கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சு. வே. சீனிவாசகம் நினைவுச் சுவடுகள்

Page 1


Page 2

Jr. (Ea). சீனிவாசகம் நினைவுச் சுவடுகள் 1909 - 1992
சு. வே. சீனிவாசகம் நினைவுக்குழு வெளியீடு
O3-01-1993

Page 3
Su. Ve. Se envasagam Ninaivu Suvadugal Su. Ve. Seenivasalgam Memorial Committee
122, Main Street, Sunnagam, Srilanka Published by Su. Ve. Seenivasagam
Memorial Committee. on the occassien of the First Death Anniversary by South Asian Books 6|l, Thayar Sahib II Lane
Madras-600 002.
சு. வே. சீனிவாசகம் நினைவுச் சுவடுகள் து. வே. சீனிவாசகம் நினைவுக் குழு
122, பிரதான வீதி, சுன்னாகம், இலங்கை. அச்சு சூர்யா அச்சகம் சென்னை-17 வெளியீடு : சு. வே. சீனிவாசகம் அவர்களின் முதலாம் வருட நினைவு நாளில் சு. வே. சீனிவாசகம் நினைவுக் குழுவின் 函顯*蘭「甚_煎*曇 சவுத் ஏசியன் புக்ஸ் 61. தாயார் சாகிப் 2ஆவது சந்து சென்னை-600 002. ரூ. 17.00

மனிதனை மனிதனாக நேசித்து மக்கள் பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்த முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளி வைத்தியக் கலாநிதி தோழர் சு. வே. சீனிவாசகம் மறைவிற்கு
எமது புரட்சிகர அஞ்சலி

Page 4

இலங்கை வாலிபர் சங்க சம்மேளனத்தின் 5ஆவது வடபிரதேச மாநாட்டில் தோழர் சீனிவாசகம் கட்சியின் சார்பாக உரையாற்றுகிறார். அவ்வுரை சிங்களத்தில் மொழி பெயர்க்கப்படுகிறது.

Page 5
ræk
1964ஆம் ஆண்டின் பிரமாண்டமான மேதினக் கூட்ட மேடையில் இடமிருந்து நான்காவதாக அ மர்திருக்கிறார்.
 

1987ஆம் ஆண்டு காங்கேசன்துறை வாலிப மாநாட்டிற்குப் பின் இடம் பெற்ற பன்னிரண்டு மைல் தூர ஊர்வலம் யாழ் நகர் நோக்கிச் சென்ற போது அதற்குத் தலைமை தாங்கிய கட்சித் தலைவர்களில் ஒருவராக தோழர் சீனிவாசகம் ஊர்தியில் காணப்படுகின்றார்.

Page 6
தோழர் சீனிவாசகம் மிகவும் முதுமை அடைந்த நிலையில் இறுதியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சியான 29.11.1989இல் மறைந்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
1967ஆம் ஆண்டில் இடம் பெற்ற காங்கேசன்துறை வாலிபர் மாநாட்டினை கொடியேற்றி ஆரம்பித்து வைக்கின்றார் தோழர் சீனிவாசகம்,
 
 

நினைவுச் சுவடுகள் பற்றி
நினைவுக் குழுவினர்
மறைந்த வைத்தியக் கலாநிதியும், முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளியும் பொது வாழ்விற்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவருமான தோழர் சு. வே. சீனிவாசகத்தின் நினைவாக இம்மலரினை உங்கள் முன் வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கடந்த 3-01-92 அன்று அவர் இயற்கை எய்தினார். அவரது இறப்பும் இறுதி நிகழ்வுகளும் மக்களால் உடன் அறிந்து கொள்ள முடியவில்லை. இன்றைய யுத்த சூழலும், மக்கள் இடம் பெயர்ந்து அல்லலுறும் நிலையும் அவர்களில் ஒருவ ராக தோழர் சீனிவா சரும் இருந்து வந்த காரணத்தினால் அவரது இறப்புச் செய்தி காலம் கடந்தே சகல மக்களுக் கும் தெரிய வந்தது. அதனால் அவர் நேசித்து சேவை செய்த மக்கள், கட்சித் தோழர்கள், அவரது வைத்திய நண்பர்கள் , உறவினர்கள், மற்றும் ஏனையோரும் அவரது இறுதி நிகழ்வுகளில் பெருமளவிற்குக் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே தனது மதிப்பிற்கும் அன்புக்கும் தோழமைக்கும் உரிய தலைவருக்கு உரிய அஞ்சலியைத் தெரிவிக்கும் வகையில் நினைவு அஞ்சலி மலர் வெளியிட வேண்டும் என்ற முடிவின் செயல் விளைவே இந் நூலாகும்.
இன்றைய வடநிலத்து நிலைமைகளின் தன்மைகளை யாவரும் அறிவர். அல்லலும் அவலமும் நிறைந்த சூழலி
听一l

Page 7
2
லும் மனிதத்துவ நம்பிக்கையுடன் வாழ்ந் துவரும் மக்கள் மத்தியில் இருந்து அவர்களது முழு ஒத்துழைப்புடன் இம் மலர் வெளிவருகின்றது. தமது தலைவர் ஒருவருக்கு தகுதி யான இறுதி மரியாதையும் புகழ் அஞ்சலியும் செலுத்தும் வகையிலேயே இம்மலரினை மக்கள் மத்தியில் இருந்து தொகுத்து வெளியிடுகின்றோம். இம்மலருக்கு தமது அஞ்சலிச் செய்திகள், நினைவுக் கவிதை, நினைவுச் சிறு கதை ஆகியவற்றைத் தந்துதவிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துகின்றோம். அதேபோன்று இம்மலர் உருவாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து தம்மால் முடிந்தளவு நிதி உதவி வழங்கிய தோழர்கள், நண்பர்கள், உறவினர், பிள்ளைகள் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். மேலும் இந்நினைவு மலரினை உருவாக்க பல சிரமங்கள் மத்தியில் செயல்பட்டு நின்ற நினைவு மலர் தயாரிப்பு குழுவினருக்கு நன்றி கூறியே தீரவேண்டும். இந்நூல் உருவகம் பெற்று அழகுடன் திகழ்வதற்குத் தம் உழைப்பைத் தந்து உதவிய அச்சக ஊழியர்கள், அதனோடு இணைந்த சகலருக்கும் நமது அன்பு கலந்த நன்றிகள்.
வணக்கம்
122. பிரதான வீதி சு. வே. சீனிவாசகம் சுன்னாகம் நினைவுக் குழுவினர் இலங்கை
30-12-92

தோழர் சீனிவாசகம் வாழ்க்கைக் குறிப்புகள்
முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளியும், வைத்தியக் கலாநிதியும் பொது வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்தவரு மான தோழர் சு. வே. சீனிவாசகம் கடந்த 03-01-1992 அன்று தனது எண்பத்தி மூன்றாவது வயதில் இயற்கை எய்தினார். அரசியலில் உறுதி மிக்க மார்க்சிய லெனினிய வாதியாகவும், வைத்தியத் துறையில் முன்னோடியான மக்கள் வைத்தியராகவும், பொது வாழ்வில் நேர்மையான மக்கள் தொண்டனாகவும் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு வந்த தோழர் சீனிவாசகம் தனது இறுதி மூச்சு வரை அத்தகைய முன்னுதாரண வாழ்வுப் பயணத் தில் அடிபிசகாது வாழ்ந்து மறைந்தார்.
தோழர் சீனிவாசகம் 12-09-1909 காங்கேசன் துறை தையிட்டியில் தபால் ஊழியரான சுப்பர் வேலுப்பிள்ளைட் வள்ளிப்பிள்ளைக்கு இரண்டாவது மகனாகப் t5so söSrf. ஆரம்ப நடுத்தரக் கல்விக்குப் பின் மிக இளமைப் பருவத் தின் நாட்டத்திற்கிணங்க அன்றைய பிரித்தானிய ஆட்சி யாளர்கள் அமைத்திருந்த தொண்டர் பட்ைடி சேர்ந்து ஒரு வருடப் பயிற்சியும் முடித்தார். ஆனால் தாய் தந்தை யரின் வற்புறுத்தலுக்கினங்க தொடர்ந்தும் அப்படையில் இருப்பதை கைவிட்டு, அரசாங்கத்தின் பகிரங்க வேலைப் பகுதியில் ஓர் மேற்பார்வையாளராகச் சேர்ந்தார். கொழும்பு புத்தளம் பிரதேசங்களில் வீதி அமைப்பு வேை களில் மேற்பார்வையாளராக இருந்த காலத்தில்

Page 8
4
அவருக்கு சுவாத நோய் ஏற்பட்டது. பல நாட்கள் வைத்தியம் செய்த பின்பும் அந்நோய் முற்றாகக் குணமடையவில்லை. இதனால் ஆயுள் வேத வைத்தியரின் மூலம் அந்நோய்க்கு வைத்தியம் பெறும்படி அவருக்கு ஆலோசனை கூறப்பட்டது.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் லங்கா ஆயுள் வேதக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு திறம்படி இயங்கி வந்தது. அதன் அதிபராக ஓர் இந்தியரான சிறி நிவாச ஐயங்கார் இருந்து வத்தார். சீனிவாசகத்திற்கு ஏற்பட்ட சுவாத நோய்க்கு அதிபர் ஐயங்கார் வைத்தியம் செய்து வந்தார் . நீண்ட நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்த சுவாத நோய் விரைவில் குணமடைந்தது. இதன் மூலம் சீனிவாச கத்திற்கு ஆயுள் வேத வைத்தியத்தில் ஒரு வகையான பற்றும் அதிபர் ஐயங்கார் மீது அதிக மதிப்பும் ஏற்பட்டது. இதன் விளைவாக சீனிவாசகம் ஆயுள்வேத வைத்தியத்தை கற்பதற்கு முன்வந்தார். 1933ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் லங்கா ஆயுள் வேதக் கல்லூரியில் மாணவ ராகச் சேர்ந்த அவர் நான்கு ஆண்டுகளுக்குப் பின் 1937இல் தனது படிப்பை முடித்துப் பட்டமும் பெற்றுக் கொண்டார். அதன்பின் அதே வைத்தியக் கல்வியை மேலும் விருத்தி செய்யும் நோக்குடன் இந்தியா சென்றார். மதுரையில் புகழ் பெற்ற வைத்தியரான ராமவாரியார் என்ற வைத்தயரின் வழிகாட்டலின் கீழ் ஆயுள் வேதக் கல்வியைத் தொடர்ந்தார். இக்காலத்தில் ஈ. வே. ரர். பெரியாரின் கூட்டங்களையும், அவரது நடவடிக்கைகளையும் அவதானிக்கும் ஆர்வம் ஏற்பட்டது ஆனால் இவரது வைத்தியக் கல்வி வழிகாட்டியான ராமவாரியார் பெரும் காந்தியவாதி. அதனால் காந்தியின் வழிநின்ற இயக்கங்களையே அதிகம் அக்கறையுடன் நாடும்படி சீனிவாசகத்திற்கு வழி காட்டப்பட்டது. இதனால் சீனிவாசகம் காந்தியத்தின் சில கூறுகளை மனப்பூர்வமாக நடைமுறை ரீதியில் ஏற்றுக் கொண்டார்.

அவற்றுள் பிரதானமானது எளிமையான வாழ்க்கை முறை. அதில் ஒன்றாக கதர் உடை. அணிந்தமை. தனது இறுதிக் காலம் வரை அந்த உடையையே அணிந்து வந்தார். மேலும் சாதி முறையை எதிர்த்தல், மிருக பலி எதிர்ப்பு, ஏழை மக்களுக்கு சேவை செய்தல், சுய நலமின்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஒரு வருடக் கல்வியை முடித்துக் கொண்டு சீனிவாசகம் 1938ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வந்தார்.
இந்தியாவில் இருந்து போதிய மருத்துவக் கல்வி அறிவுடனும் காந்தியக் கொள்கையுடனும் நாடு திரும்பிய சீனிவாசகம் தனது சொந்த ஊரான தையிட்டிக் கிராமத் தில் "சிறிணிவாச மருத்துவமனை” என்ற பெயரில் மருத்துவத் தொழிலை ஆரம்பித்தார். அதேவேளை லங்கா ஆயுள் வேதக் கல்லூரியில் ஆசிரியராகவும் பணி யாற்றத் தொடங்கினார். அத்துடன் "சிறிகிம்ஸ்” மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை பெருமுயற்சியுடன் ஆரம் பித்தார். ஆயினும் போதிய முதலீடு இன்மையால் அதனை மூட நேரிட்டது. சீனிவாசகத்தின் மருத்துவத் துறைப் பிரவேசமும் மருத்துவமனைத் திறப்பும் அவற் றுடன் அவரது சமூக நலக் கருத்துக்களும் மக்கள் மத்தியில் விரைவான ஆரம்ப அறிமுகத்தை ஏற்படுத்த ஆரம்பித்தன. இதனால் பழமையும், அதன் அடிப்படை, யில் அமைந்த யாழ்ப்பாணக் கிராமிய சமூக வாழ்விலும் ஊறி நின்ற காங்கேசன்துறை-தையிட்டி-மயிலிட்டிபலாலி கிராமங்களில் அவரைப் பற்றிய ஒருவிதக் கருத்து நிலை ஏற்படலாயிற்று. மருத்துவமனையில் சீனிவாசகம் சாதி சமயம் பாராது சமத்துவமான வைத்தியத்தைச் செய்ய ஆரம்பித்ததுடன் இலவச மருத்துவத்தையும் செய்து வந்தார். இதனால் பாரம்பரிய உயர்சாதி வைத்தியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அவர் காந்தியவாதியாக இருந்த காரணத்தால், சாதி முறையை நிராகரித்து நின்றதுடன்,

Page 9
6
ஆலயங்களில் மிருக பலி இடம் பெறுவதை வன்மையாக எதிர்த்தும் வந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்டுக் கடா வெட்டும் வேள்வி இடம் பெற்ற இடத்திற்குச் சென்று தனது கையைக் கொடுத்து அதனையும் சேர்த்து வெட் டும்படி கேட்டுக் கொண்ட நிகழ்ச்சி அப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சைக்குரிய சம்பவமாகி இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். இவ்வாறு நாற்பதுகளின் முற்கூறுவரை சீனிவாசகம் ஓர் காந்தியவாதியாகவே செயல்பட்டு வந்தார்.
1943ஆம் ஆண்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோழர் மு. கார்த்திகேசன் கட்சி வேலைகளை முன்னெடுப்பதற் காக 1945இல் யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். அக்காலத்தில் யாழ். விக்டோரியா வீதியில் கார்த்தி கேசன் வாடகைக்கு இருந்த வீட்டிலிருந்தே கட்சியின் ஆரம்ப வேலைகள் இடம்பெற்றன. அத்துடன் யாழ். புகையிரத நிலையத்தின் முன்பாக இருந்த திரு. கதிரேசு வின் தேனீர்க் கடைதான் அன்று கார்த்திகேசனுடன் தொடர்புள்ளவர்கள் சந்தித்து கலந்து உரையாடும் இட ம்ாகவும் அமைந்திருந்தது. கதிரே சுவின் மூத்த மகன் கார்த்திகேசனுடன் மிகவும் நெருக்கமாக நின்று அரசியல் வேலைகளில் ஈடுபட்ட ஒருவராகவும் இருந்தார். இக் காலத்திலேயே சீனிவாசகம் ஆயுள்வேத வைத்தியத் தொழில் ஆரம்பித்து பணிபுரிவதற்காக நாளாந்தம் யாழ் நகருக்கு வந்து சென்றார். அச்சந்தர்ப்பத்திலேயே மு. கார்த்திகேசனின் தொடர்பு சீனிவாசகத்திற்கு ஏற்பட லாயிற்று. அதனால் காந் தீயவாதியாக இருந்த சீனிவாச கம் விரைவாகவே கம்யூனிசவாதியாக மாற்றமடைந்தார். வைத்தியத் துறையுடன் தீவிர அரசியல் கருத்துக்களிலும், வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித் தார். யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஆரம்பக் குழுவில் அவரும் ஒருவராகினார். தோழர் மு. கார்த்தி கேசன், சு. வே. சீனிவாசகம், ஏ. கே. கந்தையா,

எம். ஏ. காதர், ராமசாமி ஐயர், எம். சி. சுப்பிரமணியம், க. மகாலிங்கம் ஆகியோரை ஆரம்ப உறுப்பினர்களாகக் கொண்டே அன்று கம்யூனிஸ்ட் கட்சி வடபகுதியில் ஆரம் பிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து காந்தீயவாதியாக வந்த தோழர் சீனிவாசகம் கம்யூனிசவாதியாகி தனது கட்சியின் கொள்கைகளுக்கிணங்க செயல்படுவதில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வந்தார். அவர் கதர் ஆடையைத் தொடர்ந் தார். அத்துடன் சிகப்பு "மப்ளர்" கழுத்தில் அணிந்திருப் பார். குளிர் காலங்களில் சிகப்பு "சுவற்றர்" அணிந் திருப்பார். தூய வெள்ளைக் கதராடையும் சிகப்பு மப்ள ரும் தோழர் சீனிவாசகத்தை ஒரு கம்யூனிஸ்ட்டின் எளிமையான வாழ்விற்கும் கடுமையான மக்கள் தொண் டிற்கும் ஓர் சின்னமாகி காட்சி கொடுத்து நின்றது.
தோழர் சீனிவாசகம் வைத்தியத் தொழில், அரசியல் பொது வாழ்வு ஆகிய மும்முனைகளிலும் ஓய்வின்றி, தன் பணி செய்து வந்தவர். 1947ஆம் ஆண்டு மயிலிட்டிக் கிராம சபைக்கு தேர்தல் இடம் பெற்றது. அத்தேர்தலில் தையிட்டி வட்டாரத்திற்கான கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தோழர் சீனிவாசகம் நிறுத்தப்பட்டார். இன்றைய நிலையில் கிராமசபை போன்ற தேர்தல் மிகச் சிறிய விடயம். ஆனால் அன்றைய சூழல் மிகவும் வித்தியாசமானது. உடையார் , மணியகாரர், விதானமார் போன்றவர்களின் ஆதிக்கம் நிறைந்த காலம். சாதாரண மக்களை அவர்கள் ஆட்டிப் படைத்து அதிகாரம் செலுத்தி வந்த நிலமை. சாதி அமைப்பின் சகல கூறு களும் இறுகி நின்ற நேரம், மனிதர்களில் கீழ் நிலை யில் உள்ளவர்களை மந்தைகளாக நினைத்து நடத்தப் பட்ட நிலை. இத்தகைய சூழலில் ஒரு சாதாரண வர்க்க சூழலில் இருந்து வந்த ஒருவர் அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் நிற்பது என்பது ஒரு சிறிய விடயமல்ல. ஒரு போராட்ட நெஞ்சுறுதி மிக்க

Page 10
8
ஒருவராலேயே அவ்வாறு நிற்க முடியும். தோழர் சீனிவாசகம் துணிவுடன் வேட்பாளராக நின்றார். அதே வேளை யூ. என். பி. கட்சியின் சார்பிலும் உயர்குலத் தினர் ஒரு வேட்பாளரை நிறுத்தினர். சீனிவாசகத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் ஊழியர் களும் பிரசாரம் செய்தனர். யூ. என், பி. வேட்பாளர் சார்பாக அன்றைய அமைச்சர் திரு. சு. நடேசபிள்ளை தலைமையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப் போதைய தேர்தல் முறையின் கீழ் நிறப் பெட்டிகளிலே ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும். அதன்படி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சீனிவாசகத்திற்கு சிகப்புப் பெட்டியும், யூ. என். பி. வேட்பாளருக்கு பச்சை பெட்டியும் ஒதுக்கப்பட்டது. அத்தேர்தலில் தோழர் சீனிவாசகம் பெரும்பான்மை வாக்குகளால் மயிலிட்டி கிராம சபைக்கு தையிட்டி வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். இவரது வெற்றி அதிகாரத்தில் உள்ள வர்களுக்கும், ஆதிக்கம் செலுத்தி வந்த உடையார் பகுதி யினருக்கும் பலத்த அடியாக அமைந்தது. அதேவேளை சாதாரண உழைக்கும் மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கும் ஒரு நம்பிக்கையாகவும் இருந்தது.
மயிலிட்டி கிராம சபையின் தலைவர் தெரிவின்போது கடற்தொழிலாளர் சமூகப் பிரதிநிதிக்கே கட்சியின் தீர்மானப்படி தனது வாக்கை அளித்தார். இது ஆதிக்கப் பரம்பரையினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய போதிலும் தனது நிலையில் சீனிவாசகம் விட்டுக் கொடுத்தாரில்லை. அக்காலத்தில் தையிட்டி, மயிலிட்டி வறுத்தலை விளான் பகுதிகளில் கிணற்றுப் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாகும். ஆழத்தில் கிணறு வெட்ட வேண்டியிருந்ததால் அதனை மிகுந்த பணச் செலவில் எல்லோராலும் வெட்ட முடியாது. அடுத்த பிரச்சினை வெட்டப்பட்ட கிணறுகள் உயர்சாதியினருடையதாக இருந்த காரணத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவற்றில் சமத்துவமாக தண்ணிர் எடுக்க முடியாது. தமது தண்ணிர்

9
தேவைக்கு உயர்சாதியினரின் கிணறுகளுக்குச் சென்று: யாராவது உயர்சாதியினர் வந்து தண்ணிர் எடுத்துக் கொடுக்கும் வரை மணிக்கணக்கில் அவர்கள் காத்திருக்க
வேண்டும். இக்கொடுமைதனை அவதானித்த கட்சியும்,
தோழர் சீனிவாசகமும் மயிலிட்டி கிராமசபை மூலம்
அரசாங்கச் செலவில் மூன்று கிணறுகள் வெட்டும்
பிரேரணையை சபையில் சில உறுப்பினர்களின் ஆதா
வுடன் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவை தாழ்த் தப்பட்ட பின் தங்கிய மக்களுக்கானவையாக அமைந்தன.
ஒன்று தையிட்டி முங்கலை என்ற இடத்திலும், இரண்டா
வது வறுத்தலை விளான் மலவத்தை என்ற இடத்திலும் மூன்றாவது கிணறு மயிலிட்டியிலும் வெட்டப்பட்டன.
கிணறுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைப்பதைத் தடுக்க உடையார் பகுதியினர் அன்று பல திரை மறைவு
வேலைகளைச் செய்த போதிலும் எடுத்த காரியத்தை இறுதிவரை செய்து முடித்து அம்மக்கள் அனுபவித்த தண்ணிர் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதில்
தோழர் சீனிவாசகம் முன்னணிப் போராட்டப் பணி யாற்றினார்.
மேலும் மயிலிட்டிக் கிராம சபையில் தோழர் சீனிவாசகம் அங்கம் பெற்று இருந்த காலத்தில் விவசாயி களின் சார்பாக பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டும் வந்தார். உதாரணமாக நாற்பதுகளின் ஆரம்பத்தில் அன்றைய சட்டசபையில் விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்டு வந்த அடமான வரி நீக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பின்பும் பழைய உடையார்மார் அவ்வரியைத் தொடர்ந்தும் விவசாயிகளிடம் இருந்து அறவிடுவதில் விடாப்பிடியாக விருந்து வந்தனர். இதனை எதிர்த்து விவசாயிகள் சார்பான இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர் தோழர் சீனிவாசகம். அதில் வெற்றி பெறவும் செய்தார்.

Page 11
O
மேலும் விவசாயிகளின் நலனுக்காக 1952இல் ஐக்கிய விளைபொருள் சங்கத்தை உருவாக்கி அதன் தலைவராக இருந்து கிராமிய விவசாயிகளின் உற்பத்திகளை இலகு -வில் விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில் செயல்பட் டார். அதற்குரிய சிறந்த கட்டிடமாக பளை-வீமன்காமத் தின் வடக்குப் பகுதியில் கட்டிடமொன்று திறந்து வைக்கப்பட்டது. இன்றும் அக்கட்டிடம் தோழர் சீனிவாச கத்தை நினைவுபடுத்தி நிற்பதனைக் காணலாம்.
நாற்பதுகளின் பிற்பகுதியிலே தோழர் சீனிவாசகம் அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனது வைத்தியத் தொழிலுடன், கட்சியின் பிரசாரப் பணியிலும் ஈடுபட்டு வந்தார். அதிகாலையில் வீட்டை விட்டுப் புறப் பட்டால் இரவு பன்னிரெண்டு மணியளவில்தான் அவர் வீடு திரும்புவார் என்பதை அவரது துணைவியார் நினைவுபடுத்துவார். வீட்டுப் பிரச்சினை, நிர்வாகம் என்பவற்றை விட நாடு, மக்கள், ஊர், சேவை என்ப வற்றையே தோழர் சீனிவாசகம் தனது முக்கிய கடமை களாகக் கொண்டு இயங்கியவர்.
1948ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து தோழர் ப. ஜீவானந்தம் இலங்கைக்கு தலைமறைவாக வந்திருந் தார். அக்காலத்தில் வடக்குக் கிழக்கில் அவரை வைத்து கம்யூனிஸ்ட் கட்சியால் பல பிரசாரக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. சிறந்த பேச்சாளரும் தீவிரமான சமூக மாற்றக் கருத்துக்களைப் பரப்புவதில் முன்னின்ற இந்தியக் கம்யூ னிஸ்ட் தலைவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அதனால் அவரை அழைத்து கூட்டம் நடத்துவதே ஒரு வகைப் போராட்டம் என்றே கூற வேண்டும். ஏனெனில் அன்றைய அரசும், ஆண்ட பரம்பரையினரும் அதற்கு எதிர்ப்புக் காட்டி வந்தனர். தோழர் சீனிவாசகம் முன்னின்று கட்சித் தோழர்களுடன் இணைந்து பலத்த எதிர்ப்புகள் மத்தியில் காங்கேசன்துறை-தையிட்டியில்

il
ஜீவானந்தத்தின் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி னார். அக்கூட்டத்தின் பயனாக பல இளைஞர்கள் கம்யூ னிஸ்ட் கட்சியின் பக்கம் வரலாயினர். அவர்களில் சிலர் பின் நாட்களில் தோழர் சீனிவாசகத்தின் நெருங்கிய கட்சி தோழர்களாக இருந்து இறுதிவரை செயல்படவும் செய்த னர், என்பதுவும் குறிப்பிடத் தக்கதாகும்.
சகலருக்கும் கல்விக்கு முதலிடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த அவர், அன்றைய பாடசாலை களில் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு சமத்துவக் கல்வி எட்டாக் கனியாக இருந்து வந்த நிலைக்கு எதிராக எதிர்க் குரல் கொடுத்தார். தொடர்ச்சியாக, அவரும் கட்சி உறுப்பினர்களும் எடுத்த நடவடிக்கைகளினால் காங்கேசன்துறையின் பெரும் பாடசாலை முதல், கிராமிய சிறு பாடசாலைகள் வரை சமத்துவக் கல்விக்கான நிலை உருவாக்கப்பட்டது.
இதேபோன்றே அப்பகுதிகளில் சனசமூக நிலையங் களை உருவாக்குவதில் தனது பங்கினை ஆற்றினார் கலைமகள் சனசமூக நிலையத்தின் உருவாக்கத்திலும், அதனை முன்மாதிரி ஒன்றாக மாற்றுவதிலும் தோழர் சீனிவாசகம் பெரும் பணி புரிந்தார். அதேபோன்று இளைஞர்களின் உடல் உறுதிக்கும் ஐக்கிய மனப்பான் மைக்கும் வழியேற்படுத்தும் வகையில் "ஸ்ரார்" விளை யாட்டுக் கழகம் உருவாக்கப்படுவதற்கும் வழி வகுத்து நின்றார். சுருங்கக் கூறின் காங்கேசன்துறை-தையிட்டி, மயிலிட்டி, பலாலி பகுதிகளில் மக்கள் நலன்களுக்கான எந்தவொரு முன் முயற்சியிலும் தோழர் சீனிவாசகத்தின் பணி இருந்து வந்திருக்கின்றது.
1950இல் மயிலிட்டிக் கிராமசபையின் சில வட்டாரங் களை உள்ளடக்கியதாக ஆறு வட்டாரங்களைக் கொண்ட காங்கேசன்துறைப் பட்டின சபை 2 உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தேர்தலில் தோழர் சீனிவாசக

Page 12
12
போட்டியிடாது மற்றொருவரின் வெற்றியை உறுதிப் படுத்த கட்சியின் தீர்மானப்படி விட்டுக் கொடுத்தார்.
ஆனால் 1953ஆம் ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது
தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு வேட்பாள
ராக போட்டியிட்டார். அத்தேர்தலில் தோழர் சீனிவாசகம்
அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் பட்டின சபை
உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பட்டின சபையின் தலைவர் தெரிவு இடம்
பெற்ற வேளை கடற் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராக வர விடக் கூடாது என்ற பிரபுத்துவ மனப்பான்மை கொண்ட சிலர் பிரசாரம் மேற் கொண்டனர். இதனை முறியடிக்கும் வகையில் கட்சியின்
முடிவுடன் சீனிவாசகம் தனது வாக்கினை அச்சமூக உறுப் பினரான திரு. கிருபாமூர்த்திக்கு அளித்து அவரையே
தலைவராக்கவும் முன்னின்று உழைத்தார்.
தோழர் சீனிவாசகம் காங்கேசன்துறைப்பட்டின சபையில் நீண்டகாலம் உறுப்பினராக, உபதலைவராக, தலைவராக இருந்து மக்கள் நலனுக்காக சுயநலமின்றி உழைத்து வந்த ஒரு மக்கள் தொண்டன். அவரது களங்க. மற்ற பொது வாழ்விற்கும், தொண்டிற்கும் பட்டினசபுை யில் இருந்து ஆற்றிய சேவைக் காலம் ஒரு சிறந்த உரைகல் என்று துணிந்து கூறிக் கொள்ளலாம். லஞசம், ஊழல், சுய புகழ், பதவி தன்னலம் போன்ற வற்றை ஈடேற்றிக் கொள்வதற்கான ஒரு களமாகவே உள்ளுராட்சி மன்றங்களைப் பயன்படுத்தி வந்தவொரு சூழலிலே தோழர் சீனிவாசகம் ஒரு கம்யூனிஸ்ட் உறுப் பினர் எவ்வாறு அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு பயனுடைய தாக்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து செயல்பட்டார். இதனை அவரது அரசியல் எதிரிகளும் ஒப்புக்கொள்வர்.
தோழர் சீனிவாசகம் ஓர் பிரபல்யம் மிக்க வைத்திய ராகவும், கிராமசபையிலும், பின் பட்டின சபையிலும் பதவி

13
வகித்து வந்த போதிலும் நீதி, அநீதி என்று வரும் சந்தர்ப்பங்களில் எவ்வித தயக்கமும் இன்றி நீதியின் பக்கம் நிற்பதுடன் அநீதிக்கு எதிராகப் போராடி நிற்ப திலும், நீதியை நிலைநாட்டுவதிலும் இறுதிவரை விட்டுக் கொடுக்காத போராளியாகவே இருந்து வந்தார். இதற்கு ஓர் உதாரணச் சம்பவம் கூறுதல் முடியும்: தையிட்டியில் உள்ள சிவகுருநாத வித்தியாசாலையில் நீண்டகாலம் ஆசிரியராகக் கடமை புரிந்த ஓர் ஆசிரியர் திடீரென மிகத்தூர இடத்திற்கு மாற்றப்பட்டார். அவ்விடத்திற்கு தையிட்டியைச் சேர்ந்த புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதை அன்றைய இந்து பரிபாலன சபை நிர்வாகமே செய்தது. அதன் தலைவரான இந்து போட் - இராசரத்தினம் ஆதிக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலாலும் தன் முனைப்பாலும் மேற்படி ஆசிரிய இடமாற்றத்தைச் செய்தார். ஓர் அனுபவமிக்க ஆசிரியர் மாற்றப்பட்டமையைப் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது பாட சாலையினது தர உயர்விற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகவே பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் கருதினர். இவ்வேளை தோழர் சீனிவாசகம் இவ்விடயத்தில் பெற்றோர் சார்பாக நின்று வாதிட ஆரம்பித்தார். புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர் தனது உறவினராகவும் ஊர்க்காரராக இருந்தும் மாற்றப் பட்ட ஆசிரியரை திருப்பி அழைக்கும் நீதியான இயக்கத் திற்கு சீனிவாசகம் தலைமை தாங்கினார். பெற்றோர் சங்கத் தலைவர் பொறுப்பை ஏற்று நான்கு மாதங்களாகப் பாடசாலைப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துச் சென்றார். அவ்வேளை பலத்த அச்சுறுத்தல்களையும் பொலிஸ் தலையீடுகளையும் சந்திக்க நேர்ந்தது. அவர் மீது நீதி மன்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. பெரும் சட்ட வல்லுனர் இந்து போட். இராசரத்தினத்துடன் தோழர் சீனிவாசகம் நியாயத்திற்காகப் போராடியும் வாதாடியும் நின்றார். இச்சூழலில் இவ்விவகாரத்தை கல்வி மந்திரிக்கும்

Page 13
14
பாராளுமன்றத்திற்கும் எடுத்துச் சென்றார். இந்நீதிக் கான போராட்டத்தில் அன்றைய பாராளுமன்றப் பிரதி நிதியான தோழர் பொன். கந்தையா சீனிவாசகத்தின் நிலைக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டார். இறுதியில் அப்பாடசாலை அரசாங்கத்தினரால் சுவீகரிக்கப்பட்ட துடன் உடனடியாக மேற்படி ஆசிரியர் மீள் மாற்றம் செய்யப்பட்டார். பாடசாலைகளை முழுமையாக அரசாங் கம் பொறுப்பேற்பதற்கு முன்னமே இப்பாடசாலை பொறுப்பேற்கப்பட்டமைக்கு தோழர் éo 6øfsnu Mr F asb தலைமையில் நடைபெற்ற நீதிக்கான போராட்டமே காரணமாகும். நீதி நியாயம் அநீதி அடக்குமுறை என வரும் வேலைகளில் தோழர் சீனிவாசகம் சுயநலம், உறவு, ஊர்க்காரர் என்ற எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் இடமின்றி உறுதியான போராட்ட வீரராகவே செயல் படுவார்.
1956ஆம் ஆண்டு பட்டின சபைத் தேர்தலில் ஒரு சில வாக்குகளினால் தோல்விகண்ட போதிலும் தனது பொதுச் சேவையைத் தொடர்ந்தார். அதன் பயனாக 1959ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று உறுப்பின ராகியதுடன் பட்டின சபையின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இத்தலைவர் பதவிக்காலத்தை நன்கு பயன்படுத்தி பட்டினசபைக்கு உள்ளடங்கிய சகல பகுதி களையும் பாகுபாடின்றி அபிவிருத்திக்கு உள்ளடக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வந்தார். மக்கள் நலன்களுக்கு இசைவான தீர்மானங்களையும் முடிவுகளையும் நடை முறைப்படுத்தி வந்த வேளை மக்கள் விரோத நடவடிக்கை களை எதிர்த்தும் வந்தார். அவரது காலத்தில் வரிக் குறைப்பு, மின்சார விரிவாக்கம், குறிப்பாக விவசாயி களுக்கு மின்சாரத்தை வழங்கும் திட்டம், பட்டினசபைக் கான கட்டிடம், வீதிகள் விஸ்தரிப்பு, சுகாதார வசதிகள், நூல் நிலையப் புனருத்தாரணம், சனசமூக நிலையங்களின் தரத்தை உயர்த்தியமை, பொது விளையாட்டு மைதானங் கள், பட்டின சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு

1.5
குடியிருப்பு வசதி போன்றவற்றை நிறைவேற்றுவதில் முனைப்புடன் நின்று செயல்பட்டும் வந்தார்.
தோழர் சீனிவாசகத்தின் சிறப்பு அம்சம் என்ன வெனில் தான் சேவை செய்து வந்த மூன்று துறைகளான வைத்தியம் , அரசியல், பொதுவாழ்வு ஆகியவற்றில் எக்காலத்திலும் ஒன்றை ஒதுக்கிவைத்து ஏனையவற்றைச் செய்யவில்லை என்பதுதான். மூன்று முனைகளிலும் தொடர்ச்சியாகவும் சளைக்காமலும் வேலை செய்து வந்தமை குறிப்பிடக் கூடியதாகும். எந்தவொரு பதவியை யும் சந்தர்ப்பத்தையும் நன்கு பயன்படுத்தி மக்களுக்கு செய்யக்கூடிய சேவையினைச் செய்வதுடன் அதன் மூலம் சமுதாய மாற்றத்தின் அவசியத்தையும் இன்றைய சமூக அவலத்தையும் சுட்டிக்காட்டுவதையே தன் பணியாகக் கொண்டும் இயங்கி வந்தமையைக் காணலாம்.
அரசியலில் எப்பொழுதும் கட்சியின் முடிவுகளுக்கு அமையவே தோழர் சீளிவாசகம் செயல்பட்டு வந்தவர். பதவிகள் வந்த வேளைகளிலும் அவை இல்லாத காலங் களிலும் கட்சியின் தீர்மானங்களுக்கு இணங்கவே பணி புரிந்து வந்தமை சிறப்பான அம்சமாகும். யூ. என். பி. தமிழ்க் காங்கிரஸ் , தமிழரசு, தமிழர் கூட்டணி போன்ற அமைப்புக்கள் சாராம்சத்தில் உயர்வர்க்க நலன் காத்து, நின்ற காரணத்தால் கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து வந்த தோழர் சீனிவாசகத்தை எப்பொழுதும் அவை கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றன. தமது பதவி பட்டங்களுக்கு சீனிவாசகம் ஒரு தடையாக இருப்பதைக் கண்ட வேளைகளில் அவர் தமிழ் இன உணர்வு அற்றவர், தமிழின விரோதி என்றுகூட இப்பதவி வேட்டைக்காரர்கள் பிரசாரம் செய்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஒருமுறை காங்கேசன்துறையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் தோழர் சீனிவாசகம் பேசிக் கொண்டிருந்த வேளை திட்ட மிட்டே ஒரு கைக்கூலியைக் கொண்டு மேடையில் பின்புறத் தின் வழியாக முதுகில் கத்தியால் குத்தப்பட்டார். அடுத்த

Page 14
16
குத்து வீழ்வதற்கு முன் முழுமியிருந்த மக்களால் அக்கூலி பிடிக்கப்பட்டு நன்கு தண்டிக்கப்பட்டான். பின்பு அவனை எதிரியாகக் கொண்டு பொலீஸ் தாக்கல் செய்த வழக்கில் தன்னைக் குத்தியவரை சரியாக ஞாபகப்படுத்த முடிய வில்லை எனக்கூறி அந்நபரை தண்டனையில் இருந்தும் தப்ப வைத்துக் கொண்டவர்.
இனப்பாகுபாட்டையும் இனவாதத்தையும் வன்மை யாக எதிர்த்து வந்த, ஒருவர் என்பதை பல சந்தர்ப்பங் களில் தென்னிலங்கை நிகழ்ச்சிகளில் எடுத்துக் காட்டி யவர். ஒருமுறை உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் மகாநாடு தென்பகுதியில் இடம் பெற்றபோது அங்கு சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே உரைகள் இடம் பெற்றன. அதனைச் சுட்டிக் காட்டிய அவர் தனது உரையைத் தமிழில் நிகழ்த்தப் போவதாக விடாப்பிடியாக வற்புறுத்தி தமிழிலேயே உரையாற்றினார். அவரது உரை சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்த வேளைகளில், எல்லாம் இனவாதத் தையும், பாகுபாடு, புறக்கணிப்புகளையும் எதிர்த்து வந்தவர் தோழர் சீனிவாசகம் என்பதை அவரது வாழ் நாளில் காண முடியும்.
1953ஆம் ஆண்டு இடம் பெற்ற நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டம் வெற்றி பெறுவதற்கு வடபகுதி தனது முழுமையான பங்களிப்பை வழங்கி நின்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தமிழரசுக் கட்சி யுட்பட அவ்வியக்கத்தில் சகல சக்திகளும் இணைந் திருந்தன. இப்போரட்ட் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் தோழர் சீனிவாசகமும் ஒருவராக இருந் தார். அதே போன்று பாடசாலைகளை அரசு சுவீகரிக்க முற்பட்ட வேளை அதற்கு வடபகுதியின் உயர்வர்க்க மத சக்திகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் பாடசாலைகளை அரசு சுவீகரிப்பது முற்றிலும் நியாய மானது என வற்புறுத்தி அதற்கான இயக்கத்தை

7
கம்யூனிஸ்ட் கட்சி பரந்த இயக்கமாக முன்னெடுத்தது. தோழர் சீனிவாசகம் அதன் முன்னணியில் இருந்து செயல் பட்டார். அதே போன்று மக்கள் வங்கி முறைய்ைக் கொண்டு வரும் இயக்கத்திலும் பங்கு கொண்டார்.
தோழர் சீனிவாசகம் உயர் சமூகம் என்றழைக்கப் படும் , ஆனால் வர்க்க ரீதியில் உழைக்கும் வர்க்கப் பிரிவினராக உள்ள கிராமிய குடும்ப சூழலில் இருந்து வந்தவர். இதில் அவருக்கு இரட்டை வாழ்க்கைமுறை இருக்கவில்லை. அவர் சாதி அமைப்பை ஒவ்வொரு நடை முறையிலும் கடுமையாக எதிர்த்து இடையறாது போராடி வந்த ஒருவர். 1963ஆம் ஆண்டு நீர்வேலி பூதர்மட்க் கிராமத்தில் சாதி வெறியர்கள் தமது வெறித்தனத்திைக் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைக் கொளுத்தி எரித்து, கள்ளு மரங்களை வெட்டி, மக்களைத் தாக்கி காயப்படுத்தினர். இதனை அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்த போதிலும் அதற்கு எதிராக இயக்கம் எதுவும் நடத்த முன்வரவில்லை. அதற்குக் காரணம் அன்றைய கட்சியின் பிரதேசக் கமிட்டியில் இருந்தவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் (தத்துவார்த்த நடைமுறைப் பிரச்சினை) தோன்றியிருந்தமையே காரணமாகும். ஆனால் தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தை பிரதேசச் செயலாளராகக் கொண்ட வாலிபர் இயக்கம் கட்சித் தலைமையின் அனுசரணையின்றி நீர் வேலி பூதர்மடம் சாதிவெறிச் சம்பவங்களுக்கு எதிரான ஒரு பெரும் கண்டன ஊர்வலத்தை ஒழுங்கு செய்து யாழ்-நகரில் நடாத்த ஏற்பாடு செய்தது. அவ்வூர்வலத்திற்கு தலைமை தாங்குமாறு வாலிபர் இயக்கம் தோழர் மு. கார்த்திகேச னின் ஆலோசனையுடன் தோழர் சீனிவாசகத்தைக் கேட்டுக் கொண்ட பொழுது, அவர் மிக உறுதியான ஆதரவு தெரிவித்து அதற்குத் துணிவுடன் தலைமை தாங்கி சாதி வெறியர்களுக்கும் பொலிசாருக்கும் எதிரான
2م--- *g

Page 15
18
வெகுஜன கருத்து நிலையை ஏற்படுத்த வாலிபர் இயக்கத் திற்கு துணை நின்றார்.
அதே போன்று 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சியென வரலாறு முக்கியத்துவம் உடைய சுன்னாகம் ஊர்வலத்தில் தோழர் சீனிவாசகம் ஏனைய தலைமைத் தோழர்களில் ஒருவராக நின்று பொலீஸ் தாக்குதலுக்கு உள்ளானார். தாக்குதலுக்குப் பின்பும் அவ்வூர்வலம் யாழ் நகரத்திற்கு சென்று முற்ற வெளியில் இடம் பெற்ற Sgr Lost 6ir LLD (T60T பொதுக் கூட்டத்திற்கு தோழர் சீனிவாசகம் தலைமை தாங்கினார். அன்றைய கூட்டத் தில் அவர் ஆற்றிய தலைமை உரை சாதி அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்திற்கு கட்சியின் புரட்சிகர அறைகூவலாக அமைந்தது.
தோழர் சீனிவாசகம் தொழிலாளர்களைத் தொழிற் சங்க ரீதியில் அணி திரட்டுவதில் அக்கறை கொண்டவர். காங்கேசன்துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் குறைந்த வேதனம் கூடிய நேர வேலை மற்றும் ஒப்பந்தக்காரர்களின் ஆணவப் போக்கு போன்றவற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை முறியடிக்கும் வகையில் ஐக்கிய துறைமுகத் தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் என்ற பெயரில் ஓர் சங்கத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். தொழிலாளர்களின் ஐக்கியம்தான், சாதிக்க முடியாக எதையும் சாதிக்க முடியும் என்ற உணர்வைத் தொழி லாளர் மத்தியில் நிலைபெறச் செய்வதற்கு சதா முயன்று வந்தார்.
1964ஆம் ஆண்டில் காங்கேசன் துறை சீமெந்து ஆலையில் மாதச்சம்பளம் உட்பட எட்டுக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட் டத்தை நடாத்தி வந்தனர். அன்று கம்யூனிஸ்ட் கட்சித் தொழிற் சங்கமே அவ்வேளை நிறுத்தப் போராட்டத்தை

9
வழி நடத்தி நின்றது. சுமார் ஒரு மாத காலம் அவ்வேலை நிறுத்தப் போராட்டம் நீடித்தது. மிகவும் போராட்டம் சூழலில் இடம் பெற்ற அவ்வேலை நிறுத்தத்தில் ஒவ்வொரு நாளும் தோழர் சீனிவாசகம் தவறாது தொழிலாளர் மத்தியில் நின்று அவர்களை உற்சாகப் படுத்தி வந்தார். தொழிலாளர்கள் மத்தியில் o!ಾತ್ರಿ! உரைகள் ஐக்கியப்பட்ட போராட்டம் உணர்வை 61st படுத்தி நின்றன. இறுதியில் அப்போராட்டம் வெற்றி பெறவும் செய்தது.
தோழர் சீனிவாசகம் ஆரம்பம் முதல் இறுதிவரை வட பகுதி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராகவே இருந்து வந்தார். அவர் காங்ே துறை-தையிட்டி பலாலிப பகுதிகளில் கட்சியை ஸ்தாபன ரீதியாகவும் அரசியல் தத்துவார்த்த அடிப்படையிலும் கட்டி வளர்ப்பதற்கு அயராது உழைத்து வந்தவர். அவர் எப்பொழுதும் கட்சியின் கூட்டு முடிவுகளுக்கு கட்டுப் பட்டே தனது வெலைகளையும் முன்னெடுத்து வந்தார். 1963-64 ஆம் ஆண்டுகளில் இடம் பெற்ற மார்க்சிய லேனினிய மாசேதுங் சிந்தனை வழிகாட்டிய புரட்சிகரப் பாதையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். தேசிய அளவிலும் பிரதேச ரீதியிலும் சோவியத் 56066) pussy first நவீன திரிபுவாதத்தின் தவறான போக்குகளை எதிர்த்துப் போராடுவதில் அவர் சிறிதும் விட்டுக்கொடுக்க வில்லை. வர் தனது இறுதி மூச்சு வரை அந்தப் பாதையில் இருந்து பிறள்வடையாது இயற்கை எய்தியவர்.
1947ஆம் ஆண்டு ழயிலிட்டி கிராமசபைக்கு 9 (5 மக்கள் பிரதிநிதியாக கட்சியின் முடிவுக்கு இணங்க தெரிவு செய்யப்பட்ட காலம் முதல் 1969ஆம் ஆண்டின் தேர்தல்களைப் பகிஷ்கரிக்கின்ற கட்சியின் கொள்கை தீர்மானிக்கும் வரை அவர் காங்கேசன்துறையின் பட்டின சபையின் உறுப்பினராக இருந்து வந்திருக்கின்றார். 1965 இல் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும்

Page 16
20
கட்சியின் வேட்பாளராக நின்று அதனை ஓர் பிரச்சார மேடையாக பாவிக்கும் நோக்கத்தைப் பரீட்சித்துப் பார்த் திருக்கிறார். 1969ஆம் ஆண்டிற்குப்பின் தேர்தல்கள் எதிலும் பங்கு கொள்வதில் இருந்து விலகி வைத்தியத்தி லும் கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
1978ஆம் ஆண்டில் பழைய கட்சிக்குள் இடம் பெற்ற தீர்க்க முடியாத முரண்பாடுகளால் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) உருவாக்கப்பட்டு மாக்சியம் லெனினியம் மாஒ சேதுங் சிந்தனை அடிப்படையிலான புரட்சிகர வெகுஜன மார்க்கம் விரிவுபடுத்தப்பட்ட வேளை யில் அதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து கட்சி யோடும் அதன் தலைமையோடும் இணைந்து நின்றவர். வயது முதிர்ந்த போதும் அவரது புரட்சிகர உணர்வும் வைர n க்கியமும் இளமைத் துடிப்புடன் இருந்து வந்தது. இதனை அவர் இறுதியாகக் கலந்து கொண்ட அரசியல் பொது நிகழ்ச்சியான மறைந்த இலங்கைக் கம்யூனிஸ்ட். கட்சியின் (இடது) பொதுச் செயலாளர் கே. ஏ. சுப்பிர மணியத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் ஆற்றிய உரையின் போது காண முடிந்தது. அதேபோன்று கம்யூ னிஸ்ட் (இடது) கடசியின் இரண்டாவது தேசிய காங்கிரசுக்கு அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியிலும், கல மார்க்சிய லெனினியவர் திகளும் ஐக்கியப்படுவதன் அவசியத்தையும் கட்சி வளர்ச்சியின் தேவையையும் சுட்டி காட்டியிருந்தார். கட்சியின் பெயர் புதிய ஜனநாயக கட்சி யெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை உட்பட கட்சி யின் தீர்மானங்களை மிக ஆர்வத்துடன் கேட்டறிந்து அவற்றிற்கு தனது மனப்பூர்வமான ஆதரவினையும் தெரி வித்தார்.
தோழர் சீனிவாசகத்தின் உறுதி மிக்க கொள்கை. நடைமுறை நிலைப்பாட்டிற்கும் வர்க்க உணர்வு மிக்க துணிவிற்கும் இரண்டு சம்பவங்கள் உதாரணமாகும். 1971 ஜே. வி. பி. கிளர்ச்சிக் காலத்தில் தோழர்

21.
சீனிவாசகத்தை கைது செய்த பொலிசார் அவரை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயன்றனர். "சுட்டுத் தொலைத்து விடுவோம்” என்று ஓர் பொலிஸ் அதிகாரி ஆவேசமாக கூறினார். அதற்குப் பதிலாக எல்லோரை யும் இறுதியில் சுடுவதுதானே , நான் ஒரு கம்யூனிஸ்ட், அதனால் சூட்டுக்குப் பயந்து கொள்கையை கைவிடுபவன் அல்லன் நான் என்று மிகத் திடமான பதிலாக தோழர் சீனிவாசகம் கூறினார்.
இரண்டாவது சம்பவம் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இங்கிருந்த வேளையில் இடம் பெற்ற தாகும். ஒரு நாள் இரு இளைஞர்கள் சீனிவாசகத்தின் வைத்திய சாலைக்குள் புகுந்தனர். இதனை அவதானித்த இந்தியப் படையினர் அங்கு வந்து அவ்விரு இளைஞர் களையும் கூட்டிச் சென்று விசாரிக்கப் போவதாக கூறினார். ஆனால் சீனிவாசகம் அதற்கு மறுப்புத் தெரி வித்தார். அங்கிருந்து திரும்பிய படையினர் சிறிது நேரத் தில் தமது உயர் அதிகாரியுடன் திரும்பி வந்தனர். அவ் அதிகாரி இவ்விரு இளைஞர்கள் மீது தமக்குச் சந்தேகம் இருப்பதாகவும், அவர்களை கைது செய்யப் போவதாகவும் கூறினார். அதற்கு சீனிவாசகம் மிக உறுதி யான வார்த்தைகளில் பின் வருமாறு கூறினார். ‘நான் ஒர் வைத்தியன். இது எனது வைத்தியசாலை. இங்கு நோயாளராக வரும் எவருக்கும் வைத்தியம் செய்வது எனது கடமை. எனவே எனது வைத்திய சாலைக்குள் வைத்து, என்னிடம் வைத்தியத்திற்காக வந்த எவரையும் கைது செய்ய நான் அனுமதிக்க மாட்டேன். இதனைக் கேட்டு திகைத்த அவ்வதிகாரி போராளிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க , அதற்குப் பதிலாக "நான் ஒரு கம்யூனிஸ்ட், உண்மையான போராளியானால் அவர்கள் எங்கும் இருப்பார்கள். தூணிலும் இருப்பர். துரும்பிலும் இருப்பர். இதுதான் நான் அறிந்த உண்மை’ என்று கூறி நின்றார்.

Page 17
22
இவ்வுறுதி மிக்க பதிலை கேட்ட அவ்வதிகாரி அவ்விளை ஞர்களை கைது செய்யும் நோக்கத்தை கைவிட்டுத் திரும்பி விட்டார். மூப்படைந்த நிலையிலும் கொள்கை சார்ந்த துணிவும் உறுதியும் எவ்வளவிற்கு தோழர் சீனிவாசகத் திடம் உறைந்திருந்தது என்பதற்கு இவை ஓரிரு சாட்சி சம்பவங்களாகும்.
தோழர் சீனிவாசகம் ஆயுள் வேத வைத்தியத்துறை தேசிய ரீதியிலும் பிரதேச ரீதியிலும் விரிந்து வளர்வதற்கு பல முயற்சிகளை ஏனையோருடன் இணைந்து எடுத்து வந்தவர். கிழக்கு மாகாணத்தின் வைத்தியர்களுடனும், தென்னிலங்கை வைத்தியர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றை பயன் மிக்கதாக்கியும் வந்தார். அவர் வடபகுதி சித்த ஆயுள்வேத வைத்திய சங்கத்தின் தலைவர் பதவியை வகித்து அரசாங்கத்தின் ஊடாகவும். வைத்தியத்துறை வளர தன்னாலான பணி புரிந்து வந்தார். ஆயுள்வேத வைத்தியம் நமது பண்டைய தமிழர் களின் அரும் பெரும் சொத்து என்பதைப் பல சந்தர்ப்பங் களில் எடுத்து விளக்கி சில முனைகளில் ஆங்கில வைத்தி யத்துடன் சமனாக நிற்கக் கூடியது என்பதையும் வலியுறுத்தி வந்தார். அந்த வகையில் சில நோய்களுக்கு உடன் நிவாரணம் வழங்க கூடிய புதிய வகை எண்ணெய், மருந்து என்பனவற்றை மூலிகைகள் பிறவற்றின் மூலம் உருவாக்கியும் இருந்தார். அவை மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றுக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும்.
1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராட்சி மகாநாட்டில் இடம்பெற்ற கண் காட்சியில் ஆயுள் வேத மூலிகைகள் பகுதியும் அமைக்கப் பட்டிருந்தது. அப்பகுதியின் அமைப்பாளராக சீனிவாசகம் சிறப்புடன் செயலாற்றி மூலிகைகளின் தன்மைகளையும் அவற்றின் வைத்தியப் பயன்பாடுகளையும் விளக்குவதில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி நின்றார்.

23
தோழர் சீனிவாசகம் தனது வைத்தியத்துறை தொடர வேண்டும் என்றும் அது ஒர் மக்கள் சேவையாக நீடிக்க வேண்டும் என்றும் விரும்பி மிகுந்த இடர்கள் மத்தி யிலும் தனது மூத்த மகனையும், மூத்த மகளையும் சிறந்த வைத்தியர்களாகப் பட்டம் பெற வைத்து தனது மேற் பார்வையில் வளர்த்தும் வந்தவர். வைத்திய கலாநிதி சீ. சிறிகாந்தன் தந்தையைப் போன்று சிறந்த மக்கள் நேசம் கொண்ட வைத்தியராக மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று வந்த வேளையில் மாரடைப்பு நோயால் மறைய நேரிட்டது. அவரது மறைவு தோழர் சீனிவாசகத்திற்கு பெரும் இழப்பாகியது. அதேபோன்று அரசியலில் ஒரு மகனை உற்சாகப்படுத்தி வழி நடக்கச் செய்து வந்தார். சீ. சந்திர காந்தனும் எதிர்பாராத விதத்தில் அகால மரண மானார். அதுவும் அவருக்கு பெரும் தாக்கமாகியது. மேலும் இரு பெண் பிள்ளைகளை அவர் இழக்க நேரிட்டது. ஒன்பது பிள்ளைகளில் ஐவர் மட்டுமே எஞ்சி நின்றனர். இவ்வளவு இழப்பின் காரணமாகவும் தோழர் சீனிவாசகம் நிலைகுலையவில்லை. துக்கத்தைப் பலமாக மாற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் இயல்புக்கு ஏற்ப தன்னைத் திடப்படுத்தி கொண்டு தன் வாழ்வைத் தொடரவே செய்தார். வைத்தியத்துறையில் ஆர்வமுடன் முன்வர முனைந்த பல மாணவர்களுக்கு ஓர் தளராத ஊக்கியாகி நின்றார். இன்று அவரது ஊக்கத்தினால் பல வைத்தியர் கள் உருவாகி உள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். அவர் அரும்பாடுபட்டு உருவாக்கிய “சிறிநிவாச மருத்துவ மனை' அவரது இறுதிக் காலத்தில் 1987இல் 4இந்திய இராணுவ நடவடிக்கையால் சேதமாக்கப்பட்டது. எஞ்சிய பகுதிகள் பின்யு இலங்வக இராணுவத்தால் சிதைக்கப் பட்டது. இறுதியில் தோழர் சீனிவாசகம் ஏனைய மக்களைப் போன்று இடம் பெயர்ந்து செல்ல வேண்டியும் ஏற்பட்டது. இத்தனை இழப்புக்களையும் துன்பங்களை யும் தனக்கு மட்டும் ஏற்பட்ட தனி இழப்பாக அவர் குறுகிய நிலையில் நோக்கியதில்லை. முழு மக்களுடனும்

Page 18
24.
இணைந்தே தன்னையும் பார்த்த பார்வை ஒரு நேர்மை யான கம்யூனிஸ்ட்டின் பார்வையாகவே அமைந் திருந்தது.
அவரது போராட்டமும் தியாகமும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் அவருக்கு கிடைத்த துணைவி திருமதி சின்னத்தங்கம் உற்றதொரு துணையென்றே கூறுதல் வேண்டும். குடும்ப நிர்வாகம்-பாரச் சுமைகளை தானே சுமந்து அவரது சேவைகளுக்கு உதவி புரிந்து நின்ற நிலை போற்றுதலுக்குரியதாகும். அது மட்டுமன்றி தனது வழியாக கிடைத்த அறுபத்தி நான்கு பரப்பு நிலத்தை காலத்திற்குக் காலம் கணவனின் வைத்திய, அரசியல், பொது வாழ்வுச் சேவைகளுக்காக விற்றுச் செலவு செய்வதற்கு சம்மதித்து மனம் சற்றும் கோணாது நின்ற அக் குடும்ப மாதின் பெருங்குணம் யாழ்ப்பாணச் சூழலில் அரிதான செயல் என்றே கூறுதல் தகும். தோழர் சீனிவாசகமும் அவரது துணைவியாரும் தமது வாழ்க்கைக் காலத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். பிள்ளைகளைப் பராமரிப்பதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் அவர்கள் பல சுய தியாகங்களையே செய்தனர். வைத்தி யம், அரசியல், பொதுச் சேவையால் தங்களையும் தங்கள் சுற்றத்தாரையும் மேம்படுத்தி வந்த இன்றைய தனிச் சொத்துடமைச் சமூகச் சூழலில் எதையும் தமக் கென அவற்றில் இருந்து பெற்றுக் கொள்ளாது தம்மிடம் இருந்தவற்றையும் இழந்து எளிமையான வாழ்க்கை யும் கடுமையான மக்கள் சேவையும் போராட்டமும் நடத்தி வந்த தோழர் சு. வே. சீனிவாசகத்தின் வாழ்வு சகல வழிகளிலும் முன்னுதாரண மிக்க வாழ்வாகும். தோழர் சீனிவாசகத்தின் வாழ்க்கை இன்றைய இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்வதற்கு உரிய பல பக்கப் பாடங்களை கொண்ட ஓர் புத்தகம் என்று கூறுவது முற்றி லும் பொருத்தமானது.
மனித நேயத்தையும், தொண்டினையும் வர்க்கப் போராட்ட அரசியல் போராட்ட அரசியல் நோக்கின்

25
ஊடே வரித்து நின்று, அடிப்படை சமூக மாற்றம் ஒன்றே இன்றைய சகல அவலங்களையும் மாற்றி அமைப்பதற் கான இறுதி மார்க்கம் என்பதனை வலியுறுத்தி தனது வாழ்நாளினை அதற்காக அர்ப்பணித்து வாழ்ந்து மறைந்த தோழர் சு. வே. சீனிவாசகம் என்றும் உழைக் கும் வர்க்க மக்களால் நினைவு கூறப்படுவார். தோழர் சீனிவாசகத்தின் புரட்சிகர நினைவுகள் என்றும் வாழும். அவரது மறைவிற்கு எமது ஆழ்ந்த அஞ்சலி,
ஆசிரியர் குழு

Page 19
ஒரு வைரம் பாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்
இலங்கையின் வடபுலத்திலே, கம்யூனிஸ் இயக்கத்தை கட்டிவளர்த்த ஆரம்பகால முன்னோடிகள் Lu 6) i நம்மிடையே இருந்து மறைந்துவிட்டார்கள். இருப்பினும் அவர்களது இலட்சியங்களும் குறிக்கோள்களும் மக்கள் மத்தியில் இருந்து மறைந்துவிடவில்லை. அத்தகைய முன்னோடிகள் முன்வைத்த கருத்துகளும் கொள்கைகளும் நடைமுறைசார்ந்த செயல்பாடுகளும் வடபகுதிச் சூழலிலே மிகுந்த தாக்கம் மிக்கவையாகும். அதனால் அவர்களின் வாழ்வுப் பணிகள் மக்கள் மத்தியில் இன்றும் நிலைபெற்ற நினைவுகளாக இருந்து வருவதைக் காண முடியும்.
இத்தகைய முன்னோடிகளில் முக்கியமான ஒருவ ராகத் திகழ்ந்தவர் அண்மையில் மறைந்த தோழர் சு. வே. சீனிவாசகம், என்பத்திமூன்று வயதுவரை வாழ்ந்து, வாழ்வின் பன்முக அனுபவங்களைப் பெற்று முது பெரும் கம்யூனிஸட் போராளி என்ற அழியாத முத்திரையுடன் உயிர் நீத்தவர். அவருடைய வாழ்வு ஓர் புரட்சிவாதியின் வாழ்வு என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தமது இளமைக் காலத்தில் காந்தியத்தினால் ஈர்க்கப்பட்டவர். மனிதனை விலங்கிட்கு இருந்த தளைகளை அறுத்தெறிவதற்கு காந்தியம் காட்டும் மார்க்கம் சிறந்தது என நம்பி ஆரம்பத்தில் செயல்பட்ட சு. வே. சீ. மிக விரைவிலேயே அதன் இயலாமையையும்.

27
போதாமையையும் இனம் கண்டு கொண்டார். மனித உடலின் நோய்களை அகற்ற அயுள் வேத வைத்தியத்தைக் கற்றுத் தேர்ந்த அவர், மனித சமூகத்தைப் பீடித்துள்ள நோய்களை அகற்ற காந்தியம் அல்ல, கம்யூனிஸமே அருமருந்து 6 னக்கண்டு அதனைக் கையேற்றும் கொண்டார். அதனால் அவர் கதராடை தரித்த கம்யூனிஸ் வாதியாகி நின்றார். சமூகக் கொடுமைகளை அழித் தொழித்து சமத்துவ சமுதாயம் காண இடைவிடாது போராடி வந்தார்.
தோழர் சு. வே. சீ. ஓர் ஊக்கமுடைய மக்கள் வைத்தியர். தனது வைத்தியத் தொழிலை ஏனோ தனோ என்ற நிலையிலோ அன்றி அதிக வருவாய் தேடும் வகையிலோ நடாத்திச் சென்ற ஒருவர் அல்லர். மக்கள் தொண்டினை மனிதநேய அடிப்படையில் முன்னெடுக்கும் SPCl5 துறையாகவே வைத்தியத்துறையை நடாத்தி வந்தவர். அத்துடன் தனது சேவையினை தோழர் சு. வே. சீ. எல்லைப்படுத்திக் கொள்ளவில்லை. அரசியல் துறையில் தனக்கென ஓர் நிலைப்பாட்டை வரித்துக் கொண்டு அதன் ஊடே பொது வாழ்விற்குள் புகுந்து அந்த முனையிலே செய்யக் கூடிய ஆகக் கூடிய மக்கள் தொண்டினை ஆற்றி நின்றார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது பாட்டாளிவர்க்க அரசியல் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காது அதனை முதன்மைப்படுத்தி நின்றவர். மனிதகுல விடுதலைக்கு மார்க்சிய லெனினியமே வழிகாட்டும் உயர்ந்த தத்துவம் எனக்கொண்டு அதனைத் தான் வாழ்ந்த சூழலில் வெற்றி கொள்ளும தனியாத தாகத்துடன் செயல் புரிந்து வந்தவர். அந்தக் குறிக்கோளை இலட்சியமாகக் கொண்டு தன் வாழ்நாள் பூராகவும் நேர்மையுடன் வாழ்ந்தும் வந்தவர். தோழர் சு. வே. சீ. தான் எதைச் செய்ய முற்படும்போதும் "நான் ஒரு கம்யூனிஸ்ட்" நான் செய்யும் எச்செயலும் எனது நிலைப்பாட்டிற்கு உகந்ததா? இல்லையா? என்பதைப் பரிசீலித்தே செய்தல் வேண்டும்.

Page 20
28
உகந்ததாக இருந்தால் மட்டுமே செய்வேன். பாதகமான தாக இருக்கும் எதனையும் செய்ய மாட்டேன்" என்ற இலட்சிய வழிநின்று வாழ்ந்து மறைந்தவர் தோழர் சு. வே. சீ. அதனால் அவரது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் ஓர் நேர்மைமிக்க கம்யூனிஸ்டின் குணாதிசயங் கள் வெளிப்பாடடைந்து காணப்பட்டன.
*ஒருவன் தனது அடிமைத் தனத்திற்கு எதிராகப் போராடுவதற்கு மறுப்பானே யானால் அவன் அடிமையாக இருப்பதற்கு மட்டுமே தகுதியுடையவன் ' என்பது போன்றே தனது கண்முன்னே நடைபெறும் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராடாது எந்தவொரு கம்யூனிஸ்ட்டும் மறுத்து நிற்பானே யானால் அத்தகைய ஒருவரை கம்யூனிஸ்ட் என்று கூறுவதில் எத்தகைய அர்த்தமும் இருக்க முடியாது.
தோழர் சு. வே. சீ. யின் வாழ்வை உற்று நோக்கும் போது அவர் தனது இறுதிக் காலம்வரை அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிர் முனையில் நின்று விட்டுக் கொடுக்காது போராடி வந்த வரலாற்றையே கான முடியும். பிரபுத்துவ ஆதிக்க மனோபாவமும்- ஆண்ட பரம்பரை என்ற பழமைவாதப் பித்தும்-நம்மால் எதைத் தான் செய்ய முடியும் என்ற அடிமைவாதச் சிந்தனையும் பற்றிப் பரவி நின்ற வடபுலத்து சமூகச் சூழலிலே அவற்றை எதிர்த்து முறியடிக்க முன் நின்ற புரட்சிகரத் துணிவு சு. வே. சீ. போன்ற கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளுக்கு மட்டுமே உரித்துடையதாக இருந்தது என்று கூறுவது மிகையான தொன்றல்ல. தாம் வாழ்ந்து வந்த கிராம, நகர்ச் சூழல்களில் தாண்டவம் புரிந்து நின்ற சாதியக் கொடுமைகளை காந்தியவாதிகள், சீர்திருத்தவாதிகள் எனப்பட்டோர் , 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே" என்பதுபோலக் கையாண்டு வந்தனர். அநீதி என்று கண்டபோதிலும் அவற்றை எதிர்த்து நிற்கும் துணிவு அற்றவர்களாக

29
இருந்தனர். ஆனால் கம்யூனிஸ்ட்டுக்கள் என்போர் துணிவுடன் சாதிய அநீதிகளுக்கு எதிராகக் கணை தொடுத்து நின்றனர். ஆதனால் அவர்கள் சமூகத்திலே வித்தியாசமான வாழ்வையும் போராட்டத்தையும் நிகழ்த்திக் காட்டினர். இதனால் ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு வந்த மக்களிடையே சமூக நீதியை நிலைநாட்டும் போர்ாளிகள் உருவாகி வளர்ந்தனர். அவர்கள் கம்யூனிஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்கு மேலும் உரமிட்டு நின்றனர்.
தோழர் சு. வே. சீ. இதில் முன்னுதாரணம் காட்டி நின்றார். ஊர்ப் பெரியவர்கள், உடையார், விதானை மார், உற்றார், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது என்ன சொல்லுவார்கள் என்று நீதி நியாயத்திற்கான போராட்டத்தில் அவர் தயக்கம் காட்டியது கிடையாது. அல்லது பழமை, வழமை , முறைமை, பண்பாடு, இன மேன்மை, என்ற வரட்டுப் போர்வைகளால், அநீதிகளும் அக்கிரமங்களும் போர்த்துப் பாதுகாக்கப்பட்ட சூழல் களைக்கண்டும் காணாததுபோல் விட்டுக் கொடுத்து வாழ்ந்தவரும் அல்லர். நீதி, நியாயம், உண்மை நேர்மை என்பனவற்றுக்காக மக்கள் பக்கத்தில் நின்று, போராடுவதில் அவர் ஒருபோதும் பின் நின்றது கிடையாது. அவர் எப்பொழுதும் நீதி மறுக்கப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் அவர்களது போர்க்குரலாகவே நின்று போராடி வந்தார். அதனால் உள்ளூர் குண்டர்கள் தொட்டு, அரசு யந்திரத் தின் அடக்கு முறைக் கரங்கள் வரை அவரைத் தாக்கவும் அழிக்கவும் முற்பட்ட சந்தர்ப்பவங்கள் பல ஏற்பட்ட துண்டு.
தோழர் சு. வே. சீ. எடுத்துக் கொள்ளும் எந்தவொரு மக்கள் பிரச்சினையிலும் போராட்டத்திலும் கட்சியின் முடிவுக்கும் தோழர்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கும் முதன்மை கொடுத்து அதன் ஊடே போராட்டங்களை

