கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.05

Page 1
50வது ஆண்டை நோக்கி.
. JY ||
Ly66
Gibsfri fishLITI
கலைஞர்களை மதிக்கு
ÉEA) JPGPGg
 

நம் கனவான்!
விலை - 30/=

Page 2
(Dealers in Video Cassettes, Audio
Cassettes, CD's, Calculators, suxury & fancy Goods
152, Bankshall Street, Colomb0 - 11. Te: 2446028, 244982 Fax: 3234.72
毒
 
 
 
 
 
 
 
 
 
 

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
50 -வது ஆண்டை நோக்கி. 69
ീറ്റ്ര منبرz%// برگ گo ©ർn/ o/ഗ്ഗദ്ധ மேல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமுமாகும்.
201/4, Sri Kathiresan St, Colombo - 13.
Te: 2320721
mallikaijeevadyahoo.com
எழுத்தாளர்கள் அழக்கழ ஒன்று கூழ விவாதிக்க வேண்டும்
இலக்கிய உலகில் இன்று ஒருவகைச் சோர்வு காணப்படுவதாகத் தென்படுகின்றது.
இதற்கு உள்நாட்டின் யுத்தச் சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். வாழ்க்கை நெருக் கடியும் இன்னொரு காரணமாக அமையலாம்.
இடைப்பட்டு வந்து, இலக்கியவாதிகளை இய ங்க முடியாமல் தடுத்து வைத்திருக்கும் இந்தத் தற்காலிகச் சூழ்நிலையை நாம் தான் மாற்றி யமைத்திட வேண்டும்,
அதற்கான வழிமுறைகளைப் படைப்பாளிகள் தான் கண்டடைய முடியும்,
முன்னைய காலங்களில் எழுத்தாளர்கள் தங் கள் முன்னால் வந்து குதிக்கும் பிரச்சனைகளைத் தாமே முகங் கொடுத்துப் பதிலிறுத்து வந்துள்ளனர். அதற்கான இலக்கிய அமைப்புக்களும் இய ங்கி வந்த காலமது.
இன்றோ, எழுத்தாளர்கள் தமக்குத் தமக் கான பிரச்சனைகளைக் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ளவே சரியான அமைப்புக்களின்றித் தனித் துப் போயுள்ளனர். தனிமைப்பட்டுள்ளனர்.
புத்தக வெளியீடுகள் பரந்து பட்ட வகையில் நாடு பூராவும் நடந்து வருவது உண்மை தான். அவைகளின் கவனம் முதலீடு செய்யப்பட்ட பணத்தில் ஒரு பகுதியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் நோக்கம் மாத்திரமே தவிர, அவற்றில் இலக்கிய நோக்கம் சிறிது கூட இருப்பதில்லை. எழுத்தாளர்கள் தம்முன்னுள்ள பிரச்சினை கள் பற்றி ஒருங்கு கூடிப் பேசித் தீர்க்க ஆமான மண்டபங்கள் இன்று இல்லை. ஒரு சிறிய மண்ட
பத்தை ஏற்பாடு செய்ய நினைத்தாலும் அதன்
வாடகை ஆயிரக்கணக்கான ரூபாக்களாகப் பயமுறுத்தி நிற்கின்றன.
இத்தனை தற்காலிகச் சிரமங்களுக்கு மத்தி யிலும், எழுத்தாளர்கள் ஒன்று கூடித் தம்முன்னே யுள்ள இலக்கியப் பிரச்சினைகளை அடிக்கடி பேசித் தீர்ப்பது தான் ஆரோக்கியமான எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு உகந்த வழியாகும் என நம்புகின்றோம்.

Page 3
யாழ் மண்ணில் அண்மையில் நீகழ்ந்து 999 ઈgત,િ oດ)
- கார்த்திக்
பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் மறைந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று எம்மத்தியில் நந்தி அவர்கள் வாழ்ந்திருந்தால், அகவை எண்பது கண்டிருப் பார். அவர்கள் மறைந்து போன நிலையில், அன்னாரின் எண்பதாவது பிறந்த தினம் (அமுத விழா) யாழ் பல்கலைக்கழகக் கைலாசபதி அரங்கில் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுகன் தலைமையில் 30, 03. 2008 இல் நடைபெற்றது. துணைவேந்தர் என். சண்முகலிங்கன், பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா, பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், டொக்டர் சிவநேசன் ஆகியோர் நந்தியின் இலக்கியம், வைத்தியம், ஆன்மீகம் பற்றி உரையாற்றினர்.
நந்தி அவர்கள் எழுதிய குழந்தைப் பாடல்கள் அடங்கிய நந்தியின் குட்டிகளுக்குப் பாட்டுக்கள் இறுவட்டினை இசைத்துறை விரிவுரையாளர் ரொபேட் தவநாதன் சிறப்பான அறிமுகத்துடன் வெளியிட்டு வைத்தார். அதன் முதற்பிரதியைத் துணைவேந்தரிடம் இருந்து நந்தி அவர்களின் துணைவியார் பெற்றுக் கொண்டார். நந்தியின் பாடல்கள் சிலவற்றுக்கு செயல் திறன் அரங்க இயக்கம் மாணவிகள் அபிநயத்த காட்சி மனதைப் பெரிதும் கவருவ தாக அமைந்திருந்தது. இறுவட்டுப் பாடல்களைப் பாடிய பாடகர்களும், இசை அமைத்த அ. கேதீஸ0ம் மேடையில் விருது வழங்கிக் கெளரவிக்கப் பெற்றனர். இந்நிகழ்வினை நந்தி அவர்களின் பிள்ளைகளும் குடும்பத்தினருமே முன்னின்று செய்தார்கள் என்பது கவனத்துக்குரியது.
хх хх хх хх Σκ
இந்த ஆண்டு மணிவிழாக் காணும் டொக்டர் எம். கே. முருகானந்தன் அவர்களின் மணிவிழா ஆரம்ப நிகழ்வு, அவர் பிறந்த வடமராட்சி மண்ணில் கொண்டாடுவதற்கான சந் தர்ப்பம் எதிர்பாராமல் வந்து கிட்டியது. அவர் கொழும்பில் இருந்து மனைவியாருடன் பிறந்த மண்ணுக்குத் திடீரென வரவேண்டி நேர்ந்ததால் அந்தச் சமயம் மணிவிழாக் கொண் டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வினைக் கொண்டாட முடிந்தது.
கலாநிதி த. கலாமணி இல்லத்தில் மாதந்தோறும் கூடும் அவையில் 31, 03. 2008 மாலை மணி விழா நிகழ்வுகளின் முதல் வாழ்த்து இடம் பெற்றது. எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பா. இரகுவரன், ஆ கந்தையா, த. கலாமணி, ச, லவீசன், பொன். சுகந்தன் ஆகியோரும், வேறு பலரும் வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றினர். மணிவிழாத் தம்பதிகளை, த. கலாமணி தம்பதி மாலை சூட்டிக் கெளரவித்தது. முருகானந் தன் அவர்களின் துணைவியார் திருமதி மணிமாதேவி அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப் 'பித்தார்கள். முருகானந்தன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் (மணிவிழாத் தொடக்க நாள்) 27 03, 2008 என்னும் தகவலை முன்கூட்டியே அறியத்தந்த 'மல்லிகைக்கு ஆரம்பத் தில் தலைவர் நன்றி தெரிவித்தார். சிற்றுாண்டி விருந்துகளுடன் மாலை மயங்கும் வேளை யில் மகிழ்வுடன் நிறைவு பெற்றது.

தெ0ெவ. நீதி012 ஞாUதMத்த முன்UUம் இெைஞர்த்துெ
V நிதழ்ச்சித்நெக்குத் தேவை
/
அந்தக் காலத்திலிருந்தே கொழும்பு ஜிந்துப்பிட்டிப் பிரதேசம், நாடகத் துறையில், நாடு தழுவிய ரீதியில் முக்கிய கவனிப்புப் பெற்ற பிரதேசமாகவே கணிப்புப் பெற்றுத் திகழ்ந்து வந்துள்ளது.
தமிழகத்திலிருந்து இந்த நாட்டுக்கு வந்து போயுள்ள பல நாடக நடிகர்கள், ஜிந்துப்பிட்டி முருகன் தியேட்டருக்கு வந்து போகாமல் போனதுமில்லை. தமது அபார நடிப்பின் மூலமும், குரல் வளத்தின் காரணமாகவும் அன்றைய மக்கள் மத்தியில் பிரபலமும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்ந்ததை வரலாறே சொல்லும்,
இடையே திரைப்படம் நுழைந்தது.
நேரடி மேடைத் திறமைகள், தனிமனித ஆற்றல்கள் எல்லாமே பின் தள்ளப்பட்டு விட் டன. அந்த இடத்தைச் சினிமா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது.
சிறப்பு மிக்க கலைஞர்களின் நேரடி சமயோசித ஆற்றல்களும், அபூர்வ திறமைகளையும் நாம் மெய்யாகவே இழந்து விட்டோம். நாடகத் துறை நசிந்து போய் விட்டது.
மிகச் சிறந்த கலைஞர்களால் ஒரு காலத்தில் விதந்து பேசப்பட்ட ஜிந்துப்பிட்டிப் SJ தேசத்தில், இன்று கலைஞர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும், உரையாடுவதும், நூலொ ன்றை வெளியிட்டு உரையாற்றும் சம்பவங்கள் அருகிப் போய் விட்டன என்பதும் எதார்த்த உண்மையாகும்.
இதே பிரதேசத்தில்தான் கொழும்பில் முன்னொரு காலத்தில் பிரமுகராகவும், கெளரவம் மிக் கவராகவும் விளங்கிய நீதிராஜாவின் பெயரால் ஒரு ஞாபகார்த்த மண்டபம் இருக்கின்றது. * பல்வேறு வகைப்பட்ட கலைஞர்களுக்கும் பயன் தரக்கூடிய ஒரு வசதியான மண்டபமாக அது விளங்கிய போதிலும் கூட, அந்த மண்டபம் பயன்படுத்த இயலாத ஒரு மண்டபமாக இருப் பது மிகப் பெரிய இழப்பு என்றே நாம் கருதுகின்றோம்.
கொழும்பு மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்டிருக்கும் இந்த மண்டபத்தை மறு சீரமைப்புச் செய்து, கலைஞர்கள், எழுத்தாளர்கள் இந்த மண்டபத்தை அவர்கள் தத்தமது பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்த ஒழுங்கு செய்து தருமாறு மாநகர சபை மேயரையும், ஆணையாளரையும், சபை உறுப்பினர் அனைவரையும் கலைஞர்களின் பெயரால் வேண்டிக் கொள்ளுகின்றோம்.
இந்த மண்டபம் இயல்பாகவே இயங்கி வருமானால் இலக்கிய நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள், பாராட்டு விழாக்கள் அடிக்கடி நடைபெறும். அதனால் இம்மண்டபத்தின் பெய ரும், மாநகர சபையின் நாமமும் தவறாது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அடிக்கடி இடம் பெறும், மக்களது மனதிலும் நிரந்தரமாக இடம்பெற முடியும்,
- ஆசிரியர்

Page 4
etxou Vý VU Vá2 வீ. ஏ. திருOநானசுந்தரம் மதிநுடீபமும் நிர்வாகத் 5962.(96Dlu 9)ளடகவியலாளர்
-ශ්‍රිෆි. Grරඹී. රිණි)(නීගෆූජිං
1955 ஆம் ஆண்டிலே, இரத்மலானை இந்துக் கல்லூரியில் சக மாணவராக திரு' எனச் செல்லமாக அழைக்கப்படும் வீ. ஏ. திருஞானசுந்தரம் என்ற நண்பரை முதலிற் சந்தித்தேன். ஆயினும், அப்பொழுது நாம் இருவரும் அந்நியோன்யமாகப் பழகவில்லை. எஸ். எஸ். ஸி சித்தியடைந்த பின்னர், நான் கொழும்பு சென். யோசப் கல்லூரியில் உயர் படிப்புக்காகச் சென்று விட்டேன்.
1959 இல், வீரகேசரி செய்தித்தாளிலே அவர் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த வேளை, அவரை மீண்டும் சந்தித்தேன். முதுநிலை பத்திரிகையாளர் எஸ். எம். கோபாலரத்தினமும், வீ. ஏ. தி யும் 'கலைக்கதம்பம்' என்றொரு பக்கத்தைத் தயாரித்து வழங்கிய பொழுது திரைமறைவில் இசை வழங்குவோர்' என்ற தொடரை நான் எழுதி வந்தேன். திரு' அக்கறை எடுத்து எனது கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அக்காலம் முதல், அவரும் நானும் பரஸ்பர மதிப்புடன் நண்பர்களாக இருந்து வருகிறோம்.
திரு. வீ. ஏ. திருஞானசுந்தரம் இன்று நாடறிந்த ஒரு பிரமுகர். ஒரு இதழியலாளராக ஆரம்பித்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் Deputy Director-General of Broadcasting ஆகப் பதவி உயர்ந்த இந்தத் தமிழனின் பங்களிப்பையிட்டு, நாம் பெருமைப்பட வேண்டும். ஒளி ஊடகமாகிய ரூபவாஹினியிலும், இவர் ஆலோசகராகப் பணி புரிந்திருப் பதுடன், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்களிலும், அமைப் புக்களிலும், தனது நிர்வாகத் திறமையை நிரூபித்து வந்திருக்கிறார்.
மதிநுட்பமும், நிர்வாகத் திறனும், சிறந்த முகாமைத்துவ அநுபவமும், வாய்க்கப் பெற்ற வீ. ஏ. தி. அவர்கள் சிறப்பாக மதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.
தமிழ் மொழி வளம், தமிழாக்கும் ஆற்றல், குரல் வளம், ஒலிபரப்பு அம்சங்களிலும் தமது முத்திரையைப் பதித்தல் ஆகியன அவரது முத்திரையை இனங்காட்டி நிற்கும்.
இளைய பரம்பரையினர் இவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, இவருடைய சாத னைகளை நிழற்படுத்துவது பயனளிக்கும் இது. ஏனெனில், பொறுப்புடைய பல பதவிகளை அவர் வகித்திருப்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பதவிகளுக்கும், பணிகளுக்குமிடையே தொடர்பு உண்டு.
மல்லிகை மே 2008 & 4

ஆய்வறிவாளர் கா. சிவத்தம்பி அவர் கள் கூறுவது போல, "அவரது நட்பு நிலை யினையே அவரது ஆளுமையின் திறவு கோலாகக் காண்பர். ஆனால், திருவிடத் துக் காணப்படும் இந்த அணுகுதலெளி மைச் சிறப்பு, அவரது சாதனைகளை, திற மைகளை மறைப்பனவாகவே உள்ளன
என்று, சொல்லலாம்.'
வீரகேசரியின் செய்திப் பிரிவின் உதவி ஆசிரியர், காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இன்றியமையாத நிர்வாகி/ மொழி பெயர்ப் பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதி மா அதிபர், உலக இந்து மாநாட்டுச் செயலகப் பணிப்பாளர், பனை அபிவிருத் திச் செயலாளர், கொழும்பு பல்கலைக்கழக வருகை இதழியல் கற்கைநெறி விரிவுரை யாளர், வடகிழக்கு மாகாண சபையின் மறு வாழ்வு அபிவிருத்திச் சபையின் செயலாளர், ஜனாதிபதி அலுவலக ஒருங்கிணைப் பாளர், ABC துறையின் பத்திரிகையாளர், சுவர்ண ஒலி நிகழ்ச்சி/ செய்தி முகாமையா ளர் ஆகியன சில பதவிகள்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தின் வர்த்தக சேவை உதவிகள் பணிப் பாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். அவருடைய வானொலிப் பங்களிப்புக் களைப் பார்க்கும் முன்னர், பேராசிரியர் கா, சி, குறிப்பிட்ட இன்னொரு அவதானிப்பை யும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
'வீ. ஏ. தி. இலங்கை வானொலி தேசிய சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராக இருந்தவர். ‘வளரும் பயிர்' நிகழ்ச்சியை நட த்தியவர். கிராம சஞ்சிகை, சிறுவர் மலர், வானொலி நாடகம், கலைக் கோலம், விசேஷ சித்திரங்கள் போன்றவற்றிற்குப் பிரதிகளை எழுதியவர். பல நேர்காணல்
களை ஒலிபரப்பியவர். வர்த்தக சேவை யில், தேன்கூடு, விடிவெள்ளி ஆகிய நிகழ்ச் சிகளுக்கான பிரதிகளை எழுதித் தயாரித் தவர், செய்திச் சுருளைத் தயாரித்து ஒலி பரப்பியவர், செய்தி வாசித்தவர், பல்வேறு அரச கூட்டுத்தாபன நிகழ்ச்சித் திட்டங் களுக்கான பிரதிகளை எழுதி ஒலிபரப்பி
եւ 16նit.''
ஒலிபரப்பாளராகவும், இருந்து வந்த வீ. ஏ. தி. 1980 முதல் இ. ஒ. கூ, தாபனத்திலே நிர்வாகப் பிரிவு உதவி அதிபர், வர்த்தக சேவை மேலதிக அதிபர், தமிழ்ச் சேவை மேலதிக அதிபர், தமிழ்ச் சேவை அதிபர், பிரதிமா அதிபர் ஆகிய பதவிகளை வகித்த துடன், லக்ஹந்த/ ITN ஆகியனவற்றின் பிரதிப் பொது முகாமையாளர் போன்ற பதவிகளையும் வகித்துச் சிறப்பாகப் பணி யாற்றியிருக்கிறார். 4.
ரூபவாஹினியின் தமிழ் நிகழ்ச்சிகள்/ செய்திகள் ஆகியவற்றிற்கான ஆலோசக ராகவும், அதிபர்கள் சபை உறுப்பினரா கவும், வேறு சில ஒளிபரப்பு நிலையங்களின் ஆலோசகராகவும் பணிபுரிந்து வந்திருக்கி tDITIT.
ஜப்பான், ஜேர்மன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஒலிபரப்புக்கள் சம்பந்த மான பயிற்சியைப் பெற்றதுடன், நேபாளம், டொயிச்சே வெலே ஆகிய ஒளி/ஒலிபரப்பு நிலையங்களில், பயிற்றுவிப்பாளர்களுக் கான பயிற்றுவிப்பாளராகவும் அநுபவம் பெற்றார்.
கலைக்கழகம் தமிழ் நாடகத்துறைத் தலைவராகவும், மற்றும் பல தொழில் குழுக் களின் அங்கத்தவராகவும் பணிபுரிந்திருக் கிறார்.
மல்லிகை மே 2008 奉 5

Page 5
தமிழ் ஒளி', 'கலைச் செம்மல்", "கலை ஞான பானு', 'ஒலி அரசு', 'மதுர பாஷணை ஆகியன அவருக்குக் கிடைத்த பட்டங்கள்.
கார்ள்டுயிஸ்வேர்ச் அலுமினிய அசோவழி யேஷன் செயலாளர்/ தலைவர் ஆகிய பட் டங்களும், பதவிகளும் அவருக்குக் கிடைத் துள்ளன.
துறைசார் உயர்மட்டத்தினர் இவர் ஆற்றலையும், திறமைகளையும் வியந்து பாராட்டியுள்ளனர்.
'கலாபூஷணம்’ தெரிவுக் குழுவின் தலைவர்/ உறுப்பினராக நான்கு தடவை கள் கடமையாற்றியுள்ளார். உத்தியோக மொழிகள் அலுவலகம் வெளியிட்ட தொழில் நுட்பப் பதங்கள் அகராதித் தொகுதியின் தொகுப்பாளர்களில் இவரும் ஒருவராகப் பங்களித்தார்.
வீ. ஏ. திருஞானசுந்தரத்தின் பங்களிப் புக்கள் நிர்வாகத் துறையில் மாத்திரமன்றி, குறிப்பிடத் தகுந்த நூல்களை எழுதி வெளி யிட்டவர் என்பதிலும் நாம் பெருமையடைய
.Lbחט6
பேராசிரியர் கா. சிவத்தம்பி தொடர்பான கரவையூற்று', 'காற்றைக் கருவி கொண்டு கலைபடைத்த வித்தகர்கள் (சிவாலயம், மனோலயம்)', 'சாகா வரம் பெற்ற சான்றோன் (எம். சிவசுந்தரம் பற்றியது) ஆகியன இவ ரது எழுத்து வடிவ எழுத்துகள். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் நன்கு பரிச்சயம் பெற்றவர் வீ. ஏ. தி.
அரச தொலைக்காட்சி விருதுகளுக் கான தேர்வுக் குழுவிலும் அங்கத்தவராகக் கடந்த ஆண்டு செயற்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண் டாரநாயக குமாரதுங்க அவருக்கு முநீ லங்கா திலக' பட்டத்தைச் சூட்டியிருந் தமையையும் இங்கு குறிப்பிடலாம்.
இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட
வரான நண்பர் வீ. ஏ. திருஞானசுந்தரம்,
தன்னலம் பாராமல், பிறர் நலன்களில் அக்கறை கொண்டவர் என்பது எனது நீண்ட நாள் அவதானிப்பு. இதற்கு உதார ணமாக இலங்கை வானொலித் தமிழ்ப் பகுதியின் முன்னோடி ஒலிபரப்பாளர்கள் பற்றிய விபரங்களை, அவர்களின் புகைப் படங்களுடன் வெளியிட்டதை அவர் பெருந் தன்மை எனக் குறிப்பிடலாம்.
நான் ஆங்கிலத்தில் எழுதுபவற்றைப் படித்து உடனுக்குடன் பாராட்டுத் தெரிவிக் கும், தமிழ் பேசும் மக்களில், மூவரைக் குறிப்பிடலாம். அரசியல்வாதி அஸ்வர் அவர்கள், இளைப்பாறிய நிர்வாக அதிபர் மார்க்கண்டு, வீ. ஏ. திருஞானசுந்தரம் ஆகி யோர் மாத்திரமே அவர்களாவர்.
எஞ்சியவர்கள் நான் எழுதுவதைப் பார்ப்பதுமில்லை. பாராட்டுவதுமில்லை. மாறாக ஒரு விமர்சகர் ஆங்கிலப் பத்திரி கைகள் எனக்குக் கொடுககும் இடத்தை நான் துஷ்பிரயோகம் செய்கிறேன் என்று தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியிருக் கிறார். இதுவும் பதிவு செய்யப்பட வேண் டும். வீ. ஏ. தி. யும் நம்மவர்கள் மத்தியில் உரிய கணிப்பைப் பெறவில்லை என்பதற் காக, 'மல்லிகை" ஆசிரியர், அட்டைப்படக் கட்டுரையை எழுதும்படி என்னைப் பணித்த பொழுது, மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று, இங்கு எழுதியிருகிறேன்.
மல்லிகை மே 2008 & 6

- ෆෙරී ෆිෆරෑණිගු) ඊශිද්වීශීg
கட்டாரிலிருந்து வந்து ஒரு மாதம் கடந்திருந்த வேளையது. எதிர்பாராத விதமாக, நண்பன் ரிஸ்வானை அவரது கிராமமான கம்பிரிகஸ்வெவயில் வைத்துச் சந்திக்கக் கிடைத்தது. ரிஸ்வான் எனது நண்பன் என்பதை விடவும், எனது தந்தை வழி உறவுக்காரனாகும். எனது தந்தையின் பிறந்த ஊரும் கம்பிரிகஸ்வெவ என்பதனால், ரிஸ்வானின் ஊருக்கும் எனக்கும் ஒரு நெருக்கமான இடைத் தொடர்பு இருந்து மட்டுமல்ல, ரிஸ்வான் ஒரு ஒலிபரப்பாளர், நாடகக் கலைஞர், கவிஞர் என்று பல்வேறு தளங்களில் மெல்லக் கால் பதித்து வரும் திறமையும், ஆர்வமிக்கவர். அன்பு ஜவஹர்ஷாவின் கண்டு பிடிப்பால், அவரது பாசறையில் தனது திறமைகளைப் பட்டை தீட்டிக் கொண்டவர். திறந்த மனத்துடன் எப்போதும் தனது கருத்துக்களை முன்வைக்கிறவர். அநுராதபுரத்தில் எந்தக் கலை நிகழ்ச்சி நடந்தாலும், அவர்தான் அறிவிப்பாளர். விடயத்தைத் தாண்டி, வளவளக்காத மிகச் சிறந்த அறிவிப்புத்துறை சார்ந்த ஆளுமை அவரிடம் உள்ளது! அடிக்கடி அன்பு ஜவஹர்ஷா அவர்களும் சொல்லுவார்கள், போட்டியும், பொறாமையும், தலைக்கணமும் நிறைந்த இன்றைய அறிவிப்பாளர்களின் மத்தியில் மிகச் சிறந்த குரல் வளமும், திறமையும் கொண்ட ரிஸ்வான் தனது கிராமத்திற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது துரதிர்ஷ்டமே,
ரிஸ்வானோடு கதைத்த அந்த அரை மணி நேரமும், இலக்கியத்தைத் தாண்டி வேறு எதுவும் கதைக்கவில்லை. ரிஸ்வானோடு பேசிய நிமிஷங்கள் பல்வேறு பட்ட நிகழ்கால இலக்கியங்கள் பற்றிய கருத்தாடலாக அமைந்தது. சிலரோடு கதைப்பதில் ஒரு சதத்திற்கும் பெறுமானம் கிடைப்பதில்லை. ஆனால், இன்னும் சிலரோடு கதைக்கின்ற போது, தொடர்ந்தும் கதைப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காதா? என்று மனது ஏங்கும். அந்த வகையில், ரிஸ்வானிடமிருந்து விடை பெறும் போது, பேசுவதற்கு நிறைய விடயங்கள் எங்களிடமிருந்தது. ஆனால், நேரம் தான் கிடைக்கவில்லை. இதே போன்ற ஒரு இனிமையான அநுபவமொன்று எனக்குக் கட்டாரில் இருந்த போதும் ஏற்பட்டது.
(Qatar Foundation) கட்டார் பவுண்டேசன், என்ற கூட்டுத்தாபனத்தின் கீழ் அமைந்துள்ள Education City இல் அமைந்துள்ள ஐந்து University களில் ஒன்றுதான், VCU-Q (Virginia commen wealth of Qatar) 95ub. Sást) GustoTassassitsOT usio(36up பட்ட Diploma Degree Course கள் காணப்படுகின்றன. இதில் முக்கியமானதும், பிரதானமானதும் தான், Art Drawing சித்திரம் வரைதலுக்கான பட்டப்படிப்பு. அதிலும், Modren Art க்கு இந்த University யானது மிகவும் பிரசித்தம். அவ்வப்போது, இந்த
மல்லிகை மே 2008 & 7

Page 6
VCU-Q sSl6ö Art Exhibition pisu Jugos) வழக்கம், ஒருமுறை இப்படி நடந்த Art EXhibition இல் நானும் ஒரு நண்பனும் கலந்து கொண்டோம்.
அற்புதமான ஒவியங்கள் VCU-0 மாணவர்களின் கைவண்ணத்தில் சிந்தை யைக் கவர்ந்தது. வளைகுடா நிலப்பரப்பில் நமக்குத் தெரியாத இன்னொரு பரிமா ணத்தை அவர்கள் சித்திரமாய்த் தீட்டி அசத்தியிருந்தார்கள். மேற்கத்திய சிந்தனா வாதத்தின் கீழ், இந்தக் கட்டார் மண் அடி மைப்பட்டிருந்தாலும், எதார்த்தம் பற்றிய முன்னெடுப்புக்களிலும் இவர்கள் ஆர்வம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது தான். மேற்கத்தியவாதிகள் என்னும் போது, கால னித்துவவாதிகள் என்கின்ற உண்மையை யும் தாண்டி மனிதாபிமானமும், எதார்த்த எண்ணமும் கொண்ட சிறந்த சிந்தனையா ளர்களும் ஆங்காங்கே இருக்கின்றார்கள் என்கின்ற உண்மை அந்த Art Exhibition ஐ அவதானித்த போது, அனுமானிக்க முடிந்தது. ஏனெனில், இந்த University இன் நிருவாகம் அமெரிக்காவில் இருக்கும் VCU வின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கிக் கொண்டிருப்பது தான்.
இஸ்ரேலின் கொடும் பிடிக்குள் அகப்பட் டுத் தடுமாறிக் கொண்டிருக்கும், பலஸ் தீனர்களின் நிலையையும், அரக்க எண் ணங் கொண்ட மிலேச்சத்தனமான தாக்கு தல்களினால் லெபனானில் சீரழிந்து சின்னா பின்னமாகியிருக்கும் மனித குடித் தொகை பற்றியும், ஈராக்கின் வளங்களை
சுரண்டும் முகமாகப் பொய்களை மூட்டை
மூட்டையாக அவிழ்த்து விட்டு, அங்குள்ள அப்பாவி மக்களின் அன்றாடங்களை வெறித்தனமாய், சூறையாடிக் கொண்டிருக் கும் அமெரிக்க நிருவாகத்தின் மனிதாபி மானமற்ற செயல்களை வெளிச்சப்படுத்தும் விவரணக் காட்சியாக்கமாகவும், பல நூற் றுக்கணக்கான ஒவியங்களும், புகைப்படங் களும் காட்சிக்கு வைக்கபட்டிருந்தமை, வந்தவர்களின் எண்ணங்களை வசீகரித் துக் கொண்டதோடு, அல்லல் படும் அந்த அப்பாவி மனிதர்கள் மீதான ஒரு பரிதா பத்தை, பாசத்தை விதைத்தது எனலாம்.
இந்த ஓவியங்களையும், புகைப்படங் களையும் பார்க்கின்ற போது, படையினரின் கடும் நடவடிக்கையினால் காரணமே இல் லாமல் காலமாகிப் போன வன்னிப் பிரதேச த்து அப்பாவிகள் பற்றியும், புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதலில் காத்தான் குடி, ஏறாவூர் பள்ளிவாயல்களில் உயிரி ழந்த அப்பாவிகள் பற்றியும், யாருக்கும் சார்பு இல்லாமல் இருந்தும், இரு பக்கத் தினாலும் வறுத்தெக்கப்படும், இந்த எல் லைப்புற மக்களின் அவல வாழ்க்கை பற்றி யும், அவர்களின் கேள்விக் குறியாகியிருக் கும் அன்றாடங்கள் பற்றியும், சிந்தனை விரிந்தன. கொஞ்ச நேரம் எனது மூளை விறைத்துப் போனது.
ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டுக் கொண்டு வந்த எனக்கு, எதிர்திசையில் வந்தார் அந்த நபர். சுமார் 40 வயதிருக்கும், ஒவியங்களை ஆழமாக ரசித்துக் கொண் டிருந்தார். கழுத்தில் தொங்க விடப்பட்டி ருந்த ID ஐ பார்த்த போது, அவர் ஒரு (Re
மல்லிகை மே 2008 & 8

porter) செய்தியாளர் என எனக்கு விளங் கியது. எதேச்சையாக நிமிர்ந்தவர் அவரது 11) ஐ நான் அவதானிப்பதை உணர்ந்து கொண்டார். என்னைப் பார்த்து ஒரு இளம் புன்னகையை வீசினார். அவ்வளவு தான்
நான் அவரைப் படித்துக் கொண்டேன்.
அவரது பெயர் அப்துல்லாவற் முஹம் மது யாசீன். பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர். இப்போது அல்- ஜெசீரா தொலைக்காட்சி யில் செய்தி நிருபராகவும், செய்தி வாசிப் பாளராகவும் கடமையாற்றுகிறார் என்ற, அடிப்படைத் தகவல்களை இருவரும் பரஸ்பரமாய் அறிமுகப்படுத்திக் கொண்ட
தில் அறிந்து கொண்டேன்.
அப்துல்லாவற் முஹம்மது யாசீன் முற்போக்குச் சிந்தனை உடையவர். இஸ் ரேலிய ஏகாதிபத்திய அடக்கு முறையிலும், அவர்களின் வன்மம் நிறைந்த தாக்குதல் களிலும், தனது உறவுகளைக் கண்முன்னே காவு கொடுத்து விட்டு, தனித்து நின்று வாழ்க்கையோடு போரிட்டுக் கொண்டிருப் பவர். அவரது, கசப்பான அநுபவங்கள் தான் அவரை ஒரு ஊடகவியலாளராக மாற்றியதாகக் கூறினார். தினமும், இஸ் ரேலிய இராணுவம் செய்யும் வக்கிரங் களால், வன் செயல்களால் அப்பாவி ஏழை மக்கள் படும் அவஸ்தைகளை விவரித்தார். இவைகளைக் கூறும் போது, அவரது கண்கள் கலங்கிப் போய் விட்டது. மெது வாக கைக்குட்டையின்ால், துடைத்துக் கொண்டார். அவரது அநுபவங்கள் வித்தி யாசமானவை. ஒரு ஊடகவியலாளராக
அவர் பெற்ற கசப்பான அநுபவங்களை
விவரிக்கும் போது, ஆச்சரியப்பட வைக் கின்றது. எல்லா நாடுகளைப் பற்றியும், அவைகளின் சித்தாத்தங்களையும் தெளி வாக விவரிக்கின்றார். ஒரு வளைகுடா நாட்டு அரேபிய ஊடகவியலாளனுக்கு நம் நாடு பற்றி என்ன தெரியும்? என்ற கணிப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய எந்தக் கருத்துக்களையும் நான் முன்வைக் கவில்லை. ஆனால், அவர் அது பற்றியும் பேசினார். இலங்கை பற்றி என்ன தெரிந் திருக்கும் அவருக்கு என்ற என் எண்ணத் திற்கு முற்றுப் புள்ளியை வைத்தது. அவரது கருத்துக்கள் 1983 ஆம் ஆண்டிலான ஜூ லைக் கலவரம் தொடக்கம், நான் அவரை சந்தித்த அந்தத் தினம் மட்டுக்கு மான அரசு- புலிகள் பற்றிய அவரது கருத்
துக்கள் என்னை அசர வைத்தது.
4W
அவரது பேச்சிலேயே, சுமார் மூன்றரை மணி நேரம் வேகமாய்க் கழிந்து போய் விட்டிருந்தது. அவரோடு பேசிய அந்த சில மணி நேரங்கள் உண்மையிலேயே என் வாழ்வில் மிகப் பெறுமதியானவை மட்டு மல்ல மறக்க முடியாதவையும் கூட. மன
மின்றி இருவரும் பிரிந்தோம்.
ஒரு ஊடகவியலாளன் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு அவர் நல்ல உதார ணம். சுமார் பதினைந்து வருட அவரது சேவையில் அவர் இன்னும் தேடல் நிறை ந்த ஒரு சாதாரண மனிதனாகவே காணப் படுகின்றார். எளிமையும், பக்குவமும், பண்பாடும் நிறைந்த அந்த அரேபிய ஊடக வியலாளரைப் போல், நம் நாட்டிலும் ஊடக
த்துறையினர் உள்ளார்களா? என்பது ஆரா M
மல்லிகை மே 2008 & 9

