கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மண்ணில் தொலைந்த மனது தேடி

Page 1


Page 2

மண்ணில் தொலைந்த LoGMTSJ Goggle.ee
கவிதைத் தொகுப்பு
FLIGESTLIGổ
登
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
Tjt!e Mannil Tholaintha Manathu Theedi... (Collection of poems) Edition December 20O4
(6) Author
|3BN:955-B637-21-1
Publia hera Theshiya Kalai Ilakkiyap Peravai
Layout & Printine Kribs
Cover Designing A. Azeez Nizardeen
Art SaSithiaran
Distributore South Asian Booke Vasantham (Pvt) Ltd. No. 44, 3rd Floor
C.C.s.M. Complex Colonbo -11.
Tel: 23618O3
Frice:Re.15O/=
நூல் மண்ணில் தொலைந்த மனது தேடி. (கவிதைத் தொகுப்பு)
பதிப்பு
டிசம்பர் 2004
பதிப்புரிமை
ஆசிரியருக்கு
அமைப்பும் அச்சும்
கிறிப்ஸ்
அட்டை வடிவமைப்பு ஏ. அளபீஸ் நிஸார்டீன் கருத்தோவியங்கள்
சசிதரன்
வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவை
விநியோகம்
சவுத் ஏசியன் புக்ஸ் வசத்தம் பிறைவேற் லிமிட்டெட் 4. மூன்றாம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி கொழும்பு - 11.
தொலைபேசி: 2361803

இந்நூல் இவர்களிற்கு
விடுதலைச் சமையலுக்கு விறகாகிப் போன
என்
முன்னவனிற்கும் அவன் போன்ற
ஆயிரமாயிரம் மானிடர்க்கும்

Page 4

சடாகோபனின் கவிதைகள்
ஈழத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தமிழ்த் தேசியவாதம் வகித்த இடம் 1970 களின் நடுவில் வேகமாக மாறியது. அது தமிழ்த் தேசியவாத அரசியலின் தலைமையின் சமூக அடையாளத்தின் மாற்றத்தையும் தேசிய இன ஒடுக்குமுறையின் தன்மையில் ஏற்பட்ட மாற்றத்தையும் அடையாளப்படுத்தியது எனலாம். எனினும் பழைய தமிழ்த் தேசியவாதத்தை ஒட்டி வளர்ந்த சில பண்புகள் இன்னமும் தொடருகின்றன.
தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட சமூக ஒடுக்கு முறைகளில் அதற்கு வெளியிலிருந்து வந்த ஒடுக்குமுறைகட்கும் அது சார்ந்த போராட்டங்களையொட்டிய அரசியல் முரண்பாடுகளுமே தமிழ்த் தேசியவாதத்தின் அக்கறைக்குரியனவாக இருந்தன. தமிழ்ச் சமூகத்தின் உள்ளிருக்கும் ஒடுக்குமுறைகள் பற்றிய அக்கறைகள் இடதுசாரி முனைப்புடையவர்களாலேயே முதன்மைப்படுத்தப்பட்டன. இன்னும் இந்தப் போக்குக்கள் தொடர்வதை ஈழத் தமிழ்ப்
படைப்பிலக்கியம் அடையாளங் காட்டுகிறது.
1983இற்குப் பிறகு படுவேகமாக மோசமான தேசிய இன முரண்பாடு வடக்குக்கிழக்கில் ஒரு போர்ச் சூழலாக மாறிய காலத்தில் தேசிய இன ஒடுக்குமுறையும் அதற்கெதிரான விடுதலை போராட்டமுமே படைப்பிலக்கியத்தின் பிரதான
மையப் பொருளாகியதில் வியப்பில்லை.

Page 5
6 F-Irés=m_eSr 56aం956*T
தமிழகத்து இலக்கியப் பீடங்களின் மடாதிபதிகள் சிலர் கற்பனை செய்வது போலன்றி இலங்கைப் படைப்பாளிகளது கவனம் நாவலை விடச் சிறுகதையிலும் சிறுகதையை விடக் கவிதையிலும் அதிகம் குவிந்ததற்குப் படைப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட காரணங்களே அதிகம். ஒரு படைப்பு வாசகர்களை எட்டுவதற்கான வாய்ப்பும் எவ்வாறான வாசகர்கட்காக அது ஆக்கப்படுகிறது என்பதும் அதன் வடிவம் பற்றிய முடிவுக்குத் தூண்டுகோலாகின்றன.
இன்று பலஸ்தீன இலக்கியத்தில் மிகவும் உலகறிந்த பகுதியாக இருப்பது கவிதையே. அங்கிருந்து வரும் சுயசரிதைப் பாங்கான பதிவுகள் புனைவுகளை விடப் பெரிதும் மெச்சப்படுவதையும் குறிப்பிடுவது தகும். எனவே ஈழத்து இலக்கியப் பதிவுகளாக இன்றைய போராட்ட யுகம், நாவல்களை விட முக்கியமாக உணர்வுகளதும் அனுபவத்தினதும் பதிவுகளாகச் சிறுகதைகளையும் கவிதைகளையுமே வற்புறுத்துவதும் நாவல்கள் குறிப்பிட்ட சில அரசியற் சிந்தனைகளை முதன்மைப்படுத்தும் பதிவுகளாக அமைவதும் எதிர்பார்க்க வேண்டியதே. இங்குதான் தூய இலக்கிய வாதத்தினதும் பக்கச் சார்பற்ற படைப்புப் பற்றிய புனைவுகள் யதார்த்தத்தை எதிர்கொள்ள இயலாது தடுமாறுகின்றன.
மேற்குறிப்பிட்ட பின்னணியிலேயே ஈழத் தமிழ்க் கவிதையின் கடந்த கால் நூற்றாண்டுக்கால வளர்ச்சியையும் புதிய கவிஞர்களின் வருகையையும் கவனிக்க வேண்டும். முஸ்லிம் கவிஞர்களது வருகைக்கும் அவர்களது படைப்புக்களின் பொதுவான தன்மைக்கும் முஸ்லிம் தேசியவாதத்தின் எழுச்சியின் பங்கும் வேறுவிதமான ஒரு அடையாளத்தையுடையனவாயினும் வடக்கு - கிழக்கின் போராட்ட அரசியலின் இன்னொரு பக்கமாகவே நாம் அதை நோக்க
வேண்டியுள்ளது.

Loafbradfa தொலைங்கத மனது தேடி. 7
வடக்குக் கிழக்கின் தமிழ்த் தேசியவாதக் கவிதையின் ஒரு பெரும்பகுதி நமக்கு எட்டும் வகையில் இல்லை. அண்மைக்காலங்களில் தெரிந்தெடுக்கப்பட்ட சில ஆக்கங்கள் நூல் வடிவு பெற்று நமக்குக் காணக் கிடைத்துள்ளன. அதே அளவுக்கு,விடுதலைப்புலிகளின் அதிகாரத்துக்குட்படாத, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வெளியான கவிதைகளிற் பல சிதறலாகவே வெளியிடப்பட்டுக் காலப்போக்கில் மறக்கப்பட்டுள்ளன. எனவே இக்கால இடைவெளியில் வெளியான கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்வடிவுபெறுவதன்மூலம் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான ஒரு திருப்புமுனை முழுமையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஈழத்தின் இன்றைய நூற்பதிப்புச் சூழல் படைப்பாளிகளை அதிகம் ஊக்குவிப்பதல்ல. வாசிப்பு நலிந்தும் நூல் வெளியீட்டில் பொருள் இழப்பு அதிகமாயும் இருக்கிற நிலையில் இளம் படைப்பாளிகளின் தனிப்பட்ட ஊக்கமே இன்று புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்கிறது. பொருள் வசதியின்மையால் தரமான படைப்புக்களை வெளியிடும் தேசிய கலை இலக்கியப் பேரவை உட்பட்ட சில அமைப்புக்களுடைய வெளியீட்டு முயற்சிகளும்
மந்த வேகத்திலேயே உள்ளன.
தமிழகத்திலிருந்து நூல்கள் வந்து குவிகிற வேகத்துடன் ஒப்பிடும்போது ஈழத்து நிலவரம் மிகவும் வருத்தந் தருகிறது. எனவே இவ்வரட்சியின் நடுவே வரும் படைப்புக்களை ஊக்குவிப்பதும் விமர்சனத்தின் மூலம் படைப்பின் தரத்தையும் தகுதியையும் உயர்த்துவதும் மிகவும் தேவையாயுள்ளது. சடாகோபனின் "மண்ணில் தொலைந்த மனது தேடி .”பெருமளவும் யாழ்ப்பாண மண்ணின் போர்க்கால அல்லல்கள்
பற்றிய ஒரு பதிவாகவே உள்ளது.

Page 6
8 runésirudër கவிதைகள்
அதிலே அரச அடக்குமுறைக்கும் அதிகாரத்தின் அத்துமீறல்கட்கும் எதிராக நிமிர்ந்து ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கவிஞர் வெளியேறிய பின்பும் அவரது படைப்புக்களில் தேசிய இன ஒடுக்குமுறை பற்றிய பதிவுகளே முக்கியம் பெறுகின்றன. எனினும் இந்தப் போர் சிங்கள மக்கள் மீதான ஒரு அடக்கு முறையுந்தான் என்ற தெளிவு.
"அன்னையிடம் விடைபெற்ற அன்றைய காலையில் அவளின் ஒட்டிய கன்னத்தில் ஊர்ந்த நீர்த்துளி என்னையும் நனைத்து என்பின்னே பிறந்த சின்னக்
கண்களையும் நனைத்தது
அலை நனைந்த மணற் பரப்பில் ஒடும் சிறு நண்டுகளாய் விளையாட ஒரு பொழுது மீண்டும்
கிடையாமலே போகலாம்
ஆயினும் நான் போகிறேன்
தென்மேற்குக் கரையோரச் சின்னக் கிராமத்தில் என் குட்டிக் குடிசையும் பூப்பதற்காய் . yy (விழித்துளி நம்பிக்கை)
பல கவிதைகளின் தாக்குதலின் பிரதான இலக்கு ஒடுக்குமுறையாளர்களும் அவர்களது எடுபிடிகளாகச் செயற்படுகிற பல்வேறு சக்திகளுமாவர். எனினும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் பெரிய அவலத்தைப் பின்வரும் கவிதை மிகவும் சிறப்பாகச் சித்திரிக்கிறது.

Dణిజhe தொலைங்கத LOGO தேடி. 9
“விடுதலைக்கு வீரர்கள் வேண்டுமென்றீர் விருப்புடனே அனுப்பிவைத்தோம்
அவர்கள் சுடுவதற்கு துவக்குகள் வேண்டுமென்றீர்
கையால கழுத்தால காதாலயம் கழட்டி அதையும் தந்தோம்.
இப்போ அந்தத் துவக்குகளால் சுட்டுப் பழக தலைகளும் வேண்டுமென்று எம்மிடமே கேட்பதுதான் கொஞ்சம் சங்கடமாய் இருக்கிறது." (என் கைகாட்டி மரத்துக்குக் கழுத்தறுக்கப்பட்டபோது)
சடாகோபனின் கவிதைகளின் முக்கியமான ஒரு பண்பு பேரினவாதத்துக்கும் பெரும்பான்மைச் சமூகத்துக்குமிடையே அவர் தெளிவாகவே அடையாளங் காணக்கூடியவராக இருப்பது என்பேன். எனினும் தேசிய இனப்பிரச்சினைக்கு அப்பால் அவரது கவனம் போனது போதாமலுள்ளது. ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பின் பொதுவான போதாமை இது. இதனின்று அவர் விடுபட்டுத் தன் எதிர்காலக் கவிதைப் பரப்பை மேலும் விரிவுபடுத்துவாரென எதிர்பார்க்கிறேன்.
வரிப்பிரிப்பு விடயத்திலும் ஈழத்துப் புதுக்கவிதையில் உள்ள ஒரு தவறான புரிதலைப் புதிய தலைமுறையினர்தான் தீர்த்து வைக்க இயலும், சடாகோபனின் அண்மைக்காலக் கவிதையொன்றில் இவ்விடயம் தொடர்பான தெளிவைக் காணலாம்.
சடாகோபனின் எழுத்துப் பணி தொடர்ந்து மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்.
சி. சிவசேகரம்
27 நவம்பர் 2004

Page 7
முன்னீடு
கவிதை எழுதவேண்டும், கவிஞராக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. எந்தக் கலையை விடவும், எந்த எழுத்துத் துறையை விடவும் கவிதைக்கு அப்படி ஓர் ஈர்ப்பு. இளம் வயதில் என்றாலோ சொல்லத் தேவையில்லை. இன்று பத்திரிகைகளில் வரும் குறுங்கவிதைகளை . மினிக் கவிதைகளை - ஆரங்களை - சரங்களைப் பாருங்கள். பெரும்பாலும் அவை கவிதையாகவே இருப்பதில்லை. ஆனாலும் அவற்றுள்ளே குன்றிமணிகளும் குருக்கத்திகளும் இருக்கக் காண்கையில் சிலிர்த்துப் போவேன்.
இப்படித்தான் கவிதைப் போட்டிகளூடாக, சில முத்துக்கள் கிடைக்கின்றன. 1993இல் என நினைக்கிறேன், கைலாசபதி கலையரங்கில் கலைவாரம். வழமைபோல் கவிதைப் போட்டிக்கு நடுவராகப் போயிருக்கிறேன். ஒரு மாணவன் கவிதை படித்தான். சில அடிகள் என்னைச் சிலிர்க்க வைத்தன. தீர்ப்பை வாசிக்கும்போது அவற்றைச் சிலாகித்துப் பேசவும் செய்தேன். அவை என் நினைவேட்டில் கல்மேல் எழுத்தாய்ப் பதிந்துவிட்டன.
"குட்டியாடு கட்டி நிற்க விட்டு வந்தோமே - நாங்கள் கோடியிலே நாய் குரைக்க ஓடி வந்தோமே!” படையினர் ஓரிடத்தில் புகும்போது, போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிவரும் மக்களுடைய தவிப்பு,துடிப்பு, இழப்பு, ஏக்கம், அவலம் எல்லாம் இந்த அடிகளுக்குள் செறிவாய் இறங்கியதுபோல ஓர் உணர்வு.

மண்ணிலதொலை:ேதமனதுதேடி. 11
சடாகோபன் என்ற அந்த இளைஞன் முதற் பரிசு பெற்றான். ஆக்கத்திறன் (Creativity) கனவுகள் காணும் இளமைக் காலத்தோடு வற்றி விடுகிறது சிலருக்கு. சடாகோபன் போன திசை அறியேன். நேற்றுவரை. அதாவது, 'மண்ணில் தொலைந்த மனது தேடி' கவிதைத் தொகுதிக்கான படிகளோடு என்னைச் சந்திக்கும்வரை. அவர் தம் வாழ்வனுபவங்களை - சொல்லப்போனால், நம் அனுபவங்களைப்-பதிவுசெய்திருக்கிறார். மிக்க மகிழ்ச்சி. தம் திறனைக் காற்றோடு போகவிடாமல், எம் ஊற்றோடு - உணர்வோடு ஒட்ட வைத்திருக்கிறார்.
‘மண் என்ற சொல் இக்காலக் கவிதைகளில் - கீதங்களில் - அடிக்கடி வருகிறது; ஒலிக்கிறது. மண்ணை நேசிக்கிறோம் என்பதன் பொருள்தான் என்ன? பிறந்து மொழி பயின்ற நாள் முதலாய் நாம் பெற்ற அனுபவங்கள் நம் மண்ணோடு தொடர்புபட்டவை; பிரிக்க முடியாது பிணைந்து கிடப்பவை. நம் வீடு, வாசல், திண்ணை, முற்றம், கிணற்றடி, தெரு, ஒழுங்கை, தோட்டம், வயல், மடம், கோயில், சுடலை இவையும் இவற்றோடு தொடர்புபட்ட குடும்பம், சுற்றம், அயல், ஊர் என்ற உறவுகளும் நம்முன் ஊறிக் கிடக்கின்றன. முதுமையிலும் இவற்றை எண்ணி ஏங்குகிறோம் (Nostalgia என்பார்கள்). இவை எல்லாம் நம் பண்பாட்டின் கூறுகள். நம் வாழ்விலிருந்து இவற்றை எடுத்துவிட்டால் நாம் சடமாகி விடுவோம்;அடையாளம் இழந்துவிடுவோம். எமக்கு எம் மண் மீதுள்ள பிடிப்பு, அதை இழக்க மறுப்பது, அதைப் பறிப்போரை எதிர்ப்பதுஎல்லாம் இக்காரணத்தாலேயே, சடாகோபன் மண்ணில் தொலைந்த மனதைத் தேடுவதை இக்கோணத்திலேயே நோக்குகிறேன்.
இவ்விளைஞர் உயர்கல்வி கற்ற காலம் நாடு குழம்பிப் போயிருந்த காலம். பொன்னலரி பூத்த புழுதித் தெருக்களிலே அந்நியர் தம் பாதங்கள் ஆழம் பதிந்த காலம். இயக்கங்களிடையே எழுந்த முரண்பாடுகளால் கொலைகள் வழமையாய்ப் போயின.

