கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளிப்பு

Page 1

is refood

Page 2

இஇURற்று
க. தணிகாசலம்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு 83
நூற்பெயர் பதிப்பு வெளியீடு
அச்சிட்டோர்
விநியோகம்
விலைநபா. 100/=
Title
Edition
Publishers
Printers
Diustributors
ISBN NO
Price:
RS
... 100/
ിഖണിu
(BLO, 2002 தேசிய கலை இலக்கியப் பேரவை கெளரி அச்சகம்
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட், 47, மூன்றாம் மாடி, A கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு -11.
தொலைபேசி : 335844,
Velippu
May, 2002 Deshiya Kalai Ilakkiyap Perawai Gowry Printers South Asian Books, Vasantham (Pvt) Ltd., No. 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo -ll. Tel: 335844 955-8637-O2-5

முனி ് 0]്
‘தேசிய கலை இலக்கியப் பேரவையின் பணிகளில் இடையறாத ஊக்கங்கொண்டு உழைத்து வருகிறவர்களிலே க. தணிகாசலம் அவர்கள் பிரதானமானவர். பேரவை வெளியிட்டு வரும் 'தாயகம்' சஞ்சிகையின் உயிர் நாடியாய் விளங்குகிறவர் அவர்தான். தாயகத்தினைத் தொடர்ந்து வாசிக்கிறவர்கள் கூட, தணிகரின் கவிதை ஈடுபாட்டையும் கவிதை முயற்சிகளையும் பற்றி முழுமையாக அறியாமல் இருக்கக் கூடும். அவர் காலத்துக் காலம் பல்வேறு புனைபெயர்களில் எழுதி வருவதும் இதற்கு ஒரு காரணம் ஆகலாம். வேறும் ஒரு காரணம் உண்டு. அவர் காரியவாதி; விளம்பரத்திலும் சிலுசிலுப்புகளிலும் அக்கறை கொள்ளாதவர். தம்மை முதன்மைப்படுத்துவதைக் காட்டிலும், தமக்குப் பிரியமான கருத்தியலின்பாலும் கொள்கையின்பாலும் பற்றுறுதி கொண்டு பணிகளில் முனைவதிலே தான் அவருடைய நாட்டம் பதிந்துள்ளது.
தணிகரின் கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுதி உருவாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலே, அவருடைய ஆளுமை பற்றி நினைத்துப் பார்க்கிறோம். அவர் இத்தனை கவிதைகளை எழுதியுள்ளாரா என்ற வியப்பும் இலேசாக ஏற்படுகின்றது. ஆனால், வெறும் வியப்புகளையும் பாராட்டுகளையும் எதிர்பார்க்கும் ஒருவரின் முயல்வுகள் அல்ல, இப்பொழுது தொகுதியாகியுள்ள இந்தக் கவிதைகள். மேலோட்டமான சலசலப்புகளுக்கு அப்பால், தீவிரமான இறுகிய உறுதிகள் சில, இந்தப் படைப்புகளின் உயிர்நிலையாய் விளங்குகின்றன. அந்த உறுதிகள் யாவை? அவற்றை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.
எழுத்துக்களினுாடாக காண்பதே சரியான வழிமுறை ஆகும். 1975 தொடக்கம் மிக அண்மைக்காலம் வரையிலான காலப்பகுதியினைத் தழுவி நிற்கும் இந்த ஆக்கங்களில் ஊடுருவி நிற்கும் பண்புகளிற் பிரதானமானவை பின்வருமாறு :- ;காலப் பெயர்ச்சியினது ஓட்டங்களின் சுவடுகளைப் பதிவு செய்திருத்தல் ([9ع) (ஆ) மக்களின் குறிப்பாக உழைக்கும் மக்களின் நலன் பற்றிய ஊன்றிய
அவதானிப்பு: (9) உடனியற் சூழலின் இன்ப துன்பங்கள் மீதான அக்கறை, (RF) ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகி உழலும் மாந்தர்கள் யாவரும்
ஒருங்கு திரளக்கூடியவர்கள், திரட்டப்பட வேண்டியவர்கள் என்னும்"
எண்ணத்துணிவு,
(2-) மேலாதிக்க அடாத்துகளுக்கு எதிரான விழிப்பினைத் தூண்டும் தணியாத
ஆவல்;
(GII) மாறுபட்டும் வேறுபட்டும் தொடர்ந்தியங்கும் உலக வரலாறு பற்றிய
தெரிந்துணர்வு;

Page 4
தொகுதியில் முதலாவதாய் இடம்பெறுவது, 'வெறும் பேனா வீரர்கள்’ பற்றியதொரு விமர்சனம் ‘உதிரிகளாய் நிற்கும் உங்கள்/தனிமனித திட்டுகளால்/ வெட்டு குத்து என்ற/வெறும் வாய்ச் சவடால்களால்/விடுதலை கிட்டாது. மக்களிடம் போங்கள் . கண்ணோட்டம் தெளிவு வரும்/காலத்தை மாற்றுகின்ற/ கவிதைக்கும் ஊற்று வரும்/என்று பேசும் இந்த வாசகம், ஒரு வகையிலே கவிஞரின் கருத்தியற் பிரகடனமாகவும் அமைந்துவிடுகிறது.
உடைமையாளருக்கும் உடல்உழைப்பாளிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை உணர்த்துவதற்கு, ஒரு சிறு காட்சியை அமைத்துக் காட்டுகிறார், கவிஞர்-எப்படி?
“கொட்டில் பிடுங்கி/எமைக் குடியெழுப்பி/தெருவில் விட அரசபடையோடு/ வருகின்றார்/உடையாரின் வழித்தோன்றல்'.
இப்படிப்பட்ட காட்சித் துணுக்குகளைக் கொண்டே, எத்தனையோ சங்கதிகளைச் சொல்லிக் காரியங்களைச் சாதிப்பதுதானே, கவிதைக் கலைக்கே உரிய சுருக்கெழுத்துச் சூத்திர உத்தி
‘உடையாரின் வழித்தோன்றல் செய்யும் அதே திருப்பணிதான், ஆசியாவின் வயல்கள் எல்லாவற்றிலும், ஆபிரிக்க தங்கச் சுரங்கங்களிலும், அமெரிக்க எண்ணெய் வயல்களிலும் நடந்தேறுகின்றன’ என்ற அகண்டமான பரந்த தரிசனத்தைக் கவிஞர் நமக்குக் காட்டுகிறார். ஒன்றிலிருந்து பலவுக்கும், சிறப்பிலிருந்து பொதுவுக்கும் வளர்ந்து பெருகும் விரி சிந்தனை, கவிதைப்பாங்கிலே துலக்கம் பெறுகிறது."எனது உறவுகள் விசாலமானவை தான்’ என்னும் தெளிவு கைகூடுகிறது. சொற்கலையின் உள்ளாற்றலால் நேரும் உணர்வு வெளிப்பு இது. இன, மத, மொழி அடையாளங்களுடனோ, தேச வரம்பெல்லைகளின் உள்ளோ இவ்விதமான உணர்வு வெளிப்பு மட்டுப்பட்டு நிற்பதல்ல.
* சாதி, இன, மத, நிறத்தை/ சாட்டாக வைத்தொருவன்சகமனிதன் மீதேறி/சவாரி விடுவதனைlசா வரினும் நாம் ஏற்கோம்' என்று சபதம் போடும் மனப்பான்மையையும் உணர்வு வலுவையும் ஊட்ட முந்துகிற பண்புதான், தணிகர் கவிதைகளின் தாற்பரியம்.
கவிஞர்கள் தம் படைப்புத் தொழிலுக்குத் துணையாகச் சிற்சில மரபுக்கூறுகளைக் கையாள வேண்டியவர்களாயும் உள்ளனர். சிலர் சிறியதொரு மரபு வட்டத்தினுள்ளே தம்மைச் சிறைப்படுத்திக் கொள்வதும் உண்டு. ஆனால், தணிகர் போன்ற பொதுமை நோக்குக் கொண்டவர்கள், தம் கலை நோக்கத்துக்குத் துணை போகும் ஆற்றலுள்ள எத்தகைய மரபுக்கூறுகளையும் எடுத்தாளத் தயங்குவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, "மீட்பர் நீரே" என்னும் கவிதையினைப் பார்க்கலாம்.