Page 21
30
முன்னெடுத்துச் செல்லும் போக்கு, எப்பொழுதும் நிதானம்மிக்கதாகவும் மக்கள் நலன் சார்ந்ததாகவும் இருக்கும். போராட்டம் உயர்ந்த நிலைக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுப்பிற்கோ அன்றி வளைந்து கொடுப்பதற்கோ இடம் இருக்காதவாறு, பார்த்துக்கொள்வதில் அவர் அக்கறையுடன் இருப்பார். எதிர்தரப்பில் எவர் நிற்பினும், அதையிட்டு சலனமோ, பதட்டமோ கொள்வதில்லை. தனது நெருங்கிய உறவினர் இருப்பினும் சரி, அல்லது ஆயுதம் தரித்த பொலீஸ் படை நிற்பினும் சரி, தனது வழி நடத்தும் போராட்டப் பணியில் இருந்து பின் வாங்காது முன்சென்றே தீரும் புரட்சிகரத் துணிவு மிக்கவராகவே செயல்பட்டு வந்தார். அதே வேளை போராட்டங்களில் ஈடுபடும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து, உற்சாக மூட்டி, துணிவுடன் முன் செல்ல வைப்பதில் வல்லவராக இருந்தும் வந்தார்.
தோழர் சு.வே. சீ. சிறந்த மக்கள் வைத்தியர் என்று பிரபல்யம் பெற்றவர். அதே போன்று கிராமசபை உறுப்பினர் பதவி முதல், பட்டின சபைத் தலைவர் வரை பதவி வகித்தவர். மேலும் பல்வேறு பொது ஸ்தாபனங்க ளில் பதவி பெற்று சேவைசெய்தவர். இத்தனைக்கும் மத்தி யிலும் தன்னடக்கம் மிக்க ஓர் கம்யூனிஸ்ட்டாக வாழ்வதில் தான் அக்கறையுடையவராக இருந்து வந்தவர். தோழர் சு. வே. சீ.யின் நேர்மையான அரசியல் பொதுவாழ்வுப் பணிகளைக் களங்கப்படுத்த அவரது அரசியல் விரோதி கள் முயன்ற சந்தர்ப்பங்கள் உண்டு. தமது குறுகிய விரோத எண்ணங்களை அவர் உயிருடன் இருந்தபோது மட்டுமின்றி, இறந்த பின்பும் கூட வெளிக்காட்டுவதில் அவர்கள் பின் நிற்கவில்லை.
தோழர் சு. வே. சீ. வர்க்க விரோதிகளுக்கும் அரசி யல் குரோத சக்திகளுக்கும் சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்தார். அதே வேளை உழைக்கும் சாதாாரண

மக்களுக்கு நம்பிக்கை மிகுந்த வழிகாட்டியாகவும் தலைவ எாகவும் திகழ்ந்து நின்றார். அவர் ஒரு தனிமனிதன் அல்ல. உலகம் பரந்த மாபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தின் ஓர் உறுதிமிக்க உறுப்பினர். இலங்கையின் வட புலத்திலே அக்கம்யூனிஸ் இயக்கத்தை அறிமுகம் செய்து, கட்டி வளர்த்த ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவராக நின்று இறுதி வரை அந்நிலையிலேயே நின்று மறைந்தவர். அவர் பல போராட்டக்களம் கண்ட ஒரு வைரம் பாய்ந்த கம்யூனிஸ்ட் என்று கூறுவதில் பெருமைப் படவேண்டும். அவரது நீண்டகால வாழ்வின் ஒவ்வொரு கற்றறிவும் பட்டறிவும் நம் அனைவருக்கும் ஆழ்ந்த படிப்பினைக்குரியதாகும். அவற்றின் செழுமை மிக்க அனுபவங்களையும் இலட்சியங்களையும் கையேற்றுப் பாதுகாத்து உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வோம். அதுவே முதுபெரும் கம்யூனிஸ்ட் போராளியான தோழர் சு.வே. சீனிவாசகத்திற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் அவரது நினைவுகள் புரட்சி as TuDfT 60T கம்யூனிஸ் இயக்கத்தின் வளர்ச்சியில் என்னென்றும் நிலைத்து நிற்கவே செய்யும்.
சி. கா. செந்திவேல்

Page 22
தன் நயம் கருதாத சமூகத் தொண்டன்
யாழ்ப்பாணம் இலங்கா ஆயுள்வேத சித்த வைத்திய கல்லூரியில் நான் 1936ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வைத்தியம் கற்கச் சென்றிருந்தேன். அப்போது காலம் சென்ற வைத்திய கலாநிதி சு. வே. சீனிவாசகம் அவர் கள் நாலாம் வருட வகுப்பில் கற்கும் மாணவனாக இருத் தார். அந்நேரத்தில் கல்லூரி மாணவ மன்றத்தில் அவர் பேசும்போதும், இன்னும் பல விஷயங்களில் அவர் ஈடுபடும்போதும், அவரின் குணாதிசயங்களை நான் நன்கு அவதானிக்க கூடிய, தாய் இருந்தது. அவரைப் பற்றி எனது அபிப்பிராயம் என்னவென்றால், அவர் ஓர் அஞ்சா நெஞ்சன் என்றும் தீவிரவாதி என்றும் விளங்கிக் கொண்டேன்.
வாழும் பிள்ளையை மண் விளையாட்டிலும், விள்ை யும பயிரை முளையிலும் தெரியும் என்பார் ஆன்றோர். அதற்கேற்பவே அவர் விவேகமாய்ப் படித்து 1937ஆம் ஆண்டு பங்குனி மாதம் இறுதி ஆண்டுப் பரீட்சையிலும் சித்தியடைந்து வைத்திய கலாநிதி D. A. M. என்னும் பட்டதாரியானார். அதன்பின் காங்கேசன் துறையில் ஓர் வைத்திய சாலையைத் தொடங்கி நடத்தினார்.
வைத்தியத்தில் புகழ் ஈட்டியதுடன் ஏழைகளுக்கு இலவச வைத்தியமும் செய்து வந்தார். இக்காலத் திலேயே தனது கொள்கைப்படி பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்து ஓர் சமூகத் தொண்டனாகவும் விளங்கினார். தன் நயம் கருதாது பிறர் நயம் கருதியே வாழ்ந்தார். ஆகவே மக்கள் என்றும் கடமைப்பாடுடையவர்கள் ஆவார்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய இறை வனைப் பிரார்த்திப்போம்.
அ. வி. இராசரத்தினம் முந்நாள் அதிபர் இ. ஆ. வே. கல்லூரி யாழ்ப்பாணம்.

கட்சிக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்
மறைந்த தோழர் சு. வே. சீனிவாசகம் வட பிரதேசத்
தில் கம்யூனிச இயக்கத்தை கட்டி வளர்த்த அனுபவ மிக்க தலைவர்களில் ஒருவர். உறுதியான கொள்கைப் பற்றும் விடாப்பிடியான போராட்ட நிலைப்பாடும் கொண்ட அவர் மக்கள் நலனுக்காகத் தன்னை முற்றிலும் அர்ப் பணித்துக் கொண்டவர். எளிமையான வாழ்க்கை கடுமை யான மக்கள் தொண்டு புரிந்து அதனால் ஏற்பட்ட போராட்ட சூழலுக்குத் துணிவுடன் முகம் கொடுத்து முன்னணிப் பாத்திரம் வகித்து வந்த புரட்சிவாதியாவார். மார்க்சியம், லெனினியம் மாஒ சேதுங் சிந்தனையை தனது இறுதிக்காலம் வரை பாதுகாத்து முன்னெடுப்பதில் ஆர்வ அக்கறையுடன் இருத்து வந்தவர் அவரது ஆலோ சனைகள் வழிகாட்டல்கள் எமது கட்சியின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்து நின்றன. அவரது நீண்ட புரட்சிகர அனுபவங்கள் நமது கட்சிக்கும் அதன் வெகுஜன ஸ்தாப னங்களுக்கும் உறுதுணை வழங்கி வந்தன. அத்தகைய தோழரின் மறைவு கட்சிக்கும் மக்களுக்கும் பேரிழப் பாகும். அவரது இழப்பை ஈடு செய்யும் வகையில் அவர் விட்டுச் சென்ற புரட்சிகரப் பணியின் பாதையில் நாம் தொடர்ந்து முன் செல்வோம். தோழர் சு. வே. சீனிவாச கத்தின் மறைவுக்கு எமது புரட்சிகர அஞ்சலியைத் தெரி வித்துக் கொள்கின்றோம்,
மத்திய குழு
புதிய ஜனநாயகக் கட்சி
கொழும்பு-15

Page 23
உயர்வு தாழ்வு நோக்கா நேர்மையாளன்
காலம் சென்ற 1 க்டர் சு. வே. சீனிவாசகம் அவர் கள் 1938ஆம் ஆண்டளவில் தனது வைத்தியத் தொழிலை தனது பிறந்த கிராமத்தில் ஆரம்பித்த காலத்தில், நான் பத்து வயது சிறுவன இருந்த சமயத்தில் அவரிடம் வைத்தியம் செய்ய சென் / நாளிலிருந்து அவர் இறக்கும் வரை அவருடன் சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. 6-7 ஆண்டுகள் கழித்து யாழ் நகரில் தனது தொழிலை ஆரம்பித்து நடாத்தி வந்தார். அக்காலத்தில் அவர் பொதுவுடமைக் கட்சியில் அங்கத்தவராக சேர்ந்து இறக்கும் வரையும் வேறுகட்சி தாவாமல் வாழ்ந்து வந்தார்.
பொதுவுடமைக் கட்சியில் சேருமுன் அவருக்கு காந்தியக் கொள்கையிலும் பிடித்தமிருந்தமையினால் எளிமை வாழ்க்கையும் ஏழை மக்களிடம் அன்பும் காட்டி இலவச வைத்தியமும் ஏழை மக்களுக்கு ஆற்றி வந்தார். காந்தியைப் போல் கதர் உடுப்புக்களைத் தவிர அவர் வேறு எதையும் அணிந்ததை எவரும் கண்டிருக்க முடியாது. இக்காலகட்டத்தில் தனது குடும்பப் பொறுப்பை மனைவியிடம் விட்டு விட்டு முழு நேரமும் பொதுவுடமைக் கட்சியின் வளர்ச்சிக்கே உழைத்து வந்தார். . . . . .
காங்கேசன்துறை பட்டின சபை 4ஆம் வட்டாரம் தையிட்டியின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். இக்காலத்தில் டாக்டர் அவர்கள் பட்டினசபையின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார். அடுத்த

35
தேர்தலில் சொற்ப வாக்குகளினால் தோ ல்வியடைந்தார். பின் அடுத்து வந்த தேர்தலில் மிக அதிகப்படியான வாக்குகளில் (யாழ்குடா நாட்டில் நடக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில் இவ்விதம் அதிக வித்தியாசம் வருவ தில்லை) வெற்றியீட்டினார். இக்காலத்தில் இவர் பட்டின சபையின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இக்காலத்தில் பட்டின சபைக்கு விளையாட்டு மைதானத் துடன் கூடிய பட்டினசபை கட்டிடத்திற்கு அடிகல் நாட்டினார். சகல மக்களின் நன்மதிப்பையும் பெற்று விளங்கினார். இவரின் சேவையிலேயே எமது பகுதிக்கு வீதி விஸ்தரிப்புகள், மின்சார விநியோகங்கள்: வந்தன என்பது உள்ளங்கை நெல்லிக் கணி.
தனது கட்சியின் பணிப்புக்கு இணங்க காங்கேசன் துறைத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு f56iT (DTit. டாக்டர் அவர்கள் தனது பிள்ளைகள் இருவரை தனது வைத்தியத் தொழில் படிக்க வைத்து தையிட்டியில் ஓர் வைத்தியசாலையையும் ஆரம்பித்து மிகவும் சிறப்பாக வைத்தியமும் ஏழைமக்களுக்கு இலவச வைத்தியமும் செய்து வரும் காலத்தில், தன் வைத்திய மகனை இழக்க நேர்ந்ததால் அவரின் தொழில் சிறிது பாதிக்கத்தொடங்கியும் தனது தள்ளாத வயதில் வேறு ஒருவரின் உதவியுடன் தினமும் வைத்தியசாலை சென்று நடாத்தி வந்தார். பாரிச வாதத்தினால் பீடிக்கப்பட்டவர் களையும், சுவாத சன்னியால் பீடிக்கப்பட்டவர்களையும் தனது வைத்தியத்தினால் மாற்றினார், என்பது சகலரும் அறிந்த உண்மை. அமரர் அவர்கள் எவ்வித தீய பழக்கங் களும் இல்லாமலும், தனது உடல்நிலைக்கு ஏற்ற உணவருந்தியதினாலும் உற்சாகமாக இருந்தமை இன்றைய சமுதாயம் அறிந்துகொள்ளும். டாக்டர் 96. if கள் பொது விடையங்கள் என்றால் மாற்றுக் கட்சிக்காரர் கள் பங்குபற்றும் மேடைகளிலும் பங்குபற்றுவார். எந்த மேடையிலும் பிழையைப் பிழை என்றும் சரியை

Page 24
36
சரியென்றும் வாதிடுவார். உயர்வு தாழ்வு என்று பாராது சகலருடனும் கோபமின்றி எந்த விடயத்தையும் விவாதிக் கும் பழக்கமும் இவருடன் உண்டு.
இவரின் இழப்பு எமக்கும் எமது கிராமத்திற்கும் பேரிழப்பாகும்.
இவரின் இழப்பால் வாடும் மனைவி, மக்கள், பேரப் பிள்ளைகள், சுற்றத்தார், அயலவர்கட்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நன்றி
தி. வன்னிய சிங்கம் முந்நாள் செயலாளர்
கலாவல்லி ச. ச. நிலையம் தையிட்டி

LOš866TTG) GběhůLJLL சிறந்த வைத்தியர்
அமரர் டாக்டர் சீனிவாசகம் அவர்கள் காங்கேசன் துறையில் வைத்தியத் தொழிலைப் புரிந்து, பல மக்களின் நோயைத் தீர்த்து நன்மதிப்பைப் பெற்றவர். அவரின் தோற்றம் ஒரு வைத்தியனுக்கு ஒப்பானதாக இருந்த துடன் எதையும் சாதிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு தோற்றமானதாகவும் இருந்தது.
வைத்தியர்களின் சங்கம் ஒன்றின் நிர்வாகப் பொறுப் யில் இருந்து அதைத் திறம்பட நடாத்தி வைத்தியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். வைத்தியர்களுக் கான மருந்து வகைகள் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதற்கு வழிவகைகள் மேற்கொள்ளுவதில் முயற்சிகள் மேற்கொண் டார். அரசினர் ஆயுள்வேத மருந்துக் கூட்டுத் தாபனத் தின் கிளை திறக்கப்படுவதற்கு அன்னாரின் முயற்சிகள் வித்திட்டன.
வைத்திய உலகில் புகழுடனும் சமூகத்தில் முதன்மை யான நிலையிலும் வாழ்ந்து மக்களால் விரும்பப்பட்ட ஒருவருக்கான அஞ்சலியைச் செலுத்துவதில் நானும் ஒரு வைத்தியன் என்ற கடமையை நிறைவேற்றுகிறேன்.
வைத்திய கலாநிதி சு. பகவதி தலைவர், சித்தமருத்துவத்துறை யாழ். பல்கலைக்கழகம் - கைதடி

Page 25
கடமையில் நேர்மை தவறாதவர்
டாக்டர் சு. வே. சீனிவாசகம் அவர்கள் காங்கேசன் துறையில் ஓர் பிரபல ஆயுள்வேத வைத்தியராக வசித்த வர். இவரை எனது சிறு வயதில் இருந்து தெரியும். அவர் ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வைத்தியம் செய்வதை நான் நன்கு அறிவேன்.
நான் காங்கேசன்துறை பட்டின சபையின் ஓர் எழுது வினைஞராக 1951ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு வரை மூன்று முறை வேலை செய்துள்ளேன். அக் காலத்தில் டாக்டர் சீனிவாசகம் அவர்கள் ஓர் அங்கத்த வராகவும், உப தலைவராகவும், தலைவராகவும் காங்கே சன்துறை பட்டினசபையில் மக்களால் தெரிவு செய்யப் பட்டார். அக்காலத்தில் பட்டின சபையில் வேலை செய்த விகிதர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எல்லாவிதமான உதவிகளும் செய்துள்ளார். அவர் தலைவராக இருந்த காலத்தில் காங்கேசன்துறை பட்டின சபைக்கு நல்ல வீதி, வெளிச்சம், புதுவீதி திறத்தல் இது போன்ற பல நல்ல வேளைகளைச் செய்துள்ளார்.
அவர் ஓர் அரசியல்வாதியாக இருந்தும் மக்களுக்கு பாகுபாடின்றி உழைத்தார். அவர் சேர்ந்த அரசியல் கட்சிக்கு மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடந்துகொண்டார்.
தையிட்டியில் ஓர் மிகவும் சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவரின் சகோதரர்கள் ஏனையோரும் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். இவர் இறந்ததை அறிந்ததும் மிகவும் மனம் வருந்தினேன்.
இ. முருகையா கொட்டோக ஒழுங்கை
தெல்லிப்பளை

மூட நம்பிக்கைகளை எதிர்த்து நின்றவர்
வைத்தியக் கலாநிதி சு. வே. சீனிவாசகம் அக்காலத் திலேயே மைலிட்டி கிராமசபைக்கும், பின்பு காங்கேசன் துறைப்பட்டின சபைக்கும் பொதுவுடமைக் கட்சியின் சார் பில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந் தெடுக்கப்பட்டார். இது அவருக்கு மக்கள் மத்தியில் இருந்து வந்த தொடர்ச்சியான செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இதற்கு காரணம் அவர் பின்பற்றிய பொதுவுடமைக் கொள்கையும் அதன்வழி நின்று ஆற்றிய சேவைகளுமே ஆகும்.
அவரது சிறப்புகளில் இரண்டு விடையங்களை குறிப் பிட விரும்புகின்றேன். ஒன்று சாதிப்பிரச்சினைகளில் அவர் எப்பொழுதும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்படும் மக்க ளின் பக்கத்திலேயே நின்று வந்தமையாகும். பலாலிப் பகுதியில் அச்சாதிப் பிரச்சினை பெரும்பிரச்சினையாகவும் கொலைகளாகவும் இடம்பெற்ற வேளையில் சீனிவாசகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவினையும் ஆலோ சனைகளையும் வழங்கி நின்றவர். தனக்கு சரியெனப் பட்டதை எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாது முகம் கொடுத்து நிற்பவர் என்பதை அவ்வேளை அவதானிக்க முடிந்தது.
அடுத்து அவர் மூட நம்பிக்கைகளை எதிர்த்து நின்ற மையாகும். நோய்கள் வரும் வேளைகளில் அதற்குரிய வைத்தியம் செய்யாது நூல் கட்டுதல், திருநீறு போட்டுப் பார்த்தல் போன்ற அறியாமையை அவர் மிகக்

Page 26
40
கடுமையாக எதிர்ப்பது வழக்கம். யாராவது பேய், பிசாசு என்று கூறினால் அவருக்கு கடுங் கோபமேற்படும். தையிட்டியில் யாருமே இருக்கப் பயந்து கைவிட்ட நிலை யில் இருந்த பேய் வீடு என்று கூறப்பட்ட வீட்டில் தானே இருந்து வைத்தியம் செய்து பேய் பிசாசு என்ற மூட நம்பிக்கைகளை நடைமுறையில் பொய்ப்பித்து காட்டியவர் திரு. சீனிவாசகம். அவரது சேவைகளைப் பற்றி பலாலிப் பகுதி மக்கள் நன்கு அறிந்தனர். அவரது நாமம் என்றும் மக்களிடையே ஒலித்து நிற்கும். அவரது மறைவிற்கு எமது அஞ்சலி,
வேலுப்பிள்ளை-செல்லத்துரை
பலாலி முன்னாள் கிராமசபை உறுப்பினர்
மயிலிட்டி

வைத்திய உலகிற்கு ஒளிபரப்பியவர்
வைத்திய உலகுக்கு ஒளி கொடுத்து நின்றவர்தான் வைத்திய கலாநிதி சு. வே. சீனிவாசகம். அழியாத நெஞ்சுரமும், நேர்மையும், தன்னம்பிக்கையும் அவரின் தனிச் சிறப்புகள். ஒரு நோயாளியைப் பார்த்து, குன நலங்களை கேட்டு, நோயை நுட்பமாக கண்டுபிடித்து விடும் திறமை இவரிடம் இருந்தது. 1982ஆம் ஆண்டு கால கட்டத்தில் நான் அவரிடம் வைத்தியம் பழக நேரிட்டது. அவருடன் அவரது வைத்திய நிலையத்தில் கடமை செய்வது என்பதே தனி அனுபவமாகும். என்னிடம் வந்து மிகவும் பொறுமையாக அறிவுரைகள் கூறி, வைத்திய நுணுக்கங்களை எடுத்து விளக்கி வழி காட்டுவார். அதேவேளை அரசியல் விஷயங்களையும் பேசத் தவறுவதில்லை. அவருடன் பல்வேறு விஷயங்களை பற்றி பேசுவதால் நேரம் எப்படிச் சென்றது என்பதே தெரிவதில்லை. அத்துடன் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ற பல விடையங்களை அவரது அனுபவங்கள் கற்றுத் தந்தன.
அவர் "பிள்ளை” என்று அழைக்கும்போது ஒரு தந்தையின் பரிவும் பாசமும் கலந்திருப்பதை அவதானிக்க முடியும். அவரிடம் இல்லை என்ற வார்த்தை வருவது மிகக் குறைவு. சில சமயங்களில் நோயாளர்களின் எண்ணெய் முடிந்து விட்டால் இல்லை என்று கூறி அனுப்ப மாட்டார். போத்தலை வைத்துக் கொண்டு நாளை வரும்படி கூறி அனுப்புவார். நாளை எப்படியும் அந்த எண்ணெய்யைத் தயாரித்து கொடுக்க வேண்டும்,

Page 27
42
என்பதில் முழு முயற்சி எடுத்துக் கொள்வார். "இல்லை என்ற சொல் நம் வாயில் வரக்கூடாது" என்பது அவரின் கொள்கைகளில் ஒன்று என்று கூறலாம்.
அவர் சித்த ஆயுள் வேத வைத்திய சங்கத்தின்
தலைவராக இருந்து பல அரிய பணிகளை ஆற்றியிருக்
கிறார். அகில இலங்கை வைத்திய சங்கத்தின் தலைமை பதவிக்கு வடக்கு கிழக்கு வைத்தியர்களின் சார்பாக போட்
டிக்கும் நின்றார். அதன்மூலம் தமிழ் வைத்தியர்களின்
ஒற்றுமைப் பலத்தை வெளிப்படுத்துவதில் அதிக ஆர்வ மும் அக்கறையும் கொண்டவராகத் திகழ்ந்தார். அமரர் சீனிவாசகம் இன்று இல்லையாயினும் அவரது பெயரும்
புகழும் நிலைத்து நிற்கவே செய்யும்.
வைத்திய கலாநிதி திருமதி அ. பூரீபதி
யாழ்ப்பாணம்

föğjů Lu Tiff !
பொதுவுடமைத் தென்றல் அது பூங்காற்றாய் தவழ்ந்தது அது!
நின்று நோக்கின் நிமிர்ந்தநடை நேரிய பார்வை தெளிந்த நோக்கு திடமான நெஞ்சம் கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் அரசியல் ஞானம் காந்தியத்திலிருந்து கம்யூனிசம் வரை கரை
புரண்டோடும் போராட்டமே வாழ்க்கை வாழ்க்கையே போராட்டம் வாழ்க்கையே போராட்டம் என்ற வரை விலக்கணத்தையே
S9 650 - 6 (
தையிட்டி ஊராம் தனிப் பெரும் பேராம் இம்மைந்தரைப் பெற்றதால் இம்மண் மணம் கமழ்கிறது. நெஞ்சில் உரத்துடனும் நேர்மைத் திறனுடனும் இன்றளவும் வாழ்ந்து இயற்கை யெய்திட். சீனிவாசகச் செம்மலைப் போற்றாதார் கனியிருக்க காய் சுவைப் போரே! அன்றுவந்த அமைதிப்படை எங்கே போராளிகள்? என்றிட தூணையும் காட்டித் துரும்பையும் காட்டிய தூர
நோக்காளன்.
அவர்கள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற இரும்பு நெஞ்சத்தையும் இளகிய உள்ளத்தையும் உடைய கதராடைக் காந்தி அவர் சாதனையாளர் அவர் சாதித்தவை பற்பல

Page 28
ஐம்பத்திமூன்று தனில் காங்கேசன் பட்டின சபையிலே மக்களின் மதிப்புடனே அங்கத்துவம் பெற்று ஆற்றிய சேவைகள் ஆயிரம் ஆயிரம் அஞ்சல் அட்டைதனில் மேல்விலாசம் "எழுது” என்ற கட்டளைத் தொனியை மாற்றி "எழுதுக" என்னும் இனிய பதத்தை ஏற்படுத்த முழங்கிய பீரங்கி
அவா சமுதாய மாற்றம் வேண்டி சாதியத்தைச் சாடியவர் தொழிலாள வர்க்கம் பட்டின சபையிலே அங்கம் பெற வேண்டி அரும்பாடுபட்ட பெருந்தகையாளன் குருஷேவ் தொடங்கி கொர்ப்பஷேவ் வரை ருஷ்ய கம்யூனிசத்தைச் சரியாகக் கணித்த பொதுவுடமை பேராளன்
சீமெந்து ஆலையதில் 1964தனில் ஊழியர் வேலை நிறுத்தத்தில் இறங்கிய வேளை தனில் உற்சாகமாய்த் தோள் கொடுத்த உத்தமர் அவர் ஐக்கியம் ஒரு கண் எனில் போராட்டம் மறுகண்
என்றவர்.
அனைத்துத் தொழிலாளர்க்கும் ஆதரவாளர் அவர் வரி விதிப்பில் சலுகைகள் பல படைத்த சாதனையாளர். கலை கலைக்காக வல்ல வாழ்விற்காக என்று வாதிட்டார். இறுதிக் காலம் வரை உறுதியாய் வாழ்ந்தவர் உடல் உறுதி வேண்டி ஊழியம் புரிந்தவர் சுதேச வைத்தியத்தின் சுக்கான் அவர் வைத்தியத்தையும் தொழிலாளிக்கு வசமாக்கித் தந்தவர் இலவச மருத்துவச் சான்றிதழ் வழங்கியும் தொழிலாளி உழைப்பாளி உயிர்நாடி எமக்கென்று உரக்கக்குரல் கொடுத்த உத்தமர், மக்களுக்காய் உழைப்பதில் உறுதியாய் இருந்தவர்.

45
இளைப்பே இல்லாமல் இறுதிவரை வாழ்ந்து தன் பிறந்த மண்ணை விட்டு வந்தேனே. என்ற ஓர் ஏக்கம் அதன் தாக்கம் அவர் குரலில் இளையோடியதுண்மை அது போலவே ஐயகோ மறைந்த அம் மாமனிதரின் மகத்துவம், மாண்பு, சரித்திரம் படைத்த சாதனைகள் யார் கண்ணிற்கும் தெரியாதா? ஒ1. பத்திரிகை உலகே! நீ கூட மெளனியா? மாலை வேண்டாம் மரியாதை வேண்டாம் பதாகை வேண்டாம் அவர் பாடைதான் பட்டின சபைக்கும் போக வேண்டாம் அவர் பழகிய தம்மூர் மக்களுக்கு அவர் தம் இனிய தோழர்களுக்கு அவர் மறைவு தெரியாது. இருண்ட உலகே நீ வெளிச்சத்திற்கு வருவது எப்போது? இருட்டடிப்பு இனியவர்களுக்குத் தானா? ஒ.தமிழினமே தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஆரத்தி எடுத்தாயே! உன் அருந்தவப் புதல்வனுக்கு நீ ஒரு துளி கண்ணிர் சிந்தினாயா? சிந்தித்துப் பார்
செ. பாலச்சந்திரன் காங்கேசன்துறை

Page 29
உண்மையான பொது உடமைவாதி
அன்பொழுகும் பார்வை, அருள் சுரக்கும் மொழி, அழகான தோற்றம், அளவான உயரம், இனிமையான பேச்சு, இதமான நே1 க்கு, எடுப்பான தோற்றம் , எளிமையான போக்கு, மிடுக்கான நடை, மென்மையான தொனி, இவ் இயல்புகளெல்லாம் ஒருங்கமையப் பெற்ற வர்தான் அமரர் சு. வே. சீனிவாசகம் அவர்கள். தையிட்டி தரு தவப்புதல்வன் சீனிவாசகம் அவர்கள் ஒரு குறுகிய வட்டத்துள் வாழ்ந்தவரல்லர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயரிய இலட்சியம் அவர் களுடையது. மக்கள் நோய் தீர்க்கும் பொதுமகனாகபொது உடைமைவாதியாக - மக்கள் நலன் பேணும் தியாக சிந்தனை உள்ளவராக வாழ்ந்தவர் அவர்.
மருத்துவத்துறை மக்கள் சேவைக்கு மகத்தானது எனக் கண்டுகொண்டு ஆயுள்வேத மருத்துவக்கலையை இந்தியாவிலுஞ் சென்று கற்றார். தாம் கற்ற மருத்துவக் கலையை தம் வாழ்க்கைச் செலவுக்கு ஊதியந்தேடும் தொழிலாக அவர் கொள்ள வில்லை. மக்கள் உடனலத் துடன் வாழ வேண்டும் என்னும் நோக்கில் உறுதியாக நின்று உழைத்தவர்.
அதே வேளை அரசியலிலும் தீவிரமான பங்கு கொண்டு, கிராமசபை பட்டினசபை என்பவற்றில் மக்கள் பிரதிநிதியாக நின்று, கிராம வளச்சிக்கு அயராது பாடு பட்ட வர். பொது வாழ்விலும் அவர் உழைப்பு உயர்ந்து

47
நின்றது. தையிட்டி கணேச வித்தியாலயத்தில் யாம் பணி புரிந்த வேளை, எந்த மனக் கஷ்டங்களிடையேயும் நல்ல கருத்துக்களைத் தர அவர் பின் நிற்கவில்லை. மக்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஆங்காங்கு செல்வது அவர்கள் இயல்பு. அது காரணமாக அவர்களை வீட்டிலேயே கண்டு கொள்வது நிச்சயமில்லாதது. போக்கு வரவிலேயே எமது தேவை களையும் நிறைவு செய்யும் அணுபவத்தை யாம் பெற்ற துண்டு.
பெயருக்கும் புகழுக்குமாகப் பொது உடைமை பேசும்
சிலரைப் போலன்றி உண்மையான ஒரு தோழனாக
இறுதி வரை வாழ்ந்து காட்டியவர்தான் சீனிவாசகம்
அவர்கள். சொல்லும் செயலும் இணைந்த வாழ்க்கையர்
அவர். அன்னார் ஆத்மா இறைவன் திருவடி நிழலில்
இன்புற்றிருப்பதாக என்று பிரார்த்திப்போம்.
பண்டிதர் சி. அப்பாத்துரை யா | தையிட்டி கணேச வித்தியாலய முந்நாள் அதிபர்.

Page 30
தன் நலம் பேணாப் பெருந்தகை
எல்லவர் தமையு மன்பால் ஈர்த்தினி
திருந்து நாளும் நல்லவை நினைந்து மக்கள்
நலமுறச் சேவை செய்த வல்லவர் சு. வே. சீனி வாசக
டாக்டர் அந்தோ இல்லையே யென்று மக்கள்
ஏங்கிட இயற்கை பெற்றார்.
எனது அன்பு கலா நண்பன் திரு. சு வே. சீனிவாசகம் மறைவு எல்லோருக்கும் துன்பம் தரும் நிகழ்ச்சி, தன் நலம் பேணாது பொது நலம் போற்றி வாழ்ந்த புண்ணியர். பொதுவுடமைத்துவத்தின் *பொருளாக, நின்றவர். பேச்சாளர், செயல்வீரர் சென்று விட்டார். இயற்கையில் இணைந்துவிட்டார்.
சாந்தி கொள்வோம்!
Lu 6añóT Iq-ğ5 fif LD (T. (35 LO grgr 8FAT8 காங்கேசன்துறை.