Page 8
12 சடகோபன் கவிதைகள்
“மரங்கள் கூட மலர் வளையங்களுக்காகத்தான் பூக்கும் . வெளிச்சத்தைத் தேடி மெழுகுதிரிகள்
உருகும் .”
“நாடெங்கும் துப்பாக்கி இனிப்புகளுடன்
பிள்ளை பிடி வாகனங்கள் ."
“எமக்கு மட்டுமல்ல
பிரச்சினை
பொம்மர்களுக்குந்தான்
அதுதான்
ஊர்வலம் போகினம் போலை.*
என இந்த அவலங்களை - மரண நனவுகளை - சொற்சித்திரங்களாக்குகிறார் கவிஞர்.
அழிவுகளுக்கு- இழப்புக்களுக்கு-முகங்கொடுக்க முடியாது பெரியவர்கள் -முதியவர்கள். விக்கித்து நிற்க, விடலைகள் என்ன செய்தார்கள்?
சடாகோபன் சொல்கிறார். “நண்பா வடலிப் பனையும் சுடலைப் பொடியும் பொலிந்த தேசமதில், விடியல் வெள்ளி பிடிக்கவென்று விடலைப் பெடியன்
படலை தாண்டிய காலமது.”
இயக்கத்துக்குப் போன பெடியன்களுடைய மனநிலை பல கவிஞர்களால் பாடப்பட்டுள்ளது. ஆனால் சிங்கள கிராமங்களில் இருந்துதம் சீவியத்திற்காக இராணுவத்தில் சேரும் அடிமட்டத்தில் உள்ள இளைஞர்களுடைய மனநிலை நம் கவிஞர்களால் பெரிதும் பார்க்கப்படுவதில்லை. உண்மையில் அந்தப் பக்கம் புகழ்பெற்ற சிங்கள சினிமா இயக்குனரான பிரசன்ன விதானவினால் “புறகந்த களுவற” (பெளர்ணமி இருளில்) என்ற திரைப்படத்தின் மூலம் உலகிற்கு எடுத்துச் சொல்லப்பட்டது. நம் கவிஞருடைய“விழித்துளி நம்பிக்கை” அத்தகைய

Loabradణల தொலைகேத Loogi தேடி. 氰3
ஒரு படைப்பாகும். இராணுவத்தில் சேரும் இளைஞர்களின் மனநிலையை நெஞ்சுருகத் தருகிறது இக் கவிதை. அதைத் துண்டாடி மேற்கோள் காட்டுவதே அடாது என்பதால் விட்டுவிடுகிறேன். இந்த மண்ணில் வாழ நேர்ந்து, நம் மக்களின் ஏக்கங்களுக்கு, நிராசைகளுக்கு, அவஸ்தைகளுக்கு சாட்சியாய் இருந்த எவனாலும் கண்ணிர் மல்காமல் இக்கவிதையைப் படிக்க
முடியாது.
“ஓடிவா அண்ணா” என்ற கவிதையும் இந்த ரகமே. திருக்கோயில் கவியுவன் “வாழ்தல் என்பது” என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். போர்க் காலத்தில் எழுந்த அற்புதமான சிறுகதைகளுள் அ.தொன்று. சடாகோபனுடைய 'அண்ணாவும் ஓர் அற்புதமான படைப்பே. நம் குடும்ப உறவுகள் - பிணைப்புக்கள். எவ்வளவு இறுக்கமாக இருந்தன என்பதற்கும், போரால் அவை எவ்வாறு சிதறிப் போயின என்பதற்கும் இக்கவிதை சான்று பகரும்.
நாளொன்று நகரும்' என்ற கவிதையைப் Tfaiss6)Tib.
“காலையில் கால்கடுக்கக் காத்திருந்தோம் கூப்பன்கடை மாவுக்காய் மதியம் குழந்தைப் பால்மாக்காய்
dees
மண்எணண்ணெய்க்காய் தொடர்ந்தும் வரிசையில்."
இந்தப்பட்டியலைப் படிக்கும் வாசகனிற்கு கவிதையில் முடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. “நாளைய விடியலில் நாங்கள் மீண்டும் வரிசையில் நிற்போம் சவப்பெட்டிகளிற்காய்."
நல்ல கவிதைகளின் பண்பே சொல்லவரும் செய்தியை இவ்வாறு செறிவாகச் சொல்வதுதான்.
கவிஞனுடைய மென்மையான உணர்வுகள் ஊர்வலம் போவது “வளாக நாட்கள்”பகுதியில் வேப்ப நிழலையும் அலரியையும் பொன்சொரியும்

Page 9
14 சடகோபன் கவிதைகள்
கொன்றையையும் மாணவர்கள் அமர்ந்திருந்து கனவுகளை வளர்க்கும் கல்லிருக்கைகளையும் காற்றையும் புல்லையும் வண்ணாத்திப் பூச்சியையும் - இளவயசுக் கனவுகளையுந்தான் - துறந்து வளாகத்தை விட்டுப்போவதற்கு யாருக்குத்தான் மனசு வரும்!
சடாகோபனுடைய கலையாக்கத்தின் முக்கிய கூறுகள் காட்சிப்படுத்தலும் ஓசை நயமும்
எனலாம்.
“தோப்பிழந்தோம் ஒற்றை மரமாச்சு ஒற்றை மரமும் இழந்தோம் வெட்ட வெளியாச்சு? என்பதும்
"ஜாம் போத்தல் விளக்கில் டயறியும் எழுதி படுக்கை தட்டி மெல்லச் சரிய நல்லிரவு சொல்லும் பல்லி ஒன்று!"
என்பதும் கட்புலப் படிமங்கள்.
ஓசை நயத்துக்குப் பின்வரும் பகுதியைக் காட்டலாம்:
"இரையும் கடலும் தரையில் உரசி இதயம் நனையும் கதைகள் சொல்லும் அலையும் முகிலும் விழிகள் பொழியும் அவனிஎங்கும் துயரில்நனையும்.” இது இக்கவிதைத் தொகுதி பற்றிய முழுமையான மதிப்பீடல்ல. இன்னும் நீள எழுதலாம். சடாகோபன் தன் கவிதை உள்ளத்தை இளமையாகவே வைத்திருக்கிறார். படிப்பு, தொழில் துறைகள், குடும்பம் என்பவற்றுக்குள் அகப்பட்டு அது நசிந்து போகவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம். முதிர்ச்சி வர வர ஆவேசம் சற்றுத் தணியும்; இன்னும் ஆழமான கவிதைகள் இவரிடமிருந்து தமிழுக்குக் கிடைக்கும். என் வாழ்த்துக்கள். கவிஞர் சோ. பத்மநாதன் 'ஏரகம்’ பொற்பதி வீதி
கொக்குவில் 2004. II. 30

முருகையனின் முதல் முத்தங்கள் மல்லிகை ஒக்டோபர், 1998
.சடாவதனன் என்னும் இளைஞரொருவர் எழுதியுள்ள சில வரிகளை ஒப்பிடுவோம். இடக்கரம் இழந்து இருதயம் பிளந்து இறந்து கிடந்த முத்துவின் முகத்தை எப்படி மறக்க! எப்படி நினைக்க எனக்கு ஏதோ பிடித்திருக்கவேனும் எழுந்து நின்று வீட்டைப் பார்த்தன் மாலையும் கழுத்துமாய் இவரின் கையைப் பிடித்தபடி சின்னக் குடிலுக்குள் நுழைந்த நினைவுகள் காயப் போட்ட
கறுத்தப் பாவாடையின் எரிந்த மீதிகள் புகைந்து கொண்டிருந்தன ."
கல்லறை மேலான காற்று' என்னும் நூலில் வரும் மேற்படி வரிகளில் இழந்த இடதுகை, பிளந்த இருதயம், மாலை, கழுத்து, கைப்பிடி, சின்னக் குடில், கறுத்த பாவாடை. என்றெல்லாம் வரும் சொற்களும் தொடர்களும் பருமையான, உருப்படியான புலக் காட்சிகளைப்
பிறப்பிக்கின்றன அல்லவா?

Page 10
16 FLIĞasirucér =&aంgsch
இவ்வாறு நாம் வேறுபடுத்திக் காட்டுவது,
குலோத்துங்கன்பாட்டுக்கும் சடாவதனன் பாட்டுக்குமிடையே உயர்வு தாழ்வுகற்பிக்கும்
பொருட்டன்று. குலோத்துங்கன்பாட்டில் பொதுமை கூடியும் சடாவதனன் பாட்டிலே தனித் தன்மைகள் முனைப்புப் பெற்றும் உள்ளமையை விளக்குவதே இங்கு நோக்கமாகும். இவ்விருபாட்டுகளின் ஏனைய இயல்புகளை நாம் இவ்விடத்திலே பரிசீலிக்கவில்லை.
தனித்தன்மை கூடியிருந்தால் கலைப்படைப்பின் மேம்பாட்டுக்கு மெருகூட்டுவதை நமது பழைய மரபுகளும் உறுதிசெய்கின்றன.
ஈழத்து மூத்த கவிஞரான கவிஞர் இ. முருகையன் ஒக்டோபர் 1988 மல்லிகை இதழில் குலோத்துங்கன் கவிதைகள் பற்றிய குறிப்புகள் சில என பாம்புகள் எல்லாம் செத்துவிட்டனவா என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் சடாகோபன் கவிதை ஒன்று எடுத்து ஒப்பு நோக்கப்பட்டுள்ளது.

இவன்
கவிதைக்கு கனதி சேர்த்து கருத்திற்கு உருக்கொடுத்து தீமை கண்டு தீயாகி பொய்மை கண்டு பொறியானவன்
பள்ளிக் கால பரியோவான் பருவத்தின் பதிவுகள் வளாக வாழ்வின் யாழக சுவடுகள் சுங்கத்தொழில் வாழ்வின் தொடர்ச்சிகள் பதினெட்டு வருட தமிழர் கதையை கவிதையாய் சமைத்தவன்
இற்றைவரை "சடா'வாய் சடகோபனாய்"
'சடாவதனனாய்" 'சடாகோபனாய்’
'பனையடிப் பாடகனாய்" தன் பதிவுகளை அழுத்திச் செல்பவன்
மனித அவலங்களின் அடையாளமாய் மண்ணின் மணமாய் மனங்களின் நாடித்துடிப்பாய் கால அரசியலின் கண்ணாடியாய் மனிதத்தின் விம்பங்கள் - இவை படைத்தவனின் சாயலிலேயே
நட்புடன் தயா

Page 11
மனது தேடும் பயணம்
கடந்த இரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக தாயின் மடியில் இருந்து பிடுங்கி எறிபட்டு உலகெங்கும் சிதறி சின்னச் சின்ன துகள்களாய் பரந்து கிடக்கும் ஒரு சந்ததியின் தேடல் இது. எங்கள் உணர்வையும் உயிரையும் எங்கள் மண்ணிலேயே விட்டுவிட்டு வந்து இயந்திரத்தனமான இயக்கங்களிற்குள்ளும் இயற்கையோடு சினேகித்துச் செல்லாத சுற்றுச்சூழலிற்குள்ளும் சிக்குண்டு போய்க் கிடப்பினும் எங்கள் சிந்தனை வேர்கள் தாய்நிலம் சென்று நிலக்கீழ்நீரை உறிஞ்சிக் கொண்டிருப்பதால்தான் எமக்குள்ளும் உணர்வுகள் ஊற்றெடுக்கின்றன. கடந்த காலங்களில் எனது கல்லூரி, பல்கலைக்கழகம், இடம்பெயர்வுகள், கிட்டிய காலங்கள் என நான் நடந்துவந்த பாதைகளில் என்னை இயங்கவைத்த என் இயக்கத்தை நிறுத்த முயன்ற எல்லாவிதமான நிகழ்வுகளும் எனக்குள் ஏற்படுத்திய பதிவுகளின் தொகுப்பே இந்த “மண்ணில் தொலைந்த மனது தேடி.”
இத்தகைய ஒரு பதிவாளனாக நான் உருவாகக் காரணமான என் பெற்றோர், உடன்பிறந்தோர், உற்றத்தார், ஊர்மனை எல்லாம் நினைவுகூரப்படவேண்டியவை. யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் 1978- 1988 காலப்பகுதியிலும் அவ்வாறே 1989-1993 காலப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் உலவித்திரிந்த எல்லா உறவுகளும் என்னை சிலையாக்க உளி பிடித்த கரங்களிற்குரிய என் அன்பு ஆசான்கள் எல்லோரும் இங்கு நினைக்கப்பட

uಂØraಠbಲ தொலைங்கத LOGO தேடி. 19
வேண்டியவர்கள். அங்கு தொடங்கி இன்று தொழிலகத்திலும் அதற்கு வெளியேயும் தொடருகின்ற உறவுகளும் எப்போதும் என்னோடு சேர்ந்து பயணிக்கும் என் அன்புக்குரிய எண்ணற்ற நண்பர்கள் எல்லோரும் இந்த தேடலில்
பங்காளிகளாகின்றனர்.
மேலும் இருளிற்குள் பாய்கின்ற ஒரு ஒளிக்கிற்று எத்தகைய வீச்சை ஏற்படுத்தும் என்றும் அதுவும் குறிப்பாக இருண்ட ஒரு இடத்திற்குள் சிறிய இடைவெளி ஒன்றினூடாக வருகின்ற நிலாக்கீற்று எத்தகைய பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு கருவை எப்போதும் என்னோடு சேர்ந்து பயணிக்கும் என் மனைவி என் கையில் கொடுத்தார். அக்கரு பனங்கூடலிற்குள் பிறந்து வளர்ந்த என்னிடமிருந்து"உயரப்பனை ஒலைகிழித்து நிலவுக் கீற்று மெல்ல வருகிறது மண்ணில் தொலைந்த மனது தேடி' என உருப்பெற்றது. அதுதான் இக் கவிதைத் தொகுப்பு.
என்னை அடையாளம் கண்டு எனது இந்நூலை வெளியிட்டும் வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தும் என்னை ஊக்கப்படுத்தும் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் குறிப்பாக திரு. சோ. தேவராஜா, அண்ணன் மாவை வரோதயன், அன்புத் தம்பி தங்கைகள், "பயில் நிலத்து"உழவர்கள் எல்லோருக்கும் எனது அன்பு எப்போதும்.
இந்நூலிற்குத் திறவுகோலாக முகவுரைகளை ஆக்கித்தந்த பேராசிரியர் சி. சிவசேகரம், வளாக நாட்களில் என்னை அடையாளப்படுத்தி இன்றும் அதனை நினைவுகூர்ந்துள்ள கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோருக்கும் எனது கவிதைகளைப் பிரசுரித்த “உள்ளம்", "விருட்சம்”, "தினக்குரல்", "வீரகேசரி”, “மூன்றாவது மனிதன்”, "சரிநிகர்” ஆகியவற்றின் வெளியீட்டுக் குழுக்கள், நிறுவனங்கள் குறிப்பாக தேவகெளரியக்கா ஆகியோருக்கும் என்றும் என் நன்றிகள் உரித்தாகும்.

Page 12
20 sures.Tuér =వాంత్తాకాబోT
மேலும் வீச்சான சில வரிகளாலேயே என்னை விளங்கப்படுத்த முற்பட்டுள்ள நண்பன் தயாவுக்கும் என் அன்பு. இந்நூல் உருவாக்கத்தில் என்னோடு ஒரே காலத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் உலவிய அச்சுக் கலையை கவிதையாக எழுதியும் படித்தும் வரும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கவிதைகளிற்கேற்ற - கருத்தோவியங்களை வரைந்துள்ள தம்பி சசிதரன் ஆகியோர் இணைந்திருப்பது புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது. எனவே "மண்ணில் தொலைந்த மனது தேடி" நான் செல்லும் இந்தப் பயணத்தில் உங்களையும் இணைத்துச் செல்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி எனக்கு. சிறுகச் சிறுக சேமித்து சமைத்துப்போட்டதை உங்களோடு சேர்ந்து பயின்றுண்ணும் உணர்வோடு தாயின் கையால் ஒரு கவளம் சோறு வாங்கியுண்ண தயாராக நீங்களும் நானுமாய் ..!
என்றும் அன்புடன்
சடாகோபன்
"சடாவதனம்"
சுதுமலை தெற்கு
மானிப்பாய்
65A, Hena Rd Mt. Lavinia. Tel: 011271481 Mobile : 077 7321853 E-mail: SadauGstnet.lk

பதிப்புரை தேசிய கலை இலக்கியப் பேரவை தனது 30 ஆண்டு காலக் கலை இலக்கியப் பயணத்தில் இதுவரை 104 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் ஒரு ஆங்கில நூல் உட்பட 29 கவிதை நூல்கள் அடங்கும். இளம் கவிஞர் சடாகோபனின் இக்கவிதைத் தொகுப்பு எமது 30ஆவது கவிதை நூலாகும்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் மாதாந்த நூல் வெளியீட்டில் சற்று தளர்வேற்பட்டுள்ளது. புத்தக வெளியீட்டின் வெற்றி தோல்வியைப் பொறுத்தவரை எழுத்தாளர், வெளியீட்டாளர், வாசகர் ஆகிய முத்தரப்பினரை விட நூல் விநியோகஸ்தர் முக்கியமானவராகிறார். அவ் விநியோகஸ்தரே நூலின் விற்பனையையும் நிதியையும் கையேற்பவரென்பதால் அவரின் தொழில்சார் வல்லமையில் தங்கியிருத்தல் அவசியமாகிறது. ஒருவரோ அல்லது ஒரு சிலரோ அதனை ஒரு வணிக முயற்சியாக மேற்கொள்ளலாம். எனினும் அந்நிலமை இலாபம், தனிச்சொத்து, மூலதனம் என மனித வாழ்வின் அவலமாக மாறிவிடும் அபாயம் நேர்ந்துவிடுகிறது. மேலும் இதனால் சமூக முக்கியமற்ற நசிவு இலக்கிய நூல்கள் வாசகர்களை ஆக்கிரமிக்கின்றன. இவ்வணிக வல்லமையிலிருந்துநூல் வெளியீட்டுத் துறையை மீட்பது மட்டுமே மக்கள் இலக்கிய நூல் வெளியீட்டின் வெற்றியைத் தீர்மானிக்கவல்லது. ஆளுக்குப் பத்துப்பேர், ஊருக்கு நூறு பேர்’ என கிராமங்கள், நகரங்கள்,

Page 13
22 சடாகோபன் கவிதைகள்
பாடசாலைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என மக்கள் வாழுமிடமெங்கும் வேரூன்றி விழுதாகி ஆலமரமாகித் தோப்பாக விநியோக வலையமைப்பு கட்டமைக்கப்படுவதனால் மட்டுமே தமிழ் நூல் வெளியீட்டில் எம்மால் சாதனை படைத்தல் சாத்தியமாகும்.
இத்தகைய இலட்சியக் கனவை ஈடேற்ற இளைஞர் சக்தியின் இணைப்பும் செயற்பாடும் முன்தேவையாகும். புத்தகப் பண்பாடென்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் அம்சமாக மாறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
கவிஞர் சடாகோபன் தனது கவிதைத் தொகுப்பை தேசிய கலை இலக்கியப் பேரவையூடாக வெளியிடுவது மகிழ்வுக்குரியது. தனது 17 ஆவது வயதிலிருந்து எழுதிய கவிதைகளை தனது 36 ஆவது வயதுவரை பொறுத்திருந்து பேணிக்காத்து வெளியிடுவது அவரது சமூக அக்கறையை வெளிப்படுத்துகின்றதெனலாம்.
எழுத்தும் பேச்சும் எல்லோருக்குமுரியதோர் வெகுசனப் பண்பாட்டை உருவாக்குவதன் மூலம் எமது கலை இலக்கியப் பயணத்தில் நாம் முன் G36)(36 Tub.
நூல் பற்றிய விமர்சனங்களை வழமைபோல் வரவேற்கிறோம்.
தேசிய கலை இலக்கியப் பேரவை 28. II. 2004

பொருளடக்கம்
6)'tglu GStrømsv6úsið --------------------- உயரப்பனை ஒலை கிழித்து - பாடல். வெள்ளி முளைச்சிருக்கு .
புரிதலும் புரிதலும் . 8 8 e 8 e e e g இதயம் பேசியது . வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா . நீண்ட தூரத் துயரம் . தாயக மண்ணின் மேனி - பாடல். அமைதித் தென்றல் - பாடல் . சலுகை பெறுவதோ உரிமை . மே தினம் . பொங்கு தமிழிற்கு . பயிரில் பதுங்கிய வேலி .
6) CD5685 . . . . . . . . . . . . . . .
ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே. .
பெயர்வும் பின்னரும்.
சனநாயகம் . ஒரு நிறம் இரண்டு இரத்தம் . பரியோவான் அம்மா. . . . தொலைதல் . செப்டெம்பர் ஐந்து . போர் என்றால் போர் . மா. நகரும் தேர்தல் . மே தினமே நீ கேளு . . விழித்துளி நம்பிக்கை .
ஒரே சிறை o « es a 8 o 6 a s () o e el e மீள்வு . மீட்பு .
பத்திரிகையாலை .
89
92

