கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மார்க்சீயமும் பெண்ணிலைவாதமும்

Page 1

·:| No
| :
||-
“
|lis). |-

Page 2

மார்க்சீயமும் பெண்நிலைவாதமும்: மிக முற்போக்கான ஒரு கூட்டிணைவை நோக்கி.
ஹெய்டி ஹார்ட்மன் தமிழாக்கம் : மெள.சித்திரலேகா
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் LDL Lidbdb6|TL

Page 3
தலைப்பு
முதற்பதிப்பு
வெளியீடு
அட்டைவடிவமைப்பு
அச்சகம்
6.விலை
மார்க்சீயமும் பெண்நிலைவாதமும
மிக முற்போக்கான ஒரு கூட்டிணை ைநோக்கி ஹெய்டி ஹார்ட்மன்
Translation of The Unhappy Marrige between Marxism and Feminism : Towards a
Progressive Union by Heidi Hartman.
ஜனவரி 1999
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
46/2, பழைய வாடி வீட்டு வீதி
மட்டக்களப்பு.
சூரியா கலாசாரக்குழு
நியூ கார்த்திகேயன் அச்சகம் - கொழும்பு
60/

மார்க்சீயமும் பெண்நிலைவாதமும்: மிக முற்போக்கான ஒரு கூட்டிணைவை நோக்கி.
ஹெய்டி ஹார்ட்மன் தமிழாக்கம் : மெள.சித்திரலேகா
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் LDL Ldb56 TEL

Page 4
தலைப்பு
முதற்பதிப்பு
அட்டைவடிவமைப்பு
அச்சகம்
6.விலை
மார்க்சீயமும் பெண்நிலைவாதமும் :
மிக முற்போக்கான ஒரு கூட்டிணை ைநோக்கி ஹெய்டி ஹார்ட்மன்
Translation of The Unhappy Marrige between Marxism and Feminism : Towards a
Progressive Union by Heidi Hartman.
ஜனவரி 1999
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
46/2, பழைய வாடி வீட்டு வீதி
LDLLdbó56TTLL.
சூரியா கலாசாரக்குழு
நியூ கார்த்திகேயன் அச்சகம் - கொழும்பு
60/.

முகவுரை
பெண்நிலைவாதம் பற்றிய அக்கறை எமது சமூகத்தில் பல மட்டங்களிலும் , அதிகரித்து வருகின்ற இக்கால கட்டத்தில் இது பற்றிய சிந்தனாபூர்வமான விவாதங்கள் எழுவது தவிர்க்க முடியாததாகும். பெண்கள் மீதான ஒடுக்கு முறை, அவற்றுக்கான காரணங்கள், அவற்றை அணுக வேண்டிய முறைமைகள், பெண் விடுதலை என்ற கருதுகோளின் பரிமாணங்கள் ஆகியவை பற்றிப் பல்வேறு விவாதங்கள் சர்வதேச மட்டத்தில்
நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக பெண்கள் ஒடுக்குமுறை பற்றிய மார்க்சீய விளக்கத்திற்கும், பெண்நிலைவாத விளக்கத்திற்குமிடையிலுள்ள வேறுபாடுகளும் இவை
தொடர்பாக எழுந்த விவாதங்களும் மிக முக்கியமானவை.
பெண்நிலைவாதம் தொடர்பான அறிவுபூர்வமான சர்ச்சைகளையும், விவாதங்களையும் தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம் பரந்த வாசகர் வட்டத்திற்கு இவற்றை அறிமுகப்படுத்தலாம் என எண்ணுகிறோம். எமது சமூகத்தில் கருத்துகளைத் தூண்டுவதற்கு இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் காலாக அமையும் என எண்ணியே பொருளியல் அறிஞரும் பெண்நிலைவாதியுமான ஹெய்டி ஹார்ட்மன் எழுதிய இம் முக்கியமான
கட்டுரையைத் தமிழில் பிரசுரிக்கிறோம்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
Di Löö56IIIt ஜனவரி - 1999

Page 5
மார்க்சியமும் பெண்நீ மிக முற்போக்கான ஒரு கூ
மார்க்ஸிசத்திற்கும் பெண்நிலைவ ஆங்கிலப் பொதுச் சட்டத்தில் விபரிக் திருமணம் போன்றதாகும். அதாவது ஒன்று. அந்த ஒன்று மார்க்ஸிசமாகும் தையும் பெண்நிலைவாதத்தையும் இ எமக்கு அதிருப்தி தருவனவாக உள் போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு உள்ளடக்குவனவாக அந்த முயற் பயன்படுத்திய "திருமணம்" என்ற உவ தாயின் ஆரோக்கியமான திருமண அல்லது எமக்கு ஒரு விவாகரத்தே அ
பெரும்பாலான சமூக சமத்துவங்க காணப்படும் அசமத்துவங்கள் தற்செய கள் பெண்நிலைவாதமானது வர்க்க தெனவும், அதன் மோசமான நிலை பிளவுபடுத்துவது எனவும் வாதிடுவர். பெண்நிலைவாதத்தை வர்க் கப்பே பகுப்பாய்வுக்கு இட்டுச் செல்கின்றது மூலதனத்திற்கு முக்கியத்துவம் அ பால்வாதம் பற்றிய அதன் வரையறை மார்க்ஸிச ஆய்வானது வரலாற்று அ சிறப்பாக மூலதனம் குறித்து மிக அத் (insight) வழங்கியுள்ள போதிலும் அதனு குருட்டுத்தன்மை கொண்டனவாகவே சுட்டிப்பான பெண்நிலைவாத ஆய்வுமு குமிடையிலான அமைப்புரீதியான கு முடியும். எனினும் பெண்ணிலைவாத ளுவதும் குறைபாடானதாகும். ஏனெ6 கொண்டதாகவும் போதுமான அளவு அற்றதாகவும் உள்ளது. மார்க்ஸிச அ பொருள் முதல்வாத முறையியலும், !

லைவாதமும்: ட்டிணைவை நோக்கி.
ாதத்திற்குமிடையிலான "இணைப்பு" கப்பட்டிருக்கும் கணவன் மனைவி மார்க்ஸிசமும் பெண்நிலைவாதமும் எனக் கருதுவதாகும். மார்க்ஸிசத்இணைக்கும் சமீபகால முயற்சிகள் ளன. ஏனெனில் பெண் நிலைவாதப் கு எதிரான "பெரிய" போராட்டத்துள் சிகள் இருக்கின்றன. இங்கு நாம் மையைத் தொடர்ந்து பயன்படுத்துவம் ஒன்று எமக்குத் தேவையானது வசியமானது என்று கூறலாம்.
ளைப் போலவே இத் "திருமணத்தில்" லானவையல்ல. பல மார்க்ஸிசவாதி
முரண்பாட்டை விட முக்கியமற்றயில் தொழிலாளர் வர்க்கத்தைப்
இத்தகைய அரசியல் நிலைப்பாடு ாராட்டத்துள் உட்படுத்தும் ஒரு து. மேலும் மார்க்ஸிசத்தினுடைய, |ளிக்கும் ஆய்வு முறைமையானது களைத் தெளிவற்றதாக்கியுள்ளது. பிவிருத்தியின் சட்டங்கள் குறித்து, தியாவசியமான ஆழ்ந்த பார்வையை னுடைய வகைப்பாடுகளானவை பால்உள்ளன என நாம் கூறுகின்றோம். றை மூலமே ஆணுக்கும், பெண்ணுக்ணாம்ச உறவுகளை வெளிக்காட்ட ந ஆய்வை மாத்திரம் மேற்கொள்வில் அது வரலாற்றுக்குருட்டுத்தனம் பொருள் முதல் சிந்தனைத்தன்மை பூய்வும் குறிப்பாக அதன் வரலாற்றுப் பெண்நிலைவாத ஆய்வும் குறிப்பாக

Page 6
ஆணாதிக்க முறைமையை வரலாற்று, சமூக அமைப்பாக இனங்காணும் முறையும் ஆகிய இரண்டும் இணைக்கப்படும்போதே மேற்கு முதலாளித்துவ சமூகங்களின் வளர்ச்சி பற்றியும், அச்சமூகங்களில் பெண்களின் சிக்கலான நிலைமை பற்றியும் விளங்கிக் கொள்ள முடியும். இக்கட்டுரையில் மார்க்ஸிச பெண் நிலைவாத ஆய்வில் ஒரு புதிய திசையை முன்வைக்கிறோம்.
இக்கட்டுரையின் முதலாவது பகுதி "பெண்கள் பிரச்சினை" குறித்த பல மார்க்ஸிச அணுகுமுறைகளைப் பரிசீலிக்கிறது. இரண்டாவது பகுதியில் தீவிரவாதப் பெண் நிலைவாதிகளின் கருத்துக்களை ஆராய்கிறோம். இக்கருத்துக்களில் ஆணாதிக்க வழிமுறைமை பற்றிய வரைவிலக்கணங்களின் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பின் எமது கருத்துக்களை முன்வைக்கிறோம். மூன்றாவது பகுதியில் மார்க்ஸிசம், பெண்நிலைவாதம் ஆகிய தத்துவங்களின் வலுவான கோட்பாடுகளைப் பயன்படுத் தி முதலாளித்துவ சமூகங்களின் வளர்ச்சி பற்றியும், பெண்களது தற்போதைய நிலை பற்றியும் சில கருத்துக்களைக் கூறுகிறோம். மார்க்ஸிச முறையியலைப் பயன்படுத்தி சமீபகால சோசலிஸ பெண்நிலைவாத ஆய்வுகளிற் காணப்படும் சமச்சீரற்ற நிலையைத் திருத்தி, பெண்நிலைவாதக் குறிக்கோள்களைப் பகுத்தராய முயல்கின்றோம். ஆணாதிக்க முறைமை என்பது வெறுமனே ஒரு உளவியல் அம்சம் மாத்திரமல்ல, ஆனால் அது சமூக அரசியல் அமைப்பும் ஆகும் எனப் பொருள் முதல்வாத ஆய்வு விபரிக்கிறது என்றும் நாம் வாதிடுகிறோம். எமது சமூகமானது முதலாளித்துவ அடிப்படையிலும், ஆணாதிக்க முறைமை அடிப்படையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதை உணரும்போதுதான் எமது சமூகத்தை நாம் நன்கு விளங்கிக்கொள்ள இயலும். முதலாளித்துவ நலன்களுக்கும், ஆணாதிக்க முறைமை நலன்களுக்கும் இடையே முறுகல் நிலை உள்ள அதேவேளை மூலதனக்குவிவானது ஆணாதிக்க முறைமையை ஏற்றுக்கொள்வது மாத்திரமன்றி அது நீடித்து நிலைக்கவும் உதவுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பால்வாதக் கருத்து நிலையானது முதலாளித்துவ வடிவத்தை தற்காலத்தில் பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிடுகிறோம். சுருக்கமாகக் கூறுவதாயின் முதலாளித்துவத்திற்கும் ஆணாதிக்க முறைக்கும் இடையில் ஒரு இணைப்பு வளர்ந்துள்ளது.
இறுதியாக நான்காவது பகுதியில் மார்க்ஸிசத்தினதும் பெண் நிலைவாதத்தினதும் அரசியல் உறவுகளானவை பெண்கள் பிரச்சினையை இடதுசாரிகள் விளங்கிக் கொள்ளும்போது பெண்நிலைவாதத்தை விட மார்க்ஸிசத்திற்கு முதன்மை அளிப்பதற்குக் காரணமாயுள்ளன என

வாதிடுகிறோம். எனவே மார்க்ஸிசம் பெண்நிலைவாதம் ஆகியவற்றின் முற்போக்கான, திருப்திகரமான இணைப்புக்கு வர்க்கம், பால் ஆகியவற்றுக்கிடையிலான உறவுகளைத் திருந்திய ஆய்வறிவு முறையில் விளங்கிக் கொள்வது மாத்திரமன்றி, இடதுசாரி அரசியலில் ஆதிக்கக் குணாம்சத்துக்குப் பதிலாக கூட்டுறவும் தேவை என்பதைக் கூறிவைக்க விரும்புகிறோம்.
மார்க்ஸிசமும் பெண்கள் பிரச்சினையும்:
பெண்நிலைவாதமானது ஆண் பெண்ணுக்கு இடையிலான பால் அசமத்துவம் குறித்தும், ஆண் மேலாதிக்கம் குறித்தும் அதிக அக்கறை செலுத்துகிறது. ஆனால் பெரும்பாலான மார்க்ஸிச ஆய்வுகள், பெண்கள் பிரச்சினையை ஆணாதிக்கத்துடன் தொடர்புடையதாகவன்றி பொருளாதார அமைப்புக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உறவாகவே நோக்குகின்றன. பெண்கள் பற்றிய மார்க்ஸிச ஆய்வானது மூன்று முக்கிய வடிவங்களைப் பெற்றுள்ளது. பெண் ஒடுக்குமுறையை உற்பத்திக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்பில் தங்கியிருப்பதாய் கருதுகின்றன. பெண்களைத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக வரைவிலக்கணம்செய்யும் இத்தகைய ஆய்வு முறை, முதலுக்கும் தொழிலாளருக்கும் இடையிலான உறவுக்குள் ஆண் பெண்ணுக் கிடையிலான உறவை உள்ளடக்கி விடுகிறது. முதலாவதாக மார்க்ஸ், ஏங்கல்ஸ், கெளட்ஸ்கி, லெனின் உட்பட ஆரம்ப கால மார்க்ஸிஸ்டுகள் முதலாளித்துவமானது சகல பெண்களையும் கூலி உழைப்பாளர் படையில் சேர்க்கிறது எனவும், இவ்வாறு சேரும் நிகழ்ச்சிப் போக்கில் பால் அடிப்படையிலமைந்த வேலைப் பிரிவினை ஒழிந்து விடும் எனவும் கருதினர். இரண்டாவதாக, சமகால மார்க்ஸிசவாதிகள் முதலாளித்துவத்தின் நாளாந்த வாழ்க்கை பற்றிய ஆய்வுக்குள் பெண்கள் பற்றிய அக்கறையையும் இணைத்துள்ளனர். இத்தகைய ஒரு நோக்கில் எமது வாழ்வின் சகல அம்சங்களும் முதலாளித்துவ முறைமையை மீள் உருவாக்கம் செய்வதாகவும், நாம் யாவரும் இம் முறைமையின் தொழிலாளராகவும் கொள்ளப்படுகிறோம். மூன்றாவதாக மார்க்ஸிசப் பெண்நிலைவாதிகள் வீட்டு வேலை பற்றியும் அதற்கும் முதலுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் அதிக அக்கறை காட்டுகின்றனர். வீட்டுவேலை உபரியை உற்பத்தி செய்கிறது எனவும், வீட்டு வேலையில் ஈடுபடுவோர் முதலாளித்துவவாதிகட்கு உழைப்பதாகவும் சிலர் வாதிடுகின்றனர். இம்மூன்று அணுகுமுறைகள் குறித்தும் நாம் பரிசீலிப்போம்.
ஏங்கல்ஸ், "குடும்பம், தனிச் சொத்துடமை, அரசு ஆகியவற்றின்

Page 7
தோற்றம்" என்ற தமது நூலில், பெண்களது தாழ்த்தப்பட்ட நிலைமையை தனிச்சொத்துடமையின் விளைவாகக் காட்டினார். பூர்ஷவாக் குடும்பங்களில் பெண்கள், தமது எசமானர்களுக்குச் சேவகம் செய்து, ஒரு புருஷமண ஒழுக்கத்தைப் பேணி, குடும் பத்தின் சொத்துக்களைத் தொடர்ந்து பெருக்கும் வாரிசுகளைப் பெறவும் வேண்டியவரானார்கள். ஆனால் தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களில் தனிச் சொத்துடமை இன்மையால் பெண்கள் ஒடுக்கப்படவில்லை என ஏங்கல்ஸ் வாதிட்டார். கூலி உழைப்பின் விருத்தியானது சிறு நில உடமை விவசாயிகளை இல்லாதொழித்து, பெண்களையும் பிள்ளைகளையும் கூலித் தொழிலாளர் படையில் ஆண்களுடன் சேர்த்துக் கொண்டது. இது குடும்பத் தலைவனாகிய ஆணினது அதிகாரத்தைக் குறைத்து ஆணாதிக்க உறவுகளையும் ஒழித்துவிட்டது என ஏங்கல்ஸ் மேலும் கூறினார்.
எனவே ஏங்கல்ஸின் கருத்துப்படி பெண்கள் தொழிலாளராக மாறுவது அவர்களது விடுதலையின் திறவுகோலாகும். முதலாளித்துவம் பால் வேறுபாடுகளை ஒழித்து சகல தொழிலாளர்களையும் சமமாக நடத்தும் என்று அவர் கூறினார். பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமானவர்களாக மாறுவர். தொழிலாளர் புரட்சியை ஏற்படுத்துவதில் ஆண்களுடன் அவர்களும் சரிநிகராகப் பங்கு பற்றுவார்கள் எனவும் கூறினார். புரட்சிக்குப் பின்னர் சகல மனிதரும் தொழிலாளர்களாக இருப்பர் தனிச் சொத்துடமை ஒழிந்துவிடும் , பெண்கள் மூலதனம், ஆண்கள் ஆகியவற்றிலிருந்து சுதந்திரம் பெறுவர் என்றும் கூறினார். பெண்கள் தொழிலாளராக மாறுவதால் அவர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஏற்படும் சிரமங்கள் பற்றியும் மார்க்ஸிச வாதிகள் உணர்ந்திருந்தனர். இதனால் பெண்கள் இரு வேலைகளை - வீட்டு வேலையையும் கூலி உழைப்பையும் ஒரு சேர மேற்கொள்ளவேண்டியவராகினர். எனினும் பெண்கள் தொடர்ந்தும் வீட்டில் தாழ்த்தப்பட்ட நிலைமையில் இருப்பது குறித்து அதிக அக்கறை காட்டாமல் ஆணாதிக்க முறைமை உறவுகளில் "உடைவு" ஏற்படச் செய்யும் முதலாளித்துவத்தின் முற்போக்குக் குணாம்சத்திற்கே மார்க்ஸிசவாதிகள் முக்கியத்துவம் அளித்தனர். சோசலிஸச் சமூக முறையில் வீட்டு வேலைகள் அனைத்தும் கூட்டுழைப்பாக மாறும். பெண்கள் தமது இரட்டைச்சுமையிலிருந்து விடுபடுவர் எனவும் இவர்கள் கருதினர்.
இத்தகைய முதலாவது மார்க் ஸிச அணுகுமுறையின் அரசியல் தாற்பரியம் மிகத் தெளிவானது. முதலாவதாக ஆண் களைப் போல பெண்களும் கூலித் தொழிலாளராக உருவாவதும், இரண்டாவதாக

முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் ஆண்களுடன் இணைந்து கொள்வதும் பெண் விடுதலைக்கான தேவைகள் என்ற கருத்து இதுவாகும். பொதுவாகத் தொழிலாளர் மீதான சுரண்டலுக்கு மூலதனம் காரணமாயிருப்பது போல பெண்களது விசேடமான ஒடுக்குமுறைக்கு மூலதனமும் தனிச்சொத்துடமையும் காரணமாயுள்ளன என ஆரம்பகால மார்க்ஸிசவாதிகள் வாதிட்டனர்.
தமது காலத்தில் பெண்களுடைய மோசமான நிலைமை குறித்து உணர்ந்திருந்த போதிலும் ஆரம்ப கால மார்க்ஸிசவாதிகள் முதலாளித்துவத்தின் கீழ் ஆண், பெண்ணுடைய அனுபவ வேறுபாடுகள் குறித்துக் கருத்துச் செலுத்தத் தவறி விட்டனர். எப்படி எவ்வாறு பெண்கள், பெண்கள் என்ற வகையில் ஒடுக்கப்படுகின்றனர் என்ற பெண்நிலைவாத வினாவை எழுப்ப அவர்கள் தவறிவிட்டனர். பெண்கள் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதில் ஆண்களுக்கு நிலையான நலன்கள் உள்ளமை பற்றியும் உணரத்தவறிவிட்டனர். நாம் பின்னால் மூன்றாவது பகுதியில் கூறுவது போல ஆண்கள் வீட்டு வேலையில் ஈடுபடாமலிருப்பது, அவர்களுக்காக அவர்களது மனைவியர் அல்லது புதல் வியர் சேவை செய்வது, அவர்களுக்கு உழைப்புச் சந்தையில் சிறந்த இடத்தைப் பெறும் நன்மையைத் தருகிறது. ஆணாதிக்க முறை உறவுகள், காலத்துக்கொவ்வாதவையாக முதலாளித்துவ காலகட்டத்தில் ஆகிவிடும் என ஆரம்பகால மார்க் ஸிஸ்டுகள் குறிப்பிட்டது போலன்றி அவை தொடர்ந்திருந்தது மாத்திரமல்லாது மூலதனத்துடன் இணைந்தும் செயற்பட்டன. மூலதனமும் தனிச்சொத்துடமையும் மாத்திரம் பெண்கள் ஒடுக்கப்படுவதற்குக் காரணமாகாததால் அவற்றின் அழிவு பெண் ஒடுக்குமுறை ஒழிவதற்கும் காரணமாகாது.
தற்போது பிரபலமாயுள்ள இரண்டாவது மார்க்ஸிச அணுகுமுறையானது எலி ஷரட்ஸ்கியின் 'சோசலிஸப் புரட்சி" என்ற சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரைத் தொடரில் காணப்படும் கருத்தோட்டமாகும். பெண் நிலைவாத ஆய்வுகளுடன் ஒத்துப்போகும் அதேநேரம், பால்வாதம் (sexism) என்பது முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு புது அம்சம் அல்ல என்றும் ஆனால் அதன் தற்போதைய வடிவம் முதலாளித்துவத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார். முதலாளித்துவத்தின் கீழ் ஆண், பெண் அனுபவ வேறுபாடுகள் குறித்து ஷரட்ஸ்கி முனைப்பான அக்கறை காட்டுகிறார். முதலாளித்துவம் ஆண்களுடன் சமத்துவமான நிலையில் பெண்களை தொழிலாளர் படையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் கூறுகிறார். மாறாக, முதலாளித்துவமானது வீடு, குடும்பம், தனிப்

Page 8
பட்டி வாழ்க்கை ஆகியவற்றுக்கிடையே வேறுபாடுகளை ஒரு புக்கத்திலும் வேலைத்தலத்தில் வேறுபாடுகளை இன்னோர் பக்கத்திலும, ஏற்படுத்தி யுள்ளது.
வீட்டு வேலை, கூலி உழைப்பு ஆகியவறறுக்கிடையே ஏற்பட்ட பிரிவினை காரணமாக பாலவாதம் முதலாளித்துவத்தின கீழ் மேலும் உக்கிரமானதாக மாறியுள்ளது. கூலி உழைப்பிலிருந்து பென்களை விலக்கிவைத்திருத்தல் பெண்களது ஒடுக்குமுறைக்குக் காரணமாயுள்ளது. ஆண்கள் கூலி உழைப்பில் ஈடுபடுவதால் ஒடுக்கப்படுகின்றனர். ஆனால் பெண்களோ அவ்வாறு ஈடுபட அனுமதிக்கப்படாததால் ஒடுக்கப்படுகின்றனர் என ஷரட்ஸ்கி.வாதிட்டார் கூலி உழைப்பிலிருந்து பெண்களை முதலாளிகதுவமே விலக்கிவைக்கிறது. ஏனெனில் முதலாளித்துவம் வீட்டுக்கு வெளியே கூலி உழைப்பை உண்டாக்குகிறது. கூலி உழைப்பாளர்களை முதலாளிததுவ அமைப்புக்காக உருவாக்க வேண்டிய தேவை இருப்பதால் பெண்கள் வீட்டில் வேலை செய்து கூலி உழைப்பாளரை மறு உற்பத்தி செய்யும் நிலை முதலாளித்துவத்துக்கு அவசியமாகிறது. பெணகள கூலி உழைப்பாளர் படையை மறு உற்பததி செய்கின்றனர்; அவர்களுக்கு உளவியல் போஷாக்கை அளிக்கின்றனர், அந்நியப்படுத்தல் நிலவும் நிலைமையில் பெண்கள், ஒரு நெருக்கமான சூழலையும ஏற்படுத்துகின்றனர் ஷரட் ஸ்கியின் கருத்துப்படி மூலதனத்தின் குவிப்புக் காகப் பெண்கள் உழைக்கின்றனர் ஆண்கள் அலல. வீடு. வேலைத்தலம் என்ற பிரிவினை. வீட்டு வேலை தனியார் பொறுப்பானது போன்றவை முதலாளித்துவத்தால்.உருவாக்கப்பட்டதாகும். பெண்கள் வீட்டில் கணிப்பட்ட ஆண்களுக்காக வேலை செய்கின்றனர் என்ற தோற்றத்தை மேற்கூறிய விடயங்களே உருவாக்கியுள்ளன. பெண்கள் ஆண்களுக்காக வேலை செய்கின்றனர் போன்ற தோற்றத்திற்கும் பெண்கள் மூலதனத்திற்காகவே வேலை செய்யும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடே பெண்கள் இயக்கத்தின் சக்தியைப் பிழையான வழியில் செலுத்தியது வீட்டில் வேலை செய்த போதிலும் தாம் தொழிலாளர் வர்க்கத்தில் ஒரு பகுதியினரே என்பதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஷரட்ஸ் கியின் கருத்துப்படி, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூகத்தின் இரு தொழிலாளர்களாக 'மனைவியும்', 'தொழிலாளியும் தோற்றம் பெற்றுள்ளார்கள். அவர்களது வாழ்க்கையின் கூறுபட்ட நிலைமையானது தொழிலாளிக் கணவனையும் வீட்டைப் பராமரிக்கும் மனைவியையும் ஒரு சேர ஒடுக்குகிறது பெண்களது வீட்டு உழைப்பு,

ஏனைய சமூக ரீதியாக அத்தியாவசியமான வேலைகள் யாவற்றையும் உள்ளடக்கும் வகையான 'உற்பத்தி' பற்றிய ஒரு மறு கருத்தாக்கமே இத்தகைய ஒரு அழிவுரீதியான பிரிவினை இல்லாதிருக்கக்கூடிய சமூகம் ஒன்றை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க சோசலிஸ்டுகளுக்கு உதவும். ஷரட்ஸ்கியின் கருத்துப்படி ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்தோ (அல்லது வேறாகவோ) தமது வாழ்வின் பிரிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் ஒன்று சேர்க்கப் போராடவேண்டும். தனிப்பட்ட, பொதுவான தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய மனிதாய ரீதியான சோசலிஸத்தை நிறுவ இது உதவும். தமது பிரச்சினையின் மூலவேர் முதலாளித்துவமே என்பதை உணரும்போதுதான் அவர்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் போரிடாமல் மூலதனத்துக்கு எதிராகப் போராடுவார்கள். முதலாளித்துவமே எமது தனிப்பட்ட, பொது வாழ்வுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால், முதலாளித்துவத்தின் முடிவானது இந்தப் பிரிவினையையும் முடிவுறச் செய்யும். வாழ்க்கையை மீண்டும் ஒருமையுறச் செய்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் எதிரான ஒடுக்கு முறையை முடிவுறச் செய்யும்,
வஷரட்ஸ்கியின் ஆய்வு பெண்நிலைவாத இயக்கத்துக்குப் பங்களித்திருப்பினும் இறுதியில் இந்த இயக்கத்தின் குறுக் கத்திற்கு இட்டுச் செல்வதாகவே அவர் வாதம் அமைந்துள்ளது. பால்வாதம், முதலாளித்துவத்திற்கு முற்பட்டது என்ற பெண்நிலைவாதக் கருத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார். மார்க்ஸிச பெண்நிலைவாத ஆய்வுகளில் பெரும்பாலான வற்றை - மூலதனத்தின் மீள் உற்பத்திக்கு வீட்டுவேலையின் அவசியத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். வீட்டுவேலை கடினமானது எனவும் ஏற்றுக்கொண்டுள்ளார். பால் வாதம், ஆண் ஆதிக்கம் போன்ற கருத்தாக்கங்களையும் பயன்படுத்துகிறார். ஆனால் அவரது ஆய்வு இறுதியில் பிரிவினை எனும் கருத்திலேயே தங்கியுள்ளது. இதுவே பிரச்சினையின் மையம் என அவர் கருதுகிறார். இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட "ஒன்றுக்கொன்று உறுதுணை புரியும் பகுதிகள்" கருத்தோட்டத்தைப் போன்றது. அதாவது ஆண்களதும் பெண்களதும் உலகங்கள் வெவ்வேறானவை. ஆனால் ஒன்றுக்கொன்று உறுதுணையானவை. சம முக்கியத்துவமானவை என்பது இக்கருத்தோட்டமாகும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே நிலவும் அசமத்துவத்தின் முக்கியத்துவத்தை ஷரட்ஸ் கி நிராகரிக்கிறார். அவரது அக்கறை குடும்பம், பெண்களது உறவுமுறை, முதலாளித்துவம் ஆகியவை பற்றியவையாகவிருந்தது. அவர் விவாதிப்பது போலவே முதலாளித்துவம் தனிப்பட்ட ஒன்றாக வீடு சார்ந்த வாழ்க்கையை உருவாக்கியிருப்பினும் பெண்கள் அதில் வேலை செய்ய வேண்டுமென்

Page 9
பதும், ஆண்கள் கூலி உழைப்பில் ஈடுபடுவதென்பதும் எங்ங்னம் நேர்ந்தது? ஆணாதிக்க முறைமை பற்றிய குறிப்பின்றி இதனை நாம் விளங்கப்படுத்த முடியாது. எமது கருத்துப்படி குடும்பம், உழைப்புச் சந்தை, பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் காணப்படும் பிரச்சினையானது, பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வேலைப் பிரிவினையில் தங்கியிருக்கவில்லை. மாறாக ஆண்களை உயர்வாகவும் பெண்களைத் தாழ்த்தப்பட்ட நிலையிலும் வைக்கும் ஒரு பிரிவினையில் தங்கியுள்ளது.
ஏங்கல்ஸ் தனிச்சொத்துடமையைப் பெண்களின் ஒடுக்குமுறைக்கான காரணமாகக் கூறியது போல ஷரட்ஸ்கி, பெண்கள் தனிப்பட வீடுகளில் உழைப்பதே அவர்களது ஒடுக்குமுறைக்குக் காரணம் எனக் கருதுகிறார். ஏங்கல்ஸ்சும் ஷரட் ஸ்கியும் கைத்தொழிற் காலகட்டத்திற்கு முந்திய குடும்பத்தை சிறந்ததாகக் கருதினர். ஆண், பெண், முதியோர், இளையோர் யாவரும் ஒருங்கே குடும்பத்தை மையமாக வைத்தே தொழில் செய்து சமூக வாழ்வில் அனைவரும் பங்குபற்றினர் என இவர்கள் கூறினர். ஷரட்ஸ்கியின் மனிதாயத சோசலிஸம் குடும்பத்தை மீள் ஒழுங்குபடுத்தி மகிழ்ச்சிகரமான வேலைப்பட்டறையை மீள் உருவாக்கம் செய்யும்.
பெண்களும் ஆண்களும் சோசலிஸத்தில் அக்கறை கொண்டுள்ளனர் என்று கூறும் அதே சமயம் ஷரட்ஸ்கி கூறும் மனிதாயத சோசலிஸத்தை நோக்கி போராடுகிறார்களா என்பது தெளிவாகவில்லை. அவர் பெண்களது உழைப்பு ஆண்களுக்காக என்று தென்படும்போதிலும் உண்மையில் அது மூலதனத்துக்காக என்று கருதுகிறார். ஆனால் நாம், குடும் பத்தில் பெண்களது உழைப்பு ஆண்களுக்காகவே, அது முதலாளித்துவத்தை மீள். உருவாக்கம் செய்தபோதிலும் என்று கருதுகிறோம். உற்பத்தி பற்றிய மீள் கருத்தாக்கம் நாம் உருவாக்க விரும்பிய சமூகம் பற்றி யோசிக்க எமக்கு உதவும். அவ்வாறு உருவாக்குவதற்கு மூலதனத்திற்கு எதிரான போராட்டத்துக்கு இணையாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்கக்கூடிய போராட்டங்களும் தொடரவேண்டும்.
பெண்களது வீட்டுவேலை பற்றி ஆய்வு செய்த மார்க்ஸிச பெண்நிலைவாதிகளும் பெண் நிலைவாதப் போராட்டத்தை மூலதனத்துக்கு எதிரான போராட்டத்திற்குக் கீழ்ப்படுத்தியே நோக்கியுள்ளனர். மரியாரோராடலா கொஸ்தாவின் வீட்டுவேலை பற்றிய தத்துவார்த்த ஆய்வானது வீட்டு வேலைக்கும் மூலதனத்திற்கும் இடையிலான உறவு பற்றிய ஆய்வாக அமைகிறதே தவிர ஆண் பெண்ணுக்கிடையிலான உறவுமுறை பற்றியதாக

