கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதிபதியின் மகன்

Page 1

asso S.
*
զդում:
莺 Ungu

Page 2

"நீதிபதியின் மகன்"
ஆங்கில மூலம் அழகு சுப்பிரமணியம்
தமிழில் ராஜ முறிரீகாந்தன்

Page 3
நீதிபதியின் மகன்
பதிப்பு விபரம்
ஆங்கில மூலம் ; அழகு சுப்பிரமணியம்
மொழிபெயர்ப்பு & பதிப்புரிமை : ராஜபுரீகாந்தனி
முதற் பதிப்பு/ : 1999 ஜூர்ை
நூல் அளவு : 142 Ա6ւմ x 195 մջմ
பக்கங்கள் : 129 + X
கணனி வடிவமைப்பு : திரு. திருமதி. சு. கிருஷ்ணமூர்த்தி
அச்சுப்பதிப்பு சக்தி என்டபிறைஸ்ளப்
31A கே சிரில் சீபெரேரா மாவத்தை கொழும்பு - 13.
66D60 : esbUNT 100 f

சமர்ப்பணம்
3'UT ஐ. ஆ. இராஜரத்தினம் அவர்களுக்கு

Page 4

முன்னுரை
சிந்திக்கும் திறன்வாய்ந்த உயிருருவான மனித இனத்தின் அதியற்புதமான கண்டுபிடிப்பு மொழியாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் தங்கள் கருத்துப் பரிமாற்ற ஊடகமாக வெவ்வேறு மொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். உலக நாகரிகத்தின் தொட்டில்களான ஹரப்பா மொஹஞ்சதாரோ, யூபிரட்டீஸ், ரைக்கிறீஸ், நைல் நதிக் கரையோரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் பிரயோக மொழிகளின் ஆரம்பகாலப் பதிவுகளை அறிந்து கொள்வதற்குப் பெருந்துணை புரிந்தன. மனிதஇனத்தின் இயல்பான இடப்பெயர்ச்சிகளும் பிரயாணங்களும் நாகரிக வளர்ச்சிகளும் இன்னபிற காரணிகளும் வெவ்வேறு மொழிகளைப் பேசிய மக்களிடையே கருத்துப் பரிமாற்றத்திற்கான தேவைப்பாடுகளை ஏற்படுத்தின. இக்காலப் பகுதியிலேயே மொழிபெயர்ப்பு ஜனனித்தது.
காலவோட்டத்தின் மாற்றங்களை ஏற்கமறுத்த, நெகிழ்ச்சி அற்ற புராதனமொழிகளான லத்தீன், கிறீக், ஹிப்று, சமஸ்கிருதம், பாளி போன்றவை வழக்கொழிந்து போயின. இருப்பினும் இம்மொழிகள் வழியாக மனித இனத்திற்குக் கிடைத்த விழுமியங்களையும் பொக்கிஷங்களையும் ஏனைய பெறுமானங்களையும் இவற்றின் அயல்மொழிகள் பல உள்வாங்கிக் கொண்டன. வழக்கொழிந்துபோன புராதன ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து நல்ல பல பெறுமானங்களைப் புராதன திராவிடமொழியான தமிழ் சுவீகரித்துக்கொண்டு இன்றும் இளமையுடனும் செழுமையுடனும் திகழ்வது இக்கூற்றிற்கு நல்லதொரு சான்றாகும். இவ்வாறே லத்தீன், ஹீப்று, கிறிக் ஆகிய புராதன மொழிகளிலிருந்து பல பெறுமானங்களை ஆங்கிலம் சுவீகரித்துக்கொண்டதனையும் சான்றாகக் கூறலாம். இவற்றிற் கெல்லாம் ஆதாரமாக இருந்தது மொழிபெயர்ப்பாகும்.
Μ

Page 5
ஒரு மொழியில் கூறப்பட்ட செய்திகளையும் கருத்துக்களையும் பிறிதொரு மொழிக்கு மாற்றியமைக்கும் பிரயோக மொழியியற் செயற்பாடே மொழிபெயர்ப்பாகும். இதன்போது மூலமொழியிற் காணப்படும் பொருள், சுவை, தன்மை போன்றவை மாறாதிருக்கவேண்டும்.
மொழிபெயர்ப்பில் சிறப்பாகக் கவனிக்கப்படவேண்டியது மொழியினதும் மொழி நடையினதும் தன்மைகள் என்று ஒரு சாரார் வலியுறுத்துகின்றனர். ஆனால் இதற்கு மாறாக, கருத்துக்களின் தன்மைகளே சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டுமென்று பிறிதொரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். பொதுவாக மொழிபெயர்ப்பு என்றால் மூல மொழியிலுள்ள சொற்களை பிறிதொரு மொழியிலுள்ள சொற்களாக மாற்றுவது என்ற கருத்தே மிகப்பரவலாக நிலவிவருகிறது. இது சரியானதாக இருந்தால் இரு மொழி அகராதி ஒன்றை வைத்துக்கொண்டு மொழி பெயர்ப்புகளைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிடலாம்.
இரு மொழி அகராதியில் ஒரு மொழியின் சொற்களும் அதற்கிணையான மாற்றுமொழிச்சொற்களும் தரப்பட்டிருக்கும். ஆனால் அச்சொற்களின் பின்னணியை, பண்புகளை, தன்மைகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு வசன அமைப்புக்களில் அவை புலப்படுத்தும் அர்த்தங்களை இரு மொழி அகராதி எடுத்துக் கூறாது.
உலகிலுள்ள எல்லா மொழிகளும் அவற்றைப் பேசும் மக்களின் கலாசாரக் கூறுகளையும் அம்மக்களின் வாழிடப் பிரதேசங்களின் தன்மைகளையும் உட்செறிவாகக் கொண்டுள்ளன. எனவே தாம் கையாளும் மொழிகளின் இந்த அம்சங்களையும் மொழிபெயர்ப்பாளர்கள் அறிந்துகொள்வது அத்தியாவசியமாக உள்ளது.
ஒத்த கலாசாரத்தையும் ஒரே வாழிடப் பிரதேசங்களையும் கொண்டுள்ள மொழிகளுக்கிடையில் செய்யப்படுகின்ற
vi

மொழிபெயர்ப்புகள் முற்றிலும் இயல்பானவையாகவும் புரிந்து கொள்ள இலகுவானவையாகவும் உள்ளன. இந்திய மொழிகளுக்கு இடையிலான மொழிபெயர்ப்புகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். கா. பூரீ பூரீயின் தமிழாக்கத்தில் வி. ஸ. காண்டேகரின் நாவல்களை வாசிக்கும்போது நாம் பிறமொழி நாவலொன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வு பெரும்பாலும் ஏற்படுவதில்லை. ஆனால் மிகச்சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களில் ஒன்றாகிய மார்க்ஸிம் கோர்க்கியின் 'தாய்" நாவலைத் தமிழ்மொழியில் வாசிக்கும்போது பிறமொழி நாவலொன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வு வரிக்கு வரி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. வேறுபட்ட கலாசாரங்களையும் வாழிடங்களையும் கொண்ட மக்கள் பேசும் மொழிகளுக்கு இடையில் மொழிபெயர்ப்புகளைச் செய்யும் போது இந்நிலை ஏற்படவே செய்யும்.
மொழிபெயர்ப்பால் ஒரு மொழியிலுள்ள செய்திகளும் கருத்துக்களும் வேறு மொழிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. இதன்மூலம் மொழிப் பயன்பாடும் சமுதாயப் பயன்பாடும் அதிகமாகின்றன. அறிவு வளர்ச்சிக்கும் வெவ்வேறு இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகள் வலுப்படுவதற்கும் மொழி பெயர்ப்புகள் பெரிதும் துணைபுரிகின்றன.
பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களின் ராஜ்யத்துவமும் அதிகாரத்துவமுமே அம்மொழிகளின் வளர்ச்சிக்கும் பரம்பலுக்கும் பிரதான காரணிகளாக இருந்துள்ளமையை வரலாறு நமக்குப் புலப்படுத்தியுள்ளது. பல்வேறு இனங்களின் பெருந் தொகையிலான புலப்பெயர்வுகளையும் மொழிப் பரம்பலுக்கும் மொழிவளர்ச்சிக்கும் நுண்துணைக்காரணிகளாகக் குறிப்பிடலாம். இரண்டாவது உலக மகா யுத்த காலத்திலிருந்து இதைவிட நீண்டகாலம் நீடித்துச் செல்லும் இலங்கையின் இனப் பிரச்சனைப் போராட்டம்வரை இதற்குச் சான்றாதாரங்கள்
wii

Page 6
உள்ளன. இருப்பினும் இதனை நிரந்தரமான, ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்காகக் கொள்ளலாமா என்பது ஆய்விற்கு
உரியதாகும்.
பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அவர்களின் மொழியாகிய ஆங்கிலத்தை அகில உலகத் தொடர்பாடல் மொழி அந்தஸ்த்திற்கு உயர்த்தியது. ஆங்கில மொழியின் நெகிழ்திறனும் பிறமொழிச் சொற்களை இலகுவாகத் தன்வயமாக்கிக் கொள்ளும் தன்மையும் இதற்குத் துணைகளாக நிற்கின்றன.
ஆங்கிலேயர்கள் தமது குடியேற்ற நாடுகளில் சிறந்த பரிபாலனத்தை மேற்கொள்வதற்காகவும் தமது மதத்தை இந்நாடுகளில் பரப்புவதற்காகவும் இந்நாடுகளின் சுதேசமொழிகளைப் பயின்றார்கள். ஆங்கிலேயர்கள் வழங்கிய அற்ப சலுகைகளுக்காகவும், தமது சொந்த மதங்களின் பெயரில் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவும் குடியேற்றநாடுகளின் சுதேசிகள் சிலர் கிறிஸ்த்தவ மதத்தைத் தழுவினார்கள். உத்தியோக மோகங்கொண்ட வேறுசிலரும், தமது கல்வியறிவை விருத்தி செய்யத் தலைப்பட்ட இன்னுஞ் சிலரும் ஆங்கில மொழியை விருப்புடன் கற்கத் தொடங்கினார்கள். இதேபோது ஆங்கிலேய மதகுருமார்கள் மதப் பிரச்சார நோக்கத்திற்காக குடியேற்ற நாடுகளின் சுதேசமொழிகளை ஆர்வத்துடன் கற்றறிந்தார்கள். கிறிஸ்த்தவ போதனைகளை இச்சுதேச மொழிகளில் மொழிபெயர்த்துத் துண்டுப் பிரசுரங்களாக வெளியிட்டார்கள்.
இக்காலகட்டத்திலேயே மொழிபெயர்ப்புகள் மிகப் பரவலாக வளர்ச்சியடைந்தன. இன்று உலகின் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் கிறிஸ்த்தவத் திருமறையாகிய ‘விவிலிய (பைபிள்) நூலே ஆகும் என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது.
viii

அதிகாரத்தின் மொழியாகக் கோலோச்சிய ஆங்கிலமே ‘அறிவின் மொழி’ என்ற மாயையினை மாபெரும் ஒக்டோபர் சோஷலிஸப் புரட்சி 1917ஆம் ஆண்டில் தகர்த்தெறிந்தது. விளாதிமிர் இலியெச் லெனினால் தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகாலம் ஜீவிதம்பெற்று மிகையில் கொர்ப்பச்சோவின் “பெரஸ்ரொய்க்கா’ (மறுகட்டமைப்பு) "கிளாஸ்நொஸ்ற் (பகிரங்கத்துவம்) ஆகிய சித்தாந்தங்களினால் சிதைக்கப்பட்ட சோவியத் ஒன்றிய நாடு பிரமிக்கத்தக்க சாதனைகள் பலவற்றை மனிதகுலத்திற்கு தந்தது. அறிவின் மொழியாக உருக்காட்டப்பட்ட ஆங்கிலத்தின் அரிச்சுவடியே அறியாத சோவியத் விஞ்ஞானிகள் மிகக் குறுகிய காலத்தில் அறிவியலின் உச்சங்களைத் தொட்டார்கள்.
‘சுயமொழிப்பாட போதனைகள் ஒரு மனிதனின் அறிவை அதி விரைவில் விருத்தி செய்கின்றன. மொழியியலாளர் பிறமொழிகளைக் கற்று அவற்றிலுள்ள நல்லவற்றை, நமக்குத் தேவையானவற்றை மொழிபெயர்த்து சுயமொழிகளை விருத்தி செய்யும் பணியை இடையறாத் தொடர்ச்சியுடன் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சோவியத் பிரஜையும் தனது சுயமொழியினையும், சோவியத் நாட்டின் உத்தியோக மொழியினையும் விருப்பத்திற்குரியபிறிதொருமொழியினையும் கற்றறிந்திருப்பது கட்டாயம் ஆகும். மும்மொழிக்கு மேலதிகமாக வேறு மொழிகளையும் கற்க விரும்பும் யாவருக்கும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படவேண்டும்" என்று பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற லிளாதிமிர் இலியச் லெனின் சோவித்தின் மொழிக் கொள்கையினைப் பிரகடனஞ் செய்யும்போது ஆணையிட்டார்.
‘அழிவென்பது ஆக்கத்திற்கே’ என்பதனைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ள ஜப்பான் தனது சுயமொழிப் போதனைகளால் உருவாக்கிய விஞ்ஞானிகள் மூலமாக இன்று
ix

Page 7
உலகினையே ஆட்டிவைக்கும் எலக்ரோனிக்ஸ் விஞ்ஞானத்தில் உச்சநிலையை வகிக்கின்றது. மொழிபெயர்ப்புகள் மூலம் வலுவூட்டப்பட்ட சுயமொழிப் போதனைகளின் பலாபலன்கள் பிரமிப்பூட்டுகின்றன.
சோவியத்தின் மொழிக்கொள்கைப் பிரகடனத்தைத் தொடர்ந்து எழுத்துவடிவமற்ற சுமார் 25 சோவியத்மொழிகளுக்கு எழுத்துவடிவம் வழங்கப்பட்டது. மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள் விசாலமான அளவில் மேற்கொள்ளப்பட்டன. உலகின் மூலை முடுக்குகளிலிருந்த மொழிகளையெல்லாம் கற்றறிவதற்கும் அவற்றிலுள்ள சிறந்த ஆக்கங்களை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. உயர்கல்வி நிலையங்கள் தோறும் மொழியியல் ஆய்வுகூடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
நமது கே. கணேஷ், சுபைர் இளங்கீரன், கே. டானியல், அகஸ்தியர், டொமினிக் ஜீவா, கே. கணேசலிங்கன் போன்ற எழுத்தாளர்கள் உட்பட உலகின் ஆக்க இலக்கியகர்த்தாக்கள் பலரின் ஆதர்சப் படைப்பாளியாக மாக்ஸிம் கோர்க்கி திகழ்வதற்கும் சோவியத் நாட்டின் உக்ரேன் குடியரசிற் பிறந்த விதாலி பூர்னிக்கா பாரதியின் கவிதைகளை ருஷ்யமொழியிற் படித்த பின்னர் தமிழ் கற்று தமிழ்மொழியிற் கலாநிதிப் பட்டம் பெற்றுத் தமிழாய்வுகளைச் செய்தமைக்கும், தமிழ்க் கவிஞன் பாரதியை உலக மகா கவிஞனாக்கி சோவியத் நாட்டில் நூற்றாண்டு விழா எடுத்து “மகாகவி பாரதி” என்ற ஆய்வு நூலினைத் தமிழிலும் பல சோவியத் மொழிகளிலும் வெளியிட்டமைக்கும் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகளே ஆதாரமாக இருந்துள்ளன.
உலகின் சிறிய தீவுகளில் ஒன்றான இலங்கையில் வாழும் ஒர் இனத்தவரால் மட்டும் பேசப்படும் மொழியாகிய சிங்கள

மொழியிற்கூடபெருமளவு சோவியத்நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டமையும் மாட்டின் விக்கிரமசிங்ஹ, குணசேன வித்தான உட்பட பல சிங்கள எழுத்தாளர்களின் சிருஷ்டிகள் சோவியத்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதனையும் நோக்கும் போது ஏனைய மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புகளின் விஸ்தாரத்தினை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
உலக நாடுகளில் இலங்கையிற்தான் முதன்முறையாக பல்கலைக்கழகம் வரை தமிழ் போதனாமொழி ஆக்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்னரே சோவியத் நாட்டிலிருந்து பாலர் முதல் பட்டதாரிகள் வரை உபயோகிப்பதற்கேற்ற அறிவியல், அரசறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல், இலத்திரனியல் போன்ற பல்துறை நூல்கள் பொருத்தமான கலைச் சொற்களுடன் தமிழில் வெளியிடப்பட்டிருந்தன. இம்மொழிபெயர்ப்பு நூல்கள் யாவும் மிகச் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு மிகமிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப் பட்டன.
பிரமாண்டமான அளவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட, மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்ட பொற்காலமொன்று அஸ்தமித்துவிட்டது.
இன்றைய சந்தைப் பொருளாதார உலகில் இலக்கிய சிருஷ்டிகள் கூட வர்த்தக வாய்ப்பாடுகளிற் பொருத்தப்பட்டு நுகர்பொருளாக்கப்பட்டு வருகின்றன. ரூடா சதங்களிலும் ஸ்ரேலிங் பவுண்களிலும் டொலர்களிலும் லாபந்தரும் முயற்சிகளில் மட்டுந்தான் சந்தைப் பொருளாதார உலகினர் அக்கறை கொள்ளுவார்கள். மானுட விழுமியங்களும் பெறுமானங்களும் சந்தைப் பொருளாதாரப் பண்டங்களல்ல.
மொழிபெயர்ப்பின் பொற்காலமொன்று மீண்டும் உதயமாக வேண்டும். மொழிபெயர்ப்புகள் இனங்களுக்கிடையில்
xi

Page 8
புரிந்துணர்வுகளை மேம்படுத்த வேண்டும். இம்முயற்சித் தடத்தில் ஒரு துளிதான் இந்நூல்.
நமது சமகாலத்தில் வாழ்ந்த இலக்கியகர்த்தா அழகு சுப்பிரமணியம். இலங்கையிலும் இங்கிலாந்திலும் தனது வாழிடங்களை பகைப்புலங்களாகக் கொண்டு எழுதிய ஆங்கிலச் சிறுகதைகளில் அச்சில் வெளிவந்த அனைத்தையும் தமிழாக்கஞ் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
அழகு சுப்பிரமணியத்தின் அன்பு மனைவி செல்லக்கண்டு அவர்களே இவற்றைத் தந்துதவினார். இவற்றில் பன்னிரண்டு சிறுகதைகள் தெரிந்தெடுக்கப்பட்டு நூலாக்கித் தரப்படுகிறது. இலக்கிய நுகர்வாளர்களின் கொள்வனவுத் திறனைக் கருத்திற் கொண்டே சகல சிறுகதைகளையும் ஒரே தொகுப்பில் அடக்கவில்லை. அடுத்த தொகுப்பில் அவை உள்ளடக்கப்படும்.
76/35 பரமானந்த மாவத்தை, ராஜ பூgரீகாந்தன் கொழும்பு - 13 “பவானி” 01.06.1999 வதிரி.
xii

02.
03.
05.
06.
07.
08.
09.
10.
12.
உள்ளடக்கம்
கணிதவியலாளன்
விமானத் தாக்குதல்
வனப்புமிக்க நாள்
அப்புக்காத்து
மலேயா ஓய்வூதியக்காரர் தொலுக்கு முதலி
ரெனிஸ்
நீதிபதியின் மகன்
முள்ளுக்கரண்டி கூலிக்குமாரடிப்போர் கல்விமான்
மூடும் நேரம்
xiii
13
17
23
31
38
43
49
56
64
72
85

Page 9

கணிதவியலாளனி
கணிதவியலாளன்
பால் போல நிலவு காய்ந்து கொண்டிருந்தது. பட்டினத்து மக்கள் முற்றவெளியில் மெதுவாக, ஒயிலாக ஊர்ந்து கொண்டு அதனை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே புதுமணத் தம்பதிகளிருவரும் இருந்தனர். மனைவிக்கு அரையடி முன்பாகக் கணவன் நடந்து கொண்டிருந்தான். அவர்கள் படித்தவர்கள், நாகரிகம் தெரிந்தவர்கள் இதனால் இந்த அரையடி வித்தியாசம் தவிர்க்க முடியாததாக இருந்தது.
சந்திரம் பாடசாலையொன்றில் உயர்வகுப்பு மாணவர்களுக்குக் கணிதம் கற்பித்து வந்தார். பல்கலைக்கழகமொன்றில் கணிதவியல் பேராசிரியராவதற்கான தகுதி அவருக்கிருந்தது. அதுவே அவரது இலட்சியமும் கூட
சுபத்திரா சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள். முக்கியமான சம்பவமொன்றை அவள் நினைவு கூர்வதாகத் தெரிந்தது.
“என்ன, சிந்தனை பலமாக இருக்கிறதே?” சந்திரம் கேட்டார்
“வேம்படிப் பாடசாலையில் நான் படித்த நாட்களை நினைவு கூர்கிறேன். அதோ அந்தச் சுவர்களுக்கு மேலாக உயர்ந்திருக்கும் கட்டிடங்கள் உங்களுக்குத் தெரிகிறதா?”
“ஆம் தெரிகிறது”
"அங்குதான் நான் படித்தேன்"
"ஓ! இப்போதுதான் ஞாபகம் வருகிறது. திருமணப் பேச்சின்

Page 10
கணிதவியலாளனர்
போது நீ ஒரு படித்த பெண்ணென்று எனது பெற்றோர்கள் சொல்லியிருந்தார்கள். கணக்கப் படித்திருக்கிறாயா?”
“மூன்றாம் பாரம் வரையில் படித்திருக்கிறேன். கனிஷ்ட கேம்பிறிச் பரீட்சையில் சித்திபெறவேண்டும் என்று விரும்பி இருந்தேன். ஆனால் அதற்கிடையில் நமது திருமணம் முடிந்து விட்டதே."
“இது உனக்கு ஏமாற்றமளித்திருக்கும், இல்லையா" “இல்லையில்லை"அவள் சிரித்தாள். நிலவொளியில் பற்கள் பிரகாசித்தன.
“முத்துப் பல்லழகியே நீ கணிதமும் படித்திருக்கிறாயா?” “அட்சரகணிதமும் கேத்திரகணிதமும் செய்திருக்கிறேன்.” “நல்லது, சமாந்தர வரைகளுக்கு வரைவிலக்கணம் கூறு பார்க்கலாம்”
“எவ்வளவு தூரம் நீட்டினாலும் ஒன்றையொன்று சந்திக்காத வரைகளே சமாந்தர வரைகள்.”
"நீ சொல்வது முற்றிலும் சரியல்ல, ஆரம்பக் கணிதம் மட்டுமே அறிந்த ஒருவர் கூறும் வரைவிலக்கணத்தைத்தான் நீ கூறினாய்”
"நீங்கள் என்ன வரைவிலக்கணம் கூறுவீர்கள்? சுபத்திரா கேட்டாள்.
“முடிவிலியில் சந்திக்கும் வரைகளே சமாந்தர வரைகள் எனப்படும். நான் ஓர் உயர்தர கணிதசாஸ்திரி என்பதை நீ அறிந்து கொள்”சந்திரம் அமைதியாகக் கூறினார்.
"நீங்கள் நன்றாகப் படித்தவர்”

கணிதவியலாளனி
"நீயும் படித்தவள்தானே! ஆனால், அளவிற்கதிகமான படிப்பு ஒரு பெண்ணுக்கு அவசியம் என நான் எதிர்பார்க்கவில்லை. எனது படிப்பைப் பதியவைக்கும் அளவிற்கு உனது கல்வியறிவு உள்ளது. ஆனால், என்னுடைய உணர்வுகளுடன் ஒன்றிப் போவதற்கு உனது கல்வியறிவு போதாது”
சுபத்திரா மெதுவாகச் சிரித்தாள். அவளுடைய முத்துப் பற்கள் மீண்டும் நிலவொளியில் பிரகாசித்தன. சந்திரம் மிகவும் திருப்தியுடன் வீடுநோக்கி நடந்தார். சுபத்திரா அவரைப் பின் தொடர்ந்தாள், அரையடி பின்னால்,
கடந்த சில வருடங்களாக மனைவியைவிடக் கணிதத் துறையிலே அதிக கவனஞ் செலுத்தினார். அவருடைய இச்செயல் சுபத்திராவுக்கு எரிச்சலூட்டியது. ஆனால், தனது வெறுப்பைச் சொற்களிலோ அல்லது செயலிலோ அவள் காட்டிக் கொள்ளவில்லை. ஒழுங்காக, சில வருட இடைவெளிகளில் குழந்தைகளைப் பெற்றாள். அவளை ஓர் இயந்திரமாகவே அவர் கருதினார்.
ஒரு கவிஞன் தனது கவிதைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுகிறான். ஒரு பாடகன் தனது பாடல்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான். அவர்கள் சாதாரண மனித உணர்ச்சிகளில், நடத்தைகளில் தவறியிருக்கலாம்,இன்றேல் தோல்வி யுற்றிருக்கலாம். ஆனால் அவர்களை நாம் அவர்களுடைய சொந்தத் துறைகளாகிய கவிதைத் துறையிலேயோ அல்லது இசைத் துறையிலோதான் கணித்துப்பார்க்க வேண்டும்.
சந்திரம் ஒரு சாதாரண மனிதராகத் தென்படவில்லை. ஏனையோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒர் அசாதாரண பிறவியாகவே காணப்பட்டார். அடிக்கடி நீண்டதூரம் நடப்பார். அப்போதெல்லாம் நண்பர்கள் யாரையாவது சந்தித்தீர்களா என்று மனைவி கேட்டால்,

Page 11
கணிதவியலாளனர்
“இல்லை. அவைகளில் எனக்கு நாட்டமில்லை. நான் கணிதப் பிரதேசத்துக்குள் மட்டுமே அலைந்து கொண்டிருக்கிறேன்” என்று பதிலளிப்பார்.
அயலவர்களுடன் அடிக்கடி சச்சரவிடுவார். வேலையாட் களின் மேல் எரிந்து விழுவார். தனது குழந்தைகளிடம்கூட அன்பு செலுத்தாமல், அவர்களை ஒதுக்கிவிடுவார். நுண்கணிதத்தில் மிகச் சிக்கலான கணக்குகளை இலகுவாகத் தீர்த்துவிடும் அவரால் சாதாரண கடைக் கணக்குகளைத் தவறின்றிக் கூட்டிப்பார்க்க முடியவில்லை. என்றாவது ஒருநாள் தான் ஒரு நியூட்டனாகவோ அல்லது குறைந்தபட்சம் ராமானுஜமாகவோ வந்தே தீருவதென்ற எண்ணம் அவருடைய மனதில் வேரூன்றியிருந்தது.
சுபத்திரா தனது சிநேகிதிகளிடம் கணவனைப் பற்றி பெருமையடித்துக் கொண்டாள். இப்போது அவள் சந்திரத்தை ஒரளவு புரிந்துகொண்டாள். அயலவர்களுடன் அவர் நடந்து கொள்ளும் முறைக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தாள். ஒவ்வொரு தேவைகளையும் குறிப்பறிந்து பூர்த்தி செய்வதன் மூலம் அவருடைய வேலைகளை இலகுவாக்கினாள். குழந்தைகள் அவருக்குத் தொல்லை கொடுக்காதவாறு பார்த்துக்கொண்டாள்.
சந்திரத்தின் நடத்தைகள் மிக விசித்திரமாகக் காணப்பட்டன. ஒன்றிற்கொன்று பொருத்தமற்ற காற்சோடுகளை அணிந்துகொண்டு வெளியே செல்வார். நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்துவிட்டு, அந்நேரம் பார்த்து எங்காவது கிளம்பிவிடுவார். பலத்த மழை பெய்யும்போது கூட கலைந்த தலையுடன் நீண்டதூரம் உலாவச் செல்வார். கணிதத்துறையில் கடுமையாக உழைத்தார். புதிய இலகுவான வழிமுறைகளைக் கண்டுபிடித்து அவற்றை மாணவர் களுக்குக் கற்பித்தார். கேத்திரகணிதத்தில் கணக்குகளின் சொல்லடுக்குகளைக் கண்டு கலங்கிவிபாது நன்றாக ஆழ்ந்து

கணிதவியலாளனி
சிந்தித்து விடைகளைக் காணவேண்டுமென மாணவர்களிடம் கூறுவார். கணித மூலச் சமன்பாடுகளெல்லாம் எக்கணமும் அவருடைய நாநூனியிலும் விரல் நுனியிலுமிருக்கும்.
சந்திரம் தனது இலட்சியப் பாதையில் எந்தவொரு தடையினையும் சந்திக்கவில்லை. கணிதவியல் அகில உலகப் பரிசொன்றைத் தட்டிக்கொண்டதன் மூலம் பெரும் புகழையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவியையும் ஒருங்கே பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழகத்தின் பலதரப்பட்ட வாழ்க்கைமுறைகள் பேராசிரியர் சந்திரத்திற்குப் பொருத்தம் அற்றவையாகக் காணப்பட்டன. ஆசிரியர் குழாமிலுள்ள அனைவரும் தங்கள் பாடங்கள், பாடத்திட்டங்கள் தவிர்ந்த ஏனைய பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். பேராசிரியர் சந்திரத்தின் சொந்த இடமான யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு எவ்வளவோ வேறுபட்டதாக இருந்தது. கொழும்பு வாழ்க்கை எவ்வளவோ சிக்கல்களை உள்ளடக்கியிருந்தது. மக்கள் பிறருடைய சொந்த விஷயங்களைப் பற்றிச் சிறிதுகூட அக்கறை காட்டுவதில்லை.
சந்திரம் ஏனைய பேராசிரியர்கள் மீது பொறாமை கொண்டார். சரித்திரப் பேராசிரியர் சுந்தரம், இசைக் கலைஞானம் பெற்றவராக இருந்தார். அவர் பல்கலைக்கழக விழாக்களுக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். கணிதவியல் விரிவுரையாளர் தத்துவப் பிரசங்கங்களை நிகழ்த்தினார். இதே போல, தத்துவப் பேராசிரியர் மங்களம், சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார். இவருடைய தரமானசிந்தனைகளும், சிறப்பான சொற்பொழிவுகளும் நகர்வாழ் மக்களாலும், மாணவர்களாலும் விரும்பப்பட்டன. பேராசிரியர் மங்களம் சென்றவிடமெல்லாம் வரவேற்கப்பட்டார். புகழ்ந்து உரைக்கப்பட்டார்.
பேராசிரியர் சந்திரம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில் வெற்றிபெற முடியவில்லை. கணிதத்துறையில் மட்டுமே அவர்
5.

Page 12
கணிதவியலாளனர்
திளைத்திருந்தார். ஆனால், தலைநகரிலோ அசல்களே அழிந்து போகும்படியான போலிகள் பல உலாவின. பல ரகப்பட்ட மனிதர்களும் தங்கள் குறுகிய வட்டங்களிலிருந்து வெளியே வந்து வாழ்க்கை அரங்கில் கலைத்துறையிலோ அல்லது அரசியல் துறையிலோ இன்றேல் இலக்கியத்துறையிலோ ஈடுபாடு காட்டினார்கள்.
பல்கலைக்கழகப் பேராசிரியக் குழாம் அவர்மீது விசேஷ அக்கறையேதும் காட்டவில்லை. அவர்கள் தனக்குரிய அந்தஸ்தை வழங்கவில்லை என்று பேராசிரியர் சந்திரம் கவலைப்பட்டார். தன்னை ஒரு மன்றத்தின் தலைவராகும்படியோ, அல்லது பதிவாளர் ஆகும்படியோ யாருமே கேட்கவில்லையே என்ற கவலை பேராசிரியர் சந்திரத்தை வாட்டத்தொடங்கியது.
சந்திரத்தின் பார்வையில் சக பேராசிரியர்கள் நேர்மையற்ற பிறவிகளாகத் தோன்றினர். சிறந்ததொரு கணிதசாஸ்திரியென்பதைத் தவிர வேறு தகைமைகள் ஏதும் அவருக்கிருப்பதாக அவர்கள் கருதவில்லை. ஈருறுப்புச் சூத்திரம் போன்ற புதுவகையான சூத்திரமொன்றைக் கண்டுபிடித்துத் தனது மேதைத்துவத்தைப் புலப்படுத்தியதன்மூலம் அவர்களிடமிருந்து பயங்கலந்த பக்தியையும், மரியாதையையும் அவர் பெற்றுக்கொண்டார். தானொரு வெற்று ஜடமல்லவென்பதைத் தனது விசாலித்த கணித அறிவைக் கொண்டு அவர் மற்றைய பேராசிரியர்களுக்குப் புரியவைத்தார்.
அடுத்த சில வருடங்கள் பேராசிரியர் ஒய்வொழிச்சலின்றிக் காணப்பட்டார். புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று கடும் முயற்சி செய்தார். ஆனால் கண்டுபிடிப்புக்கள் அவ்வளவு இலகுவானவையாக இருக்கவில்லை.
“எனது முன்னோர்கள் கணிதவியல் சூத்திரங்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டார்கள். புதிதாகக் கண்டு
A.

கணிதவியலாளனி
பிடிப்பதற்கு எதுவுமே இல்லைப்போல் தெரிகிறது” என்று பேராசிரியர் சந்திரம் தனது நண்பர் ஒருவரிடம் கூறினார்.
“பேராசிரியரே, கரும்பலகையில் நீங்கள் சமன்பாடுகளைத் தீர்த்துக்கொண்டிருக்கும் போது, உலகம் உங்களுக்கு முன்னால் எவ்வளவோ தூரம் சென்றுவிடுகின்றது. நீங்கள் வாழ்க்கையில் ஏன் சிரத்தை காட்டக்கூடாது? அப்போதுதான் இப்படியொருவர் இருக்கிறார் என்பதை மக்கள் அறிந்துகொள்வர்” என்று நண்பர் கூறினார்.
"அப்படிச் சொல்லாதே. அப்படிச் சொல்லாதே’ சந்திரம் சத்தமிட்டார். “நான் ஒரு மேதை. உனக்குத் தெரியுமா நான் ஒரு மேதை” கூறியவாறே நண்பரை முறைத்துப் பார்த்தார். பின்னர் ஒருவாறு தன்னைச் சமநிலைப்படுத்திக்கொண்டார். நண்பரை நோக்கி “நீ கூறுவது சரியாக இருக்கலாம். இருவிதமான கவர்ச்சிகள் இருப்பதை நான் கூட உணருகிறேன். ஒன்று கணிதத்துறை, அடுத்தது பரந்துவிரிந்த இந்த உலகு என்னைப் பொறுத்தவரையில் கணிதத் துறையின் கவர்ச்சிதான் பலமானதாக இருக்கிறது”என்று கூறினார்.
பேராசிரியர் சந்திரம் பிற பேராசிரியர்களைப் போல மாணவர்களிடமிருந்து விலகியிருக்காமல் அவர்களுடன் ஒன்றிப் பழகினார். சிலபோது தன்னைப்பற்றி அல்லது தனது ஒரு டசின் பிள்ளைகளைப்பற்றி விகடங்கள் செய்வார். ஒருநாள் பலமான மழைபெய்தது. பல்கலைக்கழக விரிவுரை மண்டப ஒடுகள் ஊறி ஒழுகின. அப்போது பேராசிரியர் “விசேஷ வகுப்பில் சில மாணவர்கள்தான் இருக்கிறார்கள். இப்படியான நேரத்தில் அவர்களை எனது வீட்டிற்குக் கூட்டிச்சென்று பாடங்களைத் தொடரலாம். ஆனால் சுமார் நூறு மாணவர்கள் அடங்கிய உங்கள் வகுப்பைஅப்படி அழைப்பது சாத்தியமில்லை. ஏற்கனவே எனது வீட்டில் இடைநிலை வகுப்பொன்று உள்ளது" என்று தனது குடும்பத்தையே கேலி செய்தார்.

