கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 1998 (3.1)

Page 1


Page 2

பெண்
தொகுதி III இல.1, 1998
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் மட்டக்களப்பு.

Page 3
GALGO சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் சஞ்சிகை. 27 A, லேடி மனிங் ட்ரைவ்,
மட்டக்களப்பு.
Tie Woman - A journal published by Suriya Women's Development Centre, " 27A, Lady Manning Drive,
Battidakoa
ஆசியர்: வாசுகி ஜெயசங்கர்.
அட்டைப் படங்கள் அருந்ததி
அட்டை வடிவமைப்பு: வாசுகி
அட்டை அச்சு : நவமக பிறண்டர்ஸ், கொழும்பு.
அச்சகம் செலக்ஷன் ஒப்செற் ~ அக்கரைப்பற்று. கணனிமூலம் ബ : மா.லோகநாதன்.
விலை:30A=

வாசகர்களுடன்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின்
“பெண்”சஞ்சிகை, இவ்வருடத்திற்குரிய முதலாவது இதழாக சர்வதேச பெண்கள் தினத்தில் வெளிவருகிறது.
1910ம் ஆண்டு கொப்பன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோஸலிச பெண்களின் இரண்டாவது மாநாட்டில் பெண்ணுரிமைவாதியான கிளரா ஸெற்கினால முன்மொழியப்பட்டு அதில் பங்குபற்றியோரால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டத்ற் கிணங்க 1911ம் ஆண்டு மார்ச் 8 தொடங்கி இன்றுவலர் ஒவ்வொரு வருடமும் இத் திகதி பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1987ம் ஆண்டு மார்ச் 8 இல் நியூயோர்க்கில் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண்கள் தமது உரிமைகளிற்காக வேலை நிறுத்தம் செய்து வீதியிலிறங்கிப் போராடியதை; அதாவது முதன்முதலாகப் பெண்கள் ஒன்றிணைந்த முறையில் தமது உரிமைகளிற்காக நடத்திய போராட்டம் என்ற

Page 4
வகையில் இத்தினம் நினைவு கூரப்பட்டு உலகெங்குமுள்ள பெண்களின் அபிவிருத்தியில் பங்கெடுக்கும் நிறுவனங்களால் கொண்டாடப்பட்டும் வருகிறது. இத்தினம் சமூகத்தில் பெண்களின் இரண்டாம் பட்ச நிலையை நீக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டது.
பெண்களின் இரண்டாம் பட்ச நிலையை நீக்கு வதற்கான வேலைத்திட்டங்களில் ஆண்களது பங்களிப்புப் பற்றி தொடர் விவாதங்கள் இடம் பெற்று வந்துள்ளன. பெண்ணியல் வாதத்தையும், பெண்ணியல்வாதிகளையும் தமக்கெதிரானவர்கள் என்று ஆண்களும் ஆண்களை எதிரிகளாக பெண்ணியல்வாதிகளும் நோக்கும் சந்தர்ப்பங்களிற்கு மேலாக, சில ஆண்கள் திறந்த மனதுடன் பெண்களது அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகளிலும், தமது வாழ்க்கை, கற்பித்தல், கலாசார நடவடிக்கைகள் போன்றவற்றில் பெண்ணியம் சார்ந்த விடயங்களைக் கூறுவதன் மூலமும்
பங்கெடுத்து வருகிறார்கள்.
ஆயிரமாயிரமாண்டு காலமாக வடிவமைக்கப்பட்ட பெண் பற்றிய பிம்பத்தை தமது மனங்களிலிருந்து மாற்றுவது ஆண்களிற்கு செயன்முறையில் கடினமாக இருக்கும். இந்தப் பிரச்சனையைப் பெண்கள் அவதானிப்போடு நிவர்த்தி செய்து கொண்டு, பால்நிலைப் பாகுபாட்டைக் களையும் நடவடிக்கைகளில் ஆண்களையும் இணைத்து முன்செல்வது அவசியமாகும்.
- ஆசிரியர் -

பண்பாடு என்றால் என்ன? ஏன் பண்பாடு ஒரு பொருட்டாகிறது?
பெண்களுக்குப் பாதகமான “ பண்பாட்டுப் பயிற்சிகளை" தற்காத்து வருவதன் மூலம் மரபுவாதிகள் பண்பாடு என்ற பதத்தைக் கறைபடிந்ததாக ஆக்கியிருக்கிற அதேவேளையில் பெண்ணியக் கொள்கையானது பண்பாடு மற்றும் மதம் என்பவைபற்றிய ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். எனவே எங்களுடைய நோக்கில் இவற்றை நாங்கள் அணுக வேண்டும்.
அமா, அற்றா, ஐடு வின் வார்த்தைகளில் கூறுவதானால் "ஒரு சமூகக் குழுமத்தின் பண்பாடு உண்மையில் அச்சமூகக் குழுமம் அதனுடைய வாழ்க்கையை முற்று முழுதாக எந்தெந்த வழிகளில் - பிறப்பு,வளர்ச்சி, கற்றல், தொழில், பொழுதுபோக்கு மற்றும் மரணம்- நிகழ்த்துகிறது என்பதாகும்” அல்லது மஜோறி அகோசின் கூறுவது போல " பண்பாடு என்பது நாங்கள் யார் என்பதும் நாங்கள் யாராகிக் கொண்டிருக்கிறோம் என்பதும் ஆகும்”. மேசையில் வைக்கப்படும் உணவு, அதைச் சமைக்கும் முறை, எந்த ஏதனத்தில் சாப்பிடுகிறோம் என்பது, மேசையிலிருப்பவர்களுக்கும் அதைச் சமைத்துப் பரிமாறுபவர்களுக்கும் இடையிலான உறவுமுறை, எஞ்சியவற்றை என்ன செய்கிறோம் என்பது, சாப்பிடும்போது என்ன கலந்துரையாடப்படுகின்றது என்பது, எந்த இசை,நடனம், கவிதை, அரங்கு அதனை அணிசெய்கின்றது என்பது, அங்கிருப்பவர்களது சமூக ஆத்மீகப் பெறுமானங்கள் என்பவற்றுடன் - பண்பாடு பற்றி பேசும் போது நாங்கள் மனிதசமூகத்தின் தரிசனங்கள், கனவுகள், அபிலாசைகள் என்பவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பண்பாடுபற்றி பேசாது சமூக, பொருளாதார அபிவிருத்திபற்றிப் பேசுவது எந்தளவிற்கு சாத்தியமானது? பெரும்பாலான அபிவிருத்திச் செயல் திட்டங்களில் எழுத்தறிவையும், கலையையும் கருவியாக அல்லது சாதனமாக மட்டும் கையாளுவது பிரச்சனையாகவுள்ள பெறுமானங்களை வலுப்பெறச் செய்தலே யன்றி அதற்குரிய தீர்வாக அமையாது. எமக்கு பொருளாதார ரீதியான அபிவிருத்தி மட்டும் தான் தேவையா? ஆத்மீக, அரசியல் அபிவிருத்தியில் எமக்கு ஆர்வமில்லையா? வாசிப்பதற்கு என்ன இருக்கிறது என்ற வினாவை ஒதுக்கிவிட்டு எழுத்தறிவுபற்றிய வினாவை எவ்வாறு கையாள முடியும். கருத்தடை மாத்திரைச் சரைகளில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றக் கூடியதாக இருப்பதற்கு மட்டும்தான் பெண்கள் எழுதவும் வாசிக்கவும் கற்கவேண்டுமா? அல்லது இந்தியப்
--

Page 5
பெண்ணிலைவாதி கமலாபாஷின் கூறுவது போன்று “ தங்கள் வாழ்க்கையை வாசிக்கக்கூடியவர்களாகவும் இருக்கும் ஆற்றலைப் பெறவேண்டும் என எண்ணுகிறோமா?
மவியெல்லா ஷாலா இப்படிக் கூறுகின்றார் "பண்பாட்டைக் கவனத்திற் கொள்ளது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி சாத்தியமாகாது. ஏனெனில் முக்கியமான மாற்றங்கள் பண்பாடுடன் தொடர்புடையதாக இருத்தல் அவசியமானதாகின்றது. பெண்களிள் மெளனம், வறுமையைப் போன்றதொரு பாரிய பிரச்சனை என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதுவே வறுமையின் காரணமும், அதன் விளைவும் ஆகும். அது ஒரு தொடர் பாதக வில்ளைவை ஏற்படுத்தும் வட்டமாகும். அது தகர்க்கப்படவேண்டும். உலகளாவிய ரீதியில் பெண் எழுத்தாளர்கள் ஊமைகளாகவே உள்ளனர், அவர்கள் குரலற்றவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் பல சமூக நிறுவனங்கள் பெண்கள் பற்றிய நிலைப்பாட்டில் செவிடாக இருப்பதுடன் மக்களின் வலுவை ஒன்றுதிரட்டி மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆக்க வெளிப்பாட்டு முறைகளின் முக்கியத்துவத்தை முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். ஆக்க இலக்கியங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும், சமூகப் பிரச்சனைகளில் உள்ள முக்கியதன்மைகளை சுட்டிக்காட்டும் அதன் ஆற்றலையும், மேலான வாழ்க்கைமுறைகளைத் தோற்றுவிக்கும் அதன் பண்புகளையும் மறுக்கமுடியாது. இருப்பினும் சிலரே நிலைநிற்கும் அபிவிருத்தி, அரசியல் சமத்துவம், சமாதானம், என்பன முழுமையான மனித அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டும்- அதற்கு கலையும், பண்பாடும் இதன் அவசியத் தேவைகளாகக் கிாண்கிறார்கள்"
கரோலின மரியாடி ஜீசஸ், பிறேசிலின் சேரிப்புறம் ஒன்றைச் சேர்ந்த கல்வியறிவு குறைந்த ஒருவர், தன் பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதற்காக குப்பைக் குவியல்களில் கழிவுக்கடதாசிகளைப் பொறுக்குபவர். மிகக் கூர்மையான புத்திசாலி தினமும் நாட்குறிப்பு எழுதிவருபவர். “ எல்லாவற்றையும் அவதானிக்கும், எல்லாவற்றையும் பேசும், எல்லாவற்றையும் குறிப்பெடுக்கும் தாகம் என்னிடத்தில் உண்டு. நாங்கள் ஏழைகள்; ஆற்றோரங்களில் வாழ்பவர்கள். ஆற்றோரங்கள் குப்பை கூழங்களின் இடமும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் இடமுமாகும். சேரிகளில் உள்ள மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாகக் கருதப்பட்டனர். ஆற்றோரங்களின் குப்பை கூழங்களுக்கு அண்டிய பகுதிகளில் கழிவுண்ணும் பறவைகளை உங்களல் காணமுடியாது. கழிவுண்ணும் பறவைகளின் இடங்களை வேலையற்றோர் கைப்பற்றிவிட்டனர்"
இந்தத்தினக்குறிப்பு அவள் வாழ்வதற்கு ஒரு காரணமாக அமைந்தது மட்டுமல்லாமல் சேரிகளின் உலகத்தை விளங்கிக் கொள்வதற்கான ஒரு வழியாக வெளியுலகத்திற்கு அமைந்ததுடன் லத்தின் அமெரிக்கப் பெண்களினால் வேறு விடயங்களை குறிப்பெடுத்து எழுதி வெளிப்படுத்தும் ஒரு பரம்பரையை
-2-

ஊக்குவித்தது. கரோலினாமரியாடி ஜூசஸ்' போன்று ஐக்கிய அமெரிக்க தொழிலியக்கத்தில் இருந்தஅரம்பக்கால பெண்கள் கலையினதும் இயற்கையினதும் பால் கொண்டிருந்த ஏக்கத்தினை அடிக்கடி வெளிப்படுத்தினர். ஏனெனில் வாழ்க்கை முடிவில்லா உழைப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பதற்காகும். 1912ல் லோறன்ஸ் மற்றும் மசசூசெற்ஸ் ஆகிய இடங்களில் வேலை நிறுத்தம் செய்த பெண் நெசவுத் தொழிலாளர் "எங்களுக்கு உணவு தேவை, பூக்களும் தான்” என்ற சுலோகத்தை ஆக்கினர். இச்சுலோகம் இன்றும் பொருந்தக் கூடியதே. ஆனால் அநேக அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களில் லோறன்ஸ் வேலைநிறுத்தக்காரரோ அல்லது கறோலினா மாறிய டீ ஜூசல அல்லது அவர்களைத் தொடர்ந்து வந்த டொலோறெஸ் ஹியேற்றா, வாங்காறி மாத்தாய மற்றும் றிகோபேட்டா மெஞ்சு போன்றவர்களுக்கு இடமிருப்பதில்லை. ஏனெனில் நிகழ்ச்சி நிரல்களில் பொருளாதாரப் பிரச்சனைகளை தனிமைப்படுத்தி விடுகின்றனர். எனவே இத்தகைய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்கள் பெண்களைச் சிக்கவைக்கும் சிக்கலான சமூக வலைப்பின்னலை கையாள்வதில் தவறிவிடுகின்றன.
ஒரு இழையை மட்டும் இழுப்பதினால் ஒரு வலைப்பின்னல் அசைவதில்லை; அவ்வாறு செய்வதனால் அதனை அறுத்துவிடவே முடிகிறது. உலகின் பெரும்பாலான முக்கிய பண்பாடுகளும்; குடும்ப உறவுகளும் முழுமையாக அழிக்கப்படாது விடினும் ஏற்கனவே அவை தாக்குதலுக்காளாகி உள்ளன. எஞ்சியுள்ளவற்றைப் பாதுகாக்கும் வழிவகைகளைக் கண்டாகவேண்டும் . அதேசமயம் பெண்களையும் குழந்தைகளையும் மனிதர்களிலும் குறைவானவர்களாகக் காணும் அம்சங்களையும் ஏற்க மறுத்தாகவே வேண்டும். சுதேசிய மக்களின் பண்பாட்டு வாழ்க்கையைப் புறக்கணித்து, முன்னேற்றத்திற்கு காலனித்துவ விளக்கங்களை வலிந்து நடைமுறைப்படுத்துவது ஏற்கனவே பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அமா அற்றா ஐடு ஆபிரிக்க நிலவரத்தை விபரிக்கையில் கூறுவது போன்று:
“காலனித்துவத் தலையீட்டின் மூலம் ஒரு சமூகத்தின் சொந்தக் கலைகள் கொலைசெய்யப்பட்டிருக்கும் போது, பயங்கரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு அல்லது இழிவுபடுத்தி இல்லாமற் செய்யப்பட்டுள்ள போது அச்சமூகத்திற்கு என்ன நிகழ்கின்றது? விசேடமாக, காலனித்துவமயமாக்கப்பட்ட நிலையில் அதன் வளங்களை ஒன்று திரட்டி செயற்படுத்த முடியாததுபோலத் தோன்றும் நிலையில் அதன் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்களை ஊக்குவித்தல் அல்லது புதுவடிவங் கொண்ட பண்பாட்டு வெளிப்பாடுகளை ஆக்குவதற்கு தேவையான எவ்வகையான சாதகமான நிலையும் இல்லாத போது அச்சமூகத்திற்கு என்ன நிகழ்கின்றது? அத்தகைய சமூகம் நிச்சயமாக குழப்பநிலையை, தேக்கநிலையை, அழிவை, மரணத்தை நோக்கி நகர்கிறது. ஆபிரிக்காவில், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தக் கூடிய, மிகவும் கரிசனையற்ற, மிகவும் கீழ்நிலைப்படுத்தும் அபிவிருத்திக் கொள்கைகளை தழுவியுள்ளனர். இம்மனோபாவம் "இந்த மக்களுக்கு ஒன்றும் தெரியாது ವಾಡಿ) அவர்களைப் பொருட்படுத்தாமல்

Page 6
விடுவோம்" அல்லது “சில கிணறுகளை வெட்டிக் கொடுத்துவிடுவதுடன் குடும்பத்ததிட்டத்தையும் விற்பனை செய்வேம்” என்று கூறுகிறது.
. இத்தகைய நோக்கிற்குட்பட்ட ஆபிரிக்காவின் அபிவிருத்தியில் ஒருநாளின் கடின உழைப்பின் பின் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் என்ன நிகழ்கின்றது என்பதைக் கேட்க யாருமே இல்லை. ஆபிரிக்கர்களும் நீண்டகாலமாக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு எல்லாவற்றிலும் உழைத்துக் களைத்த 500 மில்லியன்களுக்கும் மேலான மக்கள் தொகையுடைய கண்டத்தைக் கொண்டிருப்பவர்கள். 500 வருடங்களுக்கு மேலாக சக்கை பிழியப்பட்டுள்ளேர்ம். இன்றைய ஆபிரிக்கர்களால் விடுமுறையை, ஓய்வை, பொழுதுபோக்கை எண்ணத்தில் கூடக் கொள்ள முடியாததாக இருக்கின்றது. மக்கள் முன்னைய கால ஓய்வு முறைகளின் பரிச்சயத்தை இழந்துபோய்விட்டனர். புதிய முறைகளைப் பெற்றவர் களகவும் இல்லை. நாங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளாத போது அல்லது ஆறுதலடையாத பொழுது, எங்களது நினைவுகளைத்தானும் எப்படி மீட்பது? எங்களுக்கு என்ன நிகழப்போகின்றது? இது ஒரு பிரமாண்டமான கேள்வி. பெண்களது நிலையை ஆராயின் எமது உள்ளம் நொருங்கிப் போகக்கூடிய நிலையை எதிர்கொள்ள வேண்டிவரும்”
ஏனென்றால் பெண்களுக்கான பொருளாதார அபிவிருத்தி, கல்வி, அரசியல் சமத்துவம் போன்ற பெரும்பாலான நிகழ்ச்சிநிரல்கள் ஒன்றில், தந்தைவழிப் பண்பாட்டிற்குக் கீழ்ப்படிய வேண்டியுள்ளது, அல்லது அபிவிருத்தியாளரின் பண்பாட்டு திணிப்புக்காளக வேண்டிருக்கும். இவைகளில் எல்லாம் அடிப்படைக் கருத்துருவத்
தவறுகள் உள்ளன.
"அவர்களுடைய நிகழ்ச்சிநிரல்கள், குறைத்து மதிப்பிடுபவை; பொருளாதார உறவுகள் மாற்றப்பட்டால் மற்றைய எல்லாம் உரிய இடத்தில் படியும் என்பது பழைய நம்பிக்கையின் ஒரு வகையாகும். அதாவது பெண்களுக்கு வீட்டுக்கு வெளியில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தால் சுயமாகவே அவர்கள் சமத்துவநிலையை அடைவார்கள் என்ற நம்பிக்கை பரம்பரை பரம்பரையான அனுபவங்கள் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய கல்வியூட்டல் நிகழ்ச்சிநிரல்களில் பெண்களை முழுமனிதர்களாகக் காண்பதைவிட்டு பெண்கள் “பொருளாதார வளங்களாகவே” பார்க்கப்படுகிறார்கள் - உலகவங்கியின் சொற்றொடரில் - "பெண்கள்தான் மிகச்சிறந்த முதலீடு" அவர்கள் இவ்வகையான குறுகிய தொழிற்பயிற்சியை ஊக்குவிப்பதன் மூலம் பயன்பாட்டு எழுத்தறிவுடனும் கீழ்மட்ட தொழில்நுட்பத்திறனுடனும் நிறுத்திக் கொள்கிறார்கள். ஆண்களுக்குத் தேவைப்படுவது போன்று பெண்களுக்கும பரந்தளவிலான மானிடம் சார்ந்த கல்வியும், விஞ்ஞானக் கல்வியும் தேவை
-4-

இதன் மூலம் அவர்களால் வாழ்க்கையை விளங்கிக்கொள்வதற்கும், ரசிப்பதற்கும் முடியும்; அறிவியல் மற்றும் அரசியல் தலைமைத்துவம் கொடுக்க முடிவதுடன் அவர்களால் முடிந்த மிகக்கூடிய சமூகப்பங்களிப்பை ஆற்றமுடியும்.
சரியான சட்டத்தை நிறைவேற்றுவதனால் பெண்கள் சமத்துவமுள்ளவர் ஆகிறார்கள் என்ற சட்ட அங்கீகாரத்தில் கொண்ட நம்பிக்கையால் சமத்துவத்திற்கான அவர்களது திட்டங்கள் தவறிப்போயுள்ளன. பண்பாட்டைப் புறக்கணித்து சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறைகள் பெரும்பான்மையான பெண்களது விடயங்களை போதுமானளவுக்கு மாற்றாது. பெண்களுக்கு பல நாடுகளில் சட்டரீதியான சமத்துவநிலை காணப்படினும் உண்மை நிலை அப்படியில்லை என்பதைக் காணலாம். ஒவ்வொரு நாடும், ஐம்பது சதவீதமான பெண்களுக்கு அதன் அதிகார ஸ்தானங்களில் சந்தர்ப்பத்தைக் கொடுத்தாலும் எமது பிரச்சினை தீர்க்கப்படாது. ஏனெனில் அநேக நாடுகளில் இந்தப் பெண்கள் முக்கிய பிரமுகர்களின் மனைவியராகவும், காதலிகளாகவும், சகோதரிகளாகவும் அல்லது ஆட்சிசெய்யும் குடும்பங்களின் அங்கத்தவராகவும் இருப்பர்.
அத்துடன் பெண் அரசியல்வாதிகள் நிச்சயமாக பெண்களின் நலனுக்காக சேவை செய்பவர்களுமில்லை. சில நாடுகளில் முற்போக்கான பெண்கள் அரைவாசிப் பதவிகளை வகித்தாலும், நாடுகளுக்கிடையிலான உறவை அது LDİTİBBTübl.
இந்த அணுகுமுறைகள் தவறானவை ஏனெனில் அவை பெண்களின் முன்னேற்றத்திற்கு இடைஞ்சலாக இருக்கின்ற பண்பாட்டு அம்சங்களை கவனத்திற் கொள்ளத் தவறிவிடுகின்றன. பண்பாட்டு, அரசியல், பொருளாதார அபிவிருத்தி நிகழ்சிநிரல்கள் ஒன்றுடனொன்று இணைந்து செயற்பட வேண்டுமே தவிர எதிரெதிராக அல்ல. உலக வங்கிக் கடன்களில் தங்கியிருக்கும் வறுமையொழிப்புத் திட்டங்கள் பெண்களுக்குதவும் என்பது விவேகமற்ற எண்ணமாகும். இக்கடனுதவிகள் தேசிய பொருளாதாரத்தில் மாற்றங்களை வற்புறுத்துவதால், பெரிதும் பெண்களையே கொண்டிருக்கும் ஏழைகளை மேலும் ஏழையாக்குகிறது. தந்தைவழிப் பண்பாடுகளை ஒருகையால் எதிர்த்துக் கொண்டு, மறுகையால் சர்வதேச நிறுவனங்களுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சமய ஸ்தாபனங்கள் மூலமாக குடும்பத் திட்டத்திற்கும் பெண்கள் கல்விக்கும் பணத்தைக் கொட்டுவது அபத்தமாகும். இதன்நோக்கம் சமயச் சார்பான பெண்களை அடைய வேண்டுமென்பதாக இருக்கலாம். ஆனால் அதன் விளைவு பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட பாரம்பரிய அதிகாரவர்க்கத்தின் வளர்ச்சிக்கு மானியமாக அமைவதேயாகும். ஐக்கிய அமெரிக்கா, போலந்து அல்லது நிக்காரகுவா ஆகிய நாடுகளில் சந்ததிப் பெருக்க உரிமைக்கான பிரசாரங்கள், தென்ஆசியாவில் 'அமினியோசென்ரிஸ் சிகிச்சைக்கு எதிரான போராட்டம் அல்லது மேற்கு ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும்
-س5س-

Page 7
பெண்குறிச் சிதைப்புக்கெதிரான போராட்டம் என்பவை நல்ல சுகாதாரப் பராமரிப்புக்கான போராட்டங்கள் மட்டுமல்ல, பாரம்பரியத் தந்தைவழிப் பண்பாட்டுக்கு எதிரான யுத்தமுமாகும். இவற்றை இதே நிபந்னைகளில்தான் போராடியாகவேண்டும்.
பெண்கள் விடுதலைக்கான செயன்முறைத் திட்டங்களில், பெண்களது நிலைபற்றி கேள்வியெழுப்பும் பண்பாட்டு வேலை; மையமான மூலக்கூறாகும். ஆனால் இந்த வேலை ஏலவே இருக்கின்ற பண்பாட்டுடனான உரையாடல் மூலமாக விருத்தி செய்யப்படவேண்டும். பண்பாடு உயிரோட்டமுள்ளது; ஒரு லயத்தில் இயங்குவது இதனை பொருளாதார வரம்புக்குள் வைக்கமுடியாது அல்லது சாதாரண விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது மிகப்பெரும்பாலான பண்பாட்டு அபிவிருத்தி அலகுகள் அல்லது சுகாதாரத்திட்டங்கள் அபிவிருத்தியாளரின் பெறுமானங்களுடன் உள்ளுர் ஆடைகளை அணிந்துகொண்டு அரங்கேறுகின்றன. இவையல்ல நாங்கள் கருதுவது. நிறோச்சா றொஸ்கா கூறுவது போல, “பண்பாட்டு அபிவிருத்தி மையம் என்று சொல்லும் போது, நாங்கள் கருதுவது, மக்கள் தங்களது சொந்தக் சமூகத்தினது பெறுமானங்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருப்பதற்கான நேரம், இடம், பண்பாட்டு வெளிப்பாடுகள் இருக்க வேண்டும்” முழுமையான அபிவிருத்திக்கு பாதைகளும், கிணறுகளும் சுகாதாரப் பராமரிப்பும் இருப்பது போன்று மேற்குறிப்பிட்ட செயன்முறையும் அவசியமாகிறது.
உரிமைகள், இலக்கியம் மற்றும் அபிவிருத்திக்கான பெண்களின் உலக நிறுவனத்தின் வெளியீடான 'வார்த்தைகளின் வலு பண்பா தனிக் குரல்" என்ற தலைப்பில் மெறிடித் ஒக்ஸ் என்பவர் மஜோறி அகோசின், அமா அற்றா ஐடு, ஜித்து மேனன், நிநோச்சா றொஸ்கா, மேறியெல்லா சாலாவுடன் இணைந்து எழுதிய சிறுநூலின் முன்றாவது அத்தியாயமான “பண்பாடு என்றால் என்ன? ஏன் பண்பாடு ஒரு பொருட்டாகிறது?’ என்ற கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது
தமிழாக்கம்: - லேயோ அருள் வேதராஜா லேயோன்.
 
