத்துகிறார்.
கதையின் இனிமையினை மிகைப்படுத்தப் பண்ணோடு பாடிய போது, கதைப் பாடல்கள் தோன்றிப் பின்னர், வரலாற்றுக் கதைப்பாடல்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றன என்றும், கூறப்படுகிறது. தமிழில் கதைப் பாடல்கள், பாட்டு, கதை, வில்லுப்பாட்டு, அம்மானை, கும்மி, மாலை, வாக்கியம், கீர்த்தனை, சண்டை, போர், படைப்போர், குறம், சிந்து, தூது, வெற்றி என்பன போன்ற பல்வேறு பெயர்களில் அதன் தன்மைகளை விளக்குவனவாக உள்ளன. இக்கதைப் பாடல்களுக்கு காமன் பாட்டு, இராமாயணப்பாட்டு, நல்லதங்காள் கதை, முத்துப் பட்டன் கதை, சிவகங்கைச் சரித்திரக் கும்மி, பவளக்கொடி மாலை, அல்லியரசாணி மாலை, குசலவ வாக்கியம், வீரப்பாண்டிக் கட்டபொம்பன் கதைப் பாடல், கபில சரித்திர கீர்த்தனை, கான்சாகிபு சண்டை, இரவிகுட்டிப் பிள்ளைப் ஃபோர், இந்திராயன் படைப்போர், மின்னொனியன் குறம், பூலுத் தேவன் சிந்து, கிருஷ்ணன் தூது, திவான் வெற்றி போன்ற வற்றினை உதாரணம் காட்டலாம்.
இவ்வாறான கதைப்பாடல்கள் அக்காலச் சமுதாயத்தையும், சமுதாயக் கூறுகளையும் பிரதிபலிப்பனவாய் அமைந்திருந்தன. இங்கு சமுதாயக் கூறு என்பது, அக்காலச் சமுதாய மக்களின் வாழ்வியலோடு தொடர்புபட்ட, அம்சங்களையே குறித்து நிற்கிறது. அதாவது, மனித நம்பிக்கைகள், செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் போன்றவற்றினை இக்கதைப் பாடல்கள் சித்திரித்துக் காட்டுகின்றன. இதனை ஒரு சில கதைப் பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, முத்துப்பட்டன் கதைப் பாடலானது சமுதாயக் கூறுகளுள் ஒன்றான சாதியைப் பாடுவதாக அமைந்துள்ளது. மேல்சாதி, கீழ்சாதி, என்ற சாதிப் பாகுபாடு மல்லிகை ஏப்ரல் 2008 & 36
 

சமுதாயத்தில் வேரூன்றிக் கிடந்ததை இக்கதைப் பாடல் படம் பிடித்துக் காட்டு கிறது. அன்றைய சமுதாய அமைப்பு சாதிக் கட்டுப்பாட்டைக் காத்தது. சமூக அமைப் பில் பிராமணர்கள் உயர்வாகவும், சக்கி லியர்கள் தாழ்வாகவும் கருதப்பட்டனர். இகைதைப் பாடலின் நாயகன் முத்துப் பட்டன் பிராமணர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் சக்கிலியக் குலப் பெண்களான பொம்மக்கா, நிம்மக்கா மேல் ஆசை கொண்டு தன் எண்ணத்தைத் தெரிவிக்க, அப்பெண்களோ,
"சாம்ப சிவநாதர் போலிருக்கிறீர் சுவாமி. சக்கிலிச்சி நாங்கள் தீண்டப் பொறுக்குமோ பூமி” என்கின்றனர். எனவே, இதன் மூலம் சக்கிலியப் பெண்கள், பிராம ணரை எவ்வாறு திருமணம் செய்ய முடியும் என்ற சாதிப் பாகுபாடு நிலவுவதனைக் as 600T6)TLD.
மேலும், முத்துப்பட்டன் மயங்கிக் கிடக் கும் போது, அவனை விழிப்புறச் செய்வதற் காகக் கீழ்ச் சாதியினனான வாலப் பகடை, தான் அவனைத் தீண்டாமல் தன் கைக ளைத் தட்டியும், கல்லால் எறிந்தும் மேற் கொள்ளும் முயற்சியும், இக்கதைப் பாடல் சாதிப்பாகுப்பாட்டைச் சித்திரிக்கிறது எனக் கூறலாம்.
மேலும், முத்துப்பட்டன் கீழ்ச்சாதிப் பெண்களான பொம்மக்கா, நிம்மக்காவைத் தன் அண்ணன்மார்களின் எதிர்ப்பையும் மீறி மணக்கிறான். மணநாளன்று முத்துப் பட்டனின் மாமனார் வாலப்பகடையின் ஆநிரைகளைக் கவர்ந்து செல்ல வந்த கள்வர்களுடன் போராடி உயிர் துறக்கி றான். இதனை அறிந்த மனைவியர் நிம்மக்கா, பொம்மக்கா ஆகிய இருவரும்
உடன் கட்டை ஏறுகின்றனர். இவ்வுடன் கட்டை ஏறும் வழக்கமும் அன்றைய சமு தாய மக்களின் பண்பாட்டினை எடுத்துரைக் கின்றது. எனவே, இதுவும் இக் கதைப் பாட லில் சமுதாயக் கூறுகள் வெளிப்படுத்தப்பட் டுள்ளன என்பதற்குரிய ஆதாரமாகும்.
மேலும், முத்துப்பட்டன் கதைப் பாட லின் மூலம் கீழச்சாதி இனத்தவரான சக் கிலியரின் திருமணச் சடங்குகள் விளக்கப் பட்டுள்ளன. சமுதாயக் கூறுகளுள் ஒன்றான திருமணச் சடங்கு இங்கு புலப்படுத்துவதும், இக்கதைப் பாடலில் சமுதாயக் கூறுகள் உள்ளன என்பதற்குத் தக்க சான்றாகும். அத்திமரம் நட்டு, ஆவரம் பூவினால் பந்த லிடுதல், மணப் பெண்ணுக்குக் கையில் வளையலும், கழுத்தில் பாசியும், காதில் ஒலையும், முகத்தில் மஞ்சளும், கண்ணுக்கு மையும், மூக்குக்கு மூக்குத்தியும் இட்டு அலங்கரித்தல், மணவறையில் மாங்கல்யத் துடன் நின்ற நாழியும் வைக்கப்படல், மண மக்கள் மாலை மாற்றும் போது, குலவையி டல், மணமகள் மணமகனுக்குச் சோறு பரி மாறுதல், திருமணத்தின் போது, கும்மியடித் தல், சாப்பாட்டிற்குப் பின், நத்தையும், கள்ளும், சாராயமும் வழங்குதல் என்பன சக்கிலியத் திருமணச் சடங்குகளாகும்.
மற்றுமொரு கதைப் பாடலான இராமப் பய்யன் கதைப் பாடல் மூலமாகவும், சமு தாயக் கூறுகளை, அக்கால பழக்க வழக் கங்கள் புலப்படுத்துவதனைக் காணலாம். போருக்குப் புறப்படும் முன் அரசனிடம் விடை பெற்றுத் தாம்பூலம், பரிசு முதலியன பெற்று ஊர்ப் பவனி செல்லுதல், தெய்வத்தை வழிபடுவதும் உண்டு, போருக்குப் புறப்பட முன் ஆடலும் பாடலும் நிகழ்வதுமுண்டு. இவை அக்காலச் சமுதாயப் பழக்க வழக்
மல்லிகை ஏப்ரல் 2008 * 37

Page 21
கங்களை எடுத்துக் காட்டுகின்றன. மேலும், படைகள் தங்குமிடத்தில் கூடாரமடித்துக் கொலுவிருத்தலும், போரில் தோற்றால் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதும் அக் கால வழக்கமாகும். இதனை இக் கதைப் பாடலில் குமரன் அழகனைத் தச்சனைக் கொண்டு முதுகுத் தோலை உரித்த நிகழ் வின் மூலமும், பெண்களையும் சிறைப்
பிடித்து மானபங்கம் செய்ததன் மூலமும்
அறியலாம். இவற்றோடு, பிராமணரைக் கொல்லுதல் பாவம் என்ற வழக்கும் பின் பற்றப்பட்டு வந்தமையினை, சடைக்கண் பிராமணனான இராமப்பய்யனைப் பற்றிக் கூறும் போது, "இராமப்பய்யனைக் கொல் லாமல் குடுமியில் தேங்காய் கட்டிக் கண் னைக் குத்திக் காட்டில் விடுவேன்" எனக் குறிப்பிடுகிறான்.
எனவே, இராடிப்பய்யன் கதைப் பாடலும் அக்கால மக்களின் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளத் துணை புரிகிறது. பொதுவாக, அனைத்துக் கதைப் பாடல்களையும் நாம் தொகுத்து நோக்கும் போது, சில சமுதாயக் கூறுகள், பழக்க வழக் கங்கள், மனித நம்பிக்கைகள் என்பன பல கதைப் பாடல்களில் ஒருங்கே அமைந்து மிளிர்வதனைக் காணலாம்,
கனவுகள் பலிக்குமென்று நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர். இந் நம்பிக்கை கதைப் பாடல்களிலும் இடம் பெற்றிருக் கின்றன. பவளக்கொடியாளின் கனவும், முத்துப்பட்டனும் அவன் மனைவியரும் கண்ட கனவும், வெள்ளையம்மாள் கனவும் பலிக்கின்றன. நாட்டுப்புற மக்கள் சகுனங் களில் நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ் கின்றனர். மேற் கூறப்பட்ட கதைப் பாடல் களிலும் இவ்வாறான சகுனங்கள் குறிப்
பிடப்படுகின்றன. குடித்த செம்பு தவறு தென் றாள்', 'ஆந்தை அலறி விழக் கண்டேன்’ என்பன மக்கள் சகுனங்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதற்குக் கதைப் பாடல்கள் தரும் சான்றாகும்.
அக்கால சமுதாயம் சாதிப்பாகுபாடு டைய சமுதாயமாகக் காணப்பட்டதனால் கீழ் சாதியினர் இழிவான தொழில்களைச் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டனர். இக்காலப் பகுதியில் உயர் சாதியினரிடம் காணப்பட்ட மூடப்பழக்க வழக்கமும் கீழ்ச் சாதியினரை வேரறுப்பதாகவே காணப்பட் டது. மூடநம்பிக்கை உள்ள மக்கள் கோயில் கட்டும் போதும், அணைகள், பாலங்கள் கட்டும் போதும், நரபலி கொடுப்பதுண்டு. இதற்குச் சக்கிலியர்களைப் பலியிட்டனர். இவ்வாறான மூட நம்பிக்கைகளைக் கதைப் பாடல்களிலும் காணலாம். புதையல் எடுக்கு முன் நரபலி கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை 'கான்சாகிபு சண்டை மூல மும் அறியலாம். இதே கதைப் பாடலி லேயே கண்ணுாறு கழித்தலில் உள்ள மூட நம்பிக்கையினை துருவன் எதிரில் திருஷ்டி சுத்தி என்பதன் மூலமும் அறியலாம்.
கட்டப் பொம்மன் கதைப் பாடல்களில், நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங் களை அறிந்து கொள்ளலாம். தெய்வங் களின் மீது ஆணையிடும் வழக்கம் மக்க ளுக்குண்டு. இதனை இக்கதைப் பாடலில் வரும்,
'உங்கள் சக்கம்மாள் மேலானை' என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். மேலும் சிறுதெய்வ வணக்கமும் தேரோட்ட மும் நடத்தப்படுவதுண்டு.
இது, சித்திரை மாதத்துப் பூரனையில் உனக்குத் தேரோட்டி வைப்பேன் கருப்ப ண்ணா என்பதனால் உணர்த்தப்படுகிறது.
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 38

"கன்னி கழியாத நம்பியானை வைத் துப் பூ வைத்துப் பார்க்கிற நேரத்திலே என்பதன் மூலம் பூக்கட்டி வைத்துப் பார்த் தல் என்ற வழக்கமும்,
'எண்ணி இருக்கிற நேரத்திலே ஒரு நச்சுக் கவுளிஅடித்திடவே என்பதன் மூலம் கவுளி குறிபார்த்தல் வழக்கமாகும்.
"சக்கம்மாள் தேவியைக் கட்டினாக் கால் நம்மன நானங்கே கோட்டை பிடிக் காலாமே" என்பதன் மூலம் மந்திரக் கட்டு வைக்கும் வழக்கமும் உண்டு. இவை அனைத்தும் நாட்டுப்புற மக்களின் சமு தாயக் கூறுகளான பழக்க வழக்கங்களைக் கதைப் பாடல்கள் மூலமாக வெளிப்படுத்து வதனைக் காணலாம். ጕ> ፡ நாட்டுப்புற மக்கள் மதுஅருந்தினர். இது அவர்களது நடத்தையியல் சார்ந்த ஒன்று. அத்தோடு வீட்டுக்கு வீடு வைப்பாட்டியை யும் வைத்துக் கொண்டனர். இது அவர்க ளது ஒழுக்கவியல் சார்ந்தது. இத்தகைய நடத்தை, ஒழுக்கவியல் சார்ந்த பழக்க வழக் கங்களை அவர்கள் கொண்டிருந்தமையி னால், இவை கதைப் பாடல்களிலும் பிரதி பலித்தமையில் வியப்பில்லை.
'அஞ்சு புட்டிச் சாராயம் அளந்து தருவேன்'
'வைப்பாட்டி வீட்டிலே நித்திரை செய் வான். மன்னனும் வெள்ளையத் தேவன் தான்' என்பவை கட்டப் பொம்மன் கதைப் பாடல்களில் மக்கள் பின் பற்றி ஒழுகு கின்ற செயற்பாடுகளைக் குறிக்கின்றன.
இப்படி கதைப் பாடல்கள் ஒவ்வொன்
றையும் தொகுத்து நோக்கும் போது, அவை ஒவ்வொன்றும் சமுதாயக் கூறுகளை
வெளிப்படுத்தி நிற்பனவாகவே புலப்படு
கின்றன எனலாம். ஒரு நாட்டில் வழங்கும் கதைப் பாடல்கள் அந்த நாட்டின் சட்டங் களைவிட முக்கியமானவை என்று ஆண்ட்ரூ பிளச்சர் குறிப்பிடுவதற்கும், கதைப் பாடல்க ளில் சமுதாயக் கூறுகள், மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள் என்பன ஊடுருவி நிற்பதே காரணம் என லாம். எனவே தான் போலும், 'கதைப் பாடல் கள் நாட்டுப்புற மக்களின் வீர காவியங்கள்' என அழ்ைக்கப்படுகின்றன.
- A R - R - HAR DREssERs
89, Church Road, Mattakuliya, Colombo - 15. Te:0602133791
N முற்றிலும் குளிருட்டப் பெற்ற சலூன்
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 39