மருத்துவத்துறையில் ஒரு வீரபுருஷன் வைத்திய சிரோமணி, திரு. சு. வே. சீனிவா சகம் அவர்களுடன் இளமையில் இருந்தே கூடி சுதேச மருத் துவத்துறையில் பல கோணங்களில் இணைந்து நெருங்கி செயற்பட்ட பாக்கியம் எனக்கும், பல நண்பர்களுக்கும் இருந்தது.
மருத்துவக் கல்லூரியில் நாங்கள் ஒருமித்துப் பயிலும் காலத்தில் அவரிடம் திகழ்ந்த இளமைத் துடிதுடிப்பு 6 ம்மையும் உற்சாகமாக்கி வந்தது. பல சந்தர்ப்பங்களில் எதிரணியிலிருந்தும் விவாதித்திருப்போம். அப்பொழுது வெற்றி அவர் பக்கமே இருந்து வந்தது. மருத்துவக் கல்லூரி படிப்பின் பின்பு அவர் பிற நாடுகளுக்குச் சென்று சித்த ஆயுள் வேத மருத்துவத்துறையில் மேலதிக அறிவுடன் திரும்பி அந்நாட்டின் முன்னேற்ற பாதையை இங்கும் புகுத்திய வீரபுருஷன். அதன் பெறுபேறாகவே நோயாளர் தங்கி தமது பிணிகளைப் பூரணமாக நீக்கிக் கொண்டு போக வழி வகுத்தார். இந்த விருப்பத்தை நிறைவேற்ற தனது மக்களையும், பெறாமக்களையும் சித்த ஆயுள்வேத மருத்துவப் பயிற்சியிலேயே -9ug: நடத்தியவர். இவர் பரம்பரையாக காலம் சென்ற டாக்டர் சி. சிறீகாந்தன் D. A. M. (Cey), டாக்டர் (திருமதி) கு. சந்திரகாந்தி D. A. M. (Cey), டாக்டர் செல்வி. சி. சுமித்திரா D. A. M. (Cey) ஆகியோர் சித்த ஆயுள் வேத மருத்துவத்துறையில் பட்டங்கள் பெற்றனர். மேலும் இவர் ஆண் வழிப் பரம்பரையான பெறாமகன் செல்வன். சி. இராஜ்குமார் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட Dr6oor6), TT6u sr f. (B. S. M. S. Student Faculty of Siddha medicine, University of Jaffna)
இரு இடங்களில் மருத்துவமனைகளையும், மருத்துவ F ir 60 Gav SD u uyüð (Vedians Chemical Works) fi pussa
4 م-- چق

Page 31
50
திறம்படி நடத்தியவர். தனது மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் மருந்துகளைத் தானே தயாரித்து கொண்ட துடன், மறு மருத்துவர்களுக்குக் கிடைக்கக் கூடியதாக விற்பனைக்கும் வெளியிட்டார். இப்பணிகள் மருத்துவர் களின் மதிப்பையும், அன்பையும் அவருக்குக் கொடுத்து அவர்களை 1970 ஆம் ஆண்டில் அகில இலங்கை சித்த ஆயுள்வேத மருத்துவ சங்கத்திற்கு தலைமை தாங்கி பல வருடங்களாக சங்கத்தை வழி நடத்தி வைத்தது.
"அரசினர் ஆயுள் வேத வைத்திய கவுன்சில் (Government Ayurvedic Medical Council) 6 splin egy 60) LDLüLás (3 தமிழ் சித்த மருத்துவர்கள் எவரும் தேர்தலில் போட்டி போடத் தயங்கினார்கள். அந்த சமயத்தில் இவர் முன்வந்து மனுத் தாக்கல் செய்து போட்டி போட்டு தமிழ் மருத்துவர்களுக்குள்ள பல குறைகளை அம்பலப்படுத்தி யிருந்தார். இவரின் வீரத்தையும் திறமையையும் உணர்ந்த அகில இலங்கை ஆயுள் வேத சம்மேளனம் இவர் களுக்கு "வைத்திய சிரோமணி” பட்டத்தை வழங்கிச் சிறப். பித்தது. சமூகப் பணியில் தனது நேரத்தில் பெரும் பகுதியை ܫ செலவு செய்த காலகட்டத்தில் அருமைப்புதல்வன் * காந்தன்” மருத்துவப் பணியைத் திறம்பட நிறைவேற்றி வந்திருந்தார். வைத்தியக் கலாநிதி "சிறீகாந்தனின்" திடீர் மறைவு அவரையும் குடும்பத்தாரையும் மட்டுமன்றி தமிழீழ மக்களையும் ஒா உலுப்பு உலுப்பியிருந்தது. வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களைத் தாண்டி அமைதி யாக வாழ்ந்த சமயத்தில் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் அவரின் வாழ்க்கை வழிகாட்டலைத் தொடர்ந்து பணிபுரிந்து மக்க ளுக்குத் தொண்டாற்றி ஆத்ம சாந்திபெற முயல்வோமாக. வையகம் புகழும் அருமருந்தாக வேண்டுவோம்.
வைத்திய சிரோமணி எம். எஸ். சுந்தரம் யாழ்ப்பாணம்

வைத்திய சேவைக்கு தன்னையே அர்ப்பணித்தவர்
முதுபெரும் கம்யூனிஸ்ட் தோழர் வைத்திய கலாநிதி சு வே. சீனிவாசகம் அவர்கள் தனது 83ஆவது வயதில் 1992 ஜனவரி மாதம் இயற்கை எய்தினார், என்ற செய்தி அறிந்து இலங்கா ஆயுள்வேதக் கல்லூரி ஆசிரியர் களும் மாணவர்களும் அதிர்ச்சியும் ஆறாத் துயரும், அடைந்தோம்.
காலம் சென்ற வைத்தியக் கலாநிதி அவர்கள் இலங்கா ஆயுள் வேத கல்லூரியில் 4 ஆண்டுகள் கற்று 1937ஆம் ஆண்டு இறுதி ஆண்டு பரீட்சையில் சித்தி யடைந்து D. A. M பட்டதாரி ஆகினார். ஐயா அவர்கள் வைத்தியத்துறை அரசியல் துறை, பொது வாழ்வு ஆகிய மூன்று துறைகள் ஊடாக மக்கள் சேவைக்குத் தன்ன்ை அர்ப்பணித்தவர். தான் கற்ற ஆயுள் வேத வைத்திய அறிவுக்கு மேலும் மெருகு ஊட்டும் நோக்குடன் இந்தியா சென்று அங்கு கற்றது மூலம் வைத்திய அறிவைப் பெருக்கிக் கொண்டவர்.
வைத்தியத் தொழிலை வருவாய் தேடும் தொழிலாக செய்யாது மக்கள் சேவையாகவே செய்து வந்ததுடன், ஆயுள் வேத வைத்தியத்துறையின் வளர்ச்சிக்காக அரசாங் கத்துடனும், ஆயுள்வேத வைத்திய சபையுடனும் பல முறை தொடர்பு கொண்டும். மகஜர்கள் அனுப்பியும், தான் சார்ந்திருந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடாக அமைச்சர்களைப் பேட்டி கண்டும், அவர் பட்டின சபைத் தலைவராக இருந்த காலத்தில் பல தீர்மானங் களை நிறைவேற்றியும், வைத்தியத் துறைக்கு அதிலும் குறிப்பாக தமிழ் வைத்தியர்களின் மேம்பாட்டிற்கும் அபி விருத்திக்கும் அயராது உழைத்து வந்தார்.
வைத்திய சேவைக்குத் தன்னை அர்ப்பணித்து சேவை யாற்றத் தொடங்கிய சீனிவாசகம் ஐயா அவர்கள் அச் சந்தர்ப்பத்தில், சமுதாயத்தில் புரையோ டி போய் இருந்த

Page 32
52
புற்றுநோய் போன்ற சாதிப்பிரச்சினை ப்ோன்ற சமூக ஊழல்களைக் கண்டு கொதிப்படைந்தார். அவை கட்டாய மாக சமூகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற அவாக் கொண்ட ஐயா அவர்கள் மார்க்சிய சித்தாந்தத் தினால் ஈர்க்கப்பட்டு வடபுலத்தில் பொதுவுடமைக் கருத் துக்களை முதல் முதலில் அறிமுகம் செய்த காலம் சென்ற திரு. மு. கார்த்திகேசனுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். இதன் பிரதிபலனாக 1947ஆம் ஆண்டு மயிலிட்டி கிராமசபை உறுப்பினராகவும், காங்கேசன்துறை பட்டின சபை உறுப்பினராகி, உபதலைவராகி தொடர்ந்து அதன் தலைவராக பல வருடங்கள் கடமையாற்றினார்.
多山町 அவர்கள் என்றுமே சுயநலத்தை நாடாது எளிமையான வாழ்வும் உண்மையான மக்கள் தொண்டும் புரிந்து, அவற்றுக்காகத் துணிந்து பல போராட்டங்களையும் அஞ்சா நெஞ்சுடன் வெற்றிகரமாக செய்து முடித்தார். தற்போது ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் இடம் பெயர்ந்து, தொழிலையும் முன்போல் ஆற்ற முடியாது இருந்த வேளையிலேயே அவர் உயிர் நீக்க நேர்ந்தது. சொல்லி லும் செயலிலும் ஆயுள்வேத வைத்தியர்களின் நலனுக் @羅「35 உழைத்து மறைந்த வைத்திய கலாநிதி திரு. சு. வே. சீனிவாசகம் அவர்களுக்கு இலங்கா ஆயுள் வேத வைத்தியக் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர் கள் சார்பில் ஆழ்ந்த அனுதாப அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் பிரிவினால் துயருறும் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கும் எமது அனுதாபத்தைத் தெரிவித்து அன்னாரின் ஆன்மா சாந்தி யடையவும் பிரார்த்திக்கின்றோம்.
வைத்தியக் கலாநிதி சுகந்தன் இன்னாசித் தம்பி அதிபர் இ. ஆ. வே. வை. கல்லூரி யாழ்ப்பாணம்.

அவர் ஒரு தியாக சீலர்
வைத்தியக் கலாமணி சு. வே. சீனிவாசகம் அவர் களின் மறைவு சகலதரப்பு மக்களுக்கும் தேசத்திற்கும் பேரிழப்பாகும். பொது நலச் சேவையில் பின்தங்கிய அடக் கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் அவரைப் போன்ற ஒருவரை காங்கேசன் துறை-தையிட்டி பகுதி நமது காலத்தில் பெற்றதில்லை என்று கூற முடியும். அவருடன் மிக நெருங்கி நின்று பல்வேறு விடையங்களிலும் பங்கு கொள்ள முடிந்த ஒருவன் என்ற காரணத்தினால் இதனைத் துணிந்து கூறுவேன். V
சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் மீது அவர் கொண்டிருந்த அக்கறைக்கு ஓர் உதாரணமாக தையிட்டி முங்கல்லை என்ற பகுதியில் ஆழ்கிணறு ஒன்றினை அரச செலவில் மயிலிட்டிக் கிராமசபை மூலம் வெட்டுவித்து அம்மக்களின் வாழ்வில் ஓர் புதிய நிலையைத் தோற்று வித்ததாகும். அக்கிணறு கிடைத்திராது விட்டால் மக்கள் இன்னும் தமது குடிநீருக்கு கையேந்தி நிற்கும் நிலைதான் நீடித்திருக்கும். அதேபோன்று குளிப்பதற்கு மழைகாலத்தை எதிர்பார்த்து இருந்தது போன்றே இன்றும் இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்.
1953ஆம் ஆண்டில் காங்கேசன்துறைப் பட்டின சபைக்கு 4ஆம் வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப் பட்ட திரு. சீனிவ4 சகம் தனது ப்தவிக் காலங்களில் தனது வட்டாரத்திற்கு மட்டுமன்றி ஏனைய பகுதிகளின் பிரச் சினைகளையும் கவனத்திற் கொண்டு செயல்பட்டவர். கல்விக்கும் அறிவு வளர்ச்சிக்கும் முதன்மை கொடுத்து நின்ற அவர் பல வாசிக சாலைகள் கிராம முன்னேற்றச் சங்கங்கள் உருவாகுவதற்கும் திறம்பட நடைபெறுவதற் கும் உற்சாகமாக வழிகாட்டி வந்தார்.

Page 33
54
மின்சார விநியோகம் ஆரம்பித்த காலத்தில் அதனை முன்நின்று செய்தவர்கள் சில பகுதிகளைப் புறக்கணித்த னர் என்று கூறலாம். ஆனால் சீனிவாசகம் அவர்கள் தனது பதவிக் காலத்தில் அவ்வி:ாறு புறக்கணிக்கப்பட்ட பகுதிகளைக் கவனத்திற் கெடுத்து மின்சாரம் அப்பகுதி களுக்கு வழங்க ஆவன செய்தார். அது மட்டுமன்றி விவசாயிகளின் தேவைக்கான மின்சாரத்தைப் பட்டின சபை மூலம் அறுபதனாயிரம் ரூபாய்களை ஒதுக்கி விவசாயிகள் நன்மை பெற வழி வகுத்தார். ஆனால் அவரது பதவிக் காலம் முடிவுற்றபின் ஏனையவர்கள் அத்திட்டத்தை நிறைவேற்றாது விட்டார்கள். இத்திட்டத்தை விவசாயி களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் போனமை யிட்டு அவர் பின் நாட்களில் மிகவும் மனம் வருந்தினார் என்பதும் கூற வேண்டியதாகும்.
தோழர் சீனிவாசகம் மக்கள் சேவையினால் தனது சொந்த வாழ்வில் பல கஸ்ரங்களை துன்பங்களை உயிராபத்துக்களை சந்தித்த ஒருவராகவே வாழ்ந்து மறைந்தார். அவர் சொத்துக்களை தேடிச் சேர்க்க முயன்றவரல்லர். பதிலாக தனது சொத்துக்களை விற்றுச் சேவை செய்தவர். பொதுச் சேவைக்காக அறுபத்தி நான்கு பரப்புக் காணிகளை காலத்திற்குக் காலம் விற்று, சொத்தை இழந்து சேவை செய்த தியாகசீலன் என்பது பலருக்குத் தெரியாத விடயம். இதுபற்றி அவர் ஒருபோதும் மனம் நொந்து அல்லது பெருமைப்பட்டுக் கூறியது கிடையாது.
இத்தகைய ஒரு பண்பாளனை நேர்மை மிக்கப் பொது வுடமைவாதியை - வைத்தியரை - மக்கள் சேவைகளை நாம் இழந்திருப்பது பெரும் இழப்பல்லவா? அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன். அவரது துணைவியா ருக்கும் குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது அனுதாபத்தை கூறிக் கொள்கிறேன்.
நன்றி மு. கந்தப்பிள்ளை
தையிட்டி, காங்கேசன்துறை

மக்கள் சேவையின் வழிகாட்டி
வைத்திய கலாநிதி சு. வே. சீனிவாசகம் அவர்கள் எமது குடும்ப வைத்தியராகச் சேவை புரியும் வேளையில் எனது தாயார் நோய்வாய்ப்பட்டு இருந்தபொழுது கை நாடி பார்த்து, பகல் பன்னிரண்டு மணியளவில் உயிர் பிரிவார் என்று கூறிச் சென்றார். அவ்விதமே எமது தாயார் உயிர் பிரிந்தார். இவற்றைக் கொண்டு இவர் ஒரு சிறந்த கைநாடி வைத்திய நிபுணர் என்பதை எம்மால் உணர முடிந்தது.
அன்று வைத்தியராகச் சந்தித்த உறவு அரசியல் விவகாரத்திலும் நீடித்தது. நான் மதுபரிபாலன இலாகா வில் கடமை புரிந்ததின் பின்னர் , எனது 46ஆவது வயதில் பட்டினசபையின் பிரதிநிதியாக இருந்த காலத்தில் டாக்டர் சு. வே. சீனிவாசகம் அவர்களோடு சேவை புரியும் வாய்ப்பு ஏற்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின் றேன். நான் தற்போது நோய்வாய்ப்பட்டிருப்பதனால் சரியாகத் திகதியைக் குறிப்பிட முடியவில்லை. எனினும் 1950 ஆம் ஆண்டில் பட்டின சபை தொடங்கியது. திரு. சீனிவாசகம் 1953ஆம் ஆண்டில் பட்டின சபையின் பிரதி நிதியானார். இவர் பிடித்த பிடியைத் தளர்த்த மாட்டார். நேர்மை நிதானம் உடையவர். மூன்று மொழியும் தெரிந்த வர். நேர்மையான தொண்டின் மிகுதியால் தலைவ ரானார். இவர் மூன்றுமுறை தென்னிலங்கையில் நடை பெற்ற அகில இலங்கைப் பட்டினசபை சம்மேளனத்தில்

Page 34
56
கலந்து கொண்டு தமிழ் மொழியில் பேசியவர் இவரே யாவார். இது மத்துகமவில் 1956 அல்லது 1957களில் நடந்தது எனலாம். இவர் தாய்மொழிப் பற்று மிக்கவர் என்பது இதிலிருந்து புலனாகிறது. சிறுபான்மை பகுதி மக்களின் நலன், முன்னேற்றத்தில் அக்கறை இவருக்கு இருந்தமையாலும், நேர்மை, நிதானம், கண்ணியம் மிக்க வராக இருந்தமையினாலும் எமக்குள் ஒற்றுமை நிலவி யது. இவர் மதுப்பழக்கம் இல்லாதவர் தம் மேம்பாடு மிக்க சேவையால் எல்லோரையும் தம் வசப்படுத்தக் கூடிய வராகத் திகழ்ந்தார்.
இவர் பட்டின சபையின் தலைவராக இருந்த காலத் தில் திரு. சு. கிருபாமூர்த்தி அவர்களையும் நண்பனாகப் பெற்றார். திரு. கிருபாமூர்த்தி அவர்கள் பெரும் பிரபல முதலாளியாக இருந்தாலும் சாதி சமய வேறுபாடு அற்ற வராக இருந்தமையால் இவருடன் டாக்டர் அவர்கள் ஒத்துழைத்தார்; இவர் பட்டின சபையின் தலைவராக இருந்த காலத்தில் புதிய கட்டிடத்திற்கு (தற்போதைய கட்டிடத்திற்கு) அடிக்கல் நாட்டினார்.
சட்டத்தரணி ஆ. வ. சதாசிவம் தலைவராக இருந்த காலத்தில் பட்டின சபை நிர்வாகம் ஆங்கிலத்தில் நடை பெற்று வந்த நேரத்தில், நிர்வாகம் தமிழ் மொழியில் நடத்தப்படல் வேண்டும் என்று பிரேரணை கொண்டு வந்து செயல்படுத்தியவர் சீனிவாசகம் அவர்கள் என்பது கூறவேண்டியதாகும். டாக்டர் அவர்கள் நகர சுத்தித் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் உரிமைகள் அனைத் தும் வழங்கப்படல் வேண்டும் என்ற தீர்மானத்தை பட்டின சபையில் கொண்டு வந்து நிறைவேற்றி அதற்காகப் பாடுபட்டவர். தனது பதவிக் காலத்தில் தொழிலாளர் களுக்கு இருப்பிட வசதி (வீடுகள்) அமைத்துக் கொடுத் தார்.
முன்பு சுகாதார வார விழா வருடா வருடம் நடப்பது வழக்கம். அப்படி நடக்கும் விழாவில் டாக்டர் கந்தையா

57
D.M.O. (காங்கேசன்துறையில் வைத்திய சாலையில் இருந்தபோது) அவர்களோடு முருங்கையிலையில் பென்சிலின் சத்து கூடவுள்ளது என்பதை வாதிட்டு தனது வைத்திய ஆய்வுத் திறமையை வெளிப்படுத்திக் காட் டியவர்.
காங்கேசன்துறையை நகரசபை ஆக்குவதற்கென இரு தடவைகள் கொமிஷன் விசாரணைகள் நடைபெற்ற போது அந்த அளவிற்கு காங்கேசன்துறைப்பட்டின பகுதி மக்கள் உயரவில்லை என்று புள்ளி விபரத்துடன் வாதிட்ட வர் . நகர சபையானால் மக்களின் மீதான சுமைகள் அதிகரிக்கும் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தியவர்.
திரு. சு. கிருபாமூர்த்தி அவர்கள் தலைவராக இருந்தபொழுது சுடுகாடுகளில் மடங்கள் கிணறுகள் வேண்டும், அதற்கு ஆவன செய்தல் வேண்டும் என்று பிரேரணை கொண்டு வந்தவர். மின் விளக்குகள் மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பத்து மணி வரையும் வீதி களில் எரிய விடுகின்ற நேரத்தில் சுடுகாடுகள், வாசிக சாலைகள், கோயில்கள், பாடசாலைகள் இவற்றுக்கு முன் னால் உள்ள மின் விளக்குகள் இரவு முழுவதும் எரியவிடல் வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வந்தவர். சபைக்கு கொண்டு வரும் பிரேரணை நிறைவேற்று வதிலும் அதனைச் செயலில் காட்டுவதிலும் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து அயராது செயல்பட்டவர்.
தனது சொந்தக் குடும்பக் காரியங்களுக்கு முக்கிய இடம் கொடாது பொதுச் சேவைகளில் முக்கிய இடம் கொடுத்தவர் காலம் சென்ற திரு. சு. கிருபாமூர்த்தியும் டாக்டர் அவர்களும், நானும் ஒரே குடும்பத்தவர் களாகவே செயல்பட்டோம். எமக்குள் ஒற்றுமை நிலவியது. சட்டத்தரணி திரு. ஆ. வ. சதாசிவம் திரு மு. திடவீரசிங்கம் ஆகியோர் தமது தலைமைப் பதவிகள் பறி போகும் பட்சத்தில் இவரிடம் வந்து உதவிகள் கோரிய

Page 35
58
போது தயங்காது அவர்களின் பதவிகளை காப்பாற்றிக் கொடுத்த உயர்ந்த மனப்பாங்கு கொண்டவர் டாக்டர் அவர்கள் ஆவார்.
டாக்டர் அவர்கள் பொதுவுடமைவாதியாக இருந்தா அம் எமக்குள் அரசியல் கொள்கையில் வேறுபாடு இருந் தாலும் எமக்குள் ஒற்றுமை நிலவியதற்குக் காரணம் தாய் மொழிப் பற்றும் மக்கள் சேவையில் நேர்மை, நிதானம் கண்ணியமுமேயாகும்.
இவர் மிகவும் நல்லவர். எவருடனும் அன்புடன் பழகு வார். சொல்லிலும் செயலிலும் மக்கள் சேவை செய்து, எல்லோருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த டாக்டர் சு. வே. சீனிவாசகம் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரைப் பிரிந்து தவிக்கும் அவர் பாரியாருக்கும், நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிலிப்பையா இமாலுவேல் முன்னாள் பட்டின சபை உறுப்பினர் மயிலிட்டி
காங்கேசன்துறை

பண்பும் பரிவும் கொண்டவர்
டாக்டர் சு. வே. சீனிவாசகம் அவர்களை நான் கல்லூரியில் படிக்கும் இளவயதிலிருந்தே நன்கு தெரியும். அதாவது ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே டாக்டர் அவர்களுடன் அளவளாவி அவர்களை அறியவும் வேண்டியபோது வைத்திய உதவி பெறவும் எனக்கும் என் பெற்றோருக்கும் வாய்ப்பு எட்டியது.
இதனால் டாக்டர் சு. வே. சி. யின் மறைவுபற்றி திடீரென பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள அவுஸ்திரேலியாவில் வசிக்கும் யான் அறிந்ததும் பெரிதும் வருந்தினேன். இப்பெருமகனார் தையிட்டி ஊர்மக்களுக்கு ஈய்ந்து அளப் பெரிய பேதம் மீறிய அன்பையும் ஆதரவை யும் சேவையையும் எண்ணி எண்ணி அவரை வாழ்த்தி னேன். அஞ்சலி செலுத்தினேன்.
டாக்டர் அவர்கள் தையிட்டி ஊரில் என் பெற்றோரின் வீட்டிலிருந்து ஒரு நூறுயார் தொலைவிற்குட்பட்ட ஒர் இல்லத்தில் வசித்ததுடன் வைத்தியசாலையும் ஒன்று நெடுங்காலமாக நடாத்தி எமது அயல்குடிவாசியுமாக இருந்தார். இதனால் எமது குடும்பத்திற்கும் டாக்டர் அவர்களுக்கும் இடையில் ஆழ்ந்த நட்பும், மதிப்பும், ஒத்தாசை உதவிகளும் நிலைத்திருந்தன. டாக்டர் அவர் களின் மறைவை, எமது பேரிழப்பை எண்ணும் வேளையில் அவர்கள் எமது குடும்பத்தினருக்கு ஆற்றிய சேவைகளும் நினைவில் அலைமோதுகின்றன.

Page 36
60
டாக்டர் அவர்கள் அரசியல் சேவையில் ஆரம்பித்த காலத்தில் பெண்களுக்கு கல்வி, தொழில், அரசியலிற் பங்கு ஆகியவற்றில் சம உரிமை அவசியமாகுமென மேடைகளில் முழங்குவார். சொல்லில் மாத்திரமல்ல செயலிலும் காட்டவேண்டுமென வழிகாட்டினார். இம்முயற்சியில் பெரும் ஆர்வமாக ஈடுபட்ட சு. வே. சீ. அவர்கள் எனது சகோதரி தேவியின் தமிழ் அறிவையும் முன்னேற்றத்தையும் போற்றி என் சகோதரியையும் கூட்டங்களில் பேசும்படி அழைத்து உற்சாகமளித்து பல கூட்டங்களில் சொல்மாரி பொழிய வைத்தார். டாக்டர் அவர்களின் முற்போக்கு அரசியல் சேவை. ஆரம்பத்திலிருந்தே பரிமளித்து வளர்ந்ததொன்றாகும்.
இத்துணை அன்பு அறிவு சமூகச் சேவை ஆர்வம் மனத்துணிவு நிறைந்த டாக்டர் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து தீராது. எமது ஊருக்குக்கிடைத்த பெருமகனா ரின் சேவையில் பங்கும் பெருமையும் கொண்ட அயலூர் கள் பல. இத்தகைய பெருமகனாரின் ஆவி நற்பதமடைய்ப் பிராத்தித்து அன்னார் காட்டிய சேவை வழியில் நாமும் செல்வோமாக,
க. சிறீ பத்மநாதன் இளைப்பாறிய உலக வங்கி ஆலோசகர் அவுஸ்திரேலியா

தந்தையைப் பற்றி
"தோன்றில் புகழொடு தோன்றுக-அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று”
என்னும் பொய்யா மொழிக்கிணங்க, தனக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்து மடிந்த தந்தையைப்பற்றி ஒருசில. வரிகளை எழுதி அவரை அடிக்கடி நினைவு கூறுவோமாக. ஈழமாமணித் திருநாட்டின் யாழ் மாவட்டத்தில் அமைந்த மானிப்பாய் என்னும் ஊரிலே 1909ஆம் ஆண்டு ஆவணி 12ஆம் திகதி எமது தந்தை சீனிவாசகம் அவர்கள் பிறந்தார். இளம் பிராயத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். இவருடைய கணித ஆற்றலைக் கண்டு வியந்த அதிகாரி ஒருவர், வேற்றுாரில் கல்வி கற்க வசதி செய்து கொடுத்தபோது தாயாரின் அறிவீனத்தால் அவ்வாய்ப்பினை வீணடித்துவிட்டார்கள். எனவே அவர் தமது சொந்த மண்ணிலேயே கல்வியைத் தொடர்ந்து பின்னர் யாழ் ஆயுள்வேதக் கல்லூரிவரை சென்று படிப்பை மேற்கொண்டார். அதன்பின் இந்தியா சென்று அங்கே ஓராண்டுக் கல்வி பயின்ற பின்னர் தாய்நாடு திரும்பி வைத்தியத்துறையிலே ஈடுபடலானார். ஏழை களுக்கிரங்கி ஆயுள் வேத இலவச வைத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்து ஊன் உறக்கமின்றி பொதுமக்களைக் காப்பாற்றி வந்தார் . சன்னி சுவாதம் கிருமி போன்ற நோய்களுக்குத் திறமையாக வைத்தியம் செய்தார். கற்பூரத் தைலம் , தடிமன் தூள், கல்நார்ப் பற்பொடி, போன்ற மருந்துகளை தன் கைவண்ணத்தினாலேயே தயாரித்து "வேடியன்ஸ்' தயாரிப்பு என மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் . இதனால் இவரின் புகழ் நாளுக்கு

Page 37
62
நாள் மேலோங்கியது. தனது சொத்துக்களை விற்று மக்களுக்கு வைத்தியத் துறையில் சேவை செய்த பாங்கு மிகவுப் பாராட்டத்தக்கது. தான் கெட்டாலும் தக்கார் கெடக்கூடாது" என்ற எண்ணம் எந்நேரமும் அவர் முகத்தில் பிரதிபலிக்கும். அவருடைய அறிவு ஆற்றல் நாவன்மையாலேயே மக்களைக் கவர்ந்திடுவார். எந்நேர மும் அவரைச் சூழ ஒரு குழு குழுமிக்கதைத்து உறவாடிக் கொண்டேயிருக்கும்.
வைத்தியத்துறையில் பணியாற்றி வருகால் தையிட்டி யில் 1938ஆம் ஆண்டு ஆறுமுகம் சின்னாச்சி மகளான சின்னத் தங்கத்தை மணந்து ஒன்பது பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். இவர்களில் ஆறு பெண்களும் மூன்று ஆண்களுமாவர். இவர்களை கண்ணின் மணி போலக் காத்து வளர்த்து வந்தார். முதலிரண்டு பிள்ளைகளையும் ஆயுள்வேதக் கல்லூரியிலேயே கல்விகற்க வசதி செய்து கொடுத்து தன்னைப்போலவே இரு வைத்தியர்களை உருவாக்கினார். இரு புதல்வர்களும் சேர்ந்து மூவருமாக தொண்டாற்றி வருங்கால் ஆண்டவனின் சதியில் ஆண் புதல்வன் சிக்கிக் கொண்டார். இந்நிலையிலுமே மனம் சலிக்காமல் எத்தனையோ வைத்திய மணிகளை சாதிமத பேதமின்றி உருவாக்கினார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல, வேறு வேறு துறைகளுக்கு தமது பிள்ளைகளை ஊக்குவித்தார். எந்நேரமும் அவருடைய வாயில் கல்விபற்றிய சிந்தனையே மிளிரும். எல்லா இனத்தவரின் பிள்னை களும் தன் பிள்ளைகளே என எண்ணி புத்திமதிகள் கூறிக் கொண்டே இருப்பார். சுருக்கமாகக் கூறின் தையிட்டிக் கிராமத்தை அணி செய்தவர்களில் தந்தையாருக்கு தனியிடமுண்டு. நிமிர்ந்த நடையும், சுத்த தூய கதர் உடையும், துடுக்கான போக்கும், அஞ்சா நெஞ்சும், சிறந்த நாவன்மையும் சேர்ந்து ஒரு கம்யூனிஸ்ட் அரசியல் வாதியாக விளங்கினார் என்றால் அது மிகையாகாத

63
இவர் கிராமசபை உறுப்பினராக, பட்டின சபைத் தலைவர், உபதலைவராகவும், கூட்டுறவுச் சங்கத் தலைவ ராகவும் திகழ்ந்தார். பட்டின சபைத் தலைவராக இருந்த சமயம் பட்டின சபைக்கு உட்பட்ட சகல இடங்களுக்கும் மின்சாரம் வழங்க ஒழுங்கு செய்த பின்னரே தன் சொந்த இடமான தையிட்டிக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தார். வீட்டைப் பற்றியே நினைவில்லாமல் நாட்டுத் தொண்டையே தனது குறிக்கோளாகக் கொண்ட பெருந் தகையை அக்கிராம மக்கள் மறத்தல் இயலாது. இவர் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து ஆற்றிய பணிகள் மிக மிகத் தூய்மையானவை, தூய பணிகளால் தம்மையும் துலக்கி சமூகத்தையும் மலரச் செய்து வாழ்வின் பயனை அடைந்து கொள்வதே அவர் எமக்குக் காட்டிய நன்னெறியாகும்,
*உள் ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்திலெல்லாம் உளன்"
என்ற பொது மறையே மெய்ப்பித்த பெருந்தகையை நினைந்து வணங்கி அஞ்சலிப்போமாக!
ᎥᏝ ᏯᏂ 6ir பா. மீனகாந்தி
குடும்ப உறுப்பினர்கள்
சுப்பர் வேலுப்பிள்ளை -தந்தை
சு. வே. முத்தையா
சு , வே. செல்லையா
சு. வே. சின்னையா -- சு. வே. சீனிவாசகத்தின் சகோதரர்கள்
சு. வே. சீனிவாசகம்-சின்னத்தங்கம் (மனைவி)

Page 38
பிள்ளைகளும் மருமக்களும்
கு. சந்திர காந்தி அ. குணரத்தினம்
* சீ. சிறிகாந்தன் சி. மங்கயற்கரசி
* சீ. சந்திர காந்தன்
சா. சூரியகாந்தி
கி. சாந்த கிருஷ்ணன்
பா. மீன காந்தி வை. பாலகிருஷ்ணன்
சீ. சூரியகாந்தன் சூ. சற்குணதேவி
* சீ. புஸ்பகாந்தி * சீ. தேவகாந்தி
த. ஜெயகாந்தி சி. தவராசா
பேரப்பிள்ளைகள்
சுதாகரன் சுசிகலா சுரேஷ் சுபாஸ்
சுஜிதா ஜனன்
கஜன் றொஜன் கஜனி
அனுஷியா g56), u fr துஷாந்தன்
சூரியப் பிரசன்ன !
அர்ஜனா சீபிகா
கெளதமி
* இவர்கள் காலம் சென்ற பிள்ளைகளாவர்.

தையிட்டி தந்த தவப் புதல்வன்
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று”
(வள்ளுவர் குறள்)
தையிட்டியின் தவப் புதல்வனாய் உதித்து, அண்மை யில் மறைந்த உயர் திரு சு. வே. சீனிவாசகம் அவர்கள் ஓர் ஆயுள் வேத வைத்தியக் கலாநிதி; சிறந்த அரசியல் ஞானி; சமூக சீர்திருத்தவாதி, தையிட்டிக் கிராமத்தின் தொண்டன்; ஏழை மக்களின் தொண்டன். எளிமையான வாழ்க்கையை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இவ்வருஞ்சிறப்பியல்புகளை அணிகலமாகக் கொண்டு தன் நாட்டின் வளர்ச்சிக்கு இறுதி மூச்சு வரை தன்நலன் கருதாமல் உழைத்த ஒரு பெருமகன். அவர் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டுகளையும், சமூக அநீதி களை எதிர்த்து, ஏழை மக்களின் பக்கம் தோளோடு தோளாக நின்று, ஆற்றிய அரும் பெருஞ் சேவைகளையும் எழுதப்புகின் ஒரு பெரிய புத்தகமே எழுதிவிடலாம் அவைகளில் என்னோடு சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தில் அவர் ஆற்றிய அளப்பெரும் உதவியை-நன்றியை-- சேவையை- என்னால் என்றுமே மறக்க முடியாது.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லைச் செய்நன்றி கொன்ற மகர்க்கு” (வள்ளுவர் குறள்)
5۔ چق

Page 39
66
ஆகையால் பின்வரும் அச்சம்பவம் ஒன்றை மட்டும் யான் விபரமாகக் குறிப்பிட்டு அதனை அவருடைய நினைவஞ்சலி மலரில் வெளிவரச் செய்து எனது நன்றிக் 560 65 அவருக்கு செலுத்தலாம் என எண்ணி இக்கட்டுரையை எழுதுகிறேன்.
யான் தையிட்டி க மத்திற்கு அயலில் உள்ள விமன்காமம் கிராமத்தில் வசிப்பவன். தையிட்டி தெற்கில் உள்ள சிவகுருநாத வித்தியாசாலையில் 1.9-1938இல் ஓர் உதவி ஆசிரியராகச் சேர்ந்து படிப்பித்தேன். யாழ் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் இயங்கும் 150 துக்கும் மேற்பட்ட பாடசாலைகளில் அதுவும் ஒன்றா கும். மிகக்குறைந்த தெ கைப் பிள்ளைகளுடன் 5ஆம் வகுப்பு வரையும இயங்கும் ஒரு சிறு பாடசாலையாகவே அது அப்பொழுது இயங்கிக் கொண்டிருந்தது. என்னுடன் சேர்ந்து மூன்று ஆசிரியர்கள் அங்கு கடமையாற்றினார் கள். அங்கே தையிட்டியில் உள்ள பிள்ளைகள் கூடுதலாக, வும், மயிலிட்டியில் உள்ள பிள்ளைகள் குறைந்த தொகை யின ராகவும் படித்து வந்தனர். யான் அங்கு சென்றபின் எங்கள் கிராமத்துப் பிள்ளைகளும் சிலர் அங்கு வந்து சேர்ந்து படித்தனர். ஒரு சில வருடங்களுள் பாடசாலை துரித வேகத்தில் முன்னேறி 8ஆம் வகுப்பு வரையும் படிக்கும் தரத்திற்கு வந்து விட்டது. ஆசிரியர் தொகையும் ஆறு ஏழு என்று உயரத் தொடங்கியது.
இவ்விதம் 20 வருடங்களாகத் தொடர்ந்து யான் சேவையாற்றிக் கொண்டிருக்கையில் 1-9-58 தொடக்கம் என்னைத் திருக்கேதீஸ்வரம் பாடசாலைக்கு மாற்றம் செய்திருப்பதாக அன்றைய முகாமையாளரான இந்து போட் இராசரத்தினம் அவர்களிடமிருந்து, மாற்ற அறிவித்தல் கடிதம் ஒன்று கிடைத்தது. எனது மாற்றச் செய்தியும் அங்கு படித்த பிள்ளைகள் மூலம் பெற்றோர் அனைவருக்கும் காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவி

67
விட்டது. எனக்கு மின்னாமல் முழங்காமல் இடி வீழ்ந்தது போல் இருந்தது.
இதற்கிடையில் தையிட்டிப் பெற்றோர்களின் பிரமுகர் களாய் சாத்திரியார் திரு. வல்லிபுரம், திரு. மு. கந்தப் பிள்ளை , திரு. ச. பாலசிங்கம் முதலியோர், உயர்திரு சு. வே. சீனிவாசகத்தின் தலமையில் முகாமையாளரிடம் சென்று, எனது சேவை தங்கள் பிள்ளைகளுக்கு என்றென் றும் தேவை யென்றும், அவர் மிகச் சிறந்த ஒரு நல்ல ஆசிரியரென்றும் , அவர் இப்பாடசாலைக்கு வந்தபின் உன்னத நிலையில் வளர்ச்சிபெற்று நல்ல நிலமையில் தற்போது இருக்கிறதென்றும், இன்னும் பலவற்றையும் எடுத்துக்கூறி மேற்படி மாற்றத்தை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்குப் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இதனால் தையிட்டி, மையிலிட்டி, பெற்றோர்கள் வெகுண்டெழுந்து தங்கள் பிள்ளைகளைத் பாடசாலைத் தொடக்கத்திலன்று அங்கு செல்லவிடாமல் பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு, பாடசாலைக்கு முன்பு பெரும் ஆர்ப்பாட்டமும் செய்தனர். போராட்டம் ஒரு நாளல்ல, ஒரு வாரமல்ல, ஒரு மாதமல்ல, நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றது. பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டங்கள் யாவும் உயர் திரு சீனிவாசகம் அவர்களின் தலைமை யிலேயே நடைபெற்றன. யான் திருக்கேதீஸ்வரத்தில் இருந்து கொண்டே பகிஸ்கரிப்புச் சம்பம்தமான சம்பவங் களையெல்லாம் அன்றாடன்று வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. முகாமையாளர் அங்கு கற்பிக்கும் ஊராசிரியர் மற்றும் ஆசிரியர்களின் உதவியோடு பாடசாலையை இயங்கவைப் பதற்கு பலமுறை பகீரதப் பிரயத்தனம் செய்தும் யாவும் விழலுக்கிறைத்த நீர் போலாயின. இதனால் கொதிப் படைந்த முகாமையாளர் இச்சம்பவத்தை வித்தியா பகுதி யினருக்குத் தெரிவித்தனர். அவர்களும் ସ୍ଥିa5 fir

