கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உரசல் ஓசைகள்

Page 1


Page 2

பவித்திரன்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு.82
நூற்பெயர் பதிப்பு வெளியீடு அச்சிட்டோர் விநியோகம்
விலை: ரூபா. 100/=
Title
Edition
Publishers
Printers
Diustributors
ISBN NO
Price: Rs... 100/=
உரசல் ஓசைகள்
GLO 2002
தேசிய கலை இலக்கியப் பேரவை கெளரி அச்சகம்
சவுத் ஏசியனர் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிடட், 47, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு -11.
தொலைபேசி : 335844,
Urasal Osaihal May, 2002 Deshiya Kalai Ilakkiyap Perawai Gowry Printers South Asian Books, Vasantham (Pvt) Ltd., No. 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo - ll. Tel: 335844 955-8637-06-8
ii

என்னுரை
து ஒரு காலம். நேற்றேதான் போலிருக்கிறது. வண்ணத்துப் பூச்சியாய் إ9عي பகட்டித் தளர்நடைபோட்ட அந்தக் காலம் நேற்றேதான் போலிருக்கிறது. இரவின் மடியில் இந்த முன்னுரையை எழுதத் தொடங்கும் இந்தக் கணத்தில் வானில் தோன்றி சட்டென மறையும் மின்னற்கீற்றுக்கள் போல் அந்த நினைவுகள் சடுதியில் மேலெழுகின்றன.
ஆம்! இயற்கை முழுவதும் ஒரு புதுப் பொலிவு கொண்டு பூத்து நின்ற காலப் பொழுதுகள் அவை. அந்த உலகின் வசீகரம் என்னுள்ளும் பூத்துச் சொரிய உலகமே ஒரு காவியமாக சோபை கொண்டு எழுதாக் கவியாக பேசாப் பொருளாய் கூரித்து நின்று கிளர்வூட்ட நான் முற்றிலும் கவித்துவமெய்தி விட்டேன். ஆம்! அப்படித் தான் உணர்வுகள் கவித்துவமெய்தி விட்ட பிறகு வாழ்வின் வனப்பை வரைய பேச்சுக்கள் ஏன்? பழகு தமிழின் இனிமையில் பரவசமாய் விட்ட எனக்கு வார்த்தைகளிற்கு அப்பாற்பட்ட ஆத்மார்த்தமான அனுபவம் கிட்டிற்று.
அந்த அனுபவங்களிற்கு ஆட்பட்ட நான் மெளனத்தை எனது மொழியாக வரித்துக் கொண்டேன். அன்றெல்லாம் நான் குழந்தையாயினும் முன்றில் அருகே முகாமிட்டிருந்து தென்றலோடும் தேன் நிலாவோடும், விண்ணிழிந்த நுண்துளியோடும் பேசலாயினேன். பேசியவை கொஞ்சமோ? பேணி நின்ற இரகசியம் சொல்லவோ? அன்பு முற்றி நெஞ்சம் நிறைந்ததும் யாரறிகுவார்? மனமெல்லாம் பூரித்து நின்றதனால் அன்றென் மனதினில் ஆழக் கீறிய சுவடுகள் இன்றெழுந்து சுடராய் மின்னுகின்றன.
இந்தக் கவிதைகளில் எனது முகம் உண்டு. பிறருடையதும் உண்டு. கூடவே உணர்வுகள் மெளனித்துப் போன பரிதாபமும் இக் கவிதைகளில் உண்டு. சோகம், நம்பிக்கை, வரட்சி, தணியாத கலைத் தாகம், காதல் என்ற பன்முகத் தன்மைகளை இனம் காணமுடியும்.
வாழ்க்கை எப்போதுமே எவருக்குமே சமநிலையில் இயங்கியதாக வரலாறு இல்லை. மேடும்-பள்ளமும், ஏற்றமும்-இறக்கமும், முன்னெடுப்பும் பின்நோக்கிய பாய்ச்சலும். ஆம் இப்படித்தான் வாழ்வின் போக்கு வழி. ஆனாலும் என்ன! இவற்றினுள்ளும் புகுந்து எழுகின்ற பொறுமை இருக்கிறபோது தாங்க முடியாத கசப்பினுள்ளும் வாழ்வின் ரஸத்தைப் பருக விழைகிற துடிப்பு இருக்கிறதே. அதுவே எமக்குக் கிடைத்த பெருங் கொடை. சிதையினின்றும் புதிய சோபன

Page 4
அதுவே எமக்குக் கிடைத்த பெருங் கொடை. சிதையினின்றும் புதிய சோபன மெருகுடன் எழ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதே அதுவே எமக்குப் போதுமானது.
இந்தக் கவிதைகள் என்னைப் பற்றிப் பேசுவன மட்டுமல்ல. யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் சாமானிய மனிதர்களின் அவலங்களையும் பேசுகின்றன. வாழ்நிலை யதார்த்தம் சிக்கலாகிப் போய்விட்ட சூழலில் சக மனிதர்களின் நேசம் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களைக் குறித்துப் பாடமுடிகிறதே என்ற சந்தோஷம் என்னுள் உண்டு. புறநிலை அழுத்தங்கள் மனதைக் கல்லாக்கி விட்ட நிலையிலும் மானிடம் பாடும் உந்தல் இருப்பது மனதிற்கு உற்சாகமூட்டும் சங்கதி தான்.
எனது சில கவிதைகள் கருகலானவை எனச் சிலர் கருதக்கூடும். ஆனால் அதன் மேற்பூச்சு கழன்று விடும் போது அதன் உள்ளாழங்களில் அழுந்தும் எவரும் என்னைத் தரிசிக்கும் வாய்ப்பைப் பெறுவர். எனது கருகலின் பின்னால் உள்ளாழங்களில் உள்ள ஊற்று இன்னமும் வற்றிப் போய்விடவில்லை. அந்த சோபனமான காலப் பொழுதுகளின் தெறிப்புகள் இடையிடையே, தூறல்களாக, கவிதைகளாக வந்து விழுகின்றன.
இனி. ஒரு விடயம். நான் எப்போதுமே பிரபல்யத்திற்காக கவிதைகள் எழுதியதில்லை. எனது ஆத்மாவின் உள்ளோசையை உங்கள் முன் சமர்ப்பிப்பதற்காகவே எனது கவிதைகளில் பெரும்பாலானவை எழுந்துள்ளன. என் மூலத்தைத் தரிசிக்கும்போது எழுகின்ற ஆனந்தத்திற்காக இவற்றை வெளியிடும் அவசியம் உண்டு. உண்மையான நண்பர்களிற்கு நான் பேசாத சேதிகளையெல்லாம் இக் கவிதைகள் பேசும்.
- நட்புடன் பவித்திரன் -

அணிந்தரை
(கல்வயல் வே. குமாரசாமி)
இன்றைய இலக்கிய உலகில் கவிதை பற்றிய சிந்தனைகள் நிறையவே முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்க் கவிதைப் பரப்பிலும் தொல்காப்பியர் காலம் முதல் கவிதைக்கு வரைவிலக்கணம் கூற முற்பட்டு இன்றுவரை முடியாமல் தொடர்ந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. இது கவிதைக்குச் சரியான வரைவிலக்கணம் வகுக்க முடியாதென்பதை நன்றாக நிரூபித்துள்ள அதே வேளை நல்ல கவிதைகளையும் அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கேற்ப தர, வழிவகுத்திருக்கின்ற தென்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஓர் உண்மையாகும். இதற்கிடையில் ‘கவிதைக்கு முடிவு வந்துவிட்டது' என்ற குரல்களும் அடிக்கடி ஒலிக்காமல் இல்லை. ஆனால் அவ்வப்போது நல்ல அருமையான கவிதைப் படைப்புகள் வெளிவரவே செய்கின்றன. அவற்றுள்ளே ஒன்று தான் பவித்திரனின் ‘உரசல் ஓசைகள்' .
கவிஞர் பவித்திரனின் கவிதைகள் என்னுள் எதைஎதையோ மொட்ட விழ்க்கின்றன. அவை பரப்பும் மணம் என் நரம்புகள் தோறும் புதிய உணர்வலைகளாய் பரவுகின்றன. நான் என்றோ இருந்த இருப்பையும் என்னுள் எழுதாமல் வைத்திருந்த இனிய நினைப்பையும் பவித்திரன் வெளிக்கொண்டு வந்திருப்பதைக் காண, எழுத உதவிடும் இதய உணர்வுகளை அறிவுத் திறனும் இணைந்த புணர்வின் பயனைத் தரிசித்த தன்னிறைவு ஏற்படுகின்றது. கவிதை மொழி வற்றிச் சருகாகி வன்பாலையில் வற்றல் மரம் தளிர்த்திருப்பது போன்ற நிலையை வாய் ஓயாமல் புழுகிப் பாராட்டிப் பிரமிப்பூட்டும் இவ்வேளையில் பவித்திரன் என்ற புதிய கவிஞனின் வருகை இன்றைய கவிதைத் துறைக்குத் தவிர்க்க முடியாததோர் தேவையாகி விட்டது.
இங்கே நான் மிகவும் விரும்புவது இதுதான். அதாவது மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் என் கடப்புகளிலிருந்து கொண்டு என் முடிவைத் தைரியமாகக் கூறுவதுதான். விரும்புகிறேனோ இல்லையோ அதை நேரடியாகச் சொல்வேன். என் கருத்தை முன்வைப்பேன். அதற்கு மற்றவர்கள் உடன்பட்டாலும் சரி, சலிக்கத் தேவையில்லை. கவிதை பற்றிய கருத்துக்களும் கணத்துக்குக்கணம் அசுரவேகத்தில் மாறலாம். சரியாக ஆராய்ந்தால் விமர்சகர்களின் விருப்பும் வெறுப்பும் வெறும் கற்பனையே. எனவே அவர்களின் கற்பனையைக் கண்டு நான் அஞ்சுவதில்லை. கருத்து மாறுபாடு மட்டும்தான் உண்மை. புறக்கணிப்பும் திறக்கணிப்பும் செய்ய முற்படுவது எத்தகுதியின் பாற்பட்டதென்ற படைப்பாளியின் அல்லது கவிஞனின் கேள்விக்குப் பதில் என்ன? ஒருவரை ‘நவீன கவிதை
V

Page 5
உலகின் மிகத் தெளிந்த அறிவுடையவர்களில் ஒருவர் என்பது எந்த அளவுக்குச் சரி? எதனை ஆதாரமாக கொண்ட முடிவு அது? தான் கருதியதைத்தான் படைப்பாளி தன் படைப்பில் கொண்டு வர வேண்டும். இன்ன இன்னவற்றைப்பற்றி எழுதினால் தான் அது மகோன்னதமான படைப்பு. இவர்களின் அங்கீகாரம் பெற்றால்தான் அவன் கலைஞன், கவிஞன் என்ற வாய்பாடுகளைத் துாக்கிப் பிடிக்கவும், அவற்றை வெளியிடவும் குழுநிலைப்பட்டு நின்று கூட்டவும் கொக்கரிக்கவும் தான் அவதிப்படுகின்றோமே தவிர ஆத்மார்த்த பூர்வமாக நாம் சிந்திப்பதென்பது மிகமிக அருமையாகிவிட்டது. கவிதையைப் பொறுத்தவரை கூட இருண்மைக்கும் பொருள் தெளிவின்மைக்கும் பிரசாரக் கூச்சலுக்கும் முதுகு சொறிந்து பன்னீர் தெளிக்கும் நிலைக்காளாகி விட்டோம்.
வாழ்க்கை பற்றிய யதார்த்த நுட்பங்கள், இதுவரை பேசப்பட்டனவற்றை எல்லாம் ஒதுக்கி எறிவதிலிருந்து விடுபட்டு நின்று கொண்டு, கவிஞன் பவித்திரன் பார்க்கும் பார்வை எனக்கென்னவோ இந்தக் கவிதைகள் வாழ்க்கையோடு மிகமிக நெருங்கி இருப்பதானதோர் உணர்வையே தருகின்றன. உணர்வுகளின் முதலீடும் பயனும் விதிகளை (இலக்கணக் கூட்டங்களை) எல்லாம் தோற்றம் தெரியாமல் தாண்டிக் கொண்டு வருகின்றபோது ஏற்படுத்தும் சுகானுபவமும் கவிதை உலகில் விமர்சகர்களால் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அமிழ்ந்திப் போவதிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசிய தேவையையும் இக்கவிதைகள் பூர்த்தி செய்ய முனைவதோடு வழிகாட்டி நிற்கின்றன.
மேலும், கவிதைஉலகின் ஏகபோக வாதிகளென எண்ணிக் கொள்வோர் முன்னே உண்மைகளை உரைத்துக்காட்ட வேண்டிய அவசரமும் அவசியமும் கூட இங்கு செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. இப் புதிய போக்கிற்கு இக்கவிதைகளில் காணப்படுகின்ற கலையம்சங்களும் சொல்லப்படுகின்ற செய்திகளும் பிரசார நெடியிலிருந்து விடுபட்டு மனித நேயம் மகோன்னதமாக மாறிச் செயல்படுதல் புரிகின்றது. அதாவது இதயத்தைத் தொடுவதும், ஏங்க வைப்பதும், உவகை தருவதும், உலுப்புவதும், உருக்குவதும், உணர்த்துவதும், உறுக்குவதும், உரப்புவதும், உறுத்துவதும் என்று எத்தனையோ வேலைகளைச் சில கணங்களுக்குள்ளேயே சாதித்தல் தான் அது.
“கந்தல் உடை ஓவியம்’ என்ற கவிதையூடாக மானிட நேயம் மலர்ந்து நிற்பதைப் பார்க்க முடிகிறது. வானவில்லின் நிறம் கலையல்ல - வானவில்லின் நிறமெடுத்துத் துணிக்குக் கொடுத்து அதை அணிந்த நங்கையைச் சொல்லினால் தீட்டி விளையாட்டுக் காட்டுவதுதான் கலை. ஆனைக்குட்டி கலையல்ல.

