கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தந்தையும் மைந்தரும்

Page 1
தமிழரசுக் கட்சி பிர
 

சியவிலர் விமர்சனம்

Page 2

தந்தையும் மைந்தரும்
இமயவரம்பன்
புதிய பூமி வெளியீட்டகம்

Page 3
தலைப்பு
ஆசிரியர்
முதற்பதிப்பு
ஒளி அச்சுக்கோவை
அச்சுப் பதிப்பு
வெளியீடு
விநியோகம்
தந்தையும் மைந்தரும்
இமயவரம்பன்
2000 கார்த்திகை
சொவ்ரெக் கிரபிக்ஸ்,
சொவ்ரெக் கிரபிக்ஸ்.
புதிய பூமி வெளியீட்டகம் 47, 36.lg, LDITly. கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழும்பு - 11.
வசந்தம் பிறைவேட் லிமிட்டட 44, 36ugh LDrfly,
கொழும்பு மத்திய சந்தைத் தொகுதி, கொழும்பு - 11.
: eBurT. 75.00

ax தந்தையும் மைந்தரும்
முன்னுரை
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிப் படிக்கும் ஒருவரால் பெளத்த சிங்களப் பேரினவாதத்தின் வரலாற்று வளர்ச்சியைத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். அத்தகைய ஒருவர் தமிழ்த் தேசியவாதம் வகித்து வந்த வரலாற்றுப் பாத்திரம் பற்றியும் தவறாத படித்தறிவத அவசியமாகும். பேரினவாதத்திற்கும் தமிழ்த் தேசியவாதத்திற்குமிடையில் நிகழ்ந்து வந்த இனப்பிளவையும் வர்க்க உறவையும் ஆழ்ந்த நோக்குவதன் மூலமே தேசிய இனப்பிரச்சினையின் முழுமையையும் அதன் சாராம்சத்தையும் உரியவாறு புரிந்து கொள்ள முடியும்
அவ்வாறு நோக்கும் போது தமிழ்த் தேசிய வாதத்தை முக்கிய காலகட்டங்களில் பிரதிநிதித்துவம் செய்து வந்த தமிழரசுக் கட்சி பற்றியும் அதன் தலைவர் எஸ்ஜேவிசெல்வநாயகம் (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்) பற்றியும் தெரிந்து கொள்ளல் வேண்டும். ஏனெனில் மேற்படி விடயம் பற்றி இன அடிப்படையிலான ஒரு வகைத் தரிசனப் பார்வையே செலுத்தப்பட்டு வந்துள்ளது. தமிழரசுக் கட்சி எனப்பட்டது தமிழர் உரிமையை மீட்கும் புனிதக் கடமையை ஏற்றுள்ள கட்சி எனவும் அதன் தலைவரான செல்வநாயகம் தீர்க்க தரிசனம் மிக்க தமிழினத்தின் தந்தை என்றும் பிரச்சாரப்படுத்தப்பட்டு வந்த ஒரு சித்திரத்தையே தமிழ் மக்கள் காணமுடிந்தது.
ஆனால் அதன் மறுபக்கமான வர்க்க நிலையும் அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளும் அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளும் எவ்வாறு முழுத் தமிழ் மக்களையும் பாதித்து வந்தன என்பது பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வருவத இன்றைய நிலையில் மிகவும் தேவையான ஒன்றாகும்.
கடந்த நாற்றாண்டில் தமிழ்த் தேசியவாதத்தின் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்க்கும் போது பொன்னம்பலம் இராமநாதன் சகோதரர்களின் குடும்பங்களிடமிருந்தே தமிழ்த் தேசியவாதத் தலைமையை ஜூ.ஜீ.பொன்னம்பலம் உருவாக்கிய தமிழ் காங்கிரஸ் வாரிசு உரிமையையாகக் கையேற்றுக் கொண்டது. அதிலிருந்து தோற்றம் பெற்றதே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி. இங்கே செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதிலும் வேளாள மேட்டுக்குடித் தலைமை ஆதிக்கத்தையே தமிழரசுக் கட்சி தமிழ் காங்கிரசிடமிருந்து பறித்தெடுத்தக் கொண்டது என்பதே உண்மையானதாகும். தமிழரசுக் கட்சி எழுபதின் நடுக் கூறிலே தமிழர் கூட்டணி என்ற புதிய கட்சியை அரங்கேற்றிய போதும் மேட்டுக்குடி உயர்

Page 4
தந்தையும் மைந்தரும்
భ: 驚 భ 38:
வர்க்கத் தலைமையே அங்கும் உறுதிப்படுத்திக்கொண்டத.
இவ்வாறு காண்பது தமிழ்த் தேசியவாதத்தின் பிரநிதிகளாக இருந்த தனிநபர்களின் நடத்தை மட்டும் சம்மந்தப்பட்டதொன்றல்ல. அந்தந்தக் காலங்களில் அத்தகைய தலைமைகள் எடுத்துவந்த அரசியல் முடிவுகள், நடைமுறைப்படுத்திய இயக்கங்கள், நடாத்திய போராட்டங்கள் மூலமாக மட்டுமன்றி அவற்றின் விளைவுகளையும் வைத்தே சரியான முடிவுக்கு வர முடியும். அந்த வகையில் தமிழ்த் தேசிய வாதத்தை குறிப்பிட்ட கால கட்டத்தில் தலைமை தாங்கி முன்னெடுத்து வந்த தமிழரசுக் கட்சி பற்றியும் அதன் தலைவரான செல்வநாயகம் பற்றியும் வர்க்கக் கண்ணோட்டத்தில் அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தவதே தந்தையும் மைந்தரும் என்னும் இந்நூலின் நோக்கமாகும்.
தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை சிங்கள ஆளும் வர்க்கப் பேரினவாத சக்திகளுடன் வைத்து வந்த வர்க்க உறவானது இன நலன்களை விட மிக வலிமையானதாகும். இதனை தமிழரசுக் கட்சியின் வரலாற்றை விமர்சனத்திற்கு உட்படுத்தம் போது தெளிவாகக் காணமுடியும். அத்துடன் அத்தகைய விமர்சன வெளிச்சத்தில் ஏனைய தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் வர்க்க நிலைப்பாட்டையும் குறிப்பாக தமிழ் இளைஞர் இயக்கங்களில் காணப்பட்ட சாராம்சத் தவறுகளையும் கூட அடையாளம் கண்டுகொள்ள இயலும்,
ஆதலால் தேசிய இனப்பிரச்சினையானது உச்ச கட்ட யுத்தமாகி நிற்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசிய வாதத்தின் பிற்போக்கான கூறுகளை அடையாளம் காண்பதும் அதனை நிராகரித்து பாட்டாளி வர்க்க நோக்கில் தேசிய இனவிடுதலை நோக்கிய அரசியல் போராட்டப் பயணத்தை முன்னெடுப்பதம் அவசியமாகின்றது. அதன் அடிப்படையில் இமயவரம்பன் எழுதிய தந்தையும் மைந்தரும் நூல் பயன் உள்ள ஒரு முயற்சியாகும். இந் நூல் 1949ல் தமிழரசுக் கட்சி எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது முதல் அவர் இறந்த 1976ம் ஆண்டு வரையான கால கட்டத்தின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் விமர்சனத்திற்கு உட்படுத்திக் காட்டுகின்றது. அந்த வகையில் இமயவரம்பனின் இந்நூல் அவரது நூல் வரிசையில் மற்றொரு முக்கிய நாலாக இடம் பெறுகின்றது.
சி. கா. செ.
கொழும்பு 25-I I-2OOO
 
 

நிஜங்களும் நிழல்களும்
தலைப்புகள்
தீர்க்கதரிசியின் உருவாக்க
வடக்கே தமிழரசு தெற்கே சமஷ்டி
"நண்டெடுத்து வேண்டாம் நமக்கு"
திருமலைக்குச் செல்லுவோம், தமிழின் உரிமை வெல்லுவோம்
சிறியை எதிர்ப்போம் சிறையை நிறைப்போம்
நதி முலமும் ரிஷி முலமும்
ஈழத்துச் சாதியமும் ஈழத்துக் காந்தியும்
சக்தியாக்கிரகமா, சப்பானிப் போராட்டமா?
໑. ຕົງຜິດໄຫ້ພໍ່.
திக்குத் தெரியாத காட்டில்
சாயம் வெளுத்த தமிழரசுக் கட்சி
தரப்படுத்தலும் தடுமாற்றமும்
துன்பம் சூடும் நேரம்
இயலாமையின் அரசியல்
அகிம்சையின் மறைவில் வன்முறையின் தோற்றம்
தந்தை சொல் மிக்க மந்திரம்
இறுதி ஊர்வலம்

Page 5

1. நிஜங்களும் நிழல்களும்
1997ல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பிறந்து ஒரு நூற்றாண்டு நிறைவைக் குறித்தது. அதை யொட்டிப் பல நினைவுக் கட்டுரைகள் வந்தன. தமிழரசுக்கட்சியும் அதன் மாற்று வடிவாக உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியும், இழந்த தமது பொற்காலத்தை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக இந்த நூற்றாண்டைப் பயன்படுத்தியதில் எதிர்பாராதது எதுவும் இல்லைத்தான். தமிழ்த் தேசியவாத அரசியலின் சீரழிவைத் தமிழரசுக் கட்சியின் இறுதியாண்டுகள் அடையாளம் காட்டின. தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தேசியவாத அரசியலில் இன ஒற்றுமையின் சின்னமாகக் காட்டப்பட்ட போதும் உண்மையில் அது தமிழ்த் தேசியவாதிகளது பாராளுமன்றத் தரகு அரசியல் வறுமையின் இழிநிலையின் வெளிப்பாடே ஒழிய வேறேதுவுமில்லை. இந்த உண்மையை நாம் தெளிவாகக் காணச் சில ஆண்டுகளே தேவைப்பட்டன.
ஈழத்தின் தமிழ்த் தேசியவாத அரசியல், திட்டமிட்டு வளர்க்கப்பட்ட பல மயக்கங்களை ஆதாரமாகக் கொண்டே தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. இந்த மயக்கங்கள் பல்வேறு பரிமாணங்களை உடையன. தமிழரது வரலாற்றுப் பெருமைகள், தமிழின் தொன்மை, தமிழரது (முக்கியமாக குடாநாட்டுத் தமிழ் மேட்டுக்குடிகளது), அறிவின் மேன்மை பற்றிய மயக்கங்கள் தமிழ்த் தேசியவாதத்தின் ஆதாரமான கூறுகளாக இருந்தன.
மறுபுறம், தலைவர்கள் பற்றிக் கட்டியெழுப்பப்பட்ட சில படிமங்கள், இந்த நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த உள்நாட்டு வெளிநாட்டு அரசியற் போக்குக்கட்கு வசதியாக உருவாக்கப்பட்டவை. அரசியற் சூழ்நிலை மாறும்போது இப்படிமங்களும் தமது தன்மையில் மாறி வந்துள்ளன. தலைவர்களை வர்ணிக்கப் பயன்பட்ட அடைமொழிகளில் நாம் இதைக் காண முடியும்.
மஹாத்மா முதலான இந்தியத் தேசிய காங்கிரஸ் அடைமொழிகள் தொட்டு, பெரியார், அறிஞர், நாவலர், கலைஞர் ஆகியவை ஊடாக ஜெயலலிதாவை வர்ணித்த பல்வேறு நாமங்கள் வரை, பட்டங்களும் புகழாரங்களும் மலிந்து பொருளற்றுப் போய்விட்ட தமிழகத்தினின்று சற்று வித்தியாசமான முறையில், ஈழத்துத் தமிழ் தேசியவாதத் தலைவர்களது படிமங்கள் கொஞ்சம் கவனமாகவே விருத்தி செய்யப்பட்டுள்ளதை இங்கு கூறியாக வேண்டும்.
வெள்ளையராட்சியின் போது, பிரித்தானிய அரசாங்கத்துடனும் அரச பரம்பரையினருடனும் பேரம் பேசும் போதும் அவர்களால் வழங்கப்படும் பட்டங்களும் தகுதியின் அனயாளங்களாகக் காணப்பட்டன. பொன்னம்பலம் ராமநாதனின் சேர்’
(1)

Page 6
தந்தையும் மைந்தரும்
பட்டம் முதல் சீமைக்குப் போய் வாதாடிச் சிங்கள இனவாதிகளைச் சிறைமீட்ட சீமானுடைய பிரதாபங்கள் வரையானவை பற்றிப் பேசும் வழமை இப்போது மங்கி விட்டாலும் மடிந்து விடவில்லை. இந்தச் சீமான்களது பழமைவாதமும் சாதி வெறியும் பிரித்தானிய விசுவாசமும் அவர்களது தமிழ்த் தேசிய வாதத்தினின்று பிரிக்க முடியாதவை. பிரித்தானிய மகாராணியாருக்குக் கணக்குக் கற்பித்தவர் என்று சொல்லப்பட்டவரும் பின்னர் அந்த மகாராணிக்குத் தந்தியடித்தவரும் மாவிட்டபுரம் கோவிலில் தாழத்தப்பட்ட மக்கள் புகுவதை எதிர்த்து வழக்காடியவருமான சுந்தரலிங்கமும் அந்த மரபில் வந்தவர்தான்.
(ஆங்கில்ம்) படித்தவர், பாராளுமன்றத்தில் (ஆங்கிலத்தில்) விவாதிக்கக் கூடியவர் போன்ற தகுதிகளும் தமிழ்த் தேசியவாதத்தின் அதி முக்கியமான தகுதிகளாக நீண்ட காலமாக இருந்து வந்தன. இந்த விதமான அதிபுத்திசாலித் தலைமையின் சிகரமாகத் தன்னைக் காட்டிக்கொண்ட தனிப்பெரும் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் அரசியல் சாதுரியம் மலையக மக்களின் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறித்த பின்பும் அவரால் வடமாகாணத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. 1956ம் ஆண்டில் யூஎன்.பி, சிங்கள மொழிக் கொள்கையை முன்வைத்துத் தேர்தலில் குதிப்பதை அவரால் தடுக்க முடியாமற் போனபின்பு, தமிழ்த் தேசியவாத அரசியலில் ஒரு சிறு திசை மாற்றம் ஏற்பட்டது. அதன் விளைவாக உருவான தமிழரசுக்கட்சி இருபது வருடங்கட்கும் மேலாகத் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது.
தமிழ்க் காங்கிரஸிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு அரசியற் தலைமை மாறியதில் தமிழரசுக் கட்சியின் அரசியலில் இருந்த ஒரு வெகுசனப் பண்பு முக்கிய பங்கு வகித்தது. ஆயினும் தமிழ்க் காங்கிரஸின் சரிவின் பின்பு தமிழரசுக் கட்சி தன்னைத் தெளிவாகவே எசமானத்துவ அரசியலுடன் இணைத்துக் கொண்டு விட்டது. இதன் காரணம் தமிழரசுக் கட்சியின் அரசியல் வெகுசனங்களையும் வெகுசன அமைப்புக்களையும் பயன்படுத்திய போதும், ஒடுக்கப்பட்ட பெரும் பான்மையினரது நலன் சார்ந்து அமைந்த ஒன்றல்ல. இதை 1960 களில் தெளிவாகக் காணமுடிந்தது.
தமிழரசுக் கட்சியின் அரசியற் தந்திரோபாயங்களில் முக்கியமான ஒன்று அதன் தலைவர் செல்வநாயகத்தின் படிமமாகும். சிங்களம் மட்டுமே பற்றிய விவாதம் தென்னிலங்கையில் சூடேறிய போது செல்வநாயகம் தீர்க்கதரிசி என்றும் 1956ல் தேர்தலின் வெற்றியின் பின்பு தமிழரசுத் தந்தை' என்றும் பின்னர் ஈழத்துக் காந்தி என்றும் அழைக்கப்பட்டார். இந்த மூன்று அடைமொழிகளும் தருணமறிந்து தமிழரசுக் கட்சிப் பிரசாரகர்களால் பயன் படுத்தப்பட்டன. 1956 முதல் 1961 சத்தியாக்கிரகம்
- (2)
 

வரை இந்தப் படிமங்களால் மிகுந்த பயன் இருந்தது. இதன் பின்பும் செல்வநாயகத்தின் தீர்க்க தரிசனமும் ‘காந்தியமும் தமிழரசுக் கட்சியினரால் பயன்படுத்தப்பட்டன. ஆயினும்
1956க்குப் பின்பு தமிழரசுக் கட்சியின் தலைமை ஆட்டங் காணத் தொடங்கிவிட்டது.
1970 களில் இலங்கையிலும் உலகத்திலும் ஏற்பட்ட சில மாற்றங்கள் புதிய படிமங்களது தேவையை வலியுறுத்தின. 1956க்குப் பின்பு "இரும்பு மனிதராக" நாகநாதனும் 1960களில் தமிழரசுத் தளபதியாக அமிர்தலிங்கமும் அறியப்பட்டிருந்தனர். இது போன்ற பட்டங்களின் உருவாக்கத்தில் சுதந்திரன் ஏட்டுக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. இவற்றில் தமிழகத்தின் திராவிட இயக்கத்தின் பட்டங்களது சாடை தென்பட்டதை நாம் கவனிக்காமல் விடஇயலாது. ஆயினும் 1970 தேர்தலில் தோல்வி கண்ட தளபதி மீண்டும் தனது பாராளுமன்றப் பிரவேசத்தை நடத்த அவருக்கு "ஈழத்த முஜிபுர் பட்டமும், முஜிபுர் கவிழ்ந்த பிறகு, 'ஈழத்து அரபாத் பட்டமும் சூட்டப்பட்டன. இவையெல்லாம் காலத்தின் தேவையையொட்டி உருவாக்கப்பட்ட படிமங்களின் வரிசையில் அடங்குவன.
1996ல் அமிர்தலிங்கத்தைப் பற்றி சபாரத்தினம் என்பாரது சரிதை நூல் வெளியானது. அதில் மிகவும் கவனமாக அமிர்தலிங்கத்தை மிதவாத அரசியலின் இலக்கணமாகக் காட்டும் முயற்சியை எவரும் தவறவிட்டிருக்க முடியாது. இதே அமிர்தலிங்கம் பற்றி இருபது வருடங்கள் முன்பு முன்வைக்கப்பட்ட படிமமும் 12 வருடங்கள் முன்பு அவரது நினைவுக் குறிப்புக்களில் வெளியான கருத்துக்களும் அடையாளம் காட்டும் மனிதர் வேறொருவர். நாளை, இதே அமிர்தலிங்கம் ஈழத்துக் காந்தியாரது உண்மையான ‘காந்திய வாரிசாக நம்முன் காட்டப்படலாம். மகாத்மா” காந்தி பற்றிய மயக்கங்கள் இந்தியாவில் இன்னமும் உள்ளன. அது போல இலங்கையிலும் உள்ளன. இவை தெளிவடையும் போது இந்தக் காந்தி படிமத்தின் மறுபக்கம் நாம் அறிந்த பக்கத்தை விட அதிகமாக 'ஈழத்துக் காந்தி செல்வநாயகத்துக்கும் அவரது 'காந்திய மைந்தர்களுக்கும் பொருந்துமா என்பதையும் நாம் காணலாம்.
இக்கட்டுரையின் நோக்கம் செல்வநாயகம் என்ற தமிழ்த் தேசியவாதத் தலைவரது அரசியல் முக்கியத்துவத்தைக் குறைவாக மதிப்பிடுவது அல்ல. அவரதும் தமிழரசுக் கட்சியினதும் முக்கியத்துவம் பற்றிய ஐயங்கள் எவருக்கும் இருக்க நியாயமில்லை. ஆயினும் அவை எந்தத் தமிழ்த் தேசத்தின் தேசியவாதம் என்பதையும் அது பற்றிக் கட்டியெழுப்பப்படும் கற்பனைக் கதைகளையும் ஆராய்வது அவசியம். தமிழரசு அரசியல் ஏன், எங்கே தவறிழைத்தது என்பதை அறிய முயலும் போது, அவற்றுக்கான பதில்களைச் சிங்களப் பேரினவாதத்திற்குள் மட்டுமே தேடுவது சிலருக்கு வசதியானது. மறபுறம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றோரது பார்வைக் கோணத்திலிருந்து இன்னமும்
(3)

Page 7
ః தந்தையும் மைந்தரும்
வைக்கப்படும் விமர்சனங்கள் ஈழத்தின் தமிழ்த் தேசியவாத அரசியலின் சில அடிப்படையான பிரச்சினைகளை ஒதுக்கிவிடுகின்றன.
அடுத்துவரும் பகுதிகளில் தமிழரசுத் தந்தை பற்றிய காந்திய, தீர்க்கதரிசனப் படிமங்கள் பற்றியும் அந்தக் கட்சியின் அரசியலின் உண்மையான தன்மைக்கும் மக்கள் முன் வழங்கப்பட்ட படிமத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றியும் கவனிப்போம். தமிழரசுக் கட்சியின் தலைமையின் வரலாற்று வளர்ச்சி 1983ல் அதை எங்கே கொண்டு போய் விட்டது என்று அறிவோம். ஏன் என்ற கேள்விக்கான பதிலில் ஒரு பகுதியாவது இங்கு கிடைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதைவிட முக்கியமாகத் திரிப்புக்களற்று வரலாற்றைப் பார்க்கும் முயற்சிகட்கு இது ஒரு பங்களிப்பாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
2. தீர்க்கதரிசியின் உருவாக்கம்
செல்வநாயகத்தைக் காந்தியாகக் காட்டுவதற்கான தேவை முற்றிலும் தேர்தல் அரசியற் பிரசார நோக்கை உடையதே. சிங்களப் பேரினவாத அரசியல் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அநகாரிக தர்மபால போன்றோருடனே தொடங்கிவிட்டது. ஆட்சியிலிருந்த கொலனிய எசமானர்களுடன் கிறிஸ்துவ மத நிறுவனத் தலைமைகள் கொண்டிருந்த நல்லுறவும் மதமாற்றமும் சுதேசியக் கலாசாரத்தை இழிவாகக் கருதும் போக்கும் காரணமாக, கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மீதான பெளத்தப் பகைமையைக் கொலனிய எதிர்ப்புடன் சேர்த்துக் கருத இடமிருந்தது.ஆயினும் இப்பகைமை மதபீடங்களுடன் மட்டுமானதல்ல. அது கிறிஸ்துவர்கள்மீதான பகைமையாகவும்தன்னை வெளிப்படுத்தியது. முஸ்லீம்கள் மீதான பகைமையும் இந்தக் காலத்தின் சிங்கள பெளத்த எழுச்சியுடன் சேர்ந்து எழுந்தது. சிங்களவர் தமிழர் என்ற முரண்பாடு காலப்போக்கில் உருவாக்கப்படுவதற்கான சாடை இருந்தாலும், சாதிய முரண்பாடுகள் இரண்டு சமூகங்கட்குள்ளும் இருந்து வந்ததாலும் தமிழ் உயர்சாதி, சிங்கள உயர்சாதி மேட்டுக்குடிகளுக்குமிடையே சமரசம் பேணப்பட்டது.
பெளத்த - சிங்களப் பேரினவாதத்தின் இலக்குகளாக ஒவ்வொரு தேசிய சிறுபான்மை இனமும் அமையும் என்பது பற்றி 1930-40 காலகட்டத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் தலைமைகட்டு விளங்காமலிருக்க நியாயமில்லை. ஜே.ஆர்.ஜயவர்த்தன சிங்களமே அரச கருமமொழியாக வேண்டுமென்று சட்டசபையில் பிரேரணையை முன் வைத்ததையும் தொழிற் சங்கத் துறையில் இருந்த ஏ.ஈ.குணசிங்கவுடைய பச்சையான இனத்துவேஷத்தையும் இந்திய வம்சாவழியினர்
(4)
 

தந்தையும் மைந்தரும்
மீதான பகைமையையும் பற்றி அறிந்த எவருக்கும் இந்த விதமான போக்கு எதிர்காலத்தில் எங்கே நம்மைக் கொண்டு போகும் என்று தெரியாமலிருந்திருக்க முடியாது. இதைத் தெரிந்திருக்க ஒரு தீர்க்க தரிசனம் தேவையுமில்லை.
இதற்கு எவ்வாறு முகங் கொடுப்பது என்பதில் தேசிய சிறுபான்மை இனங்களின் தேசியவாத அரசியற் தலைமைக்கும் இடதுசாரிகட்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு இருந்தது. பேரினவாதிகள் போலவே சிறுபான்மை இனங்களின் தேசியவாதத் தலைவர்களும் பிரச்சினையின் தீர்வைத் தமக்கு வசதியான ஒரு தேசிய அடையாளத்தினுள் தேடினார்கள். அந்த அடையாளங்களுட் பொதிந்திருந்த வர்க்க நலன்கள், யாரும் திட்டமிடாமலேயே கூட, அவர்களது அரசியலில் தமது முத்திரையைப் பதித்திருந்தன. குறிப்பிடத் தக்களவு முற்போக்கான தலைமைகளால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் கூடக், காலப்போக்கில் எசமான வர்க்கத்தின் கையில் போய்ச் சேர்ந்ததற்கு மலையக மக்களது தொழிற்சங்க இயக்கம் ஒரு சான்று. தேசியவாதத்தின் முற்போக்கான நிலைப்பாடு நிபந்தனைக்கு உட்பட்டதும் வரலாற்றுச் சூழல்கள் ஏற்படுத்தும் தேவையால் ஏற்படுவதும் மட்டுமே. சோஷலிஸ தேசியவாதம் என்பதிற் தேசிய வாதமே ஈற்றில் மேலோங்கிப் பல நாடுகளில் அதிகார வர்க்கத்தின் தேசியவாதமாகவே முடிந்ததை மீண்டும் மீண்டும் கண்டிருக்கிறோம். ஈழத் தமிழ்த் தேசியவாதத்தில் இந்த சோஷலிஸ அடையாளம் மிகவும் பலவீனமான ஒன்றாகவே இருந்து வந்தது. சிங்களப் பேரினவாதத் தலைமை பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கம் என்ற நிலைப்பாட்டை ஒரு அர்த்தத்திலும் சிறுபான்மை தேசிய இனங்களது அடையாளத்தை நிராகரித்தல் என்பதை மறு அர்த்தத்திலும் கொண்டிருந்தது.
சில இடதுசாரிகளும் இந்தச் சிங்கள பெளத்தக் கூறுகளைத் தம்முள் உள்வாங்கியிருந்தனர். ஈழத்துத் ட்ரொட்ஸ்கியத்தின் தந்தை எனப்படும் பிலிப் குணவர்த்தன 1956அளவில் இந்தச்சிங்கள பெளத்தத்திற்குட் சங்கமமாகத் தொடங்கி 1965ல் யூஎன்.பியில் இணைந்தார். இன்னொரு ட்ரொட்ஸ்கிவாதியான கொல்வின் ஆர். த. ஸில்வா ஒருகாலத்தில் பன்சாலைகளை இடித்து மலசல கூடம் அமைப்போம் என்று சொல்லியதும் இருமொழி-ஒரு நாடு, ஒருமொழி - இருநாடுகள் என்று எச்சரித்ததும் நமக்கு நினைவிருக்கலாம். அதே கொல்வின் 1970ல் தலதா மாளிகைக்கு பூக் கொண்டு போனதும் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை மறுக்கும் விதத்தில் 1972ல் புதிய அரசியல் யாப்பை எழுதியதும் பலருக்கு இன்னமும் நினைவாயிருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளிருந்தும் பேரினவாதச் சேற்றுக்குள் விழுந்தவர்கள் இருந்தார்கள். அது போலவே ஈற்றில் தமிழ்த் தேசிய வாதத்திற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட வி. பொன்னம்பலம் மோதிலால் நேரு போன்றோரும் விரக்தி
(5)

Page 8
தந்தையும் மைந்த
காரணமாக விடுதலை இயக்க அரசியலில் விழுந்தவர்களும் இருந்தார்கள்.
எப்படியாயினும், இடதுசாரி அணுகுமுறை, தேசிய இனங்களின் சமத்துவம் ஒற்றுமை என்பனவற்றை வலியுறுத்தி வந்தது. இடதுசாரிப் பார்வை என்று நாம் அடையாளங் காணக் கூடிய ஒரே விதமான பார்வை உலகில் எங்கும் இருந்ததில்லையென்ற போதும், மாக்ஸியச் சிந்தனை தேசிய இன ஒடுக்கலை வர்க்க ஒடுக்குமுறையின் அம்சமாகவே காணுவதால் அதற்கும் தேசியவாத அணுகுமுறைக்கும் அடிப்படையான வேறுபாடு இருந்தே வந்தது. அவர்கள் இலங்கையில் வலியுறுத்திய தேசிய ஐக்கியம், தேசம் பற்றி அவர்களது அனுபவரீதியாகவும் அணுகுமுறை சார்ந்தும் ஏற்பட்டதே. சமசமாஜக் கட்சி சிறுபான்மை இனங்களை கண்டதே ஒழியத் தேசிய இனங்களாகக் காண மறுத்தது. கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மக்களைத் தேசிய இனமெனவும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு பாரம்பரிய பிரதேசங்கள் உள்ளன எனவும் ஏற்றுக்கொண்டது.
தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் தமிழர்-சிங்களவர் என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வை வேண்டிநின்றனர். இந்த வகையில் முஸ்லிம்கள் பற்றியும் மலையகத் தமிழர் பற்றியும் அவர்களது பார்வை யாழ்ப்பாண மையமான ஒன்றாகவே இருந்தது. முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கான தகுதி, தமிழ்த் தேசியவாதத்திற்கு என்றுமே இருந்ததில்லை. ஏனெனில், அத்தலைமை யாழ்ப்பாண உயர்சாதியினரது குறிப்பாக நிலவுடைமையாளர்கள், வியாபாரிகள், பெரும் உத்தியோகத்தர்கள் போன்றோரது நலன்களை முதன்மைப்படுத்திய தலைமை. இத்தகைய குறுகிய கண்ணோட்டத்தில் அரசியலை அணுகிய ஒரு பின்னணியில்தான் பொன்னம்பலத்தின் 50க்கு 50 என்ற கோரிக்கை எழுந்து, தமிழரல்லாதோரால் நிராகரிக்கப்பட்டது. அதே பொன்னம்பலம் 1947 தேர்தலில் வடக்கில் தமிழ்க் காங்கிரஸின் வெற்றிக்குத் தலைமை தாங்கினார். அதன் பின் சிங்களப் பேரினவாதத்தினதும் ஏகாதிபத்திய சார்பு அரசியலினதும் வாகனமாகிய யூஎன்.பி. அரசாங்கத்தில் கூட்டுச் சேர்வதற்காக மலையக மக்களது வாக்குரிமையும் குடியுரிமையும் பறிபோகத் துணையானார். இதற்குத் தனது ஆதரவை மறுத்த காரணத்திற்காகவே பின்னர் செல்வநாயகம் ஒரு தீர்க்க தரிசியாகப் போற்றப்பட்டார். அவரது தீர்க்கமான தரிசன “இன்று அவர்களுக்கு நாளை நமக்கு” என்ற கூற்று தமிழரசுப் பிரச்சாரகர்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வந்தது.
வடக்கு-கிழக்கு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதிகளில் பெரும் பாலானோரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட பிரசாவுரிமைச் சட்டத்தைச் சகல இடதுசாரிகளும்
(6)
 

எதிர்த்து வாக்களித்தனர். அன்று ஒரு தமிழ் இடதுசாரியேனும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. வடக்கு-கிழக்கு பகுதியிலிருந்து ஒரு இடதுசாரியேனும் பாராளுமன்றத்துக்கு அனுப்படவில்லை. இலங்கையின் இடதுசாரிகள் மிகவும் சரியாக
நடந்து கொண்ட முக்கிய விடயங்களில் இது ஒன்று. ஆயினும் தீர்க்க தரிசியாகக் காட்டப்படும் செல்வநாயகமும் பொன்னம்பலமும் செய்து கொண்ட ஏற்பாடு பற்றிப் பலரும் இன்று பேசுவதில்லை.
பிரசாவுரிமைச் சட்டம் பற்றிய பாராளுமன்ற வாக்கெடுப்பில் தமிழ்க் காங்கிரஸ் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி அதன் தலைவர் பொன்னம்பலமும் செல்வநாயகமும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆயினும் மந்திரிப் பதவி பெற்றுத் தனது அரசியல் வலிமையை வளர்க்க விரும்பிய பொன்னம்பலம் இந்த விடயத்தில் யூஎன்.பி, ஆட்சியுடன் ஒத்துப் போகவே விரும்பினார். பூரண ஒத்துழைப்பை அவராற் பெற்றுக் கொடுக்க இயலாது போனால் அவருக்குப் பதவி கிட்டாது என்பது உறுதி.
பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தமிழ்க் காங்கிரசுக்கு ஒரே ஒரு முழுமந்திரிப் பதவி மட்டுமே தர ஒப்புக்கொண்டதாயும் அது பொன்னம்பலத்துக்கே போகும் பட்சத்தில் தனக்கு எதுவும் இல்லை என்று தான் செல்வநாயகம் பிரசாவுரிமைச் சட்டத்தை எதிர்க்க நேர்ந்தது என்ற வாதம் தமிழ்க் காங்கிரஸ் வட்டங்களில் முன்வைக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸிலிருந்து விலகிய போது மிகவும் குறைவானதொகையினரே அவரோடு சென்றதும் மலையக மக்கள் பற்றிய பிரச்சினை, 1956ம் ஆண்டுத் தேர்தலில் செல்வநாயகம் தீர்க்கதரிசியாகக் காட்டப்படும் வரை வடக்கு-கிழக்கு அரசியலில் முக்கியத்துவம் பெறாததும் இதற்கான காரணங்களாக இருக்கலாம். ஆயினும் திரைமறைவிலேயே பேரங்கள் நிகழ்த்தப்படும் அரசியற் சூழலில் உண்மை பொய்களை உறுதி செய்வது கடினம்.
பிரசாவுரிமைச் சட்டத்தில் பொன்னம்பலம் ஒத்தழைப்பதாயின் அவரது கட்சியிலிருந்து அந்தச் சட்டவாக்கத்துக்கு எவருமே எதிர்த்து வாக்களிக்காமல் இருக்க வேண்டும் என்ற தேவை இருந்தது. இதை அவரால் உறுதிபடுத்த இயலாது போயிற்று. எனவே டி.எஸ்.சேனநாயக்கவுடன் செய்த பேரத்தின்படி - அதிகபட்சம் ஒருவர் மட்டுமே எதிர்த்து வாக்களிப்பார் என்று ஏற்பாடாயிற்று. ஆயினும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே செல்வநாயகத்தினளவுக்கோ அதைவிட அதிகமாகவோ இந்தப் பிரசாவுரிமை சட்டத்தை எதிர்த்த வன்னியசிங்கமும் இருந்தார். அவரால் எந்த நிலையிலும் இந்த அநீதிக்கு எதிராக வாக்களிக்க முடியாது என்பது தெளிவான பின்பு செல்வநாயகம் எதிர்த்தும் வன்னியசிங்கம் தவிர்ந்த ஏனையோர் ஆதரித்து வாக்களிப்பது என்றும் முடிவாயிற்று. வன்னியசிங்கம் வாக்களிப்பில் பங்குபற்றாத விதமாக
(7)

