கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உடலும் உணர்வும்

Page 1
S) (SSI
୍ID)
ஒரு மந்தைே
ஷாங்
 


Page 2

உடலும் உணர்வும் ஒரு மந்தையோட்டியின் கதை
கைப்பு ஊற்று ஒரு பாரப் பேருந்து ஒட்டுனரின் கதை
Gg Hil சியான்லியாங்
சவுத் ஏசியன் புக்ஸ் S. 8 . தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
Udalum Unarvum-Oru mandhaiyotiyin Kathai
& Kaipu ootru- Oru Baraperundhu Ottunarin Kathai Zhang Xianliang Tamil rendering : K. Ganesh Origina (C) Chinese Literature Press, Being, China. (Body and Soul A Herdsmen Story & Bitter Springs-A Truck Drivers Story) First Published : September 1992 Printed at : Suriya Achagam, Madras-17 Published in Association with
National Art & Literary Association b ទំuth Asian Books 611, Thayar Sahib Lane Madras-600 002.
Rs... 16-00
உடலும் உணர்வும்-ஒரு மந்தையோட்டியின் கதை
& கைப்பு ஊற்று-ஒரு பாரப்பேருந்து ஒட்டுனரின் கதை ஷாங் சியான் லியாங் தமிழாக்கம் : கே. கணேஷ் முதல் பதிப்பு : செப்டம்பர் 1992 அச்சு : சூர்யா அச்சகம், சென்னை-17. வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவுையுடன்
இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் 1ே1, தாயார் சாகிப் 2-வது சந்து, சென்னை-600 002,
ரூ 16-90

பதிப்புரை
முதுபெரும் எழுத்தாளர் கே. கணேஷின் இன்னொரு ஆற்றல்மிகு மொழிபெயர்ப்பு இலக்கியம் இது.
எமது இணைந்த வெளியீடாக சென்ற ஆண்டில் இரு சீன நவீனங்கள் கே. கணேஷ் அவர்களால் தமிழாக்கித் தரப்பட்டிருந்தன.
அவற்றின் பதிப்புரையில் நாம் குறிப்பிட்டிருந்தவாறு, தொடர்ந்து வெளியிடும் சீன நவீனங்களின் வரிசையில் இது இரண்டாவது படிக்கல்லுக்குரியது. இன்னும் வரும்.
சென்ற ஆண்டில் அவர் தமிழுக்குப் பெயர்த்துத்தந்த கூனற் பிறையும் இளைஞன் எர்கையின் திருமணமும் எமது மண்ணில் மிக ஆழமாக வேரோடின. இலங்கைக்கு வந்த கணமே அவை வாங்கப்பட்டுவிடும்.
அவற்றின் மொழிநடை இயல்பாக அமைந்த பாங்கும் கவித்துவ வீச்சு மிக்க அந்த நடை எமது சொந்த மண்ணின் கதையைப் படிக்கும் அனுபவத்தை வழங்கியதென்பதும் திறனாய்வாளர் முதல் சாதாரண வாசகன் வரை கூறக் கேட்டவை.
நிச்சயமாக அதே ஆர்வத்தோடு இந்தப் படைப்பும் வரவேற்கப்படும். உங்களுடைய உற்சாக மூட்டலுக்கும், இந்த வெளியீடுகளில் ஒத்துழைக்கும் அனைவர்க்கும், சவுத் ஏசியன் புக்ஸினர்க்கும் எமது நன்றிகள்.
தேசிய கலை இலக்கிய பேரவை
96.92
இலங்கை.
கொழும்பு.

Page 4
உள்ளே.
பதிப்புரை
அறிமுகவுரை
உடலும் உணர்வும் ஒரு மந்தையோட்டியின் கதை கைப்பு ஊற்று ஒரு பாரப் பேருந்து ஒட்டுனரின் கதை

அறிமுகவுரை
பத்தாண்டுகட்குமுன்னர் சீன இலக்கியம்’ (Chinese Literature) இதழில் ஷாங் சியாங் லியாங்கின் படைப்பு
களான "உடலும் உணர்வும் - ஒரு மந்தையோட்டியின் கதை" அதனைத் தொடர்ந்து கைப்பு ஊற்று" - ஒரு பாரப் பேருந்து ஒட்டுனரின் கதை" வெளி வந்தன.
அவ்வாண்டுகளின் சீனச் சிறப்புச் சிறுகதைகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டு பரிசுகளைப் பெற்றிருந்தன. இவற்றைப் படித்த வெளிநாட்டவர்கட்கு இவை லட்சிய நோக்குடைய அதீத கற்பனையோ என ஐயத்தைத் தோற்றுவித்திருக்கக் கூடும். V
எனினும் உண்மை நிகழ்வுகள் கற்பனையை விட வியப் பளிப்பவை என்ற பழமொழியை உணர்த்தும் வகையில் gar' LGBT pra0LD'L' (China Reconstructs) 1986 Guo இதழில் ஒரு கட்டுரை வெளி வந்தது.
சீனத்தில் முடியாட்சியை ஒழித்துக் குடியாட்சியைத் தோற்றுவித்த 1911ஆம் ஆண்டுப் புரட்சியின் தலைவரான சுன் யட் சென்னின் மதிப்பிற்குரிய மனைவியாரான சூங் சிங் லிங்கினால் சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதும் தொடக்கிய * சீனப் புனர்மைப்பு" தற்பொழுதைய "இன்றைய சீனா" (China Today) என்ற ஏட்டின் அராபியப் பகுதியின் தலைவியாகப் பணிபுரியும் வங்ஃபு என்ற பெண் மணியின் கட்டுரையாகும்.

Page 5
6
கல்வியறிவிலும் பதவியிலும் உயர்ந்த வங்ஃபு அரைகுறைப் படிப்புள்ள உழைப்பாளியான கல்லூரிப் பேருந்து செலுத்துணரைக் காதலித்து மணம் புரிந்து ரோன இல்வாழ்வு நடத்துவதைக் குறித்து எழுதி யிருந்தார். கல்வியில் உயர்ந்த மனைவி என்றாவது கைவிட்டு விடுவாள் என எச்சரித்தனர், கணவனிடம் அவனது நண்பர்கள். வங்ஃபுவின் தோழிகளும் கல்வியறி வில் குறைந்த கணவனுடன் அதிகநாள் காலங் கடத்த முடியாது எனக் கூறினர். எனினும் அவர்கள் மணமுத்து பல ஆண்டுகளாக இன்புற்று இல்லறம் நடத்துவதாக எழுதி யிருந்தார்.
இதுபோன்று மற்றொரு இலக்கியக் குடும்பத்தினதும் சசின இலக்கிய 1991 இளவேனில் இதழில் வெளிவந்திருந் தது. அதில் தெரிவு" என்ற சிறுகதை ஆசிரியர்களான சுன்லி, யுவியாஹாய் தம்பதிகளினது சொந்த வாழ்க்கை யும் கதையுங்கூட வியப்பளிப்பவை. இருவரும் எழுத்தாளர் கள். கணவன் திடீரெனப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுக்கையிற்கிடந்தும் மனைவி பணிபுரிந்ததுடன் இருவருமே இணைந்து கதைகள் எழுதி விருதுகஞ்ம் பெற்றவர்கள். அவர்களது தியாக வாழ்வும் ஒரு எடுத்துக்காட்டே,
புவியியலில் முதுகலைப் பட்டத்திற்காகப் படிக்கும் மாணவி தனது கல்லூரிப் படிப்புக் காலத்தில் அன்பு செலுத்திய இளைஞன், பிணியுற்ற தந்தைக்குப் பணிவிடை புரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால் இளங்கலைத் தேர்வில் மூன்று புள்ளிக் குறைவால் தேர்ச்சி பெற முடியாது போக, தந்தையும் இறந்துவிட பக்கவாதத்தினால் படுக்கையில் கிடந்த தாய்க்குப் பணிபுரிய வேண்டிய கடமை உணர்வில் மேற்கொண்டும் கல்வியைத் தொடர முடியாது போகவே தனது தந்தை புரிந்த கனிவள ஆய்வுத் தொழிலாளியாக நேர்ந்தது. மாணவின் குடும்பத்தினர், பையனின் குடும்பத் தின் தரக் குறைவு காரணமாக மாணவியை உறவாடாது தடுத்தனர். தொடர்பற்ற நிலையில் பலகாலமானது.

7
பின்னர் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் அறையில் வசித்த முதுகலை முடித்து முனைவர் பட்டத்திற்காகப் பணிமலை யில் ஆய்விற்காகச் சென்ற பொழுது தற்செயலாக அவ் வாய்வுப் பெண்மணிக்கு கணிப்படிவங்கள் உதவிய தொழி லாளர் தலைவன் தன்னறையில் வசிக்கும் தோழியின் பழைய காதலன் என்பதை அறிந்து தெரிவிக்க அவன் மீதுள்ள அன்பு மேலீட்டால் வர்க்க வேற்றுமைகளை மறந்து மணக்கத் துணிவு கொண்டதாகவும் இழையோடுகிறது தேர்வு என்ற ஒரு பெருங்கதையின் உபகதையாய். -
இவ்வகையாக பண்பாட்டுப் புரட்சிக் காலகட்டத்தில் காதலும் திருமணங்களும் சந்தர்ப்பச் சூழ்நிலைமைகளைப் பொறுத்து நிகழ்ந்தன. இவ்வனுபவங்களின் வெளிப்பாடு களாக பல படைப்புகள் தோன்றின. இவற்றை "காயத் தழும்பு இலக்கியமாகக் கருதப்பட்டன. பண்பாட்டுப் புரட்சியினால் தோன்றிய வடுக்கள்ை உணர்த்துபவை. "உடலும் உணர்வும்”, “கைப்பு ஊற்று" கதைகளும்,
சீனப் பண்பாட்டுப் புரட்சியால் பாதிக்கப்பட்ட எழுத் தாளர்கள் பலரில் ஷாங் சியாங் லியாங்கும் ஒருவர். 1936இல் நான்ஜிங்கில் பிறந்தவர். சிறு வயதிலேயே கவிதை இயற்றும் திறன் படைத்தவர். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியில் இலக்கியக் கெடுபிடிகள் தளர்த்தி இரட்டை நூறு தத்துவமான "நூறு பூக்கள் மலரட்டுமே, நூறு வகை எண்ணங்கள் வளரட்டுமே" என்ற போக்கினைக் கடைப் பிடித்த காலம், அச்சூழ்நிலையில் "காற்றுக்கோர் கவிதை' வெளியிட்டார். 1956இல் இரட்டை நாறுக் கொள்கை கைவிடப்பட்டதால் 1957இல் ‘மக்கள் நாளேடு" அந்தக் கவிதையை அலசத் தொடங்கியது. அதில் அங்கொன்று இங்கொன்றாக எடுத்தாண்டு காமாலைக் கண் நோக்கோடு அரசியல் நோக்கத்தைக் கற்பித்து ஷாங்கை வலதுசாரி பூர்ஷ்வா எனக் குற்றஞ்சாட்டியது. இதன் விளைவாக உழைப்புத் தண்டனை வழி அறிவூட்டல் என்ற கோட்பாட் டில் ஷாங் பத்தாண்டுகள் பண்ணைத் தொழிலாளியாகப்

Page 6
8
பணிபுரிய நேர்ந்தது. எழுதும் உரிமையும் பறிக்கப் பட்ட-து
1979இல் கட்சியானது இத்தகைய தீவிர இடதுசாரிப் போக்கினை மாற்றியமைக்கவே ஷாங் போன்ற பாதிக்கப் பட்ட எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுதத் தொடங் கினர்.
வரம்புகளுக்கு உட்பட்டு தண்டவாளப் போக்கில் தடம் புரளாது இலக்கியம் படைத்தல் என்ற குறிக்கோளுடை யோரும், உணர்வுகளை குப்பியிலடைத்து வைத்தால் அவை வேதாளமாக உருமாறி குப்பியை உடைத்து அதாகுதம் செய்து விடும்; எனவே அவற்றை மிகைப்படுத்தாது உலவ விட்டால் காற்றோடு கலந்து விடும் என்ற நோக்குடைய வர்களுமாக இலக்கியம் படைத்தனர். பண்பாட்டுப் புரட்சி யில் தாங்கள் அனுபவித்த உணர்வுகளை பின் குறித்த நோக்குடன் எழுதத் தொடங்கினர். ஷாங் அவ் வழியைப் பின்பற்றினார்.
1979 ஷ” வோ ஃபங் என்ற நிங்ஷாவிலிருந்து வெளி வரும் இலக்கிய ஏட்டின் ஆசிரியராகப் பதவியேற்று நடத்து வதுடன் சீன எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இங்வழியா எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பலகலை இலக்கிய அவைகளிலும் கடமைபுரிந்து வருகிறார். "உடலும் உணர்வும்”, “கைப்பு ஊற்று', 'கிழகிங்கும் அவரது நாயும்", * மிமோசா" போன்ற நெடுங்கதைகள் தேசியப் பரிசுகளைப் பெற்றுள்ளன. ஆணில் அரைவாசிப் பெண்" என்ற நூல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது ஐந்து கதைகள் திரைப்படங்களாகப்பட்டுள்ளன. * உடலும் உணர்வும்" திரைப்படம் 1983இல் மணிலாவில் அனைத்துலகத் திரைப் பட விழாவின் விருதினைப் பெற்றதுடன் அவ்வாண்டின் சீனத்துச் சிறப்பான படம் என சீன நாட்டின் சிறப்பு விருதினையும் பெற்றது.

9
ஆசிரியரின் "ஆணில் அரைவாசிப் பெண்’ என்ற நீண்ட நவீனம் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. பண்பாட்டுப் புரட்சிக்காலத்தில் அஞ்ஞாத வாசம் செய்தோரின் துயர அனுபவங்களை, உளத்தில் அடைக்கப்பட்ட உணர்வுசள் குமுறி பீறிக் கொண்டு வெளிப்பட்ட நிகழ்வுகளை ஒழிவு மறைவின்றி அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தார். இவை இலக்கிய வைதீகர்களின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டன. பாலுணர்வை மிகைப்படுத்தி எழுதியாகக் குறை கண்டனர்.
ஷாங் அமெரிக்க எழுத்தாளர்களால் அழைக்கப்பட்டு விரிவுரை ஆற்றச் சென்ற பொழுது அங்குள்ள அறிஞர்கள் இவர் சீனா திரும்பிச் சென்றதும் கெடுபிடிக்குள்ளாவார் எனக் கருதி தாங்கள் அவருக்கு அடைக்கலந்தருவதாகவும் தங்கள் நாட்டில் தங்கிவிடும்படியும் கூறினர். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. தன்னாட்டில் தங்கியிருந்து பணிபுரிவதே தன் கடமை எனக் கூறி நாடு திரும்பினார்.
ஷாங்கும் தளர்வடையாது "இரட்டை நூறு நோக்கில் தன்பணியைத் தொடர்ந்து புரிகிறார்.
"ஆணில் பாதி பெண்" பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நூலானது பண்பாட்டுப் புரட்சிக் காலத்தில் நடந்த நிகழ்வு களைக் குறித்ததாகும். பண்பாட்டுப் புரட்சிக் காலத்தில் தண்டனைக்காளான அறிஞன் ஒருவன் "சீர்திருத்தப் பண்ணையில் பலவிரிந்து வந்த காலத்தில் அப்பண்ணையில் பணிபுரிந்த பலவிதத் துண்பங்களால் பாதிக்கப்பட்ட அழகியைச் சந்திக்கின்றான். காதலுறுகின்றான். பின்னர் அவளை மணந்து கொள்கின்றான், தொடர்ந்த கெடுபிடி கள், துயர்மிக்க வாழ்க்கைப் போராட்டங்கள், சஞ்சலமிக்க எதிர்பார்ப்புச் சரிவுகள் போன்ற புற நிகழ்வுகளினால் தோன்றிய தாக்கங்களால் முதலிரவின் பாலுறவில் தன் ஆண்மைக் குறைவை உணர்கின்றான். எனினும், துணைவி யின் துணை கொண்டு சமன்படுத்திக் கொண்டாலும்

Page 7
IU
பாலுணர்வினால் மட்டும் பிணைத்ததனது மணவாழ்வின் வியர்த்தத்தை உணரத் தொடங்குகிறான். இதன் விளை வாக அவர்கட்கிடையே மணவிலக்கு ஏற்படுகிறது.
புலனுணவர்கள் இலக்கியங்களில் நம்மவர்போலவே மனப்பாங்குடைய சீனச் சமூகத்தில் அதுவும் கன்பூவியஸ் சித்தாந்தத்தில் ஆழ்ந்த சமூகத்தில் இது பெரும் சலசலப்பை உண்டாக்கியதில் வியப்பில்லை. எனினும் துணிவுடன் இப் பணியில் முன்னோடியாக ஷாங் சீன இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையைத் தோற்றுவித்தார்.
இத்தகைய எதிர்ப்புகளைச் சமாளிக்க அமெரிக்க நாட்டில் நாற்பதுகளில் நோபல் பரிசை வென்ற அப்டன் சிங்ளேர் போன்று தனது சொந்தச் செலவில் நாளேடுகளில் விளம்பரமும் செய்தார். அவரது ஷாங் சியாங்லியாங் தேர்ந்தெடுத்த படைப்புகள், என்ற தொகுப்பை வெளி யிட்ட நூலகத்தின் சார்பாக வெளியிட்ட விளம்பரத்தில்,
**ஒரு ஆசிரியன் தனது நூலுக்குத்தானே விளம்பரம் எழுதிக் கையொப்பமிட்டு வெளியிடும் முதல் முயற்சியாகும் இது. எனினும், எல்லாவற் றிற்கும் ஒரு முன்மாதிரி உண்டல்லவா? இத்தகைய துணிச்சலைக் கண்டு வாசகர்கள் திடுக்கிடக் கூடும். நமது எண்ணங்களின் குறை நிறைகளை நேர்மை யாக வெளியிடுவதில் தவறுதான் என்ன? தகுதி யான ஒன்றை நாம் தோற்றுவித்திருப்பின் உலகத் திற்கு உணர்த்த எடுத்துரைக்கத்தானே வேண்டும்!
"எனது முதல் நூல் வெளிவந்தது தொடங் கியே என் மீது பலவித குறைகள். கோள்மொழி கள், கண்டனங்கள் தோன்றின. எனது நூற்கள் ஆபாசமானவை, புலனுணர்வு கொண்டவர்களைப் பற்றியதே எனவும், இவை இளம் வாசகர்களின் மத்தியிலும், எழுத்தாளர்களிடையேயும் எதிர்

1.
மாறான பாதிப்பினைத் தோற்றுவிக்கும் என்று பரப்பப்படுகிறது.
**ஷாங் சியாங்லியாங் தேர்ந்தெடுத்த படைப்
புகள் என்ற தலைப்புடைய இந்நூல் சராசரி வாழ்க்கை நிகழ்வுகள் பற்றியனவே. இது அடக்கு முறையினால் தோற்றுவிக்கப்பட்ட பம்மாத்து களை நேர்மையுடன் சவால் விடுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும்
இது குறித்து 1986இல் பெய்ஜிங் நிவ்ஸ் (Beijing
News) என்ற கிழமை ஏட்டின் நிருபர் ஒருவருக்கு அளித்த நேர்முகவுரையில் "ஆணின் பாதி பெண்" என்ற நூல் குறித்தார்.
"இக்கதை பாரதூரமான நிகழ்வுகளை உணர்த்துவன. இது வெறும் பாலுணர்வை மட்டும் குறித்தது அல்ல. கருத்து சிதறியடிக்கப்பட்ட சமூகத்தின்வாழ் மக்களது மனித உணர்வுகளையும் வேட்கைகள் அடக்கப்பட்ட பாலுணர்வின் வெளிப் பாடாகத் தோன்றுவதையும் உணர்த்தியுள்ளேன்.
"ஒரு கதையை எவர் எழுதினாலும் அதைக் கதைப் பண்புகளும் அனுபவமும் படைத்தவர்களும் பலவித கோணங்களில் நோக்குவர். எனவே, சர்ச்சைகள் தோன்றுவது இயல்பே. என் படைப்பு களில் பாதி சர்ச்சைக்கு உரியனவே. விமர்சனங் களைக் கண்டு நாம் அஞ்ச வேண்டுவதில்லை. நல்ல ஆக்கச் சூழ்நிலையில் திறனாய்வுகள் இலக்கித் துறை குறித்து மட்டுமே அமைதல் வேண்டும். ஆக்கியோனின் அரசியல் கருத்துக்கள் குறித்தோ அவனது ஒழுக்கக் கண்ணோட்டம் குறித்ததாகவோ அமைந்தால் திறனாய்வின் தரம் குறையும்'

Page 8
2
1956 தொங்கி 1976 வரை சீனத்தின் வரலாற்றில் தாக்கத்தையும் தேக்கத்தையும் தோற்றுவித்த பண்பாட்டுப் புரட்சி ஆய்விற்குரியது.
அரசியலில் இறங்கிப் பணிபுரியும் அறிஞர்கள், உழைப் பாளிகள் பதவிகள் கிட்டியதும் கொள்கைகள் மறந்து தலைக்கணந்தோன்றாது கோபுர நிலையிலிருந்து குப்பபத் திற்கிறங்கி அனைத்து மக்களினதும் வாழ்க்கை நிலையை யும் உணர்ந்து செயற்படும் வகையில் பயிற்சிக் களமாக, ஒரு நோன் புத் திட்டமாக வகுக்கப்பட்டதே பண்பாட்டுப் புரட்சி தொடக்க நோக்கமாகும்.
அனைத்து சமய அரசியல் தத்துவங்களும் எல்லோரும் இன்புற்றிருக்க வழி செய்ய எண்ணும் பெரு நோக்கங் களுடன் தோன்றுகின்றன. அதன் வழி செல்கின்றன, காலஞ்செல்லச் செல்ல வருவாய்கள், பதவிகள் என்ற கறைகள் படத்தொடங்கியதும் பரந்துபட்ட உணர்வுகள் மறைந்து, தான் தன் வீடு, தன் பிள்ளை என்ற கடுகுள்ள உணர்வுகள் தலைதூக்கத் தொடங்கி; சூழ்ச்சி, களவு, கொலை எனப் பலவாறான மறச் செயல்களில் இறங்கத் தலைப்படுகின்றன. பொய்யும் புனைகருட்டும் நிறைந்த வதந்திகளைப் பரப்பி பக்குவப்படாத உள்ளங்களைத் தன் வசம் ஈர்த்து, வெறியுணர்வுகளை ஏற்றி அவர்களை ஏணிப்படியாகவும் கைப்பாவைகளாகவும் பயன்படுத்தி வருவது வரலாறு கண்ட உண்மையாகும்.
இவ்வகையில் முதுமை அடைந்த மாஒ சேதுங்கின் போரிடத்தைக் கைப்பற்ற சதி நடத்தி வந்த குழுவினர் பழமையையும் கிழமையையும் ஒழித்துக் கட்டுவதாகக் கங்கணங்கட்டிக் கொண்டு இளம் உள்ளங்களிடம் எல்லோ ரையும் இன்னாட்டு மன்னர்களாக்குவதாக எண்ண உணர் வுகளைத் தோற்றுவித்து பண்பாட்டுப் புரட்சியைத் திசை திருப்பிவிட்டனர். m

13
ஆக்க எழுச்சி இலச்கியங்களை 'நச்சுக்களை இலக்கி யங்கள் என லட்சியப் போர்வையில் வெறியுணர்வைத் தோற்றுவித்து தம் விரோதிகளை ஒதுக்கினர். இதன் விளைவாக வழி வழி முறையாகப் போற்றிக் காக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களும் சமய இல்லங்களும் அழித் தொழிக்கப்பட்டன. அறிஞர்கள், இசை ஒவிய இலக்கிய வல்லுனர்கள் கோமாளிக் கோலஞ்சூட்டி எள்ளி நகையாடப் பட்டனர். கலை, இசை விற்பன்னர்கள் கண்காணாப் பகுதிக்கு குடும்பத்தை விட்டுப் பிரித்து கடும் உழைப்புப் பணியில் வயிற்றுப் பசி தீர்க்க வழி செய்தனர். இத்தகைய கெடுபிடிகட்கு ஷாங் சியாங்லியாங், வங்மிங், பாஜின்ெ லாஒசி, குவோமாறோ போன்ற புரட்சி இலக்கிய முன் னோடிகளும் தண்டிக்கப்பட்டனர். இவ்வஞ்ஞாத சிறைவாச காலத்தில் பலர் இறந்துபட்டனர். உளநோய் கொண்டு தேய்ந்தோர் பலர். தற்கொலை புரிந்தவர்களும் உளர்.
இவ்வகை அடக்குமுறைகளையும் அலட்சியம் செய்து "தருமத்தின் வாழ்வுதனைச் சூதுகல்வும், தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகங்கற் கும்" என வழிதேடிச் சென்று "கட்டுண்டோம் பொறுத்தி ருப்போம் காலமாறும் எனக் காத்திருந்தனர் பல அறிஞர் கள். கடமை பெரிதாகவும் பலனைக் கருதாதும் கர்ம வீரர்களாகவும் செயல்புரிந்தனர். அக்காலத் துயர அனுப வங்கள் 1979க்குப் பின் காவியங்களாக உதித்தன.
ஷாங் இக்காலத்து அனுபுவங்களின் விளைவுகளை 1985இல் தனது அமெரிக்கப் பயணத்தில் அந்நாட்டு எழுத்தாளர்களிடையே நிகழ்த்திய உரையில்
*" தற்கால சீன எழுத்தாளர்கள் ஒவ்வொரு வரும் சீர்மிக்க தனித்துவ வாழ்க்கை அனுபவங் களைப் பெற்றுள்ளனர். இருபது ஆண்டு ஆழ்ந்த எண்ணக் குவியல்களில் நாங்கள் ஆழ்ந்திருந்தோம். ஒவ்வொருவரும் சமூகம், வாழ்க்கை இவை குறித்து

Page 9
14
தனி வழிச் சிந்தனையுணர்வுகள் பெற்றிருந்தோம். பேரழிவும் ஒரு வகை நல்ல திருப்பத்தைக் கொணருவதாக எண்ணினோம். இத்தகைய பேருள்ளத் துடிப்புகளும், உளக் காய்ச்சல்களும் சீன எழுத்தாளர்களது சிந்தனைகளுக்கு அள்ள அள்ளக் குறையாத மூலப் பொருட்களாக அமைந் தன' எனத் தெரிவித்துள்ளார்.
சீன வரலாற்றின் முக்கிய காலகட்டத்தினை வெளிகாட்டும் பலகணிகளாக ஷாங்கின் இரு படைப்புகளான "உடலும் ஆடணர்வும் (ஒரு மந்தையோட்டியின் கதை) "கைப்பு ஊற்று' (ஒரு பாரப் பேருந்து ஒட்டுனரின் கதை) அமைந் துள்ளன.
கெடுபிடிகளுக்கு இடையேயும் தரவேற்றுமைகளைக் கடந்து மனிதப் பண்புகள் மேலோங்கி விளங்குவதையும் அதன் விளைவாக எழும் உயர் பண்பான அசைச்க முடியாத தியாக உணர்வுகளையும் இரு கதைகளும் உணர்த்து கின்றன.
அறிஞர்கள் கணிப்புகளையும் மீறி மாறி வரும் இன்றைய உலகச் சூழ்நிலையில் அரசியல், கலை, இலக்கியத் துறைகளிலும் இன்று ஒரு ஆய்வு களமாகத் திகழும் சீனத் தின் படைப்புகள் வாசகர்களுக்கு ஒரு அனுபவத் திறவு கோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
கே. கணேஷ்
தலாத்து ஒயி-கண்டி, 22-07-92 இலங்கை,

pL-6)|ú 9 600Tňa|úb
ஒரு மங்தையோட்டியின் கதை

Page 10
மீண்டும் தன் தந்தையைச் சந்திக்கத் தனக்கு நேரு மென சூலிங்ஜன் எண்ணியதேயில்லை,
இப்பொழுதோ அவன் நன்றாக ஆடம்பரமாக அலங் கரிக்கப்பட்ட நாசூக்கான ஹோட்டலின் ஏழாவது மாடியில் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறான். இங்கு பலகணிக்கு வெளியே விண்ணிலே நீலம் படர்ந்த வானிலே அங்குமிங்கு மாகப் பொட்டிட்டதுபோல் சில மேகங்கள் மிதந்துகொண் டிருந்தன. ஆனால் (அங்கே) தொலைவிலேயுள்ள வண்டல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள பண்ணையின் பகுதியிலோ வேறுவிதமான காட்சி, பரந்து விரிந்த மஞ்சள் நிற வயல் களும் கொண்ட பசுமைத் தோற்றம். இந்த அறையில் தனது தந்தையின் புகைக்குழாய் வழியெழுந்த புகைமூட்டத்திற் கிடையே, தான், மேகங்கட்கு மேலே மேலே பறந்து தன் முன்னுள்ள தோற்றங்கள் எல்லையற்ற மாயாரூபங்களாக மாறுவதாக உணர்ந்தான். ஆம் தனக்குப் பழக்கமான காபி யின் வாசனையை நிகர்த்த தன் தந்தையின் புகையிலை நெடி, சிறுவயதிலிருந்தே தனக்கு பரிச்சயமான தனது தந்தை புகைத்த செவ்விந்தியனின் தலைச் சின்னம் பதித்த டப்பா இவையெல்லாம் தான் வானிலே ஒரு தேவதை உலகத்திலல்லாது மண்ணுலகத்திலேயே நிலைபெற்று வதி வதை உணர்த்தின.
'போனதெல்லாம் போகட்டும்' என்று கையை வீசிறிய வாறே அவனது தந்தை கூறினார். 30 களில் ஹார்வார்டில் கலைமாணிப் பட்டம் பெற்றது தொடங்கி மாணவர் பழக்கங்களை அவர் கைக்கொண்டிருந்தார். இப்போது

17
குறுக்கே கால்களைப் பிணைத்தவாறு தனது விலை உயர்ந்த உடையுடன் சோபாவில் அமர்த்து மீண்டும் தொடர்ந்தார். 'சீன நாட்டில் காலடி வைத்ததுமே தற். போதைய அரசியல் சுலோகமான முன்னால் பார் என்ப தனை உணர்ந்தேன். எனவே நீ வெளிநாடு செல்வதற்குத் தயாராகு’’.
திடீரென சூவிற்குத் தன் தந்தையின் வருகையும் அந்த அறையின் அலங்காரங்களும் ஏதோ ஒரு இனம் புரியாத உளைச்சலைத் தந்தது. அவன் தனக்குத்தானே "கடந்தவை கடந்தவையே என்பது உண்மைதான். இருப்பினும் கடந்த நிகழ்ச்சிகளை நான் எப்படித்தான் மறப்பது' எனக் கூறிக் கொண்டான்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் கு இதேபோன்ற இலை யுதிர் காலத்தில் அவனது அப்பா தந்த சிறு கடிதத் துண்டை கையில் இடுக்கியவாறு ஷாங்காய் ஜாஃப் வீதியிலிருந்த பிரெஞ்சுக் குடியினர் பகுதியிலிருந்து மேலைநாட்டு மோஸ் தருடன் விளங்கிய மாளிகை இருக்கும் இடத்தைத் தேடிப் பிடித்துப் போயடைந்தான். மழைக்குப் பின்னர் மஞ்சள் நிற இலைக் கூட்டங்கள் மேலும் வாடியது போல இருந்தன. சுவ(), ,கு மேல் முட்கம்பி வேலியுடன் கூடிய மதிலுக்கும் வெடி யே குடையோரங்களிலிருந்து மழைத்துளிகள் இடை விடாது சொட்டிக்கொண்டிருந்தன. மாளிகையின் இரும்புக் கதவுகள் பயமுறுத்தும் சாம்பல் வண்ணம் பூசப்பட் டிருந்தது. பல முறை மணியைத் தொடர்ந்து அழுத்தியதன் பின்னரே இரும்புக் கதவுகளின் சிறு இளைவெளிகளிலிருந்து வாயில் காப்பவன் வெளிவந்தான். தனது தந்தைக்கு அடிக்கடி கடிதம் எழுதுபவன் அவனே. இருவருமே அடையா ளங் கண்டுகொண்டனர். இருவரிடையிலும் ஐலெக்ஸ் மரங்கள். அவற்றுக்கு இடையே சென்ற சீமெந்து பாதை வழியாக இரண்டு அடுக்குக் கட்டிடத்திற்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான்.

Page 11
8
ஆம், அந்தக் காலத்தில் அவன் தந்தை இன்னும் இளமையாக இருந்தார். பழுப்பு நிறக் கம்பளி உள்ளணி அணிந்தவராய் தலையைச் சிறிது தாழ்த்தி கணப்பின் தொங்கலில் முழங்கையைப் பதித்து சுக்கானைப் புகைத்த வாறு அமர்ந்திருந்தார். கணப்பின் முன்னாலிருந்த சோபா வில் சூவின் தாய், சாபத்திற்கும், நாள் முழுதும் ஆற்றிய வசை பாட்டுக்கு ஆளாகிய பெண் அமர்ந்திருந்தாள்.
"இவன் தான் உங்கள் மகனா?" என்று தன் தகப் பனைப் பார்த்து அவள் கேட்டது சூவின் செவியில் விழுந் தது. " உங்களைப் போலவே இருக்கின்றானே குழந்தை இந்தப் பக்கம் வா"
அசையாமல் சூ அவன் பக்கம் தன் பார்வையை செலுத் தினான். பிரகாசமான இருகண்களும் நிறையச் சாயம் பூசப் பட்ட உதடுகளும் அச்சமயம் தான் கண்ணுற்றது இப் பொழுது அவன் நினைவுக்கு வந்தது.
"சரி, விஷயம் என்ன?' அப்பா தலையைத் தூக்கிக் கேட்டார் 'அவன் எப்பொழுதும் நோயாளிதான்' என்று தந்தை உறுமியவாறு பச்சையும் வெள்ளையும் பட்டையிட்ட கம்பளத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டே கூறினார். தன் கண்ணிரை அடக்க முயன்றவாறு சூ தன் தந்தையின் காலடிகளை உற்று நோக்கினான். "அம்மாவிடம் நான் ஒக்கிரம் திரும்பி வருகிறேன் என்று சொல்" முடிவாக நடையை நிறுத்தி அவன் முன் நின்று பேசினார். வழக்கமாக அம்மாவிடம் தொலைபேசியில் கூறிவந்த பதில்கள்தான். பிடிவாதமாகவும் துணிந்து மறுபடியும் கூச்சத்துடன் கூறினான் 'அம்மா இப்பொழுதே வீட்டிற்கு வரச் சொன்னாள்'"
"எனக்குத் தெரியும், எல்லாம் தெறியும் p a *’ எனக் கூறியவாறு பையனின் முதுகில் ஒரு கையை வைத்தவாறு மெதுவாக கதவுப் பக்கம் தள்ளிச் சென்றார். 'நீ முன்னால்

19
காரில் போ, நான் சிறிது நேரத்தில் வருகிறேன் உன் அம்மாவிற்கு மோசமாகும் நிலை தோன்றினால் அவளை முதலில் மருத்துவமனைக்குச் செல்லும்படி வற்புறுத்து" முன் பட்டகசாலை அறைக்கு அழைத்துக் கொண்டே சென்று பையனின் தலையை அன்புடன் தட்டிக் கொடுத்த வாறு சிறிது மெல்லிய குரலில் 'நீ மட்டும் சிறிது வயதில் கூடியவனாக இருந்திருந்தால் உன் அம்மாவுடன் காலம் கழிப்பது சிரமம் என்பதை உணர்வாய், அவள் அப்படி. அப்படி.
மேலே நோக்கியபொழுது சூ தன் தகப்பனார் எங்ங்ணம் இரக்கமும் துயரமும் நிறைந்தவராக இருந்தார் என்பதைக் கண்ணுற்றுப் பச்சாதாப முற்றான்.
சூ அமர்ந்திருந்த உந்து வண்டி பிரெஞ்சுப் பகுதியினர் குடியிருப்புப் பகுதியில் இலைக் கம்பளம் விரித்த பாட்டை யில் நகரத் தொடங்கியதும் அவனது கன்னங்களில் கண்ணிர் அருவியாய் வடிந்தன. அவமதிப்பு, தன் மீது பச்சாதாபம், தனிமை என்று அலை அலையாக உணர்ச்சிகள் அவனைச் சூழ்ந்தன. மற்றெவரையும் விட பச்சாதாபத்திற்குரியவன் தானே என்பதை உணர்ந்தான். உண்மையில் அவன் தன் தாயிடமிருந்து சிறிதளவு அன்பையே பெற்றான். அவளது விரல்கள் அவனது தலைமுடியைத் தழுவுவதை விட்டு மாஜொய் பகடைக் காய்களைத்தான் உருட்டும். அவன் தனது தந்தையிடமிருந்து என்றும் வழி நெறி பெற்றது மில்லை. அவன் எப்பொழுதாவது அவர் வீட்டுப்பக்கம் வந்தால் முகம் சுண்டியவராகவும் மணற் சஞ்சலத்துடன் காணப்படுவார். அப்புறம் இருவருக்கிடையேயும் முடிவில் லாத சண்டைகள் தொடங்கிவிடும்.
அவன் தந்தை கூறியபடி அவன் சிறிது வளர்ந்திருந்தால் நிலைமைகளைப் புரிந்திருககலாம். உண்மையில் அவனது பதினோராவது வயதிலும் ஏதோ ஒரு வகையில் விஷயங் களைப் புரிந்துகொண்டிருந்தான். அவனது அன்னைக்கோ

Page 12
20
தந்தையின் அன்பு தேவைப்பட்டது. ஆனால் தந்தைக்கோ சிடுமூஞ்சி மனைவியை எப்படியாவது தொடர்பு அறுத்து விட மனம் நாடியது. அவனையோ இருவருமே விரும்பிய தில்லை. ஐக்கிய அமெரிக்காவில் படித்துத் திரும்பிய மாணவனுக்கும் மேட்டுக்குடியினரின் மகளுக்குமிடையே நடத்திவைக்கப்பட்ட கட்டாயக் கலியாணத்தின் விளை வாகப் பிறந்த ஒரு பிண்டம் என்பதைத் தவிர தான் வேறில்லை எனக் கருதப்படுவதையும் உணர்ந்திருந்தான். அன்று இரவும் வழக்கம்போல அவன் தந்தை வரவில்லை. திறிது காலத்திற்குப் பின் அவர் தனது வைப்புப் பெண் னுடன் சீனாவை விட்டு வெளியூர் சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது. முடிவாக அவனது தாயாரும் ஒரு ஜெர்மன் மருத்துவ மனையில் உயிரை நீத்தாள்.
அந்தச் சமயத்தில் தான் ஷாங்காய்க்குள் மக்கள் விடுதலைப் படை நுழைந்தது.
இப்பொழுது முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எத்தனையோ எதிர்பாராத முக்கிய மாறுதல்கள் தோன்றிய காலகட்டத்திற்குப் பின் திடீரென இப்பொழுது திரும்பி வந்திருக்கின்றார், தன் மகன் தன்னுடன் வெளிநாடு வரவேண்டும் என்ற நோக்கத்துடன். இவையெல்லாம் மர்மமாகவும் புரிய முடியாததாகவும் இருந்தது. தனது தந்தை தனக்கு முன்னால் இப்பொழுது அமர்ந்திருக்கின்றார் என்பதையும் அவன் நம்பமுடியாதது போலிருந்தது. தவிரவும் தானும் அவர் முன்னே அமர்ந்தி ருப்பதையும் உண்மையான தோற்றமா என ஐயுறத் தோன்றியது.
தந்தையின் காரியதரிசியான மிஸ் சொங் ஆடை அலமாரியைத் திறந்ததும் அதில் பல பெட்டிகளில் லொஸ் ஏஞ்சல்ஸ், டோக்கியோ, பாங்கொக், ஹொங்கொங் எனப் பல ஊர்களின் ஹோட்டல்களைக் குறிக்கும் பல வண்ணச் சீட்டுகளுடன் முட்டை வடிவமான * யுனிவர்சல்"

