கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவ்வாத்து

Page 1


Page 2

கவ்வாத்து
(குறு நாவல்)
தி. ஞானசேகரன்
g
மலையக வெளியீட்டகம்.

Page 3
முதற் பதிப்பு ;- ஜூலை 1996
உரிமை :- திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர், B.A (Cey)Dip-in-Ed. மத்திய மாகாண இந்து சமயபாட இணைப்பாளர்; ஆலோசகர்) 19/7, பேராதனை வீதி, கண்டி, 3. Phone:- 08 234755
KAVATU
(NOVELETTE)
by T. GNANASEKARAN IDR. T. GNANASEKARA IYER R. M. O; B.A. (Cey) New Peacock Group, Pussellawa.
(C) Mrs. GNA NAM GNAN SES RARA I YER
19/7, Peradeniya Road, Kandy,
COVER DESIGN - S. D. SAAM Y
PRINTERS - MI THURU SEVA NA PRINTERS
No: 288/C 1bban wewa, Pusse llawa.
PUBLISHERS - HIL. COUNTRY PUBLISHING. HOUSE
57, Mahinda Place “ Colombo.
PRICE :- Rs. 50/-
FIRST EDITION - JULY 996
ISBN : ۔ 9084 ۔ 955۔o4 ۔ }

மலையக கலை இலக்கியப் பேரவையின் பதினைந்தாவது ஆண்டு விழாவின்போது கலாசார சமய விவகார அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் ஜெயக்கொடி அவர்கள் தலைமையில் தமிழகத்து சுபமங்களா' குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற தி. ஞானசேகரன் அவர்களின் 6 99 "கவ்வாத்து
(குறுநாவல்) மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் தாமரை ஆசிரியர் எஸ். மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில்
இந்திய சாகித்திய அகடமி விருதுபெற்ற நாவலாசிரியர் திரு. பொன்னிலன்
அவர்களால்
13. 07. 1996 அன்று w கண்டி டி. எஸ். சேனநாயக்கா நூலக மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

Page 4
இலங்கையின் ‘மை அதன்
அவர்
(தி. ஞானசேகரனி குறுநாவலுக்கான ஒரு
கார்த்திகேசு
முது தமிழ்ட்
யாழ். பல்கள்
RFழத்துத் தமிழிலக்கியத் இலக்கியம்" என்பன (இலக்க *" காரணச்சிறப்புப் பெயர்'கள் மலைநாடுகளான குளிர்வலயட் தேசங்களில் உள்ள, பெருந்தோ கும், இந்திய வமிசவழித் தமி தையும் குறிக்கும். இந்தச் சொ அடிப்படையும், ஓர் இனத்துவ
இன்று ஏற்பட்டுவரும் அ றங்கள் காரணமாக இந்தப் விஸ்தரிக்கும் ஒரு போக்குக் கா தனியொரு பிரதேசமாகப் பார்ச் பெரும்பாலான மலையகத் தமிழ துள்ளமை இதற்கு ஒரு காரண
ஆயினும் ஈழத்திலக்கிய மலையகப்பிரதேசத்தைத் தளம. தமிழர் குழாமாகும். இவர்களு

லயகம்'
மக்களும் தம் இலக்கியமும்.
ன் "கவ் வாத்து”
டு முன்னுரைக் குறிப்பு]
சிவத்தம்பி
லைக்கழகம்
தில் "மலையகம்' "மலையக ண முறைப்படி சொன்னால்)
அதாவது இலங்கையின் பிரதேசத்திலுள்ள மலைப்பிர ட்டச் செய்கையில் ஈடுபட்டிருக் ழரையும் அவர்கள் இலக்கியத் ற்றொடர்களுக்கு ஒரு பிரதேச
அடிப்படையும் உண்டு.
ரசியல் - சமூக இலக்கிய மாற் பதத்தின் வரைவிலக்கணத்தை "ணப்படுகிறது. மலையகத்தைத் $கும் தன்மை காணப்ப்டுகிறது. }ர்களுக்கு வாக்குரிமை கிடைத் oாகலாம்.
த்தின் உப - குழுக்களில் ஒன்று ாகக்கொண்ட பெருந்தோட்டத் டைய சமூக - பண்பாட்டு நிலை

Page 5
மைகள் காரணமாகவும், அரசியற் பொருளாதார காரணிகள் காரணமாகவும் இவர்கள் தனியொரு குழாமா ”கப் பேண வேண்டுவது அரசியற் - பண்பாட்டுத் தேவையாகவும் உள்ளது.
சமூக நிலையில் ‘மலையகத்தமிழர்" என்பது பெருந் தோட்ட வட்டத்துக்கப்பாலிருக்கும் தமிழரையும் குறிக்கும். இன்றைய சூழ்நிலையில், இலக்கிய பண்பாட்டுத்துறைகளில் சில "நெருக்குவார* உணர்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே,
மலையகத்தின் தமிழ் இலக்கியங்கள் இரண்டு நிலைப் பட்டவை - ஒன்று மலையகப் பெருந்தோட்டத் தமிழ் மக்களின் வாய்மொழி இலக்கியங்கள் (இவற்றுடன் வாய்மொழிக் கையளிப்புக்கான பாடல்களையும் சேர்த்தல் வேண்டும்) மற்றது இந்த மலையகமக்கள் பற்றிய ஆக்கப் படைப்புகள்:
இந்த ஆக்கப் படைப்புக்களும் இருவகைப் பட்டவை -ஒன்று மலையகத்துப் பெருந்தோட்டப் பண்பாட்டுக்குள்ளிருந்து (அதாவது மலையகத் தமிழராலேயே) எழுதப்படுவன: மற்றது மலையகத்தோடு ஊடாடிய பிற பிரதேசவாசிகள் எழுதுவன.
இந்த இரண்டாவது வகையினர் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தைப் பார்க்கும் முறையில் உள்ள சில வேறுபா டுகளை மிகுந்த நுன்னுணர்வுடன் திரு ஜோதிகுமார் போன் றோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.
திரு. ஞானசேகரனோ மலையகத்துக்கு அப்பாலனவர் என்றாலும், கடந்த முப்பது ஆண்டுகள் காலமாக மலையகத் துக்குள்ளேயே இருப்பவர். அவர் நோக்கு இயல்பான ""உள் நிலை"ப் பார்வையாகவே மாறியுள் பாது.
எழுத்தாளர்,தான் எ(புதும் பண்பாட்டின் சிசுவாக இருக்கலாம்; அல்லது அந்தப் பண்பாட்டு வட்டத்துக்கு அப்பா லானவராக இருக்கலாம். ஆனால் அவரிடம் தான்நோக்கும் 'பிரச்சினை மையத்தை'ச் சற்றுத் தொலைப்படுத்தி நோக்கும் திறன் இருக்கவேண்டும். அப்பொழுதுதான், தான் சித்திரிக்க வுள்ள வாழ்க்கையின் முழு உறவுச்சிக்கல்களையும் விகCப்புகளை யும் அவர் உணரலாம். குறிப்பாக நாவலின் வளர்ச்சிக்கு இத்த கைய ஒரு பார்வை தேவை.
திரு. ஞானசேகரனின் இந்தக் குறுநாவல், மலையகப் பெருந்தோட்டத் தமிழர் எதிர்நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை நோக்குகிறது.

அது, தொழிற்சங்கங்களின் பயன்பாடு என்பதாகும். எந்தத் தொழிற்சங்க இயக்கம் அவர்கள் சமூக - பொருளா தாரத் தனித்துவங்களை உணர்ந்து அவர்களின் ‘நல் "வாழ்க் கைக்குப் போராடிற்றோ, இன்று அதே அந்த மக்களின் ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும் சமூகக் கருவியாக மாறி யுள்ள நிலைமையை இந்தக் குறுநாவலிலே காண்கிறோம்.
மலையகப் பெருந்தோட்டத் தமிழ்மக்களை எதிர் நோக்கி நிற்கும் (இன்றைய) மிகப்பெரிய சவால் இது. இந்த நிலைமை தொழிற்சங்கங்கள் சுயவிமர்சனத்தில் FGLtவேண்டிய ஒரு தேவையை முன்வைக்கிறது.
இத்துடன் இன்னுமொரு சிக்கலும் உள்ளது, மலையகத் தமிழரிடையேயுள்ள "மேலோங்கிகள்' (elies) எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது. அந்த மேலோங்கிகள் கங்காணி மட்டத்தினராக இருக்கலாம் அல்லது உத்தியோ கத்தர் மட்டத்தினராக இருக்கலாம்:
இந்தப் பிரச்சினையின் ஒரு வெட்டுமுகத்தை ஒரு வன்மையான முனைப்புடன், இந்தப்படைப்புத் தருகின்றது.
கொழும்பு, கார்த்திகேசு சிவத்தம்பி
08. 07. 1996.

Page 6
நன்றிகள் O இக்குறுநாவலை நான் எழுதுவதற்கு தூண்டு கோலாக இருந்த பிரபல எழுத்தாளர் சாரல் நாடன் அவர்களுக்கும் ஜி முன்னுரைக் குறிப்பினை எழுதி, இந்நூலுக்கு அணி செய்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுக்கும் O பொருத்தமானதொரு அட்டைப்படத்தை வரைந்த
ஒவியர் திரு. எஸ். டி. சாமி அவர்களுக்கும் O எனது படைப்புகளை விரும்பிவாங்கி பதிப்பாக்கம் செய்துவரும் மலையக வெளியீட்டக நிர்வாகி அந்தனி ஜீவா அவர்களுக்கும் O இக்குறுநாவலை நான் சொல்லச் சொல்ல எழுதி உதவிய இளைஞர் ஆறுமுகம் சந்திரமோகன் அவர்களுக்கும் O இந்தப் படைப்புக்கு வேண்டிய தகவல்கள் பல வற்றைத் தந்துதவி, பலவழிகளில் ஊக்குவித்த திரு.ரி. முத்துவேல், திரு. ஆர்.எம். பாலஷண்முகம் ஆகியோருக்கும் () இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையும் *சுபமங்களா”வும் இணைந்து நடத்திய ஈழக்குறு நாவல் போட்டியில் பரிசுபெற்ற இக்குறுநாவலை, நூலாக்கம் செய்வதற்கு அனுமதி அளித்த போட்டி அமைப்பாளர்களுக்கும் O மிதுரு செவன அச்சக நிர்வாகி திரு. ரஞ்சித் சில்வா, பொறுப்பாளர் திரு. வி. ஜி. பாலகிருஷ்ணன், ஊழியர்களான செல்வன் சி. சிவகுமார், செல்வன் கா. சண்முகநாதன், திரு. சு. பன்னீர்செல்வம்
செல்விகள். எஸ். யோகவதி, பி. ராஜகுமாரி, நாளிகா பிரியங்கனி, ஆகியோருக்கும், ஏனையோ ருக்கும்
எனது மனமார்ந்த நன்றி என்றும் உரியது.
11. 0 7. 1996 தி. ஞானசேகரன்

பதிப்புரை மலையக நாவல்களில் மிகச்சிறந்த நாவலான *குருதிமலை’ நாவலைப் படைத்த தி. ஞானசேகரனின் கவ்வாத்து குறுநாவல், மலையக கலை இலக்கியப் பேரவையின் 15வது ஆண்டு விழாவில், பேரவையின் சகோதர நிறுவனமான மலையக வெளியீட்டகத்தின் 15வது வெளியீடாக வெளிவருகிறது.
மலையகத்தின் பெருந்தோட்டத் துறையில் வைத்திய அதிகாரியாக பணியாற்றும் தி. ஞானசேகரன் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வாழ்வோடு தொடர்புடையவர். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பவர். அதனால் அந்த மக்களின் பிரச்சினைகளான வாழ்க்கைப் போராட்டங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்.
மலையக மக்களைப்பற்றிய இவரது மனப்பதி வுகள் இலக்கியப் படைப்புகளாக வெளிப்படுகின்றன. யதார்த்தமாக இந்த மக்களைப்பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்கின்றன. இவரது குருதிமலை, லயத்துச் சிறைகள், இப்பொழுது வெளிவரும் ‘கவ்வாத்து" ஆகிய நாவல்கள் இந்தப் பாவப்பட்ட மக்களைப் பற்றிய ஆவணங்களாகும். இதனைப் படித்து, பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறவேண் டியது எமது கடமையாகும்.
அந்தனி ஜீவா பதிப்பாசிரியர்
மலையக வெளியீட்டகம், 57, மகிந்த பிளேஸ், கொழும்பு-6 6- 7 - 1996

Page 7
என்னுரை
Pன்று தசாப்தங்களுக்கு மேலாக தொழில் நிமித்தம் மலையகத்திலே வாழ்ந்துவருவதால், தோட்டத் தொழிலாளர் களது வாழ்வோடு பின்னிப் பிணயைக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. தினமும் இந்த மக்களோடு நெருங் கிப்பழகி அவர்களது பிரச்சினைகளை, வாழ்க்கைப் போராட் டங்களை அறிந்துகொள்ள முடிகிறது. அவர்களது இருப்பிடங் களுக்குச் சென்று முன்கதவால் நுழைந்து பின்கதவால் வெளியே வருவதற்கு வேண்டிய உரிமையை எனது தொழில் எனக்குத் தந்திருக்கிறது.
நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து, தமது உடலுழைப்புை இந்நாட்டின் முன்னேற்றத் திற்காக ஈய்ந்துவரும் இம்மக்களது வாழ்வில் எவ்வித முன் னேற்றமும் இல்லை. தொடர்ந்தும் சோதனைகளும் வேதனை களுமே மிஞ்சுகின்றன. வறுமையின் கோரப்பிடி அவர்களை வாட்டிக்கொண்டே இருக்கிறது. தினமும் அவர்கள் பலதரப் பட்ட சுரண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களது வாழ்க்கையே ஒரு போராட்டமாக அமைந்து
விடுகிறது.
இந்தப் பாவப்பட்ட மக்களின் வாழ்க்கை தொடர்ந்தும் இப்படியேதான் இருக்கவேண்டுமா? இவர்களுக்கு விடிவே கிடையாதா? - இந்த ஏக்கத்தின் தாக்கங்கள், மனக்குமுறல்கள் எனது எழுத்தின் வெளிப்பாடாக அமைகின்றன; மலையக நாவல்களில் பதிவாகின்றன.
இன்றைய தோட்டத் தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையை இந்தக் குறுநாவல் கருவாகக் கொண்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கிடையே நிலவும் போட்டி பொறாமைகள் எவ்வாறெல்லாம் இம்மக்களின் வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதை இக்குறுநாவலில் காட்ட முயன்றுள் ளேன். இது, இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்கள்

எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை, வேலைநாட்கள் குறைப்பு, வீட்டுப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை போன்றவற்றிற்கு தீர்வுகாணமுடியாமல் பின்னடைவுகள் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் அமைகிறது.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, இதன் முன்னுரைக் குறிப்பில் கூறியதுபோல, - "இந்த நிலைமை தொழிற்சங்கங்கள் சுயவிமர்சனத்தில் ஈடுபடவேண்டிய ஒரு தேவையை முன் வைக்கிறது" என்ற உண்மையையும் புலப்படுத்துகிறது.
நடப்பியல் மெய்ம்மைக்குள், கோட்பாடுகளைப் புகுத்தி தத்துவ விசாரணையில் ஆழ்ந்துவிடாத நிதானத்துடன் யதார்த்தபூர்வமாக இக்குறுநாவலைப் படைத்திருக்கிறேன்.
எனது முன்னைய படைப்புகளுக்கு வாசகர் நல்கிய பேராதரவினை இதற்கும் வழங்கி என்னை ஊக்குவிக்குமாறு வேண்டுகிறேன். .
நியூ பீகொக் குறுாப், தி. ஞானசேகரன் புசல்லாவ.
1 - 07 - 1996.

Page 8

கவ்வாத்து
1
பஞ்சு மேகங்கள் பச்சைப் பசேலென செழித்து வளர்ந்திருந்த தேயிலைச் செடிகளைத் தழுவியிருந்தன. குளிர் காற்று ஜில்லென்று வீசிக்கொண்டிருந்தது. காலைக் கதிரவனின் தங்கக் கீற்றுகள் இப்போதுதான் அந்த மலையைத் தழுவத் தொடங்கின.
பதின் மூன்றாம் நம்பர் கவ்வாத்து மலையில் தொழிலா ளர்கள் வேலையைத் தொடங்கினர். கடத்த இருபது நாட்க ளாக அவர்கள் அந்த மலையிலே தான் கவ்வாத்து வெட்டு கின்றனர். இருபத்தைந்து ஏக்கர் விஸ்தீரணமான அந்த மலையை இன்றுடன் வெட்டி முடித்து விடவேண்டும்.
முதிர்ந்த தேயிலைச் செடிகளை உரிய காலத்தில் கவ் வாத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் புதிய கிளைகள் வெடிக்கும்; கொழுந்துகள் துளிர்க்கும்.
ஒவ்வொரு வருடமும் கவ்வாத்து வேலை தொடங்கும் போது மலையில் சாமிகும்பிடுவார்கள். இம்முறை பத்தாம் நம்பர் மலையில் நல்ல நேரம் பார்த்து, எல்லை காப்பான் முனியாண்டி சாமிக்கு நேர்த்தி வைத்து சாமிகும்பிட்டார்கள். மலையின் ஒரமாகவுள்ள தேயிலைத்தூர் ஒன்றின் முன்னால் ஒரு கல்ல்ை வைத்து பழம், பாக்கு, வெற்றிலை படைத்து கவ்வாத்துத் தொழிலாளர்கள் தமது தீட்டிய கத்திகளை வரிசையாக அடுக்கிவைக்க கவ்வாத்துக் கங்காணி ஐயாக் கண்ணு தேங்காய் உடைத்து சூடம், சாம் பிராணி காட்டி பயபக்தியோடு பூசை செய்தார். அவ்வாத்துக் கத்திகளுக்கு விபூதி பூசி சந்தனம் குங்குமம் இட்டு அங்கு வந்திருந்த கண்டக்டர் கணக்கப்பிள்ளை முதலிய உத்தியோகத்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விபூதி, சந்தனம் வழங்கினார். அதன்

Page 9
- கவ்வத்து
பின் கவ்வாத்தை ஆரம்பிக்கும்படி பூசையில் வைக்கப்பட்டி ருந்த கத்தியொன்றை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார்.
கண்டக்டர் முதன்முதலில் முன் வரிசையில் இருந்த முதிர்ந்த தேயிலைச் செடியின் வாதுகளைக் கவ்வாத்து வெட்டி வேலையைத் தொடக்கி வைத்தார். அப்போது அந்த தேயி லைச் செடியின் முடிச்சுவா தில் கத்தி சிக்க அவர் அதனைப் பலமாக வலித்து இழுத்தபோது வலதுகைப் பெருவிரலில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது.
உடைத்த தேங்காயை சிறுசிறு துண்டுகளாகக் கீறி தொழிலாளர்களுக்குப் பிரசாதமாக வழங்கிக் கொண்டிருந்த வாள் கார சின்னப்பெருமாள் கண்டக்டருக்கு காயம் ஏற்பட் டதைப் பார்த்ததும் துணுக்குற்று "முனியாண்டிசாமி ஆரம்பத்திலேயே ரத்தப்பலி எடுக்கத் தொடங்கியிருச்சு" எனப் பதறினார்.
"சகுனம் சரியில்ல, எல்லாரும் கவனமா வேலை செய்ய ணுமடா" என்றான் பக்கத்திலே நின்ற செபமாலை தனது நண்பனிடம்.
முதன் முதலில் சாமிகும்பிட்டு வேலை ஆரம்பித்த போதே கண்டக்டருக்கு காயம் ஏற்பட்டது கவ்வாத்து தொழிலாளர்கள் மனதில் கிலேசத்தை ஏற்படுத்தியது; ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக அவர்கள் எண்ணிக் கொண்டனர்.
நேற்று மாலை தொழிலாளர்களுக்குப் • Guri “ GurrG வதற்காக கங்காணி மடுவத்திற்குச் சென்றபோது, கவ்வாத்து வேலை சுணக்கம் அடைவதாகவும் இன்றுடன் அந்த மலையை முடிக்காவிட்டால் தொழிலாளர்களுக்குப் பேர் போட முடியா தெனவும் கண்டக்டர் கங்காணியிடம் எச்சரித்திருந்தார்.
கண்டக்டர் கூறிய விஷயத்தை தொழிலாளர்களுக்கு கங்காணி கூறியபோது அவர்கள் கலக்கமடைந்தார்கள். இன்று அந்த மலை முடியாது. அடுத்த நாளும் அங்குதான் வேலை Ggui Lu வேண்டியிருக்கும். கண்டக்டர் சொன்னால் சொன்னதுதான்; பெயரை நிற்பாட்டிவிடுவார்.
இந்த மாதத்தில் தோட்டத்தில் வேலை கொடுக்கப் பட்ட நாட்கள் குறைவு. இந்நிலையில் பெயரையும் நிற்

தி. ஞானசேகரன் 3.
பாட்டினால் மாதக் கடைசியில் போதிய சம்பளம் கிடையாது; சாப்பாட்டுக்கே கஷ்டமாகிவிடும்
தொங்கல் நிரையில் முருகேசு மிகவேகமாகக் கவ்வாத்து வெட்டிக் கொண்டிருந்தான். வாட்டசாட்டமான உடலமைப்பு திரண்ட புஜங்கள் கையிலே கத்தி பளபளக்க தேயிலைச் செடிகளின் வாதுகளைப் பற்றி அவன் கவ்வாத்து வெட்டும் லாவகமே தனியானது.
ஒரு நாட்பேருக்கு நூற்றைம்பது மரம் வெட்டவேண்டு மென்றால், அவன் காலையில் தொடங்கி பதினொரு மணிக்கெல்லாம் தனது வேலையை முடித்து விடுவான், மற்ற தொழிலாளர்கள் ஒரு நாட்பேருக்கு வெட்டிமுடிக்க பகல் ஒரு மணிக்கு மேலாகி விடும், கொந்தராத்து வேலை செய்யும்போது முருகேசு எப்படியும் டபிள்டேருக்கு வேலை செய்துவிடுவான்.
இப்போது அவர்கள் செய்வது தோட்டக்கணக்கு வேலை எப்படி வேகமாக வெட்டினாலும் ஒருநாட் பெயர்தான் கிடைக்கும், ஏக்கர் முடியாததால் இப்போது ஒரு நாட்பெயர் கிடைப்பதே சந்தேகமாகிவிட்டது, 8
"ஏன்டா முருகேசு இவ்வளவு வெரசா வெட்டிக்கிட்டு போற, ஒனக்கு என்ன ஒண்ணரைப் பேரா போடப் போறாங்க? எல்லாருக்கும் கெடைக்கிறதுதானே ஒனக்கும் கிடைக்கும்." பக்கத்து நிரையில் இருந்து குரல் கொடுத்தான் ராமையா.
முருகேசு பதிலேதும் கூறாமல் தொடர்ந்தும் நிரையில் முன்னேறிக் கொண்டிருந்தான் பழக்கப்பட்ட கை; அவனால் வேகத்தைக் குறைக்க முடியாது,
அவர்களது வேலையை மேற்பார்வையிட்டுக் கொண்டி ருந்த ஐயாக் கண்ணு கங்காணி இப்போது ராமையாவின் நிரையில் உள்ள கவ்வாத்து வெட்டப்பட்ட தேயிலைச் செடிகளைக் கவனித்தார்.
*" என்ன ராமையா. வேலையா இது? இங்க பாரு நீ வெட்டிற வாது பொளந்து கெடக்கு. மொதல்ல கத்தியை தீட்டிட்டு அப்புறமா வெட்டு'
அப்போதுதான் முருகேசு நிமிர்ந்து ராமையாவின் பக்கம் திரும்பினான். தன்து நெற்றியில் நிறைந்திருந்த வியர்வையை விரல்களால் வழித்து நிலத்திலே சிந்தவிட்டப்படி "கேட்டியா.

