கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானசவுந்தரி

Page 1
|
|
 
 
 

।

Page 2

ஞான சவுந்த ரி
தென்மோடி நாடகம்
шяч и ай.
காவலூர்க் கவிஞர் ஞா. ம. செல்வராசா
பாடு வித்த வர். காவலூர் புனித அந்தோனியார் கல்லூரிப் பழைய மாணவர் சங்கத் தலைவர்
எஸ். செபஸ்தியாம்பிள்ளை
ugs u T S if a.s. பல்கலை வேந்தர்
சில்லையூர் செல்வராசன்
வெளியிடுவோர் காவலூர் புனித அந்தோனியார் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் கொழும் பு

Page 3
Gnanasavundari
A “THEN MODI” STYLISED PLAY
By KAVALOOR KAVGNAR G. M. SELVARASA
Written per request of
S. SEBASTIAMPILLAI PRESIDENT, O. B. A., ST. ANTONY'S COLLEGE
Published by ۔۔۔۔ KAYTS ST. ANTONY'S COLLEGE OLD BOYS ASSOCIATION, COLOMBO
First edition AUGUST, 1972
Price Rs... 2/5o
First edition and first season performance rights by publishers. All other subsequent rights reserved by author.
Edited by PALKALAI VENTHAR SILLAIYOOR SELWARAJAN

வெளியீட்டுரை
ஒரு புதினமான பின்னணியைக்கொண்டு பிறந்தது இந்த நூல். எதற்கோ தொடங்கிய ஏதோ ஒரு முயற்சி யிலிருந்து கிளைவிட்டு இந்நூல் உருவானது.
காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியின் நூற் ருண்டு விழா இவ்வாண்டு ஆவணித் திங்களிற் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நல்வேளையில் கல் லூரியில் தொழில் நுட்பப் பயிற்சிக் கழகம் ஒன்றைப் பெரும் மூலதனமிட்டு நிறுவும் நோக்குடன் கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய பிதா அல்பிரெட் பெஞ்சமின் முயற்சியில் இறங்கினர். இதையொட்டிக் கொழும் பிலும் கல்லூரிப் பழைய் மாணவர் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக என்னைத் தேர்ந் தெடுத்தார்கள்.
எங்கள் சங்கம் மேற்கொள்ளும் பணிகளில் ஒன்ருக, நூற்றண்டு விழாவில், பழைய மாணவர், கலாசார நிகழ்ச்சி ஒன்றை அர்த்கேற்றுவதெனத் தீர்மானித்தோம். இந்நிகழ்ச்சி ஒரு நாட்டுக்கூத்தாக அமைய வேண்டு மென்ற யோசனையை நான் முன்வைத்தேன். நம் ஊர்ப் பகுதிகளில் பிரசித்தமாக இருந்த நாட்டுக்கூத்துக்களில் நெடுங்காலம் எனக்கு ஈடுபாடிருந்தமையால் அக்கூத்தை மீண்டும் மறுமலர்ச்சிபெறச் செய்யவேண்டும் என்று பெரும் ஆவல்கொண்டு நான் வெளியிட்ட யோசனையைச் சங்கத்தவர்கள் பலர் மிக உற்சாகமாக வரவேற்ருர்கள்.
இத்துறைக்கு வேண்டிய திறமை முழுவதும் சங்கத் தவர்களிடமே இருந்ததைக் கண்டுகொண்டு காரியத்தில் இறங்கினேம். கல்லூரியில் பழைய மாணவரான பிரபல

Page 4
காவலூர்க் கவிஞர் ஞா. ம. செல்வராசா முற்றிலும் புதிதாக "ஞானசவுந்தரி' நாடகத்தை எழுதிக் கொ த் தார்கள். மற்ருெரு பழைய மாணவரான புகழ்பெற்ற அண்ணுவியார் நாரந்தன. அ. அருளப்பு அவர்கள் நாடகத்தைப் பயிற்ற முன்வந்தார்கள். கொழும்பில் உயர் பதவிகளில் தொழில்பார்க்கும் பலரும்கூட ஒன்றுசேர்ந்து முற்றிலும் பழைய மாணவர்களின் படைப்பாகவே, இந் நாடகத்தைக் கல்லூரி நூற்ருண்டுவிழாவில் மேடை யேற்றுகிருேம். _" -
நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடிக்கும் நாட றிந்த கவிஞரும் கலைஞருமாகிய பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன்" இதனை நூலுருவில் வெளியிடவேண்டு மென்ற யோசனையை முன்வைத்தார்கள். இயல், இசை நாடகமாகிய மூன்று துறை நுட்பங்களையும் அறிந்த அவரையே பதிப்பாசிரியராக்கி நாடக நூல் வெளியிடு கிருேம். Ti I || || L.
நூற்ருண்டு விழாவின் பின் கொழும்பிலும் மற்றும் மாகாண நகரங்களிலும் இந்நாடகத்தை மேடையேற்ற உத்தேசித்திருக்கிருேம். கல்விப் பணியின் ஒரு கிளே முயற்சியாகப் பிறப்பெடுத்தபோதிலும், நாட்டுக்கூத்துத் துறையின் துரித மறுமலர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக எங்கள் நாடக முயற்சி அமையுமென்றே நம்புகிருேம்.
இந்நாடகம் மேடையிலும் அச்சிலும் அரங்கேறக் காரணரான புலவர், அண்ணுவியார், பதிப்பாசிரியர், அச்சக அன்பர் ரா. கனகரத்தினம், என்னுடன் இத் துறையில் ஒத்துழைத்த த. நாகலிங்கம், ம. பிலோமின் வ. யோ, அலோசியஸ், யோ. செகராசசிங்கம், மற்றும்
சகல பழைய மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
եղ n- n + '
எஸ். செபஸ்தியாம்பிள்ளே 1- 8-72, ή - தலவர், காவலூர் புனித அந்தோனியார் கல்லூரிப்
பழைய மாணவர் சங்கம், கொழும்பு.

|-
புலவர்
பைந்தமிழிலே இந்தப் பா நாடகம் யாத்த சந்தக் கவிஞர் இவர் ! காவலூர் - தந்த நா வன்று மாறு: ரேல்னா ராசாவிருற் பிறந்த போன்னூட்டுக் கென்றும் Itaj !
சி. ரா.
அண்ணுவியார்
拂
踝
அண்றவியார்"ஏ அருளப்பு 1 மேடையிலே தள்ளும் குரலும் عة الاقد عر - விள்ாருள
ஆட்டம், நடிப்பும் அவர்க்குச் சரள் கூத்துப்
பாட்டுக் கவரே பயர்ா ! = f. kr -
| }

Page 5

ப தி ப் பு ைர
னெக்கு ஒரே ஒரு அக்காள் இருந்தாள். என்னிலும் எட்டு வயது மூப்பு. நற்குணம் என்று பெயர்.
அவளுடைய நற்குணங்களில் ஒன்று கலை ஈடுபாடு. என்னைப் போலவே புத்தகங்களிற் பித்து. பாட்டென் ருல் உயிர். கூத்தென்ருல் ஒரே கும்மாளம்.
எஸ்தாக்கியார், கருங்குயிற் குன்றத்துக் கொலை, சங்கிலியன் முதலாம் புகழ்வாய்ந்த தென்மோடி நாட கங்களை எழுதிய மதுரகவி சுபவாக்கியம்பிள்ளை என்னும் மாதகல் வ. சூசைப்பிள்ளைப் புலவர் உறவுமுறையில் ள்ங்களுக்குப் பாட்டனர். எங்கள் இளம் பராயம் அவர் நிழலில் விரிந்தது.
என் தந்தையில் அவருக்குத் தனி அன்பு. வயது பின்னிட்ட காலத்தில் அநேகமாகத் தினமும் எம் வீட்டுக்கு வருவார். சாய்கதிரையிற் படுத்துக்கொள்வார். அப்பு வாங்கி வைத்த கள்ளை அக்காவோ நானே பக்கத்தில் எடுத்து வைப்போம். நிமிர்ந்தமர்ந்து சில மிடறுகள் சுவைத்துவிட்டு "கேளுங்கோ மோனை" என்று தொடங் குவார். மோனை, எதுகை முகிழ்த்துப் பொலிய, முத்து முத்தான சொற்கள் கோத்த வித்துவப் பாடல்கள், அந்த வரகவியின் வாயிலிருந்து பொழியும்.
அக்காள் சமர்த்து புலவர் எனக்குக் கற்பிக்கும் யாப்பு, நிகண்டு, கோயிற் பாடல்கள், திரை விருத் தங்கள், கூத்துப் பாட்டுகள் எல்லாம் அடுக்களையில் வேலை செய்தபுடியிருந்தே கேட்டுப் பாடமாக்கிவிடுவாள். அந்தப் பித்து முற்றி, சுற்றுப்புறக் கிராமங்களில் எங்கே நாட்டுக்கூத்து நடந்தாலும் போகவேண்டுமென்று அடம் பிடிப்பாள். அவள் "அருவினை"க்காற்ருமல் அம்மா

Page 6
அழைத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். கடலைச் சரையு டன், கையிற் பாய், கம்பளங்கொண்டு, சில்லாலை, மாத கல், இளவாலை, ஊறணி தொடக்கம் கரம்பன், நாரந் தன, மீசாலை வரை, தூர இடங்களுக்கும் கால்நடை யாகப் போய்க் கூத்துப் பார்ப்போம்.
தேவசகாயம்பிள்ளை, எஸ்தாக்கியார், ஊசோன் பாலந்தை, கருங்குயிற் குன்றத்துக்கொலை, விஜய மனே க்ரன், திருஞானதீபன், கண்டி அரசன், சங்கிலியன், என்றிக் எம்பரதோர், செனகப்பு என்று பல நாடகங்கள். பார்த்துவிட்டுத் திரும்பினல் பத்துப் பதினைந்து நாட்க ளுக்குப் பாட்டுகள் காதில் கிணுகினுத்துக்கொண்டே இருக்கும். அக்காளுக்கும் எனக்கும் அதே தியானம். அவள் அண்ணுவி பொன்னுத்துரை என்றல், நான் *புகுந்தான்" யோசேப்பு. நான் சில்லாலை லூயிஸ் என் முல், அவள் சில்லாலைச் சவரிமுத்து.
அவளுக்குப் பாட்டுகள் மனன்ம். தேவசகாயம்பிள்ளை நாடகம் நாச்சியாருக்கு ஒருவரி விடாமல் முழுப்பாடம். கமுகம் மடலில் கிரீடம் வனைந்து, தும்புத்தடிக்கம்பில் குழை கட்டிச் செங்கோல் செய்து, பனைமட்டை வாளை இடுப்பிற் சொருகி, பழுத்தல் வானழ மட்டையில் நாக தாளி மை பூசிக் கசை தயாரித்து, இருவரும் நாட்டுக் கூத்தை எங்கள் வீட்டுக்கூத்தாக்குவோம். மேசையில் நிறுத்திய கதிரைக் கொலுவின்மீது மடித்துச் சாத்திய சாய்மானக் கதிரைப் படியிற் துள்ளிக் கால் மிதிக்க, மடித்த கதிரை அடித்துச் சாய, ஆள்மேல் ஆள் விழுந் தெழுமுன், கூத்துக் கசை மட்டை அம்மாவின் கைக்குப் போய் அது எங்கள்மேல் விழுந்தெழ. வீட்டுக்கூத்து பெரும் கோலாகலமாயிருக்கும். ۔۔۔۔
ਔ ስኙ
இந்தக் கோலாகலம் பிறகு எங்கள் பக்கக் கிராமத்து
வீடுகளிற்கூடக் காணுமற் போய்விட்டது.
ii

இடைக்காலத்தில் கிராமியக் கலைகள் அனைத்தின் மீதுமே ஏற்பட்டிருந்த உதாசீனம் நாட்டுக்கூத்தையும் துடக்குப் பொருளாக்கியதில் வியப்பில்லை. 'கூத்தாடு வதும் குந்தி நெளிப்பதும் ஆற்ருதவன் செய்யும் தொழில்" என்ற பழமொழி ஒச்சம் பெற்றிருந்த காலம் அது.
புகழ்பூத்த நடிகமணி பொன்னலைக் கிருஷ்ணன் அந்தப் பழமொழிக்கு ஒரு புது விளக்கம் சொல்லக் கேட்டிருக்கிறேன். "ஆற்ருது+அவன் செய்யும் தொழில்" என்று பதம் பிரித்து, தனித்திறமை வாய்ந்த கலைஞன கிய அவனுக்கேயன்றிப் பிறருக்கு அவன் தொழிலைச் செய்தல் ஆற்ருது என்பார் அவர்.
“ஆற்ருது, அவன் செய்யும் தொழில்" என்ற அந்தஸ்து சமீப காலமாகத்தான் கலைத்துறையாளனுக்கு ஏற்பட்டு வருகிறது. நாட்டுக்கூத்துப் போன்ற கிராமியக் கலைத் துறைகளும் மறுமலர்ச்சி கண்டுவருவதும், மீண்டும் சல்லாரி, சதங்கை, மத்தளச் சத்தங்கள் வடக்கிலங்கைக் கிரா மத்து மேடைகளிற் கேட்கத் தொடங்கியிருப்பதும் மிகவும் சந்தோஷம்.
சிங்கள மக்களிடையிலும், தமிழ் மக்களிடையிலும் நாட்டிற் பரவலாக ஏற்பட்டுள்ள தேசியப் புத்துணர்ச்சி யின் தாக்கம் இது என்பது உண்மையே. எனினும் நம் நாட்டின் பழம் பாங்கான நாடகங்களின் புதுமலர்ச்சிக்கு சிங்களக் களரியில் கலாநிதி சரத்சந்திராவும் தமிழ்க் களரியில் பேராசிரியர் சு. வித்தியானந்தனும் முக்கிய காரணர்களாக அமைகிருர்கள்.
நாட்டுக் கூத்துகளை மீட்டுயிர்ப்பிக்க வேண்டுமென, காலஞ்சென்ற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையவர்கள் தூண்டி எழுதிவந்தபோதிலும், நடைமுறையில் அதற் கான பெரும் உழைப்பை மேற்கொண்டவர் பேராசிரியர் வித்தியானந்தனே! குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் வடமோடி நாடகங்கள் புதுமதிப்படைய அவரே வழி கோலினர். பல்கலைக்கழக மாணுக்கர்களைக் கொண்டு
iii

Page 7
வடமோடி நாட்டுக்கூத்துகளை மேடையேற்றத் தொடங் கிய அவர் இற்றைவரை இத்துறையிற் செய்துள்ள சேவையைத் திரும்பிப் பார்க்கும்போது அது கணிச மாகவே தெரிகிறது.
இராவணேசன், நொண்டி நாடகம் முதலாம் சில நாடகங்களை மேடையேற்றியது போக, மட்டக்களப்பு, மன்னர் டாவட்டங்களிற் பயின்றுவரும் சில நாடக ஏடுகளைத் தேடிப் பதிப்பித்தும், கூத்து விழாக்கள், அண்ணுவிமார் மகாநாடுகள் நடத்தியும், பழைய நாட கத்துறையினரைக் கெளரவம் செய்தும், கூத்துப் போட் டிகள் நடாத்தியும் பயனுள்ள பணியாற்றியுள்ளார் அவர்.
ஆயினும் அவர் வழிவந்து யாரேனும் அத்துறையில் தொடர்ந்துழைத்து அதனை முன்னெடுத்துச் செல்லும் அள வுக்கு, அவர் பணி உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாமற் போய்விட்டது வருத்தம் தருகிறது. கலாநிதி சரத்சந் திராவின் "மனமே", சிங்கபாகு ஆகிய நாடகங்களின் தாக்கம் சிங்களத்தில் நரிபேன, ஆண்டி டிக்காய் அம்ப லமாய் போன்ற நாடகங்களாய்க் கிளைத்துச் செல்ல, விேத்தி* மேடையேற்றிய இராவணேசனும், நொண்டி நாடகமும் "வாகையடி முக்கில் வந்து குடிபோட்ட கதையாகத் தரித்தமை விசனத்துக்குரியதே! வடமோடிப் பாங்கான இராவணேசன் பழைய கூத்தின் புதிய சுருக்க மேடையேற்றமாகவே முடிந்தது. நொண்டி நாடகம் தென்மோடி நாடகமெனக் கூறப்பட்டபோதும் வட மோடிப் பாங்குடையதாகவே அமைந்தது. இவை அரங் கேறி நெடுநாட்களின்பின், இராவணேசனன? சி. மெளன குரு புதிதாக எழுதித் தயாரித்த சங்காரம்" என்னும் கூத்தையும் “வித்தி'யின் நேர்த்தாக்கத்தாற் பிறந்த தெனக் கொள்ள முடியவில்லை.
வித்தியானந்தன் அவர்கள் இவ்வளவு உழைத்தும், அவர் நாட்டுக் கூத்துத் துறையில் வேர்-நிலை மலர்ச்சியை :யன்று; தளிர்-நிலைத் துளிர்ப்பையே ஏற்படுத்தினர் என்ப
ι ν

தையே, இந்நிலை உணர்த்துவதாகத் தோன்றுகிறது. பழைய ஏடுகளையே, கால விரயத்தைமட்டும் கருதிச் சுருக்கி, ஆட்டம், பாட்டு, உத்திமுறைகளைப் பொருத்தம்பொருந்தாமை பாராமல் அப்படியே கனம்பண்ணி, நாட்டுக்கூத்தை அவர் நாகரிகப்படுத்தியதோடு நிற்கா மல், நவீனப்படுத்தியுமிருக்கலாமென்று எண்ணவேண்டி யிருக்கிறது.
“வித்தி"யின் வருகைக்குப் பிறகு, இத்துறையில் அண் ணுவி மரபு நாடகங்கள் என்ற சொற்ருெடர் ஒன்றும் அடிபட்டு வருகிறது. அவரைத் தொடர்ந்து அச்சொற் ருெடரைப் பிரயோகிக்கிறவர்களும் சரியாக அப்பெயரை அர்த்த நிர்ணயம் செய்திருப்பதாகத் தெரியவில்லை.
'*நாட்டுக்கூத்துகளோ விவிதம். வடமோடி, தேன் ம்ோடி ன்ன் கிருேம். தென்மோடியிலேயே வட பர்ங்கு, தென் பாங்கு என்று கிளைகள். விலாசக்கூத்து, வாசாப்பு, சபா, கொட்டகைக் கூத்து, மேளக்கூத்து, ட்ரும்ா என்று பவவற்றைக் கேள்விப்படுகிருேம். இவற்றில் எதை ள்தை அல்லது சக்ட்டுமேனிக்கு எல்லாவற்றையும் சேர்த்தா - அண்ணுவி மரபு நாடகம் என்கிருர்கள் என் பதை நிர்ணயித்தறிவது நல்லது.
யாழ்ப்பாண மாவட்டத்திற் பயின்றுவரும் தென் மோடி நாடகமோ நிர்ணயமான உருவங்கொண்டது முழுக்க முழுக்கக் கத்தோலிக்க சமூகத்தவர்களே இன்று தென்மோடி நாட்டுக்கூத்துக்களை ஆடிவருகிருர்கள் என லாம். இத்துறையிற் பிரசித்தமான அண்ணுவிமார்களான காலஞ்சென்ற கோமாளிச் சவரிமுத்து, கட்டைச் செல் லையா, ம. கி. பொன்னுத்துரை, சில்லாலை லூயிஸ் போன்றேரும், வாழ்ந்துவரும் நாட்டுக்கூத்துச் சக்கர வர்த்தி புகுந்தான் யோசேப்பு, நாரந்தனை அ. அருளப்பு, சில்லாலைச் ச்வரிமுத்து முதலாம் பலரும் கிறிஸ்தவ சம யத்தவர்களே! கிறிஸ்தவப் பின்னணிகொண்ட கதை களைப் பேசும் தென்மோடி நாடக ஏடுகளே இன்று கிடைப் பது இதற்கு முக்கிய காரணமாகலாம்.
V

Page 8
தமிழகத்தில் கர்நாடக சங்கீதத்தின் வருகைக்கு முன்பிருந்த பழந் தமிழிசையின் பண்முறைகளை, தென் மோடி நாட்டுக்கூத்துக்களை ஆராய்ந்தால் கண்டறிய லாம் என்று பேராசிரியர் கணபதிப்பிள்ளை பெருமைப் பட்ட புராதன பாரம்பரியம் வாய்ந்த நாட்டுக்கூத்தில் இடம்பெற்ற பழைய தமிழ்க் கலாசார, சமய நாடக ஏடு சள் என்ன வாயின ? அவை கவனிப்பாரற்று எவ்வாறு அழிந்துபோயின?
கத்தோலிக்க சமயத்தை ஈழத்துக்குக் கொண்டுவந்த மேஞட்டார் வருகையின் போது அவை மிகச் செல்வாக் குடன் திகழ்ந்திருக்க வேண்டும். சமயம் மாறியவர்களும் கூட, சலாசார மாற்றத்துக்கு இசைந்துபோகவில்லைப் போலும். எனவே கடைப்பிடிக்கப்பட்ட அதே கலா சாரத் துறைகளின் ஊடே தம் சமயக் கருத்துக்களை மட்டும் நுழைத்து, அத்துறைகள் மேலோங்கும்படியான பொருளாதார ஊக்கங்களை அம்மேனுட்டார் வழங்கி யிருக்க வேண்டும். அந்த வகையிற் பிறந்த தென்மோடி நாடகங்களே கத்தோலிக்கர் மத்தியில் ஆடப்படுவன. இந்நாடகங்கள் பிறநாட்டுச் சமயப் பண்பாட்டுப் பிர சாரத்துக்கு நல்ல கருவிகளாயின. Emperor Henrgயின் வரலாறு என்றிக் எம்பரதோர் நாடகமாயிற்று. ஈழத் தின் முதலாவது தமிழ் நாவலுக்குக் கருவாயமைந்த Orson and Walentine என்ற கதை ஊசோன் பாலந்தை நாடகமாயிற்று. கண்டி அரசன், சங்கிலியன் நாடகங் களும்கூட மேனுட்டார் கண்ணுேட்டத்தில் இருவரையும் இழிவாக நோக்கும் கதைப்போக்குக் கொண்டவையே!
பொருளாதார ஒத்தாசைகளுடன் இந்த நாடகங்கள் பிரசாரக் கருவிகளாகப் பிரசித்தம்பெற, மதம் மாறிய தாழ்ந்தவர்களாலும்கூட ஆடப்படும் இழிந்த கலை உரு வம் என்ற ஒருவித உதாசீன மனப்பான்மையுடன், தென் மோடி நாட்டுக் கூத்துத் துறையையே, மதம் மாருத தமிழினத்தவர்கள் கை நெகிழ்ந்திருக்கக்கூடும். இவ்வாறு
vi

தமிழ்ச் சமயப் பண்பாட்டுக் கதைகள் கொண்ட பண் டைய தென்மோடி நாடகங்கள் அழிந்திருக்கலாம்.
ラエ
கத்தோலிக்க மக்களும்கூட, தாம் கவனக்குறைவாக இருந்த இந்தத் தென்மோடி நாட்டுக்கூத்துத் துறையில், தற்போது சிரத்தை காட்ட ஆரம்பித்திருக்கிருர்கள். தேவசகாயம்பிள்ளை, எஸ்தாக்கியார் போன்ற சில நாட கப் பிரதிகள் நூலுருவமும் பெற்றுள்ளன.
இக்கூத்தை மேலும் வளம்படுத்திப் பொதுமைப்படுத் திப் புதுமைப்படுத்தினுல் ஈழத்தமிழ் நாடகம் என்று சுட்டிச் சொல்லக்கூடிய பொருத்தமான புதிய நாடக உருவம் ஒன்று நமக்குக் கிடைக்குமென்பது என் துணிபு
தென்மோடி நாடகத்தின் சகல அம்ச நுட்பங்களை யும் தெரிந்தாய்ந்துகொண்டு, புதுவதாக மேனுட்டு நாட கத்துறைகளிலும் பயின்று வரும் உத்திகளும் அறிந்த வர் சள், சீர்மை கெடாமல் சங்கமித்துப் பிறக்கும் புதிய நாடக உருவம் ஒன்றை, ஆக்க முடியுபென்றே நான் நம்புகின்றேன்.
எந்த நாட்டிற்கும் இனத்திற்கும் மொழிக்கும் அத னதன் பண்பாடுகளைப் புலப்படுத்தும் வன்மைகள் கொண்ட பிரத்தியேகத் தன்மைவாய்ந்த நாடக உருவம் ஒவ்வொன்றுண்டு. நமக்கென இந்த நாடக மரபுமுறை செறிந்துள்ள தென்மோடி நாட்டுக்கூத்தைப் புதுக்குவ தொன்றே நாம் செய்யவேண்டிய பன .
இதற்கு என்ன செய்ய வேண்டும்? உதாரணத்துக் குச் சில சொல்லலாம். தென்மோடி நாட்டுக்கூத்தின் ஆட்டமுறை, பாட்டு முறைகளிற்கூடக் காலத்தாற் பய னிழந்து போனவற்றை அண்ணுவிமார் ஆராய்ந்து நீக்கிப் புதிய மேனுட்டுத் தொழில்நுட்ப உத்திமுறைகளைச் சேர்த்தும் கொள்ளவேண்டும். பழைய வட்டக்களரி, சதுரக் களரிகள், அதிக மக்களைக் கேள்வித்தொலைக்குள்ளும் பார்வைத்தொலைக்குள்ளும் அடக்கும் தேவையை ஒட்டிப்
vii

Page 9
பிறந்தன. ஒலிபெருக்கி இல்லாத அக்காலத்தில் பாடல் களின் தொனிப் பெருக்கத்தைப் பிற்பாட்டு முறையாற் சமாளித்தார்கள். சுற்றியமர்ந்த மக்கள் அனைவரும் நடிகர் முகபாவங்களைக் காண்பதற்காக, எட்டுப்போடு தல், வட்டம்போடுதல், அரை வட்டம்பேஈடுதல் போன்ற ஆட்ட முறைகள் இடம்பெற்றன. ஒலிபெருக்கியும், ஒரு புறச் சபையமைந்த கொட்டகைமேடைகளும் வந்து விட்ட இக் காலத்தில் இவற்றிற் பல கைவிடப்படலாம்.
புதிதாக இவ்வாறு நெறிசெய்யும் நாடக உருவ்த் தையும் பாட்டு மெட்டுக்களையும் தேர்ந்துகொண்டு புதிய நாட்டுக் கூத்துக்களைக் கவிஞர்கள் எழுதவேண்டும். நவீன சமூகக் கருத்துக் களை வெளியிட, பழைய நாட்டுக்கூத்து உருவம் போதிய வலிவுடைய சாதனமா என்ற கேள்வி எழலாம். மேனுட்டு என்றிக் எம்பரதோர், ஊசோன் பாலந்தை கதைகளையே நம் குக்கிராமத்தவர் களுக்கும் எடுத்துச் சொல்லச் செம்மையாகப் பயன்பட்ட உருவம் அது என்பதை நினைவுகூர்ந்தால் இந்தக் கேள் விக்கு இடமில்லை. (Berto Brecht) பேட்டல் பிரெச்ட் போன்ற மேலைய முன்னணி நாடக ஆசிரியர்கள், (Chak Circle) சுண்ண வட்டம் போன்ற புகழ்வாய்ந்த நவீன நாடகங்கள் சிலவற்றுக்கு உபயோகித்துள்ள உருவம், நம் நாட்டுக்கூத்துப்போன்ற கிழக்கத்திய பழம் நாடகங் களில் வேர்கொண்டதுதான் என அவர்களே ஒப்புக் கொண்டிருப்பதையும் மறப்பதற்கில்லை. நம்முடைய கற் பூரவள்வி இலையை அவர்கள் எடுத்து வல்மெலிக்ஸ் தடிமல் மருந்தாக்கித் தரக் குடிப்பதைவிட்டு, நாமே எம் மூலப்பொருள்கள் கொண்டு புதியன படைத்துக் கொள்வது சிலாகிதமானது.
தென்மோடி நாட்டுக்கூத்துப் பாட்டுகளின் ராகங்கள் பல மறைந்து வருகின்றன. வர்ணம், சிந்து என்று தருக் களுக்கும் சந்ததம், ஆசிரியம், கழிநெடில் என்று விருத் தங்களுக்கும் நாமகரணம் செய்தால் அவற்றை இனங் கண்டு பாடமுடியாதே என்று அத்துறையிற் பயிலுவோர் அஞ்சி, முன்பு பயின்ற ஒரு பாடலின் தலைப்பை ஈந்து,
viii

"இன்ன மெட்டு என்று பாடல்களைக் குறிப்பாலுணர்த் தும் நிலையே இன்று இருக்கிறது. சுருதியையும் ராகத் தையும்விட, பாணியையும் தாளத்தையுமே முக்கியமாகக் கருதி நாட்டுக்கூத்துகள் பயின்று வந்துவிட்டமையால் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கும் நிவாரணம் தேவை.
கிராமியப் பாடல்களைப் பெரும்புரலும் நாமநாதக் கிரியை, ஆனந்தபைரவி, புன்னுகவராளி, செஞ்சுருட்டி மு காரி, உசேனி, பைரவி போன்ற குறிப்பிட்ட ராகல் களிலேயே பாடவேண்டுமென்று கர்நாடக சங்கீதத்தில் ஒர் அமைப்பு உண்டு. தென்மோடி நாட்டுக்கூத்திலும் இந்த ராகங்களே பெரிதும் பயின்றுவருகின்றன. இவற்றை ஆராய்ந்து, புதிதாக நாட்டுக்கூத்து நூல்களை அச்சேற்றும் போது, ஒவ்வொரு பாட்டையும் மெட்டுக்குப்பதில் அதற் குரிய சங்கீத ஸ்வர வரிசையோடு வெளியிட்டால், காலக்கிர மத்தில் பாட்டுகளின் மெட்டுகளை இனங்கெட்டுப்போகா மற் பாதுகாக்க முடியலாம்
இவ்வளவு சிரமங்களையும் மேற்கொண்டு, நாட்டுக் கூத்துப் போன்ற பழந்தமிழ்க்கலை உருவம் ஒன்றைப் பேணும் முயற்சி, இலங்கையில்தான் மேற்கொள்ளப் pடக்கூடிய வாய்ப்புண்டு. ஏனெனில், தென்னிந்தியத் தமிழகத்தில் "தெருக்கூத்தாகி"ச் சீரழிந்து நிற்கிறது இப் பழங் கலைவடிவம். ":
"வேரோடு புல்லைப் - பிடுங்கினஞ?' என்று ஒருவர் பாட, பொருள்விளங்கார் ஈற்றுச்சொல்லை வெறும் தாளத் திற்குப் பிரித்து 'டுங்கினன, டுங்கினணு" என்று பிற் பாட்டாகப் பாடும் நிலையில், ‘டிங்கினுளு கதியை அங்கு நாட்டுக்கூத்து அடைந்துள்ளது. அரிச்சந்திரன் கூத்தின் மயான காண்டத்தைக் கேலிசெய்யும் தென்னகத் தமிழ்ச் சினிமா ஒன்றை, பார்த்தவர்கள் மறந்திருக்க Lon Lடார்கள். மாற்ருக அதே மயான காண்டம் காட்சி
ix

