கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1999.07

Page 1


Page 2

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு
புதிய நாகரிகம்
O I - O7 - IQ99 இதழ் 38
தேசியமும், தேசிய வெறியும்
தேசியம் என்ற போர்வையில் இன, மத, மொழி, வெறிகளைத் தூண்டி அரசியல் இலாபம் பெறுவது இலங்கை அரசியலுக்கு புதியதல்ல. இலங்கையின் அரசியல் வரலாறு என்பதே அதுதான். முன்பெல்லாம் தேர்தல் காலத்தில் மட்டும் தலை தூக்கும் இனவெறிக் கோஷங் கள் - இன்று பேரினவாத அரசியல், யுத்தமாக வெடித்து உச்சநிலை அடைந்துள்ளபோது பிறிதொரு பரிணா மத்தையும் பெற்றுள்ளது. இதன் வெளிப்பாடுதான் வீர விதான, பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி என்பன.
மக்கள் தமது நாளாந்த பொருளாதார இடர்ப் பாடுகளுக்குள் சிக்கித் திணறும்போது இப்பேரின உணர்வு களை மறந்து விடுவார்களோ என்பது மட்டுமல்ல. இடர்களுக்கான உண்மைக் காரணிகளை சிந்தித்து அறிய முற்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும் இடையிடையே எழும் இவ் இனவாத வெறியூட்டல்களுக்கு காரணமாகும். நீண்டு தொடரும் யுத்தத்துக்கெதிராக மக்களிடையே எழும் எதிர்ப்புணர்வை மழுங்கடிப்பதும், அரசியற் தீர்வை புறந்தள்ளி பேரினவாத யுத்தத்தை முன்னெடுக்க தூண்டு வதும் இதன் இலக்காகும்.
ஒரு தேசிய இனம் அல்லது பல்தேசிய இனக் குழு மங்கள் தத்தமது மொழி, மத, பண்பாட்டுக் கூறுகளை யும், சுதந்திரம், பாதுகாப்பு ஆட்சி உரிமை போன்ற வற்றையும் பேணிக் கொள்வதற்காக தேசியம் என்ற கருத்தியலை உருவாக்குகிறது. தேசியம் என்பது பொது

Page 3
வான கருத்தியல் அல்ல. அதன் உருவாக்கத்திலும் வர்க் கச் சார்பு உண்டு.
தமது இனத்தைச் சார்ந்த மக்களையே சமத்துவ மாக நடத்தாது, சுரண்டல் சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளும் முதலாளித்துவ தேசியம், தனது சுரண்டும் வர்க்க நலன்களை மறைப்பதற்கான வெற்றுக் கோஷமாக இதனைப் பாவிப்பதுடன் ஏனைய இனங்களையும் ஒடுக் கிச் சுரண்டுவதற்கான தேசிய வெறியாகவும் இதனை மாற்றிக் கொள்கிறது. 入
தமது தேசிய வெறிக்க துணையாக தட்டகைமுனுவை யும் எல்லாளனையும் துணைக்கு இழுக்கும் போது அவர்களது அரச போக வாழ்வு க்சாக கட்டிய கோவணத்துடனேயே கால மேல்லாம் உழைத்து உருக் குலைந்து போனவர்களையும், அவர் களது மணி முடிகளை சரிந்து போகாமல் காப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் உயிர் கொடுத்த - அடிமைப் பரம்பரைகள் - உழைக்கும் மக்களின் வரலாற்றையும் இவர்கள் மறைக்க முற்படு கின்றனர்.
தமது மொழி மத பண்பாட்டு விழுமியங்களில் கூட அக் கறையற்ற இப்போலித் தேசியம். தனது சொந்த இலாபங்களுக் காக தனது கேசத்தையே ஏகாதிபத்திய பல்கேசிய இனக் கம்பனிகளுக்கு அகலத் திறந்த விடுகிறது. ஏகா கிபத்திய நச்சுக் கலாச்சார பரம்பலால் எற்படும் பண்பாட்டுச் சீரழிவுகள் பற்றி யும் இவை அக்கறை கொள்வகில்லை
இதற்குப் மாறாக உழைக்கும் மக்கள் தலைமையிலான தேசியம் தமது இனத்து மக்களை சமத்துவமாக நடத்துவதுடன் ஏனைய இனங்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த மதிப்பை அளிக் கிறது. தமது பண்பாட்டின் உயர் விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்து உலகப் பண்பாட்டுடன் ஒண்றினைத்து காலத்துக்கு ஏற்ப ஒரு புதிய பண்பாட்டை புதிய வாழ்வை புதிய நாகரி கத்தை உருவாக்க துணை புரிகிறது. இத்தகைய தேசியம் உல கின் சில நாடுகளில் இன்றும் பேணப்பட்டு வருகின்றது.
எனவே தேசிய வெறியூட்டல்களுக்கு எதிராக மேற்கூறிய உழைக்கும் மக்கள் தலைமையிலான தேசியத்தை நாம் பலம் பெறச் செய்ய வேண்டும் . தேக்கங்கள் - திருப்பங்கள் இருந்த போதும் சுதந்திரத்தின் எல்லைகளை விரிவாக்கும் மனித குலத் தின் பேரவா - வரலாற்றுப்போக்கு - நின்றுவிடுவதில்லை. எந்தப் போர்வைக்குள் மூடிவைத்தும் அடிமைத்தனங்களை நீண்டகாலம் எவரும் அடைகாக்க முடியாது. ( ஆர் - குழு) 02 5ntu last 38

கண்ணைக் கட்டி ...
O சேயோன்
- "கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதேன்?" அண்ணலே, அலைந்து குலைந்தேன் இப்படிக் கூவி இரங்கி அழுவதால், நெஞ்சின் பாரம் நெகிழ்ந்து கரைவதும், கரைந்தது வடிந்து காய்ந்து போவதும், இலேசாய் விடுவதும்என்னவோ, உண்மை தான்.
- ஆனால், அண்ணல் ஆர்? - அண்ணல் ஆர்? அண்ணலார். - காடெது? வீடெது? கண் எது? கட்டு எது?
ட காடு தான் நாடு. கட்டும் அது தான் வீடென்பதோ விடுதலை ஆகும் விட்டு விடுதலை ஆகுக'; சிட்டுக் குருவியைப் போலே கிளம்பு.
- சாமீ. உங்கள் தத்துவம் மெய்போல் தோற்றுதல் உண்மை தான். - அப்புறம்? சொல்க உன் கருத்தை. ட கண்ணைக் கட்டிக் காட்டில் விடுதல் எண்ணம் ஒன்றை இயற்றி உணர்த்தும் உத்தியே அன்றி உண்மை அல்லவே! தந்திரம் எல்லாம் சாத்திரம் ஆகுமோ?
தாயகம் 38 03

Page 4
உவமையை உண்மையாய் மயங்கி காடும் வீடும் கலந்து தத்துவ விளக்கம் தருவது
9Frf?G3u urir?
- புத்தியால் எதையும் நீ பொத்தல் ஆக்குவாய். - சத்திய நெருப்பிலே சருகு கூளங்கள் எரிந்து சாம்பல் ஆகினால். சாம்பலைக் கிளறி என்ன புண்ணியம்? உண்மை - பொய் பற்றிய உணர்வுகள் முற்றாய் நீங்கா நிலையில் ஒவியம் இயற்றுவோம் அழியா விழிப்புடன் ஆக்குவம் கலைகளே. - ஆக்குவம் கலைகளே.
பலஸ்தீனக் கவிதை
நியூயோக்கிற்கு ஒரு சவக்குழி
நியூயோர்க், எனது நாட்டில் இடைவழியும் கட்டிலும் கதிரையும் தலையும் உனக்குரியன, இரவும் பகலும் மெக்காவின் கல்லும் திGரிஸின் நீரும் யாவுமே விற்பனைக்குரியன. நான் பிரகடனம் செய்கிறேன்: இருந்தும் நீ பலஸ்தீனத்திலும் ஹனோயிலும் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும் நெருப்பையன்றி வரலாறே அற்றவர்கட்கெதிராக முனைகிறாய், போட்டியிடுகிறாய்; நான் சொல்கிறேன் பெரிய யோவானின் காலந்தொட்டு நாமொவ்வொருவரும் தம் அறுந்த தலையை ஒரு தட்டில் வைத்துச் சுமந்து இரண்டாவது வருகைக்காகக் காத்திருக்கிறோம்.*
நன்றி : பாலை - அடோனிஸ் கவிதைகள்
40 5ntuash 38

விதைத்த விதைப்புக்கள்
விதைத்த விதைப்புகள் வீணாய்ப் போகும் விதமாய் நடப்புகள் முளைத்தன புதிதாய் மூலைகள் எங்கும் மினி சினிமாக்கள் தழைத்தது மேலை பண்பாடிங்கு பெருகின பாலியல் பிறழ்வுகள். இழிந்த கசிப்பு அழிந்து போகாது அரங்கில் வந்தது தூங்கிய சாதியம் தூக்கம் கலைந்து மெல்ல எழுந்தது சீதனச் சந்தையும் சரிந்திடா துயர்ந்து குடு பிடித்தது உடமையும் பணமும் இரத்த உறவையே இரு கூறாக்கின. சமத்துவ உணர்வுகள் சரிந்தது மனங்களில் மடிந்தது மானுட அன்பு ஒடுக்கு முறைகள் உயர்ந்து மலைபோல் மிதித்தது மானுடர் தலையை முளைத்தன புதிதாய் முளைகள் எங்கும் முள்ளுக் களைகளாய்
- அழ. ட/கிதரன்

Page 5
ಗಿರೆವೆ ನರಿ QUjಿಹಿಹಿ |
நரிக்கு அடிக்கடி மிகவும் வியப்புக்குரிய யோசனை கள், உருவாகும். அதை நரி செயற்படுத்தும் முறை மக்களை திகைப்பூட்டி வைக்கும்.
முன்பு ஒரு நரி, தனது வாயில் ஒரு ஒலி பெருக்கி ஊதுகுழலைக் கட்டிக் கொண்டு, தனது வாலில் ஒரு நெருப்புத் திரியைப் பிணைத்துக் கொண்டு வந்தது, அவற்றைத் தன்னுடலில் நன்கு பிணைத்துக் கொண்ட பிறகு, திறந்த வெளிப்பகுதிக்கு வந்த நரி, "நெருப்புக்கு எதிராக பாதுகாப்பாயிருங்கள். எதிரிகள், புரட்சியாளர் கள், நெருப்பு மூட்டுவதை அனுமதிக்காதீர்கள்" என்று தனது ஒலி பெருக்கியில் கோஷமிட்ட வண்ண . அங்கு இங்கும் ஒடித் திரிந்தது. அதேவேளை அதன் வாலில் பிணைக்கப் பட்டிருந்த தீப்பந்தம் எல்லாப் பொருட் களுக்கும் தீ மூட்டலாயிற்று.
இந்தப் பெரிய ஏமாற்று வித்தை அருகிலுள்ள, துரத்திலுள்ள கிராமத்தவர் அனைவரையும் நரியின் பால் இழுத்தது. அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
தனது செயற்பாட்டின் வெற்றியில் மகிழ்ச்சியுற்ற, நரி, தனது சிந்தனை அலையினால் உருவாக்கப்பட்டி திட்டத்தை மக்களுக்கு விபரித்துக் கூறியது.
*எனது நாட்டின் இனிய சகோதரர்களே! என்னு டைய இந்த விளையாட்டுக்குப் பெயர் என்னவென்றால்? எங்கெங்கு நெருப்பை அணையுங்கள் என்று கோஷமிடிப் படுகின்றதோ, அங்கிருந்து தான் நெருப்பு பரவிடப்படு கின்றது"
பெங்கி பெங் தமிழில்; சுரேந்திரன்
06 தாயகம் 38

திடுவிழா
O சீலன்
* டேய் சுகிர் கெதியா நட வடா, இண்டைக்கு பூங்கா வனம், கடைசித் திருவிழா,
"ஒமடா சேந்தன்ரை திரு விழா வெண்டாலும் எல்லாரும் சேந்து வ டி வா ச் செய்ய வேணும்."
ரமேஷ் மண்டாக் குளத் துக்கை தாமரைப்பூ நிறையப் பிடுங்கியாறண்டவன்."
GLtil மாலா வீட்டிலை பெரிய சவுக்கு நிக்குது, பெரிய கொப்பா நாலை வெட்டிக் கட்டி பலப்பும் பூட்டிவிட்டா எப்பிடி இருக்கும்."
"போடா தத்தாருக்குத்தான்
அப்படிச் சோடிக்கிறது. இது சைவக் கோவில் திருவிழா வெல்வே, "
'பூங்காவனம் எண்டா முரு கன்ரை கலியாண வீடுதானே எப்பிடிச் சோடிச்சாலும் வடிவா
இருந்தா சரிதானே, அதுசரி ஆருக்கு வள்ளியம்மனுக்கோ தெய்வானை அம்மனுக்கோ
கல்யாணம்,
5 mraué95ub 88
"உதுகளைப் பற்றி எனக்குத் தெரியாது"
* சரி அதைவிடு; நான் புத்த கத்தை வைச்சிட்டு ஒடியாறன் நீயும் கெதியா வா"
வேண்டாம். புத்தகத்தை சபேசன் வீட்டை வைக்கலாம், முதல் கோவிலடிக்குப் போவம். இண்டைக்கு வேளைக்கே எல்லா
ரும் வாற எண்டு சொன்ன வங்கள்."
சுகிரும் சுதாகரும் உரை
யாடிக் கொண்டே வேகமாக கோவிலை நோக்கி நடந்தனர்"
"ஆரோ வாழைக் குட்டியள் கொண்டு வந்திருக்கிறார்கள்"
தொலைவில் கோவிலடிக்கு முன்னால் கிடந்த வாழைக் குட்டிகளைக் கண்டதும் மகிழ்ச் சியுடன் சுகிர் சொன்னான்.
"சுகிர் இதன்னடா கோயில்"
தொலை வில் தென்னங் குருத்து மாங்கொப்புகளைக்
07

Page 6
காவிக் கொண்டு வந்த நிறுவரி களை திருப் பிப்பார்த்த சுகிர், சுகா ரின் அவலக் குரலால் அதிர்ச்சியடைந்து கோவிலை திரும்பிப் பார்த்தான்.
இருவரும் ஒரு சணம் விறைத் து நின்றனர் அவர் களது ஆவல் கள் எதிர்பார்ப்பு ஸ் எல்லாம் உடைந்து தொருங்க கே வில் மு ப்பு முத்ல், கொடித் கப்பம், மூலஸ் கானம் எலலாமே சரிந்து போய் இருந்தது.
ஊரி உள்ள கோவில் களிலெல்லாம் கொ டி யேற்றி திருவிழாக்கள் தொடங்கி தட ந்த மடிந்திருந்தால் அந்த அருட டுணர்வில் அவ்வூர்ச் சிறு வர் ளும் 4ோவில் கட்டி விளை யாட விரும்பினர்.
கிளாக்கர் விட்டின் பின்புற முள்ள அந்க நீண்ட வளவின் நடுவே உயர்ந்து வளர்ந்திருந்த அந்த வேப்ப மாத்தின் கீழ் அயலில் உள்ள பெண்கள் கம் ஒய்வு நேரங்களில் ஒன்று கூடி அமர்ந்து தலைவ ரிப் பேன் எடுப் பதுடன் க1 து குடும்ப நிலைமை ஸ் ஊர் நிலைமை +ள் பற்றி உரையாடுவர் "ஊாங்கு வேளை" போன்ற விசே L நாட் களில் அயலில் உளள ஆண்களும்
கூடி "காட் ஸ்" விளையாடுவர் சிறுவர்களும் அங்கு கூடி போளை அடி, கிட் டி ய டி.
கிளிக்கோடு என்று தத்தமது பரு வத்துக்கேற்ப விளையாடுவர் எல்லை வேலிகளை எல்லோரும் இறுக்கமாக அ டை த் து க்
98
கொண்டாலும் அங்கு வருவதற் காக பொட்டுக்கள் விடப்பட்டி ருந்தன.
அந்த வேப்ப மரத்தின் கிழ்த் தான் அயலிலுள்ள சிறுவர் சிறுமி யரின் கூ ட் டு ழை ப் பால் நாலைந்து நாட்களில் ஒரு கோவில் எழுந்தது. களிமண் னால் சிறிய சுவர் எழுப்பி பலிபீடம், கொடித்தம்பம், மூலஸ்தானம் எ ல் லா மே அமைந்த அக்கோவிலின் அழ கிய தோற்றத்தில் அச்சிறுவர் களின் கைவண்ணத்தைக் கண்டு பெரியவர்கள் அவர்களை மெச்சி மகிழ்ந்தனர். நல்லூர் திருவிழா வின் போது அடம்பிடித்து வாங் திய செம்பாலான வேல் மூலஸ் தானத்திலும், ஈயத்தால் உருக்
கிவார்க்கப்பட்ட Gyp CLB5 & 6ör, தெய்வானை, வள்ளி, அம்மன் சிலைகள் வசந்த மண்டபத்
திலும் வைக்கப்பட்டிருந்தன.
பத்து நாட்சளாக தொடர்ந்து பாடசாலை விட்டு வந்ததும் நடத்தப்படும் அக்கோவில் திரு விழாக்களில் சிறுவர் சிறுமியர் மட்டுமல்ல அவர்சளின் தாய் தந்தையரும் அயலிலுள்ளவர்க ளும கலந்து கொண்டனர்.
அலங் காரங்கள், ஆ ட ல், பாடல் தேவாரம் தீபாராகனை யுடன் ஆரம்பமாகும் திருவிழா அந்த வேப்பமரத்தைச் சுற்றி சுவாமி வீதிவலம் வருவதுடன் முடிவடையும் முடிவில் வீயூதி, சந்தனம், புக்கை, மோதகம், வடை வாழைப்பழம் என பிர சாதங்களும் வழங்கப்பட்டன;
தாயகம் 38

ராளுக்கு நாள் புதிய நிகழ்ச்சி களுடன் சிறப்பாக நடந்த அந்த திருவிழாக்களில் இறுதிநாளான அன்று ரமேசுடன் படிக்கும் பள்ளி மாணவர் இருவர் மிரு தங்க கச்சேரி செய்யவும் ஒப்புக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டு வாத்தியாரின் இரு சிறுமி களின் பரதநாட்டியம் இரண் டாவது முறையாக நிகழ இருத்
, • ترقی
மின்விளக்குகள் பூட்டி அலங் காரங்களுடன் சிறப்பா க ச் செய்ய வேண்டுமென்ற ஆவ லுடன் அங்கு அவர்கள் கூடிய போது தான் அந்த ஆலயமே சிதைக் கப்பட்டிருந்தது.
"டேய் சுகிர் ஆற்றா இதைச் செய்திருப்பாங்கள்"
அடுத்த வீட்டின் வேலிப் பொட்டுக்கூடாக ஒரு சிறுவனின் நடமாட்டம் தெரிய சுதா அங்கு ஓடினான்.
*டேய் குமார் ஆற்றா இந்தக் கோவிலைச் குழப்பினது?
"ஐயோ இதென்ன இது எனக்குத் தெரியாது. நான் இப்பதான் பள்ளிக்கூடத்தாலே வாறன்"
பொட்டுக்கூடாக கோவிலைப் பூந்து பார்த்து விட்டு ஆச்சரிய மும் துயரும் வெளிப்படக் கூறி னான் குமார். g
"அப்ப இதாற்றை வேலையா இருக்கும் டேய் சாமி அம்மா
தாயகம் 3&
றவ
வுக்கு முள்ை சுக மில்லைத் தானே. அவ தான் செய் தாவோ!
"சீ . அவ பாவம், மரங்களைக் கண்டாலே தொட்டுக் கும் பிடு ஒவ்வொரு நாளும் ஒழுங்கா வந்து விபூதியும் அப் பிக் கொண்டு கொண்டையிலை பூவும் செருகிக் கொண்டு நிக் கிறவ"
சஓ . தேரிலண்டு எல்லாரும் சிரிச்சுக் கொண்டு சும்மா பின் னாலை வர அவதான் அடி யழிச்சவ அப்ப வேறையார் செய்திருப்பாங்கள்"
o6t6nunt onruDT Gay ägö கடவுள் நம்பிக்கை இல்லை"
GLim L–fr sig prnr. DAf Hog ஏன் இதுக்கை இழுக்கிறா அவ ருக்கு நம்பிக்கை இல்லை எண் டாலும் எங்களைச் கும்பி டாதை எண்டு சொல்லுறவரே தாங்களும் இப்பிடித்தானாம் சின்னவயதிலை கோவில் கட்டி விளையாடுற எண்டு சொன்ன Quf o
"ஒமடா சுகிர் அண்டைக்கு "இஞ்சை நம்பிக்கை இல்லாத வரும் வந்து நிற்கிறார் எண்டு அப்பா பகிடி பண்ண இதைத் தானே நீங்களும் கோயிலிலை செய்யிறியள் எண்டு சொன்ன வர்."
கோவிலடியில் கூட்டம் கூடி விட்டது. தமது ஆத்திரங்களை சிலர் வார்த்தைகளில் திட்டித்
09

Page 7
தீர்த்தனர். அவர்களது புல னாய்வுக்குள் செய்தது யார் என்பது இன்னும் அகப்பட வில்லை. ';
கார் பற்
ரகுவும் விசியும் றியை சையிக்கிளில் வைத்து தள்ளிக் கொண்டு வருகின்ற னர். part 56filth ஒடிச் சென்று நடந்ததைச் சொல் கிறான் சுதா, சயிக்கிளை
நிறுத்தி விட்டு ஏமாற்றத்தால் ஆத்திரம் மேலிட கோவிலைப் பார்க்கிறான்.
"தால் நேற்றே யோசிச்ச னான் ஏதோ நடக்கப்போகு தெண் டு"
டேய் அப்ப உனக்கு ஆர் செய்ததெண்டு தெரியுமே”
*இது உவன் சுருளி சபேசன்ரை வேலையாத்தான் இருக்கும்"
"உதார் தம்பி ரகுவே உமக்கு வடிவாத் தெரியுமே ஆர் செய்த தெண்டு
"ஒம் அவன்தான் நேற் றைக்கு ஆத்திரப்பட்டு கதைச் சவன் அவனுக்கு தன்ரை திரு விழா வடிவா நடக்கேல்லை எண்டு அழல்"
* அதுதான் ஆளை இன்னும் இஞ்சை காணேல்ல
* சுதாவின்ரை சப்பறத் திரு விழா பரத நாட்டியம் எல் லாத்தோடையும் வடிவா நடந் தது அவனுக்கு பிடிக்கேல்லை"
Ꮧ0
அதுக்கு உந்த வேலையே செய்யிறது எத்தினை பிள்ளை யள் ஏமாந்து போச்சு"
என்ன துணிச்சலிலை இதைச் செய்தவன் தங்கடை வளவுக்கை தான் கோவில் இருக்கெண்ட தடிப்போ?
"இண்டைக்கு வரட்டும் அவ ருக்கு இழுத்துப் போட்டு நாலு குடுக்காமை விடுறேல்ல."
துரையன் ஆத்திரத்தோடு
கூறினான்
இஞ்சை ஆர் செய்த தெண்டு வடிவாத் தெரியாமை கண்ட படி கதையாதையுங்கோ "
அது தானே அவன்தான் செய்ததெண்டு ஆராவது கண் னாலை கண்டனிங்களே”
இஞ்ச இது பிழையான நாயம் கண்கானாட்டி ஆரும் எதுகும் செய்து போட்டு போகலாமே? என்ன பேக்கதை கதைக்கிறியள்.
பின்னை என்ன அவன் பொறா மை ப் பட் டுச் செய்த தெண்டால் அவன் மற்றவையை போலை வழியில்லாதவனே."
* அதுதானே ஊர்க் கோயிலெல் லாம் உச்சமான திருவிழா அவங் கடை தானே"
எட கோவில் விசயத்தை கதைக்க வெளிக்கிட்டா இவர் என்ன வசதியுள்ளவை வசதி யில்லாதவை கதைக்கிறார் வரேக்கை எல்லாரும் கட்டி க்
a r t d li 38