Page 7
யப்பட வேண்டியவையே. ஒரு சிலர் இருக் கலாம். இருந்தும், போட்டியும், பொறாமை யும், ஆணவமும் நிறைந்தவர்களைத் தான் பெரும்பாலும் நமது ஊடகங்கள் தாங்கிக்
கொண்டிருக்கின்றன.
சாதாரண ஒரு அறிவிப்பாளன் காட்டும், பந்தாவும், மிடுக்கும் நம்மால் சகிக்க முடி வதில்லை. எந்தத் திறமையும் இல்லாமல், பின் கதவு வழியால் கதிரையைப் பிடித்துக் கொண்டு, பெரிய பிஸ்தாவாக நம்மவர்கள் போடும் ஆட்டத்தைப் பார்க்கும் போது, நமது ஊடகங்களின் தனித்தன்மை பற்றி யும், அவர்களின் திறமைகள் பற்றியும் சிந்திக்க வைக்கின்றது.
பீ. எச். அப்துல் ஹமீது, நடராஜ சிவம், கபூர், மயில்வானம் சர்வானந்தா போன்ற தலை சிறந்தவர்கள் ஒலிபரப்பாளர்களாகத் தடம் பதித்திருந்தாலும், அந்த அடைவு களை எட்டும், மிகச் சிறந்தவர்களாக இப்போது ஒலிப்பரப்பாளர்களை இனங் காண முடியவில்லை. இப்படித்தான் மற்ற எல்லாத்துறைகளிலும் இந்தக் குறைபாடு நிவர்த்தி செய்யப்படாமலேயே இருக்கிறது. ஆங்காங்கே ஒரு சிலர் திறமையாளர்கள் இருந்தாலும், திட்டமிட்டு அவர்கள் ஒதுக்கப் படுகிறார்கள் என்று ஒரு மூத்த அறிவிப் பாளர் ஆதங்கப்பட்ட ஞாபகம். உண்மை யிலே, ரிஸ்வான் அஹமட் தேடலும், திறமையும் மிகுந்த ஒரு கலைஞன் ரிஸ் வான் அஹமட்டிடமிருந்து விடை பெறும் போது, அந்த அப்துல்லாவற் முஹமட் யாசீனின் நினைவுகள் தான் என் எண்ண அலைகளில் ஓயாமல் ஒலித்துக் கொண்டி ருந்தன.
(இன்னும் பேசுவேன்)
Excellent
Photographers Modern Computerized Photography For Wedding Fortraits & Child 5ittings
Photo Copies of ldentity Cards (NIC), Раеeport & Driving Licences Within 15 Minutes
300, MOdera Street, Colombo - 15. Tel 2526345
மல்லிகை மே 2008 & 10

மேமன்க: w memonkavi (a yahoo.com
இலங்கை வலைப்பதிவுகளை பற்றிய அறிமுகங்களை தினக்குரல் ஞாயிறு இதழில் க.தே.தாசன் செய்து வருகிறார். நல்ல பணி. எனது வலைப்பபதிவை பற்றியும் அண்மையில் எழுதி இருந்தார். அவருக்கு எனது நன்றிகள்.
நானும் இலங்கை வலைப்பதிவுகளை பற்றி எழுதலாம் என்று முடிவு செய்து இருந்தாலும் தாசனின் பணிக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நான் முடிந்த அளவு வேறு நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் வலைப்பதிவு முயற்சிகள்ை பற்றி அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன். ஆனாலும் சில வேளை நமது இலங்கை வலைப்பதிவாளர் களின் வலைப்பக்கங்களில் சொல்லப்படும் சில விடயங்கள் பரவலாக எல்லோருக்கும் சொல்ல படவேண்டும் என நான் கருதுகிற சில விடயங்களை இங்கு எடுத்து காட்ட வேண்டி இருக் கிறது. அந்த வகையில்.
‘மலையகத்தின் ஓர் மூலையில் இயற்கை அன்னையின் இரசனைப் பிரசவமோ என எண்ணத் தோன்றும் இறக்குவானையில் பிறந்து வளர்ந்து. நிறையவே அடிபட்டு களைத்து எதிர்காலத்தை இலட்சியத்துடன் கடக்க வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் அடைய முற்பட்டுக்கொண்டிருக்கும் சாதாரண இளைஞன்.” என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் 'இறக்குவானை நிர்ஷன்'
புதிய மலையகம்' எனும் வலைப்பதிவில் சேர்த்திருக்கும் ஒரு குறிப்பு எனது கவ னத்தை கவர்ந்தது. அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
http://puthiyamalayagam.blogspot.com/
மெகா சீர்யலால் சிறுமி தற்கொலை!!!
சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நாடகங்கள் பல பிரதிகூலமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதை பலரும் பல்வேறு வகையில் தெளிவுபடுத்தி வந்தனர்.
‘லிகை மே 2008 & 11

Page 8
இந்நிலையில். அவர்களின் கூற்றை உண் மையாக்கும் முகமாக சிறுமியொருவர் தற் கொலை செய்து கொண்டுள்ளார்
தொலைக்காட்சி நாடகத்தில் இடம் பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்து விட்டு. அதேபோல் தானும் முயற்சி செய்து சிறுமி தற்கொலை செய்துள்ளார். இச்சம்ப வம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இலங்கை,கொழும்பு பாலத்துறை பகுதி யிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரிகாசா (வயது 12} என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்த வராவார். இச்சம்பவம் குறித்து மேலும தெரிய வருவதாவது சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில நிமித் தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியு டன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேலமாடி யிலுள்ள தனது அறையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மாலை 4.30 மணியளவில் அங்கு வந்த சிறுமியின மச்சாள் முறையான மற்றொரு சிறுமி மேல் மாடியின் அறைக்குச் சென்று பார்த்தபோது, குறித்த சிறுமி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் கூரைக்கம்பியில் தொங்கிய நிலையில காணப் பட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுமி, அச்சத்தில் அலறியவாறு பாட்டியிடம் ஒடிச் சென்று கூறியுள்ளார். உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட தாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம் பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற னர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளி பரப்பான தொலைக்காட்சி நாடகமொன்றில் பெண்ணொருவர் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சிப்பதைப் போன்ற காட்சி பட மாக்கப்பட்டிருந்ததாகவும் அதைப்பார்த்த குறித்த சிறுமி விளையாட்டுத்தனமாக அதேபோன்று செய்து பார்க்க முயற்சித்த
வேளையே இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவின் ஒரு பகுதியை சிறிய மேசையொன்றின் மேல் ஏறி தாழ்வாகக் காணப்படும் கூரைக் கம்பில் கட்டி மற்றைய பகுதியை தனது கழுத்தில் கட்டிக்கொண்டு மேசையிலிருந்து குதித்ததினாலேயே கழுத்துப்பகுதி இறுகி சிறுமி உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமி யின் பாட்டியிடமும் சிறுமி தூக்கில் தொங் கியதை முதலில் கண்ட சிறுமியிடமும பொலி ஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தை நேரில் கண்டு பயந்த நிலையில் காணப்படுவதாக தெரி விக்கப்படுகின்றது
பெண்களை மையப்படுத்தியே சில தொடர் நாடகங்கள் இயக்கப்படுகின்றன.
குடும்பச்சச்சரவுகளில் பெண்களே வில் லிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். இத னால் வீடுகளில் தாய்மார்களைக் கூட பிள்ளை கள் எதிரியாகவே பார்க்கின்றனர் என்றால் தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள். நண்பரின் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த சம்பவம் இது,
தாயார் சற்று தாமதமாக வர மகன் தாயைப் பார்த்துக் கூறுகிறான் இப்படி, "எங்கடி அவன பார்க்கவா போயிட்டு வார? அவன் சோறுபோட்டு வளர்ந்த உடம்பா இது?" எனக் கேட்டுள்ளான். இதற்குக் கார ணம் என்னவென்றால் இந்த வசனம் அப் போதுதான் தொலைக்காட்சி நாடகமொன் றில் ஒளிபரப்பாயுள்ளது. அதில் தாமதமாகி வரும் மனைவியைப் பார்த்துக் கணவன் கேட்கும் இக்கேள்வியை இங்கு மகன் கேட் கிறான். இவ்வாறு நிறையவே சம்பவங்கள் உள்ளன.
மல்லிகை மே 2008 ஜ் 12

எதிர்மறை விடயங்களை காட்டுவதால் சிறுபிள்ளைகள் நியாயத்திலிருந்து விடு பட்டுச் செல்கிறார்கள் அவ்வாறே இந்தச் சிறுமியின் உயிரும் பிரிந்துள்ளது. இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்???
குரல்வலை http://www.kuralvalai.com/
குரல்வலை எனும் பேரில் சிங்கப்பூர் சேர்ந்த MSV. முத்து என்பவர் ஒரு இணையப் பக்கத்தை வைத்திருக்கிறார். suiciddisi Tuesday > April 01, 2008 அ.முத்துலிங்கத்தின் சமீபத்தில் வெளிவந்த சிறுகதை ஒட்டி ஒரு குறிப்பு எழு தி இருக்கிறார். அதுவும் உங்கள் பார்வைக்கு.
புவியீர்ப்பு விசைக்கு கட்டணம : அ. முத்துலிங்கம் எழுதிய கதையும் அதை சார்ந்த ஒரு செய்தியும்
சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையை படித்தேன். கதை யின் பெயரும் அது வெளிவந்த இதழும் சரியாக நினைவில் இல்லை. தீராநதி, காலச் சுவடு உயிர்மை இவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். அதைப் பற்றி பதிவிட வேண்டும் என்று எடுத்து வைத்திருந்தேன். இன்று அந்த கதையில் வருவதைப் போன்ற ஒரு செய்தியை நாளிதழில் பார் த்தபொழுது சட்டென மீண்டும் நினைவுக்கு வந்தது அந்த கதை. என் வீட்டில் தேடிய பொழுது அந்த கதை எங்கோ சென்று பதுங் கிக் கொண்டு விட்டது. நன்றாயிருக்கிற நம்மை (கதையை) பற்றி எழுதுகிறேன பேர் வழி என்று கடித்து குதறி துப்பி விடுவான் என்கிற பயம் கூட காரணமாக இருக்கலாம்.
கதை நமது வாழ்க்கையையும் நம்மை வழி நடத்துகிற அரசையும் நையாண்டி செய்கி றது. இந்த மாதிரியான சிந்தனை சிலருக்கு தான் வாய்க்கும். அ.முத்துலிங்கம் இனறைய தமிழ் இலக்கியத்திற்கு இலங்கை அளித் திருக்கிற கொடை என்று யாரோ சொல்லி யிருந்தார்கள். நான் அதை வழிமொழிகிறேன்.
கதையின் நாயகனுக்கு பில் கட்ட சொல்லி அரசிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. பில்லை பிரித்து பார்த்த நாயகன் அதிர்ச் சிக்குள்ளாகிறான். கிரடிட் கார்டு பில்லா என்று நீங்கள் கேட்டால், இல்லை. அதெல் லாம் நமக்குத்தான் வரும். என்ன பில்? புவியீர்ப்பு விசைக்கான பில். என்னது? புவியீர்ப்பு விசையை பயன்படுத்துவதற்கு அரசுக்கு பணம் கட்டவேண்டுமா? ஆமாம். கதையில் அரசு மக்கள் பயன்படுத்தும புவி யீர்ப்பு விசையை கணக்கில் கொண்டு மாத மாதம் ஒரு பில் அனுப்புகிறது. நாயகன் பணம் கட்ட மறுக்கிறார். அரசு நீங்கள் தண்ணிருக்கு கட்டணம் தெலுத்துகிறீர்கள். மின் கட்டணம் கட்டுகிறீர்கள். காற்றுக்கு கூட (சுத்தீகரிப்பு) கட்டணம் கட்டுகிறீகள். ஏன் தரைக்கு கூட கட்டணம் கட்டுகிறீர்கள். பிறகு புவிஈர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டு வதற்கு மட்டும் என்ன யோசனை என்று கேட்கிறது. அதற்கு நாயகன் : காற்றை சுத்தம் செய்கிறீர்கள். தண்ணிரை சுத்தம் செயப் கிறீர்கள். அதனால் கட்டணம் கட்டுகிறோம். புவியீர்ப்பு விசைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அரசு: புவியீர்ப்பு விசை எவ்வளவு முக்கியம் தெரியுமா? அது இல்லாவிட்டால் பூமியே சுழலாது. அதனால் நீங்கள் கண் டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று வாதிடுகிறது. நமது நயகன் விடாமல்: தண்ணிருக்கு பில் கட்ட வில்லையென்றால் தண்ணிரை நிறுத்திவிடுகிறீர்கள். மின் கட் டணம் கட்டவில்லையென்றால் மின் சாரத்தை தடைசெய்து விடுகிறீர்கள்
மல்லிகை மே 2008 ஜ் 13

Page 9
புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் கட்ட வில்லையென்றால் நீங்கள் என்ன செய்ய முடியும்? என்று புத்திசாலித்தனமாக கேட் கிறார். (என்னை மாதிரியே யோசிக்கிறாரு!) அதற்கு அந்த அரசு அதிகாரி, சிரித்து கொண்டே சொல்கிறார். இப்படித்தான் ஒரு அதிமேதாவி (நான் இல்லப்பா) சொனனான். அவனை என்ன செய்தோம் தெரியுமா? அவனை ஒரு சாட்டிலைட்டில் அமர்த்தி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று விட்டு விட்டோம். அப்படியே அவன் பூமியை சுற்றி வந்து கொண்டிருந்தான். பிறகு அவன புவி யீர்ப்பு விசையின் இன்றியமையாமையை உணர்ந்த பிறகு அவனை கொண்டுவந்து பூமியில் விட்டோம் என்கிறார். ஐயா! ஒசியில் பூமியை சுற்றி பார்க்கலாம் என்று நம நாய கன் நப்பாசையில் இருக்க, அந்த அரசு அதி காரி மேலும் ஒரு குண்டைத் தூக்கி போடு கிறார்.
அவ்வாறு பூமியை சுற்றி வருவதற்கு அவருக்கான செலவு 1000000000 மில் லியன் டாலர் (எனக்கு தொகை ஞாபக மில்லை. இது போன்ற ஒரு பெரிய தொகை தான்) அவரால் கண்டிப்பாக இந்த ஜென் மத்தில் கட்ட முடியாது. எனவே அவரது மகன்களிடம் (பேரன்கள் காலத்திலும்) இந்த தொகையை அவர்கள் எப்படியும கட்டி முடிக்க வேண்டும் என்று எழுதி வாங்கியி ருக்கிறது அரசு. இதை கேட்டு மிரண்டு போன நம் நாயகன் கண்டிப்பாக நாளைக்கே பணத்தை கட்டிவிடுகிறேன் என்று சொல்லி அவ்வாறே கட்டியும் விடுகிறார்.
அடுத்த மாதமும் புவியீர்ப்பு விசை பில் வருகிறது. எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. போன மாசத்தை விட இந்த மாசம் அதி தமாக இருக்கிறது பில், கடுப்பான நம நாய கன் புவியீர்ப்பு மேற்பார்வை அலுவலகத் துக்கு தொடர்பு கொள்கிறார். தொலை பேசி யில் வந்த அலுவலர், புகாரை விசாரித்து
விட்டு, ஏன் கட்டணம் கூடியிருக்கிறதென்று சொல்லுகிறார்: உங்கள் மனைவி போன மாசத்தை விட இந்த மாசம் நிறைய வெயிட் (வெயிட் கூடினால், புவியீர்ப்பு விசை அதி கம் தேவைப்படும்!) போட்டிருக்கிறார். மேலும் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து விருந் தினர்கள் வந்திருக்கிறார்கள் அதனால் தான் இந்த மாதம் உங்களுக்கு புவியீர்ப்பு கட்டணம் கூடியிருக்கிறது என்கிறார்.
நான் நாளிதழில் பார்த்த செய்தி: சிங்கப் பூர் சம்பந்தப்பட்ட செய்தி. சிங்கப்பூரில் ஒரு புது கார் வாங்கினீர்கள் என்றால் அதை பத்து வருடங்களுக்கு தான் உபயோகப் படுத்த முடியும். பத்து வருடங்களுக்கு மேல் என்றால் SCrap தான். சிங்கப்பூர் அரசு, மக்களை கார் உபயோகப்படுத்த விடாமல், public transport. Support G 3 uai Bg5). அதற்காக இந்த மாதிரியான சட்ட திட்டங் கள். கொஞ்ச நாளைக்கு முன். சிங்கப் பூரில ஒரு சர்வே நடந்தது. சிங்கப்பூர் மக்க ளின் தேசப்பற்று எப்படி இருக்கிறது என்று 3, ELDT (5 dij(86): 51-55uigi Strait Times. மக்களுக்கு தேசிய கீதத்தை விட நகரில் எங்கெங்கு ERP உள்ளது என்பது மனப்பாடமாக தெரிந்திருந்தது.
(8big (March 31 2008) The Straits Times (HOME) S6 (66.6f 6.5gs (63 g5 இது:
மக்களை கார் ஒட்டுவதிலிருந்து 6663535, 6TÚUiço Public Transport Sai 3jTa 6)6Jää56)Tb 66õ353 Master Plan.
"Planning a satellite-based system that charges drivers for the distance they travel.'
புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
لگه
மல்லிகை மே 2008 ஐ 14

அருத்த கால கடிட நகர்விற்குரிய
வித்தகன்
- டென்டுன்க் ஜிலின்
கவிஞர் முருகையன் கொழும்புக்கு வந்திருக்கி றாராம். உடல் நிலை சரியில்லையாம். அதனால், வைத்தியத் திற்காகக் கொழும்பிற்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டோம்! என வதந்தித் தகவலொன்று எனது காதுக்கெட்டியது.
"கொழும்பென்ன, சாவகச்சேரியா? விசாரித்துக் கண்டு பிடிப்பதற்கு? என ஆரம்பத்தில் இந்தச் செய்தியை நான் முக்கியப்படுத்தவில்லை.
பின்னர் ஒரு கிழமை சென்று விட்டது. இதே செய்தி பரவலாக இலக்கிய வட்டாரத்தில் அடிபடத் தொடங்கி விட்டது.
இதில் ஏதோ உண்மை இருக்கலாம் என என் மனசு நம்பியது. ‘என்ன இருந்தாலும் எங்கட கவிஞனல்லவா?’ என மனம் தத்தளித்தது.
எதற்கும் விசாரித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் தினக்குர்லுடன் தொடர்பு கொண்டேன்.
அந்தச் சந்தர்ப்பத்தில் இலக்கிய நண்பர் இரத்தினவேலோன் தொலைபேசிக் குரலில் அகப்பட்டுக் கொண்டார். "நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எதற்கும் உங்களுக்குச் சரியான தகவலை இன்றைக்குள் தந்து விடுகிறேன்" என அவர் வாக்குறுதி தந்தார்.
வாக்குறுதி தந்த வண்ணம் அவர் அன்று சாயங்காலமே மேற்கொண்டு தகவல்களைத் தந்துதவினார்.
புளுமென்டால் வீதியில் வீ. ரீ. வீ. பிளாட்டில் இன்ன இலக்க வீட்டில் கவிஞர் தங்கியுள்ள தாகவும், தொலைபேசி இலக்கம் இன்னதென்றும் அவர் விவரமாகத் தகவல் தந்தார்.
w இன்றைய கொழும்பில் தொடர்மாடி வீடுகளுக்குப் போய் ஆட்களைச் சந்திப்ப தென்றாலே எனக்கு அசாத்திய மனப் பயம். மாடி வீடுகளா, அவை? ஒரு சிறிய பட்டினமே அந்தத் தொடர் மாடி வீட்டு வளாகத்துக்குள் அடங்கியிருக்கும். அதிலும் வீட்டுத் தளம், எண்ணைக் கண்டு பிடிப்பதற்கே தனிப் பயிற்சி தவறாமல் தேவைப்படும்.
கிடைத்த தொலைபேசியில் அடுத்த நாள் தொடர்பு கொண்டேன். பேசுபவரின் பெயரைக் கேட்டதுமே “ஒ நீங்களா! உங்களை எங்களுக்கு முன்னமே
நல்லாத் தெரியுமே!’ என்ற சுமுகமான உணர்வுடன் சம்பாவடினை தொடர்ந்தது.
மல்லிகை மே 2008 ஜ் 15

Page 10
எனது வரவை முன் கூட்டியே தெரியப் படுத்தி விட்டுக் கவிஞரை நேரில் காண ஆவலாக ஆயத்தப்படுத்தினேன்.
காரணம் முருகையனைக் கண்டு கனகாலம், நான் இடம் மாறிக் கொழும் பிற்கு வந்தே பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதற்கு முன்னர் மூன்று நான்கு ஆண்டு களுக்கு மேலிருக்கும் அவரைச் சந்தித்து.
எனக்குக் கவிஞர் மீது வற்றாத பாசம். ஒரு வகைப் பிடிமானம் என்று கூடச் சொ ல்லலாம். அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். குரலெழுப்பிப் பேசமாட்டார். தானும் தன்பாடும் என்றிருப்பவர். ஆனால், தன் துறையில் அபார புலமை மிக்கவர். மல்லிகை ஆரம்பித்த காலத்திலிருந்தே மல்லிகையுடன் உடன் பட்டு வந்தவருள் கவிஞரும் ஒருவர். மல்லிகை முதன் முத லில் தொகுத்து வெளியிட்ட நூல் 'மல்லி கைக் கவிதைகள்' என்பதாகும். அதைத் தொகுத்தளித்தவரே முருகையனாகும்.
இத்தனை மென்மையும், ஆழ்ந்த புலமை யும், அடக்கமும் மிக்கக் கவிஞரை நீண்ட வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கப் போகின் றோமே என்ற மகிழ்ச்சி என் நெஞ்சில் நிரம்பியிருந்தது.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை.
முன் ஏற்பாட்டின் படி நானும் மேமன் கவியும் கவிஞரை நேரில் பார்க்கப் புறப் பட்டுச் சென்றோம்.
ஆட்டோக்காரர் வீதியின் ஒரமாக எங் களை இறக்கி விட்டு நின்றார்.
உண்மையைச் சொல்லுகின்றேன், தனி யாக என்னை அந்தத் தொடர்மாடி வீட்டி ற்கு யார் அழைத்திருந்தாலும் நேரில் போய்ப் பார்க்கத் தயங்கியிருப்பேன். தயங்கி என்ன தயங்கி- முற்றாகவே மறுத்திருப்பேன்.
மாஸ்கோவில் 25- வது மாடியில் தான் நான் தங்கியிருந்த அறை. மனசிற்குள் பயமில்லை. தனியே போவேன், வருவேன்.
பாரிஸில் எனது இலக்கிய நண்பர்களின் அறை 18-வது மாடியில் அமைந்திருந்தது. எந்த விதமான மனப் பதட்டமும் தயக்க முமில்லாமல் சென்று வருவேன். ஏதோ யாழ்ப்பாணத்து ரெயில்வே ஸ்டேசன் வீதி, ஒழுங்கையிலுள்ள என்னுடைய சொந்த வீட்டிற்குப் போய் வருவதைப் போல, தயக்க, மயக்கமின்றி நடமாடியிருக்கின்
றேன், அந்த உயர்மாடிகளில்.
ஆனால், கொழும்பு மாடி வீடுகளுப் போய் வருவதென்றாலே எனக்கு மனதில் பயம் நிழலாடத் தொடங்கி விடும். அத் தனை சிக்கல் நிரம்பிய பாதைகள்,
மேமன் கவி கொழும்பிலே பிறந்தவர்; வளர்ந்தவர். அவரே வீடு தேடிக் கண்டு பிடிக்கச் சிரமப்பட்டு விட்டார்.
கீழும் மேலும் ஏறி, பக்கம் வசிப்பவர் களை விசாரித்து விசாரித்து, ஒரு வழியாகக் கவிஞர் வசிக்கும் வீட்டைக் கண்டு பிடித்து sélt LITir!
கவிஞர் வீட்டுக்குப் போகும் வரைக்கும்
எனக்குள் ஒரு உள் மனச் சித்திரம்
உருவாகி இருந்தது.
முருகையன் நடக்க இயலiமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருப்பது போலவும், பேச முடியாமல் அனுங்கி அனுங்கிப் பேசு வது போலவும், எனது முகத்தையே ஞாபக மறதிக்குட்பட்டு மறந்து போய் விட்டது போலவும், ஒரு வித மனக் கலக்கத்துடன் தான் நான் அவரது வீட்டிற்குள் உள்நுழைந் தேன்.
"ஆ1. ஆ ஜீவா வாருங்கோ!" என்ற கவிஞரின் அன்பழைப்பைக் கேட்ட
மல்லிகை மே 2008 & 16

தும் நான் சந்தோச மிகுதியால் கவிஞரைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். அவர் ஆதரவாக எனது வலது கையைத் தடவி விட்டுக் கொண்டார்.
என் மனக் கற்பனைகளுக்கு நேரெதி ராக அவர் அந்த நிலையில் ஆரோக்கிய மாகக் காட்சியளித்தார்.
எனக்கு மகா சந்தோஷம், மனசிற்குள்.
அங்கு பெரும்பாலும் அவரே பேசிக் கொண்டிருந்தார். நானும் மேமன் கவியும் ஆவல் ததும்பக் கேட்டுக் கொண்டிருந் தோம்.
G8 TsöT60 Tsü 5 busb oTes6.
முன்னமும் எனக்கு இந்த மெளன அநு பவம் ஏற்பட்டிருக்கின்றது. நான் அநுபவ ரீதியாக இதை அநுபவித்திருக்கின்றேன்.
சிலருடன் சம்பாவழிக்க வேண்டியதே யில்லை. தொடர்ந்து பேசக் கூடத் தேவை யில்லை. நம்மை விசுவசித்து, அன்பு செலுத் துகின்ற பரிசுத்த ஆத்மாக்களின் பக்கத்தே மெளனமாக ஒரு சில மணி நேரங்கள் குந்தியிருந்தாலே போதும், ஒரு வகையான ஆத்ம நிம்மதி நம்மையறியாமலே நம்மை ஆட் கொண்டு விடும். இந்த ஆரோக்கி யமான மெளன ஆழ்ந்த நிம்மதி அலை, இரண்டொரு நாட்கள் நம்மைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருக்கும். இதை ஆன்ம நோக்கத்துடன் நானிங்கு குறிப்பிட வில்லை. யதார்த்த வாழ்வில் நான் கண்ட அநுபவ உண்மையிது.
மூத்திர ஒழுங்கை என நையாண்டி செய்யப்பட்ட யாழ்ப்பாணத்து மல்லிகைக்
காரியாலயத்தில் எனக்கிந்த மாதிரி நேரடி
அநுபவம் ஏற்பட்டிருக்கின்றது.
உள் நாட்டு யுத்தம் நம்மையும் நமது குடும்பங்களையும் மூலைக்கொருவராகத் துரத்தி விட்டது.
சிதறு தேங்காயாகப் போய் விட்டது நமது உறவுகளும், நெருக்கங்களும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கவிஞர் முருகை யனைச் சந்தித்த வேளையில், அவருடன் நெருக்கமாக மனசு விட்டுப் பேசிக் கொண்டி ருந்த தருணத்தில், எனது சிந்தனையில் ஒரு விஷயம் தட்டுப்பட்டது. இப்படியே நம்மில் பல எழுத்தாளர்கள் கதைக்காம லும், பழகாமலும் தனித் தனித் தீவுகளாக இருந்து கொண்டே இருப்போமானால் கடைசியில் மிஞ்சப் போவது தான் எது?
இந்த எண்ணக் கரு என் நெஞ்சில் முளைவிட்ட அதே சமயம், மாதத்திற்கொரு தடவையாவது நாங்கள் குறிக்கப்புட்ட ஓரிடத்தில் சந்தித்து, தேநீர் பருகி, உரை யாடி மகிழ்ந்தால் என்ன? என்ற எண்ணம் மெதுவாக என் நெஞ்சில் நிழலாடியது.
இந்தத் தொடர்பே அற்றுப் போய் நாம் தனிமைப் பட்டுப் போய் விடுவோமானால் இறுதியில் சோம்பிப் போய், செயலற்றுத் தேய்ந்து, வருங்காலத் தலைமுறையின ருக்கு எந்த விதமான பயனுமற்றுப் போய்
விடுவோமோ? என்ற மனப் பயம் என்
நெஞ்சில் நிழலாடியபடியே இருக்கின்றது.
கவிஞருடன் மெளனமாக நானிருந்த இந்த வேளையிலும் எனக்கிருந்த வெளியே விவரித்துச் சொல்ல இயலாத ஆழ்ந்த நிம்மதி நிலை ஏற்பட்டதை மெய்யாகவே உணர்ந்து கொண்டேன்.
இந்த மன நிறைவுடன் தான் கவிஞர்
முருகையனிடமிருந்து விடை பெற்றுத்
திரும்பினேன்.
மல்லிகை மே 2008 霹 17

Page 11
eitun- [xიrs“ ܕܗܺܝܬ݁ܦ݁ܘܓ݁ܳܗܰܝܟܤܗܢܙ
- பாலா சங்குப்பிள்வள
சின்னமணி. மகிழ்ச்சியுடன் தன் தோட்ட லயத்தை அடைந்தான். அப்போது மாலை ஐந்து மணியிருக்கும். ஏற்கனவே பலமாகப் பெய்த மழையினால் தோட்ட மண் பாதை நெகிழ்ந்து ஊறிப் போயிருந்தது. மழை இலேசாக பெய்து கொண்டிருந்தாலும், அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சந்தோஷத்துடன் லயத்தை அடைந்தான். அவன் தாய் மலையிலிருந்து வந்திருக்கவில்லை. தகப்பன் கோவிந்தன் மட்டுமே காம்பறாவில் சுருட்டுப் புகைத்தவாறு பழைய பத்திரிகையொன்றை வாசித்தவாறு உடைந்த நாற்காலியொன்றில் அமர்ந்திருந்தான். சின்னமணி காம்பறாவினுள்ளே நுழைந்தான்.
"அப்பா நான் க. பொ. த. பரீட்சையில் ஆறு 'ஏ'யுடன் நல்லாப் பாஸ் பண்ணிட்டேன். டீச்சர்மாரெல்லாம் ரொம்பப் பாராட்டினாங்க. ஏ. எல். சயன்ஸ் படிக்கலாமாம்.
கோவிந்தன் எதுவும் பேசாமல் பத்திரிகையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்பா. நான் பாஸாயிட்டேன்.
"ஆமா இப்ப அதுக்கு என்னவாம்.?"
"என்னப்பா இப்புடிப் பேசுற?. நான் நல்லாப் படிச்சிப் பாஸ் பண்ணனும்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நீ மட்டும் எதுவுமே சொல்ல மாட்டேன்னுறியே. ?・
"உங்கம்மாவுக்கு புத்தியில்லை. அதுதான் உனக்கு ஒழுங்கான புத்தி சொல்லாம, நடக்காததை பத்தியே திரும்பத் திரும்ப சொல்லி உன்னை வீணாக்கிக்கிட்டிருக்கா. நீ இவ்வளவு படிச்சதே அதிகம். இன்னமும் படிக்க வைக்க எங்களால முடியாது. y
"என்னப்பா இப்புடிப் பேசுற. அம்மாதானே என்னைப் படிக்க வைக்குது. நீ எடுக்கிற சம்பளம் உனக்குக் குடிக்கிறதுக்கும், புகைக்கிறதுக்குமே சரியா போயிடுது. அம்மாதான் மலையில கஷ்டப்பட்டு, மனசார இஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைக்குது. நான். நல்லாப் படிப்பேன். பெரிய உத்தியோகத்துக்குப் போவேன்.”
"ஆமா அதுக்குள்ள நாங்க கட்டையில தான் போகணும். இங்க பாரு மணி. நீ படிச் சுக் கிழிச்சது போதும். உனக்காகக் கடையில வேலை ஒண்ணு பேசியிருக்கேன். சாப்பா டெல்லாம் குடுத்து, நல்ல சம்பளம் தாராங்களாம். உன்னை கூட்டிட்டு வாரதா சொல்லி அட்வான்சும் வாங்கிட்டேன். இந்த உதவாத கதையெல்லாம் பேசிட்டிருக்காம உருப் படுற வழியைப் பாரு. yy
சின்னமணி கோபத்துடன் தகப்பனைப் பார்த்தான். "நான் தொடர்ந்து படிக்கத்தான் போறேன். அம்மா என்னைப் படிக்க வைப்பா. நீயொண்ணும் எனக்குப் புத்தி சொல்ல (36600Trip.......
மல்லிகை மே 2008 & 18