இக்கவிதையில், கிறிஸ்தவ மதபோதனையின் குரலும் சுருதியும், தொனியும், சொல் வழக்குகளும், வாக்கிய அமைப்புகளும் கையாளப்பட்டுள்ளன. வருத்தப்படுதல், பாரம் சுமத்தல், இளைப்பாறுதல் சத்தியத்தின் பாதுகாவல், பாபக் கறையைக் கழுவுதல், பரலோக சாம்ராஜயத்தைக் கட்டுதல், சிலுவையில் மரித்தல், சாவுக்குச் சாட்சியம், பலிக்களம், அசுத்த ஆவிகள், வாக்குத் தத்தம், முதுகளில் மரணச் சிலுவைகள் - இந்த தொடர்கள் எல்லாம், மதபோதனைகளின் வாசனை வீசும் தன்மையினை உடையன. ஆனால், கவிதையில் நிகழ்வது மதச்சார்பானதொரு பிரசங்கம் அல்ல. முற்றிலும் உலகியல் சார்ந்த சங்கதிகள் பற்றியதொரு குறிப்புணர்த்தல் மாத்திரமே. வெளிப்படையான ஒரு மட்டத்திலே ஒரு தொனியையும், உள்ளார்ந்த சாராம்ச மட்டத்திலே ஒரு தொனியையும் குறிப்பால் உணர்த்தும் இவ்வித உத்தி நயந்து சுவைக்கத்தக்கது. இதனால் எழும் கலை நுணுக்க உணர்வாற்றல் வலிமை வாய்ந்தது. மதச்சார்பின் உள்ளோசையுடன் ஒப்புநோக்கியும் வேற்றுமை கண்டும் நினைந்து நினைந்து அனுபவிக்கத்தக்கது. எந்த எந்த உருமாற்றங்களினால் இவ்வித இரசவாதம் நேரிடுகின்றது என்று ஊன்றி நோக்கும் தோறும், அங்கு மறைந்து நின்று பின்னணியிற் செயற்படும் கலைச்சாதுரியத்தின் மீது, நம் மதிப்பு மென்மேலும் வளர்கிறது.
"மீட்டர் மரபு சார்ந்த மேற்படி கவிதையைப் படித்த கையோடு, "அதிகாரக் கனவுகள்" என்ற 23ஆம் கவிதையையும் காண்போம். பூட்டனார் காலத்துப் பொல்லு இங்கு மையப் படிமமாகிறது. பூட்டியின் பொல்லு இலேசானதல்ல அவர்காலத்திலே அந்த பொல்லுக்குப் போட்டிருந்த பூண் பொன்னால் ஆனது வேலைப்பாடு மிகுந்தது. அப்புவின் காலத்திலோ, பொற்பூண் "ஐம்பொன்பூண்' ஆகிவிட்டது. அதாவது, பொன்னுக்குப் பதில், ஐம்பொன் என்று உபசாரமாகச் சொல்லப்படும் கலப்பு உலோகத்தால் ஆன பூண் ஆகிவிட்டது. அந்தப் பொல்லை ஓங்கியும் நீட்டியும் செய்த அதிகாரம் பற்றித்தான் இப்பொழுதும் ஆச்சியின் வாய் கதை கதையாய்ச் சொல்லிக்கொண்டிருக்கிறது. பூட்டன் போல் முகமாம் கடைசிப் பேரனுக்கு அவன் பறிபோய் விட்ட பழங்காலத்தை மீட்டுத் தருவான் என்று ஓர் ஆசைக் கனவாம், ஆச்சிக்கு, ஆனால் நனவிலோ என்றால் அந்தக் கனவுக்கதை திசைமாறிப் போய்விடுகிறது. ஆதிக்கங்களின் பாதிப்புகளால் அடிபட்டு முகமிழந்த மூத்த பேரன் அதிகாரத்தைக் கட்டவிழ்த்ததில். எல்லாமே கவிழ்ந்து கொட்டுண்டு போய்விடுகின்றனவாம். எப்படிக் கதை?
‘உடையாரின் பொல்லு' என்ற பழந்தொடர் காட்டும் படிமத்தை விருத்தி செய்து, இப்படியொரு புதிய கலைப்படைப்பைப் புனைந்து தருகிறார், தணிகர். "மீட்பர்’ கவிதையில் வருவனவற்றை விட வித்தியாசமான பிரபுக்குல மரபுக் கூறுகள் இங்கு படைப்பாக்கத் திரவியங்களாய் உதவுகின்றன.
இவை எல்லாவற்றையும் விட நாம் உற்றுக் கவனிக்க வேண்டியது கண்கூடான தினசரிக் காட்சிப்படிமங்களை வைத்தே தாக்கவலுமிக்க கலைநயத்தை உருவாக்கிவிடும் அற்புதம். 20ஆம் கவிதையாய் இடம்பெறும்
W.

Page 5
‘எதிர்பார்ப்பு' என்பதில், இந்த அற்புதம் தோன்றுகிறது. குடாநாட்டில் அடிக்கடி தலைகாட்டும் இடப்பெயர்வுக் காட்சிதான் இது. கால் முறிந்த வாங்கு, பின்னல் விட்ட கதிரை, பெட்டி, கடகம், சட்டி பானைகள், கை சூப்பும் கடைக்குட்டிக் குழந்தை எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு சிற்றுார் ஒழுங்கைகளில் மாட்டு வண்டில்கள் நகர்கின்றன. தட்டியில் நிமிர்ந்த தடியைப் பிடித்தபடி, ஆட்ட அசைவுகளுக்கு ஈடுகொடுத்து, சாகசம் காட்டி எழுந்து நிற்கின்றான், சிறுவன் ஒருவன். இது வெறும் கற்பனை அல்ல. நேரிலே காணத்தக்க காட்சி ஒன்றின் செப்பமான விபரிப்பு.
ஆனால், இதுவே ஒரு நல்ல படிமச் சேர்மானமாயும் அமைந்து விடுகிறது. இங்குதான், வாழ்நிலைகளுடன் ஒட்டிப்போகும் கவிஞரின் அனுபவ நெருக்கத்தினை நாம் உணர்ந்து கொள்ளுகிறோம்.
இப்படி ஒவ்வொரு கவிதையாகப் பார்த்துப் பார்த்துக் கொண்டே போகலாம் ஆனால், தணிகரின் கவிதைப் பாணி பற்றி நாம் அவதானிக்க வேண்டியவை, இப்படியான படிமவாக்கச் செழுமைகள் மாத்திரமல்ல. ஏனென்றால், அவர் படிமங்களுக்காகவே படிமங்கள்’ என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர் அல்ல. மாறுபட்டும் வேறுபட்டும் தொடரும் மனிதகுல வரலாறு-ஆட்சி ஆதிக்க வரலாறு தனிச் சொத்துக் குவிப்பன் வரலாறுஇவை பற்றிய தெரிந்துணர்வு நம் கவிஞரின் வரிகள் தோறும், எழுத்துகள் தோறும், எப்படி எப்படி எல்லாம் வெளிப்படுகின்றன என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களின் துணைகொண்டு கண்டோம் இல்லாத பொல்லாத விசித்திரங்களை எல்லாம் பொறுக்கிக் கோர்த்து, சோடனை பண்ணி, சப்பறத் திருவிழா நடத்தும் அலங்கார வினோதரும் அல்ல; வான் முகிலிடையே மின்னிடும் கொம்புகளைக் கொண்ட, ஊமை நாடக சூத்திரதாரியும் அல்ல. அப்படியானால் அவர் யார்?
தணிகர், தம்மைச் சூழவுள்ள மக்கள் திரளுடன் கலந்து குலாவி உலாவி வரும் பழக்கமுள்ள, நெடுநோக்கும் கூரிய பார்வையும் கொண்ட படைப்பாளி. அதனாலே தான், ஒடுக்கல்-சுரண்டல் என்பவற்றின் புதுப்புது மாறுவேடங்களையும் மாய வடிவங்களையும் இனங்கண்டு காட்டும் திறனை அவரிடம் நாம் பார்க்கிறோம்.
இன்று, உலகமயம், திறந்த சந்தை, நலன்புரி உதவிகள், நிவாரணக் கடன் என்ற பெயர்களில் வல்லாதிக்க வணிக நோக்குக் கும்பல்களின் திருகுதாளங்கள் பன்னாட்டுப் பெருந்திட்டங்களாகவும் நுண்கருத்திட்டங்களாகவும் புகுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்பிலே, ‘எல்லாம் இலவசம்’, ‘ஏழைகள் வயிற்றில் அடி’ஆகிய தலைப்புகளில் வரும் கவிதைகள் இரண்டும் ஊன்றிய கவனிப்புக்கு உரியவை.
"படியுங்கள்/ பாடத்திட்டங்கள்/தந்துள்ளோம்/அதை மீறி/ஏன்? எதற்கு? எப்படி?/என்று நீர்/நீளும் மனிதத் துயர்களுக்கு/வினா எழுப்பி விடை காண முயலாதீர்' என்றவாறு, கருத்துத் திணிப்புகள் பன்முக உத்திகளின் உதவியுடன் பரபரப்பாக மேற்கொள்ளப்படுவதைக் கவிஞர் இங்கு இரத்தினச் சுருக்கமாய்
vi

உணர்த்தி வைக்கிறார். தடையற்ற பகுத்தறிவை மடக்கிக் கட்டுவதற்குத்தான் எத்தனை இலவச உதவிகள், பயிலமர்வுகள், இடித்தூட்டல்கள், பணிக்களங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள், சுமூகமான கொடுக்கல்-வாங்கல் என்பவற்றை மழுங்கத் தேய்த்து விடும் வணிக நோக்குப் பழக்கவழக்கங்கள், இன்று மிகவும் மும்முரமாக ஊக்குவிக்கப்படுகின்றன.
கூட்டுறவு, ஒத்துழைப்பு. கருத்திணக்கம் என்பவற்றை விட, கழுத்தறுப்பு நெறிகளும், வழிமறிப்பு முறைகளும், குழிபறிப்புக் குள்ளத்தனங்களுந்தான் உயர்த்திப்பிடிக்கப்படுகின்றன.
“பாடத்தை மாறி/படிக்க முனைந்தீரேல்/பாடசாலை கோயில் என்றும் / பாரபட்சம் நாம் பார்க்கோம் குண்டுகளைப் போட்டு/கொழுத்தி தகர்த்திடுவோம்’- இப்படி எல்லாம் மிரட்டுகிறவர்களை நோக்கிப் பின் வருமாறு மக்கள் சார்பிலே முழங்குகிறது, தணிகரின் கவிதைக் குரல்
'திருவோட்டில் உணவேந்தி/தின்றும் புத்தர/போரில்லா அன்பு வாழ்வைப் போதித்தாரே/நீரோ/உலகெல்லாம் கை நீட்டி காசு பெற்று/உயிர்க்கொலையை போர் வெறியை/வளர்க்கின்றிரே!
மாறுபட்டும் வேறுபட்டும் தொடரும் மனிதகுல வரலாறு-ஆட்சி ஆதிக்க வரலாறு தனிச் சொத்துக் குவிப்பின் வரலாறு-இவைபற்றிய தெரிந்துணர்வு நம் கவிஞரின் வரிகள் தோறும், எழுத்துக்கள் தோறும், எப்படி எப்படி எல்லாம் வெளிப்படுகின்றன என்பதைச் சில எடுத்துக்காட்டுகளின் துணைகொண்டு 856,oir(BLTD.
புத்தகம் முழுவதையும் நிதானமாய்ப் படித்து, அனுபவித்து நுகரும் கவிதைப் பிரியர்கள், இங்கு எடுத்துக் கூறப்பட்டுள்ள உருவ-உள்ளடக்கப் பண்பியல்புகளுக்கு மேலும் பல சான்றுகளைக் கண்டுகொள்வார்கள்.
தொகுத்து நோக்குகையில், சமூகப் பெறுமானமும் கலைப் பெறுமானமும் வாய்ந்த நல்லதோர் அறுவடையாய், “வெளிப்பு’ என்னும் இத்தொகுதி அமைகிறது.
நீர்வேலி தெற்கு, இ. முருகையன் நீர் வேலி, 28,05, 2001.