Page 14
24 சடகோபன் கவிதைகள்
alsTT95 Birds6ir ............................. 97
நகர்வு . 99 பிரிவு . I OI பதிவு . . . . . . . . . . . . . . . 103 கடைசிக் கணப்பொழுது . 04 குழிபறித்த பதுங்கு குழி . O இரு புறங்கள் . 12 மெல்லத் தவழும் காற்றே . 113 வேப்பமரக் காற்று - பாடல் . 114 நேற்று வந்த சிவரமணி
இன்று ஏன் வரவில்லை . 16 நாளொன்று நகரும் . 118 நெருடல். . 120
saiSBYTífilis 35mravnih ............................ 127
மாரி . 29
கோடை . 130 புதியதொரு பொழுதுக்காய்.1 . 3. காலம் எப்போ.1 . 133 என்ன இது. . 35 வைகாசி 1989 . 37 நினைவுச் சிதறல்கள் . 139 என் கைகாட்டி மரத்திற்கு
கழுத்தறுக்கப்பட்டபோது . 146 ஓடி வா! அண்ணா! . 47
சுதந்திர கீதம் சொரிந்துகொண்டிருக்கும் 153

மண்ணில் தொலைந்த leargi 6519
alrearrué.
లేయరDgరోసి

Page 15

முதற் பகுதி
О-лоого8Ko دعا ہٹنظ

Page 16

உயரப்பனைஒலை கிழித்து - Lumraio
உயரப்பனை ஒலை கிழித்து நிலவுக் கீற்று மெல்ல வருகிறது மண்ணில் தொலைந்த மனது தேடி மெல்ல வருகிறது நிலவுக்கீற்று
(உயரப்.)
வயலும் கடலும் வாரிக் கொடுக்கும் மன்னார் முல்லை நிலங்கள் இயலும் இசையும் இயம்பும்இயற்கை அசையும் மரங்கள் வனங்கள் இரணைமடுவில் பருகி மலர்ந்த மழலைப் பயிர்கள் முகங்கள் எம்மண் செழிக்க நாளும் இறைக்கும் செம்மண் தோட்ட கிணறுகள் மனது தேடி நிலவு அலையும் தேடி வந்த மனதை மறந்து நெகிழ்ந்து நிற்கும்.
(plug. ...)
வானம் வந்து விழுந்து கிடக்கும் கோணமலையின் நுனிகள் மீன்கள்துள்ளிப் பாடிக் களிக்கும் வாவிக்கரைகள் குளங்கள் கிளிகள் பேசும் மொழிகள் இனிக்கும் நெல்லு மணிவயல்கள் வழிகள் எங்கும் விரிந்து கிடக்கும் பச்சைப் புல்லு வெளிகள் மனது தேடி நிலவு அலையும் தேடி வந்த மனதை மறந்து நெகிழ்ந்து நிற்கும்.
(உயரப்.)

Page 17
BO Fu LiriểssTTLJÖr கவிதைகள்
வெள்ளிமூளைச்சிருக்கு
அதிகாலை அலாரம் அடிக்கும்
பற்பசைக் கூடு கதவுக்குள் நசியும்
நட்சத்திரமாய் மின்னி
சவர்க்காரத்துண்டு நழுவி விழும்
 

Loafbrada தொலைந்த Loogi தேடி. 3.
சீனிப் போத்தலும் ஜாம் போத்தலும் பொது எதிரிக்கெதிராய் போராடும் பாவம் கரண்டி
பாகப் பிரிவினையில் பாணுக்கும் கூடுதலாய் வெட்டு விழும்
வாயுக் குடுவை நிலத்தில் படுக்க அடுப்பில்
தீகசியும்
வாயுவில் வாகனம் இயங்குமாம் ஆனால் ஏனோ
என்ர வாகனம்
இயங்க மறுக்கிது பெற்றோல் தாங்கியை நிரப்பியிருக்கும்
வாயுவில்
விரல்கள் வெளிக்கிட்டுவிட்டன வீட்டின்
சந்து பொந்தெங்கும் சில்லறை தேடி
மாலை திரும்புகையில் மனது கனக்கும் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் வீடு
காதல் கடிதங்களுக்காய் அன்று நான் திட்டித் தீர்த்ததற்கு இன்று பழிவாங்குகிறான் தபாற்காரன்

Page 18
32 சடகோடன் கவிதைகள்
கேட்காமலேயே மின்சாரம் தொலைபேசி தண்ணீர்க் கட்டண பட்டியலையெல்லாம் பெட்டிக்குள் போட்டுவிட்டுப் போகிறான்
வீட்டுக்காரன் கதவைத் தட்ட இதயத்தில் சத்தம்
என்ன இது.! மாதக் கடைசியும் மாநகர வாழ்வும்
ஞாயிறு தினக்குரல் நவம்பர் 14, 2004

Loaðradfood தொடைங்கு LOGO தேடி. 33
புரிதலும் புரிதலும்
ஒரு காரியத்தை புரிதலுக்கும் அதன் கருத்தை புரிதலுக்கும் எத்தனை பெரிய வேறுபாடு
வாவிக்கரையில் வலம் வரும் காற்றில் என்னதான் ஒட்டிக் கிடக்கிறதோ இப்படிக்கரிக்கிறதே
எப்படித்தான் முடிகிறதோ இந்த மீன்களால் ஒரேயடியாக ஒப்பாரியைப் பாட
இதயத்துடிப்புகளை நிறுத்திவிட்டு விழுந்து கிடக்கும் வெற்றுத் தோட்டாக்களிற்கு புரியவா போகிறது தான் புரிந்தது பற்றி
இயந்திரங்களையும் விட்டுவிடுவோம் இவற்றால்தான் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறதோ.

Page 19
34 FuốBESITLucČIT கவிதைகள்
பாவம் இயக்கியவனின் இதயத்திற்கும் மூளைக்கும் எத்தனைதூரமோ!
இந்த புரிதலுக்கும் புரிதலுக்குமான வேறுபாடு எப்போதாவது
புரியட்டும்
பரவாயில்லை இழப்புகள் வரும்போதுதானே இறுகிக் கொள்கிறோம்
வெடித்துச் சிதறவும்
தயாராக.
ஞாயிறு தினக்குரல் யூன் 27, 2004
2004 சித்திரையைத் தொடர்ந்து மீன்பாடும் தேன்நாட்டில் இடம்பெற்ற தொடர்ச்சியான கொலைகளைத் தொடர்ந்து எழுதப்பட்டது.

35 .தொலைங்த LOGO தேடி ܚܧܘfܫaܗܧܘܩܐ
இதயம் பேசியது
சாதனைகள் படைக்க கையுதவிக்கு நின்று கை கொடுத்த என் பிரிய வலக்கரமே!
தனியாகப் போய்நின்று தானே இயங்குவேன் வலப்புறத்தான் நான் என்று வாயால் கெடாதே!

Page 20
36 rnosručr 5బంgEch
நானும் மூளையும் இடப்புறம் இருந்து இடையறாது வழங்கியதால் தானே உன்னில் இயக்கமே இருந்தது!
பிறகென்ன இடப்பக்கம் வலப்பக்கம்!
முட்டாள்கையே
ịổ முறுக்கிக் கொள்ளாதே!
என்னோடும் மூளையோடும் உன் தொடர்பு அறுபட்டால் நீ கையல்ல பிணம்
uomf母 2004
எரிக்க எரிக்க எழுந்து கொண்டிருப்பது பீனிக்ஸ் பறவை மட்டுமல்ல
எங்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலையும்தான்

leabrace» தொலைந்த Loog தேடி. 37
sustigasLT Lorrús பாய்ந்ததடா
புற்றுநோய்ப் பயம்வந்து எனக்குள்
புகுந்தது கண்டு
சுவாசப்பை சுகமாக மூச்சொன்று விட்டது சிகரெட்டைச் சிறைப்படுத்த விரல்கள் தயங்கின
வில்லங்கமாய் எடுத்து உறிஞ்சப் போனால் உதடுகளுக்கே உதறல் எடுத்தது
தீப்பெட்டி தேடி மனது போகையில் மூளைதடுத்து முட்டாளே என்றது
புகைத்தலைப் பிடித்த புற்று நோயாய் புற்று நோய் எங்கும் உலாவரத் தொடங்க
சிகரட் விரக்தியாய்ச் சொல்லி விடை பெற்றுச் சென்றது
வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததெடா என்று
ஞாயிறு தினக்குரல் டிசெம்பர் 07, 2003

Page 21
38 சடகோபன் கவிதைகள்
நீண்ட தூரத் துயரம்
விடியாத காலைப் பொழுதொன்றில் விமானநிலையத்தில் விடைபெற்றுச் சென்ற வேளை
முத்தத்தைத் தந்துவிட்டு
6if60T மூச்சை வாங்கிப் போனவனே...!
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுத்துவிடு கொஞ்சக் காற்று. நான் சுவாசிக்க
தொலைபேசியில் மின்னஞ்சலில் உன் கையெழுத்திலான கடிதத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொடுத்துவிடு கொஞ்சக் காற்று.
மறுபடியும் எனைப் பார்த்து நீ வாங்கிப் போனதை மொத்தமாய் திருப்பித்தரும் வரை
ஞாயிறு தினக்குரல் டிசம்பர் 07, 2003

LoaỒradfa தொலைங்த மனது தேடி. 39
தாயகமண்ணின் மேனி
- பாடல்
தாயக மண்ணின் மேனி தடவிய காற்று வருகின்றது வானகம் சென்று மேகங்கள் தொட்டு ஈரமாகி இறங்கி வருகின்றது - என் இதயமும் நனைகின்றது
(தாயக.)
கார்த்திகை மாத குளிரிரவில் கண்கள் பனிக்கின்றன நேற்றைய பொழுதில் புயலாய் வீசி இன்றைய அமைதியை எமக்காய் தந்த முகங்கள் தெரிகின்றன - புனிதர்
நினைவுகள் துளிர்க்கின்றன.
V (தாயக ...)
நெருப்புத்துண்டுகள் நெஞ்சினில் அடுக்கி
தெருக்களில் நின்றவர் வருகின்றார் நெருப்புப் பெட்டிகள் குழிகளில் பதுங்க சவப்பெட்டி எழுந்து சரித்திரம் படைத்த விசித்திரம் சொல்கின்றார்
(தாயக.)
உப்புக் கடலும் ஊதல் காற்றும் உண்மைகள் உரைக்கின்றன பற்றைக் காடும் படர்ந்த இருட்டும் தப்புகள் விடாது தாயகம் காத்த நாட்களைச் சொல்கின்றன - மரங்கள் பூக்களைச் சொரிகின்றன.
(தாயக.)

Page 22
40 சடாகோடன் கவிதைகள்
அமைதித் தென்றல் - LIITL6)
அமைதித் தென்றல் ஆடி ஆடி வருகின்றது அன்னை பூமியைத் தேடி வருகிறது கொடிய போரது ஓய்வு பெறுகிறது குதூகலம் வந்து குடிபுகப் போகுது
(அமைதி.
குண்டுகள் கிண்டிய முற்றத்துக் குழிகளில் குஞ்சு நிலவுகள் குதித்து மகிழுது ஷெல்லுகள் கூவி விடிந்த பொழுதுகள் செல்லக் குயில்கள் பாடிப்புலருது சென்னீர் வியர்வை கண்ணிர் சிந்தி விடியலை அழைத்த மனிதரை நினைக்கிறோம் தொலைந்த முகங்கள் கலைந்த கனவுகள் நெஞ்சினை அடைக்க விழிகளை நனைக்கிறோம்
(அமைதி ..)

Loabradfణల தொலைஉங்கத Loажу. தேடி. 4.
ஆழக் கடல்களில் அவலமாய்க் கேட்ட ஒலக்குரல்கள் இனி ஒயப்போகுது கால காலமாய் ஊர்மனை விட்டு ஓடிடும் வாழ்வு முடிவுறப் போகுது அகதிக் குழந்தைகள் ஆதரவு இழந்தோர் அவயம் இழந்தோர் அணைத்து வருகிறோம் நிம்மதி எங்கும் நிரந்தரம் பெற்றுவிட்டால் புற்களாய் முளைத்து பூக்களாய் மலருவோம்
(அமைதி ..)
2002இல் நாட்டில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப் பட்டு சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நிலையில் 2002 ஆவணியில் எழுதப்பட்டது.

Page 23
42 சடாகோபன் கவிதைகள்
சலுகை பெறுவதோ உரிமை
அவசரகாலச் சட்டத்திற்கு ஆயுள் கொடுத்த ஆண்டவர் வருகின்றார்
அன்றாட தேவைகளை அப்பப்பவே தீர்ப்போம் ஆடைகளை அவிட்டெறிந்து அம்மணமாய் நிற்போம்
அள்ளி எடுத்ததில்
கிள்ளி எறிவார் நாமும் நனைவோம்
விண்ணப்பம் இன்றி வேலை பெற்றோம் கையொப்பமிட்டு .
கடதாசியில் காட்டிய தொகையிலும் குறைவாய் நிவாரணம் பெற்றோம்
தகுதியில்லா உயர்தொழில் உண்ண உடுக்க
எல்லாமும் பெற்றோம்
தொடர்ந்து வந்து சலுகை தந்து சுரண்டிப் போன ஐரோப்பியரோ பொட்டலம் போட்ட
பாரத பூமியோ

43 .தொலைங்கத Logory தேடி ܦܬܫeܗܣܛܘܩ
அரிசி பருப்பு அனுப்பிய அம்மாவோ
சலுகை சலுகையென்று சலுகை செய்து அடிமைசாசனம் எழுதிச் செல்ல
அவலமாய்ப் போனோம்
எத்தனைதசாப்தமாய் மத்தியில் கூட்டாட்சி மலையகம் நிமிர்ந்ததா.
சலுகைகள் கொடுத்து மனதுகள் மாற்றினர் ஆட்சியின் முகவர்கள்
அடிமை மனப்பாங்கு அன்றாடம் வளர்ந்தது உரிமை உணர்வோ உலர்ந்து போனது
பார்த்துத் திருந்தட்டும் வடக்குக் கிழக்கு
சலுகைகளிற்காய் சந்ததி இழப்பதா
சுயத்தை இழந்து சோறு தின்பதா
கண்டபடி விழந்த குண்டுகள் செல்லுகள் குடித்துச் சென்ற உயிர்களை மறப்பதா
சொத்துகள் விட்டு சொந்தங்கள் விட்டு சொறி நாய்களாய் அலைந்து திரிந்த நாட்களை மறப்பதா
பதவியேற்ற கையோடு பறிக்கப்பட்ட பத்திரிகையாளனை மறப்பதா

Page 24
44 சடகோடன் கவிதைகள்
புனர்வாழ்வு முகாமையே புனரமைத்த புதுமையை மறப்பதா!
சிறைகளில் வாடும் உறவுகள் மறப்பதா! கனவுகளில் வரும் காணாமல் போன மனிதரை மறப்பதா! கண்டபடி கைதான பொழுதுகள் மறப்பதா! துணிவோடு செய்த வல்லுறவுவதைகளையெல்லாம் மறந்தே விடுவதா!
இவற்றிற்கெல்லாம் அனுமதி கொடுத்த சட்டத்தை மறப்பதா!
அதை நிறைவேற்றிக் கொடுத்த கரங்களை மறப்பதா!
சலுகைக்காக சந்ததி இழப்பதா சுயத்தை இழந்து சோறு தின்பதா
கீரிமலைக் கடலில் தோஷம் போக
மூழ்கி எழுந்து பிதிர்க்கடன் செய்வோம் சலுகைகளிற்கும் அடிமை மனப்பாங்குகளிற்கும்
பசித்த மனிதர் படிப்பறிவில்லா பாமரர் முட்டாள்கள் என்றா
முடக்க முனைகின்றீர்

Loafbrada தொoைலங்கத Loogi தேடி. 45
கத்திக்குத்தும் காடைத்தனமும் பெற்றுக்கொள்ளுமோ சித்தி கற்றுக்கொள்வீர் பாடம்
சலுகைகள் வேண்டாம் சரித்திரம் வேண்டும் சுயநிர்ணய உரிமைக்காய் சொல்வோம் கேளும்.
ஞாயிறு தினக்குரல் பொதுத் தேர்தல் 2002

Page 25
46 Flurĉas Tu& solacozzescot
மேதினம்
கண்களின் எல்லைக்குள் கட்சி வர்ணம் காளையர் கன்னியர்
கண்கவர் ஊர்திகள்
பிரதான கட்சி கஞ்சி தண்ணிக்காய் கொஞ்சிக் குலவும் வால் கட்சிகள் பாலைக் காப்பதாய் கதைவிடும் பூனைத் தோழர்கள் அனைவரும் திரள
பத்திரிகையாளர் பாய்ந்தடிப்பர் தொலைக்காட்சியினர் துளைத்தெடுப்பர் ஒலிபெருக்கியோ இடையிடை
நெருப்பாய் வார்த்தையை அள்ளி எறிய ஊர்வலம் வரும்
ஊர்ந்து முடிய முன்னணி மேடையேறும்

Loabradfణల தொலைங்கத LOGO தேடி. 47
பின்னணி .
கைவியர்வை
துடைத்து காத்திருக்கும் கரகோஷம் செய்ய
ஏறியிருப்பவர் இடியாய் முழங்க கூடியிருப்பவர் மழையாய்ப் பொழிந்து கொண்டாடுவர் மேதினம்
குதுரகலமாக .
வடகிழக்கில் வேளாண்மைத்தடை விதைக்கவும் விதைத்தவர் அறுக்கவும் வேண்டுமோ அனுமதி மண்ணெண்ணெய் யூரியா இயந்திர பாகமும் அங்கே செல்ல
உள்ளது தடை
தொழிலுக்குப் போய்வர தொந்தரவுக்கென்றே சோதனைச் சாவடி தொடர்ந்து வர அனுமதியட்டை அடையாளவட்டை உழைத்து உழைத்து உறுதியான உடம்பு கண்டல் .
காய்ச்ச காயங்கள்
கறுப்பு நிறம் .

Page 26
48 P_f=nuటిr கவிதைகள்
அங்கச் சிதைவுகள் அனைத்தும் ஆராய்வர்
ஆயினும் என்ன கொண்டாடுவர் மேதினம் கூடி ஊர்வலம் வந்து கூட்டம் போட்டு பேட்டி கொடுத்து வாழ்த்துச் சொல்லி கொண்டாடுவர் மேதினம்
குதுரகலமாக .
ஞாயிறு தினக்குரல்
Gud 06, 2001
எப்படித்தான் முயன்றாலும் முடிவதேயில்லை சின்னவயதில் முடிவெட்டியவனின் முகத்தை மறப்பதற்கு

மண்ணசில தொலைஉதமனதுதேடி. 49
பொங்குதமிழிற்கு
பரமேஸ்வரன் பாதம் பணிந்து எழுந்து வருகிறோம், எங்கள்
சுயநிர்ணய உரிமைக்காய்!
போர்க்கோலம் பூண்டு புளுதியோடு புளுதியாகி காற்றோடு கலக்க
காத்திருக்கும் தேசமே. கறுத்த நாட்களை இன்றோடு கைகழுவு!