Page 22
எது சரியான இலக்கியப் போக்கு? என்பது பற்றித் தொன்று தொட்டு இன்று வரை சர்ச்சைக்கும், விவாதத்துக்கும் உட்பட்ட ஒன்றாகவே இருந்து வருகின்ற போதிலும், உலகளாவிய ரீதியில் காலத்துக்குக் காலம் புதிய இலக்கியப் போக்குகள் மிளிர்ந்த வண்ணமே இருக்கின்றன. இதைப் படைப்பாளியோ, வாசகனோ, ஊடகத்துறையோ மட்டும் தீர்மானிப்பதில்லை. இதற்கும் அப்பால் சமூகப் பொருளாதார, அரசியல் சூழல்களும் அவற்றோடு பின்னிப் பிணைந்துள்ள விஞ்ஞான மற்றும் பல்துறை வளர்ச்சி, வீழ்ச்சிப் போக்குகளும் இதைத் தீர்மானிப்பதில் மறைமுகமாக ஆனால், வெகு ஆழமாகப் பங்காற்றி வருகின்றன. அவ்வகையில், இன்று பிந்திய இலக்கியப் போக்காகப் பின்னைய மனிதத்துவ இலக்கியம் எடுத்தாளப்படுகிறது. மேற்கத்தைய உலகில் புதிய இலக்கியப் போக்கான 'பின் மனிதத்துவ இலக்கியம் பரவலாகி வருவதுடன், வாசகர்களால் விரும்பப்படுகிறது. பொதுவுடமை நாடுகளின் வீழ்ச்சியும் இதற்குக் காரணம்.
வளர்ச்சியடைந்து வரும் பின் மனிதத்துவ இலக்கியம்
- ச.முருகானந்தன்
எமது தமிழ் இலக்கியச் சூழலில் நவீன கலை இலக்கிய உருவாக்கங்கள் உருவாக ஆரம்பித்த பின்னர், பாண்டித்திய இலக்கியம், நச்சிலக்கியம், மலின இலக்கியம், இரசனை இலக்கியம் என்று மாறிக் கொண்டு வந்த போக்குகள், மார்க்சிய இலக்கியப் போக்கை எட் டிய பின்னர், பயன்பாடு மிக்க ஒர் இலக்கியப் போக்காக மாறியது. சமூக பிரச்சனைகளை யும், தேசிய, சர்வதேச பிரச்சினைகளையும் அலசும் வகையில் இவ் இலக்கியப் போக்குப் பரிணமித்தது. காலனித்துவ, வர்க்க, நிலமானிய சமூகக் கட்டமைப்பு ஏற்படுத்தியிருந்த பேதங்களை நீக்க வர்க்க ரீதியிலான போராட்டத்தை முன்வைத்து, சமத்துவமான ஓர் உலகைக் கட்டியமைக்க இவ் இலக்கியப் போக்கு முன்னெடுத்தது. சமூக மட்டத்தில் சாதீயம், வர்க்கம் இவற்றுடன் தேசிய ரீதியில் மொழி, இனம், மதம், ஏகாதிபத்தியம், சர்வதேச மட்டத்தில் மேற்கூறிய அனைத்தையும் உள்ளடக்கியும், பாசிசத்திற்கு எதிராகவும், மிக நீண்ட காலம் இவ் இலக்கியப் போக்கு எழுத்தாளர்களாலும், வாசகர்களாலும் விரும்பிப் படைக்கப்பட்டும், படிக்கப்பட்டும் வந்தன.
இலக்கிய உலகில் ஒரு கால கட்டத்தில் பெருமளவு மார்க்சியப் படைப்புக்கள் மிக நீண்ட காலம், ஏற்றுக் கொள்ளப்பட்ட உந்நத படைப்புக்களாகவும், அடிமட்ட ஒடுக்கப்பட்ட சகல தரப்பினரின் எழுச்சிக்கும், உய்வுக்கும், அதற்கான போராட்ட வழிகளுக்கும் வழி கூறுவ னவாகவும், பதிவு செய்வ்னவாகவும் வெளிவந்தன. ஓர் இனத்தின் முதல் அடையாளம் மொழியே. அதிலிருந்தே செம்மை மிக்க இலக்கண மொழியாக்கம் உருவானது என்பதை
மல்லிகை ஏப்ரல் 2008 40
 
 
 
 
 
 
 
 

வலியுறுத்தி, இலக்கியப் படைப்புக்களில் பேச்சு ம்ொழி பயன்படுத்தப்பட ஆரம்பித்த காலமும் இதுவே ஆகும். இம்மொழிப் பிர யோகமானது பாண்டித்தியம் பெற்றவர் களாலும், முதலாளித்துவவாதிகளாலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டன. எனினும், மார்க்சிய விமர்ச கர்களினால், இம் மொழி இலக்கியப் படைப் புக்களில் நிரந்தர இடத்தைப் பெற்றது. அத்துடன், இலக்கியம் என்பது நடுத்தர, மேற்தட்டு வர்க்கத்தவர்களுக்கு மாத்திரமே என்ற மாயையும் தகர்ந்தது.
எனினும், கடந்த நூற்றாண்டின் பிற் பகுதியிலிருந்து மார்க்சியப் படைப்புகள் வலுத்த எதிர் விமர்சனங்களுக்கு இலக்கா கின. கலைத்துவ வரட்சி என ஒரு சாராரும், மார்க்சியம் மாற்ற முடியாத கோட்பாடு அல்ல என இன்னொரு சாராரும் எதிர்க் குரல் எழுப்பினார்கள்.
இதனால், கலைத்துவத்தை முதன் மைப்படுத்தும் நவீனத்துவம் முனைப்புப் பெற ஆரம்பித்தது. கலை கலைக்காகவே, இரசிப்பதற்காகவே என்ற கோட்பாடு பிசு பிசுத்துப் போக, வெகு விரைவிலேயே பின் நவீனத்துவம் இலக்கியப் போக்கில் ஆட்சி செலுத்த ஆரம்பித்தது. கலாரசனையை ஏற் படுத்துவதோடு, மனிதனின் அறிவார்ந்த தளப் புலன்களை வாசிப்பின் மூலம் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்ட பின் நவீனத்துவம் எமது தேசத்தில் முனைப்புப் பெறவில்லை. ஏற்கனவே, இருந்து வருகின்ற மார்க்சீய நவீனத்துவ ரசனைப் போக்கிலிருந்து வாச கர்களைத் திசை திருப்பி வெற்றி கொள்வ திலும், படைப்பாளிகளின் சொற் பிரயோகங் கள் மற்றும் கட்டமைப்புக் கடினங்களால் வாசகர்கள் மத்தியில் ஊடுருவி பிரபல்யம்
பெறுவதிலும் தவறிவிட்டதென்றே கூற வேண்டும். பின் நவீனத்துவ படைப்பாளி களாக வெகு சிலரே தம்மை நிலை நிறுத் திக் கொண்ட அதேவேளை, ஏனைய படைப் புக்களுடன் ஒருசில பின் நவீனத்துவப் படைப்புக்களை உருவாக்கும் எழுத்தாளர் களையே தரிசிக்க முடிகிறது. குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருப்ப தாகக் கிண்டல் செய்யப்பட்ட மார்க்சிய நவீ னத்துவப் படைப்புகளே இன்றும் எமது இலக்கியப் பரப்பில் ஜனரஞ்சகம் போல் மிளிர்கின்றன. பின் நவீனத்துவ எழுத்துக் களை விரும்பிப் படிக்கும் ஒரு மேலோர் வட்டத்தையே காண முடிகிறது. அதாவது படித்த தகைமை சார் வட்டம், மக்கள் மத்தி யில் அதிகம் பரவலடையாததனால், பின் நவீனத்துவப் போக்கானது உரிய தளப் புலனை எட்டவும், புதிய கோட்பாடு எதை யும் உருவாக்கவும் தவறி விட்டது. யதார்த் தப் பண்புகளை மீறிய பின் நவீனத்துவப் படைப்புகள் புரியவில்லை என்ற அபிப்பிரா யம் வெகுஜன வாசகர்களிடம் மட்டுமன்றி, நடுத்தர வாசகர்களிடமும், படைப்பாளிக ளிடமும் கூட இருந்து வருகிறது.
பின் நவீனத்துவப் படைப்புகளான மாய
யதார்த்த வகைப் படைப்புகள் பற்றி எமது வாசகர்களிடையே இருவிதமான கருத்து நிலைப்பாட்டை அவதானிக்க முடிகிறது. ஒன்று பின் நவீனத்துவம் இலக்கியப் பரப் பில் புதுமைகள் படைக்கின்றது என்பது, இன்னொன்று புரியாது எழுதுகிறார்கள் என்பது. புரியாத மொழியாடல், புரியாத உத்தி, புரியாத உள்ளடக்கம் என்பவற் றால், வாசகனை அலைக்களித்து, வாசக னைச் சோர்வடைய வைக்கிறார்கள் என் பது இரண்டாவது வகையினரின் குற்றச் சாட்டாக இருக்கிறது. இதனால், இப் படைப்
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 41

Page 23
புகளின் உள்நோக்கான தீவிர அநுபவத்தை "
எண்ணிக்கையில் பெரும்பாலான வாசகர்க ளுக்குத் தர தவறிவிடுகின்றது. இதற்கு, இவை பற்றிய விமர்சனப் போதாமை எம் மத்தியில் இருப்பதையும் ஒரு காரணமாகக் கூறுகிறார்கள். மனிதனின் இயல்பான வாழ்வியல் யதார்த்தத்திலிருந்து பிரிந்து, உச்ச ரசனையை அடையத்தான் வேண் டுமா? இவ்வாறான ரசனையை ஏற்கனவே உள்ள படைப்புக்களில் பெறுகிறோம் தானே? என இப்பிரிவினர் வாதிடுகின்றனர். இதனால் தான் தீவிர வாசிப்புக்கு உரியன வான, மொழியின் பன்முக அர்த்தப் பரிமா ணங்களைத் தொடும் இதன் இலக்கும் அறிவார்ந்த தளப் புலனை எட்டி உசுப்பும் உள்நோக்கும் பிசுறடைந்து போயுள்ளது. வாசகர்களின் எண்ணிக்கையையும், வாசிப் புக்கான நேர ஒதுக்கீடும் கூட, குறுங்கி வரு கின்ற இயந்திர மியப்பட்ட உலகில், இலத் திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங் களைப் பின்தள்ளி வருவதுமான இன்றைய நவ உலகில் வாசிப்பில் இலகுத் தன்மை அவசியமானதாகிறது.
நாம் எங்கே செல்கிறோம் என்பதே புரியாத ஒரு அதிவேக மாற்றங்களைக் கொண்ட விஞ்ஞான யுகத்தில் இலக்கியப் போக்கு எவ்வாறு இருக்க வேண்டுமென்ப தும் கேள்விக்குறி தான். அத்துடன் உலகம் கிராமமாகிவிட்ட இன்றைய கணினி யுகத் தில், செய்மதிகளே பலவற்றை நகர்த்து கின்ற வேளையில், ஒரு குறிப்பிட்ட போக்கு நிரந்தரிக்கும் என்றில்லை என்பது கலை இலக்கியப் புனைவுகளுக்கும் பொருந்தும் தான். கோடிக் கணக்கான பிரதிகளை விற்பனைப் பண்டமாக்கி பில்லியன்களில் மிதக்கும் ‘ஹரி பொட்டர் போன்றவர்கள் மத்தியில், எம் தேச ஐநூறு பிரதிகளை அழ
குக்காக அடுக்கி வைத்திருக்கும் சாமன்ய னராகிப் போய்க் கடனிலும், வறுமையிலும் மிதக்கும் எழுத்தாளர்கள் மத்தியிலிருந்து வேகமான புனைவு மாற்றத்தை எங்ங்ணம் எதிர்பார்க்க முடியும்? மல்லிகை மாற்ற மின்றி அப்படியே வெளிவருகின்றதென சலிப்பவருமுண்டு; மாற்றமுறாமல் வரு வதே சிறப்பு என்று கூறுவோரும் உண்டு. எனினும், மல்லிகைப் படைப்புக்களில் நிறையவே மாற்றங்களையும், புதிய விட யங்களையும் தரிசிக்க முடிகின்றது.
சர்வதேச மட்டத்தில் ஏற்படும் மாற்றங் கள் பன்முகத் தன்மை கொண்டவையாக உள்ளன. ஒன்று விஞ்ஞான மாற்றங்கள். இதுவே இன்று உலகை ஆட்டுவிக்கும் இறைவனாக இருக்கின்றதென்று சொன் னாலும் தப்பில்லை! சமூக அறிவியல் நிலைப்பட்ட, விஞ்ஞானத்திற்குப் புறம்பான மாற்றங்கள் அல்லது வளர்ச்சிகளாகத் தொடர்பும், முகாமைத்துவமும் அமைகின் றன. இன்று தொடர்பாடல் என்பது உள் ளங்கைக்குள் உலகத்தைக் கொண்டு வந்து விட்டது. செய்மதிகள், விண்மதி யையே கேள்விக்குறியாக்குகின்றன. பொது உடமையின் வீழ்ச்சியும், முதலாளித்து வத்தின் வளர்ச்சியும் இன்று எழுத்துருவாக் கங்களையும் வியாபாரப் பண்டமாக்கி விட்டது. இதனால், இலக்கியப் போக்குக ளில் பின்னடைவும், முன்னேற்றமுமான நகர்வுகள் சமாந்தரமாகப் பயணிக்கின்றன. உலகத்தைப் பார்க்க வைத்ததில் முதன்மை பெற்றிருந்த அச்சுருவாக்கங்களை விட, இன்று இலத்திரனியல் ஊடகங்கள் முதன்மை பெற்று விட்டன. நூலகத்தைத் தேடி, பிற ரோடு கலந்துரையாடி பெற்ற விடயங்கள் யாவும் இன்று எமது அறையுள் எமது கண்ணுக்கு முன்னர் வந்துவிட்டன.
மல்லிகை ஏப்ரல் 2008 * 42

இந்தப் பின்னணியில் இன்று புதிதாகப் பேசப்படும் இலக்கியப் போக்குத் தான் பின் மனிதத்துவ இலக்கியம்'. இதன் வெளிப் பாடு கால் நூற்றாண்டுக்கு முன்னரே தரிசனமாக ஆரம்பித்த போதிலும், பின் நவீ னத்துவ, மார்க்சிய போக்குகளினைப் பின் தள்ளி, இவ்விலக்கியப் போக்கானது துரித வளர்ச்சியடையாமலிருந்தது. எனினும், புதிய நூற்றாண்டில் ஏற்பட்டு வரும் விஞ் ஞான, வணிகப் பொருளாதார, தொடர் பாடல் மாற்றங்கள் இன்று பின் மனிதத்துவ இலக்கியப் போக்கை முன் நகர்த்தி முதன் மையை எட்டும் நிலைக்கும் கொண்டு வந்து ள்ளது எனலாம். எம் நாட்டில் இன்னமும் இது அறிப்படாமலிருக்கிறது.
பின் மனிதத்துவத்தை விளக்கிட வரும் சபா ஜெயராஜாவின் கூற்றுப்படி, பின் மனி தத்துவத்தை விளக்குவதற்கு பொறியுடல்" என்ற எண்ணக்கரு பயன்படுத்தப்படுகின் றது. மனித உடலும், மனித உடலோடு இணைக்கப்பட்டு வருகின்ற செயற்கை உறுப்புகளும் இணைந்து செயற்படும் சம கால உலக நகர்வில், பின் நவீனத்துவத் தின் தேக்கத்துடன், பின்னைய மனிதத்துவ இலக்கியம் வளர்ச்சியடையத் தொடங்கி யது. என்பதை அறிய முடிகின்றது. எமது தமிழ் இலக்கியப் பரப்பில் உதிரிகளாக இப்போது தான் இவ்வாறான படைப்புக் களைக் காண முடிகிறது. எனினும், மிக அரிதாகவே இது வெளிக்கு வருகின்றது.
நடைமுறைச் சமூகத்தால் கட்டமைப்புச் செய்யப்பட்ட விடயங்களையே நமது எழுத் தாளர்கள் மீளுருவாக்கம் செய்கின்றார்கள். இதற்குச் சான்றாக அன்றைய சாதீய, முற் போக்கு மற்றும் மூடக் கொள்கைகளுக்கு எதிரான படைப்புகள் முதல் இன்றைய
போர்க்காலப் படைப்புகள் வரை, புலம் பெயர் படைப்புகள் கூட, அமைகின்றன. சமூகத்தை சமகாலத்தில் உறுத்தும், வருத்தும் பிரச்சினைகளை ஆக்க இலக்கி யத்தில் கொண்டு வரும் போது, அதன் நோக்கு உந்நதமாயினும், புற அழுத்தங் களால் ஏற்படும் பூசி மெழுகுதல் தவிர்க்க முடியாத தரிசனமாக இருப்பதால், இதன் பயன்பாடானது செயலூக்கம் குன்றிட் போகிறது. பக்கச் சார்பு எழுத்து உருவாக் கங்கள் திசைகளைத் தவறாகத் திருப்பி விடும் நிலையும் உண்டு. ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணிய மேம்பாடு கூட, ஆண் மொழியில், ஆணாதிக்கப் பார்வை யில் சரியான இலக்கை எட்டுதலை எட்டிப் போக வைக்கிறது.
இன்னொரு புறம் அழகியல் பற்றிய பார் வையும், கேள்வியும் கூட, வாசகர்களி டையே மாறுபட்ட ரசனை வெளிப்பாட்டைக் காட்டி நிற்கிறது. நடைமுறை வாசிப்பு மாயையிலிருந்து பரந்துபட்ட வாசகர்களை மீட்டெடுத்தல் என்பது காலத்தின் தேவை எனினும், வார சஞ்சிகைகளும், போலி ஜன ரஞ்சகத் தன்மையிலான படைப்புகளும் இம் மீட்டெடுப்பை அசாத்தியமாக்கி விடுகின் றன. இதில் இலக்கியச் சஞ்சிகைகளின் பங்கிலும் போதாமையும், பரவலின்மையும் தெரிகிறது. பரந்துபட்ட வாசகர் வட்டத் தினை எட்டாத வரையில், இச்சிறு சஞ்சிகை களால் சிறப்பாக வாசிப்பு மாற்றங்களைக் கொண்டு வர முடியாதிருக்கிறது. சிறு சஞ்சிகைகளின் குறுகிய கால மரணிப்பு, ஒழுங்கற்ற வரவும் வாசகனிடத்தில் எட்டு தலில் சிரமங்களை எதிர் நோக்குகிறது, கணையாழி, தீபம், தாமரை போன்ற தமிழ் சஞ்சிகைகள் கூட, அஸ்தமித்து விட்டன. முன்னரும், தற்பொழுதும், இதற்கு உதார
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 43

