கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விசய மனோகரன்

Page 1


Page 2

விசய மனுேகரன்
(நாட்டுக்கூத்து)
பாடியவர் :
புலவர் வெ. மரியாம்பிள்ளை அவர்கள்
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்.
பதிப்பித்தவர் :
புலவர் அவர்களின் மருமகனும் சமாதான நீதவானும் ஒய்வுபெற்ற ஆசிரியரும் ஆசீர்வாதம் அச்சகம்-புத்தகசாலை உரிமையாளருமாகிய
திரு. மு. வி. ஆசீர்வாதம் அவர்கள்
அச்சுப் பதிவு :
ஆசீர்வாதம் அச்சகம்
யாழ்ப்பாணம்.
1968 உரிமை பதிவு (விலை ரூபா. 3.00

Page 3
யாழ்ப்பாளம், 32, கண்டி விதியில் உள்ள ஆவிர்வாதம் அச்சகத்தில்
அச்சிடப்பெற்று 25-8-68 இல் வெளியிடப்பட்டது. . ”
 
 


Page 4

பதிப்புரை
நாட்டுக்கூத்து வேறு; நாடனம் வேறு; சினிமா வேறு அவற்றின் பண்புகளும் வெவ்வேருனவையே. நாட்டுக்கூத்து என்பது இயலுக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பழைய பண்பில் வறி, நாட்டிற்கும் சமூகத்திற்கும் நல்லவற்றைக் கதைகள் மூலம் கூத்தாடிக் காட்டும் ஒருவகைக் கலை; அறம் நிலைக்க மறம் அழியும் நல்ல பண்பினைச் சுட்டிக்காட்டும் கலை அது. நாடகம் என்பது வசனத்திற்கும் சம்பவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து புதிய பண்பில் ஊறி, விறுவிறுப்பான காட்சியமைப்புகளோடு பார்ப் போரை ஒரு கணம் மறக்கச் செய்யும் ஒருவகைக் கலை. சினிமா என்பது மேடையில் காட்டமுடியாத அற்புதக் காட்சிகளை தத்ரூப மாகச் சித்திரித்துக் காட்டும் ஒப்பற்ற ஒருவகைக் கலை. மேலை
ராட்டுக்கே உரிய கலை அது.
நாட்டுக்கூத்தை அடக்கமான, அழகான, ஒரு கிராமப் இபண் என்ருல், நாடகத்தை கிராமமுமல்லாத நகரமுமல்லாதபழமையும் புதுமையும் கலந்த-பெண் எனலாம். சினிமாவோ ாகரிக நங்கை. சினிமாவின் தாக்கம் முன்னிரு கலைகளையும் பெருமளவில் தாக்கியுள்ளது. கூத்தும் நாடகமும் சினிமாவின் வருகையினல் தமது தனிச் சிறப்பை இழந்தன. நாட்டுக் கூத்துக்கள் ழக்கொழிந்து வருகின்றன; நாடகங்கள் சினிமா உத்திகளோடு சர்ந்து "நாடகச் சினிமா’க்களாக மாறி வருகின்றன. பேசும் படக் ாைட்சிகள் வந்து புதிய திருப்பம் ஒன்றை ஏற்படுத்தியதினுல் நாட் டுக்கூத்து, வசனம் வாசாப்பு என்பவற்றுக்கும் படக்காட்சிக்கும் இடைப்பட்டதான ஒரு நிலையில் நாடகங்கள் வளர்ச்சியடைந்துள்ளன
இன்று நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு வருகின்றது. திராமங்கள், பட்டினங்கள் தோறும் அடிக்கடி நாடகங்கள் அரங்கேற் 'றப்பட்டு வருகின்றன; பல நாடகமன்றங்கள் ஆங்காங்கே தோன்றி நாடகங்களை நடாத்தி வருகின்றன; அரசாங்கக் கலைக்கழகத்தினரும் நாடகங்கள் நடிக்கப்படுவதை ஊக்கப்படுத்துமுகமாக, போட்டிகள் நடாத்திப் பரிசில்கள் வழங்கி வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நிலைமைகள் இன்று நாடகங்களின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக உள்ளன. ஆஞல், நாட்டுக்கூத்துக்களின் வளர்ச்சிக்கு, (வளர்ச்சி வேண்டாம்; உள்ள திலையைப் பேணவாவது) எந்த ஒரு தூண்டுதலும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. பழமை பேணும் சில கலைஞர்கள் ஆங்காங்கே சிதறலாக நாட்டுக்கூத்துக்களே அரங்கேற்றி வருகின் றனர். அக் கலைஞர்களின் தலைமுறையுடன் நாட்டுக்கூத்துக்களும் அழிந்துவிடலாம் என்று பயப்படுவதில் அர்த்தமில்லாமலுமில்லை.

Page 5
பாடலும் ஆடலும் ஒருங்கே ஒருவரால் நிகழ்த்தப்பட்ட காலம் மாறி, பாடல் ஒருவராலும் ஆடல் வேருெருவராலும் நிகழ்த்தப்படும் காலம் வந்து நாட்டுக்கூத்தின் முன்னைய அமைப்பு முறையையும் சிறப்பையும் சிதைத்துவிட்டது.
நமது பாரம்பரியம் மகத்தானது. பழமையைப் பேணுது புதுமையில் நாட்டம் கொள்வது நன்மையன்று. புதுமை வரவேற் கப்படுதற்குரியதே. அதனுல் பழைமை ஒதுக்கப்படவேண்டியதுமன்று.
யாழ்ப்பாணப் பகுதியில் இற்றைக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டுக்கூத்துக்கள் பாடப்பெற்று ஆடப்பட்டு வந்தன. நாட்டுக் கூத்து முறையில் வசனம் குறைவாகவும் பாடல்கள் அதிகமாகவும் இருப்பதும், நாட்டுக்கூத்துக்குரிய பாடல்கள் பாடுவ தற்குச் சிரமமானவைகளாய் இருப்பதும் பிற்காலத்தவருக்கு வெறுப் பைக் கொடுத்திருக்கிறது எனலாம். இதனுல் வசனங்கள் அதிக மாகவும் பாட்டுகள் குறைவாகவும் உள்ள முறையில் நாடகங்கள் திருப்பமடைந்துவிட்டன.
நாட்டுக்கூத்து நடக்கும் நிலை உச்சமடைந்த காலத்தில், தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்து, பூதத்தம்பி நாட்டுக்கூத்து, அலங் கார ரூபன் நாட்டுக்கூத்து, நொண்டி நாட்டுக்கூத்து, மத்தேசு மாகிறேற் நாட்டுக்கூத்து, சஞ்சுவாம் நாட்டுக்கூத்து, உடைபடா முத்திரை நாட்டுக்கூத்து, எஸ்தாக்கியார் நாட்டுக் கூத்து, மரிய தாசன் நாட்டுக்கூத்து, யூதகுமாரன் நாட்டுக்கூத்து, கனகசபை நாட்டுக்கூத்து, அந்தோனியார் நாட்டுக்கூத்து, தீத்தூஸ் நாட்டுக் கூத்து, கருங்குயிற் குன்றத்துக் கொலை நாட்டுக்கூத்து முதலிய நாட்டுக் கூத்துக்கள் நாட்டின் பல பாகங்களிலும் தக்க கலைஞர் களால் சிறப்பாக அரங்கேற்றப்பட்டுள்ளன.
இந் நாட்டுக்கூத்துக்களில் உள்ள சில பாடல்களை இராக தாளத்துடன் எடுப்பாகப் பாடக்கூடியவர்கள் இப்போது மிகச் சிலரேயுளர்; அதற்கு ஒரு தனித்திறமையும் வேண்டும். இக் கூத்துப் பாடல்கள் பழந்தமிழைப் பக்குவமாகப் பேணிக்காக்கும் கருவூலங்கள் என்று கூறுவது மிகையாகாது. அவற்றை ஆழ்ந்த கருத்துடன் நோக்கில் அருமையான சொற்கள் கையாளப்பட்டிருப்பதையும், உவமைகள், வர்ணனைகள், எதுகை மோனைச் சிறப்புக்கள், அணிகள் என்பன பரக்கச் செறிந்திருப்பதையும் காணலாம்.
இவ்விதச் சிறப்புக்களையுடைய நாட்டுக்கூத்துப் பாடல்கள் பல ஏட்டுச் சுவடிகளிலிருந்து அழிந்து மறைந்து கொண்டிருக்கின்றன. ஐம்பது வருடங்களுக்குமுன் தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்து அச்சேற்றப்பட்டதாயினும் அதன் பிரதிகள் இப்போது கிடைக்கத் தக்கனவாக இல்லை.

மதுரகவிப் புலவர் சூசைப்பிள்ளை அவர்கள் பாடிய எஸ்தரிக் கியார் நாட்டுக்கூத்தை நாட்டுக்கூத்துக் காலநிதி ம. யோசேப்பு அவர்களின் தூண்டுதலாலும் துணையிஞலும் 1962 ஆம் ஆண்டு அச்சேற்றி அஃது அழிந்தொழியாது காத்துள்ளோம். அதுபோலவே புலவர் மரியாம்பிள்ளை அவர்கள் பாடிய 'விசய மனுேகரன்" மரிய தாசன் எனும் நாட்டுக்கூத்துக்களில், இந்த விசய மனேகரன் எனும் நாட்டுக்கூத்தை அழிந்தொழியாது காப்பாற்றுமுகமாக இப்போது அச்சேற்றியுள்ளேன். , , , , "விசய மனேகரன்' எனும் இக்கூத்தின் சில சிறப்புக்களைச் சுட்டிக் காட்டுதல் நலமாயிருக்கும். இந் நாட்டுக்கூத்து நடிப்பதற்கு மட்டுமன்றி படிப்பதற்கும் சுவை தரக்கூடியதாகவுள்ளது. அருமை யான சொற்கள்; சிறப்பான உவமைகள்; எடுப்பான வர்ணனைகள்; எதுகைமோனைச் சிறப்புகள்; அணிகள் என்பன இக்கூத்தின் சிறப்பிற்குக் கட்டியம் கூறுகின்றன.
தொடை நயம்படச் செய்யுள் புனைவதில் புலவர் கைவந்தவர். * எதுகை, மோனை, இயைபு, முரண் ஆதியாம் தொடைகளை அமைத்து
ஓசை நயத்தை மிகைப்படுத்துவது இவரியல்பு.
*தேடிமயில் தன்னிடத்தோர் இறகு கேட்டால்
தேவையெனத் தான்மதித்துக் கொடுக்கா தன்ன நாடிமணஞ் செய்யெனவே நயந்து கேட்க
நாக்கொழுப்ப தானவசை மறுத்தே சொன்னுய் பேடியென எந்தனையும் நினைத்திட் டாயோ
பெண்ணுனது எண்ணமெதிர் பார்க்க மாட்டேன் கூடியுல கொன்றுபட்டிங் கெதிர்த்திட் டாலும்
கோதையுனை யிம்சைமணம் புரிகு வேனே." -
(பக்கம்-109) இந்த எண்சீர் விருத்தம் எதுகை மோனைச் சிறப்பை எடுத்துக் காட்டுவதாகும். அடிதோறும் முதற் சீரின் இரண்டாம் எழுத்து ாதுகையாயமையுமாற்றையும் அடிதோறும் முதற் சீரின் முதலெழுத் துக்கு 5ஆம் சீரின் முதலெழுத்து இயைந்து மோனையாதலையும் நோக்குக.
உவம்ைகளைக் கையாளுந் திறத்தால் புலவரின் இலக்கியப் பயிற்சியை அறிந்து கொள்ளலாம்.
அமைச்சரின் முக்கியத்துவத்தை :
'கண்ணிய மதிசேர் அமைச்சிலா வரசோ
கரையிலா வேரியே வன்றேல் கலைசெறி மதியம் நிலையிலா வானுே
கடைந்தெடு மச்சிலாத் தேரோ"
என்றும் , (பக்கம்-8)

Page 6
ப்ொருந்தா மணத்தை:
'பச்சைக் கிளியைத் தான் வளர்த்துப்
uожазм ціот васft:ьсв அச்சப் படாதே அளிப்பதற்கு
ஆர்தான் துணிவார் கேடு மிகும்"
* துட்டன் கையில் 'பெரும்புலி
ெ
ரென்றி
aágyú8, (uiaü-41)
பன உள்ளன.
auban aa شبه مrمه وورمي : " قوتهم காட்:ெ&ாநனி விளக்குவதாகவும் அமைந்துள்ளன.
EJMLES rLEE CLLCCCtLLGrS TrTLL rrTTHTTT awகழவி வரவுசெள்ளெல்கொழிக்கும் நாடு'
старић, (ušath-1)
தேன் கரும்பின் சோலேகளும் பூங்குவளே வாவிகளும் தெள்ளிய நீரோடைகளும் புள்ளுறங்கும் கூடல்களும் தென்மடுத்தே சென்னெல் விள கன்வள கொழித்த முத்தம் தான் பொலியு நாடு.
ናré∂ሴ (ሮuጳaù-5)
பொங்க பரந்தைெற வளிபோ தார்ப்ப
பூல் கழுவி குங்குடுமி அலசிப் பாயும்
கங்கைவள நாடு
réah (uăak-26) வருணித்திருக்கும் வகை பாடி மகிழ்வதற்குரியதாகும்.
நவீன இலக்கிய உலகில் மண்வாசண் என்ற பெயர் அடிக்ாடி
அடிபடுவதை தானுணர்த்திருக்கிறேன். சாதாரண மக்களும் புரிந்து
ибуia.ни Garibs&ur-oasið, st 2009, Gart2G) orairuar - gör
விட்த்தப் பெய்து இக்கூத்து ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
(
 
 
 
 
 
 
 

சப்பு அவர்கள்
க்கூத்துக் கலாநிதி
நாட்டுச்
Luc. Suur2

Page 7

நாட்டுக் கூத்து இரசிகர்களின் ஆதரவு இருப்பின் ஏனைய கூத்துக் சுளேயும் அரங்கேற்றி அவை அழிந்தொழியாது காப்பாற்றலாம் என நம்புகின்றேன்.
இக் கூத்து, முறைப்படி அச்சேறுவதற்கு பாட்டுகளுக்குரிய இராகம், தாளம் என்பவற்றையும், மெட்டுக்களையும் உதவி, பாட் டுக்களைப்பாடி சந்தம் பிரித்து உதவிய நாட்டுக்கூத்துக் கலாநிதி திரு. ம. யோசேப்பு அவர்கள் சேவை மறக்கப்படக்கூடியதொன்றன்று பழந்தமிழ்ப் பாடல்களைத் தேடிச்சேர்த்து, பிற்காலத்தவருக்கு உதவும் வண்ணம் அச்சேற்றி அருந்தொண்டு செய்பவரும், அரச கரும மொழித்துறை மொழிபெயர்ப்பு அத்தியட்சருமான வித்து வாள் மீ. X, C. நடராசா அவர்கள் இந்நூலுக்கு, தக்கதோர் அணிந் துவரை உதவியதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
வளர்க நாட்டுக் கூத்து.
இங்ஙனம் மு. வி. ஆசீர்வாதம், ஜே. பி. "ஆசீர் அகம்' 9, asawuq. 66), யாழ்ப்பாணம்.
5-8.68

Page 8
நூலாசிரியர் பற்றி
பட்டம் பெருத பண்டிதர்களும் இருந்தனர் என்பதற்கு EEcTTLCTTT C ETTTa TTTTC LLLL LL S S TT a c0LLL L LEELEL LLL ሠፅሐumúú§ään 3ጨiffsär.
கருவிலே இருவமைந்த புலமையாளன் என்று அவர் வாழ்ந்த ELTLTTT0aMT HLL LT Ta TL0TTT TLLLL LL L G TE G 0LqTA00TALLL 8:0psi.
வாக்கு வல்லபமும் தோற்றப் பொலிவும் பெற்ற புலவர் அவர் ாள் 1895ஆம் ஆண்டு மாளி மாதம் 18 ஆத் திகதி இருமரபுத்தூய நெடுத்தீவுத் தனிநாயக முதலியாரின் மரபிலுறித்த வெலிச்சோர்ப் பிள்ளை (பின்னக்குட்டி) என்பவருக்கும், தெல்லிப்பளைப் பள்லையை LLLL EEE0SSEET CESS 0aaETaELTTS TTLLTLaTrTT T LGL LT LL TLEE தையாகப் பிறந்தவர். இவர் பாடசாலைக் கல்வியை ஐந்தாம் வகுப் புடன் நிறுத்திக் கொண்டவராவர்.
பாடசாwக் கல்வியை நிறுத்திக் கொண்டாலும், நன்னூல், நிகண்டு, தொல்காப்பியம், இராமாயணம், tarro, os-alb, வெண்பா, ஒவகலந்தாமணி, தேம்பாவணி முதலிய நூல்களை T STSTS cLETC STEEcLEE rLLG TEL LLEELL LLLLLL TT TCCCLL ஆற்றல் பெற்றிருந்தமையால், எதுகை, மோனேயோடு பிலேடைப் பொருளமைய மிக்க இலாவகமாகவும், கேட்போ புளகமுறும் வண்ணமும், தர்க்க ரீதியாகவும் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு சமயோ விதமாகப் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார்.
cuitàgnéanto ucal-35335entautré, தான் வசித்து வந்த கண்டிக்குவிப் பகுதியில் ஒரு நியாயவாதி போலவும், நீதிபதி EEE LcCCaa 0SLTTTT T T ELCTT AAG LLLLaa LLTLLL LLLLSLLA0ELaa Gu99šsti.
0LLE L TaCaaS LEL S TTLT TTC TTCLLaLL TL LLTLL T0EE MTTLLLLSSS தங்கப்பொருளின் தரமறிந்து கணிக்கத் தெரிந்ததோடு, சங்கத் தமிழின் சுவையறிந்து இரசிப்பவராகவும் இருந்தார்.
விதிமுறையோடு பாக்களே யாக்க விரும்பிய இவர் அக்காலத் TE S a0LGTM0LEHGrTEE aaaGTLT SrrrTTa0aL LaT S L LTL LtLLTEE cMESES LCTL TTLTLLL S TLGGTTM HLTTL &னவதில் வல்லமை பெற்ருர்,
 
 
 

1606)ii G
வ. மரியாம்பிள்&ள அவர்கள்

Page 9

பாக்கள் புனைந்து இன்பங்கண்ட இவர் அக்காலத்து நாட்டுக்
கூத்துக்களேப் பார்வையிட்டு, நயந்து, தானும் ஒரு நாட்டுக் கூத்துப் பாடவேண்டுமென்று முனைந்து, தேவசகாயம்பிள்ளை, யூத குமாரன், சஞ்சுவாம், உடைபடா முத்திரை முதலிய நாட்டுக் கூத்துக்களையும் புலவர் அவர்களது உற்ற தோழனும், மதுரகவிப் புலவருமான சூசைப்பிள்ளை அவர்கள் இயற்றிய எஸ்தாக்கியார், சங்கிலியன் முதலிய நாட்டுக் கூத்துக்களையும் பரிசீலனை செய்து அவற்றுக்கு ஒப் பாக 1932 ஆம் ஆண்டில் மரியதாசன் நாட்டுக்கூத்தைப் பாடிமுடித்து தாமே முயற்சி செய்து குடாநாட்டின் பல பாகங்களிலுமிருந்து சிறந்த நாட்டுக் கூத்து நடிகர்களைத் தெரிந்து, அவர்களைக் கொண்டு மூன்று முறைக்கு மேல் அந்நாட்டுக் கூத்தை மேடையேற்றுவித்து மகிழ்ந்தார்.
தொடர்ந்து 1934-ம் ஆண்டில் இந்த விசய மனேகரன் நாட்டுக் கூத்தையும் பாடிமுடித்து, அரங்கேற்றுவதற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாரெனினும், அஃது அரங்கேற்றப்படும் நன்னளைக் காணப் பாக்கியம் பெருதவராய் 1938ஆம் ஆண்டு வைகாசி மாதம்
ஆந் திகதி பரனடிசேர்ந்தார்.
பின்னர் இந்த நாடகம் நாட்டுக்கூத்துக் கலாநிதி ம. யோசேப்பு, அண்ணுவியார் ம. பொன்னுத்துரை என்பவர்களால் இருபதுக்கு மேற்பட்ட முறைகளில் மேடையேற்றப்பட்டு இரசிகர்களின் பாராட் டைப் பெற்றிருக்கின்றது.
புலவர் அவர்கள் மறைந்த முப்பது வருடங்களுக்குப் பின்பு இந்த நாட்டுக் கூத்து அச்சு உருவம் பெற்று, அழிந்து ஒழிந்து போகாது காப்பாற்றப்பட்டு, வருங்கால இரசிகர்களுக்குப் பேணி வைக்கப்படுவதை எண்ணி அவரது ஆன்மா உவகையடைவதாக,
தோற்றம் : 18-2-1895
மறைவு : 55-1938

Page 10
வியச மனுேகரன் W (கதைச் சுருக்கம்) சித்திரபுரி
எழிலுக்கும், ஏற்றமுடை வளத்திற்கும் சித்திரமாய் எழுகின்ற சீர்நாடு. நீர்வளமும், நிலவளமும் நிறைந்து, - காட்டிற்கும் களனிக் கும் பேதமில்லா தெங்கும் கரும்பும் நெல்லும் நிறையும் நாடு. காடெல்லாம் களனியாக, காட்டெருமை தான் வாழ நீர் நிறைந்த வயல்களிலே தானிறங்கிச் சுகம் கண்ட சேற்றினிலே முத்தன்ன நெல் விளேக்கும் உழவர் கூட்டம் நிறைந்த நாடு.
வானவரும் வியக்கின்ற வளமிக்க இந்நாட்டை, மன்னவர் திலகம், நீதியின் சின்னம், குடிகளின் தந்தை, எனும்படி ஆண்டு வருகிருன்-மன்னன் யேசுதாசன்.
மக்களின் மகிழ்ச்சியிலே, ஆண்டுகள் பல உருண்டோடு கின்றன.
விதி விளையாட ஆரம்பிக்கின்றது.
வானம் பொய்க்கின்றது. பசிய தழைகள் காணப்பட்ட இடங்களிலெல்லாம், சருகுகளே மிஞ்சின. அவையும் நாளடைவில் பஞ்சாகிப் பறந்துவிட்டன. நீரிலே குளித்துக் கிடந்த நிலம் பாளம் பாளமாக வெடித்து பரிதாப மாகப் காட்சியளிக்கின்றது. நாட்டிலே பஞ்சம் தலைவிரித்தாடு கிறது.
பஞ்சம் மக்களின் நற் பண்புகளையே அழித்து விடுகின்றது. நாட்டில் எங்கும் கொலை, கொள்ளை, விபசாரம் நிகழலாயின. சிற்றரசரும் திறை கொடுக்கவில்லை.
நாட்டின் சீர்கேட்டினை மன்னனுக்கு எடுத்துரைக்கிருர்கள் மந்திரி-பிரதானிகள்.
மன்னன் மனம் மருண்டது. உலக வாழ்விலேயே விரக்தி ஏற்படுகின்றது. கானகம் சென்று கடுந்தவம் புரிய எண்ணுகிருன் , அதற்கு முன்னர் மக்கள் விரும்புபவர்களில் ஒருவனிடம் நாட்டைக்
யளிக்க எண்ணி, சனசங்கத்தைக் கூட்டுகிருன்.
சனசங்கத்தில் திருவுளச் சீட்டுமூலம் ஆஞ்சலோன் என்பவனைத் தெரிவு செய்து அவனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டுக் கானகம் செல்கிருன், -- YA \

ஆஞ்சலோன் ஒரு அக்கிரமக்காரன். நாட்டின் சட்டதிட்டங் கஃயெல்லாம் தன் சர்வாதிகார மனப்போக்கால் மாற்றியமைக் கிருன். நிலம், அதில் வாழும் குடிமக்களின் சொத்துக்கள் அன்ைத்தும் அரசனுக்குச் சொந்தம், தானிய விளைச்சல் அனைத்தும் அரசாங்கக் களஞ்சியத்தை வந்தடைய வேண்டும். தத்தம் தேவைக்கு மன்ன னிடம் கேட்டுப் பெற வேண்டும். ஊர்ப்பெண்கள் அனைவருக்கும் பொது. பிறக்கின்ற குழந்தைகள் எல்லாம் மன்னனின் செல்வங்கள். இதனை எதிர்ப்பவர்கள் எவரும் மரண தண்டனைக்கு ஆளாவார்கள், ானப் புதுப் புதுச் சட்டங்கள் இயற்றி மக்களைத் துன்புறுத்தி வரு idyair. -
இதே வேளையில்விசயன் என்னும் பிரபு ஒருவன் தன் சகோதரி ஞான மனுேகரி சான்பவளுடன் சித்திரபுரியிலேயே வாழ்ந்து வருகின்றன். இவர்கள் இளவயதிலேயே பெற்ருேரை இழந்தவர்கள். பணிவிடைக்காரர்களின் துணயுடனேயே வாழ்க்கை நடாத்தி வருகின்றனர்.
இவர்களது மைத்துனன் வீக்கிரம வீரன். இவன் இளமையிலேயே *ெ ட்ட தண்பர்களுடன் கூடி குடி, கொலை, களவு, பெண்மோகம் வபனவற்றில் ஈடுபட்டு பல அக்கிரமங்களைப் புரிந்து வருகிருன். ஒரு நாள். பருவத்தின் மெருகு அங்கமெல்லாம் எழிலூட்ட பொற்பாவையாக நிற்கும் ஞானமனுேகரியை விக்கிரம வீரன் காண 0கரிடுகிறது. விரகதாபம் மீதுரப் பெற்ற விக்கிரம வீரன் மைத்துனன் ான்னும் உறவு முறை பேசி, ஞானமனேகரியைப் பெண்கேட்டு அனுப்பு லஞரன், ஆஞல், அவனின் அக்கிரமக் குணங்களை நன்கறிந்தவனன விசயனுே அவனுக்குப் பெண் கொடுக்க மறுத்து விடுகிருன்,
ஆணுல், ஞான மனுேகரியிடம் மோகம் மிகக் கொண்ட விக்கிரம ஏரனே தானே விசயனிடம் நேரில் சென்று பெண்கேட்கிருள். அப் போதும் விசயன் மறுத்துவிடவே, தன் உற்ற நண்பனும் கள்வர் &l L-5 தலைவனுமாகிய உக்கிரம சிங்கனிடம் சென்று தன் நிலையைக் கூறுகிருன்.
உக்கிரம சிங்கன் 'இன்றிலிருந்து எட்டாம் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு வஞ்சி மலர்ச் சோலையில் உன்னிடம் ஞான மனேகரியை ஒப்படைப்பேன்" எனக் கூற, விக்கிரம வீரனும் மகிழ்வுடன் திரும்புகிருன்.
எட்டாம் நாள். மாலை நேரம். ஞான மனேகரியும், அவள் 0தாழியும் நந்தவனத்திற்குச் செல்கிருர்கள். அப்போது, உக்கிரம சிங்கனும் அவன் தோழனுகிய வீரசிங்கனும் நந்தவனத்திற்கு வந்து,

Page 11
தோழியை ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, ஞான மனுேகரியின் வாயிற் துணி அடைத்து, அவளைத் தூக்கிக் கொண்டு வஞ்சிமலர்ச் சோலையை அடைகின்றனர்.
புதிய அரசனின் கொடுங்கோல் ஆட்சியையும், மைத்துனனகிய விக்கிரம வீரனின் மனப் போக்கையும் மனதில் கொண்டு, தனது தங்கை ஞான மனேகரியின் திருமணத்தை விரைவில் முடித்துவிட விசயன் எண்ணுகிருன். இதனுல் அழகாபுரிப் பிரபுவும், தனது இளமைத் தோழனும் தனது சகோதரியை மணஞ்செய்ய முன்பு வாக்குக் கொடுத் தவனுமாகிய மனேகரனுக்குத் தன் தங்கையை வந்து மணம் புரியு மாறு திருமுகம் அனுப்புகிறன்.
விசயனின் அழைப்பை ஏற்று உடனடியாக சித்திரபுரிக்கு வரும் மனேகரன், கானகத்தில் ஒரு பெண்ணின் அபயக்குரலைக் கேட்கிருன். தனது துப்பாக்கி முனையில் அப்பெண்ணை மீட்கிரு?ன். உக்கிரமசிங்கன், வீரசிங்கன் ஆகிய இருவரையும் மரங்களிலே கட்டி வைத்துவிட்டு, பெண்ணின் வரலாற்றை வினவி தனக்கு மனவியாக வரவிருந்த ஞான மனேகரி என அறிந்து ஆனந்தமடைகின்றன். இருவரும் விசய *னிடம் வருகிறர்கள். அவர்கள் வரவுகண்டு விசயன் மகிழ்கின்றன்.
ஆனல், தன் எண்ணம் நிறைவேரு மல் போனதால் விக்கிரம வீரன் பெருஞ்சினம் கொண்டு, வஞ்சகமாக அவர்கள் மீது பழி தீர்க்க முனைகிருன். ஆஞ்சலோன் மன்னனிடம் விசயன், மனேகரன் ஆகிய இருவரைப்பற்றியும் அவதூறு கூறி, மன்னனின் கோபத்துக்கு ஆளாக்குகின்றன். இருவரையும் அழைத்து விசாரித்தபோது
அவர்கள் மன்னனை வணங்குவதை விடுத்து, கடவுளை வணங்கி வருவதாகத் தெரிகிறது. ஆத்திரமடைந்த ஆஞ்சலோன் அவர்கள் இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கிருன்.
இதன்பின், தனித்திருந்த ஞான மஞேகரியிடம் சென்று காதல் வார்த்தை பேசமுற்பட்ட விக்கிரம வீரன் பணிவிடைக்காரரால் விரட்டியடிக்கப்படுகிருன்.
தரட்டில் இவ்வாறு நடந்து கொண்டிருக்க, கானகத்திலே தவம் செய்து கொண்டிருந்த மன்னன் யேசுதாசன் கானகத்தை விட்டு உடனே நாட்டிற்குப் போகும்படி ஒரு தேவதூதன் மூலம் கட்டளையிடப்படுகிருன், யேசுதாசன் நாட்டிற்கு விரைந்து, மரண தண்டனை விதிக்கப் பெற்ற இருவரையும் மீட்டு அரண்மனைக்குச் செல்கிருன். s

அங்கு ஆஞ்சலோன். அபலை ஞான மளுேகரியை பலாத்காரம் செய்வதைக் காணுகிருன். அவர் வருகையால் ஆஞ்சலோனின்
ாண்ணம் தடைப்படுகிறது. − சனசங்கம் மீண்டும் கூட்டப்படுகிறது. ஆஞ்சலோன், உக்கிரம சிங்கன், வீரசிங்கன், விக்கிரம வீரன், விசயன், மனேகரன், ஞரான மனேகரி என்பவர்கள் நீதி விசாரணைக்கு ஆளாகின்றனர். ஆஞ்சலோன், உக்கிரம வீரன், உக்கிரம சிங்கன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆஞல், அரசன் யேசுதாசன் தனது மேலதிகாரத்தால் அவர் களது தூக்குத் தண்டனையை நீக்கி, ஆயுட் தண்டனையாக மாற்று விரு?ன். மனேகரன், ஞான மனேகரியை அவர்களின் மதாசாரப்படி ர், குமணம் செய்து கொள்ளப் பணிக்கிருன். விசயனைத் தனது அரச சபையில் இரண்டாவது மந்திரியாக நியமிக்கிருன்.
அநீதி அழிய தருமம் செழித்தோங்குகிறது.
சுபம்.
நல்லுரர் வண. சுவாமி ஞானப்பிரகாச அடிகளாரால் பார்வையிடப் பெற்று, நாடகமாக நடிப்பதற்கு 1944ஆம் ஆண்டு ஆவணிமாதம் 10 ஆந் திகதி அனுமதி வழங்கப்பட்டது.

Page 12
வித்துவான் F. X, C. நடராசா அவர்கள் (மொழிபெயர்ப்பு அத்தியட்சர் அரசகருமமொழித்துறை, கொழும்பு)
அளித்த அணிந்துரை கூத்து, நாடகம், விலாசம், சபா (விசித்திர சபா , நவரச சபா ) வாசாப்பு என்ற பலவகைப்பட்ட பெயர்களால், நாடகத் தமிழால் இயன்ற நூல்களை மக்கள் வழங்குவர். இப் பெயர்கள் யாவும் ஒரு பொருட் பன்மொழியாகத் தோன்றினும் உண்மையில் அவை வெவ் வேறுவகை நாடகங்களைக் குறிக்கின்றன என்பதே அருத்தமுடைத்து,
குதித்தும் மிதித்தும் ஆடிக்காட்டுவது கூத்து நடித்துக் காட்டு வது நாடகம். நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு முன்னேடியாக உருப் பெற்றது கூத்து ஆகும். இதனைத் தெருக்கூத்து நாட்டுக் கூத்து என்று அடைமொழியேற்றிக் கூறுவதும் உண்டு.
ஈழத்திலே தமிழ் மக்கள் வாழும் வடக்கிலும் கிழக்கிலும் பதி னேழாம் நூற்றண்டு தொட்டு நாட்டுக்கூத்து ஆடப்பெற்று வந்துள் னதென்பதற்குச் சான்றுகள் உள. நாட்டுக்கூத்து மோடியில் எழு தப் பெற்ற பல நூல்கள் எமக்குக் கிட்டியுள்ளன. கிறித்து மார்ச் கம் ஈழவள நாட்டிற் பரவியபோது நாடகத் தமிழும் அத்துடன் சேர்ந்து வளர வாய்ப்புக் கிடைக்கலாயிற்று. பசாம் காட்சிகளை காட்ட கூத்துமேடை உபகாரமாயிற்று. 1612-ல் சிலாபப்பகுதியை சார்ந்த கம்மல் துறையில் கிறித்துவ பள்ளிச்சிமுர் உலக சிருட் என்ற நாடகம் நடித்துக் காட்டிஞர்கள் என்று எழுதி வைக்கப்ப
 

டிருக்கிறது. கிறித்தவர்களாகிய தமிழ் மக்கள், தெய்வத்தச்சன் நாட கம், இசுத்தாக்கியார் நாடகம் போன்ற நாடகங்களை எழுதி நடிப் பதைப் பார்த்து அவற்றைச் சிங்கள மொழியில் எழுதியதாகவும் வர லாறு கூறுகின்றது.
இஃதிவ்வாருகக் கிறித்தவர்களாற் பல சமய நாடகங்கள் கூத்து, விலாசம், சபா, வாசாப்பு என்ற வகையில் எழுதப்பட்டு ஆடப்பட லாயின. கிறித்துவத் தமிழர் மத்தியில் நாடகப் புலவர்கள் பலர் தோன்றிச் சுவைமிகுந்த பாடல்களுடன் சேர்ந்த கூத்துக்களை எழுதி யிருக்கின்றர்கள். தம்பிமுத்துப்பிள்ளை, சூசைப்பிள்ளை, சுபவாக்கியம் பிள்ளை, பொன்னையாபிள்ளை போன்ற புலவர்கள் தோன்றி அருமை பெருமைமிக்க நாடகங்களை எழுதியுள்ளார்கள். இவ்வாறு தோன் றிய அருமருந்தன்ன பிள்ளைகளோடு மரியாம்பிள்ளை அவர்கள் தம்மை யுஞ் சேர்த்துக்கொள்ள அவாவுற்று தம்மைத் தாமே தகைமையுடை யவராக்கிக் கொண்டனர். பற்பல நாடகங்கள் இயற்றிஞர்; அவற்றை மேடையேற்றிஞர்.
மரியாம்பிள்ளைப் புலவர் பாடிய பல நாடகநூல்களில் விசய மனுேகரன் நாடகம் வெகுவாய்ச் சிறப்புற்று விளங்குவதினுற் போலும் இதனை ஆடுவித்துப் பார்க்கும் வாய்ப்பிணைப் புலவர் பெறமுடிய வில்லை. எனினும் அவர் பரனடி சேர்ந்த பிற்பாடு புலவர் பெருமக ஞரின் அபிமானிகள் இந்த நாடகத்தை இருபது முறைக்குமேல் மேடையேற்றியுள்ளார்கள் என்ருல் இதன் சிறப்புச் சொல்லாமலே விளங்கும்.
பாவும் பயனும் அவை நின்று நிலவுவதாலேயே விளங்கும். விசய மனுேகரன் நாடகத்தின் உயர்தனிச் சிறப்பு அஃது இன்றுவரை மறக் கப்படாமலிருப்பதிஞற் தெளிவாகின்றது. s
நாட்டுக் கூத்தினைப் பொலிவாக்கும் தன்மைகளிற் சிறப்புடை யன மத்தளமும் தாளமுமாகும். தாளத்திற்கிசைய மத்தளம் அடி பட இவற்றிற்கிணங்கச் சலங்கை கட்டிய கால்கள் மிதிபட வேண் டும். இவற்றின் வழி கூத்தில் வருந் தருக்கள் அமைதல் வேண்டும். அஃதாவது தாளக் கட்டுக்கிசைய தருக்களில் வருஞ்சொற்கள் அமை தல் வேண்டும். இவ்வித நுணுக்கங்கள் தெரிந்தாற்ருன் கூத்துக்களை இயற்றுதல் சாலும் புலவர் மரியாம்பிள்ளை அவர்கள் இவ்வகை நுணுக்கங்களை நன்கு கற்றுத் தேறியவர் என்பது அவரின் சுவைமிகு
பாடல்களாற் தெரியவருகின்றது.
தார்சிந்த நேர்வந்த பேர்முந்து மூர் சொந்த மாயுந்து வாரைந்துளான் என்றும்

Page 13
முத்திடைப் பவளம் வைத்து
ஒத்திடப் பசும்பொன் தைத்து என்றும்
எதிர்த்து வடவுமலை பெயர்த்து வரினுமவை
பொடித்துத் துகள் துகளாய் உதிர்த்திடுவேனே
sTsir pyb
அன்னத் தனிநடை மின்னற்றுடியிடை என்றும்
அழகாகச் சொற்களை இருத்தித் தாளத்திற்கிசைந்த தருக்களை யாத் துள்ளார். ஓய்வுபெற்ற நல்லாசிரியரும், சமாதான நீதவானும், தக்க நூல்களை அச்சேற்றி மக்களுக்கு உதவும் பேருபகாரியுமாகிய திரு. மு. வி. ஆசீர்வாதம் அவர்கள் கற்ருர் போற்றும் இந்நூலினை உற்ருர் என்ற முறைமை நோக்கி இனசன சம்பந்துக்கள் யாவரும் போற் றும் வண்ணம் அழகுற அச்சேற்றி அதனை அழிந்தொழிந்து போகா மற் காத்தோம்பி அளித்தமைக்குத் தமிழ்மக்கள் நன்றிக்கடமையு டன் ஏற்று, மேலும் இவ்வகைப் பல நூல்கள் அச்சேற்றி உதவ திரு. மு. வி. ஆசீர்வாதம் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்க ளாக என்று வாழ்த்தி அணிந்துரையை முடிக்கலாயிற்று.
165, செட்டியார் தெரு, F. X. C. pLJTaT
கொழும்பு.

அநாதிநம யேசு மரி சூசை துணை.
விசய மனுேகரன்
நாட்டுக்கூத்து
-------سسسسسسسسسس حسسسسسسس
காப்பு விருத்தம்
துய்யபரி பூரணமுப் பொருளொன் முன
துப்பொளிரு மற்புதன்ருள் சிரமேற் சூடி செய்யமலர்ச் சேக்கையன்னம் சிறைபொன் ஞற்றச் சேர்கழனி வாவுசென்னல் கொழிக்கும் நாட்டில் உய்யுமதி யோங்குமனே கரன்தன் னேடு
ஒப்புவிச யன் சரிதை யுவந்தே பாட மெய்யொளிரப் பான்மதிமீன் மிலைச்சும் ராச
மேவுகுலக் கன்னியன்னை பதங்காப் பாமே.
miniwanielskenn»
கட்டியன் தோற்றம்-விருத்தம்
அரைக்கணிக் கச்சை யோடே அவிர்மணிக் கவசம் மாட்டி திரைத்தொளிர் சருகைப் பாகை சொருகுண் டலமும் மின்ன திரைப்படு பவளம் முத்து நிறைவள நகரின் சீரை உரைக்கவென் றரசன் வாசல் உரியமா கதன்வந் தானே.

