கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மணல் வெளி அரங்கு

Page 1
இஆைர்சிதம்
 

o്

Page 2

மணல்வெளி அரங்கு
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 3
தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 86
நுாற்பெயர்
ஆசிரியர்
பதிப்பு
அட்டைப்படம் :
வெளியீடு விநியோகம்
விலை
Title
Author
Cover Design :
Publishers
Edition
Printers
Distributors
Price
மணல்வெளி அரங்கு இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
LDITd 2002
இரா. சடகோபன்
தேசிய கலை இலக்கியப் பேரவை
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிறைவேற்) லிமிட்டட், 44. மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி, கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
ebuT. 125/=
Manal Veli Arangu (Short Stories) Inuvaiyoor Sithampara Thiruchchenthinathan R. Shadagopan Dhesiya Kalai Ilakkiyap Peraval February 2002
Techno Printers
South Asian Books,
Vasantham (Pvt) Ltd, No. 44, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo -11. Tel: 335844
RS. 125/=

தமிழ் மக்களுக்கு.

Page 4

பதிப்புரை
எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்
செந்திநாதனின் மூன்றாவது சிறுகதைப்
படையலை வாசகர்கள் முன் வைப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.
ஏற்கனவே ‘வெட்டு முகம்’, ‘என்னுடையதும் அம்மாவினுடையதும்’ ஆகிய அவரது சிறுகதை நூல்களை வெளியிட்டிருந்தோம்.
இந்நூலில் அமைந்துள்ள சிறுகதைகள் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் மிக அண்மைக்கால நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன்.
விடிவு தமிழ்மக்களுக்கு விரைவில் கிடைக்கின்றதோ இல்லையோ போராட்ட வாழ்வின்

Page 5
சில சங்கதிகளை இக்கதைகள் எம்முடன் பகிர்ந்து கொள்கின்றன.
மக்கள் விடுதலைப்பயணத்தின் நீண்ட கால வரலாற்றில் தேசிய விடுதலைக்கான காலகட்டத்தைச் சாத்தியமாக்கும் சரித்திரத்தை மாற்றும் வல்லமையை மக்கள் பெறுவதற்கான பயிற்சி நெறிகளை வளர்க்கும் இலக்கியப்பணியினை ஆற்றிவரும் தேசிய கலை இலக்கியப் பேரவை புத்தகப் பண்பாட்டின் மேம்பாட்டுக்காக 'நூறு மலர்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்ற பதாகையின் கீழ் நாம் அனைவரும் பணிபுரிவோம்.
வழமைபோல் வாசகர்களிடமிருந்து விமர்சனங்களையம் வரவேற்கிறோம்.
44. மூன்றாம் மாடி தேசிய கலை இலக்கியப் பேரவை கொ. ம. ச. கூட்டுத்தொகுதி
கொழும்பு - 11.
தொலைபேசி-335844

மதிப்புரை
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் வழங்கும் மூன்றாவது சிறுகதைத் தொகுதி இதுவென எண்ணுகிறேன். மிகவும் சிக்கனமான மொழிநடையில் எழுதப்பட்டுள்ள கதைகளின் நீளமின்மைக்கு அவை வெளியாகும் களங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். கதைகள் ஐந்து வருடகாலஇடைவெளியில் எழுதப்பட்டவை. ஆண்டுக்கு மூன்று கதைகட்கு மேல் அவர் எழுதவில்லை என்பது திருச். செந்திநாதன் எழுதிக்குவிக்கிற வகையான படைப்பாளி அல்ல என்பதை உறுதிசெய்கிறது. அவரது கதைகள் ஒவ்வொன்றும் கவனமாகச் செதுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கும் போது தான் சொல்வது வாசகரைத் தெளிவாகச்

Page 6
சென்றடைய வேண்டும் எனக் கருதுகிற படைப்பாளிகள் நடுவே அவரை அமர்த்துகிறது.
1997க்குப் பின்பாக, அவர் எழுதியுள்ள கதைகளின் அமைப்பு அவரது முன்னைய கதைகளின் நேரடியான, யதார்த்தப் பாங்கி னின்று கணிசமாக விலகியிருப்பதைக் காணலாம். பகுத்தறிவுவாத நோக்கில் ஏற்க முடியாதனவையாகக் கூடச் சில கதைகள் தென்படலாம், கதையை ஒரு குறியீடாகக் கையாள்வதில் கதாசிரியர் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றுள்ளதை வாசகர்கள் தவறவிட இயலாது.
யமன் ஒரு கிழவரின் உயிரைக் கொண்டு போகத் தயங்கித் தன் கடமை தவறுமளவுக்கு இளம் உயிர்களைப் பறித்துச் செல்லும் யமனிடமே குற்ற உணர்வு ஏற்படுகிறதை அழகாகச் சித்தரிக்கும் போதும் (காணாமல் போனவன்) மகனைப் பற்றிய நினைவில் உருவாகிற பிரமை ஒரு தாயை அவனது கல்லறையை நோக்கி அழைத்துச் செல்வதைக் காட்டும் போதும் (அம்மாவாக அல்ல) நாம் முன்பு அறிந்த ஒரு நல்ல சிறுகதையாளர் இப்போது தன் கதை சொல்லும் ஆற்றலை மேலும் விரிவுபடுத்தித் தனது தரிசனங்களை இலகுவாக நம்முடன் பகிர்வதை நாம் உணரலாம்.
இலக்கியம் என்பது, மெய் வல்லுநர் போட்டிகளில் நிகழ்வதை ஒத்துப், படைப்பாளிகள் தமது சொல்லாற்றலையும் கற்பனை வலிமையையும் கொண்டு காட்டும் வித்தை என்ற பார்வை இன்னமும் பல படைப்பாளிகளிடம் உள்ளது. இலக்கியம் என்பது யாருக்காக, எதற்காக என்ற கேள்விகட்கான மறுமொழிகள், வெகுசனங்களின் நலனைச் சார்ந்தும் மனித இன மேம்பாட்டின் அடிப்படையிலும் அமையும் போது, படைப்பாளிக்கு ஏற்படும் தெளிவே மக்கள் இலக்கியம் என்ற திசையில் படைப்பாளியை நகர்த்துகின்றது. உருவமா, உள்ளடக்கமா, அழகியலின் முக்கியத்துவம் என்ன? என்றவாறான கேள்விகள் தாமாகவே நல்ல தீர்வுகளைக் காணுகின்றன. திருச்செந்திநாதனின் படைப்பாற்றலின் முனைப்பு தன்னைச் சூழ உள்ள மக்கள் திரளின் நலனை

முதன்மைப்படுத்தும் ஒன்று என்பது பற்றி யாருக்கும் ஐயத்துக்கு இடமில்லை.
கதாசிரியரின் அரசியலுடனோ உலக நோக்குடனோ முற்றாக உடன்பட வேண்டிய தேவை இல்லாமலே அவரது கதைகள் அவர் வாழும் சமூகச் சூழலை நேர்மையாக அடையாளப்படுத்துவதை நாம் அறிய முடிகிறது.
தமிழ் இலக்கியத்தின் எதிர்காலத்தைச் சமூக வாழ்வினின்று தம்மை அந்நியப்படுத்திக் கொண்டவர்களது சிந்தனைக் குழப்பங்களில் அடையாளங் காட்டியவர்கள் இன்று தமது ஆரூடங்கள் ஒவ்வொன்றாகப் பொய்ப்பதைக் காணுகின்றனர். மறுபுறம், தமது இருப்பைத் தம் சமூகத்தின் இருப்புடன் சேர்த்து அதன் நலிவினுடும் விடுதலையையும் சமூக விமோசனத்தையும் நாடும் படைப்பாளிகள் நிதானம் தவறாது உறுதியாக முன்நோக்கி வீறுநடை போடுகின்றனர் என்பதை நமது போராடும் மண்ணின் படைப்புக்கள் உறுதி செய்கின்றன. இந்த இலக்கிய வளர்ச்சிப் போக்கை அடையாளப்படுத்தும் ஆக்கங்களிடையே திருச்செந்திநாதனின் கதைகட்கு ஒரு நிலையான இடம் உண்டு என்பதற்கு இத் தொகுதியும் உள்ளடங்கும் என்ற வகையில் இம் மதிப்புரையை எழுதும் வாய்ப்பையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
சி. சிவசேகரம்
9.10.2001

Page 7
எனினுரை
1995ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் 2000ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் என்னால் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு இதுவாகும்.
இக் கதைகளின் முக்கியத்துவமே இக்காலப்பகுதியை இக் கதைகள் சுட்டி நிற்பதுவே என நினைக்கின்றேன்.
1995ல் அக்டோபரில் எல்லோரையும் போலவே நாங்களும் எங்களது இயல்பான வாழ்விடத்தினை விட்டு இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்து பல்வேறு முள் முடிகளைச் சுமந்தோம்.
 

விம்மலும் வேதனையும் நிறைந்த வன்னி வாழ்க்கை ஆரம்பத்தில் எல்லோரையும் போலவே எனக்கும் எனது குடும்பத்தவர்களுக்கும் தவிர்க்க முடியாத பல பாடங்களைப் படிப்பித்துள்ளது. அந்தப் பாடங்கள் உண்மையில் கடினமாக இருந்தாலும் மீள் சிந்தனையூடாக இப்போது ஒரு நிறைவினைத் தருகிறது. இனி எத்தகைய இடர்கள் வந்தாலும் தாங்கக் dhQU மனோதைரியத்தினை அது அளித்துள்ளது என்பது பெருமைப்படக் கூடிய விடயமே.
இந்த அனுபவங்கள் எமது பாரம்பரியமான பல மரபுகளை உடைத்துக் கொண்டு எங்களை புத்துருவாக்கியுள்ளன. எத்தகைய இடர்கள் இருந்தாலும் இந்த வன்னி மண்ணில் அற்புதமான ஒரு வாழ்வு உண்டு. அமைதியும், ஆறுதலும் நிறைந்த சூழலில் நிம்மதி உண்டு.
இரவு குவிந்து நிலவு வரும் நாட்களில் வானத்தில் வரிகளை வரைந்தபடி செல்லும் பெயர் தெரியாக் குருவிகளின் இசையும், பாலாக கால்களில் பரவும் வெள்ளை மணலும் வலிக்கும் நெஞ்சை நீவிவிடும் சங்கதிகள்.
எத்தகு நெருக்கடிகள் மத்தியிலும் எங்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டும். எதிர்காலத்தை நோக்கிய வழித்தடத்தில் நின்று நிலைத்து நிதானமாக காலூன்றி முன் நகரவேண்டும் என்ற உணர்வு நெஞ்சமெங்கும் விரிந்து பரந்துள்ளது.
வெறுமனே விரக்தியும், புலம்பலும், இருப்புத் தொடர்பான அச்சமும், அதனால் எழும் அகமனத்து உளைவுகளுமே நல்ல இலக்கியங்களாக அமைந்துவிடுவதில்லை.
வாழ்வு பற்றிய தேடலும், அக்கறையும் எதிர்கால நம்பிக்கயைமே இலக்கியத்தின் கருப்பொருளாக அமைவது சிறப்பானதல்லவா? இவையே மனிதனை சூழலுடனும், சக மனிதர்களுடனும் பிரக்ஞை பூர்வமான உறவுகளைப் பேணத் தூண்டுகின்றன.

Page 8
நல்ல இலக்கியத்தின் பணியும் இந்த வகையில் காத்திரமானது. தான். மனிதனின் நம்பிக்கைகளை கட்டி வளர்த்து பிரச்சனைகளை, சிக்கல்களை, தெளிவாக விளங்கிக் கொண்டு அவற்றினை எதிர்கொள்ள இவை துணை செய்கின்றன.
தனக்கென ஒரு பார்வையும், விமர்சனமும் கொண்ட படைப்பாளிக்கு இலக்கிய வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்கும் என்று தமிழகத்து மூத்த படைப்பிளி ஒருவர் சொன்னதை இங்கு எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.
அந்தப் போராட்டம் மேலும் மேலும் படைப்பாளியின் இலக்கியச் செல் நெறியை வலுவுள்ளதாக்கும் என்பதையும் எனது அனுபவத்தினைக் கொண்டு வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
இந்த வெளிப்படுத்துகை எனது இந்த சிறுகதைத் தொகுப்பினுடாக வெளிவந்திருந்தால் அதுவே எனது வெற்றி
எங்கள் இனத்தின் வீரியம் மிக்க சமகால விடுதலைத் தடத்தில் நடக்கும் பாக்கியத்தினைப் பெற்றுள்ளதை பெரிதென நினைக்கின்றேன். விரைவில் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்,
இத்தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்தவர் மதிப்புக்குரிய நண்பர் ச. நகுலேஸ்வரன் அவர்கள். எனது நூல்களில் இது எட்டாவது நூல். சிறுகதைத்தொகுப்புக்களில் மூன்றாவது. மூன்று சிறுகதைத்தொகுப்புக்களும் வெளிவர உந்துதலாக இருந்தவர், இருப்பவர் அவர்தான். அவருக்கு எனது நன்றிகள்.
பல்வேறு பத்திரிகைகள் - சஞ்சிகைகளில் வெளியான சில சிறுகதைகள் இவற்றில் உள்ளன. அவற்றினைப் பிரசுரித்த அவற்றின் ஆசிரியர்கள் யாவருக்கும் நன்றிகள். இரண்டு கதைகள் நான் பிரதம ஆசிரியராக இருந்த ஈழநாடு மாதமலர், ஈழநாடு வாரமலர் பத்திரிகைகளில் வெளியானவை.
இந்த நூலிற்கு மதிப்புரை வழங்கிய பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களுக்கும், அட்டைப்படத்தினை வடிவமைத்து வழங்கிய

ஒவியரும் கவிஞருமான இரா. சடகோபன் அவர்களுக்கும் எழுத்துக்களை வரைந்த பயஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
ஏற்கனவே எனது இரண்டு சிறுகதைத்தொகுப்புக்களை வெளியிட்ட தேசிய கலை இலக்கியப் பேரவையே இந்த மூன்றாவது தொகுப்பினை வெளியிடுகின்றது. மதிப்புக்குரிய சோ.தேவராஜா அவர்களுக்கும் எனது நன்றிகள்.
எழுதத் தொடங்கிய காலம்முதல் என் ஆர்வத்தினை சரியாகப் புரிந்து கொண்டு என்னை இப்போதும் வழிநடத்தும் மறைந்த எந்தை தம்பையா சிதம்பரநாதபிள்ளை (இணுவையூர். த. சிதம்பரநாதன்) அவர்களை நினைவில் கொள்கின்றேன்.
நன்றி
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் “சிதம்பரக் குடில்” 7ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு 07.01.2002.

Page 9
14
மணல்வெளி அரங்கு

மாலை மூன்று முப்பதுக்கு டிங்டொங் என பெல்பொட்டம் கால்களில் அடிக்க கன்னக்கிராதியும் டோப்பாத் தலையுமாக இப்போது நினைத்துப் பார்க்க சிரிப்பு வரும் கோலத்தில் சந்தியில் தவம் இருந்ததை இங்கு எப்படி விபரிப்பது?
எழுபத்தியாறாம் ஆண்டா எழுபத்தியேழா ஞாபகம் இல்லை. விடுதலை, சுதந்திரம், என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வீராதி வீரர்களாக அப்போது நாங்கள்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 15

Page 10
ஒற்றை பெளசரில் சுன்னாகம் ஸ்ரேசனடியில் தண்ணிர் அள்ளிக் காரைநகருக்குப் போகும் நேவிக்காரரின் தண்ணிர் பெளசர். இப்போது முன்னுக்கும் பின்னுக்கும் ஆயுதம் தாங்கிய நேவிக்காரர்கள் ஜிப்புகளில் பவனிவரும் முன்னிலைக்கு வந்து விட்ட காலம்.
தம்பி கடையின் ஒரமாக சந்தி வளைவில் இருக்கும் செரிமரமும் தம்பி கடையின் ஒரு பக்கத்துச் சுவரோடு தொடர்புபட்டதாய் ஆட்களற்ற பழைய மண்டபத்திலும் தான் பொழுது கரையும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேயர் விருப்பத்தில் கடைசிப் பாடல் பெரும்பாலும் எங்கள் விருப்பமாகத் தான் இருக்கும். ஆனால் ஒருநாள் தனிலும் ஒரு போஸ்காட் எழுதி அனுப்பியதாக இல்லை. ரேடியோ சிலோனில் வேலை செய்த சுபாஸ்கரனின் உறவினரின் கைங்கரியத்தில் அது அமோகமாக நடந்தது.
சந்திக்குக் கிட்டத்தான் வீடு. வீட்டுக்கும் கேற்றடிக்கும் இடையில் சைக்கிள் ஓடிப் பழகக்கூடிய தூரம்.
கேற்றடியில் குவியலாகக் குருவிச்சை ஆடிய மாமரங்கள் ஊராரின் கல்லெறிக்கும் தாக்குப் பிடித்துக் கொண்டு எங்களுக்கும் உதவி செய்தன.
சுபாஸ்கரனுடன் சில இடைப்பட்ட நேரங்களில் மாமரத்தின் கீழ் சீரியஸாக கதைத்தபடி நிற்போம். அவை கால் துரசுக்கு பெறுமதி இல்லாத சமாச்சாரங்கள் என்பதை இப்போது விளங்கி என்ன செய்ய முடியும்?
ரியூஷனுக்குப் போய் விட்டு தளர்நடையுடன் வரும் றஞ்சிதம் ஒற்றைக் கண்ணை ஒரு தடவை தான் வெட்டிப் பார்ப்பாள். அதற்காகவே எத்தனை மணித்தியாலங்கள் காத்திருந்தோம்.
கமரா ஒன்றை பேப்பர் பையினுள் மறைத்து லென்ஸ் உள்ள பக்கத்தை மாத்திரம் கிழித்து விட்டு சுபாஸ்கரன் ரஞ்சிதாவை படம் எடுத்தது அந்தக்காலத்து எங்களது மாபெரும் சாதனைகளில் ஒனறு.
0. Φ 0. 0x8 0x8 {X 0. {X
16 மணல்வெளி அரங்கு

மீண்டும் சந்திக்கு வந்தால் தம்பி கடை வளைவில் ஒருநாள் சைக் கிளில் காலை ஊன்றியபடி நிற்க, தண்ணிர் கொண்டு சுன்னாகத்தில் இருந்து வந்த நேவிக்காரரின் முதலாவது ஜிப் மெதுவாகத் திரும்பியது. றைபிள் சகிதம் றைவிங் சீற்றுக்குப் பின்னால் இருந்த நேவிக்காரர் பார்த்த பார்வையின் வலிமையின் முன்னால் எங்கள் விழிகள் தெறித்துப் பறந்தன. தோள்கள் வளைந்து சுருங்கின.
ஜீப் நின்றது. படார் என அவன் குதித்தான். நாங்கள் கேள்விகள் ஏதும் கேட்காமலே அவன் எங்கள் கன்னங்களில் பதில் தந்தான். சளார் சளார் என்ற சத்தத்துடன் அக்கம் பக்கத்தில் நின்ற மீசைக்கார ஆம்பிள்ளைகள் இருந்த இடம் தெரியாமல் பறந்து விட்டார்கள்.
நல்லூர் திருவிழா முடித்து ஐந்து சைக்கிள்களில் பத்துப்பேர்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். சில வேளைகளில் இதைவிடக் கூடத்தான் ஆட்கள் வருவார்கள்.
இந்த முறை குறைந்து விட்டது. யாரோ செய்த புண்ணியம் தான் கலகலத்து செறிந்திருந்த தெருவழியே ஆய் ஊய் என்ற படி எங்கள் நகர்வு இருந்தது. மின்சார விளக்குகளினால் உயர்ந்திருந்த வீடுகள் கடைகளால் தெருவே அமளிப்பட்டது.
சந்திக்கு வர சற்றே ஒரு மாறுதல், வைரவர் கோயில் வாசலோரமாக ஒரு ஜிப் பதுங்கியிருந்தது. சந்தைச் சுவரோரமாக துப்பாக்கிகள் சுமந்த இராணுவத்தினர்.
சந்தியின் நான்கு பக்கம் பல ஜிப்புகள் ஆமியும் நேவியுமாக நிலையெடுத்திருந்தனர். எங்கள் சைக்கிள்கள் பொத்துப் பொத்தென்று நிற்க நாங்கள் சைக் கிள்களை ஒரம் கட்டி தலை வணங்கினோம்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் − 17

Page 11
துரையண்ணை கடை மதில் சுவரில் பெரிதாக வரிவடிவம் பெற்றிருந்த விடுதலை இயக்கமொன்றின் வேண்டுகோள் சுவரொட்டியை எங்களைப் போல பல வேலையற்ற விற்பன்னர்கள் கிழித்துக் கொண்டிருந்தனர்.
உயரத்தில் இருப்பவற்றினை ஒருவர் தோளில் ஒருவர் ஏறி நின்று கிழித்துக் கொண்டு இருந்தனர். சந்தியோரமாக உடல் பெருத்து நெஞ்சுவிரிய நின்ற ஒரு பெரிய இராணுவ அதிகாரி ஐயா, எங்களையும் சுவரொட்டியைக் கிழிக்கும் பெரும் பணியில் ஈடுபடும்படி பணித்தார். அதனை பவ்வியமாக ஏற்று பணிய சில விநாடிகள்தான் தாமதம் ஆகிவிட்டது.
பெரும் அரசதுரோகம் இழைத்து விட்டதாக கருதிய அந்தப் பெருமை மிக்க படையினர் ரைபிள்களால் இடிக்க கன்னங்கள்
கன்றி இரத்தம் பிறிட்டது.
0) (X) (X {X-
இப்போது தம்பி கடை இளைத்திருந்தது. இந்தியப் படைகள் சூறையாடிய சந்தி கசங்கிக் கந்தலாகி விட்டது. முகம் கறுத்து சுயத்தை இழந்த மனிதர்கள் சந்தியோரம் வரவே அஞ்சினார்கள். தம்பி கடையின் பக்கத்து மடம் பழம் பெருமை இழந்து குட்டிச் சுவராய் போய் விட செரிமரம் கருவறுந்து கனகாலமாயிற்று.
புகை கக்கி நெய் நாற்றத்தை வீசியபடி இந்திய இராணுவத்தின் வாகனங்கள் சந்தியெங்கும் திமிரோடு திரிந்தன. சந்திக்கு வரும் பாதைகள் எங்கும் இந்திய இராணுவம் தனது நாற்றங்களைப் பரவவிட்டு மமதையுடன் முகாம்கள் அமைந்திருந்தது.
தாண்டித் தாண்டி நடந்தபடி ஒரு இராணுவ கேணல் எங்கள் தெருவாலும் போவான். அவனைச் சூழ ஒரு பட்டாலியனே போகும். சில வீட்டுக் கேற்றுக்களை இடி இடியென அடித்து அட்டகாசம் போட்டுவிட்டு அவன் துள்ளுவான்.
மணல்வெளி அரங்கு