இல்லை. எனினும் வீட்டு வேலைக்கு வேதனம் வழங்கப்பட வேண்டும் எனப் பெண்கள் கோரிக்கை விடுக்கவேண்டும் என்ற இவரது அரசியல் நிலைப்பாடானது பெண்கள் இயக்கங்களிடையே வீட்டுவேலையின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை அதிகரித்துள்ளது. இந்தக் கோரிக்கை இன்றும்கூட அமெரிக்காவில் பெண்கள் குழுக்களிடையே பலத்த விவா தத்திற்கு இடமளிக்கிறது. பெண்கள் வீட்டிலிருந்து மூலதனத்திற்கு அவசியமான சேவைகளில், உழைப்பாளர் படையை மறு உற்பத்தி செய்வதில் ஈடுபடுவதுமாத்திரமன்றி வீட்டு வேலையின் மூலம் உபரியையும் உருவாக்கின்றனர் என்று டலாகொஸ்தா வாதிட்டமை வீட்டுழைப்பு பற்றிய இடதுசாரிகளின் உணர்வை அதிகரித்ததுடன் அதற்கும் மூலதனத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய நீண்ட விவாதத்திற்கும் காலாகியது.
டலாகொஸ்தா வீட்டுவேலை பற்றிய பெண் நிலைவாத விளக்கத்தைப் பயன்படுத்தி அது முதலாளித்துவ காலத்தில் உண்மையான வேலை என அங்கீகாரம் பெற வேண்டும் என்றும் அது வேதனம் பெறும் உழைப்பாக இருக்கவேண்டும் என்றும் விவாதித்தார். பாரம்பரியமான வேலைப்படையில் பெண்கள் நிர்ப்பந்தமாகச் சேர்க்கப்பட்டு 'இரட்டை நாள்' (double day) வேலை செய்யவும் மூலதனத்திற்கான கூலி உழைப்பையும் கூலியற்ற உழைப்பையும் கொடுக்கவும் அனுமதியாமல் தமது வீட்டு உழைப்புக்கு வேதனம் கோரவேண்டும் என அவர் கூறினார்.
வீட்டு வேலைக்கு வேதனம் பெறும் பெண்கள் தமது சொந்த வீட்டு வேலைகளைத் திறமையாகவும் கூட்டு அடிப்படையிலும் ஒழுங்கமைப்பார்கள் என்றும் அவர் கருதுகிறார். வேதனத்துக்கான கோரிக்கையும், வேதனம் பெறுவதும் அவர்களது வேலையின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை அதிகரிக்கும் அதன் சமூகப் பெறுமதியையும், தனிப்பட்ட அத்தியாவசியத் தையும் நோக்குவதற்கும் வழி சமைக்கும்.
வீட்டுவேலையின் சமூக முக்கியத்துவமானது மூலதனத்துக்கு அது அத்தியாவசியமாயிருப்பதில் தங்கியுள்ளது. வீட்டுழைப்புக்காக கூலிகேட்ப தன் மூலமும் உழைப்புச் சந்தையில் பங்கெடுக்க மறுப்பதன் மூலமும் பெண்கள் மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கலாம். பெண்களது சமூக அமைப்புகளானவை மூலதனத்திற்கு எதிரானவை மாத்திரமன்றி புதிய சமூக உருவாக்கத்திற்கான அடிப்படையையும் இடமுடியும்.பெண்களது விடுதலைக்கு எதிராக ஆண்கள் செயற்படுவார்கள், இதனை எதிர்கொண்டு பெண்கள் போராடவேண்டும். ஆனால் இது இறுதி

Page 10
இலட்சியமான சோசலிஸத்தை நிலை நாட்டுவதற்கு இப் போராட்டம், நடத்தப்படவேண்டும் என்றார். பெண்களது போராட்டம் அதன் பெண்நிலை வாத நிலைப்பாட்டுக்காக அன்றி அது முதலாளித்துவத்திற்கு எதிரானதாக உள்ளதாலேயே புரட்சிகரத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என டலாகொஸ்தா கருதினார். பெண்கள் உபரி மதிப்பின் உற்பத்தியாளர்க ளாகவும் அதன் விளைவாக தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு அங்கமாக இருப்பதாகவும் கருதியே புரட்சியில் ஒரு ஸ்தானத்தை அவர்களுக்கு டலா கொஸ்தா அளித்தார். பெண்களது அரசியல் செயற்பாட்டை இந்த அம்சமே நியாயப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
பெண்கள் இயக்கமானது பெண்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை என்றுமே சந்தேகித்ததில்லை. ஏனெனில் பெண்நிலைவாதக் குறிக்கோள் பெண்களின் விடுதலையாகும். இது பெண்கள் போராட்டத்தால் மாத்திரமே அடையப்படக்கூடியதாகும். டலாகொஸ்தாவின் பங்களிப்பு வீட்டு வேலையின் சமூக இயல்பு பற்றிய விளக்கத்தில் ஒரு முன்னேற்றம் தான். ஆனால் இங்கு விமர்சிக்கப்பட்ட ஏனைய மார்க்ஸிச அணுகுமுறைகள் போல ஆண் பெண் உறவு பற்றி அல்லாமல் மூலதனம் பற்றி அதிக அக்கறை காட்டுகின்றது. முதலாளித்துவ முறைமை எவ்வாறு யாவரையும் தன்னகப்படுத்தி வைத்துள்ளது என்பது பற்றிய அவருடைய ஆய்வுமுறை யானது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் நலன்கள், குறிக்கோள், வழிமுறைகள் ஆகியவற்றிடையே உள்ள வேறுபாடுகளைத் தெளிவற்ற தாக்குகிறது. டலா கொளல் தாவின் எழுத்துக்களில் பெண்நிலைவாத சொல் வழக்குகள் காணப்படுகின்றன. ஆனால் பெண்நிலைவாதத்தின் முனைப்பான நோக்கு இல்லை. அவ்வாறு இருந்திருப்பின் அவர், வீட்டு வேலை ஒரு சமூக உறவாக ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும் அது தொடர்ந்து நீடிக்கவும் எவ்வாறு பங்காற்றுகின்றது என்பது பற்றிக் கூறியிருப்பார்.
ஏங்கல்ஸ், ஷரட்ஸ்கி, டலாகொஸ்தா யாவருமே குடும்பத்திற்குள் நிகழும் உழைப்புச் செயல்முறை பற்றி போதியளவு ஆராயவில்லை. பெண் களது உழைப்பால் யார் நன்மை அடைகின்றனர்? நிச்சயமாக முதலாளித்துவவாதிகள். அத்துடன் நிச்சயமாக வீட்டில் அவர்களது தனிப்பட்ட சேவையைப் பெறும் கணவர்களும் தந்தையர்களும் கூட இச் சேவைகளின் தன்மை, இயல்பு என்பன அவர்களது வர்க்கம், இனத்துவம் ஆகியவற்றுக்கேற்ப வேறுபடினும் அவர்கள் இச்சேவையைப் பெறுகின்றனர் என்பது உண்மையே. ஆண்கள் ஆடம்பரப் பொருள் நுகர்வு, ஒய்வு நேரம்,
v. 10

தாம் பெறும் சேவைகள் ஆகியவற்றில் பெண் களைவிட உயர்ந்த வாழ்க்கைத்தரம் உடையவராயுள்ளனர். பொருள்முதல்வாத அணுகுமுறை இந்த முக்கிய விடயத்தை அலட்சியப்படுத்த முடியாது. பெண்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதில் ஆண்களுக்கு உலகாயத நலன்கள் உள்ளன என்ற கருத்து இதன் பயனாக மேலெழும்பியது.
ஆரம்பகால மார்க்ஸிஸ்டுகளுடைய அணுகுமுறை வீட்டு உழைப்பை அலட்சியப்படுத்தி, உழைப்புப்படையில் பெண்களின் பங்கு பற்றுகைக்கு அதிக முக்கியத்துவமளித்தன. ஆனால் இது சமீபகால அணுகுமுறைகள் வீட்டுவேலைக்கு அளித்த அதீத முக்கியத்துவத்தினால் உழைப்புச் சந்தையில் பெண்ணின் பாத்திரத்தைப் புறக்கணிக்கின்றன. எவ்வாறாயினும் இம் மூன்று அணுகுமுறைகளும் தொழிலாளர் வர்க்க வகைப்பாட்டில் பெண்களைச் சேர்த்துக் கொள்கின்றன. இவற்றின்படி பெண்களது ஒடுக்குமுறையை விளக்குவதென்பது வர்க்க ஒடுக்குமுறையை விளக்குவதாகும். இதனால் பெண் நிலைவாத ஆய்வியலின் குறிக்கோளான ஆண் பெண் உறவுக்குக் குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்படுகிறது. "எமது பிரச்சினை" யானது மிகவும் நயம்பட ஆராயப்பட்டிருக்கும் அதேவேளை அது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மார்க்ஸிச ஆய்வின் குவிமையம் வர்க்க உறவுகள் பற்றியதாகும். அதன் குறிக்கோள் முதலாளித்துவ சமூகத்தின் இயங்குதன்மையை விளக்குவதாகும். மார்க்ஸிச முறையியல் பெண்நிலைவாத குறிக்கோள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம் எனக் கருதினாலும் ஏற்கனவே மேலே எடுத்துக் காட்டப்பட்ட் மார்க்ஸிச பெண்நிலைவாத அணுகுமுறை அவ்வாறு செய்யவில்லை. அவர்களது மார்க்ஸிசத்தின் ஆதிக்கத்திற்கு பெண் நிலைவாதம் உட்பட்டுள்ளது.
இது, நாம் ஏற்கனவே கூறியபடி மார்க்ஸிசத்தின் ஆய்வுத்திறன் இதற்கு ஒரு காரணமாகும். மார்க்ஸிசமானது வர்க்க சமூகத்தின் வளர்ச்சி, மூலதனக்குவிவுச் செயன்முறை, வர்க்க ஆதிக்கத்தின் மீள் உற்பத்தி, முரண்பாடுகள், வர்க்கப் போராட்டம் ஆகியவை பற்றிய கோட்பாடாகும். மூலதனக் குவிவுச் செயல் முறையால் முதலாளித்துவ சமூகங்கள் இயக் கப்படுகின்றன. அவற்றில் உற்பத்தி பரிமாற்றத்தை நோக்கி அமைகிறது தவிர பயன்பாட்டுக்காக அல்ல. முதலாளித்துவ சமூகங்களில் உற்பத்தியின் முக்கியத்துவம் அவை இலாபத்துக்குப் பங்களிப்பதிலேயே தங்கியுள்ளது. அவற்றின் பயன் பெறுமதி மிகக் குறைந்த அக்கறைக்குள்
11

Page 11
ளாகிறது. தொழிலாளர் உற்பத்தி செய்வதன் பெறுமதியை விட மிகக் குறைவாக அவர்களுக்கு வேதனம் வழங்குவதிலும், உழைப்புச்சக்தியைச் சுரண்டும் திறமையிலுமே இலாபம் தங்கியுள்ளது. உற்பத்தி உறவுகளை உருமாற்றுவது போலவே இலாபத்தின் குவிவு சமூக அமைப்பையும் ஒழுங்குமுறையில் உருமாற்றுகிறது. உழைப்புப் படையின் மேலதிக எண்ணிக்கை, அதிகளவான மக்களின் வறுமை ஆகியவை மூலதனக் குவிவுச் செயன்முறையின் பக்கவிளைவுகளாகும். முதலாளித்துவவாதிகளின் கருத்துப்படி வறுமை ஆகியவை மூலதனக்குவிவுச் செயன்முறையின் பக்க விளைவுகளாகும். முதலாளித்துவவாதிகளின் கருத்துப் படி தொழிலாளர் வர்க்கத்தின் மீள் உற்பத்தியை அதனிடமே விட்டு விடலாம். அதே நேரம் மூலதனமானது தன்னுடன் சேர்ந்து வளரும் தனிநபர்வாதம், போட்டி, ஆதிக்கம், ஒரு குறிப்பிட்ட வகையின் நுகர்வுத் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கருத்து நிலையை உருவாக்குகிறது. இவை முதலாளித்துவ சமூகங்களது அதிமுக்கியமான விழுமியங்கள்
ஆகும.
உற்பத்தியின் அமைப்பு, ஒரு குறிப்பிட்ட தொழில் முறையின் அதிகரிப்பு, கருத்து நிலை ஆதிக்கத்தின் இயல்பு ஆகிய முதலாளித்துவ சமூகத்தின் பல அம்சங்கள் குறித்து விளங்குவதற்கு எமக்கு மார்க்ஸிசம் உதவுகின்றது. முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய மார்க்ஸின் கோட்பாடானது "வெற்றிடங்களின் வளர்ச்சி" பற்றிய கோட்பாடாகும். மார்க்ஸ் தொழிலாளிவர்க்கத்தின் வளர்ச்சி பற்றியும் குட்டிபூர்ஷவாக்களின் மறைவு குறித்தும் எதிர்வு கூறினார். ஏனையவர்கள் மத்தியில் பிறேவர்மான் (Braverman) முன்னேறிய முதலாளித்துவ சமூகங்களில் சேவையாளர்கள், எழுதுவினைஞர்கள் ஆகியோருக்கான இடம் உருவாக்கப்பட்டமை குறித்துக் கூறினார். இத்தகைய வேலைகளில் அமரும் தனிநபர்களைப்பற்றிக் கவலைப்படாமல் இவற்றை முதலாளித்துவம் உருவாக்குவது போல மார்க்ஸிச ஆய்வு முறையின் வகைப்பாடுகளான வர்க்கம், உழைப்புப்படையின் மேலதிக எண்ணிக்கை , கூலி உழைப்பாளி ஆகியவை ஏன் இக்குறிப்பிட்ட பிரிவுகளை குறிப்பிட்ட நபர்கள் நிரப்புகிறார்கள் என்பது குறித்து விளக்கவில்லை. குடும்பத்திற்கு உள்ளும் வெளியிலும் ஆண்களை விடப் பெண்கள் ஏன் குறைந்த அந்தஸ்து வகிக்கிறார்கள் என்பது பற்றியும் எத்தகைய கருத்தும் கூறவில்லை. மூலதனம் போலவே மார்க்ஸிச வகைப்பாடுகளும் பால் குருட்டுத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. மார்க்ஸிசத்தின் வகைப்பாடுகள் யார் வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று எமக்குக் கூறமுடிய
12

வில்லை. பெண்கள் பிரச்சினை பற்றிய மார்க்ஸிச ஆய்வுமுறை இத்தகைய அடிப்படைப் பிரச்சினையால் குறைபாடுற்றுள்ளது.
அதிக பயனுடைய மார்க்ஸிச பெண்நிலைவாதத்தை நோக்கி
மார்க்ஸிசம் சமூக ஆய்வுக்கான ஒரு முறைமையாகும். அது வரலாற்று இயக்கவியல் பொருள் முதல்வாதமாகும். இந்த ஆய்வு முறைமையை பெண் நிலைவாத வினாக்களுக்கு விடைகாணப் பயன்படுத்துவதன் மூலம் ஜிலியற் மிஷேல், ஸ்லாமித் பயர்ஸ்ரோன் முதலியோர் மார்க்ஸிச பெண்நிலைவாதத்தில் புதிய திசைகளைச் சுட்டியுள்ளனர். மிஷேல் பின்வருமாறு கூறினார்.
"சோசலிஸத்துடனான 'எமது உறவு அல்ல எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்படுவது. எமக்கு மீதான ஒடுக்குமுறையின் பிரத்தியேக இயல்பு, எமது புரட்சிகரப் பாத்திரம் ஆகியவற்றை ஆராய விஞ்ஞான சோசலிஸத்தைப் பயன்படுத்துவது பற்றியே வினாவெழுப்புகிறோம். இத்தகைய ஒரு முறை மூலம் தீவிரவாதப் பெண்நிலைவாதத்தை முன்பு வளர்ச்சியடைந்த சோசலிஸ் கோட்பாடுகளை விளங்கிக்கொண்ட அளவு விளங்கிக் கொள்ள வேண்டும்."
ஏங்கல்ஸ் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"பொருள் முதல்வாதக் கருத்துப்படி இறுதி ஆய்வில் வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணி உடனடிவாழ்க்கையின் உற்பத்தியும் மீள் உற்புத்தியுமாகும். இது ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்கு ஆதாரமான உணவு, உடை, இருப்பிடம் உற்பத்திக்குத் தேவையான க்ருவிகள் ஆகியவற்றையும் மறுபக்கத்தில் மனிதர்களையும் உற்பத்தி செய்தலாகும். ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்த மக்களது சமூக ஒழுங்கமைப்பு இவ்விருவகை உற்பத்திகளாலும் தீர்மானிக்கப்படுகிறது"
இத்தகைய ஒரு ஆய்வுமுறையைக் கைக்கொள்ளவே மிஷேல் முயன்றார். "பெண்கள் - ஒரு நீண்ட புரட்சி" என்ற அவரது முதலாவது கட்டுரையில்
மிஷேல் சந்தை வேலை, உயிரின மறு உற்பத்தி, பால் இயல்பு. குழந்தை வளர்ப்பு ஆகியவற்றைப் பரிசீலிக்கிறார்.
பெண்களது சகலவேலைகளையும் உற்பத்தியாகக் கொள்ளாதத னாற்போலும் மிஷேல் தனது ஆய்வு முயற்சியில் வெற்றி காணவில்லை.
13

