கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: லூஷூன் போர்க்காலச் சிந்தனைகள்

Page 1
No ae :
 

I'll

Page 2

லூ ஷ"ன் போர்க்காலச் சிந்தனைகள்
தமிழாக்கம்
க.நடனசபாபதி
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தலைப்பு
Saffau
தமிழாக்கம்
முதல்பதிப்பு அச்சு
வெளியீடு
விநியோகம்
விலை
போர்க்காலச் சிந்தனைகள்
லூ ஷன்
கநடனசபாபதி
1999 மார்கழி
டெக்னோ பிரின்ட். தெஹிவளை தேசிய கலை இலக்கியப் பேரவை
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிரைவேட்) லிமிடட் 44. வேது மாடி,
கொழும்பு மத்தியகூட்டுசந்தைத்தொகுதி,
கொழும்பு - 11. தொலைபேசி , 384 ஃபக்ஸ் , 339279
ரூபா. 10000

பதிப்புரை
தேசிய கலை இலக்கியப் பேரவை புத்தாயிரமாம் ஆண்டு வாழ்த்துக்களுடன் இவ் ஆண்டிற்கான முதல் நூலை வெளியிடுகின்றது. உலக இலக்கிய மேதைகளில் ஒருவராகக் காணப்படுபவர் லூ ஷ"ன் (1881-1936) ஆவார். சீனாவின் செழுமை மிகுந்த கலை இலக்கிய கலாசாரப் பாரம்பரியத்தில் இருந்து தோற்றம் பெற்றவர்லூ ஷ என். நவீன சீன வரலாற்றில் கலாசாரத் திருப்பு முனைக்கு வழிகாட்டியவர். ஏகப் பெரும் பான்மையான மக்களின் இலக்கியப் பிரதிநிதியாக உறுதி யுடன் எழுந்து நின்றவர். அதன் மூலம் அடக்கு முறைகளாலும் அடிமைத்தனங்களாலும் அந்நிய நுகத்தடிகளினாலும் அல் லற்பட்டு ஆற்றாது துன்பத்தில் அழுந்தி நின்ற சீன மக்களுக்கு தனது வலிமைமிக்க எழுத்துக்களால் வழிகாட்டியவர். விழிப் பூட்டி உணர்வூட்டி திசை காண்பித்தவர்.
அவரது இலக்கிய ஆக்கங்கள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், மொழியாக்கம் ஆகிய வடிவங் களில் அமைந்திருந்தன. லூ ஷ"ன்னின் படைப்புக்கள் தனித் துவமானவை. அவை அன்றைய சீனாவின் சமூக அமைப்பின் தனித்தன்மைகளை வெளிக்கொணர்ந்தன. அவரது எழுத் துக்கள் ஒவ்வொன்றும் ஏற்கனவே இறுக்கமாக இருந்த வந்த எதிரி வர்க்கத்தின் இலக்கியக் கோட்டை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களாக விளங்கின. அவை அனைத்தும் சமூக மாற் றத்திற்காக எழுந்து நின்ற மக்களது போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தன. அவரது படைப்புகள் யாவும் மக்கள் சமுத்திரத்தின் போராட்ட நடைமுறைகளின் செழுமையான அனுபவங்களில் இருந்து பெறப்பட்டவை. தான் மக்களிட மிருந்து பெற்றவற்றை இலக்கிய வடிவங்களாக்கி மீண்டும் மக்களுக்கே லூஷ"ன் வழங்கினார். அதன் மூலம் மக்கள் கலை இலக்கியக் கோட்பாட்டை செழுமையாக்கி வளப்படுத் தினார். அதுவே அவரை உலக இலக்கிய மேதைகளின் வரிசை
க்கு உயர்த்திச் சென்றது.

Page 4
இத்தகைய இலக்கிய மேதையான லூஷ"ன் படைப்புகளில் அவரது சிறுகதைகள் ஏற்கனவே தொகுதியாக இலங்கையில் வெளிவந்துள்ளது. தேசிய கலை இலக்கியப் பேரவை 1995ம் ஆண்டில் முதுபெரும் எழுத்தாளரான கே.கணேஷ் அவர்கள் மொழியாக்கம் செய்த 'சீன அறிஞர் லூஷ"ன் சிறுகதை தொகுப்பு நூலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போது நண்பர் க.நடனசபாபதி மொழியாக்கம் செய்துள்ள "லூ ஷ"ன் போர்க்கால சிந்தனைகள்' நூலை வெளியிடு கின்றோம். இத்தொகுப்பில் அடங்கியுள்ள படைப்புக்கள் நமது சமகாலச் சூழலுக்குப் பெரிதும் பொருந்தக் கூடியவைக ளாகவும் படிப்பனைகளைத் தரக்கூடியவைகளாகவும் காணப் படுகின்றன.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள படைப்புக்களில் சில ஏற் கனவே தாயகம்" சஞ்சிகையிலும் 'செம்பதாகை பத்திரிகை யிலும் வெளிவந்தவை. இப்படைப்புகளை நண்பர் நடன சபாபதி ஏற்கனவே முழுமையாக மொழியாக்கம் செய்து தந்திருந்த போதிலும் அவை யாழ்ப்பாணத்து போர்க்காலச் சூழலிலே அச்சகம் ஒன்றில் குண்டு வீச்சுக்கு இரையாகி எரிந்து போயின. ஆனால் தனது முயற்சியில் சளைக்காது மீண்டும் அப் படைப்புகளை விடாமுயற்சியுடன் மொழியாக்கம் செய்து இந்நூல் உருப்பெற உதவி இருக்கிறார் நண்பர் நடன சபாபதி. அவரது முயற்சிக்கும் கடும் உழைப்பிற்கும் தேசிய கலை இலக்கியப் பேரவை நன்றி கூறிக் கொள்கின்றது. இதுபோன்று தொடர்ந்தும் இவ் ஆண்டிற்கான நூல் வெளி யீட்டு முயற்சிக்கு வாசகர் பரப்பில் இருந்து ஆக்கமும் ஊக்கம் கிடைக்க வேண்டும் எனத் தேசியக் கலை இலக்கியப் பேரவை வேண்டிக் கொள்கின்றது.
நன்றி
தேசிய கலை இலக்கியப் பேரவை
44, 3ιο ιρίτις, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொாகுதி, கொழும்பு - 11

லூ ஷ9ன் பற்றி அறிவது.
சீனாவின் நவீன இலக்கியவாதிகள் எனக் காணப்படுவோருக்கு முன்னோடி லூ ஷ"ன். தமிழுக்கு பாரதியும் புதுமைப்பித்தனும் எவ்வாறோ அவ்வாறே லூ ஷ"சன்னைக் கொள்ள இயலும். சீனப் புரட்சியில் லூ ஷ"ன் ஆற்றிய இலக்கியப் பணி பெரியது. அதனாற் தான் மா ஒ சேதுங் அவரைக் கட்சியில் இல்லாத கம்யூனிஸ்ட் என்று குறிப்பிட்டார். லூ ஷ"ன் பற்றித் தமிழரி டையே பரிச்சயம் போதாது. லூ ஷ"சன்னின் சில ஆக்கங்கள் தமிழாக்கப்பட்டிருந்தாலும், பல வேறு அரசியற் போக்குகளை யுடைய மேனாட்டு இலக்கியவாதிகள் பற்றிய அறிவும் ஆர்வ மும் மிக்க நமது இலக்கிய ஆர்வலர்கள் கூட லூ ஷ"ன் பற்றி அறிந்துள்ளது குறைவு. லூ ஷ"ன் என்றால் யாரென்று தெரியாத வர்களும் உள்ளனர்.
சீனப் புரட்சிக்குமாஒ எப்படியோசீனஇலக்கியத்துக்குலூஷன் அப்படி என்று கூடத் தைரியமாகக் கூறலாம். அவர் சீனச்சமுதாய த்தை மிகவும் நேசித்தவர் எனினும் சீனத் தேசியவாதியல்ல. அயலினின்று நிறையக் கற்றுப் புதிய சிந்தனைகளை உள்வாங் கியவர். எனினும் அந்நிய மோகத்தில் மூழ்கியவரல்ல. மரபின் குறைநிறைகளை அறிந்தே அவர் சீன இலக்கியத்தைச் செழு மைப்படுத்தினார். அவருடைய சமூகப் பார்வை மரபுவாதச் சிந்தனைகளினின்றும் பல வகைகளிலும் விடுதலை பெற்றது. அவர் வாழ்ந்த காலம் சீனம் அந்நிய ஆதிக்கத்தினின்றும் உள்நாட்டு ஆதிக்கச் சக்திகளின் முரண்பாடுகளின் விளைவான சீரழிவினின்றும் விடுபடதத்திணறிக் கொண்டிருந்த காலம். சீன முடியாட்சி முறை தூக்கியெறியப்பட்டும் சீனாவால் அதன்மீது வைக்கப்பட்டிருந்த சுமைகளைத்தூக்கியெறியமுடியாத காலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் மூலம் மெல்ல மெல் லக்கட்டியெழுப்பப்பட்டு கோமிந்தாங் அரசின் கொடுமைகட்கு முகங்கொடுத்த காலமும் அதுவே. இந்த வகையில் தமிழகத்தில் பாரதியின் எழுத்தையும் அரசியற் சிந்தனையையும் லூ ஷ"ன் னுடையவற்றுடன்ஒப்பிடுவது பயனுள்ள புதியதரிசனங்களைத்

Page 5
தரும். இத்தகைய முயற்சி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தாயகம் சஞ்சிகையில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப் பட்டுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது.
லூ ஷ"ன் ஒரு கதாசிரியராகவே அதிகம் அறியப்பட்டவர். ஆயினும் அவருடைய பங்களிப்பிற்கு மேலும் பல முக்கியமான பக்கங்கள் உள்ளன. அவருடைய சிறுகட்டுரைகள் மிகவும் இலக்கியப்பாங்கானவை. அவரது குறிப்பால் உணர்த்தும் ஆற்றலை அவை தெளிவாகவே அடையாளங் காட்டுவன. எளிமை, தெளிவு, ஆழம், செய்நேர்த்தி என்பன லூ ஷ"ன்னின் எழுத்தில் யாரும் தவறவிட இயலாத அடையாளங்கள். அவரது சமூக அரசியற் பார்வையை அவர் பிரசாரப் பாங்கில் முன் வைக்காவிடினும் அவரது நிலைப்பாடு பற்றிய எதுவிதமான ஐயத்துக்கோ தெளிவீனத்துக்கோ அவர் இடம் வைப்பதில்லை. அவரது இயல்பான ஆழமான நகைச்சுவையை அவரது எழுத்திற் பல இடங்களில் நாம் காணமுடியும். லூ ஷ"ன்னின் தெரிந் தெடுக்கப்பட்ட படைப்புக்களை ஆங்கில வாயிலாக அறியும் வாய்ப்பே நம்மிற் பலருக்கும் உள்ளது. லூஷ"ன்னின் ஆக்கங்கள் சில, முக்கியமாகக் கதைகள், தமிழாக் கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. அவருடைய சமூகப் பார் வையை மிகத் தெளிவாகத் தரவல்ல அவரது சிறு கட்டுரைகள் ஐம்பது இந்த நூலில் தமிழாக்கப்பட்டுள்ளன. இவை லூ ஷ"ன் பற்றி மட்டுமன்றி அவர் வாழ்ந்த காலத்தின் சீனச் சமூகம் பற்றியும்ஒரு தெளிவான பார்வையை நமக்கு வழங்குவன.
தமிழில் அவற்றை இம் முன்னுரைக்காக வேண்டி நான் வாசித்த போது நமது சமூகத்தின் இன்றைய சூழலுக்கு அவரது படைப் புக்கள் எவ்வளவுதூரம் பொருந்துகின்றன என்பதையே முதலில் உணர்ந்தேன். எந்தப் புனைகதையையும் விட வலிதாக நிஜமான நிகழ்வுகள் சில நம் மனங்களிற் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு இன்று கணக்கற்ற உதாரணங்கள் கண்முன் உள்ளன. இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்விக்கான விடையை நமக்கு இவை மேலும் தெளிவுபடுத்துகின்றன. லூ ஷ"ன் கவிஞரல்லர். எனினும் அவரது எழுத்தின் கவித்துவ மான வரிகளை நாம் இடையிடை காண முடிகிறது. 'இரவைப் புகழ்ந்து' என்ற ஆக்கத்தின் இறுதி வரிகளைக் கவனியுங்கள்.

“உயர்ந்த சுவர்களுக்குப்பின்னால்
உயர்ந்த கட்டிடங்களில்
பெண்களின் இல்லங்களில்
இருண்ட சிறைகளில்
இருக்கை அறைகளில்
இரகசிய அறைகளில்
எங்கள் இருள் கவ்விக் கொண்டிருக்கும்.
பகற்பொழுதும் வந்து போவோரின் சப்தங்களும்
இருளுக்கு ஒரு முகமூடி.
மனித எலும்புப் பானைக்கு ஒரு மூடி.
பிசாசின்முகத்துப் பூச்சு
இரவுக்கு மட்டுமே நேர்மையானது.
நான் ஒரு இரவு விரும்பியாதலால்
இரவைப் புகழ்ந்து
இரவில் எழுதுகிறேன்". லூ ஷ"ன்னின் எழுத்தை நண்பர் நடனசபாபதி மெருகு குறை யாமல் நேர்மையாகவும் விசுவாசமாகவும் தெளிவுறத் தமிழில் வழங்கியுள்ளார். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு அவரது கவனமான இம் முயற்சி நல்லதொாரு எடுத்துக் காட்டு. இக் கட்டுரைத் தொகுதி க்கு அவர் வழங்கியுள்ளதலைப்பு "போர்க்காலச்சிந்தனைகள்". அது லூ ஷ"ன் எழுதிய காலத்துக்கு மட்டுமன்றி அவரது இந்த எழுத்துக்கள் ஈழத்திற் தமிழராற் படிக்கப்படும் காலத்துக்கும் மிகவும் பொருத்தமானது. வரலாற்றினின்று எதையுமே கற்க முடியாது என்போருக்கு லூ ஷ"ன்னின் சிறு கட்டுரைகளில் உள்ள பல விடயங்கள் நமக்கும் பொருந்தி வருவது எதையாவது உணர்த்துமென எண்ணுகிறேன். நடனசபாபதியின் எழுத்து நூலுருப் பெறுவது இதுவே முதற் தடவை. ஒரு சிறப்பான படைப்புடன் அவர் தமிழ் வாசகர் களிடம் வந்துள்ளார். அதற்குரிய வரவேற்பை அது பெறும் என்றே நம்புகிறேன்.
சி.சிவசேகரம்
பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 6
என்னுரை
சீன இலக்கியங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் பலவற் றையும் நண்பர் சி.கா.செந்திவேலின் உதவியுடன் காணும் பேறு பெற்றேன். அவற்றில் அடிமைகளாகப் பலராலும் நசுக்கப்பட்டு வந்த சீன மக்களை விழிப்புறச் செய்யும் நோக்குடன் தமது வைத்தியப் படிப்பையும் இடைநிறுத்தி இலக்கியப் பணியிலேயே தனது வாழ்நாளை அர்ப்பணித்த லூ ஷ"னின் எழுத்துக்களை, படைப்புகளைப் படித்தபோது அவை என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டன. இதே உணர்வைப் பலரும் கட்டாயம் பெறுவார் கள் என்ற நம்பிக்கை எனக்கு எழுந்தது. அதன் நிமித்தமே இவற் றில் சிலவற்றையாவது தமிழ் வாசகர்களுக்கும் முற்போக்கு சிந்தனையாளருக்கும் பயன்படட்டுமே என்ற நோக்கில் தமிழில் தர முயன்றுள்ளேன்.
இதற்கெல்லாம் உந்து சக்தியாக இருந்தது இதற்கு முன்பு செம்பதா கையில் நான்தமிழாக்கித்தந்தவற்றிற்கு மக்கள் அளித்த உற்சாகமே. உலகெங்கும் நசுக்குவோரும் நசுக்கப்படுவோரும் பெருகிவரும் இக்கால கட்டத்தில் அவர் தமது நாட்டில் நடைபெற்று வந்த காலக்கட்டத்தில் எழுதிய கட்டுரைகள் போரையும் அதன் நிமித் தம் மக்கள் படும் அவஸ்தையையும் நேரில் கண்ட போது எழுதி யவை இன்றைய எமது கால கட்டத்திற்கும் பொருந்தும் என்ற நோக்கில் அவருடையவற்றில் சிலவற்றையாவது மொழி பெயர் க்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு பெரிதும் பூரிப்படைகிறேன். இந்நூலை வெளியிட முன்னின்ற தேசிய கலை இலக்கியப் பேர வைக்குப் பெரிதும் கடப்பாடுடையேன். மேலும் இந்நூலுக்கு முன்னுரையும் நூல் வெளிவர உற்சாகமும் தந்த பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களுக்கு நன்றி உடையேன். இந்நூலை உரிய நேரத்தில் அழகாக அச்சிட்டுத் தந்த கே.தியாகராஜா அவர்களுக் கம் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
க.நடனசபாபதி கல்கிசை

பிச்சைக்காரர்
DTன் உயர்ந்த, மக்கிப்போன மெல்லிய புழுதி மீது சிரமத்துடன் நடந்து போகிறேன். மேலும் பலர் தனியாக நடந்து போகிறார்கள். சுவருக்கு மேலாக, இன்னமும் இலை உதிராத உயர்ந்த மரங்களுக்கு மேலாக வீசும் காற்று எனது தலைக்கு மேலாக சுழலுகிறது.
காற்று மேலே செல்ல எங்குமே புழுதி பரவுகிறது.
ஒரு சிறுவன் என்னிடம் பிச்சை கேட்கிறான். அவன் மற்றவர்கள் போலவே கோடிட்ட சட்டை அணிந்திருக்கிறான். கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனது பாதையை மறைக்கிறான். முழந் தாழ் இடுகிறான். என்னைப் பின்தொடரும்போது மன்றாடுகிறான்.
நான் அவனுடைய குரலையும் போக்கையும் வெறுக்கிறேன். அவன் கவலையற்றிருப்பதை வெறுக்கிறேன். இதுவும் ஒரு விளையாட்டுத்தான். மன்றாடிக்கொண்டு என்னைப் பின்தொடருவது எனக்குச் சலிப்பூட்டுகிறது.
நான் நடந்து கொண்டிருக்கிறேன். மேலும் பலரும் தனிமையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
காற்று மேல்நோக்கி எழுகிறது. எங்குமே புழுதி மயம்,
என்னிடம் சிறுவனொருவன் பிச்சை கேட்கிறான். மற்றவர்கள் போலவே கோடிட்ட சட்டை அணிந்திருக்கிறான். கவலையின் அறிகுறியைக் காணோம். ஆனால் அவன் ஒரு ஊமை. அவன் தனது கைகளை நீட்டி ஊமைப்பாணியில் சைகை காட்டினான். அவன் ஊமை அல்லாதவனாகவும் இருக்கக் கூடும். நான் அவனுடைய ஊமைக்

Page 7
கூத்தை வெறுக்கிறேன். இது அவனுடைய பிச்சை எடுக்கும் பாணி.
நான் பிச்சை இடுவதில்லை. எனக்கு பிச்சையிட விருப்பமும் இல்லை. நான் அந்தப் பிச்சை போடுவோருக்கு மேலானவன். அவனிடம் எனக்கு இருப்பதெல்லாம் சலிப்பு, சந்தேகம், வெறுப்பு.
நான் சரிந்து விழுந்த மட்சுவர் மீது நடக்கிறேன். இடைவெளியில் உடைந்த செங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. சுவருக்கு அப்பால் ஒன்றுமே இல்லை. காற்று மேல் நோக்கி வீச குளிர்காற்று எனது சட்டை ஊடாகப் புகுகிறது. எங்குமே புழுதிமயம்.
நான் பிச்சையெடுக்க என்ன முறையைக் கையாள வேண்டுமோ?
நான் எந்தக் குரலில் பேசவேண்டும்?ஊமையனாகப் பாசாங்கு செய்ய எந்த ஊமைப் பாணியைக் கையாள வேண்டும்?.
மற்றவர் அநேகர் தனிமையில் நடந்து போகிறார்கள்.
நான் பிச்சையை ஏற்க மாட்டேன். பிச்சை போடுகின்ற விருப்பமும் வேண்டாம். பிச்சையிடுவோரினை விட மேலோரின் சலிப்பையும், சந்தேகத்தையும் வெறுப்பையும் ஏற்பேன்.
செயலற்றும், அமைதியாகவும் நான் பிச்சை எடுப்பேன். காற்று மேல்நோக்கி வீசுகிறது. எங்குமே புழுதி மயம், மற்றவர் அநேகர் தனிமையில் நடந்து போகிறார்கள். புழுதி, புழுதி.
24.09. 1924
 
 

பழிவாங்கல்
அவன் தன்னை இறைகுமாரனென்றும் இஸ்ரேலியரின் மன்னா என்றும் நினைத்ததனாலேயே சிலுவையில் அறைய வேண்டியவன் ஆனான்.
போர் வீரர்கள் அவருக்கு ஊதா நிற அங்கியைப் போர்த்தி முள்முடியொன்றைச் சூட்டி ஆரவாரப்படுத்தினர். அவருடைய தலையில் வாரினால் அடித்தும், எச்சில் துப்பியும், அவர் முன்பு முழந்தாளிட்டும் நின்றனர். அவரை நையாண்டி செய்த பின்பு அவருக்கு தாம் போர்த்தியிருந்த ஊதா அங்கியை அகற்றிவிட்டு அவர் உடுத்திருந்த ஆடையிலேயே விட்டனர்.
பார்! எப்படி அவர்கள் அவரை தலையில் அடிக்கிறார்கள், துப்புகிறார்கள், முழந்தாளிடுகிறார்கள்.
கசப்பூட்டிய மதுவை அவர் அருந்த மாட்டார். இறை குமாரனுக்கு இஸ்ரேலியர் இழைக்கின்ற கொடுமைகளை சுவாதீனத்தோடு இருந்து அவர்களுடைய வருங்காலத்தை எண்ணி இரங்கியும், தற்போதைய செயலை வெறுத்தும் இருக்க விரும்பினார்.
எல்லாப் புறமும் வெறுப்பும் பரிதாபமும் கவலையுமே!
சுத்தியலால் அடிப்பது கேட்கிறது. உள்ளங்கைகளில் ஆணிகள் ஏறுகின்றன. இந்தப் பரிதாபதற்குரியவர்கள் வலிகளைக் குறைக்கும் இறை குமாரனைச் சிலுவையில் அறைகிறார்கள். சுத்தியலால் அடிப்பது கேட்கிறது. அவருடைய கால் பாதக்குதிகளில் ஆணிகள் ஏறுகின்றன. எலும்பு உடைபடுவதால் வலி, இதயம், எலும்பு மச்சையூடாகப் பாய்கிறது. இந்த ஊத்தைச் சீவன்கள் இறைகுமாரனை

Page 8
சிலுவையில் அறைவது அவருடைய வலியைத் தணிக்கிறது.
சிலுவை நிறுத்தப்படுகிறது. அவர் காற்றிடை தொங்குகிறார். அவர் கசப்பூட்டப்பட்ட மதுவை அருந்தவில்லை. மதுமயக்கமற்ற நிலையில் இருந்து கொண்டு இஸ்ரேலியர் இறைகுமாரனிற்கு இழைக்கும் கொடுமைகளை இரசித்தபடி இருக்கிறார். அவர்களுடைய வருங்காலத்தைப் பற்றிப் பரிதாபப்பட்டும் தற்கால நிலையைப் பற்றி வெறுப்புற்றும் இருக்கிறார்.
வழிப் போக்கர் அனைவரும் அவரை ஏசுகிறார்கள். தூசிக்கிறார்கள்.
பிரதம பூசகர்களும் வரலாறு வரைவோரும் கேலிசெய்கிறார்கள். இவரோடு சிலுவையில் அறையப்பட்ட இரு திருடர்களும்கூட இவரைப் பரிகசிக்கிறார்கள்.
இவரோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் கூட.
கை, கால்களுக்கு ஏற்பட்ட வலியின் ஊடாக இறை குமாரனைச் சிலுவையில் அறையும் பரிதாபத்துக்குரியவர்களின் துயரங்களை இரசிக்கிறார். சிலுவையில் அறையப்படும் இறைகுமாரன் இறக்கப் போகிறார் என்று அவர்களுக்குத் தெரியும். முறிந்த எலும்புகளினால் ஏற்பட்ட வேதனை அவருடைய இதயத்தினூடாக எலும்பு மச்சைகளுக்குப் பாய்கிறது. பெரும் மகிழ்ச்சியாலும், இரக்கத்தாலும் வெறிகொண்டுவிட்டார்.
அவருடயவயிறு கவலையாலும், இரக்கத்தாலும், விரும்பத்தகாத தாலும் பொங்குகிறது.
பூமி எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது.
இறைவா! இறைவா என்னை ஏன் கைவிட்டு விட்டீர்கள்?
இறைவன் அவரைக் கைவிட்டுவிட்டார். ஆகவே அவர் மனிதனின் குமாரன் தானே! ஆனால் இஸ்ரேலியர்கள் மனித குமாரனையே சிலுவையில் அறைகிறார்கள்.
பெருமளவு இரத்தத்தையும்.அசுத்தத்தையும் சேகரிப்போர் இறை குமாரனை அல்ல மனித குமாரனைச் சிலுவையில் அறைவோர்.
20. 12.1924.
 
 

நம்பிக்கை
அசாதாரணமாக எனது இதயம் தனிமையில் உள்ளது.
ஆனால் எனது இதயம் அமைதியாய் உள்ளது. அன்போ, வெறுப்போ, மகிழ்ச்சியோ, கவலையோ, நிறமோ, ஒலியோ எதுவுமற்றி. ருக்கிறது.
நான் முதுமையடைகிறேன் போல உள்ளது. என்னுடைய கேசம் நரைத்து வருவது உண்மைதானே? எனது கைகள் நடுங்குவதும் உண்மையல்லவா? எனது உணர்வின் கரங்களும் நடுங்க வேண்டும். எனது உணர்வின் கேசங்களும் நரைக்க வேண்டும்.
பல வருடங்களாகவே இதே நிலைதான். அதற்கு முன்பு எனது இதயத்தில் இன்பமயமான பாடல்கள் பொங்கி வழிந்தன. இரத்தமும் இரும்பும், நெருப்பும், நஞ்சும் திரும்பி எழுவதும் பழிவாங்கலும் நிரம்பி வழிந்தன. எனது இதயம் திடீரெனக் காலியாகி விட்டது. நான் சிலவேளைகளில் வேண்டுமென்றே தேவையற்று என்னையே ஏமாற்றும் நம்பிக்கையால் அதனை நிரப்புவதுண்டு.
நம்பிக்கை, நம்பிக்கை, இதனையே நான் கேடயமாகக் கொண்டு இருண்ட இரவின் ஆக்கிரமிப்பைத் தாங்கிக் கொள்கிறேன். இருந்த போதிலும் இந்தக் கேடயத்திற்குப் பின்னாலும் இருண்ட இரவும், வெறுமையும் தொடர்ந்து நிலவுகின்றன. ஆனாலும் இதுபோல எனது இளமையை வீணடித்துவிட்டேன்.
எனக்கு உண்மையில் தெரிகிறது இளமை என்னை விட்டு அகன்று விட்டதென்று. ஆனால் நான் நினைக்கிறேன் எனக்குப் புறத்தே இளமை இன்னமும் இருக்கிறதென்று. நட்சத்திரங்களும் நிலவொளி

Page 9
யும், சிறகிழந்த வண்ணத்துப் பூச்சிகள், இருளில் பூத்த மலர்கள், ஆந்தைகளின் மரணகிதங்கள். குயிலின் இரத்தத்தோடு கூடிய ஒலம், சிரிப்பின் அர்த்தமின்மை, க்ாதலின் கூத்து. போலுள்ளது. இளமையின் துன்பமோ, நிலையின்மையோ என்றாலும் இன்னமும் இளமைதான். V
ஏன் இந்தத் தனிமை? எனக்குப் புறத்தேயிருந்த இளமையும் அகன்றுவிட்டதாலோ? உலகத்து இளைஞரெல்லாம் முதியோர் ஆகிவிட்டதாலோ?
நான் இருளிலும் வெறுமையிலும் தனியனாகப் போராட வேண்டியுள்ளது. நான் நம்பிக்கை என்ற கேடயத்தை சாண்டோ பெற்டோபி. யின் (1823-49) நம்பிக்கையின் பாடல் கேட்ட பிறகு கீழே போடுகிறேன்.
நம்பிக்கை என்பதென்ன? அவளொரு விபச்சாரி எல்லோரையும் மகிழ்விப்பாள் அனைவருக்கும் தன்னைத் தந்திடுவாள். விலைமதிப்பில்லாச் செல்வத்தை, உங்கள் இளமையைத் தியாகம் செய்யும்வரை! அதன்பின் உங்களைக் கைவிடுவாள். இந்த ஹங்கேரியத் தேசபக்தன் ரஷ்ய ஏகாதிபத்தியவாதியின் ஈட்டிக்கு இரையாகி எழுபத்தைந்து வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. அவருடைய இறப்பு சோகத்தைத் தருகிறது. இறக்காத அவருடைய கவிதை அதனைவிடக் கூடிய சோகத்தைத் தருகிறது.
ஆனால் வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது. பெற்டோபி போன்ற வீரமும் வைராக்கியமும் உடைய மனிதனே இருண்ட இரவின் முன்னி. ன்று துரவுள்ள கிழக்குப் புறத்தைத் திரும்பிப் பார்க்கிறார்.
நம்பிக்கையின்மையும் நம்பிக்கையைப் போன்றே பொய்யானது. நான் இந்தப் பொய்மையில் வாழவேண்டுமாயின் - ஒளியுமில்லை இருளுமில்லை. அதன் பின் என்னை விட்டு அகன்ற கவலையும் நிலையின்மையும் கொண்ட இளமையை நாடவேண்டியிருக்கும். என்னை வெளியே சூழ்ந்துள்ள இளமை நீங்கிவிட்டால் என்னுடைய முதுமையும் தானே நீங்கும்.
 
