கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உண்மை

Page 1

5 GUGU

Page 2

உண்மை
முருகையன்
தேசிய கலை இலக்கியப் பேரவை
i

Page 3
தேசிய கலை
நூற்பெயர்
பதிப்பு
வெளியீடு elâFafı"GLITT முகப்போவியம் விநியோகம்
விலை : ரூபா. 175/=
Title
ECdition Publishers Printers Cover Design Distributors
ISBN NO Price
இலக்கியப் பேரவை வெளியீடு -87
உண்மை
፬ምፍÜ , 2OO2 தேசிய கலை இலக்கியப் பேரவை கெளரி அச்சகம்
இரா. சடகோபன் சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
Unmai
June, 2002 Theshiya Kalai Ilakkiyap Peravai Gowry Printers R.Shadagopan South Asian Books, Vasantham (Pvt) Ltd., No. 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo -11. Te: 335844. 955-8637-04-1
175/=

பதிப்புரை
“நாடகம் என்பது நடிப்பதற்காகவே” என்ற கருத்துடன் தொடர்ச்சியாக எழுதிவரும் மிகச்சிலருள் கவிஞர் முருகையன் அவர்களும் ஒருவர். ஒரு சில மேடைகளுடன் அவ்வக் காலங்களுடன் மறக்கப்பட்டு விடும் நாடக எழுத்துருக்களை அச்சுருவில் வெளிக்கொணர்வதன் மூலம் வரலாற்று இலக்கியங்களாக அவற்றைப் படிப்பதற்கும் மீள நடிப்பதற்கும் அவை உதவியாக அமைகின்றன.
இந்த வகையில் கவிஞர் முருகையன் அவர்களின் பல கட்டுரை, கவிதை, நாடகங்களை நூலுருவில் வெளிக்கொணர்ந்த எமது தேசிய கலை இலக்கியப் பேரவையினர் “உண்மை’ என்ற இந்நாடகத் தொகுப்பு நூலினை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றனர்.
எமது வெளியீடுகளுக்கு பெரும் ஆதரவு நல்கிவரும் கலை இலக்கிய ஆர்வலர்கள் தொடர்ந்தும் எமது வெளியீட்டு முயற்சிகளுக்கு தமது ஆதரவை நல்குவதுடன் இந் நுால் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறோம்.
தேசிய கலை இலக்கிய பேரவை 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11. தொலைபேசி : 335844.
i

Page 4
முன்னுரை
ஐம்பதுகள் தொடக்கம் அண்மைக் காலம் வரை நான் எழுதிய நாடகங்களுள் ஐந்து இந்தப் புத்தகத்தில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே “கோபுரவாசல் “வந்து சேர்ந்தன’, ‘தரிசனம்’, ‘கடுழியம்’, ‘வெறியாட்டு’ என்பவற்றோடு ‘மேற்பூச்சு’ என்னும் தொகை நூலில் இடம்பெற்ற ஐந்து நாடகங்களையும் 'சங்கடங்கள்’ என்னும் நூலில் அடங்கிய ஐந்து நாடகங்களையும் சேர்த்து எல்லாமாக பதினைந்து நாடகங்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன. இப்போதைய புத்தகத்துடன் நான் இயற்றிய இருபது நாடகங்கள் வாசகள்களின் கைகளுக்கு எட்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ளன.
முன்னொரு காலத்திலே நாடகங்களைப் படிப்பதற்கு உரியன என்றும் நடிப்பதற்கு உரியன என்றும் பிரித்துப் பேசும் வழக்கம் சில வட்டாரங்களில் நிலவியது. இவற்றுள், படிப்பதற்கென எழுதப்படுவன இலக்கியத்திறம் வாய்ந்தன என்றும் ஏனையவை சனரஞ்சகமானவை ஆதலால் அவை தரத்திலே குறைவுபட்டவை என்றும் பலரும் பொதுவாக எண்ணுவதுமுண்டு. அவ்விதமான இலகு சமன்பாடுகள் பொருத்தமற்றவை என்பதும் இன்றைய கருத்து வளர்ச்சி நிலையில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் உண்மை எனலாம். அத்துடன் நாடகங்கள் எழுதப்படுவதே நடிப்பதற்காகத்தான். மேடையில் இடம்பெறும் நிகழ்வுகள் தான் நாடகத்தின் முழுமையான உயிர் நிரம்பிய வடிவ நிலை. நாடகப் பிரதி என்று கூறப்படும் ‘எழுத்துரு அந்த நிகழ்வுக்குத் துணையாக நிற்கும் திட்டக் குறிப்புகள்தான். நவீன நாடகத் துறையினர் நடிப்புக் கலைஞர்களின் உடலுறுப்பு அசைவுகளையும் நகர்வுகளையும் ஆட்டங்களையும் நாடகக் கலையின் தலையாய கூறுகளாகக் கொள்வர். அந்த உடலுறுப்புகளில் ஒன்றாகவே பேச்சுக் கருவியாகிய வாய் அமைகிறது. அரங்கச் செயற்பாடுகள் பலவற்றுள் ஒன்றாகவே, பேசுவதும் பாடுவதுமான குரல் ஒசை அமைகிறது.
தமிழ் நாடக வரலாற்றின் சிற்சில காலப்பகுதிகளில் ‘கதை-வசனம்பாடல்களே’ முதன்மை பெற்றன. நாடக எழுத்துருக்களிலும் அவையே மேலோங்கி நின்றன. நாடக ஆசிரியர் ‘கதை-வசனம்-பாடல்களை எழுதி அளிக்கும் ஒருவராகத்தான் விளங்கினார். சில வேளைகளில் கதைவசனங்களை ஒருவர் எழுத, பாடல்களை வேறோருவர் இயற்றுவதும்
IV

உண்டு. (பாடலாசிரியர் “கவிஞர்' என்று சொல்லப்படுகிறார்) இத்தகைய சூழல்களில் எழுத்துருவை அமைத்துக் கொடுக்கும் எழுத்தாளர் தான் நாடகத்தின் முதன்மைப் படைப்பாளியாகவும் விளங்கினார். அவர் தீட்டிய திட்டங்களை நிறைவேற்றும் “செயலனியின் உறுப்பினர்களாகவே, நாடக நெறியாளர்களும், நடிகர்களும், இசையமைப்பாளரும், பாடகரும், அரங்கமைப்பாளரும் தொழிற்பட்டனர்.
ஆனால், பல தருணங்களில், எழுத்தாளர் தவிர்ந்த பிற கலைஞர்களும் கூட்டுச் சேர்ந்தும், கலந்தாலோசித்தும் நாடகங்களைத் திட்டமிடுவது உண்டு. இந்த விதமான கூட்டுப் பங்களிப்பினால், வியக்கத்தக்க வெற்றிகரமான விளைவுகள் ஏற்படுவதும் ஏற்பட்டிருப்பதும் அநுபவ உண்மைகளாகும். எனது நாடகங்களிற் பல அவ்வித கலந்தாலோசனைகளின் துணையுடன் தோன்றின என்பதை இந்த இடத்திலே குறிப்பிடுதல் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, “கடூழியம்’ நாடகத்தில் மேடைச்செயற்பாடுகள், காண்பியங்கள்(Visuals) என்பவற்றின் நுணுக்க விவரங்களைக் கருக்கட்டி வெளிக்கொணர்ந்தவர்கள் நெறியாளர் நா.சுந்தரலிங்கம், இ.சிவானந்தன், வே.சங்கரசிகாமணி முதலியாரவர்களே. அவ்வழியிற் பெறப்பட்ட நுணுக்க விவரங்கள் பலவற்றைப் பின்னர் நான் நாடக எழுத்துருவிற் சேர்த்துக்கொண்டேன். 'குற்றம் குற்றமே என்ற நாடகம் 1962 இல் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டுமென்று விரும்பி அதனை எழுதுமாறு துாண்டியவர்கள் அந்தச் சங்கத்து உறுப்பினர்களே. புராணப்போக்குடைய கதையம்சத்தை எடுத்து, அன்றைய காலகட்டத்தின் முக்கியமான இலக்கியச் சிந்தனையை அழுத்திக் கூறும் கலைச்சாதனமாக உருவாக்குமாறு ஆலோசனை வழங்கியவர் அதன் நெறியாளர் கா.சிவத்தம்பி அவர்கள்.
“உண்மைக்கே இலக்கியத்தில்
உயர்வான இடமுண் டென்ற எண்ணத்தை நாட்டி விட்டீர்; இதனை நான் மெச்சுகின்றேன்.”
என்று நக்கீரரைப் பாண்டியன் பாராட்டும்போது, அந்த 45 நிமிடக்
V.

Page 5
கவிதை நாடகத்தைக் ‘கண் வெட்டாமற் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை சுவைஞர்களும் புத்தம் புதியதோர் அரங்க அனுபவச் சுவையையும் சிந்தனைத்தேறலையும் ஒருங்கே பெற்றனர் என்பதை, நாடக இறுதியில் எழுந்த கையொலி முழக்கம் தெள்ளத் தெளிவாகக் காட்டிற்று. இலங்கையின் தலைநகராகிய கொழும்பில் முதன்முதலிலே மேடைகண்ட தமிழ்க்கவிதை நாடகமாகிய அதில், நக்கீரனாகத் தோன்றியவர் சில்லையூர் செல்வராசன், இறையனார்-வீ.சுந்தரலிங்கம், பாண்டியன்-லடிஸ் வீரமணி, புலவர்களில் ஒருவர் எஸ்.கே.பரராஜசிங்கம். இந்த நிகழ்வின்போதும் கூட்டுப்படைப்பின் நன்மைகளைக் கண்கூடாகக் காணக்கூடியதாயிற்று.
இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் “பொய்க்கால் யாழ்பாணப் பல்கலைக்கழகத்துக் கலைப்பீட மாணவர்களின் கூட்டுப் படைப்பு. இதன் அச்சாணியாய் விளங்கிய க. சிதம்பரநாதன் புதியதொரு நெறிப்படி நாடகப்படைப்புகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். இந்த நெறியின்படி நடிகர்கள், பாடகர்கள், எழுத்தாளர், இசையமைப்பாளர் ஆகியோர் வெவ்வேறு கட்டங்களில் குழுக்களாய்ப் பிரிந்தும், ஒருமிக்கச் சந்தித்தும் கலந்துரையாடி, ஆடிப்பார்த்து, பேசிப்பார்த்து, செய்துபார்த்து, பாடிப்பார்த்து படிப்படியாக நாடகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள். இந்த கலையாக்க நிகழ்முறையில் ஒரு கட்டத்தில் எழுத்தாளர் வந்து சேருவார். ஏற்கனவே நிறைவேறியுள்ள ஆரம்ப முயல்வுகளை அடிப்படையாக வைத்து சமயோசிதமாக இட்டுக்கட்டப்பட்ட உரையாடல்களுக்கும் பாடல்களுக்கும் திட்டவட்டமான இறுகிய வடிவத்தை எழுத்தாளர் வரையறுக்கத் தொடங்குகிறார். அந்த வடிவமும் நாடகப் பயில்கை தரும் அநுபவ வெளிச்சத்திலே செப்பனிடப்பட்டு, இறுதியான ‘எழுத்துரு'வாகச் செதுக்கி எடுக்கப்படுகிறது. அவ்விதம் பெறப்பட்ட ஒரு நாடக எழுத்துருவே இந்தத் தொகுப்பில் இடம்பெறும் “பொய்க்கால்’ என்பது. இன்றைய பண்பாட்டுச் சூழலின் ஒரு விமரிசனமாக “பொய்க்காலை அமைக்க வேண்டுமென்பது இதனை உருவாக்கிய கூட்டுப் படைப்பாளிகள் விருப்பமாய் இருந்தது. இதன் தொடர்பில் வேறோர் உண்மையையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும். ஈழத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், பல்வேறு தரப்பினருக்கும் வெவ்வேறு தளங்களில் நின்று பொருள் பயப்பதாயிற்று. இவ்வித பன்மைப்பாட்டுக்கு எந்தக் கலைப் படைப்பிலும் இடமுண்டென்பதை மறக்கக்கூடாது. அதே வேளை, அளவு மீறிய
vi

வியாக்கியான வேறுபாடுகளுக்கு இடமளிப்பது, எதிர்பாராத, அல்லது வேண்டாத, அல்லது சம்பந்தமற்ற விளைவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லவும் கூடும். எழுத்தாளரும் ஏனைய கலைப்பங்களிப்பாளர்களும் இதனை மனங்கொள்வது இன்றியமையாதது என்று எண்ணுகிறேன்.
'பொய்க்கால் அண்மையில் மேடையேற்றப்பட்டு வரும் நாடகம். ஆதலால் அதனையிட்டு இவ்வளவும் கூற நேரிட்டது. "தந்தையின் கூற்றுவன்’ என்ற நாடகம் தோன்றிய வரலாறு வேறு விதமானது. இது சொஃவக்கிளிஸ் எழுதிய இடிபஸ் றெக்ஸ்’ என்னும் கிரேக்க நாடகத்தை அடியொற்றி எழுந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையிலே பயிலும் மாணவி ஒருத்தி, பரதநாட்டிய பாணியில் ஒரு நாட்டிய நாடகத்தைத் தயாரிக்க விருப்பம் கொண்டார். நம்மிடையே வாழும் புகழ்பெற்ற நாடக எழுத்தாளர் ம.சண்முகலிங்கம் (குழந்தை) அவர்களின் ஆலோசனைகளுடன் இதனைத் தமிழிப்படுத்தினேன். ‘தமிழி மயமாக்கும்’பொருட்டு கடுமையான சுருக்கல்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. மூல நாடகத்தில் இடம்பெற்றிருந்த குறுக்கறுப்புச் சொல்லாடல்களையும் 'நீட்டல் முழக்கல்’ இல்லாமல் கணக்காக நறுக்குத்தெறித்தாற் போன்று மாற்றி எடுத்து பரத பாணிக்கேற்ற பாடல்கள் ஆக்குவதும் அவசியமாயிற்று. மொழி மாற்றத்திலும் பாடலாக்கத்திலும் இவ்வளவு செய்த பின்னும் கூட, இதனை மேடையேற்றுவதிற் சிலபல சிரமங்கள் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. அது பரதக் கலைத்துறையினர் ஏற்றுச் சமாளிக்க வேண்டிய சவால். அவர்கள் அந்த முயற்சியில் முயன்று வெற்றி காணட்டும். அதற்கிடையில், நாட்டாரியல் கூத்துக் கலைஞராகிய சி.மெளனகுருவும் இதைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவருக்கும் "தந்தையின் கூற்றுவனின் எழுத்துருவைக் கொடுத்திருக்கிறேன். என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
'க'லிலியோ’ என்பது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஒலிபரப்பப்பட்ட வானொலி நாடகம் அதைத் தயாரித்தவர் அமரர் வீசுந்தரலிங்கம் (BBC சுந்தா) இது பேட்ரோல்ற் ‘பி’றெச்ற்றின் 'க'லிலியோ’ என்னும் நாடகத்தில் வரும் ஒரு பகுதியைப் பின்பற்றி எழுந்தது.
இரு துயரங்களின் வரலாறு வேறு விதமானது. அன்ற்றன் செகாவ்
vi

Page 6
இன் சிறுகதை ஒன்றைத் தழுவி அமைக்கப்பட்டது. ‘எதிராளிகள்’ (அன்ற்ற 'க'னிஸ்ற்ஸ்) என்பது அந்த் சிறுகதையின் தலைப்பு. இந்தக் கதையை நாடகமாக்கும்படி கேட்டுக் கொண்டவர் நா.சுந்தரலிங்கம். அந்த ஆலோசனையைக் கேள்விப்பட்ட நண்பர் கைலாசபதி ஆச்சரியப்பட்டார். “செகாவ் உடைய கதைகளே ஒரு’ற்றயிப்’. அதை நாடகமாக்கிறது. it's rather difficult” என்றார் கைலாசபதி, பின்னர் என் தமிழாக்கத்தை மேடையிலே பார்த்தபிறகு தான் அவருடைய ஐயங்கள் அடிபட்டுப் போயின.
இப்படியாக, இந்தப்புத்தகத்தில் வரும் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதமானவை; ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு. இவற்றைப் பரந்துபட்ட வாசகள் உலகும் தமிழ்நாடக அக்கறையாளர்களும் படித்துப் பயன்பெற வேண்டும் என்று ‘தேசிய கலை இலக்கியப் பேரவை’ விரும்பிற்று. வழக்கம் போலவே பேரவையின் முன் முயற்சிகளுக்கும், நல்லெண்ணத்துக்கும் பெரிதும் நன்றி உடையேன்.
அட்டை அமைப்பிற்குப் பொறுப்பாய் செயலாற்றிய ஓவியர் இரா. சடகோபன் அவர்களுக்கும், இப்புத்தக வெளியீட்டிற்குத் துணைநிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பும் வணக்கமும் உரியன.
இ. முருகையன் நீர்வேலி தெற்கு நீர்வேலி, இலங்கை, 2002-05-20.

எடுத்துரைஞர் :
பொய்க்கால்
ஊர்ப்பழஞ் சூழல் என்றால் உயரிய பண்பாடொன்றின் வேர்ப்புறம் ஆகும் என்று மிகவும் நாம் பெருமை கொள்வோம் ஆர்பாட்டம் இல்லா வாழ்க்கை, அமைதியில் ஈடுபாடு சீர்த்தமிழ்க் கலைகள் பேணும் செவ்விகள் பெற்றிருந்தோம்.
ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள்- கொடுக்கல் வாங்கல்தருமத்தைப் பெரிதாய்க் கொள்ளும் தத்துவத் தெளிவு- ஞானம்பரபரப்பின்றி மெல்லப் பண்புடன் பழகும் போக்குஅருள் மிகும் ஆலயங்கள்அவற்றிலே தொழுகை, பூசை.
சிக்கன வாழ்க்கை ஒன்றே சிறப்பினை வழங்கும் என்ற முக்கியமான கொள்கைமுயற்சியைக் கைவிடாமைஇச்சைக்கோர் எல்லை போடல்எளிமையிற் பெருமை காணல்இத்தனை மாண்பினோடும் யாம் முன்னர் இருந்தோம் அன்றோ!
முன் திரை நீங்குகிறது. மேடையில் அமைதியான இயற்கைச் சூழலை
SD L60öi60)LD

Page 7
உணர்த்தும் காட்சியமைப்பு. அந்த அமைப்புகளினிடையே “குறைவிலாது உயிர்கள் வாழ்க’ ‘திரிகரண சுத்தியும் காரிய சித்தியும் அருள்வாய்', ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு ஆகிய வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் முழிப்பாய்த் தெரியுமாறு காட்சி தருகின்றன. மக்கள் கூட்டமொன்று ஆனந்தமாக ஆடிப்பாடி மகிழ்கிறது)
நடன இசை : லாலால லால லாலா-லல
666) 669 6T6)
(நடனத்திடையே ஒரு கட்டத்தில் மந்திரம் ஓதுதல் போல இசை
விரவச் சில குரல்கள் ஒலிக்கின்றன.)
--- கற்க கசடற. --- கற்பவை கற்றபின் நிற்க, அதற்குத் தக. --- அறம் செய்ய விரும்பு. --- ஆறுவது சினம். --- ஆலயந்தொழுவது சாலவும் நன்று. --- கற்பெனப் படுவது சொல் திறம்பாமை காவல் தானே பாவையர்க்கழகு. --- நமக்கென வாழோம். பிறர்க்குமாய் வாழ்வோம். --- வான் முகிழ் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க , மன்னன் கோன்முறை அரசு செய்க. குறைவிலாதுயிர்கள் வாழ்க.
(நடனத்தின் இறுதிக் கட்டத்தில், வேற்றவன் ஒருவன் - போர்க்குண வன்கணாளன் - நுழைகிறான். மக்கள் அஞ்சிக் குலைந்து குழம்புகிறார்கள். அமைதியை உணர்த்தும் காட்சியமைப்பு ஒடிந்து சிதைந்து விழ, அழிபாடுகளும் இடிபாடுகளுமே மிஞ்சியுள்ளன.)
பின்னணிக் குரலிசை : நான் என்னும் அகந்தை நீங்கி
யாவர்க்கும் உதவி செய்க கோன்முறை அரசு செய்க. குறைவிலாதுயிர்கள் வாழ்க.
2 முருகையன்

அவன் :
பின்னணிக் குரலிசை
(மேடையில் தோன்றி) இப்படி நினைந்து பாடும் இயல்புடன் இருந்த நாங்கள் எப்படிக் குலைந்து போனோம், எப்படி உடைந்து போனோம்!
: பத்தினித் தெய்வத்துக்குப்
பாற்பொங்கல் படைத்த நாங்கள் எத்திசை திரிந்தலைந்தே எங்களை இழந்து போனோம்!
இத்தனை சிறப்பு வாய்ந்த இயல்புடன் இருந்த நாங்கள் எப்படிச் சிதைந்து போனோம் எப்படிக் குலைந்து போனோம்
(அமைதி. சூழலின் இடிபாடுகளுக்கிடையே, மெலிந்து பசித்த கோலத்தில்,
பேரவா கப்பிய
முகங்களோடு சிலர் எதையோ முயனிறு
தேடிக்கொண்டிருக்கின்றனர்)
பாடல் :
5爪岳 5爪乐 乐爪ö கை நிறைஞ்ச காசு கட்டுக் கட்டாய்க் காசு வேணுமே பேசு பேசு பேசு பெட்டி முட்டக் காசு பேணி வைக்கக் காசு வேணுமே. மூசு மூசு மூசு முடிச்சவிழ்க்க மூசு 6ມື້g 6ມື້ຫ້ 6ມື້d;
விட்டெறிஞ்சு வீசு விழுமியங்கள் தேவையில்லையே
5T STS 95T
உண்மை

Page 8
குரல்கள் : எட்டுத்
துட்டு, எண்பது துட்டு அஞ்சு பவுண்கள், அறுபது பவுண்கள் ரூபா சதங்கள், டொலர்கள், சல்லிகள். எண்பது காசு
ஏழாயிரம் பொன்
ஒன்பது கோடி
உழையா வரும்படி பொறுக்கு . பறிச்செடு பொட்டழி பிடுங்கு
மறிச்சு விழுத்து. மண்டையை நொருக்கு ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆயிரம், லட்சம், அநந்தம், கோடி. அஞ்சு பவுண்கள், அறுபது பவுண்கள் ரூபா சதங்கள், டொலர்கள், சல்லிகள்.
LITL6) : 5 5.
கை நிறைஞ்ச காசு
கட்டுக்
கட்டாய்க் காசு வேணுமே
(அவன் வருகிறான்; சனம் ஓடி ஒதுங்குகிறது. சற்றுத் தயக்கத்தின் பின் சனங்களிற் சிலர் தலை நிமிர்த்திக் கதைக்கத் தொடங்குகின்றனர்.)
ஆர் இது, மனிசன்? ஆள் ஒரு மாதிரி
ஒரு வகை.
ஒரு 'ற்றயிப்,
உவர் ஒரு பேய்க்காய் படிச்சவர் போலயம் இருக்குது, பாக்க, என்ன செய்யிறார்?
இரு இரு பாப்பம். எனக்கெண்டாலோ பயமாய் இருக்குது. பயமேன் பயமேன்? பாப்பம் பொறுங்கோ.
முருகையன்

(அவன் சற்றுப் பின்வாங்குகிறான். சிலர் அவனைச் சிறிது அணுகுகிறார்கள்.
அவனுடன் பழக விருப்பங் காட்டுகிறார்கள்.)
96.60 :
ஒருத்தி :
அவன் :
ஒருத்தி :
அவன் :
ஒருத்தி :
என்ன தேடுறியள்? இல்லை. சும்மா. ஏன் மறைக்கிறியள்? இளைச்சும் போனியள்? என்ன தேடுறியள்? இங்கை வாருங்கோ சொல்லுங்கோவன், என்ன தேடுறியள்? (மிகுந்த தயக்கத்துடனும் சிறிது வெட்கத்துடனும்) -அதய்யா காசு!
காசு?
ம்ம்ம் ஓம்.
வேறொருத்தி: ஓமோம் அய்யா.
அவன் :
ஒருவன் :
ஒருத்தி :
அவன் :
காசு தேடுறம். அதுக்கேன் இப்பிடி அடிபிடிப் படுவான்? ஒருத்தரை ஒருத்தர் தள்ளி விழுத்துவான்? முண்டி அடிப்பான், மூச்சுத் திணறுவான்? காலை இழுப்பான், கையை முறுக்குவாண்? மற்றவை எங்களை முந்தி விடுவினம் இப்பிடி எல்லாம் காசு தேடாட்டால், பந்தயத்திலை நான் பிந்திப் போவெனே! ஏன் உங்களுக்குப் பெருந்தொகை காசுகள்?
(இப்பெழுது பலர் கூச்சம் தெளிந்து மனத்தடையின்றி மறுமொழி
சொல்லுகிறார்கள்.)
--- இதென்ன கேள்வி? ---- எத்தினை தேவையள்? ---- சீதனம் கொடுக்க, ---- சிக’றெற் புகைக்க. ---- வீடியோ கசெற்றுக்கள் விலைக்கு வாங்க. ---- மகனையும் மகளையும் நோவேய்க் அனுப்ப. --- கனடா போக.
---- காரிலை ஏற.
உண்மை 3

Page 9
ஒருத்தி :
அவன் :
UTL6) :
ஒருவன் :
அவன் :
---- அவசரம் வந்தால் ஆட்டோ பிடிக்க. (தீனக்குரலில் ஒருத்தி) ---- கஞ்சி காய்ச்ச. காய்கறி வாங்க. தேத்தண்ணிக்குச் சீனி போட விளக்குக் கொளுத்த
விறகுகள் வாங்க வருத்தம் வந்தால் மருந்துகள் எடுக்க. --- எத்தினை தேவையள். எத்தினை தேவையள்? அது சரி, அது சரி. காசும் தேவை தான். ஆனால், நீங்கள் அதைத்தான் பெரிசாய்--- தனிப்பெரும் இலக்காய் நினைச்சு மாயிறியள். காசும் தேவைதான்.
வேறெது தேவை? (அழுத்தம் திருத்தமாய்) நெறிமுறை, ஒழுக்கம், நியாயம், அறவழி.
(பின்னணியில் ஒரு குரல்) “பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானுடரே கேளுங்கள் கூடு விட்டிங்கு ஆவியார் போயினபின் யாரே அநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்’
காசும் தேவை.
கண்ணியம் கடமை நீதி இதுகளும் தேவைதான் அல்லவோ? அப்பிடி எண்டால். நாங்கள் எல்லாரும் உழைக்காமல் போய் ஒதுங்கிச் சோம்பிக் கிடக்க வேணும் எண்டா சொல்லுநீர்? இல்லை, இல்லை.
இனிமேல் நீங்கள் ஆசையைக் குறைச்சு, தேவையைச் சுருக்கி
முருகையன்

ஒருத்தி :
ஒருவன் :
நீதி, நேர்மை, சரி பிழை தெரிஞ்சு பாடுபடுங்கோ.
பண்பு பெருகும். (மிகமிக வியப்படைந்து) பண்பாம்!
பண்பேன்?
வேறொருத்தி : பணம்தான் வேணும்.
நடுவயது
ஆளொருவன்: தம்பி,
LITLs) :
அவன் :
உமக்கோ சின்ன வயசு, அநுபவம் இருந்தால், அறங்களைப்பற்றிப் பேச மாட்டிர்.
பேய்க்கதை எதுக்கு? நீரும் வாரும் -- ஆளும் பேருமாய்க் காசும் பணமும் தேடிக் குவிப்பம்.
நீரும் வாரும் ஆளும் பேரும் காசு தேடிப் போகலாம் வாரும் வாரும் வாழலாம் நீரும் வாரும் போகலாம்.
வட்டி குட்டி சட்டி முட்டி ஒற்றி கிற்றி தேடலாம் தட்டிக் கொட்டிச் சிந்தலாம் குட்டிக் குட்டி முந்தலாம் வீடு வாசல் வேலி கீலி காணி கேணி தேடலாம் மாடி கோடி போதை கீதை வாழ்வு பேறு காணலாம் நீரும் வாரும் போகலாம் வாழ்வு பேறு காணலாம் .ܝܘ.. ܘܕܘܘ، ܟܳܙm(bܗ ܣܳܐb)ܪܵܐ பண்பு தான் எங்கள் செல்வம்.
S. 60öT60)LD

Page 10
பணத்துக்காய் எதை என்றாலும்
கொண்டுபோய்க் கொடுக்கும் அந்தக்
கொள்கையை வெறுக்கிறேன் நான்.
(பிரகடனஞ் செய்யும் தொனியில்)
இன்றுதொட் டிந்த நாட்டில்
இதயங்கள் கனியுமாறு
தொண்டுகள் செய்வதற்கே
துணிந்து நாம் இணைந்து கொள்வோம். (பல திக்குகளிலிந்தும் இளைஞர்கள் வந்து ஒரு சிறு குழுவாக அவனுடன் இணைந்து கொள்ளுகிறார்கள்.)
LJTL65 : காசுக்காய் மாயும் போக்கேன்?
கண்ணியம் நமக்கு வேண்டும். ஆசைக்கோர் எல்லை வேண்டும். அதற்கு நாம் உழைக்க வேண்டும்
(சனக்கும்பலில் உள்ளவர்கள் தமக்குள் முணு முணுக்கிறார்கள்)
--- இவன் இனிச் சரி வரான். --- ஆள் இனி அரோகரா.
UTL6) : ஏதோ அறியோம் இவனோ ஒருவன்
தீதே புரியும் செயலில் முனைவான் இவனோடழிவார் இன்னும் சிலபேர் திறமே அறமென்று திரிந்திடுவார்.
தாயார் : தம்பி, தம்பி,
நில் ராசா-- எங்களோடை. சமூகம் எண்டும் சனங்கள் எண்டும் திரியவேண்டாம். நம்பி உன்னை வளர்த்தம் எடா. உழைச்சுத் தந்து நல்லபடி குடும்பத்தைப் பாரென், மோனை. அன்போடை சீராட்டி வளத்தம் அப்பு. ஆருக்கோ உதவி செய்யத் துடிக்கிறாய் நீ.
8 முருகையன்

