கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் பழங்குடிகள்

Page 1


Page 2

இலங்கையில் பழங்குடிகள்
வணக்குறவர் வாழ்வியல் ஆய்வு
GLJrrëfifi. Ji 35m. ëja5LJr sugji
சமூகவிஞ்ஞானத்துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவில் 2OOO

Page 3
Title of BOOk
Author
Address
Edition
Copyright Printer
Price
நூல் ஆசிரியர் முகவரி
பதிப்பு பதிப்புரிமை
அச்சகம்
The Gypsies of Srilanka
Prof K. Kugabalan B. A. Hons(Cey), M.A.PhD(jaf). Post M.A. Diploma in Population Studies (Madr). Senior Academic in Geography.
Department of Social Sciences. SouthEastern University of Sri Lanka, Oluvil.
First Edition
To the Author
Paranan ASSociates (Pvt) Ltd., 403 1/1, Galle Road, Colombo - 06.
125/=
இலங்கையில் பழங்குடிகள் பேராசிரியர்.கா. குகபாலன்
சமூகவிஞ்ஞானத்துறை. இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழகம். ஒலுவில் (கி.மா).
முதற்பதிப்பு
ஆசிரியருக்கு
பரணன் அசோசியேட்ஸ் பிறைவேட் லிமிடெட் 403 1/1, காலி வீதி. கொழும்பு-06.

ශ්‍රී ලංකා අග්නිදිග විශේව වි දනයාලය தென் கிழக்குப் பல்கலைக்கழகம் பூரீ லங்கா South Eastern University of Sri Lanka
அணிந்துரை
ஆதிவாசிகள், பழங்குடிகள் எனப்படுவோர் காலத்தோடு ஒத் தோடாதவர்களாக உலகின் வரலாற்றுப் போக்கினின்றும் விடுபட்ட வர்களாக வாழும் விந்தை மனிதர்கள். இத்தகையோர் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, யாவா, சுமாத்திரா, போர்னியோ ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் போலவே இலங்கையிலும் சிறிய எண் ணிக்கையானோர் காணப்படுகின்றனர்.
உலகின் வளர்ச்சிப் போக்கோடு ஒட்டிப்போகும் சாதாரண மக்கள் கூட்டத்திற்கும் இவர்களுக்குமிடையிலான வேறுபாடு எவர்க்கும் வியப் பினை உண்டாக்க வல்லதே. அந்த வியப்பு பலருக்கும் அவர்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது.
இத்தகைய ஆய்வுகளின் நோக்கம் பல்வேறுபட்டதாகலாம். பழங்குடிகளின் விநோதமான நடையுடை பாவனைகளைப் புகைப்படங்க ளோடு பிரசுரித்துப்பரபரப்பேற்படுத்தும் வியாபார உத்தி முதற் கொண்டு காலதேச வர்த்தமானங்களால் நம்மிலிருந்து விலகி, இன்றைய நிலை யில் உலகம் கண்டிருக்கும் உண்னத வளர்ச்சிகள் எவற்றையும் கனவி லும் காணாதவர்களாய்த் தனிமைப்பட்டும் அதே சமயம் உலகின் போலி த்தனங்களுக்கு ஆளர்காமல் தூய்மையோடும் விளங்குபவர்களாய் உள்ள அப்பழங்குடிகளிடமிருந்து நாம் எடுக்க வேண்டியனவும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியனவுமாய் நிறையவே உள்ளன என்ற உயரிய எண்ணம் வரையில் அந்நோக்கம் பல்வேறு தரத்தின ஆகலாம்.
வியாபார நோக்கிலானவை பெரும்பாலும் நாளிதழ்களிலும் சஞ்சி

Page 4
Mகைகளிலுமாய்த் தோற்றங்காட்டி மறைந்து விடுகின்றன. உயரிய நோக் கிலானவை பல்கலைக்கழகம் முதலான நிறுவன மட்டங்களில் நிகழ்த் தப்பட்டு நூல் வடிவில் நிலைபேறடைகின்றன. விதிவிலக்குகளும் இல் லாமலில்லை.
இலங்கையில் வேடர்கள் றொடியா, கின்னரயா போன்ற ஆதிவாசிகளும் குறவர்கள் என்ற பழங்குடியினரும் உள்ளனர். இவர்க ளுள் வேடர்கள் பலரதும் கவனத்துக்கு உட்பட்டவர்களாய் அறிஞர்களின் ஆய்வுக்கும் அரசின் அநுசரணைக்கும் உரியவர்களாய் அங்கீகாரம் பெற் றிருக்கிறார்கள். குறவர்கள் நிலை அவ்வாறாக இல்லை. அதிலும் இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தில் வாழும் வனக் குறவர்கள் பொதுவான காரணிகளால் மாத்திரமன்றி அப்பிரதேசத்து ஏனைய மக்களைப் போலவே இனமுரண்பாட்டு யுத்தங்களாலும் தமது இயல்பு நிலை பாதிக்கப்பட்டவர்களாய் உள்ளனர். அவர்களை அவர்களின் இயல்போடே இருக்கவிடுவதற்கோ அன்றேல் அவர்களின் வாழ்க்கை அமைப்பை மாற்றியமைப்பதற்கோ முயலும் எந்த ஒரு முயற்சிக்கும் முன் முயற்சியாக அவர்களது வாழ்வியல் விரிவாக ஆராயப்படுதலும் பதிவு செய்யப்படுதலும் அத்தியாவசியமானவையாகும்.
இலங்கையின் ஆதிக்குடிகள் பற்றிய ஆய்வில் ஆரம்பத்தில் ஈடுபட்டவர்கள் மேலைநாட்டவர்களே. கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தைச் (&#TÍTÈ55 C.G. Seligmann. B.Z. Seligmann Saf(&uuTẤT " @CELJEITÜb நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் இலங்கையில் வேடர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு The Veddas என்ற நூலை வெளியிட்டர்கள். அது நடந்து முடிந்து எண்பது ஆண்டுகள் கடந்த பின்பே இலங்கையர்கள் அவ்வாறான ஆய்வுகளில் அக்கறை காட்டத் தொடங்கினர். தற்போதைய நிலையில் இலங்கையில் ஆதிக்குடிகள் சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகள் வெவ்வேறு கோணங்களில் வெளிவநதுள்ளன. எனினும் சிறு எண்ணி க்கையினரான குறவர் பற்றி ஒரு சில ஆய்வுகளே மிகச் சுருங்கிய வடிவில் வெளிவந்துள்ளன. ஆதிக்குடிகளான வேடர்களுக்கு கொடுக் கப்பட்ட முக்கியத்துவம் குறவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அத்துடன் இலங்கையில் வந்த இத்தகைய ஆய்வு எதுவும் தமிழில் வந்ததாகவும் இல்லை. அந்த வகையில் எனது அன்புக்குரிய மாணவனாகிய பேராசிரியர் கா.குகபாலன் அவர்களினால் எழுதப்பட்ட இந்நூல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. அத்துடன்

சமூகவியல், மானிடவியல், மொழியியல், அடிப்படைகளில் எதிர்காலத்தில் மேலும் ஆளமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்வதற்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் துணிந்து கூறலாம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறைப் பேராசிரியராக விளங்கும் கலாநிதி. கா. குகபாலன் அவர்களின் சேவையை ஒரு வருட காலம் எங்கள் பல்கலைக்கழகமும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. அக்காலகட்டத்தில் அவர் தம் உத்தியோகக் கடமைக்கு அப்பாலும் பல பணிகளை எங்கள் பல்கலைக்கழகத்தின் நலன் கருதி ஆற்றினார். அதற்கும் அப்பால் அவர் காட்டிய சமூக அக்கறையின் வெளிப்பாடே இந்நூல்.
தாம் சென்ற இடமெல்லாம் சூழவிருக்கும் சமுதாயத்தைக் கூர்ந்து அவதானிக்கும் போக்கு சமுதாய உணர்வு மிக்க ஆய்வாளரின் சிறப்பி யல்பாகும். அத்தகைய இயல்பு வாயக்கப்பெற்ற கல்வியாளனாகிய பேராசிரியர் கல்வித்துறை சார்ந்த இளஞ்சந்ததிக்கு சிறந்த வழிகாட்டி யாகிறார்.
அவர் எங்கள் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிய பொன்னான காலத்தை என்றும் நினைவுபடுத்தவல்லதாய் இந்நூல் அமையப் போவதால் நான் பன்மடங்கு உளப்பூரிப்படைகிறேன். அவர்பணி தொடர் ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.
துணைவேந்தர் அலுவலகம். எம்.எல்.ஏ. காதர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம். துணைவேந்தர். பல்கலைக்கழகப் பூங்கா
ஒலுவில்.

Page 5

முகவுரை
மானிடவியலானது மனிதனைப்பற்றிய அறிவியல் எனலாம். இவ்வியல் மனிதனை உயிரியல் நிலையிலும், சமூக நிலையிலும், பண்பாட்டு நிலையிலும், வரலாற்று நிலையிலும் அறிய முயல்கின்றது. இக்கல்விப் பரப்பானது இடம்காலம் அனைத்தையும் கடந்து நிற்கின்றது, குறுகிய நோக்கத்திற்குட்படாது அனைத்து இடங்களைச் சேர்ந்த மக்க ளையும், அனைத்துக் காலத்தைச் சேர்ந்த மக்களையும் பற்றி ஆராய் கின்றது. அவற்றில் ஒன்றாக வரலாற்றுக் காலந்தொட்டு பழமையான வாழ்வியற் பண்புகளைக் கொண்ட தொகுதியினரான பழங்குடிகள் பற்றியும் ஆராய்கின்றது. ஒரு மொழியைப் பேசுகின்ற பலருள்ளும் ஒன்றியிருக்கின்ற பழைய பழக்கவழக்கங்களைப் பாதுகாத்து வருகின்ற ஓர் எளிய சமூகத்தொகுப்பே பழங்குடிகள் என இவர்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் கோ. சீனிவாசவர்மா என்பவர் தெரிவிக்கின்றார்.
இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடிகள் 65 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஆறு இலட்சம் மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். கோத்தர், தோடர், இருளர், புலையர், கசபர், குறும்பர், பணியர், காட்டுநாயக்கர், காடர், காணிக்காரர், நரிக் குறவர் போன்றோர்களே பிரதானமானவர்கள். இவர்களில் கணிச மானோர் மலையும் மலைசார்ந்த பிரதேசங்களில் வாழ்ந்துவரினும் அண்மைக்கால ங்களில் நகரங்கள், வணக்கத்தலங்கள் சார்ந்த பகுதிகளில் நாடோடிக ளாக வாழ்கின்றனர். இந்நிலையில் இலங்கையில் பழங்குடி மக்களின் பரம்பலானது அரிதாகவே காணப்படினும் பழங்குடிகளுக்குரிய சிறப்புத் g56T60LDUL6, 36, Lquj (Tribal Traits) (86) LT (Vedda), (0.3TLQUJIT (Rodiya), கின்னரயா (Kinnaraya) ஆகியோரும், நாடோடிப் பழங்குடி களான (Nomadic Tribe) (gp36) is எனத் தமிழராலும் அஹிகுண்டகாய (Ahikuntakaya) எனச் சிங்களவர்களாலும் அழைக்கப்படுபவர்களும் காணப்படுகின்றனர். இவர்க ளின் முன்னவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகளாக இருக்க குறவர் இனத்தவர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாகவிருக்கின்றனர் என்பது அவர்களின் வாழ்வியல் பண்புகளுடாக அறிய முடிகின்றது. இக்குறவர் சமூகத்தில் சாத்திரஞ் சொல்லும் குறவர், வனக்குறவர் என

Page 6
இருவகையினர் காணப்படுகின்ற போதிலும் சாத்திரஞ்சொல்லும் குறவர் எண்ணிக்கையில் மிகச்சிறியோராகும்.
வனக்குறவரின் எண்ணிக்கை 5500 என மதிப்பிடக்கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் தேசியக்கணிப்பீடுகளில் “ஏனையோர்” என்ற பிரிவுக்குள்ளேயே சேர்க்கப்படுவதாலேயாகும். இவர்கள் வடமத்திய மாகா ணத்திலும், கிழக்கு மகாணத்திலும் தொட்டம் தொட்டமாக வாழ்ந்து வரினும் அனுராதபுரம், பொலநறுவை, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஹிங்குரான போன்ற இடங்களில் கணிசமாக வாழ்கின்றனர். எனினும் அண்மைக்காலங்களில் நிகழ்ந்துவரும் இன ரீதியிலான யுத்த்தின் விளைவாக கிழக்குமாகாணத்தில் காடுகள் சார்ந்து வாழ்வதைத் தவிர்த்து ஏனைய சமூகங்கள் வாழுமிடங்களைச் சார்ந்து குடியிருப்புக்களை அமைத்து வாழ்கின்றனர். தற்போது திருக்கோவிலில் உள்ள கள்ளிய ந்தீவுத்திடலில் நெருக்கமாகவுள்ளனர் எனலாம்.
இலங்கையில் பூர்வீகக் குடிகளான வேடர், கின்னரயா, றொடியா போன்றவர்கள் பற்றி பல்வேறு அறிஞர்கள் ஆய்வுகள் மேற் கொண்டு ள்ளனர். ஆனால் குறவர்கள் பற்றிய ஆய்வு பெருமளவிற்கு மேற்கொள்ள ப்படவில்லை. எஸ்.ஓ.வி. சோமநாதர் போன்றோர் குறவரின் வாழ்வியலைப் பற்றிய குறிப்புக்களைத் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது வாக இத்தகைய ஆய்வுகள் மானிடவியல், சமூகவியல், மொழியியல் சார்ந்தவர்களிடையே பிரபல்யம் பெற்றுள்ளது. இருந்தபோதிலும் இந்தியா வில் புவியியலினுாடான குடித்தொகையியல் மூலமும் பலர் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தவரிசையில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு என்னையும் இணைத்துள்ளதன் விளை வே இவ்வாய்வு நூலாகும்.
1999ஆம் ஆண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பினை ஏற்று வருகைப் பேராசிரியராக ஓராண்டு காலம் கடமையா ற்றச் சந்தர்ப்பம் கிடைத்தது. மேற்குறித்த பல்கலைக்கழகம் சார்ந்த பகுதிகளிலேயே வனக்குறவரின் பரம்பலும் காணப்பட்டிருந்தது. எனவே இவர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற் பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் புவியியற்றுறையிலும், சமூக வியற்றுறையிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் புவியியலினூடாக குடித்தொகைக் கல்வியில் பெற்ற அனுபவத்தினடிப்படையிலும் வனக் குறவர் பற்றி ஆராய்வதற்கு ஆர்வம் கொண்டதன் விளைவே இந்நூலு

க்குரிய பிறிதொரு காரணமாகும்.
வணக்குறவர் பற்றி அறியவிளைந்த போது அவர்களின் மூதா தையர் யாவர் என்பதை அறியவேண்டியது அவசியமாகியது. அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ப.புஷ்பரத்தினம் அவர்களின் உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லியற் பேராசிரியர் ஏ. சுப்பராயலு, பாண்டிச்சேரி பல்கலைக்கழக மொழியியற் பேராசிரியர் விஜயவேணுகோபால் ஆகியோர் என்னால் வனக்குறவரிடமிருந்து பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுப் பேழையினை நுணுக்கமாக ஆராய்ந்து குறவர் கள் இலங்கைக்கு வந்த காலத்தையும் அவர்கள் பேசும் மொழியினையும் மொழிக்கலப்பினைப் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறியதுடன் இவ்வாய் வின் அவசியத்தையும் எடுத்துக்கூறியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள் பல உரித்தாகுக.
இவ்வாய்வினை மேற்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தபோது எனக்கு உற்சாகமூட்டியும், பல்வேறு உதவிகளைப் புரிந்தவரும் இந் நூலுக்கு அணிந்துரை வழங்கியவரும் எனது ஆசானுமாகிய தென் கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசான் ஜனாப். எம்.எல். ஏ.காதர் அவர்களுக்கு எனது நன்றிகள் பற்பல. அத்துடன் ஆய்வினை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் உதவிய கலைப்பீடாதிபதி கலாநிதி கே.எச்.எம். காலிடின் அவர்களுக்கும் சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் ஜனாப் எம.ஐ.எம். கலில் அவர்களுக்கும், தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு.கே. இரகுபரன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாய்வினை மேற்கொள்வதற்கு கள ஆய்வுப் பணிகளை செவ்வனே செய்து உதவிய தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமை த்துவ பீட விரிவுரையாளர் திரு.எஸ். குணபாலன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது நன்றிகள் பல.
வணக்குறவர் வாழ்வியலைப் பற்றி ஆராய முற்பட்டவிடத்து களத்து மேட்டினரும், அயலவர்களும் பலவிதமான உதவிகளைச் செய்துள்ளனர். அவ்ர்களில் முக்கியமானவர்களைக் குறிப்பிடாமல் விட முடியாது. களத்துமேட்டில் வாழ்ந்து வருபவர்களான வனக்குறவர்களின் குழுத்தலைவர் கறுவல் சில்வா(சீலன்), வெங்கட்டன் வேலு, மேரிமரிய திரேசா, அனுமுத்துமசானா, ரங்கன் ரட்டினம், தொண்டர் ஆசிரியை

Page 7
வி. சாந்தி, பாலர் பாடசாலை ஆசிரியைகளான ஆர்.தேவகி, றோஸ்மேரி, இளைஞர்களான சின்னப்பு (கண்ணன்), டேவிற், பிரான்சிஸ் ஆகியோர் களுக்கும் எனது நன்றிகள்.
அயலவர்களில் கிராம அதிகாரி திரு.ம.பரநிருபசிங்கம்,பாடசாலை அதிபர் ஆர். நவநீதராசா, சவேரியார் ஆலயப் பங்குத் தந்தை அருட்திரு. றோகான் பேனாட் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த க. நவரத்தினம் போன்றோருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
இந்நூலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் பிரதிகளை வாசித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியற்றுறை பேராசிரியர் நா. ஞானகுமாரன் அவர் களுக்கும் எனது நன்றிகள்.
இந்நூலை அழகுற அச்சிட்டுத்தந்த பரனன் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் திரு.கே. பரணன் அவர்களுக் கும் நன்றிகள் உரித்தாகுக.
~ பேராசிரியர் கா. குகபாலன் ~

உள்ளே.
பக்கம்
அணிந்துரை
முகவுரை
1- அறிமுகம் 16
2-பழங்குடிமக்கள் வாழ்வு 17-23
3-இலங்கையில் ஆதிக்குடிகள் 24-35
4.வனக்குறவரின் பரம்பல் 36-39
5. வாழ்வியலும் சடங்குமுறைகளும் 40-62
6u hrybního IDT bgBrí456 63-87
7. பொருளாதார சமூக மாற்றங்களுக்கான அவசியம் 88-95
falafon TIL
வணக்குறவர் மொழி 96-100
உசாத்துணை நூல்கள் 101 - 103

Page 8

அறிமுகம்
எந்தவொரு குடித்தொகையிலும் குடிப்புள்ளியியல் பண்புகள் (Demographic Situation) அவர்கள் தம் சமூக, பொருளாதார, காலசார, சூழலியல் மற்றும் உயிரியற் காரணிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றன. உயிரியற் காரணிகளான உள்ளாந்த கருவளவாக்கநிலை, ஆரோக்கியம் குன்றிய நிலை, நீண்ட ஆயுள் நிலை போன்றன சமூகவியற் காரணிகளான விவாகம், மீள் இனப்பெருக்கம் செய்தலினூடாக அவர்களது முக்கியத்துவமும் தரமும், நோயுற்ற நிலையூடாக இறப்புக்கள் என்பன குடித்தொகை வேறுபாட்டை ஏற்படுத்தும் கூறுகளாகவிருக்கின்றன. குடித்தொகையில் ஏற்பட்டுவரும் எண்ணிக்கை (Size) மற்றும் கூட்டு(Composition) என்பன குடித்தொகை இயக்கப்பண்புகளான பிறப்பு, இறப்பு இடப்பெயர்வு என்பவற்றில் மாற்ற த்தை ஏற்படுத்தவல்லன. உலகில் வாழும் எந்த வகையான சமூக த்திலும் அவர்கள் தம் கலாசார பண்புகள் குடிப்புள்ளி யியற் செயல் முறைகளைப் பெரிதும் பாதிக்கக்கூடியவை. எனவே குடித் தொகை வளர்ச்சி, வீழ்ச்சிப் போக்குகள் அவர்கள் தம் நிலைக்கேற்ப வளங்களைப் பயன்படுத்தும் நிலை, இடம்பெயர்ந்து வாழப் பழகிக் கொள்ளல் என்பது அவர்கள் தம் சமூகத்திற்குள்ளும் சமூகங்களுக் கிடையிலுமான உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.
உலகில் கோக்கேசியர், மங்கோலியர், நீக்கிரோவர் என்ற மூவகை இனத்தொகுதிகளும் அவற்றுள்ளே பிளவுற்றுக் காணப்படும் உப இனக்குழுக்களும், அதனூடாக சமூகங்களுக்கிடையிலானதும், சமூகங் களுக்குள்ளேயானதுமான பிரிவுகள் போன்றன சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியில் வெவ்வேறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டவர்க

Page 9
ளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது வெளிப்படையான உண்மை நிலையாகும். இன்றைய உலகில் நாகரிக வாழ்க்கை முறைக்கு தம்மை ஆட்படுத்திக் கொண்ட சமூகங்களாக பெரும்பாலானோர் வாழ்ந்து வரும் நிலையில் ஏனையோர் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிக ளின் விளைவினால் நாகரிக சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்பவர் களாக - ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருவதை விருத்திபெற்ற நாடுகளிலும், வளர்முகநாடுகளிலும் காணக்கூடியதாகவிருப்பினும் வளர்முக நாடுகளில் மிகவும் பின்தங்கிய வாழ்க்கை முறையைத் தம்மகத்தே கொண்டு சில சமூகங்கள் வாழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது.
இலங்கையில் மிக நீண்டகாலமாக நாகரிக வாழ்க்கை வாழ்ந்த மக்களே வாழ்ந்து வந்துள்ளனர் என இலங்கை வரலாற்றை ஆராய்ந்த வர்களின் கருத்தாக அண்மைக்காலங்களில் வெளிவந்துள்ளது. எனினும் குடித்தொகையில் மிகச்சிறிய எண்ணிக்கையினைக் கொண்ட பழங்குடிகளும் வாழ்ந்து வருகின்றனர். குறவர் சமூகத்தைச் சேர்ந்த வர்களே அவர்களாவர். இவர்கள் தம் பொருளாதார, சமூக, பண்பாட்டு விழுமியங்களை நோக்கின் இலங்கையின் மூத்த குடிகளல்லர் என்பது மட்டும் வெளிப்படையான உண்மை நிலையாகும். அதாவது அயல் பிரதேசமான தென்னிந்தியாவில் இருந்து பாக்குநீரிணையைக் கடந்து உள்வரவினை மேற்கொண்டவர்களாவர். ஆனால் எக்காலத்தில் உள் வரவை மேற்கொண்டவர்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியதுள்ளது. ஆகவே இவர்கள் தம் உள்வரவு, வாழ்வியற் பண்புகள், வாழ்வியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் என்பவற்றைப்பற்றி ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
பழங்குடிகளான குறவர்கள் மூவகைக் குழுக்களைச் சேர்ந்த வர்களாகவுள்ளனர். வனக்குறவர், நரிக்குறவர், குறிசொல்லும் குறவர் என்பவர்களே அவர்களாவர். பொதுவாக நோக்கும்போது இம்மூவகைப் பிரிவினரும் பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கோலங்களைப் பொறு த்தவரை கணிசமானளவில் ஒத்த பண்புகளைக் கொண்டிருந்தபோதிலும் அவர்களை நுணுக்கமாக ஆய்வோமானால் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றில் ஒற்றுமையில் வேற்றுமைப் பண்புகள் காணப்படுகின்றன என்றே கருத இடமுண்டு. உதாரணமாக இலங்கையில் வாழ்ந்து வரும் குறவர் சமூகத்தில் 900 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தங்களை வனக்குறவர் என்றே கூறுகின்றனர். நரிக்குறவர்
(பேராசிரியர்காகுகபா குறவர் வாழ்வியல் ஆய்வு)
 
 

பேசும் மொழிக்கும், வணக்குறவர் பேசும் மொழிக்குமிடையில் வேறுபாடு காணப்படுகின்றது. இம்மூவைப் பிரிவினரும் தங்களை மற்றவர்களிலும் பார்க்க உயர்ந்தவர்கள் என்றே கூறி வருகின்றனர். விவாகத் தொடர்பு உட்பட எந்தத் தொடர்பும் கொள்வதில்லை என்பதை கள ஆய்வின் மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இவ்வாய்வானது வனக்குறவர் வாழ்வு சம்பந்தமாக மட்டுமே உள்ளடக்கப்படுகின்றது.
ஆய்வின் நோக்கம்
இலங்கையில் வாழ்ந்து வருகின்ற வனக்குறவர் வாழ்வு பற்றிய இவ்வாய்வானது தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் தம் பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலையினை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தாகும். காடுகளில் வாழ்ந்து - ஏனைய சமூகங்களுடன் தொடர்பு கொள் ளாது - தொடர்பு கொள்வதற்கான உந்துதல்களைக் கொண்டிராத - ஏனைய சமூகத்தவர்களால் ஒதுக்கப்பட்டவர்களாக - நாகரிக வாழ்க்கை பற்றிய சிந்தனையற்றவர்களாக வாழ்ந்துவரும் வனக்குறவர்,1960 களுக்கு முன்னர் காடுகளிலும் அதனைச் சார்ந்த வெளிகளிலும் வாழ்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஏனைய கிராம மக்கள் வாழும் பகுதிகளுக்கு அணித்தாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இக்காலங்களிலேயே இவர்கள்தம் நாடோடி வாழ்க்கையையும் அவல நிலையையும் கண்ணுற்ற கிறிஸ்தவப் பாதிரியாரான அருட்திரு. கொட்பிறீகுக் அடிகளார் அவர்களின் முயற்சியினாலும் 1960களில் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பி னராகவிருந்த திரு.எம். கனகரத்தினம் அவர்களின் முயற்சியினாலும் அவர்களுக்கு புதுவாழ்வு கிடைத்தது என்றே கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் குறவர்களின் வாழ்வாதாரப்பிரச்சனைகளையிட்டு ஏனைய சமூகத்தினரோ அல்லது அரசோ பெருமளவிற்கு அக்கறை கொண்டி ருக்கவில்லை.
குறவர் வாழ்வில் அக்கறை கொண்டிருந்தவர்கள் அவர்களை அக்கரைப்பற்று நகரத்திற்கு அண்மையில் உள்ள அளிக்கம்பையிலும், திருக்கோவிலுக்கு அண்மையிலுள்ள காஞ்சிரங்குடாவிலும் தற்காலிகமாக s60TT6), 555JLDITE (5tgu JLDf 55JLJ'L60ft.(Semi Permanent Settlement). எனினும் வனக்குறவர் பாரம்பரிய வாழ்க்கை முறையுடன் இறுக்கமாகப்
பேராசிரியர்காகுகபாலன் வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு)

Page 10
பிணைத்துக் கொண்டுள்ளமையால் காலத்துக்குக்காலம் நாடோடி வாழ்க் கையையே மேற்கொண்டு வந்துள்ளனர். இன்றுவரை இந்நிலை தொடர்ந் தாலும் குறைவடைந்து காணப்படுவதாகவே தெரியவருகின்றது.
நாட்டில் யுத்த சூழ்நிலை, இனத்துவேஷத்தின் காரணமாக இன வன்முறைகள் போன்றவற்றால் காலத்துக்குக் காலம் தமது வாழ்விடத்தை மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவந்துள்ளது. அளிக்கம்பை, காஞ்சிரங் குடாவில் வாழ்ந்த குறவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இப்பிரதேசங்களில் இராணுவ முகாம்கள், அமைக்கப்பட்டதாலேயே வெளியேறி திருக்கோவிலில் உள்ள கள்ளியந்தீவுத் திடலில் குடிசை களை அமைத்து, அரசு, அரசுசார்பற்ற நிறுவனங்களின் சிறு உதவிக ளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தவிர வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரம், கலாவேவா, தம்புத்தேகம, விஜிதபுர, பொலநறுவை போன்ற இடங்களில் காடுளைச் சார்ந்த பிரதேசங்களில் குழுமிய குடியிருப்புகளா கவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் நாடோடி வாழ்க்கையின் விளைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சிறிய எண்ணிகையினராக வாழ்கின்றனர். இவர்கள் ஏனைய சமூகங்கள் வாழும் பிரதேசங்களுக்கு அணித்தாக வாழ்ந்து வருகின்ற போதிலும், தங்களது பாரம்பரிய பண் பாட்டியல்களை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனரெனினும் அண் மைக்காலங்களில் ஓரளவுக்கு விடுபட்டு:வருவதை அவர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் மூலம் அறிய முடிகின்றது. எனவே அவர்கள் தம் வாழ்வில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை ஆராய்வதும் இவ் வாய்வின் நோக்கமாகும்.
வணக்குறவர் வாழ்வுபற்றிய ஆய்வின்ை மேற்கொள்ளவேண்டிய தன் அவசியம் பற்றி பலர் சிந்தித்திருந்தபோதிலும் அதனைச் செயலுரு வில் கொண்டுவரவில்லை. எஸ்.வீ.ஓ. சோமநாதர் ஏயாரெம் சலீம் போன்றவர்கள் இவர்களின் வாழ்க்கை முறை பற்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளனர். இவை அவர்கள் பற்றி அறிவதற்குப் போதுமானவை அல்ல. எனவே இவர்கள் பற்றி விரிவாக ஆராய வேண்டும் என சிந்தித்ததன் விளைவே இவ்வாய்வாகும்.
வனக்குறவர் என்றழைக்கப்பட்ட ஆய்வுக்குட்பட்டவர்கள் தென் னிந்தியவைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி ஏற்கனவே கூறப் பட்டுள்ளது. அவர்கள் தம் வாழ்க்கை அமைப்பு, வாழ்வாதாரத்தை தேடும் பண்பு,
 
 

பண்பாட்டு கோலங்கள் என்பன தென்னிந்திய பழங்குடிகளை ஒத்தது. எனவே இவர்கள் இலங்கைக்கு வந்த காலப்பகுதி, வாழ்ந்துவந்த பிரதேசங்கள், வாழும் பிரதேசத்தில் ஏனைய மக்களுடன் கொண்டுள்ள தொடர்பு, தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கான காரணிகள், ஏனைய சமூகங் களுடன் இணைந்து வாழ விரும்புமிடத்தும் அவை செயலுறுப் பெறாததற்கான காரணிகள், அவர்கள் தம் எதிர்காலநிலை போன்ற வற்றைப் பற்றி ஆராய்ந்து வெளிப்படுத்துவதும் இவ்வாய்வின் நோக்கா (5l D.
ஆய்வு முறையியல்
ஓர் ஆய்வினை மேற்கொள்ளும்போது அவ்வாய்வு எவ்வெவ்வழி முறைகளின் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதையே ஆய்வு முறையியல் சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாய்வுப் பொருளை புவியியல், பொருளாதாரத் துறைகளுக்குள் அடக்கிவிட முடியாது. சமூகவியற்றுறை யுடன் பின்னிப்பிணைந்துள்ளது. பொதுவாக ஆய்விாளன் குறித்த ஆய் வொன்றை முன்னெடுத்துச் செல்லும் போது எவ்வெவ்வணுகுமுறையூடாக மேற்கொள்ள வேண்டும் என்பதுபற்றி பல ஆய்வாளர்களால் விளக்கமளிக் கப்பட்டுள்ளது. தர்க்கமுறை, அறிவியல் முறை, அமைப்புமுறை என்ற அணுகு முறைகளுடாக மேற்கொள்வதே சிறப்பானதாகும்.
வணக்குறவர் பற்றிய ஆய்வானது புவியியற்றளத்தில் நின்று சமூகவியற் பார்வையூடாக வெளிக்கொணர்வதே சிறப்பானது. மனிங்நாங் என்ற ஆய்வாளர் இவ்வாறான ஆய்வுகளை நுண்பாக குடிப்புள்ளியியல் (Micro Demography) துறையாகக் கொள்கின்றார். இவரது கருத்தின் பிரகாரம் ஆய்வானது மூன்று படிமுறைகளைக் கொண்டது. அவையாவன,
,ஆய்வுக்குட்பட்டவர்களின் தரவுகளைச் சேகரித்தல் (94ع
ஆ) பெறப்பட்ட தரவுகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு பொருள்
கூறல் மற்றும் விளக்கமாக எடுத்துக் கூறல்,
S)) குடிப்புள்ளியியல் உண்மை நிலையுடன் சமூக கலாசாரப்
பண்புகளை வெளிக்கொணரல் என்பனவாகும்.
வணக்குறவர்களின் குடிப்புள்ளியியல் ஆய்வில் முதற்படியாக

Page 11
அவர்கள் பற்றிய தரவுகள், தகவல்களைச் சேகரித்தலாகும். ஆய்வு மேற்கொள்ளத் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்ந்துவரும் திருக்கோவில் பிரதேசமாகவிருப்பினும் இவர்களது பரம்பலானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதனால் அவர்கள் தம் பரம்பல் போக்குகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.நாடோடிகளான வனக்குறவர் பல்வேறு அனர்த் தங்களின் மத்தியில் வாழ்ந்த நிலையில் அரசின் அறிவுறுத்த லுக்கமைய குறித்த பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டனர். அப்பிரதேசத்தில் குடியமர்த் தப்பட்ட குறவர்களின் எண்ணிக்கையானது அவ்வப்பிரதேச கிராம சேவையாளர்களினால் குடும்பரீதியாக சேகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவ சியப்பொருட்கள் மானியமாகவும், இலவசமாகவும் வழங்கப்படுகின்றது.
வணக்குறவர் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும்போது பின்வரும் முறைகள் பின்பற்றப்பட்டன:-
1- 56 g|T66s 36ft (Observation 2- (&Birds.T600TG) (Interview) 3- அட்டவணைகள் (வினாக்கொத்து) (Schedule) 4- 56T sąul6 (Case Studies) 6T6óTU6076), T(5ub.
இவ்வாறாகப் பெறப்பட்ட தரவுகள், தகவல்களே முதலாந்தரத் தரவுகள் எனக் கொள்ளலாம். எந்தவொரு ஆய்வினை மேற்கொள்ளு மிடத்து இதனை ஒத்த ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள், வீடியோ நாடாக்கள் போன்றவற்றினூடாக பெறப்பட்ட தகவல்கள் பெரிதும் வேண் டப்படுவனவாகும். ஆய்வுக்கு மேற்குறிப்பிட்டனவே பக்கபலமாக விரு க்கும். இந்த வகையில் உலகில் குறிப்பாக இந்தியாவில் வாழந்து வரும் பழங்குடிகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் நூல்கள், சஞ் சிகைகள், கட்டுரைகள் போன்றன உதவின. இவை இரண்டாம் தரத் தரவுகளாகும். இவைதவிர ஆய்வுக்குப் பெறப்பட்ட ஏனைய தகவல்களும் முக்கியத்துவமானவையாகவிருந்துள்ளன.
அறிவியல் ஆய்வின் படிமுறையில் கருதுகோள் உருவாக்கம் என்பது முக்கியமானது. சமூகவியல் சார்ந்த இவ்வாய்வு அறிவியல் நெறி முறைகளுடாக அணுகப்பட்டுள்ளது. குறவரின் வரலாற்றுக்கால இடப் பெயர்வுகள், அவர்கள்தம் கலாசார பண்பாட்டுக் கோலங்கள், இந்தியா
(ரோசிரியர்காகுகபாலன் : 14 : வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு)
 

விலுள்ள பழங்குடிகளுக்கும் இவர்களுக்குமிடையேயுள்ள தொடர்பு, அண் மைக்காலங்களில் வாழ்க்கை அமைப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் என்பனவே ஆய்வின் கருதுகோள்களாகத் தழுவி நிற்கின்றது.
வணக்குறவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு குழுக் களாகப் பரந்து வாழந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இல்லாததால் அவர்களை இவ்வாய்வில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. திருக்கோவில் கள்ளியந்தீவில் வாழ்ந்து வருபவர்களையே இவ்வாய்வு மையப்படுத்தியுள்ளது.
ஆய்வு ஒழுங்குமுறை
பழங்குடி மக்களான வனக்குறவர் வாழ்வியலைப் பற்றிய இவ் வாய்வு நூலினை அவர்கள் சம்பந்தமாகப் பெறப்பட்ட தகவல்கள், தரவுகளை ஆய்வுமுறையியலடிப்படையில் ஏழு கூறுகளாக ஒழுங்குபடுத் தப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயம் பற்றிய முதலாவது அத்தியாயத்தில் ஆய்வின் நோக்கம், ஆய்வு முறையியல், கருதுகோள், ஆய்வு மட்டுப்படுத்தப்படல், ஆய்வு ஒழுங்கு முறை பற்றிய உள்ளடக்கத் தினைக் கொண்டுள்ளது.
இரண்டாவது அத்தியாயத்தில் பழங்குடிகள் எனப்படுவோர் யாவர், அவர்களின் பூகோள ரீதியிலான பரம்பல், பிராந்திய ரீதியிலான பரம்பல் போன்றவற்றைப் பற்றியும் மற்றும் அவர்களின் நாடோடி வாழ்க் கைப்பாங்கினை மூன்றாவது அத்தியாயத்திலும்,
நான்காவது அத்தியாயத்தில் இலங்கையில் பின்தங்கிய குடிகளின் வாழ்வியல் பற்றியதாக குறிப்பாக இலங்கையில் வாழ்ந்து வரும் இந்தியப் பழங்குடிகள் பற்றியதாகவும் அமைவதுடன், வனக்குறவர்நரிக்குறவர் சமூகத்தினிடையே காணப்படும் வாழ்வியல் பாங்கினையும் விரிவாக எடுத்துக் கூறுகின்றது.
ஐந்தாவது அத்தியாயத்தில் வனக்குறவரின் வாழ்வியலில் விவாகம், இறப்பு, பிறப்பு, பூப்பெய்தல், காதுகுத்து போன்ற சடங்கு
(பேராசிரி ர்.கா:குகtாலன் ့ ့ ့ .........ရ္ဟိမ္ပိ ..., 16 `ုံးပုံ வரைக்குறவர் வாழ்வியல் ஆய்வு D

