கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளியின் மழலைகள்

Page 1
N NNNNNNN
S
 

தவ சஜிதரன்

Page 2

தவ சஜிதரன்
Vegason/2°h (نیو گا کہse؟
தவித்விதாதை ஒன்று

Page 3
Oliyin mazhalaihal (I & II) Poetry
Thava Sajitharan © Thava Sajitharan
ISBN 955-99.522-0-X
First edition January 2006
Layout & Printing KRIBS
Cover illustrations
Mathipushpa
Inside illustrations
Kalaikathir
Price:Rs. 100.00 (SL) Euro 4.00

ஒளியின் மழலைகள் அணிந்துரையாகச் சில குறிப்புகள்
தவ சஜிதரனின் கவிதைகளை இப்போதுதான் முதல் முதலாகப் படிக்கிறேன். பத்திரிகைகளில் அவரது கவிதைகளைப் படித்ததாக ஞாபகம் இல்லை. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தையும் ஒரு தரம் படித்து முடித்த பின்னர் சஜிதரன் நமது நம்பிக்கைக்குரிய ஓர் இளம் கவிஞர் என்ற எண்ணம் தான் முதலில் மனதில் தோன்றியது. இது மகிழ்ச்சிக்குரியது.
பிசிறல் இல்லாமல் யாப்பைச் சரளமாகக் கையாளும் திறன் இவரிடம் இருக்கின்றது என்பதை இத்தொகுப்பில் உள்ள முதல் பகுதிக் கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன. இன்றைய இளம் கவிஞர் அநேகரிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டும் ஓர் அம்சம் இது. இரண்டாம் பகுதியில் யாப்பை மீறிய கவிதைகள் - “புதுக் கவிதைகள்' தொகுக்கப்பட்டுள்ளன. இன்று வழக்கிலுள்ள கலைச் சொற்களைப் பயன்படுத்திச் சொல்வதானால், மரபுக் கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் இவருக்குத் திறமை இருக்கின்றது என்பதை இத் தொகுப்பு உணர்த்துகின்றது எனலாம்.
யாப்பில் எழுதுவது "மரபுக் கவிதை, யாப்பை மீறி எழுதுவது 'புதுக் கவிதை" என்ற சூத்திரம் இறுகிப்போன சூழல் இன்னும் தொடர்கின்றது. இந்தச் சூத்திரத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் சொல்லியுள்ளேன். மரபு என்பது பாரம்பரிய பழைய மனோபாவத்தையும், புதுமை என்பது பாரம்பரியத்தில் இருந்து விலகிய புதிய மனோபாவத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். அதனால்தான் யாப்பில் புதிய மனோபாவத்தை வெளிப்படுத்திய பாரதி புதுக்கவிஞனாக நவகவி'யாக விளங்குகின்றான். யாப்பை மீறி எழுதிய பிச்சமூர்த்தி புதுக் கவிஞராகப் போற்றப்பட்டாலும், சாராம்சத்தில் பழைய மனோ பாவத்தையே வெளிப்படுத்தியவர். அவ்வகையில், என்னைப் பொறுத்த வரையில் அவர் மரபுக் கவிஞராகவே தோற்றமளிக்கிறார். சஜிதரனின்
3

Page 4
யாப்புவழிக் கவிதைகளில் வெளிப்படும் அவரது மனோபாவம் அடிப்படை யில் மரபுவழிப்பட்டதுதான். மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகியோர் யாப்பில் வெளிப்படுத்திய புதுமை சஜிதரனிடம் காணப் படவில்லை. ஆயினும் பாரதியின் பக்திப் பாடல்கள் சிலவற்றைப் படிப்பது போன்ற ஒரு பிரமையை சஜிதரனின் சில யாப்புவழிக் கவிதைகள் நம்முள் ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொகுப்பின் இரண்டாவது பகுதியில் யாப்பை மீறி சஜிதரன் எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றையே நாம் பொதுவாகப் 'புதுக் கவிதை' என்கிறோம். இக்கவிதைகளில் பொதுவாகப் புதிய மனோபாவமும் புதிய வெளிப்பாட்டு முறைகளும் பளிச்சிடுகின்றன. குறிப்பாக, அடக்கு முறைக்கு எதிரான குரல்களாக வெளிப்படும் கவிதைகளைச் சொல்லலாம். பெருந்தாய், வாழ்வழிதலின் வலி, கழுகுச் சாபமும் கல்லறைப் பாடல்களும், நானும் வாழவோ நாண் இன்றி ஆகிய கவிதைகளில் இக்குரல் ஓங்கி ஒலிக்கின்றது.
*கோபுரங் காக்கப் பூதங்களை உபாசிக்கும் உங்களுக்கு சுதந்திர தேவியின் சூக்குமம் எங்கு புலப்படும்?" "கொலையுண்டு போவதன் வலியை ஒருகணம் உனக்குள் நிகழ்த்திப் பார்" “கல்லறைகள் குறித்துப் பாடும் கவிதைகளிலேயே நின்காலம் வேகித் தீருமோ என் தாயே? "அடுத்தவர் சிரங்களை அறுப்பதிலேயே தன்னை இருத்திக் கொள்கிறது நாணமற்ற மனிதம்" போன்ற வரிகள் சில உதாரணங்கள்.
சொற்சிக்கனம் கவிதையின் முக்கியமான பண்பு எனலாம். சஜிதரனின் கவிதைகள் சொற்சிக்கனம் மிக்கவை. யாப்பிலும் சரி, யாப்புக்குப் புறம்பாகவும் சரி அவர் எழுதிய கவிதைகள் பொதுவாக இறுக்கமும் செறிவும் மிக்கவை. அளவில் சிறிய கவிதைகளையே அவர் பெரும் பாலும் எழுதியிருக்கிறார். சொற்சிக்கணமே அவரது கவிதையின் நீளத்தையும் தீர்மானித்திருக்கின்றது என்று தோன்றுகின்றது. கவிஞன் என்ற வகையில் இது சஜிதரனின் முதிர்ச்சியின் அறிகுறி என்றே கருதப்படலாம்.
எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாது என் மனதில் இருக்கும் கவிதைகளே என் நல்ல கவிதைகள் என்று பல சந்தர்ப்பங்களில் நான் நினைத்திருக்கின்றேன். இந்த அனுபவம் வேறு பல கவிஞர்களுக்கும் இருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன். உணர்வுகளுக்கும் வார்த்தை களுக்கும் இடையில் ஒர் இடைவெளி இருக்கத்தான் செய்கின்றது. பல
4

சந்தர்ப்பங்களில் வார்த்தைகள் உணர்வுகளை வடிகட்டி விடுகின்றன. நமது பெரும்பாலான கவிதைகள் இவ்வாறு வடிகட்டப்பட்ட கவிதைகள்தான். சஜிதரனின் "காற்றுச் சுமக்கும் கவிதைகள்’ காதலுணர்வுடன் இந்த கவியாக்க அனுபவத்தையும் கூறுகின்றது.
கட்புலனாகாத காற்றின் ஏடுகளில் எழுதப்பட்டிருக்கின்றன உனக்கான எனது கவிதைகள்
07 a 60 0 0 0 0 0 .7 87 8 9
கவிதைகளை இப்போதெல்லாம் உணரவன்றி எழுதமுடியவில்லை
O P A P. P.
எனக்கு நீ போலவும்
உனக்கு நான் போலவும் கவிதைகளுக்கு வார்த்தைகள் வசப்பட மறுக்கும் வரையில் நீயும் நானும் காற்றிடமே சரணடைய வேண்டியிருக்கின்றது.
சஜிதரனின் நல்ல கவிதைகளில் இதுவும் ஒன்று என்று நினைக்கின்றேன்.
சஜிதரன் நம்பிக்கைக்குரிய இளங்கவிஞர் என்பதை இத்தொகுப்பு உறுதிப்படுத்துகின்றது என்று தொடக்கத்தில் கூறினேன். அவர் தன் கவிதை களின் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதையும் இறுதியாகக் கூற விரும்புகின்றேன். வாழ்க்கையின் சகல அனுபவங்களுக்கூடாகவும் அவரது கவிதைகள் நுழைந்து எல்லைகள் விரிவுபட வேண்டும். விரிவுபடுத்துவார்
என்பதே என் எதிர்பார்ப்பு.
எம். ஏ. நுஃமான் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் 25. 1, 2005

Page 5
நன்றிக்குரியவர்கள்
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் ஒவியர் கலைக்கதிர் ஒவியர் மதிபுஷ்பா (கனிவுமதி) திரு. திருமதி. எஸ். கிருஷ்ணமூர்த்தி (கிறிப்ஸ்) கவிஞர் எஸ்போஸ் (சந்திரபோஸ் சுதாகர்) கல்பனி எரங்க ஜயவர்த்தன ம. ரூபவதனன் (பேராதனைப் பல்கலைக்கழகம்)
அனோஜாபூரீகாந்தன்

(9/bustadio....