சனங்கள் :
(அனைவரும் சேர்ந்து ‘திருமிகு அவர்களை அழைத்து வரும்பொருட்டுப் போகிறார்கள்)
(சனங்கள் ஊர்ப்பெரியவரான திருமிகு அவர்களிடம் போய் அவரிடம் விடயத்தைச் சொல்லி அவரை அழைத்து வருகிறார்கள். அவர் சரிகைத் தலைப்பாகை ஒன்றை எடுத்துத் தலையிலே தரித்த பிறகு, விசிறி மடிப்புச் சரிகைச் சால்வையையும் பூமாலையையும் தாமே தம் கையினால் தமது கழுத்திலே போட்டுக்கொண்டு, தம்மை உயரமாகக் பொய்க்கால்கள் இரண்டையும் பூட்டிக்கொண்டு, மிதப்புடன் நடந்து “அவன்’
தம்பி, தம்பி, நில் மோனை. என்ற்றை ராசா. தாய் சொல்லைத் தட்டாதைஅச்சாப்பிள்ளை.
--- இவன் இனிச் சரி வரான். --- இல்லை, இல்லை. இவனிலும் காரியம் இருக்கெடா, மச்சான். --- எங்கடை பக்கம் இவனைத் திருப்புவம். --- இவனைத் திருப்பவா? --- எப்படித் திருப்பலாம்? --- வளைஞ்சு குடுக்கான் வணங்கா முடி இவன். --- ஒண்டு செய்யலாம். --- என்னெடி மச்சாள்? --- ‘திருமிகு” அவர்கள் செந்தமிழ்ப் பெரியார். வயதிலே முதியவர் - வசதியள் உடையவர். அவரை நாங்கள் அணுகிப் பார்க்கலாம். --- அது சரி அது சரி. அப்பிடிச் செய்யலாம். --- அவரை நாங்கள் அணுகுவம்
வாங்கோ.
நிற்கும் இடத்தை அடைகிறார்.)
9.
உண்மை
காட்டும் பொருட்டுப்

Page 11
திருமிகு :
திருமிகு :
10
என்னெடா, சின்னராசன்! ஏதேதோ எல்லாம் பேசி, சின்ன இக்குடா நாட்டாரைத் திகைப்பிலே விழுத்துறாயாம். முன்னைய வழக்கம், செய்கை முறைகளைக் குறைச்சுப் பேசி என்னவோ எல்லாம் சொல்லி இயக்கங்கள் நடத்து’றாயாம்.
பாட்டுகள் பாடு’றாயாம் பரப்புரை செய்யிறாயாம் கூத்துகள் ஆடு’றாயாம் குழப்பங்கள் செய்யிறாயாம். நீட்டுக்குப் பேசி என்ன? நியாயத்தைச் சொல்லுறம் நாம் நாட்டுக்கு நன்மை செய்ய நாங்கள் ஏன் அஞ்ச வேணும்? பொருள் பண்டம் சேர்ந்தால் தானே பொருண்மியம் சிறப்பை எய்தும்? அருள்? அறம்?
பிறகு தானாய் அகலித்து நீளும் தானே! திருமிகு அவர்களே, உம் சிந்தனை அருமை, நன்று!
உலகியல் உயர்ச்சிக்காக உலுத்தராய் மணிசர் மாறிப் பல பல செய்தல் ஆகும்; பழி இல்லை அதில் என்பீரோ? “தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவர் ஆகி, மேலைத் தொல்கதி” அடைவர் அன்றோ?
முருகையன்

அவன்
திருமிகு :
திருமிகு :
திருமிகு :
11
சூரனே உய்தி பெற்றான். சுருட்டுதல், உருட்டல், காலை வாருதல்- எது செய்தாலும் வருவது நன்மை ஆகும். காடையர், கயவர் கூடக் கடைசியில் உய்வார் தம்பி. ஆகவே, கலகம் வேண்டாம். அமைதியைப் பேணுவோம் யாம்.
தீதுக்கு நியாயம் காட்டும் சிந்தனை!
சிறந்த தீர்ப்பு! செயற்குழு இனிமேல் வேண்டாம். திருந்தி நீ நடக்க வேண்டும். இயற்கையின் துாண்டலாலே ஈட்டுவார் பொருளை, மக்கள். அதிற் பிழை ஒன்றும் இல்லை.
9 šéfů GJIT ófsrörsorgmes T. அதிற் பிழை ஒன்றும் இல்லைஅறத்தையும் நினைத்துக் கொண்டால். மானுடப் பண்பைத் தானே வலியுறுத்துகிறோம் நாங்கள்? ஏனதைத் தடுக்கிறீர்கள்? இனி அவன் திருந்தமாட்டான். தனக்கொரு பிழைப்பும் இல்லை. தான் உய்ய மார்க்கம் இல்லை. (வெறுப்படைந்து) எனக்கென்ன. எவ்வாறோ போ. (ஏளனமாக) இவர் பெரும் முனிவராக்கும்! (வெகுண்டு) கனக்க நீ கதைக்கிறாயே! கட்டாயம் அழிந்து போவாய்.
உண்மை

Page 12
சனத்தில் ஒருவர் : உனக்கினி உய்தி இல்லை.
ஒழிஞ்சு போ, ஒழிஞ்சு போ, போ
(திருமிகு அவர்கள் “விறு விறு' என்று புறப்படுகிறார். பின்னர் திடுமென்று யோசித்துச் சிறிது பொறுத்து நிற்கிறார். அப்பொழுது “அவனுடைய தாயார் 'அவனை அணுகித் தன் வழமையான வேண்டுகோளைத் தெரிவிக்கிறாள்.)
தாயார் : தம்பி, தம்பி,
நில் ராசா- எங்களோடை. - சமூகம் எண்டும் சனங்கள் எண்டும் திரிய வேண்டாம். நம்பி உன்னை வளத்தம் எடா. உழைச்சுத் தந்து நாலு பேர் பாராட்ட நடவென், மோனை. அன்போடை சீராட்டி வளத்தம் அப்பு. ஆருக்கோ உதவி செய்யத் துடிக்கிறாய், நீ தம்பி, தம்பி, நில் மோனை. என்ற்றை ராசா. தாய் சொல்லைத் தட்டாதை, அச்சாக் குஞ்சு.
நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனிக்கும் திருமிகு அவர்கள் தமக்குள்ளே சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகிறார். “அவனுடைய தாயாரிடம் போய்ப் புத்திமதி கூறுகிறார் (மயிம் பண்ணுகிறார்). பின்னர் தாயாரிடம் ஒரு வலையைக் கொடுக்கும் நோக்கத்துடன் அதை எடுத்து உதறி மடித்துத் தயார் செய்கிறார்.
தாயார் : திருமிகு அவர்களே, செந்தமிழ் அறிஞரே
பொடியன் சின்னவன்- புத்தி குறைஞ்சவன். நானே பெத்த பிள்ளைதான். ஆனால், தானே எதுக்கும் சரி பிழை சொல்லுவான். இளமை தொடக்கமே இப்படி ஏதும் வழமை விரோதமாய் மாட்டிக் கொள்ளுவான்.
12 முருகையன்

ஊர்ப்புறம் இருக்கும் வேப்ப நிழலிலே
போய் உட்காருவான்.
பொழுது சாயிறதைக் கூட
உணரான்.
குனியான்.
மேடை ஒண்டு
96.Of 65.
அதிலை ஆளைக் காணலாம்.
இருந்தபடியே உறங்கியும் போவான்.
தனக்குள்ளை ஏதோ கனக்கக் கனவுகள்
கண்டு கொண்டவனைப் போலை,
சொண்டைச் சுளிச்சுச் சிரிப்பான்.
சோம்பற் பயலவன்.
ஒரு தனிப் போக்கு!
பாவம், அருமையாய்
வாய்ச்ச பிள்ளை, ஏன் மனது கலங்கினான்?தி திருமிகு : பார்வதி, எதுக்கும் பயப்பிட வேண்டாம்.
இந்த வலையை நீ எடுத்துக் கொண்டு போய்
வீசிச் சிக்க வை.
வெற்றி கிடைக்கும்.
(வலையைக் கையளித்துவிட்டுத் திருமிகு வெளியேறுகிறார். தாயார் என்ன செய்வதென்று தெளிவு பெறாது தயங்கித் தயங்கி மகனிடம் போகிறாள். அவனுடைய கண்ணிலே படாது “அவன் மீது வலையை வீசி விடுகிறாள். இந்த வலை போன்று ஒவ்வொரு வலை, அவனைச் சூழ உள்ள தோழர்கள் மீதும் விழுந்து அவர்களைச் சிக்க வைத்து விடுகின்றன. அவனும் தோழர்களும் மிகுந்த பாடுபட்டுத் திக்குமுக்காடி வலையை அறுக்க முயலுகிறார்கள். கணிசமான போராட்டத்தின் பின் 'அவன்’ வலையை அறுத்தெறிந்து வெளியேறுகிறான். அதே சமயம் ஏனைய தோழர்களும் வலைகளை அறுத்து விடுவித்து வெளியேறுகிறார்கள். “அவன்’ ஒரு மேட்டிலே போய் அமர்ந்து கொள்கிறான். யோசனையில் மூழ்கிப்போய் இருக்கிறான். செயற்குழுவைச் சேர்ந்த தோழர்கள் அவனைச் சூழ்ந்து துணையாக உள்ளனர்)
13 2) 666,60LD

Page 13
ஒருவன் :
மற்றவன் :
அவன் :
ஒருவன் :
மற்றவன் :
அவன் :
குரல் :
14
வலையிலெ விழாமல் நழுவி வந்திட்டம். நழுவியா வந்தம்?
நல்ல கதை இது! உறுதியோடெ வலைகளை அறுத்தம். பாடுபட்டுத்தான் தப்பினம் நாங்கள்.
என்ன, நண்பரே ஏது யோசனை? யோசனை, யோசனை. எதுக்கு யோசனை? யோசனை இல்லா ஒருத்தன் மனிசனா? யோசனையாலே உண்மைகள் புலப்படும். காசு காசென்றே ஆசையிற் புரளுற எங்கடை சனங்களை என்ன செய்யலாம்? இளமை தொடக்கம் பொருளிலே ஆசையை ஊட்டி ஊட்டி வளர்க்கிறம் அல்லவா? போட்டி போட்டி, பொறாமை, போட்டி
(பின்னணியில் இசை விரவ) கெட்டவன் குடி கெடட்டும் நீ குடி மிளகு சாறு பட்டவன் துயர் படட்டும் படக் "கசெற்’ வாங்கிக் கொண்டா. புதைந்தவன் புதைபடட்டும் புறப்படு விமானம் ஏற மிதந்தவன் மேலோங்கட்டும் மேகத்தில் அவன் தங்கட்டும்.
கெட்டவன் குடி கெடட்டும் பட்டவன் துயர் படட்டும் புதைந்தவன் புதைபடட்டும் மிதந்தவன் மேலோங்கட்டும்
பிறந்த நாள் தொடக்கம் ஒவ்வொரு கணமும்
முருகையன்

ஒருவன் :
96)60
மற்றவன் :
(சிறுமி ஒருத்தியை அவள் தாய் தந்தையர் வற்புறுத்தி வருத்திப் படிப்பிக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலும் தனிப்பயிற்சி நிலையத்திலும் (ற்றியுஷன் வகுப்பிலும்) வீட்டிலும் கல்வி திணிக்கப்படுகிறது. அந்தப் படிப்பில் இயல்பான நாட்டமில்லாத சிறுமி நளினா திண்டாடி அல்லற்படுகிறாள். அவள் தமையனுக்குப் படிப்பு வராதென்று முடிவு கட்டி, அவனை ஒரு குப்பைக் கூடைக்குள்ளே போட்டு மூடி வைத்துள்ளார்கள். அவனைத் தொட்டாட்டு வேலைகள் செய்யும் எடுபிடி ஆளாக மாத்திரம் இடையிடையே
எப்படி நாங்கள் பிள்ளை வளர்க்கிறம்? எப்படி நாங்கள் பிள்ளை வளர்க்கிறம்? உன்னை நீ மையமாக்கி உனக்கென்று சொத்துத் தேடு
மன்னன் நீ ஆக வேண்டும்
மற்றவன் வருந்தினாலும் தன்னலப் போட்டியாலே சகலமும் வாய்க்கப் பெற்று முன்னிலை அடைதல் வேண்டும்மோசடி பரவாயில்லைமோசடி, ஊழல், லஞ்சம், முறை கெட்ட கொடுக்கல் வாங்கல், காசடி, கள்ளம், கொள்ளை, கழுத்துகள் அறுத்தல் என்று பேசிடப்பட்ட மார்க்கப் பிறழ்வுகள் பரவாயில்லை.- ஆசைகள் நிறைவேறட்டும்அப்புறம் ஆபத்தில்லை. கடுமையாய் விமர்சிக்கின்றாய். கண்டித்துப் பழிக்கின்றாயே! படுபொய் நான் சொல்லவில்லை. பாருங்கள் இந்த வீட்டை.
V
பயன்படுத்துகிறார்கள்.)
15

Page 14
அம்மா :
நளினா :
அம்மா:
நாலரை ஆச்சு.
நளினா எழும்புங்கோ. பல்லை விளக்குங்கோ, பாடம் தொடங்குங்கோ. (துாக்கக் கலக்கம் தெளியாத நிலையில் கண்களைக் கசக்கியவாறு வந்து கொண்டே) என்னம்மா தொல்லை! இராத்திரியும் ஒண்டேகால் மட்டும்
படிச்சென்.
மறுபடியும் காலமை நல்லாய் வெளிக்க முந்தி. நச்சரிக்கப் பாக்கிறியள். எல்லாமே உங்களுக்காய்த் தானே நான் சொல்லுறென்.
நளினாவை அவள் தாயார் அவசரப்படுத்தி ஒரு நாற்காலிக்குட் புகுத்தித் திணித்து இருத்துகிறாள். தந்தையார் புத்தகமொன்றை விரித்துப் பிடித்தபடி நளினாவுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க முயலுகிறார்.)
அப்பா :
நளினா :
S9 fóLDT:
அப்பா ;
நளினா :
அப்பா :
16
அஞ்சாம் அலகு முடிய, இன்னும் நுாறு நொடி நேரந்தான், பிள்ளை இருக்கு.
முடிச்சீங்கள் எண்டால், பிறகு, நான் ஏதேனும் வேறை ஒண்டைச் சொல்லித் தருவென். துவங்குங்கோ பாடத்தை. கேட்பு, நிரம்பல். (அலுப்புடன் சிரமப்பட்டு) கிறுதி வருகுதப்பா.
இல்லை.
அதொண்டுமே செய்யாது. (சொல்லத் தொடங்கிய பாடத்தை விடாப்பிடியாகத் தொடர முயன்று)
சொல்லுங்கோ. uvw Loair two thirds xyz (குழம்பித் தடுமாறி) uVX yz. உலகப் படம் எங்கை?
Geography fairGoTJi.
முருகையன்

97th LAT :
நளினா : அம்மா :
அப்பா :
நளினா :
அம்மா :
நளினா :
அம்மா :
(ஒரு சருவச் சட்டியிலே தண்ணீர் கொண்டு வந்து நளினாவின் காலடியில் வைத்து) ஓமோம், உது தண்ணி. காலை அதுக்குள்ளை வையுங்கோ.
ஏனம்மா?
நித்திரையை நிப்பாட்ட.
நீங்கள் படியுங்கோ. அப்பா, உடனை அடுத்த லெசன் சொல்லுங்கோ. இந்துநதிப் பள்ளத்தாக்கின் இடிபாடு. முந்தி இருந்த முதியதொரு நாகரிகம். விட்டுவிட்டுச் சென்ற மிகுதிச் சுவடாகும். விட்டுவிட்டுச் சென்ற மிகுதிச் சுவடாகும். (சிணுங்கி) மண்டை இடிக்குதம்மா. மாதமின்னும் ஒண்டிருக்கு. Exam எடுத்து முடிஞ்சால், றிசல்ற் வந்தால், கைம்பஸ் கிடைச்சால். (இவை ஒன்றிலும் புலன் செல்லாமல்) ஆ. கன்னம் எரியுதம்மா. கொஞ்சம் பொறுங்கோ, நளினா.
மருந்திருக்கு.
பூசி விடு’றம்.
எரிவெல்லாம் மாறிப்போம்.
(அப்பா மருந்தை வாங்கி நளினாவின் கன்னத்திலே பூசி விடுகிறார். ஆனால், மருந்து பூசிய பிறகும் எரிவு குறையவில்லை. நளினா வருந்துகிறாள்.)
அம்மா :
அப்பா :
17
என்ன செய்வம். என்ன
செய்வம்? ஏன் ஏன். இன்னம் இவவுக்குத் தலையிடி? (மகனை நோக்கி) டே, சனி மூதேசி! சொன்னபடி உடனை போ. டொக்ற்றரிட்டைப் போய் அவரைக் கூட்டி வா.
சுணங்க வேண்டாம்.
உண்மை

Page 15
(மகன் குப்பைக் கூடைக்குள்ளிருந்து வெளிக்கிளம்பி மருத்துவரிடம்
போகிறான். நளினா : 9th On :
மகன் :
டொக்ற்றர் :
இடுப்பிலையும் நோகுதம்மா. (பரிவுடன்) இல்லைக் குஞ்சு. எங்கை பொறு. தடவு’றென் நான். சுகமா, பிள்ளை? (டொக்ற்றருடன் வந்து) சடக்கெண்டு வந்திட்டென்- இந்தா, டொக்ற்றர். தயவு செய்து சொல்லுங்கோ.
(நளினாவுக்கு வைத்தியஞ் செய்யும் பொருட்டு மருத்துவர் வந்திருந்தும் அவரை உதாசீனம் செய்துவிட்டு, பாடஞ்சொல்லும் தமது பணியைத் தொடர்வதற்குத் தந்தையார் முற்படுகிறார்.)
அப்பா :
டொக்ற்றர் :
அம்மா :
டொக்ற்றர் :
18
(படிப்பிக்கும் தொனியில்)
சிலம்புச் செல்வம். அரசியலில் பிழை செய்தால் அறம் கூற்றாகும். ஆர் எனினும் அவர்கள் எல்லாம் முடிந்து போவார். பெரியதொரு கற்புள்ள தெய்வம் என்றால், பேணி அந்தத் தெய்வத்தை உலகு போற்றும். ஊழ் வினைதான் பிறவி தொறும் தொடர்ந்து வந்தே உயிர்களினைத் தனித்தனியே விடாது பற்றும். சூழ்வினைக்குப் பலனாகத் துன்பம் சூழும். சொல்லும் இந்த உண்மைகளைச் சிலம்புச் செல்வம். (தந்தையாரை முறைத்துப் பார்க்கிறார்; பின்னர் எல்லாரையும் அப்புறம் போகும்படி சைகை காட்டி அனுப்பிவிட்டு, நளினாவின் காய்ச்சல், ப்றெஷர், நாடித்துடிப்பு முதலியவற்றைச் சோதிக்கிறார்: சோதித்து முடிந்ததும்) பிள்ளைக்கு நோமல் தான் ப்றெஷரெல்லாம். பெரிசாக ஒரு பிழையும் இல்லை, அம்மா. உள்ளுக்குக் கொடுக்க எண்டு
மருந்தேதேனும்.
ஒண்டுமே தேவை இல்லை.
ஓய்வு போதும்.
முருகையன்

வெள்ளி முதல் ஞாயிற்றுக் கிழமை மட்டும் வெளிக்கிட்டு விளையாடி வரட்டும், பிள்ளை.
(மருத்துவர் இதைச் சொல்லி முடிக்குமுன் நளினா துள்ளி எழும்பி ஓட முற்படுகின்றாள்.)
அம்மா :
துள்ளி விழுந்தோடு’றாள் பிடியுங்கோவென்.
(மகன் ஓடிப்போய் நளினாவைப் பிடித்து வந்து அவளுடைய இருக்கையிலே விட்டுப் பலவந்தமாக அழுத்திப் பிடிக்கிறான். இந்தக் கலவரத்தில் டொக்ற்றர் மெல்ல நழுவி விடுகிறார்.)
அப்பா :
அம்மா :
அப்பா :
நளினா :
அப்பா :
அம்மா :
19
சுடச்சுட நீ கொண்டு வா கொஞ்சம் கோப்பி. (ஒரு விசிறி கொண்டு வந்து மகளின் வேர்வை ஆறுமாறு விசுக்கி விடுகிறார்.) எக்கனமிக்ஸ் ற்றியூஷனுக்கு நேரமாச்சே! ஏழஞ்சாய்ப் போச்சுதடா. (மகனை நோக்கி) சனியன், போவென். டக்கெண்டு சயிக்கிளிலை கொண்டு போ, போ. (ஆதரவாக) நளின் போங்கோ. (சோர்வாக, உற்சாகமற்று) எனக்கொண்டும் விளங்குதில்லை. விளங்கேல்லை எண்டாலும் பரவாயில்லை. விடையெல்லாம் தருவாங்கள்.
நீங்கள் சும்மா ஒழுங்கேதும் இல்லாமல் அங்கை, இங்கை ஒண்டிரண்டு புள்ளடியைப் போட்டால் போதும். போய் வாங்கோ, ற்றியூஷனுக்கு. பேந்து வந்து புறப்படலாம் புளியடிக்கு. (தடுமாறி சமாளித்து) வேம்படிக்கு.
ஒய்வெண்டு கிடந்திட்டால். பிறகு உங்காலே (அயல் வீட்டை எட்டிப்பார்த்து)
2 60ô60) D

Page 16
உஷாவெல்லோ கைம்பசுக்குப் படிக்கப் போவாள்.
(யாரோ ஒருவன் வந்து வீட்டுக்காரரைக் கூப்பிடுகிறான். நளினா தமையனுடன் ற்றியூற்றறிக்குப் போகிறாள்.)
ஒருவன்
அம்மா :
ஒருவன் :
அம்மா :
ஒருவன் :
அம்மா :
அன்ற்றி, அன்ற்றி!
ஆரங்கை?
அது நான் அன்ற்றி. ஆரிட்டை வந்தநிர் நீர்? (அசட்டுச் சிரிப்புடன்) நளினாவிட்டை என்ற்றை கிளாஸ் தான் அவவும். இக்கொண் நோற்சை. இரண்டு நாள் தருகிறென் எண்டு சொன்னா, அன்ற்றி. அதுதான் நான். அதுக்குத் தான். இல்லை, இல்லை. அவ ஏதோ வெளியாலை போயிட்டாவே! இதைக் கேளும் இடது பக்க வீட்டை போனால், இருப்ப அங்கை- உஷா நாதன். தெரியும் தானே! நோற்செல்லாம் முழுப்படியாய் அந்தப் பிள்ளை நுணுக்கமாய் எழுதுறதாம். அவவைக் கேளும். பாத்தெழுத அவ தருவா. நல்ல பிள்ளை.
பக்கத்து வீடுதான்.
கேட்டுப்பாரும்.
('ஒருவன்’ தலையைச் சொறிந்து கொண்டு வெளியேறுகிறான். நளினா தமையனுடன் வீடு திரும்புகிறாள்)
அம்மா :
ஒருத்தருக்கும் குடாதையுங்கோ நளினா, நோற்சை.
முருகையன்

நளினா ஓம் அம்மா, ஓம் அம்மா. அம்மா நல்ல பிள்ளை.
இளம்பெண் ஒருத்தி வந்து கூப்பிடுகிறாள்.)
இளம் பெண் : நளினாவை விளையாட விடுங்கோ,
அன்ற்றி.
(விளையாட்டுத் திடலில் விளையாடும் சிறுமிகளின் உற்சாகக் கூச்சல்கள் கேட்கின்றன. விளையாடுவோருடன் சேர்ந்து கொள்ள நளினாவின் உடலும் உள்ளமும் துருதுருக்கின்றன. அம்மா : (நளினாவைத் தடவிக் கொடுத்து அவளுடைய
துருதுருப்பை அடக்கி மறைத்து) நாளைக்கு வருவ அவ. இப்ப காய்ச்சல், சுகமில்லை. வரமாட்டா. நீங்கள் போங்கோ. இளம்பெண் வெளியேறுகிறாள்.
அம்மா : (நளினாவிடம்)
தொடங்குங்கோ, ‘ற்றமில் படிக்க. நளினா : (விருப்பம் இல்லாமல் இழுத்துப் பறித்து)
சிலம்புச் செல்வம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும். ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள். அவன் : (முன்மேடைக்கு வந்து)
இப்படித்தான் பிள்ளைகளை வளர்க்கின்றோம் நாம். இவள் நிலையைப் பார்த்தீர்கள். என்ன பாவம்
21 உண்மீைகி

Page 17
ஒருவன் :
கற்பிக்கும் ஆசிரியர் பாடசாலைக் கடமைகளைச் சீராகச் செயவதில்லை. விற்பனைக்காய் அறிவூட்டும் ற்றியூஷன் காரர். வினாவிடைகள் தயாரித்துச் சொல்லித் தந்து வெற்றியையும் சில நேரம் விளைவிப்பார்கள். விடாப்பிடியாய் மாணவர்கள் சுழலுவார்கள்.
ஒரு கணமும் ஓய்வில்லை.
உறக்கம் இல்லை. ஓடி விளையாடவுமோ நேரமில்லை. ஒரு கணமும் அமைதி இல்லை. தெளிவும். இல்லை. ஒற்றைச் சாண் மனங்களிலே விரிவும் இல்லை. ஒரு பொழுதும் கலைப் பயிற்சி நாட்டம் இல்லை. ஒரு சிறிதும் பொது அறிவில் ஊக்கம் இல்லை. ஒரு சிறிதும் பிறருடனே பழகல் இல்லை. ஓடோடிப் போட்டியிட்டே உழல்கின்றாரே. இளஞ்சிறுவர் இவ்விதமாய் உயிர் வேறில்லா ஏற்றுமதிப் பண்டமாய் இறுகிப் போனால், பழம் பெருமை பேசி என்ன பயன் நாம் கண்டோம்? பணத்துக்காய்ப் பண்பாட்டை ஏலம் போடும் இழிந்த நிலை மிக இரங்கத் தக்கதன்றோ? இரத்தத்தில் மனித குணம் இல்லையானால் வளஞ் சிறந்த சொகுசுகளைப் பெற்றும் என்ன? வைக்கோலில் கிடந்துருளும் எலி நாம் அன்றோ? மறுபடியும் கடுமையாய் விமர்சிக்கின்றாய் வாணிபத்துப் பண்டமாய் மனிசர் மாறும் சிறு நிலைமை எங்குண்டு?
சிறிது சற்றே
திரும்பி அங்கு பார், நண்பா. விளங்கும் எல்லாம்.
முருகையன்

V
(முன்பு காட்டப்பட்ட அதே குடும்பம். தரகள் ஒருவர் வருகிறார்.)
தரகர் :
அம்மா : தரகள் :
அப்பா : தரகள் :
அம்மா : தரகள் :
அம்மா :
தரகள் : அப்பா :
தரகள் :
அப்பா : தரகள் :
23
யூக்கே மாப்பிளை.
ஒரு குறை இல்லை. வியாழ சுகம் தான் விசேஷமானது. எத்தினை வயது?
இளைய வயதுதான்.
நாற்பதும் நாலும்
நளினா நல்ல
அதிட்டக் காறிதான். அவர் ஒரு ப்றொஃவெசர்
ஓ, அது நல்லது.
உத்தராடத்திலை மூண்டாம் காலிலை முக்கால் நிக்குது. புதனும் குருவும் புகுந்து பாக்குது. சிவலையோ, கறுவலோ? (அவசரமாக) சிவலை, சிவலைதான். இளவாலையிலை இருந்த பொழுதிலை கனகாம்பர நிறம்.
கடும் பனிக் குளிலை சிவலையும் வெள்ளையும் சேர்ந்த புது நிறம். (சிறிது கவலை கொண்டு, ஐயப்பட்டு) பொது நிறம் எண்டா ’ப்’றோக்கள் சொன்னவர்? பொது நிறம் அல்ல, அம்மா, புது நிறம். அதெல்லாம் திறம்தான் அனுப்புறதெண்டால் . அய்ம்பதும் முப்பதும் ஒன்பதும் முடியுமாம். உடனை வேணுமாம்.
உடனையா?
ஓமோம். இன்னொரு பொடியர் இவவைக் கொண்டுபோய்
உண்மீைS

Page 18
அம்மா : நளினா : அம்மா :
அப்பா :
அம்மா :
மகன் :
அம்மா : நளினா :
அப்பா :
அம்மா :
தரகள் :
நளினா :
அம்மா :
24
எயப்போற்றடியிலை இறக்கி விடுவர். அங்கை போறவரைக்கும் அவரெடை மனிசி எண்டுதான் . மனிசி போலை தான் நளினா, எழும்பு
நான் போகேல்லை.
(வியப்புடன் சினந்து)
என்னெடி விசரா? (உறுக்கி) எழும்பு, போ.
வெளிக்கிடு.
பெட்டியை அடுக்கு.
பெரியதாய் இரண்டு
ஸாறி கொண்டு போ ஸாறி ஏன் அங்கை? அங்கை போக நான் விரும்பவே இல்லை. என்னை விடுங்கோ இங்கை தான் இருப்பென். பேய்க்கதை பேசு’றாய்.
பிறகார் பொறுப்பு? படி படி எண்டம், பலனே இல்லை. இந்த வாய்ப்பையும் இழக்கவா போறாய்? (மகளின் மறுப்பைப் பொருட்படுத்தாமல்) ஸாறி ஏன் அங்கை? தலை மயிர் நீளமாய் வளந்து கிடக்குது. வடிவாய் நறுக்குவம். அளவாய், ஸ்ற்றயிலாய் அதையும் வெட்டுவம். ஜீன்சும் வேணும்.
எல்லாம் கொழும்பிலை பாத்து வாங்கலாம் - பரவாயில்லை. (சிணுங்கலாக) வேறை யாரோடையோ போறதை நினைச்சால் ரூ.ரூ. இதென்னடி, மோனை?
எந்த யுகத்திலை
இருக்கிறாய் பிள்ளை?
இதெல்லாம் இப்ப
சார்வசாதாரணம்.
முருகையன்