21
வானூர்தி நிறுவனத்தின் சின்னமும் ஒட்டப்பட்டிருந்ததைக் கவனித்தான். அந்தச் சின்ன ஆடை அலமாரி ஒரு புதிய உலகத்தின் சின்னமாக விளங்கிற்று. மூன்று நாளைக்கு முன்னர்தான் கிடைத்த தகவலின் பேரில் தொலையிலுள்ள தனது பண்ணையிலிருந்து இரண்டு முழுதாள்கள் பேருந்து விலும் ரயில் வண்டியிலும் பயணம் செய்து வந்த சூவிங் ஜனுக்கு அப்படித் தோன்றியது. சோபாவின் மூலையில் இருத்திவைத்திருந்த அவனது செயற்கைத் தோற்பை அவனது பண்ணையில் நல்ல மவுசாகக் கருதப்பட்டது. இங்கே மேலான அறையில் பார்க்கையில் நசுங்கிப் பரிதாப மாகக் காட்சியளித்தது. பெட்டியின் மேல் நைலோன் பின்னல், பையில் பல் விளக்கும் பிரஷ், டவல் இன்னும் வழியில் சாப்பிடாமல் எஞ்சிய தேநீர் பதமிட்ட Gypol 60கள். நசுங்கிய இந்த உலர்ந்த முட்டைகள் இவ்விடத்தில் விசித்திரமாகத் தோன்றின. அவன் புறப்பட்ட மாலை வேளையில் அவன் மனைவி ஷியுஸி அவனது தந்தைக்கும் சேர்த்து மேலதிகமாக எடுத்துச் செல்லும்படி கூறியது ஞாபகம் வந்தது. இதனை நினைத்ததும் ஒரு வேதனை யுடன் நகைக்காதிருக்க முடியவில்லை.
முந்தாநாள் ஷியுஸி அவர்களது ஐந்தாவது மகளான கிங்கிங்கை ஊரின் பேருந்து நிலையத்துக்கு அவனை வழி யனுப்ப செல்லும்பொழுது அழைத்துச் செல் என வற்புறுத் தினாள். அவன் திருமணம் செய்து கொண்டபின் பண்ணையை விட்டு வெளிச் செல்வதாய் இருந்ததால் அவனது சிறிய குடும்பத்தில் அது பெரிய நிகழ்ச்சியா யிருந்தது.
"அப்பா பெய்ஜிங் எங்கிருக்கிறது' எனக் கேட்பாள் கிங்கிங், "நமது நாட்டின் வடபகுதியில் இருக்கிறது" "பெய்ஜிங் வட்டத்தின் நகரைவிடப் பெரிதா? ? **ஆமாம், நிச்சயமாக' 'ஐரிஸ் பூக்கள் பெய்ஜிங்கில் இருக்குமா?*
Al

Page 13
22
இல்லை, அத்தகைய பூக்கள் இருக்காது" ஒலியாஸ்டர் பழம் கிடைக்குமா?’ என விடாது கேட்டாள். "இல்லை அங்கு காட்டுப் பழங்கள் இருக்காது" "ஓ! együut9-HIFT
ம்ே கிங்கிங் நீண்ட பெருமூச்சு விட்டாள், தனது கன்னங்களைத் தனது கால்களால் தாங்கியவாறு, அவளுக்கு பெரும் ஏமாற்றமாகவிருந்தது. அவளைப் பொறுத்தவரையில் எல்லா நல்ல இடங்களிலும் ஐரிஸ், ஒலிய ஸ்டர் ஆகிய இரண்டும் இருக்க வேண்டும்.
பைத்தியக்காரி" என்று வண்டியோட்டி கிழவன் سWL ** செள கேலி செய்தான். பெய்ஜிங் மிகப் பெரிய இடம்; ஆனால் இந்தப் பயணம் உன் அப்பா ரொம்ப ரொம்பத் தூரத்துக்குப் போகவும் செய்யல்ாம்; ஏன் உன் பாட்டனா ருடன் வெளிநாடுகூடச் செல்லலாம் நான் கூறுவது சரியா ஆசிரியர் சூ?"
ஷியுஸி வண்டியோட்டின் பின்னால் ஒடுங்கியிருந்தவள் கணவனை நோக்கிப் புன்னகை செய்தாள். ஆயினும் வேறு எதுவும் கூறவில்லை. கிங்கிங் பெய்ஜிங்கின் பரப்பை உணர்ந்திருக்காததுபோல அவளும், அவள் என்றும் வெளி நாடுகளுக்குச் செல்லக்கூடும் எனவும் எண்ணிப்பார்த்த வளல்ல.
தூசு படர்ந்த சாலைவழியாகக் குதிரை வண்டி தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந்தது. பாதைக்கு வடபுறம் நல்ல நீண்ட- பண்படுத்தப்பட்ட வயல் வெளி பரந்திருந் 岛g· தென்புறத்தில் மேய்ச்சல் நிலம், காலை பனிப்படலம் தெரியும் வரை அவன் குதிரைகள் மேய்க்கும் இடம் வரை யும் விரிவாகத் தெரிந்தது. இந்தப் பகுதியில் ஒரு அலாதிக் கவர்ச்சித்தன்மை இருந்தது. எனவே புற்களையோ குறிப் பிட்ட ஒரு மரத்தையோ நோக்கும்பொழுது அவனது உள்ளத்திலே எண்ணற்ற நினைவுகள் கிளம்பும், குறிப்பாக அன்றைய காலை நேரத்தில் இந்தப் புல்தரைப் பிரதேசத்திலுள்ள எல்லாப் பொருட்களும் எப்பொழுதை

盛@
யும் விட மிகவும் உயர்ந்ததாகவும் கவர்ச்சிகரமானதாகவும் தோற்றமளித்தன,
பக்கத்திலுள்ள மூன்று நெட்டிலிங்க மரத்துக்கு நேர் பின்னால் ஒரு பெரிய ஒலியாஸ்டர் மரம் இருப்பதை அறிந் திருந்த அவன் வண்டியிலிருந்து குதித்தோடி புத்தம்புதிய பழங்களைப் பறித்துவந்து தந்ததும் அனைவரும் உடன் சாப்பிடத் தொடங்கினர் ஒலியாஸ்டர் என்பவை @5 մ)ւն பாக வடமேற்குப் பகுதியில் உள்நாட்டில் காய்க்கும் கசப்புச் சுவையுள்ள காட்டுவகைக் கனி, 60களின் பஞ்சக்காலத்தில் அவனுக்கு முக்கிய உணவாக இருந்தது. அவற்றை அவன் கடைசியாகச் சாப்பிட்டுப் பலகாலமாகிறது. மீண்டும் ருசி பார்த்ததும் பழைய ஞாபகங்கள் தோன்றின. கிங்கிங் இத்தகைய கனிகள் பெய்ஜிங்கில் உண்டா இல்லையா எனக் கேட்டதில் ஒன்றும் வியப்பில்லை.
'இவள் பாட்டா இதையெல்லாம் எங்கே öFTü 9ı " டிருக்க போகிறார்?' ஷியுஸி சிரித்தவாறு குண்டு குழி அதிர்வுகளுக்கிடையே கூறினாள். தொலைவிலிருந்து வந்திருந்த தன் மாமனார் எப்படி இருப்பார் என்பதன் கற்பனையின் உச்ச முடிவினை அவள் தெரிவித்ததும் இது மட்டுமே.
எங்காவது வீதிகளில் ஷியுஸினது மாமனாரை அவள் காண நேர்ந்திருந்தாலும் அவரை இனங்கண்டுகொள்வதில் சிரமம் இருந்திருக்காது. காரணம் தந்தையும் மகனும் ஒரே சாயலைக் கொண்டவர்கள். இருவருக்கும் நீண்ட நெருங் கிய கண்கள். நேரான மூக்கு, முதிர்வான உதடுகளையும் உடையவர்கள். சைகைகளிலும் அவர்கள் வம்சாவழி காட்டிவிடும். ஆயினும் தந்தையின் வயதளவு அவரது தோற்றம் காட்ட வில்லை. வெளிறிய சோகை நிறத்தின ராகவில்லாமல் லாஸ் ஏன்சல்ஸ், ஹாங்காங் கடற்கரைகளில் டிலவியதன் காரணமாக மகனைப் போலவே கபிலநிறமுள்ள வராகவும் இருந்தார். அவர் தனது தோற்றத்தில் மிகவும்

Page 14
34
கவனம் செலுத்தியிருந்தார். அவரது தலைமுடி வெள்ளி நிறத்தை உடையதாக இருப்பினும் நன்கு படியச் சீவப்பட் டிருந்தது. அவரது கைகளில் வயதின் அடையாளங்கள் பல காலமாகத் தோன்றியிருப்பினும் நகங்களைப் பக்குவமாக வெட்டியிருந்தார். பக்கத்து மேசைமேலிருந்த அழகுமிக்க் காப்பிக் கிண்ணத்தைச் சுற்றியும் மூன்று "பீ சின்னம் கொண்ட சுக்கான், மொரக்கோ ஆட்டுத் தோலிலான புகையிலைப் பை, பளபளப்பான எரிமூட்டும் விசை, கழுத்துப் பட்டிமேல் குத்தும் வைரம் பொதிந்த குத்தூசி அனைத்தும் சிதறிக் கிடந்தன. இத்தகையவர் ஒலியாஸ் டரைச் சுவைத்து எங்கே மகிழப் போகிறார் எனத் தோன்றியது.
2
பாருங்கள் வேடிக்கையை அண்மையில் வெளிவந்த பாடல்கள் கூட இங்கே கிடைக்கின்றனவே" என மிஸ் சொங் சுத்தமான சீன மொழியில் கூறினாள். நீண்டு கட்டு மஸ்தான உடலைக் கொண்ட அவளது நீண்ட கரிய கூந்தல் ஊதா நிறப் பட்டு ரிபனால் கட்டப்பட்டிருந்தது. மல்லிகை மணத்துடன் அவளது உடல் தோய்ந்திருந்தது.
"பார்த்தீர்களா இயக்குநர் சூ அவர்களே, டிஸ்க் நடனத்தில் பெய்ஜிங் வாசிகள் எத்தனை அறிமுகமாகி யிருக்கிறார்கள். ஹாங்காங்கை விட வெறியுடன் ஆடுகிறார் கள். அவர்கள் உண்மையாகவே இப்பொழுது நாகரிக மடைந்திருக்கிறார்கள் என நான் யூகிக்கிறேன்."
* மகிழ்ச்சியில் திளைக்கும் ஆசையை யாரும் அடக்கிக் கொள்வது சிரமம்தானே' என்ற பதிலோடு இயக்குநர் சூ ஒரு முதிய ஞானியைப் போல புதிராகப் பதில் கூறினார்: **அவர்கள் தங்களைச் சாதுக்கள் என்று எண்ணிக்கொள்ள வில்லை.'

25
இரவு உணவு முடிந்ததும் தந்தையும் மிஸ் சொங்கும் அவனை நடனசாலைக்கு அழைத்துச் சென்றனர். பெய்ஜிங்கில் கூட அவன் இத்தகைய இடம் இருக்குமென கற்பனை செய்ததில்லை. அவன் சிறுவனாக இருந்த பொழுது அவனைப் பெற்றோர்கள் ஷாங்காயின் பெயர் பெற்ற 'டி.டி. எஸ்', 'பரமவுண்ட்", "பிரெஞ்சு இரவு கேளிக்கை இடம்" போன்ற நடனசாலைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இப்பொழுதுதான் தனக்கு ஒரு காலத்தில் பரிச்சயமான நடமாட்டச்சாலை கட்கு மீண்டும் நுழைவது போன்றிருந்தது. எனினும் பெண் தன்மை கொண்ட ஆண்களும், ஆண் தன்மையுள்ள பெண்களும் அந்த மெல்லிய கோரமான வெண்மை ஒளிகட் கிடையே பேய்களைப் போல் நடமாடுவதைக் காண அவனுக்கு, பார்வையரளராக வந்திருந்த ஒருவரைத் திடீரென மேடைக்கு நடிக்க இழுக்கப்பட்டு தன் பாகத்தைச் சரியாகச் செயலாற்ற முடியாதிருந்தவனின் நிலைபோல மிகவும் சங்கடமாக இருந்தது. ஹோட்டலின் உணவு விடுதி யில் அவர்கள் ஏதோ சிறிது கொத்திச் சுவைத்து பலவித ஆடம்பரமான உணவுத் தட்டுகளை நோக்கியதும் அவனுக்கு எரிச்சல் தோன்றியது. அவனது பண்ணையிலோ வட்ட நகரிலுள்ள அரசின் உணவு விடுதிக்குச் செல்லும் மக்கள் எப்பொழுதும் கையுடன் எடுத்துச் செல்லும், சாப்பாட்டுப் பெட்டியில் எஞ்சிய உணவுகளைப் போட்டுக் கொண்டு வந்து வீட்டில் சேர்ப்பார்கள். w
திடீரென மீண்டும் பிரதான வெளியில் இசை ஒலிக்கத் தொடங்கியது. பல ஜோடிகள் தீவிரமாக ஆடத் தொடங் கினார்கள், கைகளுடன் கைகோர்க்காது முதலில் முன் பக்கமும் பின்னால் பின்புறமும் ஒருவருக்கொருவர் முகத்துக்கு முகம் எதிராகக் கிண்டல் பேச்சுகளுடன் கோழிச் சண்டைக் காட்சிபோல் ஆடினார்கள். இப்படித்தான் அவர் களது மிதமிஞ்சிய பலத்தைப் போக்கிக் கொண்டார்கள். சூடான நெல் வயலில் வெற்றுக்காவில் இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் தோற்றம்

Page 15
26
ஞாபகத்துக்கு வந்தது. நெல் அறுவடை செய்யும்பொழுது இடக்கை வலக்கைகளை மாற்றி மாற்றி குனிந்தவாறு கதிர் களை அறுப்பார்கள். சில சமயங்களில் தங்கள் தலையைத் தூக்கியவாறு தொலைவிலே தங்கள் தோள்களின் இரண்டு பக்கங்களிலும் வாளியைச் சுமந்து வருபவர்களை நிற்கும் உழவனை நோக்கத் தங்கள் கனத்த குரலில் "இதோ ஐயா தண்ணீர்.’’ எனக் குரல் எழுப்புவார்கள். கலங்கிய நீரோடு வாய்க்காலின் மரத்து நிழலடியில் படுத்து காற்றில் மிதந்துவரும் வைக்கோல் அல்ஃபா அல்ஃபா நெடியை முகர்ந்தால் எப்படி இருக்கும்.
"மிஸ்டர் கு உங்களுக்கு நடனமாடத் தெரியுமா?" என அவனருகில் நின்ற மிஸ் சொங் அவனது இன்பக் கனவுலகினின்று எழுப்பினாள். திரும்பியவாறு அவளை நோக்கினான். அவளும் பளிச்சிடும். கண்களும் சாயம் நிறையப் பூசப்பட்ட உதடுகளையும் கொண்டவளாக இருந்தாள்.
8 "ஒ இல்லை, எனக்கு வராது" என்று அவனையுமறி யாது புன்னகை புரிந்தவாறு கூறினான். அவனுக்கு குதிரைகள் மேய்க்கத் தெரியும்; கலப்பை கொண்டு நிலம் உழுவதற்கு முடியும்; நெற்கதிர் அறுத்து, கோதுமை துாற்றப் புரியும். அவன் ஏன் இங்ங்ணம் ஆடப் பழக வேண்டும்?
"அவனை இங்கு இழுக்காதே’ என்று அவனது தந்தை மிஸ் சொங்கைப் பார்த்துக் கூறினார். ‘அதோ பார் அதிபர் வாங் உன்னுடன் ஆட அழைப்பதற்கு வருகிறார்'
சாம்பல் நிற ஆடை அணிந்த அழகிய வாலிபனொரு வன் அவர்களை நோக்கி வந்தவன் மிஸ் சொங்கை நோக்கித் தலையைச் சிறிது கீழ்நோக்கி வணக்கம் கூறியதும் இருவரும் நடனச் சாலைக்குச் சென்றனர்.

27
"இதனைத் தவிர இன்னும் ஏதாவது யோசிக்க இருக் கிறதா?’* சுக்கானுக்குத் தீயைப் பற்றியவாறு தந்தை கேட்டார். 'உண்மையில் என்னைவிட உனக்கு நன்றாகப் புரியும். இந்தச் சந்தர்ப்பத்தில் விஸா இலகுவில் கிடைக்கும். எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்பது யாருக்கும் தெரியாது’’
* 'இன்னும் இதை விட்டுச் செல்ல முடியாத சில காரணங்கள் உண்டு’’ என சுற்றித் திரும்பியவாறு அவன் தனது தந்தையின் கண்களை நேரே நோக்கினான். ‘அந்தக் கசப்பான அனுபவங்கள் உட்பட?' என அவனது தந்தை துயரத்துடன் கேட்டார். "ஆமாம், சுருக்கமாகக் கூறின் அவற்றின் காரணமாகவே இம்மகிழ்ச்சி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கதாகவுள்ளது'
தந்தை முதுகை குலுக்கியவாறு அவனைக் குழப்பத் துடன் நோக்கினார். அவனைச் சோக அலை அலைத்துச் சென்றது. அப்பொழுதுதான் தனது தந்தை தனக்குப் பரிச்சியமில்லாத தனக்குப் புரியாத உலகத்தைச் சேர்ந்தவர் என உணர்ந்தான். உருவ ஒற்றுமை ஆத்மீக ஒற்றுமையைச் சமப்படுத்துவதில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் விசித் திரமாகப் பார்த்துக் கொண்டனர். இருப்பினும் ஒருவர் மற்றவரின் அனுபவக் களஞ்சியத்தை உணர்ந்து கொள்ள, முடியவில்லை.
"அப்படியானால் என் மீது வன்மம் கொண்டுள் ளாயா?" அவர் தலையைத் தாழ்த்தினார். w
"ஐயோ இல்லை. இல்லவே இல்லை' மகன் தந்தை கையை விசிறியது போலவே சைகை புரிந்து **நீங்கள் கறியபடி, "போனவை போகட்டும் இல்லை; இது முற்றி லுமே புறம்பான ஒன்று' ۔ ۔
அச்சமயத்தில் இசையிலும் மாற்றம் மண்டபத்தில் உள்ள வெளிச்சம் முன்னிலும் மங்கலாயிற்று. இதற்குமேல்

Page 16
28
நடன கூடத்தில் நகர்ந்த மக்களின் நிழல் கூட கண் பார்வைக்கும் புலனாகவில்லை. தலையைத் தாழ்த்திய வாறு அவனது தந்தை தனது வலதுகைகளால் புருவங் களைத் துடைத்துக் கொண்டார். மீண்டும் பலவீன கசப்புணர்ச்சிகள் அவரது முகத்தில் தோன்றின.
கடந்தவை கடந்ததுதான் என்பது உண்மையே ஒருவர் அவற்றை மீண்டும் நினைத்துப் பார்க்கும் பொழுது கசப்பு அனுபவம் நிலைபெறுகிறது’’ கிழவர் பெருமூச்சு விட்டவாறு மேலும், 'ஆனால் நீ என்னை விட்டு விலகியிருந்தது, சிரமமாயிருந்தது, இப்பொழுதோ...'
**உண்மை, நீங்கள் கூறுவதை நம்புகின்றேன்" அவனது தந்தையின் கீழ்ஸ்தாயி முனகலும் பின்னணியில் நிகழ்ந்த சோக இசையும் அவனை நெகிழச் செய்தன. **சில சமயங்களில் நீங்கள் பிரிந்திருந்ததும் துயரம் தந்தது'
"நிஜமாகவா" என்றார் தந்தை தலையை உயர்த்திய வாறு, ஆம் அப்படியேதான். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பாக ஒரு இலையுதிர் காலத்து இரவு நன்றாக நினைவிற்கு வந்தது. (பலத்த மழை) கிழித்த காகிதச் சாளரம் ஊடாக தரையில் படுத்திருக்கும் மந்தை மேய்ப்பவர்கள் மீது நிலவின் ஒளி வீழ்ந்தது. சுவருக்கும் அப்பாலுள்ள தரையில் சூலிங்ஜன் தரையில் படுத்திருந் தான். மேலெல்லாம் குளிரால் நடுநடுங்கத் திடீரென வைக்கோலிலிருந்து எழுந்தான். வெளியே நிலவொளி படர்ந்த சேற்று நிலம் உடைந்த கண்ணாடித் துண்டுகள் போல் காட்சியளித்தன. அங்குமிங்குமாகச் சேற்றுக் குழிகள் இருந்தன. சுற்றிலும் துர்மணம். முடிவாக அவன் ஒரு தொழுவத்தை நாடினான். அங்கு குதிரைச் சாணங்கள் கிளப்பிவிட்டிருந்த சூடு, மற்றைய இடத்தைவிட உஷ்ணமா கவும் காய்ந்துமிருந்தது. குதிரைகள், கோவேறிக் கழுதை கள், கழுதைகள் வைக்கோலை மென்று கொண்டிருந்தன

29
ஒரு காலியான தண்ணிர்த் தொட்டி தென்பட்டது. அதன் மேல் ஏறி உடன் படுத்துக்கொண்டான்.
கொட்டிலின் மண் சுவர்கள் மீது ஒரு சிறிய ஒளிக்கதிர் விழுந்து பிரதிபலித்தது. தொட்டியின் உள் தலையைச் சாய்த்து நிலவிற்கு நன்றி கூறுவது போல படுத்திருந்தான், திடீரென அவனுக்கு ஆழ்ந்தவொரு சோக உணர்வு தோன் றியது. அந்த முழுக் காட்சியும் அவனது உள்ளத்திலெழுந்த முழுத் தனிமையை உணர்த்துவதாக இருந்தது. மக்களால் கைவிடப்பட்டு அப்பொழுது குதிரைகளுடனும் மாடுகளுட னும் பழக நேர்ந்தது. துயரத்துடன் அழுது அந்த குறுகிய குடிதொட்டியில் கூனிப்படுத்திக்கொண்டான். தன் வாழ்க் கையில் தான் எங்ங்ணம் எல்லாத் திசைகளிலும் சாடிய நெருக்கடிகளைச் சமாளித்தமை குறித்து எண்ணமிட்டான் • முதலாவது அவன் தந்தையால் கைவிடப்பட்டான். பின்னர் அவனது தாய் மரணமடைந்ததும் சிற்றப்பன் அவனது உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அவனைத் தனிய னாக்கினான். அவனது பள்ளி விடுதிக்கு அனுப்பப்பட்டு அங்கு மக்களின் உபகார நிதியால் பயின்றான். அவனைக் கம்யூனிஸ்டுக் கட்சி ஏற்றுக் கொண்டது. மக்களின் கல்வி நிலையம் அவனை வளர்த்தது.
அந்த மகிழ்வுதரும் ஐம்பதுகளில், சிறு வயதின் காரண மாக சிறிது உணர்ச்சி வசப்படும் தயக்க உணர்வு கொண்ட வனாக இருப்பினும் சூ படிப்படியாகக் கூட்டுவாழ்வில் ஒன்றி விடத் தொடங்கினான். அக்கால இடைநிலைப் பள்ளி மாணவர்களைப் போல அவனும் அழகிய கனவுகள் கண்டான். அவன் பட்டம் பெற்றதும் அதுவும் விரைவில் நிறைவேறுவனவாகவும் இருந்தது. ஆழ்ந்த நீலச் சீர் உடை அணிந்து கையில் குறிப்பு நூலை ஏந்தியவாறு சீமைச் சுண்ணாம்புக் கட்டிகளையும் எடுத்துக் கொண்டு ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியனாக ஒரு வகுப்பறையில் நுழைந் தான். அது முதல் வாழ்க்கையில் ஒரு திருப்பம்- தனக்கென அமைந்த ஒரு திருப்பம் தோன்றியது.

Page 17
30
சிறிது காலத்திற்குள் பள்ளியின் தலைவர்கள் அவர் களது உயர் அதிகாரிகள் நியமித்த வலதுசாரிக் கணிப்பு களை எடுக்கும் முழுப் பணியில் இறங்கிய பொழுது அவனது தந்தையின் மட்டத்தில் அவன் கணிக்கப்பட்டான். கடந்த காலத்தில் மேட்டுத்தனக் குடியினர் அவனை கைவிட்டனர். 'அசையாப் பொருள்' என்ற பாரம்பரியச் சொத்தை மட்டும் விட்டுச் சென்றனர். ஆனால் இப்பொழுதோ மற்ற வர்கள் 'வலதுசாரி' எனக் கைவிட்டனர். முடிவில் எல்லோ ராலும் கைவிடப்பட்டு உழைப்பினால் மறு பயிற்சி அளிக் கப்படுவதற்காக இந்தக் கண்ணற்ற பிராணி வளர்ப்புப் பண்ணைக்குத் துரத்தப்பட்டான்.
வைக்கோல்களைத் தின்று முடித்த குதிரைகளில் ஒன்று மரத் தொட்டியின் பின்னால் அவனை நோக்கி நடந்து வந்தது. அதனால் எவ்வளவு தொலை நீட்டமுடியுமோ அவ்வளவு தூரத்திற்கு அவனருகே தன் தலையை நீட்டியது. அவனது முகத்தில் சூடான மூச்சை விட்டது. அவன் கண்ணைத் திறந்து பார்த்தபொழுது அவன், அதன் கபில நிறத்தலை அவனருகே கிடந்த தானியங்களை மூக்கினால் நசுக்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் இருப்பதை அது மெதுவாக உணர்ந்தது எனினும் அதனால் தடுமாற்ற முறுவதற்குப் பதிலாக அவனது முகத்தைத் தனது மெல்லிய பட்டுமுகத்தால் தடவியவாறு தன் ஈரமுள்ள மூக்கால் அவனை அப்பிராணி முகர்ந்தது. இந்த இதமான நிகழ்வால் உளம்நெகிழ்ந்து, அவன் அதன் நீண்ட கிழட்டுத் தலையைத் தழுவியவாறு துயருடன் கண்ணிர் வடித்தான். அதன் கபிலப் பிடரி மயிர்மீது அவை நனைத்தோடின. பின்னர் அவன் தொட்டியின் மீது குனிந்து சிதறிக்கிடந்த தானியங்களைக் கவனமாகப் பொறுக்கி ஒன்றுசேர்த்து தனது மிருக நண்பன் முன் வைத்தான்.
அதோ அந்த நேரத்தில், அப்பா நீங்கள் எங்கு இருந்தீர்கள்? , '

3
இப்பொழுது முடிவாகத் திரும்பி வந்திருக்கின்றான். இது ஒரு கனவல்ல, அவனது தந்தை அடுத்த அறையில் மெல்லிய ஸ்பிரிங் கட்டிலில் படுத்திருக்கிறார். தன் மெத்தை யைத் தொட்டுப் பார்த்தவாறு சூலிங்ஜன் அந்தக் கடின மான மரத்தொட்டியை விட இது எவ்வளவு வித்தியாசமாக உள்ளதென்பதை உணர்ந்தான். ஜமுக்காளம், சோபா , படுக்கைவிரிப்பு இவற்றின் மேல் திரையின் ஊடே தோன் றிய நிலவொளியின் நிழல்கள் படவும் பல சிறு சதுரங்களாக அமைந்தன. அந்த மங்கிய நீலவொளியில் அன்றைய நிகழ் வுகள் அவனது மனத்தின் மேல்தளத்தில் துன்னியமாக மிதந்தன. தனக்கு இங்குள்ள நிகழ்ச்சிகளுடன் ஒன்றி ணைந்துகொள்ள முடியாததைக் கண்டான். அவன் தந்தை திரும்பி வந்திருக்கின்றார். ஆயினும் ஒருவருக்கொருவர் வேற்றுப் பேர்வழிகளாகவே தோன்றினர். அவர் திரும்பி வந்தது பழைய துயரை ஞாபகப்படுத்தி அவனது அமைதி யான உள்ளத்தில் சலனத்தைத் தோற்றுவித்தது.
இலையுதிர்காலம் தொடங்கியிருந்தாலும் அறை சூடாகவும் புழுக்கமாகவும் இருந்தது. கம்பளிப் போர்வையை மேலே தூக்கி அகற்றியபின் நேரே அமர்ந்து பக்கவாட்டில் அமைந்த தலைச் சாய்வில் சாய்ந்துகொண்டான். பின்னர் படுக்கையடுத்திருந்த விளக்கின் விசையைப் போட்டவாறு முழு அறையையும் அக்கறையின்றிக் கண்ணோட்டம் விட்டான். பின்னர் அவனது பார்வை அவன் உடல்மீதே விழுந்தது. அவன் தனது திரண்ட கைகளையும் நரம்பு வெளித் தோன்றிக்காட்டிய கெண்டைக் கால்களையும் அவனது இரு பெரிய கால்களினது சப்பைப் பெருவிரல் களையும் மரத்துப் போன உள்ளங்கைகளையும் அடிப்பாதங் களையும் கண்ணுற்றப்பொழுது அன்று மாலை அவன் தந்தையுடன் உரையாடியது மனதுக்கு வந்தது.

Page 18
32
தான் காப்பி சாப்பிட்டு முடிந்ததும் தந்தை, மிஸ் சொங்கைப் போவதற்கு அனுமதி கொடுத்தபின் அவர் தனது நிறுவனத்தில் அண்மையில் தோன்றிய நிகழ்வுகளைத் தன் மகனிடம் கூறத் தொடங்கினார். லிங்ஜனின் மாற்றான் சகோதரர்களின் திறமையின் மையும் தனது சொந்த நாட்டின் மீது தோன்றிய ஏக்கத்தையும் உணர்த்தினார்.
''. . . . . . கடைசியில் நீ என் பக்கத்தில் இருந்தால், ஏதோ எனக்குச் சிறிது ஆறுதலாக இருக்கும்" என்று புன்னகை யுடன் கூறினார். 'முப்பது ஆண்டுகட்கு முன்னால் நடந் தவை என்னைத் தடுமாறச் செய்தன. குடும்பத்தின் மூலத் தொடர்பு இங்கு ஆழ்ந்து கவனிக்கப்படுகிறது என்பதை நான் அறிவேன். இதன்காரணமாக உனது வாழ்க்கைநிலை யும் இயல்பாக இருந்திருக்காது. ஒருக்கால் இதுவரை உயிருடன் இருப்பாயோ எனவும் ஐயம் கொண்டேன். எப்படியும் உன்னைப் பற்றிய எண்ணம் எப்பொழுதுமே இருந்தது. எப்பொழுதாவது ஒரோர் சமயங்களில் நீ சிறு வனாக இருந்த தோற்றம் எனக்குத் தோன்றும். குறிப்பாக உங்கள் பாட்டனார் நாஞ்ஜிங்கில் பிரமாண்டமான உனது பிறந்த நாள் விழா நடத்தியபொழுது நீ செவிலியின் கைய ணைப்பில் இருந்த தோற்றம் பசுமையாக ஏதோ நேற்று நடந்ததுபோல் ஞாபகமிருக்கிறது. அன்று ஷாங்கையிலி ருந்து பலவிருந்தினர் வந்திருந்தனர். தெரியுமா நமது குடும் பத்தின் முதல் பேரப்பிள்ளை நீ தான். 9
இப்பொழுது, படுக்கை அண்டைப் பச்சை மறைப்புள்ள விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தனது வலுவான உடலின் தோற்றத்தைக் காணத் திடீரென ஒரு விசித்திர உணர்வு தோன்றியது. தனது குழந்தைக் காலக் கதையைத் தனது தந்தையிடமிருந்து முதன்முதலாக அறிந்ததும் தனது பழைய கால வாழ்க்கையையும் இப்போதைய வாழ்க்கை வேற்றுமைகளையும் தீர்க்கமாக எடைபோட முடிந்தது. அவன் தனக்கும் தன் தந்தைக்குமிடையேயுள்ள மன வேறுபாட்டின் உண்மைக் காரணங்களைத் திடீரென

33
உணரத்தொடங்கினான். ஒரு பணக்காரக் குடும்பத்தின் மூத்த கிளையின் மூத்த புதல்வன், ஷாங்காய் பெருந்தனக் காரர்களாலும் அவர்களின் மனைவிகளாலும் பெரும் மதிப்பு செலுத்தப்பட்ட இச்சிறுவன் இன்றோ அசல் தொழிலாளியாகி விட்டான். இத்தகைய மாற்றுப் போக்கு களுக்கிடையே எவ்வளவோ துயரங்களுக்கூடாக சாத்த னையோ மகிழ்ச்சிகரமான, கடின உழைப்பும் கலந்திருந்தது.
இவனது வீடற்ற தன்மையை உணர்ந்து உடலுழைப்பி னால் பயிற்றுவிப்புக் காலம் முடிந்த பின்னர் சூலிங்ஜன் மந்தைக் காப்பாளனாகச் செல்வதென ஏற்பாடு செய்யப் பட்டது.
அதிகாலை நேரத்தில் நெட்டிலிங்கச் சோலைகளுக்கு மேலாக பகலவன் அப்பொழுதுதான் கிளம்பும் வேளையில், புற்றரையில் வெள்ளிப் பணித்துளிகள் இன்னும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவன் கொட்டில் வாயிலைத் திறந்துவிட குதிரைகளும் மற்றும் மந்தைகளும் நெருக்கித் தள்ளிக் கொண்டு ஒன்றுக்கொன்று மேய்ச்சல் நிலம் நோக்கி முன்னால் செல்லுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு வெளிச் செல்லும். இவற்றால் கலவரம் அடைந்த வானம்பாடிகளும் நெடுவால் கோழிகளும் அடர்ந்த புற்புதர் களிலிருந்து கூச்சலிட்டவாறு பயந்தோடும். அவை சிறகு கிளை அடித்தவாறும் மந்தைகளை உராய்ந்தவாறும் நெட்டிலிங்க மரக் காடுகளை நோக்கி அம்புகளெனப் பறக்கும். அவன் தனது குதிரையின் மேலே ஏறி அந்தக் காலடி தேய்ந்த பாதையின் வழி இயற்கையின் மடிமீது தலைசாய்வதற்குச் செல்பவன் போல அவற்றை விரட்டிச் செல்வான்.
அங்கு நீண்டு வளர்ந்த நாணல்கள் பரந்த சதுப்பு நிலம் இருந்தது. அதனிடையே அங்குமிங்குமாகச் சிதறிச் சென்ற குதிரைகளும் மந்தைகளும் மேயத் தொடங்கின. அவை களது மூச்சுத் திணறல்களும் எகிரும் ஒலிகளும் ஆங்காங்கே

Page 19
34
தோன்றி அமைதியைக் குலைத்தது. மண்சரிவில் சாய்ந்த வாறு, இவ்விளம் மந்தையோட்டி வானத்தை நோக்கிய வாறு வாழ்க்கை போல் மாறி மாறிக் கொண்டிருக்கும் பணிநிகர் மேகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான், அவ்வேளையில் புற்களின் உச்சியையும் சதுப்பு நிலத்தின் எல்லையையும் உராய்ந்தவாறு இளந்தென்றல் அவனது உடலனைத்தையும் வருடிச் சென்றது. குதிரைகளின் வியர்வையும் ஈரமண்ணின் நெடியுங்கலந்த தூயகாற்று அவனைத் தாலாட்டியது இந்த அமைதியான சூழ்நிலை யில் அவன் தனது உடலின் வியர்வையின் மணத்தையும் உணர்ந்தான். இவ்வியற்கையுடன் தன் வாழ்க்கையும் எவ்விதம் ஒன்றிணைந்துள்ளது என்பதை உணர்ந்தான், இந்தக் கானகக் காற்றிலே தானும் முழுதாய்க் கரைந்து விட்டது போன்று பல முறைகளில் ஒரு முடிவில்லா இன்ப வெறியுணர்ச்சி தோன்றும். எங்கும் நிறைந்தும், ஆயினும் தனது சொந்த இயல்புகளை இழந்தவனாயும் தோன்றி னான். இதன் காரணமாக அவனது உளச் சோர்வும் அவனது கவலைகளும் இவ்வதிர்ஷ்டமற்ற விதியின் மீது தோன்றிய கசப்புணர்ச்சியும் உடனே மறைந்தன. அவற் றுக்குப் பதிலாய் வாழ்வின் மீது ஒரு பற்றும் இயற்கையின் மீது ஒரு பாசமும் கிளம்பியது.
மத்தியான நேரத்தில் குதிரைகள் தம் வயறுகளைக் குண்டாக நிரப்பி, சில பிடரியைச் சிலிர்த்துக்கொண்டும். மற்றவை சில உண்ணிகளையும் ஈக்களையும் விரட்டுவதற். காகத் தங்கள் வால்களை விசிறிக்கொண்டும் குதிரைகள் அடர்ந்த நாணல் வெளியிலிருந்து வெளிவந்தன. பின்னர் மெதுவாக அவனைச் சுற்றி நின்று தங்கள் அன்பு நிறைந்த கண்களால் நோக்கும். சில சமயங்களில் வெள்ளை கலந்த ஏழாம் எண் பரி மற்றைய குதிரைகளுக்கூடே ஒளிந்து சென்று நூறாவது எண் நொண்டிப் பரியைச் சீண்டும். பின்னர் தன் தலையைத் தூக்கியவாறு வாயில் நுரை பொங்கியபடி சுற்றி ஒடும். அத்தகைய சந்தர்ப்பத்தில்

35
சூலிங்ஜன் தனது நீண்ட சாட்டையை எடுத்துப் பெரிய இரைச்சலிடுவான். உடனே மற்றைய குதிரைகள் காது
களைச் சிலிர்த்தவாறு திரும்பி வந்து நின்று குறும்பு புரிந்த
குதிரையை விறைத்து நோக்கும். முடிவாக ஏழாம் எண்
குதிரையும் திட்டுவாங்கிய பள்ளிப் பையனைப் போல
காலளவு தண்ணிரில் நின்றவாறு தன் முன்னங்கால்களை
நனைத்தபடி நிற்கும். இவற்றையெல்லாம் நோக்கியதும்
தான் மிருகங்களின் இடையே இருந்தாலும் தேவதைகள்
சூழ்ந்த புராணத்தைய இளவரசன் போல் ஆனான்.
தீய்க்கும் கதிரவனின் கீழ் மேகத்தின் நிழல் மெதுவாய் தொலைவிலுள்ள குன்றினடி நோக்கி நகர்ந்தது. சதுப்பு நில சூட்டின் உணர்வால் நீர்க்குருவிகள் நாணல்களினூடாக நாதத்தினை எழுப்பின. அவ்வெளி பரந்ததாக இருந்த தன்னியில் அழகுடையதாகத் திகழ்ந்தது. 'தாய்நாடு என்ற உருவகம் அர்த்தமுள்ள ஓர் நிலைப்பாடாகியது. அவனுக்கு அமைதியும் நிறைவும் தோன்றின. வாழ்க்கை உண்மையிலேயே அழகு நிறைந்ததுதான். இயற்கையும் உழைப்பும் அவனுக்குப் பள்ளிச் சுவர்களுக்கிடையே கிடைக்க முடியாதவற்றை அளித்தன.
சில சமயங்களில் புல் தரையில் மழைத்துளிகள் விழும். முதலில் தொலைவிலுள்ள மலைச் சாரலில் கருமைநிற நூற்களாலான திரை போலத் தோன்றும். பின் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டு கிட்ட நெருங்கிவரும். கண்ணிமைக் கும் நேரத்தில் மழைக் கொட்டத் தொடங்கி புல்தரை தோட்டமுழுவதும் வெள்ளைப் பனிமூட்டத்தினால் சூழப் படும். மழை தொடங்கியதும் சூலிங்ஜன் தனது மந்தையைக் காட்டின் ஒரு பகுதிக்கு ஒட்டிச் செல்லுவான். கையில் நீண்ட சாட்டையை ஏந்தியவாறு தன் குதிரைமீதேறி சிதறிய தன் மந்தைகளைச் சுற்றி ஓடி கூச்சலிட்டவாறு ஒன்று திரட்டுவான். இத்தகைய நேரங்களில் அவனுக்குப் படிமம் வீரியமும் தோன்றும். தான் மேற்கொண்டும் முககியமில்லாத-பயனற்ற-ஆசாமியல்ல என்ற உணர்வு

Page 20
36
தோன்றும். காற்று, மழை, கொசுக்கள், ஒலுங்குகள் போன்ற சக்திகளின் மீது தான் நாளாந்தம் நடத்திய போராட்டத்தால் அவன் வாழ்வின் மீது நம்பிக்கையை மீட்டான்.
மழை பெய்யும்பொழுது தான் பல குழுக்களையும் சேர்ந்த மந்தையோட்டிகள் பரந்த பனிக்கடலின் மத்தியில் நிலைநின்ற படகைப் போன்று காட்சியளித்த, நிழல் சாந்தி பெறுவதற்கெனக் கட்டப்பட்ட அங்குள்ள சிறு மண்டபத் தில் ஒன்று கூடுவார்கள். அம்மண்டபத்தின் கீழ் குளிர்ச்சி யாகவும் ஈரமாகவும் இருந்தது. எப்பொழுதும் அதற்குள் மட்டரகப் புகையிலையின் நெடிநிலவும், அவனது நண்பர் களின் மகிழ்ச்சிகரமான சம்பாஷனைகளையும் கேலிப் பேச்சுகளையும் அவன் கவனமாகச் செவிமடுத்துக் கேட்கும் பொழுது அவர்கள் தங்கள் உழைப்பையும், தங்கள் வாழ்க்கையையும் பலவிதச் சிக்கலான உணர்ச்சிகளுள் இணைத்துக் கொள்ளவில்லை என்பதை ஒரோர் சமயம் உணர்ந்ததும் அவனுக்குத் திகைப்பை அளிக்கும். நேர்மை யும் எளிமையும் நிறைந்த இந்த மந்தையோட்டிகளின் வாழ்க்கை கடினமாக இருந்தாலும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவர்களை அவன் மிகவும் மதிக்கத் தொடங்கி -னான்.
" "அப்படி என்றால். ' அவன் வெட்கத்துடன் தலை குனிந்தான். தயக்கத்துடன், 'வலதுசாரி என்பவன் முன் காலத்தில் தவறு செய்தவன்"
'இல்லை, அப்படியெல்லாம் இல்லை" என ஏழாவது குழுவைச் சேர்ந்த ஒருவன் இடையிற் கூறினான். 'வலது சாரிகள் என்பவர்கள் 1957இல் உண்மையைக் கூறினவர்கள், அந்த ஆண்டில் தான் அறிவாளிகள் தாக்கப்பட்டனர்." இயல்பாகவே எதையும் நேர்மையாகவும் ஒழிவு மறை வின்றியும் பேசக் கூடிய அவனை மக்கள்" "வாயாடி' என செல்லப் பெயர் சூடியிருந்தார்கள், "உண்மை பேசுதல் ஏன்