Page 27
50 சடகோபன் கவிதைகள்
மலைவேப்ப மரங்களின் இலைதொட்டு வரும் காற்றே. தொலைதூரம் சென்று
எங்கள் தொனிப்பொருளைச் சொல்லு!
கொஞ்சுமொழி பேசி குதுகலிக்கும் யூக்கலிப்டஸ் குமுறி எழுந்தாடு. கொல்லுகின்ற சண்டையின் கொடுமைகளைப் பறையடிப்போம்!
பொன்பொழியும் கொன்றைகளே பூச்சொரியும் வாகைகளே பொங்கி எழுங்கள்.
கல்லிருக்கைகளில் கால்நீட்டி அமரும் தருணமல்ல இது, நெஞ்சிருப்பை அள்ளி நெருப்பாய்த் தெளிப்போம். எரிந்து போகட்டும் இந்தக் கோதாரி யுத்தம்!
பொதுவறையும் கன்ரீனும் பொழுதுபோக்கும் இடமல்ல. கலையரங்க முடிவுகளின் தொடக்க நிலையங்கள்!
புனர்வாழ்வு வேண்டாம் உணர்வோடு வாழவிடு!
தலைவிதியைத் தாரை வார்த்து தருகின்ற மறுவாழ்வு சுடுகாட்டு மடமோ. வெள்ளையடித்த கல்லறையோ!
அவசரகாலச் சட்டத்திற்காய் அடகுவைத்த ஒருகையை மீட்க வழியில்லை, அதற்குள்.

.தொனoலங்கு Lo«OF தேடி ܚܘܬarfܗ±aܩܙ
சுயநிர்ணய உரிமைக்காய் மறுகையை எடுத்து மடத்தனமாய் உயர்த்திவிட்டு பிறகென்ன மடிப்பிச்சையா எடுப்பது சோத்துக்கும் சொத்துக்கும்!
அரித்த இலையை அடைப்பதல்ல. மருந்து தெளிப்பதுதான் எங்கள்
மண்ணின் வழமை!
நிரந்தரமானநிம்மதிக்கு சுதந்திரமாய்ப் பேசுங்கள்! பேய்த்தனமான போரை நிறுத்தி புரிந்துணர்ந்து பேசுங்கள்!
குறுக்க நிற்போரே கொஞ்சம் விலத்துங்கள்!
கடவுள் வரம்கொடுத்தாலும் கதவுதிறவாப் பூசாரிகளே. வரலாறு உங்களை
கரிக்கட்டியால் எழுதும்!
காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகளிற்கிடையால், கரங்கள் இணைத்தெழுந்து உரைப்போம் உரமாக.
பொங்கு தமிழிற்கு இன்னல் விளையுமெனின் மங்கு சனியல்ல மரணச் சனி.!
தை 2001
முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத் தில் நிகழ்ந்த நாட்களில் எழுதப்பட்டது.

Page 28
52 gr. hégsm er கவிதைகள்
பயிரில் பதுங்கிய வேலி
பூமியதிர கிபிர் வீசிச் சென்றது
கூவிவரும் ஷெல்லில் தலையிழந்து தவித்தன தென்னை மரங்கள்
சப்பாத்துகள் மிதித்து தேங்காய் மட்டைகள் பொச்சாகிப் போக கயிறு திரிப்போர் காத்துக் கிடந்தனர்
 

Loabrad్కల தொலைங்கத LOGO தேடி. 53
கவசவாகனம் டாங்கிகள் கக்கிய தீயில்,
எங்கள் ܐ
கனவுகளும் எரிந்தன
சத்தங்கள் தொடர இடையிடையில் வந்த, நிசப்தம் பயமுறுத்திச் சென்றது
தோப்பிழந்தோம் ஒற்றை மரமாச்சு
ஒற்றைமரமும் இழந்தோம் வெட்ட வெளியாச்சு
வெளிக்கிட்டோம். வெளியில் பாயத்துடித்த உயிரைப் பிடித்து, சட்டைப்பையில் பத்திரப்படுத்தி பாதுகாப்பாய் ஊசியொன்றும் குத்தி வெளிக்கிட்டோம்.
குறுக்க நின்று வேலிகள் தடுத்தன
நாம் வேலிகளானோம் அவர்கள் பயிர்களாயினர் நாம் கேடயமானோம்
அவர்கள் வீரர்களாயே நின்றனர்
அவர்கள்
எம்மில் கவரெடுத்துக் கொள்ளட்டும்
கையுயர்த்துவோரும் கால்பிடிப்போரும் அவர்களில் கவரெடுத்துக் கொள்ளட்டும்

Page 29
கவரெடுத்துக் கொண்டே கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமென்று புறப்பட்டோரிடம்
கைவரிசை காட்டட்டும்
பரவாயில்லை நாங்கள் எம்மவரின் கல்லறைகளில்
கவரெடுத்துக் கொள்வோம்
குடாநாட்டின் பளைப்பகுதியின் யுத்த அச்சம் காரணமாக மக்கள் வெளியேற முற்பட்டபோது படையினர் அதற்குத் தடைவிதித்ததுடன் மக்களிற்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர் களால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டங்களும் தாக்குதலுக்கு உள்ளானது.
அமெரிக்கா பற்றி அன்றே அறிந்துவிட்டான் யாழ்ப்பாணத்தான்
அதனால்தான் என்னவோ சவப்பெட்டிக் கடைக்கு வைத்துவிட்டான் பெயரை “வைற் ஹெவுஸ்" என்று

Loalbraicfaov தொலைஉங்கத Lo6Ongi தேடி. 55
eSnimeo)5
அதோ வருகிறார்கள் தங்கள் கோவணங்களைக் கழட்டி முகங்களை மூடி கைகளை ஏந்தியபடி அதோ வருகிறார்கள்
உற்றுப் பாருங்கள்
உந்தக் கைகளில்தான்

Page 30
56 a résirudër Scਹੀa25Si
ஒடுகிறது அவசரகாலச் சட்டத்தின் ஆயுள் ரேகை
எங்கள் மந்த புத்தியிலும் மறதியிலும்தான் எத்தனை நம்பிக்கை உந்தக் கைகளிற்கு
எங்கள் வாக்குகளின்றியே எங்கள் பிரதிநிதிகளாய் இத்தனை காலமும் ஏப்பம்விட விட்ட நன்றியும் மறந்து
இறைச்சியைத் தின்றுவிட்டு எலும்புகளை இப்போ எமக்காய் எறிகின்றார் அதுவும்,
மீண்டும் அவர்கள் இறைச்சி தின்பதற்காய்
அங்காடி நாய்களாய் நாங்கள் அலைகையில் வளர்ப்பு நாய்களாய் வாலை ஆட்டி
காலை நக்கி, ஆதரவு கொடுத்துவிட்டு இன்று ஒநாய்களாய் அழுகின்றார் ஆடுகள்நாம் நனைவதுகண்டு
விரல்களிற்கு விலங்கிட்டுவிட்டு வீணைகொண்டு வருகின்றார். விமானக்குண்டு எறிகணைக்கு இரையாகிப் போய்விட்ட எம்மவரை எரிப்பதற்கு விறகாக்கிக் கொள்வதற்கோ!

Loabradh్కల தொனoலங்கத LOGO தேடி. 57
எம்குலத்து மங்கையரின் பொட்டுகளை அழித்துவிட்டு பூக் கொண்டு வருகின்றார். என்ன மலர்வளையம் வைப்பதற்கோ!
சூரியோதயம் காட்டுவதாய் சூளுரைத்து வருகின்றார். அஸ்தமித்த உயிர்களிற்கு அந்தியேட்டி செய்வதற்கோ!
கப்பலையே மூழ்கடித்துவிட்டு நங்கூரமிட வருகின்றார். மண்ணிற்குள் புதையுண்ட மனிதர்கள் எழுந்திடாமல் இருப்பதற்கோ!
விழிகளைப் பிடுங்கிவிட்டு வெளிச்சவீடு காட்டுதற்கு விரைந்தே வருகின்றார் இடம்பெயரும் எம்மவர்க்கு இடம்காட்டி உதவுதற்கோ!
அமைதிப்படையுடன் கூடி அட்டகாசம் பல புரிந்து அஞ்ஞாதவாசம் சென்று ஆண்டியாய் வந்துநிற்கும் அரசனும் வருகிறான்
பெரியபிள்ளை பிடிக்கின்ற வாகனத்தில் வந்து விரட்டி விரட்டி வேண்டாத தொல்லைதந்து நட்டநடு வீதிகளில் துடிதுடிக்க
சுட்டுக்கொன்ற அப்பாவி மனிதர்களின் ஆவிகள் உலவுகின்ற வீதிகளில் வருகிறான்

Page 31
வரட்டும் எல்லோரும் வரட்டும்
எங்கள் இதயங்களில் மிதித்துச் சென்ற அவர்களின் பாதங்களின் சுவடுகள் பதில் சொல்லும்
சரிநிகர் - இதழ் 204 ஒக்டோபர் 08 - 14, 2000
2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் வடக்கு கிழக்கிற்கு படையெடுத்தபோது

Loabradfణల தொலைகேத LOGO தேடி. 59
ஒரு பொழுதுதருவாயா எனதருடிைத்தாய்நாடே.
பச்சை வயற்பரப்பில் பால்நிலவு இறங்கிவந்து இச்சை தீர்த்துக்கொள்ளும் இன்பப் பொழுதொன்றில் தெம்மாங்கு பாடிவரும் தென்றலோடு பேசி முற்றத்து மல்லிகையை மூக்குமுட்ட முகர்ந்தபடி பக்கத்தேயமர்ந்து பாடலொன்று எழுதுதற்கு
ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே...!
செம்மணி வெளியெங்கும் சின்னவரைப் புதைத்து அம்மணமாக்கி எம் கண்மணிகள் கதை முடித்து கைதாக்கிக் காணாமற் செய்து காலம் பல கடத்த நனைகின்ற விழிகளோடு நம்பியே காத்திருக்கும் அன்னையர்க்குத்தந்தையர்க்கு அன்பான மனைவியர்க்கு தந்தைமுகம் பார்க்கவென்று தவித்திருக்கும் குழந்தைகட்கு உடன் பிறந்தோர் உற்றத்தார் ஊர்மனைக்கெல்லாம் உண்மையைச் சொல்லுகின்ற ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே...!

Page 32
60 சடகோபண் கவிதைகள்
விசாரணையில்லை விடுதலையில்லை கம்பிகள் பின்னே காலம் கடந்தோட வயதினைத் தொலைத்து வண்ணக்கனவுகள் தொலைத்து கறுத்த நாட்களும் மரத்த மனதுமாய் சிறைகளில் சிந்த கண்ணீரே இன்றி ஒளியினைத் தேடும் விழிகளிற்கெல்லாம் விளக்கினை ஏத்த ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே..!
இரணைமடுத் தாயும் கருணைமடு மாதாவும் மாந்தை ஈச்சரனும் மகிழ்வோடு ஈர்ந்தளித்த மகத்தான வாழ்விழந்து சோமாலியாக் குழந்தை கூட சோகமாய்ப் பார்த்து இரங்குதற்கு ஒர் குழந்தையென்ன ஓராயிரம் கிடைக்கின்ற வன்னியிலே வாய்க்கால் நீர் குடித்து வருகின்ற காற்றின் ஈரம் வறண்டுபோன வாழ்வோடு போராடும் இதயங்களை இதமாக நனைக்கின்ற ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே...!
ஆச்சியும் அப்புவும் அள்ளிக்குளித்த கிணறு அண்ணனும் அக்கையும் ஆடிமகிழ்ந்த முற்றம் தம்பியும் தங்கையும் தவழ்ந்து வளர்ந்த திண்ணை

மண்ணிலதொலைங்தமனதுதேடி. 61
அத்தனையும் அங்குவிட்டு அவதியாய் ஓடிவந்து அகதிமுகாம் சிறையென்று அகராதிக்குச் சொல்கொடுத்து சகதி நிலையங்களில் அடைபட்டோர்க்கெல்லாம் கதவு திறக்கப்பாடுதற்கு ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே..!
அடையாள அட்டை வதிவிடப் பதிவு வார்த்தையிலேயே சேர்க்க நாலு சிங்களச் சொல்லு அத்தனையும் பைதனில் பத்திரப்படுத்தி பாதிவழிகளில் இறங்கி ஏறயிலும் படுத்திருந்து சோக்காக கனவு காண்கையிலும் தட்டிக் கேட்பவர்க்கெல்லாம் சளைக்காமல் எடுத்துக்காட்டி உடம்பு தடவும் உரிமையையும் அவர்களிடம் கொடுத்து அடிமையாகிப் போனவாழ்வு ஒழிந்ததென்று பாடுகின்ற ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே...!
ஷெல் வருமோ செவிடுபடுத்தி நாளை செத்தவீடோ பல் விழுவதாய் பாட்டிகண்ட கனவு பலித்திடுமோ வானம் பிளந்துவந்து விமானம் விழுத்திடுமோ கண்ணிவெடியில் சிக்கி கால்பாதி முக்கால் போயிடுமோ என்றெல்லாம் பயந்தேங்கும் இந்தப் பொழுதுகள் போய்.

Page 33
62 சடகோபன் Sola5S
பச்சை வயற்பரப்பில் பால்நிலவு இறங்கிவந்து இச்சை தீர்த்துக்கொள்ளும் இன்பப் பொழுதொன்றில் தெம்மாங்கு பாடிவரும் தென்றலோடு பேசி முற்றத்து மல்லிகையை மூக்குமுட்ட முகர்ந்தபடி பக்கத்தேயமர்ந்து பாடலொன்று எழுதுதற்கு ஒரு பொழுது தருவாயா எனதருமைத் தாய் நாடே...!
மூன்றாவது மனிதன் - இதழ் 12 ஜூலை, செம்டெம்பர், 2001
இனங்களிற்கிடையில் இடைவெளி குறைபட அயராது உழைப்பவன் மினிபஸ் நடத்துனன்

9UGరీILTం பகுதி
بخاری) varن 6 ماردین(س

Page 34

LoaỀorada தொலைபங்கத Locong ĉiyLo... 65
சனநாயகம்
ஐந்து வருடமாய் அவசரகாலச் சட்டத்திற்கு கையுயர்த்திக் கையுயர்த்தி தோள்மூட்டுக்கு வலியோவலி.
ஐம்பது பேரைக் கொண்டு ஐம்பதாயிரம் வாக்குப் போட்ட களைப்புப் போக
காலம் எடுக்கும்
பளையில தொடங்கி வட்டுக்கோட்டையில் முடிக்க போதும் போதுமென்றாகிவிட்டது
பனைமரங்களிற்கிடையால் வளைந்து வளைந்து உடைந்த தார் வீதியால் குலுங்கிக் குலுங்கி பஸ்வண்டி செல்ல நாரிமூட்டெல்லாம் நரக வேதனை
ஒவ்வொரு நிலையமாய்
இறங்கி ஏறி வேலையை முடிக்க
வெய்யில் இறங்கிவிட்டது

Page 35
இடையிலடித்த கள்ளு புளித்துக் கொண்டு வந்தது பார்சல் சோறு பத்தாட்டிலும் பரவாயில்லை
கன இடங்களில் கை விரல்களிற்கு மையூசும் சிரமம் கொடுக்கவே இல்லை
நாம் பூசியபடியே போய் போட்டு வந்தோம்
நிலையம் நிலையமாய் பிரித்து எடுத்து வாக்கு அட்டைகள் வடிவாய் அடுக்கி உரிய இடங்களில் எடுத்துக் கொடுத்து அப்பப்பா. அப்பப்பா.
பொறுப்பெடுத்த வேலையை
கச்சிதமாய் முடித்தும் திருப்தியில்லையாம்
g
தீவுக்கோட்டையில் நுழையவே முடியவில்லை அம்மா கேட்டால் எப்படியோ சமாளிப்பம்
வேர்வை நாத்தம் குளிச்சுச் சாப்பிட்டு கொஞ்சம் ஒய்வெடுத்து தோள்மூட்டுக்கு எண்ணெய்பூசி ஆவலாய்க் காத்திருப்போம் அடுத்த மாத அவசரகாலச் சட்டத்திற்காய்
ஞாயிறு தினக்குரல் ஒக்டோபர் 01, 2000 ஜனாதிபதி தேர்தல் - 1999)

Loabradణల தொலைங்கத Logory. தேடி. 6ア
ஒருநிறம் இரண்டு இரத்தம்
தேங்காய்களும் மண்டைகளும் சிதறி குருதியும் சேர்ந்து கொட்டி வெண்டிக்காய்களோடு விரல்களும் வீசி எறிபட
சந்தையும் சனமுமாய் சிதைந்து கிடந்தது
வன்னிமண்ணால் வந்த காற்று வாங்கிவந்த ஒப்பாரியோசை எந்தக் காதிற்கும் கேட்டதாயில்லை
உறுமல் சத்தம்தான் உடனே கேட்குமோ
புதுக்குடியிருப்பில் ஓடிய ஆறு கந்தளாய்க் குளத்தில்
శ్రీడ N

Page 36
68 சடகோபண் கவிதைகள்
கண்ணீரை நிறைக்குமென்று யார்தான் நினைத்திருந்தார்
இரவோடு இரவாக அது நிகழ்ந்தே விட்டது
விடியலுக்கு முன்பாக கத்திகளும் அரிவாள்களும் ஆற்றில் மூழ்கியெழுந்து அக்கரை சேர்ந்தன
அம்புகளும் கேடயங்களும் அறுபட்டுக் கிடந்தன எய்தவர்களும் வில்லுகளும் எகிறிக் குதித்தன
வேட்டுச் சத்தங்களை விட இந்த
வெட்டுச் சத்தங்கள் உரத்துக் கேட்டன செவிட்டுக் காதுகளும் உயிர்த்துக் கொண்டன
இது என்ர அம்மா அல்ல
மகே. யம்மா. ஊ .
ஒட்டு மொத்தமாய் மாண்டவர் மக்கள் ஒடிய இரத்தமும் ஒரே நிறம்
மனிதம் செத்து
மாதங்கள் வருடங்களாச்சு
செத்த பாம்பை எத்தனை தடவைதான் திரும்பத் திரும்ப அடித்துக் கொல்வது
கொஞ்சம் விலத்துங்கள் காற்றேதும் பட்டு

அது கண்விழிக்க வழியிருக்கோ
காத்திருப்போம் அதுதானே எமக்குள்ள ஒரே வழி.
ஞாயிறு தினக்குரல் ஒக்டோபர் 03, 1999

Page 37
70 ూ_rf=mudr=&pg=h
பரியோவான் அம்மா...!
பனைகள் கொடுத்த பதனீர்குடித்து பாவை முகிலாள் ஆடி அசைந்து அழகாய் நடந்து மழையாய்ப் பொழிய பயிரும் பச்சையும் விளையும் பூமியில்...!
நூறோடு ஏழுபத்தும் ஒரைந்து ஆண்டும் சிறகினை விரித்த அன்னைப் பறவையே..!
அம்மா உந்தன் கரங்களிற்குள்ளே, அடைக்கலமான தலைமுறை ஐந்து, உன்மடியினில் தவழ்ந்து மார்பினில் அருந்தி பாரினில் மனிதராய் மிளிர்வது பாரு.
எத்தனை எந்திரி..! எத்தனை மந்திரி..! வைத்தியர் எத்தனை...!
வாத்தியார் எத்தனை...! எண்ணி எண்ணியே

Loaðradfood ఏyD-- Locorg தேடி. 71
பெருமை பேசுலகில் மனிதரை ஆக்கினாய்...! நல்ல மனிதரையாக்கினாய்...! மனதினில் நிறைவும் மகிழ்வும் கொள்கிறேன்.
மலைவேப்ப மரக்காற்று, குலைதள்ளும் கொழும்புக் கதலிதனில் கோதுகின்ற சிறுஅணில்கள், வலைபோன்ற இலையசைத்து புன்னகைக்கும் புளியோடு பூச்சொரிந்து வாகை புதுவழகு காட்டும் வாவென்று அழைத்து வெளவாலை வயிராத்தும் இலுப்பையும் சேர் அழகுச்சோலையிலே.
வண்ணத்துப் பூச்சிவரும் வடிவானதும்பிவரும் எண்ணத்தைச் சொல்லவென்று எத்தனையோ பறவைவரும் என்னத்தைச் சொல்வேன். அம்மா எந்தன் சின்னவயது நினைவுகளில் என்னத்தைச் சொல்வேன்.
ஞாபகார்த்த விடுதிகளில்
நாங்கள் தொலைத்திட்ட ஞாபகங்களையா..! யூக்கலிப்ரஸ் மரங்களிடம் களவு கொடுத்த எங்கள் கலகலப்பையா...! மைதானப் புல்மேலமர்ந்து நட்சத்திரங்களோடு விழிகளைப் பேசவிட்ட இரவுகளையா...!