Page 6

G മേ
இருக்கொள்ளலி
வானம்அழ, முரசதிர வாகை கொண்டு
வாரியெழும் கடலலைகள் கூத்திட் டாடத் தேனமிழும் கனிமரங்கள் தலைய சைக்கத்
தென்றல் உரு மாறி, வெகுண்டு) உயிர்விழிக்க வான்உமிழும் தீயின்அனல் தணிதல் கண்டால்
வையஇருள் துடைத்துவிடும் வேட்கை நெஞ்சில் கானமெழும்; கவிதைவரும் கால வெள்ளம்
கடுகுமதன் சுவாசத்தில் மூர்க்கந் தள்ளும்!
புழுதியிலே புதையுண்ட சித்திரம்போல்
புதுமழையின் மேகத்துள் சூரியன்போல் உழுதநியா நன்னிலத்துள் உயிர்வி தைபோல்
ஊடலிலே காதற்பெண் ஒளிமுகம்போல் எழுதநியாப் புதுமையெலாம் கருவில் சேர்த்தே
எழுங்கவிதை மறைந்திருக்கும், மனுக்கு லத்தின் அழுந்துயர ஒலங்கள் கேட்ட போதில்
அனலாகிச் சுடராகி வெளிக்கு திக்கும்
உயிர்நாதம் கலந்தொலியில் புதிது தோன்றும்!
உணர்வாலே உளம்நனையும் புலன்கள் ஒயும்
அயர்வின்றித் தொய்வின்றிப் பலயகங்கள்
... . " அமரநிலை எய்துகின்ற திடம்மி குக்கும்!
புயம்புடைக்கும்; விழிகதிர்க்கும்; பொங்கும் மார்பு
புறந்தள்ளிச் செம்மையிலே பொலிவு காணும்
ஜெயம்பிறக்கும் பயம்மரிக்கும் ஜெகத்தை மேன்மை
செய்கின்ற ஒருகவிதை நெஞ்சில் வந்தால்
(16.01.2004)

Page 7
தவசஜிதரன்
அம்மாவுக்கு.
ബ്[];
என்கரு காத்தமெய்; என்னைச் சுமந்ததோள்; என்கவிதை ஊற்றின் எழுமூலம் - உன்குளிர்ந்த நெஞ்சில் தலைசாய்த்தென் ஆவிதான் நீங்குங்கால் அஞ்சுமோ அம்மா அகம்?
"ஆனா" எனவெழுத்தும் அன்ன பிறபலவும் நானாய் அறிந்தேனோ? நான் என்னும் - ஊனாய் எழுந்திருப்ப துன்னால் இயல்வதெல்லாம் உன்னால் அழிந்திடுமோ நெஞ்சின் அழல்?
(16.11.2004)
10
 

●e-エh \ഴുതി
பாரதி
ീബ്[[
பாட்டுத் திறத்தாலே பாழாம் அடிமை கைப் பூட்டுத் திறந்த புலவன், ஒளி - காட்டி எனையாண்ட நாதன்! இனி யார் கரத்தைத் தனையாள ஏற்கும் தமிழ்?
(21.04.2005)
11

Page 8
தவசஜிதரன்
அடங்காக் இவிதை
நிலவின் ஒளிநதியில் - உயிர்
நீந்தித் ததும்பும் இரவினிலே உலவ வரும்முகில்கள் - உள்
உவகை மலரத் தொடுந்தென்றல் தொலைவில் பொறித்துகளாய் - நின்று
தொங்கும் உடுக்கள் இவைதமக்குள் உலகை மறந்திருந்தேன்! - அட
ஒருகணம் மெல்ல இறந்தெழுந்தேன்!
"ஊ"வென்றிரைந்துவரும் - காற்றில்
உயிர்ப்புற்றசையும் மரக்கிளைகள் தூவிய வெண்ணொளிக்குள் - அவள்
சுடர நிகழ்த்திடும் கோலநிலை ஆவி உதிர்ந்தொழுக - நெஞ்சில்
அற்புதப் பொற்பதம் நர்த்தனிக்க தேவி எழுந்துவிட்டாள் - இனியும்
சிறைப்பட்டடங்குமோ தீங்கவிதை?
(8.09.2005 - பெளர்ணமிக்கு மறுநாள் இரவு)
 

G \ംഝേ
உருவிலா லிவங்கனலி
தீயாய் மூளும்; நெஞ்சின்அடி திருகி அழுத்தும்; மதர்ப்புமிகு நோயாய் நுணுகி உயிர்வரையும் நுழையும்; நெகிழ்ந்து புலனுறைய ஒயா ததிர்த்தும்; உடன் நானும் உலகு தவிர்த்துச் சுடர்ந்திருப்பேன் நீயோ அரூப வெளிகளிலும் நிறைந்து திளைப்பாய் எனையெரித்து.
சிலந்தி வலையுள் சிக்குண்டு திமிறி அயரும் சிறுவண்டாய் தொலைந்த கணங்கள் யுகங்களென்றும் தொடர்ந்து மரணம் நிகழ்ந்ததென்றும் கலைந்த சொற்கள் கோத்தெடுத்துக் கவிதை உரைப்பேன்; புலனுணர்வு குலைந்த மனிதர் குழாமோ கை கொட்டி நகைக்கும் எனதன்பே.
(15.12.2005)
13

Page 9
தவசஜிதரன்
இாலம் முந்திக் கிளர்நிற இடைசிப் பாடல்
14
கவிதைகள் உளமைச் சொற்களாய் உருமாறிப் போதல்
சேமித்து வைத்திருந்த எனது வார்த்தைச்
செருக்கனைத்தும் சூனியத்துள் கரைந்து தீர ஊமைச்சொல் உடல்பெற்றென் கவிகள் எல்லாம்
2-60Lul-G5 தகருவதாய் உணர்ந்தேன் இன்று நீ மட்டும் நெஞ்சத்துள் இம்சை செய்த
நிமிடங்கள் பொருளற்று உயிர்துறக்கப் பூமித்தாய் உதரத்துள் எனைப்பு தைத்துப்
போம் அந்த நாளை நான் புதிதாய்க் கண்டேன்!
8ീl ിട്ടള് இப்படியோர் வெளிகுறுகும் காலத் துள்ளே
எனதுயிரின் ஒளிகுறித்த இறுதிப் பாடல் மெய்ப்படுமென் றெவர் நினைத்தார்? என்னை ஆட்டி
மெய்சிலிர்த்தும் காளிதான் எதைநினைத்தாள்? ஒப்பிடவோர் உவமையில்லை - அவளின் கால்கள்
ஊழிப்பேய்த் தாண்டவங்கள் நிகழ்த்தும் கோலம் சொப்பனமோ? மெய்நினைவோ? தோன்ற வில்லை!
சுமக்கும் உயிர்ப் பாரமின்னும் நீங்க வில்லை!

airgil Lamluintir Littlu lilléillsil Bairilair! திண்டாடித் திணறுகிற மூச்சில் ஒன்றித்
தேகத்துச் சிறைநீங்கும் உயிர்தான் கேட்கும் கண்டத்துள் இறங்குகிற விஷம்நிறுத்திக்
காக்கின்ற காதல் உமைக் கைகள் எங்கே? கொண்டாடி உடற்கூறின் ஒற்றைப் பாகம்
குடியிருக்கும் அவளின் திருக் கொங்கை எங்கே? துண்டாடிப் பிளந்தாலும் ஒன்றாய்ச் சேர்ந்து
துடிக்கின்ற இருதயத்தில் பாதி எங்கே?
இறுதிநானமும் சவிமரய்ச்சாய்தலும்
உண்டென்று நினைப்பனவோ இன்மை ஆக
உணராத பலவற்றின் உண்மை தேரக் கண்டெந்தன் அருகுற்றாள் காளி வேட்கைக்
கனல்பொங்கி அரிவாளால் உடல ரிந்து முண்டத்தை வேறாக்கிக் கபாலத் தைத்தன்
முடிச்சிலிட்டுக் கூத்தாடி மூர்க்கம் கொண்டாள் அண்டத்துள் அவளினடிக் கீழே, சற்றும்
அசைவின்றிக் கிடக்கின்ற ச(சி)வமாய் ஆனேன்
15

Page 10
தவசஜிதரன்
மெய்ப்பதங்களில் சரணுமூலி
மோகம் என்னிலை மொய்ம்பற வாட்டினும்
மூச்செரித்துடல் தன்னில்,தீமூட்டினும் யோகம் அற்றொரு புன்னிலை கூட்டினும்
யுகங்கள் யாவையும் நின்று சுழல்கென ஏக மாகி இயக்கும் தனிப்பொருள்;
என்னுயிர்க்கமு தாகும் பராசக்தி மேக வானிலே மின்னும் ஒளியினாள்
மெய்ப்ப தங்கள் சரணுற மேன்மையே!
16

GramGadh Vegasoniarah
syrtågeoret
மோகன மாமொரு சோதியிலே - மறை
முனிவருலாவிய வீதியிலே ஏகனை ஐயனை ஈசுரனை - திசை
யாங்கனும் மேவும் பரம்பொருளை ஆகம வேதங்கள் பன்மதங்கள் - அவை
ஆயிரமாயிர மாய்ச்சொலுமோர் யோகியைக் காணுவ தெத்தினமோ? - எந்தன்
யுகங்களின் கனவினி மெய்ப்படுமோ?
(25.03.2005)