Page 40
68
உண்மையை அறிவதற்கு ஒரு விளக்கத்தை நடத்த முன் வந்தனர்.
விளக்க நாளன்று காலை 8, 30 மணியளவில் அப் பாடசாலைக்கு போயிருந்தேன். அங்கே விளக்க சபையார் சிலரும், முகாமையாளரும், தையிட்டி, மயிலிட்டிப் பிரமுகர்கள் சிலருடன் உயர்திரு சீனிவாசகம் அவர்களும் வந்திருந்தனர். 9.00 மணியளவில் விளக்கம் ஆரம்ப மானது. முதலிற் பெற்றோர்களையே பகிஷ்கரிப்புச் சம்பந்தமான விளக்கம் கேட்க ஆரம்பித்ததும், உயர்திரு. சீனிவாசகம் எழுந்து விளக்க சபையா ருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு பெற்றோர்களின் பிரதிநிதியாக இப்பகிஷ்கரிப்புச் சம்பந்தமாய் சில வசனங்கள் கூறவிரும்பு வதாகச் சொல்லி பேசத் தொடங்கினார். இப்பகிஷ்கரிப்பு இங்கு 20பது வருடங்களாகக் கற்பித்த உதவி ஆசிரியர் திரு. அ. வேலாயுத பிள்ளை என்பவரை முகாமையாளர் இடமாற்றம் செய்தமையால் பெற்றோர்களால் நடத்தப் பட்டதாகும் அவர் இங்கு வந்த தொடக்கத்தில் இப்பாட சாலை மிகச் சொற்ப பிள்ளைகளுடன் 5ஆம் வகுப்புக்குள் இயங்கும் ஒரு சிறு பாடசாலையாகவே இருந்தது. நாளடைவில் முன்னேறி இப்பொது 8ஆம் வகுப்பு வரையும் நல்ல கல்வி பெற்று இயங்கி வருகிறது. ஆசிரியர் கள் தொகையும் ஆறு ஏழு என்று உயரத் தொடங்கி விட்டது. எங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அவருடைய சேவை என்றென்றும் தேவையாக இருக்கின் றது, அவர் மிகவும் சிறந்ததொரு நல்ல ஆசிரியர் என்று கூறி, எங்களிற் சிலர் முகாமையாளரிடம் சென்று மேலே குறிப்பிட்ட காரணங்களை எல்லாம் எடுத்துக் கூறி குறிப் பிட்ட மாற்றத்தை நிறுத்திவிடும்படி பணிவாகக் கேட்டுக் கொண்டோம். அவர்கள் கூறியவற்றையெல்லாம் முகாமை ாளர் கேட்டு சரி மாற்றத்தை நிறுத்திவிடுகிறேன் என்று கூறியதும் நாங்கள் திரும்பிவிட்டோம். ஆனால் குறிப்பிட்ட பாடசாலைத் தொடக்கம் வரையும் மாற்றம் நிறுத்தப்படவில்லை. கூறியபடி செய்யாமல் முகாமை

69
யாளர் எங்களை ஏமாற்றிவிட்டார். இதற்கு சரியான தொரு முடிவு காணும் வரையில் தங்கள் பிள்ளைகளைப் பாட சாலைக்கு அனுப்பாமல் பகிஷகரிப்பைத் தொடர்ந்து பெற்றோர்கள் ஏ கோ பித்த நிலையில் நடத்தினார். இவற்றில் எங்களில் ஏதும் தவறுகள் உண்டாயின் நீங்கள் கூறினால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம், என்றெல்லாம் ஒரு சிறந்த சட்டத்தரணி போல் நின்று விளக்கம் கொடுத்தார். பெற்றோர் பிரமுகர்களும் அவரின் முடிவே தங்களின் முடிவும் என்று ஏகோபித்துக் கூறினார்.
நீதி வென்றது. தர்மம் தழைத்தது. இவ்விதம் இறுதி
வெற்றி எனக்குக் கிடைத்தது. இதற்கு தையிட்டி வாழ் பெற்றோர்கனின் ஆதரவும், அன்பும், சிறப்பாக உயர்திரு சீனிவாசகம் அவர்களின் ஆதரவும் கிடைத்தமையே காரணம். எனது பிரச்சினை போல், தனது கிராமத்திலும் பற்பல பிரச்சினைகளில் தலைமை தாங்கி களம் பல கண்டு வெற்றிவாகை சூடியவர் திரு. சீனிவாசகம் அவர்கள். அநீதியை எதிர்த்துப் போராடும் அஞ்சா நெஞ்சன் ஆன்மையுடன் மனம் தளராமல் நின்று போராடும் ஒரு சிங்கேறு. சுருக்கமாகக் கூறின் சிறந்ததொரு கர்மவீரன் எனலாம். இத்துனைச் சிறப்பியல்புகளைக் அணிகலமாகக் கொண்டு வினங்கிய அவரின் மறைவு தையிட்டிக்குக் கிடைத்த ஒரு பேரிழப்பாகும். அவரின் ஆன்மா சாந்தி யடைய அவரின் பூதவுடம்பு அழிந்தாலும் புகழ் உடம்பு என்றென்றும் நில வட்டும். அவரின் தொண்டு என்றும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் என்று வாழ்த்துக் கூறி அமைகின்றேன்.
அ. வேலாயுதபிள்ளை
ஒய்வு பெற்ற ஆசிரியர்
கோண்டாவில் மேற்கு
கோண்டாவில் அ. குறிப்பு :
மேலே குறிப்பிடப்பட்ட பாடசாலை பகிஷ்கரிப்பு
போராட்டம் வித்தியாபதியின் விளக்கத்துடன் முடிவடைய

Page 41
70
வில்லை. அதன்பின் இப்பிரச்சினையைத் தோழர் சீனிவாசகமும் பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளும் பாராளு மன்றம், மந்திரிசபைவரை எடுத்துச்சென்றனர். அன்றைய கல்வி மந்திரி திரு. டபிள்யூ. தகநாயக்கா இறுதியில் குறித்த ஆசிரியரை மறுபடி உரிய பாடயாலைக்கு இடமாற்றம் செய்தது மட்டுமன்றி, பாடசாலையையும் சுவீகரிப்பதற்குரிய உத்தரவைப் பிறப்பித்து அரசாங்கம் அப்பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டது. இப்பகிஷ்கரிப்புப் போராட்டம் பொலீஸ் தலையீட்குக்கும் நீதிமன்ற வழக்குக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அநீதிக்கும் ஆதிக்கப் போக்கிற்கும் எதிராக மக்களை அணிதிரட்டி, அதற்கு தலமைதாங்கி இறுதிவரை அப்போராட்டத்தை தோழர் சீனிவாசகம் முன்னெடுத் தார் என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

எனது மனக் கண் முன்னே!
நான் காங்கேசன் சீமெந்துத் தொழிற்சாலையில் சேவையாற்றிக் கொண்டிருந்தபோது, காங்கேசன்துறை பட்டின சபை உபதலைவராக சீனிவாசகம் அவர்களை முதன் முதலில் பட்டின சபைக் காரியாலயத்தில் சந்தித் தேன். நான் அவரை உத்தியோக ரீதியாக சந்திக்க வேண்டியிருந்தமையால் சந்தித்தேன். அன்று அவரை நான் நேரில் பார்த்ததும் அவர் ஏனைய பட்டின சபை உறுப்பினர்களைவிட ஒரு வித்தியாசமான மனிதனாகவே என் மனதில் பட்டார். எனவே அவர் பற்றி என்னுடன் கூடவே தொழில் புரிந்த தையிட்டியைச் சேர்ந்த எனது நண்பாைன மயில்வாகனம் என்பவர் மூலம் டாக்டர் அவர் களின் வாழ்க்கைமுறை, அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி, அவர் சமூகத்தில் மக்களுக்காக அதிலும் சாதாரண ஒடுக்கப்பட்ட கல்வி அறிவு குறைந்த, பொருளாதார ரீதி யில் பின்னடைந்த மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள், அவர்களுக்கு ஆற்றிய சேவைகள் ஆகியன பற்றி விரிவாக அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் சீனிவாசகம் அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன. அவரும் என்னைப் பற்றிய விபரங்களை அறிந்தவர் போல் அவருடன் உரை யாடும்போது எனக்குத் தெளிவுபட்டது. அவரை நேரில் பார்த்துப் பழகிய பின்னர் அவர் எந்த அரசியல் சித்தாந் தத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டாரோ, அதே கொள்கையை தனது சொந்த வாழ்க்கையிலும் கடைபிடித் துள்ளார், என்பது என் மனதில் பதிந்திருந்தது. அவர் எந்நேரமும் இலட்சியங்கள் பற்றி விவாதிப்பது அவரது வழமையான பழக்கமாகும்.

Page 42
72
நான் சில சமயங்களில் எனது நோய் காரணமாக டாக்டர் அவர்களிடம் வைத்திய சிகிச்சை பெற செல்ல வேண்டியிருந்தது. காரணம் காங்கேசன்துறை சுற்றாட லில் ஆயுள்வேத மருத்துவம் என்று கூறுவதற்கு டாக்டர் சீனிவாசகம் அவர்களின் மருத்துவம் ஒன்றே இருந்தது. அங்கு போனால் எந்நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்தே யிருக்கும். சில சமயங்களில் நான் நோயாளருடன் உரை யாடியபோது அவர்கள் பேச்சில் இருந்து டாக்டர் பற்றி அறிந்து கொண்டவற்றை குறிப்பிடுவது அவசியம்.
பரியாரி சீமானின் கைபட்டால் போதும், வருத்தம் குணமாகி விடும். வேறு பரியாரிடம் ப்ோறதிற்கு பணம் ஏராளம் வேணும். சில பரியாரி இங்கிலீசு மருந்தும் தமிழ் மருந்தும் கலந்துதான் தருவினம். சீனிவாசகப் பரியாரி யார் தணிய தமிழ் வைத்தியம்தான். இவ்வளவு காசு என்று கேட்க மாட்டார். கையிலை இருக்கிறதிற்கு மாதிரி மேசையில் வைத்தால் சரி. இவை நோயாளி கூறிய அதே பேச்சுத் தமிழில் எழுதியிருக்கின்றேன்.
வைத்தியத் துறையில் நான் அறிந்தவை-அந்த நாட்களில் யாழ்ப்பாண பரியாரிமார் உயர்சாதியினராக இருந்தமையினால் தாழ்ந்த வகுப்பு நோயாளர்களை, அவர்களின் நாடித் துடிப்பை பார்வையிடும்போது அந்நோயாளர் மீது கைபடாத வகையில் பட்டுத்துணி ஒன்றை தாழ்த்தப்பட்ட நோயாளரின் கையில் போட்டு நாடித்துடிப்பைப் பார்ப்பது வழக்கம். அத்தகைய செயல் பிழையானது என உணர்ந்த சீனிவாசகம் அவர்கள் அதை அடியோடு நிராகரித்து பழைய முறையைக் கைவிட்டு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
ஏனைய வைத்தியர்கள் வைத்தியத் தொழில் புரிவது நோயாளியைக் குணமடையச் செய்யவும், அதன்மூலம் மேலதிக வருவாய் ஈட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத் துடனேயே. ஆனால் டாக்டர் சீனிவாசகம் எனக்குத்

73
தெரிந்தளவில் அவரது மூதாதையார் தேடிவைத்த காணி களை விற்றே வைத்தியத் தொழிலை நடத்தியவர். ஒரு நாள் அவரிடத்தில் நான் கண்ணால் கண்டது:- நாளாந்தம் உழைத்து சீவியம் நடாத்தும் குடும்பப் பெண் ஒருத்தி வைத்தியரிடம் வந்தார். வீட்டில் நோய்வாய்ப் பட்டிருக்கும் குடும்பத் தலைவனை ஏற்கனவே டாக்டரிடம் காட்டி மருந்து எடுத்துள்ளார். அன்று அழைத்துவர முடியாமையால் நோயின் அறிகுறிகளைக் கூறி மருத்து எடுத்துப்போக வந்து மருந்தைப் பெற்றுக் கொண்டார். பின் சீனிவாசகம் அவர்கள் நீண்டதொரு பட்டியலை அந்த அம்மையாரிடம் கொடுத்து மருந்துக் கடையில் பட்டியலில் உள்ள சரக்குகளை வாங்கி, அவித்து மருந்து கொடுக்கும் முறையை தெளிவாக விளக்கினார். அந்நேரம் நானும் எனது நோய்க்கு மருந்து பெற்றுக் கொண்டேன். அந்த அம்மையார் அதுவரை யில் அங்கேயே நின்றிருந் தார். அதை அவதானித்த டாக்டர் அவர்கள், அந்த அம்மையாரின் பெயரைக் கூறி அழைத்து ஏன் வீட்டுக்குப் போகவில்லை என வினாவ அந்த அம்மையார் பட்டியலில் உள்ள சரக்குகளை வாங்க பணமில்லாத காரணத்தைக் கூறினார். உடனே வைத்தியர் இதை அப்பவே, (முன்னரே) கூறியிருக்கலாமே என்று சொல்லியபடி மேசை மேலிருந்த பணத்தில் அவருக்கு வேண்டிய பணத்தை எடுத்து அம்மையாரிடம் கொடுத்தார். அம்மையார் அப்பணத்தை கலங்கிய கண்களுடன் பெற்றுக் கொண்டு வெளியேறினார். அப்போது எனது மனமும் நெகிழ்ந்தது.
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லுரி, காங்கேசன் பட்டினத்தின் மத்தியில், யாழ்ப்பாண பிரதான வீதியில் போக்குவரத்து வசதியான இடத்தில் மிகவும் பிரமாண்ட மாக அமைந்திருக்கின்றது. இது மிகத் திறமையாக, கடமை தவறாது கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களால் ஓங்கி வளர் கல்லூரியாக தோற்றமளித்தது. கல்லூரிக்கு

Page 43
74
மேற்குப் புறமும் கிழக்குப் புறமும் மிக நெருக்கமாகக் குடியிருப்பவர்களும் சுற்றாடலில் செறிந்து வாழ்பவர் களும் சாதி அடிப்படையில் தாழ்ந்த சமூகத்தைக் கொண்டவர்களே. நல்லதொர் கல்லூரியைச் சுற்றிவாழும் மக்கள் அக்கல்லூரியில் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க விடவேண்டும் என்று ஆவல் கொள்வது மனித இயல்பு, ஏனெனில் அவர்களும் மனிதர்களே. அவர்க ளுடைய பிள்ளைகள் நடேஸ்வராக் கல்லூரியில் கல்விகற்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அப்போது யாழ்ப்பாணத் தில் உள்ள கல்லூரிகள் யாவும் தனிப்பட்ட நிர்வாகிகள் சொத்தாக இருந்தது . எனவே உயர்சாதி மாணவர் களுடன் கீழ்சாதி மாணவர்கள் ஒரே பாடசாலையில் கல்விகற்க பழமையான சமூக அமைப்பின் பிரகாரம் இடமளிக்கவில்லை. காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிசன் பாடசாலையே தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் கல்விகற்க இடமளித் திருந்தது. இந்த மனிதக் கொடுமை டாக்டர் சீனிவாசகத் தின் மனதை உறுத்தியது. அவர் நடேஸ்வராக் கல்லூரிக்கு அருகாமையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் நடேஸ்வராக் கல்லூரியிலே கல்வி கற்க வழி செய்ய வேண்டிய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த நல்ல முயற்சியில் காலம் சென்ற திரு. பொ. நாகலிங்கம் இணைந்து செயல்படக் கல்லூரி அதிபராகக் கடமையாற்றிய பி. ஏ. மார்க்கண்டன் அவர் கள் உறுதுணையாகச் செயல்பட்டமை கண்டு நிர்வாகிகள் மார்க்கண்டனை அதிபர் பதவியில் இருந்து நீக்கியது. இது கண்ட சுற்றாடல் வாழ் மக்கள் கல்லூரியை இயங்க விடாது மறியல் போராட்டம் செய்ய டாக் டக் சீனிவாசகம் அவர்கள் தலமைதாங்கி நின்றார். ஈற்றில் கல்விக் கமிஷன் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்துவைத்து திரு. மார்க்கண்டன் அவர்களை மீண்டும் தலமை ஆசிரிய சாக நியமித்து தாழ்த்தப்பட்ட மக்களின் முதல் மாணவ.

75
னாக வி. ரி. செல்வராசா என்ற மாணவன் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அன்று முதல் நடேஸ்வராக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டு பிற்காலத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுள் பெரும்பாலோர் ஆசிரியராகி அக்கல்லூரி யிலேயே கல்வி கற்பித்தார்கள். இவையனைத்திலும் சீனிவாசகம் அவர்கள் ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1961ஆம் ஆண்டளவில் இந்தியாவில் இருந்து சாதாரண வறிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனித்து காங்கேசன் துறையில் வந்து சேர்ந்தான். அவ் இளைஞன் தான் ஒரு சயிக்கிள் ஒட்ட சாதனையை நிலைநாட்டப் போவதாக தன்னைச் சந்தித்த சில பொது மக்களிடம் கூறி தனக்கு அனுமதி பெற்றுத் தருமாறும் , ஆதரவு அளிக்குமாறும் கேட்டான். மக்கள் சிலர் அவனை அழைத்துச் சென்று சீனிவாசகம் அவர்களிடம் தொடர்புபடுத்தினர். அவர் காங்கேசன் பட்டினசபை மூலம் அனுமதி பெற்று இளைஞனுக்கு வேண்டிய ஆதரவு அளிக்க காங்கேசன்துறை இளைஞர் களை ஏற்பாடு செய்து கொடுத்தார். இச்சயிக்கிள் சாதனை செல்லப் பிள்ளையார் கோயில் முன்றலில் (அதாவது நடேஸ்வராக் கல்லூரி) விளையாட்டரங்கில் நடைபெற்றது. இச்சயிக்கிள் சாதனையில் இளைஞன் சயிக்கிள் கான்ரிலை இருப்பிடமாகக் கொண்டு சயிக்கிள் கரியல் பக்கத்தை அதாவது சயிக்கிள் பின் பக்கத்தை பார்க்கு முகமாக அமர்ந்து பின்புற வட்டமாக இரவு பகல் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் ஓடிச் சாதனையை நிலைநாட்டினார். அச்சாதனையை “வலம்புரி சயிக்கிள் சாதனை” எனக் கூறப்பட்டது. பார்வையாளராக வந்த மக்கள் மனமுவந்து இளைஞ னுக்கு பொறுப்பாக இருந்த இளைஞர்கள் வழியாக உண்டியல் பெட்டிமூலம் 6 நன்கொடைகள்

Page 44
ሃ6
வழங்கினார். இப்பணம் முழுவதும் சாதனை புரிந்து இளைஞனிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. இதன் பிரகாரம் சில மக்கள் மத்தியில் சீனிவாசகம் அவர் கள் பணத்தை மோசடி செய்த ர் என சில துண்டுப் பிரசுரங்கள் பரவப்பட்டன. இந்த அவதூறான விஷயம் பற்றி சீனிவாசகம் அவர்கள் சிறிதும் கலங்கவில்லை. அதைப் பெரிதுபடுத்தவும் இல்லை. ஒரு சில அரசியல் குரோதமான செயல் என அவர் கூறினார். இருப்பினும் அதில் ஈடுபட்ட இளைஞர்களின் வேண்டுகோளுக் கிணங்க அந்தப் பிரசுரத்திற்கான விளக்கம் சீனிவாசகம் அவர்களால் பிரசுரிக்கப்பட்டு மக்களுக்கு உண்மை நிலை விளக்கப்பட்டது.
1964ஆம் ஆண்டு சீமெந்துத் தொழிற்சாலைத், தொழிலாளர்கள், சீமெந்து ஐக்கிய தொழிலாளா சங்கம் பிரதான எட்டுக் கோரிக்கையை முன் வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து 27 நாட்கள் நடை பெற்றபோது எப்பொழுதும் மாலை வேளைகளில் வேலை நிறுத்த இட த்திற்கு வந்து தொழிலாளர்களுடன் போராட் டத்தின் தத்துவங்களையும் , போராட்டம் இன்றேல் எதுவும் இல்லை என்பதனையும் தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையில் கலந்துரையாடுவார். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொழில் கோட்டுக்குப் பாரப்படுத்தப்பட்டு தொழிற் சங்கசார்பில் தோழர் சண்முகதாசன் வழக்கைப் பேசினார். அதன் பயனாக 42 நாட்கள் லீவும் அதைச் சார்ந்த கோரிக்கைகளும் பின்னர் பெறப்பட்டன. பொது மக்கள் போராட்டம் எங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் சீனிவாசகம் அவர்கள் நிற்பார்.
1961ஆம் ஆண்டளவில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள வங்கி இலங்கையில் அமைய வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தி பல எழுச்சிப் போராட் டங்களை நடாத்தி வந்தது. அப்போதும் கூட சில

77
முதலாளித்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டு இயங்கிய அரசியல் கட்சிகள் மக்கள் வங்கி முறையை எதிர்த்தன. ஆனால் மக்கள் வங்கி அரசாங்கத்தால் அமைக்கப்படும் வரை அயராது போராட்டத்தை பல வழிகளிலும் முன்னெடுக்க அரும்பாடுபட்டார். ஈற்றில் மக்கள் வங்கி 61ஆம் ஆண்டளவில் நடைமுறைக்கு வந்தது. உண்மை யில் மக்கள் வங்கி இயங்கத் தொடங்கியதன் பின் சாதாரண தொழிலாளர்கள்-விவசாயிகள் பாமர மக்கள் மக்கள் வங்கியில் கணக்குகளை ஆரம்பித்தனர். இதனால் செல்வந்தர்களின் கொள்ளை லாபம் ஈட்டும் வட்டிமுறை யில் இருந்து ஏனைய மக்கள் தங்களை ஒரளவுக்குக் காத்துக் கொண்டனர். இவற்றினூடாகப் பார்க்கும்போது டாக்டர் சீனிவாசகம் ஏனைய மக்கள் வளமுடன் வாழ எல்லா வழிகளிலும் அரும்பாடுபட்டு உழைத்துள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே டாக்டர் திரு. சு. வே. சீனிவாசகம் அவர்கள் என் மனக் கண் முன்னே நிற்கிறார்.
சங்கரப்பிள்ளை - கணபதிப்பிள்ளை காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபன முந்நாள் தொழிற் சங்கத் தலைவர்
சுன்னாகம்

Page 45
ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் தோழர் Estfalls festo
"கம்யூனிஸ்ட் ஒருவர் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடைய' ராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களைத் தனது சொந்த உயிர்போல் கருத வேண்டும். எங்கும் எப்பொழு தும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவறான கருத்துக்கள் செயல்கள் எல்லாவற்றிற்கும் எதிராக சளை யாத போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கட்சியின் கூட்டு வாழ்வை ஸ்திரப்படுத்தி கட்சிக்கும் பொதுமக்க ளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைப் பலப்படுத்த, வேண்டும். அவர் எந்த ஒரு தனி நபரிலும் பார்க்க கட்சி யிலும் மக்களிலும் கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவரை ஒரு கம்யூ னிஸ்ட் என்று கருத முடியும்."
இவ்வாறு இந்த நூற்றாண்டின் வரலாற்று முக்கியத் துவம் பெற்றவரும் சீன மக்களின் மகத்தான தலைவரு மான தோழர் மாஒ சேதுங் அவர்கள் கூறியுள்ளார்.
தோழர் சீனிவாசகம் அவர்கள் விசால உள்ளம் படைத்தவர். நேர்மையானவர். எந்த நேரமும் சுறுசுறுப் பாய் இயங்குபவர். புரட்சியினதும் கட்சியினதும் நலன் களை தனது சொந்த உயிர்போல கருதுபவர். அவர் சரியான கோட்பாட்டின் அடிப்படையில் தவறான கருத் துக்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எதிராக முழுமூச்சாக

79
விடாப்பிடியாகப் போராடுபவர். அவர் கட்சியிலும் மக்களி லும் அதிக அக்கறை கொண்டுள்ளதுடன் அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
கெம்பீரமான தோற்றம், எளிமையான உடை. உறுதி யான நடை, சிம்மக்குரல் , அநீதிக்கெதிராக கோபா வேசம் கொண்டு போராடும் குணவியல்பு, மென்மையான இதயம், மக்களுடன் குறிப்பாக தொழிலாளர் விவசாயி களுடன் நட்புரிமையுடன் பழகும் சுபாமுடையவர் தோழர் சீனிவாசகம்.
இலங்கைக் கமயூனிஸ்ட் கட்சியை யாழ் பிரதேசத்தில் 1945இல் ஆரம்பித்து வைத்து, கட்சியை கட்டியெழுப்பு வதிலும் கம்யூனிஸ் சித்தாந்தத்தை பரப்புவதிலும் தம்மை அர்ப்பணித்த ஏழு முன்னோடிக் கட்சித் தோழர்களில் டாக்டர் சீனிவாசகமும் ஒருவர் தோழர்கள் எம். கார்த்தி கேசன், எஸ். கே கந்தையா, இராமசாமி ஐயர், எம். மகாலிங்கம், எம். சி. சுப்பிரமணியம், காதர், டாக்டர் சீனிவாசகம் ஆகியோர்தான் அந்த ஏழு முன்னோடிகள். இவர்களுடன் ஐம்பதாம் ஆண்டுகளில் தோழர்கள் ஐ. ஆர். அரியரத் தினம், ஏ. வைத்தியலிங்கம், ஆர். ஆர். பூபாலசிங்கம். சுபைர் இளங்கீரன் ஆகியோர் இணைந்து செயலாற்றினார்கள். 1945ஆம் ஆண்டிலிருந்து அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் வரை தோழர் சீனிவாசகம் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி எழுப்புவதிலும், கட்சியின் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்புவதிலும், கட்சி நடத்திய போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதி லும், மக்களை அணி திரட்டி போராட்டங்களை நடத்து வதிலும் என்றென்றும் முன்னணியில் நின்று வந்துள் ளார். குறிப்பாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கட்சியினதும் தொழிலாளர்களதும் ஊர்வலங்கள் எல்லா வற்றுக்கும் டாக். ர் சீனிவாசகம் முன்னணியில் நின்று தலைமை தாங்கி வந்துள்ளார்.

Page 46
80
1947ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டது. அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் தலைமறைவாகி யாழ்ப்பாணம் வந்திருந்தார். தோழர் சீனிவாசகமும் தோழர் ஜிவானந்தமும் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரக் கூட்டங்களையும் பல இலக்கியக் கூட்டங்களையும், யாழ் பிரதேசத்தில் பல பகுதிகளில் நடத்தினார்கள். யாழ் நகர், பருத்தித்துறை காங்கேசனிலுள்ள தையிட்டி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்கள் முக்கியமாளவையாகக் கருதப்பட்டது.
யுத்த வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியான முதலாளித்துவ யூ. என். பி. அரசாங்கம் 1953இல் அரிசி விலையைக் கூட்டி மக்கள் வயிற்றில் அடிக்க முற்பட்டது. அப்பொழுது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி நாடு பரந்த ரீதியில் ஒரு மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தியது. இந்த ஹர்த்தாலை வாழ் பிரதேசத்தில் முன்னணியில் நின்று நடத்திய கட்சித் தோழர்களில் டாக்டர் சீனிவாசகமும் ஒருவர்.
யூ என். பி. அரசாங்கம் மக்கள் விரோத நடவடிக்கை களை எடுத்த போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி நாடு பரந்த போராட்டங்களை நடத்தியது. குறிப்பாக 1962இல் அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரித்தது. அப்பொழுது யாழ்ப்பாணத்திலும் கட்சி மக்களைத் தட்டியெழுப்புவதற்கு கூட்டங்களைப் பரவலாக நடத்தியது. அந்தவேளையில் காங்கேசன் தையிட்டி சந்தியில் தோழர் சீனிவாசகம் தலைமையில் ஒரு எதிர்ப்புக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் தோழர் ஏ. வைத்தியலிங்கம் பங்குபற்றியது குறிப்பிடத் தக்கது. மக்களின் நலனில் தோழர் சீனிவாசகம் எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டார் என்பது இந்த நடவடிக்கை களில் இருந்து புலனாகிறது.

8.
கட்சியையும் அதன் துணை ஸ்தாபனங்களான வாலிபர் சங்கம், தொழிற்சங்கம், விவசாய சங்கம், மாதர் அணி ஆகியவற்றைக் கட்டி வளர்ப்பதிலும், அவைகள் நடத்துகின்ற போராட்டங்களில் அந்தரங்க சுத்தியுடன் தம்மை இணைத்துக் கொண்டுள்ளதுடன் கட்சிக்கும் புரட்சிகர மார்க்கத்துக்கும், திரிபுவாத மார்க்கத்திற்கும், போராட்டம் நடந்தபொழுது தோழர் சீனிவாசகம் புரட்சி கர நிலைப்பாட்டையே மேற்கொண்டார். 1963இல் கம்யூ னிஸ்ட் கட்சி சித்தாந்த அடிப்படையில் பிளவுபட்ட பொழுது, புரட்சிகர மார்க்கத்தைக் கைக்கொண்டு எமது அணியுடன் தம்மை இணைத்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார் டாக்டர் சீனிவாசகம்.
1963ஆம் ஆண்டு யாழ் மகாசபை மண்டபத்தில் நடந்த வாலிப சங்க மகாநாட்டில் தோழர் சீனிவாசகம் முக்கிய பங்கேற்றதுடன், வாலிப சங்கத்தின் புரட்சிகர அணியுடன் தம்மை இணைத்துக் கொண்டார். அத்துடன் இலங்கைக் கம்யூனிஸட் கட்சியின் 7ஆவது காங்கிரசுக் கான யாழ் பிரதேச மகாநாட்டில் தலைமை தாங்கிய துடன், கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடந்த கட்சி யின் 7ஆவது காங்கிரசுக்குத் தலைமை தாங்கிய ஏழு தலைமைக் குழு உறுப்பினர்களுள் தோழர் சீனிவாசகமும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காங்கிரசில் தான் கட்சியின் புரட்சிகர மார்க்கம் உறுதிப்படுத்தப் பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழ் செயல்பட்ட இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தில் இணைந் திருந்த தொழிற்சங்கங்கள் வடபிரதேசத்தில் நடத்திய போராட்டங்களுடன் தோழர் சீனிவாசகம் தம்மை முழுமையாக இணைத்து எம்முடன் சேர்ந்து தீவிரமாகப் போராடினார். அறுபதாம் ஆண்டுகளில் நான் இலங்கை
6 مـــــــد ټ3

Page 47
82
தொழிற்சங்க சம்மேளனத்தின் வடபிரதேச பிரதிநிதியாக செயல்பட்டேன். அப்பொழுது வடபிரதேசத்தில் இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்களில் அவர் பூரண பங்கு கொண்டார். இக் கால கட்டத்தில் இ. போ. ச. தொழிலாளர் வேலை நிறுத்தம், பரந்தன் இரசாயனத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம், பீடித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் , மில்க்வைற் தொழிலாளாகளின் போராட்டம் , வல்லை நெசவு தொழில ளர்களின் போராட்டம் , காங்கேசன் சீமெந்து கூட்டுத்தாபன தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகியவற்றில் டாக்டர் சீனிவாசகம் செலுத்திய பங்கு அளப்பரியது.
1964ஆம் ஆண்டு ஜூலையில் காங்கேசன் சீமெந்து கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள், இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்தின் தலைமையின் கீழ், மாத சம்பளம் உட்பட 8 கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தது. இந்தப் போராட்டம் 28 நாட் கள் நடந்தது. இந்த நாட்களில் தோழர் சீனிவாசகம் காலையும் மாலையும் போராட்டம் நடக்கின்ற தளத்திற்கு வந்து போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துகின்ற எமக்கு வேண்டிய உதவிகளைச் செய்து எம்மை ஊக்கப் படுத்தி கொண்டிருப்பதுடன் மாலையில் தினசரி நடந்த தொழிலாளர்களின் கூட்டங்களில் எம்முடன் தாமும் பங்கு பற்றி சில கதைகளை பேச்சுகளுக்கிடையே கூறி போராடிக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்குப் பெரும் உற்சாகமளித்துக் கொண்டிருந்தார். அத்துடன் காங்கேசன் துறையிலுள்ள பொது மக்களின் ஆதரவை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் திரட்டித் தந்து போராட்டத்தை வெற்றிபெறச் செய்தமைக்கு தொழிலாளர்கள் தோழர் சீனிவாசகத்திற்கு என்றென்றும் நன்றி உடையவர்களாக இருப்பார்கள்.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கொள்கை களைப் பரப்புவதற்கு 1965ஆம் ஆண்டு நடந்த பாராளு

83
மன்றப் பொதுத் தேர்தலில் பங்குபற்ற வேண்டும் என்ற தீர்மானத்திற்கமைய தோழர் சீனிவாசகம் காங்கேசன் து ை தொகுதிக்கான போட்டியில் குதித்து, இத் தொகுதியில் கட்சியின் பல பிரசாரக் கூட்டங்களை நடத்தி கட்சியின் கொள்கையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.
1966ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தோழர் எஸ். ரி. என் , நாகரத்தினத்தின் தலைமையின் கீழ் தீண்டாமையை ஒழிப்பதற்கு அநேக கூட்டங்களையும் ஊர்வலங்களையும் யாழ் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் நடத்தியது. சங்கானையில் ஆரம்பித்த இப்போராட்டம் மாவிட்டபுரம், அச்சுவேலி, கொடிகாமம், மட்டுவில் ஆகிய இடங்களுக்கும் இன்னும் பல்வேறு பிரதேசங்களுக்கும் வியாபித்தது. இப்போராட்டத்தில் தோழர் சீனிவாசகம் எம்மோடு தோளோடு தோள் சேர்ந்து தீவிரமாகப் போராடினார். 1966 ஒக்ரோபர் 21ஆம் திகதி சுண்ணா கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் தீண்டாமைக்கு எதிரான போராட்ட ஊர்வலத்திற்கு ஏனைய தலைவர்களுடன் தலைமை தாங்கி யூ. என். பி. பொலிஸ் காடையர்களால் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டவர்களில் தோழர் சீனிவாசகமும் ஒருவர்.
1969இல் யூ. என். பி. அரசாங்கம் தொழிலாளர் தினமான மேதினத்தைக் கொண்டாடுவதை தடை செய்தது. இந்தத் தடையை மீறி கம்யூனிஸ்ட் கட்சியும், இலங்கை முற்போக்கு வாலிபர் சங்கமும், இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனமும் மேதினக் கொண்டாட்டத்தை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடத்துவதற்குத் தீர் மானித்தது. யூ. என். பி. அரசாங்க பொலிஸ் தடையைத் தகர்த்தெறிந்து கொண்டு யாழ்ப்பாணத்தில் நாங்கள் நடாத்திய புரட்சிகர மேதின ஊர்வலத்திலும் பொதுக்

