கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உண்மைகளின் மௌன ஊர்வலங்கள்

Page 1
-- - -
.. . . . . . . . . . . . .
...
-15-18 3
- - - -
----
် . . . . .် ဎွိ ဎွိ်န္တိမ္ပိ
----
ܡ°- ”- -- -- .
 

: 2-3-2 *୍ 3. -- - - - - - - - - - &: ဗွို
= "
மகளின்
頓。
* 2 მ . . . . . . . . . « . ... . ySySySySyyyySyySyyryrrrruSuSuSuSuS ဒွိ ဒွိ့် : ::::::::::::::::::::::: ::::::
3. --- ိ :::::::::::::::
ug:

Page 2

உண்மைகளின் மெளன ஊர்வலங்கள்
க.நவம்
சர்வதேச அரசியல் கட்டுரைகள்

Page 3
UNMAKAN M()UNİA () () VALANCSAL (COLLECTION OF ARTICLES ON INTERNATIONAL POLITICS)
BY
K.NAVAM
KANDIAH NAVARATNAM
B.A.(HONS); M.Sc.(AGRIC. ECONOMICS) THENYAHAM
POLKANDY
VALVETTITURA
SRILANKA
FIRST EDITION
APRIL 1991
LAYOUT
GEORGE
COVER DESIGN
MOORTHY
COPYRIGHT
SHIYAMALA NAVARATNAMI
PRICE
CDN S3
PUBLISHERS
MOMENTUM PUBLICATIONS P.O.BOX 2031 STATION 'C', DOWNSVIEW ONTARIO, M3N2S8
CANADA

அன்னை இல்லாக் குறைதீர்க்கும் தங்கையர் முவர்க்கும் தந்தையின் இடம் நிரப்பும் அண்ணுமார் இருவர்க்கும்
FLD TIL 1 LI GOOTLDTé95
இது

Page 4

என்னுரை
Tெண்ணித் துணிந்த கருமங்கள் கூட, சிலவேளைகளில் எளிதில் நிறைவேருது போய்விடுகின்றன.
எண்ணுமல் - துணியாமல், தற்செயலாக நிகழ்ந்து போகும் எத்தனையோ காரியங்கள் எதிர்பாராத வெற்றிகளைத் தேடித்தந்துவிடுதுமுண்டு.
தாயகம் வாரப்பத்திரிகைக்கென இக்கட்டுரைத் தொடரை நான் எழுதச்சம்மதித்தமையும் அவ்வாருன ஒரு தற்செயலான சம்பவமே.
இக்கட்டுரைகளை எழுத ஆரம்பித்தபோது இவை ஒரு நூல்வடிவம் பெறும் என நான் எண்ணியிருந்ததில்லை.
தொடர்ந்து ஆறுமாதகாலமாக வாராவாரம் இக்கட்டுரைகளைப் படித்த வாசகர்கள் காட்டிய வரவேற்பும் உற்சாகமும்தான் இந்நூலாக்கத்துக்குக் காலாய் அமைந்த உந்து சக்தி எனலாம்.
1990 ஆகஸ்ட் 31 முதல் 1991 பெப்ரவரி 15 வரையிலான ஆறுமாதகால சர்வதேச அரசியல் நிலைமைகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூல், வரலாற்றின் ஒரு சாசனமாக எக்காலமும் பயன்தரும் என எதிர்பார்க்கிறேன். இன்றைய செய்திகள் தானே நாளைய வரலாறு
உணர்மையைச் சொல்லுவதாயின் ஒரு நூலை வெளியிடுவதற்கான வல்லமை என்னிடம் இம்மியளவும் இல்லை. எனது "பொரிமாத் தோணர் டித்தனம்" நிதர்சனமாவதற்குப் பலரது உழைப்பும் ஒத்தாசையும் பக்கபலமாக இருந்துள்ளதை இந்நூலிலிருந்து நீங்களே கண்டறிவீர்கள். இன்னும் தோன்ருத் துணையாக இருந்து உதவியவர்கள் எத்தனைபேர்!
இவர்கள் எல்லோருக்கும் நன்றிக்கடன் செலுத்த வகை தெரியாது மென்மேலும் நான் கடனளியாகிக் கைகூப்பி நிற்கின்றேன்.
5 6 If க.நவம் 22- 07 -1991

Page 5
பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அம்பலவாணர் சிவராசா அவர்கள்
வழங்கிய
அணிந்துரை
"உண்மைகள் புனிதமானவை; விமர்சனம் சுதந்திரமானது" என்பது எழுத்தாளனுடைய தாரக மந்திரமாகும். "உண்மைகளின் மெளன ஊர்வலங்கள்" என்ற இந்த நூலில் இதன் ஆசிரியர் மேற் சென்ன தத்துவத்தினைப் பின்பற்றி உண்மைகளை எடுத்துச் சொல்லியிருப்பதோடு அவற்றினைச் சுதந்திரமாக விமர்சித்துமுள்ளார்.
சர்வதேச அரசியல் என்ற துறை அல்லது கற்கை நெறியின் வரலாறு குறுகிய தேயாயினும் அது அதிசயிக்கத்தக்க வளர்ச்சியினை இன்று பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு துரித வளர்ச்சியடைந்த இந்தத் துறையினைத் தனது பட்டப் படிப்பின் போது முறையாகக் கற்றுத் தெளிந்தவர் இதன், ஆசிரியரான திரு.க.நவரத்தினம் அவர்கள். அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியலை சிறப்புப் பாடமாக கற்றுவந்த போதும், அதற்கு முன்னரும் ஆக்க இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஆர்வம், திறமை, ஈடுபாடு என்பன காரணமாக பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வந்தவர். ஆக, க.நவம் அவர்களினர் எழுத்தாற்றல் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டதொன்றே. இந்நூலில் அவ்வாற்றல் மேலும் ஒரு படி வளர்ந்துள்ளது அல்லது புடம் போடப்பட்டுள்ளது 6606ynb.
இந்நூலில் மொத்தமாக இருபத்தைந்து கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை ஆகஸ்ட் 1990க்கும் பெப்ரவரி 1991க்குமிடையில் கனடாவில் வெளிவரும் வாரப்பத்திரிகை ஒன்றுக்கு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். இக் கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியரது அறிவு, எழுத்தாற்றல், விமர்சன நோக்கு என்பவற்றை
2

வெளிப்படுத்தி நிற்கின்றன. அவை சாதாரண வாசகனும் புரிந்து கெள்ளத் தக்கவாறு இலகு நடையில் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. அத்தோடு இவரது எழுத்துக்களில் நகைச் சுவையும் இலக்கிய மணமும் வீசுகின்றன உதாரணமாக பாகிஸ்தான் பற்றிய கட்டுரையில் "தென்னுசிய பிராந்தியத்தின் "சட்டாம்பிள்ளை நீயா, நான? என்று பாகிஸ்தானும் இந்தியாவும் குடுமிப் பிடிச் சண்டையில் இறங்கியுள்ள இவ்வேளையில்." என்று எழுதியுள்ள இவர், லைபீரியா பற்றிய இன்னெரு கட்டுரையில் "நாட்டின் கல்விமான்கள், புத்திஜீவிகள் இவருக்குப் பெருத்த தலைவலியாய் இருந்ததால், அவர்களது தலைகளைக் கொய்து மகிழ்ந்தார்" என்றும், பிறிதொரு கட்டுரையில் "பாக்தாத்தின் கசாப்புக் கடைக்காரன் - சதாம் ஹூசெயின், பூகோளப் பொலிஸ்காரன் - ஜோர்ஜ் புஷ்" என்றும் நகைச்சுவை ததும்ப தனது கருத்துக்களை முன் வைக்கிருர்,
சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளிலும் நிலவும் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துக் கூறும் போது அந்நாடுகளினது சுருக்க வரலாற்றையும் ஆசிரியர் இக்கட்டுரைகளில் தெரிவித்திருப்பது பயனுள்ளதாகும். ஆனல் இக் கட்டுரைகளில் ஆசிரியர் பல தகவல்களையும் உணர்மைகளையும் தருவதோடு அமைந்து விடாது அவற்றினை விமர்சித்து தனது ஆணித் தரமான கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். உதாரணமாக "அமெரிக்காவுக்குத் தலையிடித்தால் கனடாவுக்குக் காய்ச்சல் அடிக்கும்" என்ற கட்டுரையில் "அமெரிக்கா பிராந்திய நலனை அடிப்படையாகக் கொணர்டு பஞமாவைத் தாக்கியது போலவே, ஈராக் வளைகுடாவில் குவைத் விடயத்தில் நடந்து கொண்டது. அமெரிக்காவின் நடவடிக்கையைக் கை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்ற கனடா ஈராக்கிய நடவடிக்கையை கண்டித்தது ஏன்?" எனக் கேட்டு "அயல் நாடான அமெரிக்கா எடுக்கும் தீர்மானங்களுக்கெல்லாம் "Je LD 7" போட்டுக்கொண்டிருக்கும் கனடாவிற்கென, தனியான ஒரு வெளிநாட்டுக் கொள்கை உணர்டா?" என்றும் கேட்டு "அமெரிக்காவுடன் தோழமை கெள்ளலாம். ஆனல் கனடாவின் சுதந்திரத்தையும் சுயகெளரவத்தையும் தனித்துவத்தையும் அமெரிக்காவிடம் அடகு வைத்து
3

Page 6
விடுவதைச் சுயசிந்தனை மிக்க கனடியன் ஒருவன் ஒரு போதும் விரும்பமாட்டான். ஆகவே அமெரிக்காவின் தலையிடிக்கும் மருந்து கொடுத்து மாற்றவல் ல வளத்தையும் சுயவல்லமையையும் கனடா பெறவேண்டும்" என்ற தனது கருத்தையும் ஆசிரியர் முன்வைக்கிருர்,
"உண்மைகளின் மெளன ஊர்வலங்கள்" என்ற கட்டுரை சர்வதேச அரசியல் பற்றிய மதிப்பீட்டினைச் செய்வதில் இவ் வாசிரியருக்குள்ள ஞானத் தினை வெளிப்படுத் தியுள்ளது. அக் கட்டுரையில் அவர் "குவெய்த்தைவிட்டு ஈராக் வெளியேற வேண்டுமாயின் கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ள பலஸ்தீனப் பிரதேசங்களை விட்டு இஸ்ரேலும் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை வெகு சாதுரியமாக இந்த நெருக்கடிக்குள் திணித்துக் கெண்ட சதாம், இஸ்ரேலை யுத்தத்தினுள் இழுத்தெடுத்து அமெரிக்க கூட்டணியினை உடைத்தெறிவதற்கு முயன்று வருகிருர்" என்று விமர்சித்ததன் மூலம் தனது சர்வதேச தொடர்புகள் பற்றிய மதிப்பீட்டுத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் "பாரத மக்கள் கண்ட இன்னெரு பகற்கனவு" என்ற கட்டுரையும் "தச்சரிசம் தடம் புரள்கிறது" என்ற கட்டுரையும் ஆசிரியரது எதிர்வு கூறல் திறமையையும் வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் 'சந்திரசேகரின் ஆட்சி நீண்டகாலம் நிலைத்து நிற்காது; மார்கிறட் தச்சரின் அரசியல் ஆக்கிரமிப்பு முடிவடையப் போகிறது' என்ற ஊகிப்புகள் சரியென நிரூபிக்கப்பட்டன.
இவற்றுக்கெல்லாம் மேலாக இந்நூலின் ஆசிரியர் இக் கட்டுரைகளினூடாக எதனை வெளிப் படுத்தியுள்ளார் அல்லது மக்களுக்கு என்ன செய்தியைத் தருகிருர் என்பது முக்கியமாகும். உண்மையில் ஆசிரியர் மானுடத்தின் நன்மையை மனதில் கொண்டு அவர்களின் சார்பாகக் குரல் கொடுக்கிருர். உதாரணமாக "மானுடம் முற்ருக மரணித்துவிட்ட மணி னுக்கு உதாரணம் மொசாம்பிக்" என்றும் “நெல்சன் மன்டேலா இன ஒதுக்கு முறை எதிர்ப்புச் சக்தியின் உயிர்வாழும் சின்னம்; ஆபிரிக்க மண்ணிணி மனச்சாட்சி" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவர் மக்களின் அதிலும் சாதாரண மக்களின் பக்கத்தில் நினர் று அவர்களினர் உரிமைகளுக்காகவும் ,

ஜனநாயகத்துக் காகவும் , வரிடிவுக் காகவும் , அடக்கு முறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கிருர்,
இறுதியாக, "சர்வதேச அரசியல் என்பது இறைமை படைத்த நாடுகளுக்கிடையிலான தொடர்புகள்" என்ற அர்த்தத்திலோ அல்லது கான்ஸ். ஜே. மோகன் தோ அவர்கள் கூறியது போன்று "சர்வதேச அரசியல் என்பது அதிகாரத்துக்கான போராட்டமே" என்ற கருத்தின் படியோ அல்லது "சர்வதேச அரசியல் என்பது சமகால வரலாறு அல்லது உடன் நிகழ்கால சம்பவங்கள் என்ற கருத்துக்களின் படியோ எந்த அடிப்படையில் பார்த்தாலும் இந்நுால் அவற்றினை வெளிக் கொணர்வதில் வெற்றி பெற்றுள்ளது стента, тио.
தொகுப்பு நூலொன்றில் காணப்படும் குறைபாடு பொதுவாக இந்நுாலிலும் காணப்படுகின்றது. அதாவது நூல் முழுவதும் ஏதாவதொரு மையக்கருத்து வற்புறுத்தப் படவில்லை. அத்தோடு சோவியத் யூனியன் தற்போது எதிர் நோக்கும் பிரச்சினைக்கு பரிகாரம் காண இன்ஞெரு யோசப் ஸ்ராலின் தோன்ற வேண்டுமென்பது எல்லோருக்கும் ஏற்புடைய கருத்தாகாது. மேலும் ஒரு சில தலையங்கங்கள் கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களோடு ஒத்துப் போகவில்லை. உதாரணம் ஐக்கிய நாடுகள் அமைப்பு "பூச்சியத்துக்குள்ளிருக்கும் இராச்சியம் தாஞ7" இவற்றினைத் தவிர்த்துப் பார்த்தால் "உண்மைகளின் மெளன ஊர்வலங்கள்" என்ற இந்நூல் சகல தரப்பினருக்கும் பயனுள்ளதொரு நூலாகும். இதனை ஆக்கித் தந்த ஆசிரியரைப் பாராட்டுவதோடு இது போன்ற மேலும் பல பயனுள்ள நூல்களை அவர் ஆக்கித் தர வேணர் டுமெனர் றும் வாழ்த்துகிறேன்.
அம்பலவாணர் சிவராசா அரசறிவியல் துறை பேராதனைப் பல்கலைக் கழகம் இலங்கை 23. 5. 9I

Page 7
உள்ளடக்கம்
பாரசீக வளைகுடா பாகிஸ்தான் . தென்னுபிரிக்கா
லைபீரியா
ass
பிலிப்பைன்ஸ்
ஜேர்மனி . இஸ்ரேல்
லெபனுன்
10.பாகிஸ்தான் 11.ஐ.ஆர்.ஏ.
12.இந்தியா 13.பிரித்தானியா 14.எல்சல்வடோர் 15.போலந்து 16.ஐ.நா. அமைப்பு 17. Leotorr 18.சோவியத் யூனியன் 19. GODTF Taib faš
20.பங்களதேஷ்
2.5 60TfT 22.சோவியத் லித்துவேனியா 23.சீன 24.கம்பூச்சியா 25. வளைகுடா நெருக்கடி
6
13
19
25
31
37
43
48
54
59 65
71
77
83
88
94
99
105
11
16
122
128
33
138
144

பாரசீக வளைகுடா 31.08.1990
முன்ரும் உலக யுத்தம்
மத்திய கிழக்கில் முளுமா?
"குவெய்த் திண் கெளரவம் குலைக் கப்படுகிறது: குவெய்த்தியர் கொடுமைகளுக்கு ஆளாகி, குருதி சிந்தி வீணே மடிந்து போகிறர்கள்: அவர்களுக்கு ஆதரவு காட்டி அபயமளிக்க ற அராபியரே, நீங்கள் ஓடி வரமாட்டீரா?
ஆகஸ்ட் 2, அதிகாலை இரண்டு மணியளவில் ஈராக் தனது அண்டை நாடான குவெய்த்தினுள் அத்துமீறிப் பிரவேசித்துக் கொணர்ட போது குவெய்த் நாட்டு வாஞெலி வாயிலாக விடுக் கப்பட்ட இந்த உருக்கமான வேணர் டு கோள், வாணவெளியெங்கும் ஈனசுரமாகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. எட்டு வருடங்களாக ஈரானுடன் நடாத்திய போரின் பொது பக்கபலமாக நின்று உதவி வந்த சகோதர நாட்டினை ஒன்பது மணி நேரத்தில் ஈராக் தன் வசமாக்கி கொண்ட போது, சிரியா தவிர்ந்த ஏனைய அரபு நாடுகள் அனைத்தும் குவெய்த்தின் அந்த வேண்டுகோளுக்கு உடனடியாகச் செவிசாய்க்க முன் வரத்தயங்கியவாறு மெளனமாய் இருந்தன. உலக நாடுகள் இந்த ஆக்கிரமிப்பையிட்டு அதிர்ச்சி அடைந்தன. "அப்பட்டமான ஆக்கிரமிப்பு" என அமெரிக்கா ஆர்ப்பரித்தது. ஈராக்கின் நீண்ட

Page 8
பாரசீக வளைகுடா 31.08.1990
கால நட்பு நாடாகிய சோவியத் யூனியன் உட்பட சீன, ஜப்பான், ஈரான் ஆகிய நாடுகளுடன் அனைத்து மேற்கு நாடுகளும் ஒருமுகமாக இந்த அடாவடித் தனத்தை ஆட்சேபித்தன. ஐ.நா. அமைப்பு ஈராக்கின் இந்த ஊடுருவலை வன்மையாகக் கண்டித்தது மட்டுமன்றி ஈராக்குக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளையும் விதித்துக் கொண்டது.
ஆரம்பத்தில் பொருளாதாரத் தடைகள் மூலமாகவே குவெய்த்திலிருந்து வெளியேறும்படி ஈராக்கை நிர்ப்பந்திக்க வேண்டுமென எண்ணியிருந்த அமெரிக்க ஜனதிபதி ஜோர்ஜ் புஷ், தனது இன்னுெரு நெருங்கிய சகபாடியான சவுதி அரேபியாவுக்கும் இதே போன்று ஈராக்கினுல் கெடுதி ஏற்படுமாயின் அதனுல் தனது பொருளாதார நலன்களுக்கு விளையக் கூடிய பேராபத்துக்களை மனதில் கொண்டு சவுதி மன்னரின் அழைப்பைச் சாட்டாக வைத்து, தன் துருப்புகளை சவுதி எல்லைக்குக் காவலாக அனுப்பி வைத்தார். சவுதியின் எண்ணெய் வளத்தில் பெருமளவு தங்கியுள்ள பிரித்தானியாவும் அமெரிக்காவின் வழியைப் பின்பற்றிச் சென்றது. ஏனைய நேட்டோ அணி நாடுகளும் அவ்வழியே சென்றன. தமது பிராந்தியத்தில் மேற்கு நாட்டுப் படைகள் பிரவேசிப்பதை விரும்பாத அரபு லீக்கின் 21 அங்கத்துவ நாடுகளும் எகிப்திய ஜஞதிபதி ஹஸ்னி முபாரக்கின் அழைப்பை ஏற்று, அவசர அவசரமாக கெய்ரோவில் கூடின. ஈராக் நிகழ்த்திய ஊடுருவலைக் கண்டித்ததுடன் குவெய்த்தின் இறைமைக்கு மதிப்பளித்து அந்த நாட்டை விட்டு ஈராக் வெளியேற வேண்டும் என்றும், சவுதி அரேபியாவின் பாதுகாப்புக் கருதி, பல் தேசியப்படை ஒன்றினை அப்பிராந்தியத்துக்கு அனுப்புவது என்றும் தீர்மானம் எடுத்தன. விளைவாக "பாக்தாத்தின் கசாப்புக்கடைக்காரன்" என மேற்கு நாடுகளால் இழித்துரைக்கப்படும் ஈராக்கிய ஜனதிபதி சதாம் ஹுசைனின் படைகள் ஒருபுறமும், பூகோளப் பொலிஸ்காரன்" என நாமகரணம் பெற்ற அமெரிக்காவின் தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற மேற்கு நாடுகளுடன் எகிப்து, சவுதி அரேபியா போன்ற சில அரபு லீக் நாடுகளும் தமது படைகளுடன் மறுபுறமும் போர்க்கொடி தூக்கி நிற்கும் இவ்வேளையில் முழு உலகமும் அடுத்த கணம் அங்கு என்ன நடக்குமோ என்ற பீதியுடன் நிகழ்வுகளை அவதானித்தபடி உள்ளது.
குவெய்த் மீதான தனது ஆக்கிரமிப்புக்கு ஈராக் பல காரணங்களை உலகின் பார்வைக்கு முன்வைத்துள்ளது. எண்ணெய் உற்பத்தி நாடுகளால் (ஒப்பேக்) அங்கீகரிக்கப்பட்ட கோட்டாவுக்கு மேலாகக் குவெய்த் எணர்ணெயை உற்பத்தி செய்தமை முதலாவது குற்றச்சாட்டாகும். இதனுல் உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் ஈராக்கிற்கு சுமார் 16 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளினதும் எல்லைப் பிரதேசத்திலிருந்து 2.8 பில்லியன் பெறுமதியான எண்ணெயைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் குவெய்த் களவாடியுள்ளது என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. ஈரானுடனுன யுத்தத்தின் போது
8

பாரசீக வளைகுடா 31.08.1990
குவெய்த் ஈராக்குக்கு வழங்கியிருந்த சுமார் 15 பில்லியன் டொலர் வரையிலான கடனை இரத்துச் செய்யும்படி ஈராக் விடுத்த கோரிக்கையை குவெய்த் நிராகரித்தமையும் குவெய்த் மீதான ஈராக்கின் அதிருப்திக்கு இன்னுெரு காரணமாகும். மேல் நாட்டு சுகபோகங்களுக்காக குவெய்த்திய ஆளும் வர்க்கம் இஸ்லாமிய மதத்தையும், கலை, கலாசாரங்களையும் மேற்குலகுக்குச் சிறுகச் சிறுக அடகு வைத்துக் கொணடிருப்பதாக பிறிதொரு குற்றச்சாட்டு. மேலும் முன்ஞெரு காலத்தில் ஈராக்கின் ஒரு பகுதியாக குவெய்த் இருந்து வந்துள்ளது என்ற சரித்திர ரீதியான காரணங்களையும் முன்வைத்தே ஈராக் தனது செயலை நியாயப்படுத்துகின்றது. ஆயினும் ஈராக்கின் எதிரிகளும் விமர்சகர்களும் கூறும் காரணங்களோ இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை ஆகும். ஈரானுடன் புரிந்த யுத்தத்தினுல் ஏற்பட்ட சுமார் 90 பில்லியன் க்டண் அடைக்க வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே எரிபொருள் வளம் மிக்க குவெய்த்தை ஈராக் தனதாக்கிக் கொண்டது என்பது அவர்களது வாதம். தொடர்ந்து அடுத்த செல்வந்த நாடான சவுதியையும் கைப்பற்றிக் கொண்டால் உலக எணர்ணெய் வளத்தின் 20 சதவீதமும் ஒப்பெக் நாடுகளின் ாணர்னெய் வளத்தின் 60 சதவீதமும் தனதாகி உலகின் மிகப்பெரிய செல்வந்த நாடாகி விடலாம் என்பதும், இந்த நாடுகளுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பாரிய கடன் தொகைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் சதாமின் எண்ணமாகும். அத்துடன் மத்திய கிழக்கில் மிகக் கூடிய ஆயுத பலம் கொண்ட ஈராக் இவ்வாருக அணிடை அயல்நாடுகளைத் தனதாக்கிக் கொள்வதால், ஒரு பிராந்திய வல்லரசாகி விடலாம் என்றும் கருதுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. எகிப்தின் முன்னுள் ஜனதிபதி அப்துல் நாசர் 56-70 காலப்பகுதியில் எவ்வாறு வசீகரத்துவம் மிக்க ஒரு தலைவனுக அரபு நாடுகள் மத்தியில் விளங்கிஞரோ அவ்வாருன ஒரு தலைமைத்துவத்தை இலக்காகக் கொண்டே சதாமும் இயங்கி வருகின் ருர் என்றும், மத்திய கிழக்கு நாடுகளுக்கெல்லாம் சவாலாக அங்கு வாழ்ந்து வரும் "குட்டிச் சண்டியன் இஸ்ரேலுக்குப் பாடம் புகட்ட வல்ல சக்தி தனக்கு மட்டுமே உண்டு என அவர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
குவெய்த்தை ஈராக் கைப்பற்றியதால் உலக அரங்கில் சில குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நீண்ட காலமாக சோவியத் யூனியனின் நட்பு நாடாகவும், ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் நாடாகவும் ஈராக் இருந்து வந்துள்ள போதிலும் குவெய்த் மீதான ஆக்கிரமிப்பினை சோவியத் யூனியன் அமெரிக்காவுடன் சேர்ந்து ஆட்சேபித்துள்ளது மட்டுமன்றி தனது ஆயுத ஏற்றுமதியையும் தடை செய்துள்ளது. ஈராக் தனது விரோதியான ஈரானை நோக்கி "அன்புச் சகோதரனே" என நேசக் கரம் நீட்டி அழைத்துச் சமாதானம் செய்து கொண்டு, பரஸ்பரம் யுத்தக் கைதிகளை விடுதலை செய்து பரிமாறிக் கொண்டுள்ளமை ஈரான்ஈராக் நெருக்கடியைப் பெரிதும் தளர்த்தியுள்ளது. இது போன்ற

Page 9
|பாரசீக வளைகுடா 31.08.1990
நடவடிக்கையால் தனது படைகளை ஈரானிய எல்லையிலிருந்து அகற்றி, மேற்கு நாடுகளின் போர் முகங்களை நோக்கி நகர்த்த என சதாம் திட்டமிட்டிருக்கலாம். எட்டு வருட யுத்தத்தினுல் நொந்து போயிருக்கும் ஈரானுக்கும் இது ஆறுதல் தரும் திருப்பம் என்பதுடன் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்பதால் மகிழ்ச்சி தரும் நகர்வாகவும் உள்ளது. மேலும் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தப் பதட்டத்தினுல் ஆசிய நாட்டவர்கள் வேலை இழந்து, அகதிகளாகி வீடு திரும்புகின்றனர். இதனுல் அந்நாடுகள் பல தமது வருமானங்களை இழந்துள்ளன. எண்ணெய் விலை உலகச் சந்தையில் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட சகல நாடுகளிலும் யுத்த செலவினங்கள் அதிகரித்துள்ளன. இதனுல் செல்வந்த நாடுகளுடன் குறிப்பாக வறிய நாடுகளும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.
வளைகுடா நெருக்கடியில் அமெரிக்கா தன்னைத் தொடர்புபடுத்திக் கொண்டுள்ளமை பற்றி அங்கு பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் அடிபடுகின்றன. ஈராக் குவெய்த்தை ஆக்கிரமிக்க ஆயத்தம் செய்து வந்த தகவலை சி.ஐ.ஏ முன்கூட்டியே ஜஞதிபதி புஷ்ஷ"க்குத் தெரியப்படுத்திய போதிலும் அவர் அசிரத்தையாக நடந்து கொண்டதாலேயே நிலைமை பாரதூரமாகியுள்ளது என்ற கருத்து அங்கு நிலவுகின்றது. வியட்னுமிய யுத்த தோல்விகளின் துன்ப நினைவுகளில் இருந்து இன்னமும் விடுபட முடியாமல் தவிக்கும் அமெரிக்க மக்கள், ஈராக்கை ஒரு கிரெனடாவாகவோ அல்லது லிபியாவாகவோ அல்லது பளுமாவாகவோ அலட்சியம் செய்து விடத் தயாராக இல்லை. யுத்த அனுபவம் மிக்க பத்தரை லட்ச ஈராக்கிய துருப்புகளையும், ரஷ்யா, சீனு, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து கொள்வனவு செய்து வைத்துக் கொண்டுள்ள ஏவுகணைகளையும், இரசாயன ஆயுதங்களையும், மேலாக '90களின் நவீன ஹிட்லர் என மேற்கு நாட்டவரால் சித்தரிக்கப்பட்ட சதாமின் குரூரமான ஆக்கிரமிப்பு வெறியையும் அமெரிக்க மக்களால் வெறுமனே உதாசீனம் செய்து விடமுடியாதுள்ளது. அதே வேளை அமெரிக்க அரசியல்,பொருளாதார நலன்களுக்கு அச்சானியாக விளங்கும் அரபு நாடுகளை ஓர் எதேச்சாதிகாரியின் கரங்களில் பறிகொடுத்து விடவோ "ஜனநாயகத்தின் பாதுகாவலன்' என்ற பதவியிலிருந்து விலகிக் கொள்ளவோ தனது வளர்ப்புப் பிள்ளையான இஸ்ரேலின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதைப் பார்த்தும் பராமுகமாக இருக்கவோ அமெரிக்காவினுல் முடியாதுள்ளது. வியட்னுமில் தன்னந்தனியே போய் மூக்குடைபட்டது போலன்றி இம்முறை ஏனைய மேற்கு நாடுகளின் பக்க பலத்துடன் போருக்குப் புறப்பட்டமையும் வியட்ஞமுக்கு ஊட்டமளித்த வல்லரசு உதவிகள் ஈராக்குக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையும் அமெரிக்காவுக்குத் தைரியம் தருகிறது.
"ஒப்பரேஷன் டெசேர்ட் ஷீல்டு" என்ற பதாகையுடன் அமெரிக்கத் துருப்புக்கள் வந்திறங்கியதால் ஆத்திரமடைந்த சதாம்,
1O

(பாரசீக வளைகுடா 31.08. 199d
அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தனது 'புனித யுத்தத்தால்" ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகளையிட்டு கடுமையாக எச்சரித்துள்ளார். ஈரானையும் தனது நாட்டு சிறுபான்மையினரான கேர்டிஷ் மக்களையும் அடக்க என இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய சதாம், மேற்கு நாடுகளுக்கு எதிராக அவற்றை பாவிக்க மாட்டார் எனக் கூற முடியாது. இரசாயன ஆயுதத் தாக்குதல்களை எதிர்கொள்ள என கவச ஆடைகளுடன் மேற்கு அணியினர் சென்றுள்ள போதிலும், பாலைவன வெப்பத்தில் எவ்வளவு காலம் இந்த நச்சுவாயு யுத்த முறைகளுக்கு இவர்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்பது சந்தேகமே. அவ்வாறன நிலைமையைத் தடுப்பதற்கென மேற்கு அணியினர் தமது நவீன விஞ்ஞான, தொழில்நுட்பப் போர்முறைகளைக் கையாண்டு, ஆகாயமார்க்கமாகவும் "ரேடார் கருவிகளுக்குத் தென்படாத "ஸ்ரெல்த்" ரக விமானங்களைப் பயன்படுத்தியும் மிகக் குறுகிய காலத்தில் எதிரியை அழித்து விட முற்படுவர் என எதிர்பார்க்கலாம். ஆயினும் இவ்வாருன தாக்குதல்களைத் தடுக்க எனப் பல கேந்திர ஸ்தானங்களில் ஜெனிவா ஒப்பந்தங்களுக்கு முரளுகப் பல மேற்கு நாட்டவரை மனித கேடயங்களாக ஈராக் வைத்துள்ளமை இந்நாட்டவர்க்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவின் அண்மைக்கால ஜனதிபதிகளின் வரலாற்றுப் போக்கினை தீர்மானித்து வந்துள்ள முக்கிய காரணிகளுள் பணயக் கைதிகள் விவகாரமும் ஒன்று. 1979 இல் ஈரானில் இருந்து பணயக் கைதிகளை மீட்டெடுக்க முயன்ற ஜனதிபதி ஜிம்மி காட்டர், தன் கையாலேயே பாலைவனச் சுடுமணலை அள்ளித் தன் தலையில் இட்டு தனது அரசியல் எதிர்காலத்தை இழந்திருந்தார். ஜோர்ஜ் புஷ்ஷும் இம்முறை பல்லாயிரம் பணயக்கைதிகளின் உயிர்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் அவரது அரசியல் எதிர்காலத்தையும் சில வேளை இது நிர்ணயிக்கக் கூடும்
முதலாம் உலக யுத்தத்துக்கும் இரணர் டாம் உலக யுத்தத்துக்கும் ஆகஸ்ட் மாதத்தில் தான் அத்திவாரம் இடப்பட்டது. ர்றும் ஆகஸ்டில் கன்னிக்கால் நாட்டப்பட்டுள்ள இந்த வளைகுடா நெருக்கடி, முன்ரும் உலக யுத்தத்துக்கு எம்மை இட்டுச் செல்லுமா என்பது பலத்த கேள்வி. வல்லரசுகளுக்கிடையேயான யுத்தமாக வடிவெடுக்க வாய்ப்பில்லை என்பது நிம்மதி தருகின்ற செய்தி. ஆஞலும் அமெரிக்காவுக்கும் சியோனிசத்துக்கும் எதிராக சகல அரபு நாடுகளும் ஒன்று சேர்ந்து அணிதிரளுமேயாயின் மூன்ரும் உலக யுத்தம் பற்றி அச்சம் அடைய வாய்ப்புண்டு. தற்போது உள்ள நிலையில் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளை எதிர்க்கவும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிக்கவும் திராணியுள்ள ஒரேயொரு தலைவர் சதாம் ஹுசைன் தான் என்று பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசீர் அரபாத் நம்புகிறர். அமெரிக்கா, சவுதி அரேபியா, குவெய்த் ஆகிய நாடுகளின் நண்பரான ஜோர்தான் மன்னர் ஹாசைனுக்கும் சதாம் மீது ஒருவித பற்றுதல் உண்டென்றே கூற வேண்டும். அவரது விருப்புகளுக்கு அணிமைக்காலங்களில்
11