Page 13
கணிதவியலாளனர்
இன்னொரு விரிவுரையின்போது, “எத்தனை வழிகளில் எனது மக்கட் பிரவாகத்திலிருந்து இரண்டு சிறுமிகளையும், இரண்டு பையன்களையும் வேறுபடுத்த முடியுமென்று யாராவது கூறுவீர்களா?” என்று கேட்டார். பட்டதாரி மாணவர்கள் இயல்பாகவே அவருடன் ஒன்றி அவருடைய வேடிக்கைகளிற் கலந்து கொள்வார்கள். சில மாணவர்கள் எல்லை மீறிவிடுவதுண்டு.
பேராசிரியர் சந்திரம் தனது மாணவர்களுக்கு மிகச்சிறப்பாகக் கணித போதனையளித்திருந்தார். அடிக்கடி பரீட்சைகளும் நிகழ்த்துவார். பெளர்ணமி நாட்களில் மாணவர்களை அழைத்து அவர்களுடன் நிலவொளியில் நடந்துகொண்டே அடிப்படைச் சமன்பாடுகளை அலசி ஆராய்வார். பரீட்சைகளை அநேகமாக அவருடைய உதவியாளர்கள் தான் நடத்துவார்கள். ஒருமுறை அவரே பரீட்சையொன்றை நடத்தினார். எல்லா மாணவர்களும் அக்கறையுடன் விடை எழுதிக்கொண்டிருந்தார்கள். ஒரேயொரு மாணவன் மாத்திரம் விடைத்தாள்களை வெறுமையாக வைத்திருந்தான். அவன் கணித அறிவு அற்றவனாக இருக்க முடியாது. ஒன்றில் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். அல்லது மண்டபத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும். ஆனால் அவன் அப்டிச்செய்யவில்லை.
பேராசிரியர் சந்திரம் அவனைக் கவனித்துவிட்டார். மெதுவாக அந்த மாணவனை நோக்கிச் சென்றார். மிரண்ட மானைப்போல அவன் பயந்து கொண்டிருந்தான். அவனுடைய விடைத்தாளில் இரண்டு வரிகளைத்தவிர மீதி முழுவதும் வெறுமனே காணப்பட்டது. அவ்வாறிருந்தும் அந்தப் பட்டதாரி மாணவன் பேராசிரியர் தன்னை அணுகியபோது விடைத் தாள்களைக் கைகளால் மறைத்துக்கொண்டான். பேராசிரியர் அவனுடைய கைகளை விலக்கிவிட்டு விடைத்தாளை நோக்கினார். முதல் வரி தெரிந்தது.
8

கணிதவியலாளணி
"பேராசிரியர் சந்திரம் + கணிதவியல் = முடிவிலி'
சந்திரம் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டார். அடிமேலடி வைத்து மண்டபத்தை வளைய வளையச் சுற்றிவந்தார். மயிலின் கர்வத்துடன் மண்டப மேடைமீதேறினார். ஒருவித இன்பக் கிறுகிறுப்பு.
"நியூட்டன், இராமானுஜம், சந்திரம்"
சந்திரம், நியூட்டன், இராமானுஜம் பெயர்களைத் திரும்பத் திரும்ப வாய்விட்டு முணுமுணுத்தார்.
திடீரென்று ஏதோவொரு சிந்தனையுடன் மேடையில் இருந்து இறங்கி அந்த மாணவனை நோக்கிவந்தார். அவன் எழுதியிருந்த அடுத்த வரியைக் காட்டுமாறு கேட்டார். அவனுடைய முகம் வெளிறியது. விடைத்தாளை மடித்துவிட்டான். அப்படிச் செய்வது சரியல்லவெனக் கூறிய சந்திரம் அதனைத் தருமாறு கேட்டார். அவன் விடைத்தாளைக் கொடுத்தான். பேராசிரியர் வாசித்தார்.
“பேராசிரியர் சந்திரம் - கணிதவியல் = பூஜ்யம்”
சந்திரத்தின் முகம் இருளடைந்தது. மன உளைச்சலால் அவனைத் திட்டுவதற்குக் கூட முடியாத அளவிற்கு அந்த ஒரு வரி அவருடைய உள்ளத்தைத் தாக்கிவிட்டது. சகல சம்பத்துக்களையும் பறிகொடுத்த ஒரு மனிதனைப்போல அவ்விடத்தைவிட்டு அகன்றார். ஆரோக்கியமும், வலிமையும் பொருந்திய மக்கள் நிரம்பிய அறையில் தானொரு முடவனைப் போலிருப்பதாக அவர் உணர்வு கூறிற்று. தலைநகரத்துப் பல்கலைக்கழகம் அவரை இந்நிலைக்குக் குன்றச் செய்துவிட்டது.
பெளர்ணமிநிலவு பல்கலைக்கழகத்தையொட்டியமைந்திருந்த வெளியில் வெள்ளை விரிப்பிட்டிருந்தது. சுபத்திரா முஸ்லிம் பெண்களின் உடையணிந்திருந்தாள். அங்கு உலவிக் கொண்டிருந்த
9

Page 14
கணிதவியலாளனி
மக்கள் பகற்பொழுதில் அணிவதுபோல கனமான ஆடைகள் அணிந்திருக்கவில்லை. லேசான உடைகளையே உடுத்தியிருந்தார்கள். சுபத்திரா கணவனுக்கு அரையடிபின்னால் நடந்துகொண்டிருந்தாள். சட்டையைத் தளர்த்திக் காற்றைப் புகவிட்டாள். இரவு நேரத்துக் குளிர்காற்று உடலுக்குச் சுகத்தை அளித்தது. திடீரென்று சந்திரம் அவளைக் கூப்பிட்டார்.
"எங்கே இருக்கிறாய்?" “இங்கேதான் உங்களுக்குப் பின்னால்” என்றாள். "பேராசிரியர் சந்திரத்துடன் கணிதவியல் சேர்ந்தால் அதன் முடிவு என்னவாயிருக்கும்?"
சுபத்திரா திகைத்தாள். “முடிவிலி” என்ற சொல் அவளுக்குப் பரிட்சயமில்லை. அவளுடைய கணித அறிவு அவ்வளவு தூரம் விசாலித்திருக்கவில்லை. ஆனால் அவருடன் கணிதவியல் சேர்ந்தால் அளவிட்டுக் கூறமுடியாத ஏதோவொன்று தோன்றுமென்று அவளுக்குத் தெரிந்திருந்தது. சுபத்திரா தனக்கு இயல்பான பாணியில் அதனை விபரித்தாள்.
“அது இந்த உலகத்தையோ அல்லது சமுத்திரங்களையோ விடப் பெரியதொன்றாக இருக்கும்”
"ஓ! மிகச்சிறப்பான விளக்கம்" சந்திரம் பாராட்டினார். பிரியமிக்க பார்வையொன்றினால் அவளைத் தழுவிக்கொண்டார். அவள் தலைகுனிந்தாள். பொது இடங்களில் அடக்கமாக நடந்து கொள்ளவே சுபத்திரா விரும்பினாள். சந்திரம் அவளைச் சீண்டிக் குறும்பு செய்தார். அவளுடைய முகம் நாணத்தாற் சிவந்தது.
‘என்ன, இன்றைக்கு இவர் புதுவிதமாக நடந்துகொள்கிறாரே' என்று சுபத்திரா நினைத்தாள். ‘ஓ! இல்லையில்லை' உடனடியாகத் தன்னைத்திருத்திக்கொண்டாள். அவர் ஒரு மேதை, அதனாற்றான்."
10

56.cofieu.J601676
“சுபத்திரா"
“என்ன பேராசிரியரே?”
“இப்போது சொல்லு பேராசிரியர் சந்திரத்திலிருந்து கணிதவியலைக் கழித்துவிட்டால்?”
“கலபமாகப் பதிலளிக்கலாம்” இதழுக்கிடையில் புன்னகை தவழ அவருடைய மனைவி கூறினாள். “எனதன்பான பேராசிரியரே, கணிதவியல் இல்லையென்றால் நீங்கள் ஒன்றுமேயில்லை” தனது பதிலால் திருப்தியடைந்து சந்திரம் தன்னைப் பாராட்டுவார் என்று அவள் எண்ணினாள். ஆனால், அவள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான தாக்கம் நிகழ்ந்தது. சந்திரத்தின் உடல் கோபத்தால் நடுங்கியது. வாய்க்கு வந்தபடி சுபத்திராவைத் திட்டினார். கைகளை வீசிக் கொண்டு அவளைத் தாக்குவதற்காகப் பாய்ந்தார்.
அங்கிருந்த சிலர் பேராசிரியரைச் சூழ்ந்து கொண்பார்கள். சந்திரத்திற்குப்பைத்தியம் பிடித்துவிட்டதாக ஒருவன் சொன்னான். மேதைகளின் மாறுபட்ட மன உளைச்சலால் ஏற்படும் தற்காலிக வெளிப்பாடுகளிலொன்றே இது என்றார்கள் சிலர். பேராசிரியர் சிவபெருமானின் ஊழி நடனத்தை ஆடிக்கொண்டிருக்கிறார் என்று சில இளவட்டங்கள் நையாண்டி செய்தன.
சிநேகிதி ஒருத்தி சுபத்திராவை இழுத்துக் கொண்டாள். சந்திரம் சுற்றியிருந்தவர்களை விலக்கிக் கொண்டு உபவேந்தரிடம் ஒடிச்சென்று தனது இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் கைகளையும் கால்களையும் வீசிக் கொண்டு புராணகாலக் கதாநாயகர்களின் அபிநயங்களுடன் நடந்து கொண்ட விதம் விநோதமாக இருந்தது. உபவேந்தரால் பேராசிரியர் சந்திரத்தின் கேள்விகளுக்குப்பதிலளிக்கமுடியவில்லை. பயத்தினால் நாக்கு அண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது. சொற்கள் வெளிவர மறுத்தன. உபவேந்தரின் மனைவி வீறிட்டலறினாள்.
11

Page 15
கணிதவியலாளனர்
உபவேந்தர் ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, வேலைக்காரனை அழைத்தார். சந்திரத்தை வெளியேற்றுவதில் அவர்கள் பெருஞ் சிரமப்பட்டனர். இறுதியாக வேலையாட்கள் அவரைப்பலாத்காரமாகத் தூக்கிச் சென்று வாடகைக் காரொன்றில் ஏற்றினார்கள். உபவேந்தர் சாரதிக்கருகில் அமர்ந்துகொண்டார். நேரே மனநோயாளர் மருத்துவமனைக்குச்செல்லுமாறு சாரதியிடம் கூறினார். குளிர்ந்த நிலவொளியில் சுபத்திராவை அவளுடைய சிநேகிதிகள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது சந்திரத்துக்குத் தெரிந்தது. காது செவிடுபடக் கத்தினார்.
"ஓ! சுபத்திரா, சுபத்திரா"
“நீர் இப்போது அவளைப் பார்க்க முடியாது’ உபவேந்தர் கடுமையான குரலில் சந்திரத்தை எச்சரித்தார்.
“மிகவுஞ் சரி. நான் அவளை முடிவிலியிற் சந்தித்துக் கொள்கிறேன்” பேராசிரியர் அமைதியாகப் பதிலிறுத்தார். கருமுகில் ஒன்று நிலவை மறைத்தது. இருள் கவிந்து பாதையை மூடியது. இருளினால் வெகுண்டு வெறுப்படைந்த பேராசிரியர் ஆவேசம் கொண்டு துள்ளினார். சாரதி அசுரவேகத்தில் மனநோயாளர் வைத்தியசாலைக்குக் காரைச் செலுத்தினார்.
12

விமானத் தாக்குதல்
விமானத் தாக்குதல்
அந்த உயரமான கறுத்தப் பெண்ணின் அலைபோன்று நெளிந்த கூந்தல் நீண்டு வளர்ந்திருந்தது. கோப்பிச் சாலையில் ஒதுக்குப்புறமாகவுள்ள மேசையொன்றில் யாரையோ எதிர்பார்த்தவாறு பொறுமையற்று அமர்ந்திருந்தாள். கதவு திறந்தபோதெல்லாம் வாசலை ஆவலுடன் நோக்கினாள். இறுதியில் அவள் எதிர்
பார்த்திருந்தவன் வந்தான். ན་
"நீங்கள் வராமலிருந்து விடுவீர்களோவென்று பயந்தேன்’ என்றாள்.
“மன்னித்துக்கொள் வழியில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது” அவன் கொஞ்சலுடன் கூறினான்.
"அதுதான் உங்கள் வழக்கம்” என்றாள் கோபத்துடன் "சண்டையை ஆரம்பித்துவிடாதே, இப்போ நீ என்ன சாப்பிடப் போகிறாய்?”
“நான் எதை விரும்புவேனென்று உங்களுக்குத் தெரியுந் தானே.”
அவன் மேசைக்குச் சென்று இரண்டுகோப்பைகளில் கோப்பி எடுத்துவந்தான்.
“கோப்பி எடுத்துவர இவ்வளவு நீண்ட நேரம் வேண்டுமா?” அவள் குத்தலாகக் கேட்டாள்.
“இன்று மேசையருகே அதிகமானோர் கூடியிருந்தனர். அதனாற்தான் இவ்வளவு நேரம் எடுத்தது” என்றான் அவன்.
13

Page 16
விமானத் தாக்குதல்
"நீங்கள் அங்குள்ள எல்லோருடனும் கதைத்திருக்கிறீர்கள், அங்கிருந்த பெண்களையெல்லாம்பார்த்திருக்கிறீர்கள் அதனாற்தான் நேரஞ்சென்றிருக்கிறது. இது நல்லதொரு செயலல்ல. நீங்கள் என்னைத் தவிர வேறுயாருடனும் பொழுதுபோக்கக் கூடாது.”
அவள் மிகவும் கோபமாகக் கூறினாள். அவன் எதுவும் கூறவில்லை. அமைதியாகக் கோப்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தான்.
“ஏதாவது பேசுங்களேன்’ என்றாள்.
“அதுதான் முடியாமலிருக்கிறதே, நான் வாயைத் திறந்தால் நீ என் தலையைத்தின்றுவிடுவாய் போலிருக்கிறதே. உன்னிடம் நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.”
“இங்கே பாருங்கள், அது எனக்கு மட்டுமல்ல நம் இருவருக்குமே உள்ளது. உலகில் பெரும்பான்மையானோர் இதனால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்’ என்றாள் அவள்
“விசர்த்தனமாகப் பேசாதே. எனக்குத் தாழ்வு மனப்பாங்கே கிடையாது. ஏனென்றால் இரண்டாயிரம் ஆண்டுகள் வளர்ச்சி அடைந்த கலாசாரம் எனது பின்னணியில் உள்ளது” என்றான் அவன்.
“அது எப்போதுமே உங்கள் பின்னணியில் இருப்பதுதான்
பெரிய தவறு. எனது கலாசாரம் எங்கே இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்? எனது பின்னணியிலா அல்லது முன்னணியிலா? ஹா. ஹார் . "அவள் கெக்கலித்துச் சிரித்தாள்.
"நான் போகிறேன், இங்கிருந்தால் தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் சண்டை பிடிக்க வேண்டியிருக்கும்.”
அவள் கோப்பியை உறிஞ்சியபடியே அவனைத் தடுத்தாள். “கொஞ்சம் பொறுங்கள்.”
“gፍù?”
14.

விமானத் தாக்குதல்
“இப்படி அமருங்கள், ஒரேயொரு விஷயத்தைப்பற்றிப்பேசிய பின்னர் செல்லலாம்.”
“நான் உன்னை வெறுக்கிறேன், மீண்டும் உன்னைப் பார்க்கவே விரும்பவில்லை.”
“சரி, அது பரஸ்பரம் நிகழும் ஒரு செயல்தான். ஆனால் நீங்கள் கள்ளங்கபடமில்லாதவர், குழந்தையுள்ளம் கொண்டவர். ஒருவர் ஒரே நேரத்தில் காதலிப்பதும், வெறுப்புக்கொள்வதும் இயற்கைக்கு ஒவ்வாத செயல். நான் காதலிப்பதாகச் சொல்ல வரவில்லை. ஆனால் நம்மிடையே ஒரேயொரு பொதுவான விஷயம் உள்ளது.”
“காதலென்றால் என்ன? அவன் வெகுளித்தனமாகக் கேட்டான்.
"இருகாதலர்களிடையே என்ன நிகழுமோ அதுதான் காதல்" என்றாள் அவள்.
திடீரென்று யுத்த அபாய அறிவிப்புச் சங்கு அலறியது. பல நாட்களுக்குப் பின் நிகழும் விமானத் தாக்குதல். அவள் கலங்கி விட்டாள்.
"நாங்கள் என்ன செய்யலாம்?"அவன் கேட்டான்.
“எனது வீட்டிற்குச் செல்வோம். அது ஒரு நவீன கட்டிடம் அத்துடன் மிகவும் பாதுகாப்பான இடம். அங்கு செல்வதுதான், ஒரேயொரு வழியென்று எனக்குத் தோன்றுகிறது” என்றாள்.
அவர்கள் கோப்பிச்சாலையை விட்டு வெளியேறும்போது எடுப்பான மார்புகளையுடைய ஒரு பணிப்பெண் பாதுகாப்பாக வீடுசேரப் பிரார்த்தனைகளையும் நல்லிரவு வந்தனங்களையும் கூறினாள். “மிகவும் கவனமாகச் செல்லுங்கள்” என அறிவுறுத்தினாள்.
15

Page 17
விமானத் தாக்குதல்
"நாங்கள் கவனமாகச் செல்வோம்” என்று கூறியவாறே இருவரும் வெளியேறினார்கள்.
அவளுடைய வீட்டினை அடைந்ததும் நேரே பதுங்கு குழிக்குச் சென்று குப்புறப் படுத்துக் கொண்பார்கள். குண்டுகளின் தாக்குதலுக்கெட்டாதவாறு அந்த இடம் பாதுகாப்பாக அமைக்கப் பட்டிருந்தது. விமானத் தாக்குதல் அபாயம் அகன்று விட்டதற்கான சங்கு முழங்கியதும் அவள் கண்கள் பிரகாசித்தன.
“இப்பொழுது உன்னிடம் தாழ்வு மனப்பான்மை இல்லை” என்றான் அவன்.
“உங்களிடமும் அது இல்லையன்பே. ஒ இது சொர்க்கம், நாமிருவரும் சொர்க்கத்தில் இருக்கிறோம்"
திடீரென்று மீண்டும் அபாய அறிவிப்புச்சங்குகள் அலறின. ஆயிரம் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து புலம்புவதைப் போல லண்டன் மாநகரமே அலறியது.
"ஓ என்ன நடக்கிறது?"அவள் குரல் நடுங்கியது. "ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள்தான் சொர்க்கத்தில் இருக்கிறோமே” என்றான் அவன் அமைதியாக
விமானத்திலிருந்து எதிரிகள் போட்ட குண்டொன்று காற்றை ஊடறுத்து வந்து அவளின் குடியிருப்பின்மேல் வீழ்ந்தது.
அவள் வீரிட்டாள், "ஓ! நரகம். அன்பே, நாங்கள் நரகத்திலிருக்கிறோம்”
அந்தக் குண்டுவீச்சு விமானம் அவர்களுடைய குடியிருப்புப் பகுதியை நேரடியாகத் தாக்கி அவர்களுடைய கண்முன்னாலேயே மண்ணோடு மண்ணாக்கிவிட்டுச் சென்றது.
16

வனப்புமிக்க நாள்
வனப்புமிக்க நாள்
லண்டன் மாநகரில் முதுவேனிற் காலத்தில், ஒருநாட் காலையில் “வனப்புமிக்க நாள் வந்தனங்கள்” என்று சொல்லிய படியே பாற் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பினாள். நான் முனகலுடன் மறுபக்கம் புரண்டு படுத்தவாறு போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு மீண்டும் தூங்கினேன்.
"குறும்புக்காரப்பயல்’ என்று கூறிக்கொண்டு அவள் அடுப்படிக்குச் சென்றாள். சிறிது நேரத்தின் பின் மீண்டும் “வனப்பு மிக்க நாள் வந்தனங்கள்” என்று கூறிக்கொண்டு என்னைக் காலைப் போசனத்திற்கு அழைத்தாள்.
"ஓ! அப்படியா?” என்று சிரித்துக்கொண்டே கோப்பியை உறிஞ்சினேன்.
"நீஅப்படி எண்ணவில்லையா?” என்று கேட்டாள் பாற்.
"இருக்கலாம். ஆனால், எனது நாட்டில் எல்லாமே வனப்பு மிக்க நாட்கள்தான்” என்றேன்.
“இது ஒரு வாழ்த்துத்தானே, இதனைக் கூறப் பழகிக் கொண்பால் என்ன? இந்த ரம்மியமான காலையில் நீ இதனை மகிழ்ச்சியுடன் சொல்லக் கூடாதா?”
"நான் என்ன சொல்லவேண்டுமென்று எதிர்பார்க்கிறாய்?” “வனப்புமிக்க நாள் வந்தனங்கள் என்று சொல்லு”என்றவாறு சிரித்துக்கொண்டே அவளும் கோப்பியை உறிஞ்சினாள். அது புரைக்கேறி அவளுடைய ஆடைகளை நனைத்தது. “வனப்பு மிக்க
17

Page 18
வனப்புமிக்க நாள்
நாள் வந்தனங்களை நீ ஒருபோதும் தெரிவித்ததில்லையா?” என்று கேட்பாள்.
“இல்லை” "அப்போ, நீ என்னதான் சொல்லுவாய்?” “ஒன்றுமே சொல்வதில்லை” “ஒரு வனப்புமிக்க நாளில் நீ என்ன செய்வாய்?” “ஏனைய நாட்களில் எதனைச்செய்வேனோ அதனையே அன்றும் செய்வேன். எனக்கு எல்லாமே வனப்புமிக்க நாட்கள்தான்” பாற் கெக்கலித்துச் சிரிக்கும்போது மீண்டும் புரைக்கேறியது. “ம், மேலும் சொல்லேன்” என்றாள். நான் அவளைப் பார்த்துக் கொண்டே குளியலறைக்குள் சென்றேன். அப்போதும் அவள் சிரித்துக்கொண்டேயிருந்தாள்.
நகரத்துக்குள் செல்லும்போது புகையிலைக் கடையில் சிகரெட் வாங்கினேன். அங்கிருந்த பெண்மணி “வனப்புமிக்க நாள் வந்தனங்கள்” என்றாள்.
"ஆம், ஆனால் எனக்கு இருபது சிகரெட்டுக்கள் வேண்டும்” என்றேன்.
"நீங்கள் இதனை நம்பவில்லையா?” என்று கூறியபடியே சிகரெட்டையும் மிகுதிப் பணத்தையும் தந்தாள்.
"நான் இதனை நம்புகிறேன், உண்மையிலேயே இன்றைய பொழுது வனப்பு மிக்கதாகவும் வெதுவெதுப்பானதாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வாழ்த்தின் தாற்பர்யத்திற்கு இன்னும் நான் ஆளாகவில்லை” என்று கூறிக்கொண்டே விரைவாக அவ்விடத்தைவிட்டு அகன்றேன். சிறிய போசனசாலை ஒன்றினுள் கோப்பி அருந்துவதற்காக நுழைந்தபோது யாரும் வந்தனங்களைத் தெரிவிக்கவில்லை. சாளரத்திற்கருகே அமர்ந்து கோப்பியை
18

வனப்புமிக்க நாள்
உறிஞ்சியவாறே வெளியே பார்த்தேன். உண்மையிலேயே அது ஒரு வனப்பு மிக்க நாள்தான். வானம் தெள்ளிய நீலமாக இருந்தது. நடைபாதையில் சென்றுகொண்டிருந்த மக்களெல்லாம் மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் காணப்பட்டார்கள். ஆனால் எனது கோப்பியைக் குடிப்பதற்குள் மழைபெய்ய ஆரம்பித்துவிட்டது.
வனப்புமிக்க நாள் திடீரென்று விசனம்மிக்க நாளாக மாறிவிட்டது. மாரிகாலத்தில் பெய்வது போல மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. சோககீதமொன்று காற்றில் மிதந்து வந்தது. நிலமெங்கும் சகதி நிறைந்தது. குளிர்காற்று உடலைச் சில்லிடச் செய்தது. கொடுங்குளிர் எல்லோருடைய முகங்களிலும் விசனம் வழிந்தது.
பத்திரிகையொன்றைத் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு புளூம்ஸ்பரியிலுள்ள கோஹன் புத்தகசாலைக்கு ஓடினேன். அந்தப் புதுமையான கடையில் விநோதமான புத்தகங்கள் பல இருந்தன. சாதாரண நாட்களில் நான் பலமணிநேரம் அக்கடைக்குள் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பேன். இது கோஹனுக்குப் பிடிப்பதில்லை. முணுமுணுத்துக் கொண்டிருப்பார்.
"புளூம்ஸ்பரியில் புத்தகசாலைகள் நீண்டகாலத்திற்கு இருக்க மாட்டா. இவையெல்லாம் சாரிங்குறோஸ் வீதிக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த இடத்தைவிட்டுரோட்டன் ஹோமிற்குப் போகவே விருப்பமில்லை. அங்கு வெளியாகும் குப்பைகளை விற்பதைவிட இங்கு தரமான ஒரு புத்தகத்தை விற்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். நல்லது, இவையெல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்ப்போமே" என்றார் கோஹன்,
எப்படியோ பழைய புத்தகங்களிற் குறிக்கப்பட்டிருந்த விலையில் ஒரு சிறிய தொகையைக் குறைத்துக்கொண்டே என்னிடமிருந்து பணத்தைப் பெற்றார்.
19

Page 19
வனப்புமிக்க நாள்
நான் ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தேன். கோஹன் தனது செயலகத்திலிருந்து வெளியேறி நான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை எனது தோளுக்கு மேலாக நோட்டமிட்டார்.
“ஒஇது மிகச் சிறந்த புத்தகம்” நான் திடீரென்று திரும்பி, "ஓ! கோஹன், ‘வனப்புமிக்க நாள் வந்தனங்கள்” என்றேன்.
“வனப்பு மிக்க நாளா?" கோஹன் சத்தமிட்டார். "இது ஒரு விசனமான நாள், கொடிய நாள். பிசுபிசுத்துக்கொண்டிருக்கும் மழைச் சனியனை நீ பார்க்கவில்லையா? சாதாரண நாட்களிற் கூட ஒரு சில வாடிக்கையாளர்கள்தான் வருவார்கள். ஆனால் இப்படி மழை பெய்து கொண்டிருக்கும்போது.” என்று கூறியவாறு விசனத்துடன் கைகளை அகல விரித்தார்.
"இதோ என்னைப் பார்”என்று கூறியபடி தனது கால்களைச் கட்டிக்காட்டினார். “இன்று காலை வனப்பு மிக்கதாக, வெதுவெதுப்பாக இருந்தது. எனவே பட்டிச்செருப்பொன்றை மகிழ்ச்சியோடு அணிந்துவந்தேன். இப்பொழுதோ குளிர் வாட்டி வதைக்கிறது. எனது கால்கள் விறைத்து மரத்துவிட்டன. நல்ல வனப்புமிக்க நாளப்பா” என்றார்.
"இதற்காக மனதை அலட்டிக்கொள்ளவேண்டாம். இது வெறும் வாழ்த்துத்தானே” என்றேன் அவரைத் தேற்றும்பொருட்டு. "வாழ்த்தா? இப்படியொரு கொடிய நாளுக்கு வாழ்த்தும் வேண்டுமா?"
கோஹன் தனது துரதிஷ்டத்தைத் தனியே அனுபவிக்க விட்டுச் செல்வது புத்திசாலித்தனமாகத் தோன்றியது. இந்திய விடுதிக்குச் சென்றேன். உணவுக்கூடம் வெறிச்சோடிக் கிடந்தது. ஓர் அமெரிக்கச்சிப்பாய் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு சோற்றையும், கறியையும் முள்ளுக்கரண்டியினாலும் கரண்டியினாலும் தின்று
20

வனப்புமிக்க நாள்
கொண்டிருந்தான். சிறிய பரிசாரகனொருவன் என்னைக் கூட்டிச் சென்று இன்னொரு மூலையில் அமரச் செய்தான். முகாமையாளர் எங்கேயென்று அவனிடம் கேட்டேன். அவர் துயின்று கொண்டிருப்பதாகப் பதில் கிடைத்தது.
“காலையிலிருந்து அவர் தூங்குகிறார். இன்று வியாபாரம் படுமோசமாக இருக்கிறது"
மிகுந்த கவனத்துடன் எனக்கு உணவுகள் பரிமாறப்பட்டன. எனக்கு உணவைப் பரிமாறி விட்டு சிறிதுதுரத்தில் நின்று கொண்டு அமெரிக்கச் சிப்பாயை நோக்கியவாறிருந்தான் பரிசாரகன். சிப்பாயோ உணவைப் பற்றிய குறைபாடுகளை தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
"குடிகாரப்பயல், மூக்கு முட்டக் குடித்திருக்கிறான்” பரிசாரகன் என்னிடம் மெதுவாகக் கூறினான்.
முகாமையாளர் உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று உரோஞ்சியபடி தோன்றினார். தலைப்பாகை, நீண்டகோட்டு, இறுக்கமான காற்சட்டை இத்தியாதிகளுடன் கூடிய ஒரு வினோத உருவம் தனது இரு வாடிக்கையாளர்களையும் நோக்கிப்பணிவாகக் குனிந்து நிமிர்ந்தார்.
“எல்லாம் நன்றாக இருக்கின்றனவா ஐயா?” "ஆம், கறி பிரமாதமாக இருக்கிறது" என்றேன். "நாங்கள் எப்பொழுதும் மிகத் தரமான உணவுகளையே வழங்குவோம்” என்று கூறியவண்ணம் அமெரிக்கச் சிப்பாயின் அருகில் சென்று கைகளை உரசிக்கொண்டு “வனப்புமிக்க நாள் வந்தனங்கள் ஐயா" என்றார்.
“முட்டாள் பயலே, பரிகாசமா செய்கிறாய்? வெளியே பார்த்துவிட்டுப் பேசபா" என்று கூறியவாறு முகாமையாளரைப்
21

Page 20
வனப்புமிக்க நாள்
பிடித்துத் தள்ளினான் அந்த முரட்டுச் சிப்பாய். பரிசாரகன் தலையிட்டு ஒருவாறு சிப்பாயைச் சாந்தப்படுத்தினான். “இன்று முழுவதும் தூங்கிவிட்டு இப்பொழுதுதான் எழுந்து வருகிறார்" என்றான்.
"ஓ அப்படியா என்னை மன்னித்துக்கொள்ளவும். ஆனால் அந்த இறுக்கமான காற்சட்டையை அணிய வேண்டாம். கவர்ச்சிகரமான அமெரிக்க மங்கைகள் அணியும் உடையினை விகாரமான கால்களைக் கொண்ட நீ அணியக்கூடாது" என்றான் சிப்பாய்.
எதுவுமே நடக்காதது போன்ற ஒரு பொய்த் தோற்றத்துடன் முகாமையாளர் என்னருகே வந்துநின்றார். முகத்தில் அசடுவழிந்தது.
"நான் எல்லோருடனும் நல்லபடியாகவே இருக்க விரும்புகிறேன். எனது வாடிக்கையாளர்களுடன் நான் பழகும் முறையை நீங்கள் அறிவீர்கள்தானே? வனப்பு மிக்க நாள் வந்தனம் கூறுவது ஒரு சம்பிரதாயந்தானே? இது தவறா ஐயா?”
"இல்லவேயில்லை, நீங்கள் கூறியதுபோல உண்மையிலேயே அது ஒரு வாழ்த்துத்தான்” என்று கூறி அவரைச் சமாதானப் படுத்தினேன்.
அவ்விடுதியின் சாளரத்தின் வழியாக மழைநீர் வழிந்து
கொண்டிருந்தது. மழை நின்றுவிட்டது. ஒருசில நிமிடங்களின் பின்பு நான் தெருவில் இறங்கி நடந்தேன். பகலவன் மீண்டும் பிரகாசித்தான். வானந் தூய நீலநிறமாகக் காட்சியளித்தது. வெப்ப நிலை இதமாக, கதகதப்பாக மாறிக்கொண்டிருந்தது. எனது பழைய நண்பனொருவன் என்னை நோக்கி வந்தான். நான் முந்திக் கொண்டேன்.
"உனது வனப்பு மிக்க நாள் வந்தனங்களைத் தெரிவிக்க வேண்டாம். இன்று வனப்பு மிக்க நாள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்” என்றேன்.
22

9ttyerry
அப்புக்காத்து
அவர் தொழில்புரியும் இடத்திலுள்ள எல்லோருமே அவரை "அப்புக்காத்து” என்றுதான் அழைப்பார்கள். அதுதான் அவருடைய குடும்பப்பெயரென்றும் சிலர் சொல்வார்கள். அமெரிக்க மிசனரிமார் யாழ்ப்பாணக் கல்லூரியில் அவருடைய பீட்டனாருக்கு இந்தப் பெயரைச் சூட்டினார்களாம். அவர் இத்தொழிலைக்கொண்டு வாழ்க்கை நடாத்துவதால் ஏற்பட்ட ஒரு காரணப்பெயரென்று வேறுசிலர் சொல்வார்கள். அவரோ இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு"சங்கரன் அப்புக்காத்து”என்றுதான் கையொப்பமிடுவார். கோபுர வீதியில் அமைந்துள்ள வீட்டு விறாந்தையில் தடுப்பிட்டு ஆக்கப்பட்ட அறைதான் அவருடைய செயலகம். அங்கு இடம் போதாதபோது அல்லது சுவையான வழக்கென்று அவருக்குத் தோன்றும்போது தனது கட்சிக்காரர்களை வெளியேயுள்ள வேப்ப மரத்தடிக்கு அழைத்துச் சென்று ஆலோசனை வழங்குவார்.
ஒரு தட்டச்சுப்பொறி, வெற்றுக் கடதாசிகள், சில பத்திரங்கள், ஒரு மேசை, ஒரு முக்காலி இவைகள்தான் அப்புக்காத்தவர்களின் செயலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வஸ்துக்கள். அவருடைய நூலகம் இரண்டேயிரண்டு நூற் தொகுதிகளைக் கொண்டிருந்தது.
ஒருநாள் அதிகாலை அவருடைய வாடிக்கையாளர் ஒருவர் வந்தார்.
“என்ன நடந்தது?” அப்புக்காத்து வழக்கம் போலவே கேட்டார்.
23

Page 21
அப்புக்காத்து
“எனது சகோதரன் கொடுவாக் கத்தியுடன் வந்து என்னைக் கொல்லப் போவதாகப் பயமுறுத்தினான்.”
"ஓ! அப்படியா, எங்கே நீதிமன்ற உத்தரவைக் காட்டு பார்ப்போம்” என்று கேட்டு அதனை வாங்கிப்படித்துப் பார்த்தார். "நீ ஒரு பொய்யனாக இருக்கிறாயே, நீதான் கொடுவாக் கத்திகொண்டு உன் சகோதரனைப் பயமுறுத்தியதாகவல்லவா இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உனது சொந்தச் சகோதரனையே கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய். உன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். சிறைக்குப் போக விருப்பமா?”
“எனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் விட்டு விட்டு நான் எப்படியையா சிறைக்குப் போவேன்? அவன் விரக்தியுடன் கேட்டான்.
"இது ஒரு மோசமான வழக்கு குறைந்தது ஒரு ஆறுமாத சிறைத் தண்டனையாவது கிடைக்கும். அதனை ஆறுவாரங்களாகச் குறைக்கப் பார்க்கிறேன். ஆனால் எனது செலவிற்கு நூறுரூபா வேண்டும். ஒரு சதமேனும் குறையக்கூடாது”
அந்தத் தொகையில் ஒரு பகுதியினை அவனிடமிருந்து கறந்து கொண்டார். அந்த ஏழை மனிதன் பல தடவை வேப்பமரத்தடிக்கும், அப்புக்காத்தின் செயலகத்திற்கும் அலைந்து திரிந்தான். சிறைக்குச் செல்வதை நினைக்கும்போது அவனுக்குக் குலைநடுக்கம் எடுத்தது.
சிரித்தமுகத்துடன் வந்த அப்புக்காத்தைக் கண்டதும் அவனுடைய மனம் சிறிது ஆறுதலடைந்தது. "எல்லாவற்றையும் நல்லபடியாகச் செய்து முடித்துவிட்டேன். இன்று மாலையிலிருந்து நீ ஒரு சுதந்திரப் பறவை” என்றார் அப்புக்காத்து.
அவன் போவதற்கு எழுந்தான். “சிறிது நில், அந்த மீதிப்பணத்தை இன்னும் நீதரவில்லையே”
24.