கொண்டே வந்தவை . இஞ்சை . மற்றவையை மட்டந்தட்டுற கதை கதைச்சா வீண் வில்லங் disid GQ CU5th ... ? ----
"துரையண்ணை ஆத் தி ரப் Lullimt sa 5 uqi G35 t, சி ன் ன ப் பிள் ளை ய விரி ன் ரை விளை யாட்டை ஏன் பெரிசுபடுத்திறி யள். பெடியள் போட்டாங்கள் நேர கேட்டால் எல்லாம் தெரி யும் தானே"
சிவா வேலைக்காக காத்தி ருக்கும் ஒரு பட்டதாரி இளை ஞன் அவனது வார்த்தைகளு டன் சிறிது நிதானமடைந்த அவர்களது பார்வை கிளாக்கர் வீட்டின் பின்புறமாக திரும்பி Ա&l,
அப்பொழுது தான் வேலை
முடிந்து வந்து கிளாக்கர் உடை களை மாற்றாமலே வேலிக் கதியாலில் இழுத்து முறித்த பூவரசங் 3ம்பால் அவரது
இளைய மகன் சபேசனின் முது கிலும் கால்களிலும் மாறி மாறி அ டி த் த ப டி கோவிலடியை நோக்கி இழுத்து வருகிறார்.
இதுவரை அவன்மேல் ஆத்திர மடைந்த சிறுவர்கள் அக் காட் சியைக் கண்டதும் அவன் மீது இரக்க முற்றவர்களாக செய்வ தறியாது திகைத்து நின்றனர்.
அண்ணை இதென்ன. இது. விடுங்கோ அவனை. படிச்ச நீங்களே இப்பிடிச்
செய்தா. சும்மா விளையாட் டுக்கு கட்டின கோவில் தானே?
தாயகம் 38
விள்ையாட்டுக்கு கட்டின தெண்டாலும் கடவுளோடை விளையாடக் கூடாது."
கிளாக்கருக்கு ஆவேசம் இன் னும் அடங்கவில்லை.
சரியாச் சொன்னியள். இது கோயிலை இடிக்கிற மாதிரித் தானே உது உவருக்கு விளங் ата"
V
டேய் சபேசன்"
கிளாக்கர் மீண்டும் சபேசனை அடிக்க ஓடுகிறார் சிவா அவ ரை த் த டு த் து நிறுத்திக் கொண்டே
ஒ. நீங்கள் அங்கையே வாறி யள் விளையாட்டெண்டாலும் இடிபட்டது உங்கடை கோயி லெல்லே . ஆற் றை யே ன் கோயில் எண்டால் நீங்களும் சேந்து கல்லெடுப்பியள்.
தம்பி சிவா நம்பிக்கையில் லாத உமக்கு கோயில் விசயத் திலை கதைக்க உரிமை இல்லை"
கோயில் விசயத்திலை நான் கதைக்க வரேல்லை, குழந்தை யளின் ரை விசயத்திலை தான் கதைக்க வந்த நான். எங் களிட்டை உள்ளதுகள் தான் இதுகளிட்டையும் வெளிப்படுது விடுங்கோ அண்னை கம்பை நான் போறன்"
ஊர்க் கோவில் நிர்வாகசபைத் தலைவரின் பேச்சு சிவாவை ஆத்திரப்படுகிறது. கிளாக்கரின் .கையிலிருந்து தடிகை பறித்துக்

Page 8
கொண்டு அந்தக் கூட்டத்தை விட்டு அவன் வெளியேறு கிறான:
இதுவரை தங்களது விளை யாட்டால் ஏற்படவிருந்த 6éuff தங்களை தடுக்க முனைந்த சிவாவின் வெளியேற்றத்தால் அச்சிறுவர்களது முகங்கள் சுருங் கின. அங்கிருந்த பெரியவர்கள் பலரும் தமக்குள் புறுபுறுத்துக் கொண்டனர். துரையன் ஆத்தி ரத்துடன் மீண்டும் கதைப் பதற்கு ஆபத்தமானான். அதற் கிடையில் சிறிது தூரம் சென்ற சிவா திரும்பி நின்றான்,
சிறுகதைகள் கவிதைகள்
தாயகம் 25 - வது ஆண்டு மலருக்கு
படிைப்பாளிகளிடிமிருந்து -
கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அடுத்த இதழிலிருந்து
கலை இலக்கிய, சமூக விஞ்ஞான அறிவியற் கேள்வி களுக்கு "ஞானியர் பதில்? வாசகர் கடிதங்களும் வரவேற்கப்படுகின்றன.
தொடர்பு முகவரி 1 ஆசிரியர், தாயகம் , வசந்தம் புத்தக நிலையம், 405, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
* சர்மியை மட்டும் தாங்கள் கும்பிட்டா சண்டை வராது சாமியை சாட்டா வைச்சு நாங் கள் எங்கடை சுயநலங்களை யும், அதிகாரங்களையும் தான் கும்பிடுறம்
கையிலிருந்த தடியை முறித்து எறிந்து விட்டு அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் ஏதோ ஒரு வகையில் அவர் களைப் பாதித்திருக்க வேண்டும்; அவர் கள் அனைவரும் அவன் மறை யும் வரை அவனைப் பார்த்த படி நின்றனர்.
هسط
தருகிறார்.
(ஆ-ர் குழு)
12
தாயகம் 38

எதிர்ப்பு இலக்கியமும்
எசமானர்களும்
O சி. சிவசேகரம்
1) அறிமுகம்
இலக்கியம் என்றுமே சமுதாயஞ் சார்ந்துதான் உரு வாகி விரிவடைந்துள்ளது, அதன் சமுதாய உள்ளடககமும வர்க் கச் சார்பும் எப்போதும் வெளிவெளியாகத் தெரிய அவசிய மில்லை. இலக்கியம் உருவாகிற காலமும் அதன் உடனடியான சமூகத் தேவையும் அதன் சமூக - அரசியற் தனமையின வெளிப் பாட்டை நிர்ணயிக்கின்றன. ஒரு படைப்பாளியின படைப்புக் களில் அதிக கால வேறுபாடில்லாமலுங்கூட நாம வேறுபடட கருத்து வெளிப்பாட்டுத் தன்மை களைக் காணலாம். படைப் பினூடு வெளியாகும் கருத்து வலிந்து முன்வைக்கப்படுகிறதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, ஒருவரது சமூக - அரசியற் சித்தாந்தம் அவரை அறியாமலேயே அவரது எழுததினுட புகு கிறது. தமது நிசமான எண்ணங்களை மூடி மறைந்து எழுதுகிற டைப்பாளிகள் கூட அவர்களது அகமனதால இடறிவிடப் படுகின்றனர். இங்கே ஒரு படைப்பின் வாசிப்பின குறைபாடு ளையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும் சில சமயங்களில் குறிப்பிட்ட விதமான அகச்சார்பான வாசிப்புககள் எழுததுக்கள் மீது திணிக்கப்படுவதும் உண்டு. பாரதி மீது சுமத்தப்படும பார்ப் பனிய, ஆணாதிக்க அடையாளங்கள் இதற்கான உதாரணங்களில் உள்ளடங்குவ ன. இவ்வாறே எதிர்ப்பு இலக்கியங்கள் பலவற்றை அவற்றின் காலத்துக்குரிய முக்கியத்தை மறுக்கும் விதமாகத் திரித்து வாசிக்கும் முயற்சிகளும் இன்று பரவலாகக் கானைப்படு கின்றன:
பல பழம் இலக்கியங்களின் கிளர்ச்சிக் குரல்கள் நீண்ட காலமாகத் தவறான வாசிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்தன. இவற் றின் எதிர்ப்பிலக்கியத் தன்மையை அறியவும் அடையாளங் காட் டவும் மாக்ஸியத் திறனாய்வுமுறை ஒரு பயனுள்ள கருவியாக இருந்தது, இன்று எல்லாவற்றையும் அர்த்தமற்றவையாகக் காணு
தாயகம் 38 3.

Page 9
கிற ஒரு புதிய மாயாவாதமும் ஐக்கியப்பட வேண்டியவர்களை எல்லாம் பிளவுபடுத்தும் முயற்சிகளும் பின் நவீனத்துவம் என்ற கோட்பாட்டைத் தமக்கான ஒரு கருவியாக்கியுள்ளன. எசமான வர்க்கம் எதைச் செய்ய முயன்று தோல்வி கண்டதோ அதையே புதுமை, நவீனத்துவம், கிளர்ச்சி என்ற பேர்களிற் சிலர் இன்று செய்ய முயல்கின்றனர். இச் சூழலில் நாம் இலக்கியத்தின் எதிர்ப் புக்குரல்கள் எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளன என்பதையும் அவற்றை எசமான வர்க்கம் எவ்வாறு கையாண்டுள்ளது என் பதையும் பற்றிக் கவனிப்பதற்கான ஒரு தேவை இருக்கிறது:
எந்த ஒரு படைப்பையும் எடுத்த எடுப்பிலேயே ஏதாவது ஒரு முத்திரை குத்தி ஒதுக்குகிற ஒரு மரபும் இல்லாத கருத்துக் களையெல்லாம் வலிந்து திணித்து வாசிக்கிற ஒரு மரபும் நம்மி டையே வளர்ந்து வருகின்றன. இது திறனாய்வுக் குறைபாடு: இது நமக்கு ஏற்றதல்ல, மரபின் இலக்கியங்களின் ஆய்வில் ஒரு வரலாற்றுப் பார்வை நமக்குத் தேவை. அன்றைய கிளர்ச்சிக் குரல்கள் எவ்வாறு ஒலித்தன என்று அறிய, இன்றைய கிளர்ச் சிக் குரல்களுடனான மேலோட்டமான ஒப்பீடு உதவாது. அன் றைய எதிர்ப்பிலக்கியம் எப்படிச் செயற்பட்டது என்ற அறிவு, அதை அப்படியே இன்றைய எதிர்ப்பிலக்கியமாக்கும் காரியத் திற்கானதாக இருக்க முடியாது. எதிர்ப்பிலக்கியங்கள் ஏன், எவ்வாறு தமக்குரிய வடிவங்களுள் அமைந்தன என்ற அறிவு சமுதாய மாற்றத்திற்காகச் செயற்படுகிற திறனாய்வாளர்கட்கும் படைப்பாளிகட்கும் தேவையானவை. அதை விட முக்கியமாக, எந்த எசமான வர்க்கத்திற்கு எதிராக எதிர்ப்பிலக்கியம் குரல் கொடுத்ததோ, அதே எசமான வர்க்கம் அந்த எதிர்ப்புக் குரலை எவ்வாறு தனக்கு வசதியான விதமாக மழுங்கடித்தும் தனக்கு வாய்ப்பான விதமாக மறு வார்ப்புக்கும் மறு வாசிப்புக்கும் உட் படுத்தியும் தனதாக்கி இருக்கிறது எனவும் தாம் கவனிக்க வேண் டும் இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் என்ன என் றும் சிந்திக்க வேண்டும்
வரலாறு புரட்சிகர சக்திகளின் தரப்பில் தான் உள்ளது அதனால் புரட்சிகர சக்திகள் கைகளைக் கட்டிக் கொண்டிருக்க முடியாது. நாம் எதிரியிடமிருந்து கற்க மறுக்கலாம். ஆயினும் எதிரி நம்மிடமிருந்து கற்கிறான், எப்படியும் தன்னுடைய ஆதிக் கத்தின் ஆயுளை நீடிக்கும் நிர்ப்பந்தம் எதிரிக்கு வரலாற்றினின்று நாம் கற்க மறுக்கும் போது, எதிரியையே நாம் வலிமைப்படுத் துகிறோம்; வர்க்கப் போராட்டத்தின் இரு தரப்புப் பாசறை களிலும் கலை இலக்கியங்கள் முக்கியமான ஆயுதங்களாகவே உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்கள்சார்பான ஆயுதங்கள் எவ்வாறு
14 Asstusth 38

பறிக்கப்படுகின்றன. சிதைக்கப்படுகின்றன, எதிரியால் தனதாக்கப் படுகின்றன என்பது பற்றிய ஒரு ஆய்வுக்கான அறிமுகமாக இக் கட்டுரையை எழுத விரும்புகிறேன். இவ்விடயம் மேலும் விரி வாக்கப்பட வேண்டிய ஒன்று. இதில் உள்ள குறைபாடுகள் யாவும் அடையாளங்காணப்பட்டு, அதன் மூலமும் செம்மையான ஆய்வுகள் விருத்தி பெறவேண்டும் என்பது என் ஆவல்.
1. எதிர்ப்பின் குரலாக மதம்
மனித சமுதாயத்தின் அறியப்பட்ட வரலாற்றுக் காலத் தின் பெரும் பகுதி மதங்களின் தொடர்பானது. ஆதி மனித வாழ்வுக்கும் இயற்கைக்குமிடையிலான நட்பும் பகைமையும் கலந்த உறவும் இயற்கை பற்றியபுரிதலும் கடவுள் நம்பிக்சையின் தோற்று வாய்கள். சமுதாயங்களின் ஒருங்கிணைவில் சடங்குகளும் சம்பிர தாயங்களும் வகுத்தபங்கை மதம் படிப்படியாகத் தனதாக்கிக் கொண்டது. சமுதாயங்களின் ஒருங்கிணைவு ஏற்றத்தாழ்வான சமுதாய அமைப்பினூடாகச் செயற்படும் போது, அந்த ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துவதிலும் நிறுவனமாக்கப்பட்ட மதம் ஒரு பங்கை வகித்துள்ளது. மதம் ஒடுக்குமுறையின் சார்பான சித்தாந்தமாகிய சூழலில் அதற்கெதிரான எழுச்சி மதச்சீர்திருத் தமாகவும் புதிய ஒரு மதமாகவும் தன்னை அடையாளங்காட்டி புள்ளது. இதற்கான உதாரணங்களில் கிறிஸ்துவத்தின் தோற்ற மும் அதன் தொடக்கபரம்பலையும் இஸ்லாத்தின் தோற்றத்தை யும் பரம்பலையும் சமணம், பெளத்தம் போன்ற மதங்களின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் கூறலாம். பின்னர் இதே மதங்கள் அரச அதிகாரத்துடனும் ஆளும் வர்க்கத்துடனும் உ0° பூண்டு கோலோச்சிய காலத்தில், அவற்றுக்கெதிராக அவற்றின் உள்ளும் வெளியிலும் மதத்தொடர்பான வடிவிலேயே எதிர்ப்பு இயக்கங்கள் எழுந்துள்ளன. இந்த எதிர்ப்பு குறிப்பான ஒரு வடிவிற்தான் எழுமென்றில்லை. கத்தோலிக்கத் திருச்சபையிற் கெதிரான சீர்திருத்தக் கோரிக்கைகளே முடிவில் பல வேறு புரட்டஸ்தாந்து மதங்களாக வளர்ந்தன. அண்மைக் காலங்களில் விடுதலைக்கான இறையியல் என்பது கத்தோலிக்கத் திருச்சபைக் குள் இருந்து கிறிஸ்துவின் பேரால் மக்களது போராட்டங்களை ஆதரிக்கும் ஒரு போக்காக லத்தின் அமெரிக்காவில் வளர்ச்சி கண் டது. பிராமணிய மதத்தின் வருணாசிரம தருமத்திற்கும் ஒடுக்கு முறைகட்குமெதிராக வளர்ந்த சமணமும் பெளத்தமும், பின்பு தாமும் அதிகாரம் சார்ந்து நிலைத்து நிற்க முற்பட்டபோது, அதற்கெதிரான எழுச்சி தமிழ் நாட்டில் பிராமண மதம் என்று கூறத்தக்க சைவத்தினூடு, காரியத்தை ஒரளவுக்கேனும் நிரா கரித்து, பக்தி இயக்கமாக வடிவு பெற்றது. இந்த எழுச்சியின்
AS/T du6sub . 36 15

Page 10
TTLL TTLTTT 0LELEELTL LLLLLLTTLHtLS TCTTTT S Jy 65 m průb பெற்ற சூழலில் சித்தர். மரபு ஒரு எதிர்ப்புக் குரலாகியது:
இவ்வாறான போக்குக்களை வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு சமூக வரலாற்றுச் சூழல்கள் இயலுமாக்குகின்றன, ஆபிரிக்க மக்களை அடிமையாக்கி ஆளும் முயற்சியோடு இணைந்து செயற்பட்ட கிறிஸ்துவம் அவர்களது விடுதலைப் போராட்டங் களில் ஒரளவுக்கும் அவர்களது எதிர்ப்புக் குரல்களை வெளியிடு வதற்கான ஒரு வடிகாலாக விரிவான அளவிலும் பயன்பட்டுள் ளது. அமெரிக்க நீக்ரோ மக்களின் வழிபாட்டுப் பாடல்கள் சில பின்னைக் காலத்தில் அவர்களது உரிமைப் போராட்ட இயக்கங்களில் மக்களை ஒருங்கிணைக்கும் போராட்டக் கீதங் களாகவும் பயன்பட்டுள்ளன. எதிர்ப்பின் குரல் இறை வழிபாட் டுக்கள்ளாகவும் அதைக் கூறும் மொழியூடாகவும் இசை வடி வினுரடாக இன்னும் பிற முறைகளிலும் தன்னை அடையாளங் காட்டியுள்ளது,
மத மாற்றம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் பலவேறு சூழ் நிலை களி ல் நிகழ் துள்ள போது ம், பல இடங்களில் இந்து மதத்தின் சாதியத்திற்கு எதிரான ஒரு எதிர் நடவடிக்கையாக அமைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. மத மாற்றம் சமூக விமோசனத்திற்கு வழிவகுத்ததா என்பது வேறு விட யம். அம்பேத்கர் இந்தியாவில் தாழ்த்தப் பட்டோரை புத்த மதத்திற்கு மாறும்படி சொல்லி அதை நடைமுறைப் படுத்தியதும் 1950 களில் வட இலங்கையில் இதையொத்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் சமூக அளவிலான நடவடிக்கை கள். தனிப்பட்ட முறையில் அல்லது குடும்பமாக மதம் மாற்றப் பட்டோரின் மனதில் சாதிக் கொடுமை ஒரு முக்கியமான காரணியாகவே இயங்கியது என்பதை நாம் மறுக்க முடியாது. இம் மத மாற்றங்கள் தனிப்பட்ட நலன்கட்காக வசதி படைத்த மேற்தட்டு மாந்தர் நடுவே நடந்த மதமாற்றங்களிலிருந்து வேறுபட்டவை.
எதிர்ப்பின் குரலாக மதம்” என்ற விடயத்தை எல்லை யின்றி விரித்துக் கொண்டு போக முடியும். ஏனெனில் உலகில் ஒரு நீண்ட வரலாற்றுக் காலப் பகுதியில் மதமும் அரசியலும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவையாக இருந்தன. முதலா ளித்துவத்தின் எழுச்சியே மதத்தினின்று ஐரோப்பிய அரசியல் விடுபடுவதை இயலுமாக்கியது. ஆயினும், முதலாளித்துவம் மதத்தை எப்போதுமே தனது தேவைகட்கேற்ப இயக்கியும் பயன்
படுத்தியும் வந்துள்ளது:
6 தாயகம் 38

இங்கு "நாம் கவனிக்க வேண்டியது. எதையென்றால் மதம் எதிர்பினதும், கிளர்ச்சியினதும் குரலாக மட்டுமன்றிச் சமுதாய எழுச்சியினதும் புரட்சியினதும் வாகனமாகவும் செயற்பட்டுள் ளது என்பதையே, அதே வேளை இந்த எழுச்சிகளதும் புரட்சி களதும் வெற்றிகள் கொண்டுவந்த சமுதாய மாற்றங்களின் தன்மை பற்றி நமக்கு அதிகம் மயக்கம் இருக்க இடமில்லை;
உலகமயமாதலும் நாமும்
உலகளாவிய பொருளாதாரத்தில் மூன்றாம் உலக நாடு கள் எதையெல்லாம் இழந்துள்ளன என்பதை நாம் பார்க்க வேண்டும். உலகளாவிய பொருளாதாரம் மூன்றrம் உலக நாடுகள் கொண்டுள்ள சுயசார்பை இல்லாமல் செய்து விடுகிறது. உலகளாவிய பொருளாதாரம் தொழில் துறை யில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு மட்டுமே உதவுகிறது
வளர்ச்சியடைந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை செல்வாதாரங்களையும் குறைந்த கூலிகொடுத்து மூன்றாம் உலக நாடுகளின் மனித உழைப்பையும் வரலாறு கண்டிராத அளவில் சுரண்டி வருகிறது.
வளர்ந்த நாடுகளின் முதலீடு மூன்றாம் உலக நாடுகளில் பெருகிக்கொண்டே வருகிறது. இப்படி வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்திற்கு உதாரணமாக ஐரோப்பாவை கொள்ளலாம் . அதிகமான தொழில் வளர்ச்சி உள்ளது. அதே நேரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. உலகளாவிய பொரு ளாதாரத்தால் அப்படி என்ன நிகழ்ந்துவிடப்போகிறது. வேற்றுமை உலகளாவியதாக ஆகப்போகிறது:சமூக அநீதி உலகளாவியதாக ஆகப்போகிறது; வறுமை உலகளாவிய தாக ஆகப்போகிறது. இத்தகைய உலகளாவிய பொரு ளாதாரத்தோடுதான் நாம் உற்பத்தி செய்யும் பொருட் களை விற்றும் - வாங்கியும் வாழவேண்டிய நிலையில் உள்ளோம். ༣
- ஃபிடல் காஸ்ரோ
தாயகம் 38 盟7

