கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொங்கிறீற்றின் முக்கிய தன்மைகளும் அதன் கலவை விதானமும்

Page 1
g
ព្រោ
NEPORTANTEROIDERESSOR COMBIENVIDIS VIIDXDIESE
நவரெத்திரா
SefsNEngs PhDFCEME SyčE குர்ஆர்.பேர்சிங்
규 பல்கலைக் கழகம்
 
 


Page 2

கொங்கிறீற்றின் முக்கிய தன்மைகளும் அதன் கலவை விதானமும்
வே. நவரெத்தினராசா

Page 3
பதிப்புரிமை : வே. நவரெத்தினராசா
பதிப்பாளர் : லகஷமி அச்சகம்
கொழும்பு 13.
முதல் பதிப்பு : 1995

முகவுரை
சமீபகாலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கொங்கிறீற்றினால் அமைக்கப்பட்ட கட்டிடங்கள், பாலங்கள் போன்றவை, கட்டிமுடிந்து குறுகிய காலங்களில் இடிந்து போவதை அறிகின்றோம். இவை இடிவதற்குக் கொங்கிறீற்றின் தன்மைகளைப் பற்றியும் அதில் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் பற்றியும் விளக்கமாகத் தெரியாமலிருப்பதே காரணம் என்று கூறலாம். இலங்கை போன்ற வளர்ச்சியடையும் நாடுகளில் கொங்கிறீற்று செய்யும் முறைகள் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் கொங்கிறீற்று வேலை இடங்களில் பணிபுரியும் தொழில்நுட்பவியலாளர் மத்தியில் அறிவு குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு ஒரு முக்கிய காரணம், கொங்கிறீற்றுத் தொழில்நுட்பத்தை விளங்கவைக்கும் புத்தகங்கள் கூடியதாக ஆங்கிலத்திலே காணப்படுவதாகும். தமிழில் இப்புத்தகங்கள் காண்பது அரிதாகிவிருக்கின்றது. இக் குறையை தமிழில் தேர்ச்சி பெற்ற தொழில் நுட்பவியலாளர்களிடையே நிவர்த்தி செய்வதே இப்புத்தகத்தை வெளியிடுவதன் முக்கிய குறிக்கோளாகும்.
கொங்கிறீற்றின் மூலப்பொருட்களின் விபரமும், அவைகளின் தரமும் அவற்றைப் பரிசோதிக்கும் முறைகளும், உடன்கலந்த கொங்கிறீற்றின் தன்மைகளும், கடினமான கொங் கிறீற்றின் தன்மைகளும் , இவையிரண்டினையும் பரிசோதிக்கும் முறைகளும் தரப்பட்டிருக்கின்றன. இவைகளைத் தெரியப்படுத்தும்பொழுது, இவைக்குத் தொடர்பு கொண்ட நியமங்களையும் ஆங்காங்கே அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கேற்ப விளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன. முழுமையான விளக்கங்கள் இந்நியமங்களைப் பரிசீலித்துப் படிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இலங்கை நியமங்கள் சிலது இருப்பினும், பாரம்பரியமாக இந்நாட்டுப் பொறியியலாளர்கள் பிரித்தானிய நியமங்களைப் பாவித்து வந்திருந்தமையாலும், எமக்குத் தேவையான எல்லா விடயங்களிலும் இலங்கை நியமங்கள் இல்லாமையினாலும், பிரித்தானிய நியமங்கள் கூடியதாக இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வாசகர்கள் இலங்கை நியமங்கள் இருக்கும் விடயங்களில் அவைகளைப் பாவிக்கலாம்.
கொங்கிறீற்றுக் கலவை விதானிக்கும் முறை அத்தியாயம் 7 இல் விபரமாகத் தரப்பட்டிருக்கின்றது. இம்முறை பிரித்தானிய கட்டிட 6i5TUGOligaOTT6b (Building Research Establishment, U.K.) Geiss 60 ribs “சாதாரண கொங்கிறீற்றுக் கலவை விதானம்' (Design of Normal Concrete Mixes, HMSO, 1988) 6T6öp 2,660),556. By JULg (bidspg). இவ் ஆவணத்தில் காணப்படும் அட்டவணைகள் 7.1ம், 7.2ம், வரை

Page 4
படங்கள் 7.2ம். 7.3ம் இங்கு தரப்பட்டிருக்கின்றன. இவைகள் இங்கு பிரசுரிப்பதற்கு அநுமதி தந்தமைக்கு அந்த ஸ்தாபனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சில முக்கிய அறிவியற் சொற்களும் சொற்தொடர்களும் ஆங்கிலத்திலும் தரப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் வாசகர்கள் இச் சொற்கள் ஆங்கிலப்புத்தகங்களிலும் நியமங்களிலும் காணும்பொழுது மனக்கிலேசமின்றி அணுகுவதற்குப் பயன்படும் என்று நம்புகின்றேன்,
இப்புத்தகத்தைக் கையெழுத்துப் பிரதியிலிருந்து தட்டச்சுப் பிரதியாக்க உதவி செய்த செல்வி. சே. சத்தியராணிக்கும், அதன் பின் புத்தக வடிவில் அமைத்த பதிப்பாளர் லஷ்மி அச்சகத்தார் அவர்களுக்கும், இப்புத்தகத்தின் முன்அட்டையை அமைத்துத்தந்த எனது மகன் கட்டிடக் கலைஞர் ந. செந்நில்குமரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
வே. நவரத்தினராசா
15 November 1995

iji
உள்ளடக்கம்
கொங்கிறீற்று
போட்லந்து சீமெந்து
கொங்கிறீற்றுத் துணிக்கைகள்
危h
உடன்கலந்த கொங்கிறீற்றின் தன்மைகள்
கடினப்பட்ட கொங்கிறீற்றின் தன்மைகள்
கொங்கிறீற்று கலவை விதானம்
கொங்கிறீற்று கலத்தல்
கொங்கிறீற்று நியமங்கள்
பக்கம்
14
23
24
33
45
55
58

Page 5
1 கொங்கிறீற்று
ConCrete
கட்டடங்கள், பாலங்கள், பாரிய நெடுஞ்சாலைகள்,அணைக்கட்டுக்கள் போன்றவை அமைப்பதில் கொங்கிறீற்று அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது. இரும்பிலும் இதே மாதிரியாகக் கட்டடங்களையும் பாலங்களையும் அமைக்க முடியுமாயினும், இரும்பு கறல் பிடிப்பதால் கொங்கிறீற்றின் பாவனை அதிகரித்துக் கொண்டுள்ளது, தற்காலத்தில் கொங்கிறீற்று உருக்குக்கம்பிகள், இழைகள் போன்றவற்றை இணைத்து, வலுவூட்டிய கொங்கிறீற்று (reinforced concrete) ஆகவும், முன்தகைத்த கொங்கிறீற்று (prestressed concrete) ஆகவும் பாவிக்கப்படுகின்றது.
உருக்குக் கம்பிகள், இழைகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இரும்பு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதனால் அவைகளின் தரம் நியமங்களுக்குக் கட்டுப்பட்டவையாகவும், ஒரே சீரான தரமுடையதாகவும் அமைகின்றது. கொங்கிறீற்று பொதுவாக வேலை இடங்களிலே கலக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆகையினால் அவ்வேலை இடங்களில் பேணப்படும் கட்டுப்பாட்டைப் பொறுத்து கொங்கிறீற்றின் தரமும் மாறுபடும் நிலை ஏற்படுகின்றது. தற்பொழுது சில தேசங்களில் கொங்கிறீற்றும் மையப்படுத்தப்பட்ட ஆலைகளில், இயந்திர சாதனத்தில் மிகவும் நுட்பமாகக் கலக்கப்பட்டு வேலை இடங்களுக்கு இதற்கென அமைத்த விசேட டிறக் வண்டிகளில் கொண்டு செல்லப்படும். இதன்பிரகாரம் கொங்கிறீற்றின் தரத்தை கட்டுப்படுத்திய முறையில் தயாரிக்கக் கூடியதாகவும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது.
கொங்கிறீற்றின் தரம் அதன் மூலப்பொருட்களின் தரத்தைப் பொறுத்தும், கலவை செய்யும் பொழுது மேற்கொள்ளப்படும் கட்டுப்பாட்டுத் தரத்தைப் பொறுத்தும் அமையும், கலந்த கொங்கிறீற்று நல்ல தரமாக இருப்பினும் அதை இறுக்கும் முறைகளும், அதைப்பண்படுத்தும், முதிர்வித்தல் முறைகளும் கொங்கிறீற்றின் குணாதிசயங்களைப் பாதிக்கும். இக்குணாதிசயங்களுக்கு ஏற்ப கலவைகளை விதானித்தல் வேண்டும். சுருங்கச் சொல்லின், கொங்கிறீற்றின் தன்மைகள் அதன் கலவைகளை விதானிப்பதன் மூலமும், கலவை மூலப்பொருட்களின் தரங்களைப் பொறுத்தும், பின்பு கலந்தபின் மால்களில் இறுக்குவதையும், முதிர்வித்தல் போன்றவற்றையும் பொறுத்து மாறுபடலாம்.
கொங்கிறீற்றை அடிப்படையாக நோக்கும்பொழுது, இயற்கையான அல்லது செயற்கையான ஜடத்துணிக்கைகளையும் இணைப்புத்தன்மை வாய்ந்த பொருளையும் சேர்ந்த ஒரு கலவையாகவும், கடினமடையும் பொழுது கற்பாறை போன்று இறுக்கம் கொண்ட பொருளாகவும் நோக்கலாம். சாதாரணமாக, பாறைக்கற்கள் பிரல்கற்கள் போன்றவற்றுடன், மண்ணையும் போட்லந்து சீமந்தையும் சேர்த்துக் கலந்து கொங்கிறீற்று செய்வதை நாம் அறிவோம். கலவையில் உள்ள சீமந்து நீருடன் சேர்ந்து, நீரேறிய

சீமந்துப் பசையாகி, இப்பசைத்தன்மையினால் கற்களையும் மணலையும் ஒன்று சேர்த்து இணைக்கின்றது. இக்கலவை காலப்போக்கில் கடினமடையும் பொழுது கொங்கிறீற்று பலம் அடைகின்றது. கலவையில் கற்களையும் மணலையும் இணைக்கும் பலம் சீமந்துப் பசையிலிருந்து பெறப்படுவதால், தரம் குன்றாத சீமந்து கலவையில் பாவித்தல் மிகவும் முக்கியம். கொங்கிறீற்றின் சீமந்தின் அளவு கூடும்பொழுது, அதன் உட்புகவிடுதகவு தன்மை குறைகிறது. அதனால் வெளிச்சுற்றாடலால் ஏற்படும் தாக்கங்கள் குறைவதால் கொங்கிறீற்று நீண்டகாலத்திற்குப்பாவிக்கமுடியும். எனினும், கலவையில் கூடியபங்கு பாவிப்பதால் கொங்கிறீற்றின் விலை கூடுவதுமல்லாமல், கூடிய கொங்கிறீற்றுச்சுருங்கல், ஊர்தல் போன்ற தாக்கங்களும் ஏற்படலாம். இவைகளை அனுமானித்து, கொங்கிறீற்றின் நீண்டகாலத் தன்மையைக் கூட்டு வதற்காக ஆகக்குறைந்த சீமந்தின் அளவைகளும் ஆகக்கூடிய சீமந்தின் அளவைகளும் நியமங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
நல்ல தன்மைகளைக் கொண்ட கொங்கிறீற்றைத் தயாரிப்பதற்கு அதன் மூலப் பொருட்கள் நல்ல குணாதிசயங்களையும் தரத்தையும் கொண்டவையாக இருத்தல் வேண்டும். இவற்றில், சீமந்து ஆலைகளில் தயாரிக்கப்பட்டு, அவ்வாலைகளின் உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ளலாம். துணிக்கைகளை இயற்கையாக ஆற்றுப்படுகைகளில் இருக்கும் பரல் கற்களாகவோ அல்லது கற்பாறைகளை உடைத்து நொருக்கிய கற்களாகவோ அல்லது செயற்கை முறைகளில் தயாரித்த துணிக்கைகளாகவோ பெற்றுக்கொள்ளலாம். சிறுதுணிக்கை அல்லது மணல் வழக்கமாக ஆற்றுப் படுகைகளிலிருந்தும், கிடங்குகளிலிருந்தும் பெறப்படுகின்றன. நாம் பாவிக்கும் நீர் உகந்ததா என்று பரிசீலித்தபின் கொங்கிறீற்றுக் கலவைகளில் பாவிக்கலாம். இவை பற்றி விரிவாக இனி ஆராய்வோம்.

Page 6
2 போட்லந்து சீமந்து
Portland Cement
இன்று நாம் பாவிக்கும் சீமந்து கொங்கிறீற்று பலகாலந்தொட்டு விருத்தியடைந்துவரும் தொழில்நுட்பத்தினுாடாக வளர்ந்து, பண்டைக்காலத்தில் பாவித்த சீமந்து கொங்கிறீறிலும் பார்க்க மிகவும் வித்தியாசமானதாகவும், விஷேட தன்மைகளைக் கொண்டதாகவும் உள்ளது. கொங்கிறீற்றை அடிப்படையாக நோக்கும்பொழுது, இதில் கற்களையும் மணலையும் சேர்த்து இணைப்பதற்கு சீமந்து உபயோகிக்கப் படுகிறது. எகிப்தியர் பழைய காலத்தில் நீறாக்கிய சுண்ணாம்பை இணைப்புப் பொருளாகப் பாவித்தார்கள். நீறாக்கிய சுண்ணாம்பை மணலுடன் கலந்து ஒரு சேர்வையாக்கி அதனைக் கொண்டு பெரிய கற்களை வைத்து கட்டிட வேலைகள் செய்தார்கள். சுண்ணாம்பின் இணைப்புத்தன்மையை மேலும் ம்ேபாடடைய அதனுடன் நன்றாக அரைத்த செங்கல் ஒட்டுத்தூள்களையும், எரிமலை நீறையும் சேர்த்தார்கள். எரிமலை நீறு போசோலானா என்னும் இரசாயனப் பொருளைக் கொண்டதாகவும், இப்பொருளில் சிலிக்கா, அலுமினா போன்ற இரசாயனப் பொருள்களே இருந்தமை யினால், இதனைப் பயன்படுத்தும் பொழுது இணைப்பு மிகவும் விசேடமாக இருந்த தாகவும், இதைச் சேர்ந்த சேர்வைகள் கடினமடையும் பொழுது மிகவும் கடினமாகவும் பலமாகவும் ஏற்பட்டன. முதன்முதலாக இப்பொருள் இத்தாலியில் பொஸ்நோலி என்னுமிடத்தில் கிடைத்த எரிமலைநீறுலிருந்து கிடைத்தமையினால் போசோலானா என்று பெயரிடப்பட்டது என்று அறிகிறோம்.
இதன்பின், கட்டிடத் தொழில் விற்பன்னர்கள் நீறாக்கிய சுண்ணாம்புடன் கூடியளவு களிமண் கலப்பதால் கிடைக்கும் சேர்வை சிறந்ததென அறிந்தார்கள். இதனிலிருந்துஆரம்பமாகி, இன்று சுண்ணாம்புக்கல்லையும் களிமண்ணையும் உடைத்து, கலந்தபின் ஓர் சூளையில் வைத்து எரித்து, சுண்ணாம்புக் கலப்பில் இருக்கும் கரியமிலவாயுவைப் போக்கி, அதனால் கிடைக்கும் உற்பத்திப் பொருளைத்தான் சீமந்து என்று நாம் பாவிக்கின்றோம், இப்படிக் கிடைக்கப்பெற்ற சீமந்து, டோசற், இங்கிலாந்து என்னும் இடத்தில் இருக்கும் போட்லன்ட் சுண்ணாம்புக்கல்லை ஒத்திருந்தபடியால் அதைக் கண்டுபிடித்த யோசப் அஸ்பிடின் என்பவர் போட்லன்ட் சீமந்து என்று பெயரிட்டார்.
2.1 fidibi o jiuji 63 tisso (Manufacture of Cement)
சுண்ணாம்புக்கல்லும், களிமண்ணும் சேர்ந்த கலவையிலிருந்தே சீமந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. சுண்ணாம்புக்கல்லில் உள்ள கல்சியமும் களிமண்ணில் உள்ள சிலிக்கா, அலுமினா போன்ற இரசாயனப் பொருட்கள் சேர்ந்து வருவதுதான் சீமந்து. உடைத்த சுண்ணாம்புக் கல்லையும் களியையும் ஓர் குறிப்பிட்ட விகித அளவில் கலந்து, அரைத்து அதன்பின் ஓர் சூளையில் 1400 °C வெப்பநிலையில் எரித்துக் கிடைப்பதுதான் சீமந்து கிளிங்கர். சூளையில் எரிக்கும்பொழுது சுண்ணாம்புக் களிகலவை இரசாயன முறையில் இணைந்து உருகி கிளிங்கர் பந்துகளாகப்

பெறப்படுகின்றன. இதை ஆறியபின் மிகவும் நுண்மையாக ஓர் சிறிதளவு ஜிப்சம் (gypSum) சேர்ந்து அரைத்து சீமந்து பெறப்படுகிறது.
சீமந்து “உலர்ந்த்” முறையாகவோ அல்லது “நனைந்த" முறையாகவோ தயாரிக்கலாம். நனைந்த முறையில் உடைக்கப்பட்ட சுண்ணாம்புக்கல்லும் களிமண்ணும் நீர் சேர்த்து குறிப்பிட்ட விகித அளவில் கலவையாக்கி ஓர் குழம்பாக்கப்படுகின்றது. இதனைப் பின் ஓர் சூளையில் பம்பியின் மூலம் செலுத்தப்படுகிறது. இச்சூளை 7.5 மீ விட்டமுள்ள உருக்கினால் செய்யப்பட்டு உட்பகத்தில் விசேட சூடுதாங்கக்கூடிய செங்கற்களால் பதிக்கப்பட்ட உருளையாக இருக்கும். சிறு சாய்வுடன் பொருத்தப்பட்டதாக இருக்கும். சுண்ணாம்புக்களிகுழம்பு உருளையின் மேற்பாகத்திலிருந்து உட்புகுத்தப்பட்டு, உருளையின் அடிப் பாகத்திலிருந்து கரி எரித்து அதன் வெப்பம் சூளையில் மேற்பாகத்திலிருந்து வரும் சுண்ணாம்புக் குழம்பை நோக்கி ஊதப்படுகின்றது. அப்படி ஊதப்படும் காற்றின் வெப்பம் 1400-1500 ° C ஆக இருக்கும். இதன் பிரகாரம் இவ்வுவர்ணக் காற்று சுண்ணாம்புக் குழும்பை அவித்து அதனிலுள்ள கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இவ்வாறாக சூடேற்றப்பட்ட கலவை, இரசாயன முறையில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருகி கிளிங்கர் பந்துகளாக மாறுகின்றது. அதன் பின் கிளிங்கர்
சூடாக்கப்படுகிறது (படம் 2.1 a).
f Electrostatic precipi ta lors Chalk Clay
Jot. Surry freturs Water yåver process
Wast Clay WAfon rinít I slurr y f
'A
fouwerized Sc
Gypsun
اللغة
Bchill rinil
Rotary kalt,
Burning žrne
C);f ker cooler
Cold tr
Packing
(o) wet process part Euk transport
படம் 2.1 a சீமந்து உற்பத்தி விளக்கப் படம் - நனைந்த முறை
உலர்ந்த செயல்முறையில் (படம் 2.1b) மூலப்பொருட்களாகிய சுண்ணாம்புக் கல்லும் களிமண்ணும் உடைத்து,குறிப்பிட்ட விகிதாசாரத்தின்படி சேர்த்து நுண்மையாக அரைக்கப்படுகின்றது. அதன்பின் இக்கலவையை முதற்கட்டமாக 800C க்கு சூடாக்கப்பட்டு அதன்பின் "நனைந்த" முறையில் செய்ததுபோல் உருளைச் சூளையில் புகுத்தப்படுகின்றது. இம்முறையிலும் கலவை 1400 - 1500 °C பாகைக்கு சூடேற்றி அதன் பயனாக சீமந்து கிளிங்கர் செய்யப்படுகிறது.

Page 7
f Electrotoc
Orecipoltor
Raw neal preheoter
Eca!| fr |
1-1 rnestorie
Og |Crusher
悠炎
ཡི་
dust returns to process
Pu|verized
CO and flow of manufacturing materials
ca Flow o gases
Rotary kiln
Burning zOrne
Cold
r Clinker cooler
Packing (b) dry process ptant Bulk transport
படம் 2.1 b சீமந்து உற்பத்தி விளக்கப் படம் - உலர்ந்த முறை
மேற்கூறிய இரண்டு முறைகளாலும் உற்பத்தி செய்யப்படும் சீமந்து கிளிங்கர் ஓர் குறிப்பிட்ட குறைந்தளவு ஜிப்சத்துடன் கலந்து அரைக்கப்படுகின்றது. ஜிப்சம் சேர்ப்பதால் சீமந்து நீருடன் கலக்கும்பொழுது விரைவில் கடினமாகாமல் இருக்க உதவுகின்றது.
2.2 போட்லந்து சீமந்தின் அளவறி இயைபு
(Composition of Portland Cement)
கொங்கிறீற்றின் பலம் அதனுள் சேர்க்கும் பிரதான துணிக்கைகளின் பலத்தையும், அதற்கும் துணிக்கைகளுக்கும் ஏற்படும் இணைப்புப் பலத்தையும் பொறுத்திருக்கும். கொங்கிறீற்று உடையும்பொழுது, ஒன்றில் துணிக்கைகளும் சீமந்துப் பசையும் ஒட்டியிருக்கும் மூட்டுகளில் அல்லது துணிக்கைகளுக்கு ஊடாக உடையும் என்று ஆராய்ச்சியிலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது. இது துணிக்கைகளின் பலத்தையும் சீமந்துப் பசையின் பலத்தையும் பொறுத்து எது கூடிய பலமாக உள்ளதோ அதற்குத்தகுந்தவாறே உடைவு ஏற்படும். சீமந்துப் பசையின் பலம், சீமந்தின் குணாதிசயங்களைப் பொறுத்து இருக்கும்.
சீமந்தின் குணாதிசயங்கள் அதனுள் கலந்திருக்கும் நான்கு முக்கிய
கூட்டுப் பொருட்களின் அளவைப் பொறுத்திருக்கின்றது. இந்நான்கு முக்கிய பாகங்களாவன :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிறை கல்சியம் சிலிக்கேற் 3CaO.SiO, : CS டை கல்சியம் சிலிக்கேற் 2CaO.SiO, : CS டிறை கல்சியம் அலுமினேற் 3CaO. ALO, : CA GTippT 56bálub Pig).E(3607G6). (F) Opp 4CaO.A.O.FeO, : CAF
இவைகளைச் சுருக்கமாக CS, C,S, CA, CAF என்று குறிப்பிடுவார்கள். மேற் கூறிய பிரதான கூட்டுப் பொருட்களைவிட, சிறிய அளவில் பல கூட்டுப்பொருட்கள் சேர்ந்து இருக்கும். இவையாவன, மக்னீசியம் ஒக்சைற் (MgO),ரைற்றேனியம் ஒக்சைட் (TiO), மாங்கனீஸ் ஒக்சைட் (MnO), சோடியம் ஒக்சைட் (NaO), பொட்டாசியம் ஒக்சைட் (KO) ஆகும். இவைகள் சீமந்தின் அளவையில் மிகவும் குறைந்த விகிதமாகவே கானப்படும். எனினும் சோடியம், பொட்டாசியம் ஒக்சைட்களினால் சில பிரச்சனைகள் ஏற்படலாம் என்று அறியக்கூடியதாக இருக்கிறது. இவை சில விதத் துணிக்கைகளுடன் சேர்ந்து தாக்குதல் அடையும் பொழுது, இவைகள் உள்ளடங்கிய சீமந்தினால் செய்யப்படும் கொங்கிறீற் உடைவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தாக்குதல் ‘காரம்gj605ë 60) 5 6 5jgj, 5 Tdi (556ë” (alkali - aggregate reaction) 5T gjigj சொல்லப்படுகிறது.
2.3 (8LIT 60is fiDjib oligo3556i (Types of Portland Cement)
பல தரப்பட்ட போட்லந்து சீமந்துகள் பாவிக்கப்படுகின்றன. இவையாவன :
சாதாரண போட்லந்து சீமந்து OPC துரிதமாக கடினமாகும் போட்லந்து சீமந்து RHPC குறைந்த வெப்ப போட்லந்து சீமந்து LHC சல்பேட் எதிர்க்கும் போட்லந்து சீமந்து SRPC போட்லந்து உலோகச் சூளை கசடு (Slag) சீமந்து PBFC போட்லந்து நிலக்கரி நீறு சீமந்து PFCC கூடிய அலுமினா சீமந்து HALC
b) (Masonry) fudbg MC வெள்ளை போட்லந்து சீமந்து WC
துரிதமாகக் கடினமாகும் போட்லந்து சீமந்து (RHPC) அதன் அளவறி இயைபு சாதாரண போட்லந்து (OPC) க்குச் சமமாக இருந்தாலும் மிகவும் நுணுக்கமாக அரைக்கப்படுகிறது. இதனால் OPC இலும் பார்க்க மிகவும் கூடிய கெதியில் பலம் பெறுகிறது. ஆனால் அதன் முழுமையான பலம் சொற்பமாகவே OPC இலும் பார்க்கக் கூடுகின்றது.இச்சீமந்து நீரேற்றம் மூலமாகப் பசையாகும் பொழுது மிகவும் விரைவாக வெப்பத்தை வெளிவிடுகிறது.
குறைந்த வெப்ப போட்லன்ட் சீமந்து (LHC)சாதாரண போட்லந்து சீமந்திலும் பார்க்க வித்தியாசமான அளவு முக்கிய கூட்டுப்பொருட்களைக் கொண்டதால் சாதாரண சீமந்திலும் பார்க்க மிகவும் நுணுக்கமாக அரைத்திருந்தாலும், குறைவான