அப்பா : சரி, சரி வெளிக்கிடு.
(எல்லாருமாகச் சேர்ந்து நளினாவையும் அவள் உடைமைகளையும் ஒரு பெரிய பாசலாகக் கட்டுகிறார்கள். இந்தப் பாசலை உயரமான ஒரு மேட்டிலே கொண்டுபோய் ஏற்றி, மறுபுறம் உள்ள பள்ளத்திலே தள்ளி விழுத்துகிறார்கள்)
அவன் : (வந்து கொண்டே)
நல்லது செய்ய எண்ணும் நாட்டமே கொண்ட பெற்றார் செய்வதன் கருத்தை எண்ணிச் சிறிதுமே பார்ப்பதில்லை. தொல்லைகள் தீர்த்தோம் என்று சொற்ப நாள் மகிழ்ச்சி கொள்வார் வில்லங்கம் எங்கும் உண்டு. மெய்யிதை உணர்ந்தாரில்லை. பெறுமதி எங்கே உண்டு? பேணிடத் தக்கதென்ன? வறுமையைத் தீர்த்துக் கட்டும் மார்க்கங்கள் யாவை? யாவை?
(“காசு காசு காசு’ என்ற பாடலும் முன்னர் வந்த காசு தேடும் ஆடற் காட்சியும் -- சுருங்கிய வடிவில்.)
பெறுமதி எங்கே உண்டு? பேணிடத் தக்கதென்ன? வறுமையைத் தீர்த்துக் கட்டும் மார்க்கங்கள் யாவை? யாவை? அவன் : ஆசையை வளர்த்தல் தானா? அதைவிட வழி வேறுண்டா? தேவையைப் பெருக்கல் தானா? செய்முறை வேறும் உண்டா?
LJITL6) : (பல குரல்கள்)
உண்டென்று முழங்குவோம் நாம். உறவினைப் பண்படுத்தல்
25 SD 6760) D

Page 19
ஒருவன் : மற்றவன் : ஒருவன் :
பாடல் :
26
நன்றென்று முழங்குவோம் நாம். நமக்கிது குறிக்கோள் ஆகும். பண்டன்று கண்ட வாழ்வின் பழுதுகள் களைந்து வென்றால், என்றென்றும் புதுமை வாய்ந்த இனிமைகள் படைக்கலாமே. எப்படி இயங்கலாம் நாம்? இது நல்ல கேள்வி, நண்பா. கற்பனை ஒன்றால் மட்டும்
காரியம் நடைபெறாதே!
பாட்டுக்கள் பாடுவோம் நாம் பரப்புரை நிகழ்த்துவோம் நாம் கூத்துக்கள் ஆடுவோம் நாம் கூட்டங்கள் கூடுவோம் நாம்.
(பல குரல்) ஆட்டங்கள் ஆடினோம் நாம் அரங்கொன்றும் அமைத்துத் தந்தோம். பாத்திறம் நீங்கள் கண்டீர் பலன் கொண்டு வாழ்க நன்றே.
(திரை)
முருகையன்

குற்றம் குற்றமே
(கடும் நிறத்தில் வெறுமையான பின் திரை. நடுவிலே அரசுகட்டிலில் பாண்டியன் வீற்றிருக்கிறான். புலவர்-2, புலவர்-3 என்போர் கையில் ஏட்டுக்கட்டுடன் நிற்கிறார்கள். காவலாள் நடுமேடையில் தொங்கும் பொன்முடிப்பை உற்றுப்பார்த்தபடி நிற்கிறான். முன் திரை நீங்கும்போது சாந்த மென்குரல் ஒன்று பாடுகிறது.)
UTL65 : இறையனார் கவிக்கும் குற்றம்
இயம்பின கழக மாந்தர்
அறிவு சால் ஆன்றோர் காதை
அஞ்சாத சான்றோர் காதை
(ஏவலாள் வலப்புறமிருந்து அவசரமாக நுழைகிறான்
பாண்டியன் : பின்னும் ஒருவரா?
புலவரா? வரச்சொல்.
ஏவலாள் : (வணங்கி) மன்னர் மன்னவா,
வணக்கம்.
அவ்வாறே.
(ஏவலாள் திரும்பிச் சென்று சில நொடிகளின்பின் புலவர்-1 உடன் வருகிறான்.)
புலவர்-1 : தென்னவா, நின் திருவடித் தாமரை சென்னி மீதிலே சூடி, செழுந்தமிழ்ச் செய்யுள் ஒன்று திருமுன் படைக்கிறேன்.
27 உண்மை

Page 20
பாண்டியன்:
புலவர்-1 :
பாண்டியன்
புலவர் 1 :
புலவர் 2:
புலவர்-3:
28
புலமை மிக்க, புகழ் மிக்க, செந்தமிழ்க் கலையில் அற்புதம் காட்டும் பெருமையோய்,
செய்யுளா?
அது தேனன்றோ?
சொல்லுக.
பைந்தமிழ்ச் செழும் பாடல் மரபிலே இந்தப் பாட்டை இயற்றினேன். கேட்ட நின் சிந்தனைக்கு விருந்தாய் அமையுமேல் அந்த அவ்வளவே பயன் சான்றதாம்.
: சொல்க அந்தச் சுவைமிக்க
செய்யுளை.
(ஆரபியிலே பாடுகிறார்) படுமழை பொழிந்த பானாட் கங்குல் இருளாய் அமைந்த நின் ஈர்ங்குழல் அக்கார் ஈன்று புறத்தரும் எழில் நறுமுல்லை சூட்டிய இன்பத் தொடர்பால் வாட்டங் கண்ணி, மணம் கமழ்வதுவே.
நல்ல சிறந்த விளக்கம், அரிவையர் கூந்தலில் வாசனை கூடி இருப்பதை என்ன அழகாய் எடுத்து விளக்கினார், அறிவு மிகுந்த ஆழ்ந்த கல்வித் திறமை மிகுந்த இத்தீந்தமிழ்ப் பாவலர்!
கொடுக்கலாம் கோடி பொன். கொடுக்கலாம் பொற்கிழி. மிடுக்கெல்லாம் நிறைந்து, எழில் மிகுந்து, கருத்தமைந்து
முருகையன்

புலவர்-1 :
புலவர்-3 :
புலவர்-1 :
புலவர்-3 :
பாண்டியன்
புலவர்-3 :
உயர்ந்ததிக் கவிதையே. உண்மையில் உயர்ந்ததே.
இரவுகள் எத்தனை கண்விழித்திருப்பேன், எழுதிட இந்தக் கவிதையை?
அது தான் உயர்ந்ததாய் அமைந்ததில் உள்ளதோ வியப்பும்?
அது சரி, புலவரே! செய்யுள் புனைய நீர் எத்தனை நாழிகை எடுத்தீர்?
இதற்கா? பத்து நாளாக இப்பாட்டு என் நெஞ்சக் கூட்டினுட் கிடந்து குமைந்ததே ஆயினும், எழுத என்றே ஏடும் ஆணியும் எடுத்த பின்னர், இருபதே விநாடியில், விடியச் சற்று முன்னரே, இதனை எழுதி முடித்தேன். எப்படிப் பாட்டு?
வியக்கத் தகுந்தது, மிகவும் சிறந்தது.
: (ஏதோ யோசனையுடன்)
சிறந்ததாய் உள்ளதும் உண்மைதான்.
புலவரே,
பறந்து போம்
அங்கே,
பரிசிலாய்க் கொடுபடக் காத்துத் தொங்கும் காசுப் பொற்கிழி தன்னை அறுத்துக் கொண்டுபோம்
உமக்கே கொடுபடக்கிடந்தது; கொண்டுபோம், கொண்டுபோம்.
S-60óróOLD

Page 21
புலவர்-1 :
பாண்டியன்
புலவர் :
நல்லது, செல்கிறேன். வாழிய வேந்தே.
: (திடீரென்று)
இல்லை, சற்றே இருங்கள், புலவரே சொல்ல ஒன்றுண்டு. (தடுமாறி) நீங்கள் போகலாம். (தீர்மானத்தை மாற்றிக்கொண்டு தயங்கித் தயங்கி) இல்லை நும் பாடற்கு ஈடும் இணையும். ஆயினும் எனக்கோ அது முழு நிறைவைத் தர மறுக்கின்றது. சமுசயப்பட்ட என் நெஞ்சக் கருத்தையே நேர் முன் நிறுத்தி அறிவு பயின்றதோர் ஆளுமை நோக்கினால் திறமையாய் எடுத்துச் செப்பினீர். ஆயினும்.
சில சில வேளையில் அறிவே நிறைவினைக் கொடுக்கும் வல்லமை அற்றுக் குறைவதும் கண்டுளோம் அல்லவா?
ஆகையால்.
(ஆத்திரம் அடைந்து) பொற்கிழி தன்னை நான் பெறுதல் தகாது. இதனையே சொல்ல நினைத்த நீ சுற்றி வளைக்கிறாய். அப்படித் தானே, அரசே?
சரி. சரி.
வேண்டாம் எனக்குப் பொற்கிழி.
உங்கள் சில்லறைக் காசுச் சிறு துணிப் பொட்டலம் வேண்டாம், வேண்டவே வேண்டாம். இலக்கியம் படைப்பதே என்தொழில். படைத்ததை வைத்துத்
முருகையன்

தமிழ் விலை வாணிபம் செய்து பிழைக்கும் இழி நிலைக்கு இன்னும் நான் இறங்கினேன் அல்லேன். ஆகையால் வருகிறேன்.
ஆரும் உனக்குப் பிடித்த பாடலைப் பெற்று வருவார் பரிசிலைத் தந்து, பரவிப் புகழ்ந்து நெடுநாள் வாழிய வேந்தே-- பீடுகள் யாவும் பெற்று நனி சிறந்தே.
(புலவர் வெளியேறுகிறார். பாண்டியனும் ஆழ்ந்த யோசனையுடன் மெல்ல அரங்கை விட்டு நழுவுகிறான்.)
புலவர்-2 :
புலவர்-3 :
புலவர்-2 :
31
என்ன இருப்பினும் இனிய இக்கவிதையின் தகுதியைக் குறைத்து மதித்தது தவறே.
தான் கொண்ட கருத்தே எந்தப் படைப்பிலும் அமைதல் வேண்டும். தேன் கண்டால் அனைய மேன்மைச் சிறப்பு சால் கருத்தானாலும் தான் கொண்ட கொள்கை அன்றிப் பிற கொள்கைப் புலவன் தந்தால் ஏன் கண்டனத்தைச் செய்தே
இகழ்கிறார்?
தெரியவில்லை.
ஏனையா, இரைகிறீர்? உம் எடுப்பான் குரலைக் கேட்டால், மேன்மை கொள் வேந்தர்
உம்மை மிகக் காய்ந்து சினத்தல் கூடும். (புலவர்கள் வெளியேறுகின்றனர்)
உண்மை

Page 22
ஏவலாள் :
ஏவலாள் :
தருமி :
ஏவலாள் :
தருமி :
ஏவலாள் :
32
நாம் என்ன கண்டோம், தம்பி? நக்கீரர் முதலாயுள்ளோர் தாம் இந்தக் கவிதைப்பற்றிச் சரியாகத் தீர்த்தல் கூடும்
(தருமி என்னும் அந்தணன் வருகிறான்)
(பொற்கிழியைச் சுட்டிக் காட்டி) அங்கே தொங்குவதென்ன?
அது தான் பொற்கிழி என்பது, பூசகர் ஐயா. ஆயிரம் காசுகள் அதற்குள்ளே உள்ளன. ஆயிரம் காசுமே செம்பொற் காசுகள்.
ஆயிரம் செம்பொற் காசுகள்! ஆகா!
வாயூறுவதேன், ஐயரே? கிழிக்குள் உள்ளவை காசுகள். உண்ண முடியுமா? சர்க்கரைப் பொங்கலோ, தயிரோ, அல்லது மோதகம் வடையோ முறுக்கோ என்றால் வாய்க்குட் போட்டு விழுங்கலாம் அல்லது, கற கற என்று கறிக்கலாம், கொறிக்கலாம்.
பறிக்கலாம் தானே, அதனை நான்? பறித்தால்.
(தடுத்து நிறுத்தி) நில்லும், நில்லும் அய்யரே! பொற்கிழி
முருகையன்

தருமி :
ஏவலாள் :
காவலாள் :
தருமி :
இலேசாய் அறுக்க இயலாதையா. காவல் இருக்கிறோம்-- காசினை யாரும்-கள்வரோ பிறரோ
கவராவாறு.
நல்ல புத்திசாலிகள், அய்யா! நடு மண்டபத்திலே காசுப் பையைக் கட்டி ஏன் தொங்க விட்டீர்? பிறகு, காவல் ஏன் இருக்கிறீர்? கண்கள் ஏன் விழிக்கிறீர்? பொற்கிழி தூக்கிய நோக்கம் என்னவோ? வேலை வினைக்கெடும் அவசியம் என்னவோ? அவளைத் தொடுவதேன்? கவலைப் படுவதேன்?
மூளை இருந்தால், காசைக் கொண்டு போய்ப் பெட்டகத்துள்ளே வைத்துப் பூட்டி, திறப்பையும் இடுப்பிலே செருகி விட்டபின் நிம்மதியாக நித்திரை கொள்ளுவீர். அப்படித் தான் நான் செய்தும் இருப்பேன் என்னிடம் பொற்கிழி இருக்குமேயானால்.
அதுதான் உம்மிடம் இல்லையே!
ஆகையால், அற்புதமான உம் புத்தியைக் கொண்டுபோம் - பக்குவமாகப் பழுதுபடாமல். அதுதான் அய்யா, வெளியே போம் வழி.
(இடைமறித்து) இல்லை, அய்யா-இந்தப் பொற்கிழி உமக்குக் கூடக் கிடைக்கலாம், காணும்.
எனக்குக கூடவா? எப்படி?
உண்மை

Page 23
காவலாள் :
காவலாள் :
ஏவலாள் :
இதையே பரிசிலாய் நீர் பெறலாம்-விரும்பினால். மன்னவர் இந்தப் பொற்கிழி
தமிழில் இன்னறுங் கவிதை எழுதுவோருக்குப் பரிசிலாய் வழங்க எண்ணியிருக்கிறார்.
கவிதையா? பரிசிலா? கண்டதார் இவைகளை? எனக்கும் தெரியுமோ இலக்கண இக்கியம்? பாட்டும் செய்யுளும் பண்ணும் பரதமும் கூத்தும் வல்ல எவரே ஆயினும் வந்து பரிசிலை வாங்கி ஏகட்டும்.
இல்லை, அய்யரே.
இப்படியே நீர் ஒற்றைக் கட்டையாய் எத்தனை ஆண்டுகள் இன்னும் இருந்திட எண்ணினிர்?
இந்தப் பொற்கிழி கிடைத்தால, புகழும் கிடைக்கும். அப்புறம் என்ன?
ஐப்பசி பிறக்கும். பொற்றொடி புனைந்தொரு பூங்கொடி உமது தோள் தழுவ வருவாள். சகல வைபவங்களும் மந்திராலோபம் தந்திராலோபம் கிரியாலோபம் எதுவுமே இன்றித்
திருமணம் உமக்கும் நடைபெறும். பின்னர்.
சர்வே ஜனாஹா சுகினோ 'ப'வந்து சமஸ்தம் மங்கலாநி 'ப'வந்து.
முருகையன்

தருமி :
காவலாள் :
தருமி :
ஏவலாள் :
தருமி :
காவலாள் :
பிள்ளைகள் எனக்குப் பிறக்கவும் கூடும். இல்லறம் செழிக்கும் என்றா சொல்கிறீர்?
ஆமாம், அய்யரே, அப்படிச் செய்யும்.
பரிசில் பெற ஒரு பாடல் வேண்டுமே!
கூடலின் கழகம் குழுமி இருந்த பல்கலைப் புலவர் பலகால் முயன்றும் ஏற்ற செய்யுளை இயற்றினார் இல்லையே தருமி அய்யரா, தக்க கருத்துடன் செய்யுள் செய்ய வல்லவர் என்கிறாய்?
அது தானே!
பொற்கிழிக்கும் அடியேனைப் போன்றுள்ளோர்க்கும் வெகுதூரம்.
ஆகையாலே விடுவோம் அக்காசின் ஆசை.
முயற்சியின் முனைப்பினாலே மூளையின் திறத்தினாலே உயர்ச்சியை அடையலாம் என்று உயர்ந்தவர் சொன்னார் அன்றோ? அயர்ச்சியை விடுக.
உம் மேல் அன்புடை ஆலவாயின் வியத்தகு கருணை மிக்க இறையனாரிடம் நீர் சென்று வேண்டுதல் செய்வீராயின் மெய்யறிவுடைய அன்னார் வேண்டிய வேண்டியாங்கே விதிப்பர்.
ஓர் பாட்டு யாத்துப்
S-603T60LL

Page 24
காவலாள் :
காவலாள் :
பாண்டியன் அவையிற் காட்டிப் பரிசிலைப் பெறுவாய் என்று தூண்டிடும் அன்பினாலே சொல்லுவார்.
நீரும் உய்வீர்.
(தான் முன்பே இதனை ஏன் யோசிக்கவில்லை என்ற வியப்புடன்) உண்மைதான், அன்பரே! ஆம், உரைத்தவை முழுதும் உண்மை. எண்ணத்தில் எதற்காய் முன்பே இதனை நான் நினைக்கவில்லை? அண்ணல்- என் மீதில் மிக்க அன்புடை இறையனார்ஓர் தண்ணெழில் கமழும் பாட்டுத் தராரோ, நான் கேட்டுக் கொண்டால்? உடனே நான் போக வேண்டும்.
ஒய்! நில்லும் தருமி ஐயா, படபடப்பெதற்கு?
வேண்டாம். பாட்டு, நீர் எதனைப்பற்றிக் கொடுத்திடல் வேண்டும் என்று தெரியுமா?
சொல்லும் பார்ப்போம்?
அட, அதை மறந்தே போனேன்.
ஆம், அதைத் தயவு கூர்ந்து சொல்லுங்கள்.
சற்று நில்லும்- சொல்கிறேன். வழுதி வேந்தன்
பலவகை மலர்கள் பூத்த UjiLoJš சோலையூடே
முருகையன்

தருமி :
காவலாள் :
காவலாள் :
37.
செல்கையில், அரசியோடுதென்றலிற் புதியதாய் ஓர் நன்மணம் வீசக் கண்டான். நயப்புடன் வியப்பும் கொண்டான்.
நயப்புடன் வியப்பும் கொண்டான் அப்புறம்?
அந்த வாசம் எப்படி வந்ததென்றே எண்ணி ஆராய்ந்த போதில், நெஞ்சில் ஓர் ஐயம் தோன்றி நிகழ்ந்ததாம்.
அந்த ஐயம் நீக்கிடும் பாட்டுத் தந்த நேரிலாப் புலவருக்குத் தூக்கிய கிழிக்குள் வைத்த சொருணத்தைப் பரிசிலாக ஆக்கலே கருமம் என்ற ஆணையும் பிறக்கவைத்தான். காக்க என்று இருவர் எம்மை நியமித்தான்.
ஆகையாலே.
இவை எல்லாம் மனத்துட் கொண்டே இறையனார் பாட்டுத் தந்தால், அவையிலே அதனைக் காட்டி அக்கிழி பெறலாம் போலும். சரி, சரி வருகிறேன் நான்.
(தருமி போகிறான். ஏவலாளும் நழுவுகிறான்)
தருமியின் இயல்பைப் பார்த்தால் சிரிப்புத்தான் தோன்றப் பார்க்கும்சில சில வேளை. என்ன, இல்லையா அண்ணே?
உண்மை

Page 25
(காவலாள் கண்களை மூடிக்கொண்ட அரைத் தூக்க நிலையில் இந்த வரிகளைப் பேசியவன் உண்மையில் ஏவலாள் அங்கு இல்லாத நிலையை உணர்ந்ததும் உரத்து ஏவலாளைக் கூப்பிடுகிறான்)
காவலாள் : அண்ணே!
இவன் எங்கே தொலைந்து போனான்?
(மேடை ஒளி மங்கி இருள்கிறது)
(மேடையில் மீண்டும் வெளிச்சம் பரவுகிறது. புலவர்கள் அமைதியின்றிப் பேசும் இக்காட்சியின் முற்பகுதி பரபரப்புடன் வேகமாக நடக்கிறது. காட்சித் தொடக்கத்தில்ே, பாண்டியன், புலவர்கள்-2, 3 ஆகியோர், தருமி என்போர் மேடையில் உள்ளனர். நக்கீரனார் ஒதுக்குப் புறமாக நின்று நிகழ்ச்சிகளை அவதானிக்கிறார்)
புலவர்-2 : தருமியா? இவனா?
புலவர்-3 : கவிதைதான் எழுதினான்.
புலவர்-2 : இலக்கண வழுக்கள்?
புலவர்-3 : இல்லையாம் எதுவும்.
எனக்கு முன்னமே தெரியும். இவனொரு பிறவிப் புலவன்.
புலவர்-2 : பெருந்திறல் நாவலன்.
பாண்டியன் : அமைதி, அமைதி!
அந்தணர் பெருந்தகை
38 முருகையன்

புலவர்-2 :
தருமி :
புலவர்-3 :
புலவர்-2 :
புலவர்-3 :
39
தருமி என்ற தமிழ்ச்சுவைப் பாவலன் பருகு நற்செழும் பைந்தமிழ்ப் புலவன் கூடலின் ஆய்ந்து குளிர்ந்த நம் மொழிக்கு ஒரு பாடல் தந்துளான். அனைவரும் கேண்மினோ.
அனைவரும் கேண்மினோ, அனைவரும் கேண்மினோ.
(இசையுடன் பாட முற்படுகிறான். அநுபவம் இன்மையால் இடையிடையே அபகரம்) கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ, காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
கொங்கு தேர் வாழ்க்கை குளிர் தமிழ்ப் புதுத் தொடர். கருத்து நெருக்கமும் கற்பனைப் பெருக்கமும் செறிந்து நிறைந்த திருத்திய சொற்றொடர்
காமம் செப்புதல்!
காமமோ விருப்பமும். ஒரு பால் மிகுந்த ஒவ்வா விருப்பினால், பக்கம் சார்ந்து பல பல பேசுதல்நடுவு நிலைமை சாய்ந்து கோடலால், படு பொய் பேசலே காமம் செப்புதல். அருமையாய் அதனைச் சொல்லியிருக்கிறார் -அந்தணர் பெருமகன்-அருந்தமிழ்ப் புலவர்.
பயிலியது கெழீஇய நட்பின் நெருக்கம்
S. 60irGOLD

Page 26
புலவர்-2 :
மயிலியல் என்பதால் வலியுறுகின்றது. மயிலியல் என்பதைக் கட்புலன் அன்றித் தழுவலே மிகமிக முழுமையாய்க் காட்டும். செறி எயிறு என்கையில், அரிவையின் இதழ்களை உண்ட அநுபவம் உரைக்கப் படுவதால், கூந்தலை மோந்தமை குறிப்புரை அன்றது உய்த்தறிந்து எழுதிய ஒரு பொருள் அன்றது. உற்றுணர்து உரைத்த ஒன்றே எனும்படி மயிலியல் செறி எயிறு என்பவை கூறித் தும்பியை நோக்கிச் சொல்லிய பாட்டு நலம் புனைந்து உரைத்தலின் சிகரமே எனத்தகும் ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் அளித்தல் தகும் இவ்வருந்தமிழ்க் கணிக்கு.
எங்கே, அந்தக் கவிதையைத்
தாரீர், இன்னும் ஒரு தரம் படித்துப் பார்க்கிறேன். (தருமியிடம் ஏட்டை வாங்கி) கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ, காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே. (தாராளமாகச் சுவைத்துத் தலையசைத்து) வாசனை நுகரும் வாழ்வே வாழ்வாய் வாழ்வாய் வண்டே,
நடுநிலை வழாஅது வினவியதற்கு விடை தா.
மிகவும் நெருங்கிப் பழகிய அன்புடை அரிவையள், மயில் போற் சாயலை உடையவள், செறிந்த அழகிய வெண்பல் அமையப் பெற்றவள்;
முருகையன்

புலவர்-3 :
பாண்டியன்
தருமி :
41
அவளது கூந்தலை வெல்லும் மணமுடைப் பூவினை நீயும்
அறிவையோ, வண்டே? நறுமணம் வீசிடும் நங்கையின் கூந்தலைத் தும்பியுடனே தோழமை பூண்டு பேசலின் மூலம் பூசனை புரிகிறான். காதலின் சாரமே பூசனை போலும்! தலைவனின் அன்பின் தகுதியை எண்ணுவோர் வியப்படையாமல் இருத்தல் கூடுமா? “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ” கூடலின் ஆய்ந்த குளிர்ந்த நம் மொழிக்கொரு தேடல் அரிய செல்வமே ஆகும்.
கொடுக்கலாம் பரிசிலைகொடுக்கலாம் பொற்கிழி. மிடுக்கெலாம் நிறைந்து எழில் மிகுந்து கருத்தமைந்து உயர்ந்தது இக்கவிதையே. உண்மையில் உயர்ந்ததே.
; அந்தணர் பெருமான்,
அங்கே தொங்கிடும் பொற்கிழி உண்மைப் புலவரை நாடி, “என்று வருவரோ, எவருமே வராரோ?” என்று நினைந்தே ஏங்கிய பொற்கிழி உரிமை கொண்டாடிட ஒருவரைப் பெற்றது. பொற்கிழி உமக்கே உரிமை ஆதலால் பெற்று மகிழ்க,
பீடுகள் நிறைக.
மிக மிக வந்தனம், வேந்தர் வேந்தே. (பொற்கிழியை அறுக்க முந்துகிறான்)
s 608T60LD

Page 27
நக்கீரனார் :
பாண்டியன்
புலவர்-2 :
புலவர்-3 :
பாண்டியன்
புலவர்-2 :
புலவர்-3 :
நக்கீரனார் :
தருமி :
நக்கீரனார் :
42
(ஓடிச் சென்று கையில் பற்றிப் பலமாக இழுத்து) நிறுத்தும் ஐயரே.
: (வியப்புடன்) யாரது? கீரனார்!
என்ன பிசகு?
யாது குழப்பம்?
: எடும் என நான் உரை செய்யவும்
அதற்குத் தடையுரை சொன்னதார்? கீரரா?
ஏன், ஏன்?
அநீதி, அநீதி!
(நிலை தளம்பாது) குற்றம் நிறைந்ததே அந்தணர் வழங்கிய, சற்று முன் புகழப்பட்ட அக்கவிதை.
'கொங்கு தேர் வாழ்க்கை” குற்றம் உடையதா? நம்பவே என்னால் இயலவில்லையே! இறையனார் எழுதிய பாடலில் கூடக் குற்றம் இருத்தல் கூடுமா? (ஏளனமாக) ஒகோ!
இறையனாரா அதை எழுதினார்?
அதனைத் தருமி ஐயரே எழுதினார் என்று தான் கருதி நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன்.
முருகையன்,

புலவர்-2 :
புலவர்-3 :
இறையனார் கம்பீரமாகக்
இறையனார்
புலவர் 3 :
புலவர் 2 :
பாண்டியன்
இறையனார்
நக்கிரனார் :
இறையனார் என்பவர் யாவரோ? முன்பு யாம் கேட்டறியாத புலவராய் இருக்கிறார். பாட்டறியாத பாமரருக்குச் சொல்லுதல் போல,
தோகையர் கூந்தலில் இயற்கையாய் வாசனை இருக்கிறது என்று துணிந்து படுபொய் சொல்லி இருக்கிறார்.
இறையனார் என்பவர் எங்கே? யாரவர்?
என்ற புலவர் திடுமென்று அரசு அவையில் தோன்றுகிறார்கைப்பிரம்பு சகிதம்)
:(முழங்கும் குரலில்)
இறையனார் யாவராய் இருந்தால் என்ன?
புதியதோர் புலவர்!
இவரார்? அறியோம். இவரே போலும் இறையனார் என்பவர்!
: இறையனார் என்பவர் இவரே, இவரே!
:எனது பாட்டிலே
குற்றம் கண்டவர் யாவரோ? என்ன துணிச்சல் அவருக்கு?
பார் புகழ்ந்துரைக்கும் கீரன்-யானேயானே ‘கொங்கு தேர் வாழ்க்கையிற் குற்றம்
கண்டவன்.
2.60ör6pLD NA

Page 28
இறையனார் :எக்குற்றம் கண்டீர், இந்த
எழில் பெற்ற பாட்டில்?
நக்கீரனார் : ஆமாம்!
சொற்குற்றம் ஒன்றும் இல்லை. பொருட்குற்றம் நிறைய உண்டு. அற்குற்ற கூந்தல் எல்லாம் அணி மலர்ச் சார்பால் அன்றோ பெற்றிடும் நறுமணத்தை? பின்னை நீர். கூந்தல் வாசம் இயற்கையே என்று தோன்ற இயற்றினீர் செய்யுள் என்றால், செயற்கையாய்ப் புனைந்த, பொய்ம்மைக் கற்பனைச் செத்தல் அன்றோ? உயர்ச்சி சால் உண்மை வாய்ந்தே ஒப்பற அமைய வேண்டும் நயத்தகு கலைக்கும், இன்று நாசத்தை விளைவிக்கின்றீர்.
இறையனார் கூந்தலின் கமழ்வு இயற்கை
என்று யான் கூறவில்லை. காந்தனின் வாயில் அன்றோ கற்பனை புகுத்தியுள்ளேன்!
நக்கீரனார் : தலைவனே படுபொய் பேசும்
தன்மையில் தமிழைச் செய்தால், உலகம் அவ்வழியிற் சென்றே உருக்குலைந்து அழியும் அன்றோ?
இறையனார்: தலைவியின் மீதில், அன்பு
தலைவற்கு மிகுந்ததால்
44 முருகையன்

நக்கீரனார் :
இறையனார்:
நக்கீரனார் :
பல பல புனைந்து சொல்லிப் பரவுதல் இயற்கை ஆகும். சில சமயத்தில். அன்னோன் சித்தம் பேதலித்தான் போலத் தலைவியில் ஈடுபட்டுத் தலை தடுமாறல் எல்லாம் உலகியல் வழக்கே ஆகும். அதனையே, உயர்ச்சி சால நாடக வழக்கு வாய்ந்த நற்றமிழ் முறையில் சொன்னேன். கேடென்ன அதிலே கண்டீர்,
dig 6.2
தாங்கள் பேசும் வாதத்தைக் கணக்குப் போட்டால் வாய்மையே வேண்டாம் என்னும் போதத்தைப் பெறுபேறாகக் கொள்ளலாம் என்பீர் போலும்.
வாய்மை அல்லாதிருக்கும் வாய்மையே வாய்மை என்றால் தூய்மை வாதங்கள் பேசிச் சுகம் என்னப் பெறுதல் கூடும்? ஆய்தமிழ்ச் செய்யுள் எல்லாம் வாழ்விலே அமைந்து தோன்றும் வாழ்க்கையின் வாய்மை இன்மை எழுத்திலே தோன்றுதல் தான் இயற்கையாம்.
இதிலே எல்லாம் வழு என்ன காணுகின்றீர்?
வாய்மையே வேண்டாம் தானோ?
உண்மை

Page 29
இறையனார்:
நக்கீரனார் :
இறையனார்:
நக்கீரனார் :
இறையனார்:
மீண்டும் ஏன் அதே பாடத்தை விளங்காமல் உளறுகின்றீர்? பாண்டியன் அவைக்குமே ஓர் பழிப்பினை விளைவிக்கின்றீர். நீண்டதேல் மீண்டும் நாக்கு. நீறானீர்.
ஒகோ, அந்த ஆண்டவன் என்றா உம்மை அகத்துள்ளே நினைத்துக் கொண்டீர்? விழிகளை உருட்டி என்னை வெருட்டிட இயலாதையா. மொழிகளால் வாதம் செய்ய முடியுமா என்று பாரும். பொழி கனல் சிந்தும் பார்வை புலவரே, உமக்கு வேண்டாம் எழுகின்றீர்நெற்றிக்கண்ணால் எரித்திட இயலும் போலும்!
(சீற்றம் பொங்க) நீறாக்க முடியாதென்றா நினைக்கிறீர்?
உம்மை எல்லாம் கூறாக்கி நரிக்குப் போட்டுக் கொண்டாட்டம் நடத்த வேண்டும்.
சீறாதே, சினந்து நோக்கி சினத்திலே போட்டி என்றால் வேறொரு நாளில் வைப்போம்.
விளங்காமல் உளறினீரே!
முருகையன்

நக்கீரனார் :
இறையனார்:
நக்கீரனார் :
இறையனார்:
நக்கீரனார் :
இறையனார்:
இடி முழக்கம். உச்ச நிலைவரை திடீர் என விம்மிப் பொங்கும் இசை, இருளிலே மின்னல். மேடை இருண்டு வெளிக்கிற பொழுது அதில் நக்கீரனார் மட்டும் அங்கு உள்ளார் என்பது அவர் இரு நொடிகளின்பின் எழுந்து நிற்க முயலும் போது தெரிகிறது. அவர் வியர்வையால் நனைந்திருக்கிறார். உடல் நடுங்குகிறது. குரல் தளர்ந்து
யாருமில்லை.
யாரடா அதனைக் கேட்க f? ஒரு செய்யுள் பண்ணி நேரிலே தருவதற்கும் நெஞ்சுரம் சிறிதும் இன்றி ஊரிலே எவனோ பேதை ஒருவனின் கையில் ஈந்தே கீரனை எதிர்க்கிறாயோ? கீழ்மகன்!
அடக்கும் நாவை.
பேரில்லை, புகழும் இல்லை. பிறர் விதந்துரைக்கத் தக்க சீரில்லை.
வந்து விட்டார்சில்லறைச் செய்யுள் கொண்டு
நீர் இனி நிறுத்தும்.
மாட்டேன். நெருப்பெடுப்பதுபோல் நோக்கி வீரமா காட்டுகின்றாய்?
வெந்து நீர் நாசமாக.
போய்விட்டது.)
நக்கீரனார் :
47
கற்றை வார் சடைசேர் அண்ணல்
கருணையே கருணையாகும்.