Page 12
சந்தை வேலையையே அவர் உற்பத்தியாகக் காண்கிறார். குடும்பத்தில் பெண்களின் வேலைகள் கருத்து நிலையுடன் தொடர்பு கொண்டனவாகக் கருதப்படுகின்றன. குழந்தைப்பேறு, பால் இயல்பு, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றை ஒழுங்கமைக் கும் ஆணாதிக்க முறைமைக்கு அவர் எத்தகைய பெளதீக அடிப்படையையும் காணவில்லை. Women's Estate என்ற அவரது நூலில் பெண்களது சந்தை உழைப்பு பற்றிய ஆய்வு விருத்தி செய்யப்படுகிறதே ஒழிய குடும்பத்துள் பெண்ணின் வேலை பற்றிய ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இவ்வகையில் தீவிரவாதப் பெண்நிலைவாதத்தால் அன்றி மிஷேல் மார்க்ஸிசத்தினாலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். உளவியல் ஆய்வும் பெண் 560)6)6.Ng5(plb (Psycho analysis and Feminism) - 616 B 36)lyg hijab TG) நூலொன்றில் ஆண் பெண் உறவு நிலை பற்றி ஆய்வு செய்யக்கூடிய முக்கியமான பகுதியொன்றை ஆராய்கிறார். குறிப்பாக ஆணினதும் பெண்ணினதும் பால் பாகுபாட்டு அடிப்படையில் உருவாகும் ஆளுமைகளை ஆராய முற்பட்டுள்ளார். மிஷேல், தந்தை வழிமுறைமை உளவியல் தளத்திலேயே செயற்படுவதாகக் கூற முயல்கிறார். இங்கு அவர், உயிரின உற்பத்தி, பிள்ளை வளர்ப்பு போன்றவற்றில் அக்கறை காட்டுகிறார். ஆனால் அவற்றைக் கருத்து நிலைத்தளத்திலேயே காண்கிறார். இதனால் அவரது ஆரம்பகால ஆய்வுகளிற் காணப்பட்ட அடிப்படைப் பலவீனம் தொடர்கிறது. அவர் மிகத் தெளிவாக ஆணாதிக்க வழிமுறைமையை மூலதனம் எவ்வாறு அடிப்படையான பொருளாதார அமைப்பாக உள்ளதோ அதுபோல அடிப்படையான கருத்துநிலை அமைப்பாக காண்கிறார்.
இவ்விடயத்தை ஒரு திட்ட அமைப்பில் கூறுவதெனில் நாங்கள் இரு சுயமான பரப்புகளைக் கையாள்கிறோம். ஒன்று முதலாளித்துவத்தின் பொருளாதார முறைமை, மற்றது ஆணாதிக்கத்தின் சித்தாந்த முறைமை.
இவ்விரண்டும் ஒன்றினை ஒன்று ஊடுருவியுள்ளமை பற்றி ஆராய்ந்த போதிலும் ஆணாதிக்க முறைமைக்கு ஒரு பெளதீக அடிப்படை அளிக்கத் தவறியமையும் ஆளுமை உருவாக்கத்தில் பங்கு வகிக்கும் பெளதீக அம்சங்களைக் காணத்தவறியமையும் அவரது ஆய்வின் பயன்பாட்டைக் குறைக்கிறது.
ஷ" லாமித் பயர்ஸ்ரோன் ஆணாதிக்க முறைமைக்கு பெளதீக அடிப்படையைக் காண்பதன் மூலம் மார்க்சீயத்துக்கும் பெண்நிலைவாதத்திற்கும் பாலம் அமைக்கிறார். அடிப்படையான வரலாற்று இயக்கவியல் ஆகும். மனித இனத்தை மறு உற்பத்தி செய்யும் பெண்களின் உழைப்பு ஆணாதிக்க
14

முறைமையின் பெளதீக அடிப்படை என அவர் கூறுகிறார். பெண்களது நிலையை ஆராய மார்க்சீயத்தைப்பயன்படுத்தும் ஆணாதிக்க தந்தை வழிமுறைமைக்கு ஒரு பெளதீக அடிப்படை உண்டு எனச் சுட்டியமையும் இவரது ஆய்வின் முக்கியத்துவமாகும். ஆனால் இவரது ஆய்வில் ஒரு குறைபாடு உயிரியல் , மனித இன மறு உற்பத்தி ஆகியவற்றுக்கு அளிக்கும் அதீதமுக்கியத்துவத்தினால் ஏற்படுகிறது. நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவெனில் எவ்வாறு குறிப்பிட்ட பால் (Sex) குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்ட குண இயல்புள்ள ஆண்மை பெண்மை (Gender) என்ற சமூக அம்சமாக உருப்பெறுகிறது என்பதுதான். மனித இன மறு உற்பத்தியில் மாத்திரம் முக்கிய கவனம் செலுத்தாமல் பெண்களுடைய சகல உழைப்பையும் அவை நிகழும் சமூக வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்குதல் முக்கியமானதாகும்.
மார்க் ஸிச முறையியலை, பெண்நிலைவாதத்திற்குப் பயன்படுத்தினாலும் சகல வகையான ஏனைய ஒடுக் குமுறைக்கும் (வர்க்கம், வயது, இனம்) மூலகாரணமான ஆண் பெண்ணில் செலுத்தும் ஆதிக்கமே காரணமாக அமைகிறது என்ற பயர்ஸ்ரோனின் கருத்தானது அவருடைய ஆய்வை மார்க்ஸிச பெண்நிலைவாத ஆய்வுக்குள் அல்லாமல் தீவிரப் பெண்நிலைவாதக் குழுவினருடனே சேர்க்கிறது. அவரது நூல் தீவிரப் பெண் நிலைவாத நிலைப்பாட்டின் ஒரு முழுமையான அறிக்கை போல Ф—6її6Пgђl.
பயர் ஸ்ரோனது நூல் மாக்ஸிஸ்டுகளால் இலகுவில் நிராகரிக்கப்பட்டது. எனினும் பெண்களுக்கு மகிழ்ச்சியான விடயம் என்னவெனில் பெண்களின் மீதான ஆண் அதிகாரம் பற்றிய அவரது ஆய்வும் அது குறித்த அவரது ஆரோக்கியமான கோபமுந்தான். அவரது நூலில் காதல் பற்றிய அத்தியாயம் இதற்கு மையமாக அமைந்துள்ளது. அது வெறுமனே "ஆண்மைக் கருத்துநிலை" அல்ல. ஆனால் பெண்கள் மீதான ஆண்களின் அதிகாரத்திணிப்பின் விளைவுகளால் ஆணாதிக்க முறைமைச் சமூகத்தில் வாழ்வதை எப்படிப் பெண்கள் உணர்கிறார்கள் என்பது பற்றியதுமாகும். "அகவிடயங்களும் அரசியல்தான்" என்ற பெண்நிலைவாதிகளின் சுலோகம் வெறுமனே அகநிலைவாதத்திற்கான ஒரு விண்ணப்பம் அல்ல. அது ஆண்களது அதிகாரத்தையும், பெண்களது தாழ்த்தப்பட்ட நிலையையும் அரசியல், சமூக யதார்த்தமாக அங்கீகரிக்குமாறு கேட்கும் கோரிக்கை
եւ III (ՖԼf).
15

Page 13
தீவிரவாதப் பெண்நிலைவாதமும் ஆணாதிக்க முறைமையும்
தீவிரவாதப் பெண்நிலைவாத எழுத்துக்களின் மிகப் பெரும் அழுத்தம் "அகவிடயங்களும் அரசியல் தான்" என்ற சுலோகமாகும். பெண்களின் அதிருப்தியானது குறைபாடுடையோரின் ஒப்பாரி அன்று. ஆனால் பெண்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் ஆதிக்கப்படுத்தப்பட்டு, சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு இருக்கும் சமூக நிலைமைக்கான ஒரு எதிர்வினையாகும். உழைப்புச் சந்தையில் பெண்களின் குறைவான அந்தஸ்து, மத்தியதர வர் க் கத்திருமணத்தின் ஆண்-மைய உணர்வு அமைப்பு, விளம்பரங்களில் பெண்னைப் பயன்படுத்தல், கல்வியாளராலும், உளவியலாளராலும் பிரபலப்படுத்தப்பட்ட "பெண்கள் உளவியலானது அடிப்படையில் நரம்புத்தளர்ச்சி" (Neurotie) என்ற கருத்து ஆகியவை ஆராயப்பட்டுள்ளன. தீவிரப் பெண்நிலைவாத எழுத்துக்கள் எண்ணிக்கையில் அதிகமானவை. இலகுவில் சுருக்கிக் கூற முடியாதவை. அதேவேளை உளவியல் பற்றிய அக்கறை இவற்றில் ஒரே சீராக உள்ளது. நியுயோர்க் தீவிரவாதப் பெண்நிலை வாதிகள் அமைப்பின் பிரகடனம் "தன் முனைப்பின் அரசியல்" (The Politics ofEgo) என்பதாகும். தீவிர பெண்நிலைவாதிகளைப் பொறுத்தவரையில் தனிப்பட்டது என்பதும் அரசியலே என்பதன் பொருள் யாதெனில் இருபாலாருக்கும் இடையில் உள்ள அடிப்படையான வர்க்கப்பிரிவினையே முதலில் உருவானதும் வரலாற்றின் இயக்கு சக்தியுமாகும் என்பதாகும். இதுவே பெண்களுக்கு மீதாக ஆண்களின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் ஊக்குவிக்கிறது எனத் தீவிரப் பெண்நிலைவாதம் கூறியது.
இதற்கமைய சிறுவர்களும் சிறுமிகளும் எவ்வாறு ஆண்களாகவும் பெண்களாகவும் மாற்றம் பெறுகிறார்கள் என்பதை பயர்ஸ்ரோன் எடுத்துக் காட்டினார். அவர், ஆண்மை பெண்மையின் குணாம்சங்களை விபரித்தலா னது தீவிரவாதப் பெண்நிலைவாத எழுத்துக்களுக்கு ஒரு வகை மாதிரியாகும். ஆண், பலத்தையும் ஆதிக்கத்தையும் தேடுகிறான்; அவன் போட்டி மனோபாவம் தன்முனைப்பு உடையவன். பயர் ஸ்ரோன் இதனை"தொழிநுட்ப வகைமாதிரி" என்கிறார். பெண் போவழிப்பவளாக, கலைத்துவம், மெய்யியல் அம்சம் உடையவளாய் "அழகியல் 6Ꭷl60ᎠᏑᏴ மாதிரியாக" இருக் கிறாள்.
இங்குதான் தீவிரவாதப் பெண்நிலைவாத ஆய்வுமுறையின் குறைபாடு தங்கியுள்ளது. நிகழ்காலத்தில் ஆண்மை, பெண் மைக் குணங்கள் அமைந்து கிடப்பது போல் எல்லாக் கால வரலாற்றிலும் இருந்ததாகக் கூறுவது தவறு. நிகழ்காலம் பற்றிய இவ்வாய்வு வலுவுடையது. ஆனால்
16

அதிகளவு முக்கியத்துவத்தை உளவியலுக்கு அளிப்பதன் மூலம் வரலாற்றுக் குருட்டுத்தன்மை இருப்பது அதன் மிகப் பெரிய பலவீனமாகும்.
தீவிரவாதப் பெண்நிலைவாத முறை மாத்திரம் இக்குறைபாட்டுக்குக் காரணமல்ல; சமூக ஒழுங்கமைப்பின் ஒரு நீடித்து நிற்கும் வடிவமாக ஆணாதிக்க முறைமை இருப்பதும் ஒரு காரணமாகும். பெண்கள் மீதான ஆண் ஆதிக்கம் உள்ள ஒரு சமூக அமைப்பு முறையைக் குறிக்க ஆணாதிக்க முறைமை என்ற கருத்தாக்கத்தை தீவிரவாதப் பெண்நிலைவாதம் பயன்படுத்துகிறது. கேட்மிலற்றினுடைய வரைவிலக்கணம் இதற்குச் சரியான உதாரணமாகும்.
"எமது சமூகம் ஆணாதிக்க முறையில் அமைந்ததாகும். இராணுவம், கைத்தொழில், தொழில்நுட்பம், பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானம், அரசியல் விவகாரம், நிதி போன்ற அதிகாரத்தின் சகல வழிகளும் முற்று முழுதாக ஆண்களின் கைகளிலேயே தங்கியுள்ளமையிலிருந்து இது புலப்படும்".
தந்தை வழிமுறைமை அல்லது ஆணாதிக்க முறைமை (Patriarchy) பற்றிய தீவிரவாதப் பெண்நிலைவாதத்தின் வரைவிலக்கணம் அதிகளவான சமூகங்களுக்குப் பொருந்துவதாகும். பெண்கள் இயக்கத்திற்கு முன்னர் மார்க்ஸிஸ்டுக்களுக்கும் வேறு சமூக விஞ்ஞானிகளுக்கும் தந்தை வழிமுறைமை என்பது, பிரபுத்துவ, பிரபுத்துவத்திற்கு முன்னான சமூகங்களில் ஆண்களிடையே உள்ள உறவுகளின் முறைமையைக் குறிப்பதாகும். பூர் ஷவா சமூக விஞ்ஞானிகளால் முதலாளித்துவ சமூகங்களானவை அதிகாரத்துவம், சொந்தத்தன்மை இன்மை, திறமைக்கு மதிப்பளித்தல் ஆகிய தன்மைகளைக் கொண்டதாய் விவரிக்கப்பட்டுள்ளன. மார்க்ஸிஸ்டுகளுக்கு இது வர்க்க ஆதிக்கத்தின் முறைமையாகத் தென்படுகிறது. இவர்களில் எவரும் பழைய தந்தை வழிச் சமூகங்களையோ, தற்போதைய மேற்கு முதலாளித்துவ சமூகங்களையோ பெண்களை ஆதிக்கப்படுத்தக்கூடிய ஆண்களின் உறவுமுறைமையாக நோக்கவில்லை.
ஆணாதிக்க முறைமை பற்றிய வரைவிலக்கணத்தை நோக்கி .
நாம் ஆணாதிக்க முறைமையை பின்வருமாறு பயனுள்ள முறையில் வரைவு செய்யலாம். அதாவது ஆணாதிக்க முறைமை என்பது பெண்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பான முறையில் ஆண்கள் தமக் கிடையே அதிகாரப் படிநிலைத் தன்மையுள்ளதும் பரஸ்பரம் சார்ந்திருப்பதும் ஒருமைப்பாடும் உள்ளதுமாக அமைத்துக் கொண்ட,
17

Page 14
பெளதீக அடிப்படை கொண்ட சமூக உறவுகளின் தொகுப்பு எனலாம். இதனால் ஆண்கள் பெண்களை ஆதிக்கப்படுத்த முடிகிறது. வெவ்வேறு வர்க்கம் இனம், இனக்குழு என்பவற்றைச் சேர்ந்த ஆண்களுக்கு வெவ்வேறுபட்ட ஸ்தானங்களே ஆணாதிக்க முறைமையில் இருப்பினும், பெண்கள் மீதான ஆதிக்கத்தின் பங்குதாரர் என்ற வகையில் அவர்கள் ஒற்றுமைப்பட்டுள்ளனர். இந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியும் உள்ளனர். ஆணாதிக்க முறைமையின் அதிகாரவைப்பு முறையில் சகல ஆண்களும், அவர்கள் அதில் எந்த ஸ்தானத்தை வகித்தாலும் சில பெண்களையாவது கட்டுப்படுத்த முடியுமானவர்களாயுள்ளனர். அரச சமூகங்களில் ஆணாதிக்க முறைமை முதன் முதல் நிறுவனப்படுத்தப்பட்ட போது தமது குலக் குழு மூலவளங்களைக் கையளித்தமைக்காக புதிதாக வந்த ஆட்சியாளர்கள் குலக்குழுவைச் சேர்ந்த ஆண்களுக்கு குடும்பத் தலைமைப் தகுதியை அளித்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. பெண்கள் மீதான தமது ஆதிக்கத்தைப் பேணுவதற்காக ஆண்கள் ஒருவரில் ஒருவர் தங்கியுள்ளனர்.
பெண்களது உழைப்புச்சக்தியை ஆண் கட்டுப்படுத்துவதே ஆணாதிக்க முறைமையின் பெளதீக அடிப்படையாக அமைந்துள்ளது. அத்தியாவசியமான உற்பத்தி மூலவளங்களிலிருந்து பெண்களைப் புறந்தள்ளிவைப்- . பதன் மூலமும் பெண்களின் பாலியலைக்கட்டுப்படுத்துவதன் மூலமும் அவர்கள் மீதான தமது கட்டுப்பாட்டை ஆண்கள் நிலைநாட்டுகிறார்கள். ஒரு புருஷ, எதிர்ப்பால் உறவுத்திருமணம் இத்தகைய கட்டுப்பாட்டுக்கு வழி சமைக்கிறது. மூலவளங்களுக்கான பெண்களது நுழைவுரிமையையும் அவர்களது பாலியலையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பெண்களது உழைப்புச்சக்தியை, ஆண்களுக்குப் பல தனிப்பட்டதும் பால்ரீதியானதுமான சேவைகளைப்பெறவும், பிள்ளைகளை வளர்க்கவும் பயன்படுத்த முடிகிறது. ஆண்களுக்குப் பெண்கள் அளிக்கும் சேவையானது மகிழ்ச்சியற்ற பலவேலைகளை ஆண்கள் செய்வதிலிருந்து (குளியலறை கழுவுதல்) விடுவிக்கிறது. இது குடும்பத்திற்குள்ளும் குடும்பத்திற்கு வெளியேயும் நடப்பதாகும். உதாரணமாக குடும்பத்திற்கு வெளியே ஆண் அதிகாரிகள் தமது பெண் செயலாளர்களைப் பல தனிப்பட்ட வேலைகள் செய்யவும், காப்பி தயாரிக்கவும் பயன்படுத்துவதாகும். பிள்ளைகளை வளர்ப்பதும் ஆணாதிக்க முறைமையை ஒரு அமைப்பாக நிலைநிறுத்துவதற்கு உதவுகிறது. வர்க்க சமூகம், பாடசாலை, பொருள் நுகர்வு முறை, வேலைத்தலம் போன்றவற்றால் மீள் உருவாக்கம் செய்யப்படுவது போல ஆணாதிக்க முறை சமூக உறவுகளும் மீள் உருவாக்கப்படுகின்றன. எமது சமூகத்தில் பொதுவாகப்
18