Page 12
முறைகளும், மருத்துவ முறைகள் பற்றி விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வினடிப்படையிலான தகவல்களும்,
அத்தியாயம் ஆறில் வனக்குறவரின் வாழ்வில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் பற்றியதாகவும்,
இறுதியாக ஏழாம் அத்தியாயத்தில் நாகரிக வாழ்வுக்கு அவர்களை இட்டுச்செல்ல வேண்டுமாயின் எத்தகைய பொருளாதார, சமூக, பண்பாட்டு மாற்றங்களை உள்வாங்க வேண்டுமென்பது பற்றியதாக அமைகின்றது.
Clèj)
 
 
 

இயல் 2
பழங்குடி மக்கள் வாழ்வு
மனித சமுதாயம் வரலாற்றுக்காலம் முதற்கொண்டு பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பின்னணியில் வாழ்ந்து வந்துள்ளது என சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். மக்கள் நாகரிக வாழ்வினைப் பின் பற்றுவதற்கு முன்னர் குழுக்கள் குழுக்களாக வாழ்ந்துள்ளமை பற்றியும் அவர்கள்தம் சமூகவிரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததற்கான சான்று களைக் காணமுடிகின்றது. உலகில் ஒருபுறம் நாகரிக வளர்ச்சியின் உந்துதலினால் மக்களிடையே சமூக, பொருளாதார அமைப்பின் மேம் பாட்டுடன் சமயம், அரசியலமைப்பு போன்றவற்றில் வளர்ச்சிநிலை ஏற்பட்டு வரவே புதிய நாகரிகம் உருவாக வகை செய்தது. அதேவேளை மக்களி டையே விருத்திபெற்ற நாகரிக வளர்ச்சியுடன் இணையாது, தனித்தனிக் குழுக்களாக காடுகளிலும், வனாந்திரங்களிலும், மலைப்பிர தேசங்க ளிலும், பனிபடர்ந்த பகுதிகளிலும், தீவுகளிலும், ஒதுக்குப்புறங்களிலும் குழுக்கள் குழுக்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு ஏனைய மக்களோடு தொடர்பு களற்று தமக்கேயுரித்தான, தாம்வாழும் பிரதேசத்திற்கிசைவான பொருளாதார, சமூக, பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கி ஒரு தொகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களையே சமூகவியலாளர்கள். மானிடவியலாளர்கள், மொழியியலாளர் போன்றோர் "பழங்குடிகள்" அல்லது "ஆதிவாசிகள்" என அழைத்து அவர்கள் தம் வாழ்க்கை அமைப் புக்களை ஆராய்ந்து வருகின்றனர்.
பிரித்தானியக் கலைக் களஞ்சியம் (1) பழங்குடியினர் எனப்படு வோர், "தமக்குள்ளே ஒத்த மொழி பேசுகின்ற, ஒரு சிறிய அமைப்புடைய குழுவேயாகும்" என்கின்றது. சமூக விஞ்ஞானத்திற்கான சர்வதேச கலை க்களஞ்சியம், (2) ஒரு தலைவனின் கட்டுப்பாட்டுடன் புராதன, பண்பற்ற

Page 13
நிலையுடன் கூடியவர்கள் குழுக்களாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து வருபவர் களையே பழங்குடிகள் என்கின்றது. பேராசிரியர் சீனிவாசவர்மா "ஒரு மொழிபேசுகின்ற பலருள்ளும் ஒன்றியிருக்கின்ற பழைய பழக்க வழக்க ங்களைப்பாதுகாத்து வருகின்ற ஓர் எளிய சமூகத் தொகுப்பே பழங்குடிக ளாகும்” என்கின்றார். அதாவது, பழங்குடி என்ற சொல் ஒரு நாட்டில் தொன்றுதொட்டே வாழ்ந்து வருகின்ற பழமையான குடிமக்களைக் குறிக்கும் என்கின்றார். (3) வாழ்வியற் களஞ்சியம் பழங்குடி என்ற சொல் பொதுவாக மூதாதையரிடமிருந்து தோன்றிய பல குடும்பங் களைக் கொண்ட எந்தவொரு குழுவையும் குறிக்கும் எனக் கூறிச் செல்கின்றது (4).
பழங்குடி (Tribe) என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப் பட்டதாகும். Tribe என்பது மூன்றில் ஒன்று (One third) என்பதாகும். அதாவது உரோம் நகரை மூவர் ஒன்றுகூடி நிறுவினர் எனவும், அதில் ஒருவரைக் குறிக்க பழங்குடி என்ற சொல் வந்தது என்பர். வெரியன், எல்வின், லூயிஸ் போன்றோர் பழங்குடி என்ற சொல் நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் என்கின்றனர். மாகஸ் வெபர் (5) பழங்குடி என்ற சொல் பல உள்ளடக்கங்களைக் கொண்டது என்பர். அதாவது குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்தல், சிறப்புத்தன்மையற்ற வேலை, சமூகப் பார்வையில் பின்தங்கியிருத்தல், வேறு பழங்குடிகளுடன் விவாகத் தொடர்பினை வைத்திருத்தல் (தமது இனத்துள்), தமது பண்பாட்டுக்கேற்ப சட்ட திட்டங்களைச் செயற்படுத்துதல் போன்றன பழங்குடிகளின் குணாம் சங்கள் என்கின்றார். றிவர் என்ற அறிஞர் பழங்குடி என்ற சொல் சிறிய அரசுகளைப் போன்ற அமைப்புடைய ஒத்த மொழி பேசுகின்ற ஒரு சமுதாயக் குழுவைக் குறிப்பதாகும் என்கின்றார் (6).
மேற்குறித்த பண்புகளைக் கொண்டவர்களில் கணிசமானோர் நாகரிகம்படைத்த சமூகங்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுடன் இணைந்து செல்வதற்கு விருப்பம் கொண்டுள்ளனரெனினும் நாகரிகம் படைத்த சமூகத்தினர் அவர்களின் விருப்புக்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்காது விடுவது மட்டுமல்லாது, பழங்குடிகளாகக் கருதும் நிலை தொடர்வதையே காணமுடிகின்றது. அவர்கள் தேசிய நீரோட்டத் துடன் கலப்பதை உதட்டளவில் கூறினும் மனத்தளவில் விரும்பாத நிலையை தற்போதைய சர்வதேச நிலவரம் எடுத்துக் காட்டுகின்றது. அதாவது, இத்தகைய பழங்குடி வாசிகளை புதிய நீரோட்டத்துடன் கலந்து
 
 

கொள்வதற்கு அவர்களால் பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சமூக பொருளாதார, பண்பாட்டு நிலைமைகள் தடையாக - அவற்றி லிருந்து விடுபட முடியாதவர்களாகவிருந்து - ஏனைய சமூகத்தவர்களால் ஓரங்கட்டுபவர்களாகவிருப்பதைக் காணமுடிகின்றது. பல சந்தர்ப்பங்களில் நாகரிகம் படைத்த மக்களின் வாழ்க்கை அமைப்புக்களை உள்வாங்கி அவர்களுடன் வாழ்ந்து வரும் நிலையிலும் அவர்களால் நடைமுறையில் ஒதுக்கப்படுபவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
பழங்குடி மக்கள் என அழைக்கப்படும் பின்தங்கிய சமூகம் உலகில் எல்லாக் கண்டங்களிலும் வாழ்ந்து வருகின்றது. உலகில நிலத் தேட்டங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் நடைபெறுவதற்கு முன்னர் மக்கள் தனித்தனிக் குழுக்களாக, தாம்வாழும் பிரதேச சூழலுக்கேற்ப வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி - தேடி வாழ்ந்துள்ளனர். தற்போதும் இந் நிலையினை உலகில் ஆங்காங்கு காணமுடிகின்றது. இத்தகைய தனிமை ப்படுத்தப்பட்டிருந்த குழுக்களைப் பற்றி அறியவோ, - அவர்களையும் இணைத்துக் கொள்ளவோ - அவர்களுடன் பழகவோ நாகரிகம் படைத்த வர்களால் முடியவில்லை அல்லது தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. பழங்குடிகளில் கணிசமானோர் நிலத்தேட்டங்களை மேற்கொண்டவர் களால் அழிக்கப்பட்ட - துரத்தப்பட்ட வரலாறுகளையே காணமுடிகின்றது. 15ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பழங்குடிகள் பற்றிய தகவல்களை எவரும் வெளிக்கொணர்ந்ததற்கான ஆதாரங்கள் மிகவும் மட்டுப்படுத்த ப்பட்டளவிலேயே காணக்கூடியதாகவிருக்கின்றது. பழங்குடிகள் ஏன் தனி த்தனிக் குழுக்களாக வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது பற்றியோ அல்லது இவர்கள் ஏன் தனிமையாக வாழப்பழகினார்கள் என்பதுபற்றியோ எதுவித ஆய்வுகளும் அக்காலங்களில் மேற் கொள்ளப்பட்டிருக்க வில்லை.
ஐரோப்பியர் புதிய பிரதேசங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் காரணமாக, போட்டிபோட்டு புதிய நிலப்பகுதிகளை ஆளுகைக்குட் 'படுத்தும் நிலை ஏற்படவே நாகரிகமற்ற, தனிமைப்படுத்தப்பட்டு வாழந்து வந்த மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியது. ஐரோப்பியர் தம்பார்வையில் மேற்குறித்தவர்களை மட்டுமல்லாது சமூக, பொருளாதார ரீதியில் நலிவுற்றோரையும் பழங்குடிகள் என்றே கருதினர். இருப்பினும் இவ்வாறான வகைப்படுத்தப்பட்ட பழங்குடிகள் என ப்படுவோர் யாவர், அவர்களை ஏன் பழங்குடிகள் என அழைக்கின்றனர் போன்ற
(பேராசிரியர்காகுகபா !!! နှီး ငွှီး၊ ဒိဌိ နှီ 14) : வனக்குறவர். வாழ்வியல் ஆய்வு D

Page 14
வற்ாை? அறிந்து கொள்ளுதல் பொருத்தமானதாகவிருக்கும் எனலாம்.
மனிதசமூகத்தின் முன்னோடிகளாகப் பழங்குடியினர் காணப்படு கின்றனர் எனப் பல சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். நாகரிக வளர்ச் சியானது ஆற்றோர வண்டல் மண்சார்ந்த பிரதேசங்களிலேயே வளர்ச் சியடைந்தது என்பதை வலியுறுத்தும் ஆய்வாளர்கள் அப்பிரதேசங் களிலேயே நாகரிகம் படைத்த மக்கள் தோன்றினார்கள் என்பர். அதே வேளை தொழில்நுட்ப வளர்ச்சியற்ற அக்காலங்களில் புவியியற் காரணிக ளின் சாதக, பாதக பண்புகளுக்கேற்ப மக்கள் குழுக்கள், குழுக்களாக, பெருமளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களாக ஒதுங்கி வாழ்ந்து வந்து ள்ளனர் என்பதையும் சமூகவியலாளர் மறுப்பதற்கில்லை. இவ்வாறான சூழ்நிலையில் மானிடவியலாளர் பழங்குடியினர் எனப்படுவோர் புராதன கால மக்களின் எச்சங்களாகவிருக்கலாம் எனக்கருதினாலும் அதனைப் பல ஆய்வாளர்கள் மறுத்துரைக்கின்றனர்
ஐரோப்பியர் உலகில் தமது பரம்பலை அதிகரிக்கத்தொடங்கிய வேளை ஆசியா, ஆபிரிக்கா, வட, தென் அமெரிக்கா கண்டங்களில் வாழ்ந்த பலரை பழங்குடிகள் என்றே அழைத்தனர். அது மட்டுமல்லாது இத்தகைய பழங்குடிகளைக் கொன்றுள்ளமையையும் உலக வரலாறு கள் தெரிவிக்கின்றன. இத்தகையோர் அடிமைகள் போல நடாத்தப்பட்ட துடன் அவர்களைச் சுத்தீகரிப்பதிலும் கவனம் செலுத்தியிருந்தனர். எனினும் ஐரோப்பியர் வருகையின் பின்னரேயே தனித்தனிக் குழுக்களாக கண்டறியப்பட்டவர்கள் பற்றிக் கண்டறிதலில் பலரும் ஆர்வம் கொண்ட னர். இவர்கள் குழுக்கள் குழுக்களாக தொடர்பற்று வாழ்ந்து வந்த மையால் அவ்வக்குழுக்களின் பூர்வீகப் பெயர்கள் குறித்து அழைக்கத் தொடங் கினர்.
ஐரோப்பியரினால் உலகில் பரந்து குழுக்களாக வாழந்துவந்த மக்களை பழங்குடிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி அவர்களது வாழ்வியல் பற்றிய பண்புகளை அறிய முற்ப்ட்டிருந்தபோதிலும் அண்மை க்காலமாகவே இத்தகைய மக்களின் வாழ்க்கைப் பின்னணிகளையும், அவர்கள் தம் வாழ்வியலையும் அறிய முற்பட்டுள்ளனர். இந்தியாவில் இவ்வாறான மக்களை இனங்கண்டு அவர்கள்தம் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயற் படுத்தி வருகின்றனர்.
C பேராசிரியர்.கா.குகபாலன் - 20 வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு )
سمیہ
 

உலகில் குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ள பழங்குடி மக்கள் தங்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனித்து இனங்காணப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் என அழை ப்பதுதான் பொருத்தமானது எனக் கருதுகின்றனர். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த பழங்குடியினரில் பெரும்பாலானோரை ஆங்கிலேயர் கொன்றுவிட்டனர். ஏனையோரில் சிலர் அவர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் கணிசமானோர் தமது பழைய வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது. அதேவேளை அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியப் பழங்குடி மக்கள் படிப்படியாகத் தம்மைச் சுதாகரித்துக் கொண்டா லும் அவர்கள் தாம் மீண்டும் பழங்குடியினர் என அழைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதாவது தங்களது தேவைகள், சலுகைகள், உதவிகள், பாதுகாப்பு போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இருக்கும் என நம்புகின்றனர்.
இந்தியாவில் 1971ஆம் ஆண்டுக்கணிப்பீட்டின்படி அட்டவணைப் படுத்தப்பட்ட பழங்குடிகள் 4,147,922 ஆகும். இவர்களில் தமிழ்நாட்டில் 450,454 மக்கள் பழங்குடிகளே எனத் தெரிவிக்கப்படுகின்றது. (7) இவர்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து மிக நீண்ட காலமாக ஒதுங்கி வாழ்ந்து வந்துள்ள போதிலும் சுதந்திர இந்தியாவில் அவர்களை நாகரிகமுள்ள சமூகமாக மாற்றுவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயற்படுத்தி வருகின்றனர். எனினும் இவ்விடயத்தில் கணிசமானளவு வெற்றியைக்கூட அடைந்தார்களா என்பது ஆய்வுக்குரியதேயாகும். எனினும், அவர்களது வாழ்வியல் எதிர்காலத்தில் பெருமளவில் மாற்றங் கள் ஏற்படவேண்டு மென்பதை அவர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப் படுத்துகின்றன.
இந்தியாவில் வாழும் மக்களில் ஒரு பகுதியினர் பழங்குடிகளாக ஏன் காணப்படுகின்றனர் என்பதற்கு பலர் பல்வேறுவிதமான விளக்கங் களைக் கொடுத்துள்ளனர். உயர்ந்த கலாசாரத்தையுடைய நகரங்களாக மொகஞ்சதாரோ, ஹரப்பா, காலிபங்கன் போன்றன காணப்பட்ட போதே இந்தியாவில் பல பகுதிகள் கிராமங்களாகவும் இருந்துள்ளன. இவர்களில் தனிப்பட்ட நாடோடிகளாகக் காடுகளிலும் மலைகளைச் சுற்றியும் வாழ்ந்த மக்களையே பழங்குடிகள் என அழைக்கப்பட்டனர் என்பர். (8) எஸ்.ஆர். வேங்கடராமன் பண்டைக்காலத்தில் கொள்ளைக்காரரும், சிற்றரசர்களும்
(பேராசிரியர்காருக 2 வkர்ைக்குறள்ை 1ைழ்வில் ஆய்வு ノ

Page 15
இந்தியாமீது படையெடுத்து மக்களைக் கொன்றும் துன்புறுத்தி அடக்கி அவர்களுடைய நிலபுலங்களை கைப்பற்றியதோடு அவர்களை அடிமை போல நடாத்தினர். இக்கொடுமைகளுக்குப் பயந்து அனேக குடும்பங்கள் நாட்டைவிட்டு விலங்குகள் வசிக்கும் காடுகளிலும், மலைகளிலும் குடியேறி வேட்டையாடியும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு நாட்டின் பொதுமக்களோடு எந்தவித தொடர்புமில்லாமல் தனித்தே வாழ்ந்து அங்கு கிடைக்கும் காய்கனிகள், கிழங்குவகைகள், விலங்குகள் போன்றவற்றை உண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களே தற்போதைய பழங்குடிகள் எனப்படுகின்றது என்கின்றார் (9).
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வினை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போதே தொடங்கப் பட்டுவிட்டன. குறிப்பாக இவ்வாய்வில் சிறப்பிடம்பெற்ற ஆய்வாளர்களாக எல்.ஏ. கிருஸ்ண ஐயர், தரஷடன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் ஆய்வுகளின் பிரகாரம் பழங்குடிகள் நகர வாழ்க்கை வாழ்ந்த வர்களாகவும், அரசியல் காரணிகளாலேயே ஒதுக்கப்பட்ட பழங்குடிகளிாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றனர். தமிழ்நாட்டில் பழங்குடிகள் பற்றி நீண்ட காலமாக ஆய்வினை மேற்கொண்டுவந்த பிலோ இருதயநாத் என்பவரின் கருத்தின் பிரகாரம் போருக்கு அஞ்சி பறையடித்த பின்னர் காட்டிலும், மலையிலும் மறைந்து காடர்களாக வாழ்ந்தவர்களின் வரலாற் றையும், அவர்கள் வாழுமிடங்களையும் ஆய்வு செய்யும்போது எங்கெங் கெல்லலாம் போர் நடைபெற்றனவோ அவ்விடங்களுக்கு சமீபமாகவே அனேக மலைவாசிகளும், காட்டுவாசிகளும் இன்றும் வாழ்ந்து வருகின்ற னர் எனப்படுகின்றது.(10)மலைவாசிகளும் காட்டுவாசிகளும் பண்டைக் காலங்களில் கொள்ளையடித்துவிட்டு காடுகளிலும் மலைக்குகைகளிலும் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். அங்கனம் வாழ்ந்தவர்கள் பலரை குற்றமுள்ள பழங்குடிகள் எனப் பிரித்தானியர் வகைப்படுத்தியிருந்தனர். (11) சுதந்திரத்தையடுத்து இத்தகைய சொற்பதம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவில் பல பழங்குடி மக்களை அடையாளம் காணலாம். உதாரணமாக தமிழகத்தில் காடர், மலசர், லம்பாடியர் கோத்தர்கள், காணிக்காரன், புலையர், சோளகள், தோடர், முதுவர், குறவர், குருவிக்காரர் போன்ற மலைவாழ் பழங்குடிகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன (12).
உலகில் குறிப்பாக இந்தியாவில் ஒருசில பழங்குடிகள் தவிர
(பேராசிரியர்காருகாலன் - - 22 வனக்குறவப் tெழ்வியல் ೩à| )
 

ஏனைய பழங்குடிகளின் பண்பாட்டியலை உற்று நோக்கும்போது வாழும் சூழல், மொழி ஆகியவற்றில் வேறுபாடு காணப்பட்டாலும் அவர்களது பல்வேறு செயற்பாடுகள், பண்பாடுகளில் ஒத்த பண்புகளைக் கொண்டிரு ப்பதை அவதானிக்க முடிகின்றது. அதாவது பழக்கவழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதே இதற்குக் காரண மாகக் கொள்ளலாம்(13). இந்த வகையில் இலங்கையில் வாழும் பழங்குடி மக்களிடையேயும் தென்னிந்தியாவில் வாழும் பழங்குடி மக்களிடையேயும் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதற்கு தென்னிந்தியாவிலிருந்து உள்வரவினை மேற்கொண்டிருந்ததேயாகும் எனக் கொள்ளலாம்.
Ol) O2)
O3)
0-4)
05) O6) O7)
08)
09)
O)
11) 2)
உசாவியவை:
Encyclopaedia Britanica (W. H. R. Rivers) International Encyclopaedia of the Social Science. Vol-15, 16. 7.
சீனிவாச வர்மா. கோ. நரிக்குறவப் பழங்குடிகள், ப-1. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 12, U 95. Max Weber. The Religion of India, p 31. Encyclopaedia Britanica (W. H. R. Rivers) Govt of India, India. A Referenc Annual 1979 pp 123-124. தேவசகாயம். என். தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடிகள், பக்.1-3. வேங்கடராமன்.எஸ்.ஆர். பாரதப் பழங்குடிகள், பக் 3-7. பிலோ இருதயநாத். காட்டில் கண்ட மரம், ப. 6 பிலோ இருதயநாத், கேரள ஆதிவாசிகள், ப. 13 குணசேகரன். கே.ஏ. தமிழக மலையின மக்கள், பக் 1-6 நசீம்தீன். பீ. இடுக்கி மாவட்டப்பழங்குடி மக்களின் வழக்காற்றியல், LI: l-4.
(ప_
C பேராசிரியர்.கா.குகாலன் 2 வரைக்குறள்ை வாழ்வியல் ஆய்வு )

Page 16
இயல் 3
இலங்கையில் ஆதிக்குடிகள்
இலங்கையில் மக்கள் வாழ்க்கை பற்றி நீண்ட வரலாறுண்டு. பல மொழிகளில் எழுதப்பட்ட இதிகாசங்கள், வரலாற்றுக் குறிப்புகளில் இலங்கையில் ஆதிக்குடிகளாக வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்கள் எடுத் துக்கூறப்பட்டுள்ளன. இவை தவிர காலத்துக்குக் காலம் இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டவர்களும் தங்களது பார்வையில் எழுந்த வற்றை எழுதிச் சென்றுள்ளனர். (1) இலங்கையில் இயக்கர், நாகர் என இரு பிரிவினர் வாழ்ந்து ஆட்சிசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின் றது. நாகர் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த திபேத் தோவர்ம குலத்தவர் கள் என்றும் கி.மு 4000ஆம் ஆண்டுகளுக்கு முன்னரேயே மத்திய ஆசியா விலிருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் எனவும், ஆரியர் குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வந்து குடியேறினார்கள் என அறியக்கிடக்கின்றது(2). அதேபோலவே இலங்கையின் மத்தியிலும், தெற்கிலும் வசித்து வந்த இயக்கர்கள் புராதன காலத்தில் ஆரியர் வருகைக்கு முன்னர் இமயமலைக்கணவா யூடாக வந்தடைந்தனர் எனவும் ஆரியரின் நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டு இந்தியாவின் தென்பிராந்தியத்திற்கும் இலங்கைக்கும் வந்தடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது (3).
விஜயனும் அவனது தோழர்களும் இலங்கைக்கரையில் வந்திறங்கிய போது நாகரிகத்தில் முன்னேறிய மக்கள் கூட்டமும் பண்டைய வாழ்க்கை முறையைக் கைக்கொண்டு வாழ்ந்த மக்கள் கூட்டமும் காணப்பட்டது என்பர்(+). இயக்கரை நாகரிகமடைந்த மக்களாகக் கருதலாம் என பாக்கர் கூறுகின்றார்(5). இவர்கள் தாமிரபரணி எங்கும் பரவிவாழ்ந்தனர். அதாவது
C ரோசிரியர்காகுகபாலன் 24 . வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு
 

பினை அமைத்திருந்தனர். நாகர் இலங்கை முழுவதும் பரந்திருந்தன ராயினும் நாட்டின் வடபகுதியிலேயே செறிவாக வாழ்ந்துவந்திருக்கின்ற னர். இவர்கள் சீர்திருத்தமுடையவர்கள் எனவும், (6)பண்பாடுடைய கலா சாரத்தைப் பேணியவர்கள் எனவும் பெளத்தத்தை தழுவியிருந்தனர் என வும் வடக்கில் மட்டுமல்லாது தென்மேற்குப்பகுதிவரை பரந்தும் வாழ்ந்திரு ந்தனர் (7). எனினும் சிங்கள வரலாற்றாசிரியர்களில் சிலர் இயக்கர், நாகர்களை மனிதர்களாக ஏற்கத் தயாரில்லை. எனினும் அண்மைக்கால ஆய்வுகள் இதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விஜயனுக்கு பின்னரேயே இலங்கையில் நாகரிகம் வளர்ச்சி பெற்றது என்பதை மறுத்துரைக்கின்றனர்.
மேற்குறித்த வரலாற்றுப் போக்கினை கருத்திற்கொள்ளும்போது, நாகரிகமடையாத சமூகத்தினர் என எவரும் வாழவில்லை எனத் தெரிய வருகின்றது. நூறாயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பிருந்தே புரூட்டோ அவுஸ்திரேலிய வகையைச் சேர்ந்தவர்களான வேடர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர். இம்மக்கள் ஆரம்ப காலங்களில் காடுகளில் பொருட்களைச் சேகரிப்பவர்களாகவிருந்து, காலப்போக்கில் விவசாயத்தை தமது தொழிலுடன் இணைத்துக் கொண்டனர்(8). கடந்த சில நூற்றாண்டுகளாக இவர்களில் பெரும் பாலானோர் சிங்கள மொழி பேசுபவர்களாகவும், தமிழ்மொழி பேசுபவர்களாகவும் உள்வாங்கப் பட்டுள்ளனர். 1871ஆம் ஆண்டில் 2030 பேராகவும், 1901, 1921, 1946ஆம் ஆண்டுகளில் 3971,4510,2361 பேராகவும் காணப்பட்டுள்ளனர் என குடிக் கணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது(9). எனவே அண்மைக் காலங்களில் சில நூற்றுக்கணக்கானவர்களாகவிருக்கின்றனர். குடிக் கணிப்பின்போது தம்மை சிங்களவர்களாகவும், தமிழர்களாகவும் அடை யாளம் காட்டிக் கொள்கின்றதாலேயே இவ்வெண்ணிக்கைக் குறைவு ஏற்பட்டுள்ளது எனக்கொள்ள இடமுண்டு. குறிப்பாக கிழக்கு ஊவா, மத்திய பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற வேடர் பரம்பரையினர் சிங்களவர் களாகவும், தமிழர்களாகவும் காணப்படுகின்றனர். சிங்க மொழியினைப் பேசும் வேடர்களுக்கு அரசாங்கம் அண்மைக்காலங்களில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றமையால் தேசிய நீரோட்டத்துடன் படிப்படியாக இணைக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்பேசும் வேடர்கள் கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே சிறியளவில் வாழ்கின்றனர். குறிப்பாக கிண்ணியாப் பிரதேசத்தில் உள்ள வேடர்கள் நாடோடிகளாக இல்லாது நிரந்தரக் குடியிருப்புக்களை ஏற்படுத்தி விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இனப்பாகுபாட்டின் விளைவாக சிங்கள வேடர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், இவர்களுக்குக் கிடைக் காததால் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர் (10.
G ராரிரியர்.கா:குகாலன் 25 வலக்குறவர் வாழ்வில் ஆய்வு )

Page 17
சிங்கள மன்னர் காலத்தில் கபீர்(Kaffirs) என்ற சாதியினர் அடிமைகளாக, கூலிப்படைகளாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயப் பட்டாளங்களில் பட்டாளத்து வாத்தியக் கச்சேரி வாசிப்பவர்களாக இருந்துள்ளனர். இதனால் இவர்கள் இராணுவத் தளங்களுக்கு அண்மையில் குடியமர்த்தப்பட்டனர். கொழும்பு, புத்தளத்தில் செல்லன்கண்டல் எனும் சிறு கிராமத்தில் தற்போதும் சிறிய எண்ணிக்கையினராக வாழந்து வருகின்றனர் (11). அதேபோல இந்தியாவிலிருந்து சிங்கள மன்னர்களால் கொண்டுவந்த வினையர்களின் வழித்தோன்றல்களே முக்குவர் ஆகும். இவர்கள், புத்தளம் மட்டக்களப்புப் பகுதிகளில் வசித்து வருகின்றனர் (12). இவர்களுடன் வாக்கையர் (Vaggel) என்னும் சாதியினர் முறிற் முழுதாய் சிங்கள மக்களுடன் கலந்து கொள்ளவில்லையாயினும் சிறு சமூகமாக அனுராதபுரம், குருநாகல் முல்லைத்தீவுப் பிரதேசங்களில் வாழந்து வருகின்றனர் (13). ஆதிக்குடிகளாக உடுதும்பரை, குருநாகலைச் சுற்றியுள்ள பிரதேசங் களில் கின்னரர் என்றழைக்கப்படும் மக்கள் அங்குமிங்குமாகக் காணப்படு கின்றனர். இவர்கள் பாரம்பரிய கலாசித்திரங்கள் வரையப்பட்ட பாய்களை இழைத்து விற்பர். இவர்கள் வேடரைப்போன்று காணப்பட்டாலும் வித்தி யாசமான தொகுதியைச் சேர்ந்தவர்கள் (1+).
றொடியர் (Rodiya) என்றழைக்கப்படும் தனிக்குழுவினரும் இலங்கையில் வாழ்ந்துவரும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய குழுவினராகும். இவர்கள் குறித்து இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும் வ்ெவேறுபட்ட கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அழகிய றொடிய மாதர்கள் அரச குலத்தினரையும் மயக்கியிருக்கின்றனர். இதற்கு ஆதாரமாக இளவரசன் சாலியன் கதை பிரசித்தி பெற்றது. இவர்களது பாரம்பரியத் தொழில் பிச்சை எடுப்பதாகும். பிச்சை கொடுக்காவிட்டால் றொடியர் சபிப்பார்கள் என்ற பயம் ஏனைய மக்களுக்கு உண்டு. இவ்வினப் பெண்கள் உயர்ந்த தோற்றம், திடகாத்திரம், அழகு பொருந்தியவர்கள். இவர்களது தொழில் வயல்களைத் துப்பரவு செய்தல், மிருகத் தோலினைக் கயிறாகப் பின்னுவது, பினங்களை அடக்கம் செய்வது போன்றவையாகும்(!5). 1901ஆம் ஆண்டினதும் (16) 1911ஆம் ஆண்டினதும் (17) குடிக்கணிப்பின் பிரகாரம் முறையே 1464, 1572 றொடியர் இனத்தினர் வாழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவர்கள் சப்பிரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா, தென்மாகாணங்களில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கை அமைப்பு முறையில் அண்மைக் காலங்களில் பெருமளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1950 களிலிருந்து இவற்றினை அறிந்து கொள்ள முடிகி ன்றது(18).
மேற்கூறப்பட்ட இன சாதியினரிலிருந்து பெருமளவிற்கு வேறு பட்ட வாழ்க்கை அமைப்பினைக்கொண்ட நாடோடிகளாக வாழ்ந்துவரும் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் குறவர் கூட்டத்தினரும்
۔------سہ - ~~---------
C ரோசிரியூர்,காருகாலன் 2. வனக்குரவப் வழ்வியல் ஆய்வு )
 

இலங்கையில் பழங்குடிகள்
இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சிங்களவர் “அபி குண்டகியோ’ எனவும் (Ahikuntakiyo) தமிழர், “குறவர்’ (Kurnvir) எனவும் அழைப்பர் (19). இவர்கள் பற்றிய ஆய்வே இந்நூலாகும்.
இந்தியப்பழங்குடிகள்
இந்தியாவில் காணப்படுவது போல பழங்குடிகள் என்ற பிரிவினர் இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் வேடரைத் தவிர்ந்த பூர்வீகக் குடிகளை அடையாளம் காணமுடியாதவிடத்தும் இந்தியாவிலிருந்து காலத்துக்குக்காலம் வருகை தந்தவர்கள் எனக் கருதப்படும் சில பழங்குடியினரைக் காணமுடிகின்றது. இவர்கள் நாட்டின் மொத்தக் குடித்தொகையினரோடு ஒப்பிடுமிடத்து மிகச்சிறுபான்மையினராக உள்ளனர். எனினும் நாடளாவிய ரீதியில் பரந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் மிகத்தாழ்ந்த தொழில்களில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். பழங்குடி என்ற அமைப்பிலிருந்து விடுபட்டவர்களாக, ஏனைய மக்களுடன் இணைந்து வாழாதுவிடினும் பொதுவாழ்வில் இணைத்துக் கொண்டுள்ளனர் எனச் சில சமூகவியல் அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். எனினும் இவர்கள் பற்றிய (LP(Լք66)ԼDԱ.JT601 தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களைத் தவிர இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் எனக் கருதப்படும் சில பழங்குடிகள் எண்ணிக்கையில் குறைவாகவிருப்பினும் பழங்குடிகளுக்கே உரித்தான பண்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களும் முன்னர் கூறப்பட்டவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் இலங்கைக்கு வந்தபோது நகரப்பகுதிகளில் வந்து தங்கி சுத்திகரிப்புத் தொழிலில் ஈடுபட்டதன் விளைவாக நாடோடிப் பண்பினைக் கைவிட்டார்கள் எனவும், ஏனையோர் தென்னிந்தியாவில் வாழ்ந்த போது மூதாதையர் கைக்கொண்டிருந்த குலத்துக்குரிய பழங்குடி வாழ்க்கை முறையை மேற்கொண்டு காடுகளிலும் ஒதுக்குப் புறங்களிலும் வாழப் பழகிக் கொண்டனர் எனவும் கருத இடமுண்டு இவர்களைக் குறவர் இனத்தவர்கள் என அண்மைக்காலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள னர் (20).
இலங்கையில் வாழந்து வரும் இந்தியப் பழங்குடிகளான குறவர் இனத்தவரில் வனக்குறவர், சாத்திரஞ்சொல்லும் குறவர் என இரு பிரிவினரை அடையாளம் காணமுடிகின்றது. இவ்விரு பிரிவினரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இருபிரிவினரும் வெவ்வேறுபட்ட குலப் பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர் என்பதைக் காணமுடி கின்றது. தங்களைவிட வனக்குறவர் தாழந்த குலத்தவர்கள் எனவும் தாம்
) ராரிரியர்.கா.கு:காலன் 7 வனக்குறள்ை 1ெ1ழ்வில் ஆய்வு ܐ) ) سمیہ