Page 38
72 FurčsmLucČT கவிதைகள்
என்னத்தைச் சொல்வேன். அம்மா எந்தன், சின்னவயசு நினைவுகளில் என்னத்தைச் சொல்வேன்.
இத்துணைதுயரும் இடம்பெயர்வும் இத்தரையும் மாந்தரும் படுவன நீங்கி. வளர்வாயம்மா வாழ்நீ!
ஞாயிறு தினக்குரல் (Bufo 10, 1998
175 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியாகிய எனது வளர்ப்பு அன்னைக்கு சமர்ப்பணம்
வாகனங்கள் வாய் திறந்து வாழ்த்தின பெண்கள் விதிக்கு வந்ததால்தானே நாமும் எம்மவரைக் கொஞ்சமுடிகிறது.

uඋග්xගප්vථා தொலைந்த Logo தேடி. 73
தொலைதல்
காலம் காலமாய் உரிமை காணாமல் போனது, மேடையில் முழக்கம் .
ஊர்களும் பேர்களும் இரவோடு இரவாக,
அறிக்கைகள். மகஜர்கள்.
பாரம்பரிய பூமி பகற்கொள்ளை போனது, பாராளுமன்றில் கூ . குக்கூ . கூ .
பண்பாடும் கலையும் கண்முன்னே களவு, கதை . கதை .
இளைஞர் யுவதிகள் எங்கோ தொலைந்தனர் தொலைத்தனர்,
தகவல் திரட்டி
Ꮷ5ᎶᎣ 1ᎶᏡᎠᎶᏂᎧ . . . . ᏯᏏᎧ1ᎶᏈᎠᎶu)
திடீரென
ஒரு அரசியல்வாதி, அனைவரும் எச்சரிக்கையாகினர்
தமது s இருப்பையெண்ணி .
யூன் 1998

Page 39
74. F_résm_1& =eda-z=s"
செப்டெம்பர் ஐந்து
முந்திய இரவொன்றில் முத்தமிட்டுச் சென்ற காற்று மீண்டும்
ஒரு முறை
வார்த்தைகள் எதையும்
அது
வாங்கி வரவில்லை
ஞாபகங்களை மட்டும் உள்ளங்கையில் எழுதி எடுத்து வந்தது
உன்
அம்மையப்பனை என்னோடும் பகிர்ந்து கொண்டவனே
நீ பறந்து போய் இன்றோடு பன்னிரண்டு ஆண்டுகள்
எல்லாம்
நேற்றுப் போல்
பனைமரங்கள் நிழல் விரித்த பசுமண்தரையில்
நாங்கள்
List19 g, glug.

75 .தொனoலங்கத Loog தேடி ܚܧܘerfܗ±zܩ
ஒரு புறம் பலாவும் மறுபுறம் மாவுமாய் மலர்ந்திருக்கும் முற்றத்தில்
நீயும் நானும் அக்கா தம்பி தங்கையோடு
புழுதி குளித்து பொன்நிறமானது
எல்லாம்
நேற்றுப் போல்
கோடை முடிந்து மாரிக்குள் புகுகின்ற ஒரு பொழுதில்
f
பிரிந்து போய் பின்னர்
ஒரு தைப்பிறப்போடு வந்து போனது
எல்லாமே நேற்றுப் போல்
கடைசியாய்
இடைநடுவில் உனைத் தொலைத்துவிட்டு
எங்கள் இதயத்தில் வந்து தரைதட்டி நின்றதே அந்த ஒடம்
அதுவும் 'நேற்றுப் போல்
ஆயினும் ஆண்டுகள் பன்னிரண்டு

Page 40
76 F-Iréæsm_&r கவிதைகள்
அன்று
ஒரு அமாவாசை
இன்று பெளர்ணமிக்கு முந்திய ஒரு இரவு
ஞாயிறு தினக்குரல்
செப்டெம்பர் 05, 1998இல் எழுதப்பட்டது.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் கொடு என்று கூறிய என் பிரிய இயேசுவே.!
இரு கன்னத்திலும் அறைந்தால் என்ன செய்வதென்று நீ சொல்லவேயில்லையே.

மண்ணிலதொலைங்தமனதுதேடி. 77
போர் என்றால் போர்
புதைந்து போன சமாதானத்தை தோண்டி எடுக்கவா. நடாத்து போரை!
சிதையும் தேசம் பற்றி . சிந்தியாதே சிறிதும் இதுவொரு சமாதானத்திற்கான போர்!
விமானங்கள் விழுகிறதே. பயப்படாதே உடைந்த சோவியத்திடம் இருப்பினும் இருக்காம்!
கப்பல்கள் கவசவாகனம் அப்பப்ப அடிபடுதே. புதியதை வாங்கு போருக்கு தரகதை வாங்குன் பேருக்கு
நோயும் பசியும் குண்டும் ஷெல்லும் கொல்லுது பலரை. நாளைய சந்ததி நாளும் தொலையுது. அதற்கென்ன இப்போ! ஆதாமும் ஏவாளும்தானே ஆக்கித் தந்தனர் இத்தனை கோடியை!

Page 41
78 சடகோபண் கவிதைகள்
அப்பசரி, நடாத்து போரை ஆனால் ஒன்று. என்ர பிள்ளையோட உன்ர பிள்ளையும் வருமோ போருக்கு.
ஞாயிறு தினக்குரல் ஜனவரி 25, 1998

Loaðrards தொலைங்கு LOGO தேடி. 为
மா.நகரும் தேர்தல்
LDFTLDFT. ». »
என்னடா. கொழும்பு மாநரகம் இதுதானோ
எட பேயா மாநகரமெடா இப்பத்தை டீச்சர்மார் உச்சரிப்பை
கவனிப்பரோ

Page 42
80 சடகோபன் கவிதைகள்
என்னது ஆரவாரம் தேர்தலடா தேர்தல்
அப்படியெண்டா இந்த மாநகரை ஆண்டவையை மாத்தவாம் அப்ப உந்த குப்பைத் தொட்டியள் குமட்டல் மணம் கொஞ்சம்
குறைவாய் வீசும்
தெருவோரச் சாக்கடைகள்
மலரும் தாமரைத் தடாகங்களாய் வடிகால்கள்
மெல்ல வடியத் தொடங்கும்
வாகனங்கள் சாம்பிராணிப் புகைவிட்டு சாதுபோல் செல்லும்
நுளம்பு கொழும்பிலயோ 6ë...
அப்ப இலையான் இல்லை ராசா
வருத்தம் கிருத்தம் மருந்துக்கும் இல்லை

6Tilsl பொருளாதாரம் உங்க பார்
சுவரெல்லாம்
பிறப்பு இறப்பில்லா உந்தப் பிரசுரங்கள்
எல்லாம் அஞ்சலிக்குத்தான்
அப்ப
எல்லாம் முடிய உந்தக் குப்பையை
குண்டொன்று கிடப்பதாய் புரளியைக் கிளப்பு.
8
வீரகேசரி வார வெளியீடு
பங்குனி 1997 கொழும்பு மாநகரசபைத் தேர்தல்
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றாயே
இயேசுவே நம் நாட்டுக் கொள்ளைக்காரரிற்கா...!

Page 43
82 சடகோபன் கவிதைகள்
மேதினமே நீகேளு.
நிலம் பெயர்த்து பயன்படைத்த மானிடர் நாம் புலம் பெயர்ந்து போன கதை மேதினமே நீ கேளு ...!
வன்னியிலே வாழுமெங்கள் வயிறுகள் இரையும் பள்ளியிலே எம்பிள்ளை பாதியிலே மயங்கிவிழும்
கல்லிலே நார்உரித்த கடும் முயற்சியாளரின்று எல்லையிலே உடைத்தொட்டி எம்மிடத்தே வந்த கடிதமொன்றைப் பிரிப்பதற்கே முடியாது போனகதை ...!
மருந்தில்லை மாத்திரையில்லை வருத்தத்தால் விடுபட இறந்து விடுவதுதான் ஒரேயொரு வழிமுறையாய் ஆகிப் போனகதை ...!
நிலக்கீழ் நீரெடுத்து செம்பாட்டு மண் நனைத்து வளம்கொழிக்கும் பூமியிலே வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்

Loabradfణల தொலைகேத LOGO தேடி. 83
அங்குமின்றி இங்குமின்றி எங்குமேயின்றி . அகதிச் சிறைதனிலே அடைப்பட்டு வாடும்கதை ...!
நிலம் பெயர்த்து பயன்படைத்த மானிடர் நாம் புலம் பெயர்ந்து
போனகதை மேதினமே நீ கேளு ...!
வீரகேசரி வார வெளியீடு (3o 01, 1997

Page 44
விழித்துளிநம்பிக்கை
முழங்கை உராய்வும் முள்ளுக்கம்பி கிழித்த முதுகுக் காயமும் முழுக்க ஆற
நாட்கள் எடுக்கலாம்
நேற்றோடு என் பயிற்சி முடிந்தது
 

மண்ணிலதொலைங்தமனதுதேடி. 85
இன்று மாலை அல்லது நாளை வடக்கிற்கு நான் அனுப்பப்படலாம்
அன்னையிடம் விடைபெற்ற அன்றைய காலையில் அவளின் ஒட்டிய கன்னத்தில் ஊர்ந்த நீர்த்துளி என்னையும் நனைத்து என் பின்னே பிறந்த
சின்ன கண்களையும் நனைத்தது
நிலவு காட்டி
அமுது ஊட்டி என்னை வளர்த்த அம்மா..! மீண்டும்
ஒரு கவளம் சோறு உன் கையால்
வாங்கி உண்ண வருவனோ நானறியேன்
தம்பியரே தங்கையரே...! அலை நனைத்த மணற்பரப்பில் ஒடும் சிறு நண்டுகளாய் விளையாட ஒரு பொழுது மீண்டும் கிடையாமலே போகலாம்
ஆயினும் நான் போகிறேன்.
தென்மேற்குக் கரையோர சின்னக் கிராமத்தில் என் குட்டிக் குடிசையும் பூப்பதற்காய். f
ஞாயிறு தினக்குரல்
டிசம்பர் 12, 1999
ஆவணி 1997இல் எழுதப்பட்டது.

Page 45
85 சடகோபண் கவிதைகள்
ஒரே சிறை
இன்று திருக்கார்த்திகை உங்களிற்காயும் மூன்று தீபங்கள் என் மன
முற்றத்தில்
நேற்று நீங்கள் மரித்துப் போனிர்கள்
காற்றும் புகமுடியா கறுத்த அறைகளிற்குள்
 

87 .தொலைங்கத மனது தேடி رحمہreDغe<
கத்திபொல்லுகள் மட்டும் எப்படிநுழைந்ததோ நேற்று நீங்கள் மரித்துப் போனிர்கள்
காவல் நாய்கள் ஏவல் பேய்களாகி ஏப்பம் விட்டனவா என்ன தூக்கம் போட்டனவா
எல்லாம் முடிய எழுந்து வந்து நிம்மதியாச ஒரு மூச்சுவிட்டு சிகரட் பற்றவைத்து செய்தியொன்றனுப்பின
சாப்பாட்டுச் சண்டையில் சாவடைந்தனர் பயங்கரவாதிகள்
எத்தனை தடவைகள் உரிமை கேட்டு உண்ணாமல் இருந்த உங்களையா உணவுச் சண்டையில்.
ஆச்சியும் அப்புவும் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்து செத்து உரமாகிப் போன ஊரான ஊரிழந்து குந்தியிருக்கவும் குதியொன்று வைக்கவும் எந்தை மனிதர் ஏங்கியலைந்து.
கடைசியில் சிறைகளில் கூட இருப்பில்லையென்றால்.

Page 46
88 P_rt=mudrasబం956*T
g. . . . புரிகிறது தாயே
உனது ஒரே தேசம் ஒரே மக்கள்
ஞாயிறு தினக்குரல் டிசம்பர் 28, 1997
கார்த்திகை 1997இல் களுத்துறைச் சிறையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக எழுந்த எனது
மனநிலை,
நிமலராஜன் நினைவாக
பூமியின் புதினப் பரப்பெங்கும் புயலைப் பரப்பிய பூ ஒன்று உதிர்ந்து கிடக்கிறது
வடக்குப் புனரமைப்பு தொடக்கப்படுவது ஊடகத் துறையிலோ.
புகைந்த இடமெங்கும் உறிஞ்சி எடுத்து ஊதிவிட்டவனை உலுத்திவிட்டவர் யாரோ.!

Loabradhణల தொலைங்கத LOGO தேடி. 89
மீள்வு
இப்போது நான்
ஒரு மீட்கப்பட்ட குடிமகன்
நான் வசிப்பது மீட்கப்பட்ட பூமி
வீட்டுக்குள் ஒரே நிசப்தம் வெளியில் போக கால்களிற்குத் தயக்கம் எனவே. விழிகளை விட்டேன் வெளியில்
வீதியில் மனித உருவமொன்று
நீண்டகால இடைவெளியின் பின் பழைய நிலைக்கு மீண்டு கொண்டிருக்கும் ஒருத்தன்
அவன் லஞ்சப் பேர்வழியாயோ
89 (5
ஊழல்காரனாயோ இருக்கலாம்

Page 47
90 சடகோபண்கவிதைகள்
கசிப்பு விற்றோ களவெடுத்தோ
அவன் பிழைப்பு நடாத்தலாம்
சந்தியில் சண்டித்தனம் விடுபவனாய்
கப்பம்
கேட்பவனாய்
கறுப்புச் சந்தை வியாபாரியாய்
பொதுச் சொத்தில் பொருள் சேர்க்கும் உயர் அதிகாரியாய் எப்படியும் இருக்கலாம்
கத்தியைக் காட்டி சைக்கிள் பறிக்கவோ சங்கிலியறுக்கவோ
தனியாய்ப் போகும் பெண்ணிடம் M வம்பு பண்ணவோ வசதியாய் இடம் தேடி
தோட்டவெளி பனங் கூடல் மூலை முடுக்கு
எங்கோ அவன் போய்க் கொண்டிருக்கலாம்
ஒரு வேளை சூதாடவோ போதைப் பொருள் விற்கவோ

Loabradfణల தொலைங்த மனது தேடி. 91
ஆள் தேடித்தான் போகிறானோ என்னவோ எனக்கு
எதுவும் தெரியாது
ஆனால் ஒன்று மட்டும் மெல்ல மெல்ல புரியுமாப் போல
எனது தேசம்
யாரால்
எதற்காய் மீட்கப்பட்டதென்று.!
ஞாயிறு தினக்குரல் qassFiburi 19, 1999
மார்கழி 1996இல் எழுதப்பட்டது.

Page 48
92 சடகோடன் கவிதைகள்
மண்
மீட்கப்பட்டது
மனிதர் மீட்கப்பட்டனர்
யாரிடமிருந்து
யாரால்
எதற்காய்
இந்த மீட்பு நிகழ்த்தப்பட்டதோ.
 

Loaềoracoot) தொலைநீத Loog தேடி. 93
மூச்சுவிட எமக்கொரு முற்றம்.
கால்நீட்டியமர்ந்து கொஞ்சம் சத்தமாய் கொட்டாவி விட்டு சோம்பல் முறிக்க ஒரு திண்ணை.
வயிறு நிரம்ப குடிக்கவும் களைப்பு நீங்க குளிக்கவும் ஒரு கிணறு .
இயற்கையிருக்க ஒரு மறைப்பு. கிடைத்தன என்பது உண்மையிலும்
உண்மை
ஆயினும் ஷெல் சத்தமில்லாத இந்த இரவும் விமானம் வந்து குண்டு வீசாத இன்றைய பகலும் அன்றைய நாட்களை விட
அச்சம் தருபனவாய்.
வீட்டுக் கோடியிலும் வேலியோரத்திலும் சிறுநீர் கழிக்க விருப்பமாய் போவதும் பின்னர் எதையோ நினைத்து பயந்து. r
எங்கெங்கு என்னென்னவோ
யார் யாரோ.