Page 11
தவசஜிதரன்
வாணி துதி
salatalur
காணிநிலம் கேட்ட கவிஞனுக்குப் பூவனைத்தும் பேணி ஒளிசெய்யும் பேறளித்தாய் - வாணி நினைத் தலை சாய்த்துப் பணிகின்றேன்! நின்தாள் நினைத்தலைச் செய்க என் நெஞ்சு.
# (O5.12.2004)

9് ഠേ
வேர்மனம் நனைத்த தூறல்
கார்முகில் அவிழ்தல் போல்,உன்
கண்களில் பொழியும் தூறல் ஏர்முனை உழுத மண்ணை
எய்திய துளிகள் போலே கூர்முனை கொண்ட நெஞ்சிற்
குவிந்தெனை மெளன மாக்கி வேர்மனம் நனைத்தல் கண்டேன்!
வெல்க நீ அமர தேவி!
(23.03.2004)
19

Page 12
தவசஜிதரன்
நின் விழிகள்
என்மனத்துத் தாமரைக்கு நின்விழிகள்
செஞ்சுடர்கள்; இனிமை மீட்டும் என்மனத்து வீணைக்கு நின்விழிகள்
பொன்விரல்கள்; எழுகை தேடும் என்மனத்து நிலத்தினுக்கு நின்விழிகள்
மாமழைநீர்; இழிவு சாடும் என்மனத்துத் தீப்பொறிக்கு நின்விழிகள்
உயிர்ச்சுவாசம் என்று கண்டேன்
(14.12.2003)
20

తొrశh vegmN/*h
நினைதலி தவம்
ബിL
நித்தம் உழலுமென் நெஞ்சே! இதுகேளாய் தத்தம் கருமம் தவறாது - சித்தம் பராசக்தி என்பாள் பதமலர்கள் பற்ற இராதென்றும் வையத்(து) இடர்.
மனக்குடி வாழும் மகாதேவி பாதம் நினைத்திடில் தீங்குண்டோ நெஞ்சே! - உனக்கிங்கே செம்மைத் தமிழாலே தேவி திருக்கழல்கள் தம்மைத் தொழுதல் தவம்,
நீமனத் தெண்னும் நினைப்பெல்லாம் வீரைதன் பூமுதற் பாதப் பொலிவுக்கே - ஆமெனத் தந்திடிலோர் கேடில்லை தாழாத் தவக்கனலைச் சிந்தையில்வைத் தீவாள் தெளிவு.
ஜெயஜெயகாளி எனவுரை செய்து பயமெனும் பேயைப் பழிப்பாய் - அயர்வில்லை! அல்லலில்லை! நெஞ்சில் அழற்சினந் தானுமில்லை தொல்லையறத் தேவி துணை.
(02.07.2003)
21

Page 13
தவசஜிதரன்
கருவூராக்காலி.
கடளைக் கலித்துறை:
ஆருத ரத்தும் பிறவேன் இறவேன்என் றாகிலுந்தன் மாருத மாம்மென் மலரடி எங்ங்ண் வழுத்துவனே? கோருத லென்று குறித்தெதும் நின்னைக் குறையிரவேன் தேருதல், சிந்தை தெளிவித்தல் யாவும்நின் தெய்வதமே
தெய்வத மென்னும் உயிர்விசை ஊற்றின் திறப்படைந்தால் பொய்வித மாய மதங்களின் கூட்டுப் புதைகுழிக்குள் நைவதின் நீங்கி உயிர்ப்பினி லோங்கி நலிதலின்றி உய்வது திண்ணம் உருப்பெறும் எண்ணம் ஒளிபெறுமே!
ஒளியாய் எழுவாய் உணர்வே உனையே உளந்திருத்தும் உளியாய்ச் சரணம் உரைத்தேன்! எனக்குள் உடனிருந்தே தெளியாப் பொருளுடைச் சூட்சுமந்தன்னைத் தெளித்தனையால் வளியாய்ப் புனல்,தீ புவியுடன் வானாய் வளர்ந்தனையே
(30.08.2005)
22

9(൧൬
புலன்களை மூடித் திறந்திரும்
666fles
SrTess 3 TestT assissans stet நீ என் உவகை
காளி நீ என் காதல் artsf நீ என் சாதல்
SrTess நீ என் சாயை காளி நீ என் மாயை
snres நீ என் காலம் sitef நீ என் மூலம்
w (10.03.2005)
23

Page 14
தவசழிதரன்
ീg uTപ്ര
இச்சகத்(து) அணுக்கள் தோறும்
இருந்திடும் தேவி பாதம் மெச்சுக இனிய நெஞ்சே,
மேன்மைகள் திரளு மென்றே இச்சைகள் என்று னக்கே
ஏதேனும் உள்ள தென்றால் அச்செயல் அவள்க ழற்கே
அர்ப்பணம் செய்க இன்றே
புல்லிலே உயிரை வைத்த
புதுமைதான் எவளின் மாட்சி? சொல்லிலே ஒளியின் வண்ணம்
சூட்டுவ(து) எவளின் மாட்சி? இல்லையென்பவர்தம் ஆழ்ந்த
இருதயத் துள்ளும் உள்ளாள் எல்லைகள் யாவும் மேவி
எங்கணும் வாழுந் தேவி
24

Srgah vertonash
பொய்வினைக் காரணத்தைப்
பொன்றதன் தீமை போக்கி ஐயை உன் வாழ்வு தன்னை
g|LuuluLorruiuảk smrüLI6T s6oTLTuiul மெய்யினைக் கருவியாக்கி
வேள்வியாய்க் கருமம் ஊக்கி செய்வன அவளின் செய்கை,
என்று நீ வாழ்தல் உய்கை
ஓசையும் இன்றி நெஞ்சின்
உள்நுழைந்(து) அமர்ந்திருக்கும் மாசு கொள் எண்ண மெல்லாம்
மறைப்பின்றிக் கொல்லும் நாளில் தேசு கொள் விழிகள் தந்தும்;
தெய்வ மாச் சொற்கள் தந்தும் பேசும் உன் வார்த்தை யில், தாய்
பிம்பமாய் வாழ்வள் கண்டாய்
(01.08.2005)
25

Page 15
தவசஜிதரன்
தாப மேரி
மவுனத்தை உட்கிடத்தி, உயிர்நகர்த்தும்
மருமங்கள் மறைத்து வைத்து தவநிட்டை நிகழ்த்துமுந்தன் மனமுகை,பின் புலர்வில்இதழ்த் தாழ்திறக்கும்
நிசிப்பொழுதின் நீளத்தை விரகத்தால்
கணித்தபடி நீயிருந்த திசைபார்த்து உயிர்தீர்ந்த ஒளிவண்டு
மோனமுற்றுத் தேன்கு டிக்கும்
(31.12.2005)
26

9rFaith vegrunnmoh
מו(O&נמJפ6N6
. தீக்காட்டில் பணிபோல, திசைகளின்றிப்
பெருவெளியில் திரியுமொரு குருவி போல நீர்க்கானல் நிறைந்தகனும் நிலப்பரப்பில்
நிழல்தேடி மெதுவாக நகரும் நாட்கள் பூக்காம்பை மெலிதாக வீழ்த்திப் போகும்
புதுத்தென்றல் அசைவுக்கும் உனது கண்கள் நோக்காலே பிறக்கும் கணப் பிரளயத்தின்
நோவுக்கும் பேதமறியாதென் நெஞ்சம்
2. சாதலைப்போல் உள்ளதடி - உன்னை நீங்கிச்
சற்றேனும் வாழ்ந்திருத்தல் ஆகா! இந்தக்
காதலைப்போல் கொலைத்தொழிலை நேர்த்தியாகக்
காதகரும் புரிவாரோ? சித்தம் முற்றும்
பேதலித்தார் போலமொழி பேசிப் பேசிப்
பிறந்துலையும் கணங்களெலாம் கவிதை கொள்ள
பூதலத்தே முன்னைநாட் புலவர் கூட்டம்
புகன்றதையே யானுமிங்கு புலம்ப லுற்றேன்!
(06.03.2005)
27

Page 16
தவசஜிதரன்
வினவுஜை
ஊழ்விதி குறித்த ஒன்றோ,
உன்னைநான் கண்ட வேளை? வேள்வியின் கனலே என்னில் விரவலும், உனது மாய வாள்விழிக் கிரையாய் நெஞ்சு
வசப்படும் என்றோர் எண்ணம் மூள்வதே உயிரைக் கொய்யும்
முறைமையும் எல் ன்ே தோழி? (19.11.2004)
28
 

9roth Vegeynmoy,
Nostreor loyotić
கோடிமுறை சொல்லிவிட்டேன் - ஈதென் குற்றமோடி கண்ணம்மா? பாடிவைத்த கவிகளெலாம் - தனிமைப்
பரவசத்தில் வந்ததன்றி ஊடியுனை நாடுகையில் - ஒருசொல்
உரைத்ததில்லை இன்றுவரை மூடிமறைத் தாலும் மதி - மேக
முகத்திரையைக் கிழித்தது பார்
நூற்றவிழி கண்டுவிட்டால் - குழல்
நுதல்விழுமோர் காட்சிகண்டால் ஏற்றிவைத்த மின்குமிழ்போல் - விசை
இயங்குதடி மனவெளியில் மாற்றமில்லை மறுப்புமில்லை - நின்றன்
மெளனங்களே மரணங்களாய் ஊற்றுதடி தீயின் நுரை! - நெஞ்சு
ஒய்வதற்றுச் சுழலுதடி
(02.11.2004)
29