 
 
 

கஉலி
-வானி சைமன்
சுசிலாவிற்கு திடீரென கண்முழிபட்டது. பாயைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு மெல்ல செத்தையை விலக்கி வெளியே பார்த்தாள். ஒன்றுமே தெரியாத இருட்டு விடிய இன்னும் நேரமிருந்தது. உடம்பில் ஒரே பரபரப்பு. இன்று முதன்முதலாக வயலுக்கு புல் புடுங்கப் போகிறாள். இருட்டுக்குள் கையைத் தடவிப் பார்க்கிறாள். போத்தல் விளக்கு ஒன்று தட்டுப்பட்டது. இன்னும் கையைத் தடவுகிறாள். நெருப்புப் பெட்டி தட்டுப்பட்டது. மெல்ல விளக்கையேற்றி பக்கத்தில் படுத்தவர்களின் நித்திரை குழம்பாமல் வெளியே வந்து பார்க்கிறாள். பக்கத்திலுள்ள ஓரிரு வீட்டில் வெளிச்சங்கள். உசாரடைந்த சுசிலா சமைத்து முடித்து ஒரு பாத்திரத்தில் சோற்றைக் கட்டும் போது மாதா கோவிலில் அடிக்கப்பட்ட மணி அவளுக்கு ஐந்து மணியாகிவிட்டது என்று அறிவித்தது. சுசிலாவிற்கு அதன் பிறகு இருப்புக் கொள்ளவில்லை. கெதி கெதியாக பன் பேக் ஒன்றிற்குள் கட்டிய சோத்தையும், பழைய சீலை ஒன்றையும் வைத்து திணித்தாள். விரிந்து கிடந்த மயிர்களை ஒன்று சேர்த்து கொண்டை ஒன்றைப் போட்டுக் கொண்டவள், வெற்றிலை பாக்கை இருந்த இடத்திலேயே சப்பித் துப்பிக் கொண்டிருந்த தாயாரிடம் "நான் வாறன் புள்ளையைப் பார்த்துக்கொள' என்றவாறு சந்தியிலிருந்த கடையடியை நோக்கி நடந்தாள். அங்கு ஏற்கனவே நாலு, ஐந்து பெண்கள் கூடியிருந்தனர். அவர்களுடன் சுசிலாவும் சேர்ந்துகொண்டாள்.
புல் பிடுங்க போகும் குழுவிற்கு பொறுப்பாக இருந்த முகாமை சுசிலாவைக் கண்டதும் “ என்ன சுசிலா புதிசா வாறாய். இண்டைக்கு நல்லா வேலை செஞ்சாத்தான் தொடர்ந்து எங்கட கூட்டத்தோட சேந்து கொள்ளலாம். ஆ. பஸ் காசத்தா, போறதுக்கும் வாறதுக்கும் பதினைந்து ரூபாய் ம். விடியத்தில எனக்குச் சாப்பாட்டுக்கு ஒவ்வொருத்தரும் ஒருவாத்தாறாங்க. மத்தியானம் சோறு எடுக்க வீடி எண்டு இரண்டு ரூபா தாறாங்க. மற்றது எனக்கு உங்கள எல்லாப் பேரையும் சுட்டித்துப் போறத்துக்கு ஐஞ்சி ரூபா.

Page 8
எல்லாமாச் சேத்தா எவ்வளவு கணக்கு வருவுது” என்று சுசிலாவிடம் கேட்ட போது அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஒரு நெளி நெளிந்தவாறு அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“கணபதியண்ண. வந்து எனக்கிட்ட ஒரு சதக் காசுமில்ல புல்புடுங்கினவுடன தாற காசில தாறனே, என்றாள்" "ஆ. சரி ஒருவாக் காசு கூடக் குறைக்காம தந்துடனும” என்றவர் அதிகாரமாய்" என்ன எல்லாப் பேரும் வந்தாச்சா?"நேரம் போகுது போங்க, போங்க. ! என்று குரல் கொடுத்தார். பக்கத்தில் நின்ற பெண்கள் அனைவரும் அவரவரது பைகளைத் தூக்கிக் கொண்டு பஸ் நிலையத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாய் விரைந்தனர். அங்கு போவதற்கு தயாராகிக் கொண்டிருந்த ஒரு வேனில் முகாமை கணபதி ஏறிக்கொள்ள பின்னால் வந்தவர்களை' கெதியர் கெதியா உள்ளுக்குப் போங்கோ” என்று முதுகைப் பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தான் வேன் நடத்துனன். பதினைந்து பேரை உள்ளடக்கக் கூடிய வேனில் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டதனால் அந்த விடியல் வேளையிலும் எல்லோருக்கும் வியர்வை வடிந்தது. சுசிலாவுக்கு இது புதிய அனுபவம் என்பதால் இப்படித்தானாக்கும் என்று நினைத்துக் கொண்டு அவளும் எதுவும் கேட்காமல் காலை மாற்றி மாற்றி நின்று கொண்டாள். இடம் வந்து சேர்ந்த போதுதான் அதற்குள் இருந்து வந்தவர்கள் அனைவருமே மூச்சு விட்டனர். கணபதியர் அதற்குள் அவரது அதிகாரத்தைக் காட்ட, பயந்த பெண்கள் அனைவரும் வேலையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வரவைக்குள்ளும் ஒவ்வொருவராக புல் பிடுங்கி கொண்டிருக்க முகாமை கணபதியார் போடியாரிடம் சென்று அன்றைய கூலியை வாங்கி
வந்து ஒவ்வொருவரிடமும் கொடுத்து கொண்டிருந்தார்.
சுசிலாவிடம் வந்தவர் “ இந்தா சுசிலா, பஸ்காசி மற்ற சாப்பாட்டுக்காசி கொமிசன் எல்லாம் போக எழுபது ரூபா இருக்கி நான் இன்னும் ரெண்டு ரூபா தரணும், அத நாளைக்குத் தார காசில கழித்து விடு” என்றார். சுசிலாவிற்கு தன் உழைப்பு இன்று எழுபது ரூபா என்று நினைக்கும் போது சந்தோசமாகவே யிருந்தது. ஆனால் வேலை முடிந்த போது வேலைக்கும் , தனக்கு குடுக்கபட்ட கூலிக்கும் சம்பந்தமில்லாததாகத் தோன்றியது. சும்மாயிருந்த முகாமை எல்லோரையும் விட கூடிய காசுடன் போகும் போது, காலை தொடக்கம் பின்னேரம் வரை உழைத்த தனக்கு இவ்வளவுதானா?. என்ற கேள்வி அவளிடம்
புதிதாகத் தோன்றியது. -8-

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண் தலைமைத்தவக் குடும்பங்கள்
~ வாசுகி
உலகளாவிய ரீதியில் “குடும்பம்” என்று குறிப்பிடும் பொழுது, அது ஆண் தலைமைத்துவமுள்ளதாகவே கருதப்படுகிறது. ஆயினும், பெண்களுக் கென்று வகுக்கப்பட்ட பாரம்பரிய பண்பாட்டு வடிவமைப்பிலிருந்து விடுபட்ட அநேக மேற்கு நாட்டு (அபிவிருத்தியடைந்த) பெண்களும், மிகக் குறைந்தளவு கீழைத்தேயப் பெண்களும், குடும்பத்தின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்துவதை அல்லது தலைமைத்துவத்தை ஆண்களுடன் பங்கிட்டுக் கொள்வதை அவதானிக்கலாம்.
எனினும், பண்பாட்டின் பெயரால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை முறைகளில் இருந்து விடுபடக் கூடியதான கல்வி, பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளாத பெரும்பாலான கீழைத்தேயப் பெண்கள், ஆண் தலைமைத்துவ சமூகத்தினுள்ளும், குடும்பங்களினுள்ளுமே வாழ்ந்து வருகின்றனர்.எமது மாவட்டத்திலும் இந்நிலைமையைக் காணலாம்.
குடும்பத் தலைமைத்துவமென்பது குடும்பத்தின் பிரதான வருவாயைத் தேடித் தருதலும், குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகளையும், வெளித் தொடர்புகளையும் நிர்வகித்தலும் எனக் கூறலாம்.
இவ்வகையில் சில குடும் பங்களில் பெண்கள் பிரதான உழைப்பாளர்களாக இருப்பினும், மற்றய இரண்டு காரணங்களினாலும் ஆண் தலைமைத்துவம் நிலவுவது அவதானிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர்களாக தந்தை, கணவன் அல்லது மகன் செயற்படுவதையும், பெண்கள் அவர்களிற் தங்கி வாழ்வதையும் அவதானிக்கலாம்.
இக் குடும்பங்களில் ஏதாவது காரணங்களால் தலைவன் இழக்கப்படும் போது பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்கவேண்டி ஏற்படுகிறது. அதாவது அரசியல், சமூக, குடும்ப சூழ்நிலைகள் எதுவெனினும் பெண் தலைமைத்துவ மென்பது ஆணின் (முக்கியமாகக் கணவனின்) இறப்பால் உருவாக்கப் படுவதை அவதானிக்கலாம்.
-س9-

Page 9
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனப்பிரச்சினை சார்ந்த வன்செயல் களால் 1983 இன் பின் அதிகரித்து வந்த ஆண்களின் இறப்பு வீதம் 1990ற்குப் பின் மேலும் அதிகரிக்க அதே ரீதியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இலங்கையின் ஏனைய மாவட்டங்களைவிட Duilds 856T'L மாவட்டத்தின் கல்வியறிவு, பொருளாதார நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. அதிலும் ப்ெண்களின் நிலை மிகவும் பின்தங்கியுள்ள சூழலில் சடுதியாகவும், நிர்ப்பந்தமாகவும் கிடைக்கும் குடும்பத் தலைமைத்துவத்தை சமாளிக்க இவர்கள் மிகவும்
சிரமப்படுகின்றனர்.
இவர்கள் அநேகமாக இளவயதினர். இங்கு இளவயதுத் திருமணங்கள் அதிகமாக இருப்பதால் கல்வியறிவோ, தொழிற்பயிற்சியோ, வாழ்க்கை அனுபவமோ பெறும் வயதின் முன்னர் திருமணமாவதால், திடீரென்று கணவனை இழக்கும் போது (பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் 2/3பங்கினர் 35 வயதிற்குட்பட்ட வர்கள்) எந்தவித முன்னனுபவங்களும் இன்றி குடும்பத் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டி ஏற்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 90ஆம் ஆண்டுகளின் பின் ஆண்கள் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற்போவது பொதுவாக நிகழ்வதால் அநேகமான பெண்களுக்குத் தமது கணவர்மார் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா. என்பதிலேயே தெளிவற்ற நிலை காணப்படுகிறது. ஒருவர் காணாமற் போய் ஒருவருட காலம் தகவல் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அவரை இறந்ததாக கருதி மரணசான்றிதழ் பெறலாம். அதனைச் சமர்ப்பிப்பதன் மூலமே அரசாங்கத்தால் வழங்கப்படும் நட்ட ஈட்டுக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அநேக பெண்கள் காணாமற் போன தமது கணவன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றனர். இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக சாத்திரம் கூறுபவர்களையும், மந்திரவாதிகளையும் நாடுகின்றனர். வறுமையின் காரணமாக மரணச் சான்றிதழைப் பெற்று நட்டஈட்டுக் கொடுப்பனவைப் பெறும் நிர்ப்பந்தமும், மனதளவில் கணவன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுமாக குழப்பமான மனநிலைக்குள்ளாகின்றனர்.
மேலும், எமது சமூகத்தில் கணவனிறந்த பின் பெண்கள் “விதவை"
என்ற பெயர் சூட்டப்பட்டு நல்ல உணவு, உடை வாழ்க்கை முறைகள்
தேவையற்றவர்களாக,"நல்ல காரியங்களிற்கு” உதவாதவர்களாகக் கருதப்படும்
மரபு காணப்படுகிறது. அத்துடன் அலங்கரித்தல் (அழகாக உடுத்தல், பொட்டு
வைத்தல் ) மகிழ்ச்சியாக இருத்தல் என்பனவும் சமூகத்தால் குறை கூறப்படும் -10

இவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் காரியங்களாக அமைகின்றன. இது இந்தப் பெண்களது ஆற்றல்களையும், எதிர்பார்ப்புகளையும் மழுங்கடித்து உளவியல் ரீதியாகவும், பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அதிலும் மனதில் கணவன் திரும்பி வருவாரென்ற நம்பிக்கையுடனும், சமூகத்திற்காக விதவைக் கோலத்துடனும் வாழும் பெண்களின் மனநிலை மிகவும் வேதனைக்குரியது.
இவர்களது பொருளாதார நிலையைக் கருத்திற்கெடுப்பின், அனேக மானவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள். இவர்களிடம் பொதுவாக நிலமோ, சிறுகுடிலோ சொந்தமாக இருப்பினும் வருமானம் தரக்கூடிய வேறு சொத்துக்களோ, சேமிப்போ அற்றவர்ளே அதிகம். இந்நிலையில் அன்றாட வாழ்க்கைக்காக குடும்பத் தலைவனை இழந்த உடனேயே வருவாயிட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இப்பிரதேசத்துக் கிராமப்புறப் பெண்கள் தமது குடும்பங்களின் மேலதிகத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆண்களது வருவாய்க்கு மேலதிகமாக சிறிய வருவாயிட்டும் முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்தத் தொழில்களே கணவன் இறந்த பின்னரும் அவர்களது குடும்பங்களைக் காப்பாற்ற உதவுகிறது. கிடுகு, பாய் பின்னல், மட்பாண்டத் தயாரிப்பு, அப்பம், இடியப்பம், மிட்டாய் போன்ற உணவுப் பொருட்கள் தயாரித்து விற்றல், சலவைத் தொழில், கோழி வளர்ப்பு, தையல் போன்றன பரம்பரையாகவோ, தாய்மாரால் செய்யப் பட்டவையாகவோ இருப்பதால் இப் பெண்களுக்கும் சிறு வயதிலிருந்தே இத்தொழில்கள் தெரிந்திருக்கிறது. அதையே தொடர்வதும் இலகுவாக இருக்கிறது.
சிறு வியாபாரத்திலீடுபடும் பெண்களும் இவ்வாறே குடும்பத்தில் வேறொருவரோ அல்லது அவர்களது கிராமத்திலுள்ள வேறு பெண்களோ செய்வதைப் பார்த்தும், அவர்களிற்கூடாகக் கிடைக்கும் தொடர்புகள் (மொத்தமாக வாங்குமிடம், விற்குமிடங்கள்) மூலமும் தொடங்குகின்றனர்.
மிகச்சில பெண்களுக்கு பாரம்பரியமற்ற தொழில்களிற்கான பயிற்சி (மீன்பிடி, தச்சுவேலை போன்ற வழக்கமாகப் பெண்களால் செய்யப்படாத தொழில்கள்) அவர்களது தகப்பனிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ அல்லது சமூகசேவை நிறுவனங்களிடமிருந்தோ கிடைத்துள்ளது, மிக மிகச் சிலரே இத்தகைய தொழில்களிலீடுபடுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட தொழில்களை விட தற்காலிகமாகவேனும் நிரந்தர வருவாய் தரக்கூடிய முன் அனுபவம் அதிகம் தேவையற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு போன்றவற்றை இவர்களில் பலர் நாடுகின்றனர்.
-11

Page 10
இவ்வாறு இவர்கள் ஏதாவதொரு தொழிலை ஏதாவதொரு வகையில் நடாத்திக் கொண்டிருக்கின்றனரேயன்றி தமக்குப் பிடித்தமானதும் குடும்ப வருவாயைச் சமாளிக்கக் கூடியதுமான தொழில்களைத் தெரிவு செய்துள்ளோர் குறைவு.இத்தகைய வருவாயிட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அவற்றிற்கான முதல் கிடைப்பதிலும் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.
குடும்பத்தில் ஒருவரால் செய்யப்பட்ட தொழிலையே தொடர்ந்து செய்வோரிற்கு உற்பத்தி சாதனங்களைப் பழுதுபார்ப்பதற்கும், மூலப்பொருட்களை வாங்குவதற்கும் சிறிய முதல் ( பிரம்பு, புல் போன்றவை வாங்குவதற்கு) தேவைப்படும். இந்நடவடிக்கைகளையே பெரியளவில் வியாபாரமாகச் செய்ய பயிற்சியும், ஈடுபாடும் இல்லாதிருப்பதால் பெரிய முதலீடுகள் பற்றி இவர்கள் சிந்திப்பதேயில்லை.
ஆனால், வெளிநாட்டு வேலைவாய்பை நாடுவோரிற்குப் பயணச் செலவு, பயண முகவர்களிற்கான கட்டணம், பிரயாணப்பை, ஆடைகள் வாங்குதல் போன்றவற்றிற்கு கூடிய தொகைப் பணம் தேவைப்படுகிறது.
இத்தகைய பிரச்சினைகளைச் சமாளிக்க இவர்கள் தம்மிடமுள்ள காணி, வீடு, நகை போன்றவற்றை அடமானமாக வைக்கின்றனர்அல்லது விற்தின்றனர். சிலர் தமக்குத் தெரிந்த பணவசதி படைத்தோரிடம் வட்டிக்கு (நாள்வட்டி, வாரவட்டி அல்லது மாதவட்டி) கடன் பெறுகின்றனர். வெளியுலக அனுபவமுள்ள ஒரு சிலர் மட்டுமே வங்கிகளிலும், வேறு நிறுவனங்களிலும் நிதியுதவி அல்லது கடன் பெறுகின்றனர். சில பெண்களுக்கு வெளிநாடுகளிலோ, உளஞரிலோ இருக்கும் உறவினர் மூலம் (முக்கியமாக ஆண் சகோதரர்களின் ) உதவி கிடைக்கிறது.
இவர்களது குடும்பத்தில் முக்கியமான செலவாக பிள்ளைகளது உடை, உணவு விடயங்களும் கல்வியும் அமைகிறது. அநேகமான பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் மிகச்சிறிய வயதிலோ, தாயின் வயிற்றிலிருக்கும் போதோ தந்தையை இழந்த, அதாவது தந்தையை தெரியாத பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களிற்கு கல்வி வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு இப்பெண்களிடமே உள்ளது. கல்விக்கான செலவை சமாளிக்க முடியாத குடும்பங்களில் பிள்ளைகளின் கல்வி தடைப்பட்டுள்ளது. ஓரளவு வளர்ந்த பிள்ளைகளை கடைவேலை, கூலிவேலை போன்றவற்றிற்கு அனுப்பியுள்ளதையும் காணலாம்.
இப்பெண்தலைமைத்துவக் குடும்பங்களிற்குக் கிடைக்கக் கூடிய பிற வருவாய்களைப் பார்க்கின், அநேகமான குடும்பங்களிற்கு அரசாங்கத்தால் -12

வழங்கப்படும் உணவு முத்திரை கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளது. இது 700/= இலிருந்து 400/= வரை குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வேறுபடும். இது சமுர்த்தித் திட்டத்தால் மாற்றிடப்படும் என்று காரணம் காட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சில குடும்பங்களிற்கு பொதுசன மாதாந்த உதவிப் பணமாக ஒரு சிறு தொகை (100/= - 300/=) கிடைத்து வருகிறது.
வன்செயலில் இறந்தவர்களில் தங்கியிருப்போரிற்கு அரசால் வழங்கப்படும் நட்டஈடு (ஒருவரிற்கு 50000/=,அரச ஊழியரெனின் 150000/=)சிலரிற்கு கிடைத்துள்ளது.கணவனையிழந்த பெண்களுக்கு இந்நட்டஈட்டில்25000/=வும் அவர்களின் பிள்ளைகளிற்கு மிகுதி 25000 /-உம் பிரித்து வழங்கப்படும். பதினெட்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகளது பணம் வங்கியில் நிலையான சேமிப்பிலிடப்படும்.
இந்நட்டஈட்டுக் கொடுப்பனவைப் பெறுவதிலும் இப்பெண்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். முதலாவதாக, இவர்களிற் பலர் வெளியுலக அனுபவங்களற்ற காரணத்தால் சரியான தொடர்புகளைப் பெற முடியாமல் உள்ளனர். அத்துடன் இக்கொடுப்பவைப் பெற இறந்தவது மரணச் சான்றிதழ் தேவை. கணவன் இறந்த சமயத்தில் சரியாகச் சிந்தித்து செயலாற்ற முடியாத நிலையில் அவசரமாக பிழையான பதிவுகளுடன் சான்றிதழ் பெற்றோரும், பதியாது விட்டோரும் இக்கொடுப்பனவைப் பெற முடியாதுள்ளனர். மேலும் சட்டப்படி மணம் புரிந்த மனைவியருக்கே இக்கொடுப்பனவு கிடைக்குமாதலால் சரியாகச் சான்றுகாட்ட முடியாதோரும் பலதார மணம் புரிந்தவர்களின் மனைவிமாரும் இதைப் பெறமுடியாது சிரமப்படுகின்றனர்.
இக் கொடுப்பனவுப் பணத்தைப் பெற்ற பெண்களும் அதைச் செலவழிக்கும் விதத்தைச் சரியாகத் திட்டமிடுவதில்லை. கணவனை இழந்த நிலையில் எந்தவித சேமிப்போ வருவாயோ இல்லாமலும், தொழில்களில் ஈடுபட முடியாத மன அழுத்தத்துடனுமிருக்கும் காலத்தில் பெற்ற கடனை அடைக்கவே பலருக்கு இப்பணம் உதவுகின்றது. சிலர் தமது இருப்பிடத்தை திருத்தப் பாவிக்கின்றனர். மேலும், இக் கொடுப்பனவு கிடைக்குமென்ற நம்பிக்கையில் அதைச் செலவழிப்பதற்காகவே பலர் உறவுகூறிக்கொண்டு வருவதையும் இப்பணத்தைச் செலவழிக்கப் புதுப்புது வழிகளைக் கூறுவதையும் பணம் முடிவடைந்ததும் விலகிச்செல்லுவதையும் அவதானிக்கலாம்.
குறிப்பாக சில ஆண்கள் இப் பெண்களின் தனிமையையும் ஆதரவு தேடும் நிலையையும் தமக்கு சாதகமாக்கி அவர்களுடன் மணம் புரியாது வாழ்வதும், பின்னர் விலகி விடுவதும் ( அநேகமாக நட்ட ஈட்டுப் பணம் முடிவடைந்ததும்) அவதானிக்கப்படுகிறது. மறுமணம் முடித்துள்ள பெண்கள் குறைவு.
-13

Page 11
நட்டஈட்டுக் கொடுப்பனவைத் தமது வருவாயீட்டும் நடவடிக்கை களிற்கான முதலாகவோ, சேமிப்பாகவோ பயன்படுத்தியோர் மிகமிகக் குறைவு.
இப்பெண்கள் கணவணையிழந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுன்னரே குடும்பத்தைப் பராமரிக்க வேண்டி ஏற்படுவதால் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புக் களே, தெளிவோ இன்றி ஒருவித சலிப்புடனேயே வாழ்ந்து வருகின்றனர். தமதும், பிள்ளைகளதும் உடல், மன ஆரோக்கியத்தில் கவனமெடுப்பதில்லை. வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற பெண்களின் பிள்ளைகள் பிறரது பராமரிப்பில் விடப்படுகின்றனர். இத்தகைய சூழலில் வளரும் பிள்ளைகளால் எதிர்கால சமுதாயத்திற்கு ஆரோக்கியமான பங்களிப்பை வழங்கமுடியாது இது பற்றி சமூகத்திலுள்ளோர் சிந்திப்பது குறைவு. இவர்கள் இவ் இளம் பெண்களை வேதனைகளிலிருந்து விடுவித்து வாழ்வு பற்றிய நம்பிக்கையூட்டுவதற்குப் பதிலாக சமூக நிகழ்ச்சிகள், மகிழ்ச்சியான வேளைகளில் ஒதுக்கி வைத்தல், அழகாக, மகிழ்வாக வாழ்வதை மறுதலித்தல் என்பனவற்றினூடாக மேலும் அழுத்தங்களுக்குள்ளாக்குகின்றனர்.
ஆண் தலைமைத்துவக் குடும்பங்களே பொதுவானவையாகவும். இலட்சியத்தன்மை வாய்ந்தவையாகவும் கருதப்படும் ஒரு பண்பாட்டுச் சூழலில் வேதனையான பின்னணியில் தோற்றம் பெற்றுள்ள இப் பெண்தலைமைத்துவக் குடும்பங்களை ஏனைய பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முன்னுதாரணமாகவும் சமூகத்திற்கு ஆக்கபூர்வமாகப் பயன்தரக் கூடிய வகையிலும் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வது சமூகத்தின் கடமையாகும்.
 