Page 6
IJg5 jHaDir
தோழர் க. தணிகாசலம் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாகத் தன் வாழ்வை பொதுவாழ்வில் பொதுவுடமைப் பண்ணையில் அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர்.
சொல்லுக்கும் செயலுக்கும் நடைமுறையில் முரண்பாடு காணாதவர். தொழிலாளியாய் - விவசாயியாய் - எழுத்தாளராய் - பதிப்பாசிரியராய் - கதாசிரியராய் - கவிஞராய் - சமூகநலத் தொண்டராய் - அரசியல் தோழராய் தன் வாழ்வைப் பன்முகப்பணியில் பதித்துக் கொண்டவர்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தோற்றத்திலிருந்து இன்றுவரை அதன் செல்நேர்த்தியைத் தீர்மானித்துச் செயற்படுத்தும் முதன்மைச் சாரதி தணிகையர் ஆவார். புயலுக்கும்இ மழைக்கும்இ சூறாவளிக்கும் ஒதுங்கி புலம் பெயர்ந்து வேற்றுத் தாவாரங்கள் தேடி ஓடாமல் யாழ்ப்பாணத்திலேயே நிமிர்ந்து நிற்பவர்.
1974 முதல் 'தாயகம்' கலை இலக்கிய சஞ்சிகையை யாழ்ப்யாணத்திலிருந்து இத்தனை இக்கட்டுக்கள் மத்தியிலும் வெளியிட்டுவரும் தோழர் தணிகாசலம் பேரினவாதத்துடன் விட்டுக்கொடுக்காத போராட்டம் நடாத்திவரும் போராளியாக விளங்கும் அதே சமயம் தமிழ்த்தேசியத்தின் குறுந்தேசியக் குரலுக்குள்
ட்படுத்தாத் ளர். என்றும் ஒடுக்கட்பட் க்கள் மத்தியிலேே தனது இருப்பையும் உயிர்ப்பையும் தளராது பேணுபவர்.
தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாத ஒடுக்கலுக்கெதிராகவும் தனது சொந்தக் கிராமமான இருபாலையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் சமத்துவத்துக்கும் சனசமூக நிலையத்தில் சரிநிகர அந்தஸ்த்துக்குமாக சளையாது போராடி வெற்றி கண்டவர். இதன்மூலம் தனது உறவினர்களினதும் ஊரவர்களினதும் பழிப்புக்கும் அவமதிப்புக்கும் ஆளாக்கப்பட்டதுடன் ஆயுதப்படையின் அடாவடித்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டவர்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக ஏற்கனவே “பிரம்படி, 'கதை முடியுமா?’, ஆகிய இவரது இரு சிறுகதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பில் நாவல் ஒன்றும் எழுதி வருகிறார். அந்நூல் அடுத்த வருடம் வெளிவரும் என எதிர்பார்க்கலாம் “பெண் விடுதலையும் சமூக விடுதலையும் என அண்மையில் அச்சாகிய நூலிலும் இவரது இரு ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டுக்காக 'பாரதியும் லூஷனும; என்ற ஒப்பியல் ஆய்வுக்கட்டுரை எழுதிய போதும் அங்கு செல்லாமையே அவரது போர்க்குணாம்சத்தை வெளிப்படுத்துவதாகும்.

தமிழ்த் தேசியம், இலங்கைத் தேசியம் (சிங்களத்தேசியம்) என்பவற்றுக்குமப்பால் விரிந்த சிந்தனையுடன் பல்லினப்பண்பாட்டுப் புதுமையை சிந்திக்கும் வண்ணம் செயற்படும் மக்கள் கவிஞரான தோழர் க. தணிகாசலம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் சமகால சான்றாதாரமாக விளங்குகின்றார்.
இப்பதிப்புரை தணிகையரின் பார்வைக்குட்படாமல் வருவதன் காரணமா மகிழ்ச்சியடைகிறேன்.
அட்டைப்படம் வரைந்த கவிஞரும் ஓவியரும் பத்திரிகையாளரும் சட்டத்தரணியுமான இரா. சடகோபன் அவர்களுக்கும் கணனி வடிவமைத்த சோபனா, சிந்தியா ஆகியோருக்கும், இந்நூலை அச்சிட்டு வழங்கிய கெளரி அச்சகத்தினருக்கும், திரு. இராஜரட்ணம் அவர்களுக்கும் கவிதைகளை வெளியிட உற்சாகமூட்டி உதவி பல புரிந்த தோழர் சி.கா. செந்திவேல் அவர்களுக்கும் நல்லதொரு முன்னுரை வழங்கிய கவிஞர் இ. முருகையனுக்கும் எமது நன்றிகள்
கவிதை விமர்சனங்களை வரவேற்கிறோம்.
96). 449 3-üp LDTıç சோ. தேவராஜா கொழும்புச் சந்தைக் கூட்டுத்தொகுதி தேசியகலை இலக்கியப் பேரவையின் கொழும்பு - 11. gFाjul6b

Page 7
ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமது வாழ்வை
அர்ப்பணித்தவர்களுக்கு

வெறும் பேனா வீரர்கள்
ஒ. துாக்கு மரத்து கொலையாளிகளே ஏப்ரல் எழுபத்தொன்றில் உங்களது நலன்களுக்காய் எத்தனை பேர்களது கழுத்துக் கயிறுகளை இழுத்து நெரித்தீர்கள்.
முதலாளித்துவத்தின் முதிரந்தரசு யந்திரத்தின் கறள்படிந்த பீடமதில் பலிக்கடாவாய் கொடுத்திரகள், !
ஒ. சிறு முதலாளித்துவத்தின் வெறும் பேனா வீரர்களே
இன்னுமா உங்களுக்கு பாதை தெரியவில்லை?
உதிரிகளாய் நிற்கும் உங்கள் தனிமனித திட்டுக்களால் வெட்டுக் குத்து என்ற வெறும் வாய்ச் சவடால்களால் விடுதலை கிட்டாது.
விட்டுவிட்டு மக்களிடம் போங்கள் மக்களியக்கமதை கட்டி எழுப்புங்கள்.
கண்ணோட்டம் தெளிவுவரும் காலத்தை மாற்றுகின்ற கவிதைக்கும் ஊற்று வரும்.
gunafid (3) - 1974.

Page 8
புது மலர்கள்
வாலிபர்கள் நீங்கள் வாழ்வின் வசந்தத்தில் இருப்பவர்கள்.
காலை இளவெயிலின் சாயலை ஒத்தவர்கள்.
பழமை இருட்குகையினின்றும் வெளிவந்த புது மலர்கள் அறியாமை இருளகற்றும் பகுத்தறிவுச் சுடரொளிகள்.
புத்தம் புதுச் சிந்தனைகள் ஏற்ற புதுத் தலைமுறைகள்.
வர்க்க சமூகத்தின் கொடுமைகளை புரிந்து கொண்டு வைரம் போல் நெஞ்சுறுதி பெற்று தலை நிமிர்ந்து.
புத்தம் புது யுகத்தின் விடிவுக்குப் போராடும் பாட்டாளி வர்க்க படையணியின் வீரர்கள்.
தாயகம்- 1975 தை.

மலர்கிறது தேசியம்
2 -60)LuJIT 6).j6T66 ஒரத்தில்
ஒரு ஒதுக்கில் ஒரு பிடி மண்ணுக்கும் உரிமையற்று ஒட்டியிருந்து
அவர வாழ உழைத்த பரம்பரையின் உதிரத்தில் வந்தவர் நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம்.
கொட்டில் பிடுங்கி எமைக் குடியெழுப்பி தெருவில் விட அரச படையோடு வருகின்றார் உடையாரின் வழித்தோன்றல்
மண்ணுக்கே உழைத்து மாண்ட பரம்பரைக்கு மண்ணிலே பற்று மனதில் இறுகிறது
எங்கள் முகங்களில் உதிரம் சிவக்கிறது
அந்த ஒளியில் மலர்கிறது தேசியம்.
தாயகம்- 1975 தை

Page 9
இந்த இரயில் பாதைகள்
ஆடையாய் முகில் மூடும் அழகு மலைச்சாரல்களை ஊடறுத்து உள்நுழைந்து வளைந்து வளைந்தோடி ஓடுகின்ற கங்கைகளின் மேலாக மேலாக,
வடக்கிருந்து தெற்குவரை விரிந்திருக்கும் பசுந்தரையில் நேராக நேராக
நீண்டு நிமிர்ந்து வரும் இந்த இரயில் பாதைகள் இலங்கை மாதாவின் தேகமெங்கும் ஓடிப் பரந்திடும் நாடி நரம்புகள்.
அரைநூற்றாண்டுகளாக இந்த நரம்புகளினுாடாகவே அந்நியர்கள் இவளது இரத்தத்தை உறிஞ்சிக் குடித்தனர்
இதனால் இவளுக்கு இப்பொழுதும் இடையிடையே வலிப்பு வருகிறது.

அப்பொழுதெல்லாம் இந்த நரம்புகளில் இரத்த ஓட்டங்கள் தடைப்படுகின்றன வெடித்துச் சில வேளைகளில் இரத்த நெடில் கூட வீசுகின்றது.
இந்த நாடியைப் பிடித்தே தேசமாதாவின் தேகநிலையை நாம் தெரிந்து கொள்கிறோம்.
அந்நியர்கள் இந்த மண்ணைவிட்டு அகன்ற போதும் உலகத்தின் தெருக்களிலே இவளைக் காட்டி இரந்து வாழும் அவர்களது அடிவருடிகளே அதிகாரத்தில் இன்னும் இருக்கிறார்கள்.
தேசமாதா சுகப்படுவதை இத்தேச விரோதிகள் விரும்புவதில்லை. இதனால் பாதி உயிர் போய்விட்ட இவளின் மீதி உயிர் போகுமுன்னே தேச புத்திரர்கள் விழித்தெழ வேண்டும்
தலை நிமிர்த்தி ஒன்றுபட்டு 9ങ്ങബടങ്ങണ தகர்க்க வேண்டும்.
grufo - 1983 can

Page 10
அந்த இரவின் விடியல்களில்
ஆடிக்காற்றும் அறுதுயில் கொள்ளும் அமைதியான நடு நிசி நேரம் அசைவுகளின்றி ஊரே உறங்கும் ஓசைகளில்லா இரவின் மெளனம் எங்கோ ஊர்ந்த வாகனம் நிற்க எழுந்த பேரோசையில் எல்லாம் அதிர்ந்தது இடியும் மின்னலும் தன்கதை தொடர்ந்தது மழைப்புகார்களில் மறைந்து தெரிந்த மங்கிய நிலவில் நாடகம் நடந்தது.
இரவுத் திரைகள் விலகிய விடியலில் எலும்புகள் தசைகள் நரம்புகளாக கதிரவன் ஒளியில் காட்சிகள் விரிந்தன. கம்பிகள் இல்லாத் தந்திகள் பரவின தொடர்ந்து பல்லாண்டுகள் அரசு வளர்த்த வெறிகள் எழுந்து தாண்டவமாடின. ஏதுமறியா மனிதரின் தலைகள் மளமளவென்று சரிந்தன மண்ணில்: மறைந்து கிடந்த இனவெறி உணர்வுகள் எழுந்து தீயாய் இலங்கையை எரித்தது.
கைதிக் கூண்டில் குதறிய உடல்கள் குண்டுகள் பாய்ந்து சிதறிய தலைகள் வீதிகள் தோறும் விழுந்த பிணங்கள் வெந்து சாம்பலில் அழிந்த சுவடுகள் மனித மலர்கள் கருகிய விடியல்கள் மாறி ஒர்நாள் விடியல்கள் தோன்றும் அந்த விடியலில் வானம் சிவக்கும் அழகு மலர்களாய் வையகம் பூக்கும் மனிதன் மனிதனாய் மனிதனை மதிக்க புதிய மனிதன் எழுந்து நடப்பான்.
தாயகம்7 - ஏர்ட்ரல் மே 1984

பணப்பேயின் ஆட்சி
உழைப்பாளர் உரமிழந்தார் - ஒன்றுபட்டு புத்துலகை உருவாக்கும் திறனிழந்தா ரென்ற பிழைப்பான தத்துவத்தை உடைத்தெறிந்து புறப்படடா தோழா உன் பணிகளாற்ற.
உழைப்பாளர் சக்திதனை பிரித்து வைக்க இனப்போரை இந்நாட்டில் தொடக்கி வைத்தார் பனப்பேயின் ஆட்சிதனை நிலைநிறுத்தி படுகுழிக்குள் எம் நாட்டைத் தள்ளிவிட்டார்.