Page 30
கொண்ட கொள்கையை விடாமல் கூறிடும் வலுவை
அந்த
வண்டமர் குழலி பங்கன் வழங்கினான்.
(பாண்டியன் மேடையில் வந்து நக்கீரனாரின் தோளிலே கைளைப் போட்டு ஆதரவுடனும் தோழமையுடனும் பேசுகிறான்)
பாண்டியன் : எனினும். நீரும்,
பாவனை என்னும் அந்தப் பாட்டியல் அமிசந் தன்னைத் தேவையே இல்லை என்று செப்பினீர், சரியன்றேனும்ஆக்கியோன் பெயரை வைத்தே ஆக்கத்தின் நயங்கள் பேசும் போக்கற்றோர் போக்குக்கெல்லாம் புதைகுழி தோண்டி விட்டீர். உண்மைக்கே இலக்கியத்தில் உயர்வான இடமுண்டென்னும் எண்ணத்தை நாட்டி விட்டீர். இதனை நான் மெச்சுகின்றேன்.
நக்கீரனாரை அழைத்துக் கொண்டு பாண்டியன் வெளியேறுகின்றான். திரை)
48 முருகையன்

முற்பாட்டு :
இதிபன் :
49
தந்தையின் கூற்றுவன்
பெருமை சார் பழங் கிரேக்கம் பிறப்பித்த நாடகத்தை முருகையன் புதுக்கித் தந்தான் முத்தமிழ் முறைமையாலே. பரதமா முனிவன் சொன்ன பரம்பரை உத்தி சேர்த்துத் -தருகிறோம், ஆடலாக தமிழ்க்கலை விரிந்து வெல்க.
இலேயனின் மைந்தன் இதிபன் என்பவன் தந்தையைக் கொன்று தாயினைப் புணர்வான் என்பதோர் சாபம் இவனுக்கிருந்தது. சாபப் பலனைத் தவிர்க்கக் கருதிக் காட்டிலே குழந்தையைச் சாகவிட்டனர் ஊழ்வினை சூழ்ந்ததா, இல்லையா? நடந்தவை யாவை?
நாடகம் காட்டுமே.
(தீபநாட்டு அரண்மனை முன்றில், மன்னன் இதிபன் வருகிறான். வாயிலெதிரே கூடி வழிபாடு செய்யும் மக்களை நோக்கிக் கூறுகிறான்)
ஆராதனை என்ன? அவலக் குரல்கள் என்ன? கோரக் குமுறல் என்ன? குழப்பங்கள் ஏனப்பா? சொல்லுங்கள் அன்பு, மக்களேஏன் நீங்கள்
D 606T60)LD

Page 31
குழு :
சோர்ந்து துவண்டு நிற்கிறீர்? சொல்லுங்கள் . .XXOO
தோத்திரங்கள் சொல்லித் தூபங்கள் ஏந்துகிறீர். பூக்கள் கிளைகள் தாங்கிப் பூசனை செய்து நின்றீர். ஏக்கத்தின் ஏது என்ன? ஏன் இந்தச் சீர் குலைவு? காக்கும் கடமை உள்ளேன். கடவுட் குருவே சொல்லும் சொல்லுங்கள் அன்பு மக்களே
ஏன் நீங்கள்
சோர்ந்து துவண்டு நிற்கிறீர்? சொல்லுவீர், மதக்குருக்களே
இந்தச்
சோகத்தின் ஏது யாவதோ?
வேந்தரே, எங்கள் வேண்டுதல் கேட்பீர். மாந்தர் அனைவரும் வழிபட வந்தனர். கிழவிகள், கிழவர், குழவிகள், குமரர் கூட்டங் கூட்டமாய்க் குவிந்துள்ளார்கள். இங்கு மட்டுமா?
சந்தை, சதுக்கம் சத்திரம், சாவடி, பத்துத் திக்கிலும். நாடு முழுவதும் நலிந்துபோய் விட்டது. எங்கும் மரணம் - இழவுகள், அழிவுகள். பஞ்சம், கொடுநோய், பட்டினிச் சாவு. தஞ்சம் வேறில்லை.
தயவு செய்தருள்க. முன்னொரு சமயம், முதிய இந்நகரின் கொடிய பயங்கரக் கொட்டம் அடக்கி எங்களைக் காத்தீர், இனிய வேந்தரே. இன்றும் எங்கள் இன்னலை நீக்குவீர். இரங்கி நாம் கேட்கிறோம்
முருகையன்

இதிபன் :
(Ֆ(Ա) :
இதிபன் :
51
இன்னலை நீக்குவீர்.
துயர் கேட்டு வருந்துகின்றேன். துவண்டிந்த மக்கள் நொந்து மிக வாட்டம் அடையக் கண்டு வேதனை மிக நான் கொண்டேன். துயில் கெட்டுத் துடிக்கின்றேன் நான். தூதொன்றும் அனுப்பியுள்ளேன். பதில் நோக்கி இருக்கின்றேன் நான்பலாபலன் கிடைக்கும் என்று.
என் இனிய மனையாளின் சோதரனாம் கிறயனை நான் மின்னுசுடர்க் கதிர்த்தேவன் மேவி அமர் கோயிலுக்கு முன் அனுப்பி வைத்துள்ளேன். முது தெய்வ ஆணை மொழி என்ன என நாம் அறிந்தால் எங்களுக்கு நன்மை அன்றோ?
எங்கே அவரைக் காணோம்? கிறயனை ஏன் இன்னும் மீளக் காணோம்? எங்கே அவரைக் . .
அங்கே பார் வருகின்றார் அவர் தான் கிறயன் என்பார். சந்தேகம் தேவை இல்லை.
தருவார் இனிய செய்தி.
மங்களக் கோலம் பூண்டு வருகிறார் ஆதலாலே துன்பங்கள் நீங்கும் நல்ல சுபசெய்தி எதிர்ப்பார்க்கின்றோம்.
உண்மை

Page 32
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
(கிறயன் வருகிறான்) அன்புடைக் கிறயனே, அருமைத் தோழரே! சூரிய தேவனின் தூய அருள்மொழி சீரிய முறையிலே செப்பிடல் வேண்டும்.
நல்லதே செய்தி என்பேன்.
-அந்த நன்மையின் இடையிலே வெம்மையும் உள்ளதே நல்லதே செய்தி என்பேன்.
சொல்லுவாய் சீக்கிரம். சுணங்குதல் நீக்குவாய். முற்றிலும் மொழிவாய். முழுவதும் நீ மொழிவாய்.
நல்லதே செய்தி என்பேன் இந்த நன்மையின் இடையிலே வெம்மையும் உள்ளதே நல்லதே . . பொல்லாத களங்கம் ஒன்றாம். போக்கிட வேண்டுமாம். இல்லாது போயினாலோ யாவர்க்கும் பேரழிவாம். அக்களங்கம் பெருகி அடர்ந்து வளருமாம். மக்கள் அனைவரையும் மாய்த்து வருத்துமாம்.
என்ன களங்கம் அதுவாம்? -கிறயா எமக்கு விளங்கவில்லையே! சொன்ன களங்கம் தீர்க்கும் தூய கழுவாய் என்ன?
முருகையன்

கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
என்ன வழியில் நாங்கள் இதற்கு மருந்து காண்போம்? என்ன களங்கம் அதுவாம்?
இரத்தம் சிந்திய இழிந்த பாதகம் கொடுங்கொலை ஒன்று நடந்ததால் விளைந்தது. குருதியின் பொருட்டுக் குருதி சிந்தியோ நாடு கடத்தி ஒட்டி விரட்டியோ களங்கம் இதனைக் களைதல் கூடுமாம்.
இறந்தவன் யாராம்?
இதிபனே, இதோ கேள்இந்நாட்டின் அரசனாக இங்கு நீ வருமுன்பாக மன்னராய் ஆண்டிருந்தார் மாட்சிமை மிக்க லேயன். லேயனோ கொல்லப்பட்டார். எவர் கொன்றார் என்ற உண்மை யாருமே அறிந்தாரில்லைஇதுவரை காலமாக குற்றம் யார் செய்தார் என்று குறைவின்றித் தேடிக்கண்டு கொற்றவன் தண்டித்தால் தான் கொடும்பழிச் சாபம் தீரும்.
எப்படித் தேடிக் காண்பேன்?
ஈசனே தேடச் சொன்னான். முற்பட்ட பழி தீராமல் மூண்டுள்ள துயர் ஓயாது.
வீட்டிலோ, களத்திலோ, வெளியிலோ
உன்மை

Page 33
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
அயலார் நாட்டிலோ லேயன் படுகொலைப் பட்டான்?
யாத்திரைக்கென்று நாட்டை விட்டேகினான். லேயன் பின்னர் மறுபடி மீண்டிலன்.
வார்த்தை, செய்தி, அவன் செயல் பற்றிய வாய்மை ஒன்றுமே எட்டவில்லையோ?
அரசரைத் தொடர்ந்து போன யாருமே மிஞ்சவில்லை. ஒருவன் தான் தப்பினானாம். அவன் இன்று நாட்டில் இல்லை.
தப்பிய ஒருவன் ஏதும் தகவலைத் தந்ததுண்டோ?
அப்பயல் சொன்னதொன்றே அரசனின் கூட்டத்தாரை வழிப்பறிக் கொள்ளைக்காரர் மடக்கியே பிடித்துக் கொன்றார். முழுப்பழி
கொள்ளைக் கூட்ட முரடரைச் சேர்ந்ததென்றான்.
யாரும் பகைவன் ஏவி விட்டதால் இந்தப் படுகொலை இப்படி நடந்ததோ?
இருக்கலாம், இருக்கலாம் யார்தான் அறிவார்? இதுவரை இந்தப் படுகொலை மர்மம் தீர்க்கப் படாத சிக்கலாய் உள்ளது.
(p(b6035uj65T

இதிபன் :
கிறயன் :
இதிபன் :
இதனைத் தீர்க்க இதுவரை யாரும் எத்தனம் ஏதும் எடுக்கவில்லையா?
புரியாப் புதிர்களிற் புத்தியை விடாமல் உரிய அலுவலில் உடன் மனம் செலுத்தினோம். உண்மை இருட்டில் உறங்கிக் கிடந்தது.
உறங்கிக் கிடக்கும் உண்மையைக் காண்பேன். களங்கம் துடைப்பேன். காப்பேன், மக்களை.
களங்கத்தை நான் துடைப்பேன். தெய்வம் கடுஞ்சினம் கொண்டிடக் காலாய் இருந்த அந்தக் களங்கத்தை நான் . .
ஒழுங்கைக் கெடுத்த கொலை ஊனம் விளைத்த கொலைக் களங்கத்தை நான் . .
பளிங்குபோல் நான் இருப்பேன் பாவக் கறை ஒழிப்பேன் தளம்பலை நான் தவிர்ப்பேன் தலைமையை நான் வகிப்பேன் களங்கத்தை நான் . .
நீதியை நாட்டுவேன் நிம்மதி கூட்டுவேன் சூதினை ஒட்டுவேன் சுருதிகள் மீட்டுவேன் தீவினை நீக்குவேன் செந்நெறி காட்டுவேன் வாழ்வினை வாட்டிடும்
உண்மை

Page 34
(35(5 :
(5( :
வஞ்சனை போக்குவேன்
களங்கத்தை நான் . .
மன்னவர் நீங்கள் கேட்ட வரமெலாம் உவந்து தந்தார். சொன்னது கேட்டீர் அன்றோ? துயர்களை விடுக, மக்காள். மின்னிடும் பரிதித் தெய்வம் விடுத்ததோர் செய்தியாலே நன்மைகள் விளையும் என்று நயந்து நாம் வாழ்த்துவோமே.
ஒளி நகரில் கதிர்த்தேவன் செம்பொற்கோயில் ஓங்கி எழும் அருளோசை கேட்டோம், கேட்டோம். தெளிவறியோம், அஞ்சுகிறோம்.
ஏங்கி நின்றோம்.
செவிமடுக்க வேண்டுகிறோம்.
நமது துன்பச் சுழலொழியத் துணைபுரிதல் வேண்டும், அய்யா! தொல்லைகளை நீறாக்கித் தொலைத்தல் வேண்டும். கிளர்ந்தெழும்பும் கருணை முகில் மழை பெய்யட்டும். கேட்ட வரம் கிடைக்கட்டும், தேவதேவா.
அதினாவே, ஆட்டமியே, எம் தெய்வங்காள்!
அழியாத உறுதியுடன் அழைக்கின்றோம் யாம். எதிரிகளாய்ப் பெரும்பிணிகள் கவ்வும் எம்மை. இறப்புகளோ தொடர் நரகாய் விரைந்து நீளும்.
பயிர்களொன்றும் கழனியிலே விளைவதில்லை, பசி, புலம்பல், காட்டுத்தீ, அவலக் கூச்சல், செயலிழந்து தியங்கி நிற்றல் நிறைந்த வாழ்வைச் செப்பனிட்டுத் தருக என இரக்கின்றோம் யாம். எங்கெங்கு பார்த்தாலும் சுடலைச் சாம்பல்;
முருகையன்

இதிபன் :
57
எவை எவற்றைக் கேட்டாலும் வெதும்பல், தேம்பல்; பொங்கி வெம்பிக் குழந்தை அழும் - திக்குத் தோறும். புண்பட்டோர் கூக்குரல் தான் செவியைக் கீறும். வெங்கொடுமைப் பழி பாவச் சாபத்தாலே விடிவில்லாப் பேரிழவில் விழுந்து விட்டோம். தண் கருணை புரிந்தெம்மை உய்யக் கொள்வீர் சாமிகளே, தேவுகளே, தேவிமாரே.
வணங்கினீர், மக்காள்!
நன்று. வருத்தத்தை நீக்குவோம் யாம். துணைவராய் நீங்கள் நிற்பீர். சொல்லுவீர், உண்மை முற்றும்.
பாதகம் செய்திட்ட காதகன் யாவனோ? பயம் வேண்டாம்
சொல்ல வேண்டும். தீதுகள் யாவுமே வேருடன் கொய்வம் யாம். சிறப்புடன் நன்மை காண்போம். லேயனைக் கொன்றதார்?
முன்னாளில் இந்நாட்டு
ராசனும் அவரேயன்றோ? என்னுடைய தந்தைபோல் எண்ணத் தகுந்தவர். ஏத்திடத் தக்க வேந்தர்.
குற்றத்தை ஒப்புக் கொண்டால், கொல்படத் தேவை இல்லை. தப்பலாம் ஒருவாறாக! தாயக நிலத்தை விட்டே அப்புறம் விரட்டுவேன் நான். அதற்குமேல் ஏதும் செய்யேன்.
உண்மை

Page 35
கொன்றவன் வேற்றாள் என்றால் கூறலாம் தயக்கம் இன்றி நன்றியும் தருவோம்.
ஏற்ற நலந்திகழ் பரிசும் ஈவோம்.
அப்படி உண்மை கூற அஞ்சியே மறைத்தீர் என்றால் தப்பவே மாட்டீர்.
சாவீர். தண்டிக்கப் படுவீர், மக்காள்.
எப்படியும் நான் உண்மை தேடிக் காண்பேன். தேடிக் காண்பேன்
உறுதி
நாடிப் பூண்டேன்.
முற்பட நிகழ்ந்த செயல் முற்றும் வெளி வெளியாய் தேடிக் காண்பேன்
ஊறுதி
நாடிப் பூண்டேன் எப்படியும் நான் உண்மை தேடிக் காண்பேன் . .
அப்பரைப் போல் நான் கருதும் அந்தப் பெரியவரை எப்படி எவன் ஒழித்தான்? ஈனன் அவன் பாவி அன்றோ! எப்படியும் நான் உண்மை
முருகையன்

(Ֆ(Ա) :
இதிபன் :
(Ֆ(Ա) :
இதிபன் :
(Šნ(ყ) *
தேடிக் காண்பேன் . . இலேயனைக் கொன்ற ஈனனைப் பிடித்துக் கொலைப்பழி தீர்த்தல் குடிகளின் கடனே இப்பணி தவறினால், இறை பழி சாரும். மனைவிமார் உமக்கு மலடாய்ப் பொய்ப்பர். தெய்வ சாபத் தீமையுள் விழுவீர். என் துணை ஆகி நீர் இயங்குவீர் ஆயின் தெய்வத் திருவருட் சிறப்பினை அடைவீர்.
ஒன்று நாம் கூறுகின்றோம், மன்னர் மன்னா! உண்மையன்றி வெறும் பொய்கள் உரைக்க மாட்டோம். கொன்றவர்கள் நாம் அல்லோம்.
கொலையைச் செய்த கொடியவர் யார் என்பதையும் அறிவோம் அல்லோம். நின்ற பெருந் தெய்வம் ஒன்றே சத்தியத்தை நிச்சயமாய் உணர்ந்துரைக்க வல்லதாகும். அன்றி எம்மால் ஏதுமே ஆகாதய்யா! ஆகையினால் எமைச் சினந்து வெறுக்க வேண்டாம்.
என்ன தான் செய்வோம்?
எந்தத் தெய்வமும் மன்னன் நான் கேட்க மறுமொழி சொல்லுமோ? மனிதனின் ஆணையைத் தெய்வம் மதிக்குமோ?
ஆயினும் ஒரு வழி உள்ளது, வேந்தரே!
என்னதான் அவ்வழி?
எடுத்துக் கூறுக.
தயிரிசியன் என்னுமொரு குருடன் தெய்வ رசக்தியுள்ள சாத்திரியாம். கேட்டுப்பார்த்தால்,
உண்மை

Page 36
இதிபன் :
குழு :
இதிபன் :
(Š(ყ) *
இதிபன் :
குழு :
பயன் மிகவும் கிடைக்குமென எண்ணுகின்றோம். பணிவுடனே பவ்வியமாய் வேண்டுகின்றோம்.
கிறயனுந்தான் அவ்வாறு கூறுகின்றார். கேட்போமே நிமித்திகனை என்று நானும் விரைவில் ஒரு தூதுவனை அனுப்பி வைத்தேன் விளைந்த பயன் ஒன்றில்லை.
என்ன செய்வோம்? இரு தடவை ஆள் போயும் அவனைக் காணோம். ஏன் என்று தெரியவில்லை.
என்ன செய்வோம்?
அது தவிர வதந்தி பல இருந்ததுண்டே!
அப்படியா?
என்ன அவை?
சொல்ல வேண்டும். கதை எது தான் என்றாலும் அவற்றுக்கெல்லாம் காது கொடுத்தாலே தான் உண்மை சிக்கும்.
வழிப்போக்கர் கொலை செயதார் என்று கூறும் வதந்தியொன்று கிளம்பியது மெய்தான், வேந்தே!
பழிப்பேச்சோ, மெய்தானோ?
சாட்சி இல்லை. பச்சை உண்மை எது என்று தெரியவில்லை. தயிரிசியன் சங்கதியை வெளிப்படுத்திச் சரியான நீதியினை உறுதி செய்வான். உயரியவன் வரட்டும் என்று காத்திருப்போம்.
உத்தமனே வருகின்றான். நன்று, நன்று.
முருகையன்

இதிபன் :
தயிரிசியன் :
இதிபன் :
தயிரிசியன் :
61
தயிரிசியனைச் சிறுவனொருவன் கூட்டி வருகின்றான்) முற்றும் உணர்ந்த முதல்வரே, போற்றி. கற்பனை கடந்த கடல், மலை, விண், மண் வாழ்வும் தாழ்வும் மற்றுள யாவும் அறிவுக் கண்ணால் அளந்திடும் பெரியோய்! இறைவர் நீர் எனவே இறைஞ்சினோம்.
அருள்க.
நிமித்திகரே அந்தச் சரித்திரம் மொழிவீர் நேரடியாய் அது கூறிட இசைவீர் நிமித்திகரே அந்த .
ஆரந்தப் படுகொலை ஆற்றினார் என்றும் அச்செயற் பின்னணி எப்படி என்றும் ஊர் நலம் எய்திட உண்மையை ஒதீர். உலகம் சுகம் பெற உற்றவை கூறீர். நிமித்திகரே அந்த .
மறைபொருள் அறிவதால் வருத்தமே வளரும். மறைபொருள் தெரிவியேன். வந்தது பிழையே.
விளம்புக உண்மைகள்.
வீடு திரும்புவேன்.
உண்மை

Page 37
இதிபன் :
தயிரிசியன் :
இதிபன் :
தயிரிசியன் :
இதிபன் :
தயிரிசியன் :
இதிபன் :
தயிரிசியன் :
இதிபன் :
வழங்குக ஆசிகள்.
மாட்டேன், மாட்டேன் எமக்கும் உமக்கும் இவைகளால் துன்பமே விமோசனம் இல்லை. விடுதலை இல்லை.
நிமித்திகரே அந்தச் சரித்திரம் மொழிவீர். நேரடியாய் அது கூறிட இசைவீர்
மறைபொருள் அறிவதால் வருத்தமே வளரும். மறைபொருள் தெரிவியேன்.
மாட்டேன் மாட்டேன்.
கயவனே போக்கிரி! கட்டளை மறுத்தாய். கடுஞ்சினம் மூட்டினாய். கக்கு நீ உண்மையை.
சீற்றத்தால் நன்மை இல்லை. திருத்துவீர் உம்மை நீரே.
சாற்றினாய் பழிச்சொல் இங்கு. தகுதியை மறந்து விட்டாய்.
நடப்பது நடந்தே தீரும். நான் அது சொல்ல வேண்டாம்.
நடப்பவை யாவை? சொல்க.
முருகையன்

தயிரிசியன் :
இதிபன் :
தயிரிசியன் :
இதிபன் :
தயிரிசியன் :
இதிபன் :
தயிரிசியன் :
இதிபன் :
தயிரிசியன் :
நான் அவை அறிதல் வேண்டும். படுகொலை இதற்கு நீயும் பக்கத்தே துணையாய் நின்று கெடுதிகள் செய்து விட்டாய். அதாலே தான் மறைக்கிறாயோ?
வெருட்டி நீர் உண்மை காண விழைகிறீர் போலும்.
நன்று. இருட்டிலே தேட வேண்டாம். இங்குதான் கொலையாள் உள்ளான்.
வீண் கதை பேசுகின்றாய்.
விடுக நும் மமதைப் பேச்சை. ஆணவம் தேவை இல்லை. அக்கொலை புரிந்தீர் நீரே.
மீண்டும் நீ அதனைச் சொல்லு!
மிகக் கொடுங் கொலைஞர் நீரே.
முழுப்பொய்யா!
தப்புவாயோ?
மொழிகளைத் திருத்திக் கொள்வாய்.
பழிக்க நான் முயன்றேன் அல்லேன். பச்சையாய் உண்மை சொன்னேன்.
கிறயனின் தூண்டலாலே கெடுமொழிப் பழிச்சொல் சொன்னாய்.
கிறயன் குறை இலன். நும் பகை நீவிரே.
D 60360LD

Page 38
இதிபன் :
குழு :
தயிரிசியன் :
நெறி கெடு நீசன் இங்கு நிச்சயம் கிறயனே தான். அறிவிலான் என்னை வீழ்த்தி ஆட்சியைப் பறிப்பான் போலும்! அவனுக்கோர் கையாள் ஆகி அரசுக்கும் எதிரி ஆனாய். கயவனே, குருடா, தண்டம் கண்டிப்பாய்க் கிடைக்கும் கண்டாய்.
சினத்தினாற் பண்புச் சீர்மையை மறப்பதோ? நினைப்பவை எவற்றிலும் நியாயம் இல்லையோ?
குருடென்று பழிக்க வேண்டாம் வேந்தே குப்புற வீழ வேண்டாம் திருடன் நான் அல்ல வேந்தே நானோ தெய்வத்தின் பணியாள் ஆவேன். குருடென்று . .
இருள் நீங்க உண்மை தோன்றும் வேந்தே யார் எவர் மைந்தர் என்ற பொருள் தோன்றும் வெளிச்சம் தோன்றும்
வேந்தே பொய் நீங்கி மெய்ம்மை காணும். குருடென்று . .
உம்மை உம் அம்மை அப்பர் வேந்தே ஒருமிக்கச் சபித்துள்ளார்கள்.
(Lp(560)85u 6

இதிபன் :
தயிரிசியன் :
புண்ணியம் இல்லாப் பாவம்
உமது
புதுமணக் கட்டில் ஆகும். தாயையே தாரமாக்கி
வேந்தே
தாழ்விலே நீர் புரண்டீர். தூய்மையின் சிதைவிலே தான் வேந்தே சொர்க்கத்தை அமைத்துக் கொண்டீர். குருடென்று . .
சீ, சீ என்ன தீ மொழி!
பிதற்றல்! உளறல், வெறுமொழி, ஊத்தைச் சுடுசொல். போ, போ, உடனே, போக்கிரிச் சாத்திரி. ஆரென நினைத்து நீ அடாத சொல் பேசினாய்?
தந்தையைக் கொன்றீர் வேந்தே. தாயினை மணந்து கொண்டீர் முந்திய ஈனமொன்றும் முழுவதும் தெரிந்திலீரே நொந்து நீர் கண்ணிழந்து நுழைவிடம் இழந்து நைந்து வெந்துயர்க் கடலில் மூழ்கி வெதும்புவீர் பாவம் பாவம்!
அரசராய் இன்றுள்ளோரே அத்தனை சிறப்பும் நீங்கிக் குருடராய் அலைய நேரும்கொடுவிதிச் சாபத்தாலே. விரைவிலே உண்மை முற்றும் வெளிப்படும்.
அந்த வேளை
உண்மை

Page 39
கிறயன் :
கரையிலா அவலம் மீறும்காசினி குலைந்து போகும்.
யாவரும் வெளியேறுகிறார்கள்)
டெல்ஃவி மலைத் தேவனது திருச்சொல் ஒசை செங்குருதி சிந்து கொலைச் செயலைத் தேடிப் பல் திசையும் பாய்கிறதே!
காலபாசம் பவனத்தைச் சாடி எங்கும் பரந்து சென்று பொல்லென்று நெருப்பாகி மூண்டு பற்றிப் புகை கக்கிக் குகை, குன்று, மேடு, பள்ளம் எவ்விடமும் சூழ்கிறதே!
அய்யோ, அய்யோ! என்னென்ன இனி விளையும்?
ஏது நேரும்?
நிமித்திகன் தன் வாய்மொழியாய்ச் சற்று முன்னே நிகழ்த்தியவை அச்சுறுத்தும் கொடிய செய்தி. எமக்கு முன்னே இருட்டு மலை.
இந்த நாட்டின் எதிர்காலம் பயங்கரத்தின் பிடிக்குள் ஆகும். மிகப் பெரிய பழிப்பினுக்குள் இதிபன் வீழ்ந்தான். மெய், பொய்கள் சற்றேனும் தெளிவாய் இல்லை. அகத்தினிலும் புறத்தினிலும் இரக்கம், துன்பம் அதிர்ச்சி, பயம், திடுக்காட்டம் - அந்தோ, அந்தோ!
(கிறயன் வருகிறான்)
பெருங்குடி மக்காள், கேட்பீர். பெரியதோர் பழியை என்மேல் பொருந்திட வைத்தான் மன்னன், இதிபன் என்றறிகின்றேன் யான்.
முருகையன்