காதலித்த ரஞ்சிதாவை கைவிட்டு யாரோ ஒருத்தியை சுபாஸ்கரன் கலியாணம் செய்து கனடாவுக்குச் சென்றது போல பலபேர் போய். விட்டனர். விலை பேச முடியாத சுதந்திரமும் விடுதலையும் தேவை என்பதை மூத்த மகனைப் பார்க்கும் போது தோன்றும். கடைசி இவனாவது தலை நிமிர்ந்து வாழ வழி வர வேண்டாமா என்பதும் இதுவரை பெரும் மாயையில் வாழ்ந்து விட்டோம் என்ற உண்மையும் விழியோரங்களில் அரும்பும் கண்ணிரோடு வெளிப்படும்.
எண்பத்தியேழு மார்கழியில் ஒரு மாலைப்பொழுதில் வானத்தின் இதமான நேரத்தைக் கருமேகங்கள் மறைத்திருந்த வனப்புமிக்க நேரம்.
எங்கள் வீட்டுக் கேற்றடியில் மோட்டார் சைக்கிளைநிறுத்தி விட்டு வந்த சிவநேசனும் செல்வகுமாரும் கதைத்து ரீகுடித்து மீள ஒரு மணித்தியாலம் ஆகிவிட்டது.
புறப்பட்டுப் போனவர்களைச் சந்தியில் இருந்த முதலாவது ஐ.பி.கே.எவ். சென்றியில் சிப்பாய்கள் மறித்து விட்டார்கள்.
எங்கள் சந்தி ஒன்றும் அவர்களின் உத்தரப் பிரதேசத்திலோ குஜராத்திலோ இல்லை என்றாலும் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
சற்றே நிமிடங்கள் கரைய தாண்டித் தாண்டி நடக்கும் கேணலுக்குத் துணையாக வரும் இந்திய சிப்பாய்கள் இரண்டு பேர் எங்கள் வீட்டுக் கேற்றினை உதைத்தனர். அவர்களுடன் அந்தச் சென்றிக்குப் போனேன். கூடவே மகனைத் தூக்கிக் கொண்டு மனைவி வந்தாள். அம்மாவும் தங்கைகளும் இன்னும் கொஞ்சம் பின்னால்,
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஏன் வந்தார்கள், எதற்காக வந்தார்கள். அவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு என்பதையெல்லாம் விசாரித்து இனிமேல் இது போல எதுவும் நடக்கக் கூடாது என்று போதித்து மோட்டார் சைக்கிளை கைவிட்டார்கள். மோட்டார் சைக்கிள் கேற்றடியில் நின்றது தான் இவ்வளவுக்கும் காரணம்.
இறுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 19

Page 12
"எங்கடை காம்பில் ஒரு அறை இருக்கு தெரியுமா?"என்றான் தமிழ் தெரிந்த சிப்பாய் ஒருவன்.
et Py
D
"அங்கை கொண்டு போனால் இரத்தக்காயம் படாமல் ஒருவரும் வெளியில வாறதில்லை"
e 99
D
"அடுத்ததரம் இப்படி ஏதாவது பிரச்சினை எண்டால் அந்த அறைக்குத்தான் கொண்டு போகவேணும். இப்ப போ” என்றான் சற்று உறைப்பாக,
0. 0. 4. 0x- ox- 0x0
எல்லாமே ஒரு மாயைத் தோற்றம் போலத்தான் இருக்கிறது. தொண்ணுற்றி ஐந்தாம் ஆண்டு என்ன மாதிரி வந்து விட்டது. அக்டோபர் கடைசியில் வலிகாமத்தில் இருந்து இடம் பெயர்ந்தாயிற்று.
அடர்த்தியான பலா மரத்தின் கீழ் அடுப்பு புகைத்துக் கொண்டிருந்தது. மணலாய் பூத்திருந்த நிலம் குளிர்ச்சியாக இருந்தது.
மணல் பூக்கள் தாங்கிய உரப்பையை தரையாக்கி சிரட்டையில் ஏறிநின்ற கத்தியில் மரக்கறி வெட்டுதல் நடக்கிறது. ஒரு காலத்து எம். ஜி. ஆர் படம் ஒடும் தியேட்டரில் சனங்கள் போல ஈக்கள் கும்பல் கும்பலாக, அதனைக் கலைக்கக் கலைக்க கைகள் தான் வலித்திருக்க வேண்டும் ஆச்சிக்கு.
தெரு நிறைய சனங்கள். தாடி மலர்ந்த முகங்கள். சோகம் அப்பிய விழிகள். சோபை இழந்து நெருக்கமாக மிக நெருக்கமாக பளைவரை போவார்கள். நிம்மதியான வாழ்வுக்காக அப்பால் கிளாலியையும் தாண்டுவார்கள்.
தலையை முட்டும் கூரை கொண்ட எங்கள் தற்காலிக குடியிருப்பில் திரும்பிப் படுக்க இடமில்லை.
2 மணல்வெளி அரங்கு

ஆனால் நில், இரடா, ஐ.சி. இருக்கா என்று கேட்க யாரும் இல்லை. இரவு கனிந்தபிறகு தெருவில் நடக்க பயப்படத் தேவையில்லை. தடை முகாம்கள் முன்னால்தலை கவிழ்ந்து கைகளை உயர்த்திக் கூனிக் குறுகி, ஜயகோ இந்த அவலங்கள் இல்லை.
இப்படியான ஒரு நிலை நிரந்தரமாக வேண்டும்.
எப்போது வரும் அது ?
(ஈழநாதம், 29-12-1995)
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 2.

Page 13
எனக்காக?
2.
மின்னலாய் அவன் பார்வை என்னுள் இறங்கியது. விழிச் சிறகுகள் பரிதவிக்க தண்ணிரில் மூழ்க எழுந்தாற் போல் மூச்சுத் திணறியது.
முன்னொரு போதும் கிடைத்திராத அல்லது "முன்னெப்போதும்" இல்லாத பரவசம் அது. சிலு சிலு வென மழைத்துளிகள் முகத்தில் படும் போது கிடைக்குமே ஒரு சுகம், அதனை ஒத்ததாக ஆனந்தம், அற்புதம் எல்லாமே ஒன்றாகக் கலந்து எப்படி வந்தது இந்த அரிய நிகழ்வு.
மணல்வெளி அரங்கு
 

கனவுகள் மின்னும் விழிகளில் சந்தோஷம் கொப்பளிக்கும். எதிரில் வருவோர் எல்லோரையும் விழியாலே எறிந்து கலைக்க முடியும். அந்தக்கணத்தில் அவர்களிடம் ஏற்படும் அதிர்வுகளை ரசிக்கும் பருவம் அது. கனவும் நனவும் எதுவென்று புரியாத அந்தப் பருவத்தில் தான் அந்த அனுபவம் கிடைத்தது. என்னுள் வியாபித்து, என்னைக் கசிய வைத்து. நெக்குறப் பண்ணிய அந்த அதி அற்புதமான மாற்றம் எவ்வாறு உருப்பெற்றது. வானம் கறுத்து குளிர்காற்று உருக்கொண்டு உடுக்கடித்துக் கொண்டிருந்த அந்த வேளை "ரியூசன்" முடித்து, சைக்கிளில் ஒரு வண்ணத்து இளவரசியாக மிதந்த போதுதான் சூழலின் மாற்றம் புரிந்தது. ་་ கூட வந்த புவனா சந்தியில் திரும்ப, என் வீடு நோக்கிய பாதையால் இறங்கிய போது எதிர்ப்புறம் பதை பதைத்தபடி ஆட்கள். கனவுகள் கலைந்து வானத்தில் இருந்து தரைக்கு விழ வேண்டியதாயிற்று.
"என்ரை அம்மாளே” என்ன நடந்தது. அதிர்வுகளுடன் காதில் விழுந்த ஷெல்களின் ஒசை நடப்பதை புரிய வைத்தது. கால் இயலாமல் படுக்கையாக படுத்திருக்கும் அப்பா என்ன செய்வார்? அம்மா என்ன கஷ்டப்படுவாள். வீட்டில் அண்ணாவும் தம்பியும் நிற்பார்களா? தொடர் கணைகளாக கேள்விகள் மனதில் உருவாக பொபொலவென கண்ணிர் பெருக ஆரம்பித்தது. சைக்கிள் தள்ளாடியது.
"சித்திரா" என்று காதருகே ஒரு குரல். திரும்பினால் அண்ணா. "வீட்டில் ஆர் அண்ணை? தம்பி நிற்பானே. அப்பா என்ன செய்யிராறோ?
அண்ணாவைக் கண்ட சந்தோசத்தை மீறி வீட்டு நிலைமை மனத்தை உறுத்தியது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 23

Page 14
தம்பியும் இருக்க மாட்டான்" என்று அண்ணா சொல்லுவதற்கு முன்னர் "ஐயோ அண்ணை அப்பா என்ன செய்வார்”என்றுநடுங்கிப் போனேன்.
"அக்கம் பக்கத்தில இருக்கிற ஆக்கள் ஆரும் உதவி செய்வினம் சித்திரா" என்று அண்ணா சொன்னாலும், அதில் ஆற்றாமையும் கவலையும் திரண்டு வெளிப்பட்டன.
துயரம் வெடித்துச் சிதறும் முகங்களுடன் வரும் சனங்களை விலத்திக் கொண்டு விரைய சத்தங்களின் அதிர்வுகள் மனத்தின் அதிர்வை விட மிக அதிகமாக கேட்கத் தொடங்கின. இருந்தாற் போல -
"சித்திரா" என்றது அந்தக் குரல். இத்தனை வருடங்களாக என் காதில் புகுந்து என்னுள் நீக்க மற நிறைந்திருக்கும் அந்தக் குரல்.
சைக்கிள் நிற்கவில்லை. சரிந்தன அண்ணாவினதும் என்னுடையதும் சைக்கிள்கள். சிக்குண்டபோது கால்களில் சிராய்ப்புக் காயங்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓடினேன். வீதியோரமாக மரத்தடியில் அப்பா தனித்திருக்கவில்லை. முடித்துப் போட்ட சாக்கில் கால்களை நீட்டியபடி வழக்கமான கம்பீரத்துடன், வாடிப் போன முகத்தில் வில்லங்கமாக வரவழைத்த சிரிப்புடன்.
"என்ன பிள்ளை” என்ற குரலின் கனிவு என்னை நிலைகுலைய வைத்தது. "ஐயோ அப்பா எப்படியப்பா வந்தனியள். அம்மா எங்கை”
"அவசரப்படாத பிள்ளை அம்மா சுரேசோடை வாறா. ஒரு பிரச்சினையுமில்லை. எனக்கு கொஞ்ச நேரம் ஆறுதல் தேவைப்பட்டது. அதுதான் இருந்தனான். கனநேரம் சைக்கிளில் இருக்கேலாது" என்றார் அப்பா.
"ஐயோ அப்பா ஆரோடை சைக்கிளில வந்தனிங்கள்" மீண்டும் கேள்விகளால் அப்பாவைத் துளைக்க அப்பா கை காட்டினார். கைகாட்டிய திசையில் நிறுத்தி வைக்கப்பட்ட பெரிய கரியர்
24 மணல்வெளி அரங்கு

சைக்கிளுடன் அவன் நின்று கொண்டிருந்தான்.
இப்போது நினைத்தாலும் பசுமை மாறாத அந்தக் காட்சி இனிமை தர மறப்பதில்லை. எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும் அதிகாலை வேளையில் அம்மன் கோயிலுக்குப் போனால் கிடைக்குமே ஒரு ஆறுதல், அமைதி அது போன்ற ஒரு சுகம் அப்போது கிடைத்தது.
அவன் விழிகளில் கொப்பளித்த பரவசம் - பார்வையில் கூர்மை, அவன் முகத்தில் துளிர்த்த புன்னகை. உதட்டோரம் ராஜகளை கட்டியிருந்த மீசை - எதை எதைச் சொல்ல, எல்லாமே -
அன்று தான் ஆரம்பமா? என் அம்மாளே எனக்கு என்ன நடந்தது?
சிங்களத்தின் ஆக்கிரமிப்பு உச்சமாகி சொத்திழந்து நாடோடிக் கும்பல்களாக யாழ்ப்பாணத்தை விட்டு வன்னி யாத்திரை புறப்பட்டோம். −
தலையில் உரப் பை சுமை என்பதே தமிழரின் அடையாளம் என். கின்ற ஒரு காலப்பகுதியில் உரப் பைகள், சூட்கேசுகள் சகிதம் நாங்களும் வன்னிநகர்ந்தோம்.
அந்தப் பயணமும் இனிமையானது தான். உடல் களைக்க மனம் களைக்க தாகமும், பசியும் இணைந்து இம்சைப்படுத்த கிளாலிக் கடற்கரையில் படகுக்காக காத்திருந்து கடலையும் வானத்தையும் மாறிமாறிப்பார்த்தோம். விம்மும் நெஞ்சுடன். மாலை கனிந்து இரவு வந்தது. கடலும் வானமும் சங்கமித்து கள் நடனம் புரியும் அந்த எல்லையில் முழுப் புன்னகையாக நிலவு தோன்றியது. செங்கட்டிச் சிவப்பாக கடல் பளபளத்தது. எந்த விதமாக மனக்குறையும் இல்லாமல் அது போதையைத் தந்தது. தொடுவைப் படகுகளில் ஏறத் தயாரானோம், விம்மலுடன் அம்மா வெடித்து கிளர்ந்தபோதுவழக்கமான இதம் கலந்த புன்னகையுடன் அப்பா, அம்மாவின் தலையைத் தடவி அழ்ாதை அப்பா - எல்லாம்
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 25

Page 15
நல்ல படியாய் முடியும், நாங்கள் மாத்திரமே எங்கடை மண்ணை விட்டிட்டுப் போறம், எல்லாரும் தானே. இண்டைக்கு ஏன் போறம், இந்த மண் எங்களுக்கு நிரந்தரமாக வரவேண்டும் எண்டதுக்காகத்தானே"
அண்ணாவும் தம்பியும் வாடித் துவண்ட முகங்களுடன் படகேறத் தயார் செய்ய முனைந்தார்கள்.
அந்தச் சமயத்தில் தான் அவன் வந்தான். த்ோளில் கொழுவிய சிறிய தோற் பை, எப்போதும் போலவே மின்னும் விழிகள், கூர்மையான பார்வை.
என்சோர்வும் தளர்வும் கிளாலிக் கரையோடு கரை ஒதுங்கிக் கொண்டன. உற்சாகம் திமிறும்"பார்வைகளுடன் அவன் விழி. களைப் பந்தாட முனைந்தேன்.
நிலவுநனைக்கும் கடல் ஊடாக எங்கள் படகுத்தொடர்புறப்பட்டது. இஞ்சின் படகில் இருந்து ஆறாவது படகுதான் எங்களது படகு.
படகின் அணியத்தில் அவன் அமர்ந்தான். அணியத்தின் அருகே பலகை இருக்கையில் மனம் சந்தோஷ நுரை காட்ட நான் அமர்ந்தேன். நிலவில் அவன் விழிகள் பளபளத்தன. அப் பளபளப்பில் நான் என்னை இழந்தேன். தீராத தண்ணிர் விடாயினால் தண்ணீர் பருத்வது போல பார்வையால் பருகத் தொடங்கினான். அவன் கூர்மையான் பார்வை என்னைத் துளைக்கும் போதெல்லாம் உடலில் ஏற்பட்ட அதிர்வுகளை நான் உணர்ந்தேன். அவன் எனக்காகவே அந்தப்படகில் வருகிறான் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.
{ ox Ya ox ox ox
கிளிநொச்சி திருவையாற்றில் குடியமர்ந்து இயற்கையின் வனப்புடன் சங்கமமாகி வாழத் தொடங்க சூழல் இயைந்து வந்தது.
26 மணல்வெளி அரங்கு

அதிகாலைப் பொழுதில் காதில் இசையாய் விழும் குருவிகளின் சப்த ஜாலங்களுடன் கண் விழிக்கும் போதும் மாலை மயக்கத்தில் போதை தரும் உயர்ந்த காட்டு மரங்களின் அசைவும் மனத்தை மயக்கும்.
எல்லாவற்றையும் விட அவனது வருகை பெருமயக்கத்தை தரும். எப்போதாவது மாலை வேளைகளில் அவன் வருவான்.
அகமகிழ்வோடு அவனை வரவேற்கும் அப்பாவோடு அவன் ஐக்கியமானான். என்னை மட்டும் இடையிடையே விழிகளால் தரிசிப்பான். தந்தியடித்தாற் போல் தான் எப்போதாவது பேசுவான்.
அப்பாவைச் சாட்டி எனக்காகத்தான் அவன் வருகிறான் என்பதை நான் உணர்ந்தேன். ஒரு தடவை பேச்சோடு பேச்சாக வெளிநாட்டில் உள்ள அண்ணா அவனை வரச்சொல்லி அழைத்ததாகவும் அதற்குத் தான் மறுத்து விட்டதையும் அப்பாவுக்குத் தான் சொன்னான்.
அவன் அதனைச் சொல்லும் போது வீட்டின் திண்ணையில் இருந்து நான் தைத்துக் கொண்டு இருந்தேன். சொல்லி முடித்தவன் சட்டென்று என்னைப் பார்த்தான். பட்டென்று தீப்பிடித்தாற் போல அவன் பார்வை என்னைப் பற்றிக் கொண்டது.
அதித ஆனந்தத்தால் என் மனம் நிரம்பி இரணைமடு குள வாய்க்கால் பாயும் தண்ணிர் போல் பாயத் தொடங்கியது.
(X X X X X
நாங்கள் இப்போது மாங்குளம் குடிவந்து விட்டோம். திருவையாற். றில் தாராளமாகக் கிடைத்த தண்ணீர் மாங்குளத்தில் வரண்டது போலவே அவன் வருகையும் குறைந்திருந்தது. முன்பு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை என்றால் இப்போது வாரம் ஒரு தடவை.
முழுாைளியை கிணற்றுக்குள் விட்டால் காவாளி தண்ணீர் மண்னோடு வரும், அதனை அள்ளக்கூட கியூவில் ஆட்கள் நிற்பார்கள்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் - 27

Page 16
அப்படித்தான் ஒருநாள் அள்ளிக் கொண்டு நிமிர்ந்தேன். தண்ணீர் அள்ளக் காத்திருக்கும் கூட்டத்துடன் அவன். விழிகளில் வியப்பு மின்ன புன்னகைத்து எப்ப வந்தது? என்று பார்வையாலே கேட்க அவன் பதில் சொல்லாமலே சிரித்தான்.
அவன் குடும்பத்தவர்கள் யாழ்ப்பாணம் போகப் புறப்பட்டு விட்டார். களாம். அவர்களை வழியனுப்ப ஓமந்தை போவதாகவும் அவன்
சொன்னான்.
"அப்ப நீங்கள்" நெஞ்சைக் கிழித்த அந்தக் கேள்வி என்னுள் எழ முன்னரே அவன் பதில் சொன்னான், தான் போகவில்லை என்று,
அவன் எனக்காகத்தான் வீட்டார்களுடன் யாழ்ப்பாணம் போகாமல் இங்கேயே நிற்கின்றான் என என் உள் மனம் சொன்ன போது மூச்சு
1.
முட்டியது.
«Х» «Х» «Х» «Х» «Х•
புதுக் குடியிருப்பு:யாழ்ப்பாணம் போல ஒரு சுவாத்தியம் என்று யாரோ சொன்னது உண்மை மாதிரித்தான் தெரிந்தது.
எந்த வெக்கையாக இருந்தாலும் தென்னை மர நிழலில் அது பஞ்சாகிவிடும். காற்றாட தென்னை மரத்தடியில் அமர்வதும், வட்டமாக கூடியிருந்து கதைப்பதும் வழக்கமானது.
நாங்கள் குடியிருக்க வந்த முதற்கிழமை அவன் வீட்டுக்கு வந்திருந்தான். அம்மாவின் வற்புறுத்தலுக்குப்பின் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் தென்னை மரங்களின் கீழ் உதிர்ந்தோம்.
வழக்கத்தை விட அவன் அன்று சிரித்துக் கதைத்தான். அடிக்கடி என்னை விழிகளால் துளாவி என்னைக் கிறங்கச் செய்தான். விடைபெற்றுப் போகும் போது எப்போதும் போல அல்லாமல் தனித்தனியே*போட்டுவாறன்" என்று சொன்னான். அம்மா கூட "என்னடா இது புதினம்" என்று அவனிடம் கேட்க பதில் சொல்லாமல் தவித்தான்.
2. மணல்வெளி அரங்கு

கடைசியாகத்தான் அவன் என்னைப் பார்த்தான். விழிகள் முன்னர் எப்போதும் இல்லாதவாறு மிகப் பிரகாசமாக இருந்தது; சற்று நேரம் அவன் உதடுகள் துடித்தன. எனினும் அவன் சொன்ன வார்த்தைகள் "போட்டுவாறன்" என்பது தான். அதனைவிடப் புதினமாக அவன் எதையுமே ச்ொல்லவில்லை.
0. 0. 勾
0.
அதற்குப் பிறகு நான் அவனை எங்குமே சந்திக்கவில்லை. அப்பாவும் அவனைத் தேடிக் கொண்டிருந்தார். அம்மாவும் தான். என்னால் தான் அவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வேதனை தான் என்னைப் பிடித்துத் தின்கிறது.
கண்ணாடி பார்க்காமலே என்முகம் எனக்குத்தன் கோலத்தை உணர்த்தியது. மலேரியா வராமலே நான் ஒடுங்கிப் போனேன். கூர்மையான அவன் பார்வை கிடைக்காமல் நான் சக்தி வற்றி ஒடுங்கினேன். பிறிதொரு நாள் மணலாற்றுப் பக்கம் அதிகம் ஷெல் விழுந்து கொண்டிருந்த நேரம். புன்னகை சிந்தும் தன் தோழர்களோடு அவன் வாகனம் ஒன்றில் போவதைக் கண்டதாக தம்பி சொன்னான.
(வெளிச்சம், ஜூலை 1997 )
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 29