Page 8
அளவே இரசாயன நடவடிக்கையை (reactive) மேற்கொள்ளுகிறது. நீரேற்றமாகும் (hydration) பொழுது வெப்பம் மிகவும் மெதுவாகவே வெளியேற்றப் படுகிறது. கொங்கிறீற்றின் உஷ்ணமும் குறைவாகவே பெறப்படுகின்றது. ஆரம்பப் பலமும் முழுமையான பலமும் சாதாரண சீமந்திலும் பார்க்க குறைவாகவே பெறப்படுகின்றது. ஆரம்ப அடைநேரம் (initialSetting time) சாதாரண சீமந்திலும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
சல்பேட் எதிர்க்கும் போட்லந்து சீமந்து (SRPC) சாதாரண சீமந்தைப் (OPC) தைப் போன்றதானாலும் அதன் கூட்டுப் பொருட்களின் விகிதாசாரம் வித்தியாசமானதாகும். குறைந்தளவு CA சேர்ந்திருக்கின்றபடியால் சல்பேட்களால் பாதிப்பு ஏற்படாத கொங்கிறீற் கொடுக்கக்கூடியதாகும். சாதாரண சீமந்திலும் பார்க்க உஷ்ணம் மிகவும் வேகக் குறைவாகவே வெளிப்படுத்தினாலும், குறைந்த வெப்பம் போட்லந்து சீமந்து (LHC) இல் உள்ள வேகத்திலும் பார்க்கக் கூடியதாகவே இருக்கும்.
சாதாரண சீமந்துக் கிளிங்கருடன் உலோகம் செய்யும் சூளையிலிருந்து பெறப்படுகின்ற கசடு (slag) சேர்ந்து அரைத்துப் பெறப்படும் சீமந்து போட்லந்து உலோகச் சூளை கசடு சீமந்து எனப்படும். இதில் கசடு சீமந்துடன் கலந்த கலவையில் எடையில் 65 விகிதத்திற்குக் குறைந்தளவில் இருக்கவேண்டும். இந்தச் சீமந்து சாதாரண சீமந்திலும் பார்க்கக் தாக்குத்திறன் (reactivity) குறைவாக உடையதாக இருக்கும். பலமும் மெதுவாவே பெறக்கூடியதாக இருக்கும். சாதாரண சீமந்திலும் பார்க்கக் குறைந்த வேகத்தில் வெப்பத்தை வெளிப்படுத்துவதோடு சல்பேட் எதிர்க்கக் கூடிய சக்தி போன்ற அனுகூலமான குணாதிசயங்களைக்
கொண்டதாகும்.
பொடியாக்கப்பட்ட நிலக்கரி நீறு சீமந்து கிளிங்கருடன் சேர்ந்து அரைத்துப் பெறப்படுவதுதான் நிலக்கரி நீறு போட்லந்து சீமந்து (PFCC) ஆகும். இதில் எடை விகிதாசாரப் படி 15க்கும் 35க்கும் இடைப்பட்டளவு பொடியாக்கப்பட்ட நிலக்கரி நீறு சேர்ந்திருக்கும். பலம் பெறும் வேகம் சாதாரண போட்லந்து சீமந்திலும் பார்க்கக் குறைவாகவே இருக்கும். சாதாரண சீமந்து ஒரு குறிப்பிட்டளவு நெகிழ்த்திப் (plasticizer) பொடியைக் கலந்து கட்டிட சீமந்து பெறப்படுகின்றது. இதில் இருக்கின்ற நெகிழ்த்தி கட்டிட வேலைக்குத் தேவையான சாந்து (mortar)
செய்யும் பொழுது அதற்கு வேண்டிய நெகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.
கூடிய அலுமினா சீமந்து (HALC) இரசாயனரீதியாக சாதாரண சீமந்திலும் பார்க்க வித்தியாசமானதாகும். அது தாக்குத்திறன் கூடியதாகவும், மிகவும் கூடிய ஆரம்ப பலத்தையும் கொடுக்கின்றது. ஆனால் ஆரம்ப அடைவேகம் மற்றைய போட்லந்து சீமந்துகளிலும் பார்க்கக் குறைந்ததாகவே காணப்படுகிறது. சல்பேட் பாதிப்பை மிகவும் கூடுதலாக எதிர்க்கக் கூடியதாகவும் அசிட் போன்றவற்றை எதிர்க்கக்கூடியதாகவும் ஆனால் காரத்தினால் தாக்கப்படுவதாகவும் அமையும்.

ஈர்ப்புத்தன்மை இருக்கும்பொழுது, 40 இல் இருந்து 100°C பாகையில் இச் சீமந்தினால் செய்யப்படும் கொங்கிறீற்று அதன் உள் அமைப்பு மாறுவதால் பலமிழக்கின்றது. அதனால் கட்டிட வேலைக்குப் பாவிப்பது குறைவாகவே இருக்கின்றது.
வெள்ளை சீமந்து சாதாரண சீமந்தைப் போல இருந்தாலும் வழக்கமான சாம்பல் நிறத்தை அகற்றுவதற்காக அதை உற்பத்தியாக்கும் மூலப்பொருட்கள் தெரிந்து கடுக்கப்படுகின்றன. சீமந்து அடையும் நேரம், ஆரம்பப் பலமும், பூர்த்தியான பலமும் BS 12 : 1989 உடன் இணங்குவதாக அமையும்.
2.4 ftDibsor gooITSJFuriassir (Properties of cement)
சீமந்து நீருடன் கலக்கப்பட்டு சீமந்துக்களி செய்யும்பொழுது இணைக்கும் தன்மையைப் பெறுகின்றது. சீமந்திற்கு நீர் சேர்க்கும்பொழுது நீரேற்றம் (hydration) என்ற செய்முறையின் மூலமாக அதனில் இருக்கும் இரசாயனக் கூட்டுப்பொருட்கள் நீரினால் தாக்கப்பட்டு, இதனால் வரும் விளைபொருட்கள் கைறேட் (hydrate) எனப்படும். இதில் கல்சியம் சிலிக்கேட் (C,S, C,S) கல்சியம் அலுமினேற் (CA) போன்றவற்றின் விளைபொருட்களே பிரதானமாகக் காணப்படும். நீரேற்றிய (hydrated) சீமந்தின் தன்மைகள் சீமந்துப் பசையில் இவ்விளைபொருட்களின் விகிதாசாரத்தைப் பொறுத்ததாக இருக்கும். கொங்கிறீற்றின் பலம் விருத்தியடையும் வேகம் சீமந்து நீரேற்றமடையும் வேகத்தைப் பொறுத்திருப்பதால், சீமந்து அரைக்கும் நுண்மையைப் பொறுத்து இது அமையும். ஆகையினால் மிகவும் நுண்ணியமாக அரைக்கப்பட்ட சீமந்து விரைவாக நீரேற்றம் அடைவதால் விரைவாகப் பலத்தைக் கொடுக்கிறது. இதன் பிரகாரமே துரிதமாகக் கடினமாகும் போட்லந்து சீமந்து (RHPC) மிகவும் நுணுக்கமாக அரைத்திருப்பதைக் காண்கிறோம்.
சீமந்தின் நுணுக்கத்தை அதன் தற்பரப்பை (specific surface) அளப்பதன் மூலம் அறிகின்றோம். இதை ஒரு கிலோகிராமில் உள்ள எவ்வளவு சதுரமீற்றர் கூட்டுப்பரப்பு என்று அளக்கப்படும். வழக்கமாக மேற்பரப்பை BS 4550 : பகுதி 3 : 1978 36ö Gyuïjb 65qub (3 bij di Lü (Lee and Nurse) d5 Tijp உட்புகவிடுமுறையினால் (airpermeability) (படம் 2.2) அல்லது அமெரிக்காவில் பாவிக்கப்படும் பிளெயின் (Blaine) முறையினால் அளக்கப்படும். இவ்விரண்டு முறைக்கும் ஆதாரக் கொள்கை என்னவெனில், ஓர் குறிப்பிட்ட அளவு சீமந்தை ஓர் உட்புகமுறை கலத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அழுத்தி இறுக்கப்பட்ட பின் அதனுாடாகக் காற்று உட்புகும் வேகத்தை அறிவதாகும். BS 12 : 1989 இல் சாதாரண போட்லந்து சீமந்து மேற்பரப்பு குறைந்தது 225 சமீ/கிகி ஆகவும், துரிதமாகக் கடினமாகும் போட்லந்து சீமந்தின் மேற்பரப்பு 325 சமீ/கிகி க்குக் குறையாமலிருக்க வேண்டுமெனவும் கூறப்படுகின்றது.

Page 9
dry air
படம் 2.2 லீநேர்ஸ் காற்று உட்புகவிரு உபகரணம்
எம்மைக் கவரும் சீமந்தின் பிரதான குணங்களாவன
(1) பலம் (strength) (i) அடை நேரங்கள் (setting times) (i) தரம் (Soundness)
2.4.1 fidissor LIGOD (Strength of cement)
சீமந்தின் நெருங்கற் பலத்தை (compressive strength) அறிவதற்கு இரண்டு முறைகள் உள. ஒன்றில் சீமந்துச் சாந்தையும் மற்றையதில் அச்சீமந்தைப் பாவித்துக் கலந்த கொங்கிறீற்றையும் பாவிக்கப்படும். சீமந்துச் சாந்தைப் பாவிக்கும் அணுகுமுறையில் , 1 : 3 என்ற சீமந்து - மண் கலவை பாவிக்கப்படுகின்றது. (BS 4550 பகுதி 3 1978 இல் விளங்கங்கள் தரப்பட்டிருக்கின்றன). இதில் பாவிக்கும் மண் லெயிட்டன் பசாட் (Leightonbuzzard) என்ற பிரயேத்தியேகமாகத் தெரிவு செய்யப்பட்ட மண்ணாகும். இந்த மண் இங்கிலாந்திலிருந்து பெறப்படுவதால் சிரமங்களை எதிர்நோக்கலாம். வருங்காலத்தில் இதற்கு இணையாக மண்ணை இந்நாட்டிலேயே இனங்காணுதல் சிறந்தது. மேற்கூறிய கலவைக்கு அதன் நிறையில் 10 விகித நிறையளவு நீருடன் கலந்து, அப்படிப் பெறப்பட்ட சாந்தை 7.7 மி.மீ. கனவளவில் சதுரமுகி கலசங்களில் நிரப்பி, அழுத்தி இறுக்கப்படல் வேண்டும். 24 மணி நேரத்திற்குப் பின் இக்கலசங்களை அவிழ்த்து, கிடைக்கப்பெறும் சீமந்துச்சாந்து கனக்கட்டியை (Cube)நீரில் அமுக்கி வைக்க வேண்டும். அதன்பின்
 

O
3 நாட்களிலோ 28 நாட்களிலோ இவைகளை வெளியில் எடுத்துப் பலப் பரிசோதனை நடத்தலாம்.
முன்கூறிய விசேட மண் கிடைப்பதில் சங்கடங்கள் ஏற்படுவதால், தற்காலத்தில் பலரும் சீமந்துக் கொங்கிறீற்று முறையை விரும்புகின்றார்கள். இதன்பிரகாரம் நீர் - சீமந்து விகிதம் முறையே 0.60, 0.50 அல்லது 0.45 ஆகியவற்றில் ஒன்றைப் பாவிக்கலாம். BS 4550 பகுதிகள் 4, 5 1978 இல் கொங்கிறீற் கலவையில் பாவிக்க வேண்டிய சீமந்து, பெரிய, நுண்ணிய துணிக்கைகளின் அளவுகள் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட கலவையை கலந்தபின் 100 மி.மீ. கனவளவு சதுரமுகி கலசங்களில் நிரப்பி, மேற்கூறிய நியமத்தில் குறிப்பிட்டவாறு அழுத்தி இறுக்கப்படல் வேண்டும். 24 மணிநேரத்தின் பின் இக்கலசங்களை அவிழ்த்து கிடைக்கப்பெறும் கொங்கிறீற் கனக்கட்டிகளை (cubes) நீரில் அமுக்கி வைக்க வேண்டும். குறிப்பிட்டகால வேளையில், அவைகளை வெளியில் எடுத்துப் பலப்பரிசோதனை நடத்தலாம். இவைகள் 3, 28 நாட்களில் அடைய வேண்டிய குறைந்த பலம் BS 12 12 1989 இல் தரப்பட்டிருக்கிறது.
2.4.2 si6OL (EBUIliassir (Setting times)
சீமந்துப் பசை நெகிழ்வுத்தன்மையிலிருந்து கடினமாவதை அல்லது இறுக்கமாவதையே சீமந்து அடைதல் என்று கூறப்படுகின்றது. வழமையாக நோக்குங்கால், சீமந்துப் பசை செய்வதற்கு சீமந்துத் துாளோடு நீர் கலக்கும் நேரத்திலிருந்து அப்பசை முதன்முறையாக இறுக்கமாவதை ஆரம்ப இறுகல் நேரம் (initial setting time) என்றும் அதன்பின் கடினமாகும் பொழுது ஏற்படும் இறுக்கத்தை 4ற்றிறுகு நேரம் (final Setting time) எனவும் குறிப்பிடுகின்றோம். இவ்விருநேரங்களையும் நியI) இசைவு சீர்துப் பசையிலிருந்து (cement paste of standard consistence) Distrist, i, in Qul (p60) spéb6ft 3(bó, fissip60.
நியம இசைவு சீமந்துப்பசை (Cement paste of standard consistence)
இப்பசையைத் தீர்மானிப்பதற்கு படம் 2.3 இல் கானும் விக்கற் உபகரணம் (Vicat apparatus) பாவிக்கப்படும். இதன்பிரகாரம் ஓர் குறிப்பிட்டளவு சீமந்தும் நீரும் கலந்து பரீட்சார்த்தக் கலவை செய்யப்படும். (விளக்கங்கள், முறைகள் BS 4550 பகுதிகள் 3 1978 இல் தரப்பட்டிருக்கின்றன ) . இக்கலவை ஓர் சிலிண்டர் அச்சில் நிரப்பப்பட்டு, அதன்மேல் 10 மி.மீ. விட்டமுள்ள நியமமான ஓர் உருளை அமிழ்த்தப்படும். இவ்வுருளை அதன் பாரத்தின் நிமிர்த்தம் அப்பசையில் உருவிக் கீழே இறங்கும். அப்படி கீழ் இறங்கும் அளவு சீமந்துப் பசையின் நெகிழ்வைப் பொறுத்திருக்கும். கூடிய நெகிழ்வாக இருக்கும்பொழுது இவ்வுருளை கூடியளவில் இறங்கியும்,குறைந்தளவில் நெகிழ்வாக இருக்கும் பசையில் குறைவாக இறங்குவதையும் காணலாம். ஓர் குறிப்பிட்டளவு சீமந்துடன் வெவ்வேறு விகிதமான நீர் கலந்து இப்பரிசோதனை நடத்த வேண்டும். இப்படி கணக்கிடும் பொழுது, பசை நிறைந்திருக்கும் அச்சின் அடிப்பாகத்திலிருந்து 5+1 மி.மீ. உயரத்திற்கு உருளை இறங்கும் பொழுது கிடைக்கும் பசையை, நியம இசைவுச் சீமந்துப் பசை (cement

Page 10
11
paste of standard consistence) என்று குறிப்பிடுகின்றோம். இப்பசையில் பொது வாக சீமந்தில் 26 தொடக்கம் 33 விகிதம் வரை நீர் கலந்திருப்பதாக நிர்மானிக்கப் படுகிறது. இந்நீர் விகிதம் சுற்றாடலின் சீதோஷ்ணம், சாரீரப்பதன் முதலியவற்றைப் பொறுத்ததாக அமையும். சீதோஷ்ணம் கூடும்போது, சாரீரப்பதன் குறையும் பொழுதும் கூடிய நீர் கலக்க வேண்டியிருக்கும்.
Find Set Needle
Plunger
n t Cal Set
Needle
MOuld Wit n Cement Poste
படம் 2.3 விக்கற் உபகரணம்
ஆரம்ப இறுகல் நேரம் தீர்மானித்தல் (Determination of initial set)
இத்தீர்மானித்தலில் 1.13+0.05 மி.மீ. விட்டமுள்ள உருளைவடிவான ஊசி விக்கற் உபகரணத்தில் பூட்டிப் பாவிக்கப்படும். நியம இசைவு சீமந்துப் பசையை மேற்கூறியபடி கணிக்கப்பட்ட நீருடன் தயாரித்து குறிப்பிட்ட சிலிண்டர் அச்சில் நிரப்பப்பட்டு அதன்பின் மேல் மட்டப்படுத்தப்படல் வேண்டும். முன் கூட்டியே பசை செய்வதற்குச் சீமந்திற்கு நீர் கலக்கும் நேரத்தைக் குறித்துக் கொள்ளல் வேண்டும். அதன்பின் ஓர் குறிப்பிட்ட நிறையின் பாரத்தில் பசையின் மேற்பரப்பில் மேற்கூறிய ஊசியை வைத்து அதனை இறங்கவிட வேண்டும். அச்சின் அடிப்பாகத்திலிருந்து 5+1 மி.மீ. ஊசி இறங்கும்போது, அந்நேரத்தைக் குறிப்பிடல் வேண்டும். பசை செய்வதற்கு நீர் கலந்த நேரத்திலிருந்து இந்நேரம்வரை எடுக்கும் நேர அளவையை ஆரம்ப இறுகல் நேரம் என்று குறிப்பிடப்படும். இந்நேரம் சாதாரண சீமந்திற்கும் துரிதமாகக் கடினமாகும் சீமந்திற்கும் குறைந்தது 45 நிமிடமாவது இருக்க வேண்டும் என்று நியமனம் BS 12 : 1989 குறிப்பிடுகின்றது.
 
 
 

12
Frimogg (8EJb ŠLDTSofbgsso (Determination of final set)
மேற்கூறிய 1.13 + 0.05 மி.மீ. விட்ட ஊசியுடன் இவ்வூசியில் 5 மி.மீ. விட்டமுள்ள ஓர் உருளையும் பூட்டப்பட்டிருக்கும் (படம் 2.3) உபகரணம் இத்தீர்மானத்தில் பாவிக்கப்படும். இவ் 5 மி.மீ. விட்ட உருளை, ஊசியின் தலைப்பிலிருந்து 0.5 மி.மி. பின்னால் பூட்டப்பட்டிருக்கும். இதன் பிரகாரம் முன் செய்தது போலவே, சிலிண்டர் அச்சில் நியம இசைவுப்பசையை நிரப்பி, மேற்பரப்பு மட்டமாக்கியபின், மேற்பரப்பில் ஓரசியை வைத்து அதன் பாரத்தில் இறங்கவிட வேண்டும். முதலில் அப்படி இறங்கும் பொழுது ஊசி இறங்குவதுடன் அதனுடன் இருக்கும் 5 மி.மீ. விட்ட உருளையும் பசையில் இறங்கும். ஆனால் ஓர் குறிப்பிட்ட நேரத்தின்பின் ஊசி இறங்கினாலும், உருளை இறங்காமல் மேற்பரப்பைத் தொட்டுக்கொண்டு நின்றுவிடும். அப்படி ஏற்படும் பொழுது பசையின் மேற்பரப்பில் உருளையின் அடையாளம் ஏற்படாது. இந்நேரம் குறிக்கப்படல் வேண்டும். பசை செய்வதற்கு நீர் கலந்த நேரத்திலிருந்து இந்நேரம் வரை எடுக்கும் நேர அளவை ஈற்றிறுகு நேரம் என்று கணிக்கப்படும். சாதாரணமாக இந்நேரம் 10 மணித்தியாலங்களுக்குக் கூடியதாக இருக்கலாகாது.
2.43 fudlibibor sini (Soundness of cement)
சீர்து நீரு கன் 'லக்கும் பொழுது, அதனால் ஏற்படும் நீரேற்றம் (hydration) கIm(13, பாய கனவளவு மாற்றங்கள் ஏற்படாதிருப்பது அவசியம். முக்கியாக, கனவளவு tக்கத்தின் காரணமாகக் கூடினால், கடினமான பசையினை உடைக்கக்கூடும். fற்ேறம் சாரணமாக ஏற்படும் பொருட்களில் கூடியளவு சுயேச்சையான சுண்ணi (free lime) இருப்பின், இப்படி வீக்கங்கள் ஓர் நீண்டகால அடிப்படையில் ஏற்பl.லாம். இதை சீமந்தின் தரக்குறைவு என்று குறிப்பிடப்படுகிறது.
சீமந்தின் தரத்தை மதிப்பிடுவதற்கு லேசாற்றலியர் (Le Chatelier) உபகரணத்தைப் பாவிக்கலாம். இம்முறை நியமனம் BS 4550 பகுதி 3:1978இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வுLகரணத்தின் படத்தை படம் 2.4 இல் காணலாம். இது செம்பால் செய்யப்பட்ட குழி உருளை (hollow cylinder) வடிவம் கொண்டது. இதன் மேற்பாகத்தில் ஓர் வெட்டும், இவ்வெட்டின் இரு புறங்களிலும் இரண்டு கம்பிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
படம் 2.4 லேசாற்றலியர் உபகரணம்

Page 11
13
இவ்வுருளையை ஓர் கண்ணாடித் தகட்டின் மேல் வைத்து அதனுள் நியம அளவு சீமந்துப் பசையை நிரப்புதல் வேண்டும். நிரப்பியபின், அதன் மேற்பாகமும் கண்ணாடித் தகட்டினால் மூடல் வேண்டும். இதன்பின் உருளையும் பசையும் கண்ணாடித் தகடுகளினால் மூடப்பட்டபடி 20+1'Cசீதோஷ்ண நீரில் அமிழ்த்துதல் வேண்டும். கம்பிகளின் இடைவெளியை அளந்தபின், அமிழ்ந்திருக்கும் தண்ணீருக்குச் சூடேற்றிக் கொதிக்கவைத்தல் வேண்டும். ஒரு மணித்தியாலம் கொதித்தபின், உருளையும் பசையும் கண்ணாடித் தகடுகளினால் மூடப்பட்டபடி கொதிநீரிலிருந்து வெளியே கொணர்ந்து ஆறவைத்தல் வேண்டும். ஆறியபின், கம்பிகளின் இடைவெளியை மீண்டும் அளக்க வேண்டும். முன் அளந்த அளவைக்கும் இதற்கும் வித்தியாசம் 10 மி.மீற்றருக்கு குறைந்ததாகவே இருத்தல் வேண்டும். 10 மி.மீற்றருக்குக் கூடினால், பசை செய்யப் பாவிக்கப்பட்ட சீமந்து காற்றாட 7 நாட்களுக்குப் பரப்பிவைத்தல் வேண்டும். அதன் பின் மேற்கூறிய பரிசீலனையை மீண்டும் ஒருமுறை நடைமுறைப்படுத்தல் வேண்டும். இம்முறை, இரண்டு அளவைகளுக்கும் உள்ள வித்தியாசம் 5 மி.மீற்றருக்குக் கூடியதாக இருத்தல் கூடாது. இரண்டு முறையும் சரிவராத சீமந்து பாவனைக்கு உகந்ததல்ல என்று கணிக்கப்படும்.

