கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நந்தி உடையார்

Page 1


Page 2

நந்தி உடையார்
வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம்
எழுதியவர் அருணா செல்லத்துரை
அருணா வெளியீட்டகம் A15/1/1, மனிங் ரவுண் வீடமைப்புத் தொகுதி மங்கள வீதி, கொழும்பு 8 இலங்கை தொலைபேசி இல. 688466

Page 3
நந்தி உடையார் - வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 1996
(C) அருணா செல்லத்துரை
பதிப்பாசிரியர் : அருணா செல்லத்துரை
ஆசிரியரின் ஏனைய பங்களிப்புகள்
1. "வீடு" தொலைக்காட்சி நாடகமும்/வானொலி நாடகங்களும்
2. வேழம்படுத்த வீராங்கனை முல்லை மோடி வட்டக்களி
நாட்டுக்கூத்து/ஒளிப்பேழை
3. "ஒலித்தென்றல் - 1" மெல்லிசைப்பாடல்கள் ஒலிப்பேழை
4. அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்
(வானொலி/தொலைக்காட்சியில் ஒளி/ஒலிபரப்பாகியவை)
5. "ஒலித்தென்றல் -2" மெல்லிசைப் பாடல்கள் ஒலிப்பேழை

BBLOGRAPHICAL DATA
Title of the book
Language
Written by
Copyright of
Published by
First Edition
Types used
Number of Pages
Number of Copies
Cover designed by
Computer Type Setting:
Printed at
Subject
Price
NANTH UDAYAR
(Drama)
Tam i
Aruna Selladurai
Author
Aruna Veliyettaham
December 1996
10 point
96
1000
Namthitha
V. Sadagopan
Thranjee Prints
Drama
RS. . 00/=

Page 4
உடம்பினுள் உதிரமாய்
உள்ளத்துள் உரமாய்
உள்நின்று ஊக்குவிக்கும்
என்தந்தை
கதிரவேலு அருணாசலத்திற்கும்
என் அன்பு அன்னை
அன்னம்மாவிற்கும்
பத்தாம்பளையான
வற்றாப்பளை உறையும்
பெத்தாச்சி
கண்ணகை அம்மனுக்கும்
காணிக்கையாகும் என்படைப்புகள்
அருணா செல்லத்துரை

அருணா செல்லத்துரை:
முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், முள்ளியவளை சைவப் பாடசாலை, வற்றாப்பளை ரோமன் கத்தோலிக்க பாடசாலை, வித்தியானந்தாக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். 1960க்குப் பின்னர் முள்ளியவளை இயல், இசை, நாடகக் கலாமன்றம், பாரதி இளைஞர் இலக்கிய மன்றம் போன்றவற்றில் பொறுப்பான பதவிகளை வகித்து பல மேடை நாடகங்களை எழுதியும், தயாரித்தும், நடித்தும் இயக்கியும் அனுபவம் பெற்றவர்.
1970ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சி உதவித் தயாரிப்பாளராகச் சேர்ந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பதவி உயர்வுபெற்றவர். வானொலியில் நாடகங்கள், உரைச்சித்திரங்கள், விளம்பர நிகழ்ச்சிகள் போன்றவற்றை எழுதியும் தயாரித்துமுள்ளார். கடந்த 26 வருடங்களாக வானொலி நடிகராகவும், பகுதி நேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார். 1974ல் இலங்கைக் கலைக்கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் முல்லைத்தீவுப் பிரதேச மரபுவழி வட்டக்களரி நாட்டுக்கூத்தானதோவலன் கூத்தை மேடைக்காகத் தயாரித்து மேடையேற்றி முதல் பரிசைப் பெற்று, பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பாராட்டைப் பெற்றவர்.
1981ல் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சிக்காக மேற்கு ஜேர்மனி,சென்று பயிற்சி பெற்றவர். பின்னர் 1984ல் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொலைக்காட்சி செய்திப் பரிவர்த்தனை பற்றி பயிற்சி பெற்றவர். தொலைக்காட்சியில் ஆயகலைகள்' என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து பல நுண்க்லைகளைத் தொலைக்கிாட்சி நிகழ்ச்சியாக தயாரித்தவர். 'ஒளித்தென்றல்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடங்கி பல மெல்லிசைக் கலைஞர்களின் திறமைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்த நிகழ்ச்சிக்கென 56 மெல்லிசைப் பாடல்களை ஒலிப்பதிவு செய்து அவற்றை தொலைக்காட்சிப் பாடல்களாக நெறிப்படுத்தியவர். அத்துடன் தொலைக்காட்சியில்உதயகீதம்மெல்லிசைக் கலைஞர் அறிமுக நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவூர். தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர். சிறுகதைகள், மற்றும் வானொலி,தொலைக்காட்சி போன்றவற்றிற்கு பல மெல்லிசைப் பாடல்களும் எழுதியுள்ள இவர் 'திருப்பங்கள்’ என்ற தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்து தொலைக்காட்சி நாடக வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர். 'விடுஎன்ற மூன்று அங்கங்களைக் கொண்ட நாடகத்தினை எழுதி ரூபவாஹினிக் கலையகத்தில் தயாரித்து நெறிப்படுத்தியவர். தொலைக்காட்சித் துறையில் புதிதாக பிரவேசிப்பவர்களுக்கு உதவும் வகையில்
5

Page 5
அந்த சாதனம் தொடர்பாக கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய பிரதி தயாரிப்புதயாரிப்புநுட்பங்கள் போன்றவைபற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள உதவும்வகையில்"விடுநாடகத்தைநூல்வடிவமாக வெளியிட்டவர். தொடர்புச் சாதனத்துறையில் ஈடுபட்டு தான் பெற்ற அனுபவங்கள் மூலம் ஒரு சில விடயங்களை விளக்க எடுக்கப்பட்ட இந்த முயற்சி பலரது பாராட்டைப் பெற்றதாகும். இந்த நூல் பற்றி கலாநிதி சி.மெளனகுரு அவர்கள் குறிப்பிடுகையில் "எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்பவல்லுனர் என்ற நான்கின் இணைவு அபூர்வமானது. இந்த நான்கு அம்சங்களும் அருணாவில் இருப்பது அவரது பிளஸ் பொயின்டாகும். இதுவே அவரது முதலீடாகும். இம் முதலீட்டை ஆதாரமாகக் கொண்டு இவர் பெருலாபமீட்ட வேண்டும். சிறந்த நாடக எழுத்தாளராக, இயக்குனராக வளர்வதறகுரிய நல்ல குணாம்சங்கள் இவரிடம் உள்ளன. வீடு நாடகம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்" என்று கூறியிருந்தார். இந்த நூல் பற்றி பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராஜன் அவர்கள் குறிப்பிடுகையில் "தமிழிலே வெளிவந்த ஒரு தொலைக்தாட்சிஹத்தியார்" என்று பாராட்டியிருந்தார். இந்த நூல்993ம் ஆண்டு ஈழத்தில் வெளிவந்த ஆக்கவிலக்கியங்களில் நாடகம் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றாக யாழ் இலக்கிய வட்டத்தின் இலங்கை இலக்கியப் பேரவையின் இலக்கியச் சான்றிதழ் பெற்றதாகும்
இலங்கையின் வன்னி வள நாட்டிலே மங்கி மறையும் புரான சரித்திரங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றான வேலப்பணிக்கன் ஒப்பாரியில் இருந்து நாட்டுக்கூத்து வடிவமாக்கப்பட்ட வேழம்படுத்த வீரருங்கனை என்ற நாட்டுக் கூத்தை மாணவிகளுக்குப் பழக்கிமேடையேற்றி பல பரிசில்களைப் பெறச் செய்தவர். அந்தக் கூத்தை 1993ம் ஆண்டு நடைபெற்ற வவுனியா பிரதேச தமிழ்சாகித்திய விழாவில் மேடையேற்றியவர். பின்னர் கொழும்பில் நடைபெற்ற சாகித்திய விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியாக மேடையேற்றி அறிஞர்கள் பலரின் பாராட்டைப் பெற்றவர். இதன் பின்னர் இந்த முல்லைமோடி நாட்டுக் கூத்தை 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிப்பேழையாக வெளியிட்டார். இதன் மூலம் இலங்கையின் வன்னிக் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முதலாவது நாட்டுக்கூத்து ஒளிப்பேழை என்ற பெருமையையும் வேழம்படுத்த வீராங்கனை பெற்றுக் கொண்டது.
1995ல் அவரால் எழுதப்பட்ட மெல்லிசைப் பாடல்கள் நூலும், பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையும் வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்தப் பாடல்கள் அனைத்தும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலிப்பதிவாகி மெல்லிசைப்பாடல்களாக ஒலி, ஒளிபரப்பாகியவை என்பது குறிப்பிடத்தக்கது.
6

வானொலி-தொலைக்காட்சி மெல்லிசைப் பாடல்கள் வரிசையில் நூலுருப் பெற்ற முதலாவது வெளியீடு என்ற பெருமையை "அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள்" என்ற நூல் பெற்றுக் கொள்கிறது. அதேபோல் மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய முதலாவது ஒலிப்பேழையை ஒலித்தென்றல் -i என்ற பெயரில் வெளியிட்ட பெருமையையும் அருணா செல்லத்துரை அவர்களையே சாரும் .
கொழும்பு அகில இலங்கை சபரிமலை பூரீசாஸ்தா பீடத்தினால் 1992ம் ஆண்டு "கலா விநோதன்" என்னும் சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டு, அதி உத்தம முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு ஜே.ஆர்.ஜயவர்த்தனா அவர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டவர்.
1993ம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற வவுனியாப்பிரதேச தமிழ் சாகித்திய விழாவில் இந்துசமயக் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கெளரவ பி.பி.தேவராஜ் அவர்களினால் பொன்னாடை போர்த்திக் Gasarvasstillni.
1994ம் ஆண்டு கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய தமிழ் கலைவிழாவில் தொடர்பியல் வளர்ச்சிக்கு ஆற்றிய பணியினைப் பாராட்டி "தொடர்பியல் வித்தகர்" எனும் டட்டம் வழங்கப்பட்டு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் নওগােদ্য6 லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டுள்
1996ம் ஆண்டு "ஒலித் தென்றல் -2" என்ற ஒலிப்பேழையில் மா.சத்தியமூர்த்தி அவர்கள் பாடிய மெல்லிசைப்பாடல்களை வெளியிட்டுள்ளார். இவருடைய் அடுத்த முயற்சியாக நந்திஉடையார் எனும் வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் நூல் வடிவமாக வெளிவருகிறது.

Page 6
நந்தி உடையார் பிறந்த கருவூலம்
என் மனதில் இந்த நாடகத்தை எழுத வேண்டுமென்ற ஆவல் நீண்ட நாட்களாக இருந்தது. முள்ளியவளையில் எனது வீட்டின் அண்மையில் தான் வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவில் இருக்கிறது. அம்மன் கோவில் மணியோசை எனது வீட்டிற்கும் கேட்கும். காலை வேளையில் எனது தகப்பனார் கோவில் மணியைக் கேட்டதும் கண்ணகை அம்மனைக் கையெடுத்துக் கும்பிடுவது வழக்கம். அதன் தாக்கம் என்னையும் பற்றிக் கொண்டது. அதனால் அந்தக் கோவிலைப் பற்றியும், அதன் சுற்றாடலைப் பற்றியும், எனது தகப்பனாரிடமும், மற்றையோரிடமும் கேட்பது வழக்கம்.
கண்ணகை அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள வயல்வெளி நந்தி வயல் வெளியெனவும், சுற்றியுள்ள பரவைக்கடல் நந்திக்கபூல் எனவும்
8 • به سسهاست. سیستم. அழைக்கப்படுவது இப்பிரதேச வாசிகள் அனைவருக்கும் தெரிந்ததே. இப்பகுதியில் நந்தி உடையார் வாழ்ந்த காரணத்தால்தான் இந்தக் காரணப் பெயர்களான நந்திக்கடல், நந்தி வெளி போன்ற பெயர்கள் வந்ததாகக் கூறுவர்.
வன்னிப்பகுதியில் ஒட்டுகட்டான் தான்தோன்றி ஈசுவரர் கோவில் மிகவும் பிரபலமான ஈசன் கோவிலாகும். இந்தப்பகுதியில் முத்துஜயன் என்ற குறுநில வன்னிபம் ஆட்சிபுரிந்தான். அவனே முத்துஐயன் கட்டுக்குளத்தைக் கட்டுவித்தான். அந்த வன்னிபத்தை முத்தையன், முத்தரையன், முத்துராசன் எனவும் அழைத்ததாக வாய்மொழித்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அந்தக் குளம் முத்தரையன் குளம் என அழைக்கப்பட்டு வந்ததாகவும் பின்னர் காலப்போக்கில் முத்துஐயன் கட்டுக்குளம் என்ற சரியான பெயர் நிலைத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுசுட்டானிலிருந்த முத்துஜயன், வற்றாப்பளையை ஆட்சி செய்த நந்தி உடையார் மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். நந்தி உடையார் மறுப்புத் தெரிவித்துவிட்டார். இதனால் கோபமுற்ற முத்துஜயன் தான் கட்டிய குளத்தில் இருந்து தண்ணிர் பாய்வதைத் தடுத்து விட்டான். நந்தி உடையார் பருவமழையை நம்பி விவசாயம் செய்ய ஆரம்பித்தார். ஆத்தை மறிக்கலாம், குளத்தை மறிக்கலாம் ஆனால் கார்த்திகை மாதத்துக் கர்க்கடகத்தை மறிக்க முடியாது என்ற முதுமொழியொன்று இப்பிரதேச வாசிகளால் நம்பப்படும் ஒன்றாகும். அதாவது கார்த்திகை மாதத்தில் வரும் கர்க்கடகத்தன்று பெருமழை பெய்யும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாகும்.
8

நந்தி உடையாரின் நம்பிக்கை வீண் போகவில்லை. கார்த்திகை மாதத்துக் கர்க்கடகத்தன்று பெருமழை பெய்தது. முள்ளியவளை குஞ்சுக்குளம், பள்ளவெளி ஆகியவற்றில் நீர் நிறைந்தது. அதனால் நந்தி வெளியில் வேளாண்மை செழித்தது. வேளாண்மை நன்றாக விளைந்ததால் நந்தியுடையார் வன்னிப் பாரம்பரிய முறைப்படி பரத்தை போட்டு அருவி வெட்டினார். இதைக் கேள்வியுற்ற முத்துஐயன் பெரும் கோபம் கொண்டான். அன்றிரவு குளக்கட்டை வெட்டி வெள்ளப்பெருக்கு ஏற்படச் செய்தான். நந்தியுடையாரின் வயல்வெளியில் இருந்த உப்பட்டிகள் அனைத்தும், வெள்ளப் பெருக்கினால் நந்திக்கடலூடாக பெருங்கடலில் கொண்டு சேர்க்கப்பட்டன. மனவருத்தமடைந்த நந்தியுடையார் காலமானார் என்று எனது தகப்பனார் கூறக் கேட்டிருக்கிறேன்.
தண்ணிமுறிப்புக் குளத்தின் கீழ் 3 ஏக்கர் காணி எங்களுக்கு இருந்தது. நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அடிக்கடி அங்கு போவது வழக்கம். தண்ணிமுறிப்புக்கு நாம் போகும் போது தண்ணிரூற்றுகுமுளமுனை வீதி வழியாகவே செல்வது வழக்கம். தண்ணிரூற்றுக்கும் குமுளமுனைக்கும் இடையே கணுக்கேணியில் உள்ள முறிப்புக் குளப் பகுதியில் பூதன் வயல்வெளி என்ற பெயரில் ஒரு வயல்வெளி இருக்கிறது. இந்த வயல்வெளி பூதன் என்பவருக்கு சொந்தமானது. இதைப்பற்றியும் எனது தகப்பனாரிடம் நான் கேட்பது வழக்கம். பூதங்கள் எப்படியிருக்கும்? மிகவும் பலம் வாய்ந்தவை. பருத்த உடலைக் கொண்டவை. விரல்கள் மிக குட்டையாகக் காணப்படும் என்பது எனது தந்தையாரின் விளக்கம். ஆனால் இவற்றை நேரடியாகக் தண்டவர்கள் ஒருவரும் இல்லை) பூதங்களை வைத்து பராமரித்தவர் பூதன் எனவும் அவனுக்கு அந்த வய்ல்வெளி பரிசாக வழங்கப்பட்டது என்பதும் வாய்வழித் தகவல்களாகும். இவற்றுக்கு எந்தவித சரித்திரச் சான்றுகளும் கிடையாது. அப்படியானால் பூதங்கள் இப்போது எங்கே என்ற கேள்வி எழுகின்றது. இதே கேள்வியை நானும் கேட்டேன்.
குளங்களைக் கட்டுவதற்கு பூதங்களை உபயோகித்தனர். பின்னர் அவற்றை பராமரிக்க முடியாமல் போனது. ஏனெனில் அவற்றுக்குச் சாப்பாடு போடுவதற்கு அதிக செலவு ஏற்படும்.
பூதங்கள் மிகவும் நேர்மையானனுவூ, ஏதாவது ஒரு வேலையை ஒப்படைத்தால் அந்த வேலையைச் செய்துமுடிக்காமல் அவை தங்குமிடம் திரும்பாது. இதனை அறிந்திருந்த வன்னிபம் பூதங்களால் செய்ய முடியாத வேலை ஒன்றை ஒப்படைத்தான். முதிரை மரங்களைப் பட்டையடித்து குளத்து
9

Page 7
வானுக்குள் போட்டு அவற்றைத் தூக்கி வரும்படி கட்டளையிட்டான். மிக குட்டையான விரல்களுள்ள பூதங்களால் அவற்றை தூக்க முடியவில்லை, பசை காரணமாக மரங்கள் வழுக்கி விழத் தொடங்கின. மரங்களை தூக்க முடியாமல் போன பூதங்கள் நாட்டை விட்டு காட்டுக்குள் போய்விட்டன என்பது தந்தையாரின் பதில். இவற்றுக்கு எல்லாம் தர்க்க ரீதியான ஆதாரங்களை அப்போது அவரால் தரமுடியவில்லை.
தந்தையார் கூறிய தகவல்களையும் பிரதேச வாசிகளான எனது உறவினர்கள் கூறிய தகவல்களையும் சரித்திரச் சான்றுகளையும் இணைத்து இந்த நாடகத்தை எழுதியுள்ளேன். வன்னிப் பிரதேசத்தின் புகழ்பூத்த வற்றாப்பளைக் கண்ணகை அம்மன், தான்தோன்றி ஈஸ்வரர், பண்டாரவன்னியன், வேழம்படுத்த வீராங்கனை- அரியாத்தை போன்றவர்கள் வரிசையில் நந்தியுடையாரும் வன்னிப் பிரதேசத்தின் அடையாளமாகக் திகழ்வார் என்பது திண்ணம்.
வழமையான நாடகங்களில் வரும் பிரச்சினைகள் போலல்லாமல் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தில் வரும் களங்கள் வன்னிப் பிரதேசத்தின் வயல்வெளிகளாக இருப்பதனால் வன்னிப் பகுதியில் பிரபல்யம் பெற்ற நாட்டார் பாடல்களையும் சேர்த்துள்ளேன். இதனால் இந்த நாடகத்தை வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் என அழைக்கலாம்.
அருணா செல்லத்துரை
10

நந்தி உடையார் நாடகக் கதாபாத்திரங்களுக்கும், நாடகக் களங்களுக்குமான சில வரலாற்றுத் தகவல்கள்
நந்தி உடையார்:
எல்லை வடக்கில் எழில் யாழ் பரவுகடல் பல்லோர் புகழருவி தெற்கெல்லை - நல்லதிருக் கோணமலை கிழ்பால் கேதீச்சர மேற்கு மாணத் திகழ் வன்னிநாடு
இந்தப் பாடல் வன்னிநாட்டின் எல்லைகளை வரையறை செய்கிறது. இதன்படி முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மன்னார், மாவட்டங்களும், யாழ்ப்பாணத்தில் ஆனையிறவுக் கடலுக்கு தெற்கேயுள்ள பகுதியும் வன்னிப் பிரதேசம் எனப்படும்.
'Vanni was the name given to Northern country between
the Jaffna peninsula and the Nuwarakalaviya district. Before it aquired the Name it seems to have been known A dan kappattu. m-m-m-
யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கும் நுவரகாவிய மாவட்டத்திற்கும் இடையேயுள்ள இலங்கையின் வட பிரதேசம் வன்னி என அழைக்கப்படும். இப் பிரதேசம் இந்தப் பெயரைப் பெறுவதற்கு முன்னர் அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. சி.எஸ்.நவரத்தினத்தின் வன்னியும் வன்னியரும் எனும் ஆங்கில நூலில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களாகும். T
வன்னியர்கள் இலங்கைக்கு வருமுன்னர் வன்னிப் பிரதேசம் அடங்காப்பற்றெனவே அழைக்கப்பட்டு வந்துள்ளது. அக் கால கட்டத்தில் அப்பிரதேசத்தை ஆட்சி செய்தவர்கள் யார்? என்ற கேள்வி இதுவரை கேள்வியாகவே இருக்கிறது.
செல்வி கதங்கேஸ்வரிஅவர்கள் எழுதிய "மாகோன் வரலாறு" என்ற நூலிலே 125ம் ஆண்டில் மாகோன் வருகை ஈழ வரலாற்றிலே ஒரு முக்கிய

Page 8
திருப்பு முனையாக அமைந்துள்ளது என்றும், மாகோன் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் பல வன்னிமைகளை நியமித்து, கிராமப்புற நிர்வாகங்களையும், கோயில் திருப்பணிகளையும் நிறைவேற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே திருகோணமலை வன்னிமை தொடர்பாக தோணேசர் கல்வூெட்டு, திருக்கோணாசல புராணம் ஆகியவற்றில் தகவல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாகோன் காலத்தில் (கி.பி.1215) இலங்கையின் வடக்கிலும், பல வன்னிமைகள் நிலைபெற்றிருந்தன. மாகோன் காலத்தில் குடியேற்றப்பட்டவர்களும் இதில் அடங்குவர் எனவும், முதன் முதலாக சோழப் பேரரசின் எழுச்சிக் காலத்தில் (கி.பி.985) ஈழம் சோழர்களது நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்ததாகவும், சோழ அரசின் பிரதானிகள் அவர்களது பிரதிநிதிகளாக ஈழத்தை ஆட்சி செய்ததாகவும் மாகோன் வரலாற்றிலே செல்வி தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். அப்படிப் பார்க்கும் போது வன்னியர்களின் வருகைக் காலம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
ஆகவே இன்னுமொரு கேள்வியும் இங்கு தொக்கி நிற்கிறது. வன்னிை ன்பது நிர்வாக அதிகாரிகளைக் குறிக்கிறதா? அல்லது வன்னியர்கள் என்ற இனத்தைக் குறிக்கிறதா என்பதாகும்.
அதுமட்டுமல்ல மகியங்கனைப் பகுதியில் வாழ்ந்து வரும் வேடர்கள் தங்கள் தலைவனை அழைக்கும் போது "வன்னி அத்தோ" என்றே அழைக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடங்காப்பற்று வன்னியர் ஆட்சிக்கு கீழ்வருவதற்கு முன்னர் ஆறு பற்றுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
1. பனங்காமபற்று 2. கரிக்கட்டுமூலைப்பற்று 3. கருநாவல்பற்று 4. மேல்பற்று 5. முள்ளியவளைப்பற்று 6. தென்னமரவடிப்பற்று