அப்புக்காத்து
C
ஓ! நான் மறந்துவிட்டேன். உண்மையிலேயே மறந்து விட்டேன்” என்றான் அவன்.
“இந்த ஏழையும் உணவுண்ண வேண்டுமே வெற்று அரிசிச் சாக்கு ஒருபோதும் எழுந்து நிற்காது” என்றார் அப்புக்காத்து.
அந்த மனிதன் தனது வேட்டியைக் குடைந்தான். பின்பு மடியிலிருந்து கசங்கிய பத்துரூபா நோட்பொன்றை எடுத்து நீட்டினான்.
“ஒ இது போதாதே வீட்டிற்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும். இல்லையேல் இரவு முழுவதும் மனைவி முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாள்.
"அப்புக்காத்தையா, இப்போது இது மட்டுந்தான் என்னிடம் உள்ளது. ஆனால் வழக்கில் எனக்கு வெற்றிகிடைத்தால் சாட்சியிடம் சிறிது பணம் கடன்வாங்கி உங்களுக்கு நல்ல பரிசொன்று தருவேன். உங்களுக்கு மிகவும் உற்சாகமூட்டக்கூடிய பரிசாக அது இருக்கும்" அப்புக்காத்து நிலமையைப் புரிந்துகொண்டு வெற்றிலைக் காவியேறிய நாவினால் உதடுகளை நனைத்துக்கொண்டார்.
அவன் சென்றதும் அப்புக்காத்து சில ‘பிட்டிசங்களையும் வேறு சில பத்திரங்களையும் தட்டச்சில் பொறிக்க ஆரம்பித்தார். இவற்றின் மூலம் அவருக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இவர் ஒரு பொழுதும் நீதிமன்றம் செல்வதில்லை. எல்லா விஷயங்களையும் வெளியிலிருந்தே செய்து முடித்துவிடுவார்.
அழகிய கண்களையுடைய இளம்பெண்ணொருத்தியாராவது தன்னை அவதானிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தபடி அப்புக்காத்தின் அறைக்குள் பிரவேசித்தாள். வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிவதற்கான விண்ணப்பப்படிவமொன்று தயாரித்துத் தருமாறு அவரிடம் கேட்டாள்.
25

Page 22
அப்புக்காத்து
"நான் அருமையான விண்ணப்பமொன்று தயாரித்துத் தருகிறேன். ஆனால் அதனைத் தட்டச்சில் பொறித்துத் தருவதற்கு நீ சிறு கட்டணமொன்று தரவேண்டும்” என்றார் அப்புக்காத்து.
“என்னிடம் இப்பொழுது ஒரு சதம்கூட இல்லை. ஆனால் வேலை கிடைத்தவுடன் எப்படியாவது உங்கள் கட்டணத்தைத் தந்து விடுவேன்” என்று கூறினாள் அந்த இளம் பெண்.
சங்கரன் தனது திறமையெல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி ஒரு விண்ணப்பம் தயாரித்தார். அதில் ஒரு கையொப்பமிடுமாறு அவளிடம் கூறினார்.
அவள் வெட்கத்துடன் "எனக்கு எழுதத் தெரியாது” என்று கூறினாள்.
அவர் அந்த விண்ணப்பத்தை வாய்விட்டுச் சத்தமாக வாசித்தார். பின்பு அந்த இளம்பெண்ணின் கையைப் பிடித்து மைத்தட்டில் அவளுடைய வலது பெருவிரலை ஊன்றி அதனைப் பத்திரத்தில் பதித்து அது அவளுடைய விரலடையாளந்தான் என்று உறுதிப்படுத்தினார்.
“நல்லது. எப்படியாவது இந்த வைத்தியசாலையில் உனக்கு நான் ஒரு பணியாள் வேலை எடுத்துத் தருகிறேன். அங்கேயுள்ள பெரிய ஆட்களை எனக்கு நன்றாகத் தெரியும். எனது செல்வாக்கை உபயோகித்து நிச்சயமாக அதனை எடுத்துத் தருவேன். எனது கட்டணம்.”
"நான் ஒரு சதமும் கொண்டு வரவில்லை. ஆனால் முதற் சம்பளம் எடுத்தவுடன் உங்கள் கட்டணத்தைச் செலுத்திவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்."
"அது சரிவராது" என்றபடி விண்ணப்பப் பத்திரத்தை மடித்துத் தனது பையில் வைத்துக் கொண்டார்.
26

அப்புக்காத்து
அவள் அவரைப் பார்த்து முத்துப்பல் தெரியச் சிரித்தாள். அவர் அவளை நோக்கிக் கண் சிமிட்டினார். அவள் எங்கோ பார்த்தாள். அவர் கட்டணத்தைப் பற்றிப் பிரலாபித்தார். அதற்கு அவள்,
“நான் எப்போது சம்பளம் பெறுவேன்?” என்று கேட்பாள். அவர் அவளுடைய வலது கரத்தைப் பற்றி பெருவிரலிலுள்ள மைக்கறையை அழிப்பது போன்ற பாசாங்குடன் தேய்த்தார். அவள் மெதுவாக அவருடைய கைகளைப் பற்றினாள்.
“ஒ நான் எப்படியாவது அந்த வேலையை உனக்கு எடுத்துத் தருவேன். இப்பொழுது இதுபற்றிக் கதைக்க எனக்கு நேரமில்லை. நீ இன்றிரவு வா. நான் காங்கேசன்துறை வைத்தியசாலையில் நேர்முகப் பரீட்சைக்கான ஒழுங்குகள் செய்துவிட்டு முடிவு சொல்கிறேன்"
“எப்போது உங்களைச் சந்திக்கலாம்?" “காங்கேசன்துறை வெளிச்ச வீட்டருகே ஏழு மணிக்கு வந்துவிடு. உண்மையாகவே உனக்கு உத்தியோகம் வேண்டும் என்றால் நீகட்டாயம் வரவேண்டும்” என்றார்.
“சரி, நான் வெளிச்சவீட்டுக்கு வருகிறேன்" என்று கூறியவள் திருட்டுத்தனமாக சுற்றிலும் பார்த்துக்கொண்டு வெளியேறினாள்.
“எல்லாமே நல்லவிதமாக நிறைவேறுகின்றன” தனக்குத் தானே கூறிக்கொண்டார். அன்று காலையிலேயே அவருக்கு நல்ல வருமானம் கிடைத்துவிட்டது. இப்போதோ வேறொன்று. தனது வாடிக்கையாளர் தருவதாக வாக்களித்த பரிசு பற்றியும் சிந்தித்தார். அவன் நிரபராதி எனத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென அருகிலிருந்த தெய்வமொன்றைக் கைகூப்பிப் பிரார்த்தித்துக் கொண்டார்.
மாலை வெய்யில் பிடரியில் உறைக்கத் தொடங்கியதும் சங்கரன் தனது செயலகத்தை இழுத்து மூடினார். அந்த இளம்
27

Page 23
அப்புக்காத்து
பெண்ணின் விண்ணப்பப்படிவம் பையினுள் இருக்கிறதாவென்று தொட்டுப் பார்த்துக்கொண்டு காங்கேசன்துறை பஸ்ஸைப் பிடிப்பதற்காக பெரிய கடையை நோக்கி நடந்தார். விரைவாகச் சென்றுகொண்டிருந்தவரை யாரோ பின்னாலிருந்து உரத்த குரலில் கூப்பிட்டார்கள். காலையில் வந்து சென்ற தனது கட்சிக்காரனை அடையாளம் கண்டு கொண்டார். நல்ல சீமைச் சாராயப் போத்தலொன்றை அவன் அவரிடம் கொடுத்தான்.
சங்கரன் அந்தப் போத்தலைக் கோட்டுப்பையினுள் திணித்த பின்னர் அருகிலிருந்த கடையில் ஒரு கிண்ணமொன்றை வாங்கி அதனை அடுத்த பையினுள் திணித்துக்கொண்டு பஸ் தரிப்பில் காத்திருந்தார்.
அப்புக்காத்தர் வெளிச்ச வீட்டிற்கு வந்து சுற்றுமுற்றும் பார்த்தார். கரிபடிந்த கற்கள் மூன்று அங்கே காணப்பட்டன. யாரோ அங்குவந்து தங்கிச் சமைத்திருக்கிறார்கள். நீண்டதூரத்திற்கு எவரையுமே காணவில்லை. கடலலைகளின் ஒசையைத் தவிர வேறெந்த ஒசையும் கேட்கவில்லை. இந்து சமுத்திரத்தின் பேரலைகள் கரையில் மோதிச் சிதறிக் கொண்டிருந்தன.
தூரத்தே ஓர் உருவம் வருவது தெரிந்தது. நல்லது. எல்லாமே எனது எண்ணப்படி தான் நடக்கின்றன’ சங்கரன் தனக்குள்ளே கூறிக்கொண்டார்.
அந்த இளம்பெண் தானளித்த வாக்கைத் தவறவிடாமல் நேரத்திற்கே வந்து சேர்ந்துவிட்டாள். தான் எப்படியும் அந்த வேலையை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். பையிலிருந்த விண்ணப்பப் பத்திரத்தை எடுத்து அவளுடைய முகத்தின் முன் ஆட்டிக்கொண்டே,
“பார்த்தாயா, நான் மறக்கவேயில்லை” என்றார்.
28

Jsvý/ádenty
அவர் தனது மனைவிக்குத் துரோகம் செய்வதற்கு அந்த இளம்பெண் உடந்தையாக இருந்தாள்.
தொலைவில் நாய்கள் குரைத்தன. அவள் சேலையைச் சரி செய்தவாறு எழுந்தாள். "யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது. நீ உடனே சென்று பஸ்ஸில் ஏறிவிடு”என்றார் சங்கரன்.
"அவர்கள் நம்மைப்போன்ற ஆட்களாக இருக்கமாட்டார்கள்" என்று கூறிக்கொண்டேசிரித்தாள்.
அவள் சென்றதும் அப்புக்காத்தர் வெளிச்ச வீட்டின் கீழிருந்து சாராயத்தையும் கிண்ணத்தையும் எடுத்தார். கிண்ணத்தில் சாராயத்தை ஊற்றிச் சுவைத்துப் பருகினார். மதிமயங்கிய நிலையில் வீடு சென்று கணிசமான தொகைப் பணத்தை மனைவியிடம் கொடுத்தார்.
அடுத்தநாட்காலை கடலில் சென்று குளித்தார். "ஆகா, என்ன சுகம், என்ன சுகம். நேற்றைய இரவின் அசதிகளெல்லாம் பறந்து விட்டன” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டார்.
கோபுரவீதியால் அவர் தனது செயலகத்தை அணுகிக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு சிறு கூட்டம் காணப்பட்டது. “நல்லது இன்று பெருந்தொகையான விண்ணப்பங்கள், பிட்டிசங்கள் எழுதவேண்டியிருக்கும். இன்றைக்கும் நல்ல நாள்தான்”
திருப்தியான புன்முறுவல் ஒன்று முகத்தில் படர்ந்தது. பையில் கையைவிட்டு திறப்புக் கோர்வையைத் துளவி எடுத்துச் செயலகத்தைத் திறக்க முயன்றார். அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் அவருடைய வழியை மறித்துக்கொண்டு குறுக்கே நின்றது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
“நீர் உள்ளே செல்ல முடியாது. இப்பொழுதே என்னுடன் பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும்" என்றார்.
29

Page 24
அப்புக்காத்து
“எனது மனைவி பிள்ளைகளை நான்காப்பாற்ற வேண்டுமே”
"அப்புக்காத்தரே, நீர் ஓர் ஏழைப்பெண்ணை ஏமாற்றிக் கெடுத்துவிட்டீர். அவளுடைய கற்பைச் சூறையாடிவிட்டீர். இதற்கு என்ன கூறுகின்றீர்?" என்றார் பொலிஸ் அதிகாரி
சங்கரன் நடுங்கத் தொடங்கினார். விஷயம் ஒருவாறு புரியத் தொடங்கியது. அப்போது வீட்டுச் சொந்தக்காரர் பாய்ந்து வந்தார். “நீர் இப்பொழுதே இடத்தைக் காலிசெய்துவிட வேண்டும். நேற்று வந்த இளம் பெண் யார்? எங்களுக்கு உமது விளையாட்டுக்கள் எல்லாம் புரிந்துவிட்டது. இது கெளரவமானவர்களுக்குரிய இடம். கெட்டவர்களை இங்கே இருக்க விடமாட்டோம்” என்று பொரிந்து தள்ளினார்.
பொலிஸ்அதிகாரி, இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலையும் இங்குள்ள எல்லோருமே அவதானித்துக் கொண்டு இருப்பதை நீர் அறிவீரா? இந்தப் பட்டினத்திலுள்ள மக்கள் தமது சொந்த அலுவல்களை விட பிறருடைய அலுவல்களிலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பது உமக்குத் தெரியாதா?”
சங்கரன் அங்கிருந்த அனைவரையும் பரிதாபமாகப் பார்த்தார். பின்னர் பொலிஸ் அதிகாரியை நோக்கி, "எனது தட்டச்சுக் கருவியை இங்கிருந்து எடுத்துச் செல்லலாமா?” என்று கேட்டார்.
"தாராளமாக எடுத்துச் செல்லலாம். உமது ஜீவனத்திற்கு ஆதாரமான பொருளை உம்மிடமிருந்து யாரும் பிரிக்க மாட்டார்கள்” என்றார் பொலிஸ் அதிகாரி
சங்கரன் நடுங்கும் கரங்களுடன் தனது தட்டச்சுக் கருவியைத் தூக்கிக்கொண்டு பொலிஸ் அதிகாரி பின்தொடர அருகிலுள்ள அடைவு பிடிப்பவரின் கடைக்குச்சென்றார் தொலைவில் நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன.
30

மலேயா ஓய்வூதியகாரர்
மலேயா ஓய்வூதியக்காரர்
யாழ்ப்பாணத்துப் புத்திஜீவிகள் உணவுண்ணும் விடுதி ஒன்றினுள் நுழைந்தேன். சேற்றுநிற முகத்தையுடைய ஒருவர் பல்லிளித்துக்கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தார்.
"நான் உணவுண்பதற்கு நண்பரொருவரைத் தேடிக் கொண்டு இருந்தேன்” என்று கூறிக்கொண்டு எனது கைகளைப் பற்றினார். “உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வோம். நீங்கள் ஐரோப்பிய தேசங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளீர்கள். நான் தூரகிழக்கு நாடுகள் பலவற்றிற்குச் சென்றிருக்கிறேன். எங்கள் பிரயாண அனுபவங்களை ஒப்புநோக்குவோம்” என்று கூறியபடி உணவு விடுதியின் ஓரத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார். சிறிய மேசையொன்றின் முன் நாங்கள் அமர்ந்தோம். புகைபோக்கியின் அருகிலிருந்த அந்த இடம் ஒரே இரைச்சலாக இருந்தது.
“இந்த நாட்டில் உள்ளோர் உரத்த குரலில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. பரந்த உலகின் பல பாகங்களுக்கும் நாங்கள் சென்றிருப்பதால் நாங்கள் பண்பட்டவர்களாக இருக்கிறோம்” என்றார்.
நான் பரிசாரகனைக் கூப்பிட்டேன். அவரோ என்னை உடனே தடுத்தார்.
"நீங்கள் அவனைக் கூப்பிடக்கூடாது. உங்களிடம் வந்து கேட்க வேண்டியது அவனுடைய கடமை. அவன் வருவதற்குப் பிந்தினால் நீங்கள் கூப்பிடுவதில் தவறில்லை. ‘மலை முஹமதிடம்
31

Page 25
மலேயா ஓய்வூதியகாரர்
வருவதற்கு மறுத்தால் முஹம்மது மலையிடம் செல்ல வேண்டும்" இந்தக் கோட்பாடு எப்படியிருக்கிறது”என்று கேட்டார்.
“பிரமாதமான, மிகப் பொருத்தமான கோட்பாடு” என்றேன்.
“இந்தக் கோட்பாட்டை எங்கிருந்து பெற்றேன் தெரியுமா? புத்தகங்களை வாசித்து இதனை நான் அறியவில்லை. நீர் ஒரு சுற்றுப்பயணியாக இருந்தால் புத்தகங்களை வாசிக்கவேண்டிய அவசியமில்லை. பிரயாணங்கள் எவ்வளவோ அறிவினைத் தருகின்றன. உங்களிடம் கூட ஒரு குறையிருக்கிறது. நீங்கள் தூர கிழக்கு நாடுகளுக்குப் பிரயாணம் செய்யவில்லை”
“விரைவில் அக்குறையை நிவர்த்தி செய்யவிருக்கிறேன்" என்று கூறினேன்.
“அற்புதமான யோசனை. நீங்கள் அங்குசெல்லும்போது என்னைக் கலந்தாலோசிக்க மறக்க வேண்டாம். பாங்கொக், கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங் ஆகிய இடங்களில் தங்குவதற்கு உரிய ஒழுங்குகளை நான் செய்து தருகிறேன்"
"மிகவும் நன்றி” என்றேன். பரிசாரகன் எங்களை நோக்கி அலட்சியமாக நடந்து வந்தான். எனது நண்பர் அவனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டார். அதுபற்றி அவன் அக்கறை கொள்ளவில்லை. உணவு வகைகள் மிகவும் சுவையாகவிருந்தன.
“சுவையான உணவுகளுக்கு இது புகழ்பெற்ற உணவுச்சாலை” என்றேன்.
“இதுவுமொரு உணவா?” அவர் என்னைக் கேலிசெய்தார். “மலேயாவில் பேர்க்ஷயர் பன்றிக் கறியைச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதுவல்லவா உணவு”
32

மலேயா ஓய்வூதியகாரர்
பின்பு மலேயாவின் புகழ்பெற்ற உணவான “சாற்றாய்” என்பதைப்பற்றிக் கூறினார். இறைச்சித் துண்டுகளைச் சிறிதாக வெட்டி உறைப்பான ஆணத்திலிட்டுத் தயாரிக்கப்பட்ட உணவு அது. மேலும் பலவகையான சீன, பாங்கொக் உணவு வகையறாக்களைப் பற்றிவிபரித்தார். தூரகிழக்குநாடுகள் உணவுப்பிரியர்களின் சொர்க்கம் என்று கூறினார். எனக்கு நாவூறியது. சிறிது தண்ணிரைப் பருகி அதனைத் தீர்த்துக்கொண்டேன். நண்பர் தொடர்ந்தார்.
“நான் மலேயாவிலிருந்து ஓய்வூதியம் பெறுபவன். தூரகிழக்கு நாடுகளில் நில அளவையாளராக இருந்திருக்கிறேன். நீண்ட தூரம் பிரயாணித்த நில அளவையாளன் நான்”
எமக்கிடையில் ஒரு சிறு பிணைப்பு ஏற்படுவதை நான் உணர்ந்தேன். எனது மைத்துனர் ஒருவர் மலேயாவில் வாழ்ந்தார். “தம்பத்தான்” என்று அவரை அழைப்போம். எனது சிறு பிராயத்து நிகழ்வுகள் நினைவுவந்தன. தம்பத்தான் பிறர்மேல் அன்பும், கருணையும் உள்ளவர். மலேயாவிலிருந்து வரும்போது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சீனப்பட்டுத் துணிகளைக் கொண்டு வந்து இலவசமாகக் கொடுப்பார்.
நில அளவையாளர் எனது சிந்தனையைக் கலைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“ஒருநாள் நான் கை கழுவுவதற்காகச் சென்று கொண்டிருந்த போது, எனது வெள்ளைக்கார மேலதிகாரி பின்னால் வந்து 'திரு பிள்ளை அவர்களே, ஒரு முக்கியமான விஷயமாக உங்களைக் காணவேண்டியுள்ளது' என்று கூறினார். அதற்கு நான், “எனது பிரத்தியேக நேரத்தில் யாரையும் பார்க்க விரும்பவில்லை' என்று மட்டும் கூறினேன். அத்துடன் வெள்ளைக்காரத் துரை அடங்கி விட்டார்”
33

Page 26
மலேயா ஓய்வூதியகாரர்
“வெளிநாட்டுப் பயணங்களின் பின்னர் இந்த இடம் உங்களுக்குப் பெரிதும் சலிப்பூட்டியிருக்குமே?” என்று கேட்டேன்.
"சலிப்புடன் சோர்வையும் ஊட்டிவிட்டது. தூரகிழக்கு நாட்டில் நான் இருந்தபோது ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் காபரே நடனத்திற்குச் செல்வேன். எவ்வளவு அழகான இளம் பெண்கள் பாங்கொக் பெண்களின் எடுப்பான மார்புகளையும், பேலின் பெண்களின் கச்சிதமான உடல் அமைப்பையும் நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்” என்று வர்ணித்தார்.
அடுத்தநாள் இராப்போசனத்திற்கு எனது வீட்டிற்கு வருமாறு அவரை அழைத்தேன். “உங்கள் அழைப்பிற்கு நன்றி, ஆனால் வர முடியாமலிருப்பதற்கு என்னை மன்னிக்கவும். பெரிய சுல்தான்களோடும், துங்குகளோடும் உணவருந்திய எனக்குப் பொருத்தமான விருந்தை உங்களாற் கொடுக்க முடியாது. ஒருமுறை துங்கு என்னை விருந்தொன்றிற்கு அழைத்திருந்தார். அவருடைய அற்புதமான மாளிகைக்கு எனது ஏவலாளையும் கூட்டிக்கொண்டு சென்றேன். அவனுக்கென ஒரு சீருடை உண்டு. அதனை அணிந்து கொண்டு எனது கார்ச்சாரதியின் அருகில் அமர்ந்து வந்தான். அவனுடைய தொப்பியில் எனது முதலெழுத்துக்களான "எஸ்.எஸ்.பீ.” வர்ண நூல்களினால் பின்னப்பட்டிருந்தன. துங்குவின் பிரித்தானிய விருந்தினர் பலர் அவனைக் கூப்பிட்டு என்னைப் பற்றி விசாரித்தனர். அதற்கு அவன் “இப்பொழுது நீங்கள் எஜமானைப் பார்க்க முடியாது. அவர் நெக்கிலி செம்பிலன் சுல்தானுடனும், சரவாக் ராஜாவுடனும் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் விரும்பினால் நாளை அவருடைய அலுவலகத்திற்கு வந்து சந்திக்கலாம் என்று கூறினான். அவனுடைய பதில் எனக்கு மிகத் திருப்தியாக இருந்தது. எனது ஒரேயொரு பலவீனம் உயர்வு மனப்பாங்கேயன்றி தாழ்வு மனப்பாங்கல்ல”
34

மலேயா ஓய்வூதியகாரர்.
அப்பொழுது இன்னொரு மலேயா ஓய்வூதியக்காரர் அங்கு வந்தார். எங்களுடன் கலந்து கொள்ளுமாறு அவரை அழைத்தேன். ஒரே நாட்டில் வாழ்ந்த இருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.
“நீர் எங்கெல்லாம் சென்றிருக்கிறீர்?" எனது நண்பர் புதியவரைக் கேட்டார்.
“நான் சிறிது காலம் பாங்கொக், கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங் ஆகிய இடங்களில் தங்கியிருக்கிறேன்” என்றார் புதியவர்.
"அப்போ நீர் புகையிரத நிலையங்களை மட்டுமே பார்த்திருப்பீர்” என நண்பர் குத்தலாகச் சொன்னார்.
“நீர் என்ன சொன்னீர்?"
“உம்மைப் போன்றவர்களை உடனடியாகப் புரிந்து கொள்ளலாம். உண்மையாகவே அந்நாடுகளுக்குச் சென்று வந்த மனிதர் உம்மைவிடப் பண்பாடுடையவராக இருப்பார்” என்றார் எனது நண்பர்.
“மடப்பயலே, என்னையா ஏளனஞ் செய்கிறாய்?" புதிதாக வந்தவர் கொதித்தெழுந்தார்.
“நான் நீண்ட தூரம் பிரயாணஞ் செய்த நிலஅளவையாளர். ஆளைப் பார்த்து மரியாதையாகப் பேசப்பாரும் புழுகரே”
நான் எழுந்து குறுக்கிடுவதற்கு முன்னரே விஷயம் முற்றி விட்டது. எனது நண்பர் தனது வலதுகை முஷ்டியால் புதியவரின் தாடையில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். அவர் கதிரையுடன் பின்னாற் சாய்ந்து சீமெந்து நிலத்தில் விழுந்தார். பிடரி நிலத்தில் அடிபட்டு மண்டை உடைந்து இரத்தம் பீரிட்டது. தற்செயலாக அங்கு வந்திருந்த பொலிஸ் அதிகாரியொருவர் விரைந்து வந்தார்.
3.

Page 27
மலேயா ஓய்வூதியகாரர்
“நீர் யார்? எதற்காக இவரை அடித்தீர்?"
“நான்தான் எஸ். எஸ். பிள்ளை. ஒரு யாழ்ப்பாணத் தமிழன். மலேயா ஓய்வூதியம் பெறுபவர். தூரகிழக்கின் அரச குடும்பங்களுக்கு மிகவும் வேண்டியவர். ஆனால் இந்தக் கர்வம்பிடித்த பயல் புகையிரத நிலையங்களை மட்டுமே பார்த்திருப்பவன், நான் பார்த்த அதிசயங்களை எல்லாம் தானும் பார்த்ததாக ஆணவத்துடன் சொல்கிறான். இவன் ஒரு பச்சைப் புழுகன்"
“அளவிற்கதிகமாக பிரயாணஞ் செய்தமைதான் உம்மைப் பிரச்சினைக்கு உரியவராக்கிவிட்டது. நீர் சிறிது காலத்திற்காவது ஒரேயிடத்திலிருப்பதுதான்நல்லது. சிறைச்சாலையின்ஒர்அறைதான் அதற்கு மிகப்பொருத்தமான இடம். உமது புதிய நண்பர்கள் துங்குகளாக இருக்கமாட்டார்கள். சமூகத்திற்குத் தொல்லையளிக்கும் உம்மைப் போன்றவர்களாகவே இருப்பார்கள்” என்றார் பொலிஸ்
அதிகாரி
“விசர்த்தனமாகக் கதைக்க வேண்டாம். அதிக தூரம் பிரயாணம் செய்த என்னைச் சிறைச்சாலையின் தனித்த அறையில் அடைப்பதால் 'கிளஸ்றோபோபியா நோய் பிடித்து நான் அவதிப்பட நேரிடும்"
"அந்தச் சொல்லைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார் பொலிஸ் அதிகாரி
“உம்மால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? பிரயாணங்கள் தான் ஒருவருடைய சொல்லாட்சியை விரிவுபடுத்தும். பொலிஸ் டயறி சொல்லாட்சியை விரிவுபடுத்த மாட்டாது”
"திரு. பிள்ளையவர்களே, நான் உம்முடைய ஏவலாளல்ல. ஒரு பொலிஸ் அதிகாரி உம்முடைய அகராதிகளை நீரே வைத்துக்
36

U08aJህጠr 6muዕ6m¢ጏሀ&ጠዐፅ
கொள்ளும். இப்பொழுது நான் உம்மைக் கைதுசெய்கிறேன் என்றார் பொலிஸ் அதிகாரி.
நண்பருடைய கையைப் பிடித்து அவரை இழுத்துச் சென்றார் பொலிஸ் அதிகாரி. எஸ்.எஸ்பிள்ளை ஹிட்லரின் பாணியில் தனது மறுகரத்தை வீசிக் கொண்டு என்னை நோக்கிக் கத்தினார்.
“தம்பீர் மிக விரைவில் பாங்கொக், கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங் ஆகிய இடங்களில் உம்மைச் சந்திக்கிறேன்.”
பொலிஸ் அதிகாரி நண்பரின் பிருஷ்டத்தில் குறுந்தடியால் ஒரு தட்டுத்தட்டி"ஊர் சுற்றியாரே, உம்மை அவர் சிறைச்சாலையில் சந்தித்துக் கொள்ளட்டும்” என்றார்.
37,

Page 28
தொலுக்கு முதலி
தொலுக்கு முதலி
meg
தாய்மொழிப்பாடசாலை மாணவனான ஜே.ஜே. பனங்காணி சம்பந்தமான குடும்பப் பிரச்சினை வழக்கொன்றில் சாட்சிசொல்ல நீதிமன்றத்திற்கு வந்தான். அங்கு தொலுக்கு முதலியாரின் பதவி அவனை மிகவும் கவர்ந்துவிட்டது. எப்படியாவது தானும் அப்பதவியை அடைந்துவிடவேண்டுமென்று அன்றே தீர்மானித்துவிட்டான். அவன் தாய்மொழிப் பாடசாலையிலிருந்து ஆங்கிலப் பாடசாலைக்குமாறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
ஆனால் தேசவழமைத் தம்பதிகளான அவனுடைய பெற்றோர் அவன் தொடர்ந்தும் தாய் மொழியிலேயே கல்வி கற்பதை விரும்பினார்கள். தங்கள் பிள்ளை பாரம்பரிய முறைகளுக்கு மாறான ஒரு வழியிற் பிரவேசிக்கிறானென அவர்கள் எண்ணினார்கள். அவர்களுடைய பரம்பரையில் யாருமே ஆங்கிலம் படித்திருக்க இல்லை. எப்படியோ ஜே.ஜே. தனது முடிவிற்குப் பெற்றோரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டான். எழுதுவினைஞர் பரீட்சையிற் சித்தியடைந்து காற்சட்டை சப்பாத்துடன் இந்தியக் கோட்டணிந்து யாழ்ப்பாணத்துத் தலைப்பாகையுடன் அவன் தொலுக்கு முதலியாராகக் காட்சி அளிப்பதைப் பார்க்க அவர்களும் விரும்பினார்கள். இத்தொழிலில் நல்ல சம்பளம் மட்டுமன்றி ஓய்வூதியமும் கிடைப்பது அவர்களுக்கு இனித்தது.
“தமிழ்ப் படிப்பிற்கு எல்லையே கிடையாது. ஆனால் ஆங்கில அறிவோ நல்ல பதவியையும், பணத்தையும், புகழையும் தரும். இவனை ஒர் ஆங்கிலப் பாடசாலைக்கு அனுப்புவோம். இவன்
38

தொலுக்கு முதலி
அரசாங்க சேவையில் சேர்ந்துவிட்டால் பியானோ வாசிக்கத் தெரிந்த பெண்ணொருத்தியை நாங்கள் மருமகளாகப் பெறலாம்" என்று தந்தை கூறினார்.
ஆங்கிலப் பாடசாலையிற் சேர்ந்தபோது ஜேஜே இற்கு பதினேழு வயதாகியிருந்தது. மனமுதிர்ச்சி பெற்ற அவன் யாழ்ப்பாணத்திலுள்ள பழம்பெரும் பாடசாலையொன்றிற் சேர்ந்தான். அரசாங்க மொழியான ஆங்கிலத்தைக் கற்பதில் பேரார்வம் காட்டினான். யாராவது இதுபற்றி அவனிடம் கேட்பால், “தமிழ்ப் படிப்பிற்கு எல்லையே இல்லைத் தம்பி. ஆனால் ஆங்கில அறிவு நல்ல ஒரு பதவியையும், பணத்தையும் புகழையும் கொண்டுவரும்" என்று கூறுவான்.
கூடிய கவனத்துடன் ஆங்கில இலக்கணத்தைக் கற்றான். அத்துடன் விவிலியநூலின் புதிய ஏற்பாட்டினையும் படிக்க ஆரம்பித்தான். உலகிலேயே மிகச்சிறந்த ஆங்கில நடையில் எழுதப்பட்ட புத்தகம் விவிலிய நூல்தானென்று அவனுடைய போதகர் கூறியிருந்தார். பல வருட முயற்சியின் பின் அவன் அரசாங்க எழுதுவினைஞனானான்.
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றிய ஜேஜே இறுதியில் தனது இலட்சியப் பதவியாகிய தொலுக்குமுதலி பதவியை அடைந்தான். நீதிமன்றமொன்றில் தொலுக்கு முதலியாகச் சத்தியப் பிரமாணம்
செய்துகொண்பான்.
ஒரு வியாழக்கிழமையன்று புதிய தொலுக்கு முதலியார் ஜேஜே கடமை ஏற்றார். வழக்கறிஞர்கள் நேரகாலத்திற்கே நீதிமன்றத்திற்கு வந்து தங்கள் கட்சிக்காரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவோ நேரத்தின் பின் நீதிபதி வந்து தனது அறைக்குள் நுழைந்தார்.
3)

Page 29
தொலுக்கு முதலி
அன்று கடுமையான வெயில். வழக்கறிஞர்களின் கறுத்தக் கோட்டுக்கள் வெப்பத்தை உறிஞ்சி அவர்களை வதைத்தன. நீதி மன்றத்தினுள்ளிருந்த வாங்குகளில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தார்கள். சிலர் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.
சேவகன் சத்தமிட்டான். “கோட்”
எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
தொலுக்கு முதலியார் வரவுகளைப் பதிவுசெய்தார். அவரை அறிந்தவர்கள் முதல்நாளன்று அவர் பணியாற்றுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அன்று விசாரிக்கப்படவிருந்த வழக்குகளை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். வசதிகளுக்கேற்றவாறு தவணைகள் நிச்சயிக்கப்பட்டன. எல்லாச் செயற்பாடுகளும் கச்சிதமாகவிருந்தன.
புதியசேவகன் ஆங்கிலத்தில் சத்தமிட்டான். “குறைவான அமைதி, குறைவான அமைதி”
வழக்கறிஞர்கள் சிரித்தபடி அவனை நோக்கினார்கள். சிலர் அவனைத் திருத்த முயன்றார்கள். ஆனால், அந்தப் புதிய சேவகன் தொடர்ந்து மும்முறை ஆங்கிலத்தில் “குறைவான அமைதி, குறைவான அமைதி, குறைவான அமைதி” என்று சத்தமிட்டான்.
அங்கு வழக்காட வந்திருந்த புகழ்பெற்ற பாரிஸ்டர் ஒருவர் சேவகனின் கருத்தை ஏற்றுக்கொண்டார். அதில் தவறு இல்லை எனச் சுட்டிக்காட்ட விரும்பிய அவர், "குறைவான அமைதி என்பது மிகச் சரியான, விஞ்ஞானபூர்வமான ஒரு சொற்றொடர். மெதுவாகப் பேசுங்கள் என்ற தொடருக்குப் பதிலாக குறைவான அமைதி எனக் கூறுவது இலக்கியநயமிக்கதாகவும் உள்ளது" என்று அவர் கூறினார். சேவகன் அவரை நோக்கி பணிவாகக் குனிந்து நிமிர்ந்து முன்பைவிடச் சத்தமாகக் கத்தினான், “குறைவான அமைதி"
40

தொலுக்கு முதவி
“இவன் தாய்மொழிப் பாடசாலையில் படித்தவன் போற் தெரிகிறது”என்றார் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி
வழக்கு விசாரணைகள் ஆரம்பித்தன. மின் விசிறிவெப்பமான காற்றைச் சிதறடித்தது. வழக்கறிஞர்களிடையே சில சூடான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மாடு சூப்பிய பனங்கொட்டையினையொத்த தலையலங்காரமுடைய ஒரு வழக்கறிஞர் அரசதரப்புச் சாட்சிகளைப் பொறுமையின்றி விசாரணை செய்தார். புதிய தொலுக்கு முதலியார் தனது திறமைகளை வெளிக்காட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அறிமுகக் கேள்விகள் சிலவற்றை துணிச்சலுடன் கேட்டு அவற்றிற்கான பதில்களை வெற்றிகரமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார்.
சாட்சி தமிழில் பதில்களைக் கூறினான். சாட்சி கூறியவற்றை உடனே புரிந்து கொண்ட நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறிக்கொண்டிருந்தார் தொலுக்கு முதலியார்.
"உனது தொழில் என்ன?”மூன்றாவது அறிமுகக் கேள்வியை வீராப்புடன் கேட்டார் தொலுக்கு முதலியார்.
"நான் அப்பம் விற்கிறவன்” என்று சாட்சி கூறினான். முதலியார் ஒருகணம் தடுமாறினார். "அப்பம்" என்பதற்குச் சரியான ஆங்கிலப் பதம் அவருக்கு நினைவு வரவில்லை. தனது முதல்நாளில் அசாதாரணமான, கடினமான சொற்களைப் பிரயோகிக்க அவர் விரும்பினார்.
போதகர் முன்பொரு முறை கூறியது நினைவிற்கு வந்தது. ‘மிகச் சிறந்த ஆங்கிலப் பதங்கள் விவிலிய நூலிலேயே உள்ளன' அவர் மனம் விவிலியத்தில் அதற்கான சொல்லைத் தேடியலைந்தது.
41

Page 30
தொலுக்கு முதலி
யேசுநாதர் அப்பங்களையும், மீனையும் வைத்து அதிசயம் புரிந்த காட்சி அவர்முன்நிழலாடியது."லோஃப்” அருமையான ஒரு சொல். தொலுக்கு முதலியார் கம்பீரமாக சபையை நோக்கித்திரும்பி சாட்சியின் பதிலை ஆங்கிலத்தில் கூறினார். “த விற்னஸ் இஸ் ஏ லோஃபர்". У .
முன்பே பொருளை விளங்கிக் கொண்ட நீதிபதி, வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் யாவரும் கொல்லென்று சிரித்தனர். “லோஃப்”அப்பமெனில் “லோஃபர்”அப்பக்காரன் என அவர் முடிவு செய்துவிட்டார். நீதிமன்றம் அடங்காச் சிரிப்பில் மூழ்கியிருந்தது.
"குறைவான அமைதி, குறைவான அமைதி, குறைவான அமைதி” தனது ஆங்கிலத்தில் சத்தமிட்டான் சேவகன்.
நீதிமன்றம் அமைதியடைந்து தனது அலுவல்களைக் கவனிக்க ஆரம்பித்தது. தொலுக்கு முதலியார் மீண்டும் தனது பணியைச் செய்ய ஆயத்தமானார்.
42