வீட்டுக்குள்ளே ஆனைக்குட்டியாக அப்பா தவழ அதிலே பிள்ளை ஏறித் தோளைக் குனிந்து பிடிக்க அப்பா அசைய அம்மா பாடினால் அது இங்கே கலாம்சம் பெற்றுக் கவிதையாகி - கலையாகி விடுகிறது. கவிஞன் தரும் பாட்டுப் படுத்தும் ஜீவனாவஸ்தைதான் கலை - அதுவே கவிதை. இந்த அவஸ்தைகளை அனுபவி என்று அங்கலாய்க்கும் படியாகத் துாண்டுகின்ற மொழி இருக்கிறதே அது இவ்வீரியத்தைப் பெற்றுக் கொண்டு செயற்பட்டால்/பிரவாகித்தால் அது கவிஞனின் வெற்றி. இதைப் பவித்திரன் சாதிக்க முயன்றிருக்கிறார்.
இனி, கம்பன் நல்லியற் கவிஞர் நாவில்
பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல்லெனச் செய்யுள் கொண்ட
தொடை எனத், தொடையை நீக்கி
எல்லையில் செல்வம் தீரா
இசை என்ப பழுதிலாத
பல் அலங்காரப் பண்பு மிக்க தாகக் காட்டிய நலன்கள் மேவிய தன்மையின் முறுவலிப்பு இங்கே. ஆத்ம உணர்ச்சிகளாய் வார்த்தைக்குள் நுழைந்து உயிர் பெற்று வந்து ஆட்கொள்ளுகின்ற இயக்க நிலை - “வீடு வரை உறவு வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ” என்பதன்று கவிதை, இவற்றுக்குள்ளே முகிழ்ந்த அன்பின் அமரநிலை - ஆனந்தப் பெருக்கு - செளந்தர்யம் அவையே கவிதை. சொல் உயிர் பெற்று நடமாடுஞ் சூட்சுமத்தைக் கொடுக்கின்ற செயல்தான் கவிதைத்தொழில். பாவைக்கு - பொம்மைக்கு யந்திரத்தனமான இயக்கம் கொடுப்பது மட்டுமல்ல உயிர் பெற்ற குழந்தையோடு கொஞ்சலிலும், கெஞ்சலிலும், குழைதலிலும், தழுவலிலும் பெறுகின்ற சுகானுபவங்கள் இருக்கின்றனவே அவற்றையெல்லாம் உயிரூட்டப் பெற்ற சொல் - மொழியாகத் தொடங்கித் தருகின்றது எதுவோ-புதிய உணர்ச்சிகளை - மெய்ப்பாடுகளைத் கொடுக்க விழைகின்றது எதுவோ அதுவே கவிதை.
“பூவின் நாணம் புன்னகை இதழில்’ “உதய சூரியனை மேனி குளிர்த்திக் குளிப்பாட்ட மோகம் கொண்டதுவாய் விம்மி எழும் அலையோ தாழப் பதிந்து நிலத் தாயை வணங்கியதையும்’ “கற்பனைத் தேரேறி புல்லின் இதழ் முதலாய் அவனி ஈறாய் சுந்தரக் கனவுகள் தொடரச் சுவையாய்ப்
99
L16.16. வந்தேன்.

Page 6
என்றெல்லாம் எங்கள் மனவிழிக்குள் வார்த்தை ஒளி பாய்ச்சிச் சௌந்தர்ய தரிசனங்களைப் பவித்திரன் பார்க்க விடும் போது வெறும் சொல்லளவிலா அவ்வடிகள் தொடர்கின்றன. செளந்தர்ய பூசையிலே சங்கமித்த மலர்களெனத் துாசு விழாத துாய உணர்வுகள், பேசும் மொழிகள் மாசுபடியா மனச்சிமிழ் சுமக்கும் ஒசைச் சிணுங்கல் வார்த்தைகளின் வருடல், வளைய வரும் லாவண்யம் என அவை
எத்தனை முகங்கள்.
பவித்திரனால் இறுக்கப்பட்ட பல கவிதை வரிகள் கவிஞர் தொமஸ் ஸ்ரேண்ஸ் எலியற் (Thomas Steams Eliot) இன் கவிதைகளை நினைவூட்டி நிற்கின்றன. ஒரு யுவதியின் ஒவியத்தில் (PORTRAIT OFA LADY) அவள் காட்டப்படும் விதம், அவள் பற்றிய பார்வை அவளினால் விளைந்த பாதிப்பு, பாசாங்குத் தனம், முடிவில் அவளது இழப்பு முதலியன அவளது சுய வாழ்வுடன் ஒப்பிடப்படும்போது அவளது மனத்திறப்பால் பரிதாபமான மெல் உணர்வுகளின் பாதிப்பைக் காட்டுகின்றன. ஆனால் பவித்திரனின் கவிதைகளில் வருகின்ற அவளின் முழுமையான பிரியமும், திரிபடவிடாத தொடர்பும், ஆத்மார்த்தமான மனந்திறப்பு மொழிவுகளின் (confession) மூலம் சாந்தஞ்சார் மெல் உணர்வுடன் தரப்பட்டுள்ளனன. செயற்கையை மீறிக்கொண்டு பீறிட்டு வெளிக்கிளம்பினாலும் சமூக சுயம் மிக்க ஓர் மனித ஜீவனுடன் கவிஞர் எம்மை உறவாட விடுகின்ற விதம் இருக்கிறதே அது புறணி அளக்காத ஓர் புது வார்ப்படம் என்று கூறக் கூச்சமடையத் தேவையில்லை.
“புயலிடையேயும்
புனலாய்க் குளிர்ந்தாய்!
நிலவாய்க்,
கண்களில் புதைகையில்
வெண்பனி சொட்டும் பூங்கொத்தாய்
மனதும் விம்மக் கண்டேன்’
“சித்திரமாய்ச் சிரிக்கும் சிறுநயனம்
வித்தகமாய் வீணையின் அதிர்வாய்
எத்தனையோ கவிபாடும்”
என்ற இவ்வடிகள் பண்படுத்தப்பட்ட ஓர் மொழியில் ஏதாவது ஓர் நித்திய மானுட உயர்ச்சித் துாண்டுதலைக் கவிதை வெளிப்படுத்துகின்றதென்பதை மெய்ப்பிக்கினறன. மேலும் மெல்லுணர்வு புதுமையாய் மாற்றி மெருகிடப் பெற்றிருப்பதையும் உணரலாம். கவிதை என்பதே அவரவர் தகுதிக்கேற்ப புரிந்துகொள்ளக் கூடியது. அனைத்து வழிகளிலும் அது மனித நலனுக்காக இருப்பதுதான் என்பதை விளங்க வேண்டும்.

“செந்தணல் அருந்தியோர் சூரியன் எங்கள் வானில் எழுந்திடில் மங்கல் ஓடி மறைந்திடும்”
“எரி தீ எனப் படர்வோம்’
‘புது நிலம் திறப்போம் திறவுகோல் செதுக்கும் திட்பர் நாம்”
“சூதர் சதி ஒழிய சூழும் இருள் கெட சோதி கொணர்வோம்
பாதை பல போதல் வழி தெரிவோமே”
“மானிடம் புதுக்கும் வீச்சு என்னுள் மிகுந்தது எழுந்தேன்’
“விடுதலையே இலக்கெனினும் மூடம் களைந்து விரைவோம்”
என்றெல்லாம் கூறுவதிலிருந்து பவித்திரன் தன்னை எமக்கு அறிமுகப்படுத்தி நிற்கின்றார். மனிதப் பண்புகளில் மிகச் சிறந்தது தன்னை வெளிப்படுத்தல். தனது கலைத்துறையின் மீதான நம்பிக்கையை நிரூபித்துக் காட்டுவதோடு அது இங்கே வெற்றி பெற்றிருக்கின்றது. அது தன்னிடம் உள்ள திறன் என்ன என்பதை அவர் புரிந்து கொண்டு நமக்குத் தந்த இந்தக் கலாசிருஷ்டிதான். சொற்களுக்குள்ளே ஒலியையும், ஒளியையும், உருவையும், உணர்வையும் புதைத்து உருவாக்கிய மொழி தானே கவிதையாகிறது. அவை இங்கே நிகழ்ந்திருக்கின்றன.
பவித்திரனின் கவிதைப்பணி மேலும் வளர எல்லோரும் கை கொடுப்போம்.
25.06.200 வே. கு

Page 7
பதிப்புரை
நண்பர் பவித்திரன் பழகுதற்கு இனியர். கூடுவிட்டுக் கூடு பாய்ந்து ‘பவித்திரன்’ என்ற புனைப்பெயரினுள் கொலுவிருக்கும் கவிமன்னரின் கவிதைகள் உள்ளம் உருக்குவன - நெஞ்சைப் பிழிவன - பிணிப்பன.
கவிஞர் பவித்திரன் இளைஞரான போதும் முதிர்திறன் மிக்க சொல்லாட்சி விற்பன்னராவார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத்தக வெளியீட்டு முயற்சியில் பொருளாதார நெருக்கடியும் பிற இக்கட்டுகளும் மிக்கதொரு நேரத்தில் எமக்குப் பக்கபலமாய் கொழும்பில் இருந்து பல்வகை உதவிகளும் புரிந்து உற்சாகமூட்டிய உளப்பண்பினர். அது காலத்தால் செய்த உதவி.
மடைதிறந்தாற் போல் கவிபாடும் ஆற்றல்மிக்க கவிஞரின் எழுத்துப் பதிவுகளை வெளியிடும் ஆற்றாமை கடந்தகாலத்தில் எம்மைப் பீடித்த காரணத்தினால், என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இக் கவிதைத் தொகுப்பு தாமதமாக இப்போதேனும் வெளிவந்திருப்பது எமக்கெல்லாம் உவகை பயப்பனவாகும். ஒவியம் தீட்டுவதிலும் விவாதங்கள் செய்வதிலும் ஆன்மீக ஆழ்மனத் தேடலிலும் நீதிக்கான விடுதலைப் போராட்ட வேட்கையிலும் மாக்ஸியப் பொதுமை நெறியின் மீதான அக்கறையிலும் ஆர்வம் மீதூரப் பெற்றவர்.
பவித்திரனின் முதலாவது கவிதைத் தொகுதி இது. இன்னும் பல கவிதைத்தொகுதிகளை ஈழத்தமிழ் உலகம் எதிர்பார்க்கலாம். கவிஞர் பவித்திரனின் இக்கவிதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய தலைசிறந்த ஈழத்தின் மூத்த கவிஞரும் விமர்சகருமான கல்வயல் வே. குமாரசாமி அவர்களுக்கும் நூல் வெளியீட்டுக்கு ஆலோசனைகள் வழங்கிய கவிஞர் இ. முருகையன் அவர்களுக்கும் கவிஞர் பவித்திரனுக்கும் எமது நன்றிகள்.
இந்நூலின் கணனி அச்சாக்கத்தினைச் செய்த சோபனா, சிந்தியா ஆகியோருக்கும் முகப்போவியத்தை வரைந்த ஓவியர் இரா. சடகோபன் அவர்களுக்கும் அச்சிட்டு வழங்கிய கெளரி அச்சகத்தினருக்கும் நண்பர் திரு. இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
விமர்சனங்களை வரவேற்கிறோம்
தேசியகலை இலக்கியப் பேரவை இல, 44, 3-ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு - 11.
தொலைபேசி : 335884.

கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு தடைகள் மத்தியிலும் வெற்றிகரமாய்த் தடம் பதித்து இலக்கிய மணம் பரப்பும் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு இந்நூல் சமர்ப்பணம்
-பவித்திரன்.

Page 8

மனத்தாண்டவம்
பற்றி எரிகிறது வானம்.
சுற்றிய பகலவனும் கடலுட் போய்ப் புதைந்தான. முற்றிய கலியின் கொடூரம் இதுவென சிறிது பின்பாய் வெள்ளிகள் சிணுங்கும்.
அலையெறியும் கடலும் மணல் தழுவி மீள விரையும். காற்றின் இசைவில் ஒளியின் குளிர்வில் இலைகள் நடம் பயிலும். தொடராய் புவியின் மிசையே சருகாய் உதிரும்.

Page 9
தீயில் மெழுகாய் உருகி உருகி அழியும் மனதும்சருகாய் உதிர்கையில் முள்ளாய் நெருடும் நினைவலைகள் எதையோ எதையோ நினைவுறுத்தும். மானிடம் உருவழிந்து சருகாய் ஆயதோ?
வானும் கடலும் உரத்தே ஒலிக்கும். கூவி
செவியதிர
இதை உரைக்கும். கொலைஞர் கொடும் செயலால் உருவழிந்தது மானிடமும் இதை நீயும் அறியாயோ? என்றெனை வினவுதல் செய்யும். பின்னரும் இவ்வாறே பிரியமுடன் எதை எதையோ பிதற்றும் பித்தன் போக்காய்!
தூக்கமா கண்மணி வாள் கொண்டு இருட் பகைஞரை வடிவெலாம் தூசாய்த் துகளாய்த் தொலைப்போம். வாராயோ நீயும்? என்றெனை வினவுதல் செய்யும் எழுவேன்.