Page 17
தவசஜிதரன்
“geSP’6N62ugồTUT
உலகக் குமிழின் உதரம் கிழித்துப் பயங்கரக் கூத்துப் பயின்றாய் கலியே திகிரிகள் தம்மொடு முட்டிக் குலையத் தெருவில் அசுரப் பிணிகள் அலையச் சுழலும் புவியின் முகுளம் கலையக் கொடுமுகம் காட்டிக் குதித்தனை மூடனே!
கூரை உலுப்பிக் குடிமனை சாய்த்திங்கோர் ஊரைப் பிசாசாய் உழுது தகர்த்துப் பலநாள் தணியாப் பசியையோ தீர்த்தனை? மூச்சை உதிர்த்தும் முகிழா மழலையர், பெண்டிர், பெரியோர், பிணியுடை மக்களைக் கண்டும் இரங்காக் கயவனே வீழ்க நீ!
30

Provod von Ago
மூப்புப் பிணியின் முறைமை கெடுத்துயிர் காக்கும் வகையை நாம் காணா திருக்கையில் கோரக் கலியுன் குடலின் பசிக்கும் எமையோ குறித்தனை? சீச்சி புலையனே!
நின்கரம் எங்களை நீங்குக! நாங்கள் கடவுள் தன் கையிற் கருவியென்றாகுக! காலன் சிரிப்பில் கருகும் கவிதைகள் மூலந்துளிர்த்து முனைப்பாய் எழுக! சரித்திரம் இங்கொரு sTubusS6ër G3 DL Lç6to உருத்தெரியாமல் ஒழிந்திடச் செய்தனை
உன்னைச் சபித்தோம் ஒழிந்தினி ஒடுவாய் முன்னைக் கவலைகள்
மூழ்கத் தொலைத்தினி உய்கைகண்டு) ஆழ்க உலகு.
(26.12.2003அன்று பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஈரானியப் பூகம்பம் பற்றிய நினைவின் அதிர்வுகள், 11.01.2004 ஞாயிறு தினக்குரலில் வெளியானது)
s

Page 18
தவசஜிதரன்
எங்கள் தேசத்துக்கென்றோர் விடிவு
பூமித் திசைகள் புலர்ந்தபின்னும் - வெளிப்
பொருமிக் கதிர்கள் கிளர்ந்தபின்னும் ஊமைக் கவிதைகள் யாவையுமே - உள்
உணர்வின் விழிகள் அறிந்தபின்னும் சாமக் கனவொடு சோருவதோ? - பொய்மைத்
தாழ்வினை வாழ்வெனத் தேருவதோ? ஓமக் கனலின் ஒளிநடுவே - திரளும்
ஒருசுட ராம்மொழி கேளிர்மன்
ஓங்கி எழுந்திடும் மாமலைகள் - வளம்
ஊக்கிச் செழித்திடும் நீர்ச்சுனைகள் தீங்கனி, நெல்மணி, ஏற்றநிலம் - மனச்
செம்மை மிகுந்திடும் மாந்தர்-இவை நீங்கிப் பிறந்தவர் தேசத்திலே - அவர்
நெஞ்சம் உலைதலும் நிம்மதிக்காய் ஏங்கித் தொலைதலும் ஏற்றவொன்று - அங்கே
எந்நாளில் உண்டுகொல் மாற்றமொன்று?
நாங்கள் பிறந்ததும் அப்புலமோ? - கயவர்
நாடித் தொழில்செயும் ஒர்நிலமோ? பாங்கில் உயர்ந்தவர் தம்மினையும் - நேர்மைப்
பற்றுடன் அன்புகொண்டார்தமையும் தாங்குந் திறனெதும் அற்றழிந்தே - ஈழத்
தாயவள் நோயைப் புணர்ந்தனளோ? தூங்கித் துளும்பும்நம் நெஞ்சிருளை - அறத்
துடைத்தெழும் சூரியன் இங்கிலையோ?
32

19rVGrdh vergrunnm*
GygLeoTiá
சாவென்று சொல்லுங்கால் நெஞ்சம் நொந்து
சஞ்சலிக்கும் மானுடர்தம் புவியில், பொய்மைச் சா - வென்று பகைகொன்று திசைகள் எட்டும் சாயாது முடிகொண்டு வாழும் தெய்வம் தாவென்று கேளாமல் தழலும் நெஞ்சில்
தணியாத கவிதந்த தமிழாம் தெய்வம் பார்வென்று வரும்பணிக்கென் எழுது கோலைப்
பாலிக்கும் தொழில்கொண்டாள் அன்னை வாழி
சூரியனின் சுடர்க்கீற்றில் சுண்ணஞ் செய்து
சுதந்திரமாம் தீப்பிழம்பின் திரவ மூற்றித் தூரிகையுள் தொடுக்கவரும் சித்திரத்துள்
தோன்றுவதை என்னென்பீர்? ஐயம் வேண்டா வாரியொளி வீசுகிற செஞ்சொல் ஒவ்வோர்
வார்த்தையிலும் அணுப்பிளவின் ஒட்டம் ஆன்ம வீரியத்தைத் தமிழர்குடி எய்து மாற்றை
விதைத்துவைத்தோன் பாரதியின் விழிகள் காண்பீர்!
முற்பிறப்பில் மூண்டதொரு பிணைப்பென் றெண்ணி
முனிவனவன் பாரதியைத் தொழுது வாழும் அற்புதத்தில் விளைவதெந்தன் கவிதை அன்றி
அடியேனேன் கொண்டதிறம் ஏதுமில்லை! சொற்புழுதித் தூசுகளுள் மறைந்திருக்கும்
சுரங்கத்தைக் கண்டு நீர் கவிதை கண்டால் உற்பவித்தென் நாவுதணில் உறைவு கொள்ள
உடன்பட்டாள் வாணிஎனும் உவகை கொள்வேன்!
(12.12.2004 அன்று இடம்பெற்ற ஓர் அந்தி வேளைக் கவியரங்கில்)
33

Page 19
தவசஜிதரன்
நீக்கநின்றி நீ
விண்ணகன்று விரியுதடி விழிகள் மூட
விந்தையெலாந் தெரியுதடி அங்கே உந்தன் கண்ணினொளி தன்னில்பொறிக் கதிர்கள் நெய்து
காட்சிநயம் தீட்டுகிற சூரியன்பார் எண்ண நிரை தீர்கையிலே, மோன சித்தி
இயல்பாக நேர்கையிலே ஆழ்ந்திருக்கும் நுண்ணியதோர் மனநரம்பு தீண்டி, உள்ளே
நுழையுமிசை எங்கணும் நின் குரலைக் கேட்டேன்!
காட்சிக்குள் மந்திரத்தை வைத்தி ராக்கால்
கடவுளைநாம் பெரியனெனக் கருது வோமோ? நீட்சிக்கோர் எல்லையிலா வகையில் திக்கு
நிறைந்தபடி, பகுப்பின்றி நீயே நின்றாய் மாட்சிக்கோர் இலக்கணமே! எனது கண்கள்
மருளாமற் கணந்தோறும் பருகுகின்ற மீட்சிப்பேர் ஒளியேதிங் காதல் ஊற்றே!
வெளிப்பிரபஞ்சத்திலுயிர் விதைக்குங் காற்றே!
இயற்கையிலே அணுத்தோறும் உயிரே! நீதான் இருக்கின்ற மருமத்தைக் கண்ட வர்கள் மயக்குற்றுத் துவள்வதில்லை! அன்ன வர்க்கு
மரணமில்லை எதிரேகுந் தடைகள் கண்டு தயக்கமவர் கொள்வதில்லை தளர்வதில்லை!
தாயென்றும் காதலென்றும் உன்னை ஏத்தி இயக்கமுறும் மானுடர்க்கு வையம் மீதில்
இயலாத கருமங்கள் இருப்பதில்லை
(25.08.2005)
34

9്പ്) \(
இராக்காலம்
எங்கிருந்தோ சிறியெழும் பரிதிப் பந்தை
இழுத்தெடுத்து, ஒளிபிளந்து துகளாய்த் துண்டாய்
தம் கழனி வெளியிடையே வான வர்கள்
தானியங்க ளாகநிதம் விதைத்து வைக்க
மானுடர்கள் பிரமிக்கும் மாயக் காலம்
மனமென்னும் நோய்கொண்ட பேயும் கொஞ்சம்
தானடங்கித் தணிவடையும் தவத்தின் காலம்
தலைபுடைக்கும் கலிகளுக்கோர் ஊழிக் காலம்
சஞ்சலங்கள் மரணிக்க மனவீட் டுக்குள்
சாளரங்கள் ஜனனிக்கப் புளகிப் பார்தம்
நெஞ்சகத்தில் அச்சத்தின் சுவடு மின்றி
நினைப்பரிய பேரமைதி நிலவுங் காலம்!
இராக்காலம் கவிநெஞ்சில் சோர்வின் சாயல்
இராக்காலம் புதுமையன்றி வேறு செய்தி
தராக்காலம் கரிய நிற முகமூடிக்குள்
தன்னையெங்கள் பராசக்தி மறைக்குங் காலம்
35