Page 9
தந்தையும் மைந்தரும்
ஏற்பாடு செய்யப்பட்டது. மூதவையில் தமிழ்க் காங்கிரஸின் உறுப்பினரான ஈ.எம்.வி.நாகநாதன் எதிர்த்து வாக்களித்தார்.
தமிழரசுக்கட்சியினர், பின்னாளில் இந்தப் பிரசாவுரிமைப் பிரச்சினையில் செல்வநாயகம் பொன்னம்பலத்தை எதிர்த்துப் போராடி மறுத்து வாக்களித்தார் என்று கட்டியெழுப்பிய படிமம் முற்றிலும் உண்மை சார்ந்ததல்ல. செல்வநாயகம் இப்பிரச்சினையில் கருத்து வேறுபட்டது வரவேற்க வேண்டிய விடயம்தான். ஆயினும் தீர்க்க தரிசனம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அரசியல் ஞானத்தினால் உண்டான நிலைப்பாடு அது என்றால், தீர்க்கதரிசியான செல்வநாயகம் பின்னர் ஒவ்வொரு முக்கியமான திருப்பத்திலும் விட்ட தவறுகளும் 1970ல் “இனிமேல் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொன்ன சொல்லும் ஒரு தீர்க்கதரிசியின் சிந்தனையை வெளிப்படுத்தவில்லை. இவை பற்றி, இனிவரும் பகுதிகளிற் கவனிப்போம்,
ஒரு தமிழ்த் தேசிய கட்சியாக இருந்த தமிழ்க் காங்கிரஸ் ஒத்த மனத்துடன் இந்திய வம்சாவழித் தமிழர்களது உரிமைக்காகக் குரல் கொடுக்க முடியாமையுடன் இடதுசாரிகளது நடத்தையை ஒப்பிடுவோம். பல கட்சிகளாகவும் உட்கட்சிப் பிளவுகளுடனும் திணறிக்கொண்டு இருந்த ட்ரொட்ஸ் கிவாதிகள் கூட, கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து நின்றனர். அவர்களது மாக்ஸியத்தின் குறைபாடுகளின் மத்தியிற் கூட அவர்களாற் தமிழ்த் தலைவர்களை விட நியாயமான நிலைப்பாட்டை எடுக்க முடிந்ததும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
அடுத்துவரும் கேள்வி, இந்தப் பிரச்சினையைக் காரணம் காட்டிப் பிரிந்தவர்கள் உருவாக்கிய தமிழரசுக்கட்சியால் ஏன் அதே பிரச்சினையில் உறுதியாக நின்ற இடதுசாரிகளுடன் தமது அரசியல் உறவை வளர்க்க முடியவில்லை என்பதுதான். இந்த விதமான சிந்தனை தமிழரசுக்கட்சியில் ஒரு சிலரிடம் இருந்தது. ஆயினும் அது சிறுபான்மைப் போக்காகி நாளடைவில் மங்கி விட்டது.
1952ம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ்க் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டது. தமிழரசுக் கட்சிக்கு எதிரான தமிழ் காங்கிரஸ் அடாவடித்தனத்திலிருந்து தமிழரசுக்கட்சியினருக்குக் கம்யூனிஸ்டுகள் பாதுகாப்பு வழங்கியதற்கு வர்க்க அடிப்படையிலான நியாயம் இருந்தது. இதன் விளைவாகவுமே யாழ்ப்பாணத்தில் 1953ஹர்த்தாலை ஆதரித்துத் திரு. வன்னியசிங்கம் செயற்பட்டார் என்பது இங்கு குறிப்பிட அவசியமான ஒரு விடயம். தமிழரசுக் கட்சியின் இடதுசாரிகளாகவே ஒரு காலத்தில் அமிர்தலிங்கமும் வி.என்.நவரத்தினமும் சிலரால் கருதப்பட்டனர். ஆயினும் பாராளுமன்றப் படியேறிய பின்பு, இடதுசாரி எதிர்ப்பில் மும்முரமாக நின்றவர்களில்
(8)
 
 

L t
அமிர்தலிங்கம் முக்கியமான ஒருவராகி விட்டார்.
தமிழரசுக்கட்சியின் கொள்கைகளில் ஒன்று சோஷலிஸம் என்றும் கட்சியின் உருவாக்கத்தின் போது, ஒரே ஒரு வாக்குப் பெரும் பான்மையால் அக்கொள்கை ஏற்கப்பட்டதாகவும் செல்வநாயகம் அதற்கு ஆதரவு தந்ததாகவும் பலரால் முன்னர் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழரசு சோஷலிஸம் 1956க்குப் பிறகு நடைமுறையில் எப்படி இருந்தது என்பது பற்றி பின்னர் பார்ப்போம்.
3. வடக்கே தமிழரசு தெற்கே சமஷ்டி
தமிழரசுக் கட்சியின் அரசியல், 1949 முதல் 1955 வரை மந்தகதியிலேயே இருந்தது. 1952ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், வன்னியசிங்கம், நீங்கலாக, யாழ் குடா நாட்டின் சகல தமிழரசு வேட்பாளர்களும் மண் கவ்வினர். வன்னியசிங்கம் கோப்பாய் தொகுதியில் சிறிதளவு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார். கிழக்கில் திருகோணமலைத் தொகுதியில் ந.இ.இராஜவரோதயம் பெற்ற வெற்றியும் அங்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டதால் வசதியானதென வேண்டும். ஏனெனில் அங்கு சிங்கள வாக்காளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தனர். அவர்களிற் கணிசமானோர் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கே வாக்களித்தனர். திருகோணமலைத் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் 1948ல் யூஎன்.பியில் சேர்ந்தது காரணமாகவே தமிழரசுக்கட்சி அங்கு போட்டியிட வசதி ஏற்பட்டது என்பதும் குறிப்பிட வேண்டியது. கிழக்கு மாகாணத்தில், தமிழ்க் காங்கிரஸ் திருகோணமலை தவிர்ந்த எத்தொகுதியிலும் காலூன்றவில்லை. எனவே, தமிழரசுக்கட்சி 1952ல் அங்கு போட்டியிட்டு வெல்ல இடமிருந்தது. மற்றப்படி, கொழும்பில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலுமாக நின்ற யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகளது தலைமை, வட மாகாணத்துக்கு வெளியே, கொழும்புச் சீமான்கள்பற்றிக் காட்டிய கவனத்தை கிழக்கின் தமிழர்கள் பற்றி காட்டவில்லை. மலையகத் தமிழர் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அவர்களது அக்கறை அதனிலும் குறைவாகவே இருந்தது.
வடக்கின் சாதிய சமுதாயத்தைத் தளமாகக் கொண்டு வளர்ந்த தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளிடமிருந்து ஒரு பரந்துபட்ட, மக்கள் நலன்சார்ந்த பார்வையை நாம் எதிர்பார்க்க நியாயமில்லை. இந்த வகையில் தமிழரசுக் கட்சித் தலைமை தமிழ்க் காங்கிரஸை விட முற்போக்கான ஒரு தோற்றத்தைக் காட்டியது. 1952ம் ஆண்டு காங்கேசன்துறைத் தொகுதியில் செல்வநாயகத்துக்கு எதிராக தமிழ் காங்கிரஸால் அவர் ஒரு கிறிஸ்துவர் என்ற வாதமும் பயன்படுத்தப்பட்டது. இதே
(9)

Page 10
கிறிஸ்துவர் தான் 1947ல் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக அதே தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றியீட்டியவர் என்பதும் நாம் நினைவிலிருத்த வேண்டியது.
தமிழ்த் தேசியத் தலைமைகளைப் பொறுத்தவரை, மலையகத் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் அவர்களது தமிழ்த் தேர்தல் தொகுதியில் தேவைகட்கேற்பவே முக்கியம் பெற்றனர். தனக்குள்ளேயே சாதிய, பிரதேச அடிப்படையிலான அதிகார அடுக்குகளையும் பிளவுகளையும் கொண்ட ஒரு சமூக அமைப்பைச் சார்ந்து உருவான ஒரு தலைமையால் மொழியின் அடிப்படையில் சகல தமிழ்ப்பேசும் சமூகங்களை வழி நடத்த முடியுமா என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை நம் முன் நிற்கிறது.
தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிசுக்கு ஒரு பாராளுமன்ற மாற்றுக் கட்சியாக உருவானதேயொழிய, வெகுசன அரசியல் இயக்கமாக உருவாகவில்லை. ஒடுக்கப்பட்ட வெகுசன அரசியல் இயக்கமாக உருவாகவில்லை. ஒடுக்கப்பட்ட வெகுசனங்களது தேவைகளை வைத்துப் போராடும் ஒரு கட்சியால் அத் தேவைகளைத் தேசிய இன வரையறைகட்குட் குறுக்கிக் கொள்ள இயலாது. அன்றைய அரசியல் நிலைமைகளில், மேட்டுக்குடி அரசியலுக்கு அது அவசியமும் இல்லை, சாதிமான், கனவான், கல்விமான் போன்றவையே தகுதிகளாக இருந்து வந்த அரசியற் கட்சிகளின் போராட்டங்களும், பிரமுகர்களது பேரம் பேசுதலின் தளத்திலேயே நிகழ்ந்தன. 1952ல் தேர்தலில் தோல்வி பெற்ற செல்வநாயகமும் எம்.வி.நாகநாதனும் வெற்றி பெற்றவர்களான சு.நடேசபிள்ளைக்கும் ஜீ.ஜீ. பொன்னம்பலத்துக்கும் எதிராகத் தேர்தல் மனு சமர்ப்பித்து வழக்காடித் தோற்றனர். இப்படிக் கோடேறி வழக்குரைத்து மகாராணியாாரின் சந்நிதிக்குப் பெட்டிசமும் அனுப்பகிற அரசியல் பழக்கம் 1960கள் வரையும் தொடர்ந்தது.
1955களில் சிங்கள மொழியை அரச கரும மொழியாக்குவது என்ற சலசலப்புக் கேட்கும் வரை, தமிழரசுக் கட்சியின் வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. ஆயினும் தமிழரசுக் கட்சிக்குள் தமிழ்க் காங்கிரஸை விடச் சிறிது முற்போக்கான ஒரு முனைப்புக்கு இடமிருந்ததை 1953 ஹர்த்தால் உணர்த்தியது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பா.உ.வன்னியசிங்கம் முன்நின்று ஹர்த்தாலுக்கு வழங்கிய ஆதரவின் தொடர்ச்சியாக இடதுசாரி, முற்போக்கு அரசியற் போக்குகளுடன் தமிழரசுக் கட்சி இணைந்து செயற்படும் என்ற எதிர்பார்ப்புக்கு அதன் கொழும்புப் பிரமுகர்கள் ஆயத்தமாக இருக்க நியாயமில்லை. அதைவிட முக்கியமாக, தென்னிலங்கையின் தேசிய முதலாளியக் கட்சியான பூநீல.சு.கட்சிக்கு யூஎன்.பிக்கு எதிரான ஒரு முற்போக்கான அரசியல் முகம் தேவைப்பட்ட அளவுக்குத், தமிழரசுக் கட்சிக்கு வடக்கில் தேவையில்லாதபடி, அங்கு சிங்களம் அரச கருமமொழியாவதை மட்டுமே வைத்தே அரசியல் நடத்த வசதி ஏற்பட்டுவிட்டது.
(10)
 

தந்தையும் மைந்தரும்
வர்க்க ஒடுக்குமுறை, சாதியம் போன்ற பிரச்சினைகளின் அடிப்படையில் இடதுசாரிகட்கு வடக்கில் ஒரு தளம் இருந்தது. அந்தப் பிரச்சினைகளில் தலையிட்டுத் தமிழரசுக்கட்சி பெறக்கூடிய உடனடியான லாபத்தை விடச், சாதிய அரசியலின் பிரயோகத்தால் தமிழ்க் காங்கிரஸ் அவர்களிடமிருந்து பறிக்கக் கூடியது அதிகம். எனவே, தமிழ் மொழிக்கு ஆபத்து, தமிழினத்துக்கு ஆபத்து என்றவிதமான பிரசாரத்தால் தமிழ்க் காங்கிரஸின் வசமிருந்த தமிழ்த் தேசிய இனத் தலைமைத்துவத்தைப் பறிக்க தமிழரசுத்தலைமை முற்பட்டது. மலையக மக்களுக்குத் துரோகமிழைத்து நாட்டின் சிறுபான்மை இனத்தவரைப் பலவீனப்படுத்திய ஜீ.ஜீ. பொன்னம்பலம், சிங்களம் மட்டுமே சட்டத்தின் வரவை நிறுத்த இயலாத ஒரு அரசியல் அனாதையாகவும், அவருக்கு எதிராகத் தீர்க்கதரிசியாக செல்வநாயகமும் என்ற விதமாகவே தமிழ்க் காங்கிரஸ் - தமிழரசுக் கட்சி மோதல் சித்திரிக்கப்பட்டது. 1955ல் சேர் ஜோன் கொத்தலாவலயை வடக்கே அழைத்துச் சென்று தமிழும் சிங்களமும் நாட்டின் அரச கரும மொழிகளாகும் என்று சொல்ல வைத்த யாழ்ப்பாண அறிஞர் பெருமக்களின் மேதாவித்தனத்தால் தென்இலங்கையில் ஏற்பட்ட பாதகமான விளைவு 1956ல் தமிழ் காங்கிரஸின் தோல்விக்கு
காரணமாகிவிட்டது.
தென்னிலங்கையில், தமிழுக்கும் சமவுரிமை கோரி சமசமாஜ கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்த போதும், தேர்தலின் யூஎன்.பியை முறியடிக்கும் தேவைகருதி எஸ்.டபிள்யூஆர்.டி.பண்டாரநாயக்கவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியுடன் சில போட்டிதவிர்ப்பு உடன்பாடுகளையும் ஏற்படுத்தின. தென்னிலங்கை அரசியலின் சமூக,பொருளாதார சர்வதேச அரசியற் பரிமாணங்களை யெல்லாம் புறக்கணித்து தமிழ்மொழி, தமிழ் இனம் இரண்டையுமே அழிப்பதற்குச் சிங்கள இனமே அணிதிரண்டிருப்பதாகக் காட்டிய தமிழரசுக்கட்சி அதை வைத்து மேலும் இருபது ஆண்டுகளாக அரசியற் பிழைப்பு நடத்தியது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றபேர், 1956ம் ஆண்டுத் தேர்தலில் அதற்கு மிகவும் வசதியான ஒன்றாக இருந்தது. ஆயினும், இந்தப் பேரைப் பாவிப்பது பின்னர் தென்னிலங்கையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி தமிழரசுக்கட்சி தொடக்கப்பட்ட காலத்தில் ஆழமாகச் சிந்தித்திருக்க இடமில்லை. அரசு என்ற சொல், தமிழருக்கான மாநில அரசு, சுயாட்சி என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டாலும், அதைப் பிரிவினை என்று விஷமத்தனமாக வியாக்கியானம் செய்து சமஷ்டி என்றால் பிரிவினை என்பதே கருத்து என்று சிங்கள மக்களிடம் இனவாதிகள் பிரசாரம் செய்ய அந்தப் பேர் வசதியாகி விட்டது. இது முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றியும் தீர்க்கதரிசியாகக் கருதப்பட்ட தந்தையோ அவர் வழி நடந்த
(11)

Page 11
தந்தையும் மைந்தரும்
மைந்தர்களோ அதிகம் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆயினும், தெற்கில் ஆங்கில ஏடுகளில் தன்னைச் சமஷ்டிக் கட்சி என்றே தமிழரசுக்கட்சி அறிமுகப்படுத்தி வந்தது. தென்னிலங்கையைப் பொறுத்தவரை, இந்தக் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” தீர்க்கதரிசனம் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவையே ஏற்படுத்தியதை 1956க்குப் பின் நடந்தவை நிரூபித்தன.
4. “நண்ைடெழுத்து வேண்டாம் நமக்கு”
1953ஹர்த்தாலுக்குப் பிறகு பதவிக்கு வந்த சேர் ஜோன் கொத்தலாவலவிற்கு ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மீது தனிப்பட்ட பகைமை இருந்தது. எனவே பொன்னம்பலம் அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டார். ஆனாலும் அவரால் யூஎன்.பியினுடனான உறவை முறிக்க முடியவில்லை. இதே கதி தமிழரசுக் கட்சிக்குப் பதினைந்து வருடங்களுக்கு பின்னர் நேர்ந்தது.
யூஎன்.பி. சிங்கள மொழிச்சட்டத்தை கொண்டு வராது என்ற நப்பாசை ஜி.ஜி.பொன்னம்பலத்திடம் இருந்தது. அதே வேளை யாழ்ப்பாணத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை மிஞ்சிய தலைவராகத் தன்னைக் காட்ட விரும்பிய கொத்தலாவல அங்கு 1955ல் விஜயம் செய்து யாழ்ப்பாணப் பிரமுகர்களால் அமோகமாக உபசரிக்கப்பட்டார். அவரது அரசியல் மூர்க்கத்தனத்திற்கு அமைய தமிழும் சிங்களமும் நாட்டின் ஆட்சிமொழிகள் ஆகும் என்று அவர் செய்த பிரகடனம், தெற்கில் யூஎன்.பிக்குள்ளேயே பேரினவாத அரசியலை மேலும் தூண்டி விட்டது. இதுவே ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அரசியல் அஸ்தமனமாகித் தந்தையின் அரசியல் எழுச்சிக்கு அத்திவாரமிட்டது என நாம் அறிவோம்.
கொத்தலாவல தெரிவிற்கு நேர் எதிரான கருத்துக்கள் யூஎன்.பி. முக்கியஸ்தர்களால் முன்வைக்கப்பட்டன. ஜே.ஆர்.ஜயவர்த்தன சிங்களம் மட்டுமே அரசகரும மொழி என்பதை வெகுவாக வலியுறுத்தினார். திரிசிங்ஹல பெரமுன என்ற பேரிலான ஒரு அமைப்பு ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையில் அப்போது இயங்கிவந்தது. இலங்கையைச் சிங்களவர்களது நாடாகவே கருதிய இந்த அமைப்பு பற்றி இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தனர். (1955 ஒக்டோபரில் என்.எம். பெரெரா பாராளுமன்றத்தில் மொழிக்கொள்கை தொடர்பாகப் பேசியவை, ‘சாம்ராஜ்யத்திற்கு எதிரான உதைகள்’ என்ற தலைப்பிலான நூலில் லங்கா சமசமாஜச் கட்சியால் 1997ல் வெளியிடப்பட்டுள்ளன.)
யூஎன்.பியின் சிங்கள இனவாத அரசியலின் முன் கொத்தலாவலவின் வாக்குறுதி
(12)
 
 

தந்தையும் மைந்தரும்
தாக்குப்பிடிக்கவில்லை. தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவதன் அரசியல் முக்கியத்துவத்தை சிங்கள தமிழ் மொழிகளைப் பேசுவோரது இன ஐக்கியம் என்ற அடிப்படையில் விளக்கி அதற்காகப் போராடும் அக்கறை கொத்தலாவலவுக்கு இல்லை. எனவே களனி மாநாட்டில் “சிங்களம் மட்டுமே” கொள்கை ஜயவர்த்தனவால் முன்மொழியப்பட்டு எளிதாகவே ஏற்கப்பட்டது. இதன் பின்பு கொத்தலாவல தலைமையிலேயே யூஎன்.பி. 1956 தேர்தலைச் சந்தித்தது முக்கியமானது. 1956 தேர்தல் பற்றித் தமிழரசுக்கட்சி தமிழ் காங்கிரஸ் ஆகிய தமிழ்த் தேசிய வாதக் கட்சிகள் இரண்டும் தமிழ் மக்களின் முன்வைத்த படிமங்கள் அரசகருமமொழிப் பிரச்சினையை முதன்மைப்படுத்துவனவாகவே அமைந்தன. அந்த நிலை, இன்றுவரை, தமிழ்த் தேசிய வாதிகளால் பேணப்பட்டுவருகிறது. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1956 தேர்தலில் 24 மணி நேரத்தில் சிங்களத்தை அரசகரும மொழியாக்குவதாகக் கூறிச் செய்த தேர்தல் பிரசாரத்தை வைத்து அவரையே சிங்கள இனவாதத்தின் பிரதான பிரமுகராகக் காட்டுவதில் இரண்டு தமிழ்த் தேசியவாதக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயற்பட்டுவந்துள்ளன.
சிங்களம் மட்டுமே கொள்கையின் கர்த்தாவாகப் பிரித்தானிய ஆட்சிக்காலச் சட்டசபையிலேயே சிங்களம் மட்டும் பிரேரணையை முன்வைத்தர் ஜே.ஆர்.ஜயவர்தன என்ற உண்மை 1980களில் தான் தமிழ்ப் பாராளுமன்ற அரசியல் வாதிகளால் பரவலாகத் தமிழ் மக்களிடம் எடுத்து கூறப்பட்டது. யூஎன்.பிக்கும் பூரீ.ல.சு.கட்சிக்கும் ஒரு வித்தயாசமும் இல்லை என்று தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் கூறினால், அது அதிக பட்சம். உண்மையில் யூஎன்.பியே மேல் என்பது அவர்களது உள்ளக்கிடக்கை. இது பற்றித் தமிழ்க் காங்கிரஸ் தலைமை தெளிவாகவே இருந்தது. தமிழரசுக் கட்சி இதை வெளியே சொல்லத் தயங்கியது. ஆயினும் பின்னைய அரசியல் நிகழ்வுகள் அதை எங்கே இட்டுச் சென்றன என்பது வேறு கதை,
1956ல் பண்டாரநாயக்கவின் தேர்தல் பிரசாரத் தளம் வெறுமனே மொழிப் பிரச்சனை தான் என்று சொல்வது போல அரசியல் வெகுளித்தனம் அதிகம் இல்லை. 1953ஹர்த்தாலின் போது வெளிப்பட்ட வெகுஜன உணர்வுகளின் அறுவடை பண்டாரநாயக்கவால் பெறப்பட்டது என்பது அதிகம் பொருந்தும். ஆங்கிலம் படித்த உயர், நடுத்தர வகுப்பினரதும் நிலவுடமைக்காரக் குடும்பங்களதும் ஆதிகத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்த பகை உணர்வை கிராமிய மட்டத்தில் அவர் நன்றாகப் பயன்படுத்தினார். யூஎன்.பி. ஆட்சியை முறியடிக்கும் நோக்கில் அவருடன் பல்வேறு சக்திகளும் இணைந்தன. இதில் ஈழத்தில் த்ரொத்ஸ்கியத்தின் தந்தை எனக் கருதப்பட்ட பிலிப் குணவர்த்தனவின் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி
(13)

Page 12
தந்தையும் மைந்தரு
(வி.எல்.எஸ்.பி.எஸ்.) முதல் ,சிங்கள இனவாதியான கே.எம்.பி.ராஜரத்னவின் ஜாதிக விமுக்தி பெரமுன (தேசிய விடுதலை முன்னணியும்) வரையிலானவர்கள் இணைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கட்சியும் இந்த மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியுடன் சில தொகுதிகளில் மோதல் தவிர்ப்பு உடன் பாட்டுக்கு வந்தன.
பண்டாரநாயக்கவின் தலைமைக்கான அரசியல் ஆதரவு சிங்கள மக்களிடையே இருந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து கிடைத்ததனாலேயே அவரது அரசியல் வேலைத்திட்டத்தில் பல வேறு சமூக-பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் உள்ளடங்கியிருந்தன. தாய்மொழி மூலமே கல்வி பெற்றவர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், பெளத்த குருமார் போன்றோர் ஆங்கிலக்கல்வி பெற்றோர் மேனாட்டு வைத்திய முறையில் தேர்ந்தோர், கிறிஸ்துவ பாதிரிமார் போன்றவர்களை ஒத்த நிலைமைக்குத் தம்மை உயர்த்தும் வாய்ப்பை பண்டாரநாயக அவர்கட்குக் காட்டினார். காணியற்ற விவசாயிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் போன்றோர் மத்தியிலும் அவரது தலைமை பற்றிய எதிர்பார்ப்புக்கள் கணிசமாகவே இருந்தன. சிங்களம் மட்டுமே பிரேரணையை யூஎன்.பியின் களனி மாநாட்டில் முன்வைத்த ஜயவர்தன, களனி தொகுதியில் படுதோல்வியுற்றார் என்பதும் ஒரு முக்கியமான வரலாற்று உண்மை.
தமிழரசு கட்சித் தலைமை இவற்றை அறியாததல்ல. ஆயினும் மொழிப்பிரச்சினை தவிர்ந்த எந்தப் பிரச்சினையிலும் கை வைக்க அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அவை தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்தின் வர்க்க நலன்கட்கு மிகவும் எதிரான திசையில் தமிழ்ப்பிரதேசங்களின் அரசியலைத் திருப்பிவிடும் என அவர்கள் அறிந்தனர்.
1956ல் சிங்களம் மட்டுமே கொள்கையை யூஎன்.பியும் அதனுடன் போட்டியிட்ட பூரீ.ல.சு.க. தலைமையிலான ம.ஐ.முவும் ஏற்றுக் கொண்ட பின்பு, எதிர்பார்த்தபடியே, தமிழ் காங்கிரஸ் தலைமையின் மீதான நம்பிக்கை தகர்ந்தது. அன்று தமிழ் நடுத்தர வர்க்கம், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகத்தைப் பெரிய அளவில் நம்பியிருந்ததால், சிங்களம் அரசகரும மொழியானால் தமிழரின் வேலைவாய்ப்புக்கள் பாதிக்கப்படும் என்று அஞ்சியதில் நியாயம் உண்டு. ஆயினும், இதை மேலும் விஸ்தரித்து, சிங்களம் அரசகருமமொழியானால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று தமிழரசுக்கட்சி பிரசாரம் செய்தது. வலுவான தமிழ் அரசியற் கட்சிகள் வேரூன்றியிராத கிழக்கு மகாணத்தில் தமிழரசுக்கட்சியால் இந்தத் தமிழ் இன, மொழி உணர்வு அலையைப் பாவித்து வேகமாக வளர முடிந்தது.
1956 தேர்தலில் தமிழரசுக்கட்சி பெரும் வெற்றி ஈட்டியது. ஆயினும் இந்த வெற்றிக்காக அது கையாண்ட சில உபாயங்கள் பின்னர் அதன் பலவீனமாக மாறித் தமிழ்-முஸ்லீம் உறவையும் பாதித்தன. 1956ல் ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத்
(14)
 

தந்தையும் மைந்தரும் ,
தொகுதியில் வென்றார். ஆயினும் தமிழ்க் காங்கிரஸின் செல்வாக்கு ஒரு அரசியற் கொள்கைசார்ந்த செல்வாக்காக அல்லாமல் தனிமனிதர்களது செல்வாக்கும் தேர்தல் தந்திரோபாயங்களும் சார்ந்த ஒரு செல்வாக்காகவே இருந்தது. இதன் காரணமாகவே பின்னாளில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்ற பேரைத் தமிழரசுக்கட்சியின் பிரசார ஏடான சுதந்திரன் அகில இலங்கை ஆனைப்பந்தி காங்கிரஸ்" என்று ஏளனம் செய்து எழுதிவந்தது. தமிழரசுக்கட்சியால் தமிழ்க் காங்கிரஸின் இடத்தைப் பறிக்க முடிந்ததேயொழியத் தமிழ் காங்கிரஸின் தலைமைக்கு நேர்மாறான தலைமையையும் தேசியவாத அரசியலையும் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. மக்களைப் பொறுத்தவரை, சில மேலோட்டமான வேறுபாடுகள் காணப்பட்டன. சில நிலைப்பாடுகள், கொள்கையளவிலேனும், தமிழ்த் தேசியவாதத்தை விரிவுபடுத்துவனவாகக் காணப்பட்டன. தமிழ்க்காங்கிரஸ் சைவவேளாள உயர்குடி நலன்களை வலியறுத்தும் ஒரு சக்தியாகத்தென்பட்டது மட்டுமன்றித், தமிழரசுத்தலைமை செல்வநாயகம் ஒரு கிறிஸ்துவர் என்ற தகவலையும் தனது பிரசாரத்தில் பயன்படுத்தத் தவறவில்லை. தமிழ்க்காங்கிரஸில் தமிழ்க் கனவான்களது ஆதிக்கம் இருப்பாதாகக் காணப்பட்ட அதே வேளை, தமிழரசுக் கட்சியில் நடுத்தர வகுப்பின் கீழ் மட்டங்களிலிருந்து வந்தவர்கள் ஒரளவு முக்கியத்துவம் பெற்றனர். எல்லாவற்றையும் விட முக்கியமாக யாழ்பாணத் தமிழரையே தளமாகக் கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல் அடையாளத்தை (தமிழ்ப்பேசுமக்கள் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி) விரிவு செய்ததில் தமிழரசுகட்சியின் பங்கு முக்கியமானது. இதில் அதன் வெற்றி தோல்விகள் பற்றிப்பின்னர் கவனிப்போம். தமிழ்காங்கிரஸில் இருந்தவர்களை விட அதிகம் தமிழ்ப்பற்றுக் கொண்டவர்கள் தமிழரசுக்கட்சியில் இருந்தார்கள் என்பதும் ஒரு முக்கியமான விடயம். இதுவும் சிங்களமொழிசட்டத்தையே அடிப்படையான பிரச்சினையாகக் கருதிப் போராடும் நிலைமைக்கு காரணமாகியது எனில் மிகையாகாது. இந்தத் தமிழ்ப் பற்றும் தமிழ் இன உணர்வும் அரசியல் நடைமுறையில் எவ்வாறு வெளிப்பட்டன என்பது முக்கியமானது.
சிங்களம் அரசகருமமொழியானால் தமிழ் அழியும் தமிழினம் அழியும் என்று கூறுவதன் மூலம் சிங்கள, மொழி மீதான வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டது. 1957ல் சிங்களம் (24 மணிநேரத்தை விடக் கொஞ்சம் அதிக்காலத்தின் பின்) அரச கரும மொழியாக்கப்பட்ட பின்பு. தமிழரசுக்கட்சியால, தமிழ் மொழியுரிமை பற்றி என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது. (தமிழரசுக் கட்சியினர் தெளிவான எந்தப் போராட்ட முறைக்கும் ஆயத்தமாக இருக்கவில்லை என்பது 1961ல் சத்தியாக்கிரக முடிவில் உறுதியானது. இது பற்றிக் அக்கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்
(15)

Page 13
தந்தையும் மைந்தரும்
ஒருவர் மிகவும் மனம் வருந்தி 1961ல் தன் கைப்பட எழுதிய குறிப்பொன்றில் கூறியிருந்தார்.)
தமிழ் மொழிக்கும் சம உரிமை என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தி எழுந்த அரசியற் பிரசாரம் சிங்களம் அரசகரும மொழியான பின்பு சிங்களத்தின் மீதான வெறுப்பாக வடிவு பெற்றது. தமிழர் சிங்களம் படிப்பது தவறு என்ற கருத்தும் தமிழரசுக் கட்சியால் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளில் தமிழ் மக்கள் தாமாகவே விரும்பிக் கற்று வந்த சிங்களப் பாடங்கள் நிறுத்தப்பட்டன. சுதந்திரன் ஏட்டில் நண்டெழுத்து வேண்டாம் நமக்கு’ என்பதை இறுதி வரியாக வைத்து இயற்றப்பட்ட வெண்பாப் போட்டி ஒன்று நடத்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக்கட்சியின் தமிழ்பேசும் மக்கள் என்ற அரசியற் கோட்பாடு, அதன் அரசியல் நடைமுறை காரணமாக, எவ்வாறு வெகுவிரைவிலேயே வடக்கு-கிழக்கின் தமிழரது அரசியற் கோஷமாக முடங்கிவிட்டது என்பதை நாம் அடுத்து வரும் பகுதிகளில் காண்போம். அது போலவே, அதன் சமஷ்டிக் கொள்கை எவ்வாறு அதன் அரசியல் வெறுமையை அம்பலப்படுத்தியது எனவும் அதன் குறுகிய தேசியவாத அரசியல் அணுகுமுறை அதை நாட்டின் முற்போக்கு சக்திகளிடமிருந்து வெகுதூரம் விலக்கி வைக்க உதவியது எனவும் பின்பு கவனிப்போம்.
5. திருமலைக்குச் செல்லுவோம், தமிழின் உரிமை வெல்லுவோம்
சிங்களம் அரச கருமமொழியான பின்பு தமிழரசுக்கட்சி திருகோணமலையில் 1957ல் நடாத்திய மாநாடு போல ஒன்று தமிழர் அரசியலில் அதற்கு முன்பு நிகழவில்லை. "வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம்" என்று பாரதிதாசன் சொன்னவிதமான உணர்வுடன் திரண்ட இக்கூட்டம் மொழி உணர்வாலும் இன உணர்வாலும் உந்தப்பட்ட பலரையும் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. தமிழ் பேசும் மக்கள் என்று தமிழரசுத் தலைமை கூறுகிற மக்களில் மலையகத் தமிழர் அங்கு திரளாவிட்டாலும், முஸ்லிம்கள் கணிசமான அளவில் பங்கு பற்றினர். அ. அமிர்தலிங்கம், செ.இராசதுரை, மஷ்மர் மெளலானா ஆகியோரது உரைகள் பொது மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டன. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்றுமே சிறந்த மேடைப் பேச்சாளரல்ல. ஆயினும் அவரது உரையைக் கேட்பது ஒரு பக்தி அனுபவம் போலத் தமிழரசு வட்டாரங்களில் கருதப்பட்டது. ஈ.எம்.வி. நாகநாதனின் தமிழ் மொழியாற்றல் குறைபாடானது. ஆயினும் அவரது உணர்ச்சி வேகம் அதற்கு ஈடு செய்தது. மாநாட்டின்
(16)
 
 