Page 11
சிறுவர்கள் மாணவர்கள் இளைஞர் மீதும் முதியோர்கள் பெண்களென்ற பேதமின்றி துப்பாக்கி பீரங்கி வேட்டுத் தீர தெருவெங்கும் மனிதவதை தொடரும் நாளும்.
அந்நியரின் கைப்பாவை ஆட்சியாலே இன்னுயிர்கள் இம்மண்ணில் வீழும் காட்சி மண்ணதனை நேசிக்கும் மக்களெல்லாம் மனம் வெந்து ஒன்றுபட்டால் மாழும் மாழும்.
விழித்தெழடா தோழா உன் வீரமிங்கு விளைத்துவிட்ட அதிசயங்கள் சிறிதா என்ன! வையகத்தை வாழ வைக்கும் உனது சக்தி வலுவிழந்து விட்டதென எவரோ சொன்னார்.
மானிலத்தின் தளையறுக்கும் மனித சகதி மாபெரிய உழைப்பாளர் சக்தியென்ற மாக்ஸ் அளித்த தத்துவத்தின் ஒளியில் நின்று மானுடத்தின் கீதமதை தொடர்ந்து பாடு
பாழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் உந்தன் நீள் பொறுமைக் கோரெல்லை இங்கு உண்டு வெறுமைக்கா உன் வாழ்வு என்று கண்டாய் சிறுமைகளுக் கெதிராக சினந்தே சீறு.
உழைப்பாளித் தோழா உன் கரங்களிங்கு உயர்ந்துவிட்டால் விலங்கெல்லாம் தகர்ந்து போகும் உழைப்போரை சுரண்டுகின்ற அமைப்புச் சாயும் இனப்பகையும் சாதி மதப் பகையும் மாயும்.
தாயகம்-9 ஒகஸ், செய் 1984 -

நாமிருக்கும் நாடு. .
தோட்டத்து பங்களாவில் எனது தாயாருக்கு தொட்டாட்டு வேலை ஏற்றத்தாழ்வுகளை அறியா இளவயதில் துரையின் பழனுடன் நடந்த இழுபறியில்.

Page 12
கேட்ட பட்டங்கள் “தோட்டக்காட்டான் கள்ளத்தோணி வடக்கத்தையான்”
பாட்டியிடம் போய் பழைய கதை கேட்டேன்.
தஞ்சையிலிருந்து தாம் வந்த கதை சொன்னாள் சோழப் பேரரசின் சேனைகளோடு வந்த வீர காவியத்தையல்ல!
சோறுடைத்த நாட்டின் சேரிகளிலிருந்து சோற்றுக்கு வந்த சோகக் கதை சொன்னாள்.
நாட்டுக்கே உழைத்தவரை நாடற்றவர்களாய் நட்டாற்றில் நிறுத்தி இரு அரசும் இலங்கையா?. இந்தியாவா? என்ற போது.
இந்தியா சென்றவர்கள் எழுதிய கடிதங்கள் இங்கே இருந்திடலாம் என்ற முடிவுதர இங்கேயே நாமிருந்தோம்.
எழுபத்தேழில் எழுந்தடித்த இனவெறிப் புயலில் வடக்கு நோக்கி இடம் பெயர்ந்தும் வாழ்க்கை நிலை கவடிடந்தான்.
O

11,
இன்று. காதோரம் தோட்டாக்கள் உறுமிச் செல்லும் களத்தில் நின்று எண்ணுகிறேன்.
பிறருழைப்பை பறிப்பதற்கு புகழ்ச்சி கூறும் பழங்கதைகள் இனிமேலும் எமக்கு வேண்டாம்.
கட்டையான கறுப்புருவ அமைப்பைக் கொண்ட கலப்பற்ற திராவிடர் நாம்
இருந்த போதும்
எனது நாடு ஹரப்பாவோ மொகஞ்சதாராவோ அல்ல.
கொழுந்தெடுத்த பரம்பரையின் உழைப்பினால் தான் கொழும்பு நகர் கட்டிடங்கள் உயர்ந்ததிங்கே
நம்முழைப்பால் நாடுயர்ந்து நாமும் வாழும் "நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்” நமதுரிமைப் போரினிலே அணிதிரள்வோம்.
KALED O - GESAf g qarF 1984

Page 13
கொள்கை ஒரு கோடி பலம்
போராடும் சக்தி இன்று பிரிந்து நின்றால் போர்க்களத்தில் வெற்றி எங்கு எம்மைச் சாரும் துப்பாக்கித் துரைத்தனமே நாட்டிற் கூடும் துரோகிகளின் பட்டியலே தொடர்ந்து நீளும்.
கொள்கையிலே தடுமாறும் துப்பாக்கி குறிதவறும் எமக்கெதிராய் எதிரிகளை உருவாக்கி அணிதிரட்டும் புதைகுழியாய் எமது நிலம் ஆகும் புத்துலகம் வெறும் கனவாய் போகும்
தத்துவத்தில் வழிதவறும் தலைமை இங்கு தொடுக்கின்ற போர் முறைகள் தோல்வி காணும் வித்தகங்கள் செய்வதனா லிங்கு வீனில் இரத்த வெள்ளம் மட்டுமிந்த மண்ணிலுறும்.
12

மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாப் போரில் மனித வதை ஒன்றே தான் மண்ணில் மிஞ்சும் பெண்ணினத்தை பாலியல் வன்முறைக்குள்ளாக்க பார்த்து மனம் பதைக்கின்ற நிலையும் தோன்றும்.
உடலுயிற்கு உலையை வைக்கும் நிலையை மாற்று! மக்களுக்கு எருதுகளாய் தலையைத் தாழ்த்தி சேவை செய்யும் தத்துவத்தை தலையில் துாக்கு
வித்தகங்கள் பேசி வீண் பொழுதைப் போக்கி நித்திரையை விட்டெழாத நிலையை மாற்று புத்திதனைத் திட்டு ஒரு புதிய மார்க்கம் நிச்சயமாய் உண்டு அதை நீயே தேடு.
கொள்கை ஒரு கோடி பலம் கொண்டதென்ற கோட்பாட்டின் உறுதியிலே நிமிர்ந்து நில்லு ஒன்று பட்டு இந்த மன்ைணில் நாம் எழுந்தால் எதிரி ஒரு பூனையல்ல எலியென் றெண்ணு.
மக்களது சக்தியினை அணிதிரட்டும் மார்க்கமதைக் கற்றுணர்ந்து செயலில் காட்டு ஏய்ப்போர்க்கே இவ்வுலகம் என்றும் இல்லை
எழுதோழா எழு உந்தன் பங்கை ஆற்று.
guid 11-CAD 1985.

Page 14
இரத்தப் பூக்களே.
அந்நியரின் காலடிச் சுவடுகளால் அழித்து மறைக்கப்பட்ட எனது தேசத்தின் எல்லைகளை தேடுகிறேன்.
அவனது கால்கள் இந்த மண்ணை விட்டு அகன்ற போதும் அவன் பண்ணிய பாவங்களின் பயன்களையே
இன்றும் நாம் அறுவடை செய்கிறோம்.
அவனது அடிவருடிகளே தொடர்ந்தும் ஆட்சிக்கு வருவதால் அவர்களது அடிச்சுவடுகள் இன்னும் அழிக்கப்படவில்லை.
14

15
தேர்தல் சின்னங்களை பார்த்துப் பார்த்து தேசப் படத்தையே நாம் மறந்து விட்டோம்.
தெருவோரத்துப் போஸ்டர்களில் காலாய் அரையாய் குறுகிப் போய்விட்ட கற்பனைக் கோடுகளை உறுதிப்படுத்த ஒரு தியாக வேள்வியே இங்கு தொடர்கதையாகிறது.
கங்கைகள் பாயாது காய்ந்து கிடக்கும் எம் பூமித்தாயின் தாகத்தை திர்க்க செங்குருதி இம்மண்ணில் தொடர்ந்து சொரிகிறது.
வரலாற்றை தவறாக பின்பார்த்த மனிதர்களால் வாலிழந்த மனிதர்களின் காலங்களுக்கு நாம் வலிந்து இழுக்கப்படுகிறோம்.
மாணவப் பருவத்தில் இந்த மண்ணின் எல்லைகள் எம் கண்களுக்கு மறைக்கப்பட்டன.
உழைப்பாளிகளாக எம் வயிற்றை எம் உழைப்பால் நிரப்ப முனைந்த போதுதான் எமது உரிமைகளின் எல்லைகளை நாம் தெரிந்து கொண்டோம்.