Page 24
ணமாகத் தமிழகத்தில் மட்டுமன்றி, நம் நாட்டிலும் பல சஞ்சிகைகளைக் கூறலாம். உரிய இலக்கை எட்ட முன்னர், இவை மரணிப்பது சாபக்கேடே பார்த்த சாரதிக்குப் பின்னர் வல்லிக்கண்ணனால் தீபத்தைத் தொடர முடியாத நிலை போன்று மல்லிகை க்கும், ஏற்படக் கூடாது என்பது இலக்கிய ஆர்வலர்களின் வேணவாகும்.
இன்றைய வணிக உலகில் கலைப் படைப்பு என்பதுவும் ஓர் உற்பத்திப் பொருள் என்ற வடித்தை எடுக்கும் பொழுது, வணிக
நோக்கம் கொண்டதாகிவிடும் போது, எழு
த்தும் பல பல தலையீடுகளுக்கு உள்ளா கின்றது. விஞ்ஞான இலத்திரனியல் வளர்ச் சியுடன் பயணிக்கும் நவீன நுகர்ச்சிக் கோலங்களும், தீவிர உலகமயமாதலும் நடை முறையில் ஆதிக்கம் செலுத்தி, இன்றைய இலக்கியப் போக்குகளைப்
பின்தள்ளி, தனக்கு ஏற்றதான ஓர் இலக் கியப் போக்கை மறைமுகமாக ஏற்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில் சுயமாக மிளிர்ந்து வரும், முதன்மையுறும், ஆர்முடு கலுடன் நகரும் இலக்கியப் போக்காகப் பின் மனிதத்துவ இலக்கியம் இனம் காணப் பட்டுள்ளது.
மாயை யதார்த்தவாதத்திற்கு மேலே ஒரு படி செல்லும் புதிய விஞ்ஞானப் பாங்கான இவ் இலக்கியப் போக்கானது, ரோபோ, கணினி கதாபாத்திரங்களைக் கூட பின் தள்ளி, மனிதனும் சடப் பொருளும் இணைந்ததான புத்துலகப் படைப்புகளை வெளிக் கொணர்வதன் மூலம் வாசகர்கள் மத்தியில் பரவலாகி வருகின்றமையே இன் றைய நிலை என்பதனை மறுப்பதற்கில்லை. சரி பிழையைக் காலம் தீர்மானிக்கும்.
கவி தயாரிக்க முனைந்துள்ளார்.
னத்தில் கொள்ள வேண்டும்.
కాచిగిanండి. ந்ெஜிஇேை <ලO Uලතාවූර්AJC- බ්‍රථමුරනර්
LDல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக
ஈழத்து இலக்கியத்துறைக்கும், பொதுவாகச் சமூகத்துறைக்கும் ஆற்றியுள்ள ஆக்க பூர்வமான செயற்பாடுகள் சம்பந்தமான புகைப்பட ஆவணமொன்றைக் கவிஞர் மேமன்
ஆசிரியர் ஜீவா சம்பந்தப்பட்ட புகைப்படங்களோ, தகவல்களோ கைவசம் வைத்திருப்போர் மல்லிகை முகவரி மூலம் தந்துதவினால், சம்பந்தப்பட்ட ஆவ ணங்கள் கணினியில் பதிவாக்கம் செய்யப்பட்டதன் பின்னர், திரும்ப அவரவரிடம் ஒப் படைக்கப்படும் என உறுதி கூறுகின்றோம். தயவு செய்து ரஸிகர்கள் இதைக் கவ
l,
- ஆசிரியர்
மல்லிகை ஏப்ரல் 2008 & 44

vpలaడీ 3.cgNち
- රෑ_ෙහිදිණි”හී ශ්‍රීෆෙ
LDகேஸ்வரி ரீச்சர் நிதானமிழந்தவர் போலக் காணப்பட்டார். சோகம் முகமெங்கும் அப்பிக் கொண்டு, வெகு துலாம்பரமாக வெளியே தெரியவும் தெரிந்தது. அவரது இயல்புக்கு நேர்மாறாகவே அவர் அப்பொழுது காட்சி தந்தார்.
கரும்பலகைக்கு வெகு அணித்தாக உள்ள வகுப்பு மேசைப் பக்கமாக உள்ள ஆசனத்தில் குந்தினார். இது மூன்றாவது தடவை.
மேசை லாச்சியைச் சத்தமிடத் திறந்து உள்ளே நோட்டமிட்டார். அந்த உண்மை அவரை மீண்டும் அவரது மன நிலையை பிறழ வைத்து விட்டது.
கொஞ்சம் யோசித்தார். தனது பதட்ட நிலையைச் சமன்படுத்துவதற்காக, வேறு சிந்தனைகளில் படர விட்டார்.
ஆழ்மனது திரும்பத் திரும்ப அந்த இழப்பைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.
எதிர்ச் சுவரில் யேசுபாலன் செம்மறி ஆட்டுக் குட்டியை அரவணைத்த வண்ணம் புன்னகை பூத்துச் சிரிக்கும் படமொன்று கண்களில் தட்டுப்பட்டது.
அது கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். கீழ் வகுப்பு மாணவர்கள் கல்வி பயிலும் கலவன்
FT66),
ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பொறுப்பெடுத்து வகுப்பு நடத்தி வந்தார் மகேஸ் ரீச்சர்.
ஒழுங்கு தவறா மாணவ, மாணவியர்.
அங்கு கற்கும் பெரும்பாலான மாணவர்கள் நகரின் சுற்றுப் புறக் குடிசை வாழ் உழைப் பாளிகளின் குழந்தைகள்.
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 45

Page 25
குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் அத்தனை பேர்களினது கல் விச் சிரத்தையில் தனிக் கவனம் செலு த்தி வந்தவர் தான், ரீச்சர் மகேஸ்வரி.
இந்த இழப்பு அவரது நெஞ்சைப் பெரிதும் பாதித்து விட்டது. தான், தனது குழந்தைகளைப் போலக் கருதி, கல்வி கற்பிக்கும் மாணவர்களில் ஒருவர் இந் தச் செயலைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகமற அவர் நம்பினார்.
அந்த மனக் காயத்திலிருந்து உள்ளே மெல்ல மெல்ல இரத்தம் கசிந்து கொண் டிருந்ததை அவர் உணர்ந்தார்.
மீண்டும் யேசுபாலன் உருவத்தையே ஒருகணம் உற்றுப் பார்த்தார்.
காலை இடைவேளை நேரத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்திருக்க வேண்டும். வகுப்பு ஒய்வு விடும் நேரம் வரை அவர் அங்கே தான் இருந்தார். அந்தச் சமயம் இந்த இழப்பு நடந்திருக்க முடியாது.
'ஆர் இதைத் திருடியிருப்பார்கள்? என இரண்டொரு தடவை தனக்குள் தானே தீர விசாரித்துப் பார்த்துக் கொண்
LT.
யாருடைய முகமோ, பெயரோ அவரது
நெஞ்சில் உடனே தட்டுப்படவேயில்லை.
வழமை போல, எல்லாவற்றையும் மறந்து சாதாரணமாக இருக்கத் தெண் டிப்போமே! என முயன்று பார்த்தார்.
முடியவில்லை. முகம் காட்டிக் கொடுக்கிறது.
சொல்லப் போனால், களவு போன பணம் கூட அவரது சொந்தப் பணமுமல்ல. சிறிய தாயார் திரேசம்மா கடன்திருநாட் களுக்காகச் சுவாமியாரிடம் சேர்ப்பித்து விடும்படி கொடுத்த பணம்,
அவர் காலையில் பள்ளிக்கூடம் வந்த சமயம் பாதுகாப்புக் கருதி மேசை லாச் சிக்குள் பத்திரப்படுத்தி வைத்த பண நோட்டு.
பூட்டவில்லை. மாணவர்கள் மீது அத்தனை கரிசனம். நம்பிக்கை.
களவு போனது கூடப் பெரிய தொகை யல்ல. பத்தே பத்து ரூபா நோட்டு ஒன்று.
பண நோட்டுத் தொகையின் பெறுமதி யைப் பற்றி மகேஸ்வரி ரீச்சர் துளி கூடக் கவலைப் படவில்லை.
தனது நம்பிக்கை ஆளுமையின் சிதைவு கண்டே அவர் கலங்கிப் போய் sé "rrfr.
தான் அணுவணுவாகத் தயாரிக்கும் மாணவர்களைப் பற்றியே உளமாரக்
கவலைப்பட்டார்.
‘இனி யாரை நம்புவது?- ஆரை விசாரிப்பது?
பள்ளிக்கூடத்திற்கு வெளியே புல் மேய்ந்து கொண்டிருந்த மாடொன்று
மல்லிகை ஏப்ரல் 2008 率 46

தாகம் காரணமாகவோ அல்லது கன்றை நினைத்தோ என்னமோ 'அம்மா!" எனச் சத்தமிட்டுக் குரல் கொடுத்தது.
தொடர்ந்தும் வகுப்பறையில் இத்த கைய பதட்ட நிலை தன்னுள் தொடர் வதை ரீச்சர் மகேஸ்வரி விரும்பவில்லை.
பார்க்கப் போனால், இது முழுப் பள்ளிக்கூடத்தின் ஒழுக்க நிலை சம்பந் தப்பட்ட விவகாரமுமல்ல.
பணத்தைப் பறி கொடுத்தவர் தான். பணத்தைத் திருடிக் கொண்டவர் ஒரு மாணவர். இருவர் சம்பந்தப்பட்ட இந்த மன உள் நெருக்கடியை எப்படித் தீர்ப் பது என யோசித்துக் கொண்டே கதிரை யில் இருந்து எழுந்தார். மேசை முனை யில் எப்போதும் வீற்றிருக்கும் பிரம்பைக் கையில் எடுத்துக் கொண்டார். மெதுவாக நடந்து வந்து வகுப்பின் நடுப்பகுதிக்கு வந்தார். பிரம்பு கையில் ஆடிக் கொண் டேயிருந்தது.
இடப் பக்கம் பெண்கள் பகுதி, வலப் பக்கம் ஆண்களுக்கானது.
வகுப்பின் நடுப்பகுதிக்கு வந்து நின்ற பின்னர், திரும்பிச் சுவரைப் பார்த்தார். மாணவர்களும் அவர் நோட்டமிட்டதைக் கவனித்துக் கொண்டனர். «k.
யேசு கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து செல்கிறார்.
"என்னுடைய நகமும் சதையுமாகத் தான் இதுவரையும் நான் உங்களைக் கருதிப் படிப்பித்து வந்திருக்கிறன்! ஒரு தடவை கூட, பிரம்பெடுத்து எந்தத் தவ
றுக்கும் நானுங்களை அடிச்சதில்லை. இன்று ஒரு சின்னக் களவு நடந்து போய் விட்டது. லாச்சிக்குள்ளை இருந்து இன்ர வெல் நேரத்திலை பத்து ரூபாத்தாள் காணாமல் போச்சுது! அது கூட என் சொந்தப் பணமல்ல. கோயிலுக்குக் கட் டத் தந்த காணிக்கைக் காசு. ஆர் எடுத்தி னம் எண்டு ஆண்டவர் சாட்சியாக எனக் குத் தெரியாது. சத்தியமா உங்களிலை ஒருத்தர் தான் அதை எடுத்திருப்பியள். பத்து நிமிசம் இடைவெளி தாறன். தவறு செய்தவர் மெல்ல என் முன் வந்து ஒத்துக் கொண்டால் நல்லது!"
மெல்லப் பூ உதிருவது போல, வார்த் தைகள் ரீச்சரின் வாயிலிருந்து உதிர்ந்து கொண்டேயிருந்தன.
வகுப்பே அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டது.
மகேஸ் ரீச்சர் வகுப்பின் இரண்டு பக்கப் பகுதியையும் வெகு ஆழமான பார்வையுடன் வெறித்து நோக்கிய வண் ணம் மெளனமாக நின்றார். " لـ
நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டேயிருந்தது.
ஊஹ0ம் ஒரு அசுமாத்தத்தையும் காணவில்லை. நேரம் ஊர்ந்து சென்றது.
மெளன்ம் எங்கும் வியாபித்திருந்தது.
மாணவ- மாணவியர் மத்தியில் ஒரே பரபரப்பு. கண்களால் சாடை காட்டிக் கதைத்துக் கொண்டனரே தவிர, தவறு செய்தவர் முன் வந்து தவறை ஒத்துக் கொள்ளக் கூடியதாகவும் தெரியவில்லை.
மல்லிகை ஏப்ரல் 2008 & 47

Page 26
திரும்பவும் திரும்பி யேசு பிரான் சிலுவை சுமக்கும் காட்சியை நோட்டமிட் டார், மகேஸ்வரி ரீச்சர்.
ஆழ்ந்த பெருமூச்சொன்று அவரிடமி ருந்து வெளி வந்தது.
மீண்டும் வெளியே மேய்ந்து கொண்டி ருந்த அந்தப் பசு 'அம்மா’ எனச் சத்த மிட்டுக் குரல் கொடுத்தது.
இரண்டு வரிசை மாணவ மாணவி களையும் ஆழ ஊன்றிக் கவனித்து விட்டு, பிரம்பைக் கையிலெடுத்து சிக்கா ராக அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, தனது பலம் அத்தனையையும் வலது கைக்குத் திரட்டி கொடுத்தபடி, தனக்குத் தானே அப் பிரம்பினால் இரண்டு மூன்று தடவை விசுறு விசுறென்று விளாசித் தள்ளினார், மகேஸ்வரி ஆசிரியை.
வகுப்பறையே ஒருகணம் ஸ்தம்பித் துப் போய்விட்டது.
மூன்றாவது விளாசலை விசுறும் பொழுது, இரண்டாவது வரிசையில் வீற்றிருந்த மாணவன் ஒருவன் எழுந்து நின்றபடியே "அம்மா” என ஒலமிட்டான்.
- அட சங்கீதனா? என மகேஸ்வரி ரீச்சரின் உதடுகள் முணுமுணுத்தன. அவன் மீது தனி அபிமானம் ரீச்சருக்கு. வகுப்பில் முதல் மாணவன். அத்துடன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். அப்பன் ஒரு கூலித் தொழிலாளி.
தொடர்ந்து, 'அம்மா! அம்மா!' என அலறியபடியே பாய்ந்தோடி வந்து ரீச்சரின் கையிலுள்ள் பிரம்பைப் பிடித் திழுத்தான். கேவிக் கேவி அழுதான்.
மகேஸ் ரீச்சரின் முகத்தில் என்றுமே இல்லாத அசாதாரண அமைதி நிலவி யது. கண்களிலிருந்து கண்ணிர் வழிந்து கொண்டேயிருந்தது. நிச்சயமாக அது கவலை நிரம்பிய கண்ணிரல்ல
பிரம்பை கையிலிருந்து ஒரு பக்கமாக வீசி விட்டு, ‘சங்கீதன் சங்கீதன்!” என மெல்லிய குரலில் அரற்றத் தொடங்கி னார், ரீச்சர். மனப் பாரம் சடுதியாக நீங்கியது போன்ற ஓர் உணர்வு அவரின் நெஞ்சில்,
தோளில் கைபோட்டு அவனை அர வணைத்துக் கொண்டார். மாணவனின் கண்களிலிருந்து வழிந்த கண்ணிரைத் தனது சேலைத் தலைப்பால் துடைத்து விட்டுக் கொண்டார்.
சங்கீதன் கேவிக் கேவி அழுதானே
தவிர, பேசுவதற்கும் ஒன்றுமேயற்ற நிலையில் நின்றான்.
அவனை நெருங்கி அனைத்துத் தனது தோளில் சாய்த்துக் கொண்டே, ‘‘6T6öT LIDES 6ö7! 6T6ö76od pas 6ör ! 6T 6öT 6oog பொடியன்! என்ரை பிள்ளை”என வாய்க் குள்முணுமுணுத்தார் மகேஸ்வரி ரீச்சர்.
வெளியே புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த அந்தப் பசு மூன்றாவது தடவையாக 'அம்மா' எனக் குரல் கொடு த்து ஒய்ந்தது.
நடுப்பகல் 12 மணியை ஞாபகப்படுத் தும் முகமாகப் பக்கத்தேயுள்ள மாதா கோயில் ஆலயமணி டனார் டனார்’ என ஒலித்து, சுற்று வட்டாரத்தில் வசிக் கும் மக்களுக்கு நேரத்தை நினைவுபூ Լ19Այ5l.
மல்லிகை ஏப்ரல் 2008 & 48