தந்தையும் மைந்தரும்
போக்கில் மக்களது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இனியும் தமிழ் மக்களை யாராலும் அடக்கி ஆள முடியாது என்ற நம்பிக்கையை ஊட்டிய இந்த மாநாடு போராட்டம் பற்றி எந்த விதமான திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை மக்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
"திருமலைக்குச் செல்லுவோம். தமிழின் உரிமை வெல்லுவோம்’ ‘அறப்போர் தொடுப்போம்” என்ற விதமான கோஷங்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கால்நடையாகவே மாநாட்டுக்கு வந்தவர்கள் பலர். இந்த மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நான்கு பிரதான அரசியற் கோரிக்கைகளும் மக்கள் முன் வைக்கப்பட்டன. 1. மலையக மக்களுக்குப் பூரண குடியுரிமையும், வாக்குரிமையும் வழங்கப்பட்
வேண்டும். 2. தமிழுக்கும், சிங்களத்துக்கும் சமமான அரச கருமமொழி அந்தஸ்து
வழங்கப்பட வேண்டும். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்கட்கான ஒரு சமஷ்டி ஆட்சி உருவாக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளில் ஒரு அடிப்படையான நியாயமிருந்தாலும், அவற்றை நியாயப்படுத்தி வென்றெடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய தெளிவு தமிழரசுக்கட்சியின் தலைவர்களிடம் அதிகம் இருக்கவில்லை. தமிழரசுக்கட்சி மலையக மக்களது குடியுரிமையையும், வாக்குரிமையையும்மீட்டெடுப் பதற்கு எந்த முறையில் போரிட முடியும் என்பது ஒருபுறமிருக்க,மலையக மக்கள் சார்பில் பேசும் அதிகாரமோ தகுதியோ கூட அவர்கட்கு இல்லை. ஜி. ஜீ.பொன்னம்பலம் போன்று செல்வநாயகமும் (அவரது மனைவியும் மக்களுமே என்று கூறப்பட்டாலும்) ஒரு தோட்ட உரிமையாளர். தொழிலாளர் கண்ணோட்டத்தில் அவர் எதையும் பார்த்ததாக வரலாறு கிடையாது. எனவே பாராளுமன்ற அரசியல், சாத்வீகப் போராட்டம் என்னும் வரையறைகட்குள் தமிழரசுக் கட்சி இயங்குவது பலவகையிலும் அவரோடொத்த தலைமைக்கு வசதியாகவே இருந்தது. தமிழரசுக் கட்சியின் 'சோசலிசக் கொள்கை எப்படியிருப்பினும் கம்யூனிஸ்டுக்களை எதிர்ப்பதற்கான அவர்களது தத்துவார்த்தக் காரணங்களுள் ஒன்று வன்முறைப் போராட்டமாக எவரும் கருத நியாயமிருக்கலாம். ஆயினும் உள்ளார்ந்த காரணம் வர்க்க நலன்களே என்பதை உணர்த்த வரலாறு அதிக காலம் எடுக்க வில்லை.
திருகோணமலை மாநாட்டின் அமோக வெற்றியின் பின்பு தமிரசுக் கட்சியே தமிழ் பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதி என்ற படிமம் உருவாக்கப்பட்டது. மலையக
(17)

Page 14
தந்தையும் மைந்தரும்
மக்களுக்கு வாக்குரிமை இல்லாத காரணத்தால், வாக்குரிமை உள்ள தமிழ் பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று தமிழரசுக்கட்சி உரிமை கொண்டாட முடியாதவாறு தடையாக வடக்கில் இருந்தவர்கள் தமிழ்க் காங்கிரசும் இடதுசாரிகளுமே, யூஎன்.பி.வடக்கில் செல்லாக் காசாகிவிட்டது. பூநீல.சு.கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெகுசன அரசியற் தளம் இருக்கவில்லை. கிழக்கையும் வடக்கையும் முதன் முதலாகப் பாராளுமன்றத்தில் ஒருசேரப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற பெருமையைத் தமிழரசுக்கட்சி நிலைநாட்டிக் கொள்ள முன்னமே தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பா.உக்கள் அரசாங்கத்துடன் :ே ந்துவிட்டனர். இதற்கான காரணத்தை தமிழரசுத் தலைமை சரிவர ஆராயத் தவறியதோடு, முஸ்லிம் தலைவர்கள் எப்போதுமே தொப்பி திருப்பிகள் என்ற விதமான விளக்கத்தைக் கூறித் தப்பிக் கொண்டது. 1965 வரை, எந்த முஸ்லிம் பிரமுகரையாவது தேடிப்பிடித்து தேர்தலில் தன் சார்பில் நிறுத்தும் வழக்கம் தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்தது.
தமிழரசுக் கட்சி முஸ்லிம் பிரமுகர்களைத் தன் அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்துவதில் உள்ள அதே அளவு நியாயம் முஸ்லிம் பிரமுகர்கட்குத் தமிழரசுக்கட்சியைப் பயன்படுத்திக் தமது தொகுதியில்சிறுபான்மையினராக இருந்த தமிழ் வாக்காளர்களது ஆதரவைப் பெற்றுத்தேர்தலில் வெல்வதிலும் இருக்கலாம் என்பதைப் பற்றி நாம் சிந்திப்பது பயனுள்ளது. தமிழரசுக்கட்சி, முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதற்கான தேர்தல் அத்தாட்சியை விட அதிகமாக, முஸ்லிம்களது தனித்துவம் பற்றியோ அவர்களது குறிப்பான பிரச்சனைகள் பற்றியோ கவனிக்கவில்லை என்பது முக்கியமானது. இதனாலேயே 1957 மாநாட்டிற்கு முன்னர் நடந்த தமிழரசுக் கட்சித் தலைமைக் குழுவின் கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பா. உ, நீங்கள் தமிழர்கட்காக தமிழரசு கேட்கீறிர்கள். நாங்கள் முஸ்லிம்கட்காக ஒரு இஸ்லாமிஸ்தான் கேட்டால் ஆதரிப்பீர்களா? என்று செல்வநாயகத்திடம் கேட்டார் வேறு வழியில்லாமல் செல்வநாயகம் உடன்பட்டார். இது பற்றித் திருகோணமலை மாநாட்டில் பெருமையுடன் அறிவிக்கப்பட்டாலும், ஒருவிடயம் மட்டும் முக்கியமாது. இந்த இஸ்லாமிஸ்தான் எப்படியிருக்கும் என்பது பற்றி அந்த முஸ்லிம் பா. உ. அதிகம் சிந்தித்தாகவும் கூறிவிடமுடியாது. செல்வநாயகம் அது பற்றி அதற்கு முன்னோ பின்னோ அலட்டிக் கொண்டதற்கும் ஆதாரமில்லை. இந்த இஸ்லாமிஸ்தான் கதையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அரசாங்க அமைச்சருமான அஸ்ரப் தனது முஸ்லிம் மாவட்டக் கோரிக்கைக்குச்சாதகமாக பாவிப்பது, அவருடைய பார்வை இலங்கை முழுவதிலும் உள்ள முஸ்லிம்களது நலனை விடத் தனது அரசியல் செல்வாக்கை தக்கவைக்கும் தேவை காரணமானது தான. எனினும்
(18)
 

gheogrú soirbiggi,
தமிழ் தேசிய அரசியற் தலைமைகள் அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களது நிலை பற்றிய குறைந்த பட்ச கவனமும் காட்டவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.
எவ்வாறாயினும், 1957 திருகோண மலை மாநாடு, தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரை ஒரு பெரிய திருப்புமுனை. அதன் அரசியற் தலைமையை வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஏற்கும் ஒரு வாய்ப்யை அது உருவாக்கியது. முஸ்லிம்கள் கூட இத்தலைமையுடன் ஒத்துழைக்கக் தமிழரசு கூடிய நிலையை அது ஏற்படுத்தியது. இவற்றைவிட முக்கியமாக தமிழரசுக் கட்சியின் ஆதரவின் வலிமையும் தமிழ் மக்கள் சிங்கள மொழிச் சட்டத்தால் எவ்வளவு தூரம் ஆத்திரம் கொண்டிருந்தனர் என்பதையும் பண்டாரநாயக்கவுக்கு இது மேலும் வலியுறுத்தியது. தமிழ் மொழி உரிமைகள் பற்றி பண்டாரநாயக்க சில நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழரசு கட்சித்தலைவர் செல்வநாயகத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வரவும் தமிழரசுக்கட்சி மாநாடு ஒரு பெரும் ஊக்கியாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
தமிழரசுக்கட்சியின் அரசியல் வெகுஜன அரசியலல்ல. அதன் அரசியற் பாரம்பரியம் தமிழ்காங்கிரஸின் வழியிலானது. தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு வெகுஜனக் கோணத்தில் நோக்கவும் தமது கோரிக்கைகளை இலங்கை முழுதிலும் இருந்தது சிறுபான்மைத் தேசிய இனங்களது தேவைகளுடன் இணைப்பதற்கும் அவர்கள் ஆயத்தமாக இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமுதாயத்தினுள் இருந்த சாதிய, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் அப்படியே இருக்கத், தமிழ் மொழி உரிமையையும் தமிழ்ப் பிரதேசத்தின் சுயாட்சியையும் வென்றெடுப்பதே நோக்கமாக இருந்தது.
பண்டாரநாயக்க தமிழரசுக்கட்சியின் வலிமையைச் சரியாக மதிப்பிட்டாரோ இல்லையோ, தமிழரசுத் தலைமை தனது பாராளுமன்ற அரசியல் வெற்றியைவிட வேறெதையும் தனது வலிமையின் அளவுகோலாகக் காணவில்லை. தமிழரசுத் தலைவர்கள் சாத்வீகப் போராட்டம் பற்றியும் அறப்போர் பற்றியும் 1957ல் பேசியது அவர்கள் வேறு எந்தப் போராட்டத்தையும் நடாத்துவதற்கு ஆயத்தமில்லாமையாலே தான். தமிழரசுக் கட்சித் தலைமை வசதிபடைத்த, படித்த, உயர்-நடுத்தர வகுப்பினரது ஆதிக்கத்துக்குட்பட்டது. அது தேசிய இனப்பிரச்சினையை சமுதாய மேல்தட்டு வர்க்க நலன்கள் சார்பாகவே அணுகியதில் இரகசியமில்லை. மொழிப்பிரச்சினை, குறிப்பாக யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் சேர்ந்த தமிழ் அரச ஊழியர்கள் போன்றோரைப் பாதித்தது. யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பொருளாதாரம் தென்னிலங்கையில் தொழில் வாய்ப்புக்களில் பெரிதும் தங்கியிருந்த நிலையில் அப்பிரச்சினையை முதன்மைப்படுத்துவதில் அரசியலில் ஆதாயமிருந்தது. அதே வேளை, தமிழ் மக்களுக்குச் சாதகமாகத்
(19)

Page 15
தந்தையும் மைந்தரும்
தென்னிலங்கையில் இருந்த நல்ல சக்திகளை இனவாத முத்திரை குத்தி ஒதுக்குவதும் தமிழரசுக் கட்சியின் தேவையாக இருந்தது. இதை 1957க்குப் பின்பு தமிழரசுக்கட்சியின் அதிகாரபூர்வமற்ற பிரசார ஏடான சுதந்திரனை வாசித்தோர் கவனித்திருக்கலாம்.
திருகோணமலை மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்களும் அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் ஏற்படுத்திய நம்பிக்கை கரைவதற்கான நடைமுறைகளில் தமிழரசுக்கட்சி விரைவிலேயே இறங்கிவிட்டது. தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் உண்மையான முக்கியத்துவம் தமிழரசுக் கட்சித் தலைமைக்கு விளங்கியதோ இல்லையோ அதை வெறும் சிங்களப் பேரினவாத அரசியலின் எழுச்சியாகக் காட்டுவதிலேயே அக்கட்சி கண்ணும் கருத்துமாய் இருந்தது.
தமிழ்க் காங்கிரஸ் தமிழ் நிலப் பிரபுத்துவத்தினதும் தரகு முதலாளித்துவத்தினதும் கட்சியாகத் தமிழ் மக்களிடையே கொஞ்சம் வலிமையுடன் தொடர்ந்தும் இருந்திருந்தால் தமிழரசுக்கட்சி ஒருவேளை ஓரிரு முற்போக்கான அம்சங்களையுடைய முதலாளியக் கட்சியாகத் தொடர்ந்திருக்கக்கூடும். தனிப்பெரும் தலைவர் என அழைக்கப்பட்ட ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கட்சியின் சரிவுக்குப் பின் தமிழரசுக்கட்சியே வடக்கிலும், கிழக்கிலும் இருந்த முக்கியமான ஒரே தமிழ்த் தேசியவாதக் கட்சியாகிப் படிப்படியாக ஏகாதிபத்தியத்தினதும், பிற்போக்கினதும் குரலிற் பேச ஒரு சில ஆண்டுகளே தேவைப்பட்டன.
G. Gupu GTILBLITTLib sloppGIOLLI GCIÚBLITTLb
1957ம் ஆண்டு தமிழரசுக்கட்சி மாநாட்டின் மூலம் வென்ற மக்கள் ஆதரவை ஒரு போராட்டச் சக்தியாக மாற்றும் ஆற்றல் தமிரசுக் கட்சிக்கு இருக்கவில்லை. அதற்கு முன்பிருந்த தமிழ்த் தேசியவாதத் தலைமைகட்கும் அவ்வாறான ஆற்றல் இருந்ததில்லை. அறப்போர், சாத்வீகப் போராட்டம் என்றெல்லாம் பலதும் பேசப்பட்டாலும், அவர்கள் அறிந்த இரண்டு அரசியல் வழிகளில் ஒன்று பாராளுமன்ற அரசியல் மற்றது தொழிற்சங்க நடவடிக்கை. முதலாவது அவர்கட்கு இயலுமானது. மற்றது பற்றிஅதுவரை சிந்திக்கவும் இல்லை, அதற்கான வர்க்கத்தளமும் இவர்கட்கு இருக்கவில்லை.
தமிழரசுக்கட்சி சில வகைகளில் தமிழ்க் காங்கிரஸை விட ஜனநாயகப் பண்புடையதாக காணப்பட்டது. அது மக்களது உணர்வுகளைக் கூடுதலாகப் பிரதிபலித்ததும் உண்மை. ஆயினும் வெகுஜனப் போராட்டம் வெற்றி பெற, ஜனநாயக அரசியலும் மக்களின் உணர்வைச் சரியாக மதிப்பிட்டு வழிநடத்தும் தலைமைத்துவ ஆற்றலும் தேவை. தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரை அதன் பாராளுமன்றத்
(20)
 

தந்தையும் மைந்தரும்
தலைமையால் பொதுத் தேர்தல் பிரசார அரசியல், அரசியல் பேரங்கள் என்ற வரையறைகட்கு அப்பாற் செயற்பட முடியவில்லை. இந்த விடயத்தில் தமிழ்க் காங்கிரசின் செயற்பாட்டை விட அதிகமாகப் இந்த விடயத்தில் தமிழ்க் காங்கிரசின் தமிழரசுக் கட்சி எதையுமே கொண்டிருந்திருக்க முடியாது. ஒரு போராட்ட அரசியலுக்கான தேவை அக்கட்சியால் உணரப்பட்டது. ஆயினும் அதை நடைமுறைப்படுத்த அவசியமான வெகுஜன அரசியல் நடைமுறை அன்று அக்கட்சித் தலைமையிடம் இல்லை என்றே கூற வேண்டும். இதன் விளைவாகவே அக்கட்சி எதற்காகப் போராடுவது எதற்குப் பொறுமை பேணுவது என்ற விடயத்தில் பல தவறுகளை இழைத்தது.
CEYLON என்ற பெயரில் இருந்த O தவிர்ந்த ஐந்து எழுத்துக்களில் இரண்டை எடுத்து மோட்டார் வாகன இலக்கத் தகடுகளை அமைக்கும் முறையில் சி.ஈ தொடர்கள் 1957ல் முடிவுக்கு வந்தன. இந்தமுறை எவ்வாறாயினும் மேலும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வருமாதலால், தொடர்ந்து என்ன இலக்க முறையைக் கையாள்வது என்ற பிரச்சினை உடனடியாக எழாவிட்டாலும், ஆங்கில எழுத்துக்களின் இடத்தில் பூரீ லங்கா என்பதன் முதல் எழுத்தை வைத்து இலக்கத் தகடுகளை அமைக்கும் முடிவைப் போக்குவரத்து அமைச்சு எடுத்தது.
இந்த எழுத்துக்கு கூட ஒரு நிசமான தேவை இருக்கவில்லை. இதில் ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களம் என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கம் புலனான போதும் இது ஒரு பெரிய தமிழர் விரோத நடவடிக்கை என்று யாரும் வாதிக்க இடமில்லை. ஆயினும் சிங்களமே அரசகரும மொழியாக்கப்பட்டுச் சில மாதங்களின் பின்பு வந்த இந்த நிகழ்வு தமிழ்த் தேசியவாதிகள் சிலரது ஆத்திரத்தைக் கிளறியது. நியாயமான ஆத்திரம் தவறான உணர்வல்ல. ஆயினும் வெறும் ஆத்திரத்தின் பேரில் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைவது அருமை. மிகவும் நிதானமாக எதிர்ப்பைத் தெரிவிக்கவோ மாற்று ஆலோசனையாக எதையாவது முன்வைத்துச் சிங்கள முற்போக்கு வாதிகளது ஒத்துழைப்பைப் பெறவோ தமிழரசுத் தலைமைக்கு அக்றை இருக்கவில்லை. சிங்கள பூரீ பொறித்த இலக்கத் தகடுகளும் தமிழ் ஒழிப்பில் ஒரு முக்கியமான பகுதி என்ற விதமாகக் அதை விளக்கியதோடு நில்லாமல் ஒரு போராட்டத்தையும் தொடங்கினார்கள்.
தமிழரசுக் கட்சி இந்த விடயத்தைத் தவறாகக் கையாண்டதை நாம் விமர்சிக்கும் அதே வேளை, அரச்ாங்கம் இதைத் தமிழ் மக்களைச் சீண்டிவிடும் நோக்கிலே மேற்கொண்டது என்பதையும் நாம் மறக்க முடியாது. இவ்வாறான சீண்டல்கள் இதற்குப் பின்னும் பல பல இடங்களில் பல வேறு விதங்களில் இன்று வரை தொடர்ந்து வருகின்றன. இந்த நடவடிக்கை தமிழ் எதிர்ப்பு உணர்வு தமிழர் மீதான பகைமையும்
(21)

Page 16
தந்தையும் மைந்தரும் w
கொண்ட சக்திகளைத் தட்டிக்கொடுக்கும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்தது என்பதை பற்றி அதிக ஐயம் இல்லை. இந்த விஷப் பரீட்சை இரண்டு தேசிய இனங்களிடையிலான உறவைச் சீர்குலைக்க ஒரு பங்காற்றியது எனில் அதற்கான முக்கிய பொறுப்பு அரசாங்கத்தினுடையதே.
இந்தச் (சிங்கள) ழரீ எதிர்ப்பு இயக்கத்தில் தமிழரசுக் கட்சி நான்கு ஆண்டுகள் பின்பு நடத்திய சத்தியாக்கிரக இயக்கத்தில் நேரவிருந்த தவறுகட்கான பல அறிகுறிகளும் இருந்தன. இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி பற்றித் தெற்கில் இருந்த மதிப்பீட்டைப் பாதகமாகப் பாதித்தது. ஆனால் அது பற்றித் தமிழரசுக்கட்சித் தலைமை அதிகம் சிந்தித்ததற்குச் சாட்சியமில்லை.
இந்தச் போராட்டம் தமிழரசுக் கட்சியின் செயற்குழுவோ பாராளுமன்றக் குழுவோ தீர ஆலோசித்துத் தொடங்கிய ஒன்றல்ல. இது எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆலோசனை எல்லா மாவட்டங்கட்கும் வழங்கப்படவுமில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழரசுப் பிரமுகர்கள் எடுத்த முடிவையொட்டிப் புது வாகன இலக்கத் தகடுகளில் இருந்த சிங்கள பூநீ எழுத்தின் இடத்தில் தமிழ்(?) பூரீ எழுத்தைப் பொறிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு வட்டுக்கோட்டை பா.உ. அமிர்தலிங்கம் ஒரு முக்கிய தூண்டுகோலாக இருந்தார். இது பற்றிக் கிழக்கிலங்கையில் அதிக உற்சாகம் இருக்கவில்லை. இதற்குக் காரணங்கள் பல. மன்னாரிற் கூட சிங்கள எழுத்தை நீக்குவது விரும்பப்படவில்லை. இந்தப் போராட்டம் போதியளவு முன்யோசனையோ கலந்தாலோசனையோ இல்லாமல் நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் போராட்டத்தின் போதும் பின்னரும் புலனாயின.
யாழ்ப்பாணத்தில் சிங்கள பூரீ எழுத்துக்கு மேலாக தமிழ் ழரீ எழுத்து ஒட்டப்பட்டது. மன்னார் பா.உ. வீ.ஏ. அளகக்கோன் தலைமையில் நடந்த போராட்டத்தில் சிங்கள எழுத்துக்கு அருகாகத் தமிழ் எழுத்து ஒட்டப்பட்டது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பூரீ என்று பொறித்த சம்பவமும் நடந்ததாகக் கூறப்பட்டது. இரண்டு மூன்று நாட்களாக தெருத்தெருவாக லொறிகளில் ஏறிச் சென்ற தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் "சிறியை எதிர்போம், சிறையை நிறைப்போம்” என்பது உட்பட்ட பல வீர வசனங்களை முழங்கினார்கள். சாதாரண மக்களிடம் இருந்தவை மிஞ்சிப் போனால் சைக்கிள்களே. றிக்ஷோக்களும், மாட்டுவண்டிகளும் இலக்கத் தகடுகள் இல்லாமலே ஒடியதால் அவையும் போராட்ட இயக்கத்தில் இறங்க முடியவில்லை. எனவே, போராட்டம், தொடங்கியதிலும் வேகமாக முடிவுக்கு வந்தது. அரசாங்கத்தின் சட்ட ரீதியான பொறுப்பை நிறைவேற்றும் தேவை கருதிப் பொலீசார் வாகன இலக்கத் தகடுகளைப் பங்கப் படுத்திய குற்றத்திற்காகப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள்
(22)
 

தந்தையும் மைந்தரும்
சிலரை அழைத்து வாக்கு மூலம் பெற்றார்கள். பின்பு வழக்குத் தொடரப் பட்டுத் தள்ளப்பட்டதோடு, ழநீயை எதிர்த்தவர்கள் சிறையைப் பார்க்காமலேயே போக நேர்ந்தது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக நடந்த இரு சம்பவங்கள் குறிப்பிடத்தக்கன. ‘ழரீ 1’ என்ற இலக்கம் பொறித்த முதலாவது சிங்கள ழரீ வாகனம் முன்னாள் பிரதமர் சேர், ஜோன் கொத்தலாவவுக்குரியது. அவர் மிகவும் கவனமாகத் தனது புதிய வண்டிக்கு இந்த இலக்கத் தகட்டைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கொத்தலாவலவை தமிழுக்கும் சம அந்தஸ்து என்று 1955ல் வடக்கில் வாக்குறுதி தரச் செய்து 1956ல் தமிழர்கள் ஏமாந்த கதையை முன்பு குறிப்பிட்டிருந்தேன்.
மற்றது, தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கு. வன்னியசிங்கம் தொடர்பானது. சிங்கள பூரீ இலக்கத் தகடுகள் வந்த பின்பு அவருடைய மோட்டார் கார் விபத்தில் சிக்கி நாசமாகிவிட்டது. காப்புறுதி நிறுவனம் அவருக்கு ஒரு புதிய வாகனத்தை வழங்க முன்வந்தது. அவரோ பிடிவாதமாக ஆங்கில (ஈ.என்) எழுத்துக்கள் பொறித்த ஒரு வாகனமே வேண்டும் என்று கூறி ஒரு பாவித்த வாகனத்தைப் பெற்றுக்கொண்டார். இது சிங்கள பூரீ பதித்த வாகனத்தில் பயணம் செய்ய மாட்டேன் என்ற அவரது நிலைப்பாட்டின் ஒரு கூற்று என்று கொள்வதில் நியாயம் உண்டு. எனினும் ஒரு வகையில் தமிழரசுக் கட்சி தொடர்ந்து வந்த போராட்டக் காலங்களில் பிரச்சினைகளைத் தட்டிக் கழித்துக் கைகழுவப் பாவித்த உத்திகளுக்கு இது ஒரு முன்னுதாரணமும் ஆகிற்று.
இந்த ழரீ எதிர்ப்பு மூர்க்கத் தனத்தின் விளைவாக, வட பிரதேச மக்கள் பழைய பஸ் வண்டிகளில் பதினைந்து வருட காலமாகவேனும் அல்லற்பட வேண்டி நேரிட்டதைத் தமிழரசுத் தலைவர்கள் மெல்ல மறந்து விட்டனர். புதிய வாகனங்கள் வேண்டாம் என்ற தமிழரசுக் கோரிக்கையால் நட்டப்பட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களல்ல, சதாராண மக்களே. ஏனெனில், தியாகங்கள் தலைவர்கட்கானவை அல்லவே.
ழரீ எதிர்ப்புப் போராட்டம் ஒரு பயனற்ற அல்லது தவறான போராட்டம் என்பதை இன்றுவரை தமிழரசுக் கட்சி, த.வி.கூ. ஏற்கவில்லை. அது போக, அது தோல்வியடைந்து விட்டது என்ற உண்மையை ஏற்கவும் அவர்கட்கு நீண்ட காலம் எடுத்தது. இந்த விதமான வீம்பு இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் பின்னர் காணப்பட்டதை நாம் கவனிக்கலாம். எவ்வாறாயினும் செல்வநாயகத்துக்குத் தம்மை நெருக்கமாக்கிக் கொண்ட சிலரது எதேச்சத்திகாரத்தனமான செயல்களால் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும் செல்வநாயகத்தை மீறிச் செயற்படும்
(23)

Page 17
மனநிலையில் அவர்கள் எவருமே இருக்கவில்லை. அதிகம் பேசாதவரான செல்வநாயகம் என்ன நினைக்கிறார் என்பதும் பலர் அறியாதது. அவர் சார்பில் பேசிய சிலரது சொற்களில் அவரது அங்கீகாரம் பெற்றவை எவை என்பதும் தெளிவாக இராததால், கட்சிக்குள் ஒரு சிறு கும்பல் இரகசியமாகத் தனது அதிகாரத்தை வளர்ப்பதும் இயலுமாயிற்று.
தமிழரசுக் கட்சியின் போராட்ட வலிமை எப்படியாயிருந்தாலும் பரவாயில்லை. நாட்டில் திட்டமிட்டே சிங்கள இனவாதம் வளர்க்கப்பட்டு வந்த ஒரு நிலைமையில், இந்த ழரீ எதிர்ப்பு இயக்கம் தென்னிலங்கையில் எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் Foofபதை வடக்கில் இருந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிப் பிரமுகர்களும் உணராமல் இருந்திருப்பதற்கும் நியாயம் உண்டு. ஆனால் கொழும்பிலேயே நிரந்தர வாசம் செய்து வந்த தமிழரசுத் தந்தைக்கு அது விளங்காமல் இருந்தது, அவரது தீர்க்க தரிசன ஆற்றலுக்கு ஒரு மாசு என்றுதான் கூறவேண்டும்.
பண்டாரநாயக்க-செல்வநாயகம் பேச்சு வார்த்தையின் விளைவாக ஒரு உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பை முறியடிக்கக் காத்திருந்த சக்திகட்கு ழரீ எதிர்ப்புப் போன்ற செயல்கள் வசதியான ஆயுதங்களாகின. அதைவிட முக்கியமாக, மொழிப்பிரச்சினையைக் காரணங்காட்டித், தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களது தொழிலையும், சொத்துக்களையும் சிதைக்கவும், பறிக்கவும் காத்திருந்த ஒரு சிங்கள இனவாத முதலாளித்துவக் கும்பலுக்கும் இது போன்ற மூர்க்கச் செயல்கள் வசதி செய்தன. தென்னிலங்கையில் 1958ல் நடந்த இனவாத வன்முறைக்குத் தமிழரசுக் கட்சியே காரணம் என்று கூறுவதில் நியாயம் இல்லாவிடினும், அந்தக் கொடுமையின் பின்னணியில் இருந்த சக்திகளது கையைப் பலப்படுத்திய காரணிகளில் பூரீ எதிர்ப்புப் போராட்டமும் ஒன்று என்பதை மறுக்க அவர்களால் முடியாது.
தென்னிலங்கையிற் பேர்ப்பலகையின் தமிழைத் தார்பூசி அழிக்கும் இயக்கத்தின் தொடர்ச்சியாகவே தமிழர் மீதான வன்முறை தொடங்கியது என்பது இங்கு நினைவு கூர உகந்தது. இவ் வன்முறை பற்றிப் பின்னர் கவனிப்போம். அதற்கும் முன்னர் நடந்த சில விடயங்களைப் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் கூறுவன, 1958 வன்முறையின் பின்னணியை விளங்கிக் கொள்ள உதவலாம்.
(24)
 

தந்தையும் மைந்தரும்
7. நதி மூலமும் ரிவழி மூலமும்
நதி மூலமும் ரிஷி மூலமும் கேட்கக் கூடாது என்பார்கள். தமிழரசுக் கட்சியின் மூலமும் அந்த மாதிரி எல்லோரும் மறந்துவிட வேண்டிய ஒன்று என்று அதன் தலைமை கருத வேண்டிய நிலை 1957லேயே ஏற்பட்டு விட்டது.
தமிழரசுக் கட்சியின் தோற்றத்திற்கான காரணம் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டமை. இது பெருமை தரவேண்டிய ஒரு காரணம். இதன் பின்னணி பற்றி ஜீ.ஜீ. பொன்னம்பலம் வேறு கருத்துக்களைக் கொண்டிருத்த போதும் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் காரணங்காட்டி வடபிரதேசத்துத் தமிழர் கட்சியொன்று பிளவுபட்டது நல்ல விடயமே. இந்தப் பிரச்சினை தமிழரசுக் கட்சியின் அரசியல் வெற்றிக்குக் காரணமாக அமையவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. இதைத் தமிழரசுத் தலைமை நன்றாகவே அறிந்திருந்தது. ஆயினும் அதன் நான்கு அடிப்படையான கோரிக்கைகளில் மலையகத் தமிழர்கட்குப் பூரண குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பது ஒன்றாக இருந்தது.
1957ல் பண்டாரநாயகவும் செல்வநாயகமும் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு உடன்பாட்டுக்கு வந்தபோது இந்தக் கோரிக்கையை விட மற்ற மூன்றும் பற்றி அரசாங்கமும் தமிழரசுக் கட்சியும் சமரசம் செய்து கொள்ள முடிந்தது. மலையகத் தமிழர் சார்பில் பேசத் தமிழரசுக் கட்சிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற அரசாங்க நிலைப்பாட்டை மிக எளிதாகவே தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டது. எந்த ஒரு பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டுக்காகச் செல்வநாயகம் தீர்க்கதரிசி என்று கொண்டாடப்பட்டாரோ அந்தப் பிரச்சினையைக் கைகழுவி விட்டு பூநீல.சு.கட்சித் தலைமையிலான அரசாங்கத்துடன் உடன்பாடு காண்பதற்கு அந்தச் செல்வநாயகம் தயங்கவில்லை. சிங்களம் மட்டுமே சட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட போர் முழக்கங்கள் போல எதுவுமே மலையக மக்கள் தொடர்பாகத் தமிழரசுத் தலைமையால் எழுப்பப்படவும் இல்லை. மலையக மக்களது பிரச்சினை ஒரு சடங்கு போல தமிழரசுக் கட்சியின் வேலைத் திட்டத்தில் தொடர்ந்தும் ஒரு பகுதியாக இருந்தது. பின்பு நதிமூலம், ரிஷிமூலம் போல கேட்கப்படக் கூடாத ஒன்றாக மெல்ல மறந்து போய் விட்டது.
மேற்கூறியவாறு தனது நிலைப்பாட்டினின்று வழுவியதன் மூலம் தமிழரசுக் தலைமை அதன் தீர்க்கதரிசனமான “இன்று அவர்கட்கு, நாளை நமக்கு” என்ற கூற்றில் உள்ள அவர்கள் நாங்கள் வேறுபாட்டை முற்றாக உறுதிசெய்தது. வடபிரதேசத் தேர்தல் அரசியலில் இதில் அதிசயிக்க அதிகமில்லை. உண்மையில் தீர்க்க தரிசனத்தின்
(25)

Page 18
தந்தையும் மைந்தரும் l
Naisilläänia aith
முக்கியமான பகுதி “நாளை நமக்கு” என்பது மட்டுமேயாதலால், சிங்கள மொழிச் சட்டம் பற்றிய கவனமே முக்கியமான ஒன்றாக இருந்தது.
சிங்கள மொழிச் சட்டத்தை வைத்தே இருபது வருட காலமாக அரசியல் நடத்திய தமிழரசுக் கட்சி தன்னைப் பாராளுமன்றத்திற்குள் ஏற்றி அருளிய இந்த ஏணியையும் ஒரு சடங்காகவே கையாண்டது என்பது பலராலும் நினைக்கப்படுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. அதைப் பற்றிப் பின்னர் கவனிப்போம். ஆயினும் சிங்களத்தை அரச கரும மொழியாக 1957ல் ஏற்ற காரணத்திற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியையும் 1964ல் ஏற்ற காரணத்திற்காக சமாஜக் கட்சியையும் துரோகிகளாகவும் தமிழர் எதிரிகளாகவும் கண்ட தமிழரசுக் கட்சி பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கையில், மறைமுகமாகவேனும், சிங்களம் மட்டுமே சட்டத்தை ஏற்றுக் கொண்டது என்பது ஒரு முக்கியமான உண்மை.
தமிழ் மக்களது மொழியுரிமைகளைச் சிங்களமே அரச கருமமொழி என்ற சட்டவரம்பை மீறாமல் எவ்வாறு பேணுவது என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் நடந்தன. அந்த அடிப்படையில் வந்தடைந்த முடிவை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்குக்கிழக்கு மாகாணங்களில் பிரதேச சபைகளை நிறுவுவது என்ற உடன்பாடு தமிழரசுக்கட்சி கேட்ட சமஷ்டிக் கோரிக்கையைத் திருப்தி செய்யாவிட்டாலும் தமிழரும், முஸ்லிம்களும் செறிவாக வாழ்ந்த பாரம்பரியப் பகுதிகளில் அவர்களது மொழி, பண்பாடு, கல்வி, தொழில் போன்ற விடயங்களில் பேரினவாதத் தலையீடற்ற வளர்ச்சிக்கான வாய்ப்பை உறுதிபடுத்தப் போதுமானதாயிருந்தது. சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே டி.எஸ். சேனநாயக்கவால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அது மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பாறைப் பகுதியிலும் பின்பு திருகோணமலைப் பகுதியிலும் கந்தளாய், அல்லைப் பகுதிகளிலும் அரசாங்க உதவியுடன் நடத்தப்பட்டதன் நோக்கம் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்குவதும் அதன் மூலம் அவர்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதுமாகும். இது பற்றியும் பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கையில் உடன்பாடு காணப்பட்டது. திட்டமிட்ட அரசாங்க குடியேற்றங்களில் குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை,அங்கு மக்கள் வாழும் விகிதாசாரத்தைப் பாதிக்காத முறையில் வெளியிலிருந்து குடியேற்றம் என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டன. குடியேற்றத்திட்ட நடைமுறைப்படுத்தலில் பிரதேச சபைகட்கு நிர்வாக அதிகாரம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேற் கூறியவற்றை நோக்கும் போது தமிழரசுக் கட்சியின் நான்கு
(26)