Page 10
நடிகமணி வைரமுத்துவால் நடிக்கப்பட்டு, ஈழத்து *நிர்மலா சினிமாப் படத்தில் மகிமைப்படுத்தப்பட்டதை ஒப்புநோக்கி உண்மையை உணரலாம்.
米 米
நாட்டுக் கூத்துத் துறையைப் பேணி வளர்க்கும் நன் முயற்சி ஈழத்தில் மேலோங்குவதற்கான ஓர் அறிகுறியாக அமைகிறது இந்த “ஞானசவுந்தரி நாடக நூல். முற்றி லும் புதிதாக எழுதப்பட்டது இத் தென்மோடி நாடகம் என்பதும், படித்துப் பட்டம் பெற்று உயர் பதவிகள் வகிக் கும் பலரும்கூட அக்கறை கொண்டு இதை எழுதுவிக்க வும், மேடையேற்றவும், அச்சேற்றவும், இதில் நடிக்கவும் முனைகிருர்கள் என்பதும் சுப சூசகங்கள்.
தென்மோடி நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு நான் இங்கு தெரிவித்துள்ள நம்பிக்கைகள் விரைவில் நிறைவேறப் போகின்றன என்பதை "வருமுன் காட்டும்" நாடகமாக அமையும் “ஞானசவுந்தரி'யைப் பாடிய புலவர் ஞா. ம. செல்வராசா, எனக்கு ஒரு முன்னுேடியாகக் காட்சி தருகிருர், −
அவர் எழுதியுள்ள இந்த நாட்டுக் கூத்துப் பாட்டு களைவாய்லிட்டுப் பாடும்போது, இத்துறையில் ஈடுபாடு கொள்ள, அந்தச் சின்னஞ் சிறிய வயதில் எனக்குப் பென்னம்பெரியதுாண்டுகோலாய் இருந்த, அந்த ஒரே ஒரு அக்காளின் நினைவு வருகிறது.
கண்கள் பனிக்கின்றன.
மேலே எழுத முடியாமல், கண்களை நீர்த்திரை மறைக் கிறது.
-சில்லையூர் செல்வராசன்

ஞா ன ச வு ந் த ரி ந | ட கம் வரவு முறைப்படி நடிகர் நாமாவளி
கட்டியகாரர்
தரும இராசன் (முன்)
, , (பின்) லேனுள் மந்திரி சேனதிபதி
சங்கப் புலவர் மத போதகர் ஞானசவுந்தரி (முன்) , (பின்) சிமியோன் இராசன் சிமியோன் மனைவி
மந்திரி (முன்) , (பின்) பிலேந்திரன் (முன்) , (பின்)
குடிமக்கள்
சேவகர்
தோழிகள்
துர்துவன் முனிவர் தேவதூதன் பூரிமார்
யுவன்ரினஸ் தம்பு கசியன் செகராசசிங்கம் சுவாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை டெனிஸ் டேவிட்
குவின்ரன் அந்தோனிப்பிள்ளை குருசுமுத்து பிரான்சிஸ் சேவியர் மனுவேற்பிள்ளை ஜோர்ஜ் ஞானப்பிரகாசம் மரியநாயகம்பிள்ளை யூபேட் தேவதாஸ் செபஸ்தியாம்பிள்ளை விமலநாதன் அம்புருேஸ் பீற்றர் நீக்கலஸ் இராசநாயகம் மரிசால்பிள்ளை அகஸ்தீன் பொஞ்சின் தம்பு தம்பையா நாகலிங்கம்
சில்லையூர் செல்வராசன்
வஸ்தியாம்பிள்ளை இராயப்பு சவரிமுத்து ஸ்ரனிஸ்லோஸ் பர்நாந்து அல்பேட் அந்தோனிப்பிள்ளை செல்வகுமார்
யோகேந்திரன் சேவியர் டெனிஸ் அலோசியஸ் மொறிஸ் செகராசசிங்கம் யுவன்ரினஸ் தம்பு
யோசேப்பு செகராசசிங்கம்
தம்பு சிவநாதன்
இராசகுமார் அகஸ்தீன் வஸ்தியாம்பிள்ளை யோசேப்பு அலோசியஸ் செல்லையா சச்சிதானந்தசிவம் uostuur of sira GsmrufôsắT

Page 11

t
யேசு மரிய சூசை துணை
காப்பு விருத்தம்
சீர் மருவு சென்னிமிசை மகுடஞ் சூடிச்
செப்பரிய ருேமைமா நிகர மாளும் ஏர்மருவு தர்மம க ராசன் தம்மின்
எழில்மேவும் புத் திரியாய் இகத்தில் வந்த பேர்மருவு ஞானசவுந் தரியாள் காதை பேருலகில் நாடகமாய்ப் பாடுதற்கு கார் மருவு முகில் கிழித்த கதிரோன் போர்த்த
கன்னிமரி பொற்சரணம் காப்புத்தானே.
கட்டியன் தரு (வாரும் வாரும் என்ற மெட்டு)
சீரிய ருேமையாள் மன்னவன் - தர்ம செம்மலென்ருேதிடுந் தென்னவன்
பாரினின் மீதிலே வருகின்ருர் - வந்து பாருங்கள் அவர் அன்பு தருகின்றர்.
பூ மலர் மாலைகள் சாற்றுங்கோ - அவா பூம்பாதம் நின்றுமே போற்றுங்கோ தே மலர் பன்னீர்கள் ஊற்றுங்கோ - பாதம் தேடி ஆலாத்திக ளாற்றுங் கோ,
தென்னங்க முகுகள் நாட்டுங்கோ அதர்ம தென்னவனுக் கன்பு காட்டுங்கோ வண்ணமணிப்பந்தல் போடுங்கோ - நல்ல கன்னித்தமிழ்க் கவி பாடுங்கோ.

Page 12
முத்து மணிக்கம்பம் நாட்டுங்கோ - நல்ல சித்திரக் கேடயம் பூட்டுங்கோ ரத்ன மணிமாலை சூட்டுங்கோ - சூட்டிப் பத்தி விசுவாசம் காட்டுங்கோ.
வசனம்
இராசாதி ராசன் ராசமார்த்தாண்டன் தர்ம மகாராஜன் கொலுவிற்கு வரு
கிருர் சமூகம் எச்சரிக்கை,
றேட் சின் தர்மராசன் கொலு வரவு கவி
விருத்தம்
வல்லரிகின் னரநாதஞ் சுருதிமீட்ட
வார்முரச நாதசுரகுழல்கள் கூவ மெல்லியபூங் கொடியிடையாள் நடனமாட
மேனகை ஊர்வசி மடவார்குடைகள்தாவ துல்லிபஞ்சேர் நாற்படையுந் துணையாய்ச் சேர
தோகையர் சாமரை வீச மலர்கள் தூவ சொல்லரிய வெள்ளான ரதe தேறிச்
சுந்தரனும் தர்மனவர் சபை வந்தாரே.
தர்மராசன் கொலுத் தரு (அதியுக்ரம லோலன் எ. மெ.)
l.
மணிமுத்தொடு வயிரம் - வைடூரியம் மருவுற்றிடுமுடிசூழ் - மகிபன் நான் அணிவுற்றிடுபடை நடையுற்றிடுவடி வழகுற்றிடு மணிக் கொலுவிற் செல்வேனே.
. பகையுற்றிடு மரசர் - எனதடி
பணிவுற்றனுதினமும் - பரிவுடன்
நகையுற்றிடு முகவடிவுற் றிடுதிறை நலனுற்றிடு கெர்லுநாடிச் செல்வேனே.
2

3. நெறியுற்றிடு நீதி - விளங்கிடும்
நிலை பெற்றிடு கீர்த்தி - துலங்கிடும் அற னுத்தம தயை பொறை நற்குணமுறு அதியுத்தம தர்மன் கொலுவிற் செல்வேனே.
இராசா வசனம்
வழுவாச் செங்கோல் செலுத்தி அரசாளுவேன்,
( 点 ளு
மாளிகை சீன்
சிங்காசனத்தருகில் மந்திரி, படைத்தலைவன், மதக்குருக்கள், சங்கப் புலவர்கள் வீற்றிருத்தல், அரசனைக் கண்டு எல்லோரும் எழுந்து ஆசாரம் பண்ணுதல்.
தர்மராசன் விருத்தம்
துங்கமுறும் எனதரிய மதிவல் லோனே
துலங்கு படை அதிபதியே சத்யவேத சங்கை மிகும் போதகரே உரையா ராய்ந்து
சார்ந்த தமிழ் வளர்த்த பெரும் புலவீர் இன்று எங்கள் திரு ருேமை நகர் வளமை யாவும்
எனது இரு செவி குளிர இயம்பு மாறு தங்கமணிக் கொலுவிருந்து விளம்ப லானேன்
தனித்தமிழில் இனித்தவுரை சாற்றுவீரே.
நாட்டு வளப்பம்
தர்மராசன் தரு (தேசம் துதிக்கும் எ. மெ.)
நலங் கொள் மதி வல்லோனே இலங்கும் எனது நாட்டில் துலங்கும் வளங்கள் யாவும் விளங்கிடக் கூறும்

Page 13
மந்திரி தரு
மாதம் மழை பொழிந்து சீதம் வயல் மிகுந்து ஒதும் வளத்தில் பேதம் இல்லை யென் ன ரசே
தர்மராசன் தரு நாட்டைக் காத்திடுமெந்தன் கோட்டை கொத்தளமெல்லாம் சேட்ட முடனுளதா சேஞதி பதியே
சேணுதிபதி தரு காணும் பகைவர் வந்தால் நாணும் படிக்கு ஒவ்வோர் சாணும் காவற்றுறைகள் தோணுது மன்ன
தர்மராசன் தரு சாற்றும் சத்திய வேதம் ஏற்றமுடன் வளர்ந்து போற்றித்துதிக் கின்ருரா புகலும் போதகரே
போதகர் தரு காலை மாலையும் பலிப் பூசைவேளையும் செப மாலைப் பிரார்த்தனைகள் ஒதுருர் மன்ன
தர்மராசன் தரு வங்கம் வடநா டெங்கும் சிங்கத் தமிழ் வளர்க்கச் சங்கம் நிறுவு முரா சாற்றும் பா~ லரே
4.

புலவர் தரு
தொன்மைக் காப்பிய மோடு நன்னூல் குறள் சிலம்பும் பன்னூல் தமிழ் வளர்ந்து பலுகுது மன்ன
தர்மராசன் விருத்தம்
உளமகிழ்ந்து உரைத்த நகர் வளமை கேட்டு
உச்சியெல்லாம் மிகக்குளிர்ந்து மகிழ்ச்சியானேன்
வளமிகுந்த எனது திரு ருேமை இன்னும்
வளர் மதிபோல் வளர்ந்து வளங் கொழித்துவாழ
நலம் மிகுந்த பணியாற்றிப் படைபட்டாளம் நாற்றிசையும் வைத்து நாவினித்துப் பேச இளம் வயதுப் பிறை மிதித்த தேவதாயின்
எழிற் பதத்தை இரு கரத்தால் இறைஞ்சுவோமே
தர்மராசன் வசனம்
மந்திரி சபையோரே! நமது நாடு நகரின் வளமை கேட்டு மிகவும் மகிழ்ச்சி
யானேன். இன்னும் நமது நாட்டிலே செங்கோல் செழிக்கவும் செல்வங்
கொழிக்கவும், பஞ்சம் அகலவும் படைப்பட்டாளம் சிறக்கவும் பரிசுத்த தேவ
தாயாரின் கருணையை அனுதினமும் இறைஞ்சி மன்றடுவோமாக.
(மாளிகை சீன் விழுதல்)
மீண்டும் மாளிகை சீன்
தர்மராசன் தனித்துக் கொலுவிருத்தல்
கட்டியகாரனுக்குச் சொல்லும் விருத்தம்
வாணிளம் பிறையை யொத்த வடிவலங் காரியான தேனினுமினிய ஞான சவுந்த ரிச் சேயாள் தன்னை பானது ஒளிகாலிக்கும் பளிங்கு மாளிகையின்முன்பு நானழைத் திட்ட செய்தி நவிலு வாயறியத் தானே.
s

Page 14
தர்மராசன் வசனம்
கட்டியகாரனே! எனது செல்வக் களஞ்சியமான ஞானசவுந்தரியை நான்
அழைத்ததாகக் கூறுவாயாக.
ருேட் சீன் ஞானசவுந்தரியும் இரு சேடிகளும் வரவு தரு ஞானம் தரு (பொங்கும் எ. மெ.)
வானம் வையகம் காக்கும் ஞான சொரூபா போற்றி ஈனரெம்மையே மீட்ட யேசுரட்சகா போற்றி
முதலாம் சேடி தரு
கர்மவினை போக்கிய கன்னி பாலகா போற்றி தர்மராச ஞட்சியைத் தற்காக்கும் சீலா போற்றி
ஞானம் தரு பாதி மதியணிந்த பரம தாயாரே போற்றி சோதி சோமனைக் கொண்ட சுந்தரியாளே போற்றி
இரண்டாவது சேடி தரு
வானத் திருந்து மன்னு வையம் தந்தவா போற்றி கானன் தேசத்தில் ரசம் காணச் செய்தவாபோற்றி
ஞானம் தரு
மாசில்லாதுற் பவித்த மாமரித்தாயே போற்றி பூசித ஞான முேசாப் பூவே பூரணி போற்றி
முதலாம் சேடி தரு
கட்டளை பத்தும் தந்த கர்த்தாவே போற்றி போற்றி துட்டர் சிலுவையிட்ட தூயவா போற்றி போற்றி,
6

ஞானம் தரு
மன்னன் தாவீதுகுலம் வந்த மாதவா போற்றி அண்ணல் ஏரோது கொன்ற அற்புதா போற்றி போற்றி
இரண்டாம் சேடி தரு அஞ்சு காயனைத்தந்த அமலோற்பவமே போற்றி
கெஞ்சும் அடியார்க் கெல்லாம் கிருபை செய்பவா போற்றி
மாளிகை சீன்
தர்மராசனும் லேணுளும் கொலுவிருத்தல்
ஞானசவுந்தரி இன்னிசை
அன்னையில்லாத என்னை அருகினிலிருத்திவைத்து கன்னல் தேன் பாலுமூட்டிக் களப கஸ்து7ரிவாசப் பன்னீரால் முழு கவார்க்கும் பார்த்திபத்தந்தா யென்னை இந்நேரமழைத்த செய்தி இயம்புவீர் அறியத்தானே.
தர்மராசன் தர்க்கத் தரு (மாதரார் எ. மெ.)
தர்மராசன் தரு வானின் இளம் பிறையே - நிதம்நான் வணங்கும் திருமறையே தேனின் மிகுஞ்சுவையே - எனதரும் செல்வமே வந்திடடி
லேனுள் தரு
மானின் விழியழகி - மணிமுடி மன்னர் குலப் புதல்வி
நானுனக்கே உதவி - ஒடிவாடி நங்கையே தேன் கதலி

Page 15
ஞானம் தரு
ஆசை மிகுந்தவரே - என்ன ரிய அன்பான பெற்ருேரே வாசல் அழைத்த செய்தி - எனக்கு வடிவாயுரைப் பீரே
தர்மராசன் தரு
கர்த்தன் பிறந்திறந்த - திருத்தலங் கண்டு மகிழ்ந்து வர சித்தங்கொண்டேன் விருப்பாய் - அதுமட்டும் சின்னம்மா வோடிருப்பாய்
ஞானம் தரு
அன்னையரை இழந்தும் - இன்று எந்தன் அப்பரை நான் பிரிந்தும்
என்ன விதம் இருப்பேன் - கவலையை எப்படி நான் பொறுப்பேன்
லேனுள் தரு
கண்ணின் இமை போன்று - உனப்பாது காப்பேன் பலவாண்டு என்னதுய ருனக்கு - அதைநீ எடுத்துரைப்பா யெனக்கு
தர்மராசன் தரு
அஞ்சாதே ரஞ்சிதமே - சின்னம்மா அளிப்பாள் மிகச் சுகமே நெஞ்சு கலங்காதே - அவளுடை நேர்மை விளங்காதே

ஞானம் தரு :
அன்பு இருப்பதுண்மை - ஆனலுமென் அப்பர் இருந்தால் நன்மை இன்பம் எனக்காரு - இருந்தால் எடுத்து இப்போ கூறு
லேனுள் தரு பக்கம் படுக்க வைப்பேன் - பன்னீரால் பளிங்கு முகம் துடைப்பேன் எக்கணமும் பிரியேன் - பிரிந்திடில் இந்த இடம் தரியேன்
ஞானம் தரு
துக்கம் விட்டேன் அறிவீர் - அப்பாநீர் துணிவுடன் போய் வருவீர் அக்களிப் பே பெறுவீர் - எந்தனுக்குன் ஆசிர் வாதம் தருவீர் in i , , ,
தர்மராசன் விருத்தம்
அஞ்சுகமே நீ பகர்ந்த மொழியினலே
அடக்கமுடியாத பெரும் மகிழ்ச்சியானேன் வஞ்சகமோ அறியாவுன் சிறியதாயார்
வதன இதழ் வாடாது பாதுகாத்து நெஞ்சணைத்துப் படுத்திடுவாள் நிதம் பன்னீரால்
நில வெழுமுன் முகங்கழுவி அழகு பார்ப்பாள் கொஞ்சிடுவாள் பூப்புனைவாள் குறையோ செய்யாள் கோமளமே போய்வருவேன் பயப்படாதே.
தர்மராசன் வசனம்
என் செல்வக் களஞ்சியமே! உன்னைப் பெற்ற அன்னேயைப்போல் சிற்றன்னை யானவள் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக் கொள்வாள். அவ ளுக்கு உன்மேல் அதிகம் அன்பு இருப்பதை நான் நன்கறிவேன். நான் திருத் தலங்கள் சென்று பார்வையிட்டு மீண்டும் வருமட்டும் நீயொன்றுக்கும் கலங்
காமல் சிற்றன்னையுடன் இருப்பாயாக.
9

Page 16
ஞானம் வசனம்
என் நேசப் பிதாவே ! நான் சிற்றன்னையுடன் மனக்கவலையின்றி சந்தோ ஷமாக இருப்பேன். கூடிய கெதியில் திருத்தலங் கண்டு நற்சுகத்துடன் வீடு
திரும்பி வருவீராக.
(சின் விழுதல்)
ருேட் சின் தர்மராசன் சீமை சுற்றிப் பார்க்கச் செல்லுதல் தர்மராசன் தரு (நெஞ்சமே என்ற மெட்டு)
பார்க் கச் செல்வேனே - திருத்தலம் பார்க்கச் செல்வேனே
பார்க்கச்செல்வேன் பெரும் பட்டணம் கட்டடம் பாங்கான பண்டைநாள் பத்திரம் சித்திரம் மார்க்கங்கள் காட்டிடும் பற்பல அற்புதம் மங்காமல் நின்றிடுங் கற்காலக் கைத்திறன்- பார்க்கச்
கர்த்தன் பிறந்திட்ட சிற்றுாரும் மற்றுாரும் கட்டி அடிபட்ட கற்றுாணும் பொற்றுாணும் உத்தம ஏரோனுர் ஊன்றிநின்ற கோலும் ஒதும் மோசேஸ் முனிசென்ற சீன மேரும் - பார்க்கச்
சிங்காரத் தோப்புடன் சென்னுக் கொலுவையும் செப்புங்காணுன் கலியாண மனையையும் எங்கட்காய் யேசு மரித்த தலத்தையும் இவ்வுலகம் விட்டெழுந்த இடத்தையும் - பார்க்கச்
(தர்மராசன் போய் மறைதல்)
மாளிகை சீன்
(ஞானசவுந்தரி கட்டிலில் படுத்துச் சயனித்தல். லேனுள் கோபத்துடன்
அடிக்கடி வந்து பார்த்தல்)
10

லேனுள் வசனம்
அடி ஞானம் ! என்னடி? மணி எட்டாகியும் இன்னும் எழும்பாமல் கிடக் கிருய். சீக்கிரம் எழுந்து வீட்டுவேலையைக் கவனி. எழும்பு, போ.
லேஞள் தரு (கட்டி முத்தம் என்ற மெட்டு)
கட்டிலேறச் சொன்னதாரடி - அடி சிறுக்கி கட்டிலேறச் சொன்னதாரடி
கட்டிலேறச் சொன்னதாரு வெட்டியாகத் தின்னுஞ்சோறு முட்டிவயிற்றில் செமிக்கச் சட்டி பெட்டி கழுவாமல் - கட்டி
செத்தையில் கிடந்த சிறுக்கி - எந்தனின் பட்டு மெத்தைக் கேண்டிபோனப் பொறுக்கி
செத்தையில் கிடந்த கள்ளி மெத்தைக்கேன் நீபோனப் துள்ளி வித்தை காட்டினலோ பள்ளி சொத்தையைக் கிள்ளுவேன் நுள்ளி - கட்டி
(ஞானசவுந்தரி விக்கத்துடன் ஒன்றும் பேசாமல் மவுனமாக நிற்றல்)
லேனுள் வசனம்
அடியே கள்ளச் சிறுக்கி ! உன்னையாரடி என்னுடைய கட்டிலில் ஏறி ஒய் யாரமாகப் படுக்கச் சொன்னது? இனிமேல் இன்று துவக்கம் மாளிகையிலுள்ள எந்தப் பொருட்களிலும் கை தொடக்கூடாது. முக்கியமாகக் கட்டிலில் மெத் தையில் கதிரையில் இருக்கக்கூடாது. இது ருேமாபுரியின் மகாராணியான மாட்சிமைதங்கிய லேளுள் அம்மாவின் கண்டிப்பான கட்டளையாகும். நீ என் அரண்மனை வேலைக்காரி என்பதை மறவாதே. இன்றேடு தர்மராசனின் செல் வப்புத்திரி, ருேமாபுரியின் பட்டத்து இளவரசி, சென்னியில் முடிசூட்டும் செக ராசி, செங்கோல் பிடிக்கும் மகராசி என்ற எண்ணத்தை விட்டுவிடு. இவைக ளெல்லாம் உனக்கு வெகு சொற்பநாட்களுக்கிடையில் பகற்கனவாய் முடிந்து விடும். சரிசரி இப்போ உடனடியாக விளக்குமாறு எடுத்துக் குப்பைகளைக் கூட்டு.
(ஞானசவுந்தரி விளக்குமாறு கொண்டுவருதல்.)
l

Page 17
லேனுள் தரு (என்னமொழி என்ற மெட்டு)
வீட்டைப் பெருக்கிடடி - வெளி: வேஷங்கள் சாலங்கள் காட்டிடாமல் கூட்டி ஒதுக்கிடடி - குப்பை கூளங்கள் சாணங் கிடந்திடாமல்
ஞானசவுந்தரி தரு அம்மா நான் கூட்டிடுவேன் - கூட்டு மாறு கொண்டே ஏறுமாறு சொல்லாய் சும்மா இருக்கவில்லை - உந்தன் - சொற்களைத் தட்டி நடக்கவில்லை
லேனுள் தரு
கோபம் வருகுதோடி - நீயும் கொற்றன் மக ளென்ற எண்ண மோடி பாவம் உனக்கிரங்கேன் - நீயோர் பாதகி நீலி பாசாங்குக் காரி
ஞானசவுந்தரி தரு பாசாங்கு காட்டவில்லை - மன்னன் பாவையென் றெண்ணமுங் கொள்ளவில்லை கூசாமற் குப்பைகளை - கூடை கொண்டுபோறேன் நீயும் கண்டுகொள்ளும்
(ஞானசவுந்தரி கடகத்தில் குப்பைகளே அள்ளிக்கொண்டு தலையில் சுமந்து போதல்).
லேனுள் விருத்தம்
அள்ளி வைத்த குப்பைகளை அகற்றிப்போட்டு
அதன்பிறகு அடுப்பினையே மூட்டுதற்குக்
கொள்ளிகளைக் கோடரியாற் பிளந்து கொத்திக்
கொழுந்துவிடும் நெருப்பெரித்துத் தாச்சிவைத்து
12

எள்ளளவும் அடிப்பிடித்துப் பழுதாகாமல்
இருந்த இடம் எழும்பாமல் இருகையாலே
மெள்ளமெள்ள மாவறுத்து இறக்கவேண்டும்
மறுவேலை நான்தருவேன் விரைவாய்த்தானே.
லேனுள் வசனம்
அடி நீலி ! தீ பாங்கியரோடு கூடிப் பாண்டி விளையாடுவதையும், பூப் பறித்து மாலை கோப்பதையும் முற்ருய் மறந்துவிடு. ஒடிப்போய் விறகுகளையும், தாச்சியையும் எடுத்துக் கொண்டுவந்து அடுப்பைமூட்டி நான் தரும் அரிசி மாவைச் சிக்கிரம் வறுத்து இறக்கு.
(ஞானசவுந்தரி விறகுகளோடும் தாச்சியோடும் வந்து தீ மூட்டுதல். லேனுள் மாவைக் கொடுத்தல்.)
லேனுள் வசனம்
அடி சிறுக்கி! இதோ பத்துக் கொத்து மா இருக்கிறது. கொஞ்சமேனும் கீழே கொட்டாமல் அரை மணித்தியாலத்திற்கிடையில் மிகவும் நேர்த்தியாக வறுத்துத் 西T.
(ஞானசவுந்தரி மாவறுக்கும்போது லேஞள் கதிரையில் இருந்து பூமாலை கோத்துக் கொண்டிருத்தல்.)
ஞானசவுந்தரி மா வறுத்தல்
ஞானசவுந்தரி தரு (சதியிதுவே என்ற மெட்டு)
தலைவிதியோ - தாயில்லாதார் - நிலையிதுவோ
கந்தங்கஸ்தூரி கலந்த கரத்தினுல் காட்டுவிறகால் தீமூட்டி எரித்து நான் அந்தோ அகப்பையால் மாவை வறுத்திட அன்றீசன் ஊன்றி அழியாதெழுதிய - தலைவிதியோ
வெந்தணல் பட்டெந்தன் மேனி கருகிட வேகும்புகையாலே கண்ணிர் பெருகிட தந்தையின் தாகத்தால் நெஞ்சு குமுறிடத் தாயில்லாப் பிள்ளைக்கு ஈசன் எழுதிய - தலைவிதியோ
13

Page 18
தந்தை யார் தானுமிங் கில்லாதிருக்கவும் தாச்சியில் மாவைக் கொட்டாமல் வறுக்கவும் எந்தனின் பாங்கிகள் ஏசிச்சிரிக்கவும் ஈசன் என் சென்னியில் பேசாதெழுதிய - தலைவிதியோ
ஞானம் வசனம் அம்மா! இதோ உமது கட்டளைப்படி மாவறுத்து முடித்துவிட்டேன் பார்ப்பீராக, (லேனுள் மாவை வாங்கிக் கையில் பார்த்தபின்)
லேனுள் விருத்தம்
சோம்பலை விட்டுப்போட்டுச் சுறுசுறுப்பாக நீயும் காம்பினை ஒடித்துக் கொச்சிக்காயோடு மல்லி சேர்த்து சாம்பலின் பட்டுப்போன்று சல்தியில் அரைக்கவேண்டும் வீம்புகள் காட்டி னயோ வெளுவைதான் வாங்குவாயே.
லேனுள் வசனம்
அடி ஞானம் ! உன்னுடை: மாயாசாலம் என்னிடத்தில் ஒரு நாளும் பலிக்காது உன் அப்பரிடம் காட்டும் செல்லம் என்னிடம் காட்டுவதற்கு வந் திடாதே. சீக்கிரமாக மிளகாயை அரைத்துக் கொண்டுவா.
(ஞானசவுந்தரி, அம்மியும் மிளகாயும் கொண்டுவருதல். லேனுள் கதிரை யிலிருந்து குளிர்பானமருந்திக்கொண்டு பத்திரிகை பார்த்தல்.)
ஞானசவுந்தரி தரு (ஐயனே நான் எ. மெ.)
1. ஐயோ ஐயோ என்ன செய்வேன் அப்பா - இந்த
ஆத ரை மீதினில் ஒர் துணையின்றியே அகதி போல வாடுகிறேன் அப்பா
2. மல்லிகைப்பூ மாலை கோத்த கையால் - இன்று
மல்லி மிளகாய் சுக்கு உள்ளிசீரகம் உப்பு மாய்ந்து மாய்ந்து அரைக் கலாச்சே அப்பா
3. காந்தணல்போல் கை எரியுதப்பா - முளங் காலும் முதுகும் மிகவாக உழைகிறதே கருணை செய்வார் யாருமில்லை அப்பா
14