Page 49
94 சடகோபன் கவிதைகள்
முந்தநாள் கூட மூன்று இடங்களில் கால்கள் போனது
நேற்று பரீட்சை எழுதிவிட்டு வந்த பள்ளிப் பெண்ணொருத்தி காணாமல் போனாள்
இன்று காலையில் சந்திக்கடையில் நெருப்பெட்டி வாங்கிய ஒருவரும்
சைக்கிள் கடையில் வேலை செய்யும் சிறுவனும் கூட்டிச் செல்லப்பட்டனர்
மனம் ஏதோ புரிந்ததுபோல எதையோ எதிர்பார்த்தபடி..!
ஞாயிறு தினக்குரல் சித்திரை 09, 2000
ஆவணி 1996இல் யாழ்ப்பாணம்

Lcabraco தொலைஉேத LOGO தேடி. 95
புத்திரிகையாலை
ஏரிக்கரையாலையில் என்னமாய் உற்பத்தி வாழைச்சேனையைத் தோற்கடித்து வாரிவழங்கும் கட்டுக்கட்டாய்
தணிக்கை இதற்கு தலையிடி இல்லை இனிக்க எழுதி தாகம் தீர்க்கும்
விளம்பரதாரர் பக்கம் நிரப்ப பலதும் பத்தும் அவரவர் எண்ணம் பளபளக்கும் பலபலவண்ணம்
சுருக்கமாய்ச் சொன்னால் சாப்பாடு கட்ட நல்ல சாமான்

Page 50

శ్రీపాyంue
assy/12 //۱۶۱ وضع

Page 51

நகர்வு
வளாக முன்றலும் வழியும் தென்றலும் வார்த்தைகள் இன்றி வழியனுப்பும் காலம்
முகங்கள் யாவிலும் சோகம் கால்களை நீட்டி சோம்பலாய்
படுத்துக் கிடக்கிறது
நாலுவருட
நகர்வில் நாலாயிரம் உறவுகள் நானூறு கோடி நினைவுகள்
சுமக்க முடியாப் பாரத்தில் தள்ளாடும் இதயத்தை கைநீட்டியழைக்கும் உடம்பே இல்லா எதிர்காலம்
இந்த
நாலு வருட நணைப்பு வரப்போகும் நாற்பது வருட வரட்சியை
தாங்குமோ என்னவோ

Page 52
100 శా_€=muరిr=&బంgsపోT
சும்மாதிரியும் மனதும் சுமந்து கொள்கிறது ஈரத்தை
நாளை மழை பெய்யக்கூடும்
யாழ். பல்கலைக்கழக இறுதி வருடம் 1993இல் எழுதப்பட்டது.

uంabad தொலைநீகத் Locryćy o. 0.
܂ ܘfܟܐ
புஷ் என்று காற்று வரும் பொது அறை
முகப்பிலே பூச்சொரியும் வேப்ப மரம் அருகிலே குக்குறுப்பாச்சான்
குடியிருக்கும் அரளி क्।

Page 53
102 rurasituax கவிதைகள்
ஒய்யாரமாய் வயசுப் பெண்ணுருவில் வளைந்து நின்று மனசைக் குழப்பும் செவ்வலரி
பலதையும் பரிமாறிச் செல்லும் சிற்றுண்டிச் சாலை
பொன்னிறமாய் மாறி வண்டினத்தை குலவவிட்டு
பூவையரை ஏங்க வைக்கும் கொன்றை
வளாகப் பெண்ணாய் கலகலக்கும்
யூக்கலிப்டஸ்
இடையிடையே அச்சம் தர ஒசையிடும் சவுக்கு
நெஞ்சிருக்கும் கல்லிருக்கை நிழல்விரிக்கும் மலைவேம்பு
இந்தக் காற்று
LDGOOT Ljov வண்ணாத்திப் பூச்சி தும்பி கலையரங்க விரிவுரையில்
தவறாது
வந்துபோகும் அந்த அணில்
எல்லாமே அப்படியே இருக்க எம்மை மட்டும் ஏன்..!
யாழ். பல்கலைக்கழக இறுதி வருடம் - 1993இல் எழுதப்பட்டது.

Loabraday தொoைலங்கத Loorg தேடி. OE
பதிவு
நடந்தன கால்கள் கழுத்தைத் திருப்பி விழிகள் பதிக்கையில் அழுத்தமாய்
சுவடுகள்
இந்த
வயசுக் கனவுகள் மனசுக்குள் கூதலடிக்கும்
நினைவுகள்
அழுத்தமாய் இறங்கி இதயத்தை அழுத்த தொடர்ந்தன கால்கள்
መmኝ
யாழ். பல்கலைக்கழக இறுதி வருடம் - 1993இல் எழுதப்பட்டது.

Page 54
104 srulurĉas Tulluðr கவிதைகள்
கடைசிக் கணப்பொழுது
இது நாலு வருட நகர்வின் ஒரு மீட்பு
எமது
பாதங்கள் உதிர்ந்து வந்த சுவடுகளின் படப்பிடிப்பு
பசுமையான புல்வெளியில் மனதினை தொலைத்துவிட்ட
ஒரு
மானிடத்தின் தேடல்
அன்று அந்நிய முகங்கள் அடுக்கப்பட்ட பூமியிது
சொல்லிட முடியா துயரம் தோய்ந்த காலம்
இருபது வருடமாய் ஆசையாய் வளர்த்த மீசையை எடுத்து
ஆயிரம் கனவுகள் விழிகளில் சுமந்து அடியெடுத்து வைத்தது அந்த

Loafraddfael தொலைந்த Logongl தேடி. 5
ஆவணிமாதத்து எண்பத்தியெட்டில்
விரிவுரைகள் தொடங்க பகிடிவதைகள் பாய்ந்து வர பதுங்கி வரும்
நாங்கள்
ஒதுங்கி வரும், அணங்குகளின் ஒய்யாரநடையையும் மூக்குநுனிச்சிவப்பையும் பார்த்து
மூச்சுவிட்ட
காலம்
பிள்ளை பிடி தொல்லையரின் பிடியிலிருந்து தப்ப பச்சை மட்டை அடையாளவட்டை
பத்திரமாய் இருக்கும்
விரிவுரையின் இடையினிலே நகர்வலங்கள்
சென்று திரைப்படங்கள் பார்த்து திரும்பியும்
வருவதுண்டு
வரலாற்றுச் சிறப்பான கலையரங்க
கூட்டங்கள் உண்ணாவிரதங்கள் ஊர்வலங்கள்
உணர்ச்சிகளால் பொங்கிய காலம்
வளாக வளவினுள் இரவுவரை

Page 55
106 Iréasugõ கவிதைகள்
நின்று
sp.600T606) till D கன்ரீனில் உண்டு
மின்னொளிக்கு மறைந்து சிறுநீரும் கழித்து அறைபோய்ச் சேர நடுச்சாமம் ஆகும்
சுற்றுலாக்கள் சென்ற சுகமான நினைவுகளில் எங்கள் மனதோடு நிற்பவர்கள் மறைந்தவரும் பிரிந்தவரும்
ஆறுமாத
அச்சமிகு விடுமுறையின் பின் அடுத்த கல்வியாண்டு முற்றிலும் புதிய சூழல்
பொருளாதாரம் போக்குவரத்து மின்சாரம்
தடை
g560) -
g560)-
போரின்
கோரப் பிடியில்
எங்கள்
புனித பூமி
DITGOG)
ஆறுமுப்பதுக்கே அனைவரும் விசிலடித்து அனுப்பப்படுவர்

Logbræve தொலைங்கத Loogi தேடி. 107
நல்ல வேளை மணியடித்து நடப்பது பூசை மட்டும்தான்
நகர்ந்தன நாட்கள் நடந்தன கால்கள்
உருண்டன வருடங்கள் உள்ளங்கள் இடம்மாறும் வேகத்தில்
கடைசிக்கு வந்ததும் கால்கள் தயங்கின
காதல் கலியாணமாகும் வேகத்தில்
பச்சைத் தண்ணிகூட விக்கிக் கொள்கிறது தொண்டையில்
விழிகளில் எப்படியோ வந்துவிடுகிறது ஈரம்
இருப்பவனையும் சுமந்து பின்னால் இருப்பவனின் இரண்டு கால்களையும் சுமக்கும் எங்கள்
விரிவுரை மண்ட கதிரைகள் போல் நெருக்குதலுக்குள்ளே
மனம்
இத்தனை காலமாய் இங்குநாம் எறிந்த வார்த்தைகளை தம்மகத்தே
வாங்கிய
இந்த
மரங்களின்

Page 56
108 gr časnu dèr கவிதைகள்
படிக்கட்டுகளின் சுவர்களின் மண்டபங்களின் கதிரைமேசைகளின் மெளனங்கள் பேசுவது மனிதர்களின் வார்த்தைகளை விட கனதியாய்
மந்த மாருதம்
வீசும் அந்திப் பொழுதுகளில்
துணைவேந்தர்அலுவலக முன்புள்ள
கம்பிகளில்
மைதானம்
பார்த்தமர்ந்து
வானத்தின்
எழில் கோலங்களை ரசித்த
அந்த
DfT66) பொழுதுகளிற்குத் தெரியும் எங்கள்
மனதுகள் பற்றி
இவ்
வாழ்வினின்றும் சுமந்து செல்லும் அதிர்வுகள்
உடலுக்கும்
உயிருக்கும் உறவறும் வரையிலும் எங்கோ
ஒர் மூலையில் உலவிக்கொண்டேயிருக்கும்

Loatada) தொலைந்த Loog) தேடி. ዝ09
உணர்வுகளை மெளனமாக தூக்கிச் செல்லும் நெருக்குதலை விட்டெழுவோம்
கைகொடுத்து எழும்புங்கள் என்
இனிய சகோதரரே கைகொடுத்து எழும்புங்கள் காலம்
இன்னும் கணப்பொழுதுதான்
யாழ். பல்கலைக்கழக இறுதி வருடம் - 1993இல் விடை தந்த வைபவத்தில் படிக்கப் பட்ட கவிதை.

Page 57
10 சடகோபண் கவிதைகள்
குழிபறித்த பதுங்குகுழி
முகில்கள் மெல்ல அசைந்து சொல்லிச் சென்ற சோகம் முகங்களில் இறங்கிக் கொண்டது.
இருபது உயிர்கள் இமைகளை மூடியதுயரம் விழிகளை நனைக்க இதயம் விம்மிக் கொண்டது
மூச்சுக் கொடுக்க
மறுத்த காற்றே ...!
குழலிலும் யாழிலும் இனியமொழிக் குழந்தைகள் கதறியழுதது. கதறியழைத்தது
g9 657
காதில் விழவில்லையா!
நாளும் பொழுதும் உன்னோடு விளையாடும் இந்த
சின்னத்துளிர்களை மண்ணே நீயேன் மூடினாய் உன் மனதை
ஏன் மூடினாய் ...!

toabracob தொலைஉங்த Logo தேடி. 11
சிற்றெறும்புகளே புற்றுகளிற்குச் செல்லாதீர்கள்!
இது பதுங்குகுழிகளே குழிபறிக்கும் பயங்கரமான தேசம்
கிளாளிக் கடலால் குமுதினிப் படகாய் வெளிக்கடைச் சிறையாய் மாறிப்போன
அந்த கடைசிக் கணங்களை .
குடும்பங்கள் கூடுவது கொலையுண்டு போவதற்கென்ற தேசத்து வழமையை .
எப்படி . எப்படி ஏற்க எம் மனதுகள்
கேட்கும்.!
செப்டெம்பர் 28, 1993 இல் சாவகச்சேரி சங்கத் தானையில் பதுங்கு குழியருகில் போடப்பட்ட புக்காரா விமானக் குண்டால் குழிக்குள் மூழ்குண்டு இறந்த குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 20 பொதுமக்கள் நினைவால் எழுதப் tu l-l-&l-

Page 58
112 rurassruar Sa-ਲੁਕ
இரு புறங்கள்
அங்கு
சிறிலங்காவின் ஆடையை அவிட்டு அடகு வைத்து திறக்கிறார்கள் ஆடைத் தொழிற்சாலை
இங்கு
தேசமாதாவின் ஆடையில் ஒரு நூலையேனும் சிதைக்க வருவோனின் சிரசைக் கொய்து அதையும் அவளிற்கு ஆடையாக்கிறார்கள்
ஜனவரி 28, 1993இல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற கலைவார கவியரங்கில் முதல் பரிசுபெற்ற கவிதையில் இருந்து ஒரு சிறுபகுதி

ucóak೨ Gyraoeurès, Loogi தேடி. 13
மெல்லத்தவமும் காற்றே
- பாடல்
மெல்லத் தவழும் காற்றே கேட்கிறேன் மேனி தன்னை நீயேன் மீட்டுறாய் பகலுமில்லை இரவுமில்லை நிகழ்வுமில்லை நினைவுமில்லை நெஞ்சில் தீரும் என்று தொல்லை
(மெல்ல)
இரையும் கடலும் தரையில் உரசி இதயம் நனையும் கதைகள் சொல்லும் அலையும் முகிலும் விழிகள் பொழியும் அவனி எங்கும் துயரில் நனையும் நிலவு வழியும் நீண்ட வழியில் நிழல்கள் அசைந்து நெஞ்சம் அதிர பணியைத் தூவும் முகிலே - நீயும் துணிவை இங்கு தூவுவாயோ ...!
(மெல்ல)
இரையும் வயிறு ஏக்கம் நெஞ்சில் இமைகள் இரண்டும் தூக்கம் கெஞ்சும் உலர்ந்த உதடும் உரிமை கேட்கும் தளர்ந்த மனதும் எழுந்து நிற்கும் களையை இழந்த தேச மண்ணின் நிலையை எண்ணி துயரம் உயர அமுதை ஊட்டும் அம்மா - நீயும் அனலாய் இங்கு மூட்டுவாயோ ...!
(மெல்ல)
ஜனவரி 28, 1993இல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற கலைவார கவியரங்கில் முதல் பரிசு பெற்ற கவிதையில் இருந்து உருவான பாடல்

Page 59
114 சடாகோடன் கவிதைகள்
வேப்படிரக் காற்று - பாடல்
வேப்பமரக் காற்று வந்து
வீசவில்லை வேலியோரச் செவ்வரத்தை
பூக்கவில்லை தோப்புக்குயில்ப் பாட்டுமிங்கு
கேட்கவில்லை -நாங்கள் துயிலெழும்பக் காலையின்னும்
விடியவில்லை
(வேப்பமரக் . . . . ・ル
உற்றமும் ஊரும் ஒருநாள்ப் பிரிந்து ஒற்றை மரநிழல் இழந்து முற்றத்துப் பாயில்போட்ட
முத்தான நெல்மறந்து குட்டியாடு கட்டிநிற்க
விட்டுவந்தோமே - நாங்கள் கோடியிலே நாய்குரைக்க ஒடி வந்தோமே
(வேப்பமரக் . . . . . )
 

Loafracio- தொலைங்கத uoog தேடி. f15
சோற்றுப் பருக்கை கனவில்
எந்நாளும் வந்து வாட்டும் வயித்தை என்ன செய்ய காற்றையள்ளித் தின்றுவிட்டு கையலம்பத் தண்ணிதேட
பக்கத்திலே குழந்தைவந்து பசித்துநிற்குமே - அதன்
பால்வடியும் முகமதிலும் நீர்நனையுமே
(வேப்பமரக் . . . . . )
வேதனை உலவும் நீண்ட இரவும்
விடிந்தும் விலகா இருண்ட முகிலும் அடிக்கடி எழுந்தலைந்து
ஒடியோடி வலுவிழந்து வாடிவந்த மனங்களிலே
வழிமறக்குமா - இருள் ஒடிநின்ற முகங்களிலே ஒளி பிறக்குமா
(வேப்பமரக் . . . . . )
ஜனவரி 28 1993இல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற கலை வார கவியரங்கில் முதல் பரிசு பெற்ற கவிதையில் இருந்து உருவான பாடல்

Page 60
16 rčsme கவிதைகள்
நேற்று வந்த சிவரமணி இன்று ஏன் வரவில்லை
நேற்றைய பொழுதில் எம்மோடு . கதைபேசி சிரித்தவள் காற்றோடு கலந்தகதை, காதுகளுக்குள் புகுந்து இதயத்தை இறுக்கி விழிகளால் வழிய வழியே இன்றி.
அமுங்கிக் கொண்டது.
வானம் பாடியாய் வளாகத்தில் திரிந்தவள் ஏனம்மா இப்படி . சோக
கானம் பாட . சோதியாய் போவது ..?
உன் செயலை ஏற்க மறுக்குதடி! எம் இதயம், ஏங்கித் தவிக்குதடி என் செய்வோம் .
பட்டம் பெற
உனக்கு சற்றுவேளை இருக்கையில் முற்றுப்புள்ளியை ஏனம்மா..!
முன்னுக்கு வைத்தாய்.

மண்ணசிலதொடைங்கத Locory தேடி. 17
சிற்றுண்டிச்சாலையின் நாற்காலி மேசைகளும் மைதான ஒரத்து மரநிழல்
கல்லும்
முழு நிலவாய் சிரிக்கும் உன் முகமதியை
காணாது ...! அழுகின்ற ஒசை மெளனத்தில் அடங்கும்.
கண்ணான காட்சி ஒன்றை காணநாம் காத்திருக்க ...!
கைலாயநாதனடி காணச் சென்றாயோ
றமணி.
GBud 20, 1991

Page 61
118 சடகோபன் கவிதைகள்
காலையில் கால்கடுக்கக் காத்திருந்தோம் கூப்பன்கடை மாவுக்காய்
மதியம் குழந்தைப் பால்மாக்காய்
D6)G)
மண்ணெண்ணைக்காய்
தொடர்ந்தும் வரிசையில்
வழமை போலவே சுப்பர் சோனிக்கும் சியாமா செட்டியும் வந்து போக புல்லும் புழுதியும் நனைந்து போயிற்று
மாலையில் ஹெலிக்கொப்டர் ஒன்று நோட்டீஸ் போட்டுச் சென்றது
 

Loaðradfood தொoைலங்கத LOGO தேடி. 179
புக்காரா ஏனோ இன்னும் வந்தபாடாயில்லை
கப்பலும் கடிதமும் நாளைதான் வருமாம்
இலங்கை இந்தியா கொழும்புச் சர்வதேசம் வெரித்தாஸ் உள்ளூர் குரல் வெளியூர் ஒசை
சைக்கிள் டைனமோ சுழற்றிச் சுழட்டி எல்லாச் செய்தியும் கூடிக் கேட்டம்
ஜாம் போத்தல் விளக்கில் டயறியும் எழுதி படுக்கை தட்டி மெல்லச் சரிய நல்லிரவு சொல்லும் பல்லி ஒன்று
ஒரு நொடியிரவும் நிசப்தம்படர நீளும் படலை கடந்து நினைவு சுற்றும்
மறுநொடி குலைய ஷெல்கள் எங்கோ கூவிச் செல்லும்
நாளைய விடியலில் நாங்கள் மீண்டும் வரிசையில் நிற்போம் சவப்பெட்டிகளிற்காய்.
ஞாயிறு தினக்குரல் ஏப்ரல் 16, 2002
சித்திரை 1992இல் யாழ்ப்பாணத்தில் எங்கள் வாழ்நிலை பற்றி எழுதியது.