 

ஆனால் தற்போது நட்சத்திரங்களுமில்லை நிலவொளியுமில்லை, சிறகிழந்த வண்ணத்துப் பூச்சிகளுமில்லை, அர்த்தமற்ற சிரிப்புமில்ன்ல, காதல் கூத்துமில்லை. இளைஞர்கள் மிகவும் அமைதியாகவுள்ளார்கள்.
நான் இருண்ட இரவில் தனிமையில் போராடவேண்டியுள்ளது. எனக்கு வெளியே இளமையை காணமுடியாவிடினும், எனது முதுமையின் தாக்கத்தை ஏற்கவேண்டியுள்ளது. ஆனால் இருண்ட இரவு எங்கே? நட்சத்திரங்களுமில்லை. நிலவொளியுமில்லை. அர்த்தமற்ற சிரிப்புமில்லை. காதல் கூத்துமில்லை. இளைஞர்கள் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள்.
என் முன்னால் உண்மையான இருண்ட இரவுமில்லை. நம்பிக்கையின்மை நம்பிக்கை போன்று பொய்யானதே.
புத்தாண்டு தினம் 1925

Page 10
பணி
தென்புறத்து மழைநீர் என்றுமே உறைந்து பனிக்கட்டியாகவோ, மின்னும் பனிச்சீவல்களாகவோமாறுவதில்லை. உலகை நன்கு கண்ட மனிதர்கள் இதனைத் துர்ப்பாக்கியமாகக் கருதுகின்றனர். மழையும் கூட துர்ப்பாக்கியமென்றா நினைக்கிறது. யாங்க்ஸே ஆற்றுத் தென்புறத்துப் பணி முழு ஈரலிப்பாகவும் அழகாகவும் வசந்தத்தின் அறிவித்தல் போலவும் ஆரோக்கியத்துடன் மிளிரும் இளம் பெண்ணின் மலர்ச்சி போலவும் தோற்றுகிறது. பனிக்காட்டிலே செந்நிற மலர்களும் பச்சை படர்ந்த வெண்ணிற மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. மணியுருவிலுள்ள பனிமலர்களும் உள்ளன. பனியினடியில் பச்சைநிறக் களைகள் மறைந்துள்ளன. இம்மலர்களை வண்ணத்துப் பூச்சிகள் நாடுவது பற்றியோ தேன் குடிக்க தேனீக்கள் வருவது பற்றியோ திடமாக எதனையும் கூறுவதற்கில்லை. பனிக்காட்டில் பனிமலர்களை நோக்கி தேனிக்கள் சுறுசுறுப்பாகப் பறப்பதைக் காண முடிகிறது. அவற்றின் ஓசையையும் கேட்க முடிகிறது.
ஏழு எட்டுப் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து பனிப் புத்தர் செய்யவுள்ள. னர். இஞ்சி முனைகளைப் போலச் சின்னச் சிவந்த விரல்களால் முயற்சிக்கின்றனர். அவர்கள் வெற்றி பெறாதபோது யாரோ ஒருவரின் தந்தை உதவிக்கு வருகிறார். புத்தர் சிறுவர்களை விட உயரமானது. சதைப் பிடிப்பான பழத்தைப் போன்றோ புத்தரைப் போன்றோ வெள்ளொளி வீசிக் கொண்டுள்ளது. தனது ஈரலிப்பால் ஒருங்கிணைந்து முழு உருவமும் ஒளிருகிறது. சிறுவர் பழக் கற்களைக் கண்களாகவும், தாயின் அலங்காரப் பொருள் வைக்கும் பெட்டியிலிருந்து எடுத்தவற்றை உதடுகளாகவும் பயன்படுத்துகின்றனர். இப்பொழுது பொம்மை மதிக்கத்தக்க புத்தர் ஆகிவிட்டது. மங்கலான
 
 

கண்களுடனும் சிவந்த உதடுகளுடனும் பனித்தரையிலுள்ளது.
மறுநாள் அதனைப் பார்க்கச் சில சிறுவர் வந்தனர். கைகளையும் தட்டி தமது தலைகளையும் ஆட்டிச் சிரித்தனர். தனிமையில் புத்தர் வீற்றிருக்கிறார். ஒளிவீசிய தினம் அதன் தோல் கரைந்துவிடுகிறது. இரவுக் குளிரில் அதன்மீது பணி அங்கியொன்று மூடுகிறது. ஒளிபுகாத பொருளாகிவிடுகிறது. அடுத்தடுத்து வந்த ஒளி பொருந்திய தினங்கள் அதனை அடையாளம் காணமுடியாத பொருளாக்கி விடுகின்றன. சிவந்த உதடுகளும் மறைந்து விடுகன்றன.
ஆனால் வடக்கிலிருந்து பெய்யும் பனித்துாள்கள் கூரைகளிலாகிலும் நிலத்திலாகிலும் புல்களின் மீதாகிலும் விழுந்தாலும் தூளாகவோ மணலாகவோ இருக்கின்றதே தவிர ஒன்று சேர்வதில்லை. கட்டியாவதில்லை. அடுப்பிலிருந்து புறப்படும் வெம்மை கூரைமீது விழுந்த பனியை உருக்கிவிடுகிறது. சுழற்காற்று தெளிந்த வானத்திலிருந்து வீசும் போது அவை புகைமண்டலமாக, சூரிய ஒளியில் சுடரைச் சுற்றிய புகைபோலத் தென்படுகிறது. எழுந்து எழுந்து வானத்தை நோக்கி நகருகிறது. எழும்பிச் செல்லச் செல்ல வானம் மின்னுகிறது.
எல்லையற்ற காட்டுவெளியில் விண்ணுலகக் குளிர்மைக்குக் கீழே மின்னும் ஒளிரும் பயங்கரத்திற்குக் கீழே மழையென்னும் பூதம்.
ஆம் அது தனிமையான பனி, மரணமழை,
35 D609 ........
ஜனவரி 18, 1925

Page 11
காற்றாடி
பீஜிங்கின் பனிகாலம் எனக்கு ஏமாற்றத்தையும் மனத்தளர்ச்சி. யையும் தருகிறது. நிலத்தில் படிந்து தடித்த பனி, தூங்குமூஞ்சி மரக் கிளைகளில் விழுந்த பனி தெளிந்த நீல வானை நோக்கி உந்தப்படுகிறது. தூரத்தே ஒன்றிரண்டு காற்றாடிகள் மிதந்து கொண்டுள்ளன.
ஊரிலே காற்றாடிக்கான காலம் வசந்தகாலத்தின் ஆரம்பமே. சுழற்காற்று வீசும்போது நிமிர்ந்து பார்த்தால் கபிலநிற நண்டுக் காற்றாடி, நீலநிற சிலந்திக் காற்றாடி தென்படும். தாழப்பறக்கும் வாலற்ற ஒட்டுக் காற்றாடி தனிமையிலிருக்கும்- சோகமாகவும் தனிமையாகவும் தோற்றும்,
இதற்கிடையே நீர்ச்செடிகள் முளைவிட மலைப்புற மரங்கள் அரும்புகின்றன. சிறுவரின் கைவண்ணம் ஆகாயத்தில் பறக்க வசந்தத்தின் வெம்மைக்கு ஊக்கம் பெருகுகிறது. நான் இப்போது எங்கே? என்னைச் சூழ்ந்து பயங்கரமான பனிகாலம் ஆட்சி செய்கிறது. நீண்ட நாட்களுக்கு முன் விட்டுச் சென்ற எனது வீட்டு வசந்தம் வடக்கு வானத்தில் மிதக்கிறது.
இருந்த போதிலும் நான் என்றும் காற்றாடி விட விரும்பியதில்லை. அதை விரும்புவது ஒரு புறமிருக்க அது ஒன்றுக்கும் உதவாத பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள் என்று ஒதுக்குகிறேன். ஆனால் எனது தம்பியோ இதற்கு நேர் மாறானவன். அவனுக்கு அப்பொழுது சுமார் பத்துவயதிருக்கும். அடிக்கடி சுகவீனமுறுவான். மிகவும் மெல்லியவன். ஆனால் அவனுக்குக் காற்றாடி விடுவதில் கொள்ளை ஆசை. காற்றாடி ஒன்றை வாங்கவும் வசதியில்லை. நானும் ஏற்று
போர்க்காலச் சிந்தனை
 
 

வதற்குத் தடையாக இருப்பதனால் வாய்பிளந்து ஆகாயத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி இருப்பான். தூரத்தில் ஒரு நண்டுக்காற்றாடி அறுந்து விழுந்தால் ஏங்குவான். இரண்டு ஒட்டுக் காற்றாடிகளின் நூல்கள் சிக்கிக் கொண்டால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பான். இது எனக்கு முட்டாள்தனமாகவும் வெறுக்கத் தக்கதாகவும் பட்டது. அவனைப் பல நாட்களாக நான் கவனிக்கவில்லை. எங்கள் வீட்டுப்பின்புறம் மூங்கில் குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். எனக்கு மின்னல் வேகத்தில் உண்மையொன்று புலப்பட்டது. கைவிடப்பட்ட பண்டக அறைக்கதவை நம்பிக்கையோடு தள்ளித் திறந்தபோது குப்பை கூளங்களுக்கிடையே அவனைக் கண்டேன். பெரிய சதுரமேசைக்கருகே சிறியதொரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தவன் தடுமாற்றத்துடன் எழுந்து நின்றான். முகத்தில் நிறமாற்றம் தென்பட்டது. பெரிய மேசை மீது இன்னமும் காகிதம் ஒட்டாத வண்ணத்துப்பூச்சிக் காற்றாடி இருக்கிறது. சிறிய ஆசனத்தில் வண்ணத்துப்பூச்சியின் கண்களில் ஒட்ட இரு வால்கள் இருக்கின்றன. அவற்றைச் சிவப்பு நிறத் தாளால் அலங்கரித்தான். வேலை அநேகமாக முடிந்துவிட்டது. இரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. உதவாக்கரைப் பிள்ளைக்கான விளையாட்டுப் பொருளை உருவாக்குவதில் சிரமப்பட்டு என்னை ஏமாற்றி. விட்டானே என்பதை நினைக்க வேதனையாய் இருக்கிறது. காற்றாடி யின் சட்டங்களில் ஒரு பகுதியை முறித்தெறிந்தேன். செய்யப்பட்ட வாலைக் காலால் மிதித்துத் துவைத்தேன். தோற்றத்திலும் பலத்திலும் என்னை விடக் குறைந்தவனாததால் முழு வெற்றியைப் பெறமுடிந்தது. சின்ன அறையில் அவனை வேதனையுடன் தனிமையில் விட்டுவிட்டு வெற்றிக் களிப்புடன் வெளிவந்தேன். அதன் பிறகு அவன் என்ன செய்தான் என்று தெரியாது. நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
இறுதிக்காலத்தில், நாம் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டபின், நான் நடுத்தர வயதை அடைந்த பிறகு சிறுவர்களைப்பற்றிய புத்தகங்களை துரதிர்ஷ்டவசமாகப் படித்த வேளை நான் அறிந்து கொண்டது இதுதான். பிள்ளைகளுக்கு முக்கியமான தொழில் விளையாட்டு. விளையாட்டுச் சாமான்கள் அவர்களின் தேவதைகள், சிறுவர் உணர்வுகளுக்கு எதிரான கொடுமை புரிந்ததை மறந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நடந்து கொண்ட விதத்தை நினைக்க இதயம் வேதனையில் ஆழப் புதைந்துவிட்டது.

Page 12
எனது இதயம் வெடிக்கவில்லை. ஆழப்புதைந்து விட்டது. அவனோடு எப்படிச் சமரசம் செய்து கொள்வதென்று தெரியும், காற்றாடியொன்றை வாங்கிக் கொடுப்பதும், அதனைப் பறக்க விடுவதை அங்கீகரிப்பதும், பறக்கவிடத் தூண்டுவதும், அவனோடு சேர்ந்து பறக்கவிடுவதும் ஆகும். நாம் கத்துவோம், ஒடுவோம். சிரிப்போம். ஆனால் இன்று அவனும் என்னைப் போலவே வளர்ந்து மீசை முளைத்த, வாலிபனாகி விட்டான்.
இதனை ஈடு செய்ய வேறொரு வழியும் உள்ளது. அவனிடம் சென்று மன்னிப்புக் கோருவது, அவன் அதற்கு நான் உங்களைக் குறை கூறவில்லை என்பதைப் பதிலாகப் பெறக் காத்திருக்க வேண்டும். அப்பொழுது எனது மனச்சுமை இறங்கும். ஆம், இந்த வழி சாத்தியமானதே. ஒருநாள் இருவரும் சந்தித்தோம். எங்களிருவர் முகங்களிலும் வாழ்க்கைச் சுமைகளின் அறிகுறிகள் தென்பட்டன. எனது மனச் சுமையும் தெரிந்தது. நாம் இளமைக் கால நிகழ்வுகளை உரையாடினோம். நான் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தினேன். நான் யோசனை செய்யாத பைய்ன் என்றேன். நான் உங்களைக் குறை கூறவில்லை என்று கூறி மன்னிப்பான் எனது மனசச்சுமையும் குறையும் என்று நினைத்தேன்.
இப்படி உண்மையில் நடந்ததா என்று கேட்டான், யாரோ வேறொருவரின் கதையோ என்ற பாங்கில் அந்த நிகழ்ச்சி அவனுடைய மனதைவிட்டு என்றோ அகன்றுவிட்டதே.
மனச் சுமை எதுவுமின்றி என்றோ மறந்துவிட்ட சம்பவமாகிவிட்டதே. அப்படியெனில் மன்னிப்புக்கு இடமேயில்லை. மனத்தாங்கல் ஏற்படாதபோது மன்னித்துவிட்டேன் என்பதும் வெறும் பொய்யே.
இனி என்ன நம்பிக்கை எனக்கு இருக்கிறது? எனது மனம், எப்பொழுதும் பாரமாகவே இருக்கப் போகிறது.
எனது வீட்டின் வசந்தம் மீண்டும் காற்று வெளியை அடைந்து விட்டது. அது என்னைவிட்டுப் பிரிந்த இளமையையும் உடன் எடுத்துச் சென்று கவலையைத் தருகிறது. பயங்கரப் பனிக் காலத்தில் மீண்டும் புகுந்து மறைவதே வழி. என்னைச் சூழ எங்குமே பனிக்குளிர் ஆட்சி செய்கிறது.
ஜனவரி 24, 1925
 
 

இலையுதிர்கால இரவு
னெது வீட்டுப் பின்புறச் சுவரிற்குப் பின்னால் இரு மரங்களைக் காண்பீர்கள். ஒன்று ஈச்சமரம், மற்றதும் ஈச்ச மரம்.
அவர்களுக்கு மேலுள்ள இரவில் ஆகாயம் புதுமையாகவும் உயரமாகவும் உள்ளது. இவ்வளவு புதுமையான உயரமான ஆகாயத்தை நான் என்றுமே கண்டதில்லை. உலக மக்களிடமிருந்து வெகு தொலைவில் போக விரும்பியதோ அல்லது அவர்களுடைய பார்வையிலிருந்து எட்டாத தூரம் சென்றுவிட வேண்டுமென நினைத்ததோ. ஒரு நேரத்தில் தனிமையாய் நீல நிறமாய் இருந்தாலும் அநேக நட்சத்திரக் கண்கள் சிமிட்டியபடி இருக்கும். உதட்டில் புன்னகை விளையாடும். அந்தப் புன்னகையில் ஒரு தனித்தன்மை காணப்படும். எமது தோட்டத்துச் செடிகளின் மீது பனிப்புகையைத் தூவும்.
இச் செடிகளை எப்பெயரிட்டு அழைப்பதென்று தெரியவில்லை. அவற்றின் பொதுவான பெயரென்னவென்று அறியேன். அவற்றிலொன்றில் மென்சிவப்புநிற மலர் பூத்திருந்ததாக நினைவு. அவை சிறியவையானபோதிலும் இன்னமும் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. குளிர்ச்சியான இரவுக் காற்றில் நடுநடுங்கியபடி இருந்த போதிலும் வசந்தத்தின் வருகையையும் இலையுதிர்கால வருகையையும் கனவு காண்கின்றன. மெல்லிய கவிஞர். தமது கண்ணிரை உதிரப்போகும் இதழ்கள் மீது வழித்து விட்டபடி இலையுதிர்காலத்தை அடுத்துப் பனிகாலம் வருமென்கிறார். அதனைத் தொடர்ந்து வண்ணத்துப்பூச்சிகள் பறந்து திரிவதும், தேனீக்கள் சப்தித்தபடி திரிவதும் வசந்தத்தின் வருகையை அறிவிக்கின்றன. பனியின் தாக்கத்தால் நடுங்கியபடி நிறம் மாறிய மென்சிவப்பு மலர்கள் புன்னகை புரிகின்றன.

Page 13
ஈச்சமரங்களோ தமது இலைகளை முழுமையாக இழந்துவிட்டன. மக்கள் கைவிட்டுவிட்ட போதிலும் இரு பையன்கள் ஈச்சம்பழங்களுக்கு எறிகிறார்கள். மரத்தில் ஒரு ஈச்சம் பழமும் இல்லை. இலைகள் முழுவதும் உதிர்ந்து விட்டன. மென்சிவப்பு மலர்கள் இலையுதிர்காலத்திற்குப் பிறகு வசந்தகாலத்தைப் பற்றி கனவு காண்கின்றன. உதிர்ந்துபோன இலைகளைப் பற்றி வசந்தத்தில் கனவுகாணும் @lD@l இலைகள் அனைத்தையும் இழந்து வெறும் கிளைகளே மிஞ்சியுள்ளன.
பழ, இலைச் சுமையால் அவை சரிந்து போவதில்லை. ஈச்சம்பழங்களைத் தடியால் அடித்தபோது கிளைகளின் பட்டைகளில் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக் கொண்டிருந்தன. நீண்ட தடித்த கிளைகள் விண்ணை நோக்கி நீண்டன. அவையும் ஏமாற்றத்தில் கண்சிமிட்டின. அவை முழுநிலவைக்கூடத் துளைத்தன. அதன் ஒளியையும் மங்கச் செய்தன.
சிமிட்டியபடி இருந்ததால் ஆகாயம் மேலும் மேலும் நீலநிறமானது. தளர்ச்சி மிகவே, மனித சஞ்சாரத்திலிருந்து எட்டிச் செல்ல, ஈச்சமரத்திலிருந்து விலகிச்செல்ல, சந்திரனை மட்டும் தனித்துவிட்டுச் செல்கிறது. சந்திரன்கூடக் கிழக்கே தன்னை மறைத்துக் கொள்கிறது. வெறும் மரக் கிளைகள் விண்ணைத் துளைத்துக் காயப்படுத்த முயல்கின்றன. எப்படித்தான் அது தன் கண்களையெல்லாம் எப்படியெல்லாம் உருட்டிய போதிலும்,
கீச்சுக் குரலோடு பயங்கர இராப்பறவையொன்று பறந்து சென்றது.
திடீரென நள்ளிரவுச் சிரிப்பொலி கேட்கிறது. மற்றவரின் நித்திரை குழம்பக் கூடாதபடி சத்தம் குறைக்கப்படுகிறது. இருந்த போதிலும் சிரிப்பொலி எங்குமே எதிரொலிக்கிறது.நள்ளிரவு தவிர வேறொன்றும் அருகில் இல்லை. சிரிப்பது நான்தான் என்று உடனே உணர்ந்து கொண்டேன். இந்தச் சிரிப்பால் நான் அறைக்குள் தள்ளப்பட்டேன். உடனே மண்ணெண்ணெய் விளக்கின் திரியைத்துண்டினேன். பின்புற ஜன்னல் கண்ணாடியில் பூச்சிகள் கூட்டமாகத் திரண்டு மோதியதால் சலசலப்புச் சத்தம் கேட்டது. சில ஜன்னல் காகிதத்தின் துவாரங்கள் ஊடாக உள்ளே நுழைந்தன. விளக்கின் கண்ணாடியில் மோதி மற்றும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தின. ஒன்று விளக்குக் கண்ணாடிக்கு மேல் புறமாக உள்ளே நுழைந்து விளக்கின் சுடர்மீது விழுந்தது. அது உண்மையில் சுடர் தானோவென அங்கலாய்த்தேன். இரண்டு மூன்று, காகித நிழலில் ஒய்ந்திருந்து மூச்சு வாங்கின. முன் இரவிலிருந்து நிழலும் புதியதே. பனி வெள்ளை நிறத்தாளில் அலை வடிவ
 
 

மடிப்புக்கள் கொண்டன. ஒரு ஒரத்தில் இரத்தச் சிவப்பு பாரிஜாத மலர் வர்ணம் தெளிக்கப்பட்டுள்ளது.
இரத்தச் சிவப்பு பாரிஜாதமலர் மலர்ந்ததும், ஈச்சமரத்தை பசும் இலைகளின் பாரம் கீழே வளைத்தது. மென்சிவப்பு மலர்கள் மீண்டும் கண்ட கனவையே காணும்.நள்ளிரவுச் சிரிப்பு எனக்குத் திரும்பவும் கேட்கும். இந்த நினைவலைகளிலிருந்து விடுபட காகிதத்தில் இன்னமும் இருந்துகொண்டிருந்த பச்சைப் பூச்சிகளைப் பார்த்தேன். சூரியகாந்தி மலர் விதைகளைப் போன்று பெரிய தலைகளோடும் சிறிய வால்களோடும் கோதுமைத் தானியத்தின் பாதி அளவோடும் பரிதாப்த்திற்குரிய சிறிய பச்சைத் திரளாகத் தென்பட்டது.
நான் கொட்டாவியை விட்டு சிகரெற் ஒன்றைப் பற்றி புகையை வெளிவிட்டேன். வீர மரணத்தைத் தழுவிய பச்சைப் பூச்சிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தினேன்.
செப்ரெம்பர் 15, 1924
போர்க்காலச் சிந்தனைகள்

Page 14
விடைபெறுகிறது நிழல்
உங்களை மறந்து நேரம் போவதே தெரியாமல் உறங்கும் போது உங்களை விட்டு விடைபெறும் நிழல் கூறிவிட்டுச் செல்வது இதனைத்தான். V
சொர்க்கத்தில் நான் விரும்பாதவை சிலவுள்ளன. அங்கே போக எனக்குப் பிரியமில்லை. நரகத்தில் நான் விரும்பாதவை சிலவுள்ளன. அதனால் அங்கே போக எனக்குப் பிரியமில்லை. உனது பொன்மயமான வருங்கால உலகிலும் நான் விரும்பாதவை சிலவுள்ளன. அதனால் எனக்கு அங்கே போகவும் பிரியமில்லை.
உன்னைத் தான் நான் விரும்பவில்லை. நண்பா, நான் இனி உன்னைப் பின்தொடரமாட்டேன். எனக்கு இங்கே இருக்கவும் விருப்பமில்லை.
நானும் அப்படித்தான். ஆ. இல்லை. நானும் விரும்பவில்லை. இதைவிட வெறுமையில் அலைய விரும்புகிறேன்.
நான் நிழல் மட்டும் தான். உன்னை விட்டுப் பிரிந்து இருளில் மறைவேன். இருள் என்னை விழுங்கும். அதுபோலவே ஒளியும் என்னை அழித்து விடும்.
எனக்கு வெளிச்சத்திற்கும் மறைப்பிற்கும் இடையே அலைந்து திரிய விருப்பமில்லை. இருளில் மறைவதை விரும்புகிறேன்.
நான் இன்னமும் வெளிச்சத்திற்கும் மறைப்பிற்கும் இடையே அலைகிறேன். எனக்கு அந்திநேரமோ அதிகாலையோ என்று
 
 

திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. என்னால் எனது சாம்பல் நிறக் கையைத் தூக்கி ஒரு கோப்பை மதுவை குடிக்க மட்டும் முடியும். நேரத்தைப் பற்றிய சிந்தனையை நழுவ விடும்போதுநான் வெகுதூரம் தனிமையில் சென்று விட்டிருப்பேன்.
ஐயோ! அந்திநேரம், நான் கரிய இரவில் மாட்டிக் கொள்வேன். அதிகாலையானால் பகல் வெளிச்சத்தில் மறைவேன்.
நண்பா, நேரம் கையிற்குள் தான் இருக்கிறது.
நான் இருளுக்குள் நுழைந்து சூனியத்தில் உலாவருவேன். நீ இன்னமும் என்னிடம் வெகுமதியை எதிர்பார்கிறாய். கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது? நீ வற்புறுத்தினால் அதே இருளையும் சூனியத்தையும் தான் பெறமுடியும். அது இருளாக மட்டும்தான் இருக்கக்கூடும், அது உன்னுடைய பகல் வெளிச்சத்தில் அற்றுப்போகும். அது சூனியமாக மட்டுமிருந்தால் உனது இதயத்தை ஒருபோதும் தன்வயப்படுத்தாது.
நண்பா. இதைத்தான் நான் விரும்புகிறேன்.
நீ தனிமையில் இருளில் வெகுதூரம் சென்று விட்டால் எல்லா நிழல்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்படுவாய். நான் மட்டும் தனிமையில் இருளில் மூழ்கிவிடுவேன். அந்த உலகம் எனக்கே சொந்தம்.
செப்டெம்பர் 24, 1924

Page 15
நல்ல கதை
விளக்கில் போதியளவு மண்ணெண்ணெய் இல்லாதபடியால் சுடர் மங்கிக்கொண்டு போகிறது. தரக்குறைவான மண்ணெண்ணெய் ஆதலால் விளக்குக் கண்ணாடி ஏற்கனவே கறுத்துவிட்டது. எல்லாப் பக்கங்களிலும் பட்டாசு வெடிக்கிறது. சிகறெற் புகை என்னைச் சூழ்ந்துள்ளது. அது மந்தமான இருண்ட இரவு.
நான் கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்திருந்தேன். முழந்தாளிலுள்ள சூஜியானும் மற்றவர்களும் எழுதிய ஆரம்பக் கை நூல் என்னும் நூலை ஏந்தியபடி இருக்கின்றேன்.
இந்த மயங்கிய நிலையில் நல்லதொரு கதை கண்டேன். இதுவொரு அழகான கவர்ச்சியான கதை. அநேக அழகானவர்களும் அழகான பொருள்களும் மேகங்கள் கலந்த வானம் போலக் கலந்திருந்தன. கணக்கற்ற நட்சத்திரங்கள் எல்லையற்ற வெளியில் மிதந்தன. நான் ஒரு புராதன நெடுஞ்சாலையின் பக்கமாகச் சிறுபடகினை ஒட்டிச் சென்றது நினைவுக்கு வருகிறது. இருகரைகளிலும் நீல நிறநீரோடையில் மெழுகு மரங்கள், இளம் நெற் செடிகள். காட்டு மலர்கள். கோழிகள், நாய்கள், பற்றைகள், உதிர்ந்த மரங்கள், மேய்ந்த குடில்கள். தாதுகோபுரங்கள். மடாலயங்கள், தோட்டக்காரரும் கிராமியப் பெண்களும், கிராமப் பெண்பிள்ளைகளும், ஆடைகள் கொடிகளில் உலர்கின்றன. துறவிகள், தும்புமுனைகள், மூங்கில் தொப்பிகள், வானம், முகில்கள், மூங்கில்கள் ஆகியவை தோன்றுகின்றன. துடுப்பின் ஒவ்வொரு அசைப்பிற்கும் சூரிய ஒளிமின்னிட மீனும் களையும் ஒன்றுசேர்ந்து திரண்டன. பொருள்களும் விம்பங்களும் நடுங்கின, சிதறின, விரிவடைந்தன. ஒன்றுசேர்ந்தன,
 
 

ஒன்றுசேர்ந்ததும் மீண்டும் சுருங்கின. பழைய உருவத்தைப் பெற்றன. நிழல்களின் வெளித்தோற்றங்கள், கோடை முகில்கள் சூரிய ஒளியால் தாக்குண்டதால் ஒளி மழுங்கித் தென்பட்டன.
நான் கடந்து சென்ற ஆறு முழுவதும் இப்படித்தான் இருந்தது.
நான் பார்த்த கதையும் இது போன்றதே. நீலவானம் நீரில் பிரதிபலிக்க எல்லாமே கலந்து விட ஒன்றுடனொன்று சேர்ந்துவிட, நெடுகவம் அசைந்து திரிய, எப்பொழுதும் விரிந்து கொண்டிருக்க என்னால் இதற்கு ஒரு "Inரவையும் காணமுடியவில்லை.
ஒடையின் ஓரங்களில் உதிர்ந்துபோன மரங்களின் கீழே அங்கொன்றும் இங்கொன்றுமாகவுள்ள பலநிறப் பூச்செடிகள் கிராமத்துச் சிறுமிகளால் நடப்பட்டிருக்க வேண்டும். பெரும் மென்சிவப்பு மலர்கள், சிவப்பு மலர் நீரிலே மிதந்து, சிதைந்து, நீரை மென்சிவப்பு நிறமாக்கிவிட்டன.
மேய்ந்த குடில்கள், காய்கள், தாது கோபுரங்கள், கிராமச் சிறுபெண்கள், முகில்கள் மிதக்கின்றன. ஒவ்வொரு மென்சிவப்பு மலரும் நீண்டு சிவப்புப் பட்டுவார்கள் போன்று வட்டங்களை நீரில் ஏற்படுத்தியது. சுற்றுவட்ட வளைவுகள் நாய்களோடு பின்னின. நாய்கள் வெண் முகில்களோடும் வெண் முகில்கள் கிராமத்து சிறு பெண்களோடும் பின்னிப் பிணைந்தன. நொடிக்குள் அவை மீண்டும் சுருங்கின. சிவந்த மலர்களின் பிரதிபலிப்பு ஏற்கனவே சிதைவுற்றுவிட நீண்ட தாதுகோபுரங்கள், கிராமிய சிறுபெண்கள். நாய்கள், மேய்ந்த வீடுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன.
நான் பார்த்த கதை மேலும் தெளிவாகவும், அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் தென்பட்டது. தெளிவான வானத்திற்கு மேலாக எண்ணற்ற அழகிய மக்களும், அழகிய பொருட்களும் உள்ளன. நான் அனைத்தையும் பார்த்தேன். அடையாளம் கண்டு கொண்டேன்.
நான் அவற்றை மிக நெருக்கமாக நோக்கலானேன். A U 4
நான் நெருக்கமாக நோக்க முயன்று கண்களை நன்கு திறந்து பார்க்கையில் பெரியகல் ஒன்றைத் தண்ணிருக்குள் போடும்போது ஏற்படும் சுழற்சி அலைகள் மேலெழும்பி பிம்பத்தை சின்னாபின்னப்படுத்தியது. எனது புத்தகத்தைப்பற்றி நினையாது பறிக்க முயன்றபோது கீழே நழுவப்பார்த்தது. எனது கண்களுக்கு முன்னால் வானவில் சிதைவுற்றுத் தெரிந்தது.
போர்க்காலச் சிந்தனைகள்

Page 16
நான் உண்மையில் நல்ல கதையை விரும்பினேன். சிதறுண்ட சில நினைவுகள் இன்னும் இருந்துகொண்டிருந்தபோது நான் அவற்றைப் பிடிக்க முனைந்தேன். நான் புத்தகத்தை ஒரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு எனது பேனாவை எடுக்க நிமிர்ந்தேன்.ஆனால் இப்பொழுது ஒருவித பிரதிபலிப்பும் மிச்சமாயில்லை. நான் காணக்கூடியதெல்லாம் மங்கலான விளக்கொளிதான். நான் சிறிய கப்பலில் தற்போதில்லை,
நான் அந்த மங்கலான இருண்ட இரவில் கண்ட நல்ல கதை இன்னமும் நினைவில் நிற்கிறது.
பெப்ரவரி 24, 1925
 
 

இறந்த நெருப்பு
நிBTன் பனிமலையொன்றின் பக்கமாக ஓடிக்கொண்டிருக்கக் கனவு கண்டேன். அது ஒர் உயர்ந்து, நெடிதுயர்ந்த மலை- பனி ஆகாயத்தை நோக்கி உயர்ந்திருந்தது. ஆகாயம் பனி முகில்களால் பெருக்கெடுத்தோடியது. ஒவ்வொரு துணிக்கையும் மீன் செதில்கள் போலத் தோன்றியது. மலையின் அடிவாரத்தில் பனிக்காடு இலைகளும் கிளைகளும் ஊசியிலைக் காடுகளைப் போலத் தோற்றமளித்தன. எல்லாமே பனிக்குளிரால் சாம்பல் போல வெளுத்திருந்தது.
நான் திடீரெனப் ப்னிப் பள்ளத்தாக்கில் விழுந்தேன்.
எல்லாப்புறங்களிலும் மேலும் கீழும் பனிக்குளிர் சாம்பல் போல வெளிறியிருந்தது. இருந்த போதிலும் வெளிறிய பனியின் மீது எண்ணற்ற சிவப்புநிழல்கள் பவளம் போல பின்னிப் பிணைந்திருந்தன. எனது காலடியில் சுடரொன்டறைக் கண்டேன்.
இது இறந்த நெருப்பு. இதற்கிருந்த தீயின் தோற்றம் முழுமையாக அசைவற்று இருந்தது. முற்றாக இறுகியிருந்தது. பவளத்தின் கிளைகள்போல. அவற்றின் முனைகளிலே உறைந்த கருகிய புகை அடுப்பிலிருந்து புதிதாக வெளிவந்த நெருப்புத் தாக்கியது போலவிருந்தது. பனியின் எல்லாப் புறங்களிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்தி மீண்டும் பிரதிபலித்தபோது கணக்கற்ற நிழல்களை ஏற்படுத்தி பள்ளத்தாக்கை பவள நிறமாக்கிவிட்டது.
ஆகா!
வேகமாகச் செல்லும் கப்பல் தள்ளும் நுரை எரி உலையிலிருந்து வெளிப்படும் தணல் ஆகியவற்றைப் பார்ப்பதில் எனக்கு சிறுவயதில்

Page 17
பெருவிருப்பம். அவற்றை அவதானிப்பது மட்டுமன்றி அவற்றைத் தெளிவாகக் காணவும் விரும்பினேன். பரிதாபமான விஷயம் என்னவென்றால் தொடர்ந்தும் ஒரே மாதிரியாக இராமல் மாறியபடி இருக்கின்றன. இருந்த போதிலும் எவ்வளவு கடினமாக உற்றுப் பார்த்தபோதிலும் தெளிவானதொரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இறந்த தணலே இறுதியாய் உன்னைப் பெற்றேன்.
இறந்த நெருப்பொன்றை எடுத்து நுணுக்கமாக ஆராய்ந்தபோது அதன் பனிக்குளிர்மை எனது விரல்களை உறுத்தியது. வேதனை. யைத் தூக்கிக் கொண்டு அதனை எனது சட்டைப்பையிற்குள் போட்டேன். முழுப் பள்ளத்தர்க்கும் சாம்பலாய் வெளிறிவிட்டது. அதேவேளை இந்த இடத்தைவிட்டு எப்படி வெளியேறுவதெனச் சிந்திக்கலானேன்.
எனது உடலிலிருந்து வெளிப்பட்ட கரும்புகை வளையம், கம்பி போன்ற பாம்பைப்போல் எழுந்தது. உடன் இளம்சிவப்பு நிறத்தணல் எங்கும் பொங்கி வழிந்தது. அழிக்கும் பெரும் தீ போல என்னைச் துழந்தது. நான் கண்டு பிடித்தேன். இறந்த நெருப்பு மீண்டும் உயிர்பெறவும் எனது ஆடைகளுக்கூடாக எரிந்து பணிநிலத்தில் விழுந்தது.
"ஏ p60öruit!"
"உன்னுடைய உடல் வெப்பத்தினால் என்னை மீண்டும் எழுப்பி விட்டாய்"
நான் உடனடியாக அதனைப் பாராட்டி அதன் பெயரைக் கேட்டேன்.
"நான் மனிதர்களால் பனிப்பள்ளத்தாக்கில் கைவிடப்பட்டவன்" என்று எனது கேள்வியை உதாசீனம் செய்து பதிலளித்தது. "என்னைக் கைவிட்டவர்கள் என்றோ அழிந்து மறைந்துவிட்டார்கள். நான் அந்தப் பனியால் அநேகமாக உறைந்து மடிந்தேன். நீ என்னைச் சூடாக்கி மீண்டும் எரியச் செய்யாதிருந்தால் என்றோ அழிந்து போயிருப்பேன்".
"என்னை எழுப்பியது மகிழ்ச்சி தருகிறது. இந்தப் பனிப்பள்ளத்தாக்கை விட்டு எப்படி வெளியேறுவதென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். நீஎன்றும் உறைந்து போகாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க உன்னை என்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறேன்".
"ஓ, வேண்டாம். அப்படியானால் எரிந்துவிடுவேன்".
 