இவற்றை விட இப் பிரதேசம் மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது என்பதற்கு கரைதுறைப்பற்று என்ற பிரயோகம் வழக்கத் திலிருந்தைக் குறிப்பிடலாம். அண்மைக் காலம் வரை முல்லைத்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சமாஜம் கரைதுறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சமாஜம் என்ற பெயரிலேயே அமைந்திருந்தது. முல்லைத்தீவு, முள்ளியவளை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தண்ணிருற்று, வெள்ளாம் முள்ளிவாய்க்கால், அளம்பில், குமுளமுனை, அம்பலவன் பொக்கணை, தண்டுவான் ஆகிய 10 கிராம சேவகர் பிரிவுகள் கரைதுறைப்பற்று என அழைக்கப்பட்டு வந்தது. இதை விட வேறும் பல பிரிவுகள் பற்றுக்களாகக் பிரிக்கப்பட்டு இருந்தன.
முள்ளியவளைப்பற்றுக்கு மயிலூத்தை உடையார் வன்னிபமாக இருந்துள்ளார் என்பதற்கு கயிலுை வன்னியனார் மடதர்ம சாதனப் பட்டயம் சான்று பகருகின்றது. பேராசிரியர் சி.பத்மநாதன் கயிலை வன்னியனார் மடதர்ம சாதனப்பட்டயம் என்ற தலைப்பிலேயே எழுதியுள்ள கட்டுரையிலே
பின்வருமாறு கூறியுள்ளார்.
"வன்னிமைகளைப் பற்றி இதுவரை கிடைத்துள்ள வரலாற்று மூலங்களிலே 1722ஆம் ஆண்டு எழுதப்பெற்ற கயிலை வன்னியனார் மடதர்ம ஆதனப்பட்டையம் என்பது மட்டுமே சாசனமாகும். அது வன்னியர்களினாலே வழங்கப்பட்ட தானமொன்றினைக் குறிப்பதனால், அடங்காப்பற்று வன்னிமைகள் பற்றிய ஆவணங்களிலே அது அதிக வரலாற்றுமுக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியிலே அடங்காப்பற்றில் அதிகாரம் செலுத்திய வன்னிபங்கள் பெரும்பாலானோரின் பெயர்கள் அதைப் போல வேறெந்த ஆவணத்திலும் இடம்பெறவில்லை. 17ம் நூற்றாண்டுக்குரிய கொம்பனி அதிகாரங்களின் அறிக்கைகள் வன்னிமைகள் பற்றிய சில விபரங்களைக் கொண்டுள்ள போதிலும் அவற்றுள் பட்டயத்தினைப் போல் அதிகமான பெயர்கள் குறிப்பிடப்படுவதாக தெரியவில்லை. இந்த வகையிலேயே அந்தப் பட்டயத்தின் முக்கியத்துவத்தை ஏற்ற வகையிலேயே புரிந்து கொள்வதற்கு அதில் குறிப்பிடப்பட்ட வன்னிமைகளையும்,
வன்னிபங்களையும் கீழ்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.
13

Page 9
வன்னிப்பிரிவு
1. பனங்காமம்
2. மேல்பத்து
3. மேல்பத்து-முள்ளியவளை
4. கரிக்கட்டுமூலை
5. தென்னமரவடி
வன்னிபம்
1. நிச்சயச் சேனாதிராயமுதலியார்
2. குலசேகர முதலியார்
1 ரனசூர ரண தீரராக
வன்னியனார்
2. கந்தயின வன்னியனார்.
1இலங்கை நாராயண முதலியார் 2. மயிலாத்தை உடையார்
பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் அடங்காப்பற்றுவன்னிமைகள் (1720-1760) என்ற தலைப்பிலே எழுதிய மற்றுமொரு கட்டுரையிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:- "ஒல்லாந்தரின் மேலாட்சிக் காலத்திற்குரிய (1658-1796) அடங்காப்பற்று வன்னிமைகளின் வரலாற்றைப் பொறுத்த வரையிலே தேசாதிபதிகள்,கொம்மாந்தர்கள் போன்ற உயரதிகாரிகள் எழுதிய அறிக்கைகளே பிரதான வரலாற்று மூலங்களாக அமைகின்றன. அதன்படி ஒல்லாந்தத் தேசாதிபதிகளுக்கும் கொம்பனி உயரதிகாரிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளே ஆதாரமாக இருக்கின்றன. இவற்றில் கொம்பனி அதிகாரிகளின் நிபந்தனைகளையே அவை பிரதிபலிக்கின்றன. இந்த ஆவணங்களின் துணைகொண்டுவன்னியங்களைப் பற்றிய விபரங்களை கீழ்வருமாறு அட்டவனைப்படுத்தியுள்ளார்.
வன்னிப்பிரிவு
1. பனங்காமம்
2. கரிக்கட்டுமூலை
3. கருநாவல்பத்து
4.
வன்னிபம்
தொம்பிலிப்பு நல்ல மாப்பாணர்
தொம்தியோக்புவி நல்லமாப்பாணர் (1697-1715, 1720-1747)
தொங் தியோ அகிலேசன் புவிநல்லமாப்
rä(1745–1766)

4. மேல்பத்து தொங் கஸ்பார் இலங்கை நாரண
முதலியார் (1715-1747)
5. முள்ளியவளை. தொங் கஸ்பார் இலங்கைக் காவல புவிநல்ல மாப்பானவன்னியனார் (1747-1757)
இந்த விபரங்களோடுதந்தப்பூர்மையிலாத்தை என்பரொருவர்.1812ம். ஆண்டளவிலே வன்னிபம் ஆயிருந்தார் என்பதை ஹென்றிக்பெக்கர், (HENDRIC BECKER) அறிக்கை மூலம் அறிய முடிகின்றது. கந்தப்பர் மைலாத்தையை கயிலை வன்னியனார் மட தர்ம சாதனம் குறிப்பிடுகின்ற மைலாத்தை உடையொரென அடையாளம் கொள்வோமாயின் மைலாத்தை உடையார் 1715க்கு முன்பே வன்னிடமாக நியமனம் பெற்றிருக்க வேண்டும். சாசனத்திலே மைலாத்தை உடையாரின் பெயரானது இலங்கை நாராயணரின் பெயரை அடுத்து வருவதால் இருவருள்ளேயும் பின்னயவரே முதன்மை வன்னிபமாயிருத்தல் வேண்டும் என பேராசிரியர் சி. பத்மநாதன் தனது கட்டுரையிலேயே தெரிவித்துள்ளார்.
கொம்பனி அதிகாரங்களின்போது எழுதப்பட்ட ஒப்பந்தங்களில் பெயர்கள் குறிப்பிடப்படும்பொழுது ஆட்சியாளர்களின் பெயர்களின் முன்னால் தொம் பிலிப்பு, தொம்தியோகு போன்ற கிறிஸ்தவப் பெயர்கள் க்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். அதிகமான ஒப்பந்தங்கள் மானிய முறைக் கோட்பாடுகளையே எடுத்துக் காட்டுகிறது. அதாவது ஒவ்வொரு வன்னிபமும் நியமனம் பெற்றபின் அவர்கள் தன் பெயரிலுள்ள பிரதேசங்களின் பொருட்டு 30 கடமை யானைகளை கொடுக்க வேண்டும் Tsör gp உடன்பாடாகியிருந்தது. வன்னிபங்கள் கடமை யானைகளை கொம்பனியின் அரசாங்கத்திற்கு கொடுக்காதவிடத்து குறைபடுகின்ற யானைகளுக்கு அலியன் யானை ஒன்றுக்கு 1000 பறை நெல்லு அல்லது 280, இறையால் நெல்லு என்ற பிரகாரமாக கப்பூம், செலுத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது என்பதை இவ்வுடன்படிக்கை மூலம் அறிய முடிகின்றது என பேராசிரியர் சி. பத்மநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாம் பார்க்கும் போது வன்னிப் பிரதேசத்தில் இரண்டு தொழில்கள் முக்கிய இடம்பெற்றுள்ளன என்பது தெளிவாகின்றது. காடுகளில்
5

Page 10
அதிகரித்து காணப்பட்ட யானைகளைப் பிடிப்பதும், குளங்கள் கட்டி விவசாயம் செய்வதுமேயாகும். இதனால் கட்டப்பட்ட அநேக குளங்களுக்கு இப்பகுதியில் ஆட்சியில் இருந்த வன்னிபங்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாய் இருக்கின்றது. உதாரணமாக(முத்துஐயன் கட்டுக்குளம், மதவளசிங்கங்குளம், தெணியன்குளம், /போன்றவற்றையும், கையிலைவன்னியனார் மடதர்ம சாசனத்திலே குறிப்பிடப்படும் இலங்கை நாரண பெயரைக்குறிக்கும் இலங்கை நாராயண் குளத்தையும், முதலியார்களைக் குறிக்கும் வகையில் முதலியாகுளத்தையும், உடையார்கள் ஆட்சி செய்ததைக் குறிக்கும் வகையில் புதுக்குடியிருப்பு அரசாங்க அதிபர் பிரிவில் உடையார்கட்டுக் குளத்தையும் உடையார்கட்டுக் கிராமத்தையும் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.
வன்னிபம், வன்னிமை, முதலியார், உடையார் போன்ற ஆட்சியாளர்கள் பிற்காலங்களில் தமது குடும்ப அங்கத்தவர்களையே கிராம நிர்வாகிகளாக நியமித்தனர். முதலியாரின் மகனோ, உடையாரின் மகனோ பிற்காலங்களில் விதானையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அக் காலத்தில் அவரின் கல்வித் தகைமையோ மற்றும் தராதரங்களோ இப்பதவிக்கு முக்கியமானதாகக் கருதப்படவில்லை. அண்மைக் காலம் வரை இது நடைமுறையில் இருந்தது. தற்போது விதானையார் என்ற பதவி போட்டி பரீட்சைகளின் மூலமும் மற்றும் நேர்முகப் பரீட்சைகளின் மூலமுமே தெரிவு செய்யப்படுகிறது.
மேற் கூறிய தகவல்களில் இருந்து இரண்டு விடயங்களை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
வன்னிப் பிரதேசத்தில் இருந்த உடையார்கள், வன்னிuங்கள், வன்னிமைகளுக்கு சரிசமனாக இருந்துள்ளர்கள் என்பதும், முள்ளியவளையில் உடையார்கள் வன்னிபங்களாக இருந்தார்கள் என்பதும் தெளிவாகின்றது. இவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை காணப்படவில்லை என்பதும், இதனால் அடிக்கடி வன்னிபங்களை மாற்றி நியமிக்க வேண்டிவந்தது என்பதும் கொம்பனி அதிகாரங்களின் ஒப்பந்தங்களில் இருந்து தெரியவருகின்றது. இவற்றிற்கான காரணம் இரண்டு விதமான ஆட்சியாளர்கள் இப்பிரதேசத்தை ஆட்சி செய்து வந்தமை எனக் கூறலாம். உடையார்கள் விவசாயத்தைத் தமது முக்கிய தொழில் ஆகவும், வன்னிபங்கள் காட்டு யானைகளை பிடித்
காடுப்பதில் அக்கறையுடையவர்களாகவும் இருந்தார்கள் எனலாம். அல்லது
வன்னியர்கள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னர் வந்தபடியால்,
16
 
 
 
 

அடங்காப்பற்றின் பழங்குடி மக்களை ஆட்சி செய்த உடையார், முதலியார் குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினைகள் தோன்றியிருக்கவும் நியாயமுண்டு. இதனால் தான் வன்னிபங்கள் மற்ற பகுதிகளின் ஆட்சியாளராக இருந்த உடையார்களுடன் திருமணபந்தம் செய்ய விரும்பியபோதும் உடையார்களாக இருந்தவர்கள் மறுத்து வந்துள்ளார்கள். நந்தி உடையாரின் மகளை முத்துஐயன் திருமணம் செய்ய விரும்பிய போதும் நந்தி உடையார் மறுத்து விட்டதில் இருந்து நாம் இதனை விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. வன்னிபங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய யானைகளுக்குப் பதிலாக நெல்லிறுக்க வேண்டிய தேவை இருந்தபடியால் அவர்கள் நீர்வரியாக நெல்லைக் கேட்டார்கள் என்ற தகவலையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகின்றோம். இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கலாசாரப் பண்பாடுகள் எவ்விதம் இருந்தன என்பதற்கு சரித்திரச் சான்றுகள் இல்லாதபடியால்(வாய்வழித் தகவல்களையும், காரணப் பெயர்களையும் கொண்டே நாம் ஊகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நந்தி உடையார் அவர்களின் பெயர் சரித்திரக் குறிப்பேடுகளில் தவிர்க்கப்பட்டிருந்தாலும், ஆம்மன் சிந்துகளில் காணப்படும் நந்திவெளி, நந்திக்கடல் போன்ற காரணப் பெயர்களைக் கொண்டும் வாய்வழித் தகவல்களைக் கொண்டும் நந்தி உடையார் வாழ்ந்திருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேற்கூறிய ஆதாரங்களைக் கொண்டு நந்தி உடையார் இப் பகுதியின் வன்னிபமாக இருந்தார் என்பதை நாம் நியாயப்படுத்தலாம்.
இனிவரும் ஆய்வியல் மாணவர்கள் இவற்றிற்கான ஆதாரங்களைத் தேடுவதற்கு இந்தத் தகவல்கள் உதவினால் அதுவே எனது நோக்கம் நிறைவேறியதற்கான சான்றாகும்.
நந்திக்கடல்
வன்னிவள நாட்டுப் பாடல்களிலே நந்திக்கடல் முக்கிய இடத்தைப் பெறுகிறது. மிகவும் பிரபல்யம் பெற்ற அம்மன் சிந்திலே
வெற்றிலையைத்தானே விளிம்பிலே கட்டி
வேதியர்கள் அப்போது வேடிக்கையாக மங்காத தேவி குழ் நந்திக்கடல் கரையில்
ஆலயம் தன்னிலே பொங்கல் மடை செய்து
7

Page 11
பொங்கல் மடை செய்தே அம்மன் நிறைவிளக்கேற்றி
பொன்னின் குடக்கும்ப மேதினில் நிறுத்தி
கங்கை குழ் வன்னியோர் ஐந்துபற் றெல்லோரும்
காராளரும் மட மாதர் எல்லோரும்
தஞ்சமென்றே உனது தாளினைப் பணிந்தோம்
தாயே நீ வந்து காத்தருளவேனும்
(வன்னிவள நாட்டுப்பாடல்கள்)
இதே போல அமமன் சிந்திலே பல இடங்களில் நந்திக்கடல் குறிப்பிடப்படுகின்றது. நந்திக்கடல், வன்னிப் பிரதேச வாசிகளினால் மறக்க முடியாத ஒன்றாகும். சிலப்பதிகார கண்ணகி மதுரையை எரித்த பின் தென்னிலங்கை சென்றதாக ஐதீகம். கண்ணகி தென்னிலங்கை செல்லும் வழியில் பத்தாவது இடமான பூத்தாம் பஹையிலே (பின்னர் பத்தாம்பளை வற்றாப்பளையாக திரிபடைந்தது என பிரதேசவாசிகள் கூறுகின்றனர்) நந்திக் கட்ற்கரையில் ஒரு வேப்பமர நிழலில் வந்து இருந்தார். அவ்விடம் நின்ற இடைச் சிறுவர்களை அழைத்து தான் பசியாக இருப்பதாக கூறி பொங்கல் பொங்கிப் படைக்கும் வண்ணம் கேட்டார். அதன்படி இடைச் சிறுவர்கள் பொங்கிப் படைத்தார்கள். விளக்கின்றி சாப்பிட மறுத்த கண்ணகித்தாய் இடையர்களை நந்திக்கடலில் சென்று நீர் மொண்டு வந்து விளக்கேற்றும்படி கூறினாள். அதன்படி இடைச்சிறுவர்கள் நந்திக்கடலில் நீர் மொண்டு வந்து விளக்கேற்றினார்கள். உப்பு நீரில் விளக்கெரியத் தொடங்கியது. இதை அடியொட்டியே இப்பொழுதும் உப்பு நீரில் விளக்கெரிப்பது வழக்கம். காலப்போக்கில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்திலும் பொங்கல் செய்ய வேண்டி வந்ததினால் இப்பொழுது முல்லைத்தீவு சிலாவத்தை பெருங்கடலில் இருந்து தீர்த்தம் எடுப்பது வழக்கமாகிவிட்டது. தற்போதும் இந்தப் பரவைக் கடல் நந்திக் கடல் என்றே அழைக்கப்படுகிறது. நந்திவெளி:
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவிலின் இரண்டு பக்கமாகவும், நந்திக்கடலையொட்டியும் உள்ள வயல் வெளி, "நந்திவெளி" என அழைக்கப்படுகிறது. இந்த நந்திவெளி இப்பிரதேசத்தில் பாடப்படும் கோலாட்டப் பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அளம்பிலைச் சேர்ந்த மே. செபஸ்தியாம்பிள்ளை அவர்களிடம் கையெழுத்துப்பிரதியாய் இருக்கும் அம்மன் சிந்திலே
18

நால்வேத மந்திரம் நமக்குரைத்தாயே சாலைமிகு நந்திவெளிவந்தமைந்தாயே சாஸ்திரமீராறையும் தேற்றிவைத்தாயே கோலமிகு நந்திவெளிவந்தமைந்தாயே குலவு கற்புடைய கண்ணகையெனும் தாயே
(வன்னிவள நாட்டுப் பாடல்கள்)
என்று குறிப்பிட்டு பாடப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் கூட நந்திவெளிபற்றி பாடல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வன்னிப் பிரதேசத்தில் ஆடப்படும் முல்லைமோடி நாட்டுக் கூத்தான கோவலன் கூத்திலே நந்தி வெளியும் நந்திக் கடலும் குறிப்பிடப்படுகிறது.
பூதங்கள்:
பூதங்களின் தோற்றம் எப்படிப்பட்டது என்பது ஒருவருக்கும் சரிவரத் தெரியாது. மனிதர்களை விட பலம் கொண்டதாகவே இருந்தன என்பதும் விரல்கள் குட்டையாக இருந்தன என்பதும் வாய்வழித் தகவல்களாகத் தெரியவருகிறது. இப்பகுதியில் வாழ்ந்த சிலர் பல மைல் தூரத்தில் உள்ள வயல்களுக்கு நடந்தே சென்றனர் என வன்னிப் பிரதேசத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விளைந்த வயலுக்கு வரும் பன்றிகளை, நாய்களைக் கொண்டு மறித்து அதனைக் கொலை செய்து அதன் இறைச்சியை காவுதடி மூலம் எத்தனையோ மைல் தூரத்திற்கு கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. அதே வயல்வெளிகளையண்டி மாடுகளைக் கட்டி பெறப்படும் பாலை பெரிய பானைகளில் விட்டு, காவுதடிகள் மூலம் பல மைல் தூரம் கொண்டு சென்றதை இப்போதும் வயோதிபர்கள் நினைவு கூருவதை நாம் கேட்டுள்ளோம் ப்படிப் பலம்பொருந்தியவர்களை பூதகணத்தைச் சேர்ந்தவர்தஸ் ரதேச மக்கள் கூறுகிறார்கள். வழமையாகப் பேசும் போது கூட உடல் பெருத்த பலமுள்ள ஒருவனைப் பார்க்கும் போது பூதம் போலிருக்கிறான்' எனக் கூறுவதையும் கேட்கிறோம்.
அரசர்கள் பலம்பொருந்திய படைப்பிரிவைக் குளங்கள் கட்டுவதற்காக வைத்திருந்தார்கள் என்பதை வன்னியில் பிரபல்யம் பெற்ற குளக்கோட்டன் சிந்து மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
19

Page 12
குளக்கோட்டன் சிந்து
சுருதிமொழிதவறாத மனுநீதிமன்னன்
சோளனுதவுஞ் சோள கங்காள கண்டன் பிருதிகுல மன்னன் குளக்கோட்டு ராசன்
u60ծ76)մ է,தப் படைகள் கொண்டு சென்றனரே கருதரிய கல்லு மண்ணும் சுமப்பித்து
கடலும் மலையும் போலவே குளங்கட்டி வருஷமிரு செந்நெல் விளையப் பன்னிரண்டு
மாதமும் புனல் பாய மதவு செய்தனரே
(வன்னிவள நாட்டுப் பாடல்கள்)
பண்டு பூதப் படைகள்' என்பதை பஞ்சபூதங்கள் எனக் கொண்டால் காற்று, மழை, வெயில், நீர் நெருப்பு போன்றவற்றை குறிப்பதாக இருந்தால், அவற்றை அரசர்களால் படைகளாக கூட்டிச் சென்றிருக்க முடியாது என்பது தெளிவு. பூதங்கள் என்ற சொல்லின் அர்த்தம் தெளிவில்லாமல் இருப்பதனால் மனிதரையும் விட பலம் பொருந்தியவர்கள் பூதங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளலாம்.
முல்லைத்தீவு, நெடுங்கேணி றோட்டில் இருக்கும் களிக்காடு - தட்டாமலை போன்ற வயல் வெளிகளுக்கு அண்மையில் "கூடைதட்டின புட்டி" என்றொரு இடம் இருக்கின்றது. அந்த இடத்தில் # காணப்படுகின்றன. இவை சிறிய மலைக் குன்றுகள் போல் காணப்படுகின்றன. இந்த இடமே கூடை தட்டின புட்டி என அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தின் வரலாற்றை நாம் விசாரித்தபோது பூதங்கள் கூடையில் மண் அள்ளிச் சென்று கொட்டியதாகவும், மண்ணைக் கொட்டியபின் கூடையின் அடியில் இருக்கும் மண்ணைத் தட்டியபோது அவை இப்படி சிறு சிறு மண்புட்டிகளாக வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். இவற்றிற்குக் வரலாற்று ரீதியான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் இப்பகுதியில் தொகையான குளங்கள் கட்டப்பட்டு இருப்பதை நாம் கவனிக்கலாம்.
பூதங்கள் இப்பகுதியில் இருந்தன என்பதற்கு கணுக்கேணி முறிப்புக் குளத்தின் கீழுள்ள பூதன் வயல் வெளியையும், கூடை தட்டின் புட்டி ப்ோன்ற இடங்களையும், இப்பகுதியில் சிலரின் பெயர் பூதத்தம்பி என்று இருப்பதையும், சான்றுகளாக எடுத்துக் கொள்ளலாம். -
முத்துஐயன் கட்டுக் குளம்:
வவுனியா மாவட்டத்திலுள்ள ஆயிலடியில் உற்பத்தியாகி நந்திக்
கடல் ஊடாக பெருங் கடலில் கலக்கும் பேராறு எனும் ஆற்றை
ஒட்டுசுட்டானுக்கு வடக்கே மறித்துக் கட்டி முத்துஐயன் கட்டுக்குளம்
20