கொப்பி திருத்துவதும் கொஞ்சம் சிரமமான வேலைதான் போல. அதுவும் சின்னக் கிளாஸ் பிள்ளைகளின் கொப்பியென்றால், ஆகவும் கஷ்டம். இடத்துக்கிடம் வெட்டும் கொத்துமாய். எரிச்சலுடன் சிவப்புப் பேனையால் ஒரே வெட்டாய் கோடிட்டு விட்டு, நிமிர்ந்த போது தான் கவனித்தேன் சஜீவன், என்னையே கவனித்துக் கொண்டு நின்றான்.
~ “என்ன சஜீவன் விளை
யாடப் போகலையா. ?・
'இல்ல ரீச்சர்' என்றபடி குனிந்து கொண்டான்.
கவே இப்படித்தான் இவன் என்னையே சுற்றி சுற்றி வளைய
- பிரமிளா பிரதீப்பன் is இப்போ சில நாட்களா
ܝܢܖܙ܌”
வருகிறான். இவனது அத்தனை முரட்டுக் குணமும் என்னைக் கண்டதும் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போகிறது.
இவனை யாருக்குமே அவ்வள்வாகப் பிடிப்பதில்லை. அப்படியொரு முரட்டுப் பையன். ஆனால், என்னிடம் எத்தனை மென்மையாக நடந்து கொள்கின்றான் தெரியுமா..? ஒரு வேளை பாகுபாடில்லாத என் அன்பு காரணமாக இருக்குமோ..? இருக்கலாம்! விசாரித்துப் பார்த்ததில் மோசமான குடும்பச் சூழ்நிலைதான் அவனது முரட்டுத்தனத்திற்கு காரணமென்றார்கள்.
இன்னுமே அவன் என்னருகிலேயே நின்று கொண்டிருக்க, "ஏன்?" என்கிறேன். இன்னும் கொஞ்சம் சமீபத்தில் வந்து பொத்தி வைத்திருந்த கையை நீட்டி ஒரு கொய்யாப்பழத்தை தருகிறான்.
எனக்கு வியப்பாய் இருக்கவில்லை. தினசரி எதையாவது ஒளித்து வைத்திருந்து யாருக்கும் தெரியாமல் தருவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்.
அவனது உருவமும் சற்று வித்தியாசமாகத் தான் இருந்தது. ஒரு பதின்மூன்று பதினான்கு வயதிருக்குமென்றாலும் அதனிலும், அதிகமான வயதைக் காட்டக் கூடிய முகத்தின் முதிர்ச்சி. மெலிந்த தேகம். தொட்டுப் பொட்டு வைத்துக் கொள்ளலாம் என்றளவிற்கு கறுப்பு நிறம். முடியை மொட்டையாக வெட்டிக் கொண்டு, ஒரு ஆபிரிக்கக் குடிமகனைத் தான் அடிக்கடி ஞாபகப்படுத்துவான்.
தினசரி யாருடனாவது சண்டை. வயது வித்தியாசமின்றி அத்தனை பேரையும் அடித்துப் போட்டு விடுவான். இரத்தம் வழிய வழிய மற்றய மாணவர்கள் முறைப்பாடு செய்கையில் எல்லா ஆசிரியர்களிடத்திலும் ஞாயமாய் அடி வாங்கி விடுவான்.
முதல் தடவையாய் அவனது வகுப்பிற்குப் போனதும், தலை சுற்றிப் போனேன். அவன் ஒருத்தனின் சேட்டையால் ஒருவருக்கும் படிப்பிக்க முடியவில்லை. அடித்துத் திருத்தி விட
மல்லிகை ஏப்ரல் 2008 & 49

Page 27
முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. அன்பால் கட்டுப்படுத்த முடியுமென்றும் நான் நம்பவில்லை. மாறாக, அவனையே. அவன் கண்களையே ஒருகணம் கூர்ந்து பார்த்துவிட்டு, வகுப்பிலிருந்து வெளியேறி விட்டேன். நான் அவனை அடிக்காமல் விட்டது அவனுக்கு வியப்பாய் இருந்திருக்க வேண்டும். பின்னாலேயே ஓடி வந்தான்.
"ஏன் ரீச்சர் போநீங்க..?" என்றான்.
ஒன்றுமே பேசாமல், அவன் தலையைத் தடவி விட்டுப் போய்விட்டேன்.
அந்த ஸ்பரிசம். அவனை இந்தள விற்கு மாற்றும் என நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. என் அன்பு கலந்த அந்தத் தொடுகையில் அவன் நெகிழ்ந்து போயிருக் கிறான். அதன் பின் என் பாடத்திற்கு மணி யடிக்க முன்பேயே ஒடி வந்து கையையோ, சாறி முந்தானையையோ பிடித்துக் கொண்டு வகுப்பிற்கு வரச் சொல்லுவான்.
என் வியப்பை வெளிப்படுத்தாமல் பல சந்தர்ப்பங்களில் அவனுக்கு முதலிடம் கொடுத்துப் பார்த்தேன். சத்தியமாய் ஆடிப் போனேன்! அவனில் அப்படியொரு முன் னேற்றம்.
ஆக, இவன் மனதில் தான் மந்தத்தனம் இருந்திருக்கிறது. அறிவில் அல்ல.
மொத்தத்தில் எனக்கு உள்ளூரப் பெருமை தான். ஒரு சாதாரண மாணவனையா மாற்றியிருக்கிறேன். ?
இந்தத் தொழில் ஆண்டவன் எனக்குத் தந்த வரம், நாளாந்தம் எத்தனை குழந் தைகளுடன் உறவாட முடிகிறது. அன்பு,
அரவணைப்பு, கண்டிப்பு, அறிவுரை, விளை யாட்டு, சுற்றுலா. இப்படி வாழ்வின் இன்பப் பக்கத்தையே சுழற்றும் அற்புத மான உலகமிது!
ரீச்சர் ரீச்சர்!’ என்று பிள்ளைகள் என் னைச் சுற்றிக் கொண்டும், சாறி முந்தா னையில் தொங்கிக் கொண்டுமாய். சில நேரங்களில் புல்லரித்துப் போய் விடுவ துண்டு.
என்ன புண்ணியம் செய்தேனோ. ஆண்ட வனே! அன்பும் ஆபத்தாகி விடுமோவென கொஞ்சம் பயப்படவும் தொடங்கியிருக்கி றேன்.
சஜீவனது நடவடிக்கைகள் எனக்கு அத்தனை தூரம் பிடிக்கவில்லை. வேறு எந்த மாணவனும் என்னை நேசிப்பதை அவன் விரும்பவில்லை. ஏன்? சக ஆசிரியர் ஒருவர் அதிக நேரம் உரையாடுவதைக் கண்டாலே, அவனது நடத்தைக் கோலங் களில் அசாதாரண மாற்றத்தைக் காண முடிகிறது.
இது எங்கு போய் முடியுமோ. ?
சஜீவனுடனான என் நெருக்கத்தைக் குறைக்க ஆரம்பித்த பின் தான் நாளாந்தம் மறைத்து மறைத்து எதையாவது கொடுக் கப் பழகியிருந்தான்.
யாரிடமும் இதைப் பற்றிச் சொல்லவும் முடியவில்லை. சொன்னால் 'எல்லாம் நீங்கள் கொடுத்த இடம் தான்’ என்று குற்றம் என் மீதே திரும்புகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, நேற்று அவனுடன் உரையாடிய போது, எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.
மல்லிகை ஏப்ரல் 2008 & 50

'ஏன் ரீச்சர் அடிக்கடி வாறிங்க இல்ல..?" என்றான்.
நான் தொடர்ந்தும் எழுதிக் கொண்டே, "ரீச்சருக்குக் கல்யாணம் நடக்கப் போகுது, அதனால் தான்' என்றேன்.
சடாரென அவ்விடத்திலிருந்து அகன்று போனவன், போன வேகத்திலேயே திரும்பி வந்தான்.
"ரீச்சர் நீங்க கல்யாணம் கட்டாதீங்க"
"ஏன்?" என்றவாறு அவனைப் பார்த்த
போது தான், அவன் முகம் மாறியிருப்பது தெரிந்தது.
“(86ussotrescotsborn G3susbottıb fäaft”
"அதுதான், ஏன்?"
"அப்புறம், என்னோட பாசமா இருக்க மாட்டீங்க" என்றான்.
சிரித்துக் கொண்டே விளையாட்டாய்ச் சொன்னேன். "நான் கலியானம் பண்ணத் தான் போறேன்."
"அந்தாளைக் கண்டா, அடிச்சே கொன் னுருவேன்' என்று எதுவித சலனமும் இல்லாமல் சொல்லிவிட்டுப் போய் விட்டான்.
ஒரு நிமிடம் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் விட்டேன்.
அவன் என்னத்தை விளங்கிக் கொண்டு, இப்படியெல்லாம் பேசுகிறானென்று புரிய வில்லை. அவன் என் மீது வைத்திருக்கும்
அன்பின் ஆழம், ஒரு ஆசிரிய மாணவ உறவிற்கு அப்பாற்பட்டதென என்னால் உணர முடிந்தது.
நான் கடுமையானவளாகி, தண்டித்து மீண்டும் அவனை முரடனாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. பின் என்னதான் செய்வது?
எனக்கு உடலிலும் சோர் வொன்று தெரிய, எழும்பி வகுப்பறையில் இருந்து வெளியே வருகிறேன். கூச்சலுடன் ஆர வாரித்துக் கொண்டு, மாணவர்கள் விளை யாடுவது தெரிகிறது. கூடவே, சஜீவனும்.
நான் அவர்களையே அவதானித்துக் கொண்டு.
யாரோ ஒருவனின் கால் இடறிவிட சஜீவன் விழப் போய், தட்டுத்தடுமாறி தன்னைக் காப்பாற்றிக் கொண்டவன், மற்றைய மாணவனை ஓங்கி அறைகிறான். அவனும் பதிலுக்கு ஏசிவிட்டு, மீண்டும் விளையாட்டுத் தொடர்கிறது. அவர்கள் இருவருமே மீண்டும் கட்டிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் தொடர. V
இப்பொழுது சஜிவனை ஒரு சராசரி மாணவனாக என்னால் பார்க்க முடிகிறது. அவனும் ஒரு குழந்தைதானே.
என் அன்பில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமன்றோ, சஜீவனிலும் மாற்றம் ஏற்படக் கூடும். சற்றே மனது லேசானது போல் ஒரு உணர்வு. அடுத்த பாடத்திற்குச் செல்வதற் காய் நான் ஆயத்தமாகிறேன்.
மல்லிகை ஏப்ரல் 2008 & 51

Page 28
g267?
எங்கள் ஊர் இருளில் கிடக்கிறது; நரகத்து நடுவழிப் பாதை போல
கோயில்கள், கர்ப்பகிரகங்கள், குடிமனைகள், ஊர் அம்பலங்கள், உள் இழையும் பாதைகள் என்று எல்லாமே அடர்ந்து கரும்பாசி படர்ந்தது போல் இருளில் கிடக்கிறது.
ஒரு அகல் தானும் இல்லை ஒளியேற்ற எங்களிடம். ஒரு துளி எண்ணெய்க்கு
ஊவரல்லாம் அலைகின்றோம்.
உண்மை இது.
ஒளி நமக்கு வேண்டும். ஒளி நமக்கு வேண்டும். அதை.ஆர் தருவார்?
எங்கள் ஊர்
இருளில் கிடக்கிறது; நரகத்து நடு வழிப்பாதை போல.
() () 0.
டிகிருைகல்தி
- க. சட்டருதல்
?○号 g、エ
உள்ளே இன்னும் உள்ளே, 9 (5. ஒளியின் மையத்தைத் தொரும் வரை 2-ILL|(95. குருத்திருளின் அடர்த்தி குறைய, ஒளி ஒரு பொட்டாய் உள்ளிருக்கும். அதைத் தொடும்வரை இயங்கு. சருதியில் அவ்வொளியின் கூர்படும். கூர்படுமிடத்தில் ஓராயிரம் பூச்சிதறல்கள்.
fgö, உச்சத்தில் நீ பேரொளியுள் சுருள்வாய். சுடர்வாய். பின், நீ அதுவே ஆதல் காண்பாய்.
() () ()
மல்லிகை ஏப்ரல் 2008 * 52

露
வியூகம் அமைத்துத்தான் இரவு முழுவதும் cബീ. ബീബഴ്ച്ക്രിസ്കിസ്ത്ര
'ഴീ'൬ീ ഗ്രേസ്ക്.. ?* என்று இடைக்கிடை கேட்கவும் செய்தான்.
புரட்டிப் புரட்டிப்
Guttula/67,
கூரிய நகங்க7ைான் கீறிப் பார்க்கவும் செய்தான். oിസ്ത്ര வணைந்த அனகுகள் கொண்டு; கொத்தி, கொழுவி இழுத்து, நார்நாராயர்வகிர்ந்து பார்த்து ஏதேதோ தேடினான். ഫ്രഡ്വൈ7Z “Frigid bitch' 6760767762/667arwana.
மனதுன் 67காத7நினை, உன்னினரியும் தீ தனாைய்க் கன,ை அருகின் கிடந்தவன் சருகாயப் பற்றி? 7ரிவது கண்டேன். கிறனாய் ஒரு சிரிப்பு/ உதிர புரண்டு படுத்தேன்.
() () ()
sf6......
உலர்ந்த குரலில்தான் இப்பொழுது என்னால் எதையும் சொல்ல dUO192DDgôl.
முன்னர், எங்கள் ஊரில் எல்லா மிருந்தது. ஓம் எல்லாமிருந்தது. நண்பர்கள் இருந்தார்கள்.
நாலுபேர் பேச இருந்தார்கள். இன்னும். இங்கிதம் தெரிந்தவர்கள், எழுத்தாளர், இளைஞர்கள், குழந்தைகள், இளம் விபண்கள் என்று ஏராளம். இப்பொழுது. நானும் எனது நிழலும் தான் ஊரில் ஒன்றாய்.
() ()
இஆவும் ஒ:ஆவும்
எங்கள் ஊரில் இருந்து அடுத்த ஊருக்குப் போனேன். எங்கள் ஊர் மாதிரித்தான் அதுவும் இருந்தது 86ITuIñI85086ITITC6..... இன்னும் இடிபாடுகளோடு.
() () ()
மல்லிகை ஏப்ரல் 2008 & 53