37
* தவறிழைத்தல்" எனக் கருதப்பட்டதோ தெரியவில்லை. நாம் எல்லோரும் உண்மை பேசத் தவறினால் எல்லாமே குழப்பம் தான் ’’ அந்த கிழ இடையன் தனது சுக்கானைப் புகைத்தவாறு மேலும் ‘என்னுடைய அபிப்பிராயத்தில் தொண்டராக இருப்பதை விட தொழிலாளியாக இருப்பது மேல்; இதோ பாருங்கள் எழுபது வயதடைந்து விட்டேன். கண் காதில் கோளாறு கிடையாது; கூன் ஏதும் இல்லை; பல்லும் உறுதியாக இருக்கிறது. ஏன் வறுத்த சோயா அவரைகளைக் கூடக் கடித்துத் தின்பேன்’’.
**இது காரணமாக அடுத்த ஜென்மத்திலும் தொழி லாளியாகப் பிறப்பாய்' என்று வாயாடி சிரித்தவாறு நடுவிலே குறுக்கிட்டான்' அதனால் ஒன்றும் மோச மில்லை.’’ என்று அந்த மந்தை காப்போன் மனப்பூர்வ மாகப் பதிலளித்தான். 'எப்படியோ இரவும் பகலும் நாம் உழைக்காவிட்டால் தொண்டர்கள் தங்கள் பதவியைக் காத்துக்கொள்ளவும் முடியாது, அறிவாளிகளும் தங்கள் படிப்பையும் எழுத்தையும் கொண்டுசெல்ல முடியாது.”*
இத்தகைய எளிய, மனந்திறந்த-சிற்சில சமயங்களில் திடீரெனத் தோன்றும் கலந்துரைகளின் பொழுது ஒரோர் சமயம் அவன் உணர்வைத் தூண்டிவிடும். மழைக்குப் பின் தோன்றும் வானவில்லைக் கண்டதுபோன்ற ஒரு நிறைவு தோன்றும். எளிய, நேர்மையான வாழ்கையை ஏற்க-அவர் களைப் போல் நிகழ் காலத்தில் மகிழ்ச்சிகாணும் மனப்பான் மையைப் பெற பல காலம் சென்றது.
அவனது நீண்டகால உடலுழைப்பு காரணமாக ஒரு உறுதியான வாழ்க்கையின் போக்கில் நிலைபெற்றுவிட்டான். இந்த புதிய அமைப்பு பிடிவாதமாகத் தனது வார்ப்பை அவன் பால் பதித்தது. காலங்கள் கடக்கவும், கடந்தவை யெல்லாம் படிப்படியாக ஒரு மெல்லிய கனவாகவோ அன்றி
Alam 9

Page 21
38
வேறு யாரோ பிறத்தியாருடைய கதையைப் படித்ததைப் போன்ற உணர்வோ தோன்றியது. அதே நேரத்தில் அவனது நினைவுகள் அவனது புதுமுறை வாழ்க்கையால் இருவேறு கூறுகளாக பழைய வாழ்க்கைக்கு முற்றும் புறம்பாக அமைந்தது. இது காரணமாக அவனது பழைய பெரிய நகர்ப்புற வாழ்க்கை மேலும் மேலும் தேய்ந்து மறைய அப்போதைய நிகழ்வுகள் மட்டும் சாத்தியமான உண்மை யாக விளங்கின. முடிவில் இத்தகைய தரையின் சுற்றாடலில் வாழத் தகுதியுடையவனாக மாற்றப்பட்டான். பெயர், தொழில் ஆகிய இருவழிகளாலும் அவன் மந்தை மேய்ப்பவ னாக மாறிவிட்டான்.
* கலாச்சாரப் புரட்சியின் தொடக்ககாலத்தில், மக்கள் அவனது கடந்த காலத்தை மறந்துவிட்டனர். பின்னர் யாரோ முன்னர் வலதுசாரியெனக் கணிக்கப்பட்டதை ஞாபகப்படுத்தி ஊர்வலத்தில் கொணரத் தீர்மானித்தனர். அந்த நெருக்கடியான நேரத்தில் மண்டபத்தில் கூடிய பல குழுக்களின் மந்தை காப்பவர்களும் ஏகமனதாக இந்தப் பசும் வெளியில் மேய்ப்பதற்கு புல் அருகி விட்டதால் பண் ணையின் நிருவாகச் செயலகத்துக்கு வாய்வழி அறிவித்து குன்றுகளின் அடுத்த மலைச்சரிவுப் பகுதிக்கு அகல அனை வரும் முடிவு செய்தனர். எனவே சூலிங்ஜனும் அவர்களு டன் செல்ல நேர்ந்தது. ஒரு முறை மலைப்பகுதி சென்று விட்டால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு வீடு திரும்ப முடியாது. எனவே "புரட்சிக் குழுவினர்’ ஒருவர் கூட அவர்களுடன் செல்ல விரும்பவில்லை. இந்தவிதமாக சூலிங்ஜனும் தனது சிறிய மூட்டை, முடிச்சுகளை குதிரை யின் முதுகின்மேற் சேர்த்து அவற்றுடன் ஏறிச் சென்றான். கலகங்களை விடுத்து அகன்றான். நெடுஞ்சாலையில் அவர் கள் இறங்கியதும் எல்லா மந்தை காப்போரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் "தொலையட்டும். இப்பொழுது நாம் மலைப் பகுதிக்கு வந்துவிட்டோம். எவன் தாய் எவனோடு போனால் நமக்கென்ன?’ பலக்க சீட்டையடித்துக்கொண்டு

39
குதிரைகளையும் மந்தைகளையும் விரைவுபடுத்த தமது நீண்ட சாட்டையைச் சுழற்றிப் புழுதிப் புயலைக் கிளப்பிய வாறு கூறிச்சென்றனர். எதிர்த்தாற் போல், தூரத்திலே மலைச் சாரலிலே மேய்ச்சல் தரை ஆதவன் ஒளியில் சுடர் விடும் பரந்த மரகதப் பச்சையாகத் தென்பட்டது. . அந்தத் தினம், சூலிங்ஜனின் மனதில் என்றும் அவனுடைய உள்ளத் தில் அன்புடன் அரவணைத்துக் காக்கும் நினைவாக நிலை பெற்றுவிட்டது.
அவனது நினைவுகள் துயரமும் இன்பமும் கலந்த தனது வாழ்க்கையில் அனுபவித்த பலவித நிலைகளிலும் தன்மை களிலும் கலந்தவையாக அமைந்தன. ஆயினும், அந்தத் துயரப் படலம் தோன்றியிருக்கா விட்டால் தற்போதைய அவனுடைய இன்ப உணர்வு உப்புச்சப்பற்றதாக இருக்கும் என்பதை உணர்ந்தான்.
கடந்த ஆண்டின் இளவேனிற் காலத்தில் மரச்சாரவி லிருந்த நிருவாகச் செயலகத்திலிருந்து அவனைத் திரும்பவும் அழைத்திருந்தார்கள். ஆர்வத்துடனும் அச்சத்துடனும் பண்ணையின் அரசியற் பகுதியை அடைந்தான் அவர் ஒரு ஆவணத்தை வாசித்தவாறு உப தலைவர் டொங், 1957இல் அவனை வலதுசாரி எனக்குறிப்பிட்டது தப்பு எனவும் அக்குற்றச்சாட்டு அகற்றப்பட்டுவிட்டதெனவும் பண்ணையைச் சார்ந்த ஊர்ப்பள்ளியில் மீண்டும் விரைவில் ஆசிரியனாக நியமிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார். புதிதாக முட்டையிட். ஈயொன்று சுவருக்கும் ஆவண அலமாரிக்குமிடையே பறந்துகொண்டிருந்தது. அந்த ஈயின் ஒவ்வொரு இயக்கத்தையும் கவனித்தவாறு அதனை அடிக்கத் தமது கையில் ஒரு சஞ்சிகையை எடுத்த வண்ணம் "சரி அடுத்த அறையில் இருக்கும் செயலாளர் பாங் இட மாற்றல் உத்தரவைப் பெற்றுக் கொள்ள நாளை பள்ளியின் வேலையை ஏற்றுக்கொள்' என்றார். முடிவாக ஈயும் அவரது மேஜைமேல் அமர்ந்து, அவர் சஞ்சிகையால் அடிப் பதற்கு முன் அது தந்திரமாய் பறந்து சென்றுவிட்டது.

Page 22
40
ஏமாற்றமடைந்தவராய் உப தலைவர் டொங் அவரது நாற்காலியில் மீண்டும் சாய்ந்து கொண்டார். "இதோ பார் இது முதல் நீ சிரமப்பட்டு வேலை செய்ய வேண்டும். மேற் கொண்டும் எதுவும் தவறுகள் செய்யக் கூடாது.
இந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் சூலிங்ஜன் திகைப் புற்றான். மின்சாரம் பாய்ந்து மரத்துப் போனது போன்ற உணர்ச்சி. நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட இத் திருத்தத்திலும் தனது வாழ்க்கையில் எதிர்காலத்தில் ஏற்ப டுத்தவிருக்கும் மகத்தான மாறுதல்களின் முக்கியத்துவத்த்ை யும் உணர்வது கடினமாக இருந்தது. உண்மையில் இத்தகைய நாளை நினைத்துப் பார்க்கக்கூட அவன் துணிந்ததில்லை. இருப்பினும் அவனை மகிழ்ச்சி பீடிக்கத் தொடங்கியது. அவனது உடலில் இவ்வுணர்வு மதுபோல் ஊடுருவி அவன்
தொண்டையில் ஒரு வறட்சித் தோன்றியது. சிறிது அனைத் திடமும் ஓடி, நடுக்கமடைந்து முடிவில் தாரையாகக் கண்ணீர் பொழிந்தது. அவனது கன்னங்களில் கடகட வென்று வழிந்தது. ஜபர்தஸ்துவாக இருக்கும் உப தலைவர் டொங்கிற்குக் கூட இந்நிகழ்ச்சி நெகிழச் செய்தது. உடன் தனது கையை அவன் பால் நீட்டினார். உபதலைவர் டொர். இன் கரம் அவனது கையைத் தொடும் இத் தருணம் வரை அவன் தனது எதிர்காலத்தைப் பற்றித் துளியும் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. அப்புறம் மீண்டும் அவன் வகுப் பறைக்குள் நீலச் சீருடையுடன் கைக்கடியில் குறிப்பு நூலையும் கையில் சீமைச் சுண்ணாம்புக் கட்டிகளையும் ஏந்தி முடிவாக இருபது ஆண்டுகட்கு முன்னர் போற்றி வளர்த்த மீண்ட ஒளிமிக்க கனவுடனும் நுழைந்தான். இது அவ்வளவு செழிப்பான பண்ணையல்ல. குழந்தைகள் அனை வரும் கந்தைகள் உடுத்தியிருந்தனர். வகுப்பறை நிரந்தர மாகி வியர்வை, தூசி, வைக்கோல் ஆகியவற்றின் கூட்டு நெடியுடன் திகழ்ந்தது. மாணவர்கள் கரடுமுரடான மேசை கட்குப் பின்னால் அசையாது அமர்ந்திருந்து தங்கள் கண் களை அகலத் திறந்து இந்த மந்தை மேய்ப்பான் திடீரென

4
ஏன் ஆசிரியரானார் என வெறிக்க நோக்கினார். விரைவில் அவன் மீது நம்பிக்கை கொண்டனர். தான் ஏதோ விசேட மான சேவை செய்வதாகவோ, சோசலிச நோக்குக்காகவும் நாட்டின் 'நான்கு நவீனப்படுத்தல்" முறைக்காகவும் பணிபுரிவதாகவோ அவன் கிஞ்சித்தும் மனதில் கொள்ள வில்லை. அவை பெரும் வீரர்கள் ஆற்றவேண்டிய அற்புத நிகழ்ச்சிகள் என அவன் எண்ணினான். தான் செய்வது ஏதோ மனச்சாட்சியுடன் கூடிய கடமை என அவன் எண்ணினான். இருப்பினும் அவனது மாணவர்களால் அவன் பெரிதாக மதிக்கப்பட்டான். பெய்ஜிங்கில் அவன் புறப்பட்ட நாள் காலை வேளையில் இந்க மாணவர்கள் தாங்கள் வழக்கமாக வழிநடக்கும் பாதையில் இருவர் மூவரென இருமருங்கிலும் நின்றுகொண்டு குதிரை வண்டியை நோக்கித் தம் பார்வைகளைச் செலுத்தியதை கவனித்தான். ஒருக்கால் அவர்களும். தான் செல்வந்தரான தந்தையைக் கண்டதும் வெளிநாடு சென்றுவிடலாமென்ப தாகக் கேள்விப்பட்டிருப்பார்களோ? அவன் வெளிச்செல் வதை விரும்பாதவர்களைப் போல கற்பாலம் கடந்து நெட்டிலிங்க மரத் தோப்பினுாடே புகுந்து முடிவாகப் பண்படாத ஒரு வயலின் முனையைக் கடக்கும் வரை காத்திருந்து சென்றனர்.
சில சமயங்களில் மற்றைய குழுக்களைச் சேர்ந்த இடையர்கள் பத்து கல் தொலைக்கப்பாலிருந்தும் வந்து அவனைக் காணுவார்கள். அந்த மந்தை காப்பவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். இருந்தும் உஜாராக நடமாடுவார். கணப்புச் செங்கல் மேல் அமர்ந்தவாறு ஒரு சீன அகராதியைக் கையில் எடுத்தவாறு கூறுவார்: **இவர் எவ்வளவு கெட்டிக்காரர் பாருங்கள்; இவர் அறிஞர் என அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர்; இதோ பாருங்கள் எவ்வளவு பருமனான புத்தகம். இதைப் படிப்பதற்கு ஆயுள்காலம் முழுவதும் ஆகுமே" W
**இல்லை, இது ஒரு அகராதி; புதிய சொற்களை அறிவதற்காகப் பயன்படுத்துவது" என்று "வாயாடி’

Page 23
42·
அந்தக் கிழவருக்கு விளக்கிக் கூறினான். "எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள்; வயது ஆக ஆக உங்களது மூளை குழம்பிப்போகிறது."
"அது உண்மைதான்; இதோ எனக்கு வயது எண்பது ஆகியும் படிக்கவில்லை, திரைப்படம் பார்க்கப் போனாற் கூட அதன் தலைப்புகள் என்ன என்று புரியாது, ஏதோ திரையில் அசையும் உருவங்களைப் பார்த்து வருவேன்'
**ஆம் நாம் எது செய்தாலும் சரி நாம் படிப்பதற்கு முயல வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னால் நான் என் மந்தைக்கு மருந்து தயார் செய்த பொழுது அவற்றின் மேற் பூச்சுக்கு இடவேண்டியதை உள்ளுக்குச் செலுத்த இருந்தேன்' என்றான் வாயாடி, "எப்படியோ சூ, நீயும் எங்கள் சகாதான். இப்பொழுது எங்களுக்கோ படிப்பதற்கு வயது முதிர்ந்துவிட்டது. ஆகையால் எங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை உன்னுடைய நல்ல கைகளில் அளிக்கிறோம்"
**அது சரி' என அந்தக் கிழவர் அவன் கூறியதைத் தொடர்ந்து கூறினார். "சூ என் பேரப் பிள்ளைகளுக்கு இது மாதிரிப் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி தந்தாயா னால் நீ உன்னுடன், உன்னைப் போல் புல்தரை மேடுகளில் துயரைப் பகிர்ந்து கொண்ட உனது ஏழை நண்பர்களை இன்னும் மறக்கவில்லை என்பதை உணர்த்துகிறது"
இந்த எளிய சொற்கள் அவன் புரிய வேண்டிய பணியை உணர்த்துபவையாக இருந்தன. எதிர்காலம் குறித்து மேலும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. அவர்கள் அனை வரின் மீதும் வீசிய குதிரைகளின் வியர்வை நாற்றம், பூக்களும் வைக்கோலும் கலந்த மணம், இவற்றுடன் இணைந்த இயற்கையின் சுகந்தம் ஏதோ தனக்குப் பழக்க மானதென உணர்ந்தவை; தனது தந்தயுடனும் மிஸ் சொங் குடனும் இருக்கும் பொழுது ஏற்படும் அழுத்த உணர்வுக்கும் புறம்பானதாக இருந்தது.

垒季
இந்த மந்தையோட்டிகளின் கண்களிலும் அவனது மாணவர்கள் அவனுடன் மீண்டும் ஒன்று சேர்ந்து வேலை செய்த சகாக்கள் ஆகியோர்களின் கண்களிலும் தோன்றும் பெரும் மதிப்பை உணர்ந்தான். இவற்றைவிட விலையற்ற இன்பம் வேறு என்னதான் இருக்க முடியும்?
4.
காலையில் அன்றும் மிஸ் சொங்கும் தந்தை அழைத்துச் செல்ல வங்ஃபுறிங் வழியாகச் செல்லும் பொழுது தனக்கும் பட்டனத்து வாழ்க்கைகக்கும் ஒத்துவராது என்பதை உணரத்தொடங்கினான். இங்கு நாட்டுப்புறம் போலல்லாது தரைகளில் தார் போடப்பட்டிருந்தது. காலடிவைக்க ஈரமும் மெதுவாகவும் அல்லாது கடினமாக இருந்தது தெருக்களில் மக்கள் வரிசையாக போய்க் கொண்டிருந்தார்கள். பேச்சி லும் ஒரு அலட்சியப் போக்குக் காணப்பட்டது. இத்தகைய ஆரவாரங்களுக்கிடையே அவனிடையே ஒரு அழுத்த உணர்வு தோன்றி அயரச் செய்தது.
நுண்கலை, கைப்பணி விற்பனை நிலையத்தில், அவனின் தந்தை, பிரசித்தி பெற்ற ஜிங்டெஷன் காள்வாயி னரால் செய்யப்பட்ட அழகிய நீலமும் வெள்ளையும் கலந்த பீங்கான் டின்னர் செட்டுக்கு ஆறு நூறு யுவான் காசோலை எழுதித் தந்தார். மகன் ஒரு பீங்கான் கடையில் மண்பாத் திரமொன்றை இரண்டு யுவானுக்கு வாங்கினான். கபில நிறமும் மஞ்சள் நிறமும் கொண்ட அந்த மெல்லிய பழமைத் தோற்றமுடைய சாடி ஹான் கல்லறையினின்று அகழ்ந் தெடுக்கப்பட்ட தொல்பொருணெயத் தோற்றமளித்தது. இத்தகையவற்றை அவன் வடமேற்குப் பகுதியிலுள்ள தனது சிறிய வட்டத்தில் பார்த்ததேயில்லை. ஷியுஸி அவளது சொந்த ஊரிலிருந்து கொண்டுவரும் ஊறுகாயை மிகவும் புகழ்வாள். அவற்றை வைப்பதற்கு ஒரு சாடியை

Page 24
44
வாங்கவேண்டுமென்று பலநாள் கேட்டுக்கொண்டிருந்தாள். இப்பொழுது அவள் வைத்திருப்பதை, ஷான்ஸியிலிருந்து யாரோ கொண்டு வந்ததை பல இரவுகள் கண் விழித்துத் தான் தைத்த துணியிலான பாத அடிகளுக்குப் பண்ட மாற்றுச் செய்து பெற்றுக் கொண்டாள். அது உப்புக் கரையினால் பழுதுபட்டு இப்பொழுது பார்ப்பதற்கு அசிங்க மாக இருக்கிறது
ஹோட்டலுக்குத் திரும்பும் வழியில் மிஸ் சொங் குனட்டித்தவாறு, 'உங்கள் மனைவி உண்ம்ையில் அழகாய் இருப்பாள் அல்லவா?" என்று கேட்டாள். "அவள் மீது நீங்கள் கொண்டிருக்கும் காதல் போற்றத்த்க்கது; நினைப்ப வர்க்கும் பொறாமையாக இருக்கும்' மெல்லிய ஊதா நிறக்கம்பளிப் பின்னல் மேல் சட்டைக்கும் மெல்லிய சாம்பல் நிறக் கம்பளிக் கீழாடைக்கும் மேலாக புதிய சிகப்பு கறுப்பு பட்டையிட்ட ரவிக்கை அணிந்திருந்தாள். இலை யுதிர் காலத்துக் கதிரொளியை விட அவள் பூசியிருந்த மல்லிகை வாசனைப் பூச்சின் மணம் வீசியது.
**ஆமாம், திருமணம் என்பது உண்மையில் ஒரு கட்டும் கடமையும் கூடத்தான்' தனது காப்பியைக் கலக்கியவாறு தந்தை பெருமூச்சு விட்டார். பின்னர் மொழிகளின் உட் பொருளை மாற்றியது போல தொடர்ந்தார். அவர் தன்னையே நினைத்துக் கூறிக்கொண்டார் போலும். 'உன் மனைவியை விரும்புகின்றாயோ இல்லையோ, உனது வாக்குறுதியை உனது. வாழ்நாள் இறுதி வரை செயல்படுத்த வேண்டும். இல்லாவிடில், ஒரு குற்ற உணர்வும் உள்ள உளைச்சலும், வேதனையும் தோன்றிக் கொண்டே இருக்கும். நீ வெளிநாடு செல்வதை நான் விரும்புகின்றேன். ஆயினும் தனியாக அல்ல, உன் மனைவியையும் மகளையும் அழைத்து வரவேண்டும்"
'உங்கள் இருவரின் காதல் அனுபவத்தைக் கூற முடியுமா? என மிஸ் சொங் கேட்டாள். 'உங்கள் காதல்

臺影
நிகழ்ச்சி விசேஷமாக இருந்திருக்க வேண்டும். உங்களை யொத்த அழகிய வாலிபரை வளைக்க இளம் பெண்கள் நிச்சயமாக நிறையச் சுற்றித் திரிந்திருப்பார்கள் அல்லவா"
**எனது காதல் அனுபவமா?" சிரித்தவாறு தயக்கத் துடன் கூறினாள். "நான் மணம் செய்தபொழுது தான் அவளை அறிந்திருக்கவேயில்லை. எனவே காதல் என்ப தற்கே இடமிருக்கவில்லை' என்றான்.
‘ஓ’ என மிஸ் சொங் பெரிதும் ஆச்சரியமடைந்தவள் போல் பாவனை செய்தாள். அவனின் தந்தையோ அதைத் தான் நம்பவில்லை என்பது போன்று முதுகை அசைத்தார்: தானும் ஷியுஸியும் மணம் செய்து கொண்ட நிகழ்ச்சியை அவர்கட்குக் கூற அவன் விரும்பினான். ஆயினும் அவனது அசந்தர்ப்பமான திருமணம் நாட்டின் நல்ல பெயரையே நாசமாக்கும் தன்மை கொண்டதொரு அழிவு நிகழ்ச்சிக் காலத்தில் அமைந்ததால் அது குறித்து விவரிக்கத் தயங்கி னான். அதனைக் கூறினால் தான் எதனைப் புனிதமெனக் கருதியிருந்தானோ அதனை அவர்கள் இகழ்ச்சி செய்து கேலி செய்யக் கூடும் என நினைத்தான். செல்லுவோமா வேண்டாமா என்ற தயக்கத்தில் மெளனமாகக் காப்பியைச் சுவைத்தான். அந்தக் கசப்பான பானத்தில் ஒரு இனிமை இருந்தது. இனிப்புடன் கசப்பு இணைந்து இருந்தது. இரண்டின் கலப்பில் மட்டுமே இத்தகைய இன்ப உணர் வூட்டும் வாசனையைத் தர முடியும். அப்பாவும் மிஸ்
சொங்கும் அந்தப் பானத்தின் தனிச் சுவையினை ரசித்தி
ருக்கலாம். ஆயினும் அவர்கள் இவனது இணைந்த வாழ்வின் உணர்வைப் புரிந்துகொள்ள முடியுமா? அந்தக் குழப்பமிக்கி நாட்களில் மற்றவற்றைப் போலவே திருமணங்களும் அல்லாடிக்கொண்டிருந்தன. அவர்களிருவரைப் பொறுத்த வரை ஒரு குருட்டதிர்ஷ்டம் நிகழவே விதியுஸியும் அவனும் அதைப் பொருத்தமற்றதாக எண்ணினார்கள், பின்னர் அது அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாரா மகிழ்ச்சியைத் தரும் என நினைத்துப் பார்க்கவேயில்லை. எனவே

Page 25
A6
தொடக்சத்தில் எவ்வளவு துயரங்கள் தோன்றினவோ அதனளவு இன்பநுகர்வை இப்பொழுது பெற்றனர். தங்களது அசந்தர்ப்ப மண நிகழ்ச்சியை அவர்க்ள் இருவரும் நினைவு கொள்ளும் பொழுதெல்லாம் துயரும் இன்பமும் அவர்களது உள்ளத்தே தோன்றும். அவர்களிருவர்களுக்கு மட்டுமே புரியக் கூடியக் ஆனால் மற்றவர்கள் உணர முடியாத ஒரு கலப்பு உணர்வு தோன்றும்.
இந்நிகழ்ச்சி 1972இல் இளவேனிற் கால மாலையில் நிகழ்ந்தது. வழக்கம் போல் அவன் குதிரைகளுக்கு தண்ணீர் காட்டியபின் மந்தைப்பட்டியைத் தாளிட்டுத் தன் சிறிய குடிலுக்குத் திரும்பினான். அவன் தனது சாட்டையை வைத்தானோ இல்லையோ அச்சமயம் பார்த்து வாயாடி அவனது அறைக்குள் திடுமென நுழைந்தான்.
"டேய் மூத்த சூ, பெண்டாட்டி ஒருத்தி உனக்கு வேண்டுமா?’ எனக் கேட்டான். ' “சரி” என்று மட்டும் சொல். இதோ இந்த இடத்திற்கே அவளை இன்றைய இரவே அனுப்பி வைக்கிறேன்' என்றான்.
அவன் அங்ங்ணம் விளையாட்டுக்காகக் கூறுகிறான் என நினைத்து அவனும், "அப்படியென்றால் அனுப்பித்தான் வையேன்" என்றான் சிரித்தவாறு.
"சபாஷ், அப்புறம் வார்த்தை பிறழக் கூடாது அந்தப் பெண் மணமாகாதவள் என்பதற்கு அத்தாட்சி இருக்கி நது உன்னைப் பொறுத்தவரையில் நான் பண்ணைத் தலைவரிடம் ஏற்கனவே பேசி வைத்திருக்கிறேன். உனக்கு ஆட்சேபனை இல்லாதவரை அவர் உடனே சான்றிதழ் தர அட்டியில்லை என்றார். நான் உன் சார்பில் போய் அதனை வாங்கி, திரும்பும் வழியில் நிர்வாகிகளிடம் கொடுத்து விடுகிறேன். அப்புறம் அந்தப் பெண்ணை இங்கு அழைத்து வந்து இன்றிரவே கல்யாணத்தை முடித்து விடுவோம்" என்றான்:

47
அப்பொழுது இருள் கட்டுகின்ற நேரம் அவன் ஒரு முக்காலியில் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கும் பொழுது வெளியே சிறுவர்களின் கூச்சல் ஒலி கேட்டது. "மூத்த சூ மனைவி வருகிறாள், மூத்த சூ மனைவி வருகிறாள்" கதவு திறக்கப்பட்டு அன்று மாலை வந்தது போல வாயாடி திடீரென நுழைந்தான்.
"எல்லாம் முடித்து வைத்தாகிவிட்டது. உன் வீட்டு "வைன் ஒரு சொட்டுக் கூட எனக்கு வேண்டாம். ஏதோ கொஞ்சம் தண்ணீர் வேண்டுமென்றால் கொடு. கடினமான வேலையாய்ப்போச்சு தெரியுமா? முப்பது லீ தூரம் அங்கு மிங்குமாக நான் நடைபோடவேண்டியிருந்தது' இவ்வாறு கூறியவாறே பானையிலிருந்து சாய்த்துத் தண்ணீரை குடித்தான். தனது மீசை படிந்த உதடுகளைத் துடைத்து விட்டவாறு நீண்ட பெருமூச்சு விட்டு ஆசுவாசமடைந் தான். "ஏய் என்று வெளியே கூவி அழைத்தான்.
"ஏன் உள்ளே வாயேன், இனிமேல் இது உன் வீடு.
இதோ உங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவன்தான் நான் கூறிய மூத்த கு அவன் முழுப் பெயர் சூலிங்ஜன். கொஞ்சம் ஏழை. இருந்தும் நல்ல பயல். இந்தக் காலகட்டத்தில் எவ்வளவுக்கு ஏழையாக இருக்கிறார்களோ அந்த மட்டும் மதிப்புக் கொடுக்கிறார்கள்" அப்பொழுது தான் அவன் தனக்கு அறிமுகமில்லாத ஒரு பெண் ஒரு சிறுவர், சிறுமியர் கூட்டத்துக்கு முன்னால் நின்று கொண் டிருப்பதைக் கண்டான். அவள் ஒரு நிறைய எண்ணெய் படிந்த சாம்பல்நிற நீண்ட அங்கி அணிந்தவளாய் கையில் ஒரு வெள்ளை மூட்டையும் சுமந்து நின்றாள். தூசியும் ஒட்டடையும் மண்டிய குடிசையில் தங்க முடிவு செய்து தயாராக வந்திருப்பது போல் நோட்டம்விட்டாள்.
**இது என்னப்பா நடக்கிறது?’ அவனுக்கு அதிர்ச்சி யாக இருந்தது. "இதெல்லாம் என்ன வேடிக்கை?*

Page 26
4&
'இது ஒன்றும் வேடிக்கை கீடிக்கை இல்லை’* வாயாடி ஒரு காகிதத்தை வெளியே இழுத்து செங்கற் கட்டிலின் முகப்பில் பட்டென வைத்தான். "எல்லா ஆவணங்களும் இதோ இருக்கின்றன. அதிகாரபூர்வமானது புரிகிற்தா? அரசியல் பகுதியில் இருக்கும் பெரியவனிடம் நீ குதிரை மேய்க்கச் சென்றுவிட்டதாகக் கூறி இந்த ஆவணக் கொத்தைத் தரும்படி கேட்டு வாங்கி வைத்தேன். நீ பேச்சு மாறினாயானால் என்பாடு போச்சு தெரிகிறதா மூத்த சூ?"
"நாம் இப்பொழுது என்ன செய்ய' என்று மேலே கையை விசிறியவாறு வாயாடியிடம் கேட்டான். அவன் எழுந்ததும் காலியாக இருந்த முக்காலியில் அந்தப் பெண் மெதுவாக நடந்துவந்து அமர்ந்து கொண்டாள். அந்த உரையாடல்களுக்கும் தமக்கும் எத்தகைய தொடர்பும் இல் லாதவள் போல் வாளாயிருந்தாள். --
"என்ன செய்வதா? இனிமேல் அவை கணவனும் மனை வியும் முடிவு செய்துகொள்ள வேண்டிய விஷயம், என்னி டம் கேட்டால்? எல்லா அதிகாரபூர்வமான ஆவணங்களை யும் செங்கற் படுக்கையின் மேல் வைத்தான்’ இனிமேல், இருவரும் மகிழ்ச்சியாக வாழுங்கள், அடுத்த ஆண்டு நல்ல கொழுத்த பிள்ளையாகப் பெறுங்கள், அப்பொழுது எனக்கு நல்ல விருந்து போடுங்கள்' வாயில்வரை சென்று கையை ஆட்டினான். சூழ்ந்து நின்ற குழந்தைகளை கோழிக் குஞ்சு களை விரட்டுவது போன்று சூ எனத் தள்ளிச் சென்றான். "பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? உங்கள் பெற்றோர்கள் கலியாணத்தை நீங்கள் பார்த்திருக்காவிட்டால் அவர்களி டம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இங்கிருந்து எல்லோ ரும் இப்போதே ஒடிப்போங்கள்!" Y
அத்துடன் வாயாடி விடைபெற்றுக்கொண்டான்.
அந்த மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் அவன் சாடை யாகக் கண்ணோட்டம் விட்டான். அப்படி பெரும் அழகி யல்ல, சிறிய மேல் நோக்கிய மூக்கு. அதைச் சுற்றி சிறுசிறு

49
வெயிற்சூட்டுத் தழும்புகள், தலையில் பளபளப்பற்ற பழுப்பு முடி. சோகைபிடித்த தளர்ந்த உருவம். அவள் மீது அவனுக் குப் பச்சாதாபம் ஏற்பட்டது. ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றிக் கொடுத்தான். "ரொம்பத் தூரத் திலிருந்து வந்திருக்கின்றாய், தண்ணீர் சிறிது பருகு."
அவள் மேலே நோக்கியபொழுது அவனது ஆர்வமுள்ள பார்வையுடன் கலந்தது. மெதுவாகத் தண்ணிரைப் பருகி னாள். அவளது பலம் மீண்டதும் அவளது தோற்றமும் சீரடைந்தது. செங்கற்படுக்கை அருகே சென்று மெத்தை யைச் சுருட்டி வைத்தாள் பின்னர் அவனது காற்சட்டையை எடுத்து முழங்காலில் தேய்ந்திருந்த பகுதியைத் தனது மடி யில் வைத்தவாறு அவள் கொண்டுவந்த சிறிய வெள்ளை மூட்டையை அவிழ்த்து சிறிய நீல நிறத் துணித் துண்டினை யும் ஊசியையும் கொஞ்ச நூலினையும் எடுத்து தலையைக் கவிழ்த்தவாறு தைக்கத் தொடங்கினாள். அவளது போக்கு, லாவகமாகவும் மென்மை நிறைந்ததாகவும் இருந்தது. அவளது நடையுடை பாவனைகளில் அவ்ளது தோற்றத்தில் காணாத காம்பீர்யம் காணப்பட்டது. பார்வைக்கு எளியவ ளாக்க் காணப்பட்ட அந்த பெண் அங்குமிங்குமாக சீர் செய்து அறையினைத் தூய்மையாக்கி விட்டாள். மெத்தை களையும் துணிகளையும் தன் விரல்களினால் மீட்டி இசைப் பதுபோல் பணியாற்றினாள், அந்த அறையில் அவள் ஒரு நாதத்தைப் புகுத்தியதாக அவனுக்குப்பட்டது.
திடீரென அவனுக்குத் தன் கபில நிறக் குதிரையின் ஞாபகம் தோன்றியதும் அவன் மனது துயரடைந்தது. அவளை அவன் முன்னரே அறிமுகமானவள் போன்றும் இத்தனை காலமும் அவளுக்காக அவன் காத்திருந்தது போன்ற உணர்வும் தோன்றியது. திடீரெனத் தோன்றிய உணர்ச்சிப் பெருக்கினால் அவனை அறியாது கட்டிலின் முனையில் அவளருகில் அமர்ந்தான். அவன் தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டான். முடிவில்

Page 27
50
தனக்குக கிடைத்திருக்கும் இந்த இன்ப உணர்வு வந்ததில் அவநம்பிக்கையும் இத்தகைய எதிர்பாரா மகிழ்வின் காரண மாக ஏதும் புதிய துரதிர்ஷ்டமான நிகழ்வுகளும் வந்துவிடக் கூடாதே என்று அச்சமுமடைந்தான். கண்களைக் கைகளி னால் மூடியவாறே இந்த இன்ப நுகர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தான். அப்பெண் தைப்பதை நிறுத்தினாள். அவளது உள்ளுணர்வு இந்த மனிதனை வாழ் நாள் முழுதும் நம்பலாம் என அறிவுறுத்தியது. அவனை அவள் அறிமுகம் இல்லாதவள் போல் கணிக்காதுசிறிது கூனியிருந்த அவனது முதுகின் மேல் தன் கையை வைத்தாள். பின்னர் இருவரும் படுக்கையின் முனையில் விரிக்கப்பட்டிருந்த துணியில் அமர்ந்து விடியும்வரை பேசித் தீர்த்தார்கள்.
ஷியுஸி சிச்சுவானிலிருந்து வந்தவள். அந்த ஆண்டுக் காலத்தில் வளம் நிறைந்த பகுதியெனப் பெயர்பெற்ற அம்மாநிலத்தில் மக்களுக்கு உண்பதற்குப் போதியளவு உணவு கிடைக்கவில்லை. சர்க்கரைவள்ளிக் கிழங்கு கூட இடைப்பதற்கில்லை. பட்டினியுற்ற உழவர்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக தங்கள் வீட்டைவிட்டுச் செல்ல நேர்ந்தது. மற்ற இடங்களைத் தேடிச்சென்று மற்ற ஊர்களிலுள்ளவர்களை மணந்துகொண்ட பெண்கள் சிறிது நல்ல நிலையில் வாழ்ந்தார்கள். வெளியில் சென்று குடியே றிய பெண் தன் சொந்த ஊரிலுள்ள பெண்களையும் அழைத்து அவ்வூரில் மனைவிகளாக்கி வைப்பார்கள். இந்த வகையில் சிறு சிறு கூட்டமாகத் தங்கள் வீட்டை விட்டுக் இளம்பிக்கொண்டிருந்தார்கள் தங்கள் பொருள்களை-சிறு மூட்டைகளை கையில் ஏந்தியவாறு யாங்பிங் சமவெளி கடந்து இன் லிஸ் மலைகள் மீதேறி சிறிதும் பெரிதுமான எண்ணற்ற ரயில்பாதைச் சுரங்கங்கள் ஊடே சென்று ஷான்சி நோக்கி, கான்சு, கிங்ஹாய், நிங்ஸியா சிஞ்ஜியாங் எனப் போவார்கள். தகுதியுள்ள பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு ரயில்வண்டிச் சீட்டுக்குரிய பணந்தருவார்கள். அது கிடைக்காதவர்கள் திருட்டுத்தனமாய் ரயில் ஏறிப்

5 I
போய்ச்சேர முயற்சிப்பார்கள். அவள் கையிலுள்ள மூட்டை யில் சில ஒட்டு போட்ட துணிகள், சிறிய வட்ட முகம் பார்க்கும் கண்ணாடியும் சீப்பும் இருக்கும். இத்தகைய சிறு பொருள்களுடன் தன் இளமையையும் ஏன் உயிரையும் பணயம் வைத்துச் செல்வாள். இதனால் அவள் மகிழ்ச்சியை யும் பெறலாம் இன்றே அதனை இழக்கவும் செய்யலாம்.
இந்த மாவட்டத்தில் இத்தகைய திருமணங்களை * எட்டு ஃபென் திருமணம்”** என்று பெயர் கொடுத்திருந் தார்கள். உள்ளூர் இளைஞர்கள் மணமகளுக்குப் பரிசளிக்கப் போதிய பொருள்களில்லாததால் மணமுடிக்காதிருந்த வயது கூடிய ஆடவர்கள் இத்தகைய கிச்சுவான் பெண்கள் மீது நாட்டங்கொள்வார்கள். இங்குவந்த கிச்சுவான் பெண்க ளைக் கேட்டால் தங்கள் ஊரிலுள்ள மணமாகாத பெண் களின் பட்டியலையே தருவார்கள். அப்புறம் ஒரு கடிதம் அனுப்பப்படும். இந்த அழைப்பினைப் பெற்று ஒரு பெண் வருவாள். பின்னர் ஒரு திருமணம் முடிவுறும் வழியுஸியும் இம்முறையில் வந்தவள் தான். ஏழாவது உற்பத்திக் குழுவின் டிறாக்டர் ஒட்டி ஒருவனை மணப்பதற்காக முன்னர் வந் திருந்தவள் சொந்த ஊரில் சான்றிதழ்களையெல்லாம் பெற்றுநெடும்பயணம் கடந்து இங்கு வந்து சேர்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அப்பேர்வழி இறந்து போனான். அவள் இடுகாடு செல்லவில்லை. அவள் அவனைக் கண்ணாற்கூடக் காணாததால் இது தேவைப்படவில்லை. திருமண ஏற்பாட்டைச் செய்து தந்த பெண்ணைக் கூட அவள் சென்று பார்க்கத் தயங்கினாள். காரணம் அவளுக்கும் அவளது அங்கவீனமுற்ற கணவனையும் ஒரு சிறு குழந்தை யையும் காப்பாற்ற வேண்டிய பரிதாபகரமான நிலை ஏற் பட்டிருந்ததால் ஏழாவது குழுவின் கால்நடைப்பட்டியில் முன்னால் அமர்ந்து தன்னைச் சூழ்ந்திருந்த தன் நிழலையே பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
* ஒரு கடிதத்திற்கான அஞ்சல் செலவு