 
 

"நீ எரிந்துவிட்டால் நான் வருத்தப்படுவேன். உன்னை இங்கேயே விட்டுவிடுவது நல்லது".
"ஒ, வேண்டாம். நான் உறைந்து இறக்க வேண்டும்".
"அப்படியாயின் என்ன செய்யப்படவேண்டும்?"
"உன்னை என்ன செய்து கொள்வதாக ploitsTitir?" என்று கேட்டது. "நான் முன்பு கூறியபடி இந்தப் பனிப் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற விரும்புகிறேன்"
"அப்படியாயின் நான் எரிந்து முடிவது நல்லது" சிவந்த வால்வெள்ளிபோல ஊர்ந்த அதனுடன் சேர்ந்து பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினோம். திடீரென வந்த கல்வண்டியின் சக்கரங்கள் என்னை நசுக்கிக் கொல்ல வண்டியும் பனிப்பள்ளத்தாக்கில் விழுந்தது.
"ஆஹா! நீ இனி என்றும் இறந்த நெருப்பைக் காணமாட்டாய்".
நான் பேசிக்கொண்டு மகிழ்ச்சியில் சிரித்தேன். மகிழ்ச்சி கட்டாயம் ஏற்படவேண்டும்.
ஏப்ரல் 23-1925

Page 18
நாயின் பதிலடி
நிTன் ஒரு பிச்சைக்காரனைப்போல கந்தை உடுத்து குறுகிய ஒழுங்கை வழியாக நடந்து செல்லக் கனாக் கண்டேன்.
நாயொன்று எனக்குப் பின்னால் நின்று குலைக்கத் தொடங்கியது. நான் வெறுப்புடன் திரும்பிப் பார்த்து "ஏய். எச்சில் நக்கும் ஜென்மமே வாயை மூடு" என்று கத்தினேன்.
அது தனக்குள்ளே சிரித்தது.
"ஒ. இல்லை! இந்த விஷயத்தில் நான் மனிதனைப் போல் இல்லையே".
"என்ன!" கோபம் பொங்க் அதனை இழைக்கப்பட்ட பெரிய அவமதிப்பாகக் கருதினேன்.
"எனக்குக் கூற வெட்கமாக இருக்கிறது. செப்பிற்கும் வெள்ளிக்கும் பேதம் காணவோ, பட்டுக்கும் பருத்திக்கும் இடையே வேற்றுமை காணவோ, அதிகாரவர்க்கத்தையும் பாமர மக்களையும் வித்தியாசம் காணவோ,எசமானர்களையும் அடிமைகளையும் வேறுபடுத்தவோ எனக்குத் தெரியவில்லையே."
நான் திரும்பி ஓட்டம் பிடித்தேன்.
"கொஞ்சம் பொறு! நாமிருவரும் இன்னும் கொஞ்சம் பேசுவோமே." என்று உரத்த குரலில் என்னை நிற்கும்படி கூறியது.
ஆனால் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக ஒடி எனது கனவிலிருந்து வெளிவந்து எனது கட்டிலில் சாய்ந்தேன்.
ஏப்ரல்- 23-1925.
போர்க்காலச் சிந்தனை
 
 

பறிபோன நல்ல நரகம்
நிரகத்திற்குப் பக்க்த்துக் காட்டில் கட்டில் ஒன்றில் படுத்திருக்கக் கனவு கண்டேன். பிசாசுகளின் ஒழுங்கான ஆழமான முனகல் ஒலியும் அனலின் ஒசையும் கொதித்து நுரை தள்ளும் எண்ணெயும் இரும்பு ஈட்டிகளின் மோதல் ஒசையும் ஒருங்கிணைந்து வெறியூட்ட மூன்று மண்டலமும் நியாயபூர்வமான அமைதி நிலவியது.
உடல் முழுவதும் ஒளிவீச அழகான அமைதியான பெரிய மனிதனொருவன் என்முன்னால் நின்றான். அவன் ஒரு பிசாசு என்று எனக்குத் தெரியும். "எல்லாவற்றிற்கும் இதுதான் முடிவு எல்லாவற்றிற்கும் முடிவு. பொல்லாத பிசாசுகளின் நல்ல நரகம் பறிபோய்விட்டது". அவன் வெறுப்புடனும் கவலையுடனும் பேசினான். பிறகு எனக்குக் கதையொன்று சொல்ல அமர்ந்தான்.
சொர்க்கலோகமும் பூலோகமும் தேன் மழைவண்ணத்திலிருந்த காலத்தில் பிசாசுகள் கடவுளை வென்று முழு அதிகாரத்தையும் கைப்பற்றின. அவை சொர்க்கலோகத்தையும் பூலோகத்தையும் நரகலோகத்தையும் தம்வயப்படுத்தின. அவர் நேரே நரகத்திற்கு வந்து நடுவிலமர்ந்து பிசாசுகள் அனைத்தின் மீதும் பிரகாசமான ஒளியைப் பரப்பினார்.
நரகலோகம் நீண்ட நாட்களாக கவனிப்பாரற்ற நிலயிலுள்ளது. காற்றாக மலரும் மரங்களும் தமது ஒளியை இழந்தன. கொதிக்கும் எண்ணெயும் நுரை தள்ளுவதில்லை. பெருநெருப்புக்களும் கூட சிறிய நீலப்புகையையே வெளிவிடுகின்றன. தொலை தூரத்தில் நச்சுமரமலர்கள் பூத்திருக்கின்றன. அவை வெளுத்துப்போன சிறிய மலர்கள். அதனைக் கண்டு அதிசயிக்கத் தேவையில்லை. ஏனெனில் பூமி

Page 19
பயங்கரமாக எரிந்து தனது நிலவளங்களை இழந்து விட்டது.
குளிர்ந்த நெய்யிற்கும் ஆடு தணிந்த நெருப்பிற்கும் இடையே உறக்கத்திலிருந்து விடுபட்டு பேய்களின் சிறுவெளிச்சத்தில் பிசாசுகள் வெளிறிய நரகத்துச் சிறுமலர்களைக் கண்டு குதுகலித்தன. திடீரென புவியில் வாழும் மக்களின் நினைவு வரவே எவ்வளவு காலம் கடந்துவிட்டதோ தெரியவில்லை மனித குலத்திற்கு நரகத்தைக் குறை கூறினர்.
மனிதன் பிசாசுடன் போராடிப் பெற்ற உரிமையை நிலநாட்டினான். அவர்களின் போர்க்குரல் இடியைக் காட்டிலும் பேரொலியுடன் மூன்று மண்டலங்களிலும் கேட்டது. பல தந்திர உபாயங்களைப் பயன்படுத்தி பிசாசைநரகத்தை விட்டு வெளியேறச் செய்தனர். இறுதி வெற்றிக்குப் பின் மனிதனின் கொடி நரகத்தின் வாயிலில் பறந்தது.
நரகத்தை மறுசீரமைக்க மனித இனம் வந்தபோதும் பிசாசுகள் மகிழ்ச்சியுடனிருந்தன. அவன் நரகத்தின் நடுவில் இருந்து கொண். டான். மனிதனின் ஆட்சியில் பிசாசுகள் ஆண்டன.
மீண்டுமொரு முறை பிசாசுகள் நரகத்தைக் குறைகூறியபோது மனிதனின் பகைவராயினர். குற்றத்திற்கு நிரந்தரத் தண்டனையாக அவர்கள் ஊசியிலைக் காட்டிற்கு வெளியேற்றப்பட்டனர். அதன் பின் மனிதன் நரகத்தின் மீது முழு அதிகாரத்தையும் பேயாட்சியைக் காட்டிலும் கூடியஅளவில் செலுத்தினான். எரியும் நெருப்புக்கு நெய்யூற்றுவதுபோல நரகத்தில் பெருமாற்றத்தை ஏற்படுத்தி வாள்மலையைக் கூராக்கி இருந்து வந்த கலாசார சீர்குலைவை நீக்கினான்.
உடனே மலர்கள் வாடின. நெய் மீண்டும் கொதித்துக் கொப்பளித்தது. வாள்கள் கூர்மையாயின. தீமுன்பு போலவே எரியலானது. பிசாசுகள் பெருமூச்சு விடலாயின. நல்ல நரகம் பறிபோனதைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை.
"இது மனிதனின் வெற்றி, பிசாசுகளின் துர்பாக்கியம்.நண்பா நீ என் மீது நம்பிக்கை இழப்பது தெரிகிறது. ஆம். நீமனிதன்.நான் காட்டு விலங்குகளையும் அரக்கர்களையும் தேடிச் செல்ல வேண்டும். f
ஜூன் 16, 1925
 
 

(e.
அபிப்பிராயம் தெரிவிப்பது பற்றி
BTன் ஆரம்பப் பாடசாலை வகுப்பொன்றில் இருந்து அபிப்பிராயம் தெரிவிப்பது பற்றி கட்டுரையொன்று எழுதுவதெப்படி என எனது ஆசிரியரை கேட்பதாகக் கனவொன்று கண்டேன்.
"அது மிகவும் சிரமமானது" எனத் தனது கண்ணாடிகளின் ஓரங்கள் வழியாகப் பார்த்துச் சொன்னார். "உனக்குக் கதையொன்று சொல்கிறேன்".
"ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தையொன்று பிறந்ததும் வீட்டார் அனைவரும் மகிழ்ந்தனர். ஒரு மாதம் ஆனதும் அவனை விருந்தினருக்குக் காட்டும் நோக்கோடும் பாராட்டுப் பெறும் நோக்கோடும் வெளியே எடுத்து வந்தனர்.
ஒருவர் "இவன் ஒரு பணக்காரன் ஆவான்" என்று கூறினார். அவருக்கு நன்றி தெரிவித்தனர். வேறொருவர் "இந்தப்பையன் ஓர் அதிகாரியாவான்" என்று சொன்னார். இந்தக் கூற்றுக்குப் பிரதியாக அவருக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
மற்றொருவர் "இந்தப்பிள்ளை ஒருநாள் இறக்கும்" என்று தெரிவித்தார். முழுக் குடும்பத்தினரும் அவரை நன்கு நையப் புடைத்தனர். "ஒரு நாள் இக்குழந்தை இறக்கும் என்பது தவிர்க்க முடியாதது. அவன் செல்வன் ஆவதும் அதிகாரி ஆவதும் பொய்யாக இருக்கக் கூடும். பொய் சொன்னவருக்குப் பரிசும் பாராட்டும். கட்டாயம் நடைபெறக்கூடியதைக் கூறியவனுக்கு அடியும் உதையும், நீ."
"எனக்குப் பொய் பேச விருப்பமில்லை. அதே நேரம் அடிவாங்கவும் விருப்பமில்லை. அப்படியானால் நான் என்ன சொல்ல வேண்டும்?"
"அப்படியானால். ஆ! பிள்ளையைப் பார்த்து. "இந்தப் பையன். .ஒ.ஒ. இவன். இவன்.இவன்."
ஜூலை 08, 1925

Page 20
மரணத்திற்குப் பின்
வீதி ஒரத்தில் நான் இறந்துகிடப்பதாய்க் கனவு கண்டேன்.
நான் எங்கே இருக்கிறேன். எப்படி அங்கு வந்தேன், நான் எப்படி இறந்தேன் எல்லாமே மர்மமாக இருக்கிறது. இருந்தபோதிலும் நான் இறந்துவிட்டேன் என்று தெரிந்து கொள்ளும் போது நான் இறந்து கிடக்கிறேன்.
ஆங்கிலக் காகம் அழுவதும் அதன் பின் கரைவதும் கேட்கிறது. காற்று புதிதாகவும் தெளிவாகவும் - புழுதி மணம் கலந்த போதிலும் - வீசுகிறது. அது அதிகாலைப்பொழுது. நான் கண்களைத் திறக்க முயல்கிறேன். ஆனால் இமைகள் அசைய மறுக்கின்றன. அவை எனக்கு உரியவையாகத் தெரியவில்லை. அதன் பிறகு எனது கைகளை உயர்த்த முயல்கிற்ேன். அவையும் அப்படியே.
திடீரென அச்சம் இதயத்தைப் பிளப்பதாக உணர்கிறேன். நான் உயிரோடு இருந்தபோது இப்படி நினைத்து அதிசயிப்பது உண்டு: மரணம் என்பது உணர்வுகள் அகலாமல் உணர்ச்சி நரம்புகள் செயலிழந்து இருப்பது மரணத்தைக் காட்டிலும் பயங்கரமானது. எனது எதிர்பார்ப்புகள் கைகூடுமென்று யார் கூறுவார்?நானேதான் உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டுமோ?
யாரோ பக்கத்தில் நடந்து செல்லும் காலடியோசை கேட்கிறது. எனது தலைப்புறமாக இரும்பு வண்டியொன்று தள்ளப்படுகிறது. வண்டியின் சப்தத்தை அவதானிக்கும்போது அளவுக்கதிகமான சுமை அதில் இருப்பது தெரிகிறது. அது எனது நரம்புகளையும் பல்வரிசையையும் ஈடாடச் செய்கிறது. எல்லாமே செவ்வரி படிந்ததாகத் தெரிவது
 
 

சூரியன் உதயமாகிவிட்டதைக் காட்டுகிறது.நான் கிழக்கை நோக்கி இருக்கிறேன் போலத் தெரிகிறது. இது பிரச்சனை இல்லை. வேடிக்கை பார்க்க வந்த மனிதரின் குரலும் கேட்கிறதே. அவர்கள் புழுதி வானளாவி எனது முக்கினுள் நுளைந்ததனால் தும்மத் தூண்டுகிறது. நான் விரும்பிய போதிலும் இதனைச் செய்து கொள்ள முடியவில்லை.
அதன் பின் அநேக காலடி ஓசைகள் கேட்டன. எனக்கு அருகில் வந்ததும் சப்தம் நின்றது. அநேக சரசரப்புகள் கேட்டன. பெரியதொரு கூட்டம் சேர்ந்திருக்க வேண்டும். திடீரென அவர்கள் என்ன பேசுகிறார். கள் எனத் தெரியத் துடித்தேன். எனது வாழ்நாளில் நான் விமர்சனத்தைப் பற்றிப் பெரிது படுத்த வேண்டாமென்றுகூறியது நினைவுக்கு வருகிறது. நான் அப்படி அர்த்தம்படக் கூறாவிட்டாலும் நான் ஏமாற்றப்படுமுன்பே இறந்து விட்டேன். நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனாலும் ஒரு முடிவுக்கும் வரவியலவில்லை.
"ஆ1 இறந்து விட்டதா?
2D6ll... 26 II ........
நல்லது .
அன்பே. எவ்வளவு கெட்டது!"
பழக்கப்பட்ட எந்தவொரு குரலும் இல்லை என்பதில் பெருமகிழ்ச்சி. இல்லாவிட்டால் சிலர் வருத்தப்படுவார்கள். சிலருக்குச் சந்தோஷமாகவும் இருக்கும். சிலர் இராப்போசனத்தின் பின் முணுமுணுப்பார்கள். இப்படிப் பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள். இவையெல்லாம் என்னை வேதனைப்படுத்தும். இப்போது என்னை யாருமே காண. வில்லை. அதனால் யாருக்குமே பாதிப்பில்லை. நல்லது. நான் யாருக்குமே எந்த்தத் திங்கும் செய்ததில்லை.
ஆனால் எறும்பொன்று எனது முக்கில் ஊர்ந்து அரிப்பூட்டியது. என்னால் சொறிந்துகொள்ள முடியவில்லை. அதனால் அதனை ஒழித்து விடமுடியவில்லை. சாதாரணமாக புரண்டு படுத்திருந்தால் அது பின் வாங்கியிருக்கும். இப்பொழுது வேறொன்று எனது தொடை மீதுள்ளது. நீஎன்ன செய்கிறாய் என்பது உனக்குத் தெரிகிறதா அற்ப பூச்சியே.
நிலைமை மோசமாகிக் கொண்டு போகிறது. சப்தமிட்டுக் கொண்டிருந்த ஈயொன்று எனது கன்னத்தில் குந்தியது. கன்னத்திலிருந்து மெல்ல நகர்ந்து முக்கு நுனியைத் தொட்டது. நான் ஒரு

Page 21
பிரபலமில்லையே என்று வேதனையுடன் நினைத்தேன். உங்கள் கிசு கிசு பகுதிக்குத் தகவலைத் திரட்டத் தேவையில்லை. என்னால் பேச்சை வெளிப்படுத்த இயலவில்லை. இது மூக்கு நுனியிலிருந்து தனது பசைவடியும் வாயால் எனது உதடுகளை நக்கத் தொடங்கியது இது காதல்வெளிப்பாட்டின் அறிகுறியோ? வேறு பல எனது புருவத்தைச் சூழ்ந்தன. அவர்கள் வைக்கின்ற ஒவ்வொரு அடியின் போதும் எனது உரோமக் கால்கள் அசைந்தன. இது வெகுதூரம் - மிக வெகுதூரம் செல்கிறது.
திடீரென வீசிய காற்றில் ஏதோவொன்று மேற்புறமாய் என்னை மூடியது. அவை அனைத்தும் பறந்துவிட்டன. அவை போகும்போது கூறிக்கொண்டு சென்றது கேட்டது. "என்ன பரிதாபம்."
நான் கவலையால் ஒதுங்கினேன். ஏதோ மரத்துண்டு நிலத்தில் விழுந்து நிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியதால் நான் நானானேன். கோரைப்பாய் நெற்றியில் அழுத்தியதால் ஏற்பட்ட வடுவை நான் உணரமுடிகிறது. பாய் அகற்றப்படுகிறது. உடனே சூரியனின் சூட்டை உணர முடிகிறது.
"இவன் ஏன் இங்கே சாகவேண்டும்?" யாரோ கேட்பது கேட்கிறது. ஒலி மிக அண்மையில் கேட்பதால் யாரோ என்னை நோக்கிச் சாய்ந்திருக்கிறார் போல இருக்கிறது. எங்கே ஒரு மனிதன் சாகவேண்டும் என நான் நினைப்பதுண்டு மனிதன் பூமியில் எங்கே வாழவேண்டும் என்று நிர்ணயிக்க இயலாது போனாலும் விரும்பிய இடத்தில் சாகலாமே. இப்பொழுது நான் அறிந்து கொண்டது இதுதான். எல்லாரையும் திருப்திப்படுத்துவது கடினமான காரியம். பரிதாபமான நிலை என்னவென்றால் என்னிடம் பேனாவோ எழுதுதாளோ இல்லை. இருந்தாலும் என்னால் எழுதமுடியாதே. எழுதினாலும் எங்கு எதில் வெளியிடுவது? ஆகவே இதனைக் கைவிட்டேன்.
சிலர் என்னைத் தூக்கிச் செல்ல வந்தார்கள். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. வாளுறை மோதிய ஒலியிலிருந்து பொலிஸ்காரர்கள்தான் என்று ஊகித்துக் கொண்டேன். இறந்திருக்கக் கூடாத இடத்தில் இறந்து கிடந்ததனால் போலும், நான் பல முறை புரட்டப்பட்டேன். ஒரு முறை தூக்கித் திருப்பி வைக்கப்பட்டேன். பின்பு மூடப்பட்டு ஆணிகள் அடிக்கப்பட்டன. அதிசயமாய் இருக்கிறது. இரண்டே ஆணிகள் தான் பயன்படுத்தப்பட்டன. இங்கு சவப்பெட்டிகளுக்கு இரண்டிரண்டு ஆணிகளை மட்டுமா பயன்படுத்துகிறார்கள்?
 
 

"நான் இருக்கப்போவது ஆறு சுவர்களுக்குள்ளேதான்" என்று நினைத்தேன். ஆணிகள் நன்றாக அறையப்பட்டுள்ளன. இதுவே முடிவு. எல்லாமே என்னோடுதான்".
"இங்கே ஒரே புழுக்கமாகவே உள்ளது" எனக் கருதினேன். நான் புதைக்கப்பட்டுவிட்டேனோ என்று உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும் முன்பைக்காட்டிலும் அமைதியாக இருக்கிறேன். எனது பின் கைகள் கோரைப் பாயின் கோடுகளைத் தடவின. இப்படியான போர்வையால் முடுவது பிழையாய் இருக்காது. அதற்கான காசை யார் செலுத்தினார்களோ தெரியவில்லை. என்னைச் சவப்பெட்டியுள் வைத்தவர். களைச் சபிக்க வேண்டும். எனது மேற்சட்டை எனது முதுகுக்கடியில் அழுத்தப்பட்டிருந்தது. அதனை எனக்காக நீட்டி நிமிர்த்தினார்கள். அது இப்போது குத்தி அசெளகரியம் தருகிறது. இறந்தவனுக்கு எவ்வித உணர்வும் இல்லையென்றா நினைக்கிறீர்?ய். ப்.
உயிரோடு இருந்த காலத்தைக் காட்டிலும் இறந்தபின் எனது உடலின் பாரம் கூடியுள்ளது. இதன் அமுக்கம் அழுத்திய சட்டையில் உந்த, அசெளகரியம் அதிகமானது. நான் விரைவாக இதற்குப் பழக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் அழியவேண்டும். அது அதிக தொல்லை தராது. இதற்கிடையே அமைதியாகத் தியானிப்பதே நல்லது.
"எப்படி ஐயா இருக்கிறீர்கள்? இறந்தா விட்டீர்கள்?" இது ஏதோ பழக்கப்பட்ட குரலாக இருக்கிறது. நான் கண்களைத் திறந்து பார்த்தபோது பெரிதாய் புத்தாசாலைத் தூதுவனாய் இருந்தான். இருபது வருஷங்களாக நான் அவனைக் காணவில்லை. ஆனாலும் அதே மாதிரித்தான் இருந்தான். நான் சவப்பெட்டியின் ஆறு பக்கங்களையும் ஆராய்ந்தேன். முரடாகவே இருந்தன. பூசப்படவுமில்லை. மூலைகள் சரிவரச் சீவப்படவில்லை. அதனால் முரடாகவே இருந்தது. "பரவாயில்லை. காரியமில்லை" என்று கூறிவிட்டு கடும் நீல நாடாவால் கட்டப்பட்ட பொதியொன்றை அவிழ்த்து "இது கொங்யாங்கின் விமர்சனங்கள். மிங் பரம்பரைப் பதிப்பு. இது உங்களுக்குத்தான். இது ஜியாஜிங் காலம். பந்திகள் கறுப்பு நிறத்தில் உள்ளன. சும்மா இதனை வைத்திருங்கள். மேலும் இது."
"நீ !" என்று கூறி அவனுடைய கண்களை உற்றுப்பார்த்தேன். "உனக்கு என்ன பைத்தியமா? நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்று தெரியவில்லையா? மிங் பரம்பரைப் பதிப்பை வைத்து நான் என்ன செய்வது?"

Page 22
"அது பரவாயில்லை".
எரிச்சல் காரணமாகக் கண்களை உடனே மூடினேன். சிறிது நேரம் ஒரு சப்தமுமில்லை. அவன் போய் விட்டான் என்பதில் சந்தேகம் இல்லை. வேறொரு எறும்பொன்று எனது கழுத்தில் ஊர்ந்து முகத்தை அடைந்து எனது கண்களைச் சூழ்ந்து கொண்டது.
மனிதர் மரணத்திற்குப் பிறகும் கூடத் தங்கள் நோக்கங்களை மாற்றிக் கொள்வார்களென்று எப்பொழுதும் கற்பனை செய்ததில்லை. திடீரென விசையொன்று எனது மனவமைதியைக் குலைத்தது. எனது கண்களின் முன் அநேக கனவுகள் தோன்றின. சில நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். எதிரிகள் சிலர் எனது அழிவை விரும்பினர். நான் அழியவுமில்லை மகிழவுமில்லை. இரு தரப்பினரின் அபிலாஷைகளையும் நிறைவேற்றாமலேயே அமைதியாகவிருந்தேன். நானும் நிழல் மறைவதுபோல இறந்துவிட்டேன். எனது எதிரிகளை மகிழ்விக்க விரும்பாது இருந்து விட்டேன். இதனால் எனக்குச் செலவொன்றும் ஏற்பட்டிருக்காது. வேதனையில் அழவிரும்பினேன். மரணத்திற்குப்பின் நான் சிந்துகின்ற முதற் கண்ணிர்.
இருந்த போதிலும் கண்ணிர் சுரக்கவில்லை. என் கண்முன்னால் ஒளியொன்று உந்தியது. நான் எழுந்து இருந்தேன்.
ஜூலை 12, 1925
 
 

இப்படியொரு போராளி
அங்கே இப்படியொரு போராளி இருப்பான். நன்கு பூச்சிடப்பட்ட ஆயுதங்களைத் தோளில் ஏந்திய ஆபிரிக்க மக்களைப் போன்ற அறிவற்றவர்களாகவோ தன்னியக்கித் துப்பாக்கி ஏந்திய பச்சைப்பதாகைச் சீனப்படையினர்போல உற்சாகமற்றவர்களாகவோ இல்லை. அவன் ஆயுதங்கள் மாட்டுத்தோலாலானதையோ இரும்பினாலானதையோ நம்பியில்லை. அவனிடம் தன்னைத் தவிர வேறொன்றுமில்லை. ஆயுதங்களைப் பொறுத்தவரை காட்டுமிராண்டிகள் வீசிய ஈட்டிதான்.
அவன் வெறுமையில்தான் நடக்கிறான். காண்பவரெல்லாம் ஒரே மாதிரியாக தலையை அசைக்கிறார்கள். அவனுக்கு நன்கு தெரியும் இந்த அசைப்புத்தான் இரத்தம் சிந்தாமல் எதிரிகள் கொல்லப் பயன்படுத்தும் ஆயுதம், இதனால் அநேக போராளிகள் அழிந்து போயுள்ளனர். பீரங்கிக்குண்டுபோல வீரர்களின் ஆற்றலைச் செயலிழக்கச் செய்துள்ளது.
அவர்களுடைய தலைமேல் பல்வேறு கொடிகளும் பதாகைகளும் தொங்குகின்றன. கரையோரங்களில் பட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வள்ளல்கள், கல்விமான்கள், எழுத்தாளர், மூத்தோர், இளைஞர், மேலெழுந்தவாரியாகக் கற்றோர். பிரபுக்கள். எனப் பல்வேறு வர்க்கத்தினரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கீழே மேலங்கிகளில் கல்வி, ஒழுக்கம், தேசிய கலாசாரம், பொதுக்கருத்து, தர்க்கம், நீதி, கீழைத்தேய நாகரிகம் ஆகியவற்றில் நல்ல பெயர்பெற்றோர் பெயர்கள் இைைழக்கப்பட்டுள்ளன.

Page 23
ஆனால் தனது ஈட்டியை உயர்த்துகிறான்.
அதோடு தமது இதயங்கள் முன்கூட்டியே தவறான முடிவு எடுப்போர் போலன்றி நெஞ்சங்களுக்கு மத்தியிலுள்ளன என்று பிரமாணம் செய்கிறார்கள். தமது இதய கவசங்களைக் காட்டித் தமது இதயங்கள் மார்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன என்று நிறுவ முயலுகிறார்கள். ஆனாலும் அவன் தனது ஈட்டியை உயர்த்துகிறான்.
புன்னகை பூத்தபடி வீசிய ஈட்டி அவர்களுடைய இதயம் ஊடாகத் துளைக்கிறது. ஒன்று மற்ற மேலங்கி கீழே விழ அவர்கள் துவண்டு நிலத்தில் சரிகிறார்கள். இல்லாத்தன்மை மற்ைய அவனுக்கு வெற்றி கிட்டுகிறது. அவன் வள்ளல் ஒருவரையும் மற்றும் சிலரையும் கொன்ற குற்றவாளியாகிறான்.
ஆனாலும் அவன் ஈட்டியை உயர்த்துகிறான்.
இறுதியாக முதுமை எய்தி முதுமையால் வெறுமையோடு இறக்கிறான். அவன் உண்மையில் பார்க்கும்போது போராளியல்லன். வெறுமைதான் வெற்றிவீரன்.
இப்படியான இடத்தில் போர்க்குரல் கேட்காது. ஆனால் அங்கே அமைதி தான். அமைதி.
ஆனாலும் அவன் தனது ஈட்டியை உயர்த்துகிறான்.
டிசெம்பர் 14, 1925.
 
 

புத்திசாலி, முட்டாள், அடிமை
,Pfi அடிமை இருந்தான், அவனுக்கு வேறு வேலை இல்லைي தன்னுடைய வேதனையைத் கொட்டிவிடக் கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருப்பான். ஒருநாள் ஒரு புத்திமானைக் கண்டான்.
கவலையுடன் கன்னங்களில் கண்ணிர்மல்க "ஐயா" என்றழைத்தான். "உங்களுக்குத் தெரியுமா நான் நாயின் வாழ்க்கை வாழுகிறேன். நாள் முழுதும் ஒரு வேளை உணவு கூடக்கிடைப்பதில்லை. பன்றியும் விரும்பாத சோளக் கோது தான் எனது உணவு. சொல்லக் கூடாது அது கூட ஒரு கோப்பை அளவுதான்".
"இது உண்மையிலேயே சரியில்லை. ஆ அப்படியா?" என்று இரக்கம் பொங்கக் கேட்டார். அவனது உணர்வுகள் பொங்கின.
"நான் பகலும் இரவும் வேலை செய்கிறேன். அதிகாலையில் தண்ணிர் சுமக்கிறேன். அந்திப்பொழுதில் இரவு உணவு சமைப்பேன். காலையில் செய்தி சுமந்து செல்லும் சேவகன், மாலையில் கோதுமை மா அரைப்பேன். வெய்யில் காய்ந்தால் ஆடைகளைத் துவைப்பேன். மழை பெய்யும்போது குடைபிடிப்பேன். குளிர்காலங்களில் நெருப்பு எரிப்பேன். வெய்யில் காலத்தில் விசிறுவேன். நள்ளிரவு வேளையில் வெள்ளைக் காளானை அவிப்பேன். எனது எஜமானும் அவருடைய சூதாட்ட நண்பர்களும் உண்டு முடியுமட்டும் காத்திருப்பேன். ஒரு சில்லறைக் காசும் கிடைப்பதில்லை. கருகலும் காய்ந்த துண்டும் மட்டுமே எனக்கு. அதுவும் சில வேளைகளில் மட்டுமே".
"அன்பனே" என்று அழைத்த புத்திசாலியின் கண்ணோரங்கள் சிவந்தன. கண்ணிர் சிந்துவாரோ எனத் தோன்றியது.

Page 24
"இப்படியே நீண்ட காலம் போக்கவியலாது . இதிலிருந்து விடுபட ஏதாவது வழி செய்யவேண்டும். ஆனால் என்ன செய்யமுடியும்?"
"நான் நிச்சயமாக நம்புகிறேன். நிலைமை மாறும்"
"நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்? நானும் நம்புகிறேன். நான் எனது அவஸ்தைகளைச் சொல்லிவிட்டேன். நீங்களும் பெரிதும் பரிதாபப்பட்டது உற்சாக மூட்டுகிறது. எனக்கு இப்பொழுதே சுகம் தருகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால் இன்னமும் உலகில் நீதியும் நியாயமும் இருக்கத்தான் செய்கிறதென்பதை".
சில நாட்களுக்குப் பிறகு தொடர்ந்தும் நீர் கசிந்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்தபோது தனது துயரங்களை யாருக்காவது கொட்ட விரும்பினான்.
"ஐயா" என்று கண்ணிர் வடிய அழைத்து, "நான் வசிக்கும் அறை பன்றியின் கொட்டகையைக் காட்டிலும் மோசமானது. எனது எசமான் என்னை மனிதனாகவே மதிப்பதில்லை. அவர் தமது நாயைப் பராமரிப்பது பத்தாயிரம் மடங்கு மேல்."
"அவனைத் தொலைத்துவிடு" என்று மற்றவன் கூறியது அடிமையை அதிர்ச்சியூட்டியது. மற்றவனோ ஒரு முட்டாள்.
"நான் இருப்பதோ பள்ளத்திலுள்ள ஓர் அறைக் குடிலில. சதா ஈரமாகவும் குளிராவும் முட்டைப் பூச்சிகள் நிறைந்ததாகவும் உள்ளது. நான் படுக்கப்போனாலோ என்மீது பாய்ந்து விழுவார். அறை நாற்றம் வீசும். ஒரு ஜன்னல்கூட இல்லை".
"உனது எஜமானிடம் சொல்லிச் செய்விப்பது தானே?"
"நான் எப்படிக்கேட்பது?"
"சரி, எனக்கு இடத்தைக் காட்டு பார்ப்போம்". அடிமையைப் பின்தொடர்ந்து சென்ற முட்டாள் சுவரைக் குடைந்தான்.
"ஐயா என்ன செய்கிறீர்கள்?" அடிமை அதிர்ச்சியுடன் கேட்டான். "நான் உனக்கு ஜன்னல் ஒன்று ஏற்படுத்துகிறேன்" "ஐயோ இது வேண்டாம். எஜமான் என்மீது எரிந்து விழுவார்".
"விழட்டும்" என்று கூறிவிட்டு முட்டாள் தொடர்ந்தும் சுவரை இடித்தான்.
 
 

"உதவி கள்ளன் வீட்டை இடிக்கிறான்.ஒடிவாருங்கள். சுவரை இடித்து விடுவான்." என்று கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் நிலத்தில் புரண்டான். ஒருபெரிய அடிமைக்கூட்டமே திரண்டு வந்து முட்டாளைத் துரத்தியது.
சப்தம் கேட்ட எஜமான் கடைசி ஆளாக அங்கு வந்தான்.
"ஒரு கள்ளன் வீட்டை இடிக்க வந்தான்.நான்தான் முதலில் அபயக் குரல் எழுப்பினேன். நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவனைத் துரத்திவிட்டோம்" அடிமை பணிவுடனும் வெற்றிக் களிப்புடனும் கூறினான்.
"நல்ல காரியம் செய்தாய்" எஜமான் அவனைப் புகழ்ந்தார்.
சம்பவதினம் வந்த பலரில் புத்திசாலி மனிதரும் ஒருவர்.
"ஐயா. நான் நல்ல காரியம் செய்ததால் எஜமான் என்னைப் புகழ்ந்தார். அன்று சொன்னீர்கள் நிலைமை மாறும் என்று. எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் சொன்னீர்கள்" என்றான் உற்சாகமும் மகிழ்ச்சி. யும் பொங்க,
"அது சரிதான்".என்றார் அடிமைக்காகப் பரிந்து,
டிசம்பர் 26, 1925

Page 25
சுருங்கிப் போன இலை
Dங்கோலியக் கவிஞர் சுற்றுலாக் கவிதைகளை விளக்கொளியில் படித்துக் கொண்டிருக்கையில் உலர்ந்த மேப்பிள் இலை தென்பட்டது.
இது என்னைச் சென்ற ஆண்டு இலையுதிர் காலத்துக் கடைசிப் பகுதிக்கு இட்டுச்செல்கிறது. கடும் பணியில் ஓர் இரவு. அநேகமாக எல்லா மரங்களும் தமது இலைகளை உதிர்த்து விட்டன. எனது வளவிலிருந்த மேப்பிள் மரம் மட்டும் செங்கபில நிறமாகியது. மரத்தை நெருங்கி அவற்றின் இலைகளைப் பார்வையிட்டேன். அவை பச்சை நிறமாய் இருந்த போதெல்லாம் ஆராய்ந்ததில்லை. எல்லாம் சிவப்பு நிறமாகவில்லை. அநேகமாக எல்லாம் வெளுத்திருந்தன. சில இன்னமும் பச்சைப் புள்ளிகளைப் கொண்டிருந்தன. அதில் ஒன்றில் புழுவொன்று ஒட்டை போட்டுவிட்டது. ஓரங்கள் கறுத்துவிட்டன. கலைந்த சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களின் ஊடாக முறைத்துப் பார்ப்பதுபோலத் தென்பட்டது.
"இந்த இலை உலர்ந்துவிட்டது" என்று நினைத்தேன். ஆகவே அதனைப் பறித்து நான் அப்பொழுதுதான் வாங்கிய புத்தகத்திற்குள் வைத்தேன். இந்த உலரும் இலையை மற்ற இலைகளோடு சேர்ந்து அலைந்து மறைந்து விடாமல் காப்பாற்றி விட்டதாக நினைக்கிறேன்.
இன்றிரவு இது மஞ்சள் நிறமாக எனக்குக் காட்சியளித்தது. சென்ற ஆண்டைக் காட்டிலும் மங்கலாகி நிறம் மாறித் தோன்றுகிறுது. சில ஆண்டுகளில் அவற்றின் நிறங்கள் மங்கியபின் எனது நினைவிலிருந்து அகன்ற பின் நான் ஏன் புத்தகத்திற்குள் வைத்தேன் என்பதையே மறந்து விடுவேன். மறைந்துவிடும் நிறங்கள் சுருங்கிப் போன இலையில்
போர்க்காலச் சிந்தனைகள்
 
 
 

நெடுநேரம் இருப்பதில்லை. கம்பீரத் தோற்றத்தையும் பசுமை நிறத்தையும் பேசவே வேண்டாம். பெரும் குளிரையும் தாங்கக்கூடிய மரங்கள் கூட இலைகள் அனைத்தையும் இழந்து காணப்படுவதைச் ஜன்னல் ஊடாகக் கண்டேன். மேப்பிள் மரங்களோ பெருமளவு தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டன. இலையுதிர்கால இறுதிநாட்களில் சென்ற ஆண்டைப்போலவே சுருங்கிப் போன இலைகளிருக்கும். ஆனால் இந்த ஆண்டோ இவற்றை ரசிக்கும் மனப்பாங்கில் நானில்லை.
lgóFIDLIii 26, 1925.