பிள்ளை வளர்ப்பு பெண்களில் தங்கியுள்ளதுடன் ஆண்கள் மிக அரிதாகவே குடும்ப அலுவல்களில் பங்கு கொள்கின்றனர். இத்தகைய சூழலில் வளரும் பிள்ளைகள் இலகுவில் பால் அதிகார அமைப்பு முறையை கற்றுவிடுவர். இதனை விட குடும்பத்திற்கு வெளியே பாடசாலை, கோயில், தொழிற்சாலைகள், அலுவலகங்கள்,தொடர்புசாதனங்கள் போன்றவை பெண் களது தாழ்த்தப்பட்ட நிலையை உறுதி செய்து நிலைநிறுத்துகின்றன.
ஆணாதிக்க முறைமையின் பெளதீக அடிப்படை குடும்பத்தில் நிகழும் பிள்ளை வளர்ப்பில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. அது பெண்களின் உழைப்பைக் கட்டுப்படுத்த இயலுமானவர்களாக ஆண்களை ஆக்கும் சகல சமூகக் கட்டுமானங்களிலும் தங்கியுள்ளது. தந்தை வழிமுறைமையை நிலைநிறுத்தும் சமூகக் கட்டுமானங்களின் அம்சங்கள் கோட்பாட்டு ரீதியாக இனங்காணப்படக்கூடியனவாகவும் அதனால் ஏனைய அம்சங்களிலிருந்து பிரித்தறியக்கூடியனவாகவும் உள்ளன. கெய்ல் ரூபின், இத்தகைய சமூகக் கட்டுமானங்களின் கூறுகளை இலகுவாக இனங்காணும் வண்ணம் பால்/ UT6) 566) (p60.1360)LD (Sex/Gender System) 616 golf ତ୯୬ கருத்தாக்கத்தை உருவாக்கினார்.
"l_JT6Ö/LJT6ÜÉ560)6\) (yD60)360)LD" (Sex/Gender System) 6T6öTuğ5I 6Q([b öfeLypÖbLíb தனது உயிரியல் பாலியலை மனித செயற்பாட்டின் உற்பத்திகளாக உருமாற்றும் ஒழுங்குமுறைத் தொகுதியைக் குறிக்கும். இவற்றினால் உருமாற்றப்பட்ட பாலியல் தேவைகள் திருப்தி செய்யப்படலாம்.
நாம் ஆண் பெண் என இரு வகை உயிரியல் பால் வகைகளாகப்
பிறந்துள்ளோம். ஆனால் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் ஆண்மை
பெண்மை என்ற குணங்களைக் கொண்டவர்களாக பால்நிலைகளாக
(Gender) உருவாக்கப்படுகிறோம். நாம் எவ்வாறு அப்படி ஆக்கப்படுகிறோம்
என்பது ஏங்கல்ஸ் கூறிய உற்பத்தி முறைமையின் இரண்டாவது அம்சம்
ஆகும். அதாவது 'மனித இனத்தின் உற்பத்தி, அதன் தொடர்ச்சியும் நிலைபேறும்" என அவர் கூறியமையாகும்.
எவ்வாறு மக்கள் தமது இனத்தை நிலை நிறுத்துகின்றனர் என்பது சமூகரீதியாகத் தீர்மானிக்கப்படுவதாகும். பால் அடிப்படையில் உள்ள கட்டிறுக்கமான உழைப்புப் பிரிவினை - சகல சமூகங்களுக்கும் பொதுவான சமூகக் கண்டு பிடிப்பு - இரு வேறுபட்ட ஆண்மை, பெண்மை என்ற பிரிவுகளை உருவாக்குவதுடன் பொருளாதாரக் காரணங்களுக்காக ஆணும் பெண்ணும் ஒன்றுசேரவேண்டிய தேவையையும் உருவாக்குகிறது. இது எதிர்ப் பால் உறவை நோக்கித் தமது பாலியல் தேவைகளை வழி நடத்துவதுடன் மனித
19

Page 15
இன மறு உற்பத்தியையும் நிச்சயிக்கிறது. சில முன்னேறிய சமூகங்களில் மனித இன மறு உற்பத்தி தொழினுட்பத்தினாலும் சாதிக்கப்படலாம். ஆனால் இன்று வரை பால்ரீதியான வேலை பிரிவினை யாவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. இவ்வேலைப்பிரிவினை பால்களுக்கிடையிலான அசமத்துவத்திற்குக் காரணமாகாமல் இருக்கக்கூடிய வாய்ப்பு கோட்பாட்டு ரீதியாக உண்டு. எனினும் சகல அறியப்பட்ட சமூகங்களிலும் இப்பிரிவினையே பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. மேலும் இப்பிரிவினையே பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமூகத்தில் வெவ்வேறான அனுபவங்களை அளிப்பதற்கும் காலாகிறது. இதுவே, உயர்ச்சி வாய்ந்த தொழில் வாய்ப்பு, வீட்டு வேலைகளைச் செய்யாமை ஆகியவற்றால் மாத்திரமல்லாமல் உளவியல் ரீதியாகவும் செயற்படத்தக்க ஆண் அதிகாரத்தின் பெளதீக அடிப்படையாக உள்ளது.
எவ்வாறு மனிதர்கள் தமது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்? எவ்வாறு அவர்கள் தமது இனத்தை மறு உற்பத்தி செய்கின்றனர்? புதிய தலைமுறையினருக்கு சமூக விழுமியங்களை எவ்வாறு கற்றுக்கொடுக்கின்றனர்? ஆண், பெண்ணாக இருப்பது குறித்து எவ்வாறு உணர்கின்றனர்? ஆகிய இவை யாவும் ரூபின் குறிப்பிடும் பால் பால்நிலை முறைமை (Sex/Gender System) என்பதில் அடங்கும். உறவுமுறைகளின் செல்வாக்கிற்கு (யாருடன் பாலுறவு கொள்ளலாம் என இந்த உறவு முறைகள் நிர்ணயிக்கும்) ரூபின் முக்கியத்துவமளிக்கிறார். இத்துடன் பால்களுக்கிடையே அதிகாரவைப்பு முறையை வரைவு செய்து பேணுவதில் ஏனைய சமூக நிறுவனங்கள் வகிக்கும் பாத்திரத்தை ஆராய்வதற்கு பால் பால்நிலை முறைமை என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்த முடியும். கோட்பாட்டு ரீதியாக இந்த பால்/பால்நிலை முறைமையை பெண் ஆதிக்கமாகவோ, ஆண் ஆதிக்கமாகவோ, ஆண் சமத்துவமாகவோ கூட இருக்கலாம் என்று ரூபின் கூறுகிறார். ஆனால் இந்த முறைமையை வரலாற்று ரீதியாகப் பாகுபடுத்தவில்லை. நாம் எமது நிகழ்கால பால் / பால் நிலை (UD60)[]36ÖDLD60)UJ (Sex / Gender System) cẹ,60ÖIII gổlö đ5 (UD60)[I060DLD 6I 6öI đồ கூறுகிறோம். ஏனெனில் தந்தை வழிமுறைமை என்ற இக்கருத்தாக்கம் அதிகாரவைப்புமுறை, ஆணாதிக்கம் போன்ற நிகழ்கால சமூக முறையின் மையமாக உள்ளவற்றைக் குறிப்பதாலாகும்.
பொருளாதார உற்பத்தியும் (மார்க்ஸிஸ்டுகள் உற்பத்தி முறைமை எனக் குறிப்பிட்டது) மனித இனத்தை உற்பத்தி செய்வதும் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் எத்தகைய சமூக ஒழுங்கமைப்பின் கீழ் மக்கள் வாழ்கின்றனர் என்பதைத் தீர்மானிக்கும் என
20

ஏங்கல்ஸ் கூறினார். இவ்விரு வகை உற்பத்தி முறைகளையும் நோக்குவதன் மூலம் முழுச் சமூகத்தையும் புரிந்துகொள்ள முடியும் "தூய்மையான முதலாளித்துவம்" என்பதோ "தூய்மையான ஆணாதிக்க முறைமை" என்பதோ இல்லை. அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே இயங்குகின்றன. உண்மையில் என்ன இருக்கிறது எனின் தந்தை வழிமுறைமை நிலப்பிரபுத்துவம், தந்தை வழிமுறைமை முதலாளித்துவம், சமத்துவமுடைய வேட்டையாடும் சேகரித்துண்ணும் சமூகங்கள், த்ாய் வழி அல்லது தந்தை வழி விவசாய சமூகங்கள் போன்றவை தாம். உற்பத்தியின் ஒரு அம்சத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் இன்னோர் அம்சத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் இடையே அத்தியாவசியமான தொடர்பு ஏதும் இல்லை. உதாரணமாக ஒரு சமூகம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிஸ் கட்டத்திற்கு மாறலாம். ஆனால் தந்தை வழி முறைமை தொடர்ந்திருக்கலாம். வரலாறு, எமது அனுபவம், பகுத்தறிவு ஆகியவை மூலம், மேற் கூறிய இரு உற்பத்திகளும் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன என்பதும் ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றதில் இயக்கம், முரண்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தும் எனவும் அறியலாம்.
இனரீதியான (Racial) அதிகாரவைப்பு முறையையும் இப் பின்னணியில் விளங்கிக் கொள்ளலாம் நிற / இன (Color / Race) அமைப்புகளை வரைவு செய்வதன் மூலம் - உயிரியல் பிறப்பினால் உண்டாகும் நிறம் எவ்வாறு ஒரு சமூக வகைப்பாடாகிய இனமாக மாறுகிறது என்ற அடிப்படையில் இது மேலும் விரிவாக விளக்கப்படலாம். பால்ரீதியான அதிகார அடுக்குமுறை போல இனரீதியான அதிகார அடுக்குமுறையும் சமூக ஒழுங்கமைப்புகளின் அம்சங்களாகும். இவை கருத்து நிலை அடிப்படையானவையல்ல. ஆனால் இரண்டாவது உற்பத்தி முறைமையான மனித இன உற்பத்தி, மறு உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கியவை, எமது சமூகங்களை எளிமையாக முதலாளித்துவ சமூகம் என்றில்லாமல் ஆணாதிக்க முறைமை முதலாளித்துவம் என்றோ, வெள்ளைப் பேரினவாதம் என்றோ கூறுவது கூடிய பொருத்தமாயிருக்கும். மூன்றாவது பகுதியில் நாம் எவ்வாறு முதலாளித்துவம் இனரீதியான அம்சங்களைப் பயன்படுத்துகிறது என்பதையும் முதலாளித்துவத்திற்கும் ஆணாதிக்க வழிமுறைமைக்கும் உள்ள பரஸ்பர தொடர்பு பற்றியும் விளக்கியுள்ளோம்.
முதலாளித்துவ விருத்தியானது தொழிலாளர்களுக்கிடையே ஒரு அதிகாரப் படிநிலை முறையை உருவாக்குகிறது. ஆனால் பாரம்பரிய மார்க்ஸிச வகைப்பாடுகள் எவர் எந்த இடத்தை வகிப்பார்கள் என்று கூறவில்லை. பால், இன அதிகார அடுக்குகள் யார் இத்தகைய வெற்றிடங்களை நிரப்புவர்
21

Page 16
என்று தீர்மானிக்கும். ஆணாதிக்க முறைமை என்பது வெறுமனே அதிகாரப் படிநிலை கொண்ட ஒழுங்கமைப்பு அல்ல. ஆனால் அது குறிப்பிட்ட நபர்கள், குறிப்பிட்ட இடங்களை வகிப்பது தொடர்பானதாகும். ஆணாதிக்க முறைமை பற்றிக் கற்கும்போதுதான் பெண்களே ஆதிக்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் எவ்வாறு என்பதையும் அறிகிறோம்.
பெரும்பான்மையான சமூகங்கள் ஆணாதிக்க முறைமையுடையனவாக உள்ளன என்று நாம் நம்புகிறோம். ஆனால் அது மாறுதலற்ற சர்வதேச அம்சமாகும் என நினைப்பதில்லை. ஆனால் உண்மையில் இது காலப்போக்கில் மாறுதலடைந்து வந்துள்ளது. பெண்களை ஆதிக்கப்படுத்தும் ஆண்களுக்கிடையிலான பரஸ்பர உறவுகளின் வடிவங்கள் காலப்போக்கில் மாறியுள்ளன. ஆண்களுக்கிடையிலான அதிகாரப் படிநிலையும் ஆணாதிக்க முறைமையின் நன்மைகளைப் பெறுவதில் அவர்களுக்கிடையேயுள்ள வேறுபாடும் முக்கியமாக ஆராயப்பட வேண்டியதாகும். வெவ்வேறு வர்க்கம், இனம், தேசம், திருமண அந்தஸ்து ஆகியவற்றையுடைய பெண்கள் வெவ்வேறு வகையான ஆணாதிக்க முறைமை அதிகாரத்திற்கு உட்படுகின்றனர். பெண்களும் கூட தமது ஆண்களை விட குறைந்த அந்தஸ்தில் உள்ள ஆண்கள் மீது மேற்கூறிய அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியும்.
மீண்டும் மேலே கூறியவற்றைத் திருப்பிக் கூறுவதானால் பெண்களை ஆதிக்கப்படுத்தக்கூடியவர்களாக ஆண்களை ஆக்குவதும் அவர்களுக்கிடையிலான அதிகாரப் படிநிலை உறவுகளையும், ஒருமைப்பாட்டையும் கொண்டதும் பெளதீக அடிப்படையைக் கொண்ட சமூக உறவுகளையும் உள்ளடக்கியது ஆணாதிக்க முறைமை என நாம் வரைவு செய்கிறோம். ஆணாதிக்க முறைமையின் பெளதீக அடிப்படை பெண்களின் உழைப்புச். சக்தியைக் கட்டுப்படுத்துவதாகும். பெண்களது பாலியலைக்கட்டுப்படுத்துவதன் மூலமும் அத்தியாவசியமான பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து அவர்களைப் புறந்தள்ளி வைப்பதன் மூலமும் ஆண்கள் இதனைச் சாதிக்கிறார்கள். பெண்களிடமிருந்து தமக்குத் தனிப்பட்ட சேவைகளைப் பெறுவதன் மூலமும், வீட்டு வேலை, பிள்ளை வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதாலும் தமது பாலியல் தேவைகளுக்குப் பெண்களின் உடலை அடையக் கூடியமையினாலும் இந்த அதிகாரத்தை அவர்கள் செயற்படுத்தித் தாம் அதிகாரமுள்ளவர்கள் என உணர்கின்றனர். தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் ஆணாதிக்க முறைமையின் அம்சங்களாவன எதிர்ப் பால் திருமணம், பிள்ளை வளர்ப்பு, வீட்டு வேலைகள் பெண்கள் ஆண்களிற் பொருளாதார ரீதியாகத் தங்கியிருத்தல், அரசு, (ஆண்களிடை
22

யேயான சமூக உறவுகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிறுவனங்கள், கழகங்கள் (Clubs), விளையாட்டுகள், தொழிற்சங்கங்கள், ஆயுதப்படைகள்) ஆகியவையாகும். ஆணாதிக்க முறைமையை புரிந்து கொள்ள இவை யாவற்றையும் நாம் பரிசீலித்தல் வேண்டும்.
அதிகாரப் படிநிலையும் பரஸ்பரம் தங்கியிருத்தலும், பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலையும் எமது சமூகத்தின் செயல்பாட்டுடன் ஒன்றிணைந்ததாகும். இத்தகைய உறவுகளின் உருவாக்கம் பற்றிய வினாக்களைப் புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவ சமூகத்தில் ஆணாதிக்க முறைமை உறவுகளை இனங்காண முடியுமா? முதலாளித்துவ சமூகங்களுக்குள் ஆண்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டையும் உறவையும் நாம் இனங்காணுவதுடன் அவை எவ்வாறு தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகின்றன என்பதையும் ஆராய வேண்டும். முதலாளித்துவ சமூகங்களின் வளர்ச்சி ஆணாதிக்க முறைமையை வடிவமைத்துள்ள வகையை நாம் இனங்கான முடியுமா?
முதலாளித்துவத்தினதும் ஆணாதிக்க முறைமையினதும் கூட்டு
முதலாளித்துவ சமூகங்களில் எவ்வாறு ஆணாதிக்க முறைமை உறவுகளை இனங்காண்பது? பெண்கள் தமது சொந்த ஆண்களால் ஒடுக்கப்படுவது போலத் தென்படுகிறது. அது தனிப்பட்ட ஒன்றாகவும் தோன்றுகிறது. குடும்பங்களுக்கிடையிலும் ஆண்களுக்கிடையிலும் உறவு துண்டாடப்பட்டுள்ளது. ஆண்களுக்கிடையிலானதும், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலானதுமான உறவை ஒழுங்குமுறையான ஆணா திக்க முறைமையாக இனங்காணுதல் கடினம் தான். எவ்வாறாயினும் ஆணாதிக்க முறைமை ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான உறவு முறைமையாக முதலாளித்துவ சமூகத்தில் அமைந்துள்ளது. அத்துடன் முதலாளித்துவத்திற்கும் ஆணாதிக்க முறைமைக்கும் இடையே ஆரோக்கியகரமான உறவும் நிலவுகின்றது. இது தவிர்க்கமுடியாதது. இதே சமயம் பெண்களது உழைப்புச் சக்தியைப் பயன்படுத்துவதில் முதலாளித்துவவாதிகளுக்கும் ஆண்களுக்கும் இடையே முரண்படும் நலன்கள் காணப்படுகின்றன. பெருந்தொகையான ஆண்கள், பெண்கள் தமக்குத் தனிப்பட்ட வகையில் சேவை செய்யவேண்டும் என விரும்புவர். ஆனால் முதலாளித்துவவாதிகளான சிறுதொகை ஆண்கள் கூலி உழைப்புச் சந்தை யில் பெண்கள் வேலை செய்ய வேண்டுமென விரும்புகின்றனர். இத்தகைய முரண்பாடுகளைப் பரிசீலிப்பதன் மூலம் ஆணாதிக்க முறைமை உறவுகளின் பெளதீக அடிப்படையையும் முதலாளித்துவத்திற்கும் ஆணாதிக்க
23