Page 48
S4
கூட்டத்திலும் தோழர் சீனிவாசகம் உற்சாகத்துடன் பங்கு பற்றினார். அதே ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பகிஷ்கரிப் பிரச்சாரப் போராட்டத்தை நடத்தியது. அதிலும் தோழர் சீனிவாசகம் பங்குபற்றிப் புரட்சிகர மார்க்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.
தமது இறுதிக் காலத்தில் தோழர் சீனிவாசகம் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அறிந்து டிசம்பர் 28ஆம் திகதி மானிப்பாயில் அவர் இடம் பெயர்ந்து வந்து வசித்த வீட்டிற்கு அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் சுயநினை வற்ற நிலையில் இருப்பதைப் பார்த்த எனக்கு துக்கம் தாங்க முடியவில்லை. எமது ஏனைய தோழர்களுடன் தொடர்பு கொண்டு அவரை வைத்திய சிகிக்சைக்காக வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நாம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கையில் எமது முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான தோழர் டாக்டர் சீனிவாசகம் 1992 ஜனவரி 3ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு ஐந்து நாட்கள் பிந்தித்தான் கிடைத்தது. அவரது இறுதிச் சடங்கில் கூட என்னால் பங்குபற்ற முடியாமல் போய்விட்டது பெரும் துர் அதிஷ்டமாகும்.
இன்று நமது சோசலிச பிதாவும் குருவும் தலைசிறந்த நண்பனுமான தோழர் ஸ்டாலினை இழந்துவிட்டோம். இது ஒரு ஈடு செய்த முடியாத இழப்பாகும். இந்த மாபெரும் நஷ்டத்தினால் நம்முடைய தாங்கொணாத் துயரத்தை எடுத்துச் சொல்ல வார்த்தைகளை தேடமுடி யாத அளவில் திகைக்கின்றோம். இத்துயரத்தை ஒரு சக்தியாக மாற்றுவது நமது கடமையாகும்.
உலக சனத் தொகையில் மூன்றிலொரு பங்கு அதாவது 800 மில்லியனுக்கதிகமான மக்களது தலைவ ரும் உலகில் முதலாவது சோசலிச அரசை நிர்மானித்து உறுதிப்படுத்தியவரும் மார்க்சிய லெனினிய புரட்சிகர

85
சிந்தனையை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி கண்ட வரும், உலகத்துப் பாட்டாளி வர்க்கத்தின் ஆதர்ச புருஷனும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் உலக முதலாளித்துவத்திற்கும் சிம்ம சொற்பனமாயிருந்தவரு மான தோழர் ஸ்டாலின் மறைந்தபொழுது சீனமக்களது மகத்தான தலைவர் மாஒ சேதுங் அவர்கள் துயரம் தாங்காது மேற்கண்டவாறு கூறிய வாசகம் தோழர் சீனிவாசகம் மறைந்துவிட்டார் என நான் அறிந்த பொழுது எனது மனத்திரையில் உதித்தது. அவரது இழப்பு எமக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியபோதும் அமரத்துவம் எய்திய அத்தோழரின் நினைவு ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்களதும் விவசாயிகளினதும் இதயங் களில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
நீர்வை பொன்னையன்
வசந்தம் நீர்வேலி

Page 49
மறக்க முடியாத வைத்திய கலாமணி
வைத்தியக் கலாமணி சு. வே. சீனிவாசகம் ஞாப கார்த்தக் குழு கேட்டுக் கொண்டதற்கிணங்க வைத்தியக் கலாமணியைப் பற்றிய நினைவுக் கட்டுரையை எழுது, வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் குண்டகசாலை விவசாயக் கல்லூரியில் விரிவுரை யாளராக இருக்கும்போது என் சிநேகிதரும் சக விரிவுரை யாளருமாகிய திரு. வே. சின்னையா மூலம், வைத்தியக் கலாமணி சீனிவாசகம் அவர்களை அறிந்தேன். சீனிவாச கத்தின் தம்பியான வே. சின்னையா அவர்கள் வைத்திய ரின் அரசியல் ஈடுபாடுகள் வைத்திய முறைமைகள் போன்றவற்றைப் பற்றியும் அநேகமாகக் கூறினார். எனக்கு நீண்ட காலமாக பீனிசம், முட்டு, தொய்வு போன்ற வருத்தங்கள் இருந்ததின் காரணத்தினால்தான் வைத்தியர் பற்றியும், அவருடைய வைத்தியம் பற்றியும் நான் அறியக் கூடியதாக இருந்தது.
1970ஆம் ஆண்டில் திரு. வே. சின்னையா அவர்கள் என்னை வைத்தியரிடம் கூட்டிச் சென்று, அறிமுகப்படுத்தி வருத்தம் பற்றியும் கூறினார். அன்றிலிருந்து நான் அவரிடம் வைத்தியம் செய்ய ஆரம்பித்தேன். அவருடைய மருந்துகள் எவ்வளவோ சுகத்தைத் தந்தன. எனவே, தொடர்ந்து அவரின் மருந்துகளைப் பாவிப்பவனானேன். எனது சுகம் பற்றி பல சிநேகிதர்களுக்கும் கூறி அவர்

87
களையும் அவரிடம் மருந்து செய்ய சிபாரிசு செய்ததின் பயனாக அவர்களும் சுகம் பெற்றார்கள். அவருடைய மூத்த மகன் வைத்தியம் செய்த காலத்தில் அவரே மருந்துகளைத் தந்து வந்தார். அவர் இறந்த பின்பு வைத்தியக் கலா மணி அவர்களே மருந்துகளைத் தந்தார்.
இவரிடம் நான் வைத்தியம் செய்யும் காலத்தில் எனது மகள் ஒரு வயதாயிருக்கும்போது, சளி வருத்தம் முட்டு போல் வந்து இரு தடவைகள் கடுமையாக்கியது. மூச்சு எடுக்க முடியாத அளவிற்கு முட்டு வந்து தொய்வின் அறிகுறிகள் காணப்பட்டன . சிறுபிள்ளை வைத்திய நிபுணர் யாழ். போதனா வைத்தியசாலையில் இப்பிள் ளைக்கு வைத்தியம் செய்தார். இரு தடவைகளும் வைத்திய சாலையில் பல ஊசிகள் ஏற்றப்பட்டன. ஆனால் சுகம் காணப்படவில்லை. மறுநாள் வைத்திய ரிடம் சென்றபோது அவர் அதைப் பார்த்துவிட்டு இதைச் சுகமாக்க முடியும் பயப்பட வேண்டாம், வைத்தியம் செய் கின்றேன் என்று சில மருந்துகளைத் தந்து ஒன்றை உடனே கொடுக்கும்படி கூறினார். ஒரு மருந்து அவரது ஆராய்ச்சியின் பின் செய்யப்பட்ட தூள். இதுதான் உடனே கொடுக்கப்பட்டது. மூச்சு எடுக்கக் கஸ்ரப்பட்ட பிள்ளை மருந்து கொடுத்தபின் நன்றாக மூச்சு எடுத்து பிள்ளைகளோடு விளையாடினாள். மற்ற மருந்தையும் கொடுத்தோம். நல்ல சுகம் காணப்பட்டது. மிகவும் சந்தோஷமடைந்தோம். வீடு சென்று தொடர்ச்சியாக மருந்துகளைக் கொடுத்தோம். பிள்ளைக்கு பூரண சுகம் கிடைத்தது. இப்போது 21 வயதாகியும் கடும் நெஞ்சு சளி வந்தால்கூட அவ்வருத்தங்கள் இல்லை. இதன்பின் எல்லாப் பிள்ளைகளுக்கும் அவரே வைத்தியம் செய்தார். அவருடைய வைத்தியத் துறையில் இதை மறக்க முடியாது என்பதனால் விபரமாகக் கூறி யுள்ளேன்.

Page 50
88
வைத்தியத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து நல்ல தரமுள்ள பல மருந்துக்களைக் கண்டுபிடித்தார் என்பதை யும் நான் அறிவேன். சளிக்குரிய தூள், தைலம், பல்லுக் குரிய மருந்துத் தூள், பிள்ளைகளின் கிறைப் வாட்டர்’ போன்றவைகளைப் பாவித்திருக்கின்றோம். இவைகள் நல்ல தரத்தையுடைய திறமான சுகம் கொடுக்கக்கூடிய தயாரிப்புகள். ஆனால் பல பிரச்சினைகளினால் இம் மருந்துகளைச் சில காலமாக அவர் தயாரிக்காது விட்ட தினால் இவைகளைப் பாவித்தவர்களுக்கு எவ்வளவோ சிரமம் காணப்பட்டது.
1982ஆம் ஆண்டு நான் புலமைப் பரிசில் பெற்று, இங்கிலாந்திற்கு முதுமானிப் படிப்பு (M.Sc)க்காக செல்ல முன் எனது சளிக்ருரிய தூள், எண்ணெய் எல்லாம் வேண்டும் என்று கேட்டு வாங்கி அவற்றைக் கொண்டு சென்றேன். பதினாறு மாதங்கள் அங்கு இருந்ததினால் இரண்டாவது தடவையும் மருந்துகளை அவரிடமிருந்து தொடர்ச்சியாகப் பெற்று பாவித்தேன். அங்கு முட்டோ தொய்வோ வர வேவில்லை. நான் ஆங்கில மருந்துக் குளிசை கூடப் பாவிக்க வில்லை.
அவரிடம் மருந்துக்குப் போகும் போதெல்லாம் அநேக நேரம் கதைப்பதையே விரும்புவார். பலவற்றைப் பற்றி உரையாடுவார். 5-10 நிமிடங்களில் மருந்தை எடுத்து விட்டுத் திரும்பலாம் என நினைத்துச் சென்றாலும் இது நடக்காத காரியமாகிவிடும். assig 600T to கதைத்துக் கொண்டே இருப்பார். வைத்தியம், அரசியல், குடும்பப் பிரச்சினைகள் போன்றவற்றையெல்லாம் கதைப்பார். அரசியல் பற்றிக் கதைக்கும் போது எப்படி, தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தாரென்றும் தன்னால் செய்யக் கூடியவைகளை எப்படிச் செய்ய முடிந்தன என்றும் கூறுவார். அவர் உள்ளூர் தேர்தல்களில் பங்கு பற்றியதையும், பட்டின சபைத் தலைவராக வந்து செய்த

89
தொண்டுகள் பற்றியும் கூறுவார். வைத்தியத்தைப் பற்றிக் கூறும்போது, அவருடைய படிப்பு, அதிபர் பற்றியும், வைத்திய ஆராய்ச்சிகள், முடிவுகள் பற்றியும் கூறுவார். வாத நோய்க்கு வைத்தியம் செய்தல் விசேஷமாக பாரிச வாதம் வந்து எழும்ப முடியாதவர்கள், எழும்பி நடக்கக் கூடிய அளவிற்கு வைத்தியம் செய்தது பற்றியும் கூறுவார். மேற்குறித்தவைகள் மட்டுமன்றி தனது குடும்பப் பிரச்சினைகள் பற்றியும் திறந்த மனதோடு கதைப்பது அவர் வழக்கம். இதையும் மறக்க முடியாது என் வாழ்வில்,
காங்கேசன்துறை தையிட்டிப் பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சினைகளில் மக்கள் இடம் பெயர்ந்ததால் சில காலம் அவரிடம் வைத்தியம் செய்ய முடியாதுபோனது, 1991ஆம் ஆண்டு ஆடி மாதம் அவர் மானிப்பாயில் இருக்கிறார் என்று அவரின் சகோதரன் மூலம் அறிந்தேன். எனது 2ஆவது மகனுக்கு வைத்தியம் செய்வதற்காக அவரிடம் சென்றபோது தலையில் இருந்து கால்வரை ஒவ்வொரு பகுதியில் இருக்கும் நோய்கள் பற்றி கைநாடி பார்த்துக் கூறினார். மகன் அவற்றைச் சரியென ஏற்றுக் கொண் டார். கைநாடியில் வருத்தத்தைக் கண்டுபிடிப்பதில் பேர் போனவர் என்று கூற முடியும். எல்லா வியாதிகளைப் பற்றி விபரமாகக் கூறுவார். மகனுக்கு தலையிடி இருந் தது. மறதி பலவீனம் காணப்பட்டது. இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் படிப்பவர். இவரோடு பட்டதாரி களைப் பற்றித்தான் கதை. இப்படிப்பட்ட படிப்பிற்கு ஞாபகம் வேண்டும். அதிகம் படிக்க வேண்டும் என்றெல் லாம் கூறி மருந்துகள் கொடுத்தார். ஆண்டவர் கிருபை யால் மருந்துகளோடு வருத்தம் சுகமாகி நல்ல தைரியம் வந்தது.
இதன் பின் மகளுக்கும் தலையிடி இருந்தது. அவரிடம்
மருந்து எடுத்து, நானும் வாதத்திற்காக மருந்து எடுத் தேன். கடும் பத்தியம் பார்க்க வேண்டுமானதால்,

Page 51
90
கொழும்பு சென்று திரும்பி வந்து மருந்து செய்யலாம் என்று ஐயாவிடம் கூறி கொழும்பு சென்றேன். கொழும் பால் வந்தபின் ஒரு ஞாயிறு காலை மகன், மகள், நான் எல்லோரும் ஆலய ஆராதனையின் பின், அவரிடம் மருந்து எடுக்கும் நோக்குடன் சென்றபொழுது, வீட்டில் கதிரைகள் அடுக்கியிருந்ததைக் கண்டு விசாரித்தபொழுது இறைவனடி சென்று விட்டார் என்று அறிந்தோம். இது அதிர்ச்சிக்குரிய செய்தியாக இருந்தது. வீட்டுக்குச் சென்று அம்மா மகள் எல்லோரிடமும் நடந்ததை அறிந்து எங்கள் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்தோம். மிகவும்: கவலைப்பட்டோம்.
மறக்க முடியாத வைத்தியக் கலாமணி ஐயா மரித்த, பின் அவரின் உடலைக் காண முடியாததையிட்டு மிகவும் கவலையடைந்தேன். ஆனால் மனதைத் தேற்றினேன். ஐயாவில் பல நற்குணங்கள் காணப்பட்டன . அத்தோடு சில காரியங்களில் பிடிவாதத் தன்மை உடையவராகவும் காணப்பட்டார். தன் கொள்கைகளைக் கைவிடாது ஜிவித் தார். சிலவற்றை இவ்வேளையில் ஞாபகப்படுத்தல் நல்ல தென எண்ணுகிறேன். வைத்தியத் துறையில் தன்னால் மருந்துகள் தயாரிக்கக் கூடிய காலம் வரை இயலுமான அளவு தான் செய்த மருந்துகளையே செய்து கொடுத்தார். ஆங்கில மருந்துக் குளிகைகளையோ வேறு மருந்து களையோ பா விக்கவில்லை. அரசியலிலும் தன் கொள்கை களைக் கடைசிவரை கைவிடவில்லை. தன் கொள்கை. களையே சிறந்ததென்றும் மற்றவர்களுக்கும் இதையே கூறி வாழ்ந்தார். உடையில் எப்போதும் கதர் துணிதான் நாலு முழ வேட்டிதான் அவர் பாவிப்பது. உணவிலும் கட்டுப்பாடுதான். சாப்பாடு வேண்டியவற்றிற்கு மேலா னவை ஒன்றும் சாப்பிட மாட்டார். அவருக்கு இருந்த மனக்கவலை தனது வைத்தியத்தைத் தொடர ஒருவரு மில்லை என்பதுதான். மேற்கூறிய கொள்கைகளை உடையவராக இருந்தார்.

91.
எனவே எங்களால் அவரை மறக்க முடியாது. அவர் பிரிந்தாலும் அவரின் அன்பு, குணாதிசயங்கள், வைத்தியம் முதலியன எங்கள் உள்ளங்களின் ஆழத்தில் பதிந்திருக் கின்றன என்பதில் ஐயமில்லை. ஆகவே மறக்க முடியாத வைத்தியர் என்றே கூறுவோம்.
அவரைப் பிரிந்திருக்கும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் எல்லோரினது ஆறுதலான வார்த்தைகளும் அனுதாபங்களும் உரித்தாகுக.
வேதநாயகம்-சில்வா இளைப்பாறிய உதவி விவசாயப் பணிப்பாளர்
உரும்பிராய்

Page 52
மனிதர்களை மனிதர்களாக நேசித்த மாமனிதன்
sect கிராமத்திற்கு நல் குரு நல் ஆசிரியர், நல் வைத்தியர், மூவர் தேவை. இம்மூவரும் சேர்ந்து தன்னலமற்ற சேவை செய்தால் அக்கிராமம் மிகவும் பெருமையுடன் திகழும். இந்த வகையிலே காங்கேசன் துறைப் பட்டினத்தை தமது சேவையால் சிறப்பித்தவர் வைத்திய கலாநிதி சு. வே. சீனிவாசகம் அவர்கள்.
அவர் உயரிய இலட்சியங்களை உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தவர். வெறும் சிந்தனையாளர் அல்லர். தாம் மேற்கொண்ட வைத்தியத்துறை, பொதுவாழ்வு, அரசியல்துறை ஆகிய மூன்று முனைகளினூடாக மக்களுக்குச் சேவை செய்து மனிதர்களை மனிதராக நேசித்த மாமனிதன்.
டாக்டர் அவர்களுடன் தனிப்பட்ட முறையிலே பழகும் வாய்ப்பு 1979களில்தான் எனக்குக் கிட்டிற்று. ஆனாலும் இதற்கு முன்னர் அவரது வைத்தியத் திறனின் வெளிப்பாட்டால் வெளிக்கொணரப்பட்ட, வேடியன்ஸ், ஓமோ வாட்டர், வேடியன்ஸ் கல் நார் பற்பொடி, வேடியன்ஸ் கற்பூர தைலம், வேடியன்ஸ் தடிமல் மருந்து ஆகியவற்றின் தயாரிப்பாளர் என்பதை அறிந்து கொண் டேன். இவருடன் உரையாடும் பொழுதில் இனிய இயல்பு கள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். இவருடன் உரையாடும் வேளைகளில் இந்த வார்த்தைகளைக் கூறிக்

93
கொள்வார். "அவன் என்ன செய்கிறான் என்பது எனக்கு முக்கியமல்ல. நான் என்ன செய்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம்." இந்த வார்த்தைகள அவரது நிலைப் பாட்டை வெளிப்படுத்தின. இவர் தனது வாழ்க்கையில்
கொண்ட கொள்கையில் இறுக்கமான பிடியை தளர்த்தாத கொள்கைவாதி என்பதையும் தெளிவாகக் காணலாம்.
இவரது அறிவு முதிர்ச்சியின் வெளிப்பாட்டை படம் பிடித்தாற் போல காணமுடிந்தது. மும்மொழி வல்லவன்.
அன்பிலும் பண்பிலும் சிறந்த சேவையாளன். ஏழை
பணக்காரன் என்றில்லாது எவருக்கும் தயங்காது உதவு பவர். மருத்துவம், பொது வாழ்வு, அரசியல் துறை ஆகிய மூன்று துறைகளிலும் தூய்மையாக சேவை புரிந்து அவரை எந்தவொரு உள்ள மும் இலகுவில் மறந்துவிட
(p gulf 35.
தன்னை நாடிவந்த நோயாளர்களின் ஏனையோர்
உள்ளங்களிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மண்ணிற் பிறந்தோர்க்கு இறப்பு நியதியானதுதான். ஆனாலும் அமரர் சீனிவாசகத் தாரது மறைவு எல்லா மக்களினதும் உள்ளங்களையும் உலுக்கிச் சென்றுள்ளது. இவ்வாறான ஒரு மாமனிதன் நம்மைவிட்டுப் பிரிந்தமை பெரும் துயர் தருவதாகும். அவரது பிரிவினால் வருந்தும், அவரது பாரியாருக்கும் குடும்ப அங்கத்தவர்களுக்கும், சுற்றத்தவர்களுக்கும், தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
திருமதி ஈஸ்வரி தர்மலிங்கம்
கலைமகள் வீதி
தையிட்டி

Page 53
சொல்லிலும் செயலிலும் வழிகாட்டி
"ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்கு பேரும் தகைத்து"
என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க ஒடுக்கமுடன் தன்னைத்தானே அடக்கி உள்ளத்தில் ஊக்கத்தை அதிகப் படுத்தி சந்தர்ப்பம் வாய்ந்த பொழுதெல்லாம் நன்மை யான விஷயங்கள் அனைத்திலும், உதாரணமாக அரசிய லிலோ, வைத்தியத்திலோ, தேசிய நீரோட்டத்திலோ எவரும் எதிர்பார்த்திராத நிலையில் தனது ஊக்கத்தை அவ்வப்போது ஆக்கம் உடன் வெளிக்காட்டி மக்களின் சேவையே தன் சேவை என்ற பெருங் கொள்கையினை மேலெடுத்து சென்ற வைத்திய கலாநிதி சு. வே. சீனிவாசகம் என்பவரை 1959ஆம் ஆண்டிலிருந்தே எஸ். ஏ. குஞ்சிதயாதம் மூலமாக அறிமுகம் செய்யப்பட் டேன். அன்றிலிருந்து நாம் இருவரும் சிறந்த நண்பர் களானோம். உற்ற இடத்தில் உறுதியுடன் நின்று உண்மை நிலைகளை விளக்கும் தன்மை அவரிட்ம் என்றும் காணப்பட்டது.
அகில இலங்கை சித்த ஆயுள்வேத வைத்திய சங்கத் தில் தலைவராக இருந்த சமயத்தில் 1970ஆம் ஆண்டு யாழ் ஆயுள்வேத வைத்திய ஆண்டு விழாவுக்கு என்னை யும் அழைத்திருந்தார். அப்பொழுதில் அந்த ஆண்டில் நிகழ்ந்த பல பாரிய அசம்பாவிதங்களை இட்ட வாதப்பிரதி வாதங்கள் அடிக்கடி முளைத்தெழுந்தன. அவைகளை ஆயுள் வேத கல்லூரியின் யாப்பிற்கு இணைந்த சட்ட திட்டங்களால் அனைவரையும் மனத்திருப்தி அடையச் செய்யும் தன்மை இவரிடம் இயல்பாகவே இருந்தது என்பதை நான் அறிந்தேன். அன்றிலிருந்து இவருடன் நான் கொண்ட சினேகிதம் முன்னரை விட அதிகரித்தது. சொல், செயல் இரண்டிலும் மக்கள் சேவையே பிரதானம் எனக் கருதி எல்லோருக்கும் ஒரு வழிகாட்டி யாகவும் அமைந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் இயங்கு

95 கின்ற சிந்தவைத்திய சாலைகளில் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிறிநிவாச வைத்தியசாலையென சித்த வைத்திய ஒளடத முறைகள் அனைத்தையும் கொண்டதும், சித்தவைத்திய மருந்தகத்தைக் கொண்டதுமான தனிச் சிறப்பு, சித்தவைத்தியத்தையே பிரதானமாகக் கொண்டு கடமையாற்றிய டாக்டர் சு. வே. சீனிவாசகத்திற்கே பொருத்தமுடையதாகும்.
விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில வைத்தியர்களே சித்த மருந்துகளை தம் அனுபவத்தில் நோயாளிகளுக்கு உபயோகித்த அதன் பலனை நன்கு அனுபவித்தனர். அவ்வாறானோரின் டாக்டர் சு. வே. சீனிவாசகம் முதலிடம் வகித்ததையிட்டு நான் மிகமிக பெருமையடை கின்றேன்.
அவர் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் அவர் வழிப்பரம்பரையான தற்ப்ோது யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையில், சித்த மருத்துவத்தையே கற்றுக் கொண்டிருக்கின்ற எனது மாணவன் திரு. சி. ராஜ்குமாரின் திறமைகளை நான் அவதானித்தபோது எவ்விதத்திலும் டாக்டர் சு. வே. சீனிவாசகத்திற்கு குறைந்தவர் அல்லர் என்பது புலப்படுகின்றது. பரம்பரை வழியாக டாக்டர் சு. வே. சீனிவாசகம் மேற்கொண்ட சித்த மருத்துவ முறைகள் அவர் வழிப் பரம்பரையான திரு. சி. ராஜ்குமார் மூலமாக யாழ் நகர மக்களுக்கு வெகுவிரைவில் புனிதத் தன்மையுடன் வழங்கப்படுமென அவரின் குரு என்ற வகையில் உறுதிப்படுத்த விளைகின்றேன்.
நன்றி
வைத்திய கலாநிதி,
சி. திருநாவுக்கரசு டி. ஐ. எம். எஸ்
ஓய்வு பெற்ற சித்தமருத்துவ
விரிவுரையாளர்,
யாழ் பல்கலைக்கழகம்,
இலங்கை,

Page 54
Even after one year it is difficult to believe that my paternal Uncle Dr. S.V. Seenivasakam is no more. On the day heard the news of the sad demise of my Uncle, shock and sorrow experienced was unbearable. Only two days before he passed away, I had occasion to examine him, His pulse was slow and feeble. but his face was bright as usual.
He gave me a guidance in diagnosing various diseases by reading accurately the pulsa of patients. It is an irony that had to test his pulse just two days before his demise to diagnoise his own ailments.
was his student since 1980 until his demise. He taught me a lot about Siddha Ayurvedic system - very often its intricacies as well. He even divulged to me the methods of preparing certain Siddha Ayurvedic specifics which our family had kept as a secret thereto. In fact it was due to my paternal Uncle's persuasion that I am following a Course of Siddha medicine at the University of Jaffna. In view of the various ways he had helped me in furthering my studies on Siddha Ayurveda, il thought it fit to contribute an article on Typhoid fever' (Athisara sura sanni) in his MEMORY, believe that my article would be of some benefit to the public.
Dr. S. RAJAKUMAR
Siddha Ayurvedic Physician. Kankesanthurai. Sri Lanka.

தைபொயிட்டு காய்ச்சல் (TYPHOD FEVER)
சி. ராஜ்குமார், B.S. M.S. 3ஆம் வருடம்
யாழ். பல்கலைக்கழகம்.
இந்நோயானது தாவர இனத்தைச் சேர்ந்த பசிலசு (Bacius) 6.60) is usibis ful நுண்ணுயிரியினால் ஏற்படு கின்றது. இது Salmonella typhi எனப்படும்.
இவ்வகை நுண்ணுயிரியுடன் தொடர்புபட்ட நீர், பால் மற்றும் உணவு வகைகளை உள் எடுக்கும்போது இந்நோய் தொற்றுகின்றது. மனிதனின் மலம், சிறுநீர் மூலமாக இது பரப்பப்படுகின்றது. (Faeco oral route)
இதன் நோயரும்புக் காலம் (Incubation period) 10இலிருந்து 14 நாட்கள் வரை ஆகும்.
வாய் வழியாக உள் எடுக்கப்பட்ட நோய்க்கிருமி ஆனது இரைப்பையால் சுரக்கப்படும் அமிலத் தன்மை யால் பெரும்பகுதி அழிக்கப்படலாம். எனினும் நோயை ஏற்படுத்த போதுமான பற்றியாக்கள் சிறுகுடலை அடைந்து அங்குள்ள சீத மூளிப்படையே (Mucosal layer) துளைத்துக் கொண்டு நிணநீர் இழையங்களை (Lymphoid tissue) S|60|-föS Úlsör G(555 சுற்றோட்டத் தில் சேருகின்றன. இதன்போது காய்ச்சல் உண்டாகி பற்றிரீமியா (Bacteramia) என்ற நிலை உருவாகின்றது.
7- چ9

Page 55
98
பின்பு குருதியிலிருந்து இவ்வகை பற்றிரியாக்கள் பின் சிறு குடலில் காணப்படும் பேயர் பச்சசு (Payers patches), மண்ணிரல் (Spleen), மெசன்றிக் நிணநீர் முடிச்சுகள் (Mesenteric lymph nodes), 6 s) by dd God (Bone marrow) ஆகியவற்றை அடைந்து பெருகுகின்றன. இதன் போது குடலில் புண்கள் (Ulcers) உருவாகின்றன. இந்நோயின் போது ஏற்படும் வெப்பநிலை (temperature) மாற்ற வரைபானது படிக்கட்டு அமைப்மை (Step adder fever) கொண்டிருக்கும்.
G55é 6007 ib (Signs & Symptoms)
உடல் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்துகொண்டு செல்லும் கடுமையான முன்பக்க தலையிடி (Severe frontal headache) இருக்கும். நாடித் துடிப்பானது வெப்பு நிலை அதிகரிப்பிற்கு ஏற்ப அதிகரிக்காது. ஆரம்ப நிலை யில் மலக்கட்டு (Constipation) காணப்படும். ஒரு கிழமைக்கு பின்பு வயிற்றோட்டமானது அடிக்கடி நீர்த் 56160LDust 60T 251 as (Pea Soup stools) 9C05 disgub. As) வேளைகளில் இரத்த கறைகளும் காணப்படலாம். இந்நிலையில் நோயாளியின் உடல் வெப்பநிலை மிகக் கூடுதலாகவும், நீர்த்தன்மை குறைந்தவராகவும் (Dehydrated), 36061T (U60) is 56). TT 56th (Exhausted) காணப்படுவார். வயிற்றில் நோ இருக்கும். வயிற்றில் ரோஸ் நிற புள்ளிகள் (Rose Spots) தோன்றலாம். நாக்கின் நடுப்பகுதி பாலாடை படர்ந்தும், ஒரங்கள் செந் நிறமாகவும் காணப்படும்.
இந்நோய்க்கு தகுந்த நேரத்தில் சிகிச்சை செய்யா விட்டால் குடலிலிருந்து குருதிப் பெருக்கு (haemorrhage) மற்றும் குடலில் துளை ஏற்பட்டு பெறிரோனைற்றிஸ் (Periton it is due to Perforation) -2, du 5606)6OLD56ir sib பட்டு நோயாளி இறக்க வேண்டிய (fatal condition) C3 fift 6v i ld.

99
சிகிச்சை கிரமம்:-
இந்நோய்க்கு உடனடியாக சிகிச்சை செய்யா விட்டால் பல உபத்திரவங்களை மட்டுமல்லாது இறப்பை யும் ஏற்படுத்துமாகையால் வைத்தியரை உடன் நாடுவது அவசியம்.
தேக வெப்பநிலை சாதாரண நிலைக்கு வரும்வரை நோயாளியைப் படுக்கையில் காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். நீர் அற்றுப் போகும் தன்மையை தடுக்கப் போதியளவு திரவங்கள் கொடுக்க வேண்டும். கடினமான ஆகாரங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இறைச்சி போன்றவை தவிர்த்தல் வேண்டும். திரவ ஆகாரங்களையே நோயாளிக்குக் கொடுக்க வேண் டும். ஆகாரம் எடுத்த பின்னர் தேனும், தேசிப்புளிச் சாறும் கலந்த திரவத்தினால் வாய்ைக் கழுவ வேண்டும். மலத்தில் இரத்தம் கலந்து சென்றால் திராட்சாதி குடிநீர் செய்து கொடுக்கலாம்.
மகா எலாதி மாத்திரையை 1 அல்லது 2 குளிகை வீதம் காலை, மாலை சாப்பாட்டிற்குப் பின் கொடுக்க லாம். குடசபாலை சூரணம் 500-1000mg (மில்லி கிராம்) வீதம் காலை, மாலையில் சுடுநீரில் கொடுக்க லாம். இரட்ண கிரிரச குளிகை ஒன்றை காலை, மாலை யில் சுடுநீரில் கொடுக்கலாம்.
வாய் அவியல் இருப்பின் ஊசி மல்லிகை அவித்த நீர், டிகார நீர் ஆகியவற்றினால் வாயைக் கொப்பளிக்க 6) Tib.
இருதய சோர்வு, பதற்றம் இருப்பின் மகரத்துவம் 100-200mg இலை காலை, மாலையில் தேனுடன் சாப்பாட்டின் பின் கொடுக்கலாம்.
வயிற்றுப் பொருமலுக்கு அபான வாயு குளிகை இரண்டை காலை, மாலையில் கொடுக்கலாம்.

Page 56
1.00
தலைவலிக்கு செஞ்சந்தனம், கடுக்காய் ஆகியவற்றை சமபங்கு எடுத்து பசும்பா லில் அரைத்து நெற்றியில் பற்றிடலாம்.
சிகிச்சையின்போது உறைப்பு, காரசார வாசனைத் திரவியங்கள். எண்ணெய். பதார்த்தங்கள் ஆகியவற்றை உள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஆசிரியர் குழு குறிப்பு:
மேற்படி கட்டுரையை எழுதியுள்ள திரு. வி. ராஜ் குமார் காலம் சென்ற வைத்தியக் கலாநிதி சு. வே. சீனிவாசகத்தின் பெருமகனாவார். அவர் தற்போது யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையின் மூன்றாம் வருட மாணவனாகக் கல்வி கற்று வருகிறார். தனது பெரிய தகப்பனாரின் நினைவாகவே இக்கட்டுரையை இந்நினைவு மலருக்கு வழங்கியுள்ளார்.