14
3 கொங்கிறீற் துணிக்கைகள்
ConCrete aggregates
கொங்கிறீற்றின் பெரும்பகுதி துணிக்கைகளைக் கொண்டதாகையினால் இத்துணிக்கைகளின் பண்பு அவற்றைப்பாவித்து செய்யப்படும் கொங்கிறீற்றின் தன்மைகளையும் பாதிக்கும். துணிக்கைகளின் தன்மை அவற்றின் இரசாயன, கணிப் பொருள் உள்ளடக்கம் (பண்பறி இயைபு), பாறை வகுப்பியல், பலம், கடினத்தன்மை, தன்னிர்ப்பு, துவாரத்தன்மை, இரசாயன, பெளதீக உறுதிநிலை போன்றவற்றைப் பொறுத்திருக்கும். துணிக்கைகள் நீண்டகாலம் பாவனைக்குரியதாகவும் இரசாயன பாணியில் ஜடமான பொருளாகவும் இருத்தல் அவசியம். கொங்கிறீற்றுக்கு துணிக்கைகள் இரண்டு அளவைகளில், பெரிய துணிக்கைகளாகவும் நுண்துணிக்கை களாகவும்,பாவிக்கப்படுகின்றன. 5மிமீ. சல்லடையில் தடுக்கப்படும் துணிக்கைகள் பெரிய துணிக்கைகள் எனவும் இச்சில்லடையினுாடாக புகும் துணிக்கைகளை நுண்துணிைக்கைகள் என்றும் கூறப்படும். உடைத்த கல், ஆற்று பரல் பெரிய துணிக்கைகளைச் சார்ந்ததாகவும், மண் நுண்துரிைக்கையாகவும் சொல்லப்படும். துணிக்கைகளில் கிடைக்கக்கூடியவற்றில் பெரியவற்றைப் பாவிப்பது உகந்தது. ஏனெனில், பெரிய துணிக்கைகளைப் பாவிக்கும்பொழுது, குறைந்தளவு நீருடன் அதாவது குறைந்த சீமந்து - நீர் பிரமானத்துடன் குறிக்கப்பட்ட இசைவைக் கொண்ட கொங்கிறீற்றையும், இதன் பலனாக கூடிய பலமுடைய கொங்கிறீற்றையும் பெறமுடியும். 40மி.மீ. வரை அளவு கொண்ட பெரிய துணிக்கைகளைப் பாவிக்கலாம். கூடிய அளவைகளால் பெறப்படும் நன்மையாக குறைந்த அளவு சீமந்துப்பசை பாவிப்பதனால் கூடிய பலம் கிடைப்பது ஆகும். ஆனால் ஓர் குறிப்பிட்ட கனத்திற்கு, அதனில் அடங்கும் துணிக்கைகள், சிறியனவையாயின் அவற்றின் கூட்டு மேற்பரப்புக் கூடியதாகவும், பெரியவையாயின் கூட்டு மேற்பரப்புக் குறைந்ததாகவும் இருக்கும். முன்கூறியபடி, கொங்கிறீற்றின் பலம் துணிக்கைகளைச் சேர்த்துக் கட்டும் சீமந்துப் பசையின் பலத்தைப் பொறுத்திருப்பதால், பெரிய துணிக்கைகளின் மேற்பரப்புக் குறைந்திருப்பதனால் அவைகளைக் கொண்டிருக்கும் கொங்கிறீற்றின் பலம் குறைந்விடும்.இதைவிட, சில தருணங்களில் பெரிய துணிக்கைகளில் பலவீனங்கள் காணப்பட்டால், இதன் காரணமாகவும் கொங்கிறீற்றின் பலம் குறைந்துவிடும், ஆகையினால், நன்மைகளையும் குறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து,துணிக்கைகளின் ஆகக்கூடிய அளவை நிர்ணயித்தல் நலம். வலுவூட்டிய கொங்கிறீற்றிலும் (reinforced Concrete), typ6656O)555 Gld Tsiliff Dögi (prestressed Conctete) பாவிக்கும் துணிக்கைகளில் கூடிய அளவு, அவைகளில் பாவிக்கப்படும் இரும்பு வலுவூட்டிகளின் இடைவெளியைப் பொறுத்தும், அவைகளை மூடும் கொங்கிறீற்றின் பாதுகாப்பு அளவை (cover) யைப் பொறுத்துமே நிர்ணயிக்கப்படல் வேண்டும். வழக்கமாக இவைகளில் ஆகக்கூடியது 20 மி.மீ. அளவை கொண்ட பெரிய துணிக்கைகளே பாவிக்கப்படும்.

Page 12
15
கொங்கிறீற்றுக்குப் பாவிக்கப்படும் பெரிய துணிக்கைகளின் ஏனைய பிரதான மான பண்புகளாவன அவற்றின் உருவகம், மேற்பரப்பின் தன்மை (surfacetexture) தரப்படுத்துதல் (grading) ஆகும். துணிக்கைகளின் உருவகத்தை உருண்டை, ஒழுங்கற்ற அல்லது கோணங்களுள்ளதாகக் கூறலாம். இத்துணிக்கைகளின் உருவகத்தைப் பொறுத்து கொங்கிறீற் கலவையின் இசைவும் அதற்குத் தேவையான சீமந்துப் பசையும் அமையும். உதாரணமாக, ஒரே இசைவான கொங்கிறீற்று செய்வதற்கு உருண்டை வடிவத்திலும் பார்க்க கோணங்களுடைய துணிக்கைகளைப் பாவிக்கும் பொழுது கூடியளவு பசை தேவைப்படுகின்றது. கொங்கிறீற்றின் பலம் அதில் சேர்ந்திருக்கும் பசையின் அளவில் தங்கியிருப்பதால் கோணங்களுடைய துணிக்கைகளைப் பாவிக்கும் பொழுது கொங்கிறீற்றின் பலம் குறையக் காரணம் ஏற்படும்.
துணிக்கைகளின் மேற்பரப்பின் தன்மையை வழவழப்பானது அல்லது கரடு முரடானது என்று வகுக்கலாம். கரடுமுரடான துணிக்கைகளைப் பாவிக்கும் பொழுது கூடிய சீமந்துப்பசை தேவைப்படுகின்றது. இருப்பினும் இன்னொரு நோக்கில் பார்க்கும் பொழுது கரடுமுரடான மேற்பரப்பு துணிக்கைகளுக்கும் சீமந்துப் பசைக்கும் இடையில் கூடிய இணைப்பு ஏற்படுவதாலும் இதனால் கொங்கிறீற்றின் பலம் கூடுவதனால், கரடுமுரடான துணிக்கைகள் விரும்பப்படுகின்றன.
துணிக்கைகளின் தரப்படுத்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு கொங்கிறீற் கலவையினை இலேசாக நெருக்கமாக்குவதற்கு அதற்கு வேண்டிய இசைவு தேவைப்படுகிறது. இதற்கு மிகவும் ஒழுங்காகத் தரப்படுத்தப்பட்ட (Wel-graded) துணிக்கைகள் இன்றியமையாகின்றது. அத்துடன் தரப்படுத்தப்பட்ட துணிக்கைகளின் இடைவெளிகள் குறைவாக இருப்பதனால் துணிக்கைகளை இணைப்பதற்கு வேண்டிய சீமந்துப் பசையின் அளவும் குறைவாகும். மறுபுறமாக, குறைந்தளவு தரப்படுத்தப்பட்ட (poorly - graded) துணிக்கைகளைப் பாவிக்கும் பொழுது கூடியளவு பசை தேவைப்படுகின்றது. இதன் காரணமாக இத்துணிக்கை களைப் பாவிக்கும் கொங்கிறீற்றின் பலம் ஒழுங்கு தரப்படுத்தப்பட்ட துணிக்கைகளைக்
கொண்ட கொங்கிறீற்றிலும் பார்க்கக் குறைந்தாகவே காணப்படுகின்றது.
மேலும் வலுவூட்டிய கொங்கிறீற்றிலும் (reinforced concrete) முன் தகைத்த கொங்கிறீற்றிலும் (prestressed concrete) வழக்கமாக 20மி.மீ, 14 மி.மீ. அல்லது 10 மி.மீ. அளவுள்ள பெரிய துணிக்கைகளே பாவிக்கப்படுகின்றன. துணிக்கைகளின் அளவு கொங்கிறீற் உறுப்பின் அளவையும், பாவிக்கும் வலுவூட்டியின் தொகையையும் பொறுத்து நிர்மாணிக்கப்படும். முக்கியமாக, வலுவூட்டிகளின் இடைவெளிக்கூடாகவும், வலுவூட்டிக்கும் மாற்பெட்டிகளுக்கும் உள்ள இடைவெளிக்கூடாகவும் செல்லக்கூடிய துணிக்கைகள் பாவிக்கப்படல் வேண்டும். இல்லாவிடின், வலுவூட்டிகளுக்குள் உள்ள இடைவெளிகள் நிரப்பப்படாமல் அதன் விளைவாக கொங்கிறீற்றுக்குப் பலவீனம் ஏற்படலாம். இதைவிட வலுவூட்டிகளுக்குத் தேவையான பாதுகாப்பு (protective Cover) ஏற்படாமல் போகலாம். பொதுவாக, கொங்கிறீற் உறுப்பின்

16
குறைந்த அளவின் கால் அளவையிலும் பார்க்கக் குறைந்த அளவுள்ள துணிக்கைகளைப் பாவிப்பது தான் நன்று. அப்படியாயின் நெரிசல்படும் பொழுது (compaction) கொங்கிறீற் வலுவூட்டிகளைச் சுற்றி ஓடி அவற்றிற்குக் கூடிய பாது காப்பை அளிக்கின்றது.
3.1 துணிக்கைகளில் பரிசோதனகைள்
கொங்கிறீற்றில் துணிக்கைகளை பாவனைக்கு உகந்ததா என்று மதிப்பீடு செய்வதற்கு பலதரப்பட்ட பரிசோதனைகள் நடாத்தப்படும். இப்பரிசோதனை களிலிருந்து பெறப்படும் முடிவுகள் குறிக்கப்பட்ட பலம், இசைவுத்தன்மை, வெகுகாலம் உழைக்கும் தன்மை பொருந்திய கொங்கிறீற் கலவைகளை உருவகப்படுத்தப் பயன் படும். துணிக்கைகள் தொடர்பான பின்வரும் குணங்களைச் சார்ந்த பரிசோதனைகள் மிகவும் பிரதானமாகக் கொள்ளப்படும்.
() பலம் (Strength) (i) தன்னிர்ப்பு (specific gravity) (iii) g|6) is $566.60)LD. 56b56b b66T6OLD (porosity and absorption) (iv) தரப்படுத்தமை (grading)
(v) (b6Jypti), (3LD5Duyl (365 56óTSOLDub (Shape and Surface texture) (v) காரத்துணிக்கைகள் தாக்கம் (alkali-aggregate reaction)
மேற்கூறப்பட்ட பரிசோதனைகள் BS 812 பகுதி 102 : 1984) நியமத்தில் குறிக்கப்பட்ட முறையின் பிரகாரம் துணிக்கைகளின் மாதிரிகளில் (Samples) செய்யப்படும்.
ஒரு தொகை குறிக்கப்பட்ட துணிக்கைகளிலிருந்து பிரிக்கப்பட்டுப் பின் தொகுத்தெடுக்கப்பட்ட மாதிரிகளிலேயே பரிசோதனைகள் செய்யப்படும். துணிக்கைகளின் அளவைக்குத் தக்கவாறு பரிசோதனைக்குத் தேவையான மாதிரியின் ஆகக்குறைந்த நிறுவை மேற்கூறிய நியமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. துணிக்கைகளின் தொகையிலிருந்து வேண்டிய அளவைப் பெறுவதற்கு சில வழிகளைக் கையாளலாம். இவையாவன, காலாக்கல் (quartering) றைப்பிலிங் (riffing) ஆகும். முதற்கூறிய முறையில், துணிக்கையைக் குவித்து, அதன்பின் மட்டமாக்கி, நான்காகப் பிரித்தல் வேண்டும். இதனில் எதிர்மாறான மூல விட்டங்களிலுள்ள பகுதிகளை ஒன்றுசேர்த்து மறுபடியும் குவிக்க வேண்டும். இதே மாதிரியாக,குறிப்பிட்ட தேவையான அளவு தேறும் வரை இம்முறையைப் பலமுறைகள் செய்தல் வேண்டும். மற்றைய முறையில் றைப்பிளர் (rifler) என்று கூறப்படும் ஒரு பெட்டி பாவிக்கப்படும் (படம் 3.1).

Page 13
17
படம் 3.1 றைப்பிளர் பெட்டி
இந்தப் பெட்டியில், அரைவாசி இடதுபுறமும் மறு அரைவாசி வலதுபுறமும் பிரியக்கூடியதாக சமாந்தரமாக சரிவான பிரிவுகள் ஏற்படித்தப்பட்டிருக்கும். பெட்டியின் மேல்வாயிலில் துணிக்கையைக் கொட்டும் பொழுது அவற்றில் அரைவாசி இடதுபக்கமும் மிகுதி வலது பக்கமுமாகப் பிரியும். ஒரு பிரிவை விலக்குவிட்டு மறு பிரிவை மேலும் இதே மாதிரிப் பிரித்துத் தேவையான குறிப்பிட்ட அளவு மாதிரி கிடைக்கும்வரை இம்முறையை மேற்கொள்ளலாம்.
3.1.1 basissi Gugldrigor ID Siseb (Crushing value test)
இம்மதிப்பீடு பெரிய அளவு துணிக்கைகளில் செய்யப்படும். இதனால் கிடைக்கும் முடிவுகளிலிருந்து பல தரப்பட்ட வகையான துணிக்கைகளின் பலத்தை எடை போடக்கூடியதாக இருக்கின்றது. இதனால் கிடைக்கப்படும் முடிவிலிருந்து இத்துணிக்கைகளைப் பாவித்துப் பெறப்படும் கொங்கிறீற்றின் நெருங்கற் பலத்தை (compressivestrength)ஓரளவுக்கு மதிப்பிடக்கூடியதாக இருக்கும். நெருங்கற்பலம் நசுக் கல் பெறுமானத்திற்குத் தரைகீழ் விகிதசமமாகக் கணிக்கப்படும். இப்பரிசோதனைக்குப் பாவிக்கும் துணிக்கைகள் 14.0 மி.மீ. சல்லடைக் கூடாகப் போகக்கூடியதும் 10.0 மி.மீ. சல்லடையில் தங்குவதாகவும் இருத்தல் வேண்டும். இப்பரிசோதனை BS812 பகுதி 110 1990 நியமத்தின் பிரகாரமாகச் செய்யப்பட வேண்டும். துணிக்கையின் பிரதி குறிக்கப்பட்ட முறையில் காயவைத்தபின், ஓர் குறிப்பிட்ட சிலிண்டர் உருவமுள்ள அச்சில் வைத்து BS 812இல் குறிப்பிட்டபடி
 

18
நெருக்கல் அளிக்கப்படல் வேண்டும். அதன்பின் அச்சை ஓர் நெருக்குதல் அளிக்கும் பரிசோதன ைஇயந்திரத்தின் கீழ் வைத்து குறிப்பிட்ட அமுக்கத்தைப் பத்து நிமிடங்களுக்கு அளித்தல் வேண்டும். இதன்பின், நெருக்குதலை நிறுத்தி, துணிக்ககைளை 2.36 மி.மீ. சல்லடையில் கொட்டி அரிக்க வேண்டும். இச்சல்லடை யின் கீழ் கொட்டப்படும் துணிக்கைகளை நிறுத்து கிடைக்கும் நிறுவையை பிரதியின் நிறுவையால் பிரித்தால் வரும் விகிதம் பிரதியின் துணிக்கை நசுக்கல் பெறுமானம் என்று கொள்ளப்படும்.
3.1.2 sers frin (specific gravity)
துணிக்கைகளில் உட்புகமுடியாத துவாரங்கள் இருப்பதால், இத்துவாரங்கள் அடங்கிய துணிக்கையின் கனவளவு விசேடமாக எமது கவனத்தை ஈர்க்கின்றது. இப்படிப்பட்ட துவாரங்களடங்கிய துணிக்கைகளின் தன்னிர்ப்பை தோற்றத் தன்னிர்ப்பு (apparent Specific gravity) 6T6p 360.pidlyUGégöpg. 100 / 110 "C சீதோஷ்ணத்தில் 24மணித்தியாலங்களுக்கு ஒரு அடுப்பில் (oven) காயவைத்தபின் கிடைக்கும் பிரதியின் நிறையை, துணிக்கைப் பிரதியின் கனத்திற்குச் சமமான நீரின் நிறையால் பிரித்தால் கிடைக்கும் விகிதம் தோற்றத் தன்னிர்ப்பு என்று வரை யறுக்கப்படுகின்றது. இத்தோற்றத் தன்னிர்ப்பைப் பாவித்து ஒர் குறிப்பிட்ட கனம் கொங்கிறீற் பெறுவதற்குத் தேவையான துணிக்கைகளில் இருக்கும் கல்வகைகளையும் துவாரங்களின் தொகையையும் பொறுத்து இருக்கும். பொதுவாக இப்பெறுமானம் 2.6 க்கும் 2.7 க்கும் இடையில் உள்ளதாகக் கணிக்கப்படுகின்றது.
3.1.3 துவாரத்தன்மை, உறிஞ்சல் தன்மை (porosity, absorption)
துணிக்கைகளில் காணப்படும் உள்துவாரங்களை அளப்பதற்கு இப்பரிசோதனை உதவுகின்றது. இப்பரிசோதனையிலிருந்து துணிக்கைளின் துவாரத்தன்மை, ஊடுருவல் தன்மை (permeability) உறிஞ்சல் தன்மைகள் பெறக்கூடியதாக இருக்கின்றது. துணிக்கைளின் துவாரத்தன்மை, உறிஞ்சல் தன்மைகள் துணிக்கைகளுக்கும் சீமந்துப் பசைக்கும் உள்ள இணைப்பைப் பாதிப்பதால், இவ்விணைப்பின் பலத்தை அறிவதற்கு இத்தன்மைகளை அறிந்திருப்பது முக்கியமாகின்றது. துணிக்கைகளை நீரில் அமிழ்த்தும் பொழுது அதனிடையில் இருக்கும் துவாரங்களில் நீர் உறிஞ்சப்பட்டிருக்கும். துணிக்கைகளை வெளியில் எடுத்துப் பரப்பில் இருக்கும் நீரை ஒத்தி எடுத்தபின் இத்துணிக்கைகள் ‘பூரிப்படைந்த ஆனால் பரப்பு காய்ந்த” (saturated Surface dry) நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலை முக்கியமாவதற்குக் காரணம் என்னவெனில், துணிக்கைகளைப் பாவித்துக் கொங்கிறீற் செய்யும் பொழுது. பாவிக்கும் நீரின் ஒருபகுதி துணிக்கைகளால் உறிஞ்சப்பட்டு துணிக்கைகள் இந்நிலையை அடைந்து, மேல் மிச்சமாக இருக்கும் நீர்தான் சீமந்துடன் தாக்குதலில் இடம்பெறுகின்றது. அதனால் நீர் - சீமந்து விகுதி வரை யறுக்கும் பொழுது இம்மேல் மிச்சமாக இருக்கும் நீரின் அளவைத்தான் கனக்கிடப்படுகின்றது. மறுபுறமாகச் சொன்னால்,கொங்கிறீற் கலவை செய்யும்பொழுது, பாவிக்கும் சீமந்தின் அளவையிலிருந்தும் நீர்- சீமந்து விகுதிலிருந்தும் தேவையான

Page 14
19
நீர் கணக்கிடப்படுகின்றது. இதனுடன் கலவையில் பாவிக்கும் துணிக்கைகள் உறிஞ்சப்போகும் நீரையும் கணக்கிட்டுக் கூட்டிய நீரையே கலவையில் பாவிக்க வேண்டும். உறிஞ்சிடும் நீரைக் கணக்கிடாமல் விட்டால் சீமந்து-நீர் தாக்கத்திற்குத் (reaction) தேவையான நீர் பற்றாக்குறையாகிவிடும். ஒருபிரதி துணிக்கையின் நீர் உறிஞ்சுதலை நிர்ணயிப்பதற்கு BS 812 பகுதி 109 1990 இல் குறிப்பிட்டபடி அடுப்பில் (oven) காயவிடப்பட்ட துணிக்கையை நிறுத்தபின், 24 மணிநேரத்திற்கு நீரில் அமிழ்த்தி, அதன் பின் துணிக்கைகளின் வெளிப்பரப்பில் நீரில்லாமல் ஒத்தி எடுத்த பின் மீண்டும் அதனை நிறுக்க வேண்டும். இரண்டு நிறுவைகளிலிருந்தும் காணப்படும் அதிக நிறையை காயவிட்ட துணிக்கையின் நிறையால் பிரித்துப் பெறப்படும் விகிதத்தை துணிக்கையின் உறிஞ்சல் என்று சதவீதமாகக் கணிக்கப்படும். ஓர் கொங்கிறீற் கலவையில் பாவிக்கப்படும் துணிக்கைகள் காற்றில் உலர்ந்திருந்தால், துணிக்கைகளில் பரிசோதனை மேற்கொண்டு அவற்றின் ஈரலிப்புள்ளுறை முதலில் கணிக்கப்பட்ட பின்பே அதற்குத் தகுந்தவாறு கொங்கிறீற் கலப்பதற்கு மேலதிகத் தேவையான நீரின் அளவை கணக்கிடப்படல் வேண்டும். இப்படிப்பட்ட நீர் உறிஞ்சல் பரிசோதனைகளை பெரிய துணிக்கைகளிலும், நுண்துணிக்கைகளிலும் அவற்றிற்கு ஏற்றவாறு BS 812 இல் குறிப்பிட்டவாறு மேற்கொள்ளல் வேண்டும்.
3.1.4 5uillbissoid (grading)
நியமிக்கப்பட்ட ஒன்றில் மேல் ஒன்றாக அடுக்கிய சல்லடைத்தட்டுகளினுாடாக துணிக்கைகளை அரித்துக் குறிப்பிட்ட கண் உள்ள சல்லடைக்குள்ளாகச் செல்லும் பிரதியின் அளவை அறியப்பட்டு ஓர் குறிப்பிட்ட துணிக்கையின் தரப்படுத்தமையை நீர்ணயிக்கலாம். இப்படிக் கிடைக்கும் அளவைகள் (விகிதாசாரப்படி) BS 882 இல் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருந்தால் இத்துணிக்கைகளை கொங்கிறீற் செய்வதற்கு உகந்தது என்று எடுத்துக் கொள்ளலாம். BS882 பகுதி 103:1985 இல் குறிக்கப்பட்ட பெரிய துணிக்கைகளினதும், நுண்துணிைக்கைகளினதும் இவ்வெல்லைகள் அட்டவணைகள் 3.1 இலும், 3.2 இலும் தரப்பட்டிருக்கின்றன.
அட்டவணை 3.1 பெரிய துணிக்கைகளின் தரப்பருத்தும் எல்லைகள் BS 882: ugs 103: 1985
நியமிக்கப்பட்ட சல்லடையில் செல்லும் விகிதாசாரம் சல்லடை (நிறுவையளவில்)
[(06ا آموکسی
துணிக்கையின் அளவை 40 மி.மீ. - 5 மிமீ 20 மி.மீ - 5 மிமீ 14 மி.மீ - 5 மி.மீ
37.5 fS. Š 95 -1 100 سسسس OO m
20 [ftổ 35 .100 100 - 95 70 سمسم
14. Lf5.Lf5 - 90 - 100 10 f.f) 10 - 40 30 - 60 50 -85 --سس
5 É.15 0 - 5 0 - 10 O - 10

2O
அட்டவணை 3.2 நுண்துணிக்கைகளின் தரப்படுத்தும் எல்லை.
BS 882 ugf6 103 : 1985
நியமிக்கப்பட்ட சல்லடையில் செல்லும் விகிதாசாரம் (நிறுவையளவில்)
சல்லடை அளவை
தரப்படுத்தும் தரப்படுத்தும் தரப்படுத்தும் தரப்படுத்தும் மண்டலம் 1 மண்டலம் 2 மண்டலம் 3 மண்டலம் 4
10 լճյլf 100 100 100 100
5 SB 90 - 100 90 - 100 90 - 100 95 - 100 6160ঠ 7 (2.36 เถิuf) 60 - 95 75 - 100 85 - 100 95 - 100 எண் 14 (1.18 மிமீ) 30 - 70 55 - 90 75 - 100 90 - 100 எண் 25 (60 ue) 15 - 34 35 - 59 60 - 79 80 - 100 எண் 52 (300 ut) 5 - 20 8 - 30 12 - 40 15 - 50 எண் 100 (150 ut) 0 - 10 0 - 10 0 - 10 0 - 15
10 மி.மீ அளவை கொண்ட துணிக்கைகளின் தரப்படித்தல் வளைவுகள் மண் லfகி|க படம் 3.2 இல் தரப்பட்டிருக்கின்றது.
um 3OOum esdourn 1 1ermrrn 2-36Birrin 5mrtn 1Oרחרח (No. 10O) (No. 52) (No 25) (Nilo 14) (No 7) ( ጴዛn) (in)
BS Sieve size படம் 3.2 10 மி.மீ. அளவை கொண்ட துணிக்கைகளின் மண்டல ரீதியான வளைவுகள்
துணிக்கைகளின் தரப்படுத்தல் நிலை கொங்கிறீற்றின் இசைவுத் தன்மையைப் பாதிக்கும். நல்ல தரப்படுத்தல் நிலையில் உள்ள துணிக்கைகளைப் பாவிக்கும் பொழுது அதனைக் கொண்டு பெறப்படும் கொங்கிறீற் மிகவும் இசைவாகவும் ஆனால் இலகுவாக குறைந்தளவு எத்தனிப்புடன் இறுக்கக்கூடியதாகவும், கூடிய அடர்த்தி உடையதாகவும், அதன் காரணமாக ஓர் குறிப்பிட்ட நீர் - சீமந்து விகிதத் திற்கு உயர்ந்த பலமுடையதாகவும் கிடைக்கும்.