நெருஞ்சி
அம்மா அடுப்Uழயில் இருட்டில் புகைநடுவில். ஆனால் அவளின் ஆழமான கட்குழியில் எண்ணெய் விட்டுத் திரியும் ஏற்றலாம் புண்ணியம் தானே செய்ததாய்ப் புலம்புவாள் மயிர்தான் கொஞ்சம் நரைத்துப் போனாலும் பயிர் போல் தன் வாழ்வு பச்சைதான் என்கிறாள் உயிரோடு இருக்கிறார் அப்பா என்பதால்
அம்மா அடுப்படியில் இருட்டில் புகைநடுவில் அப்பா வெளியில் நிலவில் ஈசிச்செயரில் அயல் வீட்டுப் பரமசிவம் படியில் மயிலு நடுவில் மறுபக்கம் மகாதேவன் வைத்து நன்றாய் ஊர்வம்பும் அரசியலும் . சும்மா பிய்த்து எறியும் பெரிய்ய. கருத்தரங்கம்!
"சாப்பிடுங்கோவன்” அம்மாவின் குரல் “போட்டுவை வாறன்” . இது அப்Uா “ வேறென்ன வேலை ? சமையல் மட்டுந்தான்” மாறின்றித் தீர்மானம் கருத்தரங்கில் நிறைவேறும் இன்றும் நாளையும் இறந்து பிறக்கும் இரவும் பகலும் புரண்டு சரியும் மஞ்சளும் சிவப்புமாய் (மண்ணிக்கவும் குங்குமமுமாய்) 9tbuost tissifiesT6f
கொஞ்ச நேரம் மறந்து விடுங்கள் குருதியின் நிறமும் சிவப்பு என்பதை!
அம்மாவைப் பார்த்தால். மனதை ஜிவ்வுவது எடுப்பான மூக்கு பாடம் அவளெனக்குச் சொல்லித் தருவாள், வீட்டுக்கு விலக்காய் இருந்த வோர் நாளில் வீட்டுப் பாடம் விளங்கவில்லை என்று அப்பாவைக் &l; அவர் குரலில்

Page 12
உலோகத்தன்மை எப்படி வந்தது? "கொம்மாவுக்கு இங்கே என்ன வேலை? பாடம் சொல்லித் தருவது மட்டுந்தான்.” பாய்ந்து விட்டுப் போனார் அவரும்!
இரவு நேரக் காற்றுவந்து வளைந்து வளைந்துவீசிப்போனது "தோயித்துப் போட்ட உடுப்பை ஒருக்கால் பார்த்துக் கொஞ்சம் எடுத்து வாங்கோ ” தோல் போர்த்த விறகு வேண்டுகோள் விட்டது. ஈசிச் செயரோ.அசையவே இல்லை "எனக்கு எவ்வளவு வேலை இங்கே உனக்கு என்ன வேலை அங்கே, உடுப்புத் தோய்ப்பது மட்டுந்தானே? ” கொதிநிலை இன்னும் உயர்ந்தது எனக்குள் மனம் ஒரு பள்ளத் தாக்குத் தானே! ஆழம், இருட்டு, அடர்த்தி, இன்னும்?
தாழ்ந்த கருதியில் ஒரு தனியான மிருதுக்குரல் "சூழ்ந்த இடம் துப்பரவாய் இருக்கட்டண், ஏனிந்த இடத்திலை பேப்பரைப் போடுறீங்கள்? எத்தனை தரந்தான கூட்டிறது நானும்? ” "a gun s Goldig5 (366poi6OT (86).j606) 2 ” கொய்யா தந்த சீதனக் காசிலை மெய்யாய்ப் பத்து வேலைக்காரி வைக்கலாம்” உயர்விைை ஆடைதான் உடுத்திருந்த அம்மா, உயர்விலை ஆடையுள் உருளும் புழுப்போல்,
மனிதனைத் தவிர மற்றெந்தப் பிராணியும் சோவிஇன்றி இருந்ததே இல்லை அப்பா இன்னும் ஈஸிசெயரில் Uேப்பர் பழக்கிறார் கொஞ்சம் பொறுங்கள் அம்மாவுக்கு மூச்சு வாங்குது சந்தை தூரம் சாமான் வாங்க கந்தையா அர்ைணையின் கடைக்குப் போக கால்கள் அவளைத் தூக்கிச் செல்லும்
-6-

சைக்கிளில் நீங்கள் ஒரு மிதி மிதித்தால் சுருக்காய் வரலாம் என்று நான் சொன்னேணி "அம்மா போகட்டும் பார்த்து வாங்குவாள் சந்தைக்குப் போவது மட்டுந்தானே மிகுதி எல்லாம் நானே செய்வேன்" அப்பா போடும் முகமூடி மிகநீளம்
அண்டவெளியின் பெரியசங்கீதம் அதுதான் அம்மா, அதுதான் அம்மா, அந்தச் துளசி அதன்மீது கவியும் இருளில் என்ன பெற்றுக் கொள்ளும் ? விலக்க வில்லை இருளை அதுவும், விழயுந்தானே என்ற நினைவோ? என்ன நினைவு? என்ன நினைவு?
-LD. JoaoT6

Page 13
சிறிலங்காவின் தேர்தல் வழிமுறையில் மெணர்களின் பங்களிப்பு
~ நந்தினி சமரசிங்க ~
... . :::::::
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியான திருமதி சரோஜினியோகேஷ்வரன் பங்கெடு வைக்கப்பட்டு வெற்றியீட்டியுள்ளார். இதுபோன்றே இந்தியாவிலும் மறைந்த பிரத
இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களது அரசியல் வரலாற்றை பார்க்கின், பெண்களின் தலைமைத்துவமென்பது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆணின் இழப்பின் பின் ஏற்படுவதாகவே அமைகிறது. கட்சி அரசியலிலோ, இயக்கங்களின் அரசியலிலோ தீர்மானமெடுக்க கூடிய பதவிகளிலும், ஆண் ளிற் பதவிகளிலும் பெண்கள் அவர்களின் திறமைகளினடிப்படையில்
பார்வைக்கும் தமிழ் விமர்சகர்களது பார்வைக்கும் வேறுபாடுகள் இருக்கும், எனினும் அரசியலில் பெண்களது பங்கெடுப்பு பற்றிய 3 அதிகளவு வேறுபாடு
ல் கொழும்பு சட்டமும் சமூகமும் நிதி சமரசிங்கவின் இக்கட்டுரையை பெண்களும் சட்டமும், அபிவிருத்திக்குமான ஆசிய பசுபிக் மன்றத்தின் (APWLD) சஞ்சிகையிலிருந்து (பங்குனி 97) மொழிபெயர்த்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கள் குடும்ப அங்கத்தவர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்காகப் பெண்களைத் தயார்படுத்தும் தெற்காசியாவின் அரசியலின் தனித்துவமான போக்கினை முதன் முதலில் தீவு நாடாகிய சிறிலங்கா ஆரம்பித்தது. அன்றைய பிரதம மந்திரியாகவிருந்த S.W.R.D.பண்டாரநாயக்கா அரசியற்படுகொலை செய்யப்பட்ட பொழுது சிறிலங்காவானது அதன் முதல் பெண் பிரதமந்திரியாகப் பின்னர் திகழ்ந்த அவரது மனைவி சிறிமாவோ டயஸ் பண்டாரநாயக்காவை 1960இல் கட்சியின் தலைவியாக உலகிற்கு அறிமுகம் செய்தது. இன்று தனது மகள் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருக்கும் அரசாங்கத்தில் அவர் மூன்றாவது தடவையாகப் பிரதம மந்திரி பதவி வகிக்கிறார். இதற்கு முன்னர் அவர் இருதடவைகள் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்ததுடன் 1960ல் இருந்து இன்றுவரை கட்சித் தலைவியாகவும் இருந்து வருகிறார்.
சிறிலங்காவானது பாராளுமன்ற முறைமைக்குப் புறம்பான நிறைவேற் றதிகாரங் கொண்ட ஜனாதிபதியொருவரினால் ஆளப்பட்டாலுங்கூட ஜனாதிபதி யானவர் சட்டவாக்க அதிகாரத்தில் தனது அரசியற் கட்சியின் மூலம் பங்கு கொள்கிறார். தேசிய அரசுப் பேரவையாக இருக்கும் பாராளுமன்றமானது 196 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும் தேர்தலில் பல்வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் விகிதாசாரத்துக்கமைய நியமிக்கப்பட்ட 29 கட்சி அங்கத்தவர்களையும் கொண்டிருக்கின்றது. ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கும், பின்தங்கிய பிரதேசங்களுக்கும் கூடுதல் சுயாட்சி வழங்குமுகமாக முதல் அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கையாக 1986இல் மாகாணசபைகள் முறை உருவாக்கப்பட்டது. மாகாணசபைகள் நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் என்பவற்றைக் கொண்ட ஒரு உள்ளுாராட்சி முறைமை கொண்டுவரப்பட்டு மிகச் சாதாரண மக்களும் , அரசியலில் பங்கு கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.
சிறிலங்காவானது பிரித்தானியரிடமிருந்து 1948இல் சுதந்திரம் பெற்றிருந்தும் இற்றைவரை அதன் அரசியலானது சலுகைகள் படைத்தோராலும் அதிகாரம் கொண்டோராலுமே மேலாதிக்கம் செலுத்தப்பட்டது. அரசியலில் ஈடுபட்ட பெண்களில் பெரும்பாலானோர் கூட நெருக்கமான அரசியல் தொடர்புள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அத்துடன் அவர்களிற் பலர் முதன்முதல் அரசியலிற் பிரவேசித்தமைக்கான காரணம் அவர்களின் மிக நெருங்கிய ஆண் உறவினர்கள் விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்புவதற்காகவே அமைந்தது. 1931இன் முதலாவது சட்டசபையில் அங்கம் வகித்த இரு பெண்களும் (அட்லீன் மொலமுறை, நைசும் சரவணமுத்து) இக்காரணம் ஒன்றிற்காகவே சபையில் பிரதிநிதித்துவம் பெற்றனர். ஆசிய சட்டசபையில் இடம் பெற்ற முதல் மேல்நாட்டுப் பெண்ணென்ற அசைக்க முடியாத சாதனையைக் கொண்டிருந்ததுடன் மட்டுமன்றி ஒதுக்கப்பட்டோரின் நிலையை உயர்த்துவதற்காக, தான் செய்த பங்களிப்புக்காக இன்றும் மதிக்கப்படும் டொறின் விக்கிரமசிங்க கூட 1952இல் தனது கணவரின் சொந்தப் பிரதேசத்திலிருந்து தான் பாராளுமன்றத்துள் பிரவேசித்தார்.
-19

Page 14
மேற்கண்ட இந்நிலையானது சிறிலங்காவின் அரசியலில் ஜனநாயக மென்பது வெறும் கருத்துநிலை எண்ணமே என அர்த்தம் கற்பிக்க வைக்கிறது. சிறிலங்காவில் காணப்படும் சுதந்திரத்திற்குப் பிந்தியதான சோசலிச சனநாயக மரபுகள் அரசியல் உரிமைகளை மேம்படுத்தியிருப்பதுடன் நாட்டின் அரைவாசிச் சனத்தொகையை அதன் பிரதான தீர்மானம் எடுக்கும் வழிமுறையிலிருந்து தள்ளி வைக்கும் ஒரு அரசியல் நிலைமையையும் உருவாக்கி இருக்கிறது.
பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றும் குறைவாகவிருந்தாலும் கூட 1977ம் ஆண்டுத் தேர்தலிலிருந்து இவ்விடயத்தில் தேசீய மட்டத்தில் சிறிய முன்னேற்றம் இருப்பதாகத் தென்படுகின்றது. 1989,1994 ம் ஆண்டுத் தேர்தல்களில் பெண்களின் பங்கேற்பானது 2.9 % த்திலிருந்து 4.9% ற்கு அதிகரித்திருந்தது. எப்படி இருந்தும் தேசிய அரசுப் பேரவையின் முழு அங்கத்துவ எண்ணிக்கையான 223 இல் 12 ஐ மட்டுமே பெண்களின் விகிதாசாரம் கொண்டிருக்கின்றது. தற்போதைய பத்தாவது பாராளுமன்றத்தின் 12 பெண் பிரதிநிதிகளில் ஏழுபேர் அவர்களின் ஆண் உறவினர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசியல் தொழிலை ஆரம்பித்தவர்கள்.
மாகாண சபைகளில் பெண் பிரதிநிதித்துவத்தில் சிறிய வீழ்ச்சி (3.6% இலிருந்து 3.1% க்கு தெரிவதுடன், உள்ளுராட்சி மட்டத்தில் 1987இல் 2.9% ஆக இருந்து 1991இல் 2.4% க்கு உறுதியான ஒரு சரிவும் மேலும் பிரதேச சபை மட்டத்தில் 1.6% வீழ்ச்சியும் அவதானிக்கப்படுகிறது. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்கள் பற்றிய இதுவரை அறிந்த கணக்கெடுப்புக்கள் பெண்களின் பங்கேற்பு விகிதாசாரம் மேலும் குறைவாக இருக்கும் என்பதையே காட்டுகின்றன அதாவது 1 % இற்கும் குறைவாக இருக்கும் என்பதாகும்.
கிடைக்கும் தரவுகளை வைத்து பார்க்குமிடத்துக் குறிப்பிடத்தக்கதாக அவதானிக்கபட்டது என்னவெனில் மாகாண மற்றும் உள்ளுராட்சி மட்டங்களில் தேர்தல்களில் பெண்களின் பங்கேற்புக் குறைவு என்பதே. இதற்கான வெளிப் படையான காரணமென்னவெனில் சிறிலங்காப் பெண்கள் தங்களது ஆண் உறவினர்களின் பணியைத் தொடருமுகமாக அரசியற் கட்சிகளின் உயர் பதவிகளுக்குள் தள்ளப்பட்டாலும், கட்சி அமைப்பினுள் தேர்தல் நடவடிக்கை களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மிக மட்டுப்படுத்தப்பட்டவையாகவேயுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஜனநாயகத் தேசீய கூட்டு முன்னணி (DUNF) ஆகிய கட்சிகளின் ஸ்தாபகத் தலைவர்களாவிருந்து மறைந்து விட்ட இரு அரசியல்வாதிகளின் மனைவியர் தற்போது அக்கட்சிகளின் தலைவிகளாகப் பணியாற்றுகின்றனர். ஏனைய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி(UNP தற்போதைய பிரதான எதிர்க்கட்சி) தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF) லங்கா சமசமாசக் கட்சி (LSSP) நவசம சமாஜக்கட்சி (NSSP) மக்கள் விடுதலை முன்னணி (JVP - இடதுசாரி) மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) என்பவற்றில் கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுத்தலில் பெண்களின் ஈடுபாடு என்பது மறக்கப்பட்ட உண்மையாகவேயுள்ளது.
-20

1947இல் அரசியற்கட்சிகள் அறிமுகம் செய்யப்பட்டது தொடக்கம் தேர்தல் வழிமுறையுள் பிரவேசிப்பதற்கு ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவு முக்கிய ஒரு காரணியாக்கப்பட்டது, சுயேச்சை வேட்பாளர்களாகவோ, சுயேச்சைக் குழுக்களாகவோ நியமனப் பத்திரம் தாக்கல் செய்யக் கூடிய ஒழுங்கு இருந்தாலும் விரும்பும் வேட்பாளர்கள் ஏதாவது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினுடாக நியமனப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டு மென்ற நிபந்தனையை 1978 அரசியல மைப்புச் சட்டம் கொண்டுவந்தது. எப்படியாயினும் கட்சியாதரவின்றிச் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் ஆசனமொன்றை வென்றெடுப்பது ஒரு மெய்மை முரண்பாடாகவுள்ளது.
இவ்வாறு பிரதான அரசியல் நீரோட்டத்தில் பெண்கள் பிரவேசிப் பதற்கு கட்சி ஆதரவு என்பது ஒரு முதன்மைத் தேவையாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியற் கட்சியிலும் பெண்கள் அணி இருந்தாலும் அவர்களது குறிக்கோள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளுமுகமாக வாக்குகளை உச்சப்படுத்தலாகும். நிலை இவ்வாறிருக்கின்றபடியால் எந்தவொரு அரசியற்கட்சியும் பெண்களுக்குச் சம அடிப்படையில் அரசியல் ஸ்தாபனம் வழங்குவதற்காக அவர்களின் உண்மையான தேவைகளையும் அபிலாசைகளையும் அத்துடன் கட்சி முறைமையை சனநாயகப்படுத்தலையும் கருத்திற் கொள்ளவில்லை.
சிறிலங்காவின் பெண்கள் இயக்கமானது தங்களுக்கு இப்பரந்த சமூகத் தளத்துள் பால் சமத்துவம் வழங்கப்படவேண்டு மெனக் கடந்த இரு தசாப்தங்களாக குரல் எழுப்பி வருகின்றது. எனினும் பெண்கள் தேர்தல் முறையுள் முழுமையாகப் பங்கு பற்றுவதற்கான செம்மையான பிரச்சாரம் எதுவும் நடப்பதில்லை. பிரசாரத்திற் காகத் தாங்கள் எடுத்துக்கொண்ட பல்வகைப்பட்ட விடயங் களுடன்,மேற்கூறப்பட்ட இந்த விடயத்திற்கும் பொறுப்பாக இந்நாட்டின் பெண்கள் இயக்கத்தின் உருவாக்கம் அமையும். அத்துடன் மிகச் சாதாரண மட்டங்களில் பெண்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்திருந்தாலும் சமீபகாலமாகவே அவர்கள் பெண்கள் இயக்கத் தலைவர்களாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் சுவாரஷ்யமான அம்சம் என்னவெனில் இத்தகையோரின் அரசியல் ஈடுபாடுபற்றிய மனப்போக்கு நகர்புறப் பெண்களினதை விட நேர்ப்போக்கான தெனப் புள்ளிவிபரங்கள் உறுதிசெய்தலாகும். ஒப்பீட்டடிப்படையில் சிறிலங்காவில் கிராமப் புறங்களில் தெரிவாகும் விகிதாசாரம் நகர்ப்புற விகிதாசாரத்தைவிட மிக உயர்வாக உள்ளது. 1994 இல் சென்வோர் (CENWOR: பெண்களுக்கான ஆராய்ச்சி மையம்) இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது நகர்ப்புற பணம் படைத்த பெண்கள் அரசியலில் பங்கேற்கும் விடயம் சம்பந்தமாக எதிர்க் கருத்தையே கொண்டுள்ளனர் என முடிவு செய்கின்றது.
தேர்தல் வழிமுறையில் பெண்களின் ஈடுபாட்டின் குறைவான போக்கு சிறிலங்காவுக்கு மட்டும் தனித்துவமான ஒன்றாகத் தெரியவில்லை. இவ்விடயமானது இறுதியாக ஜெனிவாவில் நடந்த பாராளுமன்ற ஒன்றிய மாநாட்டில் கவனத்திற் கொள்ளப்பட்டு, அரசியலில் தெட்டத் தெளிவாகக் காணப்படும். பால் நிலை
-21

Page 15
இடை வெளியைச் சுருக்குவதற்கான புதிய வழிவகைகள் காணப்படவேண்டுமெனத் தீர்மானம் செய்யப்பட்டது. உலக மடங்கிலும் பெண் பாராளுமன்றவாதிகளின் விகிதாசாரம் 1988இல் 14.6% ஆக இருந்து தற்போது 11.7 %ஆக குறைந்ததால் அவ்விடைவெளி மோசமான நிலையையடைந்துள்ளதைக் காட்டுகின்றது.
கட்சி அமைப்பிற்குள் பால் சமத்துவத்திற்கான நாட்டம் குறைவாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் நாட்டின் தற்போதைய அரசியற் சூழலும், முன்னொருபோதும் ஏற்படாத அளவு வன்முறையும், பெண்களைத் தேர்தல் வழிமுறைக்குள் ஈடுபடுவதைத் தடுப்பனவாக உள்ளன. தமிழ் ஈழவிடுதலைப் புலிகள் (LTTE) தனிநாடு கோரி 1970 ல் தொடங்கிய போராட்டத்துடன் ஆரம்பித்த முறையானது படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்கிறது. இடது சாரிப் புரட்சிகர இயக்கமான UWP) இனது வன்முறை மற்றும் சிக்கலான அதிகாரப் போராட்டத்தில் தங்கள் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக அரசியற்கட்சிகள் கைக் கொள்ளும் உயர் நவீன முறை வன்முறைகளும் இதனுடன் சேர்ந்து கொண்டுள்ளது. சிறிலங்கா அரசியலிருந்து வன்முறைக் கலாசாரத்தை வேரோடு களைய வேண்டு மென்ற அயராத நம்பிக்கையுடன் பல அரசியற் கட்சிகயைக் கொண்ட (மக்கள் அணி) கூட்டரசாங்க மொன்றைத் தெரிவு செய்ததன் மூலம் 17 ஆண்டு கால UNPஅரசு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருந்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக அரசாங்கம் பதவியேற்ற பின்னர் 1997 மார்ச் 16 வரையாக, ஏப்ரல் 17ல் நடத்துவதற்கெனத் திகதி குறிக்கப்பட்டிருந்த உளஞராட்சித் தேர்தல்கள் தொடர்பான வன்செயல் சம்பவங்களின் எண்ணிக்கை 1308 ஐ எட்டியிருக்கின்றது. இதுவே இதுவரை காலமும் புகார் செய்யப்பட்ட சம்பவங்களில் அதிகூடியதாகும். சிறிலங்காவின் அரசியல் சரித்திரத்தில் முதன் முதலாக ஒரு பாராளுமன்றவாதி இன்னொரு சக பாராளுமன்றவாதியைக் கொன்றமைக்காகவும், பெண்வேட்பாளர் ஒருவரைக் கடத்தியமைக்காகவும் சந்தேகிக்கப்பட்டார். நாட்டினது முழுச் சமூக அமைப்பானது தேர்தல்களை நடாத்துவதற்குத் தேவையான சனநாயக நியமங்களைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாகக் காணப்படுவதுடன் அது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த வெளிப்படையாகவே தவறியுள்ளது.
சுதந்திரமும் நீதியுமான தேர்தல்களுக்கு முற்றிலும் எதிர்மாறான சூழலில் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்குழுக்களை அனுமதிக்கும் வழமையான நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற வாதிகள் மனித உரிமைகள் அமைப்புக்கள் என்பன சகல அரசியற் கட்சிகளையும் தெளிந்த அரசியலுக்குத் திரும்புமாறு தொடர்ந்தும் பரித்து கேட்கின்றன. சமூக ஸ்திரத் தன்மைக்குத் தங்களால் அளிக்கக் கூடிய பங்கினைக் கோடிட்டுக் காட்டுவதற்குப் பெண்கள் இயக்கமானது இச்சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொண்டுள்ளது. மனப்பாங்கு ரீதியானதும், நிறுவன ரீதியானதுமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான அபிவிருத்தியின் வேகத்தை மந்தப்படுத்தும் சமூக கலாசாரப் பின்னடைவுகளை முற்றாக ஒழிக்குமுகமாக அரசியல் தளத்தில் தங்கள் பங்கினை அதிகரிக்கத் தக்க தூண்டுதல்களைப் பெண்கள் செய்து கொண்டிருக்கின்றனர். மேற்கூறிய இம் மாற்றங்கள் சனநாயகம் உறுதியாக வேருன்றுவதற்கு மிகவும் அத்தியாவசியமானவையாகும்.
தமிழாக்கம்: தே. கிருபாகரன். -22

வில்லோ மரம்
இந்த நூற்றாண்டின் இளமைப் பருவத்துக்
குளிர்ச்சி நிறைந்த நாற்றுப் பண்ணையில்
பிரத்தியேகமான அமைதியில் நான் வளர்ந்தேனர்.
ஆண்களின் குரல்கள் என் காதுகளில் நாராசமாய் விழுந்தன;
நான் புரிந்து கொண்டது காற்றின் குரலைத்தான்.
நான் நேசித்தவை புற்களும் புதர்களும்,
ஆனால் எல்லாவற்றையும் விட ஒரு வெண்ணிற வில்லோ மரத்தையே.
அதுவும் விசுவாசத்துடன் வாழ்நாள் முழுவதும் என்னோடே இருந்தது; அதன் கிளைகளின் சலசலப்பு உறக்கமின்றிக் கிடந்த என்னை
வருடிக் கொடுத்தது, கனவுகளை வழங்கியது.
என்ன ஆச்சரியம்! அதன் ஆயுளையும் விஞ்சிவிட்டேன் நான்.
குத்துக்கட்டை மாத்திரம் அங்கே நிற்கிறது: நமது அதே வானத்தின் கீழ் வேறு வில்லோ மரங்கள்.
அந்நியக்குரல்களில் சளசளக்கின்றன.
நானோ மெளனத்தில். ஒரு சகோதரனை இழந்தவளைப் போல,
~அன்னா அக்மதோவா
தமிழில்: எஸ். வி. ராஜதுரை
வ. சீதா
-23

Page 16
பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகக் கலை
-ஜெயந்தி
கலைத்துறையைப் பொறுத்த வரை பெண்களின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் பெண்களின் மன உணர்வுகளையும், அபிலாசை களையும் வெளிப்படுத்துவதற்கு கலைசிறந்ததொரு ஊடக LDT (Sg5 LĎ . அதுமட் டு மல் ல பெண்ணியம் பற்றியும், பால் நிலைப் பாகுபாடு பற்றியும் சமூகத்திற்கு கூறுவதற்கு இலகுவானதும் , எளிமை யானதுமான தொடர்பூடகமு மாகும். இந்த வகையில் கலைத்துறையில் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச்
செய்யும் நோக்கத்துடன் எமது
நிறுவனம் நாடகம், ஓவியம்,
ஆக்க இலக்கியம் போன்ற நாடகம் - திராகரிக்க முடியாதபடி
துறைகளில் பயிற்சி வழங்கி வருகின்றது. இதில் முதற்கட்டமாக நடாத்தப்பட்ட நாடகக் களப்பயிற்சியின் மூலமாகப் பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இனம் காணப்பட்டு –24
 
 

நாடகப் பட்டறையில்
அதில் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து" நிராகரிக்க முடியாதபடி” என்ற நாடகம் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது.
இப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அவரவர் பகுதியில் காணப்படும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை நாடகமாகத் தயாரித்து கிராமங்களில் மேடையேற்றுகின்றனர்.
சமூகத்தில் பெண் எழுத்தாளர்களது எண்ணிக்கை குறைவு. இதனைக் கருத்திற்கொண்டு கட்டுரை, கவிதை, சிறுகதை வடிவங்களில் பெண்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஆக்க இலக்கியப் பயிற்சியும் நடாத்தப்படுகிறது. இதில் பங்குபற்றும் பெண்களால் படைக்கப்படும் ஆக்கங்களில் தரமானவற்றைப் பிரசுரிக்கவும் உள்ளோம்.
அத்துடன் சூரியாவின் கவிதா நிகழ்விற்காக எழுதப்பட்ட, கவிதைத் துறையிலிடுபாடுள்ள நான்கு பெண்களின் கவிதைகளைக் கொண்ட வெளியீடு "கனல்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
எழுத்தில் வடிக்க முடியாத உணர்வுகளை வர்ணங்களுடு வடிப்பதற்கான
5

Page 17
#భ్య
ஓவியப் பட்டறையில்
ஓவியப் பயிற்சிப் பட்டறை ஒன்றும் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிக் காலத்தின் போது அவர்களால் வரையப்பட்ட சித்திரங்களைத் தொகுத்து கண்காட்சி ஒன்றும் நடாத்தப்பட்டது.
மேலும், தொடர்ந்து வெவ்வேறு கலைத்துறைகளில் பெண்களை ஈடுபடுத்தும் முயற்சியில் சூரியா ஈடுபட்டு வரும் வேளையில் மேற்குறிப்பிட்ட பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அங்கத்தவர்களின் ஆக்கங்களும் இச்சஞ்சிகையில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
 
 

விடுதலை எண் உடைமை
எண் உடைமைகளை என்னிலிருந்து விடுவிக்கின்றேனர் 'அச்சம்’ எனக்கு
விதிக்கப்பட்ட முதல் தடை - அச்சத்தால் என்னிரு கரங்களும் விலங்கிடப்பட்டது.
ՙԱշՎ-6020’
6T60 gill) சிந்தனைக்கும் விருப்புகளிற்கும் சூனியமானது. என் உணர்வுகளை அது கொளுத்திற்று அதனால் மடமையை’ உதறி உமிழ்கிறேன்
'நாணம் ‘நாய்கட்கு வேண்டுமென்றார் பாரதியார் நான் நாயல்லவே என் இதயவறையை சுற்றியிருக்கும்
நாணக்கயிறு
என் மூச்சில்
எரிகிறது.
ՆԱՏiծվ ՚ எனக்கு அவர்கள் தந்த இறுதியுடைமை எனக்கது 89ങ്ങഖധിങ്ങ്ങബ இன்றிலிருந்து.
uu 665606.60 என் உடைமையாக்கி கொள்கிறேன்.
a
--27۔