606pfarth
ரெனிஸ்
பாக்டரும் வழக்கறிஞரும் ரெனிஸ் மட்டைகளுடன் ஆடுகளத்தினுள் இறங்கினார்கள். அவர்களுடைய மனைவிமார் இருவரும் வாங்கொன்றில் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்கத் தயாரானார்கள். பந்து பொறுக்கும் இரண்டு சிறுவர்கள் களத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.
"நேற்று நான் யாரைச் சந்தித்தேன் தெரியுமா?’ பாக்டரின் மனைவி கேட்டாள்.
“தெரியவில்லையே, யாரைச் சந்தித்தாய்?"
“சீதாவை"
“அவள் என்ன கேட்டாள்?"
தனது கணவனைப் பற்றிக் கூறி எனது பிராணனை வாங்கினாள். அவர் இப்போது நீதிபதியாக இருக்கிறாராம். அவரைப் பற்றியே அலட்டிக் கொண்டிருந்தாள். எந்நேரமும் கணவனின் புகழ்பாடும் பெண்களை எனக்குக்கட்டோடுபிடிக்காது"
“நானும் அப்படித்தான். சில பெண்களுக்கு இதைத் தவிர வேறு கதைகளே இருப்பதில்லை. எந்நேரமும் கணவன்மாரைப் பற்றிய கதைதான். இப்படிக் கதைப்பது வெட்கமாகத் தெரியவில்லையோ?”
"அதோ பார் இப்போது எனது கணவர் வென்று கொண்டிருக்கிறார்”என்றாள் பாக்டரின் மனைவி.
43

Page 31
ரெனிஸ்
“சிறிது பொறுத்துப் பாரேன். எனது கணவர்தான் இறுதியில் வெல்வார்” என்றாள் வக்கீலின்மனைவி.
"பந்தை வீசபா"பாக்டர் சிறுவனை நோக்கிச் சத்தமிட்டார். வெளியே போன பந்தை எடுத்து பாக்டரிடம் வீசினான் சிறுவன். வழக்கறிஞர் ஒரு புள்ளியால் வென்றுவிட்டார். அடுத்த ஆட்டம் தொடங்கியது.
"நான் சொன்னது சரிதானே" வழக்கறிஞரின் மனைவி கர்வத்துடன் கேட்டாள். பாக்டரின் மனைவி பதிலேதும் கூறவில்லை. சிறிது நேரத்தின் பின் பேச்சை மாற்றினாள்.
“கணவன் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற பின்பு சீதா மிகவும் பெருமைக்காரியாகிவிட்டாள்" என்றாள் அவள்.
“எனது கணவர்கூட விரைவில் நீதிபதியாகப் போகிறார்” என்றாள் வழக்கறிஞரின் மனைவி. ஆட்டக்காரர்கள் இடம் மாறினார்கள். பந்து பொறுக்கும் சிறுவர்களும் இடம் மாறினார்கள்.
“யார் வெல்வாரோ தெரியவில்லை" என்றாள் வழக்கறிஞரின் மனைவி.
"இம்முறை எனது கணவர்தான் வெல்வார்”
“இல்லை. இம்முறையும் எனது கணவர்தான் வெல்வார்”
"அவர்களையே கேட்டுப் பார்ப்போம்"
“இப்போது கேட்க வேண்டாம். அவர்கள் ஆட்டத்தை முடிக்கும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்”
"நேற்று நான் யாரைச் சந்தித்தேன் என்று உனக்குத் தெரியுமா?”பாக்டரின் மனைவி கேட்டாள்.
“யாரைச் சந்தித்தாய்?"
"அன்னம்மாவை'
44

sigsfer
“அவள் எப்படி இருக்கிறாள்?” "நன்றாகத்தான் இருக்கிறாள். ஆனால் அங்கு சென்றதில் எனக்கு மகிழ்ச்சி கிட்டவில்லை. முழு நேரமும் தனது கணவரைப் பற்றியே அலட்டிக் கொண்டிருந்தாள்”
"அவர்கள் எல்லோருமே அப்படித்தான்” “இது சகிக்கமுடியாத ஒருசெயல். அவள் என்ன சொன்னாள்?"
“தனது கணவனின் தொழிலைப் பற்றி பெருமையடித்தாள். சென்ற வாரம் ஒரு வழக்கில் தனது கணவர் உனது கணவரை வென்றது பற்றியும் அவள் கூறினாள்:”
வழக்கறிஞரின் மனைவி சிரித்தாள். “ஹோ .ஹோ. ஹோ. அவள் அதைப்பற்றியும் கூறினாளா?” என்று கேட்டுவிட்டு அவள் மீண்டும் பலமாகச் சிரித்தாள்.
“அதனை ஏதோவொரு பெரிய காரியமென அவள் பீற்றிக் கொண்டாள்.”
“அதுபற்றி எனது கணவர் விபரமாக என்னிடம் கூறினார். உண்மையிலேயே அவர் தோற்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே அது ஒரு மோசமான வழக்காம் என்ன செய்வது? தன்னைத் தேடி வந்தவர்களின் முகத்திற்காக அவர் அந்த வழக்கை ஏற்றுக் கொண்டார். உண்மையைக் கூறினால் அந்த வழக்கிலும் மறைமுகமான வெற்றி எனது கணவருக்குத்தான் என்று அவருடைய உதவியாளர் என்னிடம் கூறியிருந்தார். நீதிமன்றத்தில் இருந்த எல்லோருமே அப்படித்தான் கூறினார்களாம்" என்றாள் வழக்கறிஞரின் மனைவி.
“இது ஒரு சின்ன விஷயம்தான். வெற்றியும் தோல்வியும் சகஜமானதுதான்” பாக்டரின் மனைவி தத்துவார்த்தமாகக் கூறினாள்.
45

Page 32
வரனிஸ்
"அப்படிச் சொல்லாதே" வழக்கறிஞரின் மனைவி சீறி விழுந்தாள்.
“எனது கணவருக்குக் கூட இப்படியான அனுபவமொன்று ஏற்பட்டது. உயர் வைத்திய அதிகாரி கைவிட்ட சத்திர சிகிச்சை ஒன்றை எனது கணவர் துணிந்து செய்தார். நோயாளி சுகம் அடைந்தபோது, தான் அளித்த ஆரம்ப சிகிச்சையிற்தான் அவன் தப்பினான் என்று அந்த உயர் வைத்திய அதிகாரி கூறினார். இப்படி எல்லாம் நிகழ்வது சர்வசாதாரணம்” என்றாள் பாக்டரின் மனைவி. பந்தொன்று பாக்டரின் மனைவியின் காலடியில் வந்து விழுந்தது. அவள் அதனைக் காலால் உதைத்தாள். பந்து பொறுக்கும் சிறுவன் அதனைப் பிடித்து வழக்கறிஞரிடம் வீசினான். அவர் பலமாகப் பந்தையடித்து ஆட்டத்தை ஆரம்பித்தார். பாக்டரினால் அந்தப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. பந்து வேலியில் உள்ள ஒட்டையொன்றுள் புகுந்து மறைந்தது. சிறுவன் வேலியைக் கடந்து சென்று பந்தைத் தேடினான்.
"ஆஹா என்ன அருமையானஅடி” வழக்கறிஞரின் மனைவி கூறினாள். ஆட்டம் மீண்டும் ஆரம்பித்தது. வழக்கறிஞர் போட்ட பந்தை மிகவும் லாவகமாக விளாசினார் பாக்டர்.
“பார்த்தாயா, என்ன அருமையான அடி'என்றாள் டாக்டரின் மனைவி. சிறிதுநேரம் எதுவுமே பேசிக்கொள்ளாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விளையாட்டின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியது. ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. நீண்டநேரத்திற்கு பந்து தவறவில்லை. அது செல்லுமிடத்தை நோக்கி இருவருடைய தலைகளும் திரும்பிய வண்ணமிருந்தன. இதனைப் பார்த்துக் களைப்படைந்த நிலையில் ஒருவரையொருவர் நோக்கினார்கள்.
"சனிக்கிழமை நீ விருந்திற்குப் போகிறாயா?” “யாருடைய விருந்து?"
A6

refers
"லீலாவினுடையது” “ஓ! பொறியியலாளரின் மனைவிதானே, நான் கட்டாயம் அங்கு போகவேண்டும். எனது கணவரின் கெளரவத்திற்காக இவ்வாறான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது” பாக்டரின் மனைவி கூறினாள்.
“எனக்கும் அதேநிலைதான். ஒரு பிரபல்யமான வழக்கறிஞரின் மனைவிக்கு இவ்வாறான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது ஒரு முக்கிய கடமை”
“லிலாவின் கணவரின் பதவி உயர்வுக்காகத்தான் இந்த விருந்தை ஏற்பாடு செய்கிறார்கள்” என்றாள் டாக்டரின் மனைவி.
“எனக்கு இது எப்பொழுதோ தெரியும்” என்றாள் வழக்கறிஞரின் மனைவி.
“எதற்காக அவருக்குப் பதவி உயர்வு கொடுத்தார்களோ தெரியவில்லை”
“ஏதாவது மின்சார அல்லது தொலைபேசி இணைப்பைப் பூர்த்தி செய்ததற்காக இருக்கலாம். என்னவென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் பொறியியல் துறையில் மிகத்திறமையான ஒரு செயலென்று நான் கேள்விப்பட்டேன். எப்படியோ சனிக்கிழமை இதைப்பற்றி விபரமாக அறிந்து கொள்ளலாம்"
“தமது கணவர்மாரைப் பற்றியே எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கும் பெண்களை எனக்குப் பிடிக்காது. அது ஒரு வீண்தனமான செயலென்று எனக்குப்படுகிறது. அப்படியில்லையா?” "நீ சொல்வது சரிதான். அதைவிட பெரிய வீண் செயல் வேறில்லை” என்றாள் பாக்டரின் மனைவி. − “உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்ளேன். எனது கணவர் சட்டத்துறையில் பெற்றுள்ள திறமையினைப் பற்றி நான்
47

Page 33
வரனிஸ்
பெருமையடிப்பதில்லை. அவர் பல சிச்கலான வழக்குகளை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவற்றிலெல்லாம் வெற்றியும் பெற்று விடுகிறார். நானோ அதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை”
"அதேபோலத்தான் எனது கணவரும். பிரச்சினைக்குரிய பல நோயாளிகளை அவர் கவனிக்கிறார். அத்துடன் எப்படியாவது அவர்களைக் குணப்படுத்தியும் விடுகிறார். உண்மையில் அவர் ஒர் அற்புதமான சத்திரசிகிச்சை நிபுணர். நானோ இதைப்பற்றி வாயைத் திறப்பதேயில்லை"
சூரியன் அடிவானில் மறையத் தொடங்கினான். ரெனிஸ் ஆடுகளம் செந்நிறம் பூத்தது. வெப்பம் குறைந்து குளிர்ந்த தென்றல் வீசியது.
"ஆஹா, இந்த இளம் காற்று மிகவும் ரம்மியமாக இருக்கிறது” “கணவரின் துதிபாடும் பெண்களின் வீடுகளுக்குச் செல்வதை விட இங்கு வருவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்"
அதோ அவரைப்பார். அந்தச் சீனப்பட்டுச் சேட்டு அவருக்கு மிகவும் எடுப்பாக இருக்கிறதல்லவா? அதனை நானே தைத்தேன். என்றாள் பாக்டரின் மனைவி.
“எனது கணவருக்கு ஜப்பானிய பியூஜிப் பட்டில் சேட்டொன்று தைத்தேன். அது அவருக்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஆஹா இந்த மாலை வேளையில் அவர் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார்” என்றாள் வழக்கறிஞரின் மனைவி.
விளையாட்டு முடிந்தது. பந்து பொறுக்கும் சிறுவர்கள் பந்துகளைச் சேகரித்த பின் வலையையும், நாபாக்களையும் அகற்றிச் சுருட்ட ஆயத்தமானார்கள். டாக்டரும் வக்கீலும் தங்கள் விளையாட்டு மேலங்கிகளை எடுத்துக்கொண்பார்கள். மனைவியர் இருவரும் அடுத்தநாள் ரெனிஸ் ஆடுகளத்திற் சந்திப்பதற்கு ஆயத்தமானார்கள்.
48

நீதிபதியினர் மகள்
நீதிபதியின் மகன்
அரசினரின் தந்தி கிடைத்ததும் தந்தையைவிடத் தாயே பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள். தந்தையோ மீசையை முறுக்கியபடி “நல்லது, நல்லது” என்று மட்டும் கூறினார். அவருடைய இளைய மகன், குடும்பத்தின் இளைய வாரிசு நிலத்தில் உருண்டு கட்டிற்கு அபங்காத தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். பின்னர் எழுந்து வீட்டைச் சுற்றி ஓடினான்.
“நான் ஒரு நீதிபதியின் மகன் ஹேய், ஹேய் நீதிபதியின் மகன்” என்று சத்தமிட்டவாறு துள்ளிக் குதித்தான். வேலியில் பொட்பொன்றைப் பிரித்து தலையை அதனுள் நுழைத்து தனது விளையாட்டுத் தோழர்களை நோக்கிக் கத்தினான். “நான் இப்பொழுது ஒரு நீதிபதியின் மகன், கெட்ட நாய்களே நான் சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா? நான் ஒரு நீதிபதியின் மகன்”
அந்தக் குடும்பத் தலைவரான வழக்கறிஞரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனஞ் செய்திருப்பதாக அந்தத் தந்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது. மனைவி இப்பொழுதே புதிய நிலைக்குத் தன்னைத் தயார்படுத்த ஆரம்பித்துவிட்டாள். இறைவன் அவளுடைய பிரார்த் தனைக்குச் செவிசாய்த்து இரங்கியதாற்தான் அவருக்கு இந்தப் பதவி கிடைத்ததாக அவள் எண்ணினாள்.
சிறுவன் இன்னும் வேலியோரத்தில் நின்று கொண்டு அயல் வீட்டுச் சிறுவர்களிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தான். “கீழ்சாதிப் பயல்களே, இனி உங்கள் அலுவல்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நான் அங்கெல்லாம் வர மாட்டேன்”
4)

Page 34
நீதிபதியின் மகனி
“இதைச் சொல்ல நீ யாரடா?” என்றான் ஒருவன். “நான்தான் ஜே.ஜே. நீதிபதியின் மகன்” “ஜேஜே என்பது பெயர்களின் முதலெழுத்துக்கள் தானே. உனது உண்மையான பெயரென்ன? உலகத்தில் எவருக்கும் முதலெழுத்துக்கள் மட்டும் இருப்பதில்லையே”
“எனக்கு இருக்கிறது. அதுதான் ஜே.ஜே. அதுதான் என் பெயர்’
அவன் கம்பீரமான குரலிற் சொன்னதை அச்சிறுவர்கள் மறுதலிக்கவில்லை. அவனுடைய தந்தையாரும் முதலெழுத்துக்களாலேயே அழைக்கப்பட்டார். தகப்பனுடைய ஒவ்வொரு செயலைப் பற்றியும் அவன் பெருமையடிப்பான்.
அவனுடைய தாய் பெரிய காரொன்றை வாங்குவதற்காக தனது சகோதரனான நாதன் மாமாவைக் கொழும்பிற்கு அனுப்பினாள் காரைப்பற்றிய சகல விஷயங்களையும் அவர் நன்கறிவார். எல்லாவிதமான தயாரிப்புக்களைப் பற்றியும் அவர் நன்கறிந்திருந்தார். அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் அவருடைய சுற்றத்தாரிடையே முதன்முதலில் கார் வைத்திருந்தவரும் அவர்தான். மிகச்சிறந்த பராக்கிரமசாலியாகவும் அவர் கருதப்பட்டார். காட்டு யானைகளும், காட்டெருமைகளும், கல்லெறியும் காடையர்களும் நிறைந்துள்ள காடுகளினூடாக காரைச் செலுத்திச் செல்வதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். இத்தடைகளையெல்லாம் தாண்டிச் செல்லும் தைரியம் நாதன் மாமாவிடம் நிறையவிருக்கிறது. மேல்நோக்கி முறுக்கி விடப்பட்ட குத்து மீசையும், வைரமேறிய புஜங்களும் உடைய நாதன் மாமா தன்னிகரற்ற ஒரு பயில்வானைப் போலத் தோற்றமளிப்பார்.
சில நாட்களின் பின்னர் புதிய நீதிபதியின் வீட்டினுள்ள புதிய பெரிய கறுப்பு நிறக் காரொன்று பிரவேசித்தது. ஜே.ஜே. மகிழ்ச்சி
50

SusuPstuoaa
தாங்க முடியாமல் மீண்டும் ஒருமுறை நிலத்தில் விழுந்து புரண்பான். அவனுடைய அண்ணாவும் அக்காவும் படிப்படியாக மாட்டு வண்டியிலிருந்து குதிரை வண்டிக்கு வந்து, பின்னர் தான் காருக்கு வந்தார்கள். ஆனால் அதிஷ்டசாலியான ஜே.ஜே. முதல் அடியையே காருக்குள் வைத்தான்.
நாதன் மாமா தனது பராக்கிரமங்களைப் பற்றி உறவினர்களிடம் பெரிதாகப் பீற்றிக் கொண்டார். "கொழும்பில் இருந்து வரும்போது காட்டினுள் பல காடையர்களை ஓட ஓடத் துரத்தினேன். பின்னர் இரண்டு எருமைகளின் முதுகு முறிய அடித்தேன். என்னைத் தாக்க வந்த வெறிபிடித்த யானையொன்றின் தந்தங்களைப் பற்றிப் பிடித்து முறுக்கப்பிடுங்கியெடுத்தேன். அது பயந்து ஒட்டமெடுத்தது” என்று மீசையை முறுக்கிக் கொண்டே கூறினார்.
நாதன் மாமா சாரதிகள் சிலரைப் பரீட்சித்து மிகச் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து நீதிபதியின் சாரதியாக நியமித்தார். இதன்மூலம் தனது அந்தஸ்து உயர்ந்து விட்டதாக அந்தச் சாரதி கருதினான். புன்னகையுடன் வெற்றிலைப் பெட்டியை எடுத்து ஒருவாய் வெற்றிலை போட்டுக்கொண்டான்.
புதிய இலட்சிய வாழ்க்கையொன்றை ஆரம்பிப்பதற்கு அந்தக் குடும்பத்தினர் தயாரானார்கள். ஆனால், ஜே.ஜே.யின் அண்ணனோ தான் பிறந்து வளர்ந்த வேம்படிச் சூழலை விட்டுப்பிரியமனமின்றிக் கண்ணீர் சிந்தியவாறு புதிய காரில் அவர்களுடன் சென்றான். வேம்படிப் பாடசாலையைச் சேர்ந்த கம்பீரமான பெண்கள் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினார்கள். அயலிலுள்ள சிறுவர்கள் ஒன்றுகூடி “நீதிபதியின் மகனே! நீதிபதியின் மகனே" என்று சத்தமிட்டார்கள். கார் ஊர்ந்து செல்லத் துவங்கியது. வேப்ப மரங்கள் பூக்களையும், பழங்களையும் காரின் கூரைமேல் சொரிந்தன. கிளைகள் காற்றில் அசைந்து அவர்களுக்குப்பிரியாவிடை வழங்கின.
51

Page 35
நீதிபதியின் மகன்
"நாங்கள் எங்கே போகின்றோம்பப்பா”ஜேஜே கேட்டான்.
“யானைக் குன்றும், அருமையான துறைமுகமும் உள்ள வனப்புமிக்க குடாப் பகுதியொன்றிற்குச் செல்கிறோம்"
"ஏன் அங்கே போகிறோம்?"
“எங்களுடைய ஜீவியத்திற்காக”
“அவனுக்கு உண்மையைச் செல்லுங்களேன். மகனே உனது பப்பா அங்கே நீதிபதியாக இருக்கப் போகிறார். நாங்கள் அங்கு செல்வச் செழிப்புடனும், புகழுடனும் வாழப் போகிறோம். எங்களிடம் அதிகாரம் இருக்கும். அங்குநீ ஒரு நீதிபதியின் மகனாக உலாவருவாய்' என்றாள் தாய்.
"நீதிபதியின் மகன், நான் ஒரு நீதிபதியின் மகன்” என்று சத்தமிட்டவாறு ஜேஜே துள்ளிக் குதித்தான். அவர்கள் விரைவில் முறிகண்டி என்னும் புகழ்பெற்ற தலத்தை அடைந்தார்கள். சாரதி இறங்கிச் சென்று தேங்காய் அடித்து, கற்பூரம் கொழுத்தி கடவுளை வணங்கி வந்தான். எந்தவிதமான விபத்துக்களும் இனிவராது என்ற நம்பிக்கையுடன் அவன் புன்னகைத்தான். அவர்கள் இளநீர் குடித்து தாகசாந்தி செய்த பின்னர் பிரயாணத்தைத் தொடர்ந்தார்கள்.
பக்தர்களின் கூட்டமொன்று குறுக்கிட்டது. பெருந் தொகையான மக்கள் நெற்றியிலும் மார்பிலும் விபூதி அப்பிக் கொண்டு ஒரு யானையைப் பின்தொடர்ந்தார்கள். அந்த யானையின் இருபுறமும் இரண்டுமணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. யானை ஆடியசைந்து செல்லும்போது, அந்த மணிகள் சப்தித்தன. தனக்கு ஒரு யானைத்தந்தம் வேண்டுமென ஜேஜே அடம்பிடித்து அழுதான்.
“சத்தம் போடாமலிரு. யானையின் தந்தங்களைப் பிடுங்கித் தருவதற்கு நாதன் மாமா இங்கே இல்லை” என்று தாய் கூறினாள். அப்படியும் அவன் அடங்கவில்லை. அவனுடைய கவனத்தை
52

duduPat upah
வேறிடத்திற்குத் திருப்பும் பொருட்டு சாரதி மரங்களிலிருந்த குரங்குகளைக் காட்டினான். அவை கூட்டங்கூட்டமாக இருந்து பெண்களைப் போல ஒன்றுக்கொன்று பேன் எடுத்துக் கொண்டிருந்தன. கார் மெதுவாகச் சென்றபோது சில குரங்குகள் கோபத்தோடு பின்தொடர்ந்தன. சில குரங்குகள் பாய்ந்து சென்றன. வேறு சில குரங்குகள் மரத்திற்கு மரம் தாவிச் சென்றன.
பரந்து விரிந்த நெல்வயல்களில் ஆண்களும், பெண்களும் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் வாய்க்காலொன்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கார் வேகமாகச்சென்று கொண்டிருந்தபோது மண்குடிசைகளிலிருந்து வெளியே ஓடிவந்த குழந்தைகள் காரைநோக்கிக் கையசைத்து மகிழ்ந்தன.
மாலையானபோது அவர்கள் இந்து சமுத்திரத்தின் கரையை அடைந்து விட்டார்கள். நகரத்தை அடைந்து விட்டதை ஜே.ஜே. உணர்ந்துகொண்டான். ܗܝ
"பப்பா, நாங்கள் இப்போது எந்த இடத்திற்கு வந்திருக்கிறோம்?”
"அதோ தொலைவில் தெரிகிறதே அதுதான் யானைக்குன்று. அதற்கப்பால் எமது பங்களா இருக்கிறது"
புதிய நகரத்தில் தந்தையார் மகனுக்கு நல்ல பாடசாலை ஒன்றைத் தேடினார். வேப்பமரந்தான் அவர்களுடைய அதிஷ்டமான மரம். எனவே, நீதிபதி வேப்பமரத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றையே அக்கறையுடன் தேடினார். இது அவருக்குச் சிரம மானதாக இருக்கவில்லை. மெதடிஸ்த திருச்சபையார் வேப்ப மரமுள்ள இடங்களில்தான் பாடசாலைகளை அமைத்து அவற்றிற்கு வேம்படிப் பாடசாலைகள் எனப் பெயருமிட்டுள்ளனர். ஜே.ஜே. அவ்வாறான பாடசாலையொன்றிற் சேர்க்கப்பட்டான்.
53

Page 36
நீதிபதியின் மகன்
கடலலைகளின் அழகையும் கடற்காற்றையும் அந்தக் குடும்பம் நன்கு அனுபவித்தது. ஜே.ஜே.நீதிபதியின் மகனென்ற பெருமையுடன் பாடசாலைக்குச்சென்றான். பொலிஸ்காரர்கள் யாவரும் நீதிபதியைக் காணும்போது எல்லாம் மரியாதை செலுத்தினர். ஆனால், அந்தச் சிறுவனுக்கு அவர்கள் அவ்வாறு மரியாதை செலுத்தவில்லை. அவன் தகப்பனிடம்சென்று இதுபற்றி முறையிட்டான். அங்குள்ள சகல பொலிஸ்காரர்களும் தனது மகனுக்கும் மரியாதை செலுத்த வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார். அன்றிலிருந்து பொலிஸ்காரர்கள் எங்கே, எப்போது ஜே.ஜே. ஐக் கண்டாலும் கால்களைக் கூட்டி விறைப்பாக நின்று மரியாதை செலுத்தி விட்டுத்தான் அப்பாற் செல்வார்கள்.
ஒருநாள் மாலை தான் ஜெ. இ. சி. உ க. செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டதாகக் கூறிக்கொண்டு ஜேஜே.வந்தான்.
“ஜெ. இ. சி. உக என்றால் என்ன?” என்று தந்தை கேட்டார்.
“ஜெலம் இளம் சிறார் உதைபந்தாட்டக் கழகம்”
"ஓ! மிகவும் நல்லது”
“பப்பா, நாங்கள் இதன் திறப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாடப் போகிறோம். அண்ணா பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். நாங்கள் மாலை போட்டு அவரை வரவேற்கப் போகிறோம்"
6. O 9. நலலது.
“பப்பா, எனக்கு இருபத்தைந்து ரூபா வேண்டும். அங்கத்துவ சந்தாப் பணம் செலுத்த வேண்டும்”
"மற்றைய சிறுவர்கள் எவ்வளவு கொடுக்கிறார்கள்?" "இருபத்தைந்து சதம். நீதிபதியின் மகனாகிய நான் எங்கள்

நீதிபதியினி மகனி
அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள். நீங்கள் இருபத்தைந்து ரூபா தராவிட்டால் நாளை காலையில் நான் பாடசாலைக்குச் செல்ல மாட்டேன்”
“முடியாது. அவ்வளவு பெருந் தொகையை நான் தர மாட்டேன். நீயும் உனது அம்மாவும் என்னை உயிருடன் வைத்தே சமாதி கட்டிவிடுவீர்கள். உங்கள் நடத்தையைப் பார்த்தால் நாங்கள் இங்கு உழைப்பதற்கு வராமல் செலவு செய்யவே வந்திருக்கிறோம் போலவிருக்கிறது. ஒ நான் ஏன் வேம்படியை விட்டு வந்தேன்.வேப்ப மரங்களே! நீங்கள் எங்கு சென்று விட்டீர்கள்?"
ஜே.ஜேயின் அக்கா அறைக்குட் சென்று பிரம்பொன்றை எடுத்து வந்தாள். “இவனுக்கு நல்லபூசை கொடுக்க வேண்டும்பப்பா" என்று கூறிக்கொண்டு தந்தையிடம் பிரம்பைக்கொடுத்தாள்.
நீதிபதி பிரம்பை எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினார். "உனது ஆடம்பரங்களும், கேளிக்கை ஆசைகளும், அதிகார மோகமும் இல்லாதொழியும் வரை அடித்து நொருக்கப்போகிறேன்" என்றவாறு அவனை நெருங்கினார்.
பிரம்பு அவனைத் தீண்டுமுன்னர் கதறிக்கொண்டு தாயிடம் ஓடிச்சென்று அவளுடைய கால்களுக்கிடையில் தலையைப் புதைத்துக் கொண்டு அழுதான். “ஓஅம்மா. நான் ஒரு நீதிபதியின் மகனென்று எப்போதும் சொல்லுவாயே, நீதானே அப்படிச் சொல்லித் தந்தாய், அப்படியில்லையா? நீ அப்படிச் சொல்லித் தரவில்லையா?”
6

Page 37
முள்ளுக்கரண்டி
முள்ளுக் கரண்டி
பார்வதியைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றாள் மேற்றன். அந்த அறையை வியப்புடன் சுற்றி நோக்கினாள் அந்தச் சிறுமி அதிபருடைய அறையினைப்போலவே அந்த அறையும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நகரிலுள்ள ஒவ்வொருவரும் ஆங்கிலேயர்களைப்போல வாழக்கூடும் என்று அவள் எண்ணினாள். அவள்கூட வளர்ந்த பின்னர் அவர்களைப் போல வாழலாம்.
புதிய சிறுமியின் கிராம வாழ்க்கையைப் பற்றிக் கூறுமாறு மேற்றன் கேட்பாள். அவள் தனது பெற்றோர், சுப்பு, சுப்புவின் வண்டியோட்டியான புல்லுக்காரன் ஆகியவர்களைப் பற்றிச் சொன்னாள். அவளுக்குப் புல்லுக்காரனின் பெயர் தெரியாது. அவனைப்பற்றித் தெரிந்ததெல்லாம் அவன் சுப்புவின் புல்லுக்காரன் என்பது மட்டுமே. அவனை ஏன் அப்படி அழைக்கிறார்களென்றும் அவளுக்குத் தெரியாது. அவன் அடிக்கடி அவளைக் கேலிசெய்து பின்புறத்தில் செல்லமாகக் கிள்ளுவான். வேறு யாராவது அப்படிக் கிள்ளினால் அவளுக்குப் பொல்லாத கோபம் வரும். ஆனால் புல்லுக்காரன் கிள்ளும்போது மட்டும் அவள் மகிழ்ச்சியடைவாள்.
"நீ ஆங்கிலம் படிக்கவேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் நான் அதற்கு உதவுவேன்” என்றாள் மேற்றன்.
மேற்றன் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு அவளுக்கு ஆங்கிலம் கற்பித்தாள். ஆனால் பார்வதியோ ஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொள்வதற்கே திணறினாள். பொறுமை இழந்த மேற்றன் இதற்காக அவளை ஏசினாள். பார்வதிக்கு அழுகை
56

முள்ளுக்கரண்டி
பொத்துக் கொண்டு வந்தது. பின்னர் மேற்றன் இரக்கம் கொண்டு அவளைத் தேற்றினாள்.
"ஒ அழாதேயம்மா. தயவுசெய்து அழாதே. ஆரம்பத்தில் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் வெகு விரைவில் நீஇதில் திறமை பெற்றுவிடுவாய். நீ ஒரு கெட்டிக்காரப் பெண். எண்கணிதத்தில் மிகவும் கெட்டிக்காரியாக இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்"
பார்வதி புறங்கையால் கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள். மேற்றன் ஒரு சொக்கிளேற்றுத்துண்டைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தாள். பார்வதி அதனை வாயிற் போட்டுக்கொண்டு மேற்றனைப் பார்த்தாள்.
"சாப்பிடம்மா, ஆனால் சாப்பிடுவதற்கு முன் நீஎனக்கு நன்றி சொல்லவேண்டும். யாராவது உனக்கு எதையாவது கொடுக்கும் போது கட்டாயம் நன்றி” என்று சொல்ல வேண்டும்”
“நன்றி”
“ஓ அப்படியில்லை. நன்றி மேற்றன் அக்கா’ என்று சொல்ல வேண்டும்”
“நன்றி மேற்றன் அக்கா"
மேற்றன் பார்வதிக்கு ஒரு படத்தைக் காட்டி , "நீ இதனைப் பார்த்திருக்கிறாயா?"என்று கேட்பாள்.அதில்யேசுநாதரும் அவரைச் சுற்றிப் பல குழந்தைகளும் இருந்தார்கள்.
“இல்லையே இவர்கள் யார்?" “இது யேசுநாதரின் படம். எமது ஆண்டவரும், இரட்சகரும் இவர்தான்”
"அப்படியென்றால் என்ன?”
57

Page 38
முள்ளுக்கரண்டி
அவர் பாவிகளாகிய எங்களை மீட்பதற்கென உதித்தவர். எங்களைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காக அவர் சிலுவையில் மரித்தார்.
“இப்பொழுது இவையெல்லாம் உனக்கு விளங்காது. வளர்ந்த பின்பு புரிந்துகொள்வாய். யேசுநாதர் குழந்தைகளை நேசிப்பவர். குழந்தையின் உலகம்தான் கடவுளின் ராஜ்யம்' என்று அவர் கூறினார். நீ அவரிடம் செல்லவேண்டும் பார்வதி, உன்னை அவர் இரட்சிப்பார்”
"அவரைப்பார்க்கவே முடியாதபோது எப்படியக்கா அவரிடம் போகமுடியும்? அவர் பாடசாலைக்கு வருவாரா?”
“ஒஇவற்றைக் கூடநீஅறியாமலிருக்கிறாயே. ஒரு கிறிஸ்தவக் குழந்தை இவற்றைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். உனது பெற்றோர்கள் உன்னைச் சரியான வழியில் வளர்க்கவில்லை”
“மேற்றன் அக்கா"
"61østat?"
"அவருடைய மனைவிகள் எங்கே?" “யாருடைய மனைவிகள்?"
"அவருடைய மனைவிகள் தான். அவருடைய பெயரென்ன? ஏதோவொரு நாதரென்று சொன்னீர்களே”
"ஓ! தெய்வ நிந்தனை செய்கிறாளே” என்ற தனது தலையிலடித்துக்கொண்டாள் மேற்றன். "ஐயோ நான் என்ன செய்வேன், இவள் தெய்வநிந்தனை செய்து விட்டாளே, ஆண்டவனுக்கெதிராக ஒருபாவத்தைத் தேடிக்கொண்டுவிட்டாளே”
58

முள்ளுக்கரண்டி
மேற்றன் தளர்ச்சியுடன் காணப்பட்டாள். பார்வதி முட்டாட் தனமான கேள்வி ஒன்றால் ஆண்டவனுக்கு எதிரான பாவம் ஒன்றைத் தேடிக் கொண்டாள் என்று மேற்றன் நம்பினாள். பரிசுத்தமானவர்களுக்கும் மேலான பரிசுத்தம் மிக்கவருக்கு மனைவியா?
யேசுநாதரின் படத்தின் முன்னால் முழந்தாளிட்டு நின்று, கைகளைக் கூப்பி, சிரம் தாழ்த்தியவாறு பிரார்த்தனையொன்றை
பார்வதி மேற்றணின் நடத்தைகளைக் கண்டு அதிர்ந்து விட்டாள். அவளருகே சென்று முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டு அவளுடைய முந்தானையைப் பற்றிக் கொண்டாள்.
"நான் என்ன குற்றம் செய்தேனென்று தெரியவில்லையே, உங்களுடைய கடவுளுக்கு எத்தனை மனைவிகளிருப்பதாகத்தானே, கேட்டேன். இதனை ஏன் கேட்டேனென்றால் எமது கடவுளுக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்"
"அது எந்தக் கடவுள்?"
“கப்பிரமணியர்”
"ஓ! நீ எப்படி உங்கள் கடவுளை யேசுநாதருடன் ஒப்பிட முடியும் போ, போய் அங்கேயிரு” என்று கூறியபடி அவளைப் பிடித்துத் தள்ளினாள். அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அமைதியின்றிக் காணப்பட்டாள்.
பார்வதி ஒரு மூலையில் அமர்ந்து வெருட்சியுடன் அவளை நோக்கியவாறிருந்தாள். சிறிது நேரத்தின் பின் ஒருவாறு அமைதி அடைந்து பார்வதியை நோக்கிச் சென்று அவளுடைய தலையைக் கோதியபடியே, “குழந்தாய், நீ அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.
59

Page 39
முள்ளுக்கரண்டி
போகப்போக அவை உனக்கு விளங்கும். நிச்சயமாக நீயேசுநாதரிடம் செல்வாய். அவரொருவரால் மட்டும்தான் உன்னை இரட்சிக்க முடியும்” என்றாள்.
பின்னர் பார்வதியைத் தூக்கித் தனது மடியில் இருத்திக் கொண்டு"இதோ பார்! நீ இப்பொழுது உனது தாயாருடன் இல்லை. எங்களுடன் இருக்கிறாய். நாங்கள் சொல்வதைத்தான் நீ கேட்டு நடக்க வேண்டும். நீஇரட்சிக்கப்படவேண்டுமாயின் யேசுநாதரிடம் தான் செல்ல வேண்டும்” என்று கூறினாள்.
"இரட்சிக்கப்படுதல் என்றால் என்ன?” "நீ சொர்க்கத்திற்குப் போக விரும்பினால் யேசுநாதரிடம் செல்ல வேண்டும்”
"அப்படியென்றால் அம்மா சொர்க்கத்திற்குப் போக மாட்பாளா?” என்று அச்சிறுமி கண்களை அகல விரித்துக் கொண்டு கேட்டாள்.
அவளுடைய கண்களை நோக்கிய மேற்றன், “அதுபற்றி எனக்குத் தெரியாது. எப்படியோ உனது தாயார் நலமாக இருப்பாள் என்று நான் நினைக்கிறேன். அவள் யேசுநாதரைப் பற்றியோ, அவருடைய தேவ வாக்குகள் பற்றியோ அறிந்திருக்க மாட்டாள். ஆனால், அவரைப்பற்றி அறிந்திருந்தும் அவருடைய அழைப்பிற்குச் செவிசாய்க்காதவர்கள் சொர்க்கத்திற்குப் போக முடியாது” என்று கூறினாள்.
அந்தச் சிறுமி நகத்தைக் கடித்தவாறு ஏதோ சிந்தனையில் மூழ்கினாள். தான் கூறியவற்றையெல்லாம் பார்வதி புரிந்து கொண்டிருப்பாளோவென்பது மேற்றனுக்குத் தெரியவில்லை. பாடசாலை மணி அடித்தது. வெளி மாணவிகள் மதிய உணவிற்காக வீடுகளுக்குச் செல்வார்களென்றும், விடுதி மாணவிகள் பாடசாலையிலேயே தங்கள் உணவை உண்பார்கள் என்றும் மேற்றன் பார்வதிக்குச் சொன்னாள்.
60