Page 18
எக்காலத்திலும் அவர்களுடன் எவ்வித சமூக, பண்பாட்டு தொடர்பினையும் கொண்டிருக்கவில்லை என சாத்திரஞ் சொல்லும் குறவர்கள் தெரிவித்து ள்ளனர் (21). வனக்குறவர் இவர்களால் முன்வைக்கபட்ட மேற்குறித்த கருத்துக்களை மறுக்கவும் இல்லை, ஏற்றுக் கொள்ளவும் இல்லை. குறி சொல்லும் குறவர் எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்களேயாவர். நகரப் புறங்களிலும், வணக்கத்தலங்களிலும் ஆணும், பெண்ணுமாகச் சாத்திரஞ் சொல்லிச் சம்பாதிப்பதைக் காணலாம். இவர்கள் மதுப்பிரியர்களாக உள்ளனர்.
இலங்கையில் பரவலாக சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வரும் குறவரில் வனக்குறவர் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள் நாட்டின் கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர் (விளக்கப்படம் 3,1). இவர்கள் பற்றியதான ஆய்வாக இது அமைகின்றது. எனினும் இலங்கையில் வாழும் மக்கள் இவர்களை நரிக்குறவர். வணக்குறவர் என அழைத்து வருகின்றனர். ஆனால் இவர்களிடம் மேற்கொண்ட ஆய்விலிருந்து இந்தியாவில் பரவலாக வாழ்ந்து வரும் நரிக்குறவர் பண்பா ட்டிலிருந்து விலகியிருப்பதையே காண முடிகின்றது.
தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் வாழும் குறவர் சமூகத் தினப் பல்வேறு பேயர்கொண்டு அழைக்கப்படுகின்றனர். நரிக்குறவர். கறிவேப்பிலைக்குறவர், உப்புக்குறவர். கூடை முறம்கட்டும் குறவர். குருவிக்காரன் எனத் தமிழ்நாட்டிலும் (22) வணக்குறவர், குறி சொல்லும் குறவர் என இலங்கையிலும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் நரிக்குறவர் என்ற ஒரு பிரிவினர் வாழந்து வருவதாகச் சிலர் தெரி விப்பினும் அவ்வாறான ஒரு தொகுதியினரை அடையாளம் காணமுடிய வில்லை. இங்கு வாழும் மக்கள் வனக்குறவர்களைத்தான் நரிக்குறவர் என்று அழைக்கின்றார்களா? என்ற சந்தேகமும் ஏற்படாமலில்லை.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வனக்குறள் என்ற பிரிவினரும் தென்னி ந்தியாவில் வாழ்ந்து வரும் நரிக்குறளகளும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த வர்கள் எனச் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். இவ்விருபிரிவினரும் மலை யடிவாரத்திலும் காடுகளைச் சார்ந்தும் வாழ்க்கை நடாத்துபவர்கள். தமிழ்நாட்டில் நரிக்குறவர் சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகளை மேற் கொண்ட பேராசிரியர்களான பி. பாலக்ப்பிரமணியம், எம்.எஸ்.ராமன், ஜி. சீனிவாச வர்மா, க. சக்திவேல், ச. அகஸ்தியலிங்கம் மற்றும் பிலோ இருதயநாத் போன்றோரின் கருத்துக்களை உற்றுநோக்கின் நரிக்குறவர் தனித்துவம் வாய்ந்த பழங்குடிகள் என்பதைத் தெளிவுபடத் தெரிவித்து ள்ளனர். நரிக்குறவர் என்போர் தமிழ்நாட்டில் நரிவேட்டையாடல், அதன் இறைச்சியை உண்பது, நரித்தோல், நரிப்பல், நரிநகம், நரிவால், நரிக் கொம்பு முதலியவற்றைப் பெற்று, விற்றுச் சம்பாதிக்கும் தொழிலை மேற் கொள்பவர்கள் என்கிறார்கள், இந்நரிக்குறவர் வாக்ரிபோலி என்ற மொழி
 
 

ിലT് (Lib

Page 19
யினைப் பேசுபவர்கள். வாக்ரி என்பது குஜராத்திச் சொல்லாகும். அம் மொழியில் வாக்ரி என்பது பறவை அல்லது குருவி பிடிப்பவன் என்று பொருள்படும். எனினும் நரிக்குறவர் மொழியில் வாக்ரி என்பது நரி பிடிப்பவன் எனப் பொருள் கொள்ளப்படுகின்றது என பேராசிரியர் ஜி. சீனி வாசவர்மா கருதுகின்றார் (23).
நரிக்குறவர் வடஇந்தியாவில் ஆரவல்லி மலைத் தொடர், மேவார், குஜராத் போன்ற பிரதேசங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறியிரு க்கலாம். அதாவது, வட இந்தியாவில் இஸ்லாமியரின் படையெடுப்பின் போது இஸ்லாம் மதத்தை பின்பற்ற மறுத்து இடம்பெயர்ந்து குடியேறியிரு க்கலாம் எனவும் கருத இடமுண்டு. அதாவது இவர்களது இடப்பெயர்வுப் 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்திருக்க சாத்தியம் உண்டு. நரிக் குறவரின் மொழியில் உருது, குஜராத்தி, ராஜஸ்தானி போன்ற மொழிகள் செல்வாக்குச் செலுத்தினும் மராத்தி, தெலுங்கு மொழிச் சொற்கள் மிகக்குறைந்தளவில் காணப்படுகின்றன. இவர்கள் சிவபெருமான், பிள்ளை யார், காளி, துர்க்கை, ஈஸ்வரி, மீனாட்சி, மாரியம்மன் போன்ற கடவு ளர்களை வணங்குகின்றனர். பிற தேவதைகளாக மஹமாயி, சாந்திடி, வாகாய் போன்றவர்களையும் பிற தெய்வங்களான பாலாஜி (வீரன்) போன்றவர்களையும் வணங்குகின்றனர் (24).
நரிக்குறவர்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கோலங்கள் ஏனைய பழங்குடிகளுடன் ஒற்றுமையிலும் வேற்றுமைப் பண்புகளை அதிகம் கொண்டிருக்கின்றமையைக் காணமுடிகின்றது. அந்தவகையில் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற வனக்குறவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு போன்றவற்றிற்கும் நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டுக்குமிடையில் ஒருசிலவற்றில் ஒத்தபண்புகளைக் கொண்டிருந்த போதிலும் முக்கியமான சில விடயங்களில் தெளிவான வேற்றுமைப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன என்பதை வனக்குறவரிடம் மேற் கொண்ட ஆய்விலிருந்து புலப்படுகின்றது. குறிப்பாக மதம், மொழி, பழக்கவழக்கங்களில் நேரெதிர்ப் பண்புகள் காணப்படுகின்றன.
நரிக்குறவர், வனக்குறவர் என்போர் அடிப்படையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். முதலாமவர் சிவபெருமான், பிள்ளையார், துர்க்கை போன்றோரை வணங்க, பின்னவர் முருகன், வள்ளியையும், இயற்கையினையும் (கவுலாச்செடி) வணங்கிவருகின்றனர். திணைப் புலத்து வள்ளியை வணங்குவது, அவர்கள் காடுகளிலும் அதனைச் சார்ந்தும் வாழ்ந்து வந்தமையாலேயாகும் என்பர் ஆய்வாளர்கள். நரிக் குறவர் இந்தோ ஆரியமொழியினைப் பேசுபவர்களாகவிருக்க வனக் குறவர் தெலுங்கு மொழியினைச் சரளமாகப் பேசிவருகின்றனர். அத்துடன் தமிழ், சிங்களம், மலையாளம் போன்ற மொழிகளின் கலப்பும் அவர்களின் பேச்சு மொழியில் காணப்படுகின்றது (25). இலங்கைக்கு 1987ஆம் ஆண்டு
30 : வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு
 
 

வரவழைக்கப்பட்ட இந்திய அமைதிகாக்கும் படையினருடன் சரளமாக தெலுங்கு மொழியில் உரையாடியது மட்டுமல்லாது அவர்களிடம் பல்வேறு நிவாரண உதவிகளையும் பெற்றுக்கொண்டதாகவும் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டது தமக்கு கவலையளிப்பதாகவும் உள்ளது என குறவர் களினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. மேலும் நரிக்குறவர் தலைமுடியைத் தொடர்ச்சியாக வளர்ப்பது மட்டுமல்லாது தலைப்பாவையும் கட்டிக்கொள்வது வழக்கமாகும். ஆனால் வனக்குறவர் களிடையே இவ்வழக்கினைக்கான முடியவில்லை. ஆனால் சாத்திரஞ் சொல்லும் குறவர்கள் சிவப்பு நிறச்சால்வையினை தலைப்பாவாக அணி யும் வழக்கமுண்டு.
பொருளாதாரத் தேட்டத்தைக் கருத்திற் கொள்ளுமிடத்து இருபிரி வினரும் வேட்டையாடுபவர்கள். ஆனால் தாமோ அல்லது தமது மூதாதையினரோ எக்காலத்திலும் நரிவேட்டையாடியதில்லை என்பதை வனக்குறவர் கடுஞ்சினத்துடன் கூறியுள்ளனர்(26). பன்றி, மான், முயல், பறவைகள், உடும்பு போன்றவற்றை வேட்டையாடி உண்பவர்களே வனக்குறவர்கள். நகரங்களிலும், வணக்கத்தலங்களிலும் பாம்பாட்டி பணம் சேர்ப்பவர்கள். இதற்காக நாகபாம்பினைப்பிடித்து, பழக்கி பாம் பாட்டுகின்றனர். கொடிய விஷமுள்ள பாம்புகளைப் பிடிப்பதில் வல்லவர் களாக வனக்குறவர் காணப்படுகின்றனர். ஆனால் நரிக்குறவர் பாம்பாட்டிப் பிழைப்பதை விரும்பாதவர்களாக காணப்படுகின்றனர்.
வணக்குறவர், நரிக்குறவர் ஆகிய இரு பிரிவினரும் தென்னி ந்தியாவில் 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் இருந்து வாழ்ந்து வந்திரு க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வனக்குறவரின் மொழி யில் இந்தோ-ஆரியப் பண்பாட்டினைக்கான முடியவில்லை. மாறாகத் தெலுங்கு மொழி பேசுபவர்களானபடியால் தென்னிந்தியாவே அவர்களது தாயகம் எனக்கொள்ள இடமுண்டு. இரு பிரிவினரும் சமூக, பண்பாட்டு ரீதியில் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் இல்லையென்றே கூற வேண்டும். ஆனால் வனக்குறவர்களுக்கும் தென்னிந்தியாவில் வாழ் ந்துவரும் ஏனைய பழங்குடிகளுக்குமிடையில் வாழ்வாதாரநிலை மற்றும் அவர்கள் தம் பண்பாடுகளைக் கருத்திற்கொள்ளின் பல விடயங்களில் வேற்றுமையில் ஒற்றுமைப் பண்புகளைக் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு நோக்கற்பாலது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வனக்குறவர் இலங்கைக்கு எக்கால த்தில் வந்துள்ளனர் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியாத விடத்தும் அவர்களால் பேசப்படும் மொழி சிதைவடைந்து சென்றுள்ள நிலை போன்ற வற்றின் மூலம் சில முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. இவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கான சான்றுகள் உண்டு. எனினும், எக்காலத்தில், எவ்வாறு இலங்கைக்கு
(பேராசிரியர்காகுகபாலன் . . . . . . . 总T வனக்குறவர்: வாழ்வியல் ஆய்வு D

Page 20
வந்தனர் என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுள்ளது. நாட்டினை ஆங்கிலேயர் ஆட்சிபுரிந்த காலத்தில் வந்திருக்க முடியாது. தென்னிந் தியாவிலிருந்து பெருந் தோட்டம் மற்றும் ஏனைய துறைகளில் தொழில் வாய்ப்பைப் பெறத் திட்டமிட்ட அடிப்படையிலேயே உள்வரவு அனுமதிக் கப்பட்டிருந்தது. தேவைக் கேற்பவே குழுக்கள் குழுக்களாக அழைத்து வரப்பட்டனர். வசதி படைத்த தென்னிந்தியர்களும், வர்த்தக நோக்க த்துக்காக வருகை தந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னரும் காலத்துக்குக் காலம் சாதியடிப்படையிலான உள்வரவு மேற்கொள்ள ப்பட்டது. இவர்களில் தெலுங்கர்களும் அடங்குவர்.
போர்த்துக்கீசர் (1505-1658), ஒல்லாந்தர் (1658 - 1796) ஆட்சிக் காலங்களில் அவர்களால் வெளியிடப்பட்ட குறிப்புகளில் வனக்குறவர் பற்றி எதனையும் காணமுடியவில்லை. ஆனால் ஒல்லாந்தர் ஆட்சியில் தென்னிந்தியாவிலிருந்து சாதியடிப்படையிலான தொழில்களை மேற் கொள்வதற்காகச் சிலரை அழைத்து வந்ததற்கான தகவல்கள் அடங்கிய குறிப்புக்களைக் காணமுடிகின்றது. இது இவ்வாறிருக்க இலங்கையில் சோழர் படையெடுப்பின் பின்னர் இராசதானிகள் சிதை வடைந்தன என வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதிகளில் வரண்ட பிரதேச மக்கள் குடியிருப்பின்றி - பொருளாதார செயற்பாடுகளின்றி - சுற்றுப்புறச் சூழல் பராமரிப்பின்றி - மலேரியா, கொலரா நோய்களின் உக்கிரத்தினால் பெருமளவிலான மக்கள் மடிந்திருக்கவேண்டுமென அறியக் கிடக்கின்றது (27). எனவே ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் வனக்குறவர் வந்திருப் பார்களேயானால் இறப்புக்கள் இவர்களிடையே நிகழ்ந்திருக்க வாய்ப் புண்டு. அதாவது உள்வரவு மிக நீண்டகாலமாக இருந்திருப்பின் இவர் களுக்கும் தென்னிந்தியாவில் வாழ்ந்துவரும் பழங்குடியினருக்குமிடையில் வாழ்க்கை அமைப்பில் வேறுபாடு காணப்பட்டி ருக்கலாம். அவர்கள் பேசும் மொழியில் சிதைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதாவது, இவ்விரு பிரிவினரிடையே கலாசார, பண்பாட்டுக் கோலங்களில் வேறுபாடு காணப் பட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறில்லை. பிறப்பு, விவாகம், ருதுவாதல், இறப்புச் சம்பந்தமான சடங்குமுறைகளில் பெரியளவில் வேறுபாட்டினைக் காணமுடியவில்லை. எனவே இவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னர் வந்துள்ளனர் என்ற முடிவுக்கு வரமுடியாது. தென்னிந்தியாவில் மட்டு மல்லாது இந்தியா முழுவதிலும் காலத்துக்குக் காலம் அரசியல் அமைதி யின்மை ஏற்பட்டுள்ளது. அக்காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள் வதற்காக நாட்டைவிட்டு வெளியேறியிருக்கவும் வாய்ப்புண்டு. எனவே இவற்றையெல்லாம் தொகுத்து நோக்குமிடத்து வனக்குறவரின் வருகைக் காலம் சில நூறு வருடங்களுக்குள்ளாகவே இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ள இடமுண்டு.
இந்நிலையில், வனக்குறவர் பேசும்மொழி தெலுங்கு ஆயினும் நீண்டகாலமாக வெவ்வேறு சமூகங்களுடன் வாழ்ந்து வருவதனால்
 
 

மொழிச்சிதைவு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. எனவே இவர்கள் பேசும் மொழி மற்றும் எக்காலத்தில் இலங்கைக்கு வந்துள்ளனர் என அறிய முற்படும்போது பின்வரும் வழிமுறைகள் கையாளப்பட்டன. வனக்குறவர் பேசும் மொழியினை ஒலிப்பேழையில் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி.ப, புஸ்பரத்தினம் அவர்களின் துணை யுடன் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியற்றுறைப் பேராசிரியர்.ஏ. சுப்ப ராஜலு மற்றும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக மொழியியற்றுறைப் பேராசிரியர் விஜயவேணுகோபால் அவர்களது உதவியுடன் மொழி மற்றும் வருகை க்காலம் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. -
“ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாடாவில் உள்ள மொழி தெலுங் காகும். பெரும்பாலான சொற்கள் தூய தெலுங்குக்குரியவை. இலக்கணம், வசன அமைப்பு,தெலுங்கு மொழிக்குரியவை. இம்மொழியோடு கன்னட, மலையாள, சிங்கள, தமிழ், ஆங்கிலச் சொற்களும் கலந்துள்ளன. தமிழ், சிங்கள கலப்பினை அவதானிக்கும் போது இவர்கள் சிங்கள, தமிழ்ப் பிரதேச மக்களோடு தொடர்பு கொண்டிருத்தலைக் காட்டுகின்றது. இதனால் பேசப்படும் தெலுங்கு மொழியினைப் பார்க்கும்போது இம்மக்கள் பலநூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து வருவதையே சுட்டிக் காட்டுகின்றது. அதாவது பேசப்படும் பாணி தற்காலத் தெலுங்கு மொழியி லிருந்து முற்றிலும் வேறுபட்டு இலங்கையில் பெரும்பான்மையோரால் பேசப்படுகின்ற தமிழ், சிங்கள மொழிப்பாணியுடன் ஒத்துள்ளன. இம் மாற்றம் குறுகிய காலத்தில் இடம்பெற்றிருக்க முடியாது. வனக்குறவர் களை ஒத்த பழங்குடிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவதுடன் இழி தொழில் மற்றும் நகரச்சுத்திகரிப்பாளர்களாகவும், தெருக்கூட்டுபவர்களாக வும் உள்ளூராட்சி மன்றத்தின் மலச் சுத்திகரிப்புத் தொழிலாளர் களாகவும் இருக்கின்றனர். இவர்களின் மூதாதையினரே வனக்குறவர் எனக்கொள்ள இடமுண்டு. வனக்குறவரில் ஒரு பகுதியினர் காடுகளில் தனி இனக்குழு வினராகவிருந்து வேட்டையாடுதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதுடன் இவர்க ளது உள்வரவுக்காலம் 400 வருடங்களாகவிருக்கலாம் எனலாம். வனக் குறவரின் வரலாற்றுப் பின்னணியானது இலங்கைக்கும் ஆந்திராவுக்கு மிடையில் நீண்டகால வர்த்தகத் தொடர்புகள் உண்டு என்பதனை விளக்கி நிற்கின்றது. 10ஆம் நூற்றாண்டிலிருந்து தெலுங்கு, கன்னட, மலையாளம் பற்றிய குறிப்புக்கள் உண்டு. தெலுங்கு மொழிபேசும் குறவர் 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகளிலிருந்து இலங்கையில் குடியேறியிருக் கலாம். இக்கால கட்டத்தில் தோன்றிய விஜய நகர, நாயக்க அரசுகள் இலங்கையில் தமிழ், சிங்கள அரசுகளுடன் அரசியல், வர்த்தக, கலாசாரத் தொடர்புகள் கொண்டிருந்தமைக்கு போதிய சான்றுக்ள் உண்டு. இக்காலகட்டத்தில்தான் வணிகர், படை எடுப்பாளர், கலைஞர் எனப்பல பிரிவினர் இலங்கையில் குடியேறினர். அவ்வாறு குடியேறிய பிரிவினரில் ஒரு பிரிவினராக 'வனக்குற வர்களைக் கருதலாம். இம்மக்க ளைக் காலப்போக்கில் சுதேச தமிழ், சிங்கள மன்னர்களும் போர்த்து
டுரோசிரிய

Page 21
க்கீசர், ஒல்லாந்தரும் அடிமைகளாகவும், இழிதொழில் புரிவதற்காகவும் பயன்படுத்தியபோது ஒரு பிரிவினர் நகரத்தில் தங்கிவாழ இன்னொரு பிரிவினர் காடுகளுக்குச் சென்று வேட்டையாடல் போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். தற்போது இலங்கையில் வாழ்ந்துவரும் வனக்குறவர்களே இவர்கள் எனக் கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்’(28).
எவ்வாறெனினும் மேற்படி ஆய்வாளர்கள் இவர்கள் சம்பந்தமான ஆய்வு மேலும் விரிவு படுத்தப்படும் பட்சத்தில் முழுமைத் தன்மையினைப் பெற்றுக்கொள்ளமுடியும். வனக்குறவர் சம்பந்தமான ஆய்வினை மேற் கொள்ளும்போது தாம்சார்ந்த பல்கலைக்கழகங்களின் ஆய்வு மையங் களுடாக சகல வழிகளிலும் உதவிகள் வழங்கப்படும் என கலாநிதி ப. புஸ்பரத்தினம் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப் பிடப்பட வேண்டிய விடயமாகும்.
உசாத்துணை
0)- Knox Robert. An Historical Relation of Sri Lanka. p-70
02- Rasanayagam. S. Ancient Jaffna, p-4-5.
03- Rasaunayagam. S. p-5
04. குணராசா.க. “குடியேற்றங்களால் இழந்து போன தமிழ்ப்பிரதே சங்கள்
முத்தமிழ்விழா மலர். ப-129,
05. Parker. H. Ancient Ceylon. 1929.
06- Rasanayagam. S. p-4
07. தனபாக்கியம்.ஜி. இலங்கையில் தொல்லியலாய்வுகளும் திராவிடர்
கலாசாரமும், ப-245,
08- Chandra Richard de Silva. Sri Lanka. A Surrey, p-5, ” 4ልኡ
09- Census of Ceylon 1946. Vol I. Part I. General Report. p-l62.
10. வீரகேசரி நாளிதழ் - 5.2.2000 ப-2.
1 - Census of Ceylon - 1946. Vol I. Partl. General Report. p-68.
12- Ibid. p (8
13- Ibid. p 68
14- bid, p 232
15- Raghavan M.D., Handsome Beggars. The Story of The Ceylon Rodiya.
p-l-2.
16- Arunachalam. P. Census of Ceylon. 1901. Vol I. p-78.
I7- Denham. E. B. Census of Ceylon. 1911, pp-23-28
18- Raghavan M.D.. Handsomic Beggars...... p-86-92.
19. Somanader S.V.O. Gipsies of Ceylon. CeylonTo day. April 1956.
20- கலாநித.ப. புஸ்பரத்தினம் அவர்களுடனான கலந்துரையாடலன் மூலம்
தெரியவந்தது.
(3 ராசிரியர்.கா.:தகாலன் 出4 வனக்குறவர் :ை1ழ்வியல் ತಿ)jal_
 

21. கல்முனை நகரில் சாத்திரஞ்சொல்லி பிழைத்துவரும் சின்னத்தம்பி அவர்
22232-4. 25.
26
27. 28.
மனைவி லக்சுமியுடனான பேட்டி கோ.சீனிவாசவர்மா: நரிக்குறவப்பழங்குடிகள், பக்: 1.
மேற்படி நூல் பக்3-4
மேற்படி நூல் பக்:41-42 வனக்குறவர்களிடமிருந்து ஒலிப்பேழையின் மூலம் பெறப்பட்ட பேச்சு மொழி யினை பேராசிரியர்களான எ. சுப்பராயலு, விஜயவேணுகோபால் ஆகியோரின் அவதானிப்புகள் மூத்தவயதினரான எஸ்.வெங்கட்டன் மற்றும் பரிசாரி மசண்ணா என்பவர் களுடனான பேட்டி
Sarker NK Demography of Ceylon. p-7-8 பேராசிரியர் எ.சுப்புராஜலு மற்றும் பேராசிரியர் விஜயவேணுகோபால் அவர் களின் கருத்து.
CKD
(G ராசிரியர்கள்.(தாபாலன் 85 வ1ைக்குடிய்ை வாழ்வியலி ஆய்வு )

Page 22
இயல்+
வணக்குறவரின் பரம்பல்
ஆய்வுக்குட்பட்ட இலங்கையில் வாழும் வனக்குறவரின் எண்ணி க்கை 1999ஆம் ஆண்டு மதிப்பீட்டின் பிரகாரம் 5500 ஆகும். நாடோடி மக்களாகிய குறவர் நாட்டின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், கலாவேவா, தம்புத்தேகம, பொலநறுவை, விஜதபுர, மன்னம்பிட்டி போன்ற பகுதிகளிலுள்ள காடுகளிலும் அதனைச் சார்ந்த பிரதேசங்களிலும் அதிகளவில் வாழ்ந்து வந்துள்ள போதிலும் நாடுமுழுவதும் நாடோடிக ளாகத் திரிந்து வாழ்வாதாரத்தைத் தேடி வாழ்ந்துள்ளனர் என்பதை அவர்களுடனான சந்திப்புக்களின் போதும் அவர்கள் சம்பந்தமர்ன தக வல்கைளை அறிந்தவர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடிந்தது. குறவர் கூட்டம் வடக்கே பருத்தித்துறையில் இருந்து தெற்கே தேவேந்தி ரமுனை வரையும் கிழக்கே சங்குமான்கந்தையிலிருந்து மேற்கே கொழும்பு வரையும் பாதயாத்திரை மூலம் சென்று வாழ்வாதாரத்தைப் பெற்று வந்து ள்ளனர். அதாவது நாடு முழுவதும் பரந்து திரிந்த போதிலும் வரண்ட பிரதேச மழைக்காட்டுப்பகுதிகளிலேயே வாழ்ந்துவந்துள்ளனர். 1950 களையடுத்து வரண்ட பிரதேசங்களில் குடியானவர் குடியேற்றத் திட்ட ங்களை ஏற்படுத்திய போதும் உள்ளூர் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட நிலையிலும், குறவர்களில் ஒரு பகுதியினர் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த காடுகளில் அதாவது மட்டக்களப்பு, அம்பாறைமாவட்டக் காடு களுக்கு தமது வாழ்விடங்களை மாற்றினர்.
சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களைச் சார்ந்த காடுகளைத் தெரிவு செய்து வாழந்ததற்கு பல்வேறு காரணிகளைக் குறிப்பிடலாம். வடமத்தியமாகாணப் பிரதேசம் வரலாற்றுக் காலங்களில் இருந்து குளங்கள், கால்வாய்கள், ஆறுகளைக் கொண்ட பகுதியாகும். காலப் போக்கில் அரசியல் காரணிகளின் பாதக விளைவுகளினால் மக்கள் வாழ் வதற்கேற்றதல்லாத நோய்கள், இறப்புக்களை ஏற்படுத்தும் பிரதேச ங்களாக மாறியது. 1930களைத் தொடர்ந்து இப்பிரதேசம் அபிவருத்தி செய்யப்படல் வேண்டும் எனப் பலராலும் சிந்திக்கப்பட்டது. அதன்
(பேராசிரியர்காகுகபாலன் 36 வனக்குறவப் வாழ்வியல் ೩!ಣ!_!
 

விளைவாக 1950களில் குடியானவர் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப் பட்டதன் விளைவாக தென்மேற்குப் பிரதேசங்களிலிருந்தும் குடியடர்த் தியுள்ள பிரதேசங்களிலிருந்தும் மக்கள் வரழைத்து குடியேற்றப்பட்டனர்.
1950களுக்கு முன்னர் இலங்கையின் வரண்ட பிரதேசத்தில் மக்கள் அரிதாகவே வாழ்ந்து வந்த பகுதியாகவிருந்துள்ளதாலும், காட்டு வளம், நீர்வளம் என்பன அதிகமாக இப்பிரதேசங்களில காணப்பட்ட மையாலும் குறவர் இப்பிரதேசங்களை தெரிவுசெய்து வாழ்ந்துவந்தனர் எனக்கொள்ள வேண்டும். குடியேற்றத்திட்டங்கள், அதனோடிணைந்த சேவைமையங்கள் விருத்தி பெறவே இவர்களது வாழ்வாதார எல்லை ப்பரப்பு சுருக்கமடையத் தொடங்கவே வேறு பிரதேசங்களைத் தெரிவு செய்ய வேண்டியது தவிர்க்கமுடியாத தாகியது. நாடோடிகளுக்குரிய அனைத்துப் பண்புகளையும் கொண்ட வனக்குறவர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது அத்தியாயம் இரண்டில் மிகத் தெளிவாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. பொதுவாகச் சிங்களப் பெரும்பான்மையினர் வரலாற்றுக் காலங்களிலிருந்து இந்திய எதிர்ப்புணர்வுகளைக் கொண்டிருக்கின்ற மையால் நாட்டில் வாழும் தமிழர்கள் மீது வெறுப்படைந்தவர்களா கவுள்ளனர். பெரும்பாலான சிங்கள மக்களிடையே இந்தியாவில் தமிழர் கள் மட்டும்தான் வாழ்ந்து வருகின்றனர் என்ற தவறான கருத்தும் உண்டு. அந்த வகையில் வனக்குறவர்களையும் இந்திய எதிர்ப்புணர்வுடனேயே பார்த்து வந்துள்ளனர் என்பதனை 1958ஆம் ஆண்டு இனக்கலவரம் அதனைத் தொடர்ந்து காலத்துக்குக்காலம் நிகழ்ந்துவரும் இனரீதியிலான வன்செயல்களையும் குறிப்பிடலாம். வனக்குறவர்களும் இடப்பெயர்வுக் குள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வனக்குறவர் வடமத்திய மாகாணத்தில் வாழ்ந்த காலத்தில் தங்களிடையே தமது தாய்மொழியான தெலுங்கையும், பொதுமொழியாக சிங்களத்தையுமே பேசிவந்துள்ளனர். தற்போதும் வடமத்திய மாகாண த்தில் வாழும் குறவர்கள மேற்குறித்த மொழிகளையே பேசிவருகி ன்றனர். இவர்கள் நாடோடிகளாக இருக்கின்றமையால் தமிழ் மொழியையும் பேசக் கற்றுக் கொண்டனர். இவர்கள் வடக்கே யாழ்ப்பாணக் குடா நாட்டுப் பகுதி களுக்கும் 1970களுக்கு முன்னர் வந்துபோனதை பலர் ஞாபகப்படுத்து கின்றனர். அதேபோலவே குழுக்காளாகத் தமிழ்மக்கள் பெரும்பாலும் வாழுகின்ற வரண்ட பிரதேசங்களிலும் வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்ள நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் நிகழ்வதற்கு முன்னர் வந்து போயுள்ளனர். இவர்கள் குளங்கள், கால்வாய்கள் சார்ந்து குடிசைகளை அமைத்திருந்தனர்.
1950களைத் தொடர்ந்து வனக்குறவர்களில் ஒரு தொகுதியினர்
பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசக்காடுகள் சார்ந்து இடப்பெயர்வினை ஏற்படுத்திக் கொண்டனர். குறிப்பாக அம்பாறை
(G. ராசிரியர்.கா:குகாலன் 岔7 வரைக்குறவர் வாழ்வில் ஆய்வு )

Page 23
மாவட்டத்தைச் சார்ந்த காட்டுப்பிரதேசங்களில் தற்காலிக குடியிருப்புக் களை ஏற்படுத்தி அவர்கள்தம் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டனர். குறிப்பாக புளியடிப்பிட்டி, மொட்டையாண்டவெளி, முள்ளிக்குளம், அம்பலத்தாறு, ஓடியவெளி, வெல்வெந்தா, பனையறுப்பன்கேணி, ஹிங் குரானக் காடுகளில் காலத்துக்குக்காலம் மாறி மாறி வாழ்ந்து வந்துள்ள னர் (1). இதனைத் தொடர்ந்து பெரியவிகாரை, சின்னவிகாரை, சங்கமித்த குளம், கைக்கேணி, கந்தம்வெளி, முதிர்ச்சோலை போன்ற இடங்களிலும் குடியமைத்து வாழ்ந்து வந்தனர். இக்காலத்தில் இவர்கள் மேல் அரசாங்க மோ அன்றி அரசசார்பற்ற நிறுவனங்களோ எந்தவித அக்கறையும் கொண் டிருக்கவில்லை.
நாடோடிகளாக வாழ்ந்து வந்த வனக்குறவர் வாழ்வினை மாற்றி யமைக்க வேண்டுமென்பதில் எவரும் அக்கறை கொள்ளாத நிலையில் அருட்திரு. கொட்பிறீகுக் அடிகளார் அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தார் (வனக்குறவர் அடிகளாரை கொக்குச் சாமியார் என்று அழைத்து வருகின்றனர்). அக்கரைப்பற்றைச் சேர்ந்த அளிக்கம்பை என்ற இடத்தில் 1961ஆம் ஆண்டு புனித சவேரியார் தேவாலயம் ஒன்றினை நிறுவி கத்தோலிக்க மதத்தை தழுவ விரும்புபவர்களுக்கு ஞானஸ்தானம் செய்து வைத்தார். அத்துடன் நாடோடி வாழ்க்கை யிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக குடிசைகள் கட்டிக் கொடுக்கப் பட்டது. அத்துடன் அக்காலப்பகுதியில் பொத்துவில் தொகுதிப் பாராளு மன்ற உறுப்பினராகவிருந்த அமரர்.எம். கனகரத்தினம் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வீடுகளைக் கட்டிக் கொடுத்தார் எனப் பெருமையுடன் ஞாபகப்படுத்துகின்றனர். எனினும் நிரந்தரமான குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தபோதிலும் அவர்கள் பாரம்பரிய மாக்கடைப்பிடித்துவந்த வாழ்க்கை முறைகளைக் கைவிடவில்லை. ஆரம்பத்தில் காலத்துக்குக் காலம் குடும்பங்களாக நாடோடி வாழ்க் கையை மேற்கொண்டுவந்தனர். எனினும் அளிக்கம்பையைச் சேர்ந்த பகுதிகளில் விவசாய நிலங்களும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தமையால் சிலர் விவ சாயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர். அத்துடன் பிச்சை எடுத்தல், விவசாயத் தொழிலாளர்களாகச் செல்லல், வேட்டை யாடல் போன்ற தொழில்களில் தொடர்ந்தும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இவர்களைத் தவிர திருக்கோவிலைக் கடந்துசென்ற ஒரு பகுதியினரை ஒன்றுகூட்டி காஞ்சிரங் குடாவில் குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் பாரம்பரியக் கடவுளர்களையே தற்போதும் வணங்குகின்றனர்.
1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்த வன்செயல்களின் தொடர்ச்சியாக அளிக்கம்பையில் வாழ்ந்து வந்த குறவர் சமூகம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உடமைகள் சேதமாக் கப்பட்டும், பல உயிர்களை இழக்கவேண்டியும் ஏற்பட்டது. பலர் காயமடை ந்தனர். இதனால் புதிய இடங்களைத் தேடவேண்டிய நிலை அளிக்கம்பை
(c. ராசிரியர்.கா.கு:காலண் ;8ኦ3 hisனக்குறவர் வாழ்வியல் ஆப்வு )
 

வாழ் வனக்குறவர்களுக்கு ஏற்பட்டது. இவர்கள் வாழ்ந்த இடத்தில் இரானுவ அதிரடிப்படையினர் தற்போது முகாமிட்டுள்ளனர். அதேபோல காஞ்சிரங்குடாவிலும் அதிரடிப்படை முகாம் அமைக்கப்பட்டதால் அங்கி ருந்தும் வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே இவ் விருபிரதேசங்களிலும் வாழ்ந்து வந்த குறவர்கள் திருக்கோவிலிலுள்ள கள்ளியந்தீவு என்ற திடலில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் முயற் சியினால் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் அளிக்கம்பையில் வாழ்ந் துவந்த கிறிஸ்தவ குறவர்களும், காஞ்சிரங்குடாவில் வாழ்ந்து வந்த இந்துக் குறவர்களும் தனித்தனி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு குடிசைகள் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்களப்பிரதேசங்களில் வாழ்ந்து வரும் குறவர்கள் கள்ளிய ந்திவில் வாழ்ந்து வரும் குறவர்களோடு ஒப்பிடுமிடத்து பொருளாதார ரீதியில் வசதிபடைத்தவர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சென்று வாழ் கின்றனர். எனினும் சிங்கள, தமிழ் பிரதேச குறவர்களிடையே விவாகத் தொடர்பு காணப்படுகின்றது.
உசாவியவை
01. ஏயாரெம் சலீம். அக்கரைப்பற்று வரலாறு. பக்:44-50.
CKD
(பேராசிரியர்காகுக l'H:6ði 34) னைக்குறவர் வாழ்ூடில் ஆய்வு ノ
|

Page 24
வாழ்வியலும் சடங்கு முறைகளும்
உலகில் வாழும் எந்தவொரு சமூகமும் அவர்களால் பின்பற்ற ப்பட்டு வரும் சமூக, பனப்பாட்டு கோலங்கள் அவர்கள் வாழந்து வரும் பெளதிகச் சூழலுடன் அதாவது சுற்றுப்புறச் சூழலுடன் நெருங்கிய தொடர் பினைக் கொண்டிருக்கின்றன, மேலைத்தேச, கீழைத்தேச பண்பாடுகளும் இந்தவகையிலேயே அமைந்து கானப்படுகின்றன என்றால் மிகையாகாது. அதேபோலவே உலகில் நாகரிக மக்களிலிருந்து பிரிந்து, தனித்து வாழ்ந்துவரும் பழங்குடிகளும் தாம் வாழும் சுற்றுச்சூழலின் பணிபுகளை உள்வாங்கியவர்களாக வாழ்ந்து வருகின்றனர் என்றே கூறவேண்டும். நாகரிக வாழ்வியுடன் கூடிய மக்கள் ஒருவருக்கொருவர் விரும்பியோ விரும் பாமலோ உலக சமூகத்தவர்களுடன் இணைந்து வாழவேண்டிய சூழ் நில்ை அன்னம்க்காலங்களில் உரத்து நிற்கின்றபோது பழங்குடிகள் தமது பாரம்பரிய் முறையிலிருந்து விடுபடுவதற்குத் தம்மைத் தயார்படுத்து பவர்களாகவில்லை. அவர்களை நாகரிக சமூகத்தவர்களோடு இணைத்துச் சேஸ்வதற்கு பல்வேறு செயற்றிட்டங்களைச் செயற்படுத்தி வரினும்,அவர்கள்ை புதிய சமூகத்துக்கு மீட்டெடுப்பது என்பது சிரமமான தாக்iே:காணப்படுகின்றது. உலகில் சில அரசுகள்' பழங்குடிகளை நாகரிக சமூகத்துடன் இணைப்பதற்கு பதிலாக மறைமுகமாக அவர்களை இல்லா தொழித்தலிலும் செயற்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினுமி எதிர்காலத்தில் புதிய சமூக அமைப்புடன் அவர்களை இணைத் துக் கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்ாகும்,
பழங்குடி மக்களிடையே குறிப்பாக தென்னிந்தியாவில் பழங்குடிக ளால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சடங்குமுறைகள் வேற்றுமையிலும் ஒற்றுமைப் பண்புகளைக் கொண்டமைந்ததாகவும், வேடிக்கையானவையா கவும் இருப்பதை அவர்கள் பற்றி மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊர்ஊராக சுற்றித்திரிகின்ற நாடோடிகள் தங்களுக்
ஆய்வு)
山、霹圆鸥 層黜 H:
ரஜ்ததால்ன்: 40 இTவணக்குறவர்ஜியல்:
 
 
 