マ தந்தையும் மைந்தரும்
கோரிக்கைகளில் மலையக மக்களது பிரச்சினை போக மற்ற மூன்றினதும் அடிப்படையான நியாயங்கள் பண்டாரநாயக்கவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கேற்றவாறான ஒரு தீர்வு பற்றியும் உடன்பாடு காணப்பட்டது. இத் தீர்வுக்குக் கம்யூனிஸ்ட் கட்சி தனது பூரணமான ஆதரவை வழங்கியது என்பதும் இங்கு வலியுறுத்தப்பட வேண்டியது.
மொத்தமாக நோக்கும் போது கம்யூனிஸ்ட் கட்சி 1957ல் சிங்களமே அரச கருமமொழி என்ற நிலையை ஏற்றுத் தமிழ் பேசும் மக்களது மொழியுரிமையைப் பேணுவது என்று மேற்கொண்ட முடிவுக்கும் பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கையில் சிங்களமே அரச கருமமொழியாக இருக்க வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழை நிருவாக மொழியாக கொள்வது என்பதற்கும் சாராம்சத்தில் வேறுபாடில்லை. ஆயினும் கம்யூனிஸ்ட் கட்சி 1957ல் முதல் தமிழ்த் துரோகிகளதும் தமிழின விரோதிகளதும் கட்சியாகவே காட்டப்பட்டு வந்தது. சமசமாஜக்கட்சியுடன் தமிழரசுக் கட்சிக்கு இருந்த உறவு இதைவிடச் சிறிது சுமுகமாக இருந்தாலும், சிங்களக் கட்சிகளை நம்பாதே என்ற கருத்தாக்கமே தமிழரசுக் கட்சியின் பிரசாரத்தின் அடிப்படையாக அமைந்தது.
பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறு கோரி ஜே.ஆர். ஜயவர்த்தன மேற்கொண்ட கண்டி யாத்திரையை ழரீ.ல.சு.கட்சிக்குள் இருந்த எஸ்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையிலான நடவடிக்கையே முறியடித்தது என்பதைத் தமிழரசுக் கட்சியினர் என்றுமே கூற விரும்புவதில்லை. பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கு பூநீல.சு. கட்சியுள்ளும் சில எதிரிகள் இருந்தனர். அதைவிட அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த கே.எம்.பி. ராஜரத்ன, ஆர்.ஜி. சேனாநாயக்க போன்ற இனவாதிகளும் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கு இரு தரப்பிலும் ஒத்துழைப்பு அவசியமாக இருந்தது. அரசாங்கத் தரப்பில், ஆளுங்கட்சிக்குள் பண்டாரநாயக்கவால் எதிர்ப்பை ஒரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆயினும் சிங்கள மக்களிடையே நடத்தப்பட்ட இனவாதப் பிரசாரத்திற்கு எதிர் நடவடிக்கை எடுப்பதாயின் வெகுசன மட்டத்தில் நடவடிக்கைக்கான தேவை இருந்தது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை இது பாராளுமன்ற வரையறைகட்குத் தீர்த்துக் கொள்ள இயலுமான ஒரு பிரச்சினை மட்டுமே. எனவே இந்தத் தீர்வின் நியாயத்தைச் சிங்கள மக்களுக்கு விளக்குவது பற்றியோ தமது நோக்கம் இலங்கையைப் பிரிப்பதல்ல என்று சிங்கள மக்களை நம்ப வைப்பதோ அவர்களுக்கு முக்கியமான ஒன்றாகத் தெரியவில்லை.
(27)

Page 19
தந்தையும் மைந்தரும்
அதைவிடச், சிங்கள மக்கள் மத்தியில் தமது நிலைப்பாட்டை விளக்குவதாயின் சிங்கள அரசியற் கட்சிகளாகத் தாங்கள் அடையாளம் காட்டிய இடதுசாரிகளது ஒத்துழைப்பும் அவசியம். அத்தகைய ஒரு கூட்டணிக்குத் தமிழரசுக் கட்சி ஆயத்தமாக இருக்கவில்லை. அதற்குப் பல காரணங்களும் இருந்தன.
தமிழரசுக் கட்சியின் அரசியல் வரலாற்றில், 1953ம் வருட ஹர்த்தாலின் போது வடக்கில் கு.வன்னியசிங்கத்தின் தூண்டுதலால் வழங்கப்பட்ட ஆதரவை விட்டால், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கான போராட்டங்களை ஆதரித்த கதையே கிடையாது. வாழ்க்கைத் தரம், சம்பள, உயர்வு, விலைவாசி ஏற்றம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்ற விடயங்கள் தமிழரசுக் கட்சியின் கவனத்துக்கு வந்ததில்லை. தமிழ்த் தேசியவாத அரசியல் நோக்கங்கட்காக தமிழரசுக் கட்சி ஆதரவுடன் உருவான தொழிற்சங்க இயக்கம் கூட நடுத்தர அரசாங்க ஊழியர்களைச் கொண்டதாகவே இருந்தது. தொழிலாளி வர்க்க ஆதரவு அதற்கு இல்லை என்பதற்கான காரணம் தொழிலாளர் பற்றிய அக்கறை அதற்கு இல்லை என்பதனாலேயாகும். இடதுசாரிகள் பற்றிய அதன் பார்வையை இந்த அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.
இடதுசாரி அரசியல் தமிழரசுக்கட்சித் தலைமையின் நலன்களுக்கு இசைவான ஒன்றல்ல. எனவே கம்யூனிசம் ஒரு பயங்கரமான பொருள் என்றவாறான சிந்தனை அவர்கட்குப் பயனுள்ளதாகவே இருந்தது. மறுபுறம் சிங்கள, தமிழ் புரிந்துணர்வுக்கு வழிகோலக் கூடிய ஒரு கூட்டணி தமிழரசுக் கட்சியின் குறுகிய தமிழ் தேசியவாத அரசியலுக்கு ஆபத்தானது. தங்களது சமஷ்டிக் கோரிக்கை என்னவென்று சிங்கள மக்களுக்கு விளக்க அவர்கள் என்றுமே முயலவில்லை. அதேவேளை சிங்கள இனவாத விஷமிகள் அதைப் பிரிவினை என்று திரித்துக் கூறிச் செய்து வந்த பிரசாரம் தென்னிலங்கையிற் பரவலாக நம்பப்பட்டது. தமிழரசுக் கட்சி என்று தமிழ்ப்பேரும் சமஷ்டிக் கட்சி என்று ஆங்கிலப்பேரும் உண்மையில் தமிழரசுக் கட்சியின் பிரிவினை நோக்கங்கள் பற்றிய சந்தேகங்களைத் தூண்ட விரும்பியவர்கட்கு வசதியாயின.
தேசிய இனப்பிரச்சனையின் தீர்வில் வெகுஜன அரசியலின் முக்கியத்துவத்தைத் தமிழரசுக்கட்சி அறியவில்லை என்பதைவிட, அதில் அவர்கட்குப் பரிச்சயம் இல்லை என்பது பெரிய உண்மை. அதைவிட வெகுஜன அரசியல் தமிழரசுக் கட்சி வலியுறுத்திய நான்கு பிரச்சனைகளை விட வேறு பிரச்சனைகளையும் அரசியல் அரங்கில் முன்னணிக்குக் கொண்டுவரும் என்பதுபற்றி அவர்கள் அறியாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும் மொழிப் பிரச்சனை மட்டுமே அவர்களது அரசியலின் பிரதான பிரச்சனையாக மட்டுமின்றி ஒரே பிரச்சனையாகவுங்கூட 1970 வரையில் இருந்தது என்றால் மிகையாகாது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் பற்றிய பேச்சுவார்த்தைகள்
(28)
 

தந்தையும் மைந்தரும் "
நடந்த போதும் அதற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள் பற்றித் தமிழரசுக்கட்சிக்கு எந்தவிதமான தெளிவும் இருக்கவில்லை.
தமிழரசுக்கட்சி வெகுஜனப் போராட்டத்திலிருந்து எட்ட நிற்கநேர்ந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது வட பகுதித் தமிழ் சமுதாயத்திற்குள் இருந்த இன்னுமொரு "அவர்களும், நாங்களும்” தொடர்பானது. இந்த "அவர்களும் நாங்களும்” பிரச்சனையே கம்யூனிஸ்டுகள் மீதான பகைமைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
8. ஈழத்துச் சாதியமும் ஈழத்துக் காந்தியும்
இந்தியாவில் மோகனதாஸ் காந்தியின் சத்தியாக்கிரக கொள்கை எவ்வளவு தூரம் இந்திய விடுதலைக்கு உதவியது என்பது விவாதத்துக்குரியது. ஆயினும் அவரது தலைமையின் முக்கியத்துவம் கேள்விக்குரியதல்ல. அவரது வர்க்கச்சார்பை இடதுசாரிச் சிந்தனையாளர்கள் தெளிவாகவே அடையாளங்கண்டன்ர். சாதியம் பற்றிய அவரது நிலைப்பாட்டின் போதாமையை அம்பேத்கர் எப்போதோ கடுமையாக விமர்சித்தார். ஈ.வே.ரா. இவ்விடயத்தில் காந்தியை மிகவும் கடுமையாக விமர்சித்தவர் என்பதும் முக்கியமானது. யினும் காந்தியின் கொள்கைகளை ஏற்காதவர்களும் அவரது கொள்கைப் பிடிப்பை மதித்தனர். அது மூர்கத்தனமான பிடிவாதமாகக்கூடப் பல சமயங்களில் வெளிப்பட்டாலும், அது உறுதியான நிலைப்பாட்டினின்று தளம்பாத தன்மையைப் பிரதிபலித்தது என்பது நியாயமானது. அவரது சத்தியாக்கிரகம் பல விடுதலை இயக்கத் தலைவர்களைக் கவர்ந்தது. நெல்சன் மண்டேலா, மாட்டின் லூதர்கிங் என்போர் இவ்விடத்துக் குறிப்பிடத்தக்க இருவர். மண்டேலா ஆயுதமேந்திய போராட்டத் தேவையை நாளடைவில் உணர்ந்தார். மாட்டின் லூதர்கிங் அமெரிக்க இனவெறியர்களால் கொல்லப்பட்டார். கறுப்பு இன மக்களை எவரும் தாக்கினால் அவர்கள் திருப்பித் தாக்குவார்கள் என்ற உண்மையை 1960களின் பிற்பகுதியின் நிகழ்வுகள் நிரூபித்தன. காந்தியின் அகிம்சையை நிராகரிப்பது என்பது எல்லாப் பிரச்சினைகட்கும் வன்முறையையே பயன்படுத்துவது என்று கூறுவதாகாது. மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகள், மக்களுக்கும் எதிரிக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ற வேறுபாடே அமைதியான தீர்வுக்கும் வன்முறைப் போராட்டத்துக்கும் இடையிலான தெரிவை நிர்ணயிக்கின்றன.
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஈழத்துக் காந்தியாகக் காட்டப்பட்டதற்கு ஒரே ஒரு அடிப்படை தான் இருந்தது. சாத்வீக முறையில் போராடித் தமிழ் மக்களது மொழி
(29)

Page 20
தந்தையும் மைந்தரும்
உரிமையையும் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு சமஷ்டி ஆட்சியையும் வென்றெடுக்க முடியும் என்ற கருத்தும் சத்தியாக்கிரகப் போராட்ட முறையை ஏற்றமையுமே அது. சத்தியாக்கிரகம் ஒரு வெகுஜனப் போராட்டமாக அமைவதற்கான சில அடிப்டைத் தேவைகள் இருந்தன. அதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைமை ஆயத்தமாக இருந்ததா என்பது கேள்விக்குரியது. இந்த இடத்தில் தனிப்பட்ட வாழ்வில் தீண்டாமைக்கு எதிராகக் காந்தி செயற்பட்ட அளவுக்குத் தமிழசுக் கடசியின் எந்தத் தலைவரும் செயற்பட ஆயத்தமாக இருந்தாரா என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.
வடபிரதேசத்தில், முக்கியமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாதியம் கொலணி ஆதிக்க காலத்தில் மிகவும் இறுக்கமடைந்தது. சாதி ஏற்றத் தாழ்வுகள் சமுதாயத்தின் ஆதிக்க நிலைகளை மிகவும் தெளிவாகவே அடையாளங் காட்டின. குடாநாட்டில் தமிழ்த் தேசியத்தின் முக்கியமான தலைவர்களாக உலாவந்த பொன்னம்பலம் ராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகியோர் சாதியத்தின் பிரதிநிதிகளாகவும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை. தமிழரசுக் கட்சிக்கு இவ்விடயத்தில் மிகுந்த சங்கடமான ஒரு நிலை இருந்தது. தேர்தல் அரசியலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே இடது சாரிகளும் பிற முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் ஊக்குவித்து வளர்த்த தன்மான உணர்வும் கல்வி முதற்கொண்டு பல்வேறு உரிமைகட்கான வேட்கையும் அரசியலில் அவர்களது பங்கை மேலும் முக்கியமான ஒன்றாக்கியது. ஆயினும் அவர்கள் வடக்கில் எந்தத் தேர்தல் தொகுதியிலும் பெரும்பான்மையினராக இருக்கவில்லை. அதைவிட அவர்கள் ஸ்தாபன ரீதியாக ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய ஒரு வலிய நிலைக்கு வளரவில்லை. எனவே சாதியத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டையும் உயர்சாதியினரது ஆதிக்கத்தைக் கைவிடாதவாறான ஒரு நடைமுறையையும் அவர்கள் கடைப்பிடித்தனர். இந்த இரட்டை வேடத்துக்கு இடைஞ்சலாக இருந்தவர்களுட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முக்கியமானவர்கள். எனவே 1956க்குப் பின் அவர்களை ஒரங்கட்டுவது பற்றித் தமிழரசுக் கட்சியினர் மிகவும் முனைப்பாகவே இருந்தனர். இதுவும் தமிழ்த் தேசியவாதத் தலைமை பிரித்தானிய ஆட்சிக்கு காட்டிவந்த விசுவாசமும் இலகுவாகவே உடன்பாடு
கண்டன.
1956ம் ஆண்டு தேர்தலின் பின்பு பாராளுமன்ற மூதவைக்கு (செனற்) 10 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் முறை 1957ல் வந்தது. இவர்களில் 5பேர் அரசாங்கத்தால் நியமனம் பெறுவோர். மற்ற ஐவர் பிரதிநிதிகள் சபையால் தெரிவுசெய்யப்படுவோர். எதிர்க்கட்சியினரிடையிருந்து ஒரு தமிழரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி ஒருவரை நியமித்து மூதவைக்கு அனுப்ப உத்தேசித்தது. இது தமிழரசுக் கட்சிக்கு சிக்கலை
(30)

தந்தையும் மைந்தரும்
ää
ஏற்படுத்தியது. எனவே சமசமாஜக் கட்சியினரது உதவியுடன் ஜி.நல்லையாவைத் தெரிவுசெய்ய ஏற்பாடு செய்தனர். தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுணப்பிழையாக வேண்டும் என்ற விதமாக, இடதுசாரி ஐக்கியத்துக்குச் சமசமாஜக் கட்சி குழி பறித்தது இதுதான் முதற் தடவையல்ல. வடக்கில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தாழ்த்தப்பட்ட மக்களிடையே இருந்த செல்வாக்கு மேலும் வளராமல் தடுப்பதில் சமசமாஜக் கட்சி எடுத்த முயற்சி தமிழரசுக்கட்சிக்கு உதவியதே அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களது போராட்டத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை.
ஜி. நல்லையாவை மூதவைக்கு அனுப்பியதன் மூலம் தமிழரசுக் கட்சியால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தனது அக்கறை பற்றிக் கொஞ்சம் விளம்பரம் தேடமுடிந்தது. இதே காலகட்டத்தில் சாதி முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் பண்டாரநாயக்க அரசாங்கத்துக்கும் ஏற்பட்டது. தென்னிலங்கையின் சாதியம் குடாநாட்டின் தீண்டாமை போல உக்கிரமானதல்ல. எனினும் கரையோரப் பிரதேசங்கள் போக மற்றப் பகுதிகளில் சில சாதிப் பிரிவினர் கண்டியச் சிங்கள கொவிகம (வேளாள) ஆதிக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரு சட்டத்திற்கும் சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சமுதாயத்தில் முன்னேறும் வாய்ப்புகட்குமான ஒரு தேவை இருந்தது. பின்னையது பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்த பின்பு கல்வி, தொழிற்துறைகளில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் கிடைத்த வாய்ப்புக்களால் சிறிது இயலுமாயிற்று. முன்னையதைப் பொறுத்தவரை, பொது இடங்களில் சாதி அடிப்படையில் எவரையும் கீழ்மைப்படுத்துவதைச் சட்ட விரோதமானதாக்கும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஒரு தனியார் பிரேரணையாகத் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினரான ராஜவரோதயத்தால் முன் மொழியப்பட்டுச் சட்டமானது. இச்சட்டவாக்கத்தில் சாதிப்பாகுபாடு காட்டுவோருக்கான தண்டனை மிக அற்பமாகவே இருந்தது. ஆயினும் நாட்டின் எந்தப் பகுதியில் சாதிக்கொடுமை மிக உக்கிரமாக இருந்ததோ அங்கிருந்து வந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தால் அது ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்திருக்கும் மாறாக எங்கே சாதி ஒரு தேர்தல் பிரச்சினையாக இருக்க வில்லையோ அங்கே இருந்த ஒரு பிரதிநிதியை அச்சட்டவாக்கத்தை முன்மொழியச் செய்து தமிழரசுக்கட்சியின் தலைமையால் தனது இரட்டை வேடத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
1957ல் தமிழரசுக் கட்சியினரால் சமபந்தி போசனம், ஆலயப் பிரவேசம் போன்ற
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த ஒரு நாள் கூத்துக்கள் நடந்து முடிந்த பின்பும் வடக்கில் கோயில்கள் உட்படப் பல்வேறு பொது இடங்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்
(31)

Page 21
தந்தையும் மைந்தரும்
புகவும் சமமாக பகிரவும் முடியாதவையாகவே இருந்தன. தமிழரசுக்கட்சித் தலைமையைப் பொறுத்தவரை சாதி ஒழிப்புக்கான கடமை 1957ம் ஆண்டுடன் நிறைவு பெற்றுவிட்டது. ஏறத்தாழ 30 வீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த குடாநாட்டில் தமிழரசுக்கட்சியோ தமிழ்க் காங்கிரஸோ ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பாராளுமன்றத் தேர்தலில் நிறுத்த முன்வராதது ஏன் ?1977ல் தொகுதிப் பிரிப்பின் போது வடமாராட்சியில் ஒரு தொகுதியில் முதல் முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணி தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் ஒருவரை நிறுத்தியது. அவ்வாறு நிறுத்தி வெற்றி பெறச் செய்தமைக்கு முக்கிய காரணம் 1966-72 காலகட்டத்தில் இடம்பெற்ற தீண்டாமை ஒழிப்பிற்கான கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கிய போராட்டங்களேயாகும். இங்கேயும் கம்யூனிஸ்டுக்களை முறியடிப்பதற்கே உடுப்பிட்டித் தொகுதி தமிழர் கூட்டணியினரால் ஒதுக்கப்பட்டது.
தமிழ்க் காங்கிரஸ் மேட்டுக்குடிகளது பிரதிநிதியாக வடக்கில் இருந்து வந்த காலம் வரை சாதிப்பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களது பிரதிநிதியாகத் காட்டிக்கொள்ளும் தைரியம் தமிழரசுக் கட்சிக்கு இருக்கவில்லை என்பது உண்மை. தைரியம் இல்லாமை மட்டுமின்றித் தமிழரசுக் கட்சிக்குள்ளே சாதிவெறியர்களது செல்வாக்கும் படிப்படியாக அதிகரித்து வந்தது என்பதை 1960களின் பிற்பகுதியின் நிகழ்வுகள் நிரூபித்தன.
1965-69 கால கட்டத்தில் யூஎன்.பி.யுடன் கூட்டாட்சி நடத்திய 'ஈழத்துக் காந்தி செல்வநாயகம், தமிழரசுத் தளபதி அமிர்தலிங்கம் அக்கால கட்டத்தில் வடக்கில் நடந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தை நிந்தித்துப் பேசிய வார்த்தைகளைக் கண்டிக்கவேயில்லை. வன்முறை எதிர்ப்பு என்பது 'ஈழத்துக் காந்தி செல்வநாயகத்திற்கு ஒரு வசதியான ஆயுதமாகவே இருந்தது. மக்களது நியாயமான ஆயுதப் போராட்டம் ஒன்றை நிராகரிக்க இந்த ஆயுதத்தைப் பாவித்த அளவில் ஒரிஜினல் காந்தியிடமிருந்து ஒரு பயனுள்ள பாடத்தை அவர் கற்றிருந்தார்.
50களின் பிற்பகுதியில் யாழ்குடாநாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தாங்கள் புத்த மதத்தில் இணைந்ததாக அறிவித்தபோது தமிழரசுத் தலைமை வெகுண்டெழுந்து இந்தக் “கம்யூனிஸ்ட் சதியை வன்மையாகக் கண்டித்தது. கம்யூனிஸ்டுகள் என்றுமே சாதியத்தை முறியடிக்க மதமாற்றத்தை மார்க்கமாகக் காட்டியதில்லை. ஆயினும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை என்ற அளவில் இந்த மதமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழரசுக்கட்சித் தலைமையைப் பொறுத்தவரை தங்களது இயலாமையையும் வர்க்க, சாதிய நலன்களையும் மூடி மறைக்க யார் மீதாவது பழி போடும் தேவை இருந்தது. இந்த மதமாற்றம் தமிழ்த் துரோகம், சிங்கள பெளத்தத்திடம் கம்யூஸ்டுகளின்சரணாகதி என்றெல்லாம் தமிழரசுக் கட்சியின் அதிகார பூர்வமற்ற
(32)
 

பிரசார ஏடான சுதந்திரனால் கடுமையாகத் தாக்கப்பட்டது. சுதந்திரனின் 50 சதவீத பங்காளியும் அதன் நிர்வாகத்தில் முழு அதிகாரமும் கொண்ட முதலாளியுமான செல்வநாயகம் மெளனமாக அங்கீகரித்த செயல்களுள் சுதந்திரனின் விஷமங்களும் அடங்கும். தமிழ் மக்களிடையே தமிழ் இன வெறியை வளர்ப்பதில் சுதந்திரனின் பங்கு 1956 முதல் முக்கியமான ஒன்றாகவே இருந்து வந்தது.
S. figuuTičJEGLIDIT, FILIMIGOfü BLITLJITILLDT
1958 இனக்கலவரத்தின் பின்பு தென்னிலங்கையின் இனவாத அரசியல் மீண்டும் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டது. செல்வநாயகத்துடன் செய்த உடன்படிக்கையை பண்டாரநாயக்க கிழித்தெறிவதற்குஅவரது அரசாங்கத்தில் இருந்த இனவாதிகளும் சில புத்த பிக்குகளுமே காரணமாயிருந்தனர். மறுபுறும் பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கைக்கு எதிராக ஜே.ஆர். ஜயவர்த்தன திரட்டமுயன்ற எதிர்ப்பை முறியடித்து சிங்கள வெகுசன ஆதரவை வெல்வதற்கு எஸ்.டி.ப ண்டாரநாயக்காவின் துணிவான முயற்சி மிகவும் உதவியது. ஆயினும் தெற்கில் உள்ள நிலைமைகளை நன்கு உணராத தமிழரசுத் தலைமையின் பூரீ எதிர்ப்புப் போராட்டம் நந்தவனத்திலோர் ஆண்டி நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைத்த கதையாக நிலைமைகளைக் கெடுக்க உதவியது.
1958க்குப் பின் இலங்கை அரசியல் பல திடீர்த் திருப்பங்களைக் கண்டது. 1959ல் வன்னியசிங்கம் இறந்தமை தமிழரசுத் தலைமையில் நிதானமும் கொள்கை உறுதியும் மிகவும் கொண்ட ஒருவரின் இழப்பானது. அவர்போல ஒரு தலைவர் பின்பு அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. அதே ஆண்டு பண்டாரநாயக்க ஒரு புத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை அடுத்து மதத்தை அரசியலுடன் பிணைப்பதை எதிர்த்து முறியடிக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆயினும் அதைத் சிங்களப் பேரினவாத அரசியற் தலைமைகள் விரும்பவில்லை. எனினும் 1960ல் நடந்த தேர்தல்கள் இரண்டிலும் புத்த பிக்குமாரின் பங்கு 1956ஐ விடவும் தணிந்தே இருந்தது.
1960 மாச் மாதம் நடந்த தேர்தலில் பெரும்பான்மை வலிமை எக்கட்சிக்கும் இருக்கவில்லை. அதிகப்படியான ஆசனங்களைப் பெற்ற யூஎன்.பி. சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது. தமிழரசுக் கட்சி அதற்கு உதவினாலுங் கூடப் பூரண பெரும்பான்மைக்கு இடமில்லை. எனவே தமிழரசுக் கட்சியும் ஒதுங்கி நின்றது. இக்காலகட்டத்தில் வடக்கே தமிழ்க்காங்கிரசுக்கு சிறிது செல்வாக்கு மிஞ்சியிருந்ததும்
(33)

Page 22
தந்தையும் மைந்தரும்
டட்லி சேனநாயக தலைமையிலான யூஎன்.பிக்கும் தமிழ் காங்கிரஸிற்கும் இருந்த சுமுக உறவும் தமிழரசுத் தலைமையின் நிதானத்துக்கு காரணமாயிருந்திருக்கலாம். அதைவிட, யூஎன்.பி எதிர்ப்புச் சக்திகள் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான அரசாங்க ஊழியர் மத்தியிலும் வடக்கில் கட்சியின் கீழ்மட்டங்களிலும்இருந்ததும் இன்னொரு காரணமாயிருந்திருக்கலாம்.
தமிழரசுக் கட்சி இடதுசாரிகளுடனில்லாவிட்டாலும் பூரீ.ல.சு.கட்சியுடன் ஒரு அரசியற் பேரத்தை நடத்துவதாகச் சந்தேகப்பட்ட யூஎன்.பி. 1960ஜான் தேர்தலின் போது மிக மோசமான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டது. ஆயினும் அத்தேர்தலில் பூரீ.சு.கட்சி பூரணபெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது. சிறிமா பண்டாரநாயக்க மூதவை உறுப்பினராக்கப்பட்டுப் பிரதமர் பதவி ஏற்றார்.
தமிழரசுக்கட்சி மொழிப் பிரச்சனை தவிர்ந்த வேறெந்தப் பிரச்சனை பற்றியும் அக்கறை காட்டத் தவறியதால், பல விடயங்களில் அதன் கொழும்புத் தலைமைப்பீடத்தின் வர்க்க நலன்களால் உந்தப்பட்டே செயற்பட்டது. முன்பு நெற்காணிச்சட்டம், அந்நிய தளங்களை அகற்றல் போன்ற பிரச்சனைகளில் அது யூஎன்.பி.யுடன் நின்றது போலவே, பாடசாலைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதை எதிர்ப்பதிலும் யூஎன்.பியுடனும் கத்தோலிக்க மதபீடத்துடனும் சேர்ந்து நின்றது. அரசாங்க உதவி பெற்ற மிஷன் பாடசாலைகள் அரசாங்க நிதியுதவியின் அடிப்படையிலேயே செயற்பட்டன. ஆயினும் அவை மதமாற்றம் உட்பட்ட பல்வேறு மதச்சார்பு நடவடிக்கைகளை எடுத்ததோடு மட்டுமின்றி அரசியலிலும் அன்றைய கிறிஸ்தவ மதப்பீடங்களின் ஆணையையேற்று யூஎன்.பிக்கு அனுசரணையாகவே நடந்துவந்தன. பாடசாலைகளை அரசு பொறுப்பேற்பது என்ற முடிவு, விரும்பியவர்கள் வேண்டுமானால் தனியார் பாடசாலைகளாக இயங்குவதற்கு அனுமதி தரப்படும் என்ற அடிப்படையிலே எடுக்கப்பட்டது. கல்வி மீது சமய நிறுவன ஆதிக்கம் தகர்வதைக் தமிழரசுக் கட்சி எதிர்க்க ஒரு நியாயமே இருந்தது. அது பாடசாலைகள் சிங்கள ஆதிக்கத்திற்கு உட்படலாம் என்ற அச்சமாகும். (ஆயினும் இது நிகழவில்லை என்பது வேறு விடயம்). தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு ஒரு புறமிருக்க, ழரீல.சு.கட்சி அரசாங்கத்திலும் அரசாங்க நிர்வாக இயந்திரத்தினுள்ளும் பல சிங்கள இனவாத விஷமிகள் இருந்தனர். தமிழரசுக் கட்சி பற்றிய பிரிவினைவாதப் படிமமும் இத்தகைய விஷமிகளது செயலுக்கு ஊக்கமளித்தது. அரசகரும மொழியான சிங்களத்தை நீதிமன்ற மொழியாக்குவது என்று பூரீ.ல.சு.க. எடுத்த முடிவு தமிழரசுத் தலைமையை வெகுண்டெழச் செய்தது. யாழ் மாவட்டத் தமிழரசு உறுப்பினர்களுட் பெருவாரியானோர் அப்புக் காத்துமாராக இருந்ததும் இந்த தர்மாவேசத்துக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
(34)
 

தந்தையும் மைந்தரும்
தமிழரசுக் கட்சி போராடப் போவதாக அறிவித்ததையடுத்து அரசாங்கத்திற்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன. நீதி அமைச்சர் சாம் பி.சி. பெர்ணாணி டோவும் செல்வநாயகமும் தலைமை தாங்கி நடத்திய இப்பேச்சுவார்த்தைகளில் ஒரு விடயம் தவிர மற்றவற்றில் பொதுவான இணக்கம் காணப்பட்டது. சர்ச்சைக்குரிய விடயத்தை மீண்டும் பேசி முடிவெடுப்பதற்கு இடமளிக்காமல், தமிழரசுக் கட்சி, யாரும் எதிர் பாராவிதமாக, யாழ்ப்பாணத்தில் ஒரு சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கியது. இப்போராட்டத்திற்கான எந்தவித முன்னேற்பாடும் செய்யப்பட்டதாக யாரும் அறியமாட்டார்கள். போராட்டம் எதிர்கொள்ள வேண்டிய நேரக்கூடிய நிலைமைகளும் ஆராயப்படவில்லை.
உதாரணமாக, 1958ல் தமிழர் விரோத வன்முறையை அடுத்து ஒரு சில சிங்களப் பேரினவாதிகளும் சகல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 1958ல் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தென்னிலங்கையில் ஏற்கனவே இனவாத வன்முறை நிகழ்ந்துள்ளது. இவையாவுமே மீளவும் நிகழக்கூடியனவே என்பதைக் தீர்க்கதரிசியாகக் கருதப்பட்டு வந்த தமிழரசுத் தந்தையால் கணிப்பிற்கூட எடுத்திருக்க முடியவில்லையா? தமிழரசுக் கட்சியின் இந்த அவசரமுடிவு பூரீ எதிர்ப்புப் போராட்டத்தைப் போலவே தீர யோசியாமல் எடுக்கப்பட்டது எனவும் கட்சிக்குள் கட்சியாக இயங்கிய ஒரு சிறு கும்பலின் நெருக்குவாரத்தின் பேரில் எடுக்கப்பட்டது எனவும் கிழக்கிலங்கையில் கருதப்பட்டதில் நியாயம் உண்டு.
சத்தியாக்கிரகம் என்பது ஒரு திட்டமிட்ட போராட்டம். மோகனதாஸ் காந்தியின் சத்தியாக்கிரகங்கள் எல்லாமே ஒரு அரசியற் கணிப்பின் அடிப்படையில் நடத்தப்பட்டவை. அக்கணிப்புகள் சரியானவையா என்பது பற்றி விவாதிக்க இடமுண்டு. போராட்டமுறை பற்றி விவாதிக்கவும் இடமுண்டு. ஆயினும் ஏதோ ஒரு திட்டம் இருந்தது. தமிழரசுக்கட்சியினரிடம் பாராளுமன்றத் தேர்தல்களையும் பொதுக் கூட்டங்களையும் விட வேறெதற்கும் திட்டம் இருந்ததாகக் கூறமுடியவில்லை. வெகுசன இயக்க அரசியல் என்பது அவர்கட்கு அந்நியமான ஒன்று மட்டுமல்ல ஆபத்தானதும் கூட, எந்த வெகுசனப் போராட்டமும், அதன் இலக்கின் வரையறைகளை மீறிப், பரந்துபட்ட மக்களின் பிற பிரச்சினைகளை உட்கொணர்ந்து சமுதாய மாற்றத்திற்கான சக்திகளை கட்டவிழ்த்து விடுகிற அபாயம் எப்போதும் உண்டு. இதனாலேயே, காந்திய வரையறைகட்குள் போராட்டத்தை நடத்துகிற பாவனையில், போராட்டத்தை மொழிப் பிரச்சினைக்குள் மட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தமிழரசுக்கட்சி எதிர்பாராத அதிர்ஷ்டம் சத்தியாக்கிரகத்தின் தொடக்க நிலையிலேயே கிட்டியது. முதலில் யாழ்ப்பாணக் கச்சேரி முன் அமர்ந்திருந்த
(35)