கட்டப்பட்டிருகின்றது. பேராற்றின் ஒரு கிளையான குருவிச்சை ஆறு பண்டாரக் குளத்தில் உற்பத்தியாகி முத்துஐயன் கட்டுக் குளத்திற்கு கீழே ஐந்து மைல் தொலைவில் பேராற்றில் விழுகின்றது. இந்த ஆற்றில் வரும் நீரின் சிறு பகுதி சிம்மளங்குளம்,புதுக்குடியிருப்புப் பகுதி விவசாயிகளால் சிறிய கட்டுக்கள் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
பேராற்றின் குறுக்கே இன்னுமொரு கட்டு அமைப்பதன் மூலம் மிகப்பெரிய நீர்த்தேக்கம் அமைக்க முடியும் என 'முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்ப்பாசனம்" என்ற தலைப்பில் இ. அருமைநாயகம் எழுதிய கட்டுரையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துஜயன் கட்டுச் ளமே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளமாகும். இதன் அதி கூடிய நீர்மட்டம் 22 அடியாகும். 41000 ஏக்கர் அடி நீர் கொள்ளக்கூடியது. 612 ஏக்கர் தானிக்கு நீர்ப்பாய்ச்சக் கூடிய வசதியுள்ளது. அண்மைக் காலம் வரை இந்தக் குளம் முக்கரையன் கட்டுக் குளம் எனவும் அழைக்கப்பட்டது. பின்னர் காலப் போக்கில் முத்துஐயன் கட்டுக்குளம் என்ற பெயரே சரியென இப்பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தக் குளம் எந்த மன்னனால் கட்டப்பட்டது என்பதற்குக் சான்றுகள் இல்லை. முத்துஐயன் எனும் அரசனே கட்டுவித்ததாக வாய்வழித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் குளங்கள் பற்றிப் பாடப்படும் குளக்கோட்டன் சிந்திலே.
செய்த பின் தென்கோணநாதருக்கென்று
சிலையும் எழுதிக் குளக்கட்டதில் நிறுத்தி மாரியை அடக்கிவரு சத்தியை நிறுத்தி
மங்களா தேவியை காவலாய் வைத்து கைதவனை அன்று பெலியுண்ட பத்தினியையும்
காவலாய் நில்லென்று கட்டளை புரிந்தாய்
பூவொடு பழம் பாக்கு வெற்றிலை அடைக்காய்
பொங்கு பால் அமிர்தம் உண்டாக்கினாரே.
இந்தச் சிந்திலே தென்கோண நாதர் எனக் குறிப்பிடப்படுவது திருகோணநாதர் எனக் கொள்ளலாம் என்பது ஒரு சாராரின் வாதம். திருக்கோணேஸ்வரம் இராவணன் வாழ்க்கையுடன் தொடர்புடுத்தப்படும். குளக்கோட்டன் இவ்வாலயத்தை தரிசித்ததற்கும் திருப்பணி செய்வதற்கும் கோணேசர் கல்வெட்டு சான்று பகருகின்றது.
இதனால் அடங்காப்பற்றிலும் குளங்கள் கட்டிய மனனர்களை குளக்கோட்டன் என அழைத்தார்கள் என்ற கருத்தை உண்மையென நாம் உள்வாங்கிக் கொள்ளலாம்.
2

Page 13
"நந்தியுடையார்" வன்னிப்பாரம்பரிய வரலாற்று நாடகக் கதைச் சுருக்கம்
வன்னிப் பிரதேசத்திலுள்ள ஒட்டுசுட்டான் பகுதியின் ஊடாகப் பேராறு என்ற ஆறு பாய்கிறது. அதனை மறித்துக் குளம் கட்ட தீர்மானிக்கிறான் குளக்கோட்டன் பரம்பரையில் வந்த முத்துஐயன் என்ற வன்னிபம். முத்துஜயன் வன்னிபம் குளக்கட்டு வேலைகளுக்கு பூதங்களை பயன்படுத்த விரும்பி முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து பூதங்களை வரவழைக்கிறான். குளக்கட்டு வேலைகள் இனிது ஆரம்பித்தன. முத்துஜயன் கட்டு குளத்தில் இருந்து நீர்ப்பாய்ச்சுவதற்கு கற்சிலைமடு, கருவேலன்கண்டல், புளியங்குளம், கூழாமுறிப்பு, மானுருவி, பேராத்துவித்தன், கொண்டைமடு, கேப்பாபிலவு போன்ற பிரதேச விவசாயிகள் நீர்வரியாக நெல்லிறுக்கவேண்டும் என கட்டளை இடப்படுகிறது.
முல்லைத்தீவு பிரதேசத்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் அருகில் இருக்கும் வயல்வெளியை நந்தியுடையார் விதைத்து வருகிறார். இந்த வயல்வெளிக்கு முத்துஐயன் கட்டு குளத்தில் இருந்து நேரடியாகத் தண்ணிர் பாய்வதில்லை. ஆனால் மற்றைய வயல்வெளிகளுக்கு பாயும் நீர் வடிந்து நந்தியுடையார் வயல்வெளிக்கும் பாய்வதுண்டு. நந்தியுடையாருக்கு நந்திமகள் என்ற பெயரில் ஒரு மகளும் இருக்கிறார். இவளை குட்டி வன்னியன் என்னும் குறுநில வன்னிமை திருமணம் செய்ய பெண் கேட்டான். நந்தியுடையார் மறுத்து விடுகிறார். பின்னர் குட்டிவன்னியன் முத்து ஐயன் அரச சபையில் ஆலோசகராக பதவி ஏற்கிறான். நந்தியுடையார்மீதுள்ள கோபத்தின் காரணமாக நந்தியுடையாரும் நீர் வரி இறுக்க வேண்டும் என குட்டி வன்னியன் முத்துஜயனுக்கு ஆலோசனை கூறினான். முத்துஐயன் வன்னிபமும் ஏற்றுக் கொள்கிறார். இதனால் நந்தியுடையார், முத்துஐயன் வன்னிபத்தின் மீது கோபமுறுகிறார்.
முத்துஜயன் குளக்கட்டு வேலைகள் இனிதே நிறைவுபெறுகின்றன. வைகாசி விசாகத்தினத்தில் நடைபெறும் வற்றாப்பளை பொங்கலன்று குளத்து நீர் மடைதிறந்துவிடப்படுகிறது. அன்றைய தினம் முத்துஐயன் வற்றாப்பளை கோவில் பொங்கலுக்குப் போகிறான். அங்கு நந்தி மகளைக் கண்டு அவள் மீது விருப்பம் கொள்கிறான்.
நந்தியுடையார் தனது வயல்வெளிக்கு நேரடியாக நீர் பாயாத
காரணத்தால் வரியிறுக்க முடியாதென தெரிவித்து விடுகிறார். இந்தச்
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்பிய குட்டி வன்னியன் நந்திமகள் மீது 22

அரசரின் விருப்பத்தை தெரிந்து திருமணம் பேசி வரும்படி அரசவை சோதிடரை அனுப்பி வைக்கிறான். ஏற்கனவே முத்துஐயன் வன்னிபத்தின் மீது இருந்த கோபத்தின் காரணமாகவும், நந்திமகளின் சாதகப் பொருத்தமின்ம்ை காரணமாகவும் முத்துஜயன் வன்னிபத்திற்கு பெண் கொடுக்க மறுத்து விடுகிறார் நந்தி உடையார். இதைத் தெரிந்திருந்த குட்டிவன்னியன் நந்திஉடையார் பெண் கொடுக்க மறுத்தால் அவரின் வயல் வெளிக்கு ஒரு சொட்டு நீர் கூட வடிந்து பாய வன்னிபம் விடமாட்டார் எனத் தெரிவித்து வரும்படி சோதிடரிடம் சொல்லி அனுப்பி விடுகிறார். இந்தச் செய்தியைச் சோதிடர் இராமலிங்கத்தின் மூலம் அறிந்த நந்தி உடையார், தனது வேளாண்மையைப் பருவ மழையை நம்பித்தான் செய்வதாக தெரிவித்து விடுகிறார். அத்தோடு
ஆத்தை மறிக்கலாம் குளத்தை மறிக்கலாம் கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தை மறிக்க முடியுமோ
என வன்னிப் பிரதேசத்தின் பாரம்பரிய நம்பிக்கையான கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தன்று தவறாமல் பெருமழை பெய்யும் என்ற நம்பிக்கையை வன்னிபத்திடம் சொல்லி வைக்கும்படி சோதிடரை அனுப்பி வைக்கிறார்.
குளங்களைக் கட்டுவதற்கு கொண்டு வந்த பூதங்களைப் பராமரிப்பது மிகவும் கஷ்டமாகிவிடுகிறது. அவற்றிற்கான கூலியை கொடுக்க விரும்பவில்லை குட்டி வன்னியன் முத்துஜயன் வன்னிபம் வேறுகுளங்களைக் கட்ட விரும்பினாலும் குட்டி வன்னியன் அதற்கு விரும்பாமல் பூதங்களை அனுப்பும் பொறுப்பைத்தானே ஏற்றுக் கொள்கிறான். நீதியான முறையில் பூதங்களுக்கான கூலியை கொடுத்தனுப்பும்படி கட்டளையிடுகிறான் வன்னிபம். அப்படியே செய்வதாக கூறிய குட்டி வன்னியன், பூதங்களை சூழ்ச்சி செய்து அனுப்பத் திட்டமிடுகிறான்.
பூதங்கள் மிகவும் நேர்மையானவை. ஏதாவது குறிப்பிட்ட வேலையை ஒப்படைத்தால் அந்த வேலை செய்து முடிக்காமல் அவை தாம் தங்குமிடம் திரும்பாமை வழக்கமாகும். இதனை நன்குணர்ந்த குட்டி என்னியன் முதிரை மரங்களை பட்டையடித்து குளத்து வானுக்குள் போட்டு அவற்றை தூக்கி வரும்படி கட்டளையிடுகிறான். பூதங்களின் விரல்கள் மிக குட்டையானவை. அதனால் முதிரை மரத்தில் உள்ள பிசின் (பசை) காரணமாக அவற்றை தூக்க முடியாமல் போய்விடுகின்றது.

Page 14
பூதங்கள் பூதனை விடடு பிரிய மனமில்லாமல் பிரிகின்றன. அவை காட்டுக்குள் போய்விடுகின்றன. இவற்றை ஒளிந்திருந்து பார்த்த குட்டி வன்னியன் பூதங்கள் போன பின் வெளியே வந்து பூதனைச் சாந்தப்படுத்துகிறான். குட்டிவன்னியன் செய்த சூழ்ச்சியைத் தெரிந்து கொண்ட பூதன் அரசனையும் குட்டிவன்னியனையும் பழிவாங்கும் நோக்குடன் அதே குளத்தில் விழுந்து உயிரை விடுகிறான். இதை சோதிடர் இராமலிங்கம் கண்டு விடுகிறார். குட்டிவன்னியன் முத்துஐயனிடம் பொய் கூறி பூதனுக்கு பரிசாக வயல் வெளியை எழுதி வைக்கும்படி வேண்டி அதற்குப் "பூதன் வயல் வெளி" எனவும் பெயர் சூட்டி விடுகிறான்.
நந்திஉடையாரின் நம்பிக்கை வீண் போகவில்லை. கார்த்திகை மாதத்துக் கர்க்கடகத்தன்று பெருமழை பெய்கிறது. நந்தி வெளிக்குத் தண்ணிர் பாயும் குஞ்சுக் குளம் பள்ளவெளி போன்றவற்றில் நீர் நிறைந்து நந்தி வெளிக்குப் பாய்கிறது. நந்தி உடையாரின் வயல் வெளி வேளாண்மை நன்றாக விளைந்தது. இதனால் நந்தி உடையார் பரத்தை போட்டு அருவி வெட்டத் தீர்மானிக்கிறார்.
நந்தி உடையாரின் வயல் வெளியில் பரத்தை அருவி வெட்டு நடைபெறுகிறது. பரத்தை அருவி வெட்டில் அப்பகுதி மக்கள் அனைவரும் பங்கு பற்றுகிறார்கள். பல ஏக்கர் கொண்ட வயல் வெளியில் ஒரே நாளில் அருவி வெட்டி முடிக்கவே பரத்தை வெட்டுப் போடுவது வழக்கம். பரத்தை வெட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தி உடையாரைத் தேடி சோதிடர் இராமலிங்கம் வருகிறார். பரத்தை வெட்டு நடைபெறுவதைக் கேள்வியுற்று அவ்விடம் வந்ததாக கூறும் சோதிடர் நந்தி வெளிக்கு தண்ணிர் வடிந்து பாய்வதைத் தடுத்தது குட்டிவன்னியன் தான் என்பதைக் கூறுகிறார். நந்திமகளை குட்டிவன்னியன் கல்யாணம் செய்ய விரும்பி பெண் கேட்டதையும், தான் அதற்கு மறுப்புத் தெரிவித்ததையும் அதனால் குட்டி வன்னியன் தன்னை பழிவாங்க இருப்பது தனக்குத் தெரியும் எனவும் நந்தி உடையார் தெரிவிக்கிறார். நந்தி உடையார் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சோதிடர் இராமலிங்கம் கூறி விட்டு ஒட்டுசுட்டான் செல்கிறார்.
அரண்மனையில் முத்துஜயன் வன்னிபம் வரிநெல் அறவிடுவதைப் பற்றி குட்டிவன்னியனிடம் விசாரிக்கிறார். எல்லோரும் வரி நெல் இறுத்து விட்டதாகவும், நந்தி உடையார் மட்டும் வரிநெல் செலுத்த மறுப்பதாகவும் குட்டி வன்னியன் தெரிவிக்கிறான். அந்த நேரம் அவ்விடம் இருந்த சோதிடர் வடிந்து பாயும் நீருக்கு வரி நெல் கேட்பது தவறு, அப்படியான அரசவையில் தான் ஒரு
24

அங்கத்தவனாக இருக்க விரும்பவில்லையெனக் கூறி அரசவையை விட்டு வெளியேறுகிறார். நந்தி உடையார் வயல் வெளியில் பரத்தை போட்டு அருவி வெட்டியுள்ளார் என்பதை அறிந்த குட்டி வன்னியன் பொருமுகிறான். எப்படியாவது அவரைப் பழிவாங்க வேண்டும் எனத் திட்டமிடுகிறான். அதன்படி முதலில் குளத்து துருசை திறந்துவிடத் திட்டமிட்ட குட்டி வன்னியன் நந்தி உடையாரின் உப்பட்டிகள் அனைத்தையும் முல்லைத்தீவுப் பெருங்கடலில் சேர்ப்பதற்காக குளக்கட்டை வெட்டி விட்டு பெரு வெள்ளம் ஏற்படச் செய்கிறான். இதனால் நந்திஉடையார் வயல்வெளி முழுவதும் இருந்த உப்பட்டிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனைக் கண்ட நந்திஉடையார் மனம் வருந்தி அழுகிறார். வயல்வெளியில் இறங்கி உப்பட்டிகளை எடுத்து வயல் வரம்பில் வைக்க முயற்சி செய்யும் போது இருதயநோய் காரணமாக அவர் உயிர் பிரிகிறது. நந்திமகள் வயல் வரம்பில் தந்தையின் அருகே இருந்து அழுகிறாள். அந்த நேரம் அவ்விடம் சோதிடர் வருகிறார். w
திடீர் வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் அறிய முனைந்த நந்தி மகள் எல்லாவற்றிற்கும் குட்டிவன்னியனே காரணம் எனத் தெரிந்து மனம் கொதிக்கிறாள். சோதிடர் அவளைச் சாந்தப்படுத்துகிறார். மனக்குமுறல் காரணமாக நந்திமகள் தனது தந்தையின் உடல் மீது ஆணையிட்டு இந்த உண்மையை வன்னிபத்திடம் கூறி நீதி கேட்கப் போவதாக கூறுகிறாள். சோதிடர் அவளைச் சாந்தப்படுத்தி தகப்பனாரின் கடமைகளைச் செய்து முடிக்க அழைத்துச் செல்கிறார்.
நந்திஉடையாரின் ஈமக் கடமைகள் முடிவடைந்ததும் நந்தி மகள் முத்துஜயன் வன்னிபத்திடம் நீதிகேட்டு வருகிறாள். குட்டிவன்னியன் பூதங்களுக்கும் பூதனுக்கும் செய்த அநியாயத்தை அவன் வாயாலே வெளிவரச் செய்கிறாள். இதனை அறிந்த முத்துஐயன் திடுக்கிடுகிறான். குட்டி வன்னியன் செய்த துரோகத்தை உணர்ந்து கொள்ளத் தொடங்குகிறான். ஏற்கனவே நந்தி மகளை குட்டி வன்னியன் பெண் கேட்டு வந்ததை தெரிவித்து அதன் காரணமாகத்தான் நந்தி உடையாரை பழிவாங்கும் நோக்குடன் குளக்கட்டை வெட்டி விட்ட உண்மையை குட்டி வன்னியன் ஒத்துக் கொள்கிறான். நந்திமகள் கேட்ட கேள்விகளுக்கு அவள் கண்களை நேரடியாகப் பார்த்து பதில் கூற முடியாத குட்டி வன்னியன் முத்துஜயன் வன்னிபத்திடம் மன்னிப்புக் கோருகிறான். முத்துஜயன் வன்னிபம் குட்டிவன்னியனைப் அந்தப் பதவியில் இருந்து விலக்குகிறான். அத்தோடு அவன் செய்த பாவங்கள் தீருவதற்காக வற்றாப்பளைக் கண்ணகியம்மனிடம்
25

Page 15
மன்னிப்புக்கேட்டு கரைப்பாதையாக கதிர்காமம் செல்லும்படி பணிக்கிறான். முத்துஐய வன்னிபத்தின் ஆலோசகராக இருக்கும்படி நந்திமகளுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறாள். நந்திமகள் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். குளத்து நீர் நேரடியாகப் பாயாமல் வடிந்து பாயும் நீருக்கு மக்கள் வரிசெலுத்தத் தேவையில்லை என்பதை வன்னிபம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறாள். அதைத் தீர்மானிக்கும் பொறுப்பை நந்திமகளே ஏற்றுக் கொள்ளப் ப்ணிக்கிறார் வன்னிபம். நந்திமகள் தனது ஊருக்குச் செல்லும் போது நாட்டு மக்கள் அனைவரும் கோலாட்டம் கும்மி அடித்து அவளை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். நந்தி மகள் நந்தி உடையாரின் பெயர் விளங்க பல ஆண்டுகள் முத்து ஐயன் வன்னிபத்தின் ஆலோசகராக இருந்தாள்.
முற்றும்.
Z6

நந்தி உடையார்
(வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம்) (மேடை நாடகம்) எழுதியவர்: அருணா செல்லத்தரை
நாடக ஆரம்பம்: (திரை நீக்கம்)
(மேடையில் நடிகர்கள் அனைவரும் அரை வட்டமாக நின்று நடுவில் ஒருவர் முன்வந்து கற்பூரம் கொழுத்திய பின் விருத்தமாக பாட வேண்டும்)
கண்ணகையம்மன் விருத்தம்
சரணமலர் துணையென்று தவறாமலனுதினம்
தண்மலர் தூவி நின்று தற்பரீயுனது புகழ் சாற்றிடும் தொண்டர்தம்
சஞ்சலங் கழைய வென்றே அரணதிக மதில் சூழ்ந்த வழகான கோயிலில் அருளுடன் வீற்றிருந்து அம்மையொடு கொப்புளிப்பான் கொள்ளை கோதாரி யாங்கொடிய கண்ணோ முதல் இரணவகையான பல நோய்பிணிகள் நீக்கியே
இன்பமரு ளெனது தாயே இயல்பான நீர்வளம் என்றுமே குன்றாத எழிலோங்கு நந்தி வெளியில் தருணமிது என வந்து தங்கியற் புதமருள்
தையலே தஞ்ச மம்மா தகுதிமிகு வற்றாப்பளை யுறையுமம்மனே
தக்கநற் கற்பர சியே.
(விருத்தம் முடிவடைந்ததும் நடிகர்கள் வரிசையாக பின்னரங்கம் செல்ல வேண்டும். பாடகர்கள் அரங்கின் முன்வட்ட ஒளியில் வந்து நிற்க வேண்டும்)
27

Page 16
களம்
ஒலி
ஒளி
(டாங். டாங்- a as a டாங்.
பறைபோடுபவர் :
காட்சி : 1
வீதி
பறையோடும் ஒலி.
திரைக்கு முன்னால் குறிப்பு வட்ட ஒளி (Spot Light) பறையோடுபவர் மேடையின் இடது பக்கத்திலிருந்து மேடை நோக்கி வர மங்கி இருந்த ஒளி கூடிக் கொண்டு போய் சரியான ஒளி வரவேண்டும்.
L-T...sossessee....... ங்ங்)
இத்தால் சகலரும் அறியத்தருவது வன்னிப் பிரதேசத்தின் வவுனியாப் பகுதி ஆயிலடியில் உற்பத்தியாகி ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவரர் கோவிலுக்கு வடக்கே பாய்ந்து வற்றாப்பளை நந்திக்கடல் வெளியூடாகப் பாய்ந்து முல்லைத்தீவு பெருங்கடலில் கலக்கும் பேராத்தை மறித்து குளம் கட்ட தீர்மானித்துள்ளார் குளக்கோட்டன் பரம்பரையில் வந்த முத்துஜியன் வன்னிபம் இந்தக் குளத்தைக் கட்டி முடித்ததும் கற்சிலைமடு, கருவேலங்கண்டல், புளியங்குளம், கூழாமுறிப்பு, பேராத்துவித்தன், கொண்டைமடு, கேப்பாபுலவுவரைக்கும் நீர்ப்பாய்ச்ச முடியும் என முத்துஜயன் வன்னிபம் தீர்மானித் துள்ளது. அதனால் முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள பூதங் ಆಬ್ಜೆಕ್ಟ್ರಿà: ஆரம்பிக்கப்படவுள்ளன. இப்பிரதேச மக்கள் அனைவரும் வன்னிபத்துடன் ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
(டாங். டாங். டாங். டாங்.)
(பறைபோடுபவர் மேடையின் வலதுபக்கமாகச் சென்று மறைய ஒளி மங்கிக் காட்சி முடிவடைகிறது)