Page 28
52 மத்தியானம் கையில் கேத்தலுடன் வெந்நீர் பெறுவதற் காகப் பட்டிக்குச் சென்ற வாயாடி இதனைத் தெரிந்திருந் தான். அவன் தனது குதிரைகளை இருக்கச் செய்து வீடு வீடாகச் சென்று இப்பெண்ணிற்கு ஒரு வழிவகுக்க முனைந், தான். குழுவில் மணமாகாத ஒற்றைப் பேர்வழிகள் மூவர் மட்டுமே இருந்தனர். அம்மூவரும் பட்டிக்கு வந்து அவளைப் பார்வையிட்டு ஆள் ஒல்லியாகவும் சின்னவளாகவும் இருக்கி றாள் என எண்ணினார்கள். அப்போது வாயாடிக்கு முப்பத்தைந்தோ முப்பத்தாறோ வயதான சூலிங்ஜனின் ஞாபகம் வந்தது.
இப்படியாகத்தான் அவன் திருமணம் முடிந்தது. ? ? மூத்த சூவுக்கும் கல்யாணம் முடிந்தது.' கிராமத் திலேயே இது ஒரு பெரிய நிகழ்ச்சியாகத் திகழ்ந்தது. எண்ண வேற்றுமைகளால் இணையாதிருந்தவர்கள் கூட தற்காலிகமாகத் தங்கள் மன வேற்றுமை மறந்து ஏதொரு சச்சரவுகளிலும் சம்பந்தப்படாத யாருச்கும் கெடுதி புரியாத நல்ல உழைப்பாளியான அவனை வாழ்த்த வந்தார்கள். எப்படியாயினும் மக்கள் மக்கள்தானே. அந்தக் கெடுபிடி யான ஆண்டுகளில் தங்கள் மனிதப் பண்பை இழந்துவிடாது தங்கள் பாச உணர்ச்சியைத் திரட்டி மற்றையவர்கட்கும் அன்பைப் பொழிந்தார்கள். யாரோ ஒருவர் அவனுக்கு ஒரு கொப்பரை கொடுத்தார். மற்றவர்கள் பல "கட்டி" நிறையான அரிசி தந்தார்கள். மற்றும் துணிக்குரிய சீட்டு களும் இப்படிப் பலர் அளித்தார்கள். இளம் மிருக வைத்தி யன் தலைக்கு 50 ஃபென் என வசூலித்து குடும்பம் தொடங்குவதற்கான ஆரம்ப செலவுகட்காக அளித்தான். குழுவின் தலைவரும் மற்றவர்களுக்குக் கொடுத்ததுபோல் மூன்றுநாள் தேனிலவு விடுமுறை தந்தார். அந்தக் கடின மான நாட்களில் கூட மக்கள் அன்புடன் நடந்து கொண்
456. இங்ங்ணமாக இத்தகைய நன்கொடைகளைத் தங்க. (Gyeol (L மூலதனமாகக் கொண்டு இவர்கள் தங்கள் புது? வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

53
ஷியுஸி எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்ட தீவிர உழைப்பாளி. இரண்டே ஆண்டுப் பள்ளிப் பயிற்சி பெற்றி ருந்ததால் அவள் தனது உணர்வுகளைக் கலையம்சத்துடன் உணர்த்த முடியவில்லை. எனினும் 1918 இல் லெனின் என்ற படத்தை அவள் வந்தடைந்த மறுநாள் கிராமச் சதுக்கத்தில் பார்த்த பின்னர் அதில் லெனினின் மெய்ப்பாது காவலர் **ரொட்டி மட்டுமல்ல பாலும் கிடைக்கும்' என்ற வரியை அடிக்கடிகூறிப் புன்னகை புரிவாள். அவளது புருவங் கள் மெல்லியவை, அவளது கண்களும் சிறியவை. அவள் சிரிக்கும்பொழுது அவை பிறைச்சந்திரன் கீற்றுக்கள் போல தோன்றும். அவளது குழிந்த கன்னங்களும் அவளுக்கெனத் தனி அழகை ஊட்டின.
பகல் வேளையில் சூலிங்ஜன் குதிரைகளை மேய்க்கை யில் கொளுத்தும் பகல் வெய்யவனின் வெப்பத்தில் சேங்கல் தட்டிக் காயவைப்பாள். அப்புறம் செங்கற்களை வண்டியில் ஏற்றிச் சென்று தன் குடிலைச் சுற்றிச் சுவரைக் கட்டத் தொடங்குவாள். இவ்வாறாக தொண்ணுாற்றாறு இலட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட காணியில் தனக்கென பதினெட்டுச் சதுர கிலோமீட்டர் இடத்தை ஒதுக்கிக் கொண்டாள். "அங்கு ஊரிலே ஒவ்வொரு வீட்டிற்கும் முன்னால் மரங்கள் இருக்கும். அதன் கிளைகள் மூடியதால் வானத்தைக் காண முடியாது" என்பாள்.எனவே வயற் புறமிருந்த இரண்டு நெட்டிலிங்க மரக் கன்றைப் பிடுங்கி வந்து, அவற்றை அதிசயிக்கத்தக்க பலத்துடன் இழுத்துவந்து தாது மனையின் இருபக்கமும் நாட்டினாள். சுவர் எழுப்பி முடிந்ததும் கோழிப்பண்ணை வளர்க்கத் தலைப்பட்டாள். கோழிக் குஞ்சுகள், தாராக்கள், வாத்துக்கள் இவையன்றி முயல்கள், புறாக்கள் என பலதை வளர்க்கத் தொடங்கி னான். இதனால் அவளுக்கு "மூன்று படைகளின் தளபதி என்ற பட்டப் பெயர். அரசுக்குச் சொந்தமான இந்தப்
4-س--p

Page 29
54
பண்ணையில் பன்றி வளர்க்காதது அவளுக்கு அதிருப்தி அளித்தது. காரணம், பன்றி வளர்க்க அனுமதிக்கப் படாததே. இரவு வேளையில் படுக்கையில் அவள் அடிக்கடி சூவிங்ஜனிடம் தான் சொந்தமாகக் கொழுத்த பன்றிகளை வளர்ப்பதாகக் கனவு கண்டதாகக் கூறுவாள்.
இந்த ஒதுங்கிய பண்ணை ஒரு தேங்கிய குட்டை.போல் அமைந்தது. நல்லதோ கெட்டதோ எந்தத் தீர்மானத்தை பும், மேலிருந்து வரும் கொள்கைகளையும் நிறைவேற்று வதில் மிகவும் சுணக்கமாக இயங்கினர் "முதலாளித்துவத் தின் மிச்ச சொச்சம்' எனப் பழி கூறப்பட்டு நசுக்கப்படும் ஆபத்து இருந்துங்கூட ஷியுஸி கற்சந்தியில் புல் முளைப்பது போல பிடிவாதமாகத் தன் கொள்கையை நிலைநாட்டி னாள். மந்தரவாதியின் கரம் பட்டது போல் சிறுசிறு பிராணிகள் நிறைய வளரத் தொடங்கின. **ரொட்டி மட்டுமல்ல பாலும் கிடைக்கும்" ஒராண்டுக் கடும் உழைப் பிற்குப் பின் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முன்னேற் றம் காணப்பட்டது. குறைந்த சம்பளமே பெறினும் அவர் களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைத் தன. ஷியுஸி சமூக எதிர்ப்புக்களையும் சமாளிக்கும் திறமை கொண்டிருந்தாள். வயலிலிருந்து திரும்பும் ஒவ்வொரு மாலை வேளையிலும் கிங்கிங்கை முதுகிற் சுமந்து அவள் செல்ல அவளைத் தொடர்ந்து கோழிக் குஞ்சுகள் தாராக் கள், வாத்துக்கள் படை செல்லும், முதுகில் புறாக்கள் சவாரி புரியும். தண்ணீர் நிறைந்த கொப்பரைக்குங்கீழ் உள்ள அடுப்பில் விறகுகள் ஆனந்தமாக எரிந்துகொண்டிருக் கும். ஆயிரம் கைகள் படைத்த புத்தரைப் போல் எல்லாப் பணிகளையும் ஒழுங்காகப் புரிந்திருப்பாள்.
வெறும் சர்க்கரை வள்ளிக் கிழங்கிலே வளர்ந்த இந்தப் பெண் அவனுக்கு வீட்டிலே உலைமூட்டி வைத்ததோடு இந்த நிலத்திலும் ஆழவேரூன்ற வைத்துவிட்டாள். தங்கள் சொந்த உழைப்பால் வேருக்கு உயிருட்டினார்கள். அவர் களது இணைப்பு அவனுக்கு நிலத்தின்பால் பற்றைத்

55
தோற்றுவித்தது. இதன் காரணமாக உழைப்பால் நேரும் வாழ்க்கை எளியது, தூய்மை நிறைந்தது, நேர்மையானது என உணரத் தொடங்கினான். பல ஆண்டுகாலமாக அவன் காத்திருந்த மகிழ்ச்சியில் மூழ்கடிக்கப்பட்டான்.
அப்புறம் அந்த நாளும் வந்தது. உபதலைவர் டொங் அவன் மீது இருந்த குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாக அகற்றப்பட்டதென்று அறிவித்தார். நீதிச் செயலகத்தின் நியதியின்படி அவனுக்கு நஷ்டஈடு ஊதியமாக ஐநூறு யுவான்கள் அளிக்கப்பட்டது. நடந்த இவற்றைப் பற்றி அவ்ன் மனைவியிடம் கூறியதும் அவளுக்கு மகிழ்ச்சி பொங்கி முகமலர்ந்தது. தனது முன்றானையில் கையைத் துடைத்த பின் அந்தப் புத்தம் புதிய பணத்தாள்களை எண்ணத் தொடங்கிவிட்டாள். ... "
"அடியே வியுஸி, இப்பொழுது முதல் நாம் மற்றவர் களுக்கும் சமமானவர்கள்" என்று அந்தச் சிறிய சமயலறை இருக்கும் திசையை நோக்கி முகத்தை அலம்பியவாறு மகிழ்ச்சியுடன் சத்தமிட்டு கூறினான். "நான் சொன்னது கேட்டதா ஷியுஸி, அங்கு என்ன செய்து கொண்டு இருக் கிறாய்?"
"நான் இவற்றை பலமுறை எண்ணிவிட்டேன். சரியாக எண்ண வில்லை - அடே அப்பா எவ்வளவு?"
ஐய! நீ சரியான. பணம் என்ன பெரியது? எனது அரசியல் பழி துடைப்பையல்லவா கொண்டாட வேண்டும்"
**அது என்ன "அரசியல் பழி துடைப்பு!" எனக் கென்னவோ நீங்கள் நீங்கள்தான். அவர்கள், நீங்கள் முன் ஒரு வலதுசாரி என்று கூறினார்கள். இப்பொழுது இவ்வளவு காலத்திற்குப் பின் தவறிழைத்துவிட்டதாகக் கூறுகிறார் கள். அது உண்மையானால் மீண்டும் தவறு புரியாதே

Page 30
56
என்று எச்சரிப்பதன் அர்த்தமே புரியவில்லையே? அவர்கள் செய்வதெல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் யார் மீண்டும் குற்றங்கள் புரியாது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? நமக்கு இப்பொழுது பணம் கிடைத்திருக்கிறது. நல்ல அமைதியான வாழ்க்கை வாழலாம், என்னைத் தடை செய்யாதீர்கள். நான் மீண்டும் யோசிக்க வேண்டும்'
உண்மையில் ஷியுஸி அவனைவிட பதினைந்து வயது குறைந்தவளாக இருந்தாலும் இதுவரையும் மட்டமாக எண்ணியதில்லை. அவள் எளிமையும் நேர்மையும் நாட்டுப் புறத் தன்மையும் கொண்டவளாக இருந்தாள். வலதுசாரி என்றால் என்ன? இந்தக் கேள்வி அவளது சிறிய மண்டை யில் ஏறியதில்லை. அவள் அறிந்திருந்தது எல்லாம் தன் கணவன் நல்லவன் நேர்மையானவன் என்பதே. அவ்வளவில் அவள் திருப்தியுற்றாள். மற்றப் பெண்களுடன் சேர்ந்து வேலைசெய்ய நேர்ந்த சமயங்களில், அவள் அடிக்கடி கூறு வாள் "கிங்கிங்கின் அப்பா நேர்மையான அப்பாவி மனிதர்; அடித்தாற்கூட. ஏனென்று கேட்க மாட்டார். ஓநாய் விரட்டி வந்தால் கூட மெதுநடையில்தான் செல்வார். இப்படிப் பட்டவரை வதை வாங்குவது பெரிய பாபம். யாராயிருந் தாலும் அடுத்த ஜென்மத்தில் பதில் சொல்லியாக வேண்டும்”*
பணத்தின் மீது அவளுக்குப் பற்றிருந்ததும் சிக்கணம் மிக்கவள் என்பதும் என்னவோ உண்மைதான். ஐந்நூறு யுவான்கள் அவளுக்கு எக்கச்சக்கமான இன்பத்தை தந்தது. அவளது கைகள் நடுங்கின. அவளது கண்கள் மகிழ்ச்சியில் கண்ணிர் சொட்டின. ஆயினும் அவன் தந்தை வெளிநாட் டில் வர்த்தகராக இருக்கிறார் என்பதை அறிந்த பொழுதி லும் அவள் பணத்தைப் பற்றிப் பேச்செடுக்கவேயில்லை. அதற்குப் பதில் அவள் பெரியவருக்கு தேயிலையில் அவித்த முட்டைகள் கொண்டு செல்லும்படி கூறினாள். அவளது ஏழுவயது மகளிடம் அவள் அடிக்கடி கூறுவதுண்டு. 'தானே

57
சம்பாதித்த பணத்தைச் செலவு செய்தால்தான் நிம்மதி யாக இருக்கும், நான் உப்பு வாங்கும்பொழுது அப்பணம் முட்டை விறறது என்பதை உணர்வேன். மிளகாய் வாங்கும் பொழுது நெல் அறுவடை செய்ததின் பணம் என்பதை அறிவேன். உனக்குப் பயிற்சிப் புத்தகங்கள் வாங்கும் பொழுது மேலதிக நேரம் கதிரடித்துப் புடைத்ததன் கூலி என்பதை அறிவேன்." அவள் ஆழ்ந்த கோட்பாடு களையோ தீர்க்கமான தத்துவத்தையோ கொண்டவளல்ல ஆயினும் அவளது எளிய விளக்கமான உரைகள் உழைப்பு உன்னதமானது என்பதை அச்சிறு பெண்ணுக்கு உணர்த்தின. ஒருவரின் சொந்த உழைப்பின் ஊதியமே உள்ளத்திற்கு உவகை தரும். பிறர் தயவில் வாழ்வதோ சுரண்டிப் பிழைப்பதோ இழிவானது. ஷியுஸிக்கு பாட வராது. கிங்கிங் ஒரு மாதக் குழந்தையாக இருத்தபொழுது மூவரும் ஒரு பாரப் பேருந்திற் சென்று வட்டத் தலைநகரில் ஏதோ படம் பிடிக்கும் இடத்தில் படம் பிடித்துக் கொண் டார்கள். அந்தச் சிறிய நகரின் தெருக்களில் ஒரு ஐஸ்லொலி விற்பவன் 'லொ-ல்லி - லொ-ல்-லி என்று நீட்டி முழக்கிப் பாடினான். அதுவே அவளது தாலாட்டாக அமைந்தது. தன் குழந்தையைத் தாலாட்டும் சமயத்தில் மெதுவாக வடகிழக்குப் பகுதியினர் குரலில் "லொ-ல்லி-லொ-ல்லி" ? எனப்பாடுவாள். திரும்பத் திரும்பப் பாடப்படும் இந்த அந்நிய பாடலின் இனிய இசை கிங்கிங்கை மயக்கியதுடன் அவர்கள் அருகே அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் அவளது கணவனுக்கும் இதமளித்து ஒரு மெல்லிய உளமார்ந்த உவகையை ஊட்டியது.
வாஸ்ஃபுஜிங்கிலும் லொலி விற்பவர்களும் இருக்கத் தான் செய்தார்கள். ஆயினும் அவர்கள் பாடுவதில்லை. மேசைக்குப் பின்னமர்ந்து சிடுமூஞ்சியாக இருந்தார்கள். அந்த ஊரும் கலையற்று சப்பெனத் தோன்றியது, அவளது இனிய தாலாட்டுக்கள்-அவளது செல்லச் சொற்கள்நம்பிக்கை நிறைந்த அவளது புன்னகை இவற்றிற்காக அவன் உள்ளம் ஏங்கியது.

Page 31
58
இங்கு மேலும் இருக்கத் தாழவில்லை. திரும்பிப் போயாக வேண்டும். அவன் தொல்லையடைந்த வேளை களில் உதவிய நண்பர்கட்கு இப்பொழுது அவன் தேவைப் பட்டான். தன் சொந்த வியர்வையால் நீர்ப்பாய்ச்சிய அவனது நிலம் அறுவடைக்குப் பின் இப்பொழுது பொலி வுடன் அவனது அன்பு மனைவியும் குழந்தையும் இருந்தார் கள். அவனது முழு உலகமே அங்குதான் இருந்தது. ஏன் அவனது வாழ்க்கையின் ஆணிவேரே அங்குதானிருந்தது.
5
இப்பொழுது முடிவாக அவன் தனக்குப் பழக்கமான வட்டத்தின் சிறுநகருக்குத் திரும்பிவிட்டான். ஊரின் ஒரே தார் போட்ட சாலையின் மேல் லேசாகப் போடப்பட்ட பழுப்பு நிற மண் இன்னும் காற்று வீசியதும் சிறு களஞ்சி யங்கள் வங்கி, அஞ்சல் நிலையங்கள் இவற்றின் வெளிப் புறத்தில் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. வீதிக்கும் அப்பாலிருந்த பஞ்சடிக்கும் இயந்திரம் அவன் போன பின்னர் கூட ஒயவில்லை என்பது போல இன்னும் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது பேரூந்து நிலையத்தின் வாசலின் முன்னால் சர்க்கரைப் பொங்கள், ரொட்டி, சூரியகாந்தி விதை விற்கும் உழவர்களின் கூட்டம் நிறைந்திருந்த து நிலையத்தின் இருமருங்கும் சிதிலடைந்த பழம் வீடுகள் இருந்தன. அவற்றில் சிலவற்றில் ஆதிகாலத்தில் கடையப் பட்ட பலகணிக் கம்பங்கள் புதிதுபோலவே காட்சியளித் தன. புதிதாக எழுப்பப்பட்டுவரும் நாடக அரங்கின் வெளிப்புறத்தே நிறைந்திருந்த சாரக்கட்டுகளின் மேல் செங்கல் அமைப்பவர்கள் சுறுசுறுப்பாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
பேரூந்திலிருந்து இறங்கியதும் பாரசூட்டிலிருந்துதான் குதித்து வந்தது போன்றிருந்தது. இப்பொழுது கடைசியாக

59
மண்தரைக்குத திரும்பிவிட்டான். தன் வாழ்க்கையிற் தோன்றிய கசப்பான அனுபவங்களையும் ஏற்றதுபோல் இந்த இடத்தின் குறைகளுள்ளிட்ட அனைத்தையும் நேசித்தான்.
குதிரை வண்டியிலேறி DIT 606) நேரத்தில் கிராமத்தை அடைந்தான். மேற்குவானில் தலைசாயும் பரிதி தனது சாய்ந்த கதிரொளியால் ஊரினையும் அதில் வாழ் மக்களையும் தன் இளம் செம்மை ஒளியில் குளிப்பாட் டினான். அவனது வீட்டின் முகப்பில் ஷியுஸியின் இரண்டு நெட்டிலிங்க மரங்களும் தங்கள் ஆழ்ந்த உள்ளத்தினின்று அவனை அமைதியாக உயர்ந்து நின்று பார்ப்பதுபோல் ஓங்கி நின்றன.
குதிரைகளும் மந்தைகளும் வீடுநோக்கி வந்துகொண் டிருந்தன. மண்போட்ட தெருவினைக் கடக்கும்பொழுது கண்களை அகல விழித்து அவனை அறிமுகம் கண்டதுபோல் நோக்கி நின்றன. வண்டி நிரம்பத் தொலைகடந்த பின்னரே தங்கள் தலைகளைத் திருப்பித் தங்கள் பட்டிகளை நோக்கித் தளர்நடையைத் தொடங்கின. அவனது உள்ளத்தே ஆழ்ந்த பரிவுணர்வு தோன்றியது. தான் புறப்படுவதற்கு முன் தன் தந்தையுடன் பரிமாறிக்கொண்ட உரையாடல்களை மீண் டும் நினைவுபடுத்திக் கொண்டான். அன்றைய மாலையில் திண்டு நாற்காலிகளில் இருவரும் நேருக்குநேர் அமர்ந்திருந் தனர். மனந்தளர்ந்த கிழவர் பட்டு பைஜாமா அணிந்து சிறிது குனிந்தவாறு புகைத்துக்கொண்டிருந்தார்.
**இவ்வளவு சீக்கிரமாக புறப்படுகிறாயா?" என அவர் கேட்டார். "ஆமாம் பள்ளிக் கூடத்தில் இடைக்காலத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்’’
சிறிது மெளனத்திற்குப் பின் அவர் மீண்டும் கூறினார் **உன்னைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி". உணர்ச் சியை அவர் அடக்க முயன்றும் அவரது உதடுகள் துடித்தன.

Page 32
60
'நீ ஒரு பண்பட்ட மனிதன், அதை நான் உணர்கிறேன். விஷயாதிகளில் உனக்கு ஆழ்ந்த நம்பிக்கையிருப்பது காரண மாகத் தோன்றியிருக்க வேண்டும். அது சிறந்ததே. மனித னுக்கு வேண்டுவது நம்பிக்கையே. உண்மையைக் கூறுவ தென்றால் முன்காலத்தில் நானும் அதனையே தேடினேன். ஆனால் மதம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை . * சிறிது ஒய்ந்த பின் ஏதோ அதிருப்தியான ஒன்றை அழிப்பதைப் போன்று கையை அசைத்தவாறு தான் பேச்சை மாற்றிய வாறு 'பாரிசில் நான் சென்ற ஆண்டு "மாப்பாசாந்தின் தேர்ந்தெடுத்த சிறுகதை"களின் ஆங்கில மொழிபெயர்ப் பைப் படித்தேன். பிரதிநிதி ஒருவர் ரொம்பநாள் விட்டுச் சென்ற மகனைத் திருப்பிச் சந்தித்தபொழுது அவன் ஒரு முட்டாளாக இருந்ததைக் கண்டதாக ஒரு கதை இருந்தது. அதைப் படித்தபின்னர் எனக்குத் தூக்கமே வரவில்லை. பின்னர் உன்னைப்பற்றிய ஞாபகம் அடிக்கடி தோன்றியது. உனக்கும் ஏதாவது தொந்தரவு தோன்றியதோ எனவும் எண்ணினேன். இப்பொழுது எனக்கு மன நிம்மதியாக இருக்கிறது. நான் எதிர்பார்த்ததைவிட எவ்வளவோ பெரிய. ‘’ அவருக்குச் சரியான வார்த்தை கிட்டாது தடுமாறினார். மகனுக்கு ஒருவகை ஆறுதல்; கண்களிலே ஒரு தெம்பும் தோன்றியது. இந்தச் சந்திப்பின் இணைப்பால் அவனும் தந்தையும் மகிழ்ச்சியடைந்ததுடன் பரஸ்பரம் இருவரும் தங்கட்குத் தேவையான நிறைவைப் பெற்றனர். தந்தையின் குற்ற உணர்வு உறுத்திய மனச்சாட்சி தணிந்தது. நெருக்கடியான கால கட்டத்தில் அவனும் தனது சொந்த பழையகாலத்தை மீட்டும் நினைவுபடுத்தி தன் வாழ்வின் பொருளை உணர முடிந்தது.
பகலவனும் இப்பொழுது குன்றின் பின் மறைந்து தன் பொன்வண்ணக் கதிர்களை மேலே துலங்கிய மேகங்கள் மீது பாய்ச்சினான். ஒளிமிக்க மேகங்களின் பிரதிபிம்பம் குன்றருகி லுள்ள புல்வெளிகள், வயல்கள், கிராமம் இவற்றின்மேல் மெல்லிய சந்தியின் ஒளியைப் பரப்பியது. அவன் தனது

6.
பள்ளியை நெருங்கினான், விளையாட்டுத் திடல் கண்ணில் பட்டது, தொலைவிலிருந்து நோக்குகையில் பழுப்பு நிறப் புற்றரை சூழ்ந்த அமைதியான ஏரிபோல் தோன்றியது
மாலைத் தென்றலின் வருடலில் அவனைப் பாச அலை ஆழ்த்தியது. முடிவில் தனது தந்தை தனக்கும் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாகக் கூறினாலுங்கூட அவர் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை உணர்ந்தான்.
உணர்வுபூர்வமான அனுபவத்தின் அடிக்கல் இல்லாவிடில் வெறும் கல்வி அறிவு மட்டும் பயனற்றது. சில நேரத்தில்
சில வழிகளில் உணர்வுகள் கொள்கைகளை விடச் சிறந் தவை. இருபதாண்டுகளின் கடின உழைப்புக்குப் பின் இப் பொழுது அவன் பெற்றிருந்தது ஒரு உழைப்பாளியின்
உணர்வுகளை, அதுவே பெருநிதி உணர்ச்சி மிக்குற்று
கண்ணிர் வடித்தான். இத்தனை கொடிய ஆண்டுகளாய் கடுமையான பாதைவழி நடந்ததில் ஒன்றும் வீணாகிவிட வில்லை,
கடைசியாக அவன் பள்ளிக் கூடத்தைக் கண்ணுற்றான். அவன் வீட்டின் முன்னின்ற சிலர் அவனை நோக்கித் திரும் பினர். ஷியுஸி அணிந்திருந்த வெள்ளை முன்றானை கவிந்து வரும் சந்தியா வேளையில் ஒளிதரும் விண்மீனெனச் சுடர் விட்டது. தாவிவரும் ஒளிக்கதிர்போல சிகப்பு மேற்சட்டை அணிந்த ஒரு சிறு பெண் அவனை நோக்கி ஓடிவந்தாள். அவள் வேகவேகமாக நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருந் Asrtehr. O

Page 33

கைப்பு ஊற்று
ஒரு பாரப் பேருந்து ஒட்டுனரின் கதை

Page 34
ஐயா, துரங்கிவிடாதீர்கள், நான் ஒட்டிக் கொண்டிருக் கும் பொழுது பக்கத்தில் துணையாக இருப்பவர் தூங்கி விழுவதை நான் விரும்புவதில்லை. தூக்கம் ஒரு தொற்று நோய்.
சிகரெட் ஒன்றைப் பிடிக்கிறேன். நீங்கள் புகைப்பதில் லையா? ம், நல்ல எழுத்தாளன் எப்படி புகைக்காமல் இருக்க முடியும்? எப்படியோ நான் புகைப்பவன். நகர்ப்புறத்து ஒட்டுனர்கள் கடமை புரியும்போது புகைக்கக்கூடாது என்ப தாக ஒரு நியதி உண்டு. ஆயினும் இந்தப் பகுதியில் இதெல் லாம் விதிவிலக்கு. ஏதாக இருந்தாலும் வண்டியில் ஒற்றை யாக எப்பொழுதும் குந்தி இருப்பது சலிப்பாகத் தான் இருக் கிறது. இது கிழக்குப் பகுதி மாதிரி இல்லை. இங்கெல்லாம் பல நூறு மைல்கள் ஏதாவது கிராமத்தைக் காணக் கண் களோ தேடித் தேடிப் பூத்துவிடும்.
நன்றாகப் பாருங்கள். நாமுள்ள இரு பக்கங்களிலுமே பாலைவனந்தான். அதோ, அது கோபைப் பாலைவனந் தான். நீங்கள் கோபைப் பகுதி சமதரையாக மஞ்சல் தோற்றமாக இருக்குமென எண்ணியிருப்பீர்கள். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது. சும்மா கண்கள் எட்டுமளவு பருக்கைக் கற்குவியல்கள்தான். கோபைக் கடந்ததும் நாம் மலைகளை அடைகிறோம். திரைப் படங்களிலே நாம் பார்க் கின்ற காட்சி போன்றதல்ல இவை-உச்சியிலே மட்டமாக இரும்பு ஆணிபோல இருக்கும். வரண்ட இடுக்கு என்று கூறப்படும் பகுதியை நாம் கடந்து தான் மலைகள் பக்கம் போக வேண்டும். எப்பேர்ப்பட்ட பெயர் கண்ணிர் கூடக்
கீழே சொட்டுவதற்கு முன்னால் ஆவியாக மாறிவிடும்

65
அத்தனை வரட்சி. புல்பூண்டு, ஈ எறும்பு ஒன்றாவது இருக் கணுமே, எங்கோ சந்திர மண்டலத்திலே இருப்பது போல இருக்கும். நீங்களே இதைப் பார்க்கத்தான் போகின்றீர்கள் இப்படியான இடத்தில் ஒட்டிக் கொண்டிருந்தால் தூக்கம் எப்படி வராமலிருக்கும்? எப்படியோ இன்றைக்கு எனக்குத் துணையாக ஒரு பத்திரிகையாளர் இருக்கிற அதிர்ஷ்டம் எனக்கு-பேசிக்கொண்டிருக்கலாம். படித்த மனிதர்களுடன் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
நீங்கள் நிறைய பிரயாணம் செய்கிறீர்கள்? சிஞ்ஜியாங் போகும்வரை நம்நாடு இவ்வளவு பரந்ததா என்பதை உணர முடியாது. உய்குரர்கள் பொதுவாகக் கூறுவார்கள், இந்தப் பகுதியில் பிச்சைக்காரன்கூடக் கழுதையில் சவாரி செய்துதான் போக வேண்டும். இல்லாவிடில் அவன் அடுத்த ஊருக்குப் போய்ச் சேர்வதற்குள் பட்னியாலே செத்து விடுவான் என்று. ஆமாம், அதெல்லாம் அந்தக் காலத்தில் தான். ஆமாம், நான் கூறியதெல்லாம் ஒரு அனுமானத் திற்காக.
நான் ஒட்டும் பொழுது பக்கத்தில் யாராவது துணை இருப்பதை விரும்புகிறேன். யாராவது வழியில் தென் பட்டால் வண்டியை மெதுவாகச் செலுத்தி, "கூடப் பயணம் செய்ய வருகிறீர்களா" எனக் கேட்பேன். இங்கே இந்த வெற்றுப் பாலையில் தொலைவிலே தெரியும் மலைகளுக்கும் இந்தக் கனத்த ஆகாயத்திற்கும் இடையில் மக்கள் திணறிக் கொண்டு நகர்வதைக் காணப் பாவமாக இருக்கும். ஒரு வகையில் நான் மனதிலே பாராட்டிக் கொள்ளுவேன். வண்டிக்குள் ஒன்றும் புரியாது. வெளியிலே நடந்து பார்த் தால்தான் புரியும். அடிமேல் அடி வைத்து இந்த மாதிரிப் பாதையில் நடந்து அவஸ்தைப்படுவதை உணர.
யாராவது பக்கத்தில் ஆள் இருந்தால் ஒருவருக்கொரு வர் துணையாக இருக்கும். தூரத்தொலை ஒட்டுகின்ற எங்களைப் போன்றவர்கள், மனிதர்களுடன் பழகுவதை

Page 35
66
விடக் கூடுதலாக யந்திரங்களுடன் தான் அதிகமாகப் பழகு; இன்றோம். பாதையில் நமக்கு அறிமுகமானவர் எவரை யாவது எதிர்ப்பட நேர்ந்தால் புன்னகை உதிர்க்கக் கூட
நேரமிருக்காது. அதற்குள் இரண்டு பேருமே பறந்து கடந்து
விடுவோம். நான் சிறியவனாக இருந்தபொழுது கழுதை
பூட்டிய வண்டி ஒட்டியிருக்கிறேன். அவை வேடிக்கையான
பிராணிகளாக இருந்தாற்கூட பாருங்கள் அவை உயிருள்ள மிருகங்கள். நமக்கு மனதில் சிறிது ஆயாசம் தோன்றினால் அவைகளுடன் பேச்சுக் கொடுத்தாவது ஆறுதல் அடைய
லாம். அவைகளும் நாம் கூறுவதைத் தங்கள் நீண்ட செவி
மடுத்து நமது கதையைப் புரிந்து கொண்டது போலக் கேட்டுக் கொண்டிருக்கும். ஆனால் இந்தப் பேருந்துகள் பிராணிகளா என்ன? உயிரும் இருந்தால் இன்னும்
தொல்லைதான். நிரம்ப நேரம் வண்டி செலுத்தியதும்
ஒரு விசித்திரமான தனிமை உணர்ச்சி தோன்றும். அதனால்
தான் ஒட்டுண்ர்கள் தங்குவிடுதியை அடைந்ததும் சப்தமிட்டு ஒரிப்பதும் வசைபாடுவதுமான பழக்கத்தை கொண்டிருக்
கிறார்கள். திட்டுதற்குக் காரணம் என்ன தெரியுமா? அது
பேச்சுப் பயிற்சி மாதிரி. மக்கள் ஒருவருக்க்ொருவர் உடனிருக்க ஆசைப்படுவது இயற்கை.
சில ஆண்டுகளுக்கு முன்னிருந்த எங்கள் நிறுவனத்தின் தலைவன் ஒருவன் மக்களைத் துணையாக ஏற்றிச் செல்வதை தடை செய்திருந்தான். அது ஆபத்தானது எனக் குறிப்பிட்டான். ஆனால் அவனோ சிலருக்கு பண்டங் களை ஏற்றிச் செல்லும் சலுகை செய்து சிகரெட்டுகளை யும் மது வகைகளையும் இனாமாகப் பெற்றுக் கொண் டான். அவனை உதைத்து விரட்டிவிட்டார்கள்.
மக்களுக்குச் சவாரி அளிப்பது அப்படி ஒன்றும் சின்ன விஷயம் அல்ல. யாராவது சமிக்ஞை செய்தால் நிறுத்து வோம் அந்தப் பயணி ஏறிக்கொள்கிறான். அந்தச் சிறிது நேரத்தில் அவன் உள்ளத்தில் இந்த உலகத்தில் இன்னும் பல நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற

67
எண்ணத்தை தோற்றுவிக்கிறோமல்லவா? அவனது மலர்ந்த முகத்தை காணும்பொழுது நமக்கும் ஒரு தென்பு தோன்று கிறது. ஒரு சக்திபடைத்வனாக ஒட்டுகிறோம். தூக்கமும் பறந்துபோய்விடுகிறது. நான் ஒரு அரட்டையல்ல; இருப்பி னும் பக்கத்தில் யாராவது துணையாக இருந்தால் தனியாக இருப்பதாகத் தோன்றாது. இன்றோ நான் வழக்கத்துக்கு மாறாக உங்களுடன் பேச்சுக்கொடுக்கின்றேன்.
சிஞ்ஜியாங்கிற்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன்? அது ஒரு பெரிய கதை. படித்துத் திரும்பிய இளைஞன் என்று என்னைக் கூறிக்கொள்ளலாம். எனது பேச்சிலிருந்து நான் ஹேனான் பக்கத்தைச் சேர்ந்தவனென்று அறிந்து கொண் டிருப்பீர்கள். சொந்தக் கிராமத்தில் கீழ் இடைநிலைப் பள்ளியில் கல்வி பயின்றேன். அக்காலத்தில் நிறையக் கற்பனை பண்ணினேன். திரைப்படங்களில் போர் வீரர் களைக் காணும்பொழுது நானும் அவ்விதம் ஆக வேண்டும் என்று எண்ணமிடுவேன். அல்லது யாராவது மருத்துவர் களைக் காண நேர்ந்தால் நானும் ஒரு மருத்துவனாக வேண்டுமென எண்ணுவேன். நான் எதை நினைத்திருந் தாலும் இது போல் ஒரு நீண்ட தொலைவண்டி ஒட்டியாக இருப்பேன் என எண்ணியதேயில்லை. இடைநிலைப் பள்ளி யில் மூன்றாம் ஆண்டு பயிலும் பொழுது எங்கள் கரும் பலகைச் சஞ்சிகையில் ஒரு கவிதை எழுதினேன். "விண் மீனுடன் வரிசை நிகர் என் எண்ணம் என் மேனி நெற்றி தalல் காணொளியாகும்" என்பது போன்ற வரியென ஞாபகம். பரவாயில்லையே என்கிறீர்களா? இதோ, கேலி செய்யாதீர்கள். அப்பொழுது எனக்கு வயது பதினேழு தான். இத்தகைய பெரு நோக்கங்கொண்ட இளைஞன் நிச்சயமாக முன்னேற வாய்ப்புண்டு என்று என் ஆசிரியர் கூறியதுண்டு.
1960இல் யார் எதிர்பார்த்தார்கள் அப்படியெல்லாம்
நடக்குமென்று. வீட்டில் அம்மாவும் அப்பாவும் சாப்பாட்டுக் கில்லாமல் கஷ்டப்பட்டதால் இந்த முன்னேற்ற வாய்ப்பு

Page 36
68
மிக்க இளைஞன் படிப்பை விட்டு நீங்கி, பெற்றோர்களைக் கவனிக்க வீடு திரும்ப வேண்டி நேரிட்டது. குடும்பத்தில் மூன்றுபேர் வாழ்க்கை நடத்துவது சிரமமாக இருந்தது. நானோ ஒரே பிள்ளை. 'மகனே, நீ இங்கிருந்து வெளிபூர் எதற்காவது போய் பிழைக்கும் வழியைப் பார். ஒன்ப தாண்டுப் பள்ளிப் படிப்பு இருக்கிறது. நிச்சயமாக ஏதாவது வேலை கிடைக்கும்' என்று இருவரும் உட்கார்ந்து அழுகை யுடன் கேட்டுக் கொண்டார்கள். ஹேனான்வாசிகளாகிய நாங்கள் எதையும் சமாளிப்பவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்கெங்கு வேலை கிட்டுகிறதோ அங்கெல் லாம் நாங்கள் நடகட்டுவோம். இருக்கும் இடங்களில் ஏதாவது இயற்கைப் பாதிப்பு ஏற்பட்டால் மற்றொரு மாவட்டத்துக்கு மாறுவோம். எப்படியோ எங்களூரிலிருந்து சிஞ்ஜியாங் சென்றிருந்த ஒரு பேர்வழியிடமிருந்து அப்போது (இந்த ஊர் குடியிருப்பதற்கு நல்ல ஊர், வேலையும் கிடைக்கும், உணவுக்கும் பஞ்சமில்லை என்பதாக) ஒரு கடிதம் வந்தது. பள்ளிக்கூடத்தில் "எங்கள் சிஞ்ஜியாங் ஏற்றம் நிறைந்தது" என்பதாக நான்படித்த பாடலொன்று ஞாபகத்துக்கு வந்தது. எனவே, நான் இங்கு வர முடி
செய்தேன்.
அந்தக் காலத்தில் ஊர் சுற்றிகளைக் குறித்து வெகு கண்டிப்பாக இருந்தார்கள். வீட்டிலிருந்து நிலா இல்லாத நாளாகப் பார்த்துப் புறப்படக் காத்திருந்தோம். என் தந்தை என்னுடன் சில கல் தொலைவரை நடந்து வந்தார். கம்யூன் எல்லை வரை வந்தவர் மேற்கொண்டு நடக்க முடியாது பாதை ஒரத்தில் பெருமூச்சு விட்டுக் கொண்டு குந்திவிட்டார். அம்மா எனக்காகச் செய்து எனது மூட்டை யில் கட்டி வைத்திருந்த சோள ரொட்டி சிலதை அவரது ஜோபில் திணித்தேன். "நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் . எனக்கு வழி தெரியும். என்னிடம் வரைபடம் இருக்கின்றது. நான் அங்கு போய்ச் சேர்ந்து வேலை கிட்டியதும் கொஞ்சம் பணம் அனுப்பி வைக்கிறேன்." என்றேன்.