Page 10
4. al • கவ்வாத்து
கத்தி பதம் இல்லேனா. கடிவாய் இருந்தா வாது பொளந்துறும்; நம்ம கைக்கும் மாச்சலா இருக்கும். தீட்டிட்டு வெட்டுடா" எனக் கூறிவிட்டு மீண்டும் தனது வேலையில் ஆழ்ந்தான்.
காலையிலிருந்தே கரத்தை றோட்டுப் பக்கத்தில் தீட்டுக் கட்டையை வைத்துக்கொண்டு மிகவும் சாவகாசமாகத் தனது கத்தியைத் தீட்டுவதும் முனையைப் பெருவிரலால் வருடிப் பதம் பார்ப்பதுமாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்த சோம்பேறி செவனு எழுந்து இப்போதுதான் தனது நிரையை நோக்கி நடந்தான்.
அதனைக் கவனித்த கங்காணிக்கு ஆத்திரம் பொங்கி வந்தது. மற்றவர்கள் நிரையில் வெகுதூரம் முன்னேறிவிட செவனு இப்போதுதான் வேலை தொடங்குகிறான்.
**இந்தாப்பா நேத்தே கண்டக்கையா ஆள் கூடிக்கிட்டே போகுது பேரு போடமாட்டேன்னாரு. நான்தான் நாளைக்கு எப்புடியும் முடிக்கலாமுன்னு சொல்லி பேரு போடவைச்சேன்; கொஞ்சம் வெரசா வெட்டப்பா. ஐயா வந்தா மொணங் குவாரு" என செவனுவைப் பார்த்துக் கூறினார் கங்காணி.
இப்போது தீட்டுக் கட்டையில் ராமையா தனது கத்தியை தீட்டத்தொடங்கினான். இருபது இருபத்தைந்து மரம் கவ்வாத்து வெட்டும்போதே கைவலிக்கத் தொடங்கிவிடும். மரம் பழசாயிருந்தால், தோள் மூட்டிலிருந்து கை கழன்று வருவதுபோல விண்விண்ணென்று தெறிக்கும். அப்போது சற்று ஒய்வெடுப்பதற்காக ஒரு சிலர் கத்தி தீட்டுவதுபோலப் பாசாங்கு செய்துகொண்டு தீட்டுக் கட்டையில் குந்தி விடுவார்கள்.
கங்காணிக்கு உதவியாக வேலைபார்க்கும் வாள்கார சின்னப்பெருமாள், ராமையா தீட்டுக் கட்டையில் குந்தியிருப் பதைக் கவனித்துவிட்டு அவன் வெட்டிய நிரையைக் கவனித்தார்.
‘ராமையா, இது ஒன்வூட்டு நெரை தானே. இந்த மரத்தில அசும்பு எடுக்கல. பட்ட கட்டையும் சீவல. ஒன் வேலையே சரியில்லப்பா இங்க . பாரு மரத்தை பணிச்சு வெட்டியிருக்கே. நல்ல பொட்டுவெட்டா இருபத்தி ரண்டு

தி. ஞானசேகரன் 5
இஞ்சி ஒசரத்துக்கு வெட்டணும். கத்தியை தீட்டிட்டு சுறுக்கா வந்து வேலையைக் கவனி.'
இப்போது முருகேசு ராமையாவின் பக்கம் திரும்பி, ஒன் மொழங்கால் ஒசர்த்துக்கு வைச்சு மரத்தை வெட்டினீன்னா இருபத்தி ரண்டு இஞ்சி ஒசரம் சரியா இருக்கும்" எனக் கூறினான். . . " -
பன்னிரண்டாம் நம்பர் மலையைத் தழுவிவரும் கரத்தை றோட்டிலிருந்து இறங்கிவரும் குறுக்குப் பாதையில் தோட்டத் துக் கண்டக்டர் பெரியசாமி படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். s
* கண்டக்டருக்கு நாற்பது வயதுவரை மதிக்கலாம் அரைக் கால்சட்டை சேட் அணிந்து, காலுக்கு நீண்ட மேஸ்"டன் கட்டிய சப்பாத்து அணிந்திருப்பார். எப்போதும் அவரைத் தலையில் தொப்பியுடனும் தடித்த மூக்குக் கண்ணாடியுடனும் காணலாம். " . .
"ஏய் அங்கபாரு குறுக்குப் பாதையில நாலு கண்ணுப் பூச்சாண்டி வருது. வேலையைப் பாத்து செய்யுங்க, வாளு வாளுண்ணு சுத்தப் போகுது.' :
கண்டக்டரின் வருகையை ராமையா சங்கேத மொழியில் தெரிவித்தான்.
தொழிலாளர்கள் உசாரடைந்தனர்; வேலையில் வேகம் தெரிந்தது.
கண்டக்டர் கவ்வாத்து மலையை அடைந்ததும் ஐயாக் கண்ணு கங்காணி அவர் அருகே சென்றார். கண்டக்டரின் முகத்தில் சிடுசிடுப்பு தெரிந்தது தலையைக் கீழே சரித்து மூக்குக் கண்ணாடிக்கும் புருவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியினூடாக மலையை ஒரு தடவை நோட்டம் விட்டார்.
*கங்காணி, என்ன வேலை செய்யுறிங்க . நேத்தே இந்த மலை முடிஞ்சிருக்கணும். கொறைதானே இருக்குணு சொன் னிங்க. ஒன்பது மணிக்கெல்லாம் இந்தக்கொறையை முடிச்சிட்டு பதினைஞ்சாம் நம்பர் மலைக்கு ஆளுங்களைக் கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னீங்களே; இப்ப மணி பத்து. நீங்க 'போற

Page 11
6 கவ் வ Tத்து
வேகத்தை பாத்தா இன்னிக்கு முழுக்க இத முடிக்க மாட்டீங்க போல. இன்னிக்கு ஒருத்தருக்கும் பேரு இல்ல?”
கண்டக்டர் பலமாகக் கத்தினார். அதைக்கேட்ட முருகேசுவிற்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கள் வாத்து வெட்டுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து கண்டக்டரை சினத்துடன் பார்த்துக் கூறினான்.
“என்னங்கையா எதுக்கெடுத்தாலும் பேரு இல்ல பேரு இல்ல எங்கிறீங்க போன மாசமும் எனக்கு மூணு நாள் பேரு போடல்ல. மாடுமாதிரி மழையிலும் தண்ணியிலும் கஷ்டப் படுறோம். ஒங்களுக்கு பேரு நிப்பாட்டிறது ஒரு வெளையாட்டாயிருக்கு"
முருகேசு இப்படிக் கூறியதும் கண்டக்டரின் அருகே நின்ற கங்காணியின் நிலைமை தர்ம சங்கடமாகிவிட்டது. கண்டக்டரின் கோபத்தைக் கிளறிவிட்டால் நிலைமை மோச மாகிவிடும் என்பதை அவர் அறிவார். அதனால் முருகேசுவின் பக்கம் திரும்பி அமைதியாக இருக்கும்படி கண்களால் சைகை காட்டினார்.
‘என்ன முருகேசு வாய் ரொம்ப நீளுது. கோஸ்ட் கூடிப்போச்சுன்னா ’ எங்க இருந்து பேரு போடுறது - நீ நெனச் சமாதிரி செய்யிறதுக்கு என்ன இது ஓங்க அப்பன் வூட்டுத் தோட்டமா?' கண்டக்டரின் வார்த்தைகளில் கோபம் தெறித்தது. .
தொங்கல் நிரையில் நின்ற ராமையா இப்போது பலத்த குரலில், "என்னங்க அநியாயமா பேரு இல்ல எங்கிறீங்க; நேத்து கொழுந்து மலையில 'பத்துப்பேரை வெரட்டுனிங்க. அதுல என் சம்சாரத்தையும் வெரட்டிட்டீங்க. கெழமையில குடுக்கிறது நாலு நாள் வேலை . இதுலவேற பேரு இல்லங் கிறீங்க. நாங்க எப்புடி பொழைக்கிறது. எப்புடி புள்ள குட்டிய காப்பாத்திறது?’’ எனப் பலத்த குரலில் கூறினான்.
'இந்தா வாயை மூடு; நீ ரொம்ப கதைக்கிறே. வேல செஞ்சாத்தான் பேரு. சும்மா நின்னுகிட்டு ஐஸ் அடிச்சு பேரு வாங்கப் பர்க்காத" கண்டக்டரின் கோபம் அதிகமாகி யிருப்பது அவர் போட்ட சத்தத்தில் விளங்கியது.

தி. ஞானசேகரன் 7
'நாங்க ஒண்ணும் ஐஸ் அடிக்கல; இடுப்பு ஒடிய காலயில இருந்து கவ்வாத்து வெட்டிறோம். ஐஞ்சாளு பத்தாளுன்னு ஆளுங்களை எடுத்து வூட்டு வேலைக்கும் தோட்ட வேலைக்கும் நீங்க வச்சுக்கிட்டா எப்புடி மலை முடியும் . கோஸ்ட் கூடிப் போச்சு எங்கிறீங்க' முருகேசு ஆத்திரத்துடன் கூறினான்.
'ஏய் முருகேசு, டொத்துடா வாய. நான் ஆள் எடுக்கிற கதையெல்லாம் ஒனக்குத் தேவையில்ல. ஒன் வேலைய நீ செய்யு. என்னைய எதிர்த்தா பேசுற, ஒனக்கு இன்னிக்கு வேலையில்ல. போ.." கண்டக்டர் கோபமாகக் கூறிவிட்டு பற்களை நெருடியபடி முருகேசுவை முறைத்துப் பார்த்தார்.
"யோவ், என்னா நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். ரொம்ப மேலே போlங்க . என்னை மலையவுட்டு வெரட்டினா இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பாத்துட்டுத்தான் வூட்டுக்குப் போவேன்’ முருகேசுவின் உடல் கோபத்தால் நடுங்கியது.
‘என்னடா செய்வே . எங்க செய்யு பாப்போம்" எனக் கூறியபடி வேகமாக தேயிலை நிரைகளில் இறங்கி முருகேசுவின் அருகே சென்றார் கண்டக்டர்.
முருகேசு தன்னையிழந்தான். காலயில இருந்து இது வரை கஷ்டப்பட்டு வேலை செய்யும்பேர்து, பேரு இல்லன்னு சொல்லுறான்; ஏழைங்க வவுத்தில அடிக்கிறதுக்கு இவனுக்கு கொஞ்சங்கூட இரக்கம் இல்ல கவ்வாத்துக் கத்தியால இவன ரெண்டு துண்டா வெட்டிவிட்டா என்ன?’ என அவனது நெஞ்சம் துடித்தது.
‘இந்தாய்யா கடைசியா சொல்லுறேன். நீங்க அடே புடேன்னா நானும் கைகால் நீட்டத்தான் வரும்' முருகேசு உறுதியுடன் கூறினான்.
"என்னடா சொன்னே? எனக் கர்ச்சித்தபடி தனது கைத்தடியை ஓங்கியவாறு முருகேசுவை நெருங்கினார். சுண்டக்டர் , '
"எங்க அடிங்க பாப்பம், ஒங்க் கம்புமட்டும் என்மேல பட்டுச்சென்னா கவ்வாத்துக் கத்திதான் பதில் சொல்லும்."
கத்தியை கண்டக்டரை நோக்கி உயர்த்தினான் முருகேசு.
தொழிலாளர்கள் எல்லோரும் கவ்வாத்து வெட்டுவதை

Page 12
8 . கவ் வாத்து
நிறுத்திவிட்டு திகைப்புடன் அங்கு நடப்பதைக் கவனித்துக் கொண்டு நின்றனர்.
"ஐயய்யோ! முருகேசு. என்னடா கரச்சல், கத்திய கீழே போடு" எனக்கூறிக்கொண்டே ஐயாக்கண்ணு கங்காணி முருகேசுவின் பின்புறமாக ஓடிச்சென்று அவனைக் கட்டிப் பிடித்தார், விபரீதம் எதுவும் நடந்துவிடக் கூடாதேயென அவரது மனம் பதட்டம் அடைந்தது.
கண்டக்டர் தன்னைச் சுதாரித்துக் கொண்டார். மேலும் அங்கே நின்றால் எதுவும் நடக்கலாமென அவரது மனம் கூறியது.
"இந்தா கங்காணி, நீங்கதான் சாட்சி. வேல் பாக்க வந்த என்ன இவன் கொலைசெய்ய வந்துட்டான். நான் இப்பவே தொரை கிட்ட சொல்லிட்டு பொலிஸ9க்கு போ றேன். ஒங்க ஒருத்தருக்கும் வேலயில்ல. போங்க. எல்லாம் '' ... חGu
இப்படிக் கூறிவிட்டு கண்டக்டர் அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
"இந் தாங்க கங்காணி, தெரரை கிட்ட போயி இந்த ஆளு அது இதுன்னு பொய் சொல்லுவது. நம்மஞம் தொரைக்கிட்ட போயி நடந்த அவ்வளவையும் சொல்லுவோம்" என்றான் முருகேசு
அப்போது பக்கத்தில் நின்ற ராமையா, "இப்ப மணி பதினொண்டாச்சு. தொரை தபால் டாக்க ஆபீஸ்"க்கு வருவாரு; வாங்க போவோம். தொரையை கண்டுக்குவோம்’ என்றான்.
கங்காணியால் அவர்களது முடிவுக்கு மாறாக எதையும் சொல்ல முடியவில்லை. ‘நம்ம தலைவரையும் வச்சு தொரை கிட்ட பேசுறதுதான் நல்லது. இந்தா செபமாலை தலைவர் மருந்தடிக்கிற காட்டில இருப்பாரு, நீ போயி விசயத்தைச் சொல்லி கூட்டிக்கிட்டு நேரா ஆபீஸ9க்கு வா' என்றார்.
கவ்வாத்துத் தொழிலாளர்கள் மலையில் இருந்து இறங்கி குறுக்குப் பாதை வழியாக ஆபீஸ்ை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

தி, ஞானசேகரன்
தலைவர் முத்துசாமியிடம் செபமாலை விஷயத்தைக் கூறியபோது அவருக்கு ஆத்திரம் பொங்கியது. சிறிது காலமாக தொழிலாளர்கள் கண்டக்டரைப்பற்றி அடிக்கடி அவரிடம் "பிராது" கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; இப்போது தொழிலாளர்கள்மேல் கைநீட்டவும் தொடங்கிவிட்டார் என எண்ணியபோது இதற்கொரு முடிவுகட்டவேண்டுமென அவர் தீர்மானித்துக் கொண்டார்.
தலைவர் ஆபீஸை சென்றடைந்தபோது கவ்வாத்துத் தொழிலாளர்கள் அங்கு குழுமிநின்றனர். தலைவரைக் கண்டதும் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆவேசமாகக் கண்டக் டருக்கு எதிரான தமது முறைப்பாடுகளை அவர்கள் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே கண்டக்டர் துரையைச் சந்தித்து கவ்வாத்து மலையில் நடந்த வற்றை விபரமாகக் கூறியிருந்தார்.
தலைவரும் தொழிலாளர்களும் ஆவேசமாகக் சூழ்ந் திருப்பதைப் பார்த்த துரைக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது. w
தலைவர் துரையிடம் முறையிடத் தொடங்கினார்.
"சலாங்க தொர, கவ்வாத்து வெட்டிற ஆளுங்களுக் கெல்லாம் இந்தக் கண்டக்கையா பேரு இல்லேன்னு சொல் லிட்டாரு. கஷ்டப்பட்டு வேலை செய்யிறவங்களுக்கு பேரு இல்லேன்னா எப்புடிங்க. இவங்க எல்லாருக்கும் இன்னிக்கு பேரு கொடுக் கணுங்க.."
"இந்தா தலைவர், ஏக்கருக்கு இருபத்தைஞ்சு ஆள்தான் எஸ்டிமேட். முப்பது ஆள் போயிருக்கு. அதனாலதாங் கண்டக்டர் பேரு இல்ல சொன்னது"
"தொரை, அந்த மலையில தேயிலை மரம் ரொம்ப பெரிசுங்க. அதுனால ஆள் கொஞ்சம் கூடத்தான் போகும்"
'தலைவர், அதிங் எல்லாங் நம்மகிட்ட சொல்லலாங் தானே. அந்த ஆள் ஏன் கண்டக்டரை வெட்டப்போனது? அது பெரிய குத்தம்.