Page 15
வடக்கும் கிழக்கும் மகாவலியும் மலைநாடும் மட்டுமல்ல. அழகான இத்தீவின் கடற்கரைகள் எல்லாமே எமது நிலம்
இதுவே எம் தாய் திருநாடு.
இழந்து கொண்டிருக்கும் எமது பிரதேசங்களை பாதுகாக்க மட்டுமல்ல எமது தேசத்து மண்ணில் பதிந்து விட்ட அந்நியச் சுவடுகளை அழிக்கவும் நாம் போராட வேண்டும்.
மரணங்களுக்காக நாம் மனம் வருந்துகிறோம் அதையும் விட மனிதத்துவத்தின் மரணத்துக்காகவே எமது இதயங்கள் பிழிந்தெடுக்கப்படுகின்றன.
எமது மண்ணின் இந்த இரத்த வடுக்களை அடியோடு அழிக்க ஒரு சமுதாய விடியலுக்காக மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் இரத்தப் பூக்களே. இது விடியலின் ஆரம்பந்தான் விழித்தெழுங்கள்.
GLUKSfD 12 - qasiñ 1985.
16

17
கொடுமைகள் நிறைந்த மண்ணில்
புள்ளினம் பாடப் புலர்ந்த பொழுதுகள் மெல்ல மறைந்தன. புத்தரின் அன்புத் தத்துவம் ஆளும் புனித மண்ணிலே. இரத்த வடுக்களும் எலும்புமே மிஞ்சின. வெடியொலி கேட்டே விடிந்தன பொழுதுகள்.
ஒரு சிலர் நலன்களை சம் உறுதி செய்வதற்காய் அரசு தன் குடிகளை அழித்திடத் துணிந்தது. ஆயுதச் சந்தையில் மானுட உயிர்களை அடகு வைத்தது.

Page 16
இறக்கை முளைத்த இடியேற்றுப் பிழம்புகள் ஊர்மனை எங்கும் எட்டிப் பார்த்தன.
இரத்தமும் தசையும் தேடி அலைந்து எந்திரப் பறவைகள் வானில் பறந்தன.
வீடுகள் எங்கும் குண்டுகள் விழுந்தன ஒடுகள் கூரைகள் சிதறிப் பறந்தன மனித உயிர்கள் பெறுமதி இழந்ததால் மரணமும் தனது மதிப்பை இழந்தது.
இரவின் கனவில் அரற்றிய சிறுவர்கள் விடிந்ததும் எழுந்து துணிவுடன் நிமிர்வர்.
அச்சுறுத்திய சூழலுக்கெதிராய் *Jtkł5 DT, தடிகளைத் தூக்குவர்.
கொடுமைகள் நிறைந்த மண்ணில் மனிதர்கள் கொள்கையில் தெளிந்து கிளர்ந்து எழுவர் விடியலை நோக்கி விரைந்தே செல்வர்.
ZSU-3GfD 14 - GALīgasos 1986
18

19
உரிமையின் கீதம்
தோளின் வலுவால் தொழில் பல ஆற்றி தேசங்கள் வாழ தான் தேய்ந்த வர்க்கம் துன்பச் சிலுவையை பல நூற்றாண்டாய் தலை மேல் சுமந்ததால் தேடிய தத்துவம் LDTissFlb.
விதி வினைப் பயனென மனிதத் துயர்களை LD60) LDTuJFT தத்துவமனைத்தையும் தூக்கி எறிந்து துயர் விலங்குடைத்த அடிமையின் போர்க்குரல்.
உழைக்கும் மக்களின் விடுதலை மூச்சு அடுத்தவர் உழைப்பை பறித்திட எண்ணும் அதிகார வர்க்கத்தை சுடும் நெருப்பு.
மானுட விடுதலை பாடிடும் பறவைகள் ஓயாது மீட்டும் உரிமையின் கீதம்.

Page 17
விடியலைத் தேடும் வெண்புறாக்களே.
பூமிப் பந்தின் பற்பல திசையிலும் போரும் துயரும் பசியும் தொடர ஏகாதிபத்தியங்களின் கழுகுப் பார்வைகள் ஏழை நாt}'ளை வட்டமிடுகின்றன.
பலநூற்றாண்டாய் பலவீனப்படுத்திய தேசத்தின் 2 ல்களை கூரிய சொண்டால் கொத்திக் குதறும் கொடுர நிகழ்வுகள் மேலும் தொடர அவர்களை சார்ந்து வாழப் பழகிய தேசத்து நரிகள் துணைபோகின்றன.
20

21
நட்சத்திர
யுதத சனனதராய நவீன அணுவாயுத கோரப் பற்களுடன் நரபலி தேடும் இவர்களினால் எருதுகளை மோத வைத்து இரத்தத்தை நரி பருகும் ஈசாப்பின் கதையே இன்னும் தொடர்கிறது.
மரணத்தின் முனகல்களே தேசத்தின் மொழியாக மனிதத்துவத்ன்த இழந்து போய்விட்ட வேட்டுவரின் வெறியாட்டு நிகழ்வுகளே தேசத்தின் கலாசாரமாக உருமாறுகிறது.
இரத்த வாடை வீசும் இப்பலிக்களங்களிலிருந்து வசந்தகால மலர்களை
எதிர்பார்க்க முடியாது.
பூனைகளே ஒன்றுபட்டு அப்பத்தை உண்ணாவிட்டால் ஏப்பமிடும் குரங்குகளுக்கே எதிர்காலம் சொர்க்கமாகும்.
வேட்டுவர் விரித்த வலைகளில் வீழ்ந்த விடியலைத் தேடும் வெண்புறாக்களே விடுதலை வானில் சிறகினை விரிக்க வலைகளை அறுத்து ஒன்றுபட்டெழுங்கள்.
, gjuhalifd 3 - qafaj 19.

Page 18
பாரதிக்கு ஓர் கடிதம்
அன்பின் பாரதிக்கு, ஆண்டுகள் பல அதனால் அறியப் பல விடயம் ஆவலாய் இருப்பாய்
உன் தேசத்து மக்களிலும் மானுடத்தின் மீதும் நீ கொண்ட நேசம் மட்டற்றதுதான்.
உன் கனவுகளைக் கலைத்து உனைக் கவலையில் ஆழ்த்த நான் விரும்பவில்லை *21607|1982|D அச்சத்தை கவலையை விட்டவன் நீ.
உன் தேசம் நீ கண்ட இந்தியா அகண்ட இந்தியக் கனவுக்காரர்களால் கலைந்து கொண்டிருக்கிறது.
22

23
நீ தேசத்தின் ஒற்றுமைக்கு கரங்களை நீட்டினாய் இவர்களோ இன்று துப்பாக்கிகளையே நீட்டுகிறார்கள்.
தொடர்ந்தும் இவை நீண்டால் துப்பாக்கி ரவைகளின் தூரத்தால் தான் தேசத்தின் எல்லைகள் வரையப்படும்.
காலனித்துவம் போட்டு வைத்த சுருக்கு கயிறுகள் காந்தியின் சுதந்திரத்தால் அறுக்கப்படவில்லை.
கஞ்சி குடிக்க வழிமறியா விட்டாலும் கொக்கா கோலா கனவுகளுக்காக தேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் போட்டவன் நீ உன் பாரதமோ இன்னும் பழமைச் சேற்றில ஊறிக்கிடக்கிறது
அதனால் தான்
பாபர் மசூதி
இராமர் ஆலயமென புதைகுழிகளையே மீண்டும் மீண்டும் தோண்டிக் கொண்டடிருக்கிறார்கள்.

Page 19
அருகில் இருப்பதனால் 6T60)LDub அச்சுறுத்துகிறார்கள் சீதையை சிறைவைத்த குற்றத்துக்காகத் தானோ அடிக்கடி நாங்கள் தண்டிக்கப்படுகிறோம்
இராமர்கள் அனுமார்களுடன் வந்து எமது மண்ணை எரியூட்டிச் சென்றார்கள்
உலகில் நீ ஆகாவென வியந்த புரட்சி அலை சற்றோய அகிலத்தை ஆள புதிய சார் எழுந்துள்ளான்.
கவலை விடு கடைக்கண்ணால் தான் அன்று காளி பார்த்தாள் இன்று நம் காளிகளோ நேராக பார்க்க முனைகின்றார்கள் உலகில் இனி புரட்சி அலை ஒயாதையா
நீ ஓர் வேதாந்தி
ஆனாலும் சொர்க்கத்து நிழலுக்காக அதன் சாரத்தை தேடவில்லை மானுடத்தின் தளைகளை மண்ணில் அறுத்திடவே tDITjebibb bf603TLITU)
24

25
கானகத்து பொந்திலல்ல உன் கவிதை வரிகளுக்குள் நீ வைத்த சிறு நெருப்பு பற்றிப் படர்ந்து பாரின் கொடுமைகளை சுட்டெரித்து நீறாக்கும்
தூங்கிக்கிடந்த தமிழர்களை தட்டியெழுப்பி துயில் கலைத்தாய் கொட்டு முரசறைந்து குறிக்கோள்கள்
ஏற்க வைத்தாய்
அஞ்சி ஒடுங்கி அடிமைகளாய் இருந்தவரை வெஞ்சினம் கொண்டு வீரர்களாய் எழ வைத்தாய்
ஈழத்து மண்ணில் இருந்து இதை எழுதுவதால் உற்சாகம் தரும் செய்தி
உன் சுதந்திர தாகத்தை இன்னும் உயிர்ப்போடு பேணுகிறோம் r உன்னை நினைத்து நாம் உறுதி பெறுகிறோம்
ஒடுக்கு முறையில்லா
உலகொன்றை
காணும் வரை மறக்க முயன்றாலும் மறையாது உன் நினைவு
எழுதப் பல விடயம் உளது இருந்தும் கடிதத்தை முடிக்கின்றேன் காகிதத்திற்கு இங்கு தட்டுப்பாடு வணக்கம் ஐயா.
gud 1993.