Page 17
முறைமைக்கும் இடையிலுள்ள தொடர்பையும் இனங்காணக் கூடியதாக இருக்கும்.
19 ஆம் நூற்றாண்டில் தாம் கண்ட சமூக அம்சங்கள் சிலவற்றை வைத்து மார்க்ஸிஸ்டுகள் குறிப்பிடத்தக்க தருக்கரீதியான முடிவுகளைச் செய்தனர். ஆனால் ஏற்கனவே நிலவிய ஆணாதிக்க சமூக சக்திகளின் பலத்தையும் இச் சக்திகளுடன் இணைந்து போகவேண்டிய தேவை முதலாளித்துவத்திற்கு இருந்ததையும் இவர்கள் குறைத்தே மதிப்பிட்டனர். கைத்தொழிற் புரட்சியானது பெண்கள், சிறுவர்கள் உட்பட யாவரையும் உழைப்புப்படையில் சேர்த்தது. உண்மையில் முதலில் நிறுவப்பட்ட தொழிற். சாலைகள், பெண்களதும் சிறுவர்களதும் உழைப்பை பயன்படுத்தின. பெண்களும் சிறுவர்களும், ஆண்களிலிருந்து வேறாக வேதனம் பெற்றதுடன், குறைந்த வேதனத்தையும் பெற்றனர். கோட்ஸ்கி 1892 ஆம் ஆண்டு இது நிகழும் முறை குறித்துப் பின்வருமாறு கூறினார்.
"ஆண் தொழிலாளியின் மனைவியும் பிள்ளைகளும் தம்மைத்தாமே பராமரிக்க இயலுமானவர்களாயிருந்தனர். ஆண்தொழிலாளியின் வேதனமானது அவனது சொந்தத் தேவைகளின் பெறுமதியளவுக்கு உழைப்புப்படையில் புதியவர்களைச் சேர்ப்பது தடைப்படாமலே குறைக்கப்படலாம். பெண்களதும் பிள்ளைகளதும் உழைப்பைப் பெறுவதில் மேலதிக நன்மை யும் உள்ளது. அதாவது இவர்கள் எதிர்ப்பை குறைவாகவே வெளிக் காட்டுவர். அத்துடன் உழைப்புச் சந்தையில் தொழிலாளரின் எண்ணிக்கை யையும் பெருமளவில் அதிகரிக்கிறது."
குறைந்த வேதனம், உழைப்புச்சந்தையில் குடும்ப அங்கத்தவர்களின் கட்டாய பங்கேற்பு ஆகியவை தொழிலாளர் குடும்பத்தில் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் மார்க்ஸிஸ்டுகளால் இனங் காணப்பட்டன. கோட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்.
"முதலாளித்துவ உற்பத்தி முறை ஆண் தொழிலாளியின் குடும்ப அலகை அழிக்கவில்லை. ஆனால் அதனது மகிழ்ச்சியற்ற அம்சங்களைத் தவிர்த்து ஏனையவற்றைத் திருடிக் கொண்டது. இன்று பெண்ணினது பழைய சுமைகள் வேறும் புதியவை சேர்ந்ததன் மூலம் அதிகரித்துள்ளன. ஆனால் ஒருவர், இரு எசமானர்களுக்குச்சேவை செய்யமுடியாது. ஆண் தொழிலாளியின் குடும்பம் அவனது மனைவி, தொழில்செய்து சம்பாதிக்கும்படி நேரிடும்போது பாதிக்கப்படுகிறது."
பெண்களது கூலி உழைப்பினால் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி
24"

கோட்ஸ்கி போலவே உழைக்கும் ஆண்களும் உணர்ந்திருந்தனர். பெண்கள் உழைப்புச் சந்தையில் "மலிவான போட்டியாளர்களாக" மாத்திரமன்றி ஆண்தொழிலாளர்களின் மனைவியராகவுமிருந்தனர்.
ஆண் தொழிலாளர் பெண்கள் சிறுவர்கள் ஆகியோர் பெருமளவு உழைப்புப்படையில் சேருவதை எதிர்த்தது மட்டுமன்றி தொழிற்சங்க அங்கத்துவ உரிமைகளிலிருந்தும் அவர்களைப் புறந்தள்ளி வைத்தனர். 1846 ஆம் ஆண்டு 'பத்துமணித்தியாலங்களுக்காக வாதிடுவோர் (Ten hours Advocates) பின்வருமாறு கூறினர்.
"பெண் தொழிலாளரது வேலை நேரத்தைக் குறைத்தாலன்றி அவர்களது பெளதீக , உளவியல் நிலைகளை முன்னேற்றக்கூடிய முயற்சிகள் முழுப்பலனையும் தராது என நாம் கூறவேண்டிய அவசியமில்லை. திருமணமான பெண்கள் குடும்பக்கடமைகளைச்செய்வதே கூடிய நன்மை தருமென நாம் கூறுவோம். பருத்தி ஆலையில் கடினவேலை செய்வதற்குப் பெண்ணை அனுப்பாமல் குடும்பத்திற்குத் தேவையான யாவற்றையும் கணவனே வழங்கக்கூடிய நாள் வெகு தூரத்திலில்லை என நம்புகிறோம்."
1854 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேசிய அச்சகச் சங்கம் பெண் அச்சுக்கோப்பாளர்களை வேலைக்குச் சேர்ப்பதை ஊக்கப்படுத்தக்கூடாது என முடிவு செய்தது.
பெண்தொழிலாளர்களுக்கு சங்கப் பாதுகாப்பு அளிக்கவும் ஆண்தொழிற்சங்க அங்கத்தவர்கள் விரும்பவில்லை. 1879 ஆம் ஆண்டு சுருட்டுத்தொழிலாளர்களின் சர்வதேசிய சங்கத் தலைவர் அடால்ப் ஸ்ராசா பின்வருமாறு கூறினார். "நாம் பெண்களைத் தொழிலிலிருந்து நீக்க முடியாது. ஆனால் ஆலைச்சட்டங்களினூடாக அவர்களது எண்ணிக்கை கூடுவதைத்தடுக்க முடியும்".
கூலி பெறும் பெண்களையும் இளைஞர்களையும் ஒழுங்கமைப்பதன் மூலம் மலிவான போட்டி ஏற்படுத்தும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும் குடும்பவாழ்வு பாதிக்கப்படுவதைத் தீர்க்க முடியாது, ஆண்கள், தொழிற்சங்கப் பாதுகாப்பை ஆண்களுக்கு மட்டுப்படுத்திக் கொண்டு பெண்களுக்கு தொழிற் பாதுகாப்பு சட்டங்கள் தேவை என வாதிட்டனர். இந்தச் சட்டங்கள் பெண்கள், சிறுவர் ஆகியோரது உழைப்பு தொடர்பான சில தீமைகளைக் குறைத்தாலும் ஆண்களுக்குரிய தொழில்கள் எனக் கருதப்பட்டவற்றில் பெண்கள் ஈடுபடுவதை மிகவும் மட்டுப்படுத்தின. உயர்ந்த வேதனம் அளிக்கம் வேலைகளைஆண்கள் தாமே வைத்துக் கொண்டனர்.
25

Page 18
குடும்பத்துக்குத் தேவையான செலவுகளுக்குப் போதுமான பணம் வேதனமாகத் தமக்குத் தரப்படவேண்டும் என அவர்கள் கோரினர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 'குடும்பவேதனம் தொழிலாளர் குடும்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகிவிட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதற்குப்பதில் ஆண்தொழிலாளர்கள் குடும்ப வேதனக்கோரிக்கையை முன்வைத்து, தமது மனைவியர் வீட்டில் வேலை செய்வதை விரும்பினர். ஆண்களுக்கிடையிலான அதிகார படிநிலை அடிப்படையில் அமைந்த உறவுகளும் அதே சமயம் அவர்களிடையே காணப்பட்ட ஒருமைப்பாடும் இத்தகைய ஒரு தீர்வை ஏற்படுத்தும் செயல் முறையில் முக்கியமாக செயற்பட்டன, பெண்களுடைய உழைப்புச் சக்தி குறித்து ஆணாதிக்க முறைமை, முதலாளித்துவம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் ஒரு தீர்வாக 'குடும்ப வேதனம்' விளங்கிக் கொள்ளப்படல் வேண்டும்.
ஆண்களுக்குக் குடும்ப வேதனம் அளிப்பதானது, ஏனையவர்களுக்குச் குறிப்பாக சிறுவர், பெண்கள், சமூகத்தால் குறைந்த அந்தஸ்து உடைய வர்கள் எனக் கருதப்படுபவர்கள் (ஐரிஷ் நாட்டவர், கறுப்பின மக்கள் ஆகியோருக்குக் குறைந்த வேதனம் அளிப்பதற்கு வழிவகுக்கிறது சிறுவர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட நிலையிலுள்ள ஆண்கள் ஆகியோ ருக்குக் குறைந்த வேதனம் வழங்குதல் உழைப்புச் சந்தையில் காணப்படும் வேலைப்பிரிவினையால் நிலை நிறுத்தப்படுவதாகும். இந்தப் பிரிவினை யானது தொழிற்சங்கம், நிர்வாகம் முதலியவற்றாலும் பாடசாலைகள், பயிற்சிநெறிகள் போன்றவற்றாலும் மேலும் துண்டப்படுகிறது. பால் அடிப்படையில் வேலைப்பிரிவினையும், பெண்களுக்குக் குறைந்த வேதனம் பெறும் தொழில் வழங்குவதும் பொருளாதாரரீதியாக ஆண்களிற் பெண்கள் தங்கியிருத்தலையும் ஆண், பெண்ணுக்கு வேறுவேறான பொருத்தமான இடப்பரப்புகள் உள்ளன என்ற கருத்தையும் உறுதிசெய்வதாகும். எனவே குடும்ப வேதனத்தின் தோற்றமானது இருவகையில் ஆண் ஆதிக்கத்திற்கான பெளதீக அடிப்படையை அளிக்கிறது. முதலாவது, உழைப்புச் சந்தையில் ஆண்களுக்கு நல்ல தொழில்களையும் உயர்ந்த வேதனம் பெறும் சாத்தியப்பாடும் உண்டு. பெண்கள் குறைந்த வேதனம் பெறுவதானது, ஆண்களது பெளதீகரீதியான உயர்ச்சிக்கும், பெண்கள் மனைவியராக இருத்தலை ஒரு தொழிலாகக் கொள்வதனையும் நீடிக்கச் செய்கிறது. இரண்டாவது ஆண்களுக்கு நேரடியாக நன்மை அளிக்கும்படி பெண்கள் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, ஏனைய சேவைகள் ஆகியவற்றைச்
26

செய்கின்றனர். பெண் களது வீட்டுக் கடமைகளாவன உழைப்புச் சந்தையில் அவர்களது தாழ்த்தப்பட்ட நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த குடும்பவேதனம் தொடர்பான இந்த விருத்திகள் முதலாளித்துவ, ஆணாதிக்க முறைமை நலன்களுக்கு நன்மை தருவனவாயமைந்தன. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலவிய கடுமையான நிலைமைகளால் தொழிலாளர் குடும்பங்கள் போதுமான அளவு தம்மை மறு உற்பத்தி செய்து பெருக்க முடியவில்லை. வீட்டுக்கு வெளியே வேலை செய்து உழைக்கும் பெண் வளர்க்கும் பிள்ளைகளை விடவும் வீட்டில் தங்கும் மனைவி வளர்க்கும் பிள்ளைகள் கல்வி கற்றவர்களாகவும், நல்ல வேலையாட்களாகவும் இருப்பதை பலரும் உணர்ந்தனர். 'ஆண்களுக்குக் குடும்ப வேதனம் வழங்குதல், பெண்களை வீடுகளில் வைத்தல்" போன்ற பேரமானது ஆண் தொழிலாளர்களுக்கு எந்தளவுக்கு நல்ல வாய்ப்புக்களைத் தந்தனவோ அது போல முதலாளிகளுக்கும் நன்மையாக அமைந்தது. பேரம் பேசுதலின் விதிகள் காலப்போக்கில் மாறினாலும் கூட குடும்பமும் அதில் பெண்ணின் உழைப்பும் முதலாளித்துவத்திற்கு உழைப்பாளர் படையை அளிப்பதன் மூலம் சேவை செய்கின்றன. ஆண்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் உழைப்பதை விட முதலாளித்துவத்திற்கு நுகர்வோராகவும் பெண்கள் பணி புரிகின்றனர். பயர்ஸ்ரோன், பிராங்பேட் சிந்தனைக் கூடம் வேறும் பலர் கூறியது போல பணிவு, ஆதிக்கம் ge,6uj6) bů6Š Ljubčflób jLLDT d56)|LĎ குடும்பம் விளங்குகிறது. கீழ்ப்படிவுள்ள சிறுவர்கள் பணிவுள்ள வேலையாட்கள் ஆகின்றனர். ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் தத்தமக்குரிய பாத்திரங்களைப் பழகுகின்றனர்.
குடும்ப வேதன முறையானது முதலாளித்துவம் தந்தை வழிமுறையுடன் இணைந்து செல்கிறது என்பதை விளக்கும் அதே சமயம் சிறுவர்களுடைய மாறும் அந்தஸ்தானது தந்தை வழிமுறைமை முதலாளித்துவத்துடன் இணைந்து செல்கிறது என்பதையும் விளக்குகிறது. பெண்களைப் போலவே சிறுவர்களும் கூலி உழைப்பிலிருந்து புறந்தள்ளப்பட்டனர். பணம் உழைக்கும் சாத்தியப்பாடு குறைவடைந்தபோது அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவும் மாறியது. அமெரிக்காவில் கைத்தொழிற் காலகட்ட ஆரம்பத்தின்போது பிள்ளைகளின் தேவையை நிறைவுசெய்ய அத்தியாவசியமானவர்களாக தந்தையர் கருதப்பட்டனர். சிறுவர் தாபரிப்பு வழக்குகளில் தந்தையருக்கு சட்ட முக்கியத்துவமும், முதன்மையும் அளிக்கப்பட்டது. பிள்ளைகளது உழைக்கும் திறன்
27

Page 19
குறைந்தபோது அன்னையர் அவர்களுக்குப் பொறுப்பானவர்களாகக் கருதப்பட்டனர். இங்கு பிள்ளைகளின் மாறும் பொருளாதார நிலைக்கேற்ப ஆணாதிக்க முறைமையும் தனது நலன்களை மாற்றிக் கொள்கிறது. பிள்ளைகள் அதிகளவு உற்பத்தித்தன்மை உடையோராக இருக்கும்போது அவர்களை ஆண்கள் உரிமை கொண்டாடினர். உற்பத்தித் திறன் குறைந்தபோது அவர்கள் பெண்களிடம் கொடுக்கப்பட்டனர்.
20 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவமும் ஆணாதிக்க முறைமையும்
19 ஆம் நூற்றாண்டு மாக்ஸிஸ்டுகள் முதலாளித்துவத்தின் வருகையுடன் ஆணாதிக்க முறைமை மெதுவாக அழிந்துவிடும் என்று முன்னுரைத்தமை உண்மையாகிவிடவில்லை. ஆணாதிக்க வழிமுறைமையின் பலம் , நெகிழ்ச்சி ஆகியவற்றை அது குறைத்து மதிப்பிட்டது. மாத்திரமன்றி முதலாளித்துவத்தின் பலத்தையும் அதிகமாக மதிப்பிட்டது. சமகால அவதானிகள் 'துய' முதலாளித்துவத்தின் தன்மைகட்கும் யதார்த்தமான முதலாளித்துவத்தின் தன்மைகட்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்கூறியவர்களாயுள்ளனர்.
முதலாளித்துவத்திற்கும் இன ஒழுங்குகள், உழைப்புச் சந்தையின் கூறுபாடுகள் ஆகியவற்றுக்குமிடையிலான இணைப்பு பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு 'தூய" முதலாளித்துவ சக்திகள் வரலாற்று யதார்த்தத்தை நோக்குகின்றன என்பதற்கு உதாரணங்களைத் தரக்கூடும். இத்தகைய செயன்முறையில் முதலாளித்துவம் அதிகளவு நெகிழ்ச்சியைக் காட்டும்.
தென்னாபிரிக்கா பற்றி ஆராய்ந்த மார்க்லிஸ்டுகள் இன ஒழுங்குகள் சகல மக்களினதும் சமத்துவமான தொழிலாளர் மயப்படுத்தலை அனுமதிக்காவிடினும் இது, இனத் தடைகள் மூலதனத்தின் குவிப்பைத் தடை செய்யும் என்பதைக் குறிக்காது என வாதிடுகின்றனர். அரூப நிலையில், ஆராய்ச்சியாளர்கள் அதிகளவான உபரிமதிப்பை உறிஞ்சி எடுக்கக்கூடிய ஒழுங்குகள் யாவை என்பது பற்றி ஆராயக்கூடும் எனினும் ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிலையில் எதிர்ப்பு, அரசின் குறுக்கீடு ஆகியவை குறித்து முதலாளித்துவ வாதிகள் அக்கறை கொள்ளக்கூடும். சமூகத் தினை முழுமையாக மறு உற்பத்தி செய்யக்கூடியதாக அரசு தலையிடக்கூடும். இதற்கு சில முதலாளித்துவவாதிகளைக் கண்காணிப்பதும், மூலதனத்தின் சில அதிருப்திகரமான அம்சங்களைத் தவிர்ப்பதும் முக்கியமாகும். இத்தகைய அம்சங்களைக் கவனத்தில் எடுத்து கூடியளவு நடைமுறை ரீதியான லாபங்களை முதலாளித்துவ வாதிகள் அதிகரிக்கக்
28