Page 13
10 கவ்வாத்து
"தொரை கண்டக்கையாவைப் பத்தி ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது. மாட்டுக்கு பில்லு அறுக்கிறதுக்கும் வெறகு வெட்டுறதுக்கும் தோட்டவேலை செய்யிறதுக்கும் கவ்வாத்து ஆளுங்களை எடுத்து கள்ளப்பேரு போடுறாரு அதனாலதாங்க ஆள் கணக்கு கூடிப்போகுது.'' என்றான். பக்கத்தில் நின்ற முருகேசு.
"அதெல்லாங் எனக்குத் தெரியும் மனுசன். அந்த மலையில நீதானே கண்டக்டரை ஏசி வெட்டப்போனது. அதுனால என்ன சொன்னாலும் பேரு இல்ல."
அப்போது தலைவர், 'இல்லங்க தொரை, கண்டக்கை யாதான் மொதல்ல ஒன்னை என்ன செய்யிறேன் பாருன்னு சொல்லி, ரொம்ப வேகமா முருகேசு நின்ன நெரையில போயி கம்பை ஓங்கினார்; அதனாலதாங்க இவன் கத்திய ஓங்கினான்." எனக் கூறினார்.
தலைவர் இப்படிக் கூறியதும் இதுவரை ,நேரமும் துரையின் பக்கத்தில் மெளனமாக நின்றுகொண்டிருந்த கண்டக்டர் துரையைப் பார்த்து 'இல்லையில்லை தலைவர் அந்த இடத்தில் இருக்கவில்லை. அவர் பொய் சொல்லுகிறார்" என ஆங்கிலத்தில் கூறினார்:
துரை அதனைக் கேட்டு தலையாட்டிவிட்டு தலைவரின் பக்கம் திரும்பி, ‘தலைவர் நீங்க சொல்லுறத நான் நம்ப மாட்டேன். இன்னிக்கு கவ்வாத்து ஆள் ஒருத்தருக்கும் பேரு இல்லை." எனக் கூறிக்கொண்டே தனது இருப்பிடத்தை விட்டு எழுந்தார்.
'இந்த ஆளுங்களுக்கு இன்னிக்கு பேரு இல்லாட்டி நாங்க யாருமே வேலை செய்யமாட்டோம். இப்பவே மத்த மலையில வேலைசெய்யிற ஆளுங்களையும் மலையவுட்டு எறங்க சொல்லுவோம்.'
தலைவர் இப்படிக் கூறியதும் துரை சிறிதுநேரம் யோசித்தார். தோட்டத்து உத்தியோகத்தர் ஒருவரை தொழிலாளி வெட்டப்போயிருக்கிறான். இவ்வளவுதூரம் வந்தபிறகு தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தி வைக்கா விட்டால், தோட்டத்தை நிர்வகிப்பது கஷ்டமாகிவிடும் சிறிய விஷயங்களுக்கெல்லாம் உத்தியோகத்தர்களை எதிர்க்கத்

தி. கருானசேகரன் 11
கொடங்கிவிடுவார்கள். இப்படியான நிலைமையை முளையி லெயே கிள்ளிவிடவேண்டும்.
ነ፥ካ
* தலைவர் நீ என்னா நம்மள பயங்காட்டிறதா. அதுக்கெல்லாம் நான் பயமில்ல, நம்ம கண்டக்டரை வெட்டப் போயாச்சு. அது பெரியகுத்தம். இதைப்பத்தி நான் பொலி * க்கு சொன்னா, நீ எல்லாங் ரிமாண்டிலதான் இருக்கணும்."
"என்னங்க தொரை இப்புடி சொல்லுறீங்க இந்தக் கண்டக்கையா இன்னிக்கு மட்டுமில்லங்க போன கெழமை கொழுந்தாழுங்ளுக்கு பேரு நிப்பாட்டினாரு. இப்புடியே போனா ஆளுங்க எப்புடி பொழைக்கிறது; தொரை பாத்துச் செஞ்சா நல்லதுங்க. "'
**தலைவர் நான் சொன்னா சொன்னதுதான் இன்னிக்கு பேரு குடுக்க முடியாது; நீ என்னா வேணுமென்னாலும் செய்யிறதை செய்." துரை கண்டிப்புடன் கூறினார்.
"அப்ப சரிங்க , ஏதோ கேட்கிறதுக்காக கேட்டோம். நீங்க கண்டக்கையா பக்கந்தான் பேசுறிங்க அதுனால நாங்க எல்லாம் இப்ப இருந்தே ஸ்றைக் அடிக்கிறோம்." இப்புடிக் கூறிவிட்டு தொழிலாளர்களையும் கூட்டிக்கொண்டு அவ்விடத் தைவிட்டு அகன்றார் தலைவர் .
ஆக்குரோசத்துடன் நின்றிருந்த முருகேசு, 'இந்தா பாருங்க தலைவரே, இனிமேல கண்டாக்கை இந்தத் தோட்டத்தில வைக்கக் கூடாது, எப்புடியாவது வெளியில தள்ளணும்' எனக் கூறினான்.
“எவ்வளவு நாளானாலும் டரவாயில்லை, வூட்டில இருப்போம். திங்க இல்லாட்டிலும் பரவாயில்லை. இந்த மனுசனை வெளியில தள்ளிட்டுத்தான் நாம வேலைக்குப் போ சணும்’ என்றான் ராமையா.
*" தொரையும் கண்டாக்கு பேச்சைக் கேட்டுகிட்டு ஆடுறான்; அவனுக்கும் ஒரு முடிவுகட்டணும் என்றான் செவனு.
“கொழுந்தாளுங்களுக்கெல்லாம் அநியாயமா றாத்தல் வெட்டுறாங்க; புள்ளைக் காறிங்களுக்கு ஒழுங்கா லீவு கொடுக்கிறதில்ல. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கண்டா கணும்' என்றார் வாள்காரச் சின்னப்பெருமாள்.

Page 14
12 கவ் வாத்து
அப்போது தலைவர் தொழிலாளர்களைப் பார்த்துக்
கூறினார், "இந்தாப்பா எல்லா வேலைக் காடுகளுக்கும் ரெண்டு ரெண்டு ஆள் போய் ஆளுங்களை மலையவுட்டு இறங்கச் சொல்லுங்க. தலைவர் சொன்னார் என்னு சொல்லுங்க.
கொழுந்துக் காட்டிலபோய் கொழுந்தெல்லாம் கொண்டுபோய் மடுவத்தில கொட்டிட்டு ஆளுங்களை லயத்துக்குப் போகச் சொல்லுங்க. ஸ்டோரில போய் அரைச்ச கொழுந்தை அப்புடியே போட்டிட்டு எல்லாரையும் வரச் சொல்லுங்க."
சிறிது நேரத்தில் வேலைகள் யாவும் ஸ்தம்பித்தன. கொழுந்து மலைகளிலிருந்து பெண்கள் கொழுந்துக் கூடைக ளுடன் சாரை சாரையாக இறங்கத் தொடங்கினர். ஆண் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் லயங்களுக்குத் திரும்பத் தொடங்கினர். ஸ்டோரில் கொழுந்தரைக்கும் ரோதைகள் ஒய்வுகொண்டன.
எல்லாமே ஒரிரு மணித்தியாலயங்களுக்குள் ஸ்தம்பிதம் அடைந்தன.
தலைவர் முத்துசாமி முருகேசுவையும் கூட்டிக்கொண்டு தொழிற்சங்கக் காரியாலயத்திற்குப் புறப்பட்டார். வேலை நிறுத்தத்தை விளக்கி, மேலும்பல கோரிக்கைகளை உள்ளடக்கி நீண்ட கடிதம் ஒன்றை தோட்டத்துரைக்கு அனுப்பிவைத்தார் தொழிற்சங்கப் பிரதிநிதி.
00

2
தோட்டத்தில் வேலைநிறுத்தம் தொடங்கி பத்து 6 ட்கள் கழிந்துவிட்டன. தொழிற்சங்கப் பிரதிநிதி பெரிய. துரையுடன் தொடர்பு கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக் குக் கொண்டுவருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் டியும் அன்று கவ்வாத்து மலையில் வேலைசெய்தவர்களுக்கு பேர் "போட்டு பிரச்சனையைத் தீர்த்துவைக்கும்படியும் 26 w Går ug GOTT fiř.
பெரியதுரையின் பிடிவாதம் தளரவில்லை. கண்டக்டரை வெட்ட முயற்சிசெய்தது பிழை. அதனால், தான் எடுத்த (ιριφ.6ύθου எவ்வித மாற்றத்தையும் செய்யமுடியாதெனக் கூறிவிட்டார்.
தோட்டத் தலைவர் முத்துசாமியும் தோட்டக் கமிட்டி யினரும் தினமும் தொழிற்சங்கத்துக்குப் போய், பிரதிநிதியைச் சந்தித்து வேலைநிறுத்தம் முடிவடைவதற்குரிய அறிகுறிகள் தென்படுகிறதா எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
தொழிலாளர்கள் தினமும் லயங்களின் முன்னால் கூட்டங் கூட்டமாக கூடிநின்று வேலைநிறுத்தத்தைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
சிலர் கண்டக்டர் செய்யும் அடாவடித்தனங்களை எடுத்துக் கூறினர். வேறுசிலர் நிர்வாகத்தால் தங்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் குறைந்துவிட்டதாகக் குறைப்பட்டு கொண்டனர். வேறுசிலர் ஒருநாட் பேருக்காக வேலை நிறுத்தம் செய்யப்போய் பத்து நாட்கள் பேர் இல்லாமல் போய்விட்டதேயென ஆதங்கப்பட்டனர்.
தினமும் வேலைசெய்து பழக்கப்பட்ட தொழிலாளர் களுக்கு வேலையின்றி வீட்டிலிருப்பது பெரிதும் சங்கடமாக இருந்தது. எப்படியும் இந்த வேலைநிறுத்தம் விரைவில் (pடிந்துவிட வேண்டுமெனப் பலர் விரும்பினர்.

Page 15
14 கவ் வாத்து
மாரியம்மன் கோயில் லயத்துக்கு முன்னால் உள்ள ஊத்துப்பீலியில் பெண்கள் கூடியிருந்தனர். சிலர் பாத்திரங் களைக் கழுவித் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தனர். இரண்டொ ருவர் குளித்துக் கொண்டிருந்தனர்.
பீலிக்குமேலே ஆறாம் நம்பர் மலை பச்சைப் பசேலென
விரிந்து கிடந்தது. ரவுண்ட்” பிந்தியதால் தேயிலைக் கொழுந்துகள் தளதளலென வளர்ந்து தலைநீட்டிக் கொண்டிருந்தன.
குடத்தில் தண்ணிர் பிடித்துக் கொண்டிருந்த முத்து சாமித் தலைவரின் மகள் கண்ணம்மா பரந்துவிரிந்த அந்த மலையின்மேல் பார்வையைப் படரவிட்டாள்.
சென்ற வருடத்தில் இதே காலப்பகுதியிலேதான் அதிக கொழுந்து எடுத்ததற்காக பட்டுப் புடவையொன்று அவளுக்குத் துரையால் பரிசளிக்கப்பட்டது. கொழுந்தெடுக்கும் பெண்கள் எல்லோரையும்விட அவள் வேகமாகக் கொழுந்தெடுக்கக் கூடியவள் :
தேயிலைச் செடிகளில் செழித்து வளர்ந்திருந்த கொழுந்துகள் யாவும் தம்மைப் பறித்தெடுக்கமாட்டாயா என அவளிடம் கெஞ்சின. கண்ணம்மா விரல்களைச் சொடுக்கிக் கொண்டாள்.
** என்னடி கண்ணம்மா மலையையே பாத்துக்கிட்டு நிக்கிறே. மலையில என்னமும் அப்புடி இருக்கா?, தண்ணி புடிக்கலியா? அருக்காணி குடத்தைப் பீலியில் பிடித்தவாறு கேட்டாள்.
'இல்ல ஆத்தா, இந்த ஆளுங்க செய்யிற அநியாயத்தை பாத்தியா. இது நல்ல கொழுந்துக் காலம்; இப்பதான் நல்ல வேலைவெட்டி கெடைக்கும். இப்ப போயி ஸ்றைக் அடிச்சா எப்புடி..? எப்பதான் இது முடியப்போகுதோ தெரியல்ல. ' கண்னம்மா கவலையுடன் கூறினாள்.
ஆமாண்டி கண்ணம்மா மலையைப் பாத்தா எப்புடியும் அரை நேரத்துக்குள்ள பேருக்கு எடுக்கலாம்போல. அதுக்கு மேல பத்துப் பன்னிரண்டு கிலோ ஒரு நாளுக்குப் போட்டுக்

தி. ஞானசேகரன் У 15
கலாம். மாசக் கடைசியில சம்பளம் கூடவே இருக்கும். அதெல்லாம் போச்சு’ என்றாள் அருக்காணி.
**கண்ணம்மா, ஒங்க அப்பாதானே தோட்டத்தில தலைவரா இருக்காரு . அவருதானே ஸ்றைக் அடிக்கணு மென்னு முடிவு செஞ்சாரு. நீ என்ன இப்புடி கதைக்கிறே.?" என வினவினாள் குளித்துக் கொண்டிருந்த மலையம்மா.
* அப்பாவுந்தான் எந்த நாளும் வூட்டுக்கும் ஜில்லா வுக்கும் நடந்துகிட்டு இருக்காரு; அது பத்தாதுன்னு நம்ம பெரதிநிதியும் ரெண்டு மூணு தடவை ஆபீஸ்"க்கு வந்து போயிட்டாரு. ஆனா தொரை புடிச்ச புடியை விடமாட் டேங்கிறான்; நிப்பாட்டின பேரை தரமாட்டேங்கிறான்."
‘இங்க பாரும்மா ஒங்களுக்கு எல்லாம் சரி . மாடு கண்ணு வச்சிருக்கிறீங்க. பரவாயில்ல. எங்க வூட்டில மூணு புள்ள... அதுபத்தாம மாமாவும் மாமியும் பென்சன்
காரங்க. இந்த மாசத்தில இப்பவே பத்துநாள் வேலை யில்லை, தீபாவளி அட்வான்ஸ் வேற புடிக்கிறாங்க. அடுத்த மாசம் சம்பளமே இருக்காது; அரை வயிறு தான் தெரியுமா. இந்த ஸ்றைக்வேற முடிஞ்ச பாடில்ல." என ஆதங்கத்துடன் கூறினாள் பக்கத்திலே நின்ற மாரியாயி.
அப்போது அருகே நின்ற சின்னக் கண்ணு, "இங்கபாரு மாரியக்கா, நேத்தில இருந்து எங்க வூட்டில சாப்பிட ஒண்ணுகூட இல்ல. நேத்து பெலாக்காய வெட்டி பொழுதை ஒப்பேத்திட்டோம் ஒத்தைக் கடைக்குப்போய் Fmr . DIT Gór கேட்டா, தோட்டத்தில ஸ்றைக்கு. மாசக் கடைசியில சம்பளம் இருக்காது. எப்புடி கடன் கட்டுவீங்க என்னு மொதலாளி கேட்கிறான்; சாமான் ஒண்ணுகூட கொடுக்கல' எனக் கவலைப் பட்டாள்.
“சின்னக்கண்ணு, எங்க வூட்டில அந்த மனுசன் செஞ்ச வேலய கேளு. நேத்து, புள்ள குட்டிங்களுக்கு சாப்பாட்டு சாமான் வாங்கி வரட்டுமென்னு. எங்கப்பா போட்ட மூக்குத்தி . அது ஒண்ணுதான் L6lë a b இருந்திச்சு களட்டவே மாட்டேன் , என்ன செய்ய கஷ்டமுணு களட்டிக் கொடுத்தேன். இரண்டு மூணு சாமானத்தை வாங்கிட்டு, மூக்குமுட்ட தண்ணிய போட்டிட்டு வாறான். படுபாவிப்பய. இவனுக்கு வேற பொண்டாட்டி புள்ள. சீ. ,' அருக்காணி வெறுப்ப்டன் கூறினாள்:

Page 16
16 கவ் வாத்து
தண்ணிர் பிடித்தவர்கள் இப்போது லயத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கண்ணம்மா வீட்டுக்குச் சென்றபோது, தொங்கற் காம்பரா சின்ன வேலு அவளது தந்தையோடு ஸ்தோப்பில் இருந்து/வாக்குவாதப் பட்டுக்கொண்டிருந்தார்.
"என்ன தலைவரே, தொடக்கத்தில வெட்டிப்புடுவேன் கிட்டிப்புடுவேன்னு ஏதோ பெரிசா பீத்திக்கிட்டீங்க. இப்ப என்னடான்னா ஒண்ணையும் காணோம். நம்ம பெரதிநிதியும் வந்து வந்துகிட்டு போறாரு ஸ்றைக் முடிஞ்ச பாடில்லை. தொரை என்னடான்னா கவலையில்லாம ஜீப்பில கிளப்புக்கும் கொழும்புக்கும் போகவும் வரவுமா இருக்காரு. தோட்டத்து ஆளுங்க வூட்டில பசி பட்டினி. இந்த ஸ்றைக்கு சரிவராதுன்னு தான் நான் நெனைக்கிறேன்.""
*" என்ன வேலு இப்புடி சொல்லிப்புட்டே. இந்த ஸ்றைக்கு இன்னும் ரெண்டு நாளில முடிவுக்கு வரா ட்டிப்போனா இந்தப் பகுதியில உள்ள தோட்டத் தொழிலாளிங்க எல்லாரும் ஸ்றைக்கில இறங்குவாங்க என்னு ஜில்லாவில சொன்னாங்க"
"சும்மா அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கிறீங்க தலைவரே, இந்த ஸ்றைக் முடிவுக்கு வந்தபாடில்ல. தோட்டத்து ஆளுங்க பசி பட்டினியில துடிக்குது. பெலாக் காய எத்தினை நாளைக்குத்தான் சாப்பிட்டுக் கிட்டிருக் கிறது. பெலாமரம் வேற மொட்டையாப் போச்சு"
* ஸ்றைக்கன்னா அப்புடித்தான் இருக்கும் பட்டினியை தாங்கிக்கிட்டாத்தானே வெத்த முடியும். இன்னும் ரெண்டு நாள்ள ஜில்லா மூலியமா ஆளுங்களுக்கு அரிசி மாவு தாறதென்னு சொல்லியிருக்காங்க. நீ என்னவோ வெளங் astrup 6325š5) sp.''
பொறுமையிழந்த தொழிலாளர்களுக்கு பதில் சொல்வதே தலைவருக்குப் பெரும்பாடாகிவிட்டது.
நடுக்காம்பரா அல்லிமுத்துவின் குரல் மரக்கறித் தோட்டத்தின் பக்கத்திலிருந்து கிளம்பியது. சின்ன வேலுவும் தலைவரும் வெளியே எட்டிப் பார்த்தனர்.

தி. ஞானசேகரன் 17
'ரெண்டு ஆனை வாழைத்தாரு. நல்லாமுத்தியிருந் திச்சு, கடையில குடுத்துட்டு அரிசி மாவு வாங்கிட்டு வரலா மென்னு இருந்தேன். நேத்து ராவு அதை வெட்டிக்கிட்டு போயிட்டானுக. நாசமாப் போனவங்க."
அல்லிமுத்து ஆத்திரத்தில் பெரிதாகக் கத்தினான், பீலியில் பெண்கள் சிலர் இருப்பதைக்கூடச் சட்டைசெய் யாமல் தூஷணை'வார்த்தைகளில் திட்டித் தீர்த்தான்.
*தோட்டத்தில ஸ்றைக் வந்ததும் போதும் எங்க
பாத்தாலும் களவுதான். ஒண்ணும் தோட்டத்தில வைக்
கேலாது. நேத்து ஒரு கோழிக்குஞ்சை காணோம் இன்னிக்கு
காலையில பீலியில வைச்ச தண்ணிக் குடத்தைக் காணோம்.
என்னமோ எனக்கு ஒண்ணும் புரியமாட்டேங்குது . அய்யா தலைவரே, இப்புடியே போய்க்கிட்டிருந்தா சரிவராது. ஆளுங்க் வேலையில்லாம எத்தனை நாளைக்கு இருக்கிறது? ரெண் டொரு நாளில முடிவு தராட்டி நாங்க எல்லாம் வேலைக்குப் போயிடுவோம். அப்புறம் எங்கமேல வருத்தப்படாதீங்க
என்றார் சின்ன வேலு.
தலைவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எப்படியும் இந்த வேலை நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வருவது நல்லதென இப்போது அவர் எண்ணத் தொடங்கினார்.
3
ஆறுமுகம் கங்காணி நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தார். அன்று மால்ை அவர் நாட்டுக்குச் சென்று கள்ளுக் குடித்துவிட்டுத் திரும்பவும் வழியில் சாக்குக்காரன் மரியசூசை அவரைச் சந்தித்து கண்டக்டர் உடனே வந்து சந்திக்கும்படி சொன்னதாக்க் கூறினான்.
தோட்டத்தில் வேலைநிறுத்தம் நடக்கும்போது கண்டக்டர் பங்களாவுக்குச் செல்வதைத் தொழிலாளர்கள் யாராவ்து பார்த்துவிட்டால் அது பிரச்சனையில் முடிந்துவிடும்

Page 17
1S கவ் வாத்து
என்பது ஆறுமுகம் கங்காணிக்கு நன்கு தெரியும். அதனால் அவர் லயத்தில் உள்ளவர்கள் நித்திரைக்குச் சென்றபின் யாருக்கும் தெரியாமல் கண்டக்டரைச் சந்திக்கப் புறப் பட்டார்.
அப்போது அவரது மனைவி பாப்பாத்தி, ‘என்னங்க, ஓங்கமாதிரி கங்காணிமாரு தலைவர் கூட சேர்ந்துதானே இந்த ஸ்றைக்கை ஆரம்பிச்சீங்க . இப்ப நீங்க கண்டக்கையா வூட்டுக்குப்போறேங்கிறீங்க. இது எனக்கென்ா சரியாப்படல, லயத்தில உள்ள வங்களுக்குத் தெரிஞ்சா கொழப்பம் பண்ணு வாங்க. எல்லாத்துக்கும் வர்ரதுதானே நமக்கும்." என்றாள்.
**கத்தாத பாப்பாத்தி, அடுத்த வூட்டில உள்ள்வங்க ளுக்கு கேட்டிடப் போகுது. கண்டக்கையா நமக்கு எவ்வளவோ ஒதவி செஞ்சிருக்காரு. பெரியமனுசன் கூப்பிட்டா போய் என்னண்ணு கேக்கிறதில்லையா - ஸ்றைக்கு முடிஞ்ச ஒடன அவருகிட்டதானே வேலை செய்யப் போறோம்.’’ மனைவி யிடம் இரகசியமான குரலில் கிசுகிசுத்தார் கங்காணி.
'இல்லங்க யாருமே ஸ்றைக் தொடங்கினதில இருந்து அவரு பங்களாவுக்கு போனதில்ல. நீங்க மட்டும்போனா தோட்டம் என்னா பேசும்?"
'ஐயய்யோ , சனியனே, வாளு வாளுன்னு கத்தாத நான் என்னா வேலைக்கா போறேன். கூப்பிட்டா என்னணு கேக் கத்தானே போறேன்' எனச் சினத்துடன் கூறிய கங்காணி, பின்னர் தாழ்ந்த குரலில் 'இங்க பாரு பாப்பாத்தி, ஒனக்கு ஒண்ணும் வெளங்கல. அவரு ஒன்க்கு எத்தின நாளு வூட்டில இருந்தப்போ பேரு போட்டிருக்காரு. நமக்கு பில்லு கில்லு அறுக்க, வெறகு வெட்ட ஆள் குடுத்திருக்காரு. அவசரத் துக்கு ஐஞ்சு பத்து வாங்கியிருக்கோம். அப்புடி ஒதவி செய்யிற மனுசன் கூப்பிட்டா என்னாண்ணு கேக்கிறது குத்தமா?' "
**ஆமா நீங்க சொல்லிறதும் சரிதான். அவரும் வேற யாரையும் நம்பாம ஓங்களைத்தானே கூப்பிட்டிருக்காரு. ஆனா தோட்டத்து ஆளுங்களுக்கு தெரிஞ்சா ஒரு மாதிரி நெனைப் Lit šes. சரி, யாருக்கும் தெரியாம கோடியோட போட்டுவாங்க.'