Page 20
எங்கள் கொல்லைகளில்
எங்கள் கொல்லைகளில் ஊர் மாடு மேய்ந்த நிலை மாறி
இன்று வடக்கன் மாடுகளே வடிவாய் மேய்கிறது
எல்லைச் சண்டைக்கு வேலி வெட்டி விட்டதனால் எந்தப் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை இனி
எங்கள் எல்லைகளை நாமே நிர்ணயித்து எங்கள் பயிர்களை நாங்கள் காக்கும் வரை இந்த வரலாறே இம்மண்ணில் இனித் தொடரும்.
og aanbags
26

27
வெறும் சூரியோதயமா?
ஏகலைவனின் பெருவிரலை பறித்தெடுத்த ஆளும் வர்க்கம் எப்படி இன்று சம கல்வி தருகிறது?
ஓ. இப்போதெல்லாம் எப்படி ஆள்வது என்பதை மட்டும் அவர்கள் கற்றுத்தருவதில்லை

Page 21
ஆள்பவர்களுக்கு எப்படி அடிபணிந்து வாழ்வது என்பதே அரச கல்வியின் அடித்தளமாகிறது
ஆட்சிகள் மாற அரிச்சுவடிகளும் மாறுகின்றன கல்விமான்கள் கூட கரும்பலகைகளாகின்றனர்.
கலாசாலைச் சுவர்கள் கூட சமுதாய உண்மைகளை மறைக்கும் தடையரன்களானால் கருமிருட்டில் தான் எமது சந்ததி கண்ணயர்ந்து போகும்
அடி வயிற்றில்
பசி இருந்தாலும் அதிகார வர்க்கம் தரும் அரண்மனைக் கனவுகளிலல்லவா நாம் மனம் லயித்துப் போகிறோம்
நாளை விடியுமென்று நாம் ஒவ்வொருவரும் துங்கிக் கிடக்க சமுதாய விடியலென்ன வெறும் சூரியோதயமா?
göLLEsíd 1992.
28

29
உலையும் சிலையும்
உலகத்து நாடுகளை சுரண்டி நன்றாய் கொழுத்துவிட்ட பிணந்தின்னி கழுகாய் மாறி
சுதந்திரமாய்
உலகத்தை தன் கீழ் வைக்க தேசத்தின் எல்லைகளை காலால் கீறி
பல கோடி மக்களை கூர்ச் சொண்டால் கொத்தி குதறுகின்ற கோரத்தனம் தொடர நாளும்
வியட்னாம் முதல் U60TTLDT 660) உலகத்து நாடுகளின் சுதந்திரத்திற்கு உலைவைத்து வருவதனால்
முன்பே
சுதந்திர தேவிக்கு பெரியதொரு சிலைவைத்து விட்டார்கள் அமெரிக்காவில்
Il-filul Jifà

Page 22
ஒடுக்குதலில்லா உலகுக்காய்
தன்னைப் போலவே இன்னொரு மனிதனை நேசித்தமைக்காய் அன்றொரு மனிதன் சிலுவையில் மாண்டான்.
ஏற்றத்தாழ்வுகள் இல்லா உலகை ஆக்கிடும் போரில் நேற்றைய மனிதர்கள் சாவினை ஏற்றனர்:rத
வரலாறு தன் சிறகை வேகமாய் அடித்தது வானம்பாடிகள் உரக்கப் பாடின விடியலின் கானங்கள் எங்கும் எழுந்தன.
உழைப்பவர் வியர்வையில் செழித்த இவ்வுலகம் உறக்கம் கலைந்தது கிழக்குச் சிவந்தது கீழ்மை இருட்கனம் கிழித்து எழுந்தது காலைக் கதிரொளி.
புதியதோர் வேதம் எங்கும் எழுந்தது புதுமையை வாழ்த்தி கவிஞர்கள் பாடினர்.
30

உழைப்பவர் தலைமையில் ஆட்சிகள் எழுந்தன உலகில் மானுடம் உயிர்பெற்றெழுந்தது.
ke k 米
அடிமை விலங்குகள் எங்கும் உடைந்திட ஆதிக்க சக்திகள் அலறித் திகைத்தன.
தன்னல வெறிகளை தட்டி யெழுப்பிடும் தத்துவம் பற்பல தேடிப் புனைந்தன.
பல் ஆயிரம் ஆண்டு LJIpGOLD60)uj gj60)600TuJITUJ பற்றி மீண்டும் பலங்கொண்டெழுந்தன.
புதுயுகக் கனவில் அரற்றிய சில பேர் போர்வையை மீண்டும் இழுத்து மூடினர்.
நல்லதோர் உலகம் நிமிர்ந்திடக் காணல் நாய் வாலென அவர் நம்பிக்கை இழந்தனர்.
ஒடுக்குதல் இல்லா உலகினை நோக்கி உருள்வதே பூமியில் மானுட வாழ்வு.
உண்மையின் இவ்வொளி கண்டவர் இங்கு உறுபணி செய்ய உறுதிகள் கொண்டனர்.
La Ugo 1999.

Page 23
வேறு வழி
விலங்குத் தளைகளிலிருந்து விடுபடத் துடிக்கும் மானுடத்தின் முன்னால் எத்தனை பெருமலைகள்.
மனங்களில் முளைத்த வால்களை அறுக்க எத்தனை பெரிய மனித முயற்சிகள்,
ஆதாமும் ஏவாளும் உண்ட நச்சுக் கனிகளை விட தனக்கென சொத்தைச் சேர்த்த முதல் மனிதன் செயலே அனைத்துப் பாவங்களுக்கும் அடித்தளமானது.
சுதந்திர போட்டிச் சந்தையில் இயந்திர மனிதர்களை
32

33.
உருவாக்கலாம் * .ッ இதயமுள்ள மனிதர்களை உருவாக்க அவதார புருஷர்களாலும் இயலவில்லை.
அப்புனிதர்களின் நாமத்தைச் சொல்லியே அவர்களது அடியார்கள் மனிதத் தலைகளை அறுவடை செய்கிறார்கள்
இருட்டறையிலும் நீதி தேவன் இருந்தாலல்லவா அவனை மீட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வர.
பட்டப்பகலில் பணக்கார வர்க்கத்துக்கே அவன் பாத பூஜை செய்கிறான்.
சாதாரண சட்டப் புத்தகங்கள் மீதும்
B606 துப்பாக்கிகளே இங்கு வைக்கப்பட்டுள்ளன.
எமது வியர்வைகளுக்கும் கண்ணிர் துளிகளுக்கும் நியாயம் கேட்க எஞ்சிய குருதியையும் சிந்துவதைத் தவிர
6TLDBG5
வேறு வழி?
ави ванio 1992.

Page 24
உழைப்பாளியின் அஞ்சலி
ஆழக்குழியில் மண்ணை அகழ்ந்தெடுத்து தூர எறிகின்றேன். உடலின் தசைகள் சூடேறி வழியும் வியர்வை அக்குழியில் துளித் துளியாய்,
இரத்தமும் வியர்வையும் ஆம், போரில் இறந்த வீரர்களுக்காக நான் புதைகுழி வெட்டுகிறேன்.
எனக்கும் இவர்க்கும் ஏதோ ஒரு உறவு.
34

35
எனது உறவுகள் விசாலமானவைதான்
ஆசியாவின்
வயல்களிலும் ஆபிரிக்க தங்கச் சுரங்கங்களிலும் அமெரிக்க எண்ணெய் வயல்களிலும் எனக்கு உறவுகள் உண்டு.
ஆனாலும் இந்த மண்ணில் தான் எமது உரிமைகளின்
பதாகைகளை
6TLDLDIT6) உயர்த்திப் பிடிக்க முடியும்.
சாதி, இன, மத, நிறத்தை
FITILT5 வைத்தொருவன் சகமனிதன் மீதேறி சவாரி விடுவதனை சாவரினும்
நாம் ஏற்கோம்,
D60öT6066) 2 fool D மறுத்தோரை எதிர்த்துமது இன்னுயிரை ஈந்தோரே உங்கள் கல்லறையில் எழுத விரும்புகிறேன் “மானுடத்தின் விடுதலைக்கு நீர் மரித்தீர்”
KEîD 1993.

Page 25
மீட்பர் நீரே
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே வாருங்கள் நாம் இளைப்பாறும் நேரம் இதுவல்ல,
சத்தியத்தின் பாதுகாவலர்களே 2. Iங்களது விழிப்பினால்தான் உலகத்தின் L]|[Il Idi, G699056ít கழுவப்படும்.
36

37
ரோமப் பேரரசின் கொடுமைகளை எதிர்த்தே அன்று நான் பரலோக சாம்ராஜ்ஜியத்தை கட்ட நினைத்தேன்.
ஒடுக்கு முறைக்கு உட்படும் உம் போன்றவரை விடுவிக்க முனைந்தே சிலுவையில் மரித்தேன்.
எனது சாவுக்கு சாட்சியம் சொன்னவர்களே இன்றும்
உங்களது
ராஜ்ஜியங்களை ஆள்கிறார்கள்.
பணக்காரரான அவர்களுக்கு பரலோகத்தில் இடமில்லை என்றேன். அவர்களோ இந்த உலகையே பங்கு போட்டுக்கொள்ள சந்தைகளில் போட்டியிடுகிறார்கள்.
ஆதிக்க வாதிகளின் பலிக்களங்களிலிருந்து எழும் அசுத்த ஆவிகள் வானத்துக் கூடாக எங்கும் வலம் வருவதால்
g3665606 அடையாளம் காணும்படிக்கு உங்களது அறிவுச்சுடர்களை
அணையாது ஏற்றி வையுங்கள்.

Page 26
ംLTu്ടങ്ങണ உண்மையாக்கும் பிரசாரர்களே உலகெங்கும் பெருகிவிட்டதால் ഉ_ങ്ങിങ്ങ്ഥങ്ങണ
நீங்களே தேடிக் கண்டடையுங்கள்.
எனது வார்த்தைகள் மீது வாக்குத் தத்தம் செய்து இவ்வையகத்தை பரிபாலிப்பவர்களே.
உங்கள் முதுகுகளில் மரணச்சிலுவைகளை மேலும் மேலும் ஏற்றுகிறார்கள்.
இதனால்
மீண்டும் பூமியின் மீது சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
வரலாற்றை முன்தள்ளும் வல்லமையுள்ள மீட்பர் நீரே.
guard 32, 1995 losoft
38

39
எதிர்பார்ப்பு
ஆளரவமற்று தூங்கிக் கிடந்த கிராமத்து மண்பாதைகளில் மீண்டும் தடம் பதித்தபடி மாட்டுவண்டில்கள் 2. பூவு யந்திரங்கள் LD6fly ad (b6 shibbit
இறுதிக் காலத்தில் இரவல் பெறாமல் தன் உடலை வளர்த்த
பாடடானார செய்வித்த பழம் வாங்கு கால்கள் முறிந்தபடி வண்டிலில் கவிழ்ந்து கிடக்கிறது.
பின்னல் விட்ட கதிரை I juptiD LIU. I பெட்டி கடகம் சட்டி பானைகள் அவைகளுக்கு நடுவே விரல் சூப்பும் கடைக்குட்டியை

Page 27
ஒரு கையால் அனைத்தபடி பிரிந்து வந்த தன் கிராமத்தின் அழகை ரசிக்கிறாள் மூத்த பெண், பிரியா.
தட்டியில் நிமிர்ந்த தடியைப் பிடித்தபடி ஆட்ட அசைவுகளுக்கு ஈடுகொடுத்து சாகசம் காட்டி எழுந்து நிற்கிறான் அவள் தம்பி.
முன்பு ஒரு முறை சென்று திரும்பிய போது இப்படி எழுந்து நின்ற மூத்தவன் இன்று இல்லை.
கூலியைக் கூட்ட பேரம் பேசியதில் வண்டிக்காரரின் முகத்தில் விழுந்த முகச் சுருக்கம் இன்னும் மறையாமல் மாட்டுக்கு வீசும் கம்பில் உறைய.
வண்டித் தடத்துக்குள் வழுக்கி விழும் здѣыЈti) (8 п6ї) வாழ்க்கை உருள்கிறது.
சமாதானத்தின் வரவை எதிர்பார்த்து பின்னால்
அவனும் அவளும்.
LiD31, 1995.
40