Page 23
தந்தையும் மைந்தரும்
சத்தியாக்கிரகிகளின் தொகை அதிகமல்ல. இதை மிகவும் தவறாக கணிப்பிட்ட பொலிஸார் குண்டாந்தடிப் பிரயோகத்தின் மூலம் மறியலை முறியடிக்கலாம் என்று எதிர்பார்த்தனர். அதன் விளைவாக அசட்டையாக இருந்த மக்களும் மிகுந்த உற்சாகத்துடன் முன் வந்து சத்தியாக்கிரகத்தில் இணைந்தனர். இந்த நிலையிலும் இப்போராட்டத்தை எப்படி விஸ்தரிப்பது என்பது பற்றிய தெளிவான சிந்தனை தமிழரசுத் தலைமையிடம் இருக்கவில்லை. சில நாட்களின் பின்பு சத்தியாக்கிரகம் வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு வரை விஸ்தரிக்கப்பட்டது. அங்கும் கச்சேரிமுன் மறியல் தவிரவேறு நடவடிக்கை இல்லை. பொதுமக்களது அனுதாபம் மிகுந்த சூழ்நிலையில் அரசாங்கம் சத்தியாக்கிரகிகள் மீது வன்முறை பிரயோகிப்பதைக் கவனமாகத் தவிர்த்தது. இந்தவிதமான இழுபறியான நிலைமையின் போதுதான் தமிழரசுத் தபால் சேவையை நடத்துவது என்ற அதிமேதாவித்தனமான யோசனை தமிழரசுக் கட்சிக்குள் இயங்கி வந்த சிறு கும்பலால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் உடனடியான எதிர்விளைவு பற்றியோ போராட்டத்தைப் பற்றிய அபிப்பிராயங்களை அது எப்படி மாற்றும் என்பதை பற்றியோ அதன் சூத்திரதாரிகள் போதியளவு சிந்தித்தாக நம்ப இடமில்லை.
சத்தியாக்கிரகம் தொடங்கிய நிலையில் சமசமாஜக் கட்சித்தலைமை அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு இரண்டு சமசமாஜக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரிற் சென்று ஆதரவு கூறியதாகவும் நினைவில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் நியாயத்தை ஏற்றது. ஆயினும் போராட்ட முறையின் பலவீனங்களும் கம்யூனிஸ்டுகளால் விமர்சிக்கப்பட்டன. தமிழரசுக்கட்சி (தளராமல்) ஒட்ட முயன்ற பேரினவாத, துரோக முத்திரைகட்குச் சத்தியாக்கிரகத்தின போது இடதுசாரிகளின் நடத்தையில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை
தபாற்சேவை ஆரம்பமான பிறகு, தமிழரசுக் கட்சியின் போராட்டம் நாட்டைப் பிரிப்பதற்கும் நாட்டின் அமைதியைக் குலைப்பதற்குமான போராட்டம் என்று அரசாங்கத்தால் வாதிட முடிந்தது. வெகு விரைவிலேயே அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சகல தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சத்தியாக்கிரகத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலரும், பணாகொடவில் உள்ள ராணுவ முகாமில், பலவசதிகளுடனும் தடுப்புக்காவலில் வைக்கபட்டனர். செல்வநாயகம் மட்டும் சில நாட்களில் அவரது வீட்டிலேயே தடுப்புக் காவலில் இருத்தப்பட்டார். சத்தியாக்கிரகத்தைப் பொறுத்தவரை, அது அவசரகாலச் சட்டத்துடனேயே முடிவுக்கு வந்துவிட்டது. தடுப்பக்காவலில் வைக்கப்படாத சிலர் ஒருசில வாரங்களாக அரசாங்கப் பிரசாரத்தை மறுத்து ஆங்கிலத்தில் ரோணியோ அச்சிடப்பட்ட சில பிரசுரங்களை
(36)
 

- choenix orbach,
வெளியிட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் துறைநீலாவணையில் இராணுவத்தினருடன் சில தமிழ் மக்கள் பதில் தாக்குதல் தொடுத்ததாகவும் செய்திகள் பரவின. குறிப்பிடத்தக்க விதமாக எதுவும் நடக்கவில்லை. நடந்த எதற்கும் தமிழரசுத் தலைமை வழி காட்டியதாகவும் கூற இடமில்லை. இராணுவத்தினர் ஊரடங்குச் சட்டத்தை உலகமகா யுத்தத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விளக்கணைப்புச் சட்டமாகக் கருதி மக்களை விளக்குகளை அணைக்குமாறு கட்டாயப்படுத்தியது போன்ற சில்லரை உபாதைகள் போக, அவசரகாலச் சட்டம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை எவ்வித எதிர்ப்புமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டது.
சத்தியாக்கிரகத்தின் இத்தோல்வி, தமிழரசுக்கட்சி அந்தப் போராட்டத்தைத் தொடர்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் எந்த வகையிலும் ஆயத்தமாக இல்லை என்பதை மிகவும் தெளிவாக உலகுக்கு உணர்த்தியது. தமிழ் மக்கள் பெருமளவில் அந்தப் போராட்டத்துக்கு வழங்கிய ஆதரவைத் தமிழரசுக்கட்சியால் பயன்படுத்த முடியவில்லை. மறுபுறம் தமிழரசுக்கட்சியுடைய அறப்போர், சாத்வீகப் போராட்டம் என்பன பற்றித் தமது எதிர்பார்ப்புகளை இந்திய விடுதலைப் போராட்டத்துடனான உவமைகளின் அடிப்படையில் வளர்த்துக் கொண்ட தமிழ் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தையே அடைந்தனர். இதுவே தமிழரசுக்கட்சியின் செல்வாக்கின் சரிவின் தொடக்க நிலையாகும். ஆயினும் மாற்றுக் கட்சியென ஒரு பாராளுமன்ற அரசியற் கட்சி இல்லாத சூழ்நிலையில் அதன் பாராளுமன்ற வலிமை மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்தது. 1965ல் யூஎன்.பி. அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சியின் இணைவு அதன் அரசியல் அஸ்தமனத்தின் தெளிவான அடையாளமானது. அதற்கு முன், 1961 க்கும் 1965க்கும் இடையிலான காலத்தில் தமிழரசுக்கட்சி என்ற வகையிலும் அடிசறுக்க ஆரம்பித்து விட்டது.
III. 5HéřičFUfü LJBölléFlb
சத்தியாக்கிரகத்தின் தோல்வி தமழரசுக்கட்சியின் இயலாமையைச் சிங்களப் பேரினவாதக் கட்சிகட்கும் தமிழ் மக்களுக்கும் உணர்த்திய பின்பும் காந்திய தருமத்தின் மொழியைத் தனது அரசியல் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த அக்கட்சி உபயோகித்தது. 1962ல் சீன-இந்திய தகராறும் எல்லைம் போரும் பற்றிய விடயத்தில், சீனாவை குற்றவாளி என்று கூறி சீன எதிர்ப்பு ஊர்வலம் போனதன் மூலம் தமிழரசுக்கட்சியும் யூ என் பியும் ஒரே அணியில் நின்றன. பொதுவாக இலங்கையின் முக்கியமான பல பிரச்சினைகளில் பிற்போக்கான நிலைப்பாட்டைத் தமிழரசுக்கட்சி எடுத்தாலும் அயல் விவகாரங்களில் அது அதிகம் அக்கறை காட்டியதில்லை. இலங்கை அரசாங்கம்
(37)

Page 24
S. re 滚 ረ
தந்தையும் மைந்தரும்
அந்நியளண்ணெய்க் கம்பனிகளைத் தேசிய மயமாக்கியபோது இது தருமத்துக்கு விரோதமாயனது என்று ஈழத்து காந்தியம் பேசிய தமிழரசுத்தலைவருக்கு கியூபா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் நெருக்குவாரங்களும் தருமம் சம்பந்தபட்ட பிரச்சினைகளாக தெரியவில்லை. சுதந்திர கொங்கோவில் முதலாவது ஆட்சித் தலைவரான பற்றிஸ்லுமும்பா பிற்போக்குவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அதருமம் தென்படவில்லை. இவ்வாறான பம்மாத்துக்களின் பின்னணியிலேயே, முன்னொரு போதும் இல்லாதவாறு, செல்வநாயகத்தின் காந்தி படிமம் தாக்குதலுக்கு உள்ளானது.
1956 முதல் 1961 வரை பொதுக் கூட்டங்களில் ஈழத்துக் காந்தி வாழ்க என்று கோஷங்கள் எழுப்பப்பட்ட போது என்னைக் காந்தி என்று அழைக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்த செல்வநாயகம், உண்மையில் அதைத் தடுக்க வேண்டுமாயிருந்தால், அப்படிக் கோஷம் போட ஏற்பாடு செய்த தனது கட்சியின் தொண்டர் படையிடம் கண்டிப்பாகக் கட்டளையிட்டிருக்க முடியும்.காந்தி என்று அழைக்காதீர்கள். என்ற வேண்டுகோள மூலம் அவரது காந்திப் படிமம் மேலும் வளர்க்கப்பட்டது. ஆனாலும் 1961ன் பின் உள்ளுர்க் காந்தியம் உளுத்துப் போனதோடு ஒரு கேலிப்பொருளுமாகியது. முன்பு கம்யூனிஸ்ட் அனுதாபியாயிருந்து 70களில் தமிழ்த் தேசியவாதியாக மாறிய பத்திரிகையாளரும் திராவிட இயக்கப்பாணி நாத்திக எழுத்தாளருமான அந்தனிசில், செல்வநாயகத்தை கோட்டு சூட்டு காந்தி, கோழி புறியாணி காந்தி என்று மிகவும் கிண்டலாகக் குறிப்பிட்டு எழுதிவந்தார். தமிழரசுக் கட்சி ஈழத்துக் காந்தி என்றுபடிமத்தைப் பயன்படுத்துவது படிப்படியாக நின்றுபோக நேர்ந்ததற்கு இவ்வாறான கிண்டல்தான் காரணம் அல்ல. காந்தி அகிம்சை சத்தியாக்கிரகம் போன்றவை பற்றிப் பேசுவதன் மூலம் தமிழரசுக்கட்சியினர் மக்களை இனி மேலும் கவரமுடியாது என்ற உண்மை அவர்களுக்கு விளங்கி விட்டது. ஆயினும் செல்வநாயகத்தை ஒரு புனிதராகக் காட்டும் தேவை அவர்கட்குத் தொடர்ந்தும் இருந்து வந்தது. இந்தப் புனிதத்துவம் பரீட்சிக்கப்படும் நாள் வேகமாக நெருங்கி வந்தது.
1963-64, இலங்கையின் இடதுசாரி இயக்கத்திற்குச் சோதனை மிகுந்த காலம் எனலாம். சர்வதேச அரங்கில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான திரிபுவாத அணிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான மாக்ஸியலெனினிய அணிக்குமிடையிலான போராட்டம் வெளியான பிளவான ஆண்டு அது. இலங்கை பாரளுமன்ற சீர்திருத்தப் பாதைக்கும் பாட்டாளிவர்க்கப் புரட்சிப் பாதைக்குமான முரண்பாடு காரணமாக 1963ன் கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டது. 21
(38)
 

தந்தையும் மைந்தரும்
கோரிக்கைகளின் அடிப்படையில் சமசமாஜ, கம்யூனிஸ்ட், பிலிப் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத்பெரமுன (மக்கள் ஜக்கிய முன்னணி)ஆகிய கட்சிகள் ஒன்று பட்டுப் போராட ஆயத்தமானவேளை, பூநீல.சு.கட்சி அந்த ஒற்றுமையை முறிப்பதில் வெற்றி கண்ட ஆண்டும் அதுவே இடதுசாரி ஒற்றுமையைக் குலைத்து ல.ச.ச.கட்சி அரசாங்கத்தில் இணைந்த பின் அங்கும் பிளவுகள் ஏற்பட்டன. ல.ச.ச.கட்சித் தலைமையின் துரோகமாக இதைக் கருதிய பிலிப் குணவாதன. தனக்கு முக்குப்போனாலும் சமசமாஜக்கட்சிக்குச் சகுனப் பிழையாக வேண்டும் என்ற விதமாக அரசியல் சீரழிவுக்கு ஆளாகி, 1965ல் யூஎன்.பி அரசில் இணைவதற்கான திருப்புமுனையும் அதுவே.
லேக்ஹவுஸ் பத்திரிக்கைகள் பூரீ.ல.சு. கட்சி அரசாங்கத்திற்கு விரோதமான விஷமப் பிரசாரத்தை நெடுங்காலமாகவே நடத்தி வந்தன .எஸ்.டபிள்யூஆர்.டி பண்டாரநாயக்க இலங்கை வானொலியைத் தனது மாற்றுப் பிரசாரக் கருவியாக வெற்றிகரமாகக் கையாண்டார். காலப் போக்கில் வானொலியின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகியது. இந்த நிலையில், லேக்ஹவுஸ் நிறுவனம், நாளேடுகள் மீது செலுத்திய ஆதிக்க வலிமையால் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு சக்திகளையும் ஊக்குவித்ததோடு யூஎன்.பி.ஆட்சியை மீளக்கொண்டுவரத் தன்னாலான எல்லாத் தவறையும் செய்தது. அடுத்த தேர்தலின் போது லேக்ஹவுஸின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் தேவையை பூநீல.சு.கட்சி உணர்ந்தது. லேக்ஹவுஸ் ஏடுகட்கு மாற்றான வலிய பத்திரிகைகள் பூரீ.ல.சு.கட்சியிடம் இருக்கவில்லை. எனவே லேக்ஹவுஸைத்
தேசிய மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
லேக்ஹவுஸ் பத்திரிகை ஏகபோகம் பலவகைகளிலும் பிற்போக்கானதும் ஏகாதிபத்திய சார்பானது என்பதனால் அதைத் தேசியமயமாக்கும் திட்டம் இடதுசாரிகளால் பொதுவாக வரவேற்கப்பட்டது. ஆயினும் 1964ல் அந்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது பூரீல.சு கட்சிக்குள் இருந்த வலதுசாரிப் பிரிவினர் அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சியை கவிழ்ப்பது என்ற முடிவுக்கு வந் து விட்டனர். வாக்கெடுப்பின் போது யூஎன்.பியும் இவர்களும், தருமத்தின் பேரால் தமிழரசுக் கட்சியும் மட்டுமல்லாது, ல.ச.ச.கட்சியிலிருந்த பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்து அதைத் தோற்கடித்தனர். அரசாங்கம் ஆட்சியை விட்டு விலகித் தேர்தலைச் சந்திக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது இச் சூழலில், தமிழரசுக் கட்சி ஆதரவுடன் பூரீ.ல.சு.க- ல.ச.ச.க ஆட்சியை 1965 ல் தேர்தல் நடக்க வேண்டிய காலம் வரை நீடிப்பதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. செனெற்றர் ஏ.எம்.ஏ அளிஸ் தமிழரசுக் கட்சியுடன் இது
(39)

Page 25
தந்தையும் மைந்தரும்
தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. கல்விமானும் நேர்மையாளருமான அஸிஸிடம் தமிழரசுக்கட்சித் தலைமை அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் என்ற அபிப்பிராயம் ஏற்படுத்தப் பட்டதாகவும் அந்த நம்பிக்கையின் பேரிலேயே ஆட்சிக் கலைப்பை பூரீ.ல.சு.க.பிற்போட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. இது பற்றிய உறுதியான தகவல்கள் என்வசமில்லை. எவ்வாறாயினும், பூநீல.சு.க.- ல.ச.ச.க ஆட்சி ஒரு நம்பிக்கைத் தீர்மானத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்த எடுத்த முயற்சி இயலாமல் போன நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டு 1965ல் தேர்தல் நடந்தது.
தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட கால தாமதத்தை யூ.என்.பியும் லேக்ஹவுஸ் ஏடுகளும் தமக்கு வசதியாகப் பாவித்தன. பூரீ.ல.சு.கட்சி தேர்தலைத் தவிர்த்து ராணுவ உதவியுடன் சர்வாதிகாரத்தை நிறுவ முயல்கிறது என்ற விதமான பிரசாரமும் முடுக்கிவிடப்பட்டது. 1962ல் சதிமூலம் ஆட்சியைக் விழ்க்க முயன்ற ராணுவ அதிகாரிகள் யூஎன் பிக்கு நெருக்கமானோராவார் சதி முறியடிக்கப்பட்டப் பின்பு ராணுவத்தின் தலைமையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.யூஎன்.பியின் அரசியல் வலிமையின் தளம் ஒன்று இவ்வாறு பறிக்கப்பட்டது. யூஎன்.பியின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதே என்றாலும் 1965 தேர்தலில் யூஎன்.பி. அற்ப பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர அதுவும் உதவியது. அது மட்டுமன்றிப், பின்னரும் நிகழ இருந்தது போல, தமிழரசுத் தலைமைக்கும் யூஎன்.பி. தலைமைக்கும் இடையே ஒரு இரகசிய உடன்படிக்கையும் உருவானது. தமிழ் மக்களை யூஎன்.பிக்குச் சார்பாக வாக்களிக்குமாறு வழங்கிய மறைமுகமான தூண்டுதல் அன்று முதல் 1980கள் வரை தொடர்ந்தது. 1956 போலன்றி 1960 தேர்தல்களிலும் 1965 தேர்தலிலும் யூஎன்.பி. அணிக்கோ பூநீல.சு.க. அணிக்கோ ஏகப் பெரும்பான்மை இருக்கவில்லை. இதையிட்டுத் தமிழரசுக் கட்சி இலங்கையை ஆள்வது எந்தக் கட்சி என்று தீர்மானிப்பது தானே என அகம்பாவத்துடன் பேசவும் முற்பட்டது. இதுவே சத்தியாக்கிரகத்திற்குப் பின்பான சாத்வீகப் போராட்ட அரசியலானது. 1970 தேர்தலின் பின்பு "இனிமேல் தமிழர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று செல்வநாயகம் ஏங்கியது அவரது இறுதித் தீர்க்க தரிசனம். தந்தையின் மைந்தர்கள், கடவுள் நினைத்தாலுங்கூடக் காப்பாற்ற முடியாதபடி, தமிழரசுக் கட்சியின் அரசியலை பூரணமாக பிற்போக்கு அரசியலாக்கி வைத்த கதை 1977ல் தொடங்கியது.
ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் அரசியலை 1950களில் தாங்கள் ஏளனம் செய்தபோது தமிழரசுக் கட்சியினர் “அரைமந்திரி பதவி, முழுமந்திரிப் பதவிகட்காகத் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்தோர்" என்று பேசியதை 1965ல் மக்கள் மறக்கவில்லை. எனவே யூஎன்.பி. அரசாங்கத்தில் பங்காளிகளாகி மந்திரிப்பதவி பெற்றுத் தமது அரசியற்
(40)
 

கோரிக்கைகளை வென்றெடுப்பது எத்தகைய அபிப்பிராயத்தை உருவாக்கும்
என்பதைத் தமிழரசுத் தலைவர்கள் அறியாமலில்லை. இதனாலேயே யூஎன்.பி வழங்க உடன்பட்ட அமைச்சர் பதவியைத் தெரிவு செய்யப்பட்ட எவரும் ஏற்பதில்லை என்று முடிவெடுத்து தமிழ் மக்களால் அறியப்படாதவரானபோதும் செல்வநாயகத்திற்கு மிக நெருக்கமான ஒரு பிரபல கொழும்பு வழக்குரைஞர் என்ற மகத்தான தகுதியின் பேரில் மு. திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சரானார். இதன் மூலம், தமிழரசுக்கட்சி அமைச்சர் பதவிக்காக அலையும் கட்சியல்ல என்று மக்களை இன்னும் சிலகாலம் ஏமாற்றும் வாய்ப்பும் மந்திரிப் பதவியை யார் பெறுவது என்ற மோதலைத் தவிர்க்கும் வசதியும் கிட்டியது.
இந்தப் புதிய உறவின் பின்பு தமிழரசுக் கட்சிப் பிரமுகர்களது நடத்தையில் சில மாற்றங்களைப் பலரும் அவதானித்தனர். மக்களுடன் ஒரளவு சகஜமாகவே பழகும் பண்புள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 1956ல் காணப்பட்டனர். 1965ல் பாராளுமன்ற உறுப்பினர்கட்கும் கட்சி ஆதரவாளர்கட்குமிடையே உள்ள விலகல் அதிகமாயிற்று. அது மட்டுமல்லாது, முதலாளிகளுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் உள்ள நெருக்கம் 1965க்கு சிறிது முன்பே வெளியாகத் தெரியத் தொடங்கி விட்டது. குறிப்பாக, 1960களின் முற்பகுதியில் தமிழரசுக் கட்சி அனுதாபிகளான அரசாங்க எழுது வினைஞர்கள் அமைத்த தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தையொத்த தொழிற்சங்க அமைப்புக்களைத் தமிழ்த் தொழிலாளர் மத்தியில் நிறுவுவதில் தமிழரசுக் கட்சிக்குச் சிரமம் இருந்தது. திருகோணமலைத் துறைமுகத்தில் தமிழரசுக் கட்சி 1961 சத்தியாக்கிரகத் தோல்வியின் பின்பு அமைத்த தொழிற்சங்கத்திற்கு ஒரு கப்பற் கம்பனி முதலாளியின் ஆதரவு இருந்தது. இதே முதலாளி தனது கம்பனியில் தொழிற் சங்கம் அமைவதை மூர்க்கத்தனமாக எதிர்த்தவராவார். ஆயினும் 1965 தேர்தலுக்குப் பின் நடந்த முதலாவது மேதினத்தில், ஒரு முதலாளியை மேடையேற்றிய புதுமை, யூஎன்.பி கூட அன்று கற்பனை செய்யாத தமிழரசுச் சாதனை.
1962 அளவில் மலையகத்தில் இருந்த தி.மு.க. எனப்படும் பல்வேறு சில்லறைக் குழுக்களில் ஒன்றுடன் சேர்ந்து தமிழரசுக் கட்சி தொழிற்சங்கம் தொடங்க முற்பட்டது. இது தொண்டமானுக்கு எதிராக தமிழ்ப் பேசும் இன ஐக்கியத்தைக் காக்கும் முயற்சியாகவே காணப்பட்டது. தோட்ட முதலாளி தொண்டமான் மலையக மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த அவருக்கு ஒரு மலையகத்து அரசியற் பின்னணி இருந்தது. தோட்ட முதலாளி செல்வநாயகத்தை மலையக மக்கள் நம்பி ஏமாற ஒரு அடிப்படையும் இருக்கவில்லை. தமிழரசுத் தலைமை விரைவிலேயே தன் பாடத்தை கற்றுவிட்டது. எனவே 1965ல் ஏற்பட்ட ஏழு கட்சிக் கூட்டரசாங்கத்தில் யூஎன்.பி. மட்டுமின்றி பிலிப்
(41)

Page 26
தந்தையும் மைந்தரும்
adaladhmadá
குணவர்த்தனவின் ம.ஐ.முன்னணியும், தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இ.தொ.கா. ஆகியனவும் பச்சை இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க ஆகியோரும் இருந்தனர். இவர்களை விட, யூஎன்.பிக்குள்ளும் தீவிரமான சிங்கள இனவாதிகள் இருந்தனர். 1965-70களில் டட்லி சேனநாயக தலைமையிலான ஆட்சியின் போது ஜே.ஆர்.ஜயவர்தன தனது இனவாதத்தைச் சிறிது அடக்கி வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1965ல் யூஎன்.பி. அரசாங்கத்திற் பங்காளிகளாகச் சேர்ந்ததன் மூலம் தமிழரசுக் கட்சி தனது முன்னைய அடையாளத்தின் சில முற்போக்கான அடையாளங்களை அப்பட்டமாகவே அழித்துக் கொண்டது. அது மட்டுமன்றி, 1964ல் பூரீ.ல.சு.கட்சியுடனான பேரத்தின் போது அது ழரீ.ல.சு.கட்சித் தலைமைக்குக' கொடுத்த நம்பிக்கையையும் பின்பு யூஎன்.பித் தலைமையுடன் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கையும் பூரீ.ல.சு.கட்சி எவ்வாறு நோக்கும் என்பது பற்றிய கணிப்பில் தமிழரசுக் கட்சி பெரும் தவறிழைத்தது. யூஎன்.பியுடனான இக் கூட்டு மூலம், தமிழ்க் காங்கிரஸ் போல தமிழரசுக் கட்சியும் ஒரு தமிழ் யூஎன்.பி. என்ற படிமம் உறுதியானது. இது தோற்றப் பாட்டிலான மாற்றம் என்றில்லாமல் சாராம்சத்திலேயே யூஎன்.பியுடன் தமிழரசுத் தலைமை கண்டுகொண்ட ஒரு புதிய அடையாள ஒற்றுமை என்பதை வலியுறுத்தும் விதமாகவே 1965-70 கால இடைவெளியில் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பெரும்பாலோர் நடந்து கொண்டனர். இது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
1. திக்குத் தெரியாத காட்டில்
“சிங்கள ஏகாதிபத்தியம்’ என்ற பதம் தமிழரசுக் கட்சி மேடைகளில் அதிகம் பயன்பட்ட ஒன்று. ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்று அந்தக் கட்சியின் பிரமுகர்கள் பலர் அறிவார்களோ என்று சந்தேகப்படும்படியாக அந்தப் பதம் சகல சிங்கள அரசியற் தலைமைகளையும் வருணிக்கப் பயன்பட்டது. இடதுசாரிகள் கூட இந்தச்-சிங்கள ஏகாபத்தியத்தின் எடுபிடிகள் என்றே காட்டப்பட்டனர். ஆயினும், பூரீ லங்கா சுதந்திரக் கட்சிகள் தவிர்ந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்த கூட்டணியில் தமிழரசுக் கட்சியும் ஒரு கூட்டாளியாக இணையும் பாக்கியத்தை அதன் தலைவரும் தீர்க்க தரிசியுமான செல்வநாயகம் அன்றே அறிந்திருந்தாரோ தெரியாது.
ஈழத்தில் ட்ரொட்ஸ்கியத்தில் பிதாவாக வருணிக்கப்பட்ட "தங்கமூளை’ என வருணிக்கப்பட்ட என்.எம் பெரேரா 1963 ம் ஆண்டு உருவான இடதுசாரி ஐக்கிய
(42)
 

தந்தையும் மைந்தரும்
முன்னணியின் ஐக்கியத்தைக் குலைக்கும் விதமாக பூரீ ல.சு.கட்சி ஆட்சியில் சமசமாஜக்
கட்சியை இணைக்க எடுத்த நடவடிக்கையால் அடைந்த விரக்தியின் விளைவாக பிலிப் தனது எம்.ஈ. பியுடன் 1965ல் யூஎன்.பி கூட்டுஅரசாங்கத்தில் பங்காளியானார். அதைவிட, பிலிப்பும் அவரது கட்சியும் 1965க்கும் பின்பு முற்றாகவே சிங்களத் தேசியவாத அரசியலுடன் சமரசம் செய்யத் தொடங்கி விட்டனர். 1956-1959 பண்டாரநாயக ஆட்சியின் போது சிங்கள இனவெறியின் குரல்களாக இருந்த ஆர்.ஜி.சேனாநாயக்க, கே.எம்.பி. ராஜரத்ன போன்றோரும், பூரீல.சு. கட்சியால் நிராகரிக்கப்பட்டு, யூஎன்.பியுடன் 1965ல் கூட்டுச் சேர்ந்தார்கள். இன்னும் ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல போன்ற கடைந்தெடுத்த சிங்கள இனவாதிகளும் பங்குபற்றிய ஒரு ஆட்சியில் தமிழ்க் காங்கிரஸ் இருந்தது வியப்பில்லை. ஏனெனில் அது பொதுவாக எப்போதுமே யூஎன்.பியின் நிழலையே நாடிய கட்சி. ஏழுகட்சிக் கூட்டணி என்று கேலி செய்யப்பட்டட இந்தக் கூழ்ப்பானைக்குள் தமிழரசுக்கட்சி விழுந்தது. அதன் முன்னைக்கால அரசியல் விளக்கங்கள் எல்லாவற்றையும் கேள்விக்கு இடமாக்கி விட்டது.
யூஎன்.பியின் தலைவராக இருந்த பிரதமர் டட்லி சேனநாயக்க ஒரு கனவான், சொன்ன வார்த்தை தவறமாட்டார் என்ற நம்பிக்கையின் பேரில் தமிழரசுக் கட்சி யூஎன்.பி.யுடன் கூட்டாட்சிக்கு உடன்பட்டது என்றால், அரசியலில் எதையுமே அது படிக்கவில்லை என்பதை விட வேறெதையுமே சொல்வதற்கு இடமில்லை. டட்லி சேனநாயக்க ஒரு உறுதியான தலைவரல்ல என்பதற்கான ஆதாரம் 1953 ஹர்த்தாலின் பின்பு அவரது அரசியல் அஞ்ஞாதவாசத்திற் தெரிந்திருக்க வேண்டும். யூஎன்.பி. யினுள் இருந்த சிங்களப் பேரினவாதிகள் அக்கட்சியில் ஆதிக்கம் செலுத்தினர் என்பதைத் தமிழரசுத் தலைமை அறியவில்லை என்று கூறவும் முடியாது. 1960 ஜூன் தேர்தலில் ட்டலி சேனநாயக்க தலைமையிலேயே தமிழருக்கு விரோதமான துண்டுப்பிரசுர விநியோகம் நடைபெற்றது. ஜே.ஆர். ஜயவர்தனவின் சிங்களப் பேரினவாதமும் யூஎன்.பி யினுள் அவரது செல்வாக்கும் தமிழரசுக்கட்சி அறியாததல்ல. அதைவிட முக்கியமாக யூஎன்.பி. (கனவான்களின் கட்சி) என்ற பழைய படிமத்தை மாற்றி ஒரு பொதுசனக் கட்சியாகத் தன்னைக் காட்டும் தேவையாலும் தனது வலதுசாரி அரசியலுக்கு அவசியமான ஒரு உதிரிப் பாட்டாளி வர்க்கத் தளத்தை விரிவு படுத்தி வந்தது. இந்த அரசியலின் விளைவாக சுகததாஸ, பிரேமதாச போன்றோர் அக்கட்சியில் வேகமாக முன்னேறினர்.
இத்தகைய ஒரு பின்னணியில் டட்லி - செல்வா உடன்படிக்கை எனப்பட்ட இரகசிய ஏற்பாட்டை பூரீ.ல.சு.க. எதிர்க்காமல் விட்டிருந்தாலுங் கூட, அதற்கு யூஎன்.பி. யினுள்லிருந்தே குழிபறிக்கப் பலர் காத்திருந்தனர் என்பது தமிழரசுக் கட்சிக்கு விளங்க
(43)

Page 27
தந்தையும் மைந்தரும்
அதிக காலம் எடுத்திருக்காது. தமிழரசுக்கட்சி தனது பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை வலிமையைக் காட்டி, யூஎன்.பி. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக மிரட்டத், தான் கேட்டதைப் பெற முடியும் என்று எண்ணி இருந்தால் அது வெறும் கனவுதான். ஏனெனில் டட்லி-செல்வா உடன் படிக்கைக்கு முன்னரே தமிழரசுக் கட்சி பூரீ.ல.சு.கட்சியையும் பாராளுமன்ற இடதுசாரிகளையும் பகைக்கும் விதமாக நடந்து கொண்டது. தமது கூட்டாளிகளை மாற்றி நாட்டை ஆளுவது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதற்கான வாய்ப்பைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்க பூரீ.ல.சு.கட்சியின் இடதுசாரிக் கூட்டாளிகள் அனுமதித்திருப்பார்களோ என்பதும் சந்தேகமானது. 1966 முற்பகுதியில் டட்லி - செல்வா உடன்படிக்கையை எதிர்த்து பூரீ.ல.சு.க. தலைமையில் நடைபெற்ற இனவாத ஊர்வலத்தில் சமசமாஜக்கட்சியும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் பங்குபற்றியது இடதுசாரி இயக்க வரலாற்றின் மிக வெட்கக்கேடான நிகழ்வாகும். இது இவர்களது முழுமையான அரசியற் சீரழிவின் அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டிய மாக்ஸியலெனினியவாதிகள் இந்த இனவாத நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தனர் என்பது இங்கு நினைவூட்டத் தக்கது. தமிழரசுக் கட்சி மீதிருந்த குரோதத்தைத் தமிழ் மக்கள் மீதான பகைமையாக மாற்றத் தொடங்கிய பாராளுமன்ற இடதுசாரிகள் தமிழரசுத் தலைமையை எளிதாக மன்னிக்க ஆயத்தமாக இருக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழரசுக் கட்சி அதிகபட்சம் யூஎன்.பி. ஆட்சியைக் கவிழ்க்க உதவியிருக்கலாம். அதற்கு மேலாகத், தென்னிலங்கை அரசியலின் போக்கை நிர்ணயிக்க அதற்கு வலிமை இருக்கவில்லை.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, தமிழரசுக் தலைமை வெகுஜன அரசியலுக்கும் தனக்கும் வெகுதூரம் என்பதை அறிந்து விட்டது. பாராளுமன்ற அரசியல் மூலம் எதையாவது சாதிப்பது என்றால் ஆளுங்கட்சியுடன் உறவாடியே அதைச் செய்யலாம் என்பதை அது உள்ளூர அறிந்தாலும் அதை வெளிவெளியாகச் சொல்ல முடியவில்லை. திருச்செல்வத்தை அமைச்சராக்கி நாடகமாடிய போதும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குத்துக் கரணத்தை அடையாளம் காண முடியாளதளவுக்குத் தமிழ்மக்கள் அரசியல் குருடர்களல்ல. எனவே தமிழரசுக்கட்சித் தலைமையினர் ஆளுங்கட்சியில் பங்காளிகளாக இருந்த காலத்தில் தமது வர்க்க நலன்கட்கும் தனிப்பட்ட நலன்கட்கும் செல்வாக்குக்கும் பயன்படக் கூடிய காரியங்களில் கவனங் காட்டத் தொடங்கினார்கள்.
1966 முடிவிலேயே தமிழரசுக்கட்சிக்கு டட்லி சேனநாயக்க வாக்களித்த மாவட்ட சபைகள் கிடைக்காது என்ற உண்மை விளங்கியிருக்க வேண்டும். 1967ல் அது பற்றிய ஐயத்துக்கே இடமில்லை. ஆயினும் ஆட்சியில் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டு
(44)
 

L iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii தந்தையும் மைந்தரும் iiiiiiiiiiiiiiiiiiiiiii
இருந்ததற்கான காரணம் அவர்களுக்கு வேறு வழியேதும் தெரியாதது தான். இந்தக் காலகட்டத்தில் முக்கியமான ஒரு சர்வதேச நிகழ்வும் ஒரு உள்நாட்டு நிகழ்வும் தமிழரசுத் தலைமையின் தன்மையை அப்படியே படம் பிடித்துக் காட்டின.
முழு உலகின் கவனத்தையும் ஈர்த்த வியற்னாம் போர் உக்கிரம் பெற்ற காலம் அது. அமெரிக்கா ஏகாதிபத்திதயத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் முற்போக்குச் சக்திகளை மட்டுமல்லாமல் அமெரிக்காவின் தாராளவாதிகளது எதிர்ப்பையும் சந்தித்த காலம் அது. ஆயினும் யூஎன்.பி. ஆட்சி அமெரிக்காவின் போரை ஆதரித்தது. தமிழரசுக் கட்சியும் அதில் இணைந்தது. சாதியத்துக்கு எதிரான எழுச்சி வடக்கில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று முக்கியமான ஒரு போராட்டமாக விரிவுகண்ட காலமும் அதுவே. அதையும் தமிழரசுக் கட்சி எதிர்த்து இழிவு செய்தது. கலாசாரப் புரட்சியையும் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஒரே தளத்தில் வைத்து எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பார்வை, அதன் முதலாளிய நிலவுடைமை வர்க்க அடிப்படையில், மிகவும் சரியானது தான். எனவே வடக்கின் ஒடுக்கப்பட்ட மக்களது நியாயமான போராட்டங்களை அரசாங்கம் தனது காவற்படைகளைப் பாவித்து அடக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி கேட்டுக் கொண்டது. இதை விட முக்கியமான எந்த அரசியற் கொள்கையிலும் தமிழரசுக் கட்சி அந்தகாலகட்டத்தில் உறுதியாக நின்றதாகத் தெரியவில்லை. அக்காலத்தில், குறிப்பாக வடக்கில் இடம்பெற்ற தொழிற்சங்க இயக்க நடவடிக்கைகளில் முதலாளிகள் பக்கம் பகிரங்கமாக நின்று தமது தொழிலாளர் விரோத நிலைப்பாட்டையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டனர்.
தமிழரசுக் கட்சி 1970ல் பொதுத் தேர்தலை எதிர் நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அறிந்திருந்தது. யூஎன்.பியுடன் கூடியிருந்து எதையுமே வென்றெடுக்காத நிலையில், தமிழரசுக் கட்சியால் யூஎன்.பியின் கூட்டாளியாகத் தேர்தலில் நிற்க முடியாது. ஆயினும் 1967 அளவிலேயே விலகியிருந்தால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து பெறுகிற சலுகைகள் போயிருக்கும். எனவே 1968 முடிவில் திருகோணமலை கோணேசர் கோவிற் பகுதியை புனித நகராக்கும் யோசனையை மையமாக வைத்துத் தமிழரசுக் கட்சி செனெற்றரும் உள்ளுராட்சி அமைச்சருமான திருச்செல்வம் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஆயினும், 1970 தேர்தல் வரை, அரசாங்கத்திற்குத் தமிழரசுக் கட்சியின் ஆதரவு தொடர்ந்தது. 1965-70 காலகட்டத்தில் தமிழரசுத் தலைமை யூஎன்.பியுடன் ஏற்படுத்திய உறவின் நெருக்கமே 1977 இனவாத வன்முறை, 1981 நூலக எரிப்பு, 1983 இனவாத வன்முறை போன்ற பல நிகழ்வுகளையும் தாங்கும் இதயத்தையும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்ற பேரில் ஜே.ஆர். ஜயவர்தன
(45)

Page 28
தந்தையும் மைந்தரும்
தமிழரசுத் தலைமையைக் கோமாளிகளாக்கியதை அலட்சியம் செய்யுமளவுக்குத் தடித்த தோலையும் தமிழரசுத் தலைமைக்கு வழங்கியிருக்க வேண்டும்.
மக்களைப் பொறுத்த வரை, 1965-70 காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பங்களிப்பு பற்றிய அதிருப்பதியே அதிகமாக இருந்தது. தமிழரசுக் கட்சி வடக்குகிழக்கின் ஒரே முக்கிய தேசியவாத அரசியற் கட்சியாக இருந்தும், பாராளுமன்ற இடதுசாரிகளின் சீர்குலைவும் இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகளும் வலிய ஒரு மாற்றுச் சக்தியை முன்வைக்க இயலாமற்செய்துங் கூட, 1970 பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சில பெரிய அதிர்ச்சிகளைப் பெற்றது. "தமிழரசுத் தளபதி” அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டையில் கண்ட தோல்வியின் வரலாற்று முக்கியம் பெரியது.
12. சாயம் வெளுத்த தமிழரசுக் கட்சி
தமிழரசுக்கட்சியின் மொத்த வாக்கு விகிதம் 1970ல் சரிவு கண்டது பற்றி ஒரு வேளை அக்கட்சித் தலைமை எதிர்பார்த்திருக்கலாம். ஆயினும் தளபதி அமிர்தலிங்கத்தின் பாராளுமன்றக் கோட்டை பறிபோனது பறி போனதுதான். வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்துக்குக் கிடைத்த அதிர்ச்சியானது அதிகாரத்திமிருக்கு மக்கள் கொடுத்த பலமான அடி அல்லாமல் வேறெதுவுமல்ல.
1965-70 காலகட்டத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற அரசியலில் ஏகாதிபத்தியச் சார்பாக படு பிற்போக்கான நிலைப்பாட்டை எடுத்தது பற்றி முன்பு கண்டோம். யாழ்ப்பாணக் குடாநாட்டு நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சித் தலைமையின் மனோபாவம் அதே விதமாகவே பிரதிபலித்தது. தமிழரசுக் கட்சிக்கு மாற்றான வலிய தமிழ்த்தேசியக் கட்சி எதுவும் இல்லாத போதும், தமிழரசுக் கட்சியே தேர்தலில் வெல்லும் வாய்ப்பு இடதுசாரிப் பாராளுமன்றவாதிகளின் சீரழிவால் மேலும் வலுவடைந்த போதும், வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கமும் தமிழ்க் காங்கிரஸ் என்ற பேர்ப் பலகையின் கீழ் உடுப்பிட்டித் தொகுதியில் போட்டியிட்ட மு. சிவசிதம்பரமும் 1970ல் தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததற்கான காரணங்களில் அவர்கள் மீது வட பகுதி மக்கள், குறிப்பாக அவர்களது தொகுதி மக்கள், கொண்டிருந்த கோபம் முக்கியமானது.
1956 முதல் 1961 சத்தியாக்கிரகம் வரை சிலரால் அமிர்தலிங்கம் பற்றி மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட படிமம் இந்தியாவின் காந்திக்கு நேரு போல ஈழத்தின் பிரதிக்கு இவர் என்ற வகையிலானது. அதை விட மேடைப் பேச்சு வல்லமையும் தமிழரசுக் கட்சியின் கீழ்மட்டத்தில் இருந்த நடுத்தர வர்க்க அரச ஊழியர்கள் போன்றோரிடமும் இளைஞர்களிடமும் சரளமாகப் பேசிப் பழகுகிற ஒருவர்
(46)
 
 

தந்தையும் மைந்தரும் 3.
என்பதும் அவருக்குச் சாதகமாக இருந்தன. ஆயினும் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரான ராஜதுரையுடனான போட்டியில் அவர் நடத்தை பலரதும் அங்கீகாரத்தைப் பெறவில்லை. சிவசிதம்பரம் என்றுமே வெகுஜன அரசியலில் அதிகம் ஈடுபட்டவரல்ல. அவரது அரசியல் வேலைப்பாணி தமிழ்க்காங்கிரஸ் தலைமையின் மேட்டுக் குடிப் பாங்கிலேயே இருந்துவந்தது.
1965-70 காலகட்டத்தில் வடக்கின் அரசியல் சாதியத்திற்கு எதிரான எழுச்சியாலேயே முக்கியமாக அடையாளங் காணப்பட்டது. அக்காலத்தில் தொழிற்சங்கப் பிணக்குகள் பலவும் தொழில் வழக்காடுமன்றங்கட்கு முன் வந்தன. இரண்டு சூழ்நிலைகளிலும் தமிழரசுக் கட்சி தனது வர்க்க நிலைப்பாட்டை ஐயத்திற்கு இடமில்லாது வெளிப்படுத்தியது எனலாம்.
யாழ்ப்பாணத்தில் இருந்த பல்வேறு சிறு கைத்தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டு வந்தார்கள். 1956ல் பண்டாரநாயக்க அதிகாரத்திற்கு வந்த பின்பு இத்தகைய பல சிறு நிறுவனங்களிற் தொழிற் சங்கங்கள் அமைப்பதற்கான சட்ட வசதி ஏற்பட்டது. மிகுந்த நெருக்கடிகளின் நடுவே கட்டி எழுப்பப்ட்ட இத்தகைய தொழிற் சங்கங்களை சாதியத் திமிரில் ஊறி வளர்ந்த யாழ்ப்பாணத்து முதலாளிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே வெகு சாதாரணமான நியாயமான கோரிக்கைகளை முன்னிட்டும் போராடவும் வழக்குரைக்கவும் தேவை ஏற்பட்டது. பெருவாரியான தொழிற்சங்கங்கள் நா. சண்முகதாசன் தலைமையிலான இலங்கைத் தொழிற்சங்கச் சம்மேளனத்தில் இணைந்திருந்தன. எனவே இந்தத் தொழிற்சங்கப் பிணக்குகளில் தொழில் வழக்காடு மன்றங்களில் தொழிலாளர் சார்பாக அதிகம் வாதாடியவர் சண்முகதாசனே. அதே பிணக்குகளில் முதலாளிகள் தரப்பிற் தோன்றியோரில் முக்கியமானவர் தமிழரசுக் கட்சி பிரமுகரான மு. ஆலாலசுந்தரமாவார்.
இதே ஆலாலசுந்தரம் 1980 களில் கூட்டுறவுச் சங்கப் பணவிடயங்களில் ஒழுங்காக நடக்கவில்லை என்பது காரணமாகத் தமிழீழ விடுதலை இயக்கங்கள் சிலவற்றால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்பு கொல்லப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சாதியத்திற் கெதிரான போராட்டம் தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரை ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக மட்டுமே தெரிந்தது. 1957 ல் சாதிப்பாகுபாட்டுக்கு எதிரான சட்டத்தைப் பிரேரித்தவர் தமிழரசுக் கட்சியின் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் என்று உரிமை கோரிய தமிழரசுக்கட்சி , 1957 ல் தங்களது தீண்டாமை
(47)

Page 29
தந்தையும் மைந்தரும்
ஒழிப்பை ஒரிரண்டு சமபந்தி போசனங்களுக்குப் பிறகு துடக்குக் கழித்ததோடு மூட்டைக்கட்டி வைத்து விட்டது. வடக்கில் பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்தது. அதை ஒரு பிரச்சனையாக்கிப் போராடுவதற்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்வந்த போதே தமிழரசுக் கட்சியினர் சாயம் முற்றாக வெளுத்தது.
அன்று வெளுத்தது தமிழரசுக் கட்சியின் சாயம் மட்டுமல்ல. சில இடதுசாரிகளினதும் தான். சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட்டுக்கள் இப்போராட்டத்தை ஆதரிப்பதிற் தயங்கியது மட்டுமல்லாது “பாட்டாளி வர்க்கப் போராட்டம்” என்ற பேரில் அதைத் தீவிரவாதம், பலாத்காரம் எனவும் தவறான தந்திரோபாயம் எனவும் பல்வேறு விதமாக விமர்சித்து அப்போராட்டத்தினின்று ஒதுங்கி நின்றனர். சிலர் குழிபறிக்கிற காரியங்கிளிலும் இறங்கினர். சமாதான சகஜீவனமும் பாராளுமன்ற அரசியலுமே சோஷலிஸ் உலகை அடையும் வழி என்று ஏற்றுக்கொண்டவர்கட்கு. மக்கள் தங்கள் மீதான கொடும் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்தத் துணிவது தவறாகத் தெரிவது இயல்பானதுதான்.
இந்த விதமான பசப்பு இடதுசாரித்தனம் தீண்டாமை ஒழிப்புக்கான வெகுசன இயக்கத்தில் பங்குபற்றிய சில கம்யூனிஸ்ட்டுக்களிடமும் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் வன்முறைப் போராட்டத்தில் இறங்குவதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகள் பெரும்பான்மைச் சமூகமான வேளாளரிடமிருந்து தனிமைப்பட நேரும் என்று ஆரம்பத்தில் அஞ்சினார்கள். ஆயினும் வெகுசன இயக்கத்தில் இருந்த உண்மையான மாக்ஸிய - லெனினியர்கள் இவ்விடத்தில் மிக உறுதியாக நின்று போராட்டப் பாதையை வலியுறுத்தினர். சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேசத் தலைமையிலும் சிலர் இத்தகைய தளம்பல் நிலையில் இருந்தனர். ஆயினும் கட்சியின் ஏகப் பெரும்பான்மை போராட்டத்தையே ஆதரித்தது. இது சரியான முடிவு என்பதைப் போராட்டத்தின் வெற்றிகளும் உயர்ந்த சாதியினர் எனப்பட்டோர் மத்தியிலும் கம்யூனிட்டுகள் கண்ட வளர்ச்சியும் நிருபித்தன.
சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் சாதித் திமிர் பிடித்தோரை மகிழ்விக்கும் நிலைப்பாட்டை எடுத்தவர்களில் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் முக்கியமானோர் என்பது மட்டுமில்லாது தமது தொகுதிகளில் கணிசமான அளவில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரது ஆதரவில் அது வரை தேர்தல்களை வென்றவர்களுமாவர். அந்த மக்கள் மட்டுமன்றி நியாய உணர்வு கொண்ட உயர் சாதியினருங்கூட இந்தத் திமிர்த்தனத்துக்கு ஒரு நல்ல சாட்டையடி கொடுப்பதற்காக 1970ம் ஆண்டுத் தேர்தலைப் பயன்படுத்தினர். இந்த இருவரும் அடுத்த 1977 தேர்தலில் வேறு தொகுதிகளை
(48)
 
 

- aa
3. မိမိမှိမြို့မှိချိုး
நாடிப் போகுமளவுக்கு அந்த அடியின் வலிமை அமைந்திருந்தது. இந்தத் தோல்வியைத் தனக்குக் கிடைத்த தனிப்பட்ட தோல்வியாகக் கருதிய அமிர்தலிங்கம் தனது செல்வாக்கை மீள நிமிர்த்துவதற்குத் தருணம் பார்த்திருந்தார்.
13. தரப்படுத்தலும் தடுமாற்றமும்
செல்வநாயகம் சொன்னது ஒரு வேளை கடவுளுக்குச் சரியாகக் கேட்க வில்லையோ தெரியாது. தமிழர்களைக் காப்பாற்றுகிற விதமாகக் கடவுள் ஒன்றும் செய்யாவிட்டாலும் தமிழரசுக் கட்சியைக் காப்பாற்றுகிற விதமாகக் கொஞ்சம் செய்தது போலவே 1970ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் பின்பாக நிகழ்வுகள் அமைந்தன.
பூரீ.ல.சு.கட்சியும் பாராளுமன்ற இடதுசாரி கட்சிகளும் 1956ம் ஆண்டு தேர்தலோடு யூஎன்.பி ஒழிந்தது என்று குதூகலித்தன. ஆயினும் 1960ல் யூஎன்.பி தனது வலிமையைக் காட்டி, 1965ல் ஆட்சி அமைத்தது. 1970ல் பூரீ.ல.சு.கட்சியும் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளான ல.சு.க.கட்சியும் சோவியத்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்த கூட்டணி பெற்ற வெற்றி முன்னைய 1956, 1960 வெற்றிகளை விடப் பெரியது. எனினும் அது எந்த வகையிலும் யூஎன்.பியின் முடிவல்ல. இதை பூநீல.சு.கட்சியின் தலைமையிலான அரசாங்கம் சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை.
யூஎன்.பியை நிரந்தரமாக முறியடிப்பதாயின் வெகுஜன மட்டத்தில் மிகவும் தீவிரமான அரசியல் வேலை தேவை. கட்சி அரசியல் வெகுஜன அரசியலாக்கப்பட வேண்டும். பாராளுமன்றப் பதவி பெற்று நாட்டைச் சோஷலிசப் பாதையில் திருப்பலாம் என்று நினைப்பதன் அபத்தத்தை அரசில் அங்கம் வகித்த இரண்டு பிரதான இடதுசாரிக் கட்சிகளும் உணரவில்லை. இதில் ல.ச.ச. கட்சித் தலைமையின் நடத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் நடத்தையை விட ஒரு படி அதிக திமிர்த்தன்மையுடையதாகவே இருந்தது.
தேசியமயமாக்கலை அரசியல் எதிரிகட்கு எதிரான பழிவாங்கல் நோக்குடன் பயன்படுத்திய சில்லரைத் தனமான அரசியலை 1970களில் நாம் கண்டோம். வடக்கு கிழக்கின் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை பற்றி மிகவும் அசட்டையான மனோபாவம் அரசாங்கத்திற் பரவலாக இருந்தது. மலையத் தமிழர் பகைமை கொண்ட சக்திகள் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தன. செல்லையா குமாரசூரியர் என்ற அரசியல் அநாமதேயரை நியமன உறுப்பினராக்கி அமைச்சராகப் பதவியளித்ததன் மூலம், அன்றைய அரசாங்கம், தமிழர் ஒருவரை அமைச்சரவையில் காட்சிப் பொருளாக வைத்ததற்கு மேலாகத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக எதையும் செய்யவில்லை.
(49)

Page 30
L தந்தையும் மைந்தரும் -
தமிழரசுக் கட்சி மீதான பக்ைமை பற்றி அரசாங்கத்தில் ஒளிவு மறைவு இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு எந்த நிலையிலும் ஆயத்தமாக இருக்கவில்லை. 1965ல் யூஎன்.பியுடன் ஏற்படுத்தப்பட்ட வர்க்க உறவு இன்னும் இருபது வருடங்கட்கும் மேலாகத் தளர மறுத்தது.
தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பான முதலாவது பெரிய சோதனை தரப்படுத்தல் சம்பந்தமாக உருவெடுத்தது. 1970ம் ஆண்டு க.பொ.த. உயர் நிலைப் பரீட்சைப் பேறுகளின்படி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியற் பீடத்தின் இடங்களுக்குத் தகுதி பெற்றோரில் 120 பேர் அளவில் தமிழர். இது தற்செயலான ஒன்று. ஏனெனில் இதற்கு முன்பு எந்திரவியற் பீடத்திற்கு அனுமதிக்கப் பட்ட தமிழ் மாணவர்களது சதவிகிதம் 30க்கும் 50க்கும் இடையில் இருந்தது, 80% பேரான உயர்வு புள்ளிவிவர அடிப்படையில் சாத்தியமான ஒரு நிகழ்வு என்பது போக, பாடசாலைக்கு வெளியே ட்யூஷன் மூலம் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படும் வழமை வடக்கில் வேரூன்றியதுவும் பரீட்சை முடிவுகளைப் பாதித்தது என்று கருத இடமுண்டு.
ஆயினும் யூஎன்.பி. ஜே.வி.பி. போன்ற அரசாங்க எதிர்ப்புச் சக்திகள் இப்பிரச்சனை தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதப் பிரசாரத்தை ஊக்குவித்தனர். உறுதியுடனும் நடுநிலையுடனும் நிற்க வேண்டிய அரசாங்கமும் தன்மத்தியிலிருந்த இனவாதிகளது கூக்குரலுக்குப் பணிந்தது. முதலில், தமிழ்ப் பரீட்சகர்கள் தமிழ் மாணவர்கட்குச் சாதகமான முறையில் தாரளமாகப் புள்ளிகளை வழங்கியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியில் வந்ததாகவும் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். விரிவான அரசாங்க விசாரணைகள் இக்குற்றச் சாட்டுக்கள் எதிலும் உண்மை இல்லை என்று நிரூபித்தன. ஆயினும் இந்த முடிவு உறுதிப்படு முன்னமே, மொழி அடிப்படையில் பரீட்சைப் பெறுபேறுகளைத் தரப்படுத்துவது என்ற மிகவும் தவறான ஒரு முடிவை அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஆயத்தமாகி விட்டது. இதன் விளைவாக யாழ்ப்பாண மாணவர்கள் மத்தியில் மிகுந்த கோபம் மூண்டது. இதைச் சிங்கள மக்களுக்கும் எதிராகவும் (பதியுதின் முகமத் கல்வி அமைச்சராக இருந்த காரணத்தால்) முஸ்லிம்கட்கு எதிராகவுமான ஒரு இனவாதக் கோணத்திற் திருப்புகிற விஷம முயற்சிகள் சில மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் வடபகுதித் தமிழ் மாணவர்களது எதிர்ப்பு, அடிப்படையில் மிகவும் நிதானமான 0முறையிலேயே வெளிப்படுத்தப்பட்டது. அதேவேளை தீவிரமான தமிழ்த் தேசியவாதச் சக்திகளை முடுக்கி விடுவதில் தரப்படுத்தலுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
(50)

தந்தையும் மைந்தரும்
i ialahäisiäähä*iiiiiiiiiiiiiiiiiiiiiwn
தரப்படுத்தல் இன்னொரு முக்கியமான கேள்வியை எழுப்பியது. மாணவர்கள் எல்லாருக்கும் சமவாய்ப்பு இல்லாத ஒரு சூழலில், குறைந்த வாய்ப்புடைய மாணவர்கட்குச் சலுகைகள் வழங்குவது நியாயமானது என்ற கருத்து "ஜனவேகம்” என்ற பேரில் பூரீ.ல.சு.கட்சி இடதுசாரிக் குழு ஒன்று நடத்திய ஏட்டில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரால் முன்வைக்கப்பட்டது. இதன்படி, பின்தங்கிய பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கட்குச் சலுகைப் புள்ளிகள் வழங்குவதன் மூலம் பாடசாலைகளிடையி லான சமனின்மையைச் சிறிது ஈடுசெய்யலாம் என்று கூறப்பட்டது. இந்த வாதம், உயர் கல்வி பற்றிய பிரச்சினையை வெறும் இன அடிப்படையில் நோக்குவதற்கு மாறாக ஒரு வர்க்கப் பரிமாணத்தை வலியுறுத்த முற்பட்டது. இக்கட்டுரை ஜனவேகத்தின் சகோதர சிங்கள ஏடான “ஜனவேகய” வில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தமிழரசுக்கட்சி தரப்படுத்தலுக்கு மாற்றாக ஆக்கபூர்வமான எந்த யோசனையையும் முன் வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல், 1973க்குப் பின்பு தரப்படுத்தல் முறை சிறிது மாற்றியமைக்கப்பட்டு மாவட்ட அடிப்படையிலான விகிதாசார அனுமதி புகுத்தப்பட்டது. இதன் விளைவாக, வடக்கு-கிழக்கில், யாழ்ப்பாணம் தவிர்ந்த பிற மாவட்ட மாணவர்கள் சிறிது பயனடைந்தனர். இதையடுத்து, யாழ் மாவட்டத்தில் இருந்த கிளிநொச்சியை ஒரு தனிமாவட்டமாக்கும் கோரிக்கையும் தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்தே எழுந்ததை நாம் பின்னர் கண்டோம். மாவட்ட அடிப்படையிலான அனுமதி என்ற கருத்தாக்கத்தைப் புகுத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான அன்றையை அமைச்சர் பீற்றர் கெனமனின் பங்கு முக்கியமானது. இது ஒரு புறம் தமிழ் மாணவர்களில் ஒரு பகுதியினரின் அதிருப்தியைச் சிறிது தணித்ததோடு, தமிழ் மாணவர்களிடையே பிரதேச வேறுபாட்டு உணர்வுக்கு ஒரு புதிய ஊட்டத்தை அளித்தது. (பின்னாளில், மாவட்ட அடிப்படையிலான அனுமதி, வசதி படைத்த சில பெற்றோரால் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். இது வேறு பிரச்சனை). தமிழரசுக் கட்சித் தலைமை சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இவை அனைத்திலும் நாம் கண்ட முக்கியமான ஒரு அம்சம் ஏதெனில், தமிழரசுக்கட்சியால் சிங்களப் பேரினவாதிகள் தரப்படுத்தலுக்காக முன்வைத்த இனவாத் கோட்பாட்டை முறியடிக்கும் விதமாகச் சமூக நீதியின் அடிப்படையிலான ஒரு ஆலோசனையை முன்வைக்க முடியவில்லை என்பது தான். அவர்களது வர்க்க நலன்கள் அதை என்றுமே அனுமதித்திரா என்பது நாம் அறிந்த உண்மை. தரப்படுத்தலைத் தமது தமிழ்த் தேசியவாத அரசியலை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்த மட்டும் அவர்கள் என்றுமே தயங்கவில்லை.
(51)

Page 31
தந்தையும் மைந்தரும்
அதேவேளை, பாராளுமன்ற இடதுசாரிகள் தரப்படுத்தல் பற்றி எதிர்ப்புக் குரல்
வடக்கில் இன்னொரு வகையான அரசியலுக்கான அத்திவாரம் இடப்பட்டது.
வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் எதிர் நோக்கிய கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்புக் குறைப்பாடுகளின் அடிப்படையலான காரணம் தமிழ்-சிங்கள முரண்பாடு என்ற பார்வை, இரு தரப்பிலும், இனவாதிகளால் ஊக்குவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்துக்கு போக வாய்ப்பே அற்ற பெருவாரியான இளைய பரப்பரையினரை ஏய்க்கவும் இனவாதம் பயன்பட்டது. இந்த விஷவித்துக்களின் விளைச்சலையும் அறுவடையையும், விதைத்தவர்கள் மட்டுமன்றி மெளன சாட்சிகளாகப் பார்த்து நின்றவர்களும் இங்கு விரைவிலேயே பெற நேர்ந்தது.
4 துன்பம் சூழும் நேரம்
இலங்கை இடதுசாரி இயக்கத்துள் சந்தர்ப்பவாத பாராளுமன்ற அரசியல் ஒருவிதமான சீரழிவுக்கு வழி காட்டியது என்றால், அதற்கெதிரான சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தும், அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிற் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி என அறியப்பட்ட மாக்ஸிய லெனினியக் கட்சியின் தலைமை செய்த சில தவறுகள் அவர்களைப் பலவீனப்படுத்தின. அது மட்டுமல்லாது அவை பல நல்ல சக்திகளை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) என்ற புதிய அமைப்பை நோக்கித் தள்ளின.
பாட்டாளி வர்க்க எதிர்ப்பையும் சிங்களப் பேரினவாதத்தையும் வலியுறுத்திய அமைப்பான ஜே.வி.பியின் தலைமை பற்றிய சரியான அரசியல் மதிப்பீடு அன்று நா. சண்முகதாசனால் மட்டுமே முன்வைக்கப்பட்டது. ஆயினும் அவர் ஜே.வி.பியின் வலிமையைக் குறைவாக மதிப்பிட்டார். மறுபுறம் மதிப்பீட்டில் குழப்பமாக இருந்தாலும், அரச யந்திரம் ஜே.வி.பியை நசுக்குவது பற்றி எந்த வித தயக்கமும் காட்டவில்லை.
ஜே.வி.பி. பற்றி எந்த விதான மதிப்பீடுகள் தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் இருந்தாலும், ஜே.வி.பியின் ஏப்ரல் 1971 கிளர்ச்சி நசுக்கப்பட்ட பின்பு அக்கிளர்ச்சிக்கான பழியைச் சீனா மீது சுமத்துவதற்கு யூஎன்.பி பிரமுகர்கள் சிலரும் தமிழரசுக் கட்சித் தலைவரது செல்லப்பிள்ளையான திருச்செல்வமும் தயங்கவில்லை. ஜே.வி.பி கிளர்ச்சியைச் சீனா ஆதரிக்கவில்லை என்பது போக, இலங்கை அரசாங்கத்தை ஆதரித்துச் சீன அரசாங்கம் அனுப்பிய கடிதம் திட்டமிட்டு விஷமத்தனமாகச் சிலரால் மூடிமறைக்கப்பட்டது.
(52)
 

தந்தையும் மைந்தரும்
தமிழரசுக் கட்சியின் சீன எதிர்ப்பு, பெரும்பாலும், வடக்கில் "சீனசார்பு” கம்யூனிஸ்ட்டுகள் தமக்கு எதிரான ஒரு வலிய அணியாக இருந்ததையொட்டி உருவானது என்று நம்ப வேறு நியாயங்களும் உள்ளன.
சமசமாஜக் கட்சி மீதும் “சோவியத் சார்புக்" கம்யூனிஸ்ட்டுகள் மீதும் தமிழரசுக் கட்சி காட்டிய பகைமை காலப் போக்கிற் குறைந்தாலும், சீனா மீதும் மாக்சிய லெனினியவாதிகள் மீதும் அதன் பகைமை குறையாமலே இருந்தது கவனிக்கத்தக்கது. தமிழரசுக்கட்சியின் அன்றைய பிரதம எதிரியான பூரீ.ல.சு.கட்சி தலைமையிலான ஐ.மு. ஆட்சியை கவிழ்க்க ஜே.வி.பி. முயன்ற போது, தமிழரசுக்கட்சி எடுத்த நிலைப்பாடு அதன் வர்க்க நலன்களின் அடையாளம் அல்லாமல் வேறல்ல. யூஎன்.பியை அதிகாரத்திற்கு கொண்டு வராத எந்த அரசியல் மாற்றத்தையும் ஏற்க அவர்கள் ஆயத்தமாக இருக்கவில்லை என்பதை பின்னைய நிகழ்வுகள் உறுதி செய்தன.
ஏப்ரல் கிளர்ச்சியின் பின்பு, ழரீ.ல.சு.கட்சியும் அதன் பாராளுமன்ற இடதுசாரிக் கூட்டாளிகளும் வெகுஜன அதிருப்தியைத் தணிக்கும் சில நடவடிக்கைகளது தேவையை உணர்ந்தனர். அடிப்படையான ஒரு சமூக மாற்றத்தைத் தவிர்த்துத் தேர்தல் அரசியலை மனதிற் கொண்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் தோட்டங்களின் தேசிய மயமாக்கலும் சிங்களப் பேரினவாதத்தை வலியுறுத்தும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பாகச் கவனிக்க வேண்டியது.
இலங்கை பிரித்தானிய முடியாட்சிக்குட்பட்ட சுதந்திர நாடு என்ற நிலையினின்று விடுபட்டுக் குடியரசாகக் பிரகடனம் செய்யப்படுவதன் வரலாற்றுத் தேவையை எந்த முற்போக்கு வாதியும் மறுக்க முடியாது. அவ்வாறே தோட்டங்களின் தேசிய மயமாக்கல் அடிப்படையில் மிகவும் சரியான ஒரு நடவடிக்கையாகும். எனினும் இவ் இரண்டு விடயங்களிலும் அரசாங்கம் சிங்களப் பேரினவாத உணர்வுகட்கு ஊக்கமளிக்கும் முறையிலேயே நடந்து கொண்டது. அதே வேளை, இந்த இரண்டு விடயங்களிலும் தமிழரசுக் கட்சித் தலைமை தனது தவறான பழைய அணுகுமுறையையே திரும்பவும் காட்டியது.
புதிய அரசியற் சட்டவரைவுக்கான குழுவின் கூட்டங்களில் பங்குபற்றாமல் தமிழரசுக்கட்சி விலகிக் கொண்டது. இதற்குத் தமிழரசுக்கட்சி காட்டிய நியாயங்களுள் முக்கியமான ஒன்று பழைய சட்ட வரைவின் 29ம் அலகின் கீழ் சிறுபான்மைத் தேசிய இனங்கட்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களைப் புதிய சட்டவரைவு மறுக்கிறது என்பதாகும். ஆயினும் பழைய சட்ட வரைவின் உத்தரவாதங்கள் இருந்தும் மலையக
(53)

Page 32
மக்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன என்பதும் சிங்களமே அரச கரும மொழியாகியது என்பதும் பற்றித் தமிழரசுத் தலைமை ஏனோ சிந்திக்க மறுத்தது.
ழரீ.ல.சு. கட்சியின் தலைமையிலான ஒரு பெரிய தவறு த்மிழரசுக் கட்சியிடம் எந்த விதமான உதவியையும் எதிர்பாராமல் தான் நினைத்ததைச் செய்வதில் அது காட்டிய மும்முரமாகும். இத்தகைய தவறுகளால் லாபமடைந்தது யூஎன்.பியே என்பதை ழநீல.சு.கட்சித் தலைமை மட்டுமின்றிப் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் உணரத் தவறிவிட்டன. தங்களது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து எதையும் செய்யலாம் என்ற மனோபாவத்தின் விளைவான பல தவறுகளின் விலையை 1977ல் அவர்கள் கொடுத்தனர். இருபது வருடங்களின் பின்னும் அதிலிருந்து அவர்கள் அதிகம் கற்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
இலங்கை குடியரசாவது வரவேற்கத்தக்கது என்ற அடிப்டையான விடயத்தைக் கூட அலட்சியம் செய்த தமிழரசுக்கட்சி, அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடுவதாகப் பிரகடனம் செய்தது. அது எடுத்த இரண்டு நடவடிக்கைகளும் அதன் அரசியல் வறுமையைப் புலப்படுத்தின.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதியைத் தீயிட்டுக் கொழுத்துவது சட்டவிரோதமானதல்ல என்று தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றத் தலைமையை நிறைத்துக்கொண்டிருந்த சட்ட வல்லுனர்கள் அறிவார்கள். எனவே அந்த நடவடிக்கை மூலம் வடக்கில் உள்ள மக்களிடம் வீர வேஷம் போடவும் தெற்கில் இருந்த அரசாங்கத்தின் தண்டனைக்கு உட்படாமல் தப்பவும் அவர்கட்கு முடிந்தது.
மற்ற நடவடிக்கை, செல்வநாயகம் தனது பாராளுமன்றப் பதவியினின்று விலகியதாகும். இதைத் தமிழ் மக்கள் தரப்பில் அரசாங்கத்துக்கு எதிரான சவால் என்று அவர் காட்ட முற்பட்டார். உண்மையிலேயே தமிழரசுக்கட்சி அரசாங்கத்திற்குச் சவால் விட எண்ணியிருந்தால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே பதவி விலகியிருக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கவில்லை. ஏனெனில் " உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” என்கிற கதிக்கு ஆளாக அதன் தலைவர்கள் சிலர் ஆயத்தமாக இருக்கவில்லை.
1976க்குப் பின்பு வடக்கே தமிழரசுக் கட்சியின் வலிய தளமாகி விட்ட காங்கேசன்துறைத் தொகுதியில், கட்சித் தலைவரும் பரவலாகப் தமிழ் மக்களது நன்மதிப்புக்குரியவருமான செல்வநாயகத்தை நிறுத்துவது அவர்கட்கு ஆபத்தற்ற ஒரு விளையாட்டாக இருந்தது. அதை விடவும், தரப்படுத்தல் மூலம் வடக்கில் ஏற்பட்ட கோப உணர்வு தமிழரசுக் கட்சிக்குச் சாதகமாகவே செயற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்
(54)
 