Page 18
மகளிர் உரிமைகள் மனித உரிமைகளே
-சந்திரகலா சோமநாதன்
இன்று உலக சனத்தொகையில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியினர் பெண்களே. அதாவது மகளிர் இன்று பங்கேற்காத துறைகளே இல்லை எனலாம். அடுப்பங்கரை மட்டுமே பெண்ணுக்கு என்ற கட்டுக்சோப்புமாறி சகலதுறைகளிலும் தங்களது வல்லமையை வெளிப்படுத்தும் மகளிரே இன்றைய மகளிர். இவர்களை இவ்வாறு சகலதுறைகள் மூலமும் பயன்படுத்திப் பயன் பெற்றுக்கொள்ளும் சமுதாயம், உலகம் அவர்களது உரிமைகள் சுதந்திரங்களை மட்டும் மனித உரிமைகளாக ஏற்றுக் கொள்வதில் தயக்கமே காட்டுகிறது.
இக்காலத்தில் சமூகத்தின் பல்வேறு தளங்களில் பெண்கள் எதிர்நோக்கும் கட்டுப்பாடுகள், வரையறைகள் குறித்த விமர்சனங்களும், விழிப்புணர்வுகளும் உருவாகியுள்ளன. பெண் ஏன் அடிமையாகிறாள் என்ற பெரியாரின் கேள்வி பெறுமதியானது. இதனுாடாக இரண்டு விளக்கங்களை நாம் பெறலாம், அல்லது பெறவேண்டியுள்ளது. அதாவது பெண் தானே அடிமையா கின்றாளா? அல்லது ஆதிக்கத்தின் பிடியினால் அடிமையாக்கப்படுகின்றாளா? என்பவையாகும். இவற்றை வினவ அல்லது விளக்க முற்பட்டால் பல கோணங் களிலான கருத்துக்களும், தெளிவுகளும், விளக்கங்களும் கிடைக்கின்றன.
பெண் உழைத்தாலும் பெரும் பதவிகள் வகித்தாலும் அவளது அந்தஸ்து நிலை மாறுவதில்லை. பெண் என்பதால் அவளது பால் யதார்த்தம் வெவ்வேறு வகைகளில் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கல்வியிறவினால் முன்னேற்றமும். அபிவிருத்தியும் கண்டுள்ள மேலை நாடுகளிலும் பால் ரீதியான வேலைப்பாகுபாடு மறைந்து விடவில்லை. பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குைறந்துவிட வில்லை
பெண்களுக்கெதிரான வன்முறைகள், பொதுஇடங்களில் பெண்களைத்
தொந்தரவு செய்வதிலிருந்து இராணுவப் பலாத்காரம் வரை இவ்வன்முறைச்
செயல்கள் பலவாகின்றன. காலாதிகாலமாகக் கற்பிக்கப்பட்டு வந்த பொறுமை,
அடக்கம் என்ற குணாம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளுக்குள்ளேயே வெந்து
குமையும் பெண்கள் அநேகமாகக் காணப்படுகின்றார்கள். தனிப்பட்ட குடும்ப
நிலைகளில் ஏற்படும் விவகாரங்கள் கூடப்பெண்களை அடக்கி அடக்கு முறையின்
-28

கீழ் வைக்கும் அம்சங்களேயாகும். இவைகள் சமூக அரசியல் நிலைகளின் பிரதிபலிப்புகளாகவே அமைகின்றன. சமூகமும் சரி, அரசாங்கமும் சரி இவ்வாறான குற்றச் செயல்களைப் புரிந்தோரை, புரிவோரைத் தண்டிப்பதை விட்டு மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தாற்போல குற்றத்துக்கு இலக்கான பெண்களையே கண்டிப்பதையும் அவமதிப்பதையும் காணலாம்.
பெண்களது உழைப்புச் சக்தி சுரண்டப்படல் பெண்களது அடக்குமுறை, உலக சந்தையில் பெண்கள் மலிவான உழைப்பு சக்தியாக பயன்படுத்தப்படுகின்றமை போன்ற இன்னோரன்ன பிற செயற்பாடுகளையும் வைத்து நோக்கும் போது மகளிருக்கான உரிமைகள் மதிக்கப்படாத தன்மையினைக் காணமுடிகின்றது.
பெண்களாக இருக்கும் காரணத்தாலேயே உலகசனத்தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியினர் சித்ரவதை, பட்டினி, பயங்கரவாதம், உளரீதியான பாதிப்பு, அங்கவீனம், கொலை ஆகியவற்றிற்கு ஆளாகின்றனர். பெண்களைத் தவிர வேறு எவரும் இத்தகைய வன்முறைகளுக்கு ஆளானால் அது அவர்களது மனித உரிமைகளைத் துஷபிரயோகம் செய்தல் எனவோ, சிவில் அரசியல் நெருக்கடிநிலை எனவோ கூறப்படும். பெண்களது மரணங்கள் அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்குத் தெளிவான பதிவுகள் இருந்தும் பெண்களது உரிமைகள். மனித உரிமைகளாக வகைப்படுத்தப்படுவதோ புரிந்து கொள்ளப்படுவதோ இல்லை. பெண்களது வாழ்க்கையின் அடிப்படையம்சங்களை சமூகம் எவ்வாறு நோக்குகிறது என்பதை இது காட்கிறது.
பெண்களைப் பொறுத்தவரை இவ்வாறான செயற்பாடுகள் பாதகமான விளைவுகளையே கொண்டிருப் 1ண்ால் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பிரச்சினைக்குரிய) " விளங்குகிறது. மகளிர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியவை. மகளிர் உரிமைகளும் மனித உரிமைகளே என்று மதிக்கப்பட வேண்டியிருந்தும் இன்னும் உதாசீனப்படுத்தப்படும் ஒன்றாகவே காணப்படுவது வேதனைக்கும் சிந்தனைக்கும் உரிய விடயமாகவே உள்ளது.
மனித உரிமைகள் என்பது சகலருக்கும் சமமான ஒன்றாகும். உலகம் முழுக்கப் பொருந்தக் கூடியவை எனக் கருதப்படும் சில ஒழுக்கவியல் நோக்குகளில் ஒன்றாக மனித உரிமை என்ற கருத்தாக்கம் விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1949ம் ஆண்டு நிறைவேற்றிய மனிதஉரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனம் இந்த உலக நோக்கின் குறியீடாக விளங்குவதுடன் மனித உரிமைகள் என்பதை மிகவும் பரந்த முறையில் வரையறுக்கிறது. இதன் இரண்டாவது சரத்து"இனம், நிறம், பால், மொழி, சமயம், அரசியல், கருத்து, தேசிய அல்லது சமூகத் தோற்றுவாய், சொத்து, பிறப்பு அல்லது வேறு அந்தஸ்து ஆகியவற்றின்
-29

Page 19
அடிப்படையில் எந்த வேறுபாடும் இன்றி இப்பிரகடனத்தில் தெரிவிக்கப்படும் உரிமைகளும், சுதந்திரங்களும் அனைவருக்கும் உரியதாகும்” எனக் கூறுகிறது. இதன் மூலம் மனித உரிமைகள் என்பது ஒரு சாராருக்கு மட்டுமல்ல அது ஆண், பெண் என்ற பால் வேறுபாடு அற்ற சகலருக்கும் உரிய உரிமையாகும் என்பது தெளிவாகிறது.
அப்படியாயின் மகளிர் உரிமைகள் என்பதை மனித உரிமைகளாகக் கருத்திற் கொள்வது மிகவும் முக்கியமானது. அதாவது மனித உரிமைகள் தினமான டிசெம்பர் 10ம் திகதியில் பெரும்பாலான நிகழ்சிகளில் கூடப்பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்ற பிரச்சினைகளில் அக்கறை கொள்ளப்படுவதில்லை. அரசாங்கங்களும் மனித உரிமை ஸ்தாபனங்களும், பெண்களது உரிமைகளைக் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டும் போதும் அவ்வாறு செய்யமுடியாது என்பதற்கு கூறும் காரணங்கள் பலவாகும்.
"பால் ரீதியான பாரபட்சம் மிக அற்பமான ஒரு விடயம். அது முக்கியான தல்ல. உயிர் வாழ்தல் தொடர்பான பாரிய பிரச்சினைகளுக்குப் பின்னாலேயே அது வரவேண்டும். அதாவது மகளிர் பிரச்சினைகளில் பால் ரீதியாகப் பாரபட்சம் காட்டப்படுவது உண்மையாயிருந்தும் அது ஒரு பாரிய பிரச்சினையே அல்ல எனத் தட்டிக் கழிக்கப்படுகிறது.
பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் மனவருத்தத்திற்குரியவைதான். எனினும் அவை கலாசார,தனிப்பட்ட தனிநபர் பிரச்சினையே ஒழிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசியல் விடயமல்ல என்று கூறப்படுகிறது. மகளிர் மீதான துஷ்பிரயோகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டும் அவைகணக்கில் எடுக்கப்படாத ஒரு நிலையையே காணமுடிகிறது.
பெண்கள் உரிமைகள் முற்றிலும் மனித உரிமைகள் அல்ல என்று முழுவதுமாகத் தட்டிக் கழிக்கப்படுவதையும் நோக்கவேண்டியுள்ளது. மனித உரிமைகள் மனிதர்கள் அனைவருக்குமே உரியவை என்ற நிலையிலும் கூட மனித உரிமைகளாக மகளிர் உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமை கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்,
பெண்கள் மீதான துஷபிரயோகம் அங்கீகரிக்கப்படும் அதே வேளையில் அது தவிர்க்க முடியாதது என்றோ அது பற்றிக் கவனம் செலுத்துவது ஏனைய மனித உரிமைப் பிரச்சினைகளை மேவி விடும் என்றோ கூறப்படும். இவ்வாறான காரணங்களைக் காட்டியே மகளிர் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரிக்காத ஒரு நிலை ஏற்பட்டுள்ளமை வேதனைக்குரியதாகும்.
-30

ஆனால் மனித உரிமைகளோடு மகளிர் உரிமைகளையும் இணைக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். அதாவது அரசியல்,குடியியல் உரிமைகளை உள்ளடக்கிய அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளுடன் பெண்களது பிரத்தியேகமான தேவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியனவே.
உணவு, வசிப்பிடம், சுகாதார வசதிகள் தொழில் ஆகியவற்றில் பெண்களது நிலைமையை மனித உரிமைகள் விடயங்களுடன் தொடர்பு படுத்தவேண்டும். இவற்றில் மகளிரும் சகலவற்றையும் அனுபவிக்க வழிவகை செய்யவேண்டும். மகளிர் உரிமைகளை மனித உரிமைகளை மனித உரிமைகளாகக் கொள்ளும் வகையில் பால் ரீதிய 11ன பாரபட்சங்களை நீக்கு வதற்கு புதிய சட்டரீதியான வழி வகைகளை உருவாக்குதல் என்பது முக்கியமான தொரு செயற்பாடாக அமைய வேண்டும்.
பெண்களது வாழ்க்கை பற்றிக் கூடிய கவனம் செலுத்தத் தக்கதாகப் பெண்நிலை நோக்கில் மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தை உருமாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மகளிர் உரிமைகளையும், மனித உரிமைகளாக ஏற்கக் கூடிய நிலையை ஏற்படச் செய்யமுடியும்.
எனவே ஆரம்பகாலப் பெண்ணிலைவாத அமைப்பு ஒன்று கூறியது போல “எமக்கு உணவு மாத்திரமல்ல பூக்களும் தேவையாகும்" - இங்கு பூக்கள் என்பது சம்பிரதாயபூர்வமான கலாசாரப் பின்னணியில் பெண்களுக்கு தலையில் சூட கணவனால் வாங்கிக் கொடுக்கப்படும் பூக்கள் என்பதல்ல, மாறாக பெண்களுக்கு உணவும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும். வன்முறை , அடக்குமுறை ஆகியவை அற்று கெளரவமான வாழ்க்கையை வாழக்கூடிய சாத்தியப்பாடும் தேவை. இத்தகைய போராட்டத்தில் மகளிர் உரிமைகள் மனித உரிமைகளாக அங்கீகரிக்கப்படுவது ஒரு முக்கியமான பங்கை வழங்கமுடியும். எனவே மகளிர் உரிமைகளும் மனித உரிமைகளே என அங்கீகரிக்கப்படுவது அவசியமாகும்.
-31

Page 20
உங்களுக்கென்ற ஒரு தடை.
உங்களுக்கென்று ஒரு தடை
உலகினில்
உள்ளதோ? இல்லை.
ളൺബ8ഖ G அறிவு ஜீவியாய் ஆகிக்கொள்ளுங்கள் ஆணர்வர்க்கத்தின் அடிமைத்தளையிலிருந்து வெளியேறி விடுங்கள் விலங்குகளை உடைத்து விடுபட்டு விடுங்கள்
6}6bJ6If88.u.
உங்களுக்கென்று ஓர் உன்னத உலகம்
உங்களை -
உங்களைப் போலவே ஏற்க உருவாகிக் கொண்டிருக்கிறது
பெண். .
வாழ்வு வளமாக
அமைய - அழகாகவும் குடும்பம் சுமூகமாக செல்ல - அடிமையாகவும் பெற்றோரால்
வார்த்தெடுக்கப்பட்ட 6)}ՈfԽվ,
- லோகநாயகி அப்புராமன்
-32

பாலினக் கொள்கையும், பெண்ணிலைவாதக் கொள்கையின் மறறு உயிர்ப்பும்
-வந்தன சிவா
ஆண்மை, பெண்மை என்பன சமுதாயரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் கட்டியெழுப்பப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். பாலினச் சார்புடைய கொள்கை, இது உயிரியல் ரீதிய ச்,த், தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகக் கருதுகிறது. மேற்கத்திய ஆண்மைத் தத்துவம், கலாச்சார ரீதியாக பெண்மை எனக்கூறப்பட்ட அத்தனைளையும் மறுதலித்து வந்துள்ளது. இக்கருத்து, ஆண்மை அல்லாத அனைத்தும் பெண்மை என்றும் அதனால் அடக்கி ஆளப்பட வேண்டியவை என்றும் தெரிவித்தது. பாலின ரீதியான இந்த ஆளுமைக்கு பதில் கூறும் முகமாக இருவித கருத்துக் கோட்பாடுகள் உள்ளன. முதல் கருத்து பிரெஞ்சு பெண்ணிலைவாதியான சைமன் டி புவாவால் வலுப்படுத்தப்பட்ட ஒன்று. அது ஆணும், பெண்ணும், உயிரியல் ரீதியாக தனித்தனியாக உருவாக்கப்பட்டவர்கள் என்றும், பெண்கள் "இரண்டாம் பாலினம்’ என்றும் கூறியது. அதனால் இதைப் பொறுத்தவரை, பெண்விடுதலை என்பது பெண்மையை ஆண்மைப்படுத்துவதாகும். அதாவது பெண்ணின் விடுதலை, உயிரியல் தொடர்பிலிருந்தும், அது உருவாக்கிய புதிரான தளைகளில் இருந்தும் விடுதலை பெறுவதாகும். சைமன் டி புவாவின் உலகில் ஆண்மை மேலானது என்பதும், ஆண்மையின் மதிப்புகளை பெண்கள் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கும். இது உலகையே ஆண்மை தத்துவத்திற்கு இட்டுச்செல்வதாக அமையும்.
புவா, பெண்கள், பலவீனமானவர்கள், உற்பத்தி திறனற்றவர்கள் செயலற்றவர்கள் என்ற ஆணாதிக்க கருத்துப் பகுப்பை ஒப்புக்கொள்கிறார். வேட்டையாடும் ஆண் உயர்ந்தவன் என்ற பிரமையை அவர் மனப்பூர்வமாக அங்கீகரிக்கிறார். அவர் வேட்டை சேகரிப்பு சமுதாயங்களில் பெண்கள், அடுத்தடுத்து வந்த பிள்ளைப் பேறினால், சமுதாயத்திற்கு சுமைகளாக மாறிப் போயினர் என்ற நம்பிக்கைக்கு துணைபோகிறார்.
நவீன கருத்தடைச் சாதனங்கள் இல்லாததால் பூர்வீக, பாரம்பரியப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் போனார்கள் என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஆணாதிக்க, தந்தைவழிச் சமுதாய மாயையாகும். ஆண் உற்பத்தியாளனாகவும், பெண் செயல்திற
--33۔

Page 21
ற்ைறவளகவும் சித்தரிக்கப்பட்டவையும் மாயை என்று சமீபத்திய பெண்ணிலைவாத ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேட்டை - சேகரிப்பு சமுதாயங்களில் வேட்டையில் இருந்து ஆண் கொண்டுவந்ததைவிட, சேகரிப்பில் இருந்து பெண் கொண்டுவந்தது அதிகம் என்று அவர்கள் கூறுகின்றனர். இன்று மிஞ்சியிருக்கும் வேட்டை சேகரிப்பு சமுதாயங்களில் கூட தினசரி உணவில் 80% க்கும் அதிகமானதை பெண்களே அளித்து வருகின்றனர். நமது முன்னோர்களைப் பொறுத்த வரை, வேட்டையைவிட, சைவ உணவுப் பொருட்களை சேகரிப்பது முக்கியமானதாக இருந்தது. இப்படியிருந்தபோதிலும் அச்சமுதாயங்களில் ஆணே அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக விளங்கினான் என்ற மாயை தொடர்ந்தது. மேலும் அதில் வேட்டையாடியாக இருந்த ஆண் அடிப்படையிலேயே வன்முறையாளனாக, அழிப்பவனாக, வீழ்த்துபவனாக இருந்தான். ஆனால் அதே சமயத்தில் சேகரிப்பவளாக இருந்த பெண் ஆக்க பூர்வமானவளாக இருந்தாள். வேட்டையாடிக் கொண்டிருந்த ஆணின் உணவையே அச்சமுதாயங்கள் முழுவதுமாக சார்ந்திருக்குமானால் மனிதகுலமே, நிலைத்திருக்காது. அது பிழைத்திருந்ததிற்கு காரணம், அது வேட்டையை மிகக் குறைந்த அளவு சார்ந்திருந்ததுதான். ஆனாலும் தந்தைவழிச் சமுதாயக் கருத்தாக்கம், மனிதகுல பரிணாமத்தின் மாதிரியாக வேட்டையாடித் திரிந்த ஆணையே உருவகித்துவிட்டது. அதன் மூலம் அதன் கட்டமைப்பின் பிரிக்கமுடியாத அம்சமாக, வன்முறையும், ஆக்கிரமிப்பும் விளங்க வழி வகுத்தும் விட்டது. வேட்டையாடுவது என்பது வன்முறையாகத்தான் இருக்க வேண்டும் என்று நியதியில்லை. பெரும்பாலான பூர்வீக சமுதாயங்களில் அவர்கள் கொல்லப்போகும் விலங்குகளிடம் மன்னிப்பு கேட்பது வழக்கம்; மேலும் அவர்களின் வேட்டை, இயற்கை உற்பத்திச் சக்கரத்தின் நியதியைப் பொறுத்தே இருந்தது. வேட்டையை ஒரு கருத்தியலாக உயர்த்தியதுதான், இயற்கையுடனான வன்முறை உறவு வளர வழிவகுத்தது.
வேட்டையாடியாக இருந்த மனிதன் இயற்கையுடன் கொண்டிருந்த உறவில் வன்முறை தலைவிரித்து ஆடியது. அதில் சிலவற்றைப் பார்ப்போம்:
1) வேட்டையாடிகள் உபயோகித்த முக்கிமான கருவிகள் உயிரை உருவாக்குவதற்காக உள்ளவை அல்ல; அதை அழப்பதற்காக உள்ளவை. சமயங்களில் சகமனிதன் மீதும் பிரயோகிக்க அவை செளகரியமாக இருந்தன.
2) இது அவர்களுக்கு தங்கள் சக மனிதர்கள் மீது, பிற உயிரினங்கள் மீது ஒரு அதிகாரத்தை அளித்தது. இத்தகைய ஒரு அதிகாரம் சாதாரண உற்பத்தி வேலையில் இருந்து கிடைப்பதில்லை. அவர்கள் அதைக்கொண்டு பழங்கள் போன்ற பிற உணவுப் பொருட்களை சேகரிக்கும் சக்தி படைத்திருந்ததோடு, அதைச் சேகரிப்பவர்களான பெண்களையும் சேகரித்தனர்.
3) ஆயுதங்கள் மூலமாக அடையப்பட்ட உறவுகள் அடிப்படையில் சுரண்டல் ரீதியானது.
-س34--

4) இயற்கையுடனான அவனது உறவு அடிப்படையிலேயே கூட்டுறவு ரீதியானது அல்ல; ஆக்கிரமிப்பு ரீதியானது. இந்த ஆக்கிரமிப்பு குணம், பின்னர் மனிதன் உருவாக்கிக் கொண்டிருந்த அனைத்து உற்பத்தி உறவுகளிலும் ஒரு பிரிக்கமுடியாத அம்சமாகவே ஆகிவிட்டது. இயற்கை மீது ஆக்கிரமிப்பு செலுத்தி, அதைக் கட்டுப்படுத்தாவிட்டால், மனிதனை உற்பத்தி திறனுடையவன் என்று கூறமுடியாது என்னும் அளவிற்கு அது சென்றுவிட்டது.
சுருக்கமாகக் கூறவேண்டுமெனில் அச்சமுதாயத்தில் வாழ்ந்துவந்த வேட்டையாடி என்னும் ஆண், உற்பத்தியாளன் அல்ல; ஒரு சமுதாய ஒட்டுண்ணிதான்.
இதுதவிர மூன்றாவதாக ஒரு நோக்கும் உள்ளது. அதன்படி, விடுதலைக்கான பாதை பாலினத்தை கடந்த ஒன்றாகும். இது வன்முறையையும் செயலாக்கத்தையும் ஆணோடும், அஹிம்சையையும்,செயலற்றதன்மையையும் பெண்ணோடும் மட்டும் தனித்துவப்படுத்திப் பார்க்கும் பாலினப் பாகுபாடுதான் பிரச்சனைகளுக்கு காரணம் என்கிறது. பெண்மை உள்ளிடுகள் வெறும் பெண்களுக்கு மட்டும் போய்ச் சேருவதில்லை; அவை ஆணையும் அடைகின்றன. பாலினம் கடந்த இத்தத்துவத்தின்படி, பெண்மைக் கொள்கைகள் பெண்களுக்கு மட்டுமே உரியதனிச் சொத்தல்ல. யாராலும் ஆண்மையிடம் இருந்து பெண்மையை, மனிதர்களிடம் இருந்து இயற்கையை, ப்ருஷாவிடம் இருந்து ப்ரக்ருதியை சரியாக பிரித்துவிட முடியாது. அவைகள் பிரிந்து இருப்பது போல தோன்றினாலும் ஒரே அம்சத்தின் இருவேறு நிலைகளே. அதனால் பெண்மைக்கொள்கையின் 'மீட்டெடுப்பு ஆணாதிக்கமற்ற பாலினப் பிரிவற்ற, வன்முறையற்ற ஒரு உலகை நோக்கிய பாதைக்கு வழிகாட்டும் என்பது வெறும் கனவல்ல.
இத்தகைய ஒரு நோக்கோடுதான் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் பலியாடாகவும், ஆக்கிரமிப்பாளனாகவும் விளங்கும் மனிதனை மீட்டெடுப்பதற்காக, இந்நோக்கு முயலவில்லை; பாலினத்தை கடந்த ஒரு புதிய முழுமையை உருவாக்குவதே இதன் அடிப்படையாகும். ஏனெனில் பாலினப் பார்வை எவ்வகையில் பார்த்தாலும் சமூக, அரசியல், கருத்தியல் கட்டுமானத்தை உள்ளடக்கிய ஒன்றாகவே எப்பொழுதும் விளங்கி வந்துள்ளது.
பெண்கள் மீதான, இயற்கைமீதான, மேற்கு அல்லாத பிற கலாச்சாரங்கள் மீதான அடக்கு முறைக்கு பதிலளிக்கும் முகமாகவே பெண்ணிலைவாதக் கொள்கையின் மீட்டெடுப்பு உருவாகியது. இது சூழலியல் மீட்டெடுப்பிற்காக, இயற்கையின் விடுதலைக்காக, பெண்ணின விடுதலைக்காக இத்தகைய சூழலில் மாட்டிக்கொண்டு மனிதத்தன்மையே இழந்துவிட்ட ஆணினத்தின் விடுதலைக்காக இது குரல்கொடுக்கிறது. ஆகவே விடுதலை என்பது காலனி ஆதிக்கம் செய்யப்பட்டவர்களின் முனையில் இருந்து தொடங்கி, ஆதிக்கம்
-35

Page 22
செய்பவர்களின் இடத்தை நோக்கி போகவேண்டும். காந்தி அவரது வாழ்க்கையின் ஊடாக வளர்தெடுத்த தத்துவும் கூறுவது போல் சுதந்திரம் என்பது பிரிக்கமுடியாதது; எனக்கு மட்டும்தான் - உனக்கு கிடையாது என்று; அடக்குபவனோடு சேர்ந்து அடக்கப்படுபவனுக்கும் அது வேண்டும்தான்.
பெண்ணிலைவாதக் கொள்கையின் மீட்டெடுப்பு, இயற்கை, பெண்மற்றும் ஆண் ஆகியவர்களின் முழுப்படைப்பாற்றல் வடிவத்தோடு கூடிய ஒன்றாகும். இயற்கையை பொறுத்தவரை அது உயிரோட்டமுடையது என்று அது கருதுகிறது. பெண்களைப் பொறுத்தவரை உற்பத்தியாளர்களாகவும் செயலூக்கம் உடையவர்களாகவும் அவர்களை அது கருதுகிறது. கடைசியாக, ஆண்களிடம் வாழ்க்கையை அழிப்பதற்காக அல்லாமல் அதை உருவாக்குவதற்கான செயல் திறனுடைய ஒரு மாற்றத்தை அது எதிர்பார்க்கிறது.
வந்தன சிவா
மேத்கத்தைய தொழில்நட்பம் பற்றிய கர்மையானதும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதுமான விமர்சனங்களை முன்வைப்பவரும்; இந்தியாவின் மிகமுக்கியமான சிந்தனையாளருள் ஒருவருமாவார். சுற்றுச் சூழல் பற்றிய நடவடிக்கைகள், எழுத்துக்களால் தமிழில் அறியப்பட்டவர் ஆ. பத்தில் விஞ்ஞானியாகவும், எழுத்தாளராகவும், ஆசிரியராகவும் ஆறியப்பட்டார்.ஆனால் அண்மைக் காலங்களில் பாரம்பரியப் பண்பாடு சுதேசியத் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தம் நோக்குடன் பல்வேறு தளங்களிலம் ஓய்வொழிச்சலின்றி இயங்கி வரும் அதேவேளை மேற்கத்தைய விஞ்ஞான மரபையும் ஆதன் ஆய்வுகளிலிருந்து முகிழ்க்கும் தொழில்நட்பத்தையும் கடுமையாக விமர்சிப்பவர். மேற்கத்தைய விஞ்ஞானம் தனது நல்லெதிர்காலம் பற்றிய தற்பெருமை கொண்டதும்; தன்னாதிக்க முடையதென்ற சாரம்பரிய அறிவையும்,தொழில்நட்பத்தையும் குறம்பார்வை காரனாக நிராகரிப்பவை என்றும் குற்றம் சுமத்துபவர்.
மேற்கால் திணிக்கப்பட்ட“சிந்தனையின் ஒற்றைப்பண்பாட்டிற்கு mortre of the miர் மாற்றாக, மேற்கிண் செல்வாக்கால் அடிமைப்படுத்தப்பட்ட அறிவை எழுச்சி கொள்ளச் செய்வதடண், மனித நிலைமைகளை கீழ்நிலைப்படுத்துவதும், மோசறாக்குவதமான தொழில்நட்பங்களை நிராகரிப்தற்கும் அழைப்பு விடுப்பவர்.
ஆதிக்க நிலையிலுள்ள அறிவானது பொருளியவாதத்துடன் இணைந்துள் எாறையால், அது மனிதத்தேவைகளுடன் உறவற்றதாக இருக்கிறது. இயற்கையையும், பிரபஞ்சத்தையும் அறிய விளையும் பாதைகளின் பல்வகைக் தண்மைக்கு அது இடமளிப்பதாக இல்லை என்றும் இவர் கூறுகிறார். X 8:
பூவுலகின் தணர்ார்களால் மொழிபெயர்க்கப்பட்ட உயிரோடு உலாவ
இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றச் சூழலம் என்ற
புத்தகத்திலிருந்த இப்பகுதி மறுபிரசுரம் செய்
 