Page 17
3.
கேற்றைப் பூட்டிச் சென்ற அவன் பூட்டாமலே திரும்பி வந்தான். ஒழுங்கையில் மாடுகள் மாடுகள் தான். கொம்பை
மறைத்துக் கொண்டு வந்தன. அவன்
வந்ததை மாடுகள் கண்டுவிட்டன. கேற் திறந்திருந்தால் மாடுகள் உள்ளே வந்துவிடும். ஏதோ கேற்றின் ஊடாகத்தான் அவை வரும் என்பதல்ல. வேலிகளில் இடைவெளிகள் இருந்தாற் கூடப் போதும்.
கனத்த இருள் அந்தப் பிரதேசத்தை முக்காடு போட்டிருந்தது. இருளமுதல்
மணல்வெளி அரங்கு
 

பூட்டியிருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அவன் பதறியபடி திரும்பி வந்தான்.
வெளிவிறாந்தையில் நிவாரண வெட்டால் ஒடுங்கிப் போன வன்னிப் பொதுசனம் போல விளக்கு வெளிச்சம் துடித்துக் கொண்டிருந்தது. பிரகாசமாக விளக்கு எரிவதுமாடுகளுக்குப்பிடிக்குமோ என்னவோ
விறாந்தைச் சுவரில் குடங்கிக் கொண்டிருந்த அவன் அம்மா "என்ன" என்றாள் ஒசையில்லாமல். அதை விட அவள் விட்ட பெருமூச்சு பெரிதாகக் கேட்டது.
"மாடுகள்" என்று அவன் பக்குவமாகச் சொன்னான். உடம்பு பதறியது.
மாடுகளை அவன் சந்திக்காத நாள் எது. வாசலில், ஒழுங்கையில், தெருவில் என்று சிவபெருமானுக்கு அடுத்து அவைகள் தான்.
அவனது ஊருக்கும் மாடுகளுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் அவை தாமாகவே வந்து ஊரில் பட்டியடைத்துக் கொண்டு இருந்தன.
பச்சை இலைகுழைகள் தான் அதன் சாப்பாடு. பயப்பட வேண்டாம் என்று ஆளுக்கு ஆள் தைரியம் சொன்னார்கள். வீசி. எலக்சனின் போது சொன்னார்கள். எல்லோரும் அதனை நம்பினார்கள்.
சில வேளைகளில் சில மாடுகளின் கடைவாயில் சிவப்பாய் ஏதோ வடிந்திருக்கும். அது அவற்றின் கடைவாய் இரத்தமாக இருக்க வேண்டுமென அவனும் அவனைப் போன்ற பலரும் நினைத்தார்கள்.
பிறகுதான் தெரிந்தது இந்த மாடுகள் வித்தியாசமான மாடுகள் என்று. இலைகுழை சமிபாடடையாத நேரத்தில் மாத்திரம் கொஞ்சம் பச்சை இறைச்சி சாப்பிடும். இறைச்சிக்காக அவை யாரையும் வெளிப்படையாகக் கொல்வதில்லை என்பது அவனைப் போலவே பலருக்கு ஆறுதல் என்றாலும் அவை எப்படியோ இச்ைசியைத் தேடிக் கொள்கின்றன. எலும்புகளை மாத்திரம் யாரும் அறியாமல் மேய்ச்சலுக்கும் போகும் தங்கள் மேய்ச்சல் தரைகளில் புதைத்து விடுகின்றன.
இணுவையூர் சித்ம்பர திருச்செந்திநாதன்- — 31

Page 18
அவன் வந்து தாய்க்கு அருகில் குந்தினான். குளிர் அடித்தாலும் வியர்த்தது. அவன் அப்பா எதிர்ப்பக்கம் இருந்த வாங்கில் மல்லாந்து கிடந்தார். தோட்ட வேலை செய்த களைப்பு அவருக்கு.
அவன் வாசல் கேற்றையே பார்த்துக் கொண்டு இருந்தான். மாடுகள் உள்ளே வந்தால் என்ன செய்யலாம். "காலையில் உன் வீட்டில் எத்தனை இடியப்பம் அவித்தது நீ எத்தனை சாப்பிட்டாய்? நாளைக்கு காலை நீ யாரை சந்திப்பாய்?" "இரவு கண்ட கனவில் வந்த கடவுள் யாரோ?" போன்ற அசலான ஆக்கிரமிப்பாளரின் கேள்விகளுக்கு எத்தனை தடவைகள் தான் பதில் சொல்வது?
அவன் கேற்றையே பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு அகன்ற கேற், டச்சுக் காலத்துச் சமாச்சாரம். அவன் விட்டுச் சென்ற பல்வேறு சங்கதிகள் போல இதுவும் ஒன்றோ? என்னவோ? வீட் டுக்கேற் போலவே அவனது வீடும் பழைய நெடில் உள்ளதுதான். பழந்துணிவாசனை போல் ஒரு கெட்ட நாற்றம் வரும்.
அவன் அப்பா அதுகளைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளமாட்டார். வீட்டில் அவருக்கு ஒரு பக்தி நிறம் மாறிய சுவரில் உதிர்ந்து விழுந்தால் கூட கவலைப்படுவார்.
t வீடும் வளவும் பரம்பரையானது. அப்பாவின் அப்புவின் அப்புவழி வந்த்தாம் என்று சொல்லி அப்பா பெருமைப்படுவார். அவனிற்கோ இந்தப்பழம் பெருமையில் எள்ளளவும் இஷடம் இல்லை. மாடுகள் தான் பிரச்சினை. மாடுகளுக்குப் பழம் வீடாவது புது வீடாவது. அப்பாவின் அப்பு பதினான்கு பரப்புக் காணியில் அம்மன் கோயில் கட்டியபோது அதன் பரிபால்னத்திற்கு கட்டிய வீடாம் இது. வீட்டின் சாமியறையில் அப்புவின் அப்பு அணிந்த குமிழ் மிதியடி பூசைப் பொருளாக இருந்தது. பட்டாய்க் குறி இழுத்துக் கொண்டு அப்பு அந்த மிதியடியைப் போட்டுக் கொண்டு நடந்தால் ஒருவகைப் பிரம்ம ஒளி அவரைச் சுற்றி ஒளிரும் என்று சொன்னதை இன்று காலையில் அவன் அப்பா அவனுக்கு சொல்லியிருந்தார். மாடுகளுக்கும் சொன்னாரோ தெரியாது.
32 மணல்வெளி அரங்கு

இந்த மாதிரியான பக்திப் பரவசம் பொங்கும் பல்வேறு கதைகளை அவன் அப்பா சொல்வதுண்டு. சொல்லிச் சொல்லி பொழுதுதான் போனதே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.
அப்புவின் அப்பு பதினாறு பரப்புக் காணியில் கட்டிய கோயிலில் நள்ளிரவில் கோயில்மணி ஒலிப்பது வழக்கமாம்.
ஒரு நாள் நள்ளிரவு கோயில்மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு அப்புவின் அப்பு கோயிலடிக்குப் போனாராம். கோயில் ஓவெனத் திறந்திருந்தது. வாசல் கோபுரத்தில் இருந்து மூலஸ்தானம் வரை தீபங்கள், அவற்றின் பிரகாசமான ஒளிர்வு காணக்கண் கோடி வேண்டும். அதி அற்புதமான பக்தி அனுபவம் தரும் ஒரு உணர்வு மிக்க சூழலாம்.
நிரையாக பலர் நின்று இரு கரமும் குவித்து வணங்கியபடி எல்லோரும் பொன் நிறம் சுடச்சுட ஒளிரும் பொன் பாகவதர்கள் போல் தோளில் புரளும் சடை. அதன் பளபளப்பு கண்களைக் கூசவைத்தது. s
காதில் கடுக்கனும் பிராமணர்கள் போல பூணுரல் அணிந்து பஞ்சகச்சமாக உடுத்திய உடை அவர்களை வித்தியாசமாய்க் காட்டியது. ஆனாலும் அவர்களின் கால்கள் தரையில் இல்லை.
அவர்கள் தேவர்களாம். நள்ளிரவில் இவ்வாறு வந்து வணங்குவார்களாம். இதில் என்ன புதினம்? இப்படித் தேவர்கள் வந்து வணங்குவது சாதாரணமான ஒருவருடைய கண்களுக்குத் தெரி. யாது. இறைவனை மெய்யன்புடன் வணங்குபவர்களுக்குத்தான் தெரியும். அவரும் தான் கண்டனித யாருக்கும் சொல்லக்கூடாதாம்.
அப்படிச் சொல்லாமல் இந்தக் கதை எப்படி வெளியே வந்தது என்று அவன் அவனுடைய அப்பாவிடம் கேட்டதாக இல்லை. அப்புவின் அப்பு தேவர்களைக் கண்டதாகச் சொன்னதால் தான் அப்புவிடம் இருந்து கோயில் பறிபோனதோ? கோயில் நிர்வாகம் இப்போது uusi f. (Susi 2
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 19
ஒழுங்கையில் பரவியிருந்த இருள் கலைவது போல ஒரு அசைவு. அவன் கேற்றையே பார்த்தான். மூச்சு நின்றுவிடுவது போல பயம் வீரிட்டுக் கிளம்பியது. லாடன் பூட்டிய மாடுகள் கேற்றைத் தாண்டி வளவுக்கு உள்ளே வந்தன. மூச்சை நிறுத்திவடுவது போல விளக்கு பாசாங்கு செய்தது. அவன் அப்பாவின் குறட்டை மாடுகளுக்கு கேட்டிருக்க வேண்டும். அவை சற்று உசார் அடைந்தன. அவன் அம்மாவுக்கு மலேரியா வந்தது போல நடுக்கம் எடுத்தது. அவனுடன் நெருங்கி அமர்ந்து கொண்டு ஆற்றாமையுடன் அவனைப் பார்த்தாள். வளவினுள் பச்சை இலைதழைகள் இல்லை. மாடுகள் எதைச் சாப்பிடும் என்று அவன் யோசித்தான். அவை வளவைச் சுற்றி வந்தன. பிறகு விறாந்தைக்கு முன்னால் நின்றன. அவன் எழுந்து போனான். வெறும் உடம்பில் வியர்வை தழும்பியது.
"வீட்டில் எத்தனை பேர்?"
"என்ன செய்யிறாய்?"
"எல்லோரையும் வெளியால வரச்சொல்லு ?"
குறட்டையை தூக்கியெறிந்த அவனது அப்பா, வளைந்து குறுகிய அம்மா வெளியே வந்தனர்.
"நேற்று இரவு கோயிலுக்குப் (SUIT60TTuJIr?"
"ஓம்" மாடுகள் சிரித்தன. "தேவனைக் கண்டாயா?"
எந்தத் தேவன் என்று கேட்டால் பிரச்சினை. தேவனைத் தெரியாமல் அந்தப் பகுதியில் யார் இருப்பார்கள்? அவனும் இந்த மண்ணில் இருந்து வந்தவன் தானே.
34 மணல்வெளி அரங்கு

அவனைப் போன்றோர்கள் இந்த மாடுகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏன் மதிக்கப் போகின்றார்கள். நேற்று வந்த மாடுகள் குடல் வற்றித் திரும்பிப் போய்விடும். ஆனால் தேவன் எப்போதும் இந்த மண்ணில் மிதிப்பவன். மண்ணுக்காக வாழ்பவன். ஆக்கிரமிப்பாளரை எதிர்ப்பவன்.
கண்ணிர் விட்டு வளர்க்கும் கதிர் முற்றாதவயல் வெளிகளின் ஒரத்தில் இப்போதும் தேவன் போன்ற ஆட்கள் காவல் காத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அவனைப் போன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஆட்கள்.
"அடேய் தேவனைக் கோயிலில் கண்டாயா?"மாடுகள் கொம்புகளை மறைத்த தலைகளை ஆட்டியபடி கேட்டன. லாடன் பூண்ட அவற்றின் கால்கள் துள்ளின.
சட்டென்று அப்பாவின் அப்புவின் அப்பு நள்ளிரவில் கோயிலில் கண்ட காட்சி நினைவுக்கு வந்தது. தேவர்களை கண்டால் சொல்லக்கூடாது. தேவர்களை மட்டுமா? தேவனையும் தான்.
(ஈழநாடு வாரமலர், ஒக்டோபர் 2-8, 1998)
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 20
36
படார் என்று ஒரு அதிர்வு வாசற்புறக் கதவு தான் தட்டப்பட்டது. தொடர்ந்து தடார் தடார் தான்.
திடுக்குற்று விழித்ததால் மனதில் அதிர்வு உண்டாகி இருந்தது. இரவு சாப்பிட்ட சாப்பாடு சமிபாடு அடையாமல் நெஞ்செரிப்பது போல உணர்வு.
உடல் தெப்பமாய் வியர்வையில் நனைந்திருந்தது. ரேபிள் பான் வேலை செய்யவில்லையா? நைற் லாம்ப் கூட இல்லையே கரண்ட் கட்டா? எப்போது தான் கரண்ட் சரியாக வரப்போகிறது.
மணல்வெளி அரங்கு
 

உள்ளுராட்சித் தேர்தலுக்கு ஒழுங்காக வாக்களித்தது தான்
ÓláFFIDAT?
மீண்டும் படபட அதைவிட வேறு சத்தமில்லை. வந்தவர்கள் யாராக இருக்கும். கட்டிலைவிட்டு எழும்ப சங்கடமாக இருந்தது. போர்வைக்குள் என்னவோ சரசரத்தது. பாம்பா? பூச்சியா?
லைட் இருக்கும் துணிவில் ரோச்லைட்டை கவனமில்லாது விட்டது தப்புத்தான். போர்வையைத் துரக்கி எறிந்தால் அது கதவோரமாக போய் விழுந்தது. விழும் போது கதவோரத்து ஸ்ரூலில் இருந்த கிளாஸ் ஒன்றையும் கூடவே கொண்டு சென்றது. கிளாஸ் "கலீர்" என்று சீமெந்து நிலத்தில் மோதியது. கட்டிலில் இருந்து ஏதோ ஒன்று சரசரவென்று கீழே குதித்து மறைந்தது.
மீண்டும் வெளிக்கதவு தடதட என்றது. எதைப் பார்ப்பது.
கட்டிலிலிருந்து சரசரத்ததையா?அல்லது உடைந்த கிளாசையா? வாசலில் தட்டப்படுவதையா?
மனைவி பிள்ளைகள் வீட்டில் இல்லாமல் போனது அப்போது உறைத்தது.
மனைவியின் கட்டில் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருந்தது. தலையணை போர்வைகள் கண்களுக்குப் பழக்கப்பட்ட இருளில் அவை பளபளத்தன. எல்லாம் புதிசுகள். பழைய வாழ்க்கையுடன் பழையவையும் போய்விட்டன. கட்டில் மாத்திரமா? வீட்டுத் தளபாடம், குசினி தட்டு முட்டுச் சாமான்கள், அம்மி குழவி, முக்கியமாக அரிவாள். சுவர்கூட வெள்ளை. புதிய வெள்ளை. தாமரை வெள்ளை.
தடார், தடார் முன்பைவிட வேகமாக கட்டிலை விட்டு இறங்கி தரையில் கால் வைக்கச் சில் என்றது. கால்கள் ஏன் இப்படி? வெளியே மழை பெய்து நிலம் குளிர்ந்து விட்டதா? அல்லது வியர்வைதானா?
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 37

Page 21
யன்னல்-கதவு என்று எல்லாவற்றினையும் இறுக மூடிக்கொண்டு ‘பான்’ காற்றில் மாத்திரம் நம்பிக்கை வைத்து படுத்தால் இப்படித்தான் வியர்க்கும். இரவு எத்தனை மணிக்கு கரண்ட் கட்டானது? என்னதான் செய்தாலும் வெளிக்காற்று வருவதற்கு ஏதாவது வழி பண்ணத்தான் வேண்டும். M.
கால்களை அழுத்தமாக வைத்துநடந்து மேசையில் இருந்த ரேடிய மணிக்கூட்டில் நேரத்தைப் பார்க்கப் பன்னிரண்டு ஐந்து.
இரவு பன்னிரண்டு ஐந்து.
ஐயகோ இது பேய்கள் உலாவும் நேரம் அல்லவர்? பேய்களை அடக்கி வைத்த ஒரு காலத்தில் இப்படியான நேரங்களில் திருவிழாக்கள் பார்த்து விட்டு வந்தது உண்டு தான். ஆனால் இப்போது பேய்கள் உலாவுகின்றனவே. சென்ற வாரம் din L. குஞ்சியாச்சி தங்கள் ஊர் புளியடி பேய் சேட்டை விட்டதாகச் சொன்னாவே.
குஞ்சியாச்சியின் பேய்க்கதை பகிடியானது அல்ல. குஞ்சியாச்சியின் பேத்தியார் பேயா, முனியா என்னவோ ஒன்று அடித்துத்தானே செத்தவவாம். அது ஒரு ருசியான கதை.
ஒருநாள் பகல் பன்னிரண்டுமணி உச்சி வெய்யில், செம்மண் தரை தோசைக்கல்லாய் சுட்டதாம்: கருவாடு வாங்கி கடகத்துக்குள் வைத்துக் கொண்டு குஞ்சியாச்சியின் பேத்தியார் வந்து கொண்டிருந்தார்.
புளியடிக்கு வரும்போது முதுகில் ஓங்கிப் பளார் ள்ன்று அறை விழுந்தது. வாயாலும், முக்காலும் ரத்தம் கக்கியபடி பேத்தியார் செத்துப் போய் இருந்தார். கருவாட்டுக்காக முனி குஞ்சியாச்சியின் பேத்தியாரைப் பலி எடுத்து விட்டது. அது அந்தக்காலம். வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலம். இப்போது வெள்ளைக்காரனைத்தான் கலைத்தாகி விட்டதே. பேய்களின் சேட்டைகளைத்தான் கலைக்க முடியவில்லை. கடைசியில் பேய்களுடன் சமரசம் தான்.
38 மணல்வெளி அரங்கு

உடல் வியர்வை முன்பைவிட அதிகமாக இருந்தது. ஏன் இப்படி வியர்க்கிறது?"எட கோதாரி"உடம்பில் “ஸ்வெற்றர் இரவு பனியும் இல்லை, குளிரும் இல்லை. பிறகு ஏன் இதனைப் போட்டேன். கொஞ்சக் காலமாய் இப்படித்தானே. தேவையில்லாத எத்தனையோ விடயங்கள்.
கதவு உடைபடுவது போல் இடிபட்டது. இனியும் பொறுத்தால் உடைத்து விடுவார்கள். அதற்கு ஏன் இடம் கொடுப்பான். நான் ஒன்றும் பிரச்சினையான ஆள் இல்லைத்தானே? என்னுடைய வீட்டுக்கதவையும் உடைத்து விட்டதாக ஏன் காலையில் செய்தி பரவ வேண்டும்.
ஸ்வெற்றரைக் கழற்றிக் கொண்டு அறைக்கதவைத் திறந்தேன். ஏகமாய் வியாபித்திருந்த இருளின் அணைப்பில் இருந்த குளிர் காற்று பெண்மை கலந்த சுகத்துடன் தழுவிக் கொண்டது. எவ்வளவு ஆனந்தம்.
வீட்டின் வாசலின் ஒரு ஜன்னல் பூட்டப்படாமல் இருந்தது. அத
னுாடாகத் தான் இந்தக் காற்று. வெளிக்காற்றுக்கு இவ்வளவு வல்லமை உண்டா?
வெளிவாசற் கதவடியில் பெரிதாக அமளி கதவுதட்டப்படும் ஓசை இன்னமும் நிற்கவில்லை. யார் ஆட்கள் எத்தனை பேர் வந்திருப்
IITiab6ir?
சிகரெட் குடிக்க வேணும் போல இருந்தது. வந்தவர்களிடம் சிகரெட் இருக்கலாம். நிச்சயம் தருவார்கள். நெருப்பும் தருவார்கள். என்றாலும் அச்சமாக இருந்தது. என்னில் பிழையேதும் இல்லை. இருந்தாலும் அது ஏன் தலை காட்டுகின்றது. நின்று நிதானித்து கைகளைப் பிசைந்துமுகம் துடைத்துகணைகளை அழுத்தி பிறகு வெளிக்கதவைத் திறந்தால் "மடார்”என அடித்தது வெளிக்காற்று. குளிர்மையும், மென்மையும் கலந்து சிலிர்க்க வைத்தது. முன்முற்றத்து மல்லிகையின் மணம் அந்தக் காற்றில் கலந்திருந்தது. எனினும் மல்லிகையின் மணத்தைவிட வேறு ஒரு மணமும், நான்
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 39