மக்களுக்கு மதிப்புத் தந்த மகான்
மறைந்த அமரர் சு. வே. சீனிவாசகம் அவர்களைச் சிறு வயது முதலே அறிவேன். அவர் மக்கள் சேவையில் அதிகம் நாட்டம் கொண்ட வைத்தியராகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவுடமைப் பாதையில் வழி காட்டும் தோழராகவும் விளங்கினார். அவரிடம் வைத்திய அறிவு நிரம்பியிருந்ததால் சிறப்பான வைத்தி யத்தைச் செய்ய முடிந்தது. அதேவேளை தேச நிலைமை கள் பற்றிய கல்வி ஞானத்தால் மக்களின் பிரச்சினை களுக்கு வழி காட்டும் தலைவராகவும் திகழ்ந்தார்.
எமது ஆவலைப் பகுதி மக்களின் பின்தங்கிய நிலைமை கண்டு அதனை மாற்றி அமைக்க பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டவர். அவரது அரிய ஆலோசனை களால் என்னைப் போன்றோர் கவர்ந்து இழுக்கப் பட்டனர். அவரது அரசியல் வழிகாட்டலில் நாம் சிஷ்சியர் கள் போல் இருந்து செயல்பட்ட நாட்களை மறக்கவே முடியாது. ஆலய, தேனீர்க்கடைப் பிரவேசப் போராட்ட இயக்கங்களில் அவரது உறுதியான போராட்ட நிலைபாடு மிகத் துணிவானதும் போற்றத் தக்கதுமாகும்.
எனவே டாக்குத்தர் என மக்களால் அன்புடனும், மதிப்புடனும் அழைக்கப்பட்ட அமரர் சு. வே. சீனிவாசகத் தின் மறைவுக்கு ஆவளைப் பகுதி மக்களின் சார்பாக எமது இதயபூர்வமான அஞ்சலியையும் அனுதாபத்தையும் தெரி வித்துக் கொள்கிறோம்.
வ. சுந்தரம் ஆவளை கிராம அபிவிருத்தி
சங்க செயலாளர்

Page 57
என்றும் நன்றிக்குரியவர்
அமரர் டாக்டர் சு. வே. சீனிவாசகம் அவர்களை நாம் அன்புடன் டாக்குத்தர், பரியாரியார் என அழைப்போம். அன்னார் எமது பகுதிக்குச் செய்த சேவையை நாமோ வருங்கால எமது சந்ததியினரோ மறக்க முடியாத அளவுக்கு கல்மேல் எழுத்துப்போல் பதிந்து இருக் கின்றது. அதாவது எமது சந்ததியினர் பட்ட கஷ்டங்களை உணர்ந்து எமது பகுதிக்கு கிராமச்சபை அங்கத்தவராக இருந்த காலத்தில் கிணறு வெட்டித் தந்தார். பின் பட்டின சபை அங்கத்துவராக இருந்த காலத்தில் தேவை ஏற்படும்போது கிணற்றுக்குத் துலா, வாளி, சங்கிலி அல்லது கயிறு வாங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்து தந்தார். W
டாக்குத்தர் அவர்கள் எமது பகுதி மக்களுக்கு இலவச வைத்தியம் செய்து வந்தார். இவரைப் போலவே இவரது மகனும் எமக்கு இலவச வைத்தியம் செய்தார். டாக்குத்தர் அவர்களின் சேவையினால்தான் எமது பகுதி மக்கள் தேக ஆரோக்கியத்துடன் நீடித்த ஆயுள் வாழக் கூடியதாய் இருக்கிறார்கள்.
பரியாரியார் அவர்கள் ஒரு கொம்யூனிசவாதி. எப்பொழுதும் கொம்யூனிசவாதியாகவே இருந்தார். தேனீர் கடைப் பிரச்சினை, சிகையலங்கரிப்பு நிலையப் பிரச்சினை, ஆலயப் பிரவேசப் பிரச்சினை முதலியவற்றின் தீர்வுக்கு முன்னின்று உழைத்தவர்.
அன்னாரின் பிரிவால் கவலையுறும் மனைவி, பிள்ளை கள், பேரப் பிள்ளைகள், சுற்றத்தார் , தோழர்கள் அனைவருக்கும் எமது பகுதி மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.
நன்றி த. கணேஷ்
W செயலாளர்
ஈஸ்வரி விளையாட்டுக் கழகம் தையிட்டி

எனது நண்பனும் சகோதரனும்
அமரர் வைத்திய கலாநிதி எஸ். வி. சீனிவாசகம் அவர்களை, 1936 ஆம் ஆண்டு நான் லங்கா ஆயுள்வேதக் கல்லூரியில் படிப்பதற்குச் சேர்ந்த காலத்திலிருந்து அறிமுகமானேன். அவ் அறிமுகம் அவருடைய சீவிய பரியந்தம் உற்ற நண்பனாகவும் ஒரு சகோதரனாகவும் சீவித்துவந்தோம். அவரிடம் இருந்து வைத்திய அறிவு, அரசியல் அறிவு, இன்னும் பல துறை அறிவுகளையும் பெறக்கூடியதாக இருந்தது.
அவரது வைத்தியத்துறைச் செயற்பாட்டில் அனேக மாக வாதரோகங்கள், சுர வகைகள், நிமோனியா, நெருப்புக் காய்ச்சல், சிறுபிள்ளை வைத்தியம், நரம்புத் தளர்ச்சியான ரோகங்களுக்கு அதிவிசேடமாக சிகிச்சை களைச் செய்து வந்தார். சிகிச்சை முறையிலும் தனக்கென ஓர் அனுபவமான பாணியில் மருந்துகளை உபயோகித்து வந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. எந்தவித கஸ்ர ரோகங்களையும் மாற்றி நேயாளர்கள்ைச் சந்தோசப் படுத்த வேண்டும் என்ற குறிக்கோளில் “அசாத்தியமான நோகங்களிலும்" சித்தி பெறாவிடினும் முயற்சியைக் கைவிடாது தெண்டிப்பார். நோயாளியின் காலத்தைப் பொறுத்தது.”
சில முக்கியமான நோய்களில் மற்ற நண்பர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று நடந்து வந்தார். மருந்துகள் தயாரிப்பதில் அம்மருந்துகளைச் சரியான முறையில் தயாரித்து உபயோகித்தார், அப்படி இல்லாவிடின் அம்மருந்தை நிறுத்தி பின் வசதியான நேரம் அதற்குரிய சக்குகளைச் சேகரித்து பின்னர் தான் மருந்தைத் தயாரிக்க ஆரம்பிப்பார். அவர்களுக்கு போலியாக மருந்துகளைத் தாயரிக்கும் குணம் எப்பொழுதும் இருந்தது கிடையாது. நோயாளர்களுடன் மிக அன்பாகவும், கருணையாகவும், அவரின் இயல்புகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை செய்து வந்தார். ஆனால் பத்தியம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளிலும் மருந்துப் பிரயோக முறைகளிலும் மிகக்

Page 58
104
கண்டிப்பாக இருப்பார். ஆகையால் தான் அவருடைய வைத்தியம் சிறப்படையவும், வித்தகத் தன்மை அடையவும் காரணமாக இருந்ததை அறியக் கூடியதாக இருந்தது. வைத்தியத் தொழிலினால் பொருள், பணம், சேகரிக்க வேண்டும் என்ற ஆசையோ அவாவோ அவரிடம் கிடையாது. இதனால் அவருடைய வைத்தியத்தில் தரும சிந்தனையும் இலவச சேவையும் காணப்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது பெறமுடியாத மருந்துகளை இவர் கஸ்டப்பட்டு தயாரித்து மற்றைய வைத்திய கலாநிதிகளுக்கும், பொது மக்களுக்கும் மலிவாகக் கொடுத்து வந்தார். இச்செயல் அக்காலத்தில் பெரும் உதவியாக மக்களுக்கு இருந்தது.
அமரர் வைத்திய கலாநிதி ரி. சி. நாகரத்தினம் அவர்கள் இவர் வைத்தியம் தொடங்கிய காலத்திலிருந்து பக்கபலமாக உதவிவந்தார். நாம் இதை மறக்க முடியாது. இவரிடம் வைத்தியக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களும் தங்களுக்கு அனுபவ முறையைப் பெறுவதற்காக இவருடன் சீஷர்களாக இருந்து அறிவு பெற்றார்கள். இவர் தன்னுடைய வைத்தியத்துறை அழியாம்ல் இருப்பதற்காக தனது பிள்ளைகள் இருவரை ஆயுள் வேதக் கல்லூரியில் கற்க வைத்துப் பண்டிதர் களாக்கினார். இத்தோடு நில்லாது வேறு சில பிள்ளை களுக்கு பொருளாதார உதவியும் செய்து படிப்பித்தார்.
1942ஆம் ஆண்டு காலத்தில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். இத்துறையிலும் எங்களுடன் கூடி உழைத்து வந்தார். இவருடைய அரசியல் துறைக்கு கென்றி பேரின்ப நாயகம் அவர்கள் வழிகாட்டியாக அமைந்தார். இதன்பின்தான் சம சமாசக் கட்சியுடன் எங்களுடன் சேர்ந்து செயல்பட்டார். பின்பு இந்தியா சென்று வைத்திய அனுபவங்களைப் பெற்றுவந்து தொழில் நடத்தினார். இக்காலத்தில் தான் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்து இறக்கும் வரை செயல்பட்டார்.

05
இக்கட்சியில் இவர் செயலாளராகவும் காரியக்கமிட்டியிலும் சில சமயங்களில் தலைவராகவும் பங்காற்றி வந்தார். இக்காலத்தில் மிகவும் தீவிரமான ஓர் மத்துடன் எடுத்த காரியத்தை விடாது நடத்த முன்வைத்த காலைப் பின் வைக்காது செயல்பட்டு வந்தார்.
அரசியல்வாதியாக தனித்து நிற்காது சமூக சம்பந்த மான பல முயற்சிகளையும் கூட்டங்களையும் நடாத்தி முக்கியமாக ஈடுபட்டு வந்தார். இத்துறையில் நானும்
அவருடன் ஈடுபட்டபடியால் அறியக் கூடியதாக இருந்தது.
இந்தியப் பொதுவுடமைவாதியான g55. U.
ஜீவானந்தம் போன்ற தலைவர்களை இங்கே அழைத்து பல கூட்டங்களை நடத்தினார்.
இவர் அகில இலங்கை சித்த வைத்தய சங்கத்தின் தலைவராக சில காலம் இருந்தார். இலங்கை ஆயுள் வேத சபையின் கல்லூரி வைத்திய சாலையின் சடைக்கு அகில இலங்கை ரீதியில் நடைபெறும் தேர்தலில் ஓர் முறை போட்டியிட்டவர். இப்படியாக எந்த விடயத்திலும் பொது மக்களுக்கோ தமிழர்களுக்கோ பலன் தரக்கூடிய விடயங் களில் முன்னின்று உழைத்து வந்தார். தமிழ் மொழி அபிமானம் மிக்கவர்.
இவரது பிரிவால் கவலையுறும் அன்பு மனைவியாருக் கும், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், சுற்றத்தவர், நண்பர்கள், நோயாளிகள், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரது ஆத்மா சாந்தி அடைவதாக
இப்படிக்கு எஸ். ஏ. குஞ்சிதயாதம் ஒய்வுபெற்ற ஆயுள்வேத திணைக்கள வைத்திய அதிகாரி

Page 59
எனது நினைவுகளில் LITëLiff afr. G6). êGofall|TEfaith
நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் நான் சிறுவ னாக இருந்தேன். அந்தக் காலத்தில் அரசியல் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. எனது குடும்பத்தினரும் அரசியல் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. நான் அறிந் திருந்ததெல்லாம் "போடு போடு பச்சைப் பெட்டி" என்ற தேர்தல் கோஷம்தான்.
எனது கிராமம் ஒருபுறம் உடையார் பகுதியினரையும் சாதி வெறியர்களையும் மறுபுறம் சாதாரண விவசாயிகளை யும் தாழ்த்தப்பட்ட மக்களையும் கொண்டிருந்தது. பாராளுமன்றத் தேர்தல் வந்தபோது உடையார் பகுதி யினரெல்லாம் பச்சைப் பெட்டி பக்கம் (யூ. என். பி.) நின்றனர். டாக்டர் சீனிவாசகம் சிவப்புப் பெட்டி பக்கம் (லங்கா சம சமாசக் கட்சி) ஆதரவு கொடுத்து நின்றார். சாதி ஒழிப்பு, சமத்துவம், சுதந்திரம் என்பனவற்றைக் கோரி நின்ற நாகலிங்கத்தையே எனது குடும்பத்தினரும் ஆதரித்தனர்; டாக்டரும் அவரை யே ஆதரித்து நின்றார்; தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.
பாராளுமன்றத் தேர்தலை அடுத்து கிராமசபை தேர்தல் வந்தது. எங்கள் வட்டாரத்தில் சிவப்புப் பெட்டி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக டாக்டர் நின்றார். அவர் எளிமையான வாழ்வு, சாதி சமத்துவம், மக்கள் சேவை முதலியவற்றை வலியுறுத்தி வருபவர்; எமது அயல் வீட்டுக்காரர்; குடும்ப வைத்தியர். அவரை ஆதரித்தனர் எனது குடும்பத்தினர். அவரை எதிர்த்து

107
எங்கள் ஊர்க் கடைக்காரரின் தமையனார் பச்சைப் பெட்டியில் போட்டியிட்டார். டாக்டரே வெற்றி பெற்றார்.
தேர்தல் களை முடியவில்லை. நானும் அப்புவும்
மயிலிட்டிக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். எனது மாமன்மார், பெரியப்புமார் எங்களைக் கண்டு விட்டார்கள்; "டே யப் பையா டேயப் பையா” என்ற குரல் கேட்க திரும்பப் பார்த்தோம். அவர்கள் வருகிறார்கள். அப்பு வுக்கு 'அப்பையா' என்பது பட்டப் பெயர். வந்தவர்கள் பெரிதாகத் தாக்கப்பட்டார்கள். இவர்கள் அடிபட்டுக் கொள்வார்களோ என்ற கலக்கம் எனக்கு. அவர்களின் தாக்கத்தில் ஒரு விடயம் நன்றாகப் ப்திந்திருந்தது. அவர்கள் சாதிப்பிரச்சினை பற்றியும் பேசிக் கொண்டார் disgr.
"நாளைக்கு நாகலிங்கன் நளவர் பள்ளரை மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்கும் கூட்டி வந்து உள்ளுடுவன்* அதையும் ஏற்பியோ"
"ஓம் ஏற்பன்"
ஒருவாறு தர்க்கம் முடிவடைந்து விட்டது. நாங்கள் போய்விட்டோம்.
எங்களுக்குச் சமத்துவமில்லை. ஆனால் எங்களுக்குக் கீழும் மனிதர் இருக்க வேண்டும் என நினைக்கும் எண்ணம் எனது உறவினரிடம் மட்டுமல்ல பல பகுதி யினரிடமும் இருப்பதை பின்னாளில் கண்டு இந்த சாதியமைப்பை தகர்க்கும் போராட்டத்தில் இணைந்து கொண்டேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ப.ஜீவானந்தம் தலைமறைவாக வந்து இலங்கையில் தங்கி இருந்தார். பெரும் பிரச்சாரப் பீரங்கியாக விளங்கிய அவர் பல்வேறு இடங்களிலும் சாதி ஒழிப்பு, சமத்துவம், தேசவிடுதலை

Page 60
108
பற்றி சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதற்கான கூட்டமொன்று எமது ஊரில்-தையிட்டி கணேச வித்தியா சாலையில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு டாக்டர் சீனிவாசகம்தான் தலைமை தாங்கினார். ஜீவா சொற் பொழிவு ஆற்றும்போது "இதோ தொழிலாளர் விவசாயி கள் படை வருகிறது” என முழங்கினார். இந்தப் படை பற்றி நான் எதுவும் கேள்விப்பட்டிருக்கவில் வல. அருகே பலாலியில் இருந்த மிலிட்டரிப் படையினரைத்தான் அறிவேன். எழுந்து நின்று பார்த்தேன். அயலூரான ஊரனியில் இருந்து தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் வந்துகொண்டிருந்தனர். இவர்களும் படையைச் சேர்ந்த வர்களா என யோசித்தேன். இவர்கள் கதிரவன் என்பவ ரதும் பொன்னன் என்பவரதும் தலைமையில் வந்திருப்ப தாகச் சொன்னார்கள். இவர்கள் மேடையில் முன்னால் விரிக்கப்பட்டிரிந்த பாயில் எல்லோருடனும் சமத்துவமாக இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் உயர்சாதி வெறி கொண்டவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேற எழுந்தார்கள். எழுந்தவர்கள் மற்றவர்களை அழைத்தார் கள்; பதட்டம் உருவானது. டாக்டரின் நண்பர்களான செல்லத்துரை, வேலுப்பிள்ளை ஆகியோர் எல்லோரையும் சமத்துவமாக இருக்கும்படி வேண்டியிருந்தார்கள். சாதி வெறியர் போய்விட்டனர். இந்தப் பதட்டத்தினிடையே வந்த அப்பு என்னை "ஏனடா இருக்கிறாய்” என்று அடித்து இழுத்து சென்றுவிட்டார். இப்படி ஊருக்குள்ளே டாக்டர் ஏற்படுத்திய சமத்துவப் புயல் பலரையும் உலுப்பி விட்டது.
ஜீவாவின் கூட்டங்களுக்கும் கட்சிக் கூட்டங்களுக்கும் பாடசாலைக் கட்டிடத்திலும் முன்னுள்ள வேம்பிலும் போஸ்டர் ஒட்டி விடுவார் டாக்டர், அதனைக் கிழிக்கும் படி எங்கள் வகுப்பு மாணவர்களைத் தலைமை ஆசிரியர் பணித்திருந்தார். டாக்டரில் இருந்த மதிப்பு ஒருபுறம் , ஆசிரியரின் பணிப்பு மறுபுறம், இரண்டுக்குமிடையில்

109
எங்களுக்குள் போராட்டம், சுவரில் இருந்ததை கிழித்து விட்டோம்; வேம்பில் இருந்ததை விட்டுவிட்டோம். இதனை ஆசிரியரிடம் கூற அவரும் விட்டுவிட்டார்.
ஐந்தாம் வகுப்புடன் எனது படிப்பு நின்றுவிட்டது. டாக்டரின் மீது கொண்டிருந்த பற்று வளர்ந்து வந்தது. இளைஞர்களாகிய நாங்கள் அவரில் கொண்டிருந்த ஈடுபாட்டை பற்றி அவரின் எதிராளிகள் எனது வீட்டா ரிடம் கோள்மூட்டி விட்டனர். அப்போது டாக்டர் ஒரு பயங்கரவாதியாக வர்ணிக்கப்பட்டிருந்தார். நான் அவருடன் தொடர்புகொள்வதை எனது வீட்டுக்காரர் தடுத்தனர். வீட்டுக்காரருக்குத் தெரியாமலே சந்திப்ப துண்டு. இதை டாக்டர் விரும்பவில்லை. எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுவதை, அவர் விரும்பவில்லை. ஆனால் எனது நண்பர் குமார லிங்கத்தின் ஊடாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அதன் மூலம் என்னிடத்தில் புதிய கருத்துக்களை ஏற்படுத் தினார்.
1950ஆம் ஆண்டில் மயிலிட்டி கிராமசபையில் இருந்து பிரித்து காங்கேசன்துறை பட்டின சபை உருவாக்கப் பட்டது. 1953இல் நடைபெற்ற பட்டினசபைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டாக்டர் போட்டியிட்டு வெற்றி யீட்டினார். கட்சித் தோழர்கள் இவரின் வெற்றிக்காக பாடுபட்டனர். இவரை எதிர்த்து இவரின் ஒன்றுவிட்ட தம்பியும் போட்டியிட்டார்
பொதுவான பிரச்சினையில் ஐக்கியப்படக் கூடிய சக்தி களை ஐக்கியப்படுத்தி போராட்டத்தை முன்னெடுக்கும் பணியில் ஈடுபட்டார். 1953 ஆகஸ்டில் நடந்த மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தினை வெற்றிகரமாக நடைபெற டாக்டர் நாகநாதன் பா. உ. (தமிழரசுக் கட்சி) முதலி யோருடனும் கூட்டாக செயல்பட்டார். இதனால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தார் என பொலிஸ் தேடித்

Page 61
110
திரிந்தது. அதனால் சில மாதங்கள் தலைமறைவாக வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது.
1954இல் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையில் ஏழு தொழிலாளர்களை வேலையில் இருந்து நிர்வாகத்தினர் நீக்கினர். இதற்கெதிராக அத்தொழி லாளர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நடைபெற்றபோது பட்டினசபை உறுப்பினராக இருந்ததால் அத்தொழிலாளருக்கு பட்டின சபை பந்தல் போட்டுக் கொடுக்க வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்து அதனை செய்வித்து ஆதரவு நல்கி வந்தார். இந்தப் போராட்டம் வெற்றிபெற வில்லை. இந்த தொழிற்சாலை யில் தொழிலாளருக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்க்க ஐக்கியமுள்ள வலுவான தோர் தொழிற்சங்கத் தினை உருவாக்குவதற்கு பாடுபட்டார்.
கிராம மக்களிடமிருந்தே-சமுதாயத்தின் அடித்தளத் திலிருந்தே சமுதாய மாற்றத்திற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த டாக்டர் இதற்காக வாசிகசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், விவசாயிகள் சங்கங்கள் போன்றவற்றை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். இதனால் ஆவளை முங்கலை, திருவள்ளுவர்புரம் முதலிய இடங் களில் வாசிகசாலைகளும் விளையாட்டுக் கழகங்களும் தோன்றின.
கலைநங்கை என்னும் வாசிகசாலை ஆவளைக் கிராமத்தில் (மயிலிட்டி) தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உருவாகியபோது அவர்களுடன் சமத்துவமாக இருந்து கிளாசில் சோடா குடித்தார். இது ஆண்ட பரம்பரை யினர் மத்தியில் ஆத்திரத்தையும் அடக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுச்சியையும் உருவாக்கியதொன்றாக விளங் கியது. சொல்லிலும் செயலிலும் வல்ல வீரனை வெளிச்ச மிட்டு காட்டியது. கலைமகள் வாசிகசாலைத் திறப்பு விழா வின்போது பத்து வீட்டுக்கு ஒரு வாசிகசாலையாவது

111
வேண்டுமென அறைகூவல் விடுத்தார். ஏனென்றால் மக்கள் மத்தியில் அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தி அவர் களை சிந்திக்க வைப்பதுதான். அவர் அடிக்கடி பேசுவது "சிந்தியுங்கள் செயலாற்றுங்கள்" என்பதுதான். இவ்விழா வில் பேசும்போது ருஷ்ய புரட்சியின் சாதனைகள், சீனப் புரட்சியின் சாதனைகள் அந்நாடுகளிலே எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது, அத்தகைய புரட்சி எமது நாட்டிலும் ஏன் ஏற்படுத்த முடியாது என்ற கேள்வியை எழுப்பி விட்டார்.
ஒவ்வொரு வேலைக்கும் அதற்கான ஸ்தாபனங்களும் அவற்றின் ஐக்கியப்பட்ட செயற்பாடும் அவசியம் தேவை என்பதை வலியுறுத்தி அதற்கான ஸ்தாபனங்களை உருவாக்கியவர். துறைமுகத் தொழிலாளருக்காக ஐக்கிய துறைமுகத் தொழிலாளர் சங்கத்தையும், விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தையும் ஏற்படுத்தியவர். அத்துடன் மட்டுமல்லாமல் பெற்றோர் சங்கம் ஒன்றினை உருவாக்கி 1958ஆம் ஆண்டில் சிவகுருநாத வித்தியாலயத்தில் மூன்று மாதத்திற்கு மேலாக நடந்த பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நடத்தி வெற்றிகரமாக முடிக்க தலைமை தாங்கியவர். வெற்றியைக் கொண்டாட அப்போராட்டத் திற்கு உதவிபுரிந்த தோழர் பொன். கந்தையா-பருத்தித் துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அக் கிராம மக்களால் அழைக்கப்பட்டார். இக் கூட்டத் திற்கு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களான வி. பொன்னம்பலம், கே. ஏ. சுப்பிரமணியம் முதலியோர் வந்திருந்தனர். தோழர் கே. ஏ. சுப்பிரமணியம்தான் அப்போது காங்கேசன்துறைத் தொகுதியின் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்தார். அவருடன் தொடர்பினை ஏற்படுத்தித் தந்தார். இதன்மூலம் கட்சியுடனான நெருக்கம் அதிகரித்தது.
1959இல் டாக்டர் சீனிவாசகம் காங்கேசன்துறைப் பட்டின சபைத் தலைவராக இருந்தார். கேரள

Page 62
112
மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாலிபர் இயக்கத் தோழர் வலம்புரி காங்கேசன் துறைக்குவந்திருந் தார். அவரின் சைக்கிள் ஓட்ட சாதனையை மக்கள் பார்ப் பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. சைக்கிள் கான்ரிலில் திரும்பிஇருந்து கொண்டு ஓடி பல நிகழ்ச்சிகளை நடத்திய அந்தசாதனை ஏழு நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் ஆலய முன்றல் - தற்போதைய நடேஸ்வராக் கல்லூரி விடையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. மக்கள் நலாந்தம் திரண்டு வந்து களித்த வலம்புரி சாதனை நிகழ்ச்சியில் ஒழுங்கினை நிலைநாட்ட பொலிஸ் வரவில்லை. இதற்கு அரசியல் காரணங்கள் பல இருந்தன. ஆனால் சாரணர் இயக்கத்தினரின் உதவி யுடன் சிறப்பாக-ஒழுங்காக நடந்து முடிந்தது. இறுதி நாள் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் இந்த சாரணர் இயக்கத்தை உதாரணங்காட்டி "மக்கள் படையொன்று இல்லாவிட்டால் மக்களுக்கு என்று ஒன்றில்லை” என்பதை சுட்டிக்காட்டி வலியுறுத்தினார் டாக்டர்.
இந்த நிகழ்ச்சிக்கு தமது ஒத்துழைப்பு இல்லாவிட்டா லும் ஒழுங்காக நடத்தப்பட்டதை பொறுக்க மாட்டாத எதிர்த்தரப்பினர் நிகழ்ச்சியில் சேர்ந்த நிதியை டாக்டர் கையாடிவிட்டார் எனத் துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளி யிட்டனர். அவர் ஆத்திரப்பட வில்லை. நிதானத்துடன் உண்மை நிலையை விளக்கி பதிற் பிரசுர மொன்றினை பட்டினசபைத் தலைவரான டாக்டரும், சபைச் செயலாள ராக கடமையாற்றிய உள்ளூராட்சி உத்தியோகத்தரும் கையெழுத்திட்டு வெளியிட்டனர். கட்சியும் அவர் மேல் உன்ள குற்றச்சாட்டை ஆதாரத்துடன் விளக்குமாறு கோரிக்கை விட்டிருந்தது. ஆனால் எவரும் முன்வர வில்லை. அவதூற்றுப் பிரசாரம் பிசுபிசுத்துவிட்டது 1960இல் நடந்த பட்டின சபைத் தேர்தலில் அதிகப்படி யான வாக்குகளால் வெற்றியீட்டி மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

13
டாக்டர் தனது பழைய சைக்கிளில் அல்லது நடையில் தான் சென்று வந்தார். அவர்மேல் கொண்ட அன்பினால் மக்கள் புதிய சைக்கிள் ஒன்றினை வாங்கி அன்பளிப்பாக விழாவொன்றில் வழங்கினர். அவர் அதனைத் தனது இறுதிக்காலம் வரையும் வைத் திருந்தார். இக்காலத்தில் சீமெந்து தொழிற்சாலை ஊழியர்கள் கட்சிப் பணிகளில் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டிருந்த தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களுக்கும் சைக்கிள் ஒன்றினை அன்பளிப்புச் செய்தது குறிப்பிடத் தக்கது. இது அத் தோழர்கள் மீது அம்மக்கள் கொண்டிருந்த அன்பினையும் நம்பிக்கையையும் காட்டி நின்றது.
யாழ்ப்பாணத்து விவசாயிகளும் பொதுமக்களும் அறா வட்டிக்காரர்களிடமே கடன் பெற வேண்டி இருந்தது. இதனால் அவர்களின் நிலை மோசமாகி வந்தது. இதனை நீக்குவதற்கு அரசாங்க வங்கிகள் மூலம் குறைந்த வட்டி யிலும் தவணைக் கட்டணத்திலும் செலுத்தக் கூடிய வாய்ப்பு இருந்தாலும் அரசாங்கத்தின் மக்கள் வங்கி யாழ்ப் பாணப் பகுதியில் இல்லாததால், அவை திறக்கப்பட வேண்டுமென்பதற்காக பன்முகப்பட்ட to F (To Fisslf னுரடாக கையெழுத்து இயக்கம் ஒன்றினை ஆரம்பித்து நட்த்தினார். அதன் விழைவாக யாழ் நகரில் முதலாவது கிளையும் காங்கேசன்துறையில் இரண்டாவது கிளையும் திறக்கப்பட்டது. Х«
இத்தகைய பொது வேலை நடந்து வந்த வேளையில் அவற்றிற்கு உறுதுணையான கட்சியின் அமைப்பை வலுவுள்ளதாக்கவும், பொது மக்களுடனான புரட்சிகர ஐக்கியத்தை பலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். 1962ஆம் ஆண்டில் நடைபெற்ற மேதினக் கூட்டமும் ஊர்வலமும் கிராமங்களிலே நடந்தது. தெல்லிப்பளையில் ஆரம்பமாகிய ஊர்வலம் காங்கேசன்துறையில் முற்றுப் பெற்று அங்கு பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இந்த
ó一8

Page 63
114
ஊர்வலமும் கூட்டமும் சக்தி மிக்கதாய் அமைந்ததால் இக்கிராமப் புறங்களிலே பெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும் கொடுத்தது. இந் நிகழ்ச்சிக்கு தோழர் டாக்டர் அவர்களே தலைமை தாங்கினார்.
1954இல் கட்சியில் ஏற்பட்ட தத்துவார்த்தப் போராட் டத்தின்போது திரிபுவாத மார்க்கத்தினை எதிர்த்து நின்றார். அப்பாதையை ஏற்றுக் கொண்ட யாழ் மாவட்டக் கமிட்டியின் பெரும்பான்மையினரால் புரட்சிகரக் கொள் கையை முன்னெடுத்த தோழர்கள் எம். கார்த்திகேசன், சு. வே. சீனிவாசகம், இளங்கீரன். கே. ஏ. சுப்பிர மணியம், வீ. ஏ. கந்தசாமி, நீர்வை பொன்னையன் முதலியோர் வெளியேற்றப்பட்டனர். மக்கள் விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகரமான கொள்கையைக் கொண்ட கட்சி ஸ்தாபனத்தை உருவாக்க-புனருத்தாரணம் செய்ய ஏற்படுத்தப்பட்ட மாநாட்டு அமைப்புக் குழுவின் ஏழு தலைவர்களில் ஒருவராக டாக்டர் இருந்தார். இக்கட்சி தின் மத்திய குழுவிற்காக தெரிவு செய்யப்பட்டபோது உள்ளூராட்சி சபை, மருத்துவம், பின்தங்கிய மக்களிடம் வேலை செய்தல் முதலிய வேலைப் பளு காரணமாக ஏற்காவிட்டாலும் மாவட்டக் குழுவின் அங்கத்தவராக இருந்து பணியாற்றினார்.
தொழிற்சங்க அமைப்பு தொழிற்சாலையில் ஸ்திர மாகியது. கட்சி அமைப்பு வாலிபர் இயக்க அமைப்பு கிராமங்களில் வளர்ந்தது. இவ்வேளையில் 1964இல் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை தொழிலா ளர்கள் மாதச் சம்பளம் முதலிய கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். 27 நாட்களாகத் தொடர்ந்த இந்த வேலை நிறுத்தத்திற்கு மக்களின் ஆதரவு கட்சி நடவடிக்கையால் ஏற்பட்டது. வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வாலிபர் இயக்கத்தினர் முதலியனவற்றை சேகரித்து வழங்கினர். டாக்டர் {ه6 600T - د تې. இத்தொழிலாளர்களுடனே தனது மதியத்தின் பின்பான

11.5
நேரத்தை செலவிட்டார். வெற்றிகரமாக வேலை நிறுத்தம் முடிவுற்றது. கோரிக்கைகள் வெல்லப்பட்டன.
1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் (பத்திரிகைகளால் சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி என இனங்காட்டப்பட்ட புரட்சிகரக் கட்சி) டாக்டர் போட்டியிட்டார். இத்தேர்தல் களத்தை பிரச்சார மேடையாகப் பாவித்தாரேயன்றி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வெல்வது பற்றி நோக்கம் கொள்ளவில்லை. சில ஆதரவாளர்கள் தேர்த லின் குறுக்கு வழி வாக்குச் சேகரிப்புக்குக் கோரியபோதும் அவர் அதனை நிராகரித்தார். பாராளுமன்றத்தின் உண்மைச் சொரூபத்தைக் காட்டினார். கட்சிக் கூட்டங்கள் அரசியல் வகுப்பாக நிகழ்ச்சியாக அமையவில்லை.
சாதியத்திற்கு எதிரான 1966 அக்டோபர் எழுச்சி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து வந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டமும் சாதியத்திற்கெதிரான போராட் டத்தின் வரலாற்றில் மிக முக்கியமானவை. இவற்றின் தயாரிப்புக்கு டாக்டர் வழங்கிய பங்கு அளப்பரியது. நான் சிறுவனாக இருந்தபோது கந்தசாமி கோவிலுக்குள் நளவர் பள்ளரை விடலாமோ என்ற கேள்வியின் தாக்கத்தை-இருபது வருடங்களின் பின்னும் எவ்வளவு வன்மத்துடனும் கொடூரத்துடனும் சாதி அடக்குமுறையை அமுலாக்க முயன்று நின்ற சாதி வெறியர்களின் இழிவான செயல்களை-அதற்கெதிரான போராட்டத்தில் என்னை இணைத்தபொழுது தெரிந்தது.
\
1972ஆம் ஆண்டில் கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்ட போதும் தான் கொண்ட விடுதலைக்கான உறுதியான பாதையில் வழுவினாரில்ல்ை, இளைய தலைமுறை யினரின் தலைமையில் கட்சியின் பணியை முன்னெடுக்கச் செய்யவும் கட்சியின் நடவடிக்கையின் ஆலோசகராகவும்

Page 64
11.6
இருந்து செயல்பட்டார். மக்கள் விடுதலைக்கு மார்க்சியம் லெனினியம் மாஒ சேதுங் சிந்தனைதான் வழி காட்டும் மார்க்கம் என்பதை ஏற்று இறுதிவரை நம்பிக்கையுடன் செயல்பட்டவர் டாக்டர்.
பல்வேறு முனைகளில் வெவ்வேறு அளவுகளில் உறவினர், சாதி வெறியர் , பொலீஸ் படையினர், எதிர்க் கட்சியினர் என்போரால் அவதூறுகள், எதிர்ப்புகள் உயிராபத்துக்கள் என்பன பல்வேறு ஏற்பட்டாலும் அவற்றிற்கு அஞ்சாது அடக்கி ஒடுக்கப் பட்ட மக்கள், தொழிலாளர் விவசாயிகள் பக்கம் நின்று அவர்களின் விடுதலைக்கான தனது இலட்சியத்தை இம்மியளவும் விட்டுக் கொடுக்காது போராடிய புரட்சிகர நெஞ்சுறுதி மிக்க அம்மாமனிதரின் வாழ்க்கை நம் எல்லோ ருக்கும் படிப்பினையூட்டும் ஒரு புத்தகமாகும்.
அவருடைய இலட்சியப் பற்று, விட்டுக் கொடுக்காத போராட்டம், தியாக மனப்பான்மை என்னிடம் ஏற்படுத் திய தாக்கம் அளப்பரியது. சாதியத்திற்கெதிரான போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், தொழிற் சங்க வேலைகளின் போதும் அன்றாட வாழ்விலும் அவர் வழங்கிய வழிகாட்டல் அடிபிசகாது வழி நடக்க உதவியது. சாதியத்திற்கெதிரான போராட்டத்தின் வெற்றிக்காக உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக நான் நலிவடைந்த போதும் பொதுச்சேவை மக்கள் விடுதலை என்பவற்றிற்காக ჭნ 6ზ1 ჭ5] சொத்துக்கள் அனைத்தையும் இழந்த டாக்டரை எண்ணிப் பார்க்கின் றேன் அந்த நினைவுகள் மக்கள் விடுதலைக்காய் மேலும் அணிவகுக்க ஏவுகின்றது.
1980களில் இருந்து காங்கேசன்துறை லங்கா சீமெந்து நிறுவனத்தில் கடமையாற்றி அங்கே தொழி லாளரின் உயர்ச்சிக்காக தொழிற்சங்கம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட வேளையிலும் டாக்டரின் தொழிற்சங்க அரசியல் வேலைமுறைகள் முன்னனுபவங் களாக அமைந்தன. பல்வேறுபட்ட தரப்பினர், பல்வேறு

117
பட்ட அரசியல் கொள்கைகள் கொண்டவர்கள் தொழில் புரியும் நிறுவனத்தில் பல தொழிற்சங்கங்கள் இருப்பது தொழிலாளரின் பலத்தை சிதறடிக்க உதவுமே தவிர வேறொன்றுக்கும் உதவாது. இதற்கு மாறாக பல்வேறு பட்ட கருத்துக்களைக் கொண்ட தொழிலாளர்களும் பொதுவான கோரிக்கைகளின் கீழ் ஒன்றுபட்டு வெற்றி பெற முடியும் என்ற ஐக்கிய முன்னணிக் கொள்கையின் வழியில் செயல்படும் அவரின் நடவடிக்கை வழி காட்டியது. இந்த வழி நடத்தல்தான் தொழிற்சங்க செயற்குழு உறுப்பினராக, தலைவராக இருந்து பலதரப் பட்ட தொழிலாளர்களும் ஐக்கியப்பட்டதோர் சங்கத்தின் கீழ் அணிதிரண்டு செயற்பட வழிகாட்டியது.
பல்வேறுபட்ட விடயங்களிலும் பங்கு கொண்ட தோழர் டாக்டர் சு. வே. சீனிவாசகம் அவர்கள்தான் மக்களால் "டாக்குத்தர்” என அன்பாக அழைக்கப்படும் ஒருவரானார். காங்கேசன்துறைப் பகுதியில் பல டாக்டர் கள் இருந்தபோதிலும் "டாக்டர்” என்றால் தோழர் சீனிவாசகம் அவர்களையே குறிப்பிடும் இன்னொரு பெயராகவே இருந்தது. இத்தகையதோர் மாமனிதரின் மறைவு நம் எல்லோருக்கும் பேரிழப்பாகும்.
கடத்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆசானாய் தந்தையாய், தோழனாய் நின்று வழி காட்டிய அவரின் மறைவு எனக்கு மாத்திரமல்ல மக்களின் விடுதலையை பல வழிகளிலும் நேசித்த அனைவருக்கும் பேரிழப்பாகும். நாம் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமானால் அவரது இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வது ஒன்றா கத்தான் இருக்க முடியும.
இ. கா. சூடாமணி முன்னாள் தொழிற்சங்க தலைவர் லங்கா சீமெந்து நிறுவனம் வீமன் காமம் வடக்கு காங்கேசன்துறை

Page 65
நினைவுச் சிறுகதை குமுதன்

அறுபது கத்திகள்
தொலைவில் வரும்பொழுதே எல்லோரது கண்களை யும் தன்பால் ஈர்க்கும் சீமெந்து தொழிற்சாலையின் புகை போக்கி வெண்மஞ்சல் நிறத்தோடு வானை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. சைக்கிளில் வந்து கொண்டிருந்த சண்முகம் வழமைக்கு மாறாக தூரத்தில் வரும் பொழுதே அந்த புகை போக்கியை ஆதலுடன் உற்றுப் பார்க்கிறான்.
தெருவோரத்தில் கூடலாக நிற்கும் பனை மரங்களுக் கூடாக இடையிடையே மறைந்து தெரியும் புகை போக்கி யும், புகை போக்கியிலிருந்து வழமைபோல் இல்லாவிட்டா லும் சற்று வேகம் குறைந்து காற்றிலாடிக் கலக் சும் அந்த நச்சுப் புகையைக் கண்டதும் சண்முகத்தின் மனம் கொதிப் படைகிறது. பசியால் வாடி மெலிந்துபோன மனைவி குழந்தைகளின் முகங்கள் அவனது மனத்திரையில் வந்து நிற்கின்றன.
"எங்க கடன்பட்டாதல் அரிசி வாங்கிக் கொண்டு வாங்கோ - அக்கம் பக்கத்திலே இனிக் கடன் வாங்கே 6Ꮝ Ꮀ gᎼj"
காலையில் வரும்போது மனைவி கூறிய வார்த்தைகள் காதுகளில் திரும்ப திரும் ஒலித்து அவனது கவலையைப் பெருக்கியது.
தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் ஆரம்பித்து
இருபத்தாறு நாட்களாகியும் நிர்வாகம் அவர்களது நியாயமான கோரிக்கைகளை இன்னும் ஏற்கவில்லை.