Page 15
21
3.1.5 உருவமும் மேற்பரப்பின் தன்மையும்
(shape and surface texture)
கொங்கிறீற்றின் இசைவின் தன்மைக்கு துணிக்கைகளின் உருவமும் மேற்பரப்பின் தன்மையும் விசேடமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. துணிக்கைகளின் உருவம் கொங்கிறீற்றில் அவைகளைக் கூடியளவு இறுக்கமாக அடக்குவதற்கு உறுதுணை யாக இருக்கின்றது. இதனால், உருண்டை வடிவம் கொண்ட துணிக்கைகள் இக் காரணத்திற்காக கோணங்க'ைபுடைவையிலும் பார்க்க விசேடமாக விரும்பப்படுகிறது. BS812 பகுதிகள் 105இல் இவ்வுருவங்களை உருண்டை, ஒழுக்கற்ற அல்லது கோணங்களுடையவை,நீட்சியுள்ளவை (elongated) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
BS 812 இல் குறிப்பிட்டபடி இறுக்கமாக ஓர் பெட்டியினுள் அடக்கினால், ஒரு பிரதியின் இடையில் ஏற்படும் வெறுமை விகிதம் கணித்துக் கொள்ளலாம். இவ்விகிதத்தை 67 இல் இருந்து கழித்து அதில் பலன் வரும் எண்ணை துணிக்கையின் கோணத்தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். எண் தொகை கூடும்பொழுது துணிக்கை கூடிய கோணத்தன்மையுடையதென்று அறியப்படும்.
3.1.6 துணிக்கை . காரத்தாக்கம்
(alkali-aggregate reaction)
சில வகையான துணிக்கைகளுக்கும் சீமந்து நீருடன் சேரும்போது உண்டாகும் காரப் பொருட்களுக்கும் இடையில் ஏற்படும் இரசாயனத் தாக்கத்தால் கொங்கிறீற்றின் கனம் விஸ்தீரமடைவதால் இத்துணிக்கைகளைக் கொண்ட கொங்கிறீற்றின் பலம் பாதிக்கப்படுகிறது. சில வகையான துணிக்கைகள் இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவையாக இருப்பினும் அவைகளை இனங்காணுவது கடினம். சில குணாதியங்களைக் கொண்டு சில துணிக்கைகளால் தாக்கம் ஏற்படலாம் என்று சொல்லலாமேயொழிய பார்ப்பதால் மாத்திரம் அத்துணிக்கையால் பாதகம் ஏற்படும் என்று சொல்லுவது கடினம். ASTM C 289 - 87 நியமத்தில் குறுகிய காலத்தில் செய்யக்கூடிய ஓர் பரிசோதனை தரப்பட்டிருக்கின்றது. இதன்படி துணிக்கை தூளாக்கப்பட்டு 80°C இல் சோடியம் கைத்றொக்சைட்டின் (NaOH) நேர்மைக்கரசைலோடு சேர்க்கும் பொழுது சோடியம் கைத்றொக்சட்டின் காரத்தன்மை குறைவதிலிருந்தும், கரைக்கப்பட்ட சிலிக்காவின் தொகையை அறிவதின் மூலமும் துணிக்கைகள் தாக்கம் ஏற்படுத்துமா என்று ஒரளவுக்கு அறிவதின் மூலமூம் துணிக்கைகள் தாக்கம் ஏற்டுத்துமா என்று ஒரளவுக்கு அறியலாம். மேற்குறிப்பிட்ட நியமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லைக்கோட்டிற்கு வலது புறத்தில் இப் பரீட்சாரத்த புள்ளிகள் அமைந்தால், அத்துணிக்கைகள் பாவனைக்கு உகந்தவைகள் அல்ல என்று எடுத்துக் கொள்ளப்படும். எனினும் இப்பரிசோதனை முறையை முடிவானதாக எடுக்க இயலாது.

22
ASTM நியமம் C 227-90 இல் குறிப்பிட்டிருக்கும் சீமந்து பசையில் செய்யப்படும் பரிசோதனை மேற்கூறியதிலும் பார்க்க விசேடமானதாகக் கருதப் படுகிறது. இப்பரிசோதனையில், இத்துணிக்கைகளைப் பாவித்து சீமந்துக் கலவை செய்து அக்கலவையைப் பாவித்துக் கம்புகள் செய்ய வேண்டும். இதற்குப் பாவிக்கும் சீமந்தில் காரத்தன்மை 0.6 வீதத்திற்குக் குறைவாக இருத்தல் வேண்டும். செய்யப்பட்ட சீமந்துக் கம்புகளை 38°C இல் நீரில் அமிழ்த்தி வைத்தல் வேண்டும். இச்சீதோஷ்ணத்திலேயே கம்புகள் கூடியளவு கனவிஸ்தீரணம் அடைவதாக அறிகின்றோம். 3 மாதங்களுக்குப் பின்னும், 6 மாதங்களுக்குப் பின்னும் இக்கம்புகளை எடுத்து அளத்தல் வேண்டும். 3 மாதத்திற்குப் பின் 0.05 சதவிகிதமும் 6 மாதத் திற்குப் பின் 0.1 சதவிகிதமும் கனவளவில் பெருத்திருந்தால், இத்துணிக்கைகள் பாவனைக்கு உகந்தவை அல்ல என்று நியமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Page 16
کA
4 ÊT
Water
கொங்கிறீற் கலவையில் சேர்க்கும் நீரின் தன்மைகள் கொங்கிறீற்றின் குணாதி சயங்களைப் பாதிக்கும். இதனால் பாவிக்கும் நீரில் அசுத்தமான பொருட்கள் இருப்பின் அவை கொங்கிறீற்றின் கடினமாகும் நேரம், பலகாலப் பாவிப்பு போன்ற வற்றைப் பாதிக்கும். நீரில் உப்புவகைகள், அங்ககப் பொருட்கள், தொங்கிய திடப் பொருட்கள் இருப்பின் இவை பாதிப்பைக் கொடுக்கும். சாதாரணமாக கொங்கிறீற் கலவைக்குப் பாவிக்கும் நீர் குடிநீர் தரத்தைப் போன்றதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படும். இதனால் அந்நீரில் காணப்படும் திடப்பொருட்கள் 2000 ppm க்கு கூடியதாக இருத்தல் கூடாது. 1000 ppm க்குக் குறைந்திருப்பது நல்லது. எனினும் சோடியம், பொட்டாசியம் உப்புவகைகள் உள்ள நீர் தவிர்க்கப்படல் வேண்டும். நீரின் தரத்தைப் பற்றி சந்தேகம் ஏற்படின், அதைப் பாவித்தும், வடிகட்டிய நீரைப் பாவித்தும் சில பரிசோதனைகளைச் செய்து, சீமந்துப் பசை இறுகுவது, அதன் பலம் போன்றவற்றிலிருந்தும் நீரின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம். இதற்கேற்ற ஓர் பரிசோதனை BS 3148 1980 இல் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதன்படி 10 சதவிகிதம் பலத்தில் வித்தியாசம் அனுமதிக்கப்படுகிறது. நீரில் வண்டல் இருப்பின் அந்நீரை அடையவிட்டு வடித்து எடுத்தல் வேண்டும். 2000 ppm க்கு கூடியளவு வண்டல் இருப்பின் நீர் பாவனைக்கு எடுக்கக்கூடாது.
கடல்நீர் சாதாரண கொங்கிறீற்றில் பாவிக்கலாம். கடல்நீர் பாவிப்பதனால் பலத்தில் 15 சதவிகிதம் நீண்டகாலத்தில் குறைகிறது. அத்துடன் கடல் நீர் பாவிக் கும் பொழுது, நிரந்தரமாக அக் கொங்கிறீற் கசிந்து கொண்டே இருக்கும். காரம் இருப்பின் துருப்பிடிப்பதற்கு ஏதுவாக இருப்பதனால், இரும்பினால் வலுவேற்றிய கொங்கிறீற்றின் பாவனைக்கு கடல்நீர் கலவையில் பாவித்தல் தவிர்க்கவேண்டும்.
நீர் தவிர்ந்த சில பொருட்கள் விசேட கலப்புப் பொருட்களாகக் (Admixtures) கொங்கிறீற்று கலக்கும்பொழுது பாவிக்கப்படுகின்றன. இவை கொங்கிறீற்றின் சில குணாதிசயங்களை மேம்படுத்துவதற்காகவே பாவிக்கப்படுகின்றன. இவற்றில் நீர் குறைப்பதற்கும், இறுகும் நேரத்தைக் கூட்டிக் குறைப்பதற்கும், கூடிய இசைவைப் பொறுவதற்கும் பாவிக்கும் கலப்புப் பொருட்கள் அடங்கும். இவைகளைப் பற்றி விரிவாக கட்டிட தொழில் நுட்பத்தில் தரப்படும்.

24
5 உடன் கலந்த
கொங்கிறீற்றின் தன்மைகள் Properties of Fresh Concrete
கொங்கிறீற்றைப் பாவித்து கட்டிடங்களையோ பாலங்களையோ அமைப்பவர்கள் கடினமடைந்த கொங்கிறீற்றின் பலம், நீண்டகால உழைக்கும் தன்மை, நெகிழ் வுத்தன்மை போன்றவற்றில்தான் கரிசனையுடையவர்களாக இருக்கின்றார்கள். எனினும். கடினமடைந்த கொங்கிறீற்றின் பலமும் ஏனைய தன்மைகளும் உடன்கலந்த கொங்கிறீற்று (fresh Concrete) எவ்வளவிற்கு இறுக்கமாக கடினமாக்கப்படுவதைப் பொறுத்தே இருக்கும். அதனால் ஓர் அச்சில் வார்க்கப்பட்ட கொங்கிறீற்றை மிகவும் இலகுவாக இறுக்கக்கூடிய இசைவைக் கொண்டதாக இக்கொங்கிறீற்று இருப்பது அவசியம். அப்படியிருப்பின் அடர்த்தியான பலI)டந்த கொங்கிறீற்றைப் பெற்றுக் கொள்ளலாம். ஆகையினால் ற | ன் கலந்த கொங்கிறீற்றின் இசைவு மிகமுக்கியம். இதனை கொங்கிறீற்றின் செப்படுதகவு என்று குறிப்பிடலாம்.
5.1 உடன் கலந்த கொங்கிறீற்றின் செய்பருதகவு (Workability of Fresh Concrete)
கெHங்கிறீற்றை Iலிதபலத்தலே அல்லது இயந்திரமுறைகளாலோ ஓர் அச்சில் இறுக்கும்பொழுது துரிக்கைகள் வேறு சீமந்துப்பசை வேறாகப் பிரிந்து போகாமல் தடுப்பதற்கு ஏதுவாக கொங்கிற்றின் செப்படுதகவு சிறந்து விளங்க வேண்டும். இயந்திரமுறைகளால் இறுக்குவதிலும் பார்க்க மனிதவலுவால் இறுக்க வேண்டிய கொங்கிறீற்று மேலும் கூடிய செப்படுதகவு பெற்றதாகவிருத்தல் வேண்டும். மனிதவலுவால் இறுக்குதல் கொடுக்கப்படும்பொழுது ஓர் விறைப்பான கம்பியினால் குத்தலாம். இயந்திரமுறைகளைப் பாவிக்கும்பொழுது வேகமான அதிர்வால் இறுக்கு தல் கொடுக்கலாம். எம்முறையைப் பாவித்தாலும் எமது நோக்கம் கொங்கிறீற்றில் சிக்கிக்கொண்ட காற்றினை வெளிப்படுத்துவதுதான். இதற்கு ஓரளவு முயற்சியெடுத்தல் வேண்டும். இறுக்குதல் கொடுக்கும்பொழுது துணிைக்கைகளுக்கு இடையிலும், துணிக்கைகளுக்கும் அச்சிற்குமிடையிலும் ஏற்படும் உராய்தலை விஞ்சி மேம்படக் கூடியளவு உள்வேலை செய்ய வேண்டியிருக்கும். இவ்வுள்வேலையின் அளவு கொங்கிறீற்றின் செப்படுதகவைப் பொறுத்ததாக இருக்கும். இதன் பிரகாரம், கொங் கிறீற்றின் செப்படுத்தகவை இறுக்குதல் கொடுக்கும்பொழுது இவ்வுராய்தல்களை விஞ்சத்தேவையான உள்வேலையின் அளவுகோலாகக் கணிப்பிடலாம்.
5.1.1 செப்பருதகவைப் பாதிக்கும் காரணிகள்
செப்படுதகவைப் பாதிக்கும் காரணிகளில் முக்கியமானவைகளாவன
- நீர் உள்ளுறை - துணிக்கையின் ஆகக்கூடிய அளவு - துணிக்கையின் தரப்படுத்தமை - துணிக்கையின் உருவமும், மேற்பரப்பின் தன்மையும் - சுற்றாடலின் உஷ்ணம்

Page 17
25
கொங்கிறீற்றுக் கலவையின் நீர் உள்ளுறையைக் கூட்டினால் அதன் செப்படு தகவு கூடும். முன் விளக்கியபடி சீமந்து நீரேற்றம் (hydration) அடைவதற்கு ஆகக் குறைந்தளவு குறிப்பிட்ட நீர் தேவைப்படுகின்றது. இதைவிட கலவையில் எஞ்சி யிருக்கும் நீரானது கொங்கிறீற்றின் செப்படுதகவுக்குப் பயன்படுகிறது. எனினும், நீரின் அளவு கலவையில் கூடினால் கடினப்பட்ட கொங்கிறீற்றின் பலம் குறைந்துவிடும் என்பதால், இவ்வெஞ்சியிருக்கும் நீரின் அளவை மிகவும் அவதானமாகக் கணிப்பது அவசியம். இந்நீரின் தொகை கூடியிருப்பின், கொங்கிறீற் கடினப்படும்பொழுது சீமந்து நீரேற்றத்தின் தேவைக்கு மெல் மிச்சமாகவிருக்கும் நீர் ஆவியாகி வெளியேறு கிறது. இப்படி வெளியேறும் பொழுது கொங்கிறீற்றில் வெற்று இடங்களை ஏற் படுத்துவதால் கொங்கிறீற்றின் பலம் குறைகின்றது. கொங்கிறீற்றின் நீர் உள்ளுறையும், அதன் கலவையின் நிர்மானங்களும் நிலையாக்கப்பட்டால், அதன் செப்படுதகவு துணிக்கையின் ஆகக்கூடிய அளவையும், தரப்படுத்தலையும், உருவம், மேற்பரப்புத் தன்மையையும் பொறுத்ததாக அமையும். சிறிய துணிக்கைகளின் உருவமும், மேற் பரப்புத்தன்மையும் ஒரு கலவையின் நீர்த்தேவைகளைக் கூடிய விதமாகப் பாதிப்பதால், கொங்கிறீற்றின் செப்படுதகவு பெரிய துணிக்கைகளின் தன்மையைவிட சிறிய துணிக்கைகளின் தன்மையைக் கொண்டே பாதிக்கப்படும். இருப்பினும் பெரிய துணிக்கைகளின் உருவமும், உருண்டைத்தன்மையும் அவைகளின் தாக்கமும் பெரிதாக அமைகின்றது.
ஓர் குறிப்பிட்ட நீர்-சீமந்து விகிதத்தைக் கொண்ட கலவையின் செப்படுதகவு துணிக்கைகளின் தரப்படுதலைப் பொறுத்திருக்கும். நீர் - சீமந்து விகிதம் மாறியவுடன் முன்பாவித்த துணிக்கைகளின் தரப்படுத்தமை முன்கிடைக்கப்பெற்ற செப்படுதகவைக் கொடுக்கமாட்டாது. ஆகையினால் ஓர் கலவையில் ஓர் குறிப்பிட்ட பெரிய துணிக்கை சிறிய துணிக்கையின் விகிதத்திற்குதான் ஆகக்கூடிய செப்படுதகவைப் பெறலாம். ஓர் குறிப்பிட்ட செப்படுதகவைக் கொண்ட கலவையை விதானமிடும் பொழுது, மூன்று காரணிகளைக் கவனத்தில் எடுக்க வேண்டும். அவையாவன : நீர் -சீமந்து விகிதம்,துணிக்கை - சீமந்து விகிதம், முழுமையான நீர் உள்ளுறையுமாகும். இவற்றில் நீர் உள்ளுறை கணிசமான பங்கை ஏற்கிறது. துணிக்கை - சீமந்து விகிதம் குறைக்கப்பட்டு, நீர்-சீமந்துவிகிதம் மாற்றமடையாவிட்டால், முழுமைாயான நீர் உள்ளுறை கூடுகின்றது. அதனால் கலவையின் செப்படுதகவும் கூடுகிறது. மறு பக்கமாக, முழுமையான நீர் உள்ளுறை மாறாமல் துணிக்கை சீமந்து விகிதத்தைக் குறைத்தாலும், அதன் பிரகாரம் ஏற்படும் நீர் - சீமந்து விகிதம் குறைந்தாலும். கலவையின் செப் படுதகவில் பாதிப்பு அவ்வளவாக ஏற்படாது.
5.1.2 செப்பருதகவை மதிப்பிடுதல்
கொங்கிறீற்றின் செப்படுதகவை அதனை நெருக்கும்பொழுது தேவையான
உள்வேலையைக்கொண்டு மதிப்பிட்டாலும், இலகுவாகவோ அல்லது கூடிய
வேலையைப் பாவித்து நெருக்குதல் செய்யவேண்டும் என்பது அதன் அசைவுத்

26
தன்மையையும் நிலைத்தன்மையையும் பொறுத்ததாக இருக்கும். அசைவுத்தன்மை என்னும் பொழுது கொங்கிறீற்று எவ்வளவு இலகுவாக மால்களிலும் வலுவூட்டிக் கம்பிகளைச் சூழ்ந்தும் ஓடக்கூடிய தன்மையைக் குறிக்கின்றது. நிலைத்தன்மை என்பது கொங்கிறீற்றை எடுத்துச் செல்லும்பொழுதும், நெருக்கும் பொழுதும் துணிக்கை வேறு சீமந்துப்பசை வேறாகப் பிரிந்து போகாமல் உறுதிநிலையில் முழுமையாக இருப்பதையே குறிக்கும். ஆகையினால் கொங்கிறீற்றின் செப்படுதகவை மதிப்பிடும் பரிசோதனைகள் இக்குறிப்பிட்ட தன்மைகளுடன் தொடர்புகொண்டதாகவே காண்கின்றோம்.
5.1.2.1 gorisis (3 Frissosol (Slump test)
இச்சோதனைமுறை கொங்கிறீற்றின் அசைவுத் தன்மையையும், நிலைத் தன்மையையும் அளவிடுவனவாக இருக்கும். கலவை தயாரிக்கும்பொழுது, அக் கலவையில் மாறுபாடுகள் ஏற்படின் அவற்றை உடனே அகற்றுவதற்கு இது பயன் படுகின்றது. இதனால் இம்முறை மிகக்கூடுதலாக கட்டிடவேலை இடங்களில் பாவிக்கப்படுகின்றது.
இச்சோதனைமுறை BS 1881:பகம் 102:1983இல் விரிவாகத் தரப்பட்டிருக் கிறது. புதிதாகக் கலந்த கொங்கிறீற்று ஓர் குறிக்கப்பட்ட உபகரணத்தில் நான்கு படையாக நிரப்பப்படல் வேண்டும். இவ்வுபகரணம் துண்டிக்கப்பட்ட குழிகூம்பின் உருவமாகவும், 300 மி.மீ. உயரமுள்ளதாகவும், இரண்டு திறந்த பக்கங்களும் விட்டம் 200 மி.மீ. 100 மி.மீ. ஆகவும் இருக்கும். இவ்வுபகரணத்தில் நிரப்பப்பட்ட ஒவ்வொரு கொங்கிறீற்றுப் படையும் 25 தரம் இதற்கென்று குறிப்பிட்ட இரும்புக்கம்பியால் குத்தி பின்பே அடுத்த படை நிரப்பப்படுதல் வேண்டும். ஈற்றில், மேற்பரப்பிலுள்ள மிகுதி கொங்கிறீற்று மட்டமாக்கியபின் இவ்வுகரணத்தை மேல்நோக்கியவாறு உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தும் பொழுது,கொங்கிறீற்றின் அசைவுத்தன்மையைப் பொறுத்து சரிவு ஏற்படும். அதாவது, அடிமட்டத்திலிருந்து 300 மி.மீ. இலும் குறைந்ததாகவே உயரம் காணப்படும். இச்சரிவை இறங்குதல் (stump) என்று கணக்கிடப்படுகின்றது.
இச்சோதனையின் பிரகாரம் கிடைக்கப்படும் சோர்வு வீழ்ச்சி அல்லது சரிவு மூன்று வகைப்படும் (படம் 5.1).
- 605 GOLDu JT60T 3Driggb6) (true slump)
- கொய்வு இறங்குதல் (shear slump)
- பதனம் (collapse)
பொதுவாக, இச் சோதனைமுறை சீமந்துகூடிய கலவைகளுக்கும்
இசைவுகூடிய கலவைகளுக்குமே உகந்ததாக இருக்கும். இம்முறையால் மிகவும் குறைந்த பசையுடைய கலவைகளை மதிப்பிடுவது சுலபமில்லை.

Page 18
27
25-5Omm (1"-2")
- Up to 125 mm (5") Up to 15
っ 15O-255 mm (6'1O")
True Slump SheCr Collapse
ܕ - - - r
படம் 5.1 மூன்று வகையான கொங்கிறீற்று இறங்குதல்
5.1.2.2 இறுக்குதல் காரணி சோதனை (Compacting Factor test)
இச் சோதனையின் மூலம் கொங்கிறீற்றின் இறுக்குதல் தன்மை அள விடப்படுகிறது. BS 1881 : பாகம் 103; 1983 இல் இது விரிவாக விளங்கப்படுத்தப் பட்டிருக்கின்றது.
இதற்கு பாவிக்கப்படும் உபகரணம் படம் 5.2 இல் காட்டப்பட்டிருக்கிறது. இது ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு துண்டிக்கப்பட்ட கூம்பிவடிவான துள்ளிகளும், அடியில் ஓர் சிலிண்டர்வடிவான ஏந்துகலமும் மேற்கூறிய நியமத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓர் செங்குத்தான சட்டத்தில் பூட்டப்பட்டதாக அமைகிறது. துள்ளிகளின் அடிப்பாகத்தில் பொறிக்கதவுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. சோதனைக்குரிய கொங்கிறீற்றை மேலாகவுள்ள துள்ளியில் நிரப்பியபின், அத்துள்ளியின் பொறிக்கதவைத் திறந்து கொங்கிறீற்றை இரண்டாவது துள்ளியில் சுலபமாக விழவேண்டும். அதன்பின் இரண்டாவது துள்ளியின் பொறிக்கதவைத் திறந்து கொங்கிறீற்றை கீழேயுள்ள ஏந்துகலத்தில் விழவிடல் வேண்டும். ஏந்துகலத்தின் மேற்பகுதியில் காணப்படும் கூடுதலான கொங்கிறீற் வெளியேற்றப்பட்டு ஏந்துகலத்தின் மேற்பாகத்துடன் மட்டுப்படுத்தல் வேண்டும். இக்கலத்தை நிறுத்து அதனுள்ளிருக்கும் கொங்கிறீற்றின் நிறுவை (A) அறியப்படல் வேண்டும். இதன்பின், அக்கலத்திலுள்ள கொங்கிறீற் வெளியேற்றப்பட்டு, அதன்பின் புதிதாக கலவையிலிருந்து கொங்கிறீற்றை எடுத்து பலபடைகளாக இக்கலத்தில் நிரப்பி, அதிர்வு முறையாகவோ அல்லது மனிதவலுவுடனோ முழுமையாக இறுக்குதல் வேண்டும். இப்படி இறுக்கிய கொங்கிறீற்றின் நிறுவையும் (B) அறியப்படல் வேண்டும். இவ்விரண்டு நிறுவை களிலிருந்தும் இறுக்குதல் காரணியைப் பெற்றுக்கொள்ளலாம்.
இறுக்குதல் காரணி =
 
 

28
இம்முறை பசைகுறைவான கலவைகளில் செப்படுதகவை அறிவதற்குப் பயன்படுத்தப்படுவது உகந்தது.
படம் 5.2 இறுக்குதல் காரணி சோதனை உபகரணம்
5.1.2.3. Webe இசைவுகாட்டி சோதனை (Vebe Consistometer test)
இச்சோதனை முறை BS 1881 பாகம் 104 : 1983 இல் விரிவாகத் தரப்பட்டிருக்கின்றது. மேற்கூறிய இரண்டு சோதனை முறைகளும் ஓர் குறிப்பிட்ட கொங்கிறீற் கலவையின் செப்படுதகவை அறிய உகந்ததாக இல்லாமலிருக்கும் நிலையில் இம்முறை பிரயோசனப்படும்.
இதற்குப் பாவிக்கும் உபகரணங்களாவன, இறங்கற் சோதனையில் பாவித்ததுபோல் அதேயளவு துண்டிக்கப்பட்ட குழி கூம்பும் அதை உள்ளடக்கக்கூடிய 240 மி.மீ. உள்விட்டமும் 200 மி.மீ. உயரமுள்ள சிலிண்டர் ஏந்துகலமும் ஆகும். இவ்வேந்துகலம் ஓர் அதிர்வு மேசையின் மேல் பூட்டப்பட்டிருக்கும் (படம் 5.3).

Page 19
29
Gloss plote
rider
LILib 5.3 Vebe plusgearb'
கூம்பு வடிவான கலத்தில் வைத்து 5.1.2.1 இல் கூறியவாறு நான்கு படைகளில் கொங்கிறீற்றை நிரப்பி மனிதவலுவால் இறுக்க வேண்டும். அதன்பின் கூம்பியை உயர்த்தி கொங்கிறீற்றின் சரிவை அளத்தல் வேண்டும். பின் உபகரணத்தின் சுழலும் கையைப் பாவித்து 230மி.மீ விட்டமுள்ள பிளாஸ்டிக் தட்டைக் கொங்கிறீற்றின் மேற்பரப்பில் தாங்கவேண்டும். சுழலும் கையை இறுக்கிய பின் நேரத்தைக் குறித்துக் கொண்டு அதிர்வு மேசையை இயக்க கொங்கிறீற் கீழிறங்கி ஏந்து கலத்தில் பரவும். அதனோடு பிளாஸ்டிக்தட்டும் கீழிறங்கும். முழுமையாக நிரப்பிய பின் பிளாஸ்டிக் தட்டினுாடாக சீமந்துப்பசை தட்டின் கீழ் முழுப்பாகத்திலும் மூடியிருப்பதைக் காணலாம். இந்நேரத்தில், மேசையின் அதிர்வை நிறுத்தி, எவ்வளவு நேரம் மேசை அதிரப்பட்டது என்று குறித்தல் வேண்டும். இந்நேரம் கலவையின் கெட்டித்தன் மையைப் பொறுத்திருக்கும். கூடிய கெட்டித்தன்மை கொண்ட கலவை இலகுவில் இறுக்கமுடியாமல் கூடிய நேரத்தை எடுக்கும் என்பதாகும்.
இம்மூன்று முறைகளையும் ஒப்பிட்டுக் காட்டுவதாக அட்டவணை 5.1 அமைந்திருக்கின்றது.
 