Page 26
மெல்லிய இரத்தக் கறையினூடே
உயிர் நீத்தோர். உயிருடன் இருப்போர், இனிப் பிறக்கவுள்ளோர் நினைவாக. உலகியற்றியோன் இன்னமும் பலவீனமானவன் தான். அவன் இரகசியமாகவே சொர்க்கத்தையும் புவியையும் மாற்றுகிறான். ஆனால் உலகை அழிப்பதற்கான துணிவில்லை. இரகசியமாகவே உயிருள்ள ஜீவராசிகளை இறக்கச் செய்வான். ஆனால் இறந்தவரின் உடல்களைப் பேணும் பணியைச் செய்வதில்லை. இரகசியமாக இரத்தம் சிந்தவைப்பது அவன் தான். ஆனால் சிந்திய இரத்தத்தை நெடுங்காலத்திற்குப் பாதுகாப்பதற்குரிய தைரியம் அவனுக்கில்லை. இரகசியமாவே மனித இனத்தை நோகச் செய்வான். அதனை நீண்ட நாட்களுக்கு நிலைபெறவோ நினைவுகூரவோ வைக்கக் கூடிய தைரியமில்லை.
அவனும் தன்னை ஒத்த பலவீனமானவர்களுக்கே ஏற்பாடு செய்வான். கைவிடப்பட்ட சிதைவுகளையும் தனிமையான நினைவுச் சின்னங்களையும் கொண்டு செல்வந்த மாளிகைகளை உருவாக்குவான். நோவுகளைத் தணித்து இரத்தக்கறைகளையும் ஐதாக்கி அன்றாடம் ஒவ்வோரு கோப்பை சற்று இனிப்பூட்டப்பட்ட கசப்பான வைன் பெய்து குறையாமலும் கூடாமலும் பார்த்து சிறிது போதையூட்டிடும் அதனை மனித இனத்திற்குத் தருவான். அதனைக் குடித்தவரால் அழவும் பாடவும் இயலும், தெளிவுடனும வெறியுடனும், சுவாதீனத்துடனும் சுவாதீனமற்றும், வாழவிரும்பியும் மாண்டு போக விரும்பியும் ஆகிய இரு நிலைகளிலும் இருப்பர். அவனுக்கு மனித இனத்தை அழிக்கும் தைரியம் இல்லை.
 
 

கைவிடப்பட்ட சிதைவுகளும் தனிமையான நினைவுச் சின்னங், களும் பூமியில் ஆங்காங்கே சிதறுண்டு காணப்படுகின்றன. மெல்லிய இரத்தக் கறைகளில் பிரதிபலிக்கின்றன. அங்கே மனிதர் தமது வேதனைகளையும் கவலைகளையும் ருசிப்பதோடு நில்லாது மற்றவர். களுடையவற்றையும் சுவைப்பர். ஆனுலும் அவர்கள் வெறுத்து ஒதுக்காது அதோடு இதனை வேறுவிதமாக நினையாது தங்களை "சொர்க்கத்தின் துன்பத்திற்காளானோர்" என்று கூறிக்கொண்டு தாங்கள் படும் துன்பத்தையும் துயரையும் நியாயப்படுத்துகின்றனர் புதிய துன்பத்தையும் துயரையும் எதிர்நோக்கி இருக்கின்றனர். அவற்றைச் சந்திக்க விழைகின்றனர்.
மனித இனத்திலிருந்து வெளிப்பட்டவொரு புரட்சிகரப் போராளி நிமிர்ந்துநின்று அழிந்த சிதைவுகளையும் தனிமையான பழைய புதிய நினைவுச் சின்னங்களையும் நோக்குகின்றான். கடுமையானதும் முடிவற்றதுமான துயரங்களை நினைவுகூருகிறான். உறைந்து போன இரத்தத்தை அறிந்து கொள்கிறான். அவன் இறந்து போனவரையும் உயிருடன் இருப்போரையும் இனிப் பிறக்கப் போவோரையும் அறிந்து கொள்ளுகிறான். இறைவனுக்கு விசுவாசமாகவுள்ள மனித இனத்தை அழித்தொழிப்பான்.
தோற்றுவித்தோன் வெட்கம் தாங்காது ஒளித்துக் கொள்வான். சொர்க்கமும் பூமியும் போராளியின் பார்வையின்நிறம் மாறித் தோன்றும்,
ஏப்ரல் 8, 1926
(இது மார்ச் 18ம் திகதிய சம்பவத்திற்குப் பின் எழுதப்பட்டது. ஜப்பானிய, ஆங்கிலேய வல்லரசுகளின் மிலேச்சத்தனத்திற்கு எதிராக பீஜிங்கில் கிளர்ந்தெழுந்த மாணவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யும்படி வடபுலத்து புத்தத் தலைவன் உத்தரவிட்டான். அதில் 47 பேர் இறந்தனர். 150 பேர் பாயமுற்றனர்.)

Page 27
sigil
பTடசாலை நோக்கி மாணவர் புறப்படுவதுபோல ஒவ்வொரு காலைப்பொழுதும் பீஜிங் நகரின் மீது விமானங்கள் பறந்து குண்டு பொழியும் பணியைச் செய்கின்றன. காற்றில் அதன் ஓசையைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஏதோவொரு அதிர்ச்சி ஏற்பட்டு மரணத்தின் வெற்றியைக் காண்கின்றேனோ என்ற பிரமை ஏற்படுகிறது. உயிர்வாழ்வதன் சிந்தனை உச்சநிலை அடைகிறது.
ஒரிரு வெடிகளுக்குப்பிறகு சுழன்றுவிட்டு மெதுவாகப் பறந்து போகிறது விமானம். ஆனாலும் உலகம் வழக்கத்தை விட அமைதி. யாகத் தோன்றும். ஜன்னல்களுக்கு வெளியேயுள்ள குருத்திலைகள் சூரியவொளிபட்டு பொன்னிறமாகக் காட்சியளிக்கின்றன. பூக்களும் மலர்ந்து நேற்றையைவிடக் கூடிய அழகுடன் தோன்றுகின்றன. எனது கட்டில் மீது கிடந்த பத்திரிகையை அகற்றியபோது எனது மேசை மீது முன்னாள் இரவு படிந்திருந்த தூசிகளும் அகன்றுவிட்டன. எனது மேசையும். பிரகாசமான ஜன்னல்களும் மாசுமறுவற்ற மேசையும் என்பதற்கிணங்கத் தோற்றம் தந்தது.
ஏதோ காரணத்திற்காக நானும் குவிந்துவிட்ட இளம் எழுத்தாளர். களின் கையெழுத்துப் பிரதிகளைத் தொடுக்கலானேன். அவை முழுவதையும் பார்வையிட விரும்புகிறேன். நான் அவற்றை காலவரிசைப்படுத்திப் படிக்கலானேன். அவர்களுடைய சிந்தனை எவ்வகையான அலங்கரிப்பையும் வெறுக்கின்றதன்மையைக் கொண்டன. அவை சிறந்தவை. உறுதியானவை. ஆனல் அவர்கள் கவலை நிரம்பியவர்கள். எனது அழகிய அந்த இளைஞர்கள் பெருமூச்சுவிட்டு, சினந்து, முரடு ஆயினர்.
 
 

அவர்களுடைய உணர்வுகள் காற்றாலும் புழுதியாலும் முரடாகின. அவைதான் மனித சிந்தனைகள். நான் விரும்புபவையும் அவைதான். உருவமும் நிறமுமற்ற புழுதி சிந்தும் இந்த முரட்டுத்தனத்தை மகிழ்ச்சியோடு முத்தமிட எனக்கு விருப்பம். அழகான, பூத்த மலர்த் தோட்டங்களில் அடக்கமான, அழகான பெண்கள் உலாவுகின்றனர். கொக்குகள் சப்தமிட அடர்ந்த வெண்மேகங்கள் மேலே எழுகின்றன. இது உற்சாகமூட்டுவதாக உள்ள போதிலும் மக்கள் மத்தியில் நான் வாழுவதை மறக்கமுடியவில்லை.
இது எனக்கு ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் நான் பீஜிங் பல்கலைக்கழக ஆசிரியர் அறையிலிருந்தபோது முன்பின் அறிமுகமில்லாத மாணவன் ஒருவன் வந்தான். என்னிடம் பொட்டலம் ஒன்றைத் தந்துவிட்டு ஒன்றும் கூறாமல் அகன்று விட்டான். அதனைத் திறந்தபோது இளைஞர் நடத்துகின்ற ஷோட்கிறாஸ் என்கின்ற சஞ்சிகை இருந்தது. அவன் ஒரு வார்த்தை கூடக் கூறாவிட்டாலும் எவ்வளவு பெறுமதி வாய்ந்த பரிசு இது. இனி "ஷோட்கிறாஸ்" வெளிவரப் போவதில்லை. ஆனால் இது "சங்கின் பெல்" சஞ்சிகையின் முன்னோடியாகும். "சங்கின் பெல்" தனியாக காற்றிலும் புழுதியிலும் மனித சமுத்திரத்தில் ஊசலாடுகிறது.
முட்செடி முற்றாக நசுக்கப்பட்ட போதிலும் ஒரு சிறு மலர் பூக்கும். இது தோல் ஸ்தோயை எவ்வளவு தூரம் அதிரவைத்து கதையொன்றை எழுதவைத்ததென நான் நினைவு கூருகிறேன். வரண்ட பாலைவனப் பிரதேசங்களில் செடிகள் நிலத்தின் ஆழத்தில் தமது வேர்களைச் செலுத்தி நீரை உறிஞ்சி உயிர் வாழத் துடிக்கின்றன. நீர்த் தாகத்தால் கூடிய பிரயாணிகள் இக்காட்சியைக் கண்டு தாம் தற்காலிகமாகத் தங்கக் கூடியதோர் இடத்தைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் உள்ளம் பூரிக்கின்றனர். உண்மையில் இது நன்றியையும் துயரையும் ஊட்டுகிறது.
"சங்கின் பெல்" ஆசிரியர்கள் ஒருவருடைய முகவரியையும் குறிப்பிடாமல் "தலைப்பொன்றுமின்றி" மட்டும் குறித்துவிட்டு எழுதியது இதுதான் : சிலர் எங்கள் சமூகத்தைப் பாலைவனம் என்று கூறுகின்றனர். இது சரியானதாயின் இது உனக்கொரு அமைதியையும் முடிவிலா நிலையையும் தருமல்லவா? இது இவ்வளவு குழப்பத்தையும் அமைதி. யின்மையையும் அதற்கு மேலாகவும் மாற்றத்தையும் தராதல்லவா?
ஆம், இளம் உள்ளங்கள் எனக்கெதிரே எழுந்து நிற்பது தோன்றியது. அது இரத்தம் சிந்தியும் அமைதியாக அல்லல்பட்டும் இருப்பது

Page 28
எனக்குத் தெரிகிறது. ஏனெனில் நான் மக்களின் உலகில் மக்கள் மத்தியில் வாழ்கிறேன்.
நான் எழுதிக்கொண்டிருந்தபோது சூரியன் மறைந்து விளக்கு வைத்தாகியும் விட்டது. என்முன் அந்திதான் இருந்தபோதிலும் எல்லாவிதமான வாலிபங்களும் தென்பட்டன. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டு விழிகளை முடியபடி கனவு காண்கிறேன். எனது உறக்கம் கலைந்தது. என்னைச் சுற்றி அந்திநேர இருள் சூழ்ந்துள்ளது. சிகரெட் புகை அமைதியான காற்றில் கலக்கிறது. கோடைக் கால மேகங்கள் ஒழுங்கற்ற உருவங்களைப் பெற்றன.
ஏப்ரல் 16, 1926,
 
 

ஷாங்ஹாயில் பெண்கள்
9ெTங்ஹாயில் ஆடம்பரமாகத் தோற்றமளிப்பது அலங்கோலமாகத் திரிவதைக் காட்டிலும் நல்ல பலாபலனைத் தருகிறது. பழைய ஆடையுடன் சென்றால் பேரூந்நு நடத்துனர் வாகனத்தை நிறுத்தமாட்டார். ரிக்கற் பரிசோதகர் உங்கள் ரிக்கற்றைப் பரிசோதிப்பார், மிகுந்த கவனத்தோடு, பெரிய தங்கும் விடுதிகளிலோ உணவகங். களிலோ காவலாளி முன்புறவாயிலால் நுழைய விடமாட்டான். அதனால் தான் பலரும் சிறியதும் முட்டைப்பூச்சிகள் நிரம்பியதுமான விடுதிகளில் தங்குகிறார்கள். அடுத்த நாளுக்கு மடிப்புக் குலையாமலிருத்தற் பொருட்டு தலையணைகளுக்கு அடியில் இரவே வைத்து விடுவார்கள்.
நல்லாடையுடுத்துள்ள பெண்களுக்கு நிரம்பிய பலன் கிட்டுகிறது. இதனை கடைகளில் காணக்கூடியதாயிருக்கும். அதாவது பெண்கள் எவ்வளவு நேரத்தை எடுத்தாலும் கடைச் சிப்பந்திகள் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒருமுடிவுக்கும் வராது பொறுக்கிக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பார்கள், நேரத்தினைக் கடத்துபவர்களுக்குத் தரும் தண்டனை - சிறிய பரிகசிப்பும் மெல்லிய சல்லாபமுமே. இப்படி அழகூட்டிச் செல்லாவிட்டால் கிடைப்பது வெறுப்பும் சலிப்புப் பார்வையுமே.
ஷாங்ஹாய் நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட பெண்கள் தங்கள் பாலியல் சிறப்புக்களையும், அதன் ஆபத்துகளையும் நன்கு அறிந்திருக்கிறார்கள். பெண்களின் நவநாகரிகத் தோற்றம் பிறரை ஈர்ப்பதோடு எச்சரிக்கை தருவதும் தீயதற்குத் தூண்டுவதும் பாதுகாப்பளிப்பதும் ஆகும். அது நட்பாய்த் தோன்றினும் ஆண்வர்க்

Page 29
கத்திற்கு வெறுப்பூட்டுவதாயும் அமைகிறது. இந்த முறையால் வாலைப் பெண்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்கள் கடைகளில் பொருள் வாங்கும்போது தலையை ஒருபுறம் சரித்துக்கொண்டு முகத்தில் கோபம் கொப்பளிக்கத் தோற்றம் அளிப்பர். கடைச் சிப்பந்திகள் வயதுப் பெண்களோடு சல்லாபிப்பது போலவே சல்லாபிக்கக் கூடும். சல்லாபத்தின் கருத்தை விளங்கிக் கொண்டு வெகு. விரைவில் பருவமெய்துவர்.
நாம் தினசரிப் பத்திரிகைகளில் இளம் பெண்கள் கடத்தப்படுவதைப் பற்றியும், வன் கலவி பற்றியும் படிக்கிறோம். "பில்கிறிமேஜ் ரு த வெஸ்ற்" என்னும் நூலில் வரும் பூதவரசன் மனிதமாமிசத்தையும் சிறுவர் சிறுமியரைப் பிடித்து உண்பதையும் காண்கிறோம். இது மட்டுமல்ல. வசதி படைத்த செல்வந்தர்கள் தமது உயர்வை வெளிக்காட்டுமுகமாக இளம் பெண்களைத் தங்களின் வீடுகளில் வைத்துத் தமது இச்சைகளைப் பூர்த்தி செய்வதோடு தமது உடலாற்றலையும் வெளிக்காட்டுகிறார்கள். பசியில் துடிப்போர் வேரையும் பட்டையையும் தேடி அலைவது போல கடை உரிமையாளரும் சிப்பந்திகளும் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக இவ்வாறு நடந்து வருகின்றனர். வசதி படைத்தோர் தங்களது இச்சைகளைப் பூர்த்தி செய்வதை இதோடு ஒப்பிட இயலாது.
சுருக்கமாகக் கூறின் சீன தேசத்தில் இளம்பெண்கள் ஆபத்தை எதிர் நோக்குகிறார்கள்.
உடலமைப்பு சிறு பிள்ளைகள் போல் இருந்தபோதிலும் வெகுவிரைவிலேயே பரிபக்குவ நிலையை அடைந்து விடுகிறார்கள். ரஷ்ய எழுத்தாளர் சோலோகப் என்பவர் வளர்ச்சியடைந்த பெண்ணின் கண்களையுடைய சிறுமியின் பாத்திரத்தைச் சிருஷ்டித்திருந்தார். ஆனால் எங்கள் சீன எழுத்தாளர்கள் "அலங்காரச் சிறுமி" என்பதைப் பிரயோகிக்கின்றனர்.
ஓகஸ்ற் 12, 1933
 
 

ஷாங்ஹாய் பிள்ளைகள்
சென்ற ஆண்டு சர்வதேச குடியிருப்பிற்கு அருகில் வட சிசுவான் வீதியில் சண்டை காரணமாக அமைதி பல மாதங்கள் நிலவியது. ஆனால் இந்த ஆண்டு கலகலப்பாக இருக்கிறது. கடைகள் பிறெஞ்சு அதிகாரப் பிரதேசத்திலிருந்து சற்று விலகி அமைந்தன. சில நேரம் படமாளிகைகளும் திறந்து இருந்தன. காதலர் பூங்காக்களில் கை கோர்த்துத் திரியலாயினர். இந்தக் காட்சிகள் சென்ற கோடையின் போது காணக் கூடியதாக இருக்கவில்லை,
எந்த ஒழுங்கை ஊடாகச் சென்றாலும் மலவாளிகள் நிரம்பியிருக்கவும், நடமாடும் சமையல் அறைகளையும், ஈக்கள் எங்கும் பறப்பதையும், சிறுவர்கள் அலைந்து திரிவதையும், சிலர் தியசெயல்களிலும் மற்றவர்கள் குழப்பத்தின் சிறிய உருவிலும் செயல்படுவதையும் காண. லாம். பிரதான வீதிகளில் அந்நிய நாட்டுச் சிறுவர்கள் ஒடியாடித் திரி. வதைக் காணலாம். அவர்களில் ஒரு சீனப் பிள்ளை கூடக் காணப்படவில்லை. அங்கே சீனப்பிள்ளைகள் இல்லாமலில்லை. ஆனால் அழுக்காடைகளுடன் தோற்றமளிப்பதால் அவர்கள் எடுபடவில்லை.
சீனக் குடும்பங்களுக்கு பிள்ளைகளை வளர்த்தெடுக்க இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று அவர்களைக் காட்டுமிராண்டிகளாய் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு வாழப் பழக்கவேண்டும். அவர்கள் வீட்டுக்குள்ளே வீரர்களாகவும் வெளியே வலையற்ற சிலந்திகளைப் போலவும் இருப்பர். மற்றது கடுமையான கட்டுப்பாட்டுக்குள் ஏசியும் பேசியும் வளர்த்து அடிமைகளாய் உருவாக்கி அவர்களுடைய பணிவை மெச்சி வளர்த்தல். இச் சிறுவர்களை வெளியே செல்லவிடும்போது அவர்களுக்கு அடைபட்டு இருந்த கூட்டிலிருந்து வெளிவந்த

Page 30
பறவைகளைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவர்களால் பாடவோ, துள்ளித் திரியவோ, பறக்கவோ இயலாது.
சீனாவிலும் கூட சிறுவர்களுக்கான படப் புத்தகங்களுண்டு. அவற்றில் பொதுவாகப் பிள்ளைகளின் படங்கள் இடம்பெறுகின்றன. அவை அநேகமாகப் பிள்ளைகளைக் காட்டுமிராண்டிகளைப் போலச் சித்தரித்துக் காட்டுகின்றன. அவர்கள் காவாலிகளைப் போலவும், இளங் குற்றவாளிகளைப் போலவும், சரிந்த தலைகளோடும் கீழ் நோக்கிய கண்களோடும் உருண்ட தோள்களோடும் மந்தபுத்தி. யினராவே சித்தரிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் ஒவியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே. இவை உண்மையில் சீனப் பிள்ளைகளைப் போலத்தான் உள்ளன. அவற்றின் மாதிரிகளாகவும் உள்ளன. மற்ற நாட்டுப் பிள்ளைகளின் படங்களைப் பார்ப்போமாயின், ஆங்கிலப் பிள்ளைகள் நன்னடத்தை உள்ளவராகவும், ஜேர்மானியப் பிள்ளைகள் கர்வமும் முரட்டுச் சுபாவமும் உள்ளவர்களாகவும். றவிஷ்யப் பிள்ளைகள் வலிமை படைத்தவர்களாகவும், பிறெஞ்சுப் பிள்ளைகள் சுறுசுறுப்பும் ஆரோக்கியமானவர்களாவும், யப்பானியச் சிறுவர்கள் புத்திசாலிகள் போலவும் தோற்றமளிக்கிறார்கள். ஒருவரிடமும் சீனப்பிள்ளைகளிடமுள்ள மந்தத்தோற்றம் தென்படவில்லை. ஒரு நாட்டின் உணர்வை அந்நாட்டுக் கவிதைகளிலிருந்தும், படங்களிலும் குறிப்பாகச் சிறுவர்களைச் சித்தரிக்கும் படங்களிலிருந்தும் காணக்கூடும்.
முட்டாள்தனமும் பலவீனமுமே மனிதனை ஒழுக்கவீனனாக்குகிறது. சிறுவர்களின் சுற்றுச் சூழலே அவர்களை எதிர்கால மனிதராக்குகிறது. எமது நவீனமயவாளர்கள் அன்பை - காதலைப் பற்றியும், சிறிய குடும்பத்தைப் பற்றியும், விடுதலை பற்றியும் மட்டுமே பேசிவருகின்றனர். சிறுவர்களின் வீட்டு, பாடசாலைக் கல்வி பற்றியோ தேவையான சமூகமாற்றம் பற்றியோ ஒன்றும் கூறுவதில்லை. முதியோர் தமது பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் குதிரைகளாகவும் எருதுகளாகவும் இருப்பது எப்படி என்றுமட்டும் அறிந்துள்ளார்கள். இன்றைய நிலைமையை மட்டும் சிந்தித்துக் கொண்டிராமல் வருங்காலத்தை மறவாதிருக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். "எமது பிள்ளைகளும் பேரரும் குதிரைகளாகவும் எருதுகளாகவும் இருந்து விட்டுப்போகட்டுமே" என்ற மனப்பான்மை போகவேண்டும்.
ஓகஸ்ற் 12, 1933.
போர்க்காலச் சிந்தனைகள்
 
 

இலையுதிர்கால மாலைநேர
g))
5ேலண்டரின்படி இது இலையுதிர் காலமானபோதிலும் வெம்மை கோடைகாலத்தைவிட தீட்சணியமாய் இருந்தது. சூரிய ஒளியின் இடத்தை மின்விளக்குகள் பெற்றுவிட்டபோதிலும் நான் உலா வந்து கொண்டிருந்தேன். V
ஆபத்தானதுதானா? ஆபத்திலும்கூட மனிதர் தமது வலிமையைக் காட்ட முயலுகிறார்கள். ஆபத்தின் ஊடாக நடைபோடுவது சிறந்த காரியந்தான். குடிவாழும் மாவட்டத்தில் சர்வதேச குடியிருப்புப் பகுதியில் இன்னமும் அமைதி நிலவுகிறது. ஆனால் மத்திய வகுப்பு சீன மக்களின் வாழிடங்கள் சமையல் அறைகளோடு காளவாய் போன்று உள்ளன. இரட்டை நரம்பு வயலின்கள். தாய விளையாட்டுகள் இசைத்தட்டுப் பெட்டிகள், மலவாளிகள், அரைநிர்வாண மேனியர்கள் ஆகியவற்றைக் காணலாம். உயர் வகுப்புச் சீனர்கள். வர்க்க பேதமற்ற பிறநாட்டார் வாழும் வீதிகளில் நிழல்தரு பெருமரங்கள், தென்றல் காற்று வீச்சு, நிலவொளி ஆகியவற்றைக் காணலாம். ஆனால் அங்குகூட நாய்களின் குரைப்புகளைக் கேட்கக் கூடியதாயுள்ளது.
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவனாதலால் எனக்கு நாய்களின் குரைப்பைக் கேட்க அலாதி விருப்பம், இரவு நேரங்களில் தூரத்தில் நாய்கள் குரைக்கும் ஒலி அற்புதமானது. முன்னோர்கள் "நாய்கள் குரைப்பது சிறுத்தைகள் போல் இருக்கிறது" என்று கூறுவார்கள்.

Page 31
நீங்கள் முன்பின்தெரியாத கிராமமொன்றில் நுழைந்து விடுவீர். களாயின் பெரிய நாயொன்று உங்ளை நோக்கி வந்து திடீரெனக் குரைக்கும். ஏதோ போர்க் களத்தை நெருங்கிவிட்டது போன்ற பிரமையைத் தரும்,
துரதிஷ்டவசமாக இங்கே நான். வலுவற்ற நோஞ்சான் நாயின் குரைப்புச் சத்தம் தான். பரிதாபமான குரல்தான்.
நான் நடைபோடும் போது ஒரு ஏளனச் சிரிப்புத்தான் வந்தது. ஏனெனில் இதன் வாயை எப்படி முடவைப்பதென்ற உத்தி எனக்குத் தெரியும். நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். அதன் எசமானனின் காவலாளியிடம் சென்று சிறிதுநேரம் கதைக்கவேண்டும் அல்லது ஒர் எலும்புத் துண்டை அதற்குப் போட வேண்டும். நான் இதில் இரண்டிலொன்றைச் செய்திருக்கக் கூடும். ஆனால் நான் ஒன்றையும் செய்யவில்லை. அதுவும் குரைத்துக் கொண்டேயிருந்தது. வெறுப்பான சப்தம்,
நான் நடைபோட்டுக் கொண்டிருந்த போது ஒரு முரட்டுப் புன்னகை பூத்தேன். ஏனெனில் எனது கையில் கல்லொன்று வைத்திருந்தேன். எனது முரட்டுச் சிரிப்பு அடங்கியதும் கரங்களைத் தூக்கி அதன் முகத்திற்கு கல்லை வீசினேன்.
ஒரு குரைப்புடன் அது மறைந்து போய்விட்டது. நான் தனிமையில் நடைபோட்டேன்.
இலையுதிர் காலமும் இங்கே வந்தது. நானும் நடைபோட்டபடியிருந்தேன். நாயின் குரைப்பும் தொடர்ந்தது. ஆனால் குரைப்பது இப்போது சற்றுக் கடுமையாயிருந்தது. அந்தப் பிராணியின் முகமோ எனது பார்வைக்கு அப்பால் வெகுதூரம் சென்றிருந்தது.
நான் இப்போது முரட்டுப் புன்னகை பூப்பதில்லை. நடைபோட்டுக்கொண்டு நாயின் குரைப்புச் சப்தத்தைக் கேட்டபடி இருந்தேன்.
ஓகஸ்ற் 14, 1933.
 
 

ஏறுவதும் முரட்டுத்தனமாய் அடைவதும்
பேராசிரியர் லியாங் சி கூ ஒருமுறை கூறினார் - ஏழைகளுக்கு மேலே ஏறிவிட விருப்பம், தாங்கள் செல்வந்தர் ஆகும்வரை மேலே ஏறிச் செல்ல விருப்பம். ஏழைகளுக்கு மட்டுமல்ல அடிமைகளுக்கும் மேலே ஏறிவிடத்தான் விருப்பம். அவர்கள் தம்மை அழிவற்றவர்கள் என்று நினைக்கிறார்கள். இதனால் தான் உலகம் அமைதியாய் இருக்கிறது. w
ஒருசிலரால்தான் உச்சிக்கு ஏறமுடிகிறது. ஒவ்வொருவரும் தாம்தான் அதுவென நினைக்கிறார்கள். அதனால்தான் விவசாயிகள், பாமரர்கள், எரு திரட்டுவோர், ஏழை ஆசிரியர்கள் தம்மிடம் உள்ளதோடு திருப்தியாய் உள்ளனர். கடும் உழைப்பாளிகள் வறுமையோடு போராடியபடி மேலே மேலே ஏறியபடி உள்ளார்கள். ஒரே பாதையில் பலரும் ஏறிக் கொண்டு இருப்பத்னால் இட நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. வகுக்கப்பட்டமுறைப்படி ஏறுகின்ற சாதாரண ஜீவன்கள் ஒருபோதும் உச்சியை அடையமாட்டார்கள். அறிவாளிகள் ஏறும்போது, அவர்களை ஒரு புறமாகவோ கீழேயோ தள்ளிவிட்டு அவர்களை மிதித்தும் அவர்களுடைய தோள்கள் மீதும் தலைகள் மீதும் ஏறியும் செல்வர். அநேகர் தமது எதரிகள் தமக்கு மேலில்லை பக்கத்தில்தான் உள்ளார்கள் என்பதை உறுதி செய்து கொள்வர். பலரும் எவ்விதமேனும் படிப்படியாக மேலே ஏற முயல்வர். ஆனால் கீழே தள்ளப்படுவர். மீண்டும் ஏற முயல்வர். ஒருபொழுதும் ஒயமாட்டார்கள்.
இருந்தபோதிலும் அநேகர் ஏற முயன்றும் ஒருசிலர் மட்டுமே உச்சியை அடைவர். இதனால் நல்லவர்கள் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். இதனால் இறுதியில் அமைதியான போராட்டம் நிகழ்கிறது.

Page 32
இதனால்தான் ஏறுவதோடு முரட்டுத்தனமாக அடைவதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இது எப்பொழுது நடக்குமென்றால் உங்களிடமுள்ளது போதாது என்பதை அறிந்தபிறகு. அப்பொழுது பின்புறத்திலிருந்து குரலொன்று வரும் "தள்ளிக்கொண்டு முன்னேறு" உங்கள் விறைத்துப்போன கால்கள் தடுமாறித் கொண்டிருக்கும்போது யாரோ உங்களைத் தள்ளி முந்துவது தெரியும். இது சிரமப்பட்டு ஏறுவதைக் காட்டிலும் மிகவும் இலேசானது. இதற்குக் கால்களையோ முழந்தாளையோ பயன்படுத்தத் தேவையில்லை. சற்று முன்பு நகர்ந்து தள்ளி முந்துவது. தள்ளி முந்தினால் ஐந்து லட்சம் டொலர் காசோ நல்லதொரு மனைவியோ, பிள்ளைகளோ, செல்வமோ அந்தஸ்தோ கிட்டும். இல்லாது போனால் கீழே நிலத்தில் விழுந்து விடவேண்டிவரும். நிலத்தில் இருப்பதால் குறையொன்றும் இல்லை. மீண்டும் ஏறலாம். சிலர் வேடிக்கைக்காகத் தள்ளுவார்கள். அவர்களுக்குத் தாம் விழுந்து போவதைப் பற்றிக் கவலையில்லை.
ஏறுவது பழங்காலம் தொட்டு இருக்கின்ற பழக்கம். பணிவான கல்விமானிலிருந்து அரண்மனை வாசி, கீழ்த்தர மனிதர்வரை இதற்கு அடிமைப்பட்டவரே. ஆனால் தட்டி முந்துவது சமீபகால நடைமுறை. இதனை ஆழ்ந்து நோக்கும்போது அந்நாளில்நிலவிய "இளம்பெண் பட்டுப் பந்தொன்றை வீசினாள்" இதற்கு முன்னோடியோ என்று கருத இடமுண்டு. இளம்பெண் பட்டுப் பந்தை மேல் நோக்கி வீசும்போது அவளை முடிக்க வேட்கை கொண்ட இளைஞர்கள் வாயில் நீர் வழிய மேலே நோக்கியபடி இருப்பார்கள். அந்நாளைய மூடமக்கள் அவர்களின் பணத்தின் நிறத்தைக் காண வேண்டுமென்று வற்புறுத்தினர். அல்லாது போனால் பல்லாயிரக்கணக்கான தொகையை விட வேண்டும்.
மேலே ஏறக்கூடிய வாய்ப்புகள் குன்றக் குன்ற, தள்ளி முந்துவோரின் தொகை, அதிகரித்தது. ஒவ்வொரு தினமும் மேன்நிலையில் உள்ளோர் புகழையும் பயனையும் அடைவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளனர். அதோடு அழியாத வாழ்வையும் கொள்வார்கள். தள்ளி முந்தும் வாய்ப்புக் குறைந்து உச்சிக்கு ஏறுகின்ற வாய்ப்புகள் கூடும்போது எல்லோரும் தங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க முயலுவர். மேலே ஏறியபின் தள்ளி முந்த முயல்வர். தள்ளி முயலுவது சரிவராவிடின் மீண்டும் ஏறமுயல்வர். இது அவர்கள் மரணிக்கும் நாள்வரை தொடரும்.
ஓகஸ்ற் 16, 1933.
 