Page 11
அடிமைகளில் கிளர்ச்சிகள் மூலம் நிலவுடமை அமைப்பு உருவானதே ஒழிய, சமத்துவமான சமுதாயமல்ல, விவசாயிகளின் கிளர்ச்சிகள் உலகின் பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ளன. ஆயினும் அவற்றால் உழைப்பவனுக்கே நிலம் என்ற நீதியை வென்றெடுக்க முடியவில்லை. பாட்டாளிவர்க்கத் தலைமையிலான எழுச்சிகளே உழைப்பவர்க்கு உலகம் சொந்தம் என்ற நிலைப்பாட்டினின்று போராடி மனித சமத்துவத்துக்கான செயற்பாட்டுத் தளத்தை உருவாக்கியுள்ளன.
ஒவ்வொரு கிளர்ச்சியும் அதனதன் காலத்தின் குழந்தை மட்டுமல்ல அதனதன் காலத்தின் கைதியுங்கூட. எனவே கடந்த காலக்கிளர்ச்சிகளை நோக்கும் போது அவற்றில் வெற்றிகளி னின்றும் தோல்விகளினின்றும் நாம் கற்க வேண்டியுள்ளது என்பது தெளிவாகும். அவற்றால் நாம் ஊக்குவிக்கப்படும் அதே வேளை அவற்றை அப்படியே பிரதி செய்வது எவ்வளவு ஆபத் தானது என்பது பற்றியும் நாம் கவனமாயிருக்க வேண்டும் அவற்றின் தோல்விகளாலும் அவற்றின் வெற்றிகள் திசைதிருப் பப்பட்ட சூழ்நிலைகளாலும் மனம் தளராமல் இருப்பது முக்கிய மானது இது ஒருபுறமிருக்க, அதிகார வர்க்கம் எவ்வாறு எதிர்ப் பின் சிந்தனையையும், மொழியையும், செயற்பாட்டையும் எதிர் கொண்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். எதிரி மக்க ளிடமிருந்து கற்பது போல மக்களும் எதிரியிடமிருந்து கற்க வேண்டி இருக்கிறது. இக் கல்வியின் நோக்கம் எதிரியைப்பின்பற் றுவது அல்ல. மாறாக, மக்கள் தமது போராட்ட வலிமையை யும் தந்திரோபாயங்களையும், யுத்த தந்திரத்தையுங்கூட மேலும் கூர்மைப்படுத்துவதாகும்.
மேற்கொண்டு இக்கட்டுரையிற் கலை இலக்கியங்களில் மக்களது எதிர்ப்பின் குரல்கள் எசமானர்களால் எவ்வாறு கையாளப்பட்டு வந்துள்ளன என்பது பற்றியும் அதிலிருந்து நாம் கற்கக்கூடியன பற்றியும் கவனிக்குமுன், எதிர்ப்பின் குரல்களை வரலாற்றில் வைத்து மதிப்பிடும் தேவை பற்றி நாம் வலியுறுத்தியாக வேண்டும்.
2. சமுதாய வரம்வுகளிடையே எதிர்ப்பின் குரல்கள்
எதிர்ப்பின் குரல்கள் எல்லாமே சமுதாய மாற்றத்திற்கான குரல்கள் அல்ல. பெருவாரியான சூழல்களில் எதிர்ப்பின் குரல்கள் அடிப்படையான சமுதாய மாற்றத்தை வேண்டுவன அல்ல, சீர்திருத்தந்திற்கான குரல்கள் வரலாற்றில் பெரும்பான்மையான வையாக இருப்பதில் வியப்புக்கு இடமில்லை. ஏனெனில், அடிப் படையான சமுதாய மாற்றத்திற்கான குரல்கள் பெரும்பான்மை யானவையாகத் தோன்றும் சூழல்கள் அப்படிப்பட்ட சமுதாய மாற்றத்தை உண்டாக்கும் சூழல்களாக அமைய வேண்டும் இன்
AsrNasib 98

னொருபுறம்அத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய வர லாற்றுச் சக்திகள் எழுச்சி பெறுங் காலங்கள்:குறுகியவை, அவற் றின் எழுச்சி மிகவும் வலிய ஒரு சமுதாயத் தாக்கத்தை உடையது ஆயினும் அதற்கு முன்னோடியாகச் சமுதாயத்தின் அடிப்படை பாண அமைப்பைக் கேள்விக்கு உட்படுத்தாமல் குறிப்பான பிரச்சினைகளையிட்டு எழும் ஆட்சேப குரல்கள் விரிவான தள மற்றவையும் சிறு மாற்றங்களுடன் நிறைவு காண்பவையாகவும் இருப்பது இயல்பு, இதனிலும் முக்கியமாக அடிப்படையான மாற்றத்தை வேண்டி நிற்கக் கூடிய சக்திகள் ஆளும் வர்க்கத் தால் மிகவும் கொடுமையான முறையில் எதிர்கொள்ளப்படுகின் றன மறுபுறம் ஆளும் வர்க்கம் தன்னுடைய பழைய சமுதாய அமைப்பு நெருக்கடிக்கு உட்படும் போது அதைத் தவிர்ப்பதற்குச் சில விட்டுக் கொடுப்புக்களையும் சமரசங்களையும் சீர்திருத்தங் களையும் ஏற்றுக்கொள்கிறது:
வரலாற்றில் முதலாளியத்தின் வருகை வரை, எல்லாப் பெரிய மாற்றங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களது எழுச்சி வேறு பட்ட அளவுகளிற் பயன்பட்டுள்ளது. அடிமைகளின் கிளர்ச்சியோ விவசாயிகளது எழுச்சியோ நேரடியாக மனித சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்கட்கு வழி வகுக்கவில்லை. ஆயினும் அவை வரலாற்றை முற்போக்கான திசையில் உந்து வதில் ஒரு பங்கை அளித்துள்ளன. அம்மட்டில், அவற்றை அவற் றுக்குரிய வரலாற்றுச் சூழலில் வைத்து மறிக்க வேண்டிய தேவை வரலாற்றின் மாணவர்கட்கு உண்டு.
ஒடுக்கப்பட்ட மக்களாலும் அவர்கள் சார்பாகவும் எழுப் பப்படும் எதிர்ப்பின் குரல் குறிப்பிட்ட சமுதாயச் சூழல்களின் வரையறைகட்கு உட்பட்டது. எந்தவொரு சமூகத்திலும் ஒடுக்கு வோரும் ஒடுக்கப்பட்டோரும் பேரளவிலேனும் சில சமுதாய விதிமுறைகளை ஏற்றே நடக்கின்றனர். அவற்றின் அடிப்படை யிலான சிந்தனைமுறை முழுச் சமுதாயத்தையும் ஆழமாக ஊடு ருவி நிற்கிறது. அது எவ்வளவு தூரம் கேள்விக்கு உட்படுத்தப் படக்கடடும் என்பது தான் எதிர்பின் தன்மையையும் பரிமாணத் தையும் தீர்மானிக்கிறது. இந்த இடத்திற் தான் மாக்ஸியம் அதற்கு முந்திய காலங்களின் சமுதாயச் சிந்தனைகளை எல்லாம் மீறி, மெய்யியலின் நோக்கம் சமுதாயத்தை விளக்குவது மட்டு மல்ல அதை மாற்றியமைப்பதுமாகும் என்று கூறியது, இந்த நோக்கே மாக்ஸியக் கலை இலக்கியங்கட்கும் பொருந்தும். இத்த கைய சிந்தனை ஒன்றுக்குப் பழக்கப்பட்ட ஒருவருக்கு, இது போன்று அடிப்படையான சமுதாய மாற்றத்தை வெளி வெளி யாக வேண்டுகிற கலை இலக்கியங்களை முந்திய வரலாற்றுக்
ASTush 38 19

Page 12
ாலங்களிலும் தேடுகிற ஆவல் ஏற்படுவது இயல்பு: இந்த இடத தில் நமது கடந்த காலங்கள் எத்தகைய சமூக அடக்கு (ирсодр களைக் கொண்டிருந்தன என்பது முக்கியமாகிறது. சமுதாய விதிகள், சடங்கு சம்பிரதாயங்களினூடும் மதங்கள் மற்றும் மனித உறவு சார்ந்த சகல வழமைகளிலும் ஆழமாகப் பொதிந்து செயற்படுகின்றன. எனவே தான் எதிர்ப்பு இலக்கியமும் அவற்றை ஒட்டிச் செயற்படும் தேவையும் பயனும் காணப்படு கின்றன. அதே வேளை, சமுதாய மரபுகட்குச் சவாலாகவும் சமுதாய நடைமுறையை மறுதலித்தும் மாற்றுச் சிந்தனைகள் வந்தே உள்ளன. இவ் இரண்டு வகையான எதிர்ப்புக் குரல்களும் சமுதாயத்தில் எவ்வாறு எழுகின்றன எனவும் அவற்றை எசமான வர்க்கம் எவ்வாறு எதிர் கொள்கிறது எனவும் இனிக் கவனிப் GunTrub 3. எதிர்ப்பின் குரல் வகைகள்
சமகாலச் சூழலில் கூட எதிர்ப்பு இலக்கியம் எல்லாவிடத் திலும் ஒரே விதமான முறையில் வெளிப்படாது. ஒரு குறிப்பிட்ட போராட்டத்தின் போக்கிலும் எதிர்ப்பிலக்கியத்தின் குரல் பல வேறு தளங்களில் வெவ்வேறு விதமாக ஒலிக்கக் கூடும். எதிர்ப்பு இலக்கியம் என்பது தன்னளவிலேயே முற்போக்கான ஒன்றாக அமைவதில்லை என்பது பற்றியும் விவரிக்க அவசியமில்லை ஆயினும் எதிர்ப்பு என்பதற்குத் தன்னளவிலேயே ஒரு பெறு மானத்தையும் கிளர்ச்சிகள் யாவுமே தம்மளவில் நியாயமானவை என்ற நியாயப்பாட்டையும் புகுத்தும் முயற்சிகள் சில கால மாகவே இருந்து வந்துள்ளன.
சமுதாய வளர்ச்சியின் திசை பற்றி நம் ஒவ்வொருவரதும் பார்வை எவ்வாறு வேறுபடுகிறதோ அதற்கேற்ப கிளர்ச்சி ஒவ் வொன்றும் எதிர்ப்பிலக்கியம் ஒவ்வொன்றும் பற்றிய நமது பார்வை வேறுபடும். எனினும் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப் டிலக்கியச் செயற்பாடுகள் ஒவ்வொன்றினின்றும் நாம் கற்க நிறைய உண்டு. இத்தத்துவமும் பிற மதவாத அரசியல் முனைப் புக்களும் வரலாற்றைப் பின்னோக்கித் திருப்பும் நோக்கில் பயன் படுத்தும் எதிர்ப்பு இயக்கங்களும் ஊக்குவிக்கும் கலை இலக்கிய வடிவங்களும் ஒரு முற்போக்குச் சக்தியால் பிரதி பண்ணக் கூடியன வல்ல. ஆயினும் அந்தப் போராட்ட முறைகளிலுள்ள பயனுள்ள கூறுகளைக் கற்கவும் சமுதாயச் புரட்சிக்குச் சாதகமான முறை யில் பயன்படுத்தவும் முடியும் இதற்குப் பின்னர் வருவோம்,
20 தாயகம் 38

போராட்ட இலக்கியம் வெளிவெளியாகத் தனது அரசியல் நிலைப்பாட்டைப் பிரகடனம் செய்து கொண்டு வருவதைத் தூய இலக்கியவாதிகள் விரும்புவதில்லை. வெளிவெளியான அர யெல் நிலைப்பாடு அவர்கட்கு உடன்பாடற்றது. புரட்சிகர இலக்கியவாதிக்கு இலக்கியத்தைத் தனது அரசியலுடன் இணைப் பது இயல்பாகவே வருவது. வலிந்து அரசியற் கருத்துக்களைத் திணிப்பதோ வெறும் கோஷங்களே! புரட்சிகர இலக்கிய முயற்சி ஆகி விடாது என்பதில் நமக்கு ஐயமில்லை. அதே வேளை, எவரையும் மகிழ்விக்கும் நோக்கில், அரசியற் பார்வையை மூடி மறைக்கவும் எது வித அரசியலுமே இல்லாது இலக்கியம் படைக் கவும் ஒரு புரட்சிகர இலக்கியவாதி செயறபடுவது அரசியலை வலிந்து திணிப்பதை விடப் போலியானது.
ஒரு படைப்பாளி தனது அரசியற் பார்வையை எவ்வளவு தூரம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூற வேணடியும் கூற இயலுமாயும் உள்ளது என்ற நிலவரமே பல இடங் வில் ஒரு படைப்பின் அரசியலின் வெளி வெளியான பண பைத் தீர்மானித்துள்ளது. சில கலை வடிவங்களின் தன்மையை அனு சரித்துக் கருத்துககளைக் கூறும் விதம வேறுபட்டே அமைய நேரிடலாம். அமர இலக்கியங்கள் எனப்படுவன அமரத்துவம் வேண்டிப் படைக்கப்பட்டனவா என்பது மிகவுமஐயத்துக்கரியது. கில இலக்கியங்களது நீண்டகால நிலைப்புக்குப பல வேறு சமூக. வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. இலக்கிய வளர்ச்சியின் பாரிய திருப்பு முனைகளாக அமைந்த எததனை இலககியங்கள் இன்று நிலைத்தோ அறியப்பட்டோ உள்ளன? இலககியங் வின் வெற்றி தோல்விகட்கு எளிமையான அளவுகோல்கள் இல்லை. எனினும் ஒரு எதிர்ப்பிலக்கியம் எந்த மக்களைச் செல. றடைய வும் எந்தச் சமூக நடைமுறைகட்கு எதிராகவும் உருவ 1 ன\தோ அந்த இலக்குக்களை எட்டிய அளவில் அதன வரலாற்றுப பணி நிறைவு பெறுகிறது. அதனிலும் உனனதமான வெற்றி என எதுவும் அதற்குத் தேவையில்லை.
உலகில் எல்லாவிடத்தும் சமுதாய மாற்றம் வேண்டி வெளிவெளியாகவே குரல் கொடுக்கும் சாத்தியப்படு இலறும் இல்லை. சுதந்திர சமுதாயங்கள் எனப்படுவனவற்றுள், சந்தை மீதும் தொடர்புச் சாதனங்கள் மீதும் பததிரிகை விநியோகம் உட்படப் பலவேறு கருத்துப் பரிமாறல் வசதிகள் மீதும பெரு முதலாளியத்தின் ஆதிக்கம் பெரிது. சமுதாய மாற்றததிற் 'ான குரல்களை விளிம்பு நிலைக்கு ஒதுக்கி வைககும் வசதி எசமானார் களிடம் உள்ள வரையில், கருத்துச் சுதந்திரம் பறறி அவர்கள் வாய் கிழியப் பேசுவார்கள் என்பது வரலாறு
தாயகம் 38 2.

Page 13
வரலாற்றில் எத்தனையோ நூற்றாண்டுக் காலமாக வெளிப்பட்டு வந்த எதிர்ப்பிலக்கியக் குரல்களில், சமுதாய மாற் றத்தை வேண்டியோ சமுதாய ஒடுக்கு முறைகளை அம்பலப் படுத்தியோ வெளிவெளியாகப் போர்ப் பிரகடனம் செய்தவை எத்தனை? எதிர்ப்பின் குரல்களாக வெளியானவை அடிப்படை யான சமுதாய அமைப்பை வேறுபடும் அளவுகளில் ஏற்றுக் கொண்டவையாகத் தெரிவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்;
முதலாளித்துவம் தன் தேவைகட்கும் தன் வலிமை மீதான திடமான நம்பிக்கைக்கும் உட்பட்ட சூழல்களில அனுமதிக்கும் கருத்துச் சுதந்திரத்தின் அளவு எப்போதும் ஒரே விதமானதல்ல. கருத்துச் சுதந்திரம் பல்வேறு முறைகளில் கட்டுப்படுத்தப்படுவது பற்றியும் எசமான வர்க்கத்தின் நலன்கட்கு எதிரான வலிமை பெறும் போது நசுக்கப்படுவது பற்றியும் நாம் அறிவோம். முத லாளிய அரச ஒடுக்குமுறை தீவிரமாக உள்ள சூழல்களில் எதிர்ப்பு இலக்கியங்களிற் கருத்து வெளிப்படும் முறை அப்படிப்பட்ட ஒடுக்குமுறை இல்லாத சூழ்நிலைகளில் உள்ள வெளிப்பாட்டு முறையினின்றும் வேறுபட்டது எனவும் நாம் அறிவோம். எனவே வரலாற்றில் எதிர்ப்பின் குரல்களை மதிப்பிடும் போது நம் உ. னடியான சூழலுடன் ஒப்பிடுவது பொருந்தாது என்பது திரும்ப வும் வலியுறுத்தப்பட வேண்டும்.
பக்தி இலக்கியம் எதிர்ப்பு இலக்கியப் பண்புடையது என வும் சித்தர் பாடல்கள் எதிர்ப்பு இலக்கிய வகையின எனவும் அறிவோம். இவை எதை எந்தளவுக்கு எதிர்த்தன என்று கவ னித்தால் அவை பூரணமான சமுதாய மாற்றத்திற்கான இலக் கியங்கள் அல்ல என்பதை எளிதாகவே உணரலாம். ஆயினும் சமுதாயத்தில் இருந்த மதி அடிப்படையிலான கில அதிகார அடுக்குக்களை வரையறைக்கு உட்பட்டாயினும், அவை கேள் விக்கு உட்படுத்தின. சைவ, வைணவ பக்தி இலக்கியங்களில் இறை வழிபாட்டில் சாதியத்தை மறுக்கும் குரல்கள் ஒலிக்கின் றன. அரச அதிகாரத்திற்கு எதிரான தைரியமும் தென்படுகி றது. வெகுஜனப் பார்வையும் தென்படுகிறது. ஆயினும் சமுதாய அமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அறவே நீக்குவது அந்த இலக்கியங்களின் நோக்கமல்ல. பிராமணிய இந்து மதங்களான சைவமும் வைணவமும் மாற்றுச் சமயங்கட்கெதிராக ஈடு கொடுத்து நிற்பதற்கு இயலாது போன சூழ்நிலையிலேயே முற் குறிப்பிட்ட பக்தி இலக்கியப் போக்குக்கான தேவை ஏற்பட்டது
'சித்தர்களுடைய பாடல்களில் இறை நம்பிக்கை முற்றாக மறுக்கப்படாவிடினும் பிராமணிய இறைக் கொள்கையும் வழி
含2 தாயகம் 3.

வாசி பற்றிய அணுகு முறையும். கடுமையாகக் கேள்விக்கு உள் வாாகின்றன. சித்தர்கள் எவ்வளவு தூரத்திற்குச் சமுதாயத்தினுள் ஒரு வலிய சக்தியாகச் செயற்பட்டார்கள் என்பது தெளிவில்லை. ஆயினும் அவர்கள் செயற்பட்ட சூழலை வெகுசன ஈடுபாட்டை நாடிய பக்தி இலக்கியச் சூழலுடன் சமன்படுத்த இயலாது சித்தர்கள் சமுதாய நீரோட்டத்தினின்று முற்றாக ஒதுங்கி வாழ்ந் தோர் என்ற கருத்து அப்படியே உண்மையாக இருக்க நியாய மில்லை. ஆயினும் அவர்களது கலகக் குரல்கள் தமிழரது ஆன் மீகச் சிந்தனையின் ஒரு முக்கியமான பகுதியாக வெகுகாலமாக அடையாளங் காணப்படவில்லை.
எதிர்ப்பு இலக்கியம் அங்கீகாரம் பெற்ற இலக்கியமாக நிலைப்பது எளிதல்ல. அவற்றின் எதிர்ப்புப் பண்புகள் ஆளும் வர்க்க நலன்கட்கு எதிரானவையாக அடையாளம் காணப் படும் வரை, அவற்றைப் பேணுவதற்கு அரச, மத நிறுவன ஆதரவு கிட்டுவது இயலாதது. இத்தகைய இலக்கியங்கள் புதிக் கணிப்பிற்கோ அழிவிற்கோ ஆளாவது தவிர்க்க இயலாததே,
நாட்டார் கலை இலங்கியங்கள் நேரடியான அரச ஆதத வையோ சீமான்களதும் மடாதிபதிகளதும் தயவிலோ தழைத் தவை அல்ல. அந்த வகையில் அவை மற்ற இலக்கிய வடிவங் களை விட நேரடியாகவே மக்களது இன்ப துன்பங்கள் பற்றிப் பேச வல்லன. இதற்கான ஆதாரங்களை இன்று வழக்கிலிருந்து வரும் இலக்கியங்களிலும் காணமுடியும். எனினும் சமுதா! மாற்றத்திற்கான எழுச்சி இல்லாத சூழல்களில், நாட்டார். இலக்கி யத்தின் எதிர்ப்புக் குரல் மக்கள் படும் இன்னல்கள் பற்றிக் கூறு வதுடன் எசமானர்கள் மீதான பகைமை உணர்வைப் பெரும் பாலும் குறிப்பால் உணர்த்தும் தன்மையுடையனவாகவே இருக் குமென எதிர்பார்க்கலாம். விலக்கான சூழ்நிலைகள் உள்ளன. மலையகத்து வாய்மொழி இலக்கியத்தில் இதற்கான சில சா? துகள் இருந்தாலும் இவை வெளிப்படையாகவே குறைகளைச் கூறுகிற அளவுக்கு அப்பால் போவதற்கு இடமில்லை,
ஆணாதிக்கதிற்கு எதிரான பெண்நிலை எதிர்ப்புக் குரல் கள் புத்த மதச் சார்பான இலக்கியத்தினுள் பெண் கவிஞர் களால் ஆக்கப்பட்ட தேரி காதா" வில் காணப் படுகின்றன: இவ்வாறான இலக்கியங்கள் பெருமளவும் அழிவதற்கு ஏதுவாக உள்ள காரணங்களை விளங்கிக் கொள்வதில் நமக்குச் சிரமம் இராது:
ஒடுக்கப்பட்ட மக்கள் தமது எதிர்ப்பை வெளியாகக் கூற இயலாத போது தமக்கெட்டி கூடிய கலை வடிவங்களுடு அவற்
தாயகம் 3と。 2岛