 

30
அட்டவணை 5.1
இறங்குதல் இறங்குதல் இசைவு காட்டி (Րյf) காரணி (வினாடி)
O O.65 - 0.75 2O 0 - 20 0.75 - 0.85 20 - 12 10 - 30 0.85 - 0.90 12 - 6 30 - 60 0.90 - 0.93 6 - 3 60 - 180 0.93 3 - 0
5.1.1.4 Lugoso (Dog (Flow Table)
இந்தச் சோதனை முறை ஜேர்மன் நியமம் DIN 1048 இல் விரிவாகத் தரப்பட்டிருக்கின்றது. இம்முறை சூப்பர் பிளாஸ்டிசைசர் (super plasticizer) சேர்ந்த கூடிய பரவும் கொங்கிறீற் அறிமுகமானபின் கூடியளவாகப் பாவிக்கப்படுகிறது. BS 1881 பகுதி 105 : 1984 இலும் விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன.
இச்சோதனைக்குப் பாவிக்கப்படும் உபகரணம் முக்கியமாக தகட்டினால் மூடப்பட்ட 700 மி.மீ. சதுரமான மேசைப்பலகைத் தட்டைக் கொண்டதாக உள்ளது. இத்தட்டின் நிறை 16கி.கிறாம் ஆகும். இம்மேசைத்தட்டு இன்னொரு கீழ்த்தட்டுடன் பிணைச்சலைக் கொண்டு பூட்டப்பட்டிருக்கிறது. கீழ்த்தட்டின் அளவையும் 700 மி.மீ சதுரமாகும். மேல்தட்டைக் கீழ்த்தட்டிலிருந்து 40 மி.மீ உயர்த்தி விழவிடக்கூடியதாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறது (படம் 5.4). கொங்கிறீற்றைத் தட்டில் வைக்க வேண்டிய இடம் வரைகோடுகளால் தட்டின் மேற்பாகத்தில் வரையப்பட்டிருக்கின்றது.
படம் 5.4 பரவல் மேசை
மேசைத்தட்டின் மேற்பாகத்தை நீரினால் நனைத்தபின், அதன்மேல் 200மி.மீ உயரமும் கீழ்விட்டம் 200 மி.மீ விட்டமும் மேல் வட்டம் 130 மி.மீ விட்டமும் கொண்ட ஒரு குழிகூம்பினடித்துண்டு உருவம்கொண்ட பாத்திரத்தை வைத்து அதனுள் கொங்கிறீற் அடைதல் வேண்டும். பாத்திரத்தின் மேற்பாகத்தில் எஞ்சிய

Page 20
31
கொங்கிறீற்றை வெளியேற்றியபின் 30 வினாடிகள் கழிந்தபின் பாத்திரத்தை உயர்த்தி கொங்கிறீற்றைத் தட்டில் பரவவிட வேண்டும். மேசைத்தட்டை 15 தரம் 40 மி.மீற்றருக்கு உயர்த்தி அதிர்ச்சியடையாது விழவிட வேண்டும். ஒவ்வொரு முறையும் 4 வினாடிகளில் ஏற்றி விழவிடவேண்டும். இப்படிச் செய்யும் பொழுது அதன் பரவும் தன்மையைப் பொறுத்து கொங்கிறீற்று மேசை மேற்பரப்பில் பரவும். இப்படிப் பரவும் கொங்கிறீற்றின் அளவைகளை, மேசையின் நடுவில் இரண்டு செங்குத்தான விட்டங்களில் கிடைக்கும் கூடிய அளவைகளின் சராசரியைக் கொங்கிறீற்றின் 'பரவல்” என்று மிமீ ல் அளவிடப்படும். உதாரணமாக பரவல் எண் 400 நடுத்தர இயக்கக்கூடிய தன்மையையும், எண் 500 கூடிய செப்படுதகவைக் காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
5.1.3 வெப்பநிலை, காலம் முதலிய காரணங்களால்
ஏற்படும் தாக்கங்கள்
உடன்கலந்த கொங்கிறீற் கலவை, நேரம் செல்லச் செல்ல இறுகும் தன்மை கொண்டது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. கொங்கிறீற் கலவையிலிருந்து சூரிய வெப்பத்தின் காரணமாகவோ அல்லது காற்றில் உலர்வதன் காரணமாகவோ நீர் இழப்பது ஒரு காரணம். இரண்டாவதாக காலம் செல்லச்செல்ல துணிக்கைகள் கலவையிலிருந்து நீரை உறுஞ்சுவதையும் அல்லது சீமந்து நீரேற்றம் அடைவதையும் கூறலாம். ஆகையினால் உடன்கலந்த கொங்கிறீற்றின் செப்படுதகவு காலத்தோடு குறைவதின் அளவு துணிக்கைகளின் ஈரலிப்புத தன்மையைப் பொறுத்தும், இதனால் காய்ந்த துணிக்கைகளுடன் கூடியதாகவும் இருக்கும்.
உடன்கலந்த கொங்கிறீற்றின் செப்படுதகவு சுற்றாடலின் உஷ்ண நிலையால் பாதிக்கப்படும். ஆகையினால், ஓர் வெப்பமான நாளில் வெப்பம் குறைந்த நாளிற்குச் சமமான செப்படுதகவைப் பெறுவதற்குக் கலவையின் நீர் உள்ளுறையைக் கூட்ட வேண்டியதாக இருக்கும். எனினும், ஆராய்ச்சியின் மூலம் அறியத்தருவது யாதெனில், சுற்றாடலின் சாரீரப்பதன் 20-70 விகிதமாக இருப்பின் 40°C வரை செப்படுதகவுவின் பாதிப்பு குறைவாக இருக்கும். சாரீரப்பதன் 20 விகிதத்திற்குக் குறைந்தாலும் உஷ்ணநிலை 50°C க்கு மேற்பட்டாலும், கொங்கிறீற்றின் சரிவு மிகவும் கூடியதாகக் வீழ்ச்சியடைவதைக் காணலாம்.
5.2 6BITIñißffihúsi Gifu Tb (Segregation of concrete)
உகந்த இறுக்குதலைப் பெறுதவற்குக் கொங்கிறீற்று இசைவானதாக இருத்தல் வேண்டும். பிரிபாட்டின் காரணமாக கொங்கிறீற்றின் கலவைப் பொருட்கள் வெவ்வே றாகப் பிரிவதனால், அதன்பின் கலவை ஒரே சீராக இருக்கமாட்டாது. கூடிய உயரத்திலிருந்து கொங்கிறீற் கொட்டப்படும் பொழுதோ அல்லது ஓர் சரிவில் கொட்டப்படும் பொழுதோ பிரிபாடு ஏற்பட்டு பெரிய துணிக்கைகள் சிறிய துணிக்கை களிலிருந்தும் சீமந்துச்சாந்து இவற்றிலிருந்தும் வெவ்வேறாகப் பிரியநேரிடும். ஆகையினால் கொங்கிறீற்றைக் கொட்டும்பொழுது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டுசெல்லும் பொழுதும் சரியான முறைகளைப் பாவித்தால்

32
கொங்கிறீற் பிரிபாட்டைக் குறைக்க முடியும். 5.3 65Tidgii isgsil IIIf:556,o (Bleeding of concrete)
கொங்கிறீற் ஓர் அச்சில் வார்க்கப்பட்டு இறுக்கிய சில நேரத்திற்குப்பின் அதில் உள்ளடக்கிய நீரின் ஓர் பகுதி கொங்கிறீறின் மேற்பரப்பிற்கு மிதந்து வந்து தேங்குவதைக் காணலாம். இதனைக் கொங்கிறீற் கறள்பாரித்தல் என்று சொல்லப்படும்.கொங்கிறீற்றை இறுக்கும்பொழுது கீழிறங்கும் துணிக்கைகள் தங்களுள் உள்ளடக்கமுடியாத நீர் இவ்வாறு மேற்பரப்பிற்கு எழும்புகிறது.
கொங்கிறீற் கறள்பாரித்தல் கூடியளவு தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் கொங்கிறீற்றைப் படைபடையாக வார்க்கும்பொழுது, கீழ்ப்படையின் மேற்பாகத்தில் காணப்படும் நீர் ஓர் குறைந்த வலுவுடைய கொங்கிறீற்றை மேற்படைக்கு ஏற்படுத்து வதற்குக் காரணமாக இருக்கும். அதனுள் அடக்கப்படும் நீர், பின் ஆவியாகும் பொழுது சல்லடையுடைய கொங்கிறீற் ஏற்படக் காரணமாக இருக்கும். இந்நீரில் ஓர் பகுதி துணிக்கைகளின் கீழ்ப்பாகத்திலோ அல்லது வலுவூட்டும் இரும்புக் கம்பிகளின் கீழ்ப்பாகத்திலோ சிக்குவதால், அந்நீர் கயும் பொழுது ஏற்படும் கட்டுத் தகைப்புக் குறவைான பகுதிகள் கொங்கிறீற்றின் பலத்தைக் குறைப்பதற்குக் காரணமாக அமையும்.
கொங்கிறீற்றின் கறள்பIரித்தலைக் குறைப்பதற்கு சீமந்தின் நுண்மையைக் கூட்டியும் அலுமினியத்தூள் போன்றவற்றைக் கலவையில் சேர்ப்பதாலும் கலவையைச் சீர்படுத்தலIம். சீந்து கூடிய கலவைகளில் சீமந்து குறைந்த கலவைகளிலும் பார்க்கக் குறைந்த கறள்பாரித்தல் காணப்படுகின்றது.

Page 21
33
6. கடினப்பட்ட கொங்கிறீற்றின்
தன்மைகள் Properties of Hardened Concrete
கொங்கிறீற்றின் தன்மைகளில் அதன் வலிமையும் நீண்டகாலப் பாவனைத் தன்மையுமே மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இவற்றைவிட, அதன் உள்ளடங்கிய அசைவு, சுருங்கல்,மீள்சக்தி குணகம்,பொயிசோன் விகுதி போன்றவையும் கொங்கிறீற் அமைப்புத்திட்டங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
6.1 65IIIi frissor ois sold (Strength of Concrete)
கொங்கிறீற்றின் வலிமை அதன் தரத்திற்கு அளவுகோலாகப் பேணப்படுகின்றது. அதன் மற்றைய தன்மைகள் வலிமையுடன் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கின்றன. கொங்கிறீற்றின் நெருங்கற் பலத்தைக் கொண்டே அதன் வலிமை கூடுதலாக அளவிடப்படுகின்றது. எனினும் இழுவன்மை, வளையல் வலிமை கொய்வுவலிமை போன்றவையும் அமைப்புத்திட்டங்களில் பாவிக்கப்படும்.
ஓர் குறிப்பிட்ட வெப்பத்தில் பண்படுத்தப்பட்ட கொங்கிறீற்றின் வலிமை குறிப் பிட்ட முதுமை (age) இல் கணிக்கும்பொழுது இரண்டு காரணிகளிலேயே தங்கி யிருக்கிறது. இவையாவன :நீர்-சீமந்து விகிதம், நெருக்குதல் படியளவையுமாகும். நெருங்கிய கொங்கிறீற்றில் காணப்படும் வெற்றிடங்கள் அதன் வலிமையை மிகவும் குறைக்கும் , 5 சதவிகிதம் வெற்றிடங்கள் கொண்ட கொங்கிறீற்றின் வலிமை 30 சதவிகித்ததால் குறைவாகவும், 2 சதவிகிதம் வெற்றிடமாகும்பொழுது 10 சதவிகிதம் குறைவாகவும் காணப்படுகின்றது. முழுமையாக நெருங்கிய கொங்கிறீற்று என்று சொல்லுமிடத்து கடினமான கொங்கிறீற் உட்கொண்டிருக்கும் வெற்றிடங்கள் 1 சதவிகிதத்திற்குக் குறைவாக இருத்தல் வேண்டும். அப்படியான நிலையில், கொங்கிறீற்றின் வலிமை சீமந்து-நீர் விகிதத்திற்கு நேர்மாறு விகிதசமமாகக் காணப்படுகின்றது. இதனை முதன்முதலாக டப் ஏபிராம் (DufAbrahm) என்பவர் 1919 இல் தெரியப்படுத்தினார். வலிமை எவ்வாறு நீர் - சீமந்து விகிதத்தோடு தொடர்புகொண்டுள்ளது என்று படம் 6.1 ல் காணலாம்.

34
Vibrdtion
Hond Componction
E M
Gu 改宗
du Fully Compuuleu 斋 / COfCrete S A.1
insufficiently ܓܕܶ
Compacted concrete
Woter / Cernent Ratio --
படம் 6.1 கொங்கியீற்று வலிமை, நீப்-சீமெந்து விகித தொடர்பு
நீர் - சீமந்து விகிதம் கொங்கிற்றின் வலிமைக்கு முக்கிய காரணியாக இருப்பினும் வேறுசில காரிகளும் வலிமையை ஓரளவுக்குக் குறைவாகவேனும் பாதிக்கக் கூடியதாக இ01ங்கணப்பட்டிருக்கின்றன. ஓர் குறிப்பிட்ட கலவைப் பொருட்களைப் பாவிக்கும் பொழுது பின்வரும் காரணிகள் பாதிக்கின்றன.
(a) துணிக்கை - சீமந்து விகிதம்
(b) துணிக்கையின் ஆகக்கூடிய அளவு
(c) துணிக்கையின் தரப்படுத்தல், உருவம், மேற்பரப்பின் தன்மை,
கெட்டித்தன்மை ஆகும்.
நீர்-சீமந்தைத் தவிர்த்து இக்காரணிகள் எவ்வாறு வலிமையைப் பாதிக்கின்ற்ன என்று அறிவதற்கு கொங்கிறீற்றின் வலிமையின் பொறியமைப்பையும், அதன் முறிவின் பொறியமைப்பையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். ஓர் கொங்கிறீற்றுக்கலவையில் சீமந்து நீரேற்றம் அடையும்பொழுது இதனால் பெறப்படும் கூட்டுப்பொருட்கள் அடங்கிய செல் (gel) ஆக மாறுகிறது. இதன் பிரகாரம் நீரேற்றம் அடைந்த சீமந்துப் பசையின் கட்டமைப்பில் இச்செல், நீரேற்றம் அடையாத சீமந்துத் துணிக்கைகள், நீர் நிரம்பிய மயிர்த்துளைகள் அடங்கிவிடுகின்றன. சீமந்து முழுமையான நீரேற்றம் அடைவதற்கு 0.38 நீர்-சீமந்து விகிதம் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் அறிகின்றோம். முழுமையான நீரேற்றம் என்னும்பொழுது சீமந்து முழுவதும் நீரேற்றம் அடைந்து விட்டதாகவும், மயிர்த்துளைகள் இல்லாத சீமந்து செல் உண்டாவதாகவும் கருதப்படும். நீர்-சீமந்து விகிதம் 0.38 க்கு மேல் கூடும்பொழுது, சீமந்து முழுமையாக சீரேற்றம் அடைந்தாலும், எஞ்சிய நீரின் காரணத்தால் சீமந்து செல்லில் மயிர்த்துளைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இம்மயிர்த்துளைகளின் அளவைகள் மாறுபட்டதாக இருப்பினும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாக

Page 22
35
சீமந்துப் பசையின் அமைப்பில் ஓர் ஒழுங்கீனமற்ற முறையில் காணப்படுகின்றன. இப்படிக் காணப்படும் மயிர்த்துளைகள் கடினமாக கொங்கிறீற்றின் உட்புகவிடுதக வினைக் (permeability) கூட்டுவதற்குக் காரணமாக அமைகின்றன.நீரேற்றமடைந்த சீமந்துப்பசையை இதனோடு சேர்ந்திருக்கும் மயிர்த்துளைகளையும் சேர்ந்த கனப்பரிமாணத்தின் விகிதமாக நோக்கின், இவ்விகிதத்தை செல்-காவியிடம் விகிதம் (gel - Space ratio) என்று குறிக்கப்படும். ஆராய்ச்சியின் மூலம் கொங்கிறீற்றின் வலிமை வளர்ச்சி இவ்விகிதத்தின் முப்படி நேர்விகிதசமமாக இருப்பதாக அறிகின்றோம்.
சீமந்துச்சாந்து,கொங்கிறீற்றுகளின் அமைப்புகளை ஆராய்வதால் கொங்கிறீற்றின் வலிமையின் வளர்ச்சியைப் பற்றிக் கூடிய விளக்கம் பெறக்கூடும். கொங்கிறீற்று சீமந்துச்சாந்தில் பதிந்த பெரிய துணிக்கைகளைக் கொண்ட இரண்டு அவத்தை (phase) அமைப்பாகக் கருதலாம். சீமந்துச் சாந்தையும் நீரேற்றிய சீமந்துப் பசையில் பதிந்த நுண்துணிக்கைகளைக் கொண்ட இரண்டு அவத்தை அமைப்பாகக் கருதலாம். இதனிலிருந்து நாம் அறிவது என்னவெனில், ஈரமான மற்றும் கடினமான சீமந்துப்பசை, சாந்து, கொங்கிறீற்றுக்களின் தன்மைகள் மேற்குறிக்கப்பட்ட இரண்டு அவத்தைகளின் கலவை அளவைகளையும் தன்மைகளையும் பொறுத்திருக்கும் என்பதாகும். கொங்கிறீற்று கடினமாகும் முதற்கட்டங்களில் சீமந்துப்பசை அதன் இடையில் உண்டாகும் மூலக்கூற்று விசையின் நிமித்தம் சுருங்குகின்றது. எனினும், இதன் மத்தியில் காணப்படும் பெரிய, நுண்துணிக்கைகள் சுருங்கவிடாமல் எதிர்ப்ப தால் பெரிய துணிக்கை - பசை இடையில் இருக்கும் பொதுமுகத்தில் (interface) இழுவை கொய்வு தகைப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக 6 மி.மீ. இலும் பெரிதான துணிக்கைகளின் பொதுமுகத்தில் மைக்கிரோ வெடிப்புகள் (micro -cracks) ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட நுண்வெடிப்புகள் கொங்கிறீற்றின் பெரிய துணிக்கைகள் - சீமந்துப்பசையின் பொதுமுகத்தில் கொங்கிறீறிற்றின் சுமை யேற்று முன்னரே இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரியப்படுத்துகின்றன. இவ்நுண் வெடிப்புகள் கொங்கிறீற்றில் சுமையேற்றப்படும் பொழுது, ஈற்றுச்சுமையில் 30 விகிதம் வரை மாறாமல் இருக்கும்.
கொங்கிறீற்றின் வலிமையை அறிவதற்குச் சோதனை செய்யும் பொழுது, சுமையின் திசைக்குச் செங்குத்தான திசையில் இழுவைத்தகைப்பு ஏற்படுகின்றது. இத்தகைப்புகளின் காரணமாகவும், பெரிய துணிக்கைக்கும் சீமந்துப் பசைக்குமுள்ள பொதுமுகத்தின் வலிமையைப் பொறுத்தும், கொங்கிறீற்றில் காணப்படும் பெரிய துணிக்கைகளின் விகிதாசாரத்தைப் பொறுத்தும், மேற்கூறிய பொதுமுகத்தினுாடா கவோ அல்லது பெரிய துணிக்கைகளுக்கூடாகவோ தவறல் ஏற்படும்.
6.1.1 கொங்கிறீற்றின் நெருங்கற்பலம்
(Compressive Strength of Concrete)
கொங்கிறீற்றின் தரத்தை நிர்மாணிப்பதற்கு அதன் நெருங்கற்பலமே அளவையாகப் பேணப்படுகின்றது. கொங்கிறீற்று அமைப்புகளை விதானிக்கும்பொழுது பாவிக்கும் அதன் சிறப்பியல்புடைய பலம் 28 நாள் கடினமான சதுரமுகி பலத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. கொங்கிறீற்றின் 28 நாளைய பலம் 150 மி.மீ. கொங்கிறீற் சதுர முகிச் சோதனையிலிருந்து பெறப்படுகிறது. பெரிய துணிக்கைகளின் அளவு 25

36
மி.மீ.க்குக் கூடாவிட்டால், 150 மி.மீக்குப் பதிலாக 100மி.மீ. சதுரமுகியையும் பாவிக்கலாம். கொங்கிறீற் பலச் சோதனையில் பாவிக்கும் சதுர முகிகளைத் தயாரிக்கும் முறைகள் விரிவாக BS 1881 இல் தரப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் 6இX 12இ (150 மிமீ 300 மிமீ) சிலிண்டர்களை இச்சோதனைக்குப் பாவிப்பார்கள். அதன் விபரங்கள் ASTM நியமம் C39 இல் தரப்பட்டிருகின்றன. சிலிண்டர்களிலிருந்து பெறப்படும் நெருங்கற்பலம் சதுரமுகிகளிலிருந்து பெறப்படும் நெருங்கற்பலத்தில் 70 இல் இருந்து 90 சதவிதமாக இருக்கும். BS 1881 பாகம் 4 1971 இன்படி சிலிண்டரிலிருந்து பெறப்படும் நெருங்கற்பலத்தை சதுரமுகிகளின் நெரிங்கற்பலத்தில் 75 சதவிகிதமாக எடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டிற்கும் ஏற்படும் வித்தியாசம் சோதனை செய்யும் பொறியின் தகடுகளுக்கும் கொங்கிறீற் மாதிரியின் முனைகளின் மேற்பரப்பிற்குமிடையில் ஏற்படும் உராய்வு விசைகளே காரணமாகக் கூறப்படுகின்றது. இவ்விசைகளின் காரணமாக கொங்கிறீற்று சதுரமுகியின் அல்லது சிலிண்டரின் உட்பகுதியில் பல்லுறுப்பு அச்சையுடைய தகைப்பு அமைப்பு உருவாகுகின்றது. சதுரமுகியில் இதன் தாக்கம் அதனுடாகப் பரவலாகக் காணப்பட்டாலும், சிலிண்டரின் முனைகளில் கூடியும் நடுப்பகுதியில் குறைந்தும் இருப்பதாக அறிகிறோம். சிலிண்டரின் உயரம் - விட்டம் விகுதி கூடும்பொழுது அதன் நடுப்பகுதியில் இத்தகைப்புகளின் தக்கம் முற்றாக நீக்கப்படுகின்றது. இதன் காரணமாக, ஜேர்மன் நியமத்தில் 4 1 டி யாம் அகலமுள்ள கொங்கிறீற் அரியத்தை நெருங்கற்பலம் பெறுவதற்குப் பாவிக்கப்படுகின்றது.
கொங்கிறீற்று மாதிரியைச் சோதிக்கும்பொழுது, ஈற்றுச் சுமையில் 50 தொடக்கம் 75 சதவிகிதத்தில் செங்குத்தா ைவெடிப்பு ஏற்படுகின்றது. இதை மேற்சுர துடிப்பு வேகமுறையால் கEக்கலாம். இவ்வெடிப்புகள் ஏற்படும் தகைப்பு பெரும்பாலும் பெரிய துணிக்கைகளின் குதி|ங்க)ளப் பெறுத்துள்ளது. வழுவழுப்பான உருண்ட கிராவல் துணிக்கைகளுள்ள செங்கிறீற்று கோணங்களுடைய துறிைக்கை கொங்கிறீற்றிலிம் பார்க்கக் குறைந்த தகைப்பில் வெடிப்பதாக அறிகின்றோம். சீமந் துச் சாந்திற்கும் பெரிய துணிக்கைகளுக்குமிடையில் ஏற்படும் பிணைப்பு இதற்குக் காரணமாகக் கூறப்படிகின்றது. துணிக்கைகளின் மேற்பரப்பு கரடுமுரடாக இருப்பின், இப்பிணைப்பு கூடுகின்றது. IEலும், துணிக்கைகளின் உருவமும் மேற்பரப்பின் தன்மையும் இழுவன்மையிலும் பார்க்க பெருங்கற் பலத்தை குறைவாகவே பாதிப்பதாக அறிகிறோம்.
6.1.1.1 நெருங்கற்பல சோதனை
முன்கூறியபடி. பெரிய துணிக்கையின் ஆகக்கூடிய அளவைப்பொறுத்து நெருங்கற்பல சோதனை 150 மிமீ அல்லது 100 It சதுரமுகிகளில் செய்யலாம். வழக்கமாக ஒரு தொகுதியில் 3 சதுரமுகிகளில் சோதனை நடாத்தி அதில்வரும் பெறுபேறுகளின் சராசரி கணிக்கப்படும். கொங்கிறீற் சதுரமுகிகள் செய்யும் முறை நியமம் BS 1881 பாகம் 108 : 1983 இல் விளக்கமாகத் தரப்பட்டிருக்கின்றது. இதன்படி சோதனைக்குத் தேவையான கொங்கிறீற் மாதிரிகள் 150 மிமீ கன உள் அளவுகளைக் கொண்ட இரும்பு மால்களில் வார்க்கப்படும். புதிதாகக் கலந்த கொங்கிறீற்றை இம்மால்களில் மூன்று படைகளாக வார்த்து ஒவ்வொரு படையும் இதற்காகத் தரப்பட்ட 25மிமீ சதுர வெட்டுமுகம் கொண்ட உரம்போடு கோலால்