பூதங்கள்
西{匣
பூதன்
காட்சி : 2
குளக்கட்டு வேலை நடைபெறும் இடம்.
பூதங்கள் வேலை செய்யும் ஒலி
மேடை நடுவில் பூதங்கள் அரைவட்டமாக நிற்கின்றன. பூதங்களின் நிழல் பின் அரங்கில் விழும் வண்ணம் ஒளியமைக்கப்பட வேண்டும். மேடையின் வலதுபக்கத்தில் இருக்கும் குறிப்பு வட்ட ஒளியில் பூதங்களை மேற்பார்வை செய்யும் பூதன் நிற்க வேண்டும். ஒளி குறைந்திருந்து கூடிக்கொண்டு போக வேண்டும்.
(தரு, பாட்டு போன்றவற்றிற்கு ஏற்ப சைகையில் கற்களை தூக்குவதுபோல் நடிக்க வேண்டும்.)
(பாடகர்கள் பாட வேண்டும்)
தாகிட தரிகிட தா. தாகிட தரிகிட தா. தாகிட தரிகிட தா. தாகிட தரிகிட தா. தாகிட தரிகிட தா. தாகிட தரிகிட தா. தாகிட தரிகிட தா. தாகிட தரிகிட தா.
(பாடல்) வாடா மச்சான் வாடா வாடா மச்சான் வாடா (6) TL ...)
குளம் கட்டலாம் வாடா கடலைத் தண்ணி சேராமல் கல்லுப் போடலாம் வாடா
(6).JITLIT...) குளத்தைக் கட்டிப் போட்டால் கொற்றவன் வாழ்வான் வாடா வயலுக்கு தண்ணி பாய்ஞ்சால் விதைத்தவன் வாழ்வான் வாடா (வாடா.)
(பூதன் பூதங்களை உசார் படுத்திய வண்ணம் தேவையான அளவிற்கு பாடலாம்
பூதங்கள் நிலையாக நிற்க குட்டி வன்னியன் மேடைக்கு வருகிறான்)
29

Page 17
பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
வரவேண்டும் 6 JJ வேண்டும் குட்டிவன்னிமையே. துரையே தாங்கள் ஏன் வேலைத் தளத்திற்கே வரவேண்டும். சொல்லி அனுப்பியிருந்தால் நானே தங்களைத் தேடி வந்திருப்பேனே --
பூதனே எப்படி, பூதங்கள் நன்றாக வேலை செய்கின்றனவா. வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் பொங்கலுக்கு முன்னர் குளக்கட்டு வேலைகளை முடிக்க வேண்டும் என்பது முத்துஜயன் வன்னிபத்தின் கட்டளை.
அப்படியே தங்கள் கட்டளையை நிறைவேற்றுவேன் துரையே.ஆனால்.
என்ன பூதன். ஆனால் என்று இழுக்கிறாய். உனக்கு தெரியுந்தானே. முத்துஐயன் வன்னிபம் திட்டமிட்டபடி குளத்தை நீ கட்டி முடிக்கவேண்டும். இல்லையேல் நீ பெருந் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.
வன்னிமையே நான் எப்போதாவது வன்னிபத்தின் கட்டளையை மீறியிருக் கிறேனா. போதிய அளவு சாப்பாடில்லாமல் பூதங்கள் வருந்துகின்றன. அதனால் அவை வேலை செய்வதையும் குறைத்துவருகின்றன. பூதங்களின் சாப்பாட்டிற்காக தாங்கள் தரும் தொகையை கூட்டிக் கொடுத்தால் நல்லது வன்னிமையே.
பூதனே நான் கூறுவதைக் கேள். குளத்தைக் கட்டி முடி. நான் வன்னிபத்திடம் கூறி உனக்கு நல்ல பரிசில்கள் வாங்கிக் தருகிறேன். அதன் பின்னர் நீ இந்தப் பூதங்களை கட்டி மாரடிக்கத் தேவையில்லை.
30

பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
தரங்கள் கூறுவதைக் கேட்டு எனது பூதங்களுக்கு நான் நன்றி கெட்ட தனமாக இருக்க விரும்பவில்லை. வன்னிபத்தின் கட்டளைப்படி குளத்தைக் கட்டி முடித்து தருகிறேன். எனக்கு சேரவேண்டிய கூலியை மட்டும் கொடுத்தால் போதும்.
சரி. சரி. உனது விருப்பம் போல் செய். வற்றாப்பளைப் பொங்கலுக்கு தீர்த்தம் எடுப்பதற்கு முனனர் குளக்கட்டு வேலைகளை முடித்துவிடு. சரிதானே.
ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவரர் அருளால் நான் எடுத்த இந்தக் காரியத்தை எப்படியாவது முடித்து தருகிறேன் துரையே.
முத்துஜயவன்னிபம் பறைபோட்டு, கூழா முறிப்பு கருவேலன்கண்டல், புளியங்குளம், கொண்டைமடு, பேராத்துவித்தன் விவசாயி களுக்கு தண்ணிப்பங்கு தருவதாக அறிவித்துள்ளார். அதன்படி நாம் காலபோக வேளாண்மைக்கு தண்ணிப்பங்கு கொடுக்க வேண்டும். அதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்.
தங்கள் கட்டளைப்படியே நிறைவேற்றித் தருகிறேன் வன்னிமையே.
(போவதற்கு திரும்பி பின்னர் பூதங்களைப் பார்த்துவிட்டு) பூதனே . இதென்ன பூதங்கள் வேலை செய்யாமல் நிற்கின்றன. அவற்றை நன்றாக உசார்ப்படுத்து. அப்பொழுதுதான் அவை நன்றாக வேலை செய்யும்.
31

Page 18
[ bቓፍär சரி. வன்னிமையே.
۰۰۰۰۰۰رانگ مه... رنگ ...- را رنگ .... را
6)jTLT Lošöst6šT 6.JITLIT
6uTuri në g|T66T 6uTLIT குளம் கட்டலாம் வாடா கடலைத் தண்ணி சேராமல் கல்லுப் போடலாம் வாடா
(பாடல் குறைந்து போக ஒளி குறைய காட்சி முடிவடைகிறது)
32

காட்சி : 3
6) : முத்துஐயன் அரசவை
ஒலி அரசவைக்குத் தேவையானவை
ஒளி அரசவைக்குத் தேவையான பொதுவான ஒளியமைப்பு.
(முத்துஐயன் அவையில் மந்திரிமாருடன் இருக்க குட்டி வன்னிமை வருதல்)
குட்டிவன்னியன் : (அவைக்கு வந்து) முத்துஜயன் வன்னிபத்திற்கு அடியேனின் தாழ்மையான வணக்கங்கள்.
முத்துஜயன் குட்டிவன்னிமையே. குளக்கட்டு வேலை களைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தீர்களே. என்ன வாயிற்று. பூதன் என்ன சொல்கிறான்.
குட்டிவன்னியன் : பூதங்களுக்கு போடும் சாப்பாடு போதாமை யினால் அவை மிகவும் மெதுவாகவே வேலை செய்கின்றனவாம். அதனால் நாம் குறித்த
நாளில் குளத்தை கட்டி முடிப்பதற்கு.
முத்துஜயன் கட்டி முடிப்பதற்கு. நீர் வார்த்தையை முடியும்
முதலில்.
குட்டிவன்னியன் : முடியாமல் இருக்கலாம் என்று சொன்னான்.
நான் அவனுக்கு நல்ல முறையில் ஆலோசனைகள் கூறி வெருட்டி, உருட்டிப் பிரட்டி எப்படியாவது வற்றாப்பளைப் பொங்கலுக்கு தீர்த்தம் எடுப்பதற்கு முன்னர் குளக்கட்டு வேலைகளை முடித்து தரவேண்டும் எனக் கூறியுள்ளேன்.
முத்துஜயன் என்ன சொன்னான் பூதன்.
33

Page 19
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
மந்திரி
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
சோதிடர்
முத்துஜயன்
முடித்துத் தருவதாக உறுதி கூறியுள்ளான்.
எப்படியாவது முடித்துத் தரவேண்டும். இல்லையேல் அவனையும் பூதங்களையும் இந்த வன்னிப் பிரதேசத்திலிருந்தே துரத்தி விடுவேன்.
அப்படித்தான் செய்ய வேண்டி வந்தாலும் வரலாம் வன்னிபமே. ஏனெனில் குளக்கட்டு வேலைகள் முடிவடைந்ததும் பூதங்களை வைத்து சாப்பாடு போடுவது மிகவும் கஷ்ரம் வன்னியமே.
அதற்கும் ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம்
வேறு குளங்களைக் கட்டலாம் வன்னிபமே
எதற்கும் இந்தக் குளத்தைக் கட்டி முடிக்கும் வரை பொறுப்போம் வன்னிபமே. அதற்கு முன்னர். என்னுடைய விண்ணப்பம் ஒன்று இருக்கிறது. வன்னிபமே.
சரி. உம்முடைய விருப்பத்தைச் சொல்லும் பார்ப்போம்
குளத்திற்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் அரசே.
அதைப்பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லை
வன்னிபமே.
சோதிடரே உமது ஆலோசனையைக் கூறும்.
கேட்போம்.
34

சோதிடர்
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
சோதிடர்
குட்டிவன்னியன் :
அமைச்சர்
சோதிடர்
ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவரர் கோவிலுக்கு அண்மையிலேயே குளம் அமைந்திருப்பதனால் ஈஸ்வரன் நாமத்தோடு சேர்த்து குளத்திற்கு பெயர் சூட்டலாம் வன்னியமே.
சோதிடரே நல்ல யோசனை. நீரே பெயர் ஒன்றைச் சொல்லலாமே.
இடை மறிப்பதற்கு மன்னிக்க வேண்டும். குளத்திற்கு தங்கள் பெயரைச் சூட்டினால் நன்றாக இருக்கும் வன்னிபமே.
கூறுவதற்கு தயக்கமாக இருந்தாலும் நல்ல ஆலோசனைகளை கூறவேண்டியது எனது
கடமை வன்னிபமே.
சோதிடரே. நீங்கள் கூறும் எந்த ஆலோசனையையும் நாம் ஏற்றக் கொள்ளா மலில்லை. ஆனால் இந்த விடயத்தில் நான் கூறுவதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் வன்னிபமே. தாங்கள் இந்தக் குளத்தைக் கட்டி முல்லைத்தீவுப் பிரதேசம் முழுவதற்கும் விவசாயத்திற்குத் தேவையான நீரை வழங்க இருக்கிறீர்கள். அதனால் தங்கள் பெயர் இப்பிரதேச மக்கள் எல்லோர் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும் என்பது
எனது அவா.
ஏற்கனவே மக்கள் எல்லோரும் முத்துராசன் குளம் எனவும் முத்துராயன் குளம் எனவும் தான் அழைக்கிறார்கள்.
வன்னிபமே நான் குட்டி வன்னிமை
கூறுவதற்கு எதிராகவோ அல்லது அமைச்சர்
கூறுவதற்கு எதிர் கருத்து கூறுவதாகவோ
நினைக்கக்கூடாது. தங்கள் பெயரை இந்தக்
குளத்திற்குச் சூட்டினால் இந்தக் குளத்தின்
35

Page 20
குட்டிவன்னியன் :
சோதிடர்
குட்டிவன்னியன் :
சோதிடர்
குட்டிவன்னியன் :
சோதிடர்
பயனை இப்பிரதேச மக்கள் முழுமையாகப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள் வன்னிபமே.
சோதிடரே சற்றுப் பொறும். குளம் கட்டியவர் முத்துஐயன் வன்னிபம். அவர் பெயரை இல்லாமல் செய்வதே உமது நோக்கம் போல் தெரிகிறது.
வன்னிபமே அந்தப் பழியை மட்டும் என்மீது போட்டு விடாதீர்கள். குளம் கட்டிய பலனையே நான் கூறினேன். ஒரு குளத்தைக் கட்டும்போது எத்தனையோ உயிர்களையும், பயிர் செடிகொடி களையும் நாம் குளத்தினுள் பலியாக்கி விடுகிறோம். அதனால் அந்தப் பழிகள் அனைத்திலும் இருந்து நாம் மீட்சி அடைய வேண்டுமானால் ஈசன் பெயரை வைப்பதே நல்லது.
வன்னிபமே. நாம் சற்றுக் கவனமாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சோதிடர் நம்மையே ஏமாற்றி விடுவார்போல் இருக்கிறது.
வன்னிபமே என்ன பலமான யோசனை. நான் ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.
சோதிடரே வன்னிபத்தின் காலபலன் இப்போது எப்படியிருக்கிறது என்று கூறும். எப்படியாவது குளக்கட்டு வேலைகள் யாவும் இனிதே முடிக்கும் பலன் இருக்கிறதுதானே.
அதில் எந்த வித சந்தேகமுமில்லை. குளக்கட்டு வேலைகள் யாவும் வன்னிபம் நினைத்தபடி இனிதே நிறைவுபெறும்.
36

குட்டிவன்னியன் :
சோதிடர்
குட்டிவன்னியன்:
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
மந்திரி
குட்டிவன்னியன் :
அப்படியென்றால் சரி. பெயர் வைக்கும் பொறுப்பை என்னோடு விட்டுவிடும். சரிதானே.
வன்னிபம் விரும்பினால் அப்படியே நான் மெளனமாகி விடுகிறேன்.
வன்னிபமே சோதிடர் சொல்வதற்கு நான் மறுத்துப் பேசவில்லை. ஆனால் எனது விருப்பம் வன்னிபத்தின் பெயர் இந்தப் பிரதேசம் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே. அதனால் நாம் கட்டும் இந்தக் குளத்திற்கு "முத்துஜயன் கட்டுக்குளம்" என்ற பெயரை வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
குட்டி வன்னிமையே
வன்னிபமே எனது விருப்பம் மட்டுமல்ல, இந்த பிரதேச மக்களின் விருப்பமும் கூட அதுதான்.
இருந்தாலும். சோதிடர் சொல்வதைப் பார்த்தால்
அரசே நாட்டு மக்களின் ஆசீர்வாதம் உங்கள் பக்கம் இருக்கும் போது இப்படியான குறைகள் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது.
வன்னியமே எதற்கும் இன்னும் பலரிடம் கேட்டுப்பார்த்துச் செய்யலாம் என யோசிக்கி றேன்.
வன்னிபமே தாங்கள் குளம் கட்டுவது தெரிந்து மற்றய குறுநில வன்னிமைகள் அனைவரும் எரிச்சலுடன் உங்களை வீழ்த்துவதற்காக பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
37

Page 21
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
ஏன் அப்படி அவர்கள் என்மீது எரிச்சல்பட வேண்டும்.
பேராற்றிலிருந்து நீரைப் பெற்று தங்கள்
மானாவரி விவசாயத்தை செய்து வந்தவர்கள்
இப்போது தங்கள் வயல்களுக்கு வரியின்றி நீரைப்பெறமுடியாமல் இருக்கிறது என்ப
தனால், உங்களைக் கோபத்துடன் பார்க்கிறார்கள்.
9ÜLigu.
அதனால் தங்கள் பெயர் மழுங்கடிக்கப்பட்டு விடுமோ என யோசிக்கிறேன். வன்னிபமே. அதனால் தான் தங்கள் பெயரையே குளத்திற்கு வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
(எழுந்து) குட்டி வன்னிமையே நீர் சொல்வது போல் எனது பெயரையே குளத்திற்கு வைப்போம்.
மிகவும் சந்தோசம் வன்னிபமே. நாளையே பறைபோட்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தி விடுகிறேன். (ஒளி மங்க காட்சி முடிவடைகிறது)
38

ஒலி
பறையோடுபவர் :
காட்சி :4
வீதி
பறை ஒலி
திரையரங்கிற்கு முன்னால் குறிப்பு வட்ட ஒளியில் பறைபோடுபவர் நிற்கவேண்டும். ஒளி மங்கியிருந்து கூடும்போது
(mil-lumi-Til-it-ri)
இதனால் சகலரும் அறியத் தருவது, ஒட்டுசுட்டானுக்கு வடக்கே பாயும் பேராத்தை மறித்துக் கட்டப்படும் குளத்திற்கு முத்துஜயன் வன்னிபத்தின் GuuG சூட்டப்படவிருக்கின்றது. இதன்படி இந்தக் குளம் இனிமேல் "முத்துஐயன் கட்டுக் குளம்" என அழைக்கப்படும். அந்தப் பெயரிலேயே இனிமேல் எல்லோரும் அந்தக் குளத்தை அழைக்க வேண்டும் என்பது வன்னிபத்தின் கட்டளை. கட்டளையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என்பது வன்னிபத்தின் ஆணை.
கற்சிலை LoG, புளியங்குளம், கருவேலங்கண்டல், மானுருவி, கூழாமுறிப்பு பேராத்துவித்தன், கொண்டைமடு, கேப்பாயிலவு, போன்ற இடங்களில் விவசாயம் செய்வோர் முத்துஜயன் கட்டுக் குளத்து நீரை உபயோகிக்கலாம். இந்தக் குளத்து நீரை
உபயோகிப்பவர்கள் காலபோகச் செய்கைக்கு
39

Page 22
பத்துமரைக்கால் நெல்லும், சிறுபோகச் செய்கைக்கு ஆறு மரைக்கால் நெல்லும் கம அதிகாரி மூலம் நீர் வரியாக முத்துஜயன் வன்னிபத்திற்கு செலுத்த வேண்டும் என்பது உத்தரவு.
இந்த விதிகளை மீறுவோருக்குகுளத்து நீரை உபயோகிக்கும் உரிமை இல்லை. அப்படி மீறி குளத்து நீரை பாய்ச்சுவோரின் காணிகள் பறிமுதல் செய்யப்படும். வைகாசி விசாகத்தில் நடைபெறும் வற்றாப்பளைப் பொங்கல் தினத்தன்று குளத்துநீர் வெள்ளோட்ட திறப்பு விழா நடைபெறும் என இத்தால் அறிவிக்கப் படுகிறது.
டாங். டாங். டாங்.டாங். டாங்.)
(ஒளி மங்கிக் கொண்டு போக காட்சி முடிவடைகிறது)
40

குழுவினர்
допI“ JE : 5
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவில்
பொங்கல் நடைபெறுவதற்கான ஒலிகள். பறைமேளம் ஒலிக்க வேண்டும். ஏடு படிப்பதற்கான ஒலிகள். பக்தர்களின்
அரோகராக எனும் ஒலி.
மேடையில் வர்ண விளக்குகள் கூடிக் குறைந்து வரச் செய்யலாம். மேடையில் வருவோரின் நிழல்கள் பின்னரங்கில் விழுவதற்கான ஒளியமைப்புச் செய்ய
வேண்டும்.
(காவடி ஆட்டம், பால்செம்பு எடுத்தல், வேப்பிலை ஏந்தி வரல், பொங்கல் வளந்து நேரும் பறை முழங்கல், நாதஸ்வரம் , தவில் போன்றவற்றுடனும் காவடி எடுக்கலாம். இவர்கள் அனைவரும் மேடைக்கு குறுக்கே வந்த பின்னர் மேடையில் மறுபடியும் வரச்
செய்யலாம்.)
(மேடையின் ஒரு பக்கத்தில் நின்ற வண்ணம்) அரோகரா. வற்றாப்பளைக் கண்ணகை அம்மனுக்கு . அரோகரா. அரோகரா. வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு . அரோகரா. (காவடி, பால்செம்பு எடுப்போர்,
கரகம் ஆடுவோர் பறையடிப்போர்)
4

Page 23
பாடல்
வற்றாப்பளை தன்னில் வாழும் கண்ணகைத் தாயாரே
- அம்மா வந்து வரம் தாவேன் அம்மா தாயே தாயே பொற்கலசம் ஏந்தி வந்தோம் தாயே தாயே பொன்னான வாசல் தேடி தாயே தாயே வாவேன் அம்மா வாவேன் அம்மா தாயே தாயே
அம்மா
வந்து வரம் தாவேன் அம்மா தாயே தாயே
(பாடல் காட்சி இடம்பெறும் போது நந்தி மகள் தனது தோழியுடன் மேடையின்
நடுவில் வந்து நிற்க வேண்டும். நந்தி மகள் மேடைக்கு வரத் தொடங்கியதும் குட்டி வன்னியனும், முத்துஐயனும், மேடையில் வந்து குறிப்பு வட்ட ஒளியில் நிற்க வேண்டும். பாடல் முடிவடைந்து ஆட்டக்காரர்கள் மேடையின் மறு முனைக்கு
சென்றதும், முத்துஐயன் நந்திமகளைப் பார்த்த வண்ணம் நிற்க வேண்டும்)
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஐய வன்னிபமே பால்செம்பு ஏந்தி நிற்கும் அந்தப் / பெண்ணையே வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் நிற்கிறீர்களே.
அது யார் தெரியுமா.
அந்தப் பெண் யார் குட்டிவன்னிமையே.
அவள்தான் நந்தி மகள். நந்திஉடையார் மகள். கண்ணகை அம்மன் கோவிலுக்கு இவர்கள் தான் பொறுப்பாக இருப்பவர்கள். இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள வயல் வெளி
யெல்லாம் இவர்களுக்குச் சொந்தமானவை.
42