முள்ளுக்கரனிடி
“எனக்குப் பசியாக இருக்கிறது அக்கா, ஏதாவது உண்ணத் தருவீர்களா?”
“தயவுசெய்து தருவீர்களா மேற்றனக்கா என்று சொல்ல வேண்டும்” என்று அவளைத் திருத்தினாள் மேற்றன்.
“தயவுசெய்து தருவீர்களா மேற்றன் அக்கா?” "நான் போய் உனக்கு உணவு கொண்டு வருகிறேன். கரண்டியாலும் முள்ளுக் கரண்டியாலும் உண்ணப் பழகும் வரை நீ உணவு மண்டபத்திற்குப் போகக் கூடாது"
"அப்படி என்றால் என்ன?” “பொறுத்துக் கொள், நீ அதனைப் பின்னர் பார்க்கலாம்" மிக விரைவில் ஒரு கோப்பையில் சோறு எடுத்துக்கொண்டு மேற்றன் திரும்பினாள். ஒரு கரண்டியும், முள்ளுக் கரண்டியும் சோற்றினுள் குத்தி வைக்கப்பட்டிருந்தன.
“இங்கே வா, இவற்றை எப்படி உபயோகிப்பது என்று சொல்லித் தருகிறேன்"
“எனக்கு அவைகள் வேண்டாம். நான் எப்போதும் எனது விரல்களால் தான் உண்பேன். தயவுசெய்து என்னை விரல்களால் உண்ண விடுங்கள் மேற்றன் அக்கா. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது”
"உனது வீட்டிற்தான் நீ கைகளால் உண்ணலாம். நீ ஓர் ஆங்கிலப் பாடசாலையில் படிப்பதை நினைவில் வைத்திருக்கி வேண்டும். ஆங்கிலேயர் உண்ணும் முறையிற்தான் நீயும் உண்ண வேண்டும்”
“வேண்டாம். மேற்றன் அக்கா, அதைத் தொடவே பயமாக இருக்கிறது. அந்த முள்ளு எனது கையிற் குத்திவிடும். தயவுசெய்து
61

Page 40
முள்ளுக்கரண்டி
என்னைக் கைகளால் உண்ண விடுங்கள். எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது”
“ச்சீ, முட்டாட்தனமாக நடந்து கொள்ளாதே. இது ஒரு முள்ளுக் கரண்டி இது ஒருபோதும் உனது கையில் குத்தாது. உன்னைக் கைகளால் உண்பதற்கு விடமாட்டேன். புதிய மாணவி ஒருத்தி சரியான பழக்கவழக்கங்களைக் கற்காமல் விடுவது வேம்படிப் பாடசாலையின் சட்ட விதிகளுக்கு மாறான செயலாகும். நல்ல பிள்ளையைப் போல் எனதருகில் வந்து இரு. இவற்றை எவ்வாறு உபயோகிப்பதெனச் சொல்லித் தருகிறேன்.”
பார்வதி அவளருகே அமர்ந்துகொண்டு வேண்டபா வெறுப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள். எவ்வாறு அவற்றை உபயோகிக்க வேண்டுமென மேற்றன் சொல்லிக் கொடுத்தாள். பார்வதி அந்தப் புதிய கருவிகளைக் கொண்டு உண்பதற்கு முதற் தடவையாக முயற்சித்தாள். ஒரு கொலைகாரன் கட்டாரியை எப்படிப்பிடிப்பானோஅவ்வாறு முள்ளுக்கரண்டியைப் பற்றினாள். அதனைச் சரியாகப் பிடிக்கும் முறையை மேற்றன் சொல்லிக் கொடுத்தாள். இக்கலையைக் கற்றுக்கொள்ளப் பல மணிநேரம் எடுத்தது.
"நான் எப்பொழுதும் இந்த முள்ளினாற்தான் உண்ண வேண்டுமா மேற்றன் அக்கா? விடுதியிலுள்ள எல்லா மாணவிகளும் முள்ளினாற்தான் உண்பார்களா?”
KKஆம்”
"அப்படியானால் சாப்பிட்ட பின்னரும் அவர்களுக்குப் பசியாகவிருக்கும்”
"ஓ! நீ ஒரு பகிடிக்காரி” என்று கூறிச் சிரித்தாள் மேற்றன்.
“மேற்றன் அக்கா"
62

முள்ளுக்கரணிடி
“என்ன?”
"நான் இரட்சிக்கப்படுவேனா?” “யேசுநாதரிடம் சென்றால் இரட்சிக்கப்படுவாய்” “அவர்கூடமுள்ளுக்கரண்டியினாற்தான் உண்பாரா?” மேற்றணிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. பார்வதி முள்ளுக்கரண்டியாலும் கரண்டியாலும் உண்டபோது சிந்திய உணவைத் துடைத்தாள். கைகளைப் பின்னால் கோர்த்துக்கொண்டு நிலத்தை நோக்கியவாறு ஆழ்ந்த சிந்தனையுடன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். கிறிஸ்தவ மதத்தைச் சேராத அந்தக் குழந்தை அவளுடைய சிந்தனையைக் கிளறிவிட்டது. சிலவேளை அவள் பார்வதியை மதம்மாறச் செய்துவிடலாம். அதற்காகத் திருச்சபையார் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.
மேற்றன் பார்வதிைைய நோக்கித்திரும்பினாள். அந்தச் சிறுமி கொட்டாவி விட்டாள்.
“பார்வதி, நீ மிகவும் களைத்துவிட்டாய். சிறிதுநேரம் நித்திரை செய்தால் நல்லதென நினைக்கிறேன்"
"ஆ.வ்.” பார்வதியின் இமைகள் கனத்தன. "ஆ.வ்." அந்த முள்ளுக்கரண்டி” என்று பிதற்றியபடியே மேற்றணின் கட்டிலில் சாய்ந்தவுடன் நித்திரையாகிவிட்டாள்.
83

Page 41
கூலிக்கு மாரழப்போர்
கூலிக்கு மாரடிப்போர்
அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கேட்ட அழுகுரலும் பறையொலியும் எம்மைத் துயிலெழுப்பின. ஆடைகளைச் சரிசெய்துகொண்டு பாட்டி வீட்டிற்கு ஓடினோம். வெளி விறாந்தைக்கும் வேலிக்குமிடையில் இருந்த பரந்த முற்றத்தில் அயலவர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் மத்திக்குச் சென்றோம். உயிரற்ற பாட்டியின் உடலைக் கிடத்தியிருந்தார்கள். முதல் நாளிரவே அவர் இறந்துவிட்டாராம். பயத்தினால் உடல் வெலவெலத்தது. நான் சென்றிருந்த முதற் செத்தவீடு அதுதான்.
பறையொலியையும், அழுகுரலையும் மீறி ஒரு முரட்டுக்குரல் ஒலித்தது. அவர்தான் எங்கள் மாமனார். கிராமத்துக் கொட்டிற் பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியராகவிருந்த அவர்தான் செத்தவீட்டு அலுவல்களை மேற்பார்வையிட்டார். சாதாரணமாகவே அவர் தனது சிம்மக் குரலில் வேகமாகக் கதைப்பார். கோபம் வந்தால் கேட்கவே வேண்டாம், வீராவேசம் கொண்டு ஊரே அதிரும்படி தொண்டை கிழியக் கத்துவார். அன்றும் அவர் கோபத்தின் உச்சிக் கொப்பிலே நடமாடிக் கொண்டிருந்தார். கூலிக்கு மாரடிப்பவர்கள் இன்னும் வந்து சேராததே அதற்குக் காரணம்.
“நானே போய் அவளவையின்ரைசிண்டைப்பிடிச்சு இழுத்து வாறன்” என்று தனக்குத்தானே பலமாகச் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். கூலிக்குமாரடிப்போரைப் பற்றி பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டவனாக நானும் அவரைப்பின்தொடர்ந்தேன்.
64

66°ág5 tongpÚ(3umů
மணல் ஒழுங்கைகளுடாகவும், புழுதி படிந்த ஒற்றையடிப் பாதைகளுடாகவும் சென்று கொண்டிருந்தோம். தூரத்தே நரிகளின் ஊளையொலி கேட்டது. பற்றைகளிலிருந்த சருகுகளிடையே பாம்புகள் சரசரத்து ஓடின. மாமனாரை ஒட்டி உரசிக்கொண்டு
"ஓ அதுகள் சாரைப்பாம்புகள். ஒரு நாளும் கடியாது, நீ பயப்பிடபாதை. ”
சின்னஞ்சிறு குடிசைகள் தென்பட்டன. அவை நேராக, ஒரே சீராகஅமைக்கப்பட்டிருந்தன. கடற்கரைப்பகுதிக்கு வந்துவிட்டோம், சில மீனவர்கள் மனைவிமாரின் உதவியுடன் மீன்பிடி வலைகளைச் செப்பஞ் செய்துகொண்டிருந்தனர். இன்னுஞ்சிலர் கட்டுமரங்களைக் கடலிற் தள்ளிக்கொண்டிருந்தனர்.
"பேய் நில்லுங்கோபா அயோக்கியப்பயல்களே” மாமனார் கோபத்தோடு கத்தினார். “இண்டைக்கென்ரை குஞ்சியாத்தேன்ரை செத்தவீடென்று உங்களுக்குத் தெரியாதோ? கீழ் சாதிப்பயல்களே எல்லாரும் அங்கை நடவுங்கோபா.”
"எங்களுக்குத் தெரியாது ஐயா! நாம் கோவிக்கக்கூடாது நாங்கள் இப்பவே வாறம்” வலைகளைப் போட்டுவிட்டுப் பெளவியமாக வந்து கைகட்டி நின்று கொண்டு சொன்னார்கள்.
அவர்களைக் கடந்து கூலிக்கு மாரடிப்பவர்களைத் தேடிச் சென்றோம். நாம் முன்பு பார்த்தகுடிசைகளை விடச் சிறிய குடில்கள் சில தெரிந்தன
"அந்த ஈனப்பெண்டுகள் இங்கினைதான் இருக்கிறவளஸ்” என்றார் மாமனார்.
ஒரு குடிலின் முன்னே நின்றுகொண்டு சத்தமிட்டுக் கூப்பிட்டார். கிடுகுப்படலையைத் திறந்துகொண்டு இரண்டு
65

Page 42
கூலிக்கு மாரடிப்போர்
பெண்கள் வெளியே வந்தனர். மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை அணிந்திருந்த வளையல்கள் கிலுகிலுத்தன. அழுக்கேறிய சேலைகளை மார்பின் குறுக்கே வரிந்து கட்டியிருந்தார்கள்.
“என்ர குஞ்சியாத்தையின்ரை செத்தவீடு இண்டைக்கென்று சொல்லி அனுப்பினனானெல்லோ, இன்னும் அங்கை வராமல் இங்கை என்னடி செய்யிறியள்?" மாமனார் பொரிந்துதள்ளினார்.
“நயினார் கோவிக்கக்கூடாது. நாங்கள் அங்கை வாறதுக்குத் தான் வெளிக்கிடுறம் சுணங்கினதுக்கு நயினார் மன்னிக்க வேணும்” அவர்களில் ஒருத்தி சொன்னாள்.
“மற்றவள்களெல்லாம் எங்கை போயிட்டாளுகள்?" "இப்ப இங்கை எங்களைவிட ரெண்டுபேர்தான் இருக்கினம். ரெண்டு பேரும் அக்கா, தங்கைகள் அவவையைவிட வேறை ஒருத்தருமில்லை. அதுகளும் வரமாட்டுதுகள் இண்டைக்கு விடியக் காத்தாலை அதுகளின்ரை தாய் மனிசி செத்துப்போச்சு”
“சே கொஞ்சங்கூட அறிவில்லாத சனங்களாக் கிடக்கு. அவளஸ் எங்கை இருக்கிறவளஸ்?"
"உதிலை கிட்டத்தான் நயினார்” “எனக்கொருக்கால் அவளளின்ரை குடிலைக் காட்டு” அவ்விரு பெண்களையும் பின்தொடர்ந்து சென்றோம். ஒரு குடிசையிலிருந்து விசும்பலொலி கேட்டது. அதன் முன்னாற்சென்று நின்றோம். எம்முடன் வந்த பெண்கள் அங்குள்ளோரைக் கூப்பிட்டனர். கண்ணிரால் நனைந்து நெகிழ்ந்திருந்த சேலைகளை குத்திட்டு நிற்கும் மார்பின் குறுக்கே இறுக்கிச் செருகியவாறு அச்சகோதரிகள் வெளியே வந்தனர்.
66

கூலிக்குமாரடிப்போர்,
“நயினார் எங்களைப் பொறுத்துக் கொள்ள வேணும். எங்கடை ஆத்தை காலமை மோசம் போயிட்டா. இந்த நிலமேலை நாங்கள் மற்றவயின்ரை செத்தவீட்டுக்கு எப்படி வாறது?”
“மானங்கெட்ட நாய்களே என்ர குஞ்சியாத்தேயின்ர செத்தவீட்டிற்கு ரண்டு மாரடிக்கிறவளஸ் என்னத்துக்குக் காணும்? அவஆரெண்டு தெரியுமல்லே'மாமனார் சீறி விழுந்தார்.
“நயினார் கொஞ்சம் பொறுக்கவேணும்" அயலிலுள்ள பெண்ணொருத்தி அவர்களுக்காகப் பரிந்து பேசினாள். “சொந்தத் தாய் சீவன் போய்க்கிடக்கேக்கை அந்தத்துக்கத்தில இருக்கிறதுகளை உங்கடையிடத்துக்கு வந்து போலியாக அழச்சொல்லிறது நல்லா இல்லப் பாருங்கோ’
மாமனாரின் உதடுகள் கோபத்தால் துடித்தன. கண்கள் ஒடிச்சிவந்தன, உடல் பதறியது. பரிந்து பேசிய பெண் தலைகுனிந்து நிலம் நோக்கினாள். அவர்களுடைய நிலையை எண்ணி எனது கண்கள் பனித்தன. கவலையுடன் தலையை அசைத்தேன். அவருடைய கோபம் என்மேற் திரும்பியது.
“மடப்பயலே இதுகளைப் பற்றியெல்லாம் உனக்கென்ன தெரியும்? செத்தவீட்டுக்குக் கொப்பற்றை கூட்டாளிமார் கப்பிறிம் கோட்டு நீதவான், பொலிஸ், கோட்டு நீதவான், பிரக்கிராசிமார், அப்புக்காத்துமார் எல்லாரும் வருவினம். போதுமான மாரடிப்பவளஸ் இல்லாட்டில் அவையெல்லாம் எங்களைப்பற்றி என்ன நினைப்பினம்?”
அவ்விரு சகோதரிகளும் முழந்தாளிட்டுக் கெஞ்சினார்கள். “நயினாற்றை சொல்லுக்கு மாறாக நடக்கிறமெண்டு நினைக்க வேண்டாம். உங்களைக் கும்பிட்டம். இம்முறை மட்டும் எங்களை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. அடுத்தமுறை நயினார் வீட்டுச் செத்த வீட்டுக்கு எங்கடை தொண்டைத்தண்ணிவத்துமட்டும் அழுவம்"
67

Page 43
கூலிக்கு மாரடிப்போர்
“கர்வம் பிடிச்சவளே! என்ரை வீட்டிலை இன்னுமொரு சவம் விழவேண்டுமெண்டு விரும்பிறியோடீ அற்பப் பிராணிகளே, உந்தச் சொல்லுக்காக உங்களைக் கோட்டுக்கேத்துவேன்” கோபாவேசம் மிகுந்தநிலையில் கையைப் பிடித்துத் தரதரவென்றிழுத்துச் சென்றார். “நயினார் கையை விடுங்கோ நயினார். நாங்கள் இப்பவே வாறம்”
அப்பெண்கள் நால்வரையும் முன்னேவிட்டு அலுவல்காரர் பின்னாற் சென்றார். அவரைத் தொடர்ந்து நானும் சென்றேன்.
பாட்டி வீட்டை நெருங்கிவிட்போம் அப்பெண்களின் நடையில் ஒரு வேகம் காணப்பட்டது. கூந்தலை அவிழ்த்துத் தலையை விரித்துக்கொண்டு, இரு கைகளையும் வானோக்கி உயர்த்தியவாறு "ஒ . . . வென்று கதறியபடி உட்சென்றார்கள். அங்கே அயலவர்களும் உறவினர்களுமாகிய பெண்கள் சிறு, சிறு குழுக்களை அமைத்துக்கொண்டு ஒருவரின் தலையை அடுத்தவரின் கழுத்திற் சாய்த்துக்கொண்டு அழுதவண்ணம். இருந்தார்கள். அவர்களுக்குச் சிறிது ஒதுக்கமாய் அமர்ந்து கொண்டு மாரடிக்கும் பெண்கள் அழுதார்கள். கைகளை மேலே தூக்கித் தலையில் அடித்தார்கள். பாட்டியின் நற்பண்புகளைச் சொல்லி ஒப்பாரி வைத்தார்கள்.
பாட்டியின் அன்புக்குப் பாத்திரமான பேரப்பிள்ளை தம்பு மலேசியாவிலிருந்து வரும்வரை பாட்டியை விட்டுவைத்த முழுமுதற் கடவுள் சிவனின் கருணையே கருணை என்று சொல்லி உறவினர் சிலர் அழுவதை அவதானித்த மாரடிக்கும் பெண்கள் அதனைக் கருவாகக் கொண்டு ஒப்பாரி வைத்தனர்.
"வாயைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் வளத்தினைச் சொல்லனணை கண்ணைத் திறவனணை நீ வளர்த்தவர் வந்துவிட்டார் - உன் கதையைச் சொல்லனணை"
68

ők ajáig5 uongpü08ut
அதே வேளையில் அலுவல்கார மாமனார் தனது நண்பர், குழாத்தில் தனது கெட்டிக்காரத்தனத்தைப் பறைசாற்றினார் மாரடிக்கும் பெண்களை இழுத்துவந்ததனைச் சுவையாக விபரித்தார் அவருடைய மனிதாபிமானமற்ற செயல்களை நண்பர்கள் மறுதலித்தனர். அந்த ஈனச்செயலுக்காக அவ்விரு பெண்களிடமும் மன்னிப்புக் கோருமாறு வற்புறுத்தினர். வந்திருந்த பலர் அப்பெண்களுக்காக வருந்தினர். அவர்களை வீட்டிற்கு அனுப்பும்படி எனது தந்தையார் சொன்னார்.
அலுவல்காரர் பொங்கியெழுந்து அப்பெண்களிடம் சென்றார். ஏதோவெல்லாம் கூறி அதட்டினார். இறுதியில் மரணச் சடங்கு முடியும்வரை நின்று தங்கள் கடமையைச் செய்து முடிக்க அவர்கள் இணங்கினார்கள்.
அலுவல்காரர் முன்பைவிடச் சுறுசுறுப்பாக அலுவல் பார்த்தார். அவருடைய கொடூரச் செயலை விஷயமறிந்த ஒவ்வொருவரும் விமர்சித்தனர். அவரோ எதையும் காதிற் போடாமல் சுழன்று, சுழன்று அலுவல் பார்த்தார். பறையடிப்பவர்களிடம் சென்று மாரடிக்கும் பெண்களின் குரலைவிடச் சத்தமாக வேகமாகப் பறையை முழக்கச் சொன்னார். பின்பு ஒரு பைநிறைய அரிசியையும் மரணச் சடங்கிற்குத் தேவையான சமித்து முதலிய முக்கிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பிரேதக் கட்டிலருகே வந்தார். நன்றாக வியர்த்துக் களைத்தது, மாரடிக்கும் பெண்களைக் கட்டிலருகே கூட்டிவரக் காலடி எடுத்துவைத்த போது உடல் தள்ளாடியது. கைகளாற் தலையைப் பிடித்துக்கொண்டு தபால் என்று வீழ்ந்து விட்டார். சுற்றிலுமிருந்தவர்கள் கலவரப் பட்டனர். சிலர் அவரை ஓர் ஒதுக்குப்புறமாகத் தூக்கிச் சென்றனர். இன்னுஞ் சிலர் உதவிக்கு விரைந்தனர். ஒருவர் முகத்திற் தண்ணிர் தெளித்தார். வேறொருவர் விசிறி கொண்டு விசுக்கினார். சிறிது நேரம்
69

Page 44
கூலிக்கு மாரடிப்போர்
சிசுருஷையின்பின் மாமனார் கண்களைத் திறந்து, எழுந்திருக்க முயன்றார். நண்பர்கள் விடவில்லை. நன்றாக ஓய்வெடுக்கும்படி வற்புறுத்தினர்.
மாரடிப்போரிடையே அவ்விரு சகோதரிகளின் குரல்கள் வெகு துல்லியமாகக் கேட்டன. நயினாரின் குஞ்சியாத்தையின் செத்த வீட்டில் ஒன்றிவிட முடியவில்லை.
“ஏழையள் எம்மைவிட்டு எங்கை போனாய் ஏந்திழையே ஏழையள் நாம் எங்கு போவோம் எழுந்துவாராய் எங்கதாயே’ அவர்களுடன் மற்றைய இருவரும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் வந்து மரணச்சடங்கை ஆரம்பித்தபோது அழுகுரல் விண்ணையொட்டி ஓய்ந்தது. குருக்கள் பாட்டியின் அன்புப் பேரனான தம்புவை அருகிலழைத்துத் தேவாரம் பாடச் சொன்னார். குரல் கரகரத்துக் தளதளத்தது. கண்கள் குளமாகிப் பார்வையை மறைத்தது. ஈற்றடிகளை முற்றாகப் பாடிமுடிக்க முடியவில்லை. பிரேதத்தின் மேல் தலையைப் புதைத்து அழுதார்.
“எத்தனையோ வருஷங்களாக எனக்காகக் காத்திருந்தியே. கடைசீல என்னோடு ஒரு சொல்லுக்கூடப் பேசாமல் அறிவற்ற நிலையிலேயே செத்துப் போனியே என்ரை ஆச்சி.” தம்பு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிட்டார்.
மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரியைத் தொடர்ந்தனர்.
"அப்புக்காத்தினருமைத் தாயே நீயின்று அசையாமலிருப்பதேனோ?
அசையாமலிருப்பதாலே அன்பானோர் அல்லல் கொண்டழுகிறார்கள்.
70

ტრ.6lწdდრ tomgü2U68Um0}
gLSSSSSSSL S SLLLSSSSLS SSSSSLS SSSS SSLL S SLLLSL SLL SLL SLSS கண்ணைத் திறந்துந்தன் கயல்விழியைக் காட்டனம்மா கண்ணைத் திறந்திந்தக் காட்சியினைப் பாரனம்மா ஒ. . . . . . . . . . . . வாயைத் திறவனம்மா, நீ வளர்த்தவர் வந்துவிட்டார் உன் வளத்தினைச் சொல்லனம்மா கண்ணைத் திறவனம்மா நீ வளர்த்தவர் வந்துவிட்டார் உன் கதையளைச் சொல்லனம்மா”
71

Page 45
вѣ6ђ65žuот6ії
கல்விமான்
தம்பிராசாவின் வெற்றி குறித்து அவனுடைய சகோதரி லீலாவும், அவளுடைய கணவனும் மிகவும் பெருமையுற்றார்கள். லீலா தம்பிராசாவை விடப் பல வருடங்கள் மூத்தவள். சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட அவனை லீலாவும் கணவனுமே பாதுகாத்து வந்தனர். அவன் பல்கலைக்கழக இறுதி ஆண்டுப் பரீட்சையில் மிகத் திறமையுடன் பெற்ற சித்தி அவனுக்குப் பல்கலைக்கழக உபகாரப் படிப்பினைப் பெற்றுக் கொடுத்தது, லீலாவுக்கும் கணவனுக்கும் பெருஞ்சுமையொன்று அகன்றாற்போல இருந்தது. தம்பிராசா விரைவில் அரசாங்க உபகாரப் பணத்தில் இங்கிலாந்து சென்று தனது மூன்றாண்டு மேற்படிப்பினைத் தொடர இருந்தான்.
இலங்கையில் அரசாங்க உபகாரப் படிப்பினைப் பெறுவது சாதாரண காரியமல்ல. அப்படிப் பெறுபவர்கள் குடும்பவட்டத்தினுள்ளும், படித்தவர்கள் மத்தியிலும் ஓர் உன்னத இடத்தைப் பெறுவார்கள். அதே போன்ற ஒரு இடம் தம்பிராசாவுக்கும் கிடைத்தது. அன்றைய தினம் ஆங்கில முழு ஆடை தரித்து, துவிச்சக்கரவண்டியொன்றிலேறி வீதிகளில் சுற்றித் திரிந்தான். அவனுடைய வெற்றியை அறிந்தவர்கள் மற்றையோரிடம் அவனைச் சுட்டிக்காட்டி அவனைப் பற்றிக் கூறினர்.
அவ்வெற்றியின் பின் அந்த வாலிபனின் நடத்தைகளில் மாற்றங்கள் காணப்பட்டன. இளைஞர்களுக்குரித்தான தன்மையை விடுத்துப்பெரிய மனிதத்தோரணையில் நடமாடத் தொடங்கினான்.
72

கல்விமானி
உடைகளிற் கூட மாற்றம் தெரிந்தது. மைக்கறைகளற்ற மடிப்புக் குலையாத ஆடைகளையே அணியத்தொடங்கினான்.
தம்பிராசாவின் இவ்வெற்றி பற்றிய செய்தி இலங்கையின் முக்கிய நகரங்களிலெல்லாம் பரவியது. கொழும்பு மாநகரத்து நண்பர் குழாம் பல விருந்துகள் வைத்தன. யாழ்ப்பாணத்தில் அவனுடைய சகோதரி உறவினர்களுக்கெல்லாம் இராப்போசனம் அளித்து மகிழ்ந்தாள். அவளுடைய விருந்தினர் பலர் தம்பிராசாவின் சாதகக் குறிப்பினிலேயே அதிக அக்கறை காட்டினர்.
விவாகப் பேச்சுக்கள் நாலா திசைகளிலிருந்தும் ஆரம்பிக்கப் பட்டன. பலதரப்பட்ட கல்யாணத்தரகர்கள் வாரத்திற்கு இருவர் வீதம் வந்து சென்றனர். பல்வேறு கன்னிகளின் புகைப்படங்களும் சாதகக்கட்டுக்களும் வந்துபோயின. சீதனம் ஆறு இலக்கங்கள்வரை ஏறிவிட்டது. லீலாவும் அவள் கணவனும் ஒவ்வொரு கன்னியின் சாதகத்தினையும் தனித்தனியாகப் பரிசீலித்தனர்.
முதலில் தனது சகோதரன் இங்கிலாந்துக்குச் சென்று மேற்படிப்பை முடித்துக்கொண்டு வந்த பின்பு செய்திருந்தாள். ஆனால் அவன் திரும்பி வரும்போது ஒரு வெள்ளைக்காரப் பெண்ணையும் கூட்டி வந்துவிடுவானோ என்ற பயம் அவளுக்கு ஊட்டப்பட்டது. ஐரோப்பியப் பெண்களைப் பற்றிப் பல கதைகளை அவள் கேள்விப்பட்டிருந்தாள். அதிலிருந்து மேற்கத்தையப் பெண்களெல்லாம் கிழக்கு நாட்டு ஆடவனொருவன் எப்பொழுது வருவான் என்று வலை விரித்துக் காத்திருப்பார்கள் என்றவொரு தப்பெண்ணம் அவள் மனதில் உருவாகியிருந்தது. எனவே இங்கிலாந்து செல்லுமுன் தனது சகோதரனை மணக்கோலத்தில் பார்த்துவிட அவள் விரும்பினாள்.
விவாக சம்பந்தமாக மேலோட்டமான கருத்துக்கள் தம்பியிடம் தெரிவிக்கப்பட்டன. லீலாவும் அவள் கணவனும் தமக்கு
73

Page 46
கல்விமான்
மிகவும் பிடித்திருந்த ஒரு பெண்ணைப் பற்றி அவனிடம் கூறினார்கள். ஆனால் அவனுடைய எண்ணம் அவர்களுடைய நோக்கத்திற்கு மாறாகவிருந்தது. அவனுடைய மனம் பல்கலைக் கழகத்தில் அவன் விரும்பிய ஒரு பெண்ணிடமே லயித்திருந்தது.
அவளுக்குப் பெயர் ராதா, அசாதாரண உயரம். அன்னத்தின் கழுத்தைப் போன்ற அழகான கழுத்து. யாருமே தனக்கு நிகரில்லை என்பது போன்ற கம்பீரமான ஆனால் அடக்கமான நடை பேராசிரியர் வரும்வரை மண்டப வாசலில் காத்திருக்கும்போது அவர்கள் கண்கள் பேசிக்கொள்ளும். புன்னகைகள் பரிமாறிக் கொள்ளப்படும். அவர்களுடைய அன்பு படிப்படியாக மெதுவான வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் தம்பிராசா ராதாவின் விரிவுரைக் குறிப்பினை வாங்கி அதன் ஒரத்தில் நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று எழுதிய பின் திருப்பிக் கொடுத்தான். அப்போது அவனுடைய சின்னவிரல் அவளுடைய விரல்களிற் பட்டது. இருவருமே சிரித்தார்கள். மாசு மறுவற்ற அன்பிற் தோன்றும் களங்கமற்ற சிரிப்பு. குறிப்புப் புத்தகத்தில் தம்பிராசா எழுதிய சொற்களைச் சுற்றி அழகான சிறு பூக்களை ராதா வரைந்தாள். இச்சம்பவங்களின் பின் அவர்களுடைய அன்பு மேலும் பரிணமித்தது.
தம்பிராசா தனது எண்ணக்கிடக்கையைச் சகோதரியிடம் தெரிவித்தான். “குறும்புப் பையா, ஒரு பெண்ணின் பின்னால் நீ ஒடுவதாச்சீ”ஒரு கை அசைவினாலே அந்தக் கூற்றினை நிராகரித்து விட்டாள். "படிக்கும் காலத்தில் காதலில் ஈடுபடும் பெண்கள் கல்யாணப் பேச்சிற்கே அருகதையற்றவர்கள். நிச்சயமாக நீவிரும்பும் பெண்ணும் துர்நடத்தைக்காரியாகத்தான் இருக்கமுடியும்” என்று லீலா சொன்னாள்.
காதல் நோயால் பீடிக்கப்பட்ட அந்த வாலிபன் கனத்த இதயத்துடன் சென்றான். தனித்த ஓரிடத்திலமர்ந்து பல கடிதங்களை
74

4566 upset
ராதாவுக்கு எழுதினான். பின்பு எல்லாக் கடிதங்களையும் கிழித்தான். இறுதிச் சந்தர்ப்பத்தில் அவனுடைய துணிவு உதவ மறுத்துவிட்டது. நண்பர்களிடம் இதுபற்றிக் கூறினான். அவர்கள் இரண்டு விதமான ஆலோசனைகளை அவனுக்கு வழங்கினார்கள். ஒன்று காலம் வரும் வரை அவளுக்காகக் காத்திருப்பது, அடுத்தது ராதாவை அழைத்துக் கொண்டு எங்காவது சென்று விடுவது இவ்விரண்டு ஆலேசனைகளுக்கிடையே அவனுடைய மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது.
அதே வேளையில் அவனுடைய பாதுகாவலர்கள் தங்களிடையே பல திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். லீலா ஒரு பெண்ணைத் தெரிவு செய்வாள். கணவனோ வேறொரு பெண்ணைத் தெரிவு செய்வார். பெண்ணைத் தெரிவதில் அவர்களிடையே சில முக்கியமான கணிப்புக்கள் இருந்தன. முக்கியமாகச் சீதனம், சாதி, பெண்ணின் உருவ அமைவு, பெற்றோருடைய செல்வாக்கு, கெளரவம், மணப்பெண்ணின் குணாதிசயங்கள் முதலியனவும் இன்னும் பலவும் அவற்றுள் அடங்கும். சில நாட்களின் பின் மேற்கூறிய அம்சங்கள் யாவும் பொருந்திய பெண்ணொருத்தி தெரிவு செய்யப்பட்டாள். ஆனால் அவள் கறுத்த நிறமுடையவளாக இருந்தமையால் லீலாவால் நிராகரிக்கப்பட்டாள். பெண்ணின் நிறத்திற்கும் லீலா ஒர் எல்லை வகுத்திருந்தாள்.
“மிக விரைவில் அவனுடைய திருமணத்தை நடத்த வேண்டும் அவனுடைய பயணநாள் நெருங்கிவருகிறது. ஒரு நல்ல பெண்ணைத் தெரிவுசெய்து திருமணப் பதிவினை முடித்து விட்டாலாவது போதும். அவன் இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் விவாகத்தை நடாத்தி வைக்கலாம்” என்று லீலா கணவனிடம் சொன்னாள்.
இங்கிலாந்து செல்வதற்குவேண்டிய இறுதி ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டுத் தம்பிராசா கொழும்பிற்குச் சென்றான்.
75

Page 47
ക്കിഖിofങ്ങ്
இந்தமுறை அவன் முதலாம் வகுப்பிற் பிரயாணஞ் செய்தான். அவனுடைய வேலையாள் மூன்றாம் வகுப்பிற் பிரயாணித்தான். சில புகையிரத நிலையங்களில் வேலையாள் இறங்கிவந்து சிகரட், கோப்பி, இனிப்புப் பண்டங்கள் முதலியவற்றை வாங்கிக் கொடுத்தான். பிரயாணத்தின்போது படிப்பதற்கென்று இரண்டு புத்தகங்களை அப்பட்டதாரி எடுத்துச் சென்றிருந்தான். ஆனால் அவற்றில் ஒன்றிவிட அவனால் முடியவில்லை. ராதாவுடன் தான் கழித்த நாட்களையே மீண்டும், மீண்டும் அசைபோட்டான். அவற்றினிடையே தனது இங்கிலாந்துப் பயணத்தைப் பற்றியும் அவன் சிந்திக்கத் தவறவில்லை. பட்டப்படிப்பை மிக வெற்றிகரமாக முடிக்கவேண்டுமென்ற திடசித்தம் அவனிடமிருந்தது. யன்னலினூடு தலையை வெளியே நீட்டினான். குளிர்ந்த காற்று முகத்தில் வீசியடித்தது. கனவில் மிதப்பது போன்றதொரு கிறக்கம். அழகான பூக்களும் செடிகளும் மண்டியிருந்த காட்டினூடாகப் புகையிரதம் சென்றுகொண்டிருந்தது.
கொழும்பிற் செய்ய வேண்டியவற்றையெல்லாம் முடித்துக் கொண்ட பின்னர் தம்பிராசா பல்கலைக்கழகத்துக்குச் சென்றான். அங்கு அவனுடைய நண்பர்கள் பலர் நூல் நிலையத்தில் கூடியிருந்தனர். சேவகனொருவனை அழைத்து ராதாவுக்கு ஒரு குறிப்பினை எழுதியனுப்பினான். ஐந்து நிமிடங்கள் ஐந்து யுகங்களைப் போன்று கழிந்தன. இறுதியாக ராதாவுக்குப் பதிலாக அவளுடைய அந்தரங்கச் சினேகிதிராஜி வந்தாள். ஏதாவது பானம் அருந்தலாமெனக்கூறி அவளைச் சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றான். இருவரும் அமைதியான ஒர் ஒதுக்குப்புறத்தில் அமர்ந்து கொண்டனர். சிறிதுநேரம் மெளனம் ராதை வராமை குறித்து அவன் தனக்குள்ளாகவே பலவித காரணங்களை ஆக்கிக்கொண்டான். சில வேளை அவள் விரிவுரைக்குச் சென்றிருக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் என்ன விரிவுரை நடக்கும்? ராஜியும் அவளும் ஒரே வகுப்பிற்தானேயிருக்கிறார்கள்?
76