Page 22
முக்கைத் துடைத்தேன். முன்பைவிட அதிகமாகியது. ஒரு வகைப் பச்சை மணம். பச்சை இரத்த மணம்.
கதவு திறக்கப்பட்டதால் அவர்கள் சற்று விலகிநின்றார்கள். ஐந்து பேரா, ஆறு பேரா தெரியவில்லை. அதற்கு அப்பாலும் அவர்கள் நீளமாக நிற்பது போல இருந்தது. வெளிவாசல் கேற் இரண்டும் ஆவென்று பிளந்திருந்தன.
பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டிய கேற் அது. எப்பீடித் திறந்து கொண்டது. அதனை உடைத்துக் கொண்டா இவர்கள் வந்திருக், கிறார்கள்? ஏன் இப்படிச் செய்தார்கள்? நிச்சயமாக உடைத்து எறியப்பட்ட பூட்டை எடுத்து ஒளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கேற்றை உடைத்து விட்டார்கள் என்ற கதை பரவி விடும். காலையில் விடுப்புப் பார்க்கக் கூட்டம் வந்துவிடும்.
விளக்குமாற்றினை எடுத்துக்கூட்டி இவர்கள் வந்த சுவடுகளைக் கூட அழித்து விட வேண்டும். ம், எதற்கு வந்திருக்கிறார்கள் இவர்கள்?
எல்லோரும் தெரிந்தவர்கள். வழக்கமாக சந்திப்பவர்கள். காலை வணக்கம், மாலை வணக்கம் சொல்பவர்கள். இ&ம் இருந்தால் தங்கள்வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போய் விடுவார்கள். நல்ல அயலவர்கள். நண்பர்கள். ஆட்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்களிடம் வெவ்வேறு வகையான கைக்கருவிகள். அதில் ஒன்றும் பிழையில்லை. தொழில் செய்பவர்கள் தொழில் கருவிகளை வைத்திருப்பார்கள் தானே.
"ஐயா வணக்கம்"என்றான் முன்னால் வந்த ஒருவன். அவன் சிரிப்பது பற்களில் தெரிந்தது. பற்கள் கூட வெள்ளை.
“வணக்கம்"
"உங்களிட்டைத்தான் ஒரு அலுவல்" என அவன் பவ்வியமாகச் சொன்னான். நான் அந்தப் பவ்வியத்தினுள் கரைந்து போனேன்.
4. மணல்வெளி அரங்கு

"சொல்லுங்கோ கனநேரமாய் கதவைத் தட்ட வைச்சிட்டேனே"
இல்லை ஐயா"
தயவு செய்து மன்னிக்க வேணும்.நித்திரையில் இருந்து விட்டேன். நேற்றே சொல்லியிருந்தால் நித்திரைக்குப் போகாமல் காத்துக் கொண்டிருந்திருப்பேன்" என்றேன் மெய் மறந்து. வியர்வை ஆறி உடல் இயல்பாகி இருந்தது.
நாங்கள் உங்கடை சகோதரங்கள் ஐயா. உங்களுக்காக உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள்" "மெத்தச் சந்தோசம் என்ன அலுவல்? நீங்கள் எங்களோடை வரவேணும்"
இப்பவா' என்ற எனது குரலில் இருந்த தடுமாற்றத்தினை கடவுளே அவர்கள் உணர்ந்திருக்கக்கூடாது. உணர்ந்தால் நான் தங்களைச் சந்தேகம் கொள்வதாக நினைத்து விடுவார்கள். அது சரியில்லை.
"ஒமோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும் தானே. அதற்கு இடையில் சில அலுவல்கள் இருக்கின்றது.
"சரி போவோம்”
"வாங்கோ" என்றான் ஒருவன்.
"உங்களை இந்த நேரத்தில் கஷ்டப்படுத்திறதுக்கு மன்னிக்க வேணும்" என்றான் மற்றவன்.
அதனால் என்ன பரவாயில்லை"
வீட்டின் வாசலில் இருந்து கேற்றடி வரை அவர்கள் இரு பக்கமும் வரிசையாக நின்றார்கள். பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதன் மத்தியில் நடக்க கம்பீரமாகவும் தெரிந்தது.
தெருவுக்கு வந்தோம். அவர்கள் கூட நடந்தார்கள். தெருவில் இரு மருங்கும் நீண்ட வரிசையாக அவர்கள். அவர்கள் தான்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 41

Page 23
கருமேகத்தில் சிறைப்பட்டிருந்த நிலவு அச்சம் நீங்கி வெளிவந்தது. இடிந்த கட்டிடங்கள் ஒரு பெரிய கட்டிடமும், நிச்சயம் எரிந்த நூலகம் இல்லை. முகம் அழிந்த மனிதர்கள் போல தெரிந்தன கட்டிடங்கள். ஆனால் எல்லாம் வெள்ளையாக?
இரவு எப்போதும் போல மாறாமல் இரவுப் பூச்சிகள், வண்டுகளின் சப்தங்களுடனும் காற்றின் அணைப்புடனும் முயங்கிக் கொண்டிருந்தது.
தெரு முற்றும் துறந்த முனிவனாய் எவ்விதமான உணர்வும் இல்லாமல் நீண்டு கிடந்தது. வழக்கமான பாதையா? புதிய பாதையா என்பது தெரியவில்லை. கேட்பதும் சரியில்லை.
சரிந்த சுவர்கள். அழிந்த வீடுகள் மத்தியிலேநிதானமாய் தெருவின் முடக்குகளில் சிறிய சிறிய கூடுகள் வெள்ளைப் புறாக்கள் மாத்திரம் பக்குவமாய் சீவிக்கப் பொருத்தமாய்.
கனவு கண்டது போல தெரு மறைந்து போய்விட்டது. "கெதியாய் நட" என்றான் ஒருவன்.
வீட்டின் அறைக்கதவு உட்பட வீடு எதையுமே பூட்டாமல் வந்தது ஞாபகத்திற்கு வந்தது.
காலில் மணல் சொரசொரவென்று இருந்தது. கொஞ்சம் ஈரலிப்பு பெருவெளி மணல்வெளி. சிறு சிறு பூண்டுகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெளி பிரமாண்டமானதாய் விரித்துப் பரந்து தெரிந்தது.
காலில் செருப்பு எதுவுமே போடாமல் வந்ததன் பலன் கிடைத்தது. சுருக்கென்று எதுவோ காலில் குத்தியது. தொடர்ந்து வலி நடையை நிறுத்திக் காலில் என்ன குத்தியது என்று பார்க்க முடியவில்லை. நெருஞ்சி முள்ளாக இருக்குமா? மனம் கேட்காமல் குனிந்து பார்த்தால் அது முள் இல்லை. அதைவிட கொஞ்சம் பெரிதாக என்ன அது?
"தொடாதே அதை. பிறகு ஒரு காலத்தில் யாருக்காவது ஆராச்சிக்கு உதவும்" என்றான் ஒருவன்.
42 மணல்வெளி அரங்கு

நிலவு கலந்த இருளில் வெளி, குளத்து நீர் போல பளபளத்தது. பாசிகள் போல தட்டுத்தட்டாய் சில அடையாளங்கள் ஒன்று நூறா ஆயிரமா?
நில்லு" என்றவன் அப்பால் போனான்.
இதழ் கோடியில் ஏதோ ஒன்று ஊர்ந்தது போல இருந்தது. கையால் வாயைத் துடைத்தேன். உப்புக் கசிந்தது. மண்ணைத் தொட்ட கையா? கண்ணிரா?
நான் மாத்திரம் அல்ல என்னைப் போல் பலர் அழைத்து வரப்பட்டிருப்பது ஆச்சரியமாய் இருந்தது. எல்லோரும் நண்பர்களா?
தூரத்தில் ஒரு வாகனம் இரையும் சத்தம் கேட்டது. அதன் லைட் வெளிச்சத்தில் றோட்டுக்குக் குறுக்காக அமைந்திருந்த வளைவின் நிழல் விரிந்து படுத்தது.
அணிவகுத்து வந்தவர்கள் கைக்கருவிகளுடன் அரை வட்டம், முழுவட்டம், திபோட்டு ஆடத் தொடங்கினார்கள். மணல்வெளி ஒரு பெரிய அரங்கமாக மாறியது.
(தினக்குரல் 27-121998)
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 4s

Page 24
Uub (3660õimb
அது மெதுவாகத்தான் நகர்ந்தே வந்தது. அது வந்த பாதை காட்டுப்பாதை. மனிதர்கள் உள்ள கிராமம் வர இன்னமும் தூரம் இருந்தது. தான் துணிந்து வருவதாகக் காட்டிக் கொண்டாலும், அது தயங்கித் தயங்கித் தான் வந்தது. அதற்கு அதன் கால்களில் போட்டிருந்த இரும்புத் தகடுகள் தான் காரணமா? அது முறைத்து முறைத்து பாதையின் இரு பக்கக் காடுகளைப் பார்த்தது. மரங்களின் உச்சிகளை எட்டி உதைத்
திது.
மணல்வெளி அரங்கு
 

அதனைத் தெருப் புழுதி முதலிற் கண்டது. கண்டதும் வாலைச் சுருட்டிக் கொண்டு காட்டு மரங்களின் உயரத்தைத் தாண்டித் துள்ளியது. பிறகு அதனை விட்டுப் பிரிய மனமில்லாதது போல சோர்ந்து துவண்டு அதன் பின்னாலேயே அரைந்தது.
காட்டு மரக் கிளைகளில் இருந்த குருவிகள் அச்சங் கொண்டு ஒடுங்கியபடி எழுவானில் தெரிந்த சூரியனைச் சபித்தன.
"ஏய் சூரியனே! உலகத்துக்குப் பொதுவாக இருந்து என்ன பயன்?"
"இதுகளை ஏன் அரைய விடுகின்றாய்?" என்று சொல்ல நினைத்து மெளனம் சாதித்தன.
குரங்குகள் வசதியான மரக் கொப்புகளில் மறைந்தபடி வேவு பார்த்தன. ஐயையோ ஆபத்து!" என்றது ஒரு குரங்கு
"என்ன! "
"காடு தொலைந்தது"
"அப்ப மனிதர்கள் இரட்சிக்க வரேல்ல"
குரங்குகள் குசுகுசுத்தன குட்டிகளை "அலேட்டாக்கின"
காட்டுப் பூக்கள் பொலிந்து நின்ற செடிகள் யெளவனம் துறந்தன. பூக்கள் நிறம் வெளிறி உருமாறிக் கொண்டன. யெளவனம் துறக்கத் தவறிய செடிகளை ஏனைய செடிகள் (3äb DTä5 Tiiggõ60.
"எல்லோருக்கும் முடிவு ஒன்றுதானே! பிறகேன் யெளவனத்தைத் துறப்பான்?"
"அது உண்மை தான் ஆனால் எலும்புக் கூடாவதுமானமுள்ளதாக மிஞ்சுமே!"
காடு தளர்ந்து வெட்டை ஒன்று வந்தது. வெட்டை துளிர்த்து, வயல் வெளியாகப் பரவியது. ஆழமும் மனவிரிவும் கொண்ட பெருங் கவிஞனின் கவிவரிகள் போல நெற்கதிர்கள் துள்ளி விளையாடின.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 45

Page 25
வயலைப் பார்த்து அதுநின்றது. மனிதர்கள் வசிக்கும் கிராமம் வரப் போகிறது என்ற ஆனந்தமா? அறுவடைக்கு முன் வந்து விட்டோம் என்ற பெருமிதமா? புரியவில்லை.
தண்ணிர், கசிந்து கொண்டிருந்த டச்சுக் காலத்து மதவடியில் நின்று நிதானித்தது. கூடவே வந்த புழுதி ஒரே ஒட்டமாக ஓடிவிட்டது.
தண்ணிரில் சுதந்திரமாக ஒற்றைக் காலில் நின்ற கொக்குகள். தங்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்க்கால்களின் ஒரம் மருவிக் கொண்டன. தண்ணிர் குடிக்கப் போகிறதா?முகம் கழுவப் போகிறதா? என மருளும் கண்களால் அவை பார்த்தன.
ஒன்றும் நடக்கவில்லை. அது மெதுவாக அந்தப் பாதையைத் தின்று பார்த்தது. பாதையின் இடது பக்கத்தை பின் வலது பக்கத்தை - பிறகு நடுப்பக்கத்தை சப்பிக் கொண்டது. ருசி பிடிபடவில்லையோ அதன், கொழுப்பேறிய நாவுக்கு பதமாக வரவில்லையோ அது பாதையைத் தின்பதை நிறுத்திக் கொண்டு நகரத் தொடங்கியது.
மதவினைத் தாண்ட மதவு பொரித்த அப்பளமாக நொருங்கிப் போனது கொக்குகள் அதனை வியப்போடு பார்த்தன.
"வானம்பாடி நிற்கிறதா பார்! "ஒரு கொக்கு கேட்டது" மற்றது தண்ணிரைப் பார்த்தது.
"அட மடச் சகோதரமே! வானத்தைப் பார்! வானலைகளைப் பார்! மற்றது கழுத்தை மடக்கி முறித்துப் பார்த்தது.
"காற்று உதைத்து வீசிமதவினை உடைத்துவிட்டது என்று அவை வானலை ஊடாகச் சொல்லப் போகின்றன” நமட்டுச் சிரிப்போடு முதல் கொக்கு சொன்னது.
வயல் வெளிகளில் ஆங்காங்கே சில மூளையுள்ள மனிதர்கள் தெரிந்தார்கள். வயலைப் பார்த்தும் பெருமை பட்டுக் கொண்டு எப்போது கதிர்களை அறுவடை செய்ய வேண்டும் என்பது
46 மணல்வெளி அரங்கு

தொடர்பாகவும் அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தனரே தவிர பதை ஊடாக அது நகர்வதை அவர்கள் காணவில்லை. வானில்நகர்ந்த சிறிய முகிற் கூட்டம் ஒன்று தயங்கியபடி பாதையில் அது நகர்வதை மனிதர்களுக்குச் சொன்னது தான் என்றாலும் அதனை மனிதர்கள் கவனிக்கவில்லை. புழுதி வேகமாகச் சுழன்றது. காட்டில் இருந்தவை என்ன மாதிரிப் புரிந்து கொண்டன. சா! என்ன மனிதர்கள் இவர்கள்? என்று சலித்தது புழுதி. மனிதர்களைக் கண்ட அது மீண்டும் நகர்வை நிறுத்தி, மனிதர்களைப் பார்த்து பதுங்கியது. மனிதர்கள் கையில் மண்வெட்டி, கத்தி எதுவுமே இல்லை. சாப்பிட மட்டும் பாவிக்கும் கைகள் மாத்திரம் உள்ளன என்று சொல்ல அங்கு யாரும் இல்லை. அது கைகளைத் தட்டியது. பிறகு கைகளை அசைத்து, "போங்க, போங்க" என்றது கரகரத்த சத்தம் காற்றில் கலந்தது. காற்று அதனைப் பக்குவமாகக் காவிக் கொண்டு மனிதர்களிடம் சென்றது. நலுங்காமல் குலுங்காமல் கொண்டு சென்றால் அது ஏதாவது
நன்மை செய்யும் என்று! மனிதர்கள் அப்போதுதான் பாதையைப் பார்த்தார்கள். பாதையை மறைத்துக் கொண்டு அது உழைவு எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
"ஜயய்யோ" என்றான் ஒருவன். "மோசம் போய்விட்டோம்!, மற்றவன்.
"போங்க, போங்க எண்டுதானே சொல்லுது போவம்"
" அப்பிடி இல்லை. போங்க போங்க எண்டால், வாங்க வாங்க கண்டுதான் கருத்து! வா போவம்"
இறுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 47

Page 26
"எனக்குப் பயமாயிருக்கு"
"எனக்குந்தான்"
"இப்படியே போறதா?
"வேறை"
"பொறு" என்றான் ஒருவன்.
வேட்டி மடிப்புக்குள் இருந்து ஒன்றினை எடுத்தான். அது முகமூடி கறுப்பும், வெள்ளையும் கலந்து நரை நிறங் கொண்ட அதனை எடுத்துப் போட்டான்.
அடடா அற்புதமான மூளை" என மற்றவர்கள் சந்தோசப்பட்டார்கள்.
"எங்கள் மடிப்புக்குள் இருப்பது எங்களுக்கு ஞாபகம் வரவில்லை என்றபடி எல்லோரும் தங்கள் தங்கள் முகமூடிகளைப் போட்டுக் கொண்டார்கள்.
"அப்பாடா” என்றபடி வயல் வரம்புகளின் வழியே நடக்கத் தொடங்கிப் பாதையை அண்மித்தார்கள்.
"நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகாதே. சற்று வளைந்து போ!" என்றான் பின்னால் வந்தவன்.
"அவசரப்படாதே அதை அதுவே செய்யும்" நடுவில் போனவன்
சொன்னான்.
வயல் வரம்பால் பாதையில் ஏறி முகமூடிகளை சரி செய்ய முனைந்தார்கள். ஆனால் அது அதற்கிடையில் அவர்களின் முகங்களோடு இயல்பாகி விட்டது.
அட பாரன். ஒரு மாலை இல்லை!"
"ஒமடாப்பா"
"ஒரு வெள்ளைப்புறாவைப் பறக்க விட்டிருக்கலாம்.
இந்த உரையாடல்களை அது கேட்டதாகத் தெரியவில்லை.
48 மணல்வெளி அரங்கு

அதற்கு முன்னே கணிசமான தூரத்திற்கு அப்பால் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள்.
"உங்கள காப்பாற்ற நாம வந்திற்றம். இப்ப சந்தோசந்தானே? அது கேட்டது.
மனிதர்கள் இடப்பக்கமாகவும், வலப்பக்கமாகவும் தலைகளைப் படபடவென ஆட்டினார்கள்.
"உங்கட ஆக்கள் எல்லாரிலையும் நாம சந்தோசம். எல்லாரும் போளினில பள்ளிக்கூட கிறவுண்சுக்குப் போகணும் சரியா! அங்க போறது. போனா நாங்க சாப்பிட புல்லுத்த்ாறது. தண்ணி தாறது. படுக்க சாக்கு தாறது, இனிக்குறை இருக்காது. போங்க போங்க போளின்ல போங்க"
அவர்களின் முகமூடி முகங்கள் சிரித்தன. கைகூப்பி விடை பெற்று முன்னே நடக்கத் தொடங்க, அதுவும் பின்னால் நகரத் தொடங்கியது.
நெடு நெடு மரங்கள் எதையோ பறிகொடுத்தவை போல சரிந்து நிழல் தராமல் இருந்தன. மரங்களின் கீழே இருக்கப் பயந்த மனிதர்கள் அப்பால் விரிந்த மனமாய்ப் பரந்திருந்த விளையாட்டு மைதானத்தில் சூரியனின் உச்சிக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
வடக்குப் புறத்தே இருந்த பாடசாலைக் கட்டிடங்களின் மெழுகுசீலைக் கூரைகள் காற்றில் முட்டி மோதிக் கொண்டிருந்தன.
"வந்திட்டுது வந்திட்டுது. இனி நிரந்தரக்கூரை போடும். ஆனால் படிக்க பிள்ளைகள் தான் இருக்க மாட்டார்கள். இருப்பவர்களையும் படிக்க விட மாட்டுது'
மேற்குப் புறத்தே இருந்த கோயிலின் முன்னே தனித்து அமர்ந்
திருந்த அது அமீபாக்கள் போல பிரிந்து பிரிந்து பிரிந்து அந்தப் பெருவெளியெங்கும் விரியத் தொடங்கியது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 49

Page 27
மனிதர்கள் மாத்திரம் எங்கெல்லாமோ இருந்து வந்து சொல்லி வைத்த மாதிரி மைதானத்தின் நடுவே படியத் தொடங்கினர். அழுது பழக்கமில்லாத சின்னப் பிள்ளைகள் கூட சிரிக்க மறந்து விழிகளால் பேந்திக் கொண்டிருந்தன.
மனிதர்கள் சேரச் சேர விளையாட்டு மைதானத்திற்கு மாத்திரம் பயம் வலுக்கத் தொடங்கியது. என் கொள்ளளவு இவர்களைத் தாங்குமா? இடம் காணா விட்டால் என்னை ஆழமாக அல்லவா வெட்டும்.
மைதானம் கவலைப் பட்டுக் கொண்டிருக்க, மைதானத்தின் ஒரு புறத்தே கிடாரங்களில் கஞ்சி தயாராகிக் கொண்டிருந்தது. அதை மனிதர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அந்தக் கோப்பைகளை இவ்வளவு நுட்பமாக, சின்னதாக செய்திருக்கின்றார்களே என்று தான் நடுக்கத்தினிடையேயும் மனிதர்கள் கதைத்தார்கள்.
(ஈழநாடு மாதமலர், ஏப்ரல் 1999)
5 மணல்வெளி அரங்கு

`ಟ್ಟಿ
ན
அட இவ்வளவுதானா?
"பெயர். "
"பொன்னுப்பிள்ளை"
"மிஸ்டரின்ரை பெயர்"
"உங்கடை அவரின்ரை பெயர்’
"அவர் இல்லை . இல்லாத ஆளை இப்ப என்னத்திற்கு என்ற பொன்னுப்பிள்ளை சனங்களைப் பார்க்கத் தொடங்கினாள். அவரின்ரை முகத்தினைத் தேடினாளா?
அதிகாரியின் முகத்தில் அத்து மீறாத அதிகாரம் வெளிப்பட்டது. "எங்கை அவர்” சுத்தமான தமிழ் உச்சரிப்பு
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 28
காரம் சேர்ந்திருந்தது. "அவர் செத்துப் போனார்' எந்தவிதமான ஈரமும் இல்லாமல் பட்டென்று பதில் சொன்னாள் பொன்னுப்பிள்ளை.
"அவரின்ரை பேரைச் சொன்னால் காணும்"
g5b60D Ju JIT”
"விலாசம்”
"ஆரின்ரை"
"உங்கடைதான்"
பூவோடை சுடலையடி எச்சாட்டி. " சொல்லிக் கொண்டே போனாள்.
அதிகாரி தலை விறைத்துப் பொன்னுப்பிள்ளையைப் பார்த்தான்.
"வயது"
'அறுபத்தியொன்று"
அடையாள அட்டை இலக்கம்"
"எந்த அடையாள அட்டை”
"தேசிய அடையாள அட்டை”
பொன்னுப்பிள்ளை கையில் இருந்த அட்டைகளை மேசையில் பரப்பினாள். சந்தைக் கடையாக அது விரிந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் - சிரித்து, நெளித்து, கண்சிமிட்டி, பல்லைக்காட்டி
அதில் ஒன்றை இழுத்தெடுத்த அதிகாரி அதைப் பார்த்து பதிய ஆரம்பித்தான்.
"383546300 V - இலங்கைத் தமிழ்”
பதிவு முடிய எல்லா அடையாள அட்டைகளையும் விநோதமான ரசனையுடன் பார்த்த அதிகாரி "காணாமல் போனது ஆர்" என்ற கேள்வியைத் தொடுத்தான்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::
5. மணல்வெளி அரங்கு