Page 20
தவசஜிதரன்
காலைக் கவிதை
காரிருள் என்னும் ஞானக்
கருவறை திறந்த திங்கே பேரொளிக் கதிர்களாகப்
பிறந்தன மழலைக் கூட்டம் பாருளார் முற்றும் ஒன்று W
UL" L-60Tr 6T6öTD 6nImrstoffesio பேரிகை கொட்டிக் கூவப்
பெருகுதே வேட்கை நாட்டம்
புள்ளினம் கூட்ட மாகப்
போகுது கண்டீர்! மேலே மெள்ளவே நகருகின்ற
மேகங்கள் கூடத் தம்முள் உள்ளங்கள் ஒத்த வர்போல்
உறவொடு நகருங் கண்டீர் விள்ளவும் முடிவதில்லை
பூமியின் விந்தை எல்லாம்!
(20.07.2005)
 


Page 21
|내력: % ** sae
■ 心
----
■
تيتيتيتيتيك
圈 腹。
 


Page 22

தவ சஜிதரன்
safah \ഠതJ്
இவித்தொகை இரண்டு

Page 23

சவகுவிப்பு:
தவ சஜிதரன் (1983 - )
பத்தாவது வயதிலிருந்து கடந்த பன்னிரண்டு வருடங்களாகக் கவிதைத் தளத்தில் பயணிப்பவன். தாய் இந்திராணி தவயோகநாதன். தந்தை வேலுப்பிள்ளை தவயோகநாதன். ஏழாவது வயது தொடக்கம் இலங்கை, மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளையில் வாழ்ந்து வருகி றான். பிறந்த இடம் யாழ்ப்பாணம். மாத்தளை இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவன் தற்போது 'சண்டே ஒப்சேவர் இதழில் பத்திரிகை யாளனாகப் பணிபுரிகிறான்.
முதலாவதாக வெளிவரும் இவனது இரண்டாவது தொகுதியான
ஒளியின் மழலைகள்' இலுள்ள கவிதைகள் 2003-2005 காலப் பகுதிக்கு உரியன.

Page 24

പീS് പ8, 9%.
தோன்றாப் புள்ளியொன்றில் சுரந்து இருதயத்தின் வழி பிரவகிக்கும் பெருநதி கவிதை. தனது சர்வகால ஓட்டத்தால் மாறாத நித்திய அழகைக் கவிதை கொண்டிருக்கிறது என்றாலும் அது எந்தப் புள்ளியிலும் தரித்து நிற்பதில்லை. மாறாக, காட்டாறாய் கணந் தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டு பாய்ந்தோடுகிறது கவிஞனுக்குள். அத்தகைய கிளர்வு எனக்குள் எவ்விதம் நிகழ்ந்திருக்கிறது என்பதைப் பதிய முயலும் எத்தனத்தால் இத்தொகுதி உருப்பெறுகிறது.
இந்தத் தருணத்தில் இருவரை எண்ணி நெஞ்சு கணிகிறேன்; வணங்குகிறேன்.
இற்றைத் தினம் மட்டிலான எனது வாழ்வின் முக்கிய கணம் எதனை யும் அம்மாவிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அம்மாவைப் பற்றிச் சொல்ல நேரும்போதெல்லாம் சொற்களின் பொலிவுப் போதாமையை வெகுவாக உணர்கின்றேன். ஒரு பெண்ணால் இயலக்கூடிய பிரமிப்பு மிகுந்த வாழ்க்கையை அம்மா வாழ்ந்திருக்கிறார். தனியொருத்தியாகத் தனது மக்கள் மூவரையும் சமூகச் சவால்களுக்கிடையில் வளர்த்துள்ள /வளர்த்து வருகின்ற பெருமை அவருக்குரியது. எனதும் எனது கவிதை களினதும் உயிர்ப்புக்கு அவர் மூலம்.

Page 25
கவிதையைக் கருதும்போது தமிழகத்தில் சிலபல காரணங்களுக் காகத் தற்போது வாழ்ந்து வரும் அப்பா கண்முன்நிற்கிறார். நான் மிகச் சிறுவனாக இருந்தபோதே என்னைக் கவிஞனாகக் கனவு கண்டவர் அவர் அவரது பிரயத்தனங்களால் இள வயதிலேயே எனக்குக் கிட்டிய அறிஞர் அறிமுகங்கள், இலக்கிய மேடையில் வாய்ப்புக்கள், பெரியவர் களின் வாழ்த்துக்கள், உற்சாகமூட்டல்கள் அனைத்தும் அபரிமிதமான தன்னம்பிக்கையை என்னுள் வளர்த்திருந்தன.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகளைப் பற்றி நீங்கள் வெளிப்படுத்தக் கூடிய ஒரு வரிக் கருத்தையும் கூர்ந்த சிந்தையோடும் மிகுந்த ஆவ லோடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வெளியேயிருந்து வருகின்ற எதிர்வினைகள் ஒரு கவிஞனது கவிதா வேகத்தை உந்தி எழுப்பவும், தேவைப்பட்டால் மறுசீரமைக்கவும் செய்யும் என்பது என் நம்பிக்கை.
தவ சஜிதரன் 207B, Rattota road, Matale
Sri Lanka
Email; kurumuniOyahoo.co.uk Mobile: 0714242052

(9/bustadioi.....

Page 26

Go-MGadh Veleasinarah
மவூறாவாக்கியம்
எங்கள் வாக்கியங்கள் அவர்களுடைய பாஷையில் பெயர்க்கப்பட்டபோது பைத்தியங்களினதைப் போல இருந்ததாகப் பேசிக் கொண்டார்கள்
தெய்வங்களின் சங்கேதப் பூட்டுக்கள் தெறிபட் டுடையும் அநாகத த்வனியைக் கேட்டுச் சிலிர்த்ததாய்ச் சொன்னார்கள் இன்னுஞ் சிலரோ.
எனில்,
எத்தனை பேருக்குத் தெரியும் இதயக் குகையில் உருகி எழும் அச் சுவாலை கொண்டே சூல்கொள்கின்றன எங்கள் வாக்கியங்கள் என்பது?
(10.10.2005)

Page 27
தவசஜிதரன்
2લToIT
எதிரே இருக்கிறது எங்கும் முடிவுறாத வெளி
எங்ங்னம் அது முடிவுறா வெளிஆயிற்று?
இருக்கிறதென்ற காரணத்தால்
(20.07.2005)
a - ”ーニートー ~صسTNسس س ーミー○ ○ニ
༦ ། བྱེ་) سمی کسسہ- 972ܥܰܓ
一つ一ーヂ=-
சுழல்கிறது காற்றாடி சுழல்கிறது காற்றாடி ஆம் சுழல்கிறது காற்று ஆடி
(11.08.2005)

Grov-Fath vegnNaroh
ઈgBot
காற்றை எழுதுகின்றன மரத்தின் அசையும் தலைகள்
அதே அதீதத்துடன் ஒளிக்கிரணங்கள் பூமிபாற் கொண்ட காதல்வெறி உச்சிக்கேறி
அங்கங்கே அவிழ்க்கிறது கூந்தலை மென்னிர் மேகம்
மெளன ரேகைகளை உற்றிருக்கின்றன விழிகள்
தீயும் தேனுமாய் அதே விழிகள்
(21.10.2004)
11

Page 28
தவசஜிதரன்
மீண்டும் தோடை
எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும் எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும் தனலோடும்
கோடை வந்து இறங்கிற்றெம் மண்மீது ԼOնDIւյլջպլք
அக்காலம் எங்கள் வயல்களில் பூதங்களைப் புதைத்திருந்தார்கள் கோடையின் மாரி வானிருந்து பொழியும் கீழ் எம் உயிர் பொசுங்க
உழவு நிலங்களின் உகரந் திரிந்து இகரத்தை இருத்திற்று தன் இடத்தே
இப்படித்தான் வாழ்வின் பொருளை மறந்து போனார் யட்சர் தீவின் யுகபுத்திரர் அநேகரும்
12
 

GramGath Vergrunnm,*h.
பின்னொரு நாளிலோ எவரை நோக்கியும் சீறும் தீக்குழல்கள் தினவொறுத்திருக்கத் திருவுளம் கொண்டதாயும் யட்சர் தீவின் காலப் பிணக்குகளைப் பேசித் தீர்க்கப் பிராயத்தனமென்றும் செவிகளை உராய்ந்து சேதி பரவிற்று
எங்கள் சிறுபெருமூச்சும் செலவீனமாய்க் கழிந்ததக் கணத்தே
இனியும் குருவிக்கூடுகள் கலைக்கப்பட மாட்டாவென குறிகாரன் கூறிப் போனான்
ஆனால் அந்தோ! குறிகாரன் பேச்சும் விடிந்தால் போச்சென்று மீண்டும் மெல்லக் கவிகிறது
கோடை
(11.12.2005)
13