Page 29
அன்றும் என் வீட்டு அடுப்பங்கரையில் பொறியில் அகப்பட்டுத் துடித்துக்
கொண்டிருந்த அந்த எலியையே பார்த்துக் கொண்டிருந்தேன். பொறியின் விளிம்பு இரும்புப் பிடிக்குள் தன் கழுத்தைக் கொடுத்திருந்த எலி, தனது முகத்தைத் திருப்ப முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. இடையிடையே வாலை மட்டும் ஆட்டிக் கொண்டது. கால்களும் அசைந்தன. சிறிய அரிசிப் பற்கள் தெரிய "கூச் கூச் என்று கத்தியது. என்னை ஒரு முறை
பரிதாபமாய்ப் பார்த்தது. "தப்பிப் போகிறேனே. வுட்டுடேன். என்கிற தோரணையில் அதனது பார்வை இருந்தது. நானும் அதனருகே சென்று பார்க்க, ஏதோ மிரண்டு தனது சிறிய வாயைத் திறந்து ஏதோ கத்த முயன்று முடியாமல் போய். அசைவும் முற்றாய்
நீங்க, பொறியின் இறுக்கத்தில் உயிரை விட்டது.
செத்துப் போன அந்தக் கொழுத்த எலி கடந்த வாரங்களில் எமது அடுப்பங்கரை மூலையின் இடுக்குக்களில் தனது குஞ்சுகளுடன் தனி ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறது. பெரிய அளவுக் காகிதங்களைக் கொறித்து வைத்ததோடு அல்லா மல், எனது உள் அங்கியையும் எப்படியோ திருடி எங்கோ போட்டு விட்டது.
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. புதிதாய் வாங்கியது. எலி ஒளித்த இடத்தைச் சொல்லவா போகிறது?
சதா எலியைத் திட்டிக் கொண்டே
、ニー・ニー° இருந்தேன். பலதடவைகள் எனது பயங்கரத் தாக்குதல்களிலிருந்தும் தப்பியிருக்கிறது. எப்படியோ, ஒடி ஒளிந்து தப்பிய அந்த எலி, இறுதியான என் பொறி ஆயுதத்தில் வசமாய் மாட்டிக் கொண்டது. அதுவரை, எலியின் மீதிருந்த என் கோபம், அது தலையை ஒரு பக்கமாய்ப் போட்டபடி செத்திருந்ததைப் பார்த்ததும் பரிதாபம் வந்தது. அதன் சிறிய கழுத்தை இறுக்கிப் போட்டிருந்த பொறியின் கனமான கம்பிப் பகுதியை மேலிழுக்க எனக்கு என்னவோ போலிருந்தது. சொல்லப் போனால், எனக்கு எலிப் பொறியை சரியாகப் பயன்படுத்தவே தெரியாது. எலிக்குப் பதிலாக என் விரல்கள் போய் விட்டால்...? ஆனால், என் மனைவியோ அதற்கு விதிவிலக்கு என் குலவிளக்கைத் தான் இவ்விஷயங்களில் கூப்பிட்டு நிறுத்துவதுண்டு. முன் நிற்பாள் என்னை விட, தைரியமானவள் தான்! அதை விடத் துணிச்சலுடையவன் எனது மகன் நாஸிக் படு துறுதுறுப்பானவன்! எலிப் பொறியின் கம்பியை மேல் இழுக்க நான் தயங்கிக் கொண்டிருந்த போது, அவன் முந்திக் கொண்டவனாய், பொறியின் கம்பியை மேலிழுத்து மறுகை கொண்டு பொலித்தீன் பேக்கின் துணையோடு அதன் வாலைப் பிடித்தபடி பொறியிலிருந்து எலின்ய மீட்டுக் கொண்டு போய் குப்பையில் போட்டான்! சபாஷ் 5b............... ! உன் திறமையைப் போற்றுகிறேன்!. நீ ஒருவன் மட்டும் துணையாய் மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 54
 
 

இருந்திால் உலகை மாற்றுகிறேன். எங்கோ எப்போதோ, கேட்ட ஜெய்சங்கர் படப்பாடல். இப்போது என் மகனுக்குப் பாட வேண்டும் போல் இருந்தது. சின்னவர் களின் சின்னச் சின்னச் சாகஸங்களைக்
கூட நாம் பாராட்டவே தவறக் கூடாது! சபாஷ் தம்பி’யை மீண்டும் பாடினேன். பாடல்கள் கூட, ஒருவகையில் பலம் கொடுக்கிறது. நாளமிக் நெகிழ்ந்தான். அதில் நானும் நனைந்தேன்.
எலித் தொல்லை என் வீட்டில் என்றால், கடையிலும் அப்படியே கடைக்கு அது வரை வந்திராத எலி ஒன்று எப்படியோ என் முகவரி தேடி, மூலையைப் பிடித்துக் கொண்டது. அதற்கான சில அடையாளங் களையும் காட்டியது. கடையைத் திறந்த போது, எனது மேசை மீது வைத்திருந்த ஒரே சுருளாய்ச் சுற்றியிருந்த காகிதக் கற்றையை கொஞ்சம் நறுக்கியிருந்தது. சில பொருட்களைத் தாறுமாறாக விழுத்தி யிருந்தது. கனிவுமதியின் கட்டாந்தரை கவிதை நூலை மட்டும் நல்ல வேளையாகக் கடிக்காமல் விட்டிருந்தது. கவிதைகள் அதற்கு இனிக்கவில்லைப் போலும். இன்
னொரு பக்கத்தில், பேப்பர் ஒட்டுவதற்கென
வைத்திருந்த பால் நிறத்திலான பசை கொண்ட சிறிய பிளாஸ்டிக் போத்தலையும் புரட்டி உள்ளுக்குள் ஒட்டை வைத்து அத்தனை பசை கொண்ட esib'60o Duqb குடித்திருந்தது. மீண்டும், ஒன்று மறுநாள் வாங்கினேன். வேறு ஒரு இடத்தில் வைத் தேன். அதற்கும் அதே கதிதான். மூன்றா வதாகவும், அதே பசைப் போத்தலை வாங்கினேன். இம்முறை எலியிடம் கொஞ் சம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற் காக, அந்தச் சிறிய பிளாஸ்டிக் பசைப்
போத்தலை பக்குவமாகக் கதவுடன் கூடிய கண்ணாடி அலுமாரியினுள் மேல் தட்டில் வைத்தேன்.
இப்போது எலியினால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தேன். சுற்றி வர கண்ணாடியில் அமைக்கப் பெற்ற ஒரு அழகான சிறிய அலுமாரி. எனது ஒலிப்பதிவு சம்பந்தமான நாடாக்களை நான் அதில் தான் அடுக்கி வைப்பதுண்டு. சுற்றிவரக் கண்ணாடிகள் பொருத்தப் பட்டிருந்த போதும், முதல் தட்டின் மேல் பாகமானது வெள்ளை நிறப் பலகையால் அமைக்கப்பட்டிருந்தது. அது அவ்வளவு கனமானதும் அல்ல.
என்னை விட, எலி மூளைசாலி என் பதை மறுதினமே நிரூபித்தது.
கடையைத் திறந்து கண்ணுற்ற போது, அலுமாரியின் மேல் பாகத்தின் மூலையை பெரிதாகக் குடைந்து அதனுள் இறங்கி, முதல் தட்டில் நான் பத்திரமாக வைத்தி ருந்த பிளாஸ்டிக் பசை போத்தலில் துளை யிட்டு அனைத்தையும் குடித்திருந்தது. எலி தனது வேலையை முடித்திருந்தது.
என் மனைவி அடிக்கடி எனது மூளை யைப் பற்றிச் சந்தேகப்படுவாள்.
"சரியாத் தான் போச்சு. GBusTLo இரண்டாம் தட்டில் பசைப் போத்தலை வைத்திருந்தால். கண்ணாடியைத் தீண்டியிருக்க அதனால் முடியாது. அதன் கீழே இருப்பதெல்லாம் சின்னச் சின்ன கண்ணாடித் தட்டுக்களே. எனது மூளை பற்றி எனக்கே சந்தேகம் எழுந்தது.
மல்லிகை ஏப்ரல் 2008 奉 55

Page 30
எனினும், எனக்குள் தத்துவார்த்தமான ஆச்சர்யக் குறி.
அந்தக் கும் இருளில் இடம் தேடித் திரிந்து காரியம் நடத்தியிருக்கிறதே! மனிதனுக்குக் கூட, இந்தச் சக்தி இல்லை. பின் எவ்வாறு, இந்த எலிகளால் முடிகி D5El... • • • • • • • ? இருளிலே உலவி, பொந்துகள் செதுக்கும் அதன் சிறிய பற்களுக்குத் தான் எத்தனை வலிமை. எண்ணினால் புதுமை
எவ்வளவு தூரம் அவை ஓடினாலும், கீழே விழாது பாய்ந்து துள்ளித் தப்பிச் செல்லும் தைரியத்தை எலிகளிடம் கண்டு நான் வியப்பதுண்டு. வேறு வராகங்க ளுக்கும் இத்தகைய சக்தி இருக்குமா? என்பது சந்தேகம் தான்.
எலி பசையைத் தின்று விட்டுப் போனா லும் பரவாயில்லை. வேறு ஏதாவது முக்கிய காசோலை, கடிதங்களைத் தின்றிருந் தால். ? அதை நினைக்க ஆறுதலாய் இருந்தது.
எலிக்கு விஷம் வைத்துக் கொன்றாலும் பரவாயில்லை போல் தான் எனக்குத் தோன்றியது. எனினும், மனம் மாறியது. எங்காவது மூலை இடுக்குக்களில் சிக்கிச் செத்துவிட்டால் ? சாம்பிராணி புகைத் தாலும் போகாதே. கடைக்கு வரும் வாடிக் கையாளர்கள் வேறு முகத்தைச் சுளிப்பார் களே. அதனால், அந்த எலியைச் சும்மா விட்டு விடவும் முடியாது. மனம் கேட்க வில்லை தான். எனினும், அதைக் கொல்ல வில்லையென்றால். ?
‘எலிப் பொறி வைப்பதாகவே முடி வெடுத்தேன். பொறியோடு சிறு கருவாட்டுத் துண்டும் விளிம்பில் இணைத்தேன். பய மாக இருந்தது. சமாளித்துக் கொண்டு கம்பியை மேல் இழுத்து அதைப் பின் னோக்கிப் பொருத்தினேன்.
இப்போது "பொறி தயாராகிவிட்டது.
எலி, பொறியை நெருங்கினால் அது கவ்விப் பிடித்துக் கொள்ளும், துடித்துச் சாகும். கவலை தான். இருந்தாலும்.
ஏற்கனவே, எனது கண்ணாடி அலுமாரி யின் மேற்பரப்பின் பலகையில் எலி வைத்த ஒட்டைக்கு அளவாக ஒரு சிறு பலகைத் துண்டை வைத்து ஒட்டினேன். அதனருகே புத்தம் புதிய பசைப் போத்தலையும் வைத் தேன். பொறியையும் அருகே இருத்தினேன்.
இன்று இரவு எலியின் இருப்புச் சந் தேகம் என நினைத்துக் கடையை மூடி (3606i.T.
மறுநாள் காலை
பொறியின் முனையில் எலியின் தலை துடித்துக் கொண்டிருந்தது. இம்முறை பசையை அது குடிக்கவில்லை. கருவாடு தின்ன முயன்று, பொறிக்குத் தன் கழுத் தைக் கொடுத்திருந்தது எலி, துடித்தது. ஒரு முறை என்னைப் பார்த்தது. அதிலே, ஏதோ ஒரு முறைப்பாடு தெரிந்தது. கம்பியை மேலிழுத்தால் தப்பி விடும். ‘தப்ப வைப் போமா? என்றது மனம். அதில் நான் முய ற்சிப்பதற்கு முன்னரே எலி செத்துப் போய் விட்டது
மல்லிகை ஏப்ரல் 2008 率 56

2ாற்றுக் கண்கள்
- isgauebe Do 351Direb
"ஓங்களுக்குத் தெரியவா? ஓங்கட கூட்டாளி தானே?"
திடுதிப்பென மனைவி தூக்கிப் போட்ட கேள்வி அவனைத் திக்குமுக்காட வைத்தது. அதனைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வேறு வந்து விட்டது.
"ஓங்கட கூட்டாளி ஹஸ்ஸானுக்குக் கலியாணம் தீர்ப்பாகீட்டாம்"
“QLDuiuuurT......? 6TTÄJaélulu6öIT....... ?・
"அந்த ஃபஸ்மினா டீச்சர். புதிசா ஜொப் கெடச்ச'
"e". . . . . அந்த அத்துவாஹறிது நானட மகள்.”
"9..... g......'
அவன் சடாரென்று கதிரையில் அமர்ந்து எங்கோ வெறித்தான்.
"எல்லாம் பேசிய கதக்கிய. சும்மாவாலும் சொல்லல்லேன். b......"
'அய்தானே. அவனுக்கெனத்தியன் கொற? டீச்சரொண்டு தான் எடுக்கோனு மென்டா, அதுபோலொன்ட பாக்கியதானே. சும்ம பைத்தியம் வெளாடிய'
"இன்டக்கி எப்படிம் கேக்கோணும் அவனுக்கிட்ட. ம். பாத்தியா ஒதீட்டாமா?"
"தெரியா. பொண்ணுாட்டாரு அப்படித் தானே. சாட பேசினொடன எல்லம் சரியென்டேன் செல்லிய."
“ub....... எங்கட குடும்பத்திலேம் பளவிந்தான எத்தின பொண்ணிக்கள். யாவாரப் புத்தீல ஒடித்திரீதல்லாம கலியான யோசின இல்லயென்டேன் நெனச்ச."
'சரி நீங்க போற பயணத்தப் போங்கொ. இன்னம் கொஞ்சம் நானும் விசாரிச்சுப் பாக்கியன். டீச்சரட உம்ம பத்து மணியாகச் செல்லே இவடத்தால கடக்கிப் போற. sy
அவன் வெளிப்பட்டுச் சென்றான்.
2 2 2.
மரைக்க வளவு. ஒசர வளவு ஒடையடிப் பகுதியில் வாழும் பலநூறு குடும்பங்களைப் பிரதான பாதையோடு இணைக்கும் ஒழுங்கைகள் பள்ளியடியை வந்து சேர்கின்றன. இருபக்கமாகவும் அமைந்துள்ள பஸ்ஹோல்டுகளில் ஒவ்வொரு பஸ்ஸிலிருந்தும் குறைந் தது இரண்டோ மூன்றோ பேர் வந்திறங்கிய வண்ணமேயுள்ளனர். காலை ஐந்து மணி முதல் மல்லிகை ஏப்ரல் 2008 & 57

Page 31
இரவு பதினொரு மணிவரையில் பள்ளி வாசலுக்கு சனம் வருவதும் போவதும் தான். பள்ளியடியென்றாலே, ஒரு குட்டிப் பஜார் தான்.
ஒரு காலத்தில இரண்டொரு தேநீர்க் கடைகள் மாத்திரமே இருந்த இடத்தில், இன்று என்ன கடைதான் இல்லையென்று கேட்கத் தோன்றும்,
ஹஸ்ஸானின் வாப்பாசின்ன வயதிலேயே அவன் பெயரில் எக்கவுண்ட் திறந்து காசு போட்டு வந்தார். அவனது படிப்புச் செல வுக்கு எதிர்காலத்தில் உதவட்டுமென்பதே அவரது நோக்கமாயிருந்தது. ஆனால், "படித்து முன்னேற வேண்டும் என்ற எண் ணம் அவனுக்கு வரவில்லை.
பதினெட்டு வயது தாண்டியதும், அவன்
செய்த முதல் வேலை, இடிந்து விழும் நிலை யிலிருந்த பள்ளிய்டித் தேநீர்க் கடையை, சேமிப்புப் பணத்தை விடுவித்து வாங்கி எல்லோரது நகைப்புக்கு ஆளானதுதான்.
அந்தச் சின்னக் கடையை இடித்துத் தகர்த்து நவீன பாணியில் மாற்றியமைத் தான். கண்ணாடிக் கதவுகள் பூட்டிக் கொம் யூனிக்கேஷன், ஸிடி, செல்ஃபோன் கார்ட், என்று ஒரு புதிய கோணத்தை அறிமுகம் செய்த போது, சிரித்தவர்களெல்லாம் வியந்து போனார்கள்!
மூன்று மாதம் செய்து காட்டினான். பின்னர், இன்னொருவனுக்குக் கையளித்து மாதாந்த வாடகைக்கு வழி வகுத்துக் கொண்டான்.
சிலநாட்களில் புளியமரத்தடி ரோட்டில் காணித்துண்டு உடைத்து விற்கும் பதாகை விளம்பரம் அவன் கண்ணில் பட்டது.
"அந்தக் கல்லுக்குழில தாரன் காணி எடுக்கப் போற”
'கம்மா தந்தாலும் வாண'
இப்படியெல்லாம் சொன்ன போதும், அவன் ஒரு துண்டு எடுக்கவே செய்தான். இரண்டொரு வீடுகள் எழுந்தன. கேள்வி கூடியது. ஒரு சிறிய வீடு கட்ட பெளண் டேஷனும் போட்டு வைத்தான். அதன் பெறுமதி இன்னுமின்னும் உயர்ந்தது. வாங்கிய விலையை விட, மும்மடங்கு வந்தும் "விக்கிய யோசினில்ல" என்று சொல்லிவிட்டான்.
தனது சொந்த வியாபாரத்தை இலகு படுத்திக் கொள்வதற்காக பைக் ஒன்று வாங்கியவன், இப்பொழுது நான்காவது பைக் மாற்றி ஒடுகிறான். காலப் போக்கில் பைக் புரோக்கராகக் கூட மாறிவிட்டான்.
"பொடியன் விஷயக்காரன் தான்'
உண்மையாகவே எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள்.
ஒன்றாகப் படித்த பலரும் திருமணம் செய்துவிட்ட பின்பும், அவன் அதனைப் பிற்படுத்தி வந்தது கூட, ஒருவித முன் யோசனைதான் என்பது நண்பர்களின் கணிப்பு.
இதற்கிடையில்தான் இந்தக் கலியா
ணக் கதை,
111 1 ۹ کیمیاییWW1 MMMA XمحAصMسمبر 1WY ۹۴۹ یکی AھبرمحAھبر
இந்தச் செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே அவளுக்கு வேறெதுவும் ஒடவில்லை. மாப் பிள்ளையை 'ஊசேத்தி அனுப்பிவிட்ட போதும், அவர் மீள வரும் வரும் வரையில் அவளுக்குப் பொறுமையில்லை.
மல்லிகை ஏப்ரல் 2008 & 58