இலையுதிர்கால ஆரம்பத்துச் சிந்தனைகள் சில
C ட்ெடுவாசலுக்கு வெளியே உள்ள நிலத்தில் இரண்டு எறும்புப் படைகள் சண்டையிட்டன.
எறோஷென்கோ என்கின்ற கிராமியக் கதை எழுத்தாளரை வாசகர் எல்வோரும் மறந்து விட்டனர். ஆனால் நான் மட்டும் அவர் வெளிப்படுத்திய அச்சத்தை நினைவு கூருகிறேன். "வருங்காலத்தில் ஒரு நொடிப்பொழுதில் மனிதர்களைச் சண்டையிடும் இயந்திரமாக மாற்றும் உத்தியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை நினைக்கப் பயமாய் இருக்கிறது."
இப்படிப்பட்ட இயந்திரம் நீண்ட காலத்திற்கு முன்பே கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த "நொடிப்பொழுதில்" என்பது மட்டும் அதிலில்லை. அந்நிய நாட்டுச் சிறுவர்களுக்கான புத்தகங்களில் போர் ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று காட்டும் உத்திகள் காட்டப்பட்டுள்ளன. அப்பாவிச் சிறுவர்களைக் கொண்டு போர்க் கருவிகள் செய்வித்தற்கான ஏற்பாடுகள் அவை,
மனிதர்கள் மட்டுமல்ல பூச்சிகள்கூட இதனை அறிந்துள்ளன.
எறும்புகளில் "போராளி" வகையுண்டு. இது கூடுகட்டும் வேலையையோ உணவு தேடிவரும் வேலையையோ செய்வதில்லை. மற்ற எறும்புகளுடன் சண்டையிடுவதே இதன் ஒரே வேலை. சிறிய குஞ்சு எறும்புகளுடன் சண்டை போட்டு அவற்றை அடிமைகளாக்கிவிடும். ஆனால் அவை வளர்ந்தவற்றோடு சண்டையிடுவதில்லை. ஏனெனில் அவற்றை மீளக் கற்பித்தெடுப்பது சிரமம். அவை எறும்புகளைக் குஞ்சு நிலையிலோ கூட்டுப் புழுப் பருவத்திலோ தமது "திருடர் குகை"க்கு

Page 33
எடுத்துச் சென்று. பழைய சிந்தனை எதுவுமற்ற நிலையில் வைத்து நிரந்தர அடிமைகளாக்க வைத்துவிடும். "போராளி" சண்டைக்குப் போகும்போது இந்த "அடிமைகள்" அவற்றைப் பின்தொடர்ந்து சென்று குஞ்சுகளையும் கூட்டுப் புழுக்களையும் தமது இருப்பிடத்திற்குக் கொண்டுவரும்.
ஆனால் இதுபோன்றதொரு எளிய முறையை மனிதஇனத்திற்கு வகுக்க இயலாது. அதனால்தான் மனிதர் "தோற்றுவாய் மலர்கள்".
ஆனாலும் உற்பத்தியாளர்கள் தமது பணியைக் கைவிடமாட்டார்கள். நாம் காண்பதுபோல சிறுவர்கள் வளர்ந்ததும் தமது அப்பாவித்தனத்தை மட்டும் இழந்தவர்கள் ஆகாமல் மந்தபுத்தியுள்ள முட்டாள்களாகின்றனர். பொருளாதார மந்தநிலை காரணமாக வெளியீட்டாளர்கள் விஞ்ஞான இலக்கிய நூல்களை வெளியிடுவதில்லை. அணை உடைந்து வெளிப்படும் மஞ்சள் ஆற்று வெள்ளம் போலப் பாடசாலைப் புத்தகங்கள் குவிந்துள்ளன. எதனைப் பற்றி. யவை இந்தப்புத்தகங்கள்? இவை எங்களுடைய பிள்ளைகளுக்குச் சாதிப்பது தான் என்ன? வலிமைபொருந்திய விமர்சகர்களிடமிருந்து இவை பற்றிய விமர்சனம் ஒன்றையும் காணோம். ஏனெனில் அவர்களுக்கு வருங்காலம் பற்றிய சிந்தனையே இல்லை.
ஆயுதப் பரிகரண மாநாட்டுச் செய்திகளுக்குப் பத்திரிகைகள் முக்கிய இடம் அளிப்பதில்லை. இது சீனாவில் யுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கிறது. போர் எதிர்கொள்ள வேண்டியதுதான். "போராளியைப்" பின்தொடர்ந்து சென்று தோற்று விட்டவற்றை தம் இருப்பிடத்திற்குக் கொண்டுவருவது அவைபெற்ற வெற்றியாகும். "தோற்றுவாய் மலர்களான" மனிதர்களுக்கு இது போதாது. நாம் உண்மையில் சண்டையிடத்தான் வேண்டும். ஆயுத உற்பத்தி செய்யும் எறும்புப் புற்றுகளை அழிக்க வேண்டும். எங்கள் பிள்ளைகளின் உள்ளங்களை நஞ்சாக்கும் இன்சுவை மாத்திரைகளைத் தருவோரை அழிக்க வேண்டும். வருங்காலத்தைச் சீரழிப்போரைத் தகர்க்க வேண்டும். மனிதப் போராளிகளுக்கு இதுவே பயனுள்ளதாகும்.
ஓகஸ்ற் 30, 1933.
 
 

GONES šGGON6JLIJITGTGOTTLİ இருப்பதன் இரகசியம்
கீபர் கெ காட் என்ற டேனிஷ் வேதாந்திக்கு வாழ்வு மந்தமாகத் தோற்றமளிக்கும். அவருடைய எழுத்துக்களில் எல்லாம் சலிப்பே தோற்றமளிக்கிறது. அதேநேரம் சில சுவையானவற்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அது வருமாறு:
ஒரு நாடகக் கொட்டகை தீப்பற்றி எரிகிறது. இத் தகவலைக் கோமாளி மேடைக்கு வந்து பார்வையாளருக்கு அறிவிக்கிறான். பார்வையாளரும் இதனைப் பகிடியாகக் கருதி கோஷம் இடுகின்றனர். கோமாளி மீண்டும் கொட்டகை தீப்பற்றி விட்டதென்று அறிவிக்கிறான். அவர்களின் சிரிப்பொலியும் கரகோஷமும் பன்மடங்காகிறது. எதனை. யும் பகிடியாகக் கொள்வோர் இருக்கும்வரை உலகம் சிரித்தபடியே அழியும்.
எனது கவனத்தை ஈர்ப்பது இந்தப் பந்தி மட்டுந்தான் அல்ல. இந்தக் கோமாளிகளின் தந்திரம், ஏதாவது காரியம் நடந்தேற வேண்டுமென்றால் அவர்கள் உதவுவார்கள். தமது எஜமானர் ஏதாவது குற்றம் புரிய வேண்டுமானால் இவர்கள் துணை போவார்கள். இரத்தக் கறைபடிந்த குற்றம் புரியப்பட்டால் இரத்தக்கறையே தெரியாதபடி செய்து விடுவார்கள்.
எடுத்துக்காட்டாக ஒரு கொடிய காரியம் நடந்து மற்றவரும் அக் கொடுமையை நினைத்து வருந்தும் போது கோமாளி பகிடிவிட்டு கடுமையைக் குறைத்து விடுவான். சில வேளைகள் தேவையில்லாதவற்றைச் சற்று மிகைப்படுத்தி கவனத்தைத் திசை திருப்பி விடுவான். இதனைப் "பேய்க்காட்டுதல்" என்பர். கொலையொன்று நடந்துவிட்டால் கொலை நடந்த இடத்தை விபரித்து, துப்பறியும் நிபுணரின்

Page 34
பாரிய பணியையும் விவரிப்பான். ஒரு பெண் கொல்லப்பட்டால் ஒரு விதத்தில் நல்லது. அவன் அவளை அழகான சவம் என்றோ அல்லது அவளுடைய நாட்குறிப்பையோ விவரிப்பான். ஒரு கொலை நடந்திருந்தால் இறந்தவரின் வாழ்க்கை சரித்திரத்தைக் கூறி இறந்தவரின் காதல் விவகாரங்களையோ வேறு சம்பவங்களையோ விபரிப்பான். இதனால் உணர்வின் வெம்மை தணியும். குளிர்ந்த நிரோ, பச்சைத் தேனிரோ இந்தப் பணியை, குளிரவைப்பதைச் செய்துவிடும். இவனுடைய இந்தப் "பேய்க்காட்டல்" இவனைப் பெரியதொரு இலக்கியவாதி ஆக்கிவிடும்.
முதியோரின் உத்வேகம் அடங்குமுன் ஒரு பெரும் அபாயஒலியை எழுப்பி விட்டால் கொலையாளிக்குப் பெரிதும் ஆபத்தாக முடியும். இதற்கிடையே கோமாளி பகிடி விட்டுவிட்டால் அபாயஒலிஎழுப்பியவர் வேடிக்கைப் பொருள் ஆகிவிடுவார். கோமாளி சுருங்கியும் நடுங்கியும் காட்டி மற்றவர் எவ்வளவு பெரியவரும் செல்வந்தரும் என்பதை வெளியிடுவான். அவன் தலையைத் தொங்கப் போட்டு மற்றவரின் பெருமையை எடுத்துவைப்பார். பெரும்பாலும் இக் கோமாளிகள் எல்லோரும் ஆண்களே. வேறு மாதிரியிருந்திருந்தால், தங்களை மோசம் புரிய வந்ததெனவும் பல அசிங்கங்கள் நடந்ததென எடுத்துக் கூறி, அவமானம் தாளாது தனது உயிரை விட இருப்பதாகவும் பாசாங்கு செய்வர். பல கோமாளிகள் சூழவிருந்தால் பல பயங்கர நிகழ்வுகளும் தமது வீரியத்தை இழந்து கொலையாளியை சூழ்ந்த சந்தேக அலைகள் சிரிப்பொலியில் முற்றாக அகன்றுவிடும். இப்பொழுது கோமாளி தர்மவானாகக் காட்சி தருவான்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் இல்லாதபோது வதந்திகளை - குசுகுசுப்புகளை - வாரமொரு முறையோ பத்து நாட்களுக்கு ஒரு முறையோ பத்திரிகைகளில் கோமாளிகள் எழுதி நிரப்புவர். இதனைத் தொடர்ந்து ஓராண்டுகளுக்கு மேல் படித்து வந்தால் ஒருவர் எப்படிப்பட்டவர் என்ற எண்ணம் வாசகர் மனதில் படிந்துவிடும். எப்படி ஒரு பிரபல சினிமா நடிகர் தும்முவார் என்றும் தெரியலாம். இது உண்மையில் பொழுதுபோக்கு ஆகும். சிரிப்பு விரும்பிகளின் சிரிப்பின் இடையே உலகம் ஒருமுடிவுக்கு வந்துவிடும்.
ஓகஸ்ற் 28, 1933
 
 

இரவைப் புகழ்ந்து
இரவை விரும்புவோர் தனிமையில் உள்ளோரும் ஒய்விலிருப்போரும் மட்டுமல்ல. சண்டையை விரும்பாதோரும் ஒளிகண்டு அஞ்சுவோரும் கூட.
மனிதர் பகல் வேளையிலும் சூரிய ஒளியுள்ள போதும் ஒருவிதமாகவும் இரவிலும் விளக்கொளியிலும் வேறுவிதமாக நடக்கிறார்கள். இரவு இயற்கை தைத்த மர்ம ஆடை போலிமுகமுடிகளையும் ஆடைகளையும் அகற்றிவிட்டு தமது வெறும் உடலைப் போர்த்திக் கொண்டு இருப்பார்கள்.
இரவு என்றாலும் கூட ஒளியும் நிழலும் இருக்கிறது. மெல்லிய வெளிச்சமும் அந்திநேர ஒளியும் இருக்கும். முழு இருட்டில் உங்கள் முன் உள்ள உங்கள் கைகளே கூடத்தெரியாது. இரவை விரும்புவோர் அதனைப் பற்றிக் கேட்கக் கூடிய காதுகளையும் பார்க்கக்கூடிய கண்களையும் உடையவராய் இருத்தல் வேண்டும். கனவான்கள் தங்களை நீட்டிக்கொள்ளவும் கொட்டாவி விடவும் விளக்கொளி. யிலிருந்து இருட்டறை நோக்கிச்செல்வார்கள். காதலர் நிலவொளியிலிருந்து மரநிழலை நோக்கிச் செல்வர். ஏனெனில் விளக்கொளியில் அவர்களின் தோற்றம் வேறுபடும். ஒளிபொருந்திய வெள்ளைத்தாளில் இலக்கிய கர்த்தாக்கள் பகல் வேளைகளில் எழுதி வைத்தவை இருள் சூழ்நதவுடன் வெறும் பொன்னிற அடையாளங்களாக பெளத்த சமய ஒவியங்களைப் போலத் தோற்றமளிக்கும்.
இரவு விரும்பிகள் அது வெளியிடும் வெளிச்சத்தைப் பெறுவர்.

Page 35
ஒரு நவநாகரிக யுவதி குதியுயர்ந்த காலணியை அணிந்து கொண்டு விளக்கொளியில் நிலத்தைத் தட்டியபடி வேகமாக நடந்து செல்லும் போது அவளுடைய் முக்கு நுனி மினுங்குவது அவள் தற்போதுதான் நாகரிகமாக இருக்கக் கற்றுக்கொள்ளுகிறாள் எனக் காட்டுகிறது. நீண்ட நேரம் பிரகாச ஒளியில் தொடர்ந்து இருந்தால் அழிவைத் தான் அவள் அறுவடை செய்யவேண்டியிருக்கும். வரிசை. யாக முடியிருந்த கடைகளினால் உருவான இருள் அவள் நடையை மெதுவாக்கி மூச்சுவிட ஏதுவாய் இருந்தது. இப்பொழுதுதான் இரவில் குளிர்ந்த காற்றை அனுபவிக்கும் வாய்ப்பை அவளுக்கு ஏற்படுத்தியது.
இரவு விரும்பிகளும் நவநாகரிக இளம் யுவதிகளும் இரவின் நற்பயனைத் துய்த்தனர்.
இரவு முடிந்த பின் மக்கள் எழுந்து கவனமாக வெளிவர முயல்வர். கணவனும் மனைவியும் ஆறு மணிநேரத்திற்கு முன்பு இருந்ததை விட வித்தியாசமாகத் தோற்றமளித்தனர். எங்கும் சப்தமும் சந்தடியுந்தான். உயர்ந்த சுவர்களுக்குப் பின்னால், உயர்ந்த கட்டிடங்களில், பெண்களின் இல்லங்களில், இருண்ட சிறைகளில், இருக்கை அறை. களில், இரகசிய அறைகளில் எங்கள் இருள் கவ்விக் கொண்டிருக்கும். பகற்பொழுதும் வந்து போவோரின் சப்தங்களும் இருளுக்கு ஒருமுடி. மனித எலும்புப் பானைக்கு ஒரு முடி. பிசாசின் முகத்துப் பூச்சு, இரவு மட்டுமே நேர்மையானது. நான் ஒரு இரவு விரும்பியாதலால், இரவைப் புகழ்ந்து இரவில் எழுதுகிறேன்,
ஜூன் 08, 1933.
 
 

தள்ளுதல்
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி. யொன்று வெளிவந்தது. பத்திரிகை விற்கும் பையனொருவன் பத்திரிகை விற்க டிறாம் வண்டியில் ஏறினான். தவறுதலாக இறங்கிக் கொண்டிருந்த பிரயாணியொருவரின் அங்கியை மிதித்துவிட்டான். ஆத்திரம் கொண்ட அந்தப் பிரயாணி அவனைப் பலமாகத் தள்ளினார். அவன் வாகனத்திலிருந்து கீழே தள்ளப்பட்டான். வாகனம் திடீரெனப் புறப்பட்டபடியால் அவனை நசுக்கி விட்டது. அதனால் அவன் இறந்து போனான். 、
பையனைக் கீழே தள்ளிய மனிதன் எங்கோ தலைமறைவாகி. விட்டான். மிதிபட்ட அவனுடைய அங்கியின் நீளத்தை வைத்துக் கணிக்கும் போது அவன் மிகவுயர்ந்த வகுப்பைச் சார்ந்தவனாக இல்லாவிட்டாலும் உயர்வகுப்பைச் சார்ந்தவனாய் இருக்கவேண்டும்.
ஷாங்ஹாய் நகர வீதிகளில் நடந்துகொண்டு போகையில் இருவகையான மக்கள் தென்படுவர். ஒருவகையினர் நேரே நடந்து செல்வர். நடைபாதையில் வந்து கொண்டிருப்பவர்களுக்கு சிறிதும் ஒதுங்கமாட்டார்கள். அவர்கள் மோதிக் கொண்டோ முந்திக் - கொண்டோ செல்வர். தமது கைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். தமது நீண்ட கால்களினால் முன்வைத்து ஒருவருமே வழியில் இல்லாதது போன்று நகர்ந்து, மற்றவர் விலகி ஒதுங்காவிட்டால் அவர்களது தோள்களிலோ வயிறுகளிலோ உழக்கிக் கொண்டு செல்வார்கள். இவர்கள் அந்நிய நாட்டு எஜமானர்கள, உயர் வகுப்பைச் சார்ந்த எங்களவர். ஆனால் சீனரில் உயர்வகுப்பினர், தாழ்ந்த வகுப்பினர் என்ற பேதமில்லை. மற்ற வகையினர் தேளின்

Page 36
கொடுக்குப்போல குட்டைக் கைகளும், திரும்பிய உள்ளங்கைகளும் உடையவர். வழிப்போக்கர் குட்டையிலோ சேற்றிலோ விழுந்துவிடுவார்கள் என்று யோசியாமல் அவர்களைத் தள்ளியபடி செல்வார். கள். அவர்கள் எங்கள் சகாக்கள்-உயர்வகுப்பினர். டிறாம் வண்டிகளில் அவர்கள் பிரயாணம் செய்யும்போது மூன்றாம் வகுப்பாக மாற்றம் செய்யப்பட்ட இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்வார்கள். அவர்கள் பத்திரிகைகள் படிக்கும்போது சாக்கடைப் பத்திரிகைகளைத்தான் படிப்பார்கள். வாசித்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் வாய்களில் விணிர் வழியும். பிறகும் நகர்ந்து போகும்போது தள்ளிக் கொண்டுதான் போவார்கள்.
டிறாமில் ஏறுகையில் ரிக்கற் வாங்கும் போதும், கடிதமொன்றைத் தபாற்பெட்டியில் போடும் போதும், இவர்கள் மனிதரைத் தள்ளிக் கொண்டுதான் போவார்கள். பெண்களும் சிறுவர்களும் தடுமாறிக்கொண்டு இவர்கள் முன்பு விழுந்தால் அவர்களை மிதித்துக்கொண்டு போவார்கள். உயிர்நீத்திருப்பின் அவர்களின் சவங்களின் மீது நடந்து செல்வர். தமது தடித்த உதடுகளை நக்கியபடி ஒன்றுமே நடவாதது போலவே செல்வார்கள். புள்ளரவுப் படகுத் திருவிழா(Dragon Boat Festival) நாடகக் கொட்டிலில் யாரோ "தீ" என்று கூச்சலிட்டார்கள். உடனே மீண்டும் தள்ளுவது ஆரம்பமாகிவிட்டது. பத்துக்கு மேற்பட்ட வலுக்குறைந்தோர் மிதிபட்டு உயிர் இழந்தனர். நிலத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் சடலங்களை பத்தாயிரம் மக்கள் வந்து பார்வையிட்டனர். மக்கள் சமுத்திரம் பெருகியது. கூடுதலாகத் தள்ளுவதும் இடம் பெற்றது.
தள்ளலின் முடிவு என்னவென்றால் நீண்ட புன்னகையும் "என்ன வேடிக்கை" என்கின்ற அறிவிப்புமே,
ஷாங்ஹாய்நகரத்தில் ஜிவித்தால் தள்ளப்படுவதும், மிதியுண்ணப்படுவதும் சகஜம். இந்தத் தள்ளலும், மிதிப்பதும் மற்ற இடங்களுக்கும் விரைவில் பரவப் போகிறது. வலுவிழந்த கீழ் வகுப்பு சீன மக்களைத் தள்ளிவிடவும் நசுக்கிவிடவும் விரும்புகிறார்கள். மேல் வர்க்கச் சீனர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டுவார்கள். "என்ன வேடிக்கை". எங்கள் கலாசாரத்தைக் காக்க எவ்வித தியாகங்களையும் செய்ய வேண்டும் தானே? எவ்வளவு முக்கியம் வாய்ந்தது இது?
ஜுன 08, 1933
ார்க்காலச் சிந்தனைகள்
 
 

நெடுஞ் சுவர்
ங்ெகள் அற்புதப் பெருஞ் சுவர்.
இந்தப் பொறியியல் சாதனை உலகப் படத்தில் உங்களை நிலை நிறுத்தி விட்டது. உலகம் முழுவதிலுமுள்ள ஓரளவு கற்றவர்கள் இதனை அறிந்து வைத்துள்ளார்கள்.
இதற்கு அநேகர் உயிர் நீத்துள்ளனர். இதில் ஹான் (சீன) இனத்தவர் ஒதுக்கப்படவில்லை. இது பழையதொரு நினைவுச் சின்னம். இதற்கு அழிவேற்பட வாய்ப்பில்லை. இது பாதுகாக்கப்பட வேண்டியது.
நான் என்னைச் சூழ ஒரு நெடுஞ் சுவர் அமைந்திருக்க வேண்டுமென்ற்று ஆசைப்படுகிறேன். பழைய செங்கற்கள் பிற்காலத்தில் புதிய செங்கற்களால் மீண்டும் வலுவூட்டப்பட்டன. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து எம்மைச் சூழ்ந்துள்ளன.
நெடுஞ்சுவரை புதிய செங்கற்களால் வலுவூட்டுவதை எப்பொழுது நிறுத்தப்போகிறோம?
இந்த அற்புத நெடுஞ்சுவருக்கு ஒரு சாபக்கேடு,
மே 11, 1925.

Page 37
செம்பதாகையினரைக் கட்டுப்படுத்தல்
பீஜிங்கிற்கும் தியான்ஜின்னிற்கும் இடைப்பட்ட பகுதிகளில் சிறிய, பெரிய யுத்தங்களில் அநேகர் இறந்து விட்டார்கள். இவையெல்லாம் செம்பதாகையினரைக் கட்டுப்படுத்தத் தொடுக்கப்பட்ட யுத்தங்கள். ஆளுனரின் மாளிகையின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தோர் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்களில் நாற்பத்தேழு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். கலகத்தை தூண்டியவர்கள் என்று சூகுவியானுடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் செம்பதாகையினரைக் கட்டுப்படுத்தலாம். பென்டியலிருந்து பீஜிங் மீது விமானங்களிலிருந்து மூன்று முறை பொழியப்பட்ட குண்டுகளால் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர். ஒரு கபில நிறநாய் காயத்திற்குள்ளானது. இதுவும் செம்பதாகையினரைக் கட்டுப்படுத்தவே நடத்தப்பட்டது.
பீஜிங்கிற்கும் தியான்ஜின்னிற்கும் இடையே குண்டு வீச்சால் இறந்த இரு பெண்களும் காயப்பட்ட சிறிய கபில நிற நாயும் செம்பதாகையினரோ இல்லையோ என்பதைப் பற்றி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்படாதபடியால் திட்டவட்டமாகக் கூற இயலாதிருக்கிறது.
ஆளுநரின் மாளிகையின் முன்னால் கொல்லப்பட்ட நாற்பத்தேழு பேரைப் பொறுத்தவரை அது தவறுதலாக நடந்த சம்பவம் என்று முதலில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
பீஜிங் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் "ஆளுநர் மாளிகை முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் நியாய பூர்வமானதே. அதில் யாரும் குற்றம் இழைக்கவில்லை" என்று தெரிவித்தது. இராஜ்ய சபை இறந்தோரின் குடும்பத்திற்கு நியாயமான நஷ்டஈடு தரத் தீர்மானித்
போர்க்காலச் சிந்தனைகள்
 
 
 

தது. சூகுயான் நடத்திச் சென்ற கலகக்காரர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கு குண்டுகளைத் தடுக்கும் மந்திரம் தெரியுமா?
சுருங்கக் கூறின் அங்கே கட்டுப்படுத்தல் இடம் பெற்றது. ஆனால் செம்பதாகையினர் எங்கே?
சிறிது நேரத்திற்கு அவர்கள் எங்கே என்பதைப் பற்றிச் சிந்தியாமல் இருப்போம். சூகுவியானும் மற்றவர்களும் ஓடிவிட, உயிர் நீத்த தியாகிகளுக்கு மரணச் சடங்குகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
ரஷ்ய கல்வி நிதியச் சங்கத்தில் இரண்டு வெற்றிடங்கள் உண்டு. ஆறாம் திகதி வெளிவந்த "பீஜிங் நியூஸ்" பத்திரிகையில் வெளிவந்த அறிக்கை வருமாறு.
ஒன்பது கல்லூரிகளைச் சார்ந்த ஆசிரியர் சங்கம் சட்ட அரசியல் பொருளாதாரக் கல்லூரியில் நடத்திய கூட்டத்திற்கு ஸா லியாங்சோ தலைமை தாங்கினார். அப்பொழுது தாம் கல்வி அமைச்சருடன் சில தினங்களுக்கு முன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிக் குறிப்பிடுகையில் நிதி நிறுவனத்தைப் புனரமைப்பது பற்றி ஆலோசிக்கையில் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார் : வெற்றிடங்களை அரசாங்கப் பிரதிநிதிகளைக் கொண்டு நிரப்பும் யோசனையை முழுமூச்சாக எதிர்க்க வேண்டும். வெற்றிடங்கட்கு வெளியுறவு, கல்வி, நிதி இலாகா அதிகாரிகளை நியமிப்பது என்று யோசனையை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
தனிநபர் மீது வெறுப்புக் காரணமாக இத்திட்டத்தை எதிர்க்கவில்லை. ரஷ்ய நிதியில் நிறையப் பணம் இருக்கிறது. அதிலிருந்து பெரும் பங்கை கல்வி நிலையங்கள் எதிர்பார்க்கின்றன.
அதே பத்திரிகையில் ஐந்து தனியார் பல்கலைக் கழகங்களும் ரஷ்ய நிதியில் ஆர்வம் காட்டுகின்றன" என்ற தலைப்பில் வேறொரு செய்தியும் வெளிவந்தது.
உயிர்நீத்த நாற்பத்தேழு பேர் உண்மையில் சீன தேசத்தில் கல் அபிவிருத்திக்குச் செய்த சேவை சற்றும் குறைந்ததல்ல,
"நியாயமான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்" என்பதை யார் தான் மறுப்பார்கள்.
t இதிலிருந்து சீனக் கல்வி நிலையங்கள் ரஷ்யறுபிள் பெறுவதைக் குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.
ஏப்ரல் 6, 1926.

Page 38
தலைகள்
பேராசிரியர் லியாங் ஷிக்யூ என்பவர் று ஸோ பற்றி எழுதிய கட்டுரை மார்ச் 25ம் திகதிய "ஷென் பாவோ"வில் வெளியானது. அப்ரொன் சிங்க்ளெயர் பபிற்றைத் தாக்கி எழுதியதினை எடுத்துப் பார்க்கையில் "வேறொரு கை கொண்டு கொலை புரிவது", "சரியான முறையல்ல" என்று தோன்றுகிறது.
றுஸாவைத் தாக்குவதற்கான இரண்டாவது காரணம் நூறுஸோவின்’ அழியாத்தன்மை தாராளமய எழுத்தாளர்களுக்கு நினைவுச் சின்னமாகத் திகழ்வது. ஆகவே றுஸோவின் குணநலங்கள் மீதுள்ள தாக்குதல் அவர்களுடைய நடத்தைக்கான தாக்குதலாகும் என நாம் கூறலாம்.
இது "பிறர் கையால் கொல்வது" அல்ல. "தலையை இரவல் பெற்று எச்சரிக்கை விடுவது" ஆகும். தாராளமய எழுத்தாளர்களின் நடத்தையை முன்னுதாரணமாகக் கொள்ளாதிருந்தால் அவருடைய தலை இவ்வளவு தூரம் கொண்டு வரப்பட்டு சீனாவில் காட்சிப் பொருளாகியிராது. எங்கள் தாராளமய எழுத்தாளர் அவரைப் பாழ்படுத்தி கல்லறையிலும் அவர் நிம்மதியில்லாதிருக்கச் செய்து விட்டார்கள். அவர் புரியாத தவறுக்கு அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். எவ்வளவு கவலைக்குரிய விஷயம்.
பேராசிரியர் லியாங் தமது பேனாவால் தண்டனை வழங்கியது அவருக்கு பெருமை தரும் செயலல்ல. அவர் றுஸோவின் தலையைக் காட்சிப் பொருள் ஆக்கும்படி கூறவில்லை. நான்தான் இதனை வெளியிட்டேன். ஏனெனில் இன்றைய செய்தித் தாள்களில் பொதுவுடமைவாதி குவோ லியாங்கின் தலை ஹர னானின் தலையாய
 
 

தண்டனையாக சங்ஷா நகரிலிருந்து யூயாங் நகரம்வரை இடது புறமாகவும் வலதுபுறமாகவும் அவரது தலை காட்சிக்கு வைக்கப்பட்டது என்று வெளிவந்தது. துரதிர்ஷ்டவசமாக ஹனான் அதிகாரிகள் ஒழுக்க நெறிகளுக்கு எதிராக லெனின் கூறியதற்கு குற்றப் பத்திரிகை வாசிக்கவில்லை. (மார்க்ஸ், ஹெகல் ஆகியோருக்கும் இக் கதி ஏற்படுத்தப்படவில்லை). அவர் இழைத்த தவறுக்கு விளக்கம் கோரவில்லை.
பார்க்கும்போது ஹசனான்காரர்களுக்கு விமர்சகரே இல்லை. யுவான் ஷோவின் மரணத்திற்குப் பின் யாரோ "றொமான்ஸ் ஒப் த g5, asiilot" (Romance of the three Kings)96i 6TCupg5u d56,6056T607gy நினைவுக்கு வருகிறது.
இடது புறமாய் தலை தாழ்த்தி, வாளை ஏந்தி அவர் வயதினரில் தலை சிறந்தவர் அவரின் துண்டிக்கப்பட்ட தலைக்கு பத்தாயிரம் அனுப்பப்பட்டது. நீங்கள் ஆலோசகர் தியாங் பெங்கைக் கொன்றது தவறான செயல்.
என்னுடைய நூலொன்றில் றுஸோவிற்கு வருத்தப்பட்டு எழுதிய இரங்கற் கிதம் :
பேனாவைத் தூக்கியபடி வெறுந்தலையுடன் வெளியேறினார். அவர் வயதிற்கு மிகவும் கொடியவர், பத்தாயிரம் அவரின் துண்டிக்கப்பட்ட தலைக்கு அனுப்பப்பட்டது. இளைஞரைப் பயிற்றுவித்தது நீங்கள் செய்த தவறு.
ஏப்ரல் 10, 1928.

Page 39
செம்பதாகையினரை அகற்றுவது ஒரு பெரியகாட்சி
ப்ெரல் 6ம் திகதிய ஷென் பாவோவில் "சங்ஷாவிலிருந்தொரு கடிதம்" என்பதில் ஹர0 னான் அதிகாரிகளால் பொதுவுடமைக் கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர்கள் கைப்பற்றப்பட்டு அவர்களில் முப்பது பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மார்ச் 29ம் திகதி எட்டுப் பேரின் தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் எழுதப்பட்டது. கட்டுரை மிகவும் தெளிவாக எழுதப்பட்டிருந்ததனால் அதனை இங்கே எடுத்து வைக்கிறேன். ܫܝ
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகளில் மூவர் பெண்கள் அவர்களுடைய வயதுகள் முறையே பதின்நான்கு, பதினாறு, இருபத்திநான்கு. முழு நகருமே அவர்களைக் காணத் திரண்டு விட்டது. அந்தக் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு வருவது கடினம். பொதுவுடமைக் குழுத் தலைவர் குவா லியாங்கின் தலை நீதிமன்ற வாசலில் காட்சிக்கு வைக்கப்பட்டமை அநேகரையும் அங்கே ஈர்த்தது.
நீதிமன்ற வாசலுக்கும் எண்கோணத் திடலிற்கும் இடையே போத்துவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது. குவாலியாங்கின் தலையை தென்புற வாசலில் கண்ட பிறகு வடக்கு வாசலில் - ஆசிரிய சங்கத்திற்கு அருகே - சென்று இறந்த பெண்களின் சடலங்களைப் பார்வையிட்டனர். சிலவேளைகளில் சிலர் முதலில் பெண்களின் சடலங்களைப் பார்த்த பிறகு குவா லியாங்கின் தலையைப் பார்க்கச் சென்றனர். முழு நகரிலும் பொதுவுடமைவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் பேரார்வம் பொங்கி வழிந்தது. மாலை நேரம் வரை பார்வையாளர் கலைந்து போகவில்லை.
 
 

இதனை உங்கள் முன் எடுத்து வைத்த பிறகு தான் நான் பிசகு செய்துவிட்டேன் என நினைக்கிறேன். நான் வெறுப்பை அள்ளி வீசுகிறேன் என்று சந்தேகிப்பார்களோ என நினைக்கிறேன். நான் இருளைப் பரப்புகிறேன் என்று மற்றவர்கள் குற்றம் சாட்டுவார்கள். என் மீது சாபமிடுவார்கள். இருளைத்தான் எனது கல்லறையில் சூழக்கொண்டிருப்பேன்.
நான் அமைதியாக இருக்க இயலாத போதும் "கலை கலைக்காகவே" என்பதைப் பற்றித் தொடர்ந்து விமர்சித்தபடி இருப்பேன். இந்தச் சிறிய அறிவிப்பு எவ்வளவு பலம் வாய்ந்தது. இதனால் நீதிமன்ற வாசலில் குத்திவைக்கப்பட்ட தலையையும் ஆசிரிய சங்க வாசலில் உள்ள தலையில்லாத பெண்களின் முண்டங்களையும் பார்க்க எனக்கு விருப்பம், இடுப்பு வரையிலாவது நிர்வாணமாகப்பட்டுள்ளனர். நான் தவறானவனாதலால் எனது கணிப்புப் பிழையாக இருக்கும். எல்லாக் குடிமக்களும் ஒரு பகுதியினர் தெற்கு வாசலுக்கும் மறுபகுதியினர் வடக்கு வாசலுக்கும் விரைகிறார்கள். கூக்குரல் எழுப்புகின்றனர். நான் விபரமாக எழுதுகிறேன். அவர்களுடைய முகங்களில் திருப்தி நிரம்பி வழிகிறது.
இவ்வளவு சக்திவாய்ந்த எழுத்துகளை நான் படித்த புரட்சிகர இலக்கியங்களிலும் காணவில்லை. அன்டிறியேவ் "எங்களை அச்ச மூட்ட வேண்டுமென்று எழுதுகிறார். ஆனால் அவருக்கு வெற்றி கிட்டவில்லை. இந்த முயற்சியில் ஈடுபடாத செகாவ் எழுதுவது எம்மை நடுங்க வைக்கிறது" என விமர்சகர் றொகா செக்ஸ்ஷி எழுதுகிறார். இங்கேயுள்ள சில நூறு வார்த்தைகள் ஒரு குவியல் சிறுகதைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்தன. ஏனெனில் இது உண்மைச் சம்பவம்.
எனக்கு அச்சமாயிருக்கிறது. சில தியாகிகள் நான் புரட்சியின் மீது இருளைப் பரப்புகிறேனோ என்று நினைக்கக்கூடும். அதற்கு அவர்களிடம் சில காரணங்களுமுண்டு. இன்று சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் இன்றைய பத்திரிகைகளிலெல்லாம் விசுவாசமான புரட்சியாளரின் கைதையும், விடுதலையாவதையும் பற்றிய செய்திகளே நிரம்பி உள்ளன. உங்களைத் தெளிவுபடுத்த முடியாவிட்டால் அது துரதிர்ஷ்டமே.
இதனை முழுமையாக நம்பினால் மனிதரின் மனதில் தளர்ச்சி ஏற்பட்டுவிடும். தலைகளைக் காட்சிப் பொருள்களாக வைப்பதோடு புரட்சிகள் ஒய்வதில்லை, சந்தர்ப்பவாதிகள் உட்புகுந்து உயர்பதவி களைக் கைப்பற்றி தமக்குள் முரண்படும்போதுதான் புரட்சி முடிவுக்கு

Page 40
வரும். நான் இங்கு "பொல்ஷிவிசம் பற்றியல்ல - மற்ற "இசம்"கள் பற்றித்தான் குறிப்படுகிறேன். இருளில் இருந்தபடி எப்படி எழுச்சி கொள்வது என்று தெரியாது இருப்பதனால் அல்ல, "ஒளிமயமான எதிர்காலம்", "வெற்றிக்குவழி" ஆகியவற்றை அறிந்து உங்களோடு சேர்ந்து புரட்சியாளராகவில்லாது போயினும் சந்தர்ப்பவாதிகளாக மாறார். சந்தர்ப்பவாதிகளும் திட்டம் வெற்றிபெறுமா இல்லையாவென்று கூறுவர்.
முடிவாக நான் கூறுவது இதுதான் - சற்று இருளைப் படரவிட்டபடி கூறுகிறேன். "தற்காலச் சீனமக்கள்" தலைகளையும் பெண்களின் சடலங்களையும் பார்க்கத் துடிக்கின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளில் நாட்டமில்லை. யாருடையது ஆயினும் இவை கிடைக்கப் பெற்றால் சென்றோடிப் பார்ப்பார்கள். நான் கடந்த இருபது ஆண்டுகளில் கண்டவை இவைதான். குத்துச் சண்டைக்காரரின் எழுச்சி, சிங் பரம்பரையின் முடிவுகாலத்தில் ஒடுக்கப்பட்ட எழுச்சிகள், 1913, சென்ற ஆண்டு, இவ்வாண்டு நடந்தவை ஆகியவை தான்.
ஏப்ரல் 10, 1928.
 