Page 14
一2一
கட்டியன் தரு (சித்திர மகுடம் எ. மெ.) இராகம்: அடாணு தாளம்: ரூபகம் 1. பொங்கொளி செறிந்தமணி தங்கு முடியோன்-வரப்
பொன்னிழைத் துவசமெங்கும் மின்னவிடுவீர்
2. செம்பவளத் தூண்நிறுத்தி வெண்பொன்னல் விட்டம்-இட்டுச்
சேர்தமனி யப்பலகைக் கூரையே கட்டி,
3. விண்டொளிரும் வண்டரள மாலையே தூக்கி-நேர்
விளங்குநவ ரத்தினக்கு ளோவைக ளேற்றி.
4. நற்பளிங்கா லச்சுவர்கள் நாற்புறந் தீட்டி-ஒளிர் நனிசருகைத் தோரணங்கள் இனநிரை கூட்டி.
5. மூட்டியேவி சித்ர ரத்ன பந்தர் மருங்கே-வாச
விரைமலர்ச்செஞ் சாந்துபன்னீர் விரைவிற் றெளிப்பீர்
6. முருகவிழுங் கனிமதுரக் குழல்மடவிரே-பதின் மூவிசைப்பண் பாடிநட மாட முன்னுவீர்,
கட்டியம் கூறல்
அட்டதிசை எட்டுமொரு வட்டநிழ லிட்டரசு
கொட்டுமிசை தொட்டதாரான்
ஆரமணி திரபுய மேருவென ஒருவய
தீரரண சூரவீரன்
கனகங்கொள் ஒளிசிந்து மணிபொங்கு முடிதங்கு
செயதுங்க மிகு சங்கை மான்
கார்சிந்த நேர் வந்த பேர்முந்து மூர் சொந்த
மாயுந்து வாரைந்துளான்
மகுடாதி மண்டலன் மகராதி குண்டலன்
சித்திரபுரி பூபன் ரத்தினகொலு வருகிருர்
சமுகம் எச்சரீக்கை-சாமி பராக்கு.

--3-س
இராசன் தோற்றம்-சந்த விருத்தம்
கீதகான யாழினேடு கின்னரங் களும்வர
கிளற்றுபம்பை தும்பையோடு கிரணதோ ரணம்வர
நாதபோத சாது சங்க நன்மதிக் குழாம்வர
நடனமாதர் இடைநெருங்கி நாற்புறமும் சூழ்தர
தூததான சேனைதான துத்தியஞ் சொலிவர
துய்யதாம மானகோவை சுடர்பரப்பி யேவர
கோத கன்ற ஓதிமங்கள் கொள்புயத் தொளிதர
கூறுயேசு தாசராசன் கொலுவில்வந்து தோற் றினன். இராசன் தரு (சுசிலத்ததிகாரன் எ. மெ .)
ሥኅዕ
r&b: நாதநாமக்கிரியை Gesch خلیم کتح øs தாளம்: ஆதி
l.
பணிலந் தருதரள-பசியவெண்
மணிசிந் தொளிபுரள-கவிகுடை
பரவப் படிமிசை துரகப் படியிசை விரவத் துடிமணித் தவிசிற் செல்வேனே.
அலையே றிடுபுவனத்-தெவருமென்
சொலைமீ றிடில்விதன-முறவிரைந்
தடரத் தனுதலை தொடரத் தினநிலை படரப் பருமணிக் கொலுவிற் செல்வேனே .
நிறைமுந் தொளிர்மகுட-அரசர்கள்
திறைதந் தடிவருட-முறைமுறை
நிறைகா வலரட வரைபா வலர் நட திரையே றலசுடர்க்கொலுவிற் செல்வேனே
மருமா மணிமார்பன்-குசேசய திருமா தணிநேர்பன்-நுடங்கிடை
மடவார் இடுநட எடுபா விசைபட
அடுதா ரணிமணிக் கொலுவிற் செல்வேனே .
தருமநெறி தவறுக் கோலோச்சுவேனே.

Page 15
س-4--
கட்டியன் சந்த விருத்தம்
X முண்டக நொந்தய ரும்முக சோபித
முன்னவனே வாழி! முதுமணி முடியது சிரசினி லேயணி
முருகார்பதம் வாழி! விண்டொளிர் வச்சிர குண்டல னேயிசை
விறல்நாயக வாழி! வித்துரு மத்தொடு தத்து மணிக்குடை
வெற்புயனே வாழி! கண்டக நொந்து வருந்திட ஒன்னலர்க்
கரியேசெய வாழி! கனரண முறுபடை அணியணி நிறுவிய
கவிராயனே வாழி! அண்டும ணித்தவி சொன்றி யிருந்தர
சாற்றுவனே வாழி! அண்ணலே யுன்னரு கண்ணிய குடைநிழல்
ஆசீர்செய வாழி! −
இராசன் எண்சீர் விருத்தம்
செங்கமலப் பாதமதில் முடியைச் சாய்த்துச்
சேரவிரு கரங்கூப்பிப் பணிந்தே நின்று
மங்களச்சொல் வாழிசெய வாழி யென்ற்
மாகதனே நானுரைக்கு மொழியைக் கேளாய்
பொங்குகலைச் சிங்கமெனப் பொருண ரேற்றும்
போந்தறிவு வாய்ந்திலகு மமைச்சன் தன்னை
சங்கமளி தங்குமெந்தன் கொலுமுன் பாகத்
தாமதமில் லாதுசணம் அழைத்தி டாயே.
இராசன் வசனம் : கட்டியனே! மதிவல்லோனகிய எனது மதி மந்திரியை
அதி சீக்கரம் அழைத்து வருவாயாக.
கட்டியன் வசனம் : அப்படியே அழைத்து வருகிறேன் அரசே,

கட்டியன் 5 (25 தேடியழைத். மெ.) இராகம்: தோடி தாளம்: ஆத பல்லவி
(it last படிக்குச் செல்லுவேன்-அரசனிட்ட கட்டளைப் Hடிக்குச் செல்லுவேன்.
கட்டளைப் படிக்குச் செல்வேன் மட்டளைத் தொடைமகிபன்
விருப்பொலி வளநன் னுட்டின் ಸ್ಠ09 சீபைவந் தானே
.Sr( د تـ மந்திரி திரு வேந்தனென.எ.ெ un ir sib: அடாணு தாளம்: ரூபகம்
1. மன்னனென அழைத்த செய்தி
மகிழ்ந் தறியத் தானே-அடர்
வெள்ளிச் சுடர் மதில் உள்ளம் է/(355 56uri
விளக்க மறி வேனே

Page 16
' -6-
2 நிறை புரளாக் கோல் புரக்கும்
நிருபனுளங் குறியேன்-ஆரும் நீசரித் தேசத்தை நாசப் படுத்திட
நினைந்தனரோ அறியேன்.
3. கதிருமிழ் செங் கனக முடி
கவித்தரசர் ஏணுே-நகர்
கட்டுக் குலைந்திப்போ கெட்டுச் சிதைந்திடு
கன மறியத் தானே.
4. பொங்குபுர விக்கொடி யோன்
பொற் கொலு முன் வரவோ- ஏதும் போந்த நிருபங்கள் தேர்ந்து விடுத்திட
பொருந்த மதிதரவோடு o
D v h) esKAD S «EK ESKW மந்திரி ஆசிரிய விருத்தம்
செழுங்கலை மதியைப் பழித்தொளிர் வதனே .
தெரிமணிக் கவசகுண் டலனே செறித்த செம் பவளம் பொறித்தபொன் முடிநீள்
செவ்விய வகம்படைத் தவனே
எழும்பலை யகழிக் குளங்கயல் புரள இனவளை யூர்ந்தொலி யிசைப்ப ஏர் பொலி செந்நெல் கதிர்குலை சாய்க்கும்
இணையிலா வளம்பொலிந் தோங்க
கொழுஞ்சுடர் மகிடர் முறைமுறை புரந்திங் குவைமணிக் குவையலும் பொலிந்தே கோமள மடவார் சாமரை யரற்ற
குளிர்மலர் நறுங்கமழ் விரவ
ஒழுங்கொலி விசித மணம்பொலி மணியின் ஒன்றிய பொற்கொலு வமர்ந்தே
ஒர்ந்தெனை யழைத்த பாந்தம துரையீர்
உகள் பரித் தேரெழு மரசே.

-7-
பந்திரி வசனம்: மனுநீதி தவருச் செங்கோலும், மாட்சிமை தங்கிய
சிங்காசனமும், என்றும் சரணமே சரணம் அரசே,
இராசா மந்திரி தரு (சித்திர ரத்தின எ. மெ.)
இராகம்: தோடி த்ாளம்: ரூபகம்
இரா: சித்தங்கொண்டேன் நித்தம் வித்தாரப்பூம்பொழில்
சேரும் நகர்வளமே யறிந்திட உத்தம மாக விரித்துரைத்தே யெந்தன் உள்ளங் களிக்க வைப்பாய் மதியே.
மந்: கொத்தும் பவளத்தோ டொத்த சுவர்ணங்கொள்
கோலமணி முடியே அரசேயும் மெத்தும்வளநக ரத்துச் சிதை வெல்லாம்
மேதினி யோதிடுவே னறிந்திடும்.
இரா வண்டார் நறுந்தொடை கொண்டபூ மார்பனே வாரமுகில் சொரிந்தே நகரெங்கும் பண்டே பழனங்கள் அண்டும் பயிரெல்லாம் பாரித்தே யோங்கிறதா கதிர்குலை.
மந்: தண்டார் மணிப்புய மண்டு மொய்யாரனே தாவுன்நகர் தனிலே மழையின்றி விண்ட பயிரெல்லாம் ஒன்ருய்க் கருகியே வீணே புழுதியதாம் பயனின்றி.
இரா: தங்கச் செழுஞ்சுடர் அங்கத் தொளிர்வய
சாந்த குணமதியே இந்நாட்டினில் துங்க தேவாலயத் தெங்கும் பலிபூசை
தூய்மைபெற் ருேங்கிறதா தினம்தினம்,
மந்: பொங்கு மணியொளி தங்கும் செங்கோலனே
பூசக ரோதுபலி தனைவிட்டே எங்கும் நெறியற்றுப் பங்கம் விளைந்ததே ஏற்ற தேவாலயங்கள் அடைபட்டே.

Page 17
- 8--
இரா. மந்திர நேர்புய சுந்தரனே யெந்தன்
மாட்சிபெறும் மதியே இதுநகர் பைந்தொடி மாதர்கள் சந்ததங் கற்பினில் பண்பாய் நிலைக்கிருரா விரித்துரை.
மந்: கந்தார் நறுந்தொடைச் சுந்தரியா ரெல்லாம் கற்புநெறி தவறி இந்நாடெங்கும் விந்தையுறும்பல நிந்தைக் கிலக்காகி
விரைந்து பெருகுதையா விபசாரம். இரா. செப்பும் மதிதன்னில் தப்பில்லா மந்திரி சிற்றரசர் எனக்கே தருநிறை மெய்ப்பாக வென்னடிக் கெப்போதும் போற்றர
மேதினி தப்பினரோ எவரேனும்.
மந்: தப்பினரோ வென்ற ஒப்பார் பவளப்பொன் தங்குமணி முடியோய் இதுவரை அப்பாற்கொடுத்ததை இப்போ மறுத்திட்டார்
ஆதிபனே யறியும் நகர்வளம்.
இராசா ஆசிரிய விருத்தம் புண்ணிய வுடலின் உயிரென விளங்கிப்
புதுமணங் கமழ்ந்தொளிர் நாடும் புரையது மிகுந்து நிறைவளங் குறைந்து புரண்டதென் றுரைக்குமுன் தனக்கு
எண்ணிய நினைவோ துரியமோ, கனவோ
ஏறிய பித்தமோ அதனில் என்னரு மறிவு பேதலித் ததுவோ
எதுநிச மாகுமோ வறியேன்
கண்ணிய மதிசேர் அமைச்சிலா வர சோ கரையிலா வேரியோ வன்றேல் கலைசெறி மதியம் நிலையிலா வானே கடைந்தெடும் அச்சிலாத் தேரோ

-9-
மன்னிய வெனது கோன்மையும் பிழையோ
மற்றெது வாகுமோ வறியேன் மருவலர் துதிக்கும் தளபதி தனையே
மதித்துடன் அழைத்திடு வீரே.
இராசா வசனம்: மந்திரியே! நீர் கூறியவற்றின் உண்மை, பொய் அறிவதற்கு அதிவீர பராக்கிரம சேனதிபதியை எனது சமுகம் அழைப்பீராக.
மந்திரி வசனம்: அப்படியே செய்கிறேன் அரசே,
சேனதிபதி தோற்றம் விருத்தம்
வாலமதிக் கிணையான முகக்களை வாய்ந்தே காந்தளென
வதிகுளை யிருசெவி தகதக வெனஒளி மஞ்சே விஞ்சாத கொலமணிக் கரமார வேபத்திரம் கண்டோர் மண்டேங்க
கொண்டலி ரைந்தெழு கின்ற தெனப்பரி கொண்டிடு தீரனவன் ஜீலமணித் திரளாடு விசித்திர செம்மா ரந்தாங்கி
சிரமடு முடியொளி நெரிபட மருவலர் சிங்கே றென்றேங்கி சாலமிகும் படையாதிப னேநெடி சார்பே நேர்பாக
தகைபெறு சபைதனில் விரவியே வந்தனன் தன்பேர் முன்பாக.
சேனுதிபதி தரு (துணிவோடோ. எ.மெ.) இராகம்: அம்சத்துவனி தாளம்: ஏகம்
திசை பாயும் சீர்த்திகொள் பார்த்திபன்
சிறக்க வெண்கொடி பறக்கவே செய்து இசை தோயும் படியென தடவய
இறுத்துவேன் நிலை நிறுத்துவே னிதோ எதிர்த்து வடவுமலை பெயர்த்து வரினுமவை
பொடித்துத் துகள் துகளாய் உதிர்த்திடுவேனே .
கதிரேறும் சுடர்மணி தொடுமுடி
கதித்த மன்னவர் எதிர்த்து முன்னிடில்
விதிரேறும் விடைவளை தனுநொடி
விதிர்த்தெறிந்துமே குடற் பிறிப்பினை
விரையக் குருமுழுகு நிரையத் துறுகழுகு
புரையப் பருந்துவிருந் தருந்தச் செய்வேனே.

Page 18
-10
மஞ்சாரும் மதிலொடு கொடிதொடு மன்னரிட்டழை என்ன கட்டளை அஞ்சாரும் துணிகர மொடுநகர்
அடுத்தரோ சமர் தொடுத்தரோ இதை அருண மணிநிலவு பொருணனுறு கொலுமுன்
தருணமிது விரைந்து கருமங் கொள்வேனே.
குறித்தே யுயிர் கொத்து துவக்கொடு
குண்டு வெடிமருந் துண்டு திடமொடு
வெறித்தே வருமுத்தரர் கன்னடர்
மண்டவேதலை துண்ட தாக்கியே
விரைந்தே அரண்கள் தோறும் தெரிந்த பீரங்கிநிறும்
பரந்த படைகள்திறம் பூொருத்தக் காப்பேனே.
నిని சேனூதிபதி சந்த விருத்தம்
செறிசுந் தரமணி நிறையுந் தொளிதரு
செயமா முடிசரணம் செங்கதி ரங்கி விளங்கு மணப்புய
செம்மலே செயசரணம்
பொறிவண் டிசைபல வெறியுண் டணிமலர்ப்
புங்கவனே சரணம் பொற்பவ ளங்க ளிழைத்த விசித்திரப் பொருகோல் செயசரணம் w
நெறியுண் டரசரும் முறைகொண் டடிதொழு
நீதிபனே சரணம் நேரணி வீரிய தீரிய னேயுகழ்
நிறைதாள்செய சரணம்
அறிவொன் றியபல மதிமந் திரரிடை
ஆதிபனே சரணம் அடர்கோ ளரியடு சுடரே றியதவி
சமர்நாயக சரணம்.

--11
சேருதிபதி வசனம்: வச்சிரக் கொலுவும், வைரமணி வாளும் உச்சித
முடியும் சரணமே சரணம் ஐயா.
6ᎧᏘ ᎢᏯ iᎢ சேனுதிபதி திடு (பவனனெ ετ. மெ.) இராகம்: தேசிகதோடி தாளம்: ரூபகம்
இரா: பானுெளிப்புய மேயிலங்கிடு சேனை காவலனே-ஒன்ஞர்
மீதிலன்புளனே சேரில் நாடு மின்னலனே-அகம்
பரவுநகரது பொருவு வழிதுறை விரவவைத்திடுவாய் மிகச் சதுர சித்தமதாய்
ச6): ககனவெளியெழு அருணனுெளிதவழ் கிரணவெற்புயனே
புகழ்பெற்ற தத்துவனே காவல் வைத்தேன் பத்திரமே-எதிர் கருதிவரு படை பொருதிடல் பெரும் கருமமென்றறிவீர் இது சிரமமென் றறிவீர்
J}'ዛ፡l፡ : லங்கிடு கொத்தளத்தொடு சித்திரக் கொடியே இரா. முத் கிடு ெ (ର சித்திரக் ெ G
கோட்டை வைத்திரும் றெடியே இது முற்றுமுன் கெடியே-நித்தம் மூட்டமர்களி லீட்டிவாள் வெடி A மாட்டு குண்டுடனே-நிரை தீட்டிவை திடனே.
மே(6): முகுடமட்டெழு சிகரமொட்டிய மகுட மண்டலனே
அவி ரேறு குண்டலனே விடை ஏது கண்டிலனே-இடை மூர்க்கமுற்றிடிற் காத்திடப்படை முற்றுமையமிதே-திடன் சொற்றுவையமதே.
| 1 நளினவளமுறு அகழிசெறிவய நகருமென் சிரமே
அது முற்று முன்கரமே தந்தேன் பத்திரம் நிதமே-வாகை
நாட்டிநிலையது கூட்டியெந்தனுக் கூட்டுவாய் மகிழ்வே நிலை நாட்டுவாய் புகழே,
949) கிரணமணிமுடி விரவுமரசர்கள் பரவுமற்புயனே வெற்றி பெற்ற நற்செயனே-சேனை பெற்ற துர்ப்பயனே - மெத்தக் கிளர்த்துபசிபிணி விளைத்தவர்க்கிடை கேவலம் மிகவே வரும் பாதகம் இவையே.

Page 19
-12
இராசா ஆசிரிய விருத்தம்
ஆர்செய்த பவமோ அம்பரன் முனிவோ
அண்ணலாம் என்வயப் பிழையோ அறமிலா நகரோ திறமிலாப் படையோ அரணிலாக் கோட்டையோ அன்றேல்
ஏர்பெற வைத்த அடைக்கலப் பொருளை
இல்லையென் றபகரித் தேனே ஏழையாம் பெண்கள் இரப்பவர் சிறியோர்
இவர்களை வருத்திவை தேனே காரிழை மடவார் தாயென மதியாக்
காதக மேதுசெய் தேனே கனகொலை களவு காமசூ திவைக்குக்
காரண ஞயிருந் தேனே
சீர்பெறு மேக பரன்றனக் கேராத்
தீங்குதா னேது செய் தேனே சித்திர புரியே மற்றெலா நகர்க்குந் திலதழென் றிருந்தது மழிந்தே.
இராசா சிந்து (இப்படியும் சொன். எ. பெ இராகம்: மோகனம் தாளம்: ஆ
பல்லவி இப்படிக் கெடவுமாச்சோ-எனது நகர் இப்படிக் கெடவுமாச்சோ.
அனுபல்லவி
இப்படிக் கெடவு மாச்சோ மைப்படியும் கண்ணுர் மூச்சோ தப்பிலிகள் வசமாச்சோ செப்பிடுமென் பேரும் போச்சோ சித்தமெத்தக் கல்லதாச்சோ பத்திமுத்தி யில்லாதாச்சோ கத்தனருள் இல்லாப் போச்சோ சுத்த சத்திய மித்தா யாச்ே -இப்படிக்ெ

-13
சரணம்
நித்தியம் பொறைதயவு சத்தியந் தருமமொடு குத்திரக் கொடுங்குணத்தின் வித்தறுத்த ராசனென்று பேர் பெற்றும் இருந்தேனே-இப்போது மெத்தச் சீர் அற்றுப் பொருந்தேனே-ஒளிமிக்க நித்திலங் கொழித்துச் சுடர் பத்தரைப் பசும் பொன்னுேடு மெத்திடச் சென்னல் கொழிக்கும் சித்திர புரியின் கோலம்
-இப்படிக் மன்னவனும் எந்தன் சூதோ பின்னரும் மந்திரி வாதோ ஒன்னலர்கள் பண்ணுஞ் சூதோ இன்னுமென்ன காரணமோ
முறையொன்றும் அறியேனே-இதைவிடவும் குறையொன்றும் புரியேனே-மறம் மிகுந்த மண்டலத்தை ஆள்வதிலும் தண்ட கமண்டலமாதி கொண்டருந் தவமியற்ற தண்டலை சென்றிடல் நன்றே-இப்படி
கண்ணியக் கருக்கெடுத்துக் காதகம் மிகத்தொடுத்து காரணக்கலக் கலகை பூரணமாய் இந்நகரில்
கலைகொண்டும் எழுந்ததுவோ-புன்கோல் தன்னை நிலைகொண்டும் புரந்ததுவோ-அல்லாது போகில் கன்மபவங்கள் திரண்டு இன்மை யென்மனம் வரண்டு நன்னிலைகளே புரண்டு இன்னமின்னம் பின்னமுற்று -இப்படி
கற்புநெறி யில்லைத்தூய பொற்பரன் பூசண் சாய சற்குருக்கள் போதந்தேயத் துர்க்குணஞ் சுரந்து பாய
சோரங்கள் மிகுந்ததுவோ - வளநகரின் ஆரங்கள் சிதைந்ததுவோ - சீச்சீயினி சிற்பரசொரூபமய முற்றுல குகந்தளித்த தற்பரனருள் மருவா திப்புவி புரப்பதில்லை -இப்படிக்
இராசா எண்சீர் விருத்தம்
முற்றமரில் ஒற்றலர்கள் முதுகிட் டோட s
மூட்டுவிறல் நாட்டுபடைக் கற்பித் தாமே
கற்றமதி மந்திரியும் காவல் நீயும்
கனகமணி சொரிநகரம் கவலைக் காகி

Page 20
உற்றபல தீமையெல்லாம் உருங்கொண் டோங்க ஊர்முழுதுங் கெட்டதென்று உரைத்த தாலே
நற்றமன மமைதியுற நிசத்தைத் தேர
நாட்டுசன சங்கமதைக் கூட்டு வீரே.
இராசா வசனம்: மந்திரியே, சேனைத் தலைவரே! எனது நாட்டின் நிலைமை மாறுபட்டிருக்கிறது என்று. நீங்கள் கூறியவற்றின் உண்மை பொய்களை விசாரித்தறிய எனது நகரத்துச் சனசங்கத் தலைவர்கள் யாவரையும் வரவழைப்பீர்களாக,
சேணுதிபதி வசனம்: அப்படியே தங்கள் உத்தரவின் வண்ணம் செய்
கின்ருேம். அரசே .
பிரபுக்கள் தோற்றம் கவி
சேட்டின மணிகள் தீட்டிச் சிறந்தொளிர் சருகைப் பாகை மாட்டிநற் சட்டை "சூட்டு மயிலிற குயிற்றித் தொப்பி *கோட்டு" நற் "செயினும்” “வாட்சும்” கொண்டொளி யிலங்க வூரின் மேட்டிமைக் குரிய ಹೊವಾಹ பிரபுத்தள் சபைவந் தாரே.
(26) __ కొనా
பிரபுக்கள் தரு (ஆழிகடல் எ. மெ.) இராகம்: ஆனந்தபைரவி தாளம் ஆதி
ஆஞ்சலோன்: அஞ்சுளிச் செல்வம் சுரந்து விஞ்சுளிக்கும் இந்நகரின் ஆஞ்சலோ வெனும் பிரபு நானல்லோ எந்தன் ஆனதொரு சொல்லதனுல் ஊர்முழுதும் ஆட்டி வைக்கு ஆண்மையுள்ளான் எந்தனைப்போல் ஆருமுண்டோ ஊரி
பராக்கிரமன்: பரம்பரை முடிநிலவும் பார்த்தி பனின் தீர்த்தியுறு பந்துவர்க்கத் தெந்தனைப்போல் பாந்தமுண்டோ ஆர்க்கு பன்மணி யிழைத்தசித்திரப் பொன்முடி மகிபரென்னைப் பண்புட னழைத்த செய்தி முன்பறிவேன் நானே.

-15
மாசேனன்: மாணிக்க வைடூரியமும் ஆணிப்பொற் கோமேதகமும் மாதுளை வருக்கைஇக்குத் தாதுளை பைந்தாரும் பூணிக்க வொளிர்நகரப் பூபதியென அழைத்த புதினமென்னவோ அதனைப் போயறிவேன் நானும் .
விதுரன்: சங்களை முத்தந் தெளிந்து பைங்களையும் நாடுடையோன் தங்குசன சங்கமதைத் தானழைத்த தேனே Iலுமுன் கொங்களை மதுத்தொடையான் பொங்குமணி யார் கொ கொண்டலெனவே விரைந்து சென்றறிவேன், நானும்
ஆஞ்சலோன்: சித்திரபுரியில் எந்தன் தத்துவ முரைத்திடுகில் சிற்றிடை மடந்தையர்கள் முற்றுமென்பால் தானே சித்தமது பூர்த்தியுறச் செய்யசுக போக மதில் சேர்ந்துகளி கூர்ந்திருக்கும் பாந்தனல்லோ நானும் .
பராக்கிமன்:
சீர் சிறந்த சங்கமதில் பேர்பெறும் பிரபுவெனச் சிந்தனையா யெந்தனை யுவந்தெடுப்பார் பாரும் காரொருவும் என்புகழை தார் சிறந்த மன்னனுமே கண்டுமனம் பொன்றிடுவார் காரணம் சொன்னேனே.
மாசேனன்
என்குல மகிமையென்ன எத்திசையும் கீர்த்தியென்ன ஏற்ற கலைப் பேரறிவை எல்லவரு மேற்பார் m எட்டடுக்கு மெத்தையொடு கட்டடங்காச் செல்வமதில் என்னையன்றி இங்கொருவர் இல்லையென்றே தேரும்
விதுரன்: வாக்குவல்ல பத்துடனே தாக்கரும் விசயமெல்லாம் வன்மையுடனே யுரைக்க வாகை பெற்ருேன் நானே நோக்கமுறு சங்கமதில் நேரலர்க்குள் நான்தலையாய் நின்றிலங்கும் காரணத்தை நீவிர் அறிவீரே.

Page 21
«man (s
பிரபுக்கள் ஆசிரிய விருத்தம்
இருள் கிழித் தொளிரும் பிறைதொடு கொடியோய்
எண்ணிலாப் புகழ்படைத் தவனே இழைத்தமின் மணிகள் தழைத்தெழு முரனே
எம்பர னருள்நிறைந் தவனே!
அருள்சுரந் தெவர்க்கும் பொருளளிப் பவனே
அண்டினுேர்க் கடைக்கல பதியே அடற்பொரு மகுடர் படைச்சிரந் துணித்து
ஆரமா வாகைபெற் றவனே!
மருள்களைந் துலகோர் குடைநிழ லோச்சும்
மால்வரைப் புயமுறு தரனே வளர்மணி வளையத் தாமவல் லபனே
மாதரின் பாதுகா வலனே திருமகள் வசிய முறுங்கொலு வமர்ந்து
சிந்தையி லெங்களை நினைந்து திட்டமா யழைத்த கட்டளை வழுத்தும் தென்னவர் போற்று மன்னவனே.
ஆஞ்சலோன் வசனம்: இராசாதி இராச பரமேசுவரா! அடியோரைத் தங்கள் சமுகம் வரவழைத்த கருமம் தெரிவிக்கவேண்டும் ஐயர்.
இராசா பிரபுக்கள் தரு (இகந்துள்ளோர்கள் எ. மெ.) இராகம்: முகாரி தாளம்: ருக்ம் இரா: சங்கைக்குரிய சங்கத் தலைவனே -சித்தத் துணர்ந்து
சாற்றுமிந்நகர் மாற்றமென்னவோ மதிசொல்நிசமோ
ஆஞ்: துங்கவளங்கொள் கங்கைநாடனே-தங்கஞ் சொரியும்
துன்னுமுன் நகர் பின்னமுற்றுமே துயருற்றதுகாண்
இரா: வான்சொரிகலை வயங்குந்தீரனே-வாட்டமுற்றதென் fCasir வாவுதேன் சென்னல் வளங்கொள் நாட்டிலே மாற்றமேன்ன

- 17
யிது : சூன் முதிர்ந்துமிழ் தரளம் பவளமே-துன்னு முன்நகர்
குது கொலைகட் காமம் மிகுந்துமே நிலை கெட்டதுவே.
இா : கலை நூல் வல்லவர் போற்றும் சங்கனே-தகைமை செறியும் கண்போ லென் நகர் கலக்கம் மிகுந்ததேன்-கவனித்துரையே
பராக் நிலைபெறுமுடி பெற்ற பூபனே-நின்னரு நகர்
நீதி கெட்டுமே மோசம்பட்டதே நிசமீதையனே.
மட்டவிழ் தொடை தொட்ட மார்பனே-மானிலத்துற்ற
, , )
மாட்சியற்றுமே வளமைகெட்டதோ-மதிசொல் நிசமோ.
சேன : கட்டழகுறும் கருணை வள்ளலே - கருதுன் நகரம்
கன்மம் மிகுந்து தொன்மையற்றதே- கருத்திற் றெரிவீர்;
இராசா, மந்திரி, சேணுதிபதி,
பிரபுக்கள் தரு (சற்குண, எ. மெ.) டிராகம் : ஆனந்த பைரவி தாளம் : ஆதி
நீதிசேர் மன்னஞய்நான் ஆண்டுமே-வர நீசமாய் நகர் கெட்ட மோசமேன்.
ம, சோதிசேர் மணிமகுடத் தோன்றலே-நீரும்
சோர்ந்துளங் கலங்காதீர் பாந்தனே.
சதுரங்க சேனைத் தளகர்த்தனே--மதி சாற்றுவீர் உளந்தனைத் தேற்றுவீர்.
4) எதிரிங்கார் ஏந்தலே நீர் சாற்றுமே-வாள்கை
எடுக்கிறேன் பகைஒன்ருய் முடிக்கிறேன்.
வெந்துயர் கொண்டுமனம் வாடுதே-நிறை வெற்றிகொள் பூபனென்பேர் கோடுதே.
வ, கொந்தலர் மாலைபுனை மார்பனே-பொறை கொண்டிடில் சீரேகொடைக் கன்னனே.
ா மின்பொரு வாள்கைபுனை தீரனே-வைய
மீதிலே பற்றதற்றிப் போதிலே
பாக் - இன்பொடு துன்பிணைந்த சகடமே -இதற்
கினைந்திடால் என்றும்நிலை மகுடமே 3 ,

Page 22
---- 8 il --س--
இரா : என்னரும் வாஞ்சைமிக்க நேசனே- இனி
இப்புவி ஆளமன மொப்பேனே.
மாசேன : கன்னலின் நன்னயச்சொற் காந்தனே - நகர்
காத்திடப் பின்னெவரோ வேந்தனே.
இரா அளிதங்கும் பொழில்வண்ணச் சோலையே-சூழும்
அம்புவி முடிவேண்டேன் நம்புமே.
ஆஞ் : களி பொங்கும் வதனபிர காசனே-நகர்
காரற்ற பயிராகும் சீரற்றே.
இராசா ஆசிரிய விருத்தம்
நிறைமதி யமைச்சே சேனைகா வலனே
நிகழ்த்துமென் மொழிதனைக் கேளிர் நீர்வள நகரின் நேர்முறை பிறழ்ந்து
நீசபா தகங்களும் மலிந்தே
கறைகொலை களவுக் குறைவிட மாகிக்
கட்குடி சூதெலாம் மலிந்தே கருவிழி மடவார் பெருவிப சாரம் கட்டியே யுலகுகெட் டதினுல்
உறைவனந் தனிலே நிறைதவ மியற்ற
ஒர்ந்துளேன் ஒருபொருள் வேண்டி உற்றவின் னகரைப் பெற்றர சியற்ற
ஓங்குமிச் சங்கமே தன்னில்
இறையவ னருளால் திருவுள மிட்டு
இணைந்தவன் சிரமுடி கவித்து இனிதுமே யிருக்க நனிபெறு சீட்டை
இது சண மிடுகுவீ ரீங்கே.
இராசா வசனம் : சபையோரே ! சகல அக்கிரமங்களும் மலிந்த
இந் நகரத்தை விடுத்து, கானகஞ் சென்று, கடுந்தவமியற்றத் தீர்மானித்துள்ளேன். ஆகவே, நான் திரும்பி வரும்வரையும்

-19
இந் நகரத்தைப் பரிபாலிக்க இச் சங்கத்தாருள் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு, திருவுளச் சீட்டை ஆயத்தம் செய்து சபை முன் விடுப்பீர் மந்திரி.
மந்திரி கவி
முருகவிழ் மாலை குடும் முடியர சுளத்திற் றேர்ந்து திருநகர்க் கரசு தன்னைத் தெரிந்திடப் பணித்தா ரீங்கு பெருகுநற் சபையோ ரெல்லாம் பேரருட் பொருளை வேண்டித் திருவுளச் சீட்டைத் தானே சீக்கர மெடுத்தி டீரே.
பத்திரி வசனம் : சபையோரே! எமது அரச பெருமானின் உத்தரவுப் படி இதோ திருவுளச் சீட்டுக்களைப் பரப்பினேன். கடவுளை வேண்டிக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீட்டை எடுப் ι ήτί σ οιτητέ5.
மந்திரி எண்சீர் விருத்தம்
வாக்குமனக் காயமெனும் கருத்தி ஞலே
வண்மைதிண்மை இன்னதென வகுக்காற்ருது நீக்கமற எங்குமொன்ரு ய் நிறைந்தே தேங்கும்
நிறை சுடரா மருள் மடையின் கருணை யாலே தாக்கமுறு திருவுளநற் சீட்டே தானும்
தகைமை பெறு மாஞ்சலோ வென்னும் பேரான் நோக்கமுறு மரசனென வீழ்ந்த தாலே
நேசமுடன் வாழ்த்திமனம் மகிழு வோமே.
ா,இபி வசனம் : அரசரே ! சபையோரே ! திருவுளச் சீட்டானது ஆஞ்சலோன் என்னும்,பிரபுவுக்கே வீழ்ந்தபடியால்கே வசித்தத்திற் கமைந்து அவரையே அரசராக ஏற்றுக் கொள்ளுவோ மாக
இராசா எண்சீர் விருத்தம்
பத்திபத்தியா யிலங்கும் பசும்பொன் நீட்டிப்
பன்மணிகள் மின்னியொளிர் கிரணங் காட்டி
ஒத்தொளிர முத்துநிரை வைத்தே போர்த்து
ஓரிரவி பாருலகில் உதித்தே யன்ன

Page 23
-20
எத்திசையுந் தத்துகவிக் குடைக்கீ ழோச்சும்
ஏற்றமுறு மெவ்வுலகும் நிறைந்தொன்றன
கத்தனருள் நித்தமுன்மேற் சிறக்க வேண்டிக்
கதித்தமுடி சிரத்தினிலே தரித்திட் டேனே.
இராசா வசனம் : ஆஞ்சலோன் என்னும் பிரபுவே ! இந்நாடு செழிப்
புற்றேங்க வேண்டித் தெய்வ சித்தத்திற் கமைந்து,
இராசா ஆசிரிய விருத்தம்
அணிமுடி தரித்துப் புதுவர சாகும்
ஆஞ்சலோப் பிரபுவே கேளும் ஆதிப னெனவே அவனியைப் புரப்ப
தானதின் கனமதை யறிந்தே
கணிபெறுங் குடிகள் மனமிடைந் தயராக்
கண்ணரு மணியென மதித்தே கடும்வரி விலக்கித் திடம்பெற மாதர்
கற்பொளி விளங்கிடச் செய்தே
தணிவிலா லயத்திற் புரிசெப தபங்கள் தழைத்தற மோங்கியே நிலவ தளபதி யமைச்சர் வளமதி தெரிந்து
தகுவன தன்னையே புரிந்து
துணிவோடு பரம ைெருவனுக் கன்றித்
துதித்திடு முகத்தினர்க் காகத் துரும்பிடை யெனினும் விரும்பியே நேர்மை
துறந்திடா தரசுசெய் வீரே.
இராசா வசனம் : மணி முடி புனைந்து புதுவரசாகிய ஆஞ்சலோன் பிர புவே! குடிகளின் நலன் கருதி, கடும் வரி விலக்கி, அமைச்சரின் நன்மதி தேர்ந்து, துதித்திடு முகத்தினர்க்காக நேர்மையிற் பிற ழாது நான் திரும்பிவருமட்டும் நல்லரசு செய்து நாட்டைக் காத்திடுவீராக. சபையோரே! நான் சென்றுவர உத்தரவு கொடுங்கள்.

-21
தாங்கள் செல்லும் நோக்கம் இனிதே நிறைவேறி விரைவில் வரவேண்டும் அரசே,
ஆஞ்சலோன் (கொலு) தரு (அதியுக்ரம. எ. மெ) ராகம் : நாதநாமக் கிரிகை தாளம் : ஆதி
பரிகொண் டெழுமகுடர்-தொழுமுடி
நெரியுண் டுதிர் மணிகள்-விரிசுடர்
பதுமப் பருமணிக் கிரமத் தெழுநிரை
அது மெத்திடு மணிக் கொலுவிற் செல்வேனே
கொடிதாங்கிடு பரந்த-விதிமுறை
படியோங்கிடப் புரிந்தே-பணிந்திடாக் கெறுவத் துறுபவர் வெருவச் சிரமதை
மறுகிக் குருமணிக் கொலுவிற் செல்வேனே .
பவளப் பணி மணிகள் - பதித் தொளிர் தவளக் குடை நிழற்கீழ்-எனதுடை படைபற் பலவடி புடை சுற் றிடநொடி
அடைவுற் றிடுமணிக் கொலுவிற் செல்வேனே
மது மேவிய தொடையார்--பரந்தெழு
புதுமா நறை கமழ் சேர்-அணியிழை அழகத் துடியிடை துவளத் தனு நடை
இகழத் தகுமணிக் கொலுவிற் செல்வேனே .
சாலோன் வசனம்: இரும்புவியில் என்னுண்மை செலுத்துவேனே. ஆஞ்சலோன் ஆசிரிய விருத்தம் துதிக்கரு மதியிற் கதிக்குமந் திரியே துன்னலர் பின்னிடப் புரியும்
துடிமணி மகுடத் திடதள பதியே
துங்கநற் சங்கமிக் கோரே

Page 24
-22
மதிக்கரு மணியின் சுடப்பிர காசம் மலரளி குடைமது வாசம் மாட்சிசேர் செந்நெல் மலிந்தொளிர் நகரை
மருவுமென் குடைநிழல் தனிலே
சதிக்குறும் பழைய ஒழுங்கெலாம் மாற்றி
சமநிலை யாகவே குடிகள் தனதுன தென்ற சட்டமும் விலக்கித்
தகுந்ததோர் முறைமையா னினிமேல்
விதிக்கிற மனது விரும்பியே தெளிந்தேன் விழிப்புடன் இதனை நீர் ஒர்ந்து விள்ளுவீ ரகத்தில் உள்ளது எதுவோ விளங்குமிச் சபையறிந் திடவே.
ஆஞ்சலோன் வசனம் : மந்திரியே! சேனதிபதியே! மற்றுஞ் சபையில் உள்ளோரே! இந்த இராச்சியத்திலுள்ள பழைய ஒழுங்குகள் யாவையும்" மாற்றி, பிரசைகள் யாவரும் தங்கள் தங்கள் சுயா தீனத்துடன் வாழ்வதற்கான சட்ட திட்டங்களே ஆக்க எண் ணங் கொண்டேன். ஆகவே இது பற்றி உங்கள் மனக் கருத் தைத் தெரிவிப்பீர்களாக,
மந்திரி எண்சீர் விருத்தம்
பான்மினுக்கின் தான்கதிக்கும் பவளந் திட்டி
பங்கியொளிர் செங்கனக முடிபெற் றேனே சூன்முதிர்ந்து கான்குரம்பின் வாளை பாயத் துளிக்கமது சங்கரம்பை தானந் தோய வான்முகடு தான் தடவிப் பிறையைத் தேய்க்கும்
வாவகழிக் கோட்டைதிகழ் வளங்கொள்நாட்டில் தான்விதிக்கும் சட்டமதே திட்ட மாகச்
சற்றுமன மாற்றமின்றி ஏற்று ளோமே மந்திரி வசனம் : தாங்கள் எதை மனம் விரும்பிச் செய்வதென
நிச்சயித்தீர்களோ அதன்படி இச்சபையோரும் பிரசைகளும் நடப்பதற்கு எவ்வித தடையுமில்லை மன்ஞ.