முத்துஜயன் : இவர்கள் வயல் வெளிக்கும் எமது குளத்தில்
இருந்துதான் நீர் பாய்கிறதா குட்டி
வன்னிமையே.
குட்டிவன்னியன் : ஆம் வன்னிபமே. எமது குளத்து நீர் நேரடியாகப் பாயவில்லை. பேராத்து வித்தனால் கசியும் நீர் இவர்கள் வயல் வெளிக்குப் பாய்கிறது. அதனால் தான் நந்தி உடையார் எமக்கு நீர்க்குத்தகை தர மறுத்து வருகிறார். அவருடைய மகள் தான் இந்த நந்திமகள்.
முத்துஜயன் அப்படியா. சரி. சரி. பொங்கல் வளந்து நேரும் நேரம் வந்துவிட்டது. (பெருமூச்சு விட்டு) கண்ணகை அம்மன் அருளால் எனது எண்ணங்கள் நிறைவேறட்டும்.
(காவடி ஆட்டம், பால் செம்பு எடுப்போர் தொடர்ந்து ஆடிக்கொண்டு போக ஒளி மங்கி காட்சி முடிவடைகிறது)
43

Page 24
6d
காட்சி : 6
வயல்வெளி
நாற்றுநடும் பாடல் பாடப்படுகிறது. பெண்கள் சிரிப்பொலி.
வயலில் உழுதல், பலகையடித்தல், விதைத்தல் நாற்று நடுதல், போன்ற பல விடயங்கள் நடைபெறுவதினால் அவர்களின் உருவங்கள் பின்னரங்கில் நிழல் வடிவமாக விழும் வண்ணம் ஒளியமைப்பு செய்யப்படவேண்டும்
(மேடை நிகழ்வு மேடையின் வலது பக்கத்தில் குறிப்பு வட்ட ஒளியில் பாடல்
பாடுபவர்கள் நிற்க வேண்டும்)
ஆண்கள்
பெண்கள்
(JITL6))
பட்டி பெருக வேணும் தம்பிரானே பாற்பானை பொங்க வேணும் தம்பிரானே மேழி பெருக வேணும் தம்பிரானே வேளாண்மை விளையவேணும் தம்பிரானே
(பாடல்) நாடு தழைக்க வேணும் தம்பிரானே நல்ல மழைபெய்ய வேணும் தம்பிரானே எல்லோரும் வாழ வேணும் தம்பிரானே எல்லோரும் வாழ வேணும் தம்பிரானே
(நாற்று நடும் பெண்கள் ஒலி தூரத்தில் இருந்து கேட்க வேண்டும். ஒவ்வொரு பாடல் வரியும் வித்தியாசமான குரல்களில் வரவேண்டும். நந்திஉடையார் மேடைக்கு வந்து மேற்பார்வை செய்வது போல் பாவனை செய்ய வேண்டும்.)
LITTL6ấd 5(OU
தெந்தனா தெனதெனா தெந்தனா தெனதெனா தெந்தனா தெனதெனா தெந்தனா தெனதெனா
44

LLõo ஆற்றிலே தண்ணிர் அலைந்து வருமாப்போல் அதன் பிறகே புள்ளுத் துரந்து வருமாப்போல் சேற்றிலே வெள்ளம் தெளிந்து வருமாப்போல் செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாப்போல்
(தெந்தனா)
(நாற்று நடும் பாடல் முடிய ஆடுபவர்கள் மேடையை விட்டகல குறிப்பு வட்ட ஒளியில் நந்தி உடையார் நிற்கவேண்டும். மேடையின் இடதுபக்கமாக சோதிடர் மேடைக்கு வரவேண்டும்)
சோதிடர் : நந்தி உடையார் அவர்கட்கு எனது
வணக்கங்கள்
நந்தி உடையார் : வாருங்கள் சோதிடர் இராமலிங்கம்
அவர்களே. என்ன. என்னைத்தேடி வயல் வெளிக்கே வந்து விட்டீர்கள்.
சோதிடர் . வீட்டிற்குப் போய் நந்திமகள் தந்த மோரைப் பருகி தாக சாந்தி செய்த பின் தங்களைப் பார்க்க வந்துள்ளேன்.
நந்தி உடையார் : என்ன இவ்வளவு தூரம் தேடி வந்திருக்
கிறீர்கள்.
சோதிடர் : நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை.
அதனால்தான் .
நந்தி உடையார் : நீங்கள்தான் இப்போது முத்துஜயன்
வன்னிபத்தில் சோதிடர் எனக் கேள்விப்
பட்டேன். உண்மையா.
சோதிடர் : ஆம் உடையார் அவர்களே. முத்துஜயன்
குளம் கட்டப் போவதாக கூறிகுட்டிவன்னிமை என்னை அழைத்துச் சென்றார்.
45

Page 25
bis P.60LUTi
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
அதுதான் குளத்தையும் கட்டி, குளத்திற்கு தன்னுடைய பெயரையும் சூட்டி வைத்துள்ளாரே. அது சரி பெயர் வைக்கும் விடயத்தில் நீர் ஒன்றும் கூறவில்லையா.
நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். குட்டி வன்னிமை அவரின் மனத்தை மாற்றி விட்டார். அதனால் நான் சொன்னது எதுவும் அங்கு எடுபடவில்லை. ஈசன் பெயரை வைத்திருந்தால் குளத்தின் பலனை இப்பகுதி மக்கள் நீண்ட காலம் அனுபவிக்க முடிந்திருக்கும்.
அது.சரி.குளத்தின் நீரை நேரடியாகப் பெறுபவர்கள் நீர்க் குத்தகை கொடுப்பது வழக்கம்தான். எனது வயல்களுக்கு முத்துஐயன் கட்டிய குளத்திலிருந்து தண்ணி நேரடியாகப் பாய்வதில்லை. மற்றைய வயல்களுக்குப் பாய்ந்து அதிலிருந்து வடிந்து கசிந்து பாயும் நீர்தான் எனது வயல் வெளிக்குப் பாய்கிறது. அதை முத்து ஐயன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
எவ்வளவோ முறை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை.
நீர் என்ன செய்வீர். கெடுகுடி சொற்கேளான், சாகிறவன் மருந்து குடியான். சரி. சரி. நீர் வந்த விடயத்தைக் கூறும். நந்தி உடையார் வயல் விதைப்பை ஆரம்பித்துவிட்டார். அதனால் அவரும் நீர்க் குத்தகை கொடுக்க வேண்டும் கேட்டு வாரும் என உம்மை அனுப்பி வைத்தார்களா.
46

சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
ரோதிடர்
நந்தி உடையார்
இல்லை உடையார் அவர்களே. இது கல்யாண விடயம்.
யாருக்கு யாரைக் கலியாணம் பேசுகிறீர்.
நந்திஉடையார் கோபிக்கக் கூடாது.
நீர் புதிர் போடுவதைப் பார்த்தால் விசயம் சிக்கலாக இருக்கும் போல் தெரிகிறது. சரி. சரி. சொல்லும் யாருக்கு யாரைக் கல்யாணம் பேசுகிறீர்.
வற்றாப்பளைப் பொங்கலன்று தான் முத்துஐயன் கட்டுக் குளத்து நீர் மடைதிறந்து விடப்பட்டது.
அதற்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்
அன்று வற்றாப்பளைப் பொங்கலுக்கு முத்துஐயன் வந்திருந்தார்.
வளந்து நேரும் நேரத்தில் பார்த்தேன். கோயிலடியில் நின்றார். பேசமுடியவில்லை. பார்த்து சிரித்துவிட்டுப் போய்விட்டேன்.
கோயிலுக்கு வந்த முத்துஜயன், நந்தி மகளைப் பார்த்துவிட்டார். அதன் பின்னர் தான் திருமணம் செய்தால் நந்தி மகளைத்தான் திருமணம் செய்வேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார்.
(ஏளனமாகச் சிரித்து) என்ன சோதிடரே. என்ன துணிச்சல் உமக்கு. எனது மகளை நீர் வந்து முத்து ஐயனுக்கு பெண் கேட்க.
47

Page 26
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்திஉடையார் என்மீது கோபிக்கக்கூடாது. எல்லோரும் தங்களிடம் வந்து பெண் கேட்க பயந்து விட்டார்கள். நீண்ட நாட்கள் தங்கள் குடும்பத்தோடு பழகி வருபவன் என்ற வகையில் என்னிடம் இந்தப் பொறுப்பைத் தந்து விட்டார் குட்டி வன்னிமை.
ஏற்கனவே குட்டி வன்னியன் பெண் கேட்டு தோற்றுவிட்டான். அதனால் இப்போது உம்மை ஏவி விட்டிருப்பான் போலிருக்கிறது. பழிவாங்கும் நாடகமாகத்தானிருக்கும். சரி. சரி. உம்மீது கோபித்து பயனில்லை.
நீங்கள் சொல்வது எனக்குத் தெரியும்.
எனது மகளின் சாதக பலனும் உமக்கு நன்றாகத் தெரியும். அதே போல முத்துஜயன் சாதக பலனும் உமக்குத் தெரிந்திருக்க வேண்டுமே.
முத்துஜயனுக்கு எட்டில் செவ்வாய். செவ்வாய் தோசம் உக்கிரத்திலுள்ளது.
நந்தி மகள் பலன் எப்படி இருக்கிறது.
நந்தி மகளுக்கு எவ்வித தோசமுமில்லை
நீரே அதையும் கூறுகிறீர். பிறகு. கலியாணமும் பேசி வருகிறீர்.
நான் இதை அவர்களுக்கு விளக்கமாக கூறிவிட்டேன். ஆனால் முத்துஜய வன்னிபம் கேட்பதாக இல்லை. தோசங்களுக்கு சாந்தி செய்து திருமணத்தை நடத்தலாம் என்று கேட்டு வரச் சொன்னார்கள்.
48

நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
ssii p soLurst
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடர்
நந்தி உடையார்
சோதிடரே நீரே சோதிடத்தில் வல்லவர். இந்தத் திருமணத்திற்கு என்னைச் சம்மதிக்கவா சொல்கிறீர். எனது மகளை வாழ்விழந்து விதவையாக வாழவைக்கவா சொல்கிறீர்.
நான் ஒருபோதும் இதற்குச் சம்மதிக்க மாட்டேன். உடையார். ஆனால் அவர்கள் இன்னுமொன்றைக் கூறிவிட்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். w
அப்படியென்ன முக்கியமான விடயம் சோதிடரே.
நந்திஉடையார் என்னை பிழையாக விளங்கிக் கொள்ளக்கூடாது.
முத்துஐயன் என்ன கூறினான். அதைக் கூறும்
நீங்கள் பெண் கொடுக்க மறுத்தால்.
பெண் கொடுக்க மறுத்துவிட்டேன் என்று தான் வைத்துக் கொள்ளுமேன்.
முத்துஐயன் கட்டுக்குளத்தில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணிர் கூட உங்கள் வயலுக்கு பாயாமல் தடுத்து விடுவார்களாம்.
(பலமாகச்சிரித்து.) சோதிடரே நான் முதலிலேயே கூறிவிட்டேன். எனது வயல்வெளிக்கு முத்துஜயன் கட்டிய குளத்திலிருந்து நேரடியாகத் தண்ணி பாய்வதில்லை. அப்படியிருக்க எப்படி நந்திவெளிக்குத் தண்ணி பாய்வதை மறிக்கப் போகிறான் முத்துஐயன்.
49

Page 27
Cs-Agali
நந்தி உடையார்
சோதிடர்
sig; so so-uni
சோதிடர்
psis se coLuUri
சோதிடர்
Sifa » GUOLLUTFfi
அவர்கள் ஏதாவது செய்து தங்கள் வயல்வெளிக்கு தண்ணிர் கசியாமல் செய்து விடுவார்கள் உடையார்.
சோதிடரே உங்களுக்குத் தெரியாததா? ஆத்தை மறிக்கலாம், குளத்தை மறிக்கலாம், கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தை மறிக்க முடியுமோ.
முத்துஐயன் மட்டுமல்ல யார் வந்தாலும் கார்த்திகை மாதத்து கர்க்கடகத்திலன்று பெய்யும் மழையைத் தடுக்க முடியாது. உடையார் அவர்களே.
சோதிடரே முத்துஜயனிடம் போய்ச் சொல்லுங்கள். ஆத்தை மறித்துக் குளம் கட்டினாலும் கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தை மறிக்க முடியாதாம் என்று. முத்துஜயனை நம்பி நான் வேளாண்மை செய்ய வில்லை என்பதையும் கூறிவையும்.
அப்படியானால். நந்திமகள். திருமணம்.
நந்தி வெளியிலே முருவமழையை நம்பி வேளாண்மை செய்யும் நந்தி உடையார் தனது மகள் திருமணத்தை மட்டும் சாதகபலனை நம்பாமல் செய்வேன் என எதிர்பார்க்கிறீரா.
நந்திஉடையார் என்ன சொல்கிறீர்கள்.
முடிவாகச் சொல்கிறேன். எனது மகளை
நான் முத்துஜயனுக்கு கொடுக்க மாட்டேன் என்பதை அவனுக்கு சொல்லிவிடும்.
50

Cs-ruli நந்திஉடையார் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை மாற்றமாட்டார் என்பது எனக்குத் தெரியும். எனக்கு விடை தரவேண்டும். நான் இப்பொழுதே ஒட்டு கட்டான் போய்ச் சேரவேண்டும்.
psig) so an unni : சுகமே போய்வாரும் சோதிடரே.
(சோதிடர் மேடையைவிட்டகல. நாற்று நடுபவர்களின் பாடல் கூடிக் குறைந்து
போக ஒளிமங்கிக் காட்சி முடிவடைகிறது.)
5

Page 28
களம்
ஒளி
ஒலி
முத்துஜயன்
அமைச்சர்
குட்டிவன்னியன் :
அமைச்சர்
முத்துஜயன்
gift f : 7
அரசவை. வீற்றிருப்போர். முத்துஐயன். குட்டிவன்னியன் மற்றும் இரு அமைச்சர்கள்.
பொதுவான மேடை ஒளியமைப்பு
பொதுவானது.
குட்டிவன்னிமையே குளக்கட்டு வேலைகள் முடிந்து பல மாதங்கள் ஓடிவிட்டன. இனிமேலும் பூதங்களை வைத்து நாம் ஏன் சாப்பாடு போடவேண்டும்.
வன்னியமே. பூதங்களை குளம் கட்டும் வேலைக்கு கொண்டு வரும்போது அந்த ஒப்பந்த அடிப்படையிலேயே கொண்டு வந்தோம்.
ஒப்பந்தங்கள் அனைத்தும் தேவையைப் பொறுத்தே செய்யப்படுகின்றன. தேவை முடிந்ததும் ஒப்பந்தத்தை வீசி எறிந்து விடவேண்டும்.
வன்னிபமே. குளக்கட்டு வேலைகள் முடிந்தாலும் பூதங்களை வேறு வேலைகளுக்கு உபயோகப்படுத் தலாம். ஒன்றை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். எமக்குத் தேவையான நேரம் பூதங்களை அழைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அண்மையிலேயே இருக்கும் வகை செய்யவேண்டும்.
அதுவும் நல்ல யோசனை தான். பூதன் நாம் சொன்னால் கேட்பானா?.
52

அமைச்சர்
குட்டிவன்னியன் :
அமைச்சர்
முத்துஜயன்
அமைச்சர்
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
வன்னியமே நாம் பேசிப் பார்த்தபோது பூதன் மிகவும் விசனமடைந்திருக்கிறான். பூதங்களுக்கு போதிய அளவு சாப்பாடு இல்லையாம்.
அதனால் தான் அவனையும் பூதங்களையும் இங்கிருந்து அனுப்ப வேண்டும் எனக் கூறுகிறேன்.
அதற்கு நேர்மையான வழி அவர்களுக்கு சேரவேண்டியதைக் கொடுத்து அவர்களை அனுப்ப வேண்டும்.
அவர்களுக்குச் சேரவேண்டிய தொகை எவ்வளவு வரும்
வன்னிபமே பூதங்கள் வேலை செய்த நாட்களைக் கணக்குப் பார்த்து அவற்றுக்கு அளவான கொம்பறை நெல்லைக்
கொடுக்கவேண்டி வரும்
எத்தனை கொம்பறை நெல் கொடுக்க வேண்டிவரும் குட்டிவன்னியரே
கணக்குப் பார்த்துக் கொம்பறை நெல்லைக் கொடுக்கப் போனால் எமது அரசவைக் களஞ்சியமே காலியாகிவிடும். அதனால் நான் ஒரு ஆலோசனை கூறலாம் என்று
நினைக்கின்றேன்.
என்ன ஆலோசனை கூறப்போகிறீர்
5
3

Page 29
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
சோதிடர்
முத்துஜயன்
சோதிடர்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
சோதிடர்
முத்துஜயன்
சோதிடர்
அந்த விடயம் யாருக்கும் தெரியக்கூடாது வன்னிபமே. அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள். நான் அவற்றைக் கவனித்துக் கொள்கின்றேன்.
நீதியான முறையில் சரியானதைச் செய்யும் குட்டிவன்னியரே.
அப்படியே ஆகட்டும் வன்னிபமே. (மறுபக்கம் திரும்பி கண்ஜாடை செய்கிறான்) (சோதிடர் வருகிறார்)
முத்துஐயன் வன்னிபத்துக்கு சோதிடர்
இராமலிங்கத்தின் வணக்கங்கள்.
வாருங்கள் சோதிடரே. வந்து இந்த ஆசனத்தில் அமருங்கள்.
நன்றி வன்னியமே.
சோதிடர் வெகுதூரம் பிரயாணம் செய்து வந்திருப்பதனால் மிகவும் களைத்திருக்கிறார் போல் தெரிகிறது.
போன காரியம் என்ன காயா பழமா சோதிடரே.
காயோடுதான் திரும்பி வந்திருக்கிறேன் வன்னிபமே
(கோபத்துடன்) என்ன நடந்தது எனக் கூறும்.
(எழுந்து) நந்தியுடையார் தனது நந்திமகளை முத்துஜய வன்னியத்திற்கு பெண்ணாகக் கொடுப்பதற்கு மறுத்து விட்டார்.
54

முத்துஜயன்
சோதிடர்
குட்டிவன்னியன் :
சோதிடர்
முத்துஜயன்
சோதிடர்
குட்டிவன்னியன் :
சோதிடர்
முத்துஜயன்
சோதிடர்
முத்துஜயன்
சோதிடர்
முத்துஜயன்
என்ன நந்திஉடையார் மறுத்துவிட்டாரா.
ஆம் வன்னியமே.
வன்னிபமே கவலைப்படாதீர்கள். சோதிடரே நாம் கூறிவிட்ட தண்ணிப்பிரச்சினையையும் கூறினிரா?
ஆம் தாங்கள் சொன்னபடியே கூறினேன்.
எப்படிக் கூறினிர்.
இந்தத் திருமணத்திற்கு நந்திஉடையார் சம்மதிக்காவிட்டால் நந்தி வயல் வெளிக்கு ஒரு சொட்டு நீரையும் முத்துஜயன் கட்டுக்
குளத்திலிருந்து பெறமுடியாது எனத் தெரிவித்தேன்.
(சிரித்து) அதற்கு பயந்து நந்திஉடையார் பெண் தருவதாக கூறியிருப்பாரே.
அதற்கும் அவர் மசியவில்லை வன்னிபமே.
சோதிடரே அதற்கும் நந்தி உடையார் பயப்பட வில்லையா.
நந்தி உடையார் பயப்படவில்லை வன்னிபமே.
முடிவாக நந்தி உடையார் என்ன சொன்னார்.
ஆத்தை மறிக்கலாம், குளத்தை மறிக்கலாம். ஆனால் கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தன்று பெய்யும் பெருமழையை முத்துஐயனால் மறிக்க முடியாது என்பதை தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.
என்ன துணிச்சல் நந்தி உடையாருக்கு. இப்பொழுது அவர் வயல் வெளியில் வேலைகள் நடைபெறுகின்றனவா
55

Page 30
சோதிடர்
குட்டிவன்னியன்
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
சோதிடர்
அமைச்சர்
குட்டிவன்னியன் :
அமைச்சர்
குட்டிவன்னியன்
முத்துஜயன்
ஆம் வன்னிபமே. நாற்று நடுகை நடைபெறுகிறது.
வன்னிபமே. இன்று தொடக்கம் ஒரு சொட்டுத் தண்ணிர் கூட நந்தி வயல்வெளிக்கு கசியவிடாமல் செய்துவிடுவோம்.
குட்டி வன்னிமையே அது செய்து முடிக்கக்கூடிய காரியமா?
வன்னிபமே தாங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதீர்கள். நந்தியுடையாரின் நந்திவெளிக்கு ஒரு சொட்டுத் தண்ணிர்கூட பாயாமல் செய்துவிடுகிறேன்.
சோதிடரே இந்த விடயம் நந்தி உடையாருக்கு தெரியவேண்டும். எப்படியாவது அவருக்கு தெரியப் படுத்த வேண்டும்.
அப்படியே ஆகட்டும் வன்னிபமே.
வன்னிபமே தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குளத்தைக் கட்டியவருக்கு தண்ணிர் பாய்வதைத் தடுக்க முடிவு செய்யும் உரிமை இருக்கிறது.
வன்னிபம் நல்லதைச் செய்யும் நோக்கத்துடனேயே குளத்தைக் கட்டியுள்ளார்.
நல்லதையே நாம் செய்துள்ளோம். அதனால் எடுத்த முடிவையும் நாம் மாற்றிக் கொள்ளக்கூடாது என்பது எனது வேண்டுகோள்.
அமைச்சரே கற்சிலைமடு. புளியங்குளம், கருவேலங்கண்டல், கூழாமுறிப்பு, பேராத்து வித்தன், கொண்டைமடு போன்ற பகுதிகளில்
5 6

அமைச்சர்
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டி வன்னியன் :
விவசாயம் செய்வோர் ஒரு சொட்டுத் தண்ணிர் கூட வழிந்து பாய விடக்கூடாது. குளத்து நீர் அளவாக மட்டுமே திறந்து விடப்படும் எனவும் தெரிவித்து விடவும்.
அப்படியே ஆகட்டும் வன்னிபமே.
UTřů GUIT கார்த்திகை மாதத்து கர்க்கடகத்திற்கு மழை பெய்கிறதா அல்ல்து நந்திஉடையார் எனது காலடியில் வந்து விழுகிறரா இல்லையா என்று பார்த்து விடுவோம். இத்தோடு இந்தச் சபை கலையட்டும்.
பாருங்கள் வன்னிபமே நந்தி உடையார் உங்கள் காலில் வந்து வீழ்ந்து விடுவார்.
அதற்கு முன்னர் பூதங்களை அனுப்புவதற்கான உங்கள் ஏற்பாடுகளைச்
செய்து விடுங்கள்.
அப்படியே ஆகட்டும் வன்னிபமே.
(ஒளி மங்க காட்சி முடிவடைகிறது)