கோவிந்தன் எரித்து விடுவதைப் போல மகனைப் பார்த்தான், படித்துக் கொண்டிரு ந்த பேப்பரைச் சட்டென கீழே வீசிவிட்டு, விருட்டெனக் காம்பறாவை விட்டு வெளியேறி னான், சின்னமணி சோர்வுடன் அதே உடை ந்த நாற்காலியில் அமர்ந்தவாறு, வெளியே பெய்து கொண்டிருந்த மழைத் துளிகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நேரம் ஓடியது. ஐந்து மணிக்கெல்லாம் லயத்துக்குத் திரும்பி விடும் அவன் தாய் காமாச்சியை இன்று இன்னமும் காண வில்லை. அப்போது பக்கத்து லயத்தைச் சேர்ந்த முனியன் பரபரப்புடன் ஓடி வந்தான்.
'ஏய் மணி உன் அம்மா பெரட்டுக் களத்துலவச்சிமயங்கி விழுந்திடுச்சி. டவுண் ஆஸ்பத்திரிக்கு லொரியில கொண்டு போயிட் டாங்க. நானும் டவுணுக்குத் தான் போறேன்.
எங்க உன் அப்பன்.?
சின்னமணிக்குத் தலை சுற்றியது. அம்மா வுக்கு என்ன நடந்தது? நன்றாகத் தானே இருந்தார்கள். ஐயோ! அம்மா! எனக் கத்திய வாறு அவன் முனியனுடன் புறப்பட்டான்.
சின்னமணி வைத்தியசாலையை அடை ந்த போது, காமாச்சியைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. சின்னமணிக்குக் கண்ணிர் ஆறாகப் பெருகியது. அவனால் அவன் அம்மாவுக்கு ஒன்றென்றால், அதை நிச்சயமாகத் தாங்கவே முடியாது. மணி மணியென்று அவனை வாயாற அழைத்து, அவனை எந்த வேலையையும் செய்ய விடாமல், பூவைப் போல பார்த்துக் கொண்
st G36T1..........
முனியன் சின்னமணியை ஆறுதலாக ஒரு இடத்தில் அமரச் செய்து விட்டு, அவனுக்குத் தெரிந்த ஒருவரின் மூலமாக வைத்தியரைச் சந்தித்தான்.
"உடம்புல சத்து இல்லை. கடுமையான வேலையெல்லாம் செய்யக் கூடாது. முழு
ஒய்வு தேவை. சத்தான உணவு சாப்பிட வேணும். மலையில ஏறக்கூடாது. இரத்த அழுத்தம் ரொம்பவும் குறைஞ்சிருக்கு. நான் சொல்றதைச் சரியாக் கேட்டு நடக் காட்டி அப்புறம் உயிருக்கே மோசம் வந்துடும்."
முனியன் வைத்தியர் சொன்னதை அப்ப டியே சின்னமனியிடம் சொல்ல, அவன் துடித்துப் போய் விட்டான். அவன் தாய் தன் மகன் படிக்க வேண்டும். நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ளாமல் அவனுக்காகவே உழைத்திருக்கிறாள். அதன் விளைவு தான் அந்த விபரீதம்,
கோவிந்தன் விஷயம் கேள்விப்பட்டு வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தான். ஆனால், அவன் பெரிதாக ஒன்றும் அலட் டிக் கொள்ளவில்லை. சின்னமணி ஒரு தீர்க்கமான முடிவுடன் கோவிந்தனிடம் வந்தான்.
"அப்பா. நான் வேலைக்குப் போறேன்."
“என்ன...? அப்புடின்னாப் படிப்பு?”
'எனக்கு என்னோட படிப்பை விட, என்னைப் பெற்றெடுத்த தாய்தான் முக்கி யம். படிப்பை வேணும்னா வேறொரு சந்தர்ப் பத்துல படிச்சிக்கலாம். ஆனா என்னோட அம்மாவை இழக்க நான் தயாரில்லை, என்னை வாழ வைக்கத் தன்னையே மெழுகுதிரியா உருக்கிக்கிட்ட என் தாய் எந்த நோய் நொடியுமில்லாம நிம்மதியா இருக்கணும். அதுக்காக நான் எதையும் செய்வேன். உயர் கல்வியை விட, என் தாயின் உயிர்தான் எனக்கு முக்கியம். y
மகனின் ஒவ்வொரு வார்த்தையும் கோவி ந்தன் உள்ளத்தில் சாட்டையடிகளாக விழுந் தன. தந்தைக்கே போதித்த தகப்பன் சாமி யைப் போல சின்னமணியின் செயற்பாடு கோவிந்தனை செயலற்று நிற்க வைத்து விட்டது.
மல்லிகை மே 2008 & 19

Page 12
=இன்று=
நாளை=
சுவாசிக்க மறுக்கும் காற்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறது உனக்கான
இரத்த வாடை
மகரந்தம் சேர்க்க காலம் வண்டின் இறக்கை தொடுமிதழில் புல்லின் விழிற்புகளில் இழைகிற பூச்சாரலில் цеогља, бif_to usavrt
உனது நாதி உலரல் சிவந்த எச்சங்களின் உருக்கத்தில்
جہ تمگس۔ ۔ ۔ مجسم ہے۔ ۔ ۔ ۔ ۔۔۔ مگ குவிந் f) 6astgorgottக்கும் எனது நாசயை வருவககமுனைநஆ0
f9- -3 இயற்கையின் இரசாங்களை தோற்றேன் நீ நினைத்து வருடுகிறாய்
gb65)rt Jill
é - -- - பேரிடியாக முழக்கம் உருளும் பிரளயம் வெடித்த சத்தத்த்ல்
புதிய சந்தத்தில் உனது மரணமும் நிகழ்கிறது என் நெஞ்சு வெடித்த பிரமிப்பில் ÉJ56TDort96DF fibe JJ55 FGA:---------
உன் பாதச் சுவருகளைத் தேடி
اص به جی محصہ வீதிக்குள் நுழைகிறேன் ირანიჩირიN' abyu Jütõ ირtზრ
ானே நீந்துகிறேன்
Sarre اص = * ص ஆரதத விசாரங்களில
நேற்று OGIIGOreP to JGoorto რჯრნropy &
நாளை..?
மல்லிகை மே 2008 * 20
 
 
 
 
 
 

தெருக் குரல்
கள்ளர் சுட்டமும் கூட, தம் கூட்டத்தில் நேர்மைக்கே முக்கிய இடம் கொடுப்பர்.
விறகு கொத்துதல் முதலாய் அனைத்து வினைத் திறரைக்கும்
தறி தவறாமையே முக்கியம்.
வாழ்க்கை திமையானது அல்ல தமையாக வாழ்ந்தே, தியதாக ஆக்குகின்றார்.
சுதலென்று எண்ணி சுவரைத் தட்டினால்
சமாதானக் கதவு திறக்குமா, என்ன?
- சூசை எட்வேட்
* காற்று வெளியில் அழகான
கடதாசித் துண்டுகள். கால் பாதம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்! கறுப்பு நீர் வீழ்ச்சி.
அவள் கூந்தல்
* 'மீன் தூண்டில் என இரு மொழிகள்.
அவள் விழிகள்
மல்லிகை மே 2008 & 21

Page 13
'இப்போது வகுப்புக்குப் போனால், ஜெயசிங்கத்தாரிடம் மாட்டுப் படவேண்டி இருக்கும்." என்றான் அசோகன். நேரம் காலை 10 மணியைத் தாண்டி இருந்தது. காலை 8.30க்கு முன்னர் மாணவர்கள் வகுப்பறையில் இருந்தாக வேண்டும் என்பது ஜெயசிங்கத் தாரின் கட்டுப்பாடு.
**676é760T Q&ui justion b..?''
“கொஞ்சம் பொறு. நினைலழிலா நாeகள்- 14 ஏதாவது செய்வோம்'
எனறான, 黏 யாழ்ப்பாணம் தொழில் நுட்பக்கல்லூரியில் 'பட வரைஞர் வகுப்பில் பயில் பவர்களுள் நானும் அசோக னும் சேர்த்தி. கல்லூரிக்கு அருகில் உள்ள வீடு ஒன் றில் தங்கிப் படித்தோம், சனி, ஞாயிறுகளில் ஊருக்குப் போவதால் திங்கள் எப்படியும் பிந்தியே வருவோம்.
‘இந்த மாதம் மூன்று முறை லேற்." என்று அசோகன் சொல்லிக் கொண்டிருந்த போது, மார்க்கண்டு மாஸ்ரர் வருவதைக் கண்டேன், சைக்கிளில் தியோடி லைற் கருவி யைக் கட்டியபடி மெதுவாக வந்தார்.
“என்ன வாசலிலேயே நிக்கிறியள்.?"
". . . . . . உங்களைப் பார்த்துக் கொண்டுதான் சேர். திங்கட்கிழமை சேவயிங் பாடம்
இருப்பதால், "தியோடி லைற் கொண்டு வருவியள். உதவி செய்யலாம் எண்டு நிக்கிறம்." என்றான் அசோகன்,
"சயிக்கிளைக் கொண்டு போய் நிப்பாட்டிப் போட்டு. இதுகளை ஒபீசிலை வையு ங்கோ., ’ என்று சொல்லும் போது, அவர் முகத்தில் திருப்தி தெரிந்தது.
அசோகன் என்னைப் பார்த்து முறுவலித்தான். அலுவலகத்தினுள் நுழைந்த போது, ஜெயசிங்கத்தார் நிமிர்ந்து பார்த்தார். முகத்தில் இருந்தது புன்முறுவலா. கடுகடுப்பா என்று தெரியவில்லை. அதிபருக்கே உரித்தான. அப்படி ஒரு முகம்.
"மார்க்கண்டு மாஸ்ரர் வைக்கச் சொன்னார். பின்னேரம் எங்களுக்குச் சேவயிங் இருக்கு." அவர் தலையாட்டியதும் வெளியேறினோம். A 'இப்போது போனால் ஆறுமுகம் மாஸ்ரருக்கு ஏன் லேற் என்று மறுமொழி சொல்ல வேணும். வா! கன்ரீனுக்கு. ’ என்று அசோகன் முன்னே போக, நான் பின்னே நடந்தேன்.
மல்லிகை மே 2008 ஜ் 22
 

"இரண்டு ரீ ஒடர் பண்ணி விட்டு வா" என்று அனுப்பியவனைக் காணவில்லை. ரீயுடன் மேசையில் காத்திருக்க. கையில் ஒரு பார்சலுடன் வந்தான்.
"என்னாட இது சாப்பாடா. ?・
'வழக்கம் போலத்தான்."
"ஆற்றை பார்சல். ?・
‘தெரியாது. நல்ல மணமா இருக்கு." என்று பார்சலை மணந்த படியே சொன்னான்.
இட்லி பூப்போல இருந்தது. துணைக்கு அரைத்த சம்பலும், இட்லிப் பொடியும்,
"பாத்தியா. எழுப்பமா. இருக்கு. சாப்பாடு கொண்டு வந்தவருக்குப் புண்ணி யம் சேரும்...!" என்றான் அசோகன்.
இதுவும் வழமைதான். காலைத் தேநீர் இடைவேளையின் போது, கன்ரீனில் மாண விகள் சாப்பாடு வைக்கும் அலுமாரியை எப்படியோ திறந்து, ஏதாவது ஒரு பார்சலை எடுத்து வந்து விடுவான்.
கேட்டால். “GSUT LIT...... பத்துப் பார்ச லிலை ஒன்று குறைந்தால். கெட்டா போய் விடும். எல்லாப் பெட்டையஞம் ஒண்டா இருந்து தானே சாப்பிடுகுதுகள். உடம்பு குறையும்' என்று சொல்லிச் சிரிப்பான்.
நானும், அசோகனும், ஞானியுமாக அந்தப் பார்சலை விழுங்கித் தீர்த்து விடு வோம். வகுப்புப் பெண்பிள்ளைகள் இரண்டு மூன்று நாட்கள் திட்டினார்கள். பிறகு, பட்டினிப் பட்டாளங்கள் தின்று தொலைக் கட்டும் என்று விட்டு விட்டார்கள்.
மத்தியான இடைவேளையின் பின்னர் தான் மார்கண்டேயரின் சேவயிங் வகுப்பு. பலருக்கு அந்த வகுப்பு பிடிப்பதில்லை. மத்தியானச் சாப்பாட்டின் பின் வெயிலில் அலைய முடியுமோ? மார்க்கண்டேயரின் பின்னால் உலைந்து திரிவது நாங்கள் மூன்று பேரும் தான்.
புகையிரத நிலையத்தை அண்டிப்ப காணியை அளந்து கொண்டிருந்தோம். மங்களா ஓடி வந்தாள். விசாலாட்சி மயங்கி விழுந்து விட்டதாக அவள் கொண்டு வந்த செய்தியுடன் பாடம் குழம்பி, விசாலாட்சி கதாநாயகியானாள்.
“பொம்பிளைப் பிள்ளையஞக்கெல்லாம் இந்தப் படிப்புத் தேவைதானா?” என்று திட்டியபடி ஞானியும், அசோகனும் மங்களா வின் பின்னே ஓடினார்கள்.
நான் போய்ச் சேரும் போது ஞானி, சந்திக்கடையில் வாங்கிய சோடாப் போத்த லுடன் வந்தான். மயக்கம் தெளிவித்துச் சோடா குடிக்க வைத்து, மங்களாவைத் துணையாக்கி வீட்டுக்கு அனுப்பி வைத் தார்கள்.
அடுத்த நாள் வகுப்புக்குச் சென்ற போது. முழு வகுப்புமே முகத்தை நீட்டிக் கொண்டிருந்தது போன்று பட்டது.
“GbLDT..... விட்டிட்டுப்படி " என்றான் அசோகன்,
'இல்லை என்னவோ வித்தியாசமாப் படுகுது. மங்களாவும் வாயை மூடிக் கொண்டிருக்கிறாள். yy
'மெளன விரதமோ..?" என்றான் ஞானி.
அவன் பேச்சு மங்களாவைக் கிண்டி விட்டிருக்க வேண்டும்.
‘நேற்று நீங்கள் செய்த வேலைக்கு,
வேறு என்னதான் செய்யலாம்? மங்களா
வின் குரலில் கோபம் தெரிந்தது.
"ஒம். ஓம். பிராமணப் பிள்ளை பாவம் எண்டு. என்ரை காசிலை சோடா வாங்கி வந்தது பிழைதான்." என்று கொதித்தான் ஞானி.
மல்லிகை மே 2008 ஜ் 23

Page 14
"செய்யிறது எல்லாம் செய்து போட்டு. சோடாவும் வாங்கிக் குடுப்பியள்."
"ஏன் அப்படி என்ன செய்து போட்டம்?"
'அந்த பிள்ளை மயங்கி விழுந்தது உங் களாலை தானே. அந்தப் பிள்ளையின்ர சாப்பாட்டை மூண்டு பேருமாத் திண்டு போட்டியள்."
'பாவம் விசாலாட்சி. அது வெளியிலை யும் சாப்பிடாது. கன்ரீனிலை சோடாவும் இல்ல. வெறும் வயித்தோடை வெயில்லை நிண்டால் மயக்கம் வராமல் என்ன செய்யும்?"
ஞானியின் பார்வை எங்களை மொய்த் தது. நாங்கள் தான் சூத்திரதாரி என்பது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
'உங்கடை புண்ணியத்திலை போன கிழமையும் அந்தப் பிள்ளை பட்டினி.” மங்களாவின் குரலில் கோபம் குறைய வில்லை. மூச்சுக் காட்டாமல் வெளியேறு வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அடுத்த நாள் வகுப்புக்கு நேரத்தோடே போயிருந்தோம். படிப்பில் மும்முரம் என்று காட்டுவதைத் தவிர, வேறு எதுவும் செய்யத்
தோன்றவில்லை. மற்றவர்களும் அவ்வள வாக முகம் கொடுக்கவில்லை.
ரீ இன்ரேவலின் போது, கடைசி ஆட் களாகத்தான் வகுப்பில் இருந்து வெளியேறி னோம். மூவருமாக ஒரு மேசையில் அமர் ந்து ஆறிக் கொண்டிருந்த தேநீரையே பார்த் துக் கொண்டிருந்தம்.
'தேவன். ' என்ற குரல் கேட்டுத் திரும்ப விசாலாட்சி நின்றிருந்தாள்.
'மூன்று பேருமா இதைச் சாப்பிடு ங்கோ' என்றபடி ஒரு பார்சலை வைத்து விட்டுப் போனாள்.
'இல்லை. வேண்டாம். சொறி. சொறி.
எதைச் சொல்வதென்று தெரியவில்லை.
"உங்கள் மூன்று பேரிலும் எனக்குக்
கோபம் இல்லை. இண்டைக்கு இரண்டு பார்சல் கொண்டு வந்தனான். சாப்பி டுங்கோ.
சொல்லிப் போன விசாலாட்சியுடன் கூடப் போனது எங்கள் மரியாதையும் மனச்சாட்சியத் தான்.
- A R - R - HAR DREssERs
89, Church Road, Mattakuliya,
Colombo - 15.
Te:0602133791
ཡོད། முற்றிலும் குளிருட்டப் பெற்ற சலூன்
மல்லிகை மே 2008 & 24

இந்தியக் கவிகளும், யானைகளும்
~ கெகீறலை ஸஉறனைல
LDன்னித்தல் என்பது புரிந்து கொள்ளல் தான் என்று யாராவது சொல்லுவதைக் கேட்கிற போதெல்லாம், நான் போஸோ (Bozo) என்ற அந்தச் சர்க்கஸ் யானைக்கு நிகழ்ந்த துயரத்தை, மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்தச் சர்க்கஸ் யானையை நினைத்துக் கொள்கிறேன்.
BOzo எப்போதும் சிறுவர்களால் விரும்பப்பட்ட நல்ல யானை, சர்க்கஸ் விளையாட்டுத் திடலின் உச்சியிலே அது வால்ட்ஸ் (Waltz) டான்ஸ் ஆடியபடி, ஒரு காலில் நின்று ஒரு காலைச் சுழற்றும், பின்னர், கீழே படுத்து இறந்தது போன்று பாவனை காட்டும். சர்க்கஸ் முடிவின் போது, அமெரிக்கன் கொடியை ஏந்தியபடி Band வாத்தியக் குழுவை நடாத்திச் செல்லும். ஆனால், எல்லாம் கொஞ்ச நாள் தான். ஒரு வாரத்தில் மூன்று தடவைகள் அது தனது பாகனைக் கொல்ல எத்தனித்திருந்தது. பீனட் கடலைகளைக் கொடுத்த சிறுவர்களையும், சிறுமிகளையும் மிதிக்கப் போவது போல் அது கர்ஜித்தது. அன்தச் சாந்தப்படுத்துவதற்கு ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. பொது ஜனங்களுக்குத் தொால்லை கொடுப்பதன் காரணத்தினால், அது கொல்லப்பட வேண்டும் என்று அதிகாரிகள் யானைச் சொந்தக்காரனுக்குக் கூறினார்கள்.
அந்நாட்களில், பல நகரங்களில் மிருகவதையைத் தடுப்பதற்கான நமது நல்ல சமூகங்களாக உருவாகியிருக்கவில்லை. அந்த Bozo வினால் ஏற்படப் போகின்ற நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக யானையின் மரணதண்டனையை காட்சிப்படுத்தி டிக்கட்டுகள் விற்பதற்கு அந்த நிர்வாகி வஞ்சகமாக முடிவெடுத்து ஒப்பந்தம் செய்த போது, அதைத் தடுப்பதற்கு ஒரு தனிமனிதன் கூட, இருக்கவில்லை. 1 சனிக்கிழமை காலையில், பிரதான கூடாரத்தை நிரப்பியிருந்த சனக் கூட்டம், தயாராக நிறுத்தி வைக்கபட்டிருந்த இராணுவத் துப்பாக்கிகளையும், அதற்குப் பக்கத்தில் இராணுவத் துப்பாக்கிதாரிகள் தயாராக இருப்பதையும் கண்டது. சர்க்கஸ் மத்திய திடலில், வட்டக் கூண்டின் பின்னால் இருந்த Boz0 முடிவேயின்றி பிரயாசையுடன் நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அது தனக்கு நடக்கப் போவதை நன்கறிந்தது போல, தனது தும்பிக்கையைத் தூக்கி கர்ஜித்தது. w கூண்டுக்கு வெளியே, சர்க்கஸ் பயிற்சியாளர் பளபளக்கும் நீண்ட கோர்ட்டுடனும், தொப்பியுடனும் நின்றார். சமிக்ஞையை வழங்குவதற்குத் தயாராக இருந்தார். அவர் நிகழ்ச்சியைத் தொடங்குவதற்குத் தயாரான போது, அவரது தோள்களை ஒரு கரம்
மல்லிகை மே 2008 ஜ் 25

Page 15
தொட்டது. அவருக்குப் பக்கத்தில் குள்ள மான, நல்ல தேகக்கட்டுள்ள, ஒரு சிறிய மனிதர் கபில நிற மீசையுடனும், அடர்த்தி யாக லென்ஸ்கள் போடப்பட்ட கண்ணாடியு டனும், கபில நிற derby தொப்பியுடனும் நின்றிருந்தார்.
'உண்மையாகவே அந்த யானையைக் கொல்ல விரும்புகிறீர்களா?" என்று அந்தப் புதி யவர் கேட்டார். "நீங்கள் அது உயிர் வாழ் வதை விரும்பவேயில்லையா?"
"சான்ஸே இல்லை." நிர்வாகி பதிலளித் தார். 'அது மிக மோசமான யானை. அதை எதனாலும் இப்போது குணப்படுத்த முடி
யாது.'
‘நான் அந்த யானைக் கூட்டிற்குள் செல்லட்டுமா? இரண்டே நிமிடங்களில் நீங் கள் சொல்லுவது பிழையென நான் காட்டு
வேன். s
நிர்வாகி கபில நிற மீசையுள்ள அந்தப் புதியவரை ஆவலுடன் பார்த்தார். சிறிது நேரம் தான்! அந்தக் கூட்டிற்குள் நுழைவது என்பது மரணத்தைத் தழுவுவற்கு ஒப்பாகும்.
"நீங்கள் மூன்றே நிமிடங்களில் தூளா கிப் போவீர்கள்' அவர் பெருமூச்செறிந்தார்.
'நீங்கள் அப்படிச் சொல்வீர்களென நான் நினைத்தேன்' சின்ன மனிதர் புன்ன கைத்தார். 'எனவேதான், நான் என்னுடன் உங்களுக்குக் காட்டவென்று சட்டப்படி யான ஒரு விடுகைப் பத்திரத்தைக் கொண்டு வந்தேன். இப்போது அபாயமெல்லாம் என் னோடு.
அது ஒரு நொத்தாரிசினால் வழங்கப் பட்ட பொதுவான விடுகைப் பத்திரம் என் பதை உறுதி செய்து கொண்டு, நிர்வாகி
சபையினரின் பக்கம் திரும்பி இந்தப் பர பரப்பான செய்தியைக் கூறினார். "சபையி லிருந்தே ஒருவர் B070 வுக்கு மறுவாழ் வளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தனது உயிரைப் பணயம் வைக்கப்
போகிறார்!"
அப் புதிய மனிதர் சுறுசுறுப்பாகத் தனது தொப்பியையுைம், கோர்ட்டையும் கழற்றி
நிர்வாகியிடம் கொடுத்தார். கண்ணாடி
யைக் கழற்றி மடித்து, தனது உட்சட்டைப் பையில் வைத்தார்,
'இப்போது நீங்கள் கதவைத் திறக் கலாம். !" அவர் அமைதியாகக் கூறினார்.
பூட்டுத் திறபடும் சப்தத்திலேயே BOZ0 தனது இடைவிடாத பதுங்கு நடையை நிறுத்தியது. சிறிது உருக்குக் கதவுக் கூடாக தனது இரத்தச் சிவப்பான கண் களைத் திருப்பியது. உடம்பின் மூட்டுக்கள் எல்லாம் உடைபடுவது போல அந்தப் பெரிய பிராணி தனது முழு உடம்பையும் உதறிக் கொண்டது. அந்தச் சிறிய மனிதர் தனக்குப் பின்னாலிருந்த கதவைப் படி ரென்று அடித்து மூடி விட்டு, உள்ளே அடியெடுத்து வைத்தார்.
B0ZO கோய அலறல் ஒன்றை வெளி யிட்டு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், நிராயுதபாணியான அழையா விருந்தாளி அசையாது நின்றார். மென்மையாகப் பேசத் தொடங்கினார். முதற் சில சொற் களைக் கேட்டவுடனேயே யானை எச்சரிக் கையுடன் அமைதியடைந்தது. அந்தச் சிறிய மனிதர் பேசிய வார்த்தைகள் சபை யினருக்குத் தெளிவாகக் கேட்டன. ஆனால், ஒரு வார்த்தையைத் தானும் புரிந்து கொள்ள முடியவில்லை. BOZ0 மட்டுமே மொழியைப் புரிந்து கொண்டதாகத் தோன்றியது.
மல்லிகை மே 2008 & 26

சுருதி மாறாத குரல் கனிவான, உறுதி யான, ஆனால், மென்மையான தாளத் தோடு உட்சென்ற போது, பெருத்த உடம்பு நடுக்கம் நீங்கி, பக்கவாதம் வந்தது போன்று விறைத்து நின்றது. அத்துடன், இப்போது ஒவ்வொருவரும் ஒரு புதிய அழுகையைக் கேட்டனர். அந்த அபாயகரமான மிருகத்தி டமிருந்து பரிதாபமான, ஒரு குழந்தையு டையதைப் போன்ற சின்ன அழுகை அந்தப் பெரிய தலை அங்கும் இங்கும் ஆடத் தொடங்கியது. ஏதோ ஒரு அற்புத மான, அழகான, அன்பான ஒன்றினால் Bozo செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் தோன்றிற்று.
இப்போது அந்தச் சிறிய மனிதர் இன்
னும் துணிவுடன் செயல்பட்டார். அவர்
தனது கரத்தைத் தூக்கி யானையின் தும்பிக்கையை அன்புடன் தடவினார். அத்தோடு, அது அவரது இடையைச் சுற்றி வளைக்க, அவர் மெதுவாக யானையுடன் செல்ல நடை பயின்று அந்தக் கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார். கடைசியில் அந்த ஆர்வமிக்கப் பார்வையாளர்கள் இனியும் மெளனத்தைத் தாங்க முடியாது என்ற நிலையில் ஆனந்தத்தால் வெடிக்கும் வரை. இறுதியாக அந்தச் சின்ன மனிதர் கூட்டை விட்டு வெளியே வந்து தனது தொப் பியையும், கோர்ட்டையும் கேட்டார்.
"BOZ0 விடம் ஏதும் தவறில்லை" அவர் நிர்வாகியிடம் சொன்னார்.
'அதற்கு வீட்டு நினைவு தான். (HomeSick) வந்திருக்கிறது. யாருக்கும் வீட்டு நினைவு வரலாம். நான் அதனுடன் ஹிந்து ஸ்தானி பாஷையில் பேசினேன். அது ஒரு இந்திய யானை; அந்த மொழியுடனேயே அது வளர்ந்தது. அந்த மொழி யானைக்கு
மீண்டும் மனநிம்மதி ஏற்படுத்த வழி சமைத் தது. இனி, அது நீண்ட காலத்திற்குக் குழப்பமின்றி இருக்கும்."
தன்னுடன் குலுக்கிக் கொள்வதற்காக நீண்ட, நிர்வாகியின் கரங்களை அவர் கவ னித்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை, ஒரு யானையின் மரணக் காட்சியை டிக் கட்டுக்களாக விற்ற ஒரு மனிதனுடன் 'கை குலுக்க விரும்பவில்லையோ என்னவோ? கபில நிற Derby தொப்பியு டன் இருந்த அந்த மனிதர், உடனே அவ்விடத்தை விட்டு அகன்றார். ஆனால், அவர் தனக்குப் பின்னால் விட்டுச் சென்ற காகிதத்துண்டை அந்த நிர்வாகி இரண்டு தடவைகள் உற்று நோக்கினார். அவ்வேளையில் விளக்குகள் எரியத் தொடங்கின.
அந்தக் காதிதத் துண்டில் காணப்பட்ட பெயர்- கையெழுத்து- ருட்யார்ட் கிப்ளிங்
(Rudyard Kipling)'' 4
பல வருட காலங்களாக Reader's Digest பத்திரிகையின் பிரதம ஆசிரியராக @(bsbg, Fulton oursler (1893- 1952) எழுதிய இக்கட்டுரையை சமீபத்தில் படிக்க (3.bitibg (Surg), (bits): Readings to enjoy macmilian பதிப்பகம், முதற் பதிப்பு 1974; மறுபதிப்பு 1984) என்னுள் திடீரென ஓர் ஒப்புமை தோன்றி மறைந்தது.
Rudyard kipling (1865- l936) ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ஓர் இந்தியக் கவிஞர் ஆவார். ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக் காலத்தின் போது, ஆங்கிலேயப் பெற்றோருக்கு மகனாகப் பம்பாயில் பிறந் தார். அவரது தந்தை நூதனசாலைப் பாது காவலராகத் தொழில் புரிந்தவர். ஆரம்பச் கல்விக்காகத் தனது மகனை இங்கிலார் திலுள்ள ஆங்கிலப் பாடசாலைக்கு அனுட் பினார். அந்த விடுதியில் Kipling கருணை யற்ற விதத்தில் நடாத்தப்பட்டார். எப்போ தும் தண்டிக்கப்பட்டதன் காரணமாகத்
பிகை மே 2008 ஜ் 27

Page 16
துயரத்துடனும், வீட்டு நினைவுடனும் அவர் வாழ்ந்தார். தான் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்த சூழலைப் பற்றிய ஏக்கம் அவருள் நிரந்தரமாகத் தங்கி விட்டது. பின்னாளில் 96 ft 6Tupgu'Baabaa black Ship' 6169.Jub சிறுகதையில் இந்தத் துயர அனுபவங் களை அவர் மீட்டியுள்ளார்.
இளைஞராக இந்தியாவுக்குத் திரும்பி ஒரு பத்திரிகையில் வேலை செய்தார். மிக விரைவிலேயே சிறந்த கவிஞராகவும், சிறு கதையாசிரியராகவும் புகழ் பெற்றார். தனது படைப்புகளில் பலதரப்பட்ட பாத்திரங்க 66GT மனோவுணர்வுகளையும் திறம்பட வெளிப்படுத்திய இவர் மிகச் சிறந்த குழந்தை இலக்கியங்களையும் படைத்துள்ளார். உ-ம்: Jungle Books (1894-1895)
, སི་སི་
மேலும், முழு உலகையும் சுற்றிப் பார் த்து மனித வாழ்வின் பன்மைத் தன்மை களை எடுத்துக் காட்டிய இவர், இந்தியா வைப் பற்றி நிறைந்த அறிவுடனும், அன்புட னும் தனது Kim என்ற நாவலிலே எழுது கிறார்.
யானையின் மரணதண்டனையைத் தனது கருணையினாலும், துணிவினாலும் ßä asuu Rudyard Kipling @iðE5ub, gab வல்லிக்கேணியிலே கோயில் யானைக்கு விளாம்பழம் கொடுக்கப் போய் ܙ அதனால், தூக்கியெறியப்பட்டு மரணக் காயங்களு க்கு உள்ளான நமது பாரதிக்கும் எத்தனை ஒற்றுமை!!
தனிப்பிரதி 307 ஆண்டு மலர் 200/
மல்லிகை மே 2008 ஜ் 28
 
 

01. 6hBIT6örIDIñIB6ir IDıpBonflorio Br6UITITıp'II 6T6) Tib60),D e தன்யங்கிற்குவர்ணந்தீட்ட விரும்பிய ஒருவன் கடலின் நிறத்தை அழைத்துத் தோற்கிறான். தி வானவில் வரமறுத்து D)ைகிறது.
சோர்ந்து உட்கார்ந்தவன் J. 62 முகத்துக் கவலை ரேகைகளைப் பொறுக்க
േ அதன் அர்த்தத்தில் அடுக்க, بينغ w
பிறந்தது ஒரு துப்பாக்கி. S
இலரி, வர்ணக் குழம்பு குறந்த கவலையில்லை. ہ இருந்தது எங்கள் அனைவரதுங் ಲೌಲ್ವವೆ). &g ડેો வர்ணங்கொடுத்துப் பி)rங்களானோம். *్య நிகழ்ந்த, வசந்துTரிகையின் தாண்டவத்தை
o 6NDČB IDDODIröI SQçB 60IIIrdpluib. 02. தீட்டியவர்)ைாம் உலர்வதற்கிடையில்
தன்னை ஒரு சிற்பியென்றும் உனர்கிறான்.
வர்னாங்கொடுத்துப் பினங்களIனோம் நாம். 6Tuib ID6Ooorojil 1(3) If கல்லாய்ச் சமைந்து விழுந்தனர் எங்கும்.
«?)HõDIT ? LibIB6l6io தன் உளிகொண்டு செதுக்கத் தொடங்க al,Iloor, 3C5 (3.Brigii (3rtili dib IIFIBoir.
03. 6r6ü6ori» dDiplibğ5 16ör6orr
சமீபத்தில் சென்னையில் நடை .
காலத்தின் சுவரில் தனது ஒவியங்களை
பெற்ற 'காலச்சுவடு பண்பாட்டு நிகழ்வில் கவிதைப் போட்டியில் 2- மாடுகிறான்.
வது பரிசு பெற்ற கவிதைக்கான பரிசை முரீ. பிரசாந்தன் சார்பாக திரு. பூ முரீதரசிங் நேரில் சென்று பெற்றுக்
கிடக்கும் வெளிளங்கும் பேய்ச்சிற்பங்களை அடுக்கிப் புன்ைைகக்கிறான்.
விரலி,ை கொழுவிய புகையுடன்
6)Iruílôio 6RČb IIIrL53)6u IĎlJ5šJ6 6íl(Bfilm rôr.
எல்லாவற்றையும் மறைத்து 6)Iro)Irib6opolID(pOyislyb, அவன் பாடும் தருமகிதம்.
மல்லிகை மே 2008 ஜ் 29

Page 17
“பாரதி வாழ்க்கையில், (பார் அந்தத்
25.5Lan?”
திடீரென பாரதி குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது பெரிய அளவில் எழுவதும் பின்னர் அட்ங்கிப் போவதும் ஒரு வழக்கமாகத் தொடர் கிறது. சமீபத்தில் பெங்களுருவில் உள்ள ஒரு கழிவறை ஒன்றில் ஆண்கள் என்பதை அடையாளப்பகத்தும் விதமாகப் பாரதி ஒவிய த்தை வரைந்து வைத்துத் தங்கள் இழிபுத்தியை வெளிப்பகுத்தி யிருந்தார்கள் சிலர். ஆங்கிலம் தெரிந்தவனெல்லாம் வெள்ளை
பாரதி வசந்தன்
யனுக்குச் சேவகம் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருந்த காகைட்டத்தில், கற்ற கல்வியை நாட்குக்காக, நாட்கு மக்களுக்காக வெள்ளையனை
எதிர்த்தும், சாதிப் பாகுபாட்டை, பெண்ணடிமையை ஒழிக்கப் பாகுபட்ட பாரதியை இப்படி அவமானப்பகுத்திய போது, மூன்று அரசாங்கங்கள் அட்ைடிக் கொன்னாமல் வேடிக்கை பார்த்தது தான் வேடிக்கையான விஷயம். பாரதியால் ஒன்றும் அரசியல் ாைபமில்ைை என்று கட்சிகள்
நினைத்திருக்கக் கூகும்.
"ஆம்பிளை என்றால் அது தமிழன் பாரதி மட்டும் தான்! என்று நினைத்தார்களோ என்னவோ?கழிவறையில் பாரதியின் படத்தை வைத்ததன் மூலம் தாங்கள் ஒரு "கழிசடைப் புத்திக்காரர்கள் என்று அவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் என்பதே உண்மை. கழிவு அகற்றுவதையே தொழிலாகக் கொண்ட மக்கள் சமூகத்துடன், பாரதி எந்தளவு நட்புடன் பழகியிருக்கிறான் என்பது பல பேருக்குத் தெரியாது. அதைத் தான் என்னுடைய
தம்பலா" சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன்." என்கிறார் பாரதி வசந்தன்.
புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன் நடந்த பாரதி என்ற குறும்பட வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அமுதசுரபி இதழின் ஆசிரியர் ’ ‘திருப்பூர் கிருஸ்ணன் பாரதி வசந்தன் தமிழில் எழுதிய 'தம்பலா சிறுகதை தற்போது சாகித்ய அகாடமியால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் வரக்கூடிய சம்பவங்கள் எதுவும் இந்தக் குறும்படத்தில் காணப்படவில்லை. அந்த நிகழ்வுகள் இல்லாத பாரதி பற்றிய எந்தவொரு ஆவணமும் முழுமையடைய முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார். யார் தான் இந்தத் தம்பலா? அது ஊரா அல்லது பேரா?
மல்லிகை மே 2008 3 30
 

'தம்பலா ஒரு பயங்கர முரடன். ஊரில் நடக்கிற ரவுடித்தனங்களுக்கெல்லாம் அவன் தான் ஜவாப்தாரி. ஷோ கொட்டகை, சாராயக்கடை, கஞ்சாக் கடை எல்லாம் குத்தகை எடுத்து நடத்துகிறவன். அவன் பேரைச் சொன்னாலே போதும், அழுகிற குழந்தை கூட வாயை மூடிக் கொள்ளும்." இப்படித் தான் புதுச்சேரி முழுக்க தம்பலா வைப் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் அவன் நகரத்துக் கழிவு களை கைகளால் அள்ளிச் சுத்தம் செய்கிற தோட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவன். இப்ப டிப்பட்ட தம்பலாவை பாரதியே விரும்பிப் போய் நேரில் சந்திக்கிறான். இந்த உண்மை களை அடிப்படையாகக் கொண்டதே தம் பலா சிறுகதை, இனி பாரதி வசந்தனுடன்.
இயக்குநர் ஞானராஜசேகரிடமோ அல் லது பாரதி பற்றிய மற்ற பதிவுகளைக் கொடுத் திருக்கிற படைப்பாளிகளிடமோ காணப் படாத தம்பலா உங்களுக்கு மட்டும் எப் படிக் கிடைத்தார். அதற்கு என்ன ஆதாரம்?
"பாராதியாரால் பூணுால் அணிவிக்கப் பட்டு, ‘இன்று முதல் நீர் பிராமணன். யாரா கிலும் உன்னை என்ன ஜாதி என்று கேட் டால், நான் பிராமணன் என்று தையிரிய மாகச் சொல்." என்கிற நிலைக்குக் கொண்டு வரப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ரா. கனகலிங்கம் ‘என் குருநாதர் பாரதியார் எனும் நூலை எழுதியிருக்கிறார். சென்னை சக்தி காரியாலயம் 1947ல் அதை வெளியிட்டிருக்கிறது. அதில் தம் பலா என்கிற தோட்டியைப் பாரதி சந்தித்தது பற்றி சில வரிகள் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டேன். இது எனக்குள் மிகுந்த ஆர்வ
த்தை உண்டு பண்ணியது. மேற் கொண்டு பல நூல்களைத் தேடி ஆராய்ந்ததில் சிறு, சிறு தகவல்களே கிடைத்தன.
96ίπ6υτή புதுவையில் தம்பலா வாழ்ந்த பகுதியான 3,600T 600T Tubuds as IT sit surrus) ஏழெட்டு மாதங்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தேன். இப்பொழுது சென்றாலும் தோட்டித் தெருவில் தம்பலா வாழ்ந்த வீடு சிதிலமடைந்த நிலையில் உள்ளதைக் காணலாம். அங்கே தகவல் சேகரிப்பது ஒன்றும் சுலபமாக இருக்கவில்லை. ஏன் னென்றால் பிரெஞ்சியர் வருகைக்குப் பிறகு சுண்ணாம்புக் காளாவாயிலிருந்த தம்பலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து விட்டார்கள். இப்போது மிகுந்த வசதியாகி விட்ட அவர் கள், தங்களின் சாதி அடையாளத்தைக் காட்டிக் கொள்ள விரும்புவதில் ன் ல. தம்பலாவின் வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு சொல்தா (பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்த தமிழர்கள்) ஒருவர் என்னை நாயை விட்டே கடிக்க வந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இறுதி யில் தம்பலா குடும்பத்தைச் சேர்ந்த வய தான மூதாட்டி ஒருவர் கொடுத்த சில தக வல்கள் மற்றும் அங்கங்கே நான் சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதினேன்.”
சுப்பைய்யா என்றழைக்கப்பட்ட சுப்ர மணியத்திற்கு பாரதி என்கிற பட்டம் சரஸ் வதியின் பெயரால் அவனது நாவன்மைக் காக, எழுத்துவன்மைக்காகக் கொடுக் கப்பட்டது என்று பரவலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், பாரதி படத்தில்
மல்லிகை மே 2008 ஜ் ?