தந்தையும் மைந்தரு
தமிழரசுக் கட்சியின் காய்நகர்த்தலுக்கு எதிராக அரசாங்கம் வேறு விதமான காய் நகர்த்தலில் இறங்கியது. காங்கேசன்துறை இடைத் தேர்தலுக்கு நாள் நியமிக்காமல் அரசாங்கம் இழுத்தடித்தது. இதைத் தமிழரசுத் தலைமை எதிர்ப்பார்க்கவில்லை.
ஒரு போராட்டஇயக்கமாகவோ தைரியம் உள்ள தலைமை கொண்ட கட்சியாகவே இருந்திருந்தாற். பல வேறு மாற்று நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகியிருந்தால் மக்கள் மனதில் அவர்கள் பற்றிய மரியாதை கொஞ்சம் உயர்ந்திருக்கும். பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்திருந்தால், அது அரசாங்கத்திற்கு இக்கட்டான ஒரு சூழலை உருவாக்கியிருக்கும். அத்தோடு அதன்மூலம் பழைய கூட்டாளியான யூஎன்.பியின் விசுவாசத்தையும் சிறிது உரைத்துப் பார்த்திருக்கலாம். இதற்கெல்லாம் அவர்கள் ஆயத்தமாக இருக்கவில்லை. ஏனெனில் எம்.பி.மாரின் அதிகாரங்களும் வசதிகளும் கணிசமான அளவுக்கு அதிகரித்து விட்டன.
காங்கேசன்துறை இடைத் தேர்தலை எவ்வளவு காலத்திற்குப் பிற்போட ஐக்கிய முன்னணி அரசாங்கம் திட்டம் இட்டதெனக் கூறுவது கடினம். தரப்படுத்தல் ஏற்படுத்திய சிரமமான நிலைமை சிறிது தேறும் வரை அரசாங்கம் காத்திருந்தது என்றால், அது நடப்பதற்கு முன்னமே மேலும் புதிய சிக்கல்கள் உருவாகி விட்டன. அரசாங்கம் எதிர்ப்பார்த்த விதமாகவோ தமிழரசுக்கட்சி எதிர்பார்த்த விதமாகவோ இல்லாமல் வடக்கில் வரவிருந்த அரசியல் மாற்றங்கட்கான வித்துக்கள் ஏற்கனவே
விதைக்கப்பட்டுவிட்டன.
15. இயலாமையின் அரசியல்
தமிழரசுக் கட்சியின் அரசியல் அஸ்தமனத்தினின்று சிங்களப் பேரினவாதம் அதைத் காத்தாலும், தமிழரசுக் கட்சியின் அரசியல் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றல் சிங்களப் பேரினவாதிகட்கு இருக்கவில்லை. மக்களிடமிருந்து தமிழரசுக்கட்சி எவ்வளவுளள தூரம் தனிமைப்பட்டிருந்தது என்பதற்கு 1970-77 காலத்தில் அதன் சில நடவடிக்கைகளைக் கவனித்தால் விளங்கும்.
மீண்டும் தன்னைப் பாராளுமன்றத்திற்குள் நுழையச் செய்ய வேண்டி அமிர்தலிங்கம் தன்னைச் சூழ ஒரு இளைஞர் அணியைக் கட்டி வளர்த்தார். அவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அவர் கிளறிவிட்ட உணர்வுகளும் காட்டிய தோற்றங்களும் அவரைப் பொறுத்தவரை ஒரு அரசியல் விளையாட்டு என்பதை
(55)

Page 33
தந்தையும் மைந்தரும்
1977 க்குப் பின்புதான் மக்கள் முற்றாக அறிந்தனர். அவரது தீவிரமான நிலைப்பாட்டை நம்பிய இளைஞர்கள் அவர் அடைய விரும்பியது பாராளுமன்ற ஆசனமே ஒழியத் தமிழ் ஈழமல்ல என்பதை அறியவும் சில காலம் எடுத்தது.
இந்தப் பின்னணியில் தமிழரசுக் கட்சித் தலைமையின் யோக்கியத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிற மாதிரிச் சில விடயங்கள் நடந்தன. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் நிறுவப்பட்ட போது அதைத் தமிழரசுக் கட்சி எதிர் கொண்ட விதம் வினோதமாக இருந்தது. திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்க எடுத்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்த தமிழரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக்கழகம் என்று சவால் விட்டவர்களைத் தமிழ்க் காங்கிரஸ் ஆதரித்து, இரண்டுமே இல்லாமல் போனது பழைய கதை. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் வந்தவுடனே அதை எதிர்க்கத் தம்மாலான எல்லா முயற்சிகளையும் தமிழரசுக் கட்சியினர் மேற்கொண்டனர். பரமேஸ்வராக் கல்லூரியை யாழ் வளாகத்திற்கு எடுத்ததையும் தற்காலிகமாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக் கட்டிடங்களில் விஞ்ஞான பீடத்தை நிறுவியதையும் கடுமையாக ஆட்சேபித்த தமிழரசுக் கட்சியினர் இன்னொரு வாதத்தையும் பாவித்தனர். யாழ் வளாகத்திற்குச் சிங்கள மாணவர் வருவது தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் மூலம் சிங்கள ஊடுருவல் நடக்கும் எனவும் வாதித்தனர். அவர்களது ஆட்சேபனைகள் யாழ்ப்பாண மக்கள் நடுவே எடுபடவில்லை.
பேராசிரியர் கைலாசபதி வளாகத் தலைவராகவும் பேராசிரியர் கா. இந்திரபாலா கலைப்பீடாதிபதியாகவும் யாழ் வளாகத்தைக் கட்டியெழுப்ப எடுத்த முயற்சிகள் மக்களிடையயே பெரும் ஆதரவைப் பெற்றன. மற்ற எந்த வளாகத்தையும் விடத் தன்னைச் சூழவுள்ள சமூகத்துடன் நல்ல நேரடி உறவு கொண்ட ஒரு வளாகமாக யாழ் வளாகம் வேகமாக விருத்தி பெற்றதை தமிழரசுத் தலைமையால் தாங்க முடியவில்லை.
பிற மாவட்ட மாணவர்களுக்கு இருப்பிட வசதி கொடுக்க வேண்டாமென்று யாழ் நகர மக்களிடம் தமிழரசுக் கட்சியினர் செய்த பிரசாரம் அதற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியது. அரசாங்கம் மனம் விரும்பி வட பகுதியில் செய்த மிக உருப்படியான காரியம் யாழ் வளாகத்தை நிறுவியதும் அதன் பொறுப்பை ஆளுங் கட்சி ஆதரவாளரல்லாத கைலாசபதியிடம் கொடுத்ததும் ஆகும் என்னும்படியாக யாழ் வளாகம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. யாழ் வளாகத்தைப் பற்றி ஒருவரது நிலைப்பாடு அவரது சமூகப் பார்வையின் அளவுகோல் எனும்படியான நிலவரம் வந்த பின்பே, தமிழரசுக் கட்சியினர் கறுவிக்கொண்டு பின் வாங்கினர்.
(56)
 

தந்தையும் மைந்தரும்
யூஎன்.பி ஆட்சிக்கு வந்த பின்பு யாழ் வளாகம் பல்கலைக்கழகம் ஆனது. அப்போது கைலாசபதியின் இடத்தில் யூஎன்.பிக்கும் தமக்கும் ஏற்ற ஆளான போராசிரியர் வித்தியானந்தனைத் துணை வேந்தராக்கியதே தமிழரசுக் கட்சியின் அரசியல் சாதனையாகியது. அதன் பின் நடந்தவை பற்றி இங்கு விவரிக்க இடமில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் புதிய துன்பங்களின் தொடக்கப்புள்ளியான 1977க்குப் பின்பு நடந்தவை இன்னொரு அரசியல் சகாப்தத்துக்குரியன.
1972 ல் தேயிலைத் தோட்டங்கள் தேசியமயமானதையடுத்து சகல பெருந் தோட்டங்களும் அரச கூட்டுத்தாபனங்களின் கீழ் வந்தன. சிங்கள பேரினவாதிகள் பலர் தோட்டங்களில் பொறுப்பேற்றனர். 1973-1975 காலத்தில் ஏற்பட்ட வரட்சி தோட்டங்களில் வேலையின்மைக்குக் காரணமாகியது. இச் சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் பலர் தோட்டங்களிலிருந்து நிர்வாகத்தினரால் விரட்டப்பட்டனர். சிலர் வறுமை காரணமாகத் தாமாகவே வெளியேறினர். மலையகத் தமிழர்களிற் பலரை இந்தியாவுக்குப் போகுமாறு தூண்டிய முக்கிய காரணங்களில் இக்காலகட்டத்தின் கொடுமைகளும் அடங்கும்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு ஈடு கொடுக்க மலையகத் தமிழரை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் குடியேற்றும் யோசனை 1960களின் பிற்பகுதியிலே சில தமிழ்த் தேசிய வாதிகளது மனதில் முளைவிட்டிருந்தது. இதைக் குறிப்பிடத்தக்க அளவில் நடைமுறைப்படுத்த இயலாத விதமாக அரசாங்கக் கெடுபிடிகள் இருந்தன. அதேவேளை, மலையக மக்களைக் கவரும் விதமான நிலவரங்கள் வன்னியிலோ கிழக்கிலோ இருக்கவில்லை. அதை விட முக்கியமாக, இத்தகைய ஒரு குடிப்பெயர்வை நடைமுறைப் படுத்துவதற்கு அவசியமான வேலைத்திட்டமோ அரசியற் திட்டமோ கொள்கை அடிப்படையோ கூடத் தமிழரசுக் கட்சியிடம் இருக்கவில்லை. வன்னிக்குக் குடிபெயர்ந்த மலையகத் தொழிலாளர்கட்கு சொந்தத்தில் பயிரிடக் காணியும் பிற வசதிகளும் ஏற்படுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மறுபுறம், வாழ வழி தேடி வந்தவர்கள் வன்னியில் பெரும் காணிப்பரப்புக்களைத் தமதாக்கிக் கொண்டவர்கள் மலிவான உழைப்பாளர்களாகப் பயன்படுத்தினர். சாதிய அடக்கு முறைக்கும் நிலவுடைமை மனோபாவத்துக்கும் பழக்கப்பட்ட இந்தச் சுரண்டற் காரர்களிடமிருந்து தப்பி மீண்டும் மலையகத்துக்கே மீண்டவர்கள் பலர். இந்த நிலைமையில் காந்தியம் போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே மனிதாபிமானமான முறையில் மலையகத் தமிழர்கட்கு அங்கு வாழ வழி செய்தன. அரசாங்கத்தின் நெருக்குவாரங்களிடையிற் செயற்பட்ட இவர்கட்குத் தமிழரசுக் கட்சியின் ஆதரவு கிடைத்ததாகக் கூற இடமில்லை. எனினும், தீவிரவாத இளைஞர்கள் சிலர் இத்தகைய
(57)

Page 34
தந்தையும் மைந்தரும்
அமைப்புகளுடன் தமது தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். ஆயினும், பின்னர் யூஎன்.பி அரசாங்கம் குற்றஞ்சாட்டியது போல தமிழ்த் தீவிரவாதிகளது பாசறைகளாக இவை இருக்கவில்லை. .
தமிழரசுக் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலின் இன்னொரு முக்கியமான சாட்சியம் தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதத்தால் மறைக்கப்பட்டு வருகிறது. 1974ல் நடந்த தமிழாராச்சி மாநாடு அரசாங்கங்களதோ அரசியற்கட்சிகளதோ தலையீடின்றி நடத்திருக்க வேண்டிய ஒன்று. இந்த மாநாடு தனிநாயக அடிகளினதும் பிற தமிழறிஞர்களதும் முயற்சியால் கோலாலம்பூரில் முதலில் நடத்தப்பட்டது. அடுத்து பாரிஸிலும் சென்னையிலும் நடந்தது. சென்னை மாநாட்டை தி.மு.க அரசாங்கம்
என்பது கட்சி அரசியல் சாராது நடத்தப்படவேண்டும் என்றே தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் பல முக்கிய பிரமுகர்கள் விரும்பினர். ஒரு சர்வதேச மாநாட்டை நன்கு நடத்தும் வசதி கொழும்பிலேயே இருந்தது என்பதால் கொழும்பிலே மாநாட்டை
நெருக்குவாரங் காரணமாக யாழ்ப்பாணத்தில் வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாநாட்டின் மூலம் தமிழரசுக்கட்சி தனக்கு விளம்பரம் தேட முயல்கிறது என்பதைக் கருதியவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். இச் சூழ்நிலையில், வடக்கில் இருந்த அரசியல் நிலவரத்தையும் கருத்திற் கொண்டு, கொழும்பிலேயே மாநாட்டை நடத்த அனுமதிக்க முடியும் என்ற முடிவை அரசாங்கம் எடுத்தது. இந்த முடிவு அரசியற் காரணங்கள் சார்ந்தது என்பது ஐயமில்லை. இது இறுதிக்கட்டம் வரை மாநாடு நடத்தப்படுமா இல்லையா என்றே நிச்சயமில்லாத அளவுக்கு ஒரு இழுபறிப் போராக நீண்டது. இறுதியில் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த அனுமதித்தது. ஆயினும் தமிழரசுக் கட்சி பற்றியும் தமிழ்த் தீவிரவாதம் பற்றியுமான ஐயங்கள் காரணமாக அரசாங்கம் மாநாட்டுக்கு வருவதற்கு விசா வழங்குவது பற்றிக் கடுமையாகவே நடந்து கொண்டது. இது தமிழரசுக்கட்சிக்கு மேலும் சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது,
தமிழாராய்ச்சி மாநாடு. ஒரு தமிழ்த் தேசியவாத அரசியல் மாநாடாகிவிடும் என்ற அச்சத்தை வளர்ப்பதில் சில தமிழ் அரசியற் பிரமுகர்களது பங்கும் முக்கியமானது. அதே வேளை தமிழரசுக்கட்சியின் அரசியல் சிறுபிள்ளைத்தனமும் யாழ்ப்பாணத்தில் ஒரு நெருக்கடியான நிலவரத்தை உருவாக்கியது.
தமிழாராய்ச்சி மாநாடு வெறும் தமிழ் அறிஞர்கள் மாநாடாக இல்லாது பொது மக்களுக்கான ஒரு கலை நிகழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்ற நியாயமான
(58)
 
 

தந்தையும் மைந்தரும்
bm
முடிவு தமிழரசுக் கட்சியால் தனது அரசியல் நோக்கங்கட்காகத் திசை திருப்பப்பட்டது. அம் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியின் போது இது தெளிவானது. இலங்கைக்கு வர விசா அனுமதிக்கப்படாத ஜனார்த்தனம் என்கிற பிரமுகரை இறுதிநாள் நிகழ்ச்சியில் மேடையேற்றிய தமிழரசுக் கட்சி தன்னால் அரசாங்கத்தை மீறவும் அதன் கண்களில் மிளகாய்ப்பொடி தூவவும் முடியும் என்று சவால் விட்டது.
இதற்குப் பதிலடியாக அரசாங்கத்தின் பொலிஸ்படை அவரைக் கைது செய்ய முற்பட்டது. இறுதி நாள் நிகழ்ச்சிகள் குழப்பமான நிலைமைகளின் நடுவே கடைசி நேரத்தில் வீரசிங்கம் மண்டபத்திலிருந்து மாற்றப்பட்டன. இதில் பொலிஸ் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட இழுபறிகள் பதற்றத்தை மேலும் அதிகமாக்கின. இத்தகைய சூழலில் ஜனார்த்தனத்தைப் பிடிக்க முயன்ற பொலிசாருக்கு சனத்திரளை மீறி மேடைய அணுக இயலவில்லை. வழமையான பொலிஸ் முரட்டுத்தனம் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மக்கள் நடுவே குழப்பம் ஏற்பட்டது. மக்கள் பலதிசைகளிலும் சிதறிஓடினர். வானத்தை நோக்கிப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டனர். இதன் விளைவாக மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்தன. மின்சாரம் பாய்ந்ததால் சிலரும், நெரிசலில் சிக்கிச் சிலருமாக ஒன்பது பேர் வீணாக இறந்தனர். இச் சாவுகட்குப் பொலிசாரின் பொறுப்பற்ற நடத்தையே முக்கியமான காரணம். எனினும் தமிழரசுக்கட்சிப் பிரசாரத்தில் உள்ள ஒரு பொய் மறுக்கப்பட்ட வேண்டும். பொலிசார் சனங்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்துதான் சாவுகள் நிகழ்ந்தன என்ற அபிப்பிராயம் கவனமாக இன்னமும் பேணப்படுகிறது.
மாநாட்டை அரசாங்கமும் பொலிசும் கையாண்ட விதம் பற்றிக் கண்டிக்க எவரும் தயங்க நியாயமில்லை. அதே வேளை மாநாட்டைத் தமது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்த முற்பட்டு ஒரு வெகுசனக் கலாசார நிகழ்ச்சியாகவும், கொண்டாட்டத்துக்கு உரியதாகவும் அமைய வேண்டிய நாளைத் தனது அரசியல் தேவைகட்காகச் சீரழித்ததில் தமிழரசுக் கட்சியின் பங்கை மூடிமறைப்பது சரியாகாது. பின் விளைவுகள் பற்றிய யோசனை இன்றி மக்களை இம்சைக்குள்ளாக்குகிற விதமாக தமிழரசுக் கட்சி நடந்தது இதுதான் முதலுமில்லை, இதுதான் கடைசியுமில்லை.
(59)

Page 35
தந்தையும் மைந்தரும்
1B. bങ്ങfuി (Dങ്ങി) ബീഡ്രങ്ങuീ Bg[i]]b
இறுதிவரை , தமிழரசுக் கட்சித் தலைமையின் அகிம்சாவாதம் அகிம்சையை விட வேறு வழி இயலாததன் விளைவு என்பதற்கு நிறைய ஆதாரங்கள் அக் கட்சியின் வரலாற்றில் உள்ளன. சத்தியாக்கிரகத்தைக் கூடத் சரியாகக் திட்டமிட இயலாமலும் சிங்கள மக்களிடையே இருந்த நல்ல சக்திகளை எல்லாம் கவனமாகப் புறமொதுக்கியும்
வழியையும் காட்ட முடியவில்லை. சாதியத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையானது என்று தார்மீகக் கண்ணிர் வடித்தவர்களின் வன்முறைப் போக்கு படிப்படியாக வளர்ந்து வந்தது. இதை ஊக்குவித்த அமிர்தலிங்கத்துக்கு அந்த இளைஞர்களது எதிர்காலப்
அவர் அவர்களைத் தனது அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது பற்றிக் கூடிய கவனங்காட்டியிருக்கக் கூடும்.
சிறிய அளவிலான வன்செயல்களைக் கண்டிப்பதில் தமிழரசுக் கட்சித் தலைமை காட்டிய தயக்கத்திற்குப் பல வேறு விளக்கங்கள் இருக்கலாம். எப்படியும் இளைஞர்கள் அதை ஒரு மறைமுகமான அங்கீகாரமாகக் கொண்டதையும் குற்றங் கூற இடமில்லை. யாழ்ப்பாண மேயராக இருந்த துரையப்பாவின் மீதான கொலை முயற்சி முதலில் தோல்வி கண்ட போது தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் அம் முயற்சிக்கான காரணங்களை அரசியல் சாராத விடயங்களில் தேடின. கொலை முயற்சியைப்பற்றிக் கட்சிக்கு உள்ளே விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சி தவறிவிட்டது.
1972 ல் பதவி விலகிய பின்பு, காங்கேசன்துறை இடைத் தேர்தல் நியாயமற்ற முறையிற் பிற்போடப்பட்டது பற்றி முன்பு குறிப்பிட்டேன். இடைத் தேர்தலை நடத்த வடக்கில் நிலைமை சுமுகமாக இல்லை என்ற காரணம் ஏற்கக் கூடிய ஒன்றாக இருக்கவில்லை. இடைத் தேர்தலில் வி. பொன்னம்பலம் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்டார். அன்றைய அரசியற் சூழலில் அந்தத் தொகுதியில் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிப்பது இயலுமான ஒன்றல்ல. தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பேரில் உருவான அமைப்பு, போட்டியான தமிழ்த் தேசியவாத அரசியற் கட்சிகளை இல்லாமற் செய்யும் ஒரு முயற்சி என்பது தெளிவான விடயம். 1972ன் புதிய அரசியல் யாப்பை மையமாக வைத்து தமிழரசுக் கட்சி த.ஐ.முன்னணியை அதே ஆண்டு தோற்றுவித்தது. அதில் யூஎன்.பி பிரமுகர் தேவநாயகமும், இ.தொ.க. தலைவர் தொண்டமானும் பங்காளிகளானது, அம் முன்னணியின் அரசியற் தன்மை பற்றிய வேறு சந்தேகங்களையும் எழுப்பியது. இதனாலேயே வடக்கில் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் முக்கியஸ்தரான
(60)
 

- தந்தையும் மைந்தரும் 그
வி. பொன்னம்பலத்திற்கு ஆதரவு தருவது பற்றி இடதுசாரிகள் மத்தியில் மிகுந்த கருத்து வேறுபாடுகள் நிலவின. சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு மக்களைக் கோரியது. 1972ல் சண்முகதாசனை எதிர்த்துப் பிரிந்தவர்கள் நடுவிலும் வட பிரதேசத்தில் இருந்தோர் வி. பொன்னம்பலத்தை ஆதிரிக்க மறுத்தனர். கொழும்பிலும் தெற்கிலும் இருந்தோர் சிலர் தமிழர் ஐக்கிய முன்னணியை எதிர்த்தும் பிரிவிைையை எதிர்த்தும் வாக்களிப்பது சரி என வாதித்தனர். எனினும் வடக்கில் மாக்ஸிய லெனினியவாதிகள் எவருமே வி. பொன்னம்பலத்தை ஆதரிக்கவில்லை என்பது முக்கியமானது.
தேர்தலில் வி. பொன்னம்பலத்தை ஆதரிக்குமாறு கோரிப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர்கள் விடுத்த ஒரு அறிக்கை செய்தி ஏடுகளில் வந்தது. தேர்தல் முடிவுகள் செல்வநாயகத்தின் வெற்றியை அறிவித்தன. அவருக்கு எதிராக விழுந்த வாக்குக்கள் அன்று வடக்கில் இருந்த சூழ்நிலையில் கணிசமானவையே. இதனாலோ என்னவோ, செல்வநாயகத்தை எதிர்த்து நின்ற இனத் துரோகிகளாக அப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கருதப்பட்டனர். அறிக்கையில் ஒப்பமிட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மேலிடத்திற் சிலருக்காவது தெரியாமல் இது நடக்கவில்லை என்பது என் எண்ணம்.
வடக்கில் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் அதிகாரிகள் பற்றியும் தாங்கள் துரோகிகள் என்று கருதிய அரசியல்வாதிகள் பற்றியும் கொண்டிருந்த பகைமை உணர்வின் சரி பிழைகளும் நியாய அநியாயங்களும் எவ்வாறிருந்தாலும் இவை அரசியற் கோணத்தில் மதிப்பிடப்பட்டு மாற்று நடவடிக்கைகளும் அரசியல் நடவடிக்கைகளும் அரசியல் முடிவுகளாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, வடக்கில் இளைஞர்கள் முகங்கொடுத்த பிரச்சனைகளை தமக்கு வசதியாகப் பயன்படுத்தித் தமது தேசியவாத அரசியலை வளர்த்த தமிழரசுக் கட்சித் தலைமை இளைஞர்கட்கு வழிகாட்டுவதில் ஒரு நழுவல் போக்கையே கடைப்பிடித்தது.
தமிழரசுக் கட்சிக்குள் பல்வேறு அரசியற் போக்குகள் எப்போதுமே இருந்து வந்துள்ளன. போராட்ட முனைப்புடையவர்கள் கட்சி அதிகாரத்தினின்று கொஞ்சமாகப் பின் தள்ளப்பட்டனர் அல்லது செல்வநாயகத்தின் மிதவாத் அரசியலை ஏற்றுக்கொண்டனர். மக்களால் தெரிவு செய்யப்படாத மு. திருச்சசெல்வம் கட்சியின் மீது செலுத்திய ஆதிக்கம் இளைஞர்களை ஒரு மாற்றுத் தலைவரை நோக்கி உந்தின. இந்த இடைவெளியை அமிர்தலிங்கம் தனதாக்கிக் கொண்டார். ஆயினும் அவருடைய தேவையும் இளைஞர்களுடைய தேவையும் முற்றிலும் வேறு என்பதைச் செல்வநாயகத்தின் மரணத்தின் பின்பு தீவிரவாத இளைஞர்கள் அடையாளம் கண்டனர்.
(61)

Page 36
பிரிவினை, ஆயுதப் போராட்டம் என்ற கருத்துக்கள் 1970க்குப் பின்பு சிலருடைய மனங்களில் ஆழமாக வேருன்றிவிட்டன. நேரடியாக அரசியற் களத்தில் அவர்களது நிலைப்பாட்டை முன்வைக்க வசதி இல்லாததால் தமிழரசுக் கட்சியை ஒரு தளமாகவும் நிழலாகவும் அவர்கள் பயன்படுத்தினனர். அவர்களது நியாயமான மனக் கொதிப்பையும் அதற்காக அவர்கள் தேடிய அரசியற் பாதையையும் எவரும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆயினும், அந்த உணர்வுகளை அறிந்து, அவர்களது அரசியற் பாதையை அறிந்நது போலவும் அங்கீகரிப்பது போலவும் நடித்தவர்களின் வேடம், தமிழ்த் தேசியவாத வன்முறை அரசியல் வடக்கிற்கு வந்த போதுதான் கலையத் தொடங்கியது.
இளைஞர்களின் தீவிரவாதம் பற்றிச் செல்வநாயகத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்பவர்கட்குப் பலவிதமான பதில்கள் கிடைக்கலாம். செல்வநாயகத்தின் “காந்தி" படிமம் கலையாமல் பாதுகாப்பதற்கு 1976ல் அவரது மரணம் உதவியது. ஆயினும் மாற்று அரசியற் சக்திகள் வளராமல் தடுப்பதற்காக வன்முறையைப் பாவித்தவர்களை இந்தக் காந்தியவாதி மறிக்கவோ கண்டிக்கவோ நிராகரிக்கவோ முன்வரவில்லை என்பது முக்கியமானது.
செல்வநாயகத்தைத் தமிழரசுக் கட்சிக்குள் இருந்த பல்வேறு குழுக்கள் தமக்கு விரும்பியவாறு விளங்கிக்கொள்ள வசதியாக இருந்தது அவரது மெளனம் மட்டுமல்ல. அவரது செவிப்புலனின் போதாமையை அவர் தனக்கு வசதியாகவே பயன்படுத்திக் கொண்டார் என்பது அவரது அரசியலுடன் உடன்பாடற்ற பலர் வெளிவெளியாகவே சொல்லியுள்ள ஒரு குற்றச்சாட்டு.
1965ல் செல்வநாயகத்தைத் திருச்செல்வம் பயன்படுத்தினாரா செல்வநாயகத்தின் நோக்கங்கட்கு வசதியான கருவியாகத் திருச்செல்வம் பயன்பட்டாரா என்பது தமிழரசுக் கட்சிக்குள் விடுவிக்கப்படாத புதிராகவே இருந்தது. எனினும் திருச்செல்வத்தின்
எதிர்த்ததும் இல்லை. நியாயப் படுத்தியதுமில்லை. செல்வநாயகத்தின் வீட்டில் இருந்த விறாந்தை அலுவலகத்தில் ஒரு கட்சிக்குள் ஒரு சிறிய கட்சியை நடத்த முற்பட்ட சிவானந்தசுந்தரம், சந்திரஹாசன், ஈழவேந்தன், கோவை மகேசன் போன்றோர்,
செல்வநாயகம் தமது பக்கம் தான் என்று பாவனை செய்து வந்தனர்.
செல்வநாயகம் பற்றிய காந்திய, தீர்க்கதரிசனப் படிமத்தைப் கலைப்பது அவரது கட்சிக்குள் இருந்த பல்வேறு குழுக்களில் ஒவ்வொன்றுக்கும் பாதகமானதாகவே இருந்தது. கருத்து வேறுபாட்டு அடிப்படையில் 1975ல் வெளியேறிய முன்னாள் ஊர்காவற்றுறை பா.உ. வி. நவரத்தினம் கூட செல்வநாயகத்தைப் பகிரங்கமாக விமர்சிப்பதில் கவனமாகவே இருந்தார். கட்சியின் நிதி பற்றிக் கணக்குக் கேட்டு
(62)
 

இதந்தையும் மைந்தரும் :
T
திருப்தியான பதில் வராததால் வெளியேறிய கட்சிப் பொருளாளரான முன்னாள் கிளிநொச்சி பா.உ. சிவசுந்தரம் செல்வநாயகத்தை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் காந்தி பண விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்பது ஈழத்துக் காந்தியாரின் சீடப்பிள்ளைகள் அறியாத விடயமல்ல. எவ்வாறாயினும் இந்தக் காந்திப் படிமத்தைக் குலைக்க எவருமே விரும்பவில்லை.
செல்வநாயகத்தின் அகிம்சைப் படிமத்தைக் கலையாமற் காக்கின்ற அதே வேளை இளைஞர்ளை அந்நியப்படுத்தாமலும் இருக்க அவரது மெளனம் பயன்பட்டது எனும்போது, இந்த மெளனம் வன்முறையின் வெளிவெளியான கண்டனத்தையோ அங்கீகாரத்தையோ விடக் கேவலமான கோழைத்தனமும் நேர்மையீனமும் கொண்டது என்றும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
1972க்குப் பின்பு வடக்கில் மோசமடைந்து வந்த நிலவரங்களின் பின்னணியில் இந்திரா காந்தியை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையிற் குறுக்கிடுமாறு கேட்பதற்கு புது டில்லிக்குப் போவதற்கும் செல்வநாயகம் திட்டமிட்டார் என்று அவரது அன்புக்குரிய மருமகனும் ஜே.ஆர். ஜயவர்தனவின் அபிமானியாக இருந்தவருமான ஏ.ஜே.வில்சன் என்ற அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குறுக்கீடு நடந்திருந்தால் முடிவு சாத்வீதமான ஒன்றாக இருந்திருக்கும் என்று செல்வநாயகம் எதிர்பார்த்தாரா என்று தெரியவில்லை. சிறிமா பண்டாரநாயக்கவுக்கும் இந்திரா காந்திக்கும் இருந்த தனிப்பட்ட நெருக்கம் பற்றி அவர் அறியாமல் இருந்தார் என்று நம்பவும் முடியவில்லை. அவரது தீர்க்கத் தரிசனத்தின் இருண்ட அத்தியாயமாகவும் அவரது அகிம்சையின் மெளனச் சாவின் சாட்சியமாகவும் 1970-1977 காலகட்டம் அமைந்தது என்றால் மிகையில்லை.
17. தந்தை சொல் மிக்க மந்திரம்
1972ன் புதிய அரசியல் யாப்புப் பற்றிய கலந்தாலோசனைகளினின்று ஒதுங்கியதன் மூலம் தமிழரசுக் கட்சி தலைமை சாதித்தது என்ன என்பது ஒரு புறமிருக்க, இவ்வாறு ஒதுங்கும் போது மாற்று வேலைத்திட்டம் எதையும் கைவசம் வைத்திராமலே அப்படி ஒதுங்கியது என்று எண்ண நிறைய இடம் உண்டு. தன் தொகுதி மக்களால் நிராகரிக்கப்பட்ட அமிர்தலிங்கம் பாராளுமன்றத்திற்கு வெளியில் தனக்கான ஒரு அரசியற் தளத்தைக் கட்டியெழுப்பக் கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதை விட, இந்தப் பகிஷ்கரிப்புக்கான அவசியம் வேறு எவருக்கும் இருந்ததா என்பது ஒரு விடயம். மறுபுறம், புதிய அரசியல் யாப்பினுள் தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பாக
(63)

Page 37
தந்தையும் மைந்தரும் -:ل
ஆக்கமான யோசனைகளை முன்வைத்துப் போராடி விட்டு, முடியாதபட்சத்தில் எல்லா எம்.பி மாரும் பதவி விலகியிருக்க முடியும். இவ்வாறான போராட்டத்தின் ஆபத்துக்கள் பற்றி ஒரு வேளை தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் நன்கு அறிந்து இருக்கக்கூடும்.
பழைய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரது உரிமைகட்கு உத்தரவாதமளிக்கும் நோக்கில் இருந்த 29வது ஷரத்து புதியதில் இல்லை என்பது ஒரு முக்கியமான ஆட்சேபனையாக இருந்தது. எனினும் இந்த உத்தரவாதத்ததால் மலையக மக்களின் குடியுரிமை பற்றியோ தமிழையும் அரசகரும மொழியாக்குவது பற்றியோ எதுவுமே செய்ய முடியவில்லை என்பது சட்ட மறிந்தவர்களான தமிழரசுக்கட்சித் தலைவர்கள்
அறியாத ஒன்றல்ல.
இன்னொரு ஆட்சேபனை பெளத்தத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பான இடம் பற்றியது. இதில் பிரபல ட்ரொட்ஸ்கிவாதியான அமைச்சர் கொல்வின் ஆர். த. சில்வாவுடைய அரசியற் சீரழிவு புலனானது ஒரு முக்கிய விடயம். 1972ல் கண்டிக்கு வந்த அமைச்சர் தலதா மாளிகைக்கு மலர்கள் கொண்டு வழிபடப் போனது அதன் அளவிலேயே கண்டிக்க வேண்டியதில்லை என்றாலும், அதற்கு இருபது வருடங்கட்கு முன்பு அதே பிரமுகர் பெளத்த கோயில்களை விடப் பொதுமலசலகூடங்கள் நாட்டுக்கு முக்கியமானவை என்று கூறியதை நினைவுகூரும் போது, சில அதி தீவிர இடது சாரிகள் எவ்வளவு தூரம் சீரழிய முடியும் என்பதை எண்ணாமல் இருக்க முடியாது. அதே வேளை, பெளத்தத்தின் சிறப்பான இடம் பற்றிச் சினக்கின்ற தமிழரசுக்கட்சியைக் கூட்டாளியாகக் கொண்ட அரசாங்கம் பதவியில் இருந்த போதே “போயா" தினங்கள் பொது விடுமுறை தினங்களாக்கப்பட்டன. ஞாயிறு வார விடுமுறையை அடிப்படையாகக் கொண்ட வாரத்திற்கு பதிலாக, பூரணை, அட்டமி, அமாவாசை விடுமுறை நாட்களாகும் விதமாக வேலை நாட்கள் மாற்றியமைக்கப்பட்டன. இச் சிக்கல் 1971க்குப் பின்பு பூரீ.ல.சு.கட்சி ஆட்சியின் கீழ் தீர்க்கப்பட்டாலும் பெரிய போயா (பூரணை) விடுமுறையை பெளத்த மத பீடங்கள் விட்டுக் கொடுக்க மறுத்து விட்டன.
தமிழரசுக் கட்சி ஆட்சியில் பங்காளியாக இருந்த காலத்திற் தான், வெசாக் தினமும் மே தினமும் அபூர்வமாக ஒரே நாளில் அமைந்தன. வெசாக் நாளன்று மே தின ஊர்வலங்கட்கும் தடைவிதிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சி இதற்கும் உடந்தையாகவே இருந்தது. பெளத்த மேலாதிக்கத்திற் கான சட்டரீதியான எந்த நடவடிக்கையும் 1965 முதல் 1970 வரை எதிர்க்காத இத் தமிழ்த் தேசியவாதிகளது பெளத்த மேலாதிக்க எதிர்ப்புணர்வு 1970க்குப் பிறகு எப்படிப் புத்துயிர் பெற்றது என்பது விளங்கிக்
(64)