-23
ஆஞ்சலோன், மந்திரி சேனதிபதி,
பிரபுக்கள் தரு (ஆரணபூரண .ன. மெ.)
இராகம் : கல்யாணி தாளம் : அட
ஆஞ்ச :
கலைதங்கு மொழி பொங்கு விந்தமே-எனக்
* கனசந்ர முடிமந்திரிசந்தமே-இந்த
இரா :
Քեծ5 :
abli :
நிலமெல்லாம் அரசுக்குச் சொந்தமே-அதில் நிலைபெற்ற வீடெல்லாம் நிந்தமே.
பசும் பொன்னே விசும்பில்நீள் சோதியே-புகழ் பரந்துந்தன் நகரிந்தச் சேதியே -மன்ன விசும்பின்றித் தகுமென்ன ஒதியே-மற்றேர் விருப்பென்ன மறுக் கொண்ணு நீதியே.
தணிவின்றி முடிமின்ன லூரவே-வீர தள கர்த்தா கேளித்தைத் தேரவே-உயர் மணிபொன்னும் பணியெல்லாம் தீரவே-எந்தன் வரை பொக்ஷ சாலைக்குச் சேரவே.
: பன்னரும் மணிதுன்னு தோற்றமே-புகழ்
பாங்குற்ற வுன்னகர் ஏற்றமே-ஆளும் மன்னனுன் சொற்கில்லை மாற்றமே-அதை மதித்திடா தவர்க்கெல்லாம் கூற்றமே.
மாநிலம் போற்றுமிந் நகருக்கே-ஏற்ற வன்மை பெற்றிடு சங்கப் பிரபுக்காள்-நகர்த் தானிய விளைவெல்லாம் அரசுக்கே-தரத் தப்பிற்கை வாளவர் சிரசிற்கே.
மாணிக்க ராணிக்கல் லாரனே-எங்கும் மங்காப் புகழ்பெற்ற தீரனே-நல்ல வேணிக்கீழ் மேவதி காரனே-இவை வீண்மொழி தானே யுதாரனே.
ஆஞ்சலோ வசனம் : என்ன சொன்ஞய்! இவையெல்லாம் எனது
விருப்பம். யான் விதித்ததே சட்டம். ஆஞ்ச ஆருக்கும் நாரியர் பொதுவதே-மன
அன்புபெற் றுாடலென் விதியதே-அதி சீருக்கும் தொடைமலர் மதுவதே-தோயும் சிங்கநற் சங்கனே வதுவையேன்.

Page 25
-24
பிரிவுக்கியிக் : விந்தையுற்றிடுமலர் முல்லையே-போல
விளங்குந்தன் மொழிக்கில்லை எல்லையே-தங்கள் சிந்தையு வந்துரை சொல்வதே-தேரில் தேனிலும் பாகிலும் நல்லதே. ஆஞ் சேயெல்லாம் பாயொளிர் முடிக்கே - சேரச்
செய்வீர் என்கட்டளைப் படிக்கே-நறும் வீகொய்து தூவியென் னடிக்கே- தூபம் விளைத்திடு வீரித்தைப் படித்தே. *சேரனுக் சீதள மாமுக ராசனே-நீதி
- சேரிறை யாருன் போல் போசனே-என்றும்
ஏதமில்லா விசுவாசனே-உன் சொல் ஏற்றுக் கொண்டோம்மன நேசனே.
ஆஞ்சலோன் ஆசிரிய விருத்தம்
X ஒழுகொளி பரப்பும் குளிர்முக மதியே
உரைக்குமென் மொழிதனைக் கேளும் உருத்துறு காணி யாட்சியிங் கெவர்க்கும்
இன்றுடன் விலக்கிய தோடு
முழுமணி மாட கூடகோ புரமும்
முதிர் சிறு குடிசைகள் தானும் முக்கனி மொழிசேர் சித்திர மடவார்
முறையுட னெவர்க்குமே பொதுவாம்
பழுதிலா மொழியான் பணித்ததின் படிக்கே
பற்பல தொழில்களே யன்றி பன்னரு மணிமின் பொன்னெடு பணிகள்
பணதிகள் யாவுமென் னடிக்கே
அழுகுரற் சிறியோர் அனைவரும் முடிக்கே அரசெனைத் தொழுவதே சட்டம் அடங்கிடா எவர்க்குஞ் சிரங்கெடு மெனவே
அடங்கலும் பறையிட வுரையே.

-25
சஞ்சலோ வசனம்: இன்று தொடக்கம் எனது இராச்சிய எல்லைக்
குட்பட்ட காணி, வீடு, செய்பயிர், வான்பயிர், மிருகாதியன வும், பொன், மணி, சகல சம்பத்தும், பிறக்கும் குழந்தைகள் தானும் முடிக்கே உரியன என்றும், ஒரு பெண்ணுக்கு ஒரு நாய கன் என்ற சட்டத்தை விலக்கி, எவரும் விரும்பியபடி பொது வாக நடக்கலாம் என்றும், தாய், 'தந்தை உறவின் முறை இங் கில்லை என்றும், அரசனுகிய நான் ஒவ்வொருவருக்கும் விதிக்கும் பணிவிடைகளைச் செய்து தத்தம் சீவனத்துக்கு வேண்டிய உண வும், உடையும், பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும், சமயங்கள் குருக்கள், ஆலயங்க்ள் எதுவும் இங்கு இருக்கக் கூடாதென்றும் அரசன் என்னைத் தொழுவதேயன்றி, மறுத்துப்பேசுவோருக்கு மரணதண்டனையென்றும் ஊர்களெங்கும் பறைசாற்றுமாறு பிர சித்தம் செய்வோருக்கு அறிவிப்பீர் அமைச்சரே.
ப,இரி வசனம்: அப்படியே தங்கள் சித்தஐாஜ்செய்விக்கின்றேன்
அரசே! (2C_2 -- అనే
சாம்புவன் தோற்றக் கவி
சீப்புநல் லெண்ணெய் தானும்
சீவியந் தனிலே காணுக் கோப்புறு கன்னக் கொண்டை
குடமென வயிறுந் துன்ன தாப்புறு புயத்தில் மேளம்
தான்கரம் முழக்கும் கோலும் சாப்பிடு மதுக்கால் பின்னச்
சாம்புவன் சபைவந் தானே.
சாம்புவன் தரு
ழிபாகம்: நொட்டிச் சிந்து தாளம்: ஏகம்
t
ஆண்டே நமஸ்காரம்-எந்தன்
அடக்கங்கள் கிடக்குது வெளிப்படுத்த பூண்டேன் ஒரு வேஷம்-இதில்
பிழைகண்டால் பொறுத்திடும் பெரியோரே.
(ஆண்டே)
* இப்பாட்டுக்கள் மூன்றும் சில பிரதிகளில் பேதமாகக் காணப்
படுகின்றன. 4

Page 26
-26
2. கள்ளுடன் நல்லரக்கும்-ஒன்ருய்க்
கலந்துண்டேன் பலங்கொண்டேன் தெரிந்திடுவீர் துள்ளிநா னடிடுவேன்-நன்ருய்த்
தாளம்மத் தாளமும் தானடிப்பேன்.
(ஆண்டே) 3. அண்டமோ ரெண்டிசையும்-போற்றும் அரசனு மாஞ்சலோ துரை சமுகம் விண்டவோர் செய்தியதை-நானும்
விரைவுடன் அறைகுஜன், தரையதனில்.
1p t \ గాb sş- GST (ஆண்டே)
சாம்புவன் விருத்தம்
அரவுமிழ் மணிமுத் தாரத்
தலைசுடர் முடியாய் போற்றி பெருமித மதியோர்க் கெல்லாம்
பேரறி வுரைப்பாய் போற்றி திருநிறை யரசி ஞண்மை
சீர்பெறப் புரிவாய் போற்றி தரவிடைக் கழைத்த செய்தி
சாற்றுவாய் போற்றி போற்றி
சாம்புவன் வசனம்: மகா மண்டலீகப் பிரபுவாம் நயிந்தே. நம்ம
சமுகம் விடை தர நயிந்தே.
மந்திரி எண்சீர் விருத்தம்
சங்கினமு யிர்த்த தரள மகுடஞ் சூடிச்
சாற்றுமொன்னர் வெற்புறச் செய் யர சகோமான் பொங்கரிய பரந்த சிறை யளிபோ தார்ப்பப் பூங்கமுகி ஞங்குடுமி அலசிப் பாயும் கங்கைவள நாட்டிலுறு வழமை மாற்றி
காரணங்கொள் சட்டதிட்டம் புதுமை யாக இங்குவிதித் திட்டத்தினல் இதை நீ யெங்கும்
ஏற்றபறை சாற்றறிக்கை செய்கு வாயே.

-27
, பி வசனம்: சாம்புவனே எங்கள் புதிய அரசராகிய ஆஞ்சலோ தமது இராச்சியத்திலுள்ள சட்டதிட்டங்களை மாற்றி புதிதாக ஒரு நிருபம் விடுத்திருக்கிருர். இதனைச் சகல சனங்களும் அறி யும்படி பறை சாற்றுவாயாக. w
சாபபுவன் வசனம்: அப்படியே ஆகட்டும் ந
உபபுவன் மறுவசனம் : GSQò ܘܗ̄ ܥ5ܓܐ ܢܒܝܝܪ f
என்னவோ புது நிருவம் என்குது. நக்கி நக்கிப் பார்த்தாலும் மொக்கு மொக்காக எழுதியிருக்குகு,
சட்டம் புதிதாம் டொம், டொம், டொம், டொம்.
சாம்புவன் தரு (ஐந்து கல்லால் எ. மெ.) டி பாகம்: நாதநாமக்கிரிகை (தெம்மாங்கு) தாளம்: ரூபகம்
1. பூண்டேன் சிரநமஸ்காரம்-எங்கள்
புதிய அரசின் புதினம் விஸ்தாரம் ஆண்ட நிலபுல தூரம்-உள்ள
ஆடுமா டெல்லாம் அவர்க்காம் கொடூரம்.
 ை11 ஆண்டை மாருக்கு ஒரு செய்தியென் குது. எல்லோரும் வாருங்கோ. இல்லை, இல்லை-எமது புதிய அரசர் ஆஞ்சலோ உரைக்கும் வார்த்தை, தமது தேசத்திலுள்ள குடிமக்கள் எல் லோருக்கும் புதிய சட்டம். அது எப்படி என்ருல், இன்றையி லிருந்து காணி, பூமி வீடு வாசல் ஆடு மாடு:
தரு
துன்னும் விளைபயிர் தோட்டம்-உள்ள
சொத்தெல்லாம் எங்கள் அரசனினிட்டம் பொன்னின் மணிபல தேட்டம்- யாவும்
பொருந்த மகிபன் பதத்தினிற் கூட்டும்
 ைசாம்: அது மாத்திரமா! இன்னும் கேளுங்கோ, படித்துக் காட்டு கிறேன். தாய்க்கோ தகப்பனுக்கோ பிள்ளைகள் சொந்தமில்லை. அதுபோலவே எவரும் எவருக்கும் சொந்தமில்லை. அத்துடன் இன்று தொடக்கம் அரசர்தான் யாவருக்கும் தெய்வம்.

Page 27
-28
ქb([ნ 3. அறந்தப்பா மன்னவன் தன்னைப்-போற்ரு
தவனியில் இருப்பதற்காகுமோ பின்னை பிறந்தகைக் குழந்தைகள் தன்னை-நீவிர்
பிரியமா யொப்பிப்பீர் தவிசது முன்னே.
வசனம்: நன்ருகக் கேளுங்கோ. உங்கள் தேட்டம் சம்பாத்தியங்க ளுடன், பிறந்த குழந்தை தானும் அரசர் சொத்து ஆகவேண்டும். இன்னும் இன்று தொடக்கம் ஒரு புருஷனுக்கு ஒருபெண், ஒரு பெண்ணுக்கு ஒரு புருஷன் என்னும் கட்டாயம் இல்லை. அவ ரவர் விரும்பியடி நடந்து கொள்ளலாம். மேலும் அரசர் இட்ட பணிகளைப் புரிந்து அவர் கொடுக்கும் உணவை அருந்தி,
தரு 4. கன்னியர் பொதுச் சொத்தாய்க் கொண்டே-இங்கு கருத்துற்றேர் கலந்திடத் தடையில்லை கண்டே மன்னிய வுத்தியோக மொன்றே-அது
மன்னரின் விதிப்பிரகாரந் தானுண்டே. வசனம்: ஆண்டைமாரே! இன்னும் கேளுங்கோ, இன்று தொடக்கம் சமயங்கள் எதுவும் இருக்கக்கூடாது. குருக்கள் கன்னியர் இருக்
கக்கூடாது. அவர்களும் அரசரிட்ட பணிவிடைகளே செய்ய வேண்டும்.
தரு
5. தாய்தந்தை பிள்ளைகளில்லை-ஆருந்
தான்தானே அன்றிப் பிறிதென்ன தொல்லை வாய்ந்தஎம் அரசரின் சொல்லை-இங்கு
மறுத்திட்டால் அவருயிர் உடல் தனி லில்லை
ம்ை ஆண்டைமாரே! இவைகளை மறுப்பவர் உயிரானது அவர்களின்
உடலிற்தங்குவது அசாத்தியம் என்றறிவீர்.

-- 29
ஞானமனுேகரி, தோழியர் தோற்றம் (ஆசிரிய விருத்தம்)
முகமல ரிணையே தெனவொளி யெறிப்ப
முகவரி விழிக்குமை தீட்டி முத்துமிழ் பவளச் செப்பென வைகும்
முறுவலோ டதரவாய் துன்ன
பகிர்பிறை நுதலில் திலகமும் மூக்கில்
பளிரென வைரமு மிலங்க பரவு மெய் குழல் மேல் திருகுபூ பில்லை
பருதியென் கம்மலு மிலங்க
அகவரி மார்பில் நவமணி யாரம்
அமைகழுத் தட்டிகை துலங்க அரதன கடகம் இருகர மொளிர அணியிழைப் பட்டுடை சிறக்க
கருமணிச் சிலம்பு இருபதந் துலங்க தான் தனக் கேயினை யென்ன தகைபெறு ஞான மனேகரி யோடு தாதியும் சபையில் வந்தனளே.
ஞானம் இன்னிசை விருத்தம்
.ந்தனுக்கே யன்பான இன்பமுறும் பாங்கியரே கந்தமல ரேகமழும் காவனத்தில் நாமே கி விந்தையுறு மாமலர்கள் மென்கரத்தி னற்பறித்து கொந்துகுழ லில்முடிக்கக் கோதையுடன் வாரீரே. வ, 4ாம் வசனம்: பாங்கியே! நந்தவனத்திற் சென்று நறுமலர்கள்
பறித்து, செண்டுடன் மாலைகள் தொடுத்து விளையாடி வரு வோம் வருவீராக.

Page 28
-30
தோழி கொச்சகம்
தேனுகுக்கும் கார் குழலே செங்கமலத் தாரனமே கூன் பிறைக்கும் நேர்நுதலே கொவ்வையிதழ்ச் சேயிழையே கான்மிகுக்கு மென்மலரிற் கானவிசை யாயளிகள் தான்சுகிக்கத் தோகைமயில் தான் ஆன மாடுகுதே.
గా r ఈ నా! రా 2షా
ஞானம், தோழி தரு (மானேமட.எ. மெ.) ாகம்: சங்கராபரணம் தாளம்: பகம் இர e5
ஞானம் துளிக்குமா மதுமாலை யணிந்திடு
தோகையரே கேளும்-மனம் களிக்கத் தென்றல் அலர்ந்து
நறுங்கமிழ் நாசிக்குள் ஏறுகுதே
தோழி: விழிக்குநேர் கயல்விற் பொருதும் நுதல்
விஞ்ஞைப் பசுங்கிளியே-மெத்த செழிக்குந்தேன் கஞ்சத் தொளிக்கும்
பெடைதனைச் சேவல் அகவுகுதே
ஞானம்; செங்கதி ரொளி சேர விளங்கிடு
செந்திருவே மயிலே-கிளை தங்குமாங் குயில் தன்னினந் தேடித்
தயங்குதே பாருமங்கே.
தோழி: சங்கிமிழ் மணித் தாள்வடம் சூடிய
சாமளப் பெண்ணணங்கே-அதோ அங்கு தோன்றிடு மாம்பல் மலர்முகை
அற்புதம் பாரு மம்மா . ஞானப் கஞ்சத்தார் முகக் கார்குழலே எந்தன்
காதல் மிகுந்தவளே-மனம் அஞ்சப்பாரிரு காடைகள் யுத்தம்
அழன்று விளைக்குதடி.

-س-31----
,ோழி: மிஞ்சப்பானுெளி ரஞ்சித ரூபமின்
வஞ்சிக் கொடியிடையே-பேடை கொஞ்சத்தான் சேவல் கோதி மகிழ்ந்திதோ
கோகிலம் பாடுதம்மா.
தருணம் வகனம்: அடி தோழி! நந்தவனத்தின் கிழக்குப்புறமாக வுள்ள பூஞ்சோலைக்குச் சென்று புதுமலர் கொய்து வருவோம்
வருவாயாக! x'
தரு (சீவிய ரஞ்சித. எ. மெ.) இராகம்: தோடி தாளம்: ரூபகம்
ஆானம் செஞ்சொலின் ரஞ்சித வஞ்சியரே எந்தன்
சேடியரே கேளும்-மகிழ்ந்து நாம் மஞ்சொளிர் கூந்தலி லெஞ்சத் தரித்திட
வாசமுகை பறிப்போம் விரைந்து நாம் .
தோழி: கொடியிடை யேரத்தினக் கோதையரே வாரும்
கோதில் மலர்பறிப்போம்-தெரிந்துநாம் கொடிபடர் முல்லைய சோகு மந்தாரமும்
கூட்டிப் பறித்திடுவோம்-தொடைமலர்
கானம்: அன்னத் தனிநடை மின்னற்றுடியிடை
அஞ்சுக ரஞ்சிதமே-இப்போதே நாம்
வன்னக்குவளைகள் வாசக்குடை மல்லி
வாகாய்ப் பறித்திடுவோம்-வித விதம்
,ே 1ழி: பொன்னின் கொழுஞ்சுடர் என்னத் திகழணி
பூங்குழலே யளியே-யிப்போதிந்தப் பன்னீர்த்துளிமலர் தன்னைப் பறித்து நாம்
பாங்காய்ச்செண் டாற்றிடுவோம்-பலவிதம்
ாருாண14: பைந்தார் செந்தேனே மருவிழி மானே
பனிமொழியே குயிலே-இப்போதிந்த கொந்தார் மலரோடு மந்தாரம் சண்பகம்
கொய்து களித்திடுவோம் என்மானே

Page 29
தோழி:
இராகம்:
S5T 60 if :
தோழி:
ஞானம்
தோழி:
ஞான
-32
மொய்குழல் வைகிய தொய்யிடை யாளேயுன்
முக்கனி வாய்மொழியே-விரும்பிநாம்
பெய்மலர் தன்னைப் பிரித்தொரு மாலையாய்ப்
பேணித் தொடுத்திடுவோம்-என்னம்மா.
ஞானம்-தோழி தரு (அந்தரத்திலே. எ. மெ.) செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்
அங்கேபாராய் கொங்கார் ருே சா
இலங்குந் தோற்றமே-அதில்
ஆசை கொண்டேன் நேசச் சேடி அன்பின் தோற்றமே.
பங்கேரு கைதானே பற்றி
இங்கு தந்தேனே-இதை பட்சமாகச் சூடிக்கொள்ளும்
லட்சணந்தானே.
தங்கமயப் பூக்கள் சோலை
எங்கும் சேட்டமே-வானின் தாரகை போலே யொளிரும்
எங்கும் கூட்டமே.
கஞ்சந்தன்னில் அஞ்சம் வாழும்
ரஞ்சிதம் பாரும்-அங்கே மாலை வேந்தன் வர வேகாணக் கோலங் கொள்ளுதே
விஞ்சுராகங் குயிலே பாட நெஞ்ச மன்பதே-கிளி மேவிப்பேசும் மொழிகேட்கில்
காவுமன்பதே .

-33
விசயன் தோற்றம் (எண்சீர்)
சங்கிமிழு மிங்கிதநற் தரளந் தன்னை
தன் கருவென் றன்னமடை கிடக்குங் கஞ்ச பொங்குவளந் தங்குநகர் தனிலே வைகும்
போந்தறிவு, வாய்ந்திலங்கு விசயன் தானும் கங்குமணிக் குண்டலமும் கதிரும் பொன்னின்
கச்சணிந்து வச்சிரநற் பணிகள் பூட்டி பங்கியொளிர் பவளமலைப் பகலோ னென்னப்
பன்னுசபை முன்னர்வுந்து தோற்றி ஞனே.
SS - – SST
விசயன் தரு (பொன்னின். எ. மெ.) டா கம்: கீரவாணி தாளம்: திரிபுடை
மதியற்றிடுமிப் பதிதனஞ்சலோன்
மன்னனய் வந்து இந்நகர் தனில் விதிக்கும் வஞ்சகக் கதிக்குங் கட்டளை விள்ளலாகுமோ-மனதினில்கொள்ளலாகுமோ
நற்குலந்தனி லுற்பவித் தோமே
நாடுசெல்வங்கள் கோடி பெற்ருேமே பெற்றதாய்தந்தை யற்றதால் மனம்
பேதலிக்குதே-எண்ணஎண்ணஆகுலிக்குதே.
" சுற்றத்தாருள் என் அத்தை மகனைச்
சுகுணதங்கைக்கு மணமும் பேசினர் சற்றும் நற்குண மற்ற துட்டனுக்
கில்லை யென்றேனே-அவன்செய்யும்தொல்லை என்தானே
அன்னை தந்தையை யிழந்ததோர் துக்கம்
அரசன் கொடுமை அதிலும் நிர்ப்பந்தம் பின்னும் பெண்கேட்டென் பேதை மைத்துனன்
பகைத்துக் கொண்டானே -பரனடி"துதித்துக் கொண்டேன் நான்

Page 30
---34-س--
ச. தங்கையிடஞ் சென்று இங்கென் மனத்துத்
தாவும் துயர்கள் யாவும் உரைத்தே செங்கை மின்னவள் தன் கருத்தினைத் தேர்ந்தறிவேனே-உறுவழி-- நான் தெரிவேனே. விசயன் வசனம் : ஆ! தேவனே, இந்தக் கொடிய அரசனின் அநியாயச் சட்டங்களும் தெய்வ நிந்தனையும் ஒரு பக்கம்-அனந்த செல்வங் களிருந்தும் தாய்தந்தையரை இழந்து வருந்தும் துயரம் ஒரு பக்கம்-என் உடன் பிறந்தாளாகிய சகோதரியை மணஞ் செய் வதற்கு துட்டஞகிய எனது மைத்துனனுக்குத் சம்மதம் கொடுக் காததால் அவனுடைய பகைமை ஒரு பக்கம் - இவைகளைப் பற்றி மனம் விட்டுப் பேசி ஆறுதலடைய எனது தங்கையிடம் செல்லுவேன். OS 's
ད > འ། དེ་ ༠ཙང༽ ཚ《ཏོང འཚོ་
விசயன் பரணி
வேலைநிகர் விழியாளே விரும்பென் நேச
விளைசுவர்ண மணியெனவே விளங்குந்தங்காய்!
சோலைமை சேர் புள்ளுறங்கச் செல்லிந் நேரம்
சொர்ணமணி மாளிகைக்குச் செல்லா தேனே!
ஞானம் பரணி ஆலையுமிழ் பூங்கரும்பின் அமுதே யூறும்
அன்புமொழி என்பிறவி அண்ணு கேளும்
கோலபரி மளமலர்கள் கொய்யும் பாங்கில்
கொள்மதியம் தான்மறந்தேன் குறை எண்ணுதீர்
விசயன் ஞானம் தரு (மதி கதிரொளி எ. மெ. இராகம் : சங்கராபரணம் ۔ தாளம்: ரூபகம் விசய மலரளிசிறை வார்குழல் மேவிய
மங்கையே நேசத் தங்கை மின்னுளே குலவழிவரு கோதிலா நல்மணம்
குறித்துப் பேசக் கருத்துக் கொண்டேனே

-- 35
அன: அலைகொளும் சுடர் ஆரமணிந்த வென்
ஆன சோதர னே மணம் கேட்டந்த நலவழியுறு நாயக னரென
நானறிந்திட வொண்ணுதோ அண்ணு ,
விசய நடைபெடை யன்னம் நாணிடு வாணுதல்
நாரியேயுனைப் பாரியாய்க் கேட்டவன் விடவயம் செறி விக்ரம வீரனென்
விளங்கு மைத்துனன் என்றறிவாயே.
•ካ " ' ን ! .
கடைமதி செறி காத களு மந்தக்
கள்வர் தோழனைக் கொள்ளேன் மணுளனய்
அடைவிலா தன்னை தந்தைய ரற்றதால் அப்படிச் செய்ய நீர் நினைந்தீரோ?
னிச்சய் பசியமுத்தம் பரப்பும் பவளவாய்ப்
பைங்கிளியே மனம் பதருதே உசிதமேவிய உன் கருத்தென்னவென்
றுணர வேண்டியே நானுரைத்தேனே
தான விசிதமா மணி தேங்கொளி வீங்கிய
வீரனே யெனதாவி நேர் அண்ணு நிசித மொன்றிய விக்ரமன் தன்னையே
நீக்குவீரும் நினைவைவிட்டிப் போதான்.
விசயன் எண்சீர் விருத்தம்
ஆம்பல்விழிச் சாம்புனதத் தமுதே யின்சொல்
அஞ்சுகரஞ் சிதக்குயிலே இனிய கான தேம்புனலின் சீதளமே செழும்பொற் சோதி
சேர்மயிலே யென் பிறப்பே செப்பக் கேளாய் வீம்புசெறி விக்கிரம வீரன் தானும்  ܵܐ விடுத்துமணம் பேசியுனை விரும்பிக் கேட்க 1ம்பலியா தில்லையென மறுத்தேன் நானும்
ஈரமில்லா நெஞ்சனினி என்செய் வானே!

Page 31
--س-6 3---
விசயன் வசனம்: என் ஆசைத் தங்கையே! மைத்துனனுகிய விக்கிர மன் தூதுவர் மூலமாய்ப் பெண்கேட்டு அனுப்பியிருந்தான். நான் அதற்குத் தகுந்த சாட்டுகள் சொல்லி மறுத்து அனுப்பி விட்டேன். அந்தக் கொடியோன் எமக்கு என்ன கெடுதிகள் விளை விப்பானே தெரியவில்லை, கடவுள்தான் எமக்குதவி தங்கையே!
ஞானம் கொச்சகம்
அறுகாற் பொறிவண் டளைதொடையே
அணிமார் பகன்ற புயபதியே மறுவார் கொடிய பாவ மொன்றே
மடுத்துக் கெடுக்கு மாத்துமத்தை தறுவண் கணமிக் குறுசிதடன்
தானென் வினைகள் புரிந்திடினும் குருடொன் றியகண் னெளிகொடுத்த குமரன் யேசு பதந்துணையே.
ஞானம் வசனம் : அருமை அண்ணு! பாவமானதொன்றே ஞான உயிரைக் கெடுக்குமல்லாது அந்தச் சிதடனல் என்ன செய்ய முடியும்? சரீரத்துக்குத் தானே தீங்கு செய்ய முடியும், பிறவிக் குருடருக்குக் கண்ணுெளி கொடுத்தவரும், மரித்த இலாசருவை மூன்ரும் நாள் உயிர் பெறச் செய்தவருமாகிய எம் தேவன் கரம் எம்மீதிருக்கையில் வீண் பயம் எதற்கு? இருட்டுகின்றது வாருங்கள் மாளிகை செல்லுவோம்.
விசயன்-ஞானம் தரு (என்மகளே எ.மெ.) இராகம் : தேசிய தோடி தாளம் : ஏகம்
விசய தோடவிழ் பூங் குழலாளே - நேசச்
சோதரியே மாதரசே மூடமதி சேரரசன்-செய்யும்
மோசமதற் கேது செய்வோம்
ஞான ஏடொளிரு மற்புயனே-இதற்
கேங்கி மனம் வாடுவதேன் கேடடரும் இம்மகிபன்-முடி
கெட்டழியும் காலமிதே

ー37ー
னியா : அன்னை தந்தை யற்றவுனக்-கொரு
ஆனமணம் செய்து வைக்க நன்னயஞ் சேர் தோழனுக்கே நானும்
நற்கடிதம் தான் விடுத்தேன்.
வ, n நன்னயச் சொல் இங்கிதனே-நீரும்
நலிந்த சிறு குழந்தையைப் போல் பின்னமுற்றுத் தேம்புவதேன்-யாவும்
பரனருளென் றேதெளியும்.
உய வேந்தனுக்கு நாம் பயந்தே-எங்கள்
வேதமுறை தான் புரிந்தோம். பாந்தமில்லா மைத்துனன் போய்-ஏதும்
பகைவிளைக்கத் தான் நினைப்பான் ,
வான : சாந்தபரன் தன்னருளால்-எந்தச்
சதியெனினும் வாராதே ஆந்துயரம் தன்னை விட்டு-ஏகன் அடியிணையைப் போற்றுவமே
தாடினம் வசனம் : அருமை அண்ணு! அரசன் பகைத்தாலென்ன? விக்கிரமன் வெறுத்தாலென்ன ? அல்லது உலகம் முழுவதுமே காம்மைக் கைவிட்டாலுந்தானென்ன? அளவில்லாத கருணையுள்ள அமலனின் கிருபை எம்மீதில் இருக்கையில் நாம் ஏன் வீனில் கலங்க வேண்டும் ? ,
விசயன் ஞானம் தரு. (அஞ்சுகமே கிஞ்சுக எ. மெ.)
() சும் : நாத நாமக்கிரியை தாளம் : ஆதி
f. வஞ்சியபரஞ்சிதப் பெண்ணுளே-எந்தன் f .
வாஞ்சைமிகுந் தங்கையரே - வந்திடுமிப் போதே மஞ்சுலவு மாளிகைக்குத் தானே-நாங்கள் மாற்றுமிருள் சேருமுன்னர் ஏற்றமாய்ச் செல்ாேமே

Page 32
--- & 3 ۔۔۔
ஞான்: கண்ணுெளியென் அண்ணரே நான் வாறேன்-அதோ
கஞ்சமலர்ப் பஞ்சணையில் கிஞ்சுகப் பண்பாடும் தண்ணுெளிசேர் வண்ணமணி மாடம்-அதில் தானிலங்கும் கோபுரத்தின் மேலந்தம் பாரும்.
விசய : மானிறைஞ்சும் மைவிழி சேர் மாதே-நேச
மங்கையே யென் தங்கையளே மாங்குயில்கள் பாட தேனிறைஞ்சும் கான மதில் தானே-நல்ல தெள்ளுசிறைப் புட்களோடு கிள்ளையிசை பாராய்
ஞான: பொன்னெளி பிறங்குமணி மார்பா - எந்தன்
புத்தியில் மிகுந்திலங்கும் உத்தமனே கேளும் துன்னுமணி மாளிகையே பாரும் - அதில் தோன்றிடு விவித வர்ணக் "கேற்று முன்
வந்தோமே. விக்கிரமன் தோற்றம்
எண்சீர் விருத்தம்
செங்கமலந் தானிருக்கும் பொய்கை தன்னில்
சேரரவு மாமைகரா நுணலை தானும் அங்கடங்கி மென்மலரை யலர்த்தே காட்டும் அன்னபல வஞ்சகங்கள் அகத்தே தேங்க பொங்குமுக வொளிபுத்தி விளக்கிக் காட்டப்
பொற்பொளிரு நற்பணிகள் புறத்தே மின்ன துங்கமிகு விக்கிரம வீரன் தானும்
துன்னு சபை முன்னர்வர்ஆ ஒதாற்றி ஞனே
விக்கிரமன் தரு (அப்பனே அப்பனே எ . மெ.) இராகம்: பலஹம்ச தாளம்: ரூபகம் 1. விளங்கிந்த நகரெங்கும் களங்கமற்ற
விறல் தங்கு விக்கிர்ம வீரன்நானே இளநங்கை ஞானம னேகரியை
இணைந்தநன் மணஞ்செய்ய எண்ணிமுன்னே.

--39-سس
கருத்துற்றே தூதரை விடுத்துக் கேட்டேன் கதியற்று மதியற்ற விசயன் என்போன் செருக்குற்றே சதிக்குற்றேன் தங்கை தன்னை
செய்திடேன் மணமென்று சொன்னன் சன்னை. அட்டதிக் கெட்டுங்கை கட்டிப் போற்றும்
ஆண்சிங்கன் நானென்றும் அறிந்திடானே பட்டிமை தொட்டவித் துட்டன் கெட்டே
பயனில்லா தழியப்பெண் தானே அட்டி .
இது சணம் அவன்முன்னே சென்றே ஒப்பி
ஏற்ற பெண் கொடுவென்பேன் மாற்றம் செப்பில்
புதுமணப் பூவையும் அவனும் கெட்டே
பொற்புயிர் நீங்கலென் பகைக் குட்பட்டே.
விக்கிரமன் பரணி
பொளிந்த மணி தழைத்திலங்கும் புயவொய் யாரா பொற்பொளிரும் மைத்துனரே புனித நேசா வழிந்தழகின் குளிர்ந்த மலர் வதன காந்தி
வாடுதுயர் கூடுமன வாட்ட மேனே!
விசயன் பரணி மொழிந்ததுயர் அன்னைதந்தை யிழந்ததோடு மூர்க்கமுறு மரசவிதி முழுதும் கேடே தழைந்தமனத் தோகையெந்தன் தங்கைக் கேற்ற
தண்ணளிசேர் க ஐழ்ஆங்கிறேனே.
ప్తి TSRSவிக்கிரமன்(கொச்சகத் த்ரு குணமொன்றிய மாப்பிளையுனது
குலவுந் தங்கைக் கில்லையென்று மனமொன்றிய மைத்துனனிருந்தும் மதியற்றலைந்து திரிவதென்னே முனமுன்னிடத்து மணம் பேசி
முறையா யனுப்ப மறுத்த தென்னே

Page 33
-40
தரு இராகம் : எதுகுலகாம்போதி தாளம் : ஆ a šò தனத்தென் குறைவதோ-இனத்தில்
JAV 19 v. மறுவுளதோ ஏற்ற என் நய
குணத்தில் பழுத தோ-ம்னத்தேர்
* அழகிலையோ மைத்துனு சொல்லும்
விசயன் கொச்சகம் அஞ்சும் மடவாள் என்பிறவிக்
கரிய மணம் நான் செய்துவைக்க கொஞ்சம் வயதே ஆனதிஞல்
குறித்த பருவம் வரவு ம் ல்லை மிஞ்சும் மணத்தில் விருப்புமில்லை
மேலோன் சித்தம் வரவுமில்லை
ਨੂੰ தஞ்சம் பிறிதற்ற கொஞ்சும் கிளிமொழியாள்
(என்) தங்கை தன் மனம் துஞ்சும் படிக்கிது வஞ்சம் பகர்ந்திடனே
தூய்மை என்சொல்லே.
விக்கிரமன் கொச்சகம் உன் தாய் தந்தை இறந்ததினல்
உனக்கோர் துணையாய் நானிருப்பேன் முேன்போலுருப்பெற் ருேருமுன்தன்
மேன்மைப் பிறப்பாம் மடமயிலை கண்போல் மதித்துக் காத்திடுவேன்
கலக்கம் தவிர்த்தே எனதுரை போல்
தரு பண்புற்றிடு மணம் அன்புற்றிணைந்திடவே ன உன் விடை '. இன்புற் றளித்திடில் துன்பற்றுலகினிலே
ஏற்ற வாழ்வதே,

-4l
விசயன் கொச்சகம்
மெச்சும் மணிமுத் தாரமிளிர்
மேன்மை செறி மைத்துனரே கேள் பச்சைக் கிளியைத் தான் வளர்த்துப் பகை சேர் பூனை தன்னிடத்தே அச்சப் படாதே அளிப்பதற்கு
ஆர்தான் துணிவார் கேடுமிகும்
தாரு
இச்சைக்குறு முந்தன் பிச்சுப் பிதற்றலெல்லாம்
ஏற்றிடாது காண் w
பிச்சை யிரந்துநாம் லச்சை கெடுகினு ே
பெண் கொடே னறி
விக்கிரமன் - விசயன் தரு. (பாலகனே விரை. எ. மெ.)
ராகம் : மோகனம். memrb :
受 ଧୃଷ୍ଟ
விக்கி : ஆலநிறைந்துள மாடிடு மூடனே
விச :
அத்தனை தத்துவ முற்றனை யோவடா கோலமிடும் மணமானது கேட்டிடக்
குறைமொழி பகரத் துணிகர மோவடா
துணிகர மதுதனை வினவ நீ யாரடா
சூது கொலைகள வாதிபனேயடா
அணிமல ரனையென தருமைசேர் தங்கையை
அசடனு முந்தனுக் களித்திட னேயடா
விக்கி : மூடனென் றேயுரை கூறிய கேடனே
முற்றிய வென்பழி பற்றி யுனக் கிதோ பாடென வந்து விழுந்து பணிந்திடப்
பண்ணுவ னேயடா வன்மை யறிந்திட

Page 34
விக்கி :
விச :
lagu :
-4 2
அறிந்து நீ யென்னை அசைத்திடக் கூடுமோ
ஆண்பராபரணு ரருளின்றியே
திறந்தரு முன்னுரை துரும்பென மதித்திடேன்
தீங்குறப் பலகுடி கெடுத்தவ னேயடா
கெடுத்தவ னென்றதி கேடுகள் பேசிடு
கெறு மொழி நாவது மறுகிடவேயிது
திடத்துறு மென்வலி தேச மறிந்திடச்
செய்குவ னென்றறி தீங்குளனேயடா.
தீங்குள னென்றுரை வேங்கை மனத்தனே
தினகர னெதிர் சரி மின்மினி யோவடா
ஓங்கிய வஞ்சனை ஒன்றும் நில்லாதது
ஒடிய நீரெழு புற்புத மாமடா
புற்புத மென்றுரை பேசிடு மூடனே
புலியுட னெதிர்பொரு மறியது போலடா விற்பன முற்றிடு வீரபராக் கிர்ம
விக்கிர்ம னேடெதிர் பேசிட வந்தனை வந்தனனென்று வகுத்துரை வஞ்சனே
வரைமலை மோதிடு காற்றது போலடா உன்தன் பதட்ட மிரட்டுகள் இங்கது
ஒன்றுஞ் செல்லாதினிச் சென்றிடு வாயட
விக்கிரமன் எண்சீர் விருத்தம்
துங்கமணம் பேசிவந்த உரியோர் தன்னைத்
தூற்றிவசை வக்கணங்கள் பகர்ந்த தோடு
சங்கைகெட எந்தனுக்கு மெதிரே நின்று'
சாற்றியவல் வாய்மதத்தை யடக்கி யீன
கங்கமுன தங்கமுண்ணக் களித்தே கூளி
கக்குரத்தம் முக்குளிக்கக் கண்டம் வேறு
தங்குவிழி யீரல்குடல் நாக்கு மூக்குஞ்
சத்கை சக்கை யாயரிந்து எறிவிப் பேனே.