41
கனலாக நின்றாள்
அடக்கம் அணிகலனாய் அன்னை யவள் இருந்தாள் ஆ. ஊ. எனப் பலநாள் அலறி அவள் துடிக்க அவளை அவன் அடித்தான்
கையெடுத்துக் கும்பிட்டாள் காலில் விழுந்தழுதாள் கைப்பிரம்பு ஒயும் வரை கையோய வில்லை அவன்

Page 28
வைக்கும் இடத்தில்தான் உனை வைக்க வேண்டுமென பல்லை நெரித்து பயமுறுத்தல் பல செய்தான்.
விக்கி அழுதாள் விதியோ வென நொந்தாள் வேதனைகள் தீர வழி வேறிலையோ என்றிரந்தாள்.
காலை முதலிரவு வரை கையோயா தவளுழைத்தும் கணக்கில் வரா உழைப்பின் காரணத்தைக் கண்டறிந்தாள்.
தேனென்றும் மானென்றும் தெய்வமென்றும் போற்றுவது பொய்யுரைகள் வெற்றுப் புகழுரைகளென அறிந்தாள்.
பொற்றாலியோடு பூனாபரணமெல்லாம் தைக்கின்ற முள்ளுத் தளையாக எண்ணி நின்றாள்.
அம்மா பட்ட அடி g|ഖണ്ടി പ്ര'L ഉ_ഞ്b அண் ைஅயற் பெண்கள் பட்டுவரும் அவலங்கள் எல்லாமே அவள் கண்முன்
6 p6\)ITL— ஏனடித்தாய் என்னையென எழுந்து தலை நிமிர்ந்தாள் கைப்பிரம்பைப் பற்றி கனலாக அவள் நின்றாள்.
“GLssõsonsõT afashys.
42

43
எல்லாமே இலவசம்
எல்லோருக்கும் கல்வி இலவசம் தான் கற்பித்தல் மட்டுமல்ல கற்பதற்கு புத்தகமும் களைக்காமல் உண்பதற்கு உலர் உணர்வும் எடுப்பாக உடுத்துவர சீருடையும் எல்லாமே இலவசமாய் தருவோம் நாம்,

Page 29
படியுங்கள் பாடத்திட்டங்கள் தந்துள்ளோம்
அதைமீறி ஏன்? எதற்கு? எப்படி? என்று நீர் நீளும் மனித துயர்களுக்கு வினாவெழுப்பி விடைகாண முயலாதிர.
கண்டாலும் கூடி இணைந்தொன்றாய் போராட முனையாதீர் முனைந்தீரேல் சாதி, இன, மதம் - நாம் பார்ப்பதில்லை சூரிய கந்தவில் கண்டிருப்பீர் எலும்புகளில் வேறுபாடு எமக்கு இல்லை.
பாடத்தை மாறி படிக்க முனைந்தீரேல் பாடசாலை கோவிலென்றும் பாராபட்சம்
நாம் பார்க்கோம் குண்டுகளைப் போட்டு கொழுத்தித் தகர்த்திடுவோம் கொன்றிடுவோம் உம்மை கொடுமிருட்டில் தள்ளிடுவோம்.
gusso 1994.
சிங்கள மாணவர்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட இடம்.
44

45
புறாக்களின் வருகை
கழுகுகள்
வானத்தில் வட்டமிட்டாலும் வெள்ளைப்புறாக்களுக்கு பச்சைக் கம்பளம் விரித்தது எனது மண்.
இரண்டு தசாப்தங்கள் எனது உறவுகளின் இரத்தத்தால் சிவந்த மண்மேடுகளில் மீண்டும் பசும்புல்லின் துளிர்ப்புக்கள்.

Page 30
கற்குவியலாக்கப்பட்ட எனது நகரத்தையும் கற்பழிக்கப்பட்ட எனது கிராமங்களின்
660TŮJ60). Juquib மீட்டெடுக்க ஆவல். இழக்க முடியாத
உரிமையுடன்தான்.
வெண்புறாக்கள் முன்பும் வந்தன தலை காட்டி அழிந்தன.
இன்றும் எமது தசைகளிலும் இரத்தத்திலும் குறிவைத்தபடி கழுகுகள் வானத்தில் வட்டமிடுகின்றன.
வெண்புறாக்களுக்கு பச்சைக் கம்பளம் விரித்தால் போதுமா?
suUEid 44.
46

47
ஏழைகள் வயிற்றில் அடி
தம் உழைப்பில் தாமுண்ணும் மக்களுக்கு தருவதற்கு உங்களிடம் ஏதும் உண்டா?
உழைக்கின்ற மக்களுக்கு உங்களைப் போல் உல்லாசம் உப்பரிகை எதுவும் வேண்டாம்.
சோற்றுக்கவர் உழைக்க சுதந்திரமாய் விட்டுவிட்டு நிறுத்துங்கள்
உங்கள் நிவாரணத்தை.
நேற்றுவரை இவைகளையா நம்பி வாழ்ந்தார்.

Page 31
தீராத இனப்போரை தொடக்கி வைத்து ஊரூராய் தெருத்தெருவாய் அலைய வைத்தீர்.
தேடிவைத்த சிறு தேட்டம் வீடு வாசல் எல்லாமே தொலைத்தழித்தீர்.
ஊரரிசிக் கஞ்சியேனும் குடித்துக் கொஞ்சம் உரமாக இருந்தவரை கூப்பனுக்கும் கோறா அரிசிக்கும் பழக்கி வைத்தீர்.
திருவோட்டில் உணவேந்தி தின்றும் புத்தர் பேரில்லா அன்பு வாழ்வை போதித்தாரே.
的m
உலகெல்லாம் கைநீட்டி காசுபெற்று 2. ulJá5 (obT60)6)60)|L போர் வெறியை வளர்க்கின்றீரே.
நீளும் கொடும்போரை நிறுத்த முயலாமல் ஏழைகள் வயிற்றில் அடியென்று எவர் சொன்னார் ஐ.டி.எ.வ்(F) ஆ?
தாயகம் 1998
48

49
ஒரு தந்தையின் நினைவு
பேருக்கு குலம் விளங்க பெற்ற ஒரு மகனாக நாம் நினைக்க நீயோ
ஊருக்கு
விளக்காக எரிந்தணைந்தாய்
உனக்குள் எரிந்தவிந்த செந்தியின்
666566 எவர் அறிவார்.
விரிந்த உன் உள்ளத்தின் வெளிப்பரப்பை 6t6.j அளந்தார்.
சுயநலத்தின்
FT355TLITU
சுழலும் இவ்வுலகத்தில் மனிதத்தை
தேடுபவன் மரணிப்பதில்லையடா.
Gru Esgaid 3 - Bually 1995.

Page 32
அதிகாரக் கனவுகள்
பூட்டனார் காலத்தில் புதுவைரம் கைப்பிடியில் பதித்து வைத்து பாட்டனார் கைக்கு பரம்பரையாய்
வந்த பழம் பொல்லு.
அடையாளம் மட்டும் இன்னும் அகலாமல் பொன்னாலிட்ட பூண் ஐம்பொன்னாலாகி அப்புவின் கையில் அழகாய் ஒளிர்கிறது.
50

51.
அதை நீட்டி செய்த அதிகாரம் கதை கதையாய் ஆச்சியின் வாயில் இன்னும் அடிக்கடி வருகிறது.
கேட்கும் மனிதர் தரமறிந்து கூச்சத்துடனும் பல கதைகள்.
பூட்டன் போல் (ps(p60Luu கடைசிப் பேரன் பழங்காலம் மீட்டானென்ற பெருங்கனவு ஆச்சிக்கும் அவர் தமக்கும்.
ஆதிக்கங்களால் அடிபட்டு
மிதிபட்டு முகமிழந்த மூத்த பேரன் அதிகாரத்தை கட்டவிழ்த்ததில்
அவர்களது பரம்பரையின் நிர்வாணம் p5up6 Tui அவன் முன் நீள்கிறது.
Juusto 1998

Page 33
உம் கரத்தை சேர்ப்பீரா?
பொதுமை மணம் பரப்பி பூத்து மலருமென காத்திருந்த ஒரு மொட்டு இதழ் விரித்து கருகியதே.
மணியதாஸ் எம் உளங்கவர்ந்த இள முகையே
பேரினத்து புயல் வரவால் பட்டழிந்த மொட்டுகளுள் நீயும்
ஒன்றாய் ஆனாயா?
52

53
நேர் விளைவு கண்டே நெஞ்சயரும் நாம் பக்க விளைவுகளை பார்க்கும் உளம் பெறுவோமா?
பஞ்சம் போர் பிணிகள் பிஞ்சு மழலைகளை பேரரிய
DigiDL-5605 வாட்டி வதைத்து வேரனுக்கும் கோரத்தனம் கண்டும் நாம்
இவை குழிதோண்டி புதைப்பதற்கு கொதித்தெழுதல் எப்போது?
இவர் நினைவாய் பொதுமையுயர் பண்பாடு
பூக்கும்
LJ360)LDLJ bl36T6ITUL
இப்புவியை ஆக்கும் பணிக்கு சிறிதேனும் ஊக்கம் கொடுக்க உம் கரத்தை சேர்ப்பீரா?
சிறுவரும் சமூகச சூழலும் 1994

Page 34
வேதம் புதிது
பெரு மண்ணின் துப்பாக் அமாருப் * போராளியே உனது தேசத்து மண்ணை அந்நியர்க்கு தாரைவார்த்து உன் தோழர்களை வதை முகாம்களில் வைத்து வாட்டும் கொடிய அரசின் மந்திரிக்கு எதிராக நீட்டிய துப்பாக்கியின் குறியை நீ ஏன் தளர்த்திக் கொண்டாய்.
நூற்றி ஒரு நாள் உறவின் நுாலிழைகளினால் உன் எதிரியின் இதயத்திலும் மனித நேயத்தின் உருவச் சாயலை பின்னிவிட எண்ணினாயா?
மரணத்தின் விளிம்பில் நீ நின்ற போதும் உனது துப்பாக்கியை மெளனமாக்கி மனச்சாட்சியைக் கூட சந்தையில் விற்கமுனையும் இவ் உலகத்துக்காக நீ உகுத்த கண்ணிரத் துளிகள் உனது துப்பாக்கியை மட்டுமா
ஈரமாக்கியது.
நீ வடித்த கண்ணிரால் மனிதம் துளிர்த்தது. உலக மானுடம் தனது மனச்சாட்சியில்
54

55
படிந்திருந்த தூசுகளை 69(5 (p603 கழுவத் துடித்தது.
திருச்சபையின் சங்கீதம் கூட உங்களது உயிர்களுக்கு ഉ_ങ്ങബൈഴ്ച உலுத்தர்களின்
காதுகளை
உருக்கவில்லை.
ஒடுக்கப்படும் மக்கள் விழிக்கும் வரை அவர்களுக்கு குழிபறிக்கும் ஆதிக்க வாதிகள் அசகாய சூரர்கள் தான்.
உலகெங்கும் மனிதத்துவத்தை குழிதோண்டிப் புதைப்பதில் கைதேர்ந்தவர்களும் கூடி இருந்தல்லவா உங்களுக்கு குழிபறித்தார்கள்.
இரத்த நெடில் வீசும் இவர்களது அறிவுச் சுரங்கங்களில் இருந்தல்ல
உங்களது இதயச் சுரங்கங்களிலிருந்து இம்மனுக்குலம் அகழ்ந்து கற்க வேண்டிய வேதங்கள் புதிது.
Kufro 1997.
பெரு நாட்டின் ‘ஒளிரும் பாதை' என்னும் மக்கள் விடுதலைப் படை.