4. மானினங்காள் மயில் குயில் காள் வாரீர் - மட மங்கைபடுந்துய ரைத் துங்ககுல மன்னர்க்கே மாவிரைவாய்ப் போயுரைப்பீர்தானே
5. மாடப்புருச் சோடினங்கள் வாரீர் - தர்ம
மன்னரிருக்குமிடம் இன்னதறிந்துகொண்டு மாவினையின் தூது சொல்லுவீரே
6. சந்திரரே சூரியரே வாரும் . பெருஞ்
சங்கை மிகுந்த மகள் பங்கப்படுவதையே சர்வலோகத்திற்கும் விரைந்தோதும்
ஞானம் வசனம்
ஓ பரலோகப் பிதாவே ! தாயில்லாப்பிள்ளை என்மேல் கருணே வைத்தரு ளும். என் சிறு வயதிலே அன்னையைப் பறிகொடுத்தும், தற்போது என்னரு மைத் தந்தையைப் பிரிந்தும், நிர்ப்பாக்கிய அபலையாக அவதிப்படுகிறேனே. இந்தக் கொடிய வாதையிலே நின்று என்னைக் காப்பாற்றியருளும் கர்த்தாவே!
லேனுள் வசனம்
அடி ஞானம் ! அரைத்து முடிந்ததாடி?
ஞானம் வசனம்
ஆம் அம்மா. நீங்கள் தந்த மிளகாயை அரைத்து முடித்துவிட்டேன் அம்மணி.
லேனுள் வசனம்
அரைத்து முடித்துவிட்டால் எனக்கு ஏனடி வந்து சொல்லவில்லை. வேலைகள்முடிந்துவிட்டால் உடனடியாக எசமாணி அம்மாளுக்கு வந்து சொல்லும் பழக்கம் வேண்டுமடி. சரி, சரி. இப்போ.
லேனுள் விருத்தம்
உலக்கையும் உரலும் கொண்டு உடனடியாகவந்து வலக் கையும் இடக்கை மாறி வண்ணமாய் நெல்லைக்குற்றி விளக்கியே அரிசியாக்கி விஞடிக்குள் தருதல் வேண்டும் குளப்படி விட்டாயானல் குட்டுவேன் அறிவாய்தானே,
15

Page 19
லேனுள் வசனம்
அடி ஞானம், சிக்கிரம் உரலையும் உலக்கையையும் கொண்டுவந்து நெல் லைக் குத்து.
(ஞானம் உரலும் உலக்கையும் நெல்லுங் கொண்டுவருதல்.)
லேனுள் தரு (சிந்து எ. மெ.) இப்படி நெல்லினைக் குற்றடி - சண்டாளிநீலி இப்படி நெல்லினைக் குற்றடி
இப்படி நெல்லினைக் குற்று இச்சணம் உலக்கைபற்று தப்பிலித்தன மகற்றுத் தட்டுவாணித்தனம் விட்டு - இப்படி
ஞானசவுந்தரி தரு தாயே தயைகூரு தமியாள் எனக் காரு சேயா யென ஏரு சிறுமி முகம் பாரு
கரம் பொங்கிடச் சிரம்மங்கிட தரம் அற்றிடு உரம் பெற்றிடு தாங்கு முலக்கை கொண்டோங்கி நெல்லுமி நீங்கிடக் குற்றுவேனே
; லேனுள் தரு சட்டெனக்குற்றடி நீ நெல்லு - சப்பட்டைதட்டி சட்டெனக் குற்றடி நீ நெல்லு
சட்டெனக் குற்றடி நெல்லு தட்டினயோ எந்தன் சொல்லு கொட்டுவேன் உனது பல்லுக் கிட்ட வாரா தெட்ட நில்லு - இப்படி
ஞானசவுந்தரி தரு சந்ரபதத்தாயே எந்தன் அருளாயே இந்த நேரம் நீயே வந்துதவு வாயே
கங்கை கடலலை தங்குதுரும்பென நங்கை வாடுறேன் செங்கை தந்தருள் காரணி பரிபூரணி என் நி வாரணி துணை "தாராய்
16

லேனுள் வசனம்
அடி ஞானம், நெல்லுக்குற்றி முடிந்து விட்டால், அரிசியையும் உரல் உலக்கையையும் எடுத்துக் கொண்டு இருந்த இடத்திலே வைத்துப் போட்டு, குசி னிக்குச் சென்று வேலைக்காரி போட்டுத் தரும் சோற்றுப் பருக்கையைத் தின்று போட்டு, உனக்கெனப் போடப்பட்டிருக்கும் கொட்டிலில் சென்று அங்குள்ள சாக்குக் கட்டிலில் நன்கு உறங்கு. நாளைக்கு மறு வேலைகளைச் செய்யலாம் சென்று வா.
ஞானம் வசனம்
அப்படியே செல்லுகிறேன் அம்மணி.
(ஞானசவுந்தரி செல்லும் போது உரல், உலக்கை, அரிசி முதலியவைகளைக் கொண்டு செல்லுதல்),
லேனுள் விருத்தம்
மணியொடு முத்து நீலம் மரகதம் வயிரமாதி அணி நிரையிட்ட எந்தன் அரண்மனை வாசல் காக்கும் பணிவுறும் கட்டிய காரா பகரு சேவகரை இப்போ துணிவுறும் கொலுமுன்பாகத் துடுக்குடன் வரச் செய்வாயே
லேனுள் வசனம் அடே கட்டியகாரா! எனது வாசல் சேவகரை நான் வரும்படி சொல்லுவாயாக. ருேட் சின் சேவகர் வரவு தரு (வெற்றி வீரர் எ.மெ.)
சூரர் வீரர் நாமையா-வெற்றி மிகும் சூரர் வீரர் நாமையா
1ம் சேவகன்
சூரர் வீரர் நாமே சூழும்புவியில் தானே ஆரும் எதிர்க்க வந்தால் அஞ்சிப் பயந்து ஓடி ஊரும் பேரும் சொல்லா தொண்டி ஒழித்துப் பின்பு உற்ற மனையாளோடு கெட்டித்தனங்கள் பேசும்-சூரர்
- 2 ஞா 17

Page 20
2ம் சேவகன்
தண்டுதடிகள் பொல்லுக் கொண்டுவருதல் கண்டால் பெண்டில் தனக்குப் பின்னல் அண்டி மறைந்து நின்று ஒண்டி ஒழித்துப் பார்த்து ஒட்டம் எடுத்து வந்து சுண்டு விரலைக் காட்டிச் சூரக் கதைகள் பேசும் - சூரர்
1ம் சேவகன்
செத்த பாம்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டு மெத்தப் பெரிய பொல்லால் மேனி அடித்து நின்று புத்தியாக வாலில் பிடித்து இழுத்து வந்து வித்தை காட்டி நிற்கும் வீரத்தனமுடைய - சூரர்
2ம் சேவகன்
கொட்டில் தனிலே சென்று குடமாய்க் குடித்துப் போட்டு சட்டிபானையோடு சண்டை நிதமும் செய்து கெட்டித்தனங்கள் காட்டும் மட்டி மடையர் நாங்கள் குதமும் வந்ததாலே குடலும் சுருங்கிப் போன -சூரர்
மாளிகை சீன் (லேனுள் இருத்தல்) சேவகர் விருத்தம் மரு மலர் மாலை குடும் மாட்சிமை மிகுந்த உந்தன் அருணனினுெளி காலிக்கும் அருட்பதம் போற்றி போற்றி வெரு வலர் நாணி அஞ்சும் வீரசேவகராம் எம்மை கருணையாய் அழைத்த செய்தி களறுவீர் அறியத்தானே
சேவகர் வசனம்
மாட்சிமை மிகுந்த எம் மகாராணியாரே! எம்மை அழைத்த காரணம் யாதெனக் கூறுவீராக.
லேனுள் விருத்தம் சொன்ன சொல் தட்டிடாத சூரசேவகரே கேளும் மன்னவன் மகளா லெந்தன் மதிப்புகள் அழிந்துபோச்சே பொன்னெடு பொருள்கள் தாறேன் பூவையைத் தூக்கிச் சென்று துன்னு கானகத்தில் வெட்டித் தொலைத்து நீர் வருவீர்தானே
18

லேனுள் வசனம்
கேளும், சேவகரே! நீங்கள் இருபேரும் என் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமானவர்கள். நான் சொல்லும் கருமங்கள் எதையும் தட்டமாட்டீர்களென்பது எனக்கு நன்கு விளங்கும். இந்த மாளிகையில் மன்ன னின் ஏக புத்திரி ஞானசவுந்தரியின் கோளாலும், குண்டணியாலும், எனக் கும் மாட்சிமை தங்கிய மன்னருக்கும் ஒயாது சண்டையாக இருக்கிறது. எனக் குக் கொஞ்சமும் மாளிகையில் மதிப்பில்லே. அவள் இங்கு இல்லாவிட்டால் எனக்கு ஒருவித குறைச்சலுமில்லை. அரசனுக்குப் பிற்பாடு நானே மகாராணி யாக இருப்பேன். ஆனதால் தற்போது அரசன் இல்லாதபடியால் ஞானசவுந் தரியை எதுவிதமும் கொல்லல் வேண்டும். உங்களுக்கு வேண்டிய சன்மானம் தருவேன். உயர்ந்த உத்தியோகத்திலும் அமர்த்தி வைப்பேன். இந்தாருங்கள் ஆயிரம் ரூபாய், கையிலே பிடியுங்கள். (சேவகர் கை நீட்டி வாங்குதல்) அதோ ஞானம் நன்ருகத் தூங்குகிருள். இது சமயம் அவளைக் கட்டிலோடே தூக்கிக் கொண்டு கானகம் சென்று கொன்று விடலாம். தாமதியாமல் கருமத்தை முடியுங்கள்.
1ம் சேவகன் வசனம்
அம்மா, ஏன் தாயே இந்த அநியாயம் ? அவளொரு தாயில்லாதபிள்ளை. அவளை ஏன் கொல்ல வேண்டும்? சற்று இரக்கங்காட்டுங்கள் அம்மா.
2ம் சேவகன் வசனம்
அடே முட்டாள்! பெரிய இடத்துப் பேர்வழிகளுக்கு நீயேன்டா புத்தி சொல்ல வேண்டும். நமக்கு இட்ட கட்டளையை ஜல்தியாய் முடித்துப் பணத்தை வாங்கிக் கொண்டு போகாமல் வீண்கதை பேசுகிருய். அம்மா நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். இந்தச் சணமே நாங்கள் கருமத்தை முடித்துப் போடு வோம். நீங்கள் மறைந்து போய் விடுங்கள்.
1ம் சேவகன் வசனம்
அடே தோழா! அதோ ஞானசவுந்தரி தூங்குகிருள். (இருவடும் அவளே நெருங்கிப் போதல்)
2ம் சேவகன் வசனம்
பாவம், பிள்ளை நன்றகத்தான் குறட்டை விட்டுத் தூங்குகிறள்.
1ம் சேவகன் வசனம்
தோழா! இது தானடா தருணம், சத்தம் சந்தடி போடாமல் கட்டிலோடு தூக்கடா தூக்கு.
(கட்டிலோடு ஞானசவுந்தரியைத் தூக்கிக் கொண்டு சேவகர் காட்டுக்குக் கொண்டு செல்லல்.)
19

Page 21
காட்டு சீன்
(ஞானசவுந்தரி தூக்கந்தெளிந்து எழுதல். கானகத்தையும் சேவகரையும் கண்டு திகைத்துப் பயப்படுதல்)
ஞானசவுந்தரி வசனம்
ஆ தெய்வமே ஈஸ்வரா! நான் இப்போ எங்கிருக்கிறேன்? ஐயோ, காட் டின் மத்தியில் அல்லவா இருக்கின்றேன். சேவகரே! ஏன் என்னை இங்கு கொண்டு வந்தீர்கள்? சொல்லுங்கள். அண்ணன்மாரே! சொல்லுங்கள்.
1ம் சேவகன் வசனம்
அம்மா, குழந்தாய்! ருேமை நாட்டின் மகாராணியான லேனுள் அம்மா வின் கட்டளைப்படி உன்னைக் காட்டில் கொலை செய்யவந்திருக்கிறேம், அறிவி
T86.
ஞானம் வசனம்
அண்ணன்மாரே! என்மீது இரக்கங் காட்டுங்கள். நான் ஒர் தாய்இல்லாத பிள்ளை. என்னைக் கொலை செய்யாதீர்கள். நான் உங்களுக்கு ஒருவிதமான குற்றமும் புரியவில்லை. அண்ணன்மாரே! உங்களின் காலில் விழுந்து கும்பிடு கிறேன். என்னைச் சும்மா விட்டுவிடுங்கள்.
1ம் சேவகன் வசனம்
அடே தோழா! பெரும் பாவமாயிருக்குது. தாயில்லாத பிள்ளை, நமக்கு அவள் ஒரு துரோகமும் செய்யவில்லை. நாம் இவளைக் கொல்லாமல் காட்டில் விட்டு விட்டுப் போவோம்.
2ம் சேவகன் வசனம்
நமக்கு என்னடா பாவம்! நாங்கள் இவளைப்போல் பலபேரைக்கொலை செய்திருக்கிறேம். நமக்கு வேண்டியது பணம்தானே. தாமதியாது நமது வேலையைப் பெருக்குவோமடா.
1ம் சேவகன் வசனம்
தோழா! அப்படியானுல் இவளைக் கொலை செய்யாமல், நாங்களும் லேனுள் அம்மாவுக்குத் தப்புவதற்கு இவளுடைய இருகைகளையும் வெட்டிக் கொண்டு போய்க் காட்டுவோம். இப்படிச் செய்தால் நாங்களும் தப்பிக் கொள்ளலாம்,
20

2ம் சேவகன் வசனம்
சரி, சரி, உன்னுடைய யோசனையின்படி அப்படியே செய்வோம். இனி மேல் சுணங்கக்கூடாது. யாராவது குறுக்கால் வருவதற்கு முன் கைகளைச் சீக் கிரம் வெட்டிக்கொண்டு போவோம். அம்மா! உன் குலதெய்வத்தைக் கடைசி யாக வேண்டிக்கொள்வாயாக.
ஞானசவுந்தரி தேவாரம்
அலைகடலின் துரும்பானேன்; அடவி மீதில்
அகப்பட்ட சேயானேன்; அனலைக் கக்கும் உலையிலிட்ட மெழுகானேன்; ஆலைவாயில்
உட்புகுந்த கரும்பானேன்; கொம்பில்லாத நிலையிழந்த கொடியாகி வனத்தில் நின்றே
நிட்டூரப் படுகின்றேன்; அம்மா, தாயே! கொலையிருந்து எனtட்க ஓடிவாராய்
குளிர்நிலவைப் பதமணிந்த மரியதாயே!
ஞானம் வசனம்
அண்டபிண்டந்தாங்கும் அமலனப் பெற்ற அருணுேதயமே! அடவியிலே நின்று அந்தரிக்கும் அபலையைக் கைதுாக்க ஓடிவாரும், அம்மா!
1ம் சேவகன் வசனம்
அடே இனிச் சற்றும் தாமதியாமல் கைகளே வெட்டுவோம்.
(சேவகர் கைகளை வெட்டிக்கொண்டு ஒட்டம் பிடித்தல். ஞானசவுந்தரி களைத்து விழுதல். பின்பு களை தெளிந்து தேவதாயை இரந்துகேட்டல்)
ஞானம் தேவாரம்
பெற்றவளை இழந்திட்டேன்; உலகி லென்னைப்
பேணிய நற்தந்தையையும் பிரிந்திழந்தேன்;
உற்ற மணி மகுடம் செங் கோலிழந்தேன்;
உரிமைபல நானிழந்த தோடல்லாமல்
பற்றுடனே பாலுணவும் பசும்பட்டாடை
பற்றி நிற்கும் கரங்களையும் இழந்தேனம்மா!
இற்றரையில் என் கற்பு நெறியைக் காத்து
எனக் குதவி புரிந்தருளும் அமல தாயே!
21

Page 22
ஞானம் வசனம்
ஒ என் மாசில்லாத தேவதாயே! சிறு பிராயத்திலே என் அன்னையை இழந்து கஷ்டப்பட்டதுமல்லாமல் தற்போது நான் ஆகாரம் அருந்துவதற்கும் அணிமணி கட்டுவதற்கும் வழியில்லாமல் எனது இரண்டு கைகளையும் இழந்து தவிக்கின்றேனே. என்ன இந்தப் பெரும் ஆபத்தில் நின்று நித்தியமும் தற் காரும், தாயே!
ஞானம் தரு (பன்னிருதாரகை எ. மெ.)
1.V ஆதித்தனை ஆடையாக அங்கம் போர்த்த ராக்கினியே!
மேதினியின் மீது என்னை மேவி வந்து காத்திடம்மா !
2. V கையிழந்தும் மெய்யயர்ந்தும் கனகமுடி தானிழந்தும்
வையகத்தில் வாடுகின்றேன் வந்து என்னைக் காரு
LD bl DIT 3. பிஞ்சுக் கரம் நோகுதம்மா! மிஞ்சுங்களை யாகுதம்மா! தஞ்சம் தந்து காருமம்மா! தற்காக்கவே வாருமம்மா! 4. அன்னமுண்ணக் கைகளில்லை; ஆடை கட்ட மார்க்க மில்லை என்ன செய்வேன், அம்மா தாயே! ஏழையைக் கண் பாரும் நீயே!
(சாட்டு சின் விழுதல்)
ருேட் சின்
சிமியோன் ராசன் கொலுத்தரு (அந்த சந்த்ரன் என்ற மெட்டு)
சந்த்ரன் வந்துலாவும் - அதி மிகு சங்கை தங்கி மேவும் - எனதரும்
சித்ரரத்னமணி முத்துவைத்த கொலு இத்தினத்தில் மகிழ்வுற்றுச் செல்வேனே - சந்த்ரன்
பம்பை முரசொலிகளும் - முழங்கிட கொம்பு குழ லொலிகளும் - விளங்கிட
பைம் பொன்மணிபவள ஐம்பொன் அணிதிகழச் செம்பொன் முடி மிளிரச் சிமியோன் வந்தேனே - சந்த்ரன்
22

மந்த்ரர்தந்த்ரர் சூழ - மருவலர் வந்து நின்று தாழ - எனதடி கண்டு வந்து கெடி மண்டி நின்று திறை கொண்டு வந்து தருங் கொலுவிற் செல்வேனே - சந்த்ரன்
அதிரப்படை அடரவே --கொடியுடன் குதிரைப்படை தொடரவே - பல பல அரசர் சிரமசைய முரசம் புரமிசைய தருமதயை நிறைய அரசு செய்வேனே
சிமியோன் ராசன் வசனம்
நீதி வழுவாச் செங்கோல் செலுத்தி அரசாளுவேன்.
சிமியோன் விருத்தம்
சுந்தரஞ்சேர் எனது மணிக் கொலுவின்மீது
சூழ்ந்திருந்து எந்நாளும் கடமையாற்றும் எந்தனரும் சபையோரே எகிப்து நாட்டின்
எழில் செறியும் பலவளத்தை யினிதாயின்று விந்தையுடன் ககலருமே நன்காராய்ந்து
வெகுவிரைவா யெனது மனங் குளிருதற்கு சந்தமரியாள் பதத்தைத் துதித்து வாழ்த்திச்
சங்கையுடன் சாற்றிடுவீர் அறியத்தானே.
நாட்டு வளப்பம் சிமியோன் அரசன் தரு (எல்லவரும் கேட்டிடுங்கோ எ.மெ.)
புத்தி மெத்திடு வித்தை கற்றிடு உற்ற மந்திரியே - எந்தன் இத்தரைவள மத்தனை தனைச் செப்புந் தந்திரியே
மந்திரி தரு செந்நெல் கன்னல்கள் மின்னி எறியுது பொன்னின் காட்டினிலே - சோடாய் வண்ண அன்னங்கள் திண்ணைமேயுது ஒவ்வோர் வீட்டினிலே
23

Page 23
சிமியோன் தரு
வீரமார்ப உதார கெம்பீர சேனைத்தளபதியே - பொல்லா வேங்கை போற் புயம் ஓங்கு வீரருண் டோ சொல் இப்பதியே
சேணுதிபதி தரு கத்து கரிபரியுற்ற படையினர் நித்தம் ஓங்கிறதே - மாற்று ஒற்றர் வந்திதைக் கண்டிடில் அவர் நெஞ்சு வீங்கிறதே
சிமியோன் தரு
ஞால மெங்குமே வேதபோதகம் நாளும் முற்றிடவே - ஞானச் சீலர் போதகம் பண்ணுகின்ருரா ஒது மென்குருவே
குருவானவர் தரு
அந்திசந்தியும் எந்த நேரமும் வேத போதனைகள் - மக்கள் ஆவலாகவே கேட்கிருர் அது பெரிய சாதனைகள்
சிமியோன் தரு பைந்தமிழ்க்கலை எந்த நாட்டிலும் முந்தி நிற்கிறதா - சில பண்பிழந்தவர் செந்தமிழ்த் தாயைக் கூறி விற்கிருரா
பண்டிதர் தரு நாடு போற்றிடும் நாயகன் தமிழ் ஏடு காத்திடுவான் - எந்த நாடுமே அதைத் தீண்டிடாமலே நன்கு பார்த்திடுவான் .
24

சிமியோன் தரு
நித்த நித்தமும் வந்து வந்துமே எந்தன் காலடியே - கப்பம் தந்து தந்துமே செல்கிருர்களா தங்கத் தாளடியே
மந்திரி தரு
தட்டிடாமலே வட்டமாகவே கிட்டி உன் பதமே - கப்பம் கட்டுருர்களே அட்டமன்னரும் இட்டமாய் நிதமே
சிமியோன் தரு
நாட்டைக் காத்திடக் கோட்டை கொத்தளம் சேட்டமாயுளதா - நானும் கேட்டறிந்திட நாட்டமாகிறேன் கூறுவீர் மகிழ்வாய்
சேஞதிபதி தரு
மாற்ருர் அஞ்சியே கெஞ்சி ஒஞ்சிட மாபெரும் கோட்டை- பொல்லாக் கூற்றன் போலவே காவல் பண்ணுதே எங்களின் நாட்டை
சிமியோன் தரு கோணமெங்குமே ஆலயம் பெருங் கோபுரத்தோடு - காட்சி கொள்ளுதா அதை விள்ளுவீர் எனக் காதாரத்தோடு
குருவானவர் தரு எங்கு நோக்கினும் தங்கக் கோபுர ஆலயம் தோணும் - அதை ஏறிப்பார்த்திடில் நிச்சயம் எழி லோனுமே நானும்
25

Page 24
சிமியோன் தரு பஞ்ச காவியம் அஞ்சையும் தினம் கொஞ்சிப் போற்றுருரா - சிறு பாலரும் தாயின் பாலொடு அதை நெஞ்சில் ஏற்றுருரா
பண்டிதர் தரு ஆவலாகவே காவியத்தோடு ஓவியக் கலையும் - மிகத் தாகமாகவே கற்றுவருகிருர் ஏற்றியே மலையும்
சிமியோன் அரசன் விருத்தம்
சொல்லரிய எனது நகர் வளமை யாவும்
சூட்சமுடன் சொல்லியதைச் செவியிற்கேட்டு எல்லையிலா மனமகிழ்ச்சியானேன் இன்னும்
எழில் சிறக்க அரிய பல கடமையாற்றி துல்லிபஞ்சேர் சேனைபடை அணியாய் வைத்தே
துலங்கிடவே நாற்றிசையும் காவல்காத்து அல்ல லெதுமனுகாமல் எகிப்து நாட்டை
அழகுறவே அமைத்திடுவீர் அறியத்தானே.
சிமியோன் வசனம் அரச சபையோரே ! நீங்கள் யாபேரும் கூறிய நமது எகிப்து நாட்டின்
வளமைகேட்டு மகிழ்ச்சியானேன். இன்னும் வேண்டிய பணிகள் யாவையும் என்னுடன் ஒத்துழைத்துச் செய்வீர்களாக !
றேட் சின் குடிமக்கள் தரு (தரைதன்னில் எ. மெ.)
1ம் குடிமகன் தரு காத்து வளர்த்த களனிகள் நாசமாய்ப் போச்சுதே -
நெல்லின் நாத்தும் பயிரும் பசளையும் நட்டமதாச்சுதே
2ம் குடிமகன் தரு
காட்டு மிருகங்கள் கூட்டமாய் வந்தல்லோ மேயுது - பயிர் சேட்டமாயுள்ள கமத்துக்குள்ளே நித்தம் பாயுது
26

1ம் குடிமகன் தரு
பொல்லா விலங்கினைக் கொல்லாவிடில் மிகமோசமே-இதை எல்லாருங் கூடியே மன்னர்க் கோதாவிடில் நாசமே
2ம் குடிமகன் தரு
வாருங்கள் கூட்டமாய் மன்னர்க்கிதை எடுத்தோதுவோம் - ஒன்று சேர்ந்தெங்கள் நட்டத்தின் கட்டத்தைச் சட்டெனக்
கூறுவோம்.
மாளிகை சின்
சிமியோன் இருத்தல்
சிமியோன் வசனம்
அடே கட்டியகாரா! எனது அரண்மனை வாசலின் முன்னுல் பெருங் கூட்டமாகக் குடிமக்கள் திரண்டு வந்திருக்கிருர்கள். அவர்களே என் சமுகம் வரும்படி அழைத்து வருவாயாக,
குடிமக்கள் விருத்தம்
இலங்கிடும் எகிப்து நாட்டின் ஏந்தலே போற்றி போற்றி நலங் கொள ஆட்சி செய்யும் நாயகா போற்றி போற்றி விலங்கினம் வந்து எங்கள் விளைந்த நெற்பயிரை எல்லாம் கலங்கிட அழிக்குதந்தோ கலைத்திட வழி செய்வீரே.
குடிமக்கள் வசனம்
மகாராசாதிராசனே! எங்களின் காணிகளையும் தோட்டங்களையும் ருேமா புரிக் காட்டிலுள்ள துட்ட மிருகங்கள் வந்து அழித்து நாசப்படுத்துகின்றன. தங்களின் உதவியை நாடும்படி தர்மராசன் தங்களிடம் எங்களை அனுப்பி இருக்கிறர். அவைகளை ஒழித்துக்கட்ட வழிவகை செய்யவேண்டும், அரசே!
சிமியோன்ராசன் தரு (இங்கிர்த நன்றே எ. மெ.)
சுந்தரஞ் சேர் மணிக் கொலுலில் சூழ்ந்து வந்த, குடி காள் - மனம் நொந்து வருந்தி நீர் வந்துற்ற காரணம் கூறிடுவீர் விரைவாய் - இங்கு - பேசிடுவீர் தெளிவாய்
27

Page 25
1-ம்:குடிமகன் தரு
பாடுபட்டு நாம் வளர்த்த பயிரை எல்லாம் வேந்தே - காட்டுப் பன்றி யானை மந்தி வந்து அழிக்குதே பகல் முழுதும் மேய்ந்தே - நடு - இரவினிலும் பாய்ந்தே,
இராசன் தரு உள்ளமதில் உமக்கிருக்கும் சோகமதை அறிந்தேன் - அதை ஊக்கமுடன் நீக்கிக் காக்கப் பிலேந்திர இளவலையும் தெரிந்தேன்-நெஞ்சின்-குமுறலையும் புரிந்தேன்
2-ம் குடிமகன் தரு
அண்ணலேயுன் உரைகேட்டு நாம் ஆனந்தத்தால் களித்தோம் - சோக எண்ண மெலாம் விட்டு இன்பக்கடலிலே இன்று நாங்கள் குளித்தோம் - எங்கள் - நன்றித் துதி
அளித்தோம்.
குடிமக்கள் வசனம் மகாராசாதிராச ராச மார்த்தாண்டரே! தங்களின் தயாள சிந்தையான மறுமொழி கேட்டு மகிழ்ச்சியானுேம், தங்களின் நீதி தவறச் செங்கோலை நீடுழி காலம் தழைக்கவைக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டு கிருேம், அரசே!
குடிமக்கள் செல்லுதல்
சிமியோன் விருத்தம்
அட்டதிக்கும் கட்டியரசாளு மெந்தன்
அணிமணிப் பொன்னெளி செறிக்கும் கொலுமுன்பா இட்டமுடன் நின்று பணி நிதமு மாற்றும்
எந்தனருங் கட்டியனே இயம்பக் கேளாய் பட்டொளிகால் பரந் தெறிக்கும் பசும் பொன் வாய்ந்த
பளிங்கு முகம் இலங்கு பிலேந்திரனர் தம்மை சட்டென நான் வரும்படிக்கு அழைத்த செய்தி சங்கையுடன் இச்சணமே சாற்றுவாயே.
28

சிமியோன் வசனம்
கட்டியகாரனே! எனது செல்வ மகன் பிலேந்திர குமாரனை என் சமுகம் வரும்படி கூறுவாயாக.
ருேட் சின் பிலேந்திரன் வரவு பிலேந்திரன் தரு (வண்ண மெட்டு)
வானுலாவியசந்த்ரன் தானுலாவும் எகிப்தூர் கோனுலாவுஞ் சிமியோன் பானுலாவும் மைந்தன் நான்
முடியிட்டே சிரமிசை மருவலர் அடியிட்டே அவரவர் தருதிறை கெடியிட்டே முறைமுறையாகவே படியிட்டே வருமணிக் கொலுமிசை வார்முர - சொலிகுழல் - பேரிகை - மீட்டிடக் கார்குழல் - மாதர்கள் - சாமரை - காட்டிட ஆர் கலி - அலையெனப் - பேரவை - போற்றிடப் பார்மிசை-யாள்மகு - டாதிபன் - தோற்றினன் (வானு)
பாவலர் சிந்து பாடப் பன்மலர் கொண்டு தூவக் காவலர் வந்து நாடக் கட்டியம் நின்றுகூற
முத்திட்ட மணிமுடி மிளிரிடக் கொத்திட்ட குடைகொடி சுழரிட நற்றுற்ற வலமிட நடைகொளப் பற்றுற்ற புகழொலி மருவிட கடலலை - யென கரி -பரிரத - படைவர அடலுறு - புயபலர் - நடுவிட - நடைபெற பரிமள - துமிதுமி - மழையென - நிலவிள பகலவ - னெறிமுக - குமரனும் - வருகிறேன் (வானு)
மாமறை யோர்கள் வாழ்த்த மதுமலர் பாதஞ்சாத்த
சாமரை மாத்ர் வீச சாந்து சவ்வாது பூச மணியிட்ட அணிபளிர் பளிரென தொனியிட்ட குழல் கல கலவென
29