சற்றே கண் திற
கவிஞ!
மோனக் கனவுகளில் மூழ்காதே சற்றே கண் திற ஞாலக் கொடுமைகள் உன்னுட் புகும்.
காற்று வெளியிடையேயும்
நித்திலம் கொழிக்கும்
நீலக் கடலலையிடையேயும்
நீந்தி மனம் குளிர்ந்தாயோ? வானத் தனிப்பந்தல் உனது சாம்ராஜ்யமோ? கானப் பறவை ககனவெளியில் சிறகசைத்துத் தான் செல்லும். சிட்டாய் பூஞ்சிறகசைத்து மனவெளியில் திரிந்தனையோ?
கவிஞ! மோனக் கனவுகளில் மட்டும் மூழ்காதே. மோனத்துள் மூழ்கி முத்தெடுத்து சற்றே கண் திற. ஞாலக் கொடுமைகள் உன்னுட் புகும். பிரியமுடன் ஏதேதோ பிதற்றும் நீலக் கடலலைகளை நோக்கி வெள்ளிகள் சிரிக்கும் பாங்காய் நேசமுடன் புன்னகைத்து, கையசைத்து விரைவேன் சூரியனாய் கொடுவிழிச் சுடர் விரித்து வானிற் பாய்வேன். பின்னர் என்ன புதிய பூமியின் ஜனனம் தான்.
3

Page 10
கந்தல் உடை ஓவியம்
கந்தல் உடை, கலைந்த கோலம்! சிந்தி விழச் சிதறும் விழிநீர்! நொந்த உளத்தினளாய்
வீதியோரம்
எவரும் காணக் கிடந்தாள் அச்சிறுமி.
வந்த எவருமே காணார் போல் இந்தவாறே ஏகுதல் முறையா? நைந்து வேகும் என் உளம். எந்த வினை மூண்டதுவோ? நல்லதோர் வீணை நலங்கெடக் கிழிந்ததுவோ? பந்தமென எவருமிலாள்.
சொந்தம் நாடி
அண்ணா என்றிரந்தாள். அருகணைந்து தஞ்சமே ஆனாள் எனை. நாடிக் கைதொழுது நவின்ற மொழி கேட்டு வேடிக்கை பார்ப்பேனோ யான்?
துயரெய்தி பாடிக் கொண்டிருந்த வாயும் மூடிற்றாம் பகலோன் தானும் தன் சொந்த மகள் என நினைந்து சுடரொளி வீசிச் சிரித்தான். இந்தா இதை உண்பாய் என்றுரைத்தேன். விந்தை மிக உற சிந்தை லயித்தாள் சிறிது.
என்ன இவள் சின்ன விழிகள் மலரச் சிரித்தால் என்ன அழகு என்ன அழகு! நன்றி என அவள் நவில்கையிலே பைந்தமிழின் பண்ணொலி யாழ் மீட்டியதோ? நானிலம் வெற்றி கொண்டவனாய் குன்றாய் நிமிர்ந்தேன். நன்று செய்தாய் என அகம் ஒப்புகையிலே சிந்தை நிறைவுற வந்தவாறே நடந்தேன் நான்.
4.

தாண்டவம்
ஊழிக்கூத்தாய் ஆங்காரமுற்றது காற்ற1. தாளமிட்டு இசைத்தபடி தட்டத்தரிகிட தித்தோம் தட்டத்தரிகிட தித்தோம்
ஓயாதிரைந்தபடி
ஓர் கணமும் தரியாது வெளி தாவிற்று காற்று.
இருள் போர்த்தி கவலை கொண்டழுதது வானம். துளித் துளியாய் தாரைகள் வான் விட்டு இப்பால் வருகை கொள்ளும். வெட்டியடித்திடும் மின்னல் வானில் நிலை கொள்ளாது பாய்ந்தகலும். சற்றே பின்னால் வான் உறுமல் கொள்ளும். சோவென்று சோனாவாரியாய் பொழியும் மழை. ஊழிக் கூத்தாய் இயற்கையின் தாண்டவமி.
தட்டத் தரிகிட தித்தோம் தட்டத் தரிகிட தித்தோம் ஓயாதிரைந்தபடி காற்று இது ஒரு மழை நாள்
இதுவே திருநாள் என உழவரும் மனதினில் நினைவர்
5

Page 11
நாட்டியங்கள் ஏனடியோ?. நர்த்தன சுந்தரியே!
பள்ளி சென்று பாடம் பயின்றமையும், மெல்ல நடை போட்டு மேதினியே எமதென்று துள்ளி இன்ப நினைப்பெல்லாம் நெஞ்சம் முற்றும் நிறைந்தமையும், பிஞ்சு விரல்கள் வெண்மணல் இறைத்து பாதம் படிய
மிஞ்சி நடந்தமையும்,
இன்றிப்போ
இன்பக் கனவாய் தோன்றி மறையும்,
பின்னரும் இடையிடையே பிதுங்கி வழியும் பிழிநிலவாய் முன்னர் மூழ்கிய மோகனராக இன்னிசை மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது என்ன காரணத்தாலோ? என்ன காரணத்தாலோ? இதை நானறியேன்! முன்னர் மூழ்கிய மோகனராக இன்னிசை பின்னர் பிய்ந்து பிசகியதேன்?
6

காற்று வெளியிடை கண் இமைப் போதினில் புள்ளினம் ஆர்க்கும் புதுவிடிகாலையில் நாட்டமுடன் நான் கரைந்தேன். என் நெஞ்ச ஊற்றிடை, மனக்காட்டிடை சிலம்பும் சலங்கைகள்
நடமிடும்
அவள் நினைவுகள் கனவாகும். நாட்டியங்கள் ஏனடியோ?-நர்த்தன சுந்தரியே!
பனியாடும் பனியாடும் இராப்போதில் ஒளிர்ந்தாளே புதிதான மலராகப் பொழுதெல்லாம் மலர்ந்தாளே சதிராடும் நினைவலைகள் மனதாட நிலைமாறிக் குலைந்தேனே! வெறு வான வெளி மீதும் என் பார்வை விரிபோதும் இனிதான கலை போல அவள் இதழோரம் ஓர் ஒளி பாயும்.
பின்னரும் இடையிடையே பிதுங்கி வழியும் பிழிநிலவாய் முன்னர் மூழ்கிய மோகனராக இன்னிசை மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. நாட்டியங்கள் ஏனடியோ? - நர்த்தன சுந்தரியே!

Page 12
சிட்டாய் சிறுநடை பயின்ற சித்திரமே!
புது மலராய் மலர்ந்தாய்! பூக்களிடையே நீயும் ஓர் பூவானாய்!
புயலிடையேயும்
புனலாய்க் குளிர்ந்தாய்!
நிலவாய்க்
கண்களில் புதைகையில் வெண்பனி சொட்டும் பூங்கொத்தாய் மனதும் விம்மக் கண்டேன்.
கடும் இருள் அடர்ப்பில் கற்கள் உறுத்த பாதம் செம்மண் துழாவி முட்புதர்களும் என் கால் கிழிக்கும் முன்னைய பொழுதினில் சித்திரமாய்ச் சிரிக்கும் சிறுநயனம் வித்தகமாய் வீணையின் அதிர்வாய் எத்தனையோ கவி பாடும். கட்டிளமை சொட்டும் தளிருடல் தனை அசைத்து நீ நடக்கையிலே சிட்டாய் சிறு நடை பயில்கையில் விண்ணதிர நெஞ்சம் துடிக்கும். இதயம் முரசறையும் விழிகள் பின்னே விரையும்.

சித்திரமே! சிரிக்கும் இதழெழிலே! வான் முத்துதிர்ந்து மழையாய் வீழ்தல் போல் கல கல எனச் சிரிக்கையிலே கை கொட்டி நகைக்கையிலே பால் நிலவும் இதழோரம் பாயக் கண்டேன். உன் இதழ் ஒளியில் நான் நடப்பேன். சற்றுத் தூரமேயானாலும் சடுதியில் வராது எனிலும் இலக்கோர் நீள்பயணமேயானாலும் கற்கள் உறுத்த
முட் புதர்கள் பாதம் கிழிக்க கன இருள் சாட்டை சொடுக்க கடுமையாய் விரட்டினும் நான் விரைவேன் உன் நினைப்பைப் புதைத்து.
விற்பன்னனல்லேன. விரித்துரைத்து நவநவமாய் கவி பாடநான் பாவலனுமல்லேன். பல நாளாய்ப் பார்த்திருந்து
சிற்றுளி புதைத்து
சிரிக்கும் விழிகளை
சிந்தும் முறுவலை சித்திரமாய் புத்தெழிலாய் உள உன்முக அழகை பத்திரமாய் மனதில் பதிந்து செதுக்கிக் கொண்டேன்.
பாதி விழி மூடி
நித்திரை பாதி நினைவுகள் பாதி என
அயர்கையிலும்
உள் நுழைந்து மனவெளியில் புத்துயிராய்ப் புகுகின்றாய். புதுமைகளின் அரங்கானாய்!

Page 13
என் அன்பே
இன்றுமிக மகிழ்வுற்றேன்! என் இனிய சுந்தரக் கனவுகள் சுருள் சுருளாய் விரிய சிந்தையிலே தேன்பாய்தல் கண்ணுற்றேன். மங்கல் படும் வானைப் பார்க்கையிலும் அலை கடல் ஒரம் வெண்மணல் நெரித்து உருவழிய
பாதங்கள் நடக்கையிலும் திங்களைப் பழிக்கும் திவ்ய வடிவம் தோன்றும். திகட்டா நினைவுகள் பாயும்.
உன் வரவென்ன என்னை மட்டுமா மலர்விக்கும்? அதோ பார்!
நளினமாய் நயனம் சுழற்றி அதோ பார்! தலையசைத்து வரவேற்கும் நெடுமரங்கள் கரம் விரித்து கை நீட்டும் ஒளியின் கதிர்கள் வாழ்த்துக் கூறும் வசந்தப் பொழுதைப் பார்.வரவேற்றுத் தலை தாழ்த்து உன் யெளவனம் கண்டு நாணிச் சிவக்கும் வானம் பின்னோர் நாழிகையில்
கண்ணிர் உகுத்து ஆனந்தம் கொள்ளும் ஆச்சரியத்தை நீ இன்னும் உணர்ந்திலையோ!
தளிரடி பெயர்த்து தையல் நடக்கையில் மெட்டி இசைக்கும். மேனி புளகமுறும். மென் கொடியாளின் கட்டழகு கண்டு கண் இமைக்காது நானும் பார்த்திருந்தேன். சித்தம் சலசலக்க இத்தனையும் என்னுள்ளே பொங்குகையிலே புத்துயிரானேன. புத்தமுதே சித்திரமே!
10

நண்பனுக்கு ஓர் மடல்
ர்ெத்தைகளற்றுப் போயின
நண்பா வார்த்தைகளே அற்றுப் போயின! மெளனம் எதற்கு?
வெறிதே வானை நோக்கி விழிகள் நிமிர்த்தி திகைத்து நிற்பதுமேன்? எனக் கேட்டிருந்தாய். வார்த்தைகளின் உள்நுழைந்து மர்மம் துருவி நீட்டி முழக்கிட நான் என்ன சொற்கலை நிபுணனா? மடை திறந்த ஆற்றின் வெள்ளமென சொற்கள் கட்டறுத்துப் பாய்ந்திட எனக்கும் விருப்பம் தான்.
சிறிதும்
சிந்தனைச் சிதறல் இன்றி சில பொழுதுகளில் எந்தன் இனிய மொழியும் தனை மறந்து பின்னலிடும். விரிவானம் பார்த்துப் பார்த்துக் கண்கள் சலிப்பையே எய்தும்.
மிஞ்சும் துயரில் விழிகள் நனைய நினைத்திட
ஏனோ மனம் அதை ஒப்ப மறுக்கும்.