Page 10
பாரசீக வளைகுடா 31.08. 1990
அமெரிக்கா பெருமளவில் செவிசாய்க்காத அதிருப்தியும் ஈராக்குடஞன 95 சதவீத இறக்குமதி வர்த்தகத் தொடர்பும் ஜோர்தான் மன்னரைத் தவிர்க்க முடியாதவாறு ஈராக் ஆதரவாளராய் இருக்கவே நிர்ப்பந்திக்கும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்காவை எதிர்ப்பவர் எவரோ அவர் லிபியாவின் நண்பராகி விடுவார் என்பது புதிய சங்கதி அல்ல. இந்த பலஸ்தீனிய, ஜோர்தானிய, லிபிய மக்கள் மத்தியில் சதாம் ஓர் இலட்சிய வீரஞகவே இலங்குகின் ருர், அல்ஜீரியா, யேமன், சூடான், மொரித்தானியா போன்ற நாடுகளும் சதாமை எதிர்க்க விரும்பவில்லை. இவை தவிர்ந்த ஏனைய அரபு லீக் நாடுகள் மட்டுமே அவரைக் கண்டிக்கின்றன. ஆகவே அரபு நாடுகள் இவ்விடயத்தில் பாதிபாதியாகப் பிரிந்து, ஒரு பாதி ஈராக்குக்கும், மறுபாதி மேற்கு நாடுகளுக்கும் ஆதரவாக நிற்கும் வரை, முழு அளவிலான உலகயுத்தம் ஒன்று மத்திய கிழக்கில் ஏற்படுவதற்குச் சாத்தியங்கள் இல்லை என நிம்மதி அடையலாம். தவிர மேற்கு நாடுகளுடன் கைகோர்த்து நிற்கும் எகிப்து, மொரோக்கோ, சவுதி அரேபியா, சிரியா ஆகியன உட்பட சகல அரபு நாடுகளிலும் சதாம் ஒரு அரசியல் கவர்ச்சி மிக்க தலைவனுக வளர்ச்சி பெறுவாராயின் அமெரிக்க, இஸ்ரேலிய அதிருப்தி அங்கு மேலும் வளர்ந்து, அந்நாடுகளில் இப்போது ஆட்சியில் உள்ள தலைவர்கள் அந்நாட்டு மக்களால் அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்படும் நிலை ஏற்படுமாயின், ஈராக் மீது ஐக்கிய நாடுகள் அமைப்பு விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவளித்த போதிலும் அமெரிக்க தாக்குதலையும் வளைகுடாவில் அமெரிக்கர் வருகையையும் மனதார அங்கீகரிக்கத் தயங்கும் சோவியத் யூனியன், சீனு போன்ற நாட்டினர் இடையில் மனம் மாறி ஈராக்குக்கு மறைமுகமாகவேனும் கைகொடுத்து உதவ முன்வருவார்களேயாயின் மத்திய கிழக்கில் முன்ரும் உலக யுத்தம் பற்றி அச்சம் அடைய நியாயம் உண்டு.
கிழக்கு ஐரோப்பாவில் அண்மைக்காலங்களில் இடம் பெற்றுவரும் அரசியல் மாற்றங்களால் வார்சோ அணி தனது வலுவை இழந்து போய் விட்டது. உலக அரசியல் அரங்கில் வெளிப்படையாகக் கண்டுணரக்கூடிய பல பாதிப்புகளை இது ஏற்படுத்தி விட்டது. சர்வதேச அதிகாரச் சமநிலை தளம்பி, ஈற்றில் ஒருபக்கமாகச் சாய்ந்து கொண்டுள்ளது. "தம்பிசற்றே மெலிவாளுல் அண்ணன் தானடிமை கொள்ளும்” ஆபத்துக்கு உதாரணமாக அண்மைக்காலச் சம்பவங்கள் பல உள. இவ்வாருன கெடுதிகள் ஏற்படாது தடுக்கவும், உலக சமாதானம் பேணப்படவும் இன்னுெரு அதிகாரச் சமநிலையின் ஜனனம் அவசியமானதாகும். கழுகும் ஒநாயும் ஒன்றையொன்று சீறிச் சினந்தவாறு உள்ள இந்தச் சமர்க்களத்திலோ அல்லது இதன் பின்னரோ அமெரிக்காவுக்கு இணையான இன்ஞெரு வல்லரசின் அவசியம் பற்றி உலகு சிந்திக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்ப்போமே!
12

பாகிஸ்தான் o7, 09. 199ο
பாகிஸ்தானில் மீண்டும்
ஜனநாயகத்துக்கு சாவுமனி
“கோறி அக்குயினேவாக வந்திருந்தார்; இமெல்டா மார்க்கோஸாகச் சென்று விட்டார்." பாகிஸ்தானின் முன்னுள் பிரதமர் பெனளிர் பூட்டோவின் அரசியல் வாழ்வு பற்றி பத் திரிகையாளர் ஒருவர் அணி மையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அரசியல் என்பது ஆண்களுக்கு மட்டுமேயான ரக போகச் சொத் துரிமை என்ற ஆணர் மேலாதிக்க மளுேபாவத்திற்குச் சவாலாக சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்திரா காந்தி, கோல்டா மெயர், மாகிரட் தச்சர், அக்குயினே கேர்ற வரிசையில் அடுத்து பெனவீர் பூட்டோ இடம் பிடித்துக் கொணர்ட போது, உலக நாடுகள் ஆச்சரியமடைந்தன. அதிலும் முஸ்லிம் உலகோ ஜீரணிக்க முடியாத இந்த வரலாற்று நிகழ்வை வேண்டா வெறுப்புடன் மென்று விழுங்கிக் கொண்டது. பெண்களை வெறுமனே தமது போக தேவைப் பிறவிகள் என்றும் , ஆணினத்துக்குச் சேவகம் செய்ய வந்தவர்கள் என்றும், இன, மத, கலாசார முத்திரைகளைக்கட்டிக் காக்கப் பிறந்தவர்கள் என்றும் கருதுகின்ற ஒரு பழமையும், மதப்பற்றுதலும் கொண்ட முஸ்லிம் நாட்டில் முக்காடுடன் ஒரு பெண்மணி முதலமைச்சர் ஆசனத்தில்
13

Page 11
பாகிஸ்தான் 07.09. 1990
அமர்ந்து கொண்டார் என்ருல் அது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்லவே!பிலிப்பைன்சின் கோரி அக்குயினே போன்று வெற்றி வாகையுடன் உலகின் முதலாவது முஸ்லிம் பெண் பிரதமராக பெனளிர் பதவியேறியபோதே அவரது ஆட்சியின் ஆயுட்காலம் பற்றிய சந்தேகம் தலைதுாக்கத் தவறவில்லை. இருபது மாதங்களின் பின் இன்று என்ன நடந்தது? அபகீர்த்தியுடன் நாட்டை விட்டு வெளியேறிய பிலிப்பைன்சின் முதலாவது பெண்மணி இமெல்டா மார்க்கோஸ் போன்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு பதவி இழந்தார். ஊழல், உறவினர் சலுகை, அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களைக் காட்டி, பாகிஸ்தான் ஜஞதிபதி குலாம் இஷாக் கான் பெனளிரைப் பதவிநீக்கம் செய்து, அவரது பாகிஸ்தானி மக்கள் கட்சி அரசாங்கத்தைக் கலைத்து, அவசரகாலச்சட்டத்தைப் பிரகடனப்படுத்திக் கொண்டதுடன், நீண்ட காலத்தின் பின் பாகிஸ்தானில் உயிர் பெற்றிருந்த ஜனநாயகம் எங்கே, மீண்டும் மரணித்துப் புதைகுழிக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டதோ எனர் று உலகு எண்ணிக்கொண்டது.
1947 இல் இந்தியா பிரித்தானிய ஆட்சியாளரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட போது, பாகிஸ்தானும் ஒரு சுதந்திர நாடாக, இந்தியாவிடம் இருந்து பிரிந்து சென்றது. இந்தியாவின் இருமருங்கும் கிழக்கு-மேற்காகப் பிரிக்கப்பட்டிருந்த அன்றைய பாகிஸ்தான் 1956 இல் ஒரு புதிய அரசியற் சட்டத்தைத் தயாரித்துக் கொண்டு, "பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு" எனத்தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. 1958 இல் இராணுவச் சட்டத்தின் கீழ் ஜெனரல் அயூப்கான் ஜனதிபதியாகி, இராணுவ ஆட்சியை நிறுவியதுடன் அந்த அரசியற் சட்டம் உயிரிழந்து போயிற்று. கிழக்குப் பாகிஸ்தானில் துளிர் விட்டிருந்த சுதந்திர வேட்கையும், மாணவர் எழுச்சியும் ஷேக் முஜிபுர் ரஹற்மானின் தலைமையில் பிரிவினையை வலியுறுத்தும் பாரிய சுதந்திரப் போராட்டமாக வடிவெடுத்தது. 1971 இல் யாஹ்யா கான் பாகிஸ்தானின் தலைமைப் பதவியில் இருந்த போது இந்தியா தலையிட்டு, கிழக்குப் பாகிஸ்தானை வெனர் றெடுத்துக் கொடுத்ததுடனர் அது பங்களாதேஷ் என்ற புதிய தேசமாகப் பிறவி எடுத்துக் கொண்டது. இந்தியாவுக்கு மேற்குப் புறமாக இருந்த நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய பகுதி தான் பின்னர் பாகிஸ்தான் என்ற பெயருடன் வளர்ந்து வரலாயிற்று. இஸ்லாமாபாத் நகரைத் தலைநகராகக் கொண்ட பாகிஸ்தானைச் சூழ இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகியன அயல்நாடுகளாக அமைந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் சோவியத் சார்பு அரசுக்கு எதிராகப் போராடி வரும் இஸ்லாமியக் கிளர்ச்சிக்காரருக்கு ஆதரவை வழங்கி, பாகிஸ்தான் அந்த நாட்டு அரசுடன் பகைமையைத்
14

பாகிஸ்தான் 07.09.1990 | தேடி வைத்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பிரிந்து வந்து தனிநாடாகியதாலும், 1947,65,71ஆம் ஆண்டுகளில் இந்தியாவுடன் நிகழ்த்திய யுத்தங்களினலும், காஷ்மீர் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கு உதவியமையாலும் பாகிஸ்தான் இந்தியாவின் நிரந்தர விரோதியாகி விட்டது. உலகின் மிக அழகிய பிரதேசங்களுள் ஒன்ருன காஷ்மீர் விரைவில் இரு நாடுகளையும் ஓர் அணுஆயுத யுத்தத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்ற பதற்றமான சூழ்நிலையில் தான் பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான இந்த ஆட்சிக் கலைப்பு இடம் பெற்றுள்ளது.
1977 இல் நிகழ்ந்த இராணுவச் சதிப்புரட்சியின் போது பிரதமராக இருந்த சுல்பிகார் அலி பூட்டோவைச் சிறைப் பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றிய ஜெனரல் ஷியா உல் ஹக், இராணுவச் சட்டத்தின் கீழ் ஜஞதிபதியானதுடன், பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி முறை அகற்றப்பட்டது. இரண்டு வருடங்களுக்குப்பின் உலக நாடுகளின் வேண்டுகோளுக்கும் செவிசாய்க்க மறுத்த வழியா, தேர்தல் காலங்களில் இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கொலைக்குற்றங்களுக்காக, பூட்டோவைத் தூக்கில் இட்டார். இதே கல்பிகார் அலி பூட்டோவின் மகள் தான் பெனளிர் பூட்டோ. பல வருடங்களாகச் சிறையிலும் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டிருந்த பெனளிர், 1984 இல் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு இரண்டு வருடங்கள் வாழ்ந்தபின்னர் தந்தையாரது மக்கள் கட்சியைக் கட்டியெழுப்பி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் நாடு திரும்பிஞர். 1988 இல் நிகழ்ந்த விசித்திரமான விமானவிபத்தில் இராணுவ ஆட்சியின் ஜளுதிபதி ஷியா இறந்தார். மூன்று மாதங்களின் பின்னர் இடம் பெற்ற ஜனநாயக ரீதியிலான பொதுத் தேர்தலில் பெனளிர் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி, அதிக ஆசனங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைத்துக் கொணர்டது. ஹவார்ட், ஒக்ஸ் போட் பல்கலைக்கழகங்களின் அரசறிவியல் பட்டதாரியான 36 வயதுடைய பெனளிர், 1988 ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானின் முதலாவது பெண் பிரதமர் ஆளுர், கராச்சியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான ஆஸிப் அலி சர்தாரியை 1987 இல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு வயதுடைய ஓர் ஆண் குழந்தையும் பிரதமராகப் பதவியேற்ற பின் பிறந்த ஆறு மாதப் பெண் குழந்தையும் உண்டு. இராணுவ சர்வாதிகார ஆட்சி முறை மீதான அதிருப்தியும், சுதந்திர ஜனநாயக முறையில் ஏற்பட்ட நாட்டமும், பூட்டோ குடும்பத்தின் மீதான அனுதாபமும், பெனளிர் மேல் கொண்ட நம்பிக்கையும், கவர்ச்சியும் சேர்ந்து தான் பாகிஸ்தான் மக்கள் பெனளிரின் கையில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கக் காரணமாயிருந்தன. இந்தியாவுடன் இருந்து பிரிந்து வந்த நாள் முதலாக இந்த நாடு அயூப்கான், யஹ்யா கான், ஷியா உல் ஹக்
15

Page 12
பாகிஸ்தான் o7. oe. 1990 | ஆகிய இராணுவ தளபதிகளின் தலைமையிலான ஆட்சிக்குள் சுமார் 25 வருடங்களைக் கழித்து விட்டது. இதஞல் மீண்டும் உண்மை ஜனநாயகத்தை அமுல் படுத் தி, நாட் டை ஆள்வதில் பொதுமக்களினர் உரிமைகளையும் கடமைகளையும் உறுதிப்படுத்துவேன் என்றும், மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப் பேணி என்றும் , மாகாணங்களுக் கிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன் என்றும் தனது கொள்கைகளை முன்வைத்தே பெனளிர் மக்கள் ஆதரவைப் பெற்ருர். இவரது தந்தையான அலி பூட்டோ ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு மிக்கவராகவும் சோஷலிஸத்தின்பால் நாட்டமுடையவராகவும் காணப்பட்டவர். அவரது வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கைகள் இதனை நிருபித்திருந்தன. ஆளுல் அவரது வாரிசான பெனளிரோ தனது தந்தையாரினர் கொள்கைகளில் இருந்து சற்று மாறுபட்டவராக, அமெரிக் காவுடஞன நல்லுறவுகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்திக் கொள்ளப் போவதாகவும், இராணுவ, பாரிய வர்த்தக உடன்படிக்கைகளில் மேற்கு நாடுகளுடன் கை கோர்த்து, ஒருங்கிணைந்து செயற்பட உள்ளதாகவும் மக்களுக்கு எடுத்துக் கூறிஞர். மேலும் தனியார் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள கம்யூனிஸ அரசுக்கு எதிராகப் போராடி வரும் போராளிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறித் தனர் னை கம்யூனிஸ் எதிர்ப்புணர்வுள்ளவராகக் காட்டிஞர். அதே வேளை உள்நாட்டில் பழமை பேணும் பழமைவாதிகளின் ஆதரவைத் திரட்டும் நோக்குடனர் பெனி களதும் , முஸ்லிம்களால் லாத சிறுபான்மையினரதும் உரிமைகள் பாதிக்கப்படாதவாறு, ஏற்கனவே ஷியாவிஞல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த 'இஸ்லாமியமயமாக்கல்" கொள்கைகளைத் தொடர்ந்தும் பின்பற்றப் போவதாக வாக்குறுதி அளித்தே மக்கள் ஆதரவைத் திரட்டி இருந்தார். மிகப் பெரிய பெரும்பான்மையைப் பெறத் தவறிய போதிலும் ஏனைய கட்சிகளை விடக் கூடுதலான ஆசனங்களைப் பெற்று, அதிகாரத்துக்கு வந்தார். இருபது மாதங்களுக்கு முன்னர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து ஆற்றிய சொற்பொழிவின் போது, தனது நாட்டுக்குச் செய்யவெனத் திட்டமிட்டுள்ள சேவைகளை மிகுந்த உற்சாகத்துடன் எடுத்துரைத்தார். "வேலையின்மையையும் பசி, பட்டினியையும், கல்வியறிவின்மையையும் நாட்டை விட்டுத் துரத்துவேன்' என்ருர். "தொழிற் சங்கங்கள், தொடர்புச் சாதனங்கள் மீதான கைவிலங்குகளை உடைப்பேன்" என்ருர். "அரசியற் கைதிகளின் வழக்குகளை மீள விசாரிக்க வழி செய்து, நீதி கிடைக்க உதவுவேன என்ருர், 'பெண்களின் அடிப்படை உரிமைகள் பற்றி அக்கறை செலுத்துவேனர்' எனர் ருர், ஷரியாவின் ஆட்சியில் பழிவாங்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவேன்' என்ருர்,
16

பாகிஸ்தான் O7. O9. 1990
"எமக்குள் உள்ள காயங்களைக் குணமாக்குவோம். சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நட்புறவு என்பவற்றினுல் எமக்கிடையிலான வேற்றுமைகளைக் களைந்தெறிவோம். புதிய பாகிஸ்தானை நோக்கிப் புறப்படுவோம்” எனப் புதிய உத்வேகத்துடன் ஆட்சிக்கு வந்தவர், இவ்வளவு வேகமாக வீழ்ச்சியடைவார் என யார் நம்பியிருந்தார்கள்?
நீண்ட கால இராணுவ ஆட்சி முறையில் ஊறித் திளைத் திருந்த அந்த நாட்டு அரசியலில், திரைமறைவில் இராணுவச் செல்வாக்கும், ஊடுருவலும் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளன. சுவை கண்ட இராணுவ மேலிடங்கள் ஜனநாயக ஆட்சியின் போது மறைமுகமாகப் பல சந்தர்ப்பங்களில் தமது எதிர்ப்புச் சக்தியைப் பிரயோகிக்கத் தவறவில்லை. மேலும் ஜெனரல் ஷியாவுக்கு விசுவாசமான பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையும் பல வழிகளில் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளது. இவற்ருல், மிகுந்த நம்பிக்கையுடன் ஆட்சிக்கு வந்த பெனளிர்,தாம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டார். பாகிஸ்தானில் இதுவரை எந்த அரசாங்கமும் பெற்றிராத அவப்பெயருடன் இவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த நவம்பரில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பின் போது மயிரிை ழயில் தப்பிக் கொண்டார். இவரது கணவன், தாய் ஆகியோர் மீது சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச வாழல் குற்றச்சாட்டுக்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் என்பவற்றுடன், தேர்தலின் போது மக்கள் முன் சமர்ப்பித்த ஒரு வாக்குறுதியைத் தன்னும் நிறைவேற்றத் தவறியதும் பெனளிரின் அரசியல் எதிர்காலத்துக்குக் களங்கத்தைத் தேடிக் கொடுத்து விட்டன. நீதித் துறை, செனட் சபை, மாகாண அரசுகள் என்பவற்றில் தலையிட்டு, இத்துறைகளை இழிவுபடுத்தியதாகவும், இருபது மாத ஆட்சியின் போது ஒரு மசோதாவைக் கூட சமர்ப்பித்து நிறைவேற்றியதாக இல்லை எனவும் குற்றம் சுமத் தப்பட்டுள்ளார். மேலாக, சரிந்து மாகாணத்தில் இனப்பிரச்சனை காரணமாக இடம் பெற்றுவரும் வன்செயல்களை அடக்கத் தவறியமையும் இவரது அரசியல் சாதுரியத்துக்குச் சவாலாக அமைந்து விட்டமை துரதிஷ்டமே. பாகிஸ்தான் மக்கள் கட்சிப் பிரதமரான இவர் (pppp)மீண்டும் தாய்மையுற்றிருப்பதைச் slig-5, distill - Permanently Pregnant Prime minister of Pakistan என்று இவரை நையாண்டி செய்யும் எதிர்த்தரப்பு அரசியல் விமர்சகர்கள், குடும்ப சுகபோகங்களில் கூடுதலான ஈடுபாடும் நாட்டமும் கொணி ட இவரால் எவ்வாறு நாட்டினர் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து அயராது உழைத்தல் சாத்தியமாகுமென்று கேள்வி எழுப்புகின்றனர். பெனளிரின் ஆட்சிமுறையில் காணப்பட்ட குறைபாடுகள் தான் அவரது
17

Page 13
umélsignsor 07.09. 1990
வீழ்ச்சிக்குக் காரணம் என்று அவரது ஆதரவாளர்களே வெளிப்படையாகக் கூறிக் கொணர்ட போதிலும் இது இராணுவத்தின் தூண்டுதலுடன் தனக்கு எதிராகச் செய்யப்பட்ட அரசியற் சதி என பெனளிர் கூறுகின்றர். 1986 இல் இவரோடு சேர்ந்திருந்து செயற்பட்டு வந்து, பின்னர் விலகிய குலாம் முஸ்தபா என்பவரைப் பிரதமர் பதவியில் அமர்த்தி, காபந்து அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு, தனக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதே அதற்கு தக்கதொரு ஆதாரம் எனக் கூறுகின்ருர், ஆயினும் அக்டோர் 24 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்ற நம்பிக்கையுடன் தனது சொந்த நகரான கராச்சிக்குத் திரும்பியுள்ளார்.
பெனளிர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்பது நிச்சயம் இல்லை. அவரது கடந்த கால ஆட்சியின் போது காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்டார் என்பது வெளிப்படை. இவருக்கு எதிராக நீதி விசாரணை மேற்கொள்ளப்படுமாயின், அது அவரை அரசியல் வாழ்வின் அஸ்தமனத்துக்கு இட்டுச் செல்லலாம். அது மட்டுமல்ல,அறிவிக்கப்பட்டது போல அக்டோபர் 24 இல் தேர்தல் ஒன்று நடைபெறுமா என்பதுவும் சந்தேகமே. மத்திய கிழக்கில் இருந்து யுத்த வெடிச்சத்தம் எந்நேரமும் கேட்கலாம் என்ற நிலையில், காஷ்மீர் எல்லையில் ஒரு வேலிச்சண்டை எந்நேரமும் நடக்கலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில், தென்னுசியப் பிராந்தியத்தின் "சட்டாம்பிள்ளை நீயா?நாஞ?என்று பாகிஸ்தானும் இந்தியாவும் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் அவ்வப்போது இடம் பெற்று வரும் வன்செயல்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்- இவை யாவற்றையும் காரணம் காட்டி இராணுவம் மீண்டும் பொறுப்பேற்று, காலவரையறையின்றி ஆட்சியைத் தொடர்ந்தாலும், பாகிஸ்தானைப் பொறுத் தவரை ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தல் ஒன்று நடைபெற்ருலும் பெனளிர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளாமல் தடுக்க இரகசியத் திட்டம் எதுவும் இருக்காது என்றும் நம்புவதற்கில்லை. இதஞல் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற பெனவீரது கனவு நனவாகாமல் போவதற்கான வாய்ப்புக்களே அதிகம். அதே வேளை மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சியைத் தொடர்ந்து நிறுவுவதற்கான வாய்ப்புக்கள் தான் வழக்கம் போல பாகிஸ்தானில் வெறும் கனவாகி விடப் போகின்றதே!
18

|தென்குயிரிக்கா 14.09. 1990
ஒற்றுமையீனம்
விடுதலையைப் பின்தள்ளிவிடும்
"is என்ன இனத்தவன்? கொலை வெறி முகங்களில் கரிதணலாகக் கொப்பளிக்க, கைகளில் கோடரி, வாள், கத்தி, ஈட்டி, உலோகக் குழாய்கள் சகிதம் அவனைச் சுற்றி வளைத்த சோஸா இனக் கறுப்பர்களுள் ஒருவன் அதட்டினன். "சோஸா” என அவன் மரணபயத்துடன் பதிலளித்தபோது, குரலில் நடுக்கத்தைக் கண்டு கொண்டார்களோ என்னவோ ஆயுதங்களை நீட்டிப் பிடித்தபடி கிட்ட நெருங்கினர். “சோஸா மொழியில் முழங்கைக்குரிய சொல் என்ன? சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள இன் ஞெருவன் உறுமிஞன். இருமொழிகளிலும் இதற்குரிய சொல் ஒன்ருகவே இருந்து விட, ஆண்டவனையும், மொழிகளை வகுத்த முதாதையர்களையும் கெஞ்சி மன்ரு டி வேண்டிக் கொண்டு, தனக்குத் தெரிந்த சூலு மொழிச்சொல்லை அந்த அப்பாவி சொல்லி வாய் முட முன்னர், குற்றுயிராய் நிலத்தில் கிடந்து துடித்தான். கொடிய பிராணி ஒன்று கொல்லப்படுவது போல அடித்து, குத்தி, குதறப்பட்டு ஈற்றில் பெரிய பாருங்கல் ஒன்றினல் மணி டையோடு நொருங்க
19

Page 14
தென்பிைரிக்கா 14. oe. 1990
மரணத்தைத் தழுவிக் கொண்டான், அந்த சூலு இனத்தைச் சேர்ந்த கறுப்பு மனிதன்.
தென் ஞ பரிரிக் காவில் ஜொகனர் ன ஸ் பேர்க் கிற்கு தென்கிழக்காக உள்ள நேட்டால் மாநிலத்தில் கறுப்பினத்தவர் வாழும் நகரங்களில் இது போன்ற ஏராளமான கோரக் கொலைகள் தொடர்ந்து தினமும் நடக்கினர் றன. சூலுT, சோ ஸா இனத்தவர்களுக்கிடையே இருபது மாதங்களாக நடைபெற்று வரும் இந்த வன்செயல்களால் சுமார் 3000 கறுப்பினத்தவர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்சொன்ன சம்பவத்தைத் தொடர்ந்து உக்கிரமடைந்த இந்தக் கலவரம் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் அறுநூறுக் கும் அதிகமான உயிர்களைப் பலி கொண்டுள்ளது. இப்போது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இது பரவலாம் என்று அஞ்சப்படுகிறது. இங்கதா இயக்கத் தலைவர் மங்கசுது புத்தலேசிக்கு விசுவாசமான சூலூ இனத்தவர்களுக்கும், நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸுக்கு ஆதரவான சோஸா இனத்தவருக்கும் இடையே நடைபெற்று வரும் இக்கலவரங்களால் வெள்ளைச் சிறுபான்மை இனவெறி அரசுக்கு எதிரான, கறுப்பு இனத்தவரது விடுதலை வேட்கையும் போராட்ட வீறும் திசை திருப்பப்பட்டு பலவீனமடைந்துள்ளன. 28 மில்லியன் கறுப்பு இனத்தவரைக் கொண்ட நாடு தென்னுபிரிக்கா. சிறுபான்மையினரான வெள்ளையரின் ஆட்சியில் கறுப்பினத்தவரது அரசியல், பொருளாதார, சமுக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இந்த நிறவெறி அரசுக்கு எதிராக கறுப்பு இனத்தவரது விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த ஆ.தே.கா கடந்த முப்பது ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டு அதன் தலைவர்கள் பலரும் சிறையில் தள்ளப்பட்டிருந்தனர். உலக நாடுகளின் தொடர்ச்சியான நெருக்குதல் களும் , பொருளாதாரத் தடைகளும் தென்னுபிரிக்காவை உலக அரங்கில் தனிமைப்படுத்தியதுடன் பல பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும் வீழ்த்தின. இந்த ஆபத்திலிருந்து நாட்டை மீட்டு எடுக்கவும் கறுப்பர்களது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவும் புதிதாகப் பதவியேற்ற ஜனதிபதி எஃப். டபிள்யு. டி கிளார்க் பல சீர்திருத்தங்களைப் புகுத்தத் தீர்மானித்தார். இதன் விளைவாக ஆதே.கா மீதான தடையுத்தரவு நீக்கப்பட்டது. நெல்சன் மணி டேலா இன ஒடுக்குமுறை எதிர்ப்புச் சக்தியின் உயிர்வாழும் சின்னம்', 'ஆபிரிக்க மணி னின் மனச் சாட்சி போன்ற புகழாரங்களுடன் தனது 27வருடச் சிறைவாழ்க்கையை முடித்துக் கொண்டு வெளியே வந்தார். ஆயினும் தென்னுபிரிக்க கறுப்பு இனத்தவரின் வாழ்வில் விடிவு ஏற்பட்டதா என்ருல் இன்னமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். "ஒரு நாட்டில் சீர்திருத்தங்களைச் செயற்படுத்த ஆரம்பிக்கும் கால கட்டம் தான்
2O

தென்குபிரிக்கா 14.09. 1990
ஒரு திறமையற்ற அரசாங்கம் சந்திக்கக் கூடிய மிக மிக ஆபத்தான காலம்" என்று பிரெஞ்சு வரலாற்று அறிஞர் அலெக்சிஸ் டி ரொக்கியுவில் கூறி வைத்துள்ளதை தென்னுபிரிக்காவில் அண்மைக் காலங்களில் இடம் பெற்று வரும் சம்பவங்கள் உண்மையென நிருபிக்கின்றன. கறுப்பினத்தவர்கள் மத்தியில் இடம் பெற்று வரும் இன,சாதி, பிரதேசச் சண்டைகள் சிறுபான்மை வெள்ளை அரசிடம் இருந்து உரிமைகளை வென்றெடுப்பதற்கு தடைக்கற்களாக அமைந்து வருகின்றன. சூலூ, சோஸா இனத்தவருக்கிடையிலான இந்தச் சண்டையை ஆ.தே.காவினல் தூண்டப்படும் இனக்கலவரம் என்று புத்தலேசியின் இங்கதா இயக்கத்தவர்கள் கூறுகின்றனர். இதை மறுக்கும் ஆ.தே.கா, இனப்பிரிவினையைச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசாங்கம் தனது வழக்கமான பிரித்தாளும் தந்திரத்தைக் கொண்டு, கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தினைத் திசை திருப்ப முற்படுவதாகவும் இதற்கு இங்கதா இயக்கம் துணைபோவதாகவும் குறை கூறுகின்றது. ஆ.தே.காவின் பிரதித்தலைவரான மணி டேலா சிறையில் இருந்து வெளிவந்ததும் இங்க தாவுடஞன பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்திருந்தார். இதனை ஆதே.காவின் தீவிரவாத இளைஞர் குழுவினர் எதிர்த்தமையால் அது கைவிடப்பட்டது. இதஞல் ஏமாற்றமடைந்த புத்தலேசி தேசிய, சர்வதேச மட்டங்களில் பிரபலமாயுள்ள ஆ.தே.காவை, கீழிறங்கி வந்து தன் னேடு பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்கவெனப் பலவழிகளிலும் பிரயத்தனம் செய்து வருகின்ருர். வன்முறைகளுக்குத் தீனி போட்டு, நிலைமையை மோசமடையச் செய்து, தனது நோக்கத்தை வெல்ல நினைக்கின்ருர். மண்டேலா தன்ளுேடு பேச்சுவார்த்தைக்கு வருவதால் தனக்குக் கிடைக்கக் கூடிய பலாபலன்களால் புத்தலேசி ஈர்க்கப்பட்டுள்ளார். இவ்வாருன ஒரு பேச்சுவார்த்தையின் மூலம் ஆ.தே.காவை தன் காலடிக்குள் கொண்டு வரலாம் என்று நினைக்கின் முர். இச்சந்தர்ப்பத்தினை ஆ.தே.காவின் ஒரு பகுதியினர் எதிர்ப்பதால் இது ஆ.தே.காவை நிச்சயம் பிளவுபடுத்தும் எனவும் இதஞல் தனது இங்கதா இயக்கம் கூடுதலான செல்வாக்கைப் பெறும் எனவும் அவர் நம்பு கிரு ர். மேலும் ஆ.தே.காவுடனர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் மணி டேலாவுக்குச் சமஞன தகுதியும் பிரபலமும் செல்வாக்கும் மிக்க தலைவனுகத் தன்னைக் காட்டி தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டு விடலாம் என்றும் அவர் நினைக்கின்ருர் ஆ.தே.காவோ தமது நீண்ட கால விடுதலைப் போராட்டத்தை புத்தலேசியின் கையில் கொடுத்துவிட விரும்பவில்லை. அத்துடன் தமது அணி பிளவுபட்டுவிடும் என்பதாலும் இவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பவில்லை. ஆஞல் வன்செயல்களோ நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நாடுபூராவும் இருந்த அவசரகால
21