 

பிறைச்சந்திர சங்கத்தின் விமர்சகர்களின் பங்களிப்பு
பிறைச்சந்திர சங்க விமரசகர்கள் குறை கூறுவதை விரும்புவதில்லை. ஆனால் குத்தலாக எழுதுவோரைக் குறை கூறுவார்கள்.
இன்று நிலவிவரும் நிலையைக் குற்றம் காணுவதை பிறைச்சந்திர விமர்சகர்கள் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட அதிருப்தியாளரும் இருக்கிறார்களே!
இது "பழிக்குப்பழி" போன்றதொரு பிரச்சனையாகும். அவர்கள் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்கள்.
உதாரணமாகப் கொலைபுரிவது பிழையானது. கொலையாளி. யைக் கொல்பவனும் கொலையாளி தான். அவன் முன்பு செய்தது தவறு என்று கூறிவிடலாமா. மக்களைத் தாக்குவதும் கூடத் தவறானதே. நீதவான் ஒருவர் தண்டனை வழங்குவோனுக்கு கசையடி கொடுக்கும்படி உத்தரவிடுவது குற்றமாகாது. இதே முறையில் பிறைச். சந்திரச் சங்கத்தாரின் விமர்சகர்கள் மற்றவர்களை அவதூறு செய்வார்கள். அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம்.
மீண்டும் பழைய கதைதான். மரணதண்டனை நிறைவேற்றுவோரும் தண்டனை நிறைவேற்றுவோரும் ஒழுங்கை நிலைநாட்டுவதனால் பாராட்டுக்குரியவரே. தங்கள் அதிகாரத்தைப் பிரயோகித்து மக்களுக்கு அறிவுரை வழங்கத் தகுதி படைத்தவர்கள். பொது அமைதியைக் குழப்பாத வரை அதிகாரிகள் கண்டும் காணாதது போலிருப்பர். W

Page 41
சட்ட ஒழுங்கை நிலை நாட்டிய பிறகு பிறைச் சந்திர சங்க விமர்சகர்கள் எல்லோரும் விரும்பும் கருத்துச் சுதந்திரம் நினைக்க மட்டுமே. நிறைவேற்றவல்ல.
சட்ட ஒழுங்கை நிலைநாட்ட விதிகள் இருந்த போதிலும் சிந்திக்க அனுமதிப்பதில்லை. இரண்டு விஷயங்களில் திருப்தியினம் இருக்கக் கூடும் என்று கூறுவதில் ஆசைப்படுகிறேன்.
1928
 
 

கனவான்கள் நடத்தும் அரசாங்கம்
dFமீபத்தில் வெளியான "கிறசன்ற் (p6ir" (Crescent Moon) சஞ்சிகையில் திருவாளர் லியாங் வழிக்யூ தற்போதுள்ள நிலையில் திருப்தியீனத்தினை அங்கீகரித்துள்ளார். தாறுமாறாகக் கண்டனங்களை மட்டும் வெளியிடுவதை விடுத்துக் குறைக்கான பரிகாரத்தையும் வெளியிடவேண்டும்.
இது ஏன்? நீங்கள் சுகவீனமற்று இருக்கையில் மருந்து வேண்டும். "மூவரின் கருத்துக்கள்" என்பதில் முதலாவது மருந்து, அடுத்தது கொம்யூனிசமீ. அடுத்தது தேசியம், குழப்பமான ஆட்சி, மற்றது கனவான்களின் அரசாங்கம் என்கிறார் லியாங்.
இத்தனை மருந்துகளையும் பயன் அற்றது என்று ஒதுக்கிவிட்டால். என்ன மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது.
இது உண்மையில் கீழ்த்தரமான மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. நான் ஒரு தனியாளிடமிருந்து இத்தகைய கட்டுரையை எதிர்பார்க்கவில்லை. மூவர் கருத்துக்கள், ஆங்கிலேயர் அமெரிக்கரின் சுதந்திரக் கொள்கைகளுக்கான மாற்றீடு என்று கருத்துடையன. பொதுவுடமைவாதிகள் றஷய றுாபிளை ஏற்பவர்கள் - தேசியம் மிகவும் குறுகலானது, குழப்பமான ஆட்சியும் வெறுமையானது. ஆகவே திரு. லியாங் தமது கட்டுரையில் தாம் அறிந்திருந்த கட்டுரையாளரின் குற்றங்களை மிகைப்படுத்தியுள்ளார்.
உண்மையில் புரிந்து கொள்வதில் ஏற்படும் தவறுகளையும் ஆட்சிமுறைகளிலுள்ள தீங்குகளையும் எடுத்து முன்வைப்பதில்

Page 42
தவறொன்றும் இல்லை. உங்களிடம் மாற்றுத் திட்டம் இல்லாது போனாலும் பரவாயில்லை. இது எப்படியென்றால், நீங்கள் நசுக்கப்படும் போது நல்ல மாற்றுத் திட்டம் உங்களால் வெளிப்படுத்தப்படும் வரை வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை, மாற்றுத் திட்டம் தெரிந்தால் மெளனமாக இருக்க வேண்டுவதில்லை.
இவர் குறிப்பிடும் கனவான்களின் அரசாங்கம் என்னும் கருத்தை மெதுவாக ஒதுக்கிவிடலாம். இது மருந்தாக இருப்பதைக் காட்டிலும் ஒரு விளம்பரந்தான். பிரபல வைத்தியர் "நல்ல மருந்து" என்று கூறுவதுபோல. நோயினைக் குணப்படுத்த பிழையான மருந்தைப் பாவிக்க வேண்டாம். இப்படிப்பட்ட மருந்தை வைத்தியர் குறிப்பட வேண்டாம். நாம் இதனை உதவாதது என்று ஒதுக்கி விடலாம்.
வைத்தியர் பொறுமையை இழந்து நான் கூறும் "கனவான்களின் அரசாங்கம்" உதவாததென்று நகையாடுகிறீர்களே. உங்கள் மாற்றுத் திட்டந்தான் என்ன? இது தற்போதுள்ள நிலை நகைப்பிற்கிடமான நிலைமை, எந்த நிலையான முறையையும் அறிந்திராவிட்டாலும் ஏதாவது ஒன்றை எடுத்து வையுங்கள். ஏதாவதொன்று கூறமுடியாதிருப்பதற்குக் காரணங்கள் பல இந் நாட்களில் தலை தூக்கி இருக்கின்றன.
ஏப்ரல் 17, 1930,
 
 

சண்டைகளைப் பார்ப்பது
சீன மக்கள் எப்பொழுதும் நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம் என்பர். ஆனால் அவர்கள் நேசிப்பது சண்டையைத்தான். மற்ற விலங்குகள் தமக்குள் சண்டை போடுவதையும் பார்க்க விரும்புகிறோம். சாதாரணமாக கோழிச் சண்டை, சில்வண்டுச் சண்டை ஆகியவையே. தென்பகுதியில் பாடும் பறவைகளையும் பிற பறவைகளையும் சண்டையிட விடுவர். வடபுலத்தில் சிட்டுக்குருவிகள் சண்டையிடுவதை வேலை வெட்டி அற்றவர்கள் கூடிநின்று கண்டு களிப்பர். தம்முள் பந்தயமும் கட்டுவர். ஆதி காலத்தில் உண்ணிகளை மந்திர தந்திரம் புரிவோர் சண்டையிட விடுவர். இவ்வாண்டு "ஈஸ்ரேண் மகளின்" (Eastern Magazine) இல் காளைகள் சண்டையைப் பற்றிப் பார்த்தேனர். ஸ்பெயின் தேசத்தில் காளையோடு மனிதன் சண்டை போடுவது போலின்றி காளையோடு காளை சண்டையிடுகிறது.
அவற்றின் சண்டையிடத்தும் நாம் கலந்து கொள்ள வேண்டாம். சும்மா பார்த்துக் கொண்டிருப்போம்,
போர் விரும்பிகள் வேறொன்றும் செய்யமாட்டார்கள். சண்டைதான் போடுவார்கள். மக்கள் கலந்து கொள்ள வேண்டாம். சும்மா பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.
போர் விரும்பிகள் தாங்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதில்லை. போர் வீரர்களை சண்டையிட விடுவார்கள். ஆண்டு தோறும் நடைபெறும் யுத்தங்களால் தலைவர்கள் நன்றாகவே இருப்பார்கள். அவர்களுடைய கருத்து வேற்றுமைகள் விரைவில் மறையும். தங்களுக்குள் சந்தோஷமாகக் குடித்து மகிழ்வார்கள். எதிரிகளுடன் ஐக்கியப்பட்டு நாட்டு நலனிற்குப் பாடுபட உறுதி பூணுவார்கள்.

Page 43
சொல்லத் தேவையில்லை. விரைவிலேயே மீண்டும் சண்டையிடத் தொடங்குவர்.
ஆனால் மக்கள் தங்கள் விளையாட்டைத் தொடரட்டும். அவர்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு இருக்கட்டும்.
எங்கள் போராளிகள் அந்நிய எதிரிகளுடன் வேறுவிதமாக நடக்கிறார்கள். அவர்கள் நெருக்கத்தில் உள்ளபோது அகிம்சை முறையைக் கைக்கொள்வர். அவர்கள் தூர உள்ளபோது ஆயதங்களைத் தாங்கியபடி இருப்பர்.
"அகிம்சை" என்னும் பதம் தெளிவாத் தெரிகிறது. "ஆயதமேந்தி வருதல்" எனும்போது ஆயுதங்களைத் தயாரிக்கும் முறையை என்றோ மறந்து விட்டோம். விளக்கம் தர தொல்பொருளாளர் வரட்டும். அதன் பிறகு ஆயுதங்ளை உற்பத்தி செய்து முன்னேறுவோம்.
எங்களுக்குள் சண்டையிட நாம் இறக்குமதி செய்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது நல்லது. சீன தேசத்தின் மக்கள் தொகை மிகவும் அதிகமானது. ஆகவே சண்டையைக் கண்டு களிக்க ஒரு சிலராவது மிஞ்சுவர். அதனைச் செய்யும் போது நாம் அந்நிய எதிரிகளுடன் சமாதானமாக விரும்புகிறோம் என்பதைக் காட்டிக் கொள்வோமே.
ஜனவரி 24, 1933,
 
 

பறந்து போவதற்கு மன்னிப்பு
ஆதிகாலத்தில் பெண்ணாய்ப் பிறப்பது துர்ப்பாக்கியம். நீங்கள் செய்வதெல்லாம் பிழையாகத் தோன்றும். முழு உலகமுமே உங்களை ஏசும். இது இப்பொழுது மாணவர்கள் மீதாக மாறிவிட்டது. அவர்கள் எது செய்தாலும் கண்டனத்திற்கு உள்ளாகிறது.
சென்ற ஆண்டுப்பனிக்காலத்தில் மாணவர் செய்த வீண் ஆர்ப்பாட்டத்தை நினைவு கூருவோம். சிலர் தென்புலம் வர விரும்பினார்கள். சிலர் வடபுலம் போக விரும்பினார்கள். இருபுறம் போகவும் புகையிரதமில்லை. அவர்கள் தலைநகரை நோக்கிச் சென்று மனுவைச் சமர்ப்பித்தபோது அவர்களைப் பிற்போக்குவாதிகள் பயன்படுத்தினர். துப்பாக்கி முனைகளால் அவர்களின் தலைகள் தாக்கப்பட்டன. வேறு சிலர் நீரில் பாய்ந்து மூழ்கினர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவர்கள் கறுப்பும் நீலமுமென அறிவிக்கப்பட்டது. அதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை.
ஆனால் ஒருவரும் கேள்வி ஏதும் எழுப்பவில்லை. அல்லது எதிர்ப்பும் காட்டவில்லை. சிலர் ஆரவார ஒலி கூட எழுப்பினார்கள்.
சிலர் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.சிலருடைய பெற்றோருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள். ஆராய்ச்சியில் ஈடுபடும்படி அறிவுரைகளும் வழங்கப்பட்டன. சென்ற எல்லாமே நன்றாக இருந்தன. ஈற்றில் அமைதி நிலவியது. ஷாங்ஹாய்கு வான் இழக்கப்பட்டது. ஷாங்ஹாயில் அவ்வளவு தூரம் ஒன்றுமில்லை. பீஜிங் பிழையாகி விட்டது. ஏனெனில் ஆராய்ச்சிக் கூடங்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஜினான் பல்கலைக்கழகம், தொழிலாளர் பல்கலைக்

Page 44
கழகம், ரொன்ஜி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சென்ற வருடம் நடந்தவற்றை ஷாங்ஹாய் வாசிகள் நினைவு கூரட்டும். அவர்கள் எப்படி ஆராய்ச்சிகளை மேற்கொள்வர்?
பீஜிங் பட்டப்படிப்பு மாணவர் நினைவில் நிற்கும். இம்முறை தமது தலைகளில் துப்பாக்கி முனைத் தாக்குதலோ நீரிற்குள் குதித்து கறுப்பும் நிலமுமாகும் நிலையோ இராது. அவர்கள் புதிய உத்தியைக் கண்டுவிட்டார்கள். வீடுகளுக்குள் சிதறிக் கிடப்பது.
இது சில வருடங்களாகக் கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஆனால் மக்கள் அவர்களை மீண்டும் ஏசுகிறார்கள். சாரண இளைஞர்கள் தியாகிகளின் மரணகிதங்களில் "இவர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மணம் வீசட்டும்" என்ற வாசகத்தைப் பொறித்து உள்ளனர்.
ஆனால் நாம் அவற்றைப் பிரதிபலிப்பதைக் கைவிடுவோம்.
கல்லாலான நினைவுச் சின்னங்கள் மொழி, சரித்திர நிலையங்களி. லிருந்து வெகு தூரம் நகர்ந்து விட்டன. மாணவர் எப்படி ஆளுக்கொரு ஆகாய விமானத்தை வைத்திருக்க முடியும்? சீனத் துப்பாக்கி முனைகளால் தாக்கப்படும்போது எப்படி ஆராய்ச்சிக் கூடங்களில் ஒளிந்து கொள்ள முடியும்? அந்நிய துப்பாக்கிகளும் விமானங்களும் ஆராய்சிக் கூடங்களிலிருந்து துரத்துவதை எப்படி தவிர்த்துக் கொள்ள இயலும்?
ஜனவரி 24, 1933.
 
 

விஷயத்தின் உண்மை நிலை
உண்மை என்பது அது தொனிப்பதுபோல அவ்வளவு அழகானது அல்ல.
"சுதந்திரப் பேச்சு" ஒன்று நாம் கூறுவது உண்மையில் சுதந்திரமானது அல்ல. சுதந்திரப் பேச்சு என்றே கூறிக் கொண்டு அதற்குரிய கட்டுப்பாடுகளுக்குள் நடமாடுவோம்.
பீஜிங்கிலிருந்து கலைப் பொக்கிஷங்களை அப்புறப்படுத்துவதும் மாணவரை வெளியே போக அனுமதி மறுப்பதும் நோக்கற்பாலது. இந்த உத்தரவுகளுக்கு நியாயமும், கண்டனத்திற்கு நியாயமும் உண்டு. இவை வெறும் வார்த்தைகளே. விஷயத்தின் சாரமல்ல.
இவை புராதன சரித்திரச் சான்றுகள் என்று நீங்கள் கூறக்கூடும். அவை உடனடியாக பொக்கிஷங்களாகக் கருதப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இது அர்த்த புஷ்டியானது. ஆனால் பீஜிங் மிகவும் புராதனமானது. எல்லாவற்றைக் காட்டிலும் பழமை வாய்ந்தது. புழுவான யூவைப் பற்றிப் பேசுவதை நாம் தவிர்ப்போமாக. இந்த இடம் ஷாங், ஜெளவ் வம்ச காலத்திலிருந்து பிரபலமானது. இதனை ஏன் கைவிட்டு நினைவுச் சின்னங்களை அப்புறப்படுத்த வேண்டும்? புராதனச் சின்னங்கள் - கலைப் பொக்கிஷங்கள் பெறுமதியானவை என்பதற்காகவல்ல. ஆனால் பீஜிங்கைப் பறி கொடுத்த பின் எந்த நேரத்திலும் இவற்றை வைத்திருக்கலாம். எந் நேரத்திலும் நல்ல விலை பெறலாம் என்பதற்காகவே.
கல்லூரி மாணவர்கள் நாட்டின் முதுகெலும்புகள் ஆனபோதிலும் அவர்களின் பெறுமதி என்ன? ஒவ்வொருவரும் ஐரோப்பாவிலோ

Page 45
அமெரிக்காவிலோ ஐந்நூறு டொலர் ஈட்டித் தருவாராயின் ஏற்கெனவே அவர்களை பொட்டலமாகக் கட்டி புராதனப் பொருட்களோடு வெளியேற்றி இருப்பார்கள். விசேட புகையிரதங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றி இருப்பார்கள். வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமான இடத்தைப் பெற்றிருப்பர்.
பல்கலைக்கழக மாணவர் அதிக தொகையானவர்கள். மிகவும் புதியவர்கள். பரிதாபத்திற்குரியவர்கள்.
இந்த விழற் பேச்சுக்கள் போதும். "யெலோ ஸ்ரோக் ரவர்" (Yellow Stork Tower) என்பதில் குய் ஹவ்வின் கவிதையின் பாணியில் அவர்களின் கதிக்காக கண்ணிர் வடிக்கிறேன்.
"பண்பாட்டுடன் பறந்து விட்டனர் - எமது
செல்வந்தரும் பெரியோரும். பண்பாட்டு நகரை வெறுமையாக விட்டு அகன்றுவிட்டனர். பண்பாடு ஒருமுறை போனால் மீண்டும் வராது. வெறுமையாய் இருக்கும் புராதன நகரம், குயன்மென் நிலையத்தை நிரப்பியுள்ளன விசேஷ ரயில்கள். கெட்டகாலம் பல்கலைக்கழக மாணவருக்கு! நுழை வாயிலில் வெய்யில் காய்கிறது! தடுப்பவர் யாரோ? சிவப்பு விளக்கு மாவட்டத்தில் பரபரப்பே இல்லை!"
ஜனவரி 31, 1933,
 
 

சீனக் குடியரசின் புதிய டொன் கீஹோட்டேக்கள்
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்பெயின் தேசத்தில் செர்வன்ரெஸ் என்பார் டொன் கிஹோட்டே (Don Quiyote) என்னும் நீண்டதொரு நெடுங்கதையை எழுதினார். கிஹோட்டே என்பவன் அநேக காதல் காவியங்களைப் படித்ததனால் வெறியேறி கோமகன். களை பின்பற்ற விரும்பினான். தனது நண்பனொருவனோடு சேர்ந்து கொண்டு அழுக்காடை உடுத்துக் கொண்டு கொடிய பூதங்களை ஒழித்து நல்லோரைக் காப்பாற்றும் நோக்கத்தோடு அலைந்து திரிந்தான். வீரபிரதாபங்களை வெளிப்படுத்தும் காலம் போய்விட்ட போதிலும் அதனை வெளிக்காட்ட முயன்று முட்டாளாகத் தோற்றமளித்தான். இறுதியில் படுகாயங்களுடன் திரும்புகிறான். மரணப் படுக்கையில்தான், தான் கோமகன் ஆகவில்லை என்பதை அவன் உணருகிறான்.
இது சீனாவில் சென்ற ஆண்டு பின்பற்றப்பட்டு முக்கியஸ்தர்கள் "கிஹோட்டிக்" என்று பட்டம் சூட்டப்பட்டு வெளியே தள்ளப்பட்டனர். கிஹோட்டே என்கின்ற ஸ்பெயின் தேச முட்டாளுக்கு ஈடானவரைச் சீனதேசத்தில் உன்னால் காணமுடியாது. சராசரித் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் போது காண முடியாது. ஸ்பெயின் தேசத்தவர் ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது காதல் கீதங்களைப் பாடுவர். சமயப் பற்று மேலிடும் போது தூபங்களை எரிப்பர். புரட்சி செய்யும் போது மாதாகோவில்களை இடிப்பர். அரசனைத் துரத்துவர். எங்கள் சீனக் கல்விமான்கள் பெண்கள் தம்மை தீய செயல்களைப் புரியச் செய்கின்றனர் எனக் குற்றம் காட்டுவர். எல்லாச் சமயங்களிலுமுள்ள பொதுத்தன்மையை ஆராய்ந்து ஆலயச் சொத்துக்கள் அனைத்

Page 46
தையும் பாதுகாத்து, புரட்சிக்குப் பின்னும் பூயியை அரண்மனையில் பலவாண்டுகளுக்குச் சக்கரவர்த்தியாக இருக்கவும் அனுமதிப்பர். எனக்குப் பத்திரிகையொன்றில் வாசித்த ஞாபகம். சில கடைச் சிப்பந்திகள் வாள் வீரர்களின் செயல்களால் உந்தப்பட்டு வாடும் மலைக்குச் சென்று அக்கலையில் பயிற்சி பெறத்தீர்மானித்தனர். இதனைத் தொடர்ந்து என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆதலால் இவர்கள் தாம் விரும்பியவை கைகூடிய பின் வீட்டிற்குத் திரும்பிப் போனார்களோ தெரியவில்லை. சராசரித் தத்துவத்தின்படி அவர்கள் வீடு திரும்பியிருப்பதே பொருத்தமானதாகும்.
அடுத்ததாக தோன்றியுள்ள சீனதேச கிஹோட்டேக்கள் "இளம் புதிதாக்கப்பட்ட கழகத்தினர்". அவர்கள் போர்வீரர்கள் அல்லர். ஆனாலும் போர்க்களத்திற்கு போகவேண்டுமென்று வற்புறுத்தல் விடுகின்றனர். அரசாங்கம் சர்வதேச சங்கத்திற்கு பிரச்சனையை எடுத்துச் செலவதாகக் கூறுகின்றது. ஆனால் அவர்களோ தாங்களாகவே நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறுகின்றனர். அதிகாரிகள் தடுத்தபோதிலும் அவர்கள் தங்கள் நடவடிக்கையைத் தொடர்கிறார்கள். சீனாவில் சில புகையிரதப் பாதைகள் உள்ளன. இருந்த போதிலும் அவர்கள் தாம் நடந்தே போகப் போவதாகக் கூறுகின்றனர். வடக்குப் புலத்தில் சரியான குளிர். இருந்த போதிலும் அவர்கள் வெப்பமூட்டும் ஆடைகளை அணிய மறுக்கின்றனர். சண்டையிடுவதற்கு முக்கியம் ஆயுதங்கள். ஆனால் அவர்கள் தமது மன ஓர்மையே போதுமென்கின்றனர். இவையெல்லாம் கிஹோட்டே செயல்களே. இச் சீனக் கிஹோட்டேக்கள் தமக்குள் ஒரு கழகத்தை நிறுவிக் கொண்டனர். அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டுப் புறப்பட்டுச் செல்கையில் பாராட்டப் படுகின்றனர். அவன் இருந்ததோ ஆழ்ந்த மலைப்பகுதி. இவர்கள் வந்தது சென்று நகரத்திற்கு. அவனுடைய பணியோ காற்றாடி ஆலையைக் கலைப்பது. இவர்களுடைய முயற்சிகளில் ஒன்று சாங்செள நகரில் சீப்புக்களைச் சேகரித்து அழகிய பெண்களைச் சென்று காண்பது, (இதனைப்பற்றி "ஷென் பாவோ" டிசம்பர் மாத இதழில் பாருங்கள்). ஐயோ,எவ்வளவு வித்தியாசமானவர்கள் இவர்கள்!
அநேக புதிய பழைய கதைகள் சீன தேசத்திலும் அந்நிய தேசங்களிலும் உண்டு. "சவப் பெட்டி காவுதல்", "விரல்களை வெட்டிக் கொள்ளுதல்", "குவின் மன்றத்தின் முன்பு ஒலமிடுதல்", "சுவர்க்கத்தை நோக்கி சத்தியம் செய்தல்" என்பவற்றைக் கூறலாம். சவப் பெட்டி காவுவது, விரலை வெட்டுவது, சுன்யாட் சென்னின் நினைவுச்
 
 

சின்னத்தின் முன் நின்று ஒலமிடுவது மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமலா விடும்? கலாநிதி ஹ0 வரி கலாச்சாரப் புரட்சியை முன்வைத்தபோது "உயர்ந்த இலக்கியப் படைப்புகள் ஒழியட்டும்" என்று கூறினார்.
இன்றைய நடவடிக்கைகளில் நாம் இந்தப் பழைய சம்பவங்களை உதாசீனம் செய்வோமாக!
எல்லா யுத்தத்தை விவரிக்கும் இலக்கியப் படைப்புகள் - பழைய நூல்களில் றிமார்க்கின் "ஒல் இஸ் குவையற் ஒண் த வெஸ்ரேண் LGpIT6ólito" (All is Quiet on the Western Front), Ji'63dB GD676of6ir "gb வோர்" (The War) அல்லது நவீன படைப்புகளான செறா வி மோவிச். dair "9/u67 6isib" (Iron Stream), UITL(Suj66ir "25 60lb 637 fair" (The Nineteen) என்பதிலோ இப்படியான இளைஞர் கழகத்தைப் பற்றி எங்கும் வர்ணிக்கப்படவில்லை. அங்கே உண்மைச் சண்டையை மட்டும் தான் காண்கிறோம்.

Page 47
வெளவால்களைப் பற்றி
LDனிதர் சாதாரணமாக இரவில் வரும் பிராணிகளை விரும்புவதில்லை. ஏனெனில் அவை மனிதர்களைப் போல இரவில் உறங்குவதில்லை. நல்ல உறக்கத்தில் நாம் இருக்கும்போதும் இருட்டில் தடுமாறும்போதும் எங்கள் இரகசியங்களை அவை அறிந்து விடுமே என்ற பயமும் கூட.
வெளவால்கள் இரவில் பறப்பன என்ற போதிலும் சீனதேசத்தில் அவற்றிக்கு அலாதி மரியாதை. அவை நுளம்புகளை இரையாகக் கொள்வதாலோ அல்லது மனிதனின் நண்பன் என்பதாலோ அல்ல. சீன மொழியில் அதிர்ஷ்டத்தை வெளவால் என்றும் அழைப்பர். இந்த நன்றியை வெளிப்படுத்தவே ஒவியங்களில் அது இடம் பெறுகிறது. மேலும் வேறொரு காரணம் சீன மக்களுக்குப் பறந்து செல்ல விருப்பம். அதனால் மற்ற ஜீவராசிகளும் பறக்கின்றதாகவே கற்பனை செய்கின்றனர். தாவோத் துறவிகள் சொர்க்கத்திற்குச் செல்ல இறக்கைகள் இருக்க வேண்டுகின்றனர். சக்கரவர்த்திகள் பறந்து சென்று நீடு வாழ்கின்றனர். காதலர்கள் பறவைகள் ஆகி சோடியாக பறப்பர். துன்பப்படுவோர் பறந்து சென்று துன்பங்களிலிருந்து விடுபடுவர். இறக்கைகளுடைய புலிகளை நினைத்து மனிதர் நடுங்குவர். ஆனால் பணம் தங்களை நோக்கிப் பறந்துவருமாயின் மகிழ்ச்சியில் பூரிப்பர். மோஸி கண்டுடித்த பறக்கும் பொறிகள் மறைந்து போய்விட்டபடியால் பணம் திரட்டி அந்நிய நாடுகளிலிருந்து ஆகாய விமானங்களை வாங்க வேண்டியள்ளது. நாம் புராதன ஆன்மிகப் பண்பாட்டில் கூடிய கவனம் செலுத்துகின்றதனால் சந்தர்ப்ப வசத்தால் இது ஏற்பட்டுள்ளது. நம்மால் உண்மையில் பறக்க இயலாத போதிலும் பறப்பதாகக் கற்பனை செய்கிறோம். இறக்கைகளைக் கொண்ட வெளவால்
 
 

கள் போன்றவற்றைக் காணும் போது நாம் ஆச்சரியப்படுவதில்லை. பிரபல கவிஞர்கள் தமது கவிதைகளில் இவற்றைக் கருப்பொருளாக வைத்திருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக அந்திப்பொழுதில் நான் ஆலயத்தை அடைந்த போது வெளவால்கள் பறந்தன.
மேல்நாட்டாரோ அவ்வளவு பரந்த மனப்பான்மை உடையோர் அல்ல. அவர்களுக்கு வெளவால்களில் விருப்பம் இல்லை.இதற்குரிய காரணத்தைத் தேடுவோமாயின் ஈசாப்பைத்தான் நோக்க வேண்டும். ஏனெனில் அவருடைய புனைகதையில் விலங்குகளுக்கும் பறவை. களுக்கும் சேர்ந்து மாநாடு ஒன்று நடந்ததாம். வெளவால் விலங்குகளின் பக்கம் சென்று அமர்ந்தது. அதற்கு இறக்கைகள் இருந்தபடியால் விலங்குகள் தங்களோடு சேர்க்க மறுத்துவிட்டன. பின்பு அது பறவைகளின் பக்கத்திற்குச் சென்றது. அதற்கு நான்கு கால்கள் இருந்தபடியால் அவையும் அதனைத் தங்களோடு சேர்க்க மறுத்துவிட்டன. அது தக்கதொரு நிலைப்பாடு எடுக்க முடியாத நிலையில் மதில் மீது இருப்பது போன்ற நிலையில் இருந்தது.
இப்பொழுது சீனர் அந்நியரின் சில பண்புகளைப் பின்பற்றி இருப்பதனால் வெளவால்களைப் பகிடி பண்ணுகிறோம். ஈசாப்பின் இப் புனைகதைகள் சுவாரசியமாக இருக்கின்றன. அவை எல்லாம் உயிரியல் அறிவு வளர்ச்சியுறாத காலத்தில் எழுதப்பட்டவை. ஆனால் இன்றோ ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் கூட திமிங்கலம் எந்த விலங்கினம், வெளவால் எந்த விலங்கினம் என்று எளிதில் கூறிவிடுவர். இன்னமும் கூட பழைய கிரேக்க புனைகதைகளை நம்புகிறவர்கள் ஈசாப்பின் கதைகளில் வரும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள் பெண்கள் பெற்றிருந்த அறிவை விட எந்த விதத்திலும் மேலான அறிவுடையவர்கள் அல்லர்.
நீர்படாச் சப்பாத்துகள் வைக்கோல் செருப்புக்கும் தோல் சப்பாத்துக்கும் பிறந்ததுதான் என்றுதான் பேராசிரியர் லியாங் வழிக்கூவின் நினைப்பு. அவருக்கு உள்ளது அந்த அறிவுதான். இவர் புராதன கிரேக்கத்தில் பிறந்திருந்தால் புத்தியில் ஈசாப்புக்கு அடுத்த நிலையில்தான் இருந்திருப்பார். துரதிஷ்டவசமாக இவர் மிகவும் பிந்திய காலத்தில் பிறந்தவர்.
ஜூன் 16, 1933.

Page 48
சொந்த புத்தியால் ஜீவிபது
"கருத்தூன்றாமல் வேலைபுரிவது" என்கின்ற ஷாங்ஹாய் சொற்றொடருக்கு சாதாரண சீனமொழியில் "பொறுக்கித்தின்னி" என்று குறிப்பிடலாம். "சொந்தப் புத்தியால் ஜிவிப்பது" என்பதை "எல்லாத்தானியங்களும் பொறுக்கித் தின்னியின் ஆலைக்கே வரும்". "பொறுக்கித் தின்பது" வாழ்க்கை முறையாக அமைவது விநோதமானது அல்லவா! ஷாங்ஹாய் நகர மனிதன் ஒருவனை அல்லது பெண்ணொருத்தியைப் பார்த்து உனது கணவரின் தொழில் என்ன என்று கேட்டால் கிடைக்கின்ற பதில் இதுதான் - அவர் சொந்தப் புத்தியால் ஜிவிக்கிறார்.
கேள்வி கேட்ட மனிதன் இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்படுவதில்லை. அவர் "கல்வி போதிப்பவர்", "தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார்" என்று கூறுவது போன்றுதான் அவர்கள் கருதுவர். "அவருக்கு வேலையொன்றும் இல்லை" என்றால் வருத்தப்படுவார்கள்.
ஷாங்ஹாயில் "சொந்தப் புத்தியால் ஜிவிப்பது" என்பது மரியாதையானது. ஷாங்ஹாய் பத்திரிகைகளில் நாம் அன்றாடம் வாசிப்பதெல்லாம் இவர்களுடைய நடவடிக்கைகள் பற்றித்தான். அவர்கள் பற்றி எதுவும் வராவிட்டால் உள்ளுர்ச் செய்திகள் 'சய்' என்று இருக்கும். சாதனைகள் செய்ய வாய்ப்புகள் இருந்து, அவை மூன்றாகக் குறைக்கப்பட்டுவிட்ட போதிலும், முழுமையாகப் பயன்படுத்தாதபடியால் அவை திரண்டுள்ளன.
முதல் முறை ஏமாற்றுவது. பேராசை கொண்டோரைத் தூண்டி விடுவதும் வெறுப்புள்ளோருக்கு மனம் வருந்துவதுபோல் நடிப்பதும் கடுமையான நிலையிலுள்ளோரைக் கண்டு தாராளத் தன்மையைக்
 
 

காட்டுவதுபோல பாசாங்கு செய்வதும் தாராளத்தன்மை கொண்டோருக்கு துரதிஷ்டக் கதையைக் கூறுவதும் இதே விதமாக மற்றவரை கசக்கி விழுங்கலாம்.
இரண்டாவது முறை பயமுறுத்துவது. ஏமாற்றுவது சக்தியற்றுப் போனாலும், கண்டு பிடிக்கப்பட்டாலும் கோபமாய் இருப்பதுபோல் காட்டி, பயமூட்டத் தொடங்க வேண்டும். மற்றவரை முரட்டுச் சுபாவக்காரரென்று குற்றம் சாட்டுவதும் நடத்தை கெட்டவர் என்று துற்றித் திரிதலும் அவன் தனக்குக் கடனாளி என்பதும் அல்லாது ஒரு காரணமும் காட்டாமல் இருப்பதும் . அதுவே சரியான கணிப்பு என்று கூறுவதும் - ஆகும். இவ்விதமாகவும் நீங்கள் கசக்கிப் பிழியலாம்.
மூன்றாவது முறை ஓடி மறைவது, மேலே கூறப்பட்ட இரு முறைகளும் வெற்றியடைந்து விட்டதென்பது உறுதியானதும் காற்றைப் போல ஒடி மறைந்து விடுங்கள். எவ்வித அடையாளமும் தெரியாதபடி, தோல்வி கிட்டியபோதும் கூட அடையாளம் ஏதும் தெரியாதபடி காற்றைப் போல ஒடி மறைந்துவிடுங்கள். பிரச்சினை சற்று கடுமையானதும் மாவட்டத்தை விட்டே ஓடி ஒளிந்து எல்லாம் தீரர்ந்து விட்டது என்று தெரியும்வரை இருங்கள்.
எல்லோருக்கும் இப்படிப்பட்ட தொழில் இருப்பது தெரியுமாதலால் அதிர்ச்சி அடைவது இல்லை.
சொந்த புத்தி கொண்டு ஜீவிக்கக் கூடுமாயின் உழைத்து ஜிவிப்பவர் இயற்கையில் பட்டினியில் காய்வர். எல்லோருக்கும் இது தெரிவதனால் அதிர்ச்சி அடைவதில்லை.
சொந்தப் புத்தியில் ஜிவிப்பவர்களிடம் காணப்படுகின்ற விசேஷ குணம் தாங்கள் சொந்தப் புத்தி கொண்டே ஜிவிப்பவர்கள் என்று அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்வார்கள்.
ஜூன் 26, 1933.