Page 26
மணமுற்ற மழை துமி துமியென
மலரிட்ட பதம் திமி திமியென வருநர - பதிதரு - திருமகன் - நடுவெழ இருபுய - மருவிய - மறைதரு - குருவர பெருமலை - கடலெனச் - சனதிரள் - ஒலியெழ எழில்மிகு - குமரனும் - இது சபை வருகிறேன்.
மாளிகை சீன் சிமியோன் மன்னன் கொலுவிருத்தல்
பிலேந்திரன் ஆசிரிய விருத்தம்
பொன்னெடு முத்து வயிர மாணிக்கம்
புட்பராகம் மணி பவளம் பொங்குரத்ணுதி தங்கமார் குயிற்றிப்
பொருத்திய மணிமுடி செறிய மின்னிடை அரம்பை இன்னிசை யிசைக்க
மேனகை வெண்குடை அசைக்க மென்பதம் தண்டை சிலம்புகள் ஒலிக்க
மெல்லியர் சாமரை விசுக்க கன்னடர் தெலுங்கர் கலிங்கர் வங்காளர்
கங்கணர் கொங்கணர் குடகர் கதிர் முடிபுனைந்து பதமது குனிந்து
கப்பமே தந்தவர் பணிய தன்னிகரில்லா எகிப்து நன்நாட்டைத்
தனியரசாட்சியே புரியும் தந்தையே! எனயிங்கழைத்த நற் செய்தி
தமியனுக் கெடுத்துரைப்பீரே.
பிலேந்திரன் வசனம்
என்னரிய தந்தையே! என்ன அழைத்த செய்தியாதெனக் கூறுவீராக.
30

சிமியோனும் - பிலேந்திரனும் தரு
சிமியோன் தரு (சற்குண எ. மெ.) சற்குண விற்பன்னப் புத்திரா - மிகச் சாந்தம் மேவிய விசித்திரா கற்கண்டில் மேலினிப் பானவா - எந்தன் கண்ணே பொன்னே பாலா ஒடிவா
பிலேந்திரன் தரு
நற்குண க்குன்றே என் தந்தையே - என்னை நாடி அழைத்ததேன் எந்தையே மற்போர்க் கெவரும் வந்தார்களோ - வேறு மாற்ருன் கடிதம் தந்தார்களோ
சிமியோன் தரு
செப்பும் ருேமாபுரிக் காட்டிலே - வாழும் சிங்கங்கரடிகள் நாட்டிலே சப்பிப் பயிர்கள் அழிக்குதாம் - ஓர் சருகுமில்லாமல் ஒழிக்குதாம்
பிலேந்திரன் தரு
அந்த விலங்கை ஒழித்திட - துணை அண்ணலுக்கே நாம் அளித்திட உந்தன் உத்தாரத்தைத் தாருமே - பின்பு எந்தன் வீராண்மையைப் பாருமே
சிமியோன் தரு வீரருடனே வனஞ் சென்று - வேட்டை ஆடி விலங்கினை நீ கொன்று
தீரமுடன் வெற்றியே கண்டு - ஒரு தீங்கில்லாமல் வருவாய் நன்று.
31

Page 27
சிமியோன் வசனம்
என்னருமை மகனே! தர்மராசனின் சக்கராதிபத்தியத்திலே உள்ள ருேமாபுரிக் காட்டிலே உள்ள மிருகங்களெல்லாம் உள்நாடுகளிலே புகுந்து அங்குள்ள கமங்களை எல்லாம் அழித்து நிர்மூலப்படுத்துவதாகவும், அதற்குத் துணை தரவேண்டுமென்றும் தர்மராசன் தமது குடிமக்களை இங்கனுப்பிக் கேட்டிருக்கிறர். ஆதலின் நீவிர் வீரருடன் காட்டிற்குச் சென்று துட்ட மிரு கங்களை அழித்து அம்மன்னனுக்கும் நம்மிடம் முறையிட வந்த குடிமக்களுக் கும் அபயம் அளித்து வெற்றியுடன் வருவீராக.
பிலேந்திரன் வசனம்
தங்களின் உத்தரவின்படி இதோ வீரருடன் காட்டிற்குச் சென்று வேட்டையாடி வருகிறேன். தங்களின் ஆசீர்வாதத்தைத் தந்தருளும் தந்தையாரே.
சிமியோன் வசனம் எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் வேட்டியாடி வெற்றிவாகை யோடு வீடு திரும்பி வரவேண்டுமென்று இயேசுவின் நாமத்தால் உன்னை ஆசீர்வதிக்கிறேன். சென்று வருவாயாக.
றேட் சின்
தர்மராசன் திருத்தலங்கள் யாவும் சுற்றிப்பார்த்து ஆனந்தத்துடன் தன் மாளிகை திரும்புதல்
தர்மராசன் தரு (கூனற்ற வளசங்க எ. மெ.) பாரில் மிகவிளங்கும் தேவத் திருத்தலங்கள் பலதும் மகிழ்வாய்க் கண்டு மனது நிறைவாய்க்கொண்டு ஆர்வமுடனே திரு ருேமைப் பதியை ஆளும் அகிலம் புகழும் தர்ம அரச மகிபன் வந்தேன் அனுதினம் திருவருள் கருணையாய்ப் பொழிகின்ற அமலனின் இருபாதம் தமியேன் தோத்திரித்தேன்.
பானின் முகவதனத்தேனை நிகர் மொழியாள் பகரும் எனது நேச அருமை மனையாளையும் கான மயிலை ஒத்த ஞானக் குழந்தையையும் மாஞர் புகழும் கொலு மீது மகிழ்வாய்க் காண்பேன் பகவானின் அருளாலே மிக மேன்மைத் தலம் யாவும் படிமீது சுகமாகப் பர்ர்த்து வந்தேனே,
32

தர்மராசன் வசனம்
அண்டசராசரமனத்தும் காத்துவருகின்ற கருணுமூர்த்தியாகிய நித்திய பிதாவே தேவரீருடைய திருக்கடாட்சத்தினுல் திருத்தலங்கள் யாவும் தரி சித்து மனக்கெலி தீர முத்திசெய்து மீண்டும் என் இராச்சியத்துக்கு சுகபலத் தோடு வந்து என் மனைவியையும் அருமைப் புத்திரியையும் கண்குளிரக் காணப் போகும் பாக்கியம் தந்த தங்களின் பாதாரவிந்தத்தை முத்திசெய்து நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன், கர்த்தாவே !
மாளிகை சின்
தர்மராசன் மாளிகைக்கேகுதல்; லேனுள் தனித்துக் கொலுவிருத்தல்.
தர்மராசன் விருத்தம்
அன்னமே வடிவே மானே அருமைசேர் தேவியாரே
வண்ணச் சித்திரமா மெந்தன் வளர்மதி ஞானம் தன்னை கன்னமே முத்தமிட்டென் கலியெல்லாம் தீர்க்க எண்ண இன்னுமென் சமுகம் வாரா திருப்பதேன் இயம்புவாயே.
தர்மராசன் தரு (சீருலாவிய எ. மெ.)
இன்னு மெந்தனின் ஞானசவுந்தரி இங்கு வந்தென்னைக் காணுததேனே கன்னங் கொஞ்சாதிருப்ப தெனக்குக் கவலையாகுது காதலியாளே.
லேனுள் தரு ஆரமார்பணி அண்ணலே எந்தன் அரசரேறே அரும்புதல்விக்குத் தாரணியில் நடந்ததைக் கூறிடத் தாயார் சற்றுத் தயங்கிறேன் மன்ன
தர்மராசன் தரு தயக்கமேது என் தங்கக் குழந்தைக்குத் தாவு காய்ச்சல் தடிமல் இருமலோ மயக்கமோ அல்லால் மக்கள் கண்ணுரருே மனது நோகுது கூறும் விரைவாய்
, - 3 ஞா 33

Page 28
லேனுள் தரு அஞ்சுகம் நானும் மஞ்சத்தில் தூங்கினுேம் அர்த்தசாமம் எழும்பி நான் பார்க்க பஞ்சணையினில் பைங்கிளியைக் காணுேம் பாரில் தேடிப் பலனுமில்லையே
தர்மராசன் தரு ஏது கூறினய் என்னிளம் பூங்கொடி எங்கு சென்ருளோ ஏங்கிப் போனளோ குதுமாயமோ என்னணியாயமோ சூனியம் அல்லால் சொப்பனந்தானே
லேனுள் தரு சூது வாதில்லை சுந்தரியில்லாதால் சோறும் தூக்கமும் துண்டாய் எனக்கில்லை ஈதுக் கென்செய்வோம் ஈசனை வேண்டிடில் இன்பங் காணலாம் பின்னலே மன்ன
லேனுள் வசனம்
ஓ! என்னருமைப் பிராணநாதா ! நானும் என் குழந்தை ஞானமும் ஒன்றகவே மஞ்சத்தில் தூங்கினுேம். அர்த்தசாமத்தில் விழித்தெழும்பிப் பார்க்கையில் குழந்தையைக் காணவில்லை. நானும் பல இடங்களிலும் தேடிப் பார்த்தேன். வீரர்களையும் ஒற்றர்களையும் நானுதிக்கும் அனுப்பி விசாரனையும் பண்ணினேன். அகப்படவில்லை. நானும் அன்றிலிருந்து பித் துப் பிடித்தவள் போலாகி ஒழுங்கான சாப்பாடோ, உறக்கமோ இல்லாமல் வாடி இருக்கிறேன். கடவுளிலேயே பழியைப்போட்டு அவரையே அனுதின மும் வேண்டி வருகிறேன். எனது அங்கலாய்ப்பையும் அபயச் சத்தத்தையும் தேவன் கேட்டு மீண்டும் நமது குழந்தையை நம் அண்டைவரச் செய்வார். கலங்காமல் இருங்கள் பிராணநாதா !
தர்மராசன் வசனம்
ஆ, தெய்வமே ! நான் திருத்தலங்கள் யாவும் கண்டு ஆனந்தமாக வந்த சந்தோஷத்திற்கா எனக்குக் கிடைத்த இந்தச் சோதனை? என் மகள் ஞானத்தை நினைக்கும்போது எனக்குத் தலை சுழல்கிறதே! நான் எங்கு போய்த் தேடுவேன்? யாரிடம் கேட்பேன்? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே. இறைவா! நான் படும் அங்கலாய்ப்பைப் பார்த்து தாயில்லாத என் செல்வக் குழந்தையை, ஒரே கண்மணியை, மீண்டும் நான் கண்டடைந்து ஆனந்தங் கொள்ள அணுக்கிரகம் செய்தருளும், சுவாமி !
34

காட்டு சின் பிலேந்திரன் வேட்டைக்குப் போகப் புறப்படுதல் பிலேந்திரன் தரு (கட்டில் எ. மெ.)
கானகத்தை நாடிச் செல்லுவோம் - என் தோழரே நாம் கானகத்தை நாடிச் செல்லுவோம்
கானகத்தை நாடிச் சென்று கர்த்தனை முன் வேண்டி நின்று மான் மரைகள் தேடிக் கண்டு மாய்த்திடுவோம் அம்பால் கொன்று சடசட வென நீவிர் அம்பை எடுங்கள் மடமட வென அதை வில்லில் தொடுங்கள் கடகட வெனக் கடும்பாணம் விடுங்கள் படபட வென விழ இலக்குத் தொடுங்கள் (கானகத்)
1ம் வீரன் தரு
மந்தியொன்று குந்திப்பாயுது - பாரடாதோழா மந்தியொன்று குந்திப் பாயுது
மந்தியொன்று பாயுதடா
மாணிரைகள் மேயுதடா
தந்திர நரிக் கூட்டங்கள்
தாவிப் பற்றை பாயுதடா
சளசளவென மலையருவியும் பாயுது பளபளவென முத்துக்குமிழிகள் தோயுது கிறுகிறுவென ஒரு கரடியும் வருகுது மளமளவென அது நீரினைப் பருகுது (கானகத்தை)
பிலேந்திரன் தரு கானமயில் ஆடுது பாரீர் - தோகை விரித்துக் கானமயில் ஆடுது பாரீர்
கானமயில் ஆடுகுது கண்டு குயில் பாடுகுது மானமுள்ள மாடப்புரு? தானே சோடாய்க் கூடுகுது
35

Page 29
குசுகுசு வெனச் சிட்டுக் கூடியே பேசுது குபுகுபு வென நறுந் தென்றலும் வீசுது துமிதுமி யெனப் பணி நீருமே பொழியுது அகமிக மகிழவே ஆனந்தம் வழியுது (கானகத்தை)
2ம் வீரன் தரு அஞ்சாமலென் பின்னலே வாரும் - என் தோழனே நீ அஞ்சாமலென் பின்னுலே வாரும்
அஞ்சாமல் என் பின்னல் வாரும் அங்கே செங்கால் நாரை பாரும் பஞ்சவர்ணக்கிள்ளை பாடும் பண்ணினை நீர் சற்றுக் கேளும் புதுவித மணமலர் இதழ் இதோ விரியுது மதுரித மதுவினை மிகமிகச் சொரியுது நிலவொளி மரமிடை தனிலிதோ தெரியுது சிறுவனம் மெதுமெதுவாகவே கழியுது (கானகத்தை) பிலேந்திரன் வசனம்
வீரர்களே! நாங்கள் இவ்வளவு நேரம் மட்டாக சிறிய காட்டிற்குள்ளே
நின்று வேட்டையாடினுேம். இனித் தாமதியாது பெருங்காட்டிற்குள் புகுந்து வேட்டையாடுவோம் வருவீர்களாக,
1ம் வீரன் வசனம்
ஐயா ! உங்கள் விருப்பப்படியே உட்காட்டிற்குள் புகுந்து வேட்டையாடு வோம், வருவீர்களாக,
2ம் வீரன் வசனம்
அரசே! உட்காட்டிற்குள் சென்று வேட்டையாடும்போது கொடிய மிரு கங்கள் குறுக்காலே வரும். நாங்கள் மிகவும் ஆயத்தமாக நமது ஆயுதங் கண் வைத்துக்கொள்ளவேண்டும், அரசே!
பிலேந்திரன் தரு (வீரகுர எ. மெ.) வேகவேகமாய் வாரும் வீரர்களே - மிருகவேட்டை ஆடலாம் வருவீரே தோழர்களே - மதம் மிஞ்சிக்
கத்திடும் சிங்கங்கள் சாய மெத்திடும் புத்தியதாக விட்டிடும் அம்புகள் தாவ வேங்கைகள் வீழ்ந்துமே சாக (வேக)
36

பாணம் அம்புகள் பற்றி நின்றிடுவீர் - பாயும் வேங்கை ஆணவத்தை அடக்கிக் கொன்றிடுவீர் - கெட்டியாக
ஆனை ஓநாய்கள் ஓட ஓடவே அஞ்சிச் சிங்கங்கள் கெஞ்சி நாடவே ஈனவிலங்குகள் வீழ வீழவே எங்கள் அம்புகள் பாயப்பாயவே (வேக) ஞானசவுந்தரி தரு (அசைக்கிருரே எ. மெ.) பதைக்கிறேனே அம்மா தாயே - என்னைப் பாதுகாக்க வாரும் நீயே
பிலேந்திரன் வசனம்
அடே வீரர்களே ! நாங்கள் எல்லோரும் நன்றங்க் களத்துவிட்டோம். சற்று இளைப்பாறி மீண்டும் வேட்டையை ஆரம்பிப்போம்.
ஞானம் தரு துன்பம் போக்கத் துணையைத் தாரும் - எந்தன் துயரம் நீக்க ஓடிவாரும்
பிலேந்திரன் வசனம் அடே வீரர்களே! இந்தத் திக்கிலிருந்து ஒரு மானிடக் குரல் கேட்கிறதே. சற்றுக் காது கொடுத்துக் கேளுங்க்ள்.
ஞானசவுந்தரி தரு காட்டில் வந்தே கரமிழந்தே - நானும் கதறுகிறேன் கருணை தாராய்
1ம் வீரன் வசனம்
ஆம், ஐயா! ஒரு மெல்லிய அழுகைக் குரல் கேட்குமாப்போல் விளங்கு கிறது.
பிலேந்திரன் வசனம்
வீரனே! விரைவாக அந்தப் பக்க்ம் சென்று சற்றுப் பார்த்து வருவாயாக.
(வீரன் பார்க்கச் செல்லல்)
:37

Page 30
ஞானம் தரு
ஆதுலரை அரவணைக்கும் - தாயே அடியாளையும் அணைப்பீரம்மா
(வீரன் விரைந்து ஒடி வருதல்)
1ம் வீரன் வசனம்
ஐயா ! பரிதாபம், பரிதாபம், ஒரு பெண் தலவிரிகோலத்தோடு அழுது கொண்டிருக்கிருள் அரசே!
பிலேந்திரன் வசனம்
ஆ! என்ன சொன்னுய்? ஒரு பெண் பேதையா? தலைவிரிகோலமா ? அழுது புலம்பிக்கொண்டா ? ஐயோ! என்ன கர்மம்.
(பிலேந்திரன் ஓடிப்போதல்)
(ஞானசவுந்தரியின் அழகைக் கண்டதும் பிலேந்திரன் ஆச்சரியப்பட்டுச் சொல்லும் வசனம்.) 氧
பிலேந்திரன் வசனம்
,1 என்ன ஆச்சரியம் ! என் கண்களே என்னைப் பொய்யாக்குகிறதே! இவள் ஒரு மானிடப் பெண்ணு? தேவலோகத்துக் கன்னியா ? அல்லது ரம்பை, ஊர்வசியா? அதுவுமில்லை, சந்திரன் சூரியன் குழம்பெடுத்துச் சமைத்த பளிங்குச் சிலையா? அல்லது பொற்பாவையா? நான் இவளை என் னென்று கூறுவேன்? என் மனக் கெலி தீர, எப்படி வர்ணிப்பேன்? கம்பன்
கண்ட சீதையா? இளங்கோ போற்றிய கண்ணகியா?
பிலேந்திரன் தரு (ஆகா எ. மெ.)
ஆகா இவள் சந்த்ர பிம்பமோ - இப்பூவுலகில் ஆகா இவள் சந்த்ர பிம்பமோ ?
அங்கமீது தங்கமிட்ட திங்கள்ளூப சுந்தரியோ? அங்கயற் கண் லோசனியோ? செங்கமலப் பூமணியோ? அக-முக-வசி-கர-நகை-மிகு-குண-வதி அந்தோ ரம்பைபோலத்தோணுதே - அவளுதட்டை அல்லிமலர்கள் கண்டு நாணுதே -ஆகா இவள்
38

இந்திராதி தேவர் போற்ற வந்துதித்த தேவ மாதோ? இன்று பூத்த செங்கமல இராசயோக லட்சுமியோ ? இர-வியை-பழி-தரு-ஒளி-மிகு முக-வசி இதோ புன்னகை பொங்குதே - அவள் முகத்தில் இன்பக் கதி ரோனுமே தங்குதே -ஆகா இவள்
(பிலேந்திரன் ஞானசவுந்தரியைக் கிட்டி நெருங்கிப்போதல்)
பிலேந்திரன் வசனம்
ஆ! பெண்ணே! இதென்ன, உன் கோலம் ? கைகளிரண்டும் அற்றவ ாாக அல்லவா இருக்கிருய்? உனக்கு ஈசன் எழுதிய எழுத்து இதுதாஞ? உன்னைப் படைத்த பிரமனுக்கு இரக்கமில்லையா? இந்த நீசச் செயலைப் புரிந்த சண்டாளர் யார் ? உனது பெற்றேர் எங்கே? ஊர் பேர்யாது,
அம்மா ?
பிலேந்திரன் பரணி
இரவி நிகர் முகவதன இன் சொல்லாளே
இருளொளிக்கும் குழல் அவிழ்ந்தும் உனதிரண்டு
கரமிழந்தும் வனத்திலுறும் காரணத்தைக்
கான குயிற் குர லெழுப்பிக் களறுமம்மா
ஞானம் பரணி
புரமதிலே சிறுமியெனக் காருமில்லைப்
புத்தியிலாச் சிற்றனையாள்புரிந்த இந்தக்
கருணையற்ற செயலறிவீர் பெற்ருேர் பேரூர் கன்னியறியேன் எனைநீர் காப்பீர் ஐயா
பிலேந்திரன் தரு (தங்கம்போல் எ. மெ.) அங்கமே தங்கமிட்ட நங்கையே - நீவிர் இங்குற்ற செய்தி கூறும் மங்கையே
பிலேந்திரன் வசனம்
ஆ! மாசுமறுவற்ற மங்கையே! நீவிர் இங்குவந்த காரணத்தை எனக்குக் கூறுவீராக. :
39

Page 31
ஞானம் தரு
காரணம் யாதோ நானறிகிலேன் - இந்தக் கானகம் வந்ததும் தெரிகிலேன்
ஞானம் வசனம்
திக்கற்றவளுக்கு ஆதரவளிக்க வந்த என் தர்மப்பிரபுவே! நான் இங்கு வந்த காரணமும், வந்த வழிவகைகளும் உண்மையாகவே எனக்குத
தெரியாதையா.
பிலேந்திரன் தரு
இந்த மோசங்கள் செய்ததாரம்மா - அதை எந்தனுக்கின் றெடுத்துக் கூறம்மா
பிலேந்திரன் வசனம்
ஆ! இந்தப் படுபாதகச் செயலைப்புரிந்த சண்டாளர்கள் யாரென்பதைக்
கூறுவாயாக,
ஞானம் தரு
சிற்றன்னை செய்த சதிவேலையே - உண்மை செப்பினேன் எந்தன் இளங்காளையே
ஞானம் வசனம்
பிரபு ! எனக்குற்ற இந்தக் கொடுமைகள் யாவும் எனது சிற்றன்னை செய்தாளேயன்றி, வேறு எவரும் இல்லை. அறிவீர் ஐயா.
பிலேந்திரன் தரு
பெற்றேரின் ஊர்பேர் கூறும் அம்மையே - உன்னைப் பேணி நான் காப்பேன் மிகச் செம்மையே
பிலேந்திரன் வசனம்
அம்மையே! உம்முடைய பெற்றேர்களின் ஊரும் பேரும் நானறியும்படி கூறுவீராக,
40

ஞானசவுந்தரி தரு
தந்தைதாய் ஊர்பேர் தெரியாதையா - என்னைத் தற்காக்க வேண்டினேன் துரைஐயா
"ஞானம் வசனம்
தர்மப் பிரபுவே! எனது தந்தை தாயாரையும் அவர்களின் பெயரை யும் ஊரையும் நான் அறிகிலேன், அபலையாகிய என்னை எப்படியாகிலும் காத்து இரட்சிக்கவேண்டும், ஐயா !
பிலேந்திரன் வசனம்
அம்மா! உனது நிலைமையைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பரி தாபமாக இருக்கிறது. கன்னியnகிய நீ கரமிழந்து காட்டில் நின்று தவிக் கின்ருய். நீ ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். உன்னை நான் என்றுமே கைவிடாமல் காப்பாற்றுவேன். எம்முடன் கூடி எமது ஊருக்கு வருவீராக.
ஞானம் வசனம் அப்படியே உமது சொற்படி வருகிறேன் ஐயா,
மாளிகை சீன் சிமியோனும் பெண்ணும் இருத்தல்
பிலேந்திரன் ஆசிரியவிருத்தம்
கனக மாணிக்கம் செறிமணிக் கொலுவில்
கதிரவன் போலொளி காலும்
கவினுறும் பெற்றேர் திருவடி பணிந்து களறுமென் னுரையது கேளிர்
வனமது சென்றே விலங்கினைக் கொன்றே வாகையாய் நான் வரும் வழியில்
வதனசுந்தரியாள் இருகரமிழந்தே
வனமிடை நிற்பதைக் கண்டே
மனமது நொந்தே அருகினில் சென்றே மடக் கொடியாள் துயரறிந்தே
மருவுபெற்றேர்கள் இலையெனத் தெரிந்தே
மாளிகைக் கழைத்து நான் வந்தேன்
41

Page 32
எனதுடல் ஆவி காப்பதைப் போன்றே
இவளை உம் திருமகள் போலே
ஏற்றுமே நீவிர் காத்திடல்வேண்டும் ஈது என் விண்ணப்பம் அறிவீர்.
பிலேந்திரன் வசனம்
எனது அருமைப் பெற்றேர்களே! தங்களின் உத்தரவின்படி தர்மராச னின் ஆக்ஞாசக்கரத்துள் அடங்கிய ருேமாபுரிக் காட்டிற்குச் சென்று வேட்டை யாடி மிருகங்களைக் கொன்று வாகையோடு வரும்வழியில் கானகத்தின் மத்தியிலே இக்கன்னிப் பெண்ணுள் இரு கைகளையும் இழந்து துன்பப்பட்டு நிற்பதைக் கண்டேன். இச்சோகக் காட்சியைக்கண்டு அவளிடம் சென்று வர லாற்றை அறிந்தபோது அவள் யாருமற்றவளென்றும், அன்னை தந்தையை இழந்த அபலேயென்றும், ஊர்பேர் தெரியாதவளென்றும் அறிந்தபடியால் தன்னந்தனியே அவளேக் காட்டில் விடாது, இங்கு கூட்டி வந்துள்ளேன். அவளே உங்கள் சொந்தப்பிள்ளையைப்போல் பாதுகாக்கவேண்டும். உங்களை மன்ருட்டமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன், அறிவீராக.
சிமியோன் தரு (ஒடியாடி எ. மெ.)
ஒவியப்பூம் பாவையாளே கேளிர் - எங்கள் ஒரு மகன் பகருரை தவறிடாதுனையே நாம் உற்றபிள்ளை போல் நாம் காப்போம் வாரீர்
சிமியோன் வசனம்
மகளே ! நீயொரு அணுதைப்பிள்ளையென்று ஒருபோதும் எண்ணுதே. எமது செல்வமகன் பிலேந்திரன் உன்னை எம்மிடம் அழைத்து வந்தபடியால்
நாங்கள் எங்கள் சொந்தப்பிள்ளையைப்போல் பாதுகாப்போம், பயப்படாதே.
சிமியோன் பெண் தரு
பால்பழம் பிசைந்து அன்னம் ஊட்டி - உன்னைப் பக்குவமாக நாம் மிக்க மேலாகவே பாதுகாப்போம் அஞ்சாதே சீமாட்டி.
சிமியோன் பெண் வசனம்
குழந்தாய் ! உன் அன்னையைப்போல் பாலும் பழத்தோடு அன்னபானுதி
களூட்டி உன்னேச் செல்லமாய் வளர்ப்போம். நீ ஒன்றுக்கும் அஞ்சாதே
9DDr ... »
42

பிலேந்திரன் தரு
ஏழைபரதேசி என்று பெண்ணே - சற்றும் எண்ணமில்லாமலே கண்ணியமாகவே இங்கிருந்து வாழ்வீர் எந்தன் கண்ணே
பிலேந்திரன் வசனம்
பெண்ணே! இன்று துவக்கம் நீ ஒரு ஏழைப் பெண்ணென்றே அல்லது கையிழந்த பாவையென்றே ஒருபோதும் எண்ணக்கூடாது. எனது பெற் ருேர்கள் உனக்கு வேண்டிய சகல சிகிச்சைகளும் சங்கைகளும் செய்வார்கள். எந்தவித துக்கங்களையும் மனதிற் கொள்ளாமல் ஆனந்தமாயிருப்பாயாக.
ஞானசவுந்தரி தரு
கோடிகோடிப் புண்யம் உமக்குண்டு - எந்தன் கொற்றவா உமதுடை சொற்படி நானிங்கு கூடி வாழ்வேன் ஆனந்தமே கொண்டு
ஞானம் வசனம்
என் துயரைத் தீர்த்த துரைமகனே! உமது உத்தரவின்படியே தங்களின்
அன்னை தந்தையருடன் ஆனந்தமாக என் சீவியத்தைக் கழிப்பேன் அறி
விராக, (சின் விழுதல்)
மாளிகை சின் Ys
சிமியோனும் பெண்ணும் இருத்தல் சிமியோன் தரு (முத்தந் தந்தேன் எ. மெ.)
காவியம் கூறிடும் ஓவியப்பாவையே காரியம் ஒன்று சொல்வேன் பெண்ணுளே ஆவலாய் நீர்மிக வாலோசனை பண்ணி அன்புடன் கூறிடுவீர் பின்னலே
சிமியோன் பெண் தரு
தாதவிழ் பூமலரார நேர் மார்பனே தாரதல’ மகிபா என் வேந்தே ஏது கரும மென் ருேதினுல் நானதற் கேற்றவுரை பகர்வேன் மகிழ்ந்தே

Page 33
சிமியோன் தரு
ஆசை அவுறுகமான ஒல் காசநேர் அன்புறும் மைந்தனுக்கே திருமணம், வீசு புகழ் மேவு ராசகுலத்தினில் பேசிடவே நினைத்தேன் இதுதினம்
சிமியோன் பெண் தரு
வாலிப கோலணுய் வந்ததால் இல்லற வாழ்வளித்தல் மிகவும் உவப்பே பாலனின் எண்ணமும் ஏதென்று கேட்டுநாம் பார்ப்பது எங்களுடை பொறுப்பே.
சிமியோன் பெண் வசனம்
என்னருமை நாதா! நீங்கள் கூறியபடி நமது மைந்தன் பிலேந்திர குமாரனுக்கு வயது வந்தபடியால் திருமணஞ் செய்துவைத்தல் மிகவும் நல்ல தேயாகும். எதற்கும் நமது மைந்தனிடமும் இதனைக்கூறி அவருடைய விருப்பத்தை அறிதல் நல்லதாகும்.
சிமியோன் வசனம்
தேவி! நீர் சொல்லியபடி நமது குமாரனே இச்சணமே அழைத்து விஷ யத்தைக் கலந்தாலோசிப்போம். கட்டியகாரா! எனது மகன் பிலேந்திரனை வரும்படி அழைத்து வருவாயாக.
பிலேந்திரன் வசனம்
தந்தையே! என்னை அவசரமாய் அழைத்த கருமம் யாதெனக் கூறுவீராக.
சிமியோன் தரு (தரைதனில் நீதியே எ. மெ.)
வண்டுறங்கும் மாலை கொண்டிலங்கும் மணிமார்பனே - உன்னைக் கண்டொரு காரியம் பேச நினைத்தேன் குமாரனே