தந்தையும் மைந்தரு
கொள்ளக் கடினமானதல்ல. வெகு சராசரியான ஒரு பாராளுமன்ற எதிர்க்கட்சியின் முரட்டு எதிர்ப்புக்கும் தமிழரசுக்கட்சி 1970-77 காலகட்டத்தில் கடைப்பிடித்த போக்குக்கும் அதிக வேறுபாடில்லை. இந்த மனோபாவம் எவ்வாறு 1977க்குப் பிறகு மாறியது என்பது தமிழரசுக் கட்சியின் வர்க்க நிலைப்பாட்டை மேலும் தெளிவாக விளக்கக் கூடும்.
பூரீ.ல.சு.கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பல தவறுகளைச் செய்திருக்கிறது. தேசிய இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தோட்டங்களின் தேசியமயமாக்கலின் முற்போக்கான பக்கத்தையே தோட்டத் தொழிலாளர் காண இயலாத விதமாக மலையகத் தமிழ் மக்களுக்கு விரோதமான பல காரியங்களைச் செய்து கொண்டது ஆயினும் அந்த அரசாங்கம் எடுத்த சில நல்ல நடவடிக்கைகளுள் சில உணவுப் பொருட்கள் இறக்குமதி மீதான கட்டுப்பாடு ஒன்று. இதன் விளைவாக, வடக்கில் விவசாயிகளது உற்பத்தியும் வருமானமும் வாழ்க்கைத் தரமும் வேகமாக உயர்ந்தன. இதனையொட்டிக் குடா நாட்டு மக்களில் கணிசமானோர் வவுனியா, கிளிநொச்சிப் பகுதிகளில் குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டனர். தமிழரசுக்கட்சி சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் பற்றி 1949 முதலாகப் பேசி வந்தாலும் அதனால் என்றுமே யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்களை வடக்குக் கிழக்குக் மாகாணங்களின் குடியேற்றத்திட்டப் பகுதிகளிலோ விவசாயத்திற்கேற்ற வேறு காணிகளிலோ குடியேற்ற எதுவுமே செய்யவில்லை.
தமிழ்த் தேசிய உணர்வு செய்யத் தவறிய ஒன்றைப் பொருளாதார வாய்ப்புக்கள் செய்தன. இந்த விதமான மீள் குடியேற்றத்தின் விளைவாகவே வடக்கின் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களது பாரம்பரியப் பிரதேசம் என்பதன் பொருளாதார, அரசியல் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆயினும் சரியான ஒரு அரசியல் வழிகாட்டலைத் தமிழ்த் தேசிய வாதிகளான தமிழ்த் காங்கிரஸோ தமிழரசுக்கடசியோ இவ்விடயத்தில் வழங்கவில்லை. எனவே, மலையக மக்கள் 1973க்குப் பின்பு வன்னிக்கு குடிபெயர்ந்து அங்கே தமது வாழ்வை மீள அமைக்க முனைந்த போது, தமிழரசுத் தலைமை தனக்குப் பழக்கப்பட்ட சாதிய, நிலவுடமைச் சமூக மனோபாவத்தை முறியடிக்கும் விதமான ஒரு புதிய பாதையைக் காட்ட முடியாமற் தடுமாறியது. மலையக மக்கள், வன்னியிற் பெருங்காணியுடைமையாளர்களாக வளர்ந்தவர்களால் குரூரமாகச் சுரண்டப்பட்டு அடிமைகள் போல நடத்தப்பட்டதையிட்டுத் தமிழரசுக் கட்சித் தலைமை எதுவிதமான அக்கறையும் காட்டவில்லை. எனவே தான், தமிழரசுக்கட்சிக்கு வெளியிலும் அதன் ஆதரவின் மீது தங்காமலுமே காந்தியம் போன்ற சமூக சேவை அமைப்புக்கள் விருத்திபெற்றன.
(65)

Page 38
தந்தையும் மைந்தரும்
தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும் யூஎன்.பிக்கும் இருந்து வந்த நெருக்கம் 1970க்குப் பின்பும் தொடர்ந்தது என்பதற்கான சாட்சியங்கள் பாராளுமன்ற வாக்கெடுப்புக்களிலும் விவாதங்களிலும் மட்டுமன்றி முக்கியமான அரசியல் நடவடிக்கைகளிலும் தெளிவாகவே தெரிந்தன. 1972ல் உருவான தமிழர் ஐக்கிய முன்னணிக்கு யூஎன்.பி இந்தப் புதிய தமிழ்த் தேசியவாதப் போக்கையும் பிரிவினை வாதத்தையும் கண்டுகொள்ளமாலே இருந்தது ஒரு வலுவான சான்று. எனினும் யூஎன்.பியின் தலைமை தமிழரசுக் கட்சித் தலைமையின் இந்தப் போக்கைத் தனது வசதிக்காகவே மறைமுகமாக ஊக்குவித்தது என்பதைத் தமிழரசுக் கட்சியின் தீர்க்கதரிசி அறியவில்லை என்றால் அதன் பொருள் என்ன ? 1977ல் தேர்தலில் வென்ற பிறகு யூஎன்.பியின் சுயரூபம் வெளிப்பட்ட பின்பும் தமிழரசுக் கட்சித் தலைவர்களது மயக்கம் தெளிய வெகு காலம் எடுத்தது என்பதை நோக்கும் போது, தந்தையின் தீர்க்கதரிசனச் சுடர் எப்போதோ அவிந்து விட்டது என்றுதான் தோன்றுகிறது.
வடக்கில் தேசிய இனப்பிரச்சனை மோசமடைந்து வந்த அதே வேளை, அரசில் தமது கூட்டாளியாக இருந்த ழரீ.ல.சு.கட்சியிடம் உண்மை நிலைமைகளை விளக்கி நிலவரம் மேலும் மோசமாகாமல் தடுப்பதற்கும் இன உறவுகளைச் சீர்திருத்துவதற்குமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நிர்ப்பந்திக்க வேண்டிய கடமை இரண்டு பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளுக்கும் இருந்தது. ஆயினும் அவர்கள் அப்படி எதையுமே செய்யவில்லை. மறுபுறம் புண்ணுக்குப் புனுகுபூசுகிற விதமான காரியங்களையே செய்து வந்தனர். 1975ல் கூட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு இத்தகைய ஒரு முயற்சியே அல்லாமல் வேறல்ல.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மாநாட்டை நடத்துவதில் முன்னின்ற "முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" என்கிற ஒரு அமைப்பும் அதன் வழிகாட்டியான பாராளுமன்றவாத கம்யூனிஸ்ட் கட்சியும் இது போன்ற ஒரு மாநாட்டை சிங்கள மக்கள் மத்தியில் நடத்த எதுவித அக்கறையும் காட்டாததுதான். போதக்குறைக்கு, அம் மாநாட்டிற்கு வருகைதந்த அக் கட்சி அமைச்சரும் பிற பிரமுகர்களும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி எதுவித அக்கறையுங் காட்டிப் பேசாதது போக, தமிழ் மக்கள் நடுவில் தான் இனவாதம் உள்ளது என்றும் ஒருவர் குற்றஞ்சாட்டிப் பேசியதை யாருமே தட்டிக் கேட்கவில்லை. இவர்களை நம்பி மாநாட்டுக்கு ஆதரவளித்த சில தமிழ் முற்போக்குச் சிந்தனையாளர்கள் முகத்தில் இம்மாநாடு கரி பூசியது.
அரசாங்கத்தில் சிங்கள இனவாதிகளது கை ஓங்குவதற்கு அதிற் பங்கபற்றிய இடதுசாரிகள் எனப்படும் இரு கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களது அசட்டையான போக்கும் ஒரு காரணமே. சிங்களப் பேரினவாதத்தின் வலிமையை மிகையாக
(66)
 
 

தந்தையும் மைந்தரும்
மதிப்பிட்டதன் விளைவாக இந்த இரு கட்சிகளும் தமிழ் மக்களிடையே பூரணமாகவே செல்வாக்கிழந்தன. தமிழரசுக் கட்சியின் இடதுசாரி எதிர்ப்புக்கு வலுவும் நம்பகமும் வழங்கியது இந்தப் பாராளுமன்ற இடதுசாரிகளது நடத்தையே. இதை வைத்தே மாக்ஸிய-லெனினியவாதிகட்கு எதிரான அவதூற்றை வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசுத் தலைமையால் ஆழ விதைக்க முடிந்தது. அந்த விஷப் பூண்டுகள் இன்றும் தமிழ்த் தேசிய வாதத்தால் திசை திருப்பப்பட்ட பலரது தெளிவான சிந்தனைக்கு ஒரு தடையாகவே இருந்து வருகின்றன.
மாக்ஸிய-லெனினியவாதிகளிடையே 1972 க்குப் பிற்பாடு ஏற்பட்ட பிளவுகளும் வடக்கில் தமிழரசுக் கட்சியின் அரசியலின் வீழ்ச்சியைத் தாமதிக்க உதவின. தேசிய இனப்பிரச்சினையில் மாக்ஸியவாதிகள் முன்வைத்த சமூக நீதி தொடர்பான நியாயங்களைப் புறமொதுக்கி, தமிழ்-சிங்கள முரண்பாட்டை அடிப்படை முரண்பாடாகக் காட்டும் போக்கின் தர்க்க ரீதியான தொடர்ச்சியாக, பிரிவினைவாதக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் பின் திரண்ட புதிய இளைஞர் பரம்பரையினர் நடுவே வலுப்பெற்றது. 1974 அளவில் இது வெளிவெளியாகவே அடையாளங் காணப்பட்டாலும் 1976ல் த.ஐ.வி. கூட்டணியின் தோற்றத்தோடு தான் தமிழீழப் பிரிவினை முறையாக ஒரு கொள்கையாக முன்வைக்கப்பட்டது.
அமிர்தலிங்கத்தையோ தமிழரசுக் கட்சி எம்.பி.மாரினதோ கூட்டணிக்காரப் பிரமுகர்களதோ அன்றைய தேவை தமிழீழமல்ல. அவர்களது தேவை. 1977 தேர்தலில் எப்படியாவது தமது பாராளுமன்ற ஆசனங்களை வெல்வதும் மேலும் சில காலத்திற்குத் தமிழ்-சிங்கள முரண்பாட்டைக் காட்டித் தமது வர்க்க நலன்களைப் பேணுவதுமே. எவ்வாறு ஒரு வேலைத்திட்டமும் இல்லாமல் சமஷ்டி கேட்டுக் கால் நூற்றாண்டுக் காலமாக அரசியல் நடத்தினார்களோ அவ்வாறே தமிழீழம் கேட்டு ஒரு பத்து வருடங்களையாவது கடத்தலாம் என்ற கணக்கு தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே தப்பாகிப் போய்விட்டது.
செல்வநாயகத்தின் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியை வழி நடத்த இயலாது என்பது தெட்டத்தெளிவான விடயம். ஆயினும் மக்கள் மத்தியில் அவர் பற்றிக் கட்டியெழுப்பப்பட்ட படிமத்தின் வலு அவரையே தலைவராகக் காட்டும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. 1970க்குப் பின்பு படிப்படியாக தன்னம்பிக்கை தளர்ந்து போன செல்வநாயகத்தால் அமிர்தலிங்கம் திரைக்குப் பின்னால் நடத்திய நாடகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழரசுக் கட்சியினதோ பிற தமிழ்த் தேசியக் கட்சிகளை அது தன் கீழ்க் கொண்டுவர உருவாக்கிய தஐ, முன்னினியினதோ த.ஐ.வி. கூட்டணி யினதோ திசை தெரியாத பயணத்தில் வழிகாட்டவும் அவருக்குத் திராணியில்லை.
(67)

Page 39
|-ിo
1976ல் திருகோணமலையில் நடந்த கூட்டணி மாநாடு தமிழ் மக்களிடையே எதிர்ப்பார்ப்புக்களைக் கிளறிவிட்ட அளவில் அதே நகரில் 20 வருடங்கள் முன்னர் நடந்தேறிய தமிழரசுக் கட்சி மாநாட்டை ஒத்திருந்தது. ஒரு தீர்க்கதரிசியால், ஒரு வேளை, இந்த மாநாடும் முன்னையது போல் எதிர்ப்பார்ப்புக்களை மிஞ்சிய ஏமாற்றங்கட்கே வழி காட்டும் என்று கூற முடிந்திருக்கும். 1956ம் ஆண்டின் நம்பிக்கைகள் தகரத் தொடங்க ஐந்து ஆண்டுகளாயின. 1976ம் ஆண்டின் நம்பிக்கைகள் தகர ஒரு ஆண்டு கூட எடுக்கவில்லை. எனினும் செல்வநாயகம் அதிர்ஷ்டசாலி. அவருக்குப் பின் அவரது வாரிசுகளாக எஞ்சிய ஒவ்வொருவரது பேரும் தமிழ்த் தேசியவாத வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களிற் பொறிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் தமிழ் மக்களால் வெறுத்தொதுக்கப்பட்டனர். மரணம், செல்வநாயகத்தை அந்த அவலத்தினின்றும் காப்பாற்றியது.
1B. Röggle GIs bluGDLİ)
1961ம் ஆண்டின் சத்தியாக் கிரகத்திற்கு பிறகு செல்வநாயகத்தால் தமிழரசுக்கட்சிக்காகவோ தமிழ்ப் பொதுமக்களுக்காகவோ ஆற்றக் கூடிய பணியோ காட்டக்கூடிய வழியோ இல்லை என்பது தெளிவாகிவிட்டது. தென்னிலங்கையின் இரண்டு முதலாளியக் கட்சிக்களிடையே தமிழரசுக் கட்சியால் எது ஆளுங் கட்சி எனத் தீர்மானிக்க முடியும் என்ற எதிர்ப்பார்ப்பு 1970ல் மண்ணாகி விட்டது. அதை விட, தமிழரசுக் கட்சி ஆதரவில் அமைத்த ஆட்சிக்கு எதிராக மற்றோர் இனவாதத்தைக் கிளறின் அதன் விளைவாகத் தமிழரசுக்கட்சி பங்கு பற்றும் பேரினவாதக் கட்சியின் அரசாங்கமும் இனவாதத்துக்கு வளைந்து கொடுக்க வேண்டி வரும் என்பதை உணரமுடியாத அரசியல் அஞ்ஞானிகள் தான் தமிழரசுக்கட்சியில் இருந்தார்களா ? இங்கே தமிழரசுக் கட்சியின் வர்க்க நலன்கள் யூஎன்.பியினது வர்க்க நலன்கட்கு அதிகம் நெருக்கமாக இருந்ததையும் யாரும் மறந்துவிடக் கூடாது. முதலாளியம் வழிநடத்தும் தேசியவாதம் எப்படிச் சீரழிந்தது என்பதற்குத் தமிழகத்தின் திராவிட இயக்கங்கள் இன்று மதவாதிகளுடன் குலாவுவதிலும் சில ஒற்றுமைகளைக் காண (tptջ պtb.
தமிழரசுக் கட்சியின் அழிவைத் தடுத்து நிறுத்திய ஒரே அரசியற் சக்தி சிங்களப் பேரினவாதம் மட்டுமே. சிங்களப் தமிழ் மக்களின் இருப்பை மிரட்டுகிற நிலை ஏற்பட்ட பிறகு, தமிழரசுக் கட்சி மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எப்படி யாருடன் இணைந்து நடத்துவது என்று தெரியாமற் தடுமாறியது. பழைய இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதமும் நலிவும் தமிழ் இளைஞர்களிடையே ஊட்டி விடப்பட்ட தமிழ்த்
(68)

தேசியவாதமும் அவர்களைத் தமிழ்த் தீவிரவாத அரசியலுக்குள் தள்ளிவிட்டது. இந்த நிலைமையில் 1977 ல் யூஎன்.பி. ஆட்சி ஏற்பட்ட பின்னர் இன்னும் மோசமாவதையும்
தமிழரசுக் கட்சி வளர்த்த தமிழ்த் தேசியம் அதையும் அதன் வாரிசான கூட்டணியையும் வரலாற்றின் குப்பை மேட்டுக்கு அனுப்புவதையும் யாராலும் தடுத்திருக்க முடியுமா? அமிர்தலிங்கத்தின் இடத்தில் செல்வநாயகம் கூட்டணியின் தலைவராக இருந்திருந்தால் கூட்டணியின் சில தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று பின் நோக்கிய பார்வையில் கருத்துக் கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். இக்கருத்தில் சிறிது உண்மை உள்ளது. ஆயினும் ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரினவாத அரசியலையும் அவரது கைகள் போல செயற்பட்ட பேரினவாத இனவெறியர்களையும் 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது கவனித்தவர்கள், கூட்டணியின்முன் இருந்த தெரிவு, பேரினவாதத்திற்குப் பணிந்து போய் அழிவதா பணிய மறுத்து அழிவதா என்பது தான் என்று உணர்வார்கள். கூட்டணியின் தெரிவு எதாயிருந்தது என்று நாம் அறிவோம். 1965க்குப் பிறகு தமிழரசுக் கட்சியின் நடத்தையைக் கவனித்த எவருக்கும் கூட்டணி வேறுவிதமாக வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தை 1970 வரையிலான அதன் கடந்தகாலம் தீர்மானித்தாயிற்று. அதற்குப் பங்களித்தவரான செல்வநாயகத்தால் அதை மாற்றியிருக்கவும் முடியாது.
தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு இருந்த ஒரே அரசியற் சொத்து செல்வநாயகம் பற்றி உருவாக்கப்பட்டிருந்த படிமமாகும். அகிம்சாவாதி, சத்தியவான், தீர்க்கதரிசி போன்ற குணாம்சங்களை அவருடன் இணைத்துச் கருதுவது மக்களுக்குப் பழக்கப்பட்டு விட்டது. எனவே சாவையும் தமது அரசியலுக்கு முழுமையாகப் பயன்படுத்தக் கூட்டணி அரசியல்வாதிகள் முடிவு செய்தனர். இதற்கும் அவர்கட்கும் ஒரு நல்ல முன்னுதாரணம் இருந்தது. 1974ல் டட்லி சேனநாயக இறந்த போது அவரது சடலத்தை வைத்து அரசியல் லாபம் தேடிய ஜே.ஆர் ஜயவர்தன அதன் மூலம் தனக்கும் டட்லி சேனநாயக்கவிற்கும் இருந்த பிணக்கை மூடி மறைத்து, பிரேமதாச தலைமைப் பதவிக்கு வராமல் தடுத்துத் தன்னை முதன்மைப் படுத்தி, அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தையும் செய்தார். கூட்டணித் தலைமை அதே பாடத்தை இன்னும் விரிவான அளவில் நடத்த முற்பட்டது. செல்வநாயகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டு அவரது சாம்பல் தமிழ்ப் பிரதேசங்களில் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. இதன்
பேரினவாதிகள் இந்த ஊர்வலத்தைக் காரணம்காட்டி வன்முறையைக் கிளறிவிட்டனர். திருகோணமலையில் வைத்தே 1956ல் தமிழரசுக் கட்சி தன் போராட்டப் பிரகடனத்தைச் செய்யதாலே இனவாதிகள் இந்த ஊர்வலத்தை ஒரு தமிழ் ஆதிக்க நடவடிக்கையாகக் காட்ட விரும்பினர்.
(69)

Page 40
syanonnu
தந்தையும் மைந்தரு
கூட்டணி எதிர்பார்த்த அரசியல் மூலதனம் இந்த ஊர்வலத்தால் கிடைத்தாலும் செல்வநாயகம் உயிரோடு இருந்தவரை வெளிவராமல் இருந்த சில உட்கட்சி மோதல்களைத் தூண்டி விடும் முறையில் அமிர்தலிங்கத்தைப் புதிய தலைவராக்கும் முயற்சிகள் அமைந்தன. செல்வநாயகத்தின் தமிழ்த் தேசியவாதம் வடக்கு கிழக்கின் தமிழரையும் மலையகத் தமிழரையும் முஸ்லிம்களையும் இணைக்கத் தவறினாலும், மட்டக்களப்பில் உள்ள தமிழரில் கணிசமான பகுதியினரைத் தமிழரசுக் கட்சிக்குப் பின்னால் திரட்டுவதில் வெற்றி கண்டது. இது உண்மையான ஒற்றுமையாக அமையாமைக்குத் தமிழரசுக் கட்சிக்குள் இருந்த சிறு குழு ஒன்றின் அரசியல் ஆதிக்கத்தின் பங்கு முக்கியமானது. 1977 தேர்தலிலேயே அமிர்தலிங்கம் தலைமை வடக்குக் - கிழக்குத் தமிழரின் ஒற்றுமை என்ற தோற்றப்பாட்டுக்கு வேட்டு வைத்து விட்டது.
ஒரு வகையில், செல்வநாயகம் பற்றிய மயக்கங்களால் கட்டிக்காக்கப்பட்டதான சாரமற்ற ஒரு ஒற்றுமை செல்வநாயகத்தின் சாவின் பின்னர் நொறுங்குண்ணத் தொடங்கியது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அது புது வடிவில் மீளமைக்கப்பட்ட போது, தமிழரசுக் கட்சியும் கூட்டணியும் தமிழ்த் தேசியவாத அரசியலில் பெறுமதியற்றனவாகி விட்டன.
எவ்வாறாயினும் செல்வநாயகம் பற்றிய காந்தியவாதி தீர்க்கதரிசி, தமிழரசுத் தந்தை என்றவாறான படிமங்கள் காரணமாக அவரது பேர் இன்று வரை தமிழ்த் தேசிய வாதிகட்கு மிகவும் பயன்பட்டே வந்துள்ளது. தமிழரசுக் கட்சி முதல் விடுதலைப்
அந்த வகையில், தமிழரசுக் கட்சி அரசியல் சிந்தனையின் கைதிகளாகவே விடுதலை இயக்கங்கள் எனப்பட்ட யாவுமே இருந்து வந்துள்ளன.
இன்று தமிழ் இன விடுதலைப் போராட்டத்தின் வர்க்கப் பண்பு மிகவும் மாறிவிட்டது. அது அதன் வர்க்க இயல்புக்கேற்ற அரசியல் பாதையை வகுப்பதாயின். தன் வரலாற்றுப் பொய்களையும் களைந்தாக வேண்டும். இக் கட்டுரைத் தொடர் அந்த நோக்கிலேயே எழுதப்பட்டது. செல்வநாயகம் பற்றிய புனைவுகளினின்று விடுபடும் போதே தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றைப் பற்றிய தெளிவான பார்வை இயலுமாகும். ஈழத் தமிழர்கள் தமது அரசியல் வரலாற்றை மீளாய்வு செய்யும் தேவை இன்று முக்கியமாகியுள்ள நிலையில் இக்கட்டுரை தனது பயனுள்ள பங்களிப்பைத் தந்துள்ளது என நம்புகிறேன்.
- முற்றும் -
(7O)
 
 

தந்தையும் மைந்தரும்,
பின்னுரை
இந்த நூலின் நோக்கமும் தேவையும் பற்றிய சில விளக்கங்களைத் தருவது பயனுள்ளது என்று புதிய~ஜனநாயகக் கட்சித் தோழர்கள் எடுத்துரைத்தனர். அவற்றை முன்னுரையாக வழங்குவதைவிடப் பின்னுரையாகத் தருவதே பொருந்தம். ஏனெனில் வாசகர்கள் மனதில்
எழுக்கூடிய சில வினாக்களுக்கு விளக்கங்களை முன் கூட்டியே தர இயலாது.
இந்த நால் செல்வநாயகத்தினதும் தமிழரசுக் கட்சியினதும் அரசியல் பற்றியது மட்டுமல்ல. தமிழ்த் தேசியவாதத்தின் தேசிய முதலாளியத் தலைமையின் அரசியற் பாதை தமிழ் மக்களுடைய நலன்கட்கு முரணாகச் சென்றது தவிர்க்க இயலாதத, ஏனெனில் வர்க்க நலன்கள் என்றுமே தேசிய நலன் என்பதை விட வலுவானவை. தமிழரசுக் கட்சி மட்டுமல்லாமல் எந்தத் தேசிய முதலாளியக் கட்சியும் மக்கள் சார்பாகவும் மக்கள் நலனுக்காகவும் வெகுசன அரசியல்
அதிகாரத்தக்காகவும் எவ்வாறு செயற்பட்டிருக்க முடியும்?
அப்படியாயின், தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய அரசியலில் ஆதிக்கத்தில் இருந்த காலத்து வரலாற்றின் முக்கியத்துவம் என்ன? இன்று தமிழ் தேசிய அரசியலில் உள்ள பலவேறு இயக்கங்களினதும் அரசியலை விளங்கிக் கொள்வதற்குத் தமிழரசுக் கட்சியின் துரோகங்களை விமர்சித்து விடுதலை இயக்கங்களைத் தொடங்கியவர்கள் அவற்றைவிடப் பன்மடங்கு மோசமான தரோகங்களை இழுைத்துவந்துள்ளனர். தமிழரசுக் கட்சியின் அரசியலின் விளைவாகத் தமிழ் மக்களிடையே யூ.என்.பி, இந்திய ஆளும் வர்க்கம், மேலை “ஜனநாயக" நாடுகள் என்பன பற்றி எழுப்பப்பட்ட சாதகமான படிமங்களும் வளர்க்கப்பட்ட நம்பிக்கைகளும் இன்னமும் தமிழ் மக்களிடையே தமது பாதிப்பைச் செலுத்துகின்றன. இவற்றைத் தொடர்வதற்கு வசதியாகச் செல்வநாயகம் பற்றிய படிமங்கள் உதவுகின்றன. தமிழ் மக்கள் தங்கள் அரசியல் வரலாற்றைத் தெளிவாகக் காண்பதற்குத் தடையாக உள்ள சில மூடுதிரைகளை நீக்க வேண்டி இருக்கிறது. பிரதானமாக இந்த நோக்கத்திற்காகவே இந்த நூல் தொடர் கட்டுரைகளாக மூன்று வருடங்களாக புதிய பூமி பத்திரிகையில் எழுதப்பட்டது.
தமிழரசுக் கட்சி மீதான விமர்சனம் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கான
பழியை அதன் மீதே சுமத்தும் நோக்கிலானதல்ல. பேரினவாதம் பற்றி இங்கு சொற்பமாகவே

Page 41
தந்தையும் மைந்தரும் -
கூறப்பட்ட காரணம் இந்நால் பேரினவாதம் பற்றியதல்ல என்பதே. பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் வழிமுறைகள் எவ்வாறு அதன் தலைமையின் வர்க்க நலன்களாலும் குறுகிய தேசியவாத அணுகுமுறை யாலும் தவறாக அமைந்தன என்பதை விளங்கிக் கொள்வது தமிழ் மக்களின் விடுதலைப் பாதையைத் தீர்மானிப்பதற்கு அவசியமானது.
வெகுஜனக் கண்ணோட்டத்தில் அமையாத அரசியற் சூதாட்டங்களும் பேரம் பேசுதலும் இன்று முன்னைவிட அதிகமாகவும் உக்கிரமாயும் நடைபெறுகின்றன. இவற்றின் தோற்றுவாய் என்ன? இவற்றை இயலுமாக்கியது வெறுமனே சில தனிமனிதர்களத சுயநலமான செயல்களா என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளத. தமிழ் மக்கள் தமது கடந்த இருபத்தைந்து வருடங்களின் பெரிய இன்னல்களிலிருந்து மீண்டு விடுதலையை நோக்கிச் செல்லும் வழி என்ன?
முஸ்லிம் மக்கள் பற்றியும் மலையகத் தமிழர் பற்றியும் இன்றும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் நடுவே உள்ள பார்வைகளைக் கவனமாக மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் பற்றிய அக்கறை தமிழ் தேசியவாத அரசியலில் அன்றும் இல்லை இன்றும் இல்லை என்பத ஒரு கசப்பான உண்மை. அரசியலை வெகுஜனப்படுத்துவத சனநாயகப்படுத்தவதம் பற்றிய தயக்கம் மிகுதியாக உள்ளத.
தாம் வாக்களித்த அதிகாரத்தை வழங்கினால் வென்றுதருவார்கள் என்கிற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இன்று இல்லை. ஆனாலும் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாகச் சிலரால் இன்னமும் உலா வர முடிகிறத. அரசாங்கங்களுடன் பேரம் பேச முடிகிறது. அந்நிய நாடுகளின் தலையீட்டை வரவேற்க முடிகிறது. இவை ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டியவையாகும்
தமிழ் மக்கள் இந்தச் சுமையினின்று விடுபடாமல் தலை நிமிர முடியாது. எனவே தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் வரலாற்றைக் கவனமாக மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. என்ற கண்ணோட்டத்தில் இந்நூலின் தொடர்ச்சியாக "அண்ணன் காட்டிய வழி” என்ற தலைப்பில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி யுகத்தின் அரசியல் "புதிய பூமியில்" இப்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
 

தந்தையும் மைந்தரும்
இந்த நாலோ இதன் தொடர்ச்சியாக வருகிற கட்டுரைத் தொடரோ தமிழ்த் தேசிய இனத்தின் சமகால வரலாறு பற்றிய முழுமையான சித்திரமல்ல. இவற்றின் முக்கியமான நோக்கம் பிரச்சனை பற்றிய பல சித்தரிப்புக்கள் பெரும்பாலும் வேண்டுமென்றே தவிர்த்து வரும் ஒரு அம்சத்தை, தமிழ்த் தேசியவாத அரசியலின் வறுமையை, குறிப்பாகப் பாராளுமன்ற அரசியலின் வறுமையைத், தமிழ் மக்களின் கவனத்திற்குத் கொண்டு வருவதாகும். இம்மாதிரி விடயங்களில், மறதி யாருக்கு வசதியாக இருந்தாலும் பரந்துபட்ட பொது மக்களுக்கு நல்லதல்ல.
தமிழ் மக்களுடைய உடனடியான எதிரி சிங்களப் பேரினவாதம் என்பதில் எனக்கு வேறு கருத்தில்லை. அதே வேளை பிற சிறுபாண்மைத் தேசிய இனங்களது எதிரி மட்டுமில்லாமல் சிங்கள மக்களது எதிரியும் அதவே என்பதும் எனத கருத்தாகும். அதை முறியடிக்கும் முனைப்பிலான ஒவ்வொரு முயற்சியும் இலங்கையின் சகல மக்களதும் நலன்கட்குமானது
என்பதிலும் எனக்கு ஐயமில்லை.
அதே வேளை, நமதம் உலகின் சகல ஒடுக்கப்பட்ட மக்களதம் பிரதான எதிரி ஏகாதிபத்தியம் என்பதையோ மூன்றாம் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுபட முடியாமற் தடுப்பதில் ஏகாதிபத்தியத்தின் பங்கு பெரியத என்பதையோ எவரும் மறக்கப் கூடாத,
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியவாத அரசியலால் எவ்வாறு ஏய்க்கப்பட்டார்கள் என்பது பேரினவாதத்தின் பங்கை எவ்வகையிலும் மறுதலிப்பதல்ல. ஒடுக்கபட்ட தமிழ் மக்கள் தமது அரசியல் வரலாற்றினின்று கற்றுத் தமது போராட்டத்தின் திசையையும் வழிமுறைகளையும் தீர்மானிக்கிற சக்தியாக வளர வேண்டியுள்ளது. இதுவே இந் நூலின் உள்ளடக்கத்தையும்
கட்டுரைத் தொடரில் வந்தவற்றில் இருந்த சில தவறுகள் திருத்தப்பட்டுள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி ஆலோசனை கூறிய நண்பர்கட்கு என் நன்றிகள். இன்னும் தவறுகள் இருப்பின் அவற்றைச் சுட்டிக்காட்டி விமர்சிக்க உள்ளவர்கட்கும் முன் கூட்டியே எண் நன்றிகள்.
ജൂ0ധയffbUമ് 14. Ο 7.2OOO

Page 42
தமிழரசுக் கட்சி து
பாராளுமன்ற மாற்றச் தேயொழிய ஒடுக்கப்ப இயக்கமாக உருவா
வெகுசனங்களது தேனை
ஒரு கட்சியால் அத்ே வரையறைகட்குட் குறு
அன்றைய அரசியல் நி
அரசியலுக்கு அது அவ
கனவான், கல்விமான் ே
இருந்து வந்த 3
போராட்டங்களும் பிரமு
தளத்திலேயே நிகழ்ந்தன
தனக்குள்ளேயே சாதிய,
அதிகார அடுக்குகளையு ஒரு சமூக அமைப்பைச் தலைமையால் மொழியி
தமிழ்ப் பேசும் சமூகங்க என்ற கேள்வி அன்று மு
நிற்கிறது.
 
 
 
 

மீழ்க் காங்கிரசுக்கு ஒரு கட்சியாக உருவான
ட்ட வெகுஜன அரசியல்
கவில்லை. ஒடுக்கப்பட்ட
பகளை வைத்துப் போராடும்
தவைகளை தேசிய இன
க்கிக் கொள்ள இயலாது.
லைமைகளில் மேட்டுக்குடி சியமும் இல்லை. சாதிமான்,
போன்றவையே தகுதிகளாக
9ரசியல் கட்சிகளின்
கர்களது பேரம் பேசுதலின்
பிரதேச அடிப்படையிலான ம் பிளவுகளையும் கொண்
சார்ந்து உருவான ஒரு எண் அடிப்படையில் சகல
ளை வழி நடத்தமுடியுமா
தல் இன்று வரை நம் முன்