Page 14
வெண்பஞ்சு மேகங்கள்
சற்றே
எனக்காய் இரங்கிக் கண்ணிர் உகுக்கும்.
சிறிது பின்போ சடாரென வெயில் மின்னும். செஞ்சூரியனும் சுட்டெரிக்கும் விழிகளால் எனை நோக்கி எதிர்த்து நில் எதிர்த்து நில் என்றே சொல்லும். நான் காணும் ஒவ்வோர் துகள் மண்ணும் இவ்வாறே உரைக்கும் எனினும் நானோ
நூறாயிரம் தரமாக எனது பாதங்கள் அளைந்த மண்ணில் நடை பயில்வேன். காற்றும் மிக மெலிதாய் மேனி வருடி
அடே தம்பி!
முக வாட்டமேன்?
வாழ்க்கை இனிது. என்றுரைத்து அப்பால் நகரும் . மீண்டும் மீண்டும் புதிய உயிர்ப்புடன் எழுவேன். ஒற்றை மனிதனாய் தன்னந்தனியனாய் வெட்டியே எனைப் புதைத்திடினும் மிதித்து உதைத்து வதைத்திடினும் சுட்டெரித்துச் சாம்பல் ஆக்கிடினும்
சுடர் ஏந்தி மீண்டும் மீண்டும் புதிய உயிர்ப்புடன் எழுவேன. அதன் முடிவில்
புதிய சூரியோதயம்.
12

கனிந்திசையும் கானங்கள்
நெஞ்சில் ஓர் நினைவு நேசம் பிறந்ததென்று.
நண்பா
அறிந்திலையோ நீயும் எனை? முன்போர் நாள் வீட்டின் முன்றிலிலே அந்தி வானின் அழகழகான கோலம்
கண் பதித்து பாரதி முன்பிசைத்த நெட்டைக் கனவின் பான்மையதாய் விந்தைக் கனவுச் சுருள் விரிய
விரி உலகம் தனையே
மறந்து
பைந் தமிழின் சுவையினிலே சப்த சுரங்களின் அற்புதமாம் கவின் மிகு இசையினிலே என் சிந்தை இழந்தேன்.
நீயோ
மனவீணையினைrழுந்தத்
13

Page 15
பஞ்சு மேகங்கள் பறவைகளாய், குதிரைகளாய், பல்உருக்களாய் நீலக் கடலலையே வெண்நித்திலங்களாய் காலை விரித்துப் பாய்ந்து சென்றன பார்! ககன வெளியில் அந்திச் சூரியனை இருள் விஞ்சி விழுங்கும் பொல்லாப் பொழுதது. சொல்லி வைத்தாற் போல்
சுரீரென்றுன்
மெளனம் கலைகிறது. சிந்தை என்நிழற்பாலோ செல்கிறது. உணதகத்தின் உள்ளக் கதவின் உள்நுழைந்து நெஞ்சகம் கிள்ளி அகன்றனள் கன்னி இளநகையாள் என அறியா நானும்
கற்பனைத் தேரேறி புல்லின் இதழ் முதலாய் அவனி ஈறாய் சுந்தரக் கனவுகள் தொடரச் சுவையாய்ப் பவனி வந்தேன்.
சொல்லி வைத்தாற் போல்
சுரீரென்றுன்
மெளனம் கலைகிறது. பாட்டொன்று காற்றதிர்ந்து கலகலக்கிறது. எல்லோரும் வாழ நான் வாழ்த்துவேன். நான் வாழ யார் வாழ்த்துவார்? பன்னிய அவன் வார்த்தைகள் காற்றதிர்ந்து கலகலக்கிறது. என்னவனே! ஏதுரைத்தாய்? அறிந்திலையோ நீயும் எனை? என்னுளம் பூத்துக் கவியாய் வாழ்த்திசைக்கும். நேசம் முற்றி நெஞ்சம் நிறைந்துளதை பாட்டில் அன்றோர் நாள் தீட்டி வைத்தேன். பாரதி நான் அல்ல. பழம் தமிழின் சாற்றினையே பிழிந்து கவிரசம் ததும்ப கேட்டவர் கிறுகிறுக்குமாறு போதை ஏற்றவல்ல பாவலனுமல்லேன்.
14

எனினும்
ஆற்றின் வெள்ளமே போல் ஊற்றெடுக்கும் ஓர் உணர்வின் உன்னதத்தால் கூற்றுவன் கொண்டேகி உடலம் சாயினும் என்னிதயம் மீட்டும் மீட்டும் வடிக்கும் வாழ்த்தொலியினை கேட்டிடுவாய்!
பூட்டுடைத்துப் புகன்றதனால் வெண்பனி சொட்டும் பூங்கொத்தாய் சித்திரமே சிந்தையில் நிறைந்ததனை சொல்லுதிர்த்துச் சாற்றியதால்
என்னுள்ளே
ஓர் கானம் கனிந்திசைகிறது.! மெல்லென்றெழுந்து ஒய்யாரமாய் காற்றிலசைந்து கலைகிறது. என்னுள்ளே ஓர் கானம் கனிந்திசைகிறது! பின்பென்ன பொழுதுகள் புலரும். வசந்தப் பொழுதின் விம்மிதத்தால் பச்சை படர்ந்து பசுந் தரையாய் புற்கள் பாய் விரிக்கும். பகலவன் ஒளியினில் மலருமிதயம் குளிக்கும்.
15

Page 16
புரிதலும் புதிர்கள் அவிழ்ந்த புதுமையும்
புல்லும் ஓர் புதுமை!
புரிதலும் நிகழும்.
வெளியில் இலையுதிர்த்து நிற்கும் மரங்களும் ஓர்அருமை! இரவின் மெளனம்
நெஞ்சை நனைக்கும்.
மெல்லென தென்னங்கீற்றசைத்து வரும் தென்றலும் ராகம் மீட்டி வரும்.
சந்தம் பாடி
யௌவனக் கர்வம் பூசி இளைஞர் விரைவர். தனிமை, துயரம் இவற்றில் கரையும். மொழியின் மெளனம்,
வெளியின் விரிவு, சொற்களும் வார்த்தைகளும் விளக்கா. புதிர்களும் அவிழும். பின்போர் கலங்கல், குழப்பம். புதிர்களும் புரியா, புதுமைகளும் விரியா. மனதும் அழியும்.
மகிழ்வும் கரையும். நெடுநாட்களாய் நிசப்தம் ஆட்சிபுரியும். இவ்விதம் நீண்டே செல்லுமா என ஏக்கம் என்னைக் கவ்வும்.
பின்னர் இலைகள் துளிர்த்து வசந்தம் ஜனிக்கும். புரிதலும் நிகழும்.
புதிர்களும் அவிழும்.
16

நடுநிசியும் ஒரு கவிதையின் வரவும்
நடுநிசி நள்யாமம். நெடிது பொழுதாய் துயில் விழிகள் தழுவா. புதிதாய் ஏதோ ஏதோ நினைவுகள் நெடிது பொழுதாய் நெஞ்சகத்தில் ஆடும். சிறிதேனும் ஒப்பி விழிமூடி நீள் துயில் வாராது. புதிது புதிதாய் ஏதோ அசை போடும் மனது. திடீரென்று எவ்வாறோ துயிலும் எனை வந்து தழுவலாயிற்று. நான் அறியாவண்ணம் உறக்கம் வந்தணுகிற்று. துயில் உணர்கையில் உள் வீட்டின் ஓர் கோடியில் மனதகத்துக் கதவில் பதிவாயிற்று கவிதை! யார் நினைத்தார் அதை? புதிதாய் ஓர் ஜனனம். புதுமைகள் பூக்கும் நெஞ்சம் . நெஞ்சப்புலம் நெகிழ்த்தி நுழைய விடு . விடி காலைப் பொழுதில் நெஞ்சம் குளிக்கும்.
17

Page 17
பகலவனும் இடுக்கில் ஓர் கவிதை பாடி வரவேற்று எழுவான். எனவே நெஞ்சப்புலம் நெகிழ்த்தி எழு. நீள் துயிலும் கலைகிறது.
பின்னும்
எவ்வாறோ பிசகு வந்து விட எனதகம் கலைகிறது
மனத்திருத்தி மீளவும் அசை போடும் மனது. நெஞ்சு கீறி பீறி எழும் வார்த்தை பின்போ
மனதில் நின்றாடும். யார் நினைத்தார் இதை? புதிதாய் ஓர் கவிதை முளை கொள்ளும். என்றோ ஓர் நாள் மண்ணில் புதைந்து புதுமைகள் நிறை பெருமரமாய் விருட்சமாய்
கால் கொள்ளும். கனிகள் காவிக் களி கொள்ளும். யார் நினைத்தார் அதை? உள்வீட்டுக் கதவு திறந்து ஓர் நொடிப்பொழுதில் எனதகம் நிறைகிறது. பதிவாயிற்று கவிதை! புதுமைகள் பூக்கும் நெஞ்சம். பொழுதும் மெல்லக் கலைகிறது. புதிதாய் ஓர் நாளின் உயிர்ப்பு! நெஞ்சப் புலம் நெகிழ்த்திட ஓர் கவிதையின் வரவு.
18

தொல்லையே இந்தத் தொழில்
இல்லாக் கற்பனையை இழுத்தெடுத்து இடித்தே என்னுள் புகுத்தி கையால் ஓர் வண்ணம் காட்டென்றார் நம் ஆசிரியர். சொல்ல இயலாத மயலிது!
சொல்லெடுத்து உயர் இன் கவி தொடுத்தல் இனிது. அதை விடுத்து. சும்மா வண்ணம் குழைத்து சுரி பூசுதல் போல் பூசி விட்டால். அட அடடா என்ன விந்தையிது! முன்னர் எழுந்த ரவிவர்மனோ? என்ன இவன்! இல்லை இனிஎல்லை இல்லை இதற்கப்பால் என்றே சொல்லும் படியாய் தூரிகை வளைத்தெடுத்து கோடுகள் பதித்தல் இயலாதே! வேண்டாம், வேண்டாம் தொல்லையே இந்தத்தொழில். எல்லை இல்லா வானம், கடல், சிறகடிக்கும் புள்ளினம், கள்ளமில்லாது மெல்லிதழ் விரித்து முறுவலிக்கும் சிறு குழந்தை, எல்லாம் மனதினில் நினைந்தே கற்பனைத் தேரினில் கடிதேகி காற்றினிற் குதிரையை, சாட்டை சொடுக்கி ஏகவிட்டே வைய முற்றும் திரிந்து வந்தேன். ஒன்றும் காணோம் வேண்டாம் தொல்லையே இந்தத் தொழில்
19

Page 18
நித்தமும் உன் முகம் காட்டி நித்திலமாய் ஒளிர்ந்து விடு
இன்னும் மலர்கின்றாய் நீ! மின்னும் விழி அசைவில் பின்னும் எனதகம் பிரிய மறுக்கிறது. எண்சாண் உடம்பும் பஞ்சாய் மிதக்கும் போதைக் கிறுக்கத்தில் நஞ்சாய் மிதக்கும் நினைவுகளும் மிஞ்சி எனை வதைக்கும் துயர்களும் அப்பால் எனை விட்டு அகல்கையிலே இன்னும் மலர்கின்றாய் நீ! என் இளைய பூவே! செவ்வதரம் திறந்து சற்றே சிரித்திடுங்கால் என்னை இழந்தேன். பின்னும் நீ என்னுள்ளே - பிரிய மறுக்கின்றாய் முட்கள் கிழிக்கையிலே மேனி துவண்டு உடல் சோர்ந்து மாயும் அவ்வெல்லையிலே நன்றே இவ்வுலகம் நனி சிறந்ததுவே கொன்றே துயர் வதை படினும் நன்றே இவ்வுலகம் என்றே புகழ்கின்றாய் இன்றிவ்வாறே துயருறுதல் நன்றோ? சென்று விடும் அல்லல்கள் தொல்லைகள் மாய்ந்து விடும் பின்பு எல்லாம் நலமே பிரியமாய் புன்னகைக்கையிலே இன்னும் மலர்கிள்றாய் நீ! வேண்டுமடி பின்னும் உன்முறுவல். பேசாதகன்று விடு நித்தம் உன் முகம் காட்டி நித்திலமாய் ஒளிர்ந்து விடு
ஆதலினால் இக் கணத்தில் அப்பால் நகர்ந்து விடு.
20

வான் முறிபட உயர்வதும் நிசமே!
சிதையினின்று எழுவேன் உயிர்ப்புடன்.
சுடரொளி கால சிதையினின்று எழுவேன். புது சோபன மெருகுடன் விழிகளில் சோபை ஒளிவிட சிதையினின்று எழுவேன். புனலதும் அழியா விறலுடன் எழு தீ எரிதணல் எனக் கனன்றதும் பலபடப் பரவி எனதுயிர் உருவி கவர்ந்ததும்
உண்மை! தகுமோ எனதுயிர் தின்னலும்? வாழ்வொரு பெரு நிதி எனினும் வதைபட நேர்வதுமேன்? பொழுதுகள் அழிவதுமேன்? புதைகுழி மேல் புல் முளை விடுவதுமேன்? கதியிலி மனிதர் மாள சதிபல செயும் விதியது தூள்பட கரமிசை கடுசரம் எடுத்தனம். பொடி பட துயர் அழிபட அழிதொழில் புரிகுவம்.
65.6600T மனிதம் தொலைவதும் ஆகாதே! மகிதலம் வாழ உனதுயிர் நல்காது பிணமென வாழல் பெரு மறுவே! ஒரு சிலர் உயர்வதும் மறுசிலர் தாழ்வதும் போதாதே. சம நிலை காண்பதும் ஒருமையுள் ஆழ்வதும்
விடிவுற ஒரு வழியே! எறி திரை கடல் வான்முறிபட எழுவதும் பாராய்! அது போல் உயர்வதும் நிசமே!
21

Page 19
வாழ்வினோடு குறு நகை புரிக! வானில் எழு இரவி என ஒளிர்க!
கோயில் மணியோசை கேட்கிறது வீரித்த நாதம் விண்பாய்ந்து மெல்லக் கரைய கூரித்த ஓசை குறுகிக் கரைகிறது. கப்பிய இருள் கலைந்து விழ எழுவான் திசையில் அற்புதம் ஒன்று நேர்கிறது. பொன் உருகி வழிந்தாற் போல் செஞ்ஞாயிறு சிரிக்க மொட்டவிழும் பூவோ மோகித்துக் கிடக்கிறது. மோகித்து மோகித்து வண்டினம் முரல பாட்டெடுத்து இசைஞர் நாவும் இசை பயில்கிறது. காலைப்பனியின் தோய்வில் கண்மலர்ந்து முன்றில் கூட்டி முகையவிழும் பார்வையுடன் வண்ணக் கோலம் தானிழைத்து வனிதையர் செல்வர். ஒளியே எங்கும் பூத்தது போல் மின்நிறைந்து விளங்கிற்று எம் கிராமம். ஆழக் கிணறிறைத்து அருகிருந்து தடவி தாழக் கால் புதைத்து வேளை தோறும் உணவூட்டி வளர்த்ததனால் பசிய தளிர்கள் விரவி எங்கெங்கும் வசந்தம் பூத்தது காண்! குச்சொழுங்கைகள் கூடக் குதூகலித்திருக்கும். இளையரைச் சுமந்தனம்
நாமே மன்னர்!
இறுமாப்புடன் குச்சொழுங்கைகள் கூட குதூகலித்திருக்கும்.
22