பிலேந்திரன் தரு
சுடர்மணி மகுட மன்னவரேறே எந்தனின் அப்பரே - பொல்லா அடர்சேனை படையேதும் நகர்வந்தாரோ சொல்லும் இப்போதே.
சிமியோன் பெண் தரு
பகையின்றிப் பலரும் புன்னகையோடு வருகின்ருர் செல்வமே - உந்தன் தகைமையை நிலைமையை அறிந்ததால் வாடுதெம் உள்ளமே
சிமியோன் தரு
வண்ணக் குமாரா உனக்கு எம் மன்னர் குலத்திலே - ஒரு வாழ்வினைத் தேடிட எண்ணுகிருேம் இத்தலத்திலே
சிமியோன் பெண் தரு உங்களின் எண்ணமும் ஏதென்று எங்களுக் கோதுமே - அதை உண்மையாய் நாங்கள் அறிந்துவிட்டால் அது போதுமே
பிலேந்திரன் தரு
மன்னர் குலத்தில் திருமணஞ் செய்ய இணங்கிலேன் - கைகள் இல்லாத ஞானசவுந்தரியை ஏற்க எண்ணுறேன்
பிலேந்திரன் ஆசிரிய விருத்தம்
அருணநேர்கிரண ஒளி தவழ் வதன
அன்னைத்ந்தையர் திருவடியை
அணிமணித் தவிசில் சிரமிசை வணங்கி
அடியவன் கூறுரை கேளிர்
45

Page 34
மருவலர் வெருவும் மணிமுடிராச
மரபினின் மடக் கொடியாரை மானிலம் மீதில் நான் மணம்புரியேன்
மாதா பிதாவின் மேலாணை இரு கரமிழந்தே வனமிடையிருந்தே
எடுத்துநான் வந்த ஏந்திழையாம் எழில்திரு ஞானசவுந்தரி தனையே எந்தனின் இல்லவளாகத் திருமணஞ் செயவே நான் மனங் கொண்டேன்
தீங்கிதற் கெவர் விளைத்தனரோ தீயில் முக்குளித்து உயிரை நான் விடுவேன்
தீர்க்கமா யறிந்திடுவீரே.
பிலேந்திரன் வசனம்
எனது அருமைத் தாய் தந்தையரே! நான் தங்களின் விருப்பத்தின் படியே திருமணம் முடிப்பதற்கு இசைந்து வருகிறேன். ஆணுல் அரச ம1 பிலோ அல்லது பிரபு வங்கிஷத்திலோ நான் ஒருபோதும் சம்மதப்படேன். நான் காட்டிலே கண்டெடுத்து இங்கு கூட்டிவந்த கரமிழந்த ஞானசவுந்தரி என்னும் கன்னியையே நான் எனது சொந்த மனைவியாகக் கையேற்க ஆசைப்படுகிறேன். எனது திருமணம் எட்டுத்திக்கும் பதிஞறு கோணமும் கட்டியாளும் அரசர்க்ளின் லரவேற்பின்றி ராசோபசார வைபவமின்றி நடை பெறுவதற்கே விரும்புகிறேன். அங்கனம் எனது எண்ணத்திற்கு நீங்கள் செய்வதற்கு விரும்பினுல் நாளையத்தினமே நமது அரண்மனைச் சுவாமியாரை அழைத்து சத்திய திருச்சபையின் முறைமையின்படி செய்வதற்கு ஆயத்தப் படுத்துங்கள். எனது எண்ணங்களுக்கு மாறக இருக்குமேயாகில் நான் தீயில் விழுந்து சீவனைப்போக்குவேன். இது என் பெற்றேர்கள்மேல் ஆணை, அறிவீர்களாக.
சிமியோன் பெண் வசனம்
அண்ணலே! நமது மைந்தன் பிடிவாதமாக ஞானசவுந்தரியாளையே திரு மணம் செய்வதற்கு விரும்புகிறபடியால், அவரின் விருப்பப்படியே அதனைச் செய்து வைக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆக்வே நாளைக்கே திருமணத்துக்கு ஆயத்தம் செய்வீர்களாக,
46

சிமியோன் வசனம்
என் நேசமகனே! அன்று நீ அவளைக் காட்டில் சந்தித்த பொழுதே அவள் மேல் உனது நெஞ்சைப் பறிகொடுத்து விட்டாய். பரவாயில்லை. அவ ளோர் ஏழைப் பெண்ணுக இருப்பினும் கையிழந்த பாவையாகத் தோன்றி னும் களங்கமில்லாக் கற்பரசி என்பது உண்மை. ஆகவே உனது விருப்பத் தின்படியே எங்களின் மனம் நிறைந்த ஆசிர்வாதத்துடனே நீர் கூறியவண் ணம் எவ்வித ஆடம்பரமும் இன்றி நாளையத்தினமே திருமணத்தைச் செய்து வைக்க ஆயத்தப்படுத்துகிறேன். கட்டியகாரா! எனது மாளிகைக் குருவான
வரை அழைத்து வருவாயாக,
ருேட் சின்
குருவானவர் வரவு கவி
சத்திய வேத ஞான சாத்திரமனைத்தும் கற்று எத்திசைத் தேசமெங்கும் ஏகியே சென்று யேசு கர்த்தனின் தொண்டு யாவும் கருத்துடன் செய்து நிற்கும் உத்தமக் குரு சந்நியாசி உவப்புடன் சபைவந்தாரே.
குருவானவர் தரு ஆதியந்தமுமற்ற சோதி அம்பரனே போற்றி போற்றி உல-கனைத்தும் படைத்துக் காத்து அருளும் அற்புதவானே போற்றி போற்றி ஆறுலட்சணரூப மான அற்புத தேவா போற்றி போற்றி ஞான-பேறுதந்தருள்கின்ற தேவாதி தேவனே
போற்றி போற்றி வானவர் போற்றிடும் ஞான சொரூபியே போற்றி போற்றி இந்த-வையகம் காத்திடும் மெய்யான ரட்சகா
போற்றி போற்றி சென்மப் பவமில்லாத கன்னி மரியதாயே
w போற்றி போற்றி சர்ப்ப-சென்னித்தலை மிதித்துச் செகத்தை மீட்ட வளே
− போற்றி போற்றி
47

Page 35
மாளிகை சின்
குரு வசனம்
மாட்சிமை தங்கிய மன்னரின் குடும்பத்திற்குப் பரம தேவனின் ஆசிர்வாதம் உண்டாவதாக என்னை இங்கு அழைத்த காரணம் கூறுவீராக.
சிமியோன் வசனம்
வணக்கம் சுவாமி ஆசனத்தில் அமருவீராக. நாளையத்தினம் எனது மகன் பிலேந்திரனுக்கு எவ்வித ஆடம்பரமுமில்லாமல் திருமணம் செய்வதற்கு எண் ணியுள்ளோம். ஆகவே எமது மாளிகைக் கோயிலில் திவ்விய பூசைப்பலி வைத் துத் திருமணத்தைச் செய்து வைக்க வேண்டும், சுவாமி.
குரு வசனம்
மன்னவரே! நீங்கள் சகல ஆயத்தங்களும் செய்து வையுங்கள். நாளைய தினம் மாளிகைக்கு வந்து திருமணத்தைக் கைப்பிடித்து விடுகிறேன், அறிவீ
历T5, 籍
சிமியோன் வசனம்
அப்படியே செய்கிறேம் சுவாமி. (சீன் விழுதல்)
கோயில் சின்
(சிமியோன் ராசனும் பெண்ணும் பிலேந்திரனும் ஞானசவுந்தரியும் திரும ணத்திற்குக் கோயிலில் இருத்தல். சுவாமி கைப்பிடித்தல். திருமணம் முடிந்து நடனப் பெண்களோடு ஊர்வலம் செல்லுதல்)
சிமியோனும் பெண்ணும் புதுக்குடும்பத்தை வாழ்த்தல்
சிமியோன் விருத்தம்
வாழ்கவே நீர் பல்லாண்டு வல்லபன் கிருபையாலே நீள் புவி மீதில் என்றும் நிறைந்த பாக்கியங்களோடே
சிமியோன் பெண் விருத்தம்
தாழ்விலாச் செங்கோல் தாங்கித்தனையர் பல்லோரைக்கண்டு ஆழ்கடலுலகம் யாவும் ஆளுவீர் ஆளுவீரே.
48

பிலேந்திரன் ஞானம் தரு (ஆசை நிறை எ. மெ.) இருவரும் தரு வாசம்நிறை நறும் ருேசாமலரே என்-அன்பே என்னுரமுதே நேசம் மிகும்-இன்பே என் தேனமுதே பிலேந்திரன் தரு மாசில்லா எந்தனின் மாடாப்புரு நீயே
ஞானசவுந்தரி தரு மாடாப்புழுக் காத்த மன்னவன் நீர்தானே
பிலேந்திரன் தரு ஆசை வைத்ததாலே உன்னைக் காத்தேன் மானே
ஞானசவுந்தரி தரு அன்பு தந்தேன் அதற்காகத் தானே நானே--வாசம்
பிலேந்திரன் தரு தேவியே உன்னை நான் தேன்நிலவிற் பார்க்க
ஞானசவுந்தரி தரு தேடுங்கரமற்ற பாவைபோல் தோணுதே
பிலேந்திரன் தரு இல்லை இல்லை ரதி தேவதை நீமானே
ஞானசவுந்தரி தரு எந்தன் மனங்கொண்ட இந்த்ரனும் நீர்தானே--வாசம்
பிலேந்திரன் தரு கட்டிப் பிடிக்கக் கை இல்லாக் கவலையோ
ஞானசவுந்தரி தரு கணவனின் கைகள் இருந்தால் அது போதும்
பிலேந்திரன் தரு எட்டி வாரும் எங்கள் இன்பமனை செல்வோம்"
ஞானசவுந்தரி தரு யேசு மரிசூசையார்க்குத் துதி சொல்வோம் - வர்ச்ம்
ஞா. - 4 49

Page 36
LoT afsons gf Gör
சிமியோன் அரசன் கொலுவிருத்தல் (துருக்கிதேசத் தூதுவன் கடிதம் கொடுத்தல்)
துருக்கி தூதுவன் வசனம் ராசாதி ராச ராசமார்த்தாண்ட மன்னவரே! துருக்கி தேசத்து மன்னன் தந்து அனுப்பிய கடிதம் பெறுவீராக. .
சிமியோன் கடிதம் வாசித்தல்
சிமியோன் ஆசிரிய விருத்தம் (கடித வாசினை) சீர்மிகு எகிப்தின் நாட்டினைப்புரக்கும்
செம்மலாம் சிமியனின் சமுகம் சிறப்புறு துருக்கி நாட்டையாள் அரசன்
தீட்டிடு நிருபமே பாரீர் ஏர்மிகும் எனது ஆணையின் கீழே
உன்னெழில் எகிப்து ராச்சியமே இயங்கிடல் வேண்டும் , என் பிறைக்கொடியும்
எங்குமே பறந்திடல் வேண்டும் பார்மிசை மீதே எனது சிற்றரசாய்ப் பயத்துடன் என்றுமேயிருந்து பலன்தருங் கப்பம் தந்திடல் வேண்டும்
பகர் இதற் கமைந்தி டாவிடிலோ போர்ப்பறைகூவி எகிப்தினைப் பிடித்துப்
பொடிப்பொடியாக்குவேன் திண்ணம் புரவலா இதனை அறிந்து நீ கடிதம்
புத்தியாய் அனுப்பிடுவாயே.
சிமியோன் (கல்வெட்டு)
கோடுற்ற மத கரிகள் அடிகள் தடுமாறினும்
குரை கடல்கள் பொங்கி எழினும்
கொக்கரித்திடுமரவம் அக்கினிகள் கக்கினும்
குளிர்மதி கொதித்து விழினும்
SO

காடுற்ற கரிவரிகள் கர்ச்சித் தெழும்பினும்
ககன மதிடிந்து விழினும் கனகமணி முடிவேந்தர் எனதடியே பணியினும்
கடவுள் தரிசனமாயினும் நாடற்ற துருக்கியவன் என்னுணையறியாது
நஞ்சரவ நெஞ்சுகொண்டு நாடியவனென தெல்லை தேடிவந்தவனுடைய
நாக்கையரியாமல் விடனே பாடுற்ற படைகொண்டு பங்கப்படுத்தியென்
பட்டயம் தொட்டு நின்றே பாழும் பருந்து நாய் நரி கழுகு உண்டிடப்
பண்ணுவேன் திண்ணமீதே,
சிமியோன் சிந்து (இப்படியும் சொன்னனே எ. மெ.)
இப்படித் துணிந்திட்டானே - துருக்கியவன் இப்படித் துணிந்திட்டானுே
இப்படித் துணிந்திட்டானே கப்பத்தில் மிகுந்திட்டாணுே எப்படியும் தப்பிலியை இப்புவியில் விட்டிடேனே
சிங்களம் சோனகம் கொல்லம் சீனம் துளுக் குடகம்
கொங்கனம் கன்னடமோடு கலிங்கம் தெலுங்கம் வங்கம் கட்டியே அரசாளும் - முடிமன்னா கிட்டியே என நாளும் . அஞ்சி ஒஞ்சி வந்துமே பணிந்து பதம் நின்றுமே வணங்கி நிதம் தந்துமே திறைகள் பெறும் சுந்தரஞய் நானிருக்க - இப்படி
51

Page 37
வாட்பலச் சிங்கேறெனச் செங்கோல்பிடித்து ஆளுமெந்தன் ஆட்பல மறியாமூடன் நாட்பலன்கள் பார்த்தெகிப்தின் நாட்டிற்குள் புகுந்தானே - அவன் பலத்தை காட்டிட நிமிர்ந்தானே - பார்பார் இன்று அக்கினிச் சக்கரம் பற்றிக்
சிக்கெனப் பிடித்துக் கட்டி
குக்கலே வளைந்து சுற்றி
நக்கிடச் செய்வேனே கெட்டி - இப்படி
மண்டலம் நடுநடுங்க அண்டமும் கிடுகிடுங்க எண்டிசையும் பேரிலங்கும்." ஏந்தலஞய் நான் விளங்க போருக்குத் துணிந்தானே - பொல்லா வசைகள் கூறித்தான் முனிந்தானே - ஆகா இவனை நாய் நரி கழுகுதின்ன பேயலகை கூடியுண்ண வாய்க் கொழுப்புத்தானென்றெண்ணப் போய் அடக்கி வைப்பேன் திண்ணம் - இப்படி
சிமியோன் வசனம்
தூதுவா துருக்கியுடன் நான் சண்டை செய்யத் தயார் என்றும், கப்பம் கட்ட முடியாதென்றும் நாளைக்குப் போர்முனையிலே சந்திப்பதாகவும் கூறு
AfT T86.
தூதுவன் வசனம் அப்படியே சொல்கிறேன், அரசே!
சிமியோன் வசனம்
கட்டியகாரா ! எனது மகன் பிலேந்திரனை அதிசீக்கிரம் அழைத்து
aGart ms.
பிலேந்திரன் வசனம் அரிய தந்தையே! என்ன அதிசீக்கிரம் அழைத்த செய்தி கூறுவீராக.
சிமியோன் வசனம்
என் மகனே! இதோ துருக்கி மன்னன் அனுப்பிய கடிதத்தைப் பார்ப் பீராக. (பிலேந்திரன் கடிதம் படித்தல்) 4.
52

பிலேந்திரன் நெடில் ஆசிரியம்
அந்தரமெழுந்து வருசந்திர னெருங்கினும்
ஆதித்தன் திசை மாறினும் அண்டமுக டிடியினும் குண்டு மழை பொழியினும்
அலையாழி கரையேறினும் வெந்துருகித் தாரகைகள் பந்தெனவே விழினும் விட சேடன் மிக நெளியினும் , - விண்ணுடு எரியினும் மண்ணுடு கருகினும்
விருதரசர் அடி பணியினும் சந்த்ர நிழல் தவழ்கின்ற எந்தனரும் நாட்டினின்
சங்கையறியாத மூடன் சண்டித்தனங் கொண்டு நெஞ்சுத் திடங்கண்டு
d# LDprrr l. 6Qugr6qLDmréfG3éFfT மந்திர மிகுந்திலகு எந்தனரு பட்டயம் மருவி நான் தொட்டு நின்றே மண்டல மீதின்று படைகொண்டு அவனுணவ
மறத்திமிர் அடக்குவேனே.
பிலேந்திரன் சிந்து ஆணவம் அடக்குவேனே - அடங்காவிடில் ராணுவம் தொடக்குவேனே
ஆணவம் அடக்குவேனே ராணுவம் தொடக்குவேனே அட்டகோணத்துறு பட்டண மெட்டிட நட்டனை செய் பெருதுட்டனை இப்புவி பட்டயமிட்டிடு கெட்டிய வாளினல் ...' . . . . . . சட்டெனச் சிரமதை வெட்டியே எறிகுவேன் (ஆண)
மந்திரங்கள் கற்றிட்டானே-எமக்கு அவன் தந்திரங்கள் விட்டிட்டானே
மந்திரங்கள் கற்றிட்டானே தந்திரங்கள் விட்டிட்டானே மண்டல மெண்டிசை கண்டு நடுங்கிட அண்டவர் நின்றே வெருண்டு கலங்கிட கண்டமே துண்டு விழுந்து விளங்கிட இன்று நான் சண்டை புரிந்திடு வேனே - ஆண்விம்
53

Page 38
நாய் நரி கழுகு உண்ணவே - அவனுடலை நாலு பேய் கள் வந்து தின்னவே
நாய் நரி கழுகு உண்ண நாலு பேய் கள் வந்து தின்ன நட்ட னை செய்திடு துட்டனை இக்கணம் கட்டியே அவனுடல் வெட்டியே வேகமாய் பட்டண நாய் நரி கிட்டியே உண்டிட சட்டென அவனுயிர் இக்கணம் போக்குவேன்
பிலேந்திரன் வசனம்
தந்தையே! துருக்கி மன்னனுக்கு கப்பங்கட்டி வாழ்வதிலும் பார்க்க போர் புரிந்து இறப்பது மேலாகும். அஞ்சாதீர். நாளைக்கு நான் படையோடு போர் முனைக்கு செல்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் தந்து அனுப்பி வைப்பீராக.
சிமியோன் வசனம்
என் செல்வப்புதல்வா! நமது பழம் பெரும்நாட்டைக் காப்பாற்ற நாம் ஒவ் வொருவரும் போர் புரிந்தே ஆகவேண்டும். உன்னையும் நீ கொண்டு செல்லும் படைகளையும் தேவதாயின் திருப்பாதத்தில் ஒப்படைத்தேன். வெற்றிவாகைசூடி வீடு திரும்புமாறு உன்னை ஆசீர்வதிக்கிறேன், சென்றுவருவாயாக.
மாளிகை சின்
பிலேந்திரனும் ஞானசவுந்தரியும் தரு பிலேந்திரன் தரு (மஞ்சார் சந்தன எ. மெ.)
அன்றலர்ந்த சண்பகமே அன்னமே துருக்கி செல்லப்போறேன் - நீரும் என்றும் மனதன்புடனே இங்கிருப்பீர்பெற்றேருடன் மானே.
ஞானசவுந்தரி தரு
செப்பிடும் துருக்கி தேசம் செல்லுங் காரணத்தைச் சொல்வீர் ஐயா - நானும் தப்பிதமில்லாதறிந்தால்
தைரியமாய்த் தர்னிருப்பேன் மெய்யாய்
54.

பிலேந்திரன் தரு
பொல்லாத துருக்கியோடு போர்பொருதச் சேனை கொண்டுபோறேன் - எந்தன் சொல்லரிய செல்வமே நீ நல்லவிடை தந்தனுப்பும் மானே.
ஞானசவுந்தரி தரு
போர்க்களம் நீர் சென்றுவிட்டால் பூவையெனக் கேது துணை கூறும் - நானும்
யாருமற்ற பாவை யென்று ஏந்தலனே சற்று எண்ணிப் பாரும்
பிலேந்திரன் தரு அன்னையுண்டு தந்தையுண்டு ஆடிப்பாடப் பாங்கி உண்டுதானே - இங்கு என்ன குறை யுண்டுனக்குச் சொல்லிடுவாய் எந்தன் மடமானே
ஞானசவுந்தரி தரு அக்கம் பக்கம் ஆயிரம்பேர் தக்க துணையாயிருந்த போதும் - எந்தன் அண்ணலைப் போலன்பாயென்னை ஆதரிப்பார் வேருருண்டு ஒதும்
பிலேந்திரன் தரு
அஞ்சுகமே அஞ்சிடாதே வெஞ்சினப்போர் செய்யத்தானே வேண்டும் - அல்லரல் மஞ்சு தவழ் நம் எகிப்து Sy மாற்ருன் கையில் போய்விடுமே மானே
ஞானசவுந்தரி தரு அப்படியிருந்தால் நீவிர் எப்படியும் போர்முனைக்கு ஏகும் - நானும் செப்பமாகப் பெற்றேருடன் சீவிப்பேன் நீர் வெற்றியோடு வாரும்
55

Page 39
பிலேந்திரன் வசனம்
என் அருமைத் தேவியே! நான் உன்னைக் கையேற்று இன்றைக்கு ஒரு வருடமாகியும் உன்னைத் தனியே விட்டுவிட்டு நான் எங்கேயும் செல்லவில்லை. ஆணுல் துருக்கி மன்னன் நம்மிடம் கப்பம்கேட்டு நமது பழம்பெருமை வாய்ந்த எகிப்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் போர்ப்பறை கூவிப் படை திரட்டிச் சண்டைக்குப் புறப்பட்டிருக்கின்றன். நாம் அவனுேடு போர் பொருதி அவனைத் தோற்கடிக்காவிட்டால் நம் நாடு பறிமுதலாகிவிடும். ஆகவேதான் நான் போர்முனை செல்லுகிறேன், அறிவிராக.
ஞானசவுந்தரி வசனம்
அண்ணலே ! நான் ஒன்றிற்கும் கலங்கவில்லை. நான் தற்போது கர்ப்ப வதியாயிருக்கிறேன். மாதமும் மிகவும் நெருங்கிவிட்டது. நீர் போர்முனைக்குச் சென்றபின் குழந்தை பெற்றுவிட்டால், வெகுநாள் சென்றே நீங்கள் வந்து பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சும் பாக்கியம் கிடைக்குமென்பதை நினைக்கும் போதுதான் நான் மனம் கலங்குகிறேன், பிரபு.
பிலேந்திரன் வசனம்
அன்பே ! நீர் ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். உம்மை மிகவும் பக்குவ மாகப் பார்க்க என் அன்னையுண்டு, தந்தையுண்டு, பரிகரிப்பதற்குப் பாங்கிக ளுண்டு. நான் வெகுசீக்கிரம் வெற்றியோடு விடுதிரும்புவேன், பயப்படாதீர்.
ஞானம் வசனம்
ஐயா! நீங்கள் சொல்லியபிரகாரம் துருக்கி மன்னன் நம் எகிப்து நாட்டைக் கைப்பற்றினுல் நாம் அனைவோரும் துன்பப்படவே செய்வோம். கையில்லாத என்னத் தங்களை அனுப்பிக் காப்பாற்றிவைத்த தேவதாயார் இவ்வாபத்தில் நின்றும் எம்மைக் காப்பாற்றுவார். நீங்கள் சந்தோஷமாக யுத்தத்திற்குச் சென்று வெற்றியோடு வீடுதிரும்புவீராக.
பிலேந்திரன் விருத்தம் வண்டலம்பும் மலர்புனைந்த குழலினுளே வாவியுறு கயல்பழித்த விழியினளே இன்றெனக்கு நீபகர்ந்த மொழியினலே
இருபுயமும் எழுபுயத்தின் வலிமையானேன் கண்டவர்கள் கெடிகலங்கும் எகிப்துநாட்டின்
கரிபரி காலாட்படைகள் அணியாய்க்கொண்டு சென்று சமர்புரிந்து வெற்றிவாகை பூண்டு
சீக்கிரம் நான்வந்திடுவேன் அறிவீர்தானே
56

பிலேந்திரன் வசனம்
கேளும் பெண்ணே நீர் எனக்குக் கொடுத்த உத்தாரமானது எனது மனதிற்கு மிகவும் ஆனந்தத்தைக் கொடுத்திருக்கின்றது. தேவதாயாரை அனுதினமும் வேண்டிக்கொள்வீராக. நான் சுகமாய்ச் சென்றுவருகிறேன்
அம்மா. -
ருேட் சின் பிலேந்திரனும் படைகளும் சண்டைக்குப் புறப்படல்
லேந்திரன் சந்தத விருத்தம் -
குண்டுபீரங்கிகள் எண்டிசைமண்டிடக்
கொண்டு குவித்திடுவீர் கொடி குடையொடு படை திமிதிமிதிமியெனக்
குமுறி நடந்திடுவீர் கண்டவர் அஞ்சியே நெஞ்சு கலங்கிடக்
கரிபரி நிரையிடுவீர் கடகபு:வென எதிர்படை யொடுதரைவிழக்
கடுகி எதிர்த்திடுவீர் வண்டலர் சென்னி உருண்டு புரண்டிட
வாள் வலிகாட்டிடுவீர் வயின் வயின் வயினென முரசு முழங்கிட
வாத்தியம் மீட்டிடுவீர் எண்டிசை கண்டு புகழ்ந்து மகிழ்ந்திட
இரணிய துருக்கியனை இன்று போர் வென்று விரைந்துமே கொடியினை
ஏற்றுவோம் வருவீரே
ச ண்  ைடத் த ரு
சேனைதானகள் கொண்டுசென்றிடுவோம். விரைவாய்
(நாங்கள்
சென்று போர்முனை கண்டு வென்றிடுவோம் - தப்பாது
(இப்போ
st

Page 40
அண்டமெண்டின்ச கண்டு அஞ்சி! மண்டலத்தவர் நின்று கெஞ்சிட குண்டுகள் வெடி மிஞ்சிக் குமுறிட கொட்டு பேரிகை பம்பை கமறிட - சேனைதான
சேஞதிபதி தரு
வேகவேகமதாகச் சென்றிடுவோம் - ஈட்டி அம்பு வில்லு கேடயம் கொண்டு நின்றிடுவோம் - மதங்கொண்டு வந்த படையினர் நொந்துவாடிட கந்துகம் பரி முந்தி ஓடிட பந்துபோல் சிரம் வந்து வீழிடச் சந்திரக்கொடி கம்பந்தானிட - சேனைதான
பிலேந்திரன் தரு
சத்துருப்படை கண்டு ஓடிடவே-தகதோம் த கதோமென்று தத்திமித்திமிதாளம் போட்டிடவே நிரையாய் நின்று கொம்பு குழலொடு தம்பூர் தவிலொலி பம்பை சுரவீணை செம்பு கரடிகை அம்பு வில்லோடு கெம்பு நடையொடு . தெம்பு மனமொடு நம்பிச்செல்லுவீர் - சேனைதா
சேணுதிபதி தரு
அம்பு வில் கணை பற்றி நின்றிடுவீர் - மகாவீரர் அத்தனைவரைக் கொன்று வென்றிடுவீர்- இப்போ நீவிர் வேகவேகமாய்த் தானையங்களில் சேனையோடுயர் ஆனை குதிரைகள் பாகபாகமாய் விட்டு வெஞ்சமர் வாகை சூடிட வந்து சேருவீர்
பிலேந்திரன் வசனம்
வீரர்களே! இதோ நாம் போர்முனைக்கு வந்துவிட்டோம். நமது எல்லை , யைக் காவல்பண்ணி ரத கஜ துரகபதாதிகளே ஆங்காங்கே வரிசைவரிசையாய் நிறுத்துங்கள், பீரங்கிகளில் குண்டுகளைச் செலுத்துங்கள். நமது எல்லைக்கு துருக்கிப் படைகள் வருமேயாகில் நாம் ஒவ்வொருவரும் வீராண்மையோடு போராடி நம் தாய்நாட்டைக் கர்ப்பாற்றத் தயாராகுங்கள்.
58

வீரன் வசனம்
தலைவனே! உமது கட்டளைப்படி நடந்துகொள்ள நாம் தயாராயிருக் கிருேம். எவ்வித துன்பம் லந்தாலும் மனங்கோணுமல் நமது தாய்நாட் டைக் காப்பாற்ற உறுதிபூண்டுள்ளோம். நீங்கள் ஒன்றுக்கும் கலங்கவேண்டாம்.
2ம் வீரன் வசனம்
அரசே! தினவுபிடித்த எம் புயவலியை இந்த யுத்தத்திலே காட்டி வைப்போம். துருக்கி இராச்சியம் முழுமையும் நாங்கள் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டாமல் ஒருபோதும் தூங்கோம், இது நிச்சயம். நீங்கள் ஒன்றுக்
கும் யோசிக்க வேண்டாம்.
பிலேந்திரன் வசனம்
வீரர்களே! அதோ அந்த எல்லையிலே பீரங்கிகளை நிறுத்திக் காவல்
பண்ணுவோம். வருவீர்களாக . .
மாளிகை சீன்
ஞானசவுந்தரி கட்டிலில் படுத்திருத்தல், பக்கத்தில் பாங்கிமாரிருத்தல்.
ஞானசவுந்தரி வசனம்
அடி பாங்கி! இன்றைக்கு எனக்கு மிக்வும் வருத்தமாயிருக்குதடி, தேகம் முழுவதும் ஒரே குத்துழைவாயிருக்குதடி, ஒடிப்போய் என் மாமியாரை அழைத்து வாருங்கள்.
சிமியோன் பெண் வசனம்
ஞானம் ! உனக்கு என்னம்மா செய்கிறது ? வெட்கப்படாமல் சொல்லுங்கள்
தாயே..
。 ཁག་ ஞானம் வசனம் அம்ம்ா! எனக்கு இன்றைக்குத் தேகம் முழுவதும் ஒரே உளைச்சலாய் இருக்குதம்மா. சந்தும் இடுப்பும் மிகவாக உழைகிறது.
59