მზ6ხ6)?uprT60f
வளைந்த சீப்பொன்றைத் தலையிற் சொருகியிருந்த சிங்களப் பரிசாரகன் ஒருவன் வந்தான். சர்பத் கொண்டுவரும்படி கூறினார்கள். சிற்றுண்டிச் சாலையிலிருந்த அனைவரின் பார்வைகளும் அவ்விருவர் மீதே பதிந்திருந்தன. தம்பிராசாவின் அதிவிவேகத்தைப் பற்றியும், ராஜியின் முன்னேற்றம் பற்றியும் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். முதலில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பற்றியும் அவர்கள் சிலரின் தனித்துவம் குறித்தும் பேசினர். பின்னர் தங்களுடைய இலட்சியங்கள், நோக்கங்கள் பற்றிப்பேசினர். ஆனால் இருவருமே ராதாவைப் பற்றிப் பேசிக்கொள்ளத்தான் தவித்தார்கள். ராதாவைப் பற்றிய அண்மைச் செய்தி ஒன்றைக்கூற ராஜிதுடித்துக் கொண்டிருந்தாள். ஒருபடியாகத் தம்பிராசா அதற்கு அடிகோலிக் கொடுத்தான்.
ராஜி அவனிடம் எல்லாவற்றையும் சொன்னாள். திடீரென்று ஒருநாள் வீட்டிற்கு வரும்படி ராதாவிற்கு அழைப்பு வந்தது. ராதையின் மைத்துனனொருவன் முடிக்குரிய சத்திர சிகிச்சையாளர் கல்லூரி அங்கத்தவனாகி இங்கிலாந்திலிருந்து வந்திருந்தான். ராதையின் முடிவையறியாமலே அவளுக்கும் அவனுக்கும் திருமண ஒழுங்குகள் செய்து முடிக்கப்பட்டன.
மிகவிரைவில் திருமணம் நடக்கவிருந்தது. இந்த திருமணத்திற்கு ராதா உடன்பட்டாளாவென்று ராஜிக்குத் தெரியவில்லை. ராதையிடமிருந்து வந்திருந்த இறுதிக்கடிதம் மேற்குறித்த சம்பவங்களை மட்டுமே கொண்டிருந்தது. தனது சொந்த அபிப்பிராயங்கள் எதனையும் அவள் எழுதியிருக்கவில்லை. தம்பிராசாவின் உதடுகள் வறண்டன, கண்கள் பனித்தன. மெளனமாகத் தலையைக் குனிந்து கொண்டான். ராஜி அவனைத் தேற்ற முற்பட்டாள். ராதாவைப் பற்றிய இச்செய்தி அவளுக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் போது ராதாவின்மேல் உயிரையே வைத்திருப்பவனின் நிலை எப்படியென்பதை அவளால் ஊகிக்க முடிந்தது.
לל

Page 48
கல்விமான்
அவன் பல்கலைக்கழகத்தை விட்டுச் செல்லும் போது ராதா ஒருத்திதான் அவனுடைய நெஞ்சமெங்கும் வியாபித்திருந்தாள். அங்ங்னமான ஒருத்தியைப் பிரிந்துவிட்டு வேறொருத்தியை ஏற்றுக் கொள்வதென்பது அவனால் முடியாத ஒரு செயல். யாழ்ப்பாணத்தில் உள்ள அவனுடைய அறையில் பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்றின் படத்தைத் தொங்கவிட்டிருந்தான். ஏனெனில் அதில் ராதாவும் இருந்தாள். காலையில் மாலையில் இரவு நேரத்தில் அந்தப் படத்தைப் பார்த்தபடியிருப்பான். அவனுடைய அறையில் இன்னொரு சித்திரமும் தொங்கியது. இரண்டு அன்னப் பட்சிகள் ஒருங்கிணைந்து நீந்திக்கொண்டிருக்கும் அச்சித்திரத்தை சீனஓவியன் ஒருவன் வரைந்திருந்தான். இப்பொருட்கள் இரண்டுமே ராதா பற்றிய நினைவலைகளைக் கிளறிக் கொண்டிருக்கும்.
“காலை, மாலை எந்நேரத்திலுமே அவள் நினைவு என்னை வாட்டுகிறது, ராஜி ஒ. நான் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை. ராதா இல்லாமல் எனக்கு வாழ்வே இல்லை” தான் ஓர் ஆண், தாங்கள் இருப்பது ஒரு பொது இடம் என்பது எல்லாவற்றையும் மறந்து விசித்து விசித்து அழுதான்.
"அழாதீர்கள். எங்களைச் சுற்றியுள்ள எல்லாரும் எங்களையே பார்க்கிறார்கள். தயவுசெய்து அழாதீர்கள்" ராஜி அவனைத் தேற்றினாள். ஓரளவு சுயநிலையடைந்தவனாகத் தனது பட்டுக் கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டான்.
ராதையுடன் தொடர்புகொண்டு எப்படியாவது தம்பிராசாவுக்கு உதவவேண்டும் என ராஜி தீர்மானித்தாள். அதன் முதற் படியாக அவனுடைய தற்போதைய நிலை பற்றி விரிவான ஒரு கடிதத்தை எழுதினாள். கடித ஆரம்பத்தில் பல்கலைக்கழக வளாகச் செய்திகளையும் தனது சுகம் பற்றியும் எழுதிவிட்டு இறுதிப்பகுதியில் தம்பிராசாவைப் பற்றி நீண்ட குறிப்பொன்றை எழுதினாள்.
78

ക്കബptങ്ങി
ராதா தனது எதிர்காலக் கணவனுடனமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருக்கும்போது தாயார் அக்கடித்ததைக் கொண்டு வந்து, கொடுத்தார். அக்கடிதம் ராஜியின் எழுத்தில் விலாசமிடப் பட்டிருந்தமையால் தாயார் உடைத்துப் பார்க்கவில்லை. அவ்விரு சினேகிதிகளின் கடிதப் போக்குவரத்தைத் தாய் அனுமதித்திருந்தாள். “இது ராஜியிடமிருந்து வந்திருக்கிறது. உங்களிடம் பலமுறை அவளைப் பற்றிக் கூறியிருக்கிறேனல்லவா? அவள் ஒரு அதிசயமான பெண். எனது உயிர்ச் சினேகிதி. மிகவும் நகைச்சுவையுடன் கடிதங்களை எழுதுவாள். இக்கடிதத்தில் எனது ராஜி என்ன எழுதியிருக்கிறாளோ?” என்று தனது மைத்துனனிடம் கூறிக் கொண்டு கடிதத்தை உடைத்தாள்.
இருவருமாகச் சேர்ந்து கடிதத்தைப் படித்தார்கள். அவளுடைய முகம் இருண்டது. தலையைக் குனிந்து கொண்டாள். சிறிது நேரம் அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் ராதா இத்திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. அவளுடைய தாயார் எந்நேரமும் தனது மருமகனின் குணாதிசயங்கள், தகைமைகள், பெருமைகள் பற்றியே சொல்லிய வண்ணம் இருப்பாள். ஒரு நாள் ராதா தம்பிராசாவின் மேல் தான் கொண்டிருந்த விருப்பத்தைத்தாயிடம் சொன்னாள். தம்பிராசாவைப் பற்றியும் அவனுடைய வெற்றிகள் பற்றியும் முன்பே அறிந்திருந்தாள். “யாரடி அவ்வளவு பணம் வைத்திருக்கிறது? பல்கலைக் கழகத்திலிருந்து உபகாரப் படிப்பினைப் பெற்று வெளிநாடு செல்லும் ஒருவர் எப்போதுமே கூடிய தொகைச் சீதனம் தான் கேட்பார். நாம் அதற்கு எங்கே போவது? உனது விசர்த்தனமான ஆசைகளை இனிமேலும் வளர்க்காதே’ என்று தாயார் கூறினார். அன்றிலிருந்து பலமான புத்திமதிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் ராதையின் மனது மாறியதாகத் தெரியவில்லை.
79

Page 49
கல்விமானி
ஒருநாள் அவளுடைய தாயார் தும்புத்தடியொன்றினால் அவளை நன்றாக அடித்தார். அவள் அசையவேயில்லை. தகப்பனார் வந்தார். "ராதா, தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லையென்ற முதுமொழி பட்டதாரியாகிய உனக்குத் தெரியாதா அம்மா? அதுவும் ஒரு கன்னியாகிய நீ இப்படியான துர்ச்செயலைச் செய்யவே கூடாது” என்று அறிவுறுத்தினார்.
ராதா சஞ்சலமுற்றாள். அவளால் வெளியே செல்ல முடியவில்லை. தனது இதய தாகத்தை அடக்குவதைத் தவிர வேறு எவ்வித வழிகளுமே அவளுக்குத் தெரியவில்லை. பெற்றோர் பலாத்காரத்தைக் கையாண்டார்கள். வெற்றியும் பெற்றார்கள். ராதா தனது விருப்புக்களை மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. படிப்படியாக, எவ்வளவோ சிரமப்பட்டு மைத்துனனுடன் பழகினாள். இருவருமே படித்தவர்கள், நாகரிகமானவர்கள். எனவே திருமணத்துக்கு முன்பாகவே ஒன்றாக இருந்து கதைப்பதற்குப் போதிய சுதந்திரம் இருந்தது. ஆனால் அது ராதையின் வீட்டில் மட்டும்தான். அதுவும் தாயாரின் மேற்பார்வையிலேயே நடக்கும். அவர்கள் ஒழுங்கான முறையில் நடந்து கொள்கிறார்களா என்று பார்ப்பதற்காக ஏதாவதொரு சாட்டுக் கூறிக் கொண்டு அவர்களிடம் வந்து போவாள். அவன் ராதையிடம் மிகவும் பிரியமாக நடந்து கொண்டான். அடிக்கடி பரிசுப் பொருட்கள் கொண்டுவந்து ராதையை மகிழ்விப்பான். அவள்மீது அபரிமித அன்பைச் செலுத்தி அவளைத் திணறடித்தான்.
ராஜியின் கடிதம் இப்பொழுது அவனுடைய கையில் இருந்தது. ராஜிவிபரிதமாக எதையும் எழுதியிருக்கமாட்டாள் என்ற நம்பிக்கையில்தான் அக்கடிதத்தைப்படிக்க அவனை அனுமதித்தாள். ராதையின் உடல் நடுங்கியது. உலகமே நொருங்கி அவள் தலைமேல் விழுவதுபோல் இருந்தது. அவனுடைய பார்வை ராதை மேல்
ԲՐ

as66toneh
பதிந்திருந்தது. அருவருக்கத்தக்க பொருள் ஒன்றை பார்ப்பதைப் போல அவளைப் பார்த்தான். பின்பு அக்கடிதத்தை எடுத்துச் சென்று அவளுடைய பெற்றோரிடம் கொடுத்தான். அமைதியாக, ஆழமான ஒர் ஆற்றின் நீரோட்டத்தைப்போல வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தில் புயல் வீச ஆரம்பித்தது.
ராதாவின் மைத்துனன் அவள் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த விடுதியின் ஆசிரியைக்கு இதுபற்றி எழுதினான்: அக்கடிதத்தில் ராஜியின் பெயரும் இழுக்கப்பட்டிருந்தது. அவர் தம்பிராசாவைக் கூப்பிட்டு எச்சரித்தார். அரசாங்க உபகாரம் பெற்றுப் படிக்கும் ஒருவருக்கு மற்றைய பட்டதாரி மாணவர்கள் அனுபவிக்குமளவு சுதந்திரம் வழங்கப்படுவதில்லையென்றும், ஒரளவு கட்டுப்பாட்டுடன் அவர்கள் நடந்துகொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். பல்கலைக்கழகத் தலைமைப்பீடம் இது பற்றி அறிந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி எடுத்து உரைத்தார். இறுதியில் அவனுடைய வேண்டுதலுக்கிணங்கி மேலிடத்திற்கு இதனை அறிவிக்கவில்லையென்று சத்தியம் செய்து கொடுத்தார். ኣ
சகோதரனுடைய செயல் லீலாவிற்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாங்களெல்லாம் இருக்குமிடத்திலேயே இப்படிச் செய்பவன் உற்றார், உறவினர் அற்ற இடத்திற்குச் சென்று என்னவெல்லாம் செய்வானோ அவனை இப்படியே விடுவது மிகவும் ஆபத்தான செயல் என்று கணவனிடம் கூறிவிட்டு முழுமூச்சுடன் தம்பிராசாவுக்குப் பெண் தேடும் படலத்தை ஆரம்பித்தாள்.
தம்பிராசாவுக்கும், ராதாவுக்குமிடையே இருந்த காதல் விவகாரம் பல்கலைக்கழகமெங்கும் பரவியது. பட்டதாரி மாணவர்களின் அனுதாபங்கள் அவ்விளங்காதலர்கள் மீதே இருந்தது. அவர்களுக்குதவிய ராஜியை ஒரு நவ நாகரிக எண்ணங் கொண்ட பெண்ணென்று வர்ணித்தனர்.
81

Page 50
6ങബDTങ്ങ്
தம்பிராசா, உண்பது, உறங்குவது ஆகிய இரு செயல்களையும் மறந்து விட்டான். சர்பத்தை மட்டும் குடித்துக்கொண்டு நாட்களைக் கடத்தினான். வாழ்க்கையின் பிடிப்புக்கள் யாவுமே அற்றுப்போய் விட்டன. ஒருநாள் லீலாவிடமிருந்து தந்தி வந்தது. "உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள ஏற்பாடுகளெல்லாம் செய்தாயிற்று. கடிதம் தொடர்கிறது”தம்பிராசா வெறிபிடித்தவனைப்போல அத் தந்தியைக் கிழித்தான், கிழித்த துண்டுகளை மீண்டும் கிழித்தான் பலநூறு துகள்கள் எல்லாவற்றையும் காற்றில் வீசியெறிந்தான். அறையைவிட்டு வெளியேறிக் கலைந்திருந்த தலையுடன் வளாகம் எங்கும் அலைந்தான்.
லீலா குறிப்பிட்டிருந்த கடிதமும் வந்தது. ஆரம்பத்தில் அவனுடைய நடத்தையைக் கண்டித்து எழுதியிருந்தாள். அதன் பின் அவனுடைய விவாக சம்பந்தமான விளக்கங்கள். இலங்கையின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வாழும் பகுதியான கறுவாத் தோட்டத்தில் நல்ல சாதியைச் சேர்ந்த பெண்ணொருத்தியை லீலாவும், கணவனும் தெரிவுசெய்திருந்தனர். சீதனப்பணமாக எழுபத்தையாயிரம் ரூபாவை ரொக்கமாகவும், இன்னுமொரு எழுபத்தையாயிரம் ரூபாவிற்குப் பெறுமதியான நகைகள், பண்டங்கள் முதலியவற்றைத் தருவதாகவும் கூறியிருந்தனர். பெண் ஒலிவ் நிறத்தினளாகவும், நாகரிகமானவளாகவும், பியானோ வாசிக்கத் தெரிந்தவளாகவும் இருந்தாள். நூற்றுக்கணக்கான சேலைகள் அவளிடமிருந்தன. அவளுடைய ஆபரணங்களில் வைரங்களே முக்கிய இடம் பெற்றிருந்தன.
தம்பிராசா அக்கடிதத்தை ராஜியிடம் காட்டினான். இருவருக்கும் அது பிடிக்கவில்லை. "எத்தனையோ வாலிபர்கள் விவாகம் செய்யாமல் ஐரோப்பிய தேசங்களுக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள். உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள உங்கள் சகோதரியால் முடியவில்லை” என்று ராஜி கூறினாள். ராதாவைப் பற்றிஇருவரும்பலமணிநேரம் கதைத்தார்கள்.இறுதியில், தான் ஒரு
82

6ൺഖpTങ്ങ്
விரிவுரைக்குத் தயாராக வேண்டியிருப்பதாகக் கூறிவிட்டு ராஜி சென்று விட்டாள். அன்று இரவு அவன் படுக்கவில்லை. ஒருவித விரக்தி உணர்வு அவனை ஆட்டிக் கொண்டது. “ஒ, ராதா, ரா
yy
எல்லாமே முடிந்து விட்டன. முடிந்தே விட்டன. எனறு ஏதோவெல்லாம் பிதற்றியபடி அழுதான். "இல்லை இப்படியே விடமாட்டேன் இதற்கு ஒரு வழியமைத்தேதீருவேன். ராதா உன்னை எப்படியும் அடைந்தேதீருவேன்"
தம்பிராசா தனது வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்டான். புகையிரத நிலையங்களில் இறங்கித்தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று அவனிடம் கூறிவிட்டு உறங்கலிருக்கைப் புகையிரதப் பெட்டி பிரயாணச் சீட்டினை வாங்கினான். புகையிரதம் புறப்பட்டது. அமைதி அற்றவனாக ஒவ்வொரு பெட்டிக்கும் சென்றான். பிரதான புகையிரதத்தரிப்புகளில் அங்காடி வியாபாரிகள் சத்தமிட்டனர். ஒரு சிகரெட் பெட்டியை வாங்கிக்கொண்டு தனது இடத்திற்கு மீண்டான். யன்னலை மூடி வெளியுலகத் தொடர்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். ஒன்றன் பின் ஒன்றாக எல்லா சிகரெட்டுக்களையும் புகைத்துத் தள்ளினான்.
அடுத்தநாட் காலை புகையிரதம் யாழ்ப்பாண நிலையத்தை வந்தடைந்தது. தம்பிராசாவை வரவேற்க அவனுடைய சிறிய தந்தையாரும் லீலாவின் கணவனும் வந்திருந்தனர்.
தம்பிராசாவின் வேலைக்காரப் பையன் தனது பெட்டியினின்று இறங்கி வந்து தம்பிராசா பிரயாணஞ் செய்த பெட்டியினுட் பிரவேசித்தான். தம்பிராசா மல்லாந்து படுத்திருந்தான். “தம்பிராசா எழும்பப்பா” என்று அவனை உலுப்பினான் மைத்துனன். தலை துவண்டது பதிலில்லை.
புகையிரதச் சிப்பந்திகள் தம்பிராசாவின் உடலை அப்புறப் படுத்த உதவினார்கள். அவசர சிகிச்சைக்கு வந்த பாக்டர் பாதி
83

Page 51
6ൺഖിofങ്ങ്
அப்பிள் ஒன்றைக் கண்டார். அப்பழத்தில் இயற்கையாகவே நஞ்சு LILT5gicU.55g).
பிரேதத்தைப் பார்த்ததும் லீலா நினைவற்று விழுந்து விட்டாள். மயக்கம் தெளிந்து எழுந்ததும் கதறி அழுதாள். "நீயே இறந்து விட்டயின் நான் ஏன் வாழ வேண்டும் என்னையும் அவனுடன் சேர்த்துக் கொளுத்தி விடுங்கள்” என்று கணவனின் காலைக் கட்டிக்கொண்டு ஒலமிட்டாள்.
“அவன் நினைத்திருந்தால் கோடீஸ்வரியை மணந்திருக்கலாம். ஆனால் தான் விரும்பிய பெண்ணையடைய வேண்டுமென்ற வீராப்புடன் இறந்துவிட்டான்” என்று மரணச்சடங்கிற்கு வந்திருந்த ஒருவர் கூறினார். பல்கலைக்கழகத் தலைமைப்பீடம் இன்னொரு பட்டதாரியை இங்கிலாந்திற்கு அனுப்பியது.
84

eყpტსბ (8ებეub"
மூடும் நேரம்
அவன் கணப்பினருகே நின்று புத்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தான். சிலபோது கணப்பை நோக்கிக் குனிந்தும், உள்ளங்கைகளைக் கணப்பை நோக்கி விரித்தும் குளிர்காய்ந்தான். போதுமான கதகதப்பை அடைந்ததும் மேசையை அடைந்து ஒரு கோப்பை பியர் வாங்கினான். ஒருமுறை பியரை உறிஞ்சிவிட்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கினான். அப்போது ஒர் அமெரிக்கச் சிப்பாய் அவனை நோக்கிக் குனிந்து, “என்ன படிக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.
“ஹேமிங்வே” என்றான் அவன்.
“அவர் உங்களுடைய நாட்டைப்பற்றியும் எழுதியுள்ளார்” என்றான் அந்த அமெரிக்கன்.
“எந்த நாடு”
“ஸ்பெயின்"
"நான் ஸ்பானியனல்ல"
“தென்னமெரிக்கனா?”
“இல்லை”
“இத்தாலியனா?”
"g ,י
“கிரேக்கனா?”
85

Page 52
eყp0ჩtბ (8ყნეtბ
“இல்லை”
“G o f O ولو
"g R
"அப்போ எந்தச் சனியன்?
"நான் ஓர் இந்து"
“நான் முன்னொருபோதும் ஓர் இந்துவைச் சந்தித்ததில்லை” என்று கூறியபடி அவனுடைய கையைப் பற்றிக் குலுக்கினான் அந்த அமெரிக்கன். இந்து வலியைத் தாங்கமுடியாமல் கண்களை லேசாக மூடிக்கொண்டு கையை மெதுவாக விடுவித்தான்.
"ஏதாவது குடிப்போம்"
“பியர் வாங்குங்கள்"
“சிற்றுண்டிகள் ஏதாவது”
"நன்றி, வேண்டாம்"
அந்த அமெரிக்கன் இருவருக்குமாகச் சேர்த்து மதுவை வாங்கினான். அங்கு இன்னும் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்கள். வாய்நிறைந்த பியருடன் அறிமுகம் தொடர்ந்தது.
"நான் இந்துக்களை விரும்புகிறேன்"
"அது உங்களுடைய நல்ல குணத்தைக் காட்டுகிறது"
"நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய்” என்றான் அந்த அமெரிக்கன். அப்போது அங்கிருந்த ஆங்கிலேயனொருவன் இரக்கத்துடன் ஏதோ கூறினான். இந்தியனுக்கு இது பிடிக்கவில்லை. வெறுப்புடன் வெளியே நோக்கினான்.
86

დყo(ტსბ (8ებეubბ
"நாம் எல்லோரும் இந்தியாவின் அனுதாபிகள். அந்த அதிசயமான மக்களுக்கு விடுதலை வேண்டும். எல்லா அமெரிக்கர்களும் இந்திய சுதந்திரத்தை விரும்புகிறார்கள்” என்றான் அமெரிக்கன்.
“எனக்கும் அது தெரியும்"
அந்தக் கூட்டம் கலைந்து போயிற்று, முற்றுமுழுதாகவல்ல. அங்கொருவர் இங்கொருவராகச் சிலர் காணப்பட்டார்கள். இது மதுச்சாலையில் நிகழும் சாதாரண நிகழ்ச்சிகளில் ஒன்று. அந்த இந்தியனும், அமெரிக்கனும் தனியாக ஓரிடத்தில் நின்றார்கள். ஒருவரையொருவர் ஆழ்ந்து நோக்கிய பின் வெற்று மதுக் கிண்ணங்களைப் பார்த்தார்கள். இந்தியன் மேலும் மது வரவழைத்தான். மதுவை உறிஞ்சியபடியே தலையைத் திருப்பித் தோளின் மேலாக அங்கு மீந்திருந்தோரை நோக்கினான்.
"அவர்களைப் பற்றிக் கவலைப்படாதே" என்றான்
"அவர்களுக்குக் குடிவகை வழங்க வேண்டாமோ?” "அவர்கள் போதுமானவரை அருந்தியுள்ளார்கள்" மேலும் பலர் அங்கு வந்தார்கள். நெரிசல் கூடியது. ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நின்றார்கள். அந்த அமெரிக்கனுடைய ஆங்கில நண்பன் மீண்டும் வந்தான். குடிவகைகள் தாராளமாகப் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்தியன் அடிக்கடி கதவை நோக்கினான். அவனுடைய கண்கள் ஆவலுடன் எதையோ தேடின. எங்கும் பார்வையைச் சுழலவிட்டு அடிக்கடி கணப்பை நோக்கினான்.
வழக்கத்திற்கு மாறாக அன்று மிகவும் குளிராக இருந்தது. ஆனால் மதுக்கடைக்காரன் கதவைத் திறந்தபடியே விட்டிருந்தான். அதனை மூடினால் தனது வருவாய் குறைந்துவிடுமென அவள்
87

Page 53
დყ20ჩuბ (8pguბ
எண்ணினான். அநேகமான வாடிக்கையாளர்கள் கதவினூடாக வரும் தூய காற்றையே விரும்பினர். நான் நின்றிருந்த இடத்தில் குளிர்காற்று வீசியது. எனவே, கணப்பை நோக்கி நடந்தேன்.
கணப்பருகே முன்போலவே கைவிரல்களை அகல விரித்துக் கொண்டு அவன் குளிர்காய்ந்தான். என்னை நோக்கித் திரும்பிப் புன்னகைத்தான்.
“எனது பெயர் மோகன்" "நான் மார்க்கண்டு, ஹரி மார்க்கண்டு. நீங்கள் ஹரி என்றே அழைக்கலாம்” என்றேன். குளிர் அதிகமாகவிருந்தது. கணப்பை நோக்கிக் கால்களை நீட்டினேன்.
"மிகவும் குளிராகவிருக்கிறது இல்லையா?” "பயங்கரமான குளிர்” “ஐம்பது வருடங்களுக்குப் பின்பு மீண்டும் இன்றுதான் இப்படிக் குளிராக இருக்கிறதாம்"
“நான் அதை நம்புகிறேன். இங்கு வீசும் குளிர்காற்று எனது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது” என்றேன்.
“இப்பொழுது பரவாயில்லைத்தானே?" “முன்பைவிட எவ்வளவோ பரவாயில்லை. கேட்டதற்கு நன்றி.”
"மிகவும் அதிகமான வெப்பம் எங்களுக்கு வேண்டும்” என்றான்.
“அதற்காக ஒரேயடியாக நெருப்பில் குதித்துவிடக் கூடாது" என்று நான் கூறினேன்.
“சென்ற கோடையின்போது வட ஆபிரிக்காவில் எங்கோ ஓரிடத்தில் சில இந்திய வீரர்கள் வெப்ப அலையினால் இறந்து விட்டதாக அறிந்தேன்"
88

eყo06uბ მ8pguბ
"அசாதாரணமான செயல்" மோகன் தலையை உயர்த்தியாரையோ தேடினார். “நண்பர்கள் யாரையாவது தேடுகிறீர்களா?"என்று கேட்டேன்.
“இல்லை” அங்கிருந்த கூட்டம் கலைந்தது. அந்த அமெரிக்கன் புதிய ஒரு நண்பனைப் பிடித்துக் கொண்டான்.
“உங்கள் அமெரிக்க நண்பர் எல்லோருடனும் சகஜமாகப் பழகிக் கொள்கிறார்” என்றேன்.
“ஆடம்பரமாகப் பேசிக் கொள்கிறாரென்று நீங்கள் கருதுகிறீர்கள் போலிருக்கிறது”
நான் சிரித்தேன். "அப்படியுமிருக்கலாம், அவர் உங்களிடம் நன்றாகப் பெருமையடித்திருப்பாரென எண்ணுகிறேன்” என்றேன்.
“இல்லை. அவர் அப்படியேதும் கூறவில்லை, அவர் நல்ல நிலையில் இருந்தார். அவர்கள் எல்லோரும் நன்றாக இருந்தார்கள். அவர் ஒரு நல்ல மனிதர்"
நகம் தேய்க்கும் அரத்தை எடுத்து நகங்களைத் தேய்த்துக் கொண்டார். புருவங்களை உயர்த்தித் தலை அசைத்தார். பின்பு கணப்பை நோக்கி முஷ்டிகளை நீட்டிக்கொண்டு விரல்களை மடித்தும், விரித்தும் பலவித அசைவுகளைச் செய்தார்.
"அவர் டாம்பீகமானவரல்ல. நீர்தான் பாம்பீகமானவர்" என்றேன் நான்.
“போதும். என்னைத் தொல்லைசெய்யாமல் தனியே விட்டு விடுங்கள் நான் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறேன்"

Page 54
eყp0ჩსბ (8pguბ
நான் ஒரு சட்ட நிபுணரென்றும் ஆனால் தற்போது தற்காலிகமாகப் புத்தக விற்பனையாளராக இருக்கிறேனென்றும் சொல்லிக்கொள்ள முன்பே அவர் அதைக் கூறிவிட்டார்.
சிறிதுநேரம் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவில்லை. பின்பு நான் சென்று இரண்டுபியர் வாங்கிவந்தேன்.
“மன்னியுங்கள், எந்நேரமும் நான் குடித்துக் கொண்டிருப்தி 99
"பரவாயில்லை, நடந்ததை மறந்துவிடுங்கள்” என்றேன். "நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" "புத்தகசாலையொன்றை நடத்துகிறேன்" "சுவையான தொழில். உங்கள் புத்தகசாலை எங்கேயுள்ளது?" "புளூம்ஸ்பரியில்” "அது இன்னும் சுவையானது. நான் கட்டாயம் அங்கு வந்து உங்களைச் சந்திப்பேன்"
“மிகவும் மகிழ்ச்சி நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் இன்னும் O
"நீங்கள் ஒர் எழுத்தாளரா?” என்று கேட்டேன். "ஆம், நான் எழுத்தாளன்தான். எப்படி அறிந்து கொண்டீர்கள்?"
"அது வெளிப்படையாகத் தெரிகிறது"
எப்படி வெளிப்படையாகத் தெரிகிறது என அவர் கேட்கவில்லை. தனது சப்பாத்தை நோக்கினார். கழுத்துப்பட்டியைச் சீர்செய்தார். தலைமயிரைப் பின் நோக்கி நீவி விட்டார். பின்பு முறுவலித்தார்.
90

დყp0ჩuბ (8ებgub
“நான் எழுத்தாளனென்று நீங்கள் கருதியதற்கு ஏதாவதொரு காரணம் இருக்கவேண்டும். அது என்னவென்று சரியாக என்னால் ஊகிக்க முடியவில்லை” என்றார்.
“உங்களுடைய தலைமயிர்” “இருக்கலாம், நான் எப்போதும் நீளமாக முடிவளர்ப்பேன். அது எனது வழக்கம். நாகரிகம் கருதி நான் அதைச்செய்யவில்லை” "நானும் அதனை நாகரிகமென்று எண்ணவில்லை” என்றேன். “இல்லை, சிலர் இதனை நாகரிகமென்று நினைக்கிறார்கள். நீண்ட முடியைப் பற்றிப் பலர் பலவிதமான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இவர்களிற் பலர் ஆடம்பர எண்ணம் உடையவர்கள்”
"நீங்கள் ஏன் அவர்களைப்பற்றிக் கவலைப்படுகிறீர்கள்" என்று நான் கேட்டேன்.
"பழக்கம்தான். ஒவ்வொரு செயலும் பழக்கத்தின் வெளிப்பாடு தான். ஆடம்பரமாக நிற்பது கூடப் பழக்கத்தால் வந்த செயல்தான்” என்றார் மோகன். அவர் ஏனோ கவலையுடன் காணப்பட்டார். ஏதோவொன்றை எண்ணி மிரண்டு கொண்டிருந்தார்.
"நாங்கள் மதிய போசனத்திற்குச் செல்வோம்” என்றேன். “இன்னும் கொஞ்சம் குடியுங்கள் அதன்பின் போகலாம்" என்றார் மோகன்.
"நான் போதுமானவரை குடித்துவிட்டேன். இதற்கு மேலும் குடிக்க இயலாது. வாருங்கள் சாப்பிடச் செல்வோம்”
"நான் உணவை வெறுக்கிறேன், நிரந்தரமாகவல்ல. மதுச்சாலை மூடும் நேரத்திற்கு முன்பு சாப்பிட நான் விரும்பவில்லை”
91

Page 55
დყo06სბ (8p[Jub
"இது இன்னுமொரு பழக்கமா?" "இருக்கலாம்” என்று சிரித்துக்கொண்டு கூறினார் இரண்டு பெரிய கண்ணாடிக் கிண்ணங்களில் மோகன் பியர் வாங்கி வந்தார். அது முழுவதையும் எவ்வாறு குடித்து முடிப்பதென எனக்குப்புரியவில்லை. அவரோ விரைவாகக் குடித்துவிட்டார். அது அவரை அதிகம் பாதித்ததாகத் தெரியவில்லை. தள்ளாடாமல் உறுதியாக நின்று கொண்டு முன்பு கூறியவற்றை நிதானமாகத் தொடர்ந்தார்.
“சாப்பிடுவதில் எனக்குச் சலிப்பு உண்டாகிவிட்டது. அதுவும் தனியாகச் சாப்பிடுவதென்றால் கட்போடு பிடிக்காது” என்றார்
மோகன்.
அவருடைய கூற்று முற்றுமுழுதாகச் சரியென எனக்குப் படவில்லை. ஏனெனில் அவருடன் நான் கதைத்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் அவருடைய கவனம் முழுவதும் எம்மிடையே இருப்பதில்லை. எங்கோ ஒர் ஏகாந்தத்தில் சஞ்சரித்துக்கொண்டு தனிமையை நாடுபவர்போல அரைகுறையாகத்தான் உரையாடினார்.
"உண்மையாகவே நான் யாரையும் சலிப்படையச் செய்வது இல்லை. அதேபோல வேறு யாராலும் என்னைச் சலிப்படையச் செய்யவும் முடியாது. சலிப்படைவதென்பது ஒருவருடைய பலவீனத்தின் அறிகுறியாகும். இன்னொருவரின் மனிதத்துவச் செயற்பாடுகள் உங்களை அந்த எல்லைவரை இட்டுச் சென்று விட்டதென்பதுதான் அதன் பொருள். ஒவ்வொருவரும் கட்டாயம் மனோவலிமை பெற்றவராக இருக்கவேண்டும்” என்றார்.
இந்த உரையாடல் பெரிய சிக்கல் வாய்ந்ததாக எனக்குத் தோன்றியது. நேரமும் நன்றாகப் பிந்திவிட்டது. நான் கடைக்குத் திரும்ப வேண்டுமென அவரிடம் கூறினேன்.
92

eყp0ნსბ (8pguბ
"கட்டாயம் போகவேண்டுமா?” என்று கேட்டார்.
6. 29
-ՉԱԼ0. “வழித்துணையாக ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்” “இல்லை வேண்டாம், கேட்டதற்கு நன்றி” “ஒரே மூச்சில் இன்னொன்று அடித்துவிட்டுச் செல்லலாமே." “வேண்டாம். உண்மையாகவே நான் போக வேண்டும். இன்னொரு நேரம் உங்களைச் சந்திக்கிறேன்.”
“நல்லது வாருங்கள். மீண்டும் உங்களை எங்கு சந்திக்கலாம்?" “ஒரிடமும் சந்திக்க முடியாது. உங்களுடைய தொலைபேசி இலக்கத்தைத் தாருங்கள். நானே உங்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன்” என்றார்.
மோகன் தனது வாக்கைக் காக்கத் தவறவில்லை. தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்புகொண்டு ஒருநாள் மாலை வருவதாகக் கூறினார். அன்று ஒர் இராப்போசனத்திற்கு வருமாறு அவரை அழைத்தேன். ஆனால் அவரோ அதற்குப் பதிலாக ஒரு மதுச் சாலையிற் சந்திக்கலாமென்றார். அன்று நான் அங்கு சென்றபோது யாரோ ஒருவருடன் சேர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்.
“இது டெமிற்றியஸ் பப்படாபெளலஸ்” என்று அவரை எனக்கு அறிமுகம் செய்துவிட்டு, "இவர் ஹரி மார்க்கண்டு” என்று என்னை அவருக்கு அறிமுகம் செய்தார்.
அவர் நம்மை அறிமுகஞ் செய்தபோது இருவரையும் நோக்கிக் கையை அசைத்தார். ஆனால் முகமோ அதற்கு எதிர்த்திசையை நோக்கித் திரும்பியது. டெமிற்றியஸ் நீண்டமுடியையும், விரல்களையும் உடையவராகவும், பேசும்போது அபிநயங்கள்
காட்டுபவராகவும் இருந்தார். அருகிலிருந்து அவதானித்தபோது
93

Page 56
დყo05uბ (8pguბ
அவருடைய தோற்றம் மோகனுடைய தோற்றத்திலிருந்து வேறுபட்டிருந்தது. ஆனால் அவர்களிடையே ஏதோவோர் ஆழ்ந்த தோற்றப்பாட்பொருமையிருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர்கள் இருவரும் ஒரேமாதிரியாக, ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.
ஒரு பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது இருவரும் சகோதரர்கள் போலிருந்தார்கள். அழையா விருந்தாளிகளான பல ஆண்களும், நீண்ட கூந்தலையுடைய பெண்களும் வந்து அவர்களுடன் கதைத்தார்கள், குடிவகைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். பின்பு சிரித்துக்கொண்டே விடைபெற்றார்கள்.
"அவர்களெல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது எழுத்தாளர்கள்” என்று மோகன் என்னிடம் கூறினார்.
மதுச்சாலை மூடும் நேரத்திற்கு முன்னால் அவரை அங்கிருந்து கூட்டிச்செல்ல எடுத்த முயற்சிகளெல்லாம் பயனற்றுப் போயின. ஒருவழியாக அங்கிருந்து புறப்பட்டதும் தனது இடத்திற்கு வந்து செல்லுமாறு பெமிற்றியஸ் வேண்டினார். அவர் அழைக்காமலே அங்கு செல்வதற்கு மோகன் தயாராக இருந்தார். நான் சிறிது முரண்டுபிடித்தபின் சம்மதித்தேன்.
“வீட்டில் நமக்கெல்லோருக்கும் போதுமான உணவிருக்கும் என்றார் டெமிற்றியஸ்.
நாங்கள் பஸ் ஒன்றில் ஏறினோம். டெமிற்றியசும் மோகனும் நண்பர்களிடம் விடைபெற்றார்கள். ஓரிடத்தில் டெமிற்றியஸ் பதறிக்கொண்டு பஸ்ஸை நிறுத்திக் கீழே இறங்கினார். “விரைவில் இறங்குங்கள்” என்று எங்களையும் துரிதப்படுத்தினார். “கொஞ்சம் உணவுப் பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் செல்வோம்" என்றார்.
94

ლყo(ჩსბ მ8ებეüბ.
“வீட்டில் போதுமான உணவிருப்பதாகச் சொன்னாரே' என்று மெதுவாக மோகனிடம் கேட்டேன்.
"அவர் என்ன சொன்னாரென்பதை அவரே மறந்துவிட்டார். இது அவருடைய இயல்பு" என்று கூறிவிட்டு மோகன் வாய்விட்டுச் சிரித்தார்.
டெமிற்றியஸ் மூன்று கோப்பை கோப்பி வாங்கினார். "இது குளிருக்கு இதமாகவிருக்கும். இப்போது குளிராகவிருக்கிறதல்லவா?” “மிகவும் குளிராகவிருக்கிறது. உங்களிடம் நிலக்கரி இருக்கிறதா?” என்று மோகன் கேட்டார்.
“எனக்குத் தெரியாது. இங்கிருந்து ஒன்றிரண்டு நிலக்கரித் துண்டுகளைப் பெறலாமென நினைக்கிறேன். ஆனால் உங்களுக்குத் தேவைப்படாதே" என்றார் டெமிற்றியஸ்.
மோகன் சிரித்தார். நான் இருவரையும் நோக்கினேன். டெமிற்றியஸ் சிக்கலை விடுவித்தார்.
“மோகன் நெருப்பு உண்டாக்குவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கணப்படுப்பினை அவர் ஒரு பத்திரிகையால் மூடுவார். பின்பு குந்தியிருந்துகொண்டு கைகளை உரோஞ்சுவார். உடனே நெருப்பு உண்டாகிவிடும். இது ஒரு விந்தை”
அவர்கள் சிரித்துக்கொண்டே கோப்பியை உறிஞ்சியபோது அது புரைக்கேறி வெளியே வந்தது. நான் இவற்றையெல்லாம் வெகு சிரத்தையுடன் அவதானிப்பதைப் பார்த்து அவர்கள் மேலும் சிரித்தார்கள். என்னிடம் கொஞ்சம் கூட நகைச்சுவைத் தன்மையில்லை. அதுதான் நான் இப்படியிருக்கிறேன்.
டெமிற்றியஸ் மூன்று பெரிய பணியாரங்களை வாங்கிவந்து கடதாசியில் சுற்றினார். அவருடைய சிரிப்பு இன்னும் அடங்கவில்லை.
9.