س-3 4--
விக்கிரமன் வசனம் : அடா விசயனே! என்னை எதிர்த்துப் பேசிய ய எனது வாய் மதத்தை அடக்கி வைக்காவிட்டால் என் பெயர் விக்கிரமன் அல்ல என்பதை அறிந்து கொள்ள டா. அதுவன்றி உள் தங்கையையும் என்ன செய்விக்கிறேன் என்பதையும் இருந்து
I r U L-IT.
44 M வசனம் சந்திரனைப் பார்த்து நாய் உளளையிடுவதினுல் ஒரு யோசனமும் இல்லை. எல்லாம் இறைவூன் செயல். சென்று
1ாரும் மைத்துனு. KG గ్రా ܘܐܝܟ ܥܡܛ̈ܔܢܢ حسكة
விக்கிரமன் தரு (ஆரறியப்.) 1) செஞ்சுருட்டி தாளம் ஆதி
என்னையவன் வையலாமோ-எதிர்த்து நின்று கான்னையவன் வையலாமோ
தரு என்னை யவன் வைது மெத்தச்
சன்னை சொன்னன் வீணே யத்தை னண எண்ண எந்தனகம்
ஏறிய னல் மூளுகுதே புன்னையுறும் புண்ணதிலே
பின்னருங் கோலிட்டது போல் πη "புர்க்கனவ னுர்ப்பரித்துச்
சாற்றரும் வசையே சொல்லி. என்னை
அத்தை மகன் நானிருக்க
எத்திசையும் ஏன் அலைவான் அன்பு மணம் தந்தாற் பெண்ணைத்
துன்பமில்லை என்றுரைக்க மெத்துமவன் நாக்குளறிச்
சுத்தமற்ருேன் என்றே தூறி மெல்லியை மணந் தடுத்துச்
சொல்லரும் பழி தொடுத்து. என்னை

Page 35
-44
சுந்தர அணங்கை மணந்
தந்திடெனக் கேட்டதற்கு
சூது வஞ்ச நெஞ்ச னென்றுஞ்
சுற்று கள்வர் தோழ னென்றும்
சிந்தை கொதித் தேயெழுந்து
வந்துமே கையை விரித்துச்
சீறியவன் சொன்ன விந்தை
கூறிடின் அதுவே விந்தை. என்னை
ë.
தக்க தோழனந் திடத்து
உக்கிர்ம சிங்கனிடத்து தாற்பரியந் தானுரைத்து
பார்ப்பனே பெண்ணைப் பிறித்து பக்குவ மதாய்க் கவர்ந்து
வெட்கி விசய னயர்ந்து பல்லிளித்த மற்கடம் போல்
அல்லற் படச் செய்வேன் பார்பார்.என்னை
உக்கிரமன், தோழன் தோற்றம் சந்ததம்
விண்டல மேற்கருக் கொண்டிடு மேகமோ
விரவிய பெருமரமோ விட்டழல் கொட்டிடு பேயதோ பூதமோ
விந்தமோ வென்றுலகில்
கண்டவ ரையுறு மந்ர புயத்தினில்
கட்க மிலங்கிடவே கடகரி யெனவடி நெடிபட வைத்துமே
கானகம் நெக்குவிட
துண்டவுருக்கினில் ஒன்றிய கச்சணி
துன்னிட வன்கரமே துடிதரு கோலது இடியென ஒலிதர
துங்கமா மறலியென

ー45ー
உண்டவு யிர்ப்பழி மண்ட முகத்தினில்
உக்கிர்ம சிங்கனுடன்
உற்றப Nக்கள வொத்திடு தோழனும்
9 '' A ti) :
ܐܘ
உயர் சபை வந்தனரே
உக்கிரமன், வீரசிங்கம் 5 T5. (துணிவோடே) CS Vஹம்சத் தொனி $1 KQ) Sa Ss T தாளம் ஏகம்
பண்டேறும் படர்வனத் திடைவரு பலத்த மடையர்கள் உளத்தில் வெருவிட மண்டேறும் மனமது துணிவொடு மறித்தவர் பொருள் பறித்து மேசணம் மறைந்து குகையினிடை நுழைந்து வழிதெரிந்து விரைந்து நொடிதனிலே பறந்து செல்வோமே
மச்சோ டுறுமாளிகை சூழுநல் மடுத்த கற்சுவர் தொடுத்த தாயினும்
அச்சோ டுறு மாவுகார் கீொண்டதை அறுத்து மோர்துளை யிறுத்துமே யதில் அரவமென நகர்ந்து பெரிது பொருள் கவர்ந்து தருணமது விரைந்து மறைந்திடு வோமே
பகை கூடிய பற்பல விற்பன படைத் தளங்களை நிரைப் படுத்தியே
வகை நீடிய துரைத்தனர் தாமுமே வளைத்துமே யெமைப் பிடித் தடக்கிட வகுக்கு மெமது வில்லுக் கெதிர்க்க முடியாதென தொகுத்துப் புறங்கொடுத்துக்களைத்தனர் பாரும்
அடமேவிய உக்கிர்ம சிங்கனை அஞ்சலித்திடா நெஞ்சரிங்கெவர்
தடமேவிய அரசனி ஞஸ்திகள் தானும் எம் நிதிக் காகுமோ சரி தரளமணிகளொடு சுவர்ண அணி பணிகள் திரள நிரை குபேரன் தானெமக் கினையோ

Page 36
-4 6
முத்தோ டுறு ரத்தின மும்பல முன்கை வளையலும் தொங்கு குளையலும் அத்தோ டுறு பொன் பண நிதிகளும் அடுத்து எனதுமுன் கொடுத்திடாவிடில் அரிந்து அவர்கள் சிரம் சரிந்து குடர் பிரியப் புரிந்து நிணங்கள் நரி அருந்தச் செய்வேனே
笼。
க்
விர்: நிரை மேவிய சபைகளி லெவர்களும்
நிமைத்த கண்ணது விழித்து எம்மையே
வரையா தவர் நோக்கினும் கணத்தினில் வயங்கு மவர் பொருள் சுழித் தெடுத்துமே வாவு மணிலை விட்டுக் கூவு சுணங்கனென மேவு மவர் புலம்பத் தாவிச் செல்வேனே
உக்கிரமன் எண்சீர் விருத்தம்
வாட்டமுரு தெக்களவு கொலைக்கு மஞ்சா
வாகைபெறு முக்கிரநற் ருேளா கேளாய் நாட்டினிலே அரசனது கொடுமைக் காற்ரு
நற்பணிகள் பொற்குவியல் திரட்டிச் சேர்த்ே காட்டினிலே வந்தொதுங்க எண்ணி யூரார்
கருதுமிந்த வழிவருவார் கவன மாய்ப்பொன் வேட்டையது ஆடுதற்குத் தருணங் கண்டாய்
விழித்துவழி காத்திருப்போம் கவனம் தானே.
உக்கிரமன் வசனம்: எனது பிராண அன்பனகிய தோழா! வீரசிங்கடு
இத் தேசத்தை ஆளும் புதிய அரசனின் கொடுமைக் காற்ருது இந் நகரவாசிகள் தங்களிடமுள்ள நகையணிகளும் மற்றும் சகல சம்பத்துக்களும் மூட்டை முடிச்சுக்களாகத் திரட்டிக் கொண்டு இந்தக்காட்டு மார்க்கமாக வருவார்கள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த மிகவும் சாக்கிரதையாய் இருப்போம் தோழனே!
வீரசிங்கன் கவி இருண்ட இவ் வனத்தின் கண்ணே எதிரிலாச் சிங்கே றென்ன திரண்டபொன் மணிமுத் தாரத் திடமிகுந் தலைவா கேளும்
மருண்டவுன் மனதுக் கேற்க மன்னவன் கெடுமைக் காற் வெருண்டிங்கு வருவோர் செல்வம் விரைந்து நாம் கவரு வோமே

س-47 س
னிவிங்கன் வசனம்: தலைவரே! தாங்கள் கூறியபடி யாவுஞ் சித்தம்
செய்துள்ளேன்.
உக்கிரமன் வீரசிங்கம் தரு (பவள.எ. மெ.)
கம்: மோகனம் தாளம்: ரூபகம்
 ைக் சொல்லிடாவரு நல்லதிஷ்டம தல்லோ
இத்தருணம் வரு-தொல்லையே திரணம்
எதிர்-புல்லுவோர் மரணம்-நல்ல இங்கிதத்துறு துங்கநற்பணி எங்கள் கைவசமே
இனிப்-பொங்கு நற்செயமே
அச்சமற் றெமதிச் சையின்படி
வச்சிரப் பணியே யாரும்-மெச்சிடும் மணியே ኣ*
நல்ல-உச்சிதப் பணியே-நகர் வருந்து பல சனர் பொருந்து நகையெலாங் கவர்ந்து சென்றிடுவோம்
இனம்-தெரிந்து ஒன்றிடுவோம்
A : மண்டலத் தெவர் வந்தெதிர்க்கினும்
துண்டெனப் புரிவோம் கெடி-மண்டிடத் திரிவோம்
பெருங்-குன்றெனத் தெரிவோம்-வய மதத்த மத கரி பதைத்து அலறிடச் சிதைத்துமே விடுவோம்
உடல்-புதைத்துமே விடுவோம்
அண்ட முட்டிய கொண்டலைப் பொறித்
துண்ட மாய்க் கொறிப்பேன் மேக-மண்டலைப் பிறிப்பேன் Y
மலை-துண்டதாய் முறிப்பேன்-முகில் படரு மரங்களைச் சிறுக நகங்களால் நுள்ளியே எறிவேன்
புகழ்-அள்ளியே செறிவேன்

Page 37
உக் பொருந்து மித்தொழில் புரிந்து முப்பது கடந்த ஆண்டுடனே இணை-பிரிந்திடாத் திடனே
சேவை-தெரிந்த நற்செயனே-எனக் குன்னையின்றியே இந்நிலத்தினில் உற்ற நண்பனிலை
இது-முற்று மன்புநிலை
வீர வீரமுற்றிய தீரவெற்புய
சோரர்முன்னவனே நலஞ்-சேரும் நன்னயனே
இது-காலு மென் நயனே புகழ்-துன்னு முனதரு மன்னு கருணைய தெங்கள் பாக்கியமே
அருள்-பொங்கு யோக்கியமே
உக்கிர்மன் எண் சீர் விருத்தம்
மெத்துவயக் குத்திரநற் தோளா கேளாய்
மேட்டிமைசேர் நாட்டிலுறு செல்வர் வீட்டில் கொத்துமணிப் பொன்னிருக்கும் குறிப்புப் பார்த்துக் கோடிபொருள் நாங்கவரத் துணையே செய்யும் சுத்தமனத் தோளனென்னும் விக்கிர்ம வீரன்
சொன்னதின மாச்சுதின்னும் வரவே காணேன் சித்தமது கலங்குதெந்தன் நேசர்க் கேதும்
தீங்குகள்தான் நேர்ந்தனவோ தெரிந்தி லேனே
உக்கிரமன் வசனம்: தோழனே! எமது ஆருயிர் நண்பனுகிய விக்கிரம
வீரன் இன்னும் வராததால் என்மனம் கலங்குகின்றது. அவ ரைத் தேடிப் பார்த்து வருவோம் வருவாயாக.
வீரசிங்கன் வசனம்: தலைவரே! தேடியயூடு காலிற் தடக்கியதுபோல
அதோ வருகின்ருர் பாரும்.

-س-49 --
உக்கிரமன் ஆசிரிய விருத்தம்
ஒளிதவழ் வதனப் பிரபையே கருகி
உடலெலாம் வியர்வையே துளிக்க உற்றதோர் புலிவாய்ப் பட்டிடத் தவறி
ஒடிய மானென விரைந்தே
விழிக்கடை நெருப்புப் பொறியனல் பறக்க
வீரநன் மீசையுந் துடிக்க விளைத்திடு சோகக் குறியிடை யிடையே
விளங்கியே மின்னென மறைய
பழிப்புரை எவரும் பகர்ந்தரோ வன்றிப்
பார்த்திபன் கோபமோ எதுவோ பகையவர் எவரும் வந்தெதிர்த் தனரோ
பதைப்புறு நோய்பிணி யெதுவோ
களிப்புறு மெனது மனத்தினிற் கேற்ற
கண்ணியத் தோழனே யுனது
கலக்கமே விடுத்து உரைத்திடுஞ் சணத்தில்
கருத்தினைத் தெரிந்திட நானே. உக்கிரமன் வசனம்" ஆருயிர் நண்பா ! என்ன ஆச்சரியம். என்றுமில்
லாதவாறு உமது கோலம் இன்று காணப்படுகிறதே. வேட்டை நாய்களாற் துரத்தப்பட்ட சிறு முயலைப் போன்று உமது அங்க மெல்லாம் பதைபதைக்க, கடூர கோபக்குறி முகத்திற் பிரதி பலிக்க எவர் குறை புரிந்தனர்? இயமனஞலும் ஒரு கை பார்க் கிறேன். கூறும் தோழனே.
விக்கிரமன் ஆசிரிய விருத்தம் தோழனே யெனது துயரமே யுரைக்கத்
தோற்றுமென் நாவதே யசையா தொல் புவி தனிலென் வல்லமை யிழந்தேன்
தோகையாள் தனநினைந் ததினல் 7

Page 38
--0 A تسس
வாழ்நகர் தனிலென் வங்கிச பதியாம்
விசயனென் றுரைக்குமோர் வீணன்
விளம்பிய வார்த்தை விரித்துயா னுரைக்க விசனமேற் கொள்ளுதென் நேசா
அழகியா மவனின் தங்கையைக் கேட்க
அடங்கிடாச் சினமதே நீடி அந்நீத மொழியால் என்னையு மிகழ்ந்தான்
அற்பணு மவன்கெறு வாலே
உளந்துணிந் துனையே யுலகினி லிகழ்ந்தான்
உற்றநாம் சுற்றுகள் வர்களாம் உயிருட னவனிங் கிருந்திடி லிதமோ
உளமது பதைக்குதென் நேசா .
உக்கிரமன் சந்தத விருத்தம்
அண்டர் முதற்பல தேவர்க ளோடுமண்
அரசர்க ளெதிர்த்திடினும் அலைகடல் சுவறினும் மலைநிலை பெயரினும்
அசனி தெறுத்திடினும்
கொண்ட லிரைந்திருள் மண்டி யெழுந்துல
கான திருண்டிடினும் குறிசுட ருதிரினு மிடமுக டொடியினும்
குணமிகு முந்தனுக்கே வண்டணி குழல்மட வொண்டொடி தன்னையே
வண்மைய தாய்த்தருவேன் வஞ்சிம லர்வனச் சோலையின் பின்புறம்
விருப்புற எட்டாந்நாள்
கொண்ட நடுநிசி வந்திடு நிட்சயக்
குறித்தவந் நேரமதே குளிர்மதி நேசனே விளைமனச் சஞ்சலக்
குறையகற் றிடுவாயே.

-51
உக்கிரமன் வசனம் : என் அன்புமிக்க தோழனுகிய உமக்குக் கவலைதரக் கூடிய நிகழ்ச்சியைக் கணமேனும் பார்த்துப் பொறுத்திருக்க மாட்டேன். நீர் ஆசித்த பெண்ணை உமது கைக்கு விரைவிற் சேர்ப்பேன்
உக்கிரமன், விக்ரமன் தரு. (ஆதி தற்ப.எ. மெ.)
இராகம் : பைரவி தாளம் : திரிபுடை
டிக்கிர நேசனே கவலை விடவேதிடனே சொன்னேன்
தேசு கந்திடுமுன்-ஆசைக்குகந்த நேரிழை நொடி பாரிலுன்னடி சேரவும் "றெடி பாருமென்கெடி
விக்கிர பாந்த மென் மனதின் புளனே நலனே சேருங்
காந்த மென் மலரார்-முகவசீகர பழித்தவன்மொழி விழித்தினிப்பழி குலைத்துமென் வழி விளைப்பதென் தெளி
உக்கிர வீரகேசரியே வயமே செயமேதங்கும்
சோரர் மேதினியே-துணிந்தே மெத்த எதிர்த்தவன்கரம் விரிந்து முன்னுரம்
வெறுத்துமென்திறம் பொறுத்தனே புரம்
விக்கிர ஏசில் என்னை அவன் பொறுப்பேன் தரிப்பேன் மெத்த
நேசமுற்றவுனை-அவன் சினந்து ஏறிலாவசை கூறினன் நசை ஆறுமோதிசை ஏறுமோ இசை
உக்கி நேச பூசிதனே மதியே நிதியே சேரும்
ராச ராசர்களும்-எமக்கே யஞ்ச நெஞ்சமானது கொஞ்சமாவது அஞ்சிடாதவன் வஞ்சனை சொல

Page 39
一52一
விக்கிர ஏசுமப்பொழுதே சிரமே புரமேசேரத்
தூசதாய்ப் புரிவேன்-எனக் குகந்த ஏந்திழை மனம் மாந்து வாளென ஒர்ந்தனன்வய சாந்தனே யறி.
உக்கிரமன் வசனம் : தோழனே ! ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம். இன்றையில் இருந்து எட்டாவது நாள் நீர் ஆசித்த பெண்ணை இந்த வஞ்சிமலர் வனச் சோலையில் இதோ தோன்றும் ஆலமரத் தடியில் அவளது அண்ணனுடன் சேர்த்துக் கொண்டு வந்து தருவேன். என்கைக்குத்
உக்கிரமன்-விக்கிரமன் தரு. (அத்தனை எ. மெ.)
இராகம் : மோகனம் தாளம் : ஆதி சிந்து உக்கிர : N
தப்பினவர் ஆரும் இங்குண்டோ-என்னேடெதிர்த்துத் தப்பினவர் ஆரும் இங்குண்டோ என்னேடெதிர்த்து
தப்பினவராருமுண்டோ
ஒப்புமென் திறமுங்கண்டே தப்புமொழி தானும் விண்டே
செப்பிடும் உயிருங்கொண்டே (தப்பி) விக்கி : :
வஞ்சியிடை எந்தன் கரத்தே-அகப்படட்டும் மிஞ்சுமவள் அண்ணன் சிரத்தை கெடுத்துமெத்த
வஞ்சமே மொழிந்த மதம்
மிஞ்சுவாய்க் கொழுப்பின் விதம் கெஞ்சிடச் செய்வேனே யதம்
அஞ்சலர் கலங்கநிதம் (வஞ்சி) உக்கிர :
சங்கையின்றி வைது நின்றனே-மணம் புரியத் தங்கை தன்னை யில்லை யென்றனே-பார்பார்எந்தன் தத்துவமு மெச்சுதிறன் எத்திசையு மச்சமுற பித்தனவன் லச்சைபெற
நத்துமுந்தன் இச்சைதீர (சங்)

-53
விக்கிர :
உக்கிரம சிங்கனும் நன்றே-விரும்புமெந்தன் பக்குவநல் மங்கையை யின்றே கவர்ந்து வனத்
துற்றமலர்ச் சோலைவரப் பற்றியே யவளைக் கர முற்றுமெந்தன் இச்சைதீர
வெற்றிபெறுவேனே சேர (உக்கி)
உக்கிரமசிங்கன் வசனம் : நேசனே! மனக் கவலையின்றி உமது மனைக்
குச் சென்று குறித்த தவணைக்கு வருவீராக.
>< ஞானம் இன்னிசை
மடலவிழும் செங்கமல மாந்ரமுகச் சேயிழையே இடமுயர்ந்த அன்னை தந்தை தெய்வபதி சேர்ந்தபின்பு கடலருகின் காவனம் போய் காற்றளையத் தப்பியதால் உடலமது தான்களையாய் உள்ளயர்ந்து சோருகுதே
ஞானம் வசனம் X எனது அருமைத் தாய் தந்தையரை இழந்த பின்பு கடலோரமாகவுள்ள நந்தவனஞ் செல்ல முடியாமற் போனதால் உடல் களைப்புற்றிருக்கின்றது. அண்ணர் இன்று வீட்டில் இல்லாத தால் இருவரும் கடற்கரையோரத்துள்ள நந்தவனஞ் சென்று மென் காற்றுச் சுவாசித்து வருவோம் பாங்கியே.
Tx தோழி இன்னிசை
பெண்ணணங்கே பொற்கொடியே பேதைமடமாங்குயிலே விண்மதியை யொண்ணுதலே விள்ளருமுன் வாஞ்சைமிகு அண்ணரில்லா நேரமிதே ஆனதினுல் காவனம் போய் தண்மையுறுந் தென்றலது தான்சுகிக்க லாம்வருவீர்.
தோழி வசனம் :Xஅம்மணி! உமது அண்ணர் வீட்டுக்கு வருவதற்கு முன் கடற்கரைப் பூங்கா சென்று விரைவில் வருவோம் வரு
t ܡܓܠ a pints. f్క ? : తాల రాn ܭܵܧܵܙ
ஞானம்-தோழி தரு (சுந்தர நற்.எ.மெ)
இராகம் : செஞ்சுருட்டி. தாளம் ஆதி
ஞான அழகு நடைத் துவழு மிடையே-அடியே பாங்கி
அண்ணரிட்ட கட்டளைக்குப் பின்னமா மீதே

Page 40
தோழி
ஞான
தோழி :
ஞான
தோழி :
ஞான
தோழி :
--54 --س-
இளமதியே தவழு நுதலே-இது சணமே இன்பமிகு தென்றல்குளித் தாடி வருவோம்.
காவிய நீள் ஒவியப் பெண்ணே-கமலபொய்கை காற்றளைந்து சாற்றுமுடல் தேற்றலாம் வாடி.
மேவு விழிக் காவி மலரே-விளங்கு பொய்கை மெத்து புஷ்பத் துற்ற நறம்மெல்ல வீசுதே.
ஆசு கந்த அன்னமின்னளே-அளிகுடையும் ஆம்பல் வர்ணச் சோலை சென்று நாம்களிப் போமே
தேசுகந்த செஞ்சொல் மொழியே-செழும்
w வனத்தில்
இசய்ய மலர்ப் பொய்கை யெழும் தென்றல்
நுகர்வோம்
&
ங்கஜணயும் செங்கரமின்னே-சலதி வரை தாவு குளிர் சோகரமாய் வீசுதே பாரும் திங்கள் முகப் பைங்கிளி மாதே-புளசிதம் சேர் தாதளைந்து வீசுமலர்ச் சோபிதம் பாரும்
ஞானம் தோழி வேறு தரு (மெய்ப் பற்ருவதுஎ. மெ)
இராகம் :
எதுகுலகாம்போதி தாளம் : ஆதி
ஞான பொன்னர் சுணங்ஃறி அன்ன அகத்தாளே
போந்த மென்மலர் புது நறமெழ இசை பலநய ஒலிதர
மதுகர மொடு விதமே-மஞ்சை பாரடி
தோழி : மின்னர் துடியிடை வன்னக் கிளி மொழியே
மேனலந்திகழ் மிகை தரு பஞ்சிறை அழகது செஞ்செழில்
இசை தரு புட்களதே-இன்னிசைபாராய்

سے کا 5 ہم
ஞான : விந்தைக்குறு பொய்கை சிந்தை கலங்கி யெங்கோ
செல்ல எண்ணியே விரைந்தலைந் திணிப்புக வரம்பது மறிந்தன
வருந்துளந்தெரிந்ததுவே-நல்லோர்செய்கையே
தோழி : பைந்தார் சலதியே நொந்தாகுலித்தலைதல்
பார்க்க வெண்ணியே பலவித மலரிடை குவளைகள் அலர்வது
புனலலை முடிவதற்கே-நோக்கு மாண்பதே
ரூான : அயில் கண்டகங் குழை ஒயில் சேர் விழியாளே
என்ன மாயமோ அச்சமாயுடலெல்லாம் மெத்தவும் பதறுதே
எச்சதி விளைந்திடுமோ-ஏங்குதே மனம் .
தோழி : மயில் கண்டுனதெழில் பயில் கொண்டிடவிரும்பும்
பாவையே யுந்தன் ع மனதுறு கவலையின் நினைவதேயிது வல்லால்
வினையேதும் விளைந்திலதே-வீணில் ஐயமேன்.
ஞான : அகில் சேர் புகைநறம் அலர்த்தும் குழலாளே
ஆரோ பின்புறம் அடுத்ததோர்செடிக்கிடை அடிக்கடி அசைத்திடு அரவமென் செவிதனிலே கேட்குதே பாராய்.
உக்கிரமன்-வீரசிங்கம் ፵5Gሠj (வீரரே. எ. மெ)
இராகம் மோகனம் தாளம்: ரூபகம்
உக்கிர :
இச்சைக்குரியவுந்தன் மச்சான் தனை விடுத்து ஏதோர்மணமுஞ் செய்ய வாதோர் கருத்துத்தானே இடங்கொள் மத கரிவாய் அடங்கு மிரை எவரும் எடுத்த துலகிலுண்டோ தொடுத்தென்
வயமுங்கண்டே

Page 41
- 56
வீர
வீரத் தனத்தில் மிக்க சோரத் தலைவனென்ருல்
விளையும் குழந்தைதானும் முலையும்குடித்திடாதே கோரப்புலியுஞ் சிங்கம் சோரத் தமதுள் ளங்கம்
கொடிசெய் பூதந்தானும் அடியும் பெயர்த்
திடாதே
உக்கிர :
அருண ன மருந்தேரைத் திரணமெனப் பிடித்து
அண்டம்படச் சுழற்றித் துண்டம்பட முறிப்பேன் வருணக் கருவின்மூலம் உதிரப் பொடித்திடுவேன்
வச்ர குண்டன்தானும் அச்சப்படுவான்முன்னே,
உக்கிரமன் வசனம் : தோழனே ! சாக்கிரதை. எமது தீர்மானங்கள்
உனது ஞாபகத்தில் இருக்கட்டும். அதோ அவளும் தோழியுந் தானே - மறைந்து கொள்.
ஞானம்-தோழி 5(15 (பொங்கும். நலம் எ. மெ.)
இராகம்: ஆனந்த பைரவி தாளம்: ஆதி ஞான கொஞ்சுங் கிளிமொழி வஞ்சியரஞ்சித
குளிர்மதி முகத்தாளே
பிஞ்சின் பிறை மலர்ந்த புஷ்பமென்னடி பாங்கி
தோழி : தண்பெற்ருெளிர் மணி பண்புற்றியைதரு
தையலரே கேளும் கண்ணுக் கழகுதரு காந்தள் மலரீதம்மா
ஞானம்; கந்தங்கமழ் தரு சந்தகில் சிந்திய
கார்குழலே கேளாய் N பொந்திங் கணிமலர்ந்த புஷ்பமென்னடி-பாங்கி
தோழி : பந்தம் செறிமதி பிந்தும் முகஒளிப்
பாவையரே கேளும்
சந்திங் கணிமலர்ந்த தழைநிறப் பூவிதம்மா

ー57ー
ருடனம் கொத்தின் முழுமணி தத்து விசித்திரக்
கொடியிடை யாளே கேளும் மெத்தும் புதரருகே மேவும் மலரென்னடி.
தோழி : சத்தம் செறியொலி முத்தின் பணியணி
தொய்யிடையாளே கேளும் துத்தம் எனஒளிரும் துடிலில்லிப் புஷ்பமம்மா.
ஞானம் வசனம் : ஐயோ 1 ஐயோ! அண்ணு! அண்ணு !!
விக்கிரமன் வசனம் : தோழா கெட்டியாக அவளைக் கட்டு வாயில்
துணியை அடை. இவளை மாத்திரம் கொண்டு செல்வோம்.
உக்கிரமன் எண்சீர் விருத்தம்
X கரும்பனைய இன்மொழியே கமழ் செந் தேனே
காந்தள் மலர் உன்கரங்கால் பிணித்திப் போநாம்
விரும்புமுந்தன் மைத்துனனும் விக்ரம வீரன் விஞ்சுமலர் வஞ்சிவனச் சோலை தன்னில்
வரும்வழியே நோக்கியெமைக் காத்து நிற்பான் வஞ்சமண முள்ளவுன தண்ணன் மீதே
அரும்புபகை சொல் சமய மிதுவு மல்ல
அன்னவன்முன் உன்னைவிடுத் தறைகு வேனே.
விசயன் எண்சீர் விருத்தம்
>(மாசையொளி ரிம்மனையென் மனதுக் கேற்ற
வல்ல பணி செய்துநிற்கும் காவ லாகேள் நீசதலை நோவுடனே தேகந் தானும்
நிகழ்த்தரிய வருத்தமதா யிருப்ப தாலே ஆசைமிகு மென்பிறவி தனை நான் காண
அவ்விடத்திற் செல்வதற்கு முடியா தென்று தேசையுறு மென்மனைக்கு வந்தே காணச்
சீக்கரத்திற் சென்றழைத்து வருகு வாயே 8

Page 42
--58
விசயன் வசனம் : காவலனே! எனது தேகம் அசெளக்கியமாக இருப் பதிஞல், அங்கு வருவதற்கு என்னுல் முடியவில்லை என்று கூறி, என் தங்கையை இங்கு வரும்படி தெரிவிப்பாயாசு.
காவலன் வசனம் : அம்மாவும் தோழியும் கடற்கரையோரமுள்ள நந்தவனத்துக்குச் சென்ருர்கள். சாயங்காலம் இருளாகியும் மனைக்கு வரவில்லை. நானும் தேடியலைந்து விட்டு உங்களுக்குத் தெரிவிக்கவே வந்தேன் எசமானே.
விசயன் வசனம் : ஐயையோ! நீ சொல்வது நிசந்தான.
X விசயன் ஆசிரிய விருத்தம்
சிந்தையே வருந்தி நொந்திடு பயமும் திகைப்புமா யிருக்கு தையையோ சிதடணும் விக்ரம வீரனே ரச்சம்
சீரிலா வரசனேர் பக்கம்
எந்தை தா யற்ற இளமதிச் சிறுமி
எத்தனை சொல்லியும் மறந்தே இதுவரை நேரம் எங்குசென் றனளோ
என்னதான் சதியதோ அறியேன்
விந்தையே பொழுது போய்விளக் கேற்றி
விளங்குமீர் நாழியு மாச்சு . விரவிய தென்றல் சுகித்தயர்ந் தனளோ
விரை மலர் பறித்ததிற் றழும்போ
W முந்தையோர் பகைகள் முற்றுமே யறிவாள்
மூரிருள் வரைக்குமே நில்லாள் முத்தொளிர் முறுவல் உற்றவென் தங்கை
மோசமென் பட்டயர்ந் தனளோ,
4.

- 59
விசயன் தரு. (என்னசை. எ. هه.(
இராகம் கீரவாணி L ఫాగా తీ தாளம்: அடதாளம் பல்லவி
சோதிச் சுடர்முக ஆசைப் பிறவியென்
தங்கையா ளெங்கேயடா-விரைந்து சொல் தங்கையா ளெங்கே யடா.
agoJ6Jub சோதிச் சுடர்முகச் சேயிழை என்தங்கை
சொக்கு மிருள் தன்னில் எக்கதி யானுளோ ஆதி பரப் பொருள் அத்தனே உன்னருள்
அல்லாதெமக் கொரு நல்ல துணையில்லை.
(சோதி)
இச்சைக்குரிய என் பச்சைப் பசுங்கிளி
இன்பமனேகர நேசவுல் காசியும் அச்சத்துடன் வெகு நேரமே சென்றதால்
அண்ணன் சினப்பாரென் றெண்ணிப் பயந்தாளோ X. (GF (Tg) 3. அன்னரும் தந்தை தாய் அற்றபின் என்துயர்
ஆறக் கிடைத்த பொற் பேருன தங்கையாள் என்னை விட்டோர் கணம் தனிலும் பிரிந்திராள்
என்னென்ன மாயமோ ஏங்குதென் நெஞ்சமே. (சோதி) 4. கொஞ்ச வயதெந்தன் கஞ்ச மலரன்னம்
கோதைச் சிறுமியெப் போதும் வனத்தினில் மிஞ்சுமிருள் தனக் கஞ்சி அங்கே நில்லாள்
வஞ்சக நெஞ்சர்கள் தீங்கு செய்தார்களோ .
g (சோதி) விசயன் வசனம் : ஐயையோ என் தேவனே! வஞ்சகர் நிறைந்த உலகிலே வஞ்சிக் கொடியாளை எங்கே தேடுவேன்? என் சிந்தை கலங்குகின்றதே தேவா.
காவலன் வ்சனம் : எசமான்; அதோ தோன்றும் நந்தவனத்தில்
தேடிப் பார்க்கலாம் வாருங்கள்.

Page 43
س-60 س--
விசயன் தரு (என்னசெய்வேன்எ.மெ) - :്ക്ക് இராகம் : ისrtიuთfl o-ს n-t იცთr&ldმრ} "' Ory தாளம் : ரூபகம்
என்பிறந்த தங்கைதனை இங்கு காணேனே எங்கே யென்று தேடுவேனே யேசுநாதனே.
2 அன்னை தந்தை அற்றதுயர் ஆறுமுன்னமே
அரிய தங்கை தனைப்பிரிந்து அலையலா னேனே
3. அன்ன மெனவே நடந்து அருகில் வந்துமே
அன்பு மொழி சொல்லி யென்னை ஆதரிப்பாளே.
4. சேடிதுணை யென்றிருந்தேன் செல்வமே செந்தேனே
சேர்ந்தவள் பிணித்திருக்க தங்கையைக் காணேன்
5. அன்னியரின் வஞ்சனைக்கே ஆளாய்ப் போனயோ
அண்ண ணெனை எண்ணி எண்ணி அழுது நொந்தாயோ
காவலன் வசனம் : சேடியே! உன் எசமாணி எங்கே? உன் கால் கரங்களைப் பிணித்தவர் யார்? (கால், கரங்களின் கட்டுகளை அவிழ்த்து விடுதல்)
டியன் வசனம் : ஐயையோ, எனது தங்கையைக் காணவில்லையே. அவள் எங்கே ? உன்னைக் சுட்டிவைத்தவர் யார் ? சீக்கரம்
சொல்லு சேடி. ܗ శ్కీ జ్కn cacost છે
தோழி கொச்சகம்
என்னென் றுரைப்பேன் எம்பரனே
இசைக்கென் நாவுந் தான்வருமோ
அன்னம் பழித்த நடையழகி
அரிவை யுடன்நா னிங்கிருந்தேன்
பென்னம் பெரிய பூதமெனப்
- பிறகே யிருவர் பதுங்கிவந்து
பின்னம் படவே பிணித்துமது པ་
பிறவி தனக்கொண் டேகினரே.

-61
தொழி வசனம் : ஐயையோ! எசமானே, என்ஞல் ஒன்றும் hyet தற்கு முடியவில்லை. இரு பயங்கர பூதங்கள் வந்து என்னைக்
கட்டி விட்டு உங்கள் தங்கையைக் கொண்டு சென்றன ஐயா,
விசயன் வசனம் : ஐயோ தேவனே என் நெஞ்சை அடைக்கிறதே.
உலகமே சுற்றுகிறதே.
விசயன் தரு. (எந்தன் மதி மந்திரி.எ. )buמ*(
இராகம் : நீலாம்புரி தாளம் : ஆதி
என்னரும் பிறவியாளே-உனக் கிச் சதி வரவும் நாளோ முன்பகைவர் செய்யும் பாழோ-உளம்
மோதுதுய ராகுதையோ
* நாடு பொய்கை செல்லல் தீதே-என
நாளுஞ் சொல்லி வந்தேனீதே கேடு நிறை வஞ்சர் வாதே - பட்டுக்
கெட்டலைய வாச்சிப் போதே
3. உனக்குகந்த மணமதொன்றே-பேசி
உடன் வரவே சொன்னே னன்றே எனக்குகந்தா ளெங்கே யென்றே-கேட்கில்
ஏது பதில் சொல்வேனின்றே
நெஞ்சயர்ந்து சோருகுதே-எந்தன்
நினைவு தடுமாறுகுதே மிஞ்சுகளையாய் வருகுதே-இந்த
மேதினி சுழலுகுதே.
காவலன் வசனம் : பாங்கியே, எசமான மாளிகைக்குத் தூக்கிச்
செல்வோம் வருவாயாக.

Page 44
-62
மனுேகரன் தோற்றம்
வச்சிரகோ மேதகமும் வளங்கொள் நீல
வன்னமணி துன்னியொளிர் வதன காந்தி
மெச்சிடப்பொன் வைத்தமணிப் பணிகள் பூட்டி
மேன்மைசெறி நற்குலத்தின் மகிமை தோன்ற
முச்சுடரொன் முனபரன் தனையே நெஞ்சில்
முன்னிருத்தி ஒன்னலர்க்கும் கருணை செய்யும்
உச்சிதம னேகரனம் உரவோன் தானும்
ஓங்குசபை யருனதின்முன் தோற்றி னனே
மனுேகரன் கடிதம் வாசித்தல்
ஆசிரிய விருத்தம்
பரணருள் பெருகும் மனேகர னறியப் பாங்குட னெழுதுமிந் நிருபம்
பதிதன மரசன் சதிமிகக் கொடுமை
பண்பிலா மைத்துன னென்போன்
திருமண மெனது தங்கையைக் கேட்கத்
திடமுட னில்லையென் றதினல் தீங்குக ளேதும் செய்திட நினைப்பான் தேர்ந்த நற் றுணையெமக் கிலையை
அருமைசேர் கல்விக் கழகமா மதிலே
அருங்கலை கற்குமந் நாளில் அன்புட னெனது தங்கையே மணக்க அளித்தநல் வாக்கையே நினைந்து
பெரிதுமிக் கடிதம் கண்டதும் விரைந்தே
பெண்னைவந் தேற்றிட வேண்டிப் பிரியவுன் வரவைத் தினமெதிர் பார்க்கும்
பிசகிலா விசயனென் பெயரே.

-63
மனுேகரன் வசனம் : ஆகா ! இதுவென்ன விபரீதம். அருமைத் தோழனுகிய விசயனுக்குப் பலவித கெடுதிகள் இருப்பதாகவும் நான் முன்பு வாக்குப் பண்ணியபடி தனது சகோதரியை ஏற்றுக் கொள்ளும்படியும் எழுதப்பட்டிருக்கிறதே. ஆபத்து வேளையில் உதவுவது தானே உண்மை நட்பு.
தோழனே ! உடனே வேட்டைக்குரிய ஆயுதங்களுடன் புறப் படுவீராக,
தோழன் வசனம் : தங்கள் உத்தரவுப்படி சித்தம் செய்கிறேன் பிரபு.
மனுேகரன், தோழன் கொச்சகத் தரு.
மணுே : கொச்சகம்
மதிசேர் கல்விக் கழகமதில்
மாண்புற்றிடு மென் மனம் பொருந்தி நிதிசே ருந்தன் தங்கைதனை
நிசமாய் மணப்பே னென்றுறுதி விதிசேர் வாக்கொன் றளித்தனன் நான்
விசயன் எனுமென் தோழனுக்கே
- தடு
இராகம் : எதுகுல காம்போதி தாளம் : ஆதி
சதி சேர் கயவர்கள்
வதியும் நகர் நனிலே-தக்கதோர் துணை தமக்கிலை யென அவர் மனத்துயர் படுவதால்
தான் விரைந் திது சணமே-யேகிடுவேனே தோழின் கொச்சகம்
கந்தங்கமழும் சண்பகமும்
கனசுந்தரமார் அல்லி முல்லை முந்தப் பாக்கும் தேக்குடனே
முள்ளார் வருக்கைத் தருக்களொடு விந்தம் மறைக்கும் பூம்பொழில் சூழ்
விசிதத் திசைபெற் ருெளிர் வனத்தின்

Page 45
மணுே :
--4 6 س
தரு : பந்தற் கொடியென
எந்தப் புறத்தினுமே-பரவு மென்மலர் பனிமது சொரிதர கனிரசமுறு நலம்
பரவசமுறு வழியே-தான் நடப்போமே.
கொச்சகம் கதிரும் மணியும் ககனமொடு
கவினக் குயிற்றும் மாளிகையும் பிதிரும் பொன்னின் அம்பிடையே
பொருந்தும் பவளக் கோட்டைகளும் முதிரும் மணிசேர் சாலைகளும் முனைசே ரரசர் வீதிகளும்
தரு : அதிரும் படைபல
விதிரும் அணிஅணியே-ஆனதே சித்ரம் அமைத்தரு நடவழி இடைக்கொரு கொடிதொடு ஆனந்த பாஸ்கரமே-அந்நற்காட்சியே
மளுேகரன் வசனம் : தோழனே ! காட்டுப்பாதை சமீபித்து விட்டது.
ஆயுதங்களைச் சித்தம் செய்து கொள்வோம்.
உக்கிரமன் எண்சீர் விருத்தம்
X நித்தமெனக் குற்றபல மதிகள் ஒதி
நேரமறிந் தே களவு விளைக்குந் தீர
உத்தமனே நத்துமிளங் கோதை யாளும்
உள்ளறிவு தான் மயங்கிக் கிடப்ப தாலே
சந்தமிடா தேயவள்வாய் திணித்த சீலை
தனையெடுத்தே கால்கரங்கள் அவிழ்த்திப் போது
மெத்துகளை மூர்ச்சையது தெளிதற் கான
மேவுவழி யீதுசணம் புரிகு வாயே.

u 5
உக்கிரமன் வசனம் : தோழா ! சத்தங்காட்டாது சென்று அவள்
வாயில் அடைந்த துணியை வெளியே எடுத்து விடு
வீரசிங்கன் வசனம் X ஆகா! என்ன அழகு. சந்திரனைப் பழித்த வதனமும், தங்கத்தையொத்த மேனியும், மின்னலைநிகர்த்தஇடை யும், கார்மேகத்தை ஒத்த கூந்தலும், என்னுல் வர்ணிப்பதற்கு முடிய வில்லையே.
மக்கிரமன் வசனம்x இன்ஞெருவன்மூபுண்ணேப் பார்த்து இப்படி
ஆசைப்படுவதா? > r Q) 9- es
உக்கிரமன், வீரசிங்கன் தரு.(சொல்லரிய நீல. எ.மெ) இராகம் : பைரவி தாளம் : ஆதி
உக்கிர : கன்னியிவள் தன்னழகின்
காந்திதன்னை என்ன சொல்வேன் கானமயில் தானுமிவள்
சாயலுக் கொவ்வாதே
வீரசிங்க : மின்னிமைக்கும் பைந் தொடியாள்
சொர்ண முகத் தேசுமின்றி மேனிபசும் பொன்னெளியின்
மேன்மையல்லோ பாரும்.
உக்கிர : சித்திரக் கொடியிடை சேர்
உத்தமியாளின் வனப்பை செப்புதற்குத் தக்கதொரு
ஒப்பனை காணேனே
விரசிங்: மித்திரனும் விக்கிரம
வீரனுக்கே நல்லதிஷ்டம் மேதினி யவனடையப்
பாக்கியம் பெற்ருனே
உக்கிர ஊர்வசி யரம்பையோடு
மேனகை திலோத்தமையும் உற்ற இவ்வழகியட்குச்
சற்றுமிணை யாமோ,

Page 46
-66
உக்கிரமசிங்கன் வசனம் : அட தோழனே! கண்களை விழித்துக் கொண்
டாள். மறைந்திருந்து கவனிப்போம் வா. வா.
A. * ஞானம் கொச்சகம்
மதுவார் குழல்நற் பாங்கியெங்கே
மலர் சேர் பொய்கைக் கரைதனில்வாய் சதியாய் இருவர் துணிதிணித்தே
தாவிக் கரங்கால் பிணைத்தனரே இதுவென் வியப்போ இங்கு வந்த்ேன்
இருள் சேர் வனத்தே யாருமில்லை எதுவோ வழியும் தெரியவில்லை
எழிலார் மனநான் செல்வதற்கே
ஞானம் வசனம் : ஆ ! பரிசுத்த தேவதாயே! இதுவென்ன ஆச்ச ரியம். நாணிப்போது எங்கிருக்கிறேன். இதுவோர் அத்துவான கானகமாகவன்ருே இருக்கிறது. நானும் பாங்கியும் கடற்கரை யில் இருக்கும் போது இரு பயங்கர பூதங்கள் தோன்றி எனது கால் கரங்களைக் கட்டி, வாயில் துணி அடைந்தனவே, ஐயையோ தேவதாயே! எனது பாங்கியின் கதி என்னவாயிற்றே ! நான் இப்போது எங்கு செல்வது? வழியும் தெரியவில்லையே. அந்தரித் தவர்க்கு அடைக்கலமான தாயே! உம்மை நம்பினேன். என்னைச் த3 கவிடாதேயும் அம்மா . -
உக்கிரமன், ஞானம், வீரசிங்கன் தரு,
(புத்தியில்லாதவ. எ. மெ.)
இராகம் : கரகரப்பிரிய ሎ தாளம் : ரூபகம்
உக்கிர : இன்பர சக் கிளியே! பெண்ணுளேநீ
எங்குதான் சென்றிடுவாய் ?
வசனம்?*அடிபேதைப் பெண்ணே! இந்த இடமோ எனது
ஆட்சிக்குட்பட்டது. எத்தனை புயபல பாக்கிரமம் மிகுந்த வீரஞயிருந்தா லென்ன, அரச பரிவாரமாயிருந்தா லென்ன
என்கையில் சிக்கியபின்-தமதில்லம்
ஏகினர் ஆருமுண்டோ.