(Š(ყ) :
கிறயன் :
(Ֆ(Ա) :
இதிபன் :
கிறயன் :
வருந்தும் என் இதயம். இந்த
வசைமொழி கேட்ட பின்னும்
இருந்து நான் வாழுவேனோ? எரியும் என் நெஞ்சம், அம்மா.
கொடிய பொய் கேட்டால், கோபம் வராதோ?
நிமித்திகன் என் சொற் கேட்டே நிகழ்த்தினான் பொய்க் கூற்றென்று சுமத்தினான் பழியை, வேந்தன். சொல்லுங்கள் - உண்மை தானே?
எமக்கொன்றும் விளங்கவில்லை. ஏன் அது மொழிந்தார் என்றும் மதிப்பிட இயலவில்லை.
மன்னரே வந்துவிட்டார்.
இதிபன் வருகிறான்)
ஏனிங்கு வந்தாய், அய்யா? கிறயா என் குடி கெடுக்கத் தானோ? ஏன் இங்கு . .
ஈனன் என்றென்னைப் பேசி இழிவுகள் செய்த நீயே கோன் என்று முடியும் சூடிக் கொள்ளவோ சூழ்ச்சி செய்தாய்? ஏன் இங்கு . . நினைத்தவாறெல்லாம் பேசி
உண்மை

Page 40
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
நீதியைக் குலைக்க வேண்டாம். உரைக்கும் என் சொல்லைக் கேட்பாய். உண்மையை விளங்கிக் கொள்வாய்.
உண்மை நீ சொல்ல மாட்டாய்உலுத்தன் நீ ஆதலாலே. தண்டனை தவிர்க்க மாட்டேன் தப்ப நீ முடியாதையா.
என்ன நான் தப்புச் செய்தேன்?
எனக்கு நீ புத்தி சொல்லி, கண்ணிலாத் தயிரிசீயன் தனை இங்கு வரச்செய்தாயே!
உண்மை தான்.
அதிலே குற்றம் ஒன்றுமே இல்லை என்பேன்.
இலேயனார் மறைந்த காலம் எத்தனை ஆண்டின் முன்னால்?
பல பல ஆண்டின் முன்னால் .
பழைய இத்தயிரிசீயன் பல பல ஆண்டின் முன்னால் பழி ஏதும் என்னைப் பற்றிப் பகர்ந்ததும் இல்லை அன்றோ? பறைந்ததே இல்லை அன்றோ? இப்பொழுதுன் சொற் கேட்டே இவன் என் மேற் பழி சுமத்த முற்பட்டான் என்னும் உண்மை
மொழியவும் வேண்டுங் கொல்லோ?
முருகையன்

கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
69
அப்படிச் சொல்ல வேண்டாம். அவப்பழி சுமத்த வேண்டாம். சுத்தன் நான்.
தூய நெஞ்சன். சூழ்ச்சிகள் அறியேன், அப்பா! இன்னும் ஒன்றுரைப்பேன், கேளாய். என்னுடன் பிறந்தாள் தானே, உன் கரம் பிடித்த நங்கை?
ஓம். அது முழுதும் மெய்தான்.
உரிமையும் மதிப்பும் கொண்ட உயர் நிலை உடைய தேவி .
அரசியாய் அமர்ந்திருக்கும் அரியதோர் பேறு பெற்றாள்.
அப்படி அவள் இருக்க, அடுத்ததாய் அதிகாரத்தின் கைப்பிடி உடையேன் நானே! கவுரவம், மதிப்பு, மாட்சி பற்பல உடையேன் நானே
பாதகச் சிகரத்துள்ளாய்.
இப்படிக் கொடிய சொல்லால் என்னை நீ இகழ வேண்டாம்.
எனக்கிது போதுமையா
-இதிபா இதைவிட உயர் நிலை எதனையும் வேண்டேன் எனக்கிது . .
sd 6560)LD

Page 41
7Ό
அடக்கமே எனது வேட்கை அது ஒன்றே சிறந்த வாழ்க்கை கெடுப்பதென் குறிக்கோள் அல்ல. கேவலப் படுத்த மாட்டேன். .م.م. م.-.... 5Jقا6T60T#f
பொன், பொருள், போகம் போதும். போற்றுதல் புகழ்ச்சி போதும் இன்பமும் சுகமும் போதும் எனக்கொன்றும் பொறாமை இல்லை. موسمه ممممممم. لكن 6 61607 என் கருத்திது தான். யாவரும் அறிக. வன் செயல் விரும்பேன். வம்புகள் தொடங்கேன்.
தீர விசாரிக்கலாம்எதனையும் நீர் தேர்ந்து தெளிவாக்கலாம் தீர விசாரிக்கலாம் . .
சூரிய தேவனின் கோயிலில் உண்மை பொய் குதுகள் பற்றிய வாய்மை தெளியலாம். நேரடியாகவே யாவும் அறியலாம். நீதி வழங்கலாம் ஞாயம் விளங்கலாம். தீர விசாரிக்கலாம் . .
நிமித்திகனோடு நான் சூழ்ச்சி செய்தேனோ? நேர்மை நெறி நிலை நீங்கிவிட்டேனோ? எவற்றையும் நீங்களே தேர்ந்து தெளியலாம். என்ன பிழை என்னும் தன்மை அறியலாம். தீர விசாரிக்கலாம் . .
முருகையன்

குழு :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
கலகம் புரிந்திடும் கயவன் நான் அல்லேன். உலகம் பாவியை ஒரு நாள் உணரும்.
நல்ல கருத்துரை.
நாங்கள் யாவரும் உள்ளம் பொருந்தி ஒழுக உகந்தது. அவசர புத்தி அழிவையே கொடுக்கும்.
சூழ்ச்சிகள் விரைவாய் நேர்ந்தால், சுணங்குதல் புத்தி அல்ல. ஆய்வினைத் தொடங்க வேண்டும்.
அழி செயல் எதிர்க்க வேண்டும்.
என்னை நீ நாடு நீக்கும் எண்ணந்தான் கொண்டுள்ளாயோ?
உன்னுயிர் நீக்கல் ஒன்றே உனக்கேற்ற தண்டம் ஆகும்.
என்ன நான் குற்றம் செய்தேன்?
ஏன் இந்த வெறும் வீண் வாதம்?
நன்மைகள் அன்றித் தீமை நான் ஒன்றும் புரிந்தேன் இல்லை.
ஈடிலாக் கயவன் நீய்ே!
என்னை நீ இகழ வேண்டாம்.
ஆட்சி நான் நடத்த வேண்டும்.
அறத்தினைக் கொல்லும் ஆட்சி.
உண்மை

Page 42
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
குழு :
யோகதா :
கிறயன் :
இதிபன் :
72
சூழ்ச்சியைத் தொலைக்கும் ஆட்சி.
தூய்மையைக் கெடுக்கும் ஆட்சி.
இவன் பழி பொறுப்பதோ, இனிய தாய் நாடே!
தீபத் தாயகம் உனக்கே உரியதா? எனக்கும் உரியதே, இனிய என் நகரம்.
போதுமே, உங்கள் மோதலும் முழக்கமும் எங்கள் இராணி யோகதா வந்துளார். உங்கள் பிணக்கினை நன்கு தீர்த்திடத் துணையாய் அமைவார்.
சூடு தணிவீர்.
யோகதா வருகிறாள்)
பிணங்கி நிற்கும் காரணம் பேசுவீர்கள், ஐயன் மீர்! இணங்கல் நல்லதல்லவோ? என்ன, வெட்கம் இல்லையோ? குணங்கடந்து வீணிலே கோபங் கொள்ளல் நல்லதோ? இணங்குவீர்கள், ஐயன்மீர். எதுவும் தீமை இல்லையே.
தீமைகள் உண்டு, தங்காய் என்னைத் தீயவன் என்று சொன்னான். ஆவியை எடுப்பேன் என்றான். இதிபன் அடாத சொல் பேசி விட்டான். தீமைகள் உண்டு . .
பிழை புரிந்தவன் கிறயனே
முருகையன்

யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
73
பிசகு வந்தது கிறயனால், அழிவு செய்தவன் - சதி புரிந்தவன் அண்ணனாகிய கிறயனே.
உன்
அண்ணனாகிய கிறயனே.
உன்
அண்ணனாகிய கிறயனே.
என்ன குற்றம்? எப்படிச் செய்தார்?
இலேயனை இந்தக் கிறயனே கொன்றதாய் அவப்பழி சாட்டினான், அரசன் இதிபன்.
தானே அறிந்து சாட்டிய பழியோ? கேள்விச் செவியாற் கிடைத்த தகவலோ?
சாத்திரி ஒருவனைத் தன் கைக்கருவியாய்க் கோத்த பொய்ச் சூத்திரக் கொடுமைக் கூற்று.
வீண் துயர் கொள்ள வேண்டாம். உண்மை வெளிப்படுத்திடும் ஒரு தனிப்பெருஞ் சாத்திரம் காண்பது கடினம் என்பேன்
நானே கண்ட அநுபவம் கொண்டிது சொல்கிறேன். வீண்துயர் கொள்ள . . இலேயனும் நானும் கூடி ஈன்றதோர் மகவினாலே இலேயனின் இறப்பு நேரும் என்பதோர் தெய்வ வாக்கு. சூரிய தேவன், முன்னர்
2-6060D

Page 43
இதிபன் :
யோகதா :
74
சொல்லிய தெய்வ வாக்குநேர்வதை முன்பே கண்டு நிகழ்த்திய பழைய வாக்கு.
ஆயினும் நடந்ததென்ன? அடாவடிக் கொள்ளைக் கூட்டம் வீதிகள் மூன்று கூடும் சந்தியில் வேந்தர் தம்மைச் சாய்வுறத் தொலைத்த தன்மை சகலரும் அறிவார் அன்றோ? வாய்மையே உரைக்கும் தெய்வ மறைமொழி உலகில் இல்லை.
தந்தையை மைந்தன் கொல்லும் தன்மையைத் தடுக்க எண்ணி அந்த மைந்தன் பிறந்து மூன்று நாட் கழியுமுன்னால், நொந்திடக் குதிகாலூடு நுழைத்தனம் ஆணி ஒன்றை பின்பதைக் காட்டில் விட்டோம்
பிரியட்டும் ஆவி என்று.
மறைமொழி மெய்ம்மை ஆகும் மாட்சிமை இதுதான் கண்டீர். மறை மொழி நம்பி வீணே மனங்களை வருத்த வேண்டாம்.
அன்புடையாளே, அருமை யோகதா, உன்மொழி கேட்டபின் என்மனம் வேகுதே!
ஏன் துயர், துணுக்கம்? எதற்கு வீண் திகில்? ஆண்டகை வேந்தரே, ஆறுதல் கொள்ளுவீர்.
முருகையன்

இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
75
முச்சந்தியிலா, கொற்றவன் மடிந்தான்? எப்பொழுதம்மா, இச்செயல் நடந்தது?
இங்கு நீர் வந்து மன்னர் ஆகுமுன் . கொஞ்ச நாள் முந்தி - சந்தியில் நடந்தது,
தெய்வமே, தெய்வமே!
கொள்வதேன், பெருந்துயர்?
சொல்ல நான் துணியேன். தெய்வமே, தெய்வமே! இலேய மன்னவர் எப்படி இருப்பார்? இறக்கும் சமயம் எத்தனை வயது?
உங்களைப் போலவே உருவம் உள்ளவர். நரை மயிர் இருந்தது.
நல்ல உயரம்.
நானே கொலைஞனோ?
நடந்தவை யாவையோ?
நிமித்திகன் சொன்னவை நிஜமாய் இருக்குமோ?
அஞ்சுமென் நெஞ்சம், அஞ்சுமென் நெஞ்சம்!
இலேயனுடனே யார் யார் சென்றனர்?
சென்றவர் ஐவர்.
தூதர் முன் சென்றனர். ஒன்றே தேர் - அதில் இலேயன் போயினார்.
உண்மை

Page 44
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
76
இந்தச் செய்திகள் எப்படி அறிந்தனை?
தப்பி மீண்டதோர் ஏவலன் கூறினான்.
எங்கே அந்த ஏவலன், யோகதா?
இங்கே, இல்லை, எங்கோ போயினான். திரும்பி வந்த சிற்றாள் - ஏவலன் தலைவன் கட்டிலில் தங்களைக் கண்டான். நகரில் இருந்து மிகவும் தொலைவிலே நாட்டுப் புறத்திலே ஆட்டுடன் அலைகிறான். ஆயனாய் வாழ்ந்திட ஆசைப்பட்டான். அதற்கு நான் இசைந்தேன். அனுமதி வழங்கினேன்.
அவனை நான் உடனே காணுதல் வேண்டும். கண்டு சில பல கதைத்திடல் வேண்டும்.
காணலாம், கதைக்கலாம்.
அதற்குமுன் ஒரு வினா எதற்காய் இத்தனை பதைப்பும் பயமும்?
சொல்லுவேன் எல்லாம், சொல்லுவேன் எல்லாம். கொறிந்து நாட்டரசரான பொலிவனின் மகன் நான் என்றும் பரிந்தெனைப் பயந்த அன்னை மெரோபிப்பேர் அரசி என்றும்இப்படித் தருக்கி வாழ்ந்தேன், எதுவித முறையும் இன்றி. அப்படி இருந்த வேளை . . அடாததோர் செய்தி கேட்டேன். பொலிவனின் மகன் நீ அல்ல;
முருகையன்

போ, என்றோர் பேதை சொன்னான். குலைவுறு மதியினாலே குடிவெறிக்காரன் சொன்னான். சரி, பிழை, உண்மை பொய்கள் தந்தை தாயிடம் நான் கேட்டேன். எரிவினால் மழுப்பி விட்டார். என் மனம் ஆறவில்லை. கதிர்த்தெய்வம் தனை நான் வேண்ட, களங்கங்கள் கலந்த வாக்குப் பதிற்சொல்லை விடையாய்ப் பெற்றேன். பதைத்ததென் உள்ளம் அம்மா! தந்தையைக் கொல்வேன் என்றும் தாயை நான் மணப்பேன் என்றும் சிந்தைக்கும் தகாத தீய செய்தியை விடையாய்ப் பெற்றேன். உரையினைக் கேட்ட நானோ உளம் மிக நொந்து, வெந்து கொறிந்தினை விட்டு நீங்கிக் குடும்பத்தைத் துறந்து சென்றேன்.
வீட்டினை விட்டு நீங்கி வெளிவந்த அந்த வேளை காட்டுக்கும் அயலாய்ச் செல்லும் கடுமலைச் சாரல் சேர்ந்தேன்.
முச்சந்தி அருகில் அங்கே முன்பு நீ சொன்னவாறே அப்பெருந் தலைவன் வந்தான், அணி நெடுந் தேரின் மீதே,
தூதர்கள் முன்னே சென்றார்; தொடர்ந்து காப்பாளர் சென்றார்;
S-6T60)LD

Page 45
78.
வீதியை மறைக்க வேண்டாம், விலகென்று வேந்தன் சொன்னான்.
எற்றினான் ஒருவன் என்னை. எடுத்து நான் படைக்கலத்தை முற்றிய சீற்றத்தோடும் முடுக்கினேன்; பொருது நின்றேன்.
தேரோட்டி சூலமொன்றைச் செலுத்தினான்; கலங்கி விட்டேன். ஒரீட்டி பற்றி வீசி ஒச்சினேன் சினந்து மூசி.
தலைமகன் தேரால் வீழ்ந்தான்; சாவினைத் தழுவிக் கொண்டான்; அனைவரும் என் கையாலே அழிந்தனர், ஒழிந்து போனார்.
இலேயனின் குருதி தானே இப்படிச் சிந்திற்றென்றால், கொலைஞன் நான், இழிந்த பாவி, கொடு நெடும் பதகன் நானே.
மன்னனைக் கொன்ற நானே மனைவியைப் பற்றிக் கொண்டேன். என்னரும் பிதாவைக் கொல்ல எனக்கொரு விதி உண்டாமே!
பொலிவனைக் கொல்லுவேனோ? புன்மையும் புலையும் சூழும் தலை விதி விதித்த தெய்வம் தகுதிகள் உணர்ந்திடாதோ?
முருகையன்

(35( :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
79
வாழ்ந்தென்ன பயன் நான் கண்டேன்? மாய்தலே பொருத்தமாகும். வேந்தனோ நானும்?
அய்யோ!
வீணனே, ஈனனே யான்.
அய்யனே, வெய்ய வார்த்தை அறைவது முறைமையாமோ? மெய்யினைச் சான்று கொண்டு விசாரித்துத் தெளிதல் வேண்டும்.
ஆயன் வரட்டும். அது வரை பொறுப்போம்.
ஆயன் வருவதால் ஆம் பயன் என்ன?
இலேயனைக் கள்வர் கொன்றார் என்றவன் இயம்பியுள்ளான்.
கொலைஞர்கள் கள்வர் ஆயின் கொலைப்பழி எனைச் சூழாது.
ஆயனை நேரிற் கேட்டே அதனை நாம் உறுதி செய்வோம்.
தீயவை புரிந்த பேர்க்குச் சிறிதுமோர் அமைதி உண்டோ?
தெய்வத்தின் குறிச்சொல் மெய்ம்மை செறிந்ததாய் இருந்ததென்றால், என் மகன் கையால் அன்றோ, என் பதி இறந்திருப்பார்? ஆகையால், தெய்வச் சொல்லை அறிவினால் ஏற்றுக் கொள்ளேன்.
ஆயனை வருவிப்பாய் நீ.
-6x60)LD

Page 46
யோகதா :
குழு :
யோகதா :
அது செய்வேன், வருக உள்ளே.
(யாவரும் வெளியேறுகிறார்கள்.)
தெய்வத்தின் திருமொழிகள் சிரமேற்கொண்டு சிரத்தையுடன் வாழ்கின்றோம்; செருக்கற்றோர் யாம். கர்வத்தை முன்னெடுக்கும் கயவர் வீழ்வர். கடவுள் வழி மீறிடுவோர் இடிந்து சாய்வர். செவ்வியதாம் நேர்மை நெறி உய்தி சேர்க்கும். சிறுமையிலா அறமுறைகள் நம்மைக் காக்கும். நைவகற்றிக் காத்தருள்க, கதிர்ப்பொன், தேவா! நாடு முற்றும் உன் முறைமை நம்பி ஏற்கும்.
இன்னமும் நீ உள்ளாயோ, கதிர்ப்பொன் தேவா? இருப்பது மெய் ஆமாகில், உலகை நோக்கி முன்னுரைக்கும் திருவாக்குக் குறிசொற் பேச்சு முழுமையாய்ப் பழித்திடுதல் வேண்டும், அய்யா! சொன்னவற்றின் உட்குறிப்பை விளங்க மாட்டோம். சொற்பொருளின் சிக்கெடுக்கத் திணறுகின்றோம். அன்னதொரு நிலைமையினால், தெய்விகத்தின் ஆற்றலில் நம் விசுவாசம் அழியும் அன்றோ?
(மாலை சூட்டிய கிளை ஒன்றும் நறுமணப் புகையும் ஏந்தியவாறு யோகதா அரண்மனையிலிருந்து வருகிறாள்)
தேற்றும் வகை தெரியேன்
ஆற்றல் எதுவும் இலேன்.
ஆற்றும் வழி அறியேன்
அந்தோ, கதி உணரேன்
ܘܘܘܘܘܘ ܘܘܘܘܘ، ܗ̄J60oܗ ܣܳܠܐ6500
முருகையன்

தூதன் :
(Š(ყ) :
தூதன் :
யோகதா :
81
சோர்ந்து வருந்துகிறார் சோகம் பொருந்துகிறார் நேர்ந்த கொடிய பழி நெஞ்சம் குடைவதனால் சேர்ந்த கனவுகளும் தேய்க்கும் நினைவுகளும் சார்ந்து கரைந்து நின்றார் தாழ்ந்து குழைந்து நொந்தார்.
தேற்றும் வகை . .
அஞ்சி நடுங்குகிறார் அறிவு தடம் புரள கெஞ்சி இரங்குகிறார் கீழே விழுந்துலைந்தார் முன் செய்த தீவினையில் மூச்சுத் திணறுகிறார் என்செய்வேன், தேவதேவா? தஞ்சம் அடைந்தேனய்யா
தேற்றும் வகை . . (கொறிந்து நாட்டிலிருந்து தூதுவன் வருகிறான்)
இதிப மன்னவர் அரண்மனை எதுவோ?
இதுதான் அரண்மனை. என்ன உன் அலுவல்? அரசியார் அவர் தான்.
கொறிந்து நாட்டில் இருந்து நான் வருகிறேன். செய்தி ஒன்றுண்டு.
செப்புக உடனே.
SD-60i,60)LC

Page 47
தூதன் :
யோகதா :
தூதன் :
யோகதா :
இதிபன் :
தூதன் :
இதிபன் :
தூதன் :
இதிபன் :
இன்பமும் துன்பமும் இசைந்தவோர் செய்தி எங்கள் நாட்டின் வேந்தராய் இதிபரை ஆக்குதல் கொறிந்து மக்களின் ஆசையாம்.
என்ன? பொலிவனார் எங்கே போயினார்?
பொலிவனார் இறந்தார் - போயே போயினார்.
(பணிப்பெண்ணுக்கு) செய்தி இதனைத் தெரிவி, மன்னர் பால். (பணிப்பெண் வெளியேற)
என்னே வியப்புகள், எத்தனை விந்தைகள்! இதிபரின் கையால் இறந்திடாப் பொலிவனார் இயல்பாய் நோயினால் இறந்து போயினார். தெய்வமாவது, திருமொழியாவது! இதிபன் வருகிறான்.)
என்ன செய்தி, யாவரின் தூதுவன்?
கொறிந்து நாட்டில் இருந்து நான் வந்தேன். மன்னர் பொலிவனார் மறைந்துபோய் விட்டார்.
எப்படி மறைந்தார்? எல்லாம் சொல்லுக.
மூத்தவர், பாவம் மூண்டதோர் சிறுபிணி. இயற்கை வழியில் இறந்து போயினார்.
பார்த்தியோ தேவி நீ!
முருகையன்

யோகதா :
இதிபன் :
யோகதா :
இதிபன் :
பரிதியர் தேவனின் வாக்கியம் பொய்த்ததே! மற்று நான் பொலிவரின் கூற்றெனும் நிலைமை, கை கூடுதல் முடியுமோ? ஆற்றல் சால் நோயினால் அப்பனார் போயினார்.
பிரிவெனும் துயரினால் பெரியவர் போயினார். ஒரு விதம் நோக்கினால் உண்மையில் நான் அவர் மரண காரகன் எனும் வார்த்தையும் வாய்மையே. பெருமிடர் இங்ங்ணம் பேதகப் பட்டதோ?
பயமினி இல்லை, பழையவை நினையேல்.
எனினும் ஓர் அச்சம் என்னைக் குடைவதே.
அச்சமா?
அச்சமேன்? தற்செயல் சீவியம். எச்செயல் நேருமோ, யாவரே அறிகுவார்? நற்செயல் புரிவமேல் நன்மையே விளைவதாம். பற்பல நினைவதேன்? பயமினி இல்லையே.
தாயை நான் மணப்பேன் என்றோர் சாத்திரம் உண்டு கண்டீர்.
உண்மை

Page 48
யோகதா :
இதிபன் :
தூதன் :
இதிபன் :
தூதன் :
இதிபன் :
தூதன் :
இதிபன் :
தூதன் :
தீய அக் குறிச்சொல் எண்ணித் திணறும் என் நெஞ்சம், அய்யோ! நேயமார் தகப்பனாரை நெறி கெட்டுக் கொல்வேன் என்றும் கூரிய கொலை வாள் போன்ற கொடுமொழிச் சாபம் உண்டே.
தந்தையார் நோயால் மாண்டார்
தாய் இன்னும் உள்ளார் அன்றோ?
சிந்தனைக் கூச்சம் வேண்டாம்.
திகைப்புகள், பயங்கள் வேண்டாம்.
எந்தவோர் காரணத்தால் இவற்றை நீ கூறுகின்றாய்?
உண்மையைக் கூறுகின்றேன். உம் தந்தை பொலிவன் அல்ல.
என் தந்தை பொலிவன் அல்ல? என்ன நீ கூறுகின்றாய்?
உம் தந்தை பொலிவன் அல்ல. உமது தாய் மெரோபி அல்ல. அப்படியானால், நான் ஏன் அவர்களால் வளர்க்கப்பட்டேன்.
கற்பனை அல்ல.
உண்மைக்
கதையை நான் கூறுகின்றேன். பற்பல ஆண்டின் முன்னால்,
முருகையன்

இதிபன் :
தூதன் :
இதிபன் :
தூதன் :
பரந்ததோர் காட்டுப் பக்கம் தங்களை நானே கண்டேன், தளிரிளஞ் சிறுவராக. பின்பு நான் பொலிவனார்க்குப் பிரியமாய் உம்மைத் தந்தேன்.
நான் அவர் மைந்தன் இல்லை! நல்கினாய் அவர்பால் என்னை. ஏன் என்னை வளர்த்தார் வேந்தர் இத்தனை செல்லமாக?
பிற பிள்ளை இல்லை. வேந்தர் பிரியமாய் வளர்த்து வந்தார்.
காட்டிலே என்னை எங்கோ கண்டதாய்ச் சொல்கின்றாயே!
ஆட்டினை மேய்க்க என்றே அங்கு நான் போனேன், வேந்தே அங்ங்ணம் போன வேளை அவ்விடம் வேறோர் ஆயன் உங்களை எனக்குத் தந்தான்ஒரு சிறு குழந்தையாக. கால்களைக் குத்திக் கட்டிக் கடுந்துயர் நிலையில் விட்ட நோவினை ஆற்றினேன், நான். நொய்யன நும் கால் அன்றோ! இதிபனாம் பேரும் கூட இடுகுறி ஏதுப் பேர்தான். கதாயுதக் காலன் என்ற கருத்தினைக் கொண்டதாகும்.
உண்மை

Page 49
இதிபன் :
தூதன் :
இதிபன் :
©(ሠ9 ።
இதிபன் :
யோகதா :
இதிபன் :
உன்னிடம் என்னைத் தந்த ஒருவன் யார்? அறிதல் வேண்டும். என்னிடம் அதை நீ சொல்வாய்.
இலேயனின் அடியாள் என்றான்.
இலேயனின் அடியாள் என்றால் . இடையனை அறிந்தோர் யாரும் இங்குளார் கொல்லோ?
சொல்வீர். எனக்கிது தெரிய வேண்டும். யார் அது சொல்ல வல்லார்?
ஏலவே நீங்கள் தேடிய ஆயனே இவனேயாக இருக்கவும் கூடுமே! அரசியார் இதனை அறுதியாய்க் கூறும் வல்லமை உடையார்.
வாழிய மெய்ம்மைகள்.
அரசியே, உண்மையை அறிவித்திடுக. தூதன் கருதும் ஆயன் அவனா?
ஒன்றையும் தேட வேண்டாம் இதற்கு மேல் உண்மையை நாட வேண்டாம். நன்றொன்றும் விளையாதய்யா இதனால் நாசமே நேரும் அய்யா, ܘܘܘܘܘܘ ܘܘܘܘܘ ܩܰܬ݂ܐ̱ܬܬ6020ܐܶܗ̄ܘܼܵ
வீண் கதை வேண்டாம், பெண்ணே.
எனது
முருகையன்

யோகதா :
குழு :
இதிபன் :
(5( :
87
வினையை நீ தடுக்க வேண்டாம். ஆழ்ந்துள்ள மர்மம் காண்பேன்
தேடி அனைத்தும் நான் அறிந்து கொள்வேன். வீண் கதை . .
வேட்டையை வீடுவீர் அய்யா. இனிமேல் விளைவன அனர்த்தம் ஆகும். கேட்டினைத் தவிர்ப்பீர் அய்யா மேலும் கேள்விகள் வேண்டாமையா.
ஒன்றையும் . .
(யோகதா வெளியேறுகிறாள்)
எதிர் வருந்துயர் எண்ணி இராணியார் கதி கலங்கிக் கடிது மறைந்தனர். புதிர் பொதிந்த மறுப்பின் அடியிலே அதிர வைக்கும் அனர்த்தம் இருக்கலாம்.
எத்தனை கயமை, எத்தனை இழிவுகள்! அத்தனை பாவமும் அம்பலம் ஆகுக. பெற்றவர் தமையும், பிறப்பு முறைமையும் அத்தனை மருமமும் அறிந்தே தீருவேன். என் வழி மெய் வழி, எதற்கும் நான் கூசேன். அன்னையும் தந்தையும் ஆர் எனும் உண்மையை ஆராய்ந்தறிவேன், அறியாதோயேன்.
ஒளிபரப்பும் ஞாயிற்றுத் தெய்வமே, உன் உயர் ஆட்சி பெரியதென மதிக்கின்றோம், யாம். தளர்வடைந்தார் நம் இதிப வேந்தர், அய்யா. தந்தை யார், தாய் யாவர் என்ற உண்மை
S 60öT60)LD

Page 50
இதிபன் :
(35( :
இதிபன் :
தூதன் :
இதிபன் :
ஆயன் :
இதிபன் :
தூதன் :
ஆயன் :
3.
தெளிவுறுத்த வேண்டும் அய்யா, தேவ தேவேதிவ்வியமே, உன்னதமே பரமநாதா. பழி கழித்த பெருவாழ்வை விழைகின்றோம், யாம். பார்வையினால் இருள் முழுதும் ஒழித்தல் வேண்டும்.
(தொலைவில் உற்று நோக்கி)
அங்கே, ஒருவனை அரண்மனை அலுவலர் அழைத்து வருகிறார்.
அவனா ஆயன்?
ஆமாம், அவனே அந்த ஆயன்இலேயனின் ஆட்சியில் ஏவலன் ஆயினோன்.
தூதுவர், நீரே சொல்லுக சாட்சி. இந்த ஆயனே, அந்த ஆயனா?
அவனே இவன் தான், இவனே அவன் தான்.
ஆயனே, இதோ பார். அவனைத் தெரியுமா?
யாரவன்? ஏதும் தெரியவில்லையே!
நன்றாய் ஊன்றி நினைவு கூர்ந்து சொல்.
முன்பு நாங்கள் காட்டுப் புறத்திலே ஆடு மேய்த்திருந்தமே, அது நினைவுண்டோ? நீ இரு மந்தையும் நான் ஒரு மந்தையும்மூன்று கால் ஆண்டு முயற்சி செய்திருந்தோம். கொறிந்து நாட்டான் நான்.
இலேயனின் ஆள் நீ.
எப்பவோ முடிந்த காரியம் இவைகள்.
முருகையன்