Page 23
37
35 தடவைகள் இடித்தல் வேண்டும். கொங்கிறீற்றை அடையும் பொழுது அதிர்வு முறையைப் பாவித்து இறுக்கலாம். எந்த முறையைப் ப்ாவித்தாலும் போதிய இறுக்குதல் அடையும்வரை தொடரவேண்டும். அதன்பின் வார்க்கப்பட்ட கொங்கிறீற் மாதிரிகளை நனைந்த சாக்கினால் மூடி 18-22C வெப்பநிலையிலும் 90 சதவிகிதத்திற்குக் குறையாத சாரீரப்பதனிலும் 24மணித்தியாலங்களுக்கு அசையாமல் களஞ்சியப்படுத்தல் வேண்டும். 24 மணித்தியாலயங்களுக்குப்பின், கொங்கிறீற் மாதிரிகள் மால்களிலிருந்து வெளிப்படுத்தி மேலும் ஓர் குறிப்பிட்ட கால அளவிற்கு 19-21°C வெப்பநிலையில் நீரில் பண்படுத்தல் வேண்டும். பண்படுத்தப்பட்ட கால எல்லைக்குப்பின், இம்மாதிரிகளின் பலம் நீரிலிருந்து எடுத்து காயமுன் சோதிக்கப்படல் வேண்டும். இம்மாதிரிகளை சோதிக்கும் சுமையேற்றும் வீதம் BS 1881 பாகம் 116: 1983 இல் குறிக்கப்பட்ட அளவுக்கு இருத்தல் வேண்டும். ஏனெனில் கூடிய வீதம் கூடிய பலத்தையும் குறைந்தவிதம் குறைந்த பலத்தையும் பிழையாகக் கொடுக்கும். அதேபிரகாரம், காய்ந்த மாதிரியிலிருந்து பெறப்படும் பலம் நனைந்த மாதிரியிலிருந்து பெறப்படும் பலத்திற் பார்க்கக் குறைவாக இருக்கும் என்பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும். 100 மிமீ சதுரமுகிகளிலிருந்து 7, 28 நாட்களிலும் 1 வருடத்திலும் பெறப்பட்ட நெருங்கற்பல வளைவுகள் படம் 6.2 இல் காணலாம்.
Ordinary Portland cement 8ON- - - - - - - Rapid-hardening Portland V Cerment
M
N 7一
V 8 N N W N V دOk 6 جے E `v N 2 g) M ওঁ, 5 5OH \ N \ς 21
w V V N ۔ N NN - Nمه بن
&ა’’ \, N 중 4 X `Š, šol སྐ 8 y S&s ܥܠ a. ليلا NTR | N E 3O s s NA Ο QSN) is N NA U ζς Y W N i N Y ༄ ܓܓܠ () 2 YN N n Σ N א י トミト ` ܓ
1O NNNN །།།།
Ο ا O3 O.4 O.5 O-6 O.7 O.8 O.S 1.O Water / cement ratio (by weight)
படம் 62 கொங்கிறீற்று நெருங்கற்பல வளைவுகள்

38
சதுரமுகியைப் பாவிக்கும் பொழுது, அதனின் இரண்டு எதிர்புறமான வழுக்கையான முகங்களை சோதனைப் பொறியின் தட்டுகளிடையில் வைக்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் சிலிண்டர் மாதிரிகளின் ஓர் முனை கரடுமுரடாக ( வார்த்த முனை ) இருப்பதால், மாதிரியைச் சோதிக்கமுன் இம்முனையை வழுக்கையாக்குதல் வேண்டும். வழக்கமாக இம்முனைக்கு ஒரு வழுக்கையான தொப்பி போடப்படும். இவற்றின் விளக்கத்தை ASTMநியமம் C 39 இல் இருந்து அறியலாம்.
6.1.2 கொங்கிறீற்றின் இழுவை வலிமை
(Tensile strength of Concrete)
கொங்கிறீற்று அமைப்புகள் விதானிப்பதில் கொங்கிறீற்றின் இழுவை வலிமை முக்கிய பங்கை வகிக்கின்றது. இவ்விதானிப்பில், கொங்கிறீற்றில் ஓரளவுக்கு வெடிப்பு ஏற்பட அனுமதிக்கப்பட்டாலும், இவ்வெடிப்புகளின் அளவைக் கணிப்பதற்கு கொங்கிறீற்றின் இழுவை வலிமை தெரிந்திருப்பது முக்கியம். வெடிப்பு குறிப்பிட்ட வரையறைக்கு மீறினால் கொங்கிறீற்றின் நீண்டகால உழைக்கும் தன்மையும் பாதிக்கப்படும். இழுவைவலிமை முன்தகைத்த கொங்கிறீற்று அமைப்புகளை விதானிப்பதிலும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
a 605 SO)Isu T601 Gbi, 3.Qg5O)6) 66560)LD&OL (direct tensile strength) அறிவது மிகவும் உகந்ததாக இருப்பினும், உண்மையான நேர் இழுவையை கொங்கிறீற்றில் இடுவது கடினமாகையால், கொங்கிறீற்றின் நேரல்லாத இழுவை 6).JG56OLD50)u (indirect tensile strength), 915ui psi)pa,6O)6)T(3u UT5555 (36,505 Lou நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
6.1.2.1 பிளவு இழுவைவலிமை
(Splitting Tensile Strength) இம்முறையின் மூலம் மேற்கூறியபடி கொங்கிறீற்றின் நேரல்லாத இழுவைவலிமையைக் கணிக்கின்றோம். இம்முறையை பிறேசிலியன் பிளவுசிலிண்டர் (3d 1560601 (Brazilian Split - Cylinder test) 51 sigti (55 UL3(66) gloG. (35 Tg56O)6O1 முறைகள் BS நியமம் 1881 : பாகம் 117 1983இலும் ASTM நியமம் C 496 இலும் தரப்பட்டிருக்கின்றன.

Page 24
39
f = ۶ سص f·念辰
മാ
Tensile Compfessive
Բ՝
(a) பிளவு சோதனை (b) கிடைத்தள தகைப்பின் பரம்பல் படம் 6.3 பிளவு இழுவை வலிமை சோதனை
இம்முறையின் பிரகாரம் 300 மிமீ x 150 மிமீ விட்டமுடைய கொங்கிறீற்று சிலிண்டர் அதன் விட்டத்திற்கு நேராச சுமையேற்றப்படுகின்றது. (படம் 6.3 a ) சுமையேற்றும் பொழுது சுமையேற்றும் பொறியின் தட்டுகளுக்கும் சிலிண்டரின் மேல் பரப்பிற்கும் இடையில் கீழும் மேலும் குறிப்பிட்டளவு தடிப்பு, கடினம் கொண்ட ஒட்டுப்பலகைக் கீலங்களில் தாங்கியிருத்தல் வேண்டும். தவறல் செங்குத்தான விட்டத்தளத்தினுாடாக ஏற்படும். இவ்விட்டத்தினுாடாக ஏற்படும் கிடைத்தகைப்பின் பரம்பல் படம் 6.3 (b) இல் காணப்படும். பிளவு இழுவை வலிமை f யைப் பின்வருமாறு கணிக்கப்படுகின்றது.
2P
DL
இதில் P - பிரயோகித்த உச்சச்சுமை (N)
D = சிலிண்டரின் விட்டம் (ßß) L - சிலிண்டரின் நீளம் (ÊLỗ)
விதானிக்கும் தேவைகளுக்கு, சதுரமுகிகளிலிருந்து பெறப்பட்ட வலிமையில் 1/8 இல் இருந்து 1/12 வரை பிளவு இழுவை வலிமையாகக் கணிக்கலாம்.
6.1.2.2 solosmuso 665sold (Flexural Strength)
வளையல் வலிமையைப் பெறுவதற்கு BS 1881: பாகம் 118 - 1983 நியமத்திலும் ASTMநியமம் C78இலும் தரப்பட்டிருக்கும் முறைகளைப் பாவிக்கலாம். இம்முறைகளில் 100 மிமீ x 100 மி.மீ குறுக்குவெட்டுமுக அளவுகொண்ட அரியவுரு மாதிரி பாவிக்கப்படும். இம்முறையால் பெறப்படும் வளையல்வலிமை கிழிவுமட்டு
 

40
(modulus ofrupture)என்று அழைக்கப்படும். சுமையேற்றும் பொழுது, இறுதிவரை கொங்கிறீற்றின் தன்மை மீள்சக்தி எல்லைக்கு உட்பட்டதாக இருப்பதாகப் பாவனைசெய்து இவ்வலிமை கணிக்கப்படுகின்றது. எனினும் ஓர் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டே கொங்கிறீற்று மீள்சக்தித்தன்மை பெற்றதாகவும் அதற்கு அப்பால் அதன் நெகிழ்வு (plastic) தரத்தை அடைந்து விடுவதாகவும் ஆராய்ச்சிகள் கட்டுகின்றன. ஆகையினால் கொங்கிறீற்றின் முறிவு மீள்சக்தி எல்லைக்கு அப்பாற்பட்டே அமைவதனால், கிழிவுமட்டு என்று பெறப்படும் தகைப்பு ஓர் அநுமானிக்கப்பட்ட தகைப்பாகவே கொள்ளலாம். முறிவு மீள்சக்தி எல்லைக்கும் அப்பால் அமைவதனாலும், ஆனால் மீள்சக்தித் தன்மையைப் பாவித்து வலிமை கிழிவுமட்டு கணிக்கப்படுவதனால், இவ்வலிமை உண்மையான வளையல் வலிமையை விடக்கூடியதாகவே இருக்கின்றது. கிழிவுமட்டு தகைப்பு பிளவு வலிமையில் 1.5 மடங்காக இருப்பதைக் காண்கின்றோம்.
6.2 கொங்கிறீற்றின் உட்புகவிருதகவும்
நீண்டகாலப் பாவனைத்தன்மையும் (Permeability and Durability of Concrete)
கொங்கிறீற்றின் நீண்டகாலப் பாவனைத்தன்மை அதன் முக்கிய தன்மைகளில் ஒன்றாகவும்,கொங்கிறீற்று அமைப்புகளை விதானிக்கும் முறைகளிலும், நியமங்களிலும் கூடிய கவnத்தை ஈர்க்கும் ஓர் தன்மையாகவும் கருதப்படுகிறது. வெளிச்சுற்றாடலில் பாதிக்கப்படுவதாலோ அதன் ஓள்ளடங்கிய காரணிகளாலோ கொங்கிறீற்றின் நீண்ட காலப் பாவனைக்குப் பாதிப்பு ஏற்படலாம். ஆகக்கூடிய வெப்பநிலை மாற்றங்கள், உரோஞ்சுதல், இயற்கையில் அல்லது கைத்தொழில்களினால் ஏற்படும் திரவங்கள், வாயுவகைகளால் 1ற்படும் தாக்கங்கள், காலநிலைகளால் ஏற்படும் சிதைவுகளை, வெளிச்சுற்றாடல் காரணிகளாகக் கொள்ளலாம். கொங்கிறீற்றிலுள்ள துணிக்கைகள் சீமந்துப் பசையுடன் இணையும் பொழுது இவைகளுக்கிடையில் ஏற்படக்கூடிய இரசாயனமுறை எதிர்த்தாக்கங்கள், மற்றும் இவையிரண்டிற்கிடையிலும் இருக்கும் வெப்பநிலை வேற்றுமைத் தன்மையினால் ஏற்படக்கூடிய கனவளவு மாற்றங்கள் உள்ளடங்கிய காரணிகளாக அமைகின்றன.
கொங்கிறீற்றின் உட்புகவிடுதகவைச் செம்மையாக்குவதன் மூலம் வெளிச் சுற்றாடலால் எதிர்நோக்கும் தாக்கங்களைக் குறைக்கலாம். எவ்வளவு சுலபமாக நீர் மற்றும் திரவங்கள், வாயுக்கள் கொங்கிறீற்றை ஊடுருவமுடியும் தன்மையையே அதன் உட்புகவிடு தகவையாகக் குறிக்கப்படுகிறது. ஆகையினால் உட்புகவிடுதகவு கொங்கிறீற்றின் நீண்டகாலப் பாவனைக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடையதாக அமைகிறது. உட்புகவிடுதகமை குறைந்திருக்கும்கால் அதன் நீண்டகாலப்பாவனை கூடுகின்றது. கொங்கிறீற்றில் வெற்றிடங்கள் கூடும்பொழுது அதன் உட்புகவிடு தகமையும் மிக விரைவாகக் கூடுகின்றது. இவ்வெற்றிடங்கள், கொங்கிறீற்றில் சிக்கிக் கொண்ட காற்றுக்குமிழிகள் வெளியேறும் பொழுது ஏற்படுவதனாலும், கூடிய நீர்-சீமந்து கொண்ட கொங்கிறீற்றின் எஞ்சிய நீர் ஆவியாகி வெளியேறுவதால் ஏற்படுவதாலும், உட்புகதகவு கூடிக் காணப்படுகிறது. பொதுவாகக் கூறினால், கொங்கிறீற்றின் வலிமையைக் கூட்டும் காரணிகள் அதன் உட்புகதகவைக்

Page 25
41
குறைத்தும் அதன் பிரகாரம் அதன் நீண்டகாலப் பாவனையைக் கூட்டவும் உதவும். எனினும், நீர்-சீமந்து விகிதம் குறைவாக இருக்கும் கொங்கிறீற்றின் செப்படுதகவு குறைவதனால் நெருக்குதல் கடினமாகவும் செறிந்த கொங்கிறீற்று கிடைப்பது கடினமாகவும் அதன் காரணமாக கொங்கிறீற்றின் உட்புகவிடுதகவு பாதிக்கப்படுவதால் அதன் நீண்டகாலப் பாவனைத் தன்மையும் குறைகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்காக கொங்கிறீற் கலவையை விதானிக்கும்பொழுது சீமந்தின் ஆகக்குறைந்த அளவு குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக, BS 8110 நியமத்தில், வெவ்வேறு தராதரக் கொங்கிறீற் கலவைகளுக்கு, கொங்கிறீற்றின் வெளிப்பாதுகாப்பைப் பொறுத்து சூழலால் பாதிப்பு குறைவாக இருக்கும்பொழுது சீமந்தின் அளவு 180 கிகி /மீ ஆகவும், சூழலால் பாதிப்பு உக்கிரமாக இருக்கும் பொழுது 350 கிகி/மீ ஆகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கொங்கிறீற்றின் நீர் உட்புகத்தகவு, காற்று, ஆவி உட்புகத்தகவு போன்றவற்றைக் கணிப்பதற்கு முறைகள் இருக்கின்றன. கொங்கிறீற்றினுாடாக நீர், ஆவி ஊடுருவுவது காற்று ஊடுருவுவதைப் போன்றே இருக்கும்.
அண்மைக்காலங்களில் துணிக்கைகளுக்கும் சீமந்துப் பசைக்கும் இடையில் ஏற்படும் இரசாயனமுறை எதிர்த்தாக்கங்கள் கொங்கிறீற் தொழில்நுட்பவியலாளர்களின் முழு கவனத்தை மிகவும் ஈர்ந்திருக்கின்றது. இவை துணிக்கைகளில் கானப்படும் சிலிக்கா உறுப்புகளுக்கும் கொங்கிறீற்று பசையில் காணப்படும் காரப் பொருட் களுக்குமிடையில் ஏற்படும் எதிர்த்தாக்கங்கள் ஆகும். இவ்வெதிர்த்தாக்கங்களின் காரணமாக ஏற்படும் கார-சிலிக்கா செல்கள் (gel) விங்கக்கூடிய தன்மை யைப் பெற்றதாய் இருப்பதனால், நீர் உறுஞ்சி மேலும்மேலும் கனவளவைக் கூட்டுகின்றது. எனினும் இச்செல்கள் சுற்றியிருக்கும் சீமந்துப்பசையால் அடைக்கப் பெற்று இருப்பதால், உள்ளடக்கிய தகைப்புகள் ஏற்பட்டு, அதன் காரணமாக கொங்கிறீற்று பெருக்கமடைந்து ஈற்றில் வெடித்துச் சிதறுகிறது.
மேற்கூறிய எதிர்த்தாக்கம் ஏற்படுவதற்குச் சீமந்தில் காணப்படும் காரத்தின் உள்ளுறை மிகவும் முக்கியபங்கை வகிக்கின்றது. இதன் விகிதம் கூடும்பொழுது இவ்வெதிர்த்தாக்கத்தினால் கொங்கிறீற்றின் பெருக்கம் கூடுகிறது. இதைவிட, இவ் எதிர்தாக்கத்தின் முன்னேற்றம் சீமந்துப் பசையிலிருந்து வெளியேற முடியாத நீரின் விகிதத்திலும் பசையின் உட்புகவிடுதகவையும் பொறுத்திருக்கும். இவ்வெதிர்தாக் கத்திற்கு நீர் முக்கியமான தேவையாகும். கூடிய வெப்பநிலை எதிர்த்தாக்கத்தை மேலும் துரிதப்படுத்தும். சந்தேகிக்கப்படும் துணிக்கைகளை அவைகளின் எதிர் தாக்கத்தை ASTM நியமம் C 227-76 இல் கொடுத்த முறைகளின்படி அரியவுரு சாந்துப்பிரதிகள் மூலம் அறியலாம். 3 மாதத்தின் பின் 0.05 சதவிகிதமும் 6 மாதத்தின் பின் 0.10 சதவிகிதமும் பெருக்கம் ஏற்படின் அத்துணிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனினும் இப்பரிசோதனை முறைக்கு கூடிய கால அளவை தேவைப்படுவதால், ஓர் குறுகிய- கால அளவு பரிசோதனைமுறை ASTM நியமம் C 289 - 76 இல் தரப்பட்டிருக்கின்றது. இப்பரிசோதனைமுறை தரும் முடிவுகள் தற்காலிககமானதால் ஊர்ஜிதப்படுத்துவதற்கு முன்கூறிய பரிசோதனை முறையினால் முடிவுகள் காணவேண்டும்.

42
6.3 3idbriassyIib parassio 356stoIDugh (Shrinkage and Creep) 6.3.1 கொங்கிறீற் சுருங்கல்
கொங்கிற்ேறு கடினமடைந்து காயும்பொழுது ஏற்படும் சுருங்கலை காயும் சுருங்கல் (dry shrinkage) அல்லது சுருங்கல் என்று அழைக்கப்படும். சீமந்துப் பnயின் அமைப்பிலுள்ள செல்லின் புறத்துறிஞ்சியிருக்கும் (adsorbed) நீர் வெளியேறுவதன் காரணமாக இச்சுருங்கல் ஏற்படுவதாக அறிகின்றோம். ஆகையினால் செல்லின் இரசாயன கூட்டிலும் பார்க்க அதன் பெளதீக அமைப்பைப் பொறுத்து இசுருங்கல் ஏற்படுகிறது.
இச்சுருங்கலில் மீளமுடியாத ஒருபகுதி ஏற்படுகின்றது. அதனை ஆரம்பகாயும் சுருங்கல் (initial drying shrinkage) என்று கூறப்படும். எனினும் கொங்கிறீற்றை நீரில் அமிழ்த்தினால், மீளாக்கம் அல்லது பெருக்கம் ஆரம்பகாயும் சுருங்கலில் 60 சதவிகிதம் வரை ஏற்படலாம். அதன்பின், நீரிலிருந்து வெளியேற்றப்பட்டபின் காய வைத்தால் மீளவும் பெருக்கமடைந்தளவு சுருங்கல் ஏற்படும். இதனை கொங்கிறீற்றில் காணப்படும் ஈரலிப்பு நகர்வு (moisture movement) என்று சொல்லப்படும்.
புதிதாகக் கலந்த கொங்கிறீற்று, நெருக்கியபின் நீரில் தேங்க வைத்தால், பசையிலுள்ள செல்நீரை உறுஞ்சுவதால் கொங்கிறீற்றின் பெருக்கம் கூடும். கொங்கிற் வர்த்தபின் ஒரு வருடத்தில் அதன் முழுப்பெருக்கத்தையும் அடையும். Moம் வர்த்து 1 மாதத்தின்பின் இதில் 80 சதவிகிதமும் 6 மாதங்களின் பின் 90 சதவிகிதமும் ஏற்படும்.
கொங்கிறீற்றின் சுருங்கல் அளவு அதனுள்ளிருக்கும் துணிக்கைகளின் விகிதத்தையும் வகையையும் பொறுத்திருக்கும். அத்துணிக்கைகளின் அளவை, தரப்படுத்தல் சுருங்கலின் அளவை பதிக்காது. எனினும் பெரிய அளவைத் துணிக்கைகளைக் கொண்ட கலவையில் சீமந்துப்பசை குறைவாக இருப்பதால் சுருங்கலும் குறைவாக ஏற்படும். லு தரMIாக, துணிக்கையின் அளவை 6 மிமீ இலிருந்து 150மிமீ ஆக மாற்றும்பொழுது, துணிக்கைகளின் தொகை கொங்கிறீற்றின் கனவளவையில் 60 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதமாகக் கூடுவதனால், சுருங்கல் மூன்றிலொரு பங்காகக் குறைகிறது. அதேமுறையாக, ஒரு குறிப்பிட்ட வலிவுடைய கொங்கிறீற்றில், கூடிய செப்படுதகமை கொண்ட கொங்கிறீற்றிலும் பார்க்கக் குறைந்த செப்படுதகமை கொங்கிறீற்றில் கூடியளவு துணிக்கைகள் இருப்பதனால் இக்கொங்கிறீற்றின் சுருங்கல் அளவு குறைந்திருக்கும்.
துணிக்கையின் வகையும் சுருங்கலைப் பாதிக்கும். குவாட்சுக்கல், பரல், கருங்கல், சுண்ணாம்புக்கற்கள் போன்ற சுருங்காத கற்துணிக்கைகளைக் கொண்ட கொங்கிறீற்றின் சுருங்கல் குறைவாகவும், மண்கல், பசால்ட் போன்ற கூடிய சுருங்கல் தன்மையும் நீரில் அமிழும்பொழுது வீங்கியும் காயும்பொழுது சுருங்கும் கற்களைக் கொண்ட கொங்கிறீற்றின் சுருங்கல் கூடியும் இருக்கும். பொதுவாக அடர்த்தியான கடினமான கூடிய மீள்சக்திமட்டு உடைய துணிக்கைகளைப் பாவித்து கொங்கிறீற்றின் சுருங்கலைக் குறைத்தல் நன்று.

Page 26
43
கொங்கிறீற்று உறுப்பின் அளவையும் உருவாக்கத்தையும் பொறுத்தும் சுருங்கல் ஏற்படும். கொங்கிறீற்று உறுப்பின் வெளிப்பரப்புக்கூடும் பொழுது ஈரலிப்பு கெதியில் குறைவதால் கூருங்கலும் கூடும்.
6.3.2. 635III figh g arisso (Creep of Conctete,
ஓர் கொங்கிறீற்று மாதிரியில், மாறாத சுமையேற்றும் பொழுது அதில் முதன் முதலாக உடன் விகாரம் ஏற்பட்டபின், மேலும் சுமையின் அழுத்தத்தின் காரணமாக காலப்போக்கில் அதன் உருத்திரிபு ஏற்படுகின்றது. இவ்வுருத்திரிபு காலத்தோடு குறைந்துகொண்டு செல்லும். உடன் ஏற்படும் விகாரத்தை மீள்சக்தி விகாரம் என்று அழைக்கப்படும். அதன்பின் காலப்போக்கில் ஏற்படும் விகாரத்தை ஊர்தல் விகாரம் அல்லது ஊர்தல் என்று அழைக்கப்படும். சுமையை அகற்றுங்கால், இவ்விகாரத்தில் மீட்பு ஏற்படுகின்றது. உடன் ஏற்படும் மீட்பு விகாரத்தை மீள்சக்தி மீட்பு என்றும், தங்கிய மீட்பு விகாரத்தை ஊர்தல் மீட்பு என்றும் அழைக்கப்படும். வழக்கமாக மீள்சக்தி மீட்பு மீள்சக்தி விகாரத்திலும் குறைவாகவே கானப்படும். அதேபோல் ஊர்தல் மீட்பு உலர்தலிலும் பார்க்க மிகவும் குறைவாகவே இருக்கும். (படம் 6.4)
T ーT t T S ft fonder lC336 NC log
·熟 permer u O8 - 8O1O- - us - - -
i
esox co- .
N
r Z 40 x 1O -
& s t 2Ox1O - ન
l للسلاo
Ο 2 4 1O 2 14
Age (months)
படம் 6.4 கொங்கிறீற்று ஊர்தல்
கொங்கிறீற்றுக் கலவையின் குணாதிசயங்களும் சூழல் காரணங்களும் அதன் ஊர்தலைப் பாதிக்கும் காரணிகளாகின்றன. உண்மையில் ஊர்தல் சீமந்துப் பசை யிலேயே ஏற்படுகின்றது. துணிக்கைகள் பசையினோடு ஒட்டியிருப்பதால் ஓரளவுக்கு ஊர்தலுக்குத் தடை ஏற்படுகின்றது. ஆகையினால் ஊர்தலும் சுருங்கலைப் போன்று கொங்கிறீற்றுலுள்ள சீமந்துப் பசையின் கனவளவினால் பாதிக்கப்படுகின்றது. துணிக்கை களின் சதவிகிதம் ஊர்தலைப் பாதிக்கும் பொழுது, அவைகளின் சில பெளதீகத தன்மைகளும் கூடியபங்கு ஆற்றுகின்றன. கூடிய மீள்சக்திமட்டுடைய துணிக்கை சீமந்துப்பசையின் ஊர்தலுக்கும் கூடிய தடையைக் கொடுக்கின்றது. துணிக்கைகளின்
 

44
துவாரத்தன்மையும் ஓவர்தலைக் கூட்டுவதாகக் கணிப்பிட்டாலும், இப்படிப்பட்ட துவாரத்தன்மையும், துணிக்கைகளின் மீள்சக்திமட்டு குறைவாக இருப்பதே முக்கிய காரணமாகலாம், எனினும், துவாரத்தன்மையுள்ள துணிக்கைகளினுள்ளே ஈரலிப்பு நகரக்கூடிய இயல்புகூட இருப்பதால், இப்பப்பட்ட ஈரலிப்புப் பரிமாற்றமும் இவர்தலை விவக்க ஏதுவாக அமையும். எடைகுலிறந்தி துணிக்கைகளைக்கொண்ட கொங்கிcற்றின் ஊர்தல் சாதாரண துணிக்கைகலிளக் கொண்ட கொங்கிறீற்றின் தர்தலிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும். எLைAத ைதுணிக்கைகளின் மீள்சக்தி Iட்டு சாதாரன துணிக்கைகளின் மீள்சக்தியைவிடக் குறைந்ததாக இருப்பதே இதற்குக் காரனமாகும்.
கொங்கிறீற்றின் வலிமை அதன் ஊர்தலைப் பாதிக்கும். பொதுவாக நோக்கின், சுமையேற்றும் நேரத்தில் உள்ள வலிமைக்கு நேர்மின்று விகிதசமமாக ஊர்தல் கRக்கப்படும். சீமந்தின் வகையும் அதன் நுண்ணிமயும் கொங்கிறீற்றின் ஊர்தலைப் LIதிக்கும். எனினும், ஊர்தலைப் பாதிக்கும் (ரிக்கி காரணி கொங்கிறீற்றைச் சுற்றியிருக்கும் காற்றின் சாரீரப்பதனாகும். குறைந்த சரிரப்பதனில் கொங்கிறீற்றின் ஊர்தல் கூடும். ஆகையினால் கொங்கிறீற்று சுவிமயில் கீழ்காயும்பொழுது அதன் ஊர்தல் கூடுகின்றது. கூடிய சுருங்கலைக் கொடுக்கும் கொங்கிறீற்றின் ஊர்தலும் கூடியதாகவே இருக்கும். இவை இரண்டும் சீமந்து பணியின் அமைப்புத்தன்மையில் தங்கியிருப்பதே இதற்குக் காரணம்.