Page 18
கல்கத்தா சென்று நிவேதிதா தேவி என்கிற இந்தியாவுக்கு ஆதரவான வெள்ளைக் காரப் பெண்மணியைச் சந்தித்துத் திரும்பு கிற சுப்பைய்யா நான் புதிய பாரதியாகத் திரும்பி வந்திருக்கின்றேன்! என்பதாய்க் காட்டுகிறார்கள். தந்தை பெரியாரின் மீதும் பாரதியின் மீதும் எதிர்மறையான கருத்துக் களை ஒடுக்கப்பட்ட மக்கள் தளத்திலிரு ந்தே ஏவி விட்டிருக்கும் இந்தக் காலகட்டத் தில் பாரதிதாசன் மாதிரி நீங்களும் பாரதி வசந்தன் என்று வைத்துக் கொண்டீர்களா? ஒரு தலித் படைப்பாளியான நீங்கள், பாரதி பெயரை முன் நிறுத்தக் காரணம் என்ன?
'பாரதி, சாதியை எதிர்த்து பணிபுரியத் தொடங்கிய பல நாட்களுக்குப் பிறகே பெரி யார் இயக்கம் தோன்றியது என்று பெரியா ரின் திராவிட இயக்க உறுப்பினரான பாரதி தாதனே கூறியுள்ளார். அதே போல் நிவே திதா தேவியை சந்தித்த பிறகே பாரதியிடம் பெண்ணுரிமை குறித்த புதிய சிந்தனை தோன்றியது.
'கற்பென்று சொல்ல வந்தார். அஃதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்" என்று பாட்டெழுதுகிறார். பாரதி பெண்ணு ரிமைச் சிந்தனையுடன் புதிய பாரதியாக உருவெடுக்கிறார் அவ்வளவே. பாரதி என் பது பிறரால் கொடுக்கப்பட்டது அல்ல. டாக்டர் பட்டமோ, சர் பட்டமோ, சுப்பர் ஸ்டார் பட்டமோ பெயருக்கு முன்னால் போடுவார்களே தவிர, பின்னால் அல்ல. அவர் சுப்ரமணியப் பாரதி என்று தானாகவே பெயர் வைத்துக் கொண்டார். இது காசியில் நடந்தது. அங்கு வாழ்ந்த ‘பாரதி என்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்க
ளின் வாழ்க்கையை நேரில் கண்டு மனம் கொதிக்கிற சுப்பைய்யா, நாத்திகனாக மாறி பூணுாலைத் துறந்ததும் அங்கே தான் நிகழ்ந்தது. அம்மக்களின் அடையாளமா. கத் தான் பாரதிக்கு அப்பெயர் வந்தது என்று 'கணையாழி, கவிதாசரண் ஆகிய இதழ்களில் ஒரு மிகப் பெரிய ஆய்வுக் கட்டுரை தகுந்த ஆதாரங்களுடன் வந்திருக் கிறது. இதுவரையில் அதற்கு யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனவே, பிராமணராகிய சுப்பைய்யா தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாகப் பாரதி என்கிற பெயரை முன்னிறுத்துகிற போது, சாதி ஒழிப்பை முன்னிறுத்துகிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தப் பெயரை வைத்துக் கொண்டதில் தவறேது மில்லை."
தம்பலா சிறுகதையில் தோட்டி சமுதாய த்தைச் சேர்ந்த மக்களை பிற தாழ்த்தப் பட்ட சமூக மக்களே இழிவாகப் பேசுவதாக ஒரு சம்பவம் பதிவாகியிருக்கிறது. இன்றும் அந்நிலை தொடர்கிறதா?
*அதில் எந்தச் சந்தேகமுமில்லை. தலித்துகளுக்குள் உட்சாதிப் பிரிவுகள் இருப்பது உண்மை தான். இதில் பெரும் பான்மைப் பலமிக்கவர்கள் தன்னிலும் கீழான, குறிப்பாகச் சக்கிலியர்கள், தோட்டி கள், வண்ணார்கள் ஆகிய சமூகத்தினரை இழித்துப் பேசுவதும், ஒடுக்குவதும் அது பாரதி காலமானாலும் சரி, பாரதிவசந்தன் காலமானாலும் சரி, தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது."
நன்றி : தினமலர்.
மல்லிகை மே 2008 ஜ் 32

இறலிGஆல் ஆலைகreடுகிலுஃகல்
- முருகபூபதி
பDல்லிகையின் முன்னொரு ஆண்டு மலரில் மா. பாலசிங்கம் எழுதிய 'வாழையடி வாழையென வாரிசுகள் தொடரட்டும்' என்ற ஆக்கத்தில் மேலும் பல தகவல்கள் விடுபட்டுப் போயிருப்பது எனது கவனத்திற்கு வந்தமையால்- எனக்குத் தெரிந்தவற்றையும் மல்லிகை வாசகர்களுக்காகப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
வண்ணதாசன்
தமிழக முற்போக்கு இலக்கியச சூழலில் நன்கு அறியப்பட்டவரும், ஈழத்து மூத்த- இளம் தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நன்கு பரிச்சயமானவருமான எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் தி.க, சிவசங்கரனின் (தி. க. சி) புதல்வர் தான் வண்ணதாசன், இவர் சிறுகதை எழுத்தாளர். பல சிற்றிதழ்களில் எழுதுபவர், சில கதைக் கோவைகளின் ஆசிரியர்.
©Hទិសំ ១៨hយសំ
தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான அகிலனை இலக்கிய உலகம் நன்கறியும், இவரது நாவல்கள் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன. அவை- பாவை விளக்கு, குலமகள் ராதை (வாழ்வு எங்கே), கயல்விழி (மதுரையை மீண்ட சுந்தர பாண்டியன்) இவரது 'சிநேகிதி என்ற நாவலைத் தழுவித்தான் இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஸ்ணன் சாரதா என்ற படத்தை எடுத்தார்- என்பதற்காக வழக்குத் தொடர்ந்தார். அகிலனின் மகன் தான் கண்ணன். இப்பொழுது சென்னை தமிழப் புத்தகாலயத்தை நடத்தி வருபவர். சிறுகதை எழுத்தாளர். இவரது கதைகள் சுபமங்களா உட்பட பல சிற்றிதழ்களில் வெளியாகியுள்ளன.
அகிலன் கண்ணன் என்ற பெயரில் எழுதுகிறார். "வால்கா முதல் கங்கை வரை (ராகுல ங்கிருத்தியான் எழுதியது) நூலை தமிழுக்குத் தந்த கண. முத்தையாவின் மகளைத் தான் அகிலன் கண்ணன் திருமணம் முடித்தார்.
நவீனன் ராசதுரை
ஈழத்தின் மூத்த தலைமுறைப் படைப்பாளியும் சென்ற ஆண்டு (2007) பவள விழாக் கண்டுள்ள எழுத்தாளரும்- தற்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவருமான காவலூர் ராசதுரையின் புதல்வன் நவீனன்.
அவுஸ்திரேலியாவில் அரச மொழி பெயர்ப்பாளராக (தமிழ்-ஆங்கிலம்) பணியாற்றுகிறார். அவுஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ஹென்றி லோசன் என்பவருடைய கதைகளை
மல்லிகை மே 2008 $ 33

Page 19
மொழிபெயர்த்து ஹென்றி லோசன் கதை கள்' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார். இதனை சென்னை ‘மித்ரா பதிப்பகம் வெளியிட்டது.
நவீனன் தமது தந்தையாரின் கதைகள் சிலவற்றை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த் siTSITTir. A Prophet unhonoured 676610 பெயரில் வெளியாகியுள்ளது. இந்நூலுக்குப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அணிந்துரை எழுதி யுள்ளார். நவீனன் ராசதுரை அவுஸ்திரே லியாவில் வெளியாகும் இதழ்களில் எழுது கிறார்.
பிரவீனன் மகேந்திரன்
இலங்கையில் மிகுந்த கவனத்தைப் பெற்ற எழுத்தாளர் கோகிலா மகேந்திரன். நாவல், சிறுகதை, விமர்சனம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதியிருப் பவர். இவரது ஏகபுதல்வன் பிரவீணன். இலங்கையில் க. பொ. த. உயர்தரப் பரீட் சையில் சிறந்த புள்ளிகளைப் (4 A) பெற்று புலமைப்பரிசிலில் அவுஸ்திரேலியாவுக்கு மேற்கல்வியைத் தொடர்வதற்காக வந்த வர். மன ஆற்றலும், கல்வியாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். அவுஸ்திரேலியா வில் கவியரங்குகளிலும், பட்டிமன்றங்களி லும் கலந்து கொள்வதுடன், சிட்னியில் பல பொது நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராகவும் இயங்குபவர். கவிதை, சிறுகதை, விமர்சனம் எழுதுபவர். இவரது எழுத்துக்கள் அவுஸ்தி ரேலியா, இலங்கை பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் விழாக் களை நடத்தி வரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் சென்ற ஆண்டு (2007) வெளியிட்ட ‘வானவில்'. என்ற கவிதைத் தொகுப்பிலும் பிரவீண னின் கவிதை இடம் பெற்றுள்ளது.
இளமுருகனார் பாரதி
நவாலியயூர் சோமசுந்தரப் புலவரின் மற்றுமொரு புதல்வர் தான் இளமுருகனார். பழந்தமிழ் இலக்கியச் சமயச் சொற்பொழி வாளராகவும், சமய இலக்கியங்கள் படைப் பவராகவும் திகழ்ந்த இளமுருகனாரின் புதல்வர் பாரதி அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கிறார். இவர் ஒரு பல் மருத்தவர். கவிதைகள் எழுதுகிறார். பல கவியரங்குகளில் பங்கு பற்றியவர். தொடர்ந் தும் எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
JITSIfgjidigtorit
இலங்கையில் 'ஆசுகவி' என புகழ் பெற்ற கல்லடி வேலுப்பிள்ளை பற்றி அறிந்திருப் பீர்கள். இரசிகமணி கனக செந்திநாதனும் தமது ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலில் இவரப்ை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
கல்லடி வேலுப்பிள்ளையின் பேத்தி திருமதி ராணி தங்கராசா (வயது 74) அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வசிக்கின் றார். இங்கு வெளியாகும் இதழ்களில் எழுது கிறார். கவியரங்குகளில் பங்கு பற்றுகிறார்.
ராணி தங்கராசாவின் கதைகள், கவி தைகள் இடம் பெற்ற நூல் ‘ஒரு கைதியின் மனச்சாட்சி
இந்நூல் வெளியீட்டு விழாவில்- ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
‘புலம் பெயர் இலக்கியம் பிறந்து மூன்று சகாப்தங்களுக்கு மேலாகியும் இன்னும் வாரிசுகள் தலைகாட்டவில்லையே'- என்று மா. பாலசிங்கம் தமது ஆக்கத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
சகாப்தம்'- சரியா தசாப்தம்' சரியா?
மல்லிகை மே 2008 & 34

தங்கWu>3-hனின் "ஒன்Ua டுUn6ருheடு”
- இலகு ஆனந்த்
அழகி, தென்றல், சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம் என வரிசையாக வித்தியாசமான, கலைத்துவமான படங்களைத் தந்து கொண்டிருக்கும் தங்கர் பச்சானின் அண்மைய வெளியீடு தான் ஒன்பது ரூபா நோட்டு திரைப்படம். இருபது வருடங்களுக்கு முன்னர் அவரால் எழுதப்பட்ட நாவலே இந்த ஒன்பது ரூபா நோட்டு. வழமையான கிராமியக் கதை கிராமத்தையும், கிராமியப் பின்னணியையும் பாரதிராஜாவுக்குப் பின், இன்னும் சிறப்பாகக் கொண்டு வந்து காட்சிப்படுத்தி அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் போன்ற படங்களை வெகுஜன ரீதியிலும் வெற்றிப் படமாக்கியதுடன், ஆழமான பிரச்சினைகளையும் அணுகிக் கவனிப்பைப் பெற்ற, இவருக்கு இப்படம் அப்படியொன்றும் பிரமாண்டமான வெற்றியைத் தராவிட்டாலும், பேசப்படும் சினிமாவாகவே இதுவும் சில நிறைவுகளைத் தருகிறது.
வழமையான கூச்சல் உரையாடல்களுடன், பாத்திரங்களின் அறிமுகச் சிக்கலும் பார்வையாளனை ஆரம்பத்தில் குழப்புகிறது. பெரியார் படத்திற்குப் பின்னர், கனதியான ஒரு பாத்திரத்தில் சத்தியராஜ் பாத்திரமாகவே மாறிவிடுகிறார். அதைவிட ஒருபடி மேலாக அர்ச்சனா தனது நடிப்பின் மூலம் மனதை அள்ளிச் செல்கிறார். உருக்கமான காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. எனினும், மாதவர் படையாட்சியின் குண இயல்புகள் மக்கள் அனுதாபத்தைப் பெற தவறி விடுகின்றமை, படத்தின் வெகுஜன வெற்றிக்குத் தடையாக இருந்திருக்கலாம் போல் தோன்றுகின்றது.
பத்திரக் கோட்டை கிராமத்தின் விவசாயக் குடிமக்களின் பிரச்சனைகளைச் சொல்ல வந்த தங்கர் பச்சான், இதைவிட அவ்விவசாயிகளாலும் ஒடுக்கப்பட்ட தலித்கள் பற்றி மூச்சும் விடாதமை அவரது போலி முகத்தைக் காட்டுகிறது. மண் மணம் கமழும் தமிழ் சினிமாக்களில் பல்வேறு சமூகங்களுடன் இடர்பட்டு வாழும் தலித் சாதியினரின் இருப்பு மறக்கப்பட்டோ, தந்திரமாக மறைக்கப்பட்டோ வருவது சாபக்கேடு. சாதியம் என்னும் சவாலை எதிர்கொள்ளத் தங்கர் பச்சான் உள்ளிட்ட இயக்குநர்கள் தயங்குவது புலப்படுகிறது. இதே கிராமத்தில் இதே விவசாய வன்னியர்களால் தான் தலித் ஒருவர் போட்டியிட்டமைக்காக, அவர்கள் மீதும் பெரும் வன்முறை பாவிக்கப்பட்டிருந்ததை ஒப்புக்குக் கூட, ஒரு வார்த்தையில் தானும் தங்கர் சொல்லவில்லை. அவரது பிரச்சனை எல்லாம் வன்னியர் பிரச்சனை மட்டும் தான். மேலும் மாதவன் படையாச்சி போன்றவர்களின் விடாப்பிடியான பழமை பிற்போக்கு வாதப் போக்குகளும், அவர்களது பின்னடைவுக்குக் காரணம் என்பதையும் வலியுறுத்தத் தவறி விடுகிறார், தங்கர். குறிப்பிட்ட சாதி மக்கள்
மல்லிகை மே 2008 & 35

Page 20
பற்றிச் சொல்லும் போது, அச்சாதி வாழும் பிரதேசத்தில் வாழும் இதர சாதிகளையும், அவர்களுடனான உறவுகளையும் சிறித ளவாவது காட்சிப் படுத்தியிருக்கலாம் அல் லவா? வன்னியர்களுக்குத் தான் பிரச் சனை இருப்பதான மாயையை இது ஏற் படுத்துகிறதல்லவா?
பிராமண ஆதிக்கம் இந்தியாவில் இருந் தது போல், எமது நாட்டில் மேட்டுக்குடி விவ சாயிகளின் (வெள்ளாளரின்) ஆதிக்கம் இருந்தது. இவர்களின் மனப்போக்கு அங்கு வன்னியர்களிடம் இருக்கிறது.
எமது தேசத்திலும் ஒடுக்கப்பட்டிருந்த இடைநிலைச் சாதிகள், தீண்டாமை ஒழிப் பில் மேட்டுக்குடியினருடன் சேர்ந்து நின்ற மையும், இப்போது அப்படி ஒரு சாதி இல்லை என்பது போல் வெள்ளாள முகமூடிக்குள் நிற்பதும், ஒதுக்கப்பட்டிருந்த மீனவ சமூகத் தவர்களும் தம்மை உயர் சாதியாகக் காட்ட முயல்வதுமான எமது தேச நிலைப்பாடு போலத்தான் வன்னியர்களின், தலித்துக் களை ஒடுக்கும் நிலைமையாக தமிழகத் தில் இருப்பதை அறிய முடிகிறது. ஆனால், தங்கருக்கு அவை எதுவும் புலப்படாதது ஏனோ?
இந்து முஸ்லிம் நட்புறவு, இதன் மூலம் உலகத் தமிழரின் ஒன்றிணைவு, புரிந்து ணர்வு எனப் பிரிந்து கிடக்கும் தமிழர்களை ஒருங்கிணைப்பதான முழக்கத்தை முன் வைக்கும் போது, தலித் பற்றி மூச்சே விட வில்லை. குறைந்த பட்சம் மகளின் காதல் விவகாரத்தையாவது தலித் இளைஞனு டன் காட்டியிருக்கலாம். இது போன்ற, படங்கள் சாதிய ஒடுக்கு முறையின் நிஜ மான நிதர்சனத்தை மறைக்கத்தான் உதவு மேயன்றி, சாதிய ஒடுக்கு முறையை அகற்ற உதவப் போவதில்லை.
இன்றைய எமது தேச யுத்தப் பின்னணி யில் சாதியம் பின்தள்ளப்பட்டது உண்மை தான். எனினும், அது வேரோடு சாயவில்லை. இலைகளும், கிளைகளும் தான் வெட்டப் பட்டுள்ளன. வோரோடிய முரணும், பாகு பாடும் நீறுபூத்த நெருப்பாக அப்படியே தான் இருப்பதாகத் தெணியான், ஜீவா போன் றோர் குறிப்பிடுவதும் இவ்வேளையில் கவ னிக்கத் தக்கது. எமது தேச மக்களின் சாதி யம் கடல் தாண்டிப் புலம்பெயர் நாடுகளிலும் கூடக் கொடி கட்டிப் பறப்பதை அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் பறைசாற்றுகின் றன. இன்றும் கூட, திருமண விளம்பரங் களில் 'சாதி சதி செய்து கொண்டே இருக் கிறது.
இனித் திரைப்படத்திற்கு வருவோம். அர்ச்சனா என்ற இந்த அற்புதமான நடி கையை தமிழ்த் திரையுலகம் ஏன் அதிகம் பயன்படுத்தவில்லை என்ற ஏக்கத்தை அவரது உருக்கமான, இயல்பான, உணர் வுகளை வெளிக்காட்டும் காட்சிகளின் நடிப்பில் மாத்திரமன்றி, உணர்ச்சிகளை மறைத்துத் தனக்குள் துடிக்கும் காட்சிக ளிலும் வெளிப்படுத்தி நிற்கிறார். அடிதடி சத்யராஜ் நடிகருக்குள்ளும் இத்தனை திறமை ஒளிந்திருக்கிறதா?
சில நல்ல விசயங்களைச் சொல்ல வரும் போது, கறிக்கு உப்பு போல் ஜனரஞ் சகக் காட்சிகளைப் புகுத்துவதில் தப்பி ல்லை. இதனால், பலதரப்பட்ட பார்வை யாளர்களை எட்ட முடியுமல்லவா?
ஒன்பது ரூபா நோட்டு வெளியான தினத்தில் இன்னொரு குறிப்பிடத் தக்க விடயம், திரையரங்குகளில் இலவசமாக அன்றைய தினம் படம் காண்பிக்கப் பட் டமை தான்! தங்கள். உங்களிடம் திறமை நிறையலே இருக்கிறது. இருக்கும் குறை களை ஏற்றுக் கொள்ளுங்கள். தமிழகச் சினிமாவை உச்சம் பெற வைக்க உங்க ளால் தான் முடியும்
மல்லிகை மே 2008 ஜ் 36

சிங்களச் சிறுகதை
S960ouluu mromr SÐČl6ool
முலம': கபிலகுமார காலிங்க
தமிழில்: இப்னு அஸரிமத்
5டல்கொந்தளிப்பு ஏற்பட்டதன் பின்னர் உடைந்து, சிதைந்து போயுள்ள வீதிகளில் இன்னமும் உடைந்த பொருட்களின் மிச்ச சொச்சங்களை ஆங்காங்கே காணக் diniqug Tidb இருக்கிறது.
வாகனம் குழிகளில் விழுந்தும், எழுந்தும் ஆடி ஆடி சிரமத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது.
நாங்கள் இப்போது அம்பாந்தோட்டை நகரை அண்மித்துள்ளோம். . "நாங்கள் எங்கே செல்ல வேண்டும்?” சாரதி வினவுகிறான்.
“பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு” “அதற்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படவில்லையா?” "போய் பார்ப்போம். ரேடியோவில் கூறுவதைப் பார்க்கும் போது, இப்போதைக்கு அந்த இடத்திலோ அல்லது வோறொரு இடத்திலே அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.”
திருப்பி மறுபக்கமாக வந்தடித்த படகைப் போன்று முணுமுணுத்த முகத்துடன சாரதி, ஏதோ கூறியவாறு வாகனத்தைச் செலுத்துகிறான். இது நான் வாடகைக்கு எடுத்த வாகனமாகும். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரம் செல்வதற்கும் முன்பாக அம்பாந் தோட்டைக்குச் சென்று வரும்படி அவரது முதலாளி விடுத்த வேண்டுகோளை இந்த வாடகைச் சாரதி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவில்லை போலும். என்ன இருந்தாலும்
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் இனந்தெரியாத சாரதியுடன் தூரப் பயணம் செல்வதானது இன்னொரு சுனாமியைப் போன்ற விடயமாகும்.
நண்பர் ஒருவரிடம் இருந்து இன்று அதிகாலை கிடைத்த தொலைபேசி அழைப்பை யடுத்தே அவசரமாக இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு நான் தீர்மானித்தேன்.
மல்லிகை மே 2008 & 37

Page 21
சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்க ளின் அடையாள அட்டைகள் சில சடல ங்களிலும் கடற்கரையிலும் வேறு சில இடங்களிலும் இருந்து பிரதேச மக்களால் சேகரிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்திலும் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அந்த அடை யாள அட்டைகளுள் எனது அடையாள அட்டையும் உள்ளதாக வானொலி செய்தி யில் கூறப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு குழப்பமடைந்த எனது நண்பர் எனது அலு வலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது நானிங்கு இல்லை. (அலுவலகம் செல்லவில்லை என்பதால்) அவர் மீண்டும் எனது கையடக்கத் தொலைபேசியுடன் Qg5TLi Li Qa5T605 LTsi.
போதும் போதும் அட்படியானால் ந இன்ன மும் உயிருடன் இருக்கிறாய். உனது அடையாள அட்டை அம்பாந்தோட்டை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இருக் கிறதாம்! காணாமற் போனவர்களது பட்டி பலின் கீழ் ஒரு அறிவிப்புப் பலகையில் தொங்கவிடப்பட்டுள்ளதாம்!. ஆமாம். இப் போதுதான் ரேடியோவில் சொன்னார்கள்.”
"அப்படி இருக்க முடியாது! எனது அடை யாள அட்டை எனது பர்ஸில் இருக்கிறது!”
“அது எனக்குத் தெரியாது! அம்பாந் தோட்டையிலும் நீ இருந்திருக்கிறாய்”
கரகரத்த குரலில் இவ்வாறு கூறிய எனது நண்பர் பலத்த சிரிப்புடன் தொலை பேசி தொடர்பைத் துண்டித்து விட்டார்.
இதற்கு முன்பதாக எனது அடையாள அட்டை ஒன்று காணாமற் போயிருந்த போதும் பின்னர் யாரோ ஒருவரால் அது தபாலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனி ‘டையே நான் புதியதொரு அடையாள அட்டையும் பெற்றுக் கொண்டேன். எனவே இப்போது என்னிடம் இரண்டு அடையாள
அட்டைகள் இருக்கின்றன. அப்படியானால் இப்போது கிடைத்திருக்கின்ற இந்த அடையாள அட்டை யாருடையதாக இருக்கும்?.
சந்தேகத்திற்கு உட்பட்ட நான் அந்த வானொலி நிறுவனத்தில் இருக்கும் எனது நண்பர் ஒருவரின் ஊடாக மீண்டும் விபரங்களை ஆராய்ந்து பார்த்தேன். உண்மைதான். எனது பெயரைக் கொண்ட அடையாள அட்டை ஒன்று அம்பாந் தோட்டையில் வைத்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. இதில் பெரும் பயங்கரம் என்னவென்றால் இந்த அடையாள அட்டை ஒரு சடலத்தில் இருந்து கண்டெடுக்கப் பட்டிருந்ததுதான்.
இதன்படி சுனாமியின் பின்னர் நானும் இறந்து விட்டுள்ளேன். இப்போது நான் அவ்வாறு இறந்துவிட்ட என்னைப் பற்றிய விபரங்களை அறியும் முகமாகவே பயணித் துக் கொண்டிருக்கிறேன். ஒரு வகையில் பார்க்கும் போது, இது ஒரு பைத்தியககாரத் தனமான பயணமாகும். மறுபக்கம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மரண பரி சோதனையுமாகும். இந்தப் பயணத்தின் போது, ஒரிரு நண்பர்களையாவது அழை த்து வந்திருக்கலாம். எனினும் இப்பயண த்தின் இலக்கின் நிச்சயமற்றத் தன்மை காரணமாக நான் அதற்குத் தூண்டப்பட வில்லை. இருந்தாலும், இப்போது ஏதோ ஒரு வித தனிமையை உணர்கிறேன் போதாக் குறைக்கு சாரதியும் ஊமையைப் போல் வருகிறான்.
பொதுவாகவே நான் சாரதிகளை நண் பர்களாக்கிக் கொள்வேன். போகட்டும். பின்னர் இந்த சாரதியையும் பேச்சுக்கு இழுத்துக் கொள்ள வேண்டும்.
அளுத்கமயில் வைத்து தேநீர் அருந்து வதற்காக சற்று நேரம் ஒய்வெடுத்துக்
மல்லிகை மே 2008 & 38

கொண்டோம். சோகத்துடன் காணப்பட்ட சில குடும்பங்கள் நாங்கள் தேநீர் அருந்திய கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. இவர்கள் தங்களது வீடு, வாசல்களை இழந் ததன் காரணமாக தங்களது உறவினர்க ளிடம் அடைக்கலம் நாடிச் செல்பவர்களாக இருக்கக் கூடும். என்னுடன் ஒரே மேசை யில் இருந்த போதும் என்னுடன் வந்த சாரதியும் அந்த நபர்களில் ஒருவரைப் போலவே காணப்பட்டான். அவனும் கடல் ஏழு முறை கொந்தளித்தது போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். பாழ டைந்ததொரு நிலையில் காணப்பட்டான். சவரம் செய்யப்படாத அவனது முகம் அத ற்கு மேலும் வலு சேர்த்திருந்தது. என்ற லும் தொடர்ந்து அவன் இடியப்பத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறான். கறி வகைகளையும் அள்ளி ஊற்றிக் கொள் கிறான். ஆறேழு மாதங்கள் ஒன்றுமே சாப்பி டாதவன் போல, நான் அவனது சாப் பாட்டுக்கு தடையேற்படுமாப் போல் இடை நடுவில் பேச்சுக் கொடுத்தேன்.
“நண்பரே. உங்களது ஊர் எது?”
'மாத்தறை அவன் எண் னைப் பார்க்காமலே பதில் கூறியவாறு தொடர்ந்து இடியப்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.
'இப்போது கொழும்பில் வசித்து வருகிறீர்கள்’
“உங்களுக்குத் தெரிந்த எவருக்கும் பிரச்சினைகள் ஏதும் இல்லையா?. கடல் கொந்தளிப்பில்? ஊரில் ஏதும்?.”
”தெரியாது” "ஏன். இந்தப் பகுதியில நண்பர்கள்.
உறவினர்கள். எவரும் இல்லையா?”
”அதிகம் இல்லை”
பொலிஸாரிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பொய் கூறும் சந்தேக நபரைப் போல் சாரதி பதில் கூறுகிறான். என்றாலும் இவ்வாறான சந்தேக நபர்கள் இறுதியில் மூச்சிறந்ைதுக் கொண்டு, கிளிப் பிள்ளையைப் போல் (உண்மையோ, பொய்யோ) கூற ஆரம்பிப்பார்கள். எனவே நான் அதைரியப்படவில்லை. எனது இந்தப் பயணத்தின் நோக்கத்தை அவன் அறியான் என்றாலும் இப்பொழுதே அதைக் கூற வேண்டியதும் இல்லை. சிலவேளை அதனால் இவன் பயந்து, ஏதேனும் ஒரு பொய்யைக் கூறி பயணத்தை இடைநடுவில் நிறுத்தி விடவும் தூண்டக் கூடும்.
நான் இன்னும் ஏதேதோ கேட்ட
போதிலும் அவற்றுக்கு அவனிடமிருந்து
சுருக்கமான பதில்களே கிடைத்தன. ஒரு சில சந்தேக நபர்கள் மிகவும் பிடிவாதக் காரர்கள். இறுக்கமான மனதைக் கொண்ட வர்கள். இவ்வாறவனர்களின் முன்பாக புலனாய்வாளர்கள் கூட களைத்துப் போய் விடுவார்கள். r
அரை மணி நேரத்தில் நாங்கள் மீண்டும் எமது பயணத்தை ஆரம்பித்தோம்.
மரண வீட்டின் இறுதிக் கிரியைகள நடந் ததன் பின்னர் சில தினங்களுக்குக் காணப் படுகின்ற சோகமானதும் பாழடைந்ததுமான நிலையையே பாதையின் இரு புறங்களி லும் காணக் கூடியதாக இருந்தது. ஆங் காங்கே மயானங்கள் எழுந்திருந்தன. கரையோரங்களில் இருந்து பாதையை நோக்கி தூக்கி எறியப்பட்ட படகுகளின் பாகங்கள், ஊனமுற்று பூமியைத் தழுவிய படி ஆங்காங்கே கிடக்கின்றன. பெயர்ந்து சென்றுள்ள பெரிய முட்புதரொன்று கரை யின் நடுவே கிடக்கிறது. பின்னடித்துக் கொண்டிருக்கும் சிறிய அலைகள் முன் னால் வர வெட்கப்பட்டுக்கொண்டே கரை யில் உரசியவாறு மீள அடித்துச் செல்
மல்லிகை மே 2008 & 39