Page 15
தென்ன பிரிக்கா 14.09. 1990
நிலையை அகற்றுவதற்கு ஜனதிபதி சம்மதித்து இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் வன்செயல்களை அடக்கவென விசேட அதிகாரங்களைக் காவல் படைக்கு வழங்கி, அப்பகுதிகளைப் பதட்ட நிலைப் பிரதேசங்களாகப் பிரகடனம் செய்ய இந்த வன்செயல்கள் வழிவகுத்து விட்டன. 29 வருட காலக் குரோதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிறுபான்மை வெள்ளையருக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை நிறுத்திக் கொள்ள மண்டேலா சம்மதித்து ஒரு வாரத் தினுள் மீணடும் இந்த வணி செயல்கள் தீவிரமடைந்துள்ளன. இது நிறுத்தப்பட்டால் அன்றி அரசுடனன சமாதான ஒப்பந்தமும் பேச்சுவார்த்தைகளும் பயனளிக்கப் போவதில்லை என்பது திண்ணம்.
வெள்ளை இனப் பழமைவாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், ஜஞதிபதி கிளார்க் துணிச்சலுடன் கறுப்பினத்தவர் பிரச்சனை தொடர்பாகப் பல முற்போக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. 1912 இல் ஆரம்பிக்கப்பட்ட ஆ.தே.காவின் வரலாற்றில் இடம் பெருத சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெறுவதற்கு ஜனதிபதி கிளார்க் தான் காரணமாயிருந்தார். வெள்ளைச் சிறுபான்மை அரசும் ஆ.தே.காவும் கடந்த மே மாதம் நேருக்கு நேராகச் சந்தித்து, முதன்முதலாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுச் சரித்திரம் படைத்துள்ளன. "எஜமானுக்கும் வேலையாளுக்கும் இடையிலான பேச் சுவார்த்தை என்ற நீணி ட கால பாரம்பரியத்தை உடைத்தெறிந்த சம்பவம், இது” எனக்கூறிச் சென்ற நெல்சன் மணி டேலா, பேச்சுவார்த்தையின் முடிவில், "நாம் ஒருவரை ஒருவர் இப்போது நெருங்கி விட்டோம் என்பதுடன், இரு சாராருமே வெற்றி பெற்றுள்ளோம்" என்று அதன் பெறுபேறுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். "வெள்ளை இனத்தவரது ஆதிக்கம் தென்னுபிரிக்காவில் இனிமேலாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லையாயினும் அது கறுப்பினத்தவரின் ஆதிக்கத்திஞல் பிரதியீடு செய்யப்படக்கூடாது என்பதற்காகவே எனது தேசிய கட்சி அரசாங்கம், ஆ.தே.கா வற்புறுத்தி வரும் 'ஒரு பிரஜைக்கு ஒரு வாக்கு" என்ற முறைமையை எதிர்க்கின்றது” என்று அன்றைய பேச்சுவார்த்தையில் சமரசம் காணப்பட முடியாது போன ஒரு முக்கிய அம்சம் குறித்து ஜஞதிபதி கிளார்க் கருத்து வெளியிட்டிருந்தார். அவ்வாருன வாக்களிப்பு முறையினுல் இப்போது ஐந்து மில்லியன் வெள்ளையர் கைவசம் இருக்கும் அரசியல் அதிகாரங்கள் 28 மில்லியன் கறுப்பினத்தவரிடம் கைமாறிவிடும் என்ற அச்சத்தின் வெளிப்பாடே இக்கருத்துக்கான காரணம் ஆகும். பாரிய பலாபலன்களை உடனடியாக அந்தப் பேச்சுவார்த்தை தராதபோதிலும் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்திருந்தோர் நாடு திரும்பவும், சிறையில் எஞ்சியிருந்த
22

தென்குயிரிக்கா ---- 14.09. 1990
அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும், நாலு வருட கால அவசரகால நிலைமை அகற்றப்படவும், ஆ.தே.கா ஆயுதப் போராட்டத்தைக் கைவிடவும், தென்னபிரிக்கா மீதான வெளிநாட்டுப் பொருளாதாரத் தடை நிர்ப்பந்தங்கள்
தளர்த்தப்படவும் இதுவே வழிவகுத்தது எனலாம். அரசாங்கத்துக்கும் ஆ.தே.காவுக்கும் இடையே நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேச்சுவார்த்தையை இரு தரப்பினரையும் எதிர்க்கும் தீவிரவாதிகளும் வழக்கம் போலக் கணி டிக்கத் தவறவில்லை. ஆயினும் கறுப்பினத்தவர்களது பிரச்சனைகளுக்குப் பெருமளவில் இப்பேச்சுவார்த்தை தீர்வு கண்டது எனக் கூற முடியாதெனினும், அவர்களது வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு ஆரம்பம் எனப் பலரும் எதிர்பார்த்தமை உணர் மையே. ஆ.தே.காவை அங்கீகரித்தமை, மண்டேலா உட்பட பல தலைவர்களை விடுதலை செய்தமை, மூன்று மாகாணங்களில் இருந்து அவசரகால நிலையை அகற்றியமை, பொது இடங்களில் உள்ள வசதிகளை உபயோகிப்பதில் கறுப்பினத்தவருக்கு இருந்த தடையை அகற்றியமை, நிற அடிப்படையில் மக்களை வகுக்கும் சட்டத்தையும் குறிப்பிட்ட நிறத்தைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழ முடியும் என்ற சட்டத்தினையும் நீக்க வாக்குறுதி அளித்தமை என்பனவும் கறுப்பு இனத்தவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத் தவல்ல மாற்றங்களுள் குறிப்பிடத்தக்கவையாகும். ஆயினும் அண்மைக்காலமாக இடம் பெற்றுவரும் வன்செயல்களுக்கு எண்ணெய் ஊற்றி வளர்ப்பதில் பொலிசாரின் பங்கு, அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. பொலிசாரே வன் செயல்களை ஒழுங்கு செய்து, வழிப்படுத்தி, இங்கதா இயக்கத்தினருக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கி, போக்குவரத் து வசதிகள் செய்து கொடுத்து, கறுப்பினத்தவர்களுக்கு இடையில் குரோதத்தை வளர்த்து வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த விதமாக வளர்க்கப்பட்டு வரும் வன்செயல்களைச் சாட்டாகக் காட்டி, சமாதானத்துக்கான வாய்ப்புக்கள் கைநழுவிப் போவதாகவும்,
இத்தகைய கறுப்பினத்தவருடன் அரசியல் அதிகாரங்களையும் உரிமைகளையும் எவ்வாறு பகிர்ந்து கொள்ள முடியும் என்றும், தமது இனத்துக்குள்ளேயே ஒற்றுமையைக் காணமுடியாதவர்கள் எவ்வாறு கறுப்பு, வெள்ளை இன வேறுபாடுகளைத் தீர்ப்பதில் ஒத்துழைத்து,ஒற்றுமையாக வாழ முடியும் என்றும் சில வெள்ளை அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர். தென்னுபிரிக்க கறுப்பினத்தவர் மத்தியில் தலைவிரித்தாடும் இந்தக் கலவரங்களுக்கு இன விரோதமும் நிற வேறுபாட்டினர் அடிப்படையில் எழுந்த பொருளாதாரப் பாகுபாடும் தான்
23

Page 16
தென்பிைரிக்கா 14.09. 1990
காரணம் என அரசறிவியலாளர் சிலர் கூறுகின்றனர். வெள்ளையர்களுக்குக் கூலி வேலை செய்வதற்கென நேட்டால் மாநிலத்தில் பிரித்து வைக்கப்பட்ட கறுப்பினத் தொழிலாளர் சமுகத்தில் ஆயிரக்கணக்கானேர் வேலை இல்லாமல், வீடு இல்லாமல் சேரிகளில் வாழ்ந்து கொணர்டிருக் கிருர்கள். கைத்தொழிற் பிரதேசமான இப்பகுதிகளில் வேறுமாநிலங்களில் இருந்து வந்து, ஆண்களுக்கு மட்டுமான விடுதிகளில் தங்கியிருந்து, கூலி வேலை செய்யும் சூலூ இனத்தவர்க்கும் இதே மாநிலத்தைச் சேர்ந்த சோஸா இனத்தவருக்கும் இடையே பகை ஏற்படுவது தவிர்க்க முடியாததே. இதனுல் உண்மையில் பயன் பெறுபவர்கள் வெள்ளையர்கள்தான்.
தென் ஞபிரிக் காவில் கறுப்பர்களுக்கு எதிராகக் காண்பிக்கப்பட்டு வந்த நிறப்பாகுபாடு அகற்றப்படுவதற்கான ஆரோக்கியமான ஒரு சூழல் ஏற்பட்டு வந்துள்ள போதிலும், அதனைப் பயன்படுத்த முடியாதவாறு கறுப்பினத்தவர்களுக்கு இடையிலான பிரிவினைகளும் ஒற்றுமையீனமும் அவர்களைப் பலவீனப்படுத்திப் பொதுவான இலக்கை விட்டு விலகி ஓட வைத்து விட்டன. புத்தலேசியைத் திருப்திப்படுத்த வென மணி டேலா மனம் மாறிப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிப்பாரா? அண்மையில் தமது அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது, நீண்ட கால ஆயுதப் போராட்டத்துக்கும், காஸ்ட்ரோ, கடாபி, அரபாத் போன் ருேருக்கு அவர் காட்டும் ஆதரவு பற்றியும் வினவப்பட்ட போது, ஆ.தே.காவுக்கு ஆதரவு திரட்ட என அமெரிக்காவுக்கு அவர் வந்திருந்த போதும், தனது கொள்கையில் இருந்து சற்றேனும் தளம்பாமல் "எவன் ஒருவன் தான் பழகுபவர்களுக்கு ஏற்ப, அவர்களைத் திருப்திப்படுத்த என, அவ்வப்போது தன் கொள்கைகளை மாற்றிக் கொள்கிருனே அவன் ஒரு இனத்துக்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவன்” என்று அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லி முழு அமெரிக்கரையும் வாயடைக்கச் செய்த கொள்கைப் பற்று மிக்க தலைவரான மணர் டேலா, இச் சந்தர்ப்பத்தில் தனது கொள்கைப் பிடிவாதத்தைத் தளர்த்தி புத்தலேசியுடன் பேச முன்வருவாரா? அவப் வாறு பேசுவாராயினர் ஆ.தே.காவினர் ஒரு பகுதி தலைமையையும் மீறி ஆயுதங்களுக்கு வேலை கொடுக்கும் என்பது உறுதி. பேசத் தவறுவாராயின் எதிர்த்தரப்பினர் தொடர்ந்தும் கொலை வெறியாட்டத்தை நடத்திக் கொண்டே இருப்பர். முடிவு, ஒற்றுமையீனம் ஆனது கறுப்பினத்தவருக்கு விடுதலையைக் கானல் நீராக்கிவிடும். இந்நிலையில் "ஒற்றுமை வழியொன்றே வழியென்று ஒர்ந்திட்டோம்; நன்கு தேர்ந்திட்டோம்” என்று பாடம் புகட்ட இவர்கள் மத்தியிலும் இன்னுெரு பாரதி பிறக்கத்தான் வேண்டும் போலும்!
24

21.09. Soo
பொதுமக்கள் பற்றிப்
பொருட்படுத்தாத போர்
ஜனதிபதி சாமுவேல் டோவின் சரித்திரம் முடிந்து விட்டது. சிதைக்கப்பட்ட அவரது உடல், தலைநகரான மொன் ருேவியாவில் உள்ள கிளர்ச்சியாளர் பாசறை ஒன்றுக்கு வெளியே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது, பத்து வருடங்களாக நாட்டை ஆண்ட ஜனதிபதிக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக அல்ல; அவரது அரசியல் வாழ்வு மட்டுமன்றி இவ்வுலக வாழ்வும் முடிந்து விட்டது என்பதை அந்த நாட்டு மக்களும், உலக நாடுகளும் வர்ஜிதப்படுத்திக் கொள்ளவே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒன்பது மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் சணர்டையின் விளைவாக நொந்து போயிருந்த டோ, அண்ைடை அயலில் உள்ள ஐந்து நாடுகளால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த மேற்காபிரிக்க சமாதானப் படையிடம் அடைக்கலம கோரச் சென்ற சமயம், பிரின்ஸ் ஜோன்சன் குழுவினரின் திடீர்த் தாக்குதலுக்குள்ளாகிக் கைது செய்யப்பட்டார். ஜஞதிபதி
25

Page 17
2uliflum 21.09. 1990
ஸ்தானத்தில் இருந்து கொண்டு, டோகையாடிக் கொண்டதாகக் கூறப்படும் பல மில்லியன் பொது நிதி பற்றி ஜோன்சனின் முகாமில் வைத்துக் குறுக்குவிசாரணைக்குட்படுத்தப்பட்டு, ஈற்றில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவே செய்திகள் கூறுகின்றன.
இது நடந்து முடிந்தவுடன், ஜனதிபதி டோவின் அணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் டேவிட் நிம்லி, தன்னை நாட்டின் பதில் ஜனதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். தேர்தல் மூலம் புதிய அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்படும் வரை அந் நாட்டினர் தலைமைப் பீடத்தை, தானே கையேற்றிருப்பதாக ஜோன்சன் அறிவித்திருக்கின்ருர். இது இவ்வாறிருக்க, மொன்ருேவியாவுக்கு வெளியேயிருந்து நாட்டின் பெரும் பாகத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிறிதொரு கிளர்ச்சிக் குழுவின் தலைவரான சார்ள்ஸ் ரெயிலர், தானே அந்த நாட்டின் ஜனதிபதி என்று சுயபிரகடனம் செய்துள்ளார். இது போதாது என்று வேற்று நாடொன்றில் அரசியல் தஞ்சம் புகுந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னுள் தலைவரான அமோஸ் சோயா, தன்னைத் தான் ஜனதிபதி என்று அறிவித்திருக்கின்ருர். ஆஞல் உயிர்ப்பிச்சை வேண்டி, திக்குத்திக்காக ஓடி ஒளிந்து, அவதிப்பட்டுக் கொணர்டிருக்கும் அப்பாவி மக்களைப் பற்றிய அக்கறை இந்த அதிகார வெறிபிடித்தவர்களுக்கும் இல்லை; அரசாங்கத்துக்கும் இல்லை; ஏனைய உலக நாடுகளுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு தலைவிரித்தாடும் அரசியற் காட்டுமிராண்டித்தனங்களில் இருந்து பாவம், அந்தப் பொதுமக்களுக்கு மீட்சி அண்மைக்காலத்தில் கிட்டக் கூடிய சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படுவதாயும் இல்லை.
லைபீரியா அத்லாந்திக் கரையோரமாக அமைந்துள்ள ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு. ஐவறி கோஸ்ற்றின் அயல் நாடான இந்த லைபீரியா, அமெரிக்காவில் அடிமைகளாக வாழ்ந்து விடுதலை பெற்ற நீக்ரோ இனத்தவரால் , 1820 இல் உருவாக்கப்பட்ட சிறிய நாடு. சுமார் 25 லட்சம் சனத்தொகை உள்ள லைபீரியா, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கே உரித்தான இன, மத, மொழி, சாதி, பிரதேசப் பிரிவினைகளால் ஊட்டமளிக்கப்பட்டதால் உருக்குலைந்து போன ஒரு நாடு. கிரான், கியோ, மனே, மண்டிங்கோ போன்ற பாரிய இனப்பிரிவினர் உட்பட, மொத்தம் 14 இனத்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். 1847 இல் சுதந்திரம் பெற்ற இந்த நாட்டின் நிர்வாகத்தில் அமெரிக்காவுக்கு அக்கறையும் அதேவேளை செல்வாக்கும் எப்போதும் இருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து வந்து குடியேறிய சிறுபான்மைக் கறுப்பினத்தவரது அரசியல் ஆதிக்கப் பாரம்பரியம், 1980இல் நடைபெற்ற அரசியல்
- 26

(2லபீரியா 21. og. 1990 ||
சதிப்புரட்சியுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இலகுவில் அழிக்கப்பட முடியாத இரத்தக்கறைகளுடன் அந்தப் புரட்சியின் காரணகர்த்தாவான கிரான் வகுப்பைச் சேர்ந்த சாமுவேல் டோ, ஜனதிபதி ஆசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். 28 வயதில் இந்த நாட்டின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிய இவரது ஆட்சியில் காணப்பட்ட நிறைவுகளை விட குறைபாடுகளே அதிகம். வழக்கம் போல இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து இவரும் விதிவிலக்காகவில்லை. சராசரி கல்வி அறிவு கூட இல்லாத இவருக்கு, தென்கொரிய பல்கலைக்கழகம் ஒன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது. நாட்டின் கல்விமான்கள், புத்திஜீவிகள் இவருக்குப் பெருத்த தலைவலியாய் இருந்ததால், அவர்களது தலைகளைக் கொய்து மகிழ்ந்தார். அடக்குமுறை ஆட்சியின் கருவியான இராணுவத்தினை, தனது கிரான் இனத்தவர்களைக் கொணர்டே நிரப்பிக் கொண்டார். தனது செல்வாக்கை விலை கொடுத்து வாங்கி விட நினைத்த இவர், பொதுசனங்களுக்கும் இராணுவத்தினருக்கும் பெருந்தொகையான பணத்தை வாரியிறைத்தார். இதனல் நாட்டின் பொருளாதார தொழுவத்தினுள் பூனை போய்ப் படுத்துறங்கியது. பொதுநிதியத்தைத் தேடி இவரது கை போனபோது இவரால் தடுக்க முடியாது போயிற்று. இவரும் இவரைச் சார்ந்தோரும் சுகபோகங்களை அனுபவிப்பதில் ஆர்வம் காட்டினரே தவிர, நாட்டைச் செவ்வனே ஆள்வதில் அசிரத் தையாக இருந்து விட்டனர். இராணுவ அடாவடித்தனங்களும் அட்டூழியங்களும் நாட்டில் மலிந்தன. மனித உரிமைகள் மீறப்பட்டன. மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தனர். இதனைப் பார்த்த அமெரிக்கா வருடாவருடம் வழங்கி வந்த ஐம்பது கோடி டொலர்"சந்தோச நிதியுதவியை" பின்பு குறைத்துக் கொணர்டது. டோவின் ஆட்சியில் காணப்பட்ட இந்தக் குறைபாடுகளின் விளைவாக 1985 இல் ஒரு சதிப்புரட்சி மேற்கொள்ளப்பட்ட போது, இவர் தெய்வாதீனமாகத் தப்பிக்கொண்டார். ஆத்திரமடைந்த இவர் தியோ, மனே போன்ற பகை இனத்தவருக்கு எதிராகத் தனது கொலை வெறி இராணுவத்தை முடுக்கி விட்டார். இராணுவம் ஈவிரக்கமற்ற முறையில் மக்களைக் கொல்லத் தொடங்கியது. விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தது. இது லைபீரியாவில் இனங்களுக்கு இடையிலான பகைமைக்கு மேலும் தீனியிட்டது. விளைவாக ஜஞதிபதி டோவுக்கு எதிராக கிளர்ச்சிக் கோஷ்டிகள் தோன்றி வளர்ச்சி அடையத் தொடங்கின. ஜவறி கோஸ்ற்றில் மறைந்து வாழ்ந்த சார்ள்ஸ் ரெயிலரின் கிளர்ச்சிக் கோஷ்டி, 1989 டிசம்பர் 24 இல் திடீரென லைபீரியாவுக்குள் புகுந்து கொண்டது. டோவின் ஆதரவாளர்கள், இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோரை
27

Page 18
2லபீரியா 21. os. 1990
நேரடியாக வேட்டையாடி அழித்தது. அன்று ஆரம்பமான வன்செயல்கள் இதுவரை ஐயாயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களை உயிரிழக்கச் செய்தன. ரெயிலரின் தேசிய தேசாபிமான முன்னணிக்கு மக்கள் காண்பித்த ஆதரவால் ஆத்திரமடைந்த இஸ்ரேலிய பயிற்சி பெற்ற அரசபடையினர் செய்த அழிப்பு நடவடிக்கைகள் மிகவும் குரூரமானவை. ஐ.நா சபைக்குரிய கட்டிடத்துக் காவலாளியைக் கொலை செய்து, அங்கு தஞ்சம் புகுந்திருந்த ஏராளம் பொதுமக்களை டோவின் படையினர் கடத்திச் சென்று படுகொலை செய்தமை உலகறிந்த செய்தி.
தே. தே.மு னி னணியினர் தலைவரான ரெயிலர் அமெரிக்காவில் கல்வி கற்றவர். அமெரிக்காவில் இருந்து வந்து குடியேறியோர் வம்சத்தைச் சேர்ந்தவர். தியோ, மனே இனத்தவர்களே இவரது ஆதரவாளர்கள். 42 வயதான இவர், ஜஞதிபதி டோவின் நெருங்கிய சகபாடியாக இருந்தவர். டோவின் அரசாங்கத்தில் ஊழல்கள் மலிந்து, சிக்கல்கள் ஏற்பட்ட தறுவாயில், கறைபடிந்த தன் கரங்களை மறைத்துக் கொண்டு, 83 இல் அமெரிக்காவுக்குத் தப்பியோடியவர். 89 இல் அங்கிருந்து திரும்பி வந்து டோவுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்த இவருக்கு ஒப்பீட்டளவில் மக்கள் ஆதரவு கூடுதலாகக் கிடைத்திருக்கின்றது. ஆஞலும் சில மாதங்களுக்குள் இவரது முன்னணியும் பிளவுபட்டுக் கொண்டது. இனப்பிரிவினையின் அடிப்படையில் தே.தே.முவிலிருந்து பிரிந்து சென்ற புதிய குழுவின் தலைவர் தான், பிரின்ஸ் ஜோன்சன். ஐஞதிபதியான டோவும், ரெயிலரும், ஜோன்சனும் ஆளை ஆள் அழித்து, அதிகாரத்தைக் காப்பாற்றுவது அல்லது கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு மோதிக் கொண்டனர். இதில் ஒரு முக்கிய நிகழ்வு தான் டோவின் படுகொலை. மொன்ருேவியால் தரித்து நின்ற அரச துருப்புகளுடன் மோதிய ஜோன்சன், கடைசியில் இத்தலைநகரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதே வேளை நாட்டின் பெரும்பாகமான ஏனைய பகுதியை ரெயிலர் தனதாக்கிக் கொண்டார். முடிவாக லைபீரியாவில் ஒரு மும்முனைப் போர் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்து வந்துள்ளது.
லைபீரியாவில் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கும் வெறியாட்டங்களை அவதானித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் பெரெஸ் டி கொயேலர், நியூ யோர்க்கில் உள்ள தனது தலைமையகத்தில் இருந்து, "இரக்கமற்ற இந்த மனிதப் படுகொலைகளை நிறுத்துங்கள்” என்று உரத்து வேண்டுகோள் விடுத்துப் பார்த்தார். அவரது வேணர் டு கோள், எதிர்பார்க்கப்பட்டது போலவே போர்வெறியர்களின் காதுகளில் ஏறத் தவறிவிட்டது. மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், சென்ற மாதம் லைபீரியாவுக்கு அனுப்பி வைத்த ஐந்து
28

(அலபீரியா 21. ов. 1990 |
நாடுகள் சமாதானப் படையானது தியோ, மனே இனத்தவர்களால் தேடி வேட்டையாடப்பட்டு வரும் கிரான், மணர்டிங்கோ இனத்தவர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. நைஜீரியா, கான, கம்பியா, ஸிரா லியோன், கினி ஆகிய நாடுகளில் இருந்து சமாதானம் பேண அனுப்பப்பட்ட நாலாயிரம் படைவீரர்களாலும், லைபீரியாவில் உயிராபத்துக்கு உட்பட்டிருப்போரில் ஒரு சிலரை மட்டும் பாதுகாக்க முடிகின்றதே தவிர, பெரும்பாலான மக்கள் சாவின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச நிவாரண நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் மிக அத்தியாவசியமான பொருட்களைத் தன்னும் லைபீரியாவிற்குள் அனுப்பி வைக்க வழி தெரியாது விழிப்பதஞல் மக்கள் விவரிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகி அழிந்து போகின்றனர். யுத்த அகோரம் தாங்க முடியாத காரணத்தினுல் தான் சில வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் கிளையானது, தனது உத்தியோகத்தர்களை மிக அவசரமாக அங்கிருந்து அகற்றிக் கொண்டது. ஜஞதிபதி மாளிகையில் தஞ்சம் புகுந்திருந்த சுமார்ஆயிரம் பொதுமக்களைப் பாதுகாப்பை முன்னிட்டு, தற்காலிக முகாம் ஒன்றுக்குச் சமாதானப் படை இட்டுச் சென்றது. இந்த வெளிநாட்டு சமாதானப் படை அங்கு தங்கியிருப்பது சாமுவேல் ஆதரவாளர்களுக்கும், அவரது இனத்தவர்களுக்கும் ஒரு வகையில் ஆறுதலாக உள்ள போதிலும், இந்தப் பல்தேசியப் படை தொடர்ந்தும் இங்கு தங்கியிருந்து சமாதானம் பேண உதவுமோ என்ற சந்தேகமும் நிலவுகின்றது. காஞ, நைஜீரியா ஆகிய நாடுகள் தமது படைகளை அங்கிருந்து திருப்பி அழைப்பது பற்றி யோசித்து வருகின்றன. கொலைக் கும்பல்கள் வீதிகளில் கொடிய ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டிருக்க, கொலரா வியாதி வேறு சிறிது சிறிதாக லைபீரியாவில் பரவிக் கொண்டிருக்கின்றது. இரு தசாப்தங்களுக்கு முன் நைஜீரியாவில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தக் கொடுமைகளுக்குப் பின்னர், மேற் காபிரிக்கப் பிராந்தியத்தைப் பரிணக் காடாக்கிக் கொண்டிருக்கும் இந்த கொலைவெறிப் போர், லைபீரியாவை விட்டு அண்மையில் போய் விடப் போவதில்லை. இந்த இரத்தக் களரிக்கு விடுதலைப் போராட்டம் என்ருே, அரசியல் சித்தாந்தப் போராட்டம் என்ருே, சாதாரண கொள்கைப் போராட்டம் என்ருே அல்லது ஜனநாயக நாட்டம் என்ருே பெயரிட முடியாது. சம்பந்தப்பட்ட எந்த கோஷ்டிக்கென்றும் ஒரு அரசியல் கொள்கையோ கோட்பாடோ கிடையாது. எதிரியை அழித்து பதவி ஏறுவது ஒன்று தான் குறிக்கோள். அதிகார வெறி இழையோடிப் பரவி நிற்கும் ஒரு அரசியல் கலாசாரம்
29

Page 19
2லபீரியா 21.09. 1990
ஒரு போதும் மானுடத்தை மதிப்பதில்லை; மக்கள் நலனையோ, மக்கள் உயிரையோ கருத்தில் கொள்வதில்லை. இன்றைய லைபீரியா இதற்கு நல்ல உதாரணம்.
ஜனதிபதி சாமுவேல் டோ படுகொலை செய்யப்பட்ட பின்பும், அவரது ஆதரவாளர்களையும் இராணுவத்தினரையும் வீடுவீடாகத் தேடி ஜோன்சன் வேட்டையாடுகின்ருர், எஞ்சியுள்ள இராணுவம் இன்னமும் ஜஞதிபதி மாளிகையில் இருந்து எதிர்த் தாக்குதலில் ஈடுபடுவதாகவும், எதிரிகளைத் தேடி அழிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. வெளிமாநிலங்களில் நிலை கொண்டுள்ள ரெயிலர் குழுவினரும் இதே கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கிருர்கள். செயலற்று நிற்கும் மேற்காபிரிக்க சமாதானப் படையையும் வெளிநாடுகளின் ஊடுருவல் எனக்கூறி ரெயிலர் எதிர்த்து நிற்கின்ருர். ஒன்றுமே செய்வதறியாத மக்கள் தான் சொல்லொணுத்துன்பங்களை அனுபவிக்கிருர்கள். ஏராளம் காவல், கண்காணிப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் இந்த நீண்ட பயணங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திரவதை என்பன சர்வசாதாரணம். இவற்றிற்கு மத்தியிலும் ஆயுட்பலம் மிக்கவர் தப்பிச் சென்று, அயல்நாட்டு எல்லைகளில் அகதிகளாகக் கூடாரங்களில் வாழ்கின்றனர். மாரிகாலம் அண்மிப்பதால் விரைவில் இவர்களது வாழ்வும் நரகமாகும். உணவு, உறைவிடத்துக்குமென மீண்டும் அலைய வேண்டி ஏற்படும். கொடிய நோய்களுக்கும் விலங்குகளுக்கும் இரையாக வேண்டி வரும். இவர்களுக்கு நாடு திரும்ப அச்சம் மட்டுமல்ல, அதற்கான தேவையும் இல்லை.விவசாயம், கைத்தொழில்,வியாபாரம் யாவும் நாசமாக்கப்பட்ட நிலையில் திரும்பிப் போய் அங்கு என்ன செய்ய உண்டு? இவற்றைப் புதிதாக ஆரம்பிக்க யாருக்குத் தைரியம் வரும்? இதனல் இந்நாட்டு மக்களில் ஒருபகுதியினர் மரணத்தை வரவேற்று உள்நாட்டில் காத்திருக்க, பெரும்பாலாஞேர் அயல்நாட்டு எல்லைகளில் நாதியற்று அலைகிருர்கள்.
முடிவாக, லைபீரியாவில் அமைதி அண்மைக்காலத்தில் ஏற்படும் என்பதற்கு எவ்வித அறிகுறியும் இல்லை. அதிகார வெறியும், இனக்குரோதமும் வேரும், வேரடி மண்ணும் என இணைந்து, பின்னிப்பிணைந்து விட்ட இந்த நாட்டில், அரசியல் மிலேச்சத்தனங்கள் மிக்கோர் கரங்களில் ஆயுதங்கள் போய் அகப்பட்டுக் கொண்டுள்ளதே இதற்குக் காரணம். இந்த நாட்டு மக்கள் தான் பாவம் செய்தவர்கள்! அப்பாவி மக்கள் பற்றிய அக்கறை தான் இந்த ஆயுதங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லையே!
30

|aarlm 28.09. 1990
அமெரிக்காவுக்குத் தலையிடித்தால்
கனடாவுக்கு காய்ச்சல் அடிக்கும்
"அந்தக் கறள் பிடித்த கப்பல்களை இங்கே அனுப்ப வெர்ைடாம்". ஈராக்கின் யுத்தக் கொதிகலனுக்குள் இருந்து, ஒட்டாவாவில் உள்ள பாராளுமன்றக் குன்றத்தை எட்டி எதிரொலித்தது, அந்தப் பெண்ணின் கூக்குரல். குவெய்த்தை விட்டு ஈராக் வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன், அமெரிக்காவின் தலைமையில் போர்க்கோலம்பூண்டுள்ள மேற்கு நாடுகளின் அணிக்கு ஆதரவாக, கனடாவும் மூன்று கப்பல்களை அங்கு அனுப்பி வைக்கும் என்று அறிவித்ததைக் கேள்விப்பட்ட கனடியப் பெண ஒரு த் தி ஈராக் கிலிருந்து இவ்வாறு கூச்சலிட்டாள். "குவெய்த்திலும் ஈராக் கிலும் உள்ள நூற்றுக்கணக்கான கனடியர்களின் உயிருக்கு உலை வைக்கும் முடிவு இது" என்பது அவளது ஆதங்கம்.
கொரிய யுத்தத்தின் பின், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டிருந்த வயதான,
31

Page 20
|கனடா 28. 09.1990 |
துருப்பிடித்த,நவீன போர்க்கருவிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு மிகப் பழைய சாதனங்களைக் கொண்ட அதபஸ்கான், ரெரு நோவா என்ற இரு நாசகாரிக்கப்பல்களையும் , புரொட்டெக்டர் என்ற விநியோகக் கப்பலையும் தான், சுமார் ஆயிரம் கடற்படையினருடன் வளைகுடாவுக்கு அனுப்பக் கனடிய அரசு தீர்மானித்தது. இந்தத் தீர்மானத்தினல்யுத்த காலங்களில் கனடா கடைப்பிடித்து வந்த சமாதானக் கொள்கைகள் கை கழுவி விடப்பட்டதாகவும், கனடாவினர் கரங்கள் அப்பழுக்கற்றவை என இனியும் சர்வதேச அரங்கில் உரத்துக் கூற முடியாது என்றும், அமெரிக்காவின் அடியாளாக கனடா மாறிவிட்டது என்றும், இப்பெண் உட்படப் பலரும் கூறுகின்றனர். சென்ற வாரம் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர், மேற்கு அணிக்கு மேலும் உதவி வேண்டும் என்று கோரியதைத் தொடர்ந்து, மேற்கு ஜேர்மனியில் நிலை கொண்டிருந்த கனடிய சிஎஃப் 18 யுத்த விமானங்கள் சிலவும், இப்போது வளைகுடாவை நோக்கிச் செல்கின்றன. இவ்வாருன திடீர்த் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் கனடியர்களது மனதில் புதிய விஞக்களைத் தோற்றுவித்துள்ளன. அயல் நாடான அமெரிக்கா எடுக்கும் தீர்மானங்களுக்கெல்லாம் "ஆமா" போட்டுக் கொண்டிருக்கும் கனடாவிற்கென, தனியான ஒரு வெளிநாட்டுக் கொள்கை உண்டா?அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து கனடாவின் வெளிநாட்டுக் கொள்கை வேறு எந்த விதத்திலாவது வேறுபடுகின்றதா?அரசியல் விழிப்புணர்வு கொண்ட ஒவ்வொரு கனடியனது மனதிலும் இது போன்ற சந்தேகங்கள் தோன்றுவது இயல்பே.
வட அமெரிக்காவை வடக்கே கனடாவாகவும், தெற்கே அமெரிக்காவாகவும் ஒரு எல்லைக்கோடு தான் பிரித்து நிற்கிறது. இதனுல் இரு நாடுகளுக்கிடையிலும் மிக நெருக்கமான அரசியல், சமூக, பொருளாதார ஒருமைப்பாடும் ஒற்றுமையும் இருப்பது தவிர்க்க முடியாததாகும். குறிப்பாக இவ்விரு நாடுகளின் பாதுகாப்புக் கொள்கையில், இரு நாடுகளுக்கிடையிலும் தெளிவான புரிந்துணர்வும், ஒற்றுமையும் இருத்தல் அவசியமாகும். அமெரிக்காவைத் தாக்க முற்படும் ஒரு எதிரி, கனடாவை அமெரிக்காவில் இருந்து பிரித்துப் பார்த்துத் தாக்கப் போவதில்லை. சோவியத் யூனியனின் வடதுருவப் பகுதியான சைபீரியாவில் இருந்து அமெரிக்காவை நோக்கி ஒரு ஏவுகணை ஏவப்பட்டால், அது கனடா உட்பட அமெரிக்கா முழுவதையும் துவம்சம் செய்து விடும் என்ற அச்சம் கனடாவுக்கு இருந்து வந்துள்ளது. இருநாடுகளும் எதிரியின் பார்வையில் ஒன்ரு கவே தென்படும் ஓர் ஆபத்து இருப்பதால், இரு நாடுகளுக்கும் ஒத்த பாதுகாப்புத் தந்திரம் தேவை தான்.
32