Page 41
சிமியோன் பெண் வசனம்
அம்மா! பயப்படாதீர்கள், வயிறுதான் நோகப்போகிறது போல் தெரிகிறது. அடிபாங்கிகளே! அம்மாவை உடனே அந்தப்புர அறைக்குக் கொண்டு போங்கள். மருத்துவம்மாவையும் உடனே அழைத்து வாருங்கள். நீங்கள் ஒருவரும் அம் மாவை விட்டுப்போட்டு எங்கேயும் செல்லக்கூடாது. கவனமாகப் பார்த்துக் கொள்ளல் வேண்டும். சரி, அம்மாவை அறைக்குக் கொண்டுவாருங்கள்.
ஞானசவுந்தரியும் பாங்கிமாரும் அந்தப்புர அறைக்குச் செல்லுதல் ஞானசவுந்தரி தரு (ஆசைமிக ஆகிறதே எ. மெ.) உந்தி மிக நோகிறதே பாங்கிமாரே-நீங்கள் உற்ற துணையாயிருங்கோ பாங்கிமாரே
1ம் சேடி தரு அஞ்சி நீர் பயப்படர்தீர் தேவியாரே - நாங்கள் அடி பிசகாதேயிருப்போம் தேவியாரே
ஞானசவுந்தரி தரு
அடி வயிறு நோகுதடி பாங்கிமாரே-என்னை ஆதரித்துத் தாங்கி நில்லும் பாங்கிமாரே
2ம் சேடி தரு
அடிவயிறு நொந்திட்டாலும் தேவியாரே-நீங்கள் அஞ்சியே கலங்கவேண்டாம் தேவியாரே
ஞானசவுந்தரி தரு
மனது மிகச் சோருதடி பாங்கிமாரே-எந்தன் மன்னவனை எண்ணும்போது பாங்கிமாரே
1ம் சேடி தரு
அண்ணலை நீர் எண்ணவேண்டாம் தேவியாரே - தேவ அன்னை யார் உதவிசெய்வாள் தேவியாரே
60,

ஞானசவுந்தரி தரு
களைகள் மிக வாகுதடி பாங்கிமாரே - என்னைக் கட்டிலில் வளர்த்துங் கோடி பாங்கிமாரே
2ம் சேடி தரு
நோவெழும்பலாச்சு தெங்கள் தேவியாரே - பிள்ளை நொடியில் வந்து தோன்றிவிடும் தேவியாரே
ஞானசவுந்தரி தரு
மயக்கமே வருகுதடிபாங்கிமாரே - கண்ணை மறைக்குதடி எந்தனரும் பாங்கிமாரே
1ம் சேடி வசனம்
அடியே பாங்கி! இதோ இரணைப்பிள்ளைகள் பிறந்துவிட்டன. அதுவும் இரண்டும் ஆண்குஞ்சுகளாகவே பிறந்திருக்கின்றன. சரி சரி, கொஞ்சம் கோப் பியைக் கொண்டுவாருங்கடி.
(சேடி கோப்பியைக் கொண்டு வருதல்)
2ம் சேடி வசனம்
பாங்கி நமது அம்மா எவ்வளவு யோகக்காரி. ஒரேமுறையில் இரண்டு குழந்தைகள். அதுவும் ஆண்சிங்கங்கள். இன்றைக்கு நமக்குக் கற்கண்டும் வாழைப்பழமும் கிடைக்கும்தானே.
1ம் சேடி வசனம்
அடியே பாங்கி! உனக்கு எப்போதும் சாப்பாட்டு எண்ணந்தானடி ளைகளைத் தாயாருக்கு, பேரன் பேத்திக்குக் காட்டவேண்டாமோ, சிக்கிரம் ஆயத்தப்படுத்துங்கள். (ஞானசவுந்தரி இருத்தல். பாங்கிமார்கள் பிள்ளைகளேக்கொண்டு வந்து பக்கத்தில் வளர்த்துதல்.)
1ம் சேடி வசனம்
அம்மா! இதோ நீங்கள் பெற்றெடுத்த கண்மணிச் செல்வங்கள். இருவ
ரும் ஆண்சிங்கங்களம்மா..
61

Page 42
ஞானசவுந்தரி வசனம்
அடி பாங்கி, ' என் கண்மணிக்குஞ்சுகளுக்கு என்னுசை தீர முத்தங் கொடுக்கக் கொஞ்சம் தூக்கித்தாருங்கடி. ۔ ۔ ۔ ۔ (இரு பிள்ளைகளையும் பாங்கிமார்கள் தூக்கிக்கொடுத்தல். ஞானம் முத்தமிடுதல்)
ஞானம் வசனம் ஆ! இறைவா என் கைகளால் தூக்கிக் கொஞ்சவும், அரவணைத்துப்பால் கொடுக்கவும் அடியாளுக்குப் பாக்கியமில்லையே பாங்கிகளே. குழந்தைகள் பிறந்த நற்செய்தியை மன்னருக்கும் மகாராணிக்கும் ஒடிப்போய் அறிவியுங்கள்.
(பாங்கி செல்லுதல்) (சிமியோனும் ராணியும் குழந்தைகளேப் பார்க்க வருதல், இருபிள்ளைகளையும் இருசேடிமார்கள் தூக்கிக் கொடுத்தல்)
சிமியோன் வசனம்
ஆ! என் சந்ததி தழைக்கவந்த என் சந்திரபிம்பங்களே!
சிமியோன் தரு (கண்ணுக்கினிய எ.மெ.) "
ஆசை அவுறுகமாய் - வந்த எந்தன் ஆண் சிங்கக் குட்டிகளே - காசினி ஆள்வதற்கோ-மன்னர் குலம் கண்டுமே வந்தீர்களோ
சிமியோன் பெண் தரு
சந்த திச் செங்கோலினைத் - தாங்கவந்த சந்திரக் குஞ்சுகளே எந்தன் கலி தீர்த்த - செல்வர்களே இன்பமாய்க் கண்ணுறங்கும்
சிமியோன் தரு
ஆடி விளையாட ~ ஆணிப்பொன்னல் அன்ன ஊஞ்சால் தருவேன் பாடி விளையாடத் - தங்கப் பொன் பதுமைகள் நான் த்ருவேன்
62.

சிமியோன், பெண் தரு முத்துச்சரந் தருவேன் - கன்னத்திலே முத்தங்கள் நான் தருவேன் நித்தமும் தோள் சுமப்பேன் - வளர்த்திட நித்திரை நான் விழிப்பேன்
சிமியோன் தரு
தங்கரதமேற்றி - எதிப்தின் தலங்கள் கொண்டே காட்டி சிங்காசனமிருத்தி - உங்களுடைச் சிங்காரம் நான் பார்ப்பேன்
சிமியோன்_பெண் தரு இ. வான் நிலவைக்காட்டி உங்களுக்குப் பாலமுதே ஊட்டி மான் விழி மைதீட்டி -மாசின்றி வளர்த்தெடுப்பேன் பாட்டி
சிமியோன் வசனம் அடி பாங்கிகளே! வருங்காலம் நமது எதிப்து நாட்டை ஆளப்போகும் அரசசிங்கக்குட்டிகள், கண்ணுங்கருத்துமாகக் கவனிக்க வேண்டும்
சிமியோன் பெண் வசனம் ,
பாங்கிகளே! எனது மருமகள் ஞானம் சொல்லும் பணிகளை மிகவும் அக்கரையாகச் செய்து கொடுக்க வேண்டும். குழந்தைகளைக் கண்ணுாறு, நாவூறு இல்லாமல் காப்பாற்றல் வேண்டும். நமது மாளிகையிலே இருக்கும் பொற் தொட்டில்களிலே எனது கண்மணிகளைப் போட்டுத்தாலாட்டுங்கள்.
(சிமியோனும், பெண்ணும் போதல். பாங்கிமார் தொட்டிலிலிட்டு ஆராட்டல்)
பாங்கிமார் தரு (விஞ்சும் புகழ் எ. மெ.) ஆளப்பிறந்த அர்சகுமாரரை
தொட்டிலிட்டாட்டிடுவோம் - பஞ்சவர்ணத் தொட்டிலிட்டிாட்டிடுவோம் ,
مي 63 *bio

Page 43
1ம் பாங்கி தரு மன்னர் குலத்து மா
ணிக்கங்காள் ஆராரோ
2ம் பாங்கி தரு மானிலமாள் ராச
மைந்தர் காள் ஆராரோ
1ம் பாங்கி தரு அண்ணல் பிலேந்திரர்
செல்வங்காள் ஆராரோ
2ம் பாங்கி தரு ஆசை அவுறு கப்
பாலர் காள் ஆராரோ - ஆளப்பிறந்த 1ம் பாங்கி தரு பொட்டிட்டோம் பூவிட்டோம்
பொன்தொட்டில் தானிட்டோம்
2ம் பாங்கி தரு பட்டிட்டோம் முத்திட்டோம்
பன்னீர்கள் மேலிட்டோம்
1ம் பாங்கி தரு வட்டமான் கண்ணுக்கு
வண்ணத்தால் மையிட்டோம்
2ம் பாங்கி தரு இட்டமாய்த் தொட்டிலில்
தூங்குங்கள் பாலர் காள் - ஆளப்பிறந்த
மாளிகை சின் சிமியோன் வசனம் அடே க்ட்டியகாரா! எனது மாளிகைத் தூதுவன வரும்படி சொல்லு
வாயாக. ዃኴ
தூதுவன் வசனம் அரசே! என்ன அழைத்த காரணம் யாதெனக் கூறுவீராக.
6.

சிமியோன் வசனம்
அடே தூதுவா ! துருக்கிப் போர்முனையில் சண்டைசெய்து கொண்டிருக்
கும் எனது மகன் பிலேந்திரன் கையில் இக்கடிதத்தை மிகவும் பத்திர மாகக் கொடுத்து, அவர் தரும் மறுகடிதத்தைப் பெற்றுக்கொண்டு வேறு எவ்விடமும் தாமதியாது காற்றுப்போல் பறந்துகொண்டு என் மாளிகை
வருவாயாக்.
தூதுவன் வசனம்
அப்படியே செய்கிறேன் அரசே!
ருேட் சின்
தூதுவன் வரவு தரு (ஆரறிய எ. மெ.)
தூது இதோ கொண்டு செல்லுவேன் - துருக்கிதேசம் தூது இதோ கொண்டு செல்லுவேன் М
ஞா. - 5
தூது இதோ கொண்டுசெல்வேன் தோன்றலன் பிலேந்திரர்க்கே ஏதுமிடம் தங்கிடாமல்
எங்குமே சுணங்கிடாம்ல் - தூது இதோ
காத்திரமாய்த் தந்த இந்தக் காகிதத்தை நான் மடியில் நேத்திரம்போல் பாதுகாத்தே நேரமே சுணங்கிடாமல் w ஒடிஓடி வேறேரிடம் ஒண்டிநின்று தூங்கிடாமல கூடி எவரோடுதானும் கூத்தாடிக் குடித்திடாமல்
- தூது இதோ
காடுமலை ஆறு நதி காவனம் பூங்காவனங்கள் நாடுநகர் கோபுரங்கள் நல்ல வெளி மைதானங்கள் ஒடி ஒடி நான் கடந்தே ஒங்குபோர்க்கள மடைந்தே * தேடிப் பிலேந்திரன்கையில் நாடிச் சங்கையாய்க்
கொடுப்பேன் - தூது இதோ
65.

Page 44
லேனுள் வசனம்
அடே கட்டியகாரா! அதோ எகிப்து நாட்டுத் தூதுவன் அதிவிரைவாக்ச் செல்கின்றன். அவனை உடனே நான் வரும்படி அழைத்துவருவாயாக,
கட்டியன் வசனம்
ஏ! தூதுவனே! எங்கள் நாட்டு மகாராணி உன்னை அதிசீக்கிரம் அழைத்து
வரும்படி கூறியுள்ளார். என்னுடன் வருவாயாக்.
மாளிகை சீன்
லேனுள் இருத்தல்
தூதுவன் வசனம்
மகாராணியாரே! என்னை அழைத்த காரணம் யாதெனக் கூறுவீராக,
e
லேனுள் வசனம்
எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எகிப்து நாட்டின் தூதுவன் அல் லவா நீர்? தற்போது இத்தூதுகொண்டு எங்கே விரைந்து செல்கின்றீர்?
தூதுவன் வசனம்
எங்கள் நாட்டு இளவரசன் பிலேந்திரகுமாரன் துருக்கியுடன் சண்டை செய்யப்போயிருக்கின்றர். அவருடைய தந்தை சிமியோன் தந்த இக்கடி
கத்தை அவரிடம் ஒப்படைக்கச் செல்கிறேன் அம்மா.
லேனுள் வசனம்
ஆகா! சந்தோஷம். நீ எங்கள் உறவின நாடான எகிப்து தேசத்தின் தூதுவனுய் இருக்கிறபடியால் உன்னைச் சங்கைபண்ணி அனுப்புதல் எங்கள் கடமையாகும். ஆகவே அந்திக்காலமாகிவிட்டதால் நீ எத்தனையோ மைல்கள் தாண்டவேண்டியுள்ளது. இன்னும் சொற்ப நேரத்துக்குள் இரவு வந்து விடும். ஆகவே என் மாளிகையில் தங்கிக் குளித்துமுழுகி உண்டுஉறங்கி விடியற்காலேயில் எழுந்து செல்லலாம். நான் உனக்கு வேண்டிய சகல வசதி களும் செய்துதருவேன். இன்று இங்கு தங்குவாயாக.
66

r தூதுவன் வசனம்
மாட்சிமை மிகுந்த மகாராணி அம்மா ! இவ்வளவு அன்போடும் ஆதர வோடும் சிறியேன் ஆகிய என்னைச் சங்கைபண்ணும்போது அதனை மறுத்து நான் செல்லுதல் எனக்கு அழகல்ல. ஆகவே தங்களின் விருப்பப்படியே இன்றிரவு நான் தங்குகிறேன் அம்மா.
லேனுள் வசனம்
அடே கட்டியகாரா! இத்தூதுவன் இன்று நமது மாளிகை விருந்தாளி யாக இருப்பதனுல், அவருக்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் செய்துவைப் பாயாக. தற்போது உடனடியாக இவரது களைப்பை மாற்றுவதற்குக் குடிவகை களைக் கொண்டு வருவாயாக.
(மேசையில் குடிவகைகள் கொண்டுவந்து வைத்தல்)
லேனுள் வசனம்
தூதுவரே! உமக்கு வேண்டிய குடிவகைகளைக் கூச்சமின்றித் தாராள மாகக் குடித்துக்கொள்ளுங்கள். அந்நியநாட்டுக் குடிவகையான விஸ்கி, பிறண்டி, ஜின், பியர் முதலானவைகளும், நம் நாட்டுக் குடிவகையான சாராயமும் என் தோட்டத்தில் இறக்கிய கள்ளும் தாராளமாக இருக்கின்றது" எல்லாக் குடிவகைகளையும் உமது ஆசைதீரக் குடித்துச் சுவைத்துக் கொள்ள 6) Tib,
தூதுவன் வசனம்
இவ்வளவு தாராளமான மனதுநிறைந்த ஒரு மகாராணியை நான் என்றுமே கண்டதில்லை. நான் தங்களின் சொற்படி எனக்குவேண்டிய குடி வகைகளைக் குடித்துக்கொள்ளுகிறேன் அம்மா.
(தாதுவன் குடிவகைகளே ஊற்றிக் குடித்தல்)
லேனுள் வசனம் زاهد
தூதுவரே! என் கணக்கில் கொஞ்சம் பிறண்டி ஊற்றித் தருகிறேன். குடித்துப் பாரும்,
(லேனுள் ஊற்றிக்கொடுக்கத் "துவன் குடித்தல்; பின்பு மயங்கிவிழுதல்.)
(தூதுவன் மதுமயக்கத்தில் குறட்டைவிட்டு நித்திரை செய்கல். .g|ബബ7'] திரி @结 நத தல. அவன: இடுப்பிலிருந்த கடிதத்தை லேனுள் இரகசியமாக எடுத்து வாசித்தல்),
67

Page 45
லேனுள் வசனம்
ஆகா! நன்றயிருக்கிறது. ஞானசவுந்தரி என்னும் பெண் இரு ஆண் குழந்தைகள் பெற்றிருப்பதாக, அவளது கணவன் பிலேந்திரனுக்கு சந்தோ கடிதமல்லவா போகிறது. நான் காட்டிற்குக் கொலைபண்ணுவதற்கு அனுப்பிவைத்த ஞானசவுந்தரியை வீரர்கள் கொலைசெய்யாமல் விட்டுவிட்டார் களோ ? அவளைக் கொலைசெய்ததற்கு அறிகுறியாக இருகைகளையும் வெட்டிக் கொண்டுவந்து காட்டிஞர்களே. சரி, சரி, இதிலே ஏதோ மர்மம் இருக்கிறது. ஏதோ ஒருவிதத்தில் ஞானசவுந்தரி தப்பி இருத்தல் வேண்டும். அவள் உயி ரோடு இருப்பாளேயாகில் எனக்கு நிச்சயம் ஆபத்து வந்தேதீரும். எப்படி யாயினும் இந்த ஞானசவுந்தரியைக் கொல்லுவதற்கு வழிசெய்ய வேண்டும். சரி, சரி, பார்த்துக் கொள்ளுகிறேன்.
(கடிதத்தைத் திரும்ப ஒட்டித் தூதுவன் பைக்குள் வைத்தல். தூதுவனத் தட்டி எழுப்புதல்.)
லேனுள் தரு (ஆனையைப் பூனை எ. மெ.)
அந்தரமீதிலே எந்தனைப் போலொரு தந்திரகாரியுண்டோ இந்நாட்டில் மந்திரவாதியும் சந்தேகமில்லாமல் வந்து சரணடைவார் என்வீட்டில்
ஆணைப் பெண்ணுக்குவேன் பெண்ணை ஆளுக்குவேன் ஆமென்றுசொல்லிவிட்டால் நொடியில் வீணக என்னேடு வம்புக்கு வந்திட்டால் வீம்படக்கிவிடுவேன் விரைவில்
ஆங்காரம் காட்டிடுவோர்களின் வாயை அடக்கி நான் வைத்திடுவேன் கெதியில் ஓங்காரம் போட்டொரு அட்சரத்தால் பேயை உட்கார வைத்திடுவேன் பதியில்
நெஞ்சில் நினைத்ததைக் கொஞ்சமும் அஞ்சாமல் நேரங்கண்டு முடிப்பேன் துணிந்து
வஞ்சனை சூனியம் பில்லி மருத்தீடு
அஞ்சாமல் செய்திடுவேன் மகிழ்ந்து
(68

லேனுள் வசனம்
தூதுவரே! வெகு நேரமாகிவிட்டது. எழுந்திரும். நீர் விரைவாகச்சென்று கடிதத்தைக்கொடுத்து மீண்டும் வரும்போது கட்டாயம் என்னைச் சந்திக்க வேண்டும்.
தூதுவன் வசனம்
வணக்கம், மகாராணி ! தாங்கள் சொல்லியபடி மீண்டும் வந்து தங்களைச் சந்தித்துச் செல்லுகிறேன் அம்மணி.
போர்முனே சின்
(போர்முனேயில் பிலேந்திரன் படையோடு நிற்றல், தூதுவன் கடிதம் கொண்டுவந்து கொடுத்தல்.)
பிலேந்திரன் வசனம்
ஆகா! பெரிய சந்தோஷம். ஆண்டவருக்குத் தோத்திரம். எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தந்தையார் அறிவித்துள்ளார். தூதுவா ! சற்றுப் பொறு. (பிலேந்திரன் கடிதம் எழுதுதல்.) இதோ, இந் நிருபத்தை என் தந்தையிடம் கொடுக்கவும்.
தூதுவன் வசனம்
*வணக்கம் மகாராசா. வருகிறேன்.
மாளிகை சீன் லேனுள் இருத்தல்; தூதுவன் சந்தித்தல்.
தூதுவன் வசனம்
வணக்கம் மகாராணி! நான் தங்களை மீண்டும் சந்திக்க வந்துவிட்டேன்.
லேனுள் வசனம்
தூதுவா! வந்துவிட்டாயா ? சந்தோஷம். அடே கட்டியகாரா! நமது தூதுவன் வந்துவிட்டான். ஆகவேண்டியதைக் கவனி.
(குடிவகை கொண்டுவந்து மே50சயில் வைத்தல். லெனள் மறைதல், தூது வன் மிதமிஞ்சிக் குடித்து மயங்குதல். லேனுல் மெதுவாக வந்து கடிதத்தை எடுத்து வாசித்தல்.)
69

Page 46
லேனுள் கடிதம் வாசித்தல்
அருமைசா லெனது தந்தைதா யாரின்
அடியிணை பலமுறை வணங்கி அமர்க்கள மிருந்து பிலேந்திர குமாரன்
அனுப்பிடுந் திருமுகம் பாரீர் உரிமைசா லெனது வங்கிஷம் தழைக்க
உதித்தவென் செல்வர்களோடே உத்தமிஞான சவுந்தரி தனையும்
ஒருவித நோய்பிணி யணு கா கருமணிபோன்றே காத்திடல் வேண்டும்
கட்கமே வைத்திடல் வேண்டும் கரிசனையோடு மருந்து பத்தியமும்
கருணையா யீந்திடல் வேண்டும் திறமையாய்ப் போரை வெற்றியாய் நடத்தித்
தீயனும் துருக்கியை அடக்கி தீர கம்பீர வீரனுய் வருவேன்
தீர்க்க மாயறிந்திடுவீரே
லேனுள் வசனம்
.இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுத்து அனுப்பிவைக்கிறேன் ! • * * • - • ؟fقالي (லேனுள் பொய்க்கடிதமெழுதித் துதுவல் இடுப்பில் சொருகுதல்) துதுவா! பொழுது காலித்துவிட்டது. எழுந்து சீக்கிரம் செல்வாயாக.
மாளிகை சீன் சிமியோனும் பெண்ணும் இருத்தல்
தூதுவன் வசனம் மகாராசா ! இதோ இளவரசரின் கடிதம்.
(சிமியோன் கடிதம் பிரித்து வாசித்தல்)
ix, i.e.
சிமியோன் ஆசிரிய விருத்தம்
வல்லமை மிகுமென் தந்தை தாய் தம்மின்
வளரிரு திருப்பதம் வணங்கி
வாட்டமே மிகுந்து எழுதிடுங் கடித
வாசகமே தெனப் பாரீர்
79

நல்லவள் போன்றே நடித்த ஞானத்தை நம்பிநான் மோசமே போனேன் நாயிவள் தன்னை வீட்டில் வையாது
நாட்டமாய்ச் சேயர்களுடனே மல்லரை அழைத்தே மூவரை அரிந்து
மாவனம் எறிந்திடுமாறு மனவெறுப்புற்றுக் கூறி நிற்கின்றேன் மாதா பிதாவின் மேலாணை சொல்லினை மறுத்துச் சுகங்கொடுத்தாலோ
சூரியன் திசைமாறினலும் சுருக்கினில் எனது உயிரை மாய்த்திடுவேன்
சூழ்புவி அறிந்திடுவீரே
சிமியோன் வசனம்
- . . . . . . ! இறைவா! எனக்கேன் இந்தச் சோதனை. எனது ஏக மைந்தன் தன் விருப்பத்திற்கே இந்தத் திருமணத்தைச் செய்து தானே தனது விருப் பத்திற்கு அவளைக் காட்டிற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பியுள்ளார். அவள் ஏது குற்றம் புரிந்தாளோ நானறியேன். தேவி! உனது யோசனை என்ன ? ፥....“...
" " {
சிமியோன் பெண் வசனம்
நமது ஏகமைந்தனின் வாக்கிற்கு எதிர்வாக்கில்லை. அவரின் விருப்பப் படியே செய்துமுடிப்பது சிறந்ததாகும்.
சிமியோன் வசனம் -
; ; יזר எனது மைந்தன் சகலத்தையும் தீர அறிந்து இந்த முடிவுகட்டியே எங் களுக்குக் கடிதமனுப்பி இருக்கிறபடியால் எங்களுக்கு யாதொரு பாதகமு மில்லை. காவலரே! ஞானசவுந்தரியையும் பிள்ளைகளையும் எங்களுடைய கண்ணிற்குத் தென்படாமல் காட்டிற்குள்ளே கொண்டுபோய் விடுங்கள். வீரர்களே ! ஞானசவுந்தவியையும் பிள்ளைகளையும் அழைத்து வருவீர்களாக, (ஞானசவுந்தரியும் பிள்ளைகளும் வருதல்)
ஞானம் வசனம்
அரசே! எங்களை அழைத்ததின் காரணம் யாதோ ?
a71

Page 47
சிமியோன் வசனம்
பெண்ணே ! உனது கணவன் தன் கட்டளேப்படி உன்னையும் பிள்ளைகளையும் கொல்லும்படி கடிதம் அனுப்பி இருக்கின்றர். ஆணுல் இந்தப் பச்சிளம் பாலகர்களைக் கொல்லுவதற்கு விருப்பமில்லாதபடியால் நீங்கள் மூவரும் தப்பிப்பிழைத்துக் கொள்ளுங்க்ள். சேவகர்களே ! ஜல்தியாய்க் கொண்டுபோய் இவளையும் பிள்ளைகளையும் காட்டுக்குள் விடுங்கள்.
சேவகர் வசனம்
வாம்மா, காட்டிற்குப் போகலாம்.
சேவகர் தரு (குள்ளக் குணம் எ. மெ.)
1ம் ஆள்
வாருமடா தோழா நாங்கள் வனமே செல்லுவோம்-இந்த வஞ்சியைக் கொண்டு சென்றே வெட்டிக் கொல்லுவோம்
2ம் ஆள் கள்ளி இவள் பொல்லாவல்லி காமுகக்காரி - வீட்டில் கொள்ளி வைக்கும் நீலி கெட்ட நிட்டுரக்காரி
1ம் ஆள்
கையில்லாத பெண்ணுணுலும் காரியக் காரி - இவள் மெய்யாய் விடுகாலி நீலி கெட்டனு கூலி
βιεμ
2ம் ஆள்
வம்புக்குட்டி ரண்டு பெற்ருள் கம்புபோலவே - மன்னன் நம்பும்படி செய்தாள் மிகக் கம்பீரம்தானே
ஞானசவுந்தரி தரு (துணையெனக்கு எ. மெ.)
ஆக்கினை வேறெனக்கு உண்டோ அம்மா ஆதரிக்க வருவாய் நீயே அம்மா அடுக் கடுக்காகத் துன்பம் அண்டுகின்றதே அம்மா இடுக்கண் களைவதாரு ஏழை முகத்தைப் பாரு
172

சூது அறியா என்னை ஐயோ அம்மா சூரவீரர்கள் தொல்லை தாரார்சும்மா ஏதும் குறை செய்யாது இருக்க என்னை இப்போது ஈது கானகம் மீது
இழுக்கின்ருரே ஏது
சேவகர் வசனம் .
அம்மா ! இதோ இந்தக் கானகத்தில் உங்களை விட்டுவிடுகின்ருேம். ஏதோ தப்பிப் பிழைத்துக்கொள்ளுங்கள்.
முனிவர் தோன்றல்
முனிவர் வசனம்
அம்மா! உன்னுடைய வரலாறு முழுவதும் ஞானதிருஷ்டியால் நான் அறிந்தேன். நீர் ஒன்றிற்கும் கலங்கவேண்டாம். நீர் இப்போது படுகின்ற துன்பத்திற்கு மேலாக இன்பத்தையனுபவிப்பாய். அதோ தெரியும் எனது குகைக்கு நீர் வருவீராக. அங்கே உமக்கு எனது உணவிருக்கிறது. வாரும்
போகலாம். பெண்ணே ! நீர் ஆஞ்சாமல் இக்குகையில் வசிப்பீராக. நான் வேறிடம் சென்று வருகின்றேன். உன்னை இறைவன் காப்பாற்றுவாராக.
ஞானசவுந்தரி தரு (எல்லையற்றுத்தேடு எ. மெ.)
(கை வளர்வதற்கு முன்பு)
1. ஏழையைக் கண் பாரு மம்மா எந்தன்
இன்னல்களைத் தீருமம்மா
2. பாலருக்குப் பால்கொடுக்க அம்மா
பாதையொன்று காட்டு மம்மா
3. கையில்லாமல் கலங்கிறேனே அம்மா கருணை யொன்று காட்டுமம்மா
4. பரமனைக் கரத்திலேந்தும் எந்தன்
பாக்கியதயாபரியே
5. கிருபை நிறை மாமரியே இந்தக்
கேடிலென்னைக் காரும் தாயே
73

Page 48
ஞானசவுந்தரி கொச்சகம்
மெய் அயர்ந்து சோருகுதே மேல்மூச்சு வாங்கிறதே வையகத்திலோர் துணையுமில்லாது வாடுறேனே ஐயோ எந்தன் பாலர்களை அணைத்துவைத்துப் பாலூட்ட கைகளிரண்டும் தாரீரோ கன்னிமரி அம்மையரே
சம்மனசு காட்சி கொடுத்தல்
சம்மனசு தரு(பன்னிரு தாரகை எ. மெ.)
1. கானகத்தில் சேயரோடு கண் கலங்கி வாடிநிற்கும்
ஞான சவுந்தரியாளே மாதே நீ கலங்கிடாதே
2. உந்தனின் அழுகை கேட்டே சுந்தரத் தேவதாயாரே
எந்தனை அனுப்பி வைத்தாள் இன்று நாம் ஆருள்
புரிவோம்
3. ஆண்டவர் அருளினலே அற்புதமாய் உன் கரங்கள் மீண்டுமே வளர்ந்து விடும் மேன்மையாய் அறிந்திடு
வாய்
சம்மனசு வசனம்
அம்மா ! தாயே! ஞானசவுந்தரியே! இதோ தேவதாயாரின் அருட்கிருபை யால் மீண்டும் உனது கரங்கள் வளர்ந்திருக்கின்றன. சந்தோஷமாய் எழுந்
திடுவாயாக.
ஞானம் வசனம் ஆ! என்ன அற்புதம். தேவதாயே உமக்குத் தோத்திரம்.
ஞானம் தரு (சீதன எ. மெ.)
{கை வளர்ந்த ப்0ே:பு)
1. வாக்கடங்கா ராக்கினியே வானக ராசேஸ்வரியே தோத்திரம் நித்ய தோத்திரம்
74