Page 31
காட்சி ; 8
Ας οπιο : முத்துஐயன் கட்டுக்குளத்து வான்
ஒளி : பூதங்களின் நிழல்கள் அரங்கின் பின்னால் பதிய விழும் வண்ணம் ஒளியமைக்கப்பட வேண்டும்.
ஒலி பூதங்கள் வேலை செய்யும் ஒலி
(குறிப்பு ஒளி வட்டத்தில் பூதன் நிற்கிறான்)
பூதன் "6) (TLIT Ln&s II siT 6). ITLIT
மரங்கள் தூக்கலாம் வாடா வாடா மச்சான் வாடா மரங்கள் தூக்கலாம் வாடா"
(6)JITLET) (பூதன்பாட, பூதங்கள் மரங்களைத் தூக்க முயற்சி செய்கின்றன ஆனால் மரங்கள் வழுக்கி தூக்கமுடியாமல் விழுகின்றன. பூதங்கள் பூதனைத் திரும்பிப் பார்க்கின்றன. பூதன் பூதங்களைப் பார்க்கிறான். திரும்பவும் பாடி பூத்ங்களை உற்சாகப்படுத்துகிறான்.)
பாடல் 6TLT pag-tsiT sa TLIT
மரங்கள் தூக்கலாம் வாடா 6) jTLT LošFrsöT 6 TLT மரங்கள் தூக்கலாம் வாடா
(பூதங்களினால் மரங்களை தூக்க முடியவில்லை இரண்டாவது குறிப்புவட்ட ஒளியில் குட்டி வன்னியன் வந்து நின்று பார்க்கிறான். பூதன் பூதங்களை திரும்பத் திரும்ப உற்சாகப்படுத்த பூதங்கள் முயற்சி செய்து பார்க்கின்றன. மரங்களை தூக்க முடியாமல் போகவே பூதங்கள் மெதுவாக பூதனை பார்த்த வண்ணம் எதிர்ப்பக்கமாக சென்று மறைகின்றன. அப்போது குறிப்புவட்ட ஒளியின் வெளியில் குட்டிவன்னியன் வருகிறான்.)
குட்டிவன்னியன் என்ன பூதனே பூதங்கள் யாவும் போகின்றன. பார்த்துக் கொண்டிருக்கிறாய். பூதங்கள் ஏன் போகின்றன.
58

பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
பூதன
குட்டிவன்னியன் :
மனிதர்களின் சூழ்ச்சி தெரியாத பூதங்கள் காட்டுக்குப் போகின்றன.
ஏன் காட்டுக்குப் போகின்றன.
மனிதர்களின் கண்களுக்கு அவை காட்டுக்குப் போவது போலத்தான் தெரியும். ஆனால் பூதங்கள் மட்டும் காட்டுக்குப் போகவில்லை நேர்மை காட்டுக்குப் போகிறது.
ஏன் அப்படிச் சொல்கிறாய்.
நீங்கள் செய்த சூழ்ச்சி எனக்குத் தெரியும். பூதங்களுக்கு ஒப்படைக்கும் வேலையைச் செய்து முடிக்காமல் அவை தங்குமிடம் திரும்பாது என்பதைத் தெரிந்த நீங்கள் அவை செய்ய முடியாத வேலையை ஒப்படைத்தீர்கள். அந்த சூழ்ச்சியைப் புரியாத பூதங்கள் காட்டுக்குப் போய்விட்டன.
சரி.சரி. அதை விடு. வன்னிபம் "۔--سسسسسسسسسجي முறிப்புக்குளத்தின் கீழுள்ள வயல் வெளியை உன் பெயரில் எழுதி வைத் துள்ளார். அதற்கு
---. பூதன் வயல்வெளி என பெயரும் வைததுளளாா. இனிமேல் அந்த வயல்வெளியில் நீ விவசாயம் செய்து சந்தோசமாக இருக்கலாம்.
நீங்கள் எவ்வளவு பரிசுகள் தந்தாலும் எனக்குத் துரோகம் செய்தவர்களோடு நான்
இருக்கத் தயாராக இல்லை.
நாங்கள் உமக்கு ஒரு துரோகமும் செய்யவில்லை.
59

Page 32
பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
எனக்குத் துரோகம் செய்யவில்லை என்றா கூறுகிறீர்கள். நான் வைத்திருந்த பூதங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறீர்கள். பூதங்களை வைத்திருந்து உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து முடித்தீர்கள். இப்பொழுது அந்தத் தேவை முடிந்ததும் பூதங்களை ஏமாற்றி விட்டீர்களே. அது என்னை ஏமாற்றியதற்குச் சமனாகும்.
அது எப்படி உன்னை ஏமாற்றியதற்குச் சமனாகும்.
நான் எவ்வளவு அன்போடு பூதங்களை வைத்துப் பராமரித்தேன் என்பது உங்களுக்குத் தெரியாது. எனது கட்டளைக்குப் பணிந்து பசியோடு பட்டினி யோடு இருந்து அவை குளத்தைக் கட்டி முடித்துள்ளன அந்த நன்றி கூட இல்லாமல் பூதங்களுக்குத் துரோகம் செய்து விட்டீர்களே.
இனி அதைப் பற்றி யோசித்து என்ன பயன்? பூதங்கள் இப்போதுகாத தூரம் போயிருக்கும்.
பூதங்கள் என்னை விட்டுப் போனபின் பூதனுக்கு இப் பூவுலகில் என்ன வேலை.
(குளத்தை நோக்கிப் போகிறான்.)
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
பூதனே என்ன செய்யப் போகிறாய்.
குளத்தைக் கட்டிய பூதங்களுக்குத் துரோகம் செய்த உங்களுக்கு ஒரு நல்ல பாடம் படிப்பிக்கப் போகிறேன்.
பூதனே ஏன் குளத்தை நோக்கிப் போகிறாய். நில்லு குளத்தில் நீர் நிறைந்திருக்கின்றது.
60

பூதன்
குட்டிவன்னியன் :
பூதன்
என்னுடைய உயிரை இந்தக் குளத்தில் மாய்த்துக் கொள்ளப்போகின்றேன்.
உன் உயிரை விடுவதற்கு இந்தக் குளம்தானா கிடைத்தது. வன்னிபம் அறிந்தால் என்ன செய்வார் தெரியுமா?
வன்னிபம் அறிந்து என்ன செய்யப்போகிறார்? எனது உயிரைத் திருப்பிக் கொண்டுவந்து தண்டனை வழங்கப் போகின்றாரா?
(இன்னும் குளத்தை நோக்கிச் செல்வது போல பாவனை செய்யவேண்டும். குளத்தில் நீர் நிறைந்திருப்பதை நடிப்பு மூலம் வெளிப்படுத்த வேண்டும்)
குட்டிவன்னியன் :
பூதன்
பூதனே சொல்வதைக் கேள் நான் வன்னிபத்திடம் சொல்லி உனக்கு தேவையானவற்றை பெற்றுத் தருகிறேன்.
உங்களால் என்னுடைய பூதங்களைத் திருப்பி அழைத்துத் தரமுடியுமா? முடியாது தானே. முத்துஜயன் வன்னிபத்திடம் போய்ச் சொல்லுங்கள் இளத்தைக் கட்டியவனே குளத்துள் தன் உயிரை மாய்த்து கொண்டான் எனக் கூறுங்கள்
(மற்ற குறிப்பு வட்ட ஒளியில் சோதிடர் நின்று தலையில் அடித்துக் கடவுளே எனவும், பூதனைக் கூப்பிடுவதற்கு முயற்சியும் செய்வது போல்
இருக்கவேண்டும்)
குட்டிவன்னியன் :
பூதன்
பூதனே நில்லு. குளத்து நீர் உன்னை முழுமையாக விழுங்கிவிடும்.
என்னை முழுமையாக விழுங்கட்டும். பரவாயில்லை. எனது 2Luóf போவதற்கு முன்னர் ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன்.
6

Page 33
குட்டிவன்னியன் :
பூதன்
நீ. எதைச் சொன்னாலும் நான் ஏற்றுக்
கொள்கிறேன். திரும்பி வந்துவிடு.
திரும்பி வருவதற்காக நான் இந்த முடிவை எடுக்கவில்லை.டுனிதர்களுக்கு இது ஒரு RTT55 அமையட்டும்jகஷ்டப்பட்டு வேலை செய்வர்களை ஒரு நாளும் ஏமாற்றாதீர்கள். அந்தப் பாவம் உங்களை ஒருநாளும் கம்மா விடாது.
(பூதன்கழுத்துவரைக்கும் தண்ணிர் வந்துவிட்டது என்பதை பாவனை மூலம்
தெரியப்படுத்தல்)
குட்டிவன்னியன் :
பூதன்
குட்டிவன்னியன் :
பூதனே கழுத்து வரைக்கும் தண்ணிர் வந்துவிட்டது.
என்னை இந்தத் தண்ணிர் பலி எடுக்கட்டும். அப்பொழுது தான் இந்தக் குளத்து நீரின் பயனை ஒருபோதும் முழுமையாக உங்களால் பெறமுடியாமல் போகும்.இது உங்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் ஒரு பாடமாக
அமையட்டும்.
பூதனே என்ன காரியம் செய்து விட்டாய், ம்..ம். நான் எவ்வளவோ பொய்களைக் வன்னிபத்திடம் கூறி உனது பெயருக்கு வயல்வெளியை எழுதிவைத்துள் ளேன். இப்பொழுது நீ செய்த இந்தக் காரியத்தை எப்படி வன்னிபத்திடம் போய்ச் சொல்லப் போகிறேன்.
(குட்டிவன்னியன் நிற்க சோதிடரும் குறிப்பு ஒளி வட்டத்தில் நின்று பார்த்த வண்ணம் இருந்து பின்னோக்கிச் செல்ல ஒளிமங்கி காட்சி முடிவடைகிறது)
62

GAT" A : 9
களம் நந்தி உடையாரின் வயல்வெளி
ஒலி பரத்தை அருவி வெட்டும் பாடல்
ஒளி : பலர் ஒன்று கூடி அருவி வெட்டுவதால்
அவர்களின் நிழல் மேடையின் பின்புறம்பதியும் வண்ணம் அமைக்கப்படவேண்டும். பரத்தை அருவி வெட்டு ஆரம்பிக்க முன்னர் நந்தி உடையார் சென்று வெற்றிலை வைத்து அருவிவெட்ட வயலில் இறங்கும்படி அழைக்க வேண்டும். பின்னர் கடவுள் வணக்கப் பாடல்கள் ஆரம்பிக்கலாம். அருவி வெட்டுவோர் அதன்பின்னர் வயலில் இறங்குவது போல் பாவனை செய்து அருவி வெட்டை ஆரம்பிக்கலாம்)
(குறிப்பு ஒளி வட்டத்துள் பாடல் பாடுபவர் நிற்க வேண்டும். அருவி வெட்டும் பாடல்களில் முதலில் விநாயகர், முருகன் வணக்கப்பாடல்கள் பாட வேண்டும். பின்னர் பன்றிப்பள்ளு பாட வேண்டும். அருவி வெட்டும் போது ஒருவர் பின்னின்று மத்தளம் அடிக்க வேண்டும். யாராவது ஒருவர் அருவி வெட்டும்போது இடையில் நிமிர்ந்து பின்னின்றால் அவரின் முதுகில் மத்தளத்தை வைத்து அடிக்க வேண்டும். இது அவருக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.)
முருகையன் சிந்து : கடவுள் வணக்கப்பாடல்
மட்டுருக் காலே அரு வாளைத் தட்டி
மாவிலங் கம்பிடி தன்னி லிறுக்கி வெட்டும் பிடியை சிறக்கவே வெட்டி
வெள்ளித் தகட்டால் விரல் கூட்டமிட்டு முள்ளிநகர் வாளவரு காட்டா விநாயகரை
முன்னே நினைந்து கையில் அருவாளெடுத்து தொல்லுலகு முல்லையூர் வாளிளந் தாரிமார்
தோராமல் நிலைஅருவி விளையாடினாரே கரியதொரு விறுமனும் வைகாளி அப்பரும்
கஞ்சவீர பத்திரரும் யாப்பை வன்னியரும்
63

Page 34
அறுஅறுபூதனும் ஐயனும் காளியும்
அம்புவியிலுள்ளவோர் தெய்வமத் தனையும்
குபேரன் அறுமுகக் குமரவேலயுதன்
குன்னுறைக் குறமகள் வள்ளிபங்காளன்
முருகன் முள்ளியவளைக் கலியான வேலவரை
முதல்வனைச் சேவிக்க முழுதும் வந்தனரே.
வன்னிவரி வேங்கை மதத்துவருமாப்போல்
வாதராகன்காற்று மோதிவருமாப்போல்
வீட்டிலே கடிநாய் வெருண்டு வருமாப்போல்
சீனப்புலி தண்டயை முறுக்கிவருமாப்போல்
நாட்டிலே வாழ்கின்ற நல்லிளந்தாரிமார்
நனுகாமல் நிலை அருவி விளையாடினாரே
அருவிவெட்டுவோர். (கூக்குரலிட்டு). ஆ..இனி. பண்றிப்பள்ளு
பாடுங்கோ
பாடுபவர் (விருத்தம்) களத்த கரிதனிலே காலையோட்டி
கனத்ததோர் சூள்தடியை கையிலேந்தி குழைகுழைத்த மண்ணெடுத்து உண்டை செய்து
குண்டெடுத்து கவுணில் வைத்துக் கொண்டு போக பளபளவென நில வெறிக்கப் பணியும் தூறப்
பண்டியனார் தறைக்குள்ளே வந்து பாய்ந்திட்டாரே
தரு : தெந்தனத் தெந்தென தென்னா- தென
தெந்தனத் தெந்தென தென்னா
பாடல் அந்தியும் சந்தியு மறிந்தே - அதில்
சிந்தைகள் விந்தைகள் புரிந்தே - பரும் பந்துகள் போலவே உருண்டே - தனிப்
பண்டியும் ஓடி வந்ததுவே. குட்டியும் தாய்களுமாக - குறங்
கொள்ளிபோல் கால்களும் நோக ஒட்டி மறைந்து நின்றே தான்
உல்லாசப் பண்டியும் வந்ததுவே.
64

அருவி வெட்டுவோர்:
பாடுபவர்
பீரங்கிபோற் சொத்தை கொண்டு - மண்ணைப்
போர்த்திடும் வல்லமை கண்டு
ஆரம்பியாமலே நடந்தே - ஆள்
பார்த்துப் பண்டியும் வந்ததுவே
பன்றி குட்டிகளுக்கு என்ன சொன்னது.
ஒடி ஒடித் திரிந்தாலும் உங்கள் பசிதீராது ஓரிடத்தில் நின்று உளக்கி தின்னுங்கோ மக்காள்.
நெல்லுத் தின்னும் ஆசையினால் பல்லுக் கில்லுப் பேர்த்திடாமல் பைய மெள்ள நன்னி நன்னித் தின்னுங்கோ மக்காள்
வெட்டிக் கட்டி சூடு வைத்தால் எட்டிப் பார்க்க முடியாது கெட்டித்தனமாக நின்று தின்னுங்கோ மக்காள்
பொழுதோ விடியதாகும் பூமி வெளிப்பாகுதிங்கே
பேசாமல் வேலிக்கப்பால்
ஒடுங்கோ மக்காள் மக்கள் தழைக்க வேண்டும் மாதா பிதா வாழ வேண்டும் வஞ்சகமின்றிச் சிவனை கெஞ்சுங்கோ மக்காள்
பாடும் தமிழ் வல்லோரும் பாராட்டிக் கேட்பவரும் நிடுழி வாழ்க வென்று வாழ்த்துங்கோ மக்காள்
(பாடல்தொடரலாம். நந்தி உடையார் வயல் வரம்பில் நிற்க சோதிடர் வரல்.)
65

Page 35
நந்திஉடையார்:
சோதிடர்:
நந்திஉடையார்:
Gg-rjLi:
நந்தி உடையார் :
சோதிடர்
நந்தி உடையார் :
சோதிடர்
நந்தி உடையார் :
வாருங்கள் சோதிடரே.
வணக்கம் நந்திஉடையார் அவர்களே.
என்ன சோதிடரே இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்?
கண்ணகை அம்மன் கோவிலுக்கு வந்தேன். நந்தி வெளியில் பரத்தை வெட்டு நடைபெறுகிறது என்று கூறினார்கள். தங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்தேன்.
எப்படி சோதிடரே முத்துஐயன் குளத்து நீரை இந்தப் பக்கம் வடிந்து வரக்கூட விடவில்லையே.
நந்தி உடையார் அவர்கள் ஒன்றை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முத்துஐயன் நல்லவர். ஆனால் அவருடன் சேர்ந்திருக்கும் குட்டி வன்னிமையே எல்லாவற்றிற்கும் காரணம்.
இது என்ன புதுக்கதை சொல்கிறீர் சோதிடரே
நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். முத்து ஐயன் கட்டு குளத்து நீரைக் கசிந்து பாய விடக்கூடாது என ஆலோசனை கூறியவர்குட்டி வன்னிமை அவர்களே.
சொல்பவன் சொன்னால் கேட்பவனுக்கு மதி எங்கே போனது. குறுநில வன்னிபமாக இருப்பவன் மக்களின் தேவைகளை சரி பிழை அறிந்து தீர்ப்புக் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும். கசிந்து பாயும் நீருக்குக் கூட வரி செலுத்த வேண்டும் எனக் கேட்பது எவ்வளவு சரியாகும்.
66

சோதிடர்
நந்தி உடையார் .
சோதிடர்
நந்தி உடையார் :
சோதிடர்
நந்தி உடையார்
வரி செலுத்த மறுத்ததினால் தான் அவர்கள் உங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள்.
குளத்து நீரை கசியக் கூட விடவில்லை. பிறகேன் நான் வரி செலுத்த வேண்டும். முத்துஐயனால் கார்த்திகை மாதத்து கர்க்கடகத்திலன்று பெய்த பெருமழையை நிறுத்த முடியவில்லை. அன்று பெய்த மழையின் காரணமாக குஞ்சுக்குளம், பள்ளவெளி, நீர் நிறைந்து விட்டது. வயல் வெளிக்கு போதக்கூடிய அளவு நீர் இருந்தபடியால் வழமையை விட இம்முறை நல்ல விளைச்சல், அதனால் தான் பரத்தை போட்டு அருவி வெட்டத் தீர்மானித்தேன்.
எதற்கும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் உடையாரே
சோதிடரே, முத்து ஐயனிடம் போய்ச் சொல்லுங்கள். அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்று. குளக்கோட்டன் பரம்பரையான முத்து ஐய வன்னிபம் இப்படி தவறு செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.
உங்களுக்கு இன்னும் ஒரு உண்மையைக் கூறவேண்டும். ஆனால் என்னால் அந்த ரகசியத்தை இப்போது கூறமுடியாது. எனது வாய்க்கு அரசவை அதிகாரம் கட்டுப்பாடு விதித்துள்ளது. காலம் வரும் போது உங்களுக்கு கூறுவேன். நான் போய் வருகிறேன் உடையாரே. கொட்டுக் கிணற்றடிப் பிள்ளையார் உங்களுக்கு அருள் புரிய வேண்டும்.
கண்ணகை அம்மன் அருளால் சுகமே போய் வாரும் சோதிடரே.
அருவி வெட்டு தொடர்ந்து நடக்க ஒளி மங்கி காட்சி முடிவடைகிறது)
67

Page 36
குட்டிவன்னியன்:
முத்துஜயன்
குட்டிவன்னியன்:
சோதிடர்
முத்துஜயன்
GITA : 1 0
முத்துஐயன் அரண்மனை
எல்லோரும் அமைதியாக இருத்தல்
பொதுவான ஒளியமைப்பு
குட்டி வன்னிமையே எல்லோரும் தங்களது வரி நெல்லைத் தவறாமல் செலுத்தி வருகிறார்களா?
நந்திஉடையாரைத் தவிர, மற்ற எல்லோரும் வரி நெல்லைத் தவறாமல் செலுத்தி வருகிறார்கள் வன்னிபமே.
நந்திஉடையாரின் வயலுக்கு எப்படி தண்ணி பாய்ந்தது? கசிந்து செல்லும் நீரைத்தான் நிறுத்தி விட்டதாகக் கூறினிர்களே.
ஒரு சொட்டு நீர் கூட இப்போது கசிந்து செல்வதில்லை வன்னிபமே.
குட்டி வன்னிமை சொல்வது சரி. ஒரு சொட்டு நீர் கூட கசிந்து செல்வதில்லைத்தான். ஆனால் கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தன்று பெய்த மழையை உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அன்று பெய்த மழையின் மூலம் குஞ்சுக் குளம், பள்ளவெளியில் நீர் நிறைந்தது. நந்திவெளி வயல் முழுவதும் நீர் பாய்ந்தது. அதனால் நந்தி வயல் வெளியில் நல்ல விளைச்சல். உடையார் பரத்தை போட்டு அருவி வெட்டியும் விட்டார்.
அப்படியா! இம்முறை நந்தி உடையார் தப்பி விட்டார். இனி வருங்காலங்களில் எனது தயவின்றி அவரால் வேளாண்மை செய்ய Աpէջեւյն Ցl.
68

குட்டிவன்னியன்:
முத்துஜயன்
சோதிடர்
குட்டிவன்னியன்:
சோதிடர்
குட்டிவன்னியன் :
வன்னிபமே குளக்கோட்டு மன்னன் பரம்பரையில் வந்த தாங்கள் செய்த இந்தச் சேவையை இந்தப் பிரதேச மக்கள் அனைவரும் பாராட்டிப் பேசுகிறார்கள். தங்களையும் குளக்கோட்டு மகாராசா என்றே
அழைக்கிறார்கள்
குளம் கட்டி விவசாயம் வளரச் செய்ய
வேண்டியது எமது கடமையாகும்.
அதுபோல் தாங்கள் கட்டிய குளத்தால்
நன்மை பெறுபவர்கள் பாராட்டிப்
பேசுகிறார்கள். அதே நேரம் குளத்து நீரைப் பெறாதவர்களிடம் வரிநெல்லை நாம் கேட்பது தவறாகும் வன்னிபமே.
அரசே சுற்றி வளைத்து சோதிடர் எங்கே வருகிறார் என்பது எனக்கு விளங்குகிறது.
என்மீது தவறிருந்தால் வன்னிபம் மன்னிக்க வேண்டும். குளக்கோட்டு ராசாவின் பரம்பரைக்கு ஒரு இழுக்கு வரக்கூடாது என்பது தான் எனது ஆசை.
சோதிடரே வன்னிபத்தின் பெயரை குளத்திற்கு வைக்க வேண்டும் என நான் கூறியபோதே நீர் எதிர்ப்புத் தெரிவித்ததை வன்னிபம் மறந்திருக்க மாட்டார். ஆகவே மேலும் ஆலோசனைகள் கூறாது மெளனமாக இருந்தால் வன்னிபம் உங்களை மன்னிப்பார். அதையும் மீறி நீங்கள் நடந்தால் உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டி வரும்.
69