அச்சாய் அதுவே எம்மூர். அழகொளிரும் வாவிகள், பச்சை படர்ந்த பசுமைக் கழனிகள், ஆலைகள், சாலைகள் மிச்சம் நிறைந்து மிகுகின்றதோர் ஊர் மெச்சத் தகுந்த எம் நிலம்
இன்றோ ஏதிலியாய் ஏகாந்தம் ஏந்திக் கிடக்கிறது நச்சுள் விழுந்து
நசுங்கி
நாயகமான எம் நிலம் பிச்சை தேடும் மனிதரென பிய்ந்து சரிகிறது உண்ண உணவின்றி உறக்கமுமின்றி கண்ணயரும் போதினில் சாவு கொள்ளல் நேர்ந்தால் என்றெண்ணி தவித்தலைகிறார் எம்மக்கள் ஊரிழந்து உறவிழந்து உற்றார் பெற்றாரிழந்து வாழ்விழந்து வாழும் வழியிழந்து கண்ணிர்க் கடலாடி கரைமீளாத் துயரிடையே புண்ணுண்டு பித்துக் கொண்டவராய் அலைகின்றார் அலைகின்றார் அலைகின்றார் அனைவருமே கூவி வெளியதிர குலைகின்றார் பாவி மனிதர் படும் பாடெல்லாம் சொல்லுந் தரமாமோ? கண் பெயர்ந்தலைகின்றாரோ கடவுளரும்? ஆவி குலைந்தழும் என் மக்கள் தூளி படுதலும் துகளாகி இடிதலும் நேரினும் ஒரு திடம் மனதினில் கொள்க வேளை வரும். அதுவரை கோடை உறும் பாலைவழி வரும்
இது வழமை வாழ்வினொடு குறு நகை புரிக வானில் எழு இரவி என ஒளிர்க.
23

Page 20
பேசும் பொற் சித்திரமே!
அன்றொரு நாள் முன்றில் முகத்தருகே முறுவலித்தாய்! பிள்ளை நிலவே தரையிறங்கி வந்ததென நெஞ்சில் நினைந்தேன் முறுவலிக்கையிலே வான் பதித்த வெள்ளிமணி அனந்தம் என்பதனால் கிள்ளி எடுத்து அவை பரப்பி நேர்படவைத்தாங்கே
நிரைத்ததோர் முத்து வடம் தான் உன்நகை ஒளியோ என நினைந்து உன்னி நீள்வெளியை உற்றுநோக்குகையிலே தேன்நகையே வடிவழகே! கூன் நிமிர்ந்த முழுநிலவே! ஏன் விரைந்தாய் எனை விட்டு? ஏகி அப்பால் போனதென்னே? ஏகாந்தம் இருத்திக் கவிபாட தேன் கொணர்ந்து தந்தவளே!
தேவி!
24

உன் கஞ்சமலரடி பெயர்த்து வரின் காவெல்லாம் பூ விரிந்து புன்னகைக்காதோ? பின்னோர் நாள்
பேசித் திரிந்தமையும் என்னுள் ஏகி நீ இருப்பதனால் அல்லும் பகலும் உன் நினைவேயாகி அலைந்தமையும் இன்றென் நெஞ்சில் நடமாடுதடி அன்னை அருகணைந்து மடி போட்டு கன்னத்து முத்தங்கள் தீத்தியமையும் பின்னவள் ஏக முற்றத்து மணல் பரப்பி சிற்றில் விளையாடிக் களைத்தமையும் இன்றென் நெஞ்சில் நடமாடுதடி தேன்நகையே வடிவழகே! கூன் நிமிர்ந்த முழு நிலவே ஏன் விரைந்தாய் எனை விட்டு? ஏகி அப்பால் போனதென்னே? வான் பெருநிதியம் அள்ளி கொள்ளை கொள்ளல் அழகாமோ? ஆதலினாலே மீளவந்தென் மனவீணையை மீட்டி விடு.
25

Page 21
சா விளையும் தேசத்திலே.
சென்று சென்று தேயும் நாட்கள் அன்றை நாள் நினைவுகள்
நெஞ்சில் அலை வீச புண்ணாகி வெந்தெம் இதயம் சின்னக் கால் பதிய நடை நடந்ததெம் தாய்நிலம் சின்ன பின்னமாகிச் சிதைய சிரித்து நாமிருப்போமா? கன்னி நிலம் கறைபடிய காடகன்று பற்றை படர்ந்து பாழ்படப் பார்த்து நாமிருப்போமா? என் தாயினியாள் தன்மடித் தாங்கிய தங்க மதலைகள் உறவிழந்து திக்கொன்றாய்த் திரிதல் காணிரோ! திசையிழந்து ஒற்றைமரமென உழல்கின்றார். ஏதுமிலா வறியராய்
26

உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி தன்வசமிழந்து தரித்திரராய்த் தாமலையச் சொந்த மக்கள் துயர் மறந்து சன்னமழை பொழிந்து சா விதைக்கின்றார் வண்ணமிழந்து வடிவமிழந்து குண்டு விளைந்து குலுங்கிற்றெம் தேசம் பிய்ந்து விழுந்தனவாய் வீடுகள் வான் கண்டு வாய் திறந்து அங்காந்திருக்கும் வற்றி வண்டல் தெரிய வாழ்விழந்த நதியாள் தன்னிரு கை பற்றி வரையும் சிறுகோடாக
சுற்றித் திரிந்த கிராமத்து ஒழுங்கைகள் துயில் கொள்ளும் இது கண்டு சிறுதுயர் மேலெழும் என்னத் தகுந்ததல்ல எம்நிலம் ஒரு திடம் எம்முன் முன்ளைகொள்ளும் தோப்பிழந்த மரமாக தனித்தலையும் என்மக்கள்! துயரிடை எழுக
துணிவுடன் நிமிர்க கனிகிற கனவுகள் பலிதமென அமைய உணர்வுடன் ஒரு கவி இதுவென நினைக சமரது வரினும் பொறையுடன் எதிர்க பொழுதழியினும் மறுகால் விடியும் விடிவுகள் அகல இருள் எமைச் சூழும் எனினும் வாழ்வொரு பெருநிதி இதை உணர்க.
27

Page 22
ՖlԼգԼlԼ!
பொன்னெழில் பொலியும் புதுவிடிகாலைப் புலர்வில் கண்ணயர்ந்த நானோ துயில் நீத்தேன் சொல்நயம் தோய்ந்து சுகித்திசை பாடி கவிஞரெலாம்
வந்தனம் கூறி வாழ்த்திசைப்ப புன்னகை பூத்துப் பொலிந்தது காண் புதுவிடிகாலை காலைப் போதின் மோகனம் கண்டு பாலைத்தரிசின் வெறுமை பாழ்பட சோலைக் குயில்களெலாம் சுந்தரத் தொனியில் கோல இசை பரப்ப நாளைத் திறந்து நாயனம் மிழற்றியது காண். காலைக் கிறுக்கத்தில் கண் சொருகி விழ கனவுள் வீழ்ந்து மோனவெளியெலாம் பரந்து சிந்தை விரிந்ததுவே. எட்டா வானும் என்வசமென்றே கொட்டாவி விட்டு நிமிர்ந்தால் இன்னும் இன்னும் விரிகிறதே! என்ன அதிசயம்! இந்நாள் வரையும் சின்னதாய் வானம் என்று என்னுள்ளே சிரித்துக் கொண்டேன். மின்னல் வெட்டி கன்னம் அறைந்து காற்று நழுவிற்று சின்னதே வானம் என்று
28

சிரித்துக் கொள்ளாதே மின்னல் வார்த்தைகளில் பிதற்றித் திரியாதே என்னதே ஏகமும் என்றெண்ணுவார் மடிவர் சின்னதோ வையம்!
என்றிரைந்தே சன்னதம் கொண்டு அப்பால் நகர்ந்ததுவே தின்னும் இளமைக் கனவின் தினவில் ஏகமும் தன்னதே என்றெண்ணி தலை நிமிர்ந்தால் இன்னும் இன்னும் விரிகிறதே! என்ன அதிசயம்
முன்னம் நினைந்தேன் முழுஇரவு தேய வான்மிசையே தொங்கல் முகில் கிழித்து மல்லாடி பஞ்சு மேகம் பதற வரும் பால் நிலவும் கண் சிமிட்டிச் சிரிக்கும் வெள்ளித் தாரகைகளும் என்னதே என்றெண்ணி இறுமாந்தேன்
பூமிப் பந்தும், புனலும் பூத்துச் சொரியும் மலரும் காலைச் சூரியனும், ககனமும் எனதே என்றேன். யாவும் எனதே யாவும் எனதே என்றதோர் ஒலம் எழுந்து வர செத்து மடிந்தார் மாந்தர்
ஆதலினாலே கூவித் திரிதல் விடுத்து பிறர்க்காய் ஆவி துறத்தல் நலம் சின்னக் கனவுகள் மின்னிவரச் சிரிக்கையில் மின்னல் வெட்டாய் கன்னத்தறைந்து கூவ கனவகன்று ஏக பிறசோலிக்காய் எழுந்தேன் நான்.
29

Page 23
இரவின் தாளில் மெளன வரியொன்று
குழலோசை வழிகிறதே குளிர் நிலவில் குழந்தை மொழி பேசிக் கணிகிறதே! இரவின் மெளனப் பரிபாசை உணர்வெளியில் இதயம் நனைகிறதே! விழியோர வளைவில் உணவாகி பிணிதேய் நிலவும் பரிகாச மொழி பேசி பகலாகி ஒளிர்கிறதே! பனிதுாவி
இலையோர இதழில்
இச்சென்று சப்தித்து இதமான முத்தம் இட முனைய அருகோடி இளம்காற்று மலர் தூவி மகிழ்வோடு வாழ்க என வாழ்த்துரைக்கும்.
30

இதுகாறும் எவரேனும் எழுதாத கவியொன்று
இது காணும் கவிமன்னன் யானென இரவின் தாளில் மெளனவரியொன்று பதியல் ஆகும். இரவொன்று நகரல் போகும். இது கண்டு இளமனவானில் சுதியொன்று கூறும். தலை சீவி முகிலினங்கள் தடுமாறி ஏகும் அக மகிழ்ந்து மடிபோட்டு விண்மீனின் தாயாகித் தாலாட்டுப் பாடும் இருளென்றும் இரவென்றும் யார் பேசினார்? ஒளியொன்று மனமீதில் உருவாகும் பொழுதென்று உதய கிரணங்கள் வீசும். முடிவென்றும் தரிப்பென்றும் யார் ஏசினார்? முனைப்புற்ற பயணங்கள் இவையென்றே நான் கூவ
இரவொன்று நகரல் போகும். இது கண்டு இளமானவானில் சுதியொன்று கூரும். இதுகாறும் எவரேனும் எழுதாத கவியொன்று
இது காணும் கவிமன்னன் யானென இரவின் தாளில் மெளன வரியொன்று பதியல் ஆகும்.
31

Page 24
வாழ்வின் அர்த்தப் பரிமாணங்கள்
இளம் பூங்காற்றுத் தழுவுகிற இதமான வேளை இள நெஞ்சில் சாரல்துாறி வளமான போதில் விண்தொட எழுகின்ற கவி பாரீர் என பொதிகின்ற பதம் சுவை கூடி மிளிரும் நவமான அபிநயம் நயனங்கள் பொழிகின்ற சலனங்கள் அவை பாட ஒரு கோடி பதங்களில் சுவை கூரும் மொழி தேடி மணி ஆரம் கோவை செய முனைவேனே பலகாலும் பலகாலும் பதங்கள் எனைமீறி வெளியேக
இதுகாறும் எனதுட் பொறை கரைமீறி கடுஞ்சின வடுவாகி
வதை கீற அழகான மொழி வந்து கூடும் அசைகின்ற சலனங்கள் படமாகும். வசமான சொல்வசைத்து இன்சொரியல் நெய்கின்ற கவி இவனென எவரேனும் நினைகின்ற பொழுதொன்று உதயமாகும். தருணங்கள் விழலெனக் கழிகின்ற பாழ் நிமிடங்கள் அகல பயில்கின்ற சொற் தேடி கலை நெஞ்சும் அலையும்
32

புதையல்கள் அகழ்கின்ற நளினங்கள் அறி கலைமாதின் நயனங்கள் கணைவீச நிதியங்கள் பறிபோகும் பின் அவள் வீசும் மணிவயிரங்கள் கவியாகி தாளில் நகை அணி ஆகும்.
பொலிகின்ற யெளவன எழில் வீசி வசந்தங்கள் கலையாக எனதுளப் பாடல் அரங்கேறும் காற்றேந்தி w கடலில், நீள்விசும்பில், பூவிதழில் அறைய வெளி அலம்பும் சிறுபுள்ளாக அது விரியும்
விரிபோதில் வாழ்வின் அர்த்தப் பரிமாணங்கள் நிறையும்.
33

Page 25
பாடித்திரியும் புள் நான்
பார்த்திருந்தேன் கடலின் கரையினிலே வீற்றிருந்தும் விளையாடி இருகால் புதைய காற்றில் கைவீசிக் களிநடனம் புரிந்தும் நின்ற
நேற்றைய நாள் நினைவுகள் நீளக் கடல் இரையும் இரைச்சலிடையே மோனத்திருந்து முழுநிலவு காற்றைத் தாலாட்டும் ஆழிக் கிளர்வாய் உயர்ந்து க்ரை உரசும். முத்தமிடும் முத்தமிடும் அலை அடங்கி முன்பிருந்ததாய் கடலுள் மேவும்
34