Page 14
றைக் கூறுவதற்கு முற்படுவது இயல்பானது. நாட்டார் கூத்துக் கள் இக்தகைய எதிர்ப்பின் வாகனங்ளகாகச் செயற்பட்டு வந்த தற்குச் சமகாலக்திலும் சான்றுகள் உள்ளன. உதாரணமாகக் காக்கான் கூத்தில் காத் கவராயன் என்ற தெய்வத்தின் வழியாக சமசுக் கொடுமைகள் பற்றிய கூத்துக்கள் வருவதோடு இந்து மகக் கில் உயர் நிலையில் உள்ள தெய்வங்களைக் கேலி செய்யும் கூற்றுக்களும் வாநகின்றன. தெய்வங்கள் வாயிலாக இகழப்படு வோர் அவற்றை வழிபடும் உயர் சாதியினரே. ஒடுக்குகிற உயர் சாகியினர் மீதான பகைமை அவர்களது கடவுளர் மீது ஏற்றப் படுகிறது. தமிழகத்தில் அபிமன்யு வதம் கூத்தில் அபிமன்யு துாே" ணாநடன் வாதிடுவதைப் பயன்படுத்திப் பார்ப்பன விரோத மான பல கடுஞ் சொற்கள் கூறப்படுகின்றன (நகர மேடையில் கண்டகை விடக் கடுமையான சொற்களைக் கிராமங்களில் நடக்கம் கூக்துக்களில் கேட்கலாம் என்று தெருக்கூத்துடன் பரிச்சயமிக்க ஒரு நண்பர் மூலம் அறிந்தேன்).
எதிர்ப்பின் இன்னொரு வடிவம் ஒதுங்கிப் போதல். இது ஒாரு முழுச் சமுதாயக்தாலும் செய்ய இயலாதது ஆயினும் சமூ கத்தின் விளிம்பிற்குத் கம்மை விலக்கிக் கொள்ளும் போக்கை நாம் அண்மைக் காலங்களில் ஹிப்பிகள், பன்க் போன்ற மேல் நாட்டு விளிம்புச் சலாசாரக் குழுக்களிடமும் காணலாம் இவ் வகையான எதிர்ப்பு ஒரு சமுதாய மாற்றத்தைக் கொண்டு வரும் தன்னம் பிக்கை அற்ற பண்பையுடையது என்பது முக்கிய மானது சமுதாய அமைப்பை நிராகரிக்கிற அளவிற்கு இதில் உள்ள எகி "ப்புக் குரல் அதை எப்படி மாற்றுவது என்று வழி காட்ட இயலாத ஒன்றாகவே உள்ளது:
ஒடுக்கப்பட்ட மக்களே தமது சார்பாகச் சமுதாயத்தை மாற்றப் போராடுகிற சூழல்களில், வெளிவெளியாகவும் தன்னம் பிக்கையுடனும் எதிர்ப்பின் குரல் எழுகிறது இது வரலாற்றின் அதிபுரட்சிகரமான வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் வருகை யுடன் உருவான ஒரு சூழ்நிலை. இதை விளங்கிக் கொண்டால், வெளிவெளியான அரசியற் கருத்துடைய இலக்கியம் பற்றிய பல மறுப்புக்கள் எழும் காரணத்தை உணரலாம். இந்த இலக்கியங் களை சமுதாய மாறறத்திற்காகக் குரல் கொடுப்பது இயலாத சூழல்களிலும் அத்தகைய மாற்றங்களைப் பற்றிக் கருதாத சூழல் களிலும் எழுத்த இலக்கியங்களின் அடிப்படையில் மதிப்பிடுவது, வரலாற்றுப் பார்வையில்லாமையால் நிகழ்வது:
இன்றைய எதிர்ப்பு இலக்கியம் என்றோ இருந்த எதிர்ப்பு இலக்கியம் போலவே தன்னை அமைத்துக் கொள்ள அவசியம்
岑 SnTuulasub 38

Lly
உனக்குள் ஒரு தீயை வளர் உனது சிந்தனையை ஒடுக்கிச் சிறைப்படுத்தும் மூடத்தனங்களுக்கு முதல்
தீயை மூட்டு
உனது நெஞ்சத்தின் வளைவுகளை திமிர்த்து.
நோவரினும் உணதறிவை அதில் தேய்த்து நேராக்கு.
அறியாமை
விலங்கொடிக்க Լմlգ
உலகின்
அடிமைத்தனங்களை
உடைத்தெறிய
அதுவே
நீ வைக்கும்
முதல் அடி.
- வித்யா
ਕਸ
தாயகம் - 38
இல்லை; அது தனது சமுதாயச் சூழலில் எந்தளவு வலிவுடனும் எநிதளவு ஆற்றலுடனும் மக் களை அடைய முடியுமோ, அந் தளவுக்கு அதன் செயற்பாடு விரிவடைகிறது. அது தனக்கு எட்டக் கூடிய எந்த இலக்கிய வடிவையும் பயன்படுத்தத் தடை இல்லை. ஆயினும் அது தனது தெரிவுகளைத் தனது உலக நோக்குக்கும் தனது சமுதாய இலக்குக்கும் ஏற்றபடி செய்து கொள்கிறது. ww.
எனவே இன்றைய எதிர்ப்பு இலக்கியம் மறைமுகமாகவோ
நேரடியாகவோ
Cup (up 60 D யாகவோ பகுதியாகவோ தனது எதிர்ப்புத் தன்மையை வெளிப் படுத்திக் கொள்கிறது. அந்தத் தெரிவு பற்றி தூய அழகியல் வாதிகளது விமர்சனங்கள் இலக் கியத்தின் நோக்கம் பற்றி அடிப் படையாகவே தவறான ஒரு நிலைப்பாட்டினின்று எழுகின்
றன.
வெவ்வேறு காலங்களில் வெவ் வேறு விதமாக வெளியான எதிர்ப்பு இலக்கியங்களை எச இயக்கம் எவ்வாறு கையாண்டு வந்துள்ளது என்று இனிக் கவனிப்போம்:
O6
(வளரும்)

Page 15
திருகோணமலைத் துறைமுகம்
எத்தனையோ கப்பல்களைக் கண்டது இத் துறைமுகம் எத்தனையோ கப்பற்காரர்களைக் கண்டது இந் நகரம் அம்மா சொன்ன கப்பல்கள் ஆச்சி சொன்ன கப்பல்கள் நானுங் கண்ட கப்பல்கள் வெள்ளைத் தொப்பி வெள்ளை உடை வெள்ளைத் தோல் மாலுமிகள் விரைவாக அடையுண்ட கதவிடுக்கின் வழிப் பாய்ந்து அம்மாவின் விழிகளை ஆச்சியின் விழிகளை அகல விரித்தது. அச்சமா ஆவலா அதிசயமா கடற்சிறையின் கதவு திறந்து மாலுமிகளை விடுவிக்கும் துறைமுகம் கால்களை அகட்டிச் சரிந்து மாலுமிகள் நடந்த தெருவழிகே கைகளிற் கிடந்த சில்லரை கரைய மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கும் துறைமுகம் மாலை இருளைப் பொய்ப்பிக்கும் வாண வேடிக்கை வந்தவை போர்க்கலங்கள் என்பதையும் மறக்கடிக்கும் அம்மா சொன்ன ஆச்சி சொன்ன நானுங் கண்ட கப்பல்கள் பின்னர் ஒரு நாளும் வரவில்லை கப்பலாற் கழித்துவிட்ட வண்ண வண்ணக் கொடிகள் மட்டும் கலியான வீடுகளிலும் கோவிற் திருவிழாக்களிலும் தோரணங்களின் மேலாகத் தொங்கிப் பறந்த நினைவு மனதில் நிழலாடும் பின்னரும் சப்பல்கள் பல கண்டதுதான் இத் துறைமுகம் வணிகக் கப்பல்கள் மீன்பிடிக்கப்பல்கள் போர்க் கப்பல்கள் முன்பு போலில்லாவிடினும் கப்பல்கள் வந்து போவன துறைமுக விளிம்பில் கடலின் ஒரத்தில் படகுத் துறையில் எவரதோ வீட்டில் காவல் நிலையத்தில், நடு வீதியில் அரச அலுவலகத்தில் அகதி முகாமில் ஊர் திரும்பிச் செல்வதற்காக ஒரு கப்பலுக்குக் காத்திருக்கிறார்கள் அம்மா சொன்ன கப்பல்கள் ஆச்சி சொன்ன கப்பல்கள் நானுங் கண்ட கப்பல்கள் இன்னும் எத்தனையோ கப்பல்கள் வந்து போன துறைமுகத்தில் ஊர் திருப்பிச் செல்வதற்கு ஒரு கப்பல் ஒரே ஒரு கப்பல்.
--- 6 Gras fir
26 sagrLuaKfiß . :48

ஒளிநாடி
சண்முகம் பென்ரோஸ் தோட் டத்திலேயே பிறந்து வளர்ந்த வன். கல்பொடை ரயில் நிலை யமும் குகைப்பாலமும் சலசலத் தோடும் அருவியுமே அவனறிந்த அகிலம். நவீன மோட்டார் வாகனங்கள் அங்கே வரவோ போகவோ மோட்டார் பாதை * அற்ற கைவிடப்பட்ட و أقسام" rrtقوقا
rg;LDT5 ஒதுக் கப் பட் - தோட்டமாதலால் சர்வதேச ாணய நிதியம் ஒரு விஷப் பரிட்சை செய்து பார்க்கத் தொடங்கி ற் று கொள்ளை ga aymt l_u u6 l*- G5) aiS 6ñ) ufig as தோட்டம் கடைநிலையில் இருப் பதாகவே கணித்துக் கொண் டது. பச்சைப்பசேவெனப் பசு மையும் குளுமையும் காட்டிய தேயிலைச் செடிகளை எல்லாம் அழித்து மாற்றுப் பயிர் செய் திடும்படி உத்தரவு பிறப்பித் 岛岛°
கொழுந்தெடுத்து உழைப்பில் ஒன்றியமான தொழிலாளிகளை பைகேப்பிள் தோட்டத்திற்கே கலிக்கு போய்விடவே நிர்வாக மும் ஒத்துப் பாடியது.
தாயை விட்டுப் பிரிந்திட மனமில்லாத தனயன் போலவே
தாயகம் 38
O சி. சுதந்திரராஜா
லயத்தை விட்டகலாமல் சண் முகம் தெ ன் பட லா னா ன் ஏகாந்தமாகி லயக்காம்பரா பல வும் வெறிச்சோடிப் போயின. பிழைப்புத் தேடி அட்டனுக்கும் நாவலப்பிட்டிக்கும் அநேகம னோர் கிளம்பினார்கள். மாட் டுக் கொட்டில்களாக சில காம் ராக்கள் மாற்றம் காட்டலாயின. புதுப்பசளைக் கோணிக் கிடங்கு களாகவும் மருவலாயின.
ரயில் பாதை வளைவாகவே அமைந்துவிட்ட மலைச்சாரல் கீழ் நோக்கிப் போகின்ற ரயில் மேலிருந்து வருகின்ற போதே எதிர்ப்புறத்தில் தெளிவாகத் தெரியும். வளைவுப் பாதையால் பென்ரோஸ் வந்து தாண்டிட ஓர் அரைமணி நேரமாவது கழி யும் சின்ன வயதிலிருந்தே விநோதமும் வியப்பும் முட்டி வழிய இதையெல்லாம் பார்த்து நேரமறிவான்
மா னிக் க மும் இவனைப் போலவே புல்லுவெட்டியும் கல் லுக் கட்டியும் பழகியவன். சண் முகத்தின் கூட்டாளி மாற்றுப் பயிர்களாக மிளகையும் கடுகை யும் மலைதேசத்தில் புதுவகைப் பயிர்களாகச் செய்கை பண்ணும் தி ட் டத் தி ல் ஈடுபடுத்தப்பட் L-GT til
.27

Page 16
விக்கத்தின் மனைவி பிர சவ நோவெடுத்த காலத்தில் போக்குவரத்து வாகனமில்லாக் கா ர னியா ல் மரணமாகிப் போ ன வ ள். கால்தடையாகத் தான் நாவலப்பிட்டி ஆசுப்பத்தி ரிக்கேனும் போய்வர முடியும். பிரசவ வேதனையுடன் துடிப்ப வளை எவ்வாறு அத்தனை தாரம் அவனால் இட்டுச் செல் து? அவள் விட்டுச் சென்ற பிள்ளைச் செல்வங்களை வளர்த் தெடுப்பதில் மாத்திரம் மாணிக் கம் பிரயாசைப்பட்டான், நாவ லப்பிட்டி கதிரேசன் வித்தியால பம் வரை சென்று அவர்கள் படித்திட எவர் எவரையோ எல்லாம் தேடிக் கெஞ்சிக் கத் தாடினான்,
படிக் கட்டு கள் தன்னும் அமைக்கப்படாத கடுஞ் செங் குத்தான மலை க்கு ன் றில் தேயிலை பக்டரி அங்கே அமைந் திருந்தது. தேயிலை அடைபட்ட பாரமான பெட்டிகளைத் த னித் துத் த லை யி லே யே வைத்தபடி அந்தத் தலைகிறங் கும் செங்குத்துச் செம்மண் தரைவழி மூலம் கீழேயிருந்த ரயில் மடுவத்திற்கு மூதாதை யர்கள் இப்பெட்டிகளைச் சுமந் தது பற்றியும் கேள்விப்பட் டிருக்கிறான். ரயில் மார்க்க மாகவே கூட்ஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு லண்டன் சீமைக் குப் போய்விடுவதாகச் சொல் லக் கேட்டிருக்கிறான்; கடிட்ஸ் வண்டிகள் அங்கே தரிக்கின்ற தருணங்க ளில் தேயிலைப் பெட்டிகள் ஏற்றப்பட்டதை எல்லாம் கண்டிருக்கின்றான். இது வொன்றே உலகத்துட னான தோட்டத் தொடர் பாயுமிருந்தது5 28
faurras Ab Grubudîradgrrr வுக்கு பக்டரியிலுள்ள உதிரிப் பாகங்களை எல்லாம் ஏற்றி விடும்படி பணிப்பு விட்டிருந் தது. மாணிக்கமும் சண்முக மும் எப்பாடு பட்டேனும் இதைத் தடுத்து எனறு uit GOfAN nrahmut
ri ዶöffይ0ዐ። பச்சைப் பாவடை விரித்திருந் தது போல் வனப்புக் காட்டிய பென்ரோஸின் அழகெல்லாமே மாற்றுப் பயிர்வகையால் குன் றிப் போயின, வேற்றுப் பசளை யின் நாற்றத்தால் சூழல் மாசு பட்டது. இவர்களது நியாய மான உணர்வுகள் மறுதலிக் கப்பட்டு வளங்குவித்த இவர் களது உழைப்பெல்லாம் வீன டிக்கப்பட்டு இவர்கள் கண்டும் கேட்டும் அறிந்தேயிராத வெள் ளைச் சிமை முகாமைத்துவப் பணிப்பினால் சின்னாபின்ன மாக்கப்பட்டார்கள்.
'கொரங்குமலைல மருந்தடிச் சிப்பிட்டியா?
கணக்குப்பிள்ளை குரல் நச் சரிக்கும். そ
மாணிக்கம் சண்முகத்திடம் Fo arror loursor . கணக்குப்பிள்ளை அவ்விடத்தை விட்டகன்றதும் இரு வ ரு மே கெக்கரித்துச் சிரிப்பார்கள்.
* எப்பண்ணே இந்த யதேச் சாதிகாரம் மாறும்"
அப்பாவியாகக் கேட்டான் மாணிக்கம்.
உற்பத்திச் சாதன மெல்லாம் எப்ப ightAGol
கைக்கு வருதோ அப்பத்தான்” பெருமூச்சொன்றை இழுத்து விட்டபடி தூரத்துமலைகளை
பார்த்தபடி விழிகளில் புதிய ஒளி வீசச் சொன்னான் சண்
முகம்
தாயகம் 38

துருவன்
O மணி
என் தந்தை மடியில் நான் அமர்ந்த காட்சி எனது மாற் றாந்தாயின் மனதில் பொறா மைத் தீயாக மூண்டெழுந்தது. நான் வேகினேன். என் புண் களை ஆற்றவோ வெம்பி அழுத
என் கண்களைத் துடைக்கவோ
இயலாது என் தந்தையைத் தடுத்தது அவரது கோழைத்த னம். கொடுமையைத் தாங்கிய என்னால் கோலைத்தனத்தைத் தாங்க இ ய ல வில் லை. நாடு நீங்கிக் காடேகினேன்.
முன் கண்டிராத இன்னல்
கள், மு ன் அறிந்திராத இடர் கள், எண்ண முனையாத துன்
பங்கள். என் பயணம் ஒரு நீண்ட நடைத் தவமா சித் தொடர்ந்தது. என் முகத்தில்
அறைந்த மணற் புயல்களையும் என்னை முழுக்கி எழுப்பிய பேரலைகளையும கால்களைத் தீய்த்த சுடுமணல் வெளிகளை யும் வழி மறித்த மா மலைகளை யும் சூறைக் காற்றையும் கடல் ஆழத்தையும் சதுப்பு நிலங் களையும் தாண்டினேன். புகலி டம் ஒன்றே இலக்காக நெடுந் தொலைவுகளைக் கடந்தேன். என் கடுந்தவம் வென்றது. என் தெய்வம் எனக்கு இரங்கி யது5
Bf TL195 Lb 38
வ-புலத்து வானவெளியிலே எனக்காக ஒரு இடத்தை ஒதுக் கிய தேவனே, எனக்கு நிலை யாக ஒரு நிழல் தந்த தேவனே,
எல்லாமும் முன்னமே அறி வாயா? அவ்வாறெனின் ஏன் என்னிடம் நீ கூறிவில்லை?
தேவனே நீ தந்த இடத்தில் நான் ஒரு பெருங் கற்குவிய லிடையே இன்னொரு கல். @(5 கோடி மின்மினிகளிடையே இன்னொரு மின்மினி எண்ணி மா ளா த தாரகைகளிடையே இன்னொரு தாரகை என் தனிமையை நீ அறிவாயா? ஒன் றோடொன்று ஒட்ட இயலாத வைரங்களூடு ஒளியைப் பாய்ச்சி வர் ன ச் சிதற ல் க ளா ல் வேடிக்கை காட்டுகிற தேவனே வைரக்கல்லின் தனிமையை நீ அறிவாயா?அதன் வேதனையை நீ அறிவாயா? கடுமையை மீறிய அதன் கண்ணீரை நீ அறிவாயா? ஓய்வின்றி இயங்குகிற எந்திரங் களின் பற் சக்கரங்களின் உயி ரற்ற இயக் க த்தை நீ அறி வாயா? இயந்திரப் பேரொலி யின் இடையே அவற்றின் அழு குரலை நீ அறிவாயா?
தீயினின்றுந் தப்பி வந்த என்னை இந்தத் துருவத்துக் கடுங்குளிர் உறையச் செய்தி நறது. சுடுசொற்களென எனைச் சூழச் சொரியும் எரிகற்களைக் கண்டு என் மனம் மரத்துப் போயிற்று. என் மண்ணில் ஒரு சொல் மூட்டக் கூடிய நெருப் பின் வெப்பத்தை இந்த வட புலத்து வானத்தின் நெருப்புக்
29

Page 17
கோளங்களால் ஏன் மூட்ட இயலவில்லை? என்னைச் சூழும் இக் குளிர் உன்னுள்ளும் குடி கொண்டு விட்டதா?
காண் ப தெ ல் லா
இதயங் பனிப்பாறைகளையும்
தா ன் மென்ன? கல்லான தங்கள் கடுமையைப்
urei)
_u 6erflu'r Guntri60). Gal மூடி மறைக்கும் கற் குன்றுகளையும் வட புல த் து மண்ணுடன் என் உறவை மறிக் கும் பணிப் படலத்தின் எல்லை யற்ற விரிவையும் தவிர என் கண்களுக்குத் தெரிவதென்ன? வட துருவ வானிலே வண்ண ளிைகளாய் மாயங் காட்டும் தேவனே, சொல்! என்றுமே எனதாக முடியாத இந்த வட புலத்து வானவெளி நடுவே என்னை ஏன் கொண்டுவந்து வைத்தாய்?
கன னி க ளின் கட்டளைக் கிசைய ஒளிவிடும் உயிரும் உறவு மற்ற வண்ண விளக்குகளின் நடுவே நான் காற்றில் தடுமாறும் ஒரு மெழுகுதிரியின் சுடருக்காக ஏங்குகிறேன். சாவுக்கும் வாழ் வுக்கும் இடையே தடுமாறும் ஒரு அகல்விளக்குக்காக ஏங்கு கிறேன்" நடுங்குகிற ஒரு குத்து விளக்குச் சுடருக்காக ஏங்கு கிறேன். எரிகின்ற எனது தேசத் துக்காக ஏங்குகின்றேன். தன் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டுக் களிமண் சட்டியில் வைத்துப் பராமரிக்கப்படும் கா ட் டு ச் செடிபோல, என் தாய் மண் ணுக்காக ஏங்குகிறேன்.
3 O
என் சகோதரனே என் சிற் றன்னை மகனே, நான் சொல் வதைக் கேள். அகதி மின்னலின் ஒளியைக் கண்டு பொறாமை படாதே. அந்திய வானில் அகதி நட்சத்திரமும் தடுமாறிப் புர ளும் எரிகற் துண்டமும் ஒன்றே தான் நான் ஒளி ர வி ல் லை எரிகிறேன் என்மண்ணிலிருந்து என்னை விரட்டிய தீ இன்ன மும் என்னுள் எரிகிறது அது உன்னையும் எரிப்பதை நீ அறி வாயா?நீ அதை அறியாயெனின் யார் அதை உனக்கு எடுத் துரைப்பார்? பொக்திய கைகள் மட்டிய பொறாமைத் தீயைப் பொத்தி வைக்கவும் முடியாது, பொத்தி அணைக்கவும் முடி யாது. மூட்டிய கைகளையே சுட்டெரிக்கும் நீ அது. இன்று எரிகிற மண் தனியே என் மண்ணுமல்ல, உன் மண்ணு மல்ல. இது எங்கள் மண் இதன் தியை எங்களால் அன்றி எவ ரால் அணைக்க முடியும்? எம் ம்ன்ணை எங்களாலன்றி எவ ரால் மீட்க முடியும்?
என் சகோதரனே, சென் றதை வெறுமனே மறந்து விடு வது தீர்வல்ல, கப்பி ஓடுவது, தவறுகளை அறிவது, தவறு களினின்று கற்பது, தவறுக ளைத் திருத்துவது, தவறுகள் மீள நேராமல் தவிர்ப்பது, இதுவே மீட்சிக்கான பாதை: கல்லும் முள்ளும் நிறைந்த போராட்டப் பாதை. இந்த மண்ணை இந்தத் தீயினின்று உனக் காகவும் எனக்காகவும்
தாயகம் 38