Page 62
120 శా_rడిజsm_టిr Eclaంగ్త్రికdT
நெருடல்
நண்பா...! குளிர் குண்டூசியாய் குத்த, உடல் குறுகிப் போகிறது.
மனமும் குறுக முன்னர்.
நீள் தொலைவிலிருந்து நெடுநாள் நெருடலின் பின்னர் உனக்கிதை எழுதுகிறேன்.
நிம்மதி தேடி நீண்டதூரம் அலையாதே!
காலையிலே பனித்துளிகள் பூத்திருக்கும் மைதானப் புல்வெளியில், மாலையிலே நாங்கள் படுத்திருந்த நாட்கள் எத்தனை இனிமை நண்பா!
இங்கு உணரமுடியா வகையிலே அவனவன் உளறுகிறான் உங்கென்றால் ரொக்கெற் விட்டாவது நிறுத்திவிடலாம்,

Loabraంగీణల தொலைங்கத LOGO தேடி. 12
நண்பா. இப்போதும் நீங்கள் விசிலடிக்கிறீர்களா..? எனக்கும் இங்கு அடிக்க ஆசை, அடித்தால். என்ன நடக்குமோ ஒரே பயம்,
கன்ரீன் கதிரைகூட இங்கு இல்லை, தட்டி விட்டு திருப்திப்பட
பக்கத்து வீட்டு வெண்தோல் குழந்தை, தனது பொம்மையின் தலையைப் புடுங்கி சிரிக்கும் போது எனக்குள் எத்தனை சோகம்.
அதற்கும் மேலாய் ரீகுடித்துவிட்டு கன்ரீன் குவளையை நசித்துப் பார்க்கும்
உனது கபடமற்ற முகம் நினைவில் வரும்.
வைகாசி பிறந்து சோளகமும் எழுந்த முன்னிரவொன்றில், கலைந்த முகில்களுக்கால் கசிந்த நிலவொளியில் கல்லுக் கதிரையில் நாங்கள் கண்ணயர்ந்த வேளை நண்பா.

Page 63
22 சடகோபண் கவிதைகள்
வெடியோசை கேட்டு மதில் பாய்ந்தோடிய அந்த விடியாத இரவின் விடியலில்.
எங்கள் நண்பன் ஒருவனை இழந்த செய்தி கேட்டு கதறியழுததை.
பிடறி பிளந்து
இறந்து கிடந்த அவனின் முகத்தை
எப்படி மறக்க எப்படி நினைக்க.
நண்பா..! வடலிப்பனையும் சுடலைப் பொடியும் பொலிந்த தேசமதில்,
விடியல் வெள்ளி பிடிக்கவென்று, விடலைப் பெடியள் படலை தாண்டிய காலமது.
அறுணாக்கொடி தெரிய அரையால் இறங்கிய அரைக்கால் சட்டையுடன் அன்று நான்
கருக்கல் மாலைப் பொழுதுகளில் பொரித்த மீனும் சோறும் குழைத்து, அன்னை ஊட்ட அண்ணன் சோல்லும் ஆமிக் கதைகள்,
ஆழப்பதியும்
எந்தன் நெஞ்சில்

l pabracao தொலைகேத Logory. தேடி. 蕾23
அரைக் கால்சட்டை
முழுசாக மாற, முளைக்கத் தொடங்கின மீசையும் மனமும்
நாங்கள் விலங்கோடு திரியும் விந்தை விளங்கத் தொடங்கியது.
தொலைந்து போன மனித முகங்களும் சொரிந்து போன சொந்த ரத்தமும் தொடர்ந்து போன எங்கள் பாதங்களை நனைக்க, இதயங்களும் சேதமாயின.
உறவுகள் இழந்தும் உணர்வுகள் இழக்காது ஊன்றத் தொடங்கின உரிமைக்காய் வேர்கள்.
காலம் சுழன்றது, எத்தனை நிகழ்வுகள் இடையில் நிகழ்ந்தன.
மாற்றம் ...! மக்களில் .
மண்ணில் . மனதுகளில் . மாற்றம் ...!
அன்னிய பாதங்கள் பண்ணிய பாவங்கள் நீயும் நானும் அவனும் அவளும் அதுவும் . அனுபவித்தவையே.

Page 64
24 சடகோபன் கவிதைகள்
கனவுகளும் கவிதைகளும் கருவிகளின் நிர்ணயிப்பில் கதிகலங்கிப் போக,
மறைந்து போன மனித முகங்களின் நினைவுகள் முட்களாய் உறுத்த,
உரிமை கேட்க உரிமை இன்றி. உலர்ந்துபோன உதடுகளோடு
செத்துப் போன மனித உரிமையின் மார்புத்துடிப்புக்காய் காத்திருந்த கணங்கள் யுகங்களாக .
நிசப்தம் எங்கும் நிரந்தரமாக . நிரந்தரமாக .
வாழ்க்கையின் நிச்சயத்திற்கான நிகழ்தகவு பூச்சியமாக .
பூச்சியமாக .
அந்தகார வெளியெங்கும் என் ஆன்மாவைத் தேடி . அலைந்து . எல்லையைத் தாண்டி . எங்கோ. எங்கோ . வெகு தொலைவில் .
வேண்டாம் நண்பா...!
நின்மதி தேடி நீண்டதூரம் இங்கு வராதே ...!

125 .தொலைந்த LOGO தேடி رههاrarنگهoا
அதை நிரந்தரமாக்க தயாராய் இரு .
ஒரு செம்பகத்தை ஒரு வண்ணத்துப் பூச்சியை எங்கள்
வளாக வளவில் மீண்டும் பார்க்க நிறைய ஆசையெனக்கு.
வெகு விரைவில் உன்னுடன் நான் .
கன்ரீன் மேசையில் கால் போட்டு பிளேன்ரீகுடிக்கமட்டுமல்ல.
“விருட்சம்" 1992
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ மன்றத்தால் வெளியிடப்படும் விருட்சம் சஞ்சிகையில் 1992இல் வெளியிடப்பட்டது.

Page 65

mergóTasmo பகுதி

Page 66

uంaరీraరోణల தொoைலங்கத Logorrgi தேடி. 9.
മ്
இது ஒரு மழைக் காலம் மண்ணையும் மனதையும் நிறைத்துப் போகும் மழைக்காலம்
கூதல் ஏறி குதூகலம் ஆடி மனதுகள் எங்கோ
தொலைந்து போகும்
காதல் ஆகி கண்கள் திறந்து வண்டுகள் பார்த்து பூக்களே பூக்கும்
தூறல் கூடி துளியாய் மாறி இதழ்கள் நனைக்க இளமை துளிர்க்கும்
இது ஒரு மழைக்காலம் மண்ணையும் மனதையும் நிறைத்துப் போகும் மழைக்காலம்.

Page 67
1so சடகோடன் கவிதைகள்
தலை வயலின்நின்று
வாய்க்கால் கட்டி பாய்கிறது வியர்வை ...!
நீரில் ஊறி மயங்கிக் கிடக்கின்றன மயிர்கள் ...!
கழுத்துப் பட்டியும் கமக்கட்டுக் சட்டையும் கறுத்துக் கிடக்கின்றன.
சிலையாகி நிற்கும்
இந்த இலைகள் சிரியாதோ..?
 

Loabad్కల தொலைங்கத LOGO தேடி. 13
புதியதொரு பொழுதுக்காய்.
வசந்த காலமும் வரண்டகாலமாய் உருண்டுபோகும் மனிதர் நாம்
துயர மையில் தோய்ந்த ஆண்டொன்று விழியோரத்தில் விழுந்த துளிகளில் அமிழ்ந்து போகிறது
நல்லதொரு மனிதனாய் நாளை நீ.
குறிவைக்கிறது பார்வை.! பார்த்திருக்கிறது பாதை...! காத்திருக்கும் கால்களை வழிநடத்த தயாராகும் மனதை தடவிக்கொடு
தடைகளாயிரம் இடையினில்வரினும் தயங்காதே. தகர்த்தெறிந்து நடைபோடு
முதலில் இலட்சியம் அடுத்தவை. அடுத்தவைதான்!

Page 68
132 சடகோபன் கவிதைகள்
பொறுத்திரு பொறுமையாய் பொறுத்திரு துயருறும் பொழுதுகளில் துணைக்கழை இறைவனை
வளவுக்குள் வரும் வண்ணத்துப்பூச்சி செண்பகத்தோடு ஒரு முறை பேசிப்பார் இலேசாகிவிடும் இதயம்
நீல வானையும் நீந்திவரும் வெண்முகிலையும் நேசி.!
தாலாட்டும் தென்றலை தாலாட்டி.
நீ பாடு
தெம்மாங்கு
முற்றத்து நிலவில் மூச்சுத்திணற மூழ்கியெழுந்து. நம்பிக்கையோடு காத்திரு.1 நாளைய விடியலில் உனக்காயும் ஒரு சேவல்.
ஞாயிறு தினக்குரல்
1989ஆம் ஆண்டு முடிவடைந்து 1990 பிறக்கும் வேளை எழுதப்பட்டது.

Lodbraced தொலைஉேத LDD தேடி. 133
a5Tevě srůöursesel
ஆண்டு முழுதும் மாண்டு உழைத்தும் கண்டது என்ன கண்ணம்மா வாழ்வில்.
கண்டது என்ன கண்ணம்மா
மண்புழுவாய் புழுதியிலே நாங்கள்
புரண்டு எழ,
பணம் பணமாய் புரளுதம்மா, தினம் தினமும் அவர் கைகளிலே
நாங்கள் வடித்த வியர்வையை குடித்து வளர்வது வயலில் பயிர்கள் மட்டுமல்ல, வங்கியில் முதலாளி கணக்கும் தானே

Page 69
134 சடகோபன் =&aంకాడోT
என்ன கண்ணம்மா இப்படிப் பார்க்கிறாய் வயிற்றில் ஒரே இரைச்சல் என்றா.
பெருங்குடலும் சிறுகுடலும் சந்தித்துப் பேசுகின்றன முதலாளி வயிற்று தொந்தி பற்றி.
எங்கள் வீட்டு மூட்டைப் பூச்சிகளும் பாவம் கண்ணம்மா அவற்றின் சாப்பாட்டை இவர்களல்லவா தட்டித்தின்கிறார்கள்
மேதினங்கள் எத்தனையோ மேதினியில் வந்ததுண்டு எங்கள் மேனிகளின் வேதனைகள் போனதுண்டோ கண்ணம்மா
சுரண்டல் தனங்கள் சுரண்டப்பட்டு
எங்கள்
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க
களைப்புக் கேற்ற
கஞ்சி கிடைக்க காலம் எப்போ
கண்ணம்மா.
'a-6irst lib' வைகாசி 1990
மே தினம் 1990

Loabrada) தொலைங்கத Loao தேடி. 135
என்ன இது.
பாழடைந்த இருட்டில் பயங்கர உருவங்கள் அசையும், ஆந்தைகள் அலறும், வெளவால்கள் எச்சமிடும்
பல்லிகள் சொல்லும் பரிதவிப்புகளில், பாம்புகள் பால் குடிக்கும் பிணங்களைத் தின்று நரிகள் ஊளையிடும், மனிதத்துவம் மட்டும் மெளனமாய்ப் போகும்
ஆலமரத்தின் இலைகளும் துளிர்களுமாய் ஊதல் காற்றில்
உதிரும்,
விழுதுகள் கூட நிலத்தைப் பார்த்து
ஏங்கும்
நெருஞ்சியின் நெருக்குதல்க்குள்ளும் பாலறுகுகள்
துணிந்து வாழும்,
குப்பை மேனிகளும் கோரைப் புற்களும் தரைகளை விட்டு நகரும்

Page 70
136 rursessiruger கவிதைகள்
நாயுருவிகள் நாணலைப் போல காற்றோடு ஒதுங்கும் வெள்ளெருக்கும் கல்லறைகளும் போட்டியாக முளைக்கும்
மரங்கள் கூட மலர் வளையங்களுக்காகத்தான் பூக்கும்
வெளிச்சத்தைத் தேடி. மெழுகு திரிகள்
உருகும்
உருகி முடிந்தவை கல்லறைகளில் உறங்கும்
என்ன. இது..? சவச்சாலையா...! இல்லையில்லை எனது தேசம்
"உள்ளம்"
மார்கழி 1989

737 .தொலைகேத LOGO தேடி ܚܦܘfܩcܡܧܘܩܐ
வைகாசி989
மெளனம் மரணமாகிப் போக மரணம்
மெளனமாய் நிகழ்ந்தது
மயான அமைதிக்காய் மயானங்கள் ஏங்க விளையாட்டு மைதானங்களோ
மயான அமைதியாய்
நாடெங்கும் துப்பாக்கி இனிப்புகளுடன் பிள்ளைபிடி
வாகனங்கள்

Page 71
738 ru-reasirudër கவிதைகள்
வீட்டு வாசலையே மிதிக்கப் பயந்து வாசம் செய்தன குழந்தைகள்
எந்த முகில்களோ பொழிந்த மழையில் வெள்ளை உடைகளும் சிவப்பாய் நனைய
இறப்பர் புகைக் கறுப்பில் இருண்டது தேசம்
சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்தன
மனிதரும்
மனிதமும்
வடக்கு வீதிகளும் தெற்கு நதிகளும் அந்தி வானமாய்
எந்தை மனமும் ஏதோ ஒன்றாய்
ஞாயிறு தினக்குரல்
1989இல் இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக எழுதப் பட்டது.

139 .தொலைஉங்கத Logo.g. தேடி ܚܧܘ#ܫaܡܧaܩܙ
நினைவுச்சிதறல்கள்
மாலை வேளை
சோலைக் குயில்கள் சோகம் இன்றி கானம் பாடின எனினும் அன்றைய பயங்கரத்தை நன்றே உணர்த்த ஆந்தை ஒன்று அலறித்துலைத்தது

Page 72
40 சடகோபண் கவிதைகள்
எந்த ஒசைக்கும்
நான் அலட்டிக் கொள்ளேல.
அடுப்பில் தண்ணி கொதித்துக் குமுறியது
6956 நெஞ்சுகள் போல
கடல் வலயச் சட்டத்தால் வளையம் போட்டு திண்ணையில் படுத்த கணவனைப் பார்க்க
கண்கள் கலங்கின
இன்னும் எத்தனை நாளைக்கோ ...!
நினைத்தபடியே குழைத்த மாவை அடுப்பில் வைத்தன்
முற்றத்து மரத்தின்கீழ் முத்துவும் நந்துவும் சத்தம் போட்டு விளையாட்டில் கலந்தனர்
மூத்தவள்தனு படிக்கப் போயிருந்தாள்
காத்துப் பட்டும்
அசையாது. முறுகிக் கிடந்தது வேலியில் வலை
தண்ணிபட்டும் எவ்வளவு நாட்கள்
வயிற்றை நனைக்க வலையை நனைக்கணும் சொன்னபடி தொழிலுக்கு போக நினைச்சவரை மறிச்சுப் போட்டன்

Loaềradfau தொலைங்கத Loажу தேடி. 14
வயிற்றுக்குள் இருந்த அடுத்த சீவனும் பசிக்குது என்று வாயால் கேட்பதுபோல ஒரு பிரமை. குடுக்கிற கடவுள்
கூரையை
பிச்சுக் குடுக்குமாம்
மூன்று போதாதென்று நாலாவதும் ஒன்று நாலுமாதச் சீவனது நானும் என்ன செய்ய
நினைவுகளைச் சிதறடிக்க நீலவானில் ஏதோ சத்தம்.
தட்டிக்குப் பக்கத்தால் எட்டிப் பார்த்தன்
எமக்கு மட்டுமல்ல பிரச்சினை பொம்மர்களுக்கும்தான் அதுதான் ஊர்வலம் போகினபோல
எண்ணியபடியே தண்ணிப்பானையால
புட்டை இறக்கிறன்
கட்டைவேலிப் பக்கம் பெரிய சத்தம் கல்லுப் பறியல் போல
விமானச் சத்தம் அருகில் பிளக்க அடுப்படியால
வெளியவாறன்
ஒரு கணம்தான். பக்கத்து வளவில்

Page 73
142 aruréasTLugèr 5బంఖాకాడోT
குண்டொன்று விழ, குழந்தைகளைத்தூக்க இவர் ஒடுறார்.
என்ன கொடுமை...! அடுத்த குண்டு இவர்கள் அருகில். சிறிய அசைவுடன் அடங்கினர் அனைவரும்
கண்ணுக்கு முன்னால கணவனும் பிள்ளைகளும். கத்தக்கூட
என்னால முடியேல
இதயம் ஏனோ இயங்கமறுப்பது போல கண்கள் ஏதோ கழருவது போல சுழல கால்கள் நிற்க மறுக்க தொண்டை வறள தொப்பென்று விழுந்தன் தொடர்ந்தவை ஏதும் எனக்குத் தெரியாது
சூடு போல ஏதோ பரவ பாடு என்னவென்று பார்க்க எழுந்தன் ஐயோ வீடு எல்லோ பற்றி எரியுது
எழுந்து ஓடி குப்புறக் கிடந்த கணவனின் உடலை கட்டி அழுதன் தொட்டு வணங்கினன்
பட்டு விரல்களால் முத்துவின் வலது மணிக்கட்டை,

தொoைலங்கத Loog தேடி. 霄3 ܝܧܬarfܡ±aܩܐ
பிடித்தபடியே உறங்கிப் போன நந்துவின் முகத்தை கையில் ஏந்தினேன் என்ன பயங்கரம். t கையுடன் தலை வந்தே விட்டது. என்னுடல் பதற மீண்டும் உடலுடன் ஒட்டியே வைத்தன்
இடக்கரம் இழந்து இருதயம் பிளந்து இறந்து கிடந்த முத்துவின் முகத்தை எப்படி மறக்க...! எப்படி நினைக்க...!
எனக்கும் ஏதோ பிடித்திருக்க வேணும்
எழுந்து நின்று வீட்டைப் பார்த்தன்.
மாலையும் கழுத்துமாய் இவரின் கையைப் பிடித்தபடி சின்னக் குடிலுக்குள் நுழைந்த நினைவுகள்
காயப் போட்ட கறுத்தப் பாவாடையின் எரிந்த மீதிகள் புகைந்து கொண்டிருந்தன
விசரிபோல தலையில் அடிக்க படிக்கப் போன
தனுவின் ஞாபகம்
மறுகணம் ஒடத் தொடங்கினன்

Page 74
44 சடாகோடன் கவிதைகள்
குஞ்சம்மா டீச்சரின் வீடு நோக்கி
வழிகள் எங்கும் இரத்தச் சிதறல்கள் சதைப் பிண்டங்கள்
இத்தனைக்கும் வயிற்றுச் சீவனும் கூடவே வந்தது
குஞ்சம்மா டீச்சரின் குச்சுக்கை திரும்பிறன் குறுக்க ஒரு குமரின் சடலம்
கொஞ்சம் தள்ளி .
வாய் பிளந்து வாலறுந்து கிடந்தது நாய்க்குட்டி ஒன்று
எட்டிக் கடந்து அங்கால பார்த்தன் எங்கும் நிசப்தம் எல்லாம் நிசப்தம்
தனு. தனு. f பதிலே இல்லை
திரும்பி நடக்கிறன் இல்லை. இல்லை. ஒடுறன் நடக்கிறன் நடக்கிறன் ஒடுறன்
கால்கள் மறுக்க வயிரவர் இருக்கிற் ஆலமரத்தடியில் அமர்ந்தே விட்டன்
தொட்ட கணவன் பெற்ற பிள்ளைகள் ஆருமே இல்லையா..?