கத்தும் அலைக்கோர் கடல் ஆறுதல் இந்த இரவிடையே ஏகப் பெருவெளியோர் ஆச்சரிய விந்தையம்மா! அலை உரசும் கரையினிலே நினைவுரச நானிருப்பேன் கூத்திடும் குதிபோடும்
மன அரங்கினிலே நாற்றிசையும் விழிபோக்கா புதுமோடி ஆற்றுகை நிகழும் பார்த்திருந்தவர் வியந்திருக்க பாவையாளின் நயனங்கள் கீற்றுகளாகி ஒரு நூறு கதை பேசும் நேர்த்தி, லாவண்யம், ஒருங்கிசைவு கீர்த்திச் சிறப்புப் பொருந்திய கிளர்விடையே ஒரு கவி புனைந்திட வார்த்தைகள் வரும் வழியிடையே புழுதித் தோய்வாய் துன்பியல் கலந்த துகள் முரண்கள் ஒருங்கிருக்கும் முரண்களின் ஒருங்குகள் முழுநிறைவினைச் சமைக்கும் முத்திறைத்ததாய் வானம் நீளக் கடல் இரையும் இரைச்சலிடையே மோனத்திருந்து முழுநிலவு காற்றைத் தாலாட்டும். ஆழக் கடல் எழுந்து வான் தொடும் ஊடே
பாடித் திரியும் புள் நான்.
35

Page 26
மோனக் கிறக்கம்
பிள்ளை வயதினிலே பேசுந்திறனிழந்தேன். வெள்ளை உளந்தனிலே மேவிநின்றதோர் மோனத் திரளினுள்ளே மோகித்திருந்து விட்டேன். ஆவி கலந்து விட்டேன்! அம்மா! ஆருயிர் ஒன்றி விட்டேன் வானெட்டும் பரவசம் தான் வாயுரைக்க வருவதில்லை பள்ளி செல்கையிலும் பாடம் நடக்கையிலும் கிள்ளை மொழி பேசி இப் பேரண்டம் மீட்டியதோர் பேசாச் சேதியெலாம் பேணி நின்றதோர் பெருமாட்டி அன்னவள் தான் கன்னியவள் கலைமங்கையவள் என்னைப் புறம் கொண்டாள் வெள்ளிமணி இறங்கி என்னுள் பதிந்ததுவே! மேகத்திரளிறங்கி வானமழையாய் பொழிதல் போல் அள்ளிச் சொரிந்ததe அமுதமெல்லாம். ஆகாயவெளி பறந்து மனப்புள்ளும் காற்சதங்கை கட்டி
தாளப்படி
கால் அசைத்து மனமேடையில் நர்த்தனங்கள் பயின்றதடீ! உள்ளம் இழந்து விட்டேன் அம்மா! உணர்வு ஒன்றி விட்டேன் ஆவி கலந்து விட்டேன்! அம்மா! ஆருயிர் ஒன்றி விட்டேன்! வானெட்டும் பரவசம் தான் வாயுரைக்க வருகுதில்லை
36

காற்று வெளியிடையே கண் கலக்கும் வேளையிலே பேசுந்திறனிழந்தேன். பேசாப்பொருள் உணர்ந்தீரோ? நீலக்கடலின் கரையிலே நீளநடந்ததுவும் ஓடிக் குதித்ததுவும் உதய சூரியனை மேனி குளிர்த்திக் குளிப்பாட்ட மோகம் கொண்டதுவாய் விம்மி எழும் அலையோ
தாழப் பதிந்து நிலத் தாயை வணங்கியதையும் பார்த்திருந்தேன். அன்றொரு நாள் வான் கிழித்துத் தள்ளி விட விண்ணிழிந்த நுண் துளிகள் மண் தாவ
ஏன் கலந்தாய் என்னோடு? என்றே வினாத் தொடுத்தாளா மண்மாதா? இல்லையே ஊன் கலந்தாய் வாழி! உவகையோடு என மடியிட்டு
தாலாட்ட பார் விரிந்து பரந்ததுவே நீர்ப்பெருக்கெல்லாம்! இளசுகளுக்கோ கொண்டாட்டம் நீர் மிதந்து நீந்தினரே துக்கித்திருக்கும் வானம்
பின்போ
துயர் மறந்து பற்காட்ட பகலொளி பாய்ந்ததுவே பின்னிய இளமை நினைவுகளின் பேசாப் பொருள் உணர்ந்தீரோ? கொள்ளை கொண்டதுவே கோகில கானம் கோதை மொழி சொல்லியதோர்
சொல்லில் உள்ளிருந்து ஆனந்தம் உசுப்ப பிள்ளை வயதினிலே பேசுந்திறனிழந்தேன். பேசாப் பொருள் உணர்ந்தீரோ?
37

Page 27
விண்ணின் பாடல்
பச்சைப் புல் விரிந்து பாய்விரித்த தரையில் குந்தியிருந்தேன் குளத்தங்கரையோரம் அந்தி படுகிறது என்னைத் தின்ற வெஞ்சூரியர் இரத்தம் சிந்தி மடிந்தார். இருளே துயில் கொள்க மறுகால் புதிய சூரியர் எழுக தண்ணிலவு தவழ்ந்து
வானில்
இன்னமுது பொழிகிறது காற்றின் கனத்த மெளனம் என்னைத் தின்கிறது நேற்றே நள்ளிரவில் வேற்றவர் வந்து மிண்டினர். கூற்றம் வந்து உயிர் கொள்வது போல் ஆற்றல் அழிய அங்கோர் பறவை தீனத் தொனியில் தீராத் துயரில் ஆற்றாமை கொள்கிறது வேட்டுக்கள் விழுந்து சா விளைகிறது பச்சைப்பயிர் கருகி பாலைவெளியாக நாட்டை, நம்முயிரை
38

இரவின் மடியில் உறங்கும் இனிய பிஞ்சைப் பிரியநேரின்? காற்றின் கனத்த மெளனம் என்னைத் தின்கிறது. இன்றிரவில் இளையநிலா துண்டாடி தூளாக்கக் கூடும் பாட்டின் சந்தம் குலைந்து சிதையக்கூடும் பேச்சின் இடையே பின்னல் விழுந்து வீச்சொன்று
வீணே முடியக் கூடும் வீணையொன்று மீட்ட மறந்தது போல் சின்னஞ் சிறிசொன்று
சிரிப்பிழந்து விண்ணின் கூரையில் முடங்க நேரின்? என்னைத் தின்னும் வெஞ்சூரியர் வெறு நரகில் வீழ்க மின்னும் ஏரியில் பொன்னாய்ப் புடமிடுக நிலவு நீள்விழியெறிந்து
கலகலக்கும்
மானிடம் பாடுக நண்பனே! என் வாழ்வின் பொருளுரைக்கும் அந்தி படுகிறது அங்கோர் தண்மை சிந்தி வழிகிறது. கன்னிமை அழித்த கயவர்
காமுகர்
பெண்ணினம் மாளச் சதிசெய்தோர் மண்ணின் துகளாவர்
என்றோர் விண்ணின் பாடல் எழுந்து கரைகிறது.
39

Page 28
தொலைபேசி விளையாட்டு
நாட்டியங்கள் போடுகிறாள் நளின சுந்தரி நாயனத் தேன் கலந்தே குரலெறிந்து தீட்டிடும் சொல்லில் இனிமை சுரந்தன கேட்டவர் கிறுகிறுத்தனர். கீழிறங்கி வந்துமே பூட்டிய மனந்திறந்து களி கொண்டுலாவினர் வார்த்தைகள் எறிந்தனர். வாயதரம் பூத் திகழ் சோலையாய் புன்னகை வீசியதும் பார்த்தவர் வியந்தனர் பாவொன்று பிறந்ததுவே.
காரிகை எடுத்தனள் தொலை கருவி காத்திருந்தவர் செவிப் பூட்டியே வார்த்தைகள் கோர்த்துமே வழங்கினர் சொற்பதங்கள் காற்றினில் கலந்ததும் நண்பு ஏற்றவர் ஒத்திசைத்தனர். ஒமோம் என்றே ஒப்பினர். வார்த்தைகளில் சுடுசரம் ஏற்றியே வேடிக்கைகள் செய்தனர். விளையாடல் தொடர்ந்தது.
பேச்சினில் தேன் பாய்ந்ததால் தேவி உன் கண்வீச்சினை விரும்பி நான் காத்துளேன். எனை ஏற்றி உனதகத்திலே ஏந்திழாய் ஏற்றிடேன் என்றுமே இரந்ததும் பேச்சுக்கள் பிறந்தில. பேசாமடந்தை ஆயினாள் கண் வீச்சினில் கணை பாய்ந்ததாம் காளையர் எரிசாம்பல் ஆயினார்
காலம் வந்தில. நாட்கள் ஓடி மறையவே வாலை நெஞ்சும் வாடலானது. துன்பு கொண்டுமே துயர் அணைந்தன. கஞ்ச முகம் மலருமோ? காவில் மலர் விரியுமோ? என்றுமே சிலர் ஏங்கி நிற்கலாயினர் பின் வஞ்சி மனம் வேட்கைகள் கொண்டதும் வேளையொன்று பிறந்ததால் கண்கள் ஒன்றை யொன்று உண்டு காதல் முந்தி நிறைந்தன.
40

ஊற்றெடுக்கும் உள் வசசு
நித்தம் என் நெஞ்சகக் கோவிலிலே பற்ற வைத்ததோர் தீபமாய் நின்றிருந்து என்னுளே தைத்த விழி போக்காது நோக்குகின்றனை சித்தம் உன்வசமாட புத்தி போக்கி வேறு வழி புகுத்த முயல்கையிலும் சத்தம் இடாது நுழைவதேன்? கோதையே! சரித்திரத்தில் நீயும் ஓர் புரட்சியோ? கத்தும் என் கிள்ளையே காத தூரம் செல்க செல்க செல்கவே!
கற்பனை கோடி நெஞ்சிலே காவியம் பாடி நின்றவோர் அற்புதம் சொல நாழிகையாகுமோ? பற்பல பகல்கள் படர்ந்தகன்றன ஆயினும் பாரிடம் பிறந்தனன் நானோ விண்ணகம் நண்ணலாயினேன். மண்ணிலே கால் பதித்திடா நானக வாழ்வை விரும்ப சொப்பனங்கள் வந்துறும் சுந்தர எழில் நங்கை வாய் மொழி தெய்விகம் ஆதலால் கண்வீச்சிலே கவிதை பீறிடும். ஊறிடும்
நீலமென் துகில் போர்த்தியொரு பூமி சுழல்வதாய் உள இத்தலத்தில் வந்து உதித்தனன். ஆதலால் நாளும் உழல்கின்ற விதி வந்தெனை எய்தவோ? சத்தமிடும் சாத்திரங்கள் படித்தனன். வித்தகம் பேசி விரியும் நூற்கணங்களோடு உறவாடி உறவாடியே காலம் சுழன்றது. புத்தகங்கள் ஓர் மாயையே அவை பேசியதோர் சொற்பமே! அற்பமே அவை அவை எண்ணிறந்தவை என்னுளே விரியுமாம்.
41

Page 29
ஊமையான வதை பாடல்
ஒரு வதை பாடல் ஊமையானது. நிலவின் ஒளியில் ஒரு பூவின் மொழி புதினமானது விழிகளில் கனவுகள் எழுகிற போதினில் விமரிசை நாதம் துயிலெழ விரைகணம் பழுதென அமைகிற சுரம் ஒரு பரிகாசம் அது விழலென சுடுசரம் எழலாமே! கடுகதி ரெயிலாய் வாழ்வு முடிகிற தருணம் இவன் புரிவினையாடல் பலிதமென அமையாதோ
விடு விடு என விரைகிற மேகங்கள் அவை நகர்வலம் செலும் குறி யாதோ? பயில்கிற சிறுவன் இவனோர் பரிதாபம்! படுகுழி வாழ்வென நிட்டுரம் மொழிகிற படுபாதகன் வதையாக சரிநிகர் சமனாய் எழுவம் பலபட பரவி விரிவம் கடிதாய் வாழ்வு கரைகிற பொழுதும் அவமென எவரும் நினையாதே சுடரொடு நிமிர்வம்
தணிகிற தண்புனலெனத் திரிவம். பொடிபட அழிப்ட வருகிற துயர் மறுபட ஒரு கணை எறிவம். திசைவழியினில் புயல் எழுகிறநிலை வரினும் எதிர்கொள மனதினில் உரம் வருமே! இனிஎன்? விதிஒரு துகள்! விழைகிற எரி அது மரணம்! இது நிசமே அறிக எவன் கொடுவாள் கரமிசை எடுத்தனன்? அவன் சிரம் அரிகிற விறல் எமை அணுகாதோ? (அதுநனவே).
42