Page 27
7 கொங்கிறீற்று கலவை விதானம்
Design of Concrete Mixes
கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளில் கொங்கிறீற்று கலவை விதானம் ஓர் குறிப்பிட்ட முக்கியத்துவத்தை அடைந்திருக்கிறது. இதற்கு கொங்கிறீற்று கட்டமைப்புகளில் அதன் விபரங்கள் குறிப்பிடும் முறையும் வழக்கமும் காரணங்களாகக் கூறலாம். முன்னைய வேலை விபரங்களில் கொங்கிறீற்றின் ஆகக்குறைந்த வலிமையின் அளவைக் குறிப்பதைவிட, அதற்குமேலாக கொங்கிறீற்று கலவைக்குப் பாவிக்கப்படும் உறுப்புப் பொருட்கள் விகிதாசமமும் குறிக்கப்பட்டன. இம்முறை அவ்வளவு உகந்ததாக இருக்கவில்லை. ஏனெனில், இவையிரண்டு முறைகளும் கெடுதலில்லாமல் இருப்பினும், சிக்கனமான கட்டுதல் முறைக்கு ஒன்றோடொன்று முரண்பாடாக அமைந்தன. ஆகையினால், இப்பொழுது நடைமுறையில் இருக்கும் முறை என்னவெனில், குறைந்த செலவுடைய கட்டிட வேலைகளைத் தவிர்ந்த மற்றைய கொங்கிறீற்று கட்டிட வேலைகளில், கொங்கிறீற்றின் ஆகக்குறைந்த வலிமையின் அளவும், அதன் நீண்டகாலப் பாவனையின் தன்மையுமே வேலை விபரங்களில் குறிப்பிடப்படுகின்றன. இத்துடன் கொங்கிறீற் கலந்தவுடன் திருப்திகரமான செப்படுதகவு கொண்டதாகவும் மால்களில் திருப்திகரமாக வார்த்து நெருங்கற்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்படும். இதன் பிரகாரம், கொங்கிறீற்றுக் கலவையை விதானிப்பவர், கொடுக்கப்பட்ட உறுப்புப் பொருட்களைக் கொண்டு, கடினமாகும்பொழுது தேவையான வலிமையையும் நீண்டகாலப் பாவனைத் தன்மையையும் கொண்டதாகவும், கலந்தவுடன் திருப்திகரமான செப்படுதகவும், நெருக்கக்கூடிய தன்மையும் கொண்ட கொங்கிறீற்றுக் கலவையை விதானிக்க முடியும். அப்படி விதானித்தபின், உறுப்புப் பொருட்களின் வேறுபாடுகளை அவதானித்து அதற்கேற்றவாறு கலவையை மாற்றியமைத்துக் கொங்கிறீற்றின் தரத்தைப் பாதுகாப்பது அவசியம். ஈற்றில், கலவையை விதானிக்கும் பொழுது குறிப்பிட்ட தன்மைகளுடைய கொங்கிறீற்றைச் சிக்கனமாகப் பெறுவதுதான் முக்கிய குறிக்கோளாகும். ஆகையினால், கொங்கிறீற்றுக் கலவை விதானம் என்பது சிக்கனமாகவும் தேவையான தன்மைகளைக் கொண்ட கொங்கிறீற்றைப் பெறுவதற்கு உறுப்புப் பொருட்களின் விகிதாசிமத்தை நிர்மாணிப்பது என்று கொள்ளலாம்.
இப்படிப்பட்ட குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட கொங்கிறீற்றைப் பெறும் பொழுது, அதன் கிரயம் கூலியைவிட உறுப்புப் பொருட்களின் மேல் தங்கியிருக்கிறது. ஆகையினால் இவைகளின் தொகையை எவ்வளவு குறைக்கமுடியுமோ அதற் கேற்ப சிக்கனமான கலவையைப் பெறலாம். எனினும் ஆக்ககுறைந்த சீமந்தின் அளவை கொங் கிறீற்றின் நீண்டகாலப் பாவனைத் தன்மையால் கட்டுப்பாடு செய்யப்படுகின்றமையால், மற்றைய பொருட்களைக் கூடியளவுக்குக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. எனினும் கொங்கிறீற்றின் கிரயம் அதன் தர வேறுபடும் தன்மை எவ்வளவு அனுமதிக்கப்படுகிறது என்பதைப்

46
பொறுத்திருக்கும். வழக்கமாக, விபரக்கூற்றுகளில் குறிக்கப்பட்ட ஆகக்குறைந்த வலிமையை அடைந்த1ல் கொங்கிறீற்று திருப்திகரமானதாக ஏற்றுக் கொள்ளப்படும். ஆசையினால் கலவை விதாவிக்கப்படும் பொழுது வலிமைக்கும் உடன்கலந்த கொங்கிற்றின் ப்ெபடுதகவுக்கும் இடையில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு அnத்தல் வேண்டும். சில வேளைகளில், சிக்கனமென்று நினைத்து மிகவும் 4ெ|தகவு குறைந்த கலவையை நிர்மாணித்தால், அப்படிப்பட்ட கலவையை lெliருவதில் 1ற்படும் கூலி அக்கலவையை சிக்கனமற்றதாக ஆக்கிவிடலாம்
hinத அவதானித்தல் வேண்டும்.
7.1 கலவை விதானிப்பின் அடிப்படைக் கொள்கை
1லவை விதானிக்கும் பொழுது எமது நோக்கம் இரண்டு குறிக்கோள்களைக் பெண்டதாக அமையும். கொங்கிறீற்று கலந்தவுடன் அச்சுகளில் வார்த்துக் குறைந்த வெற்றிடங்களுடன் நெருக்கக்கூடிய செப்படுதகவையுடையதாக இருத்தலும், பின்பு கடினமடைந்தபின் குறிப்பிட்ட வலிமை மற்றும் நீண்டகாலப் பாவனைக் தன்மை கொண்டதாக இருத்தலும் குறிக்கோள்களாகும்.
() கொங்கிறீற்றின் வலிமைக்கும் நீண்டகாலப் பாவனைத் தன்மைக்கும் நீர் சீமந்து விகிதமே முக்கிய காரணியாகின்றது. கொங்கிறீற்று இறுக்கI) யும் பொழுது, அதன் வலிமை நீர் -சீமந்து விகிதத்திற்கு பேய்யாறு விகிதசIIIக 11றும்.
(i) கொங்கிற் கலவையில் செய்படுதகவு கலவையிலுள்ள நீர் உள்ளுறையைப் பொறுத்திருக்கும், சா டிய நீர் சh டிய செப்படுதகவைக் கொடுக்கும். எனினும், உயர்ந்த நீர் உள்ளுறை அறுபுறத்தில் கொங்கிறீற்றின் வலிமையைக் குறைப்பதோடு நீண்டகாலப் பாவனையையும் பாதிக்கும். சீமந்து நீரேற்றத்திற்கு மிதமிஞ்சி இருக்கும் நீர் ஈற்றில் ஆவியாகி வெளியேறும் பொழுது கொங்கிறீற்றில் வெற்றிடங்களைவிட்டுச் செல்கிறது. இதனால் கொங்கிறீற்றின் வலிமையும் அதன்கூடிய நீண்டகாலப் பாவணைத் தன்மையும் Iகவும் பாதிக்கப்படுகின்றன.
(l) கொங்கிறீற்றுக் கலவையின் நீர்-சீமந்து விகிதத்தைக் குறைந்தளவில் வைத்துக்கொண்டு வேண்டிய செப்படுதகவைப் பெறுவதற்குத் தேவைப்படும் முழுமையான நீர் உள்ளுறையைக் குறிப்பிட்ட ஆகக்குறைந்த சீமந்தின் அளவையைப் பாவிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். சீமந்தின் இக்குறைந்த அளவு கொங்கிறீற்றின் நீண்டகாலத்தன்மையுடன் தொடர்பு கொண்டதாகவும் கடைப்பிடிக்க வேண்டிய அளவாகவும் நியமம் BS 8110 இல் தரப்பட்டிருக்கிறது.
(iv) துணிக்கைகளைப் பொறுத்தளவில், கடினமடைந்த கொங்கிறீற்றின் வலிமை இவற்றின் வலிமையையும் தரத்தையும் பொறுத்ததாகவும், கலந்தவுடன் கொங்கிறீற்றின் செப்படுதகவு துணிக்கைகளின் உருவம், மேற்பரப்புத்தன்மை, அவற்றின் தரப்படுத்தல் போன்ற தன்மைகளைப் பொறுத்ததாகவும் காணப்படுகின்றது.

Page 28
47
ஆகையினால், கலவை விதானிக்கும் முறைகளில் மேற்கூறிய பண்புகள் சீர்தூக்கிப் பார்க்கப்படல் வேண்டும்.
72 கொங்கிறீற்றின் விபரக்கூற்று
(Concrete specification)
கடந்த காலங்களில், கொங்கிறீற்று விபரக்கூற்றுக்களில் அதன் உறுப்புகளான பெரிய துணிக்கை, சிறிய துணிக்கை, சீமந்து ஆகியவற்றின் விகிதாசமம் கொடுக்கப்பட்டன. உறுப்புப் பொருட்களின் மத்தியில் ஏற்பட்ட மாறுந்தன்மை காரணமாக குறிப்பிட்ட வலிமையையும் செப்படுதகவையும் பெறமுடியாமல் இம்மாதிரி நிர்ணயிக்கப்பட்ட விகிதாசமம் கொண்ட கலவைகளால் பல குறைபாடுகள் ஏற்பட்டன. நல்ல தரமுடைய உறுப்புப் பொருட்கள் பாவிக்கும்பொழுது இம்முறை தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது. அதனால் புதிய விபரக்கூற்று முறைகள் இவ்வாறான கட்டுப்பாடுகளைத் தவிர்க்கின்றன.
பிரித்தானிய கட்டிட நியமம் CP110 அதன்பின் நியமம் BS8110 ம் கொங்கிறீற்று அமைப்புகளில் விதானித்த கலவைகளைப் (Designed mixes) பாவிக்க அனுமதிக்கின்றன. நியமம் BS5328:1976 இன்படி கொங்கிறீற் பாவனையாளர் தனக்கு வேண்டிய தன்மைகளைக் கொண்ட கொங்கிறீற்றைக் குறிப்பிட்டால், அதற்கு உகந்தவாறு கொங்கிறீற்றை தயாரிப்பவர் அதன் உறுப்புகளின் கலவை விகிதாசமத்தைத் தீர்மானிப்பார். எனினும் நீண்டகாலத்தன்மைக்கு ஏற்ற ஆகக்குறைந்த சீமந்து அளவை அக்கலவையில் சேர்க்கப்படல் வேண்டும். சில வேலைத்தளங்களில்,கொங்கிறீற்பாவிக்கப்படும் அளவுகுறைவாக இருக்கும்பொழுது முன்கூறிய அளவு முறையால் குறிப்பிட்ட கலவை முறையைப் பாவிக்கலாம். இதுபற்றிக் கடைப்பிடிக்கவேண்டிய கலவைகளின் அளவைகள் நியமம் BS 5328 1986 இல் தரப்பட்டிருக்கின்றன.
7.2.1 சராசரி இலக்கு வலிமையும் சிறப்பியல் வலிமையும்
(Target mean strength and characteristic strength)
கொங்கிறீற்று அமைப்புகளின் விதானம், நியமம் BS 8110 பிரகாரம் அதன் சிறப்பியல்பு நெருக்கல் வலிமையை அடிப்படையாகக் கொண்டதாகும். சிறப்பியல் வலிமை புள்ளிவிபரவியல் நோக்கமாக அமைந்ததாகவும், கொங்கிறீற்று தயாரிப்பில் ஏற்படக்கூடிய மாறுதல்களுக்கு ஏற்ப, புள்ளிவிபர முறைகளைப் பாவித்து அதன் அடிப்படையில் கிடைக் கப்படுகின்றது. இதன்பிரகாரம், கொங்கிறீற்றின் நெருங்கற்பலமாகக் கிடைக்கப்பெறும் சோதனை முடிவுகளில் ஓர் பகுதி இச்சிறப்பியல் வலிமையிலிருந்து குறிக்கப்பட்ட விகிதாசாரத்திற்கு அதிகமாக குறைந்திருத்தல் கூடாது. நியமம் BS 8110 இவ் அளவை 5 சதவிகிதமாக நிர்ணயிக்கின்றது. இதன்படி 28 நாள் வலிமைச் சோதனையில் ஏற்படும் முடிவுகளில் 5 சதவிகிதம் முடிவுகளைப் பரிசோதிக்கும் பொழுது, கொங்கிறீற்றின் வலிமை முடிவுகளைப்

48
செவ்வன் பரம்பல் வளைவின் வடிவில் காணக்கூடியதாகவும் (படம் 7.1), சராசரி வலிமைக்கு சமச்சீருள்ளதாகவும், பெரும்பான்மையான முடிவுகள் வலிமைக்கு அண்மையாகக் கIMiபடுவதாகவும் அறிகிறோம். இதன் அடிப்படையில் குறிக்கப்பட்ட சிறப்பியல் வலி)யை கொங்கிறீற்றின் சராசரி இலக்கு வலிமையுடன் தொடர்புகொண்டு பார்க்கலாம்.
சோதனை முடிவுகளில் 5 சதவிகிதம், சிறப்பியல் வலிமைக்குக் (கோடு AB) குறைவ11. இருப்பதால், இம்முடிவுகள் படம் 7.1 இல் AB க்கு இடதுபக்கத்தில் 1.Mப்படும் பரப்பில் அமைகின்றன. கோடு AB சராசரிமூடிவு OC இல் இருந்து 104 நிய) விலகல்கள் விலகிக் காணப்படும். இதன்பிரகாரம், சராசரி இலக்கு வலி)Iடியையும் சிறப்பியல் வலிமையையும் பின்வரும் முறையில் தொடர்பாக்கலாம்.
Area to the right ' of Oc = x 1 = O-5
Area of this ta I se O. O5
A. Ο Z
Z -- as-H
படம் 7.1 கொங்கிரீற்று வலிமையின் பரம்பல்
S0TS LL ttTttHHHL LL LT TtttTS S SS 0S00 C S SS 7.1
ஆதில் 0ா வலிமை சோதனை முடிவுகளின் நியமவிலகல்.
சிறப்பியல் வலிமையிலும் IIர்க்க சராசரி இலக்கு வலிமையின் கூடிய பரிமாணத்தை 1.640 குறிக்கும். இதனை உபயோகத்திலுள்ள பக்கவிலக்கு (Current margin) என்று குறிப்பிடப்படும். நியமவிலகல் 0ம் அதன் நிமித்தமாக உபயோகத்திலுள்ள பக்கவிலக்கும் கொங்கிறீற்று தயாரிப்பின்போது அநுசரிக்கப்படும் மேற்பார்வை முறைகளின் தராதரத்தைப் பொறுத்திருக்கும். குறைந்த தராதரமுடைய மேற்பார்வை முறைகளின்போது நியமவிலகல் கூடியும், மறுதலையாக பார்வை முறைகள் நன்றாகப் பேணும்பொழுது நியமவிலகல் குறைந்தும் இருக்கும்.

Page 29
49
7. 3 D.C.E கலவை விதானிப்பு முறை
இம்முறை பலகாலமாகப் பாவிக்கப்பட்ட முறைக்குப் பதிலாக 1975 இல் பிரித்தானிய சூழல் பாதுகாப்பு இலாகாவால் (D.C.E) தயாரிக்கப்பட்டது. இம்முறை புதியதாயினும், அதன் நோக்கங்கள் முன்பாவித்த முறையின் நோக்கங்களோடு முரண்பட்டவையல்ல. இம்முறையைப் பாவித்துக் கிடைக்கும் கலவைப் பரிமாணங்களைக் கொண்டு பரீட்சார்த்த கலவைகள் செய்யப்பட்டு, குறிக்கப்பட்ட வலிமை, செப்படுதகவு, நீண்டகாலப்பாவனையின் தன்மை போன்ற கொங்கிறீற்றின் குணாதிசயங்கள் கிடைக்கப்பெறின், அக்கலவையின் பிரமாணங்கள் பாவனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஈற்றில், கிடைக்கப்பெறும் கலவையின் விகிதாசமங்கள் ஓர் கனமீற்றர் நெருக்கப்பட்ட கொங்கிறீற்றில் பாவிக்கப்படும் உறுப்புப் பொருட்களின் நிறையளவில் கொடுக்கப்படும்.
முன்கூறியபடி, கலவையை விதானிக்கும் பொழுது பேணவேண்டிய அடிப்படை தேவைகளாவன:
(1) கடினமான கொங்கிறீற்றின் நெருங்கல் வலிமை (2) உடன் கலந்த கொங்கிறீற்றின் செப்படுதகவு
கொங்கிறீற்று அமைப்புகள் விதானிக்கும் பொழுது, உறுப்புகளின் சுமைதாங்கும் ஆற்றல் அவைகளின் கொங்கிறீற்றின் நெருங்கற்பலத்திலேயே தங்கியிருக்கின்றது. ஆகையினால் எமது முக்கிய கரிசனை கடினமான கொங்கிறீற்றின் தன்மைகளின் மேலேயே இருக்கின்றது. சாதாரண கொங்கிறீற்று உறுப்புகளையோ அல்லது வலியுறுத்திய கொங்கிறீற்று உறுப்புகளையோ கட்டும்பொழுது, கொங்கிறீற்றை நேர்த்தியாக நெருக்கி, அதன் பிரகாரம் அதனுள் ஏற்படக்கூடிய வெற்றிடங்களைக் குறைத்துக் கூடியவலிமையுடைய கொங்கிறீற்றை அடைவதே எமது குறிக்கோள். நல்ல செப்படுதகவுள்ள கொங்கிறீற்று மால்களில் ஓடி, வலியுறுத்தும் கொங்கிறீற்று உறுப்புகளில் வலியுறுத்தும் கம்பிகளைச்சுற்றி ஓடி, மிகவும் செறிந்த கொங்கிறீற்றை அடைய வழிசெய்யும். ஆகையினால் கடினமாகும்பொழுது செறிந்த கொங்கிறீற்றை அடைவதற்கும் அதன்பிரகாரம் கூடிய நெருங்குதல் வலிமையைப் பெறுவதற்கும் கொங்கிறீற்றின் சீரிய செப்படுதகவு மிகவும் அவசியம். செப்படுதகவைக் கணிக்கும் சோதனை முறைகள் அத்தியாயம் 5 இல் விளக்கப்பட்டன.
D.C.E முறைப்படி விதானிக்கும் கொங்கிறீற்றுக் கலவைகளில் பாவிக்கும் நெருக்கற்பலம் 28 நாட்கள் கடினமடைந்த கொங்கிறீற் சதுரமுகி மாதிரிகளின் சோதனை முடிவுகளிலிருந்து கிடைக்கப்பெறும் பலமென்று குறிப்பிடப்படுகின்றது. அதேநேரத்தில், அப்படிப்பட்ட கலவையின் செப்படுதகவையின் அளவைகள் இறங்கற் சோதனை அல்லது Vebe நேர இசைவுகாட்டி பரிசோதனை முறைகளைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது.

50
கலவை விதாரிப்பில் இரண்டு விதமான துணிக்கைகள் பாவனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவையாவன நொறுங்கிய துணிக்ககைகள், நொறுங்காத அல்லது இயற்சuI0 துணிக்கைகள் ஆகும். முன்கூறியபடி செப்படுதகவைப் பாதிக்ார்.கூடிய துணிக்கைகளின் தன்மைகள் அவற்றின் தோற்றமும், மேற்பரப்பின் தன்ilயுமாக ஆடுப்பினும், அண்மைய ஆராய்ச்சிமூலம் நாம் அறிவதென்னவெனில் துரிfr)11)ள நொறுங்கியது அல்லது இயற்கையானது என்று மட்டும் பாகுபடுத்தல் IேIது10தென்பதாகும்.
1).O.E கலவை முறையைப் பின்வரும் படிவரிசையில் முறைப்படுத்தலாம் : படி 1: நீர் - சீமந்து விகிதத்தைக் கணித்தல்
வழக்கமாக கொங்கிறீற்று விபரக்கூற்றுக்களில் ஓர் குறிப்பிட்ட வயதில் கொங்கிறீற்றின் சிறப்பியல் வலிமை எவ்வளவாக இருத்தல் வேண்டுமெனக் குறிக்கப்பட்டிருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டும், வேலை இடத்தில் கிடைக்கக்கூடிய மேற்பார்வை முறைகளின் தராதரத்தைப் பொறுத்தும் அதற்கு உகந்தவாறு உபயோகத்திலுள்ள பக்கவிலக்கை அநுமானித்தபின், சமன்பாடு 7.1 ஐப் பாவித்து கொங்கிறீற்றுக் கலவையின் சராசரி இலக்கு வலிமையைக் கணிக்கலாம்.
அட்டவ6ை0 7.1 இல், ஓர் குறிப்பிட்ட வயதில், நொறுங்கிய அல்லது இயற்கையான நொறுங்காத துணிக்கைகளுடனும், சாதாரண மற்றும் விரைந்திறுகு போட்லண்ட் ஆகிய இரண்டு வகையான சீமந்துகளினுடனும் 0.5 நீர்-சீமந்து விகித்ததுடன் பெறப்படும் கொங்கிறீற்பலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. படம் 7.2 இல் வெவ்வேறு நீர்-சீமந்து விகிதங்களுடன் கிடைக்கப்பெறும் நெருங்கற்பலத்தின் வளைவுகள் தரப்பட்டிருக்கின்றன. அட்டவணை 7.1 ஐயும் படம் 7.2ஐயும் பாவித்து, முன்கூட்டி கEக்கப்பெற்ற சராசரி இலக்கு வலிமைக்கேற்ற நீர்-சீமந்து விகிதத்தை அறியலாம். உதாரணமாக, 28 நாட்களில் பெறப்படும் சராசரி வலிமை 45 N/mm? ஆயின், இயற்கையான நொறுங்காத துணிக்கைகளையும் சாதாரண போட்லன்ட் சீமந்தையும் பாவித்தால், அட்டவனை 4.1இல் 0.5 நீர் - சீமந்து விகுதிக்குக் கிடைக்கும் 28 நாள் நெருங்கற்பலம் 40 N/mm? என்று அறிகிறோம். படம் 4.2இல் 40 N/mm? க்கு உள்ள கிடைகோடு 0.5 நீர்-சீமந்துச் செங்குத்துக் கோட்டை வெட்டும் புள்ளிக்கூடாகச் செல்லும் வளைவிலிருந்து 45 N/mm க்கு ஏற்ப நீர் - சீமந்து விகுதி 0.46 என்று கணிக்கக் கூடியதாகும். எனினும் . நீண்டகாலப்பாவனைத்தன்மை நிமிர்த்தமாகக் குறிக்கப்பட்ட நீர்-சீமந்து விகுதி 0.46 க்குக் குறைவாக இருப்பின், குறிக்கப்பட்ட குறைந்த விகுதியையே பாவித்தல் வேண்டும். இப்படியான நிலமையில் கொங்கிறீற்றின் பலம் தேவையிலும் பார்க்கக் கூடியதாகவே இருக்கும்.

Page 30
51
8O
9 Ο N"TT" ("I
-
starting line, using
[ ba། from To be 7.1
N
NN NN
N
N
N
N
ܠ 〉།
ܠܘ:
N
- ༄།།
ܠPܘܢ
О Ч—1—I—I—I—II—I—I—I
《།།《། །།།།
《
I l. l I
Oo3 O4 O-5 O6
water / cement rotio
O.7
Ο 8 Ο 9
படம் 7.2 கொங்கிறிற்று வலிமை, நீர்-சீமெந்து விகிதத் தொடர்பு வளைவுகள் Building Research Establishment, (Crown copyright).