Page 49
மேலும் கீழும்
சீனாவில் இரண்டு விதமான குண்டுவீச்சுகளுண்டு. ஒன்று உள்ளி. ருந்து மற்றது வெளியிலிருந்து முதல் வகைக்கு இதோ ஒர் உதாரணம்.
சமீபத்தில் யுத்தமொன்றுமில்லை. ஆனாலும் விமானங்களை அனுப்பி கொள்ளையர் பகுதிகளில் குண்டுகள் பொழிய விட்டனர். ஏழாம் திகதி காலையிருந்து மாலைவரையிஹர7ஆங்கின் மேற்கிலும், சொங்கிறனின் தெற்கிலும் மூன்றாம், நான்காம் படையணியினர் ஒவ்வொன்றும் சுமார் நூற்றியிருபது இறாத்தல் நிறையுள்ள முன்னூறு குண்டுகளைப் போட்டனர். கொள்ளைக்காரர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட இடமெல்லாம் குண்டுகளைப் பொழிந்து நிர்மூலமாக்கினர். அதனால் அவர்கள் மீண்டும் பலம் பெற முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். (மே 10ம் திகதிய "ஷென் பாவோ" இதழில் நான்சாங்கிலிருந்து வெளியிடப்பட்ட செய்தி.)
இரண்டாம் வகைக்கு இங்கே ஒர் உதாரணம். இன்று காலை ஆறுமணியளவில் எதிரிகளின் விமானம் ஜிஷியானில் குண்டுகள் பொழிந்து பத்துக்கு மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றது. மியூனும் கூட ஒவ்வொரு முறையும் இரண்டு விமானங்களால் நான்கு முறை தாக்குதலுக்கு உள்ளானது. நூற்றுக்கு மேற்பட்ட குண்டுகள் போடப் பட்டன. இதனால் ஏற்பட்ட அழிவுகள் பற்றி விசாரணை நடைபெறுகிறது. (ஈவினிங் நியூஸ் - அதே தினம் - பீஜிங் நிருபர் தந்த தகவல்)
இது தொடர்பாக ஷாங்ஹாய்ச் சிறுவர்கள் விமானங்களை வாங்கத் தொடங்கி விட்டனர். விமானத் தாக்குதலிருந்து தப்பித்துக்கொள்ளப் பாதுகாப்புக் கிடங்குகளையும் வெட்ட ஆரம்பித்து விட்டனர். இந்தத்தொனிப் பொருளுக்கு இரண்டு முக்கிய அம்சங்கள்
 
 

தேவை. "உடனடியான எதிரிகளை சாந்தப்படுத்தாமல் வெளி எதிரியைக் கட்டுப்படுத்த முடியாது". "வெளி எதிரியை அடக்குவதைவிட அவசரமானது உள்எதிரிகளைச் சாந்தப்படுத்துவது".
அந்நியர் சலுகைகளில் வாழ்பவர்களுக்கும் சந்தோஷம். கண்களை மூடிக்கொண்டு விசாலமாக நோக்கும்போது எம்மால் உணர. முடிவது இதுதான். சீனாவில் மேலே அரசாங்கத் துருப்புகளும் கீழே செங்கொடியினரின் ஆதரவு பெற்ற கொள்ளையரும். மற்றப்படி, எதிரிகள் மேலே, செங்கொடியினரோடு சம்பந்தப்படாத சாமானியர் கீழே. "சேதங்கள் ஆராயப்படுகின்றன". சமாதான பூமியில் புத்தவிகாரைகள் கட்டப்படுகின்றன. புத்தர் பிறந்தபோது ஒரு விரலை ஆகாயத்தை நோக்கியும் மற்றதை பூமியை நோக்கியும் காட்டினாராம். "மேலும் கீழும் நான் ஆள்வேன்". இதுவும் அப்படித்தான்.
மீண்டும் எமது கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்து சிந்தித்தோமாயின் இன்னொரு கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. உள்ளுக்குள் இருந்து உட்புறம் குண்டு வீசுவது வெளியிலிருந்து வீசுவதைக் காட்டிலும் வேகம் குறைந்து இருக்கும். இரண்டு விமானத் தொகுதிகளும் இரண்டும் மோதிக்கொள்ளும், அதன்பின் நாம் என்ன செயவது? உள்ளே உள்ளோரைச் சாந்தப்படுத்துவதை விட்டு விட்டு எதிர்த் தாக்குதலைப் போடுவோமா?அல்லது உள்ளே உள்ளவர் மீது குண்டுகளைப் போட்டுக் கொண்டிருப்போம் வெளியாரும் எம்மோடு வந்து சேரும் மட்டும். தொடர்ந்து குண்டு பொழிந்து கொள்ளையரை முற்றாக ஒழித்துக்கட்டி விடுவோமே! அதன் எதிர்ப்பைக் காட்டி எல்லோரையும் விரட்டி அடிப்போமே.
இதெல்லாம் ஒரு வேடிக்கைக்குத்தான் கூறப்படுகிறது. இப்படிப்பட்டவை என்றும் நடக்காது. ஆனாலுங் கூட இப்படியொன்று நடந்தாலும் பிரச்சனை தீர்ந்துவிடும்; வெளிநாட்டுக்குப் போய் ஒய்வெடுத்து நோயைக் குணப்படுத்தி, புத்தரை மலைமீது வழிபட்டு வந்தால, எல்லாமே சரியாகி விடும்,
மே 16-1933.

Page 50
உதைப்பது
இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் தள்ளுவதைப் பற்றிப் பேசினேன். இப்பொழுது பேசுவது உதைப்பது பற்றி.
இம்மாதம் ஒன்பதாவது திகதிய "ஷென் பாவோ"வில் வெளிவந்த செய்தி இது. ஆறாம் திகதி மாலை நேரம் மெழுகு வேலை செய்வோர் மூவர் - லியூ மிங்ஷான், யாங் அகுன், கூ ஹெங்ஷென் ஆகியோர் காற்று வாங்குவதற்காக பிரெஞ்சு ஆதரவுபெற்ற பட்டர்பீல்ட் ஸ்குவயர் இறங்குதுறைக் குளக்கட்டருகே சென்றனர். அவ்வழியாக ரோந்து வந்த பொலிஸ் படையினர் அங்கே சூதாடிக் கொண்டிருந்தோரை விரட்டினர். லியூவையும் கூவையும் ரஷ்யப் பொலீஸ் ஒருவன் தண்ணிருக்குள் விழுத்திவிட்டான். லியூ நீரில் முழ்கிவிட்டான். ரஷ்யனின் கூற்றுப்படி "அவனாக விழுந்து விட்டான்" கூ சாட்சியத்தில் பின்வருமாறு கூறினான்.
"நான் லியூ யாங் இருவருடனும் இறங்கு துறைக்குக் காற்று வாங்கப் போனேன். லியூ நிலத்தில் ஓர் இரும்பு வாங்கில் அமர்ந்திருந்தான். நான் அவனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த ரஷ்ய பொலிஸ்காரன் அவனை உதைத்தான். லியூ எழுந்து விலகிப் போக முயன்றான். பொலிஸ்காரன் விட்ட அடுத்த உதையில் அவன் நீருக்குள் விழுந்தான். நான் அவனை வெளியே இழுத்து எடுக்க முயன்றேன்.நேரம் கடந்து போய்விட்டது. நான் அந்த ரஷ்யனை பிடிக்கப் போனபோது அவன் என்னைத் தண்ணிருக்குள் தள்ளி விட்டான். நான் காப்பாற்றப்பட்டேன்."
"அவனை இவன் ஏன் உதைத்தான்?" என்று நீதிபதி வினவினார். "எனக்குத் தெரியாது" என்றான் சு. 'தள்ளுவதற்கு கையைத் துரக்கவேண்டியிருக்கும். ஆனால் உதைப்பதற்கோ அந்தச் சிரமம் ஒன்றும்
 
 

இல்லை. ஷாங்ஹாயில் இந்தியப் பொலீஸ், அன்னமிய பொலிஸ், தற்போது வெள்ளை ரஷ்ய பொலிஸார் இத்துறையில் வல்லவர்களாகிவிட்டார்கள். இந்த ரஷ்யர் ஜார் காலத்தில் யூதர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய உத்திகளைத் தான் இங்கேயும் பயன்படுத்துகிறார்கள். மொத்தத்தில் நாங்கள் ஏச்சுகளை ஜீரணிப்பவர்கள். நாம் தாங்கிக் கொள்ள முடியாது போனால் சும்மா சிரித்தே மறப்போம். சிலவேளை நாம் அந்நிய தேசத்து இறைச்சித் துண்டை உண்டு விட்டோம்" என்போம்.
மியாவோக்கள் தோற்கடிக்கப்பட்டதும் அவர்கள் மலைக்கு எங்கள் மஞ்சள் சக்கரவர்த்தியல் துரத்தப்பட்டனர். தென்புல சொங் வம்சம் தோற்கடிக்கப்பட்டதும் அவர்கள் எமது சக்கரவர்த்தி ஜெங்கீஸ்கானால் கடலுக்குத் துரத்தப்பட்டனர். இறுதியில் லுசியூகுழந்தைச் சக்கரவர்த் தியை முதுகில் சுமந்து கொண்டு கடலுக்குள் பாய்ந்தான். நாமாகவே கடலுக்குள் பாயும் பழக்கம் சீனருக்கு நீண்டகாலமாகவுண்டு.
ஏழைகளுக்கு இலவசமாகக் கிடைப்பது நீரும் காற்றுமே என்று சில வள்ளல்கள் கூறுவார்கள். ஆனால் இது முற்றாக உண்மையல்ல. மற்றவர்களின் பாவனைக்குரிய நீரும் காற்றும் எப்படி அவர்களுக்கும் கிடைக்கும்? இறங்குதுறை அருகில் காற்று வாங்கப் போனால் காரணம் எதுவுமின்றி நீருக்குள் உதைத்துத் தள்ளப்படுவார்கள். அவர்களும் அதனுள் மூழ்கி இறப்பார்கள். நண்பருக்கு உதவுமுகமாகக் குற்றம் புரிந்தவரைப் பிடிக்க முயன்றால் அவரும் தள்ளப்படுவார். எல்லோரும் உதவி செய்யவருவார்களாயின் ஆட்சியாளருக்கு எதிரானவர்கள் என்று சந்தேகிக்கப்படுவார்கள். இது சீனாவில் தடை செய்யப்படாததனால் நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் கலவரத்தைத் தூண்டிவிடும் பிற்போக்குவாதிகள் எனப்படுவோம். அதற்கெல்லாம் முடிவு உதைபடுதல் அல்லது தள்ளப்படுதல், உங்கள் இறுதி இடம் நீர்தான்.
காலம் முன்னேற்ற நடைபோடுகிறது. நீராவிக் கப்பல்களும் ஆகாய விமானங்களும் எங்குமே உள்ளன. கடைசி சொங் சக்கரவர்த்தி இன்று உயிரோடு இருந்திந்தால் நீருக்குள் குதிக்க வேண்டியிராது. சாதாரண மக்கள் தான் அவருக்குப் பதிலாக நீருக்குள் விழவேண்டியிருக்கும்.
எளிமையானது அதே நேரம் சிக்கலாகவும் தோன்றுகிறது: மெழுகு வேலையாள் கூ "எனக்குத் தெரியாது" என்று ஏன் பதிலளித்தான்
ஓகஸ்ற் 10, 1933.

Page 51
தொமின்கள்
"பிறீரோக்" (Free Tak) ஜூன் 28ம் திகதிய இதழில் திரு. ராங் ராவோ "தொமின்" என்கின்ற கிழக்கு ஜிஜியாங்கில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிப் பேசியது வெளிவந்தது. "தொமின்களின் அனுபவங்கள்" என்ற புத்தகத்தில் அவர்கள் தாதாரிடம் சரணடைந்த சொங் பரம்பரைத் தளபதி ஜியாங் குவாங்கின் வழிவந்தவர்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டார். அதனால் தொமின்கள் இழித்துரைக்கப்படுகின்றனர். முதலாவதுமிங்பரம்பரைச் சக்கரவர்த்தி காலத்திலிருந்து அவர்களுடைய வீட்டுப் படலைகளில் "பிச்சைக்காரர்" என்று எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கும். ஏனெனில் அவர்கள் எளிய வாழ்க்கை நடத்தி ஏளனப்படுத்தப்பட்டனர்.
ஷயோசிங்கில் பிறந்த நான் சிறு வயதில் பெரியோர்களின் வாயில் தொமின்களை இழித்துப் பேசுவதையே கேட்டு வந்தேன். பிற்காலத்தில் சில சந்தேகங்கள் எனக்குள் எழுந்தன. முதலாவது, மிங் பரம்பரைச் சக்கரவர்த்தி போரில் தோற்றுப் போன மொங்கோலியர். களையே குறைத்து மதிப்பிடாதவர். அவர் முற்காலத்தில் தாதாரிடம் சரணடைந்த தளபதியை இப்படியா இழிவுபடுத்தியிருப்பார்?
தொமின்களின் தொழிலைப் பார்க்கும்போது அவர்கள் சங்கீதக் காரர்களாகவும் பெண்கள் பாடகிகளாகவும் உள்ளனர். அவர்களுடைய முன்னோர் விசுவாசமான நல்ல குடிமக்களாகவும் இருந்து வந்திருக்க வேண்டும். மிங் பரம்பரையைச் சேர்ந்த முதலாவது சக்கரவர்த்தியையும் சக்கரவர்த்தியொங் லீயையும் எதிர்த்திருக்கக் கூடும். மேலும் நல்ல மக்களின் வழித்தோன்றல்கள் கஷ்டத்தை அனுபவிக்க நேரிடும். அதேவேளை துரோகிகளின் வழிவந்தவர்கள் இழிவு படுத்தப்படுவதில்லை. உதாரணத்திற்கு இதனை எடுத்துக்கொள்வோம். தளபதி யுவே பியின் வழித்தோன்றல்கள் இன்றுங்கூட
 
 

சவச்சாலை ஊழியர்களாக ஹாங் சூவில் மிகவும் வறிய வாழ்க்கை நடாத்துகின்றனர். ஆனால் குவின் ஹய், யான் சொங் முதலிய துரோகிகளின் வழித்தோன்றல்களோ?.
நான் பழைய துயரங்களைத் தீர்க்க முயலவில்லை. வெறுமனே குறிப்பிட விரும்புகிறேன். சயோசிங்கில் வாழும் தொமின்கள் விடுவிக்கப்பட்ட அடிமைகள் ஆவர். அவர்கள் அநேகமாக யொங் ஸெங் காலத்தில் விடுவிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் அதனால் ஏதோ ஒரு தொழிலில் வல்லவர்கள். ஆனால் அவை சிறிய தொழில்கள்தான். ஆண்கள் கழிவுகளைச் சேகரிப்பது, கோழியிறகு விற்பது, தவளை பிடிப்பது, நாடக மேடையில் பங்குகொள்வது ஆகியவற்றையும் பெண்கள் தங்கள் போஷகர்களைத் திருவிழாக் காலங்களில் வாழ்த்துவது, திருமணம், மரணம் ஆகியவற்றில் உதவிபுரிவது ஆகியவற்றிலும் ஈடுபடுவர். அடிமைத்தனத்தின் சான்றுகள் இங்கே தென்படுகின்றன. வேலை முடிந்ததும் அவ்விடத்தைவிட்டு வெளியேறிவிடுவதாலும் போதிய கைக் காசு பெற்றுக் கொள்வதாலும் சுதந்திரமானவர். களாகத் தென்படுகின்றனர்.
எல்லாத் தொமின்களுக்கும் குறிப்பிட்ட எஜமானர்கள் உள்ளனர் கண்டபடி எல்லாரிடமும் செல்லுவதில்லை. மாமியாருக்குப்பின் அந்த இடம் மருமகளுக்கு வழங்கப்படும். இம்முறை தலைமுறைக்குத் தலைமுறை மாறிச் செல்கிறது. தொமின் குடும்பத்தார் மிகுந்த வறுமை நிலையை அடைந்தால் வேறொருவருக்கு விற்கப்படுகிறார். காரணம் எதுவுமின்றி தொமினை வரவேண்டாமென்று ஒரு பாதுகாவலர் அறிவித்தால் அது பெரியதோர் அவமதிப்பாகும். 1911ம் ஆண்டுப் புரட்சிக்குப் பிறகு எனது தாயார் தொமின் பெண்ணைப் பார்த்து "வருங்காலத்தில் நாம் அனைவரும் சமமானவர்கள். ஆனபடியால் நீ இனி வரவேண்டாம்" என்று கூறினார். அது கேட்ட பெண் கடுங் கோபங்கொண்டு சொன்னாள், "நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? ஆயிரம் ஆண்டுகளானாலும் நாம் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருப்போம்" என்றாள். அது எனக்கு இன்றும் பசுமையாய் நினைவிலிருக்கிறது.
தாம் பெறும் சிறு சில்லறைக் காசுகளில் திருப்தியடைந்து விடுவதோடு பல்வேறு எஜமானர்களிடம் விலைபோய் அடிமைகளாய் வாழவும் விரும்புகிறார்கள்.
தொமின், சாதிக்கட்டிலிருந்து விடுபடுவதை விரும்பாத கூட்டத்தினர் என்பதை மறுப்பதற்கில்லை.
ஜூலை 3, 1933.

Page 52
மணல்
விமீப காலமாக எமது இலக்கியவாதிகள் சீன மக்கள்ை கிண். ணத்து மணல் போன்றவர்கள் என வர்ணித்து எமது துன்பங்கள் அனைத்திற்கும் அவர்களே காரணம் என்று பழியை அவர்கள் மீதே போடுகின்றனர். உண்மையில் இது நியாயமானதாகப்படவில்லை. சாதாரண மக்கள் அறியாதவர்கள். ஆதலால் தமக்குப் பாதகம் விளைவிக்கும் காரியத்தில் ஒன்றுதிரண்டு செயற்படமுடியுமோ என்று அவர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. பழைய முறைகள் எவையெனின் பலர் முன்னிலையில் தனக்குத்தானே தண்டனை வுழங்குவது, அரசுக்கெதிரான போராட்டம், புரட்சி ஆகியன. இன்றோ இன்னமும் மனுக்களைக் கொடுப்பதும் அது போன்ற நடவடிக்கைகளுமே நடைபெறுகின்றன. மக்கள் மணலை ஒத்திருக்கின்றார்களென்றால் அதற்குக் காரணம் ஆட்சியாளர்களேயாகும். சாஸ்திரிய பாஷையில் அவர்கள் "நன்றாக ஆளப்படுகிறார்கள்" என்று கூறலாம்.
சீன தேசத்தில் மணல் இல்லையா? இருக்கத்தான் செய்கிறது. சாதாரண ஜனங்கள் அல்லர். ஆனால் பெரிய, சிறிய ஆட்சியாளர்கள்தான்.
நாம் அடிக்கடி கேள்விப்படும் பதங்கள். "அரசாங்கப் பதவி உயர்வு", "வாய்ப்பு வசதிகள்" என்னும் இரண்டையுமாகும். அரசாங்கப் பதவி உயர்வுகளை விரும்புவது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவாகும். முதலாவதால் இரண்டாவதைப் பெறலாம். பெரிய அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு விசுவாசமில்லை. சிறிய அதிகாரிகள் உள்ளூர் ஆட்சியை நம்பிருந்தாலும் அதனை விரும்புவதோ பாதுகாப்பதோ
 
 

இல்லை. மேலதிகாரிகள் நேர்மையாக நடக்கக் கருதி உத்தரவு பிறப்பித்தால் சிறிய அதிகாரிகள் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடுவதோடு தவறான தகவல்களைத் தருவார்கள். அவர்கள் அனைவரும் சுயநலமிகளும், சொந்த நன்மைக்கான மணற்துகள்கள். தான். முடிந்த போதெல்லாம் தம்மை வளர்த்துக் கொள்ளப் பார்ப்பர். ஒவ்வொரு துகளும் ஒரு சக்கரவரத்தி. முடிந்த போதெல்லாம் மற்றவர் மீது இயலும் போதெல்லாம் அதிகாரத்தைப் பிரயோகிப்பர். "ஜார்" என்பதை சீன மொழியில் மணல் சக்கரவர்த்தி என்ற கருத்துப்பட மொழி பெயர்த்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானதே. அவர்களுடைய அதிர்ஷ்டம் எங்கிருந்து வருகி. றது? அவர்கள் பொதுமக்களை நசுக்கிப் பெறுகிறார்கள். பொதுமக்களெல்லாம் திரண்டு நின்றால் அதிர்ஷ்டம் சென்றடைவது கடினம், ஆகவே தான் நாட்டு மக்களை மணல் துகள்களாக மாற்றவேண்டும். ஏனெனில் இப்படிப்பட்ட மணல் சக்கரவர்த்திகளால் தான் முழு சீன மக்களும் "கிண்ணம் நிறைந்த மணல் துகள்கள்" ஆகிவிட்டனர்.
மணற் பாலைவனங்களுக்கு அப்பால் மக்கள் ஒன்று திரண்டு சன சஞ்சாரமற்ற பிரதேசத்திற்குச் செல்வதுபோல நடந்து செல்கின்றனர். இதன் கருத்து பாலைநிலத்திற்குப் பெரிய மாற்றம் தான். இப்படியானதொரு நிலைக்குப் பழங்கால மக்கள் இரண்டு உவமானங்களைக் கூறிவந்தனர். தலைவர்கள் குரங்குகளையும் கொக்குகளையும் ஒத்திருப்பர். சாதாரண மக்கள் பூச்சிகளைப் போலவும் மணலைப் போலவும் இருப்பர். மன்னர்கள் வெள்ளைநிறக் கொக்குகளை ஒத்து விண்ணை நோக்கிப் பறந்து செல்லவும் குரங்குகளைப் போல மரங்கள் மீது ஏறிச் செல்லவும் செய்கிறார்கள். மரம் சாய்ந்தால் குரங்குகள் சிதறி ஓடும். வேறு மரங்கள் இருப்பதனால் அவை கவலைப்படுவதில்லை. ஆனால் மக்களோ அவற்றுக்கடியில் எறும்புகளைப் போலவும் அழுக்குப் போலவும் விடுபடமுடியாமல் காலடியில் நசுக்கப்படுவார்கள். அல்லது கொல்லப்படுவார்கள். அவர்கள் "மணல் சக்கர. வர்த்தி"களை எதிர்த்து நிற்காவிட்டால் எப்படி போரில் அவர்களை வெற்றி கொண்ட "மணல் சக்கரவர்த்திகளின்" முன்பு நிற்க முடியும்?
இப்படியான வேளைகளில் எப்பொழுதும் யாராவது இருப்பார்கள். எழுதித் தள்ளவோ, பேசிவிடவோ, மக்களும் பலவித கேள்விகளால் குடைபடுவார்கள்.
"எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய இருக்கிறீர்கள்?"

Page 53
மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளின் போதெல்லாம் மெளனம் சாதிப்போருக்குத் திடீரென மக்கள் நினைவு வந்துவிடும். ஏற்பட்டுள்ள நிலைமையை மக்கள் சமாளிக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இது எப்படி இருக்கின்றதென்றால் கைகளையும் கால்களையும் கட்டிப் போடப்பட்ட ஒருவனை ஒடிச்சென்று திருடனை பிடிக்கும்படி கூறுவ போல உள்ளது.
ஆனால் அதுதான்மணல்சக்கரவர்த்தியின் நல்லாட்சியின் கடைசி நடவடிக்கை. குரங்குளின் அல்லது கொக்குகளின் வாய் பிளந்த நிலை. சுய ஏமாற்றுத் தன்மை, சுயவளர்ச்சி, தவிர்க்க இயலாத சேர்க்கை ஆகியவற்றின்முடிவு.
ஜூலை 12, 1933.
 
 

மேலதிக அறிவு
உலகில் மேலதிக உற்பத்தி காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னூறு இலட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர் பட்டினியால் அல்லற்பட்டபோதிலும், மேலதிக தானியம் இன்னமும் ஒரு "குறியினைக் கொண்டது". அதற்கு தீர்வு காணும்வரை ஐக்கிய அமெரிக்கா எமக்கு மாவைக் கடனுக்கு வழங்காது. மேலதிக விளைச்சலால் ஏற்படும் பாதிப்புக்கு நாம் துன்பப்பட வேண்டாம்.
உபரிமித அறிவு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சீன தேசக் கிராமப் புறங்களில் கற்போர் தொகை மேலதிகமாக இருப்பது கூட ஒரு பெரும் பிரச்சனைதான். இதனால் கிராமப்புறம் அழிவை நோக்கிச் செல்லும். இது புத்தியின் உபரி விளைச்சலினால் ஏற்படும் தீய விளைவு. பருத்தி மிகவும் மலிவானதால் அமெரிக்கர் பருத்தி பயிரிடுவதைக் கைவிட்டு விட்டனர். அது போலவே சீனாவும் அறிவு விருத்தியைக் கைவிடவேண்டும். இது மேலைநாடுகளிலிருந்து கற்றுக் கொண்ட சிறந்த முறையாகும். . . . "
மேலை நாட்டார் மிகவும் ஆற்றல் படைத்தவர்கள். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியர்கள் தமது நாட்டில் அநேக கல்லூரி மாணவர்களும், அரசியல்வாதிகளும் கல்விமான்களும் இருப்பதனால் இளம்பிள்ளைகளை பல்கலைக்கழகங்களில் இனி சேரவேண்டாமெனக் கூக்குரல் எழுப்பினர், ஜேர்மனியில் இந்த ஆலோசனையை வழங்குவ தோடு அறிவையும் அகற்றிவிட வேண்டும், சில புத்தகங்கள் எரிக்கப்பட வேண்டும், எழுத்தாளர்கள் தங்கள் கையெழுத்துப் பிரதிகளை தாமே விழுங்கிவிட வேண்டும், பல்கலைக்கழக மாணவர்களைத் தொழில் முகாம்களில் அடைத்துவிட வேண்டும். இதுதான் வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றும் முறையாகும். சீனாவில் பெரிய குற்றச்சாட்டு, அநேகர் இலக்கியத்தையும் சட்டத்தையும் பல்கலைக்கழகங்களில்

Page 54
படிக்கிறார்கள் என்பதாகும். இந்தப் பாடங்களை மட்டுமல்ல, அநேக உயர்நிலைப்பள்ளிக்கூட மாணவர்கள் மீது கடுமையான பரீட்சை முறை புகுத்தப்பட்டு இரும்புக் கூட்டுமாறு போல் எல்லாவற்றையும் கூட்டித் தள்ளிபுத்திஜீவிகளை பொதுமக்கள் நிலைக்குத் தள்ளிவிடவேண்டும்.
மேலதிக அறிவு எப்படி நெருக்கடியை ஏற்படுத்தும். தொண்ணுாறு வீதமான சீன மக்கள் எழுத்தறிவற்றவர்கள் என்பதும் உண்மைதானே? உண்மையில் உபரியான அறிவு வெளியான நோக்குடையதே. ஆகையால் நெருக்கடி தோன்றுகிறது. கூடுதலான அறிவு பெற்றால் கற்பனை வளமும் இளகிய மனமும் கொண்டவராவர். நீங்கள் கற்பனை உள்ளவராயின் நிரம்ப யோசிப்பீர்கள். நீங்கள் இளகிய மனமுடையவராயின் முரட்டுத்தனம் அற்றவராயிருப்பீர்கள். நீங்கள் ஒன்று உங்கள் சமநிலையை இழப்பீர்கள், அல்லது மற்றவர்களுடையதில் தலைபோடுவீர்கள். இதனால்தான் சீரழிவு நெருங்குகிறது. ஆகவே அறிவினை அகற்றிவிடுவது நல்லது.
சும்மா அறிவை அகற்றிவிடுவதனால் பயனொன்றும் இல்லை. ஒரு தகுந்த செய்முறைக் கல்வி அவசியம். முதல்தேவை மரணம் தரும் வேதாந்தம், மனிதர் விதிக்கு தன்னை அர்ப்பணித்துவிட வேண்டும். விதி வேதனையானதாயினும் திருப்தி கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாகத் தேவைப்படுவது பயனுள்ள மனப்பான்மை, காற்று வீசும் திசையை அவதானிப்பதோடு நவீன ஆயுதங்களின் சக்தியையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இருமுறைச் செய்முறைப் பயிற்சியையாவது உடனடியாக ஊட்டுதல் வேண்டும். இவற்றை விருத்தி செய்யும் முறை மிகவும் எளிமையானது. ஆதிகாலத்தில் உயர் லட்சியப் போக்கை எதிர்க்கும் தத்துவஞானி கூறினார். குவளையில் கஞ்சி நிரம்பியிருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்ணுங்கள். திருப்தியடைந்துள்ளளிர்களா என்று பாருங்கள். இன்று மின்சாரம் என்றால் என்னவென்று ஒருவருக்குத் தெரியப்படுத்த விரும்பினால் அவருக்கு மின்சார அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்து அவர் வேதனைப் படுகிறாரா இல்லையா என்பதை அவதானியுங்கள். ஆகாய விமானத்தைப் பற்றி அவர்களுக்கு அறியச் செய்ய விரும்புவீர்களாயின் ஆகாய விமானமொன்றை அவர்களுடைய தலைகளு" க்கு மேலாக பறக்கவிட்டு அவற்றிலிருந்து குண்டுகளை போட்டு அவர்கள் கொல்லப்பட்டார்களா இல்லையா என்பதைப் பாருங்கள்.
இப்படியான செய்முறைக் கல்வி கற்பிப்பதால் உபரிமிதமான அறிவு காணப்படாது. இறைவா!.
ஜூலை 12, 1933.
 
 

நையாண்டியிலிருந்து நகைச்சுவைக்கு
60)bயாண்டி எழுத்தாளனாக இருப்பது ஆபத்தானது.
கொல்லப்பட்டோரைப் பற்றியும் சிறைப்படுதத்தப்பட்டோரைப் பற்றியும் நசுக்கிவைக்கப்பட்டோரைப் பற்றியும் கல்வி அறிவு அற்றவர்களைப் பற்றியும் நையாண்டி செய்து எழுதினால் "கல்வி கற்ற புத்திஜீவி. கள்" அவற்றைப் படிக்கின்றபோதுநகைத்துக் கொள்வர். தமது துணிவையும், தாம் உயர்ந்தோர் என்பதையும் நினைத்துப் பூரிப்பார்கள். ஆனால் இன்றுள்ள நையாண்டி எழுத்தாளர்கள் இந்தச் சமுதாயத்தையும் படித்த புத்திஜீவிகளையுந்தான் நையாண்டி செய்கிறார்கள்.
நையாண்டி செய்வது இந்தச் சமூக்த்தையுந்தான். ஆகையால் ஒவ்வொருவரும் தான் தான் தாக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். அதன்பின் ஒவ்வொருவராக வெளிவந்து தம்முடைய நையாண்டிகளால் நையாண்டி எழுத்தாளர்களைக் கொல்ல இரகசியமாக முயலுகின்றனர்.
முதலில் அவனை நல்லனவற்றை விரும்பாதவன் என்று குற்றம் சாட்டுவார்கள். இதன் பிறகு படிப்படியாக எல்லோரும் ஒன்று சேர்ந்து பொய்ப் பிரசாரக்காரர், கலவரம் விளைவிப்போர், நஞசுத்தன். மையானவர், கீழ்த்தன்மையானவர், படித்த கயவன், அநீதியின் காவலன் என்றெல்லாம் கண்டிக்கலாம். ஆனால் சமூகத்தை நையாண்டி செய்தால் நீண்டநாள் நிலைத்துநிற்கும். புத்த பிக்குவாக மாறிய ஓர் அந்நிய நாட்டவனையோ, அல்லது மாலைப் பத்திரிகையையோ அதனைத் தாக்கி எழுதிவிட்டால் போதாது. ஒரு மனிதனைக் கோபாவேசம் கொள்ளவிட்டால் போதுமானது.
போர்க்காலச் சிந்தனைகள்

Page 55
முக்கிய அம்சம் இது தான் - நையாண்டியின் இலக்கு சமுதாயம்தான். சமுதாயத்தில் மாற்றம் ஏற்படாவிட்டால் அவனுடைய நையாண். டியும் அப்படியே இருக்கும். நீங்கள் தனிநபரான அந்த எழுத்தாளரைத் தாக்குகின்றீர்கள். நையாண்டி தொடர்ந்தும் அப்படியே இருக்குமாயின், உங்கள் எதிர்ப்பெல்லாம் வீணாகப் போய்விடுந்தானே?
இது போன்ற கொடிய நையாண்டிக்காரரைக் கண்டிக்க வேண்டு. , штије! சமூகத்தை மாற்ற வேண்டும்.
சமூகத்தை நையாண்டி செய்வோருக்கு எப்போதும் ஆபத்துக் கிாத்துக் கொண்டிருக்கிறது. சில புத்திஜீவிகள் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக கடித்துக் குதப்புவர். எழுத்தாளரைத் தாக்குவதில் எவரும் முக்கிய இலக்காகக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. மனிதன் உயிரோடு இருக்கையில் அல்லது மூச்சு இருந்து கொண்டிருக்குமாயின் தமது உணர்வை வெளிக்காட்ட சிரித்துக் காட்டுவர். நகைப்பு யாரையுமே பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடாது. எவரும் விசனப் பார்வை காட்டக் கூடாதென்று சட்டமொன்றுமில்லை. இதிலிருந்து சிரிப்பு சட்ட விரோதமானதல்ல என்று தெளிவாகிறது.
சென்ற ஆண்டிலிருந்து இலக்கியத்தில் நகைச்சுவைப் போக்கு காணப்படுகிறது. நகைப்பு நகைப்புச்சுவைக்காகவே தான்.
இந்தப் போக்கு நீண்ட காலத்திற்கு ஓடாது. நகைச் சுவை எங்கள் நாட்டுச் சரக்கல்ல. ஏனைனில் சீனமக்கள் நகைச்சுவை உடைய மக்களல்லர். நகைச்சுவைநடைமுறையுள்ள காலமல்ல இது. ஆகவே நகைச் சுவையும் மாறுபாடடைய இடமுண்டு. இது சமுதாயத்திற்கு எதிரான நையாண்டியாகவோ சம்பிரதாய நகைச் சுவையாகவோ மாறுபாடடையும்.
DsTiffF 2, 1933.
 