தி. ஞர்னசேகரன் 19
ஆறுமுகம் கங்காணி ஸ்தோப்பின் மேல் கதவை இலே சாகத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் வெளியே இருப்பதாகத் தெரியவில்லை. பணிய லயத்திலிருந்து உடுக்குச் சத்தம். வந்து கொண்டிருந்தது. மருதமுத்துவின் சம்சாரத் திற்கு மூன்றுறோட்டு முச்சந்தியில் முனியடித்துவிட்டதாகப் பேசிக்ச்ொண்டார்கள். கோழிக் கள்ளன் பூசாரி தொடர்ந்து நான்கு நாட்களாக உடுக்கடித்து முனியைவிரட்ட முயன்று கொண்டிருக்கிறார்; இன்னும் முடியவில்லை. எங்கோ தூர்த் தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
கங்காணி, மூலையில் சாய்த்து வைத்திருந்த கைக் கம்பை எடுத்துக் கொண்டு மெதுவாகக் கதவைத் திறந்து வெளியே வந்தார்.
'இந்தாங்க அவ்வளவு இருட்டு இல்ல. ஆளுக போறது வாறது தெரியும்; ன்துக்கும் 'மழைக்கோட்ட போட்டுக்கிட்டு போங்க." எனக் கூறி அவர்கையில் கறுப்புக்கோட்டை எடுத்துக் கொடுத்தாள் பாப்பாத்தி,
கங்காணி பணிய லயத்தின் படிக் கட்டு வழியாக இறங்கி ஏழாம் நம்பர் மலையின் சின்னரோட்டில் நடக்கத் தொடங்கினார். எதிரே வரும் அளக்கானைத் தாண்டி நேராகப் போனால் முச்சந்தியை அடையலாம். அங்கிருந்து மேலே செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஏறினால் கண்டக்டர் பங்கள்ாவின் பின்புறத்தை அடைந்துவிடலாம்.
ஆறுமுகம் கங்காணி முச்சந்தியை அடைந்தபோது பெரிய பங்காளாவுக்குப் போகும் றோட்டு வழியாக யாரோ, கைப்பந்தத்துடன் கங்காணியின் எதிரே வந்தார்கள். முச்சந்தி வளைவில் பந்தத்துடன் வந்தவர் ஏறியபோதுதான் கங்காணி அவரை மிக நெருக்கமாகச் சந்தித்தார்.
* என்னங்க கங்காணி, இந்த நேரத்தில வெளிச்சமும் இல்லாம : எங்க போநீங்க?
" ஆ. முருகேசு, நீ இந்த நேரத்தில எங்க இருந்து வாற?' கங்காணியின் மனதில் பதட்டம் புகுந்துகொண்டது. எப்படி இந்த நிலைமையைச் சமாளிப்பது? இவனிடம் என்ன சொல்வ்து? என ஒரு கணம் தடுமாறினார்.

Page 18
20 கவ்வாத்து
இல்லங்க கங்காணி, தலவர் வீட்டறுதி போனேன்;சொனிங்' ۔۔۔۔۔
கிப் போச்சு. ஆமா, நீங்க எங்கிட்டு இந்தப்பக்கம்?
'சம்சாரத்துக்கு நெஞ்சி வலின்னு துடிச்சிகிட்டு இருக்கா. அதுதான் டாக்டரையாகிட்ட மருந்து கொஞ்சம் எடுக்கப் போறேன்.""
'ஐயய்யோ. அப்புடீங்களா? வெளிச்சமும் இல்லாம். அப்புடின்னா வாங்க நானும் வாரேன் " எனக்கூறித் திரும் பினான் முருகேசு.
'வேணாம் முருகேசு; அவ்வளவு வருத்தம் இல்ல. நானே போயிட்டு மருந்து வாங்கியந்துடுறேன். நீ போ." எனக் கூறிய ஆறுமுகம் கங்காணி இப்போது அளக்கான் பக்கத்திலிருந்து மேற்புறமாகச் செல்லாது, ஆஸ்பத்திரிக்குப் போகும் பாதையில் சிறிது தூரம் நடந்தார்.
"அப்ப சரிங்க, நானும் போறேன்." முருகேசு எதிர்ப் புறமாக நடக்கத் தொடங்கினான்.
ஆஸ்பத்திரி ரோட்டில் சிறிது தூரம் சென்ற கங்காணி தரித்து நின்று முருகேசு போய்விட்டானா எனத் திரும்பிப் பார்த்தார். வெளிச்சத்தைக் காணவில்லை. அவ்வளவு விரை வாக முருகேசு போய்விட்டானா அல்லது பந்தம் ஏதும் அணைந்திருக்குமா? -
கங்காணி யோசித்தவாறு வந்த வழியே திரும்பி மேலே செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஏறி கண்டக்டர் பங்களாவின் பின்புறத்தை அடைந்தார்.
கண்டக்டர் வளர்க்கும் இரண்டு நாய்களும் பலமாகக் குரைத்துக்கொண்டே வந்து, கங்காணியை அண்மித்ததும், வாலை ஆட்டி, ஏதோ தமது பாஷையில் முனகி முன்னங் கால்களை அவர்மேல் போட்டு வரவேற்றன. கங்காணி நாய்களைத் தடவிக்கொடுத்தபடி பங்களாவின் பின்புறத்தைத் தட்டினார்.
է՛ ՛ սյոց ց:յ?''
'நான்தாங்க ஆறுமுகம் கங்காணி வந்திருக்கேன்"

தி. ஞானசேகரன் 2.
‘ஆ. வாங்க கங்காணி வாங்க.’’ எனக் கூறிக் கொண்டே கதவைத் திறந்த கண்டக்டர், கங்காணியை முன்புறத்தேயுள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
"உட்காருங்க கங்கானி' எனக் கூறி அறையில் உள்ள வாங்கைக் காட்டிவிட்டு எதிரேயுள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டார் கண்டக்டர்.
*' என்ன கங்காணி சொல்லியனுப்பினேன். சொணங் கிட்டீங்க. நீங்க நாட்டுக்கு ஏதும் போயிட்டீங்களோன்னு நெனைச்சேன்.'"
"இப்ப எங்கங்க நாட்டுக்குப் போறது? கையில மடியில ஒண்ணும் இல்லங்க. நேரத்தோட வந்திருப்பேன்; ஆளுக பாத்தா ஏதும் சொல்லுவாங்க. அதுனால இருட்டோட வந்தேன். '
d * எப்புடி கங்காணி ஸ்றைக் போகுது? ஆளுங்க என்ன பேசிக்கிறாங்க,?*
"பொடியங்க புடிச்ச புடியில இருக்காங்க. வுடமாட் டாங்க போல தெரியுது. ’’
**கங்காணி, இந்த ஸ்றைக் ஒண்ணும் சரிவராது; தொரை சொல்லிட்டாரு, தோட்டம் மூடினாலும் கவலையில்ல. அவுங்க கேட்டமாதிரி பேரு குடுக்க ஏலாதுன்னு இந்த ஆளுங்கதான் அநியாயமா வூட்டில இருந்துக்கிட்டிருக்காங்க. இன்னையோட பத்து நாள் வேலையில்லாம போச்சு.”*
**ஆமாங்க, கொஞ்சப்பேத்துக்கு வேலைக்குப்போக ஆசைதான். இந்தப் பயலுக தான். சும்மா ஒரு ஐஞ்சாறு பயலுக ஆடிக்கிட்டு திரியிறாங்க. மத்த ஆளுங்களுக்கெல்லாம் மனங்கெட்டுப் போச்சுங்க வேலைக்குப் போகத்தாங்க ஆசை.”*
"இந்தா பாருங்க கங்காணி, நான் சொல்லுற மாதிரி நடந்தீங்கண்ணா வேண்டிய ஒதவி செய்யிறேன் .'
**சொல்லுங்கையா'
'ஒங்க சொந்தக்காரங்க எத்தினை குடும்பம் தோட் டத்தில இருக்காங்க?"

Page 19
22 கவ் வாத்து
"மேட்டு லயத்தில ரெண்டு, அரிசிச் சாப்பு லயத்தில மூணு, பணிய லயத்தில ஒண்ணு அப்புறம் ஸ்டோர் லயம், வழுக்கப்பாறை லயம், மாரியம்மன் கோயில் லயம், குண்டன் கங்காணி லயம். எப்புடியும் பதினைஞ்சு குடும்பத்துக்கு கொறையாம இருக்குங்க."
"இந்தாங்க கங்காணி, ஒங்க ஆளுங்ககிட்ட எல்லாம் இந்த சரிவராதுன்னு சொல்லுங்க. அவுங்களை
வேலைக்கு Aவரச் சொல்லுங்க. நான் வேண்டிய ஒதவி செய்யிறேன்."
ஐயய்யோ என்னங்கையா. குண்டன் கங்காணி
லயத்தில பெரியாம்பிள்ளை, பணிய லயத்தில சண்முகம், வேலு இஷங்கெல்லாம் கவ்வாத்துக் கத்தியோட எல்ல வரு வாங்க. இதை எப்புடி ஐயா அவுங்ககிட்ட போயி சொல் லுறது?" எனப் பதறினார் கங்காணி.
"கொஞ்சம் இருங்க, நாட்டுக்குப் போகல்லன்னு சொல்லு நீங்க.. குளிரிலயும் வந்திருக்கீங்க.."எனக் கூறிக் கொண்டே அலுமாரியைத் திறந்து அதற்குள் இருந்த சாராயப் போ த் தலையும் கிளாஸ் ஒன்றையும் எடுத்து கங்காணியின் முன்னே வைத்தார் கண்டக்டர்.
“என்னங்கையா. இதெல்லாம் எதுக்குங்க. வேண்டா மூங்க'. எனக்கூறித் தடுமாறினார் ஆறுமுகம் கங்காணி.
** மலையிலதான் நான் கண்டக்டர், நீங்க கங்காணி. இப்ப அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நானும் மனிசன் தான் நீங்களும் மனிசன்தான்.யோசிக்காதீங்க; குளிர்தானே கொஞ்சம் எடுங்க.." எனக் கூறிவிட்டு உள்ளே சென்றார் கண்டக்டர்.
அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாராயத்தை கிலாஸில் ஊற்றி, கண்களை மூடி முகத்தைச் சுளித்தவாறு ஒரே மிடறில் குடித்துவிட்டு வெற்றுக் கினாஸை மேசையில் வைத்தார் கங்காணி.
உள்ளே சென்ற கண்டக்டர் அன்று ஆக்கிய கோழிக் கறியில் சிறிதை ஒரு தட்டில் எடுத்துவந்து கங்காணியின் முன்னே வைத்து, “டேஸ்ட்டுக்கு இதிலும் கொஞ்சம் எடுத்துக்கங்க." எனக் கூறினார்.

தி. ஞானசேகரன் 23
"இதெல்லாம் எதுக்குங்க.." எனத் தயங்கிய கங்காணி அதில் ஒரு துண்டை எடுத்து சுவைத்துவிட்டு பெரிதாக ஏப்பம் 6 'L-Tri.
"இன்னமும் கொஞ்சம் ஊத்திக்குங்க கங்காணி." எனக் கூறிய கண்டக்டர் போத்தலை எடுத்து தானே சாராயத்தை கிளாஸில் நிரப்பினார்.
“கொஞ்சம் போதுங்க.." எனக் கூறியவாறு கிளாஸை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சினார் கங்காணி.
"இங்க பாருங்க கங்காணி, பெரியாம்பிள்ளை வேலு சண்முகம் இவங்கெல்லாம் யாரு. ஒங்க அண்ணன் தம்பி புள்ளைங்கதானே, அவுங்களுக்கு நான் பெரியதுரை கிட்ட சொல்லி கங்காணி வேலை வாங்கித்தாறேன். ஒங்க மகனுக்கும் ஒரு கங்காணி வேலை கொடுத்து காஷ"வல் புள்ளைங்களை பாத்துக்க சொல்லுவோம்."
"அப்புடீன்னா பேசிப் பாக்கலாங்க. நான் சொன்னா தட்ட மாட்டாங்க .இந்த யூனியன் காரவுங்கதான் பெரச்சனை கொடுப்பாங்க. அதுதான் யோசிக்கிறேன்.""
** என்ன கங்கானி கதைக்கிறீங்க. இந்த ஒலகத்தில ஒரு யூனியனா இருக்கு . அந்த யூனியன் இல்லாட்டி வேற, யூனியனில சேந்துக்கிறது."
**இல்லீங்கையா, மத்த தோட்டம் மாதிரியில்ல நம்ம தோட்டம்; ஒங்களுக்குத் தெரியுந்தானே. பரம்பரையா இங்க ஒரு யூனியன் மட்டுந்தான் இருக்கு. அதுதான் யோசிக்கிறேன்."
*கங்காணி, ஒங்களுக்கு இன்னும் வெளங்கல. நீங்க நாளைக்கே இன்னொரு யூனியனில ஒங்க சொந்தக்காரவுங் களை சேத்துக் கிட்டீங்கன்னா, அப்புறம் அந்த யூனியனுக்கு தோட்டத்தில ஒரு தலைவரு வேணும். யாரு, நீங்கதான் தலைவரு . நான் தலைவருன்னு கூப்பிட்டா அப்புறமென்ன நீங்க தலைவருதான்."
கங்காணி குழைந்து கைகளைப் பிசைந்துகொண்.ே "ஐயா சொன்னா தட்ட ஏலாதுங்கதான். எப்புடியும் இரண்டு மூணு நாளில, முப்பது நாப்பது ஆளுங்களை வேலைக்கு கொண்டு வாறேன். எதுவும் பெரச் சனை வராம ஐயாதான்

Page 20
24 கவ்வாத்து
ډN۔هش.' 7%8
பாத்துக்கிடணும்' என்றார்.
**காவல் வேலையும் தோட்டத்தில இரண்டு மூணு இருக்கு . நீங்க சொல்லுற ஆளுங்களுக்கு அதைக் குடுத்து டுவோம் . நீங்க சொன்னா செய்யாமலா இருக்கப் போறேன் "" எனக் கூறிய கண்டக்டர் கங்காணியின் முன்னால் உள்ள கிளாஸில் மீண்டும் சாராயத்தை நிரப்பினார்.
வேண்டாங்க . போதுங்க.." எனக்கூறிக்கொண்டே அதனையும் எடுத்து வாயில் ஊற்றிக்கொண்டார் கங்காணி.
*கங்காணி,நீங்க தலைவரா ஆணப்புறம் தொரைகிட்ட சொல்லி 'கொந்தரப்பு வேலை ஒங்க பேரில தரலாம். மாசம் அதுல ஐயாயிரம் மட்டில கெ டைக்கும். தொரையும் வேண்டிய ஒதவி செய்வாரு' என்றார் கண்டக்டர்.
""நாளைக்கு ஆளுங்களோட கதைச்சு இன்னும் இரண்டு தாளில ஆளுங்களை வேலைக்கு கூட்டிவாறேன் . அப்புறர என்னங்க. செஞ்சிடுவோம்.'"
"அப்ப கங்காணி நாளைக்கே இதைப்பத்தி தொரை கிட்ட சொல்லவா?"
**ஆமாங்க, நான் சொன்னா ஒரு பேச்சுத்தான்; வெட்
டினா துண்டு ரெண்டுதான். தொரை கிட்ட சொல்லிப்புடுங்க;
ன்னும் இரண்டு நாளில வேலைக்கு வாறோம்.""
இறு ந @ ,}מ
“சரி கங்காணி, நேரமாகுது.நாளைக்கும் வாங்க; வெபரமா கதைப்போம்.'
"சரிங்கையா நான் போட்டுவாறேன்," எனக் கூறியபடி எழுந்த கங்காணி முன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.
"என்ன கங்காணி, இத வுட்டிட்டுப் போறிங்க. இதுவும் ஒங்களுக்குத்தான் ' எனக்கூறி சாராயப்போத்தலை எடுத்து கங்காணியின் கையிலே கொடுத்தார் கண்டக்டர்.
‘'எதுக்குங்க. நான் இதெல்லாம் ரொம்ப பாவிக்கிற தில்லீங்க. "எனக் கூறிக்கொண்டே அதனை வாங்கி கோட்டுப் பைக்குள் திணித்துக்கொண்டு தள்ளாடியபடியே ப்டிக்கட்டில் இறங்கி நடந்தார் கங்காணி.

4
னிமூட்டம் சிறிது சிறிதாக விலகிக்கொண்டிருந்தது காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து பிரட்டுக்குப் போவதற்கு ஆயத்தமாகும் தொழிலாளர்கள், சாவதானமாக லயத்தில் முடங்கிக் கிடந்தனர். வேலை நிறுத்தம் தொடங்கி இரண்டு கிழமைகள் கழிந்துவிட்டன.
டாண். டாண்!
பிரட்டு மணியோசை கேட்டது.
வேலை நாட்களில் அதிகாலை ஐந்தரை மணிக்கெல் லாம் கேட்கும் இந்த மணியோசை, இன்று ஏழரை மணிக்குக் கேட்கிறது. தொழிலாளர்களை வேலைக்கு அழைக்கும் மணி யோசை, தோட்டத்தில் வேலைநிறுத்தம் நடக்கும் வேலையில் ஏன் தான் கேட்கிறது?
முத்துசாமி தலைவரும் அவரது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்களும் வியப்படைந்தனர்.
ஆறுமுகம் கங்காணிதான் இன்று பிரட்டு மணியை அடித்தார். சிறிது நேரத்தில் அவரது உறவினர்கள் பலர் பிரட்டுக் களத்தில் கூடினர். ஆண்களும் பெண்களுமாக இருபத்தைந்து தொழிலாளர்கள் வரையில் அங்கு வந்து சேர்ந்தனர்.
'சலாங்க ஐயா."
பிரட்டு மணியோசைக்காகக் காத்திருந்து அதன் ஒலி கேட்டதும் பிரட்டுக் களத்துக்கு வந்துசேர்ந்த கண்டக்டருக்கு
வணக்கம் செலுத்தினார் ஆறுமுகம் கங்காணி,
*என்ன கங்காணி, ஆளுக இவ்வளவு பேருதானா?"

Page 21
26 கவ் வாத்து
‘இன்னிக்கு இவ்வளவு பேருதானுங்க நம்ப சொந்தக் காரவுங்க சிலபேரு அங்கிட்டு இங்கிட்டு விருந்தாடி போயிருக் காங்க இன்னும் இரண்டு நாளுக்குள்ள வந்திடுவாங்க; சேத் துக்குவோம். ' என்றார் கங்காணி.
இன்னும் சற்று அதிகமாகவே தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருப்பார்களென எதிர்பார்த்திருந்த கண்டக்ட ருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது.
'சரி கங்காணி, கொழுந்து ரவுண்டு பிந்தியிருச்சு , எல்லா ஆளுங்களையும் கொழுந்துக்குக் கூட்டிகிட்டுப் போங்க ', இன்னிக்கு சில்லறை வேலையில்ல. '
* இன்னிக்கு நாங்க வேலைக்குப் போறதுனால ஆளுக கொழப்பம் பண்ணுவாங்க ஐயாவும் தொரையும் கொஞ்சம் மலையில வந்து நிண்டா நல்லதுங்க ‘’ என்றார் ஆறுமுகம் கங்காணி தயக்கத்துடன்.
*அதுக்கு ஒண்ணும் பயப்புடாதீங்க கங்காணி. நான் இதப்பத்தி தொரைகிட்ட வெவரமா சொல்லியிருக்கேன். தொரை பொலிஸுக்கு சொல்லியிருக்காரு. யாரும் கொழப்பம் பண்ணினா டெலிபோன் பண்ணிட வேண்டியதுதான்; பொலிஸ் வந்து கொழப்பம் பண்ணிறவங்கள உள்ளே தள்ளிடு வாங்க ...”*
*அப்ப சரிங்க, ஐயா ஒதவியிருந்தா நம்ம பயப்புட தேவையில்ல" என்றார் கங்காணி,
** நேரமாச்சு . நீங்க எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு டதினைஞ்சாம் நம்பர் மலைக்குப் போங்க நான் வூட்டில பேரயி தேத்தண்ணி குடிச்சிட்டு வாறேன்.""
வழக்கமாக பிரட்டுக் கலைத்தபின் தொழிலாளர்கள் லயத்துக்குச் சென்று காலையுணவு அருந்திவிட்டுத்தான் மலைக்குச் செல்வார்கள். ஆனாலும் ஏதாவது குழப்பம் உண்டாகும் என எதிர்பார்த்த கண்டக்டர், முன்கூட்டியே கங்காணியுடன் கதைத்து தொழிலாளர்களை உணவருந்திய பின் வேலைக்குப் புறப்பட்டு வரும்படி ஒழுங்கு செய்திருந்தார்.