-س-67--
ஆானம் : துன்புற்றென வருத்த-உனக்கொரு
தீங்குநான் செய்திலனே
வசனம் xஐயோ! அண்ணமாரே! யானே உங்களுக்கு எவ்வித
தீங்கும் செய்யவில்லையே. என்னை ஏன் வருத்துகின்றீர்கள்.
அன்புற்ற என்பிறவி-அண்ணரிடம்
ஆவலாய் ஏகிடுவேன்.
வீரசிங்கன் உன்னரும் மைத்துனரே-அரைச் சணத்
தோடி இங்கே வருவார் வசனம் X பெண்ணரசே! உன்மைத்துனன் இப்பொழுது வந்திடு
வான்-உன் காதலைத் தீர்ப்பதற்கு,
பின்னமில்லா தவரை-மணந்து நீ பேறு பெற்றுய் திடலாம்.
ரூனய கன்னக் கொலை களவு-புரிந்திடும்
காதகனே யெனக்கு சொன்னய மற்ற உன்னை-மணம்
பேசச் சொல்லி யனுப்பியதார்.
உக்கிர திண்ணமாய் என்னுரை கேள்-இணிமனை செல்ல முடியா தடி உன்
வசனம் Xஅடிபெண்னே! உனது அண்ணன் எனது ஆருயிர்த் தோழனுகிய விக்கிரமனையும் என்னையும் கள்வர்கள்கசடர்கள் என்று நிந்தை மொழிந்தான் அதனுல்,
அண்ணன் கெறுவமதை விரைவில்
அடக்கி வைப்பேனறிவாய்.
y1orಳ್ಳ! எண்ணமில்லாதவனே-உனது சொல்
இங்கு பலிக்கா தெடா
கண்ணின் இமையெனவே-பரனருள்
காக்குமடா எமையே.

Page 47
வீரசிங்கம்: வல்லமை தானறியா-முன்னேநின்று
வாய்மதம் பேசுகின்ருய் கொல்லும் மத கரிமுன்-சிறு முயல்
கூவியெதிர்த்தது போல்,
ஞானம் : வெல்லுமுன் வீரமெல்லாம்-தனித்தொரு
游— மெல்லியாள் மீதினிலோ
புல்லனே யுன்னையன்றி-உலகிலோர்
பேதைய ரில்லையடா.
உக், வசனம் : என்பெயர் கேட்கில் அகிலாண்ட கோளமெல்லாம் அஞ்சிக் கலங்குமே. அப்படிப்பட்ட வீரஞகிய என்னை,
உக்கிர : அஞ்சிடாதே யெதிர்க்க-உனக்கென்ன ஆணவம் வந்த தடி வஞ்சமொழி யுரைக்கில் தயவின்றி வாட்டுவே னுன்னுடலம்.
மனுேகரன் எண்சீர் விருத்தம்
நில்லுமடா வஞ்சர்களே ஓடா தீர்கள்
நீட்டுமுங்கள் ஆயுதத்தைக் கீழே போடும் கொல்லுமடா நின்றவடி பெயர்ப்பீ ராகில்
குண்டு"றெடி’ வண்டர்களே குறிதப் பாது கல்லுமடா உங்கள் மனக் கடுமைக் கீடோ
காரிகையாள் தன்னை மிக வருத்தும் பாங்கைச் சொல்லுமடா மூடர்களே உயிரைப் பேணித் தேற்றமுடன் நானறியச் சுறுக்கிற் ருனே. மனுேகரன் வசனம் : அடா மூடர்களே முதலில் உங்கள் வல்ல ஆயுதங்களைக் கீழே வீசுங்கள். எதற்காக இந்தப் பேதைச் சிறுமியை வதைக்கிறீர்கள். சீக்கரம் பதில் கூறுங்கள். இல்லையேல் உங்கள் உயிர் உடலில் தரிப்பது அசாத்தியம்.

-69
உக்கிரமன், வீரசிங்கன் கொச்சகம்
உக்கிர வயமொன்றிய சிங்கே றனைய
வாரத் துரையே வழுத்திடக்கேள் நயமொன்றிய வென்தோ ழனுக்கே
நாடும் மணந்தான் செய்துவைக்க வீரசி செயமொன்றிய விச்சே யிழையைச்
சேரும் வனத்திற் கெடுத்ததல்லால் பயமொன்றிய பாதக மெதுவும் -
பாரித் திடநாம் நினைத்திலமே
வசனம் : ஐயா, வீரம் பொருந்திய சிகா மணியே! எமது தோழ ஞகிய விக்கிரமனுக்கு மணம் செய்து வைப்பதற்கு இப் பெண்ணைக் கொண்டு வந்ததேயல்லாது வேறு கெடுதி விளை விப்பதற்காகவல்ல எசமானே!
மனுேகரன் வசனம் : பொய்யைச் சொன்னலும் பொருந்தச் சொல்ல வேண்டும். நாங்கள் இருவரும் துவக்கும் கையுமாக இங்கே வராதிருந்தால் இந்தப் பெண்ணை நீங்கள் என்ன பாடுபடுத்தி யிருப்பீர்களோ - பாவம். ::::گا
மனுேகரன் தரு (மானே மறையா எ. மெ.)
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ரூபகம்
அஞ்சிக் கலங்கா தே-பெண்ணுளே நீ அஞ்சிக் கலங்காதே
சரணம் அஞ்சிக் கலங்கா தே வஞ்சி மின்னளே நீ
ஆனந்த தற்பரன் தானிந்த நேரத்தில் தஞ்சமுனக் கென்றே அஞ்சா தெனை விட்டார்
தாட்டிக மாயுன்னை மீட்டிடுவேன் திண்ணம்
(அஞ்சிக்)

Page 48
-70
கூற்றுவன் கைப்பட்ட ஆத்துமம் தப்பியே
கொண்ட சடலத்தி லண்டிவந் தெய்தினும் சாற்றுமித் துட்டர்கள் மாற்றமா யென்கைக்குத்
தப்பிப் பிழைத்திடார் செப்புந் துயர்கொண்டு (அஞ்சிக்) செஞ்சொல் மொழியப ரஞ்சிதப் பெண்ணுளே
சேரும் வனத்தினில் சோரர்களா மிந்தப் பஞ்சமா பாதகர் வஞ்சனை தும்சமாய்
பங்கப்பட அவர் அங்கம் பிழப்பேன் நீ
s (அஞ்சிக்) அண்டமுகடது துண்டு பட்டாயினும்
அந்தரம் பாதலம் எங்கிவர் போகினும் கண்ட மோரைந்தும் கழைந்து போராடினும்
காரிகை உன்னை நான் தீரமாய்க் காப்பேன் நீ
(அஞ்சிக்)
மனுேகரன் எண்சீர் விருத்தம்
வண்ணமுக மாதரசே மானே தேனே
வண்டணங்கும் பூங்குழலே வனப்பில் மிக்க ஒண்ணுதலே பெண்ணணங்கே யுரைக்கக் கேளும்
உற்ற துயர் அற்றிருப்பீர் இன்ப மாக எண்ணமின்றி உம்மைவதை புரிந்த வீரர்
ஏற்றமுறு கால்கரங்கள் பிணிப்பேன் நானும் திண்ணமரத் தோடு கரங் கொடுக்கா ரா கில்
தீட்டுவெடி நாட்டுமுயிர் சிதையத் தானே
மனுேகரன் வசனம் : பெண்ணரசே! இத் துப்பாக்கியைப் பிடித்துக்
கொள்ளும். உம்மை வதை புரிந்த இவ்வஞ்சகர்களை ஒவ்வொரு வராகத் தனித்தனி மரத்துடன் பிணிப்பேன். இவர்கள் எனக்கு
ஏதும் தீங்கு விளைக்க எத்தனித்தால் தாட்சணிய மின்றிச் சுட்டுக்
கொன்று விடுவீராக

-- 71
மனுேகரன் தோழன் வசனம் - அடா மூடர்களே! அதோ நிற்கும் பாரிய மரத்துடன் உங்கள் கரங்களை கொடுங்கள். இவரைத் தெரிகிறதா உங்களுக்கு? அறிமுகப்படுத்தி வைக்கிறேன். காந்தி புரம் ஜமீந்தார் மனேகரன் இவரே தான் விளங்குகிறதா ?
உக்கிரமன், வீரசிங்கன் எண்சீர் விருத்தம்
Y ஒன்னலர்கள் பின்னிடச் செய் வலிமை வாய்ந்து
ஒப்புயர்வற் இறவிளங்கும் விறல் பெற் ருேரே
மன்னுமுங்கள் கட்டளையின் படிக்கே நாங்கள்
மாற்றமின்றிக் கால்கரங்கள் அணைத் தேதந்தோம்
இன்னிலத்தில் எங்கள் பிழை தனையே நீரும்
ஏகனுக்காய்த்தான் பொறுத்தே இரக்கம் காட்டி
மன்னுமுயிர் தன்னுடனே விடுவீராகில்
மானிலத்தி லோர்பழியும் செய்தி டோமே.
வீரசிங்கம் வசனம் : பிரபுவே கடவுளுக்காக எங்களை உயிருடன் விட்டு விடுங்கள், நாங்கள் ஒரு இனி போதும் இப்படி நடக்கமாட்
GLn b.
மனேகரன் தோழன் வசனம் : பட்டால் அறிவான் சண்டாளன், பாடுபட்டால் அறிவான் வேளாளன், அடாமூடரே!வினை விதைத் தவன் வினை அறுப்பான். நீங்கள் அன்னகாரமின்றி அடங்கி ஒடுங்கிச் சாகவேண்டும் உங்கள் அட்டூழியங்கள் ஒழிய,
மனேகரன் எண்சீர் விருத்தம்
வண்டலம்பும் பூங்குழலே வடக்கை மின்னே வஞ்சியிடை யேகுலத்தின் மகிமை சேரும்
விண்டலஞ்சேர் தண்மதியை வென்ற ரூப
வெல்லமொழி மெல்லியளே விளம்பக் கேளும் பண்டுவதி ஊரெதுநற் குலந்தன் னேடு
பாரிலுயர் அன்னைதந்தை யுடனும் பேரும்
மண்டிருள் சேர் இவ்வனத்தில் வந்த வாறும்
மாற்றமின்றி யெந்தனுக்குச் சாற்று வீரே,

Page 49
- 72
மருேகரன் வசனம் கார்மேகத்தினூடே இடையிடையே பிரகாசிக்கும் பூரண சந்திரனைப் போல், அநேக வியாகுலங்கள் மத்தியிலும் இன்றலர்ந்த ருேசாமலரை நேர் வதன சுந்தரி, உமது வரலாற்றை நானறிய ஆவல் கொண்டேன் தெரிவிப்பீராக.
ஞானம் தரு. (செப்பரிய. எ. மெ.)
இராகம் : லாவணி தாளம் : அட
1. ஆரமணித் தீரதடப் புயனே - கேளும்
அன்னை தந்தை இழந்ததென் துர்ப்பயனே சேருமுடன் பிறவி அண்ணன் பேரே-ஆரும்
செப்பிடுவார் விசயனென் றிப்பா ரே.
2. பேரெனது ஞானமனேகரியே-எனப்
பிருதுவியி லெனையழைப்பார் தெரியீர் கார் பெருகிச் சீர் வளங்கொள் புவியே- தன்னில்
சித்திரபுரி எனது சொந்தப் பதியே
3xவிரும்பு மெந்தன் மாளிகையில் தானே--உள்ள
விரைமலர்க்கா வனந்தனிற்போய்-நானே அரும்பு தென்றல் ஆடிவரும் போதே இந்த
அசடர் பின்னுற் பதுங்கி வந்திச் சூதே
4. கன்மமொடு கால்கரங்கள் பிணைத்தே-இந்தக்
காத கரென் வாயில் துணி யடைத்தே வன்மமுட னிங்கெனைச் சேர்த்தாரே-நீரும்
வானவன் போல் வந்தெனைக் காத்தீரே.
ஞானம் வசனம் பிரபு! இது தான் எனது துயரமும் வருத்தமும்
கொண்ட வரலாறு அறிந்து கொள்ளுமையா.
மனுேகரன், ஞானம் தரு.(இந்தப்பார். எ. மெ.) இராகம் : நீலாம்புரி ఆsN ఊలిeరొటీలుగాm : 5 மனுே கஞ்சம் நேர் முகநய அழகியே
பஞ்சின் மென் சிறை யனப் பெடையதே கொஞ்சிக் குலவு விஞ்ஞை செஞ்சளி புட்கள் மஞ்சை
கூடி மகிழ் பாடுகுதே

- 73
ஞானம் : விந்தம் சேர், புயரண வீரனே
கந்தம் பார் கவின் தொடு பலவித காரகில் முல்லையல்லி சேரவே திகழ் மல்லி
காட்சி யென்ன மாட்சியதே.
மனுே: சொர்ணம் போல் சுடர்விடு சோபித
வர்ணம் சேர் வனிதா செந்தேனே கேள் வனத்திலோ நாய் முயலைத் துரத்தியே சினமுடன்
சேர வதை செய்குதே பார்.
ஞான பொன்னின் சீர் பொருந்து நற் சவுந்தர
வன்னம் சேர் விசிததே சோமயமே விம்பம் செறி ததியின் சந்தம் பளிங் கெனவே
விளங்குகுதே, களங்க, மின்றி.
மணுே துன்னுமா மணியொளி பரவிடு
மின்னின் சீர் மிளிர் வனப்பொடு தொடு சித்ர மாளிகையின் மெத்தையே தெரிகுதே
செல்லுவழி எல்லை முன்னே
பந்தம் சேர் பவளவாய் மின்னெளியே
சிந்தும் நேர். திரையெறி மார்பகனே சிறந்த எம் மாளிகையின் திறந்த பொன் வாயிலி-ை
சேர்ந்தோம் மனப் பாந்தனே நாம்
راك
ன
ஞானம் வசனம்x அடியாளுக்கு உயிர்ப்பிச்சை அளித்த உத்தமரே! இதோ எமது மாளிகைமுன் வந்து சேர்ந்துவிட்டோம். இங்கு சற்று இளைப்பாறி இருங்கள். எனது அண்ணரை அழைத்து வருகிறேன்.
n a V Osh as sa
ஞானம் வசனம் : அண்ணு,
விசயன் வசனம் : வந்துவிட்டாயா என்பிறப்பான தங்கையே!
X ஞானம் கொச்சகம்
அன்புக்குரிய வென் பிறப்பே அண்ணு வுரைக்கக் கேட்டருளும் துன்புற்றிடுமச் சோரரிடம் துய்யோன் துணைநின் றெனைக்காத்தார் மின் புற்ருெளிரும் என் மனைக்கே விரைந்தே மகிழ்வாய் வந்தனன் நான் வன்புக்குறுமும் துயர்விடுத்தே வல்ல பரன்தாள் போற்றுவமே.
10

Page 50
இராகம் :
விசய :
ஞான :
ଈର୍ଷୀ, ୫ :
ஞான :
ஞான :
-74
விசயன், ஞானம் தரு.(கன்னல் வில்லானே எ.மெ.)
செஞ்சுருட்டி தாளம் : ரூபகம்
கன்னி மின்னளே-கனிரசம்
உன்னு சொல்லாளே-உனக்குற்ற
இன்னல் தன்னுலே-பட்டேன்துயர்
ஈதென் கண்ணுளே
நீசர் கைப்பட்டு-வருந்திட
நேர்ந்ததே கெட்டு-ஒரு துணை
ஈசனர் விட்டு-எமைக்காத்த
ஈகை எம்மட்டு
வஞ்சர்கள் ஒப்பிச்-சென்ருர்
உன்னவாதுடன் அப்பி-அவர்கையில்
அஞ்சாது தப்பி-வருவிதம்
ஆற்று நீ செப்பி
கானகச் சோலை-தீயர்வசை சாற்றுமக்காலை-அழகிய
வானவன் போலே-யவர்வந்து
காத்தார் நல்வேளை,
சோரர்கள் கைதியான-உன்னை
தொந்தரை எய்தி-வருத்திட
வீரமாயுய்தி காத்தவகை
விள்ளாய் இச்செய்தி
கள்வரைக்கிட்டி-மரத்தொடு
கால்கரங் கட்டி-அவரென்னை மெள்ளவே கூட்டி-வந்தாரிங்கே
மேவுமக் கெட்டி

- 75
விச பாக்கியத் தங்காய்-உனக்குற்ற
பங்கத்திலங்கே- துணைவந்த யோக்கியனெங்கே-அவர்க் கென்ன
செய்தோம் நாம் சங்கை .
ஞான x மெத்து பொன் மாடம்-முகப்பினில்
மேவுகபாடம்-தொடுத்தநற் சித்திரகூடம்-தனக்கே நீர் சேமமாய் நாடும்.
ஞானம் வசனம் : ஆருயிர் அண்ணு! கொடிய கள்வரிடமிருந்து தேவ உதவியால் காப்பாற்றப்பட்டு விட்டேன். ஓர் புண்ணிய புருடர் தேவதூதன் போல் வந்து காப்பாற்றியதுமன்றி, எமது மாளிகை வரை கூட்டி வந்தும் விட்டுள்ளார். அவர் கூடத்தில் இருக்கிருர், அவரை உபசரித்து நன்றி தெரிவிப்போம் அண்ணு.
விசயன் வசனம் : ஆகா நான் காண்பது கனவா! அல்லது நிசந்
தானு. எனது ஆருயிர் நண்பர்தானே.
விசயன் பரரிை
சித்தமிகும் பேரறிவின் திறமை வாய்ந்த
செய்யமலர் துய்யமுகச் சிறப்புற் றேனே
மெத்துமணி வைத்தழகு மிளிரும் மாடம்
மேவியிரும் வாய்மைசெறி மெய்யன் பேரீர்
விசயன் வசனம் : என் ஆருயிர் நண்பா! தேடிய பூண்டு காலிற் தடக்கியவாறு எம் துயர் நிறைந்த வேளையில் தங்களைக் கண்ட தும் மழையின்றி வாடிய பயிருக்கு வானஞ் சுரந்தது போன்று ஆனந்தம் அளிக்கின்றது. மாளிகையிலே தங்கி ஆகவேண்டிய கருமங்களைக் கவனிப்பீர் அன்பரே.
மனுேகரன் பரணி
கொத்துமணி மாலைபுனை குணவொய் யாரா
கோகனகி ரூபமுகம் குலவும் நேசா உத்தமனே உன்னுரையை யுகந்தே நாளும்
ஓங்குமணி மாளிகையி லுலவு வேனே .

Page 51
-76
மளுேகரன் வசனம் : ஆப்த நண்பா ! உமது இஷ்டம்போல் மாளிகை
யில் தங்கி இருப்பேன்.
விக்கிரமன் தரு, (ஏகிடுவேனே. எ. மெ.)
ܓ ܬG_S இராகம் : தோடி Ge. so - ஆ~ என் தாளம் : ரூபகம் L66) nî
சோலை செல்வேனே-குறித்தந்தச் சோலை செல்வேனே .
சரனம் 1. சோலை செல்வேனந்த வேலைநிகர்விழிச்
சோபிதப் பெண்ணணங் காளையென் கைதர
மாலையுடன்நிசி வேளைவரச் சொன்ன
மற்றடவீரனும் உக்கிர்ம சிங்கனின்-சோலை
2. வாலப்பருவ வசிய சவுந்தரி
வஞ்சியாள் தன்னை வரித்தென் மனைவியாய்ச் சாலக் களிப்போடச் சோலைக் கிளியுடன்
சல்லாபமரய்விளையாடிமகிழ்ந்திடச்-சோலை
3. கட்டிக் கனிரசக் காதலியோடு மென்
கண்ணுன தோழனும் எண்ணமிட்டிந்நேரம் அட்டியில்லாதென் வரவுக் கெதிர் வழி
அன்புடன் பார்த்தவர் துன்பங்கொள்ளாதிதோ. சோலே விக்கிரமன் வசனம் : ஆ! இதுவென்ன விந்தையாக இருக்கின்றது யான் எண்ணிவந்த பெண் இங்கில்லர்திருப்பதும், தோழர்கள் மரங்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதும்
விக்கிரமன் ஆசிரியம்
சேருமென் நினைவே ஊமரின் கனவாய்ச்
செப்பிட லெட்சைய தாச்சே சிறந்தவுன் வயமே துறந்தனை யெதுவோ
சிரிப்பதோ அழுவதோ அறியேன்

-77
மேருவெற் புயனே சோரமுன் னவனே
மேதினி யீதொரு புதுமை மெத்திடு மரசர் படையெதிர்த் தனரோ
மேவியார் துப்புரைத் தனரோ
காரிளங் கொடி நேர் கன்னியாள் எங்கே
கால்கரம் பிணித்தன ரெதற்கோ
கடுஞ்சமர் புரிந்து களைத்ததோ வன்றேல்
கால்நிலை தவறிவீழ்ந் தனையோ
பேரிடி யெனினும் பின்னிடா வயனே பேசரு மிக்கொடுஞ் செயலே பிருதுவி தனிலே புரிந்தவ ரெவரோ
பிசகிலா துரைத்திடு வீரே.
விக்கிரமன் வசனம் : தோழரே! நீங்களிருவீரும் மரங்களுடன் பிணிக் கப்பட்டிருப்பதேன்? எனது ஆசைக் காதலியெங்கே? உங்கள் வீரபராக்கிரமம் யாவுங் குன்றி மெளனமாயிருப்பதேன்? சீக்கரஞ் சொல்லுங்கள். s
உக்கிரமன் வசனம் : போதுமப்மா போதும் புதுக்குளத்து வேளாண்மை
உனக்குப் பெண்தேடப் போய் பட்ட பாடும் கெட்ட கேடும்.
மரத்துடன் கட்டுண்டு அன்னகாரமின்றிக் கிடந்து நல்ல பாடம் படித்துவிட்டோம்.
உக்கிரமன் ஆசிரிய விருத்தம்
X வினைப்பய னெதுவோ விளைந்ததே யன்றி
வீரநற் பழுதிலை யறியே விரும்புமுன் னருமைக் காதலி தனையே
விதித்தவந் நாள்தனிற் கவர்ந்தே
தினையள வெனினும் மனக்கர வின்றித்
திருந்து முன் வரவையே பார்த்தோம் திடுமென வொருவன் எமதுமுன் ருேன்றிச்
சிரந்தனக் கேகுறி பிடித்தான்

Page 52
-- 8 7 --س-
கனைப்பொடு துவக்கைக் காட்டியெம் மையுமே
கதித்தவிம் மரத்தொடு பிணித்தே கன்னிகை தனையும் தன்னுட னழைத்துக்
கடிதினிற் சென்றனன் மிடுக்காய்
நினைக்கவென் மனது பொறியெழச் சினந்தே
நெருப்பதாய் எரிகுதே நண்பா நிலைபெறும் நாமம் மனேகர னெனவே
நீசனும் புகழ்ந்துரைத் தனனே.
உக்கிரமன் வசனம் : நண்பா, குறித்த தினத்தில் பெண்ணைக் கவர்ந்து வந்து இந்தச் சோலையில் உன் வரவை எதிர்பார்த்திருந்தோம். காத்திராப் பிரகாரம் ஒருவன் துப்பாக்கியுடன் தோன்றி எமது சிரசுக்கே குறிவைத்து, மரத்துடன் கரங்கொடுத்து நிற்கும்படி கட்டளையிட்டு, பிணித்து, மங்கையையும் அழைத்துக் கொண்டு மிடுக்குடன் சென்றுவிட்டான். தன் பெயர் மனேகரன் என்றும்
கூறிஞன்.
விக்கிரமன், உக்கிரமன் தரு (வெற்றி வீரரே. எ. மெ.)
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ரூபகம்
விக்கி தப்பி யெங்கே செல்லுவான்-உயிர்கொண்டு
தப்பியெங்கே செல்லுவான்.
தப்பிவிடுவானே அச் செப்பும் வினையிற் பொல்லான் தையல் தனையுங்கொண்டு வையந்தனிலே செல்லச் செப்புந் துணிவோ மெத்தச்
செருக்கை யடக்கிறேன் பார் செயத்தில் மிகுத்த விக்கிர்ம
வீரன்பகைக்குட்பட்டே.தப்பி

-79
" க்கி : மணத்துக் கெனக்குறித்த மங்கை
தனையே கூட்டி
மாற்ருன் மனேகரன்
மணங்கொள் அவனின் தோழன்
குணத்துற்றிடு விசயன் கோதில்
மனைக்கே செல்வான்
கூட்டத்துட னவரை மாட்டும்
விதத்தில் நின்று.தப்பி.
விக்கி : மறைந்திவ் விடத்திருந்து
மதியா தெனது பெண்ணை மாருய்க் கவர்ந்த வேளை
நானிங் கிருப்பேனகில் பொருந்து முடலை விட்டுப் பிரிந்து உயிரே பட்டுப் பொல்லானழியச் செய்வேன்
அல்லாதினி மேலுந்தான்-தப்பி
உக்கிரமன் எண்சீர் விருத்தம்
சீற்றமுறு மனேகரன்தான் மங்கை யோடு
சேருமவன் தோழனெனும் விசயன் பாலே ஏற்றமுடன் சென்றிருப்பான் இதை நீ ரோர்ந்து
இச்சணத்தில் மன்னவன்தன் னிடத்தே யேகி மாற்றமுடன் ஊர்க்கலகம் புரிந்தே யுந்தன்
மதிக்கரிய சட்டமதை மறுத்தா ரென்று சாற்றியந்த நீசர்களை வதையே செய்தால்
சங்கைபெறு மாதரசுன் கரங்கண் டாயே.
உக்கிரமன் வசனம் தோழா! அந்த மூடஞனவன் பெண்ணை அழைத் துக் கொண்டு, அவள் அண்ணஞன விசயன் வீட்டிற்கே சென் றிருப்பான். நீர் இப்போதே அரச சபைக்குச் சென்று பலவித சாடைகள் கூறி அவர்களைச் சிறையில் மாட்டிவிட்டால், பெண்ணரசி உமது கையில் சிக்காமல் எப்படித் தப்புவாள்? இது தான் தக்கவழி நண்பா.

Page 53
-80
உக்கிரமன் விக்கிரமன் தரு. (மஞ்சார். எ. மெ.)
3. இராகம் : தோடி GY arേക് சாமடவgதாளம் : அடதாளம்
உக்கிர : இரும்புவியில் எவரெனினும் *
இணைந்து முன்னே துணிந்து வரார் தானே-அந்த ஈனனென்முன் வந்துமானம் கெடுத்துமே
கான மயில் தனைத்
தான்பறித் தேகினன் தோழா.
விக்கிர விசய மனே கரரெனு மவ்
வீணருக்கே ஆனவழி பார்த்தே - அவர் வீரங்கள் தரங்கள் வாரங்கள் யாவையும்
ஒரஞ் சொல் சாரங்கள்
ராசன் முன்சொல்லுவேன்-நேசா
உக்கிர புலிப்பழையில் நரிபுகுந்து
பொருந்துமிரை கவர்ந்தது பேலாச்சே-அந்தப் பொல்லாத துட்டர்கள் இல்லாது கெட்டிட
வல்ல என் கட்டாரி
இல்லாது போச்சுதென்-தோழா
விக்கி : இலகு பழுத்திடு மெனவே
மாந்தகிளி போந்தமுடிவாச்சே-பார்பார் இந்தப் பழிக்கவர் சிந்தையழிந்துமே
எந்தவிதத்திலும்
பந்தப்படச்செய்வேன்-நேசா
2 க்கி எந்தவிதம் புரிந்தெனினும்
இருவரையும் கருதுமுயிர் சிதைத்தே-அல்லால் என்மன மாருது புன்மனம் நீருக மன்னன் முன் கூறியே
பின்னப்படுத்துமென்-தோழா

一8l一
விக்கி : வல்லமைசேர் தோழனே கேள்
வருத்தமே விடுத்திடுவாய் தானே-நானும் வாகுற்றரசன்முன் ஏகிச் சணமதில்
வஞ்சகர் துஞ்சிட
மிஞ்சிநற்சாடை சொல்வேனே
விக்கிரமன் வசனம் : இப்பொழுது அரசனிடம் சென்று சாடைசொல்லி
அந்த மூடர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கிறேன் பார் தோழா.
விக்கிரமன் திருச (அரிராம ராம எ. மெ.)
இராகம் தோடி - தாளம் : ரூபகம்
1.
இது சண மோடி ou rrیح مسجr ፰፻ን ቪፃ -- · ·፡r : •ኑ” ”  ̈
ஏறுமாருய்ப் பல சாடைகள் கூறி மதிமூடனன விசயன் தன்னேடு
மாற்ருளுந் தோழன் மனேகரன் தானும்
சிரமற்றே பாற உடல் ரத்தம் பீற
செறுத்தெந்தன் நெஞ்சக் கொதிப் பெல்லாமாற சரசப் பெண்ணுளை சருவுற்றே நாளை
சல்லாப மல்லாடி வெல்வேன் மின்னுளை.
மறங்கொண்டோர் சோரத் திறங்கண்டே யூரார்
மதிபெற்றுப் புகழுற்ற வீரனும் நானே புறங்கொண்டே பெண்ணைக் கரங் கொண்டே நாளே புகழ்பெற்றே மகிழ்வுற்றுப் புவியில் வாழ்வேனே
விக்கிரமன் ஆசிரியம்
எதிரிலா வரச சிங்கமென் றுலகோர் இணைமல ரடிதொழு தரனே ஏற்றமா முனது ஆஞ்ஞையின் படிக்கே
இசைந்தெவர் களும்பணிந் திடவே 1

Page 54
-82
சதிபெறு விசய மனேகர ரென்னும் தறுகண ரிருவருஞ் சேர்ந்தே சாற்றிய வசைகள் தோற்றுமோர் நாவால்
சரிவர விசைத்திட லரிதே
நிதிபெறு முனது சட்டமே பிழையாம்
நீசபா தகம்நிறை யரசாம்
நினைத்தொழு திடலுங் கனத்த தீ தெனவே
நிகழ்த்திய தன்றியே யுனது
பதிபுகழ் குடிகள் பலரையே கெடுத்துப்
பயின்றிடு மச்சமே யின்றிப் பார்த்திப லுனயே நாற்றிசை யறியப்
பணிக்கிடா திருக்கிா?ர் அரசே
ஆஞ்சலோ கழி நெடில் ஆசிரியம்
கடலாடை யுடுபூவில் முடிநீடு மன்ன்ரும் கணித்துநான் பணித்த படிக்கே கதிரேறு பொன்மணிகள் சதுர் கோடி யாகவே
காலிற் பணிந்து தருவார்
விடரேறு மடர்கானில் விலங்கினங் கலங்கியே
விரும்பு மவ்விரை யுணுது விண்ணவர்கள் தானுமே என்நாமம் கேட்டிடில்
விலவிலத் தசைந்தி டார்கள்
படர்வான முகடேழு மிடமாக முழங்காது
பச்சிளங் குழந்தை தானும்
பாலதும் குடியாது சாலவிவ்வுல கேழும்
பலங்குன்றி ய ைசந்தி டாது
அடமேறு முழுமூடர் ஆனவர்கள் தானுமே அடங்கிடா தாண்மை கொண்டார் அவிரேறு மணிவாளால் உடல் வேறு கூறதாய்
அரிந்தரிந் தெறிகு வேனே.

-83
சிந்து
இராகம் : மோகனம் தாளம் 3 ஆதி
பல்லவி
நிந்த்னைகள் பேசினரோ-கயவர் மெத்த நிந்தனைகள் பேசினரோ .
அனுபல்லவி நிந்தனைகள் பேசினரோ-சிந்தையிற் கெறுவந்தானே வந்தனைக் குரியராசன் எந்தனை மதித்திடாது
சீக்கிரத் திருவரையும் ஆக்கிரத்துடன் பிடித்து நாக்குரந் தனைத் துணித்து காக்கை நரிக் கேயெறிவேன் . நிந்தனைகள்
சரனங்கள் பேறுகொண் டெழுந்து சித்தம்
மாறு கொண்டவருன்மத்தம் வீறு கொண்டடித்து ரத்தச்
சாறுடன்தசைகள் கத்தும்
பேய்க்குணக் குறியேனே-அரிந்தரிந்து நாய்தனக் கெறியேனே-மனம் விரும்பி பண்டு நான் விதித்தவழி கண்டமும் மதித்துக் களி கொண்டிடச் சதித்த பழி
வண்டர்கள் எதிர்த்துப் பொல்லா ...நிந்தனை
மத்திரர் கன்னடர் சிங்கர் உத்திரர் பிரான்சர் வங்கர் தத்துவ இத்தாலி கொங்கர் எத்திசை நிலவு துங்கர் மன்னவர் பணிந்தேற்றும்-மகிபனென்னைப் பின்னமாய்ப் பழி தூற்றும்-கொடுங்குணத்தில் மெத்திடு விசயனெடு குத்திர மனேகரனும் மித்திர ரிருவரையும் சித்திரவதை புரிவேன்
...நிந்தனை

Page 55
- 84
தீட்டு மென் னுரை தடுத்து
நாட்டிலுள்ளோரைக் கெடுத்து வாட்டமாய் மொழி தொடுத்த கேட்டினர் தமைப் பிடித்து
தீக்கிரையாக் கேனுே-துகள் துகளாய் மாய்த்துயிர் போக்கேனே-பார்பாரினி திட்டமாயிப் பட்டணத்தோர்
பட்டதிசை மட்டடங்க மட்டியவர் கொண்ட மதி
விட்டழியக் கொட்டிடுவேன் ...நிந்தனை
ஆஞ்சலோ சந்ததம்
வெற்புய முற்று விளங்கு மலங்கிர்த
விந்தைகொள் மந்திரியே வெண்ணவிர் சங்கொடு கங்கு முழங்கிடு
மென்னக ரந்தனிலே
சொற்பெறு மெத்திற தத்துவ முற்றிடு
செறிமணி மகுட ரெலாம் சேரம ணித்திர ளான திறுத்துமே
சென்னி கவிழ்ந்திடவே
துற்குண முற்றென துற்ற வுரைக்கெதிர்
சொற்றிடு பற்றலரைத் துண்டுப டக்கெடி மண்ட வதைத்துமே
சுடரடு வாளேந்தும்
கற்பொரு நெஞ்சுறு மற்றட வீரரெம்
கடிதுறு மழுவரையே கவினுறு கொலுமுன் அரைநொடி தனிலே
கருதியிங் கழைப்பாயே

- 85
ஆஞ்சலோன் வசனம் : மந்திரி அதிவீர கொலைச் சேவுகரை எனது
கொலுமுன் அழைப்பிப்பாயாக.
மந்திரி வசனம் : அப்படியே செய்கிறேன் அரசே
சேவுகர் தோற்றம்
கரும்பொஞற் கவசம் மாட்டிக் கனத்ததோர் தலையிற் சீரா அரும்பிய மீசை தன்னை அழகொடு முறுக்கி வீரப் பெரும்புலி யெனவே சீறிப் பெருத்தவாள் கரமுங் கொண்டே விரும்பியே கொலைகள் செய்யும் வீரரும் சபைவந் தாரே.
சேவகர் தரு (வந்திடும் கப்பற்கூலி.எ.மெ)
இராகம் : பைரவி தாளம் : ஆதி
s
சுந்தரஞ் சேரின்னகர் விந்தையா யாளும் பூபன் எந்தனைத் தானின் நேரம் ஏன் அழைத்தாரோ
கட்டளை தன்னை மீறிக் கெட்டழி காலமேறி திட்டமாய் பழிதூறிச் சோரர் வந்தாரோ அண்டலர் தானும் போட்டி கொண்டிடில் செய்வேன் கோட்டி பண்டெனைப் போலே மட்டி பார்த்தறி வீரோ
பந்தமே கையாற் கெர்ட்டிச் சந்தமே செய்வேன் கெட்டி விந்தமே தன்னைநெட்டி வீசுவே னிதோ மஞ்சாரும் மலையேறிப் பிஞ்சாரும் குலைபறி அஞ்சாரும் நிலைபாற ஆட்டி வைப்பேனே.
மட்டளை வீரராசன் விட்டழை சாரமே தோ
கட்டளை யோர வேதான் நாமே செல்லுவோம்.
சேவுகர் கவி
செருக்களத் தொன்னர் சென்னி சிதறிடப் புரிந்தே யாண்மை பெருக்கிநல் வாகை குடும் பிரபல அரசே போற்றி அரக்கொளிர் மணிக ளேற்றி அடருபொற் கொலுவின் முன்னே வரக்குறித் திடுநற் செய்தி வழுத்துவீ ரறியத் தானே.