Page 57
დყp06uბ (8pgtბ
அவர்களுடைய குடியிருப்பிற்கு நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. டெமிற்றியஸ் பாட்டுப் பாடினார், நடனம் ஆடினார். இவற்றால் குளிரையே மறந்து நடந்தோம். வீதியின் மத்தியில் நின்று கைகளை வீசிச் சுழன்று ஆடினார். தலைமயிர் பரந்து விரிந்து கவிந்தது. அப்போது அங்கு வந்த காரொன்று அவர் நடனத்தை முடிக்கும்வரை காத்து நின்றது. டெமிற்றியஸ் நடனம் முடிந்ததும் அதற்குள் இருந்த இரண்டு மனிதர்களிடம் சென்று ஏதோ பேசினார். நானும் மோகனும் வீதியின் மறு ஒரத்தில் நின்று அதனை அவதானித்துக்கொண்டிருந்தோம். அவர் ஒர் அலட்டற் பேர்வழி நீண்டநேரம் தன்னை மறந்து கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென கையைக் காட்டிக்கொண்டு அவர் கோபமாகக் கத்தினார். நாமிருவரும் அருகே சென்றோம்.
“என்ன நடந்தது?" என்று நான் கேட்டேன். “ஒன்றுமில்லை. உமது நண்பர் ஏதோ விகடம் செய்கிறார்" என்றார் காரிலிருந்த ஒருவர்.
"நான் அப்படியொன்றும் செய்யவில்லை.இவர்கள் என்னைக் கோபமூட்டுகிறார்கள்” என்றார் டெமிற்றியஸ்.
"நீங்கள் அப்படி நடந்து கொண்டீர்களா?" என்று அவர்களைக் கேட்டேன்.
"இது ஒரு பிரச்சினையா” என்று கேட்டார் காரிலிருந்தவர். "இம்மாதிரிப் பேசுவது எனக்குப் பிடிக்காது. நீங்கள் யார்?" என்று கேட்டேன்.
“ஸ்கொட்லன்ட்யார்ட்துப்பறியும் பொலிஸ் நிபுணர்கள்” இதனைக் கேட்டதும் நண்பர் “ஹோ.ஹோ.” என்று பலமாகச் சத்தமிட்டுக்கொண்டு மீண்டும் நடனமாடினார்.
96

மூடும் நேரம்
மோகன்தலையிட்டு,"இப்பொழுது முழுநடனத்தையும் ஆடி முடித்துவிட வேண்டாம். இரவுக்கும் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்” என்றபின் பொலிஸ்நிபுணர்களை நோக்கித் திரும்பி,
“எனது நண்பர் தொல்லை கொடுத்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
“மன்னிப்புக்கோர வேண்டாம் எனது நண்பர் ஹரி ஒரு சட்ட நிபுணர்” என்றார் டெமிற்றியஸ்.
"அவருடைய வார்த்தைகளைப் பொருட்படுத்த வேண்டாம். இதோ எனது அடையாளஅட்டை” என்றவாறு அதனைப் பொலிஸ் நிபுணர்களிடம் நீட்டினார்.
"நாங்கள் அதனைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. உங்களை ஏற்கனவே நாங்கள் அறிவோம்”
"அப்படியா, நல்லது நல்லிரவு வந்தனங்கள்” என்றார் மோகன்.
“நல்லிரவு வந்தனங்கள். நண்பரைக் கவனமாகக் கூட்டிச் செல்லுங்கள்.”
இதன் பின் நடனம் தொடரவில்லை. பதிலாக டெமிற்றியஸ் பாட ஆரம்பித்தார். அவற்றிலொரு பாடல் "சைப்பிரஸ் நிலவு" தன்னை ஒரு சைப்பிரஸ் மாணவனாக உருவகித்து அந்தப் பாடலை யாத்திருந்தார். அத்தீவினைப் பற்றிய குறிப்பீடு மோகனுக்கும் அவருக்குமிடையில் ஒரு விவாதத்தை ஏற்படுத்திவிட்டது. ஓர் உபகண்டத்தில் பழம்பெரும் கலாச்சாரங்களுக்கமைந்த வாழ்வே உயர்வானதென்ற கோட்பாடு மோகனுடையது. டெமிற்றியசும் விட்டுக்கொடுக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதனது கலாச்சாரங்களைக் கூறினார். ஆனால் அவரால் மோகனின் கலாச்சாரங்களின் பழமைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
97

Page 58
ლყo(ნსბ (8pgüბ
டெமிற்றியஸ் தனது பழம்புராணக் கதைகளை உதவிக்கு அழைத்தார். அப்படியிருந்தும் தோல்வியை ஒப்புக்கொள்ளமுடியாத பட்சத்தில் உரக்கச் சத்தமிட்டார்.
“எனது புராணங்கள் நித்தியமானவை அவற்றின் வழியில் தான் நாமெல்லோரும் வாழ்கிறோம். அவைகள் தான் அதி உயர்ந்த கவிதைகளை உருவாக்கின"
"ஆனால் சரித்திரபூர்வமாக அவை எதனைச் சாதித்தன?” மோகன் கேட்பார்.
“பெருமளவு சாதித்துள்ளன" கோபமிகுதியால் கத்திக் கொண்டே யுத்தநடனமொன்று ஆடினார். இது மோகனை அமைதியடையச் செய்துவிட்டது.
நாங்கள் அமைதியாக அந்தக் குடியிருப்பினுள் பிரவேசித்தோம். மோகன் கணப்பின் முன்னால் முழந்தாளிட்டு அமர்ந்தார். டெமிற்றியஸ் ஒரு சிறு நிலக்கரிக் கட்டியைக் கொண்டுவந்து நிலத்தில் வைத்தார்.
“விறகு ஏதாவது?"
“வேண்டாம்”
மோகன் முதலில் கணப்பைச் சுத்தம் செய்தார். பின்னர் மூன்று கடதாசிப் பந்துகளைச் உருட்டி முக்கோணி உருவில் வைத்தார். அவற்றின் மேல் நிலக்கரிக் கட்டியை வைத்தார். பின்னர் தீப்பெட்டியை உரோஞ்சி அம்முக்காலியின் கீழே பிடித்தார். டெமிற்றியஸ் நியூஸ் குறோனிக்கல்பத்திரிகையொன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். மோகன் கணப்பின் வாயிலை அப்பத்திரிகையினால் மூடினார். சிறிய குளிர்காற்றுக்கூட அதனுள் புகாதவாறு அதனைச் செப்பம் செய்தார். பின்னர் நிலத்தில் குந்தியிருந்து கண்களை மூடினார், கைகளை உரோஞ்சினார்.
98

eყo(ნსბ მებეtბ
சிறிது நேரத்தில் கணப்பு சுடர்விட்டு எரியத் தொடங்கியது. அந்தக் கருமைநிற நிலக்கரிக் கட்டி ஒளிர்ந்தது, பல நெருப்புத் துண்டங்களாக வெடித்துச் சிதறியது. மிக அதிகமான வெப்பம் வீசியது.
"ஆஹா, அற்புதம் அருமையான கதகதப்பு. இதுதான் இப்போது எங்களுக்கு வேண்டும்” என்றார் மோகன்
“மோகன், நீங்கள் முன்பு குறளி வித்தைக்காரனாக இருந்திருக்கிறீர்களா?”டெமிற்றியஸ் மகிழ்ச்சியுடன் கேட்டார்.
"இல்லை, ஆனால் மந்திரத்தினால் மாங்காயை வரவழைக்க என்னால் முடியும்"
“உங்களால் முடியுமா?"நான் சந்தேகத்துடன் கேட்டேன். "ஆம், அவரால் செய்யமுடியும். மோகன், இப்பொழுதே ஹரிக்கு அதனைச் செய்துகாட்டுங்கள்” என்று கூறிப் படுக்கை அறையினுள் சென்று ஒரு மாங்காய்க் கல்லை எடுத்துவந்து, "இதோ உங்களுடைய கல்லு சென்ற முறை இதனை நீங்கள் இங்கேயே விட்டுச் சென்று விட்டீர்கள்”
இந்திய மந்திர வித்தைக்காரர்கள் மாங்காய் வித்தை செய்வதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதனை நேரில் பார்த்தவர்கள் இதுபற்றி என்னிடம் நிறையக் கூறியிருக்கிறார்கள்.
நிலத்தில் ஒரு கல்லுப் புதைக்கப்படும். வித்தைக்காரன் அதற்கு மேல் தனது கைகளை உரோஞ்சியபடி சில சமஸ்கிருத சுலோகங்களை உச்சரிப்பான். உடனே, ஒரு மாமரம் நிலத்திலிருந்து ஒரடி உயரத்திற்கு முளைத்து, இரண்டு மாங்காய்களுடன் நிற்கும். இதன் பின் மந்திரவாதி அந்த மாங்காய்களைப் பறித்து சுற்றி நிற்பவர்களிடம் கொடுப்பான். மாங்காய்கள் பழுப்பதுட்பட முழு வித்தைகளுமே பதினைந்து நிமிடங்களில் முடிவடைந்து விடும்.

Page 59
დყo0ნსბ (8pguბ
மோகன் இப்பொழுது அந்த வித்தைகளைச் செய்ய ஆயத்தமானார். மாங்காய்க்கல்லைக் கையிலே எடுத்துக்கொண்டார். நிலத்தில் புதைப்பதற்குப் பதிலாக கம்பளத்தின் கீழே அதனைப் போட்டார். அவர் வித்தையை ஆரம்பித்த போது எனக்குச் சிறிது பயமாகவிருந்தது. டெமிற்றியஸ் ஒரு பெரிய சாய்மானக் கதிரையில் அமர்ந்திருந்தார். அவர் கணப்பைச் சுட்டிக்காட்டி,
"இவ்வளவு நிலக்கரித் துண்டுகளும் எங்கிருந்து வந்தன?” என்று கேட்டார்.
நாங்கள் மோகனை நோக்கினோம். அவர் மாங்காய்க்கல்லைக் கைகளுக்கிடையில் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தார். கைக்குட்டையை எடுத்து எனது நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டேன்.
"ஆஹா, வெப்பம் மிக அருமையாகவிருக்கிறது" என்றார் மோகன்.
"அது சரி, உங்களுடைய மந்திர வித்தை என்னவாயிற்று” என்று கேட்டார் டெமிற்றியஸ்.
மோகன் எழுந்தார்."நல்லது. இன்றிரவு இதனைச் செய்யலாம் என்று நான் எண்ணவில்லை. நன்றாகக் களைத்துவிட்டேன். நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம். நாளை காலை உணவிற்கு நாங்கள் மாம்பழங்களை உண்போம்" என்றார்.
மாங்காய்க் கல்லை டெமிற்றியஸிடம் கொடுத்தார். அவர் மிகவும் ஏமாற்றத்துடன் அதனைத் தனது படுக்கையறைக்கு எடுத்துச் சென்றார். ஓர் அழுக்குமுள்ளுக்கரண்டியை எடுத்து அதனைத் தனது காற்சட்டையிற் துடைத்தவாறு வந்தார். பின்னர் பணியாரப் பொதியினை எடுத்து அதனைச் சிறிது குடுகாட்டும்படிமோகனிடம் கொடுத்தார். மோகன் முள்ளுக்கரண்டியால் ஒரு பணியாரத்தை
100

დყp(ტtბ (შენეub
எடுத்து நெருப்பிற் சூடுகாட்டினார். எல்லாவற்றையும் சூடுகாட்டிய பின்நாங்கள் அவற்றை உண்ணலானோம். டெமிற்றியஸ் ஒவ்வொரு துண்டினையும் ரசித்துச் சுவைத்தார்.
"ஆஹா, நீர் ஓர் அருமையான சமையற்காரன்” என்று மோகனைப் புகழ்ந்தார்.
“நாளைக்கு எனது மாம்பழங்களையும் உண்ட பின்பு அதனைக் கூறுங்கள்” என்றார் மோகன்.
உணவின் பின் படுக்கை பற்றிய பிரச்சினை எழுந்தது. டெமிற்றியஸின் தளபாடங்களெல்லாம் அந்தப்புதிய குடியிருப்பிற்கு வந்து சேரவில்லை. அப்போது அவரிடம் ஒரு பெரிய கட்டில் மட்டுமே இருந்தது. மோகன் தான் இரட்டைக் கதிரையிற் படுப்பதாகவும் என்னை டெமிற்றியசுடன் சேர்ந்து கட்டிலிற் படுக்குமாறும் கூறினார்.
நான் டெமிற்றியசுடன் சேர்ந்து படுக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர் இன்னும் சுயஉணர்வு பெறவில்லை. அத்துடன் இன்னொருவனுடன் சேர்ந்து படுக்க எனக்கு வெட்கமாகவும் இருந்தது. எனவே தான் சோபாவில் படுப்பதாகவும் என்னை டெமிற்றியசுடன் சேர்ந்து கட்டிலில் படுக்குமாறும் கூறினார்.
“உம்மை இங்கு சோபாவில் படுக்கவிடமாட்டேன். மோகன் இந்த அறையிற் படுக்கட்டும். இரட்டைக் கதிரையில் படுப்பது அவருக்குப் பழக்கமானது. அத்துடன் இங்கு கணப்புமுண்டு. மோகன் அதனை நன்குவிரும்புவார். இங்குபடுப்பது வெதுவெதுப்பாகவும், நன்றாகவுமிருக்குமில்லையா மோகன்” என்று கேட்டார் டெமிற்றியஸ்.
"அருமையாகவிருக்கும்"
101

Page 60
eყp(ტსბ (8ყნეtბ
பிரச்சினை ஒருவாறு தீர்க்கப்பட்டுவிட்டது. நான் டெமிற்றியசுடன் வேண்டாவெறுப்பாகப் பின்னறைக்குச் சென்றேன். அங்கு ஒரேயொரு கட்டில் தான் இருந்தது. அதன்மேல் மெல்லிய போர்வையொன்றும் காணப்பட்டது.
“கவலைப்படவேண்டாம் என்னிடம் நிறையப் படுக்கை விரிப்புக்கள் இருக்கின்றன” என்று கூறியவாறு கழுத்துப்பட்டி உட்படத் தனது உடைகளை எல்லாம் களைந்து படுக்கையில் போட்டார். பின்பு அவற்றை ஒழுங்காகப் பரப்பினார். பின்னர் என்னையும் அவ்வாறு செய்யச் சொன்னார்.
எனது கழுத்துப்பட்டியையும் மேற்சட்டையையும் கழற்றிய போது எனக்குத் தருவதற்குத் தன்னிடம் பிஜாமா எதுவும் இல்லை என்றார். அவர் முழுநிர்வாணமாகப் படுத்துக்கொண்டார். மேற்கொண்டு எனது ஆடைகளை அகற்ற நான் மறுத்துவிட்டேன். கட்டில் மிகவும் குளிராகவிருந்தது.
டெமிற்றியஸ் கட்டிலின் ஒரத்தில் படுத்துக் கொண்டு விளக்குகளை அணைத்த பின் நான் கட்டிலில் படுத்தேன். ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டிக்கொண்டு இருவரும் படுத்தோம். சிறிது நேரம் ஒழுங்காகப் படுத்திருந்தோம். எனது முழங்காலில் ஏதோ ஒட்டுவதை உணர்ந்தேன். காலைத் தடவியவாறே அதனை எடுத்து,
“இது என்ன?” என்று கேட்டேன்.
டெமிற்றியஸ் விளக்கைப் போட்டார்.
"ஓர் இறாத்தல் வெண்ணெய்க் கட்டி எனது பங்கீட்டு அட்டைக்குப் பெற்றுக் கொண்டேன்" என்றவாறு அதனை வாங்கி அருகிலிருந்த மேசையில் விட்டெறிந்தார். சில நிமிடங்கள் கடந்தன. தலையணையை இழுத்து அனைத்துக்கொண்டபோது ஏதோ சரசரத்தது.
102

დყo(ტსბ (ჭუბესებ
“இது என்ன?” “சில கையெழுத்துப் பிரதிகள். பேசாமற் படுங்கள்" “உங்களுடையதா?” "இல்லை வேறு ஒருவருடையது. யுத்தம் பற்றிய காவியத் தொகுப்பு”
"அது இங்கே என்ன செய்கிறது?” "நான் அதைப் பிரசுரிக்கப்போகிறேன். பேசாமற் படுங்கள்” "நீங்கள் வெளியீட்பாளரா?”
KÉ 99
-ՉԱԼ0
நான் எச்சிலைக் கூட்டி விழுங்கினேன்.
“அதனை நிறுத்துங்கள்” என்றார் அருவருப்புடன்
“gar”
“எனக்கு அது பிடிக்காது. இந்தியர்கள் எந்நேரமும் அதனைச் செய்கிறார்கள்”
"விசர்க்கதை’ என்றேன்.
"அவர் கூட அதைச் செய்வார்"
“GTalij?”
“அடுத்த அறையில் படுத்திருக்கிறாரே அந்த மனிதர். ஆனால் இப்போது அப்படிச் செய்வதில்லை. அவர் இப்போது மிகுந்த வெப்பத்தை அனுபவித்தவாறுபடுத்திருப்பார். ஒரு மனிதனுக்கு அது தேவைதான். மிகுதியாகத் தேவை. இனிமேல் பேசாமலிருங்கள்" என்றார்.
103

Page 61
eყD06uბ (8pguბ
"நான் எதுவும் சொல்லவில்லையே”
"தொல்லை கொடுக்காமல் படுங்கள். நல்லிரவு வந்தனங்கள்”
நான் புரண்டு படுத்துத் தூங்க முயன்றேன். இரத்தத்தை உறையவைக்கும் குளிர் என சட்டையை எடுத்துக் கழுத்துவரை போர்த்திக்கொண்டேன். கால் குளிர்ந்தது. அவற்றைத் தேய்த்து oft G 6.
“குளிருகிறதா?”
"ஆம். நன்றாகக் குளிருகிறது"
“மன்னித்துக்கொள்ளுங்கள்"
“எப்படித்தான் இதனைச் சகித்துக்கொள்கிறீர்களோ அதுவும் விசேடமாக இந்தப் பிறந்தநாள் ஆடையுடன் எப்படித் தூங்குகிறீர்களோ தெரியவில்லை” என்றேன்.
"நான் கதகதப்பாக இருப்பதாக உணரவில்லை. ஆனால் எனக்கு எல்லாம் ஒன்றுதான். இந்தக் குளிருக்கு என்னை இயைபு படுத்திக்கொண்டேன். எல்லாம் பழக்கம்தான்”
"அவரும் இதையேதான் கூறுவார்” என்றேன்.
“uj?”
“அடுத்த அறையில் படுத்திருக்கிறாரே அந்த மனிதர்"
"அவர் ஒர் அருமையான மனிதர் இல்லையா?”
நான் அதனை ஏற்றுக்கொண்டேன். முதுகில் ஏதோ உறுத்தியது. கைகளால் தடவி அதனை எடுத்தேன்.
“இது என்ன?”
"தாருங்கள் பார்க்கலாம்"
104

დყo(ტსბ მჭებეtბ
டெமிற்றியஸ் கைகளால் அழுத்திப் பார்த்தார். “இது ஒரு பாண்துண்டு. சில வெண்ணெய்க் கட்டிகளும் அங்கேயிருக்கும். என்னிடம் நிறைய உணவிருப்பதாக முன்பு சொன்னேனே. நீங்கள் அப்போது என்னை நம்பவில்லை.
“டெமி டெமி” யாரோ அறையினுள் வந்தார்கள். நான் தூங்குவது போலப் பாசாங்கு செய்தேன்.
“ஷ். ஷ்." டெமிற்றியஸ் அச்சத்தத்திற்குரியவரை அடக்கினார்.
“டெமி நீங்கள் விழிப்பாக இருக்கிறீர்களா? யாரோ எனது படுக்கையில் படுத்திருக்கிறார்கள்”
“ஷ்.ஷ். “டெமி. டெமிற்றியஸ்”
ஒர் உருவம் அறையை விட்டுநகர்ந்தது. "நான் போகிறேன் டெமி மூலை வீட்டிற்குப் போய் இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருக்கப் போகிறேன். நாளைக்கு உங்களைச் சந்திக்கிறேன்.”
கதவு அறைந்து சாத்தப்பட்டது. காலடியோசை தேய்ந்து அற்றுப்போயிற்று.
“யாரது?” என்று கேட்டேன். "கடவுளே! பெரிய நன்றி. அவள் போய்விட்டாள்"
“யாரவள்?”
"அவள் ஒரு விசித்திரமான பெண். அவளுக்கென்று சொந்த அறை கிடையாது. எனவே தொடர்ந்து இரண்டு இரவுகள்
105

Page 62
დყp(ნსბ (8ყნgtბ
மோகனுடைய படுக்கையை அவளுக்குக் கொடுத்தேன். ஒரு முழுப் பைத்தியம். அருமையான கவிதைகள் எழுதுவாள். நான் அவற்றைப் பிரசுரிப்பேன். தலையின் கீழுள்ள காவியம் அவளுடையதுதான். நாங்கள் இனித் தூங்குவோம்”
நான் ஒரு சில மணித்தியாலங்கள் தூங்கியபின் டெமிற்றியஸ் என்னை எழுப்பினார். விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. டெமிற்றியஸ் கையிற் சில கடதாசிகளை வைத்திருந்தார்.
“இப்பொழுது அந்தக் காவியங்களை நான் படிக்க விரும்பவில்லை” என்றேன்.
“இது Gରାறு"
“GIGia?”
"நான் ஓர் அரசன் என்பது உங்களுக்குத் தெரியுமா?"
“GraắraT?”
"அரசன். சைப்பிரசின் அரசன்”
"அப்படியென்றால் என்ன?” ベー
நேற்று ஓர் அரசனுக்குப் பக்கத்தில் படுத்துத் தூங்கி யிருக்கிறீர்கள்.
"ஓ! அப்படியா?"
"இந்த ஆவணங்களைப் படித்துப் பாருங்கள். இவை உங்களுக்கு இதனை நிரூபித்துக்காட்டும்"
“இன்றிரவு வேண்டாம். நான்களைத்துப் போய்விட்டேன்”
"ஆனாலும் இதைப் பாருங்கள்"
“என்ன இது?"
106

eჯp(ტსბ (8ებეtბ
“பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலிருந்து வந்த ஒரு கடிதம் நான் ஓர் அரசரென்று அவர்களுக்குத் தெரியும்”
நான் அந்தக் கடிதத்தை அவரிடமிருந்து பெற்றுப் படித்தேன். ஒரு பெண் பஸ் நடத்துநருடன் நிகழ்த்தும் சம்பாஷணையொன்றை எழுதியனுப்புமாறு கோரி இளவரசர் பப்படாபெளலசிற்கு விலாச
“இது எதனையும் நிறுவிக்காட்டவில்லையே” என்றேன். "ஆனால் இதனைப் பாருங்கள்" "இன்றிரவு வேண்டாம் நாளைக்குப்பார்த்துக்கொள்ளலாம். இப்பொழுது நித்திரை செய்வோம்”
அடுத்தமுறை ஏற்பட்ட குழப்பத்திற்கு நான் காரணமாக இருந்தேன். கெட்ட கனவொன்று கண்டு அலறினேன்.டெமிற்றியஸ் துடித்துப்பதைத்து எழும்பினார்.
“எதனைப் பற்றிக் கனவு கண்டீர்கள்?" "குரங்கின் பாதத்தைப்பற்றிக் கனவு கண்டேன்” "குரங்கின் பாதமா?” “ஆம் குரங்கின் பாதம் தான். டபிள்யூ டபிள்யூ. ஜேக்கப் எழுதிய குரங்குவாலென்ற கதை உங்களுக்குத் தெரியுமா?"
“ச்சி சிறுபிள்ளைத்தனமான செயல்” என்று கூறி எனது குறிப்புக்களை அசட்டை செய்தார். மல்லாந்து படுத்தார். பின்பு திடீரென்று கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார்.
“உங்கள் கனவு மாங்காய் வித்தையுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டுமென நான் நினைக்கிறேன். அந்தக் கல் பத்திரமாக இருக்கிறதாவெனப் பார்ப்போம்"
107

Page 63
დყp0ჩuბ (8pguბ
அவர் எழுந்து அறையின் மறுகோடியிலுள்ள மேசைக்குச் சென்றார். இலாச்சியை இழுத்து மாங்காய்க் கல்லைத் தேடினார்.
"ஓ! அது மறைந்துவிட்டது”
“என்ன?”
"அதைக் காணவில்லை”
“எங்கு போயிருக்கும்?" مح۔
"அங்கே சென்றிருக்கலாம். அவர் அதை எடுத்திருப்பார்" என்று முன் அறையை டெமிற்றியஸ் சுட்டிக்காட்டினார். படுக்கை விரிப்பை இழுத்து நெற்றியை அழுத்தித் துடைத்துக்கொண்டேன்.
"நீங்கள் பயப்பட வேண்டாம். எவ்விதக் கெடுதியும் நேராது. எங்கள் காலையுணவிற்கு மாம்பழங்கள் கிடைக்கும். மூன்று மாம்பழங்கள் கிடைக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சூப்புவோம்” என்று கூறிவிட்டு மெதுவாக எழுந்து சென்று எச்சரிக்கையுடன் கதவைச் சிறிது திறந்து உட்புகுந்தார்.
"அங்கு எல்லாம் சரியாக இருக்கின்றனவா?" என்று கேட்டார்.
“GTGGOT?”
"அந்த மரம்"
“என்ன மரம்?"
“முட்டாட் பயலே, அந்த மா மரம். ஆனால் என்னால் மாம்பழங்களைப் பார்க்க முடியவில்லை. மிகவும் இருட்டாக இருக்கிறது. அமைதியாகப்படுத்துத் தூங்கும்" என்றார்.
நான் எனது தலைவிதியை நொந்துகொண்டு படுத்தேன். தொலைபேசி மணி காலையில் எங்களைத் துயிலெழுப்பியது. டெமிற்றியஸ் யாருடனோ உரத்துப் பேசினார்.
108

eჯpტსბ (8pguბ
“விரைவாக வாரும் பிஜாமாக்கூட இல்லாமல் நான் குளிரில் மரத்துப்போனேன்"
அழைத்தவர் அதிகநேரம் பேசவில்லை. டெமிற்றியஸ் அறைக்குத் திரும்பியபோது சிதைந்த தும்புக்கட்டையைப் போல இருந்தார். தலைமுடிதலையிலிருந்து பிரிந்துமுகத்தின் இருபுறமும் உடலுக்கு நேர்கோடிட்டிருப்பது போலத் தொங்கியது. நான் மோகனை எழுப்பச் சென்றேன். மாமரத்தை அங்கு காணவில்லை. அவர் எழுந்தார் தலைமுடியைப் பின் நோக்கி நீவி விட்டுக் கொண்டு வெளியே செல்லத் தயாரானார். பிெமிற்றியஸ் கண்ணாடியைப் பார்க்காமலே தலையை வாரி முன்புறம் நீண்டுதொங்கிய முடியைக் காதுகளின்மேற் செருகிக்கொண்டார்.
டெமிற்றியஸ் கடந்த இரவு மதுச்சாலையில் தனது பணம் எல்லாவற்றையும் செலவழித்துவிட்டுச் சிரமப்பட்டார். அன்றைய சிகரெட்டுச் செலவையும், பிரயாணச் செலவையும் நான் ஏற்றுக் கொண்டேன். மோகன் மனமுடைந்து காணப்பட்டார். எங்கிருந்து பணம் பெற்றுக்கொள்ளமுடியுமென அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அது மட்டுந்தான் அவருடைய கவலைக்குக் காரணமாக இருக்கமுடியாது. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார். டெமிற்றியஸ் எதனைப் பற்றியும் கவலையுறவில்லை. அன்றைய செலவிற்கு ஒரு பவுணைத் தான் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்வார்.
நாங்கள் மூன்று தடவை கோப்பி அருந்தினோம். ஆனால் மாம்பழமேதும் கிடைக்கவில்லை. அது எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. மோகன் கல்லை டெமிற்றியசிடம் கொடுத்துவிட்டுத் தனது புத்தகமொன்றிற்கான முற்பணத்தைப் பெறும் பொருட்டு யாரையோ சந்திக்கச் செல்லவிருந்தார். டெமிற்றியஸ் தனக்குச் சில புத்தகங்கள் வேண்டுமென எண்ணிடம் கூறினார். அந்தப்
109

Page 64
eჯp(ჩსბ (8p[Juბ
புத்தகங்களைத் தனது நிறுவனத்திற்கு அனுப்பாமல் சொந்த விலாசத்திற்கு அனுப்புமாறு கூறினார். தனது நண்பர் சென்றதும் மோகன்,
"இதைக்கேளும் டெமிற்றியஸிற்கானபுத்தகங்களைப் பற்றி.” “நான் அவருக்குத் தபாலில் அனுப்பிவிடுகிறேன்.” “நல்லது அவற்றிற்கான பற்றுச்சீட்டை அவருக்கு அனுப்ப வேண்டாம்”
"ஏன் அனுப்பக்கூடாது?" “ஏனென்றால் அது அவரைக் கிலேசமடையச் செய்துவிடும். பற்றுச்சீட்டு அவருடைய மனநிலையைப் பாதித்துவிடும்”
“gJa?”
西 1 Iழக்sub” "அப்போ அவற்றிற்கான பணத்தை நான் எப்படிப் பெற முடியும்? அது ஒரு பெருந்தொகையல்லவா?”
“எப்படியோ அவற்றிற்கான பணம் உங்களுக்குக் கிடைக்கும். அவற்றிற்கான பற்றுச்சீட்டை அவருடைய நிறுவன இயக்குநருக்கு அனுப்புங்கள். அந்த நிறுவனம் உங்களுக்குப் பணத்தை அனுப்பும். இதுதான் அவரிடமிருந்து பணம்பெறும் வழி"
“டெமிற்றியஸ் ஒரு வெளியீட்டாளரென்று நான் நினைத்தேன்”
"அவர் ஒரு வெளியீட்டாளரிடம் வேலை செய்கிறார்” "அவர்தானே வெளியிடுவதில்லையா?” “ஒ, வெளியிடுவார். இவைகளெல்லாவற்றையும் கேட்டு என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்"
110

eყpტuბ (8ებეuბ
மோகன் பொதுக்குளியலிடத்திற்குப் போவதாகக் கூறினார். அவர் ஒவ்வொரு காலையிலும் அங்கு செல்வார். அது அவருடைய பழக்கம்.
பல நாட்களாக மோகனிடமிருந்து தகவலெதுவும் கிடைக்கவில்லை. எனவே டெமிற்றியசைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன் இப்படிக் காணாமற் போய்விடுவது மோகனின் வழக்கமென்று கூறினார்.
“உங்களுடைய புத்தகங்களுக்கு மிகவும் நன்றி. இவ்வளவு விரைவில் அவற்றை அனுப்புவீர்களென்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் உண்மையிலேயே வியாபாரத்தில் சிரத்தை உள்ளவர்தான்” என்றார் டெமிற்றியஸ். அவற்றிற்கான பணத்தைப் பற்றி அவர் எதுவுமே கூறவில்லை. பற்றுச்சீட்டை நான் இயக்குநருக்கு அனுப்பினேன்.
ஒருநாள் நான் சிறிதும் எதிர்பார்க்காத நேரத்தில் மோகன் தோன்றினார். அவர் கூரையினூடாகத்தான் குதித்திருக்க வேண்டும். எனது இருக்கை கடையின் மத்தியில் அமைந்திருந்தபோதும் அவர் வந்ததை என்னால் அவதானிக்க முடியவில்லை. மாங்காய் வித்தை செய்யுமொருவரால் எதையும் செய்ய முடியுமென நான் எண்ணினேன்.
இன்று தான் அவர் முதன்முறையாக எனது புத்தகக்கடைக்கு வந்திருக்கிறார். அவரைக் கண்டதும் வந்தனம் கூறி வரவேற்றேன். ஆனால் அவரோ நேரே புத்தக அலுமாரிகளுக்குச் சென்றுவிட்டார். அலுமாரியின் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் சிலபோது நிலத்தில் முழந்தாளிட்டும் புத்தகங்களைப் பரிசீலித்தார். எனது வழமையான வாடிக்கையாளர் களிடமிருந்து இவர் மிகவும் வேறுபட்டிருந்தார். புத்தகங்களை வாங்குவது பற்றி எந்தக் கதையும் இல்லை, அவற்றை
111