குள்ளே விந்தையான புதுமையான, பழங்குடிச் சட்டங்களையும் ஆச்சரிய த்தக்கவகையில் அமைந்துள்ள பழக்கவழக்கங்களையும் கொண்டவர் களாகக் காணப்படுகின்றனர்.
வணக்குறவரின் குடியிருப்பானது தாளிப்பனை ஓலையினால் வேயப்பட்டதுடன் அருகருகே குடியிருப்புக்களையும் கொண்டிருக்கின்றது. இக்குடிசை 10 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டமைந்துள்ளதுடன் வடக்கு-தெற்குப் பார்வையுடையதாகவுள்ளது. இக்குடிசைக்குள் குடும்ப அங்கத்தவர் மட்டுமல்லாது வாழ்வாதாரத்துக்குத் தேவையான பித்தளைப் பாத்திரங்கள், ஈட்டிகள், ஏனைய ஆயுதங்கள், பாய்கள், பைகள், துணி மண்ணிகள் பாம்புப்பேட்டிகள், தானியங்கள், உலர்த்திம இறைச்சி வகை கள், கோழிகள், முட்டை இடுவதற்கான பெட்டி, நாய் படுப்பதற்கான வசதிகள் காணப்பட்டிருக்கும். (1) குடும்ப அங்கத்தவர்கள் பாவரும் இக் குடிசைக்குள் வாழமுடியாது. பழங்குடிகளான துறவர் இக்குடிசைகளைச் சுற்றி இரவில் படுத்துக்கொள்வது வழக்கமாகும் (விளக்கப்படம் 3:1).
வணக்குரவரின் தடியிருப்பொன்று
விளக்கப்படம் 5;1 பழங்குடிகளான வனக்குறவர்களின் வாழ்க்கை அமைப்பில் குறித்த பிரதேசத்தில் சொற்பகாலமே வாழும் நிலை முக்கியமானதாகும், வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதற்குப் பொருத்தற்றது எனக்கருதும்

Page 25
பட்சத்தில் புதிய இடத்தினைத் தேடி அங்கு சென்றுவிடுவர். இவர்கள் மட்டும் இடம்பெயர்வதில்லை. அவர்களுடன் நூற்றுக்கணக்கான மந்தை கள் மற்றும் வேட்டைநாய்கள். கோழிகள், குரங்குகள். நாகபாம்புகள். புல்லாங்குழல் போன்றவற்றையும் தம்முடன் எடுத்துச் செல்லவேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்படுகின்றது. அத்துடன் அவர்களது குடியிரு ப்புக்கள் நாள்முழுவதும் சுறுசுறுப்பாயிருக்கும். ஆனால் துடியிருட்டைச் சூழ வுள்ள பிரதேசங்கள் சுற்றுப்புறச்சூழலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியாக ஒரிருநாட்களில் மாறிவிடும்,
பழங்குடிகளான வணக்குறவர்களின் வரலாறு, மூதாதையர் போன்றன பற்றிய அறிவு மிகக்குறைந்ததாகவே காணப்படுவதை கள ஆய்வின் மூலம் கண்டறியமுடிந்தது. இதற்கு அவர்களிடையே ஆயுள் எதிர்பார்ப்பு மிகக்குறைவாகவே காணப்பட்டிருப்பதேயாகும். தங்கள் முன்னோர் பற்றி அறிய அவர்கள் முற்படுவதுமில்லை.அவர்கள்தம் நோக் கங்கள் யாவும் அன்றாட வாழ்க்கையைப் பற்றியதேயாகும். எனினும் வனக்குறவர் களிடையே நிகழும் சடங்கு முறைகள் விந்தையாகவும் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்களையும் கொண்டிருக்கின்றது.
துநத்திப் பென்
 
 

குறவர்களைப் பொறுத்தவரை எதிலும் ஆர்வம் கொண்டவர்க எாகவிருப்பதில்லை. வயதில் முத்த ஆண்கள் பெரும்பாலும் அசுத்தமான, போதாததான, கிழிந்த ஆடைகளையே அணியும் பழக்கம் கொண்டவர் களாகவும் தலைமுடியை நீளமாகவும், குடுமி வைத்திருப்பவர்களாகவும் இருந்துள்ளனர். பொதுவாக துணிமணிகளைத் துவைத்துக்கட்டும்பழக்கம் இவர்களிடையே குறைவென்றே கூறவேண்டும். தமது குடும்பங்களில் நல்ல நிகழ்ச்சிகளோ அன்றில் பொதுவான வருட நிகழ்ச்சிகளிலோ மூத்த ஆண்கள் மற்றயை துடும்ப அங்கத்தவர்களைப்போல புத்தாடை அணிந்து ஆடிப்பாடி மகிழ்வர். பொதுவாகக் கணவன்மார் தங்கள மனைவிமார் மீது பேரன்பு கொண்டவர்கள். அதேபோல மனைவிமார் தங்கள் கணவன் மீதும் பிள்ளைகள் மீதும் அன்பையும் பாசத்தையும் சொரிவர். ஆண் பிள்ளை களிலும் பார்க்கப் பெண்பிள்ளைகளில் தந்தையார் அதிக பாசம் கொண்ட வர்களாயிருப்பதைக் கானமுடிகின்றது.
குநத்திப் பெண்கள் ஆண்களிலும் பார்க்க கவர்ச்சியானவர்கள். எப்போதும் சந்தோஷமாகவிருப்பார்கள். இற்றைக்கு ஐம்பது ஆண்டுக குளுக்கு முரன்னர் பெண்கள் மார்புச்சட்டை அணிவதில்லை, பருத்திச் சேலையினால் மாரடை மூடிக் கொள்வாள் (விளக்கப்படம் 5:2). ஆனால் இவ்வழக்கு தற்போது ஒழிந்துவிட்டது.
துறவர் துடும்ப அங்கத்தவர்கள்

Page 26
வயதுசென்ற சில பாட்டிகளே தற்போதும் மார்புச் சட்டைபோடாமல் இருப்பதைக் காணமுடிகின்றது. பெண்கள் பொதுவாகத் தங்களை அலங்கரித்துக் கொள்வர். கழுத்தில் காசுமாலை, நிக்கல்காப்பு, மூக்கில் மோதிரம் போன்றவற்றை அணிந்து கொள்வாள், விவாகமான பெண்கள் தாலியாக பாசிமணி, சிறுமணிகளை அணிந்து கொள்வர். கணவன் மற்றும் ஆண்பிள் ளைகள் வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்வதறதுச் செல்லும் வேளை களில் பெனர்கள் சுறுசுறுப்பாக ஓய்வு ஒழித்தலில்லாமல் வீட்டுவேலை களில் மூழ்கியிருப்பர். அரிசி, புடைத்தல், மாவு அரைத்தல், சமைத்தல், தண்ணிர்எடுத்தல், பாய்கள் பின்னுதல், பானைசட்டிகளைக் கழுவுதல் போன்ற பல வேலைகளில் நாளாந்தம் ஈடுபடுவர்.(விளக்கப்படம் 5:3.
துறவள் ஒருவர் பாம்பாட்டுவதையும் ஆய்வாளரும் உதவியாளரும் கவனிப்பதையும் காட்டும் படம்
 
 

பாம்பாட்டிச் சீவிப்பதுதான் துறவர்களின் முக்கியமான தொழிMI எாகவிருக்கின்றபோதிலும் அன்ைமைக்காலங்களில் இது நலிவடைந்து விட்டது என்றே கூறவேண்டும், பாம்பு பிடித்தல் என்பது குறவர்களின் கைவந்தகலையாகும். நாகLாம்பு, மலைப்பாம்பு போன்றவற்றைப்பிடித்து அவற்றின் பல்லினை பிடுங்கிய பின்னர் தங்களில் ஒருவராக்கிக்கொள்வர். மலைப்பாம்பு சோம்பேறியானது எனக்கூறும் வனக்குறவர் அவற்றைக் காட்சிப் பொருளாகக் காண்பிப்பது வழக்கமாகும். நாகபாம்பே ஆடக் கூடியது. இதனைக்கொண்டே அதிகபணம் சம்பாதிக்கின்றனர். அத்துடன் பாம்பிலிருந்து பெறக்கூடிய பொருட்களைவிற்று பணமாக்கிக் கொள்வர் (விளக்கப்படம் 8:4).
விவாகம்:
பழங்குடிகளிடையே விவாக நடைமுறையானது வேவ்வேறு வகைப்பட்டதாகவுள்ளது. விவாகம் செய்தலானது பாலியல் இச்சை யினைப் பெற்றுக்கொள்வதற்குத்தான் என்பதை இச்சமூகங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. விவாகIானது புனிதமானதும், வாழ்வில் முக்கியமா னேதும் எனத் தெரிவிக்கின்றனர். எனினும் விவாக நடை முறைகளைக் கருத்திற்கொள்ளும் போது நாகரிக மக்களிடையே காணப்படும் நடை முறைகளிலிருந்து வேறுபட்டதாகவும் சிலவேளைகளில் ஏனைய சமூகங் களினால் அங்கீகரிக்கப்பட முடியாதனவாகவும் காணப்படுகின்றது. குறிப் பாக பழங்குடிகளிடையே விவாகம் செய்வ தற்கான உறவு முறைகள் வெவ்வேறுபட்டனவாக அமைந்துள்ளன. உதாரணமாக கேரளாவில் பாணன் டவர் பரம்பரையினர் எனத் தம்மைக் கருதிக்கொள்ளும் பணிக்கள்’ என்ற பழங்குடி மக்ககளின் விவாக நிலைப்யில் சகோதரர்கள் யாவரும் ஒரு பெண்னை விவாகம் செய்யும் முறை கானப்பட்டிருந்தது(2). இதே போலவே தோடர்களில் ஒரு பெண்ணானவள் கணவனோடு உடன் பிறந்தவர்களுடன் உடலுறவு கொள்ளும் நிலையும், பால்ய விவாகமும் நடைமுறையில் இருந்து வந்துள்ளன(3). எனினும் அண்மைக்காலங்களில் இத்தகைய பண்பாடு குறைவடைய விவாக நடைமுறைகள் பெரிதும் அரு கிவிட்டன. அதேபோலவே மலைவாழ் காணிக்காரன் சமூகத்தில் காத லுக்குப் பின்பே விவாகம் என்ற நிலை நடைமுறையிலிருந்துள்ளது. மன்னான் சந்ததியி னரிடையே விவாக வயதடைந்த ஆணானவன் குறித்த காலம் பெண் வீட்டில் தங்கியிருந்து வேலைசெய்தல் வேண்டும், அவரது வேலைத் திறன், துணவியல்புகளை அறிந்த பின்பே விவாகம் செய்யும்
முறையும் காணப்பட்டது (4).
விவாக வாழ்வுக்கான பங்காளிகளைத் தெரிவுசெய்யும் பண்

Page 27
பினைப் பொறுத்தவரை பழங்குடிகளிடையே பல சந்தர்ப்பங்களில் ஒற்று மைப்பண்புகளைக் கொண்டிருக்கின்றபோதிலும் வேற்றுமைப் பண்புகளும் காணப்படாமலில்லை. குறிப்பாக இந்தியாவில் மன்னான் என்ற பழங்குடியி னரிடையே தாய்மாமன் மகளை விவாகம் செய்யும் முறையைக் காண முடிகின்றது. இவர்களிடையே உடன்பிறந்த சகோதரியின் மகளையோ அன்றில் சொந்தமாமியின் மகளையோ விவாகம் செய்தல் தடைசெய்யப் பட்டுள்ளது (5). புலையர் இனத்தவரிடையே விவாக உறவு மாமா, மைத்துனர் என்ற வகையில் அமைந்துள்ளது. இலங்கையில் பொதுவாக எல்லாச் சமூகங்களிடையே தாயின் சகோதரனை விவாகம் செய்யும் பண்பு அறவே இல்லை எனக்கூறலாம்.
சில பழங்குடிசமூகங்களில் தமது கூட்டத்தில் உள்ளவர்களி டையே விவாகம் செய்வதில்லை. ஒரு கூட்டத்தினர் வேறு கூட்டத்தி னரிடையே விவாகம் செய்வது மரபாகவுள்ளது. அதாவது இவர்கள் ஒரே இனத்தவர் களாகவிருப்பினும் குழுக்கள் குழுக்களாக வாழும் பண்பி னைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடப்படல் வேண்டும். அதாவது தமது இனத்தவர்களையே விவாகம் செய்வதில் உறுதியாகவிருக்கின்றனர். எனினும் மாறிவரும் உலகில் இத்தகைய இறுக்கமான வழக்கில் தளர்ச்சியைக் காணக் கூடியதாகவுள்ளது.
விவாக நடைமுறைகள்:
இலங்கையில் வாழும் வனக்குறவர்களும் இந்தியாவினைத் தமது பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்கள் பொதுவாக இந்தியாவில் வாழ் ந்துவரும் பழங்குடி மக்களது பண்பாடுகளை உள்வாங்கியவர்களாக இரு க்கின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கடந்த சில தசாப்த காலமாக இவர்களது விவாக நடைமுறைகளில் பெருமளவிற்கு மாற்றங் களை அவதானிக்க முடிந்தபோதிலும் பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து விடுபட்டவர்களெனக் கூறமுடியாது.
வணக்குறவர் சமூகம் இருகுழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அதாவது, தாபலோர், துகுடோர் என்பனவே அக்குழுக்களாகும். மேற் குறித்த இரு குழுக்களும் தாங்கள்சார்ந்த குழுவுக்குள் விவாகம் செய்ய மாட்டார்கள். அவ்வாறு செய்வது இச்சமூகத்தினால் தடைசெய்யப் பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள் யாவரும் சகோதரர்கள் என்ற நிலைக் குட்பட்டவர்கள். எனவே விவாகம் செய்யும்போது மாற்றுக் குழுவிலிருந்தே துணையினைத் தேடிக்கொள்கின்றனர். இந்நிலையானது இவர்கள் காடு களில் வாழ்ந்திருந்த அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந் திருந்த காலங்களில் விவாகத்திற்கான உறவு முறைகளில் மிகவும்
பேராசிரியர்.கா:குகாலன் 45 வனக்குறவர் வழ்வியல் ஆய்வு
每 ---
 

இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தனர் என்பதை வயோதிபர் களாகவிருப்பவர்களிடம் கேட்டறிய முடிந்தது. எனினும் தற்போதும் இம்முறையினைப் பின்பற்றி வருகின்றனராயினும் தற்போதைய சூழ்நிலை யில் தம்மைச்சூழவுள்ளவர்களின் பண்பாடுகளை உள்வாங்கும் நிலை விருத்தி பெறவே விவாக நடைமுறையில் மாற்றங்களும் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
வணக்குறவரின் குழுக்களான துகுடோர் குழுவில் உள்ள பெண் அல்லது ஆண் ஒருவருக்கு தாபலோர் குழுவில் உள்ள ஆண் அல்லது பெண் ஒருவரையே விவாகம் செய்து வைத்தல் மரபாகும். எந்தக் குழுவில் ஆண்களை விவாகம் செய்கின்றனரோ அவர்கள் (பெண்கள்) அக்குழு வினராகி விடுகின்றனர். பெண்ணானவள் தனது குழுவிலிருந்து நீக்கப் படுவது மட்டுமல்லாது தாம் ஏற்கனவே சார்ந்த குடும்பத்துடன் உள்ள உறவை - தொடர்பைக் கண்டிப்பாக மட்டுப்படுத்தலுடனேயே பராமரிக்க வேண்டியவளாகின்றாள். அதேவேளை விவாகம் செய்யும் ஆண் தனது மனைவியின் உறவினர்களைக் குறிப்பாக அவளது சகோதரிகளை தனது சகோதரிகள் போல கருதிச் செயற்படல் வேண்டும் என்ற நடைமுறை உண்டு.
இந்தியப் பழங்குடிகளான வனக்குறவர்களிடையே இந்தியாவில் விவாக நடைமுறையில் காணப்படும் மாமன் - மருமகள் விவாக நடை முறை காணப்படவில்லை. பல நூற்றாண்டுகளாகத் தனிமையாக வாழ்ந்து வந்துள்ளமையால் தமக்கேயுரித்தான விவாக நடைமுறைகளைப் பின் பற்றி வருகின்றனர் எனக் கொள்ள இடமுண்டு. எனினும் இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நிகழ்ந்துவரும் யுத்தத்தின் விளைவாகத் தொடர்ந்தும் காடுகள் சார்ந்த பிரதேசங்களில் வாழமுடியாத நிலை ஏற்படவே நாட்டுப் புறங்களை நாடிச் சென்றமையால் சமூகப் பண்பாட்டு நிலைகளில் படிப்படியான மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதாலும் விவாக நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காண முடிந்தாலும் தங்களது பாரம்பரிய முறைகளை முடிந்தவரை பேணி வருகின்றனர் என்றே கூறல் வேண்டும்.
வணக்குறவர் சமூகம் கடந்த சில தசாப்தங்களாக வேண்டத் தகாதவர்களாக, ஆதரவளிப்போரற்றவர்களாக, தீண்டத்தகாதவர்களா கவே கணிக்கப்பட்டு வந்துள்ளனர். தற்போதும் அந்நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூற முடியாது. இதனால் தமக்கு ஆத ரவளிப்போருடன் பாசம் கொண்டவர்களாகவுள்ளனர். கத்தோலிக்க பாதிரி மார்கள் உதவிக்கரம் நீட்டவே இவர்களில் பெரும்பாலானோர் கத்தோ லிக்க மதத்தைத் தழுவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை அறிந்தோ அறியாமலோ அம்மார்க்க வழியினைப் பின்பற்றினாலும் விவாக நிலையினைப்பொறுத்தவரை தங்களது பாரம்பரிய முறையினைப் பின்
(பேராசிரியர்.கா.கு:காலன் 47 னைக்குறவர் வாழ்வியல் ஆய்வு )

Page 28
பற்றுபவர்களாக விருப்பதைக் காணமுடிகின்றது. அதாவது சடங்கு முறைகள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்ததாகவிருப்பினும் விவாகம் செய்பவருக்கான பங்காளிகளைத் தெரிவு செய்வதைப் பொறுத் தவரை தற்போதும் முன்னைய நடைமுறையினையே பின்பற்றுகின்றனர். அதாவது தாபலோர் குழுவினரை துகுடோர் குழுவினரே மணம் செய்கின்றனர்.
வணக்குறவர் வாழ்வில் விவாகம் செய்வதற்குத் தமக்குள்ளே சில விதிமுறைகளை வகுத்துச் செயற்பட்டு வருகின்றனர். உதாரணமாக ஒரு குழுவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தனது மகளுக்கு மாற்றுக்குழுவில் உள்ள குடும்பத்தவரிடம் மணமகனைப் பெற்றுக்கொள்ளும் போது இரு குடும்பத்தாரும் இணைந்து நிச்சயார்த்தத்தினைத் தமது பாரம்பரிய முறைப்படி செய்து விட்டு பின்னர் விவாகத்தினை கத்தோலிக்க மார்க்கத் தினடிப்படையில் செய்து கொள்கின்றனர். இவர்கள் தவிர பாரம்பரிய மத வழிபாடுடையவர்கள் தமது பாரம்பரியமுறைப்படியே விவாகம் செய்கின்ற னர். தற்போதைய நிலையில் இந்நிலை அருகிச் சென்றிருந்தபோதிலும், விவாகத்திற்கான நிச்சயார்த்தம் நடைபெற்ற பின்னர் விவாகத்திற்கு முன்னர் கணவனாக வருபவர் தனக்கு மனைவியாக வருபவரின் தாய்க்குப் பால்க் காசாக ரூபா 7/50 சதம் கொடுக்க வேண்டும் என்ற நியதியுண்டு. அதாவது அந்தப் பெண்ணைப் பெற்று பால் கொடுத்து வளர்த்ததற்காகவே இது வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு குடும்பங்களிடையே விவாகம் செய்து கொள்ளும் போது குடும்ப அங்கத்தவர்கள், குழுத்தலைவர், மற்றும் தம்மினப் பெரியோர்கள் முன்னிலையிலேயே நிச்சயதார்த்தம் செய்யப்படும். அப்போது மாப்பிளை வீட்டார் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றுடன் மதுபானமும் கொண்டு சென்று பரிமாறப்பட்ட பின்னர் விவாகநாளைத் தீர்மானிப்பர், விவாகம் போன்ற மங்களகரமான நிகழ்வுகளிலும் மதுபானம் பரிமாற ப்படுவது சாதாரண வழக்க்மேயாகும்.
நாகரிகம் படைத்த சமுதாயங்களிலாயினும் சரி பழங்குடிச் சமூகங்களிலாயினும் சரி விவாகத்தின் போது சீதனம், வரதட்சனை, கொடுக்கும் வழக்கு வழிவழியாக வந்த நடைமுறையாகவுள்ளது. இவ்வாறான முறை மனமகின் அல்லது மணமகள் குடும்பத்திடமிருந்து பெறப்படுகின்றது. சீதன முறையானது பல்வேறு படிமங்களைக் கொண்டதாக வளர்ச்சி பெற்றிருப்பது மட்டுமல்லாது விவாக காலத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தோற்றுவிபப்துடன் பிரிந்து வாழும் நிலை, தற்கொலை, கொலைகளிலும் முடிவடையும் நிலையினைத் தென் னாசிய நாடுகளின் விவாக கலாசாரத்தில் ஆங்காங்கே காண முடிகி ன்றது.
வனக்குறவர்களைப் பொறுத்தவரை விவாகம் செய்யும்போது
 
 

சீதனம், நன்கொடை என்பன வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதாக விருக்கின்றதேயொழிய தகுதிக்கேற்ப சீதனம் என்பதில்லை என்றே கூறல் வேண்டும். ஏனெனில் இவ்வனக்குறவர்கள் யாவரும் மிகத் தாழ்ந்த பொருளாதார, பண்பாட்டுக்குட்பட்டவர்களாவர். அதேவேளை அசையாச் சொத்துக்களில் அதிக நாட்டமற்றவர்கள். காலத்துக்குக் காலம் இடம்பெயரும் பண்பினைக் கொண்டவர்கள். இதனால் தமது வாழ்வாதா ரத்தை மேற்கொள்வதற்காகவே சீதனம் என்ற பெயரிலல்லாது சில பொருட்களை வழங்குவதாகத் தெரிவிக்கின்றனர். விவாகத்தின்போது மணமகளுக்குப் பெற்றோர் பாம்பு, பாம்புப்பெட்டி, சிறிய குடில், சட்டி, பானை, ஈட்டி, கத்தி என்பவற்றுடன் வேட்டை நாய்களையும் வழங்குகின் றனர். (விளக்கப்படம் 5.5)
வேட்டைக்குப் புறப்படுவதற்கு தயாராகும் நிலை
விளக்கப்படம் 5:5
அத்துடன் பாம்புக்குணவான எலிகள், தவளை களைப் பிடித்து பாதுகாத்து வைப்பதற்கான பெட்டிகளையும் வழங்கு கின்றனர். வணக்குறவரின் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் கருவியாக மந்தைகள் உள்ளன. அதிகளவு மந்தைக் கூட்டங்கள் கொண்டிருப் பவர்கள் வசதியானவர்களாகக் கருதப்படுவர். எனவே தங்கள் வசதிக் கேற்ப மந்தைகளும் சீதனமாக வழங்கப்படும் முறையும் இருந்து வந்து ள்ளது. அண்மைக் காலங்களில் இத்தகைய பொருட்கள் வழங்கும்முறை

Page 29
படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு செல்கின்றன. ஆய்வு மேற்கொ ள்ளப்பட்ட பிரதேசத்தில் நான்கு குடும்பத்தினரிடம் மட்டுமே பாம்புகள் உண்டு. ஆனால் ஈட்டியைப் பொறுத்தவரை எல்லாக் குடும்பத்தவர்க ளிடமும் பொதுவாகக் காணக்கூடியதாகவுள்ளது. எனினும் வனக் குறவர் குடும்பத்தினர் நாய்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இந்நாய்கள் வேட்டையாடுவதற்கே வளர்க்கப் படுவதனால் அவற்றினை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. இந்நாய்கள் வேட்டையாடுவதற்கு மட்டுமல்லாது பாம்புகளுக்கு உணவாக எலிகளைப் பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியாவில் வாழும் பழங்குடிகளிடையே விவாகத்திற்கான சடங்கு முறைகளைப் பொறுத்தவரை ஆங்காங்கே சில ஒற்றுமைப் பண்புகளைக் கொண்டிருந்தாலும் தமக்கேயுரித்தான சில தனிப் பண்புகளைக் கொண்டி ருக்கின்றன. இலங்கையில் வனக் குறவர்களைப் பொறுத்தவரை இரு வீட்டாரின் சம்மதத்தினைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களுக்கு வச தியான நாளில் விவாகச் சடங்குளைச் செய்து வைப்பர். பெரும் பாலும் தை, மாசி மாதங்களிலேயே விவாகச் சடங்குகள் நடைபெறும். விவாக நிகழ்வானது ஐந்து நாட்கள் நடைபெறும். வெள்ளை அல்லது கறுப்பு பாசிமணி மாலையையே மணமகன் மணமகளின் கழுத்தில் அணிவார். இதுவே தாலியாகக் கருதுவர். கணவன் முதலில் இறப்பாரேயானால் அவரது இறந்த உடலின் மேல் இம்மாலையைக் கழற்றிப் போட்டு விடுவது வழக்கமாகும். அத்துடன் சின்னி விரலில் செம்பு அல்லது வெள்ளியிலான மோதிரத்தினை மாற்றிக்கொள்வர். விவாகம் நடந்த பின்னர் மணமகள் அடுத்துவரும் ஐந்து நாட்கள் குடிசை கட்டி தனித்து விடப்படுவர். மணமகளுக்கு அவரது நெருங்கிய பெண் உறவினர்கள் காவல் காப்பர். இதனைத் தொடர்ந்து அடுத்தநாள் மணமக்களை தனிக்குடிலில் வாழ அனுமதிப்பர். மாறிவரும் இச்சமூக அமைப்பில் இம்முறையானது அருகி வருவதைக் காண முடிகின்றது.
பொதுவாக விவாக நிகழ்வென்றால் வனக்குறவர் சமூகம் குதூ கலத்தில் ஆழ்ந்திருப்பர். விவாகச் சடங்கு நடைபெறும் ஐந்து நாட்களும் உறவினர்களைச் சேர்த்து சமைத்து உண்பர். அந்நிகழ்வில் முக்கியமாக மதுபானம் பரிமாறப்படும். இதில் ஆண், பெண் வேறுபாடு காட்டப் படாதுவிடினும் காட்டுப் பிரதேசங்களில் இருந்து இடப்பெயர்ந்து தற்போது வாழ்ந்துவரும் பகுதிகளில் கணிசமான பெண்கள் பொது நிகழ்வுகளில் மதுபானத்தை அருந்துவது மிகக் குறைவென்றே இவர்களிடம் மேற் கொண்ட கலந்துரையாடலின் போது அறிய முடிந்தது. எனினும் சாதாரண வாழ்வில் கணவரது விருப்புடன் மதுபானம் அருந்துவது பெரும்பாலா னோரிடம் காணப் படுகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
பெண்களுக்கு தாலிக்கொடி அணிவதற்குப் பதிலாக பாசிமணி
(பேராசிரியர்காகுகாலன் 5 வணக்குறவர் வாழ்வியல் ஆய்வு )
 

யினை அணிவதற்குக் காரணம் உள்ளது என்பதையும் அறியக்கிடக் கின்றது. முன்னொரு காலத்தில் தங்கள் மூதாதையினரின் ஒரு விவாக நிகழ்வின்போது மணமகன் மணமகளுக்கு அணிவதற்கான தாலியினைச் செய்வதற்கு மறந்துவிட்டார். அப்போது அங்கிருந்த பெரியோர் புதிதாக தாலியினைச் செய்வதற்கு ஒருவரை நகை செய்பவரிடம் அனுப்பினார்கள். அவர் நீண்ட நேரம் திரும்பி வராததனால் அதற்குப் பதிலாக கறுப்பு பாசிமணி மாலையினை தாலியாக கட்ட நேர்ந்தது எனவும் அன்றிலிருந்து தாலியாக அதனையே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் அவர்கள் வாயிலாக அறிய முடிந்தது (6).
விவாக வாழ்விலாயினும் சரி அல்லது அவர்கள் தம்வாழ்க்கைக் காலங்களிலாயினும் சரி ஆண்களோ அன்றில் பெண்களோ பாலியல் நடத் தையிலோ அன்றில் வேறு துர்நடத்தையினாலோ முறை தவறி நடப்பின் அவர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்பை ஒத்த சபையி னால் தண்டனை வழங்கும்முறை இச்சமூகத்தினரிடையே மேலோங் கியிருந்ததைக் காணமுடிகின்றது. குறிப்பாக இச்சமூகத்தினரில் பெண் ஒருவர் குற்றமிழைத்திருப்பின் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும் என்பதை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவ லின் மூலம் அறிய முடிந்தது. ஒரு பெண் பாலியல் ரீதியில் குற்றம் புரிந்தவர் என நிரூபிக்கப்பட்டால் எட்டுவீட்டு அம்மிகளைத் தலையில் சுமந்து தாம் வாழும் பிரதேசத்தினைச் சுற்றிவரல் வேண்டும் என்ற தண்ட னை பொதுவானதாகவிருந்துள்ளது என்பர். இதேபோலவே ஆண்களா யினும் சரி பெண்களாயினும் சரி குற்றம் செய்தால் கொதிக்கும் எண் ணெய்ச் சட்டிக்குள் கையை வைக்கச் செய்தல், கிடங்கு வெட்டி காரை முள்ளுகளை நிரப்பி அதன் மேல் நடக்கச் செய்தல் என்பன போன்ற தண்டனைகளும் வழங்கப்பட்ட சம்பவங்களும் தம்மினத்தில் காணப்பட் டிருந்ததாகக் கூறினும் அண்மைக்காலங்களில் வழக்கொழிந்து போய் விட்டதாகக் கூறுவதைக் காணமுடிகின்றது. குறிப்பாக ஆண்கள் குற்றமி ழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால் பணமாகவோ அன்றில் சாராயப் போத் தல்களாகாவோ தண்டம் விதிக்கப்படுகின்றது. வனங்களில் வாழந்த போது இவ்வாறாகப் பெறப்பட்ட தண்டத்தினை அச்சமூகத்தவர்களே பெற்று மகிழ்ந்தனர். ஆனால் தற்போது இத்தகைய தண்டப் பணத்தினைச் சமூகத்தின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்திவருகின்றனர் எனத் தெரிவிக் கப்படுகின்றது.
பெண்கள், விவாகம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்ட குழு வினரில் விவாகம் செய்தாலோ அன்றில் பாலியலுறவில் ஈடுபட்டாலோ அதனைக் கடுமையான குற்றமாகக் கருதித் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதுடன் தாம் பயன்படுத்தும் கிணற்றில் தண்ணீர் பெற அனுமதி மறுக்கப்படுவதுடன் உறவினர் வீடு களில் அம்மி, குழவி, உரல், உலக்கை போன்றவற்றைக்கூட கொடுத்
பேராசிரியர்காககாலன் 5 வரைக்குறவர் வழ்வில் ஆய்வு
J s: '! }lléki

Page 30
துதவக்கூடாது என்ற தண்டனையும் ஏற்கனவே கூறப்பட்ட தண்டனை களோடு சேர்த்து வழங்கப்பட்ட போதிலும் அண்மைக் காலங்களில் அருகி விட்டது. இத்தகைய குற்றச் செயல்களுக்கு இலங்கையில் நடைமுறை யிலுள்ள சட்டங்களினடிப் படையில் நீதி வழங்கப்படுகின்றமை குறிப்பிட த்தக்கது.
கணவன்-மனைவியரிடையே மனக்கசப்பு அல்லது சந்தோ வாழ்வில் குறுக்கீடுகள் ஏற்படுமிடத்து பெண்ணானவள் தனது பெற்றோரின் வீட்டுக்கும் செல்ல வேண்டும். கணவன் தனது நிலையினை நியாயப் படுத்துவதற்கும் பகிரங்கப்படுத்துவதற்கும் தமது குழுத் தலைவரிடம் முறையிட்டு ஊரைக் கூட்ட வேண்டும். தலைவரால் தண்டிக்கப்படுபவர் தண்டமாக பணம் மற்றும் சாராயம் போன்றவற்றை வழங்க வேண்டும். பணம் தண்டனைக்கேற்ப அறவிடுவதற்குத் தலைவரால் கட்டளை யிடப்படும். இம்முறையும் தற்போது செயலிழந்து, இலங்கையின் நீதிச் சட்டத்தின் பிரகாரம் தீர்வு காணப்படுகின்றது.
வணக்குறவரிடையே கணவன் - மனைவி உறவுநிலை மிக இறுக்க மாக அன்றும் இன்றும் பேணப்படுகின்றது. எனினும் கணவன் தனது மனைவியை விடுத்து வேறு பெண்ணுடன் பாலியல் தொடர்பினை ஏற்படு த்தும்பட்சத்தில் அவருக்குத் தண்டனை வழங்கப்படும். இது பெண்ணுக்கு வழங்கப்படும் தண்டனையிலும் பார்க்க குறைவானதேயென குறத்திப் பெண்களின் அபிப்பிராயமாகவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் முதல் மனைவி விரும்பினால் இரண்டாவது மனைவியையும் சேர்த்து வாழ அனுமதி க்கப்படுகின்றார். அவ்வாறு மூத்த மனைவி விரும்பாத பட்சத்தில் இரண் டாவது மனைவியோ அல்லது பாலுறவில் ஈடுபட்டவரோ ஏழு வீட்டு அம்மிக்கல்லைத் தூக்கிச் செல்ல வைப்பதுதான் தண்டனையாக விருப்பதுடன் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கபபடுகிறாள் அல்லது தங்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து துரத்தப்படுகின்றாள். இவையும் அண்மைக் காலங்களில் அருகிச் செல்கின்றது.
விவாக காலத்தில் கணவனோ அன்றில் மனவிையோ இறக்கும் பட்சத்தில் மறுமணம் செய்வதற்குச் சமூகத்தவரின் அங்கீகாரம் உண்டு. ஆனால் தான் சார்ந்த குழுவிற்குள் செய்யக் கூடாது என்பது கட்டாய விதியாகும். அதேவேளை ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவரின் சகோத ரனை விவாகம் செய்வது என்பது குற்றமாகும். அதாவது அண்ணனின் மனைவி தாய்க்குச் சமமாக மதிக்கப்படுவதேயாகும். அதேவேளை கணவன் மனைவியரிடையே உறவில் விரிசல் ஏற்படுமிடத்து குழுத்த லைவரின் அங்கீகாரத்துடன் விவாகரத்துக்களும் வழங்கப்படுகின்றது. விவாகரத்துப் பெற்றோர் மறுமணம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படு கின்றது.
(பேராசிரியர்.காருகபாலன் 5) வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு )
 

இறப்புச் சடங்கு
இவ்வுலகில் பிறக்கும் எவரும் இறப்பது என்பது பொது நியதி யாகும். இறப்புக்கான காரணிகள் அவரவர்களின் உயிர்க் கூற்றியலுடனும் பொருளாதார, சமூக, பண்பாட்டுக் காரணிகளுடனும் தொடர்புடையது. இவ்வாறாக இறப்புக்களைத் தழுவுகின்றவர்களுக்கு அவரவர் சார்ந்த சமூக பண்பாட்டுப் பண்புகளுக்கமைய சடங்குமுறைகள் செய்யப்பட்டு புதைத்தோ அல்லது எரித்தோ விடுவது வழக்கமாகும். இந்த வகையில் பழங்குடிகளின் சடங்கு முறைகளும் வெவ்வேறு பட்டனவாக அமைகி ன்றன. குறிப்பாக நரிக்குறவர் தமது உறவினரில் ஒருவர் இறந்து விட்டால் அவரது ஆவி தாங்கள் வாழும் குடியிருப்பினைச் சுற்றி வரும் என்பதால் தமது குடியிருப்பினை மாற்றிக் கொள்கின்றனர். அதேபோல் இறந்த உறவினரின் ஆவி தங்களைத் துன்புறுத்தாது இருப்பதற்காகவும் நினைவு கூருவதற்காகவும் அவர்களை வணங்கும் முறையும் சில பழங்குடி களிடையே காணப்படுகின்றது. (7) அதாவது இறப்போடு தொடர்புடைய சடங்குமுறைகளின்மூலம் மறு உலக தத்துவத்தை வெளிக்கொணர்வதை யே காட்டி நிற்கின்றது எனலாம்.
இலங்கையில் வாழும் வனக்குறவரிடையே இறப்புடன் தொடர்பான சடங்கு முறைகள் இலங்கையில் நாகரிகமடைந்த சமூகத்தவர்களிடமிரு ந்து பெருமளவிற்கு வேறுபட்டுக் காணப்படடாலும் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் வாழும் பழங்குடிச் சமூகத்தினருடன் பெருமளவிற்கு ஒற்றுமைப் பண்புகளைக் கொண்டிருப்பதை இவர்கள் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து அறிய முடிகின்றது. குரங்கின் பிணத் தையும் குறவனின் பிணத்தையும் காணமுடியாது என்பதற்கமைய குடும் பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவ்வுடலை விரைவில் கொண்டு சென்று புதைத்து விடுவார்கள் எனச் சில அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ள போதிலும் தாம் அவ்வாறு செய்வதில்லை எனவும், சடங்கு வைபவத்தை மேற்கொண்ட பின்னரே புதைக்கக் கொண்டு செல்லப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது (8).
குடும்பத்தில் ஒருவா இறந்துவிட்டால் அச்சமூகமே கண்ணிர் வடிப்பர். பொருளாதார அமைப்பைப் பொறுத்தவரை வனக்குறவரிடையே வேறுபாடில்லை. சகலரும் அன்றாடம் பிழைப்பூதியஞ் செய்து வாழ்க்கை நடத்துபவர்கள். சேமிப்பு என்பது அவர்களிடம் இல்லை. ஒருவர் இறந்தால் அவர் சார்ந்த குழுவினரிடம், குடும்ப உறுப்பினர்களிடம், குழுத் தலை வரிடம் இறப்புச் சடங்குச் செலவுக்காகப் பணமாகவோ அன்றில் பொரு ளாகவோ பெற்றுக் கொள்ளும் வழக்கம் இன்று வரை நிலவி வருகின்றது. இவ்வாறு கிடைக்கப்பெறும் பணத்தை நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளிலுள்ள
(ch ராசிரியர்.கா.குகாலன் 53 வரைக்குறள்ை வாழ்வில் ஆய்வு)