மீட்டாக வேண்டும்; அதை விட மேலாக எங்கள் எதிர் காலத்தின் குழந்தைகட்காக
மீட்டாக வேண்டும்:
ஒரு புதிய தொடக்கத்திற் கான வேளை நெருங்குகிறது: *னல் நெருப்பையும் கடுங்குளி *ர4ம் விட அதிகமாகக் காலம் நம்மை நெருக்குகிறது; சகோ அரனே, அன்று கை கோத்து விளை யா டி ய நாங்கள் ஒன்றாய்க் கை கோர்த் து A - di as GavGiorgiau arab நெருங்கி விட்டது. உன் அழைப் புக்காக என் செவிகள் இன் இணும் அகலத் திறந்துள்ளன. வட புலத்து வானத்தின் கற்களின் ஓயாத இரைச்சலை யும் ஊடுருவி உன் சொற்கள் எழட்டும். முதலில் மெல்வி திாசி எழுந்தாலும் மீள மீள உச்சரிக்க boost o-ህÆòg எழுந்து வான் முகட்டில் எதி ரொலித்து வட புலத்தை கிடையட்டும்.
எரிகின்ற எமது மண்ணின் ஒவ்வொரு சாம்பற் துளியினின் றும் உயிரை மீள உருவாக்கும் வித்தையை ஒன்றாகப் பயில் Gaunruh, Gunt!
(துருவன் என்ற இளவரசன் திவம் புரிந்து துருவ நட்சத்திர
மாக வானில் அமைந்ததான கதையைச் சார்ந்து எழுதப் பட்டது)
நாயகம் 38
ܗܝ இருட்டு
எத்தனை சூரியன் வந்து போய்யும் மனித மனங்களில் இன்னும் ஏன் இத்தனை இருட்டு
கல்விக் கோவிலின் கற்பக் கிரகமே வெள்ளைக் கமலமாய் விரிந்திருக்க மூலமந்திரத்தை முற்றாக
மறந்து நாம் காசுக்காகவே
பூசனை செய்கிறோம்.
கூனை நிமிர்த்தி குறைவிலாது உலகில் மனிதர் வாழ்தல் வெறும் கவிஞர் கனவா!
நீண்டு வளர்ந்தும் சுருண்டு கிடக்கும் நிமிர்த்த முடியாத நாய் வாலா நம் சமூகம்
இருளகல எமக்கு ஏது வழி:
- வித்யா

Page 18
பாரதி - லூசுன் ஓர் ஒப்பியல் நோக்கு
( ) க. தணிகாசலம்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
பத்திரிகையும் எழுத்துப்பணியும்
பாரதியும் லூ சுன்னும் இலக்கியத்தையும் பத்திரிகைத் துறையையும் தமது செயற்பாட்டுக்குரிய சாதனங்களாகக் கொண் -மை தற்செயலான தொன்றல்ல. அன்றைய காலனித்துவ பிரபுத்துவ எதிர்ப்புக் காலகட்டத்துக்கு உரிய பொதுமைப்பண் பாக அன்று உலகெங்கும் கிளர்ந்தெழுந்த புத்திஜீவிகள், கலைஞர் களிடம் இது போன்று பல்வேறு உணர்வு நிலைகளிலும் ஒருமைப் Hாடு காணப்பட்டது. சமூக விடுதலையை அடிப்படையாக் கொண்ட தேசிய விடுதலையையே இருவரும் தமது குறிக்கோளா கக் கொண்டிருந்தனர். இதனால் இவரது பார்வையும் சமுதாய அடித்தளத்தை நோக்கி விரிந்து சென்றது. தேசவிடுதலைக்காக கோடிக்கணக்கான மக்களை விழிப்படைய வைத்து கொடுங் கோன்மை அரசுகளுக்கு எதிராக அந்த மக்களை அணிதிரட்ட வேண்டிய தேவையை அவர்கள் உணர்ந்தனர். இத்தகைய நோ க் குடனேயே கலை இலக்கியத்துறையிலும் பத்திரிகைத்துறையிலும் பணியாற்ற அவர்கள் முன் வந்தனர்.
இத்தகைய நோக்குடன் லூசுன் தனது நண்பர்கள் சிலரு -ன் சேர்ந்து 1906 - ல் புதிய ortpa' ('Vita Nova) 676ši so சஞ்சிகையை வெளியிட முயன்று பணவசதியில்லாமையால் தோல்வி கண்டார்; இருந்தும் அவரது சொந்த ஊரைச் சேர்ந்த குசெளசாங் என்பவரால் வெளியிடப்பட்ட சிசியாங் செய்தி, "Zhesiangtide) என்ற இதழில் கட்டுரைகள் பல எழுதினார். '69 unti i LT 6 gër gairLort (Soul of Sparta) 6Tg të si * 860 u 6) (up . 480 ஆம் ஆண்டில் கரிசுக்கும் பாரசீகத்துக்கும் இடையில்" தேட பிலே" என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் ஸ்பாட்டன் வீரர்கள் தமது தேசத்தை பாதுகாக்க நடத்திய தீரமும் தியாகமும மிக்க 4த்தத்தை புகழ்ந்து எழுதப்பட்டது. இதன் மூலம் சீனாவில் மஞ்சு அரசவம்சத்தின் ஆட்சியாளருக்கு எதிராக அன்று குடிய
32 RTL 5 Lb 3 8

ரக கோரி எதிர்ப்பியக்கங்களை நடத்திய தேசபக்தர்களுக்கு உற்சர்கமூட்டினார்.
1907 ஆம் ஆண்டில் "கோபாவேசக் கவிஞர்கள்" (On the கொonic poet) எனும் கட்டுரைத் தொகுப்பில் பைரன், ஷெல்லி, ஸ்கொட்ஹொபேட் பேண்ஸ், அலெக்சாண்டர் புஸ் ன்ெ, பெட்டோபி போன்றவர்களின் படைப்புக்கள் பற்றியும், வாழ்க்கை பற்றியும் லூசன் எழுதினார். அவர்களது கவிதை சுள் "மக்களை எழுச்சியுற வைத்து நடவடிக்கைக்கு தூண்டுவதை இலக்காகக் கொண்டவை" என அவர் குறிப்பிட்டார்.
1904 ஆம் ஆண்டு நவம்பரில் சுதேசமித்திரன் பத்திரிகை பில் உதவி ஆசிரியராக பாரதி இணைந்தார். அக்காலத்தில் மாதர் முன்னேற்றத்திற்காக வெளிவந்த சக்கரவர்த்தினி என்ற மாதப் பத்திரிகைக்கும் அவர் ஆசிரியராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்த திலகரின் அணியில் பாரதி இணைந்து நின்றார். இதனால் 1906 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியா என்ற வாரப் பத்திரிகைக்கு ஆசிரியரானார். 1907 ஆம் ஆண்டில் பாலபாரதா என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியரானார்.
இப்பத்திரிகைகளில் தேசவிடுதலைக்கு உரமூட்டும் வகையில் உலக நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டச் செய்தி களுக்கும் அவர் முதன்மை அளித்தார். மேலைத்தேச மொழி பையும் கல்வியையும் பயின்று எதற்கும் மேலைத்தேச ஆதிக்கக் கருத்துக்களையே முன்னுதாரணமாகக் கொள்ளும் அன்றைய பெரும்பாலான புத்திஜீவிகளைப் போலன்றி ஆசிய நாடுகளின் சிறந்த பண்புகளை வரவேற்று, அதன் விடுதலையிலும் வளர்ச்ஓ யிலும் பாரதி மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
(1) சீனா பற்றி பாரதி
"மேலை நாடுகளுக்கு மட்டுமன்றி ஜப்பான், சீனா முத லிய தேசங்களுக்கும் நம்மவர்களில் நூற்றுக்கணக்கான மனிதர் கள் போகவேண்டும , வாலிபர் மட்டும் போவதில் உபயோக மில்லை முதியோர்களும செல்ல வேண்டும். அந்நாடுகள் அபிவிருத்திக்கு என்ன உபாயங்கள் தேடுகின்றன என்பதை தேரே கற்றறிந்து வரவேண்டும்." என்று அவர் குறிப்பிட்டதுடன் சீனதேசத்துக்கு அற்றிய நாடுகள் இழைத்த கொடுமைகளையும், அதற்கெதிராகப் படிப் படியாக அது விழிப்படைந்து வந்தமையையும் குறிப்பிடுகிறார்.
தாயகம் 38 蒿

Page 19
"சீனா பெரிய ராட்சதன். ஆனால் துர்க்குணமுடைய ாாட் ததன் அன்று ஆரம்பத்தில் சின யப்பானிய யுத்தத்தின் போது யப்பாள் சீனாவைக் கிள்ளியும் அடித்தும் பலபந்த மாப் இலேசாய் இம்சைகள் செய்தது அதற்கெல்லாம் சீனக் கும்பகர்ணன் எழுத்திருக்க வில்லை. பிற ஐரோப்பிய ராஜாங் கத்தார் எல்லாம் வத்து சீனாவை எதிர்த்து அநீதிகள் செய்த கீாலத்தில் சிறிது கண்ணைத்திறந்தது. அப்பால் ருஷ்ய பப்பானிய போரின் போது யப்பானிய குண்டுகள் காதில் பட்ட உடனே நன்றாக விழித்து உட்கார்நத கொண்
ብጫዞ@ሠጦ'ወ፡ சீனாவின் வரலாற்று எழுச்சியை சுருங்கக் கூறிது அவ்ர் அங்கு நடந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, உயிர்துறந்த சியூசின் என்ற பெண்கவியின் தீரச் செயல் புற்றியும் எழுதினார். பாரதியால் குறிப்பிடப்பட்ட சியூனின், லூகன்னின் பிறப்பிடமான சா வீகாங்கிலிருந்தே யப்பானுக்கு கல்வி பயிலச் சென்றிருந்தாள். சூசிலின் என்ற விடுதலை வீரரும் பக்கத்து ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தார். சன்யாட் சென் அவர்களால் 1905ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட (To8 கிையம் சமூக உடன்பாட்டு இயக்கத்தில் பப்பானில் கல்வி கற்ற சீன மாணவர்கள் இணைந்திருந்தனர். சியூசின்னும், குசிலி லும் 1905 - ஆம் ஆண்டு சீனா திரும்பி மஞ்சு அரசுக்கெதிரான ஆயுத நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர். சியூசின் என்ற இப்பெண்கவியின் தீரச்செயல்பற்றி சியூசின் என்ற சீனத்து ஸ்திரிவின் கதை என்ற தலைப்பில் பாரதியார் குறிப்பிடுகிறார்.
"இவள் தன் ஜன்மஸ்தானமாகிய சாவ்சிங் நகரத்துக்கு மீண்டும் வந்து அங்கே ஒரு பாடசாலை நடாத்தினாள், ஆனால் அது வெளிக்கு பாடசாலையாகவும் உண்மையில் குடியரசுப் படைப் பயிற்சிக்கூடமாகவும் நடைபெற்றது. மானக்கரெல்லாம் படையாட்களாகப் பயிற்சி பெற்றனர்.
ஒரு நாள் மஞ்சுப்படை நகருக்குள் புகுந்துவிட்டது . இவனைத் தப்பி ஓடும்படி சொல்லினர். இவள் மறுமொழி கூற வில்லை. சஞ்சிப்படை கலாசாலையில் வந்து நின்றது Safu போது நடந்த போரில் மஞ்சுப்படையாளர் பலர் கொலையுண் ம்ே பண்பட்டும் வீழ்ந்தனர். மாணாக்கரிலும் இருவர் மாண்ட னர். உள்ளே ஓரறையில் வீற்றிருந்த சியூசினையும் அவருடன் அறுவரைவும் படை கைதாக்கிற்று. இவருக்கு கொலைத் தன் டனை விதிக்கப்பட்டது. ஜூலை 15-ந் தேதி சூர்யோதய வேளை பில் இவள் சாவ்சிங் நகர மண்டபத்தருகே தூக்குண்டாள். அத்
3会 தாயகம் 38

த்தனத்தித இளஞ்செந்நிறமுடைய மேக்மொன்று இவலுைம்க த வானத்தில் பறந்தி குணிந்த வாடை வீற்ெறென் கல்தூக்கிட்ட்ோரும் பார்த்து நின்றோரும் துக்கத்தால்iல்லு நடுங்கினரென்றும் ஆனால் சியூகின் பரிபூரண சாந்தியுடன் தாக்கி சேத்துக்குச் சென்றானென்றும் ജ്, '
மொழிபெயர்ப்பும் சீட்டுரை மூலம் பாரதி குறிப்பிடுதிறரச. அம்சியூசின் என் "ே"."; என்ற தலைப்பில் விவரது பெண்விடுதலைக் கருத்துக்களைதுக் "பெண் 6?Os Gumayor என்ற தலைப்பிலான விடுதலைக்கு மகவி ரெல்லாம் வேட்கைகொண்டனம் என தொடங்கும் கவிதையாக "சிதமிழாக்கம் சென்.
சியூசின்னின் Pரணம் பற்றி லூசுன் பப்பானில் தாங்கள் அறிந்து கொண்டதும் மிகுந்த வேதனையும், கொதிப்பும் அடைத் அது பற்றி தமது சிட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்:
"செல்வி சியூசில சாவ்லிங்கில் துரக்கிலிடப்பட்டாள் என் ரம் சூசிலினது இருதயத்தை கிழித்து என்மிங்கின் (குசிலின்னால் சுட்டுக்கொல்லப்பட்ட மாகாண ஆளுநர்) மெய்ப்பாதுகாவலர்கள் வறுத்து உண்டாக, என்றும் எமக்கு செய்தி எட்டியதும் தாங்கள் மிகுந்த கொதிப்படைந்தோம். வழமை போல மர்க்ா தைத்தைச் சேர்ந்தவர்கள் யாவரும் ஒன்றுகூடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் மஞ்சு அரசைக் கண்டித்து கூட்டம் நடாத்தினோம்.
இச்சம்பவங்களின் பின் 909 ஆம் ஆண்டு சீனா திரும்பிய அாசுன் அவர்கள் அயல்மாகாணத்தின் தலைநகரான காங்சோவில் பள்ளி ஆசிரியராகக் கடமையாற்றினார். சன்யாட்சென் தலை ஒமயில் 1911ஆம் ஆண்டு நடந்த குடியரசுக்கான புர்ட்சியை ஆதரித்து அப்புரட்சியில் பங்குபற்றுமாறு மாணவர்களை ஊக்கு வித்தார். இரண்டாயிரம் ஆண்டுகால நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு இப்புரட்சி முடிவு கட்டியது. ஆனாலும் தனது இலக்கை அட்ை யாமலே 4த்தப்பிரபுக்களின் கையில் அதிகாரத்தை மீண்டுக் இழந்து தோல்வி கண்டது. பாரதி ஆசிரியராக இருந்த "இந்தியா" பத்திரிகையின் குறிக்கே வாசகமாக இருந்த "சுதந்திரம், சமத் துவம், சகோதரத்துவம் என்பதையே சீனாவில் ந்டைபெற்ற் அக்குடியரசுப் புரட்சியும் இலக்காகக் கொண்டிருந்தது. அப்புரட்சி பற்றி பாரதி சரியான அரசியல் கணிப்பீட்டைச் செய்து அப்புத் திரிகையில் தராசு *ன்ற பகுதியில் இவ்வாறு குறிப்பிட்டார்.
hit talestib 39 35

Page 20
புேவான்சிகாய் - சீனதேசத்துக் குடியரசுத்தலைவர் காபாக இருந்தவர் பழுத்துக் கொண்டு வருகிறார். பூர்வ ராஜவும் சந்தை ஒழிப்பதற்கு பகீரதப் பிரயத்தன்ங்கின் செய்து சீளதேசத் தார் குடியரசு நாட்டினார்கள். யுவான்சிகாப் பக்கம் சேகா பமம் இருத்தபடியால் அத்தக் குடியரசுக்கு இவர் தலைமை பெறுதல் சுலபமாயிற்று தாட்பட நாட்பட வெகு சீக்கிரத்தில் புவான் மனதில் குடியரசைவிட ராஜாதிகாரம்ே சீனத்துக்குப் பொருத்திய ஏற்பாடாகுமென்று உதயமாயிற்று எனவே சீனா தேசத்துக் குடியரசு இன்னும் எவ்வளவு காலம் ஜீவித்திருக்கும் என்பதை, நமது தேசத்து ஜோதிடர்கள் கண்டுபிடித்துச் சொல் தும்படி கேட்டுக் கொள்கின்றேன்." "
பாரதியின் கணிப்பீட்டை உறுதிப்படுத்துவதுபோலவே புவான்சிகாயின் வீழ்ச்சியுடன், கன்பூசியஸின் கருத்துக்களின் வீழ்ச்சியையும் இணைத்து லூசுன் தனது கட்டுரையில் குறிப்பீடு agrrrr.
"இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இன்று வரை கன்பூசிசஸ் அதிஷ்டத்தை இழந்துவிட்டார். ஆனால் புவான் சிகாயின் காலத்தில் அவர் மீண்டும் ஒரு முறை நினை வுறுத்தப்பட்டார். அவரது அர்ப்பணிப்புகள் மீண்டும் நிலைநாட் டப்பட்டன. ஆனால் இயற்கையில் இல்லாத புதிய உடைகள் அர்ப்பணிப்புச் செய்பவர்களுக்கு வடிவமைக்சப்பட்டன. இதனைத் தொடர்ந்து முடியாட்சியை மீள நிலைநிறுத்துவதற்கான முயற். மேற்கொள்ளப்பட்டது. கதவு திறக்கப்படவில்லை. ஆயினும் யுவான் சிகாய் அதற்கு வெளியே இறந்து கிடந்தார் 20
தொண்ணுாறு நாட்கள் வரை நீடித்த முடியாட்சி மீண்டும் புத்தப் பிரபுக்களின் கைகளுக்கு மாறியது. குடியரசுப் புரட்டு தொடர்ந்தும் பயனற்றுப் போனது பற்றி லூசுன் குறிப்பிடும் போது
"சீனப் பேரரசு குடியரசாக மாறிய பின்னும் மேல் தட்டு வன்க்கத்தாரிடம் சிறிதும் மாற்றம் ஏற்படவில்லை. எமது படிப் பறிவற்ற ஏழை விவசாயிகளும் ஒரு சிறிதளவாவது நன்மையை பும் பெறவில்லை. அதே பழைய, மூடநம்பிக்கைகளுக்கும், ஏமாற் துக்கும் தொடர்ந்தும் உட்பட்டுள்ளார்கள்" என்றும்,
"எங்களது தலைமுடிகளை வெட்டும் சுதந்திரத்தை நன்கு பாதுகாக்கும் செயலொன்றே நான் சீனக் குடியரசை நேசித் தற்கான பிரதான காரணம்" எனவும் குறிப்பிட்டார்.
36 5frt 45L 58.

காலனித்துவ பிரபுத்துவ எதிர்ப்புக் காலகட்டத்தில் மக் களின் கலாசார நடை, உடை, பாவனை, சிந்தனை முறைகளில் ரற்பட்ட மாற்றங்களை அவதானித்த பாரதியின் பார்வையில் லூ சுன் குறிப்பிட்ட சீனத்து தலைமுடியும் தீப்பவில்லை
"சிறிது காலத்துக்கு முன்புவரை சீனா தேசத்தவர் "பன்றி வால், என்று சொல்லப்படும் தமது நீளக்குடுமியை வைதிகமாகவும்: அதனை வெட்டி எறிதல் பெரும் பாபமாகவும் கருதி வந்தார் கள். சில வருடத்துக்கு முன்பு அந்த நாட்டில் ராஜவம்சத்தின் ஆட்சி அழிந்து போப், குடியரசு ஸ்தாபனம் செய்யப்பட்டபோது, பதினாயிரம் லட்சக்கணக்கான சீனர்கள் ஏககாலத்தில் குடுமிகளை வெட்டி எறிந்தனர் அந்த ரோமங்கள் ஆயிரக்கணக் கான வண்டிகள் நிறைய ஏற்றப்பட்டு வியாபாரத்துக்காக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன." 23 என்று குறிப்பிட் டுள்ளார் பாரதி. (வளரும்)
அடிக் குறிப்புக்கள்
4. Luxun, A Chines Writer For All Times, Op. Cit, p 33 15. பாரதி தரிசனம், இளசை மணியன், பக் 145 16. மேற்படி பக். 144
17. பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம் சென்னை
1988 L i l 3 l
18. Luxtin Selected Works Vol. I, Foreign Languages Press,
Beijing, 1980. p. 418
19. பாரதி நூல்கள் (வசனங்கள்) பாரதி பிரசுராலயம், பக். 183 80. Luxun Selected works, Vol, IV p. 186
21 Ibid, p. 98
88, Luxun. A Chinese Writer For All Times Op, cit p. 40
83. பாரதியார் கட்டுரைகள் பக். 120
mush 38 37

Page 21
3
8
く“
என் நலிந்த மூளையில் அரைகுறையாய் உருவாகி, பிறந்து
A56tičar Lurf scîr தூக்கும் வரை என் அருகே கிடந்து, அவர்கள் கவனக் குறைவால் பலரி தோளுக்குத்தாவிய பின் நின்று, ஓய்ந்து, அச்சகம் போய்ச் சேர்ந்து. அங்கும் பிழைகள் மலிய தீ மீண்ட போது நான் அடைந்த வெட்கம்
ஊர்சுற்றி வந்த என் "வம்பு" என்னை அம்மா" என்றழைப்பதாவது உன்னை ஒதுக்கி ஒரு மூலையில் விடுகிறேன் உன்முகத்தை பார்க்கையில் சங்கடப்படுகிறேன் என்றாலும் நீ என்னவன் என்பதால் காலப்போக்கில்
என் அன்பு
உன் களங்கங்களை மறைக்கும்
உன் முகத்தைக் கழுவியபோது மேலும் மறுக்கள் தெரிந்தன; ஒரு மறுவைத் துடைக்கப் போய் உள்ளதையும் கெடுத்தேன் பாதங்களைச் சம நீளமாக்க மூட்டுக்களை வசைத்தேன் அதன் பின்னும் நீ தாண்டித் தாண்டி நடந்தாய்;
உனக்கு நல்ல ஆடைகள் அணிய ஆசைப்பட்டேன் ஆனால் என் கைக்ககப்பட்டதோ - கைத்தறித் துணிதான்; இந்தக் கோலத்தில் கண்டதுக" வரிடையே நீ அலையலாம் ஆனால் விமர்சகர் கைகளில் மட்டும் சிக்கிவிடாதே; அறியப்படாத இடமெல்லாம் சென்றுவா அப்பன் யார் என்றால் இல்லை என்று சொல்; அன்னையோ, பாவம் வறியவள் ஆதலின் உன்னை இவ்வாறு அனுப்ப நேர்ந்தது.
தாயகம் 38