தி. ஞானசேகரன் 27
மடுவத்தின் பக்கத்திலேதான் பதினைந்தாம் நம்பர் மலை இருக்கிறது. தொழிலாளர்கள் மலையை நோக்கிச் சென்றபோது கண்டக்டர் தனது பங்களாவுக்குச் சென்றார்.
மலையில் ஏறிய ஆண்களும் பெண்களும் நிரை பிடிக் கத் தொடங்கினர்; தமது இஷ்ட தெய்வங்களை வேண்டி ஒருபிடி கொழுந்தைப் பறித்த பின் கங்காணி "பொலி சொல்வதற் காக காத்துநின்றனர்.
.9
"பொலி.பொலி ; பொலியோ . பொலி.' கங்காணி உரத்துச் சத்தமிட்டு கொழுந்தெடுக்கும் வேலையை ஆரம்பித்து வைத்தார்.
கொழுந்து பொலிவதால் மட்டும் அவர்களது வாழ்க்கை பொலிந்து விடுகிறதா?!
ஆண்களும் பெண்களும் இயந்திரமாக இயங்கினர். இரண்டு இலைகளும் ஒர் அரும்புமாக தேயிலைச் செடிக ளிலிருந்து கொழுந்துகளைக் கொய்து கைகள் நிரம்பியதும் முதுகின் பின்புறமாகத் தொங்கும் கூடைப்பில் போட்டனர்.
அப்போது முத்துசாமி தலைவரும் முருகேசுவும் ராமையாவும் வேறு சில தொழிலாளர்களும் கூட்டமாக அங்கேவந்து சேர்ந்தனர்.
*யாரடா ஒங் களையெல்லாம் வேலைக்கு வரச்சொன்னது? யாரு பொட்டு மணி அடிச்சது?"
ராமையா ஆத்திரத்துடன் பலமான குரலில் கேட்டான்.
*" என்ன, மருவா தி கொறையுது? அடேபுடேன்னு பேசுறே . நான்தான் பெரட்டுமணி அடிச்ச்ேன் . நான்தான் எங்க ஆளுங்கள வேலைக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன். இப்ப என்னா அதுக்கு?’’
"கங்காணி, நாம என்ன ஒருத்தர் ரெண்டுபேரோட நன்மைக்காகவா ஸ்றைக் அடிச்சோம்? தோட்டத்து ஆளுங்க ளோட நன்மைக்குத்தான் ஸ்றைக் அடிச்சோம்" ராமை யாவைக் கையமர்த்திவிட்டு,கங்காணிக்குப் பதில் கூறினார் முத்துசாமி தலைவர்.

Page 22
28 கவ் வாத்து:
'நீங்க என்னா தலைவரையும் மதிக்காம, அவர் கிட்ட ஒரு பேச்சு சொல்லாம ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க. நீங்கெல்லாம் ஒரு கங்காணி. Gay ...' ' ராமையா வெறுப்புடன் காறித் துப்பினான்.
* 'இன்னிக்கு ஸ்றைக் தொடங்கி பதினைஞ்சு நாள் ஆச்சு. இந்த ஆளுங்களுக்கெல்லாம் பேரு இல்ல. ஒரு நாள் பேரு இல்லேன்னு சொல்லி, பதினைஞ்சு நாள் பேரு இல்லாம ஆக்கிட்டீங்க. இனிமேலும் இல்லேன்னா எங்களுக்குத்தானே நஷ்டம்" என்றார் கங்காணி தலைவரைப் பார்த்து.
**அடே, நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனா. முந்தி யிருந்தே நீ ஒரு பந்தக்காரன் . அன்னிக்கு நீ பந்தம் இல்லாம இருட்டில போற நேரமே நெனைச்சேன் . நீ கண்டாக்குக்குப் பந்தம் புடிக்க போறேன்னு. அது சரியாப் போச்சு. நீயெல் லாம் கண்டக்டர் வூட்டில போயி வாங்கி நக்கிட்டு ஆளுங்கள காட்டிக் குடுக்கிறே.’’ முருகேசு ஆக்குரோசமாகக் கத்தினான்.
அப்போது ஆறுமுகம் கங்காணியின் தம்பிமகன் பெரியாம்பிள்ளை கொழுந்துக் கூடையை இறக்கிக் கீழேவைத்து விட்டு முன்னே பாய்ந்தான்.
* டேய் முருகேசு நானும் பாத்துக்கிட்டு இருக்கேன். நீ தோட்டத்தில சண்டியனென்னு நெனைப்பு. அதெல்லாம் ஒங்க வூட்டில வச்சுக்க, எங்கிட்ட காமிக்காத .'
"டேய் பெரியாம்பிள்ளை, நான் ஒன்கிட்ட கதைக்கல. கங்காணிகிட்டதான் கதைக்கிறேன். நீயெல்லாம் இப்ப
என்னா சொல்லுறே. மலையவுட்டு எறங்கிறியா இல்ல ஒதைக்கவா?'
"எங்க ஒதை பாப்போம். கைகால் நீட்டினா கத்தி
தான் பதில் சொல்லும்.
* பெரியாம்பிள்ளை கொஞ்சம் இருடா. நான் பேசு றேன்.இங்க பாரு முருகேசு, நாங்க நல்லா யோசிச்சுத் தான் வேலைக்கு வந்திருக்கோம்; நாங்க வேலைதான் செய்லோம். இன்னிக்கு பதினைஞ்சு நாளா வேலையில்ல . அட்வான்ஸ"ம் போடமாட்டாங்க. பொண்டாட்டி புள்ளைங்களெல்லாம் பட்டினிதான். வாங்கிற கடன் எல்லாம் நீ கட்டுவியா? பட்டினி

தி. ஞானசேகரன்
கெடந்தா சோறு போடுவியா? பச்சைப் புள்ளைங்ா (i) ; 1) வூட்டில மாவுடின் வாங்கணும் . நீ குடுப்பியா? அப்புடி காா) தானா சொல்லு; இப்பவே நாங்க ஓங்களோட வா)ோம் , ' என்றார் ஆறுமுகம் கங்காணி.
முருகேசு பதில் கூறமுடியாமல் தயங்கினான்.
** இதுதான் யூனியனில இருந்து அரிசி மாவு எல்லாம் கொண்டாந்து தாராங்கன்னு சொன்னாங்க. நீங்க அதுக்கு மொதல்ல இப்புடி அவசரப்பட்டு வேலைக்கு வந்துட்டீங்க** என்றார் தலைவர் முத்துசாமி
‘போங்கையா, நீங்களும் ஓங்க யூனியனும் சொல்லி பதினைஞ்சு நாளாகுது; ஒரு பயலயும் காணோம்."
மலையில் வாய்த் தகராறு நடப்பதை தூரத்திலிருந்தே கவனித்த கண்டக்டர், நேராக ஆபீஸிற்கு சென்று துரையிடம் விஷயத்தைக் கூறினார். மலையில் வேலை செய்பவர்களை தலைவர் முத்துசாமியும் அவரது ஆட்சுளும் குழப்புகிறார்கள். சிலவேளை அது பெருஞ் சண்டையில் முடியலாம் என்பதை துரைக்கு அறிவித்தார்.
துரை உடனே பொலிஸுக்கு டெலிபோன் செய்தார்.
மலையில் இருபகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைக்லப்பு நிகழக்கூடிய தருணத்தில் பொலிஸ் ஜீப் அங்குவந்து சேர்ந்தது.
அதனைக் கண்டதும் முத்துசாமி தலைவரும் அவரது ஆட்களும் அவ்விடத்தை விட்டு அகன்றனர்,
ஜிப்பில் வந்த பொலிஸார் மலையடிவாரத்தில் ஜிப்பை நிறுத்திவிட்டு உள்ளேயிருந்தபடி கவனித்துக் கொண்டிருந்தனர்'
*பாருங்க கங்காணி, கண்டாக்கையா பெரட்டில சொன்ன மாதிரியே இப்ப பொலிஸ் வந்திருச்சு . ஐயா ஒரு பேச்சு சொன்னாருன்னா அதேமாதிரி செஞ்சுப்புடுவாரு நம்ம ஐயா ஐயாதான்' என்றாள் நடுநிரையில் கொழுந் தெடுத்துக் கொண்டிருந்த அருக்காணி,

Page 23
30 கவ் வாத்து
‘இவனுக தோட்டத்தில ஒழுங்கா வேலைசெய்ய மாட்டானுக. ஐயா பேரு நிப்பாட்டினா, ஸ்றைக் அடிப் பானுக. இவங்கவுட்டு பேச்சைக் கேட்டா நாமதான் பட்டினி கெடந்து சாவணும்' என்றான் வேலு.
"கண்டாக்கையா மவராசன். அவரு சொன்னபடி கேட்டா பொழைக்கலாம் . இவனுக சொல்லுறதைக் கேட்டு ஆளுக அவரோட முட்டிக்கிறாங்க. யார் யாரை இன்னிக்கு பொலிஸில உள்ள தள்ளப் போறாங்களோ தெரியல’’ என்றாள் தொங்கல் நிரையில் கொழுந்தெடுத்துக் கொண்டி ருந்த மாரியாயி.
"சரி சரி, கதைய வளக்காம வேலைய செய்யுங்க . கண்டாக்கையா இன்னிக்கு ஒரே நேரத்தோட வேலவுடனு முன்னு சொன்னாரு." என்றார் கங்காணி உரத்த குரலில்,
தொழிலாளர்கள் வேகமாக வேலை செய்யத் தொடங்கினர்.
அப்போது பெரியதுரையும் கண்டக்டரும் மோட்டார் சைக்கிளில் அங்குவந்து சேர்ந்தனர்.
"இங்க வரட்டும் கங்காணி, நீ ஒண்ணுக்கும் பயப்புட வேணாங். யாரு சரி கொழப்பங் பண்ணினா நமக்கு சொல்லு நான் அந்த ஆளை பொலிஸில குடுக்கிறது" என்றார் பெரிய བ་ ."ע (60{g.
"தொரை சொன்னிங்கண்ணா சரிங்க, எங்களுக்கு
ஒண்ணும் பயமில்லீங்க. நாளைக்கு இன்னும் ஐஞ்சாறு ஆளு புதுசா வேலைக்கு வருங்க தொரை" என்றார் கங்காணி.
"அப்புடியா மிச்சங் நல்லங்; அப்ப கங்காணி அந்திக்கு வேல முடிஞ்சவுடன ஆபீஸுக்கு வாங்க, ஒங்க ஆளுங்க எல்லாம் இனி வேற யூனியனுக்கு போறதுதானே. அவுங்க ஒப்பம் எல்லாம் வாங்கிட்டு வாங்க, மிச்சங் கதைக்கணும். இனி நீங்கதானே தலைவர்" எனக் கூறிவிட்டு புன்னகையுடன் பொலிஸ் ஜீப்பை நோக்கி நடந்தார் துரை கண்டக்டரும் அவரைப் பின் தொடர்ந்தார்.

5
Dfலை மயங்கும் நேரம்.
பெரியாம்பிள்ளையும் வேலுவும் ஆறுமுகம் கங்காணியைத் தேடி அவர் இருக்கும் லயத்துக்குச் சென்றிருந்தனர். கங்காணி அப்போதுதான் மாட்டுப் டாட்டியில் மாடுகளுக்குப் புல்லுப் போட்டுவிட்டுத் திரும்பினார்.
"வாங்கடா, ஏதும் அவசரமா..? எனக் கேட்டுக் கொண்டே ஸ்தோப்பில் போட்டிருந்த வாங்கில் அமர்ந்தார் கங்காணி. அவர் எதிரே பெரியாம்பிள்ளையும் வேலுவும் அமர்ந்து கொண்டனர்.
‘இல்லை மாமா, சும்மா வந்தோம் . இன்னிக்கு ஏதும் கொளப்பம் பண்ணுவாங்க . நாங்களும் ரெடியா இருக்கணுந்தானே. அதுதான் வந்தோம் என்றான் வேலு.
'நான் சொல்லி அனுப்பத்தான் இருந்தேன். அதுக்கு முன்னுக்கு நீங்க வந்துட்டீங்க, நல்லதாப் போச்சு."
* அப்புறம் பெரியப்பா, கண்ட்க்கையாவை ஏதும் போயிட்டு சந்திச்சீங்களா? ஏதும் சொன்னாரா? என ஆவலு டன் கேட்டான் பெரியாம்பிள்ளை.
*"ஐயா ஒண்ணும் கதைக்கல. தாளைக்கும் கொழுந் துக் காடு தானாம். முடிஞ்சா இன்னும் வர்ர ஆளுங்களை வேலைக்குக் கூட்டிவரச் சொன்னா ரு."
பெரியப்பா, நம்மளப் பத்தி ஏதும் சொன்னாரா?*
"என் னடா. என்ன ஒன்னப்பத்தி கதைக்க இருக்கு. நீ மலையில முருகேசுவோட சண்டைக்குப் போனியே, அதைப் பத்தி சொல்லுறியா?' கங்காணி யோசனையுடன் கேட்டார்.

Page 24
32 கவ் வாத்து
என்ன அப்புடிக் கேக்கிறீங்க . மறந்துட்டீங்களா என்னமோ வேலைக்கு வந்தோடன எங்க ரெண்டு பேருக்குட கங்காணி வேலை வாங்கித் தாறேன்னு சொன்னிங்க. அப்புறம் என்னான் னு கேக்கிறீங்க. ' வேலுவின் குரல் சற்று! பலமாக ஒவித்தது.
"ஆ. அதுவா, இப்பக்குள்ள என் மகன் செல்லாண்டிக்கு மட்டுந்தான் நாளையில இருந்து கொழுந்துக் காட்டில கங்காணி வேல தாறேன்னு ஐயா சொன்னாரு . அப்புறம் ஆளுக வேலைக்கு வர்ர மாதிரிப் பாத்து ஓங்க ரெண்டு பேத்துக்கும் கங்காணி வேல வாங்கலாம்.'
ஆறுமுகம் கங்காணியின் மகன் செல்லாண்டி திருமண மாகி பணிய லயத்தில் குடும்பமாக வசிக்கிறான். இன்று அவன் காலையில் வேலைக்குச் செல்லவில்லை. வயிற்றுவலி எனக்கூறி வீட்டில் இருந்துவிட்டான். அவனது மனைவியும் வேலைக்குச் செல்லவில்லை. நாளையிலிருந்து வேலைக்கு வருவதாக தந்தைக்குத் தகவல் அனுப்பியிருந்தான்.
கங்காணி இப்படிக் கூறியதும் பெரியாம்பிள்ளைக்குப் வேலுவுக்கும் பெரும் ஏமாற்றமாகிவிட்டது.
** என்ன மாமா பெரண்டு பேசுங்க. அன்னைக்கு ஒண்ணு கதைச் சீங்க . இன்னிக்கு ஒண்ணு கதைக்கிறீங்க வேலைக்கு வந்தோடன கங்காணி வேலையன்னிங்க . இப்போ ஆளுக வரணுமெங்கிறீங்க ஒங்க மகனுக்கு மட்டுந்தான் கங்காணிவேலை எங்கிறீங்க.." ஆத்திரத்துடன் கூறினான் வேலு.
'நான் ஒண்ணும் பெரண்டு பேசல கண்டாக்கையா தான் ஒங்களுக்கு மொதல்ல கங்காணிவேலை தாறேன்னு சொன் னாரு அப்புறம் இருவத்தைஞ்சு ஆளுக்கு நாலு சுங்காணி குடுக்க ஏலுமாங்கிறாரு . அதுக்கு நான் என்ன செய்ய ..”*
‘என்னங்க மாமா இப்புடி மொதல் லியே தெரிஞ்சிச் சென்னா நாங்க வேலைக்கு வந்திருக்க மாட்டோம் இப்ப ஊரையும் பகைச்சுக்கிட்டு ஓங்களோட சேந்து பந்தக் கார னென்னு பேரு வாங்கிக்கிட வேண்டியதுதான்.'

தி. ஞானசேகரன் R
*அவசரப்படாதை வேலு. ஒங்க ரெண்டு பேருக்கும் கங்காணிவேல வாங்கித்தந்தா சரிதானே நம்ம பக்கம் கொஞ்சம் ஆளுங்களையும் இழுத்து எடுத்துக்குவோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா செய்வோம்."
'இல்லங்க, பெரியப்பா , இன்னும் ரெண்டு நாளில "கொன் பரன்ஸ் " வைச்சு இந்த வேலைநிறுத்தம் பத்தி பேச இருக்காங்க. அதுல அவுங்களுக்கு வெத்தி வந்திச்சினா அப்புறம் எங்க கெதி பரமகெதிதான். தோட்டமே பந்தக் காரணு கன்னு சொல்லி எங்கள ஒதுக்கிடுவாங்க."
'கண்டக் கையா நமக்கு வேண்டிய சப்போட் செய் வாரே அப்புறம் ஏன் பயப்புடுறீங்க
9
'அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்ல. சொன்ன மாதிரி நாளைக்கு ஐயாக்கிட்ட கதைச்சு எங்களுக்கு ஒரு முடிவு சொல்லுங்க. நாங்க போறோம்." எனக் கூறிக்கொண்டே
விருட்டென எழுந்து வெளியே வந்தான் வேலு. பெரியாம்பிள்ளையும் அவனைப் பின்தொடர்ந்தான்.
'வேலு, நீ நெனக்கிறியா நம்ம ரெண்டு பேருக்கும் கங்காணி வேலை கிடைக்குமென்னு? எனக்கென்னமோ நம்பிக்கையில்ல. பெரியப்பா மொதல்வ தன்னுடைய மகனுக் குத்தான் கங்காணிவேல வாங்கிக் கொடுக்கிறாரு . நம்மளப் பத்தி கொஞ்சங்கூட யோசிக்கல ” என்றான் பெரியாம்பிள்ளை.
"ஆமாடா இந்த ஸ்றைக்கு டக்கினு முடிஞ்சு போச் சுனா அப்புறம் எல்லாரும் வேலைக்கு வந்திடுவாங்க. அவுங்க ஆளுக வேலைக்கு வந்திட்டா. நமக்கு ஒண்ணும் கெடைக்காது '
**இதுக்கு என்னதாண்டா செய்யிறது? நாம ஏமாந்திட் டோமே.”” என்றான் பெரியாம்பிள்ளை கவலையுடன்.
**இந்த ஸ்றைக்கை எப்புடியும் முடியவிடக்கூடாது இன்னும் ரெண்டு மூணு கெழமைக்கு சரி இழுத்தடிக் கணு
அப்பதான் நம்ம காரியத்தை சாதிக்கலாம்
'அதுக்கு என்னடா செய்யிறது?"

Page 25
34 கவ் வாத்து
"அதுக்கு ஒரு வழி இருக்குடா. வா சொல்லுறேன்." எனக்கூறிய வேலு, பெரியாம்பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருளில் மறைந்தான்.
SSS 米 S
ஆறுமுகம் கங்காணி இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நித்திரைக்கு ஆயத்தமானார். w
*டங்' என்ற பெருஞ்சத்தத்துடன் கல்லொன்று கங்காணி படுத்திருந்த காம்பராவின் மேல் வந்து விழுந்தது.
கங்காணி திகிலுடன் எழுந்து உட்கார்ந்தார்.
தொடர்ந்து சரமாரியாக கற்கள் லயத்துக்கூரையின் மேல் விழத்தொடங்கின.
'யாரோ லயத்துக்குக் கல்லடிக்கிறாங்க." எனக் கூறிக் கொண்டே பாப்பாத்தி பயத்துடன் அவர் அருகில் வந்து ஒதுங்கிக் கொண்டாள்.
கற்கள் இடைவிடாது லயத்துக் கூரையின் மேல் விழுந்து கொண்டிருந்தன. லயத்து நாய்கள் பலமாகக் குரைக்கத் தொடங்கின.
லயத்தின் உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் திகிலுடன் வெளியே வந்தனர். பெண்களின் ஒலமும் சிறுவர்களின் அழுகைச் சத்தமும் சேர்ந்து எல்லோர் மனதிலும் பயப்பிராந்தியை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் சிலர் மண்ணெண்ணெய்ப் பந்தங்களை கையிலேந்தியபடி வெளியே வந்து, கற்கள் வந்து கொண்டிருக்கும் திசையை நிதானிக்க முயன்றனர். சிலர் டோச் லைற்றை அங்குமிங்கும் சுழற்றி கற்கள் வரும் திசையை கண்டறிய முயன்றனர்.
ஒவ்வொரு கற்கள் விழும்போதும் கூரையில் இருந்து தூசி களும் புகை ஒட்டறைகளும் காம்பராக்களில் கொட்டின. பெண்கள் சிலர் உணவுப் பண்டங்களை அவசர அவசரமாக மூடிவைப்பதில் ஈடுபட்டனர்.
'டேய் யாரடா லயத்துக்குக் கல்லடிக்கிறது?’ என
கங்காணி பலத்த குரலில் கத்தினார். அவரைத் தொடர்ந்து லயத்திலுள்ளவர்கள் பலரும் உரத்த குரலில் கூச்சலிட்டனர்"