 

நகைச்சுவையிலிருந்து உறுதிவரை
"நகைச்சுவை" எப்பொழுது நையாண்டியாக மாறியதோ அப்போது அது தனது தனித் தன்மையை இழந்து நையாண்டியாக மாறி தண்டனைக்கானதாகும். ஆனால் பகிடியாக மாறும்போது அதன் ஆயுள் நீடிக்கும். அமைதியாகவும் நகரும். ஆனால் அது மெல்ல மெல்லமாக உள்ளுர்ச் சரக்காக மாறி மேல் நாட்டுப் பாணியைத் தழுவிய சூ வெஞ்சாங்கின் படைப்புகளைப்போல ஆகிவிடும். இதற்குத் தக்க சான்று "சீனதேசப் பொருள்களையே வாங்குவீர்!" என்ற கோஷங்களுக்கு மத்தியில் "நம்நாட்டு தயாரிப்பான இறக்கு மதிப் பொருள்கள்" என்ற விளம்பரத்தைக் காண்கிறோம்.
எல்லோரும் ஏமாற்றம் அடைந்தது போன்று முகத்தை வைத் திருக்க வேண்டும் என்றொரு சட்டம் வந்துவிடுமோ என்ற அச்சம் என்னை உறுத்துகிறது. சிரிப்பது உள்ளபடி குற்றச் செயல் அல்ல. வடகிழக்கு மாகாணத்தை இழந்ததற்கான காரணத்தை ஆர்ாந்து கொண்டபோது தேசபக்தர்கள் கண்டறிந்தது இதுதான். தற்போதைய இளைஞர்கள் சந்தோஷத்திலும் உல்லாசத்திலும், ஆணும் பெண்க னும் சேர்ந்து ஆடும் நடனத்திலும் கூடிய அக்கறை கொண்டுவிட்டார்கள் என்பதேயாகும், இளைஞரும் பெண்களும் சிரித்தபடி பெயல் பூங்காவில் பணியில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தபோது குண்டொன்று விழுந்து வெடித்துப்பனிக்கட்டியில் பெரும்பள்ளத்ததை உண்டாக்கிவிட்டதனால் மேல்கொண்டு சறுக்கி விளையாட முடியாது போய்விட்டது. ஆனால் ஒருவரும் காயப்படவில்லை.

Page 56
துரதிர்ஷ்டவசமாக ஷான் ஹைகுவான் வீழுச்சியுற்றபோது ஜெஹால் அவதிப்பட நேர்ந்தது. இது பிரபல கல்விமான்களையும் எழுத்தாளர்களையும் அவதிக்குள்ளாக்கியது. சிலர் சோக கீதங்களையும் மற்றையோர் போர்க்களப் பாடல்களையும் எழுதலாயினர். ஏனையோர் எழுதுவதற்குரிய சரியான பாதையை எடுத்துக் கூறத் தொடங்கினர். ஏசுவது வெறுக்கத்தக்கது. பகிடிவிடுவது அநாகரிகச் செயல், ஆழ்ந்த கவனம் செலுத்தி எழுதுங்கள், பலனை கூடிய கவனத்திலாழ்த்துங்கள். எதிர்ப்பின்மைக்கு ஈடுகட்டுங்கள்.
மனிதர்களால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க இயலாது. ஆயுதங்கள்ற்று இருக்கையில் எதிரிகள் எங்கள் வாசலை நெருங்கினால் உள்ளுக்குள் ஆத்திரம் கொள்வோம். ஆகவே எதிரிகளுக்கு ஒரு மாற்றுத் திட்டம் வகுக்கவேண்டும். அதனால் சிரிப்பவர்களுக்குக் கஷ்டம் காத்திருக்கும். அவர்கள் "கொஞ்சமும் இதயமற்றவர்" என அழைக்கப்படுகின்றனர். ஆகவே தந்திரசாலிகள் மறவர்களைப் போன்று முகத்தைத் தொங்கப் போட்டுத் தம்மை தொல்லைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுகின்றனர். இதனைத் தான் எங்கள் ஞானிகள், "புத்திசாலிகள் எபபொழுதும் துன்பங்களிலிருந்து விலகி இருப்பார்கள்" என்று கூறினார்கள். நகைச்சுவை சொர்க்கம் வரை செல்லும். உறுதி சீன தேசத்தில் மிச்சமானவற்றை சிறப்புடன் ஆட்சி செய்யும்,
இதனை நன்கு விளங்கிக் கொண்டோமாயின் ஆதிகாலங்களில் கற்புடைப் பெண்டிரும் ஒழுக்கம் குன்றிய பெண்களும் சிரிப்பதையோ பொதுவிடங்களில் உரையாடுவதையோ அனுமதிப்பதில்லை. இந்நாளில் ஒப்பாரி வைக்கின்ற பெண்கள் சாலை ஓரங்களில், கவலை இருப்பினும் இல்லாதிருப்பினும், உரத்த குரலில் ஒலமிடுகின்றனர். இது தான் "உறுதிநிலை". ஆனாலும் உண்மையில் நச்சுத்தன்மையானது.
Diridi 2, 1933.
 
 

வெளிச்சம் வரும்போது
சீனச் சிறைச்சாலைகள் மூன்றாம் தரமானவை என்பது எல்லோரும் அறிந்த இரகசியம். மனித உரிமைச் சங்கம் இந்தப் பிரச்சனையைச் சென்ற மாதம் முன்னெடுத்தது.
வெளிநாட்டார் நடத்தும் "த நோத் சைனா டெய்லி நியூஸ்" பத்திரிகையில் "பீஜிங்கிலிருந்து ஒரு கடிதம்" என்றொன்று பெப்ரவரி 15ம் திகதி இதழில் வெளிவந்தது. கலாநிதி ஹர வழி அநேக சிறைச். சாலைகளுக்கு நேரடியாகச் சென்று திரட்டியவற்றை எமது நிருபருடன் சிநேக பூர்வமாகக் கூறினார் - மிகவும் கவனமாக ஆராந்தபோது அப்படியானதற்கான ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறைக்கைதிகளுடன் உரையாடுவது மிகவும் இலேசாக இருந்தது. ஒருமுறை கலாநிதி ஹர வழி அவர்கள் கைதிகளுடன் ஆங்கிலத்திலும் பேசினார். அவர் பின்வருமாறு மேலும் குறிப்பட்டார்: "சிறைச்சாலைகள் அவ்வளவு திருப்திகரமாயில்லை. சிறைக் கைதிகள் சுதந்திமாக தமது கருத்துகளை வெளியிட்டபோது நன்றாக நடத்தப்படுவதில்லையென்று கூறியபோதிலும் அவை மூன்றாம் தரமாக இல்லை".
இந்தக் கவனமான ஆராய்வில் என்னால் பங்குபற்ற முடியாது போனபோதிலும் பத்து வருஷங்களுக்கு முன்பு பீஜிங்கிலுள்ள "மாதிரிச்" சிறைச்சாலையைப் பார்க்கப் போயிருக்கிறேன். இது ஒரு "மாதிரிச்" சிறைச்சாலையான போதிலும் சிறைக்கைதிகளுடன் பேசும்போது "சுதந்திரம்" இல்லை. கைதியும் நாமும் ஜன்னல் ஒன்றால் பிரிக்கப்பட்டு இருந்தோம். ஜன்னல் சுமார் மூன்றடி தூரத்திலிருந்தது. பார்வையாளரின் பக்கத்தில் ஒரு சிறைக் காவலாளி நிற்பான். பேசுகின்ற நேரமும் வரையறுக்கப்பட்டது. இரகசிய சைகைகள் மட்டுமல்ல. பிற மொழியில் பேசுவது கூட அனுமதிக்கப்படுவதில்லை.

Page 57
ஆனால் இந்த முறை கலாநிதி ஹர வழி ஆங்கிலத்திலும் பேசினாராம். விசித்திரமாக இருக்கிறது. ஒன்று சீன தேசத்துச் சிறைச்சாலைகள் பெரிதும் திருந்தி இருக்கவேண்டும், அல்லது கலாநிதி ஹர வழியின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டு சிறைக்காவலாளி பயந்திருக்கவேண்டும். அல்லது விற்றன் பிரபுவின் ஆள் என்று அவன் நினைத்தானோ?
அதிர்ஷ்டவசமாக கலாநிதி ஹ9 வழியின் சீனக் கப்பல் கொம்பனியின் மூன்று முக்கிய வழக்குகளின் மீதான விமர்சனத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. "பகிரங்கக் குற்றச்சாட்டே ஊழல் அரசியலுத்குத் தகுந்த தண்டனை, வெளிச்சம் தோன்றினால் இருள் அகலும்".
இதன்பிறகு எல்லாமே எனக்குத் தெளிவாகி விட்டது. சிறைச்சாலைகளில் அந்நிய மொழிகளில் பேசுவது தடைசெய்யப்படடுள்ளது. ஆனால் கலாநிதி ஹீ வரிக்கு இதிலிருந்து விதிவிலக்கு. ஏனெனில் அவர் பகிரங்க குற்றச்சாட்டு வழங்குபவர் என்பதால் தானோ? அவர் அந்நியர்களுடன் நட்புபூர்வமாகப் பேசவும் கூடும். அவர் "வெளிச்சம்". வெளிச்சம் வந்தால் இருள் அகலும். அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுவதை விரும்பியது மனித உரிமைச் சங்க அந்நிய நாட்டார் மீது, அங்கேதான் இருள் சூழ்ந்து இருக்கிறது.
ஆனால் வேறு யாரையாவது கைதிகளுடன் ஆங்கிலத்தில் பேச விடுவார்களென்று எனக்குத் தெரியவில்லை. இந்த வெளிச்சம் வீட்டை நோக்கிப் போய்விட்டது. இல்லாவிட்டால் இதன் கருத்து வெளிச்சம் மறைய இருள் மீண்டும் சூழ்கிறது.
ஆனால் வெளிச்சம் வெகு சுறுசுறுப்பாக பல்கலைக்கழக விவகாரத்திலும், நஷ்ட ஈட்டுக் குழுவின் விஷயத்திலும் இருப்பதனால் அநேக முறை இருளை நோக்கிப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அடுத்த கவனமான சிறைச்சாலை ஆராய்வின்போது கைதிகள் சுதந்திரமாக ஆங்கிலத்தில் பேசும்பேறு பெறுவார்களோ என்று நான் யோசிக்கிறேன். அந்தோ! வெளிச்சம் வெளிச்சத்தோடுதான் சேரும், சிறைச்சாலைகளிலிருக்கும் வெளிச்சம் மிகவும் மங்கலானது.
அவர்கள் யாரையும் குறை கூறவியலாது. கைதிகள் ஒருபோதுமே சட்டதிட்டங்களை மீறி இருந்திருக்கக் கூடாது. கனவான்கள் ஒருபோதும் சட்டத்தை மீறுவதில்லை. நான் கூறுவதைச் சந்தேகப்படுவதானால் இந்த வெளிச்சத்தைப் பாருங்கள்.
DITířäF 15, 1933,
 
 

நவீன வரலாறு
னெக்குப் புத்தி தெரிந்த காலத்திலிருந்து நான் பார்த்த நகரங்களிலெல்லாம் வெளியாக உள்ள இடங்களெல்லாம் வேடிக்கை காட்டுவோராலும் "சேக்கஸ்" காட்டுவோராலும் நிரம்பியிருக்கும்.
பொதுவாக இரண்டு வகை வேடிக்கைக் காட்சிகள் தான் காட்டப்படும். ஒன்றில் குரங்கொன்று முகமுடி அணிவிக்கப்பட்டு, ஆடையும் உடுத்தப்பட்டு வாளையோ ஈட்டியையோ ஏந்திக்கொண்டு ஆடொன்றின் மீது அமர்ந்தபடி சுற்றிச் சுற்றிவரும், முற்றத்தில் கரடியொன்று கழுநீரைக் குடித்துவிட்டு அதில் தோலையும் எலும்புகளையும் விட்டு விட்டு சில வேடிக்கைகளைச் செய்யும்.நிகழ்ச்சி முடிவில் தட்டேந்திக் காசு சேர்ப்பார்கள்.
வேறொரு வேடிக்கையென்னவென்றால் கல்லொன்றைத் துணி. யொன்றால் நன்றாகச் சுற்றிவிட்டு ஒரு வெறும் பெட்டிக்குள் போட அதி. லிருந்து வெண்புறா வொன்று வெளிவரும். மற்றொரு நிகழ்ச்சி வேடிக்கை காட்டுபவன் வாய்நிறையக் காகிதங்களை நிரப்பிவிட்டு அந்தக் காகிதச் சுருளுக்குத் தி முட்டிவிட்டு வாய், முக்கு ஊடாகத் தீயை வெளிவிடுவான். அதன்பிறகு பார்வையாளரிடமிருந்து காசு சேர்ப்பான். சேகரித்த தொகை போதியதில்லையென்றால் அவன் தயங்கியபடி நிற்பான்.மற்றொருவன்பார்வையாளரைப்பார்த்து மேற்கொண்டு ஐந்து நாணயங்களைப் போடும்படி கேட்பான். ஒருவன் ஒரு நாணயத்தைப் போடவும் மேலும் இரண்டு. மூன்று.நான்கு என்று சொல்லியபடியிருப்பான். போதிய தொகைப் பணம் கிடைத்ததும் வேறொரு வேடிக்கை காட்டுவார்கள். சிறுபிள்ளையொன்றைச் சாடியொன்றுக்குள் போட்டுவிடுவார்கள். அதன் தலைமயிரின் சிறுபகுதி மட்டுமே தெரியும். பிள்ளையை

Page 58
வெளியே எடுக்கப் பார்வையாளர் காசு போடவேண்டும். போதிய காசு கிடைத்ததும் மனிதன் ஒருவன் ஏதோவிதமாக அப் பிள்ளையைக் கூரிய கத்தியால் வெட்டிக் கொன்று துணியால் மூடி வைப்பான். அப்பிள்ளை உயிர் பெற்று எழநீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
வீட்டிலே நாம் எமது பெற்றோரைக் காண்கிறோம். வெளியிலே நண்பர்களைக் காண்கிறோம். வேடிக்கை காட்டுபவன் "ஐயோ, ஐயோ" என்று சோகமாக அலறி நாணயத்தைப் போடுவது போலப் பாசாங்கு செய்கிறான்.
அவன் மற்றப்பிள்ளைகளைப் பார்த்து "நெருங்கிவந்து அவர்களை நன்றாகப் பார்த்துவிடுங்கள்" என்கிறான். நன்றாக அவதானிக்காமலிருந்தால் அவர்களை அடிக்கவும் செய்கிறான்.
உண்மையிலேயே அநேகர் பணம் கொடுத்துவிடுவார்கள். வேடிக்கை காட்டுபவன் நாணயங்களின் எண்ணிக்கை கூடினாலும் குறைந்தாலும் அவற்றையெல்லாம் எண்ணிய பிறகு தன்னுடைய உடைமைகளை எல்லாம் திரட்டிக் கொள்கிறான். இறந்துபோன சிறுவன் தவழ்ந்து எழுந்தபடி அவர்களுடன் சென்றுவிடுகிறான்.
பார்வையாளர்கள் முட்டாள்கள் என்ற நினைவோடு கலைந்து விடுகிறார்கள்.
வெட்டவெளியான இடத்தில் சிறிது நேரம் மட்டும் அமைதியாக இருந்த பிறகு மீண்டும் பழைய நிலைமைதான். "எல்லோராலும் தந்திரங்கள் செய்யமுடியுமெனிலும் அவையெல்லாம் ஒன்றாக இருப்பதில்லை" என ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் உண்மையில் அநேக வருஷங்களாக ஒரே மாதிரியானவை. யாகவே தொடர்ந்திருக்கின்றன. ஆனாலும் மக்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு பணமும் கொடுத்து வருகிறார்கள். சில தினங்கள் அமைதியாக ஒன்றும் நடவாமல் அமைதியே நிலவும்.
நான் கூறவிழைவது இவ்வளவேதான். எல்லோரும் பணம் செலுத்திப் பார்த்த பிறகு சில தினங்களுக்கு அமைதி நிலவும். பின்னர் மீண்டும் அதே சம்பவம் தொடரும்.
இப்போதுதான் நான் தவறான தலைப் பொன்றைத் தேர்ந்து விட்டேனோ என்று தோன்றுகிறது. இது மீனுமில்லை, பறவையுமில்லை.
ஏப்ரல் 1, 1933.
 
 

சீன மக்களின் BITůU600
"6றும்புகளுக்குக் கூடத் தங்கள் உயிர்கள் மீது ஆசையுண்டு" எனச் சீனப் பாமர மக்கள் தங்களை எறும்புகள் எனக் கூறிக் கொள். வார்கள். என்னைப் பாதுகாக்க வேண்டுமெனில் சிறிதுநேரத்திற்கு நான் பாதுகாப்பானதோர் இடத்திற்குச் செல்லவேண்டும். வீரர்கள் என்னை எள்ளிநகைப்பார்களோ எனச் சந்தேகமாயிருக்கிறது.
நான் ஒருபோதும் செய்திகளை அப்படியே ஏற்றுக் கொள்பவனல்ல. எப்பொழுதும் வித்தியாசமான கருத்துக்களையே ஏற்றுக்கொள்பவன். உதாரணமாகப் பத்திரிகைகள் பீஜிங்கில் விமானத் தாக்குதலுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக எழுதியபோது எனக்குச் சற்றுக் கலக்கமாகவே இருந்தது. பண்பாட்டுச் சின்னங்கள் தென்புலம் நோக்கி நகர்த்தப்படும்போது இந்தப் பழைய நகரத்திற்கு ஆபத்து வரப்போவதை உணர்ந்தேன். புராதனச் சின்னங்கள் சேருமிடத்தை வைத்துக் கணிக்கும்போது சீனாவின் மகிழ்ச்சி எங்கே தேங்கியுள்ளது என்பதை ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.
ஒன்றன் பின் ஒன்றாக புராதனச் சின்னங்கள் ஷாங்ஹாயை அடையலாயின. அந்நியருக்கான சலுகைகள் மற்ற இடங்களைக் காட்டிலும் கூடுதலாக அங்குதான் கிடைக்கின்றன.
எனினும் இதனால் அங்கு வாடகை உயரப் போகிறது.
இது "எறும்பு மனிதருக்குக்" கிடைத்த பேரிடியாகும். ஆகவே நாங்கள் வேறிடங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கவேண்டும்.
நீண்ட சிந்தனைக்குப் பிறகு பாதுகாப்பரண்கள் அமைக்க வேண்டுமென்று யோசிக்கின்றேன். இது உள் நிலையமுமல்ல முன்னணி

Page 59
நிலையமுமல்ல. இரண்டுக்குமிடைப்பட்ட பிரதேசம். இதில் மனிதன் கூடிய காலத்துக்கு இவ்வுலகில் உயிர் வாழலாம்.
முன்னணி நிலைகளின் மீது விமானங்கள் குண்டுகளைப் பொழி. கின்றன. ஜப்பானியப் பத்திரிகைகளின்படி அவர்கள் கொள்ளை. யர்களை அகற்றுகிறார்கள். சீனப் பத்திரிகைகளின்படி பெருந் தொகையான மக்கள் கொல்லப்படுகிறார்கள். நகரங்களும் கிராமங்களும் முற்றாக அழிக்கப்படுகின்றன. உள்நாட்டுப் பிரதேசங்களிலும் விமானங்கள் குண்டுகளைப் போடுகின்றன. ஷாங்ஹாய் பத்திரிகைகளின்படி, அவர்கள் பொதுவுடமைக் கட்சிக்காரக் கள்வர்களைத் துடைத்தெறிவதோடு அவர்களுக்குப் பேரழிவுகளையும் ஏற்படுத்துகிறார்கள். பொதுவுடமைப் பத்திரிகைகள் என்ன தெரிவிக்கின்ற னவோ தெரியவில்லை. உள்நாட்டு நிலைகளின்மீது இடையறாத குண்டுவீச்சுகள் தொடர்கின்றன. முன்னணிப் பிரதேசங்களிலும் குண்டுவீச்சு! அங்கே வெளியாட்களாலும் இங்கே எங்களாலும் நடைபெறுகின்றன. குண்டுவீச்சு விமானங்கள் வேறாக இருந்தபோதும் குண்டுவீச்சுக்களால் அழிவது நம் மக்களேயாவர். குண்டுவீச்சுக்கு இலக்காகும் அழிவைத் தவிர்க்க வேண்டுமாயின் இந்த இரண்டு பிரதேசங்களுக்குமிடையே இருந்தோமாயின் தவறியும் குண்டுவிழுந்து அழிக்காது இருப்போம். ஆதலினால்தான் நான் இதனைச் சீன மக்களின் "காவலரண்" என்கின்றேன்.
வெளியிலிருந்து போடும் குண்டுகள் நெருங்கி வருமாயின் "காவலரண்" வெறும் காவற்கோடு ஆகிவிடும். பிறகு இதுவும்கூட அற்றுப் போய்விடும்.
உண்மையில் எல்லோரும் இந்த வெகுமதியைப் பங்கு போட்டுக் கொள்வார்கள். "சீனா பரந்த நிலப்பரப்புடையதும் செல்வங்கொழிக்கும் வளங்களையும் பெரும் ஜனத்தொகையையும் கொண்ட நாடு" என்ற சிறப்பெல்லாம் சென்ற ஆண்டே அகன்று விட்டமை இதற்கொரு சான்றாகும். ஒரு மகா பிரபு சொற்பொழிவு ஆற்றும்பொழுது சீன மக்களை "வலுவிழந்த சின்ன மக்கள்" என்று விபரிக்கின்றார்.
ஆனால் வல்லவர்கள் இதனை அறிவற்றோர் கூற்று என்பார்கள். ஏனெனில் அவர்கள் விமானங்களையும் அந்நிய நாடுகளில் தாயகங்களையும் கொண்டுள்ளனர். w
ஏப்ரல் 10, 1933.
 
 

புதிய மருந்து
அவனுடைய பெயர் அடிபடும்போது நாம் அவனை நினைவு சுருகிறோம். செப்ரம்பர் 18ம் திகதிய சம்பவத்திற்குப் பிறகு திரு. வு ஸிஹசயையின் பிரபல பேச்சைப் பற்றியே பேசுவாரில்லை. அவரும் சுகவீனமுற்றிருக்கிறாராம். இப்பொழுது ஒரு சிறுகுரலொன்று நான்சங்க் இலிருந்து வெளிவருகிறது. செய்ரம்பர் 18ம் திகதிய சம்பவத்திற்குப் பிறகு குரலொன்றும் எழுப்பாமல் புதிய பரிமாணங்களை எடுத்துள்ள "தேசிய" எழுத்தாளர்களாலும் எள்ளிநகையாடப்பட்டது.
இது ஏன்? சுருக்கமாகக் கூறினால் இந்தச் சம்பவந்தான் காரணமாகும். நாம் பழையதைத் திரும்பிப் பார்ப்போம். திரு வூவின் எழுத்தும் பேச்சும் ஏற்படுத்திய பங்களிப்பை மறக்கவியலாது. சிங் அரச பரம்பரையின் முடிவுகாலம், மே 4ம் திகதிய இயக்கம், வடபுல யாத்திரை, கோமின்டாங் வெளியேற்றம் இவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பநிலை என்பவற்றில் அவருடைய முத்திரை பதிந்திருந்தது. இப்பொழுது அவர் வாயைத் திறந்ததும் கயவர்கள்கூட அவரைக் கேலி செய்கிறார். கள். செப்ரம்பர் 18ம் திகதிய சம்பவத்திற்குப் பிறகு சீனாவின் மூத்த அரசியல்வாதியான கோமின்டாங்கை திரு. வூ அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டார். கயவர்களையும் அது வலுபொருந்தியவர்களாக்கி விட்டது.
ஆகவே செப்ரெம்பர் 18ம் திகதிச் சம்பவத்திற்குப் பிறகு நிலைமை நன்றாகவே மாறிவிட்டது.
இது ஒரு பழங்கதை. எவரோவொரு சக்கரவர்த்தி காலத்தில் அவருடைய காதல்கிழத்திகள் பலருக்குச் சுகவீனம் ஏற்பட்டு விட்டதாம். அவ்வருத்தத்தைக் குணப்படுத்த மருந் தொன்றும் கிடைக்கவில்லையாம். ஒரு பிரபல வைத்தியர் அதிசய மருந்தொன். றைக் குறிப்பிட்டாராம். அம் மருந்து பலம் வாய்ந்த இளைஞர்களாகும்,

Page 60
சக்கரவர்த்தியும் வேறுவழியின்றி இதனை ஏற்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். சில தினங்களுக்குப் பின்னர் சக்கரவர்த்தி சென்று பார்த்தபோது தனது எல்லாக் காதல் கிழத்திகளும் நல்ல ஆரோக்கியமாக இருக்கக் கண்டார். மரணப் படுக்கையிலிருந்த சில சோர்ந்துபோன மனிதர்கள் சக்கரவர்த்தியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். அதிர்ச்சியுற்ற சக்கரவர்த்தி "இதெல்லாம் எப்படி ஏற்பட்டது" என்று கேட்க, அந்தப் அப்பெண்கள் அனைவரும் இவை இந்த "மருந்தின் மிச்சங்கள்" என்றனர்.
கடைசியாக வெளிவரும் பத்திரிகைகளை வாசிக்கும்போது திரு. ஆவும் மருந்தின் மிச்சங்கள் போலத் தென்பட்டார். நாய்கள் கூட அவர்மீது ஏறி மிதிக்கும் நிலைதான். அவர் ஒரு புத்திசாலி-நடுநிலையான மனிதர்தான். எனினும் யார்தான் அவரை உறிஞ்சிக் குடிப்பவர்களைத் தடுப்பார்கள்? ஆனால் செய்ரம்பர் 18ம் திகதிய சம்பவத்திற்குப் பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. ஆகவே இதனைக் குணப்படுத்த புதிய மருந்தொன்று விற்பனைக்கு வரவேண்டும். அவரை எள்ளிநகையாடுவது புதிய மருந்தின் விளைவுதானோ?
புதிய மருந்து சக்தி வாய்ந்ததாகவும் வன்மை குறைந்ததாகவும் இருத்தல்வேண்டும். இதனை நாம் எழுத்தோடு ஒப்பிடுவோமாயின் முதலில் நாட்டுக்காக உயிர் விடுகின்ற வீரர்களையும் அதன்பின் காதலுக்காக இறக்கின்ற அழகிகளையும் விபரிப்பதாய் இருத்தல் வேண்டும். ஒருபுறம் ஹிட்லரின் அரசாங்கத்தைப் போற்றவேண்டும். மறுபுறம் சோவியத்நாட்டின் சாதனைகண்ளப்பாராட்டவேண்டும். காதல் பாட்டைத் தொடர்ந்து ஒரு போர்க்கீதம், விபச்சாரிகளோடு 2(5 கலந்துரையாடல், நல்லொழுக்கத்தைப் பற்றிய ஆலோசனை, தேசிய அவமானத் தினத்தன்று மரங்களின் ஒலத்தைப் பற்றியும் மே தினத்தன்று ரோஜா மலர்களின் சிறப்புப் பற்றியும் பேசுவது, எஜமானின் எதிரிகளைத் தாக்கிப் பேசுவதோடு எஜமான் மீதான அவர்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். முன்பு கொடுக்கப்பட்டதோ இலேசான மருந்துக் குறிப்பாகும். இப்போது வேண்டுவதோ மிகச் சிக்கலான மருந்தாகும்.
சிக்கலான மருந்தோ எல்லா நோய்களையும் குணப்படுத்தும். அதோடு பயனற்றதுமாகும். அது நோயையும் குணப்படுத்தாது. அதே நேரம் நோயாளியையும் கொல்லாது. இந்த மருந்தை எடுப்பவர்களுக்கு நோய் நீங்கப் போவதில்லை. இறுதியில் நோய் அதிகரித்து மரணத்திலேயே முடிவுறும்.
ஏப்ரல் 29,1933.
 
 

த டிப்பர் சஞ்சிகைக்கு ஒரு பதில் நல்ல எழுத்தின் இரகசியம் என்ன?
டிசம்பர் 27 1931,
அன்புள்ள ஐயா,
இந்த வினாவை நீங்கள் அமெரிக்க எழுத்தாளர்களுக்கோ, ஷாங்ஹாயைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கோ அனுப்பியிருக்கவேண்டும். அவர்களிடந்தான் "எழுதுவதற்கான விதிகள்", "கற்பனைக் கதைகள் எழுதும் கலை" என்பவை நிறைய உள்ளன. நான் பல சிறுகதைகள் எழுதியுள்ளபோதும் இப்படித்தான் கதைகள் இருக்க வேண்டுமென்ற விதிகளை வகுக்கவில்லை. சீன மொழியில் அதிகமாக நான் பேசியபோதும் சீன மொழி இலக்கணத்திற்கு முன்னுரை எழுதும் ஆற்றல் என்னிடமில்லை. என்னை வினாவிக் கெளரவித்தபடியால் என்னுடைய அனுபவத்திலிருந்து சில வழிமுறைகளைச் சொல்கிறேன்.
1. முடிந்தவரை எல்லாவற்றிலும் அக்கறைசெலுத்தி அவதானியுங்கள். எதனையும் அரைகுறையாகப் பார்த்துவிட்டு எழுதவேண்டாம்.
2. மனநிலை ஒத்துவராதபோது ஒன்றையும் வலுக்கட்டாயமாக
எழுதவேண்டாம்.
3. உங்கள் கதாபாத்திரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகை மாதிரிப்பாத்திரப் படைப்புகளையே திரும்பத் திரும்ப ஏற்படுத்தாமல் நீங்கள் பார்த்துப் பழகிய அனைத்தையும் புகுத்துங்கள். 4. நீங்கள் எழுதிய கதையை இருமுறையாவது திருப்பி வாசியுங்" கள். வாசித்து வேண்டாத சொற்களை சொற்றொடர்களை

Page 61
பாவபுண்ணியம் பாராமல் வெட்டி எறியுங்கள். கதைக்குரிய தகவல்களைக் குறைத்து சிறு குறிப்பாக்குங்கள். சிறு குறிப்புகளை நன்கு நீட்டி நெடுங் கதைகளாக்கி விடாதீர்கள்.
அந்நிய தேசக் கதைகளை - குறிப்பாக கிழக்கு, வடக்கு ஐரொப்பிய, ஜப்பானியக் கதைகளைப் படியுங்கள். யாரும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத உவமானங்களைப் புகுத்தாதீர்கள்.
ஒரு போதும் "எழுத்துக்கான விதிகள்" பற்றிப் பேசாதீர்கள். சீன இலக்கிய விமர்சகர்களைப் பற்றி நம்பிக்கை வையாதீர்கள். ஆனால் நம்பகமான அந்நிய தேச விமர்சகர்களின் படைப்புகளைப் படியுங்கள்.
இது தான் இது பற்றி நான் கூறக்கூடியது. எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன் லுாசுன்.
 
 

G 多

Page 62
இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியர்திரு பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர் பர்மாவில் பிறந்தவர். தென் இந்தியாவின் வாழ்ந்து கல்வி கற்று விஞ்ஞானப் பட்டத 28வது வயதில் இலங்கை வந்து நீர்ப்பா களத்தில் இரசாயணியாக கடமை புரிந்தார். 19 பணியில் இருந்து ஓய்வு பெற்றார்
சமூக அக்கறையும் மனிதநேயமும்மிக்க மைக் கருத்துக்களின் மீது ஈர்ப்பும் ஆர்வமு. அதன் காரணமாக எப்போதும் சுயநலத்தி
பொதுநலத்தை முன்னிறுத்தி தன்னாலா வருபவர். பல்வேறு சமூக நல அமைப்புக முன்னணியில் இருந்து செயலாற்றி வந்து நலன்களுக்கான வெகுஜன அமைப்புகளில் சூழல்களிலும் பணிபுரிந்து வந்தவர். தேசியக பேரவையின் ஆரம்ப காலம் முதல் இணைந் இலக்கிய செயற்பாடுகளில் தொடர்ந்து வருகின்றார்.
மக்களின் புதிய சிந்தனை விழிப்புணர் இலக்கிய பிறமொழி ஆக்கங்களை ஆங்கி தமிழுக்கு கொண்டு வருவதில் தொடர்ந் வந்துள்ளார். பல்வேறு பத்திரிகைகள், அவரது மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ள உலக இலக்கிய மேதைகளில் ஒருவரான லூ கால சிந்தனைகள் என்னும் சிறுகட்டுரைக அவரது மொழிபெயர்ப்பு நூலாக வெளிவரு
 

க.நடனசபாபதி 25. O2. 335i தமிழ் நாட்டில் ரியானார். தமது சனத் தினைக் 85ல் அரசாங்கப்
இவர் பொதுவுட i elérszöTLGi. ற்குப் பதிலாக
பணி புரிந்து ல் இணைந்து Grif GTTTr. Dafig.gif நெருக்கடி மிக்க லை இலக்கிய து அதன் கலை
செயலாற்றி