Page 22
கின்றன. ஒரு சில இடங்களில் பெரிய தொரு ஹோட்டலின் அல்லது வீட்டின் எஞ்சிய டயில் ஸ் தரை மாத்திரமே காணப்படுகின்றது.
அம்பாந்தோட்டையை சென்றடைந்ததும் பிரதேச செயலாளர் அலுவலகத்தை தேடிச் சென்ற நாம் அங்கொரு பக்கமாக வாக னத்தை நிறுத்தினோம்.
பல்வேறு அலுவல்களுக்காக வந்தி ருந்த சிலர் அலுவலகத்தின் முன்பாகக் காணப்பட்டனர். ஏனைய நாட்களில் போல் உரத்த குரலில் பேசுகின்ற, சிரிக்கின்ற மக்களை அங்கு காணக் கூடியதாக இல்லை. இறக்காமல் எஞ்சியிருக்கிற மக்களினதும் வாழ்க்கையின் சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொண்டே சுனாமி மீளச் சென்றிருப்பதை உணர முடிகின்றது. சுவரில் பொருத்தப் பட்டிருந்த அறிவிப்புப் பலகை ஒன்றின் அருகில் சிலர் நின்றிருந்தனர். சந்தேகமில்லை, அடையாள அட்டைகளை அங்குதான் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும்.
நான் அங்கு சென்றேன். ஆமாம், அடை யாள அட்டைகள், அறிவுப் பலகை முழு தும் தொங்கவிடப்பட்டிருந்தன. தங்களை இனங்காட்டிக் கொள்வதற்கென நபர்களிடம் இருந்த அடையாள அட்டைகள், தங்களது தனித்துவங்களை எடுத்துக் காட்டிய அடையாள அட்டைகள் அவை. இன்னமும் தமது பணிகளை நிறைவேற்றுவதற்காக முன் வந்து காட்சி தருகின்றன. இனங்கண்டு கொண்டால் நீ எனதே என்பதைப் போல் தொங்குகின்றன. மூக்குக் கண்ணாடியை அணி ந்து கொண்ட நான் அந்த அறிவுப் பலகையை நெருங்கியவாறே ஒவ்வொன் றையும் ஆராய முற்பட்டேன். என்றாலும அது இலகுவான காரியமல்ல. அடையாள அட்டை களின் மறுபக்கங்கள் தெரியாதமை காரண மாக பெயர்களை அறிந்து கொள்ள முடியா மல் இருக்கிறது. இன்னொரு பக்கமாக
டைப் செய்யப்பட்ட பெயர்ப் பட்டியல் ஒன்றைக் கண்ட நான் அதில் எனது பெயர் இருக்கிறதா என ஆராய்ந்து பாக்க ஆரம் பித்தேன்.
'சிறிதுங்க. சில்வா. வர்ணசிறி. நவநந்தன. தேவமுனி. பெரேரா. அபே நாயக்க. ம்ம். எனது பெயர்?. அடக் கடவுளே. இதோ இருக்கிறது. எனது பெயர். ஆமாம். ஓர் எழுத்து கூட வித்தியாசமின்றி அப்படியே எனது பெயர் தான். முழுமையான பெயர். எனது இதயத் துடிப்பு அதிகரிப் பதைப் போல உணர்ந்தேன். என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அலுவலகத்தி னுள் சென்ற நான் முன்னால் மேசை ஒன் றின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயதைக் கொண்டவரிடம் சென்றேன்.
“ஐயா. அந்த அறிவுப் பலகையில் இருக்கின்ற ஐ.சீயைப் பார்க்க முடியுமா?”
ஆவணமொன்றில் ஏதோ எழுதிக கொண் டிருந்த அவர் மேலும் அதிலேயே ஈடுபட்ட வராக இருந்தபடி திடீரென கனவு கண்டு விழிந்தெழுந்தவரைப் போல் என்னைப் பார்த்தார். நான் மீண்டும் முதல் கேள்வி யையே கேட்டேன்.
"ஆம் முடியும். அது யாருடையது. நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?”
நான் என்னைத்தான் தேடுகிறேன் என பதில் கூற முடியுமா? எனவே, "என்னுடைய தல்ல. இன்னொருவரைப் பற்றி தேடுகி றேன்” என்றேன்.
‘போய் பார்ப்போம். இதோ.
சாவியை எடுத்துக் கொண்டு விடுகின்றேன்”.
நான் வந்து
அந்த நடுத்தர வயதுடைய நபர் மிகுந்த சிரமத்துடன் ஆசனத்தை விட்டு எழுந்தார். பின்புறமாக இருந்த ஊன்று
மல்லிகை மே 2008 ஜ் 40

கோல் ஒன்றை எடுத்து அவர் அதன துணை யுடன் உள்ளே செல்லும் போதே அந்த அறிவுப் பலகையின் அருகில் செல்லுமாறு எனக்கு சமிக்ஞை காட்டி விட்டுச் சென்றார். நான் மீண்டும் அங்கு செல்லும் போது முன்பு அந்த இடத்தில் நின்றிருந்தவர்கள் வெளியேறி விட்டிருந்தனர். தனது உடம் புக்கு பொருந்தாத வகையில் பெரிய சேர்ட் டும் சாயம் போன பற்றிக் சாரமொன்றையும் அணிந்திருந்த வயோதிபர் ஒருவர் மட்டும் அங்கு நின்று கொண்டு தெளிவற்ற குரலில் ஏதேதோ முணுமுணுத்துக கொண்டிருந்தார்.
"அதுதான். ஐயோ. தெரியாது.அது தான். ஐயோ..” என்றவாறு அவர் தொடர் ந்து முனு முணுத்துக் கொண்டிருந்தார். அந்த நடுத்தர வயதுடைய நபர் சாவியுடன் வந்து சேர்ந்தார்.
”பெயர் என்ன?”
நான் பெயரைக் கூறிய பின்பு அவர் அந்த அறிவிப்புப் பலகையில் இருந்த, நான் கூறிய பெயரைக் கொண்ட அடை யாள அட்டையை எடுத்துத் தந்தார். உடனே நான் அதில் உள்ள பெயரைப பார்த் தேன். சரியாகவே இருந்தது. எனது மூன்று பெயர்களும் அப்படியே இருந்தன. விலா சம், அம்பாந்தோட்டை என்றிருந்தது. பிறந்த வருடம் 1954. நான் பிறந்தது 1953ம் வருடமாகும்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் பகுதியை நான் ஏற்கனவே கண்டிருந்ததால் நான் அதிர்ச்சியடைய வில்லை. என்றாலும் எனது பெயரைக் கொண்ட நபர் எத்தகைய தோற்றத்தைக் கொண்டிருக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்ளும் குதூகலம் என்னுள் குறைய வில்லை. அடையாள அட்டையின் மறுபக் கத்தைப் புரட்டி புகைப்படத்தைப் பார்த் தேன். அநேகமான அடையாள அட்டை
களைப் போன்றே இதன் புகைப்படமும உரிய வரை இனங்கண்டு கொள்ள இயலாத வகையில் மாறுபட்டிருக்கவும் வாய்ப்புண்டு.
அதில், சோகமான தோற்றத்தையும், கூரிய முகத்தையும் கொண்ட நபரைக் காணக் கூடியதாக இருந்தது. சில காலங்களுக்கு முன்பாக பிடிக்கப்பட்டிருந்த புகைப்படம் என்பதாலோ வயைதவிட இளம் பருவத் தின் தோற்றத்தை அது கொண்டிருந்தது.
“இதுதானா?” எனக் கேட்பதைப்போல் அந்த நடுத்தர வயதுடைய நபர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"இவர் இறந்து விட்டாரா?” எனக் கேட் ઉ_66ો.
”இருக்கலாம். ஆஸ்பத்திரியில் வைக் கப்பட்டிருந்த சடலங்களில் இருந்து எடுக் கப்பட்ட அடையாள அட்டைகள்தான் இவை. ஒரு சில கரையோரத்தில் இருந் தவையாம்'.
நான் அதிலிருந்து விலாசத்தையும விபரங் களையும் குறித்துக் கொண்டேன்.
“இதில் போட்டோ கொப்பி ஒன்று எடுக்க முடியுமா?’ என்றேன்.
‘எங்களது இயந்திரம் பழுதடைந்து விட்டது” என்றார் அவர்.
"பரவாயில்லை. நான் பிறகு வருகி றேன்.” அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்தேன்.
"உறவு தொடர்பை உறுதிப்படுத்த முடியு மென்றால் நீங்கள் இதை எடுத்துச் செல்ல முடியும். நட்டஈடு பெறுவதற்கு இது தேவைப் படும்.’ என்றார் அந்த நடுத்தர வயதைக் கொண்ட நபர்
நான் அவருக்கு நன்றி கூறிவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்.
மல்லிகை மே 2008 ஜ் 41

Page 23
வாகனத்தின் கதவை பாதி திறந்து வைத்
தவாறு சாரதி ஆழ்ந்த நித்திரையில் இருந்
தான். நான் அவனை எழுப்பினேன்.
"போவோம்”
"எங்கே?. கொழும்புக்கா?”
'இல்லை. இல்லை. நான் ஒரு
கிராமசேவையாளரை சந்திக்க வேண்டும”.
* * -ီ
அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டி ருந்த விலாசத்திற்குச் சென்ற எமக்கு, முழுமையாக அடித்துச் செல்லப்பட்டு, பாழடைந்த நிலையில் இருந்த கடலோரக் கிராமம் ஒன்றையே காணக் கிடைத்தது. உடைந்து கிடந்த பாலமொன்றின் மீது பெரிய பூக்கள் கொண்டதான காற்சட்டை யும் பனியனும் அணிந்திருந்த இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனிடம் சென்று “இங்கே கிராமசேவையாளர் எங்கே இருக்கிறார்?’ எனக் கேட்டேன்.
“அகதி முகாமில் சென்று பாருங்கள்” என்றான்.
“அது எங்கே இருக்கிறது?’ அந்த இளைஞன் எங்களுக்கு வழிகாட்டினான். அதன் பின்னர் நட்பு ரீதியிலான சிரிப் பொன்றை உதிர்த்துவிட்டு எங்கள் பின்னால் வாகனத்துக்கு அருகில் வந்தான்.
'நீங்கள் உதவி என்றான்.
வழங்குபவர்களா?”
"இல்லை. இல்லை.” என்று கூறிய போதிலும் அவன் அதை நம்பக் கூடியதாக இருக்கவில்லை.
"அதோ. அந்த இடத்தில் தான் தங்களது வீடு இருந்தது” என்று காட்டி னான். "முழுக் குடும்பமும் இல்லாமற் போய் விட்டது. எஞ்சிய ஒரே ஜீவன் நான மட்டுமே” என்றான் அந்த இளைஞன்.
அவன் கைநீட்டிக் காட்டிய இடத்தில் சிறிய சீமெந்து தரை மாத்திரமே காணப் - ULU- ghl.
நான் அந்த இளைஞனுக்கு நூறு ரூபாவை" கொடுத்தேன். அதனால் அவன் திருப்திய டையவில்லை. என்ற போதிலும் வாகன த்தை அந்த இடத்திலேயே திருப்பிக கொண்டு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.
ஏற்பட்டிருக்கின்ற அழிவுகளைக் கண் ணுற்றதாலோ என்னவோ சாரதியின் முகத் திலிருந்த பாழடைந்தத் தன்மை மேலும் அதிகரித்திருப்பது போல் தோன்றிற்று. அவன் எதுவுமே பேசாமல் இருக்கிறான். வெள்ளை நிற கூடாரங்கள் சில தூரத்தே தெரிகின்றன. என்றாலும் மக்கள் எவரும் இல்லாதைப் போல் பாழடைந்த நிலையே தென்படுகிறது.
"அங்கே நிறுத்துங்கள்” தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தென்னை ஓலையால் ஆன ஒரு கடையில் இருந்தவர் சைக்கிளின் பின்பகுதியில் கட் டப்பட்டிருந்த பலகைப் பெட்டி ஒன்றில் எதையோ வைத்துக் கொண்டிருந்தார். சைக்களின் முன்பக்கத்தில் தொங்கவிடப் பட்டிருந்த பேயாவ பெக்கெற்றுக்களை எடுத்து அந்தப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டி ருந்தார். வாகனத்தில் இருந்து இறங்கிச செல் லும் என்னை அவர் கேள்விக் குறியுடன் நோக்கினார்.
”கிரம சேவையாளர் இங்கே இருந் தாரா?”
”அவர் பாடசாலை பக்கமாகச் சென்
'இது அகதிகள் (p5Tub gi(860?"
ஆமாம், ஆனால் இன்று இங்கிருந்தோர் எல்லோரும் பாடசாலையில் தங்கச் சென்று விட்டனர். மழை பெய்யும் போது கூடாரங்
மல்லிகை மே 2008 & 42

களுக்குள் நீர் நிரம்பி விடும். இது சுனா மியை விட மோசமாக இருக்கிறது’
பாடசாலைக்குச் செல்லும் வழியையும் கேட்டறிந்துக் கொண்டு நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
கடல் பக்கமாக செல்லுகின்ற சிறிய கால்வாயொன்றின் ஒரமாக அமைந்திருந்த பாதையில் நாங்கள் பயணித்துக் கொண் டிருந்தோம். அந்தப் பகுதிக்கு சுனாமி ஒழுங் கான முறையில் வந்திருக்கவிலலை போல் தெரிந்தது. பாதையின் ஒரு பக்கத்தில் பழைய மதிலொன்று காணப்பட்டது.
சுமார் ஒரு மைல் தூரம் நடந்திருபபோம். சிறிய மேட்டுப் பகுதியில் அமைந்திருந்த பாடசாலை தெரிந்தது.
பெண்கள் சிலர் ஒன்றுகூடி முற்றத்தின் ஓர் ஒரத்தில் பெரிய பாத்திரமொன்று வைக் கப்பட்டிருந்த அடுப்பிற்கு தீ மூட்டிக் கொண் டிருந்தனர். சிறுவர்கள் பலத்த சத்தங்களு டன் ஒடித் திரிகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
முற்றத்தின் ஓர் ஒரத்தில் அமர்ந்திருந்த வயோதிபர் ஒருவர் கிராமசேவையாளர் இருந்த இடத்தை எனக்குக் காட்டினார்.
பாடசாலை அதிபருக்குரிய அறையை கிராம சேவையாளர் இப்போது கைப்பற்றிக கொண் டிருந்தார். சிறியதொரு மணி இன்னமும் அந்த மேசையின் மீது இருந்தது.
என்னைக் கண்டதும் கிராம சேவையா ளர் பெரிய சிரிப்பொன்றை வெளிக்காட்டி னார். என்னை அவர் ஏதோ அரசசார்பற்ற நிறுவனமொன்றின் அதிகாரியாக நினைத் திருக்கக் கூடும். இந்த நாட்களில் வாகனங் களில் அகதிகள் முகாம்களைப் பார்வை யிட வருபவர்களில் அநேகமானவர்கள் ஏதோ ஒரு வகையில் உதவிகளை வழங்கு மி ( 3 ) ğ UT (B3b Gib t. 6oi தொடர்புடையவர்களாகவே இருக்கின்றனர்.
கிராமசேவையாளர் முன்பாகப் போடப் பட்டிருந்த கதிரையில் அமர்ந்த நான் வந்த விடயத்தைக் கூறினேன். அவர் தனது கண் களைக் குறுக்கிக் கொண்டு என்னைப் į Tif jibgb Ti.
“நீங்கள் கூறும் நபர் எனது பிரிவில் தான் இருந்தார். நீங்கள் அவருக்கு என்ன உறவு?’. என்றார்.
உண்மையை சொல்லப் போனால் நான் அவரைச் சந்தித்ததே இல்லை. என்றா லும் அவரது தங்கை முறையிலான ஒரு பெண் எங்களது வீட்டில் தங்கி இருந்தார். ரேடியோ மூலம்தான் இந்த அடையாள அட்டை பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண் டேன். அதுதான் வந்து பார்க்கலாம் என்றெ ண்ணி இங்கே வந்தேன்.”
கிராம சேவையாளர் இன்னமும் என் னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரு க்கு மேலும் தெளிவுபடுத்த வேண்டும போல் தோன்றியது.
”அந்தப் பெண் மிகவும் அன்பாக ଗtତ013) தாயை கவனித்துக் கொண்டாள். அந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாளோ தெரி யாது. இந்த அடையாள அட்டையில பெயர் குறிப்பிடப்பட்டிருப்பவரைப் பற்றி அவள் முன்பெல்லாம் கூறுவாள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதுதான். ஏதாவது தகவல் அறிந்து கொள்ளலாம் என்று வந்தேன்.”
"நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? கிராமசேவையாளரின் அக்கறை தெளிவா கத் தெரிந்தது. என்றாலும் எனது பதிலில் அவர் சங்கடப்படுவதும் புரிந்தது.
'விழிப் புலனற்றோர் சேவைகள் சபையில்’
அப்படியா" கிராமசேவையாளர் பழக்க தோஷம் காரணமாக தனது கைக் கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார்.
மல்லிகை மே 2008 ஜ் 43

Page 24
"நீங்கள் சொல்லுகின்ற நபர் எப்படிப் பட்டவராக இருட்யார்?’ என்றேன். நான எனது தேவை கருதி குறுகிய வழிமுறையைக் கடைப்பிடித்தேன்.
”அவர் இங்கு பிறந்திருந்தாலும் அதிக மாக கொழும்பில்தான் இருந்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாகத்தான் மீண்டும் இந்தப் பகுதியில் வசிப்பதற்காக வந்தார். யாருக்கும் பிரச்சினையில்லாத மனிதர்”. என்றார் அவர்.
"தொழில் ஏதும் செய்தாரா?”
"ஆங்கில ரியூசன் கொடுத்தார். அதைத் தான் தொழிலாக செய்தார்.”
'மனைவி. பிள்ளைகள்?.”
'மனைவி பற்றி எனக்குத் தெரியாது ஆனால் ஒரு பிள்ளை இருந்தது'
"அவரும் இறந்துவிட்டாரா?” என்றேன்.
”இல்லை! பிள்ளை தண்ணிரில் அடித் துக் கொண்டுப் போய் தென்னை மர மொன்றில் சிக்கியிருந்தபோது காப்பாற் றப்பட்டார்.” என்றார் அவர்.
”அந்த பிள்ளை இப்போது எங்கே?" "இங்குதான் இருக்கிறது”
"ஆமாம் சிறுவர் இல்லமொன்றுக்கு அனுப்பும் வரை.” உடனே அந்தப் பிள் ளையை காண வேண்டும் என்ற ஆசை மனதை குடைந்தாலும் நான் மேலும் சில நிமிடங்கள் கிராமசேவையாளருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
எனது பெயரைக் கொண்ட அந்த நபர் மிகவும் அமைதியான போக்கைக் கொண்டவர் என்ற போதிலும் எல்லோருட னும் அன்பாகப் பழகியுள்ளார். வறிய பிள்ளைகளுக்கு இலவசமாக ஆங்கிலப் பாடம் கற்பித்துக் கொடுத்து வந்துள்ள
அவர் கொழும்பில் ஒரு வர்த்தக நிலை யத்தில் கணக்கியல் தொடர்பான எழுது வினைஞராகவும் பணியாற்றியுள்ளார். அவரது பெற்றோர் ஊரில் நோய்வாய்ப்பட்டு இறந் துள்ளனர்.
"நீங்கள் சொன்னதைப் போல் அவ ருக்கு தங்கை ஒருவர் இருந்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை' என்றார் கிராம சேவையாளர்.
'சிலவேளை உறவுக்காரரின் மகளா கவோ அல்லது அப்படி ஏதும் இருந்திருக் 56)Tib'.
"இருக்கலாம்” அதன் பின்னர் கிராம சேவையாளர் எனது பெயரைக் கொண்ட நபர் பற்றி மேலும் தகவல்களைத் தந்து. கொண்டிருந்தார்.
அந்நபர் செல்வந்தராக இல்லாத போதி லும் பரோபகாரியாக வாழந்தவர். பொது பணிகள் என்று வந்துவிடடால் தன்னால் இயன்ற வகையில் உதவிகளை செய்து வந்துள்ளார். அவர் செய்த ஒரே ஒரு தவறு மாலைவேளைகளில் கொஞ்சம் மது அருந்துவதாகும் அதுவும் தனிமையில், இரக சியமாக! காலை வேளையிலும் மாலை வேளையிலும் ஆங்கில வகுப்புகளை நடாத்தும் அவர் சூரியன் மறைய ஆரம்பிக் கும் போது தனது பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார். அதன் பின்னர் தனது பிள்ளையுடன் பேசியவாறே கடற்கரைக்குச் செல்லும் அவர் சூரியன் மறைவதை பார்த்துக் கொண்டிருப்பார்.
கிராமசேவையாளர் கூறிய வகையில் அந்த நபருக்கு இந்த உலகில் இருந்த ஒரேயொரு நிம்மதியும் ஒரேயொரு உறவும் தனது பிள்ளையாகும் என்றே எனக்கு எண் ணத் தோன்றியது. இப்போது அவர் தனது அன்புக்கு பாத்திரமான பிள்ளையை தனித்து விட்டு மீளத் திரும்பாத பயண
மல்லிகை மே 2008 奉 44

த்தை மேற்கொண்டு விட்டார். அவரது மறைவு குறித்து துயரப்படுவதற்கும் ஊர் மக்களில் பலர் இப்போது உயிருடன் இல்லை. கிராம சேவையாளர் அந்நபரை நன்கறிவார்.
“நல்ல மனிதர்." எனது பெயரை முதன் மைட்படுத்தி அவர் பலமுறை அவ்வாறு கூறி னார். ஆனால் என்னைப்பற்றி அல்ல. எனது பெயரில் வாழ்ந்த இந்த மற்றைய நபரைப் பற்றிதான் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவர் என்னைவிட நல்லதும் பயன்மிக்க துமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளவர் என்று. எனது அடி மனம் குற்றம் கூறுகிறது. வயது போகும் வரை பிரம்மச்சாரியாக செழிப்பற்றதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனது காலம் அதிகமாக அலு வலகத்தின் ஓர் மூலையில் உப்பு சப்பில் லாமல் கழிந்து கொண்டிருக்கிறது. பெருமை யுடன் கூறத்தக்க எதுவுமே எனது ஞாபகக் களஞ்சியத்தினுள் எஞ்சி இருக்கின்றனவா?
y
நாங்கள் பாடசாலைக் கட்டிடங்கள் இருந்த பக்கமாக நடக்க ஆரம்பித்தோம்.
"அதோ. அந்தப் பிள்ளைதான்’. பாட சாலைக் கட்டிடத்தின் ஓரத்தில் மா மரத் தின் கீழ் சடை பிடித்த தலை மயிர்களுடன், பெரிய விழிகளுடன் அந்த சிறுவன் அமர்ந் திருந்தான். அவனது வயது ஐந்துக்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும். அந்த சிறுவனைப் பார்த்தவாறே முகாமில் இருந்த ஒரு சிலருடன் பேசிக் கொண்டிருந்த சாரதி நான் வருவதைக் கண்டதும் வேறொரு பக்கமாகச் சென்று விட்டான். கிராம சேவையாளர் என்னைப் பார்த்துக்கொண்டே சிறுவனை அழைத்தார்.
'இவர் பிள்ளையின் தகப் பனின் நண்பர்’. சிறுவன் அதை நம்பமுடியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். எனினும் இருந்த இடத்திலிருந்து எழுந்
தான். அவனது அளவைவிட பெரிய சட்டை யும். காற்சட்டையும் உடுத்தி இருந்தான்.
"அப்பா எனக்கு ரொம்ப உதவி செய்திருக்கிறார். நாங்கள் ஒரே இடத்தில்
வேலை செய்தோம். பிள்ளைக்கு என்ன
வேண்டும்?. வேண்டியதைக் கேளுங்கள். நான் வாங்கி அனுப்புகிறேன்". என்றேன்.
அவன் வெளிறிய கண்களுடன் பார்த் துக் கொண்டே இருந்தான். தனக்கு தனது அன்புத் தந்தையைத் தவிர வேறு எதிலுமே எவ்விதப் பயனும் கிடையாது' என்று கூறு வதைப் போலிருந்தது அவனது அந்தப் பார்வை. அவனக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டுமாயின் அவனுடன் பேசிப் பல னில்லை என்றும் அது குறித்து கிராம சேவையாளரிடமே பேச வேண்டும் என்றும் எனக்குத் தோன்றியது மகனே உனது தந்தை யின் பெயரும் எனது பெயரும் ஒன்றுதான எனக் கூற முடியுமானால் எவ்வளவு நல்ல தாக இருக்கும் என எனக்குள் எண்ணின்ேன். என்றாலும் அதற்கான சந்தர்ப்பம் இது வல்ல. சுனாமி சிக்கல்கள் தீர்ந்ததன் பின் னர் பிள்ளை மீண்டும் பாடசாலை செல்லக் கூடும். அப்போது கிராமசேவையாளர் மூல மாக பிள்ளையைக் கண்டு பிடித்துக் கொள்ள முடியும் பிள்ளைக்கு ஏதேனும செய்ய வேண்டும் என்றால் அந்த நேரத்தில்தான் செய்ய வேண்டும்.
நாங்கள் விடைபெற்று அங்கிருந்து திரும்ப ஆயத்தமானபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. ஓரளவு இடைவெளி விட்டு பிள்ளை எங்களைப் பின் தொடர் ந்தான். நான் வாகனத்தில் ஏறுவதற்கு முன்பாக மெல்லிய குரலில் பேசினேன்.
"மாமா. எனது தந்தையின் புகைப்
படமேதும் உங்களிடம் இருக்கிறதா?”
எனது தொண்டையில் ஏதோ அடை த்துக் கொண்டது போலிருந்தது. ஏதாவது
மல்லிகை மே 2008 ஜ் 45

Page 25
பதில் கூறியே ஆக வேண்டும். உடனே என க்கு அந்த அறிவுப்புப் பலகையில் இருந்த அடையாள அட்டை ஞாபகத்திற்கு வந்தது. ஏதேனும் செய்ய முடியும்.
”ஆமாம். அடுத்தத் தடவை வரும்போது நானதைக் கொண்டு வந்து தருகிறேன்’ பிள்ளை வாயை மூடியபடியே மெதுவாகச் சிரித்தான். அது எனது மனதை நிம்மதிப்படு த்தியது. வாகனம் புறப்படும்போது பிள்ளை க்கும் கேட்கக் கூடியதாக நான் கிராம சேவையாளரைப் பார்த்துக் கூறினேன்.
"நான் விரைவில் மீண்டும் வருவேன்’ பின்னர் பிள்ளையைப் பார்த்து ஜன்னல் ஊடாக கையைக் காட்டினேன்.
அவனது கண்களில் இருந்து நீர்த்துளி யென்று வெளிப்பட்டிருந்தது. அது உண்மை யில் அவனது தந்தை அவனை விட்டுப் போவதை உணர்த்தியது போல் இருந்தது. அங்கிருந்து திரும்பும் போது நான் வரும் போது இருந்ததைவிட மனம் குழம்பிப் போயிருந்தது. உலகின் பெரும்பாலான வர்களைப் போல் நானும் சுனாமியை சபித் தேன். என்றாலும் தொடர்ந்து என்னால இவ் வாறு செய்ய முடியுமா? எனக்கு இப்போது ஐம்பது வயதையும் தாண்டிவிட்டது. இன் னும் நான் திருமணஞ் செய்து கொள்ள வில்லை. எனது பெயரைக் கொண்டே வாழ் ந்த, எனினும் என்னைவிட எவ்வளவோ நல்ல மனிதர் என உணரக் கூடிய இனந் தெரியாத நபர் அவரது ஒரேயொரு மகனை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அகாலத்தில் இறந்து போயுள்ளார். உண்மையிலேயே இது தனது தவறினால், இந்த உலகில் தனித்து நிற்கின்ற வயதான ஒரு நபருக்கு ஈவு இரக்கமற்ற சுனாமியினால் வழங் கப் பட்டிருக்கும் அபூர்வமானதொரு பரிசல்லவா?
* ܬܹܐ ့ီး
இந்தக் கதையை இத்துடன் நிறைவு செய்து கொள்ள முடியும். எனினும் வாழ்க்கை என்கிற அபூர்வமானதும் ஆச்ச
ரியமானதுமான இந்த முடிவுறா பயணம்
அதற்கு இடமளிக்கவில்லை.
இன்னும் சற்று நேரம் நீங்கள் என்னுடன்
தங்கி இருக்க வேண்டியுள்ளது.
நாங்கள் மொறட்டுவ பகுதியை அடை
'யும் போது இருள் சூழ்ந்து விட்டிருந்தது.
மத்தியானம் ஒழுங்காக எதையுமே சாப்பிடா
ததால் எனக்கு கடுமையாக பசி எடுத்தது.
பாலத்தின் அருகில் இருந்த எனக்கு ஓரளவு பரிச்சயமான ஹோட்டலுக்குச்
செல்லும்படி நான் சாரதியிடம் கூறினேன்.
இரவு உணவுக்கு ஒடர் செய்த நான் உணவு வரும் வரையில் குடிப்போம் என நினைத்து அரை போத்தல் பிரண்டி வரவழைத்தேன்.
‘நானும் கொஞ்சம் எடுத்துக் கொள் கிறேன். உடம்பெல்லாம் ஒரே அலுப்பு. இன்னும் சற்று தூரம் தானே”. என்றவாறே சாரதி நான் அழைக்காமலேயே ஊற்றிக் கொள்ள ஆரம்பித்தான்.
பயணத்தின் போது மெளனமாக இருந்து வந்த சாரதி சற்று நேரத்தில் என்னை உன் னிப்பாகப் பார்த்தவாறே பேச ஆரம்பித்தான்.
"சேர். அந்த மனிதரை உங்களுக்கெப் LJLạ Gibf quib?"
“கொஞ்சம் தெரியும்'
’அப்படியில்லை சேர். எனக்குச் சரியாக விளங்கும்படி சொல்லுங்கள்! எனக்கும் அவரைப் பற்றி கொஞ்சம் தெரியும்'.
"உண்மையாக?. அது எப்படி?”
"சேர் முதலில் உங்களுக்கு அவரை எப்படி தெரியும் என்று சொல்லுங்கள்".
மல்லிகை மே 2008 黎 46

சற்று நேரம் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நான் மேலும் உண்மையை வெளிப்படுத்தக் கூடாது எனத் தீர்மானி த்துக் கொண்டேன்.
”அவர் எனது நண்பரொருவரின் சகோ தரர், அம்பாந்தோட்டையில் இறந்தவர்களது பெயர்ப்பட்டியலை ரேடியோவில் கூறும் போது இவரது பெயரும் கூறப்பட்டிருந்தது. எனது நண்பர் இப்போது வெளிநாடு சென்று ள்ளார். அவர்தான் இது பற்றி விசாரித்துப் பார்க்குமாறு அறிவித்திருந்தார்.”
சாரதி எனது கதையை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
“சேர்! எனது கதையை கேட்டால் நீங் கள் ஆச்சரியப்படுவீர்கள சாரதி வித்தியாச மாக சிரித்தான, பின்னர் அது பற்றி சிந்திப் பதற்கு எனக்கு சிறிது நேரம் அவகாசம் விட்டவாறே பாத்திரத்தை அருகில் இழுத்து அதிலிருந்து பெரிய இறால் களைப் பொறுக்கி சாப்பிட ஆரம்பித்தான்.
“என்ன கதை அது?”
”இந்த இறந்த மனிதனின் மனைவி யைத்தான் நான் இப்போது திருமணஞ் செய்து கொண்டுள்ளேன்’
“என்ன?’.
“ஆமTம் சேர்!’ உண்மையிலேயே அது ஒர் ஆச்சரியமான கதைதான்!
இறந்த நபரின் மனைவி சிலகாலத் திற்கு முன்னர் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தில் தற் காலிகமாக எழுதுவினைஞராகப் பணி யாற்றியுள்ளார். இந்த சாரதி ஏதோ ஒரு கருமமாக அங்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட அறிமுகம் அப்படியே வளர்ந்து இறுதியில் அவள் சாரதியின் மனைவியாகி விட்டாள்.
“எனது மனைவி மிகவும் துரதிஷ்ட வசமானவள் சேர். என்னுடன் வந்த பிறகு தொழிலையும் இழந்துவிட்டாள். அது போதாதென்று தொடர்ந்து நோய்வாய்ப்பட ஆரம்பித்தாள். அந்த நபரும் கொழும்பை விட்டு உ3ருக்குப் போய் விட்டதாக அறிந்தேன்'
”அந்த நபர் உங்களுக்கு எதிராக எது 6Juib (oa 'juj 66ù63)6NDU JIT?"
“இல்லை. அந்த மனிதன் ஒரு நோய்ஞ் சான். மனைவி செய்த துரோகத்தைப் பொறுத்துக் கொண்டார்”.
”அவர் உங்களை சந்தித்தது இல் ?דu Jט6(60
“இல்லை”
"fairs)att'?"
‘சிறு வயதில் கண்டிருக்கிறேன். இன்றைக்கு அவனை அடையாளம் காண் பதே சிரமமாக இருந்தது”
"அப்படி என்றால் அகதி முகாமில இருப் பது உங்களது மனைவியின் பிள்ளை. ஏன் அந்தப் பிள்ளையை உங்களுடன அழை த்துக் கொள்ள விருப்பமில்லையா? இப் போது அவனுக்கு தந்தையும் கிடையாது என்பதால் அம்மா உடன் இருந்தால் அந்தப் பிள்ளைக்கு எவ்வளவு நல்லது”
“எனக்கும் இப்போது இரண்டு குழந்தை கள் உண்டு சேர், நானும் கஷ்டத்துடன் தான் வாழ்ந்து வருகிறேன். இன்று நடந்த எதையுமே நான் வீட்டில் போய் செல்ல மாட்டேன். இவை எல்லாம் கடந்த கால விஷ யங்கள். அவற்றை ஏன் கிளறுவானேன்.”
சாரதியை இத்துடன் கைக்கழுவி விட்டு
உடனே இங்கிருந்து சென்றுவிட வேண்டு மென நான் தீர்மானித்துக் கொண்டேன்.
பல்லிகை மே 2008 & 47