பத்துமணிக்கெல்லாம் பள்ளியடிக்குப் பொம்புன்ளைகள் போக ஆரம்பித்து விட்டார் கள். பகல் சாப்பாட்டுக்குப் பலாக்காய், கறிவகைள் வாங்கும் பொறுப்பு அவர்க ளுக்குத்தானே.
பாத்தும்மாத்தாவின் தலைவெளிச்சம் தெரிகிறதாவென்று அடிக்கடி பார்த்துக் கொண்டாள். டீச்சரின் உம்மா அல்லவா? சந்தேகமில்லாமல் விஷயத்தை நாடி பிடிக்கலாம்.
"தைரியமான பொடியன். நாலு தொழிலும் தெரிஞ்சவன். டீச்சரெண்டு கண்ணப் பொத்திக் கொண்டு எடுக்கியா. சீ. பச்சக்கெத. அவனுக்கு ஜாதியா பொண்ணெடுக்கேலும்."
தனக்குள்ளேயே அவள் போராடினாள்.
"ஆ" வார. 6.irrs'
தும்புத் தடியோடு விறாந்தைக்கிறங்கி. பாத்தும்மாத்தா நெருங்கியதும் திரும்பி. தற்செயலாகக் கண்டது போல்.
“எனத்தியன் செய்தி கடக்கிப் போறா?
“ஒ. மகள்"
அந்தச் சிரிப்பிலே ஏதோ அர்த்தமிருப் பதை விளங்கி, நடை வேகத்தைக் குறைத்து நின்று பார்த்தாள்.
“நல்ல செய்தியொண்டு கேள்விப்பட்ட. GLDuiju JIT?'
"ஆ.மகள்ட விஷயமா?"
'9. . . . . ؟g • • • • • டீச்சர் மகள் ட. கேள்விப் பட்டதிலிந்து எனக்குச் செரியான சந்தோஷம்."
'ஓ பேசிக்கோ நிக்கியதான்'
"நல்ல பொடியன். நாலு தொழிலும் செய்த. ஊதாரித்தனமுமில்லேன்."
'கலியானத்துச் செல்லிய கட்டாயம் வரோணும். பகலாகீட்டேன். வாரன்"
எண்ணெய்யை வாரி ஊற்றி விட்டுப் பாத்துாம்மாத்தா போய்விட்டாள். அவளல் லவா பற்றியெரிகிறாள்.
#** *** జోజోళM #wwజో
*^^
ممامي ^^జో జోజోజో
தனது வேலை வெட்டிகளை முடித்துக் கொண்டு ஹஸ்ஸானை எப்படியும் சந்தித்து விட்டுப் போக வேண்டுமென்று வந்தவனுக்கு நேரப் பொருத்தம் சரியாக அமைந்தது.
வெளியே நின்ற புது பைக் வேறு யாரும் உள்ளே இருக்கிறார்களோ? என்ற சந்தேகத்தை அவனுக்கேற்படுத்தியது. உண்மையில் அங்கு யாரும் இருக்கவில்லை.
“என்னத்தியன்டா சேட் மாத்திய மாதிரி பைக் மாத்திய?
வாய் விட்டுச் சிரித்தான் ஹஸ்ஸான்
"நேத்துத் தான் எடுத்த"
“SeqÜLu இருந்தது?"
“எடுத்து ரெண்டு கெழம. வெல வந்த. யெம்பத்தெட்டுக் எடுத்த, நூத்தொண்டுக்கு குடுத்த,”
"அப்ப பைக் யாவாரம் நல்லாத் தான் போகுது. நீ கெட்டிக்காரன் தான்டா!'
இருவரும் மாமரத்தடிக்கு வந்தமர்ந் தனர். காற்றுச் சலசலத்தது.
*எனத்தியன் மசான் நின்ட வாக்கில?
“ஒன்டுமில்ல. ஒண்ட கலியானச் செய்தி கேக்கத்தான்"
*எந்த விஷயமன்?"
மல்லிகை ஏப்ரல் 2008 & 59

Page 32
"அந்த டீச்சர்"
"மெய்தான் மெய்தான்" w
அவனால் தாங்கிக் கொள்ளக் கஷ்ட மாக இருந்தது.
‘பைத்தியமா ஒனக்கு?"
“இப்படித் தான்டா எல்லாரும் கேக்கிய"
“ஒனக்கு எவளவு நல்லெடுத்தில பஸிந் தான பொண்ணெடுக்கேலும்'
"கூட்டாளிமாரெண்டு நாங்கீக்கிய. கொஞ்ச மசூரா பண்ணினா கொறஞ்சி போறா?
‘யோசிச்சித்தான் இந்த முடிவுக்கு வந்த”
"éo, ............ y
பூபாலசிங்கம் புத்தகசாலையின் நீண்ட நாளைய ஊழியனும், பல எழுத்தாளர்களினது நண்பருமான விஜயன்- சாந்தி திருமணம் வெகு சிறப்பாகச் சமீபத்தில் நடைபெற்றது.
எழுத்தாளர்கள்சார்பாக மணமக்கணைமல்லிகைமதைரவாழ்த்துகின்றது.
"மாஸம் மாஸம் சம்பளம் வந்து கொண்டீக்கும்"
“டேய் வாழ்க்கயென்டா ஒரு சந்தோஷம் ஈக்கோனும்"
"வருமானம் பல பொக்கதாலேம் வந்து கொண்டீந்தா. வாழ்க்கேல சந்தோவடி மும் வந்து கொண்டீக்கும்."
அவன் அதற்கு மேல் ஒன்றும் பேச வில்லை.
"டேய் மெளத்தாப் போனாலும் பென் ஷன் வரும்டா'
அவன் மெளனித்துப் போனான்.
"நல்ல பொஞ்ஞாதியாப் பாக்க, நல்ல வருமானம் முக்கியமென்டா. ஒண்டும் Q5FiuG8uJ6u'
மல்லிகையின் வாழ்த்துக்கள்
- ஆசிரியர்
மல்லிகை ஏப்ரல் 2008 & 60
 

ඊරිශුපිරිගැනීතීරීතීt’
43- வது ஆண்டு மலர் படித்தேன். ரமணியின் ஒவியமும், மலரின் வடிவமைப்பு மனதை ஈர்த்துப் பற்றிவிட்டன. ஒரே எத்தனிப்பில் பெரும்பாலான படைப்புகளைப் படித்தேன். மலர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மல்லிகை ஆண்டு மலர்கள் எப்போதும், கனதிமிக் கவை என்பதனை மீளவும் நிறுவி விட்டீர்கள். கடந்த மலர்களை விட, புனைக்கதைகள் அதிகமாய் இருந்தன. திக்குவல்லை சப்வான், தெணியான், பவர், சுதாராஜ், ப. ஆப்தீன், ஆனந்தி போன்றோர்களது கதைகள் பல்வேறு அநுபவங்களைப் பகிர்ந்தன. (ஏனைய சிறு கதைகளும் சிறப்பாக இருந்தன. டொமினிக் ஜீவாவின் சிங்கள மொழியிலான செவ்வியும், குணசேன விதானவின் எதிர்வினைகளும் மலரில் பல்வேறு விவாதங்களை பகிர்ந்தன. புதிய முகங்கள் பல மல்லிகை மலரில் கவிதை உரையாடல் நடத்தியிருக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று. அனார், ஸ்ஹானா, மணி, நிருபா, ஹளினா புகார், பிரசாந்தன், திலகபாமா, தாமரைச் செல்வி போன்றவர்களின் கவிதைகள் அருமை. பெரும்பாலான மல்லிகைக் கவிதைகள் காலத்தின் மறுபக்கமாக ஒளிர்ந்தன.
43- வது ஆண்டு மலரில் மேமன் கவியின் கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக் கிறது. பெண்ணிலை வாதமும், அணியில் புனைவுகளும் இன்று முக்கிய மையமாக மாறி விட்டன. பெண் பெயர்களில் ஆண்கள் எழுதும் போது, உள்ள சிரமங்கள் பற்றியும் பிறிதொரு கட்டுரையில் படித்தேன். 4.
செங்கை ஆழியானின் தேடல்கள் நாளைய ஆய்வாளனுக்கு ஒரு முக்கிய ஆவண மாகும். திக்குவல்லை கமால், அந்தனி ஜீவா, யோகராசா, இரவீந்திரன் போன்றவர்களது கட்டுரைகளும் இலக்கியத்தின் கூறுகளை அணுகியிருந்தன. அத்துடன் மல்லிகை ஆசிரிய ரின், ஆசிரியர் குறிப்புகள் குறிப்பிடத் தக்கனவாக இருந்தன. சாதனை வீரன் முரளிதரனை பல்வேறு இதழ்கள், இணையங்கள் பாராட்டின. ஆனால், மல்லிகை முரளியை வேறு வித மாகக் கணிப்பீடு செய்தது புதுமை,
மல்லிகை பெப்ரவரி இதழும் கிடைத்தது. தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் மல்லிகை அட்டைப்பட அதிதியாக மலர்ந்தது மகிழ்ச்சி. தினக்குரல் இன்று படைப்பாளி' களை வெகு துலாம்பரமாகக் கனம் பண்ணுகிறது. இது சர்வ நிச்சயம். நீண்ட நாட்களுக்குப் பின் பிரகலாத ஆனந்தின் படைப்பை மல்லிகையில் படிக்க முடிந்தது. அவ்வாறே நவாஸ் அவர்களின் படைப்பும் அமைகிறது. பரன் அவர்களது நினைவுகள் நகைச்சுவையானதாக இருந்தன. கனிவுமதி, தமிழ்நேசன் ஆகியோர்களது கவிதைகளும் சிறப்பே : Տ
பெப்ரவரி இதழில் எனது 'மண்ணில் துழாவும் மனது கவிதை நூல் வெளியீட்டு விழா பற்றிய குறிப்புக்களைப் பிரசுரித்தமைக்கு நன்றிகள்
அநுராதபுரம். s 8 . . . • எல். வளிம் அக்ரம்.
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 6"

Page 33
உலக தமிழ் இலக்கியப் பரப்பில் நம் நாட்டுக் கலை- இலக்கிய வீச்சு வெகு உக்கிரமாக வளர்ச்சியடைந்து வருவதை, இன்று வெளிவரும் நூல்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. பல புதிய இலக்கிய நுகர்வு கள், நூல் வெளியீடுகள், சஞ்சிகைகளின் பிரசவம் போன்ற அம்சங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒரு கவிஞனின் படைப்புகள் நூலுருப் பெற்றால், அக்கவிஞன் நிரந்தரமாக வாழ் ந்து கொண்டிருப்பான். சகல படைப்பாளி களும் தங்களுடைய படைப்புக்களை நூலு ருப்படுத்த விரைகின்றனர். பல பொருளா தார நெருக்கடிகளின் மத்தியில் தமது நூலை வெளிக் கொணரும் நூலாசிரியர்கள், வெளியீட்டின் பின்னர் நிலைகுலைந்து தொடர் படைப்புகளில் சுவையிழந்து சோகை யாய் மிளிருகின்றனர். எழுத்தாளன் பம்பர மாக சுழன்று தனது நூலை வெளியிட்டு கடனாளியாகின்றான். இதற்கான காரணம் ஒழுங்கான சந்தைப்படுத்தல் இன்மையே யாகும். அவனது நூல்களில் சிறு தொகை யைத் தவிர, ஏனையவைகள் அடுக்கடுக் காய் எழுத்தாளனது இல்லத்தைத் தரி சிக்கின்றன.
எனவே, நூலாசிரியர்களது கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு எழுத் தாளனும் சந்தோஷிக்கும் வண்ணம் நூல் கள் சந்தைப்படுத்தப்பட வேண்டும். இந் நிலை முகிழ வேண்டுமானால், தமிழகத்து இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வெளித்தேச தமிழ் இறக்குமதிகளை தமிழகமே கட்டுப்படுத்தியுள்ளதெனில், ஏன் நாம் தமிழக இறக்குமதிகளைக் கட்டுப் படுத்தக் கூடாது? தமிழகத்திலிருந்து வரும்
ஆபாச, வர்த்தகச் சஞ்சிகையொன்றுக்குக் கிடைக்கும் கிராக்கி, எமது ஆரோக்கிய மான எழுத்தாளன் ஒருவனது நூலுக்குக் கிடைக்கவில்லை என்றால் பாருங்களேன். வெளித் தேசத்து இறக்குமதிகள் குறையும் போது, நம் நாட்டு நூல்களுக்கு உரிய சந்தை வாய்ப்புக் கிட்டும்.
இவ்விடயத்தில் புத்தகசாலை அதிபதி கள் கவனம் எடுக்க வேண்டும். ஏனெனில், அண்மையில் கொழும்பிலுள்ள புத்தகசாலை யொன்றுக்குச் சென்று நம்மவர் ஒருவரின் நூலைத் தேடினேன். அது காட்சிப்படுத்த லில் இருக்கவில்லை; விசாரித்தேன். அந்நூல் களஞ்சியசாலையில் இருப்பதாக வியாபாரப் பையன் குறிப்பிட்டான். நான் விட வில்லை. காரணங் கேட்டேன். காட்சிப் படுத்தும் இடத்தில் தமிழக எழுத்தாளர் களின் நூல்கள் வைக்கப்பட்டிருப்பதனால் நம்மவர்களின் நூற்களை வைப்பதற்கு இட மில்லையாம். ஆகையால், களஞ்சியசாலை யில் போடப்பட்டிருப்பதாக அப்பையன் குறிப்பிட்டான்.
ஆயினும், ஒரு சில நம்மவர்களின் நூல் களை அவ்விடத்தில் கண்டேன். நம்மவர்க ளின் நூல்கள் களஞ்சியத்தில் என்றால், இது எப்படி? என்று வினாத் தொடுத்தேன். இந் நூலின் ஆசிரியர் இன்று எமது புத்தகசா லைக்கு வருவதாக அறிந்தோம். ஆகையால் தான், இது இங்கு ஜொலிக்கிறது. நாளை காலையில் இதுவும் களஞ்சியசாலைக்குச் சென்று விடும் என்று கூறினான்.
எனவே, புத்தகசாலைகளின் அதிபதிகளே! நம்மவர்களின் நூல்களை காழ்ப்புனர் வோடு நோக்காது, அவைகளுக்கும் உரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
எம். சி. நஜசமுதீன். அநுராதபுரம்.
மல்லிகை ஏப்ரல் 2008 & 62

{
னெது முதல் ஒவியத்தை அட்டைப் படமாக முதன் முதலில் வெளியிட்டது மல்லிகை தான். 1982இல் நடந்தது. எனது முதற் கவிதையையும் மல்லிகை தான் முதன் முதலில் பிரசுரித்து, என்னை எழுத் தாளனாக அறிமுகப்படுத்தி வைத்தது.
நான் மல்லிகையைப் பெற்றுக் கொண் டதும், முதலில் வாசிப்பது தூண்டில் கேள்வி- பதில் பகுதியைத்தான். காரணம் அக் கேள்வி பதிலில் அடங்கியுள்ள உண்மை யான வாழ்வின் அநுபவங்களை எழுத்தின் மூலம் தெரிந்து கொள்வதற்காகத் தான். பல பிரபலஸ்தர்களை எனக்கு அறிமுகப் படுத்தியதும் மல்லிகை தான்.
இரண்டு மாதங்களாக வீட்டில் படுக்கை யாகக் கிடந்து உழன்றேன். எனது உடல் நலனை விசாரிக்க வந்த மல்லிகை ஆசிரியர், மார்ச் 2008 இதழில் எனது சுகசேமம் பற்றி விசாரிக்க வந்தவர்களின் பெயர் பட்டியலையே பிரசுரித்து விட்டார். இந்தத் தகவல்களைப் படித்தறிந்த பல கலைஞர்கள் என்னைத் தேடி நேரடியாகவே வீடு வந்து விட்டனர்.
முீதர் பிச்சையப்பா. கொழும்பு- 13.
ஆண்டு மலரும், அம் மலருக்குப் பின்னர் வெளி வந்துள்ள இரண்டு இதழ் களும் அதி அற்புதமாக அமைந்திருந்தன.
சிலர் நினைக்கிறார்கள் வண்ணங் களைப் பக்கத்திற்குப் பக்கம் அப்பி அப்பி வெளியிடுவதுதான் சிறந்ததென்று. அது இந்தக் காலத்து இளம் பெண்கள் தம்மை அளவுக்கு மீறிக் கவர்ச்சிப்படுத்துவதால், ஒருவகை எரிச்சலுக்கு உட்படுத்துவதாக அமைவது போல, அமைந்து விடுவது 2 -600T60)LD.
உண்மை அழகு எப்பொழுதுமே மிக மிக எளிமையாக மிளிரும். அந்த எளிமை அழகை நான் மல்லிகை மலர்களில் அவ தானித்திருக்கின்றேன்.
நீங்கள் உங்களைப் போலவே, உங் களது ஆளுமைக்குட்பட்டு வரும் சிற்றித ழையும் மிகமிக எளிமையாகவும், ஆழமாக வும் வெளியிட்டு வருகின்றீர்கள். பார்க்க மனசுக்கு வெகு ரம்மியமாக இருக்கின்றது.
தொடருங்கள். தொடருங்கள்.
பெர்லின்- ஜெர்மனி. எஸ். மோகனதாஸ்.
gọọsäleắ6ì
asITLob Luso
வாழ்க்கை பாலை
வீசும் தென்றல்
வற்றாத சுனை
காதல் காதல
கலமும் மாயம் இருதயம் சுவர் சகலமு சிதையாத சித்திரம் சாகா வரம
安 காதல் காதல
o உலகம் சூன்யம் மானுடம இருள் முடியா முடிவிலி எரியும் சுடர்
காதல காதல
- உ. நிசார்
மல்லிகை ஏப்ரல் 2008 & 63