Page 31
வர்த்தக நிலையங்களுக்குச் சென்று புதுத்துணி (சாவுப்புடைவை), கயிறு, வெற்றிலை, பாக்கு, மதுபானம் போன்றவற்றை வாங்கி வருவர். இறந்தவர் ஆணாகவிருந்தால் தாடியினை வழித்துக் குளிப்பாட்டி சாவுப்புடைவையை உடுத்தி அவர்களது குடிலில் பன்பாயில் (தெனனோலையை ஒத்த ஒலையினால் பின்னப்பட்டது) கிடத்தி வைப்பர். உப்பு, மிளகாய் சேர்க் காமல் பிண்ணாக்கு, முமங்கை இலை, (காட்டிலுள்ள ஒரு வகை மரத்தின் இலை) நெத்தலிக்கருவாடு, அரிசி போன்றவற்றை ஒன்றாக அவித்து இறந்த உடலின் பக்கத்தில் வைப்பர். அத்துடன் அவர்களின் வழக்கப்படி உடலின் பக்கத்தில் பாத்திரம் ஒன்றில் தண்ணிரும் வேறொன்றில் மணலும் வைப்பர். இவர்களது கருத்துப்படி இறந்தவர் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகவே வைக்கப்படுகின்றது எனக் கூறுகின்றனர். அத் துடன் இறந்தவரின் வாயில் மஞ்சள்த்தூளைக் குழைத்து வைத்து அதன் மேல் வெற்றிலை, பாக்கு வைக்கும் வழக்கமும் உண்டு.
மறுபிறப்பு உண்டென்பதைப் பலமாக நம்பும் வனக்குறவர் இறந்தவரின் உடலைப் புதைத்த பின்னர் அவ்விடத்தில் ஒரு குடிசையை அமைத்துவிட்டுத் தாம் வாழும் பிரதேசத்துக்கு வெளியே சென்று விடுவார்கள் எனத் தெரிவிக்கப்படினும் இளம் குறவர் சமூகம் அதனை எதிர்க்கின்றனர். பாடையை அவர்களது குடிசையிலிருந்து எடுத்துச் செல்லும் போது வளைத்து வளைத்து எடுத்துச் செல்வார்கள். ஆவி திரும்பி நேராக வீட்டுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அப்படிச் செய்கின்றனர்.
இறப்பு நிகழ்வின்போது பெண்கள் ஒப்பாரி பாடும் முறையும் உண்டு. இறந்தவரின் கவலையை அல்லது தமது குடும்பத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இராகத்துடன் ஒப்பாரி செய்வது வழக்கமாகும். ஆனால் தற்போதைய இளம் சமூகத்தினர் தங்களது கவலையை அழு கையின் மூலமாகவே தீர்த்துக்கொள்கின்றனர்.
குடிலுக்கு முன்பாக பந்தல் போடப்படும். ஏனெனில் உற்றார், உறவி னர்கள் வந்து அடக்கம் செய்யும் வரை தங்கியிருப்பதற்கேயாகும். வனக் குறவரிடையே இறந்த உடல்களைப் புதைக்கும் வழக்கமேயுண்டு. இறந்த வரின் உடலை அடக்கம் செய்வதற்காகப் பாடை கட்டுவதற்காக உறவி னர் காட்டுக்குச் சென்று கம்பு வெட்டி வருவர். நீள்சதுரமாகக் கட்டப்பட்ட கம்புகளின் மேல் பன்பாயை விரித்து அதன்மேல் இறந்தவரின் உடலை வைத்துத் தூக்கிச் செல்வர். ஏற்கனவே வெட்டி வைத்துள்ள குழியில் உடலை வைத்து குழியை மூடிவிடுவர். அதன்மேல் உடலைக் காவிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகளை குழியின் மேல் வைத்துவிட்டு அவர் வாழ்நாளில் உண்ட உணவுகளை எருக்கிலையில் வைத்துப் படைப்பர். அதன் பின்னர் எட்டாம் நாள் சென்று குழியின் மேல் வைத்தி ருந்த கம்புகளை எடுத்து வீசிவிட்டு வருவர் என அனுமுத்து ரங்கன் என்ற
(பேராசிரியர்கா குகாலன் 54 வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு
 

குறவன் தெரிவிக்கின்றார் (9).
இறந்த உடலை அடக்கம் செய்யுமிடத்துக்கு ஆண்களும் பெண் களும் செல்வது வழக்கமாகும். குடும்பத்தில் கணவன் இறக்கும் பட்சத் தில் மனைவி தங்களது விவாகநாளின்போது கணவனால் கட்டப்பட்ட கறுப்பு மணிமாலையினைக் குழியில் கணவனின் உடலின் மேல் போட்டு விடுவது வழக்கமாகும். மஞ்சள் கயிறு கட்டும் வழக்கம் இவர்களிடம் காணப்படவில்லை. அடக்கம் செய்த பின்னர் அவருக்கு உரித்தான ஆண் அல்லது பெண்ணுக்கு மூன்று சுளகு நீர் வார்த்துவிட்டு இரும்பு ஒன்றி னைக் கையில் கொடுத்து கூட்டி வந்து விடியும் வரை தனிமையில் வைக் கப்படுவர். காலையில் கோழி ஈரல், கோழிமாங்காய் போன்றவற்றை அரிசி ச்சோற்றுடன் கலந்து ஆக்கி சுளகில் கொட்டி காகத்திற்கு வைத்த பின்னரே மற்றவர்களுடன் கதைப்பார்.
ஒருவர் இறந்த மூன்றாவது புதன்கிழமை வனக்குறவர் குடும்பங்களின் முக்கியமான நாளாகும். அன்றைய தினம் தமது உற வினர்களை அழைத்து விருந்தளிப்பர். இந்நிகழ்வின் பொருட்டு காடுகளில் வேட்டையாடிய கோழி, பன்றி, உடும்பு போன்றவற்றின் இறை ச்சிக்கறியுடன் விஷேடமாக மதுபானம் பரிமாறப்பட்டு உணவு உண்பர். வெற்றிலைபாக்குச் சுவைப்பது இவர்களது முக்கியமான பொழுது போக்காகும். இந்நிகழ்வுக்கு தேவையான பொருட்களை அருகில் உள்ள சேவை மையங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்வர்
வணக்குறவரிடையே நிகழும் இறப்புகள் தீட்டாகவே கருதப்படு கின்றது. தீட்டானது இறந்த பின்னர் மூன்று புதன்கிழமை வரையும் இருக் கும் எனவும் அக்காலங்களில் வீட்டில் அம்மி, உரல், சட்டி, பானை யினைத் தொடுவதில்லை எனவும் அதன்பின்னர் வீட்டிலுள்ள பொருட்கள் யாவற்றையும் கழுவித்துடைத்துக் கொள்வதாகவும் கூறுவதுடன் அன்றிலி ருந்தே தீட்டுமுடிவடையும் என்பர்.
பிறப்புச்சடங்கு
பிறப்புடன் கூடிய சடங்குமுறைகள் இனத்துக்கு இனம், சமூகத்து க்கு சமூகம் வேறுபட்டனவாகவிருக்கின்றன. குழந்தையை எங்கு பெற்றுக் கொள்வது? என்ன பெயர் வைப்பது? பல் முளைக்கும்போது நிகழும் சடங்கு முறைகள் போன்றன வெவ்வேறுபட்டனவாகவிருக் கின்றன. வனக் குறவரிடையே பிறப்புச் சம்பந்தமான சடங்குகள் தென்னிந்தியாவிலுள்ள பழங்குடிகளை ஒத்துள்ளதாயினும் சில விடயங்களில் வேறுபாடு காணப் படாமில்லை.
5
5
( பேராசிரியர்.கா.குகாலன் வணக்குறவர் வாழ்வில் ஆய்வு つ

Page 32
வனக்குறவர் காடுகளில் வாழ்ந்தபோது குழந்தைப் பிரசவத்திற்கு உதவியாக அவளின் தாயாரே உடனிருப்பாள், குழந்தைப்பேற்றுக்கென தனியான குடில் (தளாபத்துக் கூடாரம்) அமைக்கப்படும். பிரசஸ்த்திற்கு உதவியாக அவர்களது சமூகத்தில் மூத்தவயதுடைய பெண்கள்சிலர் இருப்பர். குழந்தை பிறப்பதற்கான காலம் வந்ததும் குழந்தை பிறக்க வில்லை அல்லது பிறப்பதில் சிக்கல் இருக்குமோயின் பன்றிப்பல்லை அரைத்து சாறு எடுத்து முன்று தடவை கொடுத்தால் குழந்தை சுகமாகப் பிறக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். தற்போது துறவர் களிடையே நிகழும் பிறப்புக்களில் 0ெ0 சதவீதமானவை வைத்திய சாலையில் நிகழ்ந்தாலும் மேற்குறித்த பன்றிப்பல் சாற்றினைத் தாம் தற்போதும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர் (IU), மேலும் பெண் களின் பிரசவ வேதனையின்போது சிரட்டையில் பெருங்காயத்தை கரை த்து கணவன்-மனைவி இருவருக்கும் சமமாகக் குடிக்கக்கொடுப்பர் மனைவி வேதனைப்படுவதுபோல கணவனும் வேதனைப்படுள்ான். குழந் தை பிறக்கும்வரைக்கும் இந்த வேதனை முனகல் இருக்கும். இதற்கா கவே “குறத்தி பிள்ளைபெற குறவன் காயம் தின்பான்’ என்ற பழமொழி இவர்களிடையே உச்சரிக்கப்படுவதைக் காணமுடிகின்றது (11). (விளக்க L'ULLi 5:6)
இச்சமூகத்தில் பிரசவத்தாயினை மிகவும் கவனமாகப் பரTம்ரிக்கும் பண்பு நீண்டகாலமாக காணப்படுகின்றது. குறிப்பாக உடும்பு இறைச்சி, விரால்மீன், பரட்டைமீன், போன்றவற்றுடன் உணவினைக் கொடுப்பதுடன் பிரசவவேதனையிலிருந்து விடுபடுவதற்கு சில்சாராயம் (சாராயத்தில் ஒரு வகை} குடிக்கக்கொடுப்பர்.
குழந்தை பிறந்து திட்டுக்கழிக்கும்வரை தாபபும், குழந்தையும் தனியி டத்தில் இருக்கவேண்டும், 11 நாட்கள் கழித்து திட்டு நீக்கி குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவிக்கின்றபோதிலும் மூன்று மாதங்கள் தாயும் குழந்தையும் தளபத்துக் கூடாரத்திலேயே வைத்திருப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மூன்று தடவை குழந்தைக்கு மொட்டை
வெட்டுவது கடவுளுக்குச் செய்யும் துரோகம் எனக் கூறினும் அதுபற்றிய அறிவு அவர்களிடமில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் ஏனைய சமூகத்தவர்களைப்போல முடிவெட்டிக்கொள்கின்றனர். மேலும் கணவன்மனைவியரிடையே பாலியலுறவு மூன்று மாதங்களின் பின்னரே ஆரம்பிக்க வேண்டும் என்ற நியதி உண்டெனினும் அண்மைக் காலங்களில் இவற்றை எவரும் கண்டுகொள்வதாகவில்லை. இதனால் அடிக்கடி குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர் என மேரி என்ற குடும்பப் பெண் தெரிவித்துள்ளார் (12). தாய்க்கும் சேய்க்கும் தாய்,மாமி,கணவன் ஆகியோரே உணவு சமை த்துக்கொடுப்பர். ஆனால் இம்முறையானது தற்போதைய சூழலில் பெரு மளவிற்கு மாற்றமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இஜ்கிர்குகள்ல்ஜ் 5
:87°:35 '
 
 
 

குழந்தைகளுக்குப் பெயர்வைக்கும் நிகழ்வை பெரிதாகக் கொண் டாடுவதில்லை. அதேபோலவே பிறந்தநாள் நிகழ்வுகளையும் நினைவுகூரு வதில்60ல், காரணம், அதிக றப்புக்களை ஏற்படுத்துபவர்களாக இருப்பது மட்டுமல்லாது பிறந்த திகதியினையும் நினைவில் வைத்திருப்ப தில்லை. பொதுவாகக் துறவர் வனப்பகுதிகளில் வாழ்ந்தபோது குழந்தை களுக்குத் தெலுங்குழிேப் பெயரையே வைத்துள்ளனர். அதாவது பிறந்த குழந்தை ஆனாக.வெள்ளையாகவிருப்பின் "ஏரண்ன” என ம்ை, கறுப்பாகவிருப்பின் “நல்லண்ண" எனவும், பெண் குழந்தை வெள் யைாகவிருப்பின் “ஏரக்கா” எனவும், கறுப்பாயிருப்பின் “நள்லக்கா’ எனவும் பொதுவாக அழைப்ப,
நறத்திப்பெண் தன் துழந்தையுடன்
விளக்கப்படம் 3:
இவைதவிர காலப்போக்கில் செல்லப் பெயர்களாக தெலுங்குப் பெயர்களையே வைத்துள்ளனர். ஆனால் ஏனைய சமூகங்கள் வாழும்
யர்த்தகப்ான்ஜ் 57:வ்னக்குறவர்லாழ்வியல்ஆர்வு)
Fr.

Page 33
இடங்களைத் தெரிவு செய்தபின்னர் அப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் பெயர்களைச் சூட்டத்தொடங்கினர். பொதுவாக சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள குறவர் சிங்களப் பெயர்களையும், தமிழர் வாழும்பிரதேசத்திலுள்ள குறவர் தமிழ்ப்பெயர் களையும் வைத்துள்ளனர். எனினும் கத்தோலிக்க மதத்தைத் தழுவி யவர்கள் பங்குத் தந்தையினால் தெரிவிக்கப்படும் பெயர்களையும் குழந்தைகளுக்கு வைத்துவருகின்றனர். இருப்பினும் வீட்டில் செல்லப் பெயராக தெலுங்குப் பெயர்களைக்கொண்டு பிள்ளைகளை அழைக்கும்பண்பு தற்போதும் காணப்படுகின்றமை குறிப் பிடத்தக்கது.
ருதுவாதல் சடங்கு
பெண்பிள்ளைகளின் ருதுவாதல் சடங்குமுறைகள் உலகில் எல்லாச் சமூகங்களினாலும் கொண்டாடப்படும் நிகழ்வாகவுள்ளது. பெண் ணானவள் ருதுவாகின்றாள் என்றால், விவாகம் செய்வதற்குரிய தகுதி யைப் பெற்றுக்கொள்கின்றாள் என்பதுதான் அர்த்தமாகும். இலங்கையில் வணக்குறவர்களைப் பொறுத்தவரை இச்சடங்கு முறையினைச் சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளனர்; தற்போதும் கொண்டாடி வருகின்றனர்.
சிறுமி ருதுவானவுடன் சிறியகுடில் ஒன்றினை தமது குடிலுக்கு அருகில் அமைப்பர். அக்குடிலை நாகம்கொத்து, மங்குல்கரந்தகொத்து போன்ற மரங்களின் இலைகளினால் கூரையையும் சுற்றிவர பாதுகாப்புச் சுவரையும் அமைத்து சிறுமிபோய் வரக்கூடியதாக வழிவிடுவர். அதற்குள் எட்டுநாட்கள் தங்கவைப்பார். அப்பெண்ணுக்கு எட்டுநாட்களும் கறியில்லா மல் சாதம் மட்டுமே கொடுக்கும் வழக்கம் உண்டு. அதனைத் தொடர்ந்து பெண்ணுக்கு மஞ்சள்பூசி நீராட்டிய பின்னர் பேயை விரட்டுதல் என்பதற் காகக் கோழியினை வெட்டுவர். அதன்பின்னர் தங்கியிருந்த குடிலைக் கலைத்துவிடுவர். ருதுசாந்தி நிகழ்வினை நடாத்துவதற்கு பந்தல் ஒன்று போடப்பட்டிருக்கும். பந்தலைச்சுற்றித்துணியைக் கட்டு வார்கள். பெண்ணு க்குப் புத்தாடை அணிவிப்பர். காட்டில் உள்ள வேர் ஒன்றினைக்காய வைத்து அரைத்துக் குளிசையாக்கிக் கொடுப்பர். அத்துடன் வெற்றிலை பாக்கு போடக்கொடுக்கும் பழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகின்றது. வனக்குறவரிடையே வெற்றிலைபோட்டுக் கொள்வது சிறுவர்முதல் முதி யோர்வரை சர்வசாதாரணமான விடயமாகும். பொதுவாக ருதுவான பெண் ணுக்கு மதுபானம் குடிக்கக்கொடுப்பது வழக்கமாகும். எனினும் அண்மை க்காலங்களில் சில பெற்றோர் இதனை எதிர்க்கின்றனர். எனினும் முதி யோர் சிலர் ஏற்றுக்கொள்கின்றனர்.
ருதுசாந்தி நிகழ்வினை மிக நீண்டகாலமாகவே சிறப்பாகக் கொண்
பேராசிரியர்.கா.:ககாலன் . . . வணக்குறவர் வாழ்வியல் ஆய்வு
2ற
 

டாடுவது வனக்குறவர்களின் வழக்கமாகும். அண்மைக்காலங்களில் குறவரின் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களினால் ருது சாந்தி நிகழ்வு ஏனைய சமூகங்களிடையே காணப்படும் பண்புகளை உள்வாங்கிக் கொண்டுள்ள போதிலும் அடிப்படைப் பண்புகளிலிருந்து இன்னும் விலகிச் செல்லவில்லை என்பதை ருதுசாந்தி நிகழ்வொன்றினை அவதானித்ததிலிருந்து அறியமுடிகின்றது.
குறிப்பாக ருதுசாந்தி நிகழ்வுகளை ஒளிப்படம் எடுக்கும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிகழ்வில் மிகச்சந்தோஷமாக மதுபானம் அருந்தி ஆடிப்பாடி, வேட்டையாடிய மாமிசத்தை சமைத்து உண்டு மகிழ்வர். வருகை தருவோர் பெண்ணுக்குத் தங்களாலான அன்பளிப்புக் களை வழங்குவர்.
காதுகுத்துச் சடங்கு
வனக்குறத்திகள் நகைகள் அணிவதில் பெருவிருப்பம் கொண்ட வர்கள். கைவிரல்களில் மோதிரங்களும், கால்விரல்களில் மெட்டிகள், வெள்ளி, செம்பிலாலான காப்புகள், காதணிகள், மூக்குத்தி, கழுத்து மாலைகள், பூச்சிமணிமாலைகள், பிளாஸ்டிக், கண்ணாடி வளை யல்கள் போன்றவற்றை அணியும் வழக்கமுண்டு. அண்மைக் காலங்களில் தங்கத் திலான நகைகளை அல்லது தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை அணிகின்றனர்.
காதுகுத்துச் சடங்கோ அல்லது மூக்குத்திச்சடங்கோ இவர்களால் கொண்டாடப்படுவதில்லை. காட்டிலுள்ள வாளா மரத்து முள்ளே (விளா த்தி மரத்தை ஒத்தது) காதுகுத்துக்கு ஊசியாகப் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய வயதிலேயே காதுகுத்திவிடுகின்றனர். மரத்து முள்ளால் குத்திய இடத்தில் சுண்ணாம்பைப் பூசியவுடன் காயம் ஆறிவிடுகின்றது. பருவ வயதடையும்போதோ அதன்பின்னரோ இதேமுள்ளினால் மூக்கில் துவாரம் போட்டுக்கொள்வது வழக்கமாகும். இதனைத்தொடர்ந்து செம்பு, வெள்ளியிலான மூக்குத்தி, தோடு அணிவிப்பர். இதற்கெனத் தனியான நிகழ்ச்சிகள் எதுவும் நடப்பதில்லை. அண்மைக்காலங்களில் வைத்திய சாலைகளில் சென்று மருத்துவர்களின் துணையுடன் காதிலும், மூக்கிலும் துவாரம் இட்டு நகைகளை அணிகின்றனர் என இளம்வயதினர் தெரிவிக் கின்றனர்.
மருத்துவம்
காடுகளில் வாழும் பழங்குடிகள் தங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்
G ராசிரியர்.கா.குகாலன் 5) வkனக்குறவர் வாழ்வில் ஆய்ை ノ

Page 34
களுக்கு காடுகளில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு பெறப்பட்ட மருந்துவகைகளை உண்டு குணப்படுத்திக் கொள்கின்றனர். இவர்களிடையே காணப்படும் மருத்துவம் செய்பவர்களை “பரிசாரி’ என்று அழைக்கப்படுகின்றார். பொதுவாகப் பழங்குடிகளுக்குரிய குணாம்சங் களில் ஒன்றாக மருத்துவ முறைபற்றி வெளியார் எவருக்கும் சொல்லிக் கொடுக்கும் வழக்கமில்லை. அதையே வனக்குறவரும் பின்பற்று கின்றனர். சொன்னால் தாங்கள் செய்யும் மருத்துவம் பலிக்காது என்பதில் பூரண நம்பிக்கை கொண்டுள்ளனர். கடந்த நான்கு தசாப்தங்களாகப் புதிய சூழலுக்குத் தம்மை இயல்பாக்கிக் கொண்டதனால் பரிசாரி முறைகளின் முக்கியத்துவம் குறைவடைந்து சென்றுள்ளதைக் காணமுடிகின்றது. குறவரின் வைத்திய முறையினை அறிந்து கொள்வதற்குக் கையுறை வழங்கவேண்டியிருந்தது. எனினும் வைத்திய முறையினையும் அதற்கான மருந்துகளைப் பற்றியும் மிகச்சிறியதளவிலேயே பெற்றுக்கொள்ள முடிந்தது. அவை பின்வருமாறு:-
I- விவடிம் ஏறல் :
காடுகளில் வாழும் சூழலில் விஷ ஜந்துக்களினால் பாதிக்க ப்படுவது அதிகமான நிகழ்வாகும். குறிப்பாகப் பாம்பினால்கடியு ண்டால் விஷக்கல்லைப் பயன்படுத்தி விஷத்தை வெளியேற்றுவர். நாகதாழிவேர், வெள்ளொருக்கிலைவேள், விசக்குடம்பா மற்றும் விஷத்தை வெட்டக்கூடிய மூலிகைகளைக்கொண்டு தயாரிக் கப்பட்ட விஷக்கல்லினை தேங்காய்ப்பாலுக்குள் போட்டு ஊறவிட்ட பின்னர் கடித்த இடத்தில் வைத்தால் விஷம் வெளியேறிவிடும். இவ்வைத்திய முறைக்கு தற்போதும் நம்பிக்கை கொண்டவர் களாவிருக்கின்றனர். தங்கள் இனத்தவரல்லாதவர்கள் கூட தங்க ளிடம் வந்து சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர் எனப் பெருமைப்படு கின்றனர்.
- பிரசவம் :
பிரசவகாலத்தில் பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்படவேண்டும் என்பதற்காக பன்றியின் பல்லை அரைத்து மூன்றுமுறை குடிக்கக் கொடுத்தால் சுகப்பிரசவம் நிகழும் என்கின்றனர். அதுதவிர முடக்கறுத்தான் (முடக்கொத்தான்) இலையைப்பிழிந்து கஞ்சியுடன் சேர்த்து கற்பமுற்ற பெண்ணுக்குக் கொடுப்பது வழக்கம். இது குழந்தை பிரசவிக்கும் போது ஏற்படும் வலியைக் குறைக்கும் 660JT.
பேராசிரியர்காருகபாலன் t() வனக்குறவப் வாழ்வியல் ஆய்வு ノ
 

இலங்கையில் பழங்குடிகள்
11. புண்கள் :
தொட்டாச்சினுங்கி என்ற செடியினை அவித்துக் குடிக்கக் கொடுத்தால் புண்கள் மாறிவிடும்.
IV. காதுக்குத்து :
மூலிகைகளை (எவை என்று கூறவில்லை) அரைத்துக்குளி சையாக்கி வேப்பெண்ணெயில் குழைத்துக் காதுக்குள் வைத்தால் நோய்தீரும்.
V- பல்வலி :
புகையிலையை அரைத்து பற்சூத்தைக்குள் வைத்தால் பல்வலி உடன்தீரும்.
VI- fJfáIej :
வேப்பெண்ணெயுடன் எருக்கிலைப்பாலைச் சேர்த்து குழைத்து இரவில் பூசினால் சிரங்குநோய் குணமாகும்.
VI- Gha Tg:
கெந்தகம் அரைத்து தேங்காயெண்ணெயில் குழைத்து சொறியின்
மேல் பூசிவிட்டு நாள்முழுவதும் வெய்யிலில் இருந்தால் குணமாகிவிடும்.
VII வயிற்றுக்குத்து :
திராய்க்கீரைவேரினையும் வேப்பம்பட்டையையும் சேர்த்து அவித்து நீரில் சீனிபோடாமல் ஒரு கரண்டி வீதம் மூன்று தடவைகள் குடித்தால் வயிற்றுக்குத்து உடன்தீரும்.
IX வெட்டுக்காயம் :
பாலைமரத்தினதும், நாகைமரத்தினதும் பட்டையை வெட்டி
உரலில் குற்றிச் சாறாக்கி அடுப்பில் சூடாக்கும்போது சிவப்புக் களியாக வரும். அதனை வெட்டுக்காயத்தில் பூசினால் மாறிவிடும்.
Ge. ராசிரியர்காதுகாலன் லைக்குறள்ை வாழ்வில் ஆய்வு )

Page 35
X- SOLD6i :
வெள்ளைக் குன்னியின்வேருடன் சிறதளவு இஞ்சியும், வசம்பும் சேர்த்து கொதிக்க வைத்துக் கொடுத்தால் இருமல் குணமாகி விடும். இவைதவிர தூதுவளை இலையினை தண்ணிரில் கொதிக்க வைத்து வடிகட்டி இருமலுக்கு மருந்தாக உபயோகிக்கின்றனர்.
மேற்குறித்தவற்றைவிட பலவைத்திய முறைகள் காணப்பட்டாலும் அவற்றை வெளியாருக்குச் சொல்வதற்கு விருப்பப்படவில்லை. அதே நேரம் பரிசாரிகள் பொதுவாக மூத்தோர்களாகவிருப்பதாலும், இறந்து விட்டதாலும் வைத்திய முறையினை அறிந்துகொள்ள இளைஞர்கள் விருப்பப்படாமையாலும், ஆங்கில மற்றும் ஆயுள்வேத வைத்திய முறை கள் அயற்பிரதேசங்களில் காணப்படுவதாலும் அங்கு செல்வதன்மூலம் தமது நோய்களைத் தீர்த்துக்கொள்வதனாலும் பாரம்பரிய வைத்திய முறைகளில் நாட்டம் கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர் எனலாம்.
உசாவியவை
01- Somanader. S.V.O. The Gipsies of Ceylon. pp-12-18
02- சுப்பிரமணியம்.வி.ஐ. கேரளப்பழங்குடி மக்கள், சிலகட்டுரைகள். பக்
: 56-62.
03- தேவசகாயம்.எஸ். தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடிமக்கள். பக்.38.
04- நசீம்தீன்.பி. இடுக்கி மாவட்ட பழங்குடிமக்களின் வழக்காற்றியல்.
Ji:58-59.
05. மேற்படி நூல். பக்.58.
O6 பரிசாரி மசண்ணா அவர்களுடனான நேர்காணலின்போது தெரிவி
க்கப்பட்டவை. 07. சீனிவாசவர்மா.கோ. நரிக்குறவப் பழங்குடிகள். பக்: 88-89. 08- தும்பர் எரண்ணாவுடனான நேர்காணல்
09- அனுமுத்துரங்கன் என்பவருடனான நேர்காணல் 10- ரங்கன்கருணை, மற்றும் சில்வாசக்கா ஆகிய இளம்தாய்மாருட
னான பேட்டியின்போது அறிய முடிந்தவை. 11- ஏயாரெம் சலீம். அக்கரைப்பற்று வரலாறு. L估++50 12 மேரி மரியதிரேஸ் என்ற 24 வயதுடைய ஆறுகுழந்தைகளுக்குத்
தாயானவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்.
 
 

வாழ்வியல் மாற்றங்கள்
இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பிர தேசங்களில் வாழ்ந்துவரும் மூத்த குடிகளான வேடர்களுக்கு அரசாங்கம் தகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவர்களது வாழ்வியலில் பல் வேறுபட்ட பொருளாதார,சமூக,பண்பாட்டு வளர்ச்சிக்கான உதவிகளைச் செய்து வருகின்றது. 1981ஆம் ஆண்டுக் குடித் தொகைக்கணிப்பில் 1426 பேராகவிருந்துள்ளளார் (1). அதேபோல இலங்கையில் வாழ்ந்துவரும் பழங் குடிகள் பற்றிய தரவுகளை வெளியிடவோ அன்றில் அவர்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கோ அரசு முன்னிற் கவில்லை என்றே கூறல் வேண்டும். இலங்கையில் 5500 வனக்குறவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் குடிக்கணிப்பு அறிக்கைகளில் எவ்வாறு புகுத்தப்பட்டுள்ளனர் என்பதை அறியமுடிய வில்லை.
இலங்கையில் வனக்குறவர் தாங்கள் எங்குவாழ்ந்து வருகின்றனரோ அவ்வப்பிரதேசம் சார் மக்களின் சமூக, பண்பாட்டு விழுமியங்களுக்கு முரண்படாதவாறு அவர்களினின்று ஒதுங்கி தமக்கேயுரித்தான வாழ்க்கை அமைப்பிற்கு கட்டுப்பட்டவர்களாக உள்ளனர் என்றே கூறல் பொருத்த மானதாகும். குறிப்பாக சிங்கள மக்கள் வாழந்துவரும் பிரதேசங்களைச் சார்ந்த வனக்குறவர் தமது தாய்மொழியுடன் சிங்கள மொழியையும் தெரிந்து வைத்துள்ளனர். அதேபோலத் தமிழர்பிரதேசத்தைச் சார்ந்து வாழும் குறவர் தமிழ்மொழியையும் சரளமாகப் பேசிவருகின்றனர். எனினும் ஆய்வுக்குட்பட்டுள்ள பிரதேசத்திலுள்ள குறவர்களில் 1950களுக்கு பின் னர் பிறந்தவர்களுக்குத் தாய்மொழியுடன் தமிழ்மொழியை மட்டுமே தெரி ந்து வ்ைத்துள்ளனர். 1950களுக்கு முன்னர் பிறந்த வயோதிபர் களுக்குத் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேசும் வல்லமை கொ |ண்டவர்களாக இருக்கின்றனர். ஐம்பதுகளைத் தொடர்ந்து சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து நாடோடிகளாகத் தற்போது வாழ்ந்து வரும் பிரதேசங்கள் நோக்கி இடம்பெயர்வினை மேற்கொண்டனர். இதனை அவர்
(பேராசிரியர்காருகாலன் ( ነ;፥ வனக்குறவர் வழ்வியல் ஆப்வு ノ

Page 36
களில் முதியோர்கள் உறுதிப்படுத்தினர் (2).
ஆய்வுக்குட்பட்ட பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் அவ்வப்பிரதேச கிராம சேவகர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் பிரகாரம் அளிக்கம்பையிலிருந்து வந்து குடியேற்றப்பட்ட 202 குடும்பங் களைச் சேர்ந்த 741 குறவரும் காஞ்சிரங்குடாவிலிருந்து குடியேற்றப்பட்ட 48 குடும்பங்களைச் சேர்ந்த 242 குறவரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தவிர பல்வேறு காரணங்களின் நிமிர்த்தம் இப்பிரதேசத்துக்கு வெளி யுேள்ள பிரதேசங்களில் ஏறத்தாழ 50 குடும்பங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து வருவதாகக் கிராம அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்விரு பிரதேசத்தவர்களில் முன்னவர்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவியிருக்க பின்னவர்கள் தமது பாரம்பரியக் கடவுளான முருகன், வள் ளியை வணங்குகின்றனர். இவ்விரு பிரிவினரும் தாம் ஓரினத்தைச் சேர்ந் தவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். மத வேறுபாடு இருந்தும் இவர்களிடையே விவாகத் தொடர்புகள் தற்போதும் உள்ளன.
வனக்குறவரின் வாழ்வில் கடந்த நான்கு தசாப்தங்களாலக படிப் படியாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காண முடிகின்றது. நாடோடி களான, நிலையான குடியிருப்புகளில் வாழ்க்கை நடத்த விரும்பாத குறவர்களுக்கு இலங்கையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்து வரும் யுத்த நிலைமையானது காடுகள் சார்ந்து நாடோடி வாழ்க் கை நடாத்துவதற்குச் சவாலாக அமைந்துவிட்டது. யுத்தமானது காட்டுப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் அகப்பட்டுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஏனைய சமூகத்தினர் வாழும் பகுதிகளை நாடிச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமானது. இதனாலேயே அவர்கள் காட்டுப் பிரதேசத்திலிருந்து ஏனைய சமூகங்க ளான தமிழர், முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் சார்ந்து வாழ வேண்டிய நிலை உருவானது. தமது நாடோடி வாழ்க்கையுடன் கூடிய குலத்தொழி லான வேட்டையாடலில் ஈடுபடுவது பெரும் சிரமமானதாகவிருந்துள்ளது. காடுகளுக்குச் செல்ல வேண்டுமாயின் இராணுவத்தினரின் அனுமதி பெற்றே ஆக வேண்டும். வேட்டைக்குச் சென்று வரும் போது வேட்டைப் பொருளில் ஒரு பகுதியை அன்பளிப்பாகக் கொடுப்பதாகவும் தெரிவிக் கின்றனர். எனவே ஏனைய மக்கள் வாழும் பகுதிகளிலேயே தமது ஜீவனோபாயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்காளவிருப்பதைக் காணமுடி கின்றது.
மக்கள் சார்ந்த பகுதிகளில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக் கின்ற போதிலும் அவர்கள் தங்களை மனிதப் பிறவிகள் தான் என்பதை ஏற்றுக்கொள்பவர்களாகத் தெரியவில்லை. அதாவது சிங்களவர், தமிழர், முஸ்லீம் மக்கள் யாவரும் தம்மைக்கண்டு கொள்வதில்லை எனவும் தீண்டத்தகாதவர்கள் என்ற மனப்பான்மையுடன் நடந்துகொள்வதையிட்டு
C பேராசிரியர்.கா.குகாலன் 54 வனக்குபவர் வாழ்வியல் ஆய்வு ) سمبر
 

தாம் கவலைகொண்டிருப்பதாக கூறுவதைக்கான முடிகின்றது(+). இந்நி லையில் தம்மையும் புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லவென வந்த கத்தோலிக்க மதகுருவான அருட்திரு.கொட்பீறிகுக் அடிகளாரின் பங்களிப் பைத் தம்மால் மறக்கமுடியாதெனவும் அவரைத் தமது சமூகம் என்றெ ன்றும் நினைவு கூரும் எனவும் தெரிவிக்கத் தவறவில்லை.
அருட்திரு. கொட்பீறிகுக் அடிகளார் இச்சமூகத்தின் குறைபாடு களை நிவர்த்தி செய்து நாகரீக மனிதர்களாக உருவாக்குவதற்குக் குறவரிடம் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பன ஏற்படவேண்டும் என எண்ணி னார். எனவேதான் அவர்களைக் கத்தோலிக்க மதத்தைத்தழுவச் செய் தார். வலிந்து மதம் மாற்றுவது என்பது பலராலும் விரும்பத்தகாத ஒன்றாக விருந்தபோதிலும் வனக்குறவர் விடயத்தில் அடிகளாரின் முடிவு சரியா னதே என்பதை யாராலும் மறுத்துரைக்கமுடியாது. அவர்களைப் புதவாழ் வுக்கு அழைத்துவரல் வேண்டுமாயின் அவர்கள் புதிய பொருளாதார, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்க வேண்டியது அவசிய மாகும் என்பதனாலேயே முதற்படியாகக் கத்தோலிக்க மதத்தைத் தழுவச் செய்தார். இந்நிகழ்வுகள் 1960களில் நிகழ்ந்ததாயினும் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருக்கோவிலில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது அவர்களிடையே காணப்பட்ட மாற்றங்களைத் துல்லியமாக அறிய முடிந்தது. குறவர் சமூகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்டுவந்துள்ள மாற்றங்களையும் எதிர்காலத்தில் அவர்களிடம் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றியும் திருக்கோவில் புனிதவளனார் தேவாலய பங்குத் தந்தை அருட்திரு. றோகான் பேனாட் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார் (5).
வனக்குறவரின் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்வந்த அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த திரு.எம். கனகரத்தினம் அவர்களையும் நன்றியுடன் நினைவுகூருகின்றனர். இவரது பதவிக்காலத்தில் அளிக்கம்பையில் இவர்களுக்கென வீடமைப்புத் திட் டத்தை அமுல்படுத்தியது மட்டுமல்லாது நாடோடிகளாகத் திரியும் வாழ் வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காக விவாசாய நிலங் களையும் வழங்கினார். எனினும் அவர்களது பொருளாதார பலவீனம் காரணமாகத் தொடர்ந்தும் பாரம்பரியத் தொழில்களில் ஈடுபடவேண் டியிருப்பதுடன், நகரம்சார்ந்த பகுதிகளுக்கு வயது, பால் வேறுபாடின்றி
வினை நடத்தி வந்தனர். 1990களில் ஏற்பட்ட வன்செயல்களைத் தொடர் ந்து தாம்குடியிருந்த அளிக்கம்பையிலிருந்தும் காஞ்சிரங்குடாவில் இருந் தும் துரத்தப்பட்ட நிலையில் கள்ளியந்தீவில் தற்போது வாழந்து வருகின்றனர்.
(பேராசிரியர்கா குகபாலன் 5 வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு ノ