கூடும். முதலாளித்துவவாதிகள் ஆதிக்கமுள்ள சமூகக் குழுவாயிருப்பதால் அவர்கள் இனவாதிகளாகவும் பால்வாதிகளாகவும் இருப்பர். முதலாளித்துவம் ஆதிக்கமுள்ள குழுவினதும் ஆதிக்கத்திற்கு உட்படும் குழுவினதும் பண்புகளை உள்வாங்கும்.
உழைப்புச் சந்தையைக் கூறுபோடும் ஏகபோக மூலதனத்தின் குணாம்சங்கள் பற்றிய அண்மைக்கால விவாதங்கள் மேற்கூறிய புரிதல்களுடன் ஒத்துப்போகின்றன. தொழிலாளர்களின் இயற்கையான பண்புகளைப் பயன்படுத்தி உழைக்கும் வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் முதலாளிகள், திட்டமிட்டு உழைப்பாளர் சக்தியை துண்டாடுகின்ற சந்தர்ப்பங்களில், அவர்களின் இம் முயற்சியானது குறுகிய அர்த்தத்தில் மூலதனத்தின் திரட்சிக்கான தேவை என்பதைவிட சமூகக் கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் அவசியத்திலிருந்தே எழுகிறது.
காலப்போக்கில் இவ்வாறான எல்லாப் பிளவு முயற்சிகளும் பிளவு படுத்துவதில் வெற்றியைத் தருவதில்லை. உழைப்புச் சக்தியை வடிவ மைப்பதிலுள்ள மூலதனத்தின் திறமையானது இரண்டு அம்சங்களில் தங்கியுள்ளது. ஒன்று குறுகிய அர்த்தத்தில் வருமானத்தையே திரட்டுவதற்கான அத்தியாவசிய தேவைகள், (உ-ம் பெருமளவு எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், தமக்கிடையில் தொடர்புகொள்வதை அவசியமாக்கும் விதத்தில் உற்பத்தியானது ஒழுங்கமைக்கப்பட்டிருப்பின், தொழிலாளர் அனைவரும் ஒரே மொழியைப் பேசுபவர்களாக இருப்பது பயனை விளை விக்கிறது) இரண்டாவது, அனுசரித்துச் செல்லுமாறு மூலதனத்தை நிர்ப்பந் திக்கும், தூண்டும் சமூக சக்திகள் ஒரு சமூகத்தில் காணப்படுவது (உ-ம் தென்னாபிரிக் காவில் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் தனித்தனியான குளியலறை வசதிகளை அமைப்பது முதலாளிகளுக்கு பொருளாதாரச் செலவைக் கூட்டலாம்,ஆனால் கறுப்பர்களுடன் ஒன்றாக குளியலறையைப் பாவிக்குமாறு நிர்ப்பந்திப்பதால் ஏற்படும் சமூக இழப்புடன் ஒப்பிடுகையில் இந்தப் பொருளாதாரச் செலவு அற்பமானதே)
மேற்கூறியதன்படி மூலதனம் அதிக பலமற்றதென்றும், அது அதிகளவு நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்தது என்பதும் எமது வாதமாகும். மூலதனக் குவிவு ஏற்கனவே நிலவும் சமூக வடிவங்களை எதிர்கொண்டு ஒரேசமயத்தில் அவற்றில் சிலவற்றை அழிக்கவும் சிலவற்றுடன் இணையவும் செய்கிறது. இவ்வாறு இணைந்து செல்லுதலானது புதிய சூழலில், ஏற்கனவே நிலவும் சமூக வடிவங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலில்
29

Page 20
வெளிப்படுத்தும் பலத்தின் அடையாளமாகும். தம்மை அவை பாதுகாத்துக் கொள்ளினும் அவை மாற்றமடையாமலில் லை. இனமும் பாலும் விளங்கிக்கொள்ளப்படும் கருத்து நிலையானது, மூலதனக் குவியல் செயல்முறையின் இன, பால் பிரிவுகள் மீள் உறுதிப்படுத்தப்படும் முறையால் வடிவமைக்கப்படுகிறது.
இன்று குடும்பமும் குடும்ப வேதனமும்
முதலாளித்துவமும் தந்தை வழிமுறைமையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து போதலின் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குடும்பவேதன முறை உருவாகியது என மேலே வாதிட்டோம். முதலாளித்து வத்தினதும் ஆணாதிக்க முறைமையினதும் இணைப்பை குடும்பவேதனம் உறுதி செய்தது. இதுவே பால் அடிப்படையிலான வேலைப் பிரிவினையின் ஆதாரமாகவும் அமைகிறது. பெண்கள் வீட்டு வேலைக்குப் பொறுப்பானவர் கள் எனவும் ஆண்கள் வேதனம் பெறும் உழைப்பாளர்கள் என்ற கருத்தையும் இது தருகிறது. உழைப்புச் சந்தையில் பெண்ணினது குறைந்த வேதன மானது குடும்பம் ஒரு வருமான அலகு என்ற நிலை தொடர்ந்திருக்கவும் காலாக அமைகிறது. இதுவே பெண்களது உழைப்பைக் கட்டுப்படுத்துவ தற்கு ஆண்களை அனுமதிக்கிறது.
பெண்களது கூலி உழைப்பானது குடும்பத்தில் பல அழுத்தங்களை ஏற்படுத்தினும் இதன் விளைவாக பால் அடிப்படையிலமைந்த வேலைப்பிரி வினை ஒழிந்துவிடும் என்று கருதுவது பிழையானதாகும். பால் அடிப்படை யிலான வேலைப்பிரிவினை உழைப்புச் சந்தையில் மீண்டும் தலை காட்டுகிறது. அங்கு அவர்கள் வீட்டில் செய்யும் வேலைகளைப் போன்ற வற்றையே செய்கிறார்கள். (உணவு சமைத்தல், துப்பரவாக்குதல், பரா மரிப்பு போன்றவை) இந்த வேலைகள் குறைந்த கணிப்பு உடையனவாகவும் குறைந்த ஊதியம் தருவனவாகவுள்ளன. ஆணாதிக்க முறைமையின் பெள தீக அடிப்படை குடும்பத்திலிருந்து உழைப்புச் சந்தைக்கு மாறுகிறது அது கைத்தொழில் அடிப்படையிலானதாக மாறுகிறது.
கைத்தொழில் அடிப்படையிலமைந்த ஆணாதிக்க முறைமை உறவுகள் பலவழிகளில் உறுதிப்படுத்தப்படுகின்றன. குறைந்த வேதனம், குறைந்த நன்மைகள், சந்தர்ப்பங்கள் என்பவற்றைப் பெண்களுக்கு தொழிற்சங்கங்கள் பிரேரிப்பது வெறுமனே பால் வாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் மீதமிச்சங்களால் அல்ல, அவை உண்மையில் ஆணாதிக்க வழிமுறைமையின் பெளதீக அடிப்படையை உறுதி செய்கின்றன.
30 -

குடும்பத்திலிருந்து-ஆணாதிக்கம் ஏற்கனவே மறைந்துவிட்டது எனும் அளவிற்கு சிலர் வாதிக்கின்றபோதிலும் நாம் அதனை மறுக்கிறோம் ஆணாதிககத்திற்கும் மூலதனத்திற்கும் இடையில் ஏற்படும் இணக்கத் திற்கான நிபந்தனைகள் மாறிச் செல்கின்றன என்ற போதிலும் நாம் ஏற்கனவே விவாதித்தது போல உழைப்பச் சந்தையில் வேலைகளைத் தீவிரமாகப் பாகுபடுத்துவதால் ஏற்படும் வேதன வேறுபாடானது குடும்ப அமைப்பையே பலப்படுத்துவதற்காக உள்ளது என்பதும் உண்மையாகம்
ஒரு குடும்பத்தை ஆதரிக்குமளவு ஆண்கள் சம்பளம் பெறமுடியும் என்ற கருத்தாககத்திற்குப் பதில் குடும்பவேதனம் இன்னொரு கருத் தாக்கத்திற்கு - ஆணும் பெண்ணும் உழைத்து ஒரு குடும்பத்தின் வருமானத் திற்கு உதவுவர் என்பதற்கு இடமளிக்கிறது. வேதனத்தில் உள்ள வேறுபாடு ஆணாதிக்க முறைமையையும், பெண்களின் உழைப்பைக் கட்டுப்படுத் தலையும் உறுதி செய்கிறது. இந்த வேறுபாடு பெண்களின் வேலையை இரண்டாந்தரமானது என வரைவு செய்வதற்கு உதவுவதுடன் ஆண்களில் தங்கியிருத்தல் தொடரவும் வழிவகுக்கிறது. உழைப்புச் சந்தையில் காணப்படும பால் அடிபபடையிலான வேலைப் பிரிவினை தந்தை வழி முறைமையை உறுதிசெய்கின்ற அதனது வெளிப்பாடு என்று கூறலாம்.
ஆணாதிக்க முறைமையும், முதலாளித்துவமும் இன்று ஒன்றுடன் ஒன்று இணைந்து சென்றாலும் காலப்போக்கில் முதலாளித்துவம் அதனைப் பொறுத்துக் கொள்ளாது எனப் பலர் வாதிட்டுள்ளனர். காலப்போக்கில் குடும்பத்தையும் ஆணாதிக்க முறைமையையும் அது ஒழித்துவிடும் என்று இவர்கள் கூறினர். தருக்கரீதியாக முதலாளித்துவ சமூக உறவுகள் சர்வவியாபகம் அடைய பெண்கள் உழைப்பாளர்களாவது அதிகரித்து குடும்பத்தில் ஆண்களுக்கு அடங்கிப்போக மறுப்பர் எனவும் குடும்பத்திற்கு வெளியில் சுதந்திரமாக மனிதர்களுக்கு வாழ முடியுமெனில் குடும்பம் நிலையிழந்து போகும் எனவும் கூறினர்.
ஆனால் குடும்பத்தில் இணைந்திருக்கும் ஆணாதிக்க உறவுகள் அவ்வளவு இலகுவில் முதலாளித்துவத்தினால் அழிக்கப்படும் என நாம் கருதவில்லை. குடும்ப முறை குலைவுறுவதற்குக் குறைந்த அத்தாட்சிகளே உள்ளன. பெண்கள் வீட்டுக்கு வெளியே உழைப்பதன் அதிகரிப்பானது விவாகரத்தைச் சாத்தியப்படுத்தினாலும் அதற்கான உந்துதல் குறைவாகவேயுள்ளது. பெண் களது சம்பளம் குறைந்தளவு பெண்களையே சுதந்திரமான முறையில் தம்மையும், தமது பிள்ளைகளையும் பார்ப்பதற்கு இடமளிக்கிறத விவாகரத்து வீதம் அதிகரிக்கவில்லை. ஆனால் மறுதிரு
31

Page 21
மண விகிதம் அதிகரித்துள்ளது. 1970 களிலிருந்து திருமணத்தையும் குழந்தைப் பேற்றையும் காலந்தாழ்த்தினாலும் கூட சமீப காலத்தில் பிறப்பு விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. மரபுரீதியான குடும்பங்களுக்கு வெளியே வாழ்வோர் தொகை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பெற்றோர்களிட்மிருந்து விலகி, தமது சொந்த இல்லங்களை நிறுவுகின்றனர். வயதானோர், குறிப்பாகப் பெண்கள் பிள்ளைகள் வளர்ந்தபின் கணவன் பிரிந்தபின் அல்லது இறந்த பின்தனியாக வாழ்கின்றனர். முன்பு ஒருபோதும் இல்லாதவகையில்அதிகளவு இளைஞர்கள் தமது வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் ஓரலகுக் குடும்பத்தை நிறுவுவார்கள் எனச் சமீபத்தைய போக்குகள் தெரிவிக்கின்றன.
மூலதனம் குடும்பத்தை அழித்துவிடும் என்ற வாதம் குடும்ப வாழ்க் கையை கவர்ச்சிகரமானதாக்கும் சமூக சக்திகளை அலட்சியப்படுத்து கிறது. ஓரலகுக்குடும்பம் உளவியல் ரீதியாக அழிவுத்தன்மை வாய்ந்தது என்ற விமர்சனம் இருந்தாலும் கூட இந்தப் போட்டிச் சமூகத்தில் குடும்ப மானது பல மனிதர்களது தேவைகளை நிறைவு செய்கிறது. இது நீண்டகால ஒருதார மண உறவில் மாத்திரமன்றி குழந்தை வளர்ப்பிற்கும் அவசிய மாகும். தனிப் பெற்றோர் குழந்தை வளர்ப்பின் நிதிப்பொறுப்பினையும், உளவியல் அழுத்தங்களையும் தாங்க வேண்டியுள்ளது. குறிப்பாக, தொழி லாள வர்க்கப் பெண்களுக்கு இத்தகைய சுமைகள் உழைப்புப்படையில் பங்கேற்கும் சுதந்திரத்தைப் பொய்யாக்கிவிடுகின்றன.
குடும்பத்திற்குள் பால் அடிப்படையிலான வேலை பிரிவினையின் வீழ்ச்சியில் உழைப்புச் சந்தையில் பெண்களது அதிகரிக்கும் பங்கேற்பு பிரதிபலிக்கிறது என்று கூறினாலும் இதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. சமீப வருடங்களில் உழைக்கும் மனைவியுள்ள குடும்பங்களில் இன்னும் அவர்களே பெருமளவு வீட்டுவேலை செய்கின்றனர். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரையில் 'இரட்டை உழைப்பு என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது. உழைப்புச் சந்தையில் நிலவும் பால் அடிப்படையி லமைந்த வேலைப்பிரிவினை பெண்களைப் பொருளாதார ரீதியாக ஆண்களில் தங்கியிருக்கச் செய்யும் நிலையில் இது ஆச்சரியகரமான தல்ல. ஆணாதிக்க முறைமையின் எதிர் காலம் குடும்ப உறவுகளில் மாத்திரம் தங்கவில்லை. ஆணாதிக்க முறைமையும் மூலதனம் போல நெகிழ்வுடையதாகவும் இணக்கத்தன்மை உடையதாகவும் உள்ளது. குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காணப்படும் ஆணாதிக்க முறை மையிலான உழைப்புப் பிரிவினையானது இறுதியில் மூலதனத்தால் சகிக்க முடியாது இருக்குமோ, இல்லையோ ஆணாதிக்க முறைமையானது
32

மூலதனக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துவதுடன் மூலதனத்திற்கு எதிரான சில போராட்ட வடிவங்களை நியாயமற்றதாகவும் காட்டுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் கருத்துநிலை
ஆணாதிக்க முறைமையானது ஆண்களுக்கிடையே அதிகாரப் படிநிலை அமைப்பை நிலைநிறுத்தி நியாயப்படுத்துவதன் மூலம் அது முதலாளித்துவ கட்டுப்பாட்டையும் விழுமியங்களையும் உறுதிப்படுத்துகிறது.
தங்கியிருத்தல், ஆதிக்கம் ஆகியவற்றுக்கிடையிலான உறவுகளில் என்ன நிகழ்கிறது என்பதற்கு வr லாமித் பயர்ஸ்ரோன் கூறும் உளவியல் அம்சங்கள் உதாரணமாகலாம், ஆண் களது சமூக அதிகாரம் என்ற யதார்த்தத்திலிருந்து இவை பிறக்கின்றன. ஆனால் அவை முதலாளித்துவ சமூகச் சூழலில் நடைபெறுகின்றன என்ற உண்மையால் வடிவமைக்கப்படு கின்றன. தீவிரவாதப் பெண்நிலைவாதிகள் ஆண்களை போட்டித்தன்மை கொண்ட, பகுத்தறிவு வாய்ந்த, ஆதிக்க மனோபாவம் கொண்டோர் என விபரிப்பது போலவே நாம் முதலாளித்துவ சமூகத்தின் முக்கிய விழுமியங்களையும் விபரிக்கின்றோம்.
இந்த தற்செயல் இணைவு (Coincidence) இருவகையாக விளக்கப்படக்கூடும்.
1) கூலி உழைப்பாளர்களான ஆண்கள் முதலாளித்துவ போட்டி உறவுகளுள் இழுத்தெடுக்கப்பட்டு இந்த விழுமியங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
2) பால் விழுமியங்கள் கூறுகிறபடி யதார்த்தத்தில் ஆண்கள் நடந்து கொள்ளாவிடினும் அவர்கள் அத்தகைய பண்புகளுக்கு உரிமை கோருகின்றனர்.
முதலாளித்துவ சமூகங்களில் ஆண்மை, பெண்மை பண்புகளை இது விளக்குவது மாத்திரமன்றி இச் சமூகங்களில் பால் நிலைக்கருத்துநிலை எத்தகைய வடிவம் எடுக்கிறது என்பதையும் விளக்கும். பெண் களது உழைப்பு, ஆணாதிக்கம், முதலாளித்துவ உற்பத்தி ஆகியவற்றைப் பேணி இருவகையாகச் செயற்படுவது போல் பால்வாதக் கருத்துநிலையும் ஆண் முதலாளித்துவ விழுமியங்களை உன்னதமாகக் கூறிச் செயல்படுகிறது. ஏனைய வேறு சமூகங்களில் பெண்கள் பலமற்றவர்களாகவோ தாழ்த்தப்
33