தூதன் :
ஆயன் :
இதிபன் :
ஆயன் :
இதிபன் :
ஆயன் :
இதிபன் :
ஆயன் :
இதிபன் :
ஆயன் :
இதிபன் :
நல்லது, முன்பு நீ ஓர் ஆண் பிள்ளையைத் தந்து வளர்த்திடச் சாற்றினாய் அல்லவோ?
ஏன் இதை என்னிடம் இங்கு கேட்கிறாய்? எனக்கோ எதுவும் நினைப்பிலே இல்லையே!
மறைக்க நீ முயல்கிறாய், மடையா!
உண்மையைச் சொல்லடா. உதைப்பேன்.
છું, છૂ!
அவனிடம் குழந்தையை அன்று நீ தந்தாய். உண்டோ, இல்லையோ? உள்ளது சொல்லடா.
உண்மை தான். நானே உவனிடம் தந்தேன். அந்த நாள் - உடனே அழிந்தேன் இல்லையே!
நேரம் கடத்த நினைக்கிறாய் போலும். உண்மை முழுவதும் உடனே சொல்லடா. அந்தப் பிள்ளை உன் சொந்தப் பிள்ளையா? இல்லையானால் எவரது பிள்ளை?
கடவுள் ஆணை! காவலர் முதல்வ!
இதற்குமேல் ஒன்றும் இனி நான் சொல்லேன்.
கொல்லுவேன், இடையனே! கூறடா உண்மையை.
S. 60öT60)Ld

Page 51
ஆயன் :
இதிபன் :
ஆயன் :
இதிபன் :
ஆயன் :
இதிபன் :
ஆயன் :
இதிபன் :
ஆயன் :
(Šხ(ყ) :
இலேயனின் வீட்டில் இருந்த மகவது.
அடிமையா, அவர்களே பெற்றதா?
அவர்களே பெற்றதாம், அந்தப் பிள்ளை. உங்கள் அரசியும் உண்மை தெரிந்தவர்.
அவளா குழந்தையை அளித்தவள்?
ஆமாம்.
காரணம்?
கொல்லவே தந்தனர்.
பிள்ளையைக் கொல்லவா?
தந்தையே பிள்ளையாற் சாகுவான் என்றொரு கெடுமொழிச் சாபச் சாத்திரம் தெரிந்ததால் கொன்றிடப் பணித்தனர்.
கொல்ல நான் கூசினேன். இவனிடம் கொடுத்தேன் - எங்கே ஆயினும் கொண்டிவன் தொலைவான் எனுமொரு குறிப்பினால் எடுத்துச் சென்றவன் இன்னுயிர் காத்தான்.
தெய்வமே, யாவுமே தெரிந்தன, தெளிந்தன. ஒளிப்பினி இல்லை, ஒளிச்சுடர்ப் பிழம்பே. பிறப்பிலே பாவி நான், பிணைப்பிலே பாவி நான். சிந்திய குருதியில் செப்பரும் பாவி நான்.
(ஆயனும் தூதனும் வெளியேறுகிறார்கள்)
மானுடவர் வாழ்க்கை வெறும் மாயந்தானோ?
முருகையன்

தூதுவன் :
குழு :
தூதுவன் :
91
மயக்கத்தில் முடியாத சரிதம் உண்டோ? ஊனுடலுக்கிரை தேடி உழன்று மாய்ந்தே உயர் புகழும் பெரு நிதியும் உற்ற பேரும் ஈன நிலை கண்டன்றோ இறுதி காண்பார்! என்ன பயன் இவைகளினால்? எது தான் வெற்றி? மேனிலையை அடைந்துவிட்ட இதிபன் கூட வீழ்ந்தானே தலைகீழாய்!
என்ன நன்மை?
இதிபன் எங்கள் காவலனாய் இருந்தான் அன்றோ? இருண்ட கொடும் இராக்கதரைக் கடலில் ஆழ்த்திப் புதிய ஒளி பரப்பி எமை ஆண்டான் அன்றோ? புல்லியனாய்த் தன் தந்தை கட்டில் ஏறி விதி கடந்து நெறி பிறழ்ந்து
தாயைக் கூடி மிகப்பெரிய படுகுழியில் விழுந்தான், அந்தோ! அதிக துயர் இதனைவிட வேறும் உண்டோ? ஆண்டவனே, தெய்வதமே, அனைத்தும் பாழோ?
(அரண்மனையிலிருந்து தூதுவன் வருகிறான்)
இராணியார் மாண்டு விட்டார். எதை என்று சொல்லுவேன் நான்?
தூதுவா, எல்லாம் சொல்லு.
துயர்க்கதை முழுதும் சொல்லு.
தம்மையே கொன்று விட்டார்யோகதா, தவறுகள் கருதி நொந்து. .ܝܘ... .ܝܘ.. 8uuܣܙ60oܣܳܬ݁ܬܹܐ
D-603T60)LD

Page 52
92
முன்னர் தாம் பெற்ற பிள்ளை முதிர்ந்ததோர் இளைஞன் ஆகிப் பின்னர் தம் கணவன் ஆன பெரும் பிழை நினைந்து கூசி தம்மையே கொன்று விட்டார்யோகதா தம்மையே கொன்று விட்டார்.
குமுறினார். குலைந்து நைந்தார். குளறினார். கண்ணீர் சோர்ந்தார். திமிறினார்.
திணறி ஓடிச் சிந்தனை கொதிக்கலானார். தமது நீள் கூந்தல் பற்றித் தம் கையால் பிய்த்துக் கொண்டார். சுமை இந்த வாழ்க்கை என்று சுடுந்துயர் வெதுப்ப வெந்தார்.
உள்ளறை புகுந்த தேவி யோகதா எது செய்தாரோ? தள்ளினார்.
கதவை உந்திச் சடார் என்று சாத்திக் கொண்டார். உள்ளத்தின் கொந்தளிப்பால் உளைவுற்ற இதிப வேந்தர் துள்ளி முன் வந்து மோதிச் சூழலைக் கலங்கச் செய்தார். வாள் ஒன்று தாரீர் என்றார். வழிவிட்டுப் போங்கள் என்றார்.
பாழ்பட்டுத் தாயைச் சேர்ந்தேன் பாவியேன்” என்று கூவிக்
முருகையன்

கீழ் விழுந்தலறிச் சாய்ந்தார். கிழிக்கிறார் உடையை எல்லாம். ஊழ் விட்ட வழியை எண்ணி உள்ளத்தாற் குமைகின்றாரே.
கதவுகள் உடைத்துச் சென்றார். கடவுளே, யோகதாவோ கயிறுகள் கழுத்திற் சுற்றிக் கட்டியே தூக்குப் போட்டு வதைபட்டுச் செத்துத் தொங்கி மடிந்தமை கண்டு கொண்டார். அரசியின் கொண்டை ஊசி அரசர் போய்ப் பறித்திழுத்தார். இழுத்த அவ்வூசியாலே இதிபர் தம் கண்ணைக் குத்தி முழுக்குருடாகி விட்டார். முகமெல்லாம் குருதிக் கூழின் ஒழுக்கினால் நனைந்து போக உரை தடுமாறி நின்றார்.
இழுக்குகள் கண்ட கண்காள், இருண்டினிப் போங்கள்’ என்றார்.
'கண்களே, நீங்கள் உண்மை காட்டினீர் இல்லையே,
3, புண்களாய்ப் போங்கள்’ என்று புடைத்தனர். மோதிக் கொண்டார்.
நண்பர்கள் அல்ல நீங்கள்; நாசமும், பழியும், சாவும் பண்பற்ற இழிவும் தந்தீர்; பாழ்பட்டுப் போங்கள்’ என்றார்.
உண்மை

Page 53
(5( :
தூதுவன் :
குழு :
இதிபன் :
குழு :
ஆர் இவை ஆற்ற வல்லார்? அவர் நிலை யாது? சொல்க.
கதவுகள் திறப்பீர், என்றார். 'கடும்பழிப் பாவம் தன்னைத் திருநகர் முழுதும் கண்டு திட்டட்டும், என்று சொன்னார். உதவி வேறினிமேல் உண்டோ? ஓ, அங்கே திறந்து கொண்ட கதவுகள் பாரும், பாரும்! காட்சியின் அவலம் பாரும்.
இதிபன் வருகிறான்.)
விதியே விதியே விசரோ, வசையோ? கதிகேடிதை நம் விழி காணுவதோ? வதைபாடுகளும் மதி கேடுகளும் அதிர்மோதுகையும் அடடா, கொடிதே.
எங்கு நான் உள்ளேன்? ஒன்றுமே காணேன். என்ன தான் செய்வேன், அந்தோ? இனிமேல்
என்னதான் . .
ஒன்றுமே தேரேன். ஊழினால் வெந்தேன். உதவி வேறினிமேல் இல்லேன். அந்தோ உதவி வேறினிமேல் இல்லேன்.
பார்வையும் இழந்தார்.
முருகையன்

இதிபன் :
95
பாவம், மன்னர்!
படுந்துயர் நெடுந்துயர். பாவம், மன்னர்!
கால் துளைத்த ஆணியினைக் கழற்றி விட்ட மேலவன் என் காலன் ஆனான். மேலிருக்கும் தெய்வம் என்னை விளையாட்டுப் பொருளாக்கி வித்தை காட்டும். சீல நெறி என் அறிவைக் குருடாக்கி, முரடாக்கித் தீமை செய்யும். ஓலமிடும் கடல் முழுதும் கழுவ இயலாக் களங்கம் ஒன்று பெற்றேன்.
தந்தைக்கும் கூற்றுவன் நான். தாயாரை மணம் புரிந்து தகுதி கெட்டேன். சிந்தைக்கும் அசைபோடக் கூசிடுமோர் கொடும் பாவம் தேடிக் கொண்டேன். பந்துக்கள் இனி எனக்கேன்? UTF6D672
நேசமேன்? பார்வை தான் ஏன்? சிந்தி விட்ட குருதிகளால் அறங்கொன்றேன். ஒழுக்க நெறி தீர்ந்து கெட்டேன். விளைவித்த நிலமென்றே அறியாமல் நானே போய்
D-60GT60LD

Page 54
குழு :
இதிபன் :
விதைத்து விட்டேன். களைவிக்க இயலாத கறை படிந்த காதகனாய்க் காட்சி கெட்டேன். தெளிவற்ற தெய்வமொழிக் கருத்தறிய இயலாது தியங்கிப் பட்டேன். ஒளி கெட்ட பார்வையினேன். ஒரு விதமும் மீட்சி இல்லேன். ஊனம் உற்றேன்.
படுந்துயர் நெடுந்துயர்.
பாவி நான்.
பதகன் நான்.
ஒழிப்பீர் என்னை.
ஒதுக்குவீர் என்னை. ஆழ் கடல் அமிழ்த்துவீர். ஆவி போக்குவீர். இவ்விடம் விட்டெனை எடுத்துச் செல்வீர். கருணை காட்டுவீர், கை இதைப் பற்றுவீர்.
கிறயன் வருகிறார்.
அதோ, அவர் வருகிறார். அவர் இனி அரசர் - ஆட்சி முதல்வர். அவர் சொற்படி இனி அனைத்தும் நடக்கும்.
(கிறயன் வருகிறான். இதிபன் கூசி இரங்குகிறான்.)
எத்தகைய முகத்துடனே அவனைக் காண்பேன்? எவ்வாறு நம்புவான் என்னை அன்னோன்? இத்தனையும் நடந்த பின்னர்,
கிறயன் என்னை
ஏறெடுத்தும் பார்ப்பானோ?
முருகையன்

கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
கிறயன் :
இதிபன் :
97
என்ன செய்வேன்?
ஏளனம் செய்ய மாட்டேன். எதற்கும் நான் உன்னைச் சீறேன். ஊழ் செய்த சதி தான் அய்யா. உள்ளே நீ போக வேண்டும். (பணியாட்களை நோக்கி) கொடும் பழி சூழ்ந்த இந்தக் கொற்றவன் மக்கள் கண்ணிற் படும்படி விடுதல் தீமை. பற்றி நீர் அழைத்துச் செல்வீர்.
மனிதர்கள் யாரும் இல்லா வனாந்தரம் போகுமாறே இனி எனை விடுவீரானால், இதயத்தால் நன்றி சொல்வேன்.
தெய்வத்தின் ஆணை கேட்டே செய்குவேன் எதை என்றாலும்.
உய்தி வேறெனக்கும் உண்டோ? ஒழிதலென் விதியாம், நண்பா இருப்பினும், தெளிவாய்க் கேட்டே என் கடன் முடிப்பேன், அய்யா.
விருப்பத்தின் படியே செய்க. வேந்தன் நீ தானே அன்றோ? மறைந்த உன் சோதரிக்கு மரண நல்லடக்கம் செய்வாய். செறிந்த பேரன்பினோடே சீரிய மதிப்புச் செய்வாய்.
நான் பெற்ற பிள்ளைகள் தான் .
6xõ60)p

Page 55
இதிபன் :
98
நாளைக்கு யாது செய்வார்? ஆண் மக்கள் பிழைத்துக் கொள்வர். பெண்களைக் காப்பாய், தோழா. அவர்களைச் சற்றென் கையால் அணைத்திட விருப்பம் கொண்டேன். தயவுடன் அனுமதிப்பாய். தந்தை நான் வேண்டுகின்றேன்.
இதிபனின் மகள்மாராகிய இசிமினியும் அந்திகனியும் கொண்டு வரப்படுகிறார்கள். இதிபன் அவர்களைத் தழுவிக்கொள்கிறான்)
கிறயனே, நன்றி, அய்யா. கிழவன் நான் நன்றி சொன்னேன். என் மனம் குளிரச் செய்தாய். இறைவன் உன்மீதில் என்றும் இன்னருள் சொரிவான் அப்பா. இரக்கத்தை மறக்க மாட்டேன். (மகள்மாரைக் கிட்ட அழைத்து) குழந்தைகாள் என நான் உம்மைக் கூப்பிட்டுக் கொஞ்சுவேனோ? உடன்பிறப்பென்று சொல்லி உணர்ச்சியைக் காட்டுவேனோ? குழந்தைகாள், வாரீர் இங்கே. கொலை செய்த கை என் கைகள். பொழிந்தருள் சுரந்த என் கண் பொய்த்திடத் தோண்டும் கைகள். இழிந்துங்கள் வாழ்நாள் எல்லாம் இருள்பட்டுக் கரிநாள் ஆகி ஒழிந்திடுமாறு செய்த உலுத்தன் நான் ஆனேன் அன்றோ! என் செயல் விளைவால்
நீங்கள்
எத்தனை பழிக்குள்ளானீர்! மன்றல் கொள் பருவ நாளில்
முருகையன்

வருத்துமே, பழிகள் எல்லாம்!
(கிறயனை நோக்கி) என் தவ மகளிர் தம்பால் இன்னல்கள் சூழா வண்ணம் அன்பனே, கிறயனே, நீ அவர்களைக் காத்தல் வேண்டும்.
(கிறயன் இதிபனின் கைகளைப் பற்றிச் சம்மதம் தெரிவிக்கிறான்)
கிறயன் : போதும் மொழிகள்.
போங்கள் உள்ளே.
இதிபன் மகள்மாரை அணைத்தவாறு அரண்மனை நோக்கிச் செல்ல முற்படுகிறான். கிறயன் மகள் மாரிடமிருந்து பிரித்து அப்பறப்படுத்துகிறான். தன் அதிகாரங்கள் அற்றுப்போய் விட்டமை இதிபனின் உள்ளத்தில் உறைக்கிறது. அவன் குரலிலும் செயலிலும் இந்த ஆற்றாமை தெரிகிறது)
கிறயன் : மகளிரை விடுக.
நீ தனியே போகலாம்.
இதிபன் : என்னிடம் இருந்தென் மக்களைப் பிரித்தல் நல்லதல்லவே, நல்லதல்லவே
கிறயன் : நடக்கலாம் உள்ளே.
நான் தான் மன்னவன். முன்னை நாள் வேந்தே, முடிந்ததுன் ஆட்சி.
இதிபன் இட்டுச் செல்லப்படுகிறான்)
(Ֆ(Ա) : மாந்திரிகம் தெரிந்தவர் தான் இதிப மன்னர். வலுவுடனே மாட்சிமையும் புகழும் வாய்ந்த
99 SD L60öT605JLD

Page 56
100
வேந்தர் அவர்,
என்றாலும் அன்னார் கண்ட வீழ்ச்சியினை அளவிட்டு விளக்கலாமோ? காந்தியுடன் திகழ்ந்த அவர் சூறைக் காற்றில் கடல் நடுவே தத்தளிக்கும் துரும்பு போலே சோர்ந்துலைந்து துவண்டாரே! மனித வாழ்க்கை தோற்றரவாய் உடனொழியும் மாயை தானோ?
திரை.)
முருகையன்

இரு துயரங்கள்
மேடைத் திரை விலகுமுன்னர் மண்டபத்து ஒளி மங்கத் தொடங்குகிறது. அரை மங்கலில் இசைக்குழு இந்த நாடகத்துக்கான இசையை வாசிக்கத் தொடங்குகிறது. தொடக்கத்தில் இசை வேகமாக ஆரம்பித்து, சடுதியாக சோக இசையாக மாறுகிறது. சோக இசையை மீட்டத் தொடங்கும் போது மண்டபத்து ஒளி மங்கி மறைகிறது. திரை மெல்ல விலகுகிறது. மேடையிலே, சற்று மங்கிய ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது. மேடையின் இடது பாதையில், கீழ்மேடை இடம் பிற்பகுதியை அண்டி, சோஃவா செற்றிகள், பூச்சாடியோடு கூடிய நீள மேசை என்பன உள்ளன. நடுமேடை இடம் பின் மூலையடியில், நிறுத்தியோடு கூடிய மின் விளக்கும், அதனை அண்டி மேல் மேடை இடத்தில், புத்தகங்களோடு கூடிய புத்தக இறாக்கையும் அதன்மேல் அலங்கோலமாகக் கிடக்கும் அலங்காரப் பொருள்களும் இரண்டு மூன்று பெரிய புத்தகங்களும் உள்ளன. மேல் மேடை வலத்தை அண்டி ஒரு கட்டில். அதன் தலைமாட்டில், குத்துவிளக்கோடு கூடிய சிறிய மேசையும், பின் புறத்துள்ள யன்னலை அண்டி, சற்று உயரமான மேசையும், அதன்மேல் மருந்துப் போத்தில் வகையறாக்களும், திறந்தபடியுள்ள ஒரு தடித்த புத்தகமும் காணப்படுகின்றன. நடிகர்கள் மேடைக்குட் பிரவேசிப்பதற்கு, கீழ்மேடை இடத்தின் பக்கச் சுவரிற் கதவொன்றும், நடுமேடை வலத்தின் பக்கச் சுவரில் இன்னுமொரு கதவும் உள்ளன.
இது இளைப்பாறிய டொக்ற்றடு) கந்தப்புவின் இருக்கை அறையும் படுக்கை அறையும் சேர்ந்த பகுதியாகும். இவற்றின் பிரிப்பைக் காட்டுவதற்கு நடுமேடை மத்தியில், நிலை கதவைக் குறிக்கும் ஒரு சட்டப்படல் வைக்கப்படலாம். இவ்விரு பகுதிகளும் அவையோருக்கு நன்கு தெரிகின்றன. மேல்மேடை வலத்தை அண்டிய கட்டிலிலே கந்தப்புவினது குழந்தையின் பிணம் வைத்து மூடப்பட்டுள்ளது. கந்தப்பு நரை விழுந்த கிழவர். கட்டிலருகில், முழந்தாளில் குனிந்து நின்று முனகி முனகி விம்மிக்கொண்டிருக்கிறாள், கந்தப்புவின் மனைவி. அவளும் வயது போனவள் தான். மருந்துப் போத்தில் வகையறாக்கள் உள்ள மேசையில் கைகளை ஊன்றியபடி, பக்கவாட்டாக யன்னலினூடாக வெறித்துப் பார்த்தபடி நிற்கிறார் டொக்ற்ற(ர்). நெறியாளர்
101 1, உண்மை)

Page 57
மேடையில் வந்து அவரது அறிமுகத்தை முடித்துப் போகும்வரை இருவரும் சோகச் சிலையாக நிற்கிறார்கள். இசை சோகமழை பொழிகிறது. நெறியாளர் பேசத் தொடங்கியதும் இசை மெல்லத் தேய்ந்து, அவர் சென்றதும் கூடி, பின் வசனங்களுக்கு இடங்கொடுக்கும் வகையிலே தேய்ந்து மறைகிறது.
நெறியாளர் :(மேடையில் உள்ள பொருள்கள், நடிகர்களைத் கவனித்தப்படி கீழ் மேடைக்கு வந்து) இரு துயரங்கள். இந்த நாடகத்தினு டைய மூலம் அன்ற்றன் ச்செக்வோவ் எழுதின ஒரு சிறுகதை. அந்தச் சிறுகதையிலை நாடக அம்சங்கள் நிறைய இருக்கெண்டு தோன்றிச்சுது, எனக்கு. அது தான், நாடகமாக்கித் தரச்சொல்லிக் கேட்டேன். முருகையன் தான் நாடகமாக்கித் தந்தவர். அங்கை நிக்கிறவர் தான் டொக்ற்ற(ர்) கந்தப்பு. இது அவருடைய மனைவி. அவைக்கு ஒரேயொரு பிள்ளை. அந்தப் பிள்ளை இப்ப கொஞ்சம் முந்தித்தான் மோசம் போயிட்டுது. வயிற்றோட்டம் - படுவன் எண்டு தமிழிலை சொல்லுறது. வயசான காலத்திலை தான் அவைக்கு அந்தப் பிள்ளை பிறந்தது. அவையும் அந்தப் பிள்ளையை ஆசையாயும் கவனமாயும் தான் வளத்தவை. என்ன செய்யிறது? அந்தக் கவலையிலை தான் அவரும் அவற்றை பெண்சாதியும் நிக்கினம். இந்தத் துக்கமான செய்தியோடை தான் நாங்கள் நாடகத்தை ஆரம்பிக்கிறம். சரி. உங்கடை ரசனைக்குக் குறுக்கை நான் நிக்கிறது சரியில்லை. நீங்கள் நாடகத்தைப் பாருங்கோ.
(நெறியாளர் போகிறார். கந்தப்பு தலைமயிரை ஒதுக்கிக்கொண்டே வெளிப்புறமாகப் பார்க்கிறார். பின்னர் பெருமூச்சு விடுகிறார். சட்டைப்பையைத் துழாவி, இருபது முப்பது நொடிகளுக்குப் பிறகு ஒரு கைலேஞ்சியை எடுக்கிறார். பிறகும் காற்சட்டைப் பையில் எதையோ தேடுகிறார். ஒரு நெருப்புப் பெட்டி அகப்படுகிறது. சிறிது நேரம் அதை வருடிக்கொண்டிருந்துவிட்டு, பிணத்தின் தலைமாட்டில் உள்ள குத்துவிளக்கில் ஒரு திரியை இட்டு ஏற்றுகிறார். பிறகு சில ஊதுவத்திகளையும் பற்றவைத்துப் பிணத்தருகிலே வைக்கிறார். சிறிது நேரம் குனிந்து பார்த்துக்கொண்டு நிற்கிறார். கண்களை ஒரு தடவை
102 முருகையன்

மூடித் திறந்துவிட்டு வெளியே வருகிறார். கதவு மணி அலறுகிறது. டொக்ற்றடு) சட்டைத் தெறியைக்கூடப்பூட்டாமல் வெளியே வந்து பார்க்கிறார். மனோகரன் விரைந்து நுழைகிறான்.
மனோகரன் : டொக்ற்ற(ர்) இருக்கிறாரா, வீட்டிலை?
கந்தப்பு :
மனோ :
மனோ :
Ln66OTIT :
103
ஓ.. நான்தான் டொக்ற்ற(ர்). என்ன வேணும்?
ஒ. சந்தோஷம், பொக்ற்றடு). நல்ல காலம். நீங்கள் வீட்டிலை இருந்தது. (டொக்ற்றரின் கைகளைப் பற்றிய படி) உங்களை எனக்குத் தெரியும், டொக்ற்ற(ர) என்ற்றை பேர் மனோகரன். மிசிஸ் ஆறுமுகத்தின்ற்றை ஹிலேஷன். நீங்கள் ஓரிடமும் வெளியாலை போகாமல் இருந்ததே பெரிய காரியம். உடனை என்னோடை வரவேணும் டொக்ற்றர். என்ற்றை சம்சாரத்துக்குச் சுகமில்லை. கடும் வருத்தம். ஆபத்து. கார் கொண்டு வந்திருக்கிறன் டொக்ற்ற(ர்).
(படபடப்புடன் பதறிப் பதறிப் பேசுகிறான், மனோகரன். கந்தப்பு எதுவும் பேசவில்லை. குனிந்தபடி நிற்கிறார்.)
நீங்கள் வீட்டிலை இருப்பீங்களோ இல்லையோ எண்டு பயந்து கொண்டுதான் வந்தநான். வழி முழுவதும் இதே கவலைதான், எனக்கு. அப்பிடியே அந்தரிச்சுப் போனென் டொக்ற்ற(ர்). சட்டையைப் போட்டுக் கொண்டு வாருங்கோ. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.
(கந்தப்பு முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல், சோகத்தோடு பெருமூச்சு விட்டபடி மேலே பார்க்கிறார்)
டொக்ற்ற(ர்), நடந்தது இதுதான். பஞ்சாட்சரம் வந்தவன், என்னைக் காணிறதுக்கெண்டு - எங்கடை வீட்டுக்கு. கொஞ்ச நேரம் பலதையும் பத்தையும் பேசிக்கொண்டு நாங்கள் இருந்தம். பிறகு எல்லாருமாய்த் தேத்தண்ணி குடிச்சம். பஞ்சாட்சரத்துக்கு வயலின் வாசிக்கிறது கே’க்க
2 60öT60)LD

Page 58
மனோ :
கந் :
மனோ :
104.
நல்ல விருப்பம். அவன் வயலின் வாசிக்கச் சொல்லிப் பாமாவைக் கேட்டான். அவள் உடனை வயலினை எடுத்து வாசிச்சாள். திடீரெண்டு அவள் கையை நெஞ்சிலை வைக்கபடியே அலறினாள் அப்பிடியே பொத்தெண்டு விழுந்து போனாள். அவளைத் துக்கி, கட்டிலடிக்குக் கொண்டுபோய் ஆறுதலாயப் படுக்க வைச்சம். நெத்தியிலை 'பாம் பூசி, முகமெங்கும் தண்ணி தெளிச்சுப் பாத்தம் ஆள் அசையவே
எண்டு தான் நான் நினைக்கிறன். அவவின்ற்றை தகப்பனார் கூட அனுறிசிம் வந்து தான் செத்தவராம் அதை நினைக்கத் தான் பயமாயிருக்கு.
(டொக்ற்றடு) எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல மவுனமாய் நிற்கிறார்.)
நீங்கள் உடனை வெளிக்கிடுங்கோ பொக்ற்றடு) சட்டையைப் போட்டுக்கொண்டு வாருங்கோ.
(கந்தப்புவின் கைகளை இரு கைகளாலும் பற்றியபடியே அழைக்கிறான், மனோகரன். கைகளை விடுவித்துப் பின்வாங்கியபடியே ஒரு அசுமாத்தமும் இன்றிப் பேசுகிறார்)
*னிக்க ே ம் ஐஞ்சு நிமிஷத்துக்கு முந்தித்தான் என்ற் பிள்ளை மோசம் போயிட்டுது.
ச். ச். ச். (சிறிது நேரம் பொறுத்து) ஆ, கடவுளே!
O O o P 60 6. நான் O கிெ O என்ன அதிட்டக் குறைவான நாள் . ஆனால், ஆர் தான் நினைச்சிருப்பினம், இப்பிடி நடக்கும் எண்டு. ச். ச். ச்.
(யோசனையில் ஆழ்ந்தபடியே போவதா, விடுவதா என்று தயங்குகிறான், மனோகரன். டொக்ற்றின் கையை உரிமையுடன்
மன்னிச்சுக் கொள்ளுங்கோ டொக்ற்ற(ர்). தயவு செய்து
முருகையன்

மனோ :
105
கேளுங்கோ நான் சொல்லிறதை, உங்கடை நிலைமை எனக்கு விளங்குது. பரிபூரணமாய் விளங்குது. இந்த வேளையிலை உங்களை வரச்சொல்லிக் கே’க்கிறது எவளவு வெக்கக்கேடான காரியம். கடவுளுக்குத்தான் தெரியும். நான் படுற பாடு. ஆனால் என்ன செய்யிறது? வேறை வழியில்லை, டொக்ற்ற(ர்). நீங்களே யோசிச்சுப் பாருங்கோ. நான் வேறை ஆரிட்டைப் போறது? உங்களை விட வேறை டொக்ற்றரே இல்லை, இந்த ஊரிலை. வேறை ஊருக்குப் போய்த் தேடிப் பிடிச்சு வாறதுக்கிடையிலை. இது மிச்சம் ஆபத்தான வியாதி. பாமாவின்ற்றை தகப்பனும் அனுாறிசிம் வந்து தான் செத்தவர். பொல்லாத நோய். அனூறிசிம் டொக்ற்ற(ர்). அவர் கன காலம் வருத்தமாயும் கிடக்கேல்லை. திடீரென்று ஒரு நாள். டொக்ற்ற(ர்), நீங்கள் எனக்கு இப்ப கடவுள் போலை. தயவு செய்து மறுக்காமல் வாருங்கோ. டொக்ற்ற(ர்), நான் எனக்காகாய்க் கே’க்கேல்லை. வேறை ஒரு உயிருக்காய்க் கே’க்கிறென். தயவு செய்து . ப்லீஸ் .
(சிறிது நேரம் மவுனம். கந்தப்பு திரும்புகிறார். மனோகரனுக்குப் பின்காட்டியபடி சில நொடி நிற்கிறார். பின்னர், இயந்திரம் போல உள்ளறைக்குப் போகிறார். அங்குள்ள குத்து விளக்கைத் தூண்டிவிட்ட பிறகு, எண்ணெய்ப் போத்திலை எடுத்து எண்ணெய் விடுகிறார்கையை ஒரு துவாயாலே துடைத்த பிறகு, பிணத்தின் அருகில் நின்று ஒரு வெற்றுப் பார்வையைப் படிய விடுகிறார். தமது மூக்கினை விரல்களால் அர்த்தமின்றிப் பிடித்து விட்ட பிறகு, நாடியைத் தடவுகிறார். மேசையிலே விரித்தபடி இருந்த ஒரு மொத்தமான புத்தகத்தை எடுத்து, நடுப்பக்கத்தைப் பார்க்கிறார். பின்னர் அப்புத்தகத்தின் பக்கங்களை விறுவிறு என்று முன்னும் பின்னும் புரட்டுகிறார். நெற்றியின் முகட்டை விறுவிறு என்று உரசி விட்டுக்கொண்ட கந்தப்பு வெளிக்கூடத்துக்கு வருகிறார்)
(ஆறுதலாகப் பெருமூச்சு விட்டபடி) அப்படா - வாருங்கோ, பொ’க்ற்றடு)
(மனோகரனைக் கண்ட பிறகு தான் அப்படி ஒருவன் தன்
2 608T60)LD