Page 37
பொருளாதாரநிலை - மாற்றங்கள்
வனக்குறவர் வாழ்வில் பொருளாதாரீதியில் பெருமளவிற்கு மாற்ற ங்கள் ஏற்பட்டுள்ளன எனக்கூறமுடியாதுவிடினும் சமூக, பண்பாட்டியலில் அவர்களிடையே மாற்றங்களைக்காணக் கூடியதா கவுள்ளன. வாழ்வாதார த்தை வனக்குறவர் பாரம்பரிய முறையினூடாகவே பெற்றுவருகின்றனர். வேட்டையாடல், பாம்பாட்டல், பிச்சை எடுத்தல் விவசாயக் கூலிகளாகச் செல்லல் போன்றவற்றினுTடாக தமது வருமானத்தைப் பெற்றுக்கொள் கின்றனர்.
மதரீதியாக பிரிந்துகாணப்படும் வனக்குறவரின் பொருளாதார ரீதியில் வேறுபட்ட பண்புகள் நிலவுவதைத் துல்லியமாகக் காண முடிகின்றது. குறிப்பாக காஞ்சிரங்குடாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் ஆய்வு செய்த காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்களாகக் காணப்பட்டனர். அதாவது, 1990 E6 for முற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட ஜனவசம திட்டத்தில் இவர்கள் இணைந்திருந்தமையால் உலர்உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. 1994ல் பதவிக்கு வந்த புதிய அரசு அத்திட்டத்தைக் கைவிட்டது. அதற்குப்பதிலாக சமுர்த்தித்திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. ஜனவசம திட்டமானது குறித்த காலப்பகுதியில் உதவிகளை வழங்கி அதனூடாக அவர்களது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதாகும். அத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்களுக்கு புதிய திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கு அனுமதிக்கப்படாது என்பது தெளிவான கொள்கையாகும்.
இதனால் தற்போதைய நிலையில் இவர்களுக்கு எந்தவித உதவி களும் வழங்கப்படுவதில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற வர்களுக்கான மிகச்சிறிய உதவிகளையே பெற்றுக் கொள்கின்றனர். எனவே இவர்களிடையே வேலைவாய்ப்பின்மையுடன் அரச உதவியற்ற நிலையிலும் அதிகரித்த குடும்ப எண்ணிக்கையிலும் அவதியுறுகின்றனர். இந்நிலையில் ஆண்களுக்காயினும் சரி, பெண்களு க்காயினும் சரி இடை யிடையே கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்பிற்கு குறைந்தளவு ஊதியமே விவசாயிகளால் வழங்கப்படுகின்றது. வனக்குறவர்களை மலிவான கூலித் தொழிலாளர்களாகக் கருதி குறைந்த சம்பளத்தை வழங்கிவருவது கவ லைக்குரியதாகும்.
ஒப்பீட்டுரீதியாக காஞ்சிரங்குடாவில் இருந்து இடம்பெயர்வினை மேற்கொண்டவர்களைவிட, அளிக்கம்பையிலிருந்து இடம்பெயர்வினை மேற்கொண்ட கத்தோலிக்க மதத்தை தழுவியர்களின் பொருளாதார நிலையானது உயர்வாகவேயுள்ளது. இவர்கள் ஜனவசம திட்டத்தில்
s (e. ராசிரியர்.கா.குகாலன் iti னைக்குறவர் வாழ்வில் ஆய்வு
 

இணைந்திருக்கவில்லை. எனவே இவர்களுக்கு உலக உணவு gigs' Liggit dup (Relief and Recovery Assistance to displaced Persons - World Food Programme) Utilat' (B SL6OL36ft 6 prija, JUL (S உலர்உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பின்வருமாறு:- சராசரி ஒருவருக்கு அரிசி 1கிலோ 450 கிராம், பருப்பு 750 கிராம் சீனி 300 கிராம், தேங்காய் எண்ணெய் 375 மில்லி லீற்றர், உப்பு 75கிராம் ஆகும். 12 பேர்கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒருமாதத்திற்கு 154.8 கிலோகிராம் அரிசியும், 7.25 கிலோகிராம் சீனியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவைதவிர ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தைகள் இருப்பார்களேயானால் மாதம் ஒன்றுக்கு 300கிராம் சீனியும், 1.5கிலோ திரிபோச சத்துணவும், 300 மில்லிலீற்றர் தேங்காய் எண்ணெய்யும் மேலதிகமாக வழங்கப்படுகின்றது (6). இவ்வுலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் மாதாந்தப் பெறுமானம் சராசரி குடும்பத்திற்கு ஏறத்தாழ 3000/- ரூபாவகும் என கிராம அதிகாரி கணித்துக்கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. இவை தவிர அரசசார்பற்ற நிறுவனங்களான Ahed,UNICEF என்பன குடியிரு ப்புக்கான கூடாரம் மற்றும் பாய் தளபாடங்கள் என்பவற்றைக் காலத்து க்குக்காலம் வழங்கி வருகின்றன. இதே வேளை காஞ்சிரங்குடாவில் இருந்து இடம் பெயர்வினை மேற்கொண்டவர்களுக்கு சமுர்த்தி உதவித் திட்டத்தின் கீழ் சராசரி ஒரு குடும்பத்திற்கு 250ரூபாய் மட்டுமே கிடைக்கப் பெறுகின்றது. இதில் ஒருபகுதி கட்டாய சேமிப்புக்கணக்கில் வரவு வைக் கப்படுதல் வேண்டும். எனவே இவ்விரு பிரிவினரைப் பொறுத்தவரை வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதில் பாகுபாடு காட்டப்படுகின்றது என்பதை உணரக்கூடியதாகவுள்ளது. இது இவ்வாறிருக்க உலக உணவுத்திட்டத்தி கீழ் பயன்பெற்றவர்கள் தமக்கு கிடைக்கப்பெறும் உலர்உணவில் ஒரு பகுதியினைக் குறைந்தவிலைக்கு தனிப்பட்ட வர்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் விற்பனை செய்வதையும் அவதானிக்க முடிந்தது.
வணக்குறவர் தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பர ம்பரையாகச் செய்துவந்த வேட்டையாடற் தொழிலில் ஈடுபாடு கொள் கின்றனர். குறிப்பாக அவர்களயால் நுகரப்படும் அசைவ உணவு வேட்டை யாடல், மீன்பிடித்தல் மூலமே கிடைக்கப்பெறுகின்றது. வேட்டைக்குச் செல்வதாயின குழுக்கள் குழுக்களாகவே செல்வது வழக்கம். வேட்டை யாடும் காலம் பல நாட்களாகவும் இருக்கலாம். அவ்வாறாக வேட்டை யாடச் செல்வதை “தங்கல் வேட்டை” என அழைப்பர். அதன்மூலம் பெறப்படும் இறைச்சி மீன்வகைகளை தங்களது உணவுத்தேவைக்கு மேலதிகமாகவிருப்பின் உள்ளுரில் கொண்டுசென்று விற்பனை செய்வர். வேட்டையின்போது பன்றி,உடும்பு, மான், மரை, பறவைகள், மீன்வகைகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்கின்றனர். எனினும் அண்மைக் காலங்களில்
(பேராசிரியர்காருகாலன் 7 வணக்குறவர் வாழ்வியல் ஆய்வு D

Page 38
ங்கையில்பழங்குடிகள்
மேற்கொள்வதற்கு பல கட்டுப்பாடுகள் கானப்படுவதனால் இதன்மூலம் பெருமளவிற்கு பெருமானத்தைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை என இளம் குறவர் ஒருவர் தெரிவிக் கின்றார்".
நகரங்கள், கிராமங்கள் என்ற பேதமின்றி நாடோடிகளாகத்திரிந்து பாம்பாட்டிப் பணம் சம்பாதிப்பதுதான் வனங்களில் வாழ்ந்து வந்த கால ங்களில் அதிகளவு வருமானத்தைத்தரும் தொழிலாகவிருந்தது. தற்போது சிாழும் சூழல் Lாம்புகள்ள வளர்ப்பதற்கு ஏற்றதஸ்லாது இருப்து ஸ் பாம்புக்கான உணவினைப் பெற்றுக்கொள்வதில் காணப்படுகின்ற சிரமத் துடன் இனரீதியான வன்செயல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால் நாடோடி வாழ்க்கை நடத்துவது பல பிரச்சினைகளைத் தோற்றுவித் துள்ளதால் தமது பாரம்பரியத் தொழிலான பாம்பாட்டிப் பிழைப்பதை தவிர்த்து வருகின்றனர். இவர்களில் நான்கு தடும்பத்தவர்களிடமே பம்புகள் உள்ளன என்பதை அறிய முடிந்தது.
வணக்குறவர் தற்காலிக, நிரந்தர இடம்பெயர்வினை ஆரம்பித்த காலத்திலிருந்து வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ள பிச்சை எடுத்தல் சாதாரண நிகழ்வாகும். சிறுவர்தொட்டு வயோதிபர் வரை பாஸ்வேறு பாடின்றி விடுவிடாகவும், கடை கடையாகவும் சென்று பிச்சை எடுக்கி ன்றன்ர். கிழமையில் இரண்டு நாட்களே பிச்சை எடுத்தல் தொழிலில் ஈடு படுகின்றனர். சராசரி ஒரு நாளைக்கு ப்ரூேபாயளவில் சேரும் என்கிறார் ஒரு வயோதிபக் குறவர். எனினும் இளம்வயதில் உள்ள வாலிபர்கள், புவ திகள் பிச்சை எடுப்பது தமக்கு அவமானமாகவுள்ளதாகவும் தாம் பல வழிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுரைகள் கூறிவருவதாகEபும் கூறுகிறர்கள். இதனை முற்றாக நிறுத்துவது என்பது சிரமமானதாகும் என்கின்றனர். ஏனெனில் இத்தொழில் வாழ்வாதாரத்துடன் இறுக்கமாக தொடர்புடையதாகவிருத்தலேயாகும் 19), 炒 இப்பழங்குடியினர் வாழும் சூழல் இருபோக நேஷ்விவசாபம் பண்ணப்படும் பிரதேசமாகும். வரம்புகட்டல், களைண்டுத்தல், அறுவடை செய்தல் சூடுமிதித்தல் பற்றும் கூலி வேலைகளுக்கு பருவகாாப்ங்களில் செல்வது வழக்கமாகும். இவர்களுக்கு விவாசாயிகள் மலிவான கூலி யையே வழங்குகின்றனர். அறுவடை செய்யப்பட்ட காரணிகளில் வனக் குறுத்திகளும், சிறுவர்களும் நேற்கதிர்பணிகளைப் பொறுக்கிச் சேர்த்து க்கொள்வது சாதாரண காட்சியாகும்,
இடம்பெயர்வுக்கு முன்னர் அளிக்கம்பையிலும் காட்டுச்சூழலிலும் வாழ்ந்த காலத்தில் ஆடு,மாடுகளை வளர்ப்பதில் ஆர்வம்கொண்டவர்களா விருந்துள்ளனர். இவற்றினை தம்மைச்சூழவுள்ள முஸ்லீம்களுக்கும். தமிழர்களுக்கும் விற்பதன் மூலம் வருமானத்தைப் பெற்றனர். ஆனால் இர்: மந்தை வளர்ப்புத் தொழில் தொடர்ச்சியான இடப்பெயர்வின் காரணமாக,
(ரோசிரியகாருகாலன் հիմl:it:l:Iէ:1Il ril II wil Iհ այլIIril|
 

நலிவடைந்துள்ளளது. அத்துடன் ஆண்களும், பெண்களும் காடுகளில் சென்று ஈச்சமரத்திலிருந்து பெறப்பட்ட மூலப் பொருட்களிலிருந்து பாய், கயிறு போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்வதுடன் மொண்டக் காட்டுக்கயினைச் சேகரித்து அதிலிருந்து பருப்பினைப்பெற்று மாவாக்கித் தேனுடன் கலந்து உண்பதும் வழக்கமாகும். ஆனால் தற் போதைய சூழ்நிலையில் இவற்றினைச்செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ள்ளதாகத் தெரிவிக்கின்றனர் (10),
சமூக பண்பாட்டு மாற்றங்கள்
இலங்கையில் வாழ்ந்துவரும் வனக்குறவரின் பாரம்பரியமாகப்
பேணப்பட்டுவந்த சமூக,பண்பாட்டு நிலைகளில் அண்மைக்காலங்களில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை அவதானிக்கமுடிகின்றது.
துறத்திப் பெண்களின் பாரம்பரிய தோற்றமும் மாறுபாடடைந்த தோற்றமும்

Page 39
குறிப்பாக விவாகம், பிறப்பு,இறப்புருதுவாதல் போன்வற்றுடன் தொடர் புடைய சடங்குமுறைகள் மதம்,கல்வி, அவர்கள்தம் பழக்கவழக்க ங்கள் போன்ற பலவற்றிலும் படிப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுவருவது தவிர்க்க முடியாததும் காலத்தின் கட்டாயமுமாகும். எவ்வாறெனினும் ஏனைய மக்கள் குழுக்களிடமிருந்து விலகி அல்லது விலக்கப்பட்டு தனி மையாக வாழ்வேண்டிய சூழ்நிலையினால் மாற்றங்களை உள்வாங்கு ம்போதும் தமது பாரம்பரியத்தையும் அதனுடன் இணைக்க வேண்டியுள்ளமை தவிர்க்க முடியாததாயிருக்கின்றது என்பதை அவர்கள் தம் ஆய்வினிலிருந்து அறிய முடிந்தது. (விளக்கப்படம் 6.1)
விவாகம்
விவாக நிலையில் பாரம்பரிய முறையிலமைந்த இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடித்து வந்த குறவர் சமூகத்தினர் அண்மைக் காலங்களில் அதனைப் படிப்படியாக மாற்றிக்கொண்டு வருவதைக்காண முடிகின்றது. குழுக்களுக்கிடையிலான விவாகமுறை பெரும்பாலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற போதிலும் கத்தோலிக்க மதத் தைத்தழுவியவர்கள் தேவாலயங்களில் கிறிஸ்தவ முறைப்படியும், பாரம் பரிய பண்பாட்டைபின்பற்றுபவர்கள் தம்மைச்சூழவுள்ள தமிழர்களின் இந்துசமய முறைப்படியும் விவாகச் சடங்குகளைச் செய்துவருகின்றனர். பாரம்பரிய விவாக முறையில் குழுவுக்குள்ளே விவாகம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. அதனை மீறிச்செய்வது அவர்களது எழுதப்படாத சட்டத்தில் குற்றமாகும். ஆனால் அண்மைக்காலங்களில் குழுவுக்குள்ளே விவாகம் செய்துகொள்வது அரிதாகவிருப்பினும் விவாகம் செய்து வருவதையும் காணமுடிகின்றது. பொதுவாக இவ்விவாகங்கள் காதல் விவாகமாகவேயுள்ளது. அவர்களது பண்பாட்டுக்கு மாறான விவாக நடை முறைகளுக்கு குழுத்தலைவரால் தண்டிக்கமுடியாதுள்ளது. காரணம் இத்தகைய விவாகங்கள் நாட்டின் பொதுவிவாகச் சட்டத்திற் குட்பட்டதாக அமைவதால் எதுவும் செய்யமுடியாதுள்ளது என குழத் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது (11). எனினும் உட்குழு விவாகம் செய்பவர்கள் தமது குடியிருப்பினை வேறு பிரதேசத்துக்கு மாற்றிக் கொள்கின்றனர்.
கத்தோலிக்க மதத்தைச்சார்ந்தவர்கள் கூட தமது பாரம்பரிய நடைமுறைக்கேற்ப விவாகத்திற்கான நிச்சயதார்த்தத்தைச் செய்துவிட்டு அதன்பின்னரே கிறிஸ்தவ முறைப்படி விவாகம் செய்துகொள்கின்றனர். இத்தகைய விவாகங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எவ்வாறெ னினும் தமது குடிசைகளில் நடைபெறும் சடங்குமுறைகளில்பழமையும், புதுமையும் கலந்ததாகவிருப்பதை நேரடி அவதானிப்பின் மூலம் அறிய முடிந்தது.
 
 

பாரம்பரிய முறைப்படி பஞ்சாயத்தைக் கூட்டியே விவாகரத்துக்கான தீர்மானம் எடுக்கப்படும் நிலையிலிருந்து விலகிவருவதைக்காண முடி கிறது. அதாவது குழுத்தலைவர்களது அதிகாரங்கள் நாட்டின் சட்டதிட் டங்களுக்கு மாறானதாகவிருப்பதாலும் கிராம அதிகாரி, காவல் நிலையம், நீதிமன்றம் போன்றவற்றின் மூலம் தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாலுமேயாகும். விவாகரத்துக்களில் பெரும்பாலானவை நீதிமன்றங் களினூடாகவே வழங்கப்படுகின்றன. அண்மைக்காலங்களில், விவாகர த்து, பிரிந்துவாழல், வேறுஒருவருடன் தொடர்பு வைத்திருத்தல் என்பன குறவரிடையே அதிகரித்து வருவதற்கு குழுத்தலைவர் முறையிலமைந்த கட்டுக்கோப்புக்கு ஒத்துழைப்பு இல்லாமையே பிரதான காரணமாகும் என மட்டக்களப்பில் க.பொ.த. சாதாரணம்வரை கல்விபயின்ற மேரி மரியதிரேஸ் என்ற பெண்மணி கூறுகின்றார் (12). இவர் தமது குழுவில் நிகழ்ந்துவரும் விவாகரத்து, பிரிந்துவாழல், தகாப்புணர்வு போன்றவை பற்றி விலாவாரியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விவாகநிலையில் இளவயது விவாகமே பெரும்பாலானோரிடம் காணப்படுகின்றது. ருதுவாகிய சில மாதங்களிலேயே பெரும்பாலானோர் தமது பெண்பிள்ளைகளுக்கு விவாகம் செய்து வைக்கின்றனர். இதற்கு அவர்களது வாழ்க்கை அமைப்பு, குடியிருப்புக்களின்பாங்கு, கல்வியறி வின்மை, மதுபானநுகர்வு, விவாகத்திற்கும் தொழிலுக்குமிடிையில் தொடர் பற்ற நிலை போன்றவற்றுடன் அன்றாட்ப் பிழைப்பூதிய வாழ்க்கை முறை யும் காரணங்களாக அமைந்துள்ளன. இளவயது விவாகத்தினால் கரு வளவாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சராசரி குடும்ப அளவு எட் டாகவுள்ளது. இதனால் வறுமைநிலை ஒருபுறமிருக்க, குழந்தை, சிறுவர் மற்றும் பிரசவத்தாய் இறப்புக்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
வணக்குறவர் தம்மினத்துக்குள்ளேயே விவாகத்தினைச் செய்துவை க்கின்றனர். சிங்கள மக்களிடையே வாழும் குறவர்களுக்கும் தமிழ்ப் பிர தேசத்தில் வாழும் குறவர்களுக்குமிடையே தொடர்ச்சியான விவாகத் தொடர்புகாணப்படுகின்றது (13). வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்துவந்த போதிலும் அவர்களின் தாய்மொழி ஒன்றேயாகும். தம்மைச் சூழவுள்ள மக்களுடன் விவாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டபோது அவர்கள் சமூகமே பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் சில நிகழ்ந்துள்ளன என அறிய முடிந்தது. அவற்றில் ஒரு சம்பவத்தினை மேரி திரேசா என்ற இளம்பெண் பின்வருமாறு தெரிவிக்கின்றார். “குறவர்களாகிய நாம் எம்மைச்சூழவுள்ள மக்களுடன் நல்லுறவுடனேயே வாழவிரும்புகின்றோம். கலப்புத்திரு மணத்தினூடாகத்தான் நல்லுறவைப்பேண வேண்டுமென எண்ணியதில் லை. அவை தற்போதைய சூழலில் நடைமுறைச் சாத்திய மில்லை என்பதையும் உணர்கின்றோம். இவ்விடயத்தில் எமது சமூகம் மிகவும் அவதானத்துடனேயே நடந்துவருகின்றது. இருப்பினும் ஒருசில காதல் விவாகங்களும் அதனால் எழுந்த பலவகைப்பட்ட பிரச்சினைகளுக்கும்
(பேராசிரியர்கா குகாலன் . 71 வணக்குறவர் வtழ்வியல் ஆய்வு ノ

Page 40
நாம் முகங்கொடுக்கவேண்டியுள்ளவர்களானோம். நாம் வாழும் தடிபி ருப்பில் வசதி படைத்தவர்கள் என்று எவரும் இல்லை. ஒருவர் மட்டுமே உழவு இயந்திரம் ஒன்றை சொந்தபா. 10வத்துள்ளார். இந்நிலையில் எமது குடியிருப்புக்களுக்குள்ளே மளிகைக்கடை சாராயம், கசிப்பு வியாபாரம் செய்வோர் குடியிருப்புகளுக்கு வெளியில் வாழ்பவர்களாவர். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கடனடிப்படையிலும், பணத்தினைப் பெற்றும் பாருட்களை விற்கின்றனர். இவர்களின் இத்தகைய தொடர்பி னால் சாதகமான நிலைகள் காணப்படுகின்றபோதிலும் பாதகமான விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக திருக்கோவிலைச் சேர்ந்த ஒரு இளைஞன் இளவயதிலிருந்தே கல்வியில் நாட்டம் குறைந்தவர். நாம் இப்பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டதிலிருந்து குறவர்களின் வேட்டைப் பொருட்கள்ை வேண்டிவிற்பதுடன், சாராயம், கசிப்பு போன்றவற்றை எம்மினத்தவர்களுக்கு விற்றும் வந்தான். குறவர் சமுகத்தினர் இவனுடன் அன்புடன் பழகிவந்தனர். அக்காலப்பதுதியில் அழகிய குறத்திப் பெண்ணு டன் காதல் தொடர்பு ஏற்பட்டு விவாகம் செய்யவேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டான். இச்செயலினைப் பொறுக்கமுடியாத கிராம மக்கள் ஒன்றுகூடி எம்மினத்தவர்களுக்கு உடல், உளரீதியிலான துன்பங் கண்ளப் புரிந்து விட்டனர். விவாகம் செய்த இளைஞனையும் அழைத்துச் சென்றுவிட்டனர். பின்னர் கிராமத்து நலன்விரும்பிகள், சமூக சேவையா ார்கள், கிராம அதிகாரிகள் போன்றோரின் உதவியுடன் இக்குடும்பத்தை இணைத்து வைத்துள்ளபோதிலும் குறத்திப் பெண்ணையும் தமது கிராம த்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். தற்போது அந்தக் கடும்பத்துடன் எந்தவித தொடர்புமில்லை என்கின்றாள்' மேரி திரேசா.
குறவர் சமூகம் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள். ஆனால் அன்ை மைக்காலங்களில் நாடோடி வாழ்க்கையிலிருந்து படிப்படியாகத் தம்மை விடுவித்துவருகின்றனர் என்றே கூறல் வேண்டும். எனினும் தாம்வாழும் சூழலிலிருந்து வேளியில் சுதந்திரமாக நடமாடுவதில் பல்வேறு இடர்பாடு கணுள அனுபவிக்கின்றEணர். இளம் பெண்களுடன் தமது இக்னத்தவரல்லா தவர்கள் தகாதமுறைகளில் ஈடுபட முனைந்த சம்பவங்களிள் சிஸ் குறவர்களாள் முன்வைக்கப்பட்டன. பாலியஸ் வஸ்லுறவுகொள்ள முயற்சி த்தல், ஏளனமாகப் பரிகரித்தல், வாழ்வாதார நிலையினைச் சுட்டிக்காட்டி அவபIEப்படுத்தல். பொதுப்போக்குவரத்து வண்டிகளில் உரிய இடத் தினை வழங்காதுவிடல் போன்ற பலவற்றினால் தொடர்ந்தும் பாதிக்கப் பட்டு வருகின்றோம் என்கின்றார் ஒரு இளம் குறத்தித்தாய் ! 15.
கல்விநிலை - மாற்றங்கள்
|tட்கள் வரை குறவருக்கும் கல்விக்குமிடையில் எந்தவித தொடர்
(பேராசிரியகா ஆகாலன் liphப் iiri ஆய்வு །
 

புமிருக்கவில்லை. நாடோடிகளாகவும். காடுகளைச் சார்ந்தும் வாழ்ந்து வந்தமையால் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டவில்லை, அளிக்கம்பையில் இவர்களுக்கெனக் குடியிருப்புக்களை ஏற்படுத்திய பின்னர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்றபெயரில் ஒரு கல்விக்கூடம் ஆரம்பிக்கப் பட்டது. இப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியை மட்டுமே கற்கக்கூடியதாக விருந்தது. சிறுவர் பொழுதுபோக்காகவே பாடசாலைக்குச் சென்றனரே யொழிய கல்வியில் அவர்களுக்கு நாட்டமிருக்கவில்லை. பெற்றோருக்கும் பிள்ளைகள் கல்வி கற்கவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தில்லை. மானவர்கள் தாய்மொழியிலன்றி தமிழ்மொழியில்தான் கல்விகற்கவேண்டி (რმt:bib:tხჭu| -
1990களின் முற்பகுதியில் நிகழ்ந்த வன்செயல்களின் விளைவாக கள்ளியந்தீவுக்கு இடம்பெயர்ந்தபோது அப்பாடசாலையும் இடம் மாற்ற ப்பட்டது. பாடசாலையின் பெயரினை புனித சவேரிபார் வித்தியாலயli எனப் பெயர்பற்றி கல்விப்பணி தொடர்ந்தது. 2000ஆம் ஆண்டு மே மாதம் 164 மாணவர்கள் கல்விபயின்ப் நான்கு நிரந்தர ஆசிரியர்களும் நான்கு தொண்டர் ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர் (16). இப்பாடாசாலையின் அதிபராக திரு.ஆர். நவநீதராசா என்பவர் கடமையாற்றுகின்றார் (fissTähäfČJULuti 6,2).
துறவர் சிறார்கள் கல்விகற்கும் பாடசாலை
விளக்கப்படம் :ே?
குறவரின் வாழக்கை அமைப்பு, பொருளாதாரத் தேட்டம் போன்றன அரசின் கட்டாயக்கல்விக்குப் புறம்பாக மாணவர் இடைவிலகல் பண்பினை

Page 41
அதிகரித்ததாகவுள்ளது. அல்லது ஒழுங்காகப் பாடசாலைக்குச் செல்வ தில் தவறுகின்றனர் என்பது நிர்வாகத்தினரின் கவலைப்பாகவுள்ளது. வணக்குறவச் சிறுவர் அறிவும் ஆற்றலும் மிக்கவர்கள். அவர்கள் வாழும் சூழல் கல்வியில் நாட்டமிழக்க வைத்துள்ளது. பெற்றோரின் ஆர்வக் குறைவு. அடுத்தடுத்துப் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு சிறுவர்களுக்குரியதாகுதல், பெற்றோர் நாடோடிகளாவிருத்தல், பிச்சை எடுத்தற் தொழிலுக்கு பிள்னைகளையும் அழைத்துச் செல்லல், அரசு வழங்கும் சீருடைகளை விரைவில் அழுக்கடையச் செய்தல் அல்லது உரிய தேவைக்குப் பயன்படுத்தால்ரம, இளவயது விவாகத்திற்கான உந்து சக்திகள் அதிகமாக இருத்தல், இடைத்தரக் கல்வியைப் பயில்வதற்கு வேறு பாடசாலைகளுக்குச் செல்வதற்கு அச்சம் அல்லது தாழ்வுச்சிக்கல் போன்ற பல காரணிகள் கல்வியில் அதிக நாட்டத்தினை ஏற்படுத்தத் தவறுகின்றது (17).
இருந்தபோதிலும் குறவர் சிறுவர்களின் கல்வியில் கத்தோலிக்க பாதிரிமார் பல்வேறு வழிகளில் உதவி புரிகின்றனர். கல்விகற்கும் ஆற்றல் கொண்ட மாணவர்கள் சிலரை மட்டக்களப்பு, திருகோணமலை, அக்கரை ப்பற்று, வெலிமடை போன்ற இடங்களுக்கு அனுப்பிக் கல்வியூட்டு கின்றனர். எனினும் இவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதேயாகும், சில மாணவர்கள் தம்புலுவில் மகாவித்தியாலத்தில் இடைத்தரக் கல்வியைக் கற்கின்றனர். நான்கு மாணவர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி படைந்து உயர்கல்வி கற்பதற்கு ஆயத்தமாகினர். இரண்டு மாணவர்கள் கனணிப் பயிற்சி பெற்றுவருகின்றனர்.
மட்டக்களப்பில் கல்விகற்கும் இரண்டு பானவர்கள் அடுத்தாண்டு பல்கலைக்கழகம் புகுதற்குரிய திறமையைக் கொண்டிருக்கின்றனர் என அருட்திரு றோகான் பேனாட் அவர்கள் தெரிவிக்கின்றார். எவ்வாறெனினும் ஆசிரியர் தொழில் உட்பட அரச தொழில்களில் ஈடுபடுமளவிற்கு இதுவரை முன்னேற்றத்தைக் காண வில்லை என்றே கூறல் வேண்டும். குறிப்பாக எஸ்.முத்து என்பவர் அரசு போக்குவரத்துச் சபையில் சாரதியாகவும், வி. சாந்தி என்ற பெண் புனித சவேரியார் வித்தியாலயத்தில் தொண்டராசிரிய ராகவும், ஆர்.ரேவதி, ரோஸ்மேரி என்பவர்கள் பாலர்பாடசாலை ஆசிரியர் களாகவும் பணிபுரிகின்றனர் (விளக்கப்படம் 63),
கல்வியில் நாட்டமின்மை
கல்விப் பாரம்பரியமற்ற வனக்குறவர்கள் கல்வியினூடாக முன் னேற்றம் காணவேண்டும் என்பதைவிட நாடோடிகளாகவும், வேட்டையா டுபவர்களாகவும் திரிந்து வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்பதிலேயே முதியோர் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்
 
 

நனi, கல்வி கற்றலினுடாகச் சமுக மற்றத்தைக் காண்வேண்டும் என்பத னை அறிய விளைவதில்ல்ை அல்லது அதற்கான சூழல் அவர்களிடத்தில் இல்லை என்றே கூறல்வேண்டும். இவை தவிர இவர்களின் பொருளாதார நிலையானது குழந்தைகளின் கல்விச் செலவினத்தை ஈடுசெய்ய முடியாத நிலையும் காரணிகளில் ஒன்றாகும், அரசு இலவசமாக வழங்கும் நூல்கள், சீருடைகள் தவிர ஏனையவற்றைப் பெற்றோரால் வழங்க முடிவதில்லை, பொதுவாக வனக்குறவர்களின் குழந்தைகள் ஆற்றல் மிக்கவர்கள் என்ப தை வனபிதா றொகான் பெர்னாட் மற்றும் அதிபர் நவநீதராசா என்போர் ஒப்புக்கொள்கின்றனர். எனினும் கல்வித் திணைக்களத்தினர் இவர்களது கல்வியில் அசட்டையாக-பாராமுகமாக விருக்கின்றனர் என பலர் தெரிவி க்கத் தவறவில்லை, குறிப்பாகப் பெளதீகவளம், ஆசிரியர்வளம் என்பன சீராக வழங்கப்படவில்லை என்பதைக் கல்வி சம்பந்தமாக மேற் கொள்ளப் பட்ட அவதானிப்புகள் மூலம் அறிய முடிந்தது.
பாலர் பாடசாலையில் குழந்தைகளும் கர்ப்பினித்தாயான இளம் ஆசிரியையும்
விளக்கப்படம் :ே
குறவர் சமூகம் கல்வியில் நாட்டம் கொள்ளாமைக்கு தம்மைச் சூழவுள்ள சமூகத்தினால் இழிவுபடுத்தப்படுவதும் முக்கிய காரணியாகும் (18). புனித சவேரியார் ஆரம்ப பாடசாலையில் குறவர் சிறுவர்களைத் தவிர வேறொருவரும் கல்வி கற்கவில்லை. இப்பாடசாலையை வெளியார் கள் “குறவர் பள்ளிக்கூடம்" என்றே அழைப்பர். இதனால் இங்கு கற்பிக்க
ஜீ 75 *வணக்குறவர் வாழ்விய

Page 42
ஆசிரியர் எவரும் முன்வருவதில்லை. கல்வித் திணைக்களத்தினருக்கும் அல்லது அரசியல்வாதிகளுக்கும் பிடித்தமற்றவர்களையே ஆசிரியர்க ளாக நியமித்துள்ளனர். அத்துடன் ஆசிரியக் கல்விக்கான பயிற்சியற்ற தொண்டர் ஆசிரியர்களையே இப்பாடசாலை நம்பியிருக்கவேண்டிய நிலை யும் கல்வி வளர்ச்சிக்குத் தடையாகவுள்ளது. இப்பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைபவர்களில் 200 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ஆண்டு ஐந்தைப் பூர்த்தி செய்கின்றனர். இவர்களில் எண்ணிக்கையில் மிகக்குறைவானவர்களே ஏனைய சமூகத்தினர் கல்வி கற்கும் பாடசாலை களுக்கு செல்கின்றனர். இப்படியாகப் புதிய பாடசாலை களுக்கு செல்லும் வேளை பல்வேறு துன்பத்திற்குள்ளாக்கப்படுகின்றனர். 18 வயது இளம் பெண் ஒருவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார். தான் ஆரம்பக் கல்வியை முடித்தபோது அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் இடைநிலைக் கல்வி யைக் கற்பதற்கு பெற்றோர் விருப்பம் கொண்டமையால் அங்கு சேர்க்க ப்பட்டேன். அங்குள்ள மாணவர்கள் என்னையும் ஏனைய குறவர் இன மாணவர்களையும் தீண்டத்தகாதவர்களாக மதிக்கும் நிலையை உணரக் கூடியதாகவிருந்தது. காட்டுக்குறத்திகள் என நேரடியாகவும் மறைமுகமா கவும் சொல்லத் தொடங்கினர். எம்மைத் தங்களுக்கு அருகில் இருத்தமா ட்டார்கள். தனியே ஒதுங்கி இருத்தல் வேண்டும். எங்களை வகுப்புத் தோழிகள் என்றுகூடப் பார்ப்பதில்லை. படிப்பில் எவ்வித உதவியும் செய் வதில்லை. எனினும் ஆசிரியர்கள் எம்மீது பாகுபாடு காட்டுவதில்லை. ஆகவே பாடசாலைக்குச் செல்வதை நிறுத்துவதைத் தவிர வேறுவழி இரு க்கவில்லை (19). இத்தகைய இடையூறுகளுக்கும் மத்தியில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தாலும் அதனூடாகவாவது எமது சமூக த்தின் வளர்ச்சிக்கு உதவ முடியுமா வென்றால் அதுவும் முடிவதில்லை. தொண்டர் ஆசிரியை ஒருவர் கற்ற கல்வித் தகுதிக்கேற்ப மணமகனைத் தனது சமூகத்தில் பெற்றுக்கொள்ள முடியாததால் பரம்பரைத்தொழில் புரியும் ஒருவரையே விவாகம் செய்யவேண்டியதுதவிர்க்க முடியாததாகி விட்டது. இதனால் தனது உயர்கல்வி பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது நிரந்தரத்தொழிலினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினையும் இழ ந்துவிட்டேன் என வருத்தத்துடன் தெரிவிக்கின்றார். அத்துடன் விரும் பியோ விரும்பாமலோ பரம்பரையாகப் பேணப்பட்டுவரும் சமூக நடை முறைகளுக்குக் கட்டுப்பட்டே வாழவேண்டியது தவிர்க்கமுடியாத தாகியு ளளது.
வனக்குறவர் சிறுவர்களின் கல்விப்பாதிப்புக்கு கல்வி கற்கும் மொழியான தமிழ் இரண்டாவது மொழியாகும். தமது தாய்மொழியான தெ லுங்கையே வீடுகளில் சரளமாகப் பேசிவருகின்றனர். எனினும் அவர் களால் தெரிவிக்கப்படும் இக்குற்றச்சாட்டு வாழும் சூழலைப் பொறுத்து பொருத்தமாகவிராது எனக் கூறிக்கொள்ளலாம்.
 