Page 22
பட்டவர்களாகவோ இருப்பின் அதற்கு ஆண்கள் கூறும் காரணங்கள் வேறானவை. ஆனால் முதலாளித்துவ சமூகத்திலேயே பெண்கள் உணர்ச்சிபூர்வமானவர், நிதானமற்றவர் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. தங்கி வாழ்வோர்' என்பதைச் சிறப்பு விபரணப் பெயராகக் கொள்வது பிரபுத்துவ சமூகத்தில் பொருத்தமற்றது. வேலைப் பிரிவினை பெண்களை பயன் பெறுமதியின் உற்பத்தியுடன் தொடர்புள்ள மனைவியராகவும் அன்னையராகவும் உறுதிப்படுத்துவதால் இத்தகைய செயல்களின் அழிவு, சமூகத்தால் தீர்மானிக்கப்பட்ட தேவைகளை மூலதனம் நிறைவு செய்ய முடியாமையை மழுங்கடிக்கும். அதே சமயம் ஆண் ஆதிக்கத்திற்கு ஒரு நியாயப்பாட்டை அளித்து பெண்களது அந்தஸ்தைக் குறைக்கும்.
இதற்குச் சமாந்தரமாக, முதலாளித்துவம், ஆணாதிக்க முறைமை ஆகியவற்றின் இணைவு பற்றியும், உழைப்பாளர் படையில் பால்ரீதியான வேலைப்பிரிவினை பற்றியும் விளக்கும் ஒரு வாதத்தை முன்வைக்கலாம். பால் ரீதியான வேலைப்பிரிவினை பெண்களுக்குப் பொருத்தமான வேலைகள், என்ற இடத்திலும் குறைவான வேதனம் பெறும் இடத்திலும் அவர்களை வைக்கிறது. பெண்கள் ஆசிரியைகளாகவும், சமூக நலத்துறை பணியாளர்களாகவும், சுகாதாரத் துறையில் பெரும் எண்ணிக்கையிலும் பணியாற்றுகின்றனர். முதலாளித்துவமானது தனிநபர் சுதந்திரங்களையும், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குள்ள தனியார் துறையின் ஆற்றலையும் வலியுறுத்துகின்ற காரணத்தால் மேற்படி பராமரிப்புப் பணிகளில் பெண்கள் ஆற்றும் பாத்திரங்கள் குறைந்த அந்தஸ்து உள்ளனவாக இருக்கின்றன. இப் பராமரிப்பு வேலைகளைப் பெண்கள் செய்கின்றார்கள் என்ற காரணத்திற்காகவே அவற்றின் சமூக முக்கியத்துவம் தாழ்த்தப்படக்கூடியதாக இருக்கும் வரையிலும் மூலதனம் முக்கியத்துவம் கொடுக்கின்ற பரிவர்த்தனை மதிப்பிற்கும் பயன்மதிப்பு முக்கியத்துவப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கும் இடையில் எழுகின்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படக்கூடிய நிலையே ஏற்படுகின்றது. இவ்வகையில் தொழிலாளி வர்க்கத்தைக் கூறுபடுத்தி திசைதிருப்புவது பால்வாதமே அன்றி பெண்நிலைவாதம் அல்ல.
மிகவும் முற்போக்கான ஒருமைப்பாட்டை நோக்கி.
பல பிரச்சினைகள் குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது. ஆணாதிக்க முறைமை என்ற தொடர் ஆய்வுத்தன்மை கொண்டதாக அன்றி விபரணத்
தன்மை கொண்டதாய் உள்ளது. மார்க்ஸிசம், தீவிரவாதப் பெண்நிலை வாதம் ஆகியன போதாமையுடையன என நாம் கருதினால் புதிய வகைப்
34.

பாடுகளை நாம் முன்வைக்க வேண்டும். பால்ரீதியான வேலைப்பிரிவினை போன்றவை எமது வேலையைக் கடினமாக்குகின்றன. ஆணாதிக்க வழிமுறையுள்ள முதலாளித்துவ சமூகத்தில் ஆணாதிக்க முறைமையின் இயக்கப்பாட்டை தனியே பிரித்தெடுத்தல் கடினமானது. எனினும் இது செய்ய வேண்டியதாகும் பெண்களது உழைப்புச் சக்தியினால் யார் பயன் பெறுகின்றனர்? தந்தை வழிமுறைமையின் பெளதீக அடிப்படை, ஆண்களுக் கிடையேயான அதிகாரப் படிநிலை ஒருமைப்பாடு ஆகியவற்றின் பொறிமுறை ஆகியவை பற்றி ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளோம். எனினும் நாம் எழுப்ப வேண்டிய வினாக்கள் அதிகமாக உள்ளன.
ஆணாதிக்க முறைமையின் இயக்க விதிகள் பற்றி நாம் பேசலாமா? பெண் நிலைவாதப் போராட்டத்தை எவ்வாறு ஆணாதிக்க முறைமை தூண்டுகிறது? விருத்தியடைந்த முதலாளித்துவ சமூகங்கள் தவிர்ந்த ஏனைய சமூகங்களில் எத்தகைய பால் அரசியலையும் போராட்டத்தையும் காணலாம்? வரலாற்றுக் கட்டங்களில் வர்க்கப் போராட்டத்திற்கும் பெண் நிலைவாதத்திற்கும் இடையிலான உறவு எவ்வாறிருந்தது? இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் நாம் கடைசியாக எழுப்பிய வினாவைக் கையாள்கிறோம்.
பெண்நிலைவாதமும் வர்க்கப் போராட்டமும்
வரலாற்று ரீதியாகவும், தற்காலத்திலும் பெண்நிலைவாதமும் வர்க்கப் போராட்டமும் இரு வேறான வழிகளில் சென்றுள்ளன. அல்லது இடது சாரிக்கட்சிகளுள் பெண்நிலைவாதம் மார்க்ஸிசத்திற்குக் கீழ்ப்பட்டதாக வுள்ளது. இதில் இரண்டாவதற்கு, மார்க்ஸிசத்தின் ஆய்வு வலுவும், கட்சிக்குள் ஆண்களின் ஆதிக்கமும் காரணமாயின. இவை இடதுசாரி அமைப்புக்களில், பகிரங்கமான போராட்டத்திற்கும் மார்க்ஸிச பெண் நிலைவாதிகளின் முரண்பட்ட நிலைப்பாடுகளுக்கும் காரணமாயின.
தம்மைத் தீவிரவாதிகள் எனக் கருதும் பெரும்பான்மையான பெண்நிலைவாதிகள் பெண்கள் இயக்கத்தின் தீவிரவாதக் கிளையின் உற்சாகம் அணைந்து போனதையும் தாராண்மைவாதிகள் பல விடயங்களைத் தமது கையில் எடுத்துக்கொண்டனர் என்பதையும் ஒத்துக் கொள்வர். பெண்கள் இயக்கத்தின் சில பகுதிகள் வழக்கமான நடைமுறைகள் கையேற்கப்பட்டதுடன் சில சமயங்களில் பெண்நிலைவாதம் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதையும் காணலாம். உதாரணமாக விவாகரத்து வழக்குகளில் மனைவியரான பெண்களுக்கு தபாரிப்பு
35

Page 23
தேவையில்லை; ஏனெனில் அவர்கள் விடுதலை அடைந்தார்கள் என நீதிபதிகள் வாதிடுவதைக் காணலாம். அமெரிக்காவில் சமத்துவ உரிமைச் Ö L'L-gö60)g5 (Equal Rights Amendmat) D -s}lg5) (6ð u'Julg5 g56)lsólu J60)LD, பெண்நிலைவாதம் பெண்களுக்கெதிராகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்ற நியாயபூர்வமான பயத்தைக் குறிக்கிறது. எமது இயக்கத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டியமையையும் இது சுட்டுகிறது. மார்க்ஸிசம் மாற்றம் பற்றிய ஒரு முன்னேறிய கோட்பாடு என்பதால் இந்த மறுமதிப்பீட் டுக்கு அதன் உதவியை நாடுதல் தருக்கத்திற்கு உட்பட்டதாகும். பெண்நிலைவாதக் கோட்பாட்டுடன் ஒப்பிடும்போது மார்க்ஸிசக் கோட்பாடு மிகவும் வளர்ச்சியடைந்ததாகும். அதனைப் பயன்படுத்தும்போது சில சமயம் நாம் பெண்நிலைவாதக் குறிக்கோள்களிலிருந்து வழிதவறியும் விடுகிறோம்.
இடதுசாரிகள் பெரும்பாலும் பெண்கள் இயக்கம் சோசலிஸப் புரட்சிக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்றே கூறி வந்துள்ளனர். இடதுசாரிகளான பெண்கள் பெண்நிலைவாதத்தை ஆதரிப்பது ஆண்களுக்குப் பயமூட்டுவதாய் இருந்தது, பல இடதுசாரி அமைப்புகள் பெண் களது உழைப்பால் நன்மை அடைந்துள்ளன. பெண்களது நிலை பற்றிய சுதந்திரமான விளக்கத்தைக் கைவிட்டு இடதுசாரி விளக்கம் ஒன்றைக் கைக் கொள்ளும்படி இடதுசாரிகள் பெண்களைத் தூண்டினர். மேலும் பல மார்க் ஸிஸ்டுகள் பாரம்பரியமான மார்க்ஸிச ஆய்வுடன் பெண்கள் பிரச்சினை பற்றித் திருப்தியடைந்தனர். பெண்களது நிலையை விளங்கிக் கொள்ளவர்க்கம் என்ற சட்டகம் போதுமானது என நினைத்தனர். பெண்கள் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதி. முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் போராட்டம் முதன்மை வாய்ந்தது. வர்க்க ஒருமைப்பாட்டைச் சிதைக்க பால் முரண்பாட்டை அனுமதிக்க முடியாது எனக் கூறினர்.
கடந்த சில வருடங்களில் அமெரிக்காவில் பொருளாதாரநிலை மோசமடைந்தபோது பாரம்பரிய மார்க்ஸிச ஆய்வு மீண்டும் தன் கருத்தை வற்புறுத்தியது. 1960 ஆம் ஆண்டுகளில் மாணவர் இயக்கம், யுத்த எதிர்ப்பு இயக்கம், சிவில் உரிமை இயக்கம், பெண்கள் இயக்கம், சூழலியக்கம் போன்றவை மார்க்ஸிசத்தை நோக்கிப் பல புதிய வினாக்களை எழுப்பின. பணவீக்கம், வேலையின்மை போன்ற வெளிப்படையான பொருளாதாரப் பிரச்சினைகளின் தோற்றமானது மீண்டும் இடதுசாரிகளை தொழிலாளர் வர்க்க அரசியலின் அடிப்படைகளை நோக்கித் திருப்பியுள்ளது. இடதுசாரிக்கல்வியாளர்களிடையே பெண்நிலைவாத பிரச்சினைகளின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியுள்ளது. இடதுசாரிகளின் கருத்தரங்
36

குகளில் பிள்ளை பராமரிப்பு வசதிகளைச் செய்வது குறைவடைந்துள்ளது.
சிறுபிள்ளைத்தனமான கோரிக்கையைக் கைவிட்டு காத்திரமான புரட்சியாளர்களாக ஆகும்படி பெண்களை வேண்டுவது அதிகரித்துள்ளது. பணவீக்கம், வேலையில்லாப்பிரச்சினை போன்றவற்றுடன் ஒப்பிடும்போது பெண்களின் கோரிக்கைகள் நேரவிரயத்தை ஏற்படுத்துபவை எனக் கருதப்பட்டன. பெண்களது வேலையில்லாப் பிரச்சினை ஆண்களால் பெரிய பிரச்சினையாகக் கருதப்படவில்லை. குறிப்பாக 1930களில் பெண்களை வேலையிலிருந்து விலக்குவதன் மூலம் ஆண்களுக்கு வேலை வழங்கப்பட்டது. நெருக்கடியிலிருந்து முதலாளித்துவமும் ஆணாதிக்க முறைமையும் தம்மை இதன் மூலம் விடுவித்துக் கொண்டன.
பெண்நிலைவாதப் பிரச்சினைகள் கைவிடப்படின் ஆணாதிக்க (p68)(1866)d, முதலாள்த்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் வெற்றி அடையமாட்டாது. முதலாளித்துவ ஒடுக்குமுறை உறவுகளுக்கு ஆணாதிக்க ஒடுக்குமுறை உறவுகள் வழங்கும் உள்ளார்ந்த ஆதரவு சரியாகக் கருத்திற்கெடுக்கப்படாவிட்டால், முதலாளித்துவ ஒடுக்கு முறைக்கு எதிரான இலக்கைக் கொண்ட ஒரு போராட்டம் தோல்வியடையவே செய்யும். பெண்களுக்குப் பிரயோசனமான சோசலிஸத்தில் ஆணாதிக்க முறைமை பற்றிய வரைவிலக்கணம் தேவை. முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கு பொதுவான தேவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்டு. அதே சமயம் குறிப்பிட்ட பாலாருக்கு குறிப்பிட்ட நலன்கள் உள்ளன. எனவே சோசலிஸம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியானதாக அமையுமா என்பது தெளிவில்லை. ஒரு மனிதாபிமானமான சோசலிஸத்திற்கு புதிய சமூகம் எத்தகையதாக இருக்கும் என்பதில் ஒருமித்த கருத்து தேவையானது என்பது மாத்திரமல்ல, ஒரு ஆரோக்கியமான நபர் எவ்வாறிருப்பார் என்பதிலும் ஒருமித்த கருத்து தேவையாகும். ஆனால் இன்னும் ஸ்தூலமாகச் சொல்வதானால், இது ஆண்கள் தமது தனிச் சலுகைகளைக் கைவிடுவதையும் அவசியமாக்குகின்றது.
நாம் பெண்கள் என்ற வகையில் கடந்த காலத்தில் நடந்ததுபோல எமது பிரச்சினைகளின் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் கைவிடக்கூடாது. அவற்றுக்காக நாம் போராட வேண்டும். அத்துடன் பெண்நிலைவாத இலட்சியங்களைக் கைவிடும்படி மறைமுகமாகவும், நேரடியாகவும் செய்யப்படும் கட்டாயப்படுத்தல்களுக்கு எதிராகவும் நாம் போராட் வேண்டும்.
37

Page 24
இது புதிய தந்திரோபாயங்களை வேண்டுவதாகும். முதலில் சோசலிஸப் போராட்டம் என்பது வேறு வேறான நலன்கள் கொண்ட . குழுக்கள் ஒரு கூட்டை அமைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். புரட்சிக்குப்பின் ஆண்கள் தமக்கு விடுதலை அளிப்பர் எனப் பெண்கள் நம்பக்கூடாது. ஏனெனில் அவர்கள் அவ்வாறு செய்வதற்கான அவசியம் இல்லை. உண்மையில் பாரம்பரியமான பெண்களின் ஒடுக்குமுறைதான் ஆண்களுக்கு நன்மை பயக்கும். நாம் எமது சொந்த அமைப்புகளையும் சொந்த பலத்தளத்தையும் வைத்திருக்கவேண்டும். இரண்டாவதாக முதலாளித்துவத்திற்குள் பால் அடிப்படையிலான வேலைப்பிரிவினையானது மனிதரின் பரஸ்பர தங்கியிருத்தல், தேவைகள் ஆகியன பற்றி விளங்கிக் கொள்ள சந்தர்ப்பம் அளித்துள்ளது. முதலாளித்துவத்திற்கு எதிராக ஆண்கள் நீண்ட காலமாகப் போராடி வந்துள்ளனர். அதே சமயம் பெண்கள் எதற்காகப் போரிட வேண்டும் என்பதைத் தெரிந்துள்ளனர். ஒரு பொதுவிதியாக முதலாளித்துவம்,ஆணாதிக்க முறைமை ஆகியவற்றில் ஆண்களின் ஸ்தானமானது வளர்ச்சி, பகிர்வு, போவழிப்பு போன்ற மனித தேவைகளின் அவசியம், அதிகார அடுக்கு அற்ற சமூகத்தில் இவற்றை எய்துதல் போன்றவற்றை உணர்வதைத் தடுக்கிறது. ஆண்களுக்குத் தமது கைவிலங்குகளை விட இழப்பதற்கு அதிகமுண்டு.
சோசலிஸப் பெண்நிலைவாதிகள் என்ற வகையில் ஆணாதிக்க முறைமைக்கும் முதலாளித்துவித்திற்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். நாம் உருவாக்க விரும்பும் சமூகத்தில் பரஸ்பர சார்ந்திருப்பு சுதந்திரமாகவும், போவதிப்பு சர்வ வியாபகமானதாகவும் சுரண்டல் தன்மை அற்றதாகவும் இருக்க வேண்டும். மேலும் ஆண்களது . பொய்யான சுதந்திரத்தைத் தொடர்ந்து ஆதரிக்காததாகவும் இருக்க வேண்டும்.
38