அந்த மண்டபம் முழுக்க ஆட்கள் அழுத கண்களும், சிந்திய மூக்குக்களுமாக ஆண்களும் பெண்களும் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் புலம் பல்கள் அடுக் கடுக்காக வட்டம் போட்டு மேற்கிளம்பின. பிறகு ஒன்றின் மீது ஒன்றாகப் படியத் தொடங்கி இருக்க வேண்டும்.
அந்த அகன்ற மண்டபத்தின் கூரைகளைத் தாண்டி அப்பால் போகாமல் உள்ளுக்குள்ளேயே தம் சோகங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
ஆட்களின் நெருக்கமும் அவர்களின் அவலங்களும் சேர்ந்து மண்டப வெளியின் காற்றினை மூச்சடைக்கப் பண்ணின. உஷ்ண சுவாசமும் வேதனையில் முக்குளித்த துயரங்களும் தத்தளித்தன.
ஆட்கள் வரிசையாக நிற்பது போலவும், வரிசை இல்லாமல் நிற்பது போலவும் பாத்திரத்தினுள் ஒடும் பாதரசமாக நின்றிருந்தனர்.
பளிர் என்ற விசாலமான மேசைளின் முன் அதிகாரிகள் தண்டனைக் கைதிகள் போல கதிரைகளில் அழுந்த உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் இருந்த கதிரைகளில் அந்தக் கதிரைகளுக்குப் பொருத்தமில்லாத ஆட்கள்.
அதிகாரிகளிற் சிலர் வானில் பூசினாற் போல மினுமினுப்பாக இருந்தார்கள். எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் மட்டமாய் வெட்டப்பட்ட தலைமயிர், ஒருவர் மாத்திரம் கொஞ்சம் சுருட்டை, பால் நுரையில் வார்க்கப்பட்டது போல இரண்டு பேர் வெள்ளை முழுக்கை சேட்டுக்கள். வேறு இரண்டு பேர் அடக்கி ஒடுக்கப்பட்ட நீல, மஞ்சள், நிறச் சேட்டுக்கள். பாம்புத் தோல் போல வழுவழுத்த ரைகள்.
அதிகாரிகளின் உடைகளில் இருந்த "சிவில்"தனம் பார்வையிலும் தோற்றத்திலும் இல்லை. புறம்போக்காக இருந்த ஒருவரின் முகம் குளத்தில் முக்கி எழுந்தவர் போல சோர்ந்து போய் இருந்தது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 53

Page 29
மூப்பை ஓரங்கட்ட படு பிரயத்தனம் எடுத்து ஆனால் ஆட்களின் அமளிபோல அது கட்டுப்படாது இருந்தது.
நரையோடிய தலைமுடி கழுத்து வரை வளைந்திருந்தது. தாடையில் சதை மடிப்பு முகத்தினை உப்பலாக்கியது. பவுண் நிற பிறேம் போட்ட கண்ணாடியை எடுத்துமுகத்தை துடைத்த போது அவரின் சலிப்பு தலை நீட்டியது. எல்லா அதிகாரிகளும் களைத்திருந்தார்கள், கதைத்துக் கதைத்துக் களைத்ததா என்பது புரியவில்லை. ஆட்களின் அமளியை விட அவர்களின் அவலங்களின் அடுக்குகளின் பாரங்களால் அதிகாரிகள் மூச்சுத் திணறினார்கள்.
அந்த அந்தரிப்பினைப் போக்க அவர்கள் விட்ட சிகரெட் புகை கூட போக வழியில்லாது மேசைகளின் முன்னாலேயே உயிர்பிளந்து துடித்தது.
வெள்ளை வேட்டி, நாசினல், தோளில் தொங்கிய சால்வை சகிதம் தன் முகக் கொள்ளளவைவிட அதிகமாகச் சிரித்து வந்த பிரமுகர் ஒருவர் முகம் துடைத்துக் கொண்டிருந்த அதிகாரி முன்னால் வந்து நின்றார்.
அதிகாரி சற்றே தலை நிமிர்த்த அவனின் பார்வையின் கூரிய முனை பிரமுகரின் நெற்றிப் பொட்டில் தைத்தது. நான் கனகசபை. சங்கத்தின் செயலாளர் "
ee
ஒ.ஐ.சீ. நீங்களா? இருங்கோ"
அதிகாரியின் கூரிய பார்வையில் சுவிட்ச் போட்டது போல ஏசியாகிற்று. முதல் இருந்த வெம்மை மேசையில் இருந்த 'அவுட் றேக்குள் ஒளிந்தது.
"சொல்லுங்கோ - என்ன விசியம்
நான் ஒரு அலுவல் அல்ல நாலைஞ்சு அலுவலாக கண்டு மீண்டது என்றாலும் அதனை வெளிக்காட்டவில்லை.
"சொல்லுங்கோ"
326 03
54 மணல்வெளி அரங்கு

நீங்கள் நல்லாய் களைச்சுப் போனிங்கள் போல” என்று கேட்ட கனகசபையின் பார்வை குழையடிக்க ஆரம்பித்தது.
"சரியான கிறவுட் சனங்களுக்கு உதவி செய்யத்தானே நாங்கள் வந்திருக்கிறம். ஆனால் அதை சனம் ஏற்றுக் கொள்ளுறதாய் இல்லை. பெரிய கரைச்சல்’ சுழித்த முகத்தின் இரு பக்கங்கள் ஊடாகவும் வெறுப்பு வடிந்தது. அது உண்மைதான். சனம் எல்லாத்துக்கும் அவசரம் தான்.
பருத்துச் சிவந்த முகத்தில் வியர்வைத்துளிகள் மணற்பரப்பில் துருத்திக் கொண்டு நிற்கும் மேடுகள் போல கையில் இருந்த தடித்த கோவைகளை மேசை மேல் பரத்தினார் கனகசபை,
குழியில் அடக்க மறுத்த சடலத்தின் கை கால்கள் போல கோவைகள் ஊடாக தாள்கள் மிதத்திக் கொண்டிருந்தன.
நீங்களும் யாராவது காணாமல் போன ஆட்கள் தொடர்பாக டிஸ்கஸ் பண்ண வந்தனிங்களோ" முகத்தில் கண்ணாடியைப் பொருத்தி எதையோ பார்வையிட வெளிப்பட்டவர் போல அதிகாரி காணப்ப்ட்டான்.
இல்லையில்லை அப்பிடி ஒரு பிரச்சினை இல்லை. அதுகளை அந்தந்த ஆட்களே பார்க்கிறது நல்லது என்று விட்டிட்டம். அதுக்கெல்லாம் தனித்தனி அமைப்புக்கள் இருக்குந்தானே" ஒ. ஐ. சி. தோள்களை உதறிய அதிகாரி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான். தாங்கள் கதைப்பதையே சனங்கள் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கவும் கண்டான்.
பொன்னுப்பிள்ளையும் ஒரமாகவே நின்று கொண்டிருந்தாள். அவள் மனக் கூண்டுக்குள் அந்த நினைப்பு மாத்திரம் சிறகடித்துக் கொண்டிருந்தது. அது அவளின் உயிரோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அவளின் இரத்தத்தின் இரத்தமாய் வளர்ந்து உருவெடுத்தது. நெஞ்சு நிமிர்த்தியதின் நினைப்பு.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்தி தொண்ணுற்றி ஆறில் காணாமற் போய் வெறுமனே அந்த நினைப்பும் தவிப்பும் தான்.நெந்தக்தி
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் ட - 8

Page 30
னுள் குடி கொண்டு விட்டது. அவளுக்கு மாத்திரமல்ல அவளைப் போல எத்தனையோ பேர் பாரக் கூண்டுகளை நெஞ்சிற் சுமந்தபடி தம் உணர்வுகளை மனசுக்குள்ளேயே வைத்து புடம் போட்டுக் கொண்டு கனகசபை சுற்றி சுற்றிப் பார்த்தார். சுற்றிலும் ஆட்கள் தான். பழுத்துப் போன முகங்கள் புதிதுபுதிதாக விரிந்து கொண்டு போகும் எதிர்பார்ப்புக்களும் விழியோரங்களின் ஈரப்பசைத் தவிப்புக்களுடன்.
"என்ன மிஸ்டர் கனகசபை"
அதிகாரி சோர்வினைத் தவிர்த்துக் கொண்டு கனகசபையை வார்த்தைகளால் தீண்டினான்.
இல்லை" மென்று விழுங்கினார் கனகசபை.
"என்ன”
நான் கதைக்க வந்தது தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை" "அப்ப"
"பொதுப்பிரச்சினை, ஆட்கள் எல்லோருக்குமானது"
"ஓ - போக்குவரத்து பிரச்சினையா?அது சரியான பிரச்சினைதான். நாங்களும் வலுவாய்த் தெண்டிக்கிறம். எப்பிடியும் கப்பல் போக்குவரத்து செய்து போடலாம் கிழமைக்கு இரண்டு தடவையாவது ." என்று நீண்ட அதிகாரியின் உரையினை கனகசபை வெட்டி இடைமறித்தார்.
"அது தெரியும் தானே. நான் கதைக்க வந்தது அதுவல்ல" கண்களைக் குறுக்கிக் கொண்ட அதிகாரி.
"அப்ப"
கனகசபை சுற்றிலும் பார்வையால் ஒரு வட்டம் போட்டார்.
"மீளக் குடியேற்றப் பிரச்சினை தானே. அதுக்கு இப்ப ஒண்டும் செய்யேலாது என்று தான் எங்களுக்கு மேல இருக்கிற ஆட்கள் சொல்லினம். ஏனென்டால் அதெல்லாம் பாதுகாப்போடை சம்பந்தப்
5. V மணல்வெளி அரங்கு

பட்டது. கிட்டத்தட்ட நாற்பது ஜி. எஸ். டிவிசனில் உங்கட பக்கத்தில் மாத்திரம் ஆட்களை குடியேற்றாமல் இருக்குது"
கனகசபை மீண்டும் குறுக்கே ஓடினார். "உதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சினை எண்டு தெரியும் தானே"
அதிகாரி முகத்தில் மெல்லென சிரிப்பு கிளம்பியது. அத்துடன் இந்த மனிசன் என்ன கேட்கப் போகின்றார் என்ற முன்னுரகிக்க முடியாத ஒரு அந்தரமும் ஏற்பட்டது.
"ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பிரச்சினைகளா? மருந்துகளை தாராளமாய் அனுப்ப நாங்களும் எங்கட உயர் அதிகாரிகள் எல்லாரும் முயற்சி எடுக்கிறம் தான். எண்டாலும் பாதுகாப்பு அனுமதி அது இது எண்டு இழுபட்ட சரியான ரைமுக்கு அனுப்ப முடியாமல் போகுது"
கனகசபை சிரத்தை இல்லாமல் இந்தப் பதிலை கேட்கும் போதே அதிகாரிக்கு விளங்கி இருக்க வேண்டும். தன் பேச்சை இடைநிறுத்திக் கொண்டு.
"மிஸ்டர் கனகசபை கெதியாய் சொல்லுங்கோ - நான் கொஞ்ச நேரம் றெஸ்ட் எடுக்க வேணும்" என்றான் சலிப்புத் தடவிய குரலுடன்.
மீசை முறுக்கி முகம் பெருத்த நடுத்தர வயதுக்காரன் ஒருவன் ரீ கப்புக்களை மேசைகள் மீது லாவகமாக வைத்தபடி சென்றான்.
அதிகாரியின் கண் அசைவின் படி கனகசபைக்கும் ஒரு கப் கிடைத்தது. ஆட்கள் தரையில் வேர் விடத் தொடங்கிய கால்களை அசைக்க முடியாமல் பொறுமை காத்தனர்.
4. (d () -8X- 0x8 -X «م%ه
KO
Х»
"என்ரை உயிரைத்தான் காணேல்லை" பொன்னுப்பிள்ளை சொன்னாள். அதிகாரியின் மேசை மீது அவள் உயிரின் முகம் ஒளிப்
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 57.

Page 31
பிழம்பாக தகித்தது. அதன் ஒளியில் அவள் விழிகள் துடித்தன. அவள் விழிகளை மூடிக் கொண்டாள்.
அவள் பதிலால் அதிகாரி பிசாசைக் கண்டவன் போலான்ான். தன் கீழ் கை கட்டி சேவகம் புரியும் ஒருவன் நெஞ்சு நிமிர்த்தி கேள்வி கேட்டால் எப்படி இருக்குமோ அப்பிடி அந்தரித்து கதிரையின் நுனிக்கு வந்தான்.
"ஏய் கிழவி - யாரைக் காணேல்லை"
"என்ரை உயிரைத்தான் காணேல்லை" பொன்னுப்பிள்ளை எந்தவித வன்முறையாலும் வெளிப்படாத வாக்கு மூலமாக வெளிப்படுத்தினாள். . . .
சிறுபொழுது மெளனம் காத்த அதிகாரி தலை நிமிர்ந்தபோது அவன் முகம் வன்மத்தோடு உறுமத் தலைப்பட்டது. வாயின் கோடிகளில் வேட்டைப்பற்கள் வேட்கையுடன் வெளிக்கிளம்பின.
ஒரே பார்வையில் பொன்னுப்பிள்ளையை உதைத்தான். அந்த உதையால் அவள் வான் மண்டலத்திற்கு போயிருக்க வேண்டும். நல்ல வேளை மண்டபக் கூரை மூன்றாம் தரப்பாக வந்து விட்டது. தலையை தடவிக் கொண்ட அவளுக்கு அதிகாரியின் கோபம் புரிந்தது.
ஆனால் அதனை அவள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. கோபப்படாத அதிகாரிகளை அவள் வாழ்க்கையில் எப்போது தான் பார்த்திருக்கிறாள்.
அதிகாரி கசக்கிக்குப்பைக் கூடைக்குள் போடும் கழிவுத் தாளாக அவளைக் கழித்தான். எங்கேயோ போக வேண்டியது திசை மாறி வந்து விட்டது என அர்த்தம் செய்து கொண்டு "அடுத்த ஆள்" என்றபடி சிகரெட் ஒன்றினை வாயினால் கௌவி நெருப்பு (PLL ஒலைக் குடிசைக்கு வைக்கப்பட்ட தீயாக பற்றிக் கொண்டு அது பின் அணைந்தது.
பொன்னுப்பிள்ளை அசைவில்லாமல் உறைந்து போய் நின்றாள். நேரம் நீண்டு கழிந்தது. "அடுத்த ஆள்" மீண்டும் அதிகாரி.
5. மணல்வெளி அரங்கு

பொன்னுப்பிள்ளை அதிகாரியை திரத்துடன் பார்த்தாள். என்னை ஒதுக்கி விட்டு அடுத்தவரை அழைப்பதன் காரணம் என்ன? என்ற தொனி அதில் இருந்தது.
"கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஆட்கள் எல்லாம் ஏன் இங்கு வருகின்றீர்கள்? உறுமினான் அதிகாரி.
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியாச்சு"
"என்ன”
"என்ரை உயிரைக் காணேல்ல்ை"
"அடுத்த ஆளை விடு"
கூட நின்றவர்கள் பொன்னுப்பிள்ளை பின்னால் நெருங்கி நின்றார். கள். அவர்கள் கருத்தொருமித்த செயற்பாடு அதில் புரிந்தது.
தீர்க்கமான முடிவுடன் பொன்னுப்பிள்ளை அதிகாரியைப் பார்த்தாள் பிறகு.
"என்ன முடிவு சொல்லுறியள்?
அதிகாரி முன்னால் மீண்டும் புயல் அடித்தது. அவள் சீறிக் கொண்டு எழும்பினாள். கழுத்து நெரிபடுகையில் எழும் அடிக்குரலாக கதிரை தரையில் தேய்த்து சத்தம் போட்டது.
பொன்னுப்பிள்ளை சிரித்தாள். வரண்ட சிரிப்பு. அதில் கேலிகள் பாளம் பாளமாய் வெடித்து பிரிந்தன.
அதிகாரிக்கு யாரோ கால்களை வாரிவிட்டது போல இருந்தது. பொன்னுப்பிள்ளை சிரித்த சிரிப்பு தன் முன்னால் விஸ்வரூபம் எடுத்து தன்னையே விழுங்கிவிடுவதுபோன்ற உணர்வுஏற்பட்டது.
அந்த இடத்தினை விட்டு அக்கணமே மறைந்து விட வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளியது. ஒடுதளத்தில் ஒடிக் கிளம்பத் தேவையில்லாத ஹெலிகொப்டர் ஒன்று வந்தால் நல்லது போலவும் பட்டது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன். 外

Page 32
அவனது மேசையைச் சுற்றி ஆட்கள் சந்தை மீன் வியாபாரியைச் சுற்றி நிற்பவர்களைப் போல அவளையே பார்த்துக் கொண்டு.
விரைவாக நகர முடியவில்லை. பரிதாபமாக, அல்லாட முனைந்த அதிகாரிக்கு உதவ வந்தவர் கனகசபை, ஆட்களை விலத்தி அதிகாரியை வெளியேற்றுவதற்கு இடையில் அவர் களைத்து விட்டார்.
(ஈழநாதம், 31-07-1999)
6 மணல்வெளி அரங்கு

6cu • Jewon
காணாமல் போனவன்
கனதியான இருள் வீட்டு லைற் மாத்திரமல்ல. தெருவிளக்குகளும் பரலோகம் போயிருந்தன.
மரக் கட்டிலில் மல்லாக்கக் கிடந்த பொன்னுத்துரைக் கிழவருக்கு மின்சாரம் நின்று போன சங்கதி தெரியவரத் தாமதமாயிற்று.
எப்படிப் புரண்டு படுத்தாலும், துரத்திக் கொண்டிருக்கும் எலும்புகள் மரப்பலகையுடன் முரண்பட்டுக் கொண்டிருந்தன.
கண்பார்வையும் அப்படி இப்படியாகி விட்டது. விடாமல் துளைத்தால்தான் எதிரே நிற்பவர் தூக்கலாகத் தெரிவார்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் s

Page 33
சில எடுகோள்களின் அடிப்படையில் தான் யார் எதிரே நிற்பது என்பதை இறுதியாக முடிவு செய்ய முடியும்.
அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாதது ஆழமான சோகம் தான். தனிய இருப்பது ஒன்றும் புதினமில்லை. லைற் இல்லாத இரவுகளில் இருள் மேல் இருளாகக் கழிந்த எத்தனையோ இரவுகள் இப்படி கழிந்திருக்கின்றன.
இப்போது அப்படியல்ல. நிலைமை மோசம். அவரது நாளாந்த மன வருத்தங்களுடன் கூடவே புதியதொரு சோகம் அவரைப் போலவே வீட்டில் உள்ளோரை கஞ்சி வடித்துக் கொண்டிருந்தது.
முன் போல உஷாரான ஆளாக இருந்திருந்தால் அவர் எத்தனை இடங்களுக்கு ஒடித்திரிந்திருப்பார்? இப்போது ஊன்று கோலை விட்டால் வேறு நம்பிக்கையான ஆட்கள் யாரும் இல்லை.
வாசல் கேற் இறுகச் சாத்தியிருக்கும். மகனும் மருமகளும் போகும் போது வீட்டையும் பூட்டிக் கொண்டு போயிருப்பார்கள் என்று கிழவர் யோசிக்கும் போதே வாசல் கேற் திறக்கப்படுவது போல சத்தம்.
மகனும் மருமகளுந் தானா என்று நினைத்து காதுகளை கூர்மையாக்கினார். ஆனால் அவர்கள் வருவதாயின் அவர்களின் ஸ்கூட்டர் சத்தம் கேட்குமே? அப்படியானால்..? கிழவர் சற்றுக் குழம்பினார். ஊரைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்துபவர்களா? அவர்கள் என்றால் இப்படி ஒரு அமைதி இருக்காதே? அமைதி எங்கேயோ ஒடியிருக்குமே? யார் என்று குழம்பும் போதே மீண்டும் கேற் திறக்குமாப் போன்ற சத்தம்.
ஆர் அது?" உரக்கக் குரல் கொடுத்தும் பதில் குரல் கிடக்கவில்லை. கேற்றடியில் யாரோ நடமாடுவது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது. தட்டுத் தடுமாறி ஊன்று கோலை எடுத்துக் கொண்டார். இருளில் பாதை பிடிப்பது கஷ்டம் தான். என்றாலும் முயற்சித்தார். தயங்கித்
A2 மணல்வெளி அரங்கு

தயங்கி அடிமேல் அடி வைத்து கேற்றடியை நோக்கி நடந்தார் நயைா அது? ஊர்வு!
முன் போட்டிக்கோவில் ஏறி சீமேந்துக் குளிரில் கால் சிலிர்த்தது. கேற்றை அண்மித்தார். மூடு திரையிட்டுத் தெரிவது போல கேற் தெரிந்தது. அதனைத் தொட்டார். என்ன ஆச்சரியம்! அது இறுக்கமாக வழக்கம் போல பூட்டப்பட்டுக் கிடந்தது. என் மாயம்? கேற் திறந்த சத்தம் கேட்டதே? தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். மருமகள் சொல்லுவது போல் தனக்கு மண்டை பிசகி விட்டதா? மனது சுழன்று விட்டதா? தடவித் தடவிக் கேற்றைப் பார்த்தார். எந்த விதமான ஐயுறவும் இல்லாமல் அது பூட்டுத்தான்.
முற்றிலுமாக நிலை குலைந்த கிழவர் வீட்டின் பக்கம் திரும்பினார். சர்வ வியாபகமாக எங்கும் இருள். இருளைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. தெருவில் வெளிச்சக் கதிர்களை வீசியடித்த படி இரண்டு கனரக வாகனங்கள் போயின. பகலிலே பதுங்கிப் பதுங்கித் திரியும் சனங்களின் நடமாட்டம் இப்போது அறவே அடங்கிப் போய் இருந்தது. அடையாள அட்டைகளை நீட்டியபடி பொழுது படவும் திரியத் துணிந்த மனிதர்களைக் காணவில்லை.
முடிவில் போட்டிக்கோவின் முன்புறத்தில் பூந்தொட்டி வைக்கும் சீமேந்துக் குந்தில் கொஞ்ச நேரம் இருக்க அவர் நினைத்த போதுதான் அந்தக் குந்துக்கு அப்பால் யாரோ நிற்பது போல பிரமை,
கிழவர் மீண்டும் கடகடத்தார். தொண்டைக் குழிக்குள் என்னவோ ஒன்று திரள்வது போல விடாமல் பார்க்க பார்க்க அசைவில்லாத ஒரு உருவமாக கலங்கலாகத் தெரிந்தது. வழக்கமாக வந்து வளவைக் கிளறிப் பரிசோதனை செய்யும் கூட்டமா?
"தாத்தா ஐ. சீ இருக்கா? எடு எடு" என்று தானே கேட்பார்கள்.
கேட்பது என்னவோ ஒரு ஐ. சீ தான். ஆனால் காட்ட வேண்டியது மூன்று நான்கு ஐ.சீ. கள். உலகத்தில் இல்லாத புதினமாக ஒருவருக்கு மூன்று நான்கு அடையாள அட்டைகள் உள்ள நாடு வேறு எங்காவது உண்டா என்று கிழவர் நினைத்ததுண்டு.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 63