(கனடா - 28.09. 1990
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா, உலக அரங்கில் ஒரு வல்லரசாக முக்கியத்துவம் பெற்றதாலும், கனடா அமெரிக்காவின் அடிப்படலையில் அமர்ந்திருப்பதாலும், கனடா தனது பாதுகாப்புக் கருதி தவிர்க்க முடியாதவாறு நேட்டோ, தோராட் அணிகளுடன் சேர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று. இதன் அடிப்படையில் தான் அமெரிக்காவின் வழியினை கனடாவும் பல இடங்களில் பின்பற்ற வேண்டி ஏற்பட்டது. வளைகுடா நெருக்கடியில் கனடா காலை நனைத்துக் கொண்டிருப்பதற்கும் இதுவே முக்கிய காரணமாகும்.
கனடாவின் வெளிநாட்டமைச்சர் ஜோ கிளார்க், தமது வெளிநாட்டுக் கொள்கை பற்றி அண்ைமையில் வெளியிட்ட தகவல் ஒன்று, அரசியல் விமர்சகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டுள்ளது. சென்ற வாரம் சி.டி.ஹோவே நிறுவனத்தின் கனடிய-அமெரிக்கக் குழு முன்னிலையில் அவர் பேசும் போது "அமெரிக்கா தான் கனடாவின் வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது" என்று கூறியிருக்கின்ருர், மேலும் கனடாவின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிநாதமாகச் சில அம்சங்களை அவர் பின்வருமாறு கூறுகின்ருர்,
1.சேர்ந்து செயற்பட சந்தர்ப்பங்கள் இருக்கக் கூடியதாக, அவற்றைத் தவிர்த்து ஒரு போதும் தனித்து இயங்கலாகாது.
2.நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல், மிகக் கடினமான காரியமானுலும் , முரணர் படுதலையும் மெளனமாய் இருத்தலையும் விட அது எவ்வளவோ பயன்மிக்கது. 3.உலகை நன்ைபர்கள், பகைவர்கள் எனப் பாகுபடுத்தல் பயன்தரமாட்டாது.
4.திடீர்க் கொள்கை மாற்றங்களை விட, மெதுவான ஆளுல் நிதானமான கொள்கை மாற்றங்கள் பயன்மிக்கவை.
5.நேட்டோ, ஐ.நா என்பனவே இன்னமும் வலுவூட்டப்பட வேண்டியவையாயினும், உலகில் மக்கள் ஒற்றுமையாக வாழ அவையே பெரிதும் உதவக் கூடியன.
கனடிய வெளிநாட்டுக் கொள்கையில் இழையோடி நிற்கும் இந்த நல்லம் சங்களால் அமெரிக்கா இப்போது ஈர்க்கப்பட்டுள்ளதாகக் கருதும் கிளார்க், கனடா அமெரிக்காவின் கட்டளைப்படி கருமமாற்றுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்ருர். வளைகுடா நெருக்கடி ஏற்பட்ட போது அமெரிக்கப் படைகளை அங்கு அனுப்பி வைத்த ஜோர்ஜ் புஷ் , மேற்சொல்லப்பட்ட அம்சங்களில் முதலாவது தவிர்ந்த ஏனையவற்றைக் கருத்தில் கொணர்டு செயற்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறிருக்க, இந்த அம்சங்களால் அமெரிக்கா கவரப்பட்டுள்ளதாகவும், இவற்றை உள்ளடக்கிய கனடிய வெளிநாட்டுக் கொள்கைகளையே அமெரிக்கா பின்பற்றுகின்றது
33

Page 21
(கனடா 28.09.1990 | என்றும் கிளார்க் கூறுவது எந்தளவு உண்மையானது என்பது விளங்கவில்லை.
கனடாவினர் பிரதமர் பிறையனர் மல் ருே னி அமெரிக்காவின் ஒரு அபிமானி; ஜோர்ஜ் புஷ்ஷின் நெருங்கிய நண்பர். புஷ் வளைகுடாவிற்குத் தன் படைகளை அனுப்பிய பின், அவரோடு பேசிய மல் ருேனியும் "முன்று கப்பல்களை அனுப்புவேன்” என அறிவித்தார். நேட்டோ அணியின் முத்த நாடு எடுக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு காட்டிச் செயற்படுதல் வேண்டும் என்றும், எந்த ஒரு வலிய நாடும் சிறிய நாடொன்றை ஆக்கிரமிக்க அனுமதித்தலாகாது என்றும், குவெய்த்தை விட்டு ஈராக்கை வெளியேற்றியே ஆக வேண்டும் என்றும் காரணம் காட்டியே மல் ருேனி அந்த முடிவுக்கு வந்தார். ஆனல் இவ் வாரு ன சந்தர்ப் பங்களில், கனடிய மக்களின் நாடியைப்பிடித்துப் பார்க்காமல், நாட்டின் பாராளுமன்றத்தின் சம்மதத்தைப் பெருமல், அமெரிக்க ஜனதிபதியின் ஆணைப்படி நடந்து கொணர் டுள்ளமையும் கனடிய பாராளுமன்ற பாரம்பரியத்துக்கு முரணுனதாகும். மேலும் இந்த முடிவின் விளைவாக ஈராக்கினதும் அதனர் நேசநாடுகளினதும் அதிருப்தியையும் பகைமையையும் கனடாவிற்கு இவர் தேடிக் கொடுத்து விட்டார். "உலக சமாதானத்தின் பாதுகாவலன்" என்ற நற்பெயரையும் கனடா இழந்து விட்டது. அமெரிக்க செல்வாக்கினையே இதற்குக் காரணமாகக் கூறும் எதிர்த்தரப்பினர், இன்றைய கனடாவிற்கு அமெரிக்கா மீது இருக்கும் மோகத்துக்கு உதாரணங்களாக மேலும் பல ஆதாரங்களை முன் வைக்கின்றனர்.
சென்ற வருடம் பஞமாக் கால்வாயை மனதில் வைத்து, தனது பிராந்திய நலனை அடிப்படையாகக் கொணர்டு, இரவோடிரவாகப் பஞமாவை அமெரிக் கா தாக்கி, நொரியே காவைப் போதை வ ஸ் து முதலான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்து கொண்ட போது கனடா கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றது. அமெரிக்கா செய்த இதே போன்ற ஒரு காரியத்தைத் தான் வளைகுடாவில் இன்று ஈராக்கும் தனது பிராந்திய நலன் கருதிச் செய்துள்ளதாகக் குரல் கொடுக்க யாருமே முன்வரவில்லை. மல்ருேனியின் அரசு தான் அமெரிக்காவுடன் சுதந்திரவர்த்தக ஒப்பந்தத்தைச் செய்து அமெரிக்காவுக்குப் பெரும்பயனைத் தேடிக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் தலைமையும் செல்வாக்கும் மிக்க, அமெரிக்க நாடுகள் அமைப்பில் மல்ருேணி தாளுக விரும்பி ஓர் அங்கத்துவ நாடாகக் கனடாவைச் சேர்த்துக் கொண்டார். இவ்வாருக அமெரிக்காவின் வழியையே கனடாவும் பின்பற்றிச் செல்வதற்கு உதாரணங்களாக எதிர்த்தரப்பினர் கூறும் காரணங்களின் பட்டியல் நீண்டு செல்லும்.
34

les-T 28.09. 1990 கனடா சுதந்திரம் பெற்ற நாள் முதலாக, அகாள்மைக்காலம் வரை பல்வேறு விதங்களில் அமெரிக்காவுடன் நட்புறவை வளர்த்து வந்துள்ள போதிலும், தனது கொள்கைகளை இண்று போல் என்றும் அமெரிக்காவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததில்லை. 1930-35 இல் கனடாவின் பிரதமராய் இருந்த பெகனட், அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக, அன்றைய அமெரிக்க ஜனதிபதியான ஹெர்பேட் ஹ"வருடன் வெள்ளை மாளிகையில் வைத்துப் படம் எடுக்க ஒரு முறை மறுத்திருந்தார். 1980இல் கனடியப் பிரதமர் ஜோன் டீன்பேர்க்கருக்கும் ஜஞதிபதி கென்னடிக்கும் இடையே இருந்த தனிப்பட்ட குரோதம் காானமாக, கனடிய அமெரிக்க உறவு கசப்புற்றிருந்தது. இவர்கள் அமெரிக்காவின் முன்னுல் அடிபணிந்து போகவில்லை; வஃாந்து நெளிந்து விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளவும் இல்லை. அண்மைக்காலத்தில் பிரதமராய் இருந்த பியெ ருடோ கூட அமெரிக்க ஆசீர்வாதங்களை எதிர்பாராமல் தார விலகி இருந்து கொண்டது மட்டுமல்லாமல், தனது "முணிருவது தேர்வு" என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்க ரகவாசத்தைக் குறைத்து, ஐரோப்பிய நாடுகளுடனும், பசுபிக் ால்லைப்பிராந்திய நாடுகளுடனும், ஏன் சோவியத் யூனியனுடனும் கூட நட்புறவை வளர்த்துக் கொண்டார். 19ம் நூற்ருண்ைடின் பிற்பகுதியிலும், இரண்டு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலும் கனடாவின் பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தலாக இருந்த ஒரே ஒரு நாடு அமெரிக்கா தான் என்ற எண்ணம் இந்த தலைவர்களின் அடிமனதில் இருந்து அவர்களை எச்சரித்தவண்ைணம் இருந்திருக்க வேண்டும். சுயமான வெளிநாட்டுக் கொள்கைகளைக் கொண்டிருந்த இத்தலைவர்களால் கனடா உலகில் நன்மதிப்புடன் திகழ்ந்து வந்துள்ளது. அமெரிக்கா தொடர்பு பட்ட பல யுத்தங்களிலும் ஏனைய யுத்த நெருக்கடிகளிலும் கனடா நடுநிலைமை வகித்து, சமாதானத்தை இலக்காகக் கொண்டு, ஐ.நா சபைக்கூடாகப் பல நல்ல காரியங்களைச் செய்து வந்துள்ளது. வியட்னும் யுத்தக் கொடுரத்தில் இருந்து விலகி நின்று தனி பெயரைக் காப்பாற்றிக் கொணர்டுள்ளது. காஸ்ட் ரோ கியூபாவில் ஆட்சிக்கு வந்தபின்னரும், அந்த நாட்டுடன் வர்த்தக ராஜதந்திரத் தொடர்புகளைக் கனடா வைத்துக் கொண்டிருந்தது. நீண்ட காலமாகச் சீனுவுடன் தொடர்புகளைத் துணி டித் திருந்த அமெரிக்கா, நிக்சன் காலத்தில் தான் "பிங் பொங் ராஜதந்திரம் மூலமாக முதன் முறையாகத் தொடர்பை ஏற்படுத்திக் கொணர்டது. ஆளுல் இதற்கு முன்னரே கனடா சீனவை அங்கீகரித்து, அந்நாட்டுடன் தொடர்புகளை வைத்து வந்துள்ளது. அமெரிக்க நாடுகளின் அமைப்பில் அமெரிக்க செல்வாக்கு மேலோங்கி நிற்பதால் இப்பிராந்தியத்தில் தமது சுதந்திரத்துக்கு
35

Page 22
கனடா 28. 09. 1990 |
இது தடையாகலாம் எனக் கருதி, மல்ருேனியின் காலம் வரை அதில் சேர்ந்து கொள்ளாமல் கனடா ஒதுங்கி நின்றது. இவை யாவும் கனடாவின் வெளிநாட்டுக் கொள்கையில் காணப்பட்ட சுயாதீனத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனல் பிரதமர் மல்ருேனி பதவிக்கு வந்தபின் ருடோவின் 'முன்ருவது தேர்வு' திட்டத்தைச் சாகடித்து, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்குப் பொருளாதார வாய்ப்புக்களை வாரி வழங்கி, அமெரிக்க நாடுகளின் அமைப்பில் வலிந்து போய் அங்கத்துவம் பெற்று, பணுமா தாக்குதலுக்கு சபாஷ் சொல்லி,நிக்கரகுவாவின் முன்னுள் ஜனதிபதி டானியல் ஒட்டேகாவுக்கு எதிரான கிளர்ச்சியாளருக்கு அமெரிக்கா ஊட்டமளித்த போது மெளனியாய் இருந்து, இன்று ஈராக்குக்கு எதிராக மக்கள் அனுமதியின்றிக் களத்தில் இறங்கி அமெரிக்காவுக்கு தன் விசுவாசத்தைக் காட்டியுள்ளார். முடிவாக கனடாவின் வெளிநாட்டுக் கொள்கையை மல் ருே னி அமெரிக்காவிடம் தொலைத்து விட்டாரோ என எண்ைணி, மக்கள் இப்போது அஞ்சுகிருர்கள்.
எந்த ஒரு இனத்துக்கும் ஒரு போதும் ஏற்படக் கூடாத ஒன்று, அது தனது தனித்துவத்தையும், சுதந்திரத்தையும், சுயகெளரவத்தையும் இழப்பது தான். இது நாடுகளுக்கும் பொருந்தும். கனடா அமெரிக்காவின் நண்பனே தவிர,கையாள் அல்ல. கனடாவுக்கென ஒரு தனித்துவம் உண்டு. சர்வதேச அரங்கில் ஆற்றிய பணிகளின் விளைவாக அதற்கென ஒரு கெளரவம் உண்டு. கனடாவின் பிரதமர் "ஐரிஷ் கண்கள் சேர்ந்து ஆனந்தித்துச் சிரிக்கின்றன" என்று அமெரிக்க ஜனதிபதியுடன் கைகோர்த்து ஆடிப்பாடலாம். "கெனபங்போட்டில் அவரோடு தோணியோட்டி, மீன் பிடித்து மகிழ்ந்து தோழமை கொணர்டாடலாம். ஆணுல் கனடாவின் சுதந்திரத்தையும் சுயகெளரவத்தையும் தனித்துவத்தையும் அமெரிக்காவிடம் அடகு வைத்து விடுவதைச் சுயசிந்தனை மிக்க கனடியன் ஒருவன் ஒரு போதும் விரும்ப மாட்டான். "அமெரிக்காவுக்குத் தலையிடித்தால் கனடாவுக்குக் காய்ச்சல் அடிக்கும்" என்ற நிலை மாறி, அமெரிக்காவின் தலையிடிக்கு மருந்து கொடுத்து மாற்றவல்ல வளத்தையும், சுயவல்லமையையும் கனடா பெற வேணடும் என்று தான் ஒவ்வொரு கனடியனும் விரும்புவான்.

பிலிப்பைன்ஸ் O5. 10. 1990
அமெரிக்க பிலிப்பைன்ஸ்
காதல் கசந்திடுமோ?
குவெய்த் பற்றி எண்ணி இந்நாட்களில் கூடுதலாக வருந்திக் கொண்டிருக்கும் உலகத் தலைவர், பிலிப்பைன்சின் ஜளுதிபதி கொரலோன் அக்குயினே தான். இது பலருக்கு அதிசயமாக இருக்கலாம்; ஆனல் உண்மை. கோறி அக்குயினே இவ்வாறு குவெய்த் பற்றி நினைத்து நினைத்து மனதைக் குழப்பிக் கொண்டிருக்கக் காரணம் என்னவாக இருக்குமோ? அவரது கவலையெல்லாம் ஈராக்கினல் ஆக்கிரமிக்கப்பட்ட குவெய்த் பற்றியது அல்ல. ஒவ்வொரு கணமும் COup-wai பற்றியே சதா சிந்தித்துச் சித்தம் கலங்கிக் கொணர்டிருக்கும் கோறிக்கு, வளைகுடாப் பிரச்சனை இரண்டாம் பட்சம் தானும். தனது நான்கு வருட ஆட்சியில், இதுவரை ஆறு சதிப்புரட்சிகளுக்கு முகம் கொடுத்துக் களைத்துப் போன நிலையில், இன்னமும் ஜனதிபதிக் கதிரையை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் இவர், எப்போது "ஏழாவது சதிப்புரட்சி நடக்கப் போகின்றதோ? என்று கலக்கத்துடன் காத்திருக்கின்ருர், "சுதந்திரத்தின் சின்னமே வருக” என அமெரிக்கா செங்கம்பளம் விரித்து

Page 23
|பிலிப்பைன்ஸ் 05. 10. 1990
வரவேற்க, "மக்கள் சக்தி” என்ற மகோன்னத பலத்துடன் அரசியலுள் புகுந்த கோறி அக்குயினே, இன்று அந்த அரசியல் சகதியில் கிடந்து அழுந்தி, சேற்றை வாரி அள்ளி அப்பிக் கொண்டபடி "அமெரிக்கனே வெளியேறு " என்று கும்பலோடு சேர்ந்து கோவிந்தா போட்டாவது தனக்கு எதிரான அடுத்த சதிமுயற்சியைத் தள்ளிப் போடலாம் என்று எண்ணுகிருர் போலும். ஆளுல் பிலிப்பைன்சின் அரசியல் சாக்கடையில் அமிழ்ந்து போன நிலையில், தனக்கு ஆதரவாக இருந்த ஒரேயொரு அமெரிக்கப் பற்றுக் கோட்டினையும் கைநழுவவிட்டு, குய்யோ முறையோ என்று ஓலமிட்டவாறு, வெகுவிரைவில் தன் அரசியல் வாழ்க்கைக்கு எங்கே ஆபத்தைத் தேடிக் கொள்ளப் போகிருரோ என்று கருதவேண்டியுள்ளது.
பிலிப்பைன்ஸ் ஆனது ஆசியாவின் கிழக்கு எல்லையில் பசுபிக் சமுத்திரத்துக்கும் சீனக்கடலுக்கும் இடையில் உள்ள ஒரு குடியரசு. இதன் சனத்தொகை சுமார் மூன்று கோடியாகும். இந்நாடு 7100 தீவுகளைக் கொண்டது என்பது வியப்புக்குரிய தகவல். இத்தீவுகளுள் லுசோன், மின்டனேவா என்பனவே பரப்பளவில் பெரியனவாகும். மலே இனத்தவருடன் ஸ்பானிய சீனக்கலப்பினத்தவரும் சேர்ந்து வாழும் இந்நாடு, 1521 இல் போத்துக்கேயரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நூற்ருண்டின் பிற்பகுதியில் ஸ்பானியரால் கைப்பற்றப்பட்டு, 1898 வரை இது ஒரு ஸ்பானியக் குடியேற்ற நாடாக இருந்து வந்துள்ளது. அதன்பின்னர் அமெரிக்காவின் கைவசம் இருந்த போது இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜப்பானல் ஊடுருவப்பட்டு, கடும் யுத்தத்தின் பின் அமெரிக்கா தொடர்ந்தும் தன் உரிமையை நிலை நாட்டிக் கொண்டதால், 1946 இல் சுதந்திரம் பெறும்வரை அமெரிக்க குடியேற்ற நாடாகவே இது இருந்து வந்தது. சுதந்திரத்தின் பின்னரும் ஜனநாயகம் என்ற போர்வையில், சுதேச எதேச்சாதிகாரிகளினல் பிலிப்பைன்ஸ் ஆளப்பட்டு வந்தது. குறிப்பாக 1986 வரை 20 வருடங்களாக, தன்னகங்காரம் தலைக்கேறிய பேர்டினண்ட் மார்க் கோஸ் கைக்குள் நாடு சிக்குண்டிருந்தது. பல கோடி பெறுமதி மிக்க டாம்பீக ஆடை அணிகளையும் , ஆபரணங்களையும், ஆயிரக் கணக்கான காலணிகளையும் கொள்வனவு செய்து அனுபவித்து வந்த ஆடம்பரப் பிரியையான இமெல்டாவைத் தனது பிரிய மனைவியாகக் கொண்ட மார்க்கோஸ், நாட்டின் பொதுச் சொத்தைச் சூறையாடிச்சுகித்தவர். தனது எதேச்சாதிகாரத்தை எதிர்த்தவர்களுக்கு எமஞனவர். இவரது கொடுங்கோன்மையும் அதிகார துஷ்பிரயோகமும் ஊழலும் எல்லை மீறிய போது தான், ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட, முன்னுள் எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியான கொறஸோன் அக்குயினுே, பொதுமக்களின் ஆதரவுடனும் அனுதாபத்துடனும் 1986
38

(பிலிப்பைன்ஸ் 05. 10. 1990
பெப்ரவரியில் ஆட்சிக்கு வந்தார். அரசியல் அனுபவம் இல்லாத பவர், பிரார்த்தனையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி மக்கள் பலத்துடன் ஜனதிபதி ஆஞர். மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாமற் போன மார்க்கோஸ்,கையில் கிடைத்ததை வரிச் சுருட்டிக் கொண்டு அமெரிக்காவ்ரில் உள்ள ஹாவாய் தீவுக்குத் தப்பியோடி அங்கு மரணமானர். "நாட்டை மீண்டும் நல்வழிப்படுத்துவேன்" என்ற சபதத்துடன் ஆட்சிக்கு வந்தவர், கொறி அக்குயினே. அவரது எண்ணம் ஈடேறியதா?
"மார்க் கோஸின் பொருளாதாரக் கற்பழிப்பினர் விளைவாக, அதலபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்த பிலிப்பைன்ஸை அந்தக் கெடுகுழியில் இருந்து காப்பாற்றுவேன்" ாள்ற வாக்குறுதியுடன் கோறி ஜனதிபதியான போது மக்கள் மனதில் நம்பிக்கை சுடர் விட்டது. ஆனல் இன்று நான்கு ஆணர்டுகளின் பின், அந்த நம்பிக்கை ஒளியின் கடைசிக் கீற்றையும் அந்த நாட்டின் அரசியல் அந்தகாரம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. இப்போது மீண்டும் அங்கு வங்குரோத்து, தலைநகரான மணிலாவில் வீதியெங்கும் அகற்றப்படாமல் மலைபோலக் குவிந்து கிடந்து துர்நாற்ற மெடுக்கும் குப்பை கூழங்கள், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், குண்டு வெடிப்புக்கள், லொட்டரிச் சீட்டு மோசடிகள், லஞ்ச ஊழல்கள், இன்ருே நாளையோ வெடிக்கலாம் என்றிருக்கும் சதிக்கிளர்ச்சிகள் யாவும் பேயாட்டம் ஆடிக் கொணர் டி ருக்கினர் றன. கிராமப்புறங்களில் ஒருபுறம் நீரில்லாமல் நிலமும், மரம் செடி கொடிகளும், மக்களும் வாடி வருந்திச் சருகாக, இன்னுெரு புறம் வெள்ளப் பெருக்கால் பயிர் பச்சைகளும், பச்சிளம் குழந்தைகள் உட்பட குடிசனங்களும் அள்ளுண்ைடு செல்லப்பட, மற்ருெரு புறம் பூமி நடுக்கத்தால் வீடுகளும் கட்டடங்களும் இடிந்து நொருங்க, இயற்கையும் தன் சீற்றத்தை இந்நாட்டின் மீது ஈவிரக்கமின்றிக் காட்டிப் பழிவாங்குகிறது. இவை போதாதென்று அரசாங்கத்துக்கு எதிராக, கம்யூனிஸ்ட் இடதுசாரிக் கொரில்லாக்களின் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இவற்றுடன் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற வலதுசாரிக் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிக் கொணர் டிருக்க, கணர் காணிப்புக் குழுக்கள் இரகசியமாகப் பொதுமக்களைத் துன்புறுத்தி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பிரிவினை வாதிகள் செய்யும் கிளர்ச்சிகளுடன், அமெரிக்காவில் கரைந்துறையும் இமெல்டாவை மீண்டும் நாடு திரும்பக் கோரும் சுலோகங்கள், அக்குயினேவை ஆறு தடவை அகற்ற முயன்ற கிளர்ச்சியாளருக்கு ஆதரவு தரும் வாக்கியங்கள் போன்ற மணிலா மாநகரின் சுவர் வாசகங்கள் வேறு கோறியைப் பயமுறுத் திக்
39

Page 24
பிலிப்பைன்ஸ் 05. 1ο, 1990
கொண்டிருக்கின்றன.
இவை இவ்வாறிருக்க, விலைவாசி உயர்வையும் பொதுநல சேவைகள் சீர்கேடுகளையும் காரணம் காட்டி, தீவிரவாத மாணவர் குழுக்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், போக்குவரத்துத் துறைத் தொழிற் சங்கங்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றைத் தமக்குச் சாதகமாக இருபக்கக் கிளர்ச்சியாளர்களும் பயன்படுத்தி, கிளர்ச்சிகளுக்குத் தூபம் இடுகின்றனர். இவர்கள் தரும் தலையிடி போதாதென்று காங்கிரஸில் கோறிக்கு ஆதரவான கட்சியான எல்.டி.பி ஜனதTபதி ஆட்சிமுறையை மாற்றி வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சி முறைக்கு மாற்ற வேண்டும் எனப் பல தடவை வற்புறுத்தியும், அவர் செவிசாய்க்காமல் அதைப் பின்தள்ளிப் போட்டு வருவதால், தனக்கு ஆதரவாய் இருந்த அரசியல்வாதிகள் மத்தியிலும் செல்வாக்கை இழந்து கோறி அந்நியப்பட்டு வருகிருர். இவை அனைத்தையும் அவதானித்து வரும் பத்திரிகைகள் யாவும் "கோறி ராஜிஞமாச் செய்ய வேண்டும்" என்று ஏக காலத்தில் தலையங்கம் தீட்டிக் கொண்டிருக்கின்றன. இல்லையேல், எந்த நிமிடமும் அவரது ஆட்சி வீழ்த்தப்பட்டு, நாடு இராணுவத்தின் கைக்குள் போய்ச்சேரலாம் என்று அவை ஆருடம் கூறுகின்றன. மேலும் இப்பத்திரிகைச் செய்திகளின்படி இவ்வருடத்தின் முற்பாதியில் பிலிப்பைன்ஸின் அந்நியச் செலாவணி 23 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது; வளைகுடா நெருக்கடி, விலைவாசி உயர்வை மேலும் மோசமாக்கி விட்டது; வளைகுடாவில் வேலை செய்து வந்தோரால் கிடைத்த ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை நாடு இழந்து விட்டது; அகதிகளாக இருந்து நாடு திரும்பும் 650 ஆயிரம் பேரும் நாட்டுக்கு மேலதிக பாரமாக வந்து சேர்ந்துள்ளனர்; எரிபொருள் விலை 32 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, இவ்வாரம் ஆர்ப்பாட்டங்கள் பல நடைபெற்றுள்ளன; 1987 இலும் 89 இலும் எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து தான் இரண்டு கிளர்ச்சிகள் நடைபெற்றன என்பதையும் சுட்டிக் காட்ட இந்தப் பத்திரிகைகள் தவறவில்லை. இவ்வாருன அல்லோலகல்லோலத்துக்கு மத்தியில் தான் சென்ற வாரம் பிலிப்பைன்ஸில் மிக நீண்ட காலமாக நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைத்தளங்களை அகற்றக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் ஆரம்பமாகியுள்ளன. அமெரிக்க தளங்கள் அகற்றப்படுவதை அக்குயினே மனதார ஆதரிக்காத போதிலும், இவ்விதமான ஆர்ப்பாட்டங்களின் தீவிரத்தைக் குறைப்பதற்கென இக்கோரிக்கைக்கு ஆதரவு காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனல் இது பிறிதொரு வகையில் அவருக்குக் கெடுதியை விளைவிக்கப்
40

(பிலிப்பைன்ஸ் 05. 10. 1990
போகிறது என்பது திண்ைணம்.
1989 டிசம்பர் 1, நள்ளிரவில் தான் கோறிக்கு எதிரான ஆருவது சதிப்புரட்சி வெடித்திருந்தது. இதை மீண்டும் முன்னின்று வழிநடத்தியவர் முன்னுள் இராணுவ கேர்னலும் புரட்சிகர மக்கள் சக்தியின் தலைவருமான கிறிங்கோ என்பவரே. வறுமை, அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமைகள் மீறல், வழல், பொருளாதார தீர்க்கதரிசனமின்மை, கம்யூனிச கிளர்ச்சிக்காரருக்கு இளக்காரம் காட்டியமை போன்ற டிராளமான காரணங்களைக் கூறியே கோறியின் இராஜினுமாவை வற்புறுத்தி இக் கிளர்ச்சியை மேற்கொண்டார். முன்னைய கிளர்ச்சிகளை விட மிகவும் உக்கிரமாக இருந்த இந்தச் சதிக்கிளர்ச்சியால் கலவரமடைந்த கோறி, நிலைமை கட்டுமீறிப் போய், தனக்கு தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தவுடன், அமெரிக்க உதவியை நாடிஞர். அமெரிக்க விமானப்படைகள் நேரடியாகக் கிளர்ச்சியாளரைத் தாக்க முற்படாமல், அரசபடைகளுக்கு ஆதரவாக ஆகாய மார்க்கமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஈற்றில் கிளர்ச்சியாளர்களைப் பின்வாங்கச் செய்தனர். இவ்வாறு கிளர்ச்சியாளர்களைப் பின்வாங்கச் செய்து அவர்களைப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்க வைத்தபோதிலும் கோறியைப் பொறுத்தவரை, அவரது பலவீனத்தைக் காட்டிய நிகழ்வாக இது அமைந்துவிட்டது. அமெரிக்கப்படைகளின் இந்தச் செய்கை, ஏற்கனவே கோறியின் ஆட்சியில் அதிருப்தி அடைந்திருந்த பொதுமக்கள் மத்தியில் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது. இந்த அமெரிக்க அதிருப்தியை நாடெங்கிலும் மிக இலகுவாகப் பரப்பிய எதிர்த் தரப்பினர், அமெரிக்க பிலிப் பைனர் ஸ் நவகாலனித்துவத் தொடர்புக்கு இப்போது ஆப்பு வைத்து விட்டார்கள். வெளிநாடுகளில் அமெரிக்கா நிறுவியுள்ள தளங்களில் எல்லாம் மிகப் பெரிய தளங்களான,பிலிப்பைன்ஸில் உள்ள கிளாக் விமானத்தளத்தையும் சுபிக் பே கடற்படைத் தளத்தையும் முடி விட்டு, அமெரிக்கா வெளியேற வேண்டும் எனக் கோரி, ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இப் போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1987 முதல் இன்றுவரை எட்டு அமெரிக்கர்கள் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 1946 முதல் ஊடலும் கூடலும் அடங்கிய அமெரிக்க பிலிப்பைன்ஸ் உறவில், நிரந்தர ஊடலுக்கான அறிகுறி இப்போது தென்படுகிறது. அமெரிக்க எதிர்ப்பு வடிவில், தனக்கு எதிராகப் புகையத் தொடங்கியுள்ள இந்த விதமான கிளர்ச்சிகளைத் தடுக்கவும், சர்வதேச அரசியல் அரங்கின் தற்போதைய நிலைமைகளுக்கு இணங்கவும் அமெரிக்கா பிலிப்பைன்ஸை விட்டு வெளியேற வேண்டுமென்று புஷ் நிர்வாகத்தைக் கோறி கேட்டுள்ளார். ஆனல் இத்தளங்களை முடுவதால் 78 ஆயிரம் பிலிப்பைன்ஸ் காரர்கள் உடனடியாக
41