Page 59
கந் :
கந் :
Loősorm :
106
வீட்டில் வந்து நிற்கிறான்; தன் மனைவியின் நோய்க்கு வைத்தியம் பார்க்கும் பொருட்டுத் தன் வீட்டுக்கு வருமாறு தம்மை அழைத்தான் என்ற நினைவு டொக்ற்றருக்கு
ஒ . நான் . அப்பவே சொன்னெனே, வர ஏலாதெண்டு. தயுவு செய்து என்னைக் கரைச்சல் செய்யாதையும்
இல்லை, பொக்ற்றடு), உங்கடை நிலைமை எனக்கு நல்லாய் விளங்குது. நான் என்ன, கல்லுச் சிலையா, அல்லது மரக்குத்தியா. நல்லாய்த் தெரியும், நீங்கள் எப்படிப்பட்ட மன நிலையிலை இருக்கிறீங்கள் எண்டு. நானும் மனிசன் தான். ஒரே ஒரு பிள்ளையை, அதுகும் இந்த வயசிலை . பறிகுடுக்கிறதெண்டால், அது எவ்வளவு ஏமாற்றமாய் ய் இருக்கும் . அதெல்லாம் எனக்குப் பூரணமாய் விளங்கும். ஆனால், நான் . கே’க்கிறது எனக்காகாக இல்லை, டொக்ற்றடு). வேறை ஒரு உயிர் சீவத்தறுவாயிலை இருக்குது. சாகக் கிடக்கிறவள் என்ற்றை சம்சாரம் அந்தக் கிறீச்செண் குளறலைக் கேட்டிருந்தீங்கள் எண்டால், முகத்தைப் பாத்திருந்தீங்கள் எண்டால், என்ற்றை கிலேசம் உங்களுக்கு விளங்கும் கடவுளே,கடவுளே. சத்தியமாய் நான் நினைச்சென், நீங்கள் உடுப்புப் போடத்தான் உள்ளை போயிட்டீங்கள் எண்டு. டொக்ற்ற(ர), ப்ளிஸ், வாருங்கோ. நேரம் பொன்னானது. மண்டாடிக் கே’க்கிறென். நீங்கள் வரத்தான் வேணும் .
ப்ளிஸ் .
இருக்கும். எவ்வளவு துக்கமாய், க
(தெளிவாகவும் திடமாகவும்) மன்னிச்சுக் கொள்ளும் நான் இப்ப உம்மோடை வர ஏலாது.
இவ்வாறு சொன்ன கந்தப்பு உள்ளே செல்லத் திரும்புகிறார். தொடர்ந்து சென்ற மனோகரன் கந்தப்புவின் கையைப் பிடித்துக் கொள்ளுகிறான்.)
டொக்ற்ற(ர்), நீங்கள் படுற சங்கடம் எனக்குத் தெரியும்.
முருகையன்

கந் :
LDGSOTIT :
107
அது எவ்வளவு கடுமையானது எண்டதும் எனக்கு விளங்கும். ஆனால், நான் வரச்சொல்லுறது ஒரு பல்லுக் -கொதிக்குப் பரியாரம் செய்யிறதுக்கு இல்லை, டொக்ற்ற(ர்). தடிமன் காய்ச்சலுக்கு மருந்து எழுதிக் குடுக்கிறதுக்காக இல்லை, உங்களை நான் வரச்சொல்லி மண்டாடுறது. ஒரு உயிரைக் காப்பாற்றுறதுக்கு - ஒரு மனிச சீவனைக் காக்கிறதுக்காக . (மன்றாட்டமாக) டொக்ற்ற(ர்), மனிச சீவன் தனிப்பட்ட துயரங்களை விட மேலானது. விலைமதிப்பில்லாதது. மனிசத் தன்மையிைன்ற்றை பேராலை கே’க்கிறென், டொக்ற்ற(ர்),உங்கடை மனத் தைரியத்தையும் தியாக சிந்தையையும் காட்டுங்கோ. தயவு.
(பதற்றத்துடன்) தயவு செய்து என்னை இனித் தெண்டிக்க வேண்டாம். வைத்திய தர்ம விதி பதின்மூண்டாம் புத்தகம் முதலாம் பிரமாணப்படி, என்ற்றை கழுத்தைப் பிடிச்சு இழுத்துக் கொண்டு போக உமக்கு உரிமை இருக்கு. வைத்திய தருமப்படி உம்மடை வேண்டுகோளை மறுக்கிறதுக்கு எனக்கு உரிமை இல்லை. விருப்பமெண்டால் என்னை நீர் அப்பிடி இழுத்துக் கொண்டுபோம். ஆனால், எந்த வேலையையும் செய்யக்கூடிய நிலைமையிலை இப்ப நான் இல்லை. என்னை மன்னிச்சுக் கொள்ளும், மிஸ்ற்ற(ர்) மனோகரன்.
இல்லை, டொக்ற்ற(ர்). நீங்கள் அந்தத் தொனியிலை பேசக் குடாது. வைத்திய தருமத்தைப் பற்றியும் பதின்மூண்டாம்
புத்தகத்தைப் பற்றியும் எனக்கு என்ன கவலை? உங்களைக் கட்டாயப் படுத்துறதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு? அப்பிடி நான் கனவிலையும் நினைக்க மாட்டென். இப்ப என்ற்றை சம்சாரத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேணும். நீங்கள் தான் தெய்வம். நீங்கள் தான் கடவுள். மனமிரங்கி, மனமிசைஞ்சு வாறதெண்டால் வாருங்கோ. இல்லையெண்டால், நான் என்ன செய்ய முடியும்? என்ற்றை தலைவிதி எண்டிட்டுப் போக வேண்டியது தான் . போறதா? நான் எங்கை போறது? டொக்ற்ற(ர்), உங்களைத் தவிர வேறை கதியே இல்லை. உங்கடை மகன் உங்களைவிட்டு, இப்பத்தான் பிரிஞ்சிட்டான்
2-606T60s

Page 60
கந் :
மனோ :
கந் :
108
எண்டு சொன்னீங்கள். அப்பிடியெண்டால், என்ற்றை அந்தரம் உங்களைத் தவிர வேறை ஆருக்குத் தான் விளங்கும்? என்னடா, அலம்பிக்கொண்டு நிக்கிறான், மடையன் எண்டு நினையாதையுங்கோ. என்ன பேசுறதெண்டு யோசிக்கிற மனநிலையே எனக்கு இல்லை. தயவு செய்து குறை நினைக்க வேண்டாம். உடனை வாருங்கோ. வைத்தியர் தானே கண்கண்ட தெய்வம்! நீங்கள் வாருங்கோ டொக்ற்ற(ர). அனுறிசிம் எண்டால் . அய்யோ, கடவுளே! டொக்ற்ற(ர), கன நேரம் நான் மினைக்கெடுத்த மாட்டென். ஒரு அரை மணித்தியாலம்.
கன தூரம் போக வேணுமா?
இல்லை. ஒரு நாலு நாலரைக் கட்டை தான் இருக்கும். கார் கொண்டு வந்திருக்கிறென். அரை மணித்தியாலம் எடுக்காது, போய்த் திரும்பி வர. மறுக்காமல் வாருங்கோ.
(சிறிது நேரம் யோசித்துப் பெருமூச்சு விட்டபடி) ம்.
(கந்தப்பு உள்ளே சென்று மனைவியையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தபடி நிற்கிறார். மனோகரன் நிலை கொள்ளாது தவிப்பவனாய் உள்ளான். சிறிது நேரத்தின்பின் கோற்றை மாட்டிக் கொண்டு கைப்பெட்டி சகிதம் வருகிறார், கந்தப்பு. மனோகரன் அவரிடமிருந்து பெட்டியை வாங்கிக்கொண்டு, முன்னே அவரை அழைத்துச் செல்கிறான். நடந்து வெளியேறப் போன கந்தப்பு, ஒரு கணம் நின்று, உள்ளறைப் பக்கம் பார்க்கிறார். மனோகரன் அவர் கையைப் பிடிக்கவே, மெல்லத் திரும்பிப் போகிறார். சோககீதம் மெல்ல இசைத்துக் கூடுகிறது. ஒளி மெல்ல மெல்ல மங்க, திரை மெதுவாக மூடுகிறது.)
இரண்டாம் காட்சி மனோகரனின் வரவேற்பறையில் நடைபெறுகிறது. மனோகரன் வீடு வசதி உள்ள ஒருவரின்
முருகையன்

மனோ :
மனோ :
109
வீடாகக் காட்சி தருகிறது. மேடையின் இடப்பாதியின் பின் பகுதியில், மேல் வீட்டுக்குச் செல்வதற்கான படிக்கட்டுத் தென்படுகிறது. நடு மேடை இடத்தின் பிற்பகுதியிலும் படிகட்டுக்கு முன்பாகவும் ஒரு ஷோக்கேஸ் உள்ளது. ஷோக்கேசுக்கு மேல், தொலைக்காட்சி, டெக் போன்ற பொருட்கள் உள்ளன. இடப்பக்கச் சுவரின் நடுப்பகுதியில் ஒரு புத்தக இறாக்கை உள்ளது. மேடையின் வலப்பாதி நடுப்பகுதியில்,
சோஃவா செற்றிகள் போடப்பட்டுள்ளன. நீள மேசை மீது ஆ(ய்)ஷ்ட்ரேயும் சில கவர்ச்சிப் பத்திரிகைகளும் உள்ளன. இவற்றோடு நிறுத்தியிற் பொருத்திய ஒரு பெண்ணின் ஒரு படமும் வைக்கப்பட்டுள்ளது. நடு மேடை வலத்தின் கீழ் வல மூலையில், நிறுத்தியோடு கூடிய ஒரு மின் விளக்கும் உண்டு. நீளமான செற்றியில் ஒருதலையணையும் குழம்பிய கோலத்திற் கிடக்கும் ஒரு படுக்கை விரிப்பும் காணப்படுகின்றன.
முந்திய காட்சியைவிட இந்தக் காட்சியில் அதிகம் வெளிச்சம் உண்டு. இப்பொழுதுதான் கதாபாத்திரங்களைச் சுவைஞர்கள் முழுமையாகப் பார்க்கிறார்கள். டொக்ற்றரின் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறந்தபடி மனோகரன் உள்ளே நுழைகிறான். கந்தப்பு பின்னால் வருகிறார்.
(அறையைச் சுற்றும் முற்றும் நோட்டமிட்டு, நின்று) ஏதாவது அவக்கேடாய் நடந்திருந்தால் . கடவுளே! (திடீரென்று கந்தப்பு நிற்கும் பக்கம் பார்வையைத் திருப்புகிறான். அவர் இன்னும் இருப்புக் கொள்ளாமல் அவன் நிற்கும் திசையை நோக்கியபடி, ஆனால், சிந்தனை வேறெங்கோ அலைய வெறிப்புடன் நிற்கிறார். அவரை உரியபடி உபசரிக்க வேண்டும் என்னும் விழிப்பு வர .)
இருங்கோ, டொக்ற்ற(ர்), இருங்கோ. அவை மேலைதான்
இருக்க வேணும். நீங்கள் வந்திருக்கிறீங்கள் எண்டு சொல்லிப் போட்டு வாறென்.
(டொக்ற்ற(ர்) ஏதோ முணுமுணுப்பது போல் வாயசைக்கிறார்.
2-60õ60) D

Page 61
மனோ :
மனோ :
110
ஆனால், குரல் வெளிப்படவில்லை.
உண்மையிலை, டொக்ற்ற(ர்), உங்கடை பெருந்தன்மையை நினைக்க நினைக்க . அதைப்பற்றி என்ன சொல்லிற தெண்டே எனக்குத் தெரியேல்லை. சத்தியமாய்ச் சொல்லிறென், பொக்ற்றடு). சரி, சரி . . நீங்கள் இருந்து கொள்ளுங்கோ. நான் அவைக்குச் சொல்லிப்போட்டு வாறென்.
(கடகட வென்று மாடிப்படி ஏறிப் போகிறான், மனோகரன். டொக்ற்ற(ர) இரண்டொரு தடவை தலைமயிரைக் கோதி விடுகிறார். மருந்துக் கறை படிந்த தம் கைகளை ஒருக்கால் மணந்து பார்த்துவிட்டு, பின்னர் அவற்றை உற்று நோக்குகிறார். ஒரே அமைதி சூழ்ந்திருக்கிறது. பின்னர் அறை மேல் மாடியில் “ஆ!” என்ற அலறல் கேட்கிறது. ஓர் அலுமாரியின் கண்ணாடி சடாரென அடிபட்டுச் சுக்கல் கக்கலாக நொருங்கிய சத்தம் கேட்கிறது. பின்னர் சிறிதுநேர அமைதி. மனோகரன் மாடிக்குச் சென்ற படிக்கட்டுப் பக்கமாகக் கந்தப்பு நோக்குகிறார். மேற்படிக்கட்டில் மனோகரன் நிற்கிறான். அவன் தோற்றம் முற்றாக மாறிவிட்டது. படுபயங்கரமான எதுவோ நடந்து விட்டது போன்ற 'பாவம் அவன் முகத்திலே தெரிகிறது. வருத்தமும், ஆத்திரமும், ஏமாற்றமும் மாறிமாறித் தோன்று கின்றன. படிக்கட்டால் இறங்கிக் கைகளைப் பிசைந்தபடியே நடுமேடைக்கு வருகிறான். பற்களை நறநறவென்று நெருமிக் Gd5.760ci (6 ... ...)
அவள் என்னை ஏமாத்திப்போட்டாள். ஏமாத்துக்காறி. விட்டிட்டு ஒடித் துலைஞ்சு போனாள். வருத்தமெண்டு சொல்லி என்னை டொக்ற்றரிட்டை அனுப்பினது என்னத்துக்கெண்டு எனக்கு அப்ப விளங்கேல்லை. இப்ப விளங்குது, எல்லாம்.
பஞ்சாட்சரத்தானோடை ஒடிப் போறதுக்காகத்தான், என்னை அனுப்பினவள், டொக்ற்றரிட்டை (கந்தப்புவுக்குக் கிட்டப் போய்) என்னைக் கைவிட்டிட்டாள். ஒடிப் போட்டாள். ஏமாத்திப் போட்டாள். ஏன் எடி உனக்கு இந்தப் பொய்? ஏன் இந்தப் பசப்பும் பாசாங்கும்? ஏன் இந்தச் சூதும் சதியும் கைகேசித்
முருகையன்

கந்தப்பு :
மனோ :
கந் :
111
தனமும்? என்ன தீமையப்பா, நான் உனக்குச் செய்திருப்பென்? ஒரு துரோகம் நினைச்சிருப்பெனா? ஏனப்பா நீ . இந்த மாதிரிச் செய்தாய்? (கந்தப்புவிடம்) அவள் ஓடிப் போயிட்டாள் டொக்ற்ற(ர்). என்னை விட்டிட்டு ஓடியிட்டாள், டொக்ற்ற(ர).
(கண்ணீர் முட்டுகிறது. மனோகரனுக்கு ஆத்திரமும் துயரமும் போட்டி போடுகின்றன.)
அ . அ . வருத்தக்காறி எங்கை?
வருத்தக்காறி வருத்தக்காறி. அவள் வருத்தக்காறி இல்லை. எங்கையோ கிடந்த மூதேசி. என்ன கேவலம். என்ன எளியதனம். கொடும்பாவி. இதைப்போலை ஒரு சூழ்ச்சி செய்யிற புத்தி பேய் பிசாசுக்குகூட வராது. என்னை உங்களிட்டை அனுப்பினவள் . வருத்தமெண்டு சொல்லி. உண்மையான நோக்கம், அந்த நாய்ப்பயல் பஞ்சாட்சரத்தோடை, அவளின்ற்றை கள்ளப் புரியனோடை ஒடுறதுக்கு. அய்யோ, கடவுளே, இதிலும் பார்க்க, நான் செத்திருக்கலாம். இந்த அதிர்ச்சியிலையிருந்து எனக்கு மீட்சி இல்லை. ஒரு காலமும் இல்லை.
மன்னிக்க வேணும், மிஸ்ற்ற(ர) மனோகரன். இதெல்லாம் என்ன? என்ற்றை பிள்ளை செத்துப் போச்சு. என்ற்றை மனிசி வீட்டிலை துக்கமும் துன்பமுமாய் அழுதபடியே இருக்குது. எனக்கு . எனக்கு . நிக்கவே முடியாதபடி களைப்பாயும் சோர்வாயும் இருக்கு. மூண்டு நாளாய் இரவு பகலாய் எனக்கு நித்திரை" இல்லை. இப்பிடி எல்லாம் இருக்க, நீர் . நீர் . நீர் என்ன செய்யிறிர்? வேடிக்கை காட்டிறிர். ஏதோ ஒரு படுமோசமான உம்மடை கோமாளிக் கூத்துக்குப் பக்கவாத்தியம் வாசிக்கச் சொல்லி என்னைக் கே’க்கிறிர் பக்கவாத்தியம் வாசிக்கிறது எண்பால்க் கூடிப் பரவாயில்லை. உம்மடை கூத்து மேடைக்குப் பந்தல்காலாய் நிண்டு சுமக்கச் சொல்லிறிர். எனக்கு. . எனக்கு
ஒண்டுமே விளங்கேல்லை.
(மனோகரன் கையில் வைத்திருந்த கடிதம் போன்ற ஒரு
உண்மை

Page 62
Losso :
கந் :
ഥങ്ങr :
112
கடதாசியை வெறுப்புடன் கீழே வீசி எறிந்து ஏதோ, ஓர் அருவருப்பான பூச்சியை மிதிப்பது போல உழக்குகிறான்.)
எல்லாம் கண்ணுக்கு முன்னையே நடக்கிது. நான்தான் ஒண்டையும் கவனிக்கேல்லை. அவன் ஒவ்வொரு நாளும் ஏன் வந்து போனான் எண்டதைக்கூடி நான் கவனிக்கேல்லை. இண்டைக்கு இந்தப் பஞ்சாட்சரம் ஏன் கார் பிடிச்சுக்கொண்டு வந்தவன்? அதைக்கூட நான் யோசிச்சுப் பாக்கேல்லை. ஏன் கார்? நான் ஒரு குருட்டு மடையன். கண்ணிருந்தும் பாக்கத் தெரியாதவன். சீ. நான் ஒரு முட்டாள்.
எனக்கு . எனக்கு . ஒண்டுமே விளங்கேல்லை. இதுக்கெல்லாம் என்ன கருத்து? செருப்பாலை அடிச்சது போலை . காறித் துப்பினது போலை இருக்கு, உம்மடை வேலை. மனிசன்ற்றை துக்கத்தைப்பகிடி பண்ணிறது போலை இருக்கு. ஒரு மனிசன் செய்யமாட்டான், இப்பிடியான காரியத்தை. இப்பிடி ஒரு விசர்த்தனமான வேலையை நான் இது வரை கேள்விப்பட்டதே கிடையாது.
(தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டது என்னும் உணர்வு சிறிது சிறிதாக டொக்ற்றரின் நெஞ்சிலே விடிந்து கொண்டு வர, சொல்வதென்ன, செய்வதென்ன என்று அறியாதவராக மனம் புழுங்குகிறார்.
அப்ப உனக்கு என்னிலை அன்பில்லை. வேறை ஒரு ஆளிலை தான் உனக்கு விருப்பம். சரியப்பா. ஆனால், ஏன் இந்த ஏமாத்து? கீழ்த்தரமான துரோகம் ஏன்? எளியதனமான தந்திரத்தாலை என்னப்பா நன்மை உனக்கு? என்ன லாபம்? ஏனப்பா இந்த வேலையை நீ செய்தாய்? நான் உனக்கு என்ன கெடுதி செய்தென்? (டொக்ற்றரை நோக்கி) டொக்ற்றர், என்ற்றை துர்ப்பாக்கியத்தை நீங்களே நேரிலை கண்டிருக் கிறீங்கள். நீங்கள் விரும்பாமலே, சந்தர்ப்ப வசத்தாலை இங்கை வந்து சேர்ந்திருக்கிறீங்கள். உண்மை முழுவதையும் உங்களுக்கு நான் சொல்லுறென். ஒண்டையும் ஒளிக்காமல்,
முருகையன்

113
மனம் திறந்து எல்லாத்தையும் சொல்லுறென். கேளுங்கோ, டொக்ற்ற(ர்), இந்த அநியாயத்தை. சத்தியமாய்ச் சொல்லுறென். நான் ஒரு சொல்லுக்கூடப் பொய் பேசேல்லை. எல்லாம் வெளி வெளியாயச் சொல்லிறென், உங்களுக்கு. அந்த மனிசியை என்ற்றை உயிரைப்போலை விரும்பினென். இல்லை. உயிர் போலை எண்டு சொன்னாலும் போதாது. உயிரைவிட மேலாய் விரும்பினென். அன்பு செலுத்தினென். ஆதரவு காட்டினென். அவளைக் கும்பிடக்கூடத் தயாராய் இருந்தென். அவளுக்காய் எல்லாத்தையும் பலியிட்டென். தியாகம் செய்தென். என்ற்றை சொந்தக்காறர் எல்லாரோடையும் சண்டை பிடிச்சென், பொ’கற்றடு). எத்தினை பிழையளெல்லாம் செய்திருப்பள்? அதுகள் எல்லாத்தையும் மன்னிச்சென். என்ற்றை சொந்த அம்மாவோ அக்காவோ அந்தத் தவறுகளைச் செய்திருந்தால்க் கூட நான் பொறுத்திருக்க மாட்டென். ஏன், அவளை நான் ஒரு கடுகடுப்பான முகத்தோடைகூடப் பாத்ததில்லை. ஒரு விதமான குறையும் வைக்கேல்லை. அப்பிடி எல்லாம் இருக்க, ஏன் இந்தப் பொய் இவளுக்கு? இந்தக் கபடமும் தந்திரமும் குள்ளபுத்தியும் ஏன்? உன்ற்றை அன்பு வேணும் எண்டு நான் பிடிவாதம் பிடிக்கேல்லை. பின்னை, ஏன் இந்த எளியதனம்? என்னிலை உனக்கு அன்பில்லை எண்டால். சரி. உன்னை நான் விரும்பேல்லை. இன்னாரோடை தான் நான் ஓடப்போறென், எண்டு சொல்லியிருக்கலாமே! வெளிவெளியாய்க் கதைச்சிருக் கலாமே. இதைப்பற்றி எல்லாம் என்ற்றை கொள்கை என்ன எண்டு உனக்கு நல்லாய்த் தெரியும் . பிறகேன் அப்பா, இந்த மூடுமந்திரம்? (நீள் மேசையிலிருந்த பாமாவின் படத்தை எடுத்து முன்னாற் பிடித்துக் கொண்டு) பாருங்கோ,
டொக்ற்ற(ர); இப்பிடிச் சாந்தமான ஒருத்தி, இப்பிடியான கேவலமான ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்கோ, டொக்ற்ற(ர்). பாருங்கோ இந்தப் படத்தை.
(டொக்ற்றரின் முகத்துக்கு நேரே படத்தை நீட்டுகிறான். டொக்ற்றரின் ஆத்திரம் அதிகரிக்கிறது. மிருக வெறி ஒன்று பளீரிடுகிறது, அவர் விழிகளில், ஒவ்வொரு சொல்லாக அழுத்தி அழுத்தி அவர் பேசுகிறார்.)
2 608T60)LD

Page 63
கந் :
கந் :
114
ஏன் காணும், இதை எல்லாம் எனக்குச் சொல்லுறிர்? இதைப் பற்றி எல்லாம் எனக்கு அக்கறையும் இல்லை. கவலையும் இல்லை. எனக்குத் தேவையில்லைக் காணும் உம்மடை சில்லறை இரகசியங்கள். கொண்டுபோய்க் குப்பையிலை போடும் உம்மடை ஒப்பாரியளை. உந்த அழுக்குக் கஞ்சலை எல்லாம் எனக்கு முன்னாலை அவிட்டுக் கொட்டாதையும். எனக்கு நீர் செய்த அவமானமும் இழிவும் போதாதெண்டு நினைக்கிறிர் போலை இருக்கு. நான் உம்மடை வேலைக்காறன் எண்டு நினைச்சிரா, உம்மடை குளறலையும் கூச்சலையும் கேட்டுக்கொண்டிருக்கிறதுக்கு- உம்மடை அவமானங்களைப் பொறுத்துக்கொண்டிருக்கிறதுக்கு? காணும், இதெல்லாம்.
(மனோகரன் கந்தப்புவிடமிருந்து சிறிது பின்வாங்கி ஆச்சரியத்தோடு அவரைப் பார்க்கிறான்.)
ஏன் காணும் என்னை இங்கை கூட்டி வந்த நீர், இப்ப? நீர் கல்யாணம் பண்ணினிர், வேலை இல்லாமல், நீர் உம்மடை உணர்ச்சிமயமான நாடகத்தை ஆடலாம். அல்லது கோமாளிக் கூத்தை ஆடினாலும் சரி தான். உமக்கு வேறை வேலை இல்லை எண்டால் அதுகளைச் செய்து கொண்டு இரும். ஆனால், என்னை ஏன் காணும் இதுகளுக்கை இழுக்கிறிர்? எனக்கும் உதுகளுக்கும் என்ன அலுவல்? உம்மடை காதல்க் கதையஞக்கையும் சல்லாபங்களுக்கையும் என்னை ஏன் கொண்டு வந்து மினைக்கெடுத்துறிர்? என்னை என் பாட்டிலை விட்டிடும். ஆரேன் உம் தரவழி உல்லாசியளோடை போய்
உம்மடை மனிசத்தன்மை, தியாக சிந்தை, பண்பு, பணியாரம் -இதுகளைப்பற்றிப் பேசும். பிரசங்கம் பண்ணும். அல்லது புறுபுறுத்துக் கொண்டு புசத்தும். வேணுமெண்டால் உம்மடை வீணையை எடுத்து, கருணாரசம் ததும்ப ஒரு கீர்த்தனையைப் பிடுங்கி எறியும். நீர் காம்போதியை வாசிச்சால் என்ன, முகாரியிலை அழுது வடிஞ்சால் என்ன? எனக்கென்ன காணும் அதைப்பற்றி? மணிசர் மக்களோடை உம்மடை சேட்டையை வைச்சுக் கொள்ளாதையும். மற்றவைக்கு மரியாதை குடுக்கிறது எப்பிடி எண்டு உமக்குத் தெரியாட்டால், அவைக்குக் கிட்டப்
முருகையன்

மனோ :
கந் :
மனோ :
கந் :
ഥങ്ങr :
கந் :
ഥങ്ങ്
115
போகாதையும். அவளவு தான் நான் சொல்லக் கூடியது. மன்னிக்க வேணும். இதுக்கெல்லாம் என்ன கருத்து?
கருத்தா கே’க்கிறிர் மிஸ்ற்ற(ர்) மனோகரன்? மனிசரை விளையாட்டுச் சாமான் போலை மதிக்கிறது சரியில்லை எண்டது தான் இதுக்குக் கருத்து. நான் ஒரு டொக்ற்றடு) அத்தர் வாசனையும் பரத்தமை மணமும் இல்லாதவையும், டொக்ற்றர்மாரும் மற்றத் தொழில்காறர் எல்லாரும் உம்மடை வீட்டு விளக்கு மாறுகள் துடைப்பக்கட்டையள் -எண்டா நினைச்சிர்? விருப்பமெண்டால் நீர் அந்த வேலையைச் செய்யும். ஆனால், துன்பப்படுற ஒரு மனிசனைப் பிடிச்சு, கூத்து மேடைக்குக் குத்துக்கல்லாய் வைச்சுப் பாக்கிறதுக்கு உமக்கு உரிமை இலலை.
என்ன துணிச்சலோடை நீர் எனக்கு உதைச் சொல்லிறிர்?
என்ற்றை துன்ப நிலையைத் தெரிஞ்ச பிறகும் என்னை இங்கை கொண்டு வந்து, உம்மடை அலம்பல்களைக் கே’க்க வைக்கிறதுக்கு உமக்குத்தான் எவளவு துணிச்சல்? மற்றவன்ற்றை மனக்கவலையை நையாண்டி பண்ணிறதுக்கு என்ன உரிமை காணும் இருக்கு உமக்கு?
உமக்கென்ன விசரா? என்ன கருணை இல்லாத கல்லுத் தூண் நீர்? நானோ கவலையிலை முழுகி இருக்கிறென்.
நீர் .
கவலை. (உரத்து) கவலை. அந்தச் சொல்லை உச்சரியாதையும். உமக்கும் அதுக்கும் வெகு தூரம். கடைச் செலவுக்குக் காசு போதாதவங்களும் கவலைப்படுறதாய்த் தான் சொல்லிறாங்கள். அடைப்பன் வியாதி பிடிச்ச கோழிச் சாவலும் கவலை தான் படுகிது.
டொக்ற்ற(ர்), நீர் உம்மை மறந்து பேசுறிர். உப்பிடிப்பட்ட பேச்சுக்குக் கைகாலாலலை தான் மறுமொழி குடுக்கிறது வழக்கம். விளங்குதா, நான் சொல்லிறது? (தன் சட்டைப்
S. 606T60LD