Page 37
சோதிடர்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
குட்டிவன்னியன்:
சோதிடர்
எதிர்காலத்தில் நடக்க வேண்டியதைக் குறித்து சொல்ல வேண்டியது எனது கடமை. அதையும் தவறென்று கூறுகிறீர்களே.
கால பலனை குறித்து சொல்வதை மட்டும் உங்கள் தொழிலாக வைத்துக் கொள்ளுங்கள். வன்னிய நிர்வாகத்தில் நீங்கள் ஆலோசனை கூறவேண்டிய அவசியமில்லை. அதற்கான அதிகாரமுமில்லை.
இருவரும் வாய்த்தர்க்கம் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
அப்படியே ஆகட்டும் வன்னிபமே
வன்னிபம் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். தாங்கள் செய்யும் சேவை குட்டி வன்னிமை போன்றவர்களின் செயல்களால் இழிவுபடுத்தப்படுகிறது. குளக்கோட்டன் பரம்பரையில் வந்த தாங்கள் குட்டிவன்னிமை போன்றோரின் பேச்சைக்கேட்டு நடப்பதால் தங்கள் சேவையை மக்கள் கணக்கில் எடுக்காது பேசுகிறார்கள். இப்படியான அரசவையில் நான் அங்கம் வகிப்பதை விடுத்து ஒதுங்கிக் கொள்வதே மேல் என நினைக்கிறேன். அதனால் இந்த நிமிடம் தொடக்கம் இந்த அவையில் இருந்து நான் வெளியேறுகிறேன். என்னை வன்னிபம் மன்னிக்க வேண்டும்.
(சோதிடர் வெளியே போக முத்துஜயனும், குட்டிவன்னியனும் பார்த்த வண்ணம் இருக்க ஒளி மங்கி காட்சி முடிவடைகிறது)
70

குட்டிவன்னியன் :
காட்சி : 11
முத்துஜயன் குளக்கட்டு
இரவு நேர ஒலிகள்
குளக்கட்டில் குட்டி வன்னியன் நடந்த வண்ணம் வருதல். அதற்கான ஒளியமைப்பு செய்யப்பட வேண்டும்.
(தனியே) குளக்கோட்டு மகாராஜா பரம்பரையில் வந்த முத்துஐயன் கட்டிய குளத்து நீரைத் தனது வயலுக்கு பாய்ச்சி நெல் விளைவித்த நந்தி உடையார் அரசருக்கு வரி நெல் செலுத்த மறுத்தது மட்டுமல்லாமல் தனது மகளை வன்னிபத்திற்குமணம் முடித்து வைக்கவும் மறுக்கிறார். என்ன துணிவு வேண்டும் வன்னிபத்தை எதிர்த்துப் பேசுவதற்கு. இவனுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும். நந்திஉடையார் பக்கமே பேசி அரசவையை விட்டு சோதிடரும் விலகிக் கொண்டார். நந்தி மகளை நான் திருமணம் செய்ய பெண் கேட்டுச் சென்றபோது நந்தி உடையார் என்னை ஏளனம் செய்து அனுப்பிவிட்டார். இவர்களுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க வேண்டும். என்ன செய்யலாம். ம். ம். நந்தி உடையார் இப்பொழுதுதான் அருவிவெட்டியுள்ளார். உப்பட்டிகள் யாவும் வயலில் நிறைந்த வண்ணம் இருக்கும். இந்த நேரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உப்பட்டிகள் அனைத்தையும் முல்லைத்தீவு பெருங்கடலுக்கு கொண்டு போகச் செய்யலாம். குளத்து நீரை திறந்துவிட்ால் நந்திவெளி முழுவதும் நீர் பரவி விடும் நந்திஉடையார் சொன்ன வார்த்தைகள் பொய்த்து விடும். நந்திஉடையார் என்ன
71

Page 38
சொன்னார் தெரியுமா? ஆத்தை மறிச்சான், குளத்தை மறிச்சான், கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தை மறிக்க முடியுமா? என்று தானே கேட்டான். மழை பெய்து வேளாண்மை விளைந்த செருக்கில் நந்தி உடையார் இருக்கிறார். அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும்.
குளத்துத் துருசை திறந்துவிட்டால் நாளைக்குத் தான் தண்ணிர் நந்தி வெளியை போய்ச் சேரும். எப்படியாவ்து இன்றிரவே தண்ணி பாய்ந்து நந்திஉடையார் வயல்வெளியை நிரப்ப வேண்டும். என்ன செய்யலாம்.ம்.
குளக்கட்டை வெட்டி bil(6)(6штih அப்பொழுதுதான் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நந்தி உடையாருக்கு ஒரு பாடம் படிப்பிக்கலாம். ஆமாம் குளக்கட்டை வெட்டிவிடுவோம்.
(சிரித்து ) இன்றிரவே நந்திஉடையார் வயல் வெளியில் உள்ள உப்பட்டிகள் அனைத்தும் முல்லைத்தீவு பெருங்கடலுக்குப் போய்விடும்.
நாளைக்கு எப்படி நந்திஉடையார் வீரம் பேசப் போகின்றார் என்பதையும் நான் பார்க்கத்தான் போகிறேன். நந்தி மகள் கண்ணிர் விட்டு அழுவதை நான் பார்க்க வேண்டும். ஆ.
(குளக்கட்டை வெட்டுகிறான். குறிப்பு வட்ட ஒளியில் சோதிடர் வந்து நின்று பார்க்க வேண்டும். குட்டி வன்னியன் குளத்தை வெட்டுவதைப் பார்த்து சோதிடர் சத்தமின்றி "கடவுளே" எனச் சொல்லி தலையில் அடித்துக் கொள்கிறார்.)
(வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதைப் பார்த்து குட்டி வன்னியன் சிரித்தவண்ணம் இருக்கிறான். குட்டிவன்னியன் சிரிக்கக் குடி மக்களின் அழுகுரல் கேட்க வேண்டும்.)
(ஒளி மங்கி காட்சி முடிவடைகிறது)
72

ஒளி
காட்சி ; 12
நந்திவயல்வெளி
மக்கள் ஆரவாரித்து வெள்ளம் பாய்வதை அங்கும் இங்கும் சொல்லிய வண்ணம் ஒடுகிறார்கள். சிலர் தங்கள் பெட்டிகளுடன் ஒடுகிறார்கள். பிள்ளைகள் அழும் ஒலி. சிலர் வயல்வெளியில் நின்று உப்பட்டிகளை வெளியே எடுத்து வைக்கும் போது ஏற்படும் ஒலி.
இவர்களின் ஒட்டத்தை நிழல் வடிவத்தில் எடுத்துக் காட்டிக்கூடிய வகையில் ஒளியமைக்கப்பட வேண்டும்.
(நந்திஉடையார் வயல் வரம்பில் வந்து நிற்கிறார்.)
நந்தி உடையார்
குடிமகன்
நந்தி உடையார்
வற்றாப்பளைத் தாயே இது என்ன சோதனை.?
(வந்து) நந்திஉடையார் அவர்களே. வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. தடை செய்யவே முடியவில்லை. வயலில் உள்ள உப்பட்டிகள் அனைத்தும் பெருங்கடல் பக்கம் அள்ளிச் செல்லப்போகிறது.
கொட்டுக் கிணத்தடிப் பிள்ளையாரே நான் என்ன செய்யப் போகிறேன்.(வயலில் இறங்கி ஒவ்வொரு உப்பட்டியாகத் தூக்கி வரம்பில் வைக்கிறார். திரும்பி வெள்ளம் வருவதைப் பார்க்கிறார். அந்த நேரம் நந்திமகள் வருகிறாள். நந்தி உடையாரைப் பிடித்து வயலுக்கு வெளியே வரும்படி அழைக்கிறாள்.)
73

Page 39
நந்திமகள்
நந்தி உடையார்
நந்திமகள்
நந்தி உடையார்
நந்திமகள்
நந்தி உடையார்
நந்திமகள்
நந்திமகள்
நந்திமகள்
நந்தி உடையார்
நந்திமகள்
அப்பா. என்ன இது வாருங்கள் வெளியே
நான் வரவில்லை மகளே.
பரத்தை போட்டு வெட்டிய உப்பட்டிகளை எப்படி நீங்கள் தனியே வரம்பில் தூக்கி வைக்கப் போகிறீர்கள்?.
என்னை விடு மகளே. என்னால் இயலக்கூடிய வரையில் உப்பட்டிகளை வயல் வரம்பில் வைக்கப் போகிறேன்.
அப்பா சொல்வதைக் கேளுங்கள். வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது.
பார்க்க மனம் பொறுக்குதில்லையே அம்மா(அழுகிறார்)
ஏனப்பா அழுகிறீர்கள். மனத்தை தேற்றிக் கொள்ளுங்கள்.
காட்டு விநாயகரே.என்னையேன் இப்படிச் சோதிக்கிறாய். யாருக்கு நான் துரோகம் செய்தேன். என்னையேன் இப்படி வருத்துகிறாய். (நெஞ்சைப் பிடித்த வண்ணம் அழுகிறார்.)
அப்பா அழாதீர்கள். எங்களுக்குத் சேரவேண்டிய சொத்தாக இருந்தால் நமக்குச்
சேரும். இல்லையேல் அவை அழிந்து போகும் என நீங்கள் தானே அடிக்கடி கூறுவீர்கள்.
நந்திமகளே எனக்கு நெஞ்சுவலி அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அப்பா வெளியே வாருங்கள். (கையைப் பிடித்து வெளியே வரும்படி அழைக்கிறாள்)
74

நந்தி உடையார்
நந்திமகள்
நந்தி உடையார்
நந்திமகள்
நந்தி உடையார்
நந்திமகள்
நந்தி உடையார்
என்னை விடம்மா. நந்தி உடையாரின் உயிர் நந்தி வெளியிலேயே போகட்டும்.
அப்பா அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்.
உனக்குத்தான் கண்ணகைப் பெத்தாச்சியும், காட்டா விநாயகரும், தான்தோன்றி ஈசுவரரும் துணையிருக்கிறார்கள். நான் இருந்து என்ன செய்யப்போகிறேன்.
அப்பா வாருங்கள் வைத்தியரிடம் போவோம்.
செய்யப்போகிறேன். என்னுடைய மனவருத்தத்திற்கு மருந்தில்லையே அம்மா
அப்பா உங்களுக்கு ஒன்றும் நடக்காது வாருங்கள்
எனது உயிர் இந்த வயல் வெளியில் தான் போக வேண்டும்.
(நந்திஉடையார் நெஞ்சைப் பிடித்த வண்ணம் வயல் வரம்பில் உட்காருகிறார். பின்னர் மெல்லமெல்லமாகச் சாய்கிறார்)
நந்திமகள்
நந்திமகள்
அப்பா. அப்பா. (அழுதழுது) என்னைத் தனியே விட்டுவிட்டு போய்விடாதீர்கள். அப்பா. அப்பா. (தொட்டுப்பார்த்து) ஐயோ. அப்பா. என்னைத் தனியே விட்டு போய்விட்டீர்களே. (அழுகிறாள்)
(ஒப்பாரி)
ஐயோ என் அப்பாவே அன்புடைய தந்தையரே சொல்லரிய நாயகமே - நீர் சிவலோகம் சேர்ந்தனையோ
75

Page 40
(சோதிடர் வருகிறார்)
சோதிடர்
நந்திமகள்
சோதிடர்
நந்திமகள்
சோதிடர்
நந்திமகள்
(ஐயோ)
நந்திமகள் தனியிருக்க உன்னுயிரை நீ மாய்க்க என்ன நடந்ததென தெளிவாய் அறிந்திட்டால் - என் மனம் தான் ஆறாதோ -
(ஐயோ)
நந்தி வயல் வெளிக்கு நன்னீரை வெட்டி விடச் செய்தவரை நானறிந்தால்
செத்தாலும் விடுவேனோ - அவரை செய்த பழி வாங்காமல்
(ஐயோ)
நந்தி மகளே. என்ன நடந்தது?
சோதிடரே எனது அப்பாவைப் பாருங்கள்.
(நந்தி உடையாரை தொட்டுப்பார்த்து) கடவுளே. இந்தக் கொடுமையைச் செய்தவர்களை எப்படித் தண்டிக்கப்
போகிறாய்.
:சோதிடரே. யாரிந்தக் கொடுமையைச் செய்தார்கள்.
நந்திமகளே இந்தக் கொடுமையைச்
செய்வதன் குட்டிவன்னிமையேதான்.
:இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா சோதிடரே
76

சோதிடர் நந்திமகளே. மக்கள் எல்லோரும் தமக்கேற்பட்ட இழப்பைப் பற்றி யோசிக்கிறார்களே தவிர கொடுமைகளைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு நேரமுமில்லை.
நந்திமகள் நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தால்
நான் தட்டிக் கேட்கிறேன்.
சோதிடர் நந்திமகளே, கண்ணகை ஆம்மன் மதுரையை ஏரித்த பின் நந்திவெளியில் தான் குளிர்ச்சி கண்டாள், ஏன் இங்கிருந்து மற்றுமொரு பெண் கொடுமைகளை தட்டிக் கேட்க புறப்படக்கூடாது?
நந்திமகள் எனது தந்தையின் மீது ஆணையாகக் கூறுகிறேன். எனது தந்தையின் உயிரிழப்புக் குக் காரணமான வர்களை நீதியின் முன்னிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை யைப் பெற்றுக் கொடுக்கும்வரை எனது மனக்குமுறல் ஆறாது சோதிடரே. இது கண்ணகைத்தாயின் மீது ஆணை.
சோதிடர் : நந்திமகளே முதலில் அப்பாவின் கடமை
களைச் செய்து முடிப்போம் வாருங்கள்.
(இருவரும் இணைந்து நந்திஉடையாரை தூக்கிக் கொண்டு போக மற்றும் பலர் மேடைக்கு ஓடிவர ஒளி மங்கி காட்சி முடிவடைகிறது)
cm。11”とf - 13
8G6II tib: முத்துஐபன் அரண்மனைக்கான ஒலி, ஒளி அமைப்பு. முத்துஐபன், அமைச்சர், அவையிலிருக்க குட்டிவன்னிமை
வெளியே இருந்து வரல்,
(ஆட்டி வன்கரிமை வள்ளி பத்திற்கு எனது வணக்கங்கள் முத்துஜயன்: குளக்கட்டு எப்படி உடைத்து தண்ணீர் வெளியே பாய்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்ததா. குட்டி வன்னிமை: முடிந்தாவு முயற்சி செய்து விட்டேன். என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை வன்னிபமே. (சேவகன் வருகிறான்)
சேவகன்: வன்னிபத்திற்கு வணக்கம். நந்தி உடையார் மகள்
நந்திமகள் தங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். முத்தஐயன்: நந்திமகளா..!
குட்டி வின் ரிைமை சரியான தருணம் வந்துவிட்டது வன்னிபுடிே நந்திமகள் தனது தந்தையார் நந்தி உடையார் சார்பில் தங்களிடம் மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறாள் போலும்.
77

Page 41
முத்துஜயன்
(சேவகன் வெளியே செல்லல்)
குட்டிவன்னியன் :
சரி. என்னவென்றுதான் கேட்டு விடுவோமே. அவளை உள்ளே வரச் சொல்லுங்கள்
வன்னிபமே. நல்ல தருணம் கிடைத்துள்ளது. அவர்களுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும்.
(நந்தி மகள் உள்ளே வரல் அவையில் உள்ளோரை ஏளனமாக பார்த்து)
நந்திமகள்
குட்டிவன்னியன் :
நந்திமகள்
முத்துஜயன்
நந்திமகள்
குளக்கோட்டு மகாராஜா பரம்பரையில் வந்துதித்து குளங்கள் பல கட்டி, விவசாயம் வளர்த்து, நீதி, நேர்மை வழுவாமல் ஆட்சி புரியும் முத்துஐயன் வன்னிபத்திற்கு எனது பணிவான வணக்கங்கள்.
என்ன . வணக்கம். நீ. ண்டும். பழித்தும் இழித்தும் வருவது போல் தெரிகிறது.
நான் முத்துஐய வன்னிபத்திற்குத்தான் வணக்கம் சொன்னேன். வன்னிபந்தான் பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டியது கடமை. வேண்டாதவர்கள் எல்லாம் இந்தச் சபையில் பேசுவதுதான் வழக்கமோ.
நிறுத்து பெண்ணே. அதிகம் பேசர்மல் வந்த விடயத்தைச் சொல்லு.
நீதி கேட்க வந்தவர்களை நிற்க வைத்துப்
பேசுவதுதான் முத்து ஐயன் வன்னிபத்தின் வழக்கமோ.
78

முத்துஜயன்
நந்திமகள்
முத்துஜயன்
என்னிடம் . நீ. நீதி கேட்க வந்திருக்கிறாயா.
ஆம் வன்னிபமே.
யாரங்கே. இந்தப் பெண்ணுக்கு இருக்க ஒரு ஆசனம் கொண்டு வந்து கொடுங்கள்.
(சேவகன் ஆசனம் கொண்டு வந்து வைத்த பின் நந்தி மகள் அதில் அமர்ந்து
கொள்கிறாள்)
நந்திமகள்
முத்துஜயன் நந்திமகள்
குட்டிவன்னியன் :
நந்திமகள்
முத்தறயன்
ஆசனம் தந்து மரியாதை செலுத்தியமைக்கு எனது நன்றி வன்னிபமே.
சரி. இப்பொழுது கூறும் உமது வழக்கை. குளங்கள் கட்டி நீதி வழுவாமல் கோலோச்சும் வன்னிபமே, தாங்கள் கட்டிய குளத்தின் பலனைப் பெறாத மக்களிடமிருந்து வரி நெல்லைப் பெறுவது எவ்வளவு நீதியாகும்.
வன்னிபமே எமது குளத்தில் இருந்துதான் இவர்களின் நந்திவெளிக்கும் நீர் கசிந்து செல்கிறது. அதனால் இவர்களும் வரி செலுத்தக் கடமைப்பட்டவர்களே.
வானத்தில் இருந்து மழை பொழிகிறது. நாங்கள் விவசாயம் செய்கிறோம். அப்படியிருக்க நாம் ஏன் உங்களுக்கு வரி நெல் இறுக்க வேண்டும்?
பூதங்களைக் கொண்டு வந்து எவ்வளவோ செலவுசெய்து குளத்தைக் கட்டியிருக்கிறேன். என்னைப் பார்த்தா சொல்கிறாய் வரியிறுப்பது தவறு என்று.
79

Page 42
நந்திமகள்:
முத்துஜயன்
நந்திமகள்:
குட்டிவன்னியன் :
நந்திமகள்
முத்துஜயன்
நந்திமகள்:
குட்டிவன்னியன் :
வன்னிபமே . தங்கள் குளத்தில் இருந்து நேரடியாக எங்கள் வயல்வெளிக்கு நீர் பாயவில்லை. அது ஒரு புறம் இருக்கட்டும். குளங்களைக் கட்டிய பூதங்களுக்கே போதுமான அளவு கூலியைக் கொடுப்பதற்கு அருகதை அற்றவர்கள். எப்படி தாங்கள் தான் குளத்தை கட்டினோம் என இறுமாப்புக் கொள்ளலாம்.
குளங்களைக் கட்டிய பூதனுக்கும் பூதங்களுக்குமாக வயல் வெளியைக்
கூலியாக கொடுத்து, அதற்கு பூதன் வயல் வெளியென பெயரும் சூட்டியுள்ளேன்.
அவற்றை அனுபவிப்பதற்குத்தான் பூதனையும்
பூதங்களையும் நீங்கள் விட்டு வைக்கவில்லையே.
ஆ- ஆ. அது. ஒன்றுமில்லை வன்னிபமே. பூதங்கள் தாங்கள்
பொறுப்பேற்ற வேலையை செய்ய முடியாமல் போகவே காட்டுக்குள் போய் விட்டன. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.
பூதங்கள் போயினவா அல்லது போக வைத்தீர்களா?
பூதங்களுக்கு வேலை கொடுத்தோம் அவற்றால் செய்ய முடியவில்லை. தாமாகப் போயின.
என்ன வேலை கொடுத்தீர்கள் வன்னிபமே.
அது. குளத்தில் இருந்த சில மரங்களை வெளியே எடுத்துப் போடும்படி கூறினோம். அவற்றைத் தூக்கப் போன பூதங்கள் திரும்பவேயில்லை.
80

நந்திமகள்
குட்டிவன்னியன் :
நந்திமகள்
குட்டிவன்னியன்
நந்திமகள்
குட்டிவன்னியன் :
நந்திமகள்
முத்துறயன்
நந்திமகள்
குளத்தில் இருந்த மரங்களா. அல்லது நீங்கள் வெட்டி பட்டையடித்துப்பூேரட்டமுதிசை
மரங்களா..? །ངག────་མ─མག་──────────────ང་----
எதுவாயிருந்தாலென்ன. மரங்களைத் தூக்க முடியவில்லை அவ்வளவு தான். பூதங்கள் போய்விட்டன.
வன்னியமே. முதிரை மரத்தை வெட்டிப் பட்டையடித்துக் குளத்து வானுக்குள் போட்டீர்கள். மரத்திலிருந்த பசை காரணமாக மரங்கள் வழுக்கத் தொடங்கின. குட்டையான விரல்களைக் கொண்ட பூதங்களால் தூக்க முடியாமல் போனது. அதனால் நாட்டை விட்டுப் போயின. நான் சொல்வது சரிதானே குட்டிவன்னிமையே.
ஆ. அது உனக்கு எப்படி தெரிந்தது.
குளம் கட்டி மக்களுக்கு சேவை செய்யும் நீங்கள் எப்படி இந்தத் துரோகத்தை செய்தீர்கள் வன்னிபமே. அது சரி பூதங்களை வைத்திருந்த பூதனுக்கு என்ன நடந்தது.
பூதனும் பூதங்களோடு சேர்ந்து போய்விட்டான்.
பூதன் போகவில்லை வன்னிபமே. நீங்கள் செய்த துரோகத்தை தாங்க முடியாமல் நீங்கள் கட்டிய குளத்தில் இறங்கி தற்கொலைசெய்து கொண்டான் வன்னிபமே.
என்ன. தற்கொலை செய்து கொண்டானா?
அதுவும் நான் கட்டிய குளத்துள் விழுந்ததா?
ஆம் வன்னிபமே.
8