Page 34
இப்போது மடியைத் தொட்டுப் பார்த்தார். பொலித்தீன் பைக்குள் சகல அடையாள அட்டைகளும் இடுப்பிலிருந்தன. இந்தப் பொலித்தீன் பையை அவிழ்த்தால் திரும்பிச் சுற்றிக் கட்ட அரைமணித்தியாலமாவது வேணுமே என்பது தான் உடனடியாகக் கிழவருக்கு எழுந்த கவலை.
ஆனால் அவர்களாக இருந்தால் இவ்வளவு நேரம் காக்க மாட்டார்களே? கிட்டப் போய்ப்பார்க்க மனமும் உடலும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
"ஆர் அது?" என உரத்த குரல் எடுத்துத்தான் கேட்க முனைந்தாலும், அது கழுதைச் சத்தமாகவே வெளிப்பட்டது. தன் குரல் மீதே அவருக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டது. மீண்டும் அடித் தொண்டையால் "ஆர் அது? என்ன வேணும்?" என்றார். முன்பை விடக் குரலில் இறுக்கமான தொனி தோன்றியிருந்தது.
பதில் கிடைக்கவில்லை.
"ஆர் அது? என்ன வேணும்?" அது பதில் பேசாமலே நின்றது.
ஆனால் அதில் ஒருவகை அசைவு ஏற்பட்டது. தெருவில் ஒரு மாட்டு வண்டில் போனது. மாட்டின் கழுத்துச் சலங்கை சீராக சப்திக்க, வண்டியின் அடி வயிற்றில் இருந்த அரிக்கன் லாம்பு ஒளி விரித்து ஆடிக் கொண்டிருந்தது.
வண்டில் வாசல் கேற்றைத் தாண்டிய போது மின்னல் கீற்றுப் போல ஒளிச் சிதறல்கள் முன் போட்டிக்கோவைத் தாண்டி அதன் மீதும்
IL 60.
அந்த சில விநாடித் துடிப்புக்குள் அது சாடையாகத் தெரிந்தது. புதினமாக உருவமாக கொழுந்து, முறுக்கேறிய மீசை, தோளிற் பரந்த சடை. காதிலும் ஏதோ மின்னியது. தலை உச்சியில் பளபளப்பான அரசின் முடியாக,
உடை கூட வித்தியாசமாக என்ன இது? என்று கலங்கித் தவித்த
64 மணல்வெளி அரங்கு

கிழவருக்கு, தான் சிறு வயதில் பார்த்த சத்தியவான் சாவித்திரி கொட்டகைக்கூத்து பற்றி நினைவு ஏற்பட்டது. கன்னிகா பரமேஸ்வரி குழு, வேப்பம்பில சம்பந்த முதலியார் குழு என்று ஏதோ ஒரு குழு யாழ்ப்பாணத்தில் வந்திருந்து பல இடங்களிலும் விடிய விடியக் கூத்துப் போட்ட போது அதைப் பனியில் நனைந்து நனைந்து பார்த்திருந்தார்.
பல கூத்துக்களில் இவ்வாறான ஒரு ஆளை சந்தித்திருந்தாலும் சத்தியவான் சாவித்திரியில் கண்டது தான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. அந்த மாதிரி வேசம் கட்டிய ஆள் இந்த இடத்தில் எப்படி?
யாரோ நிற்பது உறுதி. அதனை விட வேசம் போட்ட ஆள் என்பதும் உண்மை. ஆனால் அந்த ஆள் ஏன் குத்துக் கல்லாட்டம் நிற்கிறான்?கிட்டப் போகவும் பயம். அப்படியே நிற்கவும் அந்தரம். கிழவர் பாடு திண்டாட்டமாகி விட்டது. தூக்கியடித்தாற் போல திடீர் என குளிர்காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து வினோதமான சில சத்தங்கள் கேட்டன. ஆனால் தெரு ஆளரவம் அற்று முற்றாக ஒடுங்கிப் போய்ச் செத்திருந்தது. கிழவர் உடலில்நடுக்கம் ஏற்பட்டது. மூச்சு விடுவது கூட கஷ்டமாக.
"என்ரை அம்மாளே "தன்னுடைய குல தெய்வத்தை அழைத்தார். கண் முன்னே ஜெகஜோதியாக சர்வாலங்கார சொரூபியாக, சிவகாமி அம்மன் வந்தாள்.
சற்று மனதில் நிம்மதி ஏற்பட்டது. அம்மனைக் கூப்பிட்டது அந்த உருவத்துக்குக் கேட்டிருக்க வேண்டும். சற்றே நகரத் தொடங்கியது.
எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு மனிதரைப் போல நடந்தது. நிச்சயம் அரச வேசம் போட்ட ஆள் தான். பூட்டிக் கிடக்கும் கேற்றினைத் திறந்து கொண்டு உள்ளே வந்த பின்னர் கேற்றினைச் சாத்தியிருக்க வேண்டும். எத்தகைய துணிச்ச. லான ஆள்!
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 35
இத்தனை தடை முகாம்களையும் தாண்டி எப்படி வந்தான்?இவனது அடையாள அட்டை எப்படி இருக்கும்?கிழவன் நினைக்கும் போதே கிழவருக்கு முன்னால் அந்த ஆள் வந்தான். "ஆர் அது? என்ன வேணும்?" தனது கேள்வியைத் திருப்பிக் கேட்டார். ஆனால் அது உச்சத் தொனியில் வரவில்லை. அதற்கு அந்த ஆள் பதில் கூறவில்லை. பேசாதவனாகவே இருந்தான். கிழவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
\
"ஆர் அப்பா நீ? உன்ர காது என்ன செவிடா? அந்தக் கத்தலில் கிழவரின் உடல் முன்பை விட நடுங்கியது.
ஆள் இப்போது சிரித்தான். அது சிரிப்பா? தடை முகாமில் சில வேளைகளில், அங்கு காவலுக்கு நிற்பவன் அப்படிச் சிரித்ததை கிழவன் கண்டிருக்கிறார். இப்போது இந்த ஆள் அதே மாதிரித்தான் சிரிக்கிறான். :
ஆனால் ஆளின் விழிகளில் ஏதோவொரு ஒளிர்வு இருந்தது. தீக்கோளம் போல தகதகவென்று அவனின் சிரிப்பால் வெலவெலத்துப் போன கிழவர், அவனின் கையில் இருந்த கயிற்றைப் பார்த்தார். சுருக்குப் போட்ட கயிறு.
ஆளின் பின்னே வேறு ஒன்று. ஒருவகை வாகனம் போல, கிழவரைத் தாண்டி ஆள் கேற்றை நோக்கி நடந்தான். அவன் பின்னால் வாகனமும் அதுவும் நகர்ந்தது. அதற்கு சில்லுகள் இல்லை.நான்கு கால்கள் மாடு போல எருமைதான்!
முன்னே சென்ற ஆள் திரும்பிக் கிழவரைப் பார்த்து சைகை செய்தான். அதன் அர்த்தம் பின்னால் வா" என்பது தான்.
கிழவருக்கு நா உலர்ந்து போனது. ஏன்? எதற்கு? கேட்க மனம் துடித்தாலும் வார்த்தை வரவில்லை. ஆள் முன்னே நடக்க அவனின் பின்னால் வாகனம் சென்றது. கிழவரில் சடுதியான மாற்றம் ஏற்பட்டு வேகம் உண்டானது. அவனின் பின்னால் பயணிக்க ஆரம்பித்தார்.
66 மணல்வெளி அரங்கு

பின்னால் நடக்கும் போது கிழவருக்கு எல்லாமே தெளிவாகி விட்டது. தன் இறுதிக் காலம் வந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டார்.
"ஏன் வீட்டில் வைத்து உயிரை எடுக்காமல் எங்கோ கூட்டிப் போகிறான்? இவனது பொது வழக்கம் இந்த இடத்தில் வைத்து உயிரைப் பறிப்பது தானே. சமகாலத்து பழக்கம் இவனுக்கும் தொற்றி விட்டதா? எனவும் கிழவர் யோசித்தார்.
சட்டென்று சோகம் அவரைப் பற்றிக் கொண்டது. தன் இறுதி நேரத்தில் மகனை மருமகளைப் பார்க்காமல் போகிறேனே என்பதை எல்லாவற்றையும் விட பேரனைக் காணாமல் போவது தான் சொல்ல முடியாத வேதனையைக் கொடுத்தது.
இரண்டு கிழமைகளாக மகனும் மருமகளும் படாதபாடு படுகிறார். கள். ஏறாத முகாம்கள் இறங்காத அலுவலகம் ஒன்றும் இல்லை. பத்தொன்பது வயது பேரன் மறைபொருள் ஆகிவிட்டான். அடையாள அட்டைகளுடன் தான் போனான். கடைசியில் அவை கூட மிஞ்சவில்லை.
கிழவரின் கண்களில் கண்ணிர் துளிர்த்தது. ஓவென்று அழவேண்டும் போல் இருந்தாலும் முன்னால் செல்லும் அந்த ஆளின் பின்னால் போவது சீராக நடந்து கொண்டிருந்தது.
சந்தித் தடைமுகாம் ஒளி வெள்ளத்தில் பூத்திருந்தது. ஜெனரேற்றரின் சீரான ஒசையில் அந்தப்பகுதி கலகலத்தது. முள்ளுக் கம்பிகள், கேடர்கள், தென்னை பனை மரக் குற்றிகள், மண் மூடைகள் என தெருவில் இருபக்கமும் அலங்காரமாக தெருவைத் தடைசெய்து படுத்திருந்த கேடர்களை லாவகமாகக் கடந்து கொண்டு அந்த ஆள் போனான். மின்சார விளக்கு ஒளியில் தகதகவென்று அவனின் ஆடைகள் மின்னின. தலையில் இருந்த முடி, தோளில் புரண்ட சடை எல்லாமே வித்தியாசமாக அற்புதமாக,
அந்த ஆளை அங்கு காவற்கடமையில் இருந்த ஆட்கள் எப்படி கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்று புரியவில்லை. யாரும்
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 67

Page 36
ஆளை மறிக்கவில்லை.
பழக்க தோஷத்தால் கிழவர் மடியில் இருந்த அடையாள அட்டைகள் கொண்ட பொதியை எடுக்கப்போனார். ஆனால் அதனை உணர்ந்தோ என்னவோ அவன் திரும்பிப் பார்த்தான். கிழவர் தன் முயற்சியை நிறுத்தினார். யாரும் அவரை அடையாள அட்டை கேட்கவில்லை. கிழவருக்கு அந்த நேரத்தில் உச்ச சந்தோஷமாக இருந்தது. தொண்ணுற்றி ஆறு ஏப்ரலில் தென்மராட்சியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பின்னர் முதல் தடவையாக அடையாள அட்டை காட்டாமல் ஒரு இடத்தைத் தாண்டிய நாள்தான் இறுதி நாளாக இருக்க வேண்டுமா?
மீண்டும் இருள் வந்தது. தெரு, வாய்க்கால் தண்ணிராக வளைந்து போனது. மறுபடியும் பேரனின் ஞாபகம் கிழவனைத் தொற்றிக் கொண்டது. இந்த ஆளைக் கேட்டால் பேரனுக்கு என்ன நடந்தது என்று தெரிய வரலாம். ஆனால் இவனுக்குத் தெரிய வருவது என்றால் பேரன் செத்துப்போய் இருக்க வேண்டுமே?
அந்தநினைப்பே கிழவரை இம்சைப்படுத்தியது. "கொஞ்சம் நிப்பம்" என்றார் வேதனையுடன். அதற்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை. என்ன மனிதன் இவன்? உயிரைப் பறிக்கத் தான் கூட்டிக் கொண்டு போகிறான். கடைசியில் இந்தத் தகவலையாவது சொல்லக் கூடாதா?
"என்ரை பேரன் எங்கையெண்டு தெரியுமா? விம்மலுடன் கிழவர் கேள்வி எழுப்பினார்.
இப்போதும் பதில் வரவில்லை. அவர்களது நடை பயணம் அழுது வடியும் நகரின் பிரதான பஸ் நிலையம் வரை வந்து விட்டது. பஸ் நிலையம் ஆட்கள் இல்லாமல் மூலைக்கொன்று இரண்டு மூன்று பஸ்களுடன். பஸ் நிலையத்தின் முன் பக்கமாக உள்ள முனியப்பர் வீதி ஊடாக நடைசென்றது. முற்ற வெளி ஓவென வரவேற்றது.
முனியப்பர் கோயில் மூச்சடங்கி மெளனித்துப் போய் இருக்க ஒரு சிறு விளக்கு மாத்திரம் எரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நடக்க விளையாட்டு அரங்கு தலை காட்டியது.
68 மணல்வெளி அரங்கு

பேரனின் நினைவுடன் வந்த கிழவருக்கு எரிச்சல் உச்சக் கட் த்தை அடைந்தது.
"கொஞ்சம் நில்லப்பா" அழுகையும் சீற்றமுமாக வெடித்துச் சிதறினார்.
பதில் கிடைக்காததால் கிழவர் சட்டென்று நின்றார். நிற்க முடியவில்லைத்தான். என்றாலும் அசையவில்லை. முன்னால் போய்க் கொண்டிருந்த அந்த ஆள் அதை உணராமலே சற்றுத் தூரம் போய் பிறகு தான் உணர்ந்திருக்க வேண்டும். திரும்பிப் பார்த்தான். கல்லுப்பிள்ளையார் போல கிழவர் நிற்பதையும் கண்டு திரும்பிக் கிழவரை நோக்கி வந்தான்.
"என்ரை பேரன் எங்கே எண்டு தெரியுமா? எத்தனை தடவை உன்னைக் கலைத்துக் கலைத்துக் கேட்டேன்." என்று கேட்கும் போதே கிழவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. ஆள் இப்போதும் பதில் பேசவில்லை. ஆனால் அவன் முகத்தில் தீவிரமான மாற்றம். ஒரு கையில் வைத்திருந்த சுருக்குக் கயிற்றை மறு கைக்கு மாற்றினான்.
"எங்கையப்பா என்ரை பேரன்? உயிரோடை இருந்திருந்தால் இவ்வளவுக்கும் தெரிஞ்சிருக்கும். செத்துப் போயிருந்தால் உனக்குத் தெரியாமல் இருக்காது. தயவு செய்து சொல்லு என்ரை உயிரை நீஎடுக்க முதல் இதைச் சொல்லிப் போடு"தாங்க முடியாத துக்கத்தோடு கிழவர் கேட்டது அந்த ஆளுக்குக் கவலையை உண்டு பண்ணியதோ என்னவோ அவன் விழிகள் கண்ணிர் நிறைந்து பளபளத்தன. அவன் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.
வெடித்துச் சிதறியது போல ஒரு வெளிச்சம் அடித்தது. கிழவரின் யன்ை மூடுண்டு திறந்த போது அந்த வேசம் கட்டிய ஆளைக் 11000வில்லை. அவனின் நாலுகால் வாகனத்தை, அவன் கையில் இருந்த கயிற்றையும் தான்.
(தினக்குரல், 22-08-1999)
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 6s

Page 37
7
ஒரு பாலத்தினி கதை
* ♥  ́፩ S
அப்போது தான் அது நடந்தது. அம்மா கறையான் தின்னும் சுவரோரம் சுருண்டு படுத்திருந்தாள். வழக்கம் போல கனவுகள் தான். அந்தக் கனவுகளில் தப்பா. மல் இயமனின் காலாட்படைகளுடன் சண்டை பிடித்துக் கொண்டு மூத்த அண்ணாவை காப்பாற்ற முனைந்து கொண்டு இருப்பாள்.
பாவம் நிஜத்தில் அவளால் மூத்த அண்ணாவைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.
சற்றே நரையோடிய கூந்தலுடன் மூத்தக்கா குசினிச் சாம்பல் குடித்துக்
மணல்வெளி அரங்கு
 

கொண்டிருந்தாள். பெரியண்ணா எதிர் வீட்டு ரீவியில் கடைவாய் வழிய படம் பார்த்தபடி ரீவியில் "சுதந்திரம்" படம் ஓடிக் கொண்டிருந்ததாகக் கேள்வி. அந்தச் சுதந்திரம் மாத்திரம் அவனுக்குப் போதும். இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாமாவின் மகள் பள்ளிக் கூடத்தில் கொடுத்த சமயப் பாடப் புத்தகத்துடன் அல்லாடிக் கொண்டிருந்தாள். புத்தகத்தின் ஒரே பக்கத்தில் இரண்டு வெவ்வேறு வகையான ஒளவையார்கள். அதில் எந்த ஒளவையார் சரி என்று அவள் முடிவு கட்ட வேண்டும். எங்கள் குச்சொழுங்கையின் கடைக்கோடி ஒட்டு வீட்டுக்கு வந்து விட்ட ரெலிபோனை சின்னக்கா கொஞ்சியபடி இருந்தாள். ஐந்தாகப் பத்தாக அம்மாவுக்கும் பெரிய அக்காவுக்கும் தெரியாமல் பொத்திப் பொத்திச் சேர்த்த காசில் சினிமாப்பாட்டுக் கேட்பது. அவளுக்கு பெருவிருப்பு. * . அப்போது காலை பத்துமணி இருக்கும். காலைச் சாப்பாட்டை கற்பனையில் சாப்பிட்டு விட்டுச் சோம்பியிருந்தோம். கூலி வேலைக்குப் போயிருந்த ஐயா சந்தித் தவறணையில் முடங்கியிருப்பார். சந்தியைத் தப்ப விட்டிருந்தால் பள்ளிக் கூடச் சந்தியில் வீடியோக் கடை பாருக்குள் தடக்கி விழுந்திருப்பார்.
அந்த வீடியோக் கடை பிரசித்தமானது. பெரியண்ணாவின் செற் அங்கு தான் நீலப் படங்களை எடுத்து பச்சை பச்சையாகப் பார்த்து பெருமைப்பட்டிருந்தார்கள். காக்கி உடுப்புப் போட்டு சந்தியின் சமச்சீர் குறையாமல் மண் மூட்டைகளை அடுக்கி அந்த் மண் மூட்டைகளைப் பாதுகாக்க ஆயுதங்களை வைத்திருக்கும் சமாதானத்திற்காக யுத்தம் செய்பவர்களும் வேறொரு நிலப்படம் தருவதாக சொன்னதாக பெரியண்ணா பீற்றிக் கொண்டு திரிந்ததும் உண்டு.
காலம் எப்போது கிளர்ந்தெழுந்து இந்த நீலத்தையும் பச்சையையும் காவு கொள்ளப் போகின்றதோ என ஊரில் உள்ள
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 71

Page 38
முற்பிறப்புடன் தொடர்புடைய எக்காலமும் உணர்ந்த பெரியவர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர்.
தாங்கள் சொல்லும் விடயங்களுக்கு சான்றாதாரங்களாக அவர்கள் கிழக்குப் பக்கத்திலும் தென்பகுதியிலும் தெரிவதாகவும் வெள்ளி காலிக்கத் தொடங்கியிருப்பதாகவும் சொல்லியிருந்தார்கள்.
அம்மா திடுக்குற்று விழித்தாள். ஒடி வந்து என்னைக் கட்டிப் பிடித்தாள். அந்தச் சமயத்தில் சமாதான தூதுவர்கள் ஆயுதங்களை நீட்டியபடி உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். படரும் கொடியாக அவர்கள் அணி நீண்டு வளைந்து படர்ந்தது. தாச்சி மறிக்காமலே எல்லோரும் ஒரு பக்கம் போய்ச் சேர்ந்தோம். வீடியோ பார்த்துக் கொண்டிருந்த பெரியண்ணாகும்பல் ரெலிபோன் ஊடாக நாங்கள் நலம் சந்தோஷமாய் வாழுறம்" என்று சொல்லிக் கொண்டிருந்த சின்னக்கா உட்பட எல்லோரும் சங்கக் கடைக்கு முன்னால் இருந்த பெரும் வெளிக்குள் தள்ளப்பட்டோம்.
முந்தியொரு காலத்தில் நெருஞ்சி முள்ளும் நாயுருவிப் பற்றையும் என்று பூரித்துக் கிடந்த அந்த வெளி நாங்கள் அடிக்கடி வந்து போனதால் முட்களும் மாசுக்களும் நீக்கப் பட்டு முத்தியடைந்திருந்தது.
எங்கள் பெரிய ஒழுங்கையின் சந்து பொந்துகளில் உள்ளவர்கள் நேற்று முன் தினம் பிறந்தவர்கள். எல்லோரும் அங்கு குப்பையாகக் கூட்டித் தள்ளப்பட்டு இருந்தனர்.
வெளியின் மண்ணில் உடல் புதைந்து தலையை மட்டும் வெளியில் காட்டி கைகளை நீட்டி வானத்து தேவதைகளை அழைத்துக் கொண்டு எனக்குப் பக்கத்தில் நந்தன், கோவிந்தன், சுரேசன், கணேசன், அவர்களின் ஹிரோ ஹொண்டா மோட்டார் சைக்கிள்கள் g)6b6uTLD6).
இந்த முறை நல்லூர் திருவிழா மூட்டம் கணேசன் அன் கோ செய்த அட்டகாசங்கள் கின்னஸ் புத்தகத்தில் பதியலாம் போல,
72 மணல்வெளி அரங்கு