 
 
 
 
 
 

பிரவு வேளை
என் மனம்
ஒரு முறை
உனக்காக
அழுத்துக் கொள்ளும்,
Supff!
ഉഗ്രഖ്ടണിങ്ങ്
வேலிகளால்
உனக்கும் எனக்கும்
என்ன.
பிரிவு வேளை!
நேசக் சக்திகளின்
குண்டு வீச்சுப் போல்.
ஒரு சங்கதி
சகோதரி
Θτιό Θ60τηΕιάδ6ή
பிரிந்து போன போது
நாமும் பிரிவதாய்
பிரிந்து போனோம்.
6τ6δή
கண்களைத் துடைத்துக் கொள்கிறேன்
அந்தக் கண்ணிர் கூட
உனக்காகத் தான்.
ஆம்.
மனித மனங்கள்
மண்ணுக்காய்
மதத்திற்காய்
மாரடிக்கின்றன
நாமென்ன செய்தோம்.
பொறுத்துக் கொள்
போர் முழயட்டும்.
செல்வி.பிலிசியா மியூரின்
-37

Page 23
கடைசிநேரம்
வமளனத்தின் அடியில் மானுட ஆளுமை விம்மலுற தன்னுயிரை குழக்கப் போகின்றமனிதனை, உயிரைக் குழக்கும் துப்பாக்கியை unfpnUiConfuŮ
பார்த்தபடி நின்றான் அவன்.
ஊரின்குறுக்குத் தெருக்களும் பழகிய முகங்களும் பச்சை மரங்களும் மேடும் குழியும் போக இடம் தரவில்லை மீதமுள்ள வாழ்க்கை சமுத்திரம் போல் விரிவுகொள்ள
அவன் போகாத இடங்கள் Guang Gudaidassif அடையாத இலக்குகள் வகாடுக்காத முத்தங்கள் ஆயிற்று
வநஞ்செதிரே பிரும்மார்ைடமாய் நீண்டு விட்டது குழல் துப்பாக்கி வாழ்வின் இறுதி நேரம் விபாங்கிவழிய அவன் பேசி முழப்பதற்குள் தன்னைப் புரிய வைப்பதற்குள் தீர்ந்தது வழ
காக்கைகள் பறக்க - அவன் அநாதையாய் உயிரற்று நடுத்தெருவில் உறங்குகிறான்.
كرويقيمثله عن ثرى -

மட்டக்களப்பு பிரதேசப் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும்.
மீன்பாடும் தேன் நாடாம் மட்டுமாநகர் ஈழத்தின் புகழ்மிகு பிரதேசங் களில் ஒன்றே என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை எனலாம். இது எல்லைகளாக தெற்கே துறைநீலாவணையினையும், வடக்கே ஓட்டமாவடியினையும் கொண்டமைந் துள்ளது. இங்கு தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் என மூவின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களையும் இதேபோல் இனரீதியாக வகைப்படுத்தலாம்.
இந்தப் பின்னணியில் மட்டக்களப்புப் பிரதேசப் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுள் ஒன்றான “வெளிநாட்டு வேலைவாய்ப்பும் பெண்களும்” என்பதை நோக்கலாம்.
தொழில் என்ற ரீதியில் ஏன் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மகளிர் விரும்புகிறார்கள் என நோக்கும் போது, அவர்கள் உள்நாட்டில் அனுபவிக் கின்ற பிரச்சனைகளே மூலகாரணமாய் அமைகின்றது என்பதை நாம் அனுபவ ரீதியாகக் காண்கின்றோம்.
இவ்விதத்தில் வறுமை, குடும்பச்சுமை, சீதனப் பிரச்சனை, கணவனை யிழந்த பெண்களின் அவலநிலை, வேலைவாய்ப்பின்மை, உள்நாட்டு யுத்தம், பிறரில் தங்கி வாழ விரும்பாமை, சமூகத்தில் மேன்மையான அந்தஸ்து கருதல், குடும்பத்தின் பிற அங்கத்தவர்களால் வெளிநாடு செல்ல நிர்ப்பந்திக்கப்படல், ஆணாதிக்கம் போன்ற பலதரப்பட்ட பிரச்சனைகளைக் குறிப்பிடலாம்.
மேற்கூறிய காரணிகளுள் முக்கியமானது வறுமை ஆகும். எமது பெண்கள் வறுமை என்ற கொடிய அரக்கனின் கைக்குள் அகப்பட்டு சிக்கித் தவிப்பது தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சனையாகி விட்டதெனலாம். குடும்பம் என்ற சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள பெண் வறுமையின் நிமித்தம் தாழ்வுச் சிக்கல்களிற்குட்படுகிறாள். வாழ்க்கைச்செலவு அவளால் தவிர்க்க முடியாத பெரும் சுமையாகி விடுகிறது. குடும்பப் பொறுப்பற்ற கணவனுள்ள அல்லது கணவனை யிழந்த பெண்களின் நிலை இவ்வகையில் மிகவும் மேசமானது. இத்தகைய நிலையில் தான் அவள் தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நோக்கோடும் சமூகஅந்தஸ்து கருதியும் வெளிநாடு செல்ல வேண்டி ஏற்படுகிறது.
இதே ரீதியிலேயே உள்நாட்டு யுத்தம் என்ற காரணியையும் எடுத்துக்
கொள்ளலாம். உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக கணவனை இழந்த இளம்
பெண்கள் சகோதரனை இழந்த பெண்கள், புதல்வனை இழந்த அன்னையர்கள் -39

Page 24
அத்துடன் உடமைகளையும் இழந்து அநாதரவாகிப் போன அவலநிலையைக் காண்கிறோம். இதனால் ஏற்படும் வறுமை, துயரம் என்பவை ஒரு பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி நகரவைக்கிறது.
- அத்துடன், சீதனப் பிரச்சனை என்பதும் எமது பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான பிரச்சனையாகிறது. பெண்களின் சீதனத்தில் முதலீட்டை உருவாக்கிக் கொள்ளும் ஆணாதிக்க கொள்கையினுாடாக விரக்தியடையும் பெண்கள், தமது அல்லது தமது மகளின் வாழ்விற்காக மூலதனம் தேடும் நோக்கத்துடன் வெளிநாடு செல்கின்றனர்.
மேலும் ஆண் மேலாதிக்கம் என்பதும் ஓர் பெண்ணை தொழில்நாடி வெளிநாடு செல்ல வழிவகுக்கின்றது. பல குடும்பங்களில் ஆண்கள், பெண்ணை பலவந்தமாக வெளிநாடுகளிற்கு அனுப்புவதும் அவளது வருமானத்தை எதிர்பார்த்து அவன் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டும்ன்றி குடிபோதைக்கு அடிமையான கணவனின் அடக்குமுறை அராஜகத்தை தொடர்ந்து சகிக்க முடியாத எத்தனையோ பெண்களும், மனநிம்மதிக்காகவும் குடும்ப பொருளாதார நிலை கருதியும் வெளிநாடு செல்வதைக் காணலாம்.
இவ்வாறு தொழில்வாய்ப்புக் கருதி வெளிநாடு செல்கின்ற பெண்கள் பலதரப்பட்ட பிரச்சனைகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும எதிர் நோக்குகின்றனர்.
தொழிற்பயிற்சியோ, தூரபிரதேசப் பிரயாண முன் அனுபவங்களோ இல்லாததால் பிரயாண முகவர்களிடம் பணத்தை இழப்பது, பாலியல் வன்முறை என்பவற்றை எதிர்நோக்குகின்றனர். வேலைசெய்யும் இடங்களிலும் போதிய சம்பளமின்மை, அதிக வேலைப்பழு, தமது வீட்டுநிலை பற்றி அறியமுடியாத நிலை, பிரிவுத்துயர் என்பவற்றுடன், வீட்டு எஜமானர்களின் சொல்லொண்ணாக் கொடுமைகள் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். குறிப்பாக அடித்தல், கொதிஎண்ணெய் ஊற்றல், பாலியல் வன்முறை என்பவற்றைக் குறிப்பிடலாம்.
அத்துடன் உள்நாட்டிலு,அவளால் அனுப்பப்பட்ட பணம் கணவனால் அல்லது உறவினரால் ஊதாரித்தனமாகச் செலவிடப்படல், கணவன் வேறு மணமுடித்தல், பிள்ளைகள் கவனிப்பாரற்றலைதல் என்பவற்றால் வாழ்க்கை சிதைவுற்றுப் பாதிப்டைகிறாள்.
இவ்வாறு மேலே குறிப்பிடப்பட்ட பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தும் மட்டக்களப்பு பிரதேசப் பெண்கள், ஏனைய பிரதேசப் பெண்களைப் போன்றே பிரச்சனைகளை உணர்ந்தும் உணராதவர்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடிச் செல்வது தவிர்க்க முடியாததாகி உள்ளது.
மாரதி, வாணி வினித்தா, அருட்செல்வி
–40

ரோஜா என்பத முள்ளா பூவா?
6U60660. உறவுக்குள் அநா
نرسمہ سہہ کسی سسیسپیہ
உணர் ? உரிமைகளும் ഉ_ങ്ങിങ്ങഥമബ്രb அடுத்தவர் கண் சிறையிடப்பட்
*豹 ருமண ஒ: 35
sy 6. 数 தத gp?g 3.
ழிப் *лт60тфт
கல்ய னக் கப்பல்* a கறபனையால் பாய
இன்று, ! 2 CpG-665UUUUTU. மூன்று முழச்சரி முந்தானைப்ப BiSsT
முன் வநற்றிழ் பெர்ட்டா 、| 卤梦
இன்று நீ ."、 டியப்பட்டதா? முடக்கப்பட்டாய் . f ZYX
இவ்வளவுத چص سسچ திருத்த ஒயாத தீர்ப்புகளும் இன்னும் ị r அவிழ்திழ்ழிதழ்டிச்சுக்களும் எண்ணவும் முழுது g
டிஎன்றாவது ஒரு நாள். உறவுகளின் வரீதீன்தக்ள்ர் 68( بھگوتم ?t۔ ۔ ۔۔۔ مجھ பின்னப் பட்டாய் ” (சித்த்மின்றிச் சுத்தமாக விலகும்) நாடு விட்டுக் கலைக்கப்பட்ட பரதேசி உன் நிலை
~விஜயலட்சுமி~
-41

Page 25
மட்டக்களப்பு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள்
(0.01.98 - 13.02.98)
ansió — திகதி 250198
பாவிபல்வல்லுறவு - பெண் வயது 12 மாவடிப்பள்ளி சம்மாந்துறை. சந்தேகநபர் 40 வயதான பாட்டனார்.
சந்தேக நபர் தற்போது விசாரணைக்காக பொலில் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம்- 1 திகதி 020298
பாலியல்வல்லுறவு- பெண் வயது 13.மண்டூர்.பாவமுனை சந்தேக நபர் 19 வயதான அயலவர் குற்றவாளி பாவமுனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பவம் - I திகதி 220198.
பாவிபல்துண்புறுத்தல் - பெண். வயது 16,மட்டக்களப்பு நகர் சந்தேக நபர் பொலில்
vitjasfib -IV ging: 22O198.
கொவையாஇல்லையா என்று தீர்மானிக்கப்படவில்லை.
பெண் வயது 19மட்டக்களப்பு நகர். காரணம்- திருமணத்தின் முன்னரான உறவுமூலம் குழந்தை உண்டானதால் உறவினரால் இரகசியமாக மருத்துவ சுகாதார முறைகளிற்கப்பாற்பட்ட வகையில் குழந்தை பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள். கிராமிய மருத்துவமாது
அவரின் மகன்
பெண்ணின்தாய் (இன்னமும் குற்றம் சாட்டப்படவில்லை) மருத்துவமாதுவின்திருமணமான மகனுடன் உறவு கொண்டதால் குழந்தை கிடைத்ததாகவும் குழந்தை இரகசியமாகப் பிறப்பிக்கப்பட்டு வேறு ஒருவரிடம் கையளிக்கப்பட்டதாகவும். இச்செயல் முறைகளினால் ஏற்பட்ட சுகவினத்தால் பெண் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
asiano -V fig2101.98
தற்கொலை- பெண். வயது 30மட்டக்களப்பு நகர் காரணம் கணவனின் துன்புறுத்தல்,வேறுபெண்ணுடனான தொடர்பு வீட்டுவளையில் தனது சேவையாய் தாக்கிட்டு இறந்துள்ளார். இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
aisai-VI திகதி290198
தற்கொலை முயற்சிபெண். வயது 24 வாழைச்சேனை காரணம் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தனது 3 பிள்ளைகளையும் வளர்க்க முடியாத பொருளாதாரக் கஷ்டம். இதனால் மனநிவை பாதிக்கப்பட்டு இருக்கிறார். மூட்டைப் பூச்சிகொல்வி அருந்திதற்கொலைசெய்ய முயன்றுள்ளார்.
தகவல் : விஜி -42

மீண்டும் ஒரு மரணம்
~விஜயலட்சுமி~
பாத்திரங்கள்
அன்னம் - இறந்த பெண் பூரணியின் தாய். அந்தோனி - இறந்த பெண் பூரணியின் தந்தை. BLLub I - அவ்வூர் கிராம மக்கள் நான்கு பேர். கூட்டம் II - புதிய நபர்கள் மூன்று பேர். நபர் 8 - வெள்ளை உடையுடன் வருபவர். நபர் 9 - வெள்ளை உடையுடன் வருபவருக்கு உதவியாக வருபவர்.
திரை விலகுகிறது.
அன்னம் தன் மகளின் இறப்பை எண்ணியபடி பூரணியின் குழந்தை அருகில் தலைவிரி கோலமாய் அமர்ந்துள்ளாள். ஓர் மூலையில் அந்தோனி அமர்ந்துள்ளான். திடீரென்று அன்னம் விசும்பத் தொடங்குகிறாள். அழுகை ஒலி வர வர அதிகரித்து தனக்குத் தானே பிதற்றத் தொடங்குகிறாள். (அழுகை ஒலியுடன் சோக இசை அதிகரிக்கின்றது)
அன்னம்: ஐயோ! இன்டைக்கு என்ர மகள் செத்துத்தாளே அப்பா, என்ர மகளே, உனக்கு ஏனம்மா இந்த கெதி வந்திச்சி, ஆர் முடிச்சது உன்ர விதிய, என்ட தெய்வமே நீ சாக நானும் ஒரு காரணமாகித்தனே, ஐயோ. நான் கொலகாரி. நான். கொலகாரி. (உருண்டு பிரண்டு அழுது மகளிற்கு அருகில் போய் இருக்கிறாள்)
(அந்தோணி எழுந்து அன்னம் அருகில் வந்து அமைதியாக அவளது தலையில் கை வைக்கிறான். அவனும் அழுகின்றான். விளக்கு அணைந்துள்ளது. அணைந்த விளக்கைப் பார்த்து.)
அந்தோணி ம். நம்மட இந்த விளக்கும் நூந்துத்து. எல்லாப் பக்கமும் இருட்டாக் கிடக்கு. பார் அன்னம். நாம ரெண்டு பேருந்தான் இருட்டில கிடக்கணும் எண்டு விதி. ஆனா, நம்மட பூரணியின்ர இந்த பிஞ்சு என்ன பாவம் செஞ்சது. அதுக்காக எண்டாலும் இந்த விளக்க கொழுத்தன். (அந்தோணி யோசித்து. யோசித்து உலவியபடி கூறுகிறான்)
-43

Page 26
அன்னம்: ஐயோ. நான் என்ன செய்வன், என்ர மகள ஒழுங்கா ஒருத்தனுக்கு கட்டிக் கொடுக்கனும் என்டுதானே ஆசப்பட்டன். அவள ஒண்டுமே தெரியாம. ஒரு இடமும் விடாம பள்ளிக்குகூட அனுப்பாம. வீட்டுக் குள்ள பொத்தி பொத்தி வளத்தனே. என்ர ஐயோ. அந்தப் பாழாப் போனவன் வந்து எண்ட புள்ளயிட மனசக் கெடுத்தானே. அவளுக்கு ஒரு பிள்ளையையும் கொடுத்து சாகடிச்சானே. அவனாலதானே எண்ட மகள் செத்தாள் ( பின்னணி இசை உரத்து ஒலிக்க ஆவேசத்துடன் எழுந்து கூறுகிறாள்.) அவன்தான். அவன்தான் எல்லாத்துக்கும் காரணம் ஓம் அவன்தான். அவனேதா. ண்
அதேனி ஐயோ, ஆண்டவரே. எங்கள இப்படி விசர்க்கணக்கா கத்த வைச்சிப் போட்டியே அப்பா. (எழுந்து மார்பில் அடித்தபடி உரக்க) இவள் சாக நாங்க மட்டுமா காரணம்? நாங்க மட்டுமா குத்தவாளிகள்? என் பிதாவே. ஏ. (அந்தோனி பேசும் போது இசை உரத்தும் பேச்சு நின்றவுடன் எங்கும் நிசப்தம் - 5 செக்கன்)
(திடீரென்று எங்கும் பலத்த சிரிப்பொலி கேட்கிறது. அச்சிரிப்பொலி சிறு இரைச்சலாக மாறி அவர்களை நெருக்குகிறது. தற்போது அன்னம், அந்தோணி இவர்களைச் சுற்றிப் பலமாகச் சிரித்தபடி வந்த கூட்டம் அரை வட்ட வடிவில் வளைக்கின்றது. வருபவர்கள் கையில் ஒவ்வொரு புத்தகம் உள்ளது.)
அன்னமும் அந்தோணியும் இக்கூட்டத்தைப் பார்த்து ஒதுங்குகையில் அத்தோணி இடறி குப்புற விழுகிறான்.கூட்டத்தினர் தங்கள் கையில் உள்ள புத்தகங்களை விழுந்த அந்தோணியின் முதுகில் வைக்க அவன் எழ முடியாமல் முனகுகிறான்.
அன்னமும் அந்தோணியும் பயந்தபடி அனைவரையும் பார்க்கின்றனர்.
அன்னம்: நீங்க . நீ. ங்க பென்சன் வாங்கிற ரீச்சா வடிவக்கா. இது. எங்கட பக்கத்து வீட்டு தேவாக்கா. நீங்க கடைக்கார ராமண்ண, இது ஆடு வளக்கிற செல்லக்கா, வட்டிக்கு குடுக்கிற செட்டியண்ண. நீங்க புதுசா குடிவந்திருக்கிற வதனாக்கா. இது. இது. ஐயோ. உங்க எல்லாரயும் எனக்குத் தெரியுமே. இப்ப ஏன் எங்கள ஒரு மாதிரியாப் பாக்கிறியள்(அழுகிறாள்) உங்கட இந்தப் பார்வைக்கும் சிரிப்புக்கும் நாங்க பயந்த படியாதானே என்ர மகள் செத்துப் போனாள். கடவுளே. என்ர வயிறு பத்துதே. ஏ.
(அரை வட்ட வடிவில் கூட்டத்தில் நின்ற ஒருவர் ஆவேசமாக முன்னால் வந்து. (அன்னம் பயந்து ஒதுங்குகிறாள்.)
-44

கூட்டநபர்1 நிறுத்து என்ன் சொன்னாய், எங்களாலா உன் மகள் இறந்தாள்? செய்வதையும் செய்துவிட்டு எங்கள் மேலா பழி போடுகின்றாய்? கெட்டிக்காறி. ஹா. ஹா. ஹா. (சிரிப்புடன் உலவுகிறார்)
கூட்டநபர்2: (முன்னால் வந்து) அன்னம், இங்கே வா. ம். என்ன சொன்னாய், பூரணியின் இறப்பிற்கு முதலில் உன்னைச் சொன்னாய்.
கூட்டநபர்3 பிறகு அவனைச் சொன்னாய்
கூட்டநபர்4: இப்போ. எங்களைச் சொல்கிறாயா? சே. நீ ஒரு நாடகக்காரி.
(தற்போது திரைக்கு வெளியில் இருந்து புதிதாக மூவர் விரைந்து வருகின்றனர். கையில் புத்தகம் உள்ளது. இருந்த கூட்ட நபர்களை விலக்கிக் கொண்டு. புதிதாக வந்த ) நபர் 1: விடுங்கள். விடுங்கள. எங்களை, அவர்களிடம் நியாயம் நாங்கள் கேட்கிறோம். ம். (கம்பீரமாக) நாங்கள் இந்தப் புத்தகத்திலிருக்கும் கேள்விகளைக் கேட்கிறோம். இருவரும் பதில் சொல்லுங்கள் பார்ப்பம்.
(அன்னம் கைகட்டியபடி கூனிக்குறுகி நிற்கிறாள். அந்தோணி கீழே கிடந்தபடி பார்க்கிறான்)
புதியநபர்1 ம். பூரணி கர்ப்பமுற்ற காலத்தில் இருந்து யாருடன் இருந்தாள்?
அன்ன்ம்
ಸ್ಲಿ எங்களுடன் தான்
புதியநபர்2: யாரிடமாவது அவளது கர்ப்பத்தைப் பற்றிச் சொன்னீர்களா?
இருவரும் இல்லை (கூட்டம் பின்னால் சிரிக்கிறது)
புதியநபர்3; அவளை வைத்தியரிடம் அழைத்துச் சென்று ஒழுங்காகப்
பராமரித்தீர்களா?
இருவரும்: (ஒருவரை ஒருவர் பார்த்தபடி) இ.இ. ல்ல
கூட்டம்: கொடுமை. கொடுமை. (என்கிறது)
புதியநபர்1. சரிபோகட்டும். ம். குழந்தை பிறந்தபோது பூரணி யாருடன்
இருந்தாள்?
-45

Page 27
அத்தோனி:
எங்களோட
(பின்னல் இருந்து இழுத்து சொல்லல்) வருகிறார்கள் வழிக்கு,
ஆமாம். ஆமாம்.
கூட்டத்தை நோக்கி) அமைதி. அமைதி. உங்கள் மகள் இறந்த போது யாருடன் இருந்தாள்
6ršis6aR- L
(பின்னல்) கொலை. கொலை.
இப்பொழுது பாருங்கள், இதோ இன்று இறந்து போன உங்கள் மகள் இறக்கும் வரை இருந்தது உங்களுடன். இவள் குழந்தை பிறந் படியால்தான் இறந்தாள். அதற்கு காரணம் அவன்.
இப்போ எப்படி எங்கள் மேல் பழி போடுவீர்கள்? குற்றவாளிகள் நீங்களே. நீங்களேதான்.
தேவாக்கா. செல்லக்கா. ராமுஅண்ண. இவ்வளவு நாளும் எங்கள கத்தி எங்களோட நல்லா இருந்த நீங்களா இன்டைக்கு இப்படி சொல்லுறியள். ஐயோ நான். என்ன செய்வன்.எனக்கு யார் இருக்கா கடவுளே.ஏ.
ஐயோ. அப்ப நாங்களா கொல செய்தம் ஆ. (நிலத்தில் அவன் தலை சரிந்து அசைவற்று போகிறான்)
(மீள்டும் பின்னால் இருக்கும் நான்கு பேரில் ஒருவர் முன்னால் வந்து)
வதன:
அன்னம் இங்க பார், நாங்க உங்களைச் சுத்தி இருக்கிற சனங்கள்தான். இண்ைடைக்கு நீங்க பிழ செய்து போட்டியள். நான் வதனாக்காதான். இருந்தாலும்(கம்பீரமா) நீங்க குற்றவாளிகள் என்பதால இன்று நாங்க எல்லோரும் நீதிவான்கள் சித்துக் கொண்டே. ஆமா. நானும் ஒரு நீதிவாள்.
ஆமா நாம எல்லோரும் இவங்களுக்கு இனி நீதவான்கள் தான். (கூட்டம் கம்பீரமாக புன்னகையுடன் உலவுகிறார்கள்) இவர்கள் உலவும்போது
-46