Page 65
மூடும் நேரம்
அங்கிருந்தே வாசிக்கத் தொடங்கி விட்டிருந்தார். மிகவும் எச்சரிக்கையுடன் புத்தகங்களைக் கையாண்டார். விலைமதிப்புள்ள இரத்தினங்களைக் கையாளும் கவனம் அதில் இருந்தது.
பின்புற அறையில் நிறையப்பேர் இருந்தார்கள். அவர்களுக்கு மோகனை அறிமுகம் செய்து வைத்தேன். கனவில் நடப்பதைப்போல அவர்களிடம் கைகுலுக்கினார். புத்தகம் படித்துக்கொண்டே அவர்களுடன் உரையாடினார். ஓரிடத்தில் அமர்ந்து காலுக்குமேல் காலைப் போட்டுக்கொண்டு காலை ஆட்டிக்கொண்டிருந்தார். அமைதியற்றுச் சஞ்சலத்துடன் காணப்பட்டார். இறுதியில் "இந்தக் கூட்டத்திலிருந்து விடுபட வேண்டும். நாமிருவரும் வெளியே போவோம்” என்று ஹிந்தியிற் கூறினார்.
மதுச்சாலைக்குச் செல்லும்போது முன்பொரு முறை சிகரெட்டுக்காக என்னிடமிருந்து கடனாகப் பெற்ற அரைக் கிறவுன் நாணயத்தைத் தந்தார்.
“அதற்கு இப்போது அவசியமில்லை" என்றேன். “இல்லையில்லை, எடுத்துக் கொள்ளுங்கள். எனது கதை ஒன்றை விற்றேன். இப்பொழுது என்னிடம் கொஞ்சம் பணமிருக்கிறது” என்று கூறிவிட்டு டெமிற்றியஸ் என்னிடமிருந்து கடனாகப் பெற்றுக் கொண்ட பணத்தையும் தந்தார்.
"நான் உங்களுடைய புத்தகங்கள் சிலவற்றை எனது கடையில் விற்கவிரும்புகிறேன். எனவே அவற்றைப் பெறலாமா?” என்று கேட்டேன்.
“எனது முதலாவது புத்தகத்தை இப்பொழுதுதான் முடித்தேன். டெமிற்றியஸ் அதனை வெளியிடும் வரையும் பொறுத்துக் கொள்ளுங்கள்"
“எவ்வளவு காலம் பொறுத்திருக்க வேண்டும்?"
112

eყp06uბ (8pguბ
"வருகிற வசந்தம் வரை” “உங்களுடைய சிறுகதைகளை யார் வெளியிடுகிறார்கள்?"
"அது ஒரு சஞ்சிகையில் வெளியாகிறது" “எது?”
“ஹொறைசின்’
“எப்பொழுது?”
“எனக்குத் தெரியாது”
“உங்களுடைய கதைகள் வெளிவரும்போது நான் அந்தச் சஞ்சிகையை விற்பேன்"
“உங்களால் அதனைப் பெறமுடிந்தால் விற்கலாம்"
“என்னால் முடியும்"
நாங்கள் சென்ற மதுச்சாலை அவருக்குப் பிடிக்கவில்லை. அங்கிருந்த நீண்டமேசை இருண்டு கிடந்தது. அங்கு பெண்களையே காண முடியவில்லை. நகரத்து ஆண்களே நிரம்பியிருந்தார்கள். தனது குழுவைச் சேர்ந்தவர்களைவிட “மிகவிரைவாக அவர்கள் மதுவைக் குடிப்பதை மோகன் அவதானித்தார். மதுக் கோப்பைகள் மீண்டும், மீண்டும் நிறைந்தன.
"நாங்கள் இங்கிருந்து செல்வோம். இங்கிருப்பது எனக்கு மன உளைச்சலைத் தருகிறது” என்று கூறியபடி மோகன் அங்கிருந்து வெளியேறினார். நான் அவரைத் தொடர்ந்தேன்.
மோகனுக்கு அறிமுகமான மதுச்சாலை ஒன்றிற்குப் போனோம். அங்கு அவர் விரும்பும் மக்கள் காணப்பட்டார்கள். அவர் ஒய்வாக அமர்ந்து மது அருந்தினார். அவர் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண எனக்கு விருப்பமாகவிருந்தது. அங்குள்ள
113

Page 66
ლყpტსბ (8p[Jub
எல்லோருமே அவரைத் தெரிந்து வைத்திருந்தார்கள். கை குலுக்கல்களும், "இப்போது எப்படியிருக்கிறீர்கள்? எப்போது உங்கள் அடுத்த வெளியீடு, உங்களுடைய கதைகளை நான் விரும்புகிறேன், அண்மையில் வெளியான புதிய எழுத்துக்களைப் பார்த்தீர்களா?" போன்ற குசல வார்த்தைகளும் நிறையப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பலர் எங்களுக்கு மதுவகைகளை வாங்கித்தந்து உபசரித்தார்கள். அங்கிருந்தோர்கள் இயற்கையாகவே பரந்த உள்ளங் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். மூடும் நேரம் வந்ததும் மோகன் பல பைந்துகளை அருந்துவதில் முதலிடம் பெற்றார். அவற்றிற்கு நான் பணம் கொடுக்கமுனைந்தேன். அவர் என்னைத் தடுத்துவிட்டார்.
“உங்களுடைய பணத்தை வீணாகச் செலவு செய்யாதீர்கள்” என்றார்.
"இன்றைக்கே செலவு செய்துவிட்டு நாளைக்கு என்ன செய்வீர்கள்?
"அது எனக்குத் தெரியாது, இன்னும் கொஞ்சம் மது அருந்துங்கள்” என்றார்.
“போதுமான அளவு அருந்திவிட்டேன்" "பரவாயில்லை அருந்துங்கள்" "இதற்குமேல் அருந்துவது கூடாது" “ஒஇதுகூட ஒருவகைப் பழக்கந்தான்" "எல்லாமே பழக்கத்தால் நிகழ்பவைதான். குடிக்காமல் இருப்பதுகூட ஒரு பழக்கந்தான்” என்றேன்.
மது வாங்குவோரின் இரைச்சலும், கூச்சலும் அதிகமாக இருந்தது. மோகன் மிகவிரைவாக மது அருந்தினார். விரைவில்
114

eჯpტსბ (8p[Jub
நாங்கள் சாலையில் இறங்கிப் பதினொரு மணிக்குத் திறக்கும் மதுச்சாலையொன்றைத் தேடினோம்.
"நாங்கள் போதியளவு மது அருந்தி விட்போமல்லவா?" என்று கேட்டேன்.
“இல்லை, வேறு என்ன செய்யக்கிடக்கிறது”
"சாப்பிடுவோம்”
"அது சினமூட்டுஞ்செயல்" “என்னுடன் வந்து கொஞ்சம் கறி சாப்பிடுங்களேன்" "ஓ! அது நன்றாகவிருக்கும்” “இந்த வழியாற் போவோம்” "இல்லை. இன்னுங் கொஞ்சம் மது அருந்திவிட்டுப் போவோம்"
நான் ஒப்புக்கொண்டேன். ஒப்புக்கொள்வதைத் தவிர மாற்று வழியேதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. அங்குகூட மூடும் நேரமாகவிருந்தது. இறுதியாக நாங்கள் உணவு விடுதியொன்றினுட் சென்றபோது இருவருக்குமே பசி காதை அடைத்தது. உலகத்தில் உணவுத்தட்டுப்பாடு நிலவியபோதும் லாஸ்காஸ் பகுதியிலுள்ள அந்த விடுதியில் அதிக சோறு இருந்தது. கோழிக்கறியுடன் சாப்பிட்டோம். அவ்விடுதியின் முகாமையாளர் வந்து பணிவுடன் வணங்கி நாங்கள் விரல்களாற் சாப்பிடலாம் என்று கூறினார். இதனை அவரோ, அவருடைய வாடிக்கையாளரோ இழிவாகக் கருதவில்லை. இந்த சலுகையை நாங்கள் மறுத்ததும்,
“கோழிக்கறியை முள்ளுக்கரண்டியாலும், கரண்டியாலும் ரசித்துச் சாப்பிடமுடியாது” என்றார் அவர் தனது விரல்களை ஒன்றாகக் குவித்து வாயருகே கொண்டுசென்று "இதோ, இப்படி
115

Page 67
மூடும் நேரம்
விரல்களின் நுனியாற் சாப்பிடவேண்டும்" என்று காட்டினார். பின்னர் எவ்வாறு பெருவிரலாற் சுரண்ட வேண்டுமெனவும் காண்பித்தார். இன்னும் நாங்கள் முள்ளுக்கரண்டியாலும் கரண்டியாலும் தான் சாப்பிட்டோம். அப்போது முகாமையாளர் உள்ளே சென்று எமக்காகச் சோறு எடுத்து வந்தார்.
“டெமிற்றியஸ் இதனை மிகவும் விரும்புவார். கறியென்றால் அவருக்கு ஒரே கொண்டாட்டம். இப்போ அவர் இங்கிருந்தால் இந்த எலும்புகள் எல்லாவற்றையும் சூப்பித்தள்ளியிருப்பார்” என்றார் மோகன்.
"அவர் ஒரு வினோதமான மனிதன்” என்றேன்.
"ஏன்?"
"மாம்பழங்களையும் சூப்பிக்கொண்டு எலும்பையும் சூப்புபவராக இருக்கிறாரே?”
“டெமிற்றியஸ் இயற்கையோடிணைந்த ஒரு மனிதர்" என்றார் மோகன்.
"நாங்கள் போவோமா?"
"ஆம், என்னுடன் வாருங்கள்"
“IEGs?” "துருக்கியக் குளியலுக்கு, நாங்கள் ஒருமுறை குளிப்போம்" “என்ன? இந்த நேரத்திலா?”
"இது உங்களுக்கு நல்லது"
"இன்றிரவு வேண்டாம்”
"நான் தனியாக இருப்பதாக உணருகிறேன். என்னுடன் வாருங்கள்"
116

eყo(ტსბ მ8ებეuბ
"நீங்கள் ஏன் வீட்டிற்குப் போகவில்லை?”
“எனக்கு வீடு கிடையாது”
“எங்கே தூங்குவீர்கள்?"
"துருக்கியக் குளியலறையில்"
“ஒவ்வொரு நாளும் குளிப்பீர்களா?”
“இல்லை, ஆனால் இன்றிரவு குளிக்க வேண்டும் போல் இருக்கிறது. வாருங்கள்"
“சரி, வருகிறேன்.”
குளியலறைகளெல்லாம் நிரம்பி வழிந்தன. பலவிதமான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். அவர்கள் வெளியேறும் வரை காத்திருந்தார். நுழைவுக் கட்டணங்களையும் சன்மானங்களையும் பெறுமொருவன் மோகனிடம் வந்து "மாலை வந்தனம் ஐயா" என்றான்.
"மாலை வந்தனம் படுக்கைகள் உண்டா?”
“நிச்சயமாக உங்களுக்கென்று எப்பொழுதுமே ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கும்."
“எனக்கு ஒரு நண்பரும் இருக்கிறார்"
"பரவாயில்லை. சமாளிப்போம்” என்றவன் என்னை நோக்கித் திரும்பி "இவர் ஒரு உயர்ந்த மனிதர். எனக்கு உதவுவார். நானும் இவருக்கு உதவுவேன்” என்று மோகனைப் பற்றிக் குறிப்பிட்டான்.
நாங்கள் கீழ்த்தளத்திற்கு இறங்கிச் சென்றோம். அருகருகே உள்ள இரண்டு அறைகளை மோகன் தெரிந்தெடுத்தார். எங்கள் ஆடைகளைக் களைந்து விட்டு துவாய்களை அரையினில் கட்டிக் கொண்போம். குளிப்பதற்குப் பிறிதொரு கீழ்த்தளத்திற்குச் செல்ல
117

Page 68
ლყo06სბ (8pguბ
வேண்டியிருந்தது. அங்கு ஒவ்வோர் அறையாக மாறிக்கொண்டு குளித்தோம். மாறிச் செல்லச் செல்ல சூடு அதிகரித்துக்கொண்டே வந்தது. இறுதியாக நீராவி அறைக்குச் சென்றோம். அதன்பின் எங்கும் செல்லவேண்டியிருக்கவில்லை. உடலைப் பிடித்து விடுவதற்கும், தூறற் குளிப்பிற்கும் தயாரானோம். இவையெல்லாம் முடிந்ததும் வெம்மையான துவாய்களால் உடலை மூடிக் கொண்போம். இதன் பின் பெறுமதிமிக்க பொருட்களைப் போல மேல் மாடியிலுள்ள படுக்கையறைக்குக் கொண்டு செல்லப் பட்டோம். நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன்.
"நீங்கள் ஒவ்வொரு நாளும் இப்படிக் குளிப்பீர்களா?” என்று கேட்டேன்.
“இல்லை. நான் ஒவ்வொரு நாளும் இப்படிக் குளிப்பதில்லை என முன்பே உங்களுக்குக் கூறியிருந்தேன். ஒரு குளியலுக்குப்பின்பே உங்கள் நிறை பெருமளவிற்குக் குறைந்திருக்கும். அதனால் நீங்கள் பலவீனமடைந்திருப்பதாக உணர்வீர்கள். ஆனால் இது உங்களுக்கு மிகுந்த உற்சாகமளிக்கும். இடையிடையே துருக்கியக் குளியலை மேற்கொள்ளுதல் உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது?”
“அருமையாக இருக்கிறது. உடல் மிகவும் மென்மையாக இருப்பதாக உணர்கிறேன்"
“நாளைக்கு உடல் இன்னும் நன்றாக இருப்பதை உணர்வீர்கள்” என்றார்.
“இரவிற்குளிக்காதபோது என்ன செய்வீர்கள்?"
“பேசாமல் படுத்துத் தூங்கிவிட்டுக் காலையில் பொதுக் குளியலறைக்குச் செல்வேன்.”
"நீங்கள் விசித்திரமானவர்"
118

დყoტtბ (8Bეtბ
"அப்படியல்ல, எனக்கென்று ஒர் அறையில்லை. எனவேதான் இங்கு வருகிறேன்.”
“இங்கு வருவது செலவுமிக்கதொரு செயலாக இருக்குமே?”
“இல்லை, ஒரு படுக்கையெடுப்பதற்கு அவ்வளவு செலவாகாது. நான் வசிப்பதற்கென ஒரு அறையெடுக்க வேண்டியிருந்தால் இதை விடப் பலமடங்கு கூடிய தொகை செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன் ஒழுங்காக வாடகைப் பணமும் செலுத்த வேண்டி இருக்கும். என்னிடம் பணமில்லாதபோது நான் இங்கு வர மாட்டேன். யாராவதொரு நண்பருடன் தங்குவேன். அல்லது மூலை வீட்டிற்குச் சென்று கொட்டக் கொட்ட விழித்திருந்திருப்பேன். இன்றேல் தெருக்கள் பூராவும் சுற்றி அலைவேன். இப்படித்தான் எனது பொழுது கழிகிறது. எப்படியோ எனது வாழ்க்கையும் ஒடுகிறது”
“என்ன விசித்திரமான வாழ்க்கை முறை”
“இங்கே தங்குவதை நான் மிகவும் விரும்புகிறேன். அதுவும் குளிர்காலத்தில் தங்குவதை பெரிதும் விரும்புகிறேன். இவ்விடம் கதகதப்பாகவிருக்கும், நிலம் கூடச் சூடாகவே இருக்கும். நீங்களே அதை உணரலாம்.”நான்குனிந்து கட்டிலிலிருந்தபடியே நிலத்தைத் தொட்டேன். நிலம் சூடாகவிருந்தது. அறையின் கீழிருந்து வெப்பம் வீசுவதை உணர்ந்தேன். எங்களிடம் ஒரேயொரு போர்வைதான் இருந்தது. அந்த ஒரு போர்வையே வேர்த்துக்கொட்ட வைத்தது.
“சில வாரங்களுக்கு முன்னர் நண்பரொருவர் தன்னுடன் வந்திருக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் இரவு வேளைகளை இங்கு போக்குவதையே நான் பெரிதும் விரும்புகிறேன். மிகவும் கதகதப்பான இடம் இது” என்றார்.
“நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது. இங்கிருப்பது ஒரு வைத்தியசாலையில் இருப்பது போலல்லவா இருக்கிறது" என்றேன்.
119

Page 69
eყo06uბ (8pguბ
‘பைத்தியக்காரக் கதை. நான் மக்களை நேசிக்கிறேன், அத்துடன் நான் அவர்களுடன் இணைந்துள்ளேன். நான் சமூகத்தில் ஒர் அங்கம், அதனுடைய ஒரு பகுதியல்ல"
அரையில் ஒரு துவாயை மட்டுமே உடுத்தியிருந்த பரிசாரகனொருவன் எங்களுக்குத் தேனீரும், சிற்றுண்டியும் கொண்டு வந்தான். அவை உட்சென்றதும் சிறிது தெம்பு உண்டாயிற்று
"இங்கு வருவது அவ்வளவு செலவு தரும் செயலல்ல. உங்களிடம் பணமில்லாத போது இவற்றையெல்லாம் வாங்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உடலைப் பிடித்துவிடவோ, இனாம் கொடுக்கவோ வேண்டாம். பிரவேசச்சீட்டுக்குமட்டும் பணமிருந்தாற் போதும். சிலவேளை வாயிலில் நிற்பவனுக்கு ஒரு ஆறுபென்ஸ் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அதுகூட எப்பொழுதும் அவசியமில்லை” என்றார் அவர்.
"இப்போது புரிகிறது" என்றேன்.
"உண்மையாகவே எனக்கென்று ஒரு சொந்த அறை வைத்திருக்கவே விரும்புகிறேன். எனது பொருட்களெல்லாவற்றையும் சேர்த்து ஒரிடத்தில் வைக்கவேண்டும். இப்பொழுது ஒவ்வொரு பொருளும் ஒவ்வோரிடத்தில் இருக்கிறது. நான் அற்புதமான குடியிருப்புகளில்வாழ்ந்திருக்கிறேன். பலவருடங்களாகச் சாலொற்றி வீதியிலுள்ள ஒரு குடியிருப்பில் இருந்திருக்கிறேன். அதன் பின்புதான் பரிமாட்டின் வீதியிலுள்ள குடியிருப்பொன்றில் டெமிற்றியசுடன் அறையைப் பகிர்ந்துகொண்டேன்” என்றார்.
"ஹா. ஹா. ஹா." "ஏன் சிரிக்கிறீர்கள்?
“உங்களையும் டெமிற்றியஸையும் ஒரே குடியிருப்பில் வைத்துப் பார்த்தேன் சிரிப்பு வந்துவிட்டது. ஹா. ஹா..."
120

დpტებმგებ
அங்கே சிரிப்பதற்கு எதுவுமில்லையே. டெமிற்றியஸ் ஓர் அருமையான மனிதர் நான் அவரை விரும்புகிறேன்” என்றார் மோகன்.
"அவரும் உங்களைப் பற்றி இதே கருத்தைத்தான் கூறுகிறார்" மோகன் புரண்டு படுத்துக்கொண்டு அந்த அறையின் முகட்டை நோக்கினார்.
"ஒரு குடியிருப்பிற்கான வாடகையை எப்படிக்கட்டலாமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
“எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்த இடங்களில் குடியிருப்புகள் வாடகைக்கு இருக்கின்றனவா?”
“இல்லை அது அநேகமாகச் சாத்தியமில்லை” "அப்படியாயின் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு என்னைச் சலிப்படையச் செய்ய வேண்டாம்"
பரிசாரகன் தட்டுக்களை எடுத்துச்செல்ல வந்தான். எமது பிரவேசச் சீட்டுக்களில் தேனிருக்கும், சிற்றுண்டிக்குமான தொகையைக் குறித்தான். பின்பும் பலர் உள்ளே வந்தார்கள். அவர்களிற் சிலர் மோகனை அணுகி ஆலோசனைகளைப் பெற்றார்கள். வேறுசிலர் அவரை அந்த இடத்தின் உரிமையாளராக எண்ணி அவருடன் பேசினார்கள். இச்செய்கை எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.
“சில மாதங்களின் முன்பு நான் நிறையப் பணம் வைத்திருந்தேன்” என்றார் மோகன்.
“உங்களுடைய புத்தகத்திற்கான முற்பணமா?"
66 曼零爱
ՎԱԼD
121

Page 70
დყo@uბ (პpguბ
“பெருந்தொகை கிடைத்ததா?”
“ஆம் கிடைத்தது. ஆனால் இப்போது எல்லாம் கரைந்து விட்டது. அத்துடன் அதில் அரைப்பங்கை டெமிற்றியசிற்கு கடனாகக் கொடுத்தேன்"
"அவர் உங்களுடைய வெளியீட்பாளரென முதலில் நான் எண்ணினேன்.”
"ஆம், நீங்கள் எண்ணியது சரிதான்”
“எனவே அவர் உங்களுடைய புத்தகத்திற்காகப் பெருந் தொகைப் பணத்தை தந்துவிட்டு அதில் பாதிப் பங்கை சுருட்டிக் கொண்டார். எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது”
"இங்கு எதுவும் விசித்திரமில்லை. டெமிற்றியஸ் ஒரு பெரிய மனிதர் நானறிந்தவர்களில் மிகவும் கருணைவாய்ந்த ஒரு மனிதர்"
“சரி இந்தப் பிரச்சினையை விட்டுத்தள்ளுவோம். ஆனால் நீங்கள் எப்படியாவது பணம் பெறவேண்டும். இம்மாதிரியான வாழ்க்கையை நீடிக்கவிடக்கூடாது. உங்களுக்கென ஒரு சொந்த இடமில்லாமல் எப்படி நீங்கள் எழுதுவீர்கள்?”
"நான் இன்னொரு புத்தகமும் எழுதுகிறேன். மிக விரைவில் அது முடிந்து விடும். பின்பு அதற்கான முற்பணத்தையும் பெற்றுக் கொள்வேன்"
“உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். உங்கள் நன்மைக்காக எப்பொழுதும் பிரார்த்திப்பேன்’
“எல்லாமே முடிவில் நல்லபடியாக நடக்கும், நீங்கள் இதுபற்றிக் கவலை கொள்ள வேண்பாம். பிரார்த்தனை செய்வதை விடநித்திரை செய்வது எவ்வளவோ சிறந்தது படுத்துத்தூங்குங்கள்"
என்றார் மோகன்.
122

eყp0ნსბ (8pgtბ
"மோகன் அதிகாலையே எழுந்து விட்டார். தரையின் வெப்பத்தை உணர்ந்து அனுபவித்தவாறு வெறுங்காலுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். பின்பு சிறிது நேரம் ஓரிடத்தில் நின்று சில உடற்பயிற்சிகளைச் செய்தார். அவரிடம் ஒரேயொரு சேட்டுத்தானிருந்தது. எப்போதும் அவரை அந்த சேட்டுடன்தான் பார்க்கலாம். ஆனால் இதைப்பற்றி அவர் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அங்கு வந்த வாடிக்கையாளர்களிற் பலர் முழுநிர்வாணமாக, இன்றேல் அரைநிர்வாணமாக நடமாடினார்கள். பரிசாரகர்களிற் பலர் அரையிற் துவாய்களை மட்டும் சுற்றிக் கொண்டு படுக்கைகளை ஒழுங்கு செய்தார்கள். சிலபோது இந்த சிறிய உடைகூட அவிழ்ந்து கீழே விழுந்துவிடும் அவற்றை எடுத்து உதறித் தோளிற் போட்டுக்கொண்டு பிறந்த மேனியுடன் சர்வ சாதாரணமாக வேலை செய்வார்கள். ஆனால் ஏதோ நிறைய உடுத்திக் கொண்டவர்கள் போல அவர்கள் பேசிக்கொள்வார்கள்.
"எனது துவாய் எங்கே?" என்று ஒருவர் கேட்பார். "எனது சீப்பு எங்கே?" என்று இன்னொருவர் கேட்பார். “எங்களுக்குத் தேனீரும் சிற்றுண்டியும் கொண்டு வாருங்கள்" என்றேன் நான்.
“இரண்டு தேனீர்கள்" என்று சமையலறையிலுள்ளவரை நோக்கிச் சத்தமிட்டார் ஒரு பரிசாரகர்.
"சாயம் குறைந்த தேனீராக எனக்குப் போடுங்கள்” என்றேன் நான்.
“எனக்கும் அப்படியே கொண்டு வாருங்கள்" என்றார் மோகன்.
“தேனீரை மென்சாயமூட்டு" என்று சத்தமிட்டார் பரிசாரகர்,
123

Page 71
eყp06uბ (8pguბ
"நாங்கள் காலையுணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, துருக்கியக் குளியல் உங்களுக்குப்பிடித்திருக்கிறதா?” என்று மோகன் கேட்டார்.
"நன்றாகப் பிடித்திருக்கிறது ஆனால் ஏறக்குறைய என்னையே நான் கொன்று கொண்டேன்”
“எப்படி?” “நீராவியறையில் மயங்கி விழுந்து விட்டேன். வியர்த்துக் கொட்டி மூச்சுவிட முடியாமற் திணறினேன். பியர் குடித்தமையாற் தான் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது” என்றேன்.
"விசர்க்கதை" “முன்பும் ஒரு முறை இதைப் போல நடந்திருக்கிறது. நான் கனக்கக்குடிப்பதில்லையென்பது உங்களுக்குத் தெரியும். முன்பொரு நாள் உங்களைப் போன்ற ஒருவர் மதுச்சாலை மூடும் நேரம் வரை என்னைக் குடிக்கச் செய்தார். பல பைந்து பியர் அருந்தினோம். பின்னர் சூடான கறிவகைகளைச் சாப்பிட்டோம் எனது கடைக்குச் செல்லும் வழியில் ஒரு பொதுக் குளியலறைக்குச் சென்று வெந்நீரிற் குளித்தேன். அதைப் போலப்பைத்தியக்காரத்தனம் வேறில்லை”
"ஏன்,என்ன நடந்தது?" "நான் மயங்கி விழுந்துவிட்டேன்" "நீங்கள் இறக்கவில்லையா?” என்று மோகன் பரிகாசமாகக் கேட்டார்.
“இல்லை. ஆனால் பின்பு இரத்தமிரத்தமாக வாந்தி எடுத்தேன். குடித்த பின்பு வெந்நீரிற் குளித்து உன்னையே நீயே கொல்லப் போகிறாயென்று அங்கிருந்தோர் கூறினார்கள்”
"விசித்திரமான செயல்முறைதான். அதுசரி. எப்போது எனக்கு ஒரு குடியிருப்பை ஒழுங்கு செய்யப்போகிறீர்கள்"
124

eჯp(6uბ (8pguბ
"ஏன், நீங்களாகவே ஒன்று தேடவில்லையா?” "நான் அதைச் சிரத்தையுடன் செய்யமாட்டேன்” "அப்போ நான் எதற்காகச் சிரத்தை கொள்ள வேண்டும்?" "நீங்கள் எனது நண்பரென எண்ணுகிறேன். குடியிருப்பைத் தேடி நான் ஒருபோதும் போக மாட்டேன். எங்காவது ஒர் இடம் வாடகைக்குப் போவதாக இருந்தால் அதனை நான் எடுத்துக் கொள்வேன். ஆனால் அதனைத் தேடி என்னால் அலைய முடியாது. சிலபோது எனது நண்பர்கள் எனக்காக குடியிருப்புக்களைத் தேடிப் பெற்றுத் தருவார்கள். அவர்கள் செய்து தராவிடில் அத்துடன் அதற்கு முடிவு கட்டிவிடுவேன். பிரச்சினைகளை அதனதன் வழியிலேயே விட்டுத் தீர்வுகாணுவதுதான் எனது வழக்கம். ஆனால் இறுதியில் எல்லாமே நல்லபடியாகத்தான் முடியும். எப்படியோ விசயங்கள் நடந்தேறுகின்றன’
பரிசாரகன் வந்து எமது படுக்கைகளை ஒழுங்கு செய்தான். காலையுணவை முடித்த பின்பு சிறிது நேரம் அங்கு தங்கியபின் உடைகளை அணிந்து கொண்டோம். மோகனிடம் ஏதோ ஒன்றைக் கேட்டறிய வேண்டும் போல் இருந்தது. ஆனால் அது உடனடியாக நினைவிற்கு வரவில்லை. கழுத்துப் பட்டியைக் கட்டும்போது நினைவு வந்தது.
“மோகன், நீங்கள் ஏன் உங்கள் சொந்த நாட்டிற்குப் போகக் கூடாது? அங்கே உங்களுடைய எழுத்து வேலையைச் செய்து கொண்டு அருமையான வாழக்கை நடத்தலாமே?” என்று கேட்டேன்.
“ஏனோ தெரியவில்லை. இங்கிருப்பதே எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. இந்தப் பழக்கத்தை என்னால் உடைக்க முடியவில்லை. பல வருடங்கள் பழகி இரத்தத்தில் ஊறிப்போன ஒன்றைத் திடீரென மாற்றுவது மிகவும் சிரமமான செயல்” என்று
125

Page 72
დყp0ჩსb (წყნეuბ
கூறிவிட்டு பரிதாபத்துடன் எதையோ வெறித்து நோக்கினார். நான் சிரித்தேன்.
“தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றார்.
நான் எனது பிரவேசச் சீட்டையும், எனது பொருட்கள் வைத்த பெட்டியின் திறப்பையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.
"மிகவும் நேரத்தோடு செல்கிறீர்கள்”
“எனது கடையைத் திறப்பதற்கு முன் நான் கோப்பி குடிக்க வேண்டும். இங்கு கோப்பி எடுக்கமுடியாது போலிருக்கிறது" என்றேன்.
“கோப்பி இல்லாமல் உங்களால் செயற்பட முடியாதோ?”
“முடியாது. ஒரு கோப்பைக்கோப்பியுடன்தான்எனதுநாளை ஆரம்பிப்பேன்."
"அது ஏன்?"
"பழக்கம்"
இதன்பின்மோகனைப்பலமுறை சந்தித்தேன். பின்னர் நீண்ட காலமாக அவரைச் சந்திக்க முடியவில்லை. பல மாதங்கள் கடந்தன. இளவேனிற்காலம் வந்தது. பின்னர் முதுவேனிற்காலம் வந்தது. இக்காலங்களிலும் அவரைச் சந்திக்க முடியவில்லை. மிக நீண்ட இடைவெளி தொடர்ந்தது. என்னையும் எனது நிறுவனத்தையும் வளர்க்கும் பொருட்டும், குண்டுகளின் தாக்குதல்களிலிருந்து இவற்றைக் காக்கும் பொருட்டும் எனது நேரத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டேன். எனவே அவரைத் தேடிச் செல்லப் போதிய நேரம் கிடைக்கவில்லை. டெமிற்றியஸ் நாட்டை விட்டு எங்கோ சென்றிருந்தார். மோகனை அறிந்த யாரையும் என்னாற் சந்திக்க முடியவில்லை.
126

ლყp(6სბ (8p[Juბ
ஈயோட்டிய காலம் முடிந்தது. புத்தகங்களின் கொள்வனவு சீர்பெற்றுச் சாதாரண நிலையை அடைந்தது. ஒருநாள் மாலை கடையை மூடியபின் சாரிங்குரோஸ் வீதிவழியே நடந்து கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராதவிதமாக டெமிற்றியஸ் குறுக்கிட்டார்.
“ஹலோ, இது அருமையான மாலைப்பொழுது இல்லையா?” என்றார்.
“அருமையானதும், கதகதப்பானதுமான மாலைப் பொழுது. மோகன் இதனை மிகவும் விரும்புவார்” என்றேன் நான்.
டெமிற்றியஸ் திடீரென முகத்தைத் திருப்பி அருகிலிருந்த புத்தகசாலையின் கண்ணாடி யன்னலினூடாகப் புத்தக அலுமாரிகளை நோக்கினார். நான் தொடர்ந்து கூறினேன்.
"நீண்டகாலமாக மோகனைச் சந்திக்க முடியவில்லை. தனது இரண்டாவது புத்தகத்தை எழுதுவதில் அவர் மூழ்கியிருக்கலாமென எண்ணுகிறேன்.”
டெமிற்றியஸ் என்னை நோக்கித் திரும்பினார். “நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார்.
“என்ன?”
"உண்மையாகவே உங்களுக்குத் தெரியாதா?” “இல்லையே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” “மோகன் இறந்துவிட்டார்” “என்ன?”நான் அதிர்ந்துவிட்டேன்.
"ஆம், இறந்துவிட்டார். உங்களுக்குத் தெரிந்திருக்குமென நினைத்தேன்.”
127

Page 73
დყo06uბ (8pguბ
“மதுச்சாலை மூடும் நேரத்தின் பின் அவர் துருக்கியக் குளியல் எடுத்தார்’ என்றார் டெமிற்றியஸ்.
“மூச்சுத் திணறியிருப்பாரென எண்ணுகிறேன்.” "ஆம், நீராவி அறையில் அது நிகழ்ந்தது" “ஒருநாள் இது நடக்குமென எனக்கு எப்போதோ தெரியும். நான் அந்த முட்டாள் மனிதனை எவ்வளவோ எச்சரித்தேன். அந்த நேரத்தில் அவர் எதற்காகக் குளிக்க வேண்டும். நேரே படுக்கச் சென்றிருக்கலாமே”
"இப்பொழுது அதுபற்றிப் பேசிப் பயனெதுவும் இல்லை. இப்படியான செயல்கள் தெரிந்திருந்தும் நடைபெறத்தான் செய்கின்றன. இவற்றையெல்லாம் நீங்களும் அறிவீர்கள்தானே" டெமிற்றியஸின் குரல் உடைந்து கம்மியது. துக்கம் தொண்டையை அடைக்க இதனைக் கூறிக்கொண்டு சூனியத்தை வெறித்து நோக்கினார்.
“என்னால் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வளவையும் அவருக்குச் செய்தேன். ஆனால் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது முழுப்பைத்தியம்"
இச்செய்தி என்னைக் கலங்க வைத்தது. இந்த இருவரில் யார் பைத்தியமென்று என்னால் இனம் புரிந்துகொள்ள முடியவில்லை. டெமிற்றியஸ் என்னை நோக்கித் திரும்பினார்.
“இன்றிரவு உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கிறதா?” "இல்லை, அப்படியெதுவும் முக்கியமான வேலையில்லை" என்றேன்.
"அப்படியானால் 'கவிஞர்கள் மூலைக்குப் போவோம்”
128

ლყo0ნსბ (8pguბ ,
"அது என்ன இடம்?" "அது ஒரு மதுச்சாலை. அங்கே சென்று சிறிது மது அருந்துவோம்” என்றார்.
“நன்றி, நான் வரவில்லை" “இந்நேரம் குடிக்காவிடில் என்னால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.
“என்னை என்னசெய்யச் சொல்கிறீர்கள்?”என்று கேட்டேன். “ஒன்று மட்டும் எடுங்கள்” என்று கெஞ்சினார். “வேண்டாம். இனி ஒருபோதும் குடிக்கவே வேண்டாம்"
129

Page 74
அழகு பீப்பிரமணியம் - ஆங்கி இலங்கையர் சட்டத்துறையில் பாரி உயர்நீதிமன்ற வழக்கறிஞராகத் துெ துறையைவிட இலக்கியத்துறையே த கீறுவார்.
நீண்டகாலமாக இங்கிலாந்தி என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இ எழுத்தாளர் சங்கத்தின்" இன்ை இவருடைய தந்தையார் புகழ்பெற்ற கொண்டவர். அழகு சுப்பிரமணியழே )LATfat ert'ı Ü L/550pxujugü 5
புகழ்பெற்ற ஆங்கில நாவலா "எமது கருத்துப்படி அழுத கப்பிரமணி இவரைப் போன்ற மிகச் சிறந்த எழுத் நாங்கள் கீழைத்தேசங்களைத் தரி பெரும்பாலும் இலங்கைப் பின்னணி
சவால்விடக்கூடிய முறையிலும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய இலக்கியப் படை மேற்கத்திய மொழிகளிலும், பல இ LJÚGASTGWTGOT. " FÈ GEFÜGY" (The E தொகுப்பு 1964ம் ஆண்டில் வெளி தொகுப்பு"குளோசிங்ரைம் அண்ட் அத
· Stories) 896IgB63U paryZe:Pň5 சிசின்க்கண்டு அழுது ஆப்பிரமணியம் சுப்பிரமணியத்தின் ஒரேயொரு நாவல் கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. மாத சஞ்சிகையில் பிதாடர்ச்சியாக வெ என்ற சிறுகதை "மிகச்சிறந்து இந் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்: "S D Golfssoss" (The Mathi
1915 மார்ச் 15ஆநீதிகதி யாழ்ப்பு 15ஆதி திகதி உடுப்பிட்டியில் காலமான

R இலக்கியத்துரையில் உலகப் புகழ்பெற்ற ஸ்டர் பட்டம் பெற்ற இவர், இலங்கை ாழில் புரிந்தார். இருந்தபோதிலும் சட்டத்னினைப் பெரிதும் கவர்ந்ததாக அழிக்கடி
ல் வாழ்ந்த இவர் "இண்டியன் றைற்றிங்" னையாசிரியராகவும், "இந்திய முற்போக்கு ச்ைசெயலாளராகவும் பணியாற்றினார். நீதிபதி பேரனார் இலக்கிய ஈடுபாடு ா பேரனாரின் இலுக்கிய ஆர்வத்தையும் , ருசேரக் கொண்டவராகத் திகழ்ந்தார். சீரியரும், விமர்சகருமான பாஜ்ரர் அலனி, ரியம் ஓர் அற்புதமான எழுத்தாளராவர். தாளர்களின் மூலமே மேற்குலகில் வாழும் சிக்கிறோம். இவருடைய படைப்புகள் யிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதே பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சில கதைகளை எழுதியுள்ளார்" என்று
ப்புகள் ஜேர்மனி, பிரெஞ்சு, ரஷ்யன் ஆகிய ந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்ig Girl) என்ற முதலாவது சிறுகதைத் யிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் at Tai" (Classing Times & Other Poeziřty ĝenigáto LJJ (250øTesi? ĝ#Edziĝo? அவர்களால் வெளியிடப்பட்டது. அழுத "cisix epo" (Mr. Moon) &rgyll ஆனால் இதன் தமிழாக்கம் "மண்விதை sfulcuttig., "sosis (& "(Lovely Day) தியச் சிறுகதைகள்" என்ற ஆங்கிலச் ቫTÉዜ
2maticlan) 6T6ñID dfgpyg56Iğ5 "Z AsLJ5 "என்ற தலைப்பில் ஹைடஸ்பேர்க் நகரில் b இடம்பெற்றுள்ளது. ானத்தில் பிறந்த இவர் 1973 பெப்ரவரி ார்.