69
இளம் வயதினர்க்கு அவ்வளவாக வீட்டுப் பாசம் இருப் பதில்லை. சாப்பாட்டுக்கில்லாவிட்டாலும் சிறகை விரித்துப் பறந்து செல்லத்தான் பார்ப்பார்கள். நானும் அச்சமயம் ஒரு சொட்டுக் கண்ணிர்கூடச் சிந்தவில்லை. என் பெற்றோர் கள் அச்சமயத்தில் எத்தகைய உணர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதையும் நான் அறிந்ததில்லை. இவையெல்லாம் வயது ஆகஆகத்தான் புரிகிறது. கடைசியாக அம்மாவும் அப்பாவும் கூறிய வார்த்தைகளை நினைவுக்குக் கொணர்ந்து சிந்திக்கும் பொழுதோ, அல்லது அவர்களைக் கடைசியாகச் சந்தித்த பொழுது எப்படித் தோற்றமளித்தார்கள் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதோ பாதை ஒரத்தில் அமர்ந்த தந்தையின் தோற்றம்தான் கண்முன் காணும். தனியாக நான் வண்டி யைச் செலுத்திச் செல்லும் பொழுதெல்லாம் அந்தக் காட்சியே என் முன்னால் வண்டியின் முகப்பு வெளிச்சத் திற்கு முன்னால் பாதை ஒரத்தில் தோன்றும் காற்றுத் தாங்கியான முகப்புக் கண்ணாடியில் ஒட்டப்பட்ட பாதை அனுமதிப் பத்திரம் போல நான் போகும் இடங்களுக்கெல் லாம் என்னுடன் வரும், அதனை எந்த வகையிலும் போக்க முடியாதிருந்தது.
ஒரோர் சமயங்களில் நானே என்னை மன்னித்துக் கொண்டு அன்று இரவு அம்மா உடன் வந்தால் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாகப் பேசிஇருப்போம் என நினைப்பதுண்டு. அப்பாவும் வாய்மூடி மெளன விவசாயி. நானும் அதற்கு மேலே. அது மட்டுமல்லாது பொதுவாகத் தந்தை-மகன் உறவு முறையில் அதிகம் நெருக்கம் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் என்னைப் பதினெட்டு ஆண்டுகள் பெற்று வளர்த்திருக்கிறார்கள். இருந்தும் அவர்கள் பிரியாவிடை அளிக்கும்பொழுது அவர் களிடம் ஒரு வார்த்தை நன்றிகூட நான் கூறவில்லை.
எப்படியோ என் கதைக்கு வருகிறேன்.
al-5

Page 37
70
இப்படிதான் சிங்ஜியாங் வந்தடைந்தேன். அந்தக் காலத்தில் வெய்யா வரைதான் இருந்தது. இன்றைக்கு அது பார்வைக்கு அவ்வளவு மோசமான பட்டினமாகத் தோன்ற வில்லை. ஆனால் அப்பொழுது பாலைவனத்தில் புதைந்த மண் சுவர்களாலான சிதிலமான வீடுகள் நிறைந்ததாக இருந்தது, வீடுகளைச் சுற்றி மக்கள் ஒருவர் பின்னொருவ ராக பல வரிசைகளாகக் கூடாரம் அடிக்கத் தொடங்கினார் கள். வெய்யா கடைசி ஊராக இருந்ததால் வந்தவர்களெல் லாம் அங்கேயே டோரா அடிக்கத் தொடங்கினார்கள். பேருந்து வண்டிகள் மேற்குப் பக்கம் போய்க் கொண்டிருந் தன. ரயில் வண்டிகள் கிழக்கிலிருந்து மக்களைக் கொணர்ந் தன. அவர்கள் பலவித உருவங்களும் பருமனும் வயதும் கொண்டவர்களாக இருந்தனர். அந்தக் கூடாரங்களிற் சில ஆயிரம் பேராவது எப்பொழுதும் பனிக்கட்டிகள் துகள்களா கச் சிதறும்படி மிதித்தபடி வசித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? சிலர் அதிகாரபூர்வ மாக மாற்றப்பட்டவர்கள். இங்கு கடமைபுரிய அனுப்பப் ப்ட்ட பல்கலைக்கழகப் பட்டதாரிகள், இடம் மாற்றப்பட்டதொழிற்சாலைகளுடன் சேர்ந்து வந்தவர்கள். ஆயினும் அவர்களின் பலர் "ஊர்சுற்றிகள்" எனக் குறிப்பிடப்பட்ட
ட விரோதமான ஒடுகாலிகள்". இப்பொழுது எங்களை ஒத்தவர்களுக்கு அழகான கெளரவப் பட்டம் சூட்டினார் கள்- "முன்னணித் தொண்டர்கள்" என. அதனை ஒரு வகைப் புனர் வாழ்வு முயற்சி என்றே கூறலாம். உண்மை யாகக் கூறினால், அந்த ஊர் சுற்றிகளும் முன்னணித் தொண்டர்களும்தான் இன்றைய சிஞ்ஜியாங்கின் இத்தகைய சிறப்பாக இருப்பதற்கு மூலகாரணிகள். அவர்களில் பலர் சிறந்த தொழிலாளர்களாகவும் செயலாளர்களாகவும் பொறியியலாளர்களாகவும் உற்பத்தி, கட்டட அமைப்பு ஆகியவற்றில் முன்னணியில் திகழ்வதை அறிவேன்.
ஊர்சு ற்றிகளான நாங்கள் நன்றாகப் பழகினோம். எங் களிற் பலர் ஒன்று சேர்ந்தபொழுது பார்ப்பவர்களுக்குக்

7.
காலங்காலமாக நெருங்கிப் பழகியவர்கள் என்று நினைக்கத் தோன்றும். ஒரிரு வார்த்தைகளைக் கொண்டு மற்றவரின் வாழ்க்கைப் பின்னணியை உணர்ந்து கொள்வோம். உற்பத் திக் குழுவினரும் தொழிற்சாலைகளுக்கு ஆள் திரட்டுபவர் களுமாகத்தான் தொடக்கத்தில் கூடாரங்கள் அமைக்கப் பட்டன. ஆள் சேர்ப்பவர்களும் என்னையொத்த ஊர்சுற்றி களைத்தான் தேடிக் கொண்டிருந்தார்கள் வெய்யா அந்தக் காலத்தில் ஹாஸ்கர் நான்ஜிங் வீதியைப் போல் ஆட்கள் நிறைந்த சந்தடி மிக்க நெடுஞ்சந்தை போல் காட்சியளித் தது. "இதோ, இங்கே வாருங்கள்! நிறையச் சம்பளம் தகு இறோம், தாராளமாகத் தானியங்கள் கொடுப்போம். சந் தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்' என்றோ, 'ஐயா, இந்தப் பக்கம் வாருங்கள், உங்கள் தலையத்தனை ஆப்பிள்கள் கிடைக்கும் , இத்தருணம் போனால்வேறு தருணம் கிடைக் காது" என்றெல்லாம் ஆள் சேர்ப்பவர்களின் ஆரவார ஒலி கேட்கும். வேறு விதமாக "ஏய், சோளந்தின்னிப் பேர்வழி கள் எங்களுக்குத் தேவையில்லை. பணத்தின் அருமை தெரி யாத தொட்டி தொழுவத்தில் தோன்றியவர்கள் இந்தப் பக்கம் வராதீர்கள்' என்றெல்லாம் கூடக் கூவுவார்கள். அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டால் சிறந்த உணவை உண்டு, சிறிய வீட்டில் வாழ்ந்து பை நிறையப் பணம் வழியும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பார்கள்.
ரயில் வண்டி ஏறியதும் உரிய சான்றிதழ்கள் இல்லாமல் எனக்கு வேலை கிடைக்காது என்று கவலை தோன்றியது. ஆனால் வெய்யாவை அடைந்ததும் இதிலெல்லாம் அடி பட்ட பேர்வழி ஒருவர் கம்யூன் மாற்றுச் சான்றிதழ் இல்லாவிடில் வாக்காளர் பதிவுச் சான்றிதழ் போதுமானது எனக் கூறினார். அதுவும் இல்லாவிட்டாலும் சிஞ்ஜிவாசி யான ஒரு நண்பரிடமிருந்தோ உறவினரிடமிருந்தோ ஒரு கடிதம் பெற்றிருந்தால் போதுமானது என்றார். எங்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்படுகிறதோ அந்தப் பகுதி ஆள் சேர்ப்பவர்கள்தான் அதிகக் கூச்சல் போட்டு அழைத்

Page 38
72
தார்கள். அத்தகைய இடங்கள் மிகவும் ஏழ்மையும் கடின மான வேலை வாங்கும் பகுதிகளாகவும் இருக்கும். கையோ காலோ ஊனமில்லாமல் கண்கள், காதுகள், மூக்கு இவை சரியாக இருந்தால் போதும், வேறு ஒன்றும் கவனிப்ப தில்லை.
இத்தகவலை எனக்குக் கூறிய பேர்வழி நாற்பது வயதை எட்டியவர். எப்பொழுதும் தேய்ந்த, எண்ணெய்ப் பசை யுள்ள கனத்த அங்கியை அணிந்திருப்பவர். தனக்கு மருத்து வத்தில் சிறிது பயிற்சி உள்ளதாகவும், எனவே தகுதியான வேலைக்குக் காத்திருப்பதாகவும் அதனால்தான் தான் இன்னும் ஒப்பந்தம் செய்துகொள்ள வில்லை எனவும் கூறினார். அவருக்குச் சிறிது கல்வி அறிவு இருக்கக் கண்டு நானும் எனது கீழ் இடைநிலைப் பள்ளித் சான்றிதழை அவரிடம் காட்டினேன். அவர் கண்கள் எங்ங்னம் வியப்புற்று "பையா, நீ ஒரு பொக்கிஷம். இதைக்கொண்டு உனக்கு அவர்கள் செயலகத்திலேயே வேலை தருவார்களே. இந்தக் கந்தல்பேர்வழிகளிடம் போய்ச் சேர்ந்து விடாதே" என்று கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது. டன்னர் அவர் கூடாரத்தில் ஒன்றினைச் சுட்டிக்காட்டி அங்கு வேலை தேடும்படிக்கேட்டுக் கொண்டார்.
அது மற்றவைகளைவிட ஒரு அமைதியான வட்டமென் பதில் வியப்படைவதற்கில்லை. அதன் முகப்பில் “சிஞ்ஜி யாங் கல்விப் பகுதி வெய்யா செயலகம்' என்ற சின்னம் தொங்கியது. உள்ளிருதவர்களும் அந்த அரட்டைக். கூச்சல் பேர்வழிகளைவிட நல்லவர்களாகத் தென்பட்டனர். கூடா ரத்திற்குள் பெட்ரால் கணப்படுப்பும் ஒரு வெற்றுப் பலகை நீண்ட இருக்கையும் இருந்தன. வரிசையாக அங்கு வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் அமர்ந்திருந்தார்கள். தங்களை பதிவு செய்த பேர்வழி சிறிது கனமாக இருந்ததாக ஞாபகம். அந்தக்காலத்தில் தடித்த பேர்வழிகளைக் காண்பது அரிது. அதனால் தடித்த ஆளைக்கண்டதும் மனதில் பதிந்தது. விண்ணப்பித்தவர்கள் அனைவரிடமும் சான்றிதழ்கள்

76
இருக்கவில்லை. அங்ங்ணம் சான்றிதழ்களைப் பார்த்து அந் தத் தடித்த ஆசாமி வாய்மொழிக் கேள்விகள் கேட்டார். விண்ணப்பதாரர் எந்த வகுப்புவரை படித்திருக்கிறார் என் பதை அறியும் வகையில் கேள்விகளைக் கேட்டார் உதார
657 DITAS "எத்தனை கண்டங்களும் மாவட்டங்களும் உள்ளன? " இன்னும் 'சீன மக்கள் ஜனனாயகக் குடியரசு எத்தகைய நாடு' என்றோ 'மூலக அட்டவணையைக்
கண்டு பிடித்தவர் யார்?' என்பதாகவோ அன்றி "பெற்ற கல்வியை அவ்வப்பொழுது பயிற்சி செய்தால் இன்பமாக இருக்குமல்லவா எனக்கன்பூஷியஸ் கூறியதன் கருத்தென்ன'ே போன்றவற்றைக் கேட்டார். அவரது கேள்விகளைச் செவி மடுத்து எனக்கு எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் பதில் கூற முடியும் என்பதை உணர்ந்தேன். அந்தக் கனத்த ஆசாமி ஷான்சி பகுதியினர் எனவும் நன்கு படித்த சுகுணமாணவர் எனவும் தோன்றியது. என்னை அவர் சோதிக்குந் தருணத் தில் எனது சான்றிதழைக் காட்டினேன். அவர் திருப்தி யடைந்ததாகத் தெரிந்தது. என்னைப் பார்த்து எப்பொழுது வந்து சேர்ந்தேன், குடும்பத்தில் எத்தனை பேர்கள், நான் மட்டும் வந்தேனா-அன்றி மற்ற எவருடனும் வந்தேனா என்றெல்லாம் கேட்டறிந்தார். உடனே அவர் பதிவு நூலில் எனது பெயரைக் குறித்து வைத்த் பின்னர் மறுநாள் காலை யில் உரும்கி செல்வதற்கு வந்து சேரும்படி கூறினார்.
கடா க்திலிருந்து வெளிவந்ததும் எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தனது பிறகை விரி, துப் பறந்து களித்தேன். நிருவாகியாக வேலை கிடைத்தால் மிகவும் நல்லதுதான் அல்லது போனாலும் குறைந்தது பள்ளி ஆசிரியர் வேலை யானாலும் பரவாயில்லை. சிறுவனாக இருந்தபொழுது "பள்ளி ஆசிரியை, என்ற சோவியத் பேசும் படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன். அது என் உள்ளத்தைக் கவர்ந் திருந்தது. அப்படத்தின் முக்கிய பாத்திரம் பெண்ணாக இருந்ததால் நான் அப்பாத்திரத்துடன் இணைந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் இப்பொழுது தோன்றியுள்ள

Page 39
A
சந்தர்ப்பத்தை எண்ணிப் பார்த்ததும் நான் பள்ளி ஆசிரிய னாக ஆசைப்பட்டது ஞாபகம் வந்தது. எனக்கு முதுமை தோன்றியதும் அங்கனம் அந்தப் பள்ளி ஆசிரியைப் போல் நகை, மூக்குக் கண்ணாடியுடன் விஞ்ஞானிகள், எழுத்தாளர் கள், படைத்தலைவர்கள் கொண்ட பழைய மாணவர்கள் சூழ இருப்பேன் என்பதாக எண்ணத் தோன்றியது.
இப்படி கற்பனையில் ஆழ்ந்திருக்கையில் இரு மங்கையர் களைச்காண நேர்ந்தது. அவர்கள் என்னையொத்த வயதி னர். மாணவிகளைப் போல உடையணிந்திருந்தனர். இருவரும் சடை பின்னியிருந்தனர். மற்றைய ஊர்சுற்றி யுடன் நான் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட அவர்கள் என்னுடன் பேசுவதற்காக என்னை நோக்கி வந்தனர். அவர்கள் பேச்சு வழக்கிலிருந்து எனது கம்யூனிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஹேறான் பகுதி யைச் சேர்ந்தவர்களெனத் தோன்றியது. அவர்கள் எனக்கு வேலை கிட்டியதா என்று கேட்டார்கள். நான் ஆமெனக் கூறியவுடன் உயர்ந்த வேலையாகவும் நடந்தவற்றையெல் லாம் அப்படியே கொட்டிவிட்டேன். அத்துடன் அந்தத் தடித்த ஆசாமி என்மேல் ஏற்பட்ட பெருமதிப்பில் தேர்வு கூட வைக்கவில்லை எனவும் பொழிந்து தள்ளினேன். அவர் களையும் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது. தங்களுக்கு வேலை கிட்டவில்லை எனவும் உடலுழைப்புப் பணி தங்களுக்கு வராது என்றும் கூறினார்கள். நானும் அவர்கள் கூறியதை நம்பினேன். இக்காலத்தில் இளந்தலை முறையினர் போல் ஆரோக்கியமாக இல்லாமல் மெலிந்து சோகை பிடித்தவர்களாக இருந்தார்கள். நானும் வாய் தவறி நான் வேலைபெற்ற இடத்துக்குப் போய் ஆசிரியைத் தொழில் கிட்டுமா என்று முயற்சிக்கும்படி கூறினேன்,
அன்று இரவு உள்ளூர் தங்குவிடுதியில் தங்கினேன். அது அரசாங்கத்தினதா அல்லது உள்ளூர் ஆசாமி நடத்தியதா என்று தெரியவில்லை. இடையில் குழிவுடன் கூடிய சூடுபடுத் தும் கணப்படுப்புகள் கொண்ட இரண்டு நீண்ட செங் கற்

75
இாாலான சுவர்கள் கொண்ட இடம். ஆனால் சுவரைத் தொட்டால் பணிக்கட்டி போல சில்லிட்டிருந்தது. அந்த இடத்திற்கு ஒரு இரவு தங்கியதற்கு மூன்று யுவான் காசுகள் வாங்கினார்கள் படுக்கைகூடக் கொடுக்கவில்லை. அதற்கும் பெரும் நெருக்கடி. முட்டி மோதி உள்ளே நுழைய வேண் டியிருந்தது.
அங்கு பலர் தங்கள் தொழில்களை மாற்றிக் கொண்ட தையும் அறிந்தேன். அவர்கட்கு வசதியான இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். சுவர்ப்புறத்தே தங்கள் முதுகுகளைச் சாய்த்து இந்த அனுபவஸ்தர்கள் கையிலுள்ள சிகரெட்டுகளை உருட்டியவாறும் புகைத்துக் கொண்டும் தங்கள் தங்கள் அனுபவங்களைப் பரஸ்பரம் பேசிக் கொண் டார்கள். அவர்கள் பேசியதைச் செவிமடுத்தால் சிஞ்ஜியாங் வட்டாரத்திலே அவர்களுக்குத் தெரியாத பகுதியே இருக் காது போலும் எனத் தோன்றும். இதோ பாருங்கள் பத்திரி கையாளரே, இந்தக் காலத்தில் உங்கள் கிழக்குப் பகுதிகள் போல் காலடிவைக்கும் இடத்திற்கெல்லாம் அனுமதிச் சீட்டுகள் காட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கவில்லை. ஒரு திறந்த பகுதியாகவே இருந்தது. சிஞ்ஜியாங் பகுதி நாட்டின் மிகவும் பின் தங்கிய பகுதியாகவே இருந்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்ட மாறுதல்களால் திறந்த தொழில்வாய்ப்புப் பகுதியாக நேர்ந்தது.
அது போகட்டும், விஷயத்துக்கு வருகிறேன். மறுநாள் காலை எழுந்ததும் நான் பள்ளி ஆசிரியனாகப் போவதால் முதல் நாளும் அதுவுமாகப் பார்ப்பதற்கு சுத்தமாக இருக்க வேண்டுமேயென எண்ணினேன். முப்பது ஃபென் கொடுத்து ஒரு தொட்டி தண்ணிர் பெற்று நன்றாகக் குளித்தேன். நான் அந்தக் கூடாரத்தை அடைந்த பொழுது மற்ற வேலையாட் கள் ஒருவர் பின்னொருவராக பாரப் பேருந்துவில் ஏறினார் கள். அதன் அருகில் நின்றுகொண்டிருந்த அந்தத் தடித்த ஆள் ஒவ்வொருவராக எண்ணிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் முகத்தைக் கடுகடுத்தவாறு 'இங்ங் ருந்து உடனே போ, பார்ப்பதற்கு நல்லவன் போல்

Page 40
76
தோன்றினாய். ஆனால் சுத்த மோசமான பேர்வழியாக இருக்கிறாய். எங்களுக்கு நீ தேவையில்லை. வேறு எங்கா வது இடம் பார்த்துக் கொள்!"
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது, "என்ன சொன்னீர் கள்?’ என்றேன்.
"என்ன சொன்னீர்கள்?' என்று நான் கூறியதைத் திருப்பிக் கேளிக்கையாகக் கூறினார். "இரண்டு பெண் பிள்ளைகளைக் கூடவே இழுத்துச் செல்கிறவன் எப்படிப் பட்டவன்? நல்ல போக்குத்தான். நேற்று நான் உன்னைக் கேட்டபொழுது நீ தனியாகத்தான் இங்கு வந்ததாகக் கூறி னாய். அண்டப்புழுகன்!
நான் உண்மையை நிலைநாட்ட முயன்றேன். "நான் அந்த இரு பெண்களுடன் வரவே இல்லை. உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஒரு தேர்வு வையுங்கள்" என்றேன்.
"எதைப் பற்றித் தேர்வு வைப்பது?" அவர் கையை வீசியவாறு 'அவர்கள் எல்லாம் இடைநிலைப் பள்ளியில் படித்ததாகக் கூறுகிறார்கள் ஆனால் ஒரு சாதாரண கணக்கைக் கேட்டால் கூடப் பதில் தெரியவில்லை. கார்க்கி ஒரு சீனாக்காரர் என்கிறார்கள். சுத்தமுட்டாள்தனம்!"
அறிவாளிகளே எப்பொழுதும் பிடிவாத குணம் உள்ள வர்கள். இந்தத் தடித்த ஆசாமியோ சுத்த மோசம். அந்தப் பெண்கள் என் பெயரைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். அவரிடம் பொய் கூறி கோபமுண்டாக்கியிருக்கலாம் எனினும் ஆசாமி நான் எதைக் கூறினாலும் தணியப் போவதில்லை என்பதை உணர்ந்தேன்.
பாரப் பேருந்து புறப்படத் தொடங்கியது. நான் தண்ணிச்சையாக நின்றேன். தடித்த மனிதர் வண்டியைச் தற்றி வந்து கதவைத் திறந்து கொண்டு என்னை நோக்கி,

77
'பையா, நீ பள்ளி ஆசிரியனாக ஆக வேண்டுமானால், முதலாவது தேவைப்படுவது ஒழுக்கம் என்பதை உணர்ந்து கொள். அது மட்டும் இல்லையென்றால் நீ எத்தனை படித்தும் பயனில்லை என்பதை புரிந்துகொள்' என்று உரத்துக் கூறினார்.
தேவையில்லாது நான் குழப்பிக் கொண்டேன். ஆசிரிய னாக எண்ணியதெல்லாம் சுக்குநூறாகியது. விஞ்ஞானிகள்9 எழுத்தாளர்கள், படைத் தலைவர்கள் எல்லாம் சூழ இருப்பது எல்லாம் கலைந்தது. தடித்த மனிதரும் மறைந்து விட்டார், அவர்கள் சென்ற பார பேருந்து வண்டியின் உருளைகள் என்மேல் சேற்றை சிதறி அடித்துச் சென்றது. இந்தச் சகதியிலிருந்து கிளம்பியபொழுது என் முன்னே ஒரு கூடாரத்துக்குப் பின்னால் அந்த இரு பெண்கள் உடல் குன்றி தயக்கத்துடன் என்னை நோக்கியவாறு நின்றிருப் பதைக் கண்டேன்.
"என்ன அநியாயம் செய்தீர்கள்! உங்களால்தான்." நான் வாயில் வந்தபடி விளாசியதாக ஞாபகம்.
அவர்கள் கூனிக் குறுகி தலைகுனிந்தவாறு என்னை நோக்கி, "அப்படி நேர்ந்து விட்டது நாங்கள் தொடக்கக் கல்வி கூடச் சரியாகப் பெற்றதில்லை, அந்தத் தடித்தவர் எங்களைப் பரீட்சை செய்ய விரும்பியபொழுது நாங்கள், "அதெல்லாம் தேவைப்படாது. நாங்கள் உங்களுடன் உடன் படித்தவர்கள். ஒரே காலத்தில் தேர்ச்சியடைந்தவர்கள். நீங்கள் எங்களை அழைத்து வந்தீர்கள் என்றோம், இப்படி நேருமென்று. ’’
அவர்கள் கண்ணிர் வரும் நிலையில் இருப்பதைக் கண்டேன். அவர்கள் தவறு செய்ததை உணர்கிறார்கள் எள்பதையும் புரிந்தேன். தண்ணிரில் மூழ்குகிறவன் வைக்கோல் துரும்பைக் கூடப் பிடித்துக் கொள்ளப் பார்ப்பது வழக்கம், அவர்கள் எனக்கு வேண்டுமென்றே

Page 41
78.
கெடுதல் புரிய எண்ணவில்லை. எனவே, நான் அதிகம் ஒன்றும் கூறாமல் ஆள் திரட்டுபவர்களின் கூடாரத்தை நோக்கிச் சென்றேன். V,,
"ஐயா' என்று ஒரு பெண் உரத்துக் கூவினாள். **விரைவாக எங்களையும் அழைத்துச் செல்லுங்கள். நாமெல்லாம் ஒரு பகுதியிலிருந்து வந்திருப்பதால் உங்களை நம்புகிறோம். நீங்கள் எங்கு செல்கிறீர்களோ அங்கெல்லாம் வருகிறோம்." ر
"அதனை மறந்து விடுங்கள்" என்று பதில் கூறினேன். 'நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இரண்டு பெண் களைத் தொற்றிக் கொண்டு செல்லும் என்னைப் பார்க்கும் மக்கள் தவறான முடிவுக்கு வருவார்கள். அந்தத் தடித்த மனிதர் என்மீது பாய்ந்ததை நீங்கள் பார்த்துக் கொண்டி ருந்தீர்கள் அல்லவா! அது போதாதா?’’
அவர்கள் இருவரும் அழத் தொடங்கினார்கள் "நாங்கள் என்ன செய்வோம்? எங்களிடம் காசே கையில் கிடையாது. இங்கு ஒரு ஜென்மத்தைக்கூட அறிய மாட்டோம். நாங்கள் திரும்பிச் செல்லவும் முடியாது '
கண்ணீர் சொட்டுவதைக் கண்ணுற்றதும் என்னால் தாளவில்லை. எப்படியோ ஒரே பகுதியிலிருந்து. வந்தவர் களல்லவா? எனவே, நான் அவர்களைப் பார்த்து, "சரி அழாதீர்கள். நாமெல்லாருமே வேலையில்லாதிருப்பதால் ஒன்றுபட்டு இருப்போம். இன்னும் என்னிடம் விற்பதற்குக் சில துணிகள் இருக்கின்றன’’ என்றேன்.
எனது பெற்றோர்களுக்கு நான் ஒரே பிள்ளையென் பதையும் கூறினேனல்லவா? ஏழைகளாக இருந்தாலும் எனக்கு உடைகளுக்குக் குறை வைக்கவில்லை. உழவர்கள் தன்றாக இருந்த அந்தச் சில ஆண்டுக் காலத்தில் எனக் காகப் பெற்றோர் நிறைய வாங்கிக் கொடுத்தார்கள். நான்

79.
தோற்றத்தில் நன்றாக இருக்க வேண்டுமென்பது அவர் களது ஆசை. பின்னர் பள்ளிக்கும் அனுப்பி வைத்தார்கள்.
இவற்றை நான் எண்ணிப் பார்க்கும்பொழுது 1956இல் சென்றபடியே நமது நாடும் போய்க் கொண்டி ருந்தால் நான் இப்போதைக்கிப் பல்கலைக்கழகத்து ஆசிரியராக இருந்திருக்கக் கூடும்.
வெய்யா ஒரு பெருஞ் சந்தையைப் போல் இருந்த தென்று கூறினேன் அல்லவா? அந்த ஆள் திரட்டுபவர்கள் கூடாரங்களின் முன்னால் நின்று கொண்டு உரத்துக் கத்திக் கொண்டிருப்பதைச் சுற்றி மக்கள் பொருள்களை விற்றுக் கொண்டுமிருப்பார்கள். தங்களுடன் கொணர்ந்த எத்தகைய பொருள்களையும் விற்பனை செய்வார்கள். சிலர் தங்களது கறுப்புச் சந்தை தானியச் சட்டை கூட விற்றார்கள். ஆமாம்! என்னைப் போன்ற ஊர்சுற்றிகள்தாம் அவர்களும் வேலை பெற்றிருந்தால் இப்படியெல்லாம் அவர்கள் செய்ய நேர்ந்திருக்காது அல்லவா? சாமான்களை விற்பதற்குச் சந்தையோ கடையோ அமைக்க வேண்டியதில்லை. சும்மா விற்க வேண்டிய பொருள்களைக் காட்டிக் கொண்டு நின்றால் போதும். அதனைப் பார்த்து வாங்குவார்கள், நான் எனது குளிரைத் தாங்கும் வெப்ப உடைகளையும், நீலநிற டுவில் காற்சட்டையையும் புத்தம் புதிய வெள்ளைப் பருத்திச் சட்டையையும் பத்து யுவான்களுக்கு விற்றேன். அறுபதுகளில் பணத்துக்கு அவ்வளவாக மதிப்பு இருக்க வில்லை. ஒரு கோப்பை தேநீரின் விலை முபபது ஃபென் னாக இருந்தது. அந்தக் காற் சட்டையும் விற்றதொகை மூன்று பேருக்கும் ஒரு நாள் சாப்பாட்டிற்குத்தான் போதிய தாக இருந்தது.
அன்றைய இரவு நான் தங்குவிடுதிக்குத் திரும்பிச் சென்றேன். அந்த இரு பெண்களும் எங்கே உறங்கச் செல்வது என்று அறியாது தடுமாறிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலை என்னை நோக்கி வந்தார்கள், அவர்கள்

Page 42
80
கண்கள் சிவந்தும் வீங்கியும் இருந்தன. உங்கள் வேலையையும் பாழாக்கி விட்டோம். போதாதற்கு உங்கள் பணத்தையும் காலி செய்தோம். எங்களுக்கு வேதனையாக இருக்கிறது, நாங்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தி ருக்கிறோம். உடல் உழைப்புப் பகுதியில் போய் வேலையில் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்து விட்டோம். அவ்வளவுதான் எங்களால் முடிந்தது' என்று கூறினார்கள்
ஆமாம், என்னையே நான் கவனித்துக் கொள்ள முடிய வில்லை. மற்றவர்களை ஆதரிப்பது எப்படி? எனவே, நான் அவர்களைப் பார்த்து ** அது சரிதான். நீங்கள் இருவரும் போங்கள். பலுவில்லாத வேலையாகப் பார்த்துச் செய்யுங் கள். உடலைத் தேற்றிக் கொள்ளுங்கள். எப்படியோ வீடு திரும்புவதைவிட விட இது நல்லதே. ஏதோ சாப்பாடாவது கிடைக்கும்' என்று ஆறுதல் கூறினேன்.
அவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளச் சென்றனர். அன்றைய மறுநாள் அவர்கள் பயணம் செய்வதற்காகப் பாரப் பேருந்துவில் ஏறினார்கள். நான் மற்றொரு சட்டையை விற்று ஒவ்வொருவருக்கும் இரண்டு யுவான் கொடுத்தேன். அந்தப் பேரொலி எழுப்பிக் கூறியவர்கள் அங்கும் இங்கும் நின்று கொண்டு "இதோ எங்களுடன் வாருங்கள். வேண்டிய அளவு பால் பருகலாம்." என்று கத்திக் கொண்டிருந்தார்கள். அந்த இருவரும் அங்கு அமர்ந்து மனம் உருக அழுது கொண்டிருந்தார்கள். அவர் கள் உண்மையில் எனது சகமாணவர்கள் போலவும் இந்த விசித்திர சிஞ்ஜியாங் இடத்திற்கு என்னுடன் உழைக்க வந்தவர்கள் போலவும் எண்ண நேர்ந்தது.
ஒட்டுனர்களாகிய நாங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்கிறோம். சில ஆண்டுகளுக்குப் பின்னர் நான் சோர்ாை விற்குச் சென்றபொழுது என் முன்னால் நின்ற பாரப் பேருந்து ஒன்றிலிருந்து வால் பேரிக்காய்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கூடையில் சுமந்து சென்ற ஒரு

ᎦᏐ
பெண்ணை எங்கோ பார்த்த ஞாபகம் உண்டாகியது. அந்த இரண்டு பெண்களில் ஒருத்தியே என்று இனப் கண்டு கொள்வதற்குச் சிறிது நேரம் ஆகியது. அவள் நல்ல பலம் கொண்டவளாகவும் தடித்திருப்பதாகவும் காணப்பட்டாள். மணமாகி பிள்ளையைப் பெற்றிருந்ததாகவும் தெரிந்தது. அவளுடன் பேச்சுக் கொடுக்கவே எனக்குத் துணிவு வரவில்லை.
அந்த இரண்டு பெண்கள் சென்றதும் வெய்யாவில் தங்கியிருந்த மற்ற ஊர் சுற்றிகளுடன் கலந்து கொள்வேன். இதோ கேளுங்கள். அவர்கள் நல்ல மனது படைத்தவர்கள். கஷ்டநிலையில் இருந்துங்கூட மற்றவர்கள் பிரச்சினை களிலும் அன்பு காட்டினார்கள். என்க்கு நிகழ்ந்ததை அறிந்தவர்கள். எனது இடைநிலைப் பள்ளிச் சான்றிதழை பலரும் படித்துப் பார்த்துவிட்டுப் பலவித ஆலோசனைகள் அளித்தார்கள். ஹமிக்குச் சென்றால் கணக்காளனாக பணிபுரியலாம் என்றார்கள்.
கணக்காளர் ஆவதும் ஒருவகையில் சரிதான். நடுத்தரப் பள்ளியில் அபாகுஸ் என்ற எண் கணிக்கும் கருவியை இயக்கம் பழக்கப்பட்டிருக்கிறேன். ஹமிக்குச் செல்வதென முடிவு செய்தேன்.
அந்தக் காலத்தில் வெய்யா பஸ்களில் அப்படியொரு கூட்டம். மேற்குப் பக்கம் போகும்போது ஒரு கிழமைவரை கூட டிக்கட் கிடைக்கக் கஷ்டம். சில யுவான்களே கைவசம் எஞ்சியிருந்தன. விற்பதற்கு வேறு துணிகளும் இருக்க வில்லை. அவரைக் காத்திருக்கவும் வழியில்லை. எனவே, ஊர்சுற்றிகள் கூறிய ஆலோசனையைக் கடைப்பிடித்தேன். பாரப் பேருந்துகளில் சவாரி கேட்டுச் செல்ல முயன்றேன்.
வண்டி நிலையங்களில் கூடாரத்துக்கு மேற்குப் பக்க மாக இருந்தது. அங்கே டயர்களைக் குறுக்குமறுக்காகப் போட்டிருந்தனர். பனிக்கட்டி மேல் எண்ணெய்ப் படிவங்

Page 43
32
கள். எல்லாப் பகுதியிலும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந் தன சுமார் ஒரு நூறாவது இருக்குமென நினைக்கிறேன். சில வண்டியோட்டிகள் சுமாராக இருந்தனர். மற்றவர்கள் பார்வைக்குப் பயங்கரமாகத் தோன்றினர். அன்று காலை அங்கு பலமணி நேரம் தயங்கித் தயங்கி அவர்களிடம் பேச வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். பகலவன் உச்சிவானை நோக்கிச் செல்வதை உணர்ந்தேன். ஒவ்வொரு வண்டியாக சென்று கொண்டிருந்தது. நானோ கூச்சத்துடன் நின்று கொண்டிருந்தேன் அப்போது அவ்விடத்தில் எரிபொருள் வண்டியோட்டுனர் ஒருவர் எங்கள் பகுதி பேச்சுச் சாடை யில் பேசியது காதில் விழுந்தது. யந்திரம் பழுது பார்ப் பதைக் கவனிக்கும் சாடையில் நான் அவர் பக்கம் சென்றேன். சிறிது சென்றதும் அவருடன் பேசிக் கொண்டி ருந்தவர் சென்று விட்டார். ஒட்டுனரும் பழுது பார்த்து முடித்து விட்டார். வண்டியின் முன்பக்க மூடியைச் சாத்தித் திரும்பியதும் என்னைக் கவனித்தார். "பையா! அதோ அந்தப் பக்கம் இருக்கும் தண்ணிர் வாளியைக் கொஞ்சம் எடுத்துத் தருகிறாயா?"
நான் தண்ணீர் வாளியைக் கொணர்ந்து, 'ஐயா நீங்கள் எந்தப் பக்கம் போகிறீர்கள்?" என்றேன்.
ஒட்டுனர் சிரித்த முகத்தையுடையவர். எனது பேச்சை கேட்டதும் புன்னகை செய்தவாறு, "நாமெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் போலிருக்கிறது, எங்கே பயணம்? என்று கேட்டார்.
நான் ஹமி செல்லவிருப்பதாகக் கூறினேன். தான் உரும்கி செல்வதால் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.
டாங்கியில் தண்ணிர் ஊற்றியதும் படியிலிருந்து இறங் கியதும் விரைந்து சென்று எனது பெட்டியை எடுத்து வரும் படி கூறினார். நான் எனது மூட்டையைக் கட்டியவாறு

83
"இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து இதுதான்" என்றேன். அவர் அதைக் கேட்டுச் சிரித்த தோற்றம் இன்றும் என் நினைவில் இருக்கிறது" என் தலையைத் தட்டிக் கொடுத்தவாறே, "சரி வா, போவோம்" என்றார்.
அவர்தான் எனக்கு ஒரு வகையான 'குரு' என்பதை இதற்குள் உணர்ந்திருப்பீர்சள். நாங்கள் பயணம் போகும் போதே வீட்டு நடப்புகனைத் தெரிவித்தேன். ஹமிக்குச் சென்று என்ன செய்ய உத்தேசம், அங்கு உறவினர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் கேட்டார். நான் எனது உள்ளத்தில் உள்ளதை எல்லாம் மனம் திறந்து கூறியதுடன் எனது சான்றிதழையும் காட்டினேன். அதற்கு அவர் உடல் உழைப்பைக் குறைவாக மதிக்கக் கூடாது என்றும் உலகமே. உடல் உழைப்பால்தான் ஆக்கப்பட்டதென்றும் பார்க்கப் போனால் அதுவே மற்ற தொழில்களிலும் பார்க்க உயர்ந்த தாகத் தெரிகிறது என்றும் கூறினார். தான் 1947இல் ஒட்டுனராகத் தம்மூர்ப்பக்கப் படையில் பணி புரிந்தபின் சிஞ்ஜியாங் பகுதிக்கு 1949இல் வந்து சேர்ந்ததாகவும் கூறி னார். நாங்கள் இருவரும்ே ஒரே மனப்போக்கு உடையவர் களாகத் தோன்றியது. ஹமி வந்தடைவதற்கு முன்னரே அவர் என்னைத் தனது கற்றுக்குட்டியாகச் சேர்த்துக் கொண்டார். * . .
எனவே, நான் ஹமியில் இறங்காது நேரே அவருடன் உரும்கி அடைந்தேன்.
இப்பொழுது அவர் ஒய்வு பெற்று பொழுதெல்லாம் வீட்டுத் தோட்டச் செய்கையில் கழிக்கிறார். அவரைத் தேடி அடிக்கடி போய்ப் பார்ப்பேன். எதுவும் கொண்டு வர வேண்டாம் என்றும், முடிந்தால் எனக்கு நல்ல செடிவகை கள் தென்பட்டால் கொண்டு வரும்படியும் கேட்டுக் கொண்டார். அதோ, அங்கு உங்கள் பின்னால் வைத்திருக் கிறேனே அந்த "ஆர்க்கிட் செடி அதை நேற்று வடகிழக்குப்

Page 44
84
பகுதியில் அவருக்குக் கொடுப்பதற்காகத்தான் வாங்கினேன். ஐம்பது யுவான் அதன் விலை. நாளை அவருக்கு எடுத்துச் செல்வேன். அவருக்கு அது மகிழ்ச்சியைத் தரும்.
இதையெல்லாம் கேட்க உங்களுக்குச் சலுப்புத் தட்டு கிறதா? பத்திரிகை நிருபர்களாகிய நீங்களெல்லாம் பெரிய மனிதர்கள் வீரர்களைப் பற்றி யெல்லாம் எழுதுவீர் கள் என்பது எனக்குத் தெரியும் எனது வாழ்க்கையில் நான் என்றும் சாதித்ததில்லை. சாதித்தவை சர்வசாதாரணம் தான் நான் பாராட்டு, பரிசுகள் எல்லாம் பெற்றிருக் இறேன். இவையெல்லால் எங்கள் நிறுவனத்துக்குத்தான். அவற்றை அவர்கள் சிஞ்ஜியாஸ் செய்தித் தாளில் தந்த தில்லை. இது பற்றியெல்லாம் நீங்கள் எழுத மாட்டீர்கள் என்பதை நான் உணர்வேன். எந்தச் செய்தித் தாளும் இதை வெளியிடாது. கொஞ்ச நேரம் உங்களுக்கு மனமகிழ்வு தரப் பேச்சுக் கொடுக்கிறேன்.
நன்றாக அமருங்கள். அதோ அந்த வளைவு தாண்டிய தும் மலைப் பகுதியில் ஏறப் போகிறோம்.
அப்புறம், அது தொடக்கம் ஒட்டத் தொடங்கினேன். வாழ்க்கை என்பது நகருகின்ற டயர்களைப் போல் வேகமா கச் செல்கின்றது. வேகமாணியை மிதிக்கும்பொழுது ஒடுதல் போல நல்ல காலம் போகிறது. பயணத்தின் சேற்றில் மாட் டிக் கொண்டு வெளிவர முடியாது திண்டாடுவது போலத் தான் கெட்ட காலப்போக்கு. எப்படியோ இருபது ஆண்டு கள் மின்னல் போல் மறைந்து விட்டன. இந்தக் காலங்களில் வாகனங்கள் பல மாற்றியுள்ளேன். நான் முதலில் ஒட்டியது சோவியத் பாரப் பேருந்து, அதன்பின் நமது நாட்டு 'விப ரேஷன்" செலுத்தினேன். பின் செக் நாட்டு "ஸ்கோடா' வண்டி. ருமேனிய வண்டிகூட ஒட்டினேன். இந்த ஜப்பானிய ஹினோ" வண்டியைச் சிறிது காலத்துக்கு முன்னால்தான் ஒட்டத் தலைப்பட்டிருக்கிறேன்.