இரவு ஏழரை மணிக்குப் பிறகு நல்லூர் கோயிலடியில் ஹிரோ ஹொண்டாவில் மீதேறி கோகுலத்து கிருஷ்ணர்களாக இரைந்து சப்த மெழுப்பி தேவ கன்னிகைகள் மத்தியில் அவர்களின் தோள்களின் வழியே ஏறி விழுந்து விழிகளைப் பந்தாடி விரல்களால் கீச்சு கீச்சு மூட்டி ஆகா அற்புதம்,
அத்தோடுவிட்டார்களா. தீர்த்தத்தன்று கேணியடியில் சுவாமி தீர்த்தம் ஆட்'இவர்களும் தீர்த்தம் ஆடி சேற்றுத் தண்ணீரை பக்த கோடிகளுக்கு அள்ளி விசிறி பக்தியில் திளைத்து ஐயகோ அதை என்ன வென்று சொல்வது.
இப்போது இந்தக் கணத்தில் எலிகளை விழுங்கிய சாரைப் பாம்புகளாக என் பக்கங்களில் கிடந்தார்கள். ٬ به ,
t
"ஏன்டாப்பா என்ன நடந்தது. பிரச்சினையாய் ஒண்டும் நடக்கேல்லை. பிறகேன்றவுண்ட் அப்” என்று கணேசன் கேட்க,
இரவில் படம் பார்த்த நித்திரை மயக்கத்தில் கிடந்த பெரிய அண்ணை மண்ணைச் சுவாசித்தபடி நித்திரையாகிப் போயிருந்தான். இரவோ அதிகாலையோ இடி இடிக்கவில்லை. மின்னவில்லை. அதனால் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை. கடைசி யாருடைய சயிக்கிள் ரியூப்பாவது வெடித்துச் சத்தம் எழும்பவில்லை. பிறகேன் சுற்றிவளைப்பு என்று புரியவில்லை.
காரணம் சொல்லியா இங்கு எல்லாம் நடக்கிறது என்று யாரும் யோசிக்காமல் இருக்க வெளியைச் சுற்றி ஊராட்கள் திரண்டு கொண்டிருந்தனர். அது விடுப்புப் பார்க்கும் கூட்டம் மாத்திரம் அல்ல. அம்மாவைப் போல பிள்ளைகளுக்காக கணவர்களுக்காக சகோதரர்களுக்காக கலங்கிய படி இருந்தனர்.
சங்கக்கடை முன்னால் வாகனங்கள் வந்துநின்றன. கோல உடை அணிந்த அதிகாரிகள் இறங்கி புழுதி கிளம்ப நடந்து சங்கக் கடையின் முன் தாழ்வாரத்துக் கதிரைகளில் அமர்ந்தார்கள்.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 73

Page 39
வெளியில் முடங்கிப் போயிருந்த எல்லோரையும் எழுந்து நிற்கச் செய்து அணி வகுக்க வைத்தார்கள்.
ஒருவர் பின் ஒருவராக ஒருவர் பிடரிப் பகுதியை மற்றவர் முகர்ந்து கொண்டு பவ்வியமாய் நடந்து அமர்ந்து இருந்தவர்கள் முன்னால் போய் நின்றோம். அதிகாரிகள் மூன்று பேர் எழுந்து வந்தார்கள். ஒவ்வொருவராகப் பார்த்தனர்.
சுயம்வர மாலையா? யாருடைய கழுத்தில் விழப்போகின்றதோ
என்ன செய்யப் போகின்றார்களோ.
முதுகில் முதுகெலும்பு இருக்கின்றதா?"பின்னால் இருந்த சுரேசிடம் கேட்டேன்.
"மச்சான் என்ரை முதுகெலும்பு இருக்கடா"
எட மடையா, என்ன விசர்கதை கதைக்கிறாய் அது எங்கையடா இருக்கு”
சட்டென்று உண்மை சுட்டது. என்றைக்கு இவர்களிடம் அகப்பட்டோமோ அன்றைக்கே அதனை கழற்றி வைத்தது ஞாபகம் வந்தது. என்றாலும், "அது தெரியும் மச்சான். சிலவேளை அது திரும்பி வந்திட்டுதோ என்று பார்க்கிறதுக்குத்தான் இந்த செக்கிங்கோ?”
வெய்யில் சரிந்த போது எங்களில் பதினைந்து பேருக்கு கிட்டத்தட்ட ஒரு புறமாக்கிவிட்டு மிகுதிப்பேர்களை திருப்பி அனுப்பி விட்டார்கள்.
"சரி சரி, மிச்ச ஆளும் போகலாம். இவ்வளவு நேரமும் கரைச்சல் தந்ததுக்கு மன்னிக் வேணும்" என்று சொல்லி ஆட்களை அனுப்பினான் ஒரு அதிகாரி.
வேள்விக்கு நேர்ந்து விட்ட கிடாய்களைப் பார்ப்பது போல திரும்பிப் போகும் ஆட்கள் எங்களைப் பார்த்தபடி போனார்கள்.
பதினைந்து பேர்களில் ஐந்து பேர்கள் பெண்கள் மலங்க மலங்க விழித்தபடி கண்ணிர் பொங்க துவண்டு போய் இருந்தனர்.
14 மணல்வெளி அரங்கு

ஆண்கள் பத்துப் பேருக்கும் தலை விறைத்து இருந்தது. எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. என்ன நடந்தது. என்ன செய்யப் போகிறார்கள் என்ர அம்மாளே.
எனக்கு அம்மாவைப் போல பதினைந்து பேர்களின் உறவினர்களும் விம்மி வெடித்துக் கொண்டு வெய்யில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க பசி அடிவயிற்றைப்பிடுங்கியது. சிறுநீர் கழித்தால் சிறிது நிம்மதியாய் இருக்கும். யார் தருவார் இதற்கு அனுமதி.
சங்கக் கடை தாழ்வாரத்தின் மறைவில் இருந்து கொண்டு ஒரு மொட்டைத்தலைப் பேர்வழி என்னை சைகை காட்டி அழைத்தான்.
ஏனைய அதிகாரிகள் தங்கள் தங்கள் கதிரைகளில் இருந்து எதையோ குடிக்க ஆரம்பித்திருந்தனர். மொட்டைத் தலையன் கண்களில் முதலில் பட்டது நானாகத்தான் இருக்க வேண்டும்.
போனேன். அவன் பார்வை வெய்யிலைவிட வெக்கை குறைவாகத்தான் இருந்தது. சகல விபரங்களையும் கேட்டான். அடையாள அட்டைகளைப் பார்த்தான். பயந்து வெளிறிய முகத்துடன் நான். "இது நேற்று - இது முந்தநாள். இது அதற்கு முதல் நாள் என்று படங்களைக் காட்டத் தொடங்கினேன். அவன் அதுகளை ஒரங் கட்டினான்.
"குறி சுட்டதா? என்றான்.
tt
ஓம்."
இடுப்பு எலும்பை முறிப்பது போல என்னைத் திருப்பி முதுகைப் பார்த்தான். முதுகில் இருந்த இலக்கத்தைக் குறித்துக் கொண்LT6i.
முதுகு எலும்பு இல்லைத்தானே. மிச்சம் நல்லது" என்றான்.
என் படபடப்பு குறைந்தது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 75

Page 40
"சரிபோய் அங்கேநில்லு."என்று சொல்லநான் வெளியே வந்தேன்.
ஒரமாக நின்ற அம்மா விரைந்து கதிரைகள் இருந்த இடத்தை நோக்கி நடந்தாள். நடையில் அவசரம் தெரிந்தது.
"பொறு பாக்கியம்" என்று குஞ்சியாச்சி சொன்னது கேட்டது.
கதிரைகளில் இருந்தவர்களுக்கு அம்மாவின் அவசரம் புரிந்திருக்க வேண்டும்.
பயம் வேண்டாம் பொறுங்கோ அம்மா" என்றான் ஒரு இளநிலை அதிகாரி.
அதிகாரி எல்லோரையும் ஒன்றாக இருக்கச் சொன்னான். அம்மா ஏனையவர்களின் உறவினர்கள் எல்லோரும் எங்களோடு வந்து அமர்ந்தார்கள். வெள்ளை நீளக்கை சேட் போட்டு ரை கட்டிய மனிதர் ஒருவர் கதைக்கத் தொடங்கினார்.
"உங்களுக்குப்பாலம் தெரியுமா?"அம்மாவைப்பார்த்துக் கேட்டார். அம்மா சற்று தயங்கிக் கொண்டு நாவற்குழி பாலம் மாத்திரம் தெரியும்" என்றாள்.
யாரும் சிரிக்கவில்லை. எனக்குப் பயமாகிப் போய் விட்டது.
நாங்கள் பாலம் கட்டத்தான் இவன்களைப் பிடிச்சது. அதுதான் தெரிவு செய்தது. இவன்கள் எல்லாம் பிரச்சினை இல்லாத ஆட்கள். இவன்கள் எல்லாம் இஞ்சை இருந்து அங்கை போறது. நாங்கள் பிளேனில கூட்டிப் போறது. யாராவது பிளேனில போயிருக்கிறீங்களா? இல்லைத்தானே. நாங்க பிளேனில கூட்டிப் போய் எங்கடை தெற்கில் எங்கடை ஆட்களோட பழக விடுறது. தங்க வைக்கிறது. சாப்பாடு தாறது. விளையாட விடுறது. அப்ப அவன்களும் இவங்களும் ஒண்டாப் பழகி சந்தோஷமர்ய் இருக்கலாம். இன ஒற்றுமையை வளர்க்கலாம். அதுதான் நாங்கள் நட்புறவுப் பாலம் அமைக்கப் போறது. இதெல்லாம் நல்லது தானே. உங்களுக்கும் சந்தோஷம் தானே. இப்ப பயப்படாமல் இருங்க"
(ஈழநாதம், 19-02-2000)
ገ6 மணல்வெளி அரங்கு

சமாதானம்
மாபெரும் பேரணிக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. மக்கள் வசிக்கும் ஊர்களில் இருந்து அவர்களை அழைத்து வர நம்பர் பிளேட் உள்ள வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் எல்லாம் தயார்.
போக்குவரத்து சபை பஸ்கள் பேரணிக்கான ஆட்களை சத்தமில்லாமல் இழுத்து வரவும் மிச்ச சொச்சங்களை திணைக்கள கூட்டுத்தாபன வாகனங்கள் கொண்டு போய்ச் சேர்க்கவும் தடைகள் இல்லை.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 77

Page 41
மாவட்ட எல்லைகளை, மண் முட்டை அரண்களைத் தாண்டுவது தமது ஆதரவாளர்கள் தான் என்பதை உறுதி செய்து காவலர். களின் காருண்யமான சோதனைத் தடைகள் அனைத்தையும் கடந்து வந்து சேர சகல ஏற்பாடுகளும் ரெடி.
தொடர்ந்து எழுபத்தி இரண்டு மணித்தியாலங்களாக வானொலி தொலைக்காட்சியின் அலைவரிசைகள் அலையலையாக பேரணி தொடர்பான புனித பேரொலிகளை ஒசைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.
வானத்துத் தேவர்களும் அகிலத்துப் பெருமானார்களும் நேரில் வந்து இன மத மொழி வேறுபாடு இன்றி முத்தி வழங்கப் போவதாக அவை அடித்துச் சொன்ன காட்சிகளை வெளிப்படுத்தின.
பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் அனுபந்தங்கள் வெளியிட்டன. கிராமத்து மக்கள் சகல வசதிகளும் பெற்றுக் குறைவில்லாத வாழ்க்கை வாழ இந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் போலவும் சுதந்திரம் பெற்ற ஐம்பது ஆண்டுகளை கழித்து விட்ட இந்த நீண்ட வரலாற்றில் ஒரு புதிய எழுச்சி ஏற்படப் போவதாகவும் அவை கதை பரப்பின.
பேரணியில் பங்குபற்றும் ஆளும் கட்சியும் அதன் அன்புசார் அமைப்பாளர்களும் இ6ை0ணப்பாளர்களும் ஆதரவாளர்களும் எல்லோரும் சிரத்தை எடுத்து தமது சாயங்களை வெளுக்கப் பண்ணி வெண்மையாக்கி வெள்ளை வெளேர் ஆகி விட்டனர். நடத்தி முடித்தால் அந்த மாதிரி இருக்கும் என்று பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் அவர்களை அடிதொழும் சிறுபான்மைத் தலைவர்களும் நெஞ்சை நிமித்திய போது தான் பேரணியை ஒழுங்கு செய்த ஆளும் கட்சியின் மெத்தப் படித்த தலைமை கேட்டது.
"எங்கே அது?"
"ஏற்பாடுகள் எல்லாம் பொதி செய்தது போல பூர்த்தியான பின்னர் தலைமை கேட்டது எதனை.
7 மணல்வெளி அரங்கு

"எது.?
அதுதான் அந்தப் பேரணிக்கே பிரதானமானது. அது இல்லாமல் என்ன பேரணி"
தலைமை கிடுகிடுத்தது.
தலைமை எதைக் குறிப்பிடுகின்றது என்பதைக் கலங்கித் தெளிய முடியாது திண்டாடியவர்கள்.
நீங்கள் எதனைக் கூறுகிறியள் "தயங்கித் தயங்கிக் கேட்க, தலைமை கோபத்தின் உச்சிக்குப் போனது.
உயர்ந்துநீண்டு விரியும் எதிர்கால அரசியல் நலன்களைப் பெற்றுக் கொள்ள இந்த முட்டாள்களை வைத்தா செயற்பட வேண்டும் என்று நினைத்ததாலோ என்னவோ காதடைக்கச் சத்தம் போட்டது. தேர்தல் காலத்து வாக்குறுதிகள் போல அவை நாற்றிசையும் பாய்ந்து சென்றன.
நாங்கள் எதற்காக இந்தப் பேரணியை நடாத்துகின்றோம்" "இன் ஒற்றுமையைக் கட்டிக் காக்க” "வெட்டிச் சாய்க்க. மூளை கெட்டவர்களே இன ஒற்றுமையைப் பாதுகாப்பதாகக் காட்டிக் கொள்ள"
பெருந்தலைகளும் இடை மட்டத்து முடிகளும்/துடி துடித்துப் போனார்கள். சுதந்திரமான பத்திரிகையாளர்கள் யாராவது நின்றார்களா? என அக்கம் பக்கம் பார்த்தனர். "அப்படிக் காட்டிக் கொள்ள எது முக்கியம்" மீண்டும் தலைமை கேள்வி கேட்டது. பதில்கள் தடம் புரண்டபடிதான் இருந்தன. சரியானதைத்தான் காணவில்லை. "இன ஒற்றுமை இருப்பதாகக் காட்டிக் கொள்ள என்ன வேண்டும் சொல்லுங்கள். ம். சொல்லுங்கள்"
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 79

Page 42
"தெரியாதா, நான் சொல்லுகின்றேன். கொண்டு வாருங்கள் அதனை" சிறிது காலமாய் அதனைக் காணவில்லை. தொண்ணுற்றி நாலாம் ஆண்டில் எங்கள் தத்துப் பிள்ளையாக இருந்து எங்களுக்கு நன்கு உதவியது.
நள்றாகத் தின்று கொழுத்திருந்தது. பிறகு எப்போதாவது தான் அதனைப் பார்த்ததாக ஞாபகம். அதனைக் கொண்டு வாருங்கள்.
தலைமயிரைப்பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு தலைமை சொல்லும் அதனை மறந்து கன காலமாயிற்று. அதன் உருவத்தை முக அடையாளத்தையே மறந்தாயிற்று. எப்படிக் கண்டு பிடிப்பது எங்கே போவது."
"அது எங்கே இருக்கும் "
இது என்ன முட்டாள்தனமான கேள்வி. உடனே கண்டுபிடியுங்கள். வழக்கம் போல சகல வழி முறைகளையும் கையாளுங்கள். சுற்றி வளைப்புகக்ள். தேடல்கள் எல்லாம் நடக்கட்டும். உயிரோடோ பிணமாகவே கொண்டு வாருங்கள்" என்று கர்ஜித்தது தலைமை. "அடடே முழுப்பிணமாக்கினால் காரியம் கெட்டு விடும். எனவே எழும்பி நடக்கக் கூடிய மாதிரியான நிலையிலாவது கொண்டு வாருங்கள்.ம். விரைந்து செல்லுங்கள் திரும்பி வாருங்கள். இருபத்திநான்கு மணித்தியாலம் தான் காலக்கெடு"
அதனைத் தேடி தொண்டர்கள், குண்டர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் புறப்பட்டனர். நால்வகைப் படைகளுடன் துணை, இணைப்படைகளும் இணைந்து கொண்டன.
தேர்தல் இடாப்புகளில் அதன் பெயர் இல்லை. உயர் மட்ட பிரமுகர் பட்டியலில், விருந்தினர் பட்டியலில், சந்தேகநபர்கள், எதிராளிகள் என்று எந்தப்பட்டியலிலும் காணவிே காணோம்.
பிரயாணத்திற்கான பாஸ், தங்குமிட பாஸ், போக்குவரத்துப் பாஸ் அது இது என்று எதிலுமே அதன் பெயர் இல்லை.
எதிர்க்கட்சிப்பிரமுகர்கள், நடுநிலையாளர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்து விட்டதா?
மணல்வெளி அரங்கு

சுழியோடிப் பார்த்தும் பிரயோசனப்படவில்லை. கடைசியில் அந்த அற்புதம் நடந்தது. ஆள் அரவம் அற்ற காட்டுப் பகுதியில் தோல்வியடைந்த கவிஞனைப் போல அது குப்புறக் கிடந்தது.
தேடிக் கொண்டு போனவர்களுக்கு அது விட்ட மூச்சுத்தான் கேட்டது. "சர் புர்" என்ற அந்தச் சத்தம் எந்த விதமான பின்னணி இசையும் இல்லாமல் தெளிவாகக் கேட்டது. பதுங்கிப்பதுங்கிப் போனவர்கள் ஆளை ஆள் தள்ளி அதன் கிட்டப் போனார்கள். செத்தது போலவும் சாகாதது போலவும் கோமா நிலையில் இருந்த அது சுற்றிவர நடந்த அமளிகளை உணராமலே கிடந்தது.
கடல் தாண்டி இந்தியாவுக்குக் கேட்குமாப் போல் ஒருவன் நீதானா அது " என்று கதறினான்.
அது சிறிதாகத்தான் அசைந்தது. ஆனால் கண்களைத் திறக்கவில்லை.
இது தலைமை சொன்னது தானே." என்றார் ஒரு தலைவர்.
பல பேர் அதனை உறுதி செய்ய முடியாமல் உதடுகளைக் கடிக்க சற்றே வயதோடிய ஒரு குருவானவர்.
"எனக்கு முன்பு பார்த்த ஞாபகம் இருக்கிறது. இது அது தான். ஆனால் முந்தி இது என்ன மாதிரி இருந்தது. எல்லாம் வடிவாய் புஷ்டியாய்.” மலரும் நினைவுகளில் மூழ்கினார் அவர். இப்போது முண்டியடித்துக் கொண்டு எல்லோரும் அதனைப் பார்த்தனர். சோமாலியா சிறுவர்களைப் போல அது வதங்கியிருந்தது. மண்டை பெருத்து, கனத்து எலும்பெல்லாம் துருத்திக் கொண்டு உதடுகள் வெடித்து உளி மாறிய விழிகள் படைபடையாய் அழுக்கு மோசமான துர்வாடை.
மூக்கைப் பொத்திக் கொண்டு நின்று என்ன செய்வது? இதனைக் கிளப்பிக் கொண்டு போய் பேரணியை நடாத்த கடைசி அதுவரை
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 43
யாவது இது தாக்குப் பிடிக்குமா? என்ற பிரச்சினையும் சேர அவர்கள் கவலைப்பட ஆரம்பித்தனர்.
அது எழுந்து உட்கார்ந்து கண்களை இடுக்கிக் கொண்டு சுற்றி நின்றவர்களை விநோதமாகப் பார்த்தது. பிறகு சுயத்திற்கு வந்தது. எதுவுமே புதினமாக இல்லை அதுக்கு.
எல்லோருமே பழையவர்கள் அல்லது அவர்கள் வழித்தோன்றியவர்கள். உடைகளும் முகங்களும் தான் வித்தியாசம், கோல உடை அணிந்தவர்களின் உடைகளும் புதியவைகள் தான். அவர்கள் கைகளில் இருந்த இரும்புத் தளபாடங்களும் வேறு தான்.
இத்தனை பெருங் கூட்டம் வந்திருப்பது ஏதோ பெரிய அலுவலாகத்தான் இருக்க வேண்டும் என்று அதற்குப் புரிந்தது. நாற்பத்தி யெட்டாம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் தன்னை எப்போதாவது தான் தேடி வருகின்றார்கள் என்பது அதற்குப் புரியாத தொன்றல்ல.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன யார் அரசோச்சிய போதும் தேவைப்படும் நேரங்களில் மாத்திரம் தன்னிடம் வந்து கொஞ்சிக் குலாவி கன்னத்தில் கள்ள முத்தமிட்டு சுகித்து விட்டுப் போவதும் இயல்பானதே.
ஆரம்ப காலங்களில் அடிக்கடி இந்த உறவுகள் புதுப்பிக்கப்படும். ஆனால் சமீப காலங்களில் இடைவெளி நீண்டு கொண்டு போய் விட்டது. நீண்ட இந்தக் காலப் பகுதியில் போர் என்றால் போர் என்று சொல்லிக் கொண்டிருந்த பெரும்பான்மைத் தலைமை அவ்வப்போது அதனைப் பாவித்து வந்தது. அதற்குப் பிறகு வந்தவரும் ஒன்றும் குறைவில்லை. எத்தனை வாஞ்சையாக வெள்ளைப்புறா, வெண்தாமரை என்றெல்லாம் பளபளாக் காட்டினார்கள். எல்லாமே வெற்றி நிச்சயத்தில் கதைத்த பணமாயிற்று.
நீங்கள் வர வேண்டும்"
வெகு விநயமாகக் கேட்டார்கள் வந்தவர்கள்.
"எங்கே..."இத்துப் போன குரலில் அது கேட்டது
2 மணல்வெளி அரங்கு