Page 29
தவசஜிதரன்
உதிராத இறகொன்றினால் எங்ங்ணம் நோ உணரும் வானம்? எனினும் உனது குற்றச்சாட்டு அதுவே.
உனக்குள்ள ஒரே பிரச்சனை பறவைகளால் பறக்க முடிகிறது என்பதுதான்.
(12.08.2005)
14

Ge*FH egenesa“)
பெருந்தாய்
இன்னுமா நீங்கள் நம்புகிறீர்கள்?
உங்கள் கைகள் கட்டியெழுப்பிய சுடுகாடுகளில் சுதந்திர தேவிக்கு ஆலயம் அமைக்கலாமென்று,
மனித இதயத்தில் நீங்கள் செய்த மாமிசப் பட்சணத்தை அவளுக்குப் படையல் தரலாமென்று,
வானுக்கும் மண்ணுக்கும் வரம்புகள் வகுக்க வரங்கேட்டுப் பிரார்த்திக்கலாமென்று,
உங்கள் எல்லைகளுக்கு மாத்திரம் தேவியைக் காவல் செய்யக் கோரலாமென்று,
இன்னுமா நீங்கள் நம்புகிறீர்கள்?
கோபுரங் காக்கப் பூதங்களை உபாசிக்கும் உங்களுக்கு
சுதந்திர தேவியின் சூக்குமம் எங்கு புலப்படும்?
(20.07.2005)
S

Page 30
தவ சஜிதரன்
வாழ்வழிதலின் வலி
கொலையுண்டு போவதன் வலியை ஒருகணம் உனக்குள் நிகழ்த்திப் பார்
வன்மம் பீறிடும் நெடிய கைகளுக்குள் நசுங்கி ஒலமின்றி ஒடுங்கிக்கொள்கிற மரணத்தை ஒருமொழி பேச விடு
அது கேட்கக்கூடும் உன்னிடம்: "உனது சகோதரனின் குருதியையும் பருகி ருசிக்க எந்த நாளில் பழகிக் கொண்டாய்?
என்று.
இறுதியாய் ஒன்று சொல்கிறேன்
ஒருவன், ஒருத்தி அல்லது ஒன்று செத்துப்போவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை - அவன்/அவள் /அது எவராலும் கொல்லப்படாத வரை.
(04.08.2005)

கழுகுச் சாபமும் கல்லறைப் பாடல்களும்
கல்லறைகள் குறித்துப் பாடும் கவிதைகளிலேயே நின்காலம் வேகித் தீருமோ என் தாயே?
முடமாக்கப்படும் கிழக்கழுகுகள் ஒவ்வொன்றிலும் முளைத்தெழுகின்றன இறக்கைகள் எங்கிருந்தோ புதிது புதிதாய்
கழுகுகள்உன்னைத் தின்று தீர்ப்பதொன்றில் மட்டுமே தீர்க்கமாயுள்ள கோரக் கழுகுகள் காலச் சுழலனை மீறிப் பிணித்திருக்கும் ஊளைக் கழுகுகள்
நூற்றாண்டுத் தொன்மங்களில் மூவாது நின்று நின் மதலையர் நெஞ்சு நெரிக்கும் இந்த ராட்சதங்களுக்கேன்
இன்னும் எழுப்பப்படவில்லை கல்லறைகள்?
ஒற்றடம் நீவவும் ஒருவரில்லா உனது மேனியில் கழுகுக் கால்கள் பட்ட காயங்கள்தான் எத்தனை? எத்தனை?
இந்தப் பிணி கொன்றுனை மீட்க தனியர் தனியராய்ச் செய்யப்படும் எந்தவங்கள் சாபத்தையன்றி வேறெதை ஈட்டின?
ഋ് കേ

Page 31
தவசஜிதரன்
18
 

பிளவு இடந்த லிவளி)
காலத்தின் முகம் சிதறித் தெறிப்பதென்ன துண்டங்களாய்?
இன்றைய உதயத்தில் தெற்குத் திசைநோக்கி ஒன்றாய்ப் பறக்க நான்கண்ட வெண்ணிற நாரைகள் இரண்டும் நாளை வெவ்வேறு துருவங்களில் தனித்துப் பறத்தலும் நிகழுமோ?
பூச்சுதிர்ந்த வீட்டுச் சுவரில் வளைகோடுகள் வரைந்து ஊர்கிற கறுப்பெறும்புக் கூட்டம் கலையக் காணினும் தாங்கத் திரானியற்றுத் தகிக்கும் நெஞ்சு
தோழர்களே,
நாம் கரங்கோத்து உலவுதற்காய் பரந்து கிடக்கிற மேடுகளை, சமவெளிகளை நிலமடந்தை தன் ஆதி நாள் ஆசீர்வதிப்புக்களை விலகப் பிளப்பது தகுமென்று
நீர் கொள்வதும் துண்டங்களாய்ச் சிதறித் தெறிக்கும் காலத்தையிட்டுக் களித்துச் சிரிப்பதும் எப்படி?
(20.11.2005)
Ge*Fah e-gen'√a“)

Page 32
தவசஜிதரன்
లాలా جسم
நானும் வாழவோ நான் இன்டு?
கடல் காறி உமிழ்கிறது
பொறுமை மீறிப் பொருமி அதிர்கிறது பூமி
எனினுமென்ன?
அடுத்தவர் சிரங்களை அறுப்பதிலேயே தன்னை இருத்திக் கொள்கிறது
நாணமற்ற மனிதம்
(20.07.2005)
20
 
 
 

9rVGath vegrunnmoh
JloLToJUplå JloLitt(ba)QIUplå
இரட்சகர்தம் கைகளின் பிடிதளர இந்த வேலிக் கிடுகுகளுக்குள் விழுந்த நாள்முதலாய் எமதுரதர்காள், உங்களால் மன்னிக்க முடியாத பாவங்கள் பலதையும் இழைத்துள்ளோம் நாம்
ஆனபோதும் பாவப் பல்வகைமை பாலிக்கும் அதிகாரம் உம்மிடம் மட்டுமே உள்ளது தான் எங்கள் பரிதாபம்
(15.08.2005)
21

Page 33
தவசஜிதரன்
மனிதக் குருதி பற்றிய உனது புனைவுகள்
சொல்லிலே இல்லாத அர்த்தங்களைச் சுமந்து கொண்டு வருகிறது உனது நா - செட்டை முளைத்தவொரு நச்சுப் பாம்பினைப் போல
நீ வகுத்த நீதிகளும் விதிகளும் அப்படியே
நேற்று நீ புகட்டிய பாடத்தில் குருதிக்குப் பிறிதாய்ப் பல நிறங்களுண்டென்று மீளவும் சாதித்தாய்
22
 

9rWFaith vergrunnmyth
வெறிநாயின் சோடிக் கண்களை இடுக்கில் செருகி மறைத்துக்கொண்டு சலனமற்ற மொழிகளில், ஆயினும் அழுத்தமாக புறத்தார் உணராப் புன்னகை மலர்த்தி நீயதைச் சொன்னாய்
முடிவிலி நீளங் கொண்டு கோடி முகங்கள் வழியே உனது நா உதிர்க்கும் முழக்கங்கள் எப்படியோ எட்டி விடுகின்றன என்னையும் இன்னும் அநேகரையும்
ஆயினும் உன்மத்தனே,
திசைதோறும் சூழும் கண்ணிரிலும் மூச்சுக் காற்றிலும் கலந்து வாழ்ந்ததில், இதய வேரை உலுக்கும் கணங்களைக் கூடிக் கரைந்ததில் இரத்தத்துக்கு இன்னும்பல நிறங்களுண்டென்று நீ சொல்வதை ஏற்றுக்கொள்ள எப்போதுமே இயன்றதில்லை என்னால்
(2007, 2008)

Page 34
தவசஜிதரன்
= ഞിന്റെ ജഴ്സു ശെമ്ന ബ്രി ജിങ്ങള இரும்பு முகம் பற்றிய பிரத்திவேகக் குறிப்புகள்
எனது உயிரைக் கீறிச் சிதைப்பதான ஆர்ப்பரிப்பில் நீ காறி உமிழ்கிற கரியமில வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் வடுப்படுகின்றன வளித்துணிக்கைகள்
உனது முழக்கம் உருக்கொள்ளத் தொடங்கும்போது இன்னொரு லோகத்தில் பிரசன்னம் கொள்ளும் வரத்தை இச்சித்திருக்கும் என் காதுகள்
எங்கள் வீட்டுச் சுவர்களை முன்னிறுத்தி எல்லைப் பிரகடனம் செய்கிறாய் கிரீடம் புனையாத சக்கரவர்த்தி நீயெனவும் proöT, 6T6060Tusceolushift நினது சேவக குழாத்தைச் சேர்ந்தவர் எனவும்;
24
 