திடீரென வித்தியாசமான ஓர் இசை கேட்கிறது. மேடைக்கு வெள்ளை உடையுடனும், வெள்ளைக் கொடியுடனும் ஒருவர் அமைதியாக வருகிறார். அவர் பின்னால் அவருக்கு (வெள்ளை உடைக்காரருக்கு) உதவியாக ஒரு நபர் வருகிறார் (பின்னால் வருபவர்கையில் வெள்ளைக் கொடியும் ஓர் புத்தகமும் உள்ளது. இவர் தன் கையில் இருக்கும் கொடியை அமைதியாக நாட்டுகிறார். வெள்ளை உடைக்காரர் அந்தோணி முதுகில் இருக்கும் புத்தகங்களில் ஒன்றை எடுத்து கீழே வைக்கிறார். அந்தோணியிடம் சிறிது அசைவு ஏற்படுகிறது. கூட்டம் அசைவற்று வரிசையாக அவதானிக்கிறது)
Gentib: நிறுத்து (மெல்லிய இசை நிற்கிறது)
கூட்டநபர்1: யார் நீ? எதற்காக எங்கள் தீர்ப்புப் புத்தகத்தை எடுக்கின்றாய்?
வெள்உடை:நான் யாரா? (சிரிக்கிறார்) நீங்கள் கேட்கத்தவறிய கேள்விகள் சிலவற்றை
கேட்க வந்திருப்பவள்.
கூட்டநபர்2: எங்கே உம் கேள்விகளை கேளும் பார்ப்பம்.
வெள்ளை உடையுடன் வந்திருப்பவர் ஒவ்வொரு கேள்வியாக கேட்கும்போது கூட வந்திருப்பவர் புத்தகத் தாளை திருப்பிக் கொடுத்துக் கொண்டே கேள்விகளை தலை அசைத்து ஆமோதிக்கின்றார்.
வெள்உடை (அன்னத்தைப் பார்த்து) உன் மகள் கர்ப்பமுற்ற ஆரம்ப காலத்திலேயே
உன்னிடம் சொன்னாளா?
9667 b: இல். ல
வெ.உடை: ஏன் சொல்லவில்லை?
அன்னம்: எப்படிச் சொல்லுவாள் அவள்? தன்ன என்ர கையாலயே அடிச்சி கொண்டு
போட்டுருவன் எண்டு அவளுக்கு நல்லா தெரியுமே. கடவுளே.
வெ.உடை. நீ ஏன் அவளை துன்புறுத்த நினைத்திருப்பாய்?
அன்னம்: இது என்ன கேள்வி ஐயோ! கலியாணம் கட்ட முந்தி புள்ளத் தாச்சியாகினா எப்படி நான் சனங்களின்ர முகத்தில முளிப்பன்? சனங்கள் என்ன சாகுமட்டும் குத்திக் காட்டுங்களே. கேவலமான குடும்பம் எண்டுங்களே. மகளப்பத்தி கண்ட மாதிரி கதைக்குங்களே, பிறகு எப்படி அவளுக்கு கலியானம் கட்டி வைப்பண்? கலியாணம் கட்டாட்டியும் துரத்தி குாத்திக் கதைக்குங்களே.ஆ. இந்த சனங்களின்ர கதைக்கெல்லாம் பயந்ததால தானே என்ர மகளுக்கு இந்த கதி (அழுகிறாள்)
-47

Page 28
Gosp. 6oo :
(கூட்டத்தைப் பார்த்து) இப்போ சொல்லுங்க, இவளின்ர மகள் இன்றைக்கு உயிரோட இருந்து ஒரு பிள்ளையையும் பெற்றிருந்தால் நீங்க எல்லோரும் என்ன பண்ணியிருப்பீங்க? இவள உங்களோட சேர்த்திருப்பீங்களா? ம். சொல்லுங்க பூரணிக்கு நியாயம் தேடிக் கொடுத்திருப்பீங்களா? இவள் மகள் மாதிரி பல பூரணிகள் புதை குழிக்குப் போகாம இருக்க வளரும் சந்ததிக்கு அறிவுரை வழங்கி இருப்பிங்களா? சொல்லுங்க. சொல்லுங்க.
(அன்னம்மமா எழுத்து நிற்கிறாள். கூட்டத்தினர் தலை குனிந்தபடி ஒட
ற்சிக்கின்றனர்)
GaNs2, GaoL:
நில்லுங்கள் (அன்னத்தைப் பார்க்கிறார்.)
உன் மகளை உலகம் தெரியாமல் வளர்த்தது யார்? சிறுவயதில் இருந்தே நல்லது கெட்டது தெரியாம, சுதந்திரமே இல்லாம வளர்த்தது யார்? இன்று ஒரு கதை நாளை ஒரு கதை பேகம் சனங்களின்ர வார்த்தைக்குப் பயந்து கோழையானது யார்? ஊரின் பேச்சுக்கு மதிப்பளித்த நீ, மகளின் உணர்வுக்கு மதிப்பவியாம போனது ஏன்? வயிற்றில் வளரும் கருவுக்கு காரணமானவனை கூட சொல்லமுடியாம அவளது பேச்சு சுதந்திரத்தை பறித்தது யார்? (அன்னம் உட்பட அனைவரையும் பார்க்கிறார்)ம்.எங்கே உங்கள் பதில்கள். பேகங்கள். பேசுங்கள்.
(பின் ஒவ்வொருவராய்ச் சென்று அசைத்துப் பார்க்கிறார். யாரும்
Ghen.so_GDL:
அசையவில்லை. சத்தம் போட்டுச் சிரிக்கிறார்.)
இது ஏன்? . யார் போட்ட வட்டம் இது?.
உறங்குபவர்களை எழுப்யலாம். ஆனால் உறங்குவது போல நடிக்கும் உங்களை?
(பார்வையாளரைச் சுட்டிக் காட்டியபடி மெளனமாக அசைவற்று நிற்கிறார்.
மெல்லிய இசை கேட்டுக் கொண்டிருக்கிறது)
(திரை விழுகிறது)
-48
 

குடும்ப வருமானத்தின் முழுப்பிரதிநிதிகளாக மாறிவரும் பெண்கள் - ஓர் களஆய்வு ~ பத்மா ~
நவீன காலத்தில் புதுமைகள் புகுவது மரபு.தேவை, நோக்கு என்ற பல அம்சங்களினால் முன்னைய கூற்றுக்கள் மறுதலிக்கப்பட வேண்டி இருக்கின்றது. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்று கூறியவர் "வல்லவருக்கு புல்லும் ஆயுதம்" என்று கூறியிருத்தல் நன்று. இது தான் இங்கு பொருந்தாது காணப்படுகின்றது. இதனால்தான்வல்லவிக்கு கல்லும் புல்லும் யாவும் ஆயுதம்' என்று இன்னொரு பரிணாமத்தைப் பெறுகின்றது.
பண்டைக் காலத்தில் இருந்து பெண்கள் சகல துறைகளிலும் விற்பன்னிகளாக விளங்குவது கண்கூடு. ஜனாதிபதி வாழ்வு தொடங்கி சிறு விற்பனையாளர் வாழ்வு வரை பெண்களது தொழில்கள், சேவைகள் அமைந்துள்ளன. அன்று விவசாய வாழ்வுடன் தொடங்கிய தொழில் முயற்சிகள் இன்று பரந்து பல்கிப் பெருகியுள்ளன. ஒவ்வொரு பெண்ணும் “தனக்குத் தேவை', "தன் குடும்பத்திற்குத் தேவை”, தன் சமூகத்திற்குத் தேவை” என்று பலதரப்பட்ட வாழ்வினை, தொழிலினை, சேவையினை வழங்கி வருகின்றனர்.
பெரும்பாலான பெண்கள் தமது குடும்பத்திற்காக வேலை செய்வதனை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் இங்கு சிறு வியாபாரம் செய்யும் பெண்களை சுயதொழில் செய்யும் பெண்கள் என்று கூறுதல் பொருந்தும். இதனடிப்படையில் மட்டக்களப்பு பொதுச் சந்தையில் மேற்கொண்ட கள ஆய்வின் போது இனம் காணப்பட்ட பெண்களது சிறு விற்பனை கவனத்திற்குரியது.
நகர வாழ்வானது ஆடம்பரமான வாழ்வுக்கு வழிசமைக்கும்
அதேவேளை அத்தியாவசியமான தேவைகளுக்கும் இடமளிக்கின்றது என்பதை
மட்டக்களப்பு நகரத்தின் பொதுச் சந்தையானது சிறு விற்பனையாளர்களுக்கு
கொடுத்துள்ள முக்கியத்துவத்தினைக் கொண்டு அறியலாம். எவ்வாறு குடிசைக்
கைத்தொழிலானது பொருளாதாரத்தில் கைத்தொழில் துறையில் முக்கியத்துவம் -س49

Page 29
பெறுகின்றதோ, அதே போன்று சந்தைப் பொருளாதார வருமான வழிகளில் சிறு விற்பனையும் முக்கியம்பெறுகின்றது,
மட்டக்களப்புப் பொதுச்சந்தை நடவடிக்கையில் ஐம்பதுக்கும் ܫ மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமது சிறுவிற்பனைத் தொழிலை ஐந்து தொடக்கம், இருபது வருடங்களாகச் செய்து வருவதைக் காணலாம். தமது அடிப்படைத் தேவைகளை இதனுடாக பூர்த்தி செய்வதைனையும், தமது பிள்ளைகளது கல்வியை மேம்படுத்தவும், அவர்களைப் புத்தி ஜீவிகளாக்கவும், கணவனது வருமானம் போதாத நிலையில் வீட்டின் வருமானத்தில் பங்கெடுக்கும் நோக்குடனும் குடிகாரக் கணவனது அல்லது நோய்வாய்பட்ட கணவனது இரண்டு பட்ட நிலைகளாலும், கணவனது இறப்பு அதனால் அவளுக்கு வந்த குடும்பச் சுமை, கிராமத்தைவிட நகரச்சந்தையில் கூடிய இலாபம் கிடைப்பது முதலிய இன்னோரன்ன காரணங்களாலும் இங்கு பெண்கள் சிறு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இவர்களின் விற்பனைப் பொருட்களை கீரை, கருவேப்பிலை, கூனி, கருவாடு, வெற்றிலை, புகையிலை, அரிசி, மரக்கறி, என்று வரையறுக்கலாம். “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற பாரதி கூற்றுக்கு இணங்க இவர்கள் எதுவித பால் உணர்வுப் பேதங்களும் அற்று வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
பெண்கள் தூர இடங்களுக்குச் சென்று அரசாங்கத் தொழிலைச் செய்வதை விரும்பாத குடும்பத்தினர், சமூகத்தினர் மத்தியில் இருந்து சிலர் தமது விற்பனைப் பொருட்களை தாமே கொள்வனவு செய்து பல இராணுவச் சாவடிகளில் சோதனைக்கு உட்பட்டு பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வருகின்றனர். சித்தாண்டி,செங்கலடி,ஊறணி, கல்முனை, புதுக்குடியிருப்பு, களுதாவளை முதலிய இடங்களில் இருந்து தமது பொருட்களுடன் அதிகாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு எட்டுமணிக்குச் சந்தைக்கு வந்து தாமே பொருட்களைப் பரப்பி அதற்குரிய விலையை நிச்சயித்து தமது விற்பனையை நடத்துகின்றார்கள். சந்தையில் ஒரு பொருளுக்குரிய அன்றைய விலையை குறித்த பொருளுக்குரிய கேள்வி, நிரம்பலை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் திறன் பாராட்டுதற்குரியது.
இதிற் குறிப்பிட வேண்டிய அம்சம் பெண்களிடம் முதலீடு செய்வதற்குப் பணம் இல்லாமையாகும். வேறு நபரிடம் விற்பனைக்குரிய மரக்கறி களைக் கடனாகப்பெற்று, அதனை விற்பனை செய்து கடனைக் கொடுத்து, மிகுதியையே பெறுகின்றனர். ஒரு நபரிடம்காசு கொடுக்காது பொருட்களைப் பெறுவதை அவர்கள் ஒரு உதவி எனவே கொள்கிறார்கள். பொருட்களைக் கடனாகக் கொடுப்பவர்கள் அதிக விலையிட்டுக் கொடுப்பதால் பெண்கள் அவற்றை -50

விற்பதன் மூலம் கிலோ ஒன்றுக்கு இரண்டு ரூபாவை மட்டுமே இலாபமாகப் பெறுகின்றனர். ஆண் தரகர்கள் குறைந்த விலையில் வாங்கிய பொருட்களை அதிக விலைக்கு கொடுத்தாலும் இந்தப் பெண்கள் அதனைச் சுரண்டலாக உணரவில்லை. "அந்த நல்ல மனுஷரால தான் குடும்பம் வாழுது” என்று கூறுகிறார்கள்.இந்நிலை மாற பெண்களுக்கெனச் சுயமான மூலதனம் இருந்தால் அவர்கள் இன்னும் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்துவிடுவார்கள் என்பது உறுதி.
இவர்களில் சிலர் கணவருடன் வந்தாலும் தனியே இருந்து தனது வருமானத்தை உயர்த்தும் தன்மையையும் கண்டுள்ளனர். இந்நிகழ்வு கணவனது வருமானத்தில் வாழ எண்ணாமை அதாவது தங்கி வாழ்வதை விரும்பாமையைக் காட்டுகிறது. அத்துடன் வருமானம், தொழில், தேவை என்பவற்றைத் தானே தீர்மானிக்கும் திறனை எடுத்துக் காட்டுகின்றது.
சில பெண்கள் தமது மேற்பார்வையில் கூலிக்கு ஆண்களை அமர்த்தி விற்பனை செய்வதையும் அவதானிக்க முடிந்தது. கூலியாள் வராது போனால் குறித்த பெண்ணே விற்பனை செய்வதாகவும் தகவல் கூறினார்கள். ஆதலால் இங்குள்ள பெரும்பாலான பெண்களுக்கு முகாமைத்துவம் செய்தல் சுய உற்பத்தி, சுய வருமான வழிகள் ஆகியவற்றை தமதாக்கிக் கொள்ளும் திறன்கள் வளர்ந்துள்ளன.
இங்கு குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் என்னவெனில் இங்குள்ள பெண்கள் தாம் விற்பனையாளர்கள் என்று எண்ணுகிறார்களேதவிர ஒரு போதும் பெண் என்று எண்ணாமையை அவதானிக்க முடிந்தது. சந்தைக்கு வருபவர்கள் யார், யாரோ முகம் தெரியாதோர், தெரிந்தோர் எனப் பலதரப்பட்டனர். இவர்கள் எல்லோரையும் எவ்வித பதட்டமோ, அச்சமோ, நாணமோ, இல்லாது கூவி அழைத்து தனது பொருளை விற்பனை செய்யும் போக்கை அவதானிக்க முடிந்தது. அன்று “அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமோ” என்று பாரதியார் பாடியதைப் படிக்காத போதிலும் பெண் என்றால் நாற்குணம் படைத்தவள் என்று கூறி நான்கு சுவருக்குள் அடைபட்டிருக்கும் முறைமையை உடைத்து தாமே தம்மை வழிநடத்தும் அவர்களது செயற்பாடு வருங்காலப் பெண் சமூகத்திற்கு ஒரு மைற்கல் எனலாம்.
பெண்ணைக் கேலி செய்தால் அவள் அடங்கி விடுவாள் என்று
இன்று வரை எண்ணும் ஆண்கள் உள்ள இந்நிலையில் நுகர்வோர் சிலர் (ஆண்)
“இவளிடம் சொன்ன விலைதான்” “ஏன் கொஞ்சம் குறைக்க மாட்டாயா?” என்று
எதிரிடையாக வினவ, சொன்னதைக் கொடு இல்லாது போனால் முன்நில்லாது
போய்விடுமற்றவர்கள் வரவேண்டும் எனத்துணிவுடன் தனது விற்பனை நோக்கிலிருந்து
மாறுபடாது தனது தொழிலை நடத்தும் திறனைச் சொல்லித்தான் ஆகவேண்டும். -51

Page 30
v சிறு விற்பனையாளராகிய இப்பெண்கள் சந்தையில் தாம் விற்பனை
செய்யும் இடத்தினை தாமே தெரிவு செய்பவர்களாக இருக்கின்றனர். அதற்குரிய நாட்கூலி 10 ரூபாவை அன்றைய தினமே மாநகர சபைக்கு செலுத்தி விடுகின்றனர். இவர்களது கூட்டுச் சேர்க்கை பற்றி அவர்களது வாய்ச்சொல்லின் மூலம் இனம் காணமுடியாவிட்டாலும், அவர்களது செயற்பாட்டின் மூலம் காணமுடிகின்றது. உதாரணமாக “ஒரு பெண்ணிடம் நிறுவைப்படி இருக்கவில்லை. அதனைப் பக்கத்திருந்த பெண்ணிடம் வேண்டி நிறுத்து விற்றதையும், தராசோ, நிறுவைப்படியோ இல்லாத ஒரு பெண் இரு பெண்களுக்கு நடுவில் இருந்து அவர்களின் உதவியுடன் விற்பனை செய்ததையும் அவதானிக்க முடிந்தது. இது மட்டுமல்ல சாப்பாட்டு நேரம், தேனிர் வேளைகளில் ஒருவரது வியாபாரத்தை மற்றவர் கவனிப்பதையும் காணலாம் மற்றும்படி எதுவிதமான சண்டைகளும், போட்டி, பொறாமை நிகழ்வுகளும் இதுவரை இடம் பெறவில்லை.
இவ்வாறாக சிறு விற்பனையில் ஈடுபடும் பெண்களில் அரைப்பங்கினர் வரையில் கணவனை இழந்தவர்களாக இருக்கின்றனர். வயது அடிப்படையில் பார்த்தால் 35 வயதிற்குட்பட்டவர்கள் சிலரே. மிகுதியானவர்கள் 45 வயதிற்கும் மேற்பட்டவர்களாகவே உள்ளனர். திருமணமாகி கணவருடன் இருப்பவர்கள் தமது தொழில், சமையல் இரண்டையும் தாமே கவனிப்பதாகக் கூறினர். வீட்டில் கணவன் இருந்தாலும், பிள்ளைகள் இருந்தால் அவர்களே சமையல் செய்வதாகக் கூறினர். பெண்களில் பலர் தூரஇடங்களில் இருந்து வருவதால் நேரத்துடனேயே வீடு திரும்புவது வழக்கம். இச் சந்தர்ப்பத்தில் சந்தைக்கு அண்மையில் இருக்கும் பெண்கள் தமது பொருட்களுக்கு விலையை கூட்டி விற்கும் செயற்பாட்டைக் கையாள்வதாகக் கூறினர். இச்செயற்பாடானது பெண்களது வியாபாரத்
தந்திரோயாயத்தைக் காட்டுகின்றது.
இவை யாவற்றையும் தாண்டி "நிச்சயமற்ற சந்தை நிலைமை” ஒன்று இங்கு நிலவுவது கவனத்திற்குரியது. எத்தனையோ இடர்களின் மத்தியிலும் தமது வருமானத்திற்காக விற்பனையாளராக இருக்கும் பெண்கள் கடந்த சில மாதங்களிற்கு முன் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்புக்கள், காயங்கள், மரணங்கள் எனப் பலவகைப்படும். எனினும் அவற்றை யெல்லாம் உதாசீனப்படுத்தி"சாவின் நிச்சயத்தன்மை உணர்ந்து" தமது தொழிலைச்
சிறுவிற்பனையாளராகிய இப்பெண்களின் உழைப்பு அவர்களது
பிள்ளைகள் பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களுக்குக் கல்வி கற்கச்
செல்லவும், ஏனைய அடிப்படைச் செலவுகளைப் பூர்த்தி செய்யவும் உதவுகின்றது. -52

அநேகமாக கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த மறுநாளே குடும்ப வருமானத்தின் முழுப் பிரதிநிதிகளாகி விட்டனர். குடிகாரக் கணவனது அல்லது நோயாளியான கணவனையுடைய பெரும்பாலான பெண்களும் குடும்ப வருமானத்தின் முழுப் பிரதிநிதிகளாக மாறியுள்ளனர். இவர்களைவிட்டால் குடும்பத்தில் கணவனுடன் சமமாக அல்லது மேலாக விற்பனையில் ஈடுபடும் பெண்கள் குடும்ப வருமானத்தில் கணவனைவிட ஒருபடி மேலான பிரதிநிதிகளாகவே இனம் காண முடிகின்றது.
இத்தகைய சேவை மனப்பாங்கு பொறுப்புக்கள் காரணமாக தம்மை தியாகிகளாக்கிச் செயற்படும் தொழிலாளர்களை விற்பனையாளர்களைப் பற்றி இதுவரை யாரும் சிந்திக்கவில்லை. ஏன் அவர்களது உற்பத்தியும் விற்பனையும் தலா வீத வருமானத்தில் வரவுசெலவு திட்டத்தில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்துவது கூட வெளிக் கொணரப்படவில்லை. அல்லது தெரிவிக்கப்படவில்லை. இவர்களது வருமானம் பற்றியும், முயற்சிகள் பற்றியும் இனி வரும் பொருளாதார சமூகம் சிந்திக்குமா?

Page 31
குமாரபுரப் பெண்கள் - சிறிவஸ்ளியம்மன்
பின்தங்கிய நிலையிலுள்ள பெண்கள் சகல விடயங்களிலும் ஆக்கபூர்வமாகச் சிந்திக்க,செயற்படக் கூடிய வல்லமையைப் பெறவும், அவர்களை பொருளாதார சுதந்திரமானவர்களாக ஆக்குவதன் மூலம் சமத்துவமான, சமாதான சமூகமொன்றை உருவாக்கும் முகமாகவும் நாம் சில கிராமங்களைத் தெரிவு செய்து நீண்டகால அடிப்படையில் வேலை செய்துவருகின்றோம். இவ்வகையில் குமாரபுர புன்னைச்சோலை கிராமத்தையும் தெரிவு செய்தமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மட்டக்களப்பு மருத்துவமனையூடாகக் கிடைத்த தகவல்களின்படி இக்கிராமத்திலுள்ள சில பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதே சமயம் சில பெண்கள் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்திற்கு சட்ட உதவி சம்பந்தமாகவும் வந்து ஆலோசனை பெற்றார்கள். இவற்றை வைத்து இக்கிராமத்தின் பெண்கள் நிலைபற்றி ஒரு ஆய்வு செய்யத் தீர்மானித்தோம்.
இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கையில் கொழும்பு தேசிய சமூகசேவை நிறுவனத்திலிருந்து வெளிக்களப் பயிற்சி மாணவராக ரமா என்பவர் மட்டக்களப்பு சூரியா பெ. அ. நிலையத்திற்கு இரண்டரை மாத கால பயிற்சியை மேற்கொள்ளுவதற்காக வந்திருந்தார். கிராமத்தில் பெண்களைக் கொண்ட குழு அமைப்பது பெண்கள் பிரச்சனைகளை இனம் கண்டு விழிப்புணர்ச்சியைக் கொடுப்பது என்பன இவரது முக்கியமான பயிற்சியாக இருந்தது. அதனால் எமது மேற்பார்வையில் குமாரபுரம் புன்னைச்சோலை கிராமப் பெண்கள் பற்றிய ஆய்வும், குழு அமைத்தலும் இவரிடம் ஒப்படைக் கப்பட்டது. இவ் ஆயப் வு மேற்கொள்ளப்பட்டபோது பல பிரச்சனைகள் இனம் காணப்பட்டன.
இங்கு பல சமூக அமைப்புக்கள் இருந்தும் இது வரை இங்குள்ள பெண்கள் ஊக்குவிக்கப்படவில்லை. அவர்களது அடிப்படை தேவைகளும் இனம் காணப்படவில்லை. சிறு கடன் உதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் செயற்படவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு யாரும் முன்வரவில்லை. மேலும் அயல் கிராமம் காட்டிய சாதிபாகுபாட்டால் இக்கிராமம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் இவர்களுக்கு வெளிஉலகம்
-54

இங்கு அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள் பின்வருமாறு:
பெண்களிடையே தற்கொலை முயற்சிகள் அதிகம் மது பாவனையால் குடும்பப் பிரச்சனைகள். அநேகருக்கு பிறப்புச்சாட்சிப் பத்திரம் இன்மை. பல குடும்பங்களில் திருமணம் பதிவுசெய்யப்படாமை. பெண்களிற்கிடையே கல்வியறிவின்மை. நிலையற்ற பொருளாதார நிலை அடிப்படை சுகாதார வசதியின்மை (பெண்களிடையே சுகாதார அறிவின்மை) வீட்டு வசதியின்மை 9. போக்கு வரத்து வசதியின்மை ( பஸ் இல்லை
- பாதைகள் சீரற்றநிலை.) 10. மின்சார வசதியின்மை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 48 கிராம சேவகர் பிரிவுகளில் மிகவும் பின்னடைவான கிராம சேவகர் பிரிவுகளில் ஒன்று புன்னைச்சோலை ஆகும். இங்கு மொத்தம் 388 குடும்பங்கள் உள்ளன. இப் புன்னைச்சோலையின் முக்கிய பிரிவுகளான புன்னைச்சோலை காளி கோயில் வீதியில் 185 குடும்பங்களும், புன்னைச்சோலை குடியேற்றக் கிராமத்தில் 137 குடும்பங்களும் உள்ளன. இம் மூன்று கிராமங்களிலும் குமாரபுரம் மிகவும் பின்னடைவானதும் புறக்கணிக்கப்பட்டதுமாக இருப்பதைக் காணலாம். இங்கு 137 குடும்பங்கள் இருந்தாலும் நிரந்தரமாக 96 குடும்பங்களே உள்ளனர். ஏனெனில் இது ஓர் குடியேற்றக் கிராமமாகும். வன்செயலால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வந்த பலர் இங்கு குடியேறியுள்ளனர். இவர்களில் சிலர் இங்குள்ள அரசாங்க காணிகளில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது இங்கு நிரந்தரமாக 345 பேர் உள்ளனர். இவர்களில் 174பேர் பெண்கள் 171பேர் ஆண்கள் ஆகும்.
இக்கிராமத்திலுள்ளோரின் தொழில்களைப் பார்ப்பின் அரச ஊழியர் 02 % ஆகவும் ஏனைய தொழில் புரிவோர்98%ஆகவும் உள்ளனர். அரச தொழில் புரியாதோரில் மேசன், தச்சுவேலை செய்வோர் மற்றும் கூலியாட்கள் 94% ஆகவும் மீன்பிடித் தொழில் புரிவோர் 04% ஆகவும் உள்ளனர். இவர்களில் 95% மானவர்கள். உணவு முத்திரை பெறுவோர் ஆகவும் 17% உபகாரச்சம்பளம் பெறுவோர் ஆகவும் ഉ_ബണങ്ങf.
8.
95 வீதத்தினர் உணவு முத்திரை பெறுவதிலிருந்து இங்குள்ள மக்களில் அனேமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதை அறிய முடிகின்றது. இவர்களது பொருளாதார நிலை சீரற்று இருப்பதற்கான காரணம் கூலித்தொழில் தினமும் கிடைப்பதில்லை. மாதத்தில் இருபது தினங்களே கூலித் தொழில் கிடைக்கின்றது. இதன் மூலம் சராசரியாகத் தினமும்100/=பெறுகின்றனர். இத்தொகை நாளில் இரண்டு வேளை உணவு உண்ணவே போதுமானதாக உள்ளது. இதனால் சேமிப்பில் அக்கறை காட்டுவது இல்லை. கல்வியறிவும் மிகக்குறைவாகவே உள்ளது. க.பொ.த.(சாத) பரீட்சைக்கு 05பேர் மட்டுமே தோற்றியுள்ளனர். இதில்
-55