Page 56
-86
சேவுகர் வசனம் : இராசாதிராச பரமேஸ்வரா! அடியோரைத் தங்கள் சமுகம் அழைத்த செய்தி தெரியச் சொல்ல வேண்டு
ஆஞ்சலோன் ஆசிரிய விருத்தம்
மின்னேறு மென்னுடைய பொன்னடு தன்னிலே
மிடல்கொண்ட கயவர் தம்மை மேட்டிமை யடக்கியுயிர் வாட்டிடப்புகழ் பெற்ற
மேன்மைசேர் வீரர் கேளீர்.
மன்னதி மண்டலன் என்னதி கண்டமும்
மதித்துவாய் புதைத்து நிற்க மாற்றல ராற்ருது வேர்ப்புற்றெடுங்கவவர்
மணக்குடர் தனப் பிறித்து
தின்னவே நரிகழுகு முன்னரே விருந்தாடும்
தீரணு மாஞ்சலோ னென் திறமான தறியாத விசயனெடு தோழனைச்
சென்றவர் பிடர் மடக்கிப்
பின்னக வேகரந் தன்னைப் பிணித்துமே பிரம்புகொண் டடித்து நீங்கள் பிதிரேறு கொலுவாரு மணிவாசல் முன்பதே
பிடித்துடன் வருகுவீரே.
ஆஞ்சலோ வசனம் : வீர கொலைச் சேவகர்களே! விசயனும், மனேகர னும் எனது சட்டங்களை அவமதித்து குடிகளைக் கெடுத்து வருவ தாக அறிந்தேன். அத்துட்டர்களைப் பின் கட்டக் கட்டி, பிரம்பு கொண்டடித்து எனது கொலுச் சமுகம் இழுத்து வரு 69rf66Trrés.
சேவகர் வசனம் : அப்படியே செய்கிருேம் அரசே,

سسس-87 --
சேவகர் தரு. (சொல்லுரை.எ. மெ.) "
இராகம் : செஞ்சுருட்டி W தாளம் : ஏகம்
1. மன்னவன் பொன்னடிக்கே சொன்னவுரைப் படிக்கே
மட்டிகள் இருவரையும் கிட்டியே நாம் பிடித்தே
2. என்னருங் கைத்திறமே ஒன்னலர்கள் மறமே
ஏறுமாற தாகக் கூறில் எல்லா மறம் புறமே
3. அண்டந்தனைப் பிறிப்பேன் கொண்டல் தனைக் கொறிப்பேன் அஞ்சிடா தெதிர்ப்போர் சிரம் வஞ்சமுடன் முறிப்பேன்
4. மண்டலத் தோர்மாட்சி கொண்டதே என் காட்சி
மாற்றலர்கள் வேர்ப்புறவே ஆற்றுவேன் சூட்சி 5. நற்பளிங்கின் பாலே முற்றிலு மென் போலே
நாட்டமாய்த் தெரியப் போனேன் ஒட்டமாய்ப் பின்ஞலே
பின்னே வைத்த காலை முன்னே வையா தாலே பின்புறமாய் வெற்றி பெறல் என்திறமே வேலை.
மனுேகரன் எண்சீர் விருத்தம்
ஆங்கமணி யோங்குபுய வழகுள் ளோனே ஆனநடு நீதியற்ற அரசன் தீதாய் ஓங்குமணி மாளிகையோ டுளபொன் பூமி
உற்றபல செல்வமெல்லாம் பறித்த தாலே தீங்கினனுக் கஞ்சியிங்கே யிருத்தல் தீதே V
தேங்குமிசை மாங்குயிலுன் தங்கை யோடு தேங்கமல வாவிசெறிந் தொளிரும் நாட்டில்
சென்றெனது மாளிகையில் வைகு வோமே
மனுேகரன் வசனம் : நடுநீதியற்ற கொடியோளுகிய இந்த ஆஞ்சலோ னின் நாட்டை விட்டு, சகல செல்வ வளங்களும் நிறைந்த எனது சொந்தத் தேசஞ் சென்று வாழ்வதே நல்லதென எண்ணுகி றேன். அதற்கு உமது தங்கையின் விருப்பை அறிந்து கூறும் நண்பனே!

Page 57
இராகம் :
விசய :
மனுேக :
விசய :
(ணுேக:
விசய :
மணுே :
-88
ஆவிசயன்ஜமனுேகரன் தரு (ஆகமமா. எ. மெ.)
பைரவி தாளம் : ஆதி
செங்கரமின் மடமயில் எனது
தேசுகந்த ஆசை சேர்பிறவி
தங்கையுளந் தன்னை நாமறியத்
தயவுடன் வருவீரே
செங்கதி ரோன் செறி ஒளி முகனே
தேரிலிங்கோர் ஆறுதலிலையே
பொங்குபைேக சேரிடம் விடுத்தே சென்றிடல் மாட்சியதே.
வயமருவும் திருமணிப் புயனே
வல்லமை சேர் துல்லிபனே உந்தன்
நயமருவு சொற்படி வரவே
நலிந்துளம் வருந்துகுதே
செயமருவும் சிறந்த நற் புயனே
சேரவரும் பொருளெலாமழிந்தே
பயமுடனே பண்பிலா வரசில்
பதுங்கிநா மிருந்திடலேன்
துங்கமிகும் சுவர்ண மின் ஞெளிசேர் தூயமதி செறிமொழி தனையே
இங்கெனது இதயமா மதிலே
ஏற்றுளம் மகிழ்வேனே
தந்கையுந்தன் தையலாள் தனையே
தாவில் மணம் புரிந்துமே எனது சங்கைநகர் ஏகிடில் உமக்கோர்
தாபரபமிங் கெவரோ
விசயன் கொச்சகம்
அன்ன்ம் பழித்த பெண்ணணங்கே ஆசைப் பிறப்பே யறைந்திடக்கேள் பொன்னு மொளியும் போலுனக்குப் பொருந்தும் மணநிட் சயவரதன் மன்னும் கொடிய நகரைவிட்டு மகிழ்வாய்த் தனது நகர்தனிலே
துன்னும் மனைக்கே யெமையழைத்தார் சொல்லுன் மனதின் விருப்
பெதுவோ.

-89
ாயிசயன் வசனம் : என்னுயிருர்த் தங்கையே! பொதுவுடைமை வாதி யாகிய இந்தக் கொடிய ஆஞ்சலோவின் நாட்டை விட்டு உனது காதலருடன் செல்வதற்கு ஏதும் தடையுண்டோ கூறிடுவாய்.
ஞானம், மனுேகரன், விசயன் தரு.
(பொன்னின் நிற. எ. மெ.)
இராகம் : பரசு V w தாளம் : அடதாளம்
எான கதிரும் பொன்னிணை பிதிருஞ் சுந்தரக்
கருணை நண்ணிய அருமை அண்ணு கேள் அதிரும் சங்கொலி விதிரும் எம்மனை
ஆட்சியற்றதோ பிறநகர் மாட்சியுற்றதோ
விசய கனக சுந்தரி யான பைந்தொடி
மானே யென் பிறப் பான தங்கையே ஆன உன்மண வாளனுய் வரும்
அன்பன் சொல்லையே ஏற்கிலொரு துன்பமில்லையே
(எஞான பவளப் பொற்பெனத் திகழு மற்புதப்
பாந்தனே யன்பின் காந்தனே கேளும் தவளத்தார்மணி அழகத்தேயணி
தலைவனுன் சொல்லே எமக்கிதம் நிலையதே யெல்லை,
மனுே பஞ்ச ரஞ்சித வஞ்சியே யெந்தன்
பாவையே ரத்தினத் தோகையே கேளும் வஞ்ச மிஞ்சிய பஞ்ச பாதகர்
வதியும் நாடிதே இனிவை கில் கதிக்கும் கேடதே
ஞான மாமதி முக மேவு மிங்கித
மாரனே அலங் காரனே கேளும் தாமத மின்றி நேசமா யொன்றி - நான் வருவேனே தடையொன்றும் தான்புரியேனே.
விசய அயிலே விழியே மயிலே தோகையே
அன்னமே மட மின்னிடையாளே செயலே வஞ்சகத் தியலே மிஞ்சிடும்
தேசமே விட்டுஅன்பனுறைவாசமேதொட்டு
12

Page 58
-90
ஞான : அண்ணரே யும தெண்ண மொப்பிடில்
அருமைத் தலைவர் தருநற் சொற்படி திண்ணமாய்ச் சிறு கன்னிகை நானும்
திருத்தமாய் வாறேன் உங்கள் மனக் ".
கருத்தை நான் மீறேன்
மணுே : மதுரித மொழி மாதரசே கேள்
மாட்சிசே ரெந்தன் ஆட்சியின் நகர்ப் பதியில் வந்திடில் சதி சேர் பகைகள்
சார்ந்திடாதென்று இதை மன மோர்ந்திடீர் நன்று
மனுேகரன் வசனம் : என்னுசை மிக்க மானே! இக் கொடியோனு டைய நாட்டை விட்டு இப்பொழுதே புறப்பட்டுச் செல்வதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்வோம் வருவீராக,
சேவுகர் விருத்தம்
*திறம்பெறு மரசன் சொல்லைச் சிந்தையில் மதித் திடாது
மறம்பெறு வசைகள் பேசி மடங்கிடா தெதிர்த்தே நீங்கள் து அறமுறை மறுத்த தாலே அனலெனச் சினந்தே யும்மை
பிறங்குபொற் கொலுவின் முன்பு பிடித்துடன் வரச் சொன்னரே சேவுகர் வசனம் : விசய மனேகரர் என்னும் பிரபுக்களே! உங்கள் இருவரையும் அரசர் பிடித்து "வரும்படி உத்தரவிட்டிருக்கிருர் . வருவீர்களாக,
ஞானம் கொச்சகம்
ஆரம் புனைந்த அணிமகுட அரசர் கொலுமுன் அவர்பணிக்கே வீரம் மிகுந்த கொலைபுரிய விடவா ளேந்து சேவுகரே வாரம் மிகுந்த இவர்களுடன் வஞ்சிக் கொடியா ளென்னையும் நீர் சேரப் பிடித்தே கொண்டு சென்ருல் சிறப்பா மதுவே யுலகினிற்கே.
ஞானம் வசனம் : கொலைச் சேவுகரே! இவர்களுடன் என்னையுங்
கூட்டிச் செல்வீர்களாக
சேவுகன் வசனம் : அம்மா! உம்மை அழைத்து வரும்படி அரசர்
உத்தரவு இல்லையே. இவர்கள் இருவரையுந்தான் அழைத்துவரச் சொன்னர், என்னம்மா செய்வோம்.

இராகம் :
oருான
sî Fuu :
ஞான :
-9 l
விசயன், ஞானம், மனுேகரன் தரு.
(காந்தி முகச் . எ. மெ.)
நீலாம்புரி தாளம் ஆதி
மின்னிமைக்கும் ஒண்ணுதலே-மாதே-அந்த
வன்ம மிகு மன்னவ னிப்போதே-பொல்லா
மத மிகு மழுவரைச் சதியுடனேவியே
பின்னமுடன் முன்னழைப்பதேனுே-அதைப்
பேதமின்றிப் போய் அறிகுவேனே .
தங்கமய அங்கமுக அண்ணு-இந்தத்
தையல் மனம் நையு குதே புண்ணுய்-சற்றும்
தயவிலா மனமுறு கயவராம் மழுவர்கள்
பொங்கு சினத் தோடழைத்த சீரே-இதைப் பொருந்த மனம் தெரிந்து சொல்லு வீரே
சொர்ணமுகச் சோபிதப்பெண்ணுளே- உளம் சோக மிக வாகுதென்கண் ணுளே-பொல்லாச் சோரன மரசனெக் காரண மாகவோ வன்மமிகு மழுவர்களைத் தானே-விட்டு வரவழைத்த கரும மறியேனே சங்கொலிசேர் செங்கரமின்னுளே-நாங்கள் தாவி மழு வோர்களின் பின் னலே-மிகச்
சதியுறு மரசனின் பதிமுனரே கியே இங்குடனே வருகுவேன்பெண் ணுளே-நீரும்
இனிது மனை வீற்றுருங்கண் ணுளே
திங்கள் முக இங்கிர்தனே மதியே-அந்த
தீங்கினர் முன் போங்கருமம் சதியே நீரும்
சென்றிடா தரண்மனை நின்றிடி லிதுநலம்
பங்கமுட னேக மன மாறேன்-அல்லால்
பாவியாள் நா னுங்களுடன் வாறேன் ,

Page 59
- 92
மனே : பவள விதழ்ப் பைங்கிளியே தேனே-நீரும்
பரிந்துளங் கலங்கிடாதீர் மானே-ஒளி
துன்னிடு மாளிகை தன்னிலே நீரிரும் தவளமணி திகழ் கொலுமுன் தானே- ஏகி
இது சணத்தில் வந்திடுவேன் நானே.
மனுேகரன், விசயன் எண்சீர் விருத்தம்
மைே x சித்தமது நீர் கலங்கித் தியங்கி டாதீர்
தேனமிர்த மானமொழிச் செழுமின்னளே கத்தனருள் தன்னை நிதம் கருத்தில் வேண்டி
காதகனம் மன்னவனின் உரைதப் பாதே விசய :* மெத்துமவன் பொற்கொலுமுன் சென்றே நாமும்
மேவுமனை தான்விரைந்து வருமட் டாக சுத்த மனச் சேடிதுணை யெனவே கொண்டு
சோபிதப்பொன் மாளிகையில் வைகு வீரே.
விசயன் வசனம் : தங்கையே நாங்கள் அரச சமுகம் சென்று வருமட்டும் உமது பாங்கியுடன் மாளிகையில் மனக் கவலையின்றி இருப்பீராக.
சேவுகர் கவி
பொன்னவிர் ததும்பு மார்பன் புரண்டெழு 'மணியார் காந்தி ܐܶܙ ܙ
மின்னெழு கதிர்வா ளேந்தும் மிடல்பெறு மரசர் கோமான் வன்மமாய்ச் சினந்தெம் மீது வலிதுறு பகைகொள் ளாது கன்னியை விடுத்தே நீங்கள் கடிதினில் வருகு வீரே.
சேவுகர் வசனம் : அரசன் சினங்கொள்ளுமுன் போகவேண்டும், ஓக்கம்
வருவீர்களாக.
விசயன் வசனம் : அப்படியே வருகிருேம் வீரரே,

- 98
விசயன், மனுேகரன் திரு. (பானுலா. எ. மெ.)
இராகம் : பைரவி தாளம் : ஆதி
விசய: ஐயனே உன்னரிய செய்யபா தம் பணிந்தேன்
வையமே லீனர்வதை செய்யவே வருபகை
அகிலத்தே ஒருகுறை மறுவிலா எனையுற்றே மறமுற வதை செய முனிவுற்றே அறமுறை சிறிதிலா கனிவற்றே அரசனு மிதுசணம் கனலென விரவிய மனநிலை மழுவரைச் சினமுடனெது செய்து தனநிலை குலையவே புனலலை துகளென மலைவுற வெனையழை வினையம தறியேனே-சுடர் பர போதா .
பனுே: துய்யனே காயமைந்தார் மெய்யனே யீனனென்மேல்
ஐயனே யுன்னருளைப் பெய்திடாயிந்த வேளை
துங்கமா மணிநில விடுசுடர் " தங்கமா மெனதரு நகர்விடு சிங்கமே யிணை யென விரை கொடு பங்கமே பணநகர் தனிலுறு குதுறு மாதிப னுனவனே மிகு வாதுறு காதக ராம்மழு வோர்களை ஒதுறு வேகம தாக விடுத்தழை மூதுறு கோபம தேதறியேனே.
விச : பாரதை யாளரசன் வீரராம் மழுவோரை
7 கோரமா யேவியேயெக் காரணத் தழைத்தானே
பந்தப்பா டுடனவ னெனையுயிர் சிந்தத்தான் நினைவினிலுறு வினை முந்தப்பா டதுபுரி வதுநிசம் எந்தப்பா த கமதும் நிலைபெறும் படர்வன மதிலுறு கடகரி புலியொடு கெடுவினையுறுமன அடமிவ னிடநிறு கொடியவ னிடுதுயர் கெடவுன தருள் சொரி படர்தயை யுறுதிரு சுடர்பர போதா

Page 60
-- 94 س--
மனுே: சீரதே சற்றுமற்ற காரதே யொத்த நெஞ்ச
^്. பாரமா தூர வஞ்ச ராசனே கொல்வான் விஞ்ச
திரையுற்றே செறிவரை தடையுதா மரையுற்றே வருமிலை தனிலுறு கமலத் தோர் திவலைய தெனவுளம் மலைவுற்றே புரள்பட மோதுமே
சீதள மாமுக சோபித மாதென
ஆருயி ரானகு னகர காதலி
ஆழரு சோகம தாயுளம் மூழ்குவ
ளே கபரா பரனேயருள் தாரும்.
சேவுகர் வசனம் : அரசபெருமானே, விசயன் மஞேகரன் என்போர்
இவர்கள் தான் அறிந்து கொள்ளுமையா .
விசயன் மனுேகரன், ஆசிரிய விருத்தம்
விசய முத்தொளி சிறக்கும் தத்துவக் குடைக்கீழ்
முழுவுல கத்தையும் புரந்தே மூண்டெழு மமரில் மாண்டிடப் பகைவர்
முரண்கொடு சிரந்தறிப் பவனே
மனுே தத்துவம் மிகுந்த எத்திறத் தரசும்
தணிவிலா முறைமுறைப் படிக்கே தருதிறை சுவர்ண பவளமின் மணிகள்
தான்குவித் தடிபணிந் திடவே
விசய : மெத்திய முரச வாத்தியம் முழங்க
மெல்லியர் பன்மலர் தெளிக்க மேனகை யரம்பை தான்விதிப் படிக்கே
மென்சிலம் பொலிபட நடிக்க
மனே சித்திர மணிகள் தத்துமின் கிரணஞ்
செறிந்த பொற் கொலுவினி லமர்ந்தே சினந்தெமை யழைத்த கனந்தரு கருமம்
செப்புவீர் மெய்ப்புர வலனே.

-95
ஆஞ்சலோன் ஆசிரியம் தாரேறு மன்னணுய்த் தாரணி முழுதுமோர்
தனிக்குடை நிழலி லோச்சித் தகுந்தமுடி மன்னரும் பணிந்துதிறை தந்துமே
தாமெனக் கடங்கி நிற்க
காரேற கங்கொண்ட மூடரே கேடரே
கருத்துடன் நான் பணித்த கட்டளைகள் ஆனதைக் கெட்டதெனச் சாற்றியே
கட்டுக் கடங்கி டாதே
பேரேறு மென்னையவ தூறதாய்ப் பேசியே
புரட்சிகள் புரிந்த தன்றிப் பேசரிய வென்குடிகள் தம்மைக் குழப்பியே
பின்னமது வாக நீங்கள்
பாரேறு மாறதாய்க் கலகம் புரிந்ததெனப் பகர்ந்தனர் மெய்யோ பொய்யோ பகர ரிய வுங்களுயிர் தன்னைமுன் பேணியே
பகர்ந்திடீர் பண்ப தாயே, \ SING Å A** ஆஞ்சலோன் வசனம்: எனது கட்டளைகளைக் கெட்டதெனக்கூறிஎன்னை யும் அவதூருய்ப் பேசி, நாட்டிற் கலகம் செய்தீர்களென்று கேள் விப்பட்டேன். இவைகள் உண்மையோ பொய்யோவெனக் சீக்கரம் கூறுவீர்களாக, ܨ
விசயன், மனுேகரன் அகவல்
விச நீர்வளம் பொலிந்து நித்திலங் கொளிக்கும்
ஏர்பெறின் நகரை எங்குமே மதிக்க
மனுே: ஒர்குடை நிழலில் உற்றர சியற்றும் சீர்மணி மகுடச் செம்மலே கேளும்
விச: திருவுள முணர்ந்தே திசையெலாம் வருந்த
அருமையாய் விதித்த ஆஞ்ஞையின் படிக்கே

Page 61
-96
மனுே : திருமணி பணிகள் தேங்குமா Oகையும்
உரிமை சேர் பொருளும் உமக்களித் தனமே விச நிந்தனை மொழியே நிகழ்த்தினே மெனவே முந்திடு பகைவர் முனைந்துநின் சமுகம் * மனுே : வந்துரைத் ததுவும் வஞ்சமா மன்றி
சிந்தனை தனிலும் தீங்குசெய் தறியோம் விச சிறந்தவுன் நகரில் தேங்கிடுங் குடிகள் அறந்தனை விடுத்து அவர்களுக் கிடையே * மணுே மறந்துமே யுரைத்தும் மாறுசெய் திலமே
திறந்திக ழரச சிங்கமே கேளும் * விச: பல்லுயி ருடனே பரந்தமூ வுலகும்
வல்லவோர் சொல்லால் வகுத்தளித் தாக்கும் மனுே எல்லையில் ஞானம் இணைந்தொரு பொருளாம்
நல்லவன் யேசு நாயகன் தனையே *விச நாற்றிசை யறிய நன்மனத் திடனய்
ஏற்றியே போற்றி இறைஞ்சினே மறியே மனுே சாற்றிடி லெமைப்போல் சஞ்சலம் நிறைந்த
நாற்றமா முடல் சேர் நரபதி யுமையே
விச: சிரந்துணித் திடினும் சிந்தையில் மதியோம்
பொருந்துநின் சமுகம் புகல்வது நிச்சமே
மனுே : திருந்துமுன் மனதின் சித்தமா மெதுவோ
தெரிந்ததைப் புரிவீர் செகம்புரப் பவனே.
ஆஞ்சலோன் கழிநெடில் ஆசிரிய விருத்தம் வட்டார வட்டமிட் டெட்டிக் கவிந்திரியும்
வல்ல கங்கம் பதுங்க
வருகுருகு நரிகழுகு பெருகுதிர மூழ்கவே
வன்கணம் நின்று நகைக்க

-97
கட்டாரி தொட்டட்ட மட்டாரு மணிமகுடர்
கை கட்டி வாய்பு தைத்தே கன சந்ர ஒளிதுங்க இனமுந்து மணிதந்து
கட்டளைக் கமைந்து நிற்பர்
பட்டாடை யிட்டொட்டு முட்டாரைக் கொட்டிடும்
படித்தளம் கெடிக்க லங்க படிமுழுது மொருகுடையில் கடிபுரந் தருளுமென்
பாங்கதை யறிந்திலீரோ
செட்டாடை முட்டேறு கட்டாணிக் குழைஞளும்
செம்ம லென்னுரை மறுத்தே செறிகான முறு கோர வரியேறு முன்னரே
சிறியமான் பொருத லெனவே
ஆஞ்சலோன் தரு. (கணத்திணிலடக். எ. மெ.)
இாகம் : மோகனம் தாளம் 3 ஆதி
1. அச்ச மின்றிப் பேசலாமோ-அறிவற்ருேரே
இச்சணத்தில் ஆவி போமே. அச்சமின்றிப் பேசலாமோ இச்சணத்தில் ஆவிபோமே ஆணவமா யென தாணையை மீறிய - வீணரே நானுமைக் காணுவோர் தாமழச் சேணெழு மக்கினி யானதி லிட்டுமே
ஈனமே யுக்கிர்ம மாகவதைப்பேனே
2. சிதைத்துடல் வருத்தி டேனே-அட-தீமொழி பேசிய
மதத்த நாக் கறுத்திடேனே சிதைத்துடல் வருத்திடேனே
மதத்த நாக் கறுத்திடேனே சிந்துமிரத்த மிரைந்து சொரிந்திடப் பந்தென வுந்தலை யந்தர மீதெழ இந்தரை நொந்து வருந்த அரிந்துமே
3 முந்த விருந்து பருந்து அருந்தவே

Page 62
سس-98--
3. மடம்படா அரசன் நானே-எனது சட்டந்
திடம்பெற மதித்துத் தானே மடம்படா அரசன் நானே திடம்பெற மதித்துத்தானே
மன்னணு மென்னடி தன்னை வணங்கியே இன்னில மீதினில் நன்னய மாகவே பின்னமில்லாததோர் இன்னரு வாக்கதஞல் முன்னரே சத்தியஞ் செய்திடு வீரே. ஆஞ்சலோன் வசனம் : அடே மூடர்களே! எனது சட்டத்தின்படி
நடப்போமென்றும்,என்னையே தெய்வமாகவணங்குவோமென்றும் எர்னது முன்னிலையில் சத்தியம் செய்வீர்களாக,
விசயன், மனுேகரன் எண்சீர் விருத்தம்
விச: நீறுபட்டுப் பாறுடலை நிலையாய் எண்ணி
நீசபழி பாதகங்கள் தனையே செய்யும் மாறுபட்ட மன்னவனே யுரைக்கக் கேளும்
- மன்னுவெல்லை தன்னிலொரு மனுவாய் வந்து மனுே: பேறுதர வேண்டியெமக் குயிரே யீந்த
பெட்புநிறை யற்புதனுர் தனையே நெஞ்சில் ஆறுபட வுள்ளுருகித் துதிப்போ மல்லால்
ஆவிநிலை போகினுமுன் னுரைகே ளோமே.
மனேகரன் வசனம் : எம்மைப் போன்ற நாற்றமாமுடல் சேர் உம்மை நாம் ஒரு போதும் வணங்க மாட்டோம். எம்முயிருக் காய்த் தம்முயிரிந்த யேசு ரட்சா பெருமான ஒரு போதும் மறக்கமாட்டோம். இவைகளை அறிந்து கொண்டு எமக்கு எதுவும் செய்து கொள்ளலாம் அரசே,
ஆஞ்சலோன், விசயன், மனேகரன் தரு.
(ஆளிப்பார். எ. மெ.)
இராகம் : பைரவி தாளம் : ஆதி
ஆஞ்ச மாறுற்றே மடமொழி திடமொடு
தூறுற்ற கெடுமதி யசடரே வீறுற்றே குடரது படவிரு கூறுற்றரி வேனே

ஆஞ்ச :
மணுே :
ஆஞ்ச :
விசய
ஆஞ்ச :
மனுே
-99
பாறுற்றே படியொடு நெடிசுடர்
வீறுற்றே நிலையது குலையினும்
தேறுற்றே தினையளவினியுனை
யேறுற்றும் பாரோமே
வானின்றே வளர்மதி யிரவியும்
மீனென்ருய்ப் புவிதனி லுதிரினும்
கோனென்றே மதித்திடாவுஞ் சிரம்
நானின் றரிவேனே.
கூனின்றே சொரிமணி தெரிபுய !
வானின்றே படிபுரி கெடுமதி தானென்ரு ய்த் தாக்கியழித்திடும்
ஏனென்றறி வாயே. கானத்தே கடகரி யொடுசின
நானெத்தே கூனரு வேலினுல் ஈனத்தே குக்கலே நக்கிட "
ஊனைத்தான் போக்கேனே
மானத்தே நிலைபெறு முயிரது
தானத்தே தவறிடி லறமிலா
ஊனத்தே உற்று வருத்திடில்
வானத்தே வாழ்வேனே .
நாளுற்றே நெடிநகர் கெடவரு
பாழுற்றே பாதக மாமொழி காளுற்றே காரண மின்றியே
சூழ்வுற் றறைந்தாயோ நீளுற்ற தடவரை யொடு புவி
வாழ்வுற்றேர் இலையிது நிலையென வாளுற்றே சிரமதை யரியினும்
தாழ்வுற்றுன் சொற் கேளோம்

Page 63
-I 00
மருேகரன் வசனம் : நீர் எவ்வித வாதைகள் புரியினும் யேசுபெருமானை
ஒரு போதும் மறவோம் அரசே,
ஆஞ்சலோன் சந்தத விருத்தம்
தெண்டிரை யண்டி விளங்கு நலந்திகழ்
சித்திர மாநகரில் சேமமி கும்பிர தாப சுசீலனய்ச்
செம்மை செலுத்திடவே
கண்டம தொன்றிய மண்டல ஆதிபர்
கடகரி முகடதனில் கட்டியம் பாரிகை யிட்டுமொன் முய்மணி
காலடி துய்த்திடவே
என்றுமென் னேவலை நன்று புரிந்திடு
ஏற்றமா வீரர்களே இட்டவென் கட்டளை தட்டிய மூடரை
இன்றுட னெட்டாம்நாள்
மண்டுயிர் போக்கவே விண்டிடு துரக்கினில்
மாட்டு மந் நாள்வரைக்கும் மன்னு நரம்பு தெறிக்க வடித்து
மறிப்பினில் வைப்பீரே.
ஆஞ்சலோன் வசனம் வீர கொலைச் சேவகரே! எனது ஆஞ்ஞையை மறுத்து அரசுக்கு அழிவு தேடும் எண்ணங்கொண்ட இத்துட்ட்ரை இன்றையில் இருந்து எட்டு நாட்கள் சென்றதும் Tதுரக்கிலிட்டு கொன்று போடுங்கள். அது வரைக்கும் மிகுந்த அச்சறுக்கையான காவலில் வைப்பீர்களாக,
சேவுகர் வசனம் : அப்படியே செய்கிருேம் அரசே,
6ífaruusör மனுேகரன் திரு. (கார்முகில்.எ. மெ.) இராகம் முகாரி தாளம் : ரூபகம் விசய என்னவிச் சதிவந்தே
இன்னல் படுத்துதே-தேவனே
மன்னனெம் முயிர்கெட
டிாருய் விதித்திடல் நீதியோ,

மனுே :
sisu :
மனே :
விசய
மனுே :
விசய :
மனுே :
-101
சொந்த நகர் விட்டே
வந்தே யிதுபழி சிக்கியே-நானும் பந்தப்படவுந்தன்
சிந்தைக் கருத்ததோ கத்தனே
Ses-- ser கன்னங்கடிய நெஞ்சன்
கருணைய தின்றியே தூறியே-கொல்ல முன்னம் விதித்திட்டான்
மூர்க்கமதாகவே என் செய்வேன்.
நீதி நெறியற்றே
பாவி நினைந் தெமைக் கொல்லவே-தீர்வை
ஒதியெமைப் பொல்லாக்
காகதர்க் களித்திட வாச்சுதே
வாதிற் சிறைவைத்தே
வருத்திட நாம் செய்த தீங்கெதோ-மெத்த சூதுற்றிடும் வஞ்ச
ராசனுளங் கல்லின் வல்லதோ
கானமுறுந் துட்ட
ஒநாய் தனையொத்த மன்னனே-பொல்லா ஈனமுற இட்ட
இடர் தனிலே யெம்மைக் காக்கவே
கொந்தார் குழல் எந்தன்
தங்கை கதியெதோ நாதனே-மெத்தச் சிந்தாகுலங் கொண்டே
நொந்து கலங்குவாள் தேவனே
தீனபரா வுந்தன்
திருவுள மிதுவானல் என் செய்வேன்-வலத்
தான பக்கலின் கள்வன்
தானே திருந்தருள் பாலியே

Page 64
- 102
மனுேகரன் வசனம் : அனந்த காருண்யரான சருவேசுரா ! இந்தக் கொடியோனகிய ஆஞ்சலோ, எவ்வித குற்ற மும் புரியாத எங்களை அநியாயமாய்க் கொல்ல விதித் தான். உமது திருவுளங் கனிந்து எம்மேல் இரங்கியருளும் சுவாமி !
சேவுகர் விருத்தம் இறையவர்க் கிறையா மெங்கள் ஏந்தலின் உரையே மீறிக் குறைமொழி பகர்ந்த தாலே குன்றிடாச் சினங்கொண் டேதான் நிறைபெறு மரசன் கொல்ல நினைந்தநாள் வருமட் டாக சிறைதணி லடைத்தோ மெங்கள் செகபதி மொழிக்குத் தானே.
சேவுகர் வசனம் : தூக்கிலிட்டுக் கொல்லும் நாள் வரை உங்கள் இரு
வரையும் சிறையிலடைத்தோம் அறிவீர்களாக,
விசயன், மனுேகரன் தாழிசை
விசய : உருகுதே யனலின் மெழுகுபோல் மனது
உள்ளுடைந்து துயராகுதே "**. مر
ஊனமான சிறையான தேயிருத்தி
உற்றவன் குறித்த நாளிலே மருள் மதம் விளங்கு மழுவரெம்முயிரை
மாய்ப்ப ரேது கதி யீசனே மயங்கு மேழை கட்கு வயங்கு முன்னருளை
மனது வைத்தருள வேண்டினுேம்
புணுே இருள்படர்ந் தவிட மருவகக் கொடிய
ஈனணு மரசன் தானுமே
ஏற்றமா னதொரு மாற்றமாங் குறைகள்
எண்ணிலா வெமையும் மண்ணிலே
பெருகு பாதகங்கள் புரியு நீசரென
பேசரும் பழிக ளேற்றியே
பேதமா யுயிரை வாதை செய்வதற்கே பெருத்த தீர்வைய தளித்தானே.

rmas b: தோடி
விசய :
விசய :
- 103
விசய மனுேகரர் தரு. (உள்ளங் கல்தன. எ. மெ.)
தாளம் : ரூபகம்
அந்நாட் பபிலோன் தோற்ற
மன்னு கோபுர மேற்ற பின்னுற் பாசையே மாற்றி
பின்னப்படவே செய்து அனந்தந் துதி தினஞ் சம்பொதி
மணந்தங்கிய கரஞ்சிந்தைகொள் ஆரணு பரிபூரணு கதி
காரணு துணை நீயே
முன்னமோர் நரன் செய்த
அன்ன வினையால் நையும் மன்னு மனுவோ ருய்யச்
சென்ம வினையே கொய்ய முழங்கச்சங் குளைந்தும்நித்
திலம்பொங்கும் வளந்தங்கும் முல்லை நிலவிடு வெல்லைமலை வரு
வல்லகுருபர போதா
பண்டு வினை பெருகி
கொண்ட நகரெரிய தொண்டன் புறம் பிரிய
விண்டாய் தூதர் தெரிய பரந்துன் னருள் திறந்தென்மிடி
திருந்தும்படி வரந்தந்தருள் பரனே யமலசெங் கரனே யளவிலா
கருணையே யருள் வாயே.

Page 65
விசய
- 104
பூர்த்திப்பார் சிறைசெய்த
கோத்திரக் கோன் சூசையுய்து கீர்த்தி யெய்திடச் செய்த
வார்த்தைப் பொருளே துய்ய புரைதங்கிய வரசிங்கெனை
மிகுவஞ்சனை யொடு துஞ்சவே புரியு மின்னலில் பெருகுமுன்னருள்
தருகுவாய் பரபோ தா
உள்ளமுற நீர்பட்ட
விள்ளரும் பாடு தொட்டே வள்ள லெமக் கேயிட்ட
வாதை தனிலே கிட்ட உளங்கொண்டருள் களங்கின்றியே
பளிங்கென்றிது விளங்கும்படி உன்னர் கமலசெம் பொன்ஞர் பதமது
என்னளும் துணைதானே.
சீவர்க்க முதளிக்க
மேவுன் ரத்தம் துளிக்க
தாவுன் னுயிரளிக்க
பூவுலகங் களிக்க சிறந்துங் கதி துறந்தும் புவி
பிறந்துந் தரு திறந் தங்கிய திருவேயுனதருள் சொரிய வென தரு
தருணமிது தனிலேதான்
ஞானம் இன்னிசை
கூசுபொழுதே மறைந்து .கொம்பமரப் புள்ளினங்கள்
வாசமலரே குவிய, வலியவிரு ளாச்சுதையோ
தேசுகந்த வண்ணரையும் செல்வமண வாளரையும்
Lont F -- ribas ராசனென்ன மாறுசெய்தா ளுேவறியேன்.

இராகம் :
.
- 105
ஞானம் தரு. (அள்ளிக் கொள்ளை. எ. மெ.)
தாளம் ஏகம்
செஞ்சுருட்டி
பூவிலும்மை நான் பிரியப்
பாவியென்னபாவஞ் செய்தேன் ஐயோ-மன்னும்
பொன்னுயிராம் என் பிறப்பை
மன்னனென்ன தீங்குபுரிந் தானே
ஐயோ வினி வையமீது
உய்ய வழி ஆகுமோ என்நாதா-உங்கள்
அன்பின் மொழி, எந்தனுக்கு
இன்பரசம் ஆகுமல்லோ நேசா.
தந்தையற்றேன் தாயர் அற்றேன்
சந்தமரித் தாயே புவி மீதே-எந்தன்
ஏக்கமே தணியும் மோட்ச
கம் :
14
ராக்கின்ரியே நோக்குவீ ரன்பாக.
ஞானம் g5C15. என்மகனேபொன்மகளே.எ மெ.) செஞ்சுருட்டி தாளம் : ரூபகம் நெஞ்சிரக்க, மற்ற அந்தப்
பொல் லா-நீச மழுவர்களே
வெஞ்சினமாய்த் தானழைத்தே யும்மைத்
தான் வதை செய்தனரோ
ஏதமில்லா அண்ணரையு
மெனக்கேற்ற தலைவரையும்
சூதுமிக்க இந்நகரில் பேதை
யெங்கு போய்த் தேடுவேனே
நினைக்கமனடிமேங்குதையோ எந்தன்
நேசர்கள் தன்னையந்த
தினைத்துணையும் ஈவிரக்கமற்ற
தீங்கனென் செய்தனனே.

Page 66
-10 6
ஞானம் வசனம் அளவில்லாத கருணையுள்ள அமலனயீன்ற அன்னை
மாமரித் தாயே! ஆதரவற்ற அடியாள் முகம் பாரும் அம்மா
விக்கிரமன் ஆசிரிய விருத்தம்
மலரணி குழலே மாதரார் மயிலே
மைத்துணி யேயென தன்பே மதிமயக் குனது அதிசய வனப்பின்
மாட்சிதா னுரைத்திடத் தர மோ
நிலவிடு முனது மணமக லுடனே
நேசவுன் னண்ணனுந் திரும்பான் நீசன மரசன் மோசமே புரிவான்
நேரிழை யுனக்குநான் துணையே
பலரெனை விரும்பி மணமது கேட்டார்
பசுங்கிளி யுன்னைநான் நினைந்தே படியினில் மறுத்தேன் திடமினி யுனக்கே
பண்புடன் மணமக னெனவே
இலகுபொன் னுடனே இசைந்திடு மொளிபோல்
இன்பமா யொன்றியே வாழ இனியெது தடையோ மனமுவந் தருள்வாய்
இணையிலா வமுதசெந் தேனே,
விக்கிரமன் வசனம் அதிரூப சிங்காரியே! எனக்காகவல்லவா உன்னைப் பிரமன் படைத்தான் கண்ணே. விண்மீன்களிடையே பிரபையோ டொளிரும் பூரணச் சந்திரனைப் போன்ற உனது முகார விந்த மானது எனது வதனத்திற் பட்டதும் எவ்வாறிருக்குதென்றல், காலைச் சூரியனைக் கண்டலர்ந்த தாமரைப் புஷ்பம் எவ்வளவு அழகாக இருக்குமோ அதேபோன்று என் இதய கமலமும் மலருகின்றதே கண்ணே - எங்கே உன் ஆசைக் காதலனருகில் வா. ஏன் தயக்கம். கூச்சப்படுகின்ருயா ?
ஞானம் வசனம் : அட சீ. சீ. அற்ப பதரே. எட்டிநில் துட்டகுணம் படைத்த துரோகி. இப்படி எத்தனை பெண்களுக்கு உனது ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசினய்

- 107
ஞானம், விக்கிரமன் தரு (முக்கனிவாயனே. எ. மெ.)
இராகம் தோடி
கரு என ஏமாந்து போகாதே காமாந்த காரனே
இங்கு செல்லா துனது சல்லாபம் பூமாந்தர் தன்னிலே பேதைய ருன்போல
புத்தியற் ருருமுண்டோ புகன்றிடாய்.
விக்கி புத்தியற்றே னென்று குத்திரம் பேசிடப்
பூவையுனக் கென்னடி துணிகரம்
வசனம் : கண்ணே, மனேகரி, என்னைப் புத்தியற்றேன் என்று புகலுகிருய் அதில்தானே உனது சித்திரம் வரையப்பட்டி ருக்கிறதே. உன் வாழ்வை வளம் பெறச் செய்ய வல்லபம் மிக்க உன் காதலன் அருகில் வா. வாடாத மலரே உன்னைச் சூடாதிருக்க மனம் வருந்துகிறதே கனிரசமே.
இத்தரை மீதிலென் இச்சைக் கிணகிங்டா
தெங்குதான் சென்றிடுவா யினித்தானே.
5(5
ஞான எங்கு சென்ருலென்ன சங்கையில்லா தவுன்
எண்ணம் பலிக்கா தடா அறிவற்றேய் இங்கு தனித்தொரு மங்கையா ளென்றெண்ணி
ஈனமொழி விடுத்தே நடந்திடாய்.
விக்கி ஈனமுரைத்திட்டால் மானே நீயென் செய்வாய்
ஈங்குனக் குற்றரில்லை எனவிட்டால்
வசனம் : மனுேசுரனை மணளஞய் அடைந்து கொள்ளலாமென் னும் இறுமாப்பினுல் மமதை காட்டுகின்ருய். அடி பேதைப் பெண்ணே. இந்நேரம் தூக்கு மேடையில் தொங்கிக் கொண் டிருப்பான் உன் ஆசைக் காதலன். அவனுக்குப் பக்கத் துணையாக உன் அண்ணன் இருப்பான்-நீயிங்கு
மான மழிந்திடா தானவென் சொற்படி
மன்றல் புரிந்திடுவாய் எனையன்பாய்

Page 67
-l 08
ஞான : மணமென்றே யோதிய குணமில்லா மூடனே
மருவுமென் னுசைவிட்டே மறந்திடாய்.
வசனம் X காதலின் சீவ சக்தியை இன்னதென்றுணராது, என் ஆருயிர்க் காதலனிடமிருந்து வஞ்சகச் சூழ்ச்சியால் என்னைப் பிரித்த காத கனே, இங்கு நில்லாதே. காம வெள்ளத்துக்கு அணைதேடி கன்னிப் பெண்ணுகிய என்னைக் கற்பழிக்க எண்ணங் கொண்ட காமாந்தகாரப் பேயே,
கணமும் நில்லாதிங்கே செல்லுவாய் சீக்கரம் கன்னியா ளென்னைவிட்டே இது சணம்.
விக்கி : கன்னியா ளுன்னைநான் எண்ணிவந் தேனல்லால்
காரியம் வேறில்லையே. அறிந்திடாய்.
வசனம் : ஆகா! என்ன தீரமான வார்த்தைகள், நெருப்பினும் கொடிதானதாயிருந்தும் என் செவிகட்கு இரசமாகவன்றே இருக்கின்றன. ஒரு பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அத்தனையும் மறந்து ஆட்டம் போடுகிருள் அடங் காப்பிடாரி, அடி இதோ பார் -நீ புலியின் வாயில் அகப்பட்ட புள்ளிமான் - எனக்கு விருந்தாகும் வரையில் உனக்கு விடுத இலயே கிடையாது.
இந்நிலத்துன்னை விட்டெங்குநான் செல்வது
ஏற்றவென் கையில் நின்றே யினித்தப்பாய்.
ஞான : தப்பவிடேனென்று செப்பிடு மூடனே
சாற்றுமுன்ணெண்ணமெல்லாம் விழல்மெய்யாய்
வசனம் X போதும் போதும் உனது பிதற்றலெல்லாம் காமப் போதையில் கருத்தழிந்து கத்துகிருய். அண்ணரையும், ஆருயிர்க்காதலரையும் அநியாயமாய்ப் பழிசுமத்தி அரச தண்டனைக்குள்ளாக்கி, ஆதரவற்ற என்னேயும் கற்பழிக்க எண்ணங் கொண்ட
தப்பிலி யுன்னைநான் அப்பாற் றுரத்திட
தானெந்த னேவலரை வரச்செய்வேன்

-س-09 I --
விக்கிரமன் எண்சீர் விருத்தம்
தேடிமயில் தன்னிடத்தோர் இறகு கேட்டால்
தேவையெனத் தான்மதித்துக் கொடுக்கா தன்ன நாடிமணஞ் செய்யெனவே நயந்து கேட்க
நாக்கொழுப்ப தானவசை மறுத்தே சொன்னுய் பேடியென எந்தனையும் நினை. த்திட் டாயோ
பெண்ணுனது எண்ணமெதிர் பார்க்க மாட்டேன் கூடியுல கொன்றுபட்டிங் கெதிர்த்திட் டாலுங்
கோதை யுனை யிம்சைமணம் புரிகு வேனே.
ஞானம் வசனம் : ஐயையோ காவலரே இவனைப்பிடியுங்கள் அடியுங்கள்
காவலர் வசனம் : அடே மூடா! எமது எசமானி இருக்கும் ம
கைக்கு எதற்காகவந்தாய். (அடித்தல்) இதைப் பெற்றுக் கொண்டு வந்தவழியே திரும்பிப்பாராது ஒடிச்செல்வா
சந்நியாசி இராசா தேவாரம்
ஒலிகொண்ட வுலகம் யாவும் உயர்பர கதியிற் சேர
மலிதரு கருணை யாலே மானிட வுருவாய் வந்து நலிவுவே தனைகள் பட்டே நயந்தரு முயிரை யீந்த
வலியசெம் பதமென் ஞளும் வணங்கிநா னேத்து வேடு
சந்நியாசி இராசா தரு. (ஆதி நாதா.எ. மெ.)
இராகம் : தோடி தாளம் : ரூபகம்
1. சோதிவானே சுடர் புவி யாதிதானே-ஒங்கும்
சொல்லினலே தருபர வல்ல கோனே ஆதி பிதாத் திருச்சுதன் யேசுநாதா-தூய
அமர ரேறே வருமொரு உருமைப் பேறே
2. புல்லனையே பொதிதுணை நல்லிணை யே-என்ன
பொருந்துசீரே யெமக்கருள் சொரிந்துநீரே தொல் மனிதர் புரிவினை யல்லல்தீர-வந்து
தோற்றினீரே புவியெமைத் தேற்றினீரே

Page 68
- 1 1 0
3. கடியெனையே புரிபல மிடிதனையே-எண்ணிக்
கருகிறேனே மனமது உருகிறேனே அடியன் நானே படருமிக் கொடிய கானே-வந்தேன்
ஆற்றிடாயே துயரது தேற்றிடாயே
4. சமுகமோசே தனக்குறு வமிசதேசே-ஆக
தருமமோங்கத் தினமெம தருமை தேங்க அமுதமான உணர்வது விவித போதா-அன்று அத்தன்சீனு மலையுரை பத்துந்தானே.
சந்நியாசி இராசா வசனம் : சோதிச் சுடராய் எங்கும் நிறைந்த கர்த் தாவே! எனது சுக போக செல்வங்கள் யாவையுந் துறந்தேன் சுவாமி. என்றும் எனதுள்ளத்தில் உம்மைத் தியானிக்க அணுக் கிரகம் செய்தருளும் தேவே.
அசரீரி வாக்கு ஆசிரிய விருத்தம்
மனமது குழைந்து மாறுடை யணிந்து
மன்னுமிக் கானகந் தனிலே மதித்துமே தவத்தை விதிப்படி யியற்றும்
மன்னவா செப்பிடக் கேளும்
கனமிகுன் நகரச் சனம்படு துயரைக்
கணக்கிட லரிதெனத் தெரிந்தே கானகம் விடுத்தே தானிரு வுயிரைக்
காத்திட வேயுடன் விரைந்தே
தினமுன தரசைச் செகதலம் புகழச் சிறப்புட னேற்றர சியற்றில் தீங்கெலா மொழிந்து ஓங்கியே செந்நெல்
செழித்தற மோங்கிடு மெனவே
நினைநினை நாயகன் நல்லுரை யதனை
நவின்றிட விங்குநான் வந்தேன் நாட்டமாய் நகர்க்கு நடந்திடு சணத்தில்
நற்கதி பெற்றுஉய் வாயே.