Page 25
பிலிப்பைன்ஸ் 05. 10. 1990
வேலை இழப்பர். இதனுல் நாடு ஒரு பில்லியன் வருமானத்தை உடனடியாக இழந்து, மென்மேலும் பொருளாதார சூனியத்துள் தள்ளப்படுவது நிச்சயம். இவை யாவும் ஜனதிபதி கோறி அக்குயினுேவை விரைவில் தேடித்துரத்தி வரவுள்ள புதிய ஆபத்துக்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
'அரசியற் சதி என்பது பிலிப்பைன்ஸில் பாலியலுக்கு அடுத்து மிகப்பிரபலமான உள்ளரங்க விளையாட்டு" என்று கோறியின் பாதுகாப்பமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். இவ்வாறு ஒரு விளையாட்டாகி விட்ட இன்னெரு சதிப்புரட்சி மீண்டும் வெகுவிரைவில் கோறிக்கு எதிராக நிகழத்தான் போகிறது. நாட்டில் இடம் பெற்று வரும் முன் விபரிக்கப்பட்ட சம்பவங்களாலும், கோறியின் அனுபவமின்மையாலும், அவரிடம் ஒரு தலைவருக்குரிய சாதுரியமின்மையாலும், அவருக்குப் போதியளவு ஒத்துழைப்பு இன்மையாலும், அவருடன் சேர்ந்திருப்போர் அடிக்கடி "சேம்சைட் கோல் அடித்துக் கெடுப்பதாலும் இன்னெரு சதிக்கிளர்ச்சி பிலிப்பைன்ஸில் எந்நேரமும் வெடிக்கலாம். அப்போது அமெரிக்கரையும் நாட்டை விட்டு வெளியேறு" என்று கூறி விட்டுப் பின்னர் 'அச்சோ அமெரிக்கரே " என்று அலறித் துடித்தால், ஆகாயத்தில் இருந்து ஆடைகளை அள்ளி இறைத்து, பாண்டவர் கோதையின் மானம் காத்த ஆபத்பாந்தவனுக, மீண்டும் அமெரிக்கர் ஆகாயத்தில் வலம் வந்து, கோறியை இனியும் காப்பாற்றுவர் என்று நம்புவதற்கில்லை. இதஞல் எதிரிகளின் துச்சாதனங்களில் இருந்து கோறி இனிமேலும் தப்புவது என்பது கடினம். எனவே "பிலிப்பைன்சில் ஜனநாயகத்துக்கு ஆபத்து" என்று எந்த நிமிடமும் அலாரம் அலறக் கேட்க நேரிடினும், அதையிட்டு யாரும் அதிர்ச்சியடைய வேணர்டியதில்லை. தூரகிழக்கில் பிலிப்பைன்ஸ் தனது 'சின்னவீடாக இருக்கும் வரை தானே அமெரிக்காவும் இது பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும்!
42

| (;"ყჯჩuიითfi 12.10. 1990
இஷ் பின் அயின் பேர்ளினர்
"சுதந்திர மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும், அவர்கள் பல்லோரும் பேர்ளின் வாசிகளே. நான் சுதந்திரமானவன். ஆகையால் என்னை இவ்வாறு சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன, Ichbin ein Berliner,"ஆங்கிலத்தில் ஆற்றிய அந்தப் பேருரையின் போது "நான் ஒரு பேர்ளின் வாசி" என்பதை மட்டும் அவர் ஜேர்மன் மொழியில் உரத்துக் கூறிய போது, மேற்கு ஜெர்மன் மக்கள் எல்லோரும் அன்று மெய் சிலிர்த்து நின்றனர். 1963 ஜூன் மாதம் மேற்கு பேர்ளின் சுவர் அருகே நின்று அன்றைய அமெரிக்க ஜனதிபதி ஜோன் எஃப். கென்னடி கூறிய இக்கூற்று, இன்று தான் அனைத்து ஜேர்மன் மக்கள் வாழ்விலும் நிதர்சனமான முர் உண்மையாயிற்று. சுதந்திரம் கிழக்கில் அல்ல, மேற்கில்தான் உணர்டு என அன்று கென்னடி கூறிக் கொண்ட போதிலும், ஜெர்மனி கிழக்கும் மேற்குமாக இணைந்து,உண்மைச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது 1990 அக்டோபர் 3 இல்தான் சுமார்
தரைநூற்ருரண்டு காலமாக உலகை உலுக்கி வந்த வல்லரசுகளுக்கு இடையிலான கெடுபிடி யுத்தப் போட்டிகளுக்கு அன்று தான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. 45 வருடங்களின் பின் பூரண இறைமையும் சுதந்திரமும் மிக்க ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு
43

Page 26
(ஜேர்மனி 12. 10. 1990
அன்று தான் பிறந்தது. பேர்ளின் வீதிகளும், பிரண்டன் பேர்க் வாயிலும் சனசமுத்திரத்தால் நிரம்பி வழிய, றைஸ்ராக் முன்பாக ஜேர்மன் கொடியை ஏற்றி வைத்த புதிய ஜேர்மனியின் பிதாமகரான சான்சலர் ஹெல்முட் கோல், தனது வாழ்நாளின் மிக மிக மகிழ்ச்சியான அந்தச் சந்தர்ப்பத்தில் “ஜேர்மனி எமது தந்தை நாடு, ஐக்கிய ஐரோப்பா எமது இலட்சியம்" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறிய போது, புதிய ஜேர்மனியின் மகிழ்ச்சியும் அதே வேளை புதிய ஐரோப்பா பற்றிய ஜேர்மனியின் உட்கருத்தும் உலகெங்கும் எதிரொலித்தன.
1933 இல் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி ஹிட்லர், வரலாற்று அடிப்படையில் முன்பு ஜேர்மனியுடன் இணைந்திருந்ததாகக் கூறப்பட்ட அண்டை நாடுகளைப் பலாத்காரமாக மீள இணைத்துக் கொண்டார். ஆஸ்திரியாவைத் தனதாக்கிக் கொண்டார். 1939 இல் போலந்தினுள் அத்துமீறிப்புகுந்து கொண்டார். ஆறு மில்லியன் யூதர்களைக் கோரமாகக் கொன்ருெழித்தார். ஆளுல் இரண்டாவது உலக யுத்தம் ஹிட்லரின் மண்ணுசையில் மண்ணை அள்ளிப் போட்டதுடன் அவரது அழிவுக்கும் வழிவகுத்தது. உலகை வெல்ல நினைத்த ஜேர்மனி இறந்ததால் பிறந்த புதிய வல்லரசுகளும் தமக்குள் பிளவுபட்டுக் கொண்டதால் 1949 இல் ஜேர்மனி இவர்களுக்குள் பங்காடப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு அணியினர் மேற்கு ஜேர்மனியையும் சோவியத் யூனியன் கிழக்கு ஜேர்மனியையும் தமதாக்கிக் கொண்டன. ஜேர்மனியின் தலைநகராய் இருந்த பேர்ளின் கிழக்கு ஜேர்மனிக்குள் அகப்பட்டுக் கொண்டதால், இவ்விரு சாராருக்கிடையில் உள்ள ஒப்பந்தப்படி பேர்ளினும் கிழக்கு மேற்காகப் பிரிக்கப்பட்டது. 1954 இல் சோவியத் யூனியன் கிழக்கு ஜேர்மனிக்கு சுதந்திரத்தை வழங்கி, அதனை வார்சோ ஒப்பந்த அணியின் ஆரம்ப அங்கத்துவ நாடாக்கிக் கொண்டது. 1955 இல் மேற்கு ஜேர்மனி சுதந்திரத்தைப் பெற்று நேட்டோவில் சேர்ந்து கொண்டது. பெயரளவில் இரு நாடுகளும் சுதந்திரத்தைப் பெற்றபோதிலும், எஜமானர்களின் ஏவல்களுக்குக் கட்டுப்பட்டே இற்றை வரை இயங்கி வந்துள்ளன. எல்லையோரங்களில் ஆயுதங்களும் படைகளும் குவிக்கப்பட்டு, ஒன்றையொன்று தாக்குவதற்குத் தயாரான நிலையில் எதிரிகளாக இருந்து வந்தன. கம்யூனிஸ கட்டுப்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள என, கிழக்கு ஜேர்மனியர் மேற்கு ஜேர்மனிக்குத் தப்பி ஓடியதைப் பார்த்த அன்றைய கிழக்கு ஜேர்மன் நாட்டின் உள்நாட்டமைச்சரும் பின்னர் நாட்டின் தலைவராயும் இருந்த எரிக் ஹொனேக்கர், 1961 இல் பேர்ளின் சுவரைக் கட்டி எழுப்பிஞர். வல்லரசுகளின் கெடுபிடி யுத்தப் போட்டிகளின் சின்னமாக இருந்த இந்த 169 கி.மீ நீளமான பேர்ளின் சுவர், முதலாளித்துவ கம்யூனிஸ இழுபறிகளுக்கும், அமெரிக்க சோவியத் பிடுங்குப்பாடுகளுக்கும் நேட்டோ வார்சோ குத்து வெட்டுகளுக்கும், கிழக்கு மேற்கு சடுகுடு விளையாட்டுகளுக்கும் 1989 வரை ஓர் எல்லைக்கோடாக இருந்து வந்தது.
சுமார் நான்கு தசாப்தங்களாகக் கார்ல் மார்க் ஸின்
44

ஜேர்மனி 12.10. 1990 து. . துவங்கள் கல்லறைக்குள் பவுத்திரமாக நல்லடக்கம் செய்யப்பட்ட நீலயில், சோவியத் யூனியனும் அதன் தோழமை நாடுகளும் தாம் பொருளாதார ரீதியாகச் சோரம் போன சோகத் தை , விரும்புத் திரைக்குள் முடி மறைத்தபடி, மெளன ஒப்பாரி வைத்துக் கொளண்டு வாழ்ந்து வந்த போது தான் 1985 மார்ச் 11 இல் மிககையில் கொர்பச் சேவ் சோவியத்தின் தலைவராஞர். சோவியத் பூமளியனைப் பொருளாதார சூனியத்திலிருந்து மீட்டெடுக்க 'பெரஸ் ரோய்க்கா, கிளாஸ் நொஸ்ற் போன்ற சீர்திருத்தக் கொள்கைகளைக் கொண்டு வந்தார். "வாலறுந்த துருவக்கரடி டிஃனய வார்சோ அணி நாடுகளின் விவகாரங்களில் இனியும் கலையிடாது" என்று தெரியவந்தபின்னர் தான், 1989 மே 2 இல் முதன் முதலாக இரும்புத்திரையில் ஒரு துவாரம் வீழ்ந்தது. சோவியத் அணியைச் சார்ந்த ஹங்கேரி இதே தினத்தில் தனது மல்லையைத் திறந்து கொண்டது. கிழக்கு ஜேர்மனியில் இருந்து கதந்திரம் தேடிச் சென்ற மக்கள், செக்கோஸ்லாவாகியா வழியாக தாங்கேரி வந்து, அங்கிருந்து ஆஸ்திரியா ஊடாக மேற்கு ஜேர்மனிக்குள் பல்லாயிரக்கணக்கில் வந்து குவிந்தனர். கம்யூனிஸம் அதன் பிடியைத் தளர்த்திக் கொண்டதன் விளைவாக போலந்து, பல்கேரியா, ஹங்கேரி, செக்கோஸ்லாவாகியா, கிழக்கு ஜேர்மனி ஆகிய வார்சோ அணி நாடுகளில் ஏற்பட்ட கம்யூனிஸ எதிர்ப்பு பூதாகாரமாக வெடித்துக் கிளம்பி, கிழக்கு ஐரோப்பிய சரித்திரத்தையே மாற்றி எழுதி விட்டது. 28 வருடங்களாகச் சுதந்திரம் தேடி ஓடிய சுமார் 200 கிழக்கு ஜேர்மானியரின் உயிர் குடித்த அந்த பேர்ளின் சுவர்,1989 நவம்பர் 9 இல் உடைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் இருந்த எல்லை திறக்கப்பட்டது. ஜெர்மனியை மட்டும் அன்றி, ஐரோப்பாவையும் முழு உலகையுமே இரு முகாம்களாக அரசியற் சித்தாந்த, பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பிரித்து நின்ற அந்தச் சுவரின் வீழ்ச்சியை, இரும்புத்திரையின் வீழ்ச்சிக்கான குறியீடு என்று மேற்கு நாடுகள் வர்ணித்தன. அன்று ஜேர்மன் மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. கிழக்கு பேர்ளினில் இருந்து உடைக்கப்பட்ட சுவர் கடந்து, தனது நாய் வழிகாட்டியின் வழிகாட்டலுடன் நிலத்தைத் தட்டித் தடவிப் பார்த்தபடி, மேற்கு பேர்ளினுக்குள் நடந்து சென்ற கணிபார்வையற்ற ஒரு மனிதன் “சுதந்திர பேர்ளினின் சுகந்ததத்தை முகர்ந்து பார்க்க வந்தேன்" என்று கண்ணிர் பொங்கக் கூறினனே, இது ஒன்று போதாதா அன்று மக்கள் அடைந்த ஆனந்தத்தை விபரிக்க? அன்று சுதந்திரத்தின் வாயிற்படியை மிதித்த ஜேர்மன் மக்கள் இன்று தான் பூரண சுதந்திரத்தைச் சென்றடைந்துள்ளனர்.
ஐரோப்பாவின் அதியுயர்ந்த பொருளாதாரப் பலம் பொருந்திய புதிய ஜேர்மன் சமஷ்டிக் குடியரசின் ஜனனத்தினுல் சினமடைந்து, அதை எதிர்க்கும் சிறுசிறு குழுக்களும் இல்லாமல் இல்லை. தீவிரவாதிகள், இடதுசாரிகள், தோல் தலையர்கள் என்போர் "இணைந்த ஜேர்மனி இனியொரு போதும் இல்லை" என்றும்
|
45

Page 27
ஜேர்மனி 12.10.199ο
"நாஸிகளே வெளியேறுங்கள்" என்றும் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்துள்ளனர். ஜேர்மனி இணைப்பை மகிழ்ச்சியுடனர் வரவேற்றவர்களும் "இந்த மகிழ்ச்சிக்கு விலையாக நாம் அதிக வரி செலுத்தத்தான் வேண்டும்" என்று யதார்த்தமாகச் சிந்தித்துச் செயற்படத் தயாராக உள்ளனர். கிழக்கு ஜேர்மனியின் வறுமையை ஈடு செய்ய மட்டும் அடுத்த ஐந்து வருடங்களில் 135 பில்லியன் டொலர் செலவிடப்பட வேண்டும். அதே வேளை 16 மில்லியன் கிழக்கு ஜேர்மனியர்கள் புதிய ஜேர்மனியின் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆகி விடப் போகிருரர்கள். பலகோடி பெறுமதி மிக்க பொதுக்கட்டிடங்கள், கலாசாரச் சின்னங்கள் யாவும் கிழக்கு ஜேர்மனியில் வீணுகிவிடப் போகின்றன. சுமார் இரண்டு லட்சம் கிழக்கு ஜேர்மன் நிர்வாக ஊழியர்களும், பல மில்லியன் தொழிலாளர்களும் வேலை இழக்கப் போகின்றனர். பேர்ளின் சுவர் வீழ்ந்தாலும், இரு பகுதியினருக்கு இடையிலும் எழுப்பப்பட்ட உளவியல் தடைச்சுவர் வீழ நாளாகும். கல்வியறிவும், ஒழுங்கும், கட்டுப்பாடும், கடின உழைப்பும் ஒப்பீட்டளவில் மிக்க கிழக்கு ஜேர்மனியினர், மேற்கு ஜேர்மனியினரின் பொருமைக்கும், சிறுமைக்கும், வெறுப்புக்கும் உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம் சில ஆண்டுகளுக்காவது தவிர்க்க முடியாததே.
ஜேர்மன் இணைப்பினைப் பல நாடுகளும் வாழ்த்தி வரவேற்றுள்ள போதிலும் அதனையிட்டு அதிருப்தி அடைந்துள்ள நாடுகளும் இருக்கவே செய்கின்றன. இந்த இணைப்பால் பயனும் பாராட்டும் பெற்றவர் சோவியத் தலைவர் தான். “சோவியத் தலைவர் கொர்பச்சேவ் இன்றி இந்த இணைப்பு இன்று சாத்தியமாகியே இருக்க முடியாது" என்று தன் துவக்க உரையில் கூறிய சான்சலர் கோல், கொர்பிக்கும் சோவியத் யூனியனுக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கிழக்கு ஜேர்மனியில் இருந்து சோவியத் துருப்புக்களைத் திருப்பி அழைக்கவும், புதிய ஜேர்மனி நேட்டோவில் அங்கம் வகிக்கவும் கொர்பியிடமிருந்து சம்மதம் பெற்ற கோல், இதற்கு நன்றியுபகாரமாக 18 பில்லியன் டொலரை சோவியத் யூனியனுக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிருர். இது மட்டுமல்ல "சோவியத் யூனியன் இன்றி ஐக்கிய ஐரோப்பா இல்லை" என்று கோல் கூறியிருப்பது, மேற்கு ஜேர்மனியின் முன்னுள் எஜமான நாடுகளின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. வளைகுடா நெருக்கடிக்கு அனேக வற்புறுத்தல்களின் பின் மேற்கு ஜேர்மனி 2.5 பில்லியன் பண உதவி செய்துள்ளதாலும், ஒரு லட்சம் அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனியில் நிலை கொள்ள அனுமதித்துள்ளதாலும் மனம் நெகிழ்ந்து போயிருக்கும் அமெரிக்கா ஜேர்மன் இணைப்பையிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவும் கனடாவும் கூட ஜேர்மனியை வாழ்த்தத் தவறவில்லை. ஜேர்மன் இணைப்பை விரும்பாத நாடுகளுக்கு உதாரணமாக பிரான்ஸ், போலந்து, இஸ்ரேல், கியூபா என்பவற்றைக் கூறலாம். ஆரம்பத்தில் இணைப்பை ஆதரிக்காத பிரான்ஸ் அதிபர் மிற்றரோணர்ட், பின்னர் சம்மதித்துக் கொண்ட
46

| ஜேர்மனி 12.10.1990
பொதிலும், நேட்டோ உடன்படிக்கையையும் அசட்டை செய்து, ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த தனது துருப்புகளைத் திருப்பி அழைத்துக் கொண்டார். "பிரான்ஸ் உலகின் அதியுயர்ந்த நாடாக இருந்தாலன்றி, பிரான்ஸ் ஒரு போதும் பிரான் ஸாக இருக்க முடியாது" என்ற முன்ஞள் பிரெஞ்சு அதிபர் டி கோலின் கனவு சிறுகச் சிறுகக் கலைந்து போய்க் கொணர்டிருக்கும் கவலை மிற்றரோனர்ட் மனதில் எப்போதும் உண்டு. தாம் கட்டுப்படுத்திய நாடு தம் கண்முன்ஞவ் ஒரு வல்லரசாகி விடப் போகிறதே என்ற பொருமையும் தமது எதிரியான சோவியத்துடன் வேறு நல்லுறவை வளர்த்து, ஐக்கிய ஐரோப்பாவைத் தனது குடைக்குக் கீழ் கொண்டு வரப்போகின்றதே என்ற மனக்கிலேசமும்மிற்றரோண்டுக்கு மட்டும் அல்ல, மாகிரட் தச்சர் மனதிலும் இலேசாக உண்டு. "ஜேர்மனியின் இந்த உற்சாகத்தை ஏனைய ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுப் பங்கு பற்றவில்லை என்பதை ஜேர்மனி உணர வேண்டும்" என்று “லண்டன் டெலிகிராப்" பகிரங்கமாக எழுதியுள்ளது. போலந்தைப் பொறுத்தவரை இனி ஜேர்மனிக்குள் பிரவேசிக்க விசா தேவை ாண்பதும், இரண்டாம் உலகப் போரின் இழப்புக்கான நஷ்ட ஈடாகத் தாம் கேட்ட ஐந்து பில்லியன் டொலரை ஜேர்மனி தர மறுத்ததும் கோபம். கிழக்கு ஜேர்மனியுடஞன வர்த்தகத் தொடர்பினுல் தனது பொருளாதாரத்தைக் கட்டி இழுத்து வந்த கியூபாவுக்கு இந்த இணைப்பு நஷ்டம் தான். ஹிட்லரின் ஜேர்மனியால் தமது ஆறு மில்லியன் உயிர்களைப் பறி கொடுத்த இஸ்ரேலுக்கு இந்தப் புதிய, வலிய ஜேர்மனி தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருக்கவே செய்யும்.
இரணர் டு ஜேர்மனியும் மீள இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும்,புதிய ஜேர்மனியின் சகல அம்சங்களும் பழைய மேற்கு ஜேர்மனியைப் பிரதிபலிப்பதாகவே காணப்படுகின்றது. உண்மையில் இன்று கிழக்கு ஜேர்மனி தான் அழிந்து போய்விட்டது. எனவே இதை இரு ஜேர்மனியின் இணைப்பு என்பதை விட, ஒரு ஜேர்மனியின் அழிப்பு என்பதுவே பொருத்தம். ாது எவ்வாருயினும் புதிய ஜேர்மனி உலக வரலாற்றை மீண்டும் மாற்றியமைக்கப் போகின்றது என்னவோ உண்மை. "வாலையில் ஆடிய தேவடியாள் வயது போன பின்னும் காலைக் காலைத் தூக்கிப் பார்த்தாளாம்" என்பது போல, வலுவிழந்து போன சோவியத் யூனியன்,ஏதோ இன்னமும் தன்னை வல்லரசாகக் காட்டிப் பாசாங்கு செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் வழுக்கலில் வான்று கோலாக அதற்கு இன்று புதிய ஜேர்மனியின் கைப்பிடி அகப்பட்டுள்ளது. இவர்களது பரஸ்பர உதவியும், உறவும் நிச்சயம் உலக அதிகாரச்சமநிலையை மாற்றவே போகின்றன. அரசியல், பொருளாதார, யுத்த ராஜதந்திரோபாயங்களில் ஜேர்மனி அதீத வளர்ச்சியை வெகுவிரைவில் எய்தி விடும். “பெரிய அண்ணு நாடுகள் எல்லாம்,'ஆமை வரும் ஆள் கணிடு ஐந்தடக்கம் செய்தாற் போல புதிய ஜேர்மன் வருகை கண்டு "ஊமை உருக்கொண்டு ஒடுங்கி அடங்கும் நாள்' வெகுதொலைவில் இல்லை.
47

Page 28
இஸ்ரேல் 19.10. 1990
மலைக்கோவில் கொலைகளுக்கு
இஸ்ரேல் காரணமா?
துெ நடக்கக் கூடாது என்று அமெரிக்கா எணர்ணியிருந்ததோ, அது நடந்தே விட்டது! வளைகுடா நெருக்கடிக்குள் இஸ்ரேல் சம்பந்தப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை. அது தனது அரபுத் தோழமைக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதை நன்குணர்ந்திருந்த அமெரிக்கா, இஸ்ரேலைச் சற்றுத் துார விலகி இருக்கும் படி கட்டளையிட்டிருந்தது. "நீ உன் படைகளை ஒரமாக நகர்த்தி எடுத்துக் கொண்டு, சற்று வாயை முடிக் கொண்டு இருந்து கொள்” என்று குவெய்த்தை ஈராக் ஊடுருவிய மறுநாளே இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆணையிட்டிருந்தது. இரண்டு மாதமாக இஸ்ரேல் ஒதுங்கியிருந்தது என்னவோ உண்மை தான். ஆனல் இன்ருே வளைகுடாப் பிரச்சனைக்குள் இஸ்ரேல்
 

இஸ்ரேல் 19. 10. 1990 தகப்னை நனைத்துக் கொண்டு விட்டதே!அக்டோர் 8 திங்களன்று, கிழக்கு ஜெருசலேத்தில் உள்ள மலைக்கோவிலில் இடம் பெற்ற வகள் செயல்களின் போது 21 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு சாராருக்கும் புனித ஸ்தலமாகக் கருதப்படும் இந்தப் பிரதேசத்தில், இஸ் ரேலியரின் மலக்கோவிலும் பலஸ்தீனியரின் அல் அக்ஸா பள்ளிவாசலும் ாதிரும் புதிருமாய் அமைந்துள்ளன. மெக்கா, மெதிஞ என்பவற்றிற்கு அடுத்து முஸ்லிம்களின் முக்கிய புனித ஸ்தலமாகக் கருதப்படும் இம்மசூதிக்கு அருகே, புதிய யூத தேவாலயம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்ட என பூத தீவிரவாதிகள் முயன்று வருகிருர்கள். இதனல் இத்தினத்தில் எப்போதும் குழப்பங்கள் ஏற்படுவது வழக்கம். இம்முறையும் த தீவிரவாதிகள் அடிக்கல் நாட்ட வந்திருந்ததைத் தாடர்ந்தே கலவரம் மூண்டது. யூத தீவிர வாதிகள் மீது பலஸ்தீனியர்கள் கற்களை வீச, இஸ்ரேலிய பொலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட, ஈற்றில் அது வன்செயலில் வந்து முடிந்தது. இச்சம்பவத்தால் ஜெருசலேமின் புனித பூமி மனித குருதியால் குளிப்பாட்டப்பட்டது. இதனுல் அமெரிக்கா உட்பட சகல உலக நாடுகளும் இன்று இஸ்ரேல் மீது சீறிப் பாய்கின்றன. வளைகுடா நெருக்கடியால் பல்வேறு வழிகளிலும் பாதிப்புற்றிருக்கும் உலக நாடுகளுக்கு, இஸ் ரேலினர் வழமையான இந்தச் சணர்டித்தனத்தால் ஏற்பட்ட புதிய பதட்ட நிலை, மேலும் பிரச்சனைகளைத் தோற்றுவித்து விட்டது. இஸ்ரேல் நாடானது எப்போதும் எல்லோராலும் கண்ைடிக்கப்பட வேண்டும் என்ற தலைவிதியை ஒருபோதும் மாற்றியமைக்க முடியாது போலும்!
உலகிலேயே யூத இனத்தவரின் சரித்திரம் சற்று விசித்திரமானது. ஆபிரகாம் என்பவரின் தலைமையில் கி.மு இரண்டாயிரம் ஆண்டளவில், இப்போது ஈராக் எனப்படும் மொசப்பத்தேமியாவில் இருந்து பலஸ்தீனத்துக்குப் புலம் பெயர்ந்தவர்கள் தான், இந்த யூதர்கள். 250 ஆண்டுகளுக்குப் பின் அங்கிருந்து எகிப்துக்குள் புகுந்தனர். 430 ஆண்டுகள் சென்ற பின் மோசஸின் தலைமையில் நாற்பது வருடங்களாகக் காடுகள், மலைகள் என்று அலைந்து திரிந்து மீண்டும் பலஸ்தீனம் திரும்பினர். அங்கு சிறிது காலம் பபிலோனிய சாம்ராஜ்யத்துக்கும் பின்னர் எகிப்திய, சீரிய ஆட்சிகளுக்கும். உட்பட்டிருந்தனர். யேசுநாதர் காலத்தில் யூதர் வாழ்ந்த பலஸ்தீனத்தின் ஒருபகுதி ரோமானியரால் ஆளப்பட்டு வந்தது. கி.பி 70 இல் மீணடும் யூதர் உலகெங்கும் பரவி நாடோடிகளாகினர். வாழ்ந்த இடமெங்கும் யூதர்கள் வதைக்கப்பட்டனர். இங்கிலாந்தில் இருந்து 12ம் நூற்ருண்டில் வெளியேற்றப்பட்டு, திரும்பவும் 17ம் நூற்ருண்டில் உள்ளே
49

Page 29
இஸ்ரேல் 19. 1o. 1990 |
அனுமதிக்கப்பட்டனர். 19ம் நூற்ருண்டில் அங்கு அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. இதே காலப்பகுதியில் தான் பலஸ்தீனத்தை மீண்டும் கைப்பற்ற என 'சியோனிஸம்" பிறந்தது. முதலாம் உலகப் போரின் போது துருக்கியர் வசம் இருந்த பலஸ்தீன மண்ணை அவர்களிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர், பல்பர் பிரபுவின் பிரகடனப்படி மீண்டும் யூதருக்கே வழங்க முடிவெடுத்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரண்டாம் உலக யுத்தம் தோன்றியது. ஹிட்லரின் யூத விரோத வெறியால் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக பலஸ்தீனத்தில் யூதர், கெரில்லாத் தாக்குதல்களை மேற்கொண்டு சுதந்திரப் போரில் இறங்கினர். இதனுல் பிரித்தானியர்களும் இவர்களைக் கைகழுவி விட முடிவு செய்தனர். இவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை ஐ.நா சபையிடம் கையளித்து விட்டு,பிரித்தானியர் பலஸ்தீனத்தில் இருந்து வெளியேறினர். 1948 மே மாதம் இஸ்ரேல் என்ற புதிய நாடு தோற்றுவிக்கப்பட்டது. உலகமெங்கும் இருந்த யூதர்கள் யாவரும் இஸ்ரேலில் வந்து குடியேறினர். லெபனன், சிரியா, ஜோர்தான், எகிப்து ஆகிய நாடுகளால் சூழப்பட்டிருந்த இஸ்ரேல், சுதந்திரம் பெற்ற மறுநாளே இந்த நாடுகளின் தாக்குதலுக்கு உள்ளானது. 1958 இல் எகிப்துடஞன எல்லைச்சண்டையில் பிரான்ஸ்,பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவியுடன் எகிப்தை சுயெஸ் கால்வாய்க்குப் பின்னல் இஸ்ரேல் பின்வாங்கச் செய்தது. 1967 இல் நிகழ்ந்த எகிப்து, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளுடனுன சண்டையின் போது பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான மேற்குக் கரையோரப் பகுதியையும் காசாத் துனர் டுப்பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. கைப்பற்றப்பட்ட இப்பகுதிகளால் பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியருக்கும் இடையில் இன்று வரை தொடர்ந்து போராட்டங்கள் நடந்தபடியே உள்ளன. அயின் ஸ்டைன் போன்ற பல விஞ்ஞானிகளையும், பல தத்துவஞானிகளையும், அறிஞர்களையும் தந்த இந்த யூதர்கள் மிகுந்த துரிதமானவர்களாயும் புத்திசாதுர்யமானவர்களாயும் இருந்தும் அவர்களின் வாழ்க்கை என்றுமே போராட்டம் தான். 1967 யுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இஸ்ரேல் இருந்து வந்துள்ள போதிலும், மிக அணர்மைக்காலமாக இஸ்ரேலின் தன்முனைப்பான நடத்தைகளால் அமெரிக்கா பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளது. தமக்குக் கூடுதலாக இராணுவ உதவி வழங்காது போஞல், வெள்ளை மாளிகைக்கு எதிராகத் தமது அரசியற் செல்வாக்கைப் பிரயோகிப்போம் என்றும், தமது
50

[[ისისმთინ 19.10. 1990
பெருந்தொகையான கடன்களை ரத்துச் செய்து கொள்ள வேண்டும் என்றும் கோரி வாஷிங்டனை நோக்கி இஸ்ரேலிய .மு மைச் சர்கள் காவடி எடுத்து வருகின்றனர். இக்கோரிக்கைகளால் ஜோர்ஜ் புஷ் ஆத்திரமடைந்துள்ளார். பலஸ்தீனியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இன்னமும் பிரச்சனைக்குரிய பிரதேசங்களாகக் கருதப்படும் மேற்குக் கரையோரப் பகுதியிலும் , காசாப் பகுதியிலும் குடியமர்த்தப்பட்டுள்ள யூதர்களுக்கு போனஸ் களும் , மானியங்களும் வழங்க இஸ்ரேல் முடிவு செய்திருப்பதையும் புஷ் விரும்பவில்லை. 1967இல் நடைபெற்ற ஆறு நாள் யுத்தத்தின் போது தான் இஸ்ரேல் அமெரிக்க உறவு உச்சமடைந்திருந்தது. இந்த யுத்தத்தின் பின் மிக ஏராளமான யுத்தக் கருவிகளையும் ஆயுதங்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியிருந்தது. 1990 இல் 1.8 பில்லியன் இராணுவ உதவியும் 1.2 பில்லியன் பொருளாதார உதவியும் வழங்க உள்ளது. இவை போதாதென்று 700 மில்லியன் இராணுவ உதவியையும் ஒரு பில்லியன் அவசரகால நிதியுதவியையும் மேலதிகமாக இஸ்ரேல் வற்புறுத்தி வருவதுடன், ஏற்கனவே பெற்ற 4.5 பில்லியன் இராணுவக் கடன் உதவியை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் கூறி வருவது அமெரிக்காவுக்கு மகிழ்ச்சி தரவில்லை. சோவியத் யூனியனில் இருந்து இஸ்ரேலுக்குக் குடி பெயர்ந்து வரும் யூதர்களை, கைப்பற்றப்பட்ட மேற்குக்கரையோரத்திலும் காசாப் பகுதியிலும் குடியமர்த்தும் காரியத்துக்கு அமெரிக்கா தரும் கடன்பணத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என எழுத்து வடிவில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா இஸ்ரேலிடம் வற்புறுத்தி உள்ளது. மிகச் சிக்கலான விடயங்களில் இனிமேலும் இஸ்ரேலை அமெரிக்கா நம்பத் தயாரில்லை என்பதனையே இது காட்டுகின்றது. இஸ் ரேலுக்கு சோவியத்திலிருந்து வரும் யூதர்களின் நலன் முக்கியமா
அல்லது பலஸ்தீனியர்களிடம் இருந்து கைப்பற்றி வைத்துள்ள நிலம் முக்கியமா எனக் கண்டுபிடிக்கவும், அமெரிக்கக் கட்டளைகளுக்கு இஸ்ரேல் எந்தளவுக்கு மதிப்பளிக்கிறது என்பதைக் கனர்டுபிடிக்கவும் இது ஒரு பாசிச் சாயப் பரிசோதனையாக அமைந்து விட்டது. ஆளுல் யூதர்களின் குடியேற்றத் திட்டங்களுக்கு அமெரிக்க உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தமது கொள்கையை விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை என்ற இஸ்ரேலின் வெளிநாட்டு அமைச்சர் டேவிட் லெவியின் பதிலால் அமெரிக்கா ஏமாற்றம் அடைந்துள்ளது. மேலும் பலஸ்தீனப் பிரச்சனை பற்றி ஒரு சமாதான முடிவுக்கு வரவேண்டும் என்றும், சோவியத்தின் ஆதரவுடன் இப்பிரச்சனையை இட்டு ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்றும் புஷ் வற்புறுத்திய போதிலும் இஸ்ரேல்
51