Page 32
இருவர் பெண்கள். ஆண்களில் பெரும்பாலானோர் மதுபாவனைக்கும் புகைத்தலுக்கும் அடிமையாகி உள்ளதால் தின வருமானத்தில் பெரும் பகுதி இதற்காக செலவழிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் இவர்கள் குழுக்களில் இணைவதற்கு எவ்வளவு ஆர்வமாக உள்ளார்கள் என்பதை அறிய வேண்டியிருந்தது. குழுக்களின் எதிர் பார்ப்புக்கள் என்ன? குழுவில் ஈடுபட ஆர்வமாக உள்ளனரா? ஒருவர் மற்றவருடன் எவ்வாறு தொடர்பைக் கொண்டுள்ளனர்? கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் தெளிவுபெறவும் எவ்வளவு தூரம் ஆர்வமாக உள்ளனர்? என்பவற்றை அறிய வேண்டியிருந்தது. இவர்களுக்காக இடப்படவேண்டிய அத்திவாரம் மிகவும் உறுதியாகவும் இருக்க வேண்டியது புலனாகிற்று.
முதலில் தங்களைப்பற்றி அதாவது பெண்களைப் பற்றி என்ன வகையான சிந்தனைப் போக்கில் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கான கலந்துரையாடல் அவர்களுடன் நடாத்தப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாவன: குடும்பவேலை அனைத்தும் பெண்களே செய்யவேண்டியுள்ளது. பெண்கள் அமைப்புக்களில் சேருவது குழுவாக் இயங்குவது இன்றைய சூழலில் சாத்தியமாகாச் செயல். பெண் மற்றவர்களின் வன்முறைக்கு உள்ளபவள் போன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கணவனின் மதுபாவனையால் அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதால் பல குடும்பப்பெண்கள் மனதில் விரக்தியுடன் தற்கொலை முயற்சியைச் சரியென விவாதிக்கப் பல காரணங்களையும் முன்வைத்தனர்.
இப்படியான பிரச்சனைகளைத் தனித்தனியே கையாள்வதை விட குழுவாக ஒன்றிணைந்து தீர்ப்பது இலகுவானது, அத்துடன் சமூகம் சார் வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் பெண்களாலும் இயலும் என்ற நம்பிக்கையை சமூகத்தின் மத்தியில் ஊட்டி, பெண்களையும் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றலாம் என்ற கருத்தின் அடிப்டையில் 17.0897 அன்று குமாரபுர மகளிர் முன்னேற்ற சங்கம்” தோற்றம் பெற்றது.
இதன் பின் இவர்களுக்கு சில ஆரம்ப பயிற்சிகள் வழங்கப்பட்டன. பெண்கள் சம்பந்தப்பட்ட அறிவூட்டலுடன் சூரியாவின் கலாச்சாரக்குழுவினால் இப்பெண்களின் பிரச்சனைகளை வைத்து நாடகம் ஒன்றும் நடித்துக் காட்டப்பட்டது. பின்பு அவர்கள் தங்கள் பிரச்சனைகளை எடுத்துக் காட்டும் வகையில் கலாச்சாரக் குழுவுடன் இணைந்து நடித்து காட்டினார்கள். இதன் மூலம் பெண்களும் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களாலும் பல காரியங்களை குழு மூலம் சாதிக்கமுடியும் என்கின்ற நம்பிக்கை தோன்றியது.
- பெண்களும் கிராம அபிவிருத்தியில் பங்கு கொள்ளலாம் என்றும்
இதன்மூலம் ஆளுமை, தலைமைத்துவம் போன்றவற்றை வளர்த்து சமூக
அபிவிருத்திக்கு ஓர் வழிகாட்டியாக இருக்கமுடியும் என்றும் கலந்துரையாடப்பட்ட -56

தன்அடிப்படையில் இவர்கள் தங்கள் கிராமத்தின் அத்தியாவசியத் தேவைகள் சிலவற்றை இனம் கண்டு அதை பூர்த்தி செய்வதற்காக சில தொண்டர் நிறுவன பிரதிநிதிகள் , பாராளுமன்ற உறுப்பினர்கள். மாநகர முதல்வர் போன்றவர்களைச் சந்தித்தனர். வீதி திருத்தல், வீட்டுத்திட்டம், நூல் நிலையத் தளவாடங்கள் பெறல், வறிய பிள்ளைகளுக்கு இலவசமாக கொப்பிகள் பெறல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு சிலவற்றைப் பெற்றும் உள்ளனர். மற்றைய உதவிகளுக்கு முயற்சி எடுத்து வருகிறார்கள்.
தமது கிராமத்திற்காக மேற்கொள்ளும் அபிவிருத்திவேலைகளுடன் வேறு இடங்களிலும் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சிரமதான பணிகளில் ஈடுபடுகின்றனர். 300897 அன்று வயோதிபர் இல்லத்தில் அரைநாள் சிரமதானத்தை மேற்கொண்டு வயோதிபர்களுடன் ஆறுதலாகப் பேசி, மதிய உணவையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். இக்குழுவிலுள்ள 30 பேர்களில் இருபது பெண்கள் (கூடுதலாகத் திருமணம் முடித்தவர்கள்) ஆர்வத்துடனும்,ஒற்றுமையுடனும் RFCSUL60Tit.
அடுத்து குமாரபுர மகளிர் சங்கம், முறக்கொட்டான்சேனை மகளிர் முன்னேற்ற சங்கம், சூரியா பெ. அ. நிலையம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து அங்கவீனர் தினத்தை அனுஷ்டித்தது. இத்தினம் சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சோன இல்லத்தில் நாடகம், பாடல், போன்ற கலை நிகழ்ச்சிகளில் சிறுவர்களையும் இணைத்து கொண்டாடப்பட்டது. இவற்றிலும் இப்பெண்கள் மகிழ்வுடனும் புரிந்துணர்வுடனும் கலந்து கொண்டனர்.
மேலும், சர்வதேச ரீதியில் பெண்களின் பிரச்சனைகளிற்கு குரல் கொடுக்கும் அமைப்புகளுடன் தம்மையும் இணைத்துள்ள இவர்கள் நம்பிகையுடனும் பெருமிதத்துடனும் - இந்தவருட சர்வதேச பெண்கள் தினத்தை (மார்ச்03) தமது சகோதரிகளுடன், அதாவது நாவற்குடா கிழக்கு உழைக்கும் மாதர்சங்கம், பூநொச்சிமுனை மாதர் சங்கத்தினர், முறக்கொட்டான்சேனை மகளிர் சங்கத்தினர் சூ.பெ.அ.நிறுவனத்தினர் ஆகியோருடன் இணைந்து கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

Page 33
அனுபமா நிரஞ்சனாவும் *சம்பவமும் பிறவும்”
அனுபமா நிரஞ்சனா(1934- 1991) மருத்துவராக இருந்த பொழுதும், கன்னடத்தில் இருபது நாவல்களும்; எட்டு சிறுகதைத் தொகுதிகளும்; பெண்கள் நலம் பற்றி பல பிரபல்யம் பெற்ற நூல்களும் எழுதியுள்ளார்.
குடும்பத்தில் ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் காட்டப்படும் பாரபட்சங்களை எதிர்த்து வளர்ந்த அனுபமா, மைசூர் மருத்துவக் கல்லூரியில் 1956ம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டார். அதே வருடத்தில் பெற்றாரின் விருப்பத்திற்கு மாறாக மிகவும் அறியப்பட்ட கன்னட நாவலாசிரியரான நிரஞ்சனாவை திருமணம் முடித்துக்கொண்டார்.
V அனுபமாவின் படைப்புக்கள் பற்றிய நிரஞ்சனாவின் பொறுப்பான விமரிசனங்கள் அனுபமாவின் படைப்புகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தியிருந்தன. இந்த உறவும் நிரஞ்சனாவின் இடதுசாரிச் சிந்தனைகளும் அனுபமாவை நிரஞ்சனாவின் பால் ஈர்த்திருந்தன.
1971ல் நிரஞ்சனா பாரிசவாதத்தில் வீழ்ந்ததிலிருந்து வீட்டைக் கொண்டு நடத்துவதும் ( தேஜஸ்வினி, சீமந்தினி ஆகிய) பெண் குழந்தைகள் இரண்டையும் வளர்த்தெடுக்கும் முழுச்சுமையும் அனுபமாவுக்குரியதாயிற்று. அவர்களது வாழ்க்கைப் பாதையில் மேலும் இடர்பாடுகள் நேரிட்டன. புற்றுநோய்க்கு அவர் உட்பட்டிருந்த மூன்று அறுவைச் சிகிச்சைகளில் முதலாவதை 1978ல் சந்தித்தார்." இந்தப் பயங்கர வியாதிகளுக்கு எதிராக போராடுவதிலேயே எனது பெருமளவு சக்தி விரயமாகிவிடுகிறது" என்று அவர் சொல்லியிருக்கிறார். இருந்த பொழுதும் எழுதுவதைத் தொடர்ந்தார். இவர் பிரத்தியேகமமாக நடத்திய மருத்துவ நிலையத்தில் தினசரி சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களுடனான சந்திப்புக்கள் அவரது எழுத்துக்களுக்கு முக்கிய வளங்களக அமைந்தன. மருத்துவத் தொழிலில் பால்நிலை காரணமாகப் பெரிதும் பாரபட்சத்தினை எதிர்நோக்காத அனுபமா இலக்கியத்துறையில் அதிகம் அதை உணர்ந்திருக்கிறார்,
ஆண் எழுத்தாளர்களும், விமர்சகர்களும் இவரது படைப்புகளை அங்கீகரிக்க இசையவில்லை. ஆரம்பத்தில் அனுபமாவுக்கு இது தாக்கமாக இருந்தாலும் அதனை வெற்றி கொண்டு தன்னை நிலைநிறுத்தினார். கன்னடப் பெண் எழுத்தாளர்களிடையே ஏற்பட்ட புதிய விழிப்புணர்வு காரணமாக பல்வேறு கருத்தரங்குகளில் பேசுவதற்காக அனுபமா அழைக்கப்பட்டார்.
-58

தமது நூல்களுக்கு தேவையான விடயங்ளையும் தகவல்களையும் சேகரிப்பதில் பெண்கள் தங்களுக்குள்ள பொறுப்புக்கள் காரணமாகவும்; சுயாதீனமான நடமாட்டத்திற்கு சமூகத்தில் இருக்கின்ற மட்டுப்பாடுகள் காரணமாகவும் எப்பொழுதும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பத்தை மையமாகக் கொண்ட கருக்களை பிரதானமாகக் கையாளுவதற்கான காரணமாக இதுவே அமைகிறது என்பது அனுபமாவினது கருத்து.
அனுபமா நிரஞ்சனாவுடைய முதலாவது பிரதான நாவலான “மாதவி” 1976ல் பிரசுரமானது. இந்த நாவல் மகாபாரக்கதையின் ஒருபகுதியை ஆதாரமாகக் கொண்டது. இதில் விசுவாமித்திர மகரிஷி தனது மாணவரான கல்வாவிடம் குருதட்சணையாக கறுத்த ஒற்றைக் காதுடைய எண்ணுறு வெள்ளைக் குதிரைகளை கேட்டார். இவற்றைப் பெறமுடியா கல்வா, ஜயாதி மன்னரிடம் உதவி கோருகிறான் இத்தகைய குதிரைகளைக் கொடுக்கமுடியாத ஐயாதி குதிரைகளுக்கு மாற்றாக பதினாறு வயது நிரம்பிய மகளாகிய மாதவியைக் கொடுத்தார். மாதவியை ஒவ்வொரு அரசராக கல்வா அழைத்துச்சென்றான். குதிரைகளுக்கு மாற்றாக ஒவ்வொரு அரசரிடமிருந்தும் அவள் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கதை அனுபமாவின் வாசிப்பில் மாதவியின் விதி பொதுவாக பெண்களது அனுபவத்தின் தொடக்கக் குறியீடாயிற்று.
இவரது பிரபல்யம் பெற்ற எட்டு மருத்துவ நூல்களும் பெண்களுக்கு அவர்களது உடல்பற்றியதும் பொதுவான நோய்கள் பற்றியதுமான அறிவைக் கொடுப்பனவாக அமைகின்றன. மேலும், விடலைப் பருவத்தினருக்கும், திருமணத் தம்பதியினருக்கும் ஆலோசனைகளையும்; தாய் சேய் நலம் பற்றியும் கலந்துரை யாடுகின்றது.
1968ல் வெளிவந்த "தாயும் சேயும்” நூலும் 1973ல்வெளிவந்த “தம்பதியர்க்கு ஆலோசனை” நூலும் 1987ல் முறையே பதினோராவதும்; பதின்மூன்றாவதும் பதிப்புக்களைக் கண்டது. 1989ல்இந்த நூல்களை மீண்டும் எழுதினால், ஏற்கனவே இருப்பது போலவா எழுதுவீர்கள் என்று கேட்டபொழுது, அதே போலத்தான் எழுதுவேன் ஏனெனில் அவற்றுடைய விஞ்ஞானபூர்வமான தகவல்கள் இன்னமும் பெறுமதியுடையதாகவே இருக்கின்றன என்று கூறியிருக்கிறார். ஆனால் “மணமக்களுக்கு ஆலோசனை’ என்ற நூலில் தான் கொடுத்த ஆலோசனைகளைப் பற்றி மகிழ்ச்சி கொண்டவராக அனுபமா இருக்கவில்லை. 1971ல் இந்நூலை எழுதிய பொழுது கணவருடனும்; மாமன் மாமியுடனும் விட்டுக் கொடுத்து சமரசஞ்செய்து கொள்ளும்படி ஆலோசனை கூறப்பட்டிருந்தது. “1921ல் இது பற்றிச் சுட்டிக்காட்டப்பட்ட பொழுது நான் சில மாற்றங்களைச் செய்தேன். ஆனால் அதனை மீண்டும் எழுதுவதாக இருப்பின் அது முற்றுமுழுதாக வித்தியாசமாகவே இருக்கும். நான் பெண்ணுக்கு அதிக கெளரவத்தைக் கொடுப்பேன். அவளது தனித்துவத்தை வற்புறுத்துவேன்” என்று கூறியிருந்தார்.
இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் "சம்பவமும் அதன் பிறகும்” என்ற சிறுகதை1980ல் எழுதப்பட்டது, அனுபமா நிரஞ்சனாவின் சிறுகதைத் தொகுதியிலிருந்து அவரது மகளான சீமந்தினி நிரஞ்சனாவால் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
“இந்தியாவில் பெண்களின் எழுத்து, கி.மு. 600முதல் இன்றுவரை” தொகுதியின் இரண்டாம் பாகமான 20ம் நூற்றாண்டு எழுத்துக்கள் அடங்கிய தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
-س-59

Page 34
சம்பவமும் அதன் பிறகும் ~ அனுமா நிரஞ்சனா ~
மாடிப்படிகளில் ஏறும் போது தன்னை யாரும் கண்டுவிடுவார்கள் மறித்துக்கதைத்துவிடுவர்கள் என்று அந்தரப்பட்டவனாகக் காணப்பட்டான். அயலவர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த நண்பனின் மனைவி அவன் மேலேறி வருவதைக் கண்டுவிடுகிறாள்.
“ தனிய வருகிறீர்கள் போல? எங்கே உங்களுடைய மனைவி?” அவளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டு இரண்டாவது மாடியை அடைந்து கொண்டான். அவளுக்கேன் இந்த விண்ணாணம்? நியாயமமான கோபத்துடன் சிந்தித்தான். ஆனால் அன்று மாலை தாங்களிருவரும் சேர்ந்து போனதை அவள் பார்த்திருந்தாள் என்பது நினைவுக்கு வர, அவனுக்கு ஒரு தடவை உதறலெடுத்தது. எது எப்படியாயினும் அவளுக்கு எதையாவது நான் சொல்லியிருக்க வேண்டும். அவளதைப் பூதாகரப்படுத்தி விட்டாளென்றால்? அவளது வம்பு ஆலையில் சக்கைபிழியத் தொடங்கி விட்டாளென்றால்?
அவனுக்கு மூச்சு முட்டியது. மாடிப்படிகளில் ஏறியதன் மூச்சிரைப் பிலிருந்து மீள்வதற்கு முயன்றபடி வாசலருகில் நின்றிருந்தான். கதவில் வெளித்தள்ளியபடி வெள்ளை எழுத்துகளில் அவனது பெயர் எதிர்கொண்டது. அடையாளங்காண முடியாதவனாகவும், ஆறுதலற்றவனாகவும் அதை வாசித்தான். இதுநானா? இந்த முகமற்ற நபர் நானா? இந்த வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக இதிலிருந்து விலகிப் போக வேண்டும். அந்த ஒட்டகங்களைப்போல. கடலோரமாக நீளத்திற்கு. அவனது கை தானாகவே வாசல் கதவுமனியை அழுத்தியது. வீட்டினுள் அதன் எதிரொலிப்பு மறுமொழி சொல்ல வேண்டுமென்ற நடுக்கத்தை அவனுள் எழுப்பியது. அம்மா கதவைத் திறக்கப் போகிறா, இப்பொழுது அவவுக்கு என்ன சொல்வது? உலர்ந்து உயிரற்றது போன்றதான அவனது நாக்கு உதடுகளில் அலைந்தது. இதயம் அடித்துக் கொள்வதைக் கவனித்தவாறே, முகத்தைத் துணிகரமக வைத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தான்.
கேள்வி கலந்த பார்வையுடன் தாய் வரவேற்றாள். அதனைக் கவனிக்காத வாறே பாதணிகளைக் கழற்றிவிட்டு மண்டபத்தைக் கடந்து தனது அறையுள் நுழைந்து கொண்டான். மருமகள் பின்னால் வருவாள் என நினைத்து சிறிது நேரம் வாசலில் காத்திருந்த தாய், அவள் வராததைக் கண்டு வாசற்கதவை மூடிக்கொண்டாள்.
-60

“எங்க மகன், மருமகள்?” காற்சட்டையைக் கழற்றியவாறே “ அவளுடைய சிநேகிதி வீட்டிற்கு போய்விட்டாள்" என்று பதிலளித்தான். அவனது குரல் கம்மியது.
“சுனிதி வீட்டிற்கா?” "is தாய் உள்ளே போய்விட்டாள். குசினியில் எழுந்த பாத்திரங்களின் கடபுடாச் சத்தம் அவனது எரிச்சலை மீளவும் கிளப்பிவிட்டது.
"சிநேகிதி வீட்டிற்குப் போவதென்றால் காலையில் போகிறது! இரவுவேளையில் ஏன் போகிறாள்? போதாததற்கு, சுனிதி கலியாணம் முடிச்சவளுங்கூட. இது வெக்கக்கேடு. அவளை இப்பிடி விட்டிட்டு வாறியே, உனக்கு சூடுசொறணை இல்லையா?”
அவளை விட்டிட்டு. வாறதற்கு. உனக்கு சூடுசொறணை இல்லையா? சொற்கள் எதிரொலித்து லட்சோபலட்ச வடிவங்களை எடுத்தன.
அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன். சொறணை அல்ல. என்னிடம் துணிவு இல்லை. சரத்தை இடிப்பில் வரிந்தபடியே குளியலறைக்கு விரைந்தான்வாய்விட்டு அழுவதற்கு.
"இந்தப் பாதையில் ஏன் போகிறீர்கள்? ஏற்கனவே இருண்டுவிட்டது. கூக்குரல் போட்டாலும் உதவிக்குவர ஒரு மனு இருக்காது" என்று சொன்னாள்.
“ஆகவும் பயந்தாங்கொள்ளியாக இருக்காதை பயப்படுவதற்கு என்ன இருக்கு, அதுவும் ஸ்கூட்டரில் போகும் பொழுது?! இது கிட்டடிப்பாதை. இருந்துபார், இரண்டு நிமிஷத்தில் வீட்டிற்குப் போகிற பிரதான தெருவுக்கு வந்திடுவோம்”
கடற்கரையில் எத்தகைய அருமையான மாலைவேளையை அவர்கள் சுகிர்த்தார்கள். அலைகளை நோக்கி நடந்து கால்களை நனைத்துக் கொள்வதில் எப்பொழுதும் அச்சங்கொள்வாள்.
" கடலுள் தாண்டுவிட்டால்?" என்று நடுக்கத்துடன் கையை நீட்டுவாள், இறுகப் பற்றிய கரங்களுடன் நாங்கள் நடப்போம்.
அவளைத் தூக்கி முத்தமழையில் திணறவைத்த பொழுதில் எப்பிடி உணர்ந்தான் என்பதை நினைவுக்குக் கொண்டுவந்தான். கடலில், மேலும் தூரத்தில் சோடியொன்று அலைக்கழிந்துகொண்டிருந்தது. சிறுவர்கள் அலைகளுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளும் குதிரைக்குட்டிகளும் கரையில் விளையாடின. உலகம் துயரற்றதாக இருப்பின் அவர்களது மகிழ்ச்சி ஆரவாரம் இரையும் கடலுக்கு ஒப்பானதாக இருந்திருக்கும். ஆனால் ஈற்றில் சூரியன் அஸ்த்தமித்தது . இருள் ஊமைக்கால்களில் வந்தடைந்தது.
“இனிப் போவம் போக முதல் கண்டலும் ஐஸ்கிரீமும்.” ஐஸ்கிறீம் சாப்பிட்ட பொழுது சந்தோசத்தில் மிதந்தான். அவளது விரித்த கண்களது பார்வையும், விம்மியிருந்த மார்பும் வீட்டிற்கு விரையத் தூண்டியது. அதனால்தான் கிட்டடிப்பாதை.
-6-

Page 35
குளியலறையில் இருந்து வெளியே வந்தான். தாயிடம் முகங்கொடுக்கத் திராணியிருக்கவில்லை. தன்னை நம்பியிருப்பாவா என்று ஆச்சரியப்பட்டவாறு கட்டிலில் நீட்டி நிமிர்ந்தான்.
“வா, வந்து சாப்பிடு” “இப்ப சாப்பிடவேணும் போல இல்லையம்மா. சுனிதி வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டோம்”
“கனிதி வீட்டுக்கு நீயும் போனாயூா? அதைப்பற்றி ஏன் சொல்லவில்லை. நான் நினைத்தேன், கடற்கரைக்குச் சமீபமாக அவளைச் சந்தித்தீர்களாக்குமென்று." அம்மா திருப்தியுற்றவளாக இல்லை. அவள் கேட்கும்போது மட்டுமே என்னால் பதிலளிக்க முடியும்.
சஞ்சலப்பட்டவனாக மொட்டைமாடியை அடைந்தான். எதிரிலிருந்து பெரும்பாலான கட்டடங்கள்களின் ஜன்னல் கதவுகள் இரவுக்காக தங்களை மூடியிருந்தன. மொட்டைமாடியொன்றில் கணவனும் மனைவியும் அருகருகே நின்றிருந்தனர், அவளது தோளுக்கு மேலால் கையைப் போட்டவாறே காதில் ஏதோ குசுகுசுத்தான்.
தனிமையில் நின்றிருந்தவனது உடல் நடுங்கத் தொடங்கியது. பாசம், காதல், விருப்பம், முத்தமிடுதல், அரவணைத்தல் அதன் பின்வு கூடுதல் - இவைதான் பிறப்பின் முக்கியமெனக் கருதியிருந்தான். ஆனால் எல்லாம் ஒருகணத்தில் அர்த்தமிழந்து போயின எந்தவிதச் சாரமுமற்ற வெறும் நிழல்களாகவே தோன்றின.
அவன் திரும்பினான். மொட்டைமாடியின் கதவை மூடிவிட்டு கட்டிலில் வந்து விழுந்தான். அதே கட்டில்தான் ஒருபொழுது ஆனந்தத்தின் ஊற்றாயிருந்தது இப்பொழுது, தீக்குளம்பு கக்கும் எளிலையாகியிருக்கிறது. முகத்தை மூடிக்கொண்டான். தீயில் வெந்துகொண்டிருப்பதாக உணர்ந்தான்.
கும்மிருட்டில் ஸ்கூட்டரை யாரோ வழிமறித்தார்கள். கடுமையான குரல்களுடன் வாட்டசாட்டமான ஆட்கள். ஒருவன் ஸ்கூட்டரிலிருந்து மனைவியை இழுத்தெடுத்தான். இருளில் அவள் கதறினாள். “யார் நீங்கள்? எங்களைப் போகவிடுங்கள்" என்றவாறு முன்னால் விரைந்தான். முஷ்டியொன்று முகத்திலிறங்கியது. நிலைகுலைந்து தள்ளாடினான். கண்கள் இருண்டு வந்தன. அதிலிருந்து அவன் மீண்டபொழுது, அவளது அலறல் தூரத்தில் பரிதாபகரமாகக் கேட்டது. பின்னணியில் குடிசை போன்றதொரு அமைப்பையும் மங்கலாக காணமுடிந்தது. முன்னால் நகர முனைந்தான். ஆனால் வலுவான கரங்கள் அவனைக் கட்டுக்குள் வைத்திருந்தன.
* ஸ்கூட்டரில் ஒடித்தப்பு அமர்க்களப்படுத்தினால் கதை முடியும்” அந்த அந்நியனது கையில் சவரக்கத்தி மின்னியதைக் கண்ட பொழுது அவன்து நா உலந்தது. கால்களில் உதறலெடுத்தது.
நேர வீட்டுக்குப் போ பொலிசுடன் வரத் துணிந்தால் உன் மனுஷியின் கதை முடியும்”
அவளைக் காப்பாற்ற போவது ஆபத்துகளைத்தான் வரவழைக்கும். எனவே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நேரே య్కేప్రోత్ விரைந்தான்.