யூரோ நாணய தோற்றமும் அதன் பொடுளாதார முக்கியத்துவமும்
O LI LuS 36).png,657
பிரான்ஸ், மேற்கு யேர்மனி, பெல்ஜியம், லக்சம்பேக் இத் தாலி நெசர்லந்து ஆகிய ஆறு ஐரோப்பிய நாடுகள் 1957-ம் Haker GI Grit lfNsv கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய பொருளாதார சமூகப் (BEC) தோற்றம் பெற்றது. பொருளாதார கூட்டுறவை அங்கத்துவ நாடுகளிடையே பரஸ் பரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் BBC செயற் Hட்-து. இவ்வமைப்பு 1967-ல் ஐரோப்பிய சமூகம் என பெயர் மாற்றிக் கொண்டது (EC), 1973-ல் பிரித்தானியா, அயர்லாந்து டென்மார்க் போன்ற நாடுகளும் EC யில் சேர்ந்துகொண்டன. 1979-ல் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய அங்கத்துவநாடுகள் ஐரோப்பிய நாணய முறை என்ற அமைப்பைத் தோற்றுவித்து நாணயரீதியான கூட்டுறவொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பட்டது. 1981-ல் கிறீஸ் நாடும் EC யுடன் சேர்ந்து கொண்டது. 1982-ல் ஐரோப் சமூக விஞ்ஞான வட்டத் பிய சமூக நாடுகளின் தலை தின் 13 வது கலந்துரையா வர்கள் கூடி தமக்கென தனி டலில் ஆற்றிய உரை யானதொரு சந்தையை 1992-ல் கட்டுரை வடிவில் தரப்பட் உருவாக்கிவிட வேண்டும் என டுள்ளது. தி ட சங் கற்ப ம் பூண்டனர். 1986-ல் ஸ்பெயின் போத்துக்கல் ஐரோப்பிய சமூகத்தில் சேர்ந்து கொண்டது. 1990-ல் கிழக்கு யேர்மனி மேற்கு யேர் மனி யுடன் சேர்ந்ததோடு ஐரோப் பிய சமூக நாடுகளின் எல்லை விரிவடைந்தது. 1995-ல் சுவீடன், பின்லாந்து ஆஸ்திரியா போன்ற நாடுகளும் இவ்வமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டன. இன்று மொத்தமாக 15 நாடு கள் இதில் அங்கம் வகிககின்றன. .
1992 ல் மான்ரிற்ச் ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளான 15 நாடுகளும் தனிஒரு நாணயம் வேண்டும் என்பதைக்
5 Tudslid 38 39

Page 22
கொள்கை அளவில் ஒப்புக் கொண்ட இவ் வொப்புதல் ஒவ் வொரு தனிநாட்டினதும் வெளிநாட்டுக் கொள்கையாகவும் வெளி நாட்டு வர்த்தகக் கொள்கையாகவும் இருப்பதற்கு இம் மாநாட் டில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக 1. 1999 ல் இந்நாடுகளின் புழக்கத்திற்கு தனிநாணயம் ஒன்று வெளியிடப் பட்டது இந் நாணயத்தை அங்கத்துவ நாடுகளான பிரிக் தானியா பி-ன்மார்க், சுவீடன் ஆகிய மூன்று நாடுகளும் ஏற்றுக்கொள்ள வில்லை. கிரிஸ்நாடு இத் தனி நாணயப் பயன்பாட்டிற்கான தகு தியை இன்னும் பெறவில்லை என்று விலக்கிவைக்கப்பட்டுள்ள து. 1. 1. 1999 ல் சட்டரீதியான தனிநாணயமாக ஏற்றுக் கொள்ளப் பட்டதும் ஒவ்வொரு தேசிய பொருளாதாரங்களிலும் வங்கிகள், நாணய இருப்புக்கள், வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் யூரோ வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1.1.2002 - ல் இந்நாணயத்தை ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளின் உள்நாட்டுப் புழக்கத்திற்கும் யூரோ நாணயமே பயன்படுத்தப்படும் என குறிப் பிடப்பட்டுள்ளது. முடிவாக 1, 8 2002 - ல் முன்னர் புழக்கததி லிருந்த தேசியநாணயங்கள் முற்றாக நீக்கப்பட்டு முழு அளவில் யூரோநாணயமே புழக்கத்திலிருக்கும் எனக்குறிப்பிடப்பட்டுள் ளது.
யூரோ நாணயம் தனியொரு நாணயமாக இந்நாடுகளில் இருக்க வேண்டும் என்பன தற்கான அடிப்படை நியாயமாக பின் வருவன குறிப்பிடப்படுகின்றது. 1. இப்பிரதேசங்களில் தடையற்ற பொருள் நுகர்வு இருப்பது எல்லாப் பொருளாதாரங்களிலும் அபிவிருத்தியை விரைவு படுத்தும் - 2. தடையற்ற ஊழிய தகர்வு இப்பகுதிகளில் ஊழியப்பற்றாக் குறையை நீக்குவதோடு வேலையின்மையுள்ள நாடுகளின் பிரச்சனையைக் குறைப்பதோடு வேலையின்மையால் தடைப் பட்ட பொருளாதார அபிவிருத்தியை மீண்டும் ஏற்படுத் (1թւգ պւծ. 3. தடையற்ற சேவைகள் நகர்வு இப்பிதேசங்களில் இருக்கும் போது உற்பத்தித்திறன் அதிகரிக்கும் இதனால் இப்பிரதேச நாடுகள் சம வளர்ச்சி வீதத்தை அடைந்து கொள்ள முடியும். 4. தடையற்ற முதல் நகர்வு இருக்குமானால் முதலீட்டால் தடைப்பட்ட சிறிய நாடுகள் அப்பிரச்சனையிலிருந்து விடு பட்டு விடும். அத்துடன் எல்லா நாடுகளின் வளர்ச்சி உறுதி யானதாகவும் விரைவு படுத்தப்பட்டதாகவுமிருக்கும். 5. ஐரோப்பாவிற்குள் வர்த்தகத்தையும் முதலீட்டையும் இலகு வாக்குவதற்கு தனியொரு நாணயம் அவசியமென உணரப் Lull-gil
40 தாயகம் 38

6. அமெரிக்க டொலருக்குச் சமாந்திரமாக ஐரோப்பாவிற்கு தனி யொருநாணயம் 22. aa) 5 கொருளாதாரத்தில் அவசியமென கருதப்பட்டது:
ஐரேப்பியப் பொருளாதாரத்தைப் பாதிக்கா வண்ணம் தடுப்பதற்கு யூரோவை சர்வதேச பெறுமதி நாணயமாக இருக்க வைக்க வேண்டும் என கருதப்படுகிறது)
7. ஐரோப்பாவில் தனியொரு நாணயம் இருப்பதால் பொரு
பயன்பாடு அரசியல் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த முடியும் *னவும் நம்பப்படுகிறது.
பிய மத்திய வங்கி 1998 ai ஆரம்பிக்கப்பட்டது. இதில் தேசிய பொருளாதாரங்களில் உள்ள மத்திய வங்கியின் ஆளுனர்கள் 4 பேரும் ஐரோப்பிய நாணய யூனியன் அமைப்பிலிருந்து *லைவர் உபதலைவர் மற்றும் 4 பேரும் இருப்பர். மேலும் வங்கி அனுபவமுடைய 6 உயர் நிலை நிர்வாக *த்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்வங்கத்தவர்களைக் கொண்ட சபையின் முடிவுகளே Pனயக் கொள்கை முன்வைக்கப் 'டுகிறது. இம் மத்திய வங்கியல் வகுக்கப்படும் 57ணயக்கொள்கை &? Strarl 17u நிTணய யூனியனின் கொள்கையாகவுமிருந்தது. குறிப் lin a g(Bigtitut nu யூனியன் சிங்கத்து நாடுகளில் இருக்க வேண் டிய வட்டி வீதம் யூரோவின் பெறுமதியில் காணப்படும் 2-y தித் தன்மை, யூரோ சில்லறை நாணயங்கள் தோட்டுக்களின் அளவு உள், யூரோவின் பண நிரம்பல், "*யத்திரவத்தன்மை ஒழுங்கு படுத்தல், இந்நாடுகளிடையே குறைந்த பணவீக்க. Lத்தை ஏற்படுத்தல் போன்றவற்றை மேற்பார்வை செய்வதோடு பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
இவ் ஐரோப்பிய யூனியன் மத்தியவங்கி சிங்கத்துவ நாடு களின் அரசியல் தலையீடு எதுவுமின்றி *திந்திரமாக செயற் படக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ள
Ֆո այՅւն 3 8 4. l

Page 23
யூரோ நாணயப் புழக்கம் உள்ள நாடுகளில் குறைந்த பண வீக்கம் இருக்க வேண்டும். பணவீக்கம் 1.5% மேற்படாது இருத் தல் அவசியம், அவ்விதமே வரவு செலவுத்திட்டத்தின் குறைநிலை அந்தந்தநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மேல் இருக்கக் கூடாது. ஒவ்வொரு நாட்டிலும் நீண்டகால வட்டி வீதம் 2% குறைவாக இருக்க வழி செய்ய வேண்டும். தற்போதுள்ள 8% - 10% உள்ள வேலையின்மை வீதம் 4% மளவிற் குறைக்கப் பட வேண்டும் என ஐரோப்பிய நாணய யூனியன் மாற்றிற்ச்" உடன்படிக்கைக்கு அமைவாக தீர்மானங்களை எடுத்தது. இத்தீரி மானங்களில் இந்நாடுகளின் முன்னேற்றகரமான பேரினப் பொருளாதாரச் சூழல்தொடர்ந்து இருக்க வேண்டும் எனக்கருதப் படுகின்றது. அச்சந்தர்ப்பங்களில் நாணயப் பெறுமதியையும் நாடு களில் விலையையும் உறுதிப்படுத்த முடியும். அத்துடன் பொருளா தார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகின்றது: பொருளாதாரக் கொள்கை நோக்கில் நாணய நடைமுறைக் கொள்கையும் அரசாங்க வரவு செலவுத்திட்டக் கொள்கையும் அதாவது இறைக் கொள்கையும் இப்பிரதேசங்களில் நிச்சயமற் றத்தன்மையை நீக்கி விரைவான அபிவிருத்திக்கு வழியை ஏற் படுத்தும் என நம்பப்படுகிறது.
யூரோ நாணயத்தை அங்கத்துவ நாடுகள் தமது நாணய மாக ஏற்றுக் கொள்வதனால் அதிக பலனடைய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,
1. குறித்த நாடு பொருளாதாரப் பலத்தை பெறமடியும்
ஒன்றிணைந்த பொருளாதாரச் சூழலால் உள்நாட்டில் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்தலாம். விரைவான வளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். அதிக வேலை வாய்ப்பை உருவாக்கலாம். அதாவது வேலையின்மையைக் குறைக்கலாம்
2. விலையை உள்நாட்டில் உறுதிப்படுத்தலாம் அதனால் வர்த்த கத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தலாம். இது ஐரோப்பா விற்கும் சந்தைத் திறமையை உருவாக்கும். இது சந்தையில் போ. டியையும் வளர்க்கும்.
3 விலையை உறுதிப்படுத்துவதனூடாக முதலீட்டிற்கான நல்ல சூழ்நிலையைத் தோற்றுவிக்கலாம். இதனால் முதலாக்கம் ஏற்படும்.
4. முதலீடு, மற்றும் தொழில் முயற்சிகளில் ஏற்படும் ஆபத்தும் குறைக்கப்படும். செலவும் குறைக்கப்படும். அதாவது ஒரு நாணயமாக இருப்பதால் இது வரை அந்நாடுகளில் க,ை
42 தாயகம் 38

பட்ட நாணயமாற்று வீதத் தளம்பலால் ஏற்படும் ஆபத்தும் அதனால் ஏற்படும் செலவும் நிச்சயமற்ற தன்மையும் குறைக் கப்படும். இதனால், நாடுகளில் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிக்கு உட்படும்:
8. சிறிய நாடுகள் அதாவது குறைந்தளவு உறுதிப்பாடுடைய நாடுகள் ஐரோப்பிய நாணய யூனியனின் பங்கான நாடு களாக இருப்பதால் இணைக்கப்பட்ட வலிமையும் பாது காப்பையும் யூரோ மூலம் பெறுவர்
6. ஒரே நாணயமாக இருப்பதால் ஐரோப்பிய யூனியன் நாடு
களிடையே அரசியல் கூட்டுறவு ஏற்படும்:
7. ஆவணச்சந்தையிலும் பங்குச் சந்தையிலும் யூரோ நாணயத் தின் உறுதிப்பாடு அங்கத்துவ நாடுகளிற்கு நன்மையளிக்கும்.
ஐரோப்பிய யூனியனில் அங்சம் வகிக்கும் நாடுகளில் 371.8 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்ட 11 நாடுகளில் மாத்திரம் 289. மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது உலக சனத்தொகையில்5 % மாகும். இவர் களிடையே யூரோ நாணயப் புழக்கம் முதலில் நடைபெறும் அமெரிக்காவின் 263 பில்லியன் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது இது சற்று அதிகமானதே. உலகப் பொருளாதார மொத்த வெளியிட்டில் 20% யூரோ நாணயப் பிரதேசத்தில் நடைபெறு இன்றது. இந்நிலை இந்நாணயப் புழக்கத்தை விரைவுபடுத்தும்: உலக வர்த்தகத்தில் இந்நாடுகளின் பங்கு 28-9% மாகக்காணப் படுகிறது. அமெரிக்காவின் உலக வர்த்தகப் பங்கு 14.8% காணப் படுவதனால் நேரடியாக வர்த்தகம் செய்யும் நாட்டின் நாணயப் பரிமாற்றம் என்ற அடிப்படையிலும் 11 நாடுகளின் வர்த்தகப் பங்கு யூரோ நாணயத்தின் பயன்பாட்டை பரவலாக்கும் என்ப ஒல் ஹயமில்லை. இந்நாடுகளின் சர்வதேச ஒதுக்கு 290 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கிறது. இனிமேல் இது யூரோ நாணய மாக மாற்றப்படும். இவ்வொதுக்குகள் அமெரிக்காவின் 58 பில்லி பன் ஒதுக்கைவிட பன்மடங்கானது; அத்துடன் யூரோ நாடுகளின் ஏற்றுமதியில் 40% - 50% மானவை ஆபிரிக்க நாடுகளிற்கே என்ற வகையில் அதிகம் போக்குவரத்துச் செலவில்லாத அயற் சண் டத்தில் நடைபெறுவதால் ஏற்றுமதிகள் மற்றைய நாடுகளிற்கு மலிவாகவும் இருக்கும். பணவீக்கம் மிகக்குறைவாக இருப்பதும் வட்டி வீதம் குறைவாக இருப்பதும் யூரோ நாடுகளின் ஏற்றுமதி ஒப்பிட்டுரீதியில் மிக மலிவாக இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு:
தாயகம் 38 43

Page 24
இந்நிலை சர்வதேச நாடுகளில் யூரோவின் பயன்பாட்டை அதி சரித்து விடும். இது அமெரிக்க டொலருக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும்:
1997-ம் ஆண்டு IMF ன் மதிப்பீட்டின்படி யூரோ நாடு *ள் 195 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஆசிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்தது. அவ்வேளை ஆசிய நாடு *வி 190 பில்லியன் டொலர் பெறுமதியான பொருள்களை ஏற்று மதி செய்தது. இது யூரோ நாடுகளிற்கும் அமெரிக்காவிற்கு மிடையிலான வர்த்தகப் பெறுமதியை விட உயர்வானது. இலங்கை தனது ஏற்றுமதியில் 17% யூரோ நாடுகளுக்கு வழங்க 10% இறக்கு மதியை இந்நாடுகளிலிருந்து பெறுகிறது. இலங்கைக்கான வெளி நாடுகளின் முதலீட்டிலும் 6% பங்கை யூரோ நாடுகள் மேற் கொள்கின்றன. இலங்கை போன்ற சிறிய நாடுகளின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரளவு பங்கு இருப்பது போல மூன்றாம் உலக நாடுகளின் சர்வதேச வர்த்தகத் தொடர்புகளிலும் முதலீடுகளி லும் வெளிநாட்டு உதவிகளிலும் யூரோவின் பயன்பாடு அதி கரிக்கும் சாத்திய மிலை காணப்படுகிறது. சீனா, இந்தியா பாகிஸ் தான் போன்ற நாடுகள் தங்களது வெளிதாட்டு இருப்புக்களை யூரோவில் வைத்திருப்பதற்கு முன் வந்துள்ளனர். இந்நாடுகள் தங்களுக்கு யூரோ நாடு சந்தையாக மாறக்கூடும் என்ற வகை யிலும் மிகக் குறைந்த வட்டியில் யூரோ கடன்களைப் பெறமுடி யும் என்ற நம்பிக்கையிலும் யூரோ நாடுகளோடு தொடர்புகளை ஏற்படுத்த முனைகின்றன. இவ்விதமே கிழக்கு ஐரோப்பிய நாடு களில் மேலும் 10 நாடுகள் யூரோ நாடுகளோடு சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளன. யூரோ நாடுகள் இந்நாடுகளில் உள்ள பண வீக்கம் குறைக்கப்பட வேண்டும். வேலையின்மை வீதம் குறைக் கப்பட வேண்டும் நீண்ட கால வட்டி வீதம் குறைக்கப்பட வேண் டும். வரவு செலவுத்திட்டத்தரை நிலை குறைக்கப்பட வேண்டும் அதன் பின்னரே யூரோ நாடுகளோடும் யூரோ நாணய யூனிய னிலும் சேர்வதற்குத் தகுதி உடையது என குறிப்பிடுகின்றது. இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது யூரோ நாணயம் விரைவில் உலகில் பெறுமதி வாய்ந்த நாணயமாக மாறிவிடும் சூழ்நிலை காணப்படுகின்றது
W ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடுகளில் பிரித்தானி
யாவும், சுவீடனும், டென்மாக்கும் யூரோ நாணயத்தை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை தங்கள் தங்கள் நாட்டுமக்களின் ஒப்பு தனுடனே இதைச் செய்ய வேண்டியிருப்பதால் ஒப்புதல் வாக் கெடுப்பு நடைபெற வேண்டும். மக்களின் விருப்பிற்கு ஏற்பவே
4 4 தாயகம் 38

யூரோவை பயன்படுத்த முடியும் என கூறுகின்றன. இன்றைய நிலையில் மக்களும் யூரோவை விரும்பவில்லை போல் தெரிகிறது. இருந்த போதும் பிரித்தானியா தனது ஸ்ரேலின் பவுண் நான யத்தை இழக்க விரும்பவில்லை சர்வதேச நிதிச்சந்தை, ஆவணச் சந்தைகளில் ஸ்ரேலின் பவுணுக்கு நல்ல மதிப்பு இருப்பதால் அதை விட்டு வேறொரு நாணயத்தை ஏற்றுக் கொள்ளத்தயக்சம் காட்டு கிறது. உலக வர்த்தகத்தில் ஸ்ரேலின் பவுண் பெற்ற மதிப்பை இழந்தால் பிரித் கானியா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்ச நேரும் என கனியே நின்று முடிவெடுப்பதால் ஐரோப்பிய யூனி பன் (மடிவுகளுக்கு ஒத்துப் போகாத நிலையும் காணப்படுகிறது. இது இனிவரும் காலக் தில் பிரித்தானியா யூனியனிலிருந்து விலகி விடும் வாய்ப்பை உருவாக்கும். ஆனால் பிரித்தானியப் பொருட் களிற்கான சந்தை ஐரோப்பாவில் இருப்பதால் தனித்து இருப்ப தென்பது சாத்தியமில்லை.
கிறீஸ் உடனடியாகவே யூரோநாணயத்தில் இணைந்து கொள்ள விரும்புகிறது. ஆனால் "மன்ரிற்ஸ்" ஒப்பந்தப்படி யூரோ நாணயப் புழக்கத்திற்கு முன்னர் இருக்க வேண்டிய பொருளா தாரச் சூழல் கிறீஸ் நாட்டில் இல்லை; அதற்கான தகுதியைப் பெற்ற பின்னரே சேர்ந்து கொள்ள முடியுமென ஐரோப்பிய நாணய யூனியன் அறிவித்துள்ளது:
கடந்து மூன்று தசாப்தங்களில் உலக நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை உலகமயமாக்கலுக்கு இசைவாக மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சர்வதேச வர்த்தக முறையில் ஒரு சமநிலைத் தன்மையினைப் பேணவேண்டும் என்ற நோக்கில் உலகமயமாக்கலுக்கு ஏற்ற பொருளாதார அமைப்பை உள்நாட்டில் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது . இந்நிலையில் பெரும்பாலான சர்வதேச நாடுகள் தனித்து நின்று உலகமயமாக்கலுக்கள் புகுந்து விடாமல் பிரதேச ஒயா பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்புக்களை ஏற்படுத்தி உலக மயமாக்கலுக்கு முகம் கொடுத்து வருகிறது. இவ்வடிப்படையில் ஐரோப்பிய யூனியனும் உலகமயமாக்கலுக்கு முகம் கொடுப்ப தோடு ஏனைய நாடுகளும் கட்டில்லா வர்த்தகத்தை ஏற்படுத்தி உலகமயமாக்கலுக்கு வருவதைக் சாதகமாக்கிக் கொண்டு உலக வர்த்தகத்தில் யூரோ நாணயப் பயன்பாட்டையும் அதிகரித்து சர்வதேச வர்த்தக புழக்க நாணயமாக யூரோ நாணயத்தை நிலை நிறுத்த அடித்தளமிட்டு வருகிறது. இதற்கு உலகமய மாக்கல் எண்ணக்கரு தோன்றிய நாளிருந்தே யூரோ நாணய ஆக்கம் பற்றிய செயற்பாடுகளும் முடிக்கி விடப்பட்டிருந்ததை சான்றாகக் கூற முடியும்? எவ்வாறெனினும் உலகமயமாக்கம்
தாயகம் 38 45