Page 30
இஸ்ரேல் 19.10. 1990 இவற்றிற்கு மறுப்புத் தெரிவிப்பதால் புஷ் நிர்வாகம் இஸ்ரேல் மீது மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளது. இஸ்ரேலுடனன அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படுவதற்கு இன்னுெரு காரணமும் உண்டு. வளைகுடாவில் உள்ள தனது நாட்டுக்குத் தேவையான எணர்ணெய் வளங்களை, ஈராக்கிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதில் அமெரிக்கா இப்போது கூடுதலான அக்கறை கொண்டுள்ளது. இதன் பொருட்டு சவுதி அரேபியாவுக்கு 23 பில்லியன் பெறுமதி மிக்க யுத்தக் கருவிகளை அமெரிக்காவிற்பனை செய்யவுள்ளது. வளைகுடா நெருக்கடியில் தமது பக்கமாக நிற்கும் எகிப்துக்கு நன்றிக்கடனுக, எகிப்தின் 7 பில்லியன் இராணுவத் தளபாடக் கொள்வனவுக் கடன்களை அமெரிக்கா இரத்துச் செய்துள்ளது. தனது நீண்ட நாள் விரோதியான சிரியாவுடன் நட்புறவை வளர்க்கத் தொடங்கியுள்ளது. அரபு நாடுகளுக்கு மிகவும் பாரிய அளவில் யுத்தக் கருவிகளையும் யுத்த விமானங்களையும் அமெரிக்கா வழங்குவதால், மத்திய கிழக்கில் இராணுவ பலம் அரபு நாடுகள் பக்கம் சாய்ந்து விடும் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆபத்தாகி விடும் என்று எண்ணும் அமெரிக்காவில் வாழும் யூத முக்கியஸ்தர்கள், புஷ் நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இஸ்ரேலை உதாசீனம் செய்து அரபு நாடுகள் மீது அதிக அக்கறை காட்டுவதால் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி என்ற நிலையில் இருந்து இஸ்ரேல் தள்ளப்பட்டு விட்டதாக இவர்கள் கருதுகின்றனர். ஆயினும் இஸ்ரேல் மீதான அமெரிக்க அதிருப்தியை மிக நுணுக்கமாக அணுகி, செய்தி வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பத்திரிகைகள் பலவும், பலஸ்தீனியர் தொடர்பான சமாதானத் தீர்வுகளுக்கு இஸ்ரேல் ஒத்துழைக்கத் தவறியதால் ஏற்பட்டுள்ள விபரீதம் தான் இதுவென்றும், இஸ்ரேலின் இந்தப் பிடிவாதம் தளர்த்தப்பட வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன. இவ்விதமாக அமெரிக்க இஸ்ரேலிய உறவில் சிறிய கசப்பு ஏற்பட்டிருந்த சமயம் பார்த்து, இஸ்ரேல் 21 பலஸ்தீனியர்களைச் சுட்டுக் கொலை செய்து, 150 பேரைப் படுகாயப்படுத்தி மீணடும் கெட்ட பெயரை எடுத்துக் கொண்டுள்ளது. இதஞல் பலத்த அசெளகரியங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளவர், அமெரிக்க ஜனதிபதியே. தன்னை ஒரு சம்பியனுகக் காட்டிக் கொள்ள மென்மேலும் வாய்ப்பைப் பெற்றவர், சதாம் ஹுசைன் தான். “மெக்காவையும், மெதீனுவையும், ஜெருசலேமையும் இஸ்லாமிய விரோதிகளிடமிருந்து காப்பாற்றுவேன்" என்ற அவரது கோஷத்துக்கு இச் சம்பவம் ஊட்டமளித்துவிட்டது. மலைக்கோவிலில் இது போன்ற வன்செயல்களை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தும் தடுக்க நடவடிக்கை எடுக்காது, நிலைமையை
52

(இஸ்ரேல் 19. 10. 1990 இவ்வளவு தூரம் மோசமடையச் செய்த இஸ்ரேல் மீது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்குமே ஆத்திரம் தான். வளைகுடா நெருக்கடியில் அமெரிக்காவுடன் அணிவகுத்து நின்ற சவுதி அரேபியா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளும் இஸ்ரேலின் இந்தக் கொலையை ஆட்சேபித்துள்ளன. இஸ்ரேலின் இச்செயலால் மத்திய கிழக்கு முழுவதுமே இன்று சதாம் ஓர் இலட்சிய வீரனுகும் வாய்ப்பு ஒன்று தோன்றியுள்ளது. குவெய்த்திலிருந்து ஈராக் வெளியேற வேணர்டுமாயின், கைப்பற்றியுள்ள பலஸ்தீனிய மணர்ணிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும், லெபஞனிலிருந்து சிரியாதன் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று சதாம் நிபந்தனைகளை விதித்துள்ளார். விளைவாக வளைகுடா நெருக்கடியும், பலஸ்தீனப் பிரச்சனையும் பிணைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சகலரும் இப்போது மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச அரங்கில் ஒரு புதிய பதட்ட நிலையைத் தோற்றுவித்துள்ள இச்சம்பவத்தின் பின்னணி பற்றிப் பல்வேறு வகங்கள் உண்டு. வளைகுடாப் பிரச்சனையில் முழு முஸ்லிம் உலகினர் ஆதரவையும் பெறவென ஈராக் கிஞல் இது தூணர் டப்பட்டிருக்கலாம். வளைகுடா நெருக்கடியைப் பயன்படுத்தி, இச்சந்தர்ப்பத்தில் தமது பிரச்சனைக்கு ஒரு முடிவு காண என பலஸ்தீனியர்கள் இதனைத் தூண்டியிருக்கலாம். அமெரிக்காவின் புதிய அராபிய உறவுக்குள் பிளவை ஏற்படுத்தி, சீர்குலைந்து போயிருந்த தனது அமெரிக்காவுடஞன உறவை மீள வலுப்படுத்திக் கொள்ளவென இஸ்ரேலியரே இதைத் துண்ைடியிருக்கலாம். எது எவ்வாருயினும் இன்று ஐ.நா சபையில் இஸ்ரேலைக் கண்டித்து அமெரிக்காவே தீர்மானம் கொண்டு வரவும், தன்னிடமுள்ள புதிய ரக ஏவுகணைகளுக்கு இஸ்ரேல் இரையாவது திணினமென்று சதாம் சத்தமிடவும், இஸ்ரேலுக்கு எதிரான ஆத்திரத்தைக் கிளறி அமெரிக்க அணியில் பிளவை உண்டாக்க வல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தவும், வளைகுடா நெருக்கடியுடன் பலஸ்தீனியர் பிரச்சனைக்கும் உடனடியாகத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ரற்படுத்தவும், மத்திய கிழக்கில் யுத்த சாத்தியங்களை மென்மேலும் வலுப்படுத்தவும், மேலாக சர்வதேச அரங்கில் "ஒரு குட்டிச்சாத்தானே" என்று இஸ்ரேல் கெட்ட பெயர்வாங்கிக் கட்டவும் இந்த மலைக்கோவில் சம்பவம் வழி வகுத்து விட்டது.

Page 31
|லெபஞன் 26. O. 1990
போரே, நீ எம்மை விட்டுப்
СЗшптель Gөл шопти "ш —птшпт?
இருதலைக் கொள்ளி எறும்பாக இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த பெய்ரூட் அரசாங்கத்தின் ஒரு தலை கிள்ளி எறியப் பட்டு விட்டது. கிறிஸ்தவர்கள் பெய் ருட்டினர் கிழக்குப்புறமாகவும் முஸ்லிம்கள் மேற்குப் புறமாகவும் நின்று 1988 செப்டம்பர் முதல் தத்தமக்குள் அரசாங்கங்களை அமைத்து, மக்களை ஆளாமல் அழித்து வந்தார்கள். கிழக்குப் பெய்ரூட்டின் பிரதமராகத் தன்னை சுயபிரகடனம் செய்திருந்த கிறிஸ்தவ கிளர்ச்சிக்குழுவின் தலைவர் ஜெனரல் மிசேல் அவூன் பிரெஞ்சுத் தூதரகத்தினுள் அடைக் கலம் புகுந்ததுடன் லெபஞனில் தலைவிரித்துத் தாண்டவமாடி வந்த யுத்த சன்னதம் தற்காலிகமாகக் கீழிறங்கியுள்ளது. லெபஞனைக் கடந்த 15 வருடங்களாகச் சுடுகாடாக்கிய உள்நாட்டு யுத்தத்தின் ஓர் அத்தியாயம் சென்ற வாரம் அக்டோபர் 13ம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
உலகில் பாவம் செய்த நாடுகளினர் பட்டியலில் லெபஞனுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. லெபஞனின்
 

லெபஞன் 26.10. 1990
தலைநகரான பெய்ரூட்டில் குண்டு துளைக்காத சுவர்கள் இல்லை; குருதி சிதருத சாலைகள் இல்லை; ஷெல்லும் ஆட்டிலறியும் பதம் பார்க்காத கட்டிடங்கள் இல்லை. அங்கு பாதாள அறைகளிலும் பதுங்கு குழிகளிலும் பயந்து பயந்து வாழும் மக்களுக்கு இரவும் பகலும் ஒன்று தான். பலநூறு போர்நிறுத்தங்களையும் மறுகணமே போர் நிறுத்த முறிப்புக்களையும் கண்டு அலுத்துக் களைத்துப் போயிருக்கும் மக்கள் "போரே, நீ எம்மை விட்டுப் போகவே மாட்டாயா?" என்று கூறி அழுது புலம்புகின்றனர். ஒவ்வொரு விஞபடியும் எதிர்காலத்தை அவநம்பிக்கையுடன் எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் லெபஞன் மக்கள் மனதில் நம்பிக்கையை ஊட்டவென "லெபஞன் குடியரசுக்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது” என்று அந்த நாட்டு ஜஞதிபதி எலாயஸ் ஹராவி மறுநாள் வாஞெலி வாயிலாகக் கூறிஞர். ஆளுல் மிசேல் அவூனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, லெபஞன் மக்கள் வாழ்வில் இதோ வசந்தம் வந்து விட்டது என்ற அவசரப்பட்டு ஆருடம் கூறுவது அரசியல் விவேகம் மிக்க செயல் அல்ல என்பதனை அங்குள்ள நிலைமைகள் சுட்டிக் காட்டுகின்றன.
மத்திய தரைக் கடலோரத்தில் அமைந்துள்ள லெபஞன் குடியரசுக்கு வடக்கும் கிழக்குமாக சிரியாவும், தெற்கே இஸ்ரேலும் அயல்நாடுகளாகும். 1944 இல் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்ற லெபஞனில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும் அங்கு சிறுபான்மையினர். சுதந்திரத்தின் பின் அரசாங்கத்தில் கிறிஸ்தவர்களே அதிக செல்வாக்குடையவர்களாக இருந்தனர். இதஞல் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் சிறுபான்மைக் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான இனப்பிரச்சனை இந்த நாட்டின் மண்ணுேடு ஊறிப் போன சங்கதி. சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாள் முதலாக இவ்விரு சாராரும் தொடர்ந்து அடிபிடிப்பட்டுக் கொண்டே வந்தனர். இதனைத் தடுக்கவென 1976 இல் சிரியா சுமார் நாற்பதாயிரம் துருப்புக்களை "பல் தேசிய அரபுச் சமாதானப்படை' என்ற பெயருடன் லெபஞனுக்குள் கொண்டு வந்து குவித்தது. ஆயினும் சிரிய சமாதானப்படை, அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்களுக்குப் பாதுகாவலஞகவே நடந்து கொண்டது. இது சிறுபான்மை இனத்தவரின் அரசியற் செல்வாக்கைப் பங்கப்படுத்தியது. அது மட்டுமன்றி லெபஞனின் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் அரசியல் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரபு லீக்கும் தீர்மானம் எடுத்திருந்தமை கிறிஸ்தவர்களுக்குப் பேரிடியாய் அமைந்தது. இவற்றின் விளைவாகவே லெபஞன் மண்ணை விட்டு சிரியா வெளியேற வேண்டும் என்றும், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களின் அரசியற் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்ற அரபு லீக்கின் தீர்மானத்திற்கு எதிராகவும் கிறிஸ்தவ தீவிரவாதக் கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திப் போராட்டங்களில் இறங்கினர். இவ்விதமாகத் தோன்றிய போராளிகள் குழுவினர் தலைவர் தான் ஜெனரல் மிசேல் அவூன்.
55

Page 32
|லெபஞன் 26.10. 1990
முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பங்காடப்பட்ட லெபஞனின் தலைநகரான பெய்ரூட்டின் கிழக்குப் பகுதி அவூனின் கையிலும் மேற்குப் பகுதி முஸ்லிம்களின் கையிலும் போய்ச் சேர்ந்தன. இவ்வாருக பெய்ரூட்டைக் கூறு போடும் எல்லை 'பச்சைக்கோடு" எனப்பட்டது. மேற்கு பெய்ரூட்டையும் நாட்டின் பெரும்பகுதியையும் தம் வசப்படுத்தி வைத்திருந்த முஸ்லிம் ஆட்சியாளருக்குப் படைபலமும் பயிற்சியும் அளித்துப் பக்க துணையாக இருந்த நாடு, சிரியா. சிரியாவின் நீண்ட நாள் விரோதியான ஈராக் தான் அவூனின் கிளர்ச்சியாளருக்கு ஆயுத உதவிகளும் உற்சாகமும் அளித்து வந்தது. சிரியாவை எதிர்ப்பதற்கென்றே ஈராக்கினுல் ஊட்டமளிக்கப்பட்ட இந்தக் கிறிஸ்தவ அணியினருக்கு வளைகுடா நெருக்கடி ஏற்பட்ட நாள் முதலாக ஈராக்கின் உதவி கிடைக்காமல் போனது பேரிழப்பாகி விட்டது. கிறிஸ்தவ ஆட்சியாளரை அடிபணிய வைக்கவென,சிரியா பெய்ரூட்டின் மீது விமானத் தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்கனவே பலதடவை சிரியாவை எச்சரித்திருந்தன. ஆளுல் சிரியாவோ வளைகுடா நெருக்கடி தோன்றியவுடன் ஈராக்குக்கு எதிராக அமெரிக்காவுடன் தனது படைகளை அங்கு அனுப்பி, அமெரிக்க நன்மதிப்பைப் பெற்றுக் கொண்ட இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு பெய்ரூட்டின் மீது திடீர் விமானத் தாக்குதலை மேற்கொண்டு அஆனை அடிபணிய வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் அமெரிக்கா, இஸ்ரேல், ஈராக் ஆகிய நாடுகளின் முழுக்கவனமும் வளைகுடாப் பக்கம் திரும்பியிருந்த போது, மலைக் கோவில் கொலைகளினல் இஸ் ரேல் உலகநாடுகளினர் கண்டனத்திற்குள்ளாகியிருக்கும் போது, எதிர்ப்பு எதுவும் இன்றி சிரியா தன் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளது.
லெபஞன் ஜனதிபதி எலாயஸ் ஹராவியின் துருப்புக்கள் சிரிய படையுடன் இணைந்து அக்டோபர் 13 காலை ஜெனரல் அவூன் தங்கியிருந்த பாபடா மாளிகையை மையமாகக் கொண்டு, கிழக்கு பெய்ரூட்டை ஆகாயமார்க்கமாகத் தாக்கத் தொடங்கின. பகல் 12 மணியளவில் மலையுச்சியில் அமைந்துள்ள மாளிகையையும், அருகிலிருந்த பாதுகாப்பு அமைச்சையும் இலகுவாகக் கைப்பற்றிக் கொண்டனர். இத்தாக்குதலின் போது இருநூறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. சுமார் 600 பேர்வரைபடுகாயமுற்றனர். தோல்வியைத் தழுவிக் கொண்ட அவூன் தனது குடும்பத்துடன் பிரெஞ்சுத் துரதரகத்தினுள் சரண் புகுந்து கொண்டார். அங்கிருந்து தனது இருபதாயிரம் படைவீரரையும் யுத்தநிறுத்தம் செய்து, ஜனதிபதி ஹராவியின் துருப்புக்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். “சிரியாவின் கைப்பொம்மையான ஹராவியின் ஆட்சிக்குச் சரணடைவதை விட நான் சாவேன்" என்று அவூண் சூளுரைத்த மறுநாளே சாவுக்குப் பயந்து ஓடி ஒளித்துக் கொண்டதால் அவரது வீரர்கள் அவர் மீது அளவிலா ஆத்திரம் அடைந்துள்ளனர். இவர்கள் இன்னமும் ஆங்காங்கே எதிர்த்துப்
56

(லெபஞன் 26.10.1990
(பாராடிக் கொணர் டே இருக்கினர் ருர்கள். அஆனினர் 1ள்வாங்குதலால் ஏமாற்றம் அடைந்துள்ள கிறிஸ்தவர்கள், அவூன் தங்கள் இதயத்தில் கூரிய கத்தியால் குத்தி விட்டதாகவும், கிறிஸ்தவர்களுக்கு இனி இந்த நாடு இல்லை எனவும் கூறி வருந்துகின்றனர். "அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல், ஈராக் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் லெபளுனை விட்டு சிரியாவைத் துரத்தியே திருவேன்" என்று கூறிப் போரிட்ட அவூன், “மேற்கு நாடுகளைப் போல மனித உரிமைகளைப் பேணும் நாடாகவே லெபஞன் டிருக்கவேண்டும்" என்று கனவு கண்டார். உறுதியுடன் போராடிய அஆணின் பின்வாங்கலால் கிறிஸ்தவ சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க, அவூனை அகதியாக மற்றுக் கொள்ள பிரான்ஸ் முன்வந்துள்ள போதிலும் நாட்டை விட்டு அவர் வெளியேறுவதைத் தடுப்பதற்கென சிரிய, லெபஞன் துருப்புக்கள் பெய்ரூட்டில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தைச் சுற்றி வளைத்து நிற்கின்றன. நாட்டின் பொது நிதியத்தில் இருந்து 75 மில்லியன் டொலரைக் கையாடியதாகக் குற்றம் சாட்டி அவர் மீது நிதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிரிய, லெபனன் தரப்பினர் கூறுகின்றனர்.
ஜெனரல் அவூனின் வீழ்ச்சி இப்பிராந்தியத்தில் ஈராக்கிற்கு இருந்த செல்வாக்கின் வீழ்ச்சியாகும். அதே வேளை சிரியாவின் கை :ங்கு திடீரென மேலோங்கி விட்டது. நிலைமை தனக்குச் சாதகமாக இருந்த தருணம் பார்த்து எதிரியைத் தோற்கடித்து விட்ட சிரியா, தனது சமாதானப் பணி முடிந்து விட்டதெனக் கூறி, லெபளுனை விட்டு அணி மைக் காலத்தில் வெளியேறி விடும் என ாதிர்பார்ப்பதற்கில்லை. லெபஞனையே இஸ்ரேலுக்கு எதிரான தனது பாதுகாப்புத் தந்திரோபாயத்தின் தளமாக சிரியா கருதுகின்றது. இதஞலும் சிரியாவின் வெளியேற்றம் அண்மையில் இல்லை என்பது உறுதியாகின்றது. இதே வேளை லெபஞனின் தென்பகுதிகளில் இருந்து கொண்டு பலஸ்தீனியர்கள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், இப்பகுதிகளை விட்டு இஸ்ரேலும் வெளியேற மறுக்கின்றது. இவற்றுடன் ஈரானிய புரட்சிக் காவலர்களும், பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பல்வேறு குழுக்களும் கிழக்கு பெய்ரூட்டில் நன்கு காலுரன்றி நிற்கின்றன. பெய்ரூட்டிற்கு 25 மைல் தூரத்தில் உள்ள சிடன் நகரம் இன்னமும் ஈராக்குக்கு ஆதரவான பலஸ்தீனியர் கைவசம் இருக்கிறது. இதே போல வளைகுடா நெருக்கடியின் பின், ஈராக்கின் ஆதரவாளராக மாறி விட்ட இன்னும் சில பலஸ்தீனியக் குழுக்களும் இங்கே இயங்கி வருகின்றன. அவூனின் தலைமையிலான கோஷ்டியை விட, மேலும் பல கிறிஸ்தவப் போராட்டக் குழுக்கள் இருந்தமையே அவர்களை எதிரிகள் முன் பலவீனப்படுத்திய முக்கிய காரணி என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். ஜனதிபதி எலாயஸை ஆதரித்த சமீர் கீகி என்பவரது குழுவும், எலி ஹொபீக்கா என்பவரது குழுவும் ஏனைய கிறிஸ்தவக் குழுக்களுக்குள் முக்கியமானவையாகும். இவ்விருவருள் ளும் முனர் னவர் ஈராக் கிஞல்
57

Page 33
லெபஞன் 26.10.1990
வளர்க்கப்பட்டவராயினும் ஜெனரல் அஆனின் எதிரியாவர். பின்னவர் இஸ்ரேலினுல் வளர்க்கப்பட்டு இப்போது, சிரியாவின் ஆசீர்வாதத்துடன் இயங்கி வருகின்றர். எஞ்சியுள்ள இவ்விரு கிறிஸ்தவக் குழுக்களுக்குள்ளும் போர் நிகழப்போவது நிச்சயம். இதில் எலி ஹொபிக்காவின் குழு வெற்றி பெறுமாயின் லெபனுனில் சிரியா நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கு பாரிய தடைகள் இருக்கப் போவதில்லை. ஜெனரல் அவூன் வீழ்ச்சியடைந்ததும் லெபஞனில் "இரண்டாவது குடியரசு பிறந்துள்ளது" எனக் கூறி மகிழும் லெபஞன் ஜளுதிபதி எலாயஸ், நாட்டின் ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் பற்றி இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளார். ஆளுல் இவரை ஆட்டுவிக்கும் சூட்சுமக் கோல், சிரிய நாட்டின் ஜஞதிபதி அஸாத்தின் கைகளில் தான் உண்டு என்பது முழு உலகும் அறிந்த இரகசியம். இவ்வாருக லெபஞனில் சிரியா செல்வாக்குப் பெற்று விட்டமை இஸ்ரேலுக்கு மகிழ்ச்சியான விடயம் அல்ல. லெபஞனின் பெரும்பகுதி இன்னமும் சிரிய செல்வாக்கினுள் இருக்க, நாட்டின் தெற்கு ஓரங்களில் இஸ்ரேலின் படைகள் அணிவகுத்து நிற்க, பெய்ருட்டில் இன்னமும் பல கிறிஸ்தவக் குழுக்கள் திக்குத் திக்காக எதிரிகளாய் துவக்கேந்தி நிற்க, ஈரானிய புரட்சியாளர்கள் ஒரு கையில் குர் ஆனும் மறுகையில் துப்பாக்கியும் தூக்கி வர, பலஸ்தீனியக் கிளர்ச்சிக்காரர்கள் கைகளில் கல்லேந்திக் குறிபார்த்து நிற்க, இவற்றுக்கு நடுவே நாடு சீரடைந்து விட்டது என்று எண்ணி போவியாய் மகிழ்வது நகைப்புக்குரியது. எதிரிகளினர் போர்க்களமாகும் பேராபத்து லெபனுனை விட்டு இன்னமும் நீங்கி விடவில்லை என்பது தான் உண்மை.
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எதிர் எதிராக நின்று போராடிவரும் லெபனனில் தான், பணயக்கைதிகள் விவகாரம் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. பலஸ்தீனியத் தீவிரவாதிகளும், ஈரானிய ஆதரவுத் தீவிரவாதிகளும் சுமார் 15 மேற்கு நாட்டவரை இன்னமும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். இதே போல இஸ்ரேலின் ஆதரவுடன் இயங்கும் தெற்கு லெபஞன் தீவிரவாதிகள், ஏராளம் பலஸ்தீனியர்களையும் முஸ்லிம் மதத்தலைவர்களையும் பிடித்து வைத்துள்ளனர். இவற்றிற்கெல்லாம் உள்நாட்டுப் பிரச்சனை தான் காரணம் எனக் கூறி விட முடியாது. இஸ்ரேலிய பலஸ்தீனப் பிரச்சனை, அமெரிக்க ஈரானர் பிரச்சனை, சிரிய ஈராக் பிரச்சனை, கிறிஸ்தவ முஸ்லிம் பிரச்சனை என்பவற்றைக் காரணமாகக் கொண்டு, வெளிநாடுகள் பலவும் லெபஞன் மண்ணில் கடந்த 15 வருடங்களாகச் சதுரங்கம் ஆடின. சம்பந்தப்படாத பல்லாயிரம் அப்பாவிப் பொதுமக்களைச் சங்காரம் செய்து மகிழ்ந்தனர். உயிரற்ற முண்டமாகக் காட்சியளிக்கும் பெய்ரூட் நகரத்தையும், வெளிநாட்டுக் கொலைவெறியர்களின் கைபட்டு விட்ட லெபஞன் மண்ணையும், அந்த நாட்டு மக்களையும் விட்டு, போர் அரக்கன் போய் விடுவான் என அன்ைமைக்காலத்தில் எதிர்பார்க்க முடியாது.
| 58 |

பாகிஸ்தான் 02.11.1990
பெனளிர் என்ற
பெரும்புயலுக்கு நடந்ததென்ன?
"பெண்ணெருத்திக்கு வாக்களிப்போருக்கு சொர்க்க வாசல் முடப்பட்டிருக்கும் "என்ற வேடிக்கை மிக்க வேதவாக்கினை உங்களால் நம்ப முடிகிறதா? பாகிஸ்தான் மக்களை அந்த நாட்டு மதபீடங்கள் நம்ப வைத்து விட்டனவே பாகிஸ்தானில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக, ஒவ்வொரு வெள்ளியும் பள்ளி வாசல்களில் இடம் பெற்று வந்த ஜும்மா தொழுகையின் போதும் மதகுருமார் நிகழ்த்தி வந்த பிரசங்கங்களில் இது போன்ற பிரசாரங்கள் பொதுமக்களின் செவிப்பறைகளில் ஓங்காரமாய் ஒலித்து வந்தன. "பெனளிர் பூட்டோ ஒரு புனிதமான முஸ்லிம் அல்ல” என்று பொய் கலந்து மார்க்க போதனை செய்த மதவாதிகள், அவரைக் குற்றவாளிக் கூணர்டில் நிறுத்தினர். "களவெடுத்தவர்களின் கைகால்கள் துண்டாடப்பட வேண்டும் என குர்ஆனில் கூறப்படும் தண்டனை அபத்தமானது" என்று ஆட்சியிலிருந்த காலத்தில் பெனளிர்
59

Page 34
பாகிஸ்தான் 02.11.1990
கூறியதை பெரும் குற்றமாகக் கண்டித்த மதத்தலைவர்கள், அவரை ஒரு அசல் முஸ்லிம் அல்ல என்று வாதிட்டனர். "இருபது மாத இருண்ட ஆட்சி" என்று பென ஸ்ரீரின் ஆட்சிக்காலத்திற்குத் தார் பூசித் தலையங்கம் தீட்டிய “பாகிஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை அவரை இந்தியாவுடனும் இஸ்ரேலுடனும் இணக்க உறவுகள் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டிச் செய்திகள் வெளியிட்டது. ஊழலைக் காரணம் காட்டி பெனளிரைப் பதவி இறக்கம் செய்த ஜஞதிபதியும் காபந்து அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும், மதபீடங்களும், பத்திரிகைகளும், பாரிய பொருளாதார நிறுவனங்களும், மிடுக்குடன் மீசையை முறுக்கி நிற்கும் இராணுவமும் ஓரணியில் திரண்டு எதிர்த்து நிற்க, சாதாரண மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் மட்டும் ஊட்டமாக வைத்துத் தேர்தலில் நின்ற பென ஸிர் பூட்டோ இன்று தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார். பெண் என்பதோர் மாயப்பிசாசென்றெண்ணி பென வீரை உதாசீனம் செய்தனரா? மாதர் தம்மை இழிவுபடுத்த வேண்டும் என்ற மதவெறியுடன் கூடிய மடமை தான் இதற்குக் காரணமா? அல்லது உண்மையிலேயே அந்த நாட்டை ஆள்வதற்கு அருகதையற்றவர் என்று மக்களே உணர்ந்து அவரை உதறித் தள்ளினரா?அல்லது ஏழை எளிய மக்களின் மனங்களில் வேர்விடத் தொடங்கிய பெனளிர் என்ற பசுந்தளிரை எதிரிகள் தந்திரங்கள் பாவித்துப் பிடுங்கி எறிந்தனரா?
பாகிஸ்தானின் முன்னுள் இராணுவ ஜஞதிபதி ஷியா உல் ஹக்கின் மர்ம விமான விபத்து மரணத்தின் பின் இடம் பெற்ற தேர்தல் மூலம், 1988 இல் பிரதமராகப் பதவி ஏற்றவர், பெனவீர் பூட்டோ. ஜெனரல் ஷியாவினுல் துரக்கில் இடப்பட்ட பிரதமர் சுல்பிகார் அலிபூட்டோவின் புத்திரியான பெனளிர் பூட்டோவை பிரதமர் பதவியிலிருந்து இருபது மாதங்களின் பின் ஆகஸ்ட் 8 இல் தற்போதைய ஜனதிபதி குலாம் இஷாக் கான் பதவியிறக்கம் செய்தார். அதிகார துஷ்பிரயோகம், உறவினர்க்கு அதிகாரங்கள்,பதவிகள் வழங்கியமை, கட்சி ஆதரவாளர்களுக்குச் சலுகைகள் செய்தமை, பொதுச் சொத்துக்களை சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தியமை, உள்நாட்டுக் குழப்பங்களை அடக்கத் தவறியமை, நீதித்துறை, செனட் சபை போன்றவற்றுள் தலையிட்டமை, திறமையினர் மை போனர் ற குற்றங்களை ஆதாரங்களாகக் காட்டி, பெனளிரைப் பதவியில் இருந்து அகற்றி அவரது எதிரியான குலாம் முஸ்தபா ஐரோயின் தலைமையில் ஒரு காபந்து அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பெனளிர் மீது ஆறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, ஒரு தனிநபர் நீதி விசாரணைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் பொது, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்படுவதுடன் ஆகக் குறைந்தது ஏழு வருட
60

பாகிஸ்தான் 02.11.1990
சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டி ஏற்படும். இது இவ்வாறிருக்க பெனளிரின் கணவரான ஆஸில் அலி சர்தாரி, பாகிஸ்தானில் பிறந்த பிரித்தானிய வர்த்தகர் ஒருவரை பலாத்காரமாகக் கடத்திச் சென்று பணம் பறித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கையில் விலங்குடன் சிறையுள் தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வாருன நிலைமையில் அக்டோபர் 24 இல் இடம் பெற்ற பொதுத் தேர்தல் ஒரு புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்து கொள்வதற்காக நடாத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட போதிலும், உண்மையில் பெனளிர் பூட்டோ மீதான ஒரு பொதுசன வாக்கெடுப்பு என்றே அதைக் கூற வேண்டும். பெனளிர் ஆட்சி மீண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்று மக்கள் சம்மதம் பெற என நடாத்தப்பட்ட வாக்கெடுப்புத் தான் அது. ஜனதிபதி, மதபீடம், இராணுவம், எதிர்க்கட்சிகள் ஆகிய இடங்களில் இருந்து பலத்த எதிர்ப்புக்களைப் பெனளிர் தேடிக் கொண்டுள்ள போதிலும், சாதாரண மக்களின் அபிமானத்தை அவர் இழந்திருக்கவில்லை. சுமார் 56 சதவீதத்தினர் பெனளிரின் பதவிநீக்கம் அநீதியானது என்றும் 55 சதவீதத்தினர் பெனளிரின் ஆட்சியை விட காபந்து அரசாங்கத்தின் ஆட்சி மோசமானது என்றும் கருதி இருந்தனர். தேர்தல் பிரசாரங்களின் போது பெனளிர் சென்ற இடமெல்லாம் பெருந்திரளாகக் கலந்து கொண்ட பொதுமக்கள் "பெனளிர் குற்றமற்றவர்" என்றும் “ஏழைத்தொழிலாள மக்களின் ஏக புத்திரி பெனளிர்” என்றும் கோஷமெழுப்பி தமது ஆதரவைக் காண்பித்தனர். பர்தாவுடன் அரசியலுள் புகுந்த பெனளிர் பாகிஸ்தானின் பிரபுத்துவ வம்சத்தைச் சேர்ந்தவர். இன்றும் அவ்வாருன வாழ்க்கை முறைகளைப் பினர் பற்றி வருபவர். இருந்த போதிலும் சோஷலிஸத்தின்பால் அதிக நாட்டமுடையவர். பாகிஸ்தானில் புதிய ஜனநாயகப் புரட்சி வெடிக்க வேண்டுமெனக் கனவு காணும் இவர், பல முற்போக்கான சிந்தனைகளை மனதிற் கொண்டிருந்த போதிலும், தனது நாட்டு மதவாதிகளின் "கட்டுப்பெட்டித் தனம்" மிக்க விமர்சனங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவென ஆண்களோடு கைகுலுக்குவதை இவர் இன்னமும் தவிர்த்து வருகின்றமை இவர் மீது திணிக்கப்படும் பல நிர்ப்பந்தங்களுக்கான ஒரு சிறு உதாரணம் எனலாம். ஆண் மேலாதிக்கம் மிக்க இந்த முஸ்லிம் நாட்டில் பெண்களின் சொல்லுக்குச் செல்வாக்கு இல்லை. நீதிவிசாரணைகளின் போதும் இவ்வாருனபாகுபாடுகள் இன்னமும் பேணப்படுகின்றன. இதன் விளைவாக சுமார் இரண்டாயிரம் பெண்கள் ஆணர்களால் கற்பழிக்கப்பட்டும், அதை நியாயப்படுத்த வழியின்றிவிபசாரிகள் என்ற கெட்ட பெயருடன் இந்த நாட்டின் சிறைக்கம்பிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்விதமான பெண் அடிமை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பெண் தலைவி வேண்டும்
61