Page 34
சிங்கனச்சிறுகதை
பூனைக் கண்கள்
சிங்கனத்தின் தரங்கஜ2சேனே தமிழின் இப்னு ஆஃைமத்
நாள் - இன்று நேரம் - அதிகாலை ஒரு மணி
அமைதி இந்தளவிற்கு பயங்கரமானது என்பது பற்றி நானொரு போதும் நினைத்திருக்கவில்லை. அறையில் சீமெந்து பூசப்பட்டிராத சுவர்களில் உள்ள சகல துவாரங்களிலும் செவிகள் பொறுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றியது. மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளியின் ஊடாகவும் மீனாவின் பூனைக் கண்கள் மின்னும் விதம் ஆச்சரியமாக இருந்தது.
கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் ரேடியம் முட்களின் சக்தியால் நேரம் காட்டப்படாமல் இருப்பின் காலத்தைப் பற்றிய நிலையான உணர்வின்றி நான் இருந்திருப்பேன். ஆலையைப் போல் துடித்துக் கொண்டிருந்த மீனாவின் நெஞ்சம் மெதுமெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
'பசியாக இருக்கிறதா?”
நான் மெதுவாகக் கேட்டேன்.
அவள் தலையாட்டினாள். தனக்குப் பசி இல்லை என்பதை அறிவிப்பதற்காகவா அல்லது நான் கூறியது விளங்கவில்லை என்பதை அறிவிப்பதற்காகவா அவள்
தலையையாட்டினாள் என்பதை மேலே உள்ள கடவுள் மாத்திரமே அறிவார்
இதுவரையில் எனக்குத் தெரிந்த அனைத்து சிங்களமும் அனைத்து ஆங்கிலமும் பேசி முடிக்கப்பட்ட நிலையில் எனக்குத் தமிழ் தெரியாது என்பதால் கைகளாலும்
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் P

கண்களாலும் பேசக் கூடிய புதுமையான தொரு மொழி எங்களால் உருவாக்கப்பட்டி ருந்தது. இந்த நிலையில் தான் உடுத்தி யிருக்கும் ஆடையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவள் உணர்த்தினாள். எனது குளியல் அறையை அவளுக்குக் காட்டினேன். அவள் பயணப் பையைத் திறந்து இரவு ஆடை ஒன்றையும் துவாய் ஒன்றையும் எடுத்துக் கொண்டதன் பின்னர் குளியல் அறையின் கதவைத் திறந்து விட்டேன். மீனா மிகவும் அழகானவள்.
மனதுக்குள் நடமாடும் ஆயிரமாயிரம் எண்ணங்களை மறைத்துக் கொண்டு நள்ளிரவில் வீட்டுக்குள் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடிய எந்தவொரு மனிதனுக்கும் ஏற்படக் கூடிய சிந்தனைகள் எனக்குள்ளும் மெதுவாக தலைதுாக்க ஆரம்பித்தன.
மீனா குளிக்கும் ஓசை கேட்கிறது. நான் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டேன்.
சரியாக ஐந்து மணி நேரத்திற்கு முன்பதாக அவளைக் கண்ட அந்த எதிர்பாராத சந்தர்ப்பம் புகையினுாடே மீள
ஞாபகத்திற்கு வந்தது.
সুঃ পুঃ পুঃ
நாள் - நேற்று நேரம் - இரவு சுமார் 8.00 மணி இடம் - வவுனியாவில் இருந்து கொழும்பு
வரும் யாழ்தேவி புகையிரதம்: சிற்றுண்டிச்
சாலை பெட்டி.
தண்டவாளத்தின் மரண ஒசைகளைக் கணக்கில் எடுக்காதவாறு யாழ்தேவி ராகம புகையிரத் நிலையத்தைத் தாண்டியது.
நான் சிற்றுண்டிச்சாலை அமைந்திருந்த பெட்டியில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந் தேன். நீண்டதொரு பயணம் முடிவுறப் போகும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியை ஒரு சிகரெட்டின் ஊடாக உறிஞ்சியபடி நானிருந்த போதுதான் புகையிரதத்தின் மங்கிய விளக்கொளியில் மீனாவின் பூனைக் கண்களை நான் கண்டேன்.
அந்த கணிகள் புகையிரதத்தின் போக்கிற்கு நேரெதிராக வேகமாக வந்து எனது கண்களில் மோதின.
உள்ளிழுத்த சிகரெட் புகை நீண்ட நேரம் நுரையீரலுக்குள் இருந்திருக்க வேண்டும்.
அவள் சிரித்தாள்! எனக்கு போதை யேறியது!.
அவளைக் கண்டவுடனேயே எனது தலைக்குள் எங்கிருந்தோ வந்த மீனா என்ற பெயர் தங்கி விட்டது. இது ஏதாவது மூன்றாந்தர நாவலில் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்ப் பெண்ணின் பெயராக இருக்கக் கூடும். நாங்கள் கண்களால் கதைத்துக் கொண்டோம்.
புகையிரதத்தில் நிரம்பி வழிந்த சிங்கள மக்களும் தமிழ் மக்களும் காணாத ஒன்று எங்கள் இருவருக்கிடையில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
களனி பாலத்தின் 'சிக்னல் அருகில் வைத்து புகையிரதம் தடாரென நின்று விட்டது. எனது மேசை மீதிருந்த ஆவி பறக்கும் கோப்பிக் கோப்பை பறந்து போய் கீழே விழுந்து விட்டது. சிறிது நேரத்தில் அடி வயிற்றில் இருந்து எழுகின்ற அவலச் குரலொன்று கேட்கத் தொடங்கியது.
மல்லிகை ஏப்ரல் 2008 奉 65

Page 35
அதன் பின்னர்,
நாள் - மீண்டும் இன்று இடம் - எனது நான்கு சுவர்களுக்குள்
சிந்தனைகளில் இருந்து விடுபட்டு கட்டிலின் மீதிருந்த மீனாவின் கைப் பையைத் திறந்து பார்ப்போமென எண்ணித் திறந்தேன்.
பிஸ்டல்
உடம்பில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த அனைத்து ரோமங்களும் எழுந்து நின்று அதையே பார்த்துக் கொண்டிருந்தன. 'எஸ்பெஸ்டஸ் கூரை என் தலையை நோக்கி கீழிறங்கி வருவதைப் போல் உணர்ந்தேன்.
கடவுளே!. நான் செய்து கொண்ட முட்டாள்தனம். எங்கேயோ போகின்ற எதையோ கொண்டு வந்து அறைக்குள் போட்டுக் கொண்டேனே!. மீனா யாராக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட எனக்கு அச்சமாக இருந்தது.
குளியல் அறைக் கதவின் உட்பக்க மாக டக்கென்ற சத்தம் கேட்டது. மீனா வெளியில் வரப் போகிறாள் என்பதை அது உணர்த்தியது. உடனே பிஸ்டலை மீண்டும் கைப் பையினுள் நுழைத்தேன். இரவாடை யில் வெளிப்பட்ட மீனா ஈரத் துவாயை கதிரையொன்றின் மீது விரித்துப் போட்டாள்.
கடவுளே!. இவள் யார்?.
பாதங்களினூடாக மரத்துக் கொண்டே
வந்து அது நிமிடத்திற்கு ஓரடி என்ற வேகத்தில் உடம்பின் மேற்பகுதிக்கும்
பரவியது. மனதுக்குள் எழுவது பயமr அல்லது மகிழ்ச்சியா என்பதைப் பிரித்தறிய முடியாமல் மூளை செயலிழந் துப் போயிருந்தது.
இதோ. அவள் என்னருகில். கட்டிலின் மீது அமர்ந்து கொள்கிறாள்.
மெழுகுவர்த்தியின் ஒளி அவளது இரவாடையின் மெல்லிய இடங்களில் நுழைந்து அவளது மேனியை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. நாங்கள் மூச்சு விடுகின்ற சத்தத்தையும் ரேடியம கைக்கடிகாரத்தின் மெல்லிய சத்தத்தையும் தவிர முழு உலகமும் அந்த நேரத்தில் மெளனத்தில் உறைந்து போயிருந்தது.
நானறியாமலேயே எனது கைவிரல்கள் அவளது கைவிரல்களைத் தேடி கட்டிலின் ஊடாக ஊர்ந்து சென்றன. அந்த ரம்மி யமான ஸ்பரிசம் கிட்டிய நொடியில் எங்கள் இருவரினதும் உடல்கள் அக்னியால் காய்ந்தன.
நடக்கக் கூடிய அனைத்தும் அந்த நேரத்தில் அந்த கட்டிலின் மீது நடந் தேறின. உடம்பின் ஒவ்வொரு நரம்பிலும் காதலும் காமமும் பரவிச் சென்றன. மரணத் தின் பெயரால் பிரிக்கக் கூடிய எதுவும் அந்தக் கட்டிலின் மீது இருக்கவில்லை.
எஸ்பெஸ்டஸ் கூரையின் ஓட்டையி னுாடாக உள் நுழைந்த மின்மினிப் பூச்சி யொன்று மெழுகுவர்த்திக்கு சவால் விடுத தவாறு கட்டிலின் மேலாகப் பறந்து சென்றது. ஒழுங்குற விரிக்கப்பட்டிருந்த கட்டில் விரிப்பு எங்கள் இருவரையும் சபித்தவாறு பொறுமை காத்திருக்க வேண்டும்.
மல்லிகை ஏப்ரல் 2008 & 66

அனைத்தும் முடிவுற்றது.
கனவுலகில் சஞ்சரித்தவாறு மீனா இன்னமும் கட்டிலின் மீது கிடந்தாள். நான் பற்ற வைத்த சிகரெட்டுடன் இருந்தேன். மனது மிகவும் திருப்திகரமான மாயத்தன் மையிலிருந்து சூனியமானதும் பயங்க ரமானதுமான தன்மைக்கு மாற ஒரு சிக ரெட் பிடிக்கும் நேரத்தையே எடுத்திருந் திருந்து. அணையத் துடிக்கும் மெழுகு வர்த்தி மீனாவின் கண்கள் பணிகின்ற நெஞ்சுப் பகுதியில் தனது வலுவிழந்த வெளிச்சத்தை ஒருமுறை பாய்ச்சியது.
என்ன செய்வது? தலை தீப்பிடித்துள் ளதைப் போல் தோன்றியது.
இப்போது மீனா நித்திரையாகி விட்டால் போல் தெரிகிறது.
இன்றைய இந்தப் பொழுது கடந்தகால கரைகளால் மூடப்பட்டு விடக் கூடும். நாளைய தினம் நான் வரும் வரையில் விரல்களினூடே ஏறிக் காத்திருக்கும்.
இவ்வாறானதொரு நிலையில் வேறு எவரும்
செய்யக் கூடும் என நினைக்கக் கூடிய ஒன்றை நானும் செய்தாக வேண்டும். ஆமாம்! கழிகின்ற ஒவ்வொரு நிமிடமும், இப்போது கூட கழுத்தில் விழுந்துள்ள முடிச்சு இறுக் கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
புரிந்து கொள். புரிந்து கொள்.
மீனாவை எழுப்பி, நான் வெளியில் சென்று சாப்பாடு கொண்டு வருகிறேன் என உணர்த்தினேன். அவள் எனது கரத்தைப்
பற்றி கட்டிலின் மீது அமர்த்தினாள். அந்த நொடியில்தான் மெழுகுவர்த்தி தனது இறுதி மூச்சை விட்டது. நான் எழுந்து லைட்டரைப் பற்ற வைத்து வேறொரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன்.
அவளது கண்களில் இருந்து உயிர்த் தெழுந்த கண்ணிர்த் துளி மெத்தையில் விழுந்து தும்புக்குள் காணாமற் போனது
裘 裘 裘
இடம்: பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவு நேரம்: இன்று அதிகாலை 3.35 நான் யாழ்தேவியில் வீட்டுக்கு வந்தேன். நேற்று சமாதான முகாம் பணிக்காக வவுனியா சென்றேன்.
அந்த நிகழ்ச்சி நடக்கும் போது நான் ரயில் சிற்றுண்டிச்சாலை பெட்டியில்
இருந்தேன்.
இந்தப் பெண் அங்கே முன்னால் இருந்த ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தாள். நான் சோம்பல் போக்க எண்ணி அவளுடன் பேச முற்பட்ட போதும் அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை.
ரயில் திடீரென களனி சிக்னலில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பெண்கள் ஒலமிட்டவாறு நாங்கள் இருந்த பெட்டியை நோக்கி ஓடிவந்தனர். காடையர்கள் சிலர் ரயிலில் ஏறி அதிலிருந்த தமிழர்களை கொலை செய்கிறார்கள் என்பதை அதிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன்.
மல்லிகை ஏப்ரல் 2008 & 67

Page 36
அக் காடையர்கள் சீக்கிரமே நாங்கள் இருந்த பகுதிக்கும் வரக்கூடும் என நான் கருதியதால் நான் அந்தப் பெண்ணின் கைகளைப் பற்றியவாறே ஏனையோருடன் ரயிலின் முன்பக்கமாக ஓடினேன். பின்னர் நான் அவளுடன் மலசல கூடத்திற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டேன். நாங்கள் சுமார் இருபது நிமிடங்கள் அங்கே இருந்திருக்கக் கூடும். சிங்களத்தில் படு மோசமான தூசன வார்த்தைப் பிரயோகங் களையும் தமிழில் கத்திக் கதறி ஒலமிடு வதையும் தவிர என்ன நடக்கிறது என்பதை நாங்கள் காணவில்லை.
சிறிது நேரத்தில் சிங்களத்தில் பேசும் சத்தம் நின்று விட்டது. அழுது புலம்பும்,
ஒலமிடும் சத்தங்கள் மட்டும் எஞ்சியிருந்:
தன. நான் அவளை உள்ளேயே இருக்க விட்டு மெதுவாக தலையை வெளியே நீட்டிப் பார்த்தேன். கண்ட இடங்களில் எல்
லாம் மனிதர்கள் வெட்டிக் கொலை செய்.
யப்பட்டிருந்தனர். ஒரு சிலரின் உயிர் துடித் துக் கொண்டிருந்தது.
பின்னர் நான் அவளையும் அழைத்து கொண்டு ரயில் பாதையில் இறங்கினேன்.
தேடித் தேடிப் பார்த்து வரிசையாக
அமைந்திருந்த வீடுகளினூடாகத் தெரிந்த ஒழுங்கையில் நடந்து கண்டி வீதிக்கு வந்து சேர்ந்தோம்.
அங்கிருந்து டெக்ஸி பிடித்து டெம்பல் வீதியில் உள்ள எனது எனக்ஸஉக்கு
அவளை அழைத்து வந்தேன். பின்னர்
பாண் வாங்கி வந்து அவளுக்கு சாப்பிடக் கொடுத்தேன். அவள் ஒரு வார்த்தையேனும்
பேசவில்லை. அவள் மலசலகூடம் சென்ற போது நான் அவளது கைப்பையைப் பார்த்தேன். அதில் பிஸ்டல் ஒன்று இருந்தது. அதைக் கண்வுடன்தான் சேர் நான் பொலிஸ் நிலையத்திற்கு வந்தேன். அவள் இப்போதும் எனது அறையில்தான் இருக்கிறாள்.
பொலிஸ் அதிகாரியின் நித்திரைக் கணி களில் நட்சத்திர ஒளியொன்று உற்பத்தியாகியது.
இதன் பின் நடந்தவை பற்றி எழுதுவது உகந்ததலல்ல. எனினும் ஒன்றை மட்டும்
எழுதி வைத்தேன்.
: :
பொலிஸார் வந்து அறையில் இருந்த மீனாவிற்கு கைவிலங்கிட்டனர்.
இறுதியாக. அந்தப் பூனைக் கண்கள் என்னுடன் பேசின. அந்தக் கண்களில் கண்ணிர் இருந்ததா என்பது பற்றி சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. அவள் எனது கண்களைப் பார்த்து நான் உங்களின் பால் அன்பு கொண்டுள்ளேன்’ எனக் கூறினாள்.
அந்த வார்த்தை எனக்குப் புரிய வில்லை.
எப்போதுமே அந்த வார்த்தை எனக்குப் புரிந்ததில்லை.
எனக்கு மட்டுமல்ல நிறையப் பேருக்கு அந்த வார்த்தை எப்போதுமே புரிவதில்லை.
மல்லிகை ஏப்ரல் 2008 & 68