Page 25
யூரோ நாணயத்திற்கான கேள்வியை அதிகரிக்கக் கூடியதாகவே உள்ளது. அத்துடன் குறைந்த'வ்ட்டியில் யூரோ நாணயத்தைக் கடனாகப் ப்ெறும் வாய்ப்பு இருப்பதும் குறைந்த வட்டியில் அதிக முதலீட்டை ஏனைய நாடுகள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உள்ளது. பணவீக்கம் குறைந்த பெறுமதி உறுதியாக் கப் பட்ட நாணயமாக யூரோ இருப்பதால் உலக நிதிச் சந்தை யில் யூரோவிற்கான கேள்வி அதிகரிக்கும் வாய்ப்பே உள்ளது.
யூரோ நாணயப் பிரதேசத்தில் எந்த நாட்டுப் பொருளா தாரத்திற்கு இலகுவாக நாணயப் பெறுமதி , வரையறுக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது? உலகின் LA st பெறுமதி வாய்ந்த ஜேர்மன் மார்க்கும் பிரான்சின் lSg Ir ntiags to புழக்கத்திலிருந்து வந்த ஜேர்மனி, பிரான்ஸ், போன்ற பொருளாதார பலம் வாய்ந்த நாடுகளிற்கு ஏற்புடையதான பேரினப் பொருளாதாரக் கொள்கை, நாணயக் கொள்கை, வகுக்கப்படுமா? அல்லது மற் ஹம் சிறிய நாடுகளுக்காக கொள்கை வகுக்கப்படுமா என்ற பிரச்சினைகளும் எதிர் காலத்தில் ஏற்படலாம் என சந்தேகிக் கப்படுகிறது. இது இறுதியில் ஐரோப்பிய யூனியன் நாடுகளிற் கிடையே கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தி பிரிவு படக் கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.
இன்று உலகில் அதிகார வல்லரசாகவும் பொருளாதாரப் பலம் வாய்ந்த நாடாகவுமுள்ள அமெரிக்காவின் டொலரை அப் புறப்படுத்திவிட்டு யூரோ அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் உண்டு. யூரோ நாடுகளும் சர்வதேச வர்த் தகத்தில் டொலரை ஒதுக்கி அவ்விடத்தில் யூரோவை வைக்க (மயல்கின்றன. எழு உலக கைத்தொழில் நாடுகள் குழுவில் பெரும்பாலானவை யூரோ நாடுகளாகும். எனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒன்று சேர்ந்திருப்பதென்பது பொருளாதார பலம் பொருந்திய நாடாக யூரோ நாடுகள் வருவகற்கான சாத் தியக்கூறுகள் உண்டு இவ்வாறு உலக வர்த்தகத்தில் யூரோ நாணயப் பிரவேசம் டொலரின் இடத்தை இரண்டாவது நிலைக் குத்தள்ளுவதோடு உல்கப் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்து விடும் என்பதில்லை. யூரோ நாடாக தன்னை மாற்ற விரும் பாத பிரித்தானியா ஸ்ரேலிங் பவுண் நாணயத்தை விடவும் விரும்பவில்லை யூரோவும் எதிர்காலத்தில் டொலர் அரக்கனை வெற்றிகொண்ட இன்னொரு அரக்கனாகவும் மாற்றமடைய வாய்ப்புண்டு.
46 தாயகம் 38

பண்பாட்டின் பேரால் (10)
வெற்றி என்பது
O முருகையன்
*டிறிங், டிறிங் டிறிங், டிறிங் "
வழக்கம் போல அப்பு தமது சாய்மணைக் கதிரையிலே சாய்ந்திருந்தார். காண்டாவனம் தொடங்கி இரண்டு நாள் தான் ஆகி இருந்தது. மத்தியானப் பார். இப்பொழுது இரணடு பயணி கூட ஆகியிருக்காது, கணகள் திறந்திருக்கச் சிரயப்படடன. இமைகள் ஒனறை ஒன்று ஈர்க்கப் பாாததன.
ஓ! அதற்கிடையில் அவளே வந்து விடுகிறாள். ஆம் செந்திரு தான்.
*ங் ஆ! பிள்ளையா? வா. வா. என்ன வழமைக்கு மாறாய், இந்த மத்தியான வேளையிலே "
ஞானியார் வியப்புடன் வரவேற்கிறார். செந்திாவின் கையிலே ஒரு சிறு பாசல், "இந்தாருங்கோ அப்பு" நாங்கள் இண்டைக்குப் பயத்தம் பணியாரம் சுட்டநாங்கள். உங்களுக்கும் கொண்டுபோய்க் கொடுக்க வேணும் எண்டு அம்மா அவசரப் படுத்தினா. அது தான் " செந்திரு பாசலைக் கொண்டுபோய் உள்ளறையிலே பக்குவப்படுத்தி வைத்துவிட்டு, ஞ | னி பாா மு ன வந்து அமர்ந்து கொள்கிறாள்
"அப்பு போன தடவை நீங்கள் எதிர்களின் ஒருங்கிருப் பைப்பற்றியும் எதிர்களின் மோதலைப் பற்றி பும விளங்கபபடுத தி விட்டீங்கள். இனி, அடுத்ததாய் இயங்கியலிலே தெரிஞ்சு கொள்ள வேண்டியது என்ன?
"எதிர்மறுப்பின் எதிர்மறுப்பு".
செந்திரு நிமிர்ந்து உட்கார்கிறாள். "எனக்கொரு பாட்டு நினைவுக்கு வருகுது, அப்பு".
5rruash 38 47

Page 26
போட்டா? நல்லது தானே! நீ பாடு பிள்ளை
ஓ. எனக்கென்ன வெக்கம்? இங்கே இப்ப இருக்கிறது: அப்பு மாத்திரம் தானே! நான் பாடத்தான் போறென்" சிரித்துக் கொண்டே செந்திரு தொடங்குகிறாள்
இல்லை என்பதை இல்லை செய்யலாம் எதிர் மறுப்பையும் எதிர் மறுக்கலாம் முன்னர் ஒடிய திசையில் ஓடியும் முகிலை நோக்கி நாம் உயர ஏறலாம் இல்லை என்பதை
சுற்றி ஏறிடும் பாதை ஆயினும் தூக்கி எங்களை மேல் உயர்த்துமே வெற்றி என்பது மேன்மை எய்திடல் விரிந்த விண்ணிடை மேல் உலாவுதல் இல்லை என்பதை .
"இந்த வாறு நாம் ஏறும் ஏற்றமே இனிய வாழ் நிலை காட்டும் மாற்றமாம் அந்தம் முந்திய ஆதி ஆகுமோ? அது புதியதோர் ஆதி ஆகுமே இல்லை என்பதை ."
செந்திரு பாடினாள் அப்பு அமைதியாக இரண்டு கண் களையும் மூடிப் பாட்டிலே ஈடுபட்டுக் கேட்டபடி சாய்ந்திருக் கிறார். புலன்களைக் குவித்து ஊன்றி எந்த விடயத்திலாவது ஒன்றிவிடும் வேளையில் இந்தமாதிரிக் கண்கள் தாமாகவே மூடிக் கொண்டு விடும் - அது ஞானியாரிடம் பிரிக்க முடியாமல் ஒன்றிப் போய் விட்ட பழக்கம் ஏன் வழக்கமும் தான் பாட்டு முடித் ததும் அப்புவின் இமைகள் திறந்து கொள்கின்றன.
சநல்ல பொருத்தமான பாட்டு. யார் இசை அமைச்சது கண்ணன் தானே?, அப்பு விசாரிக்கிறார்.
"ஒமோம். நல்ல பாட்டு இல்லையா அப்பு??
* அச்சா. அதோ டெ பிள்ளையுடைய குரலும் இதம் பத மாய்த்தான் இருக்கு - எதிர்மறுப்பின் எதிர்மறுப்பு என்ற கோட் பாட்டை விளங்கப்படுத்திறதுக்கு மிச்சம் தோதான சொற் பதங்கள்?
48 Ajouash: 39

*எதிர் மறுப்பு என்றால்?
*இல்லை செய்வது?
*உள்ள பொருள் எதையும் இல்லாமல் அழித்து ஒழித்து விட முடியாது எண்டல்லவா, விஞ்ஞான வகுப்பிலே நாங்கள் படிச்சிருக்கிறம் ?
"அது மெய் தான் ஆனால் ஒரு பொருளின் இயல்புகளை நாங்கள் மாற்றலாம். பானையொன்றை எடுப்போம் . . ?
புதுப்ங்ானையை எடுக்க வேண்டாம் - பழம்பானையை எடுங்கோ, அப்பு?
* ஏன் பிள்ளை??
"பானையை உடைக்கத்தானே போநீங்கள்? புதுப்பானை பாவம் - சுக்கல் சுக்கலாய் உடைஞ்சு போம். பழம் பானை எண் டால் பரவாயில்லை?
பீறிட்டுக் கொண்டு வந்த சிரிப்பை, வேண்டுமென்றே, பகிடிக்காக அப்பு தம்முள்ளே புதைத்துக் கொள்கிறார், ஆனால், செந்திருவின் நகைச் சுவையை அவர் எவ்வளவு நயந்தார் என் பதை அவருடைய முகம் காட்டிக் கொடுத்து விடுகிறது.
"சரி பழம்பானையை எடுப்போம்; உடைப்போம். உடைந்த சல்லிகள் எல்லாவற்றையும் கூட்டி அள்ளி உரலிலே போடு வோம். உலக்கையை எடுத்துக் கணைப் பக்கத்தாலே இடி இடி என்று இடிப்போம்; இப்ப, பானை எங்கே?
பானை இல்லை" "ஒம் உரலுக்குள்ளே இருக்கிறது? "அது வெறும் தூள். சுட்ட மண் பொடி, காடுடைய
சுடலைப் பொடியைப் போலே!"
அப்புவின் விளக்க முயற்சி ஒர் அடி பாய்ந்தால், செந்திரு வின் விளக்கப் பேறு ஒன்பதடி பாய்கிறது. ஞானியாருக்குப் பரம சந்தோசம். அவர் சொல்லுகிறார்.
விளங்குது தானே பானை" என்று பெயர் சொல்லக் கூடிய அந்தப் பண்டம் இப்பொழுதில்லை. ஆக்கப்படு பொருள் இல்லை, ஆனால் அதனை ஆக்கிய முதற் காரணப் பொருள் - அதாவது மண் - இப்பொழுதும் இருக்கிறது; பானை என்று
SnTuulasub ' ’ 49

Page 27
பெயர் சொல்லும் பொழுது அதன் வடிவமும் பயனும் முதன்மை .ெ றுகின்றன. உடைந்த பிறகு, முந்தி இருந்த உருவம் இல்லாமற் போகிறது. உருவம் கெட்ட பிறகு, அந்தச் சுட்ட மண் பொடிக் குவியலை வைத்துக் கொண்டு, அதை அடுப்பில் ஏற்றி வெந்நீர் வைக்க முடியாது. அரிசி போட்டுச் சோறு காய்ச்ச முடியாது. பொங்கலை இறக்கிப் பரிமாறி விருந்து வைக்க முடியாது. பானையினாலே முன்பு பெற்ற பலனை, சுடுமண் பொடிக் குவியலிலிருந்து தாங்கள் பெற முடியாது"
"பானை இல்லையாய் விட்டது. அப்பு: ஆக்கப்பட்டிருந்த பொாகள் அழிஞ்சு போச்சு; ஆனால், பானையை ஆக்கிறதுக்கு முதற் காரணமாய் இருந்த திரவியம், அந்த " மற்றீரியல்" இன்னும் இருக்கு அதைத்தானே சொல்ல வருறியள். அப்பு?
"ஓம் பிள்ளை விஞ்ஞானத்திலே வருற "சற் காரிய வாதம்" இது தான் ?
சற்சாரிய வாதம் எண்டால்?" "சடப்பொருளை ஆக்கவும் முடியாது; அழிக்சவும் முடி யாது என்ற பவுதி வியல் விதி
* ஆனால், அணுச் ஈரு விஞ்ஞான வளர்ச்சிக்குப் பிறகும் அந்தச் சற் காரியவாத விதி உண்மையா அப்பு?"
"ஒரு சின்னத் திருத்தம் செய்ய வேண்டி வந்திட்டுது." "என்ன திருத்தம்? திருத்தின பிறகு, அந்த விதி என்ன சொல்லுது?
* சடப்பொருளை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடி யாது. ஆனால், சடத்தைச் சக்தியாக மாற்றலாம். திருத்தம் செய்யப்பட்ட நிலையிலே டவுதிகவியற் சற்காரிய விதி பெற்ற புது வடிவம் இது தான் பிள்ளை"
"சரி. அப்பு. நாங்கள் பொடிப்பட்ட பானையடிக்குத் திரும்பி வருவம்; ”
Toss அடைந்த உடைவு ஒரு விதமான எதிர்மறுப்புத் தான்; "இல்லையாக்கம்" வேலை தான். பானையுடைய வடி வாைப் பையும் பயன்பாட்டையும் இல்லாமற் செய்து போட்டம். ஆன ல் இது ஒர் உரு தலைவு நடவடிக்கையே தவிர ஆக்க பூர்வமான எதிர் மறுப்பு அல்ல, அதாவது இயங்கியல் எதிர் மறுப்பு அல்ல"
0. தாயகம் 38

"இயங்கியல் எதிர்மறுப்பு எப்படி இருக்கும்?" "ஒரு புளியங்கொட்டையை எடுத்து நிலத்திலே புதைப்பம்"
"ஓம் நான் புதைச்சுப் பாத்திருக்கிறேன். தண்ணியும் விட்டுவிட்டு ஒவ்வொரு நாளும் அவதானிச்சிருக்கிறேன். புளியங் கண்டு முளைச்சு வந்தது. நான் அதைப் பிடுங்கிப்போட்டென் பிடுங்கிப் பாத்தால், முந்தி இருந்த கொட்டையைக் காணேல்லை." செந்திரு தொடர்கிறாள்.
"இது இயங்கியல் எதிர்மறுப்புக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு புளியங்கொட்டை கொட்டை ஆக இப்போது இல்லை. அது செடியாய் மாறிவிட்டுது. புளியங்கொட்டையிலிருந்த 66p அம்சங்கள் இப்பொழுது இல்லை. அதினுடைய புறத்தோல், வயிரத்தன்மை எல்லாம் இப்பொழுது இல்லை. அவை மறைந்து விட்டன. பழையன கழிதல் என்று இதைச் சொல்லலாம்'
அப்பு விட்ட இடத்திலிருந்து செந்திரு தொடங்குகிறாள். "புதிய அம்சங்கள் பல புகுந்து விட்டன முதலிலே இளம்பச்சை நிறத்தில் இருந்த தளிர்கள், பிறகு கரும்பச்சையாக மாறத தொடங்குகின்றன. செடி மேல் நோக்கி உயருது'
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல'
அவை தான் இயங்கியல் எதிர்மறுப்புகளின் பெறுபேறு." "மெய் தான், பிள்ளை. இதை நாங்கள் இப்படிச் சித்திரிக் கலாம். அதாவது படமாக்கலாம்" அப்பு ஒரு தாளை எடுத்து விளக்கப்படமொன்றை வரைந்து காட்டுகிறார்.
இயங்கியல் சில சில எதிர் = நீஃலமை - பழைய + புதிய மறுப்பு அம்சங்கள் அம்சங்கள்
இந்த எதிர்மறுப்பின் இறுதிப் பலன் ஒரு புதிய நிலைமை எண்ணுக்கணக்கில்லாத எதிர்மறுப்புகளின் திரண்ட விளைவாகத் தான் புளியங்கொட்டை புளிய மரமாய் வளர்கிறது. அதாவது, எதிர்மறுப்பின் எதிர்மறுப்பின் எதிர்மறுப்பின் எதிர்மறுப் பின் எதிர்மறுப்பின் எதிர் மறுப்பாகத்தான் வளர்ச்சி களும் அபிவிருத்திகளும் மேம்பாடுகளும் பரிணாமங்களும் நடந்தேறுகின்றன. இது ஒரு மிக நீண்ட தொடர். மனிதகுல வரலாறு கூட இப்படிப்பட்ட ஒரு நெடுந்தொடர்தான்."
gintuluesb • 38 等数

Page 28
செத்துரு இடைமறிக்கிறாள் அப்பு” பொறுங்கோ, பொறுங்கோ பரிணாமம் எண்டு சொன்னீங்களே - அது தானே கூர்ப்பு??
"ஒமோம். அமீபா" கிளாமிடமோனஸ் போன்ற ஒற்றை உயிரணுக்களிலேயிருந்து நாகரிகம் பெற்ற நவீன மணிசர் வரை நேரிட்ட மாற்றங்களெல்லாம் எதிர்மறுப்புகளின் எதிர்மறுப்பு கள் தான்."
இந்த இடத்திலே எனக்கொரு சின்ன ஐமிச்சம் ஒரு சின்னச் சங்கடம்." இது செந்துருவின் இடைமறிப்பு:
"ஏன் என்ன ஐமிச்சம்? என்ன சம்கடம்?"
"முதலிலே ஒரு நிலைமை இருக்கு, அதுக்கு ஒரு எதிர் மறுப்பு வருகுது. பிறகு அந்த எதிர்மறுப்புக்கு ஒரு இரண்டா வது எதிர்மறுப்பு, எதிர்மறுப்பை எதிர்மறுத்தால், மாற்றமே இருக்காதே! மாற்றம் இல்லாவிட்டால், என்ன முன்னேற்றம், என்ன வளர்ச்சி, என்ன அபிவிருத்தி, என்ன மேம்பாடு, என்ன கூரிப்பு? வேப்ப மரக்கிளையிலெ ஊஞ்சல் கட்டி நாங்கள் ஆடிறம். முன்னும் பின்னுமாக நாங்கள் ஆடிக் கொண்டிருக்கிறம் எவளவு நேரம் தான் ஆடினாலும் வேப்பமரத்தடியை விட்டு அஞ்சாறு யார் தூரமாவது முன்னுக்குப் போக ஏலாமல் இருக்கே!"
'பிள்ளை, நீ பொருத்தமில்லாத ஒரு "மொடெலை" எடுத்துப்போட்டாய், ஊஞ்சலிலே ஏறி ஆடத் தொடங்கிவிட் டாய் அது தான் இந்தச் சங்கடம்".
" அப்ப, பொருத்தமான மொடெல் என்ன? நீங்களே சொல்லுங்கோவென், அப்பு?
"மலையடிவாரத்திலே நாங்கள் நிற்கிறம். நியாயமான
உயரத்திலே ஒரு தேயிலைத் தொழிற்சாலை. அங்கே நாங்கள் போக வேணும் போவமா?"
"affl Gunt autb°.
"தொழிற்சாலை சரி கிழக்கிலே தான் இருக்கு - அதுக்குப் போகிற தெரு இது தான். தெருவழியெ பயணிப்பம்".
"இந்தத் தெரு வடக்கு நோக்கியெல்லோ போகுது அப்பு?
"மலை நாட்டிலே அப்பிடித்தானே பிள்ளை வடக்கு, கிழக்கு தெற்கு, மேற்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு, கிழக்கு, கிழக்கு, வடக்கு, கிழக்கு கிழக்கு
52 Antosh 38

கிழக்கு எண்டு இப்பிடி மாறி மாறி வளைஞ்சு கொண்டே தான் மலைநாட்டுப் பாதைகள் போகும். மலையிலே ஏறுற பொழுது ஒரு தருணத்திலே வடக்கு நோக்கிப் போன நாங்கள் வேறொரு நேரத்திலெ தெற்கு நோக்கியும் போக வேண்டி வரும், மலை நாட்டுத் தெருக்கள் திசையை அடிக்கடி மாற்றி மாற்றிக் கொண்டு போனாலும், கடைசியிலே கூட்டுமோத்தமாய்ப் பாக் கிற பொழுது, எங்களை மேலே மேலே உயரக் கொண்டு போகும் அல்லது கீழே கீழே இறக்கிக் கொண்டு வரும் , ஒன்றில் நாங்கள் மலையடிவாரத்திலிருந்து (ஏறி) தொழிற்சாலைக்குப் போய். சேரலாம். அல்லது திகும்பி இறங்கி மலையடிவாரத்துக்கு வர லாம். இந்தப் பயணத்திலே ஒரு தருணத்திலே பயணஞ் செய்த இசைக்கு எதிரானதொரு திசையிலே மற்றொரு தருணத்திலே நாங்கள் பயணஞ் செய்யிறம் அல்லவா? அது ஓர் எதிர்மறுப்புச் இப்படிப்பட்ட பலதருணங்களிலெ எதிர்மறுப்புகளின் எதிர்மறுப்பு களை நாங்கள் காணலாம். அந்த எதிர்மறுப்புகள் பயனில்லாத வெறும் ஊசலாட்டமாக ஒரே இடத்திலே தேங்கி நிற்கிறதில்லை இயங்கியல் வழிப்பட்ட ஏற்றங்கைையும் இறக்கங்களையும் நாங்கள் இந்தவிதமாக எண்ணிப்பார்க்கலாம்?
W அப்படியானால், சமுதாய அரசியல் வரலாறுகளும் இப் படியான இயங்கியற் போக்கைக் கொண்டவை தானா?
"ஒமோம்"
"ஏன், வரலாற்றிலே முன்னேற்றங்கள் : மட்டும் தானா இடம் பெறுகின்றன? பின்னிறக்கங்களும் இருக்குத்தானே?
"பின்னிறக்கங்களும் நேர்வதுண்டு தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நமக்கு மிக நெருக்கமாக உள்ள, நாங்கள் மிகவும் நன்றாக அறிந்த, இந்தப் பூமியையும் இதிலே தோன்றிக் கூர்ப்படைந்து மேம்பட்டு வந்த உயிரினங்களையும், மனிதர்களையும், அவர்களுடைய அறிவியல், உணர்வியல், கலை யியல், தொழில் நுட்பவியல், பண்பாட்டியல் முதிர்ச்சிகளையும் இவற்றினால் ஈட்டப்பட்ட சாதனையையும் எடுத்து நோக்குகிற பொழுது, நெடியதொரு கால நீட்சியை உள்ளடக்கியதொரு கணிப்பீட்டில் நடுநிலை நின்று பார்க்கும் பொழுது, மொத்தத் தில் நாம் கண்டுள்ளது முன்னேற்றம் என்று தானே பிள்ளை சொல்ல வேறும்!"
"ஏன் அப்படிச் சொல்லுறியள்?
"ஏன் என்றால், பிள்ளை, எவனவு துன்ப துயரங்களிலெ ஆழ்ந்தாலும், வருந்தினாலும், நைந்தாலும், நொந்தாலும் நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து வாழவேணும் என்று தான்
தாயகம் 38 3.