கட்டிலில் புரண்டுபுரண்டு படுத்தான். சமையலறையில் அலுவல்களை முடித்துக்கொண்டு, தாய் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் மண்டபத்தில் படுக்கையை வித்துவிடுவாள். அடுத்தகணம் குறட்டை விடவும் தொடங்கி விடுவாள்.
பொலிகக்குப் போகத்தான் வேண்டுமென நினைத்தான். அவளது உருவம் கண்முன்னால் நின்றது. அவளுடனான அந்தக் கணங்கள் மிகவும் இனியவை. அவள் இல்லாத வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. இப்பொழுது, எதிர்பாராத விதமாக.
பொலிசுக்கு அறிவித்திருந்தால் அவள் கொல்லப்பட்டிருக்கலாம். இப்பொழுது, அவளது வாழ்க்கையில் என்ன பயன்தான் இருக்கிறது? அவளைக் காப்பாற்றுவதற்கு முன்னால் போயிருந்தேன் என்று வைத்துக் கொண்டால்..? சவரக்கத்தியின் கூர்முனை என் மார்பைப் கீசியிருக்கும்.
நானும் வீரனின் மரணத்தைத் தழுவியிருப்பேன். தீரச்செயல் என்று காட்ட இந்த உலகில் என்ன நியாயம் இருக்கிறது? இப்பொழுதும் தப்புவதற்கு உத்தரவாதமிருந்தால் எதையாவது ஒருவர் சாதிக்கலாம். அவனது நினைப்புகள் அவனுக்கே வெட்கமூட்டின. ஒரு கணம் அவனிலேயே அவனுக்கு வெறுப்பேற்பட்டது. புரண்டு படுத்தான். தன்னை அணைத்துக் கொள்ள மனைவி வருவதாக நினைத்துக் கொண்டான். எப்பிடி அவளிங்கு வருவாள்? இந்த நேரத்தில். அந்தக் கொட்டிலில். தலைமயிரைப் பிடித்துக் கொண்டான். கருபொழுது, அவளது முத்தங்களும் வருடல்களும் அவனுக்குப் புதையல்களாகஇருந்தன. இப்பொழுது, அவையெல்லாம் அர்த்தமிழந்து போயின.
அவன் எழுந்தான். இப்பொழுது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தாயின் குறட்டை மண்டபத்தையும் கடந்து தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. உடைகொழுவியில் இருந்து காற்சட்டையை எடுத்துக் கொண்டான், நண்பனையும் அழைத்துக் கொண்டு போய் அவளைக் காப்பாற்ற ஏன் முனையக்கூடா தென்று சிந்தித்தான்.
அக்கறையற்றவனாக கண்ணாடியில் பார்த்தான். தன்னை எதிர்கொண்ட முகத்தை அடையாளங்காணத் தவறியிருந்தான். வருவதற்கு நண்பன் மறுத்துவிட்டா னென்றால்? இந்த இரகசியத்தை அவனை அறியவிடுவதென்றால், இந்தக் கட்டடத்திலுள்ள இருபது வரையான குடும்பங்களுக்கும் அதைச் சொன்ன மாதிரித்தான். பின்பு அவர்களை எந்த முகத்துடன் சந்திப்பது? நண்பனிடம் உதவிகேட்டுப் போவதற்கெதிராக முடிவெடுத்த படியால் மீண்டும் கட்டிலில் விழுந்து படுத்துக்கொண்டான்.
நடந்த எல்லாவற்றையும் தெரிந்து கொண்டும் முன்போலவே அவளை நேசிக்க முடியுமா? சாத்தியமேயில்லை? என நினைத்தான். ஏன்? அவள் கற்பிழந்து விட்டாள் என்பதாலா? அப்பிடியென்றால் நான்? தசைகளில் இச்சை கொண்டு இந்த நகரத்தெருக்களில் அலையவில்லையா? அது திருமணத்திற்கு முன், இப்பொழுது மரியாதைக்குரிய மனிதன் நான். வாழ்க்கையில் சறுக்கிவிட்ட பெண்ணிடம் எந்தத்

Page 36
தேவையும் இருக்காது.
அவனது கண்கள் தூக்கத்தால் நிறைந்தன. சமுத்திரக்கரையில் நான் நிற்கிறேன். யாருக்காகவோ சனங்கள் காத்து நிற்கின்றன. முழங்கிய படி அலைகள் எழுந்து விழுகிறது, தரைமீதில் திடீரென எதையோ அலை எறிகிறது? " மிகப்பெரிய மீனொன்று” சனங்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள். அதனைப் பார்க்கும் ஆவலில் நெருங்கி நுழைகின்றேன். நான் அலறினேன். அது அவளது சடலம்.
படபடக்கும் இதயத்துடன் சட்டென விழித்துக்கொண்டான். இயல்புக்கு வர சிறிது நேரம் பிடித்தது, ஆச்சரியமான சிந்தனையொன்று அவனுள் உதித்தது. அவள் தற்கொலை செய்து கொண்டால் என்ன நடக்கும்? மற்றவர்களுக்கு என்ன சொல்வது? போதாக்குறைக்கு அவளது தகப்பன் பொலிஸ்அதிகாரி " நீதான் அவளைக் கொன்றாய்"என்று குற்றத்தை என்மீது சுமத்திவிடப் பின்னிற்கமாட்டார்.அவள் இருந்தாலும் பிரச்சினை செத்தாலும் பிரச்சினை.
எழுந்து கழிப்பறைக்குப் போனான்"இன்னும் நித்திரை கொள்ளவில்லையா மகனே?" கதவு மூடும் சத்தத்தில் முழித்துக்கொண்ட தாய் கேட்டாள். அவளது குரலில் நித்திரை திணித்திருந்தது.
“இப்பொழுதுதான் முழித்தேன். நீங்கள் நித்திரை கொள்ளுங்கள்” என்று நிர்ச்சலனமாகக் கூறிவிட்டு, விளக்கை அணைத்து விட்டு கட்டிலுக்கு மீண்டான்.
அவனிடம் கேட்டிருந்தாள், " உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா?”
“எவ்வளவு?”
“உயிருக்கும் மேலாக”
இப்பொழுது என்ன சொல்லுவாள்? நிச்சயமாக என்னை வெறுப்பாள். இனிமேல் எப்பிடி அவளுக்கு முகங்கொடுப்பேன்? ஆச்சரியம் இரண்டு வருஷகால நெருக்கம் பிரிக்கி முடியாததாக இருந்தது. இப்பொழுது, இந்தச் சம்பவம் எப்பிடி எங்களைப் பிரித்துவிட்டது
“எங்களுக்கு இரண்டு பிள்ளையள் இருக்கவேணும் என்ன சொல்கிறீர்கள்"
“இரண்டு மட்டும் போதுமா?”
"th ஒரு மகனும் ஒரு மகளும்"
கடந்துபோன இரண்டு வருடங்களிலும் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கவில்லை. இப்பொழுது அவள் கர்ப்பந்தரித்தால் என்ன செய்வது? அப்பிடி நிகழ்ந்தால் அது கலைக்கப்பட வேண்டும். அதற்கு எங்கே போவது? அது பற்றி நண்பனிடம் அறியலாம். செலவு பற்றிக் கவலையில்லை. அம்மா மாத்திரம் இதுபற்றிக் கேள்விப்படவே கூடாது.
ஒன்றாக வாழ்வதற்குச் சாத்தியமில்லை. உணர்ந்தோமென்றால் விவாகரத்துக்கு ஒழுங்கு செய்யலாம். அவள் மலடி என்றோ. புத்திமாறாட்டக்காரி என்றோ நான் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் முதலில் எனது ஆண்மையைப் பரிசோதித்துப் பார்க்கும் படி மாமனார் கூ னாரென்றால் என்ன செய்வது?

சுலபமானவழி 'உன்னை மன்னித்துவிட்டேன்"என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிடுவது. அதற்கவள் நன்றியுடையவளாகவும் இருப்பாள்.
அதன்பிறகு முகமூடிகளை அணிந்தபடி ஏமாற்றைத் தொடரலாம். திடீரென அவனது வயிற்றில் வலிதாய்ச் சுழற்றியது. இன்னும் பூரணமாய் விடியவில்லை. உலகம் மீண்டுமொரு முறை சீவியத்திற்கு வந்திருந்தது. ஸ்கூட்டர் - றிக்ஷோவிலிருந்து இறங்கியவள், இரைதேடும் கண்களுக்குத் தப்ப விரைந்து நடந்தாள்மாடிப்படிகளில் ஏறிய பொழுதில் கால்கள் கழன்றுவிடுமாப்போல் அவளுக்கிருந்தது. தொடைகளில் வலி தாங்க முடியாததாக இருந்தது. மாடிப்படிக் கைப்பிடியில் பற்றி வேதனைதோய அவள் படிகளில் ஏறினாள். பின்னால் நின்று கணவன் ஆதரவுதர முயன்ற பொழுது " தொட வேண்டாம் என்னை "அந்தத் தொனி வெறுப்பும் ஆத்திரமும் கலந்ததாக இருந்தது. V அவர்கள் ஏறிவருவதை மொட்டைமாடியிலிருந்து கவனித்த தாய் வாசலுக்கு வந்தாள். மருகளின் குழம்பிய தலைமயிரும் மண்பிராண்டிருந்த சேலையும் “கடவுளே, என்ன இதெல்லாம்?”என்று நாக்குளறியது,
குனிந்த தலையுடன் எதுவும் பேசாமலே மாமியாரின் அருகால் போனாள். தெருவுக்கு குறுக்கே எருதொன்றுவர, திடீரென பிறேக் பிடிக்க அவள் விழுந்து போனாள்.
“விபத்தில் நீங்கள் இறந்து போயிருந்தால்?” மாமியார் உடைகொழுவியில் இருந்து ஆடைகளை இழுத்தெடுத்தவாறு மருமகள் குளியலறைக்கு விரைந்தாள். சுடுநீர் குழாயைத் திறந்துவிட்டாள். அது வாளியை நிறைக்கத் தொடங்கியது. குளிப்பதற்காக இருக்கையில்அமர்ந்தாள். கண்ணிர் அருவியாய் ஓடியது.
குளியல் அவளைத் தூய்மைப் படுத்துமா? இந்த நீரெல்லாம் அவளுடன் ஒட்டிக்கொண்டுள்ள பாவங்களை எல்லாம் கழுவிக்கொண்டு போய்விடுமா? அவள் அதற்குப் பாத்திரவாளியல்ல! ஆனால் இந்தப் களங்கம் இறுதிவரை அவளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.
எல்லா அலறல்களும் தொண்டையை அடைக்க மட்டுமே செய்தன. ஏனொரு துரும்புகூட என்மீது இரக்கங்காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் கையெடுத்துக் கும்பிடுகிற கடவுளுக்கு என்னவாயிற்று?! அன்புக்குரிய கணவனே ஒரு விரலைக்கூடத் தூக்காது ஒடித்தப்பிவிட, யாரிடமிருந்து உதவியை நான் எதிர்பார்ப்பது?
அவளது விம்மல் அதிகரித்தது. மண்பிரண்ட ஆடைகளை மூலையில் போட்டவாறு, தனது உடம்பைப் பார்த்தாள். இது நானா? நான் தானா இது? மிருதுவான அழகிய சருமம் காயங்களால் கண்டியிருந்தது. தொடர்ச்சியான பலாத்காரத்தால் அவளது தொடைகள் முழுமையாகத் தாக்கப்பட்டிருந்தது. பெண்குறியிலிருந்து இரத்தப் பெருக்கு நின்றிருக்கவில்லை. சுடுநீரின் ஸ்பரிசம் மெளன அலறலை அவளது உதடுகள் வரையில் ஆண்டு வந்திருந்தது. கடவுளே! வாழ்க்கை

Page 37
இனிமேலும் அர்த்தமுடையதாக அவளுக்கிருக்குமா? குடிசையிலிருந்து தன்கை விடுவித்து கடலால் வழங்கக்கூடிய அமைதிக்கு ஏங்கிக் கண்வைத்திருந்தாள். ஆயினும் அத்துரத்தைத் தாண்டும் வலு அவளிடமிருக்கவில்லை. இல்லையென்றால் அந்தக் கடலின் அடியில் அவள் அமைதியாகக் கிடந்திருப்பாள். உடுக்கத் தொடங்கினாள். வெளியில், மகனுடன் உரையாடிக்கொண்டிருந்தாள் தாய் * வேலைக்குப் போகப்போகிறாயா?” “போகத்தான் வேணும். எடுப்பத்ற்கு 'லீவு இல்லை” கணவன் வீட்டிலிருப்பதை தள்ளாடும் உடலுடனும், மனதுடனும் அவள் எதிர்பார்த்திருந்தாள். குறைந்த பட்சம் அவன் செய்யக்கூடியது அதுதான்.
அதற்கு மாறாக இவற்றிலிருந்து தப்பித்து ஓடுவதற்கே அவன் முனைந்தான். தன்னுடைய மனைவியையே காப்பாற்ற முயலாத எப்பிடியான மனிசன் இவன்? அந்தத் தடியன்களோடு சண்டை போட்டுச் செத்திருக்கலாம். அதனாலாவது மரியாதைக்குரியவனாக இருந்திருப்பான். செத்திருந்தாலும் இவனுடைய நினைவுகளோடு சீவிச்சிருப்பன்.
அவள் வெளியே வந்தாள். கண்ணாடிக்கு முன்னால் நின்று சவரம் செய்து கொண்டிருந்தவன் பிறத்தியானாகத் தோற்றமளித்தான்.
அவனது முகத்தில் அப்பியிருந்த சவக்கார நுரையுடன் பார்க்க முயலைப்போல இருந்தான். அவள் கட்டிலில் வந்து விழுந்தாள்.
மருமகள் குசினிக்குள் வராததால் ஆச்சரியமுற்ற தாய் அவர்களுடைய அறைக்கு வந்தாள்.
“என்ன ஒருமாதிரியாய்? உனக்குச் சுகமில்லையா?” மருமகளுடைய நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள், " பிள்ளைக்கு காய்ச்சல் காயுமாப் போலிருக்கிறது.டொக்ரறிட்ட காட்டவில்லையா?”
தாடிமயிரைக் கவனமாக கத்தரித்த படியே " அதுக்கு அவசியமில்லை. காயம் என்றதால்தான் காச்சல் காயுது. நாளைக்கு எல்லாம் குணமாகிவிடும்.”
சில மாதங்களுக்கு முந்திய விடயங்கள் அவளது ஞாபகத்திற்கு வந்தன. தலையிடிக்கிறதென முறையிட்டிருந்தாள் " டொக்ரறிட்ட போவமா?’பதறிக் கேட்டான். “தலையிடிக்கு டொக்ரறிட்டையா? எனக்கொரு அஸ்பிறின் தந்தால் போதும்” குளிசை வாங்க உடனேயே விரைந்தான். இன்றைக்கு அலுவலகம் போகவில்லை என்று சொன்னான்.
ஆனால் இப்பொழுது, ஒரே இரவில் உறவு எவ்வாறு முறிந்து விடுகிறது? கணவன், மனைவி, காதல், பிணைப்பு - இவை எல்லாவற்றினதும் அர்த்தமென்ன? சந்தோசத்தை ஏற்றுக்கொண்டு துயரத்திற்கு முதுகுகாட்டி ஒடுவதாயிருந்தால் வாழ்க்கைக்கு என்ன பெறுமதி?
மாமியாரின் வற்புறுத்தலால் கோப்பி சிறிதளவு அருந்தினாள். பின்னர் கண்ணயர்ந்து போனாள். அங்கமங்கமாய்ஐத்துப் போட்டதுபோல உடம்பு வலித்தது.

இல்லை, இந்தக் கோழையோடு நான் சீவிக்கக்கூடாது. ஏதாவது அக்கறை காட்டினானா? “ என்னை மன்னித்துக்கொள் தயவுசெய்து மன்னித்துக்கொள்" என்று வேண்டினானா? நரகம், அவனது முகத்தைப் பார்க்கவே அருவருப்பூட்டுகிறது. எது எப்படியாயினும் என்னை இங்கு பிணைத்து வைக்க பிள்ளைகுட்டியில்லை. என்னால் அப்பாவின் வீட்டுக்குப் போகமுடியும். உழைச்சு என்னை காப்பாற்றிக் கொள்ள என்னால் இயலும். இவனது திருட்டுமுழி வெறுப்யூட்டுகிறது.
அவன் வேலைக்குப் போய்விட்டான்.
சிறிது நேரத்தில் வேலையாள் வந்தாள். குளியலறையில் இருந்து
திடீரெனச் சத்தம் வைத்தாள் “ அம்மா, உள்ளாடை எல்லாம் இரத்தக்கறையாக இருக்கு என்ன நடந்தது?"
"நான் வீழ்ந்தேன்”
“எங்கிருந்து எங்கு?” "வானத்திலிருந்து பாதாளத்திற்கு” அவள் தன்னைச் சுதாகரித்தவளாக அவற்றை எல்லாம் நானே கழுவியிருக்க வேண்டும். வேலையாள் இதையெல்லாம் அயலவர்களுக்குச் சொல்லிவிடுவாள்.
இந்தக் கறைகளை ஒருவர் கழுவிவிட்டது போல, எல்லாக் கறைகளையும் கழுவிவிட முடியுமா? ஊத்தையை அகற்றுவதற்காக துணிகளை வேலையாள் அடித்துத் துவைக்கத் தொடங்கினாள். அச்சிறுவீடு முழுவதும் அந்தச் சத்தம் எதிரொலித்தது. எப்பொழுதுக்கும் இந்தக் கறைகள் மங்கிப் போகமாட்டா. அவள் களைத்துப் பின்வாங்கினாள்.
சமையல் ஆயிற்று. மாமியார் அவளிடம் வந்தாள். நேர வீட்டுக்கு வந்திருந்தால் இதொன்றும் நடந்திருக்காது. சுனிதி வீட்டிற்குப் போவதற்கு என்ன தேவையிருந்தது?
என்ன நடந்ததென்பதை மாமியாரிடம் சொல்லிவிடவா? ஒருகணம் தன்னுள் விவாதித்துக் கொண்டாள். இப்படி நடந்ததென்பதை மாமியார் நம்பமாட்டார். அப்பிடி நம்பினால் ஏங்கிவிடுவார். தன்னுடைய ஒரே மகனுடைய மனைவிக்கு எப்பிடி இவ்வாறு நடக்க முடியும்? குடும்ப கெளரவம் என்னாவது? புலம்புவார், அழுவார், தனது நிலையை எண்ணி அரற்றுவார். பின்பு, மகனது நலனுக்காக எல்லாம் அப்பால் வைக்கப்படும். வீணித்துப்போன வாழ்க்கை மதிப்பிற்குரிய அங்கியால் போர்த்தப்படும்.
சாப்பிடுகிறாயா? காலையிலும் சாப்பிடவில்லை. பசிதான், ஆனால் மனக்குடைச்சல் நிற்கவில்லை. மாமியும் அந்நியமான வளாகவே தெரிந்தாள்.
அவள் உணவைக் கொறித்துவிட்டு எழுந்தாள். மற்றுமொரு கவலை அவளை அரிக்கத் தொடங்கியது. கர்ப்பமாகிவிட்டால் என்ன செய்வது? இல்லை, ஒருபொழுதுமில்லை. அந்தப் பாவத்தின் பிண்டத்தை அகற்றிவிடுவதில் வைத்தியர்
அவளுக்கு உதவுவார்.
-67

Page 38
ஆனால் அதன்பிறகு முழுக்கதையும் வெளியே வந்துவிடும். கிழிந்திருக்கும் பெண்குறி, கண்டி வலிக்கும் வீங்கிய தொடைகள், என்ன நடந்ததென்பதை வைத்தியர் அறியமாட்டாரா? எனக்கு வைத்தியம் செய்ய மறுத்தால் என்ன செய்வது? பொலிஸ் விசாரணை அதுஇது என்று. பிறகு நகரம் முழுதுக்குமே அறிவித்தது போலாகும்.
இது திறமான வேலை. கூரைக்கு மேல் ஏறிநின்று சத்தம் வைப்பம். மதிப்பிற்குரிய இந்த நகரத்தில் வாழ்ந்த பெண்ணின் கதைமிது. அவர்களை- ஆண்கள், பெண்கள், பொலிஸ்காரரை - வெட்கித் தலைகுனிய வைக்கவேண்டும்.
அவள் சோர்ந்து கிடந்தபோது, கணவனது சிநேகிதனின் மனைவி வந்தாள்.
“உனக்கு உடல்நிலை சரியாக இல்லையா? பின்னேரம் முழுவதும் எங்கே போயிருந்தாய்? உன் கணவரிடமிருந்து ஒன்றையுமே அறிய முடியவில்லை”
வறண்ட சிரிப்பொன்றை விடையாக அளித்தாள். வேலையாள் இப்பொழுதுதான் போனாள். உங்களுடைய வீட்டில் மண்பிரண்ட ஆடைகள் குவியலாகக் கிடந்ததாக அவள்தான் சொன்னாள்.
இவள் அறிந்திருக்கிறாளோ? என்று நினைத்து அச்சத்தாலும் ஐமிச்சத்தாலும் சோர்ந்து வீழ்ந்தாள்.
பயப்பிராந்தி அதிகரித்தது. இப்பொழுது என்ன செய்வது? எல்லாவற்றையும் பின்னால் மறைத்து வைத்து விட்டு, காதல் நாடகத்தை மீண்டும் தொடங்குவதா? காதல் என்பது பாலியல் இச்சை மட்டுமென்றால் நான் அதனால் வேதனையடைகிறேன். வெறுக்கிறேன். இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட ஒரே வழி, சுலபமான வழி சாகிறது. சமுத்திர அலைகளில் அடிவைத்து நடந்து சொர்க்கத்தை அடைவது, அதுதான் உண்மையான விடுவிப்பு.
கணவன் வீடு திரும்பிய பொழுது, சூரியன் மங்கிக் கொண்டிருந்தது. பிறத்தியானைப் போல உள்ளே நுழைந்து உடைகளை மாற்றிக் கொண்டு சமையலறையுள் அடைந்து கொண்டான். தேனீரைப் பருகிக்கொண்டே தாயிடம் கேட்டான், “ அவள் எப்படி இருக்கிளாள்?”
“அவள் படுத்திருக்கிறாள். நீ பார்க்கேலையா?” தாயும் மகனும் காலையின் உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் வானொலியின் துணையில் மண்டபத்தில் ஒதுங்கிக் கொண்டான்.
கட்டிலில் புரண்டு கொண்டு முனங்கினாள். "அப்பாவுக்கு போன் செய்ய வேண்டும். பொலிஸ் திணைக்களத்தில் பணிபுரிகிறார். அவர் இங்கு வரமுடியுமென்றால் அந்தத் தடியன்கள் தேடிப்பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இந்தக்கோழையால் இயலாததை அப்பா ஆவது செய்யக் கூடும்.”
இரவு எல்லோரையும் திருடிக் கொண்டது. கட்டிலின் கரையில்எதுவுமே பேசாமல் தள்வி கிடந்தான். அவள் காத்திருந்தாள், அவன் நித்திரையாகிப் போய்விடுவானோ என்று பயந்தாள். பின்பு தைரியத்தைக் கெழ்ப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

“ ஏதாவது பேசுங்கள் நாங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் இல்லையா?” “இப்பொழுது என்ன இருக்கு அதைப்பற்றி முடிவுக்குவர?” “இத்துடன் முற்றுப் பெற்றுவிட்டது என்பதா அதன் அர்த்தம்” மறுமொழி இல்லை. மெளனம் அவர்களுக்கிடையில் துயில் கொண்டது. அவனுக்கது நிம்மதியற்ற இரவாகியது. ஆனால் அதிகாலையில் அவனை ஆழ்ந்த துயில் ஆட்கொண்டது.
அவள் இல்லாத காலையில் அவன் விழித்தான். அவள் குளியலறையில் இருக்கவேண்டும். அவன் திருப்பிப் படுத்துக்கொண்டான். கால் மணித்தியாலம் ஆயிற்று. எந்த ஆளரவமுமில்லை. படுக்கையை விட்டெழுந்து தேடினான். அங்கே அவளைக் காணவில்லை.
அவனது இதயத்துடிப்பு அதிகரித்தது. முன்கதவின் கழற்றப்பட்ட தாழ்ப்பாள் அச்சத்தை உறுதிப்படுத்தியது. அவள் போய்விட்டாள். இந்த நேரத்தில் யாரையும் சந்திக்கப் போயிருக்க மாட்டாள். கடல் பற்றிய நினைவு அவனுக்கு வந்தது. அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். மற்றைய எல்லா உணர்ச்சிகளையும் ஆறுதல் இடம் பெயர்த்தது. அசிங்கமான விடயத்திற்கு எவ்வளவு சுலபமான தீர்வு. அடுத்த கணத்தில் எவ்வளவு கொடுரமாக அவனால் முடிந்தது. மனைவியின் மரணத்துக்கு அழாவிட்டால் சனங்கள் என்ன நினைக்கும்? தன்னை திடப்படுத்திக் கொண்டு நித்திரை கொள்ளும் தாயைப் பார்க்கிறான். அம்மாவை எழுப்பி விடயத்தைச் சொல்லவா? வேண்டாம் முதலில் அமைதியாகச் சிந்திப்பதே நல்லது. சிந்தனையில் சிக்குண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
அவளுடைய பொருட்கள் இங்கே இருக்கின்றன. அவளது உடைகள் அப்பிடியே இருக்கின்றன. எனவே சுனிதியின் வீட்டிற்கோ அல்லது தகப்பனின் வீட்டிற்கோ போயிருக்க முடியாது. இது, அவள் தற்கொலை செய்து கொண்டிருப்பாள் என்ற ஊகத்தை உறுதிப்படுத்தியது. இப்பொழுது முதற்காரியமாக, அவள் காணாமல் போய்விட்டாள் என்பதைப் பொலிசுக்கு அறிவிக்கவேண்டும அதன்பிறகு தகப்பனாருக்கு விபரமாகக் கடிதமொன்று எழுதுவேண்டும்.
அவனது மனம் எல்லையற்று சிந்தனைக்கு சிந்தனை தாவிக் கொண்டிருந்தது. அவனது கைகள் தலையணையுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் ஏதோ இருளாக அவனது கண்ணில் பட்டது. ஆவல் தூண்ட முன்னால் குனிந்து அந்தக் குறிப்பைப் பார்த்தான்.
அது சில வரிகளைக் கொண்டிருந்தது: எங்களது உறவு நேற்றுடன் முடிவுக்கு வந்தாயிற்று. சுயாதீனமான வாழ்வை முன்னெடுப்பதற்காகப் போகிறேன். என்னைத் தேடாதே
அந்தக் கடிதத்தில் அவளது கையெழுத்துடன் மங்கள சூத்திரமும் வைக்கப்பட்டிருந்தது.
அறிமுகமும், மொழிபெயர்ப்பும் சி.ஜெயசங்கர்.
-69

Page 39
சூரியா ஆலோசனைக் குழு
அம்மன்கிளி முருகதாஸ் இராஜேஸ்வரி தட்சணாமூர்த்தி ஒட்றி றிபேரா கமலினி கதிர்வேலாயுதபிள்ளை குமுதினி சாமுவேல் சரளா இமானுவேல் சித்திரலேகா மெளனகுரு சுனிலா அபயசேகர சூரியகுமாரி பஞ்சநாதன் நதீரா மரியசந்தனம் வாசுகி ஜெயசங்கர்
சூரியா அலுவலர்கள்:
சிறிவஸ்ளியம்மன் சிதம்பரப்பிள்ளை கிரிஜா இரத்தினசிங்கம் விஜயகுமாரி முருகையா யுமுனா இப்ராஹிம் ஜெயந்தி தளையசிங்கம்

வருடாந்தச் சந்தா - பெண்
ஐரோப்பா,வடஅமெரிக்கா,
அவுஸ்திரேலியா : US S 20/-
இந்தியா US S 20/-
இலங்கை : ரூபாய்100/-
சந்தா விண்ணப்பம்199.
பெண் சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
இத்துடன் காசோலை / மணி ஒடரை சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பேரில் அனுப்பிவைக்கிறேன்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 27 A, லேடி மனிங் ட்றைவ், மட்டக்களப்பு.
Suriya Women's Development Centre, 27A, Lady Manning Drive, Batticalloa, Shri Lanka.

Page 40