தி. ஞானசேகரன் 35
"" அடே இது முத்துசாமி தலைவர் லயத்துப் பக்கத்தில இருந்துதான் கல்லு வருகுது . இது அவுங்கலுட்டு வேலதான் , நம்ம வேலைக்குப் போட்டோ முனு - வேணுமுனே சண்டைக்கு இழுக்குறாங்க."
"நம்ம இத லேசில வுடக்குடாது. வாங்கடா நம்மஞம்
அவுங்க லயத்துக்குக் கல்லடிப்போம்." என்றான் லயத்திலுள்ள ஒர் இளைஞன்.
இப்போது ஆறுமுகம் கங்சாணி லயத்திலிருந்து தலைவர் முத்துசாமி லயத்துப் பக்கமாக கற்கள் சரமாரியாகப் பொழிந்தன.
தலைவர் லயத்திலிருந்தும் ஒரே சத்தமும் கூக் குரல்களும் எழுந்தன. −
*அடே யாரடா எங்க லயத்துக்குக் கல்லடிக்கிறது?" முத்துசாமி தலைவர் பலமாகக் கத்தினார்.
நீ தானே கல்லடிச்சுப்புட்டு யாருன்னா கேக்கிறே . ஏன்டா பொட்டைப்பய மாதிரி ஒளிஞ்சிருந்து கல்லடிக்கிறீங்க? ஆம்புளையா இருந்தா நேருக்கு நேர வாங்கடா அடிச்சுக்கு வோம்’ ஆறுமுகம் கங்காணியின் குரல் ஆக்குரோசமாக ஒலித்தது. ベ
இப்போது கங்காணி லயத்திலிருந்தும் தலைவர் லயத்தி லிருந்தும் கற்கள் அங்குமிங்கும் பறந்தன. சிறிது நேரத்தில் பக்கத்து லயங்களிலிருந்தும் சிலர் கற்களை வீசத் தொடங்கினர் எங்கும் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தது.
பெரியாம்பிள்ளையும் வேலுவும் கங்காணி லயத்தை நோக்கி ஒடிவந்தனர்.
* என்ன பெரியப்பா இஷங்க செய்யிற அநியாயத்தைப் பாத்தீங்களா கல்லடிச்சு நம்பகளைப் பயங்காட்டப் பாக்கி றாங்க. இவுங்கள சும்மாவுடக்கூடாது."
**இது அவன் முருகேசு செய்யிற வேலயாத்தான் இருக்கும். நாளைக்கு தொரை கிட்ட சொல்லி இதுக்கு ஒரு வழி பாக்கணும்." என்றார் கங்காணி,

Page 26
36 கவ்வாத்து
அப்போது விர்ரெனப் பறந்துவந்த கல்லொன்று பெரியாம்பிள்ளையின் நெற்றிப் பொட்டைப் பிழந்தது. "ஐயோ பெரியப்பா" எனக் கதறியபடி தனது நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டு ழே உட்கார்ந்தர்ன் பெரியாம்பிள்ளை. அவனது விரற் சந்துகளினூடாக இரத் தர் கொப்பளிப்பது தெரிந்தது.
'ஐயய்யோ நெத்தி பொழந்து போச்சே. படுபா விங்க, ஒளிஞ்சு நின்னு கல்லடிக்கிறாங்க.." எனக்கூறி ஒலமிட்டபடி வெளியே வந்த பாப்பாத்தி, பெரியாம்பிள்ளையின் காயத்தில் ஒரு துணியை வைத்து அழுத்திக் கட்டுப்போட்டு அவனை காம்பராவின் உள்ளே இழுத்துச் சென்றாள். W
* நான் மொதல்லயே சொன்னேன்தானே கொழப்பம் இழுப்பாங்கன்னு. இப்ப நெத்தி போச்சு . . நீங்க இதுக்கு ஒரு முடிவு எடுக்காட்டி நாங்க நாளையில இருந்து வேலைக்கு வரமாட்டோம்" என்றான் வேலு ஆத்திரம் ததும்பும் குரலில் •
*சரி. கொஞ்சம் இருங்க. இப்பவே இத தொரை கிட்ட சொல்லி ஒரு முடிவு எடுப்போம் ' எனக்கூறிய கங்காணி துரை பங்களாவை நோக்கி ஓடினார்.
லயங்களிலிருந்து வரும் பெருஞ்சத்தமும் கூக்குரலும் கற்கள் கூரைத் தகரங்களில் விழும் ஒசையும் கேட்டு, பெரிய துரை பங்களாவின் வெளிவிறாந்தையில் நின்றவாறு லயங்க ளின் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். ン
"தொரை லயத்தில பெரிய கொழப்பங்க; நாங்க வேலைக்கு வந்திட்டோமுணு சொல்லி எங்க லயத்துக்கு ஒரே கல்லடிங்க... என் தம்பி மகன் பெரியாம்பிள்ளைக்கு பெரிய காயமுங்க. என்ன அநியாயம் இது, தெஈரைதான் காப்பாத்தணும்.
'யார் லயத்துக்கு கல்லடிச்சது கங்காணி?’
“வேறு யாருங்க தொடரை, முத்துசாமி தலைவரும் முருகேசுவும் . அப்புறம் ராமையாவும் தானுங்க. தொரை இதுக்கு ஒரு முடிவு எடுக்காட்டி நம்ம ஆளுங்க நாளையில இருந்து வேலைக்கு வரமாட்டோமுனு சொல்லுறாங்க . என்றார் கங்காணி.

தி. ஞானசேகரன் 37
*அது ஒண்ணுங் பயப்புட வேணாங் கிங்காணி, இப்ப நான் பொலிஸ்"க்கு போன் பண்ணிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில பொலிஸ் வரும். நீங்க தோட்டத்து லொறியை எடுத்துக் கொண்டுபோய் பெரியாம்பிள்ளையை கவர் மென்ட் ஆஸ்பத்திரியில விடுங்க. நான் எல்லாம் பாத்துக்கிறேன்.' எனக் கூறிய துரை உள்ளே சென்று டெலிபோனைச் சுழற்றினார்.
சிறிது நேரத்தில் இரண்டு ஜீப்களில் பொலிசார்
லயத்துக்கு வந்தனர்.
தலைவர் முத்துசாமியையும் முருகேசுவையும் ராமை யாவையும் கைதுசெய்து ஜீப்பில் ஏற்றினர். பெண்களின் ஒலம் லயத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது.
"ஐயோ சாமி எங்களத்தான் புடிக்கிறீங்க . அவுங்கதான் மொதல்ல கல்லு அடிச்சாங்க. எங்கள ஏன் கொண்டு போநீங்க?" தலைவர் புலம்பினார்.
'ஏய் வாயை மூடு . தோட்டத்தில ஸ்றைக் அடிக்கிறது கொழப்பம் பண்ணிறது, லயத்துக்குக் கல்லடிக்கிறது: கண்டக்டரை வெட்டப்போறது. தொரை எல்லாங் நமக்கு சொல்லியாச்சு வாய் பொத்து” எனக் கூறிய பொலிஸ் அதிகாரி கோபத்துடன் தலைவரை முறைத்துப் பார்த்தார்; இரண்டு மூன்று உதைகளும் விழுந்தன.
முருகேசுவும் ராமையாவும் அதிர்ச்சியுடனும் குழப்பத் துடனும் வாயடைத்துப் போயிருந்தனர்.
பெருங்கவலையுடன் அவர்கள் மூவரும் அன்றிரவை *றிமான்ட்"டில் கழித்தனர். м
★

Page 27
6
இற்ாயிற்றுக் கிழமையை அடுத்து போயாதினமும் வந்ததால் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து தோட்டத்தில் வேலை கொடுக்கப்படவில்லை. லீவு நாட்களில் வேலை செய்தால் தொழிலாளர்களுக்கு மேலதிக சம்பளம் வழங்க வேண்டும். அதனால் நிர்வாகச் செலவு அதிகரித்து விடுமென் பதற்காக பெரும்பாலும் லீவு நாட்களில் தோட்டங்களில் வேலை வழங்கப்படுவதில்லை.
முத்துசாமி தலைவரும் முருகேசுவும் ராமையாவும் பொலிசாரினால் கைதுசெய்யப் பட்டதும் பெரியாம்பிள்ளை பலத்த காயத்தோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப் பதும் தொழிலாளர்களிடையே பதட்ட நிலையை ஏற்படுத்தி யிருந்தது. எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற உணர்வு அவர்களிடையே தோன்றியிருந்தது.
ஆறுமுகம் கங்காணி அன்று பகல் கண்டக்டரின் பங் களாவுக்குச் சென்றிருந்தார். அவர் பங்க்ளாவை அடைந்த பொழுது கண்டக்டர் முன்விறாந்தையிலிருந்து டி. வி. யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கிரிக்கட் மாட்ச் ஒன்றை ரசித்துக் கொண்டிருந்தார்.
'ஆ. கங்காணியா வாங்க, நேத்து இந்தப் பக்கிட்டு
காணோமே. " எனக் கூறியபடி கங்காணியை வரவேற்றார் கண்டக்டர்.
**பெரியாம்பிள்ளையை Imr rfj; 35 போயிருந்தேன்.
அவனுக்கு ரொம்ப காயம்போல இருக்கு. ஐஞ்சு தையல் போட்டிருக்காங்களாம். மூஞ்சியெல்லாம் வீங்கியிருக்கு ,' என்றார் கங்காணி கவலைதோய்ந்த குரலில்.
'நானும் அவனைப் போயி பாக்கிறதுக்குத்தான் காலையில புறப்பட்டுக்கிட்டிருந்தேன். அம்மாவூட்டு தம்பியும் குடும்பமும் வந்திட்டாங்க. அவுங்களை வுட்டுப்புட்டு போறது

தி. ஞானசேகரன் 39
சரியில்லத்தானே. இப்ப கொஞ்சம் முன்னதான் அவுங்க போனாங்க." என்றார் கண்டக்டர்"
"அது தானுங்களே பாத்தேன், ஐயாவாவது பாக்காம இருக்கிறதாவது; முக்கியமானவங்க வந்தா வூட்டில இருக்கத் தானே வேணும்.'
**ஆமா, இப்ப பெரியாம்பிள்ளைக்கு எப்புடி இருக்கு; என்னா சொல்லுறான்?"
**அதை ஏங்க கேக்கிறீங்க. ஜயாவை நம்பி தோட்டத் தையே டகைச்சுக்கிட்டு வேலைக்குப் போனோம். இப்ப அவரு எங்களைக் கவனிக்க மாட்டேங்கிறாரு என்னு கொறை சொல்லுறாங்கையா...'
W ** என்ன கங்காணி, நான் போயி அவனைப் பாக்க
லேன்னு கோவிச்சுக் கிட்டானா?"
* 'இல்லீங்க, நம்ம ஆளுங்களைப் பத்தி தெரியாதா. ஆஸ்பத்திரிக்கு அவனைப் பாக்கப் போனவங்க, ‘கங்காணி வேல கெடைக்குமுனு பாஞ்சுக்கிட்டு போனியே இப்ப கல்லு அடிப்பட்டுக் கெடக்கிறே. . அதுதான்டா சொல்லுறது, வேலைக்காரவுங்கள நம் பேலாது, அவுங்க செவத்தில ஒட்டுற சுண்ணாம்பு மாதிரி. கங்காணி வேலதான் வேணாம். அத வுடுவம்; கண்டாக்கையா வந்துசரி பாத்தாரா? அப்புடீன்னு கேலி 1ண்ணியிருக்காங்க..""
கங்காணி இப்புடிக் கூறியது கண்டக்டரின் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டார். :
"என்ன கங்காணி அப்புடியா சொன்னாங்க. இந்த ஆளுங்களைப்பத்தி ஓங்களுக்குத் தெரியாதா. நாலு பக்கத் துக்கும் பெரண்டு பேசுவாங்க. இப்ப அவனைப் போபி நான் பாக்கல என்னு பேசிக்கிறாங்க. போய்ப் பாத்திருந் தேன்னா, ஐயா தனக்கு வேண்டியவங்கள மட்டும் போய்ப் பாக்கிறாருன்னு சொல்லுவாங்க.. இந்த ஆளுங்களே இப்புடித்தான் .'

Page 28
40 கவ் வாத்து
, அதுமட்டுமில்லங்க, இந்தப் பொடியங்க தெரியாதுங் களா. இப்ப ரொம்ப கொழப்பம் பண்ணுறாங்க, இனி வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க நான் ஏதும் சொன்னா , ஒங்களாலதான் நாங்க கெட்டோம் என்னு என்னோட Fstiv 6opLäs (5 GAurrrrrfil s’”
* "நான்தான் சொன்னேனே, என்னைய நம்பினா கைவிடமாட்டேன்னு. தொரைகிட்ட நான் கதைச் சிட்டேன். இப்போதைக்கு ஒரு ஆளுக்கு கங்காணிவேல கொடுக்கலாமு னு தொரை சொல்லிட்டாரு. பெரியாம்பிள்ளை ஆஸ்டத்திரியில இருந்து வந்த ஒடனேயே அவனுக்கு அந்த வேலய கொடுத்துப் புடுவோம்.'
* அதுதானுங்களே பத்தேன் ஐயாவைப்பத்தி இன்னும் அவுங்களுக்கு தெரியல. பிஞ்சு ரத்தம் தானுங்களே. அப்புடித்தாங்க துள்ளுவாங்க, அத ஐயா ஒண்ணும் மனசில எடுத்துக்காதீங்க ' என்றார் கங்காணி குழைந்தபடி.
"சரி கங்காணி, வேற எந்தப் பயலுக துள்ளுறாங்க?"
*' என் மகன் செல்லாண் டி. அவன் தாங்க ரொம்ப துள்ளுறான். அப்புறம் அந்த வேலு. ரெண்டு பேருந் தாங்கி , '
** அப்புடியா அவுங்க ரெண்டு பேரையும் நாளையில இருந்து காவல் வேலைக்குப் போகச் சொல்லுங்க. அது லேசு வேல தானே. . " என்றார் கண்டக்டர்.
* அதுக்கில் லங்க, செல்லாண்டி கங்காணி வேலதான் தனக்கு வேணுமெங்கிறான்; அதுதாங்க யோசிக்கிறேன்.
‘'இப்போதைக்கு ஒரு கங்காணி வேலதானே இருக்கு . அப்புறம் கூடுதலா ஆளுங்க வேலைக்கு வந்தா செல்லாண்டிக் கும் கங்காணிவேல குடுக்கிறேன்."
'ஐயா ஒண்னு செஞ்சீங்கனா நல்லதுங்க. இப் போதைக்கு அந்த கங்காணி வேலய செல்லாண்டிக்கு கொடுத் தீங்கன்னா நல்லதுங்க. பெரியாம்பிள்ள ஆஸ்டத்திரியில இருந்து வர்ரதுக்கு ரொம்ப நாளி குங்கையா. செல்லாண்டிக்கு

தி. ஞானசேகரன் ・ 41
艇
கங்காணிவேல கிடைச்சிச்சின்னா அவன் பேச்சையும் கேக்
கிறதுக்கு நாலு ஆளுங்க இருக் காங்க, அவுங்களும் வேலைக்கு வந்திடுவாங்க. '
* சரி அப்புடியே செஞ்சுப்புடுவோம். நாளையில இருந்து செல்லாண்டி கொழுந்துக்காட்டி ல கங்காணிவேல் பாக்கட்டும். ரொம்ப கவனம்ா வேல செய்யனுமுனு. அவங்கிட்ட சொல்லுங்க.." w
**ரொம்ப நல்லதுங்க. அவன் என்வூட்டுப் பயதானுங் களே . விக்வா ச்மா இருப்பான்.""
*அப்புறம் இன்னுமொரு வெசயம் சொல்ல மறந்துட் டேன். ஸ்றைக் தொடங்கின நாளில இருந்து, பெரி: பங்களாப் பக்கம் யாரும் போகலயாம். ம்ரக் கறித் தோட்.ம் எல்லாம் காய்ஞ்சு போச்சுனு தொரை சாணி சொல்லியனுப் பிச்சு ஆம்புள ஆளுக நாலு பேரை அங்க அனுப்பிடுங்க. கொழுந்தில தான் பேர் போடம்ை.'
‘இன்னொண் ஐங்க, நாளையில இருந்து அல்லிமுத்து வும் செபமாலையும் வேலைக்கு வாறேன்னு செர்ன்னாங்க. அவுங்ககூட இன்னும் ரெண்டு பேரை பெரிய பங்களா வுக்க அனுப்புவோம்.' sான்றார் கங்காணி.
‘அப்புடியே இன்னும் ரெண்டு ஆளை நம்ப பங்களா வுக்கும் அனுப்பிவையுங்க . போஞ்சிப் பாருல பில்லு மண்டிப்போச்சு . புடுங்கணும். ’’
* * Fiftita) disti i r ' ' ,
"ஸ்றைக் தொடங்கின நாளில இருந்து "கொன்றாக்ட்" வேலையெல்லாம் அப்புடியே கெடக்கு. இன்னும் பத்து பதினைஞ்சு ஆள் சரி வேவைக்கு எடுக்கப் பாருங்க. அப்புடி எடுத்தீங்கன்ா, ஓங்க பேருல இப்ப மானா புடுங்கிற "கொன் றாக்ட்" தரலாம்: காலையில பேருக்கு வேல செஞ்சிட்டு அத்தியில கைக் காசுக்கு வேல செய்யட்டும். ஆளுங்களும் விருப்பப்படுவா ங்க டபிள் பேருதானே." என்றார் கண்டக்டர்.
‘நல்லதுங்க, அப்ப நான் வரட்டுங்களா. கடைப் பக்கம் போகணும்.’’ எனக் கூறிக்கொண்டே எழுந்தார் கங்காணி

Page 29
42 1.வி வர்த்து
'கங்காணி, இனிமே காலையில முந் தினமாதிரி ஐஞ்சரை மணிக்கு பெரட்டு கலைக்கிறது: வழுவட்டையா இருக்கக் கூடாது . காலையில நீங்களே பெரட்டு மணியை அடிச் சிடுங்க ??
கண்டக்ட்ரிடம் விடைப்பெற்றுக் கொண்டு கெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார் கங்கா எண்ணி, முச்சந்தியைத் தாண்டி ஆலமரத்தடியை அடைந்தபோது, அவரின் வருகைய்ை எதிர்பாத்து அங்கு ஐந்தாறுபேர் காத்து நின்றனர்.
'கங்காணியா ாே , கண்டாக்கையா வூட்டுக்குப் போனீங்க போல, ஒங்க ஐயா என்ன சொல்லுறாரு?" என ஒருவன் கேட்டான்.
"ஒண்ணுமில்ல. ஆளுங்க கொஞ்சப்பேரு ஐயா கிட்ட போயி நாளையில இருந்து வேலைக்கு வறோ முனு ரகசியமா கேட்டிருக்காங்க போற போக்கைப் பாக்தா கொஞ்ச நாளில எல்லாரும் வேலைக்கு வந்திடுவாங்க போலயிருக்கு." என்றார் தங்காணி,
‘அப்புடீங்களா, எத்தின நாளுக்குக் தான் ஆளுங்க வூட்டி ல இருப்பாங்க, கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும்
வேலைக்கு வரவேண்டியதுதான்; நாங்களும் காளைக்கு வரட் போறோம்.’’ என்றான் கூட்டத்தில் நின்ற வேறொருவன்.
கங்காணி வெரிதாகச் சிரித்துவிட்டு தனது லயத்தை நோக்கி நடந்தார்.