Page 29
விரும்பிறம்: egi இயலாதென்றாலும் எங்களுடைய வழித் தோன் றல்கள் என்றாலும் சிறப்பாக வாழவேணும் என்று விரும்பிறம். இந்த விருப்பம் இந்த வேட்கை எல்லா உயிரினங்களிடமும் இயற்கையாக இருக்கிறதே! உயிரினங்கள் முழுவதற்கும் பொது வுடைமையாகவும் பனிதர்சளுக்குச் சிறப்புடைமை யாசவும் உள்ள இந்த வேட்கைக்கு அடியில் ஏதோ ஓர் உயிரூக்கம் இருக்கிறது என்பதை மறுக்க என்னால் முடியவில்லை. அதனாலெ தான் சொல்லறென் - மனிதகுல வரலாறு ஒரு வெற்றிக் காவியம்; வீழ்ச்சியை நோக்கிய அவலக் கூத்தல்ல; வெறும் அபத்த நாட கமும் அல்ல
எனக்கு ஆச்சரியமாய் இருக்கு அப்பு ஏன்?" உங்களுடைய வயதை எட்டிப்பிடிச்ச ஆட்கள் இப்படி யெல்லாம் கருதிறது குறைவு. கருதினாலும் அதை வெளிவெளி யாகச் சொல்லமாட்டினம்" 6.
அதுவும் ஒரு வகைப் பாசாங்கு தான்" "எனக்குச் சில வசனங்கள் நினைவுக்கு 6u@@あ?
சொல்லு, பிள்ளை. பாரதியார் எழுதின வசனங்கள்" சொல்லு பிள்ளை"
இவ்வுலகம் இனியது. இதில் உள்ள வான் இனிமை யுடைத்து. காற்றும் இனிது. தி இனிது, நீர் இனிது. நிலம் இனிது - மனிதர் மிகவும் இனியர் ஆண் நன்று - பெண் நன்று குழந்தை இன்பம் இளமை இனிது" மிச்சம் நான் சொல்லுறென்" என்கிறார் அப்பு அவர் சொல்லுகிறார் -
"முதுமை நன்று உயிர் நன்று - சாதல் நன்று" செந்திரு சொல்லுகிறாள் -
வாழ்தலும் நன்று நான் சென்று வருகிறேன்." இதுவரை மூடி இருந்த தம் கண்களைத் திறந்து பார்க் கிறார் அப்பு. செந்திருவைக் காணவில்லை. அவள் தெருவிலே - சயிக்கிளில்,
54 தாயகம் 38

கிரிக்கெட் யுத்தமா, வர்த்தகமா,
GDIGIT TIITLIT, TIL UDT ?
உண்மையில் விளையாட்டிற்கும் அரசியலுக்கும் தொடர் பில்லையா? பண்டைய கிரேக்க வீரனுக்கு தரப்பட்ட விருது வெறும் ஆலிவ் இலை கீரிடம்தான். இன்றைய ஒலிம்பிக் வீரனுக்கு விருது, விளம்பரத்திற்காக பன்னாட்டு நிறுவனம் தரும் சில மில்லியன் டால்ர்கள். டாலரும், இலையும் ஒன்றுதானா?
முன்பு, கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா ஆடுவதையே காண முடியாத நீங்கள், இன்று எந்த நாடு ஆடினாலும் கான முடியும். உலகமயமாக்கமும், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி யும் அதை சாத்தியமாக்கியது. விளையாட்டில் மட்டும் புழங்கும் மூலதனம், பல மூன்றாம் உலக நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகம். சர்வதேச கால்பந்துக் கழகம்தான் உலகின் மிகப் பெரும் பன்னாட்டு நிறுவனம், பில்கேட்சின் நிறுவனம் அல்ல? விளையாட்டின் இத்தகைய மாபெரும் வருமானம் ஆப்பிரிக்க பஞ்சத்தைப் போக்குவதற்கும், ஆசியாவின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் தான் பயன்படுகிறதா? இல்லை, ஏழை நாடு களைக் கொள்ளையிடவும், ஆதிக்கம் செய்யவும் பயன்படுகிறதா? மூலதனம், சந்தை, விளம்பரம், பணம் இவற்றை உருவிவிட்டு எந்த விளையாட்டைக் காட்டமுடியும் அல்லது ஆட முடியும்? முடியாதென்றால் அதன் காரணம் அரசியல். ஆம், அரசியல் கலப் பற்ற தூய விளையாட்டு எதுவும் இன்று கிடையாது. சாத்திய மும் இல்லை.
இதுபோக, ஏழை நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டி களும் தேசிய வெறியால் கவ்வப்பட்டிருக்கிறது. அவை பொய்யான உணர்ச்சியில் மக்களை மூழ்கடித்து ஆள்பவருக்கு பயன்படுகிறது" இருப்பினும் விளையாட்டில் நாம் கண்ட சமூக நிலைமைகள் அனைத்தும், பரபரப்பை ஏற்படுத்தி, சந்தையை அதிகரித்து, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடவே முக்கியமாக பயன் படுகிறது.
தாயகம் 38 55

Page 30
கோடிக் கணக்கான மக்களை ஒற்றுமைப்படுத்துவது மட்டு மல்ல. கோடிகள் கொட்டும் கற்பக விருட்சமாகவும் கிரிக்கெட் இருக்கிறது: அதுதான் கிரிக்கெட்டின் வர்த்தக அரசியல் அதை நடத்துபவர்கள். ஆடுபவர்கள், விளம்பரதாரர்கள், கொலைக்காட்சிகள், நிறுவனங்கள் . இவர்ாள் சம்பாதிப்பது ஒரு ஏழை நாட்டின் பட்ஜெட்டை விட அதிகம்.
நாடுகளில் கிரிக்கெட் சங்கங்களின் கலைமைப் பொறுப் பிலுள்ளவர் 4 ன் அட்டவி சுெளைக் கெரிக்கிாக க்க வேண்டிய தில்லை. சந்கையின் விதிகளைத் தெரிந்திருப்பது கான் அவசியம்: அகற்கேற்ப பல முகலாளிகள், ஓய்வு பெற்ாm உயர் அதிகாரிகள், இன்னபிற மேட்டுக் குடியினர் கான் கிரிக்கெட் தொழிலைச் செவ்வனே நடத்துகின்றனர், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலியக் கோப்பை, மினி உலகக் கோப்பை என இடை விடாமல் நடத்துகின்றனர். ஒவ்வொரு போட்டியையும் ஒரு பன்னாட்டு நிறுவனம் நடத்துகின்றது. வீரரின் ஆ.ை முதல், மைதான, தொலைக்கா சி விளர் பாங்சள். நோடி ஒளிபாப்பும் உரிமை வாை பல நாறு கோடிகள் புரளும் வர்த்தகம் நடை பெறுகிறது:
90 - களில் வக்க பெப்சியும், கோ க்கம் தங்களது விளம் 1ா நிறுவனச் செலவுகளில் பெரும் பங்கை கிரிக்ஈெ" டிஸ் ஈ ஒதுக்கி யிருக்கின்றன என்ற7 ல் பார்த்துக் கொள்ளநங்கள்.
இப்போது சொல்லங்கள் கிரிக்கெட்ஸ் க ச டப்படும் அகீக பிரபலம் எதற்காக? ஒரு ஆரோக்கியமான சமூ4 க்திற்க விளை LLLLLTTSTTS T SS T LHTLtTSLaL SYYTTttLrSS EET tS SDES ELS HH0 Ct S SELGLT னேற்றக்கில் அகற்கோர் இடமுண்டு. எனில் சில நாடுகள் மட்டும் விளையாடும் கிரிக்கெட் நமது மக்களதக்க எதைக் கற்க த? சீண்டு வாரில்லாமல் ஏனைய விளையாட்டுக் ஈஸ் ஒதுக்ாப் 1.டசு கான் ஒாே பலன் கிரிச்செட்டில் புரளம் பணத்தில் நாறில் ஒரு பங்க கைக்கினால் கூட எனைய துறைகள் வளாகம் விளையாடும் பழக் காமம் மக்களிடம் அதிகரிக்கும். ஆனால் கிரிக்+ெட்டின் வளர்ச்சி ருை சந்தையின் வளர்ச்சிதான், கேளிக்கைக்கான ஒரு நுகர் பொருள் தான்.
சங்கர சாப்பாப மடங்களில் வருமான வரி சோதனை கிடையாது என்பது போல் கிரிக்கெட் வீர்களுக்கும் இல்லை கேசிய நாயகர்கள் ல்லவா. சும்மாவா? பிடிக்கும் பந்கைவிடப் பிடிக்காத பந்திற்கும், அடித்து ஆடுவதை விட அவுட் ஆவதற்கும். நின்று ஆடுவதை விட உடன் வெளியேறுவதற்கும் - ரேட் அதிகம். ஆம். இனிமேலும் கிரிக்கெட் ஒரு விளையாட்டல்ல, பன்னாட்டுச் சந்தையின் சூதாட்டப் பொருள் மட்டுமே.
நன்றி : புதிய கலாச்சாரம் 56 தாயகம் 38

குழந்தை தந்த கொடை
() சித்தமழகியான்
*கூடி விளையாடு பாப்பா? குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் சிறுவர் நாடகம். இதை அவர் 1978 இல் எழுதினார்: இது முதலில் மேடையேறியது 1979 இல், அதன் பிறகு காலத் துக்குக் காலம் பல மேடையேற்றங்கள் நடந்தேறி விட்டன.
இந்த நாடகத்தை அரங்கச் செயற்பாட்டுக் குழு என்னும் அமைப்பு "யுனிசெவ்" நிறுவனத்தின் ஆதரவோடு "சிறுவர்களுக் கான உள நல மேம்பாட்டுத் திட்டம்" என்னும் திட்டத்தின் கீழ் மறுபடியும் புத்துயிரூட்டித் தொடர்ச்சியாக நடத்தி வரு கிறது. ஏற்கனவே 19 தடவை - இவ்வாண்டு மே அய்ந்தாம் தேதி தொடக்கம் - குடாநாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சிறுவர்களுக்கென இந்த நாடகம் ஆடப்பட்டு விட்டது இன்னும் பல இடங்களிலும் நடத்திக் காட்ட வேண்டும் என்பது "அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் " விருப்பமாகும்.
முன்பு நாடக விற்பன்னர் அ. தாசீசியஸ் அவர்களாலும், பின்னர் திரு. க. சிதம்பரநாதன் அவர்களாலும் நெறியாள்கை செய்யப்பட்ட கூடி விளையாடு பாப்பா? இப்பொழுது இளந் தலை முறையினரின் கலை எழுச்சிக்கு ஒரு குறியீடு போல விளங்கும் கே. தேவானந் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி யுள்ளது. இந்த நாடக அரங்கேற்றங்களைப் பற்றி விதந்து பேசுவதற்கு நல்ல நியாயங்கள் சில உள்ளன.
மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது, "சிறுவர்களுக் கென்று பெரியவர்கள் சொல்லும் நாய், பூனை, நரி, கரடி பற் றிய ஒரு கதை தானே, இது!" என்று சிலர் நினைக்கக் கூடும். பத்தோடு பதினைந்தாக இதையும் அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட எண்ணலாம். ஆனால் குழந்தைகளோடு குழந்தையாக, சிறுவரோடு சிறுவராக அமர்ந்திருந்து இதனைப் பார்த்து மகிழும் எவரும், இந்த மேடை நிகழ்வு வழங்கும் குதூகல உணர்வையும் கும்மாளத்தையும் ஆனந்தத்தையும் இலேசாகத் தட்டிக் கழித்து விட முடியாது. இந்தச் சிறப்பு எப்படி வந்து வாய்ந்தது, இந்த நாடகத்துக்கு?
தாயகம் 38 57

Page 31
வழமையாக நாங்கள் பார்க்கும் நாடகங்களிலே, நடிகர் கள் ஆடிப்பாடி நடிக்கும் மேடை புறம்பாக ஒரு பக்கத்தில் இருக் கும். பார்வையாளர்கள் மேடையுடன் கொடர்பில்லாத மற் றொரு புறம்பான பகுதியிலே இருப்பார்கள், ஆனால் கூடி விளை யாடு பாப்பா”வில் மேடையிலே וb)6bז mחנ_ו וr r+6וג6תu6"חנT6יק תי நோக்கி வீசப்படும் ஒரு திசைக் சகாக்கு கலாக" பேச்சுகளம் "பாடல்களும்" ஆட்டங்களும் அமையவில்லை மாறாக, மேடை யாளர்களுக்கும்" பார்வையாளருக்குமிடை யில் நிகழும் ஒரு கொடுக்கல் - வாங்கலாக, ஒர் அனுபவப் பரிமாறலாக, ஒரு கருத் தாடவாக, ருெ - திசைப்பட்ட உணர்வுக் சலப்பொன்று இருந் தது. இது மிகவும் முக்கியமானது:
"மேடையாளர்களோடு பார்வையாளர்களும் சேர்ந்து பாடினார்கள்; கூடி, ஆடினார்கள்; கேட்ட கேள்விகளுக்கு மறு மொழி கூடச் சொன்னார்கள். சுருக்கமாகச் சொன்னால், சிறு வர்கள் நாடகத்துடன் கலந்து போனார்கள் அந்த மகிழ்விலே கரைந்து போனார்கள் :
இது ஒங் பெரிய சாதனை:
எட்டாத உயரத்தில் ஏறி நிற்கும் பெரியோர்கள், கட் டாயப்படுத்திப் போகனைகளை இடிக் துரட்ட ராயலும் இன்றைய சூழ்நிலையில், இந்த விதமான கலப்பும் காைவும் ஒரு பெரிய
சாதனை.
சிறுவர் நாடங்களைச் சிறுவர்களைக் கொண்டே, அவர் களை மாத்திரம் வைத்தே கூடத் சுயாரிக்கலாம் அது ஒரு முறை : ஆனால் இந்த நாடகத்திலே, நாயாகவும், புனையாகவும். சேவ லாகவும், ஆடாகவும், பன்றியாசவும், நரியாகவும், குரங்காச வும், கரடியாகவும், மணிகனாகவும் வேடமிட்ால நடிக்கவர்கள் சிறுவர்கள் அல்ல; பெரியவர்கள் தான். ஆனால், இவர்களிற் பலர், நிகழ்ச்சித் தொடக்கத்துக்குச் சற்று முன்பே சபையில் இருந்த சிறுவர்களுடன் சேர்த்து, அமர்ந்து பழகி, sey GMT a GMT * 6? . விளையாடி அந்தக் குழந்தைகளுக்கு இருந்கிருக்கக் கூடிய **தி தடைகளை இளக்கி இசைவாக்கம் செய்து கொண்டனர். இசைக் கருவிகளைச் சுருதி கூட்டுவது போன்ற இந்த முன்னாயத்த முயற்சிகள் மிகவும் நாகுக்காக மேற்கொள்ளப்பட்டமை, "கூடி விளையாடு பாப்பா' வின் வெற்றிக்குப் பெரிதும் துணை நின்றது என்று சொல்ல வேண்டும்.
58 தாயகம் 38

எளிமையான காட்சியமைப்பு, வேடிக்கையான வேட உடைகள், உயிர்ப்பும் தெளிவும் நிரம்பிய இசை, சிக்கலில்லாத நேரடியான பேச்சு முறை - இவை யாவும் சேர்ந்து தயாரிப்பின் சிறப்புக்குப் பங்களிப்புச் செய்தன.
எல்லாம் சரி. இந்த அரங்கேற்ற உத்திகளாலும் ஆற்றுகை யாலும் எழுத்தாளர் குழந்தை அவர்களும் நெறியாளர் தேவானந்தும், ஏனைய கலைஞர்சளும் எதனை உணர்த்த முயன் றனர்? எதனை உணர்த்தி வைத்தனர்? சிறுவர் உளநல மேம் பாட்டுக்கு இந்த நாடகம் எந்த வசையில் உதவி செய்கிறது? ஒரு நல்ல மாலை வேளையிலே அல்லது காலை வேளையிலே, பல சிறுவர்களையும் சில பெரியவர்களையும் மகிழ்ச்சியாக இருக் கும் படி செய்கது. அந்த அளவிலே நின்றிருந்தாற்கூட அது பெரிய காரியம் தான்.
ஆனால், அவ்வளவில் நிற்கவில்லை; அதற்கு அப்பாலும் சென்றது - "கூடி விளையாடு பாப்பா? : எப்படி? கந்தன் என்ற கமக்காரன் ஒரு நாயையும் பூனையையும் ஆட்டையும் பன்றியை யும் வளர்க்கிறான். இவை எல்லாம் வீட்டு மிருகங்கள். இவற்று டன் ஒரு சேவலும் இருக்கிறது. இவற்றைத் தவிர நரி, குரங்கு கரடி மூன்றும் காட்டு மிருகங்கள்.
இவற்றிடையே சிறு சிறு முரண்டுகளும் குழப்படிகளும் தோன்றுகின்றன. இவற்றை மூலதனமாக வைத்துத் தான் "நாடகம்" தோற்றுவிக்கப்படுகிறது.
கந்தன் வீட்டில் இல்லாத வேளை தாங்கள் காற்று, வெயில் மழைக்கு ஒதுங்கி இருக்ச ஒரு வீடு தேவை என்று கருதி, சுயமுயற்சியினாலே பன்றியும் ஆடும் சிறு வீட்டைக் கட்டி முடிக் கின்றன. ஆனால், நாயும் பூனையும் சேவலும் இந்த முயற்சியில் ஒத்துழைக்கவில்லை.
பன்றியும் ஆடும் தம்முடைய சொந்த வீட்டிலே வசதி யாக வசிக்கின்றன. காற்றும் மழையும் கடுமையாய்ப் பிடித்துக் கொள்ள, நாயும் பூனையும் இரந்து மன்றாடிக் கேட்டு அந்தச் சிறு வீட்டினுள்ளே மழைக் குளிருக்கு ஒண்டிக் கொள்ளுகின்றன: சேவல் ெேபருமை பிடித்த பிராணி, தான் கூவுகிற படியாலே தான் பொழுதே விடிகிற சாக அது நினைக்கிறது. வீட்டுக் கூரையிலே உயரத்தில் இருந்தாலும் நடுங்கும் குளிரையும் மழை யையும் தாங்க முடியாமல் இறங்கி வந்து மன்னிப்புக் கேட்டு ஏனைய விலங்குகளோடு "கடி விளையாட' அதன் கர்வம் விட வில்லை கடைசியில் சேவல் கூட தன் கர்வத்தை விட்டுக் கொடுத்து மற்ற விலங்குகளுடன் சேர்ந்து கொள்கிறது.
35 Tuusub 38 59

Page 32
காட்டுக்குப் போன குரங்கும் நரியும் திரும்பி வருகின்றன: நரி சேவலைப் பிடித்துத் தின்ன முயலுகின்றது. கடைசியில் நரியின் கபடத் தனம் அம்பலமாகிறது என்றாலும் பெரும்பான் மைக் கருத்திணக்கத்தினால், நரிக்குக் கூட மன்னிப்புக் கி.ை க்கிறது
எல்லா விலங்குகளும் கந்தனும் சேர்ந்து, விருந்து சமைத் துச் சாப்பிடுகிறார்கள்; ஆடிப்பாடுகிறார்கள்.
இப்ப0. ஒரு கதையோட்டத்தை வைத்துக் கொண்டு *ட்டுழைப்பின் நன்மை, சுயமுயற்சியின் பெருமை, கர்வம், பொறாமை, கன்னலம், கபடத்தனம் என்பவற்றினால் வரும் கெடுதி, பெரும்பான்மைக் கருத்தினக்சம் கரும் வலிமை அமைதி ஆகியன பற்றிய ஆரோக்கியமான சில மன அசைவுகள், நுட்!! மும் சாதுரியமும் இணைந்த வகையிலே கலை நுணுக்கத்துடன் விளையாட்டு விளையாட்ட்ாக உணர்த்தப்படுகின்றன.
பாரிய சிவகனுசை இராமன் ஒரு பூமாலையைத் தூக்கு வது போல இலாவகமாக எடுத்தானாம். வாங்கச் செயற்பாட் டுக் குழு கிட்டத்தட்ட அகைத் தான் இப்பொழுது அடிக்கடி செய்து வருகிறது . "கமந்தை" கொடுத்து வைத்த வர். அவர் தந்த பெருங் கொடை, இந்த நாடகம்:
|Bu, ammm Grina yöifi) & afio eunT|
ஆண்களுக்கான ஆடைகள் நவீன முறையிலும்,
உரிய நேரத்திலும் தைத்துக் கொடுக்கும் அதிசிறந்த ஸ்தாபனம். பழைய புதிய வீடியோ படக் கொப்பிகளும் வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளருக்கு விசேட சலுகை
652, நாவலர் வீதி, அரியாலை,
(சத்தியாஸ் ஸ்ரூடியோ அருகாமை)
qSLSSLSLSSLSLSLSLSLSLSS ܢܚܝܬ
ரங்கன் இசைக்கருவி திருத்தகம்
சகல விதமான இசைக்கருவிகள் () திருத்தவும் () வாங்கவும் ஒரே ஸ்தாபனம் உரிமையாளர் : செ. தனேந்திரகுமாரன் (ரங்கன்) 53, கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.
صعصص 60 தாயகம் 38

* கிளின் ரன் ”
(அந்திய காலச் சேவை)
இல, 212, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
நாம் எமது மக்களின் அந்திய காலச் சேவைகளை,
திருப்திகரமாகவும், வசதிக்கும் ஆத்ம சாந்திக்கும் அமைவாகவும் சேவை செய்து வருகிறோம்.
எமது சேவை 1935ம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து கொண்டே வருகின்றது.
வாருங்கள் 1 நாடுங்கள் 11
கிளை 548, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
நியூ விதுஷா நகை மாடம் x உங்கள் இளமைக்கு மீண்டும் மெருகூட்டும்
* கண்கவர் 22 கரட் தங்க நகைகளைப் பெற்றிட
யாழ் நகரில் சிறந்த ஸ்தாபனம் கிளை ரஞ்சனா நகை மாடம்
இல, 105, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
©-ሰF6oqpuጋ፵ 6n Ö
ச. சத்தியசீலன் (ரஞ்சன்)
சத்தியாஸ் * சிறந்த கறுப்பு வெள்ளைப் படங்கள்
*ழ் கலர்ப் படங்கள்
• Gunt“ Gu-fr - eft-Gun * சயிக்கிள் உதிரிப்பாகங்கள்
* அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றுக்கு நாடவேண்டிய ஒரே ஒரு ஸ்தாபனம்
F ö i UII I ÍN 650, நாவலர் வீதி, அரியாலை.

Page 33
செய்திப் பத்திரிகையாக Registered as a News
விரியும் அறிவு நிை வீழும் சிறுமைகளை
இலங்கை இலக்கிய வெளி
VASANTHAM |
405, ஸ்ரான்லி வீதி
இச்சஞ்சிகை தேசிய கலை இ பானம் 405, ஸ்ரான்லி வீதி வச அவரீகனால் பாழ்ப்பாணம் தீ யாழ்ப்பான அச்சகத்தில் அச்சிட்

ப் பதிவு செய்யப்பட்டது Paper in Sri Lanka.
9 காட்டுவீர் - அங்கு
Eph.
H. T. ரதி
இந்திய ரியீடுகளுக்கும் நூல்களுக்கும்
BOOK HOUSE
, i
லையம்
), யாழ்ப்பாணம்,
விக்கியப் பேரவைக்காக யாழ்ப் ந்தத்திலுள்ள சு. தணிகாசலம் 07, ஸ்ரான்லி வீதியிலுள்ள
வெளியிடப்பட்டது,