"நாட்டின் எதிர்காலம் கருதி நீங்கள் வர வேண்டும்" முன் வரிசை அங்கத்தவர் ஒருவர் பவ்வியமாகக் கேட்டார்.
அது சிரித்தது. ஆனால் பார்க்க அது சிரிப்பது போல இருக்கவில்லை. மிதந்து கிளம்பிய அதன் பற்கள். ஆட்களைப் பயம் கொள்ளச் செய்தன.
நாடு ஒரு கஸ்டமான நிலையில் உள்ளது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பெரும்பான்மை சிறுபான்மை பிரச்சினை எல்லை மிறிப் போய் விட்டது. நாட்டை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்."
"அப்படியா. அவ்வளவு மோசமாகி விட்டதா பிரச்சினை " ஆமாம் பிரச்சினை முத்திப் போய் விட்டது. நாங்கள் மேற்கொண்ட எந்த நடவடிக்கைகளும் இதுவரை பயன் தரவில்லை." பயன்தரவில்லை என்றால்"
"சிறுபான்மைப் பிரச்சினை முழுமையாக முடியவில்லை" "ஆமாம். சிறுபான்மையை முழுமையாக முடிக்கும் வரை பிரச்சினை முடியாது தான் " என்றது அது.
கூட நின்றவர்களின் முகங்களில் சந்தோஷம் பீறிட்டது. தங்கள் தரப்புநிலையினை அது உணர்ந்து கொண்டு விட்டதாக ஆனந்தம் கொண்டனர்.
நாங்கள் பெரும்பான்மையாக இருக்கின்றபடியால் இந்த நாடு எங்களுக்கானது நாங்கள் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதுக்கு முதல் சிறுபான்மைப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்"
அது சற்றே கண்களை அகட்டி சுற்றி நின்றவர்களை பார்த்தது. சிறுபான்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் அதீத ஆர்வம் அவர்களின் அகத்தில் இருப்பதை அது புரிந்து கொண்டது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 83 ܥ

Page 44
"சிறுபான்மையினரின் மிச்சப் பிரச்சினையைத் தீர்க்கும் வரை அவ்வப்போது நான் உங்களுக்கு உதவ வேண்டும். அப்படித்தானே."
சூழ நின்றவர்களை தன் கண்களால் சுழற்றி சுழற்றிப் பார்த்தபடி அது சொன்னது.
"ஆமாம் எங்கள் செயற்பாடுகளுக்கும் வேகம் கொடுக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை மக்கள் மத்தியிலே ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்த வேண்டும். எங்களை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பவர்களைத் திசை திருப்பவும் வேண்டும். அதோடு. ”
மூச்சு வாங்கிய முன்னணித் தலைவர் சற்று இளைப்பாறினார்.
"அத்தோடு வாக்குகள் கேட்டுப் போகும் திருவிழா வரப் போகின்றது. அப்படித்தானே என்றது அது.
"ஆமாம் நீங்கள் கட்டாயம் வர வேண்டும்" கூட்டத்தில் உச்சக் குரலில் வேண்டுகோள் விடுத்தனர்.
நான் அதிக நாள் வாழ்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. மூப்பு வரவில்லையாயினும் என் நிலைமை மோசமாகி விட்டது.
சரியான பராமரிப்பு இல்லாதபடியால் என் உயிர் போகப் போகிறது. இன்றோ நாளையோ அது நடக்கலாம்"
சோகக் குரலில் அது சொல்ல
அதனால் என்ன பரவாயில்லை. இப்போது வாருங்கள்"
கையுறை அணிந்த கைகள் அதனைத் தூக்கின. அது எழுந்து நின்றது.
"வாழ்க வாழ்க" என்று எல்லோரும் சத்தம் போட அமைதியான
காட்டுப்பகுதி அதிர்ந்தது. காட்டில் இருந்த மிருகங்கள் அதிர்ந்து சிதறின. பறவைகள் துடித்துத் துடித்து விழுந்தன.
ஒரு கிளாஸ் பழரசத்தினை அதனிடம் நீட்ட அதனை வாங்கிய அது மூக்கைப் பொத்திக் கொண்டு சுவைத்துப் பார்த்துவிட்டு மிகுதியை தரையில் ஊற்றியது.
4. மணல்வெளி அரங்கு

பேரணி புறப்பட்ட போது புத்தாடை பூண்ட அது முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்தது.
தாங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி போட்டு அதன் முகக் கொடுமையை மறைத்திருந்தனர். காந்திக் குல்லாய் வைத்து தலையின் அசிங்கத்தை முக்காடு இட்டிருந்தனர். காந்திக் குல்லாய் போட்ட காந்தியத் தலைவர் நன்றாய் கழுவிய கைகளுடன் அதற்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.
எங்கும் வெண்மை. எதிலும் வெண்மை, தூய வெண்மை, உடல் பொருள் ஆவி அத்தனையுமே இன ஒற்றுமைக்காக ஒப்படைத்தவர்கள் போல முதல் தர நடுத்தர கீழ்மட்ட தலைவர்கள் எல்லோரும் நடந்தனர்.
வழக்கமாக கோல உடைகளில் திரிபவர்களும் கூட தம்மை வெறுத்து வெள்ளை பர்தா அணிந்து பொது இயல்பு காட்டினர்.
சப்பிளாக்கட்டை, உடுக்கு, மேளம், தாளம் என்று ஒரு சிறு கோஷ்டி ஆடிக் கொண்டும் பஜனை பாடிக் கொண்டும் வந்தது. ஒத்து ஊதிக் கொண்டும் சில பேர் வந்தனர். அவர்கள் பெரும்பான்மையோடு இணைந்துள்ள சிறுபான்மையின் சிறுபான்மை என்பதை அது கண்டு கொண்டு கவலை கொண்டது.
நாடு வாழ்க"
இன ஒற்றுமை வாழ்க" "சிறுபான்மை பெரும்பான்மை பேதமை ஒழிக’ "சிறுபான்மை மக்களின் உரிமைகளை அளிப்போம் அழிப்போம்" "மக்கள் ஒன்றிணைந்து நாட்டை வாழவைப்போம்." நாட்டை மேம்படுத்துவோம்" பேரணி தலைநகரினை விழுங்கியபடி பாம்பாக வளைந்து சென்றது.
அது நடக்க முடியாமல் கஷ்டப்பட்டது. மூச்சு விடக் கூட இயலாமல் இருந்தது. பெரு வேதனையில் துடித்தது.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 45
பேரணி இன்னும் அதன் இலக்கை அடைய வெகுதூரம் இருந்தது. அதுவரை எப்படித் தாக்குப் பிடிக்கப் போகின்றேன் என அது கண்ணிர் விட்டது. நிலைமையினை புரிந்து கொள்ள முடியாதவர்கள் காட்டுக் கத்தலுடன் சேர்ந்து வரும் அதனை இழுத்துக் கொண்டு நடந்தார். கள். பேரணியை பார்வையிட்டவர்களுக்கு அதனைக் காட்டி மகிழ்ந்தார்கள். நடந்து களைத்தவர்கள் வாகனத்திற்குப் போக புதியவர்கள் வந்தார்கள். களைக்காமல் வந்தார்கள். ஆனால் அது களைத்து தள்ளாடத் தொடங்கியது.
"ஏன் இது பேசாமல் இருக்கிறது" என்றார் முன்னணித் தலைவர்களில் ஒருவர். "இன ஒற்றுமை வாழ்க என்று சத்தம் போட்டால் எவ்வளவு நல்லாய் இருக்கும்" இது குரல் கொடுக்கும் ஒப்பற்ற ஆட்சியைக் கொண்டு நடாத்தும் கட்சி என்ற பெயரல்லவா கிடைக்கும்" ஆளுக்கு ஒவ்வொரு கருத்தினைச் சொல்ல அதுதலை குனிந்தது.
கோபம் கொண்ட பேரணி சகபாடிகள் அதன் தலையை உலுக்கினர்.
நாடு வாழ்க" என்று சொல்லும்படி நெருக்கினார். உயிருக்காகப் போராடும் வேதனையில் சோர்ந்திருந்த அதன் உதடுகளை அசைத்தாலும் சத்தம் வரவில்லை. தெண்டித்து தெண்டித்து தம் முயற்சி பயன் அளிக்க முடியாமல் போகவே அதனை வேறுவிதமாக கவனிக்கத் தலைப்பட்டனர்.
கைக்கடக்கமான ஆயுதங்கள் தான். நீளம் அதிகம் இல்லை. சிறுகத்தி, சிறிய ஊசிகள் ஆரவாரம் இல்லாமல் அதன் உடலில் இறங்கின.
"சொல்லு"
மணல்வெளி அரங்கு

"கத்து.ம் கெதியாய் கத்து."
அது பரிதாபகரமாக மூச்சுத் திணறத் தொடங்கியது.
பேரணி முடிந்து கூட்டம் ஆரம்பிக்கும் இடத்தை அடைந்த போது பேரணியில் வந்தவர்கள் உச்ச லாகிரியில் திளைத்திருந்தனர். மேடையிலே முக்கிய தலைகள் முதன்மை பெற்றிருக்க கனவுக் காட்சிகளாக மேடையும் சூழலும் வனப்புக் கொண்டன. தங்க பிறேம் கண்ணாடியும் புதிய உடைகளும் பிடுங்கப்பட்ட நிலையில் ரத்தம் பெருக்கெடுத்தோட அப்பாவித் தமிழ்ச்சனம் போல அது அனுங்கிக் கொண்டிருந்தது. "இதனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அடுத்த மாதம் நாம் நடாத்தப் போகும் மகா நாட்டுக்கு இது தேவை" என்றபடி வேறு சிலர் வந்து கொண்டிருந்தனர்.
(சரிநிகர், ஏப்ரல் (6-22) 2000)
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 46
அம்மாவாக அல்ல
காதோரம் தான் அந்தச் சத்தம் கேட்டது. "அம்மா" என்று மெல்லிய விசும்பலாக இளம் கன்றின் குரலாக அம்மா முதுகு சிலிர்த்து எழுந்தாள்.
அவன் குரல் தான். எங்கே வந்தானோ. இப்போது ஏன் வந்தான் இவ்வளவு காலத்திற்கு பிறகு? அவளுக்கு மூச்சு திணறியது.
விரிந்த வளவின் ஒரு புறத்தே ஒலைக் குடிசை, தென்னையும் தென்னோலைகளும் குரும்பை குப்பையுமாக அந்த வளவு புழுத்துக் கிடந்தது. ஒற்றை மனிசியாக வளவை பராமரிக்க
மணல்வெளி அரங்கு
 

அவளால் முடிவதில்லை. மரநிழல்களில் படுத்துக் கிடப்பதும், புல் மேய வரும் மாடுகளோடும் தீன் பொறுக்க சிலுப்பித் திரியும் கோழிகளோடும் பொழுது சரிந்து விடும்.
எப்போதாவது அவனின் தோழர்கள் வருவார்கள்.
"அம்மா பசிக்குது" என்று கூறி தென்னைகளில் ஏறுவார்கள். மாங்காய் பிஞ்சை பிய்ப்பார்கள். கிணற்றில் குளிப்பார்கள்.
குடிசை வாசலில் ஒலை பரப்பி அரை வட்டமாக உட்காரர அம்மா நடுவில் அமருவாள். வாளை இலைகளை பிய்த்துக் கொண்டு கைகளை நீட்டிப்பம்பலடித்துக் கொண்டு அம்மா குழைத்துத் தரும் சாப்பாட்டைச் சாப்பிடுவார்கள்.
"மணியான சாப்பாடு அம்மா" என்று வேறு சொல்லுவார்கள்.
அம்மா அவர்களில் ஒவ்வொருவருடைய முகத்திலும் மகனைத் தேடுவாள். விழிகளின் ஒளிர்வில் அவள் மகனின் முகத்தைக் காண முடியாவிடினும் அகத்தைக் காணுவாள். அகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தாகத்தினையும் உணருவாள். ஆனால் ஒரு நாளாவது அவன் வந்ததில்லை.
கார்த்திகை மாதத்து மாலை நேரம் ஆறு மணிக்கு கிட்டத்தில் இருக்கும். தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வானம் தொடுத்திருந்த யுத்தம் காலையில் தான் ஒய்ந்திருந்தது. மழை குடித்த நிலம் இறுகிப் போய் இருந்தது. மரம் செடி கொடிகள் முழுகித் தலை உலர்த்தியதால் பளிர் என்றன. இதமான குளிர் வேறு. தளர்ந்து போன மாலையும், அமானுசமான அமைதியும் அம்மாவுக்கு வித்தியாசமாக தெரியவில்லை.
அவள் உலகத்தில் எப்போதும் போல அப்போதும் வெறுமைதான். அதில் காகம் கரைந்தாலும் ஒன்றுதான். மிக்"சத்தம் கேட்டாலும் ஒன்றுதான். "அம்மா” மீண்டும் மிக மென்மையாக ஆதரவாக, அம்மாவின் நெஞ்சு அதிர்ந்து கலங்கியது. காதுகளில் தீப்பற்றியது. எவ்வளவு
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்

Page 47
நாட்களுக்குப் பிறகு கேட்கும் குரல். என்றாலும், எந்த விதமான ஊறும் நேராத அவனின் குரல் தான் எவ்வளவு காலத்திற்குப் பிறகு கேட்டாலும் மறக்க முடியாத குரல்.
அம்மா குரல் வந்த திசையைப் பார்த்தாள். காற்று சற்று நேரத்திற்கு முதல் இருந்ததை விட வேகமாக வீசியது. தென்னை மரத்து தென்னோலைகள் கைகளை வீசிக் குதித்தாடின. மழை இருள் இல்லாவிடினும் மின்னல் ஒன்று மின்னியது.
யாரையும் காணவில்லை. சூழல் முன்பை விட அமைதி. அம்மா இருந்த இடத்தை விட்டு எழும்பினாள். அவள் முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றோ தொலைந்த மகிழ்ச்சியை அவள் மீண்டும் தேட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் கேடு கெட்ட மனம் தான் துடிக்க ஆரம்பித்திருந்தது.
பர்வையை நாலாபுறமும் சுழற்றிய போது அந்தக் காட்டி பூத்தது. ஆடிக் கொண்டிருந்த தென்னை மரம் தன் ஆட்டத்தை நிறுத்தியது போலவும் அதன் தோளில் இருந்து இறங்கி வந்தது போலவும் படம் எடுத்தால் அப்படித்தான் எடுக்க முடியும். அம்மாவின் மகன் வந்தான். கடைசியாக அவனைக் கண்டதைவிட வேறு விதமாக? என்ன விதமாக என அம்மாவினால் ஊகிக்க முதலே அம்மா மூச்சுத் திணறிப் போவாள்.
"என்ரை ராசா" என்ற படி தான் பாய்ந்தாள். அவனைப் பிடிக்க படாதபாடு பட்டாள். அவன். சிரித்து சிரித்து நழுவினான். நழுவி நழுவிச் சிரித்தான். அந்தச் சடுகுடு விளையாட்டில் அம்மா களைத்துப் போய் நில்லடா" என்றாள்.
அவன் நிற்பது போல போக்குக் காட்டிக் கொண்டு அப்பால் போனான். அம்மா மீண்டும் நில்லடா" காட்டுக் கத்தலான அந்தச் சத்தம் வெடித்து சிதறியது.
9. மணல்வெளி அரங்கு

அதைவிடப் பெரிதாக அவன் சிரித்தான். அந்தச் சிரிப்புக்கு முன்னால் அம்மாவின் கத்தல் வாலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டது.
"அம்மா என்னோடை வா ஒருக்கா"அதுதான் அவன் பேசியது.
"ஏன்" என்று அம்மா முதலில் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் சிரித்தான்.
"வா. பிறகு வந்து எல்லாம் கதைக்கலாம். இப்ப என்னோடை வா"
அம்மாவின் மனத்தில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உருவாகிநான் முந்தி நீ முந்தி என்று அந்தரப்பட்டுக் கொண்டிருந்தன. அம்மா அவற்றினை கஷ்டப்பட்டு அடுக்கி வைத்தாள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று.
"சரி வா"அம்மா பதில் சொல்ல. "சீலையை மாற்றிக் கொண்டு வாங்கோ. ஒரு புனிதமான இடத்துக்கு போக வேணும்"
அம்மா வியப்புடன் மகனைப் பார்த்தாள். நல்ல சேலை கட்டுவது என்பது அம்மாவைப் பொறுத்த வரை புதிரான விடயம் தான். எங்கு தேடுவது நல்ல சேலை.
அவன் பழையபடி சிரித்தான். கையை நீட்டி.
"இதை உடுங்கோ" என்ற அவன் கையில் புதுச்சேலை, ஒரு காலத்தில் அம்மா விருப்பமாக உடுத்த நிறத்தில் டிசைனில்.
அவன் முன்னால் நடக்க அம்மா பின்னால் அவன் நடக்கிறானா ஓடுகிறானா தெரியவில்லை.
"மெதுவாகப் போடா எனக்குக் களைக்குது"
அவன் பதில் சொல்லாமல் சிரித்தான். அவன் வேகம் குறையவில்லை. ஆனால் அம்மாவுக்கு அதன் பின் இப்போது நடப்பது போலத் தெரியவில்லை. களைப்புத் தெரியவில்லை.
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 91

Page 48
அவன் நடக்கும் பாதை கூட வழக்கமானதாக இருக்கவில்லை. புதிய பாதை-புதிய இடம்.
இருளில் கூட அவன் முகம் மட்டுமல்ல உடல் கூட பளபளத்தது. இவ்வளவு பளபளப்பு உடையவனாக எப்போது மாறினான் என்று அம்மாவுக்குப் புரியவில்லை.
இடிந்த கட்டிடங்கள் கூரைபடுத்த இடங்கள் சுருட்டி உருட்டி விடப்பட்ட முள்ளுக் கம்பிகள் அடங்கிய இடம் ஒன்று வந்தது. "இதெல்லாம் நாங்கள் சண்டை பிடிச்ச இடம். இந்தா இது ஒரு ஆமிக்காரரின் டை சப்பாத்து" என்றபடி அதனைக் காலால் உதைத்தான்.
அம்மாவுக்கு பகிர் என்றது. "ஏன்டா அவன்களும் மனிசர் தானே" என்றாள் குரல் பிசிற.
"ஒமோம் நாங்கள் எங்களை எங்கடை இடத்தில ஆக்கிரமிக்க வாறவனைத் தான் எதிர்க்கிறம்"
அம்மா ஆக்கிரமிப்பால் அழிந்து கிடந்த இடங்களைப் பார்த்தாள். அப்பால் காட்சி மாறியது.
இடிந்த கட்டிடங்களின் மத்தியில் புதிதாக குடிசைகள் முளைத்திருந்தன. நல்ல கூரை பறிபோன கட்டிடங்களின் ஒலைக் கூரைகள் முளைத்திருந்தன. "இஞ்சை பாருங்கோ அம்மா. ஆக்கிரமிப்பு விரட்டப்பட்ட இடங்களில் எங்கடை சனம் மீளக்குடி வந்திட்டுது" என்று சொன்ன அவன் குரலில் சந்தோஷம் தெரிந்தது.
வயல் வெளிகளில் வயல் வேலைகள் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
அந்த மாற்றங்களை அம்மா புரிந்து கொண்டாள். காற்றினை ஆழமாக சுவாசித்தாள். புதிய உற்சாகம் பிறந்தது.
"கெதியாய் நடவுங்கோ அம்மா" என்ற அவன் மேலும் வேகமானான்.
மணல்வெளி அரங்கு

அம்மாவில் வேகம் பிறந்தது. மகனோடு இணையமுனைந்து அவன் கைகளைப் பிடித்தால் என்ன என்று நினைத்து நெருங்க அவன் விலகினான்.
சட்டென்று இடம் மாறியது. ஏராளமான மனிதர்கள் கொண்டதாக அந்த இடம் எழுந்தது. அவர்கள் மத்தியில் ஒழுங்காக ஒரே சீரான வரிசையில் சுடர் ஒளிகள். அம்மா பிரமிப்பில் ஆழ்ந்தாள். மகன் அம்மாவின் கைகளில் எதையோ திணித்தான். உணர்திறனால் அம்மா அதனை மலர்கள் என உணர்ந்து கொண்டாள்.
பிறகு அவன் காணாமல் போனான். மின்னற்பொழுதுக்கு இடையில் அவன் மாயமானான். அம்மாவின் கண்கள் இருண்டன. கண்ணீர் மிக நீண்ட காலத்தின் பின்னர் இப்போது தான் எட்டிப் பார்த்தது.
ஓவென அவள் அழ ஆரம்பித்தாள். அக்கம் பக்கம் நின்றவர்கள் அவளை அழைத்துச் சென்று அவளின் மகனின் நடுகல் முன்னால் விட்டார்கள்.
அம்மா மகனின் அந்த நடுகல்லில் பூக்களை சொரிந்தாள். கண்களை துடைத்தாள். விளக்கேற்றினாள்.
(ஈழநாதம், 25-11-2000)
இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் 卿3

Page 49
திருச்செந்திநாதன் கதைகட்கு மேல் எ அவரி எழுதிக்குவி படைப்பாளி அல்ல செய்கிறது. அவரது றும் கவனமாகச் செ. அவதானிக்கும் போ வாசகரைத் தெளிவ வேண்டும் எனக் கரு நடுவே அவரை அமர்
கதாசிரியரின் அரசி நோக்குடனோ மு வேண்டிய தேவை ( கதைகள் அவர் வாழு நேர்மையாக அடையா
அறிய முடிகிறது.

ஆண்டுக்கு மூன்று ழுதவில்லை என்பது விக்கிற வகையான என்பதை உறுதி கதைகள் ஒவ்வொன்துக்கப்பட்டிருப்பதை து தான் சொல்வது பாகச் சென்றடைய துகிற படைப்பாளிகள் த்துகிறது.
பியலுடனோ உலக ற்றாக உடன் பட இல்லாமலே அவரது
நம் சமூகச் சூழலை ளப்படுத்துவதை நாம்
சி. சிவசேகரம்