-11 l
அசரீரி வசனம் : கேளும் மகனே! ஒன்றுக்கும் அஞ்சாது தேவனின் அருளை நினைத்துக் கொண்டு உனது நகரம் சென்று எவ்வித துன்பங்களுமின்றிச் செங்கோல் செலுத்தி வாழ்வாயாக.
சந்நியாசி 6ᎧᏘ II Ꮷ-ᎥᎢ தரு. (என்ன செய்வே. எ. மெ.)
இராகம் : லாவணி தரு : ரூபகம்
1. ஈதுபரன் சித்தமென்று இசைத்தார் வானேரே
இக்கணத்துன் தக்க நகர் ஏகுவா யென்றே
2. பொற்பொளிரும் என்நகரம் போக வேண்டியே
போந்த பரன் சித்தமது தேர்ந்து கொண்டேனே
3. ஏற்றரசன் மாற்றமெதோ ஒன்று மறியேன்
ஓங்குமென் குடிகள் கெதியென்ன வாகுமோ
4. உன்னருஞ் சீர் மன்னுயிரை மீட்க வேண்டியே
உற்றநகர் சென்றிடென உரையும் கேட்டதே
5. சோதிமயமான பர தூய நாதனே
தொல்லையில்லா துன்னருளால் செல்வேன்
நாடதே.
வசனம் அளவில்லாத கருணையங்கடலே, உமது வல்லவ தூதன்
உரைத்த வண்ணம் எனது நகரம் சென்று யாவும் அறிவேன். , མ་༽ ܦ جهتگی لا KD
بندرھویک مرمسیہ کہتے ہین ھدہ ھوتہ کچھ ఇళ్లకి ها هم میخe راه رمایی (۲۶ تیردو
*
சேவுகர் விருத்தம் கோ உடைமேகிஷஃைேம்
\; தாக்குறு புகழில் மிக்க தகைமைசேர் அரசன் தானும் வாக்குற விதித்த நாளும் வகைபெறச் சரியின் ருேடு
டிஃசீக்கரத் துமையே நாங்கள் சிறையிஞ லெடுத்துக் கொண்டு
தூக்கினில் வதைத்துக் கொல்ல சுறுக்கினில் வருகு வீரே.
சேவுகர் வசனம் : விசயன், மனேகரன் என்னும் குற்றவாளிகளே, இன்றுடன் உங்கள் தவணை முடிந்தது. தூக்கு மேடைக்குச் செல் வதற்கு வருவீர்களாக.

Page 69
-1 12
3 விசயன்ஷ்மனுேகரன் தாழிசை
விசய சேருமா கொடிய தீவினை திரண்ட
தேசமா விறைவன் தானுமே
செறுத்தெமை வதைக்கக் குறித்த நாளிதுவே
தெய்வமே துணையில் வையமேல்
சீரிளங் கொடியென் காரிகை தனக்கே
செகத்திலோர் துணையு மில்லையே
சித்தமே யுருகி மெத்துசோ கமதாய்
தேம்பியே யயர் வள் நாதனே.
ணுே : பாரமார் சிலுவை தோளிலே சுமந்து
பட்டுவா ரிமலை மேட்டிலே பாவிகட் குயிரை மேவியே யளித்த
பரந்தவுன் கிருபை சுரந்துமே கோரமா யெனது ஆருயிர் தனையே
கொல்லவே வருமின் நாளிலே குலவுமுன் னருளைப் பொழிகுவாய் தருணம்
குமரநா யக சுவாமியே
بهجتمعه شاهد نص مبتدعه «تکه بیچ کجه = خC gyu 6ir, மனுேகரன் விரு (அத்தனருளாளி.எ. மெ.)
இராகம் : பைரவி தாளம் : ரூபகம்
விசய மெத்துந் தயைநாதா சுத்தந்தரு போதா
முத்தர்க் கனுகூலா நித்தம் பரிபாலா
அத்தன் அருள்நீதா பத்தும் மொழி வேதா
சித்தந்தனில் வாதா நத்தும் துயர் தீராய்
அடுத்துப் பழி தொடுத்தென்னுயிர் கெடுத்துப்புரி இடுக்கண் தனில்
அருள் தந்திட இருசுந்தர
பதமொன்றினன் நானே

-- 1 13( جلجثه تحميه முந்தோர் வினைதீர இந்தாரணி கூர
எந்தை மனுவாக வந்தே களை சோக
சிந்தாகுலம் மீறி நொந்தே கழுவேறி
விசய
மணுே
இராகம்
மனுே
5
முகாரி
தந்தின்னுரை யேழே சிந்தை பெற நானே சினங் கொண்டெனை மனம் பொன்றிட
முனம் தண்டனை தரும் வஞ்சனை திருந்தும்படி விரைந்துன்னருள்
தருந்திவ்விய போதா.
&ses ser ago es lo -seuvo usar -ਲ
அங்கென் பிறப்பான தங்கை தனியாக
அங்கங் குழைவாளே இங்கென் னுயிர்பாழே மங்கும் மனம் நோக பங்கம் மிகவாக
சிங்கம் எனச் சீறி பொங்கும் வசை தூறி மனமொன்றியே நெறி குன்றிய
அரசின்றெனை யுயிர் பொன்றிட மடுத்தானுனை அடுத்தேன் மலர்த்
II o Lf ff Kö LD . தி *పీని سیاکمهة شبه شانسجام فات என்னே கொடுமாயம் ஈதே தனியாயம்
மன்னன் படுமோசம் முன்னம் சிறைவாசம் பின்னம்புரி ஞாயம் தன்னிலிது காயம் Ծ: பிரிந்தே யுயிர் மாய தெரிந்தித் தினம் தூயா இணைசம்பிரம பரதுங்கனே
உனதிங்கிர்த துணைதந்திட இரந்துன்னடி பொருந்தென் மிடி
திருந்தும்படி காரே A Y
ܝܵܖܐܟܼܗܕܶܦ݂ܫܥܙܢܝܘܬܬ̇ܗܶܬ݂ܝ ܒܝ ܘܝܕܥܸܢ ܗ̄ܐܕ݂ܐ ܪܽܗܢܰܗܳܧܗ
விசயன், மனுேகரன் திரு. (அள்ளிக். எ. மெ.)
தாளம் : திரிபிடை
வாருர் கொல்லப் போருர் என்னை
மாருய்த் தீர்வை கூறினனே மன்னன் காராய் எம்மைக் கன்னிமரி
தீராநர கானதிற் சேராதே.
}

Page 70
-al 14- قد اكد s I. Gese CD sint MS) ? را به وسیله قد بس رجعت ۔ **980ள் காவலிலே யேவல்ர்கள்
சீவமோ சக் கோட்டிகள் செய்தாரே தேவே எந்தன் ஆவி போக்கத்
தூக்குமரத் தாக்கினுனே மன்னன்.
விசய : மட்டிலடங்காத வும்மைத்
- துட்டன்பிலாத் திட்டதீர்வையாலே
கட்டியந்தக் கற்றுாணுேடு
நிட்டூரமதாக அடித்தாரே.
Sg-un stairgor shu தங்கை யட்கே
மன்னனென்ன தீங்கு புரிவானே கன்னிமரி யன்னையரே -
காத்தருளும் பார்த்திபர் கோத்திரியே.
விசயன் வசனம் : எங்களுக்காக எண்ணிறந்த வேதனைகளை அனுப வித்துச் சர்வாங்க காயங்களுடன் உயிரை ஈந்த யேசுபெருமானே! கொடியோனகிய ஆஞ்சலோனின் தீர்வையினல் எங்கள் உயிர் அநீதமாகப் பிரிவது உமக்குத் திருவுளமானுல் நாங்கள் அதனை நல்ல மனதோடு ஏற்றுக்கொள்வதற்கு உமது அளவில்லாத கிரு பையின் பெருக்கை எமக்கு ஈந்தருளும் சுவாமி.
சேவகர் கவி
* le முடிபெறு மரசி ஞஞ்ஞை முரண்கொண்டு மறுத்த தாலே துடிபெறு சுயவ ராமித் துட்டர்வாய் மதமே போக்க 2 \e படிதுறு மேணி மீது பதறிடா திவரை யேற்றிக்
கொடிதுறு கயிறு மாட்டிக் கொலையது புரிகு வோமே.
சேவகர் வசனம் : உங்கள் இருவரையும் தூக்கில் மாட்டுவதற்கு இதோ இந்த ஏணிப்படிகளில் ஏறித் தூக்கு மேடைக்குச் செல்லு
ari 56MT IT &G.
விசயன், மனுே கரன் தரு (காய்ந்த புலி.எ. மெ.)
ܛ ܐ இராகம் : சங்கராபரணம் (ஒரிசம்) $-டிசிகல்லிதாளம் ரூபகம்
விசய எம்முயிர்க் கிரங்கி யருள்
ஈவீர் நாதனே- இந்த செம்மை யற்றராசன் ச
தேற்ற வேண்டினுேம்

ഥബ്ര :
விரய
மனுே :
விசய :
-ll 5
மைமையுற்ற சேவுகர்கள்
மாற்ற மாயெம்மை-சீறி
புன்மை யுடனே வதைக்கப் போருர் நாதனே,
வன்புசெறி வஞ்கசனும்
வள்ளல் சினந்தே-இப்போ
வாதையுடன் எமை வதைக்கப்
போருர் நாதனே
துன்பு செய்ய வேநினைந்து
துட்டரெம்மையே பொல்லாத்
தூக்கிலிட்டுத் தான்வதைக்கப்
போருர் நாதனே.
பூபனுக்கே யோர்குறையும்
நாம் புரிந்திலோம்-அந்தப்
புத்தியற்றேன் செய்கொடுமை
பொருந்த வாகுமோ
ஆவி துடித்தே கலங்கி
அலமலங்குதே-எமக் கான துணை அம்பரன்
நீரன்றி யில்லையே
சேவுகர் விருத்தம்
விறல்பெறு மரச கோமான் விதித்துமைக் கொலையே செய்ய அறமுறக் குறித்த நாளின் அடுத்தவோர் மணித்தி யாலம் திறமுற விருப்ப தாலே சேருமந் நேர மட்டாய் நிறைபெறு முமது நெஞ்சில் நினைத்ததைப் புரிகு வீரே.
சேவுகர் வசனம் குற்றவாளிகளே! இன்னும் ஒரு மணிநேரம் இருப் பதாலே நீங்கள் உங்கள் தெய்வங்களைத் தொழுது கொள்ளு
வீர்களாக

Page 71
-1 16--
விசயன், மனுேகரன் உலா
w O − இராகம் : நாதநாமக்கிரியை <ન્મદિોન્ગ ဏဒူ gܗܠܝ8>ܧܗܪ
figu :
மைே :
மனுே :
nî Fu :
சோதிச் சுடரொளியே
தூய பரி பூரணனே
நீதி நெறி யற்ற பொல்லா
நிருபனெமை-வாதுடனே
எம்மாவி போக்குதற்கு
எண்ணமின்றி யேவிதித்தான்
இம்மானிலத் தெமக்கே
ஏற்றதயை-செம்மையுற
தந்தா தரித்திடுவாய்
தன்னிகரில்லாப் பொருளே சிந்தாகுலித் தயரும்
சேயரெம்மேல்-சந்ததமும்
சூளைதனி லேயெறிந்த
சுந்தரஞ்சேர் வாலர்களை
மாளா தனல் அவித்த
மாட்சியதே- ஏழையெம் மேல்
மாயசுக போக மதில்
மாருக நாமலைந்தே
தூயோனுமை மறந்த
தொன்மையதோ-ஆயபூவில்
அங்கம் பதறுகுதே
ஆவியுடல் சோருகுதே
துங்கபரனே யுனது
துணைதரவே-இங்கு மிகு

-ll 7- en r விசய பங்கமுடன் என் கழுத்தில்
பாவி சுருக்கிட்டு வதை இங்கியற்றும் பொல்லா
விடர் தவிர்ப்பாய்-சங்கையிலா
மனுே ஆயபுவி மீதிலெம
தாருயிரைத் தான் சிதைக்கும்
தீயமுறை யேதோ
தேர்ந்தறியேன்-நேயபரா
விசய மின்னுமலே யிடித்த
மேரையதுபோற் கொடியோன் என்னவி போக்கு
மிடர் தனிலே-நன்னயம் சேர்
மனுே : பொன்னர் கதிக்கிறையே
போந்த தயைக் கடலே உன்னர் பதம் துணையே
உற்றருள்வாய்-இந்நிலத்தே.
(3) ஞானம் இன்னிசை
பேசரிய பாதகங்கள் பின்னமுட னேயியற்றும் மாசடர்ந்த ராசனெந்தன் மனமிசைந்த காந்தனெடு வீசுபுக ழண்ணரையும் வேதனைகள் செய்தனஞே கா சொளிரும் மன்னவன்முன் காரிகைசென் றேயறிவேன்.
ஞானம் தரு. (இந்தப்பார். எ. மெ.)
இராகம் : நீலாம்புரி தாளம் : ஆதி
1 . இன்பக் கடலே யிதமேயென்
ஞருயிர் அன்பரே
என்புந் தசை போல் என்னுடன்
வாழ்ந்த நீர் எங்கு சென்றீர்
கானமயிற் பேடைகாள்
ஆண்மதி யாள் நாதன்
தானேயில் வீதிதன்னில் போனது
தானதைக் காணிடி லோதுவீர்

Page 72
- l l 8
2. அமுதக்கலமே எனதன்பினிற்
காயுருவாகியதே யித குமுதத் தழகே காலையிலே யொளிர்
தினகர னெனவரு கர்ணுவேனே பொழுதில்
தோணுவேனே அவர் முன் பானுவுடை யணிந்த பாக்கிய
மாமரி நோக்கியே யருள் புரி
ஞானம் தரு. (எல்லையற்று. எ. மெ.)
இராகம் : கல்யாணி தாளம் : ஆதி
1. ஆளர்களை நான் பிரிந்தே-துயர்
ஆகவென் மனம் கரைந்தே வாள்விழி யென் நீர் சொரிந்தே-பூபன்
வைகுமனை தான் விரைந்தே
2. கள்வர் கரந் தன்னிலன்றே-என்னைக்
கருணையுடன் காத்தே நன்றே விள்ளருந் தலைவனின்றே-வரா
வினைய மறிவேனே சென்றே
3. என்பிறவி அண்ணரே தோ- இன்னும்
இல்லம் வரக் காணேன் தீதோ மன்னவன் செய் என்னவாதோ-இதை
மங்கை சென்றறிவேன் போதே
4. மாலையிருளாகிக் கூட-கானம் மந்தி கொம்பதுவே நாட சோலைமயில் நின்றேயாட-எந்தன்
துணைவரைச் செல்வேனே தேட
ஞானம் வசனம் : ஆ! பரிசுத்த கன்னித்தாயே! இது தானே அரச மாளிகை. எனது உரியோர்கள் இங்கு இருப்பார்கள், உம்மை இங்கு நம்பினேன். என்னைக் கைவிடாதேயும் அம்மா

-ll 9
ஆஞ்சலோன் ஆசிரிய விருத்தம்
சீதள மதியே சிறந்தபொற் கொடியே செஞ்சுடர் விஞ்சுநல் விழியே தீம்புன லமுதே பாங்கிலுன் வடிவே செதுக்கு செம் பவளமின் சிலையே
மாதரே மயங்குஞ் சோதிசே ரொயிலே
மலர்ந்த செந் தாமரைத் திருவே மதித்துனை யுருவாய் வகுத்திடு பிரமன்
மருவுதன் கைத்திறன் தனையே
போதுல கதுநீள் வனப்பெலாந் திரட்டி
பொருத்த மா யுந்தனை வகுத்தான் பொற்சிறை யனமே நிற்சிலம் பதிரப்
பொங்குமா மயிலென நடந்தே
ஏதுநீ யிங்கே யிசைந்துமே வந்தனை
ஏற்ற பொன் மணபணி பெறவோ இருநக ரெதுவோ வினசன ருளரோ
இவையெலா முரைத்திடா யெனக்கே
ஆஞ்சலோன் வசனம் அழகிற் சிறந்த ஆரணங்கே நீர் தனிமையில் இவ்விடம் வந்த காரணம் யாது? உமது ஊர் பேர் யாவை?
உமக்கு என்ன வேண்டும் நானறிக் கூறுவீராக.
ஞானம் அகவல்
அணங்கெனை மதித்தே யன்புடன் வினவும் மணங்கமழ் பசிய முகவசீ கரனே
இணங்குபொற் றவிசார் ஏந்தலே யடியாள் வணங்கிநின்றுரைக்கும் வார்த்தைகேட் டருளும் ஆதிபனுமது அணிநகர் தனிலே நீதி சேர் குடியாய் நிலைத்துவாழ்ந் தனமே

Page 73
سـ0 2 1 ــ
பேதையா ளெனது பிறவியண் ணரையும் காதலர் தன்னையும் கருதிநின் சமுகம் வாதுட னழைத்த வன்னல மெதுவோ ஏதமி லவரை யிங்கு காண் கிலனே
குதுதா னெதுவோ துங்கமின் மணியார் சோதி சேர் மகுடத் துரைசிகா மணியே.
ஆஞ்சலோன் ஞானம் தரு (மா கருணுகர.எ. மெ இராகம்: கீரவாணி தாளம்: அடதாளசாபு
ஆஞ். மாதர சேயுந்தன் காதல் மிகுந்தோர் செய்
மாற்றங்கள் ஏற்றதுவோ சதிக்குறும் மன்னவ னென்னுரை தன்னை மறுத்திட
மாதிரத் தாருமுண்டோ உரைத்திடாய்
ஞ1 ை : காதலரா மெந்தன் கண்ணிய வான்களோர்
காத கந் தான்புரியார் கனவிலும் கந்தடு மற்புய முந்திடு வள்ளலே
கருத்திற் றெரிந்திடுவீ ரிது நிசம்,
ஆஞ் : மன்னனென் சொல்லை மறுத்தது மன்றியே
மானிலத் தோர்தனையே குழப்பிடும் வன்மனத் தோர்கள் வருந்தி யுயிர்கெட
வாகுடன் நான் விதித்தேன் அறிந்திடாய்.
ஞான : என்ன் பழி செய்தீர் ஏந்திழை யென்மனம்
ஏங்கித் துடிக்குதையோ இறைவனே ஏழைக ஞந்தனுக் கேதுபழி செய்தார்
எண்ணும் கொடுமைதனைப் புரிந்திட ஆஞ் : சின்னமதிப் பெண்ணே என்னமொழிசொன்னுய் திட்டமா யென்னுரையை மறுத்திட்டோர் சீவனுடன் செல்லப் பூபன்நான் பேதையோ செப்பிடும் மாதர சே யுணர்ந்து நீர்

-l 21
ஞான : கன்னிகை யென்னைக் கடிந்திடாதீர் மன்ன காதலர் தம்மைவிட்டால் உகந்துமை காசினி மீதினிற் பேரர சென்றேத்திக்
காலிற் பணிந்திடுவேன் தினந்தினம்.
ஆஞ்சலோன் ஆசிரிய விருத்தம்
X கருங்குழற் குயிலே கார்விழிக் கயலே
கஞ்சமா ரஞ்சிதப் பெடையே கன்னியர்க் கரசே யென்னுரை யதுகேள்
கலங்கிடாக் கடல்வரை புவியே
ஒருங்கர சியற்றி யுலகெலாம் மதிக்க
உணர்விலா மூடர்கள் துணிந்தே உகந்த வென் சொல்லை யிகந்தனில் மறுத்து
உற்ற பா த கம்புரிந் ததினுல்
பெருஞ்சின மடைந்து பேதையர் தனையும்
பிரித்துயிர் கெடுக்கநான் விதித்தேன் பிருதுவி யரசர் விதித்ததை மறுக்கார் பேசுமென் னுரைதனிற் றவறேன்
அருங்குண மயிலே யவர்களை விடுக்கேன்
அது கருத் தானதை மறந்தே அவனியி லெதை நீ கேட்கினுந் தருவேன்
ஆனவென் சொல்லிது நிசமே
ஆஞ்சலோன் வசனம் : ககன கோளங்கள் மாறுபடினும், காலசக்கரம் வேறுபடினும், அந்நீசருக்காகப் பரிந்து பேசுவதிற் தினையளவும் பயனில்லை-அதை மறந்துவிடு. உனது அழகிற்காக வேறு என்ன வேண்டுமாயினும் கேள். தருகின்றேன்.
6

Page 74
-l 22
ஞானம் கொச்சகம்
மாந்திவரு வோர்க்கிரங்கும் மன்னவனே நீர் சினந்தால் ஏந்திழையோர் பெண்கொடியான் எவ்விடஞ்சென் முறுவனே பாந்தமிகு. மன்பர்களைப் பாவியென்மேற் முனிரங்கி
ஈந்திடுகி
இராகம் :
ஆஞ்ச
ஞான :
ஆஞ்ச
ஞான :
லுந்தனக்கு எண்ணிறந்த புண்ணியமே.
ஆஞ்சலோன், ஞானம் தரு. (இகந்துள். எ. மெ:)
முகாரி v தாளம் : அடதாளம்
ஏற்ற வென்னுரை மாற்றிடேன் மாே
இதயத் துணர்வாய்
ஏத மாமிது சூதர் வாழ்வது
நீதமோவது வாதுமே நிசம்
இன்பரஞ்சித வஞ்சியே கேளாய்
இதுசொல் நிசமே
தாரணியோர்க்குத் தந்தை நீ ரல்லோ
தங்குமும் செங்கோல்
தர்மமோவிது வர்மமோவின்னும்
கர்மமேவிடு நன்மனத் தொடு
தையலென்துயர் ஐயனே பாரும்
தயவு வைத்திதோ
மானிலமொன்ரு ய் மடிந்து படுகினும்
மன்ன னென்னுரை
மாறுமோவுளம் ஆறுமோ இன்னும்
ஏறுதேயனல் கூறுகூறதாய்
மந்திர வாளினுல் சிந்தல் செய்குவேன்
மதியற் ருேரையே.
பேயெனினு மோர் பெண்ணிற் கிரங்குமே
பிச கேனர சே
பேத கம்படு பாதகம் இது ۔ நாதரை விடும் ஆதரை தன்னில்
பேதை துயரம் பார்த்திரங்கியே
பெற்ற தந்தை போல்

- 123
ஆஞ்ச ககன கோளங்கள் நிலை பெயரினும்
கடல் சுவறினும் • காதகர் வெகு சூதினர் உயிர்
வாது செய்வதிப் போது திண்ணமே கன்னியென்னுரை பின்னமாகுமோ
கருத்திற் றெளிவாய்.
ஞான ஆகுலித் தெந்தன் ஆவிசோருகுதே. அண்ணலே பாரும் அஞ்சலே யென வஞ்சியாள் மிக
கெஞ்சினேன் துயர்தஞ்சமே தாரும் அண்ணரோடன்பர் தம்மையே காரும்
அடிபணிந்தேனே
ஞானம் கொச்சகம்
கல்லெனினுந் தான்கரையும் கானமுறும் மாகொடிய கொல்மிருகந் தானிரங்கும் கோதை துயர் தா னுரைக்கில் நல்லுயிர்கள் காத்திடவே நாடுமுன்செங் கோலதன்றிச் சொல்லுமுயிர் வாட்டவல்லச் சோதிமுடி மன்னவனே.
ஆஞ்சலோன் ஆசிரியம்
x பனிமது மொழியே வன சசெந் திருவே
பாவையே யுரைத்திடக் கேளாய் பரந்தவான் புவிமேல் பொருந்திடு மலைகள்
பலமிலா நிலைபெயர்ந் திடினும் நனிபெறு மெனது நாவுரை மறுக்கேன்
நாற்றிசை துதிக்க வோர் குடைக்கீழ் நாட்டுமென் னண்மை கேட்டறிந் திலையோ
நரபதி யாமெனை யெதிர்த்தே

Page 75
- 1, 24
இனிதுயிர் கொண்டு பிழைத்தவ ருண்டோ
ஈனரா மவர்க்கெனப் பரிந்தே ஏந்திழை யுன்னை யன்றிவே ருெருவர்
ஈங்குவந் திருப்பரே யாகில் சனியனே யவர்க்குத் தலைக்குமே லறிவாய்
தையல்நீ வந்துநிற் பதினல் சாற்றுமுன் னுரியோர் தன்னையே பார்த்தென்
சமுகமே வரிலுனக் குரைப்பேன்.
லோன் வசனம் : பெண்ணே! உன்னையல்லாது வேறு யாராவ
ག இங்கு வந்திருப்பாராகில் அவர்களுயிர் 'ந்ேே
துே. இருந்தும் தூக்குமேடையில் நிற்கும் உன்உரியோர்களை ஒரு முறை பாாதது விட்டு இங்குவா, உனக்கு அநேக நன்மை கள் செய்வேன். s
ஞானம் தரு. (பட்சி சாலங். எ. மெ.)
இராகம் : நீலாம்புரி தாளம் : ஆதி
1. நினைக்கமனம் ஏங்குதையோ
நேச அண்ணர் தலைவர் நொய்யச் ஒனக் கதிர் வேலரசன் வைய
யேசுவே கண் பாரும் வரு-மோசமதில் காரும்
2. வாக்குயர்ந்த பிறவி அண்ணர்
வன சமுகத் தலைவர் தன்னைத் தூக்குமிடந் தனையே முன்னே
தோகை வழி நாடி-மிக ஆவலோடு தேடி
3 x கர்த்தரருள் செல்வமென்றே
கருதியிருந் தேனே யன்றே மெத்து துயராக வின்றே
மேவுமுயிர் போக-இந்தப் பாவியுளம் நோக
4. கண்டு மனம் ஆறு முன்னம்-அந்தக்
காதகர்கள் ஏது பின்னம் விண்டுமை வதைக்க இன்றே
விளைத்தனரோ ஆறேன் உயிர் பிழைத்தனரோ தேறேன்.

--------5 2 1 سس
ஞானம் கொச்சகம்
பூரணச்சந் ரோதயமேல் பொங்குமுகில் ஊர்வதுபோல் நேரணிகொள் ஞம்வதனம் நீள் துயரால் மாறுபட்டே வாரிணைத்துக் கோட்டியுடன் வன்சுருக்கிட் டேயிருக்கும் காரணமாங் கோலமதைக் காரிகைகண் டாறுவனே
ஞானம், விசயன், மனுேகரன் தரு
(என்மகளே. எ. மெ.
N t va இராகம் : தேசிகதோடிதனை خاتمهای هند دویس தாளம் ஏகம்
குான அருமை நிறை என்பிறப்பே-எந்தன்
ஆவிதனக் கோர் சிறப்பே கருமை மனத்தான் வெறுப்பே-கொண்டு
கயிற்றிலுயிர் தான் துறப்போ
விசய திருமகள் போலேயிலங்கும்-நேசச்
செல்வி மனம் நீர் கலங்கி. பெருகு துயரே விலக்கி-பரன்
பேரருள்கொண் டேவிளங்காய்
ஞான : சங்கைமிகு மென்துரையே - எழில்
சார்ந்த செம்பொற் ருமரையே பொங்கரசன் இவ்வரையே-செய்த
புன்மையென்ன வோவுரையீர்
மனுே செங்கை மட மாதர சே-இசைத்
தேன்மொழி நல் மாமுரசே மங்கையர்க் குள்ளே சிரசே-நீரும்
மாதுயர் விட்டால் பரமே
ஞான : தங்கையென்றே எனையழைக்கில்-கோடி
தங்கமது தான் சொரியும் மங்களச் சொல் வாசகனே-வந்த
மாகொடுமை தானெதுவோ

Page 76
-126
விசய : திங்களொளி தங்குமுக-அருஞ்
சேயிழையே ஆரமுதே பொங்குமண மேகுழைந்து-மெத்தப்
பேதலித்து வாடாதே
ஞான : நேரிழையென் னல்உமக்கு-நேர்ந்த
நீதமிதோ காதலரே பேருலகி லும்மைவிட்டு-இந்தப்
பேதையுயிர் வாழ்வதுண்டோ
மணுே வார்குழலே வஞ்சியரே-சுடர்
வாள்விழியே பால்மொழியே பேரிலங்கும் உன்துயரம்-காணப்
பூவில் மனம் ஆறுவேனுே
விசயன் தேவாரம் శ్రీక్ష மருவுபூங் குழலினளே மங்கையே யுரைக்கக் கேளாய் திருவுளப் படிக்கே வந்த தீவினைக் கெதுநாம் செய்வோம் தருபகை நகரந் தன்னில் தனிமை கண் டயர்ந்தி டாதே குருபரன் அருளை வேண்டி குலவுமெம் மனசெல் வாயே
விசயன் வசனம் : என்னுருயிர்த் தங்கையே! வீனில் வஞ்ந்துவதினுல்
ஒரு பயனுமில்லை-எம்பெருமான் யேசுவை நம்பிக்கொண்டு மனைக்குச் செல்வீராக, th
SN Sr Pe ar ru
மனுேகரன் தேவாரம்
உருக்கொடு காந்தம் போல ஒன்றியென் மனதிற் கேற்ற பெருக்குநற் குணமுள் ளாளேபிரியகா தலியே கேளாய் சுருக்குமித் துயரங் கண்டே கரைந்துளம் வருந்தி டாதே அரக்கொளிர் மனைதான் சென்று அமலனைத் தொழுகு வாயே.
மனுேகரன் வசனம் பெண்கள் நாயகமே! தேவசித்தத்தை விலக்க யாரால் முடியும்? மனவியாகுலத்தை விடுத்து மனைக்குச் செல்லுவீராக.

-127
x ஞானம் கொச்சகம்
அருங்குணப் பிறவி யோடு ஆசைநா யகரே கேளிர் இரும்புவி யுமையே மாய்க்கில் ஏழையான் உயிர் வாழ் வேனே கருங்குண வரச னும்மைக் கண்டபின் தனது மாடம்
வரும்படி சொன்ன தாலே விரைந்து சென்றறிந் துவாறேன்
ஞானம் வசனம் : அருமைப் பிறப்பே ஆருயிர்க் காதலரே! உங்களை இந்நிலையில் விட்டுப் பிரிய மனம் ஒப்பவில்லை. இருந்தும் அரசர் உங்களைப் பார்த்து விட்டு வரும்படி கூறியமையால் விரைந்து சென்று அவரிடம் இரந்து கேட்டு மன்னிப்படைந்து வருகிறேன்.
சேவுகர் கவி
மடங்கிடா மதங்கள் பேசும் மாற்றலர் சிரமே கொய்யும் இடங்குலா வரசன் சொன்ன இனிய கட்டளைக்கே நாங்கள் 2.அடங்கிடா திவரைக் கொல்ல ஆச்சுதே குறித்த நேரம் தொடும்படி யேணி யேறி சுருக்கதை யிறுக்கு வோமே.
ܟܳܪtܗ5 ܥܗܕܐܚܬܗ-ܧܖ تنہائی சேவுகர் வசனம் : தோழா ! நேரமாகிறது ஏணியில் ஏறிச் சுருக்கை
இறுக்குவோமாக.
சந்நியாசி இராசா சந்ததம்
அடஅட பொறு பொறு தடவய முறுமென
தாண்மை சேர் வீரர்களே அறமுறை தவறியிச் சிறுவரை வதை செய - லானதை யேநிறுத்தும்
திடமுடன் இப்புவி நெடிகுடை யோச்சிய
சீர்த்திசேர் மார்த்திபன்நான் சீர்நல யேசுவின் தாசனென் பேர்பெறு
மன்னணு மென்றறிவீர்
முடிபெறு மெந்தனின் கொடிதனை யேகுறி
முத்திரை மோதிரமே முன்னர றிந்துநீர் என்னுரை யோம்பியே
மோசமில் லாதிவரை

Page 77
- l 28
படியினில் விடுகவே கெடியனின் மிடியது
பாரி லறிந்திடவே பயமிலா தென்னுரை நயமுறு மேயிது
பாங்குடன் புரிவீரே.
சந்நியாசி இராசா வசனம் : வீர கொலைச் சேவுகரே! உங்களரசனுகிய யேசுதாசன் என்பவன் நானே. இதோ எனது முத்திரைமோதிரம், வீரர்களே இந்த வாலர்கள் இருவரும் எவ்வித குற்றமும் புரியாதவர்கள். இவர்களை தூக்குமேடையிலிருந்து இறக்கி விடுங்கள்.
சேவுகர் கவி
வாடிய பயிர்க்கு வானம் வழங்கிய செழிப்பே யன்ன நீடிய கருணை வாய்ந்த நின்புகழ் உரைக்கப் போமோ கோடிய நகரின் ஆட்சி குளிர் மதி யெனவே யோங்க நாடிவந்-தரசே யுங்கள் நல்லுரைப் படிசெய் வோமே சேவுகர் வசனம் : தேவரீர் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு
எவருக்கும் பயப்படாது செய்கிருேம் அரசே,
சந்நியாசி இராசா ஆசிரிய விருத்தம்
வாயினில் முலைப்பால் வாசமே மாரு
வாலர் களேயிது தலத்தே - வரை பெறு மரசர்க் கெது குறை புரிந்தீர்
வஞ்சமென் மனனிதில் நினைத்தீர் தீயவன் கொலைகள் களவுகு தாதி
தீங்குகள் தனிலெது புரிந்தீர் திறம்பெறு மடவார் பிறங்குகற் பதையே
சீர் கெடப் புரிந்ததோ வுரையீர்
ஆயவிப் புவிமேல் அருநக ரெதுவோ
அடுத்த நல் லுறவின ருள ரோ அன்றிரீ ரொருவர்க் கொருவரெம் முறையோ
ஆனவும் சரிதைமுற் றிலுமே

- 129
நேயமோ டெனக்கு நிசமதா யுரைப்பீர்
நிலைபெற வுளமது தெளிந்தே நிச்சயம் மனதி லச்சமே விடுத்து நிருபனென் சமுகமீ தினிலே,
சந்நியாசி இராசா வசனம் : வாலர்களே! வானதூதனுல் உங்களுக்கு வந்த ஆபத் ைச யறிந்து இங்கு வந்தேன். நீங்கள் இனி ஒன்றுக் கும் அஞ்சவேண்டியதில்லை. உங்கள் வரலாற்றை நானறியும் படி கூறுவீர்களாக.
விசயன், மைேகரன் . (அஞ்சுகமே.எ. மெ.)
9 தரு
இராகம் : நாதநாமக்கிரியை w தாளம் : ஆதி
விசய அன்னை தந்தை முன்பு தெய்வம் நீரே-அன்றி
ஆதரை எமக்கினி வேறில்லையே-கதி அண்ணலே யும் கண்ணியங் கண்டோமே.
மனுே: ஆருயிர் தந் தாண்ட குணக் கோவே-உந்தன் அடிமலர் இணைதனை முடிசிரஞ் சூடியே அஞ்சலித்துப் போற்றிசெய் தோம் நாமே
வீசய: வாடிய பயிர்க்கு மழை யேபோல-வந்து
வளம் பெறு மெமதுயிர் விளங்கிடவே செய்த வள்ளலும்ம்ை யுள்ளம் மறவாதே
மனுே: தரும நெறிக் கோல்புரக்கும் வேந்தே-இனி
தாங்கு மிந்ந கர்புகழ் ஓங்கிடுமே நலம் சாற்று முந்தன் தயையுரைக்கப் போமோ
விசயன், மனுேகரன் தரு
(மருவஞ்சி மார்த்தாண்டன் எ. மெ.)
இராகம் : கீரவாணி தாளம் : அடதாளம்
விசய வான்நின்ருெளி மதிகொள்-தேசம்
மாட்சியுடன் அரசாட்சி செய்யும் கோனின் உரை தவறி- நாம் செய்
குற்ற மெது வெனச் சாற்றரிதே . 17

Page 78
மனுே :
விசய :
மஞே :
aru :
மனே
விசய :
மணுே :
- 130
காஞரும் பூம்பொழில் சூழ்-உயர்
காந்திபுரந் தன்னைச் சார்ந்தவன் நான் ஆன துணையிழந்த அன்பன்
அன்று வரைந்த நிருபமதால்
பெற்றேர் தனையிழந்த பின்னர்
பெட்புறென் தங்கை மனேகரிக்கே சொற் சோர்விலா திவரை-வர
நோக்கி மண ஒலை போக்கினனே
கல்விக் கழகமதில்-மதி ”
கற்றிடு நாள் முதல் உற்ற அன்பன்
சொல்லின் படி அணங்கை-மணம்
செய்திட வெண்ணியூர் நண்ணிடவே
பூமலி காவிடையே-உள்ள
பொய்கை தனில் மலர்-கொய்து வந்த
சீவ அமிர்தமான-தங்கை
தன்னையே கள்வர் கவர்ந்து சென்ருர்
பாய்வேங்கை வாழ்வனத்தே-ஒரு பாவையழு குரல் கேட்டிடவே சேயாள் தனையடுத்தே-கள்வர்
செய் தீமையாலவள் தன்னை மீட்டே
விக்கிர்ம வீரனென்னும்-அந்த
வீணனென் மைத்துனன் - வேந்தனுக்கே மிக்க விசனமதால்- சாடை
விளம்பியெமைத் தளை மாட்டி வைத்தான்
தக்க சமயமதில்-எம்மைத்
தற்காக்க வந்தீர் நம் கத்தருக்கே
நித்திய ஸ்துதியே-என்றுஞ்
சாற்றினமே சுப வாக்கியமே

- 3 l
மனுேகரன் வசனம் : இது தான் எமது வரலாறு அறிந்து கொள்ளும்
பிதாவே,
சந்நியாசி இராசா எண்சீர் விருத்தம்
வாரமிகு தீரபுய மழுவ ரோடு
வாலர்களே யோதுமொழி யதனைக் கேளும் கோரமிகு நெஞ்சுகொண்டிந் நகரந் தன்னை
கோதுபுரி வஞ்சகனும் அரசன் முன்போய் சேரவவன் செய்கருமம் தனநா னேர்ந்து
சிந்தையுடன் உங்களையங் கழைக்கு மட்ட்ாய் ஆரமணிக் கோட்டை மதிற் புறத்தே நீங்கள்
ஆறியிரும் அரண்மனை நான் செல்கு வேனே. சந்நியாசி இராசா வசனம் : மழுவர்களே! வாலர்களே! நான் அரண் மனை சென்று உங்களை அழைக்கு மட்டும் கோட்டையின் பின் புறமாகவுள்ள சத்திரத்தில் தங்கியிருப்பீர்களாக,
ஞானம் பரணி
ஆதரையில் என்பிறவி அண்ணரோடு
அருந்தலைவர் தன்னையுமே அநீதமாக
ஒதுமுயிர் மாய்த்திடவே யுற்ருன் தேவே
உன்னருளல் லாதெனக்கு உதவியேதோ
ஞானம் வசனம் : 14ܛܥ பரிசுத்த தேவதாயே) குசாளுள் என்பவளை இருவர் வருத்தும் பொழுது, வானத்தில் நின்று அவர்கள் மேல் இடி விழச்செய்து அவளைத் தப்ப வைத்தது போலவும்: தேக்கிலாள் என்பவளை அக்கினியில் இட்ட பொழுது அதிலிருந்து அவளைத் தப்பவைத்தது போலவும், தானியேல் என்பவரை சிங்கக் குகையில் இருந்து தப்பவைத் போலவும் \ கொடுங் கோலஞகிய ஆஞ்சலோவினிடத்திலிருந்து என்னக் காப்பாற்றுத்
ாயே!