&5
வண்டியின் தரம் காலத்தைப் பொறுத்ததல்ல, எத்தனை தொலை கடந்திருக்கிறது என்பதில்தான் இருக் கிறது. மக்களிடையேயும் அப்படித்தான் என நான் நினைக் கிறேன். சில பேர் ஐம்பது அறுபது ஆண்டுகள் எவ்வித அல்லை தொல்லைகள் இல்லாமல் வாழ்கிறார்கள். பார் வைக்கு இளைஞர்கள் போல் தோற்றமளிக்கிறார்கள். சிலர் ஆரம்ப காலம் தொடங்கியே அவதிப்பட்டு முப்பது நாற்பது வயது என்று வரும்போது கிழடு தட்டிப் போகிறார்கள். தெரியுமா பத்திரிகைக்காரர் ஐயா, கஷ்டதசையைக் கடந் தவர்கள்தான், உங்களுக்கு எழுத ஏதாவது விஷயம் தரக் கூடியவர்கள். என்னை எடுத்துக் கொள்ளுங்களேன் தான் சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான், ஏன் பாகிஸ்தான் கூடச் சென்று வந்திருக்கிறேன். பாகிஸ்தானில் பாதை போடும்பொழுது ஏறக்குறைய எனது உயிரே போகும் நிலையில் இருந்தது. நான் சொல்லுவேன், சரியான பாதைகள் இல்லாத வெளிநாட்டு மலைப்பாதைகளில் வண்டி ஒட்டுவதை விட விண்வெளிக் கலங்களைச் செலுத் துவது எளிதாகும் என்று. சின்ஜியாங்கில் கூட அந்தக் காலங்களில் நல்ல Lurgog56o u JL பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? ஒன்று கரடு முரடு. இன்றேல் நேரான பாலைவனப் போக்கு. சூறாவளிக்கிடையே அகப்பட்டு வெளியே சாலைக்கு இடையே மாட்டிக் கொண்டால் எத்தனை கூச்சல் போட்டும் உதவாது. பனிக்காலத்தில் பணி கொட்டும் பொழுது, சாலைகளெல்லாம் பனிக்கட்டித் துகளாக மாறிவிடும். இறுகிப் போய் எது கொண்டும் தகர்க்க முடியாததாகிவிடும். மூன்று நான்கு ஆயிரம் மீட்டர் தொலை சென்றதும், வழி நெடுக ஒவ்வொரு அங்குலத் தொலைவையும் உயிரைப் பிடித்துக் கொண்டே போக வேண்டியிருக்கும். கொஞ்சம் பிசகினிர்களோ நீங்களும் உங்கள் பார வண்டியும் மலைச்சரிவுப் பள்ளத்தில்தான்.
a -6

Page 45
86
இரண்டாவது இளவேனிற் காலம் இப்பகுதி வந்த பொழுது அப்பாவும் அம்மாவும் இறந்து போய்விட்டார்கள், ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தில் வேலை செய்த பொழுது. அம்மா இறப்பதற்கு முன்னர் எனது செல்லப் பெயர் சொல்லி அழைத்ததாக மாமா எனக்குக் கடிதம் எழுதி யிருந்தார். அதன் பின்னர் நான் அனுப்பிய இரண்டு காசுக் கட்டளைகளும் அவளது சட்டைப் பையில் இருந்தாகவும் தெரிவித்திருந்தார்கள். அதனை மாற்ற அஞ்சலகத்துக்குக் கூடப் போகவில்லை. கடைகளிலோ சந்தையிலோ வாங்கத் தானியம் இருந்ததில்லை. எனவே, நான் அனுப்பிய பணம் ஒன்றுக்கும் உதவாமற் போய்விட்டது. அதனை மாமா அம்மாவுக்கு எளிய பிணப்பெட்டி வாங்குவதற்கும் அப்பா வின் புதைகுழியைச் சரி பண்ணவும் பயன்படுத்தினார். 1964-இல் நான் திரும்பச் சென்று வரப் போதிய பணம் சேர்த்துக் கொண்டு போய்ப் பார்த்தால் புதைத்த இடங் களில் புல்மூடி இருந்தது. அச்சமயம் நாட்டப்பட்ட *விலோ மரம் உங்கள் முன்கையளவு இருக்கும்.
நான் அங்கு சென்ற பொழுது கடைசி நாள் நான் புறப்பட்ட இரவன்று கடந்து வந்த பாதையைப் பார்வை யிட்டேன். அப்பா அமர்ந்திருக்கிறார், இடம் இப்பொழுது மாறுதலடைந்திருந்தது. இப்பொழுது அகலமாக்கப்பட்டு சாலை போடப்பட்டுத் திகழ்ந்தது. அன்று அப்பா அமர்ந் திருந்த இடம் இன்று டிராக்டர்கள் ஓடிக் கொண்டிருக்கும் சாலையின் நடுப்பக்கத்தில்தான் இருக்க வேண்டும். எனது பழைய குரு அழகாகச் சொன்னார்-வாகனங்கள் எப்பொழுதும் ஒடிக் கொண்டேயிருக்க வேண்டும், நாம் எப்பொழுதும் சாலையில் கண்ணைச் செலுத்திக் கவன மாகப் போக வேண்டும், சமயாசமயங்களில் பின்னோக்குக் கண்ணாடியைப் பார்த்துச் சரி செய்து கொள்ளலாம், ஆனால் அதை அடிக்கடி பார்வையிட்டால் வண்டியைக் குடை சாய்க்க வேண்டி வரும் என்பார். எனவே, நானும்
இங்கு திரும்பி வந்து ஒட்டிக் கொண்டியிருக்கிறேன்.

87
எதாக இருந்தால் என்ன, இந்த உலகத்தில் எனக் கென்று ஒரு பந்த சொந்தமும் இருக்கவில்லை. எப்பொழு தும் தனி ஆளாகவே இருக்க நேர்ந்தது. ஒட்டுனர்களாகிய எமக்கு ஒருவரையொருவர் சந்தித்துப் பேசச் சந்தர்ப்பம் இருக்காது. யாராவது ஒருவர் வந்தடைந்தால் நாம் வெளியேற வேண்டிவரும். பழைய ஒட்டுனரிடம் காலம் கழிக்க எப்பொழுது ஒன்றோ இரண்டோ நாட்கள்தான் ஒழிவு கிடைக்கும். பின்னர் "கலாசாரப் புரட்சி தொடங்கி யதும் பழைய நண்பர்கள்கூடத் தங்கள் மனதிலுள்ளதைக் கூறத் தயங்கினார்கள். ஒருவருக்கொருவர் நம்பக் கூட முடியாமலிருந்தது. புதிதாக ஒருவர் தென்பட்டால் அவரை நன்றாக ஆராய்ந்து பார்த்து அவர்கள் முதலில் வர்க்க எதிரிகளா என்றும் பின்னர் அவர்களது வர்க்கச் சூழ்நிலையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்போதைய மாதிரி நாம் சந்தித்த எவரிடமும் மனந் திறந்து பேசிவிட முடியாது. 1960 கஷ்ட காலத்தில் இருந்த அளவு இணைப்பு இன்றும் ஏற்படவில்லை. என்றே கூறலாம். மனிதனை மிகவும் சங்கடப்படுத்தும் விஷயம் என்ன தெரியுமா? என்னைப் பொறுத்த வரையில் மனதில் நினைப்பதை வெளியில் கூற முடியாமல் இருப்பதுதான். காலையில் மக்கள் படுக்கையை விட்டு எழுந்ததும் உள்ளங்கியை அணிகிறார்கள். பின்னர் மேலுடைகள், அப்புறம் கனத்த மேற்சட்டை. கடைசியில் கண்ணுக்குப் புலனாகாத ஒரு கவசத்தையும் வெளிச் செல்லு முன்னர் மேலே தரித்துச் சென்றார்கள். எல்லோருமே சொந்தக் கவசத்துக்குள் நுழைந்து இருந்தார்கள். ஒரு நிறுவனத்தில் பலபேர் பணிபுரிந்தால்கூட, உண்மையில் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்ள முடிவ தில்லை.
அந்தக்காலங்களில் எல்லாவற்றையும் எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டேன். ஒரு நாள் எனது பழைய குரு என்னைப் பார்த்து "இதோ கேள் இனிமேல் நீ கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். முப்பதை

Page 46
88
எட்டுகிறாய். உனக்கென வீடு ஒன்றும் இருந்து உன்னை யும் கவனித்துக் கொள்ள ஆளும் இருந்தால் நல்லபடியாகக் காலம் கழிக்கலாம்' என்றார். நானும் யோசித்துப் பார்த்ததில் அவர் கூறியதும் சரியாகத் தோன்றியது. எனவே, நானும் மணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.
சிஞ்ஜியாங்கில் பெண் பார்ப்பதென்றால் எளிதான காரியமல்ல. பெண்களைவிட ஆண்களே அதிகமாக அங்கு வசித்தனர். பெண்களைச் சந்திப்பதும் அபூர்வமாக இருந்தது. நல்ல வேளையாக நாங்கள் பல ஊர்களுக்குப் பயணம் செய்வதால் அந்தத் தொல்லை இல்லை. பல நாட்களுக்கும் எங்கள் நிறுவனத்தின் ஒட்டுனர்கள் பலர் பாஞ்செஸ் உணவு விடுதியில் சந்தித்தோம். அவர்கள் பேசத் தொடங்கினர். திடீரென அவர்களில் ஒருவர் **இதோ கிடைத்து விட்டது. அதுவும் நமது பக்கத்திலே தான். இதோ இந்த டபாஞ்செங்கில் வட சிங்ஜிலிருந்து வந்தவர்கள். நான் போய்ப் பேசி வருகிறேன்" என் உரக்க கூறினார். மற்றவர்கள் என்னைச் சீண்டத் தொடங்கினார்கள். அதில் ஒருவர் ஆக்கிய பாடலைப் பாடத் தொடங்கினார்.
நீண்ட சடை நெடிய விழி கொண்ட வனப் பெண்கள் என்னைவிட்டு வேறு எவனையும் செய்திடாதே டபாஞ்செங் பெண்களே நீண்டசடைக்காரிகளே அபாரம் உங்கள் கண்கள், நீங்கள் மணம் செய்தால்.
பாட்டும் என்னைக் கிறுக்கியது. சரி, ஏன் முயன்று தான் பார்ப்போமே என எனக்குத் தோன்றியது.
அவர்கள் குறித்த பெண் மிஹி வட்டத்தைச் சேர்ந் தவர். அவர்கள் பகுதிகளில் மகசூல் குன்றியதால் அவளும் என்னைப் போல் உணவுப் பற்றாக்குறையால் வீட்டை விட்டுக் கிளம்பியவளாம். ஷாங்ஹியில் பொதுவாக

89
* மிஹி பகுதிப் பெண்கள் ஆண்களை மகிழ்விப்பார்கள்' என்பார்களே அது போன்று உய்குரில் "டபாஞ்செங் பெண்கள் மலர்களைப் போல் அழகு கொண்டவர்கள்'" என்பார்கள். அவளுக்கு ஒரு இருபது வயது இருக்கும். தொடக்கப் பள்ளிப் படிப்புண்டு. பார்வைக்கு மோச மில்லை. அவளது சடைகள் நீண்டதாக இல்லாவிட்டாலும் கண்கள் நீண்டு அழகுடையனவாக இருந்தன. அவளது சிறிய தாயார் தெருவோரக் கடையில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தாள். கஷ்டமான வாழ்க்கை. சிற்றன்னை யும் ஒன்றும் அதிகமாகக் கேட்கவில்லை. அந்தப் பெண் ணுக்கு தங்கு அனுமதிச் சீட்டும் தானிய கூப்பனும் இருந்தன. அந்த அம்மாள் பேசிய தோரணையிலிருந்து அவளும் அந்தப் பெண்ணும் அவ்வளவு சுமுகமாக இருப்ப தாகத் தெரியவில்லை. எப்படியாவது தன்னைவிட்டுச் சீக்கிரமாகத் தொலைந்தால் சரி என்று எண்ணியது போலத் தோன்றியது.
காரியம் எளிதில் முடிந்தது. எங்களுக்குள் பேசி முடித்துக் கொண்டு சிற்றன்னையிடம் சென்று பேசி முடிவு செய்து கொண்டோம்.
நான் திரும்பி வந்ததும் எனது பழைய ஆசிரியருக்கு இந்த விவகாரமே அடியோடு பிடிக்கவில்லை என்பதை அறிந்தேன். அவர் தலையை ஆட்டிக்கொண்டே ‘எப்படி நீ இதனைச் சுலபமாக எடுத்துக் கொண்டாய்? அந்தப் பெண்ணைப் பற்றி இன்னும் சரியாகவே புரிந்து கொள்ள வில்லை, இது உன் வாழ்க்கை முழுவதும் சம்பந்தப்பட்ட விஷயம். இப்படி அவசரப்பட்டு முடிக்காதே. நான் ஒரு பெண் பார்த்து வைக்கிறேன்". நான் அவரிடம், கடந்த சில ஆண்டுகளாக பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருக் கிறேன். பல ஆட்களுடன் பழகியிருக்கிறேன். நான் அப்படியொன்றும் அனுபவமடையாதவனல்ல என்றேன். அந்தப் பெண் பகட்டு நிறைந்தவளாக இல்லாமல் உழைப்பு நிறைந்தவளாகத் தோன்றியது. எனவே நான் முடிவு

Page 47
9.
செய்து விட்டேன். உங்களிடம் உண்மையைக் கூறுவ தானால் இத்தனை ஆண்டுகளாக மணம் செய்வதில்லை என்றே இருந்தேன். தினமும் அதற்குத் தள்ளிப்போட்டேன்: அந்த முதிர்ந்த ஒட்டுனர் விஷயத்தைக் கிளறியதும், அது உலகத்தில் மிகவும் முக்கியமாக முடிக்க வேண்டிய செயல் எனத் தோன்றியது. எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் செய்துவிட வேண்டுமென தீர்மானித் தேன். எனவே அவர்கள் கூறியதைச் செவிமடுத்து அவளை மணந்து கொண்டேன்.
உங்களுக்குச் சின்ன வயது, கல்யாணம் ஆய்விட்டதா? இல்லை? அப்படியா? திருமணத்தைப் பற்றி ஓரிரு விஷயங் களை உங்களுக்குச் சொல்கிறேன், நான் இருமுறை திருமணம் முடித்தவன். எனவே எனக்கும் அதில் கொஞ்சம் அனுபவம் உண்டு என்பதாக நீங்கள் கூறலாம்.
இருவர் ஒரே வீட்டில் ஒன்றாக எவ்வித சலனமுமின்றி வாழ்ந்து கொண்டிருந்தார்களானால், அவர்களது உணர்ச்சிப் போக்குகளை எவ்வித சிரமமுமின்றி உணர்வது என்றால் நாம் சில சாதாரண விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் வீட்டு வேலை, சமையல் இப்படி வேலைகள் செய்வதைப் பொறுத்து மற்றும் அவர்கள் முக பாவனை முதலியவற்றைக் கொண்டும் அவர்களது உள்ள உணர்வை ஒரு வகையில் அறியலாம். கல்விக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. வெறும் உணர்ச்சிப் போக்குகளைக் கொண்டே புரிந்து கொள்ள வேண்டும். உங்களையொத்த அறிவாளிகள் கூறுவது போல ‘உள்ளுணர்களை' க் கொண்டு உங்களுடன் அவள் உண்மையிலேயே அன்பு கொண்டவளாக இருந்தால் அவள் அறைந்தாற்கூட அவனது கரங்களின் வெம்மையில் உணர்ந்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் நாள் முழுவமும் அவளது கைகளால் தழுவிக் கொண்டிருந்தாலும் அவளது குளிர்ந்த உள்ளத்தைத் தெளிந்து கொள்ளலாம். வெளி உலகத்திலே

91
மக்கள் சும்மா போலித் தோற்றத்துடன் பல சாதனை களைப் புரிந்துவிடலாம் ஆனால் வீட்டிலோ அன்றாடம் கூடவே வாழ்ந்து ஒன்றாகப் படுப்பவர்களிடம் உண்மை உணர்ச்சிகளை மறைக்க முடியாது. அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் பார்வைகளைக் கொண்டும் அவர்கள் அன்பு நிறைந்த தம்பதிகள் என எண்ண நேரும். மற்றும் பல ஜோடிகளோ எவ்வளவு முடியுமோ அவ்வளவு பவ்விய மாக நடந்துகொள்வார்கள். ஆயினும் இருவரும் ஒரே கனவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள் எனக் கூறமுடியாது.
இந்த ஹான்ஷிப் பெண் நல்லவள்தான். கடினமாக உழைத்தாள். வீட்டு வேலைவெட்டிகளைச் செவ்வையாகச் செய்தாள், அண்டை வீட்டார்களுடன் ஒரு சண்டைக் கிண்டை ஏற்பதெல்லாம் இல்லை. எந்தவிதத் தொல்லை யும் இருக்கவில்லை. ஒவ்வொரு மாதம் எவ்வளவு செலவாகும் என்பதற்காகவெல்லாம் துல்லியமாகக் கணக்கு எழுதி வைத்திருந்தாள். நான் வேலைமுடிந்து வீடு திரும்பிய நேரங்களிலெல்லாம் மேஜையில் சுடச்சுட உணவு தயாராகக் காததிருக்கும். நான் சொல்லாமலே எப்பொழுதும் எனது உடைகள் துவைத்துச் சீர்செய்யப்பட்டுத் தயாராக இருக்கும். ஆனால் பாசமென்பது ஒரு அவுன்ஸ்கூட இல்லை.
இங்கே சிஞ்ஜியாங்கில் முதலில் கலியாணம் செய்து கொண்டு பின்னர்தான் காதலிக்கின்றோம். அன்பு என்பது மணமானபின் தோன்றும் என்று நாம் எண்ணுகிறோம்.
அந்த நாட்களில் எப்படியெல்லாம் நாட்டுநடப்பு சீர் குலைந்து இருந்தது என்பதை உங்கட்கு நான் ஞாபகப் படுத்த வேண்டியதில்லை. நாட்டிற்கு எதுவும் பணிபுரிய முயற்சி செய்ய எண்ணுவதற்கும்கூட அர்த்தமில்லா திருந்தது. சொந்த் வீட்டைச் சரி செய்வதில் மட்டும்தான் ஒருவன் முழுக்கவனத்தைச் செலுத்த முடிந்தது. நிறையத் தளவாடங்கள் நானே செய்தேன். செக் போலந்து நாட்டு

Page 48
92
மோஸ்தரில் நன்றாகப் பிரகாசிக்கும்படி "பாலிஷ்' செய்தேன். சோபா, விளக்கு எல்லாம் செய்தேன். பாகிஸ்தானில் நான் வேலை செய்தபொழுது சிறிது பணம் மிச்சம் பிடித்திருந்தேன். எனது மாதச் சம்பளம் இருவருக் கும் போதுமானதாக இருந்தது.
ஆனால் அவள் என்னுடன் பழகியது ஏதோ ஆணிடம் அடிமையாக நடந்து கொள்ளும் முறையில்; அப்படிக்கூட இல்லை என்றும் சொல்லலாம், வேலையாட்கள்கூட சிற்சில சமயங்களில் வேடிக்கையாகப்பேசுவதுண்டு, ஆனால் அவளோ தமாஷாகச் சிரித்ததே கிடையாது. நான் செய்த தளவாடங்களைப் பற்றி எத்தகைய பெருமைப்படவோ இல்லை, சோபாவில் அமர்ந்ததுகூட இல்லை. நான் வாங்கிக் கொடுத்த உடைகளை உடுத்துவதில்லை. இவை யெல்லாம் சிக்கன நோக்கங்கொண்டு செய்யவில்லை என்பதையும் தன்னை என்னிடமிருந்து தொலைப்படுத்திக் கொள்ளவே செய்ததாகவும் எனக்குப்பட்டது. எனக்கு ஒய்வு கிடைக்கும்பொழுதோ அல்லது வேலை முடிந்து வீடு திரும்பியபொழுதோ இருவரும் அமர்ந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் தான் செய்ய வேண்டாத வேலைகள் பற்றிக் குறைகூறியோ அல்லது ஒரு மூலை முக்காலியில் ஒரு வீராங்கனைபோல் அமர்ந்திருப்பாள். வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பாள். படம் பார்க்க வலிய நான் இழுத்துச் செல்ல முயன்றால் திரும்பி கூடப் பார்க்காமல் 'பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லாம் பழைய ஒரே மாதிரிப் படங்களைத்தானே காட்டு வார்கள்' என்பாள். அதுவும் ஒருவகையில் உண்மைதான். எனவே, பேச்சில் இறங்குவோம். ஆனால் அவள் வீட்டு வேலைகளைப் பற்றியே பேசுவாள். மற்றப்படி இவை சம்பந்தமில்லாத பாசஉணர்வு கொண்ட பேச்சுக்கள் இருக் காது. பத்திரிகையாளர் ஐயா, நீங்கள் நான் சொல்வதைக் கேட்டுச் சிரித்தாலும் சரி, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்புணர்வு கொண்டவர்களாக இருக்க

9.
வேண்டும். அவளோ அந்த வகையில் சுத்த மோசம். நானோ மிகவும் மனத் தொல்லைக்குள்ளாகி வேதனைப் பட்டேன்.
அவள் என் பக்கத்தில் படுத்திருக்கும்பொழுது அவள் தன் கண்ணுக்கும் புலனாகாத அந்த கவசத்தைக் கழற்றா திருந்தால் அது எப்படி உங்களை உறுத்தும் என்பதை உணர்வீர்களா? நான் என்ன கூனோ குருடோ ஆகி இருந்தேனா? அல்லது வடு நிறைந்த மூஞ்சிக்காரனா? எந்த வகையில் குறைச்சல்? எனக்கும் இருபத்தெட்டு வயது தானாகியிருந்தது. தோற்றத்திலும் அப்படி ஒன்றும் மோச மில்லை என்றே நினைக்கிறேன். கிறுக்குத்தனமானவனு மல்ல, அப்படி ஒன்றும் கெட்ட நடவடிக்கைகளில் பழக்க மானவனுமில்லை. இதை எல்லாம் உட்கார்ந்து மனதில் உளற்றிக் கொண்டிருப்பேன். மனதிலிருந்து எண்ணத்தைப் போக்கவே முடியவில்லை. இதோ பாருங்கள், குடும்பத்திய விவகாரங்கள் அரசியல், பொருளாதார விவகாரங்களை விடச் சகிக்க முடியாதது. அரசியலில் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டாலும் வீட்டிற்கு வந்தாவது நிம்மதி u Golu u Ganttib நீங்கள் ஏன்ழயாக இருந்தாலும் நல்ல மனைவி அமைந்துவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம், இந்தமாதிரிப் பெண்ணைக் கட்டிக் கொண்டால் பிரம்மச் சாரியாக இருப்பதைவிட மோசம், உங்களுக்கு உண்மையை சொல்லப் போனால், அந்தச் சமயத்தில்தான் புகைக்கவும் ஏன் குடிக்கவும்-இருந்தும் ஒட்ட வேண்டியிருந்ததால் மூன்று கிறாம் அளவுக்குள் மது அருந்தத் தொடங்கினேன்
இப்படியாக ஒரு அரையாண்டுக் காலம் ஒட்டினோம். நான் பொட்டு நோட்டம் விட்டபொழுது அண்டையிலுள்ள பெண்கள் என்னைத் கவனிக்கும்பொழுது ஏதோ என்மீது இரக்கப்படுவது போலவும் அவர்கள் மனதில் ஏதோ இருப்பது போலவும் எனக்குத் தோன்றியது . மணம் முடித்த புதிதில் நான் வரும்பொழுது இடைமறித்து ஏதாவது வேடிக்கை பேசத் தவறமாட்டார்கள். சில கிழங்கள்

Page 49
94
ஏதாவது ஊர்க்கோள் குறளிகளைக் கொட்டித் தள்ளுவார் கள். நாளடைவில் நான் கவனித்ததில் என்மீது ஒரு தயக் கத்துடனும் ஆனால் அன்புடனும் நடந்துகொண்டார்கள். மனைவியைப் பற்றிப் பேச்செடுப்பதேயில்லை. ஏன் என்று எனக்கு வியப்பாக இருந்தது. வீட்டில் இருவரும் அன்பு செலுத்திக் கொள்ளாவிட்டாலும் சர்ச்சைகளில் ஈடுபட்ட தில்லை. m
எமது நிறுவனம் சில்லிக்கு சரக்குகளை இறக்க வேண்
டிருந்ததால், ஒரு நாள் இரவு 'பாலைப் பசுந்திடல்’’’ ஹோட்டலில் தங்கினோம். எங்களில் சிலர் ஒன்றுசேர்ந்து கொஞ்சம் கபாபும் உள்ளூர்த் தயாரிப்பு மதுபானத்தில் சில போத்தல்களும் வாங்கிவந்து சுற்றிக் குடித்து ஆடிப்பாடி அமர்ந்திருந்தோம். பாதியளவு குடித்து முடிந்த சமயம் எல்லோரும் ஏகக் குஷியாக இருந்தோம். அப்பொழுது முன்னொரு சமயம் கஷாக்கிய பாடலைப் பாடத் தொடங் கினவன் இம்முறை ஷாங்ஷி பாடலொன்றைப் பாடத் தொடங்கினான்.
**மிஷியாம் வட்டத்தில் முப்பது லீகிராமத்தில் பேர்பெற்ற குடும்பத்தில் பிறந்தவள் நானாகும் நான்காவது "அக்காளும் மூன்றாம் அத்தான்
கைக்கொண்டாள்" பள்ளத்தாக்குதனிலே பட்டாளப் போர்வீரன் அன்னவனும் எனக்கு ஆசைக் கண்ணாளன் அக்காளும் இங்கே சுக்காக வயல்வேளை அத்தானின் முகம் பார்க்க ஆசையாகத்தானிருக்கு அண்டை அயல் நகைக்குமென அச்சமுமாயிருக்கு"
அப்பொழுது எல்லோரும் ஷான் ஷிப் பெண்கள் மிகுந்த அழகு படைத்தவர்கள் என்றும் இந்த நாட்டிலே கற்புக் காப்பவரென்றும் ஒருவனுக்குச் கட்டுப்பட்டுவிட்டால் வாழ்க்கையை அவனுக்கு அர்ப்பணித்து வருவார்கள் என்றும் பேசத் தொடங்கினார்கள். இந்தச் சந்தடிக்கிட்ையில் கொஞ்சம் அதிகமாகப் போட்டவன் என்னை நோக்கி, "நீ

95
எச்சரிக்கையாக இருந்துகொள் உன் மனைவியின் மூன்றா வது அத்தான் நீயல்ல அது வேறொருத்தன்'.என்றான்!
இதை அவன் கூறியதும் எங்குமே நிசப்தமாகிவிட்டது. மற்ற ஒட்டுனர்கள் அவனைப் பொசுக்கிவிடுவது போல் பார்த்தார்கள். தான் உளறிவிட்டதை உணர்ந்த அவன், சும்மா சாய்ந்துகொண்டுமற்றொரு வார்த்தை எதும் கூறாது அவனது கபாப்பைப் புசித்துக்கொண்டிருந்தான்.
அவன் கூறியதில் நிச்சயமாக ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது என எனக்குத் தோன்றியது. எனக்கும் மன உளச்சல் தோன்றவும் மற்றவர்களின் கேளிக்கைகளில் கலந்துகொள்ள முடியவில்லை. சிறிது கடந்ததும் அந்த இளம்பேர்வழி கழிவறைக்குச் செல்ல நகர்ந்தான். நானும் அவனைத் தொடர்ந்தேன்.
வெளிவாசலில் அவன் கைப்பற்றி உலுக்கி 'நீ சொன்ன தில் என்ன விஷயம்? பயப்படாமல் சொல்லு, நிச்சயமாக உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்' என்றேன்.
அவன் முகம் சிவந்து உளறத் தொடங்கினான், "நான் எதையும் குறிக்கவில்லை, சும்மா தமாஷ் செய்தேன்".
அந்தச் சமயத்தில் ஒரு மூத்த ஒட்டுனர் தோன்றிச் சொன்னார் "விஷயத்தை வெளிப்படுத்திவிட்டால் எல்லா ரும்சேர்ந்து விளக்கப்படுத்திவிடுவதுதான் முறை. அவருக்கு ஒரு ஐயத்தை ஏன் வைக்க வேண்டும்? வாருங்கள் உள்ே போய்ப் பேசுவோம்.'
அப்புறம் அந்த ஒட்டுனர்கள், மற்ற அனைவரும் தெரிந் திருந்த விவகாரத்தை கூறினார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னால் அவளைத் தேடி ஒரு வடக்குஷாங்ஷி ஒருவன் வத்திருக்கிறான். அண்டை வீட்டார் அவன் யார் என்பதை அறிய மாட்டார்கள். ஆயினும் அவர்கள் அழுவதையும்

Page 50
96
கிசுகிசுப்பதையும் கேட்டிருக்கின்றர்கள். எங்கள் நிறுவனத் துக் குடியிருப்புகள் வரிசைவரிசையாக ஒருநூறு குடும்பத் துக்கு ஒன்றாக ஒன்றுக்கொன்று ஒட்டியதாக இருந்ததால் அதற்குள் எதையும் மறைத்து ஒளிக்க முடியாது. பல ஒட்டுனர் குடும்பத்து அங்கத்தவர்கள் வேலைக்குந் போவ தில்லை. பெண்களுக்கும் ஒருவர் மற்றொருவர் வீடுகட்குச் சென்று அரட்டை அடிப்பார்கள். ஏன் சொல்லுகிறீர்கள்? காவல்துறைத் துப்பறிகிறவர்கள் கூடத் தோற்றுவிடுவார் கள்-அவ்வளவு நுணுக்கமாகத் தகவல் துலக்கிவிடுவார் கள். இந்த இளைஞன் எனது மனைவியின் ஊரைச் சேர்ந் தவன். படைப்பயிற்சி அப்பொழுதுடன் முடிந்துவந்தவன் அவளைத் தேடிப்பிடிக்கவே இந்தப் பயணம் வந்திருக்கி றான். அவர்கள் இருவருக்குமிடையேயும் நிச்சயமாக ஏற்கனவே ஏதோ சம்பந்தம் இருந்திருக்கிறது. எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள மிருகப்பொருள் நிறுவனத்தில் உலையூட்டியாகத் தானாகவே ஒரு தற்காலிக வேலை தேடிக்கொண்டான். நான் வீட்டிலில்லாத சமயம் வரப் போக இருந்திருக்கிறான். நிச்சயமாக இருவரும் கதவைத் தாளிட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் கிசுகிசுத்திருப்
பார்கள்.
'திடீரென ஆத்திரமடைந்து ஏதும் முடிவுக்கு வந்து விடாதே" என ஒட்டுனர்கள் கூறினார்கள். நீங்கள் இருவரும் சகஜமாக இருந்ததால் நாங்கள் முன்னரே தெரி விக்கவில்லை. அப்பொழுது அத்தவறைச் செய்திருந்தால் உங்கள் இருவருக்குமிடையேயும் விஷயத்தைச் சிக்கலாக்கி யிருப்போம். நீயோ மண்டையை உளற்றிக் கொள்பவன். நாங்கள் ஒரு சிறு தவறு செய்திருந்தால் விவகாரம் விபரீதமாகி விடலாமல்லவா?
தொண்டையில் ஏதோ அடைப்பது போன்ற உணர்ச்சி யுடனும் கண்ணிரையும் அடக்கிக் கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். **உங்கள் சிரத்தைக்காக மிகவும் நன்றியுடையேன்-உண்மையில்

97
நீங்கள் முன்னதாகவே எனக்குக் கூறியிருக்கலாம். எங்கள் இருவரிடையேயும் வெளியே எண்ணியதுபோல் ஒன்றும் மோசமாக இருக்கவில்லை. எப்படியோ அரையாண்டுக் காலம் துன்பகரமாகவே கழிந்தது.' என்றேன் நான்.
உள்ளதைக் கூறியதும் உண்மையிலேயே அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். சிலர் அந்தப் பயலைப் பிடித்து நையப் புடைத்து அவன் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்றார்கள். மற்றைய சிலர் அவனைச் சும்மா விடக் கூடாது, காவல்துறையினரிடம் கையளிக்க வேண்டும் என்றார்கள். வயது முதிர்ந்த சிலர் விவகாரத்தை நமக்குள் அமர்த்திக்கொண்டு ஆளை அப்புறப்படுத்தி விட்டால் விஷயம் எல்லாம் மாமூலுக்குத் திரும்பி விடும் குழந்தை ஒன்று கண்டால் அவளும் தணிந்து விடுவாள் என்று: கூறினார்கள்.
எனது தலையோ பல வண்ணங்கள் தோன்ற சுற்றத் தொடங்கியது-தீர்வு காண்பதற்கான பல வழிமுறைகள் மண்டையில் தோன்றின-கொடியவை. அன்பு, வஞ்சகம், தாராளம் எனப் பல உணர்வுகள்-முடிவில் என்னால் எதுவுமே முடிவு எடுக்க முடியவில்லை.
எனவே வீட்டையடைந்ததும் அவள்மீது நெருங்கிய கண்பார்வை செலுத்தத் தொடங்கினேன். அவளோ எப்பொழுதும் போலவே பணத்தில் சிக்கனம், சுத்தபத்த மாக நடந்து கொண்டாள். விஷயத்தைத் தொடக்க எதுவும் சந்தர்ப்பம் நேரவில்லை. எப்படியும் விஷயத்தை வெளியே கொணரவே நினைத்தேன். ஆனால் எப்படியோ அதைத் தொடங்க வாய்ப்பு அமையவில்லை.
வீட்டில் தட்டிப் பெருக்க வேண்டியிருந்ததால் சில நாட்கள் வீட்டில் தங்கினேன். அது முடிந்ததும் நான் வெளிக்கிளம்ப இருந்தபொழுது கியர் பெட்டியில் ஏதோ கோளாறு தென்பட்டது. உராயும் சப்தம் கேட்டது. அக் காலங்களில் பணிபுரிந்த கம்மியர்கள் மிகவும் மோசம்,

Page 51
98
எதையும் சரியாகப் பழுதுபார்க்க மாட்டார்கள். நல்ல வாகனங்களையும் நாசம் செய்து விடுவார்கள். எனவே ஒட்டுனர்களாகிய நாங்களே அவற்றை ஒக்கிட்டுக் கொள் வோம். எனவே அன்று எங்கும் வெளியே போகாமல் பாரப் பேருந்துவைப் பழுது பார்ப்பதிலேயே காலை நேரம் கழிந்தது.
பகலுணவு நேரத்தில் வீடு திரும்பினேன். கையில் கம்மிய திருகுக் குறடு இருந்தது. நான் கதவைத் தாண்டியதும் அவள் அந்த இளைஞனுடன் இருப்பதைக் கண்டேன்.
அவள் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவன் அவளின் அருகே ஒரு முக்காலியில் அமர்ந்திருந்தான். அவர்கள் தலையைச் சாய்த்துக் கொண்டே முகத்தைத் தொங்க விட்டவாறு ஏதோ பிரச்னை ஒன்றுக்கு முடிவு தேடுபவர்கள் போலக் காணப்பட்டார்கள், என்னைக் கண்டதும் இருவரும் குதித்து எழுந்தார்கள். அவன் திகிலடைந்தவாறு தோன்றினான். ஆனால் அவளோ மிகவும் அமைதியுடன் எங்கள் இருவர்க்கும் இடையே நின்று கொண்டாள். அவனைக் காப்பாற்றுவதற்கென்றில்லாமல் ஏதோ என்னை பார்த்த பார்வையில் "என்ன செய்து விடப் போகிறாய். அவனைத் தொட்டால் என்னையும் தீர்த்துவிட வேண்டி வரும்' என்பது போலிருந்தது.
உண்மையாகக் கூறுவதென்றால் அந்த நேரம் என் தலையெல்லாம் சுற்றினாலும் இருவரையும் பிடித்து நன்றாக உதைக்கவே தோன்றியது. ஆயினும் பின்னர் எல்லாவற்றையும் விட்டுத் தொலைப்போய் எனப்பட்டது? என் தயக்கத்தை கண்ட இவன் அவள் பின்னால் ஒளிந்து கொண்டு மெதுவாக நழுவி விட்டான். அவள் கட்டிலுக்குச் சென்று அமர்ந்து கொண்டாள். அவளது முகத்திலே ஆழ்ந்த முடிவு ஒட்டியிருந்தது,

99
நான் அவளை மீண்டும் மீண்டும் 'அந்தப் பயல் யார்" எனக் கேட்டேன். முதலில் அவள் ஒன்றும் பதில் கூற வில்லை. பின்னர் அந்த நீண்ட கண்களின்று அவள் உடை களை நனைக்குமளவு கண்ணீர் சொட்டத் தொடங்கின. அவள் தலையைச் சாய்க்கவோ, முகத்தை திருப்பவோ, ஒரு வார்த்தை பேசவோ இல்லை. அவள் பேசாது அழுது கொட்டினாள்.
நான் கோழை மனதுடையவன். யாரும் அழுவதை காணத் தாங்காது. அவள் அழத் தொடங்கியதும் எனது கோப்ம் தணியத் தொடங்கியது. குறட்டை வீசி எறிந்து விட்டு சோபாவில் சாய்ந்தேன். அவள் என்னிடம் அவன் தன்னுடைய சகோதரன், அல்லது ஊர்க்காரன் என்று என்று ஏதாவது சொல்லியிருந்தால் தேவலை, அத்துடன் விஷயத்தை விட்டுவிடலாமென எண்ணினேன், முதிர்ந்த ஒட்டுனர்கள் கூறியவாறு விட்டுவிட்டால் குழந்தை பிறந் ததும் சரியாகிவிடும், மற்றவர்கள் போல் வாழலாம் என்று கூட எண்ணினேன்.
அந்த விதத்தில் அவள் பொய் சொல்லவும் இல்லை. அழுது கொண்டே இருந்தாளேயொழிய வாய்விட்டு எதுவும் கூறவில்லை. நான் தலையை என் கைகளில் சாத்தியவாறே அந்த இடத்தில் குந்திவிட்டேன். நான் அந்த புதிய தளவாடங்கள், நாகரீக சோபாகள், நிலையான விளக்கு யாவற்றையும் சுற்றுமுற்றும் நோக்கினேன். இருவருக்கும் இடையில் இணைப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. அந்த பளபளக்கப் பூசப்பட்ட தளவாடங்கள் அனைத்தும் வெறும் பனிக்கட்டிகள் போல் இருந்தன, அவை ஏதோ குளிர் நிறைந்த ஒளியைப் பாய்ச்சுவது போலத் தோன்றியது. இவையெல்லாம் எதற்கு? குழந்தையே பிறந்தது என்றா லும், பின்னால் என்னாகும்? வீட்டில் பிள்ளைகுட்டிகள் வழிய உள்ள பல இயக்குனர்களைப் பற்றி நான் நன்கு அறிவேன். கணவன் மனைவியர் மகிழ்ச்சியுடனில்லாது

Page 52
• 100
இருவரும் வெவ்வேறு வழி பார்த்ததால் குடியில் மூழ்கு, வதை அறிந்திருக்கிறேன். வண்டி ஒட்டுத் தொழில் நல்லது தான். அரசியல், அசிறு பிசிறுகள் கிடையாது. இருந்தும் ஏன் அப்படி மிடாக் குடியர்களாகிறார்கள்? அவனை ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் வீட்டுப் பிரச்சினை காரணமாகத்தான் என்பதை உணர்வீர்கள்.
அவள் பதில் பேசாததால் நான் வெளியே அவனைத் தேடிச் சென்றேன். எதாகவிருந்தாலும் இனிமேல் விஷயத் துக்கு நான்முடிவு கட்ட எண்ணினேன். சாப்பிடவும் அங்கு ஒன்றுமில்லை. அந்தச் சமயத்தில் யாருக்குத்தான் சாப்பிட வரும்? எனவே வெளிச் சென்றேன்.
ஆசாமி மிருகப் பொருள் தொழிற்சாலைக்கு அருகில் சிறிய இடத்தில் குடியிருந்தான். புகை போக்கியை ஒட்டி எழுப்பப்பட்ட வெற்றுச் செங்கற்களான இரு சுவர்களும் பார்வைக்கு முக்கோணம் போலவும் பிறை போலவும் தோன்றிய ஒரு மனை. புகைபோக்கியிலிருந்து வெப்பாவி சென்றதால் சூடாக இருந்தது. உண்மையில் அது ஒரு புதுவகையான கட்டடம்.
பயலும் பயந்தாங்கொள்ளி அல்ல அட்டைக் கதவை நான் திறந்ததும் நான் அவனைத் தேடி வருவேன் என எதிர்பார்த்திருந்தது போல் மிகவும் பணிவாக என்னை அமரும்படி கூறி தேனீர் ஊற்றிக் கொடுத்தான். புன்னகை செய்யும் மனிதனைத் தாக்க மனம் வருமா? என்னதான் நான் செய்வது? நுழைந்தவுடன் தடால்புடால் என்று ஒருவனைத் தாக்கிவிட முடிகிறதா? எனவே உட்கார்ந்துஅவன் கூறியவற்றை செவிமடுக்க நேர்ந்தது.
அவன், தங்களிருவரும் ஒரே ஊரில் பிறந்து வளர்த்த தாகவும் மலைப் பகுதிகளில் இருவருமே சேர்ந்து விறகு பொறுக்கியதாகவும், பள்ளிக்கு ஒன்றாகவே சென்று பயின்ற தாகவும், வயது வந்ததும் இருவரும் கல்யாணம் செய்து

10.
கொள்வதென்று முடிவு செய்திருந்ததாகவும் கூறினான். இருவர் குடும்பத்தினரும் சம்மதம் தந்திருந்தனர். அவனும் படையணியில் சேர்ந்திருந்தான். அப்பயிற்சி முடிந்து வந்ததும் மணமுடிப்பதாக இருந்தது. அச் சமயத்தில் பஞ்சம் தலைகாட்டியது. அவளது தகப்பனார் பிணியினால் இறந்தார். எனவே, அவள் குடும்பத்தினர் சிஞ்ஜியாங்கிற்கு அவளது சிற்றன்னை வீட்டிற்கு வந்து தங்க நேர்ந்தது. இந்த விவகாரமெல்லாம் அவள் சிற்றன்னைக்கு தெரிந் தவைதான். இருந்தும் எனக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் பெற்றிருந்ததுடன் தங்கு அனுமதிச் சீட்டுப் பெற்றுத்தரக் கூடிய தகுதியும் இருந்தமையால் என்னைக் கட்டும்படி வற்புறுத்தியிருக்கிறாள். சிற்றன்னையும் விட்டுக் கொடுக்காததாலும் அவளது காதலன் தூரந்தொலையில் இருந்ததாலும் அவளுக்கும் என்ன செய்வதென்றே புரிய வில்லை. கடைசியில் அவளும் இணங்கி என்னை மனந் திருக்கிறாள். ஆயினும் அவனை நினைக்காத நேரமே இல்லை என்று அவனிடம் கூறியிருக்கிறாள்.
"நாங்களிருவருமே இளம் வயதினர்கள். எனவே விஷயத்திற்கு நேரே வருகிறேன்' எனக் கூறத் தொடங்கி னான். ‘நான் உங்களிடம் விவாகரத்துப் பெறும்படி கேட்டு என்னுடன் அழைத்துச் செல்ல இருந்தேன். இங்கு சிஞ்ஜியாங்கிலோ அல்லது சொந்த ஊரிலோ தொழில் புரிய லாமென எண்ணினோம். இருப்பினும் இங்கு நான் தங்கிய மூன்றுமாத கால வாழ்க்கையில் சிஞ்ஜியாங் வசிப்பதற்கு நல்ல இடமாகத் தெரிகிறது. அப்பெண் "உங்கள் மீது காதல் கொள்ளா விட்டாலும் உங்களது உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாதே எனத் தயங்குகிறாள். இரு பக்கத் துக்கும் இடையே இருந்து தத்தளித்தாள். இந்தச் சிறிது காலத்தில் நாம் மூன்று பேருமே இந்தச் சிக்கவில் மாட்டிக் கொண்டிருப்பதால் நான் ஒதுங்கி விடலாமா என்றுகூட எண்ணினேன். ஆனால் ஒன்று மட்டும் உங்களுக்கு நிச்சய மாகக் கூற முடியும். ஒன்று உங்களுக்குப் பின்னால் எதுவும்
7 سمسموع