Page 43
குட்டிவன்னியன் :
நந்திமகள்
முத்துஜயன்
நந்திமகள்
முத்துஜயன்
சோதிடர்
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
வன்னிபமே இவள் சொல்வதை நம்பாதீர்கள். இவள் பொய் சொல்கிறாள். ஆ. ஆ. ஆ. பூதன் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன சாட்சி இருக்கிறது.
வன்னிபமே. உங்களுக்கும் சாட்சிதானே
வேண்டும். வெளியே சாட்சி இருக்கிறார். அவரை இந்தச் சபைக்கு அழைப்பதற்கு அனுமதி தர வேண்டும்.
யார் அந்தச் சாட்சி.
சோதிடர் இராமலிங்கம். நீங்கள் செய்த துரோகங்களை கண்டு மனம் பொறுக்காமல் இந்த அவையை விட்டு வெளியே போனவர், உள்ளே வருவதற்கு தங்கள் அனுமதிக்காக வெளியே காத்திருக்கிறார்.
(திகைத்து) யாரங்கே சோதிடர் இராமலிங் கத்தை அழைத்து வாருங்கள்.
(சோதிடர் வரல்)
வணக்கம் வன்னிபமே
வணக்கம் சோதிடரே.
வன்னிபமே சோதிடரை நம்பாதீர்கள். ஏற்கனவே உங்கள் பெயரைக் குளத்திற்கு வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்.
குட்டிவன்னியரே மெளனமாக இருங்கள். சோதிடரே அரசவை ரகசியங்களை வெளியே சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறீர். அதை மறந்து அந்த இரகசியங்கள் அனைத்தையும் வெளியே சொல்லியிருக்கிறீர். நீர் அரசவைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டீர்.
82

நந்திமகள்
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
சோதிடர்
நந்திமகள்
சோதிடர்
முத்துஜயன்
சோதிடர்
வன்னிபமே தாங்கள் எனது சாட்சியை மிரட்டுகிறீர்கள் என நினைக்கிறேன். சோதிடர் உங்களுக்குச் செய்த சத்தியத்தை மீறவில்லை. தான் கண்டவற்றையே இங்கே
கூற வந்திருக்கிறார்.
எதைக் கண்டார்
எதைக் கண்டீர். அதைச் சொல்லும்,
வன்னிபம் மன்னிக்க வேண்டும். வந்து. வந்து.
மூன்று காலத்தையும் உணர்ந்து சொல்லக்கூடியவர்கள் சோதிடர்கள் நடந்தது. நடப்பது நடக்கப் போவது மூன்றையும் ஒழிவு மறைவின்றி எடுத்துச் சொல்ல வேண்டியது உங்கள் கடமை, வன்னிப் பிரதேசத்தின் நன்மை கருதி தாங்கள் இந்த உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் சோதிடரே.
வன்னிபமே குட்டி வன்னிமை திட்டமிட்டபடி பூதங்கள் மரங்களைத் தூக்க முடியாமல் போனது உண்மை. அதே நேரத்தில் பூதனும் தான் ஏமாற்றப்பட்டதைத் தாங்க முடியாமல் குளத்தில் இறங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டான் வன்னிபமே.
என்ன? பூதன் குளத்தில் இறங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டது உண்மையா?
ஆம். அன்றைய தினம் நானும் பூதனைச் சந்திப்பதற்காகக் குளக்கரைக்குச் சென்றிருந்தேன். எனது கண்ணுக்கு முன்னேயே பூதன் குளத்தில் இறங்கி உயிரை Inಢ್ಯಕಿ கொண்டான் வன்னிபமே.
s

Page 44
முத்துஜயன்
குட்டிவன்னியன் :
நந்திமகள்
முத்துஜயன்
நந்திமகள்
முத்துஜயன்
நந்திமகள்
முத்துஜயன்
அமைச்சர்
குட்டிவன்னிமையே பூதன் என்னைப் பார்க்க மிகவும் கூச்சமாக இருக்கிறான். அவன் பெயரில் வயல் வெளியை எழுதி வைக்கும்படி கூறினிரே. அது பொய்யா.
அது வந்து வன்னிபமே. தாங்கள்
(இடைமறித்து) வன்னிபத்திற்கு இன்னும் ஒரு உண்மையை நான் தெரிவிக்க வேண்டும்.
நந்திமகள்! எந்த உண்மையாயினும் பயமின்றி இந்தச் சபையிலே கூறலாம். குளக்கட்டு உடைத்துப் பாயவில்லை. குளக்கட்டை வெட்டிவிட்டுள்ளார் ஒருவர்.
என்ன முத்துஐயன் கட்டிய குளம் வெட்டி விடப்பட்டதா.
ஆம். குளம் எந்தக் காரணத்தைக் கொண்டும் முறித்துக் கொண்டுபோகக்கூடிய நியாயமில்லை. ஏனென்றால் குளத்தில் வான் பாய்ந்து கொண்டிருந்ததால் குளக்கட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வழியில்லை வன்னிபமே.
நான் கட்டிய அந்தக் குளத்தை வெட்டி விடக்கூடிய துணிவு யாருக்கு உள்ளது. யாராயிருந்தாலும் கூறுங்கள்.
அவருக்குத் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் வன்னிபமே.
(நந்திமகள் சோதிடர் இருவரும் குட்டிவன்னிமையைப் பார்க்கிறார்கள்)
குட்டிவன்னியன் :
என்ன.என்ன. என்னைப் பார்க்கிறீர்கள். நான் அந்தக் குளத்தை வெட்டி விடவில்லை.
84

நந்திமகள்
குட்டிவன்னியன் :
நந்திமகள்
குட்டிவன்னியன் :
நந்திமகள்
குட்டி வன்னியரே எனது கண்களை நன்றாகப் பாரும்.
நான் ஏன் உனது கண்களைப் பார்க்க வேண்டும்.
நான் அன்றாடம் காலையும், மாலையும் மதியமும் வணங்கும் கண்ணகைத்தாயின் ஆணையாக . கொட்டுக் கிணற்றடிப் பிள்ளையார் ஆணையாக, தான்தோன்றி ஈசுவரர் ஆணையாக. குட்டிவன்னியரே இந்தக் குளத்தை வெட்டிவிட்டது யாரெனக்கூறும். நீர் தானே. நந்திமகளை நீர் திருமணம் செய்யப் பெண்கேட்டு வந்த போது நந்தி உடையார் ஏளனமாகப் பேசி உன்னை வந்தவழியே அனுப்பிவிட்டதற்கு பழிவாங்க வேண்டும் என்பதற்காக முத்துஐயன் குளக்கட்டை வெட்டி விட்டீர். உண்மையைச் சொல்லும்.
(அங்குமிங்கும் நடந்து பயந்தவண்ணம்) வன்னிபமே இந்தப் பெண்ணின் கண்கள் நெருப்பாக என்னை தீய்க்கின்றன. என்னைக் காப்பாற்றுங்கள்(அரசரை நோக்கி ஒடுகிறார்)
எங்கே ஒடுகிறீர். குட்டி வன்னியரே. நில்லும்(அருகே சென்று) கற்பின் மகத்துவத்தால் மதங்கொண்ட யானையை அடக்கிய அரியறத்தை வாழ்ந்த இந்தம் பூமியின் மீது ஆணையாகக் கேட்கிறேன். யார் குளக்கட்டை வெட்டியது.
(சற்று நேரம் வரை, நந்திமகள் பார்த்த வண்ணமிருக்கிறாள். இசை)
85

Page 45
குட்டிவன்னியன் :
முத்துஜயன்
நந்திமகள்
முத்துஜயன்
நந்திமகள்
முத்துஜயன்
(பயந்து நடுங்கி) வற்றாப்பளையில் இருந்து வந்த நந்தி உடையார் பெற்ற நந்திமகளே என்னை மன்னித்துவிடு. அந்தக்கனல் தெறிக்கும் கண்களால் மீண்டும் என்னைப் பார்க்காதே. நான் எரிந்து விடுவேன். என் உடம்பெல்லாம் பதறுகிறதே. வன்னிபமே என்னை மன்னித்துவிடுங்கள். நான்தான் குளக்கட்டை வெட்டிவிட்டேன். எனது கோபம் நந்திமகளைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இப்படிச் செய்யத்துாண்டி விட்டது. மன்னிக்க வேண்டும் வன்னிபமே (அழுகிறான்)
குட்டிவன்னியரே என்ன காரியம் செய்து வீட்டீர். எவ்வளவு கஷ்டப்பட்டுக் கட்டிய குளக்கட்டை வெட்டி ஒன்றுக்கும் உதவாமல் செய்து விட்டீரே. நந்திமகளே நீரே தீர்மானிக்கலாம். குட்டிவன்னியருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். நீரே சொல்லும்.
குட்டிவன்னியருக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் இழந்த எனது தந்தையின் உயிரை மீட்டுக் கொடுக்க முடியுமா?.
அதற்காக நான் மிகவும் மனம் வருந்துகிறேன். நந்திமகளே.
இப்பொழுது வருந்தி என்ன பிரயோசனம் வன்னிபமே. பொருத்தமான ஆலோசகர்கள் இல்லாத தலைவன் எப்படி தன்னை அழித்துக் கொள்வான் என்பதற்கு தாங்கள் ஒரு உதாரணமாகிவிட்டீர்கள் வன்னியமே.
(வருத்தத்துடன்) குளம் கட்டி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற
86

அமைச்சர்
சோதிடர்
முத்துஜயன்
நல்லாசையினால் இந்தக் குளத்தைக் கட்டுவித்தேன். ஆனால் எனது வேண்டாத ஆசைகளினாலும் குட்டிவன்னியனின் தவறான வழிநடத்தலாலும் எல்லாவற்றையும் அழித்துவிட்டேன்.
சோதிடரே முத்துஐயன் காலத்தில் இந்தக் குளத்தை திரும்பவும் கட்டி முடிக்கும் பலன் இருக்கிறதா. பூதங்கள் தான் காட்டுக்குள் போய்விட்டனவே.
அதன் காரணம் நாட்டில் பொய், சூதுவாது கூடிவிட்டது. பழிவாங்கும் எண்ணம் அதிகரித்துவிட்டது. நீதி, நேர்மை செத்துவிட்டது. பல ஆண்டுகள் சென்ற பின்னர் இந்தக் குளத்தை இயந்திர சூத்திரங்களினால் தான் கட்ட வேண்டிய பலன் காணப்படுகிறது. இயந்திர சூத்திரங்களினால் இந்தக் குளத்தை கட்டி முடித்தாலும் அதன் முழுப்பலனையும் பெற்றுக் கொள்வதற்கு பல ஆண்டுகள் செல்லலாம் வன்னிபமே.
குட்டிவன்னியரே இதுவரை ஆலோசகராக இருந்து என்னை வழிநடத்தியது போதும். வற்றாப்பளை கோயிலுக்குச் சென்று அங்கிருந்து கரைப்பாதையாக கதிர்காமம் சென்று மாணிக்க கங்கையில் நீராடி உமது பாவங்களைக் கழுவும் கதிரமலை ஏறி கதிர்காமக் கந்தனிடம் மன்னிப்புக் கேளும், இனிமேல் உம்மை நான் இந்த வன்னிப் பிரதேசத்தின் எந்தப் பகுதியிலும் காணக்கூடாது. சரிதானே.
87

Page 46
குட்டிவன்னியன்
நந்திமகள்
முத்துஜயன்
சோதிடர்
முத்துஜயன்
சோதிடர்
முத்துஜயன்
நந்திமகள்
எனக்குத் தாங்கள் தந்த தண்டனை போதாது வன்னிபமே. கண்ணகைத்தாயின் காலடியில் வீழ்ந்து கதறி அழப்போகிறேன். எனக்கு விடை தரவேண்டும் வன்னிபமே (பின்னோக்கிச் சென்று மறைதல்)
வன்னிபமே. பிழையை உணர்ந்து தாங்கள்
திருந்தியமை எமக்கு மிகவும் சந்தோசத்தைத் தருகிறது. எமக்கு போக விடை தரவேண்டும்.
நந்திமகள் போகு முன்னர் எனது வேண்டுகோள் ஒன்றை விடுக்க இருக்கின்றேன். வன்னிபமே. இடைமறிப்பதற்கு மன்னிக்க வேண்டும். தங்களுக்குச் செவ்வாய் தோசம் இருக்கின்றது. அதனால் தான் நந்திஉடையார் தங்களுக்குப் பெண் தர மறுத்தார்.
சோதிடர் அவசரப்படுகிறீர்கள்(சிரித்து) தாங்கள் முன்னர் பார்த்த முத்துஜயன் தான் செய்த பிழையை உணர்ந்து சற்று முன்னர் இறந்து விட்டான்.
வன்னியமே அப்படியானால் தங்கள் வேண்டுகோள்
(சிரித்து) சோதிடரே நான் நந்திமகளை திருமணம் செய்யத் தகுதியற்றவன். நந்திமகளிடம் நான் கேட்பதெல்லாம் இந்த அரசவையின் ஆலோசகராக இருந்து இந்த வன்னிபத்தை நல்ல முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்பதுதான்.
வன்னிபமே தாங்கள் கூறுவது.

சோதிடர்
அமைச்சர்
முத்துஜயன்
நந்திமகள்
அமைச்சர்
முத்துஜயன்
நந்திமகள்
முத்தடியன்
(இடைமறித்து) நந்திமகளே. தயங்க வேண்டாம். நந்தி உடையாரின் பெயர்
நிலைக்க, இப்பிரதேச மக்களின் விவசாயம் செழிக்க நீங்கள் இந்த ஆலோசகர் பதவியை ஏற்று இப்பிரதேச மக்களுக்கு நல்ல சேவைகளைச் செய்ய வேண்டும்.
வன்னிபத்தின் முதல் பெண் ஆலோசகாாக தாங்கள் பதவி ஏற்க வேண்டும் நந்திமகளே. அத்தோடு இரண்டு வன்னிபங்களும் ஒன்றாக இணைந்து இப்பிரதேசத்திற்கே ஒரு முன்மாதிரியாக விளங்க நந்திமகள் உதவ வேண்டும்.
அமைச்சர் கூறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நந்திமகள் யோசிக்காமல் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசே நான் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்வதாயின் எனது நிபந்தனையை வன்னிபம் ஏற்றக் கொள்ள வேண்டும்.
வன்னிபத்தின் நிர்வாகத்திற்குப் பந்தம் வராத எந்த நிபந்தனையாயினும் நாம் ஏற்றுக் கொள்வோம்.
நந்திமகள் தனது நிபந்தனையைக் கூறலாம்.
கசிந்து பாயும் நீருக்கு தாங்கள் வரி கேட்கக்கூடாது.
அதைத் தீர்மானிக்கும் பொறுப்பைத்தான் நான் தங்களுக்குத் தந்துள்ளேன்.
நந்திமகள் வேறு நிபந்தனைகளை
விதிக்காமல் அரசவை ஆலோசகர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
89

Page 47
நந்திமகள் எனது தந்தையாரின் கடமைகளை முடித்த பின் இவ்விடம் வந்து இந்த வன்னிபத்தின் ஆலோசகர் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.
சோதிடர் நந்திமகள் வாழ்க.
அமைச்சர் : முத்துஐய வன்னிபம் வாழ்க.
சோதிடர் : நந்திஉடையார் வாழ்க.
(குழுவினரும் இந்த வாழ்த்துக்களை உரத்துக் கூறவேண்டும். நடிகர்கள் பின் திரையரங்கம் செல்ல சோதிடரும் நந்தி மகளும் நடந்து செல்லும் பாவனையில் ஒளிவட்டக் குறிப்புக்குள் செல்ல வேண்டும். கும்மியடிக்கும் பெண்கள் மாலையுடன் வந்து நந்தி மகளுக்கு மாலை போட்ட பின்னர் கும்மி, கோலாட்டம் அடித்து வரவேற்க வேண்டும்)
கும்மிப்பாடல்:
5({ தானன்ன தானன்னத் தானானே - தன்ன
தானன்ன தானன்னத் தானானே
பாடல் : சக்கரை மோதகம் தேங்காயும் கொண்டு
சன்னதி முன்பாகத் தான் படைத்து முக்குறுணிப் பிள்ளையாரை வேண்டி
முழங்கிச் சோபனம் கொட்டுமடி.
(தானன்ன..)
பொய்யும் புரட்டும் உருட்டும் புரளியும்
போதையும் வேண்டாத வார்த்தைகளும் எய்தும் குரோதமும் நாட்டிலே நம்மவர்
எய்துவாரோ சொர்க்கம் ஞானப் பெண்ணே
(தானன்ன..)
சங்கொன்று சக்கரம் கைப்பிடித்து நல்ல
தங்கநிறக் கச்சை தன்னோடே துங்கக் கண்ணன் காளி பாம்பின்மேல் ஆடிய
துய்ய நடனம் ஒன்றாடினாரே.
(தானன்ன.)
90

(கும்மியடிப்போர் மேடையின் ஒரு பகுதியில் நிற்க மறுபக்கத்தில் இருந்து கோலாட்டம் அடிப்போர் வருகிறார்கள்.)
கோலாட்டம்:
தரு : தந்தனத் தன்னா தன தந்தனத் தன்னா தன
தந்தனத் தன்னா தன தந்தனத் தன்னா தன
பாடல் : காசறு காட்டு விநாயகனே வந்தனம்
கண்ணகை அம்மனுக்கும் வந்தனம் தந்தோம் கற்றவர் உற்றவர் மற்றுமுள்ளோரும்
கருதியே பிழைகளைப் பொறுத்து அருளுவீர்.
(தந்தனத்.)
கற்ற கனவான்கட்கு வந்தனம் தந்தோம்
உற்ற சபையோர்க்கும் வந்தனம் தந்தோம் மாதா வாணி சரஸ்வதியே வந்தனம்
மயிலை ஏறும் வாகனர்க்கு வந்தனம் தந்தோம்
(தந்தனத்.)
முள்ளி நகரில் வாழும் முதியோர்களே வந்தனம்
கல்விக் கடலையுண்ட கனவான்களே வந்தனம்
வந்தனம் தந்தோம் நாங்கள் வந்தனம் தந்தோம் - நாங்கள்
வந்த சபையினர்க்கும் வந்தனம் தந்தோம்
வந்தனம் தந்தோம் நாங்கள் வந்தனம் தந்தோம் - நாங்கள்
வந்த சபையினருக்கும் வந்தனம் தந்தோம்.
(ஆட்ட முடிவில் அனைவரும் அரைவட்டமாக ஒன்றுசேர்ந்து குனிந்து வணக்கம்
கூற நாடகம் நிறைவு பெறுகிறது)
முற்றும்.
9

Page 48
உசாத்துணை நூல்கள்:
வேழம்படுத்த வீராங்கனை (அரியான் பொய்கை)
வன்னிவள நாட்டுப்பாடல்கள் (தொகுப்பு செ.மற்றாஸ்மயில்)
அடங்காப்பற்று வன்னிமைகள்(1720-1760)கட்டுரை. பேராசிரியர். சி.பத்மநாதன்.
கயிலை வன்னியனார் மடதர்மசாதனப் பட்டயம்- சில வரலாற்றுக் குறிப்புகள் பேராசிரியர் சியத்மநாதன்
கரைதுறைப் பற்றுப் பிரதேசத்தின் நீர்ப் பயன்பாடும் பயிர்ச் செய்கையில் அதன் பிரச்சிகைளும் கட்டுரை: நா.தேவரஞ்சிதம்
92

çoğænæsg@to-qosraestoŝo
ự sẽ sơnoskās 雷恩遇总um取旨与函滑老鼠işasınaeffnP) sto韃"posė增T) glasos oặrılırleselsso**- 1ạo úristųolgos ipsaeuinsson鱷16. ו( us运gu员资母暗妲n) unsayo:ışsságiữojai 每恩ugh慰9塔guan追gnIpsaeuissoul (soosÎnĝigs” o ląsteğrisoi quang-isiologo *:jinnog武藏国鸟 :iusspisalosofi•*y டிமிடீவிரி ஏயிழ்grd1ęgisissions, íosfēģostoso
:ışsrn
&引gdD
:ழயmஜர்ர்ாகிழாgggg-usti mīņuos siris mụng sự sụosso„gumřítos-öğąjā, Tīriņaigsmotiosus) 、、)’ışĝđì mìışssifiņotsuse osuusymore)înĝậu-ï na sologi Ilmuositostod'Isossfilosoouno o 9661°04′9ở
Iggyrtolanollin gif@sgo grmljŲ999劑sion。
93

Page 49
1.
பாரம்பரிய நடனங்கள்: வவுனியா "பரதஷேத்திர" மாணவிகள்
பிரசன்னா விஜயரத்னம் மாதவி வீரவாகு மிதிலினி சேனாதிராஜா சாம்பவி ரகுநாதன் சங்கீதா விபுலஸ்கந்தா கேசிகா மங்களராஜான் வைதேகி சிவநேசன்
0.
11.
12.
13.
14.
94
நாகநந்தினி அப்பையா பிரிதா மகேந்திரராஜா தக்ஷாயினி கதிரவேலு லோகிதா சிவசுப்பிரமணியம் கலைச்செல்வி சுலோஷினி நவரட்ணம் உதயப்பிரியா கந்தசாமி
 

ஒகன் இசை : ஆசிரியை ஷிலா டேவிற்
பாட்டு : செல்வி: சிவரதி சின்னத்துரை
செல்வி கோணேஸ்வரன் சிவாஜினி செல்வி விவேகானந்தன் செல்வரூபி செல்வி: அருளானந்தம் அருள்மொழி
நடன அமைப்பு : திருமதி துஷ்யந்தி வேலுப்பிள்ளை
(பரதஷேத்திர அதிபர்)
கதை, வசனம், தயாரிப்பு, நெறியாள்கை அருணா செல்லத்துரை
95

Page 50
எழுத்தாளர், தயாரிப்பாள என்ற நான்கின் இணைன அம்சங்களும் அருனாசி பொயின்டாகும். இதுே முதலீட்டை ஆதாரமாகக் வேண்டும். சிறந்த நாடக
வளர்வதற்குரிய நல்ல குை
ISBN
 

ர், நடிகர், தொழில்நுட்பவல்லுனர் பு அபூர்வமானது. இந்த நான்கு வில் இருப்பது அவரது பிளஸ்
வ அவரது முதலீடாகும். இம்
கொண்டு இவர் பெருலாபமீட்ட சு எழுத்தாளராக, இயக்குனராக
1ணாம்சங்கள் இவரிடம் உள்ளன.
கலாநிதி சி. மெளனகுரு
55-96159-0-4