Page 79
-1 32
ஆஞ்சலோன் ஆசிரிய விருத்தம்
பச்சிளங் கிளியே சர்க்கரை மொழியே
பாலிடு முக்கனிச் சுவையே பண்ணிசைக் குயிலே விண்ணவர்க் கமுதே
பைந்தமிழ்த் தீஞ்சுவைக் கனியே
இச்செக மதிலே இணையுனக் கெவரோ
இமையவர் விரும்புசெந் தேனே ஏற்றவுன் வதன சோபிதந் தனிலே
இணங்கியென் மனமது குழைந்தேன்
கச்சதி லடங்கா கனதனச் சுமைகள் களிப்புட னெனக்களித் திடுகில் காதலனுடனுன் சோதரன் தனையுங்
காத்துரட் சிப்பதே யன்றி
வச்சிரப் பணிகள் வகைவகை தருவேன்
வளநகர்க் கரசியாய்ப் புரிவேன் வஞ்சிமின் னிடையே யென்சுக மொழிக்கே
மாறிலா திணங்கிடு வாயே
ஆஞ்சலோன் வசனம் அழகிற் சிறந்த ஆரணங்கே! உனது வனப்பில் எனது மனம் ஈடுபட்டு விட்டது. நீ பட்டத்து இராணியாக வர விரும்பினுல் இதோ எனது அரியாசனத்தில் அமரலாம். காலம்போக்காது என்னருகில் வா.
ஞானம், ஆஞ்சலோன் தரு. (மதிகதி ரொளி எ மெ)
இராகம் : பரசு தாளம் : அட மதிவயஞ் செறி மன்னனே இன்னிலம்
மாட்சிசேர் உந்தன் ஆட்சிதனி லிந்த
சதிமிகும் மொழி தானே யுரைத்திடில்
தர்மமோ இதுவர் மமோ ஏதோ
ஞான :

-l 33
ஆஞ் : விதிமுறை பெறவே தன மைத்திட்ட
விந்தை சேர்ரூப சுந்தர மாதே ததியிலுன் னருங்காதல னேடண்ணன்
தாவு நல்லுயிர் மேவுமுன் கையே
ஞான : அண்ணரோ டெந்தன் அன்பரின் நல்லுயிர்
ஆதரைதனில் காத்திட வேண்டியே எண்ணிநா னிங்கு வந்ததல்லாலுந்தன்
ஏற்றிடா மொழி கேட்பதற் காமோ ஆஞ் : கண்ணே யுன்னழ கொத்ததோர் மாதினைக்
காசினிதனில் கண்டறியேனே
AF6OTD :
ஓர் அழகிய கனியைக் கண்ணுற் கண்டும், அதைப் புசிக்காவிட்டால் என்னை அரசனுக ஒருவரும் மதிக்க Lost "...-nrif Gustin (36oor. திண்ணமா யுந்தன் நேசரை விட்டிடில்
சேமம் என் சொல்லுக் கேயிணங்காயே ஞான வேலது தைத்த புண்ணிலே யக்கினி
வேதனை படச் சுட்டது போலவே வசனம் ; வேல்தைத்த புண்ணிலே அனலைப் பிடிப்பதைப் போன்று, அபலையாகிய என்னை இம்சிப்பது அரச தர்மமல்லவே, வீனிலே என்னை வருத்துதல்கடவுளுக்கு
ஏராது அரசே, சாலவும் மனம் நொந்து வருந்துமென்
சஞ்சலத்தின்மேல் நஞ்சதே யிவ்வார்த்தை ஆஞ் : சேலதே விழிச் செம்மைப் பசுங்கிளிச்
செல்வியே அலங்கா ரியே கேளாய் வாலர்கள் தன்னை இச்சணம் நீக்குவேன்
வஞ்சியென் னேடிணங்கு வாயாகில் ஞான ஆவி காப்பதற் காகவென் மானம்
அழித்திடா துயிர் நீக்குதல் நன்றே

Page 80
-134
வசனம் : அரசே! இருவர் உயிரைக் காப்பதற்காக எனது கற்
பென்னும் பொற் பூஷணத்தைக் கெடுத்துக் கொள் ளக் கூடிய விலைமாதல்லவே யான், சந்தேகம் வேண் டாம் இப்பொழுதே தங்கள் பட்டயத்தால் என்னை வெட்டிக் கொன்று விடுதல் நன்றரசே,
கூவிநானழும் கண்ணிருன் சுற்றத்தைக்
கொன்றழித்திடு மென்றறி வாயே,
ஆஞ்சலோன் எண்சீர் விருத்தம்
X விண்ணவர்கள் எண்ணியெண்ணி வியந்து போற்றும்
விந்தைபெறும் பெண்ணங்கே விளம்பக் கேளாய்
எண்ணிடுகி லென்னுரைக்கே யிணங்கா நீயும்
எங்குசென்று தான்பிழைப்பாய் இதுவென்ஆட்சி
மண்ணிலுனக் கார்துணையோ மடமின் னளே
மனதுகொண்டு தானிணங்கில் மதியே யாகும்
அண்ணனெடு தலைவனுயிர் பிழைத்தே போவார் அரசியென வென்னருகில் அமரு வாயே.
ஞ்சலோன் வசனம் : நானே இத்தேசத்தை ஆளும் அரசன். எனது விருப்பத்திற் கிணங்குவாயாகில் பட்டத்து இராணியல்லவா நீ. அது மாத்திரமா கண்ணே! உனது அண்ணனதும் மற்ற வாலி பனதும் உயிர் உன் கையில் அல்லவா இருக்கிறது. இவைகளை யோசித்துப் பார்த்து உனது பதிலைத் தெரிவிப்பாய் பெண் மயிலே,
ஞானம், ஆஞ்சலோன் தரு (புத்தியில்லாதவனே. எ. மெ.) இராகம் : பைரவி தாளம் : ரூபகம்
ஞான தந்தை யரசரன்ருே-அவரின்
தனயர் குடிகள் அன்ருே
வசனம் : இராசா திராச பரமேஸ்வரா! தமதுதேசத்துப் பிரசை களுக்கெல்லாம் பிதாவாக இருக்க வேண்டிய நீங்கள் நீச விலங்குகளிலும் இழிவாக கொடிய காமத்தாற் தூண்டப்பட்டு கன்னிப் பெண்ணுகிய எனது கற்பைச் சூறையாட எண்ணங் கொண்ட,

- 15
வந்தனைசே ரரசே -இது வென்ன வாது மொழி பகர்ந்தீர்.
ஆஞ் : சிந்தைக் குகந்தவளே-அழகுள்ள
செங்கமலத் திருவே
வசனம் : அதிரூப சிங்காரியே, சுகானந்த சோலையின் இன்பக் கிளியே, பூங்குயிலே, உனது வனப்பில் ஈடுபட்டு என் மனம் படும் வேதனையை எடுத்துக் கூற இது தருணமல்ல.
விந்தை யிது வல்லவோ-எனக்கு விரித்து மதியுரைத்தல்.
ஞான தாலமதில் விஷத்தைச் சிறுவர்க்கு
தாயார் கொடுப்ப ரோதான்
வசனம் : தான் பெற்ற குழந்தைக்குத், தாயானவள் பாலுடன் விஷத்தைக் கொடுப்பாளா? உங்கள் பிரசையாகிய என்னைக் கெடுக்க நினைத்தல் நீதியோ?
கோல முடியரசே - குடிகட்குக் கோது விளைத்திடவோ,
ஆஞ் : வால மடமயிலே-பரிகாச
வார்த்தை தனை விடுத்தே
காலசுணக்க மின்றி-எனது
கருத்துக் கிசைந்திடுவாய்.
ஞான நிந்தை மொழி பகரும் அறிவற்ற
நீசனுனை விடுத்தே
வசனம் - காமப் பித்தம் தலைக்கேறித் தாண்டவமாடும் கெட்ட
குணமுடைய துட்டனே நீயுமோர் அரசளுே? கற் பென்னும் பொற்பூஷணத்தை அற்பமாக மதிக் கும் கெட்டவனே உனை விடுத்து,
வந்த வழி பிடித்தே-எனதில்லம் வாகுடன் ஏகிடுவேன்.

Page 81
. . --1 36-------
ஆஞ்: எந்த விதத்திலுமே-உனநானே
ஏகவிடேன் அறிவாய்
வசனம் அடிபேதைப் பெண்ணே! உனது எண்ணம் இங்கு பலிக்காது. கதவுகளில் எல்லாம் காவலர் விழிப்புடன் இருக்கின்றனர். நீயோ எனது இச்சைக்கிணங்காது எங்குஞ் செல்வதற்கு முடியாது.
பந்தப் படுத்தியுனை-எனதெண்ணம் பார்பார் முடித்திடுவேன். சந்நியாசி இராசா வசனம் : அரசே! பொறுங்கள் பொறுங்கள், ஓர் அபலைப் பெண்ணை இப்படிப் பங்கப்படுத்துவதுதானே நீதி.
ஆஞ்சலோன் எண்சீர் விருத்தம்
கெட்டியிது நற்றுணிவோ கெறுவந் தானே
கேடுதொட்டுத் தானுனையிங் கழைத்த தோடா
திட்டமுட னென்ன ரிய காவல் மீறிச்
சீர்முறையற் றிங்குவர விடுத்த தாரோ
மட்டியரக் காவலர்கள் எங்குற் ருரோ
மன்னவனு மென்னருமை யறிந்தி டாரோ
அட்டியின்றி யுன்தலையும் அற்றே வீழும்
ஆனபதில் ஒதிடுவாய் அறிவற் ருேனே
ஆஞ்சலோன் வசனம் : அடே மூடச் சந்நியாசியே! எனது காவலை
மீறி, சமய சந்தர்ப்பம் தெரியாது இங்கு வந்த காரணத்தை உன்னுயிரைப் பேணிக் கொண்டு விரைவிற் கூறுவாய்.
சந்நியாசி இராசா ஆசிரிய விருத்தம்
முடிபெறு மரசே முறையிலாக் கோபம்
முற்றுமே விடுத்தென துரை கேள் மூதுரைப் படிக்கே யாவையுந் துறந்து
முத்திசேர் நெறியது பிடித்தே

-137
படிதனி லொழுகும் அடியவ னெனினும்
பற்பல வர சரி னிடத்தே பரிந்துயான் சென்றே தெரிந்தவர் வழமை
பார்த்திட வேநினைந் ததினுல்
கொடியிசை மகுடர் பலரையு மறிந்தேன்
கொற்றவ ஞமுனைப் பார்த்தே கெதியிலென் வழிக்கே யேகலா மெனவே
குறித்தநின் சமுகமுற் றனனே
நொடிதனி லுனது நொய்மையை யறிந்தேன்
நூதன வர செனத் தெளிந்தேன் நோக்கிடி லுனைப்போல் நீசரா ரினையோ
நுண்மதி யற்றபூ பதியே.
ஆஞ்சலோன் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
படைநீடு முடிமகுடர் பரந்தொன்ருய்க் கூடியே
படைகொண்டெ திர்த்து வரினும் பல்லாயி ரஞ்சிங்க மெல்லாமு ரங்கொண்டு
பகைமூண் டிரைந்து வரினும்
இடியண்ட கோள மொடு அடியுண்டு நீறியே
இடமுகடு பாறி விடினும் இரைகொண்டலெழுமண்டி முகிலண்டமொன்றியே
இருள்படக் கக்கி விடினும்
நெடிதுற்ற மகமேரு பொடிதுண்ட மாகினும்
நிரையாழி வரம்பு கெடினும் நெறிநீதி மன்னவனு மவமானதைக் கண்டு
நலிந்திருந் ததுவு முண்டோ

Page 82
- 138
கொடியாடு மெனதாண்மை அடியோடு கெட்டதோ
கொள்ளுமதி யற்ற மூடனே கோணது முன்னின்று வீணுயவ தூறுகள்
கொஞ்சமு மஞ்சிடாதே.
ஆஞ்சலோன், சந். இராசா தரு (என்னுரை எ. மெ.) இராகம் : மோகனம் தாளம் : அட
ஆஞ்ச என்னரண் மனநின்றே
முன்பு வாய் மதங் கொண்டே
பின்ன மாய்ப் பழிவிண்டே
உன்னரு முயிர் கொண்டே
வேகமே மிகு சூதனே உயிர்
போகுமே சதியாகவேயிது
ஏற்றநாய்நரி ஆற்றவே பசி
கூற்றதாய் அரிவேனே
சந். இரா: சீற்றமே னரசேறே
சாற்றுமும் முரை மாறே
ஆற்றிடில் பெறுபேறே
தாற்றுமிப் புவி நீறே
சிந்தையானதில் இந்த மாபழி
வந்ததே புவி தந்தையான நீ
திருத்தமற்றிடு பெருத்த பாதகம்
கருத்திலே யுறலாமோ
ஆஞ் : புத்தி யெந்தனுக் கோதச் சக்தி
யுந்தனுக் கேது
பித்தனுந்தனின் சூதோ
அத்துமீறிய வாதோ
பூப னெந்தனை மேவிவந்தனை
ஆனதின்றியே பாவி நிந்தனை
புரியுமுன் திறம் தெரிகுவை மறம்
அறிகுவாய் பெருமூடா

-139
சந் இரா. நல்லுரை சொல்லிற் கேடோ சொல்லுமிவ்வுயிர் பூடோ கல்லோ வுன் மனம் மேடோ
அல்லதுன் வினைப் பாடோ நடுநிலைவிடில் இது பெரும் மடல்
பொதியுமுன்னுடல் சதியதே கெடில் நாடுமுன் சினம் கேடேயல்லது பீடு பெற்றிடு மாமோ
ஆஞ்ச: தங்குமுச்சித வீர
சங்கைபெற்றிடு ராச துங்கனென்னுரை சேரப்
பங்கமே விதி சாரத் தெறித்த வஞ்சகம் பொறித்த நெஞ்சனே
வெறித்து முன் சிரந் தறித்து மிஞ்சவே தின்னநரியது முன்னரெறிவது திண்ணமேயறிவாயே
சந். இரா! மாணமற்றிது நாடே
தானியற்றிடு மூடா
ஈன சொற் பொழிவோடா வீணனுன்னுரை கூடா
மானிலர்க்கனு கூல மற்றிடு,
கோனே கெட்டழி வானே பட்டிமை
மன்னுமிப்பழி பின்னமா மெடா
வன்மையற்றிடு கேடா
சந். இரா. வசனம் : அடே மூடனே! என்னை இப்போது யாரென்று தெரிந்து கொண்டாயா? (முத்திரை மோதிரத்தைக் காட்டுதல்)
சந்நியாசி இராசா கழிநெடில் ஆசிரிய விருத்தம்
இரும்பினும் கொடிதான நெஞ்சுற்ற நீசனே
ஈதென் கொடுமை செய்தாய் இசைபெற்ற வின்னகரில் நசையுற்றுன் ஆட்சி
எவ்வா றிருக்கு தென்ருல்

Page 83
-l 40
பெரும்புலி யதுதன்னைப் புருவை காத் திடுவெனப்
பொருந்த விட்டது போலவே பொன்றிடும் பிணமதனை நன்று காத் திடுவென்ப்
பொல்லாத கழுகை விடலென
விரும்புமி ளமாதரைப் பரத்தையர்தம் மிடத்தே
வைத்தடைக் கலம தென்ன விளைத்துமே மாந்தவன் சீலமாயில் வரசை
வீணனுந் தனுக்க ளித்தேன்
அரும்புவி உயிரெல்லாம் மனங்கசிந்தோ லமிட
அநியா யமுறை புரிந்தாய் அம்பரன் முனிவுக்கு மஞ்சாத அரக்கனே
உன்னண் மையடக் குவேனே. く
சந்நியாச இராசா தரு (கணத்தினில் எ. மெ.)
இராகம் : மோகனம் தாளம் : ஆதி
கெட்ட புத்தி ஏன் நினைந்தாயோ -அடமூடனே கேடனே
கெட்டபுத்தி ஏன் நினைந்தாயோ கெட்ட புத்தி யேன் நினைந்து
மட்டில் வஞ்சகம் புரிந்து கெட்டழி காலமோ துட்டனே நீயிது
பட்டின மானதை நட்டணை யாகவே பட்டிமை கொண்டுமே தொட்டு வருத்திட
விட்டிடுவே னென ஒட்டினையோவுளம்
2. வாதுமுறை யிங்கு நின்றதோ
அடபாதகனே நடு நீதி நெறி யெங்கு சென்றதோ
வாது முறை தன்னை ஏற்றி
நீதி நெறி பின்னை மாற்றி
வஞ்சனே மாதர்கள் தஞ்சமே தாயென
கொஞ்சமு மஞ்சிடா மிஞ்சி நீ கற்பதை
இம்சை புரிந்தனை நெஞ்ச மழிந்திடத்
தும் சம தாக்கியே பஞ்சென ஊதுவேன்.

--------I 4 1 س
மலைப்புறும் வழிதா னென்னடா
-சிறுவர் செய்த கொலைக்குறும் பழிதான் சொல்லடா
மலைப்புறும் வழிதானென்ன
கொலைக்குறும் பழியதென்ன
இங்குன தங்க மரிந்து வருந்துடல்
பொங்குறு பூதகணங்கள் அருந்திடச்
சங்கமா வானவர் வந்து தடுக்கினும்
இங்கென தெண்ணம் முடித்திடுவேனே .
சந். இரா. வசனம் : யாரங்கே வீரரே. ஆஞ்சலோனென்னும் இத்
துட்டனது கையில் விலங்கு மாட்டுவீர்களாக,
சந்நியாசி இராசா ஆசிரிய விருத்தம் விரைகுழல் விரிய வியிழினிர் நீர் சொரிய
வியர்வையால் உடல்துவைந் திடவே வேடுவன் வலைக்குள் பட்டமா னெனவே
விள்ளருந் துயரமே யுருவாய்த்
திருமக ளுருவே தேசதற் றிலங்கும்
சிறுமியே யுன் பயம் விடுப்பாய்
சித்தமே யிரங்காப் பித்தணு மிவன் முன்
சேர வேன் வந்துபட் டனையோ
மருவுமூ ரெதுவோ பிறவிக ஞள ரோ
மன்னிய தந்தைதா யெவரோ மங்கள கரமாம் மணம்முடிந் ததுவோ
மற்றுமுன் சரிதைகள் யாவும்
பெருமைசே ருனது தந்தைபோ லெனையே
பேருல கானதில் மதித்தே பேதமே விடுத்து ஒதிடென் னிடத்தே பெண்ணனங் கேகுலக் கொடியே.

Page 84
-1 42
சந். இராசா வசனம் : குழந்தாய்! பயங்கரம் விடுத்து நான் கேட்ட
கேள்விகளுக்குப் பதில் சொல்வாயாக.
ஞானம் தாழிசை சிறுமியென் சரிதை பெருமைசே ரரசே
செப்பிடுந் தரம தல்லவே சிறந்தவென் நகரம் பிறந்ததிப் பதியே
சேருமன்னை தந்த்ை யற்றனே
மறுவிலா விசயன் அண்ணரா மெனக்கு மனேகரன் தனைய ழைத்துமே மன்றல் பேசுமஷ் வேளையில் வரசன் மருவென் ஞளரைப் பிடித்துமே
அறமுறை தவறித் தூக்கவே விதித்தான்
அடியவ ளேங்கி நொந்துமே அன்னவ ருயிரை மீட்கவென் றிவனை
அண்டிவந் துவிடை கேட்கவும்
குறும்பன் காம வெறிகொண் டெனையே கெடுக்கவே முனையும் வேளையில் கோதையா ளெனையே ஆதரித் தீர்குணக்
கொற்றவா அருமை பெற்றவா
ஞானம் வசனம் : ஏந்தலே இது தான் எனது துயரம் நிறைந்த வர
லாறு. எனது உரியோர்களைக் காத்திரட்சியும் தந்தையே,
சந்நியாசி இராசா சந்ததம்
மத்த கயத்தை நிகர்த்த புயத்திற
மாரன வீரர்களே மன்னிய வென்நகர் தன்னை விடுத்து
வனத்துறை நாள் வரையும்

-143
முத்தொடு பொன்சொரி சித்திர மாபுரி
முறைமைகள் தன்னையுமே முன்னர றிந்திட வெண்ணியுள் ளேன் பல
மூதறி வாளரையும்
எத்திசை யும் புகழ் உத்தம நீதிசொல்
எந்தன மைச்சனெடு எறிசுடர் வாள் கர முறுதட வீரனும்
எழில்தள பதிதனையும்
மெத்திடு சங்கமாம் அங்கமிக் கோர்களின்
மேன்மை சேர் தலைவரையும் மின்னென விரவிய பொன்னணிக் கொலுமுனர்
மேவிடச் செய்வீரே.
சந். இராசா வசனம் : சேவுகரே மந்திரி சேஞதிபதி, சங்கத்தலைவன்
யாவரையும் கொலுச் சமுகம் வரும்படி தெரிவிப்பாயாசு.
சந். இராசா மறு எண்சீர் விருத்தம்
இன்னுமொரு செய்திதன்னை இயம்பக் கேளிர்
ஏகிடும்போ தவ்வழியின் அருகே யுள்ள துன்னுமணிக் கோட்டை மதிற் புறத்தே நிற்பர்
தூய்மை செறி வரலரொடு மழுவர் தானும்
கன்மமிகு கள்வனுக்கிர்ம சிங்க னேடு
காத கணும் விக்கிர்ம வீரன் தம்மை
பின்னமில்லா தேயவர்கள் தம்மைக் கூட்டி
பிரியமுடன் என் சமுகம் வருகுவீரே.
சந். இராசா வசனம் : வீரரே! போகும் வழியில் நிற்கும் வாலர்.
சேவுகர், உக்கிரமன், விக்கிரமன் எனபோரையும் அழைத்து வருவீர்களாக,
சேவுகர் வசனம் : தங்கள் கட்டளையின்படி செய்கிருேம் அரசே,
சேவுகர் வசனம் : இராசா திராசனே இருவாலர்களையும் சேவுகரையும்
கிரசிங்கள், விக்கிர வீரன் என்போரையும் அழைத்து வத்திருக் மும்,

Page 85
-l 44
சந், இராசா வசனம் : மந்திரி, சேஞதிபதி, சங்கத்தலைவர்களே! இந்த வாலர்களின் முறைப்பாட்டைக் கேட்டு நீதி வழங்குவீர்களாக.
மந்திரி வசனம்: ஆஞ்சாலோன், உக்கிரமசிங்கன், விக்கிரம வீரன் என் போர் ஒரு புறமும் விசயன், மனேகரன், மனேகரி என்போர் மறுபுறமும் நில்லுங்கள். சங்கத் தலைவர் வசனம் : வாலர்களே உங்கள் முறைப்பாட்டைக்
கூறுவீர்களாக,
விசயன் மனுேகரன் அகவல் விசய தருமமே யுருவாய் தாரணி முழுதும்
ஒரு குடை நிழற்கீழ் ஒச்சிடு மரசே
மணுே சார்சன சங்கத் தலைவரே கேளும்
பாரிலெம் சரிதை பகரவு மரிதே
விசய ஏற்றவிச் சிறுமி என்னுடன் பிறந்தாள்
சாற்றுமந் நாளிற் தந்தைா யிழந்தோம்.
பின்னரெம் தனிமை பேசிட லரிதே
xதுன்னுமிந் நகரில் துகளிலா வாழ்ந்தோம்
பொங்குவிக் கிரமன் பொருந்திடு மணமே தங்கையைக் கேட்டுத் தானணுப் பினனே இல்லையென் றுரைத்தேன் இவன்புரி யுளவால் கள்வரென் தங்கை தனைக்கவர்ந் தனரே
மனுே சங்கிமிழ் மணிசேர் சாந்தமா புரியின்
海 துங்கநற் சமீந்தார் துரைமகன் நானே
தங்கையாள் தனையே திருமணம் முடிக்க சங்கை சேர் விசயன் தானழைத் தனனே காரண மிதற்காய்க் கடுவனம் வரவே ஆரணங் கொருத்தி அழுகுரற் கேட்டு கள்வர்கள் கரத்தால் காத்தனன் அணங்கை விள்ளரும் மனைக்கு விரைந்து வந்தனமே
விசய கனமிகும் பழியே களவிலு மறியோம்
மனக் கொதிப் பகலா மைத்துன்ன் சதியால்

-1 4 5
மனுே : சிலதினத் தரசன் சினந்துட னழைத்தே
விசய
கொலைசெய விதித்தான் கோரமா யெமையே
சுருக்கிலெம் முயிரைத் தொலைத்திடந் நேரம் அரைக்கணத் தரசர் அன்பதே யுருவாய்
மனே : எம்முயிர் காத்து யிங்கழைத் தனரே
செம்மைசேர் சபையிற் சேருமிக் கோரே.
சந்நியாசி இராசா கழிநெடில் ஆசிரிய விருத்தம்
குலமிகு விசயன் தங்கையாள் தனையே குணமுடன் தரமறுத் ததினுல் கொதிப்புட னுனது தோழன மிவனக்
கொண்டுநற் பகைமுடித் திடவே
பலசனர் வருந்தக் கொலையொடு களவு
பல்விதம் புரிந்ததே யன்றிப் பங்கயத் திருவாம் செங்கைமின் னளைப்
பந்தனை யொடுகவர்ந் ததுவும்
நிலமிசை யுனது சூட்சிதப் பினதால்
நினைக்கருஞ் சாடைகள் தனையே
நீதிசற் றுணரா நிருபனுக் கோதி
நேர்பெறுங் குடிகளைக் கெடுத்தே
கலகமே விளைத்த காதக ரெனவும் கனத்தவத் தாட்சிக ளிருந்தும் கருதுமிச் சபையோர் நிசமறிந் திடவே
காரணந் தனையுரைப் பீரே. 9

Page 86
-l 46
இரா. மந் சேன. சங். தலை. ஆஞ். உக். விக். தரு
(ஆழிப்பார் எ. மெ.)
இரர்கம் : பைரவி தாளம் : ஆதி
M
விக்
மந் :
இர :
: &نچا۔
இர :
கஞ்சத்தார் முகநய அரிவையை
வஞ்சித்தே கயவரை யேவியே
மிஞ்சத்தீ வினையொடு கவரவே
நெஞ்சந் துணிந்தாயோ
வாசப்பூங் குழலியாள் தனையிவர்
நேசத்தோ டளித்திட மறுத்ததால்
பேசுற்ற தோழரை யேவியே
மாசுற்றிடச் செய்தேன்
திரையுற்றே யெறிகடல் புவிசனர்
வரையுற்றே பொருள் பண திகள்தமை நிரையற்றே கொள்ளை புரிந்தது
உரைநிச்ச யந்தானே
மின்னின்மா மணிமுடி சிரமுறு
பொன்னின் நாடுறு மகிபனேசதி கன்னம்நா னிட்டது மெய்வரு பின்னம் பொறுப்பீரே
ஆலத்தை மிஞ்சிடு நெஞ்சனே
ஞாலத்தே நற்றய வின்றியே ஒலத்தே மக்கள் வருந்தவிக்
கோலஞ் செய்த தேனே பொறிபெற்றே பொங்கிடு மாமணி செறிவுற்றே தேசுறு மார்பனே அறிவற்றே யான்புரி பிழைதனை '
நெறிபெற்றினிச்செய்யேன்

- 147
சங். தலை: பகையுற்றே யீருயிர் போக்கிட
விக்
இராசம் :
இரா :
மந்தி :
i)J v :
இ
சேணு :
இரா :
நசையுற்றே வாதொடு சாடைகள் தகவற்றே சாற்றிய தற்கொரு
வகை சொற்றிடு வாயே
ஆசைக்கா மத்திடை மூழ்கியே
நீசத்தீ வினையது புரிந்தேனே
நேசத்தார் யேசுவை வேண்டியென்
துரசைப் பொறுப்பீரே. * v
தரு வேறு (எண்டி ைசமன்னவர் எ மெ.)
தோடி தாளம் : LIGGuid
வீசுற்ற நன்மதி பேசுற்றிடும் வய மந்திரி-இந்தத்
தேசுற்ற வாலர்கள் மாசற்றேர்
என்றறி தந்திரி
பேர்பெற்ற நீதியில் தார்பெற்ற நற்புகழ் மன்னனே -இந்தச்
சீர்பெற்ற வாலரில் ஒர் குற்றந்
தானில்லைத் திண்ணமே
அண்டார் மகுடங்கள் துண்டாடும்
வீரநற் கர்த்தனே-நீச
வண்டனும் ஆஞ்சலோ விண்ட வத்தீர்வை யந்நீதமே
மாடை யொளிர் முடி நீடியுல
கோச்சும் மன்னனே -இவன்
சாடைகள் கேட்டிந்தக் கேட்டை
விளை வித்தான் திண்ணமே
அந்நீதமாய் உயிர்தன்னைப்
பிரிக்க விதித்ததே அன்றிக்
கன்னியர் கற்பைக் கெடுக்க
முயன்ருன் ததிக்குளே.

Page 87
இரா :
இராகம் :
இரா :
சங். தலை:
-1 48
கூட்டு மணியொளி தீட்டு
மகுடநற் தீரனே -இவன் நாட்டிற் புரிந்திடு கேட்டுக்
களவில்லைத் தேருமே
வாதில் ஒன்னர் சென்னி சேதித்திடும்
படைக் கர்த்தனே-இந்தப்
பாதகர் செய்திடு சூதுக்கொரு
தீர்வை செப்புமே
அஞ்சும் நிலப்பலன் விஞ்சும்
நகர்ப்புகழாளியே-இந்த
நெஞ்சன் கனிவில்லா வஞ்சன் கொலைக் குற்ற வாளியே
தரு வேறு (சற்குணராசகுலத். எ. மெ.)
பைரவி தாளம் : ஆதி
சங்கை சேர் சங்கமதின் தலைவனே-நீரும் சாற்றுவீர் இவர் செய்கை ஏற்குமோ
பித்தராம் நீசர் செய்த மோசமே-தன்னைப் பிரித்துமே பேசில் மனம் வருந்துமே, ܀
ஒதரும் யுக்தி நிறை தலைவனே-உள்ளத் தோர்ந்திடீர் இவர் செய்கை வாய்ந்ததோ
வெற்புய மோங்கு வய தத்வனே-இந்த வினரே நெறியற் ருேர் காணுமே. மன்னனென் நீதிபங்க மின்றியே - வாய்மை
நீடவே மதி சொல்லும் கூடவே
: வன்மங்கொண் டுயிர்களை வாட்டியே-பொல்லா வாதுகள் புரிந்தார் மெய் யானதே

- 49
சங்கத் தலைவன் வசனம் : மனுநீதி தவறச் செங்கோ லோச்சும் அரச
பெருமானே! மதிமந்திரியே, வீர தளகர்த்தனே, சபையோரே! இங்கு குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் மூவரும், கொலை, களவு, காமம் என்னும் குற்றங்கள் தனித்தும் கூட்டாகவும் செய்திருப்பது மாத்திரமன்றி, குடிகளே இம்சித்து அவர்கள் குடியுரிமைகளைப் பறித்து சர்வ அதிகாரம் செலுத்திய ஆஞ்ச லோனுக்குப் பக்கத் துணையாக மற்ற இரு எதிரிகளும் இருந்து மூவரும் கொலைக் குற்றம் புரிந்தவர்களாக எண்ணப்படுவதால் மூவருக்கும் மரணதண்டனை விதிக்கவேண்டு மென்று ஆலோசனை கூறுகிறேன்.
இராசா ஆசிரிய விருத்தம்
இடம்பெறு நகரி லீனமாம் வரிகள் இட்டுமே குடிகளஞ் சிடவே எண்ணலாக் கொலைகள் கன்னியர் பழிகள் இயற்றிய ஆஞ்சலோன் தனக்கும் − மடம்படாப் புவியோர் மனந்திகைத் திடவே
மடங்கிடாக் கொலைகள வுடனே மாதரை வருத்து மறமிகுங் கள்வன்
மலைவுறுக் கிர்மனும் தனக்கும்
அடம்பெறு கள்வர் தோழன யெவர்க்கும்
அடக்கருங் கொடுமைகள் தனக்கே அடியில் வித்தெனப் பழிதனைச் செய்த
அஞ்சிடா விக்ரமன் தனக்கும்
திடம்பெறு மிவர்கள் சீவனுள் ளளவும்
சிறைதணில் தண்டனை பெறவே திட்டமாய் நீதித் தீர்வைய தளித்தேன் செகமெலாம் மகிழ்வுறத் தானே.
இராசா வசனம் : இங்கு குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும்
ஆஞ்சலோன், உக்கிரமன், விக்கிரமன் என்னும் மூவருக்கும் மரண தண்டனை விதிப்பதே சன சங்கத்தலைவரின் ஆலோசனையாயிருப் பினும், அதை எனது அதிகாரத்தால் மன்னித்து, சீவனுள் ளளவும் சிறைத்தண்டனை விதிக்கிறேன். காவலர்களே இவர் சக்ளச் சிறைக்கூடத்துக்குக் கொண்டு செல்லுங்கள்.

Page 88
- 150
இராசா மறு வசனம் : நேர்மையுள்ளங் கொண்ட மனேகரன் என்னும் வாலிபனே! எமது சமய ஆசாரப்படி நாளைக் காலை ஞான மஞேகரியை அழைத்துக் கொண்டு குருவானவரிடம் சென்று உங்கள் விவாகத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
விசயன் என்னும் பிரபுவே! இன்று தொடக்கம் எனது அரண்மனையில் இருந்து இரண்டாவது மந்திரியாக கடமை புரிவீராக.
மங்களம்
தேவ திரித்துவ ஏக பரனுக்கேமங்களம்-புகழ் சேனடர்க் கரசியாம் தாய் மரியாய்க்குமே மங்களம் தேங்கமழ் பூங்கொடி யேந்து சஞ்சூசைக்கும் மங்களம்-சிட்ட தேசிக அந்தோணி மாமுனிவர்க்குமே மங்களம் அத்தனின் பாதம் அமர்ந்திடும் தூதர்க்கும் மங்களம்-வான அர்ச்சிய சிட்டர்க்கும் உத்தம மாஞேர்க்கும்மங்களம்-என்றும் நேராய்த் திருச்சபை யாளும் பாப்பாஞேர்க்கும்-மங்களம் நெறிமுறையாய் வரு பிஷப்புமார் குருமார்க்கும் - மங்களம் தவத்தில் மிகுத்திடு சன்னியாசர் கன்னியர்க்கும் மங்களம்-நல்ல தருமச் செங்கோலது செறிமன்னர் யோட்சுக்கும்-மங்களம் கற்பலங்காரி களாகிய மாதர்க்கும் மங்களம்-கல்வி கற்றவரா முரியோர்க்கும் மாசுப மங்களம் சத்திய மறைநிதம் புத்துயிர் ஓங்கவே மங்களம்-நீதி சாரும் பல திற மானுேர்க்குமே சுப மங்களம் மாதமும் மாரிபெய் மானில மோங்கவே மங்களம்-வரு மற்றும் பிணி படை பின்னரழியவே மங்களம் கற்றறிவாளரே உற்றசொற் பிழைபொறும் மங்களம்-நல்ல கருத்தோடித் நாடகம் பாடிப் படிப்போர்க்கும் மங்களம் பாடியிந் நாடகம் பரிந்து தந்தோர்க்குமே மங்களம்.ரக பரணருள் என்றென்றும் பாலிக்க வேண்டிளுேம் மங்களம். முற்றும்.
The Drama is Clean Enough.
(Sigd) S. Gnanapragasar O. M.. I
0-8- 1944

v 2.
- 151
விசய மனுேகரன் நாட்டுக்கூத்து
1945 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 15ஆந் திகதி யாழ்ப்பாணத்துச் சுண்டிக்குளி அழகக்கோணுர் வளவில் மேடையேறியபோது
நடித்த நடிகர்களின் விபரம்
கட்டியன் ே யேசுதாச இராசன் ஒ. மந்திரி சேனதிபதி ! ஆஞ்சலோன் பிரபு 3 பராக்கிரமன் டி , , மாசேனன் , , விதுரன் சாம்புவன் ? விசயன் (முன்) ஞானமஞேகரி 2.
p M 9 Gas TA விக்கிரம வீரன்
உக்கிரமசிங்கன் (கள்வன்) 3.
வீரசிங்கம் (தோழன்) .! மனேகரன்
9 p. , , தோழன் விசயன் (பின்) சேவுகர் (1)
... (2) காவற் காரன், தூதுவன் சங்கத்தலைவன்
திரு. செ. கிறிஸ்தோப்பர் இராசா
வே, யோண்பிள்ளை ம. பொன்னு யோ. மரியாம்பிள்ளை ம. யோசேப்பு வ. செல்லத்துரை வ, அந்தோனிப்பிள்ளை அ. செல்வம் அ. செல்லையா
கி. வஸ்தியாம்பிள்ளை (செ. கிறிஸ்தோப்பர் இராசாப் எம். வீ. யோசவ் ச, லூயிஸ் (ம. பொன்னு) (o, Gafsio2shpur) (Gu. Dumbir2) ம. பொன்னுத்துரை த. சூசைப்பிள்ளை (o. Gossivau b) (வ. அந்தோணிப்பிள்ளை) (Gau, Guurraður fair2km)

Page 89