Page 53
102
அசம்பாவிதமாக நடந்து கொள்ளவில்லை. இரண்டாவது அவளை நீங்கள் மணக்கும் முன்னர் நான் மன ஒப்பந்தம் செய்திருந்தேன். அத்துடன் இருவரும் பதினெட்டு வருட காலம் ஒன்றாகப் பழகினோம். ஆனால் நீங்களோ ஆறு மாதந்தான் வாழ்க்கை நடத்தியுள்ளீர்கள். மணக்கும் பொழுது நீங்கள் பரஸ்பரம் காதலித்திருக்கவில்லை. இப் பொழுதுந்தான் எந்தமட்டில் இருக்கிறது? நாங்கள் காதலித்ததால் ஒப்பந்தம் செய்தோம். படையில் பணி புரிந்த மூன்று ஆண்டுகளும் ஒரு நாளாவது அவளை நினைக்காத நாளே கிடையாது. அவள் நினைவை ஒதுக்கி மறக்க வைக்கச் செய்வது என்பது என்னால் முடிந்த காரிய மில்லை இவற்றை நீங்களே உணர்ந்தால் என்னை மன்னித்து விடுவீர்கள். அப்படி முடியாதென்றால் என்னை தாக்குங்கள். நானும் ஒரு வகை குற்றமும் புரியாததால் நானும் திருப்பித் தாக்குவேன் இன்னமும் நான் ஒன்றும் தப்புத்தண்டாவாக நடந்து கொண்டதில்லை.
அப்புறம் இந்தமாதிரி ஏதேதோ பேசிக் கொட்டினான். பேசும்பொழுதே அவனுக்குத் தன் அன்பை உணர்த்த அவள் செய்த அன்பளிப்புகள் அனைத்தையும் எடுத்துக் காண்பித் தான். தோற்பட்டி பூவேலைப்பாடுள்ள காலணிகள் சிறிய பை ஆகியன. ஷான்ஷி பெண்கள் இத்தகைய ஞர்பகப் பொருள்களை அளிப்பது வழக்கம் போலும். அவன் கூறியவற்றைக் கேட்டும் அந்த அழகிய பொருள் களைக் கண்ணுற்றதும் என் உள்ளம் வேதனைழற்றதுஎனக்கு இத்தகையது ஒன்றைக்கூட செய்ததில்லையே. ஆயினும் அவள் என்னை நல்ல மனிதன் எனக் கூறியமை ஞாபகம் வர ஆறுதலளித்தது. என்னைப் பற்றி அவள் வைத்திருந்த மதிப்பை மற்றவர்களிடமும் கூறியிருக் கிறாள். அவளைப் பற்றியும் ஒன்றும் தவறாக எண்ணு வதற்கில்லை.
அவள் அப்படியொரு சொகுசுக்காரியுமல்ல, ஆழ்ந்த உணர்வு கொண்ட பொறுமைசாலி. பிரச்சினை என்ன

103
வென்றால் இத்தகைய உணர்வுகள் என்பால் இருக்க வில்லையே என்பதுதான்.
இருந்தும். அவன்பால் என் கோபம் தணிந்ததாக இல்லை. "எனக்குப் பின்னால் எதுவும் தவறான செய்கை கள் புரியவில்லையென்று கூறினாயே, அப்படியென்றால் நீ ஏன் என்னைக் கண்டு ஓட்டம் பிடித்தாய்?" என்று அவனைக் கேட்டேன்.
அவன் முகம் சிவக்க "உங்கள் கையில் கனத்த குறடு இருந்தது. நீங்கள் இருந்த இருப்பில் அதனால் என்னைத் தாக்கியிருப்பீர்கள் என எண்ணினேன்' எனப் பதிலளித் தான். -
**சரி நீ ஓடிவிட்டால் நான் அவளைத் தாக்குறேன் என அஞ்சவில்லையா? இருந்தும் அவளைக் காதலிப்பதாக கூறுகிறாயே"
தலையைத் தொங்கவிட்டுக் கொண்டே முனங்கினான். "நான் அந்தக் கதவுக்குச் சற்று வெளியேதான் நின்றேன்".
நாங்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது அவள் திடீரென உள் நுழைந்தாள். ஒருக்கால் நாங்கள் இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கலாமென எண்ணி யிருக்க வேண்டும். நாங்கள் அமைதியாக அமர்ந்திருப் பதைக் கண்ணுற்று சிறிது ஆறுதலடைந்தாள். புகை போக்கியில் சாய்ந்தவாறு அழத் தொடங்கினாள். இந்த முறை வாய்விட்டே அழத் தொடங்கினாள், மனதை உருக்கும் அழுகையாக இருந்தது.
இருவருமே பேசவில்லை. அந்தச் சிறு குடிலில் அவள் அழுகைக் குரல் மட்டுமே கேட்டது. அதைக் கேட்டதும் திடீரென வெய்யாவில் அந்த இரண்டு பெண்களின் ஞாபகம் தோன்றியது, இத்தகைய நிலையில் அவள் இருந்

Page 54
104
திருந்தால் எப்படி நடந்திருக்கும்? இவளைப் போல அவர்கள் இருந்த அளவு மறுதலிக்காமல் யாவையுமே அவர்கள் உடலும் உள்ளமும் வாடி மாண்டிருப்பார்கள். அவள் என்னதான் தவறு புரிந்தாள்? அப்படி ஒன்றும் பெரி தாக இல்லை. என்னென்று எனக்குப் புரியவில்லை. மூளை புரண்ட அவ்வேளையில் எனக்கு வெய்யாவின் காட்சியே தோன்றியது.
ரொம்ப ரொம்ப சாவகாசத்துக்குப் பின்னர் முடிவாகக் கூறினேன். “ஆன கதைக்கு மேளமடித்துப் பயனில்லை. இப்பொழுது விஷயங்கள் நன்றாக துலக்கமாகப் புரிகிறது. நம்மிருவரிடையில் ஒருத்தருடன் தான் நீ வாழ முடியும். இப்பொழுதே முடிவு செய்துவிடு, யாரந்தப் பேர்வழி என்பதை'.
அவள் அழுதுகொண்டே பதில் பேசாதிருந்தாள். கால மெல்லாம் கட்டி வைத்திருந்த கண்ணிரைக் கொட்டுவது போலக் கொட்டினாள். சிறிது கழிந்ததும் அவன் கம்மிய குரலில் அவள் செல்லப் பெயரில் விளித்து "நீ அவருடன் தான் இருக்க வேண்டும். இங்கு வந்து பார்த்த பின்னர் நீ நல்ல முறையில் வாழ்கிறாய் என்பதைக் காண்கிறேன். நான் விட்டுக் கொடுக்கலாம். நமக்குள் அமைப்பு இல்லை. ஏதோ ஒரு வெற்றுக் கனவு. நடந்ததையெல்லாம் ' மறந்து விடுவோம்" என்றான்.
இப்படிக் கூறியதும் அவள் மேலும் சப்தமிட்டு கட்டுப்படுத்த முடியாத அளவு அழத் தொடங்கினாள். இது போதாதா எல்லாவற்றையும் உணர்த்த? மேலும் அவளைத் துன்புறுத்துவானேன்? அவள் மீது எனக்கு அனுதாபம்தான் தோன்றியது. ஏதோ ஒரு பெருநிதி எனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று மட்டும் மனதில் பட்டது.
அவளது மனப்போக்கு எனக்குப் புரிகிறது. என்னுடன் இருந்தால் அவள் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை,

105
"நீயும் துயரப்படுவாய், நானும் துயரப்படுவேன், நானும் உங்களைப் போன்றவனே. தூரகிழக்கிலிருந்து இங்கு தள்ளப்பட்டவன் தான். வீட்டில் சரியான அமைதி இல்லா விட்டால் பலவித நிகழ்ச்சிகள் தோன்றும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆயினும் சீனா பரந்த நாடு, மனது வைத்தால் எங்கும் பிழைத்துக் கொள்ளலாம். நீங்கள் இருவருமே எதையும் செய்து பிழைக்கக் கூடியவர்கள். இங்கேயே இருந்து நன்றாக வாழலாம். நீங்கள் இருவரும் ஒன்றுசேர இருப்பதுதான் நல்லது' என்றேன்.
நான் முடித்ததும் அவள் அழுவலை நிறுத்தி சிறிது அமைதியடைந்ததாகத் தோன்றியது. அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு சுமையை இறக்கி வைத்ததுபோல், நான் அப்பொழுது நினைத்தாலும் அப்புறம் அவளது அன்பு எனச்குக் கிட்டவில்லையே, தனிமையில் காலந்தள்ள வேண்டுமே என்றும் ஏதோ என்பால் தவறிழைக்கப் பட்டாலும் உள்ளே அழைத்ததும் அழாமல் இருக்க முடிய வில்லை. ஸ்னவே அந்தச் சிறிய குடிலில் மூவரும் அழுது தீர்த்தோம்.
தானும் அவளும் விவாகரத்துச் செய்து கொண்டதும் பலர் பலவிதமாகச் கூறினார்கள். நான் அவை குறித்துக் கவலைப்படவில்லை. நடந்தவற்றை அனுபவித்தவன் நான் தான். எனவே முடிவு செய்ய வேண்டியவனும் நான்தானே! சாமான்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு முடிவாக அன்று மாலை அவள் புறப்படுகிற சமயம் வீட்டைவிட்டுச் செல்வதற்குத் தயங்கினாள். கடைசியாக இரவு உணவையும் சமைத்து வைத்துவிட்டு மெதுவாக "இன்னும் ஒரு இரவு மட்டும் இருக்கிறேன்" என்றாள்.
இதுவரை பாசமுடன் பேசியதே அன்றுதான். அவள் உள்ளக் கருத்தை உணர்ந்தேன். ஒரு கிராமியப் பெண் தான் இம்முறையில் நன்றியைத் தெரிவிக்க முயல்வாள், ஆயினும் அது வெறும் நன்றிக் கடன். அவ்வளவுதான்.

Page 55
106
'இல்லை, நீ போ என அவளிடம் கூறினேன். "நான் அன்பைத்தான் அதிகம் விரும்புகிறேன். நீங்கள் இருவரும் மகிழ்வுடன் வாழுங்கள். மீண்டும் இருவரும் பிரியாது இருங்கள். நாமிருவரும் கணவன் மனைவியாக இல்லா விட்டாலும் நண்பர்களாகவே இருப்போம். உனக்கு ஏதும் தேவைப்படின் தயக்கமின்றி எனக்குத் தெரிவி.'
இருவரும் நல்ல சமர்த்தான ஜோடிகள். தனிப் பட்டவர் வாணிபத்திற்கு அனுமதி இருந்ததால் இருவரும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் சிறிய ஷான்ஷி மோஸ்தரில் சிறுகடை அமைத்தார்கள். அங்கிருந்த உங்குர்கெபப் கடைகளை விட அவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்குமெனத் தெரிகிறது. இப்பொழுது பல ஆயிரங்கள் சேர்த்திருக்கிறார்கள். நானும் அவர்கள் கடை உணவை நிறைய வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். நான் போய் அமர்ந்தால் சலுகையுடன் கவனித்தார்கள். இரு குடும்பத்தாரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். உரும் கிக்கு என் மனைவி வரும்போதெல்லாம் அவர்கள் கடையின் கோதுமைக் கொழுக்கட்டையை விரும்பி வாங்குவாள். நீங்களும் ஒருமுறை சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும். அவர்கள் கடை நாலு பூக்கள் கிராமத் தருகே உள்ளது.
அடடா, விஷயத்தை விட்டு விலகிப் போகிறேன். கதைக்கு வருகிறேன்.
எனது பழைய குரு கிழக்குப் பகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்து பின்னர் அவருக்கு என்னைப் பற்றிய செய்தி தெரியவந்தது. அவர் மனைவியை எனக்கென நல்ல சாப்பாடு தயார் செய்யச் செய்து என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். 'பாதையிலிருந்து ஏற்றி வந்து கற்றுக்குட்டியாகப் பழக்க உன்னை நான் தேர்ந்தெடுத்ததில் நான் தவறு புரியவில்லை. நீ செய்த

107
முடிவு சரியானது. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் சரியானபடி செய்திருக்கிறாய்" என்றார்.
நான் ஓரிரு கிளாஸ் மதுவருந்தியதும் மனதிற்குள் சங்கடமாக இருந்தது. என்னமோ தெரியவில்லை, எனக்கு ஏதோ தீமை இழைக்கப்பட்டதாக எண்ணம் தோன்றியது. எனது பழைய ஆசிரியர் கூறினார் "இதையெல்லாம் அதிகம் மீனதில் எடுத்துக் கொள்ளாதே. தொடக்கத்திலேயே அவள் இன்னொருவனுக்குச் சேர்ந்தவள். என்றும் உணிக்கு உடைமையானவள் அல்ல. நீ யாரோவொருவனுக்குத் திருப்பி அளித்துவிட்டாய். அவ்வளவுதானே. ஆரம்பத்தி லிருந்தே அவள் உன்னுடையவளாக இருந்து வேறு எவனாவது கொண்டு போயிருந்தால் தவறுதான்.""
நான் கூறினேன் 'நான் அது குறித்து நினைக்கவில்லை. என் மனதிலே நல்ல நோக்கங்களிருந்தும் பதிலுக்கு அதே போல ஒன்றும் எனக்குக் கிட்டவில்லையே."
"அது இன்னும் மோசமானது' எனப் பதில் கூறினார். **அப்படியாக உன் மனதில் நல்ல நோக்கமிருந்தால் பிரதி உபகாரத்தை எதிர்பார்ப்பானேன்? எனவே, உனது நோக்கமே தொடக்கத்திலேயே நல்லதாக இருக்கவில்லை. மனிதத்தன்மை என்பது வெறும் வியாபாரம் செய்வது போலல்ல."
அவர் கூறியது சரியே. இந்த ஒருவழியுமற்றவனாக இருந்த ஒரு 'ஊர் சுற்றி’’யைக் கற்றுக்குட்டியாக ஏற்ற பொழுது நான் அவருக்கு ஏதாவது உதவி செய்வேன் என்றா நினைத்துச் செய்தார்? ஒட்டுனர்கள் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் போன்றவர்களல்ல, கற்றுக்குட்டிப் பயிற்சி முடிந்ததும் வெளிச் சென்று விடலாம். எனது ஆசிரியருக்குப் பல கற்றுக்குட்டி மாணவர்கள் உள்ளனர். சிஞ்ஜியாங்கில் பரந்து பல இடங்களில் இருந்தனர்" சிலர் இன்றும் உரும்கி வழியாகச் செல்லும் வழியில் அவரைக் கண்டுவிட்டுப் போவார்கள். வேறு சிலரோ

Page 56
108
பயிற்சி முடிந்ததும் தங்கள் சிறகெடுத்து அவரை அப்புறம் பாராமல் பறந்தே விடுவார்கள். அவர்கள் தன்னை வந்து காண்பதிலோ காணாததிலோ அவர் கவலைப்படுவதில்லை. அது அவரவர் விரும்பம். அவர் கூறிய பதிலைக் கேட்டதும் அமைதியடைந்தேன்,
ஆனால் எனது பத்திரிகையாள நண்பரே, இதோ கேளுங்கள். கல்யாணம் முடித்துவிட்டால் விஷயமே வேறு. முன்னெல்லாம் அவள் என்னைப் பற்றி என்ன எண்ணினா லும் எங்காவது ஓட்டம் போய் வந்தால் மேஜையில் சூடான உணவு காத்திருக்கும். எனது உடைகளும் சீர்படுத்தித் தயாராக இருக்கும். எனக்கும் இதமாக இருந்தது. பார்வைக்கும் நன்றாக இருந்தேன். அவள் சென்ற பின்னர் எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. ஏதோ உள்ளுக்குள் ஒரு வெறுமை உணர்ச்சி தோன்றியது. அதனால் ஒரு எரிச்சல் ஏற்பட்டது, நீண்ட தொலைப் பாரப் பேருந்து ஒட்டுபவன் வாழ்க்கைணை நீங்கள் அறி வீர்களா? ஆண்டு முழுவதும் மழையோ வெயிலோ அவன் வெளியே சாலையில்தான் வாழ்வு. வீட்டிலிருப்பதைவிட தங்கு விடுதிகளில்தான் அதிக இரவு நாட்களைக் கழிக்க வேண்டி வரும். இன்று ஒரு கூட்டத்துடனும் நாளைக்கு ஒரு கூட்டத்துடனும் ஒரு அறையில் தங்க வேண்டிவரும். போர்வையோ பார்க்கச் சசிக்காது, எந்த முனையை எடுத்துப் போர்த்திக் கொண்டாலும் காலடி நெடி வீசும், குடும்பம் உள்ள ஒட்டுனர்களுக்கோ ஏதோ ஒரு நிம்மதி. சாலையில் எவ்வளவு சிரமப்பட்டாலும் வீட்டிலாவது அமைதி. ஆனால் நான் வீட்டை அடைந்தால் அடுப்பும் சட்டியும் காலி, சூடாக உணவு வேண்டுமென்றால் எங்காவது உணவுவிடுதிக்குப் போனால்தான். சாலை ஓட்டத்தில் இயக்குனர்கள் வண்டியை நிறுத்தி வெள்ளைப் பூண்டு, மிளகு, முட்டை போன்றவற்றை விவசாயிகளிடம் வாங்கிச் செல்வதை அடிக்கடி காண்பேன். அவர்களைக் காண எனக்கு ஒரு மாதிரிப் பொறாமையாக இருக்கும்

09
அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால் எனக்கோ நல்ல காய்கறி, சாமான் கொடுப்பதற்கு யாரும் இல்லை.
அப்பொழுது எனது முடிவு குறித்து அங்கலாய்த் தேனோ? அப்படியும் இல்லை. நான் வேலை முடித்துத் திரும்பும் வழியில் அவ்விருவரும் அவர்கள் உலைக்கூட விடுதி முன்னால் பச்சைச் செங்கல் செய்து கொண்டிருப்பதைக் காண்பேன். வியர்வை சொட்ட என்னைப் பார்த்து கையசைப்பார்கள். எனக்கு ஒருவகை சந்துஷ்டியும் சோகமும் கலந்த உணர்வு தோன்றும். அதை எத்தகையது எனக்கூற முடியவில்லை. ஆனால் அங்கலாய்ப்பு என்று கூற முடியாது.
காலமும் நாட்களும் செல்லச் செல்ல அவையெல்லாம் மறைந்தன. மனதும் சரியாகி விட்டது. ஒட்டுனர்களாகிய எங்களுக்கு ஒரு வசதி, உலகத்தில் பலதைக் காண வாய்ப்பு. அதே சமயம் சிஞ்ஜியாங்கில் வசித்ததிலும் ஒரு நன்மை. இளவேனில் தொடங்கும் பொழுது சேரம் தெப்பக் குளக்கரையோரம் வண்டியைச் செலுத்தும் பொழுது அந்த நீலவானையும், நீல நிறத் தண்ணீரையும் கிர்கீசியப் புற்கள் மேலே படர அப்பொழுது வந்தடையும் அன்னக் கூட்டக் களையும் ஐரிஸ் மலர்ச் செடிகளையும் பள்ளத்தாக்கிலுள்ள நெடிய கோவில் மரங்களையும் காணக் காண துயர்களைத் துடைத்துவிடுகின்றன. கோடைக் காலங்களில் வண்டிக் கதவுகளை முதன்முறையாக திறந்து கொண்டு மலைக் காற்று உள் நுழைய ஒட்டிச் செல்லும்பொழுது ஒருவகை நம்பிக்கையும் உற்சாகமும் நிரம்புகின்றது. −
ஒ, மலை உச்சிக்கு வந்து விட்டோம். இனிமேல் இறக்கம்தான். மேலே ஏறுவது எளிது. இறங்குவது கடின மான ஓட்டம். கவலைப்படாதீர்கள், எனக்கு நல்ல பழக்கமான பாதை.
இன்னும் கேட்க விரும்புகிறீர்களா? இரண்டாவது முறை நான் எப்படி மணமுடித்தேன் என்பதை? சரியா,

Page 57
O
தூக்கத்தில் தலை சாய்க்காதிருந்தால் சொல்கிறேன். அது கொஞ்சம் சுவராஸ்யமானது. அது நான் கல்யாணத்தைப் பற்றியே சிந்திக்காத நேரம் .
இரண்டு ஆண்டுகட்கு முன்னர், இந்தச் சாலைவழி வண்டியை ஒட்டி வந்துகொண்டிருந்தேன். அன்று காற்று பலத்தடித்தது. தூசியும் மணல்களும் கண்ணாடி மேல் சாடின. ஒரு ஐந்து மீட்டர் தூரம் ஒரு பொருளையும் பார்க்கத் தெரியவில்லை. நான் அப்பொழுதுதான் குமிஷி யைக் கடந்து எல்மீ பள்ளத்தாக்கை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தேன். பரிதியும் மலைகளுக்குப் பின் மறைந்தது. எல்ம் பள்ளத்தாக்கின் இரு மருங்கிலும் சிறு குன்றுகள், அவற்றின் இடையே ஒடைகள், ஒடைக் கரை யோரங்களில் எல்ம் மரங்கள். அவை எவ்வளவு காலமாக இருந்தன எனத் தெரியாது. ஆயினும் அவை பருத்துக் கோணல் மாணலாகக் கிளைகளுடன் பலவித விசித்திரத் தோற்றத்துடன் காட்சியளித்தன. மர உச்சிக் கிளைகள் முன்னும் பின்னும் குடிகாரன் போலத் தள்ளாடின. அவ்விடத்தில் காற்று அவ்வளவு மோசமாக வீசவில்லை : தண்ணிரும் சில மரங்களும் இருந்தன. பார்வையும் சற்றுத் தெளிவாக இருந்தது.
நானும் காற்றின் போக்கிலே செலுத்திக் கொண்டிருந் தேன். தொலைவிலே ஒரு பெண்மணியாள் சாம்பல் நிறச் சால்வை போர்த்தி குழந்தையைக் கையிலேந்தி பாதை ஒரத்தில் அமர்ந்திருந்தாள். அவள் பருத்த மேற்சட்டை அணிந்திருப்பதாகத் தோன்றியது. அவளுக்கு எத்தனை வயதிருக்கும் என அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் பக்கத்திலே இரு பைகள் இருந்தன. அவளும் பிரயாணம் செய்ய விரும்புபவள் போலத் தோன்றியது. எனவே, நான் சிறிது மெதுவாகவே செலுத்தினேன். ஆனால் அவள் அருகே ஒட்டிச் சென்றபொழுது அவள் என்னை நோக்கி கையை அசைக்கவில்லை. அவள் வண்டியின் உட்பக்கம் lurrigoaul-Tair.

நான் சிறிது கடந்து சென்றேன். ஆயினும் அவளது பார்வை ஒரு பளிச்சிட்ட மின்னல் போல் என் முகத்தில் ஒளித்து உள்ளத்தே அவளது தோற்றத்தைப் பதித்தது. அந்தப் பார்வையில் தோன்றியதென்ன? ஐயம், அச்சம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு? நானும் சிறிது தொலை சென்று விட்டேன். எனக்கென்னமோ அது சரியெனப்படவில்லை. எனக்கென்னமோ எனது வண்டியிலிருந்து தவறி விழுந்து விட்ட சுமை போலிருந்தது.
வண்டியை நிறுத்திக் கதவைத் திறந்தேன். அப்பப்பா என்ன காற்று! கதவையே தகர்த்துக் கொண்டுவிடும் போ லிருந்தது. என் தொப்பியைப் பிடித்தவாறே அவளை நோக்கி ஓடினேன். "நீங்கள் எங்கு செல்ல வேண்டும்??? என அவளைக் கேட்டேன்.
தான் கைப்பு ஊற்றுப் பக்கம் செல்வதாகக் கூறினாள் அப்பொழுதுதான் அவள் ஷாங்காய்ப் பகுதிப் படித்த இளம் பெண்’ என்பதைக் கவனித்தேன். சாதாரண கனத்த பருத்திச் சட்டையாக இல்லாமல் ஆழ்ந்த பழுப்பு நிறமான தோற் கம்பளிச்சட்டை அணிந்திருந்தாள் அவளது முகம் கம்பளித் துண்டினால் பாதி மூடப்பட்டிருந்தது. கையிலேத் தியிருந்த குழந்தைக்கு நான்கு வயதிருக்கலாம் அவனது மெல்லிய முகம் உறைந்து நீல நிறமாக இருந்தது. அம்மா வின் தோற்கம்பளிச் சட்டைக்குள் புகுந்திருந்து என்னைத் தன் பெரிய கண்களால் பயந்தபடி பார்த்துக் கொண்டிருந் தான,
பெருங்காற்று பள்ளத்தாக்கில் அடித்து மரங்களினூடே சிதறிக்கொண்டிருந்தது. எனக்கு மேற்சட்டை இல்லாததால் நடுநடுங்கிக் கொண்டிருந்தேன். அவளை வண்டியில் ஏறும் படி வற்புறுத்தினேன். இன்னும் அவள் தயக்கத்துடன் குழந்தையை மேலும் அழுத்தமாக நெருக்கி அணைத்துக் கொண்டாள். ஏதோ அவளை நான் இழுத்துக் கொண்டு *சென்று விடுவேனோ என்பது போல.

Page 58
112
அவள் வண்டியில் ஏறாத காரணம் எனக்குப் புரியும். எனது பத்திரிகைத் தோழரே, உண்மையைக் கூறுகிறேன். ஒட்டுனர்களிலும் பல கெட்டவர்கள் இருந்தார்கள். தனியாகப் பயணம் செய்யும் பெண்களைச் சிறிது தொலை கூட்டிச் சென்று எங்காவது மலைப் பகுதியிலோ பாலை வனத்திலோ தனி இடத்தைக் கண்டதும் இயந்திரம் நின்று விட்டது, மேலும் பயணம் செய்யாது என்று சாட்டுக் கூறி நிறுத்தி விடுவார்கள். துணையற்ற பெண் என்ன செய்வாள்? அவனின் அசுர வேட்கைக்கு ஆளாக வேண்டி நேரும். வேறு வகை ஒட்டுனரும் உள்ளனர். அவர்கள் இளம் பெண்களையோ மணம் முடித்த பெண்களையோ தேடி ஏற்றிச் செல்வார்கள்: அவர்கள் மனதில் முன் குறித்தவர் களைப் போல் கெட்ட நோக்கம் இருப்பதில்லை. ஏதோ கிண்டல், கேலிக் கதைகள் பேசி மகிழ்வது மட்டும்தான். ஷாங்காய் படித்த கூட்டத்தினர் வலு புத்திசாலிகள். தெற்கே சிஞ்ஜியாங்கிற்கு தங்கள் இல்லங்கட்குத் திரும்பி வரும்பொழுது பொதுவாக அவர்கள் பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக தகியானில் இறங்கி வண்டிச் சவாரி பெற்றுச் செல்வார்கள். ஜோடியாகவோ கூட்டமாகவோ இருந்தால் பெண்களை முன்னே விட்டு நிறுத்தச் செய்வார் கள். ஆது நின்றதும் அங்கு காண் கட்டைகளில் ஒளிந்திருந்த ஆடவர்கள் வண்டியில் ஏறிக் கொள்வார்கள். இதிலிருந்து ஷாங்காய் படித்தவர்கள் ஒட்டுனர்களாகிய எங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். வயதான யாராவது ஒட்டுனர் வண்டியை எதிர்பார்த்து அவள் நின்றிருக்கலாம். அல்லது வண்டிக்குள் யாராவது பெண்கள் துணையையோ எதிர்பார்த்திருக்கலாம். என்னையொத்த தனி இளைஞனை நம்பவில்லை. h
காற்று இன்னும் கடினமாக வீசியது. பருதியும் மலை கட்குப்பின் மறைந்தான். ஆடிக் கொண்டிருந்த மரங்கள் ஆழ்ந்த கறுப்பாக மாறுவதைக் கண்டேன். என் வண்டியை

113
அவள் தவற விட்டால் அப்புறம் அவளுக்கு எதுவும் கிடைப் பது கடினம். உன் ஒட்டுனர் அனுமதிச் சீட்டை அவள் முன் ஆட்டியவாறே ‘என்னை நீ நம்பாவிட்டால் இதைப் பணய மாக வைத்துக் கொள். கடைசிப் பேருந்தும் போய்விட்டது. மற்றொரு பாரப் பேருந்துக்காரரும் ஏற்றிக் கொள்வார்கள் என்பது என்ன நிச்சயம்? அத்துடன் எனக்குப் பின்னால் நானறிய வண்டி இல்லை. உன்னைப் பற்றி அக்கறைப்படா விட்டாலும் குழந்தை நலனையாவது கவனிக்க வேண்டாமா? அவனைப் பார், எப்படி உறைந்து போயிருக் கிறான் என்று. பேசாமல் வண்டியில் ஏறிக் கொள்" என்றேன்.
அவள் எனது அனுமதிச் சீட்டை ஏற்கவில்லை. குழந்தையின் மீது துயரமாக நோக்கினாள். மீண்டும் என்னைப் பார்த்துத் தடுமாற்றத்துடன் நின்றாள். நான் அவளது சாமான் பைகளைத் தூக்கித் துணை செய்து வண்டியில் வைத்தேன்.
தான் வண்டியில் மூன்று, நான்கு, ஐந்து என வயதுடைய பிள்ளைகளை ஏற்றிச் சென்றிருக்கிறேன். அவர்கள் வண்டியில் சும்மா அந்த வயதில் அமர்ந்திருக்க மாட்டார்கள். கியரைத் தொடுவார்கள், அல்லது முன் சட்டத்தைத் தட்டுவார்கள். ஜன்னல்களுக்கும் வெளியே கேட்குமளவுக்கு சப்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். ஆனால் இந்தக் குழந்தையோ நிசப்தமாக இருந்தது, வேடிக்கையாக இருந்தது. அவன், அவனது அம்மா அணைப்பிலிருந்து அசைந்ததாகவும் தெரியவில்லை. சிறிது சென்றதும் வானம் கறுக்கத் தொடங்கியது. சிஞ்ஜியாங்கே அப்படித்தான். திடீரென்று இருள் மூண்டுவிடும் குழந்தை இரும ஆரம்பித்தான். அவள் தடுமாற்றமடைந்து தட்டிக் கொடுக்கத் தொடங்கினாள். அவனைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். மேலும் மேலும் இறுக்கிப் போர்த்தினாள். நான் விசையேற்றியை விடுத்துக் கேட்கத் தொடங்கினேன்டி குழந்தை மோசமாக இளைக்கத் தொடங்கினான். நான்

Page 59
114
அங்கு திரும்பி அவனைத் தொட்டும் பார்த்தேன். அவன் நெற்றி ரொம்பவும் சூடாக இருந்தது.
** கடவுளே, ரொம்ப மோசமாக இருக்கிறதே. குழந்தைக்குச் சுகக் குறைவாக இருக்கிறதே" என்றேன்.
தாய் பதில் பேசவில்லை. ஆயினும் திடீரென்று அழத் தொடங்கினாள்.
குழந்தை இளைத்துக் கொண்டிருந்தான். தாயோ அழுகிறாள். நான் வேகமாக வண்டியைச் செலுத்தினேன். எங்கள் முன்னால் மலை வளைவுக்கு முன்னால் உவழிதாலா கண் சிமிட்டிக் கொண்டிருந்தது. உஷிதாலா ஒரு சிற்றுார். வீடுகள் கொஞ்சம்தான். இரவு ஓட்டங்களில் நாங்கள் தங்கிச் செல்வோம்: நான் நிறுத்தவில்லை. மேலே ஒடிக் கொண்டிருந்தேன்.
'நிறுத்து! நிறுத்து!" எனக் கதவைத் தட்டியவாறே
கூச்சல் போட்டாள்.
*"கவலைப்படாதே, நேரே எங்காவது மருத்துவ மனைக்கு நாம் போகவேண்டும். உன்னைவிட எனக்கு உஷிதாலா பற்றித் தெரியும். அவ்வூரில் ஒரு வெற்றுக்கால் டாக்டர் கூடக் கிடையாது" என்றேன்.
அவள் அழுது கூச்சலிட்டு என் கையை இழுத்தவாறே * "அதைப் பற்றிப் பரவாயில்லை! உன்னை உடனே நிறுத்தும்படி கேட்கிறேன். உடனே நிறுத்து" என்றாள்.
எனது கை அவளது பிடிப்பில் அகப்பட்டிருந்தது. நான் ஒற்றைக் கையால் ஒட்ட வேண்டியிருந்தது. எங்களுக்கு மேலே ஒரு திருப்ப வளைவு இருந்தது. நான் சிறிது நடுக்கத்துடன் **கவலைப்படாதே. நான் கவலைப் படாதே என்று சொல்கிறேனே. நான் கெட்டவனல்ல,

115
உண்மையாகவே நான் அப்படிப்பட்டவனல்ல" என்று கூறினேன்.
""முடியாது! முடியாது!’ என்று அச்சத்துடன் கூச்ச லிட்டாள். "என்னை எங்கே அழைத்துச் செல்கிறாய்? நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நிறுத்து! தயவு செய்து நிறுத்து.'
நாங்கள் அந்தத் திருப்பத்திற்கே வந்து விட்டோம். ஒரு பக்கம் மலைகள். மறுபக்கம் பள்ளம், தமாஷான விஷயமல்ல நானோ அவள் கையை அகற்ற முயன்றேன். ஆனால் அவளோ விட்டபாடில்லை, கையை இழுப்பதால் வாகனத்தை நிறுத்தி விடலாம் என நினைப்பவள் போல, முடிவாக நான் கோபமாக கூறினேன் ‘நான் உஷித்தாலா வில் நிறுத்த விரும்பவில்லை, என்று நினைக்கிறாயா? உனக்கு ஆயாசமாக இல்லாவிட்டாலும் எனக்கு இருக் கிறது! உன்னை யாங்கிங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே விரைகிறேன்.தயவுசெய்து என்னைப் போக விடு. ஒட்டவிடு. இதோபார், ஒன்றைக் காட்டுகிறேன்!”*
எங்களுக்கு முன்னால் வண்டி வெளிச்சமூலம் தெரிவதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். கைப்பிடியை விட்டாள். நான் அந்த வளைவை மெதுவாகக் கடந்ததும் எனது இருக்கைக்குக் கீழே வைத்திருந்த வெள்ளைப் பீங்கான் தேனீர் கோப்பையை வெளியிலெடுத்துக் காட்டி னேன். நடுங்கியவாறே, "இதோ பார் இது எனக்கு அளிக் கப்பட்ட பரிசு.நான் கெட்ட பேர்வழி அல்ல என்று கூறினேனே, இதோடார் கவலைப்படாதே. குழந்தையை நன்றாக அனைத்துக் கொள்.ஆனாலும் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், எனக்குத் தொல்லை கொடுக்காதே’ என்றேன்.
எனது செயல் வேடிக்கையாகத்தானிருந்தது. ஒரு м வெள்ளைக் கோப்பை எதை நிரூபிக்கப் போகிறது? அதன்

Page 60
116
மேல் “பாராட்டும் பரிசு’’ என்று மட்டும் பொறிக்கப் பட்டிருந்தது. எல்லோர் கையிலும் அது இருக்கும், அது எதையும் நிச்சயமாக நிரூபிக்காதது. என்னவோ, அந்தக் கோப்பையின் காரணமோ அல்லது இந்த படித்த பெண் விட்டுக் கொடுத்தாளோ தெரியாது அவள் அமைதி அடைந்து இருமிய குழந்தையை அணைத்துக் கொண்டு மேலும் தொல்லை கொடுக்காது என்னை யாங்கி வரை ஒட விட்டாள்.
அந்தக் காலத்தில் உரும்கி மருத்துவமனை இருந்த இருப்பைப் பற்றி உங்களிடம் கூறத் தேவையில்லை. கடலுக்கடியிலுள்ள ஊசியையாவது தேடி எடுத்து விடலாம். நடு இரவில் அங்கே மருத்துவர்களைக் காண முடியாது. காலியாகத் தோன்றிய யாங்கி வீதிகளில் அங்கும் இங்குமாக ஒட்டி, அங்கொரு மருத்துவமனை, இங்கொரு மருத்துக்கூடம் என ஒடித் திரிந்தேன். அவற்றில் விளக்கு கள் எரிந்து கொண்டிருந்தன. கடமை புரிபவர்களையோ கண்ணுக்குத் தென்படவில்லை. நாங்கள் இருவரும் எங்கள் பலம் கொண்ட மட்டும் கத்தித் தீர்த்தோம். பதிலளிக்க ஒருவர்கூட இல்லை. இவ்விதம் ஒரு மணி நேரம் வீணாகியது.
**நாசமாகப் போக! வா போவோம்" என்று ஆத்திரத் துடன் வண்டியில் ஏறினேன். "கோர்லாவிற்குச் செல்லு வோம். எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் அங்கு இருக்கிறார்."
அந்தச் சமயத்தில் குழந்தையின் மூச்சும் கூrணமாகியது. அவனது நெற்றியும் கொதித்தது. அவன் மயக்கமுற்று நடுங்கிக் கொண்டிருந்தான். அவள் கண்களில் ஆண்ணிர் வழிந்தது. தெரு வண்டிகளின் நீல வெளிச்சம் அவனது கண்ணிரில் பிரதிபலித்தது எனக்கு நன்றாக ஞாபகம் வருகிறது. எவ்வித சிந்தனையுமற்றவளாய் நான் கூறியபடி பணிந்து நடக்க வேண்டிய நிலை எற்பட்டது.

117
வண்டியை வேகமாக கோர்லாவை நோக்கி ஒட்டிச் சென்றேன். போகும் வழிநெடுக, சந்து வழியாக நுழைந்த காற்றின் உறுமல் காதில் விழுந்தது. வீதிகளே நெட்டுக் குத்தாய் நின்று எங்கள் முகத்தில் விழுவதுபோல இருந்த இருபக்கமும் கருமையின் நிழல் பளிச்சிட்டன. வேறு எந்த வண்டியும் அந்நேரம் ஒட்டமில்லை. அதி வேகமாகச் சென்ற என்னை நிறுத்தவும் ஆளே இல்லை. இந்த மாதிரி நான் ஒட்டியதே கிடையாது. முன் வண்டி உருளை தட்டுத் தடுமாறி எந்த நிமிடத்தில் சுழன்று பறந்துவிடுமோ என்பது போலிருந்தது. எங்கே கை நழுவிப் போய்விடுமோ என்று நான் நிரம்பப் பயந்தேன்.
போஸ்டர் ஏரியைக் கடந்து கோஸ்கி ஆற்றுக் கரையை அடைந்தோம். வண்டியின் ரேடியேட்டரில் தண்ணிர் கொதித்தது. ஒட்டக்குதிரை சீறுவதுபோல் சீறியது. நான் வெளியே குதித்து "கவலைப்படாதே, கவலைப்படாதே, கோர்லாவைக் கிட்டிவிட்டோம்" என்றேன். சுத்தியல் ஒன்றை எடுத்து பனிக்கட்டித் துண்டை உடைத்துத் துண்டு களை ரேடியேட்டர் மேல் போட்டேன்.
இந்த ஆளரவமற்ற இடத்திலே வண்டியை நிறுத்திய தால் அப்பெண் மீண்டும் அச்சம் கொண்டாள், எனத் தோன்றியது. அவள் வண்டியில் அமர்ந்தபடியே குழந்தையை அணைத்துக் கொண்டிருந்தாள். வண்டி வெளிச்சத்தை நான் அணைக்கவில்லை. எனது வேலைகளை யும் கூடியவரை அவளுக்குத் தொலைவாகவே இருந்து புரிந்தேன். மீண்டும் வண்டிக்குள் ஏறியதும் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டவாறு முதன்முதலில் நம்பிக்கை தோன்றிய குரலில் *" கோர்லாவில் டாக்டர் நமக்குக் கிடைப்பாரா?* என்று கேட்கத் தொடங்கினாள். கிடைக்குமென அவளிடம் கூறினேன்.
8 سس--_2

Page 61
118
நண்பரே, ஒருவரின் நம்பிக்கையை நாம் பெற்று விட்டால் ஒடியாடிச் செயல் புரியத் துணிச்சல் தோன்று கிறது. மருத்துவர் கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டிருந் தாலும் அவரை இழுத்துக்கூட வந்துவிடலாம் போலிருந்தது.
கோர்லாவை அடைந்ததும் விடிந்து விட்டது. நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை நேரே மருத்துவர் வீட்டிற்கே சென்று கதவைத் தட்டினேன்.
"யார் அது? யார் அது?" என்று நாங்கள் சிறிது நேரம் தட்டிய பின்னர் அடைத்த குரலில் கேட்டார்.
• நான்தான், என்ன மறந்து விட்டீர்களா" என்று கத்தினேன்.
மருத்துவர் சிச்சுவானிலிருந்து வந்தவர். சென்ற ஆண்டு அவர் வீட்டிலிருந்து அவர் திரும்பி வரும்பொழுது பெட்டிகள், கூடைகள், தளவாடங்கள் என்று ஏகப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்திருந்தார். தாகேயன் நடுவே அகப்பட்டுக் கொண்டார். ஏற்றிச் செல்ல வாகனம் கிடைக்கவில்லை. மழை மூட்டம் வேறு கண்டிருந்தது. ஆள் தடுமாறிக் கொண்டிருந்தார். நான்தான் அவர் சாமான்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு வந்து சேர்த் தேன். அவர் மிகமிக நன்றி பாராட்டினார். எனக்கு வெகுமதி கொடுக்க முனைந்தார். நான் எதையும் ஏற்க வில்லை. பதிலாக அவர் எப்பொழுதாவது ஏதும் எனக்குத் தேவைப்பட்டால் உதவி செய்வதாகக் கூறியிருந் தார். எதுவித அட்டியில்லை எனக் கூறியிருந்தார். எனவே இம்முறை அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.
அவர் கதவைத் திறந்தவாறு தூக்கக் குரலில் 'இது யாருடைய குழந்தை? உன்னுடையதா?" என்றுகேட்டார்.
வண்டியிலிருந்த பெண்ணைத் திரும்பிப் பார்த்தவாறே
**ஆமாம், என்னுடையதுதான். சீக்கிரப்படுத்துங்கள்" என்றேன்.