2. அந்தரித்து வந்த என்னை ஆதரித்த தேவதாயே தோத்திரம் நித்ய தோத்திரம்
3. காட்சி தந்து கை அளித்தாய்
கவலையெல்லாம் நீ யொழித்தாய் தோத்திரம் நித்ய தோத்திரம்
4. ஆனந்த தோத்திரம் தாயே அனவரத தோத்திரமே தோத்திரம் நித்ய தோத்திரம்
பிலேந்திரன் போர்முனையிலிருந்து வருதல்
பிலேந்திரன் தரு (ஆருக்குழைத்த எ. மெ.)
1. வீரப்படைகள் கொண்டு வேங்கைப்புலிபோற் சென்று
தீரத்துடனே நின்று சூரப்படைகள் வென்று தானைத் தலைவர் போற்றத் தந்தை மகிழ்வாயேற்ற தங்கத் தனயணுன சிங்கக் குமரன் வந்தேன்
2. ஆசை மனைவி பார்ப்பேன் அன்புப்பிள்ளைகள்
பார்ப்பேன் பாசமிகும் பெற்றேரை ஆசை நேசமாய்ப் பார்ப்பேன் வாசமிகு செவ்வந்தி ருேசா மலரெடுத்து வணங்கித் தாயார் பதத்தை வாழ்த்தித் துதித்து
ற்பேன்
பிலேந்திரன் விருத்தம்
அருமைசேர் எனது நேச அன்புறும் தந்தைதாயே பெருமையாய் வெற்றி ஈட்டி பிறைக்கொடி தன்னை
வீழ்த்தித் திறமையாய் வந்தேன் எந்தன் தேவியைப் பாலர் தம்மை
அருமையாய் அழைப்பீர் என்முன் ஆவலாய்ப் பார்க்கத் தானே
75

Page 49
பிலேந்திரன் வசனம்
எனது நேசப் பெற்றேர்களே ! போர்முனையிலே துருக்கிராசனப் புறமுது கிட்டோடவைத்து வெற்றி வாகைசூடி ஆனந்த சந்தோஷ அக்களிப்போடு வந்து விட்டேன். என்னருமை மனைவியையும் கண்ணிறைந்த கண்மணிகளேயும் நான் ஆவலாய்ப் பார்க்க என் சமூகம் அழைப்பீராக.
சிமியோன் வசனம்
என் நேசமகனே! நீர் என்ன சொல்லுகின்றீர்? தூதுவன்மூலம் நீர் அனுப்பிவைத்த உமது க்டிதத்தின்படி உமது மனைவியையும் குழந்தைகளை யும் காட்டிற்கு அனுப்பிவிட்டோம். ஆணுல் உமது கட்டளைப்படி கொல்ல மனங்கொள்ளாமையால் யாவரையும் உயிருடனேயே காட்டிற்குக் கொண்டு
போய் விட்டுவிட்டோம். இதோ உமது கடிதம் பார்ப்பீராக.
பிலேந்திரன் கடிதம் வாசித்தல்
வல்லமைமிகு மென் தந்தை தாய் தம்மின்
வளரிரு திருப்பதம் வணங்கி வாட்டமே மிகுந்து எழுதிடுங் கடித
வாசகமேதெனப் பாரீர் நல்லவள் போன்றே நடித்த ஞானத்தை நம்பி நான் மோசமே போனேன் நாயிவள் தன்னை வீட்டில் வையாது
நாட்டமாய்ச் சேயர்களுடனே மல்லரை அழைத்தே மூவரை அரிந்து
மாவனம் எறிந்திடுமாறு மனவெறுப்புற்றுக் கூறி நிற்கின்றேன்
மாதா பிதாவின் மேலாணை சொல்லினை மறுத்துச் சுகங்கொடுத்திட்டால்
சூரியன் திசை மாறினலும் சுருக்கினில் எனது உயிரை மாய்த்திடுவேன்
சூழ்புவி அறிந்திடுவீரே
பிலேந்திரன் வசனம்
ஆ! தெய்வமே ! என்ன அநீதி, என்ன அக்கிரமம், வீருண்டய சூழ்ச் சியோ? இக்கடிதம் என் கையினுல் எழுதப்படவில்லையே. எந்த அக்கிரமி
76

இந்தக் கடிதத்தை வரைந்திருக்கிறன்? ஏ! வானமே ! பூமியே! நீங்கள் இந்தப் பாதகச் செயலைப் பார்த்துக்கொண்டா இருக்கிறீர்கள் ? இதனை வரைந்தவரின் தலைமேல் விழமாட்டீர்களா ? வாய்திறந்து விழுங்கமாட்டீர் களா ? என் பெற்றேர்களே ! நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள் ! நான் எங்கு போய்த் தேடுவேன்? எந்தக் காட்டிற்குச் செல்லுவேன்?
பிலேந்திரன் தரு (ஐயோ எத்தன் தேவி எ. மெ.) ஐயையோ எந்தன் ஞான சவுந்தரி எங்கு சென்ருளோ எங்கு சென்ழுளோ வையகமீதில் எங்கு தேடுவேன் எனது செல்வத்தை எனது செல்வத்தை
எந்த நீசன் செய் இந்த மோசமோ அறிகிலேனே நான் அறிகிலேனே நான் வெந்தணல் போன்று நெஞ்சம் எரியுதே வேதநாயகா வேதநாயகா
நெஞ்சகமான அஞ்சுகம் போச்சே கூட்டை விட்டல்லோ கூட்டை விட்டல்லோ பஞ்சவர்ணத்தை எங்கு பார்ப்பேனே பாவி நான் ஐயோ பாவி நான் ஐயோ
சோடிப்பாலர்கள் வாடுகின்ருரோ சொரூபா என்செய்வேன் சொரூபா என் செய்வேன் கூடியவரைக் கொஞ்சும் நாளெப்போ கோமகன் நானே கோமகன் நானே
«ğe4• • • • • » ! இறைவா இதுவும் உன் சோதனையா? உனது அளப்பரும் கிருபையாலே போரிலே வெற்றிவாகைசூடி விடுதிரும்பிவந்த எனக்கு இந்தப் பெரும் ஏமாற்றமா? இந்தச் சண்டாளச் செயலை, இச்சதித்திட்டத்தை யார் செய்திருக்கின்றனர் ? இக்கடிதமல்லவா என்னையும் எனது பெற்றேர்க்ளையும் ஏமாற வைத்திருக்கின்றது. என் செல்வப்பாக்கியத்தை, கொஞ்சும் கிளி மொழிகளை நான் இந்தக் கானகத்தில் எங்கு தேடுவேன்?
பிலேந்திரன் தரு (ஆவரா எ. மெ.)
ஆசை மிகுமெந்தன் நேச ஞானத்தை நான் எங்குதான் தேடுவேனே ஐயோ கானில் எங்குதான் தேடுவேனே
77

Page 50
பாசமிகும் இருபஞ்சவர்ணங்களை பாங்காகப் பாடும் தீங்கானக் குயில்களை காசினி தன்னில் நான் கண்ட தெய்வங்களை கையில்லாதாள் பெற்ற செல்வப்பாலர்களை - ஆசை
பிலேந்திரன் வசனம்
ஆ! என் கையில்லாத செல்லப்பாவையே! ஆசை அருமையாய்ப் பெற
றெடுத்த இரு சிங்கக் குட்டிகளே ! நான் எப்போ என் கலிதீர உங்களைக் காணுவேனுே?
பிலேந்திரன் தரு
வீசும் நறுங்காற்றில் மெல்லக் கலந்தாரோ விண்ணிலே தாரகையாக இணைந்தாரோ பேசிடும் ஞானமும் பிள்ளைகளுமொன்ருய்ப் பேரின்ப வீட்டினைக் க்ாணத்தான் சென்ருரோ - ஆசை
பிலேந்திரன் வசனம்
ஏ ! கானகத்தில் வீசுகின்ற இளந்தென்றலே ! உன்னுேடு காற்றேடு காற்ருகக் கலந்துவிட்டார்களா ? அல்லது விண்ணிலே தோன்றுகின்ற விண் மதியாக மாறிவிட்டார்களா ? அல்லது என் கண்ணிலே விழிக்கக் கூடா தென்று பெரும் வைராக்கியத்தினுல் பேரின்ப் வீட்டிற்குத்தான் சென்று விட்டார்களா? நான் ஒன்றும் அறிகிலேன்.
பிலேந்திரன் தரு
வானில் வட்டமிடும் மாடாப்புருக்களே வண்ணமயில் குயில் காள் புள்ளிமான்களே நானிதோ தேடிடும் ஞானத்தைக் கண்டீரோ கண்டால் அவன் நிற்கும் கானகம் சொல்லீரோ -ஆச்ை
பிலேந்திரன் வசனம்
வானத்தில் வட்டமிடும் மாடப்புருக்களே ! மயில்களே ! குயில்களே !
வண்ண மான்குட்டிகளே! என் ஞானத்தையும், பிள்ளைகளையும் கண்டீர்
களா? கண்டால் அவள் நிற்கும் கானகத்தைச் சற்றுக் கூறுங்கள்.
78

பிலேந்திரன் தரு Téaudka
பச்சிளம் பாலர்கள் பாலின்றி வாடுதோ பாலூட்டக் கையின்றிப் பாவை திண்டாடுதோ அச்சத்தால் மூவரின் ஆவியும் போகுதோ அந்தோ வனத்தினில் எங்கென்று தேடுவேன் - ஆசை
முனிவர் தோன்றுதல்
முனிவர் வசனம்
குழந்தாய் ! கலங்காதே. நீ என்னேக்கண்டு பயப்படாதே. நான் உனக்கு ஆறுதலளிக்கவே வந்திருக்கிறேன். கையிழந்து கானகத்தில் இரு கண்மணிகளுடன் அலைந்துலேந்த காரிகையை நானே இவ்வளவு வருஷ காலமட்டாக என் குகையில் வைத்துக் காப்பாற்றி வந்திருக்கிறேன். அனு தினமும் தேவதாயாரை அவளிரந்து வேண்டினதின் நிமித்தம் அத்தாயார் அவள்மேல் மனமிரங்கி தேவதூதன் அனுப்பி மீண்டும் கைவளரச் செய்தி ருக்கிறர். அவளிரு கரங்களோடும், பிள்ளைகளோடும் அதோ இருக்கும் குகையிலே சுகமாக வாழ்கிருள். இப்பாதையாகச் செல்வாயாக, போகும் போது ஒரு மான் உனக்கு வழிகாட்டும். அந்த மாணுேடு பின் தொடர்ந் தால் நீ உன் மனைவி மக்களைக் கண்டடைவாய். சந்தோஷமாகச் செல்வாயாக.
பிலேந்திரன் வசனம்
அதோ! ஒருமான் தெரிகின்றதே. அதற்குப் பின்னுல் ...........4ھ | செல்வேன்.
பிலேந்திரன் கொச்சகம்
எந்தன் செல்லப்பாக்கியமே
எழிலார் நறும்பூஞ்செந்தேனே கந்தங்கமழும் கற்ப கமே
கவிஞர் குயிலே நாம் பிரிந்து
ஞானசவுந்தரி கொச்சகம்
அந்தோ பலநாள் அலைக்கழிந்தோம்
ஆழித்துரும்பாய் இருவர்களும்
சந்தித்தின்றே மனங்களித்தோம்
சந்த்ர பதத்தாய் அருளாலே.
79

Page 51
பிலேந்திரன் தரு (செப்பரும்மணி எ. மெ.)
எந்தனரும் பைங்கிளியே இன்பமே என் தேவியரே வாரும் - நானும் இந்தரையிலுன்னைவிட்டு எப்படித்தான் வாழுவேனே கூறும்
ஞானசவுந்தரி தரு
நான் வணங்கித் தோத்திரிக்கும் நாயகமே எந்தனரும் நாதா - உந்தன் தேன் சுவைக்கும் சொல்லைக் கேட்காத் தேவி நான் துயரங் கொண்டேன் நீதா.
பிலேந்திரன் தரு
தந்திரக் கடிதத்தாலே வந்த படு மோசம் தானே மயிலே - எந்தன்
சுந்தரியே நானுனக்குச் சூழ்ச்சி செய்யவில்லை என் பூங்குயிலே
ஞானசவுந்தரி தரு
சற்றிரக்கமில்லா எந்தன் சிற்றன்னையாள் செய்கொடுமைதானே - வேறு மற்றவர்கள் யாருமில்லை முற்றிலுமே ஈது உண்மை கோனே
பிலேந்திரன் தரு
சூழ்ச்சி எவர் செய்த போதும் சோதிமரியாள் துணையினலே - நாங்கள் வீழ்ச்சியின்றி ஒன்று சேர்ந்தோம் வீடு செல்வோம் வர் ருமே பின்னலே
80

ஞானசவுந்தரி திரு
வீடு சென்ற பின்னல் காதை விரித்துரைப்பேன் உந்தனக்கு நானே - இப்போ நாடு செல்வோம் பாலரோடு நல்ல மகிழ்வோடு நாங்கள் தானே
ஞானசவுந்தரி வசனம்
வாருங்கள் நாதா ! நமது நாடு செல்வோம். அங்கு எனது சோகக் கதையின் விருத்தாத்தங்களை விபரமாகக் கூறுவேன். அச்சமயம் ருேமை நாட்டு மன்னன் தர்மராசனையும், மனேலியையும் இங்கு அழைப்பதற்கு ஏற்
பாடு செய்வீர்களாக.
பிலேந்திரன் வசனம்
என் செல்வக் குழந்தைகளே ! வாருங்கள். நமது நாடு செல்லுவோம்.
பிலேந்திரன் தரு (ஆவி-நேருயர் எ. மெ.)
அன்புலாவிய எந்தன் ராணியே வெண்டாமரையில் தங்கும் வாணியே இன்புலாவிச எங்கள் மாமrே செல்வோம் வாருமே பாலர்களை என் கைதாருமே எந்தன் நித்திலமே மின்னும் ரத்தினமே பொன்னின் சித்திரமே வாராய் فراهم به ای தின் காட்சியைப் பாராட்ச
ஞானசவுந்தரி தரு
சோதிலாவிய சுந்தரா மணி மந்திரா எந்தன் இந்திரா நானும் நீதிலாவிய உந்தன் சொற்படி நேரிழைவாறேன் நீலவிழிப் பாலரைத் தர்றேன் முத்தம் கொட்டிடுவீர் கட்கம் இட்டிடுவீர் பக்கம் வைத்திடுவீர் மன்னபின்னல் நாங்கள் வாழுேமே கண்ணு
6 -- هht @

Page 52
ஐயிலேந்திரன் தரு
மானே உன் விழி கானகம் மேயும் மானினங்கண்டு நாணிக் கோணுதே தேன்-குயில் கதை-சேசண்ைணியும் அஞ்சி வாடுதே மயிலன்னம் கெஞ்சி ஒடுதே எத்தன் அஞ்சு கமே வண்ணக்கிஞ்சுகமே சென்னின் ரஞ்சிதமேவாராய் நகரெல்லை-தெரியுதோராய
ஞ்ானசவுந்தரி தரு
காவனந்தனை நாம் கடந்திப்போ பூவ்னம் வந்தோம் ஆவலாகவே தேனிதழ் பூவால் மாலை பாலர்க்கு தெரிந்து சூட்டுவோம் மயிலைப்போல் நடந்து காட்டுவோம் இன்பப் புண்ணியனே அன்புக்கண்ணியனே எந்தன் மன்னவனேவாராய் கானகத்தைக் கடந்திட்டோம் நேராய்
பிலேந்திரன் தரு
தங்கக்குழம்பால் அங்கமேயிட்ட சிங்கக்குட்டிகாள் இங்கு நீர்வாரும் துங்கமாமயில் தோ ைகவிரித்து ஆடுதே பாரும் அம்மாவுக்குக் காட்டுமே நீரும் எந்தன் கண்மணிகாள் விண்ணின் மின்மினிகாள் வண்ணப்
பொன்மணிகாள்வாரீர் அப்பாவுக்கு முத்தமே தாரீர்
ஞானசவுந்தரி தரு
உங்கள் பாட்டனின் நாடுகிட்டுது ஊக்கமாய்ப் பாரும் பாக்கியங்களே தங்கக்கோபுரம் அங்கே தோணுது தாவியேபாரும் அன்பாயென்னை மேவியே வாரும் தங்கக் கட்டிகளே சிங்கக்குட்டிகளே வங்கச் செட்டிகளே வாரும் தந்தையரின் நாட்டினைப் பாரும்
82 8 – ..ቕ¢፱

பிலேந்திரன் தரு
மாளிகைவாசல் நாமிதோ வந்தோம் மருவும் ஞானமே அருமைப் பாலரே தாளில் சந்திரன் பூண்ட தாயாரின் தாளைப் போற்றுவோம் நன்றித்துதி நாமே சாற்றுவோம் பொங்கும் மங்களமே எங்கும் தங்கிடவே பங்கம் மங்கிடவே வந்தோம் தேவனுக்குத் துத்தியம் தந்தோம்
. . மாளிகை சின் சிமியோனும் பெண்ணும் கொலுவிருத்தல்
பிலேந்திரன் விருத்தம் ஆண்டவன் கிருபையாலே அன்புறும் மனைவிமக்கள் மாண்டகு சிறப்பினேடு மாளிகை வந்துள்ளார்கள் பூண்ட துன்பங்கள் ய்ாவும் பூவையாள் எடுத்துரைக்க தோன்றலன் தர்மனேடு துணைவியும் அழைப்பீர் ஐயா.
பிலேந்திரன் வசனம்
என் அன்பிற்குரிய பெற்றேர்களே ! காடு, வனம் எல்லாம் சுற்றித் திரிந்து கன்னித்தாபின் அருட்கிருபையால் ஞானத்தைக் கண்டடைந்து டும் நமது மாளிகைக்குக் கொண்டுவந்துள்ளேன். அவளுடைய சோகக்கதை
யைக் கூறுவதற்கு ருேமை நாட்டையாளும் தர்மராசனையும், மனைவியையும் இங்கு அழைப்பதற்கு ஏற்பாடு செய்வீர்களாக. .
சிமியோன் தரு (ஆசை நிறை எ. மெ.)
மாசில்லா ஞானசவுந்தரியாளே - பூ மானே நீ வந்திடுவாய் - மன்னித்தன்பு தேனே நீ தந்திடுவாய்
பூசித பூவைக்கு வந்த பெரும் நாசம் பொல்லாக் கடிதமே செய்த சதி மோசம் ஆசையாய் வந்திட்டீர் மீண்டுமெங்கள் வாசம் அன்னமே சொர்ணமே தந்தோம் ஆசீர்வாதம் - மாசில்
83

Page 53
சிமியோன் பெண் தரு
கண்மணிச் செல்வர் காள் ஒடி நீர்வாருங்கள் கன்னத்திவ் பாட்டிக்கு முத்தமே தாருங்கள் வண்ணமணிக் கொலுசுற்றி நீர் பாருங்கள்
வங்கிஷமான பொற்செங்கோலை ஏருங்கள் - மாசில்
சிமியோன் வசனம்
அம்மா ஞானம்! பொல்லாத நயலஞ்சகர்களாலே எழுதப்பட்ட கடிதத் தாலே ஏற்பட்ட விபரீதமேயொழிய வேறில்லை. இதனுல் நீ அடைந்த துன் பங்களை நினைத்து மிகவும் கவலைப்படுகிறேம். எனினும் தேவதாயாரின் அருட் கிருபையால் மீண்டும் வந்து சேர்ந்ததைக்கண்டு ஆனந்தமடைகிறேம். உமக்கு
ஏற்பட்ட சோகக்கதையைக் கூறுவீராக. .
ஞானசவுந்தரி வசனம்
அரசே! எனது சோகக்கதையைக் கூறுவதற்கு ருேமை நாட்டு மன்னர் தர்மராசனையும் அவரது மனைவியையும் இங்கு வரவழைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
சிமியோன் வசனம்
鼻
அப்படியே உமது விருப்பப்படியே செய்கின்ருேம். அடே தூதுவா! ருேமை நாட்டிற்குச்சென்று தர்மராசனையும், மனேவியையும் வரும்படி அழைத்து
R(56 Tu Tös.........
மாளிகை சீன்
தர்மராசனும் மனைவியும் கொலுவிருத்தல் தூதுவன் வசனம் அரசே! தங்களையும் தங்கள் மனைவியையும் எகிப்து நாட்டு மன்னஞன
சிமியோன் அரசன் அவசரமாகத் தங்கள் மாளிகைக்கு வரும்படி தூதனுப் பியிருக்கிருர் . . . . . ● ..
84,

* சிமியோன் மாளிகை
சிமியோன் - சிமியோன்பெண் - பிலேந்திரன் ஞானசவுந்தரி கொலுவீற்றிருத்தல்
தர்மராசன் விருத்தம்
சீரிய எகிப்து நாட்டின் செம்மலே எனதன்பான நேரிய இறைவாவுந்தன் நித்திலக்கொலுவின்மீது பாரியாளோடு என்னைப் பரிவுடன் அழைத்த செய்தி வீரியமுடனே இப்போ விளம்பு வீரறியத்தானே ..
ஞானசவுந்தரி வசனம்
அப்பா வந்துவிட்டீர்களா ? தாங்கள் திருத்தலம் பார்க்கச் சென்றதின் பின் தங்களை நான் ஒருநாளும் காணவில்லேயே.
தர்மராசன் வசனம்
ஆ! என் கண்மணி ஞானம்- உன்னைக் கண்டதே எனக்குக் கண் வெளிச்சமாகிவிட்டது. நீ இறந்துவிட்டாயென்றல்லவா நான் துக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நீ இவ்வளவு காலமட்டாக எங்கு மறைந்திருந்தாய்? உனது விருத்தாந்தத்தைக் கூறுவாய் மகளே.
சிமியோன் வசனம்
ஆ! இதென்ன எல்லாம் மர்மமாகத் தெரிகிறதே! அம்மா ஞானம் ! தர்மராசன் உனது"தந்தையரா? இவ்வளவு காலமட்டாக ஏனம்மா எங்களுக்கு மறைத்து வைத்திருந்தீர்? இதோ உனது தாயும், தந்தையும் வந்து நிற் கின்றர்கள். உமது சோகக்கதையைக் கூறுவீராக.
ஞானம் வசனம்
அரசே! எனது துன்பத்திற்கு மூலகாரணமானவர் இதோ எனக்கு முன் ஞல் நிற்கும் எனது சிற்றன்னையே. இதுவே எனது சோகக்கதையின் சுருக்கமாகும்.
தர்மராசன் வசனம்
மகளே ! உன் சிற்றன்னையா?
இந்த லேனுளா ? ஆ! கொடுமை ! கொடுமை... ! * , ,
85

Page 54
தர்மராசன் சந்தத விருத்தம்
சந்திர சூரியர் வந்து பணிந்திடும்
எந்தனின் ஆணையினை சங்கைகெடுத்திட சிங்காசனத்திடை
சர்ப்பமாய் வந்தவளே அந்திர ரூப அலங்கிர்த ஞான
சவுந்தரியாம் மகளை இகமிசை மிகமிக வதைகள் புரிந்து நீ
இடர்கள் விளைத்தனையோ. அந்தரவானவர் வந்தடி வீழினும்
ஆழி எழும்பிடினும் அண்டமிடிந்து விழுந்திடினும் புவி
அக்கினி பற்றிடினும் இந்தரை மீதினில் எந்த விதத்திலும்
இனியுனை நான் விடனே எரியனற் சூளையில் நரபலியாகவே
எறிந்திடுவேனறிவாய்.
தர்மராசன் வசனம்
அடி சண்டாளி ! எனது கரத்தினிலிருக்கும் கூரியவாளைப் பார்த்துக்
கொண்டு நான் கேட்கும் கேள்விகளுக்குத் தகுந்த விடையளிப்பாய் .
தர்மராசன் தரு
ஞாலத்தரசர்வந்து சீலத்துடனே கண்டு தாளிட்டடியே நின்று கோலத்திறைகள் தந்து மானத்துடனிருந்த ராசனெனக்கு இந்த ஈனவசைகள் தந்த நீச மனைவி உன்னை இருதுண்டு - விழஇன்று - பசிகொண்ட - நரியுண்டு மிகநன்று - எனவிள்ள - வதைகள் செய்வேனே
லேனுள் தரு போற்றும் புரவலேறே புனித கற்பகத்தாரே ஏற்றித் துதிக்கும் எந்தன் ஏந்தே இளஞ்சிங்கேறே மாற்ருர்பணிவிலாசா மானர் புகழும் போசா LDT airly ligib 666) staf T LDSuir GT667565) Turts. It மதியீனப்பிழையாலே அறியாமல் சதிமோசம் படிமீதில் புரிந்தேனே பொறுதி தந்திடுவீரே
86

தர்ம ராசன் தரு
வேலி பயிரை மேய்ந்த காதை த%னயே யொப்ப தான சதியைச் செய்த நீலிகொடு சண்டாளி கேலித் தனமோ விடு காலித்தனமோ கொடும் நீலிக்குணமோ பழிவாங்கும் மனமோ மூளி விரைந்தின்று - புரங்கண்டு - பருந்தொன்ருய்-விருந்துண்ண கரம்ரண்டாய் - சிரந்துண்டாய் - அரிந்தெறிவேனே e
லேனுள் தரு அந்தோ தருமராஜா எந்தன் அருமை நாதா உந்தன் பொறுதி தாரும் எந்தன் அழுகை தீரும் வந்த வினைகள் எல்லாம் எந்தன் பிழையினலே அந்தோ அதையுணர்ந்து வெந்து வாடுகிறேனே அறியாமல் தெரியாமல் அடியாள் செய்பிழையாவும் நெறிநீதி புரிவோனே பொறுதி தந்தருள்வீரே
தர்மராசன் தரு - அடுப்பில் படுக்கும் நாயை எடுப்பாய் பிடித்து மெத்தை படுக்கக் கொடுத்திட்டாலும் கடிக்கும் குணம் போகாதே
தடுக்கில் படுத்த உன்னை அடுக்கு மலர்மஞ்சத்தில் படுக்கக் கொடுத்ததாலுன் வெடுக்குக் குணங் காட்டினய் அடிதோஷி - கடிநாயே - சுடுகாட்டு - விடுபேயே
፥ “ኗ . ولأنها كضيفة
படிமீதில் - விரைவாக - மடியச் செய்வேனே
தர்மராசன் வசனம்
e அடி சண்டாளி ! சாமத் துரோகி ! உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பாதகி ! உன்னையே தாயென எண்ணி எனது ரக குமாரத்தியை உன்வசம் ஒப்படைத்துச் செல்ல நீ இந்தச் சதிமோசம் செய்திருக்கிருய். உன்னே நான் சும்மா விட்டுவிடேன். அரசே! இதற்கு நீர் தகுந்த ஆணை செலுத்தும்படி உங்களைப் பணிவாய்க் கேட்டுக்கொள்கிறேன். -
87

Page 55
சிமியோன் வசனம்
அரசே! சகலரின் முன்னிலையிலே இதனை நன்கு விசாரித்து இதற்குத்
தகுந்த தீர்ப்புக் கூறவேண்டும். சேவகா ! நாளே ஆலோசனைச் சபை கூடுமாறு அறிவிப்பாயாக.
குற்றவிசாரணை நீதிமன்றம் சிமியோன் - சிமியோன் மந்திரி - சேனதிபதி யூரிமார் - தர்மராசன்-பிலேந்திரன்--ஞானசவுந்தரி (லெஞள் கூட்டிற்குள் நிற்றல்) guf)Gursör விருத்தம்
சீரிய எகிப்து நாட்டின் செப்பிடும் வழக்கு யாவும் நேரிய முறையினேடு நிகழ்த்துமா சபையினேரே பாரிலே ஞானம் தன்னைப் பங்கமே படுத்திவைத்த காரிகை லேனுள் தன்னைக் கடிதினில் விளங்குவீரே
சிமியோன் வசனம்
எனது நீதி நெறி தவறத ஆலோசனைக்காரரே ! ஞானசவுந்தரி என்னும் கன்னியைக் காட்டிற்கு அனுப்பிப் பங்கப்படுத்திய லேனுளின் வழக்கை இதோ உங்கள் முன்னிலையில் விசாரணைக்கு விட்டுள்ளேன். அதைத் தீர்க்கமாக விசாரணை செய்வீர்களாக. .
சிமியோன் வசனம்
அம்மா! ஞானசவுந்தரி! உனக்கு நடந்த துன்பங்களையும், சோகக்கதை களையும் குற்றவிசாரணை நீதிமன்றத்துக்கு விபரமாகக் கூறுவீராக.
ஞானசவுந்தரி அகவல்
சீர் செறி எகிப்தின் செம்மலே உமது ஏர்செறி கழலினை இறைஞ்சி நான் வணங்கி
பார்மிசைமீது நான் பட்ட பாடெல்லாம் கார்செறி குரலால் களறுவேன் கேளீர் திருநகர் ருேமாபுரி நகராளும் தருமபூபதியின் தவத்திரு. மகளாம்
88

அன்னையர் இறந்ததால் அரியதந்தையருடன் சின்னம்மையுடனே சிறுமி நான் வளர்ந்தேன் வளர்ந்திடுங்காலையில் வல்ல என் தந்தையார் நலங்கொளுந் திருத்தலம் நாட்டமாய்ப் பார்த்திட
எண்ணமே கொண்டதால் எனச் சிற்றனையுடன் நன்மனதுடனே நலத்துடனிருத்தியே சென்றபின் சிற்றனை சிறுமியாளெனக்கு தண்டனை மிகமிக தாங்கிடாக் கொடுத்தும்
சென்னியை யரிந்திட சிந்தையில் நினைத்தே கன்னி நான் தூங்கிட கட்டிலோடெனையே வீரரைக்கொண்டே வேகமாய்த் தூக்கியே ஆரணியத்தினை அடைந்திட அனுப்பவே
இரக்கமேகொண்ட இரண்டு சேவகரும் கரந்தனையரிந்தே காட்டிலே விட்டனர் காட்டில் நானிருந்தே கதறியவேளையில் வேட்டையாடிடவே வீரர்களுடனே
வந்துற்ற இந்த வடிவலங்காரனே எந்தனைக் காத்தே எழில்மாளிகைக்கே கொண்டு சென்றென்னை குணமாயாதரித்து மன்றலும் புரிந்தே மகிழ்வுடன் பேணினர்
பேணிடுங்காலையில் பேரெழில் எகிப்தினை காணிடுந் துருக்கியும் கைப்பற்ற எண்ணியே போருக்கெழுந்ததால் பிலேந்திர மன்னனும் ஊரினைக் காத்திட உடன் புறப்பட்டே
போர்முனை சென்றபின் புத்திரரிருவரை காரிகை பெற்றே களிப்புடனிருக்கையில் சிற்றன்னையறிந்தே சிந்தித்துப் பயந்தே மற்றுமோர் சூழ்க்சியை மனந்துணிந்தரற்றினள்
தூதுவன் கொண்டே சென்ற காகிதத்தை சூதுவாதாக சூட்சமாயறிந்து
89, as