மே தினப் பாடல்
சங்கே முழங்கு சரிநிகர் சமனாய் எங்கள் தோழர் எழுந்திட்டார் இந்நாளில் முன்றில் விட்டு முன்னே விரைந்தார். முதுகொடிய உழைக்கும் அன்னவர் தாம் எங்கள் நண்பர்! அவர் வகுத்த பாதை சென்றிடுவோம் நாம்! கங்குல் மடிய ஒரு காலை இங்கெழும் பொன் விரித்த இரவி செங்கதிர் எறிந்து சிரித்திடும். செவ்வொளியில் நின்றாடிக் களித்திடுவர் நிமிர்ந்திடுவர் நம் நாயகர்
வையத் திருவை வளர்த்தெடுக்கும் தோழர் உய்தி பெறுவார் உலகாள்வார் மெய்யாய் விரும்பும் படியாய் நிதம் உழைத்து மண்வாழச் செய்திடுவர் எய்தும் இலக்காய் அதையே கனவிலும் நனவிலும் கொண்டே மெய்தேய வருந்திடுவர். மிகு சுவை அள்ளி அளித்திடலாயினர் ஆயினும் என்! பைய நடந்ததவர் வாழ்வு பேசல் துயரே!
கையளவு மனசிலே கனவு நிறைந்தவர் வாழ்ந்திடினும் உய்ய வழியிலாது ஒரு சாரர் செய்ய விழையும் ஒரு செயலாலே பூமி சோர்ந்தது. தாய் நிலம் வலிமை குன்றி பலம் இழந்தது. செய்ய திருவும் அகன்றது. ஐயன் இவன் வழி இருள் நிறைந்தது. செங்குருதி பாய்ந்தன்னவர் நிலம் சோர்ந்திடினும் குன்றிடோம் நாம்! குவலயம் எம் வசம் ஆர்த்திடும் நம்மவர் வாழ்கவே!
வாழ்கவே நம் தொழிலாளர். வளர்கவே வளர்கவே! செங்கொடி நின்றாடும். போர் முரசம் வீறிடும் நன்று உணருங்கள். மே நன்னாள் இந்நாள் எண்டிசையும் மக்கள் கூடி எழிலார்ந்த செயல் முனைந்தார். குன்றென நிமிர்ந்தார். குன்றிடாது திண் வழி தொடர்ந்தார். தீமை இருள் கடிந்தே பாதை விரைந்தே பல்லாயிரர் விழி சுடர தீ சுமந்து நின்றார்த்தார்! திசை வழி பாய்ந்தார்!
43

Page 30
இது செய இசைவாய்! தோழா !
மனதினில் ஒரு பாடல் மகிழ்வொடு எழுகிற கணம் அருகினில் அமர் எனை உருவி அருவி பருகிட வருவாய் இது செய இசை தோழா பனியினில் நனை தளிரென இதயம் உருகிட பகலவன் மனதினில் எழுதிடும் மடல் காண்! கனியினில் அமைகிற சுவையே பொதி பாடல் எழுதிடும் ஒருவன் யானென எனை உணர் மனதினில் அழுதிடும் நினைவுகளா? நிழலுரு நீங்கிய நனவுகளா! இனியும் சமர் புரிவதுமேன்? இளமை மிகு கனவுகள் எரிவதுமேன்? செரு புரி வாழ்வொடு நகையாடு இது செய இசை தோழா பலர் பயில் கலை கூடம் எனதுளம் இதை உணர் மனதினில் ஒரு பாடல் எழுகிற கணம் அருகினில் அமர் எனை உருவி அருவி
பருகிட வருவாய் இது நீ எழுதிய கவிஆடல் அருகினில் வருக
அமர்
இது செய இசைவாய்!

பாடி நடந்த பாவை
பாடி நடந்தாள் ஒரு பாவை. பாதை வழி நடந்து பயணமாயினாள் பாலை ஆனதோர் பயணம் ஆயினும் காளையோடு நெஞ்சில் உலாபோதல் ஆர்வமாயினாள் வேளையேதென்று அறியாதவள் நித்தம் அவன் நெஞ்சம் கிள்ளினாள் ஆடலுடன் பாடலும் இணைந்தன.ஆர்வமுடன் பேசல் நிறைந்தது. வேய்ங்குழல் நாதம் எங்கும் பரந்தது.
கானல் அவள் வழி என காயம் உடல் நிறைந்தது.காலில் ஒரு கிண்கிணி காதலோடு இசைத்தது. ஆசையோடவள் நோக்கையில் ஆடவன் இதயம் அதிர்ந்தது. பேசல் தொடங்கினான் அன்னவன் பேணி நின்ற காதலால் ஊழிவரை உன்னுடன் கூடி நான் வாழ்வேன்.கோதை நீ என்னுயிர் ஓசையோடு அறைந்தனன். ஈருடல் ஒருயிர் ஆயினன்.
மையல் கொண்டு விட்டாள் மாது மாயன் உரையிலே. பைய நுழைந்தவன் படரும் வேளையிலே உய்யும் வழி வினையாளும் வழி உணர்ந்தவன் போல் செய்ய தமிழின் வாய்மொழி பாய்ந்திட சேரிதழ்கள் குவிந்தது. ஐயன் இவன் என் அருமை என்றுமே வாயதரம் பூத்தது. கையளவு மனதிலே கனவுகள் பாய்ந்தன.
நோக்கும் நோக்கில் அவள் நோய் பறந்தது. பார்க்கும் இடமெலாம் அன்னவன் பார்வையே திகழ்ந்தது. நீக்கும் இடமின்றி நெஞ்சில் ஏதோ திரண்டது. போர்த்த இருள் விடிந்ததாய் புதுமை நினைவுகள் எழுந்தன ஆத்திரம் கொண்டவள் அன்னை ஏசல் ஆயினும் நாணம் விட்டவள் நாயகன் கரம் பற்றினாள். நாளொன்று நகர்ந்தது.
45

Page 31
சங்கதியாய் வந்தவள்
சந்தங்கள் நான் பாடச் சங்கதியாய் வந்தவளே சிந்துங்கள் பாடல்
சிறப்பே தான்
என்றே வந்திக்கும்
நம்மவளே நாமகளே முன்பு கலந்தொரு அன்பு நிறைந்ததும் உயிர் கவ்வி
என்புருக நின்றதுவும் சந்தங்கள் நான் பாடச் சங்கதியாய் வந்தவளே என்னவளே
சின்னத் திரையினில் சித்திரங்கள் தீட்டுவதும் கற்றைக் குழுவின் நாட்டியங்கள் மின்னற் சுவையைத் தான் அமுதாய் ஊற்ற என்னிதயம் கவர்ந்தவளே ஏகவெளியெங்கும் புகுந்தொரு கால் கன்னம் வைத்துக் களவாட மன்னன் நான்
வாய் மூடி
முன்னை முனிவன் போல் சினம் விடுத்துப் போயொழிதல் என்ன வகையில் சாலும்? காதகி என்றவளை காசினியோர் ஏச மன்னன் நான்
வாய் மூடி
முன்னை முனிவன் போல் சினம் விடுத்துப் போயொழிதல் என்ன வகையில் சாலும்? சின்னத் தனங்கள் சிறிதுமிலை எம்மிடையே. சந்தங்கள் அவள் தந்தாள்
முன்னை நாளில் முழு நிலவில் மூழ்கையிலே
சந்தங்கள் நான் பாடச் சங்கதியாய் அவள் வந்தாள்.
46

அழியாத கலையரசி
அழியாத கலையாகி இவள் நின்றாள் அழகான
பொன் முடி சூடி பலகாலம் இவள் கதையே பேசும் பெண்ணுருவாக அழியாத கலையாகி இவள் நின்றாள் சலியாத திடமோடு
உரமாகி
பெருவெளியாக விரிகின்ற தரை கொண்டு சகவாழ்வில் இணையான அழியாத கலையாகி இவள் நின்றாள் பழிபாவம் இவள் மீதுார படுபாதகர் செய்விளையாடல்
நிசமாகி பிணமென் வாடை திசை பாவ அழிகின்ற உடல் கொண்டு
உருகி தினம் அழுகின்ற நிலை காணும் துயர் வாதை கொண்ட தாயானாள் மடி மீது உள மைந்தர் பலிபீட மீதில்
பிணமாகி வீழ
விழிநீர் துளியாக
உதிரும் துயர் வாதை கொண்ட தாயானாள் எனினும் அழியாத கலையாகி இவள் நின்றாள்.
47

Page 32
இலைகளின் நடனம்
தாளம் போடும்! தாளம் போடும்! இலைகள் கூடத் தாளம் போடும் தாளம் போடும் தாளம் போடும்! இலைகள் கூடத் தாளம் போடும்! போடும் போடும்! அவைகள் கூட போடும் தாளம் போடும் போடும்! காற்றில் அசைந்து அசைந்து நடனம். நடனம். நடனம். வெளியில் உரசி உரசி கானம். கானம். கானம். சுதியாய் சுகமாய் இசையின் நாதம் புதிராய் சதிராய் இழையும் இழையும் பனியின் குளில் தளிர்கள் நனையும் இசையின் விரிவில் இதயம் கரையும் கவியின் சுகங்கள் மனதில் பதியும் மழையின் பாடல், மொழியின் மெளனம் கண்டென் மனதில் துள்ளல் நிகழும் பூவின் நாணம் புன்னகை இதழில் பின்னால் வானில் கரைந்து வெளிகள் தாவும்
48

தடுமாறும் இதயங்கள்
விழியோரம் உரசும் அவள் எழிற்கோலம். கலை நூறு உருவான மணிநாதம்
மொழியாகும்.
பலபேசி
பகலான வெண்நகை ஒளி யாவும் நயனங்கள் உள்வாங்கும். நளினங்கள் உணர்வாகும். இளையோர் இதயங்கள் தடுமாற அவள் செய் அழிதொழில்
பேசல் பெரும் ஆர்வம் அது கூறும் சரிதங்கள் சுவையாகும். அழகான விரிகுழல் அசைந்தாட
மனதாடும். மனதாட மனதாட நிலைமாறும் பருவம். யெளவன எழில் யாவும் திகழ்கின்ற இளநலம் அவளாகும். இதயங்கள் முரசறைய மிருதங்க விளையாடல் பயில்கின்ற மனசோடு அவன் தினம் அல்லாடும் நிலைகண்டு இள இதயங்கள் உருகும் பழிபாவம் என உணரா அவள் நெஞ்சம் கல்லாகி இறுகும். இரவோடு பகல் மொழி பரிமாறும்
வேளை அதுவோ இதுவோ என தடுமாறும் நிலை போல் எனதுயிர் உருகும் உருகுகின்ற காலம் கவி நூறு பொழியல் ஆகும்.
49

Page 33
வேண்டும் நமக்கோர் முனைப்பு
முன்னைப் பழம் பொருளின் மூடக் கொள்கைகளை எந்நாளும் நினைந்து மனதிலேற்றி செல்நெறி இதுவென சொல்வார் காண்!
சொல்லால் ஏசிச்
சுட்டெரித்து
கல்லா நீவிர் மூடர்
நாமே கடவுள்
என்றிரைந்தே
சன்னதம் கொள்வார் பாவிகள் நீர் பல்லிளித்து எமை ஆராதனை பண்ணி கொலுவிருக்க
சாதனங்கள் செய்க
என்றார் வேதனை கோடி வேறேதும் மிச்சமில்லை பூமாலை குரங்கின் கையாயிற்று புவியில்
ஆமோ எமை வெல்ல?
ஆருளார்? கூறுபடுத்தி குற்றுயிராக்க நாமே பிறந்தோம் என்றார்த்தார்
நாயகரானார்
பேசித் திரித்து பழமையின் நச்சுக் கனியை சாறெடுத்துச் சுவைத்தார். போனார் சற்றேனும் விழிப்பில்லா
இவர் போன வழியேயே சுற்றிச் சுழன்றார் நச்சுக் கனி விலக்கி நல்ல தேன் கனியுண்ணல் புத்தூக்கப் பாதையின் புதுமை வழி வேண்டும் நமக்கோர் முனைப்பு
50

மண்ணின் புழுதியிலே
விண்ணிறங்கி வந்து தேவன் வீதியிலே புண்ணிருந்த உடலுடனே புரள்கின்றான் கண்ணிழந்தவராய் மனிதர் பொன்னின் மணி புனைந்து கன்னியர் ஒரு பால் கோயிலிலே காதல் மடவார் கண்ணினை உண்ணும் வேட்கை நெஞ்சினில் சூழ்ந்தவராய் காளையர் சுழல்கின்றார் விண்ணிறங்கி வந்த தேவன் வீதியிலே புண்ணிருந்த உடலுடனே புரள்கின்றான்
எண்ணிரண்டு பராயத்தாள் இளமங்கை மோகனமாம் தோற்றம் சந்தியிலே எழில் சிந்தும் சிலை கந்தல் உடை புனைந்தவளாய் குந்தியிருந்தாள் குழந்தையுடன் சீ சீ தரித்திரம் பேயே! என்ன நினைந்து எம்முன் வந்தாய் எனச் சிந்தை நினைந்து ஒரு சில பெரிய மனிதர் வழிநடந்தார். ஏனோ தானோ என்றவர் போயினும் ஏழையர் வாழ்வு தன் வழி விரிந்தது.
வாழ்வெனும் பெரும் பயணம் தன் வழி தொடர்ந்தது மானிடர் வீழ்ந்து கிடந்தனர்.
வாகை சூடி ஒரு சிலர் நடந்தனர். வாஞ்சையோடு வாழ்வினை நினைந்தனர். கூனல் வீழ்ந்தவரோ குறுகிக் கிடந்தனர். குழி பறித்தொரு கூட்டம் குலவி மகிழ்ந்தது பாழில் இறைத்ததாய் வாழ்வு முடிந்தது பாதகம் கண்டொரு சிலர் பாதை புதுக்கிட முயன்றனர். காலம் ஓடிச் சுழன்றிட காசினி நிமிர்ந்திடும் என்றனர்.
5