Page 35
அமைதி நிலை மலர
கார் மேகம் இருள் கவித்தால் ஏருழவர் உளம் பூப்பர் செந்நீர் மழை சொரிந்து உடல்கள் சாய்ந்து எண்ணிலா உயிர் பிரிந்து கண்ணிரும் கலந்தோடும் போர் மேகம் கண்டு எவர் இங்கு பூரிப்பர்.
கொலைக்களமாய் மக்களது வாழ்வை ஆக்கும் கொடும் போரை இம் மண்ணில் நிறுத்த வேண்டும் அரசியல் தீர்வுதனை முன்னெடுத்து அமைதி நிலை மலர்வதற்கு முயல வேண்டும்.
Kuid 1997 (AD 1
56

57
L g
உனக்குள் ஒரு தீயை வளர் உனது சிந்தனையை ஒடுக்கிச் சிறைப்படுத்தும் முடத்தனங்களுக்கு முதல்
தியை மூட்டு
fნ ჩიმW05] நெஞ்சத்தின்
வளைவுகளை
நிமிர்த்து
நோவரினும் உனதறிவை அதில் தேய்த்து நேராக்கு.
அறியாமை
விலங்கொடிக்க
tl.
உலகில் அடிமைத்தனங்களை உடைத்தெறிய அதுவே நீ வைக்கும் முதல் அடி.
guiu rAsa A

Page 36
நினைப்பு ‘93?
பத்து ஆண்டுகள் தொடரும் இப்போரிலே எத்தனை ஆயிரம் இன்னுயிர் போயின பனிப்புகாரென மறைந்து போனவர் நினைப்பு மட்டுமே நெஞ்சில் இருக்குது.
இனித் துயரிலா இனிய நாளிலே எமைப் பிரிந்தவர் யாவரும் கூடியே மகிழ்ச்சி கீதங்கள் பாடி ஆடிட மனத்திலே எழும் ஆவல்கள் தீருமா?
இடிந்தழிந்த நம் நகர் கிராமங்கள் எழுந்து பொலிவுடன் என்று நிமிர்ந்திடும் இருளைத் துளாவிடும் எமது கண்களில் ஒளிவிடும் தாரகை என்று தெரிந்திடும்.
தீரும் துயரெனக் காலங்கள் நீளுது தொடரும் போரிலே சாவுகள் கூடுது தீர்வில்லாது போரினால் அமைதியை திணிக்க முயன்றிடில் தோல்வியே நிச்சயம்.
இந்த மண்ணிலே எங்கள் உரிமையை இன்னும் ஏன் இவர் ஏற்க மறுக்கிறார் எத்தனை ஆயிரம் இழந்தும் இச்சந்ததி உரிமை இழந்தொரு வாழ்வினை ஏற்குமா?
BuffD 1993
58

59
எஞ்சியுள்ள ஓடுகளும்.
6ön T, வன்னியிலிருந்து நீ வரைந்த கடிதம் கிடைத்தது வாசித்தேன்.
வீட்டைப் பார்க்கும்படி கேட்டிருந்தாய் மிதி வெடியின் அச்சத்தால் அந்தப் பகுதிக்குள் எவரும் செல்லவில்லை என்றுதான் எண்ணி இருந்தேன்.
உண்மையைச் சொன்னால் உன் கடிதம் கிடைக்கும் வரை கிட்டச் செல்ல அஞ்சி எட்டத்தில் நின்றே உன் வீட்டைப் பார்த்தேன்.

Page 37
தரைமட்டமானதுடன் ஒப்பிடும்போது நீ அதிஷ்டசாலிதான் ஷெல் வீச்சில் ஒருபக்க ஓடுகளும் சுவரும்தான் எடுபட்டிருந்தன.
வீட்டில்தான் நீ விட்டுச் சென்ற தளபாடம் தொட்டு தட்டு முட்டு எதுவும் இல்லை.
மிதிவெடிக்கும் அஞ்சாமல் துணிவோடு துடைத்து எடுத்துள்ளார்கள்.
சாமி அறைக்குள் முருகன் பிள்ளையார் இலக்குமி சரஸ்வதி படங்கள் மட்டும் அட்படியே முழித்தபடி உள்ளன அற்புதம்தான்.
அலுமாரியை எடுத்தவர்கள் புத்தகங்களை
அப்படியே விட்டுவிட்டார்கள். மழையில் நனைந்தவை நிறம் மாறிப்போயுள்ளன. இனி என்ன புதிய அலுமாரியுடன் புத்தகங்களையும் புதிதாக வாங்கி அடுக்க வேண்டியதுதான்.
60

61
நீ மேசை மீது வைத்து அழகு பார்த்த உழைப்பாளர் சிலை மட்டும் பக்கத்து வீட்டு பங்கருக்கருகில் எப்படி வந்ததோ எடுத்து வைத்துள்ளேன். எனக்கு என்னமோ நடைமுறையில் பொருள் முதல் வாதமே சரியென்றுபடுகிறது.
விரைவில் வர 6)is II J இல்லையேல் 6Tebiu silti ஒடுக(ளரும் இல்லாமல் போகும்.
கடைசித் தோணியில் கால் வைத்து ஏறியதால் கம்பி வேலிகளுக்கு அப்பால் நீ இப்பால் நான் துன்பம்தான் அழுது என்ன?
உன் கடைசி மகள் சுதந்திரியின் கள்ளமில்லா சிரிப்பொலியை என் காதில் கேட்பதற்கு ஏதுஞ் செய்.
said 1997.

Page 38
இன்னும் ஏன் இருட்டு?
எத்தனை
சூரியன் வந்து போயும் மனித மனங்களில் இன்னும் ஏன் இத்தனை இருட்டு,
கல்விக் கோவிலின் கற்பகக் கிரகமே வெள்ளைக் கமலமாய் விரிந்திருக்க மூலமந்திரத்தை முறாக
மறந்து நாம் காசுக்காகவே பூசனை செய்கிறோம்.
கூனை நிமிர்த்தி குறைவிலாது உலகில் மனிதர் வாழ்தல் வெறும் கவிஞர் கனவா?
நீண்டு வளர்ந்தும் சுருண்டு கிடக்கும் நிமிர்த்த முடியாத நாய்வாலா நம் சமூகம் இருளை அகற்ற எமக்கு ஏது வழி?
GusD 1979,
62.

63
வெளிப்பு
கொல்லையில் குப்பை மேட்டில் கொழுத்திய நெருப்பில் வெந்தும் கோடையின் கொடு வெயிலில் கோடுகளாய் நிலம் வெடித்தும் என் வீட்டு எல்லையிலே நட்டு வைத்த கறிமுருங்கை பட்டுவிடும் என்றெண்ணி பார்த்திருந்தேன்.
மாரி வரவில்லை மழை இடையில் பெய்யவில்லை ஓயாது உழைக்கின்ற உழைப்பாளர் கரங்களைப்போல் வேரை எங்கோ நீட்டி விரிந்த நிலப்பரப்பில் ஈரத்தை தேடி உயிர்ப்படைந்து பச்சை இலை துளிர்த்து பூ மலர்ந்து பிஞ்சாகி காய்காயாய் தொங்குவது கண்டு களிப்படைந்தேன்.
என் ஊரும் என் மண்ணும் என் உற்றம் என் சுற்றம் எமது மக்கள் எல்லோரும் நீளும் நெடும் போரில் பட்டறியும் பாடங்கள் பதித்து நெஞ்சில் பொன்னுக்கும் பொருளுக்கும் புகழுரைக்கும் விலைபோகா உள்ளுரங்கள் பெற்று உயிர்ப்படைவர்.
காய்ந்த சுடுமண்ணில் காய்க்கின்ற கனி இனிக்கும் கடும் உழைப்பில் சிவந்தநிலம் பசுமை பூக்கும் மண்ணுக்குள் நீரைப்போல் எமது மக்கள் மனங்களிலே மறைந்திருக்கும் மானுடமும் ஊற்றெடுக்கும் எங்கும் பொது உரிமை பூக்கின்ற வாழ்வுவர மீண்டும் வருமோர் வெளிப்பு.
g5LLEFfD 2001.

Page 39
=தணிகாசலம் கவிதைகளின் 1எழுத்துக்களினூடாகக் காண்பதே =தொடக்கம் மிக அண்மைக்காலம் தழுவி நிற்கும் இந்த ஆக்கங்கள் பிரதானமானவை பின்வருமாறு:-
(அ) காலப் பெர்ச்சி
=தணிகர் தம்மைச் சூழவுள்ள உலாவி வரும்பழக்கமுள்ள் நெடுே |படைப்பாளி அதனாலேதான் : Logpg|TUlf II
 
 
 
 
 
 
 
 

ரையிலான காலப்பகுதியினைத் ரில் ஊடுருவி நிற்கும் பண்புக
யினதுஓட்டங்களின் சுவடுக த்தல் |ப்பாக உழைக்கும் மக்களின் நலன்
அவதானிப்பு ழலின் இன்ப துன்பங்கள் மீதான் 墓薯 சுரண்டலுக்கும் உள்ளாகி உழலும்
ஒருங்கு திரளக்கூடியவர்கள்,
"חוז