9-MGoh vergrunnarah
கம்பீர மாயை நிறைந்து வழிய வீற்றிருக்கும் உனது பார்வையில் அதீத தன்னிறைவு; ஒப்பிடற்கரிய இடாம்பீகம்; அத்தோடு புலன்முன் தோன்றாப் பொருளாய் அவ்வப்போது வெளிப்படுகிற விகாரம்
சாட்டை வீச்சின் விசையோடு சர்ரென்று கிளம்புமுன் ராஜமொழி ஒவ்வொரு நாளும் பரீட்சிக்கிறது எனது சகிப்புத் தன்மையை
பேதை, அபலை, விதவை, விபசாரி இப்படி ஆண்பாற்சொல் அதிகம் அறியப்படாத அடைமொழிகளில் ஏதோவொன்றுக்குள் அடக்கப்பார்க்கிறாய் என்னை
நானோ எனது மெளனப் பொழுதுகளில் சேமித்து வருகிறேன் நீசபித்துத் திணிக்கும் இருளை விஞ்சி எழுவதற்கான விகாசத்தையும் அந்த நாளில் உன்னிடம் கேட்பதற்காக எண்ணற்ற கேள்விகளையும்
(12.10.2005)
ப 'தினகரன் வாரமஞ்சரியின் "பெண்" பகுதியில் 'தாட்சண்யா' என்னும் பெயரில் நான் எழுதிய சில ஆக்கங்களுள் ஒன்றான மேற்காணும் கவிதை நிஜவாழ்வில் கண்டு பழகிய ஒருவரின் குரலை கவிதைப் படுத்தும் முயற்சியாக எழுதப்பட்டது.
25

Page 35
தவசஜிதரன்
இாற்றுச் சமக்கும் இவிதைகள்
கட்புலனாகாத காற்றின் ஏடுகளில் எழுதப்பட்டிருக்கின்றன. உனக்கான எனது கவிதைகள்.
நெஞ்சோடு வேரோட மறுக்கும் காற்றின் காற்றடங்கள் சுமந்து செல்கின்றன எனது கவிதைகளின் கருவறைகளையும், கல்லறைகளையும்.
கவிதைகளை இப்போதெல்லாம் உணரவன்றி எழுத முடிவதில்லை
இதயங்களால் மாத்திரமே உணரப்பட்ட எங்கள் இருவரதும் ஒருமை பற்றி, ஊடலோடு மட்டுமே முடிந்து போகும் எங்கள் ஸ்நேகம் பற்றி, சொல்ல முயன்றும் தோற்றுப்போகும் இருவருக்கும் பொதுவான வலிகள் பற்றி
ஜனிக்கும் கவிதைகளை.
நீயும் நானும் காற்றிடமே சரணடைய வேண்டியிருக்கிறது,
எனக்கு நீ போலவும்
உனக்கு நான் போலவும் கவிதைகளுக்கு வார்த்தைகள் வசப்பட மறுக்கும் வரையில் நீயும் நானும் காற்றிடமே சரணடைய வேண்டியிருக்கிறது.
(23.02.2005)
26

Go-WKFath Vegannarah
சூரியனைத்தின்றுவிட்டுத் துயிலிகிeற இரவு
உன் விழிப்பார்வையின் ஒளிப்பாதையைத் தொலைத்து விட்டு நட்சத்திரங்கள் இழந்த வானமாய் நான் இப்போது
மலைமுகடுகளில் இறங்கும் முகிலணை போல மெல்லக் கவிகிறது நெஞ்சுள் ஏதோ ஒன்று
பாதித் துயில்கலைந்த பனியிரவில் உன் பெயரை உச்சரிக்க மாத்திரம் குளிரை எதிர்த்து உதடுகள் பிரிந்து மூடுகின்றன
கவிதையின் நிழல்படர்ந்து கருமையுற்ற நின் கூந்தலுமில்லை இங்கு என் ஒளிமுகம் போர்த்தி மோனமுற
மாயமான திசைகளெங்கும்
உனதுருவம் தேடித் திவலைகளாய்க் கலைந்து திரியுது மனசு
சூரியனைத் தின்றுவிட்டுத் துயில்கிற இரவோ இன்னும் நீள்கிறது இரக்கமின்றியே
(O1.10.2005)
27

Page 36
தவசஜிதரன்
உனக்கானதும் மழைகுறித்ததுமான கவிதை
வானின் நிசப்தம் கிழித்து சோவென்று பெய்த மழை ஒய்ந்தாச்சு
பச்சை இலைகளில் குடிபுகுந்துள்ள புள்ளித் துளிகளுக்குள் புதைந்திருக்க வேணும் மழைகொணர்ந்து சேர்ப்பித்த அந்த மெளனம்
தேங்கிக் கிடந்து தியானம் புரிந்த நீர் வடிந்து தீர மீந்து போன நிலத்திட்டுக்களெங்கும் உன்னைக் குறித்த ஓவியக் கோடுகள்
கனவின் வர்ணங்களால் நிறைக்கப்பட்ட உனது புன்னகை: சூழும் வளி அமிழ்தம் சுமக்க நீ பேசிய வார்த்தைகள் இத்தனையும் நிலத்தில் எழுதி நிறுவிப் போயிருந்தது மழை தானும் ஓவியனென
(13.10.2005)
28

Sc'h egmoare
உயிர் இரையும் பொழுதுகள்
நேற்றெறித்த நிலாக்கிரணங்களிலிருந்து உதிர்ந்து வீழ்ந்தது என் கவிதையின் முதல்வரி
gesosomuod (SuméoTTso பிரபை வீசும் உனது கண்களைப் பேச மொழிகொண்டு முடிந்திருக்காது
θεότ(3οστ
வானில் இருந்துன் பாதங்கள் இறங்க நெஞ்சில் ஏந்தி விதிர்த்தும் புல்லாங்குழலொன்றின் துளைகளில் வழியும் கருவம் தோற்றயரும்படி ஒலித்த உன் சலங்கையுள் மரித்தும் நான் முயங்க, மெல்ல நகர்ந்த இரவோடு கரைந்தெங்கோ ஏகிற்று மிச்சக் கவிதை
29

Page 37
தவசஜிதரன்
மாறாதிருக்கக் கடவது இம் மழைக்காலம்
மழைக்காலம் இப்போது
இருண்டு கனத்தும் ஈரமாயும் இருக்கின்றன லயிக்க விரிகிற வானமும் லயித்துத் தொலையுமென் நெஞ்சமும்
பருவம் மாறிச் சுழலும் ஒருநாளில் மழையைப் போலவே என் இனியவளும் பிரிந்து போவாளாம் என்னை
நேற்றுச் சொன்னாள்
காதின் ஒரம் உரசிப் பறந்து
உள்ளே ஆழச் சுரந்து
இற்றைக் கணம் மட்டும் இறப்பின் வலியை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன அதன் ஊமை எதிரொலிகள்
30

9rah verennman
மேலும் கனத்து விம்முது வானம்
அடுத்து நிகழ்வது இடியோ? ஒளியோ? விழும் நீர்த்துளியோ? விழிநீர்த் துளியோ?
மெளனம் அடைகாத்த முட்டை கவிதை பொரித்தது (அன்றேல் பொறித்தது?)
இந்திரர் உலகின் விதிதனை எதிர்த்து இருதயம் உவக்கும் சுயநலத்தோடு பிரார்த்திக்கத் தொடங்குகிறேன் மழைக்காலம் மாறக் கூடாதென
(04.11.2005)
31

Page 38
தவசஜிதரன்
கல்லறைத் தூரம்
நான் நம்புகிறேன் அன்பே, ஈரம் உலராத உதடுகளை ஏமாற்றி விடுதலை எய்தும் உனதொரு சொல், உயிரின் ஆழம் ஊறிக் கசிந்து கிளர்கிற நின் காதல், அவற்றின்வழி நான்ஈனும் கவிதைகள் Lbחט6ט6ד6
பல்லாயிர வருட தூரம் தள்ளிவைக்கக் கூடும் என் கல்லறையை என்று
கோடி நிறங்களில் நீந்தி ஒளிர்கிற வண்ணத்துப் பூச்சியாயும் தாயின் மடியில் தலைசாய்த்து கேசம் கோதிவிடச் சொல்லிக் கெஞ்சுகிற மகவாயும் மாறிப் போகிறேன் உன்னைக் காணாதிருக்கும் தருணங்களிலும் கூட
உனது கண்களில் கருப்பைச் சிலிர்ப்பை நான் உணர்ந்த அந்த நாளில் நீ வானம் முழுவதையும் பூமியின் திசைகள் யாவற்றையும் ஆக்கிரமிக்கத் தொடங்கினாய்
32

9e-ovih vergrunnvah
உன் குரலின் சாயை இழையப் பேசத் தொடங்கிற்று காற்றும்
வேர்களின் வாசகங்களையும் கேட்கிறேன் இப்போது
சொற்களில் இல்லை கவிதைகள் கவிதைகளில் இருப்பன கூட சொற்கள் இல்லை என்றும் கண்டேன்
முடிவிலியின் பிம்பங்களாய் இருக்கிறாய் நீ
உன்னோடு உயிர்கலந்த காரணந்தொட்டு நான் நம்புகிறேன் அன்பே,
6T60TT6) பல்லாயிர வருட தூரம் தள்ளிவைக்க இயலும் என் கல்லறையை என்று
(20.11.2005)
33