Page 35
பாகிஸ்தான் 02.11.1990
என்றும் , ஏழை மக்கள் மீதான இராணுவ பாணி அடக்குமுறைகளுக்கு எதிராக, நீதியான ஒரு மக்கள் தலைமை வேண்டும் என்றும் எதிர்பார்த்திருந்த பாகிஸ்தான் மக்கள் "இருள் அகற்ற வந்த உதயசூரியன், பெனவீர்” என்று கூறி அவரை சென்ற இடமெங்கும் வரவேற்றனர். சாதாரண மக்கள் காட்டும் இந்தப் பேராதரவைப் பயன்படுத்தி, பெனளிர் தன் ஆட்சிக்குப்பங்கம் விளைவித்தவர்களை எதிர்த்துத் தேர்தலில் குருவளிப்பிரசாரம் செய்தார். "பென ஸிர் என்பது ஒரு பெண்ணின் பெயரல்ல, தடைகளைப் பெயர்த்தெறியும் பெரும் புயலின் பெயரே பெனளிர்” என்று சூளுரைத்தார். மக்கள் பென லீருக்குக் காண்பித்த பெருத்த ஆதரவை மூன்று மாதங்களின் முன்னர் அவரது ஆட்சியைப் பறித்தவர்கள் பார்த்து, தாம் போட்ட கணக்கு பிழையென எண்ணினர். இவர்கள் மக்களைத் திசை திருப்ப பிரயத்தனங்கள் பல செய்தனர்; பல்வேறு உபாயங்களைக் கையாண்டனர்.
மக்கள் மனங்களைத் திசை திருப்பும் கடைசி முயற்சியாகவே ஜஞதிபதியினர் அனர் றைய உரை அமைந்திருந்தது. வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு சரியாக பன்னிரண்டு மணித்தியாலம் இருக்கும் போது ஜனதிபதி குலாம் இஷாக் கான் தொலைக்காட்சி,வானெலி வாயிலாக மக்களுக்குச் செய்தி விடுத்தார். ஜனதிபதி என்ற வகையில் நடுநிலை வகிக்க வேண்டிய அவர், பெனளிரின் அரசாங்கத்தைத் தான் பதவி நீக்கம் செய்தது சரி என்பதற்கான ஆதாரங்களை முன் வைத்தார். பெனளிரின் ஆட்சிக்கு எதிராக ஏராளம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். நாட்டின் நீண்ட கால எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நல்லெண்ணங்களையும் பெனளிர் தனது 20 மாத ஆட்சியின் போது நாசம் செய்ததாகக் குற்றம் சாட்டினர். இந்த நாசகாரியத்தை எதிர்த்துக் குரல் எழுப்ப வகையறியாது ஏங்கிக்கொண்டிருந்த சாதாரன மக்களின் மனநிலை அறிந்து தான் பென லீரின் ஆட்சியை அகற்றியதாகவும், குர் ஆனை ஆதாரம் காட்டி உண்மைக்கும் நீதிக்கும் மதிப்பளித்து, புதிய அரசைத் தெரிவு செய்யும்படியும் ஐம்பது மில்லியன் மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்த உரையைக் கண்டித்த பெனவீரின் ஆதரவாளர்கள் இஸ்லாமிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு திரட்ட என, பக்கச் சார்பாக ஜனதிபதி பிரசாரம் செய்தமை ஒரு நல்ல ஜனநாயகப் பண்பு அல்ல என விமர்சித்தனர். பென ஸிர் பூட் டோவை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கென எடுக்கப்பட்ட முயற்சி இது எனக் குற்றம் சாட்டினர். இவ்வாருக பல்வேறு முனைகளில் இருந்தும் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போர்க்கணைகளை எதிர்த்துச் சமாளித்துத் திரும்பவும் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று திடமாக நம்பியிருந்தார், பெனளிர் பூட்டோ. தன் மீது
62

பாகிஸ்தான் 02.11.1990 சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை என்றும், தனி னையும் தனது கட்சியையும் வீணர் பழி சுமத்தி ஒழித்துக்கட்டவென எதிரிகள் கங்கணம் கட்டி நிற்பதாகவும், இவற்றை எல்லாம் மீறி மக்கள் முன் தோன்றி, "உங்களை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல மீணடும் நான் வந்திருக்கிறேன்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பிரசாரம் செய்த பெனளிர் இன்று தோல்வியைத் தழுவிக் கொண்டார்.
1988 தேர்தலின் போது 93 ஆசனங்களைப் பெற்ற பெனளிர், இம்முறை 45 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளார். சுயேச்சைகளும் ஏனைய சிறிய கட்சிகளும் 86 ஆசனங்களைப்பெற, பிரதான எதிர்க்கட்சியான இஸ்லாமிய ஜனநாயகக் கூட்டணி 105 ஆசனங்களைப் பெற்று அரசாங்கம் அமைக்க உள்ளது. மிகவும் பிரச்சனைக்குரியதாகக் கருதப்பட்ட இத் தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்தே காணப்பட்டது. பெனளிரை மீண்டும் ஆட்சிக்குத் தெரிவு செய்ய விரும்பாததால் ஏற்பட்ட அசிரத்தையோ அல்லது பெனவீரைத் தெரிவு செய்தாலும் இராணும் தான் ஈற்றில் ஆட்சியைப் பிடுங்கி எடுத்துக் கொள்ளும் என்ற எண்ணத்தால் ஏற்பட்ட ஆர்வமின்மையோ இதற்குக் காரணமாக இருக்கலாம். இராணுவம் தேர்தலை இரத்துச் செய்து, பெனளிரையும் அவரது கட்சியினரையும் கைது செய்துவிட்டு, ஆட்சியில் அமரலாம் என்ற ஊகம் மக்கள் மனதிலும், அரசியல் வாதிகள் மனதிலும் இருந்து வந்துள்ளதை மறுப்பதற்கில்லை. பாகிஸ்தான் மக்கள் கட்சியினரைக் கைது செய்து காவலில் வைக்கவென அரச வாடி வீடுகள் பல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகச் செய்திகள் உண்டு. தேர்தலில் குளறுபடிகளும் மோசடிகளும் இடம் பெறலாம் என்ற சந்தேகத்தின் விளைவாக மேற்கு நாடுகள் பலவும் பெனளிருக்கு நியாயமான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தேர்தலில் ஜனநாயகப் பண்புகள் மீறப்பட்டால் பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தி விடுவோம் என்றும் கூறி தேர்தலை அவதானிக்க என அவதானக் குழுக்களை அங்கு அனுப்பியிருந்தன. ஒரு சில சிறிய அளவிலான மோசடிகள் இடம் பெற்றிருக்கலாம் என ஒப்புக் கொள்ளும் 40 உறுப்பினரைக் கொண்ட வெளிநாட்டார் அவதானிப்புக் குழு, பெனளிர் கூறுவது போன்ற பாரிய அளவிலான மோசடிகள் இத்தேர்தலில் இடம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லையென்று கருத்து வெளியிட்டுள்ளது. இரு தொகுதிகளில் போட்டியிட்ட பெனவீர் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறே இவரது கணவரும் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
புதியதொரு அரசாங்கத்தை தெரிவு செய்வற்கென நிகழ்த்த்ப்பட்ட இந்த ஜனநாயக வாக்கெடுப்பு வேள்வியின்
63

Page 36
பாகிஸ்தான் 02.11.1990
போது 9உயிர்களும் சுமார் 66 பொதுமக்களின் படுகாயங்களில் இருந்து ஓடிய பச்சை இரத்தமும் பலியிடப்பட்டன. பலிபீடத்தை வெற்றிவாகையுடன் கடந்து நவாஸ் ஷரிப் என்பவரின் தலைமையிலான இஸ் லாமிய ஜனநாயக முனி னணி முலஸ்தானத்தைச் சென்றடைந்துள்ளது. சுதந்திரமான, நேர்மையான, பாரபட்சமற்ற தேர்தல் இது என்று ஜஞதிபதி கூறிப் புளகாங்கிதம் அடைகின்ருர், தேர்தல் முடிவுகள் பூரணமாக வெளிவரமுன்னரே தனது தோல்வியை ஒப்புக் கொண்ட பென ஸிர் மோசடிகள் முலமாகவே தான் வீழ்த்தப்பட்டதாகக் கூறுகின்ருர், அரச கையாட்கள், வாக்குப் பெட்டிகளைக் களவாடினர் என்றும், பெண்களும் தனது கட்சி ஆதரவாளர்களும் பல சாவடிகளில் வாக்களிப்பதில் இருந்து தடுக் கப்பட்டனர் என்றும் , தனது கட்சியைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களைப் பயமுறுத்தி,அப்புறப்படுத்தி, அநீதிகள் இழைக்கப்பட்டன என்றும் கூறும் பெனளிர், தனது நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகக் கருதி வருந்துகிருரர். உண்மை எதுவென அறியாத உலக நாடுகள் வெறுமனே ஊகங்களுடன் இருக்கின்றன.
பென லீர் பூட்டோவின் எண்ணம் ஈடேறவில்லை. மக்களாகவே அவரை நிராகரித் திருக்கலாம். இது உண்மையாயின் இவரது ஆட்சியில் மக்கள் நம்பிக்கை இழந்தமை காரணமாய் இருந்திருக்கலாம். மக்களாலும் நிராகரிக்கப்பட்டு விட்டார் என வெளியுலகுக்கு நிரூபித்துக் காட்ட, அங்கு ஒரு நாடகமே நடாத்தப்பட்டும் இருக்கலாம். இது உண்மையாயின் இவரது ஆட்சியில் மலிந்து இருந்ததாகக் கூறப்படும் குறைபாடுகள் இதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். எது எவ்வாருயினும் பெனளிர் "அநீதிக்கு எதிராகப் போராடியே தீருவேன் என்று நிற்கின்ருர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்து நீதிக்காகக் குரல் கொடுப்பாரா? அல்லது நீதி கேட்டு வீதியில் இறங்கி விடப் போகின்ருரா? வீதியில் இறங்கி மக்கள் கிளர்ச்சியைத் துரண்டி,நியாயம் கேட்க நினைப்பாராயின் பாவம், பாகிஸ்தான், மீண்டும் ஜனநாயக மழலையை இராணுவத்திற்கு பலியிட நேரிடலாம். பாராளுமன்றத்தில் இருந்து பெனளிர் ஜனநாயகத்திற்கு குரல் கொடுக்க நினைப்பாராயின் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விரைவில் விசாரிக்கப்படாமலா போகும்? அப் போது பென ஸிர் என்ற பறவையினர் சிறகுகள் ஒடிக்கப்படலாம்; ஏன், சிறையிலும் அடைக்கப்படலாம்.

ஐ.ஆர்.ஏ 09.11.1990
பாராளுமன்ற ஜனநாயகத்தின்
நடுநாயகத்திற்கு பயங்கரவாதம்
ஒரு சவால்
"பயங்கரமான துப் பாக்கிகள், எறிகுண்டுகள், ஏவுகணைகளுடன் வருகிருர்கள்: பதுங்கியிருந்து தாக்குகிறர்கள்: பின்னர் வந்தவழியே பின்புறமாக மறைந்து விடுகிறர்கள். இவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். இது பயங்கரவாதம் - கொரில்லா யுத்தம்” என்று அழாக்குறையாக மார்க்கிரட் தச்சர் பிரித்தானியாவில் இப்போது இடம் பெற்றுக் கொண்டிருப்பது கொரில்லா யுத்தம் தான் என்பதை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் வான்படை சீஃப் மார்ஷலும் முன்னுள் ஜிப்ரால்டர் கவர்னருமான சேர் பீட்டர் ரெறி என்பவர் ஐ.ஆர்.ஏயினுல் சுட்டுக் கொல்லப்பட்ட துயரம் தாளாமல் தட்சர் இவ்வாறு பிரலாபம் செய்துள்ளார். இது நடைபெறுவதற்கு முதல் நாள், வட லண்டனில் உள்ள ஒரு இராணுவ நிலையத்துக்கு வெளியே வைத்து இராணுவ வீரர் ஒருவர் ஐ.ஆர்.ஏயினுல் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முதல் வாரம் பயங்கரவாதம் பற்றிய சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற

Page 37
|8. gъfї. бЈ 09.11.1990
இருந்த மண்டபம் ஒன்றினுள், ஐ.ஆர்.ஏ வைத்த வெடிகுண்டு கடைசி நேரத்தில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதால் மாநாடு இரத்துச் செய்யப்பட்டது. இவை யாவும் அன்ைமைக்காலத்தில் பிரித்தானிய மண்ணில் வைத்தும், வட அயர்லாந்தில் இடம் பெறுவது போன்ற தாக்குதல்களில் ஐஆர்ஏ துணிச்சலுடன் ஈடுபடத் தொடங்கியுள்ளதைக் காட்டுகின்றன. பயங்கரவாதம் என்ற பதத்தினை மட்டும் அடிக்கடி பயன்படுத்தி வந்த பிரித்தானியப் பிரதமர், இப்போது தான் ஐ.ஆர்.ஏயின் கெரில் லா யுத் தத்துக்கு எதிராகத் தாம் போராடிக் கொண்டிருக்கும் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த 22 வருடங்களாக பிரித்தானிய அரசுக்குப் பெரும் சவாலாக இருந்து போராடி வரும் ஐ.ஆர்.ஏயின் பூர்வீகம் பலருக்குத் தெரியாத விடயம். பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஐரிஷ் கடலால் பிரிக்கப்பட்ட இரு அயல்நாடுகள். அயர்லாந்தில் நான்கு மாநிலங்கள் உள்ளன. இவற்றுள் வடக்குப் புறமாக அல் ஸ்ரர் என்னும் பெரிய மாநிலத்தில் உள்ள ஒன்பது மாகாணங்களில் முனர் று ஐரிஷ் குடியரசு எனப்படும் அயர்லாந்துக்கும் , எஞ்சிய still மாகாணங்கள் பிரித்தானியாவுக்கும் சொந்தமானவை. ஆறு மாகாணங்களையும் சேர்த்து வட அயர்லாந்து என்று கூறுவர். வட அயர்லாந்தின் தலைநகரம் மேற்கு பெல்பாஸ்ட். இந்த வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து மதக் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராகவும், கத்தோலிக்கர் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றனர். இங்கு பெரும்பான்மைக் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவரும் உரிமைகள், சலுகைகள் பல, கத்தோலிக்க சிறுபானி மையினருக்கு மறுக் கப்பட்டுள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்புகளில் கத்தோலிக்கருக்குப் பாகுபாடு காண்பிக்கப்படுகிறது. இதஞல் கிறிஸ்தவர்களை விட இரணர்டரை மடங்கு அதிகமாக கத்தோலிக்கர்கள் வேலையற்று இருக்கிருர்கள். இதுதான் கத்தோலிக்க மக்களது வாழ்க்கையின் சமூக, பொருளாதாரப் பின்னடைவுக்கு இங்கு பிரதான காரணமாயிற்று. மேலும் கிறிஸ்தவ ஆயுதப் படையினராலும் தீவிரவாதிகளாலும் கத்தோலிக்கர்கள் துன்புறுத்தப்படுகிருர்கள். அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறர்கள். கொலையும் செய்யப்படுகிருர்கள். அவர்களது வாழ்க்கையில் வறுமையும் சிறுமையும் வலிந்து திணிக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக 1968 இல் வட அயர்லாந்தில் உள்ள ஐந்து லட்சம் கத்தோலிக்கரும் குடியுரிமை கோரும் பிரசாரத்தினை சாத்வீகமான முறையில் ஆரம்பித்தனர். 95 சதவீத கத்தோலிக்கர் வாழும் ஐரிஷ் குடியரசுடன் வட அயர்லாந்தை இணைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் சதி முயற்சி என்று வட அயர்லாந்தின் கிறிஸ்தவர்கள் இதை எண்ணிஞர்கள். பிரசாரங்களின் போது கலவரங்களை ஏற்படுத்தி கத்தோலிக்கர்கள் வாழ்ந்த வீதிகளைத் தீக்குத் தீனியாக்கினர். இரு மதத்தவர்களுக்கும் இடையில்
66

(ஐ.ஆர்.ஏ O9.11.1990 வன்செயல்கள் வலுப்பெற்றன. சாத்வீகத்தில் ஆரம்பித்த கத்தோலிக்கரின் குடியுரிமைப்பிரசாரம், முடிவில் வன்செயலின் வடிவெடுத்தது. வட அயர்லாந்தின் லண்டன்டெரி பகுதியில் 1969 ஆகஸ்டில் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சணர்டையினைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு கலவரங்களை அடக்கவென, தனது இராணுவத்தினை வட அயர்லாந்தினுள் கொண்டு வந்து குவித்தது. இப்பிரித்தானியப் படையினரோ சிறுபானர் மைக் கத் தோலிக் கருக்கு அச்சுறுத் தலாக நடந்துகொண்டனர். விளைவாக வட அயர்லாந்தில் இருந்து பிரித்தானிய படைகளைத் துரத்த வேண்டும் எனவும், வட அயர்லாந்தை ஐரிஷ் குடியரசுடன் இணைக்க வேண்டும் எனவும், ஐரிஷ் தேசிய வாதத்தை இலக்காக வைத்து கத்தோலிக்க தீவிரவாதிகள் ஐரிஷ் குடியரசு இராணுவம் என்ற பெயருடன் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கினர்.
வட அயர்லாந்தின் மேற்கு பெல்பாஸ்டில் உள்ள ஷான்கில் வீதி, கிறிஸ்தவர்கள் செறிந்து வாழும் பகுதி. இதே போல இங்குள்ள பிறிதொரு வீதியான ஃபோல்ஸ் வீதியில் கத்தோலிக்கர் அடர்ந்து வாழ்கின்றனர். இரு மதத்தவர்களுக்குமிடையில் வளர்ந்துள்ள வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இவ்விரு பகுதிகளையும் 1020 அடி உயரமுள்ள சுவர் பாகப்பிரிவினை செய்து நிற்கின்றது. "சமாதானச் சுவர்" என்பது இதன் பெயர். இந்தப் பெயருக்கும் சுவருக்கும் பொருத்தமில்லாத வகையில் சுவரின் இரு புறமும் தீட்டப்பட்டிருக்கும் வன்சித்திரங்களும் வசை மொழிகளும் இவர்களுக்கு இடையிலான குரோதங்களின் அடையாளச் சின்னமாகக் காணப்படுகின்றன. சுவரின் இரு மருங்கிலும் பகிரங்க தொடர் மாடிக் கட்டடங்கள் சங்கிலித் தொடர் போலக் கை கோர்த்து நீணர்டு நிமிர்ந்து செல்கின்றன. இந்த மாடிக் கட்டடங்களில் மக்கள் சேரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிருரர்கள். குறிப்பாக கத்தோலிக்கர் வாழும் பகுதியில் சுமார் 85 சதவீதத்தினர் வேலையற்றிருப்பதஞல் தோன்றிய வறுமையினர் வெளிப்பாடுகள் வெட்ட வெளிச் சமாகத் தெரிகின்றன. தெருவோரங்களில் குப்பை கூழங்கள்; அவற்றைக் கிண்டிக்கிளறித் தீயிட்டு விளையாடிக் கொண்டிருக்கும் சேரிக் குழந்தைகள் போதை வஸ்து, மதுபானம் ஆகியவற்றின் அடிமைகளால் அல்லோலகல்லோலப்படும் வீதியோரங்கள்: கொலை, கொள்ளை, விபசாரம் என்பவற்ருல் மனிதப் பண்பே மரணித்துப் போன சாலைகள், சந்துபொந்துகள்; இவை யாவும் வட அயர்லாந்தின் பிரச்சனைகளை வெறும் ஆயுத அல்லது அரசியல் தீர்வுகள் மட்டும் தீர்த்து விடப் போவதில்லை என்பதையும், அடிப்படைப் பொருளாதாரத் தீர்வுகள் தான் இதற்குப் பரிகாரம் என்பதையும் சுட்டிக் காட்டி நிற்கும் ஆதாரங்களாகும்.
வட அயர்லாந்தின் வன்செயல்களுக்கு முதலில் தீ முட்டியவர்கள் கிறிஸ்தவர்களே. சமூக பொருளாதார விடிவை நோக்கி, குடியுரிமைப் போராட்டத்தைச் சாத்வீகமாகக்
67

Page 38
la. зѣї. бї 09.11.1990
கத்தோலிக்கர்கள் ஆரம்பித்த போது ஏற்பட்ட மதக்கலவரத்தில் முதலில் கொல்லப்பட்டவர்கள், கத்தோலிக்கரே. முதன்முதலாக 1969 இல் வெடித்த குண்டு, கிறிஸ்தவர்கள் எறிந்த குண்டு தான். இவர்களால் தான் இங்கு முதல் பொலிஸ் உத்தியோகத்தரும் கொல்லப்பட்டார். கத்தோலிக்கருக்கு உரிமை வழங்கப்படுதல், வட அயர்லாந்து ஐரிஷ் குடியரசுடன் இணைய முற்படுதல் என்பவற்றை எதிர்த்தும், வட அயர்லாந்து தொடர்ந்தும் பிரித்தானியாவுடனேயே இருக்கவேண்டும் எனக் கோரியும் போராட்டங்களை ஆரம்பரித்த கிறிஸ்தவக் குழுங்களை "யூனியனிஸ்டுகள்" என்று கூறுவர். இவர்கள் எழுபதுகளின் நடுப்பகுதியில், எழுபது கத்தோலிக்கரையும், 88 இல் மட்டும் 20 கத்தோலிக்கரையும் கொலை செய்துள்ளனர். இக்குழுக்களில் ஒன்றன அல்ஸ்டர் பாதுகாப்புச் சங்கம் பிரித்தானிய அரசினல் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அதே வேளை, ஐஆர்ஏ மட்டும் தடை செய்யப்பட்டிருப்பது பிரித்தானிய அரசின் இரட்டை வேடத்திற்கு நல்ல உதாரணமாகும். 1971 இல் எட்வேட் ஹீத் பிரித்தானியப் பிரதமாக இருந்த போது இடம் பெற்ற கொலைகள், குணர்டு வெடிப்புகள் காரணமாக விசாரணையின்றி ஐ.ஆர். ஏயினரை அடக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் வன்செயலில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ தீவிரவாதிகளைச் சுதந்திரமாக வெளியில் உலவிவர அனுமதித்த போதும், ஐஆர்ஏ அங்கத்தவர்களையோ தேடி வேட்டையாடியது. ஐ.ஆர்.ஏ என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவிக் கத்தோலிக்கப் பொதுமக்கள் பொலிசாரிஞல் துன்புறுத்தப்பட்டனர். இது கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஐ.ஆர்.ஏயின் வளர்ச்சிக்கு வழி விட்டது. வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிர்ப்பு வளர்ந்தது. எழுபதுகளின் பிற்பகுதியில் சிறையிடப்பட்ட ஐ.ஆர்.ஏ உறுப்பினர் முன்னெடுத்துச் சென்ற பிரச்சாரம் தீவிரமடைந்தது. 1981 இல் பொபி சானர்ட்ஸ் என்பவரது தலைமையில் சிறைக்கம்பிகளுக்குள் உண்ணுவிரதம் இருந்து, பிரித்தானிய அரசுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை ஐ.ஆர்.ஏ முடுக்கி விட்டது. இவர் சிறையிலிருந்த போது நடைபெற்ற ஓர் உபதேர்தலில் கத்தோலிக்கர் இவரைப் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்தனர். சிறைக்கம்பிகளுக்குள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவரும், இவரது ஒன்பது சகாக்களும் உண்ணுவிரதம் இருந்து சிறையிலேயே செத்து மடிந்தனர். இவர்களது உயிர்கள் ஒவ்வொன்முக உடலை விட்டுப் பிரிந்து செல்லச் செல்ல, ஜனநாயகத்தின் அச்சாணியான பிரித்தானியாவின் கீர்த்தியும் சிறிது சிறிதாக உலக அரங்கில் இறங்கத் தொடங்கியது. இந்த அபகீர்த்தியை அகற்றிக் கொள்ளவென பிரித்தானிய அரசாங்கம் அவசர அவசரமாக ஐ.ஆர்.ஏயின் அரசியற் கிளையான சின் ஃபின் (Sinn-Fien) க்குப் பேரளவில் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. 1985 நவம்பரில் ஆங்கிலோ ஐரிஷ் ஒப்பந்தம் ஒன்றை வட அயர்லாந்து தொடர்பாக எழுதி எடுத்துக் கொண்டது. ஐரிஷ்
68

B. e. 09. 11, 1990
அரசுக்கு வட அயர்லாந்தின் உள் விவகாரங்களில் ஆலோசனை அளிக்கும் பங்கை வழங்கியுள்ள இது, வட அயர்லாந்தின் இரு மதத்தினரின் ஆதரவையும் பெறத் தவறிய ஓர் ஒப்பந்தமாகும்.
லிபிய ஜனதிபதி கேர்ணல் கடாபியின் தலை தடவலுடன் வளர்ந்து வந்துள்ள ஐ.ஆர்.ஏ. சுமார் 200 பேரை மட்டும் துரித சேவை உறுப்பினர்களாகக் கொணர்ட ஓர் இயக்கமாகும். ஒவ்வொன்றும் பத்துப் பேர் கொண்ட பல குழுக்களாக இவர்கள் இயங்கிவருகின்றனர். சுமார் அறுபது பேர் தினம் தினம் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். ஏழு பேரைக் கொண்ட உயர் மட்ட இராணுவ கவுன்சில் தான் இவ்வியக்கத்தின் தலை எனலாம். ஐ.ஆர்.ஏயின் செயல்பாடுகளுக்கு வருடாந்தம் மூன்று லட்சம் டொலர் நிதியுதவி ஐரிஷ் அமெரிக்கர்களிடமிருந்தும், ஐம்பதாயிரம் டொலர் ஐரிஷ் கனடியர்களிடமிருந்தும் கிடைக்கின்றது. இவற்றுடன் நிதி நிறுவனங்களைக் கொள்ளை அடித்தும், வரி மோசடிகள், வர்த்தகர்களிடமிருந்து பெறப்படும் கப்பம் என்பற்றின் மூலமாகவும் நிதி சேகரிக்கும் ஐ.ஆர்.ஏ சொந்தமாக டாக்ஸி, வீடியோக் கம்பனிகள், உணவு நிலையங்கள், மதுபானக் கடைகள், சூதாட்ட நிலையங்கள், றியல் எஸ்டேட் ஆகியவற்றை நடாத்தியும் பணம் பெறுகின்றது. இவ்வாறு பெறப்படும் நிதியில் பெரும் பகுதி ஆயுதக் கொள்வனவு க்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் செலவிடப்படுகின்றது. அதே வேளை உறுப்பினர்களுக்கான மாதாந்தச் சம்பளமாக நாற்பது டொலர், சிறையிலிருக்கும் உறுப் பினர்களின் குடும் பங்களுக்கு உதவிப்பணம், அரசியற் கிளையான சின் பீனுக்கு நிதியுதவி என்பனவும் இதிலிருந்தே வழங்கப்படுகின்றன. திருமணம் செய்தல் , மதுபானம் , போதை வ ஸ் துப் பாவித்தல் போன்றவற்றிற்குத் தடை விதித்துள்ள இந்த இயக்கத்தில் உள்ள உறுப்பினர்கள் "எங்கள் பொழுதும் ஒரு நாள் விடியும்" என்ற நம்பிக்கையுடன் உயிரைத்துச்சமென மதித்துப் போராடிக் கொண்டிருக்கிருர்கள்.
பாதுகாப்புப் படையினரைத் திருப்பித் தாக்குவதில் நீண்ட காலமாகக் கண்ணும் கருத்துமாக இருந்து வந்த ஐ.ஆர்.ஏ, இப்போது தன் இலக்கை மாற்றியுள்ளதாகப் பத்திரிகைகள் கூறுகின்றன. பொலிஸ், இராணுவத்தினருடன் பாதுகாப்பு ஏற்பாடுகளின்றிக் காணப்படும் அரசியல்வாதிகள், பகிரங்க புள்ளிகள், கடமையிலில்லாத இராணுவ வீரர்கள் ஆகிய மென் இலக்குகள் மீதும் தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. கடந்த ஜுலையில் ஒரு கன்னியாஸ்திரி உட்பட மூன்று பொலிசார் ஒரு சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இதைக் கணிடித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், தட்சரின் வலது கையுமான இயன் கோ ஐந்து நாட்களின் பின் அவரது காருக்குள் நாட்டப்பட்ட குண்டுக்கு இரையாஞர். அக்டோபர் 24 இல் இராணுவ உளவாளி எனச் சந்தேகிக்கப்பட்ட கத்தோலிக்கர் ஒருவரைப் பாரிய வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனச்சாரதி
69

Page 39
· ਦੀ · 09.11.1990
ஆசனத்தில் கட்டி வைத்து, வட அயர்லாந்தில் உள்ள இராணுவ நிலையம் ஒன்றினுள் பலவந்தமாகச் செலுத்துவித்து ஆறு இராணுவத்தினரைக் கொன்றனர். முப்பது பேர் அதில் காயமுற்றனர். இது போன்று இருவேறு தாக்குதல்கள் இதே தினம் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்துள்ளன. வட அயர்லாந்து, பிரித்தானியா, பிரித்தானிய படைகள் உள்ள அயல்நாடுகள் எனப் பரவி விட்ட இத்தாக்குதல்களால் பிரித்தானிய பொதுமக்களும், ஆட்சியாளரும்,அரசியல்வாதிகளும், காவற்படையினரும் பெரும் பீதி அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் இருந்து எந்த நேரமும் திடுக்கிடும் செய்தியைக் கேட்க நேரிடலாம் என்பது நிச்சயம்.
வட அயர்லாந்தில் உள்ள 10,200 பிரித்தானிய இராணுவத்தினரும் வெளியேற வேண்டும் என்றும், வட அயர்லாந்து ஐரிஷ் குடியரசுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும், தமது மதத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற நிலை அழிக்கப்பட வேண்டும் என்றும் கோரி, ஐரிஷ் தேசியத்தை நோக்கித் தொடர்ந்தும் போராடப் போவதாக ஐ.ஆர்.ஏ முடிவெடுத்து விட்டது. ஆயுதத்தினுல் ஐ.ஆர்.ஏயை அழிக்க முடியாது என்று தம்மைச் சூழ உள்ள சகல வட்டாரங்களிஞலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டும், இரும்புப் பெண்மணியோ தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளாாமல் தொடர்ந்தும் அதற்கு எதிராக அரச பயங்கரவாதத்தை எதிர் ஆயுதமாகக் கொண்டு, எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஐ.ஆர்.ஏ ஓங்கி வளர்வதற்குத் தான் ஒட்சிசன் ஊட்டிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய ஆட்சியாளரும் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கரை நியாயமாக நடாத்தி, அவர்களது நலனர்கள் சரிவரப் பேணப்படுமாயின் ஐ.ஆர்.ஏயின் அவசியமும் அழிந்து விடும் என்று வட அயர்லாந்தின் கத்தோலிக்கரே கருதுகின்றனர். இவர்களது நலன்கள் இனியும் புறக்கணிக்கப்படுமாயின் ஐ.ஆர்.ஏ ஆனது வட அயர்லாந்துக் கத்தோலிக்கரின் "சேதன அமைப்பாக” தொடர்ந்தும் உயிர் பெற்று வாழ்ந்து வரும் என்பது உறுதி. இற்றை வரை மூவாயிரம் உயிர்களைப் பலி கொண்ட, ஐ.ஆர். ஏயின் பயங்கரவாதம் என்பது ஒரு கொடிய நோயின் அறிகுறி மட்டுமே. அது தான் நோயின் மூலம் அல்ல என்பதைப் பிரித்தானிய அரசு ஏற்றுக் கொள்ளாத வரைக்கும், ஜனநாயகத்தின் நடுநாயகமான பிரித்தானியாவுக்குப் பயங்கரவாதம் ஒரு நிரந்தர சவாலாகவே இருக்கும்.
7O