119
அவர் தன் விழிப்பைச் சரிப்படுத்திக் கொண்டபின் மருத்துவமனையில் கடமை புரியும் மருத்துவரையும், தாதி, மருந்து கொடுப்பவர் ஆகியவர்களை எல்லாம் திரட்டி தாயையும் மகனையும் மருத்துவமனை அறையில் சேர்த்தார்.
என்னால் செய்ய முடிந்தது அவ்வளவே. வண்டியை 'இரண்டாம் விடுதிக்'குச் செலுத்தி வண்டியின் நீரை யெல்லாம் அகற்றி, ஒரு அறையைப் பிடித்துத் தூங்கத் தொடங்கினேன் தெருவில் வெளிச்சம் தோன்றியதும் அக்சு நோக்கிச் சென்றேன்.
ஒரு கிழமை கழிந்த பின்னர் காஷியிலிருந்து திரும்பும் போது ஏதோ எனக்குத் தோன்றியது, எனக்குத் தொடர் பில்லா விட்டாலும், மருத்துவருக்கு நன்றியையாவது செலுத்துவது எனது கடமை எனத் தோன்றியது. பிரசித்த மான அக்சு பகுதியின் அரிசி மது ஐம்பது ஜின்கள் எடுத்துச் சென்றேன்.
என்னைக் கண்ணுற்றதுமே அந்தக் குட்டையான மருத்துவர் என்னை நோக்கி விரலை ஆட்டியவாறு சிரித் தார். "என்ன காரியம் செய்தாய்? அந்த ஷாங்காய்ப் பெண் உனக்கு அறிமுகமில்லை என்று கூறுகிறாள். நீயோ பிள்ளைக்குத் தகப்பன் என்கிறாய். நீ உண்மை கூற வில்லை. நேற்று இரவு உன்னால் நான் நன்றாகவும் தூங்க முடியவில்லை" என்றார்.
நான் அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டுக்
கொண்டு குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.
'மருத்துவர் சிரித்தவாறே 'உன்னுடைய குழந்தை சுகமாக இருக்கிறது. நாளை மருத்துவமனையை விட்டுப் போகலாம்" " என்றார்.

Page 62
20
வண்டிச் சாமான்களையெல்லாம் இறக்கிய பின், மாலையில் எனக்கும் வேலை ஏதும் இருக்கவில்லை. தங்கு விடுதியில் உள்ள மக்கள் புக்கின் வயலினை மீட்டி ** புரட்சி மாதிரி இசை நாடக’ப் பாடல்களையும் பாடிக் கொண்டி ருந்தார்கள். எனது மனது புக்கின் இசைக்கருவியினின்று சுருதி கூட்டப்பெறாது லயம் பெறாத நிலையினதாக இருந்தது. சரி, எப்படியாவது ஆகட்டும், அந்தக் குழந்தையையாவது பார்த்துவிட்டு வருவோமே எனத் தோன்றியது.
இரண்டு டின் உணவு வகைகளை எடுத்துக் கொண்டு மருத்துவமனை அறைக்குச் சென்றேன். உடன் என் பார்வையில் அந்தக் குழந்தை கட்டிலுக்கு அடுத்தாற் போல் அமர்ந்திருப்பது தென்பட்டது. அந்தக் குழந்தை ஆட்டமும் பாட்டுமாக மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. அவளை நான் இச்சமயம் நன்கு கவனிக்க முடிந்தது. அப் பெண்ணுக்கோ ஒரு இருபத்தி ஆறு. இருபத்தி ஏழு வயதிருக்கலாம். நீண்ட கண்கள். வெளிறிய நிறம். ஒரு வகைச் சோகத் தோற்றத்துடன் காணப்பட்டாள். குழந்தைப் பணிவிடை செய்ய குனியும்போது அவளது தோற்றம் அடக்கமான, அன்பு நிறைந்த பெண்ணைக் காட்டியது. எனது கையைப் பிடித்துக் கத்திய சினத் தோற்றத்திற்கு மாறுபட்டதாக இருந்தது.
நான் படுக்கையின் பக்கத்தே இருப்பதைக் கண்ணுற்ற தும் அவளது கண்கன் திடீரென ஒளி பெற்றன. சங்கடப் பட்டுக் கொண்டே என்னை நோக்கி 'அந்த இரவு நான் நடந்து கொண்ட முறைக்கு எப்படி மன்னிப்புக் கேட்ப தென்றே தெரியவில்லை. நான் ஆக மோசமான மனநிலை யில் அப்பொழுது இருந்ததால் அப்படி நடக்க நேர்ந்தது' எனக்கூறினாள்.
"அதை மறந்துவிடு' என்றேன். 'குழந்தைக்கு எப்படி?’’

12
"அவனுக்கு முற்றிய நிமோனியா பிடித்திருக்கிறது. சிறிது காலந்தாழ்த்தி வந்திருந்தாலும் சரிப்பட்டு வந்திருக் காது என மருத்துவர் கூறினார். அன்றிரவு உங்கள் பெருந் தன்மையால்...”*
அவளது பேச்சிலே நன்றியுணர்வு நிறைந்திருந்தது. கண்களும் கலங்கி இருந்தன. எனக்கு மனச் சங்கடமாக இருந்ததால் தலையைத் தாழ்த்திக் குழந்தையுடன் விளை யாடிக் கொண்டிருந்தேன்.
இச்சிறுவன் நிச்சயமாக ஷாங்கையில் வளர்க்கப் பட்டவன் போல் தோற்றமளித்தான் அவன் பேச்சிலும் ஷாங்கை வழக்குத் தென்பட்டது. அவனது தோலும் அவனது தாயினது போல மென்மையான பழுப்புத் தோற்றமளித்தது, கொஞ்ச நேரம் விளையாடியதும் அவனைப் பார்த்து நான் கேட்டேன், "நீ பெரியவனாக ஆனதும் என்ன செய்ய விரும்புகிறாய்?"
குழந்தையும் தட்டுத் தடுமாறிக் கொண்டே கூறத் தொடங்கினான். "என் அம்மா-என்னைப்-பெரியவ னானதும்-மாமா மாதிரி-டிரைவராக-கூறினாள்'
அப்பொழுது எனக்கு ஏதோ காடியை முகர்ந்தது போல, கண்களிலே கண்ணீர் பெருகியது. தரையில் அவை சொட்டாமல் இருப்பதற்காகத் தலையைத் திருப்பித் பெரிதாக நகைக்க முயன்றேன். அந்தக் குழந்தையின் சொற்கள் எந்தப் பரிசையும் பாராட்டையும் மிஞ்சியதாக இருந்தது. எனது உள்ளத்தை மிருதுவான கரம் வருடுவது போன்ற உணர்வு தோன்றியது. எனது தொண்டைக்குள் அவை திணிக்கப்பட்டு வாய் பேச முடியாது செய்தது.
பையன் தன் விரலை என்னுடையதில் பின்னியவாறே அது இது பற்றிக் கேட்கத் தொடங்கினான். ஏதோ எனக்கு வாய்க்கு வந்ததை அவனைக் குறித்த கடமை உணர்ச்சி கொண்ட ஒர் அக்கறையும் எனது மகனைப்

Page 63
22
போன்ற பாச உணர்ச்சியும் தோன்றப் பதில் கூறினேன். அவனது எதிர்காலம் எப்படி அமையும்? ஹ"வாங்வு ததிக் கரையோரப் பெரிய நகரத்திலிருந்து வந்த இவன் எண்ணெயை விடத் தண்ணிர் அரிதாக உள்ள இந்தக் கோபய் பாலைவனத்துப் பகுதியில் எப்படிச் சமாளிக்க முடிகிறது என எண்ணினேன். ஷாங்காயில் படித்த கூட்டத் தினரின் வாழ்க்கைப் போக்கை நான் அறிவேன். சிஞ்ஜியாங் தென் பகுதியிலிருந்து இங்கு வந்த முதல் பகுதி யினர் எங்கள் பாரப் பேருந்து வண்டி வரிசையில் வந்திருக் கிறார்கள். எல்லோருமே பதினேழு, பதினெட்டு வயதினர் கள். வண்டிக்கு மேலே ஒரு செங்கொடியைப் பறக்க விட்டு பாட்டுடனும் சிரிப்புடனும் இருந்தனர். தரையில் காரல் மண்சொட்டல் பகுதியைப் பார்த்து இந்தப் பகுதியில் கோடை காலத்தில் பணி கொட்டுகிறது என நினைத்துக் கொண்டார்கள். அடுத்த ஆண்டில் அவர்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது என் வண்டியில் அமர்ந்து அழுது கொண்டே போனார்கள். ஏழு, எட்டு ஆண்டுகள் கடந்த பின்னர் இந்த "படித்த இளைஞர்கள்' இளமையுடன் இருக்கவில்லை. இந்தப் பெண்ணைப் போல் எல்லோர் பார்வையிலும் "கிழட்டுப் பையனாக' கருதப்பட்டனர். இருப்பினும் பூமியில் குடைந்த குடிசைகளில் தங்கி, உப்பிட்ட காய்கறிகளை உண்டு, பீப்பாயிலிருந்து தண்ணீரைக் குடித்து வாழ நேர்ந்தது.
இந்த விவகாரத்தையெல்லாம் பத்திரிகையாளர் களாகிய உங்களுக்கு நான் கூற வேண்டியதில்லை. உங்க ளுக்கு என்னைவிட நன்றாகத் தெரியுமே, அந்தக் கால கட்டத்தில் "நான்கு கொள்ளையர் கூட்டம்" என ஒன்று இருந்ததா என்பதையும், அந்த "நான்கு கொள்ளையர் கூட்டம்' வாழ்ந்ததா என்ற கதையையும் அறிய மாட்டேன். ஏதோ விவகாரங்கள் எப்பொழுதும் ஓடிக் கொண்டிருந்தபடியே போகும் என்ற வகையில் அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையும் ஏறக்குறைய நிர்ணயிக்க முடியுமென எண்ணினேன்.

123
"கைப்பு ஊற்றுக்கு போக வேண்டுமெனக் கூறினா பல்லவா’ என அவளிடம் கேட்டேன். "நாளைக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்."
அவள் நாணத்துடன் தலை குனிந்தவாறே "நீங்கள் செல்லும் வழியில் அது இருக்கிறதா?" என்றாள். *மேலும் உங்களுக்கு நாங்கள் ஏன் தொல்லை தர வேண்டும்?";
"என் பாதையில் அது இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்?" எனக் கூறினேன். நாளைக்கு எல்லாச் சாமான்களையும் 5uUnrprrrs வைத்திருந்து பார்த்துக் கொண்டிரு, வருகிறேன்.
உன்மையைக் கூறுவதென்றால் அந்தச் சிறுவன் எனது உள்ளத்தையே தனது சிறு விரலால் வளைத்துப் பிடித்துக் கொண்டான் எனக் கூறலாம். அவனுடன் அவன் அப்பாவை யும் பார்த்து அவருடன் நட்புப்பூண்டு பின்னர் அவர்களுக்கு ஏதேனும் தொல்லை நேர்ந்தால் முடிந்தளவு உதவி செய்யலாமென எண்ணினேன்.
மறுநாள் மற்றொரு ஒட்டுனரிடம் பயணத்தை மாற்று ஏற்பாடு செய்துகொண்டேன். எனவே அந்தப் பேர்வழி பொஸ்டன் ஏரி போரைப் பாய்களை திரும்ப உரும்கிக்குக் கொணரவும் நான் தெற்கே யூரிக்கு உரம் ஏற்றிச் செல்வதென ஏற்பாடு.
நான் மருத்துவ மனைக்குச் சென்றபொழுது அவர்கள் தங்கள் பொருள்களையெல்லால் எடுத்துத் தயாராகக் காத்திருந்தனர். அவள் அந்தக் கம்பளிச் சால்வையைப் போர்த்திக் கொண்டு முகமலர்ச்சியுடன் கண்கள் சுடர்விட இருந்தாள். பையன் கையை நீட்டி என்னைத் தூக்கிக் கொள்ளும்படி சமிக்ஞை செய்தான். நான் தூக்கிக் கொண்டேன். அவன் திரும்பிப் பார்த்து தாதிகளிடம் *வணக்கம் மாமி’ என்றான். அன்று என்ன அற்புதமான

Page 64
124
ஒளிமிக்க நாள் என்கிறீர்கள்! என் வாழ்க்கையில் அன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். ஏதோ என் மனைவியும் பிள்ளையையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்ற உணர்வு.
வழிப் பயணத்திலும் சிறுவன் மிகவும் சூட்டிகையாக இருந்தான். மற்றைய குழந்தைகளைப் போலவே கியர் தடியைத் தொடுவதும், முகப்பைத் தொடுவதுவாக இருந் தான். அதற்கு முன் பெரும் பேருந்துகளில் சென்றதில்லை பாகையால் எல்லாம் அவனுக்குப் புதுமையாக இருந்தது. அவன் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தான். எனது சிறுவண்டி முதன்முறையாக நிறைந்து உயிர் பெற்றது போலிருந்தது. நானும் அந்தக் குழந்தையைப் போலா னேன். முதன்முறையாக ஏதோ நான் அன்றாடம் தொட் டதெல்லாவற்றிலும் ஒரு நிறைவு பெற்ற இன்ப உணர்வு தோன்றியது. அன்றைய நாள் வண்டியந்திரமும் மகிழ்ச்சி யுடன் பாடிக்கொண்டு ஓடுவது போலிருந்தது. அமர்ந் திருந்த கடின இருக்கைகூட குதித்தாடுகின்ற வில்லுப் போல இருந்தது.
ஒரு பத்து மணியளவில் குங்கே போய்ச் சேர்ந்தோம். உரத்தை இறக்கிய பின்னர் சிறிது பன் ரொட்டிகளை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறியதும் கூறினேன்.
"சரி, வாருங்கள், கைப்பு ஊற்றுக்குச் செல்லுவோம்!'"
நீங்கள் அந்தப் பாதை வழி எப்பொழுதாவது பயணம் செய்திருக்கிறீர்களோ என்னமோ தெரியாது? அது மெதுவாக தரிம் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இறங்கித்தக்லமா கன் பாலைவன எல்லைவரை செல்லும். பெரும்பாலும் அது மணல் மூடியே இருக்கும். மற்ற வண்டிகள் பதித்த தடங்களைக் கொண்டுதான் அதை ஒரு பாதை எனப் புரிந்து கொள்ளலாம். அந்தப் பகுதி இடங்களில் நிறையத் தண்ணீர் வசதி இருக்குமென நம்பி விடாதீர்கள். ஆனால்

125
நிலைமை அதற்கு மாறானது. தண்ணிர் தட்டுப்பாடுதான் இத்தகைய பெயர் சூட்டப்பட்டதற்குக் காரணம்.
எனவே, மேலும் மேலும் இப்பாதையில் செல்லும் பொழுது வறட்சி அதிகமாக உள்ளதை நீங்கள் எண்ணிப் பார்க்கலாம். தொடக்கத்தில் ஓரிரு பொப்லார் மரங்கள்ை யும் வில்லோ மரங்களையும் இன்னும் காணலாம், காற்று வீசத் தொடங்கியதும் ஜன்னலுக்குப் பின் மஞ்சல் மணல் தான். வண்டி மேக மண்டலத்துக்குள் மூழ்கியது போல ஒன்றுமே கண்ணுக்குப் புலப்படாது.
நாங்கள் மெதுவாகவே சென்றோம். குழந்தைக்குச் சலிப்புத் தோன்றியிருக்கும். அம்மாவின் கரங்களில் துயின்று விட்டான். அவனது முகத்தில் தோன்றிய புன்னகை மறைந்தது.
"இதோ பார், பையனுக்கு நல்ல வசதி செய்து தருவோம்" என்றேன்.
வண்டியை நிறுத்தி இருக்கைகட்குப் பின்னுள்ள காலி இடத்தில் படுக்கை வசதிசெய்து கொடுத்தேன். அதற்குள் படுத்தால் தொட்டிலில் தூங்குவது போல் இருக்கும். அவன் என் பின்னால் சுகமாகக் குறட்டை விட்டுத் தூங்கினான். அவனது சிறு மூச்சுகள் எனது கழுத்தைக் கிச்சிட்டன. அது எவ்வளவு இதமாக இருந்தது என்பதை உங்களிடம் கூற முடியவில்லை.
அந்த எல்லையற்ற மஞ்சள் மணற் பரப்பிலே எங்களது வண்டி ஒரு சின்னஞ் சிறிய பிராணி போல் நகர்ந்து செல்வது போல் போயிற்று. வெளியே ஏதோவொரு கண்ணுக்குப் புலனாகாத சக்தி இயங்கி உள்ளே உள்ள அனைவரையும் ஒருவருக்கொருவர் நெருங்கும் உணர்வை உண்டாக்கியது. நாங்கள் போய்க் கொண்டிருக்கும் பொழுதே அவள் இலேசாக பெருமூச்சு விட்டவாறு என்னிடம் கூறினாள்.

Page 65
126
"இதோ பாருங்கள், இந்த இடத்திற்குத்தான் நான் போக வேண்டும் என்று கூறினேன்.""
உண்மைதான். அது பார்வைக்கு அவ்வளவு நல்ல இடமாக இருக்கவில்லை. நான் கேட்டேன், "அவனின் அப்பா விஷயம் என்ன? உன்னை அழைத்துச் செல்ல திக்கான்லிக் வருவாரா?"
பதில் கூற மிகவும் நேரமாயிற்று. முடிவாக அவள் கூறினாள், 'அவனுக்கு அப்பா இல்லை."
'ஓ' எனக்கு ஆக்சரியமாகவும், எதிர்பாராத வகை யில் சிறிது மகிழ்ச்சியாகவும் இருந்தது. "அப்புறம்.என்ன நடந்தது?’’
அவள் என்னை நோக்கி ஒரு வரண்ட புன்னகையுடன் முகம் சுருங்கியவாறு ‘இது குறித்து எங்கள் குடும்பத்தின ருக்கு எதுவுமே தெரியாது.இருப்பினும் இது குறித்து யாருக்காவது எடுத்துக்கூற விரும்பினேன். இதை மனதிலிருந்து இறக்கா விட்டால் ஏதோ நெஞ்சை அழுத்திக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.'
அவள் ஒரு முதலாளித்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். 1964இல் இடைநிலைப் பள்ளியில் தேர்வு பெற்றதும் பள்ளி -யில் உள்ள அனைவரும் தப்பும் தம்பட்டையும் அடித்தவாறு ஊர்வலமாக ரயில் வண்டி நிலையத்திற்கு வழியனுப்பி வைக்கச் சென்றனர். சிஞ்ஜியாங்கிற்கு அவள் வந்தடைந் ததும் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அந்த எல்லைப் புறப் பகுதியை சீரமைக்கவுமாகும். ஆயினும் 67இல் 'எதிர்ப்பினர்' குழுவில் ஒன்று அந்த அமைப்பைக் கைப்பற்றியதும் அவள் கூட்டத்தினருடன் உடல் உழைப்புப் பணிபுரிய அனுப்பப்பட்டாள். அதற்குப் பின்னர் அவள் மேலும் மேலும் புறக்கணிக்கப்பட்டாள். ஒரு நாள் இந்த "எதிர்ப்பினர்" குழுவுக்குத் தளபதியென்பவன் திடீரென அவள் சீர்திருந்தியதாக முடிவு செய்தான். அவளைத்

127
துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு தன்னுடன் மேய்ச் சல் வெளிக்கு மான் சுட வரும்படி கூறினான். குழுவினர் உணவில் இது சிறப்பு ஏற்படுத்த ஒவ்வொரு கிழமையும் வேட்டையாடுவதற்கென்று சிலர் குழுவில் இருந்தனர். ஆயுதப் பயிற்சியுடைய நம்பிக்கையான குடும்பத்தைச் சோந்தவர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே துப்பாக்கிகள் ஏந்த உரிமை பெற்றிருந்தனர். அந்தச் சமயத்தில் அந்த ஏழை விவசாயிகளால், தான் "மறு படிப்பு அளிக்கப்பட்டதாக எண்ணி அளவற்ற மகிழ்ச்சி கொண்டாள். இந்த "இளம் தளபதி' அக்கூட்டத்தின ரிடமிருந்து வேறுபடுத்தி அழைத்துச் சென்று வில்லோ மரக் காட்டில் கற்பழித்து விட்டான். அதற்குப் பின் சில மாதங் கள் கழிந்த பின்தான் கருவுற்றிருப்பதாக உணர்ந்தாள். ஆயினும் இது குறித்து யாரிடமும் முறையிடவும் முடிய வில்லை. கருச்சிசிைவு செய்யவும் வாய்க்கவில்லை. அவள் செய்ய முடிந்ததெல்லாம் ஷாங்காய்க்குத் திரும்பிச் சென்று குழந்தையைப் பெற்றதுதான். நான் சிஞ்ஜியாங்கில் மணமுடித்ததாகப் பெற்றோரிடம் பொய் கூறியதால் அவர் களும் இது குறித்துக் கலவரமடையவில்லை. சிறிது காலத் துக்கு முன்வரை குழந்தையைத் தன் பெற்றோருடன் விட்டி ருக்கிறாள், அவர்களுக்கும் பல தொல்லைகள் தோன்றி யிருந்தன. "லின் பியாவ், கன்பூஷியஸ் விமர்சனம்" 'செஞ் சூறாவளி" இயக்கங்கள் ஷாங்கையையும் தாக்கின அவளது பெற்றோர்கள் வீட்டினின்று வெளியேற்றப்பட்டு நாட்டுப்புறத்திற்கு உடலுழைப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவள் அவர்களுக்கு மேலும் சுமையை அளிக்க விரும்பவில்லை. குழந்தையைத் திரும்பவும் சிங்ஜியாங்கிற்கு அழைத்து வந்தாள்.
**நான் அவனை 'நன்றாக வளர்க்க விரும்புகிறேன்" என்று கூறினாள்.
"அவன் ஒரு பாவமும் செய்யவில்லை.எனது பள்ளிக் கூட சகாக்கள் அவனை விட்டுவிட்டு வரும்படி கூறினார்கள்.

Page 66
28
ஆனால் நான் அழைத்தே வந்தேன். நான் பலவித இன்னல் களுக்கு" ஆட்பட்டேன். என்னைப் பொறுத்தவரையில் இன்னும் மோசமாக நடப்பதற்கு ஒன்றுமில்லை.
"அந்த அயோக்கியன் இப்பொழுது எங்கிருக்கிறான்?" என்று ஆத்திரத்துடன் கேட்டேன். அவள் அன்று இரவு குன்றியிருந்ததன் காரணத்தை அப்பொழுதுதான் என்னால் உணர முடிந்தது. V
அவள் கசப்பு நிறைந்த கிண்டல் சிரிப்புடன் 'அவன் தானாகவே மற்றொரு குழுவிற்கு பாதுகாப்புத் தலைவ னாக மாற்றல் வாங்கிக் கொண்டான்' என்றாள்.
வாழ்க்கை அப்படித்தான். தனக்கு அறிமுகமாகாத பேர்களிடம் தன் ரகஸ்யங்களைக் கூறத் தோன்றும். முன் பின்னறியாத உங்களிடம் நான் கூறுவது போல. அவளும் அவளது உள்ளந்தரங்களை எத்தகைய உணர்ச்சியுமின்றி வேறு யார் பற்றியோ கூறுவது போல் தெரிவித்தாள். எனக்கு இவற்றையெல்லாம் தெரிவித்தாள் ஏதோ தன்னிச் சையாக அவள் கூறியதைத் தவிர, எனது அனுதாபத்தைப் பெறவோ அன்றி என்னிடமிருந்து மேற்கொண்டு எதுவும் உதவிகளைப் பெறவோ இங்ங்ணம் கூறியவளல்ல. அவளது பழைய நிகழ்ச்சிகளைக் கூறி, இன்னும் வரவிருக்கும் இதை விடப் பெரிய சிக்கலான பிரச்சினைகளைச் சமாளிக்கும் திடத்தைப் பெறுவதற்காகக் கூறினாள், அவள் கூறிய முறை அவ்வாறாகத்தான் இருந்தது.
நான் அவளை நோக்கினேன். அவள் ஆழ்ந்த சிந்தனை யிலிருந்தாள். அன்று இரவு இருந்தது போல் கண்களில் நீர் நிறைந்தபடி இருக்கவில்லை அவள் எதைச் செய்வதாகக் கூறினாளோ அதைச் செய்தே தீரக் கூடிய தன்மையுடைய வளென நம்பினேன். அவளது கண்களின் தோற்றத்தில் இப்போதைய நிலைமையைவிட இன்னும் மோசமாசமாகப் போவதற்கில்லை என்பதை அவள் கண்கள் உண்ர்த்தின.

129
பொதுவாக இது காரணமாகவும், அவள் மீதுள்ள பெருமதிப்பு அனுதாபம் காரணமாகவும் அக்கறையுடன் கேட்டேன்: 'நீ திருமணம் செய்து கொண்டால் என்ன?"
அவள் தன் பகுதியில் மேற்கொண்டும் மணமாகாத ஷாங்காய் இளைஞர்கள் இல்லையெனவும், தான் மற்றப் பகுதியிலுள்ளவர்களை மணக்க விரும்பவில்லை எனவும் மற்றைய ஷாங்காய் பெண்கள் பிறத்தியில் செய்திருந் தாலும் தனக்கு விருப்பமில்லை என்றாள். காரணம் பிற பகுதியினரை மணந்தால் ஷாங்காய்க்குத் திரும்பிச் செல்ல முடியாது போய்விடும் என்ற காரணம் தான் எனக் கூறினாள்.
எனவே நானும் தைரியமாக அவளிடம், 'நானும் கிழக்குப் பகுதிலிருந்து வந்தவன் தான். எனது அனுபவத் தில் வாழ்க்கையை ஒருவன் நடத்திச் செல்வது ஒருவன் எங்கிருக்கிறான் என்பதைப் பொறுத்ததல்ல, யாருடன் நடத்துகிறான் என்பதைப் பொறுத்துத்தான்’ எனக் கூறினேன்.
புன்சிரிப்புடன் அவள் கூறினாள், 'ஏதோ புதிர் மாதிரி இருக்கிறதே"
'பாகிஸ்தான் பழமொழி ஒன்றுண்டு. "பூனையைக் கண்டால் எலிக்குப் புதிர். ஆயினும் எலியைப் பொறுத்த வரை அது சரியே" என்பார்கள். மனிதர்களைப் பொறுத் தும் பல புதிர்கள் உள்ளன' எனப் பதில் கூறினேன். என்னை நோக்கிப் பெருமூச்சு விட்டவாறே அவள் நீங்கள் கூறியது உண்மையாக இருக்கலாம். ஆனால் யதார்த்தங் களுக்கும் நடைமுறைக்குமிடையே இடைவெளி இருக் கிறதே ? V−
நல்ல வேளையாக வண்டி காலியாக இருந்ததில் பாலைவனத்தில் வெய்யோன் தலைசாய்ப்பதற்கு முன்னர் கைப்பு ஊற்றை அடைந்தோம். அது ஒரு பாலைவனப்

Page 67
130
பசுந்திடல், அழகிய காட்சி நிறைந்ததாகவும் மண் வளம் மிக்கதாகவும் இருந்தது. ஆயினும் ஒரு வகை மக்கள் அதனைச் சீர்குலைத்திருந்தார்கள், அவளை வரவேற்க வந்த ஷாங்காய் படித்த இளைஞர்கள் குறைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். **அமெரிக்கப் படைவீரன்" என்று அவர்கள் அழைக்கும் கழுத்து நீண்ட ஒருவன் என் தோளைத் தட்டியவாறு 'உங்களுக்கு மிக்க நன்றி ஐயா! ஷாங்காயாக இருந்திருந்தால் உங்களை "லாவ்ஷெங்ஜிஸ்" கிற்கு அழைத்துச் சென்றிருப்போம். மேலை நாட்டு உண்வு 616ð}65ð56ð6ss விரும்பியிருந்தால் *ஹொஸ்பாஸ்டி”க்குக் கூட்டிச் சென்றிருப்போம். ஆனால் இங்கே "" கைகளை மேலே காட்டியவாறு தன்னால் ஒன்றும் செயலாற்றக் கூடாமலிருப்பதை உணர்த்தினான்.
நான் தங்கினால் அவர்களுக்கு மேலும் அசெளகரிய மாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். சாப்பிடுவதற்கும் அங்கு வசதியில்லை. தங்குவதற்கு இடமுமில்லை. அவள் அப்பொழுது தான் திரும்பியதால் பொருள்களைச் சரி செய்வதற்கே சரியாக இருந்தது. "நான் திகான்லிக்கிற்குத் திரும்புகின்றேன்' என்று கூறினேன். 'எனக்கு அங்கு சில வேலைகள் இருக்கின்றன. உனக்கும் சிரமம் கொடுக்க இஷ்டமில்லை"
குழந்தை என்னை நோக்கி ஓடி வந்து என் ைேகயைப் பிடித்தவாறு கூறினான் : "நீங்களும் இங்கு தங்குங்கள், நான் உங்களைப் போகவிடமாட்டேன்"
நான் தரையில் அமர்ந்து அவன் தலையில் தட்டிக் கொடுத்தவாறே கூறினேன், "மாமா அங்கே போய் மீண்டும் ஒரு பாரம் ஏற்றிவரவிருக்கிறது. நான் ஏற்றி வர நிரம்ப சாமான்கள் இருக்கின்றன. நீ நல்ல பிள்ளையாக அம்மாவுடன் கூட இரு'
தலையை ஒரு பக்கமாகச் சாய்த்தவாறே சிறிது சிந்தித்த பின் கூறினான், "நீங்கள் திரும்பி வருவீர்களா?"

13
நான் "திரும்பி வருவேன்" என்றேன். 'மாமா உங்கள் வண்டியைத் திருப்பி ஒட்டிக் கொண்டு வருவீர்களா?" "ஆமாம், வண்டிைைத் திரும்பி வரும்போது ஒட்டிக் கொண்டு வருவேன்". "நிச்சயமா?' 'நிச்சயமாக'
அவள் குழந்தைக்குப் பக்கத்தில் நின்றாள். நான் நின்றவாறே பையனிடம் ‘நான் திரும்பி வருகிறேன்" என்று கூறினேன்.
உரும்கிக்கு நான் திரும்பி வந்ததும் அவளது அந்தக் குழந்தையதும் உருவம் என் உள்ளத்திலேயே இருந்தது நான் எவ்வளவு முயன்றும் அதனை அகற்ற முடிய வில்லை. கைப்பு ஊற்றில் எனது உள்ளத்தை வைத்து விட்டு வந்தது போல் ஒரு உணர்ச்சி தோன்றியது. எனக்கு ஒட்டப் பயிற்சியளித்த எனது பழைய ஆசிரியர் திரும்பி வந்ததும் அவர் வீட்டிற்குச் சென்று எல்லாக் கதையையும் கூறி எனது உள்ளப் போக்கையும் விளக்கினேன். "அது சரி" என மேஜையில் ஓங்கிக் குத்தியவாறு கூறினார். "அவள் பின்னால் நீ பேர் காவிட்டால், வேறு எவள் பின்னால்தான் போகப் போகிறாய்?"
விஷேச விடுமுறை உணவுகள் ஒரு தொகை வாங்கிய துடன் வெளிப்பகுதி சென்று விளையாட்டுக் கார்கள் நிறைய வாங்கி ஒரு நண்பரின் வண்டியில் சவாரி பெற்று புத்தாண்டு மாலை திகான்லிக் அடைந்தேன். காற்றையும் கொட்டும் பணியையும் எதிர்த்து கைப்பு ஊற்று ஊருக்கு சென்று அவளின் வீட்டுக் கதவைத் திறந்தேன், அந்த ஷாங்கைவாசிகள் தங்கள் புத்தாண்டு விழா இரவு உணவை அருந்திக் கொண்டிருந்த பொழுது. M
சிறிது காலத்திற்குப் பின் அவள் என்னிடம் "நீங்கள் ஏன் என்னைக் காதலித்தீர்கள்" எனக் கேட்டாள்.
"காதல் என்பதை விளக்க முடியாது என நான் எப்பொழுதும் எண்ணுவது உண்டு' எனப் பதிலளித்தேன்.

Page 68
32
எனக்கு "பிங்ஜ" இசை நாடகம் பிடிக்கும். ஆயினும் அதில் லியு கியவ்வின் ஒரு வரி எனக்குப் பிடிக்காது. அது "நான் அவரைக் காதலிக்கிறேன், அவருக்குக் கணக்குக் கூட்ட, வேலை செய்யத் தெரியும், வீடு வந்தால் எனக் கொரு ஆசிரியராக அவர் ஆகலாம்" என்பதைப் போன்ற வரி. காதலை இங்ங்ணம் ஒரு பண்டமாக எப்படிக் கணிப்பது? உன்னிடம் உண்மையைக் கூறுவதற்கென்ன, நான் இதற்கு முன் மணமானவன்." அவளிடம் நான் எல்லாவற்றையும் ஒளிக்காது கூறிவிட்டேன்.
அந்த வடக்கு ஷாங்ஷிப் பெண்ணிடமுள்ள தொடர்பு அனைத்தையும் கூறி விட்டேன். நான் கூறினேன். 'ஆய்ந்து பார்த்தால் அந்த வடக்கு ஷான்ஷிப் பயலைவிட நான் எந்த வகையில் குறைச்சல்? அவனைவிட உயர்வான நிலையிலே இருந்தேன். இருந்தும் அந்தப் பெண் ஏனோ என்னைக் காதலிக்கவில்லை. பதில் அவனுடன் துயர வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள தயாராக இருந்தாள். பாதி குடிலும் பாதி குகையுமான அந்த வீட்டில் வசித்தார்கள். கோடைக் காலக் கதிரவன் அவர்கள் முகத்தின் தோலைப் பொசுக்கும் அளவு தகித்தாலும் செங்கல்லைச் சுட்டு குளிர் காலத்தில் தங்கள் விரல்கள் தேயும்வரை தீப்பெட்டி செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். ஏன்? இது எனக்குப் புதிராக இருந்தது. இப்பொழுது புரிகிறது. அதுதான் காதல். அந்த வடக்கு ஷான்ஷிப் பெண் அவளது பையன் மேல் எத்தகைய பற்று வைத்திருந்தாளோ அத்தகைய அன்பை உன்மீது நான் வைத்திருக்கிறேன். நீயோ என்னை ஏன் என்று கேட்கிறாய்."
அவள் கண் சிவக்கக் கூறியவற்றைக் கேட்டு தலை யசைத்தவாறு 'எனக்கு ஒருவாறு புரிகிறதென்று நினைக் கிறேன்.”* ܖ
அது போகட்டும், நீங்கள் இறங்க வேண்டிய இடம் அதோ எதிரே நெருங்கி விட்டது, நீங்கள். எங்கே இறங்க

显33
வேண்டும்..? அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டு வாசலிலேயே இறக்கி விடுகிறேன்.'
இப்பொழுது? ஒ இப்பொழுதோ, எல்லாமே நன்றாக இருக்கிறது. அவள் கைப்பு ஊற்று இடைநிலைப் பள்ளியின் உப அதிபராகப் பணி புரிகிறாள். நானா? எனக்குச் சிறிது சலுகை காட்டி இந்த ஒரே மார்க்கத்தில் ஒட்ட அனுமதி தந்துள்ளார்கள். குளிர்கால, கோடைக்கால விடுமுறைக் காலங்களில் உரும்கி வருவார்கள்.
நான் கிழமைக்கு ஒருமுறை வீடு செல்கிறேன். பையன் இடைநிலைப் பள்ளிக்குச் செல்கிறான். இப்பொழுதெல்லாம் அவனுக்கு ஒட்டுனர் தொழிலில் பிடிப்பில்லை. அவன்
எழுத்தாளனாகப் போகிறானாம். என்னைப் பற்றியும் அவன் அம்மாவைப் பற்றியும் எழுதப் போகிறானாம். நான் கூறினேன், "உன் அம்மாவும் நானும் அப்படிப்
பெரிய வீரர்கள் அல்ல. எழுதத் தகாதவை எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை நீ எழுதினால் மக்கள் நீ வாழ்க்கையின் இருண்ட பகுதியைப் பற்றி எழுதினாய் என்று குறை கூறுவார்கள்', அதற்கு அவன் "ஆனால் அப்பா, உங்களுக்குப் புரியவில்லை. உண்மைதான் இலக்கியத்தின் அடிப்படை. நீங்களும் அம்மாவும் சரியான குடிமக்கள்!' எனவே எனது பத்திரிகையான அன்பரே, அந்தச் சிறுவன் கூறியது சரியா தவறா என்பது எனக்குப் புரியவில்லை!
சென்ற ஆண்டிற்கு முந்திய ஆண்டில் அவளது தகப்பனார் புனர்வாழ்வளிக்கப்பட்டு பழைய சம்பளங்களும் கொடுக்கப்பட்டன. என்னை மணந்திருக்காவிட்டால் அவள் ஷாங்கைக்குத் திரும்பிச் சென்றிருக்கலாம். ஒருநாள் நான் அதிகமாகக் குடித்துவிட்டு போதை ஏற்பட்ட சமயம் அவளைப் பார்த்து ‘இதோ பார், இப்பொழுது கவலைப் படுகிறாய் அல்லவா? நீ என்னை மணக்காதிருந்திருந்தால் நீ ஷாங்காய்க்குத் திரும்பிப் போயிருக்கலாமல்லவா என்று கேட்டேன்.

Page 69
134
அந்தச் சமயத்தில் அவள் ஒன்றும் பதில் கூறவில்லை அன்று இரவு அவள் என் அருகே படுக்கையில் படுத்தவாறு அழுதுகொண்டே. "நீங்கள் என்ன நினைத்து அப்படிக் கேட்டீர்கள்? நீங்கள்தானே வாழ்க்கையை, நீ எப்படி நடத்துகிறாய் என்பது நீ எங்கிருக்கிறாய் என்பதைப் பொறுத்ததல்ல, யாருடன் இருக்கிறாய் என்பதைப் பொறுத்தது என்று கூறவில்லையா?" நான் ஏன் ஷாங்காய்க்குத் திரும்பிப் போகவேண்டும். அவளிடம் நான் சிறிது பாரதூரமாகக் கேலி செய்து விட்டேன் என்பதைப் புரிந்து கொண்டு அவளைச் சிரிக்க வைப்பதற்கு ரொம்ப நேரம் நான் தாஜா செய்ய வேண்டியிருந்தது. அது தொடங்கி எனக்குத் தகுதியான அளவிற்கு மேல் மது பாவிப்பதில்லை.
"ஆம், பத்திரிகையாளரே, கைப்பு ஊற்று எனது வாழ்க்கையில் நான் சந்தித்த எல்லோரையும்விட இப்பெண் மட்டுமே கைப்பு ஊற்றைப் பருகியிருக்கும் பெரும் பொக்கிஷமாகும். கசப்பைச் சுவைத்தவர்கள், கசப்பைப் பருகியவர்கள் அனைவருமே நம் நாட்டுப் பெருநிதியங்கள், எல்லோருமே தங்க உள்ளம் படைத்தவர்கள். பத்திரிகை யாளரே, ஒத்துக் கொள்வீர்கள்தானே!


Page 70
சவுத் ஏக

Ά
字士
சியன் புக்ஸ்