Page 26
போத்தலில் இருந்த இறுதி மதுபான த்தையும் கிண்ணத்தில் ஊற்றிக் கொண்ட சாரதி தனது பர்ஸில் இருந்து அடையாள அட்டையை எடுத்து என்னிடம் காண்பித் தான்.
"இந்த பிரச்சினைகள் எல்லாமே இந்த அடையாள அட்டையால்தான் ஏற்பட்டன” என்றான்.
நான் ஆச்சரியத்துடன் விழிகளை அகலத் திறந்தவாறு பார்த்துக் கொண்டி ருந்தேன்.
“முதன் முதலில் எனது மனைவியை நான் ஆர்.எம்.டீ அலுவலகத்தில் சந்தித்த போது எனது முகத்தைக் கூட பார்க்கா மலே அடையாள அட்டையை அவள் கேட்டாள். ஏதேன. ஒரு தேவைக்கு. எனது அடையாள அட்டையைப் பார்த்த
வுடன் அவள் எனது முகத்தைப் பார்த்து வித்தியாசமாக சிரித்தாள். அந்த சிரிப்பு தான் சேர் எனக்கு இடி விழுந்த சிரிப்பாகி விட்டது”
சாரதி வாயைக் கோணலாக்கி ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் மெளன
மானான்.
"எனக்குப் புரியவில்லை. ஏன் அவள் வித்தியாசமாக சிரித்தாள்?”
"சேர், அவளது கணவரின் பெயரும் எனது பெயரும் ஒன்று”. அவன் அவனது அடையாள அட்டையை என் முன்
வைத்தான்.
ஒரு மணி நேரம் கழித்து எனது வீட்டுக்கருகில் இறங்கிக் கொண்ட நான் அவனிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொண்டேன்.
ரேலியாவில் காலமானார்.
ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிக்கின்றோம்
Frழத்தில் சகல தமிழ் எழுத்தாளர்களினாலும் மதித்து அன்பு செலுத்தப் பெற்ற வைத்தியக் கலாநிதி டாக்டர் எம். வாமதேவன் அவர்களினது பாரியாரும், இங்கு பலராலும் பொது வாழ்வில் نسل
தெரிந்திருக்கக் கூடிய திருமதி ஜயந்தி விநோதன் அவர்களினது தாயாருமாகிய திருமதி தனலட்சுமி வாமதேவன் சமீபத்தில் அவுஸ்தி
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் அனைவரின தும் ஆழ்ந்த பெரும் சோகத்தில் மல்லிகையும் பங்கு கொள்ளுகின்றது.
- ஆசிரியர்
மல்லிகை மே 2008 & 48
 

‘என்னுடைய விமர்சனத்திற்கு யாரும்
குப்பியது இல்லை’
- ஜெயகாந்தன்
நீண்ட வெகு நாளைய "சரஸ்வதிகாலத்து நண்பர் ஜெயகாந்தனுக்கு இன்று பவளவிழா ஆண்டு. அந்த மகத்தான எழுத்தாளனை மல்லிகை மனநிறைவுடன் வாழ்த்தி மகிழ்கின்றது.
- ஆசிரியர
Monday - 21 April 2008
1ெழுத்தாளர் ஜெயகாந்தனின் 75-வது ஆண்டு பிறந்தநாள் மலர் வெளி பீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் 75-வது பிறந்தநாள் மலர வெளி யீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தொழிலதிபர் நல்லிகுப்புச1மீ செட்டியார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற செயலாளர் இளையபாரதி. நடிகர் பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விழா மலரைப் பெற்றுக் கொண்டனர்.
^م
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன். பத்திரிகையா ளர் நக்கீரன்கோபால் சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசும்போது, எழுத் தாளர் ஜெயகாந்தன் மக்களுடன் நெருங்கி பழகக்கூடியவர். வாழும் போதே தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே எழுத்தாளர் ஜெயகாந்தன். எந்த ஒரு கருத்தையும் துணிவுடன் கூறக் கூடியவர். அவருடைய எழுத்துக்கள் சாகாவரம் பெற்றவை' என்றார்.
நிகழ்ச்சியில். எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரூ.75 ஆயிரம் பணமுடிப்பு வழங்கப்பட்டது. விழா நிறைவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஏற்புரை வழங்கினார்.
அப்போது அவர், நான் யாரையும் புகழ்ந்தது இல்லை. என்னுடைய விமர்சனத்திற்கும் யாரும் தப்பியது இல்லை. அறியாமையால் இகழ்ந்து இருக்கலாம். ஆனால் நீங்கள அறிந்து கொண்டதால் புகழ்ந்து இருக்கிறீர்கள். விமர்சனம் என்பதே அன்பினால் வரக்கூடியதுதானே. படைப்பாளிகளுக்கு விமர்சிக்கும் உரிமை எப்போதுமே உண்டு என்றார்.
565. http://www.adhikaalai.com/
மல்லிகை மே 2008 ஜ் 49

Page 27
தகவிதகவம் Uரிசலிப்பு விழn 7OO7
தமிழ்க் கதைஞர் வட்டம் தனது பரிசளிப்பு விழாவைக் கடந்த ஏப்ரல் மாதம் 26ந் திகதி மிகச் சிறப்பான முறையிலும், விரிவான வகையிலும் வெள்ளவத்தைத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் இனிதே நடத்தி முடித்தது.
சரியாக மாலை 5 மணிக்கு ஆரம்பித்த இவ்விழா அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததைப் போல, மாலை 7 மணிக்கு நிறைவெய்தியது பலராலும் பாராட்டப்பட்டது.
மாத்தளை கார்த்திகேசு தலைமை தாங்கி இவ்விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்தார். வரவேற்புரையை தெ. மதுசூதனன் நிகழ்த்த, தமிழ் வாழ்த்தைச் செல்வன் த. யதுகுலன் பாடினார். முதன்மை விருந்தினராகப் பேராசிரியர் சபா. ஜெயராசா கலந்து கொண்டு விசேட சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து, சிறப்புரையைத் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்தினார்.
இறுதி நிகழ்ச்சியாகப் பரிசு பெற்ற படைப்பாளிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
2007 மூன்றாம் காலாண்டிற்கான பரிசு பெற்றவர்கள்: முதலாம் பரிசு திரு. க. தணிகாசலம் (பாமரன்) எழுதிய தடைகள் தாயகம் சஞ்சிகை, இரண்டாம் பரிசு செல்வி பிரமிளா செல்வராஜா எழுதிய கோடிப் பக்கத்தில் ஒரு பலாமரம் ஞானம் சஞ்சிகை. மூன்றாம் பரிசு திரு. தி. மயூரன் எழுதிய ‘வைகறை மேகங்கள் தினக்குரல் பத்திரிகை.
2007 நான்காம் காலாண்டுப் பரிசுகள்: முதலாம் பரிசு: திரு. தெ. நித்தியகீர்த்தி எழுதிய "போர்வைகள் மறைக்காத பார்வைகள்' ஞானம் சஞ்சிகை. இரண்டாம் பரிசு திரு. சு. முரீஸ்கந்தராஜா எழுதிய ‘பாடும் மீன் முதல் உறவு ஞானம் சஞ்சிகை. மூன்றாம் பரிசு: திரு. சிவனு மனோகரன் எழுதிய மட்டத்துக் கத்தி தினக்குரல் பத்திரிகை.
பரிசு பெற்ற எழுத்தாளர்களையும், நிகழ்ச்சியை ஒழுங்கமைப்புச் செய்து, வெற்றிகரமாக நடத்தி முடித்த தகவம் அமைப்பினரையும் வந்திருந்தோரெல்லாம் மனதாரப் பாராட்டி மகிழ்ந்தனர்.
மல்லிகை மே 2008 & 50

எழுத்து ாைவில் ஒரலாறு- 7
- செங்கையூெஇான் க. குணகிரne/
1940 - 1950 ஆகிய காலகட்டத்தில் ஈழத்தில் நாவல்கள் என்று கூறும் வகையில் இருபது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. அவற்றில், கிளாறிமிலிச் என்ற ருசிய நாவல் ஐவன் துர்க்கானோவ் என்பவரால் எழுதப்பட்டு, இலங்கையர்கோனால் தமிழாக் கப்பட்டதாகும். ஈழகேசரியில் தொடராக வெளிவந்தது. மல்லிகை என்ற வங்கநாடோடிக் கதையொன்று வில்லன் என்பவரர்ல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஐவன் துர்க்கா னோவ்வின் இன்னொரு நாவலான மாலைவேளையிலே என்பதை சி. வைத்திலிங்கம் என்பவரும், முதற் காதல் என்பதை இலங்கையர்கோனும் மொழிபெயர்த்துள்ளனர். முன்னது, ஈழகேசரியிலும் பின்னையது கலைமகள் வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. டொரதி எல் செயர் என்பவரால் எழுதப்பட்ட அலிபாபாவின் குகை என்ற நாவலை அ. செ. முருகானந்தனும், ஜேர்மனி மூலத்தில் தோம்சன் என்பவர் எழுதிய மனவிகாரம் என்ற நாவலை சோயாசலம் என்பவரும், பஞ்சாபி மூலத்தில், முல்க்ராஜ் ஆனந்த என்பவர் எழுதிய தீண்டாதான் என்ற நாவலை கே. கணேசும், ஜே. சி. எதிர்வீரசிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய தங்கப்பூச்சி என்ற நாவலை தேவன். யாழ்ப்பாணம் மணிபல்லவம் என்ற பெயரிலும் தமிழில் வெளியிட்டுள்ளனர். இவற்றில் தீண்டாதான் என்ற நாவல் காரைக்குடி புதுமைப் பதிப்ப கத்தினராலும், மணிபல்லவம் திருவனந்தபுரம் சுதர்சனம் வெளியீடாகவும் வெளிவந்தன. ஏனையவை ஈழகேசரியில் தொடராக வெளிவந்தவை.
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு ஆரம்பம் தமிழ் நாவல் இலக்கியத் தின் வீழ்ச்சிக் காலமாகும் என ஏற்கனவே பார்த்தோம். இது ஆரணிகுப்புசாமி முதலியா ரின் காலமாகும். புற்றீசல்கள் போல ஆயிரக்கணக்கான கதைப் புத்தகங்கள் நாவல் என்ற பெயரில் வெளிவந்தன. இந்த யுகத்தை ஆரம்பித்து வைத்த பெருமை ஆரணியாருக்கே சேரும், வாசகர்களின் மலின உணர்வுக்குத் தீனி போடும் நூல்களாக அவை அமைந்தன. கொலை, கொள்ளை, திருட்டுப் போன்ற குற்றச் செயல்கள் நாவல்களின் கருப்பொருளாக அமைந்து, துப்பறியும் கதைகளாகவும், தழுவல் நாவல்களாகவும், மொழி பெயர்ப்பு நாவல்க ளாகவும் மலிந்தன. இந்த வீழ்ச்சிக் காலத்தில் கதை உலகில் செங்கோலோச்சியவர்கள் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், ஜே. ஆர். ரங்கராஜ0 ஆகிய மூவராவார். இவர்களின் நூல்கள் அக்கால வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. கல்வி கற்ற மத்தியதர வகுப்பாருக்கு வாசிப்புப் பழக்கம் மிகுந்தேற்பட்ட நிலையில், இலகுவாகவும், எளிமையாகவும் தாமே படித்துணர்ந்து கொள்ளத்தக்கதும், இன்னொருவர் படித்துக் கருத்துச் சொல்லித் தெளிவுபடுத்த அவசியமற்றதுமான உரைநடையில் விபரிக்
மல்லிகை மே 2008 & 51

Page 28
கும் கதை நூல்களின் தேவை அதிகரித்த காலமாதலால், புற்றிசல்கள் போல நாவ லென்ற பெயரில் பலர் கதை நூல்களை எழுதி வெளியிட்ட காலமாக ஆரணியார் காலம் அமைந்தது. ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் அவ்வகையில் வெளிவந்தன. ஆனால், ஈழத்தில் வாசக தேவை மிகவும் பொறுப்போடு நோக்கப்பட்டுள்ளது. சிறந்த பிறமொழி நாவல்களைத் தமிழாக்கி வாச கர்களுக்கு வழங்கியுள்ளமையைக் காண லாம். இத்தேவையைத் தான் ஈழத்தில் மொழி பெயர்ப்பு நூல்கள் ஆற்றின. எனி னும், அவை நாவல்கள் என்ற பெரும் வரை யறைக்குள் இடம்பெறாது குறுநாவல்களாக அமைந்திருப்பதைக் காணலாம்.
பின்வரும் நாவல்கள் அல்லது தொடர் கதைகள் 1940- 1950 காலகட்டத்தில் ஈழத் தில் வெளிவந்தன.
1. சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு (1940) ஏச். நல்லையா 2. அன்னபூரணி (1942) க, சச்சிதானந்தன், ஈழகேசரிப் பத்திரிகைத் தொடர் 3. பாசம் (1947) க. தி. சம்பந்தன், ஈழகேசரிப் பத்திரிகைத் தொடர் 4. சாந்திமதி (1948) சாந்தா, ஈழகேசரிப் பத்திரிகைத் தொடர்கதை, சுன்னாகம் 5. சகடயோகம் (1949) கசின் (க, சிவகுரு நாதன்), நூலுருப் பெற்றது. 6. மலர்ப்பலி (1949) சொக்கன் (க, சொக்க லிங்கம்) ஈழகேசரித் தொடர் 7. குந்தளப்பிரேமா (1949) ரஜனி (கே. வி. எஸ். வாஸ்) நூலுருப் பெற்றது. 1951. வீர கேசரி வெளியீடு. கொழும்பு 8. நந்தினி (1949) ரஜனி, வீரகேசரித் தொடர்
(1949)
9. வாடியமலர்கள் தேவன் -
யாழ்ப்பாணம், சண்முகநாத புத்தகசாலை, யாழ்ப்பாணம் 10. மணியோசை (1950) கசின், ஈழகேசரித் தொடர் 11. புகையில் தெரிந்த முகம் (1950) அ. செ. முருகானந்தம், எரிமலைப்பதிப்பகம்,
திருகோணமலை.
அன்னபூரணி
தமிழ் நாவலாக்கத்தின் ஆரம்ப காலத் தில் ஆங்கில நாவல்களையும் தமிழக நாவல்களையும் படித்ததன் அருட்டுணர் வில் ஈழத்தில் நாவல்கள் எழுதப்படலாயின. அன்னபூரணி பண்டிதர் க. சச்சிதானந்தத் தினால் ஆக்கப்பட்டு, ஈழகேசரியில் தொட ராக வெளிவந்தது. அவர் ஆனந்தன் என்ற புனைப்பெயரில் 'தண்ணிர் தாகம் போன்ற நல்ல சிறுகதைகளையும், 'ஆனந்தத்தேன்' போன்ற கவிதைகளையும் ஆக்கியளித்த பேரறிஞர். அண்மையில் அமரரான அவர் எழுதிய ஆரம்ப நாவல் தான் "அன்னபூரணி ஆகும். ஈழத்துப் பின்னணியை வைத்து எழுதிய நாவல் என்ற சிறப்பு இதற்குள்ளது. குடும்ப உறவுகளையும், காதலையும் இது பேசுகின்றது. ஈழத்து மண்ணைக்கள மாகக் கொண்டு தமிழ்நாவல் எழுதும் மரபு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியி லிருந்தே தோற்றம் பெறுகின்றது என்ற நா. சுப்பிரமணியத்தின் கூற்றுப்படி, இவ்வகை யில் ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்டு நவீன நாவலாக "அன்னபூரணியைச் சச்சி தானந்தன் முதன் முதல் எழுதினார். ஈழ த்து மண்ணையும், தமிழ் மக்களது சமுதா யப் பிரச்சனைகளையும் பொருளாகக் கொண்டு ஏலவே, வீரசிங்கன் கதை', 'நொறுங்குண்ட இதயம்' என்பன அமைந்தாலும், சச்சிதா னந்தத்தின் ‘அன்னபூரணி அவ்வகையில்,
மல்லிகை மே 2008 & 52

கூடிய அக்கறையுடன் எழுதப்பட்டதொன்று எனலாம். 'அன்னபூரணியின் இறுதி அத்தி யாயத்தின் முடிவிலமைந்த பத்திராதிபரின் குறிப்பு, தமிழில் நாவல் இலக்கியத்துக் கான அவசியத்தையும் புதிய திருப்பத்தை யும் உணர்த்தின. பண்டிதத் தமிழும் பழமை யும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தின் புது மைக் கிளர்ச்சி ஏற்பட்டுச் சொற்ப காலம், ஆனால், இக்குறுகிய கால எல்லைக்குள் தன்னாலான புதுமைத் தொண்டு ஆற்றுவ தற்கு யாழ்ப்பாணம் கொஞ்சமும் பின்நிற்க வில்லை. வங்க நாவல்களைப் பின்பற்றிப் புதுமையிலறங்கிய 'அன்னபூரணியும் இதற் குப் பிரத்யட்ஷம்" என்று கூறும் இறுதிக் குறிப்பு, மரபு வழி இலக்கியச் சிந்தனை யிலிருந்து விலகிப் புதுமைய நாடும் புதிய தலைமுறையின் கருத்தோட்டத்தையே உணர்த்தி நிற்கின்றனவென்பது, சுப்பிர மணியத்தின் கருத்தாகும். அன்னபூரணி யோடு ஈழகேசரி நாவலிலக்கியத்துக்கான தளத்தை விரிவாக்கியது.
Irfiħ
'அன்னபூரணி எழுதி வெளிவந்த ஐந்தாண்டுகளின் பின்னர், ஈழகேசரியில் பாசம்' என்றொரு தொடர்கதையை முன் னோடிச் சிறுகதை எழுத்தாளர் சம்பந்தன் எழுதினார். இந்த நாவலும் இலங்கைப் பின் னணியில் எழுதப்பட்டது. கூடியவரை மக்க ளின் பேச்சுத் தவிர்க்கப்பட்டுள்ளது. முக் கோணக் காதல் கதையொன்றைக் கருவா கக் கொண்டு பாசம்’ ஆக்கப்பட்டுள்ளது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அக் காலகட்டத்தில், தமிழ்நாட்டில் பல புனைக் கதை ஆசிரியர்கள் எழுதினர். காண்டேக ரின் செல்வாக்கு அந்த நாவல்களில் செறிந் திருந்தது. அவ்வகையில் சம்பந்தரும் பாசத்
தினைப் படைத்தார். பாடசாலையொன்றி னைக் களமாகக் கொண்டது. நாராயணன் என்ற ஆசிரியர் மீது கல்லூரி மாணவியர் இருவர் வைக்கும் காதலுணர்வு ஏற்படுத் தும் உணர்ச்சிச் சிக்கல்களை இந்த நாவல் விபரிக்கின்றது. தன் காதலைத் தியாகம் செய்து, நாராயணன்- சாருகாசினியை இணைத்து வைக்கிறாள் சாரதா. பின்னர், ஒரு சந்தர்ப்பத்தில் நாராயணனின் இல்லத் திலேயே சாரதா வசிக்க நேருடுகின்றது. இதனால், நாராயணனுக்கும் அவளுக்குமி டையில் மீண்டும் காதல் அரும்புகிறது. அத 50TT6), குடும்பத்தில் பிரச்சனைகள் உருவா கின்றன. ஒரு கட்டத்தில் பிரச்சனைகளுக் குத் தீர்வாக சாரதா தன்னுயிரை இழக்கி றாள். இது தான் சம்பந்தரின் “பாசம் விபரி க்கும் கதை உள்ளடக்கம். ஆற்றல் வாய் ந்த புனைக்கதை ஆசிரியன் ஒருவனின் வெற்றி பெறாத நாவல் பாசமாகும். அக்கால கட்டத்தில் இது நல்ல வரவேற்பினைப் பெற்றதை மறக்க முடியாது.
இந்த வரிசையில் சாந்தா என்பவர் எழுதிய சாந்திமதியும்', சொக்கன் எழுதிய மலர்ப்பலியும் அமைகின்றன. இக்காலட்ட த்தில் கே. வி. எஸ். வாஸ் (ரஜனி) வீரகேசரி யில் குந்தளப்பிரேமா’, ‘நந்தினி என்ற இரண்டு வியப்புச் சுவை நிறைந்த நாவல் களை எழுதியுள்ளார் என அறியப்படுகின் றது. இவை வாசகர்களின் ஆவலைத் தூண் டும் விதத்தில் அமைந்துள்ளன. இவை நூலுருப் பெற்றும் வெளிவந்துள்ளன. இந்த நாவல்களுள் முன்னோடி எழுத்தாளர் "கசின் ஈழகேசரியின் பல தொடர்களை எழுதித் தள்ளியுள்ளார். அவற்றுள், 1949 இல் எழுதிய சகடயோகம் கவனத்திற் குரியதாகின்றது.
மல்லிகை மே 2008 ஜ் 53

Page 29
சகடயோகம்
கசின் ஈழகேசரிப்பண்ணையில் உரு வாகியவர். 1947 களிலிருந்து 1957 வரை ஈழகேசரியில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எழுதியுள்ளார். க. சிவ குருநாதன் இவருடைய இயற்பெயர். சாவ கச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட கசி னின் புனைக்கதைகளில் கருப் பொருளா கக் குடும்ப உறவுகளே முக்கியம் பெற்றன. அவருடைய கதைகளில் காமமும், காதலும் தூக்கலாக இருக்கும். புதிய உத்திகள் இவர் எழுத்தின் சிறப்புகளாகும். இனிமையா கவும், சிறப்பாகவும் கதை சொல்லக் கசினால் முடியும். ஈழகேசரியில் பதினொன்று வரையி லான தொடர்கதைகளைக் கசின் எழுதியுள் ளார். இவற்றுள் பல குறுநாவல்கள் சம கால சமூகக் குடும்ப ஊழல்களை நகைச் சுவையுடன் தொட்டுக் காட்டுக்கின்றன. ஆசி ரியரான இவர், தனது நாவல்களிலே ஆசிரி யப் பணியோடு தொடர்புடையவர்களையே பாத்திரங்களாகக் கொண்டுள்ளார். என பேராசிரியர் நா. சுப்பிரமணியம் கணிப்பிட்டு ៩fiនាrfi. "அவருடைய கதைகள் முறை தவ றிய காதலையோ, காமத்தையோ சித்தரிப் பனவாகவும், எங்கேயோ நடந்த உண்மைக் கதைகளை வாசிப்பதான எண்ணத்தை ஊட்டுவனவாகவும், அமைந்திருக்கின்றன. ஆசிரிய சமூகத்தின் நடமாடும் பாத்திரங்களே அதிகமாக அவரது கதைகளில் இடம் பெறு கின்றன. அவரது கதை சொல்லும் பாணி சிக்கலின்றி ஒழுங்காக அமைந்துள்ளாதால், சாதாரண வாசகரை அவராற் கவர முடிகின் றது என இரசிகமணி கனக செந்திநாதன் குறிப்பிட்டுள்ளார்.
கசினின் சகடயோகம் ஒரு காதல் கதையாகும். அத்தியாயங்களின் தொடக்
கத்தில் தமிழக சில எழுத்தாளர் போல, பொருத்தமான மேற்கோள் வாசகங்களை வைத்துள்ளார். சில மேற்கோள் வாசகங் கள் அந்த அத்தியாயத்தின் கருத்துக்குப் பொருத்தமற்றதாகவுள்ளன. கதை விபரண மும், சம்பவக் கோவையும் இளமைத் துடிப் போடு உள்ளடக்கத்துக்கு அமைவாக இருந் தாலும், காலத்துக்கு ஒவ்வாததாக இருக்கி ன்றது. சகடயோகத்தில் மூன்று காதல் ஜோடிகள் வருகின்றன. சதாசிவம்- சந்திரா, uமகாதேவன்- சாரதா, சண்முகம்- இரா ஜேஸ்வரி என மூன்று ஜோடிகள் 'சகட யோகத்தில் நடமாடுகின்றன. அவர்களின் காதல் கை கூடுவதிலுள்ள சிக்கல்களைக் கசின் இந்த நாவலில் சித்தரித்துள்ளார். வெறும் சம்பவங்களினால் நாவலை வளர் த்துவிடும் எண்ணம் ஆரம்பகால நாவலா சிரியர்களிடம் இருந்துள்ளது. அதற்குக் 'கசின் புறநடையல்லர். உள்ளடக்கத்தில் இந்த நாவல் அப்படியொன்றும் அற்புதப் படைப்பன்று. சரளமான உரைநடையில் கசினால் சகடயோகத்தை நடாத்திச் செல்ல முடிகின்றது. பாத்திரங்களின் வார் ப்பு இயல்பானதாக அமையாமையைக் காண முடிகின்றது. சில பாத்திரங்கள் வலி
ந்து புகுத்தியமையைக் காணமுடிகின்றது.
வாசகர்களின் உரையாடலிலும், கதாசிரிய ரின் கதைச் சொல்லிலும் ஒரே வகையான மொழியாடலைக் காணலாம். கதையை நடாத்திச் செல்லும் போது, ஆசிரியர் குறுக் கிட்டு உரை நிகழ்த்தி வருகின்றார். 19401950 காலகட்ட நாவலின் இயல்புகளைச் ‘சகடயோகம் கொண்டுள்ளது. இக்கால கட்டத்தில் 'கசின் ‘மணியோசை" என்றொரு தொடரும் எழுதியுள்ளார்.
1940- 1950 காலகட்டத்தில், புனைக் கதைகளின் கருப்பொருள் உயர்மட்டக் குடும்பங்கள் சார்ந்ததாகத் தான் இருந்துள் ளது. புனைக்கதைகள் அம்மட்டச் சமூகத்
மல்லிகை மே 2008 ஜ் 54

தின் வாசிப்பிற்குரியதாகக் கருதப்பட்டுள் ளது. அக்காலச் சமூகத்தில், எரியும் பிரச்ச னைகளாக விளங்கிய அடித்தளமட்ட மக்க ளின் துயர்கள் புனைக்கதைகளின் பொரு ளாகக் கொள்வதில் தயக்கம் இருந்துள்ளது. மண்வாசனை, தேசியம் பற்றிய சிந்தனை கள் படைப்பாளிகளிடையே ஆழ வேரூன்ற வில்லை. சமூகத்தில் சாதியக் கொடுமை கள், தீண்டாமை, ஆலயப் பிரவேசத்தடை, தேநீர்கடைப் பிரவேசம், பாடசாலைகளில் சாதிய ஏற்றத் தாழ்வுகள், வறுமை எனப் பல கொடுமைகள் நிலவியிருந்தன. சிறுகதை களில் இவ்வாறான அடக்கு முறைகள் கையாளப்பட்டுள்ளன. ஆனந்தனின் தண் னிர் தாகத்தில் ஒரு தாழ்ந்த சாதிப் பெண் ணுக்கும் ஒரு பிராமணனுக்குமிடையிலான மானுட நேயத்தையும், அ. செ. முருகானந் தன் மனிதமாடு என்ற சிறுகதையில் றிக்சா இழுத்துப் பிழைக்கும் ஒருவனின் இயலா மையையும் சித்தரித்துள்ளனர். ஆனால், இக்காலகட்டத்தில் வெளிவந்த 11 தொடர் களில் அல்லது நாவல்களில் மேற்குறித்த சங்கதிகள் சமூகச் செய்திகளாக அமை யாமை அவதானிக்கப்பட்டது.
வாடியமலர்கள்
இத்தசாப்த காலத்தில் தேவன். யாழ்ப் பாணம் 1944 இல் வாடியமலர்கள்' என்ற சுயநாவலையும், அதனை அடுத்து மணி பல்லவம்' என்ற மொழி பெயர்ப்பு நாவலை யும் தந்துள்ளார். ஈழத்து இலக்கிய உலகில் தேவன்- யாழ்ப்பாணம் சிறப்பாகக் குறிப் பிடத்தக்கவர். சிறுகதை எழுத்தாளர், நாவ
லாசிரியர், நாடக ஆசிரியர், விஞ்ஞானக் கட்டு .
ரையாளர், மொழி பெயர்ப்பாளர் எனப் பல்பரிமாணங்களைக் கொண்டவர். அவர் தன் கன்னிப் படைப்பாக் 'வாடியமலர்கள் என்ற நாவலை ஆக்கினார். 'வாடியமலர் கள்', 'மணிபல்லவம்' ஆகிய இரு நாவல் களையும், சுதர்சனம் என்ற தமிழ்நாட்டுப் பதிப்பகம் ஒன்று அச்சிட்டு வெளியிட்டது.
'வாடியமலர்கள்' என்ற இந்நாவலில் பேச்சுத் தமிழை தேவன்- யாழ்ப்பாணம் பயன்படுத்தவில்லை. சுமாரான நாவல்.
புகையில் தெரிந்த முகம்
முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவ ரான அ. செ. முருகானந்தன் எழுதிய குறு நாவல் ‘புகையில் தெரிந்த முகம் என்பதா கும். ஈழத்தமிழகத்தில் முதன் முதல் வெளி வந்த குறுநாவலதுவாகும். திருகோண மலை எரிமலைப் பதிப்பகத்தின் வெளியீ டாக அது வெளியிடப்பட்டது. அக்காலகட் டத்தில், அ. செ. மு. நடாத்திய சஞ்சிகை யின் பெயர் எரிமலையாகும். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பழக்க வழக்கங்கள், சமூகக் குறைபாடுகள் என்பனவற்றை இக்குறு நாவல் சித்தரிக்கின்றது. யாழ்ப்பாணத்தின் மண்வாசனை அக்குறுநாவலில் சிறப்பாக அமைந்துள்ளது. பாத்திரங்கள் மண்ணோடு இயைந்து யதார்த்த பூர்வமாக அமைந்து ள்ளன. பகைப்புல வருணனை இயற்கை யோடு இணைந்ததாகவும், தவை பயப்பன வாகவும் விளங்குகின்றது. 1940- 1950 பத்தாண்டுகளில் வெளிவந்த நாவல்களில் அ. செ. முருகானந்தத்தின் புகையில் தெரிந்த முகம்' குறிப்பிடத்தக்க படைப்பா கும். அக் குறுநாவலிலிருந்து 'வதைக்கு ஒரு வருணனையைப் பார்ப்போம். 'அம வாசை வந்த பதின்மூன்றாம் நள்ளிரவு. செகசோதியான நிலவு காயும் காலம், யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற்பிரதேசத்தை பகல் வேளையில் தகிக்கும் வெய்யிலில் அக்கினிக் குண்டமாகவே மாற்றிவிடும்.' என வருணனை விரியும், அ. செ. முரு கானந்தத்தின் உரை நடை எளிமையும், இனிமையும் வாய்ந்ததாகும். பாத்திரங்க ளின் குண இயல்புகளோடு முரண்படாது ஆற்றொழுக்காக அமைந்திருக்கும்.
(தொடரும்)
மல்லிகை மே 2008 ஜ் 55

Page 30
ඊ(Qජ්ජුඩ්ද්‍රවේණිජනී’%ර්” හිතෛරීභූත)රත[Cනු\තී’
అంుdజంగళినీ 2ణం969నిక
- தெளிவத்தை யோசப்
பவள விழாக் கானும் கலைச்செல்வி
ஆசிரியரை மல்லிகை நெஞ்சார வாழ்த்து |கின்றது. |
- ஆசிரியர்
ஈழத்து எழுத்தாளர்களும் அவர்களது படைப்புக்களும் மேன்மையுற 鹰 வேண்டும் என்ற ஏக்கம் மிகுந்தவராக, அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்த முதல்வராகத் திகழ்ந்த 'சிற்பி சிவசரவணபவன் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட ஏடு கலைச்செல்வி.
இலங்கை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளுக்காக எல்லாக் காலத்திலும், தென்னிந்தியப் பத்திரிகைகளை நம்பியிருக்க முடியாது என்பதனை வலியுறுத்தி வந்தவர் இவர்.
1958 ஆம் ஆண்டு ஜூலையில் 'கலைச்செல்வி என்னும் மாதச் சஞ்சிகை ஈழத்துக் இலக்கிய உலகில் உலா வரத்தொடங்கியது.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.' எனும் பாரதியின் பாடல் வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டு வெளிவரத் தொடங்கியது கலைச்செல்வி,
தமிழ்வேள், ஈழத்துச்சோமு, சு. இராஜநாயகன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இணைந்து செயற்பட்டனர்.
தமிழனின் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றிற்கு தொன்மை மணம் குன்றாமல், புதுமை சேர்க்க வேண்டும். ஈழத்தின் தனித்துவம் மிக்கப் படைப்புக்களுக்குக் களம் அமைத் துக் கொடுக்கக் கலைச்செல்வி என்றும் முன் நிற்கும். வாசகர்கள் எவற்றை விரும்புகிறார் கள் என்பதை விட, அவர்களுக்கு எவை தேவையானது, முக்கியமானது என்பதிலேயே கலைச்செல்வியின் கவனம் இருக்கும். வாசகனின் சிந்தனையைத் தூண்டி விடவும், செழு மைப்படுத்தவும் துணை நிற்கும் படைப்புக்களை வெளியிட வேண்டும் என்பதே நமது அளவு கோல், குறிக்கோள்.' என்று தெளிவுடன் கூறுகின்றது ஆசிரியருரை.
மல்லிகை மே 2008 & 56
 
 