145 .தொலைங்கு மனது தேடி رمه حorarعaح
நினைக்க நினைக்க தலைக்குள்ள வெடிக்கிது, இப்படி இப்படி எத்தனை நாட்கள், எண்ணக்கூட
என்னால முடியேல
எனக்கு ஏதோ
விசராக்கும் இல்லாட்டி இப்படி நடந்ததையெல்லாம் அப்படியே சொல்லுவனே.
மனசுக்கதான் பெரிய கசங்கல்
வயிற்றுச் சீவனை தடவி ஏதோ நம்பிக்கையோடு
விரிந்த தலையும் கிழிஞ்ச சீலையுமாய் கலைந்து கிடக்கிறன்
காலைக் கடியெறும்புகள் பதம் பார்க்கின்றன இதய வெடிப்பின் முன்னே இந்த
எறுமபுக கடிகள எங்ங்னம்.
“கல்லறை மேலான காற்று - வைகாசி 1988
1987 வடமராட்சி சம்பவங்களின் முதலாம் ஆண்டு முடிவில் எழுதப்பட்டது.

Page 75
46 சடகோபன் கவிதைகள்
என் கைகாடிமரத்திற்கு கழுத்தறுக்கப்படிடபோது
விடுதலைக்கு வீரர்கள் வேண்டுமென்றீர் விருப்புடனே அனுப்பிவைத்தோம்
பின்னர் அவர்கள் சுடுவதற்கு துவக்குகள் வேண்டுமென்றீர்
கையால கழுத்தால காதாலயம் கழட்டி அதையும் தந்தோம்.
இப்போ அந்தத்துவக்குகளால் சுட்டுப் பழக தலைகளும் வேண்டுமென்று எம்மிடமே கேட்பதுதான் கொஞ்சம் சங்கடமாய் இருக்கிறது.

ucóak೬೨ தொலைபங்கத மனது தேடி. 147
Slug shurr9leserresusenTrri
எதை எழுத ..? எப்படி எழுத .?
அழுது அழுது வடித்த பேனா கூட, எழுத முடியாமல் என் முகத்தை முகத்தை பார்க்கிறது.
தொலைந்து விட்ட என் அண்ணனே நான் இழந்துவிடவில்லை உன்னை என் ஒவ்வொரு நிகழ்விலும் என்னை அறியாது, புகுந்து விடுகிறாயே.
உன் உருவத்தை என் உடலில் புதைத்துவிட்டு, என் அன்பை என்னிடமே விட்டு விட்டு,
எங்கு சென்றாய் அண்ணா.
தமிழன்னையின் கண்களில் நீரைத் துடைக்கச் சென்றாய் திரும்பியே வராததால்! எமதன்னையின் கன்னங்களில் கங்கையைப் பாயவைத்தாய்.
ஆண்டுகள் பலமுன்னே எமக்கிட்ட விலங்குகள்,
கறள் படிந்து கிடப்பதை

Page 76
148 తా_re=nuరీr=&aంgeణిr
காணச் சகிக்காமல், விலங்குடைக்கப் புறப்பட்டாய்.
குளமாகிய எம் கண்ணை நிலமாக்க நீவாராயோ!
உடல் தீயிற்கு! உயிர் தமிழிற்கு! அன்னியனுக்கு அடிமையாய் வாழ்வதை விட, சுதந்திரப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்படுதலையே நான் விரும்புவேன். இப்படியே. உனது நாட் குறிப்புகள் அப்பியாசக் கொப்பிகள் அத்தியாயம் அமைக்கின்றன.
இரையும் கடலே - உனக்கு இரக்கமே இல்லையா? கரைகிறதே என் மனது. விரைவாக அண்ணனை கரைநோக்கி அனுப்பாயா?
படிக்கலாமென்று புத்தகத்தைத் திறந்தால், தூய கணிதத்தில் தூனெழுப்படா என்று,
நீ கூறிய
வார்த்தை கேளாது, அளவையியலை அணுகினேனே, என நினைத்தே அழுகிறது என்னிதயம்.
கவிதை எழுதலாமென்று கையில் பேனா எடுத்தால், அனுப்பி வையடா உனது கவிதையையென்று நீஅனுப்பிய கடிதம் எனது கண்ணில் நீரை அழைக்கிறது.

Loaibachad தொலைங்கத LOGO தேடி. 49
என் கவிதை எதையும் இன்னும் நீ பார்க்கவில்லை, உன் கவிதையொன்று எனை வந்து சேர்ந்ததுவே.
நான் போட்ட கடிதமொன்று நீ போட்ட பதிலுமுண்டு இப்போ என் கவிக்கு எப்போபதிலெழுதுவாயோ?
வெளி வேஷங்கள் - என்னை ஏமாற்ற முயலும் வேளை, தப்பித்துக் கொள்ளுகிறேனே எப்படி ..? தாவடிச் சந்தியில் தலைமுடிவெட்டியே திரும்பிய வேளை, தார்றோட்டில் தூரத்தே தெரிந்த கானல் நீரையெனக்கு இனம் காட்டித் தந்தாயே, மறந்து விட்டாயா?
தோன்றிய விடிவெள்ளி துகளாய்ப் போனதேன். தழுவும் தென்றல் தீயாய்ச் சுடுவதேன்.
வாடும் பயிர்கள் நாம் வான் மழையாய் வாராயோ? தேடும் உள்ளங்களில் தேனை நீ பாய்ச்சாயோ
ஓடும் ஒடத்தில் ஏறி நீ எங்கு சென்றாய்? நாடும் ஜீவன் நான், கரையின்றி ஒடுகிறேன் கவலை ஒடத்தில்
எனக்காகவென்றே - உனது கறுப்புப் பூச்சேர்ட்டை,

Page 77
50 சடாகோபண்கவிதைகள்
மடித்தபடியே மண்நிற நீளக் கால்சட்டையை நீள் தொலைவில், நெடு மரங்களிடை அமர்த்து எனை நினைத்தா அனுப்பி வைத்தாய்.
உனது சைக்கிளை . சப்பாத்தை . அந்த சாயம் போன நீலத் தொப்பியை உனது பெரிய குடையை, எனது நடைக்காக விட்டுச் சென்றாயே! பாரன்ணா வந்தவற்றை
காற்றில் மிதந்து செல்லும் தும்பியே..! கள்வடியும் பூவில் கவிபாடும் வண்டே!
என் அண்ணனைக் கண்டீர்களா?
உயரப்பறந்தே உலா வரும் பருந்தே! தாளச் சென்றே ஆழம் பார்க்கும், சிறிய மீன் குஞ்சே! என் அண்ணனைக் கண்டீர்களா?
கண்டால் அவனின் காதில் சொல்லுங்கள், தம்பி தேடுகிறான் தயங்காமல் செல்லென்று.
இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் எத்தனையோ மாறுதல்கள், காலை எழுந்ததும், அன்னையின் விழிகள்
நீரில் நீந்தும்,

மண்ணிலதொoைலங்தமனது தேடி. 151
அப்பா அமைதியாக, அமர்ந்தே விடுவார்,
தோட்டத்து மரங்களிற்கு, நீரைப் பாய்ச்சவென அக்கா சென்றால், நீ கொடுத்த குறோட்டன்கள் இலையைக் கொட்டிவிட்டு, தலைகுனிந்தே சோகமாய் நிற்கும்.
முற்றத்து மாமரம்கூட கனிதராது தனிமையில் ஏங்குது, நீ நாட்டிய
நந்தியாவட்டை, வாட்டமுடன் இருக்குது - அது பூத்ததை நான் பார்த்ததே இல்லை.
தங்கை சிரித்ததாய் சிறிதும் ஞாபகமில்லை, கூரையைப் பார்த்து தம்பிவிடும் மூச்சு எனக்கும் கேட்குது
உன்னைத்தான் பார்ப்பேன் என்றோ என்னவோ, மாக்கோ நாய்கூட, யாரையும் குரைக்காது படுத்தே கிடக்குது.
வெள்ளைப் பூனைதான் ஏதோபுறுபுறுத்தபடி, உன் படத்தையே உற்று உற்றுப் பார்க்கிறது.
முகட்டு வளையெல்லாம் பல்லிகள் கூடிப் போச்சு,
எதற்கெடுத்தாலும் கனக்கச் சொல்லுதுகள்.

Page 78
152 arrésirudër கவிதைகள்
சுவரின் மேற்புறமெல்லாம், சிலந்திகள் . சிம்மாசனம் அமைத்து ஆட்சி நடத்துதுகள்.
எங்கள் வீட்டில் மலர்கள் மலர. சொந்த இரத்தம் சொட்டிய சோகத்தில், துவண்டு கிடக்கும் உன் கூட வந்ததுகள் குதுகலிக்க தந்தையின் . கவலைப் படலை சார்த்தப்பட்டு, உவகைக் கதவு திறக்க அன்னையின் கண்ணில் ஈரம் காய நெஞ்சினில் வீரம் பாய்ந்தவனே!
ஒடிவா! என் அண்ணா
“ariasuptibo
LDsrf& 01, 1987

மண்ணிலதொலைங்கு மனது தேடி. 153
சுதந்திர்கீதம் சொரிந்துகொண்டிருக்கும்
எங்கும் சுதந்திரம், என்ற பேச்சு தாரக மந்திரமாய்ப் போச்சு பூட்டிய விலங்குகள் உடையலாச்சு, நாட்டினுள் விலங்குகள் குறையலாச்சு.
மண்புழுவாய் புழுதியிலே புரண்டு எழுகின்ற உழைப்பாளி உடலில் உதிரம் குடிக்கும், மூட்டைப் பூச்சி முதலாளிகளை வேட்டையாட,
சுரண்டல் தனத்தை
சுரண்டி எறிய,
கூட்டாளியாகும் பாட்டாளி மக்களின், சுதந்திரக் குரல் சுருதியாய் ஒலிக்குது.
வெண் தோல் போர்த்த வெறி இனமே! கருந்தோல் பார்த்து கருமுகின்றாயோ! பொறுத்துப் tյոil அறுத்து விடுவார்கள், அடிமை விலங்கையே.

Page 79
154 ruuostugo கவிதைகள்
பந்தம் - இது பணக்காரர்களின் சொந்தம். லஞ்சம் - இதற்கு இங்கில்லை பஞ்சம். பட்டம் பதவியிலும் - இவை கொட்டம் அடிக்க, மட்டமானவை கூட ஏற்றம் பெறுமே.
தண்டம் தண்டனையையும், தீர்வு தீண்டாமையையும் - இவை மிச்சம் விடாததால், அச்சம் அடைகின்றனர், ஆதரவு அற்றோர்.
இதனால் . தீர்த்து வைக்கவும் ..? பார்த்து கொள்ளவும் ..? எழுந்தவை எல்லாம், திசை மாறிய பறவைகளாய் பாதை மாறுகின்றன.
ஏழையவன் வேலை வேண்டி வேளையுடன் வந்தாலும்
வறுமைக் கோட்டின் கீழே உள்ள, திறமைக் கீறல்களை, ஆளும் வர்க்கம் யாரும் பார்ப்பதில்லை.
அதிகாரிகளின் இதயக் கதவுகள் மூடிக்கொள்ள வேலையற்ற செல்வந்தரின் உதயக் கதவுகளாய், பின் கதவுகள்
திறந்துகொள்ள, அவர்கள் புகுந்துவிடுகின்றனர்.

155 .தொலைஉேத மனது தேடி نتمكنه عنهضع
ஏழையை எப்படி ஏற்றலாம் என,
எட்டு மாடி ஹொட்டல் ஒன்றில், கூடிக் குடித்தே முடிவுகள் எடுக்கும் இந்த வடிவத்தினர்.? தேவையை நிறைவேற்றி, சேவைக்காக எப்போ முன்வருவார்களோ?
எத்தனை தமிழர் அகதிகளாய் கண்ணிர்வடித்து, நித்தமும் தண்ணீரால் தம் வயிறு நிரப்ப, இந்தத் தண்ணிக் குழுவோ..? ஏதோ அமைக்கப் போகிறார்களாமே! ஏதோ ...! அதைக் கூட காணவில்லையே!
பதவிப் பிணம் ஒன்று நாறிக் கிடக்குது. பார்த்த நரிக்கூட்டம் வாணிவடிக்குது. எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்டே, முற்றாத காய்கள் மேல் முற்களை குத்துது.
இப்படி எத்தனையோவற்றை கேட்டும் பார்த்தும் வந்ததனாலே, எம் உள்ளத்தில் எரிகிறது தீபந்தம்.
ஆனால் ஒரு நாள்! இந்தப் பந்தம், அந்தப் பந்தத்தை, சந்திக்கும் லஞ்சத்திற்கும் சேர்த்தே, வஞ்சம் தீர்க்கும்.

Page 80
156 சடகோடன் கவிதைகள்
புகுந்த வீட்டில் புரியும் கொடுமையால், புழுங்கும் பெண்ணினத்தின் சுதந்திரப் பேச்சு ஒரு புறம் கேட்க,
வஞ்சியின் கழுத்தில், வாலிபன் கட்டிய மஞ்சள் கயிற்றை கொஞ்சமும் அச்சமின்றி கோதையவள் கழட்டி, பேதையின் மூக்கினில் போர்த்து விட்டாள் நாணயக் கயிறாய்.
அத்துடன் விடவில்லை. கயிற்றின் நுனியோ! அணங்கு அவளின் கையில் சிக்கிட, ஆண்களின் அவலக்குரல் கேட்குது மறுபுறம்.
முதலாளித்துவ அரசின், தொழிலாளிகள் நீங்கள். என்ன செய்வீர்கள்.
கட்டளைகளிற்குப் பணிந்து, பெற்றவர்களையும் மறந்து, வாழ்வையேதுறந்து, நடு வீதியில் இறந்து உருக்குலைந்த முகத்தையும் அருகில் இருந்த காலையும் பக்கத்தில் கிடந்த - சக பாட்டாளியின் கையையும் உடலோடு இறுக அணைத்தபடி. புதைகுழிகளிற்குப் போகும், உங்கள் உள்ளங்கள்.
உறங்குகின்றனவா?

Loabrachణల தொலைக்த LOGO தேடி. 157
உறங்கத்தானே செய்யும் முதலாளித்துவ அரசை முதுகில் அல்லா சுமக்கிறீர்கள்.
ஆனால் ஒரு நாள். உங்கள் தோழர்கள் உங்கள் சவக்குழிகள் மேல் மலர் வைத்து மனம் வைத்து ஓங்கிய குரலில்,
ஏாகதிபத்திய அரசே! எம்மை விடுதலை செய்! என்று . சத்தமிடத்தான் போகின்றார்கள் ஆனால் .
உன்னிற் பலரும், எம்மிற் சிலரும் இனவெறிபிடித்து இருளினில் அலைகின்றனர்.
குலம் காக்க எழுந்தோரை, விலங்கிட்டுச் சென்றார்கள். குற்றுயிராய் கிடந்தோரை, கடைத்தெருவில் எரித்தார்கள்.
நம் தோழர்களோ! முகாம்களிலே தோலுரிக்கப்பட்டனர். எம் தோழிகளோ! வீதியிலே துயிலுரியப்பட்டனர்.
பிணம் தின்னிப் பிசாசுகளிடம் உதவியும் பெற்றனர் பெற்றோரைப் பிரித்தே
பிள்ளைகளை வாட்டினர்
எனினும் .
நாய் கடித்தால், நாயைக் கடித்தாலும் குற்றமில்லை.
அதற்காகா! பசுவைப் போய்க் கடிப்பதா?

Page 81
158 Losué solosset
இதை மறந்ததால் அப்பாவிகள் குரதி இப்பாரை நனைத்ததுவே இவை மட்டுமல்ல . எம் கையே - எம் கண்ணையும் குத்தியது, செங் குருதியை மண்ணில் பாய்ச்சியது.
சுதந்திரம்என்று சொல்லி, ஊரில் உலுத்தர்களும் உலாவுகிறார்கள். இவர்கள் ..? இயக்கத்தில் இருந்தால் வெளியே தெரியக் கூடாதென தம்மையே உதாரணம் காட்டும் விளம்பரதாரிகள்
முற்போக்கு சக்திதாமென, முன் வந்த காட்டும் சிலர்? எதிலுமே புரட்சி, செய்ய நினைத்து, மூக்கால் நீர்குடிக்க, முயலும் மூடர்கள். சமூகப் புரட்சியிலும் - இவர்கள் சளைத்தவர்அல்ல. சீதனச் சிங்கத்தை, சிதைப்போமென சீறியவர்கள் ஆனால் . கொழுத்த சீதனத்துடன்தான், கயிறு கொழுவியவர்கள்.
சாதிப் பேயையும் சாட எழுந்தவர்கள், ஆனால் . t பணக்காரரிடம் மட்டும்.
சிலருக்கு? சுதந்திரம் என்ற பேச்சு, தந்திரமாய்ப் போச்சு,

Loabradణల தொலைகேத Loету. தேடி. 1.59
இருந்த சுதந்திரமும் இப்போ பறிபோச்சு.
இங்கு . பேச்சுக்களும் எழுத்துக்களும் உப்புப் புளியில்லா கறிகள்தான்
எம் கையே வாயைப் பொத்துகிறது
வாஹினி வானொலி மட்டுமல்ல பத்திரிகைகள் கூட பக்கச் சார்புதான்
பாவம் .
அவர்களும் என்ன செய்வார்கள்?
நீர் பொங்கினால் நெருப்பை அணைக்கும் நெருப்பே பொங்கினால்?
ஒரு நாள். வாய்கதவை எரித்துத் திறக்கும்.
அதன் வழியே இதய வெளியில் குமுறும் எரிமலை கொட்டித் தீர்க்கும்.
பேனாக்கள் மூடிகளை உடைத்துத் திறக்கும், உள்ளக் கதறலை அள்ளி எடுத்து அக்கினியாய் வடிக்கும்.
சூரியனின் மறைவில் மலர்ந்த இந்த? அராஜகப் பூக்களின் மணம் .
மனித உரிமையை மறைத்து விடும்

Page 82
160 சடகோபண் கவிதைகள்
உதயவெள்ளி உதித்து மக்கள் பள்ளியெழுந்திட, இந்த அல்லிப் பூக்கள் கிள்ளி எறியப்படும்
ஆம் . உரிமைக்காக போராட
உரிமை வேண்டி எத்தனை உள்ளங்கள் இன்னும் அழுகின்றன
வதை செய்து புதைத்த சதைகளை பசளையாய்ப் பெற்று,
கதை சொல்லும் அன்னியர் கண்ணிரையும் தியாகச் செம்மல்களின் சென்னீரையும் தண்ணீராய்ப் பெற்று
மக்கள் மரம் வளர்ந்து கிளை பரப்பி விருட்சமாகி நிழல் தந்து, புரட்சிப் பூ பூர்த்து விடுதலைக் கனியாய் பழுக்கும் வரை,
தியாகச் சுடர்களின்
ஒளியினில்
மரண ஒலங்களின் ஒலிப்பிற்கும் மேலாய், எமது இதயங்கள். சுதந்திர கீதத்தை சொரிந்து கொண்டே இருக்கும்.
யாழ்.பரியோவான் கல்லூரி சஞ்சிகையில் 1986இல் பிரசுரிக்கப்பட்டது.


Page 83
W
W
W
 

M
W
W W
W
W