52
அட்டவணை 7.1 : 0.5 நீர் . சீமந்து விகுதியுடன் கிடைக்கப்பெற்ற கொங்கிறீற்றுக் கலவைகளின் கிட்டிய மதிப்பீட்டு நெருங்கற் பலம் (NImm) - − Building Research Establishment, (Crown copyright).
சீமந்து பெரிய துணிக்கை நெருங்கற்பலம் (N/mm) 660) களின் வகை வயது (நாட்கள்)
3 7 28 90
சாதாரண நொறுங்காதது 18 27 40 48 போட்லன்ட் நொறுங்கியது 23 33 47 55
விரைந்திறுகு நொறுங்காதது 25 34 46 53 போட்லன்ட் நொறுங்கியது 30 40 53 60
படி 2 : நீர் உள்ளுறை கணித்தல்
ஆகக்கூடிய நீர் உள்ளுறை ஓர் குறிப்பிட்ட செப்படுதகவுக்கு பெரிய துணிக்கைகளின் ஆகக்கூடிய அளவோடு மாறுவதாகவும் ’துணிக்கைகளின் வகையைப் பொறுத்தும் இருக்கும். மாறுபட்ட செப்படுதகவுகளுக்கு நொறுங்கிய, நொறுங்காத துணிக்கைகளுடனான கிட்டிய மதிப்பீடு நீர் உள்ளுறை kg/m? அட்டவணை 7.2 இல் தரப்பட்டிருக்கிறது. பெரிய துணிக்கைகளும், நுண்துணிக்கைகளும் பாவிக்கும் பொழுதும், இவைகள் வேறுவகையானதாக இருப்பினும், நீர் உள்ளுறையை மதிப்பிடுவதற்குப் பின்வரும் சமன்பாடு 7.2 ஐப் பாக்கலாம்.
W = 2/3 W,+ 1/3W. ......... 7.2
இதில் W = வேண்டிய நீர் உள்ளுறை
W = குறிப்பிட்ட நுண்துணிக்கைக்கு ஏற்ப நீர் உள்ளுறை
W= குறிப்பிட்ட பெரிய துணிக்கைக்கு ஏற்ப நீர் உள்ளுறை
நுண்துணிக்கைகளின் தற்பரப்பு கூடியதாக இருப்பதாலும் அதன் காரணத்தால் செப்படுதகவில் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், நுண்துணிைக்கைக்குக் கூடிய முக்கியத்துவம் சமன்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Page 31
53
அட்டவணை 7.2 : பல தரப்பட்ட செப்படுதகவு நிலைகளுக்குத் தேவையான diligu LD5ifeb for a stronsoD (kg/m). Building Research Establishment. (Crown copyright).
SpsÉJ56b (mm) 0-10 10-30 30-60 60-180 Vebe (BJE (Sec.) 12 12-6 6-3 3- O
துணிக்கையின் துணிக்கையின்
ஆகக்கூடிய ഖങ്ങb 96T6 (mm)
O நொறுங்காதது 150 180 205 225 நொறுங்கியது 18O 205 230 250
2O நொறுங்காதது 135 160 180 195 நொறுங்கியது 170 190 210 225
40 நொறுங்காதது 115 140 160 175 நொறுங்கியது 155 175 190 205
படி 3 : சீமந்து உள்ளுறையைக் கணித்தல்
படி 1 இல் இருந்து பெறப்பட்ட நீர்-சீமந்து விகுதியிலிருந்தும் படி 2 இல் கிடைக்கப் பெற்ற நீர் உள்ளுறையிலிருந்து சமன்பாடு 7.3 ஐப் பாவித்து, சீமந்து உள்ளுறையைக் கணிக்கலாம். ઈupf நீர் உள்ளுறை (kg/m) 7.3
மநது உளஞறை = - -- .
(kg/m3) நீர் - சீமந்து விகுதி
நீண்டகாலப் பாவனையைப் பொறுத்து, சீமந்தின் ஆகக்கூடிய அல்லது ஆகக்குறைந்த அளவைகள் குறிப்பிடப்பட்டிருப்பின், அவைகளைப் பொறுத்து வேண்டிய மாற்றங்களைச் செய்தல் வேண்டும்.
படி 4 : துணிக்கைகளின் உள்ளுறையைக் கணித்தல்
இதைப் பின்வரும் சமன்பாட்டைப் பாவித்துக் கொள்ளலாம் :
சீமந்து உள்ளுறை நீர் உள்ளுறை
துணிக்கைகளின் கனவளவு = 1 -
இதில் = சீமந்தின் அடர்த்தி = "கிட்டத்தட்ட 3150 kgາ
Y = நீரின் அடர்த்தி = 1000 kg/m3 முழுமையான துணிக்கைகளின்
உள்ளுறை (kg/m) = yதுணிக்கைகளின் கனவளவு இதில் = துணிக்கைகளின் அடர்த்தி
துணிக்கைகளின் அடர்த்தி தெரியாதவிடத்து, நொறுங்காத துணிக்கைகளின் அடர்த்தி 2600 kg/m3 ஆகவும், நொறுங்கிய துணிக்கைகளாயின் 2700 kg/m3 ஆகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கப்படுகின்றது.

54
படி 5 : பெரிய துணிக்கைகளின் விகிதாசமம் கணித்தல்
இது பெரும்பாலும் பெரிய துணிக்கைகளிலும் பார்க்க நுண்துணிக்கைகளின் தரப்படுத்தலைப் பொறுத்தே அமையும். இதற்கு ஆதாரம் என்னவெனில், நுண்துணிக்கைகளின் தரப்படுத்தலின் நுண்மை கூடக்கூட அதன் மேற்பரப்பும் கூடும். ஆகையால், ஒரேதன்மையுடைய கொங்கிறீற்றுக் கலவைகளில் இதன் கரணமாக துணிக்கைகளின் முழுமையான விகிதாசமம் குறையும் என்பதாகும். இவ்விகிதசமங்களைப் பெறுவதற்கு வெவ்வேறு பெரிய துணிக்கைகளின் அளவைகளுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் வரைபடங்களைப் பாவித்து, நுண்துரிைக்கைகளின் விகிதாசமத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ் வரைபடங்களில், வெவ்வேறு நிலைகளில் உள்ள செப்படுதகவுகளுக்கு (இறக்கம், Vebe நேரம்) 1, 2, 3, 4 என்று (BS 882 இன் படி) வெவ்வேறு மண்டலமாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நுண்துணிக்கைகளுடைய விகிதாசமம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. இவைகளில், ஓர் உதாரணமாக, 10 மி.மீ அளவு ஆகக்கூடிய பெரிய துணிக்கைகளுக்குரிய வரைபடம் படம் 7.3 இல் தரப்பட்டிருக்கின்றது.
Slump : O- Omm Os3O mm 3O-6Omm 6O-18Omm V B time: P 2s 2 - 6 s. 6 - 3s 3 - OS
O
7Ο 70
O
5O
SO
4 O
3Ο O
2O
Ο
Ο 2 O 4 Ο ό ов O'4 O6 O'8 O4 O. 6 O'8 O.4 O 6 O'8
woter / cement rot io
படம் 7.3 10 மி.மீ துணிக்கைகளுக்குரிய வெவ்வேறு செப்படுதகவுகளும், அதற்கேற்ப மண்டலா தியான நுண்துணிக்கைகளின் விகிதாசாரங்களும்.
Building Research Establishment, (Crown copyright).
மேற்கூறிய முறையின்படி, சீமந்து, நீர், பெரியதுணிக்கைகளின் மற்றும் நுண்துணிக்கைகளின் விகிதாசமத்தை ஓர் கனமீற்றர் கொங்கிறீற்றுக் கலவைக்குப் பெற்றுக்கொள்ளலாம். இது ஓர் ஆரம்ப மதிப்பீடு என்பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும். இதன்பின் பரீட்சார்த்த கலவைகளைக் கலந்து, துணிக்கைகளுக்கு ஏற்ப தேவையான மாறுதல்களைச் செய்து, குறிக்கப்பட்ட செப்படுதகவையும் கடினமானபின் குறிப்பிட்ட நெருங்கற்பலத்தையும் கொடுக்கும் கலவையை நிர்மானிமத்தல் வேண்டும்.

Page 32
8 கொங்கிறீற்று கலத்தல்
Mixing of Concrete
முன்னைய காலங்களில், கொங்கிறீற்று மனிதப் பலத்துடனேயே மண்வெட்டி, சவல் போன்றவற்றைப் பாவித்துக் கலக்கப்பட்டது. கொங்கிறீற்று மூலப்பொருட்களான சீமந்து, மண், பெரிய துணிக்கைகள் செம்மையாகக் கலக்கப்பட்டபின், அக்கலவைக்குக் குறிப்பிட்ட அளவு நீர் சேர்த்துப் பின்னும் முழுமையான ஒரே சீரான தன்மையுடைய கலவை கிடைக்கும்வரை கலக்கவேண்டும். இம்முறையாகக் கலக்கும்பொழுது கூடிய முயற்சியைப் பாவித்து ஒரே சீராக மூலப்பொருட்களைக் கலப்பது மிகவும் சிரமம். இதன் காரணமாக சீரற்ற கலவைகள் ஏற்படுகின்றன. கலப்பதற்குப் பொறிகள் கண்டுபிடித்தபின் இக்கஷ்டங்கள் தீர்ந்துவிட்டன எனலாம். பொறிகளின் உதவியுடன் ஒரே சீரான கலவைகள் கலக்கக்கூடியதாக இருக்கின்றது.
8.1 கொங்கிறீற்றுக் கலவைப்பொறி
கொங்கிறீற்றுக் கலவைப் பொறிகள் பலவிதங்களாக அமைகின்றன. இவைகளின் அமைப்பு கொங்கிறீற்று கலந்தபின் வெளியேற்றும் முறையில் வித்தியாசமாக இருக்கின்றது. கூடியதாகப் பாவிக்கப்படும் வகை சாய்கலவைப் பொறியாகும். இப்பொறியில் அதன் பீப்பாவில் கலந்தபின் அப்பீப்பாவைச் சரித்து கொங்கிறீற்று வெளியேற்றப் படும். இப் பீப் பாக்கள் போகனி அல்லது கூம்புவடிவ அமைப்புடையதாகவும் இதன் உட்பாகத்தில் கலக்கும் அலகுகள் (vanes) பூட்டப்பட்டதாகவும் இருக்கும். இவ்வலகுகள் மூலப்பொருட்களைச் செம்மையாகக் கலப்பதற்கு உதவுகின்றன. கலந்து முடிந்தவுடன், பீப்பாவைச் சரித்துக் கொங்கிறீற்றை மிகவும் துரிதமாக வெளியில் கொட்ட ஏதுவாகின்றது. இதைவிட, சரிக்காத பொறிகளும் இருக்கின்றன. இவற்றின் பீப்பாவின் அச்சு கிடைத்தளத்தில் இருக்கும். கலந்தபின், இப்பீப்பாக்களை எதிர்வளத்தில் சுற்றி அல்லது சொரிவாய் (chute) வழியாக வெளியேற்றப்படும். செங்குத்தான அச்சுகொண்ட பொறிகளும் பாவிக்கலாம். இவைகளில், கொற்கிறீற்று சிலிண்டர் அமைப்புக்கொண்ட தாலத்தில் (pan) கலக்கப்படும். இத்தாலத்தில் மூலப்பொருட்களைச் சேர்த்துச் செம்மையாகக் கலந்தபின், பொறியை நிறுத்தி, தாலத்தை வெளியில் எடுத்துக் கொங்கிறீற்றை வெளியேற்ற வேண்டும்.
பீப்பாவில் மூலப்பொருட்களை நிறைத்து அதன்பின் குறிப்பிட்டளவுநீர் சேர்த்தபின், பீப்பாவை ஓர் குறிப்பிட்ட நேரத்திற்குச் சுழற்ற வேண்டும். இந்நேர அளவை கலவை ந்ேர அளவு என்று குறிப்பிடப்படும். கொங்கிறீற்று கலக்கும்பொழுது ஒரே சீரான கலவை கிடைப்பதற்கு குறைந்தளவு ஓர் குறிப்பிட்ட நேரத்திற்குக் குறையாமல் இந்நேர அளவு இருத்தல் வேண்டும். போதிய நேரமெனக் கணக்கிடும் பொழுது, பீப்பா 20 தரமாவது சுழலல் வேண்டும். உதாரணமாக, 3.8 கனமீற்றர் அளவுடைய பொறி ஆகக்குறைந்தது 2 நிமிடமாவது சுழற்ற வேண்டும். இந்நேர அளவு

56
நீரைத்தவிர்ந்த மூலப்பொருட்கள் பொறியில் அளந்து இடும் நேர முடிவிலிருந்து அளவிடப்படும். வழக்கமாக இந்நேர அளவில் கால்பகுதி தாண்டியவுடன் குறிப்பிட்ட அளவு நீர் சேர்த்து மேலும் பொறி சுழற்றப்படல் வேண்டும்.
மூலப்பொருட்களைப் பொறியின் பீப்பாவில் அளந்து இடும் வரிசை முறையைப் பற்றி அவ்வளவாகக் குறிப்பிடப்படுவதில்லை. வழக்கங்கள் பொறி இயக்குநர்களைப் பொறுத்து Iறுபடும். சிலர், முதலாக நீரில் ஒரு பகுதியையும் பெரிய துணிக்கைகளின் ஓர் பகுதியையும் பீப்பாவில் வைத்துச் சுழற்றியபின் எஞ்சிய பொருட்களைச் சேர்ப்பார்கள். இம்முறையின் வழி, முன்கலந்த கலவையின் சீமந்துச் சாந்து பீப்பாவின் உட்பாகத்தில் அடைந்திருந்தால் அதைக்களற்றுவதற்கு உதவும். பீப்பாக்களில் கலக்கும்பொழுது, சாலின் (skip) அடியில் பெரியதுணிக்கைகளை வைத்தபின் அதன்பின் மண்ணும் அதற்கு மேல் குறிக்கப்பட்ட அளவு சீமந்தும் இடப்பட்டபின், சாலை உயர்த்தி இம்மூலப்பொருட்கள் பீப்பாவில் கொட்டப்படும். அப்படிக் கொட்டும்பொழுது பீப்பாவின் அடியில் சீமந்தும் அதற்கு மேல்மண், பெரிய துணிக்கைகள் விழுவதால், கலக்கும்பொழுது சீமந்து வெளியில் சிதறாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
8.2 கலந்த கொங்கிறீற்று
(Ready-mixed concrete)
குறுகிய இடமுள்ள வேலை இடங்களில் கொங்கிறீற்றுக்குப் பாவிக்கும் மூலப்பொருட்களக்ை களஞ்சியப்படுத்துவதற்கு இடமின்மையால், வேறு ஓர் இடத்தில் கொங்கிறீற்று கலக்கப்பட்டு வேலை இடங்களுக்கு லொறியில் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இப்படிக் கொணரும் லொறிகள் விசேடமாக இப்படிப்பட்ட தேவைக்கு அமைக்கப்பட்டதாக இருக்கும். கலந்த இடத்திலிருந்து வேலை இடத்திற்குச் கொண்டுசெல்லும் பொழுது கொங்கிறீற்றைக் கிளறிக் கலந்துகொண்டே இவ்வண்டிகள் செல்லும்.
மேற்குறிப்பிட்ட கலந்த கொங்கிறீற்று இரண்டு வகைப்படும். முதல் வகையில் கொங்கிறீற்றுக் கலவை ஓர் மையப்படுத்தப்பட்ட இயந்திர கலவை சாதனத்தில் மிகவும் கவனமாகக் கலக்கப்பட்டுப் பின் வேலை இடங்களுக்கு மேற் குறிப்பிட்ட கிளறிக் கலந்துகொண்டே செல்லும் வண்டியில் கொண்டு செல்லப்படும். நவீன கலவைமுறைகளில், இப்படிப்பட்ட இயந்திரசாதனங்களில் கணனி முறையாக கொற் கிறீற்றின் மூலப்பொருட்கள் அளக் கப்பட்டு மிகவும் நுண்ணியமாக மேற்பார்வையில் கொங்கிறீற்று கலக்கப்படுகின்றது. மேலும் கொண்டுசெல்லும் வண்டிகளின் பீப்பாய்கள் ஓர் குறிப்பிட்ட விசையில் சுழற்றப்படுவதால், கலவை கடினமாகாமல் அல்லது பிரிபாடு இல்லாமல் கொண்டுசெல்லக் கூடியதாக இருக்கின்றது. இவ்வண்டிப் பீப்பாய்கள் வழக்கமாக நிமிடத்திற்கு 2 இல் இருந்து 6 முறைகள் வரை சுழற்றப்படுகின்றன. கொங்கிறீற்று கடினமடையாமல் இசைவாக இருப்பதற்கு கலவையுடன் மந்தமாக்கிகள் (retarders) சேர்க்கப்படுகின்றன.

Page 33
57
இரண்டாவது வகையில், கொண்டுசெல்லும் வண்டியிலேயே அதன் பீப்பாவில் கொங்கிறீற்று கலக்கப்படுகின்றது. வழக்கமாக, நீரைத் தவிர்ந்த ஏனைய மூலப்பொருட்கள் ஓர் மையப்பட்ட இயந்திர கலவை சாதனத்தின் மூலமாக அளந்து வண்டியின் பீப்பாவில் வைக்கப்பட்டபின், வண்டிவேலை இடத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறது. கொண்டு செல்லும் நேரத்தில், பீப்பாவில் குறிப்பிட்டளவு நீர் சேர்த்து பீப்பா சுழற்றுப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில், வண்டி வேலை இடத்தை அடைந்தபின்பே நீர் சேர்க்கப்படுகின்றது. இம்முறையின் பிரகாரம் வண்டி தொலை இடங்களுக்கும் கொண்டு சென்று கொங்கிறீற்றுப் பாவிக்கக்கூடியதாக இருக்கின்றது. எனினும், வண்டியில் பீட்யாவிலேயே கலப்பதால், முன்கூறிய முறையில் கொண்டு செல்லும் கலந்த கொங்கிறீற்றின் அளவிலும் பார்க்க 3/4 பங்கு அளவே இம்முறையில் கலக்கக்கூடியதாக இருக்கின்றது. இப்படிப்பட்ட கலவை வண்டிகளில் 6 கனமீற்றர் கொங்கிறீற்று கொண்டு செல்லலாம்.
கலக்குவதும், அதன்பின் சுழற்றும் அளவுகளும் 300 சுழற்சிகளுக்கு மேற்படாமல் இருப்பது நன்று. நியமம் BS 5328 1976 இன்படி, கலவைகளை 2 மணித்தியாலங்களுக்கு இவ்வண்டியில் வைத்திருக்கலாம். கிளறிச் சுற்றுதல் 6 மணித்தியாலயங்கள் வரை நீடித்தாலும், கலவை கடினமடையாமலும் அதன் வலிமை பாதிப்படையாமலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

58
O O O O கொங்கிறீற்று நியமங்கள்
Cement
BS 12 : 1989 Portland Cement BS 4550 Methods of Testing Cement BS 4550 : Part 3 : 1978 Physical Tests BS 4550 : Part 4: 1978 Standard Coarse Aggregate for Con
Crete Cubes BS 455O: Part 5 : 1978 Standard Sand for Concrete Cubes BS 4550: Part 6: 1978 Standard Sand for Mortar Cubes
Aggregate
BS 812 Testing Aggregates BS 81.2 : Part 1 : 1975 Sampling, Shape, Size and Classifi
Cation BS 812: Part 2 : 1975 Physical Properties BS 812 : Part 101 : 1984 Guide for Sampling and Testing BS 812: Part 102 : 1984 Methods for Sampling BS 82 : Part 103 : 1984 Method for Determination of Particle
Size Distribution BS 812: Part 105 Methods for Determination Of Parti
cle Shape BS 812: Part 105.1: 1985 Methods for Determination of Flaki
ness Index BS 812: Part 105.2 : 1990 Elongation of Coarse Aggregate BS 812 : Part O7 : Method for Determination of Particle
BS 812: Part 109 : 1990
BS: 812:
BS 812 :
BS 812:
Part 1 10 : 1990
Part 121 : 1 989
1983
Density and Water Absorption Method for Determination Of MOiSture Content Method for Determination of Aggregate Crushing Value Method for Determination of Sound
eSS Aggregates from Natural Sources for Concrete

Page 34
59
Concrete
BS 1305 : 1 974
BS 1881 BS 1881 : Part 5 : 1970
BS 1881 : Part 1 O. : 1983
BS 1881: Part 1 O2 : 1983 BS 1881: Part 103 : 1983
BS 1881 : Part 1 04 : 1983
BS 1881 : Part 105 : 1984
BS 1881 : Part 108 : 1983
BS 1881 : Part 110 : 1983
BS 1881 : Part 16 : 1983
BS 1881 : Part 117 : 1983 .
BS 1881 : Part 118: 1983
BS 3148 : 1980
BS 5328 BS 5328 : Part 1 : 1990
BS 5328 : Part 2 : 1990
ASTM: C227-90
ASTM : C 289 - 87
DIN : 1048
Batch Type Concrete Mixers Testing Concrete Methods of Testing Hardened Concrete for other than Strength Methods of Sampling Fresh ConCrete On Site Method for Determination of Slump Method for Determination of COmpacting Factor Method for Determination Of Webe Time Methods for Determination of Flow of Fresh Concrete Method for making Test Cubes from Fresh ConCrete Method for Making Test Cylinders from Fresh ConCrete Method for Determination of Compressive Strength of ConCrete CubeS
Method for Determination of Tensile Splitting Strength Method for Determination of Flexural Strength Tests for Water for Making Concrete (Including Notes on the Suitability of the Water)
ConCrete Guide to Specifying Concrete Methods for Specifying Concrete MİXeS Test for Potential Alkali Reactivity of Cement - Aggregate Combinations (Mortar Bar Method) Test for Potential Reactivity of Aggregates (Chemical Method) Bestimmungen fur Betonprufungen (Methods of Testing Concrete)


Page 35
கொங்கிறீற்றுக் கட்டடங்களும் பழுதடைவதற்கு கொங்கிறீற்றின் நுட்ப்வியலாளர் மத்தியில் காணப்படு காரணமாகும். அப்படிப்பட்ட ஓர் ரோக்கமாகவே இப்புத்தகம் எழு ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் கான் அரிதாகவே காணப்படுகின்றன. இப்பு நுட்பவியலாளர்களின் அறிவு மேலும்
கொங்கிறீற்றின் முக்கிய மூலப் துணிக்கைகளைப் பற்றியும், விளக்கப் கொங்கிறீற்றில் பேசப்பட வேண்டி கடினமடைந்த பின் அதன் தன்ை முனராளும் விபரிக்கப்பட்டிருக்கின்ற சொற்கிநிற்றுக் கலவை விதானிக்கும் கொங்கிறீற்று சம்பந்தமான நியமங்களு
ܠܐ
பேராசிரியர் வே.
B.SC. Eng (Hons); M.Eng. Sc, F
பேராசிரியர் நவரெத்திா இ குடி ர் - பொறியியவில் சிறப் முதுமானப்பட்டத்தையும் கலாநிதிப்பட் பொறியியலில் கிடைக்கப்பெற்றார்.
இலங்கையில் மராத்து இன் நீர்மானிக்கும் பகுதிகளில் பல ஆன பல்கலைக்கழகத்தின் குடிசார் பொறி பணியாற்றி அதன் பின் அத்துறை பிள் பணிபுரிந்தார். அங்கு பEபுரியும் போழுது மேற்கொண்டு அதன் மூலமாகப் பிரிகரித்தார். இவர் தன் ஆராய்ச்சி ஜேர்மனி, அமெரிக்கா போன்ற பார் பல்கலக்கழகங்களிலும் மேற்கே சர்வதே பொறியியல் சஞ்சிகைகள் வெளியிட்டார். இப்பொழுது இலங் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட பொறியி (31 ITIf Tu Tiff U63. Lifyi.

| பாலங்களும் குறுகிய காலத்தில் தன்மைகளைப்பற்றி தொழில் ம் விளக்கக்குறைவும் ஒரு முக்கிய குறையை நிவர்த்தி செய்வதன் தப்பட்டது. கோங்கிநிற்றைப்பற்றி *ப்பட்டாலும் தமிழில் இவை மிகவும் த்தகத்தின் முலமாக எமது தொழில் விருத்தியடையுமென்று நம்புகின்றோம்.
பொருட்களான சீமந்து, பெரிய, சிறிய தரப்பட்டிருக்கின்றது. உடன்கலந்த உய தன்மைகளும், கொங்கிறீற்று மகளும், இவற்றைப் பரிசோதிக்கும் 1. சிறந்த தன்மை களைக் கொண்ட முறையும் விளக்கப்பட்டிருக்கின்றது. ம் ஆங்காங்கே தரப்பட்டிருக்கின்றன.
நவரெத்தினராசா
"h, D, F. || C. E, C, Eng, M. I. EISL}
லங்ாக பல்கலைக்கழகத்திலிருந்து |ů LIL LIů பெற்றதன் பின் டத்தையும் கொங்கிறீற்றின் அளமப்புப்
பாகாவில் கட்டிடங்கள், பாலங்கள் பீடுகள் பணியாற்றிய பின், மலாயாப் பியற்துறையில் விரிவுரையாளராகப் 1 பேராசிரியராகவும் பல ஆண்டுகள் து கொங்கிfற்றில் பல ஆராய்ச்சிகளை பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை 7ய இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, களின் ஆராய்ச்சிக் கடடங்களிலும் 1ண்டு அவற்றின் பெறுபேறுகளை பிலும், சர்வதேச மகாநாடுகளிலும் கை யாழ் பல்கலைக்கழகத்தில் பற்பிடத்தில் குடிசார் பொறியியர்
ッ