கலைச்செல்வியை வளர்த்து விட்ட எழுத்தாளர்களும், கலைச்செல்வியால் வளர்த்து விடப்பட்ட, எழுத்தாளர்களும் ஈழத்து இலக்கியப் பரப்பில் அநேகர், தங்களுடைய ஆக்க ங்கள் மூலம் ஈழத்து இலக்கிய உலகைச் செழுமைப்படுத்தியஇன்னும் செழுமைப்படுத்திக் கொண்டிருக் கும்- பலர் கலைச்செல்விப் பண்ணையில் உருவானவர்கள் தான்.
எஸ். பொ., வரதர், சொக்கன், தேவன், இ. நாகராஜன், புதுமைலோலன், அன்பு மணி, மு. தளையசிங்கம், டானியல், முருகை யன், டொமினிக் ஜீவா, நாவேந்தன், பவானி, உதயணன், நீலவாணன், அம்பி, திமிலைத் துமிலன், செங்கை ஆழியான், செம்பியன் செல் வன், செ. யோகநாதன், செ, கதிர்காமநாதன், யாழ்நங்கை என்று ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினை செப்பனிட்ட சகல
ரும் கலைச்செல்வியில் பங்கு கொண்டவர் களாவே இருந்திருக்கின்றனர்.
நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர் சனம், உருவகக் கதை, இலக்கியக் கணை கள், கேள்வி பதில், எழுத்தாளர் கடிதங்கள் என்று ஐம்பது அறுபதுகளில் ஈழத்து இலக்கிய உலகினை கலகலக்கச் செய்த சஞ்சிகை கலைச்செல்வி.
போட்டிகள் மூலமாக எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும், புதுப் புது எழுத்தாளர் களைக் கண்டு பிடிக்கவும், உருவாக்கவும் வழியமைத்துக் கொடுத்த கலைச்செல்வி யின் பணி பாராட்டுக்குரியது.
முதல் இதழிலேயே தங்கத்தாத்தா சோம சுந்தரப் புலவர் நினைவுக் கவிதைப் போட்டி நடாத்தி தங்கப்பதக்கம் பரிசளித்தது.
அகில இலங்கைச் சிறுகதைப் போட்டி ஒன்றினை 1962 இல் நடத்தியது கலைச் செல்வி.
செம்பியன் செல்வன், யோ, பெனடிக்ட்
பாலன், எம். எம். மக்கீன் ஆகியோர் முதல்
மூன்று பரிசினைப் பெற்றனர்.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக ஒரு நாவல் போட்டியினை நடத்திய பெருமை கலைச்செல்வியையே சார்கிறது.
(P. தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு, மன்னவன் எழுதிய காலடியிலே', செ, யோகநாதனின் ஞாயிறும் எழுகிறது" ஆகி
யவை பரிசு பெற்றன.
மாணவ மாணவியர்க்கான பாரதி தினப் பேச்சுப் போட்டியினையும் கலைச்செல்வி நடத்தி, மாணவர் மத்தியில் பேசும் ஆற் றலை வளர்க்கப் பணிபுரிந்துள்ளமை குறிப்
பிடக் கூடியது.
பங்கு பற்றுவதற்கான விண்ணப்பப் படிவம்: மாணவரின் வயதுப் பிரிவு, பாரதி பற்றி பன்முகத் தலைப்புக்கள் போன்றவை
கலைச்செல்வியில் பிரசுரம் பெற்றிருந்தன.
1959 செம்டம்பரில் நடத்தப்பட்ட, இப்பேச்சுப் போட்டிக்கான அறிவிப்பு 1959 ஜூன்
இதழிலேயே வெளியிடப்பட்டது.
:
கலைச்செல்வி நடத்திய நகைச்சுவைக்
கட்டுரைப் போட்டியில் ரீ. பாக்கியநாயகம்,
க. பரராஜசிங்கம் ஆகியோர் பரிசு பெற்றனர்.
படைப்புக்களுக்கப்பாலும், பல காத்திர LDTGOT இலக்கியச் செயற்பாடுகளை முன்னெ டுத்திருக்கின்றது கலைச்செல்வி,
மல்லிகை மே 2008 & 57

Page 31
இலக்கியக் கடிதங்கள் என்ற தலைப் பில் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்ட கடிதங்களைப் பெற்றுப் பிரசுரித்து வந்தது கலைச்செல்வி.
கிழக்கு மாகாணத்தின் குட்டிக்கரச்சி கிண்ணியாவிலிருந்து வ. அ. இராசரத்தி னம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த டானியல் அவர்களுக்கு எழுதிய கடிதம் (8. 10. 54) 1962 b e6čTG LDTřš/ 6JůSlJso இதழில் பிரசுரம் கொண்டது. அதேபோல், செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, வரதர், ஈழத்துச் சோமு, இலங்கையர்கோன், அ. ச. அப்துஸ்ஸமது போன்றோரின் கடி தங்களும் இடம் பெற்றுள்ளன.
புனைப்பெயரில் எழுதுகின்ற ஒரு சில படைப்பாளிகள், அதற்கான காரணத்தை "ஏன் மறைத்தேன் என் பெயரை?’ என்னும் தலைப்பில் எழுதி வந்தனர். உதயணன், அன்புமணி, செங்கை ஆழியான், செம்பி யன் செல்வன், யாழ்நங்கை போன்றோர் தங்கள் புனைப்பெயருக்கான காரணத்தை
விளக்கியுள்ளனர்.
முருகையன், மகாகவி, தான்தோன்றிக் கவிராயர், பரமஹம்சதாசன், நீலவாணன், ப. சத்தியசீலன் போன்ற முன்வரிசைக் கவிஞர்கள் தங்களுடைய லட்சியங்களைக் கவிதையால் வடித்து கலைச்செல்விக்குக் காணிக்கையாக்கியுள்ளனர். மகாகவியின் “கல்லழகி தொடர் காவியம் கலைச்செல்வி மார்ச் 1962 இதழில் நிறைவுறுகின்றது.
எழுத்துலகில் நான் என்னும் தலைப் பில் மூத்த எழுத்தாளர்கள் சிலர் தங்களது எழுத்துலக அநுபவங்களைக் கலைச் செல்வியில் தொடர்ந்து எழுதியுள்ளனர்.
மூத்த எழுத்தாளர்களின் அநுபவங்கள், மற்ற மற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு வழித் துணையாகவும் அமையக் கூடும்.
ஈழத்துச் சிறுகதை மூலவர்களான இலங்கையர்கோன், சம்பந்தன், வைத்தி லிங்கம், மற்றும், சோ. சிவபாதசுந்தரம், கனக செந்திநாதன், இளங்கீரன், வ. அ. இராசரத்தினம் தங்களுடைய எழுத்துலக அநுபவங்களைக் கலைச்செல்வி வாசகர் களுடன் பகிர்ந்து கொண்டனர்.
தன்னுடைய மலேயா அநுபவங்களை யும், தனது கன்னிப் படைப்புக்கள் அங் கேயே தோன்றியதையும், ஈப்போவில் இரு ந்து வெளிவந்து கொண்டிருந்த இனமணி வார இதழுக்கு இளங்கீரன் ஆசிரியரான வியத்தகு சம்பவங்களையும், இளங்கீரனின் எழுத்தனுபவம் குறித்துச் சொல்கிறது.
எழுத்துலகில் நான் என்னும் கலைச் செல்வி ஆசிரியர் கொடுத்திருந்த தலைப்பு என்னைப் பிரமிக்க வைத்து விட்டது. என்று தொடங்கும் வ. அ. இராசரத்தினம், ஆறாம் வகுப்புப் படிக்கும் போதே, வீரகேசரி யில் திரு. எச். நல்லையா அவர்கள் எழு திய நாவல்களை விழுந்து விழுந்து வாசித்து விட்டு, நானும் கதை எழுதுபவனாக வேண் டும் என்றும் கனவு கண்டேன். என்று தான் எழுதவாரம்பித்த அநுபவங்களைச் சுவையாகத் தருகின்றார்.
‘என்னை உருவாக்கியவர்கள்' என்ற தலைப்பில் டானியல், டொமினிக் ஜீவா, சொக்கன், அன்புமணி, நாவேந்தன், பவானி, மு. தளையசிங்கம் ஆகியோர் தங்களைப் பற்றி, தங்களை உருவாக்கியவர்கள் பற்றி விவரித்துள்ளனர்.
மல்லிகை மே 2008 率 58

இயற்கையாகவே எழுதும் திறன் ஒருவ னிடம் இருக்க வேண்டும். வெளி அநுபவ மும், வசதிகளும் அதைத் திருத்துமே தவிர, ஒருவனிடம் திணிக்காது. என்னை ஒரு நல்ல எழுத்தாளன் என்று நீங்கள் கருதி னால், கருதவில்லை என்றால் விட்டு விடுங் கள். கருதினால், அதற்குக் காரணம் என் னிடம் இயற்கையாக இருக்கும் திறமை தான். ஆகவே, என்னை உருவாக்கியவன் நானேதான். என்னுள்ளே கிடக்கும் இந்தத் துறையை ஒட்டிய திறமைதான். என்றா லும், அத்துடன் நான் நிறுத்திக் கொண் டால் அது மண்டைக் கர்வம். அல்லது முட்டாள்தனம். எந்த ஒரு சக்தியும் இந்த உலகில் தனித்து இயங்குவதில்லை.
எனது திறமைக்கு அப்பாலும், என்னை உந்தித்தள்ளிய ஒருவர் எனது தம்பி மு. பொன்னம்பலம் தான். மு. பொ. என் தம்பி யல்ல, என் இலக்கிய உள்ளத்தின் உயிர். காதலர்களிடம் கூட பேசுவதற்கு அவ்வளவு இருக்காது. உவமிக்க முடியாத ஒற்றுமை எங்களுடையது.
எனது முதல் கதை சுதந்திரனில் தான் வந்தது திரு. எஸ். டி. எஸ்ஸை நான் கண்டு கதைத்தது கூட, இல்லை. தொடர் ந்து வாய்ப்புத் தரும் அவரை, நான் கை எடு த்துக் கும்பிட்டாலும் பாதகமில்லை. பரந்த மனப்பான்மையுடன் தனது பக்கங்களை எனக்குத் திறந்து விடும் வீரகேசரியை நான் போற்றத்தான் வேண்டும். நான் வளர்ந்த பின் இடையில் வந்தாள் கலைச்செல்வி. நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். என்றெழுதுகின்றார் மு. தளையசிங்கம்.
கலைச்செல்வியின் ஒன்பதாவது இதழ் வளரும் எழுத்தாளர் மலராக மலர்ந்துள்
ளது. பத்துக்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர் களின் ஆக்கங்கள், அவர்களது புகைப்படத் துடன், அவர்கள் பற்றிய சிறுகுறிப்புடன் பிரசுரம் கொண்டுள்ளன.
தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் நினைவுக் கவிதைப் போட்டியில், பரிசு பெற்றவரான கவிஞர் முருகுப்பிள்ளை மயில்வாகனம் (மயிலன்) அவர்களின் Ul-b அட்டையை அலங்கரிக்கப் புதிய உலகு என்னும் அவருடைய தங்கப் பதக்கம் பெறும் கவிதை கலைச்செல்வியை அலங் கரிக்கின்றது.
உதயணன் எழுதிய இதயவானிலே, மனப்பாறை கலைச்செல்வியின் ஆசிரியர் திரு. சிற்பி எழுதிய 'உனக்காகக் கண்ணே *சிந்தனைக் கண்ணிர் ‘அன்பின் குரல்" அகிலனின் சந்திப்பு ஆகிய நாவல்கள் கலைச் செல்வியில் தொடர்கதைகளாக வெளிவந்தன. ته
செம்பியன் செல்வனின் கர்ப்பக் கிருகம் ஏழு அத்தியாயங்களுடன், பாதியிலேயே நின்று போயிற்று. கலைச்செல்வி நின்று
போனதால்,
பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, எஸ். பொன்னுத்துரை, கே. எஸ். சிவகுமாரன், நவாலிபூர் சோ.நடராசா, ஈழத்துச் சோமு, மு. தளையசிங்கம் போன் றவர்களின் முற்போக்கு இலக்கியம் பற்றிய கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், உருவ உள்ளடக்கம் பற்றிய விளக்கங்கள் போன் றவை விமர்சனத்துறை வளர்ச்சிக்கான கலைச்செல்வியின் பணிகள், கலைச் செல்வி யில் வெளியான கட்டுரைகள் சில தமிழக மற்றும் ஈழத்துச் சஞ்சிகைகளால் நன்றி யுடன் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
மல்லிகை மே 2008 ஜ் 59

Page 32
இலங்கையர்கோனின் "வெள்ளிப் பாத சரம் தொகுதி பற்றிய கைலாசபதியவர்க ளின் விமர்சனக் கட்டுரை எண்பதுகளில் வெளிவந்த கிருதயுகம்" சஞ்சிகையில் கலைச்செல்விக்கு நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டின் மார்கழி இதழ் இலங் கையர்கோன் நினைவு இதழாக வெளிவந் துள்ளது. இலங்கையர்கோனின் "வெள்ளிப் பாதசரம்' சிறுகதை இந்த இதழில் மீள் பிரசுரம் பெற்றிருக்கிறது.
தமிழகத்திலிருந்து வெளிவரும் உமா சஞ்சிகையில் தலைசிறந்த சிறுகதைகள் என்று பேராசிரியர் சாலை இளந்திரையன் எழுதிவரும் தொடரில் மாசி மாத உமாவில் வெள்ளிப் பாதசரம்' பற்றிச் சிறப்பான விமர் சனம் எழுதியுள்ளார் என்னும் குறிப்பு 1962 மார்ச் கலைச்செல்வியில் வெளிவந்துள் ளது. தமிழக வாசகர்கள் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆகியோர் கலைச்செல்வி மூலமாக ஈழத்துப் படைப்புக்களை அறிந்து கொண்டுள்ளமை குறித்தும், கலைச்செல்வி மகிழ்ச்சி தெரிவிக்கின்றது.
எழுத்தாளர் சு. வே. அவர்களின் மணற் கோவில்' என்னும் உருவகக் கதையை கலைச் செல்வியில் வாசித்த ராஜாஜி அவர் கள் மீ. ப. சோமுவிடம் அதைக் கொடுத்து அருமை யான சிருஷ்டி, வாசித்துப் பார் என்று கூறிய செய்தி நாம் அறிந்ததே.
எட்டாவது ஆண்டின் ஏழாவது இதழாக வெளிவந்த ஐப்பசி 1966 இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக வெளிவந்தது.
மலையகத்தில் நல்ல பல எழுத்தாளர் கள் உருவாகி வருகின்றார்கள் என்பதை ஈழத்து இலக்கிய உலகம் இன்று ஒப்புக்
கொண்டுள்ளது. இவர்களை ஊக்குவிப்ப தற்கும், தக்க முறையில் அறிமுகம் செய்வ தற்காகவும், மலை நாட்டு இலக்கிய மலர் ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று நவம்பர் 1965 இதழ் ஆசிரியருரை பேசுகிறது. ஒக்டோபர் 1966 இல் வெளிவந்த தீபாவளிச் சிறப்பிதழில் அடுத்த இதழ் (கார்த்திகை 1966) குறிஞ்சி மலராகத் தயாராகிறது. அற்புதமாக உருவாகும் இக்குறிஞ்சி மலரில், தெளிவத்தை ஜோசப், 6T61. 67 sho. 61 lb. JT60)LDuri, J. S. ss. கோமஸ், தமிழோவியன், இரா. சிவலிங்கம், ஈழக்குமார் இன்னும் பலர் எழுதுகின்றார் கள். பி.டி ராஜனின் விசேட பேட்டியுடன், ஏராளமான பக்கங்கள் என்னும் அறிவிப்பு இந்த இதழில் இருக்கிறது.
ஆனாலும், இந்த ஐப்பசி 1966 ன் இதழுக்குப் பின் கலைச்செல்வியின் இல க்கியப் பயணம் தொடர முடியாததாகப் போய்விட்டது என்பது எத்தனை சோக LDT60Tg. v
ஈழத்து இலக்கிய உலகுடனான கலைச் செல்வியின் எட்டாண்டு இயக்கம் இன்னும் எத்தனை எத்தனை ஆண்டா னாலும், அழிக்கப்பட முடியாத தடம் பதித் துள்ள இயக்கமாகும்.
ஒரு திறமை மிகு ஆசிரியராக, கல்லூரி அதிபராக, ஈழத்து இலக்கியச் செழுமை
க்காக, அற்பணிப்புடன் செயல் புரிந்த
இலக்கிய நேசராக, படைப்பாளியாக, சக எழுத்தாளர்களைப் பாராட்டி மகிழும் பண் பாளராகத் திகழும் சிற்பி சிவசரவணபவன் அவர்களுக்கு இந்த மகுடங்களுக்கெல் லாம் மகுடமாகத் திகழ்வது கலைச்செல் வியின் ஆசிரியர் சிற்பி என்னும் மகுடம் தான் என்பதை வரலாறு பொறித்து வைத்திருக் கிறது. வைத்திருக்கும்.
மல்லிகை மே 2008 率 60

கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ்
- அ. முத்துலிங்கம்
பில் பிரைசன் என்ற பிரபல எழுத்தாளர் சமீபத்தில் கனடாவுக்கு வந்திருந்தபோது அவரி டம் "உங்களுக்கு அதிக பயம் தரக்கூடியது என்ன?’ என்று கேட்டார்கள். அவர் கண் வெட்டும் நேரம்கூட எடுக்காமல் வெற்றுப் பேப்பர்’ என்று பதில் கூறினார். ஓர் எழுததாள {ருக்கு வெள்ளைத் தாள்தான் எதிரி. எங்கே ஒரு தாளைக் கண்டாலும் அவர் அதை நிரப்ப வேண்டும். கல்லைக் கண்ட சிற்பி செதுக்குவதுபோல, இயற்கை காட்சியை கண்ட ஓவியர் வரைவதுபோல, எழுத்தாளர் பேப்பரைக் கண்டபோதெல்ல"ம் அதில் ஏதாவது எழுத வேண்டும். அது நிரம்பாதவரைக்கும் அவர் நிம்மதி அடைவதில்லை.
எழுத்தாளருக்கு எண்ணப் பிரவாகம் எடுக்கும் தருணங்களும் அபூர்வமாக ஏற்படுவது உண்டு. அப்படியான சமயங்களில் அவருக்கு அவசரத்துக்கு எழுதுவதற்கு பேப்பர கிடைக் காது. உடனேயே எழுதிவைக்காவிட்டால் பொங்கிவரும் எண்ணக் கோர்வை மறைந்து விடும் அபாயம் இருப்பதால் எழுத்தாளர் அப்போதைக்கு கையில் என்ன அகப்படுகிறதோ அதில் பதிவுசெய்து வைத்துவிடுவார். ஹரி பொட்டர் நாவல்கள் மூலம் 100 கோடி டொலர் கள் சம்பாதித்து உலக சாதனை நிகழ்த்திய நாவலாசிரியை ஆர்.கே. ரோலிங் தன்னுடைய நாவலின் முதல் வசனத்தை லண்டன் உணவகம் ஒன்றில் கைதுடைக்கும் பேப்பரின் பின் பக்கத்தில் எழுதிப்பார்த்தர் என்பது இன்று உலகறிந்த விசயம்.
டொன்லிலோ என்ற நாவலாசிரியர் ஒருநாள் சுப்பர்மார்க்கட்டில் சாமான்கள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது எண்ணப் பிரவாகம் எழும்பி அவரை தாக்கியது. அவருக்கு அதை உடனுக்குடன் எழுதிவைப்பதற்கு ஒன்றுமே அகப்படவில்லை. சாமான்களைக் காவும் பேப்பர் பையின் பின் புறத்தில் எழுதிவைத்தார். அந்தப் பேப்பர் பையை இன்றும் அருங்காட்சி பகத்தில் வைத்து பாதுகாக்கிறார்கள்,
புலம் பெயர்ந்து வாழத் தொடங்கிய எல்லோருக்கும் ஏற்படுவதுபோல எனக்கும எழுதும் ஆசை அதிகரித்தது. வெள்ளை பேப்பரை எங்கே கண்டாலும் அதை நிரப்பினேன். புலம் பெயர்ந்தவர்கள் ஏற்பாடு செய்யும் சந்திப்புகளிலோ, அல்லது கூட்டங்களிலோ அகப்படும் போது நீங்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளரா? என்று ஒருவர் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. எழுத்தாளர் என்று சொல்வதற்கு எனக்கு கூச்சம் எழுத்து முயற்சியில் இருப்பவன என்பது பொருத்தமாக இருக்கும். அப்படியிருக்க புலம்பெயர் என்ற அடைமொழி இன்னும் கூடிய அசெளகரியத்தை ஏற்படுத்தியது. இலக்கி யத்தை வகைமைப் படுத்துவதை ஓர் எழுத்தாளரும் விரும்புவதில்லை. வியாதிகளுக்கு பெயர் ஆட்டுவதுபோல பத்திரிகைக்காரர்களும், பதிப்பாளர்களும் செய்யும் வேலை என்று பலர் இதை ஒதுக்கிவிடுவார்கள்.
2003ம் ஆண்டு மே மாதம் என்று எனக்கு நினைவிருக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் எழுத்தைப்பற்றியும் நான் சுராவுடன் பேசியபோது இதே கேள்வியை எழுப்பினேன். புலம் பெயர் இலக்கியம் என்று எதைச் சொல்கிறார்கள்
மல்லிகை மே 2008 ஜ் 61

Page 33
என்பதுதான் வினா. சுரா, இதையெல்லாம்
கவனிக்கக்கூடாது. எழுத்தாளருடைய வேலை எழுதுவது என்று கூறி அவர் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகளைப் பற்றி பேசினார்.
- புலம் பெயர முன்னரோ. புலம பெயர்ந்த பின்னரோ நீங்கள் ஓர் எழுத்தாளர் ஒரு தச்சுவேலைக்காரர் தச்சுவேலை செய்வது போல, உங்கள் வேலை எழுதுவது. எழுத எழுதத்தான் உங்கள் எழுத்தின் தரம் 2 ul(bli).
- அங்கு ஒரு சிறுகதை இங்கு ஒரு கட்டுரை என்று எழுதக்கூடாது. சங்கீதம பயி லும் மாணவி நாளும் சாதகம் செய்வது போல நீங்களும் தினம் கிரமம் தவறாமல் எழுதவேண்டும்
-எழுதுவது என்பது உங்களுக்கு மட்டும் தான், உங்கள் கண்களுக்கு. அச்சுக்குக்கு அல்ல. அப்போதுதான் அது சுதந்திரமாக இறக்கை விரித்து பறக்கும்.
சுரா சொன்னதில் எனக்கு முழுச்சம் மதம், ஆனால் ஒருவர் கால்சட்டை போட வேண்டுமென்றால் கால்சட்டைக்குள் ஒரு காலை மாத்திரம் நுழைத்தால் போதாது இரண்டாவது காலையும் நுழைக்கவேண் டும். எழுதி எழுதி வைத்து என்ன பிரயோச னம். அச்சுக்கு அனுப்பாத எழுத்து முழுமை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று எனக்கு தோன்றியது.
நான் இப்படி புலம் பெயர்ந்து எழுதும் முயற்சி பற்றியும், அதைப் பதிப்பிப்பது பற்றி யும் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவின் அன்டி ரூனி என்பவர வேறு ஓர் அடிப்படையான பிரச்சினையை கிளப் பினார். அவரும் ஓர் எழுத்தாளர், அத்தோடு நல்ல பேச்சாளரும்கூட. அவர் சொல்கிறார் கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ் தேவை என்ற சட்டம் கொண்டுவரவேண்டும் என்று. எனக்கும் அது சரி என்றே பட்டது. அவர் சொன்னது ஏறத்தாழ இதுதான்:
உலகத்துக்கு கவிஞர்களிலும் பார்க்க தண்ணிரக் குழாய் வேலைக்காரர்களும், மின் சாரப் பணியாளர்களும், மரவேலை செய்ப வர்களும் முக்கியம் கவிஞர்கள்கூடத தேவை தான். ஆனால் மோசமான தண்ணிர்க குழாய் வேலைக்காரர்களிலும் பார்க்க. மோசமான மின்சாரப் பணியாளர்களிலும் பார்க்க, மோச மான மரவேலைக்காரர்களிலும் பார்க்க மேTச மான கவிஞர்கள் அதிகமாக காணப்படு கிறார்கள். மற்ற பணியாளர்களுக்கு உரிமம் கொடுப்பதுபோல கவிஞர்களுக்கும் உரிமம் கொடுத்தால்தான் இந்தப் பிரச்சினை திரும்.
தண்ணிரக் குழாய் பழுதென்றால அல்லது மின்சாரத் தடங்கல் என்றால் அந்த அந்தப் பணியாளர்களை அழைத்து திருத்த வேலை களை செய்விக்கிறோம். அவர்களும் வந்த வேலையை முடித்து மணித்தியாலத்துக்கு 60, 70 டொலர் என்று பணம் பெற்றுப் போகிறார்கள். அது மாதிரியே கவிஞர்க ளும் தங்கள் கவிதை படைக்க எடுத்த நேரத்தை கணக்கிலெடுத்து இத்தனை மணித்தியா லத்துக்கு இவ்வளவு என்று விலை பேசி விற்கலாம். கவிஞர்கள் மாத்திரமல்ல மற்ற வர்களும் உரிமம் பெறவேண்டும். நாவல், கட்டுரை. சிறுகதை, நாடகம், சினிமா வசனம் என்று எல்லா வகையான எழுத்து வேலை க்காரர்களுக்கும் இது பொருந்தும். அல்லது கனடிய ஆங்கிலப் பத்திரிகைகள் செய்வது போல வர்த்தைக்கு இவ்வளவு என்று கணக்கு பார்த்து சன்மானம் வழங்கலாம். ஒரு சிறு கதை எழுத்தாளருக்கு இது எத்தனை பெரிய வசதி. 1000 வார்த்தைகளில் ஒரு சிறுகதை எழுதினால் அதை 4000 டொலருக்கு விற்க லாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் புலம் பெயர் ஆழலில் வாய்த்தால் நீண்ட தலைப்புகளு டன் கொழுத்த சிறுகதைகள் எழுதி பணம் சம்பாதித்துவிடலாம்.
கட்டுரை, கவிதை, சிறுகதைகளுக்கு சன்மானம் கொடுக்கும் பழக்கம் இன்னும்
மல்லிகை மே 2008 & 62

|லம் பெயர் தமிழ் ஆழலில் உண்டாக வில்லை. சிறுபத்திரிகைகளை விடுவோம வணி கப் பத்திரிகைகளாவது அதைச் செய்ய லாம். அவற்றை பிரசுரிப்பவர்களும் ஏதோ பெரும் உபகாரம் செய்வதாகவே நினைக் கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு வர் வாரத்துக்கு நாலு கட்டுரை, இரண்டு சிறு கதை என்று எழுதுவார். ஏழாவது நாளில் ஏன் எழுதுவதில்லை என்றால் அன்று அவ ருக்கு ஒய்வு தட்டச்சு யந்திரத்திலோ, கணினி என்ற ஒரு பொருளிலோ நம்பிக்கை இல்லா தவர். கோடு அடிக்காத வெள்ளைத தாளில் பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதுவதால் நாலு பக்க கட்டுரை இருபது பக்கத்தை தாண்டிவிடும். ஒருநாள் வழக்கம்போல கட் டுரை எழுதி வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவசரமாக எடுத்துச் சென்றார். பத்திரிகை அச்சுக்கு போவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்தன. பத்திரிகாசிரியர சொன் னார் "இந்தக் கட்டுரையை போட்டால இரண்டு விளம்பரங்களை நிறுத்தவேண்டி வரும் என க்கு 150 டொலர் நட்டமாகும். நீங்கள அதைத் தந்தால் இந்தக் கட்டுரையை போடலாம்.
புலம் பெயர்ந்த எழுத்தாளருடைய நிலைமை இதுதான். ஒரு பத்திரிகை தாளு க்கு, மையுக்கு, அச்சடிப்பதற்கு, ஓவியருக்கு என்று செலவு செய்கிறது. அச்சடித்த காகி தங்களை ஒழுங்காக அடுக்கி, ஒட்டி புத்தக மாக்குபவருக்கும் சம்பளம் கொடுக்கிறது. ஆனால் முன் அட்டைக்கும், பின் அட்டை க்கும் இடையில் இருக்கும் அத்தனை விச யங்களையும் எழுதிய எழுத்தாளர்களுக்கு சன்மானம் கொடுப்பதில்லை. அவர்கள் இல வசமாகவே எழுதவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். w
சில வேளைகளில் சற்றும் எதிர்பாரக் காத தருணத்தில் மனதை சந்தோசப் படுத்தும் காரியங்களும் நடப்பதுண்டு. யாரா வது கட்டுரை கேட்பார்கள், அல்லது சிறு
கதை வேண்டும் என்பார்கள். ஆனால மலரு க்கு எழுதவேண்டும் என்று எவராவது கேட் டால் நடுக்கம் பிடித்துவிடும். பழைய மாணவர் சங்க பாடசாலை மலரில் என்ன எழுதுவது. அல்லது அகில உலகத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு மலரில் என்ன எழுதுவது. ஐம்பது வருட மாக வளர்த்த தமிழை அதற்குமேல் வளர்ப் பது எப்படி என்பதுபற்றி கட்டுரை வரைய வேண்டும். ۔
ஒரு நாள் புலம் பெயர்ந்த எழுத்தாளர் அமைப்பு ஒன்றின் மலருக்கு எழுதும்படி எனக்கு வேண்டுகோள் வந்தது. ஒரு மாத காலம் அவகாசம் தந்திருந்தார்கள். மலரில் யார் யார் என்ன என்ன தலைப்புகளில் எழுதுகிறார்கள். நீங்கள் இப்படி எழுதலாம் என்ற அறிவுரை வேறு கொடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் உண்மையில் உபகாரம் செய்வ தாகவே நினைக்கிறார்கள். அந்த மலரில் எழுதுவதற்கு கிடைத்த பெரும் பேற்ை சரியான முறையில் நான் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே நன்றி என்ற வர்த்தை வரும என்று அவர்கள் நினைத்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இதையெல்லாம் மீறி அவர் களுடைய நிபந்தனை என்னை திகைக்க வைத்தது. புலம் பெயர் இலக்கியத்தை செறிவூட்டும் வகையில் என்னுடைய கட் டுரை அமையவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
தமிழில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் இருப்பதுபோல மலையாளத்திலும், பஞ்சாபி யிலும், உருதுவிலும், வங்காளத்திலும், சிங்க ளத்திலும் இருக்கிறார்கள். இதில் ஆச்சரிய மான விசயம் என்னவென்றால் ஆங்கிலத் திலும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள இரு ப்பதுதான். சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்து, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வசித்து, இன்று இங்கிலாந்தில் குடியே றியவர். அவருடைய புகழ்பெற்ற இரு நாவல்
மல்லிகை மே 2008 & 63

Page 34
கள் பாகிஸ்தானையும் இந்தியாவையும் பின்னணியாகக் கொண்டு ஆங்கிலத்தில எழு தப்பட்டவை. அவை புலம்பெயர் இலக்கி யம் என்று அறியப்படுகின்றன. அருந்ததி ராய் இந்தியாவில் பிறந்து இந்தியாவி லேயே வாழும் எழுத்தாளர். இவருடைய புக்கர் பரிசு பெற்ற நாவல் இந்திய பின்ன னியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. ஆனால் அவர் இந்தியாவில் வசிப்பதால் அது புலம் பெயர் இலக்கியம் அல்ல. அவர் அமெரிக் காவுக்கு குடிபெயர்ந்திருந்தால் அது புலம்பெயர் இலக்கியம் ஆகியிருக்கும்.
இது இணைய யுகம் நூற்றுக்கனககான தமிழ் வலைத்தளங்கள் இன்று இயங்கு கின்றன. புலம் பெயர்ந்தவர்களும், சொந்த நாட்டைவிட்டு வெளியேறாதவர்களும் தங் கள் படைப்புகளை இணையத்தில் ஏற்று கிறார்கள். அவர்கள் படைப்புகள் பக்கத்து பக்கத்தில் வெளியாகின்றன. இவை படிப் பதற்கு உலகத்தின் அத்தனை நாடுகளி லும் கிடைக்கின்றன. புலம் பெயர்ந்து வாழும் ஒருவருக்கும் சொந்த நாட்டில் இருந்து எழு தும் ஒருவருக்கும் அப்படி என்ன வித்தியாசம்.
காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தன் பிறந்த நாடான கொலம்பிய நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் ஐந்து வருட ங்கள் வாழ்ந்தபின் மறுபடியும் தன் சொந்த நாட்டுக்கு திரும்பினார். தன்னுடைய ஐரோப் பிய வாழ்க்கை பின்னணியில் அவர் சில படைப்புகளை வெளியிட்டார். ஆனால் ஒரு வரும் அவற்றை புலம்பெயர்ந்த படைப்பு கள் என்று சொல்வதில்லை. அவருடைய பிறந்த நாட்டைப் பற்றிய ஏக்கமோ, கவலையோ, கலாச்சார பிரதிபலிப்போ அங்கே இல்லை. அவையெல்லாம் ஒருவகையில் பயண இலக்கியம் போலத்தான்.
விக்கிரம் சேத் இந்தியாவில் பிறந்து ஆங்கிலத்தில் எழுதுகிறார். ரோஹின்ரன மிஸ்ட்ரி இந்தியாவில் பிறந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து ஆங்கில மொழியில் படைக் கும் புகழ் பெற்ற எழுத்தாளர், கனடாவின் அதி உயர் இலக்கிய பரிசுகளை வென்ற
வர். அவரை புலம்பெயர்ந்த எழுத்தாளர என்று கூறுகிறார்கள். விக்கிரம் சேத்துடைய எழுத் தும் ரோஹின்ரன் மிஸ்ட்ரியுடைய எழுததும்
ஒரே மாதிரி இருக்கிறது. விக்கிரம் சேததின்
புகழுக்கும் குறைவில்லை. இந்தியப பின்னணி uî6ù 6īgg5'A JAL. 96 JS56ÖDL-ųj Suitable Boy நாவலுக்கு வேறு யாரும் நினைத்துக்கூடப் பார்த்திராத அளவு இரண்டு லட்சம் பவுண் முன்பணம் கிடைத்தது. ஆனால் ஒருவர இந் திய எழுத்தாளர் இன்னொருவர் புலம பெயர் ந்த எழுத்தாளர்.
புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்
களில் நேர்மையானவர் ”யTம் செல்வதுரை
என்று சொல்லலாம். இவர் இலங்கையி லிருந்து புலம் பெயர்ந்து கனடாவில வாழும் ஆங்கில எழுத்தாளர் பத்திரிகையாளர கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது “யாம் செல்வ துரை தான் படைப்பது 'இலங்கை பின்ன னியில் எழுதும் கனடிய இலக்கியம' என் பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத் தில் எழுதும் எழுத்தாளர்கள். அவர்கள பிறந்த நாட்டில் வாழ்ந்தாலும், புகுந்த நாட்டில வாழ்ந் தாலும் ஆங்கில இலக்கியத்துக்கே செழுமை சேர்க்கிறார்கள். பிறந்த நாட்டு இலக்கிய
ஐஸ்க் பளூவிஸ் சிங்கர் என்பவர போல ந்து யூத எழுத்தாளர். அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த பிறகும் அவர் தொடர்ந்து யிட்டிஹற் மொழியில் எழுதினார். ஒரு முறை அவரு டைய சிறுகதை ஒன்றை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஸோல் பெல்லோ ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். அவருடைய புகழ் திடீரென்று பரவியது. அதன் பிறகு ஐஸக் பஸ்விஸ் சிங்கர் ஆங்கிலத்தில் படைக்கத் தொடங்கினார். யிட்டிஹற் இலக்கியத்தின் இழப்பு ஆங்கில இலக்கியத்துக்கு வரவாக அமைந்தது.
ங்கூகி வாதியோங்கோ என்பவர் ஆங்கி லத்தில் எழுதும் கென்யா நாட்டு எழுததாளர். இவருடைய பிரசித்தி பெற்ற இரண்டு நாவல் 356TT60T Weep Not Child, The River Bet ween ஆகியவை பல மொழிகளில் மொழி
மல்லிகை மே 2008 & 64