 

மதமும் மக்களும்
மதம் மக்களை நல்வழிப்படுத்தும் சாதனம். குறவர் வேட்டையாடி நாடோடிகளாகத் திரிந்த காலங்களில் முருகன், வள்ளி, தெய்வாணை, காளிபோன்ற தெய்வங்களையும் இயற்கையையும் வணங்கினர். குறிப்பாக வள்ளியையே தமது பெண் தெய்வமாக் கொண்டிருந்தனர். இவர்கள் ஐவகை நிலங்களில் குறிஞ்சியில் வாழ்ந்தமையால் குறவர் எனப்பெயர் வந்திருக்கலாம் எனப் பொருள் கொள்பவர்களும் உளர். முருகக் கடவுள் குறவ மங்கையான வள்ளியை மணந்தமையால் முருகன், வள்ளியைத் தமது குலதெய்வமாக வணங்கிவந்தனர். இவர்களில் 80.0 சதவீதமா னோரை 1960களில் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் தம்பக்கம் இழுத்துக் கொண்டனர். இவர்களின் வாழ்வில் அண்மைக்காலங்களில் பல்வேறு மாற் றங்கள் ஏற்பட்டுள்ளமைக்குக் கத்தோலிக்க மதத்தைத் தழுவிய மையே காரணம் என்றால் மிகையாகாது. குறிப்பாக தாம்சார்ந்த மதம் காட்டும் வழியில் செல்ல விளைவதையும் அதன்பால் விசுவாசம் கொண்டிருப் பதையும், மதகுருமாரின் போதனைகள், அறிவுரைகள், ஆலோசனைக ளைச் சிரமேற்கொண்டு ஏற்கும் பண்பினையும் அவர்களிடத்தில் காண முடிகின்றது. இந்த மதமாற்றம் இவர்களைப் பொறுத்த வரையில் ஒரு திருப்புமுனை என்றே கொள்ளமுடிகின்றது.
காடுகளில் சென்று வேட்டையாடுவது என்பது பல்வேறு சிரமங் களைத்தரவல்லது. வனவிலங்குகள், விஷ ஜந்துகள் தம்மைத் தீண்டக் கூடாது என்பதற்காக காட்டில் ஆங்காங்கே காணப்படும் காவுலாச் செடிக்கு (இலையினை கையினால் நுள்ளும்போது “V” வடிவிலேயே பிளவுபடும்) பூசை வைத்துவிட்டுச் செல்வர். அது இன்றுவரை நடை முறையிலுள்ளது. வேட்டையாடும்போது அதிகவேட்டைப் பொருட்கள் கிடைக்கப்பெற்றால் அதிலிருந்து பெறப்படும் வருமானத்தில் ஒரு பகு தியை பாரம்பரிய கடவுளர்களை நினைத்து காவுலாச் செடிக்குப் பூசை வைப்பதும் உண்டு. அதேபோல வனவிலங்குகளால் காயப்படவேண்டிய சந்தர்ப்பத்தில் விரைவில் குணமடைய வேண்டி இச்செடிக்குப் பூசை வைப் பர். கத்தோலிக் கத்தைத் தழுவிய பின்னரும்கூட தற்போதும் இத்தகைய பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
பாரம்பரிய வணக்கமுறையைப் பின்பற்றுபவர்கள்கூட தாம் மதம் மாறாத நிலையில் இருப்பதனாலேயே தொடர்ந்தும் வறுமை நிலையில் இருந்துவருவதாக உணர்கின்றனர். இவர்களும் எதிர்காலத்தில் தமது பாரம்பரியத்திலிருந்து விலகவும் கூடும். அது தவிர்க்கமுடியாதது.

Page 43
பழக்கவழக்கங்கள் - மாற்றங்கள்
வணக்குறவர் நாடோடிகளாக வாழ்ந்த சமூகமானபடியால் ஆற்றோ ரங்களிலும், நீரோடைகளிலும், குளங்களைச் சார்ந்துமே வாழப்பழகிக் கொண்டனர். கிணறு வெட்டி நீர்பெற்றுக்கொள்ளும் பழக்கம் அவர்க ளிடத்தில் இல்லை. இதனால் சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்பவர் களாகவும், தம்மிடையே சுகாதாரத்தைப் பேணாதவர்களாகவும் உள்ளனர் என அயலவர்களின் முறைப்பாடுகள் பற்றி கிராம அதிகாரி தெரிவிப்ப 653)ğ5LLqLib H5fT588öT5A’)ʻrut) (20),
Fil:Fil:F'JLJL LÊ 5:4
இந்தியாவில் வாழும் நரிக்குறவர், குருவிக்கூட்டத்தினர் குளிப்பதில் அக்கறை கொள்ளாதவர்கள், துணிகளைத் துவைக்க மாட்டார்கள். புதிய ஆடைகளைக்கட்டிவிட்டு பழைய ஆடைகளை வீசி விடுவர். பல்துலக்க மாட்டார்கள், விவாகத்தின் பின்னர் பல்லைக் கறுப்பாக்கிக்கொள்வர் (21) எனக்கூறப்படுகின்றது. ஆனால் இத்தகைய பண்புகளைத் தெளிவாக உணர முடியவில்லையாயினும் மறுப்பதற்கில்லை என்றே கூறல் வேண்டும். அவ்வாறான சில நடைமுறைகள் இருக்குமேயானால் நீர்ப்பற் நாக்குறையினாலேயேயாகும் எனக்கொள்ளலாம். எனினும் குறவர்களின்
 
 
 

இளையோரைப் பொறுத்தவரை சுற்றுச்சூழலைப் பேணுதலிலும், தம்மைச் சுத்தமாக வைத்திருப்பதிலும் ஆர்வம் காட்டிவருகின்றனர், முதியோர்கள் சுற்றுச்சூழEப்ெட் பேணுவதிலும், சுகாதாரத்துடன் வாழ்வதிலும் அக்கறையற்றவர்களாக இருப்பதனால் அயல் கிராபத் தவ்ர்கள் இவர்களைப் பொதுக்கிணறுகளிலும், தனியார் கிணறுகளிலும் தண்ணிரைப் பெற்றுக்கொள்வதற்கோ, குளிப்பதற்கோ அனுமதிப்ப தில்லை. அண்பைக்காலங்களில் இவர்களுக்கெனக் கிணறுகள் வெட்டப் பட்டு பயன்பாட்டுக்கு உட்படுத்தட்டடுகின்றன. அதேபோல இவர்களது குடி யிருப்புக்களுக்குப் பக்கத்தில் உள்ள குளத்தை அசுத்தம் செய்வதாகக் கூறி ஊரவர்கள் அதனையும் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ள போதிலும் குறவர்கள் இதனைப் பொருட்ப்டுத்துவதில்ல்ை
வணக்குறவர் வாழ்ந்துவரும் கள்ளியங்திவில் நன்னீர் கிணறுகள் இல்லை. நன்னிரைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஏறத்தாழ இரண்டு கிலோ மீற்றர் தூரம் சென்றே பெண்கள் நீரைப் பெற்றுவருவர். பெரும்பாலும் காலையிலும் மாலையிலும் குறத்திப்பெண்கள் இரண்டு மூன்று பிளாஸ்டிக் அல்லது அலுமீனியப் பானைகளை அடுக்கடுக்காகத் தலையில் சுமந்து வரும் காட்சியினைக் காணமுடியும் (விளக்கப்படம் 8:4).
வணக்குறவர்மேல் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்றாகச் சராசரி மனிதனது தேவையிலும் பார்க்க மிகக்குறைந்த நீரினையே பயன்படுத்து வதாகும். இவர்களது தடியிருப்புக்கள், வாழ்க்கை முறை களில் மாற்றங்கள் ஏற்படுமிடத்து இத்தகைய நிலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
மதுபானப்பாவனை
வணக்குறவரின் அன்றாட வாழ்வில் மது நுகர்வானது சர்வ சாதாரணமான நிகழ்வாதம், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிஸ் டி. சத விதத்தினரும், விவாகமான பெண்களில் 400 சதவீதத்தினரும் மதுருகர் வில் ஆர்வம் கொண்டவர்களாகவிருப்பது ஆய்வின்மூலம் கண்டறியப்பட் டது. சந்தோஷUான நிகழ்வுகளாயினும் சரி துக்கமான நிகழ்வுகளாயி ணும் சரி மதுபானம் இஸ்லாமல் நடைபெறுவதில்லை. அன்றாட வாழ்வில் தடும்பங்களில் மதுபான நுகர்வு முக்கியமான பானவனக்பாகவுள்ளது. ஏனைய சமூக பொருளாதார பண்பாட்டு நிலைகளில் ஏற்பட்டுவருகின்ற மா நிறங்களுக்கு மாறாக மதுபான நுகர்வு முன்னரிலும் பார்க்க அதிகரித்துக் காணப்படுவதாக இளம் குடும்பப்பெண்கள் கவலைகொண்டுள்ளனர்.
நிலையற்ற தொழில்வாய்ப்பினைக் கொண்ட குறவர் தமது வரு
பேராசிரியர்காருகாலவி 7. வனக்குறுவப் வர்விஸ் մի քHi! ! - - - - ."

Page 44
மானத்தில் பெரும்பங்கினை குடிக்கே பயன்படுத்துகின்றனர். இளம் குடும் பப் பெண்களில் பெரும்பாலானோர் மதுப்பாவனையில் ஈடுபடாத போதிலும் நடுத்தர மற்றும் வயதுசென்ற குடும்பங்களில் கணவனும் மனைவியும் மனு பானம் பாவிப்பதை அறிய முடிகின்றது. கணவன் மனைவிக்கு வேண்டிக் கொடுப்பதோ அல்லது மனைவி கணவனுக்கு வேண்டிக் கொடுப்பதோ என்பது சர்வசாதாரணமான விடயமாகும். சில குடும்பங்களில் தமக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருட்களை குறைந்தவிலையில் விற்றுவிட்டு குடிப்பதாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
குடும்பத் தலைவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிடுவதாலும், நல்லரக மதுபான வகைகளை நுகர்வதற்கு வசதியில்லாததாலும் தரங் குறைந்த கசிப்பு வகையினையே அதிகளவில் நுகர்வதால் இளவயதில் இறப்பினைத் தழுவிக்கொள்வதையும் காணமுடிகின்றது. இதனால் வித வைப் பெண்களின் எண்ணிக்கை இவர்களிடையே அதிகரித்துள்ளது. மதுபான நுகர்வின் அடிமைக்கும், பாலியல் துஷபிரயோகத்திற்குமிடை யிலான தொடர்புகள் அண்மைக்காலங்களில் சார்புரீதியாக அதிகரித்து வருவதைக் குறவர் இளைஞர்களுடனான கலந்துரையாடலின் மூலம் அறிய முடிந்தது. இவர்களின் பலவீனத்தைத் தெரிந்துகொண்ட அயல்கிரா மங்களில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் கசிப்பு உட்பட மதுபான வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளதுடன் கடன டிப்படையிலும் வழங்குகின்றனர். சமூகப்பலம் குறைந்த குறவர் எவ்வித த்திலும் கடனைத் திருப்பிச் செலுத்துவர் என்ற நம்பிக்கை கசிப்பு வியாபா ரிகளிடம் உண்டு.
குறவர் குடும்பங்களில் உள்ள இளைஞர்சிலர் தங்களது சமூகம் முன்னேற்றமடையாததற்குக் காரணம் மதுப்பாவனையே என்பதை உணர் ந்து பாவனையால் ஏற்படுகின்ற தீங்குகள் பற்றி தமது தமது சமூகத்தின ருக்கு அறிவுரைகள் வழங்குவதில் ஆர்வம் கொண்டிருக்கின்ற போதிலும் மதுநுகர்வைத்தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள் கின்றனர்.
தலைமைத்துவம் - மாற்றங்கள்
பழங்குடி மக்கள் பொதுவாக அரசினது சட்டதிட்டங்களுக்குட்பட்டுச் செயற்படுவது மிகைக்குறைவென்றே கிொள்ளலாம். இதற்கு அவர்களின் அறியாமையும் காரணங்களில் ஒன்றாகும். வனக்குறவர் காடுகளிலும் ஒது க்குப்புறங்களிலும் வாழ்ந்தபோது தமது சமூகத்தினரைக் கட்டுக்கோப் புடன் வழிநடத்திச் செல்வதற்குத் தாமே தமக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டனர். இவரைக் குழுத்தலைவர் என அழைப்பர். இவ்
(; ராசிரியர்.கா.குகாலன் னைக்குறள்ை வாழ்வியல் ஆய்வு )
 

வாறாக ஒவ்வொரு குழுவினருக்கும் தனித்தனியாகத் தலைவர்கள் இரு ப்பர். தற்போதுகூட 12 தலைவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வனக்குறவர் சமூகத்தின் தலைவரை விதான (Vidhana) என அழைப்பர். இவர் நரைத்தலையினராகவும், வயதில் மூத்தவராகவும் வெற் றிலைத்தாம்பூலம் துலங்கக்கூடிய சொண்டினைக் கொண்டவராகவும் (Betal Stained Lips) தமது குழுவினரைக் கட்டுப்படுத்தக்கூடியவராகவும், நடத்தையாலும், அனுபவத்தாலும், பொதுநலனாலும் சிறப்புற்றவராகவும் இருத்தல் வேண்டும். இவர் நீதிவானாக, விவாகத்தை நடத்திவைப் போனாக மற்றும் சமூகச் செயற்பாடுகளிலும் ஈடுபாடு கொண்டவனாக இரு த்தல் வேண்டும். அத்தகைய குணாம்சங்களைக்கொண்டவரையே தமது வம்சத் தலைவராக ஏற்று அவர்வழி நடப்பர் (22). குழுவினரிடையே எந்த விதமான பிரச்சினைகள் வந்தாலும் அதனை நீதியாகத் தீர்த்து வைப்பார் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.
குற்றவாளியாகக் காணப்படுபவர் நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக் கேற்பத் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும். பெரும்பாலான குற்ற ங்களுக்கு தண்டணையாகப் பணமும், சாராயமும் அறவிடப்படும். விவாக நிலையில் உருவாகக்கூடிய குற்றங்களுக்கு அதிக தண்டனைகள் வழங்க ப்படும். குறிப்பாகப் பெண்கள் பாலியல்துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் கடும் தண்டணை வழ்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டமாகப் பெறப்படும் பணத்தில் சாராயத்தினை வாங்கி தலைவரும், குழவின ரும் குடித்துக் கும்மாளமடிப்பர். இதில் பெண்கள். ஆண்கள், குழ ந்தைகள் என வேறுபாடு காட்டப்படுவதில்லை.
காட்டுப்பிரதேசங்களில் இருந்து வெளியேறி அளிக்கம்பை மற்றும் காஞ்சிரங்குடாவில் வாழ்ந்தபோதும் தலைவரின் செயற்பாடுகளும், அத னை அங்கீகரிக்கும் பக்குவமும் இருந்து வந்துள்ளது. தலைவரது தீர்ப்பே இறுதியானதும், குழுவினரால் ஏற்றுக்கொள்ளவும்பட்டது. ஆனால் தலை வரால் தீர்த்துக்கொள்ள முடியாத சிலவற்றை கத்தோலிக்கப் பாதிரி மார்களால் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தலைவரின் செயற்பாட்டை சமூகம் ஏற்றிருந்தது (23).
கள்ளியந்தீவுக்கு வந்தபின்னர் இவர்களிடையே சமூக, பொரு ளாதார, பண்பாட்டியல் ரீதியிலான மாற்றங்கள் ஏற்படவே தலைவரு க்குக் கொடுக்கும் மதிப்பும், அவரது தீர்ப்பும் பெரும்பாலும் புறக்கணிக் கப்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. பொதுவாக இலங்கையின் சட்டதிட்ட ங்களினடிப்படையிலேயே வாழப்பழகிக்கொள்கின்றனர். விவாகம் செய்வத ற்கான அடிப்படைத் தகுதிகள், குழுவுக்குள்ளேயான விவாக முறை, பாலியல் வல்லுறவுகள், தகாப்புணர்ச்சி சண்டை சச்சரவுகள் போன்றன வற்றிற்கு தற்போது கிராம அதிகாரி, காவல் நிலையம், நீதி மன்றங்க
GC ராசிரியர்.கா.(தகாலன் வனக்குறவர் வழ்வியல் ஆய்வு
}

Page 45
ளையே நாடும்நிலை அதிகரித்துவருகின்றது. மனைவி உயிருடன் இருக்க இரண்டாவது விவாகம் செய்தவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அதனை அனுபவித்த பின்னர் விடுதலையாகி ஒருவர் வந்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது. தாம் சார்ந்த குழுவுக்குள் விவாகம் செய்தல் தகாது என்றி ருக்கின்றபோதிலும் அண்மைக்காலங்களில் இத்தகைய விவாகங்கள் நிகழ்ந்துவந்தாலும் சமூகத்தவர்களால் அங்கீகரிக்கப்படாத தால் அவர்கள் குடியிருப்பினை விட்டுவிலகி வேறு பிரதேசங்களில் சென்று வாழ்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறவரது சமூக, பண்பாட்டு விழுமியங்களை தொடர்ந்தும் பேணிவரவே முயல்கின்றனர். தலைவர் முறையானது தொடர்கின்றது. தங்களுக்குள் தீர்க்கக்கூடிய விடயங்களை தலைவரூடாக நிவர்த்தி செய்து வருகின்றனர். தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. அபராதங் களும் விதிக்கப்படுகின்றன. முன்னரைப்போல தண்டனைப் பணத்தில் குடித்து மகிழ்கின்றனர் எனவும் இதனால் குறவர் சமூகத்தில் அமைதி யின்மை கூடாவொழுக்கம் தொடர்கின்றது எனத் தமக்கு அச்சமூகத்தவர்க ளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் சமூகத் தலைவர்களை அழை த்து தலைவர் முறையினை ஒழித்துக் கட்டவேண்டும் என அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளதாக கிராம அதிகாரி தெரிவித்துள்ளார் (24).
தேசிய அரசியலில் ஈடுபாடு
தேசிய அரசியலில் ஈடுபாடு கொள்வதைப் பொறுத்தமட்டில் வணக்குறவர் ஈடுபாடு காட்டுபவர்களாயில்லை. நாட்டின் குடித்தொகையில் தமது சமூகம் கணிசமானவர்களாகவிருப்பது மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளிலும் பரந்து வாழ்பவர்களாகவிருக்கின்றனர். தாங்கள் இந்த நாட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகம் கொள்கின்றனர். இதுநாள்வரை நிலையான குடியிருப்புகளை கொண்டிராதபடியால் அரசியல் நடவடிக் கைளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் இல்லை. இதற்கு அவர்களிடையே காணப்படும் குழுத்தலைமைத்துவமும் ஒரு காரணமாக இருந்துள்ளது.
அண்மைக்காலம் வரை அவர்கள்தம் பொருளாதார முறைமை களில் அரசை நம்புபவர்களல்லர். தாமே வாழ்வாதாரத்தைத் தேடிக் கொ ள்பவர்கள். காடுகளில் பொருட்தேட்டங்களைப் பெற்றுக்கொள்வதிலேற் பட்ட சிரமங்களின் காரணமாகவே அரச உதவிகளை எதிர்பார்க்க வேண்டி ஏற்பட்டது. அதாவது அளிக்கம்பையிலும் காஞ்சிரங்குடாவிலும் குடியே றிய பின்னரேயே உள்ளுர் அரசியல்வாதிகள் இவர்களுக்கு வாக்குரிமை யை பெற்றுக்கொடுத்து அவர்களது நலன்சம்பந்தமாக சில நடவடிக் கைகளை மேற்கொள்ளலாயினர். காலத்துக்குக் காலம் தேர்தல் வரும்
(பேராசிரியர்காகுகபாலன் ጽ32 வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு )
 

போது இவர்களுக்குத் திடீர் நிவாரண உதவிகளை வழங்க முன் வருவர். அதனூடாக அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்தி யாவிலிருந்து வந்த பழங்குடிகளானதால் தமிழர்கள் என்றே தமிழரல்லாத ஏனைய இனத்தவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இவர்களிடமிருந்து எவரும் அரசியலில் ஈடுபடுவதற்கேற்ற பக்குவத்தைப் பெற்றிருக்க வில்லை எனலாம்.
1980களைத் தொடர்ந்து தமிழ் விடுதலை இயக்கங்கள், அரசியற் கட்சிகளின் செயற்பாடுகள் இவர்களைச் சூழக்காணப்பட்ட போதிலும் அரசியலில் எவரும் ஈடுபாடு காட்டவில்லை என்பதை ஆய்விலிருந்து அறியமுடிகின்றது. குறிப்பாக ஆயுதமேந்திய தமிழ் விடுதலை இயக்கங் கள் இவர்களைச் சூழச் செயற்பட்டுவரினும் குறவர் அவற்றுடன் எந்த விதத் தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரியவருகின்றது. எனினும் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ்க்கட்சியொன்றின் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட குழுவின் சார்பில் ரங்கன் இரட்டிணம் என்பவர் (லாம்புச் சின்னம்) போட்டி யிட்டு 285 வாக்குகளைப்பெற்றுத் தோல்வியடைந்தார். தமது சமூகத்தினர் தனக்கு பூரண ஆதரவினை வழங்கினார்கள் என பெருமிதம் கொள்கின் றனர் (25).
அரசியலில் தீவிரமாக ஈடுபடாமைக்கு முக்கிய காரணமாக தம் மைத் தீண்டத் தகாதவர்களாக ஏனையோர் மதிப்பதேயாகும் எனப்படுகி ன்றது. அவர்கள் தற்போது வாழ்ந்துவரும் பிரதேசத்தின் அடிப்படை வசதிகள் பற்றிக் கிராம அதிகாரிகள், பிரதேசச் செயலாளர்களிடம் முறையிடச் சென்றால் தங்களை மற்ற மனிதர்கள்போல மதித்து நடப்ப தில்லை எனக் குழுவின் தலைவர் ஒருவர் தெரிவிக்கின்றார் (26).
வண்செயல் பாதிப்புகள்
இலங்கையில் நிகழ்ந்துவரும் இனப்போராட்டத்தின் தாக்கம் குறவர் களையும் விட்டுவைக்கவில்லை. நாடோடிகளாக வாழ்ந்த காலப்பகுதி களில் புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்குவாழும் மக்கள் தங்களைத் துப்பரவற்ற-தீண்டத்தகாதவர்கள் எனக்கருதி அடித்துத் துன் புறுத்துவதுடன் தங்களால் அமைக்கப்பட்ட குடியிருப் புக்களை எரித்தும் விடுவர்.
வணக்குறவர் பலர் தமது மார்பு, கைகளில் தமது பெயர், ஊர், வணங்கும் தெய்வத்தின் உருவம் போன்றவற்றைப் பச்சைகுத்திக் கொள் வது பெரும்பாலானோரது விருப்பமாகவுள்ளது. இவர்களது பெயர் தெலு
(பேராசிரியர்கா குகபாலன் 然出 வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு ノ

Page 46
ங்குப் பெயர்களாயினும் தமிழர்களுடைய பெயர்களை ஒத்ததாகும். சிங்க ளப் பகுதியில் வாழும் குறவர் சிங்களத்திலும், தமிழ்ப் பகுதியில் வாழும் குறவர் தமிழிலும் பச்சைகுத்திக் கொள்வர். எனவே இதன்மூலம் தம்மை யார் என்று மற்றவர்கள் அடையாளம் காணக்கூடியதாகவிருப்பதால் தமிழர்களில் வெறுப்புக் கொண்டஇனவாதிகள் தமக்கு உடல், உள ரீதியிலான பாதிப்பினைஏற்படுத்தி வருவதைப்பற்றி அடுக்கடுக்காகக் கதைகளைப் போலச் சொல்கின்றார்கள். இவர்களது வார்த்தைகளில் ஏக் கமும், பயவுணர்வும் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
அளிக்கம்பையில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது குறவரில் சிலர் தமக்கு வழங்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்துவந்ததுடன் அயலில் உள்ள தமிழர் மற்றும் முஸ்லீம் விவசாயிகளுக்கு விவசாயக் கூலிகளாக வேலை செய்வதுடன் கரும்புத் தோட்டங்களை காட்டுவிலங்குகள் நாசப்படுத்தாது காப்பாற்றுவதற்கு காவலாளிகளாகவும் தொழில்புரிந்து வந்தனர். ஏற்கனவே கூறப்பட்டதுபோல ஆயுதக்குழுக்கள் எவற்றுடனும் தொடர்புகளற்றவர்கள். இவ்வேளையில் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் திகதியன்று எல்.ரீ.ரீ.ஈ யினர் அருகில் உள்ள கிராமங்களில் வாழும் முஸ்லீம்களைத் தாக்கினார்கள் என்பதையறிந்த ஊர்காவற்படையினரும் தாக்குதலில் ஈடுபடத் தயாரானோரும் சென்று குறவர்களின் கூடாரங் களைத் தாக்கி ஏழுபேரைக் கொலை செய்ததுடன், பலரைக் காயப்படு த்தினர் (27). இந்நிகழ்வினை நினைத்து வேதனைப்படுவதுடன் எதிர் காலத்தில் அவ்வாறு நிகழக்கூடாது எனவும் கடவுளை வேண்டுகின்றனர். ஆண்களாயினும்சரி, பெண்களாயினும்சரி பிச்சை எடுக்கச் செல்லும் வேளைகளில் கல்லால் எறிந்தும், நாய்களை ஏவிவிட்டும் தமக்குப் பெருந் துன்பம் தருகின்றனர் என்பதை சோகம்ததும்ப வெளிப்படுத்துகின்றனர்.
நம்பிக்கைகள்
சமுதாயத்தின் ஒட்டுமொத்த கட்டுக்கோப்புக்கு மட்டுமன்றி தனி மனிதவாழ்வியலின் கட்டுக்கோப்புக்கும் மதம் துணைநிற்கின்றது. தனிமனி தர்களுக்கு ஏற்படும் இன்பம், துன்பம், நல்லவை, கெட்டவை, பொருள் இழப்பும், செல்வவளமும், அவதூறும் செல்வாக்கும் அழிவும் வளமும், பாவமும் வீடுபேறும், தோல்வியும் வெற்றியும் போன்ற அனைத்தும் இறை வனால் கொடுக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை மதம் போதிக்கின்றது (28). இதனாலேயே தம் வாழ்வின் அனைத்து எதிர் பார்ப்புக்களையும் ஈட்டுவதற்கு வழிகாட்டுமாறு இறைவனை வேண்டு கின்றனர். இவை நம்பிக் கையின்பாற்பட்டதாகும். இதே போலவே இயற்கையையும், முருகன், வள்ளி போன்ற தெய்வங்களையும் வணங்கும் வனக்குறவர்களும், பல் வேறு விடயங்களில் நம்பிக்கையினை இறுக்கமாகப் பின்பற்றி வாழ்கி ன்றனர். குறிப்பாகக் காகம்கரைதல், பறவைகள் ஒலி எழுப்புதல், கிளி
(பேராசிரியர்காகுக SA னைக்குறவர் வாழ்வியல் ஆய்வு )
 

தலைகீழாகத் தொங்கி குரல் எழுப்புதல், நெஞ்சுக்கு மேல் பல்லி ஒலி எழுப்புதல், குடிசையின் வாசற்படி நிலை தலையிலடித்தல், தும்மல், நாய் கள் பதறிப்போய் குரைத்தல், மனைவி யின் பொட்டு அழிதல் போன்ற நிகழ்வுகள் நிகழுமிடத்து தாம் நினைத்த வேலையையோ அல்லது செயற் பாட்டையோ செய்வதில்லை எனத் தெரிவிக்கின்றனர் வனக்குறவர்.
இவைதவிர பிறப்பு, இறப்பு, ருதுவாதல் போன்ற எந்தவகையான சடங்குகளாயினும் தமது பாரம்பரிய நடைமுறைகளையே பின்பற்று கின்றனர். அண்மைக்காலங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுவரினும் சடங் குகள் செய்வதற்கான நம்பிக்கைகள் இன்னும் குலைந்து விடவில்லை என்றே கூறல்வேண்டும். உதாரணமாக காட்டுக்கு வேட்டைக்குச் செல்லும் போது காவுலாச்செடிக்குப் படைத்து, பூசை செய்துவிட்டுச் சென்றால் வேட்டைத் தொழில் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையும் இவர் களிடத்தில் உண்டு.
ஒருவர் இறந்துவிட்டால் அவரது ஆவி பின்தொடரும் என்ற நம்பி க்கை குறவர்களை ஆட்டிப்படைக்கின்றது. இதனால் காடுகளில் வாழ் ந்தபோது இறந்தவரது உடலைப் புதைக்கக் கொண்டு செல்லும் போது நேராகச் செல்லாமல் குறுக்கும் நெடுக்குமாகச் செல்வது மட்டுமல்லாது பல இடங்களில் நிலத்தில் வைத்து வைத்துக்கொண்டு போவார்கள். ஏனெ னில் ஆவி நேராக வீட்டுக்கு வரக்கூடாது என்பதுதான் காரணமாகும். ஆனால் அண்மைக்காலங்களில் இந்நடைமுறை வழக் கொழிந்துவிட்டது என்றாலும் நம்பிக்கையுண்டு. அதேபோலவே தீட்டுக் காப்பதிலும் நம்பி க்கை கொண்டுள்ளனர். ருதுவான பெண்களை வெளியில் குடிசை அமை த்துத் தங்கவைத்தல், மாதவிலக்கான பெண்களை ஒதுங்கிவாழச் செய் தல், பிறப்பு, இறப்புக்கான தீட்டினைக் கடைப்பிடித்தல் போன்றவற்றிலும் நம்பிக்கையுடன் நடந்து வருகின்றனர்.
வணக்குறவர் மாந்திரிகத்திலும் நம்பிக்கைகொண்டுள்ளனர். விலங் குகள் தங்களைத் தீண்டக்கூடாது என்பதற்காக மாந்திரிகத்தை உச்சரி ப்பதுண்டு. பேய்,பிசாசு போன்றவற்றை ஏவிவிட்டு தனது எதிரிகளுக் குத் துன்பத்தை ஏற்படுத்தவும், மற்றவர்களால் ஏவப்படும் பேய்,பிசாசுகளை கலைப்பதற்குமான மாந்திரிகத்தைப் பயன்படுத்துவதாக முதியோர் கூறினும் அண்மைக்காலங்களில் இச்செயற்பாடுகளை அவதானிக்க முடியவில்லை. இத்தகைய செயல்களை மேற்கொள்ளும்போது சேவலை வெட்டிப் பலிகொடுப்பர். ஆனால் வேறுசில பழங்குடிகள் செய்வதுபோல ஆடு, மாடுகளை வெட்டிப் பலிகொடுக்கும் வழக்கம் தம்மிடம் இருந்த தில்லை என முதியோர் ஒருவர் தெரிவிக்கின்றார் (29).
Ge ராசிரியர்.கா.குகாலன் ታ85 னைக்குறவர் வாழ்வியல் ஆப்வு )

Page 47
உசாவியவை
O 1 - Census of Poplation and Housing Part IVol I, p 262. 02- புதுராமசாமி தும்பக்கா, வெங்கிட்டன் ரங்கன், வெண்டுக்காரன் வக்
கண்ணா ஆகியோருடனான பேட்டியில் தெரிவிக்கப்பட்டது. 03- ஆய்வுக்குட்பட்ட பிரதேச கிராம அதிகாரியான மயில்வாகனம் பரராச
சிங்கம் அவர்களால் தெரிவிக்கப்பட்டவை. 04- திருமதி.வி.சாந்தி, றோஸ்மேரி, ஆர்.தேவகி ஆகியோருடனான கலந்
துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது. 05- பங்குத் தந்தையும் குறவர் சமூகத்தவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி புரிந்துவருபவருமான அருட்திரு றோகான் பேனாட் என்பவுருட னான பேட்டி, 06- திருக்கோவில் கிராம அதிகாரி திரு.ம.பரராசசிங்கம் அவர்களின் அலு
வலகக் குறிப்பேட்டிலிருந்து பெறப்பட்டவை. 07. முதல்நாள் தங்கல் வேட்டைக்குச் சென்று திரும்பிய ஏரண்ணா, பெத்த சின்னவன் என்பவர்களுடனான பேட்டியின்போது தெரிவிக்கப் பட்டவை. 08- வெங்கட்டன்வேலு என்பவருடனான பேட்டியின் போது தெரிவிக்கப்
பட்டவை. 09- சின்னப்புகண்ணன், டேவிற் பிரான்சிஸ் என்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றியபின்னர் இனநலனின் அக்கறைகொண்ட மூவருடனான பேட்டியின்போது அறியவந்தவை. 10- அனுமுத்து மசானா என்பவருடனான கலந்துரையாடலில் பெறப்
பட்டவை. 11- குழுத்தலைவர்களிலொருவரான கறுவல் சில்வா என்பவருடனான
பேட்டி 12 மேரி மரியதிரேஸ் என்பவருடனான பேட்டியின்போது அறியவந்தவை. 13- அனுராதபுரத்திலிருந்து குறவர் இனத்தவர் நூற்றுக்கும் மேற்பட்டோர் (பெண் கொள்வதற்காக) தமது இளைஞன் ஒருவருக்கு விவாகம் செய்து வைக்கும் நோக்குடன் கள்ளியந்தீவுக்கு வந்தபோது ஆய்வாளருக்கு அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களது பெயர்கள் பெரும்பாலும் பாரம்பரியப் பெயர் களாகவும், தமிழரின் பெயர்களாகவும் காணப்பட சிறுவர்களின் பெயர் கள் சிங்கள இளைஞர்களுக்கு அண்மைக்காலங்களில் வைக்கப்படும் பெயர்களாகவிருந்துள்ளமையைக் காணமுடிந்தது. 14- மேரி மரியதிரேஸ் அவர்களுடனான பேட்டியின்போது தெரிவிக்கப்
பட்டவை. 15- சின்னப்பு சின்னமசக்கா என்ற இளம்பெண்ணுடனான பேட்டியின்போது
அறியப்பட்டவை. 16- திருக்கோவில் புனிதசவேரியர் வித்தியாலய குறிப்பேட்டிலிருந்து
பெற்றப்பட்டவை.
(பேராசிரியர்காகுகாலன் - - - 86 : வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு メ
 

202
2223
242526
27
2829
அருட்திரு றோகான் பேனாட் அடிகளாருடனான பேட்டியின் போது அறியப்பட்டவை. சாந்தி என்ற தொண்டராசிரியருடனான பேட்டியின்போது தெரிவிக்கப் பட்டவை.
- மா.கிளி என்ற இளம்பெண்ணுடனான பேட்டியின்போது தெரிவிக்கப்
பட்டவை.
திருக்கோவில் கிராம அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டவை. பிலோ இருதயநாத், கேரள ஆதிவாசிகள், பக் 1-8. Somanadher. S.V.O. Cylon Today. ரங்கன் வெங்கிட்டன் என்பவருடனான பேட்டியின்போது தெரிவிக்கப் பட்டவை. கிராம அதிகாரியுடனான சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டவை. ரங்கன் இரட்டிணம் என்பவருடனான பேட்டியிலிருந்து பெறப்பட்டவை. குழுத்தலைவர் கறுவல் சில்வா (சீலன்) என்பவருடனான பேட்டியி லிருந்து பெறப்பட்டவை. Someone else’s War. The University Teachers for Human Rights (Jaffna) Colombo - 1998. பக்கவத்சலபாரதி.சி. பண்பாட்டு மானிடவியல். ப:549, ரங்கன் வெங்கட்டனுடனான பேட்டியின்போது தெரிவிக்கப்பட்டவை.
Cế8D
(பேராசிரியர்காகுகாலன் ::::: 然7 வணக்குறவர் வாழ்வியல் ஆய்வு