Page 64
கந் :
மனோ :
கந் :
மனோ :
கந் :
மனோ :
கந் :
மனோ :
கந் :
மனோ :
116
பையிலிருந்து இரண்டு காசுத்தாள்களை எடுத்து அவற்றை மேசை மீது அடித்து வைத்து) இந்தாரும். இது நீர் வந்ததுக்காக நான் தர வேண்டிய காசு.
எனக்குக் காசு தரத் தெண்டிக்க வேண்டாம் (காசுத் தாள்களை எடுத்துக் கிழித்தெறிகிறார்) அவமானத்துக்கு ஈடாய்க் காசு குடுத்துச் சமாளிக்க ஏலாது.
டொக்ற்ற(ர்), அளவோடை நிறுத்திக்கொள்ளும்.
அளவு என்ன காணும் அளவு? செய்யிறதையும் செய்துபோட்டு, பிறகு எச்சரிக்கை பண்ணிறிரா, எச்சரிக்கை?
ஓ, நீர் பெரிய டொக்ற்ற(ர்) தான். ஆனால் என்ற்றை நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரும்.
எனக்கென்ன, வேறை வேலை இல்லையா? உம்மைப் போலை பொழுது போகாத புளிச்சல் ஏவறைக்காறன் எண்டா நினைச்சிர் என்னையும்?
மரியாதைக்காய்ப் பாக்கிறென்.
மரியாதையைப் பற்றி என்ன காணும் தெரியும் உமக்கு?
டொக்ற்ற(ர்), நீங்கள் இனிப்போகலாம்.
போகத்தான் போறென். பின்னை என்ன, உம்மோடை விருந்து சாப்பிடவா வந்தநான்? என்னைக் கொண்டு போய் விடுறதுக்கு ஒழுங்கு பண்ணும். ஒ. ஒழுங்கு, கொண்டு போய் விடுறதுக்கு ஒழுங்கு. கட்டாயம் செய்யத்தான் வேணும்.
(மேசை மணியைக் கிடு கிடு என அடிக்கிறான். ஒருவரும் வரவில்லை. மீண்டும் அடிக்கிறான். யாரும் இல்லை. கோபாவேசத்துடன் மணியை நிலத்தில் வீசுகிறான். அப்போது
முருகையன்

மனோ :
நெறி :
117
ஒரு வேலையாள் வருகிறான்.) எங்கை போய்த் துலைஞ்சிட்டியள் எல்லாரும்? போய் ட்ற்ய்வரிட்டைச் சொல்லு - காரைக் கொண்டு வரட்டாம் எண்டு. இவர் போக வேணும். (வேலையாள் போகத் திரும்பும்போது) இந்தா, எல்லா வேலைக்காறரையும் வெளியிலை போகச் சொல்லு. நீ மட்டும் நில். அவங்கள் ஒருத்தருக்கும் இனி இந்த வீட்டிலை வேலை இல்லை. துரோகியள். ஒண்டும் தெரியாதது மாதிரி நடிப்பு. நன்றியில்லாத நாயஸ். எல்லாரும் போய்த் துலையுங்கோ. ம். . . நீங்கள் போகலாம்.
(வேலையாள் டொக்ற்றரின் பெட்டியைத் தூக்கியபடி அவரை அழைத்துச் செல்கிறான். டொக்ற்றர் வெறுப்போடும் அருவருப்போடும் சினத்தோடும் வெளியேறுகிறார். மனோகரன் நிலைகொள்ளாமல் இரண்டொரு தரம் அங்குமிங்கும் அலைந்தபின், விறுவிறென்று மாடிப்படிகளில் ஏறி, உள்ளறைக்குச் செல்கிறான். சிறிது நேரத்திற் கைத்துப்பாக்கியுடன் இறங்கியவன், நடு மேடைக்கு வந்து, பாமாவின் படத்தை வெறித்துப் பார்க்கிறான். சஞ்சல இசை வலுக்கிறது. நெறியாளர் பக்கப் படிக்கட்டால் ஏறி, கீழ் மேடை நடுப்பகுதிக்கு வருகிறார்.)
என்ன நடந்தது எண்டதை எல்லாம் நீங்கள் பாத்தீங்கள். மனசார டொக்ற்றருக்குக் கோபம் வாறது நியாயம் தான். குழந்தையைப் பலிகுடுத்த துக்கம் அவருக்கு. எவளவோ தெண்டிச்சுத்தானே, மனோகரனும் கூட்டி வந்தவன், அவரை!
பெண்சாதி விட்டிட்டு ஓடியிட்டாள் எண்ட துயரம் மனோகரனுக்கு. துயரம் மட்டுமல்ல. ஏமாற்றமும் தான். அவன்ற்றை துயரம் அவனுக்கு.
ஒருத்தர் துயரத்தை மற்றவருக்குச் சொல்லிப் பங்கிட்டுக் கொண்டால், இரண்டு பேருக்கும் துயரம் குறையும் எண்டொரு தத்துவத்தைச் சில பேர் அடிக்கடி சொல்லிறதை நீங்கள்
உண்மை

Page 65
118
கேட்டிருப்பீங்கள். ஆனால், இப்ப நீங்களே நேருக்கு நேரை பாத்தீங்கள். துயரப்படுற மனங்களுக்கு, நீதி, நியாயம், தருமம்இதுகளொண்டும் தெரியாது. தங்கடை துயரம் தான், மற்ற எல்லாத்தையும் மூடி மறைச்சுப் போடும். ஆனபடியாலை தான் இவை இரண்டு பேருடைய துயரங்களும் இரண்டு முனையளிலை நிண்டு தத்தளிச்சுதுகள்.
எண்டாலும், டொக்ற்றருடைய வெறுப்பும் சினமும் அவ்வளவு நியாயமானவை அல்ல எண்டு சொல்லவும் இடமிருக்கு. டொக்ற்றர் இப்ப வீட்டை போய்க் கொண்டிருக்கிறார். ஒரு வேளை நீங்கள் நினைப்பீங்கள், அவர் தன்னுடைய வீட்டிலை இருக்கிற பெண்சாதியைப் பற்றித்தான் யோசிச்சுக்கொண்டு போறார் எண்டு. மோசம் போன அவருடைய பிள்ளையைப் பற்றித்தான் மனவருத்தப்பட்டுக் கொண்டு போறார் எண்டும் சில வேளை நினைப்பீங்கள். ஆனால் உண்மையிலை இப்ப அவருடைய மனத்திலை நிறைஞ்சிருக்கிறது, மனோகரனுடைய வீடு; அவனுடைய பெண்சாதி பாமாவைக் கூட்டிக்கொண்டு ஓடின சோரநாயகன் பஞ்சாட்சரம், அவனைப்போலை ஆக்களின்ற்றை ‘சோக்கு, சொகுசு, உல்லாசம், லீலாவினோதங்கள். இதுகளைப் பற்றி எல்லாம் டொக்ற்றருக்குத் தீராத கசப்பு, வெறுப்பு. இந்தக் கசப்பும், வெறுப்பும் அவருக்குச் சாகுமட்டும் தீராது. இரண்டு துயரங்களும் தனித்தனி நிண்டு மோதினதாலை உண்டானதுகள் இரண்டு வெறுப்புகள். இந்த இரண்டு வெறுப்புகளுக்குள்ளையும் பொக்ற்றருடைய வெறுப்புத்தான் கடுமையானது, கசப்பானது.
சரி மேடை அடுக்கணியள் எல்லாம் சிதறுப்பட்டுப் போய்க் கிடக்குதுகள். அதெல்லாத்தையும் ஒழுங்கு செய்ய வேணும். நீங்கள் பாத்துக்கொண்டிருக்கக் கூடியதாய் அந்த வேலையை நான் தொடங்கக் குடாது. ஆனபடியாலை, உங்களுக்கு வணக்கம் கூறி விடைபெறுகிறென். (பக்கத்தே பார்த்து) தம்பி, இனித் திரையை மூடி விடும்.
திரை. "இரு துயரங்கள் முற்றும்.)
முருகையன்

அன்ட்றியா :
வே'ஜினியா :
119
*கலிலியோ
('க'லிலியோ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மகள் வே'ஜினியா உடன் உள்ளாள். அவர் மாணவன் அன்ட்றியா அவரைப் பார்க்க வந்துள்ளான்.)
(கதவிலே தட்டுகிறான். கவனத்தை ஈர்க்கும் பொருட்டுச் செருமி ..) தங்கைச்சி, தங்கைச்சி.
உஷ்ஷ் மெல்லப் பேசுங்கள். குருவானவர் கோபிப்பார்.
நான் யார் தெரிகிறதா? நான் தான் அன்ட்றியா. கலிலியோவின் மாணவன். அவரால் உருவாக்கப்பட்டவன்.
ஓ! தெரியுமே. அவ்வளவு கடுமையான மறதி உள்ளவள் அல்ல, நான்.
அது சரி, வே'ஜினியா. நான் உன் அப்பாவைப் பார்க்க வேண்டும்.
அப்பாவையா? நீங்களா? திருச்சபையின் விசாரணை மன்றம் அவரைத் தடுப்புக்காவலில் வைத்திருக்கிறது. இது உங்களுக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். எப்படி வந்தீர்கள், இங்குள்ள காவல்களை எல்லாம் மீறி?
(காவல்காரன் வந்து நின்று திரும்பிப் போகும் காலடி ஓசை கேட்கிறது.)
எப்படியோ வந்துவிட்டேன். நான் இத்தாலியை விட்டுப் போகப்போகிறேன், ஒல்லாந்துக்கு - விஞ்ஞான வேலையில் ஈடுபடத்தான்! போகும் வழியில் அவரை - “கலிலியோவைச் சந்திக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். அதுதான் கண்டுகொண்டு போகலாம் என்று .
SD 60öT60)LD.,

Page 66
வே'ஜி :
120
அப்பா உங்களைச் சந்திக்க விருப்பப்படுவாரோ, தெரியாது.
நிச்சயம் விரும்புவார்.
அவ்வளவு நிச்சயமாகவா சொல்லுகிறீர்கள்? இல்லை. அவர் இப்போது முற்றிலும் மாறிவிட்டார். முன்னைய ‘கலிலியோ இல்லை, அவர். வேதவிரோதமான செய்திகளை விஞ்ஞானம் என்று பரப்பிய காலத்திலே தான் நீங்கள் அவருக்குப் பணியாளாக இருந்தீர்கள். மாணவராக, நண்பராக, தோழராக இருந்தீர்கள். இப்போது அவர் திருச்சபையின் உத்தம விசுவாசி ஆகிவிட்டார். அவர் மனந் திரும்பி மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவர் புதிய மனிதர். உங்களைப் பார்க்க விரும்பமாட்டார். அவருக்குப்
புதிதாகக் கிட்டியுள்ள மனச்சாந்தியைக் குழப்ப வேண்டாம். தயவு செய்து குழப்ப வேண்டாம்.
இல்லை, தங்கைச்சி, நீ போய்ச் சொல்லு, அவரிடம்! அன்ட்றியா வந்திருக்கிறான், அவருடைய பழைய மாணவன் வந்திருக்கிறான்வெளிநாடு செல்வதற்கு முன்பு விடைபெற்றுப் போக வந்திருக்கிறான் என்று தயவு செய்து சொல்லு, அவரிடம்.
சரி, சொல்லுகிறேன். ஆனால் மீண்டும் சாத்தானை அவரிடம் அணுக விடாதீர்கள். அபசார வேதாகமக் குழியில் மீண்டும் விழுத்த வேண்டாம். பாவம், அப்பா!
எதை வே'ஜினியா சொல்லுகிறாய், படுகுழி என்று? விஞ்ஞானம் சாத்தானா? 'கலிலியோவின் மகளா, இப்பிடியான கருத்துக்களைக் கொண்டிருப்பது?
விஞ்ஞானமாவது, விண்ணாணமாவது மனிதன் அறிய வேண்டியவை அனைத்தும் வேதாகமத்தில் இருக்கிறது. இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி? என்ன பரிசோதனை? தொலைக்காட்டி, சோதனைச் சாலை, கணிப்பு வேலை, கண்றாவி! என்ன பயனைக் கண்டோம், இவற்றால் எல்லாம்? மண்ணுலகம் மனிதனுக்காகப் படைக்கப்பட்டது. பூமி தான்
முருகையன்

121
பிரபஞ்சத்தின் மையம். வழி வழியாக, மரபு நெறி தவறாமல் நம்மவர்கள் பூண்டு, ஒழுகி வந்த கொள்கை-இது. நித்தியமான சத்தியத்தை நீக்கிவிட்டு, புத்தி சாதுரியத்தினாலே பொய்யான புதிய கொள்கைகளைப் புகுத்தப் பார்க்கிறீர்கள், உங்களைப் போன்ற சிலர். பூமி அசைகிறது; பிரபஞ்சத்தின் மையம் சூரியன் தான் என்று பேசுகிறீர்கள். விண்ணுலகத்தின் மேன்மையை, அதன் புனிதத்தை, மறுத்து ஒதுக்கிவிட்டீர்கள். விண்ணுல கத்தையே ஒழித்து விட்டீர்கள். வேதாகமத்தைப் பழித்து விட்டீர்கள்.
உன்னுடைய அப்பா தானே, இவற்றையெல்லாம் கண்டறிந்து எங்களுக்கெல்லாம் சொல்லித் தந்தார்?
இருக்கலாம். ஆனால் அது அந்தக்காலம். கேடு கெட்ட அந்தப் பழைய காலம் முடிந்துவிட்டது. சருவேசனின் சக்திக்குச் சவால் விடுவது எத்தனை இழிந்த காரியம் என்பதை மனமார உணர்ந்து விட்டார், அப்பா. திருச்சபையின் விசாரணை மன்றம் அவரைத் திருத்தி விட்டது. முன்னர் செய்த பாவங்களுக்கெல்லாம் அவர் பிராயச்சித்தம் தேடி விட்டார். அவர் பழைய “கலிலியோ இல்லை. கடவுளுக்கு விரோதமான 'க'லிலியோ இப்போது உயிருடன் இல்லை. இவர் புதிய 'க'லிலியோ. முற்றிலும் புதிய 'க'லிலியோ.
அது சரி, வே'ஜினியா (ஆதரவாக) நீ உணர்ச்சி வசப்படக் கூடாது. நான் அவரைக் குழப்புவதற்காக வரவில்லை. அவருடைய பழைய மாணவன் என்ற முறையிலே வந்திருக்கிறேன். அவருடைய காலடிகளிலே அமர்ந்து பாடம் கேட்ட ஒருவன் என்ற அடக்கத்துடனும் தாழ்மை உணர்ச்சியுடனும் வணக்கத்துடனும் வந்திருக்கிறேன். விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஒல்லாந்துக்குப் போவதற்கு முன்பு ஒரு தடவை அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையோடு வந்திருக்கிறேன். நீ ஒன்றுக்கும் பயப்படாதே. நான் அவரை ஒரே 5)9ܘܲ )P66NjD ܘܘܘܘܘ
2 60óT60) D

Page 67
வே'ஜி :
'க'லி :
'க'லி :
'க'லி :
'க'லி :
122
சரி, சரி. அவரே பார்த்துவிட்டார். உங்கள் குரலைக் கொண்டே மட்டுக்கட்டியிருப்பார்.
(உரத்து, தூரத்தில்) யாரது? அன்ட்றியாவின் குரல் போல இருக்கிறதே! அன்ட்றியா வந்திருக்கிறானா வே'ஜினியா?
ஆமப்பா. அவர் தான் வந்திருக்கிறார். (தாழ்வான குரலில், சினப்புடன்) சரி, சரி. போய்ப் பேசுங்கள். இனி நான் உங்கள் சந்திப்பைத் தடுத்தாலும் பலன் கிட்டாது. போங்கள் போய்ப் பாருங்கள்.
என்ன இருந்தாலும் . இவ்வளவு கடுமையான வெறுப்பா, என்மீது? ஏன், வே'ஜினியா, இவ்வளவு கடுமை? முன்பெல்லாம் நீ இப்படி இல்லை.
('க'லிலியோ வருகிறார். வே'ஜினியா உட்புறம் போகிறாள்.)
வணக்கம், ஐயா. எப்படி, நலந்தானே!
ஓ, சுகத்துக்கு என்ன குறை? வா. கிட்ட இரு. இப்போது என்ன வேலையில் ஈடுபட்டிருக்கிறாய்? நீரியலைப்பற்றி ஏதோ ஆராய்கிறாயாமே! மெய் தானா?
அம்ஸ்ற்றடாமில் ஃவ'ப்'றிஷியசைச் சந்தித்தேன். உங்கள் சுகத்தைப்பற்றி விசாரிக்கச் சொன்னார்.
நான் நல்ல சுகமாய் இருக்கிறேன். இங்கே என்னை நல்லாய்க் கவனித்துக் கொள்கிறார்கள்.
மெத்த மகிழ்ச்சி. நான் ஃவ'ப்'றிஷியசுக்குச் சொல்லுவேன்உங்கள் சுகத்தைப்பற்றி.
சொல்லு, சொல்லு. இங்கு எல்லா வசதிகளும் எனக்குக் கிடைக்கின்றன. என் தவறுகளை உணர்ந்து கழிவிரக்கம்
முருகையன்

'க'லி
'க'லி :
'க'லி :
123
கொண்டு, மன்னிப்புக் கேட்டுத் திருந்திவிட்டபடியால், இங்குள்ள மேற்பார்வையாளர்கள் என் மீது பரிவு காட்டுகிறார்கள். விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதற்குக் கூட அனுமதி தந்திருக்கிறார்கள். சில நிபநதனைகள் உண்டு. அவ்வளவுதான். அவை எல்லாம் திருச்சபையால் விதிக்கப்பட்டவை.
ஆமாம். கேள்விப்பட்டோம். திருச்சபைக்கு நல்ல திருப்தி தானாம். நீங்கள் முற்றாகப் பணிந்து போய்விட்டது நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. அவர்களுக்குத் திருப்தியாகத் தான் இருக்கும்.
அன்ட்றியா, நீ என்ன சொல்லுகிறாய்? உட்குறிப்பு வைத்துப் பேசுகிறாயா? அல்லது மெய்யுணர்ந்து தான் கூறுகிறாயா?
இல்லை, அய்யா. நீங்கள் குறைநினைக்கக் கூடாது. தாங்கள் அடங்கிப் போன பிறகு, புதிய கருத்துக்கள் கொண்ட ஆராய்ச்சி எதுவும் இத்தாலியில் வெளியிடப்படவில்லை.
திருச்சபையின் அதிகாரம் செல்லுபடி ஆகாத நாடுகளும் உண்டு தானே! அங்கெல்லாம் என்ன நடக்குமோ?
அந்த நாடுகளிலே கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, தங்கள் செய்கை.
அப்படியா? டெக்காற்றைப் பற்றி ஒரு செய்தியும் வரவில்லையா? பாரிசிலிருந்து ஏதும் புதினம்?
ஆமாம். தாங்கள் தங்கள் கொள்கையை மறுத்துரைத்த பின்னர், தயங்குகிறாராம் அவரும் 'ஒளியின் இயல்பு' பற்றி அவர் எழுதிய பனுவலை ஒளித்துவிட்டாராம்.
(ஒரு நீண்ட மெளனம் பெருமூச்சு) என் விஞ்ஞான நண்பர்கள் சிலரைப் பற்றித்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. அவர்களை நான் தவறான வழியிலே
2-603T60)LD

Page 68
'க'லி :
அன் :
'க'லி :
வே'ஜி : .
'க'லி :
'க'லி :
24
செலுத்திவிட்டேனோ என்றுதான் அஞ்சுகிறேன். உன் வருங்காலத் திட்டம் என்ன?
என் விஞ்ஞான வேலைகளைத் தொடர்ந்து செய்வதற்கு வசதியாக நான் ஒல்லாந்துக்குப் போக நினைத்திருக்கிறேன். இராசாவுக்கே தடை விதித்தவர்கள் மந்திரிகளையா விட்டு வைக்கப் போகிறார்கள்?
அது சரி. உன் கருத்து எனக்கு விளங்குது.
தங்கைச்சி வே'ஜினியாவும் பக்கத்திலே இல்லாவிட்டால், உங்களுக்குப் பெரிய துன்பமாய்த்தான் இருக்கும்.
அவள் தான் இப்போதெல்லாம் எனக்குப் பேச்சுத் துணை.
(வந்து கொண்டே) ஏன், சமையல் வேலையைக் கவனிக்கிறதும் நான்தானே! உங்களுக்கு என்னென்ன உணவு வகை பிடிக்கும்
என்று முற்றும் தெரிந்த ஒரே பிறவி நான் தானே! அப்பா.
மகளே வே'ஜினியா! நீ போம்மா. போ. போய்ச் சமையலைக் கவனி.
(சிணுங்கி) சரியப்பா. வர வர உங்களுக்கு என்னைக் கண்டாலே வெறுப்பு.
பாவம் வே'ஜினியா.
அவ’ நினைக்கிறா’ நான் உங்கள் அமைதியைக் கெடுக்க வந்திருக்கிறேன் என்று. உங்களோடு சண்டை பிடிப்பதற்காக நான் வரவில்லை.
சண்டையா? என்னுடனா? எதற்காக?
(சிரித்து) திருச்சபையின் வற்புறுத்தலுக்காகத் தங்கள்
முருகையன்

'க'லி :
125
கொள்கைகளைத் தாங்களே மறுத்துள்ளீர்கள் அல்லவா? கொள்கை வய்திகரின் வயிரத்துக்குப் பணிந்து போய்விட்டதைக் கண்டிப்பதற்காகத் தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என்று எண்ணுகிறா’ வே'ஜினியா. கள்ளம் கபடில்லாத வெள்ளை உள்ளம். திருச்சபையிலும் வேதாகமத்திலும் உறுதியான நம்பிக்கை- அவ’வுக்கு.
ஆனால், நீ என்ன நினைக்கிறாய், அன்ட்றியா?
என்னத்தைப் பற்றி?
என்னைப்பற்றி. என் வாழ்க்கையைப்பற்றி.
உங்களைப்பற்றி. என் அபிப்பிராயமா? உங்களைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது அவ்வளவு முக்கியமான சங்கதியா, என்ன? உலக வரலாற்றிலேயே இடம் பெற்றவர்கள்- தாங்கள். வருங்காலத்தவர்கள் பேசுவார்களே, வாய்நிறைய உங்களைப் பற்றி, அரிஸ்ற்றோற்றிள் சொன்னார், அறிஞர் பெருமான் சொன்னார் - அவர்கள் பேச்சில் ஐயம் கொள்வது தவறு : இப்படியாகத் தான் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் - எல்லாரும். ஆனால் நீங்கள் அதை எல்லாம் புரட்டி விட்டீர்கள், கவிழ்த்து விட்டீர்கள். வெறும் சிந்தனையை விட, செயல் முறையான பரிசோதனையும் ஆராய்ச்சியும் முக்கியமானவை என்று காட்டிவிட்டீர்கள். வீழும் பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சி, தொலைகாட்டி கொண்டு செய்த சோதனைகள், ஊசலைப்பற்றிய உண்மைகள். இவற்றை எல்லாம் எண்ணும் போது.
ஆம், அன்ட்றியா. இப்பொழுதும் என் நினைவிலே பசுமையாக இருக்கிறது. தத்துவஞானி ஒருவர் என் ஆய்வுகூடத்துக்கு வந்திருந்தார். நட்சத்திரங்களைப்பற்றி நான் சொன்னவற்றை
அவர் நம்பவே இல்லை. தொலைகாட்டியினூடாக வானத்தை ஒரு தடவை பார்க்கும்படி சொன்னேன். அவர் விரும்பவில்லை. நான் வற்புறுத்திப் பார்த்தேன். மறுத்துவிட்டார். அத்தனை
உண்மை

Page 69
'க'லி :
'க'லி :
'க'லி :
126
நம்பிக்கை அவருக்கு, அரிஸ்ற்றோற்றிள் மீது. ஒரு வேளை தொலைக்காட்டியினூடே பார்த்து அரிஸ்ற்றோற்றிள் சொல்லி வைத்தது தவறாய் இருந்துவிட்டால். அப்படி இருக்காது என்பது அவர் நம்பிக்கை. ஆனால், சோதித்துப் பார்க்க அவர் தயாரில்லை. தத்துவஞானியே இப்படி என்றால். மற்றவர்களைப்பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? பெரும்பாலான மக்கள் அப்படிப்பட்டவர்களாய்த் தான் இருக்கிறார்கள். என்ன செய்யலாம்?
கண்ணை இறுக்கி மூடிக்கொண்டால், உண்மை பொய்யாகி விடுமா? அல்லது உண்மையைப் பொய் என்று வாயாலே மறுத்துவிட்டால் மட்டும் அது பொய்யாகி விடுமா?
அய்யோ, அன்ட்றியா. தயவு செய்து என்னைக் குத்திக் காட்ட வேண்டாம். உனக்குத் தெரியும், அறிவுதான் என் மதம் என்பது. எல்லாம் நல்லாய் அறிந்த நீயுமா இப்படி.
இல்லை, அய்யா. என்னை மன்னியுங்கள். நான் தவறிப் பேசிவிட்டேன்.
எனக்குத் தெரியும், அன்ட்றியா. விஞ்ஞானப் பற்றுடையவர்கள் எவ்வளவு வேதனை அடைந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஒருவருமே எதிர்பார்க்கவில்லை - தாங்கள் இப்படியாக நடந்து கொள்வீர்கள் என்று.
அறிவுலகத்தையே நான் காட்டிக் கொடுத்துவிட்டேன் என்று தானே நினைக்கிறீர்கள்? நான் துரோகி என்றுதானே எண்ணுகிறீர்கள் - எல்லோரும்!
இதைவிட அதிக தயிரியசாலியாக இருப்பீர்கள் என்றுதான் எண்ணியிருந்தனர்-பலர்.
முருகையன்

'க'லி :
'க'லி :
'க'லி :
'க'லி :
127
என்ன செய்வேன், அன்ட்றியா? எனக்கு மட்டும் இல்லையா, அன்பும் வேட்கையும்? பற்றும் பிடிப்பும்? விஞ்ஞானம் என் மூச்சல்லவா?
ஒருவரும் மறுக்கமாட்டார்கள்.
அப்படியானால், நான் ஏன் அவ்வாறான ஒரு சிறு செயலைச் செய்தேன் என்று வியப்படைவார்கள். சொல்கிறேன் கேள். என் கொள்கைகளை மறுமீட்புச் செய்யாவிட்டால், சித்திரவதை செய்வதாகப் பயமுறுத்தினார்கள். கருவிகளைக் காட்டினார்கள். அம்மம்மா! எத்தனை கொடிய பயங்கரங்கள்! நான் எதையும் தாங்குவேன். உடல் நோவையும் துன்பத்தையும் மட்டும் என்னால் தாங்க முடியாது. சரி. உங்கள் எண்ணப்படியே ஆகட்டும் என்று சொல்லி விட்டேன்.
அப்படியானால் மனமார நீங்கள் மறுப்புச் செய்யவில்லை. நான் நினைத்தேன், நினைத்தேன்!
உரத்துப் பேசாதே, அன்ட்றியா. யாருக்காவது கேட்டுவிட்டால் ஆபத்து. சத்தியம், தருமம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் இவையெல்லாம்.
அய்யா ஆசிரியப் பெருந்தகையே, நான் பாவி. தங்கள் பெருமையை விளங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கில்லை. பிரபஞ்சம் பற்றிய உண்மைகளைப் புதியனவாகக் கண்டறிந்தது மட்டும் அல்ல, உங்கள் மகத்துவம் தருமம், நீதி, மனச்சான்று என்பன பற்றியும் புதுமைகளைக் கண்டறிந்த மகான், நீங்கள்.
வேண்டாம், அன்ட்றியா, வேண்டாம். என்னைக் கடவுள் ஆக்காதே. நீ போற்றும் விஞ்ஞானத்தின் பெயரால் உன்னை வேண்டுகிறேன். என்னைக் கடவுள் ஆக்காதே. நான் மனிதன்.
நீங்கள் பல காலம் வாழ வேண்டும்.
2-60öT60)LD

Page 70
'க'லி :
'க'லி :
'க'லி :
வே'ஜி :
'க'லி :
128
இந்தா, அன்ட்றியா. சட்டைக்குள்ளே மறைத்துக் கொள்.
(ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுக்கிறார்)
என்ன இது? புத்தகம்?
ஆமாம். புதிய புத்தகம். ஆராய்ச்சிப் பனுவல். நான் எழுதியது. இரகசியமாக இங்கே எனக்குத் தாள், மை, பேனா எல்லாம் தருகிறார்கள். நான் எழுதுவன எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். ஆனால், நான் கள்ளமாக ஒரு பிரதி- இரவிலே கண் விழித்துத் தயாரித்து வைத்திருந்தேன். அதுதான் இது. இயக்கவியல் பற்றிய ஆராய்ச்சி.
ஆகா! பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன். இத்தாலியை விட்டுக் கடத்திச் சென்று விட்டால் அப்புறம் ஆபத்தில்லை. வணக்கம், அய்யா. வருகிறேன்.
வாழ்க, அன்ட்றியா. சென்று வா.
(வந்து கொண்டே, ஆறுதல் பெருமூச்சுடன்) அப்.யா! போய்விட்டாரா, அந்த மனிதர்? ஒரே தொணதொணப்பு. ச்சிக்! வள வள வள வள என்று ஏதாவது சளாப்பிக் கொண்டே இருப்பார். சண்டைக்காரரும் கூட. வாதம் செய்வதும் தருக்கிப்பதும் தான் அவருக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. இல்லையாப்பா?
ஆம், அம்மா. அவன் போய்விட்டான். சமையல் பிரமாதம் போல் இருக்கிறது. கம கம என்று வாசனை வீசுகிறதே!
கொண்டு வா. ஒரு கை பார்க்கலாம்.
இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள். திரை.)
முருகையன்


Page 71
அச்சுப்பதிவு கொரி அச்சக, இ, ஐ
 

些
:தொபே, 434
ே
தெரு
ப்பட்டி