Page 39
தவசஜிதரன்
விமாழிவயப்படாதன முடிuலிதலி
உயிரை ஆழ அமிழ்த்திச் சுடுகிற பனிக்கோளம் இருதயத்துள் இறங்கி உருள்கிறது நேற்று முதலாய்
தோல்வியை வேண்டி நான்செய்த யுத்தத்தில் நினைத்தபடி நீயே வென்றாய்
உன் புருவ நதிகள் ஒடித் தணியும் நெற்றிப் பொட்டிலோ காற்றுக்குச் சாமரம் வீசும் இமைகளுக்குள் பதுங்கியிருக்கிற நின் கண்களிலோ உறைந்து சொட்டுது என் உயிர்
ஒற்றைக் கணப்பொழுதை அணுக்கமாய்ப் பகுத்து உதிர்த்திருந்தாய் உனது புன்னகையோடு சிதறிய சிதிலங்கள் ஒவ்வொன்றினின்றும் ஒருகோடி யுகங்கள் தோன்றி மெதுவாய் - அதி மெதுவாய் நகர்கின்றன இப்போது
இந்தச் சுழலின் இடைச்சிக்கி உயிர்தீர்வதொன்றே வாழ்வெனில் உன் மடியில் தலைசாய்த்து நான் மெல்லச் சாவதும் எக்கணத்தில்?
(26.10.2005)
34

9 (,
இரவின் கவிதை முகம் அல்லது பிரிவுத்துவர்
கவிதை முகம் பூண்டு உருச் சேர்கிறது இரவு
நட்சத்திரங்கள் மீது அசூயை பொங்க கறுப்புத் தாளின் ஒளிக்கோடுகளாய் பறக்கின்றன மின்மினிகள்
உன் சாய்வுச் சுமைக்கேங்கி என் தோள்கள் தவிக்க நெஞ்சுள் கணந்தோறும் விரிகிறது ஒரு மலர்க்காடு
ஒவ்வோர் அணுவும் அதிர்வுண்டு வளியின் மெளனம் விலக்க பிறக்கிறது சோகம் சொட்டும் இரவின் பாடல்
[55}29ک கனாக்கூடு கலைக்கப்பட்ட அன்றில் பறவைகளில் ஒன்று நான் என்றா பாடுது?
(22.12.2005)
35

Page 40
தவசஜிதரன்
மறுதலிப்பு
நீயெனது வானில் நிகழ்த்திப் போன
பிரளயச் சுவடுகளை
வேறு பிரித்துப் பார்க்கிறேன் கார்கால மேகங்களெங்கும் சாம்பலாய்ப் பூத்துக்கிடக்கின்றன அவை
அன்பே,
நீ என்னை மறுத்துப் போகும் ரணங்களில் இதயம் தன்னைச் சிலுவையில் அறைந்து கொள்கிறது கடினப்பட்டுக் கழியும் ஒவ்வொரு கணங்களிலும் பலமுறை இறந்து போனதான பிரமைகள்
எனது வாழ்தலைப் பற்றிய பிரக்ஞையும் உன்னைப் பற்றிய பொழுதுகளும் இரண்டன்றி ஒன்றாய்
36

9rah verminarh
ஓவியக் கனவுகள் உடைந்து விட்டன வெறித்த வெளியில் விழியின்றித் திரியுமோர் பறவையைப் போல என் கனவின் தடங்கள் நீயின்றி வாழ்வதற்கில்லையென்று எழுதும் போது திசைமாறி நடைபயிலும் விரல்கள்
எந்தப் புள்ளியில் நனைந்து தணியுமென் நெஞ்சம்? வற்றிப் போன சமுத்திரத்தில் அக்கினித் தகிப்போடு அமிழ்ந்து போகும் அந்திச் சூரியனாய் உனது விழிகளை நோக்கித் தவமிருக்கிறது இதயம்
சிதறுண்டு போகும் இதயச் சிதிலங்களை இருண்ட அஸ்தமனத்தில் எங்குபோய்த் தேடுவது இனி?
(30.01.2005)
37

Page 41
தவசஜிதரன்
99Peyó
உனது நெற்றியில் இதழ்கள் பதிகையில் ஏனென் மார்பு விம்மி முலைகளாய்ச் சுரக்கவில்லை?
ஆணாய்ப் பிறத்தலில் அத்தனை பாவமா?
எனது பாவங்களை மறக்கவும் மன்னிக்கவும் உயிருக்குக் கூட முடியாத போது உனக்கு மட்டுமே இயல்கிறது
உயிரென்றும் எங்ங்ணம் இனியழைப்பேன் உனை?
அன்பே, உனக்கு நான் தாயாகவும் எனக்கு நீ மகவாகவும் அன்றேல் எனக்கு நீ தாயாகவும் உனக்கு நான் மகவாகவும் நம் வாழ்வு சித்தித்திருக்குமேல்.
(22.07.2005)
38

Se“ Fah venoa“h
வரம்
நிலவு நொருங்கி உடைகிறது அன்பே
கண்களின் ஒடை நீர்த்துக் கன்ன மேடுகள் உப்பிக் காய காற்றில் ஈரக் கனதி பெருகிற்று
ஜன்மாந்திரங்களாய்க் கோத்துப் பிணைந்திருந்த கைகள் நமதென்றும்
ஒரு முடிச்சுள் உறைவன நம்மிருவர் உயிர்களென்றும் நம்ப மறுக்கிறாய் நீ
துயரம் துளும்பும் பாடலொன்றை இசைத்தபடியே அலைகிறது பேரிரவு
நீ அருகிலில்லாத இந்த இரவையும்
தொடரும் சுவடுகள் உயிர் கொளுத்தும் உனது புன்னகைக்கு உண்டென்பதை அறிவதில்லை நீ என் ஜீவகளையை உன்னோடு விட்டுப் பிரிவதில் இங்கு எழும் இப் பிரளயம் பற்றிப் புரிவதுமில்லை
நாளையும் நீ வருவாய் - சூரியனின் ஒளித்துமிகள் சிலகோடி ஒன்றுற நைத்துப் பிழிந்த விழிகளுடனும் இரட்டை ஜீவகளையுடனும்
அன்றேனும் நீ சொல்வாயா அன்பே நான் இறைஞ்சும் அந்த வார்த்தைகளை?
(28.12.2005)
39

Page 42
தவசஜிதரன்
ஒலPயின் மழலைகள்
வீதி உலவி மீளுமென் விழிகளில் நண்பர்காள், உம்மைச் சந்தித்த கணங்கள் தோறும் சனனித்தன
ஒளியின் மழலைகள்
கடலெம்மை விழுங்கிற்று, வெள்ளமாய் நீரும் வெகுண்டெழுந்து காற்றுங் கூட விரோதித்தன மனுக்குலத்தை. தெய்வங்கள் இம்முறை தேரேறி வரவில்லை வானிருந்து உய்விக்கும் உபாயம் உரைக்கவில்லை அவை. எனினும் நண்பர்காள், உம்போல்வார் தம்மைக் கானுந் தோறும் உருக்கொள்ளும் ஒளியின் மழலைகள்
40
 

9് ഠേ
ஆறாம் அறிவு தளர்ந்து
LD65ft
தம்மை மனிதராய் உணர மறுத்தலும் மறத்தலும் மரத்தலும் உண்டிங்கு.
இருள்வெளியில் இடிவிழுந்த குருவிக் கூடும்
எங்கள் தேசமும் எங்ங்ணம் தாங்குமிதை?
கப்பிய காரிருள் கலைக்கும் முன்னம் தீட்டிய தூரிகையில் குருதிக்கறைகள்
எங்கள் வானில் எம்மைக் குருடாக்கி, திரை மறைத்து
ஒவ்வொரு நாளும் ஒளியின் கருச்சிதைவு
எனினும் நண்பர்காள், உம்போல்வார் தம்மைக் கானுந் தோறும் உருக்கொள்ளும் ஒளியின் மழலைகள்
குறிப்பு: வாழ்வில் நான் கண்ட சில உண்மை மனிதர்களுக்கு இக்கவிதை
41

Page 43
தவசஜிதரன்
grrrou fogogo
ஒரு போர்வீரனின் நாட்குறிப்பிலிருந்து
பெயர்க்கப் பட்டவை:
அன்றைய தினம் அடைமழையின் அலறல்கள் எங்கும்.
காட்டாறு பெருகிக் கரைபுரண்டோடிற்று கண்முன்னே.
எனக்கு நீந்தத் தெரியாதென்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது
மாற்றலர் பாசறையின் ரகசியங்களை மறுமுனையில் என் நாட்டவர் அறியாது போனால்
ஒரிரு இரவுகளில் நாம் அடிமைகளாகிப் போகலாம்.
எனது வாழ்வின் இருளுக்குள் உற்றவர் வாழ்வு ஒளிந்து கொண்டது
காட்சி சூன்யப் பெருவெளி.
கண்களை மூடிக் குதித்துக் கைகளை அடிக்கத் தொடங்கினேன்
ஓ! பாதி ஆறு தாண்டியாயிற்று அப்போதுதான் அறிவுப் புலன் உணர்ந்து கொண்டது, எனக்கும் நீந்தத் தெரியுமென்று.
(16.11.2004)
42