Page 34
புதிதான புதிதான நிலையாகி.
புதிதான புதிதான நிலையாகி நின்றாளே மனமீதில் நிதம் ஊறித் தேனானாளே
புதிதான புதிதான.
ஒளி கோடி நிறை என்னுள் பலவான செயல் கள்ளி இவள் நாட மனம் துள்ளி நான் நனைவேனே! -மனமீதில் புதிதான புதிதான.
அறியாத பராயம் அது ஆகும் அலைநூறு உருவாகும் இதயம் எனதாகும்
பரிவேதும் இலையாகி எனை மீறும் செயல் ஆகி மனம் கீறி முழுதாகி நிறைந்தாளே வேறேதும் நினையாத படியாக உளம் அள்ள நிலைமாறிக் கலைவேனே! பலபேர் எனை எள்ளல் செய்யும்படியாகி பரிவேதும் இலையாகி பிறிதேதும் நினையாதவாறாக, புதிதான புதிதான நிலையாகி நின்றாளே மனமீதில் நிதம் ஊறி தேனானாளே
52

ஆழம் மிக அடி ஆவி கவர்வதும் ஏனோ? விடு எனை காலம் கொன்று எனை மருவுதல் பெரும் பிழை
மாயம் ஏதெடி!
அட விடு
எனையே பாவம் இது பரிதாபம் மிக உளது தேனின் இனிமை நீ எனினும் உளம் அழியும் செயல் புரிவது
óਘ? நாளின் முழுமையும் உனதாய் கவர்தல்
பெரு மடமை வேறுள காரியம் அறியா மடையன் இவன் என பிறர் பேசும்படியாகச் செயல் புரிதல் பெரும் பிழை
-س29Lگی
விடு எனையே.
53

Page 35
புனைவோம் ஒரு புது வையம்
பெண்ணென்றும் பேயென்றும் அன்னை இவளென்றும் பேசும் தெய்வம் தானென்றும் எண்ணங்கள் பல கொண்ட மாந்தர்
புவி மீதுளார்
கன்னங்கள் சிவந்து போகும்படியாய் கதை பேசும் ஆண்கள்
பின்னவள்
கன்னிமை அழித்து
கயமைகள் புரிகின்றார்.
வண்ணங்கள் பலவாகும்.
ஆயின்
மணம் வீசா மலர்கள் சிலவுண்டு கண்ணென்றே கதைபேசி பின்னர் பெண்ணை விலை பேசிப் பேரங்கள் அவர் செய்வார். அது போல சின்னத்தனங்கள் அவர் புரிவார் சீ சீ இது வெட்கம்! சரக்கென்றும், காயென்றும், சின்னஇடை கொண்ட சிலுக்கென்றும்
சிரித்து கேலிகள் செய்து புண்ணுற்ற சேதி சொல்லும் புலையர் அவள் வாட
பண்ணும் பல செயல்கள் வகைதொகையின்றி நீள்வனவாம் கண்ணொன்றைக் குத்தி மறுகண்ணை அஞ்சன மையிட்டு அழகூட்டல் பேதமையன்றோ? சரிபாதி அவர் இதை உணர்வீர்!
செகத்தோரே! பெண்மை கீறிப் பிளக்கும் பேயர் செத்தொழிய கண்ணான காதல் இளமாதர், அன்னையர், சோதரிகள் அவர் வாழ புதிதாய் ஒரு வையம் நாம் புனைவோம்.
54

சரி நட
மனதினில் ஒரு கவி எழுகிற தருணம் கடை மூடிட நீ நினைவாய் அடி காதகி பிழை மிகப் புரிகிற பாவாய் விரைவினில் போகிட நீ நினைவாய் உனதுளம் சுட ஒரு மொழி பேசிட அறியேன் தமிழினை எழுதிட நினை பாவலன் என எனை உணரா மடமை மிக உள பேதாய் சுடுமொழி சில குரை பெரும்பிழை பழிமொழி பகர்வது சுடுபதம் எறிவது குரை நாயினை நிகர் பிழை தொழில் புரிவது எலாம் ஒரு சிலர் இயல்பாம் இழிவு எய்திட ஒரு சொல் தானும் பேசிட நினைகிலன் கவியினில் வெறி மூண்டிடு பொழுதினில் தமிழ் மகள் தரிசனம் எனதுள வெளியினில் எழுமாம் சிலகணம் பொறு
இளநகையினை எறி எனதுயிரினைக் கவர் தமிழினை அணி செய்துயர் தமிழ் மகள் உடலினில் பூண எனதுயிர்
தீ மெழுகென உணராயோ?
சரி நட இனியும் பொழுதினை வீண் செய்வது சரியல்ல கதிரவன் முகிலினுள் ஒளித்தான் இரவிருள் எழுகிறது அதனால் கடையினை மூடிட நீ நினைவாய் விரைமிக
தமிழொடு துயில்வேன்
சரிநட
55

Page 36
புற்களிற்கும் நோகும்
புற்களிற்கும் நோகும்! எடுத்தடி
வையேன்
தலை நிமிர்த்தி எத்திக்கும் பரந்தே நிறைந்தீர் பச்சைக் கம்பளமாய் பட்டுடுத்தி பூமியின் அம்மணம் மறைத்தீர் சிற்றெறும்பின் சிறுவீடாய் நின்றீர் கற்பனை பொலியக்கலைஞன்
ஒரு வன்
56

அற்புதம் நிகழ்த்தி ஒவியம் வரையப் பொலிந்தீர் புற்களிற்கும் நோகும் எடுத்தடி வையேன் சுடுபாலைக் கல்வெளியில் நான் நடப்பேன் ஆனாலும் சிற்றெறும்பின் நசிவும் சிறு புல் சிதைவும் நித்தமும் நிகழும் மெத்தைப் பஞ்சாய் காந்தும் அனல் மறைத்தே காலடி பொரியா
சந்தனம் போன்றிருந்தீர் மெத்தவும் நன்றி மிக ஆனாலும் கல் நெஞ்சர் நாம் சிற்றெறும்பின் நசிவும் உணரா சுடுபாலை வெளியானோம் புல் ஒதும் வேதம் உணரா புலையர் ஆனோமோ நாம்?
புற்களிற்கும் நோகும் எடுத்தடி வையேன் சுடுபாலைக் கல்வெளியில் நான் நடப்பேன் எத்தனித்தார்
புல் மழித்து மொட்டைத் தரையாய் வறிதே
தரிசாக்க
எத்தனித்தார் புல் ஒதும் வேதம் உணராப் புலையர் ஆனோமோ நாம்? சிறறெறும்பென்றெமை நினைந்தாரோ? புற்களிற்கும் நோகும் எடுத்தடி வையேன் சுடுபாலைக் கல்வெளியில் நான் நடப்பேன்.
57

Page 37
புதுநிலம் திறப்போம்
யாழகத்து மண்ணில் சோபித்து நின்ற நிலம் சோபையற்றுப் போயிற்று வீண்பதர் வேடிக்கை ஆயிற்று கன்னிமை கொன்று காமுகர் குதற செந்நீர் இரு விழி சிந்தி புண்ணுண்டது புதையுண்டார் புதல்வர் புதை குழியில் எட்டுத் திக்கெங்கும எழில் கிழிந்து குட்டிச் சுவராயிற்று குடில் குலைந்து வெட்ட வெளியாயிற்று வாடிச் சிறு குழந்தை தெருவோரம் வதங்கி
வழியின்றி
வேளைச் சோற்றுக்கும் பாழில் பரிதவிக்கின்றது
ஆனாலென்?
புது நிலம் திறப்போம் திறவுகோல் செதுக்கும் சிற்பர் நாம். புன்மை கடிந்து புதைகுழியில் இட்டே எரியூட்டி
திண்மை களைந்து
தீய்ப்போம்
எரி தீ எனப் படர்வோம்.
58

போர் சென்று கலைதற்கு.
சீ என்று கழித்தற்கு நினையாதே சீரெங்கள் மனிதற்கு பிழையாகும் நோய் வென்று உனைப் பற்றும் விரைவாக நீதங்கள் கெடுதற்கு துணையாமே நீ அன்பின் வழியில் ஒன்றிடின் மாறாய் பேதங்கள் உனை விட்டு செலல் கூடும் நேர் வந்து விடுபட்ட செயலாலே பூவிந்த உயிர்
நிற்றல் வருமாமோ
மார் தட்டி சில புல்லர் மடிவார்கள் வேர் கொண்டும் கயமைக்குள் நுழைவார்கள் சீர் என்ற நிலைமைக்கு நெறி தேடார்
போர் சென்று கலைதற்கு வழி யாது? பார் வென்று உன் புகழ் எங்கும் பரவாது கூர் கொண்ட வசை வந்து அடைவானேன் போர் நின்று நிலை கொண்டு விடுவாமோ? நேரங்கள் சரிவந்து அடையாமல் பாழ் கொன்று புதுமைக்குள் புகுமாறோ? வாழும் நல் நிலைமைக்கு விடுவாயோ சேரின்ப வழி மட்டு எனலாமோ?
AO

Page 38
புரிக
வாதம் பலவகை புரிபவர் உளரே வாழும் படி நிலை கொள அவர் சொரிவார் நாளின் மொழி சரிவு எனும் இது நினையின் காலம் அறிகிறபடியுரை புகலார் நோயும் சுடுநிலை அகல்வது
நனவே வாழும் உயிரினை நிகர் செயல் புரிவாய்
சந்தம் கனிவதும்
மடமையும் குறுகச் சிந்தும் கவிதையும் பயில்வது நினைக மங்கல் உளகதி மொழிகளில் கலையின் இன்பு பொங்கு கலை வரும் ஒரு சுவை மிளிரும் எங்கள் உறவினர் பருகுவர் எனினும் என்றும் மறபடும் படி செயல் மறுவே
மனிதன் விதியினி சரிவரும் விழலும் அழுதென அமைகிற நிலையே நினைவு கனியும்படி கவி தருவது திறனே உலகம் தனை புரி
அது முறை மகிழ்வும் கரைபட அழுவதும் சரியா? அறம் என்பது உணர் புரிக உன் மனமே.
60

இளமாயம்
எனை ஆளும் எனை ஆளும் கோலம் கொண்டாளே மன ஆழம் புனை பாவாய் பீறி வென்றாளே
எனை ஆளும் எனை ஆளும் .
தலையாய கவி மல்கி குளிரான இதம் நல்கி உளம் ஆட மனம் உன்னி நான் தளிராவேன் - இவள் எனை ஆளும் எனை ஆளும் .
புவி யாவும் பொழிலாகும் இளமாயம் துளி கூட கலையாத எழில் சின்னமே இனிதாக நினைவேறி எனை ஆளல் மகிழ்வாகும் கலையாத கனவாக சூடி நின்றேனே உளமதில் எனை ஆளும் எனை ஆளும் .
மனசோடு மொழி பேசி நுழைகின்றாள் மரியாதை மிகு மானாய் சமைகின்றாள் எனை ஆளும் மலர் தன்னை நினைவோர்கள் அழிவாக கலை மீறி ஆறான பொய்கை ஆனாளே எனை ஆளும் எனை ஆளும் .
61

Page 39
நினைவில் வருகிறதா?
பேசிக் கொண்டிருந்தோம் நாம் நினைவில் வந்து முற்படுகிறதா அந்நாளெல்லாம் தோழா முற்றத்தில் வெண்மணல் பரப்பி பேரில் கட்டுவதற்காய் கொட்டிக் குவித்த மண்ணில் இருந்தபடி பேசிக் கொண்டிருந்தோம் நாம் முற்றத்தில் நிலவு புவியுடன் சல்லாபித்தபடி எத்திக்கும் ஒளியை எறிந்ததுவாம். நீண்ட பொழுதாய் நித்திரையின்றி சம்பாசித்த பின் நீ சென்று விட கற்பனை பொலிந்திருக்கும் என்னுள்ளே கவி ஊற்றெடுக்கும் பித்தன் எவனோ உளான் என்றே பிறர் போனார் நித்திரையானானோ? இவன் என்னே சந்தேகங்கள் எத்தனையோ பிறர்க்கு ஆனாலும் நானோ பிரபஞ்சம் இசைக்கும் தாளத்தை கிரகித்தபடி ஏகப் பெருவெளியில் ஒன்றலானேன் இலையை அசைத்தபடி தலையாட்டிகளாய்
மரங்கள் சலசலக்கும் இரவின் மெளனம் நெஞ்சை நனைக்க பித்தானேன் நான்
62

பின்னும் பார்க்கையிலே மரங்கள் வெண்பனி குளித்து முத்துக்குள் நிறைந்து முறுவல் செய்கிறது வான் கிண்ணிக் கவிழ்ப்பினுள்ளே ஒற்றையனாய் நானிருந்தேன் எங்கோ ஓர் குருவி
ஆலாபனை செய்தபடி சங்கீதம் பயின்றதுவே தென்னங்கீற்றில் ஊஞ்சலாடி தென்றல் விளையாடும் வானில் எத்தனை வெண்மணிகள்? யார் வைத்தார் இதை அத்தனையும் கண்சிமிட்டி குறும்பாய் சிரிக்கும்
கவிஞன் எவனோ பொற்புடன் செய் பா போல் இயற்கை மோகனமாய் உடை உடுத்தும் ஆம்
நிலவின் பால் எடுத்து புவி எல்லாம் பவுடர் பூசி இயற்கை சிங்காரமாய் தனை அலங்கரிக்கும் இத்தனையும் கிரகித்து
பரவசமானேன் நான்
பித்தன் என்றார் பிறர் இத்தனையும் நினைவில் முற்படுகிறதா தோழ கட்டாயம் எழுது நீ
63

Page 40

|-言||-*---- |||-譯
『』 感
!