பெயர்க்கப்பட்டவை. இன்று அமெரிக்காவில் வாழும் இவர். ஆங்கிலத்தில் எழுதுவதை நிறு த்திவிட்டு தன் சொந்த மொழியான கிகி பூவில் எழுதுகிறார். இவர் சொல்கிறார அடி மைட்படுத்திய ஓர் இனத்தின் மொழியில நான் எழுதி எப்படி என்னை விடுவிக்கமுடியும்? என் மொழியில்தான் நான் எழுதவேண்டும். ஆப்பிரிக்க இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான வாசகர்களை சம்பாதித்த ஒர் எழுத்தாளர் ஆங்கில மொழியை துறந்து தன் சொந்த மொழிக்கு மாறியது இலக்கிய சரித்திரத் தில் புதுமையான ஒன்று.
புலம் பெயர்ந்து ஆங்கிலத்தில் எழுதும் அகில் சர்மாவிடம் நான் சில வருடங்களு க்கு முன்னர் இந்தக் கேள்வியைக் கேட் டேன். 'எட்டு வருடங்களை இந்தியாவிலும் 26 வருடங்களை அமெரிக்காவிலும் நீங்கள் கழித்திருக்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் எழுதுவது எல்லாம் இந்தியாவில் இருக்கும் ஓர் இந்தியரைப் பற்றி அல்லது அமெரிக் காவில் வாழும் ஓர் இந்தியரைப் பற்றி. அது ஏன்? அவருடைய பதில் இப்படி இருந்தது.
'ET6ilabi Metamorphosis 616 (5 நாவல் எழுதினார். அதிலே ஜேர்மன் கதா பாத்திரங்கள் எத்தனை, சீனக் கதாபாததி ரங்கள் எத்தனை இந்தியக் கதாபாத்திர ங்கள் எத்தனை என்று ஒருவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. அந்தக் கதை உலகம எல்லா வற்றுக்கும் பொதுவானதாக இருந்தது. அது தான் முக்கியம். எழுதுவதை மிகத் திறமா கச் செய்யவேண்டும். உலகத்து அத்தனை மக்களும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் காலத்தால் மாறாததாகவும் இருக்க வேண் டும். அதுவே முக்கியம், அதிலே ஜேர்மனி யரும் அமெரிக்கரும் வருவதால் அது முக்கி யமானதாகவும் இந்தியர் வருவதால் முக்கி யத்துவம் குறைந்தும் காணப்படாது. நன் றாக எழுதுவதுதான் குறிக்கோள். யாராவது ஏதாவது பெயர் ஆட்ட விரும்பினால் அது அவர்கள் விருப்பம். அகில் சர்ம உண்மை யில் என்னுடைய கேள்விக்கு பதில் கூற
வில்லை. பிறந்த நாட்டைவிட்டு அவர் எவ்வ ளவு தூரம் போனாலும் அவரால் தன சொந்த நாட்டையோ, மக்களையோ மறக்க முடிய வில்லை என்பதுதான் நிசம்,
எனக்கென்னவோ புலம் பெயர் இலக்கி யம் என்றால் ஒருவர் புலம் பெயர்ந்து இருந் தால் மட்டும் போதாது. அவர் தன் சொந்த மொழியில் எழுதவேண்டும். புலம் பெயர் சூழலால் அவர் மொழியிலும் சிந்தனையிலும் மாற்றம் இருக்கவேண்டும். இலங்கையில் வாழ்ந்து தமிழில் எழுதிக்கொண்டிருந்த ஒரு வரை கனடாவுக்கு அழைத்து வந்து அவரை ஒர் அறையில் பூட்டி வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருட முடி வில் அவர் ஒரு நாவல் எழுதி முடிக்கிறார். உடனே அது புலம் பெயர்ந்த இலக்கியம் ஆகிவிடுமா? அவர் இலங்கையில் இருந்தா லும் அதே நாவலைத்தான் எழுதியிருப்பார். அதேபோல இன்னொருவர் கனடாவில் 40 வருடங்கள் வாழ்ந்து கனடிய பின்னணியில் ஒரு தமிழ் நாவல் எழுதுகிறார். அவருடைய பிறந்த நாட்டைப் பற்றிய பிரக்ஞையோ, இழப்போ, ஏக்கமோ, பிரதிபலிப்போ அதில் இல்லை. பிறந்த நாட்டு வாழ்வு முறைகூட அவ ருக்கு அந்நியமானது. அவருடைய நாவலை புலம் பெயர்ந்த இலக் கியம் என்று அடையாளப்படுத்த முடியுமா?
என் நண்பர் ஒருவர் சமீபத்தில் தன் இலங்கை கதையை சொன்னர் அவர அங்கே வாழ்ந்த காலத்தில் பணி நிமித்தமாக பல இடங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. வீடு திரும்ப சிலவேளைகளில் இரவு பன்னி ரெண்டு. ஒரு மணியாகிவிடும். அவருடைய அம்மா அவருக்காக பொறுமையாக கண் விழித்துக் காத்திருப்பர். அவர் வந்து கதவை தட்டியதும் அதைத் திறந்து, அவர் உள்ளே நுழைந்ததும் அமரவைத்து. உணவு பரிமாறு வார். அவர் சாப்பிட்டு முடித்தபின்னர் அந்த தாயார் தனக்குத்தானே பரிமாறி தனிய இரு ந்து சாட்பிட்டு கழுவி வைத்துவிட்டு படுக்கை க்கு ப்ோவார். தாயாரிடம் அவர் ஒரு வார் த்தை பேசியதில்லை. இப்பொழுது அவரு
மல்லிகை மே 2008 & 65

Page 35
டைய கனடா வீட்டு கதவுக்கு நாலு சாவி உண்டு ஒன்று அவரிடம், ஒன்று மனைவயி டம், ஒன்று மகனிடம், ஒன்று மகளிடம் அவர் கள் வேண்டிய நேரங்களில் வருவார்கள் போவார்கள். ஒருவருக்கொருவர் காத்திரு ப்பதில்லை. நண்பர் நேரம் கழித்து வரும் வேளைகளில் மனைவி துரங்கப் போய் விடுவார். இவர் தானே கதவை திறந்து வந்து தானே சாப்பாட்டை பரிமாறி சாப்பிட்டுவிட்டு மீதியை குளிர் பெட்டியில் வைத்து மூடி
விட்டு துரங்கப்போவார். அவருடைய தாய்
சமீபத்தில் இலங்கையில் இறந்து போன போது அவர் இதைச் சொன்னார். ஒரு நாளா வது வீட்டு கதவுக்கு இன்னொரு திறப்பு செய்யலாம் என்பதை நான் யோசித்தது இல்லை. ஒரு நாளாவது நான் அம்மாவை எனக்காக காத்திருக்காமல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சொன்னது கிடையாது. ஒரு நாளா வது சாப்பாடு நல்லாய் இருக்கிறது என்று அம்மாவின் முகத்தைப் பார்த்து பாராட் டியது இல்லை. 8000 மைல் துரத்தை கடந்த பிறகுதான் இதுவெல்லாம் எனக்கு புலப்படுறது.
1992ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற டெரிக் வால்கொட் என்பவ ருடைய நோபல் உரை மேற்படி சம்பவ த்தை நுட்பமாக உணர்ந்துகொள்வதற்கு உதவும். ஒரு பூஜாடி உடைகிறது. அதன உடைந்த துண்டுகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி திருப்பி ஒட்டும்போது கிடைக்கும் காதல் உணர்வு அந்த பூஜாடி பூரணமாக இருந்தபோது கிடைப்பதில்லை. புலம்பெயர் இலக்கியம் என்று சொல்லும்போது இழந் ததை மீட்கும் அந்தக் காதல் உணர்வு வெளிப்பாடு அங்கே இருக்கவேண்டும்.
இந்தக் காதல் இரண்டு வகையாக வெளிப் படலாம். பிறந்த நாட்டைப் பற்றி எழுதும் போது அந்த இலக்கியம் புகுந்த நாட்டின் கலாச்சார மாற்றத்தால், புதிய வாழ்வுச் சூழலால், வித்தியாசமான மொழிப்பயிற்சி யால் செழுமை பெறவேண்டும். அல்லது புகுந்த நாட்டுப் பின்னணியில் எழுதும்போது இழந்த நாட்டின் கலாச்சாரமும் மொழியும்
படைப்பில் புது வெளிச்சம் வீசவேண்டும். ஒரு கலாச்சாரம்தான் ஒருவருடைய படை ப்பை முழுமை பெறச் செய்கிறது.
புலம் பெயர்ந்த எழுத்தாளர் அமைப்பு மலருக்கு கட்டுரை கேட்டு எழுதியவர்கள் எத்தனை வார்த்தைகளில் கட்டுரை இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். என்ன தேதிக்கு முதல் அனுப்பவேண்டும், ஆசிரியரின் புகைப்படம் எந்த அளவில அமைய வேண்டும், எத்தனை வரிகளில் சுயவிபரக் குறிப்பு இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு அம்சத்தையும் நினைத்து நினைத்து எழுதி யவர்கள் கடிதத்தின் ஒரு மூலையிலோ, பின் குறிப்பிலோ, கண் பார்க்க முடியாத சின்ன எழுத்துருவிலோ கட்டுரைக்கு எவ் வளவு சன்மானம் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டார்கள். ஓர் உரிமம் பெற்ற தச்சு வேலைக்காரரிடமோ. தணணிர்க் குழாய் திருத்துபவரிடமோ, மின்சரப பணியா ளரிடமே இப்படி இலவசமாக வேலை செய்து தரும்படி யாராவது கேட்பார்களா? லை சென்ஸ் இல்லாத எழுத்தாளர்தானே, அது வும் புலம் பெயர்ந்து பொழுது போக்கிக் கொண்டு இருப்பவர். அவரிடம் என்னவும் 351,356, Tib.
எழுத்தாளருக்கு எப்படி வெற்றுத்தாள் எதிரியாகிறதோ, அப்படியே புலம் பெயர்ந்து வாழும் ஒருவருக்கு அவருடைய எழுத்து அடையாளம் பிரச்சினையாகிறது. அவர படைப் பது புலம்பெயர் இலக்கியமா அல்லது சாதா ரண இலக்கியமா என்ற விவாதம் அவர் எழுதி அது கம்பியூட்டரின் நினைவுக் கல னில் சேமிக்கப்படுமுன்னரே ஆரம்பமாகி விடுகிறது. கவிதை எழுதுபவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் முறை செயலபடுத்தப் படும்போது புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு அத்தாட்சி முத்திரையும் வழங்கினால் நல்லது. அப்பொழுது அவர்கள் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் என்பது நிச்சய மாகும். அந்த இலக்கியம் செறிவுட்டுவதா 356, D 963)LDuj6)Tib.
நன்றி : திண்ணை இணைய இதழ்
மல்லிகை மே 2008 & 66

கழுதங்கள்
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? மூத்த தோழர்கள் கவனத்தில் கொள்வதும், மூத்த தோழர்களை நாங்கள் கவனத்தில் கொள்வதும் ஒரு பேறல்லவா? தி. க. சி, கி. ரா, வ. க,- நீங்கள் என இப்படிச் சிலர் தான்! நீங்கள் வாழ்த்துகிறீர்கள். நாங்கள் வாழ்த்தப் பெறுகின் றோம்.
மல்லிகையில் அட்டைப்படம் இட்டு, இனிய நண்பர் ஜீவாவை எழுத வைத்து, அதிர்ச் சியடையச் செய்து விட்டீர்கள், 50- வது ஆண்டை நோக்கி நடக்கிறதே, அதுவே அதி சயந்தான். அதிசயங்களோடு மட்டுமல்ல, ஆக்கபூர்வ பணிகளை அடிப்படையாய் வைத்து நடக்கிறதே எல்லாமும் பாராட்டுக்குரியது.
ஏப்ரல் 29- ல் பாரிஸ், ஜெர்மனி, சுவிஸ் செல்கிறேன். சென்று விட்டுத் திரும்புகையில் அமெரிக்காவில் மகள் வீடு சென்று பார்த்துவிட்டுத் திரும்புகிறேன். லண்டன் செல்ல ( K விசா கிடைக்கவில்லை. வேறெந்த நாட்டிலும் இல்லாதபடி ( K வில் தான் விசாவுக்கு நொர நாட்டியம் பண்ணுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையாகிப் போனது.
நான் 2006 -ல் அமெரிக்கா சென்று திரும்பிய எனது கண்ணோட்டங்கள், அனுபவங்கள் "புதிய பார்வையில் தொடராக வெளிவந்தது. முடிந்து போன அமெரிக்கக் கற்பனைகள் என நூலாகத் தற்போது வெளியிடப்பட்டது. வாசிக்கவும், விமரிசிக்கவும் என நூலை அனுப்பி வைக்கிறேன்.
இந்தியா, பா. செயப்பிரகாசம்.
நீண்ட காலமாக நம் நாட்டில் ஒரு சாதனையாகத் தனித்து நின்று தங்குதடையின்றி, தரம் பேணி மல்லிகையை வெளியிட்டு வரும் தங்களை எத்துணை பாராட்டினாலும் தகும். வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
அண்மையில் மல்லிகை 43- வது ஆண்டு மலரை வாசித்த மன நிறைவுதான் இதனை எழுதத் தூண்டியது. படாடோபமின்றி வீட்டிலுள்ள அனைவரதும் கையில் படக் கூடியதாகப் படித்து விட்டுப் பேணிப் பாதுகாத்து வைக்கக் கூடியதாகத் தரமான ஆக்கங்களின் தொகுப் பாக அது மலர்ந்துள்ளது. கவர்ச்சியான வண்ண வண்ணப் படங்களின்றியும் தரமான மலர்களை வெளியிட முடியும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கிணங்க மலரில் இடம் பெற்றுள்ள 'மனிதம் இன்னும் மரித்திடவில்லை என்ற சிறுகதையை எடுத்துக் காட்டலாம். சந்தர்ப்பம்
மல்லிகை மே 2008 & 67

Page 36
சூழ்நிலைக்குப் பொருத்தமான அக்கதை யின் சிங்கள மொழி பெயர்ப்பு பிரபலமான சிங்கள வார வெளியீடொன்றில் பிரசுரமா னால் பயன் பன்மடங்காகும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
கஹட்டோவிட்ட, ஏ. ஆர். எம். ராஸிக்.
Dல்லிகை கைக்குக் கிடைத்ததும் நான் உடனே தூண்டில் பக்கத்தைத் தான் ஆவலுடன் படித்துப் பார்ப்பது வழக்கம்.
பொதுவாகவே இந்த மண்ணில் வெளி வரும் சஞ்சிகைகளுக்குப் பென்னாம் பெரி சான சங்கடங்கள் இடையிடையே ஏற்பட்டு விடுவது இயல்பானது. இத்தகைய இடர்க ளுக்கு மத்தியிலும், தொடர்ந்து நீங்கள் மல்லிகையை வெளியிட்டு வருவது அபார சாதனைக்ளில் ஒன்றாகும்.
யாழ்ப்பாண மண்ணிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த இதழ்களுக்கும் இன்று தலை நகரத்திலிருந்து வெளி வந்து கொண் டிருக்கும் இதழ்களுக்குமிடையே பாரிய வேறுபாடு தென்படுகின்றது. முன்னர் சரியோ, பிழையோ மல்லிகை ஒரு பிரதேசச் சஞ் சிகையாகவே மிளிர்ந்தது. ஆனால், இன்று அது ஒரு தேசிய இதழாகப் பரிணமித்துக் கொண்டு வருகின்றது. அதே சமயம் முழு நாட்டையும் பிரதிபலிக்கக் கூடியதாக அதனது உள்ளடக்கம் அமையவில்லை என்கின்ற குற்றச் சாட்டிலும் உண்மை இல்லாமலும் இல்லை.
இருந்தும், மல்லிகையை நாம் நேசிக்கின் றோம். காரணம் அது எங்கட சஞ்சிகையல் 66Jrt?
கொழும்பு-6. ச. ராஜேந்திரன்,
முன்னரைப் போல, மல்லிகை இதழ் மாதா மாதம் இங்கு புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. கேட்டால் ஏதோ ஏதோ காரணங்களும் சாட்டுக்களும் சொல்லு கின்றனர்.
சந்தாதாரர்களுக்குத் தான் இங்கு மல்லிகை கிடைப்பதாக வதந்தி. எம்மைப் போன்றவர்கள் கடந்த காலங்களில் மல்லி கையின் வளர்ச்சியில் காட்டி வந்த ஆர்வத் தால் இதழ்கள் தொடர்ந்து கிடைக்காமல் விக்கித்துப் போயுள்ளோம். ; :-
ஏதாவது இலக்கியப் புதினங்களை அறிய முயற்சித்தால், இங்கு வெளியாகும் தினசரிப் பத்திரிகைகளைப் பார்ப்பதுடன் எங்களது இலக்கிய ஆர்வம் மட்டுப்படுத்தப் பட்டு விடுகின்றது. இதற்கு என்ன செய்வ தென்றே ஒன்றும் புரியவில்லை.
அத்துடன் தரமான இலக்கிய நூல்க ளுக்கும் இங்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
எங்களைப் போன்ற ரஸிகர்களுக்கு மல்லிகை என்ன சொல்ல விரும்புகின்றது? நாங்கள் தான் கடந்த காலங்களில் ம்ல்லிகை போன்ற இலக்கியச் சிற்றேடு களை ஒழுங்காக வாங்கி வாசித்து ஆதரவு காட்டி வந்துள்ளோம். இன்று இந்தக் கதியா நமக்கு வரவேண்டும்?
நல்லூர், ம. அருள்நேசன்.
(பிற்குறிப்பு) இத்தனை ஆர்வமும் அக் கறையுமுள்ள இலக்கிய நேசர்கள் மல் லிகை ஒழுங்காகக் கிடைக்கச் சந்தா செலு
த்துவது தான் ஒரேயொரு வழியாகும்.
மல்லிகை மே 2008 & 68

- டொக்ேஜில்ா
p
மல்லிகையை இன்னும் கொஞ்சம் கவர்ச்சிப் பருத்தி வெளியிட்டால் என்ன?
நீர்வேலி. ச. சரவணன்.
* மல்லிகை என்ற பெயர் இதழுக்குச் சூட்டப்பட்ட நோக்கமே அதன் எளிமையான தூய கவர்ச்சிதான். நீங்கள் அதை ரோஜாவாக ஆக்க நினைக்கிறீர்கள். அதன் உள்ளடக்கத்தை இன்னும் இன்னும் செழுமைப்படுத்தினால் என்ன? என்ற கேள்வி நியாயமானது. சரியானது. அதை விட்டு விட்டு, அதைக் கவர்ச்சிப் படுத்துவதே மல்லிகை என்ற அதன் பெயரைக் கொச்சைப் படுத்துவதற்கு ஒப்பானதாகும்.
?
! உங்களது இளமைத் துடிப்பைக் கண்டு கண்டு நான் ஆச்சரியப்படுவதுண்டு. அதன்
உண்மை இரகசியம் என்ன?
வத்தளை. ஆர். சிவநாதன்.
23 சதா இலக்கியச் சிந்தனை. ஆரோக்கியமான நண்பர்களின் தொடர்பு.
p இந்த வயசிலேயே இப்படியென்றால், உங்களது இளமைக் கால வயசில் எப்படி இருந்திருப்பீர்கள்? என நான் எனக்குள்ளேயே உங்களைப் பற்றி நினைச்சு ஆச்சரியப்பருவ துண்டு. உங்களது இளமைக் காலக் குறும்புத் தனங்களில் ஒன்றை எடுத்து விடுங்களேன், LIIIf f(3L. If
புத்தளம். த. ரஞ்சகுமார்.
2இளம் வயதுக் காலத்தில் நான் உறுப்பினராக இருந்த அரசியல் இயக்கத்தின்
மல்லிகை மே 2008 & 69

Page 37
சுவரொட்டிகளை எங்களில் சிலர் இரவு இரவாக வீதியெங்கும் ஒட்டி வரப் பழக்கப்படுத்திக் கொண்டோம்.
ஒருநாள் நடுச் சாமIருக்கும் சுவ ரொட்டி, பசை வாளியுடன் நாம் மூவர் வந்து கொண்டிருந்த சமயம், வீதியை ஒட்டிய ஒரு ஒலை வீட்டில் விளக்கெரிந்து கொண் டிருந்தது தெரிந்தது. கணவன், மனைவி பேசிக் கொண்டிருந்ததும் மெல்ல மெல் லக் கேட்டது.
வீட்டருகே தகரப் படலை, சைக்கிளை ஒரு ஒரமாக நிறுத்தி விட்டு நான் மாத்தி ரம் படலையை நெருங்கி, மூன்று தடவை கள் படலையை ஓங்கித் தட்டினேன். “வீட் டுக்காரர். வீட்டுக்காரர். வீட்டுக்காரர்!” எனக் களைப்புக் குரலில் அடித் தொண்டை யால் குரல் கொடுத்தேன். “கொஞ்சம் கண் ணாம்பு தாஹீங்களா?. கொஞ்சம் சுண் ணாம்பு தாநீங்களா?. கொஞ்சம் சுண் ணாம்பு தாறிங்களா?...' என நடுங்கும் கேவல் குரலில் குரல் கொடுத்தேன். அடு த்த விநாடி கப்சிப் குரல்கள் ஓய்ந்து விட் டன. விளக்கும் அணைக்கப்பட்டது.
சிமிக்கிடாமல், ஒசைப்படாமல் சைக் கிளை எடுத்துக் கொண்டு நண்பர்களு டன் புறப்பட்டு விட்டேன்.
நடுச்சாமத்தில் வந்து சுண்ணாம்பு கேட்ட பேயைப் பற்றித்தானே அடுத்த நாள் அந்த அயல் முழுக்கப் பேச்சாக இருந் திருக்கும். இதை நினைத்து இப்பொழு தும் சிரித்துக் கொள்வதுண்டு, நான். எனது சுய வரலாற்றில் இப்படி எத்தனையே வய சுச் சேட்டைகள் பற்றிப் பதிவு செய்துள் G36T66.
எனது இளந்தாரி வயசுக் காலத்துக் குறும்புத் தனங்களைத் தொகுத்தாலே ஒரு நூலாக வெளியிட்டு விடலாம். இத்தனைக்கும் எனது வயசுக்காலக் குறும்புத் தனங்களால் நான் யாரையுமே புண்படுத்தவில்லை. அதில் நான் வெகு கவனமாகவே இருந்துள்ளேன்.
p
ரித்து வருகின்றனரா? அதன் பொருளா
மல்லிகைக்குச் சந்தாதாரர்கள் அதிக
5:IIũ LHSoff} 6T6ör6ơT?
வெள்ளவத்தை, ஆர். அகிலன்
2 சந்தாதாரர்கள் மாத்திரமல்ல, அபிமானிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். உண்மையைச் சொல்லப் போனால், சந்தாதாரர்களின் பெருக்கத் தினால் மாத்திரம் சிற்றேடு ஒன்று நீண்ட காலம் உயிர் தரித்து நின்று நிலைத்து விட இயலாது. இது யதார்த்த உண்மை. அச் சிற்றேட்டை நெஞ்சார நேசிக்கும் இலக்கிய நண்பர்களின் நெஞ்சார்ந்த அன்பளிப்புக்கள் தான் அதன் தொடர் வரவுக்கு அடி அத்திவாரப் பசளையா கும். நீங்கள் நம்பமாட்டீர்கள். எத்த னையோ இலக்கிய நெஞ்சங்கள் என் னைச் சந்திக்கும் வேளைகளில் வெகு பவ்வியமாக என் கைக்குள் பொத்தியபடி திணித்து விட்டுப் போகும் பொருளாதார உதவிதான் மல்லிகையின் இந்த 43 வருட வரலாறேயாகும். மல்லிகைக் கென்றே ஒரு வரலாறு எதிர்காலத்தில் எழுத வேண்டும். பொறுத்திருங்கள். ஐம்பதாவது ஆண்டு மலர் வெளிவரட்டும்
மல்லிகை மே 2008 ஜ் 70

? இலக்கிய உலகில் உண்மையான நண்பர்கள் இருக்கின்றார்களா? எனக்கென் னமோசந்தேகமாகத்தான் இருக்கிறது. தங் களது இருப்புக்கும் குறுக்கு வழிப் புகழுக்கும் கொஞ்சக் காலம் நண்பர்களாகப் பாவலாக் காட்டும் இலக்கிய நேசர்கள் சந்தர்ப்பங் களை நன்கு பயன்படுத்திய பின்னர், தங்க ளது இயல்பான குணத்தைக் காட்டி விடுகின் றனரே, இதற்கென்ன சொல்லுகிறீர்கள்?
வவுனியா. ஆர். மகாதேவன்.
* இலக்கிய உலகில் மாத்திரமல்ல, சகல துறைகளிலுமே இப்படியானவர் கள் ஊடுருவித்தான் இருப்பார்கள். இதில் நாம் வெகு கூர்மையாக, அக்கறையாக இருந்து இனங்கண்டு கொள்ள வேண்டும். ஆனால், ஒன்று. என்னதான் கெட்டிக் காரர்களாக இருந்தாலும், முடிவில் இவர் களது சுயபிம்பத்தைத் தரமான இலக்கி யக்காரன் கண்டு பிடித்து விடுவான். இது சர்வ நிச்சயம்!
p
ஆழமான கேள்விகள் அடிக்கடி வந்து சேருகின்றனவா?
‘தூண்டில் கேள்வி. பதில் பகுதிக்கு
கண்டி, எஸ். ஈஸ்வரன்.
2 உயர் கல்வி மாணவர்கள், தரமான இலக்கியச் சுவைஞர்களிடமிருந்து தூண்டி லுக்குக் கேள்விகள் வந்து சேரும் என எதிர்பார்த்தேன். வரும் கேள்விகளில் அநே கம் வெறும் சினிமா சம்பந்தமாகத் தான் அதிகம் கேட்கப்படுகின்றன. எனவே, அக் கேள்விகளை ஒதுக்க வேண்டி ஏற்பட்டு
வருகின்றது. எனவே, தரமான, தேடல் மிக்கக் கேள்விகளைத் தூண்டிலுக்குக் கேட்டு வைப்பது சுவைஞர்களது இலக்கி யக் கடமைகளில் ஒன்றாகும். கேள்விக ளைக் கட்டுரையாக்காதீர்கள். அஞ்சலட் டையில் கேள்விகளை எழுதுவது விரும்பத் தக்கது.
p எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இன்று வரையும் பழைய நட்பைப் பேணி வருகின்
ர்களா?
கொழும்பு- 15, அ. அழகேசன்.
* எங்களது நட்பு சரஸ்வதி காலத்தைய நட்பு. அது ஒர் இலக்கிய நட்பு. ஒருவர் நல த்தை ஒருவர் விசாரித்துக் கொள்வோம். அவர், நோய்வாய்ப் பட்டிருந்த சமயம் நண்பர் அந்தனி ஜீவா சென்னைக்குச் சென்றிருந்த வேளை, அவரைச் சந்தித்து சுகம் விசாரிக்கச் சென்ற சமயம் நண்பர் ஜெயகாந்தன் எனது சுகசேமத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டார். அதன் பின்னர், அவுஸ்திரேலியாவில் வாழும் முருகபூபதி தமிழகம் வந்திருந்த சமயம் அவரை நேரில் சந்தித்த வேளையில் “என்னை விட, ஜீவாவுக்கு வயது அதிகமி ருக்குமே!’ எனக் கேட்டு வியப்படைந் துள்ளார்.
சமீபத்தில் நண்பர் செ. கணேசலிங் கன் கொழும்பு வந்திருந்த சமயம் மல் லிகை 43- வது ஆண்டு மலரை அவரி டம் சேர்ப்பிக்கும் வண்ணம் கொடுத்தனுப் பியிருந்தேன். பிரபலம் எங்களது பாரிய நட்புக்கு இடையூறு செய்ததேயில்லை.
மல்லிகை மே 2008 ஜ் 71

Page 38
மல்லிகை மே 2008 ஜ் 72
p உண்மையைச் சொல்லுங்கள். வயது 30க்கு மேலாகி விட்டது. மூப்புத் தொடர ஆரம்பித்து விட்டது. அதனால், உங்களது ஞாபக சக்தி, சிந்திக்கும் திறன் பாதிக்கப் பட்டுள்ளதாகச் சிறிதளவாவது உங்களது இன்றைய தினசரி வாழ்வில் உணருகிறீர் கarr?
நல்லூர் ஆர். குணநாதன். * இன்றும் எனது சிந்தனை ஒட்டத் தில் தடங்கல் ஏற்பட்டதேயில்லை. என் மேடைப் பேச்சைக் கேட்டவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள். கணிர் என்ற குர லில் வயதுக்கு மீறிய துடிப்புடன் தான் எனது உரை தொடரும்.
ஆனால், ஞாபகசக்தி இடையிடையே தடம் டிரண்டு விடுகின்றது. சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சி அதற்கோர் உதார ணம். ஆத்ம நண்பர் ஒருவரின் திருமண த்திற்குப போக நான் மறந்து விட்டேன். அவர் என்னுடன் கோபித்துக் கொண்டார்.
p
கள் கொஞ்சம் பிரபலப்பட்டவுடன், பென்னாம்
வளர்ந்து வரும் இன்றைய எழுத்தாளர்
பெரிசாகக் கதையடிக்கின்றனரே, இவரிக ளைப் பற்றிய உங்களது கணிப்பு என்ன?
கல்முனை. ஆர். சுகுமாரன்.
23. இந்த வாய்ச் சவடால் ஒரு நோய்க் கூறு. இப்படியானவர்களைப் பற்றி நீங் கள் கவனத்தில் கொள்ளக் கூடாது. நின்று, நிலைத்து எதிர்காலத்தில் சிறகு விரிக்கப் போகின்றவனை அவனது முக பாவத்திலிருந்தே கணித்து விடலாம். ஏனையோரைப் பற்றி, ஏன் கவனத்தில் கொள்ளுகின்றீர்கள்?
?
வர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
உங்களை அடிக்கடி நொட்டை செ
ஜாஎல. ரீ. கணே
* உங்களுக்கு ஒர் உண்மை தெரியு இப்படியானவர்கள் தான் மல்லிகைt தும் எனதும் விளம்பரப் பலகை நன்றாக நடக்கட்டும் குதர்க்கக் கச்ே
p
பிரபலம் ஒர் இடைஞ்சல்" என்ற உங்க கட்டுரைக் கருத்துக்கள் பந்தாவாகத் 6 கின்றதே, இது முற்பாக்கு எழுத்தாளனு bi Töf5f5f5 DIT JT3bi T?
6f 6f 08 6ò3b5ð “ờru 55.Tf3ffă
தர்கா நகர். கே. பி , ஷர்மில்
2 ஒன்றை நீங்கள் புரிந்து கொள் வேண்டும். நான் வானத்திலிருந்து ரெனத் தோன்றிய தேவதூதனல்ல. ர மும், சதையும்,உணர்வுகளையும் கொன உங்களைப் போன்ற மனிதப் பிறவி த நானும், அத்துடன் ஒரு படைப்பாளி: ! சிகை ஆசிரியன். எனவே, எனது வ வின் சகல பரிமாணங்களையும், நிகழ் களையும் எதிர்காலச் சந்ததிக்காக நா எழுத்தில் பதிவு செய்து வைக்க வே டிய தேவை.
அத்துடன் எனது அநுபவங்கை எழுத்தில் வடிக்கும் போது, அது பல க்கு ஒர் அநுபவமுமாகக் கூட இரு லாம். எழுத்தாளன் என்பவன் தேவது 6016სნს!
உங்களுக்கு ஒன்று சொல்லட்டும என்னை ஊக்குவித்து உற்சாகாப்படுத் வற்கு கூட, எனது எழுத்துக்களை, க துக்களை ஊக்க மாத்திரயைாகப் பu படுத்தி வருகின்றேன். ஒரு படைப்பா யின் பூரண உருவத்தைத் தெரி கொள்ள அவனது அநுபவங்களையும் ெ ந்து கொள்வது தான் சிறந்த மார்க்க
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103 இலக்கத்திலுள்ள U.K. அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

ரு
「@
r?
IV ji Ju bepd at (
PLASTICCARDS, SCRATCH CARDS, MASTER CARDS, MEMBERSHIP CARDS, OFFICE DENTITY CARD
OUR PRODUCT
DATABASE PRINTING BROCHURES, CATALOGUESSOUVENIRS, BOOKMARKS, GREETING CARDS, NAMETAGS, CD/DVD COVERSCOLOUR BODATA, STICKERS INVITATION CARDS, PROJECTREPORTSBOOK COVER MENUCARDS, GARMENT TAGS, THANKING CARDSCERTIFICATES, BOOKSPOSTERS, CD STOMMER,
RANSPARN (TY SHEET. PASTO (ARIOS, SCRACH CARUS, VISTING (TARDS.
(OHAPPY DIGITAL CENTRE(Pvt)Ltd.
Digital Colour Lab g Digital offset Press
No. 75 7/1. Sri Sananalis sa Mawatha, Colombo. 12, Tel +94 17 4937336, +94 114879566
web. www.happy digitalcentre.com e-mail happydigitalputitdoyahoo.com

Page 39
Malika
سمير URgsh
(Bangles, Chain 'Ear Tops, Guaran
感 =ー。
) ~
Salmaan
"Santhosi Pa
* 1st Fl *ές ε 229-1714, M. A Colomb
Te: O11 : HCIt Lille D7
 

May 2008
ܐܫܠܬ
JEWELLERIES
s, Wecklaces, teed Items Etc.
རྣལ་ནི་། ། ፳፰፻ኳኙm°
*్ళ"
Trading za Complex' Oor, a in Street, 0 - 11. 23545-1 2 7 666 1336