Page 48
இயல் ך
பொருளாதார சமூக மாற்றங்களுக்கான அவசியம்
நாடோடி வாழ்வே தமது அடிப்படைப்பண்பாடாகக் கொண்டு வாழ்ந்து வரும் வனக்குறவரின் வாழ்வியலில் மாற்றத்தை உருவாக்க வேண்டுமாயின் அவர்களின் பொருளாதார, சமூக பண்பாட்டியலில் மாற்றங் களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பழங்குடி களுக்கே யுரித்தான வாழ்க்கை முறைகளில் ஈடுபாடு கொண்டுள்ளமை யால் தாம் வாழும் சூழலில் உள்ள ஏனைய சமூகங்களோடு தொடர்பற்ற வர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக, தீண்டத்தகாதவர்களாக வாழும் சூழல் அகற்றப்படாத வரை வனக்குறவரின் வாழ்வில் மாற்றங்களை ஏற் படுத்தலாம் என்பது கடினாமான செயற்பாடாக அமையும். பின்தங்கிய சமூகமாக தம்மை அடையாளப்படுத்தி வாழ்ந்துவந்த போதிலும் தேசியப் பிரச்சினை, இனப்பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய வன்செயல்களுக்கும் ஆளாகவேண்டியிருந்தமையால் குடியிருப்புக்களை அடிக்கடிமாற்றிக் கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் வறுமை, அறியாமை, பயஉணர்வு போன்றவற்றையும் தம்முடன் இணைத்தும் உள் ளனர் என்றே கூறல்வேண்டும். இந்நிலையில் இவர்கள்தம் வாழ்வுவளம் பெறவேண்டுமாயின் தேசிய மற்றும் பிரதேச ரீதியிலான சிறப்புத்திட்டங் களின் செயற்பாடுகள் இவர்களுக்கு சென்றடைய வேண்டியது அவசிய LOTG51D.
அண்மைக்காலங்களில் வனக்குறவரின் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை உள்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாதது. ஏனைய சமூ கத்தவர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அண்மையில் விரும்பியோ, விரும் பாமலோ குடியிருப்புகளை ஏற்படுத்தி வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட தால் அவர்களின் வாழ்வியல் பண்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டியேற்ப்பட்டது. குறிப்பாக கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றியமை உதாரணங்களில் ஒன்றாகக் கொள்ளலாம். எனினும் குறவர் சமூகத்தினர் இரு பிரிவினாராகப் பிரிந்து வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவர் களாக இருக்கின்றனர். தற்போதைய வாழ்க்கை அமைப்பிலிருந்து
பேராசிரியர்.கா.குகாலன் *冷 வkனக்குறவர் வாழ்வில் ஆய்வு )
 

விடுபட்டு முன்னோர்களினால் இட்டுச்செல்லப்பட்ட இறுக்கமான கட்டமைப் பினைக் கொண்ட குழுமுறைக்குச் செல்ல வேண்டுமெனக் கருதுபவர்கள் முதலாமவர்கள். விரைவாக மாறிவரும் உலகமயமாதல் நிலைக்கு தம்மையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என விரும்புபவர்கள் இரண் டாவது வகையினராவர். தமக்கு பொருளாதார, சமூக,பண்பாட்டு மாற்ற ங்கள் தேவையில்லை எனவும் உள்நாட்டுப் பிரச்சினைகள் தீரும் பட்சத் தில் மீண்டும் காடுகள்சார்ந்த பகுதிகளுக்குச் சென்று முன்னைய பொரு ளாதார முறைமையை பின்பற்ற வேண்டும் என்பர் முதலாமவர்கள். பொது வாக இவர்கள் வயதால் மூத்தவர்கள், இவற்றை அடைய வேண்டுமென முன்வைக்கும் காரணிகள் பின்வருமாறு:-
பரம்பரையாகக் குழுத்தலைமைத்துவத்தை ஏற்று மிகவும் கட்டுப் பாட்டுடன் வாழ்ந்து வந்தவர்கள். பிறப்பு, இறப்பு, விவாகநிலை போன்ற வற்றிலும் இவற்றோடு இணைந்த ஏனைய வாழ்வியலிலும் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொண்டவர்கள். குற்றச் செயல்களைப் புரிந்தால் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆணாயினும், பெண்ணாயினும் தண்ட னையை அனுபவிப்பது மட்டுமல்லாது, சுதந்திரமாக ஏனைய இனத்தவர், குழுக்களின் தலையீடின்றி வாழ்ந்தவர்கள் தாம் எனக் கூறுவதுடன் அத்தகைய வாழ்வுக்குத் திரும்புவதே சாலப்பொருத்தமாகும் எனத் தெரிவிக்கப்படுவதை அறியமுடிந்தது. தற்போது அரச அதிகாரிகளினது அறிவுறுத்தல் மற்றும் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கவேண்டியுள்ள துடன் ஏனைய பண்பாட்டுக்கோலங்களை உள்வாங்க வேண்டியது தவிர் க்க முடியாதுள்ளதாகவும் சில சந்தர்ப்பங்களில் கூடாவொழுக்க முறை களுக்கு சமூகம் ஆளாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலைகளும் ஏற்படு கின்றன என்கின்றனர்.
புதிய உலகமயமாக்கலுக்குள் தம்மை இட்டுச்சென்று நாகரிக உலக சமூகத்தில் தாமும் ஒரு அலகு என்பதற்கேற்ப தமது வாழ்வியலை மாற்றியமைக்க வேண்டும் என இளங்குறவர் சமூகத்தினர் அவாக் கொள் கின்றனர். தற்போதைய நிலையில் உலக சமூகத்தின் வளர்ச்சிப் போக்கி லிருந்து தாம் பின்தங்கியவர்களாக, பாரம்பரிய மக்களின் செயற்பாடான வேட்டையாடுதலிலும் சோம்பேறித்தனத்தைக் கொண்ட பிச்சை எடுத்த லிலும் ஈடுபடுவது போன்ற செயல்களினால் ஏனைய சமூகத்தவர்களிலி ருந்து நீண்டதூரம் விலகிவாழவேண்டியுள்ளது. எனவே தாம் பின்தங்கிய வாழ்க்கை அமைப்பினுாடாக வழிவந்தவர்கள் என்பதைப் புரிந்து ஏனைய சமூகங்களுக்கிணையாகப் பொருளாதார, சமூக், பண்பாட்டு முறைமை களை உள்வாங்கிக் கொள்ளவேண்டியது தவிர்க்க முடியாதது எனவும் சமூகக்கட்டுக்கோப்புக்காக அமுல்படுத்தப்படும் அரசியலமைப்பிற்கு மதிப் புக்கொடுத்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர் இரண்டாவது வகையினர். இவர்கள் இளைஞர்களாகவுள்ளமை மட்டு மல்லாது குறவர் சமூகத்தின் பெரும்பான்மையினராகவும் உள்ளனர்
(பேராசிரியர்காகுகாலன் 8ዷ) s வனக்குறவர் வாழ்வியல் بها بابك (

Page 49
என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த இரு பிரிவினரின் கருத்துக்களைக் கவனத்திற் கொள் ளின், மூத்த குறவர்களின் கருத்துக்கள் பலவீனமானவை என்ப தையும் இளைஞர்களின் எண்ணங்கள் ஏற்புடையது என்பதையும் உணர முடிகி ன்றது. ஆகவே வாழ்வியலில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பொருளா தார, சமூக, பண்பாட்டு முறைமைகளுடான வழிமுறைகள் அவர்களிடம் சென்றடைய வைப்பதுதான் சிறப்பானது எனக் கொள்ளலாம். வனக்குறவர் சமூகம் பொருளாதாரத் தேட்டத்திற்கான புதிய உத்திகளையோ அன்றில் செயற்பாடுகளைக் கொண்டவர்கள் எனக்கூற முடியாது. காடுகள் மற்றும் தாம்வாழும் பிரதேசம் சார்ந்த இடங்களையே தமது ஜீவாதாரத்திற்கு தெரிவு செய்கின்றனர். செய்யும் தொழில்களும் இழி தொழில்களாக வுள்ளது. வறுமை நிலையில் வாடுவதற்கு காரணம் தாழ்வு மனப்பான் மையும் அறியாமையுமேயாகும் என்பது இவ்வாய்வில் கண்டறியப்பட்டு ள்ளது. 1960களைத் தொடர்ந்து பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்தும் முகமாக அரசினால் சிறிய விவசாய நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன ஆனால் விவசாயம் செய்வதில் நாட்டமற்றவர்களாகவும், வேட்டைத் தொழிலில் அக்கறை கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். அதாவது இவர்களது உணவில் நாள்தோறும் மாமிசமும், மதுபானமும் இணைந்திரு க்கின்றன. குடும்பப் பெண்களும் வேட்டைக்கான ஆயத்தங்களையே செய்து கொடுப்பதில் கவனஞ்செலுத்தியிருந்ததாக மூத்த குறவர் ஒருவர் தெரிவித்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஒருசிலரே விவசாயத்தில் அக்கறை கொள்ள ஏனையோர் பரம்பரைத் தொழிலில் ஈடுபாடு கொண்டி ருந்தனர். வழங்கப்பட்ட நிலங்களும் எல்லை நிலங் களாவிருந்துள்ளன உற்பத்தி ஆற்றல் கொண்டவையல்ல. இதனால் ஒருபோக நெற்பயிரி னையே மேற்கொண்டனர். 1990களில் ஏற்பட்ட வன்செயல்களின் விளை வாக குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் இராணுவ அதிரடிட் படையினர் முகாமிட்டதனால் இடம்பெயரவேண்டியேற்பட்டது. இதேபோல வே காஞ்சி ரங்குடாவில் வாழ்ந்தவர்களின் நிலையுமாகும்.
தற்போதைய நிலையில் விவாசயத்தில் எவரும் ஈடுபாடு கொள்ள வில்லை. இவர்களை மலிவான கூலிகளாக்கி இடையிடையே கூலித் தொழிலுக்கு அயல்பிரதேசத்தவர்கள் அழைக்கின்றனர். வேட்டைக்கும் பிச்சைக்கும் செல்கின்றனர். பாம்பாட்டித் தொழிலும் வழக்கொழிந்து போகும் நிலையிலுள்ளது. இந்நிலையில் அவர்கள்தம் பொருளாதாரத் தை மேம்படுத்து வதற்கு முதற்கட்டமாக விவசாயத்தில் ஈடுபடச் சந்தர்ட் பத்தை வழங்க வேண்டியது அரசினதும் ஏனைய சமூக நிறுவனங்களின் தும் பாரிய பொறுப்பாகும். குறிப்பாக இவர்களுக்கெனச் சிறப்புத்திட்டங் களை அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். மானாவாரிப் பயிற்செய்கை க்கான நிலங்களை வழங்குவதைத் தவிர்த்து நீர்ப்பாசன வசதியுடன் கூடிய நிலபுலங்களை வழங்கும்போது விவசாயத்தில் ஈடுபாடு கொள்ளும்
G ராசிரியர்.கா:குகாலன் , )) வkனக்குறவர் வாழ்வில் ஆய்வு
 

பண்புகள் அதிகரிக்கலாம். அத்துடன் உற்பத்திக்கான உள்ளிடுகளை இலவசமாகவும் மானிய மாகவும் வழங்கவேண்டும். அத்துடன் உற்பத்தி செய்யப்பட்டவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படு த்திக்கொடுக்க வேண்டும். கூட்டுறவு அமைப்பினை ஏற்படுத்தி முதலில் அவர்களையுமிணைந்த சபையினுாடாக இச்செயற்றிட்டங்களை அரசாங் கம் வழங்கலாம். இது போன்ற சிறப்புத்திட்டங்களை உருவாக்கிக் கூட்டு றவு அமைப்பினுாடாக நிர்வாகிக்கப்பட்டு இமாலயப் பழங்குடிகளின் வாழ் வியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது (1).
வணக்குறவரின் வாழ்வில் அவதானிக்கக்கூடிய விடயம் வேலை வாய்ப்பின்மையும் வறுமையுமாகும். அத்துடன் கீழுழைப்பாளர்களாக வேலை செய்கின்றனர். சில குறிப்பிட்ட தொழில்களையே செய்யப் பழ க்கப்பட்டவர்களான குறவர் புதிய தொழில்நுட்பத்தைக் கல்வியினுT டாகவோ அனுபவ ரீதியாகவோ பெற்று புதிய தொழில்களை செய்யும் ஆற்றலற்றவர்கள். இதன் விளைவாக வறுமைநிலை அவர்களைத் தொடர் கின்றது என்றே கூறல் வேண்டும். அத்துடன் அவர்களின் நாளாந்த வாழ்வில் மதுப்பாவனையும் வறுமைக்கு இட்டுச் செல்கின்றது. எனவே ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோர் என்ற வேறுபாடின்றி புதிய குடிசைக் கைத்தொழில், சிறு கைத்தொழில்களை அரசாங்கம் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுப்பின் குறவர் வாழ்வில் மலர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக தேசிய தொழிற்பயிற்சி மையத்தி னதும் ஐக்கியநாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினதும் (UNDP) உதவியுடன் இவர்கள் தாம் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த தொழில்களுக்கு நவீனத்துவம் ஊட்டி, பயிற்றுவித்து அவர்கள் சுயமா கவோ அன்றில் நிறுவனமயப்படுத்தப்பட்டதாகவோ வேலை வாய்ப் பினை வழங்க முடியும். உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வதிரி என்ற கிராமத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்தவர்களில் ஒருபகுதியினர் பரம்பரை பரம்பரையாகத் தோல் உற்பத்திப் பொருட்களில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருந்ததுடன் விற்பனையாளரின் உதவியுடன் தரமான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தினர். 1980களைத் தொடர் ந்து அசாதாரண சூழ்நிலைகளால் உற்பத்தியைக் கைவிடவேண்டி ஏற்பட் டது. யூ.என்.டி.பி. யும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து பயிற்சிக்கூடம் ஆரம்பித்து மீண்டும் அத்தொழிலுக்கு புத்துயிர் கொடுக்கப் பட்டதால் மீண்டும் சிறப்பாக தொழில் செய்து வருமானத்தைத் தேடிக் கொள்கின்றனர் (2). இதேபோலவே வனக்குறவரின் பாரம்பரிய தொழில் களான ஈச்சம்பாய் இழைத்தல், ஆற்றுநாரில் (ஒருவகை நார்) கயிறு செய்தல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அரசசார் பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளித்து, உற்பத்தி செய்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஏனெனில் ஈச்சம்பாய் மிக அழகானதாகவுள்ளதுடன் உல்லாசப் பயணி களையும் கவரும் வாய்ப்புண்டு. அதேபோலலே இளை ஞருக்கு தையல்
பேராசிரியர்,காகுகபாலன் 9i வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு ノ

Page 50
பயிற்சி அளிப்பதுடன் இலவசமாக தையல் இயந்திரங்களை வழங்கி ஊக்குவிக்க முடியும். அரசு ஆடைத்தொழிற் சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் குறவர் சமூகத்தின் நலன்கருதி அவர்களுக்கென்றே ஏற் படுத்திக் கொடுக்கமுடியும். அவ்வாறு வேலை வாய்ப்பினை வழங்கும் போது அவர்களது விவாகம் செய்யும் வயதும் பின்தள்ளப்படுவதுடன் குடும்ப எண்ணிக்கையும் குறைவடைய வாய்ப்புண்டு. அத்துடன் முதியோர் மற்றும் குடும்பப் பெண்களுக்கெனத் தேனீவளர்த்து தேன்உற்பத்தி செய்யும் வழிவகையினை பயிற்சிமூலம் அளிப்பின் பொருளாதாரத் தேட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். குறவர் காடுகள்சார்ந்து வாழ்ந்த போது தேன் சேகரிப்பதுடன் உணவில் அதிகளவு பயன்படுத்தினர் என்ப தும் குறிப்பிடத்தக்கது.
வணக்குறவர்களிடையே சில இளைஞர்கள் கிறீஸ்தவப்பாதிரிமாரின் உதவியுடன் கல்விகற்று வருகின்றனர். அவர்களில் க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்களை இப்பிரதேசத்தினை பிரதிநித்துவப் படுத் தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனங்கண்டு அரச துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகின்றது. குறிப்பாக ஆசிரி யர் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தால் அவர்களின் சமூக வளர்ச் சிக்கு பாடுபடக்கூடிய சமூகம் உருவாக வாய்ப்புண்டு.
மேற்குறித்த பொருளாதார வாய்ப்புக்களை எட்டுவதற்கு அவர்கள் தம் தற்போதைய வாழ்க்கை அமைப்பு உகந்ததல்ல. அவர்களின் வாழ் வியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரம்பக் கல்வி அனைவரு க்கும் கிட்டச் செய்வதுடன் இரண்டாம், மூன்றாம்தரக் கல்வியில் நாட்டம் கொள்ளச் செய்தல் அவசியமானது. இவை குறவர்களின் பொருளாதார மாற்றத்திற்கு மட்டுமல்லாது சமூக பண்பாட்டு மாற்றத் திற்கும் வழிவகுக்க வல்லது. இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் ஹசாரிபேக் (Hazaribugh) என்ற மாவட்டத்தில் வாழும் Santa மற்றும் Birhor என்ற பழங்குடிகளின் பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகளும், உள்நாட்டு அரசுசாராத நிறு வனங்களும் இணைந்து மேற் கொண்ட நலத்திட்டங்களில் முதன்மை வகித்தது கல்வி வளர்ச்சியே யாகும். மேற்குறித்த பழங்குடிகளைக் கல்வி வாய்ப்பினை வழங்கியது டாக புதிய உலகுக்குக் கொண்டுவர முடிந்தது எனத் தெரிவிக்கப்படுகி ன்றது. புதிய பாடசாலைகளை உருவாக்கல்; பள்ளிச்செலவினத்தை ஈடு செய்தல், புலமைப்பரிசில் நிதியத்தினை ஏற்படுத்தல், அதன்மூலம் நகரப் பாடசாலைகளில் கல்விபெற வாய்ப்பளித்தல், தொழில்வாய்ப்பில் முன்னு ரிமை வழங்கல் போன்ற செயற்பாடுகளின் மூலம் அவர்களின் வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர் (3). எனவே இலங்கையில் மிகச்சிறு பான்மையினராக காணப்படும் வனக்குறவரின் கல்விநிலை திட்டமிட்ட அடிப்படையில் முறைசார்ந்த கல்வியினுடாகவும், தொழில் சார்ந்த பயி
C பேராசிரியர்.கா:குகாலன் வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு )
 

ற்சிகளினூடாகவும் முன்னெடுத்துச் செல்வது அவசியமானதாகும். கல்வி ப்பாரம்பரிய மற்றவர்களிடையே கல்வியினைப் புகுத்துவது என்பது கடினமானதாகும். எனினும் கல்வியில் நாட்டம்கொள்ள வைப்பதற்காக ஆலோசனையாளர்களின் (Counselor) ஒத்துழைப்புடன் செயற்படுத்த வேண்டும். குறவர் இளைஞர், யுவதிகளின் புத்திக்கூர்மை பற்றி திருக் கோவில் பங்குத்தந்தையும், பாடசாலை அதிபரும் புகழ்ந்துள்ளனர். அவர் கள் சரியான பாதையில் வழிநடத்தப்படுவார்களேயானால் விரைவில் அவர்கள் சமூக ரீதியில் சிறப்பிடத்தைப் பெறுவார்களெனத் தெரிவிக்கின் றார். எனவே கல்வியின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களை விட பெற்றோர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப் படல் வேண்டும். இவர்களின் சமூக மாற்றத்திற்கென “வனகுறவர் சமூக மேம்பா ட்டுத்திட்டம்” என்ற ஓர் அமைப்பினை அரசஅதிபர், பிரதேசச் செலாளர், கல்விப் பணிப்பாளர், நலன்விரும்பிகள், சமூகசேவைத் திணைக்களத் தினர், உள்ளிட்டவர்களைக் கொண்டு அமைக்கப்படின் பழங்குடியினரை புதிய உலகுக்கு அழைத்துவர முடியும்.
இன்றைய நிலையில் மிகநெருக்கமானதும் சுற்றுப்புறச் சூழலுக்கு அச்சுறுத்தலாகவுள்ளதுமான குடிசைகளிலேயே வனக்குறவர் வாழ்ந்து வருகின்றனர். நாடோடிப்பண்புகளைக் கொண்டவர்களான குறவர்கள் நிரந் தரக்குடியிருப்புக்களில் வாழ்வதென்பது கடினமானதேயாகும். உதாரண மாகச் சென்னை நகரத்தில் 1980களில் பகலில் நாடோடிகளாகவும், இரவில் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள தெருவோரங்களிலும் குடி யிருப்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்த நரிக்குறவர் வாழ்வில் சமூக பொருளாதார மாற்றத்தை விரும்பிய முதல்வர் அமரர்.எம்.ஜி.ராமச்சந்திரன் மாடிக்குடியிருப்புக்களைக் கட்டிக்கொடுத்தார். அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுமென நம்பினார். ஆனால் இரண்டு மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் தெருவோரக் குடியிருப்புக்கள் அதிகரிக்கத்தொடங்கின. காரணத் தை அறிய முற்பட்ட முதல்வருக்கு மனவேதனையே மிஞ்சியது. அதாவது குடியிருப்பினைப் பெற்றவர்கள் அதில்வாழ விருப்பமற்ற நிலையில் அவற்றை வாடகைக்குக் கொடுத்துவிட்டு தெருவோரக் குடியிருப்பினை விரும்பியதேயாகும். அதாவது நாடோடிகள் நிரந்தரக் குடியிருப்புக்களை விரும்பமாட்டார்கள் என்பதே இதன் கருத்தாகும். எனவே அவர்களிடையே சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்படாதவரை நிரந்தர வாழ்வை விரும்பமாட்டார்கள். எனினும் வனக்குறவரின் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தனிக்குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தல் அவசி யமானது. அளிக்கம்பையில் ஏற்கனவே நிரந்தரக் குடியிருப்புக்கள் அமை த்துக் கொடுத்திருந்த போதிலும், யுத்தத்தின் விளைவாக அழிந்து போய்விட்டன எனவே மீண்டும் நீர் கிடைக்கப்பெறுகின்ற இடங்களில் குடியிருப் புக்களை அமைப்பதுடன் தனித்தனியே மலசல கூடங்களையும் ஏற்படுத்திக்கொடுத்தல் அவசியமாகின்றது. அத்துடன் கூட்டுக் குடும்ப அமைப்பினை விரும்பும் குறவர்களிடத்து தனிக்குடும்ப அமைப்பினை வலி
(பேராசிரியர்காகுக - 9;፪ வனக்குறவர் வாழ்வியல் ஆப்வு ノ

Page 51
யுறுத்தல் அவசியமாகின்றது. அத்துடன் கல்வியறிவு, பொருளாதார நலன் களைப் பெற்றவர்களிடையே கருவளவாக்கநிலை வீழ்ச்சிடையும் என்பது பொதுவான நியதியாகும். அந்நிலையில் குழந்தை இறப்புக்கள் பிரசவத் தாய் இறப்புக்கள் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடி வது மட்டுமல்லாது ஆயுள் எதிர்பார்ப்பும் அதிகரிக்க வாய்ப்புண்டு.
குறவர் சமூகத்தினர் தாம் பின்தங்கிய, ஒதுக்கப்பட்டவர்கள் என்ற மனப்பாங்கினை விட்டொழித்தல் அவசியமானது. இந்தியாவிலிருந்து காலத்தால் முந்திய உள்வரவாளர்கள். இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப ப்படவேண்டும் என்பதுபற்றி அரசு சிந்தித்ததில்லை. வாக்களிக்கும் உரி மை வழங்கப்பட்டுள்ளது எனில் தாம் இந்நாட்டுக்குரியவர்கள் என்ப தைக் கருத்திற்கொள்ள வேண்டும். பயந்த சுபாவம் கொண்டவர்களான குறவர் காலத்துக்குக் காலம் உடல், உள ரீதியிலான பாதிப்புக்குள்ளாகி வருகி ன்றனர். அவர்களது தாழ்வு மனப்பான்மையைப் பயன்படுத்தி பாலியற் பலாத்காரமும் புரியப்பட்ட சம்பவங்களும் உண்டு. எனவே தம்மைச் சூழவுள்ள குறவர் சமூகத்தினரை கெளரவப்படுத்தியும் மதித்தும் நடந்து கொள்ள வேண்டியது அயலவர்களின் கடமையாகக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒப்பீட்டு ரீதியில் சிங்களக் கிராமங்களைச் சார்ந்து வாழும் குறவர்கள் பொருளாதார சமூக ரீதியில் முன்னேறியுள்ளனர். அதாவது நிரந்தரக்குடியிருப்பாளர்களாகியுள்ளமை மட்டுமல்லாது விவாசாயத்தி லும், சிறு கைத்தொழில்களிலும் ஈடுபட்டுவருவதுடன் சிலர் மத்தியகிழக்கு நாடுகளில் வேலைபெற்றுச் சென்றுமுள்ளனர். சிங்கள மக்கள் தங்களைப் பழங்குடிகள் எனக்கருதி அன்புடன் பழகிக்கொள்கின்றனர் என கலா வேவாவிலிருந்து கள்ளியந்தீவுக்கு விவாகத்திற்கு நிச்சயார்த்தம் செய்ய வந்தவர்களில் ஒருவரான சுதுநிலமே இரட்னாயக்கா என்ற குறவர் தெரிவி த்துள்ளமை குறிப்பிடத்தக்கது (4).
வனக்குறவர் வாழ்வுபற்றி விமர்சிப்பவர்கள். இவர்கள் சுகாதார வாழ்வுக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் சவால்விடுபவர்களாகவுள்ளனர் என் பர். அதாவது தம்மைத் துப்புரவாக வைத்துக்கொள்வதில்லை என்பர். எனினும் கணிசமான இளைஞர், யுவதிகள் சுகாதாரவாழ்வு வாழ்வதை அவதானிக்க முடிந்தாலும் ஒட்டுமொத்தமான சுகாதார வாழ்வை மேற் கொள்வதற்கு சுகாதாரத் திணைக்களமும், சுற்றாடல் அமைச்சும் இணை ந்து பிரதேச மட்டத்தில் ஆலோசனைகளையும் செயற்படு தன்மைகளை யும் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். இதனால் ஏனைய சமூகத்தவர்கள் இவர்கள்மேல் கொண்டிருக்கும் “அன்னியப்படுத்தப் பட்டவர்கள்’ என்ற நிலையினைப் போக்க முடியும். எனவே இவர்களின் வாழ்வியலில் மாற்ற த்தினை ஏற்படுத்துவதற்குத் துரிதப்படுத்தப்பட்ட புனர்வாழ்வு அவசியமாகி னறது.
GG ராசிரியர்.கா.குகாலன் 94 வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு )
 

O
O2
O3
0-4-
உசாவியவை
Christoph. Von. & Fuger Haiman Dorf A Himalayan Tribe. Ffrom cattle to cash. pp.44-46.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையின் செயற்பாட்டு அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை. Verma.K.K., Culture. Ecology and Population. (An AnthropoDemographic Study). pp. 68-196. கலாவேவாவைச் சேர்ந்த சுதுநிலமே இரட்னாயக்காவுடனான பேட்டி யிலிருந்து பெறப்பட்டவை.
୦30
Cரோசிரியர்.கா:குகபாலன் } வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு )
سمبر

Page 52
键.濠兹、羧 澎签
பின்னிணைப்பு
வணக்குறவர் பேசும் மொழிச்சொற்கள் சில
இலக்கங்கள் :
01- உகிட்டி 20 - இராவைய் 02- றோண்டு 30 - முப்பை b( 40 - நாப்பை)10م -03 04. நாலுக் 50 - uIITLibéOL) 05- ஐது 60 - s1360)LJ 06- ஆறு 70 - எலாவை 07- 6](b 80 - ஏண்பை 08. எனிமிதி 90 - தொண்நுாறு 09. தொம்மிதி 100 - நூறு 10- பதி 1000 - பதிஆயிரல்
100,000 - உருலச்சம்
உறவுப் பெயர்கள் :
த்மிழ் குறவர்களால் பேசப்படும் மொழி JfT அப்பாடுالا {69
9:liol DfT Sub DT
அக்கா இக்கா
அண்ணா இண்ணா
தம்பி தம்முடு
தங்கை தோடபுட்டு
LDDT LDIT65
LDTLÉl அத்தம
சித்தப்பா சினாப்பா
( (b ராசிரியர்.கா:குகாலன் s வரைக்குறவர் வழ்வில் ஆட்வு )
 

பெரியப்பா பெரியம்மா சித்தி அண்ணி அம்மம்மா தாத்தா
உணவு வகைகள் :
அரிசி
சோறு
LJT6)
முட்டை
கறி
மிளகாய்
வெங்காயம் தேங்காய் தண்ணீர்
மீன்
இறைச்சி உடும்பு இறைச்சி மான் இறைச்சி பன்றி இறைச்சி கோழி இறைச்சி ஆட்டுஇறைச்சி கத்தரிக்காய் வெண்டிக்காய் பூசணிக்காய் சீனி
பதபா Liġbġ5 JIT பினவா
வதுனா
fig6) bl DIT
தாத்தாப்பாடு
பியம்
கூடு LJT6) கோடுகுட்டு புல்ச்சு நர்க்கால்
U J85Lதெங்கய நீல்
FTL6) நஞ்சிர் உடுவ் நஞ்சிர் திப்பி நஞ்சிர் பந்தி நஞ்சிர் கோடி நஞ்சிர் மேக நஞ்சிர் 6)JÉJ5Bu_I
பண்டக்காய் கூண்டிகாய சீனி
GC ராசிரிபூர்.கா.குகாலன்
$7 வனக்குறவர் வழ்வியல் ஆய்வு

Page 53
உப்பு புளி நெல்
தாமரை நண்டு இறால்
மாம்பழம் வாழைப்பழம் பலாப்பழம் மாதுளம்பழம் விழாம்பழம் கொய்யாப்பழம்
9 -ÜL புல்ப்பு ஒட்டில் தாவர்பூல் நண்லில் றொய்யல் தாம்பல்
மாட்டி பண்டு அட்டி பண்டு பர்சபண்டு மாதுள பண்டு யலுக பண்டு சேக்காய பண்டு
மிருகங்கள் / பறவைகள்வ / ஊர்வன :
நாய் குக்கா பூனை ஊர்பில் பல்லி Lu(B)6ò6Ó ஆடு மேக கோழி கோடி LJ8LDT(BS எத்து 6T(55) பண்ட எத்து goff கிலியா புறா சிட்டபாலவ பாம்பு JT6
Gea ராசிரியர்.கா.குகாலன் 筠冷 வர்ைக்குறவர் வாழ்வில் ஆய்வு
 

எறும்பு கொசு உருபுடவைகள் :
சேலை வேட்டி சால்வை கால்சட்டை சேட்
gFATIJib
U660) பெண்ணின்மேல்சட்டை செருப்பு சப்பாத்து
சீவல்/கடியாண்டில்
ஈங்கள்
சீற
தலபட்ட பைனஏச துண்டு / வசிரம் சுருவல்
மகபிட அங்கி
8(56)
UT6) JL
ஆண்டிபிட அங்கி சோப்பாத்தூல் சாப்பாத்து
வீட்டில் உபயோகிக்கப்படும் பொருட்கள் :
LJTuů
மேசை கதிரை தலையணை EFL'[Q
T6)6OT
சுளகு குவளை (பேணி) செம்பு குத்துவிளக்கு தீப்பெட்டி
8FTLT மேசை கதிரை தலந்துண்டு புல்ச்சட்டி
JT (B)60 gTL LIT யொக்கு சொம்பு குத்துவிளக்கு அக்கிபெட்ட
போக்குவரத்துச் சாதனங்கள் :
விமானம்
கப்பல்
99 வனக்குறவர் வாழ்வியல் ஆய்வு ノ
(பேராசிரியர்காகுகபாலன்

Page 54
புகையிரதம் கோச்சி லொறி லொறியா
வசிப்பிடம் :
வீடு இல்லு குடிசை குரஸ்ஸ்
கிழமைநாட்கள் :
திங்கட்கிழமை சாவாறம் செவ்வாய்க்கிழமை Dň8E66MOTU Lb புதன்கிழமை புதாரம் வியாழக்கிழமை பேஸ்தாரம் வெள்ளிக்கிழமை சுக்கராரம் சனிக்கிழமை சனாரம் ஞாயிற்றுக்கிழமை ஆயத்தாரம்
கத்தோலிக்க மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் நடை முறையில் இருந்த பெயர்கள். ஆண்களின் பெயர்கள் பெண்களின் பெயர்கள் ரங்கமுத்து வன்னரக்கா இராமசுவாமி மசக்கா தும்பண்ணா யங்கடக்க லச்சுமனன் தும்மக்க
யங்கட்டண்ண ஏரக்க
DeF660T நடிப்புபிடா மேகவண்ண பம்மக்கா
பக்கண்ண
ராவன்ன நல்லமசோடு
GG ராசிரியர்.கா.குகாலன் ()() is னைக்குறவர் வாழ்வில் ஆய்வு ノ
 

References
Chandra Richard De Silva. Sri Lanka-A Survey, Vikas Publishing House (Pvt) Ltd. 1997.
Christoph. Von & Fuger Haiman Dorf A Himalayam Tribe, Form Cattle to cash, Vikas Publishing House (Pvt) Ltd., Ghaziabad, 1985.
levers.R.W. Manual of the North Central Province. Ceylon, 1890
Majumdar. D.N. The Bodo-Speaking Tribes of Garo Hills. Tribal Situation in India. Simla l972.
Parker.H: Ancient Ceylon, London 1909.
Raghavan. M.D. Handsome Beggers, The Story of the Ceylon Rodiya, Colombo Book Centre 1957.
Rasanayagam.S. Ancient Jaffna, Madras 926. Knox Robert. An Historical Relation of Ceylon. Colombo 168l.
Sarker.N.K. Demography of Ceylon. Colombo 1957.
Sita Toppo. Dynamics of Educational Development in Tribal India. Classical Publication, New Delhi l979.
Somanader.S.V.O.Gipsies of Ceylon. Ceylon Today. Apríl 1956.
Edger. Thurston. Caste and Tribes of Southern India. Cosmo Publication, Delhi 975.
Verma. K.K. Culture Ecology and Population (An AnthropoDemographic Study) National Publishing House New Delhi 1977.
Max Weber. The Religion of India. Illionois 1958.
(பேராசிரியர்கா குகாலன். ; : ... 101. வணக்குறவர் வாழ்வியல் ஆய்வு D

Page 55
Dharmadasa. K.N. O & S.W. R. De A. Samarasinghe: (Edited).
The Vanishing Aborigines - Sri Lanka's Veddas in Transition. ICES Sri Lanka Studies Series.2. International Centre for Ethnic Studies 1993.
Arunachalam. P. Genus of Ceylon. Vol-1, 1901.
Ranasighe. A.J. Census of Ceylon. Vol-1, Part I. 1946.
Denham.E.B. Census of Ceylon. Vol-I. 1911.
Encyclopaedia Britanica (W.H.R. Rivers).
International Encyclopaedia of the Social Sciences, Vol-15, 16.17.
Govt. of India. India-A Reference Annual 1979. Publication Division l986.
Ragharvan M.D., Kinnaraya. The Tribe of Mat Weavers, Spolia Zeylanica Vol-26. Part II.
The University Teachers for Human Rights (Jaffna). Some-one else's War". Colombo 998.
Krishna Iyer. The Travancore Tribes and Castes Vol- 1937.
குணராசா.க. “குடியேற்றங்களால் இழந்துபோன தமிழ்ப் பிரதேசங் கள், முத்தமிழ் விழாமலர், யாழ்ப்பாணம் 1995.
குணசேகரன்.கே.ஏ. தமிழக மலையின மக்கள், கண்ணப்பர் ஆர்ட் பிறிண்டர்ஸ், சென்னை 1989.
சீனிவாசவர்மா.கோ நரிக்குறவப்பழங்குடிமக்கள், அனைத்திந்திய தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலை நகர் 1978
சீனிவாசவர்மா.கோ நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை (நா. வான
பேராசிரியர்.கா.குகாலன் (). வணக்குறவர் வாழ்வில் ஆய்வு
 

மாமலை, பதிப்பாசிரியர், மக்களும் மரபும்) நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் சென்னை 1993.
சீனிவாசவர்மா.கோ நரிக்குறவர் வாழ்க்கையில் சடங்குகளும் பூசைக ளும் (பதிப்பாசரியர் : நா.வானமாமலை).
சுப்பிரமணியம்.வி.ஐ. கேரளப்பழங்குடி மக்கள், சில கட்டுரைகள். மீனாட்சி புத்தகசாலை மதுரை 1961.
தனபாக்கியம்.ஜி, இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திரா விடக் கலாசாரமும், மட்டக்களப்பு 1988
தேவசகாயம்.என். தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள். சேலம் மாவட்ட ஓராயர் எழுத்தாளர் மன்றம் சேலம் 1996,
பக்தவத்சலாபாரதி.சி. பண்பாட்டு மானிடவியல். மணிவாசகர் பதிப் பகம் சென்னை 1990.
பிலோ இருதயநாத் காட்டில் கண்டமர்மம். வானதி பதிப்பகம், சென் னை 1984.
பிலோ இருதயநாத். கேரள ஆதிவாசிகள். வானதி பதிப்பகம், சென் னை 1989.
முகம்மது ஹசன்.மு.இமரைக்காயர் சமூகம் ஒர் ஆய்வு, கவின்கலை அச்சகம், சென்னை 1991.
நசீம்தீன்.பி இடுக்கி மாவட்ட பழங்குடி மக்களின் வழக்காற்றியல் கோவை 1990.
வேங்கடராமன்.எஸ்.ஆர். பாரதபழங்குடிகள். தமிழ் எழுத்தாளர் கூட்டு றவு சங்கம். சென்னை 1983
ஜெயதேவ்,ரகுபதி.மு. பழங்காலப் பண்பாடும் பழங்குடிகள் பண் பாடும். தமிழக அரசு வெளியீடு 1962.
வாழ்வியற்களஞ்சியம். தொகுதி 12 தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சா 6ft 1992.
வீரகேசரி நாழிதழ் 05-02-2000,
பேராசிரியர்.கா.குகாலன் 13 வனக்குறவர் வாழ்வில் ஆய்வு ノ

Page 56


Page 57