\_nsడి ચn
p கார்ல் மார்க், பெரியார் ஈ. வே. ரா இவர்களினது கொள்கை ரீதியான ஒற்றுமை,
வேற்றுமைகளைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா? வல்வெட்டித்துறை. சிறீஸ்கந்தராசா.
* ஒருவர் உலகத் தொழிலாளர்களினது ஒற்றுமை மூலம் தான் மனுக்குலம் எதிர் கால விடிவைக் கண்டடைய இயலும் என்றொரு தத்துவத்தை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர். அந்தத் தத்துவம் அன்னாரது பெயராலேயே மார்க்ஸியம்' என இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்றது. சோவியத் யூனியன் தகர்ந்ததற்குப் பின்னர், மார்க்ஸியம் செத்துப் போய் விட்டது, என உலக முதலாளித்துவ சக்திகள் குதூகல மடைந்து இன்று கொக்கரிக்கின்றன. மார்க்ஸிஸம் தற்காலிகமாகப் பின்னடைந்துள் ளதே தவிர, அது தோற்றுப் போய் விடவில்லை. அது என்றுமே தோற்க முடியாத சர்லதேசத் தத்துவமாகும்.
பெரியாரின் தத்துவம் பார்ப்பனிய எதிர்ப்பு வாதம். தமிழர்களின் சகல தீமைக ளுக்குமே பார்ப்பனியம் தான் காரணம் என்ற வாதம் பெரியாரது தத்துவம் தமிழக ஆட் சியையே அண்ணா மூலம் கைப்பற்றிக் கொண்டது. பார்ப்பனர் அல்லாதவர்களினது இயக்கமான தி. மு. க வின் வளர்ச்சி, பார்ப்பனர் அல்லாத சாதிகளினது புதிய பார்ப் பன அமைப்பை உருவாக்கித் தமக்குள்ளேயே பங்கு பிரித்துக் கொண்டு, இன்று வரை, ஆட்சி அதிகாரத்தைச் செலுத்தி வருகின்றது.
ஒடுக்கப்பட்ட தலித்துகள் இன்று வரை, ஒடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர். தி. மு. க வில் தலித்துத் தலைமை வளர்க்கப்படவேயில்லை. காங்கிரஸில் rall ஜே. சிவசண்முகம்பிள்ளை, கக்கன் போன்ற தலைவர்கள் தலித் சமூகத்திலிருந்து தோன்றி, சகல மக்களாலும் அங்கீகாரம் பெற்றுத் திகழ்ந்தார்கள். இப்படிப் பெயர் குறிப்பிட்டுச் சொல்வதற்கு தலித்துக்களில் ஒரு தலைவரைக் கூட, இன்று வரை பெரியாரிஸம் வழி வகை செய்யவேயில்லை.
மல்லிகை ஏப்ரல் 2008 & 69

Page 37
எனவே, பார்ப்பனரல்லா இயக்கம், பார்ப்பனரல்லாத இடைப்பட்ட சாதிகளாக விளங்கியவர்களை அதிகார நிலைக்கும், ஆட்சிக் கட்டிலுக்கும் கொண்டு வந்து புதிய பார்ப்பனியம் உருவாக்கித் தந்துள் ளதே தவிர, சாதிகளற்ற, சமத்துவ சமுதா யத்தை உருவாக்கவேயில்லை. அதற் கான அத்திவாரத்தைக் கூடப் போடத் தவறி விட்டது.
p மல்லிகை இதழ்கள் பற்றியும், மலர்கள் பற்றியும் எழுகின்ற விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு நோக்கின்றிர்கள்?
தென்கிழக்குப் பல்கலைக்
கழகம். மொஹமட்,
25 சமைப்பவனுக்கு ருசி தெரியாது! என்பார்கள். நான் மாதா மாதம் மல்லி கையை வெளியிட்டு வைப்பவன் மாத்தி ரம் தான். படிப்பவர்கள் பல்வேறு மனப் பான்மை கொண்டவர்கள். ஆண்டுக் கொரு தடவை மலர்களையும் தயாரித் தளிக்கின்றேன்.
பல்வேறுபட்ட விமரிசனங்கள், அபிப் பிராயங்கள், கருத்துக்கள் வந்து சேரு கின்றன. இவைகளைப் பற்றி நான் மிக நிதானமாகக் கவனத்தில் எடுத்துச் சிந்தித்துப் பார்ப்பது எனது வழக்கம்.
எனவே, மல்லிகை இதழை வெளி
யிட்டு வைப்பது மாத்திரமல்ல, எனது நோக்கம். அது சம்பந்தமான கருத்துக் களையும் உள்வாங்கி, உள்வாங்கி இத ழைச் செம்மைப்படுத்துவதும், செழுமைப் படுத்துவதும் தான் எனது நோக்கம்,
p இலக்கிய உலகில் சிலர் திட்டமிட்டே
சகோதர எழுத்தாளர்கள் மீது அவதூறு பொழிகின்றனரே, இவர்களைப் பற்றி நீங் கள் என்ன கருதுகிறீர்கள்?
கிரிலப்பனை, ஆ. சிவதாஸன். 2 நீங்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உலகளா விய ரீதியில் அரசியல், கலை, இலக்கியத் துறைகளில் இப்படியான பேர்வழிகள் நிறையவே இருக்கின்றனர். தங்களினது இருப்பை வெளிப்படுத்திக் காட்ட முனை யும் செயலே இதுவாகும். இப்படியான மன நோயாளிகளைப் பற்றி என்றுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சக் காலம் இப்படியே கொக் கரித்துத் திரிவார்கள். கடைசியில் நண் பர்களை இழந்து தவிப்பார்கள். முடிவில் முகவரியற்றுப் போய் விடுவார்கள். விட் டுத் தள்ளுங்கள்- இப்படியான "சைக் கோக்"களைக் கவனத்தில் கொள்ளாதீர் கள், கருத்தாழம்மிக்கவன் விமரிசிப் பானே தவிர, நக்கலடிக்கமாட்டான். இதி லிருந்தே இனங் கண்டு கொள்ளலாம்.
?
என்ன நினைக்கிறீர்கள்?
எழுத்தாளர் சுஜாதா மறைவு பற்றி
வத்தளை. அ. சரவணன்.
* அற்புதமான எழுத்தாளன். பொழுது போக்காக நான் விரும்பிப் படிக்கும் எழுத் துக்களை இறக்கும் வரை எழுதித் தந்த வர். விஞ்ஞான தமிழ் அவருக்குரியது. தமிழை நவீன யுகத்திற்கும், இளந் தலை முறையினருக்கும் ஏற்ப எழுத்தில் கை
மல்லிகை ஏப்ரல் 2008 率 70

யாண்டவர். ஒன்றை அவதானித்துப் பார்த் தீர்களா? இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் நகுலன், சுந்தர ராமசாமி, லா, ச. ரா, சுஜாதா போன்ற எழுத்துச் சிற்பிகள் தமிழ் மண்ணை விட்டு, மறைந்து போயுள் ளனர். இன்னும் நுட்பமாகப் பார்த்தால், இந்த நால்வருமே கல்கி, அகிலன், தேவன் காலத்தவர்கள். இவர்களின் எழுத்துக் களில் தமிழகத்து மேட்டுக் குடியினரின் பாத்திரங்களே நடமாடியவைகளாக இருந்த போதிலும் கூட, தமிழை நவீன காலத்திற்கேற்ற முறையில் செப்பமிட்டுத் தந்த சிருஷ்டியாளர்கள்.
p
வளர்ச்சிக்கு ஒர் இடைஞ்சல்!” என்ற தலை
சென்ற இதழில் ‘பிரபலம் கட, சுய
பில் உங்களது அநுபவக் கட்டுரை ஒன்றைப் படித்தேன். உங்களது அநுபவத்தில் ஏற்பட்ட இத்தகைய கட்டுரைகளைத் தொடர்ந்து மல்லிகையில் எழுதி வந்தால் என்ன?
வவுனியா. எஸ். குலசிங்கம்,
* எழுதுவது தான் எனது விருப்பமும் கூட. ஆசிரியர் என்ற ஹோதாவில் மல்லி கையின் பக்கங்களை நான் அபகரித்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. ஆசிரி யர் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடிக் கொள்ளுகிறார் எனச் சிலர் குற்றஞ் சாட் டலாம். அதற்காக எனது அநுபவப் படிப் பினைகளை நான் பதிவு செய்யாமல் விடு வது சரியான அணுகு முறையுமல்ல.
Тр
கேள்விகள் தாராளமாக வருகின்றனவா?
தூண்டில் கேள்வி- பதில் பகுதிக்குக்
பசறை. எஸ். தர்மராஜன்.
2 வருகின்றன. அதே சமயம் தூண் டில் கேள்வி- பதில்களுக்கு ஏற்ற முறை யில் அக் கேள்விகள் அமைவதில்லை. தங் களது பெயர் எழுத்தில் வந்தால் போதும், என்ற எண்ணத்துடன் ஏதோ ஏனோ, தானோ என்ற முறையில் தான் பெரும் பாலானவை எழுதப்படுகின்றன. அத்து டன் அஞ்சலட்டையில் தான் தூண்டி லுக்கு எழுதும் படி கேட்டிருந்தோம். மாறாக, நீண்ட கட்டுரைகளையே பலர் எழுதி, எம்மைச் சிரமப்படுத்துகிறார்கள். பங்கு பற்ற விரும்புபவர்கள் தரமான, சுவை
யான, அறிவு பூர்வமான, தேடல் முயற்சி
கொண்ட கேள்விகளையே தூண்டி லுக்கு எழுத வேண்டும் என விரும்புகின் றோம். முக்கியமாக மாணவ - மாணவி யர் இந்தத் தளத்தைப் பயன்படுத்த முன் வரவேண்டும். இது விரும்பத்தக்கது.
p மார்க்ஸிஸம் தோற்றுப்போய்விட்டதா?
நீர்கொழும்பு. கா. பரமேஸ்வரன்.
* மார்க்ஸிஸம் ஒரு சர்வதேச விஞ் ஞானத் தத்துவம், சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பின்னர், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தமது வல்லமை மிக்க பிரசார சாதனங்கள் மூலம் உல கம் பூராவும் மார்கஸிஸம் தோற்றுப் போய் விட்டதாகப் பிரசாரப்படுத்தி, அரசியல் கொக் கரிப்பு நடத்தி வருகின்றன. அது ஒரு சர்வ தேச வாழும் தத்துவம்; வளரும் தத்துவம். கொஞ்சம் நிதானமாகப் பொறுத்திருங் கள். நீங்களும் நானும் இல்லாமல் போக லாம்- இன்று கொக்கரிக்கும் அந்த அமெரிக்காவையே நாளை இந்தத் தத்
மல்லிகை ஏப்ரல் 2008 ஜ் 71

Page 38
மல்லிகை ஏப்ரல் 2008 奉 72
துவம் ஆட்சிப்படுத்தும், கற்கக் காலம் செல் லலாம். ஆனால், இது நடந்தே தீரும்.
p இத்தனை தேசிய நெருக்கடிகளுக்கு
மத்தியிலும் கலாசார நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள் எனத் தொடர்ந்து நடை பெறு கின்றனவே, இவை பற்றி என்ன நினைக்கி றிர்கள்?
புத்தளம். எல். சிவகணேசன்.
2 ஓர் உயிர்ப்புள்ள பரம்பரையைக் கொண்டுள்ள இனம் சிரமங்கள், கஷ்டங் கள், நெருக்கடிகளைக் கண்டு சோம்பிப் போய் செயலற்று இருந்து விடாது. ஈழத் துத் தமிழினமும் அப்படிப்பட்டது தான். எத்தகைய கஷ்ட நிஷ்டுரங்கள் இடையி டையே குறுக்கிட்டு, வாழ்வை அலங் கோலப்படுத்தினாலும், அது தனது செழு மைமிக்கப் பரம்பரையிலிருந்து துளிர்த்து வளர்ந்து கொண்டேயிருக்கும். அப்படி இயங்காது போனால், செயலிழந்து, மலடு தட்டி, எதிர்க்ாலமற்றுக் குறண்டிப் போய் விடும், அந்த இனம்.
? தமிழ்நாட்டில் எந்த மூலையில் எந்த
எழுத்தாளன் மறைந்தாலும்,மல்லிகை போன்ற சிற்றிலக்கிய ஏடுகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுத்தில் அஞ்சலி செலுத்துகின்றிகள். நமது நாட்டுத் தகமையாளர்கள் மறைந்த போது, தமிழகப் பிரபல ஏடுகள் வேண்டாம், சிற்றிலக் கிய ஏடுகள் ஏதாவது அஞ்சலிக் குறிப்புகள் எழுதுவதேயில்லை. இதற்கு உங்களது பதில் என்ன?
கிளிநொச்சி. ஆர். சிவகடாட்சம்.
2 காலம் காலமாக நமது மொழிக்குச் சேவை செய்தவர்கள் மறையும் போது, அஞ்சலிக் குறிப்பு எழுதியே ஆக வேண்
டும். இது மரபு. ஆனால, வாய கிழய இலக்கியம் பேசும் தமிழகப் புத்திஜீவிகள் நமது நாட்டுத் தகைமை வாய்ந்த படைப் பாளிகள் மறைந்தபோதுமெளனம் சாதித்தே வந்துள்ளனர். இது பரம்பரை நோய். பார் ப்போம்- பொறுத்திருந்து பார்ப்போமே!
p
ளிகள். செங்கை ஆழியானின் ஈழநாடு சம் பந்தமான கட்டுரை ஒர் ஆவணம் போலப் பாதுகாக்கத்தக்கது. எண்ணிப் பார்த்தேன். எழுத்தாளர்கள் 52 பேர்களது உருவங்கள் அதில் பதியப்பட்டுள்ளன. இந்த மகிழ்ச்சியை ஏனைய மலர் வாசகர்களும் வெளிப்பருத்தி யுள்ளார்களா?
43- வது ஆண்டு மலர் வெளியிட்டுள்
நெல்லியடி. ச. நவநீதன்,
* பலர் பாராட்டுத் தெரிவித்தனர். எனக் குக் கூட மன நிறைவு. எழுத்தாளர் பல ரது உருவங்களையே மறந்து விட்டோம். எதிர்காலத்திற்குத் தேவையான ஆவணப் பதிவே அந்தக் கட்டுரையும், அதில் வந்த உருவப் படங்களும்.
?
கட்டத்திற்கு அழைத்தால் கலந்து கொள் விர்களா?
இரத்தினபுரி
இல் உண்மையான இலக்கியப் பற்றாளர்
உங்களை எங்களுருக்கு இலக்கியக்
எச். சாகுல் ஹமீட்.
தானா என்னை அழைப்பவர்?’ என்பதை நான் முதலில் தெரிந்து கொள்ள வேண் டும். அத்துடன் நமது எழுத்தாளர்களினது புத்தகங்கள் எத்தனையை உங்களது குழு வாங்கி ஆதரித்துள்ளது என்பதை நான் கவனத்தில் எடுக்க வேண்டும். அப் புறம் தான் நான் வருவதைப் பற்றி யோசி க்க முடியும்.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

(Dealers in Video Cassettes, Audio Cassettes, CD's, Calculators, suxury &
fancy Goods
152, Bankshall Street, Colomb0 - 11. Tel:2446028, 2441982 Fax:3234.72