Page 66
120
அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் கள் அனைவரும் நாளாந்தக் கூலிகளாகவே நடத்தப்பட் டனர். மாதச் சம்பளமானால் மருத்துவ லிவு சேமலாப நிதி போன்ற பல நன்மைகள் தமக்குக் கிட்டும் என்ற நம்பிக்கையுடன்தான், அவனைப் போன்ற தொழிலாளர் கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் குடும்ப நிலையை மனதில் கொண்டு கடுமையாக காய்ந்த காய்ச்சலையும் பொருட்படுத்தாது சண்முகம் வேலைக்குச்
தின் முன் உதவியாளனாகப் பணிபுரிந்து கொண்டு நின்ற அவன், மயக்கமடைந்து விழ முனைந்த போது அருகில் நின்ற தொழிலாளி அவனைத் தாங்கிக் கொண்டான். மயக்கம் தெளிந்து அவன் எழுந்தபோது மனேச்சர் தமது அறைக்கு வரும்படி அவனை அழைத்தார்.
"சண்முகம் காய்சளோடை ஏன் வேலைக்கு வந்தனி . ஏதாவது நடந்திருந்தால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்லவேணும் தெரியுமா? இனிமேல் சு கயீனம் எண்டால் வேலைக்கு வரக்கூடாது.
அவர் அவனை எச்சரித்து அனுப்பியபோது சண்முகம் வேதனையுடன் தனக்குள் சிரித்துக் கொண்டே திரும்பி னான். அந்தச் சம்பவத்தின் தாக்கம்தான் வேலை நிறுத்தத்தில் அவனை உறுதியுடன் பங்கு பற்ற தூண்டியது.
தூரத்தில் வரும் பொழுதே தொழிற்சாலை முன்பாக உள்ள ஒரு கட்டிடத்தில் தெரிந்த சிகப்பு நிறத் துணியில் மஞ்சல் மையினால் எழுதப்பட்ட தொழிற்சங்க பனர் ரைக் கண்டதும் சண்முகத்தின் மனதில் ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்பட சயிக்கிளை வேகமாக செலுத்து கிறான்
தொழிற்சாலைக்கென ஒதுக்கப்பட்ட அந்தப் பரந்த வெளியில் தொழிற்சாலையின் பெரிய கட்டிடங்கள்

12.
அழகான பொருட்காட்சி "மொடல்" போல் காட்சியளிக் கிறது. புகையிரத வண்டி மூலம் இழுத்து வரப்பட்ட முருங்கன் கழி மண்ணை ஏற்றிய் ரெயில் பெட்டிகள் கறுத்து தடித்த நேர் கோடாக தண்டவாளத்தில் அப்படியே தெரிகிறது. சுண்ணாம்புக் கற்களை எடுப்பதற் காக ஆழமாகத் தோண்டப்பட்டு பள்ளங்களாகிவிட்ட குவாறிகளில் எறும்புக் கூட்டம்போல் தெரியும். தொழிலாளர்களின் உருவங்கள் எதுவும் இன்று தெரிய வில்லை. சீமெந்து ஏற்றிச் செல்ல வரிசையாக வந்து நிற்கும் லொறிகள் எதுவும் அங்கில்லை. தொழிற்சாலை இயங்குவதுபோல நிர்வாகம் காட்ட முயன்றாலும் ஒருசில கருங்காலிகளை வைத்து அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வேண்டுமென்றே இயக்கிவிடப்பட்ட ஒரு சில என்ஜின்களின் இரைச்சல்களைத் தவிர தொழிற் சாலை வெறிச் சோடிக்கிடக்கிறது.
தொழிற்சாலை வாசலிலும் பிரதான இடங்களிலும் துப்பாக்கிகளுடன் பொலிசார் காவலுக்கு நிற்கின்றனர். அவனது சைக்கிலைத்தாண்டி பின்புறமாக வேகாமக வந்து தொழிற்சாலைக்குள் திரும்பிய ஜிப்பில் அவனுடன் வேலை செய்யும் சோமுவின் தலையும் தெரிகிறது. அவர்களது கால்களுக்கிடையில் இருந்த காட்போட் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்ட இறைச்சிக் குடல்களின் எண்ணிக்கையை வெளியே நீண்டு கொண் டிருக்கும் பனை ஒலை இதழ்கள் வெளிப்படுத்துகின்றன.
"டோய் கருங்காலி சேr மா”
தொழிற்சங்க கட்டிடத்திற்கு முன்னால் கூடி நின்ற தொழிலாளர்களில் ஒருவன் ஜிப் செல்லும் அந்த வேகத் திலும் இவைகளை அடையாளங்கண்டு உணர்ச்சி வசப் பட்டுக் கத்தினான். அப்படிக் கத்த வேண்டும் என்று எண்ணிய சண்முகத்திற்கு அவனது கத்தல் உற்சாகமாக இருந்தது.

Page 67
122
"வாங்கோ சண்முக மண்ணை” சக தொழிலாளியின் வரவேற்போடு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொள்கி றான். அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் பத்திரிகைகள் புத்தகங்களை படித்துக் கொண்டும் தமது இன்ப துன்பங்
நாட்டு நிலைமைகளையும் உலக நிலைமைகளையும் அலசிக் கொண்டும் இருந்தனர். சண்முகம் ஒரு தொழிலாளி படித்துவிட்டு நீட்டிய பத்திரிகையை மேலாகப் புரட்டினான். வேலை நிறுத்தத்தைபற்றி எதுவும் வராதது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. காலையில் மனைவி சொன்ன வார்த்தைகள் மீண்டும் நினைவிற்கு வந்தது. தன்னைப் போலவே நாளாந்த கூலிகளாக இருக்கும் இவர்களிடம் எப்படிக் கடன் கேட்பது என்று எண்ணி னான். இப்படியே வேலை நிறுத்தம் நீடித்தால் தங்களைப் போன்றவர்களின் குடும்பங்கள் பட்டினியால் இறக்க நேரிடும் என்று நினைத்தபோது அவனுக்கு "அந்த சமூக அமைப்பின்’ மீதே வெறுப்பு ஏற்பட்டது.
ஒவ்வொரு நாளும மாலையில் நடைபெறும் கூட். ங் கள் தான் அவனுக்கு நம்பிக்கையைத் தந்தன. தங்களைத் தவிர மற்றவர்களிலும் அக்கறையுள்ள பல புதிய மனிதர் களை அவன் அங்கு சந்தித்தான். நேற்று நடந்த கூட்டத் திற்கூட அப்பகுதியின் எண்ணெய் விநியோகத்திற்குப் பொறுப்பான ஒருவர் "நிர்வாகம் உங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்காவிட்டால் எண்ணெய் விநியோ கத்தை நிறுத்துவோம்” என்று பேசியிருந்தார்.
இன்று வேலை நிறுத்தம் ஆரம்பித்த நாட்களில்
தாக இருந்தது. கதர் வேட்டியும் கதர் சேட்டும் அணிந்து காட்சி தரும் அவரது தோற்றம் ஒரு காந்தியவாதியை நினைவுக்கு கொண்டு வந்தாலும் கழுத்தைச் சுற்றி கீழே தொங்கும் நிறம் மங்காத சிவப்பு மப்ளர் சமூக மாற்றத்திற் காக உழைக்க அவர் கொண்ட உறுதியை வெளிக்

123
காட்டுவதாக இருந்தது. அவருடன் பழகிய அந்த குறுகிய நாட்களுக்கிடையிலேயே அவனுக்கு அவரைப் பிடித்துக் கொண்டது. மிக எளிமையான தேற்றமுடைய அவர் தனது வருமானத்தையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் மூன்று மணிக்கு வந்து கூட்டம் முடியும் வரை நின்று தொழிலாளர்களை உற்சாகப்படுத்துவதைப் பார்க்க, சண்முகத்திற்கு ஆரம்பத்தில் அதிசயமாக, இருந்தது. பின்பு அவரைப் போன்ற பலரை அங்கு சந்திக்க நேர்ந்த பொழுது இவர்கள் எல்லாம் ஒரு புதிய வாழ்க்கையையும் நடைமுறைகளையும் விரும்பும் புதிய மனிதர்களாக அவனுக்குப் பட்டது.
சயிக்கிள்களில் பெட்டிகளைக் கட்டியபடி மூன்று இளைஞர்கள் வேகமாக வருகின்றனர். தொழிற்சாலை வாசலில் நின்ற பொலீஸ்க்காரன் அவர்களைத் தடுத்து. நிறுத்தி பெட்டிகளை பார்வையிடுகிறான்.
"சாப்பாடா சரி கொண்டுபோ” தொழிற்சங்க காரியாலயத்தை நோக்கி அவர்கள் வருகின்றனர்.
"பாசல் கட்ட பிந்திப் போச்சு மன்னிச்சுக் கொள்ளுங்க. தோழர்”
"இல்லைத் தோழர் நீங்கள் முந்தி வந்திட்டீங்கள். சாப்பாட்டுக்கு இன்னும் அரை மணத்தியாலம் இருக்கு"
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மெலிந்த தோற்றமும் சுறுசுறுப்பான சுபா வமும் கொண்ட பொன்னுத்துரையர் நன்றியோடு கூறுகிறார்.
ஒவ்வொரு நாளுத் மதிய வேளை உணவு வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கொண்டிருந்தது. ஆரம்பத் தில் சண்முகம் போன்ற தொழிலாளர்களுக்கு அவர்களுக் கும் தமக்கும் என்ன உறவு என்பது புரியவில்லை. பின்பு தான் தம்மைப் போன்ற, உழைக்கும் மக்களின் பலம் நாடு முழுவதும் பரந்து கிடப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

Page 68
124
மதிய உணவுக்காக வாளிகளில் இருந்த நீரில் கைகளை அலம்பிவிட்டு,. ஒவ்வொருவரும் பார்சல்களை எடுத்துக் கொண்டு தமது நண்பர்களுடன் கூடி அமர்ந்து உண்ணத் தொடங்குகின்றனர். வழமையாக சண்முகத் துடன் சேர்ந்து , உண்ணும் ரகுநாதன் தனக்குரிய பார்சலை எடுத்துக் கொண்டு சண்முகத்தை தேடி வந்தான். கைகளையும் கழுவாமல் வெளியே இருந்த வாங்கில் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தான் சண்முகம் ,
"என்ன சண்முகவண்ணை சாப்பிடேல்லையா? "ஓம்.வயித்துக்கை சுகமில்லை” என்னண்ணை பொய் சொல்லுகிறாய்.வீட்டிலே ஏதாலும். ஒ. விளங்குது. வீடென்ன கன தூர மோ ஒடிப் போட்டு வாங்கோ.
தனது பார்சலையிம் கொண்டு சென்ற ரகுநாதன் மேலும் இரண்டு பார்சல்களையும் ஒரு பையில் போட்டுக் கொண்டு விரைந்து வந்தான்.
சண்முகண்ணை சயிக்கிளை எடுத்துக் கொண்டு போங்கோ.இந்தாங்கோ தொப்பி.
“சீ.வேண்டாம் ரகு." கடைசிவரைக்கும் விடமாட்டேன். பிடியுங்கோ. அவன் மறுத்த போதும் மையை அவனது கைகளில் திணித்து தொப்பியையும் தானாகவே அவனது தலையில் போட்டு சரிசெய்து விடுகிறான்.
"சண்முகம் நாங்களும் உம்மைப் போலத்தான் கெதியா போவிட்டு வாரும்.
தொழிற்சங்கத்திற்குப் பொறுப்பான பொன்னுத்துரை யரும் வந்து சொல்ல அதனை மீற விரும்பாது உணர்வு மேலீட்டால் கண்கள் கலங்க வீட்டை நோக்கி செல்லு கிறான். . . .

125
டாக்டரின் பேச்சைக் கேட்கும் ஆவலில் விரைவாக வீடு சென்று திரும்புகிறான் சண்முகம், சிறிது நேரத்தில் கூட்டம் ஆரம்பமாகிறது. அவர்கள் எல்லோரும் அறிந்த டாக்டர் பேச எழுகிறார்.
நான் அதிகம் உங்கள் முன் பேச விரும்பவில்லை. வெள்ளையர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இந்தப் பகுதியில் நடந்த ஒரு கதையைத் தான் இங்கு சொல்ல. விரும்புகிறேன். அது உங்களுக்கு பல வகையில் உதவும் என்று நம்புகின்றேன். அவர் கதையைச் சொல்ல ஆரம் பித்ததும் அங்கு கூடியிருந்த தொழிலாளர்களைப் போலவே சண்முகத்தின் கற்பனையிலும் அந்தக்காட்சி விரிகிறது.
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் ஒரு மாலை நேரம் காங்கேசன் துறைமுகம் கலகலப்பாக இயங்கு கிறது. கடற்கரை எங்கும் கடலைநோக்கி சரிந்து உயர்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரங்களின் ஒலைகள் அலை ஓசையுடன் போட்டியிட்டபடி கடற்கரையில் நிண்டு பறக் கிறது. அந்த அழகான வெளிச்ச வீட்டிற்கு முன்னால் நீண்டு கிடக்கும் கடற்பரப்பில் வந்து சேர்ந்த ஒழுங்கின் படி அடுக்கடுக்காகப் பாய்க் கப்பல்கள் பாய்களை இறக்கி நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. கப்பலில் இருந்து இறக்கப்படும் சர்க்கரை, அரிசி, பருப்பு, உணவுப் பண்டங்களும் உடுபுடவைகளும் வள்ளங்களில் இறப்கப் பட்டு கரைக்கு வந்து சேருகின்றன. அவைகளைக் கணக் கெடுத்தபடி கொப்பியும் பென்சிலுமாக கணக்காளர்கள் சிலர் நின்றனர். கணக்கெடுக்கப்பட்ட பொருட்களை வண்டில்களில் ஏற்றி கிட்டங்கிக்கு கொண்டு செல்ல வடக்கன் மாடு பூட்டிய வண்டிகள் வந்து போகின்றன.
மாலைச் சூரியன் மெல்ல மறையும் நேரம். வேலை. களை முடித்து வீடு திரும்பும் ஆவலில் பாரங்களை இறக்கி ஏற்றுவோரும், வள்ளங்களைத் தாண்டுவோரும் உற்சா கத்துடன் உரக்கக் கத்தியும் ஏலேலோ பாடியும் எழுப்பும்

Page 69
126
ஓசைகள் அலைகடலின் இரைச்சலையும் மீறி அந்த வெளி யெங்கும் எதிரொளிக்கிறது.
அத்துறைமுக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான வெள்ளைக்கார ரேவுத்துறை துறைமுகத்தின் ஒரு பகுதி யில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் எழுந்து நின்றபடி மாலைத் தேனீரைப் பருகிக் கொண்டே அந்த சிறிய யன்னலூடாக துறைமுக வேலைகளை அவதானிக் கிறான். துறைமுகத்தில் அப்பால் தொலைவில் வந்த சிறிய பாய் கப்பலைக் கண்டதும் கோப்பையில் எஞ்சி யிருந்த தேனீரை மடமடவென்று குடித்து விட்டு அவசர அவசரமாக வெளியே வந்து கப்பலை அவதானிக்கிறான்.
தனுஷ்கோடித் துறைமுகத்துக்குப் பொறுப்பான வெள்ளை அதிகாரியின் கப்பல் வேகமாக வருகிறது. அதில் வந்து இறங்கிய இருபதுக்கும் மேற்பட்ட வெள்ளை யர்கள் வந்து இறங்கிய அதே வேகத்தில் அங்கு நின்ற தொழிலாளர்களை பிரம்புகளால் தாக்கத் தொடங்கு கின்றனர்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த தொழிலாளர்கள் தத்தமது வேலைகளை கைவிட்டு விட்டு கூக்குரல் இட்டபடி தெருவுக்கு ஓடி வருகின்றனர்.
"என்ன நடந்தது.ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்
29
கள்
ஆடு மாடுகளை மேய்ப்பது போல பிரம்புடன் தொழிலாளர்களைத் துரத்தியடித்து அவர்களை நெருங்கி வெள்ளைக்கார ரேவுத்துரை ஆத்திரத்துடன் கேட் கிறான்.
"ஒ.துரையா எங்கட கப்பல் வந்து ஒரு கிழமை யாகிறது. ஏன் இன்னும் இறக்கேல்லை.
“வந்த ஒழுங்கில்தான் இங்க இறக்கிறது.செட்டி மாற்றை கப்பல் தொகையா வந்ததாலை இண்டைக்குத் தான் இறக்க முடியுது."

127
"எங்களோடையா ஒழுங்கு பேசிறாய் நீ”
ரேவுத்துரை மீதும் பிரம்பை வீசுகிறான். அந்த அதிகாரியை அவனும் ஆத்திரம் கொண்டு தாக்குவதற்கு முனைய.மற்றவர்கள் இருவரையும் பிடித்து விடுகின்ற னர்.
கிட்டங்கிக்குக் சென்று விட்டு அப்பொழுதுதான் மாட்டு வண்டியில் வந்திறங்கிய முக்கந்தர் முருகேசர் தெருவில் கூடி நின்ற தொழிலாளர்களிடம் நடந்ததை அறிகிறார். துறைமுக வேலையில் கடுமையாக நின்றா லும் தொழிலாளருடன் அன்புடன் பழகும் அவருக்கு அவர் களிடம் நல்ல மதிப்பு இருந்தது. ஏதுமறியாத அவர்கள் தாக்கப்பட்டதை அறிந்ததும் அவர் ஆத்திரமடைகிறார்.
"எட கடல் தாண்டி வந்து சண்டித்தனம் விட கையைக் கட்டிக் கொண்டா நிக்கிறியள் வாங்கோடா.. நாங்கள் இவ்வளவு பேர் நிக்க என்னடா செய்வாங்கள் அவங்கள்’
தோளில் இருந்த சால்வையை எடுத்து வேகமாக உதறி மீண்டும் போட்டபடி உரத்துக் கத்தி விட்டு துறை முகத்தை நோக்கி நடக்கிறார் முக்கந்தர் முருகேசர்,
நடுத்தர வயதானாலும் திரண்டு பரந்த மார்பகத் தோடு கூடிய வாட்ட சாட்டமான கறுத்த உடல் மேவி இழுத்து தோள்வரை தொங்கும் கறுத்த தலைமுடி, நெற்றியில் இட்ட சந்தனப் பொட்டுடன், அரையில் இறுகக் கட்டிய நாலு முழ வேட்டியும், தோளில் இட்ட சால்வையும், கடற்காற்றில் படபடத்துப் பறக்க ஆவேசத் துடன் அவர் வேகமாக முன் செல்கிறார். தமது பலத்தை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் கூட்டம் ஆர் ப் பரித்து முன்னேறுகிறது. தொலைவில் வரும்பொழுதே அவர்களது வருகை அந்த வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்க "எல்லாரும் இங்கை வர வேண்டாம், நீ மட்டும் இங்கே வா"

Page 70
28
அந்த வெள்ளை அதிகாரி உரத்துக் கத்துகிறான், "சரி எல்லாரும் நில்லுங்கோ, நான் கதைச்சுக் கொண்டு வாறன்." அந்தக் கூட்டம் அவர்களது அசைவு. களை அவதானித்தபடி நிற்க முக்கந்தர் முருகேசர் மட்டும் செல்லுகிறார்.
பிரம்பை கைக்குள் வைத்தபடி தனது சகாக்களுடன் மது அருந்திக் கொண்டு நின்ற அந்த அதிகாரி கிளாசை மண்ணில் வீசி விட்டு முருகேசரை எதிர்கொள்கிறான்.
"நீதானா எல்லாத்தையும் ஒழுங்குபடுத்துகிறது. எங்கட கப்பல் வந்தது கண்ணுக்குத் தெரியேலையோ"
"ஒ நாங்கள் வந்த வந்த ஒளுங்கிலைதான் பறிப்பம், அதுக்கு இப்படியா எல்லாரையும் அடிக்கிறது.”
"ஒ நியாயமா கேட்கிறாய்" கையிடுக்கில் இருந்த பிரம்பை மறு கையால் எடுத்து முக்கநதர் முருகேசரை அடிக்க முயல்கிறான் அந்த அதிகாரி. மறுகணம் மின்னல் வேகத்தில் அந்த அதிகாரி யின் பிடரியைப் பிடித்து பிரம்பையும் தனது கைக்கு மாற்றுகிறார் முருகேசர். இதனால் ஆத்திரமடைந்த வெள்ளையர்கள் முருகேசரைத் தாக்க முனைகின்றனர். இதனை அவதானித்த தொழிலாளர்கள் கூக்குரலிட்டபடி பாய்ந்தோடி வருகின்றனர். நிலைமையை உணர்ந்து கொண்ட வெள்ளையர்கள் பணிந்து போவது போல பா சாங்கு செய்து கொண்டு சமாதானமடைந்தவர்கள் போல கப்பலில் ஏறுகின்றனர்.
"இந்த அவமானத்திற்கு இரண்டொரு நாளைக்க பழி வாங்காமல் விட மாட்டோம்”
கப்பலில் ஏறும்பொழுது ஆத்திரத்தில் பற்களைக் கடித்தாடி ரேவுத்துரையிடம் கூறிச் செல்கிறான் அந்த அதிகாரி. தன்னைத் தாக்கிய அதிகாரி மீது வெறுப்புக் கொண்ட ரேவுத்துரைக்கு அங்கு நடந்த சம்பவங்கள்

星29
ஆறுதலைத் தந்தது. மீண்டும் ஒரு தாக்குதல் நடக்க லாம் என்ற அச்சம் அவனை ஆட்கொண்டது. யாழ்ப்பாணக் கவனரிடம் முறையிட்டாலும் எந்த நேரமும் தாக்குதல் நடக்கும் என்பது தெரியாததால் அந்த இடத்தையே பலப்படுத்திக் கொள்வதுதாள் சரியென ரேவுத்துரை நினைத்தான். அங்கு நின்ற முருகேசரிடம் நின்லமையை விளக்கி கூறுகிறான்.
"துவக்கோட வந்தாலும் தரையிறங்க விட மாட்டோம்” முக்கந்தர் முருகேசன் உறுதியுடன் கூறு கிறார். மறுநாள் தொழிலாளர்கள் அனைவரையும் கூட்டி முக்கந்தர் நிலமையை விளங்க வைக்கிறார்.
"எல்லோரும் உங்கட வீடுகளில் இருக்கிற கொடுவா கத்திகளை நல்லாத் தீட்டுங்கோ.மற்றவை ஆமணக்கத் தடியை வெட்டிப் பிரம்புகளைப் பாவியுங்கோ.கடற்கரை யில்ே கைக்களவான கல்லுகளை கும்பிகளாக குவித்து வையுங்கோ.நேற்று நின்ட மாதிரி எல்லாரும் ஒற்றுமை யாய் நிண்டால் கரையில் ஒருத்தனும் கால் வைக் கேலாது. முக்கந்தரின் பேச்சு இளைஞர்களை மட்டுமல்ல வய்ோதிகர்களையும் உற்சாகப்படுத்துகிறது. மறுநாள் துறைமுகத்தில் அவர்கள் வேலை செய்யும் பொழுதே அவரவர் உடனடியாக எடுக்கக் கூடிய இடங்களில் அறுபதுக்கு மேற்பட்ட கத்திகள் நூற்றுக்கு மேற்பட்ட ஆழணக்கந்தடிகள் பொல்லுகள், வேறு ஆயுதங்கள், கற்குவியல்கள் எல்லாம் தயாராக இருக்கின்றன்
மூன்று நாட்களின் பின் ஒரு காலை நேரம் பாய்க் கப்பல் ஒன்று கடலில் தெரிகிறது. கப்பலிலும் வள்ளங் களிலிருந்தவர்களும் அவசர அவசரமாக கரைக்கு வந்து சேருகின்றனர்.
அப்பெரிய பாய்க்கப்பல் பாய்களை இறக்கி நங்கூர மிட்டு நிற்க அதிலிருந்து இறக்கப்பட்ட சிறுசிறு

Page 71
130
வள்ளங்களில் துறைமுகத்தை நோக்கி அவர்கள் முன்னேறுகின்றனர்.
"துவக்கோட வருகினம் போலை. இவ்வளத தூரத் திற்கு உவையின்ர சன்னங்கள் வராது. வள்ளங்கள்ை கிட்ட விடாமல் கல்லுகளாலை எறியுங்கோ, துறைமுகப் பரப்பாலத்தில் நின்று முருகேசர் உரக்கக் கத்துகிறார். கடற்கரை எங்கும் அது எதிரொலிக்கிறது.
வள்ளங்களில் இருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க் கப்படுகின்றன. கடற்கரை தென்னை மரங்களுக்கிடையில் இருந்து கற்கள் தோனிகளை நோக்கி சரமாரியாக வீழ்கின்றன. பாய்ந்தோடும் முயல்களையே கற்களால் எறித்து வீழ்த்தும் கைகள் இயந்திரம் போல் இயங்கு கின்றன. உற்சாகமடைந்த ரேவுத்துரை தனது பாது காப்புக்காக மறைத் து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவனது அக்கட்டிடத்துடன் மறைந்து நின்றபடி வள்ளங்களை நோக்கிச் சுடுகிறான்,
வேகமாக சென்று வீழ்ந்த பல கற்கள் அவர்களது தலை, உடல், முகங்களைப் பதம் பார்க்க இரத்தக் காயங்களுடன் அவர்கள் பின்வாங்குகின்றனர். வள்ளங் கள் கப்பலை நோக்கித் திருப்புவதைக் கண்ட தொழிலா ளர்கள், கத்திகள் தடிகள், பெல்லுகளை உயர்த்தியபடி உற்சாகத்தால் ஆர்ப்பரிக்கின்றனர். அவர்களது கையி லுள்ள கத்திகளின் பளபளப்பு கப்பலில் உள்ளவர்களுக்கே தெரிந்திருக்க வேண்டும். கப்பல் மெதுவாக கடலில் நகர்கின்றன.
கதையை முடித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக அந்தக் கூட்டத்தை அவதானிக்கிறார் டாக்டர். இதுவரை " கற்பனையில் ஆழ்ந்திருந்த அவர்களிடம் ஓர் 山函g町f劳明 மலர் வதைக்கண்டு அவர் மகிழ்கிறார். ;ண்முகத்திடம் அது அதிகமாகவே தென்படுகிறது.

131
"இந்தக் கதை வேலை நிறுத்தம் செய்கிற உங்களுக்கு ஐக்கியத்தின் அவசியத்தையும் உறுதியையும் இன்னும் பல விஷையங்களையும் உணர்த்தும் என்ற நம்பிக்கையோடு எனது பேச்சை முடிக்கிறேன்."
டாக்டர் கதிரையில் அமர்கின்றார். இதுவரை கதை கேட்கும் உற்சாகத்தினால் தங்களை மறந்திருத்த தொழிலாளர் கூட்டம் முடிந்து எழுந்ததும் தமது அபிப்பிராயங்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
“இனி நாங்கள் சும்மா இருக்கேலாது”
"கருங்காலி கூட்டத்திற்கு நல்ல போடு போட வேணும்.”
"சீ பிரதான விஷையத்திலை கைவைக்காமை சில்லறை விஷையங்களிலை மினக் கெடக் கூடாது”
அதென்ன பிரதான விஷையம்”
2 "கரண் இல்லாட்டி இவை பக்ற்றி ஓடு தெண்டு சோக்காட்டு வினமே"
சண்முகத்தின் காதில் முத்துலிங்கம் கூறிய வார்த்தை கள் விழுகின்றன. அவன் மின்சாரப் பகுதியில் வேலை செய்பவன். அவனால் இது முடியும் என்ற நம்பிக்கை யுடன் அவனை நோக்கி வந்த சண்முகம் அவனது தோள்களைத் தட்டிவிடுகிறான்.
"சரியான யோசனை தான் எல்லோரும் ܐܹ.ܝܗܿ முடிவெடுப்பம்"
சிறிது நேரத்தில் முத்துலிங்கம், சண்முகம் சயிக்கிளில் ஏறி விரைகின்றனர்.
காங்கேசன்துறை மின்சார நிலையத்தில் இருந்து நிலத்துக்கூடாக பாதுகாப்பாக செல்லும் மின்சாரம் எந்த இடத்தில் ஓடுகிறது, பொலீசாரின் கண்களில்

Page 72
132
படாமல் எப்படி அடைப்பது என்பது போன்ற பிரச்சினை கள் அவர்கள் முன் எழுகிறது.
"நில்லும் முத்துலிங்கம்" சண்முகத்தின் பள்ளிப் பருவ நண்பன் குமரேசுவின் வீட்டு ஞாபகம் வர சயிக்கிளில் இருந்து இறங்குகிறான் சண்முகம். தெருப்படலையைத் திறந்து கொண்டு இருவரும் உள் நுழைகின்றனர்.
"வாங்கோ. வாங்கோ. எப்படி வேலை நிறுத்தம் போகுது”
கதிரையில் சாய்ந்தபடி ஏதோ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த குமரேசர் அவர்களை வரவேற்கிறார்.
"ஏன் தோட்டத்திற்கு போகேல்லையே. இவர் இருக்கட்டும் இஞ்சை ஒருக்கால் வாங்கோ”
முத்துலிங்கத்தை கதிரையில் அமர்த்திவிட்டு குமரேசரை அழைத்துக்கொண்டு முற்றத்திற்கு செல் கிறான் சண்முகம். இருவரும் தாழ்ந்த குரலில் உரை யாடிவிட்டு வந்து கதிரையில் அமர்கின்றனர்.
குமரேசரின் மனைவி கொடுத்த தேனினரயும் அருந்தி விட்டு இருவரும் புறப்படுகின்றனர். ஐம்பது ரூபா நோட்டொன்றை அவன் மறுத்த போதும் சண்முகத்தின் சட்டைப்பைக்குள் திணித்து விடுகிறார் குமரேசர்.
"அப்ப நாளைக்கு தென்னம்பிள்ளைக்குக் கிடங்கு வெட்டுவம்”
"ஓம் நீங்களும் வேலை இல்லாம இருக்கிறியள் வெட்டுங்கோவன்” இருவரும் வேண்டுமென்றே உரத்துக் கூறுகின்றனர்.
மறு நாட்கால்ை குமரேசரின் வீட்டு முற்றத்தில் தெருக்கரை வேலியுவன் வெட்டப்பட்ட தென்னம் பிள்ளைக் கிடங்குவேலியை ஊடறுத்து தெருக்களை

1.33
நோக்கி வேகமாக நீள்கின்றது. சீமெந்துப் பிளேற்றினால் மூடி பாதுகாக்கப்பட்ட தடித்த மின் கம்பிகள் அவர்களது கண்களுக்குத் தெரிகின்றது. சண்முகம் மிகுந்த உற்சாகத் துடன் கோடாலியைக் கையில் எடுக்கின்றான் .
"டாக்டர் சொன்ன கதையிலை அறுவது கத்தியளை எடுத்தாங்கள். நாங்கள் ஒரு கோடாலியை யாதல் erClaub."
சண்முகம் கிடங்கு முனையில் நின்றபடி கொத்து வதற்குத் தயாராகின்றான்.
*அண்ணை கோடாலியைத் தந்திட்டு தெருவை ஒருக்கா கவனியுங்கோ இது கொஞ்சம் சிக்கலான வேலை"
அவசரமாக சண்முகத்தின் கையிலிருந்த கோடாரி யைப் பறித்தெடுத்த முத்துலிங்கம் தெருவை நோக்கிச் செல்லும் சண்முகத்தின் குரலுக்காகக் காத்திருக்கிறான். grf{ ** என்ற சண்முகத்தின் குரலோடு அந்தக்ی که கூசிய கோடாரியை தன்பலம் முழுவதையும் ஒன்று கூட்டி ஓங்கி வீசுகிறான்.
"படார்.” ஒன்ற ஓசையுடன் ஒரு பெரும் மின்னற் பொறி பளிச்சிட்டு மறைகிறது.
ஒடிச் சென்ற சண்முகம் கிடங்குக்கு வெளியே தூக்கி எறியப்பட்டு விழுந்து கிடந்த முத்துலிங்கத்தைத் துரக்கு
கிறான். வாடகைக் காரை பிடித்துவர குமரேசர் சைக்கிளில் ஏறி வேகமாக ஓடுகிறார்.
*அண்ணை எனக்கு ஒன்றுமில்லை கிடங்கைக்
கவனமா மூடிப் போட்டு புகைக் குழாயை பாருங்கோ"
முகம் கருகி ஒரு கண்ணை மூடிய நிலையில்
உடலெங்கும் பட்ட எரிகாயங்களின் வேதனையோடும்
அனுங்கியபடி கூறுகின்றான் அவன். அவனைத் தூக்கி

Page 73
134
தனது நெஞ்சோடு சாத்தியபடி தன்மடியில் கிடத்திய சண்முகம் மிகுந்த ஆவலுடன் குமரேசரின் பின்புற வளவுக் கூடாக தொலைவில் தெரியும் அந்த சிமெந்துத் தொழிற்சாலையின் உயர்ந்த புகை போக்கியை அவதா னிக்கிறான்.
மெதுவாகக் காற்றிலாடிப் பறந்த புகையும் மெல்ல ஓய்ந்து அடங்க உயிரற்று விறைத்துப் போய் நிமிர்ந்து நிற்கிறது அந்தப் புகை போக்கி.
*முத்து எங்களுக்கு இனி வெற்றி தான்றா” சண்முகத்தின் முகத்தில் பூர்த்த அந்த நம்பிக்கையின் மலர்ச்சி, அந்த வேதனையிலும் முத்துலிங்கத்தின் முகத்திலும் படர்கின்றது. கலங்கிய கண்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்து பற்கள் தெரிய புன்னகை புரிகின்றனர்.
率 率 米


Page 74