Page 56
மாறுபாடான கடிதம் மாமனுக்கு தாறுமாரு கத் தாக்கியே எழுதி
கானகம் மீண்டும் கணவன் கட்டளை போல் ஈனவளென்னை அனுப்பி வைத்தனளே அங்கு நானலைந்து அழுதிடும்போது கங்குலில் தேவதாய் காட்சியேதந்து
செங்கரமிரண்டையும் செம்மையாய் மீண்டும் இங்கெனக் கீந்தே ஏகினளறிவீர் தந்தை தாய்செய்த தவறினையுணர்ந்து எந்தன் பிலேந்திரன் ஏகியே வனந்தனில்
தேடியேயலைந்து தேவியாளென்னை நாடியே கண்ட ைர் நவின்றேனென் காதை
ஞானசவுந்தரி வசனம் இதுவே எனது சோகக்கதையின் விருத்தாந்தம் அரசே!
சிமியோன் வசனம்
குற்ற விசாரணைச் சபையோர்களே! ஞானசவுந்தரியானவள் தனக்கு நடைபெற்ற சகல துன்பங்களையும் உங்கள் முன்னிலையில் கூறியுள்ளாள். இனிமேல் உங்கள் விசாரணையைத் தொடங்குவீர்களாக,
சிமியோன் தரு (மாதரார் எ. மெ.)
நீதிநெறி விளங்கும் எனதரும் நேர்மைசேர் மந்திரியே ஒதும் வழக்கிலுள்ள உண்மைகள் உரைத்திடுந் தந்திரியே
சிமியோன் வசனம்
எனது மந்திரியே! நமது நீதி, நெறி வழுவாமல் உங்களின் விவேக புத்தியால் இந்த வழக்கின் உண்மையைக் கண்டறிவீர்களாக,
மந்திரி தரு
போர்முனைக்கே தூது கொண்டுசென்ற பொல்லாத தூதுவன ஆர்வமாயிங் கழைப்பீர் அவன் வாயால் அத்தனையுமெடுப்பீர்
90

மந்திரி வசனம்
கடிதம் மாறுபட்டு எழுதப்பட்டிருப்பதினுல் கடிதம் கொண்டுசென்ற
தூதுவனையும் அழைத்து, அவன் எங்கெங்கு தங்கிச் சென்றன் என்பன அறிந்தால் உண்மையைக் கண்டறியலாம் அரசே!
சிமியோன் தரு
நல்லமதியுரைத்தீர் தூதுவன நாட்டமாயிங்கழைப்போம் வல்ல சேஞபதியே உன்னுடைய வாயுரையும் பகர்வீர்
சிமியோன் வசனம்
மந்திரியே! நீர் கூறியபிரகாரம் தூதுவனையும் இதோ அழைக்கின்றேன். சேணுதிபதியே! நீரும் உமது யோசனையைக் கூறுவீராக,
சேணுதிபதி தரு
தூதுவன அறிந்தால் லேனளுடை சூட்சம் அறிந்திடலாம் ஒதிடும் வேறுசாட்சி நமக்கினி ஒன்றுமே தேவையில்லை
சேஞதிபதி வசனம்
அரசே! தூதுவனக் கூப்பிட்டு உடனே விசாரனே பண்ணுங்கள், அவன் மூலம் உண்மையை அறிந்திடலாம்.
சிமியோன் தரு
புத்திவித்தான யூரித் துரையேயுன் சித்தமெது கூறும் இத்நரை நானறிய விரைவுடன் இப்போதெனக் கோதும்
சிமியோன் வசனம்
புத்திவித்தாண்மையும் சட்டநுட்பமும் அறிந்த யூரித் துரையே! உமது எண்ணத்தையும் எனக்குக் கூறுவீராக,
91

Page 57
1ம் யூரித்துரை தரு
மந்திரி சேனுபதி உரைத்த மறுமொழி உத்தமமே எந்தன் மன எண்ணமும் அதுவே எடுத்துரைத்தேனரசே
1ம் யூரி வசனம்
நமது மந்திரிப் பிரதானியும் சேனத்தலைவனும் கூறியபடி தூதுவனக் கூப்பிட்டு விசாரணை பண்ணுவதே மேலானதாகும்.
சிமியோன் தரு
சட்ட நுணுக்கமெல்லாம் கற்ருராய்ந்த சங்கைசேர் யூரியரே இட்டமாயுங்கள் மன எண்ணத்தையும் இப்போ எடுத்துரைப்பீர்
சிமியோன் வசனம்
அடுத்ததாக இருக்கும் யூரித்துரையே ! உமது யோசனையையும் கூறுவீராக.
2ம் யூரித்துரை தரு
காணுங்கடிதமொன்றே இதற்கொரு
கண் கண்ட சாட்சியாக
தோன்றியிருப்பதினல் தூதுவனும் தோன்றிடல் வேண்டுமையா
2ம் யூரி வசனம்
இவ்வழக்கிற்கு கடிதமே காரணமாயிருப்பதினுல் தூதுவனே இதற்கு முக்கிய சாட்சியாகும். ஆகவே உடனே தூதுவனைக் கூப்பிடுவதே மேலான தாகும்.
சிமியோன் வசனம்
அடே காவலா! நமது அரண்மனைத் தூதுவன அழைத்து வருவாயாக,
92

தூதுவன் வசனம்
அரசே! என்னே அழைத்த காரணம் கூறுவீராக,
சிமியோன் வசனம்
அடே! தூதுவா ! இதோ இந்தக் கூண்டிற்குள் ஏறுவாயாக.
சிமியோன் தரு
ஆண்டவன் நாமத்தினுல் உண்மைகள் அனைத்தையும் கூறிடுவாய் தோன்றல்முன் பொய்யுரைத்தால் மிகமிகத் தொல்லைகள் நீ அடைவாய்
சிமியோன் வசனம்
அடே தூதுவா! நீ இப்போ எனது குற்றவிசாரனைச் சபையார் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையைச் சொல்லவேண்டும். அன்றேல் நீ தப்பமாட்டாய்
தூதுவன் தரு
உண்மை உரைத்திடுவேன் நீங்கள் என்னை ஒன்றுமே செய்யவேண்டாம் அண்ணலின் முன்னிலையில் தெரிந்த தனத்தையுங் கூறிடுவேன்
தூதுவன் வசனம்
அரசே! எனக்குத் தெரிந்த யாவற்றையும் ஒன்றும் ஒளியாமல் கூறு வேன் ஐயா.
மந்திரி தரு போர்முனைத் தூதுகொண்டு போனவழி ஏதென்று கூறிடுவாய் தாரணி வேந்தனின் முன் அதையின்று தட்டாமல் செப்பிடுவாய்
மந்திரி வசனம்
அடே! தூதுவா! நீ கடிதம் கொண்டுபோகும்போது எந்த வழியாகச் சென்ருய் ? கூறுவாயாக,
:93

Page 58
தூதுவன் தரு
சிங்காரப் பாதையுள்ள ருேமாபுரிச் சீர்மை வழியாலே மங்களமாகத் தூது அரசே மகிழ்வாகக் கொண்டுசென்றேன்
தூதுவன் வச்னம்
றேமாபுரிப் பாதை வழியாகவே தூது கொண்டுசென்றேன் மன்னு!
சேணுதிபதி தரு
தாவி நீ செல்லும்போது களைப்பினல்
தங்கியிருந்த இடம் ஆவலாய்க் கூறிடுவாய் அதை நாம்
அறிந்திடத்தான் மகிழ்வாய்
சேஞதிபதி வசனம்
நீ செல்லும்போது களைப்பிற்காகத் தங்கிய இடங்களைக் கூறுவாயாக.
தூதுவன் தரு
தர்மராசன் மனையில் மாத்திரமே தங்கியிருந்ததல்லால் மர்மமாய் வேருேர் இடம் தங்கவில்லை மன்னவா நீ அறிவாய்
தூதுவன் வசனம்
போகும்வழியில் தர்மராசனின் மாளிகையில் மாத்திரம் தங்கியிருந்தேனே ஒழிய வேருேர் இடமும் தங்கவில்லை அரசே,
மந்திரி தரு
அங்குபோய்த் தங்கியதேன் உனக்கு அலுவல்கள் அங்குண்டோ ' சங்கை கொடுத்தவரார் படுக்கையும் Frryl Jm G ufu l. –6urfrff
-94

மந்திரி ன்சனம்
நீ மன்னர் மாளிகையில் போய்த் தங்கவேண்டிய காரணமென்ன? உன்னை யார் அழைத்தவர்கள்? சாப்பாடும் படுக்கையும் உனக்கு அளித்தவர்கள் யார்?
துரதுவன் தரு
அம்மா லேனுள் அழைத்தாள் விருந்துகள் அன்பாகவே அளித்தாள் சும்மா சொல்லக்கூடாது குடிகளும் சூர் வரவே கொடுத்தாள்
தூதுவன் வசனம்
அரசே! இதோ உங்கள் முன்னிலையில் நிற்கும் லேனுள் அம்மாவே என்னை மாளிகையில் வந்து தங்கும்படி அழைத்தார். என்னையும் மிகவாக உபசரித்துச் சாப்பாடும் குடிவகைகளும் தந்தார்கள் மன்னு.
சேணுதிபதி தரு
சூர் வரவேகுடித்து வெறியினில் தூங்கிப் படுத்த இடம் ; : ஆர்வமோடே எமக்கு அதையும் நீ அன்புடன் கூறிடுவாய்
சேணுதிபதி வசனம்
தூதுவா! நீ குடிவகை பாவித்தபின் தூங்கிப் படுத்த இடம் யாதென்று கூறுவாய்,
தூதுவன் தரு
இராச விருந்தெனக்கு நடந்ததால் இராச மனையினிலே ஆசையாய் தூங்கிநின்றேன் அடுத்தநாள் அன்பாய் எழுந்து சென்றேன்
தூதுவன் வசனம்
அரசே! லேனுள் அம்மா என்னை மிகவும் கவனித்து இராச விருந் தளித்து இராச அரண்மனையிலே தங்கவைத்தனள். நான் அங்கு தங்கி விடியற்காலை எழுந்து சென்றேன், அரசே,
95.

Page 59
மந்திரி தரு
எத்தனை நாளுனக்கு லேஞளவள் உத்தம மாயுணவு மெத்தச் சிறப்பாகத் தந்தாளென்று மேன்மையாய்ச் சொல்லெனக்கு
மந்திரி வசனம்
அடே தூதுவா லேணுளுனக்கு எத்தனை நாட்கள் இராச விருந்தளித்
திருக்கிருள்? கூறுவாயாக.
துர்துவன் தரு
போர்முனை செல்லும்போதும் மீண்டும் நான் திரும்பி வரும்போதும் ஆர்வமுடனழைத்தாள் விருந்துகள் அன்புடனே அளித்தாள்
தூதுவன் வசனம்
அரசே! நான் போகும்போதும் மீண்டும் நான் வரும்போதும் என்னே அழைத்து விருந்தளித்தாள், அரசே,
சேஞதிபதி தரு
உன்னை அழைத்ததற்கும் உணவுகள் உண்ணக் கொடுத்ததற்கும் : . . முன்பின் தொடர்பு உண்டோ லேனளுக்கு முத்தங் கொடுத்ததுண்டோ
சேணுதிபதி வசனம்
துாதுவா ! உன்னை லேனுள் மிகவும் அன்போடு அழைத்து உபசரிப்ப தற்கும், குடிவகை கொடுப்பதற்கும், மாளிகை மஞ்சத்தில் படுக்கவைப்பதற் கும் என்ன காரணம் ? உனக்கும் அவளுக்கும் ஏதாவது முன்பின் தொடர் புக்ள் உண்டா? அல்லது இரகசியத் திட்டங்கள் ஏதாவது உண்டா? கூறுவாயாக,
96

தூதுவன் தரு
முன்பின் தொடர்புமில்லை காதல் அன்பு முற்றிப் பழுத்ததில்லை என்ன துன்பத்தினிற்கு அழைத்தாளோ எள்ளளவும் அறியேன்
தூதுவன் வசனம்
அரசே! எனக்கும் லேனுள் அம்மாவிற்கும் இதற்குமுன் எதுவித தொடர்பும் இருந்ததில்லை. நான் அவளை ஒருநாளும் சந்தித்துக் கதைத்த தில்லை. தற்போது என்ன துன்பம் செய்வதற்கு என்னைப் பலவந்தமாக அழைத்து மாளிகை இருத்திக் குடிவகை கொடுத்து உபசரித்தாளோ நானறி யேன். ஆண்டவன் பெயரால் நான் சொல்லுவது யாவும் உண்மை அரசே!
சிமியோன் வசனம்
சரி தூதுவா! நீ போகலாம். குற்றவிசாரணைச் சபையோரே! உங்களின் அபிப்பிராயங்களை ஒவ்வொருவராகக் கூறுங்கள்.
மந்திரி வசனம்
அரசே! பிலேந்திரனின் பொய்க் கையொப்பத்தோடு தங்களுக்கு எழுதப் பட்ட கடிதம் லேனுளின் சதிச்செய்கையென்பது தெளிவாகத் தெரிகிறது, மன்ஞ!
சேஞதிபதி வசனம்
அரசே! தூதுவன் கொண்டுசென்ற கடிதத்தை வாசித்து இரகசியம் அறியவே அவனுக்கு விருந்தளித்திருக்கிருள். பிலேந்திரனின் உண்மையான கடிதத்தை மறைத்து சதிக்கடிதம் எழுதியது லேணுளேயன்றி வேறெவரு மில்லை அரசே !
1ம் யூரி வசனம்
அரசே! தந்தையில்லாத சமயம் தாயில்லாத இந்த ஞானசவுந்தரிக்கு கைகளை வெட்டி வதை செய்ததினுல் இந்தப் பொய்க்கடிதத்தையும் லேனுளே அனுப்பியிருக்கிறள் என்பதைப் பரிபூரணமாக நம்பலாம் மன்னு
ф нив 7 r 97

Page 60
2ம் யூரி வசனம்
அரசே! தாயில்லாத ஞானசவுந்தரியை எவ்விதத்திலும் கொலைசெய்து விட்டு தானே பட்டத்துராணியாய் இருக்கவேண்டுமென்ற ஆசை லேனுளின்
மனதில் நெடுங்காலமாக இருந்திருக்கிறது. அதனுலேயே இந்தச் சதிகள் செய்திருக்கிருளென நம்பலாம் மன்னு !
மந்திரி வசனம்
அரசே! எங்கள் எல்லோருடைய தீர்மானத்தின்படி ஞானசவுந்தரிக்கு இந்தச் சதிமோசங்கள் யாவும் செய்தது லேனுள் என்பதேயாகும். ஆகவே இனி உங்களின் தீர்ப்பைக் கூறுவீராக. "
சிமியோன் வசனம்
மாட்சிமைதங்கிய ருேமாபுரி மன்னனே ! நீர் இந்தச் சந்தர்ப்பத்தில் ஏதாவது கூறுவதற்கு விரும்புகிறீரா?
தர்மராசன் வசனம்
என்னையும் அவமானப்படுத்தி, எனது மகளுக்கும் சித்திரவதை கொடுத்த இந்தச் சண்டாளிக்குக் கடுந்தண்டனை கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
சிமியோன் வசனம்
குற்றவாளியாகக் காணப்பட்டிருக்கும் லேனுளே! உனக்கு ஏதாவது கூற வேண்டுமானுல் தயங்காமல் கூறுவாய், !露穆。 koو ،i }
லேனுள் வசனம்
அரசரேறே ! மந்திரிச் சபையோரே! பட்டத்து இளவரசி என்னும் பத விக்கு ஆசைப்பட்ட பெண் பேதையாகிய நான், அறியாமல் செய்த இப்பெருங் குற்றத்தை ஆண்டவன் நாமத்தினுல் பொறுத்து இரட்சிக்க வேண்டுமென்று தங்களின் பாதாரவிந்தத்தைப் பணிந்து கேட்கிறேன் அரசே!
சிமியோன் வசனம்
தர்மபூபதியே! மந்திரிப் பிரதாளிகளே ! குற்றவிசாரணைச் சபையோரே! உங்கள் அனைவோருடைய ஆலோசனையின்படியும், ஏகமன தீர்மானத்தின்படி யும், எனது பரம்பரை பரம்பரையான நீதிவழுவாச் செங்கோலின் சிம்மாசனத் தின் மீதிருந்து ஆண்டவன் நாமத்தை முன்னிட்டுத் தீர்வை வாசிக்கப் போகி றேன் அறிவீராக.
ge

தீர்வை வாசகம்
சிமியோன் ஆசிரிய விருத்தம்
அறநெறி பிசகா தரும செங்கோலின்
ஆணையின் தவிசில் வீற்றிருந்து ஆண்டவன் பெயரால் ஈங்கு நான் எழுதும்
அரசவைத் தீர்வையா தெனிலோ குறைபுரியாத கொற்றவன் மகளாம்
குவலயம் தாயிலாச் சேயாம் கோதிலாஞான சவுந்தரியெனும் பூங்
கொடியிடைப் பாவையாள் தன்னின் கரந்தனை அரிந்தே கானகம் அனுப்பிக்
கடும்வதை புரிந்த லேஞளை காசினி மனிதர் யாவருமறியக்
கால் கரம் விலங்குகள் மாட்டி எரிந்திடுஞ் சூளை எறிந்திடுமாறு எழுபத்திரண்டு ஆவணியில் இலங்குபத் தொன்பான் தேதியில் தீர்வை
எழுதினேன் அறிந்திடுவாயே
சிமியோன் வசனம்
இதோ! குற்றவாளியாகக்கண்டு கூண்டினில் கைதியாக நிற்கின்ற லேனுளே ! தர்மராசனின் ஏகபுத்திரியாம் ஞானசவுந்தரியாளைக் காட்டிற் கணுப்பி இரு கரங்களையும் வெட்டச் செய்ததும், சொல்லொணு அட்டுழியங் களைப் புரிந்ததும், மீண்டும் பொய்க்கடிதம் எழுதி இரு கைப்பிள்ளைகளுடன் வனத்திற்கனுப்பி வைத்ததும் நீயேயென்று ஏகமனதாக குற்றவிசாரணைச் சபையார் தீர்மானித்திருக்கிறபடியால், உன்னை எனது தேசச் சட்டத்தின் பிர காரம் கை கால்களுக்கு விலங்குமாட்டி எரிசூளையிலெறிந்து உன்னைக் கொல்லு மாறு தீர்வையிடுகிறேன், அறிவாயாக.
ஞானசவுந்தரி வசனம்
மாட்சிமை தங்கிய மன்னரே! குற்றவிசாரணைச் சபையோரே! என்னரிய தந்தையரே! அன்புக் கணவரே ! உங்கள் அனைவோரிடத்திலும் நான் பணி

Page 61
வாகக் கேட்டுக்கொள்ளும் வேண்டுகோளாவது, எனக்கு எவ்வித தீங்குகள் ஏற்பட்டாலும் என் சிவனுக்கு ஆபத்தின்றி உயிரோடு உங்கள் முன்னிலையில் நிற்கின்றேன். என்னைப்போன்ற ஒரு பெண்பேதை, அதிலும் என்னை வளர்த் துக் காத்த ஒரு சிற்றன்ன அறியாத்தனமாகச் செய்த பிழையை ஆண்டவன் நாமத்திற்காகவும், அடியவளுக்காகவும் மன்னித்து விடுதலை செய்யுமாறு உங்கள் அனைவோரிடமும் மிகவும் பணிவாகக் கேட்கிறேன்.
1ம் யூரி வசனம்
இராச சபையோரே! எந்தவொரு பாவிக்கும் மன்னிப்புக் கொடுப்பதே எங்கள் சத்திய வேதத்தின் போதனையாகும். . ஆகவே ஞானசவுந்தரி கேட் டுக்கொண்டதின்படி நானும் லேனுளே விடுதலை செய்யும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
2ம் யூரி வசனம்
குற்றவிசாரணை சபையோரே குற்றவாளி ஒரு பெண் பேதையாயிருப்ப தினுலும், ஞானசவுந்தரியின் வேண்டுகோளுக்கிணங்கவும் விடுதலை செய்யும் படியே நானும் விரும்புகின்றேன்.
சிமியோன் வசனம்
ஏ! அக்கிரமச் செயல்புரிந்த லேனுளே! உனக்கு ஞானசவுந்தரி இரக்கங் காட்டினமையாலும், குற்றவிசாரணச் சபையார் மன்னிப்பளிக்கும்படி விரும் பியதாலும், ஆண்டவன் நாமத்தால் உன் குற்றங்களை மன்னித்து உன்னை விடுதலை செய்கிதேன், அறிவாயாக.
ம ங் கள ம்
மங்களம் மங்களம் மங்களம் நித்திய தேவ மங்களம் மங்களம் மங்களம்
ஏகபிதாவானவர்க்கும்
எங்கள் யேக ரட்சகர்க்கும் ஆக திரீத்துவத்திற்கும் அர்ச்சிய சிட்ட ரானவர்க்கும்
மங்களம் - மங்களம் - மங்களம்
100

சந்திரன் பதம் மிதித்த
சந்த மரி தாளிணைக்கும்
தந்தை சூசை அப்பருக்கும்
எந்தை அந்தோணி முனிக்கும்
மங்களம் - மங்களம் - மங்களம்
கட்டளைக் குரவருக்கும்
காணும் சந்நியாசருக்கும்
இட்டமுடன் எங்கள் கன்னி
யாஸ்திரிமார் யாவருக்கும்
0L 0Y LLLLLL SAS SLLLLL YOLaL MSS 0LL 0YLLLL
சஞ்சூசை முனிவர் சபை
சந்நியாசர் யாவருக்கும்
நெஞ்சகத்தில் கல்வி தந்த
நேச உபாத்திமார்களுக்கும்
மங்களம் - மங்களம் - மங்களம்
காவலூர் கொழும்புவதி கண்ணியப் பூமான்களுக்கும் ஆவலாய் இந்நாடகத்தைப்
பாடக்கேட்ட யாவருக்கும்
மங்களம் - மங்களம் - மங்களம்
காதலாகப் பாடித்தந்த
காவலூர்க் கவிஞருக்கும்
ஒதும் அண்ணுவியாரான
உற்ற அருளப்புவுக்கும் 40 6 d
is 56 - 1556 to is sort)
செப்பும் சிறப்பாய் நடித்த
ஒப்பில்லா நடிகர்கட்கும்
இப்புவியில் ஈசன் பேரால்
என்றென்றைக்கும் என்றென்றைக்கும்
மங்களம் - மங்களம் - மங்களம்
10

Page 62
எங்கள் சந்தந் தோனியாரின் இன்பப் பேர் சுமந்திலங்கும் துங்கநற் கல்லூரி தன்னைத் தோற்றுவித்த விறதர் மார்க்கும்
LLLLLL L0 cLLL S SLLSLLLLEY0LLSLLLSLLLL S LLLL cYc0L LLLLH
ஆண்டு நூறு காண வைத்த அம்பரனின் பொற்பதத்தை ஈண்டு நாமெல்லோரும் கூடி என்றுமே துதித்து வாழ்த்தி
மங்களம் - மங்களம் - மங்களம்
102

அண்ணுவியார் பற்றிப் புலவர் கருத்து
'அண்ணுவியார்' என்று பல்லோராலும் நன்கறி யப்படும் திரு. அ. அருளப்பு அவர்கள், ஊர் காவற் றுறை வடக்கு நாரந்தனையைத் தாயகமாகக் கொண்ட வர். காவலூர் புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர். 1950-ம் ஆண்டிலிருந்தே நாடக (நாட்டுக்கூத்து) நடிகராகத் திகழ்ந்து, பல ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நாற்பத்தைந்து வயது நிரம் பாதவராயிருந்தும், இவரது திறமையால் பல நாடகங் களைப் பழக்கி அரங்கேற்றம் செய்துள்ளார். இம்மனு வேல், தருமப்பிரகாசன், எஸ்தாக்கியார், விஜய மனே கரன், கருங்குயிற் குன்றத்துக் கொலை, செனுகப்பு, திருஞான தீபன் முதலாம் நாடகங்கள் குறிப்பிடத்தக் கனவாகும். இந்நாடகங்கள் யாவும் ஆலயக் கட்டிட நிதிக்காக நடிக்கப்பட்டனவாகும். சமீபத்தில் எஸ்தாக் கியார், செனுகப்பு ஆகிய நாடகங்கள் புனித அந்தோ னியார் பாடசாலை நிதிக்காகவும், கருங்குயிற் குன்றத் துக் கொலை, இம்மனுவேல் , தருமப்பிரகாசன் முதலாம் நாடகங்கள் சென். மேரிஸ் பெண் பாடசாலைக் கைத் தொழில் நிதிக்காகப் பெண்மணிகளாலும் அரங்கேற்றம் செய்யப்பெற்றன. தற்போது ஊர் காவற்றுறைப் புனித அந்தோனியார் கல்லூரியின் நூற்ருண்டுவிழாவிற்காக கொழும்பில் வதியும் காவலூர் பழைய மாணவர்களால் நடித்துக் காண்பிக்கப்படும் ஞானசவுந்தரி நாடகமும் இவ ராலேயே பழக்கப்பட்டதாகும். என்னற் புதிதாகப் urr Lபெற்ற இந்நாடகத்திற்கு இராகங்கள் கொடுக்கப்பட்ட தும் இவராலேயாம்.
杀0B

Page 63
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
இந் நூலாசிரியரின் பிறநூல்கள்
சிந்தாகுல மாலை
சகாய மாதா சரித்திரம்
சகாய மாதா பெரிய பிரார்த்தனை
யாழ்ப்பாணம் புதுமை மாதாகோயில் சரித்திர ( ர
லாறு பாலைதீவு அந்தோனியார்கோயில் சரித்திரவரலாறு சரவணை சின்னமடுமாதா ஆலய வரலாறு வடநாரந்தனை பூரீமனேன்மணியம்மாள்பேரில் பதிகம் வடநாரந்தனை பூரீமகுேன்மணியம்மாள் திருஉஊஞ்சல் நயினைத் தபால் - நயினை நாகேஸ்வரிபேரில்
நாக துரதம் - , , நயினை பொற்றேர்க் கீர்த்தனை -
நயினை நாகேஸ்வரிபேரில்
காந்தி அண்ணல் அம்மானை
கொழும்பு கலைமகள் கம்பளி வெளியீடு
நேருஜி அனுதாபக் கீதம் ,, , , , , , காந்தி அண்ணல் கீதம் , , , F. » p y திருமலை யாத்திரைச் சிந்து, , J. J. குமுறும் நெஞ்சம் 1 சன்னதியான் கும்மி y
நல்லூர்க் கந்தன் கீர்த்தனை , 9 p. 9 9
தமிழன் கீதம் s 9 0 வட ஈழமறவர் மான்மியம் மேலைக்கரம்பன் பூரீமுருகன்பேரில் பதிகம் - அச்சில் மருத மடுத் திருப்ப்தியின் உண்மை வரலாறு s
104


Page 64
கிIவலூர்க் கவிஞர் ஞா. வேடன் தீவு அன்னேயின்ற அ செல்வராசாவின் கவிதைப் ப களுக்கு முன்னர் அடிக்கடி சுவைத்தவர்களில் யானும் ஒரு பிறந்த யான் இப்புலவருடைய அடைமொழி பெற்றிருப்பதை சியும் பெருமிதமும் அடைவது யிங் செல்வராசா காவலுரர் . திர ரத்தினமாக ஒளி காலுகி நம் காவலூர்க் கவிஞர் ஒ தான் சொல்ல வேண்டும். பிறந்து வளர்ந்தபோதிலும் வன் ஒருவனே என்ற பரந்த கத்தோவிக்க சமய வழிபாட் அதே வாயால் சைவசமயப் பு கோணுது அவர் பாடியிருப் விஷயமாகும் பாராட்டப்ப கவிஞர் செல்வராசாவும் என்ே சிறப்பாக நடத்திவந்த சந்த பள்ளிக்கடத்தில் கல்வி பய தமிழ்க் கல்வியும் நல்லொழு விறதரின் மாணவர்.
ஊர் காவற்றுறை உதைய யான் பிறந்த நாட்டிற் பிறந் கூடத்திலே கல்விபயின்று இ திறனேச் சரஸ்வதி கடாட்சத்
முன்னுள் அரசினர் த
குமரன் அச்சகம், 201 டாம் S S S
-—
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம. செல்வராசா அவர்கள் ரும்பெரும் புலவர். திரு. டைப்புக்களேச் சில வருடங் பத்திரிகைகளிற் படித்துச் தவன். கரம்பன் மண்ணிற் பெயர் காவலூர்" என்ற க் கண்டு மட்டற்றி மகிழ்ச் உண்டு. கவிதைத் துறை அன்ஃபீன்ற உத்தம புத் ன்ருர், ர் அபூர்வப் பிறவி என்று கத்தோலிக்க சமயத்திற் எந்நாட்டவர்க்கும் இறை மனப்பான்மை பூண்டவர். டுப் பாடல்களேப் பாடிய க்திப் பாடல்களேயும் மனங் பது பெருமைப்படத்தக்க டவேண்டியதொன்றுங்கூட. எப்போலவே விறதர் மார்" அந்தோனியார் ஆங்கிலப் பின்றவராவர். எனக்குத் |க்கமும் ஊட்டிய சைமன்
திசைவாசராகிய கவிஞர் து, யான் படித்த பள்ளிக் யற்கையாகவே கவிபாடுந் தாற் பெற்றவர்.
முதலியார் குல. சபாநாதன் லேமைத் தமிழ் மொழிபெயர்ப்பாளர்
விதி கொழும்பு-12 . ܒ ܢ