7
தொழிற்சங்கப் பிரதிநிதியின் பெரும் முயற்சியால் பொலிஸில் அடைபட்டிருந்த முத்துசாமி தலைவர்.முருகேசு, ராமையா முதலியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆறுமுகம் சுங் காணியின் தலைமையில் புதிய கட்சி போட்டியாக உருவாகியிருப்பது தொழிற்சங்கப் பிரதிநிதிக்குப் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தொழிலாளர்கள் L. 6) riħ புதியகட்சியில் சேர்ந்து வேலைக்குத் திரும்பிக்கொண்டிருந் தனர். இன்னும் சிலநாட்களில் வேலை நிறுத்தத்தை முடிவுக் குக் கொண்டுவராவிட்டால் தமது கட்சி லமிழந்துவிடும் என்பதை பிரதிநிதி உணர்ந்துகொண்டார்.
தோட்டத்துரையும் வேலைநிறுத்தம் விரைவில் முடி வதையே விரும்பினார். இப்போது தோட்டத்தில் புதிதாகக் கொழுந்துக் களவு தொடங்கியிருந்தது. வேலைநிறுத்தம் செய்பவர்களில் சிலர், இரவில் களவாகக் கொழுந்தெடுத்து அவற்றைக் கொழுந்துவியாபாரிகளுக்கு விற்றுப் பணம்பெறத் தொடங்கியிருந்தனர்; தமது பசி பட்டினியைப் போக்கு வதற்கு அவர்களுக்கு வேறுவழி இருக்கவில்லை. இப்படியே போனால் கோட்டத்திற்கு பெருநட்டம் ஏற்படும்; தொழிலா ளர்களிடையே கட்டுப்பாடும் குறைந்துவிடும் என்பதை தோட் டத்துாை புரிந்துகொண்டார்.
வேலைநிறுத்தம் சம்மந்தமர் க துரைக்கும் தொழிற் சங்கப் பிரதிநிதிக்குமிடையே அன்று பேச்சுவார்த்தை ஏற் பாடாகியிருந்தது. முத்துசாமி தலைவரும் தோட்டக் கமிட் டியினரும் பிரதிநிதியோடு தோட்டத்து ஆபீஸில் சமூகம் அளித் திருந்தனர்.
முதலில் பிரதிநிதிக்கும் துரைக்கும் இடையே ஆங்கிலத் தில் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. ܝ

Page 30
கவ் வitத்து
‘இன்றுடன் வேலைநிறுத்தம் தொடங்கி பதினேழு நாட்களாகிறது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக் கப்பட்டிருக்கிறார்கள். காரணத்தை முன்வைத்தே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். வேலை செய்த்வர்களுக்கு பெயர்போட மறுத்தது கண்டக்டரின் பிழை. அதனn ல் , தோழிலாளர்களுக்கு உரிய நீதிவழங்கி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.'
பிரதிநிதி தனது வாதத்தை துரைக்கு எடுத்துக் கூறினார். -
'தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யாததால், பத்து நாட்களில் முடியவேண்டிய கவ்வாத்து பதின்மூன்று நாட்களாகியும் முடியவில்லை; அதனாலேதான் அவர்களுக்குப் Gît.lu tuj rř நிற்பாட்டவேண்டிய நிர்ப்பந்தம் 4ாற்பட்டது. அது மட்டுமல்ல, உங்களது தொழிலாளர்கள் கண்டக்டரை அவது றாகப் பேசியிருக்கிறார்கள். முருகேசு ம் வின் வன் கண்டக்டரை கொலைசெய்வதற்கு எத் தனித்திருக்கிறான்' என்றார் துரை.
'தொழிலாளர்கள் பெயர்நிற்பட்டிய காரணத்திற்காக ஆத்திரத்தில் சிறிது கட்டுப்பாட்டை மீறியிருக்கலாம்; ஆனா லும் அதற்கு அடிப்படை க் காரணம் கண்டக்டரின் அடாவடித்த னந்தான். நீங்க கண்டக்டரின் பேச்சைமட்டும் கேட்டு அவசர முடிவுக்கு வந்துவிட்டீர்கள். இருசாராாையும் நேரில் வைத்து விசாரணை செய்திருந்தால் உண்ம்ை தெரிந்திருக்கும்; இந்த வேலைநிறுத்தமும் நடந்திருச்காது." என்றார் பிரதிநிதி.
'உங்களது தொழிலாளர்கள், வேலைக்குத் திரும்பிய தொழிலாளர்களை அடிப்பதற்கு முபான்றிருக்கிறார்கள். அத்தோடு லயங்களுக்குக் கல்லடித்து சேதம் ஏற்படுத்தியி ருக்கிறார்கள்; அது பிழையல்லவா .'"
'எனது கட்சிக்காரர்கள் எவரும் முதலில் லயங்களுக்குக் கல்லடிக்கவில்லை. வேலைக்குச் சென்றவர்கள் தான் முதலிலே கல்லடித்தார்கள். '
'குற்றம் செய்தவர்கள் எவருமே தமது குற்றத்தை இல குவில் ஏற்றுக் கொள்வதில்லை. தோட்டத்துக் கண்டக்டரை தாக்கப் போனதும் லயத்துக்குக் கல்லடித்ததும்

தி. ஞானசேகரன் 45
குற்றம் அதனால் அவர்கள் மீது இாக்கம் காட்ட முடியாது.' என்றார் துரை ,
துரை தனது பிடியிலிருந்து இறங்கி வரமாட்டார் என்பதை பிரதிநிதி புரிந்துகொண்டார். இப்போது துாை யோடு பேசி ஒரு சமரசத்துக்கு வராவிட்டால் பின்னர் லேபர் ஆபீஸரை வைத்து பிரச்சனை பேசவேண்டும். அதுவும் சரிவரா விட்டால் தொழில் நீதிமன்றத்தில் வழக்காடவேண்டும் இப்படி இழுபட்டுக் கொண்டே போனால் நிலமை மோசமாகிவிடும் வேலை நிறுத்தத்தில் இருக்கும் தொழிலாளர் சளைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
பிரதிநிதி இப்போது முத்துசாமி தலைவரின் பக்கம் திரும்பி, ' என்ன தலைவரே, தொரை சொல்லுற மாதிரிய ப்ாத்தா நம்ம ஆளுக ரொம்ப கொழப்பம் பண்ணியிருக் காங்க போல தெரியுது; தொரை மன்னிப்பு குடுக்க ஏலா துன்னு சொல்லுறாரு' எனக் கூறினார்.
என்னங்கையா, கஷ்டப்பட்டு ஒழைச்சவனுக்கு பேரு இல்லையனா ஆத்திரந்தான் வரும். ஆனா கண்டக்கையா செஞ்சது ரொம். மோசங்க. கண்டக்கையா பேச்சைக் கேட்டு தொரை ஆடுறாரு நாங்க என்ன கதைக்கிறது. ஏழை பேச்சு ள்ப்புடி எடுபடும்.' என்றார் முத்துசாமி தலைவர் விரக்தியுடன்.
‘இந்தாங்க தலைவரே, சட்டத்திற்கு நேர்மை நீதி
எல்லாம் ஒதவாது . சாட்சி முக்கியம். கண்டக்கையாவை முருகேசு வெட்டப்போனதுக்கு சாட்சியிருக்கு . பெரியாம் பிள்ளை வேற ஆஸ்பத்திரியில இருக்கான். நம்ம சங்கத்து
ஆளுங்களுக்கு ஏதாவது நடந்திருக்கா? என்ன தலைவரே. என்னையும் தொரை மடையன்னு நெனைச்சுக்குவாரு .' என்றார் பிரதிநிதி சற்று உயர்ந்த குரலில்,
"சரிதாங்க, இப்ப சான்னதான் முடிவா செய்யச் சொல்லுறீங்க..?'
"இங்க பாருங்க, நம்ம ஆளுக அன்ன்ைனிக்கு ஒழைச்சு சாப்பிடுறவங்க . ரொம்ப நாளைக்கு ஆட்டில இருக்கேலாது. ஒண்னு செய்யலாம்; தொரை முடிவா என்ன சொல்லுறாரு ணு (éstʼyG3: I rT ub. ' '

Page 31
. (5 கவ் வாத்து
"ஐயா, அன்னைக்கு கவ்வாத்து ஆளுங்களுக்கு நிப் பாட்டின பேரை வாங்கித் தாங்க; நாங்க நாளைக்கே வேலைக்குப் போறோம்." என்றார் தலைவர்.
அப்போது துரை குறுக்கிட்டார்.
"இங்க பாருங்க மிஸ்டர், நானும் மனுசன்தான்; எனக்கும் இதயம் இருக்கு; இந்த ஆட்களைப் பார்க்க பாவ மாயிருக்கு. இவர்களை முதலில் வேலைக்குப் போகச் சொல் லுங்கள். அதன்பின்பு பேச்சுவார்த்தை நடத்தி ஒருமுடிவுக்கு வருவோம். இல்லை இப்படியே வேலைநிறுத்தத்தை தொட ருவதானால் எனக்கு ஆட்சேபனை இல்லை; நான் கஷ்டப் படப் போவதில்லை."
துரை கூறியதை, பிரதிநிதி கலைவரிடம் கூறினார்,
தன்லவரால் எர்வ்வித முடிவுக்கும் வரமுடியவில்லை. தோட்டக் கமிட்டியினரின் பக்கம் திரும்பி அவர்களது அபிப்பி ராயத்தைக் கேட்டார்,
"ஆமா தலைவரே, வூட்டில இருந்தா நாமதான் கஷ்டப்படனும் அதனால வேலைக்குப் போவோம் பயலுக கொஞ்சம் துள்ளுவாங்கதான், Wதெல்லாம் சமாளிச்சுக்கலாம். தொரைதான் மொ கல்ல வேலைக்குப்போனா அப்புறமா கதைக்கிறேன்னு சொல்லுறாரே. சரியன்று சொல்லுங்க." என்றார் கமிட்டிக் காரியதரிசி.
தலைவர் அதனைப் பிரதிநிதியிடம் தெரியப் படுத்தினார்.
‘நாளையிலிருந்து எனது சிங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவார்கள். பிரச்சனையை வேறொரு தினத்தில் பேசி முடிவெடுக்கலாம்" என்றார் பிரதிநிதி துரையிடம்.
துரை புன்னகை செய்தபடி கலையாட்டிவிட்டு, ‘சரி,
உங்களது முடிவை நான் மேலிடத்திற்குத் தெரியப்படுத்துகிறேன்
இப்போது எனக்கு வேறு வேலையிருக்கிறது; அவசரமாக வெளியே செல்லவேண்டும்." எனக்கூறியபடி எழுந்தார்.
பிரதிநிதியும் தொழிலாளர்களும் தோட்டத்து ஆபீவிை விட்டு வெளியே வந்தனர். 4.

தி. ஞானசேகரன் 47
‘சரி தலைவரே, நம்ம ஆளுங்கள நாளையில இருந்து வேலைக்குப் போகச் சொல்லுங்க இன்னொரு நாளைக்கு தொரைகிட்ட பேசுவோம். ஆளுங்க வேலைக்குப் போச்சுனா தொரையும் மனசு மாறிடுவாரு . நிப்பாட்டின பேர வாங்கிக் 5ου πιο '' எனக்கூறிவிட்டு தனது மோட்டாரில் ஏறிப் புறப்பட்டார் தொழிற்சங்கப் பிரதிநிதி.
தலைவரும் கமிட்டியினரும் பேச்சுவார்த்தை முடிந்து . வெளியே வந்துகொண்டிருந்தபோது ஆலாச் சந்தியில் அவர் களை எதிர்வார்த்து தொழிலாளர்கள் பலர் காக்துநின்றனர்.
"என்னங்க தலைவரே, காயா பழமா? எனக் கேட்டார் ஐயாக்கண்ணு கங்காணி.
‘அப்புறம் பழம் இல்லாம காயாவா இருக்கும். இவ்வளவு மெனக்கட்டதை வீணாத்க ஏலுமா?" W
நம்ம வேலைநிறுத்தம் வெத்தியா முடிஞ்சிச் و لا لا لقب " " சினு சொல்லுங்க .' என்றார் ஐயரக்கண்ணு மகிழ்ச்சியுடன்
"ஆமா ஐயாக்கண்ணு, என்னா நெனைச்ச நம்ம பெரதி நிதியை. நறுக்கினு நாலு வார்த்தை. நாக்கைப் புடுங் கிக்கிறமாதிரி இங்கிலீசில பேசி, மேசையில கையை குத்தி னாரு. தொரை அலண்டுட்டான்' என்றார் காரியதரிசி.
"ஆமா நம்ம பொதிநிதி ஆளு பூனமாதிரி இருக்கி றதுக்கென்ன , மனுசன் வெசயத்தில கெட்டி' என்றார் ஐயாக்கண்ணு கங்காணி வெற்றிலைத் துப்பலை மென்றபடி
அப்போது தலைவர் குறுக்கிட்டார். "நானும் வுடல, கவ்வாத்து ஆளுங்களுக்கு பேரு குடுத்தாத்தான் வேலைக்கு போவோம் அப்புடின்னு ஒரே பேச்சுத்தான்.""
'அப்புடீன்னா, கவ்வாத்து ஆளுங்களுக்கு பேரு கெடைக் கும் எங்கிரீங்க."
'கவ் வாத்து ஆளுங்களுக்கு மட்டுமில்ல. அன்னிக்கு மலையில இருந்து எறங்கின அத்தனை பேத்துக்கும் பேரு தான்' என்றார் தலைவர்.

Page 32
48 கவ் வ3த்து
** அப்ப, கண்டாக்கு நெனைச்சமாதிரி இனி ஆட ஏலாது." என்றான் பக்கத்தில் நின்ற சோம்பேறி செவனு.
'கண்டாக்கு மேல தொன் ரக்குக் கோபம் வந்து, பூமியில சப்பாத்து காலில ஒதைச்சு சத்தம் போட்டாரு ஆபீஸ்ே ஆடிப்போச்சு. கண்டாக்குக்கு வேர்த்துப்போச்சு அவரை வருசக் கடைசியில வேற தோட்டத்துக்கு மாத்திப் போடு றேன் னு தொரை சொல்லிட்டாரு' என்றார் காரியதரிசி.
* 'இந்தா பாருங்க., நாளைக்கே போயி கண்டக்டர் கிட்ட பேரு அதுஇதுன்னு கேக்காதீங்க . அதெல்லாம் நாங்களும். பெரதிநிதியும் பேசி முடிச்சிட்டோம். தோட்டத்தில வேலை யில்லாத நாளுக்கு வூட்டில இருந்து டோரு போட்டுக்கலாம். சரியா, நாளைக்கே எல்லாரும் வேலைக்குப் போயிடுங்க.' என்றார் தலைவர் உரத்த குரலில்,
தொழிலாளர்கள் எல்லோாது (pகத்திலும் மகிழ்ச்சி
நிலவியது.
S
முருகேசுவும் ராமையாவும் மிகவும் கவலையோடு இருந்தனர். தாம் எவ்வித குற்றமும் செய்யாதபோதும் பொலி ஸ்ாரினால் கைதுசெய்யப்பட்டு, ‘ரிமான்டில்" அடைப்பட்டுக் கிடந்ததை நினைத்தபோது அவர்களது உள்ளம் கொதித்தது. கானலயில் ஆபீஸில் நடந்த பேச்சு வார்த்கையிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்ல்ை. உடல சதியும் மன அசதியும் அவர் களை வாட்டியெடுத்தது.
அன்று மாலை இருவரும் முத்துசாமி தலைவரைச் - A. 0. o சந்தித்துவிட்டு சுரத்தை ரோட்டில் கிரும்பி வந்துகொண்டி

தி. ஞானசேகரன் 49
ருந்தனர். எதிரே, ஆறுமுகம் கங்காணி மதுவெறியில் தள்ளா டியபடி கண்டக்டர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.
முருகேசுவும் ராமையாவும் அவரை அண்மித்ததும் கங்காணி தரித்துநின்று, ‘அடே முருகேசு, என்னமோ ஸ்றைக் அடிச்சு தோட்டத்தைக் கவுத்துப்புடுவோம் என்னு பெரிசா துள்ளுனிங்களே. இப்ப என்ன ஆச்சு? வலியக்க தொரை காலில விழுந்து வேல கேட்டிருக்கீங்க ." எனக் கேலியான குரலில் கூறினார்.
"இந் தாங்க கங்காணி, தண்ணிய போட்டா ஒழுங்கா ரோட்டில போங்க, சும்மா உளறாதீங்க, நாங்க ஒண்ணும் வலியக்க வேலைக்கு போகமாட்டோம் . தொன்ர பேரு தாறேன்னு சொன்னபெறகுதான் நம்ம தலைவஞ் வேலைக்கு போறதுக்கு ஒத்துக்கிட்டாரு’ என்றான் முருகேசு.
- ஆறுமுகம் கங்காணி எக்காளமிட்டுப் L_u a)Lß9 nr «95ʻğt சிரித்தார்.
'இந்தா முருகேசு, ஒங்க தலைவரு இவ்வளவு நாளும் ஏமாத்தினது பத்தாதுன்னு இப்பவும் ஏமாத்திற்ாரு; நீங்கெல் லாம் ஒரு இளிச்ச வாயனுக அவரு சொல்லிறதெல்லாம் கேட்டுக்கிட்டு ஆடுறீங்க. ஒங்க பெரதிநிதியும் தொரைக் கிட்ட கதைச்சுப் பாத்தாரு ஒங்க தலைவரும் எவ்வளவோ கெஞ்சிப் பாத்திட்டாரு . தொரை ஏசி வெரட்டிப்புட்டாரு அப்புறம் ஓங்க தலைவரு ஒண்ணும் செய்ய முடிய்ாம, தொரை காலில வுழுந்து மன்னிப்புக்கேட்டு வேலைக்குப் போறோம் என்னு சொல்லிட்டாரு . இதுதான் நடந்த வெசயம்" எனக் கூறிய ஆறுமுகம் கங்காணி மீண்டும். பல மாகச் சிரித்தார்.
முருகேசுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கங்காணி சொல்வது உண்மையாக் இருக்குமா?
"'என்ன கங்காணி, நம்ம தலைவரு ச்ொன்னாரு எல்லாத்துக்கும் தொரை ஒத்துக்கிட்டாருன்னு. நீங்க இப்புடி சொல்லுறீங்க' என்றான் முருகேசு குழப்பத்துடன்,
'நான் ஒண்ணும் பொய் சொல்லல்ல, ஒனக்கு சந்தே கமா இருந்தா, ஆபீஸில வேலைசெய்யிற கிளாக் கர்மாரை

Page 33
50. கவ்வாத்து
இப்பவே போயி கேட்டுப்பாரு. தொரை மட்டும் பேர் குடுக்கிறேன்னு சொல்லியிருந்தாரென்னா, நாளைக்கே நான் கொழுந்து மடுவத்தில வச்சு ஆளுக முன்னா ல என் த்லைய மொட்டையடிச்சுக்கிறேன்."
"இங்க ப்ாருங்க கங்காணி, தலைவர் மட்டும் பொய் சொல்லி இருந்தாருன்னா, நானும் எங்கலுட்டு ஆளுகளும் இந்த யூனியனில இருக்கம்ாட்டோம்' எனக் கூறிய முருகேசு உண்மையைக் கேட்டறிவதற்காக, ராமையாவுடன் பெரிய கிளாக்கரின் பங்களாவை நோக்கி நடந்தான்,
O 4: O
முருகேசுவின் உள்ளம் கொடுத்தது. எவ்வளவு பெரிய ஏமாற்றம்; இவ்வளவு காலமும் வேலைநிறுத்கத்தில் ஈடுபட் டிருந்ததெல்லாம் வீண்ாகிவிட்டது. ‘முதலில் வேலைக்குச் செல்லுங்கள்" பின்னர் பிரச்சனையப் பேசித் தீர்க்கலாம்’ எனச் சாதுரியமாகப் பேசி துரை காரியத்தைச் சாதித்துவிட்டார்" நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள் யாவும் அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் குற்றவாளிகளாக உருவகித்துக் காட்டிவிட்டது.
தோல்வியை மறைப்பதற்கும் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கும் இப்போது முத்துசாமி தலைவர் பொய்மேல் பொய்யாகக் கூறிக்கொண்டி (ருக்கிறார். அவர் கூறு வன்த நம்புவதற்கு தொழிலாளர்களும் விரும்புகிறார்கள்; அவர் களது வறுமைநிலை அவர்களை அப்படிச்செய்ய வைக்கிறது,
முருகேசுவும் ராமையாவும் பெரியகிளாக்கர் பங்களாவி லிருந்து திரும்பியபோது, இளைஞர்கள் பலர் அவர்களது வரவுக்காக காத்திருந்தனர்.
‘என்னடா முருகேசு, நமக்குத்தான் வெத்தி கிடைச் சிருச்சே, அப்புறமென்ன. ரொம்ப கவலையோட இருக்கே. எனக் கேட்டான் ஒருவன்.
*சும்மா எரிச்சலைக் கிளப்பா தீங்கடா , நம்ம தலைவர் நம்மளை ஏமாத்திறாரு; தொரை பேரொண்ணும் தர ஏலா துன்னு சொல்லிட்டாராம் . நம்ம பெரியகிளாக்கர் சொன் னாரு . இவுங்க வந்து நம்பகிட்ட புழுகியிருக்காங்க. அன்தை நம்பி நாங்களும் இளிச்சுக்கிட்டு இருக்கோம்.'

தி. ஞ்ானசேகரe.
'இப்ப என்னதாண்டா செய்யிறது?" எனக் குழப்பக் துடன் கேட்டான் செவனு.
w “இப்ப ஒண்ணுமே செய்ய முடியாது; நம்ம யூனியனில தான் வேலைக்குப் போறோமுனு ஒத்துக்கிட்டு வந்திட்டாங்களே."
"அப்ப நாழ எல்லாம் நாளையில இருந்து வேலைக்குப் போணுகமா?' என்க் கேட்டான் செவனு.
'அது எப்புடி பேரு தராம வேலைக்குப் போறது? அவுங்க வேணுமுனா போகட்டும். நம்ம வூட்டில இருப் போம். இதுக்கு ஒரு முடிவு க்ாங்கணும்.' என்றான் ராமையர் ஆத்திரத்துடன். −
"அது சரிடா, மத்த எல்லாரும் வேலைக்குப் போசு. நாங்க. பொடியங்க கொஞ்சப்பேரு வூட்டில இருந்தா சரி வருமா?’* செவனு யோசனையுடன் கேட்டான்.
'என்ன கதைக்கிறே, நாம இவ்வளவு தூரம் ஸ்றை அடிச்சு ஒரு பெரயோசனமும் இல்லாமப் போச்சு . இப்புடின் னாத்தான் அன்னிக்கே வேலைக்குப் போயிருக்கலா"ே ராமையாவின் ஆத்திரம் குறையவில்லை.
நம்ம யூனியனில முடிவு செஞ்சிட்டாங்க வேலைக் ஆப் போறதுன்னு. இனி ஒண்ணுமே செய்யமுடியாது; யூனியன பல எடுத்த முடிவை நாம மாத்த ஏலாது' என்றான் மு:ருகேசு கவலை தோய்ந்த குரலில்,
'இது பெரிய அநியாயமா இருக்கு இக் கலைவரும் பெரதிநிதியுமா சேர்ந்து கொரை பக்கம் வுட்டுக்குடுத் திட் டாங்க. அதுவுமில்லாம் xளருங்கள ஏமாத்திறாங்க , , '' orrr Ga) puur uit tit chasta sir,
'இப்புடி நம்மள ஏமாத்திm கலைவருக்குக் கீழ நாம இருக்கணுமா ? அல்லது இந்த யூனியனிலதான் இருக்கலுமா?"
"ஆமா.ா நாளையில இருந்து நாம வேற யூனியனில சேந்துக்குவோம்; பெரச்சனையை ஒழுங்கா பேவித்தாற ஒருத் தரை, நம்ம தலைவரr தேர்ந்கெடுப்போம்' என்றான் ராமையா தீர்மானத்திற்கு வந்தவனாக . .
அவன் கூறியது. அங்கிருந்த எல்லோருக்கும் சரியெனப் பட்டது:

Page 34
9
மாதங்கள் சில உருண்டோடின.
தோட்டத்தில் இப்போது ep6ty தொழிற்சங்கங்கள் உருவாகியிருந்தன. முருகேசுவைத் தலைவராகக் கொண்ட தொழிற்சங்கம்ே பலம்வாய்ந்த சங்கமாக விளங்கியது. இளம் வ்யதினர் பலர் அச்சங்கத்தில் சேர்ந்திருந்தனர்.
பெரியாம்பிள்ளையும் வேலுவும் தமக்குக் கங்காணி வேலை கிடைக்குமெனக் காத்திருந்து, ஏமாற்றமடைந்ததால் மீண்டும் முத்துசாமி தலைவரின் சங்கக்திலேயே சேர்ந்து கொண்டனர்.
முன்பெல்லாம் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டாடிய மாரியம்மன் கோயில் திருவிழா, இப்போது தொழிற்சங்கரீதி யாக வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டது.
தொழிற்சங்கங்களுக்கிடையே போட்டியும் பொறாமை யும், கோபத்ாபங்களும் அதிகரிக்கத் தொடங்கின. ஒரு சங்கத் தைச் சேர்ந்த தொழிலாளர்களது நன்மை தீமைகளில் மற்றச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றுவதில்லை என்ற நிலைமை உருவாகியிருந்தது. குடும்பங்கள் கட்சிரீதியாக பிளவுபட்டன; சொந்த பந்தங்கள் சங்கப் போட்டியால் சிதைந்தன.
தந்தை ஒரு கட்சி மைந்தன் ஒரு கட்சி.
ஆறுமுகம் கங்காணியைத் தலைவராகக்கொண்ட் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு வயோதிபர் மரணமடைந்த போது, மரணமடைந்தவரின் மகன் முருகேசுவின் கட்சியில் இருந்ததால், அவன் தந்தையின் மரணச் சடங்குகளில் பங்கு பற்றாமல் இருந்து விட்டான் V

தி. ஞானசேகரன்
ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் எதைச்செய்தாலும் மற்றக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை எதிர்ப்பதையே தமது முக்கியநோக்கமாகக் கொண்டனர்.
பெரியசாமி கண்டக்டர் வழமைபோல் மலைவேலைகளை மேற்பார்வை செய்வதற்குப் புறப்பட்டார்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டார் தானே !
கொழுந்து மலைக்கு அவர் சென்றபோது ஆறுமுகம் கங்காணியும் அவரது மகன் செல்லாண்டியும் அந்த மலைக்குப் பொறுப்பாக கங்காணி வேலை செய்து கொண்டிருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர் அந்த மலையில் கவ்வாத்து வெட்டப்பட்டபோதுதான் அவருக்கும் முருகேசுவுக்கும் தர்க்கம் ஏற்பட்டது. மலையை ஒரு நோட்டம் விட்டார் கண்டக்டர்.
மலையின் மறுபுறத்தில், பெருவிருட்சமாகி நிற்கும் ஆலமரத்தின் அடியில் அவரது பார்வை தரித்துநின்றது. ஒவ்வொரு வருடமும் கவ்வாத்துவேலை முடிந்ததும் அந்த ஆலமரத்தின் கீழேதான் "கவ்வாதுத் சாமி கும்பிடுவார்கள் . வேலை தொடங்கும்போது, கூரிய கவ்வாத்துக் கத்திகளினால் தமக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படக்கூடாதெ60 நேர்த்தி வைத்து சாமிகும்பிடுபவர்கள். வேலைமுடிந்ததும் அங்குதான் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள் இந் கவருடம் கவ் வாத்துத் தொழிலாளர்கள் கட்சிரீதியாகப் பிளவுபட்டதால் கவ்வாத்துசாமி கும்பிடமுடியவில்லை,
சென்ற வருடம் விமரிசையடக கவ்வாத்து சாமி கும்பிட்டது கண்டக்டரின் நினைவில் வந்தது; வாள் கார சின்னப்பெருமாள் தான் மல்லாவற்றையும் لأن الملاك الأهمين நடத்தினார்.
முனியாண்டி சாமிக்கு பலிகொடுப்பதெற்கென வாங்கி வந்த ஆட்டை ஆற்றில் குளிப்பாட்டி, கழுத்தில் பூமாலை சூட்டி, நெற்றியில் விபூதியுடன் குங்குமமும் சந்தனமும் சாத்தி, கங்காணிமார்களும் கவ்வாத்துத் தொழிலாளர்களும் அதனை

Page 35
54 கவ் வாத்து
ஆலமரத்தடிக்கு அழைத்து வந்ததும், வாள் கார சின்னப் பெருமாள் முனியாண்டி சாமிக்கும் பலிகொடுக்கும் ஆட்டுக்கும் சூடம் சாம்பிராணி காட்டினார். பின்னர் ஆட்டை சாமியின் முன்னால் இழுத்துவந்து வெட்டரிவாளினால் அதன் கழுத்தை ஒரேவெட்டாக வெட்டி, வழிந்தோடும் இரக்கத்தை கையில் ஏந்தி, முனியாண்டி சாமியின் பாகங்களில் தடவி காவல் கொடுத்து பயபக்தியோடு வணங்கினார்.
பலிகொடுத்த ஆட்டை சமையல் செய்து கறியாக்கி, சோறு சமைத்து, வெற்றிலை பாக்கு பழம் முதலியவற்றோடு கள்ளு சாராயம் முதலியனவும் படைத்து கற்பூரம் காட்டி பூசைசெய்தார் சின்னப்பெருமாள்.
ஒவ்வொரு வருடமும் பூசையில் கண்டக்டரும் கலந்து கொள் வார். அவருக்கு மாலை அணிந்து வரவேற்று, விபூதி சந்தனம் வழங்கி மரியாதை செய்து அவரை மகிழ்வித்து, பிரசாதமாகப் படைத்த ஆட்டுக் கறியில் சிறிதை பார்சல் செய்து அவரது பங்களாவுக்கும் அனுப்பிவைப்பார் கவ்வாத்துக் கங்காணி ஐயா க்கண்ணு, கண்டக்டர் அவ்விடத்தைவிட்டு அகன்றதும் தொழிலாளர்கள் மதுவருந்தி ஆடிப்பாடி மகிழ்ந்து படைத்துவைத்த சோற்றையும் ஆட்டுக்கறியையும் உண்டு களிப்பது வழக்கம்.
சென்றவருடம் ஒற்றுமையாக சவ்வாத்துசாமி கும்பிட்ட தொழிலாளர்கள் இந்த வருடம் ஒற்றுமை சிதைந்து கிளைகளாகப் பிரிந்து விட்டனர்.
கண்டக்டரின் நினைவுகள் கலைந்த1ை.
அவர் மலையின்மேல் மீண்டும் தன் பார்வையை படர விட்டார். கவ்வாத்துக்குப்பின் இப்போது புதிய கிளைகள்
வெடித்து கொழுந்துகள் துளிர்த்திருந் கன.
பெண்கள் வேகமாக கொழுந்தெடுத்துக் கொண்டி ருந்தனர்.
திடீரென கண்டக்டரின் முகம் மாறியது.
**இந்தா பாரு செல்லாண்டி, நீ என்ன வேலைபாக்கிறே. ஆளுங்க எலையும் திரியுமா கரட்டு எல எல்லாம் புடுங்கியிருக்கு .

தி. ஞானசேகரன் V 55
நீயெல்லாம் ஒரு கங்காணி" கண்டக்டரின் குரலில் கோபம் தெறிந்தது.
"'என்னங்கையா, ஒரு நாளும் இல்லாதமாதிரி இப்புடி ஏசுறீங்க..?" செல்லாண்டி குழப்பத்துடன் கேட்டான்.
** என்னா அப்புடிக் கதைக்கிறே எந்த நாளுந்தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்; நீ கேட்கிறாப் போல இல்ல,"
**வேலயில குத்தமுனா சொல்லுறமாதிரி சொல்லுங்க. இப்புடி சத்தம்போட்டு மிரட்டா தீங்க." என்றான் செல்லாண்டி சினத்துடன்.
'அறிவு இல்லாத மாடுகளுக்கு இப்பு சொன்னாத்தான் "சரிவரும்."
“மரியாத இல்லாம பேசினீங்கனா, நானும் மரியாதை வைக் காமதான் பேசுவேன். வேல போனா மசிராச்சு."
‘என்னடா, மசிரு கிசிருன்னு பேசுறே; வாயைழுடு; ஒனக்கு இன்னிக்கு நூறுரூபா தெண்டம்"
கண்டக்டரும் மகன் செல்லான்டியும் வாய்த்தர்க்கம் புரிவதை கவனித்த ஆறுமுகம் கங்காணி பதட்டத்துடன் அவர்கள் அருகே விரைந்து வந்தார்.
"'என்னங்கையா , அவன் இந்த வேலைக்கு புதுஆள் தானே. ஐயா தானே அவனுக்கு கங்காணிவேல கொடுத்தீங்க, இப்ப ஒரு பின்னப் பிழைக்குத் தெண்டம் கிண்டம் எங்கிறீங்க.
'இந்தா கங்காணி வேலயன்னா வேலை அதுல என்ன புதுஆள் பழைய ஆள். நானும் ஒருகிழமையா சொல்லிக்கிட்டு வாறேன், கேக்கிறாப்போல இல்ல. வேல பாக்க ஏலாட்டி போயி பில் லுவெட்ட வேண்டியதுதானே. தொரை நாய் மாதிரி என்னை ஏசுறான்.' கண்டக்டர் பலத்த குரலில் கத்தினார்.
‘போன கெழமை எனக்குத் தெண்டம் போட்டீங்க . இப்ப என் மகனுக்கு தெண்டம் போடுறீங்க. நான் எவ்வளவு ஒதவி செஞ்சிருக்கேன்; அதெல்லாம் மறந்திட்டு பேசுறீங்க." என்றார் ஆறுமுகம் கங்காணி. w

Page 36
56 கவ் வாத்து
“என்ன கங்காணி ஒதவி செஞ்சீங்க? எனக்கு ஐஞ்சு பத்து தந்தீங்களா? ஒங்க மகனுக்கு கங்காணி வேலைக்கு வந்தீங்க. இப்ப என்னடான்னா, எனக்கு ஒதவி செஞ்சேன் எங்கிறீங்க."
"ஸ்றைக் நேரத்தில தோட்டத்து ஆளுகளை எதிர்த்துக் கிட்டு, இந்த ஆளோடை நின்னது பெரிய பிழையாப் போச்சு” கங்காணி முணுமுணுத்தார்.
'என்ன இந்ததாளு அந்தாளுன்னு கதைக்கிறே. மரியாத இல்லா ம; நான் நெனைச்சர் ஒன் மகனுக்கு இப்பவே கங்காணிவேல நிப்பாட்டுவேன்'
"யோவ், செல்லாண்டிக்கு வேல நிப்பாட்டினா இப்பவே நம்ம ஆளுங்களை மலையில இருந்து கீழே எறக்கிடுவேன்" கங்காணி பலத்த குரலில் கூறினார்.
'இப்ப எறங்கினாலும் சரி, கானக்கு பயமில்ல. இந்த தோட்டத்தில ஒன்வூட்டு யூனியன் மட்டுமா இருக்கு? மத்த யூனியன்காரங்களை வச்சு நான் வேலசெய்வேன். விரும்பினா வேலைசெய்; இல்லாட்டி வூட்டில இரு மனுசன்.'
ஆறுமுகம் கங்காணி திகைத்து நின்றார். தான் பறித்த குழியிலேயே தன்னைத் தள்ளிவிடப் பார்க்கிறார் கண்டக்டர்.
"சரியுங்க, ஒங்ககிட்ட கதைச்க ஒரு பெரயோசனமும் இல்ல. நான் தொரைகிட்ட கதைச்சுக்கிறேன். கங்காணியின்
குரல் தாழ்ந்து ஒலித்தது5
'நீ எங்க போயும் பேசு, நான் யாருக்கும் பயமில்ல. தெண்டம் போட்டது போட்டதுதான் .' எனக் கூறிக்கொண்டே குறுக்குப்பாதையில் இறங்கி மற்ற மலைக்குச் சென்றார் கண்டக்டர்.
மறுவாரத்தில் ஒரு நாள்.
கொழுந்துக் கணக்கப்பிள்ளை லீவில் சென்றதால் அன்று பகற்கொழுந்தை கண்டக்டர்தான் நிறுத்தார். பெண்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவராக தாம் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுவைத்தட்டில் கொட்டினர்.

தி. ஞானசேகரன் ' 57
'என்ன பேய் புடுங்கினமாதிரி எல்லாரும் முத்தெ" லையும் காம்புமா புடுங்கிட்டு வந்திருக்கீங்க. எல்லாருக்கும் இன்னிக்கு மூணு கிலோ வெட்டிறது" எனக் கூறிய கண்டக் டர், ஒவ்வொருவருக்கும் அவர்களது சிட்டைகளில் மூன்று கிலோ நிறையைக் குறைத்துக் குறித்தார்.
கொழுந்தெடுக்கும் பெண்கள் சிலர் கொதித்தனர்.
அவர்களுக்கு கண்டக்டர் செய்வது அநியாயமாகத் தெரிந்தது. முதலில் கொழுந்து நிறுத்து முடிந்தசிலர், தலைவர் முருகேசு விடம் சென்று தமக்க இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக் கூறினர்.
முருகேசு அவசர அவசரமாக அங்கு வந்துசேர்ந்தான்
"என்னங்கையா றாத்தல் வெட்டிப்புட்டீங்கன்னு கொழுந்தாளுக ஒலம்பிட்டு போறாங்க, முருகேசு கண்டக்டரிடம் பேச்சை ஆரம்பித்தான்.
"அவுங்க என்ன கொழுந்தா கொண்டு வாறாங்க? கொடியும் காம்புமா பிச்சுக் கிட்டுவாறாங்க. அதனால்தான் றாத்தல வெட்டினேன்.
அப்போது தட்டில் கொட்டப்பட்டிருந்த கொழுந்து களைக் கவனித்த முருகேசு, ' என்னங்யைா, கொழுந்து நல்லாத்தானே இருக்கு. இதை சரியில்ல எங்கிறீங்க " " எனக் கூறினான்.
"என்ன முருகேசு, எனக்கு வேல படிச்சுக் குடுக்கிறியா? எனக்கு கண்ணு பொட்டையணு நெனைச்சியா?" கண்டக்ட்ரின் குரல் கடுமையாக ஒலித்தது.
"ஓங்க சங்கதியெல்லாம் எனக்குத் தெரியும். இந்த றாத்தல வெட்டி யாருக்குத்தான் பேரு போடுறீங்களோ தெரியல . அநியாயமா ஆளுக வவுத்தில அடிக்காதீங்க."
"இந்தா முருகேசு, நீ கவனமா இரு . அன்னிக்கு கவ்வாத்துக் காட்டில என்னை வெட்ட வந்தே. அந்த வழக்கே இன்னும் முடியல. இப்பவும் கள்ளப்பேரு போடுறேன், றாத்தல வெட்டுறேன்னு சண்டைக்கு வாறே. தலைவரன்னா ஒனக்கு பெரிய கொம்புன்னு நெணைப்பா? எங்கிட்ட வால் ஆட்டேலாது.”*

Page 37
58 கவ் வாத்து
"யோவ், தேவையில்லாத டேச்செல்லாம் பேசாதீங்க. இன்னிக்கு வெட்டின றாத் தல ஆளுங்களுக்கு குடுக்காட்டி நம்ம யூனியனில சொல்லி இதுக்கு நடவடிக்கை எடுப்போம். இத லேசில் வுடமாட்டோம். என்றான் முருகேசு ஆக்குரோ சத்துடன்.
'என்னா, ஒன் யூனியன் மட்டுமா தோட்டத்தில இருக்கு. எல்லா ஆளுங்களுக்கும் சேத்துகான் நான் தோட் படத்தில வேல பாக்கிறேன். மத்த யூனியன் காரவுங்க எல்லாம் பேசாம இருக் காங்க; நீ மட்டும் பெரிசா துள்ளுறே .." கண்ட்க்டரின் வார்த்தைகள் அலட்சியமாக ஒலித் தன.
முருகேசு மெளனமானான். தோட்டத்தில் இப்போது ஒரு தொழிற்சங்கம் இருந்த இடத்தில் மூன்று தொழிற்சங்கங்கள் தோன்றிவிட்டன. தொழிலாளர்களிடை யே கடும் பிளவு ஏற்பட்டுவிட்டது. ஒரு தொழிற்சங்கம் எடுக்கும் முடிவுக்கு மற்ற தொழிற்சங்கங்கள் எதிர்ப்புக்காட்ட த் தொடங்கிவிட்டன. எல்லாத் தொழிற்சங்கங்களும் ஒன்றாகச் சேர்ந்து நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு பகைமை முற்றிவிட்டது.
முருகேசு யோசித்தான்.
இந்த நிலைமை இந்தத் தோட்டத்தில் மட்டுந்தானா நிலவுகிறது?
மலையகத் தோட்டங்கள் எங்கும் இதே நிலைமைதான்.
இது தோட்டத் தொழிலாளர் வரிக்கத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடு. இந்த நிலைமை மாறும்வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு விமோசனமே இல்லை.
இந்த நிலைமை மாறுமா ? - முருகேசுவின் மனம் தத்தளித்துக் கொண்டே இருந்தது.
(முற்றும்)

மலையக வெளியீட்டகத்தின் வெளியீடுகள்
சி. வி. சில சிந்தனைகள் 17-50
- சாரல் நாடன் " .
தியாக யந்திரங்கள் 11.00
- சு. முரளிதரன்
குறிஞ்சி தென்னவன் கவிதைகள் 12.00
- குறிஞ்சி தென்னவன் யெளவனம் . 25.00.
• - தேவதாசன் ஜெயசிங் - கூடைக்குள் தேசம் 10.00
- சு. முரளிதரன் தேசபக்தன் கோ. நடேசய்யப் 75.00 (இலங்கை சாகித்திய மண்டல பரிசு பெற்றது)
- சாரல் நாடன் ஒவியம் 10.00
- சி. ஏ. எலியா சன்
லாவண்யம் 25.00
- தேவதாசன் ஜெயசிங் மேகமலைகளின் ராகங்கள் 19.50
- மொழிவாதன் காந்தி நடேசையர் 10.00
- அந்தணி வா ܖ லயத்துச் சிறைகள் 50.00
− ܐ ܢ (மத்திய மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது) The Hill Country in Sri Lankan Tamil Literature
- Anthony Jeeva 25.00
மலையகமும் இலக்கியமும் 65.00
அந்த னரி ஜீவா
காற்றின் மெளனம் 50.00
பண்ணாமத்து கவிராயர்
Hill Country Publishing House 57, Mahinda Place, Colombo -6. (Sri Lanka)

Page 38
ஆசிரியரின் பிற
கால தரிசனம்
புதிய சுவடுகள்
(இலங்கை சாகித்திய மண்ட
குருதி மலை
(இலங்கை சாகித்திய மண்ட லயத்துச் சிறைகள்
(மத்திய மாகாண சாகித்திய
கிடைக்கும் இடங்கள்
(1) NEW PEAC PUSSELLAN
(2) 19/7, PERA
. KANDY.
(3) RAJASTHA PUNNALAI CHUN NAK
அடுத்து வெளிவரவிருக்கு
D66)
(மலையக

நூல்கள்:-
(சிறு கதைகள்) (யாழ்ப்பாண நாவல்) ல பரிசு பெற்றது)
(மலையக நாவல்) ல பரிசு பெற்றது)
(மலையக நாவல்) மண்டல பரிசு பெற்றது)
T
OCK GROUP, WA.
ADENIYA ROAD,
NY,
KKADDUVAN SOUTH, AM.
ம் படைப்பு :-
வாழை
நாவல்)

Page 39
நாவலாசிரியர் தி. ஞானசேகரன், மூன்று தசாப்தங்களாக மலைய வைத்திய அதிகாரியாகக்
யாற்றுகிறார். பேராதனைப் பல்கை வெளிவாரி கலைப்பட்டதாரியான "குருதிமலை", "லயத்துச் சில நாவல் கள் வாசகர்களின்
வரவேற்பைப் பெற்றதோடு , சாகித்திய மண்டலப் பரிசில்க பெற்றுள்ளன. குருதிமலை, அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. வைக்கப்பட்டுள்ளது. காலதரிசன சுவடுகள் (நாவல்) நூல்வடிவில் படைப்புகளாகும்.
மலையகத் தோட்டத் தொழலா சோக வரலாறு. தமது அடிப்ப செய்வதற்குக்கூட போராட வே அவர்கள், தமது போராட்டங்க முன்னெடுத்துச் செல்லமுடியா விடுகின்றனர்? வறுமையும் , " எப்படியெல்லாம் சின்னாபின்ன வார்த்தைகளுக்கும் அற்ப அவர்கள் எவ்வாறெல்லாம் பே இவற்றை இந்த குறுநாவல் தத் காட்டுகிறது.
Diego) KAJ ĈIUJ
ISBN 955 - 90

கடந்த கத்தில் fe 55 L (5) LO * || லக்கழக স্বাঙ্গে 钴 其他 இவரது 亨 நறகள் या பெரும்
அரசின்
ளையும்
மதுரை -
பட்டப்படிப்பிற்கு பாடநூலாக ம் (சிறுகதைத் தொகுதி), புதிய வெளிவந்த இவரது ஏனைய
கவிஞர் சு. முரளிதரன்
'ளர்களின் வாழ்க்கை ஒரு டைத் தேவைகளைப் பூர்த்தி ண்டிய நிலையில் இருக்கும் ளை ஒரே பேரணியின்கீழ் மல் ஏன் நிலை குலைந்து அறியாமையும் அவர்களை ப் படுத்தி விடுகிறது ஆசை சலுகைகளுக்கும் மயங்கி ாசம்போய் விடுகிறார்கள்! ரூபமாகப் படம் பிடித்துக்
சாரல் நாடன் தலைவர் கலை இலக்கியப் பேரவை