இந்தியா 16.1. 1990
பாரத மக்கள் கணிட
இன்னெரு பகற்கனவு
ல்ெலாரும் ஏறிய குதிரை மீது சந்திரசேகரும் ஏறிக் குந்திக் கொண்டார் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று சதா கனவு கண்டு வந்தவர், எப்படியோ இன்று சாதித்துக் கொண்டார். இளைஞர்களுக்கே உரித்தான பல தீவிரமான சிந்தனைகளும் செயற்பாடுகளும் உடையவர் என்பதஞல் "63 வயது வாலிபன்" என வர்ணிக்கப்படும் சந்திரசேகர், சோஷலிசத்தின் பால் மிகுந்த நாட்டமுடையவர். எழுபதுகளில் இவர் காங்கிரசில் இருந்த போது, ஆட்சியிலிருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டுக் கொண்டதால், இரண்டு வருடம் தடுப்புக்காவலில் இருந்தவர். காங்கிரசிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜனதாக் கட்சிக்குத் தாவியவர். இக்கட்சி பின்னர் ஜனதா தளம் என உருமாற்றம் பெற்றபோது தலைமைப் பதவிக்குப் பலமுறை பல்டியடித்துப் பார்த்தவர். இதற்கு வி.பி.சிங் தான் பெருத்த இடைஞ்சலாக இருந்து வந்தார். கடைசியாக அக்டோபர் 7 இல் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பின் போது வி.பி.சிங்கிற்கு
71

Page 40
இந்தியா 16.11.1990
புருட்டஸ் ஆகி, முதுகில் குத்தி வீழ்த்தி விட்டு, அவர் இருந்த பிரதமர் ஆசனத்தில் ஏறிக் குந்திக் கொண்டார். 11 மணி நேர விவாதத்தின் பின் நிகழ்ந்த வாக்கெடுப்பில் வி.பி.சிங்கிற்கு ஆதரவாக 142 வாக்குகளும், எதிராக 346 வாக்குகளும் கிடைத்திருந்தன. வி.பி.சிங் பதவி துறந்ததைத் தொடர்ந்து, ஜனதிபதி ராமசாமி வெங்கட்ராமன் பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களைக் கொண்டிருக்கும் இந்திரா காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை ஆட்சியமைக்கும்படி கேட்டுக் கொண்டார். எதிர்காலத் திட்டங்களை மனதில் வகுத்து வைத்துக் கொண்டுள்ள ராஜீவ், இந்த அழைப்பை ஏற்க மறுக்கவே, ஜனதிபதி இரண்டாது பெரும்பான்மைக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியை அணுகியதாகவும், அந்த வாய்ப்பை தான் ஏற்க மறுத்ததாகவும் அதன் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி கூறிஞர். பிரதமராகும் பெரும் பேற்றினை எங்கே யென்று எதிர்பார்த்து ஏங்கி, அங்கலாய்த்துக் கொண்டிருந்த சந்திரசேகரின் கையில் பதவி வந்து கடைசியில் சிக்கிக் கொண்டுள்ளது. ராஜீவ் காந்தி, தேவிலால் ஆகியோரின் ஆதரவுடன் இந்தியாவின் எட்டாவது பிரதமராக ஆசனத்தை எட்டிப் பிடித்துள்ள சந்திரசேகரது ஆட்சியின் ஆயுள் கெட்டியானதாக இருக்க ராஜீவ் காந்தி விடமாட்டார். அரசாங்கத்தை அமைப்பதில் கூட்டுச் சேராமல், வெறுமனே பாராளுமன்றத்தில் ஆதரவளிக்க மட்டும் உறுதியளித்து, ஒடுமீனை ஒட விட்டு உறுமீனைக்காத்திருக்கும் ராஜீவ், பிற கட்சிகளின் ஆதரவு எதுவும் இன்றி, தான் பிரதமராவதற்கான தக்க தருணம் வரும்போது சந்திரசேகரின் காலை வாரி விடுவார் என்பதில் சந்தேகமில்லை.
1947 இல் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற இந்தியா, 1989 வரை ஆக மூன்று வருடங்கள் தவிர எஞ்சிய நாற்பது வருடங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 1989 இல் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் மணி கவ்விக் கொண்டதற்குப் பல காரணங்கள் உண்டு. ஊழல் குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு, அதிகார துஷ்பிரயோகம், இலங்கை விவகாரம் என்பவற்றுடனர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் இருந்த இராமர் ஆலயத்தை 15ம் நூற்ருண்டில் அகற்றி, அதற்குப் பதிலாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பள்ளிவாசலுக்கு அருகே இப்போது மீண்டும் இராமர் ஆலயம் ஒன்றை அமைக்க அனுமதித்தமையும், அதனல் வெடித்துக் கிளம்பிய இனக்கலவரங்களை அடக்கத் தவறியமையும் அவரது வீழ்ச்சிக்கான சில முக்கிய காரணங்களாகும். பல நூறு உயிர்களைப் பலி கொணர் ட இந்த இந்து முஸ்லிம் இனக் கலவரங்களால் இந்தியாவினர் 850 மில்லியனர் சனத்தொகையின் 12 வீதத்தினரான முஸ்லிம்களின் ஆதரவை இழந்து, அதிருப்தியைத் தேடிக் கொண்ட தருணத்தில் இடம் பெற்ற தேர்தலில், ராஜீவின் தலைமையிலான காங்கிரஸ் 195, வி.பி. சிங் தலைமையிலான ஜனதா தளம் 140, லால் கிருஷ்ண
72

இந்தியா 16. 11, 1990
அத்வானியின் பாரதிய ஜனதா 86, கம்யூனிஸ்டுகள் 40, ஏனைய சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் 57, வெற்றிடங்கள் 23 என்றவாறு தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. அப்போதும் ஆட்சிப் பொறுப்பேற்க ராஜீவ் மறுத்ததால், பாரதீய ஜனதாவும், கம்யூனிஸ்டுகளும் வி.பி.சிங்கின் ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டு முன்னணி ஒன்றை அமைத்து 1989 டிசெம்பரில் ஆட்சியமைத்தனர்.
ராஜீவைத் தோற்கடிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு கூட்டணியமைத்து, ஊழலைப் பெரிதாக்கி ஊதுகுழல் மூலம் அம்பலப்படுத்தி, அவரை வீழ்த்திய வி.பி.சிங், பிரதமரான உடன் செய்த முதற் காரியம் கட்சி அங்கத்தவர்,ஆதரவாளர், உறவினர்க்கு என விசேட சலுகைகள், செல்வாக்குகள் தனது ஆட்சியில் இருக்க கூடாது என்று சகலருக்கும் எச்சரிக்கை விடுத்ததே. கண்ணியமான ஆட்சியை விரும்பிய இவரது இந்தத் திட்டம் , ஊழலே உதிரமாகிப் போன இந்திய அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சி தரவில்லை. அவரது கூட்டணியைச் சார்ந்த எம்.பிக்களும் ஆதரவாளர்களும் இது பற்றி ஆரம்பத்திலிருந்தே மனதுக்குள் கறுவிக் கொண்டனர். "எல்லா எம்.பிக்களையும் மந்திரிமாராக நியமித்து விடுவது தான் அதிருப்தி ஏற்படாமல் இருக்கச் சிறந்த வழி என்று கூறும் அளவுக்கு, பதவி மூலம் பைகளை நிரப்பிப் பயன் பெற எணர்னும் இந்திய அரசியல்வாதிகளையும், மத அடிப்படை வாதிகள் முதற்கொண்டு, அதிதீவிர கம்யூனிஸ்டுகள் ஈருகப் பல்வேறு அரசியற் சித்தாந்தங்களில் நாட்டமுள்ள பல கட்சிகளையும் வைத்து 11 மாதங்களைக் கழித்துவிட்ட, பிடிவாதக் குணம் மிக்க பிரதமர் மீது செல்வாக்கு செலுத்த முடியாமற் போனதால், பாதி வழியில் இரு அமைச்சர்களான மேனகா காந்தி, பக்தசரணர் ராஜ் ஆகியோரும் 12 எம்.பிக்களும் ஏற்கனவே பிரிந்து போய் நின்று எதிர்ப்பிரசாரம் செய்தும் வந்தனர். வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்க முன்னரேபஞ்சாப், காஷ்மீர் பிரச்சனைகள் இந்தியாவில் எரியும் பிரச்சனைகளாக மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளன. இந்தியாவிலிருந்து பிரிவினை கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்திராவுக்குக் கால தூதராகிய சீக்கிய தீவிரவாதிகள், பின்னர் வந்த எல்லாப் பிரதமர்களுக்கும் எம காதகர்களே! அடுத்து இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரில் உள்ள 12 மில்லியன் முஸ்லிம்களும், இந்தியாவில் இருந்து பிரிந்து சுதந்திரமாகத் தனித்தியங்குவதா அல்லது தொடர்ந்து சேர்ந்தே இருப்பதா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள்வதா என்பதை அறிய என, பொதுசன வாக்கெடுப்பை நடாத்தக் கோரிப் போராடி வருகிருர்கள். கடந்த நாற்பது வருடங்களாக உட்காய்ச்சலாக இருந்து வந்த இந்த வியாதி, உக்கிரமடைந்து இப்போது சன்னி கண்டுள்ளது. பஞ்சாப் சீக்கியர்களதும், காஷ்மீர் முஸ்லிம்களதும் பிரிவினைக் கோரிக்கைக்கு, வெளியே இருந்து பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி உற்சாகமளித்து வருகிறது. இவ்வாருக
73

Page 41
இந்தியா 16.11.1990
அயல்வீடான பாகிஸ்தானுடன் கிள்ளுப்பட்டுக் கொண்டும்,சொந்த எல்லைக்குள் சீக்கிய, காஷ்மீர் கலவரங்களை அடக்கிக் கொண்டும் வந்த வி.பி.சிங், உள்நாட்டில் தீவிரவாத இந்துக்களுடனும், கட்சிக்குள் தனது அரசியல் எதிரிகளுடனும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
இவ்வருட நடுப்பகுதியில் தனது உதவிப் பிரதமராயிருந்த தேவி லாலுடன் ஏற்பட்ட அதிகாரத் தகராறு காரணமாக அவரைப் பதவிநீக்கம் செய்தார், வி.பி.சிங். கீழ்மட்ட மக்கள்,தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்க தேவிலால், சிங்கைப் பழிவாங்க முடிவு செய்தார். தலைநகரெங்கும் பிரமாண்டமான ஊர்வலங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தி, அரசாங்கத்தைக் கதிகலங்க செய்தார். தேவிலாலுக்குப் பதிலடி கொடுக்க எண்ணிய சிங், அதே சாதாரண மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ள என, பத்து வருடங்களாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த மண்டல் கமிஷன் சிபார்சுகளை அமுல்படுத்த, ஆகஸ்ட் 6 இல் முடிவு செய்தார். இச்சிபார்சின்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசாங்க வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகளை அதிகரிக்கவெனப் பிரதமர் தீர்மானித்ததன் விளைவு பாரதூரமாகித் தீப்பற்றி எரியும் பிரச்சனையாயிற்று. ஆத்திரமடைந்த உயர்சாதி மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் குதித்தனர்; வன்செயல்களில் ஈடுபட்டனர்; பஸ்களையும் புகையிரதங்களையும் தீக்கிரையாக்கினர்; ஒடும் புகையிரதங்களில் மக்கள் உயிரோடு கொழுத்தப்பட்டனர். சுமார் 160 மாணவர்கள் மண்டல் அறிக்கையை எதிர்த்துத் தமது உடல்களுக்குத் தாமே தீ மூட்டிக் கொண்டனர். இதில் அறுபது பேர் தீக்கிரையாகி மடிந்து போயினர். அன்று மூட்டிய தீ, அணைக்கப்பட முடியாமல் தொடர்ந்து எரிந்தது. ஆளுல் எரிந்த உயிர்களில் இலாபமாக இந்திய சனத்தொகையின் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவை வி.பி. சிங் இதன் மூலம் தனதாக்கிக் கொண்டார். ஏழைத் தொழிலாள விவசாயிகள் இவரை ஆதரித்தனர். தேவிலாலின் சதித்திட்டத்தை வி.பி.சிங், மண்டல் சிபார்சு மூலம் முறியடித்தார். இதிலிருந்து வி. பி.சிங் தலைதுாக்க முயன்றபோதுதான் அவரது அரசுக்குப் பாராளுமன்றத்தில் ஆதரவாயிருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அத்வானி, நாட்டின் சகல இந்துக்களையும் பிரதமருக்குச் சார்பாக இருந்த சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராகத் திசை திருப்ப இன்ஞெரு ரதயாத்திரை நாடகத்தை ஆரம்பித்தார். அயோத்தியில் உள்ள பள்ளிவாசலை அகற்றி, மீண்டும் இராமர் ஆலயம் அமைக்கவென அக்டோபர் மாதம் சுமார் இருபதாயிரம் இந்து யாத்திரிகர்களை, கைகளில் ஆசீர்வதிக்கப்பட்ட செங்கற்கள் சகிதம், அயோத்தியை நோக்கி 2500 கிலோமீற்றர் ரதயாத்திரையில் அத்வானி வழிநடத்திச் செனி ருர், வெணினிறனிந்த வெறுமேனியரை வழிநெடுகிலும் இந்துக்கள் பூவும், பணப் பொதியும் வழங்கி வாழ்த்தி வழியனுப்பினர். குவளைகளில் குருதி வடித்துக் கொடுத்தும் சிலர் தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். விளைவாக இந்து முஸ்லிம் கலவரம் முண்டது. வன்செயல் நாடெங்கும்
74

இந்தியா 16.11.1990
காட்டுத் தீயாகப் பரவியது. குறிப்பாக குஜராத் மாநிலம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் என வியாபித்த கலவரம் அயல்நாடான பங்களாதேஷையும் சென்றடைந்தது. இராமஜென்ம பூமிப் பிரச்சனையால் சிறுபான்மை முஸ்லிம் மக்களது மனம் புணர்படுவதை விரும்பாத வி.பி.சிங், அக்டோபர் 23 இல் அத்வானியைக் கைது செய்தார். அன்றுடன் 86 உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சியின் உறவும் முறிந்தது. அக்டோபர் 30 காலை 9.44 சுபமுகூர்த்தத்தில், இராமர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்ட வெனத் திரணர்டு வந்திருந்த ஜன சமுத்திரத்தை அப்புறப்படுத்தவென ஒன்றரை லட்சம் துருப்புகளை அயோத்தியில் குவித்த வி.பி.சிங், இந்து மதத் தலைவர்களையும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இந்துக்களையும் கைது செய்தார். சுமார் 300 உயிர்களைப் பலி கொண்ட இந்த அயோத்தி ஆர்ப்பாட்டம் தான் ஈற்றில் வி.பி. சிங்கின் பிரதமர் பதவிக்குக் கொள்ளி வைத்தது.
சாதிப்பிரிவினையைத் தனக்குச் சாதகமாக்கி மனண்டல் சிபார்சின் மூலம் திசை திருப்பிய சிங், இந்து மரபு வாதிகள் தூணர்டி விட்ட மதப்பிரச்சனையைச் சமாளிக்க முடியாமற் போனமைக்கு அங்கு வேரூன்றி நிற்கும் "இந்து தேசிய வாதம் ஒரு முக்கியகாரணம். மத்திய கிழக்கிலும் அண்டை அயல்நாடுகளிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து வலுப்பெற்றிருக்கும் 'இஸ்லாமிய அடிப்படை வாதம்", பஞ்சாப்பின் "சீக்கிய தேசிய வாதம்', தெற்கே இலங்கையின் "சிங்களப்பேரினவாதம்" என்பவை இந்தியாவின் இந்துக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்து விட்டன. சுமார் 650 மில்லியன் இந்துக்கள் வாழும் இந்தியாவில், பெரும்பான்மை இந்துக்கள் மனதில் தோன்றிய 'சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கலின்" விளைவாகத் தோன்றியதே இந்து தேசியவாதம். இதன் குழந்தைதான் அத்வானியின் பாரதீய ஜனதாக் கட்சி. மதவெறியை மந்திரமாக உச்சாடனம் செய்து எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு வி.பி. சிங்கின் திடீர் வீழ்ச்சி நல்ல எடுத்துக்காட்டாகும். சாதி, மத பேதங்களை அறவே வெறுத்த சாத்வீகன் காந்தி, சாவின் மடியில் வீழ்ந்து கிடந்த போதும், “ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடல் காதில் ஒலிக்க, "ஈஷ்வர அல்லா தேரே நாம், சபகோ ஸண்ைமதி ஹே பஹவான்” என்ற வரிகளை உச்சரித்தவாறே உயிர் நீத்தார். "ஈஸ்வரனும் அல்லாவும் உன் நாமங்களே, இறைவா நல்லறிவைத் தந்தருள்வாயே" என இடையருது வேண்டி இறைவனுகி விட்ட தேசபிதா, இந்தியாவுக்குத் தேடித்தந்த சுதந்திரம் இருளில் கிடைத்ததாலோ என்னவோ, இன்னமும் அது பலரது கண்களுக்கு புலப்படவில்லை. 'ஆனந்த சுதந்திரம்' என்று ஆடிப்பாடி மகிழ்ந்த பாரதி இன்று வாழ்ந்திருந்தால், 'ஏனிந்த சுதந்திரம்' என எண்ணி அழுதிருப்பான். அருமந்த தேசமொன்று அரசியல் சாக்கடையில் அமிழ்ந்து போய்க் கிடக்கின்றது
அரசியற் குத்துக் கரணங்களும், கழுத்தறுப்புகளும், கால்வாரல்களும் இவ்வாருக அரசியற் கலாசாரத்தின் ஆளுமையும், அவலட்சணமும் ஆகி விட்ட இந்திய அரசியலில், மரபு தவருமல்
75

Page 42
இந்தியா 16.11.1990
இவற்றையெல்லாம் கையாண்டு சந்திரசேகர் இப்போது பிரதமராகி விட்டார். இவர் தனது பாராளுமன்றப் பலத்தை 11 நாட்களில் நிருபிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையும் உண்டு. இது நிருபிக்கப்பட்டு ஆட்சி சாகாமல் தப்பிப் பிழைத்தாலும், நீண்ட காலம் அது உயிரோடு இருக்கப்போவதில்லை. அதே வேளை விரைவில் தேர்தல் ஒன்றை ஒருவரும் இப்போது விரும்புவதாகவும் தெரியவில்லை. ஒரு வருடத்துள் மீண்டும் மக்களிடம் போய் தமது கையாலாகாத் தனத்தை ஒப்புக் கொண்டு வாக்குக் கேட்க ஆட்சியிலிருந்தவர்கள் அஞ்சுகிருர்கள். தன்மீதான கெட்ட பெயரின் சாயம் மங்கவும், எதிரிகள் மீதான மக்களின் அதிருப்தி இன்னும் வலுப்பெறவும், ராஜீவுக்கும் சற்று அவகாசம் தேவைப்படுகிறது. இவ்வளவு விரைவாக இன்னுெரு தேர்தலைச் சந்திக்கத் தேவையான நிதி எல்லாக் கட்சிகளுக்கும் முக்கியமான ஒரு பிரச்சனை. மேலும் இனக்கலவரங்களின் வெப்பிசாரம் அடங்காத நிலையில் இன்னுெரு தேர்தலை நடாத்த ஜனுதிபதியும் விரும்பவில்லை. ஆதலினுல் சற்றுக் காலம் தாழ்த்தவென, சந்திரசேகரின் ஆட்சியை எல்லோரும் சிறிது காலத்திற்கு விட்டு வைக்கக் கூடும். இக்குறுகிய கால ஆட்சியில் இவர் இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை. விரைவில் தேர்தல் என்பது நிச்சயமாகும் போது சாதிசமய, இன, பிரதேசப் பிரிவினைகளுக்கு வழக்கம் போல வெளிச்சம் போட்டுக் காட்டி, மீண்டும் வோட்டுக் கேட்கப் போகிருர்கள். ஆஞல் இவ்வாருன முரண்பாடுகள் தான் தொடர்ந்தும் மக்கள் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. சாதி, மத, எல்லைக்கலவரங்கள், பணவீக்கம், அந்நியச் செலாவணி வீழ்ச்சி, எரிபொருள் விலையேற்றம் என்பவற்ருல் பாதிப்புற்று நொந்து போயிருக்கும் இந்திய மக்கள், ஸ்திரமான அரசு ஒன்றை அமைக்கத் தவறும் எந்தக் கட்சியையும் நிராகரிக்கத் தயங்கப் போவதில்லை என்ற அபிப்பிராயமும் உண்டு. எனவே “பழைய குருடி கதவைத் திறவடி" என்பது போல மீணர் டும் அதிகாரத்துக்கு வரப்போகின்றவர் ராஜீவ் காந்தி தான். நேரு குடும்பம் தான் நாட்டினை நிர்வகிக்க வேண்டும் என்பது நியதி போலும் ராஜீவ் விரைவில் ஆட்சிக்கு வருவாராயின் அது பாகிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் பிரச்சனைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ராஜீவ் எப்போது மீண்டும் பதவிக்கு வருவார் என்பது திட்டவட்டமாகச் சொல்ல முடியாத ஒன்று. அதற்கு எல்லாரும் ஏறிய குதிரையில் இப்போது தானே சந்திரசேகரும் ஏறிக் குந்தியிருக்கிருரர். சக்கடத்தார் போல அவரும் சறுக்கி விழப் போவது என்னவோ உணர்மை தான். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பதுவும் உண்மையே. அது எப்போது என்பது தான் “7”
76

பிரித்தானியா 23.11.1990
தச்சரிஸம் தடம்புரள்கிறது
"Lól, நீண்ட காலமாக நான் போராடிக் கொணர்டு வந்த, எனது விசுவாசத்தினுள் புதைந்து கிடக்கும் துன்பமான முரண்பாடுகள் பற்றி, மற்றவர்களும் கருத்திற் கொள்வதற்கு வேண்டிய காலம் வந்து விட்டது” என்ற பீடிகையுடன் பிரித்தானிய முன்னுள் பிரதிப்பிரதமர் சேர் ஜெஃப்றி ஹெளவ் ஆரம்பித்த சொற்பொழிவு,பிரித்தானிய பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை இடம் பெற்றிராத ஆக்ரோஷமான ஒரு சொல்மாரியாகி விட்டது. ஈவிரக்கமற்ற முறையில் தன் மீது ஏவப்பட்ட சொல் அம்புகளைச் சுமந்தபடி, பிரதமர் மாகிரட் தச்சர் பேயறைந்தாற் போல, முகத்தில் ஈயாடாதவராக, மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஐரோப்பிய சமுகத்துடன் பிரித்தானியா இணைவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்ற வாரம் பிரதிப்பிரதமர் பதவியை ராஜினுமா செய்த சேர் ஜெஃப்றி, 1979 இல் தச்சர் பிரதமராகப் பதவி ஏற்றது முதலாக, அவரது மந்திரிசபையில் முக்கிய பதவிகளை வகித்தவர். ஏற்கனவே வெளிநாட்டமைச்சராக இருந்து, ஐரோப்பிய இணைப்பு தொடர்பாக

Page 43
|பிரித்தானியா) 23.11.1990
இவர் கொணர்டிருந்த கொள்கை காரணமாகவே தச்சரால் அண்மையில் உதவிப் பிரதமராகப் பதவி மாற்றம் செய்யப்பட்டார். "மாகிரட் தச்சரின் அரசியல் வாழ்வைப் படுகாயப்படுத்தி, நாசமாக்கிய இந்தச் சொற்பொழிவு,தச்சரின் அரசியல் வாழ்வுக்கு அடுக் கப்பட்ட எரிசிதை” என்று சக பாராளுமன்ற அங்கத்தினர்கள் கூறுகின்றனர். "ஐக்கிய ஐரோப்பா பற்றி வின்ஸ்ரன் சேர்ச்சில் கொண்டிருந்த எண்ணம், எமது நாட்டு நலனின் அடிப்படையில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கக் கூடியது. இன்றைய பிரதமரோ அதனைப் பெரும் பூச்சாண்டியாகப் பார்த்து நடுங்குகிருரர். இது என்ன வகையான பார்வைக் கோளாருே?" என்று கேள்வி எழுப்பி, ஐரோப்பிய சமூகத்துடன் பிரித்தானியா இணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், அதனைப் பிடிவாதமாக எதிர்க்கும் தச்சர் மீது கோபக் கணை தொடுத்தும், நிகழ்த்திய சொற்பொழிவால் பிரித்தானிய பாராளுமன்றமே அதிர்ந்து போய் விட்டது. தொழிற்கட்சியின் வெளிவிவகார விமர்சகரான ஜெரால்ட் கவுஃப்மன், தனது இருபது வருடப் பாராளுமன்ற அனுபவத்தில் கேட்ட திகைப்பூட்டும் சொற்பொழிவாக இதைக் கூறி ஆச்சரியப்படுகிருர். இதஞல் நிலைகுலைந்து போயிருந்த தச்சருக்கு 24 மணி நேரத்தினுள் இன்ஞெரு இடி காத்திருந்தது. தச்சரின் அரசில் பாதுகாப்பு அமைச்சராயிருந்து, ஐரோப்பிய ஐக்கியம் காரணமாகவே பதவி துறந்து, இப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பின்வாங்கில் போய் அமர்ந்து கொண்டுள்ள மைக்கல் ஹெசல்ரைன், கொன்ஸர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவதற்கு விண்ணப்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிருர், தச்சரின் செல்வாக்கு கட்சியினுள் வீழ்ச்சி அடைந்துள்ள இன்று, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பலரும் தச்சரின் பதவி விலகலைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் தொடங்கியுள்ள இத்தருணத்தில், கட்சிக்குள் செல்வாக்கு மிக்க மைக்கல் விடுத்துள்ள அறிவிப்பு உணர்மையில் தச்சரின் அரசியல் சாம்ராஜ்யத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமனி தாளு?
பிரித்தானியாவின் கீழ் மத்திய வகுப்பைச் சேர்ந்த ஒரு சாதாரண கடைவியாபாரியின் மகளான மாகிரட் ஹில்டா ருெ பேட்ஸ், பாடசாலை நாட்களில் படிப்பில் எப்போதுமே முதலிடம் பெற்று வந்தவர். அது மட்டுமல்ல, பாடசாலை ஹொக்கி கோஷ்டியின் தலைவராயுமிருந்தவர். 1943 இல் தனது 17 ஆவது வயதில் ஒக்ஸ் போட் பல்கலைக்கழகம் சென்று, இரசாயனத் துறையில் பட்டம் பெற்றவர். 1950 இல் கொன்ஸர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் இறங்கி தோல்வியுற்றவர். 1951 இல் மீண்டும் தோல்வி கண்டவர். 1951 டிசம்பரில் பிரபல வர்த்தகரான டெனிஸ் தச்சரை மணந்து, மாகிரட் தச்சராஞர். 1953 ஆகஸ்டில் மார்க், கரோல் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இவ்விடைப்பட்ட காலத்தில் சட்டம் பயின்ற இவர், 1959 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, பிரித்தானிய
78

பிரித்தானியா 23.11.1990
பாராளுமன்றத்தினுள் அடியெடுத்து வைத்தார். எட்வேட் ஹீத்தின் அரசாங்கத்தில், 1970 இல் கல்வி அமைச்சராகக் கடமையாற்றிஞர். வல்லரசுகளுக்கிடையிலான கெடுபிடி யுத்தம் பற்றி 1976 இல் மாகிரட் தச்சர் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவைச் செவியுற்ற சோவியத் "றெட் ஸ்ரார்” பத்திரிகை அவரை “இரும்புப் பெண்மணி" என்று வர்ணித் திருந்தது. இதனைப் பெரும் கெளரவமாகக் கருதி, தான் உண்மையில் ஒரு இரும்புப் பெணி மணியே எனர் று ஏற்றுக் கொணர் ட தச்சர், கொன்ஸர்வேட்டிவ் கட்சியின் தலைமையைப் பெற்றபின்னர், 1979 இல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, பிரித்தானியாவின் பிரதமராஞர். நடை உடை பாவனைகளில் இப்போதும் பழமை பேணும் தச்சர், மிகுந்த பிடிவாதமும் தன்னகங்காரமும் கொண்டவர். பாராளுமன்றத்தில் தன்னை எதிர்க்கும் தனது கட்சிக்காரரை, தணர்டனையாக ஒன்றில் பின்வாங்குக்கோ அல்லது "வயோதிபர் மடமான" செனற் சபைக் கோ துரத்தி வந்துள்ளார். ஆயினும் தன்னைப் புகழ்ந்துரைப் போரிடத்தில் மனம் இளகிப் போகும் பெனர் பலவீனங்களில் இருந்து இவர் பூரணமாக விடுபட்டவரும் அல்ல. இதனுல்தானே என்னவோ, பிரெஞ்சு ஜஞதிபதி மிற்றரோண்ட் ஒரு முறை தச்சரைப் பார்த்து "இவர் கலிகூலாவின் கணிகளையும், மர்லின் மன்ருேவின் மலர் உதடுகளையும் கொண்டவர்" எனப் புகழாரம் சூடி எதனைச் சாதித்துக் கொண்டாரோ தெரியாது! சென்ற வருடம் அவரது மகன் ஒரு குழந்தையைப் பெற்றதுடன் பாட்டியாகி விட்ட தச்சரைப் பதவி தான் இளமையாக வைத்திருக்கின்றதோ எனக் கருதும் அளவுக்கு 65 வயதிலும் இளமைத் துடிப்புடன் இவர் காணப்படுகின்றர்.
1979 இல் தச்சர் பிரதமரான போது, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போய் இருந்தது. அன்று வரை ஆட்சியில் இருந்தோர் சில சோலிஸத் திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை இடப்புறமாக நகர்த்தியிருந்தனர். இதனுல் நாட்டில் ஏற்பட்டிருந்த பணவீக்கத்துக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் எதிராகப் போராடுவேன்" என்று முன் வந்தவர், தச்சர். உற்பத்தித் திறன் இழந்த, மிகப் பழைய கைத்தொழிற் துறைகளில் தச்சர் பாரிய மாற்றங்களைப் புகுத் திஞர். கைத்தொழிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்களைத் தடுத்து நிறுத்திஞர். தொழிற்சங்கங்களின் செல்வாக்குக்கு விலங்கிட்டார். தேசிய மயமாக்கப்பட்டிருந்த 19 மிகப் பெரிய கைத்தொழில் நிறுவனங்களைத் தனியாருக்கு வழங்கிஞர். இதஞல் சுமார் ஏழரை லட்சம் அரசாங்க வேலைவாய்ப்புகள் தனியார் கைக்குட் சென்றன. அரசாங்கத்துக் குச் சொந்தமான பகிரங்க வீடுகளை குடியிருப்பாளருக்குச் சொந்தமாக்கினர். சாதாரண மக்களும் கம்பனிகளிலிருந்து பங்குகளைக் கொள்வனவு செய்ய வழிவகுத்தார். இதஞல் கம்பனிகளில் பங்குகளைக் கொள்வனவு செய்வதில் தொழிற்சங்கங்களுக்கு இருந்து வந்த ஆதிக்கம் தடுக்கப்பட்டது.
79

Page 44
|பிரித்தானியா 23.11.1990 வர்க்க வேறுபாட்டின் அடிப்படையில் அமைந்திருந்த பொருளாதார முறைமையை மாற்றி "தகுதியும் பணமும்" பெரும் பங்காற்றும் முறைமையைப் புகுத் திஞர். பிரித்தானிய பொருளாதாரத்தை இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு இவ்விதமாக நகர்த்திய "சொத்தைச் சொந்தமாக்கும் ஜனநாயகம்” தச்சரிஸம் எனப் புகழ்ந்து கூறப்பட்டது. அதிதீவிரவலதுசாரியான தச்சர், “சோலிஸத்தின் மரணம்” தான் தனது இலக்கு என்று ஆர்ப் பரித்துக் கூக் குரலிடும் அளவுக்கு அதன் மீது அளவுக்கதிகமான அலர்ஜி கொண்டவர்.
கடந்த 11 வருடங்களாகப் பிரதமராக இருந்து பிரித்தானியாவில் பல புதுமைகளையும் மாற்றங்களையும் புகுத்திய தச்சர், இற்றைவரை தனது அரசியல் செயற்பாடுகள் எதிலும் சோம்பல் அடைந்ததில்லை; ஊழல்களில் சம்பந்தப்பட்டதில்லை. நீண்ட காலமாக நாட்டு மக்களினது நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த தச்சரிஸம் இன்று தடுமாறிக் கொள்ளக் காரணம் என்ன?நீண்ட கால அரசியற் பாரம்பரியங்கள், வர்க்க முரண்பாடுகள் என்பவற்றுடன் இடது புறமாக நகர்ந்து இயங்கிக் கொண்டிருந்த பிரித்தானிய அரசியற் பொருளாதார இயந்திரத்தைப் படிப்படியாக நகர்த்தாமல், திடீரென வலதுபுறமாக வலிந்து இழுத்துக் கொணர்டதால் பல எதிர்விளைவுகள் இப்போது தோன்றியுள்ளன. கைத்தொழில்களுக்கு வழங்கி வந்த மானியங்களை வெட்டியதால் 55 மில்லியன் சனத்தொகையுள்ள பிரித்தானியாவில் வேலையில்லாமை 12 சதவீதத்தைத் தாண்டியது. வட்டி வீதம் இருமடங்காகி 15 சதவீதமாகியது. வருடாந்த பணவீக்கம் 8 சதவீதத்துக்கும் அதிகமானது. தச்சரின் ஆட்சியில் வசதி படைத்தவர்களுக்கும், வறியோருக்கும் இடையிலான வேறுபாடு பூதாகாரமாக வளர்க்கப்பட்டு விட்டது. பொருளாதார ஏற்றத் தாழ்வு பிரித்தானிய சமூகத்தை இரு வேறு துருவங்களாக்கி விட்டது. சமூக சேவைகள், பகிரங்க சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. லண்டனில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் இரட்சணிய சேனை (Salvation Army) யின் கணக்கெடுப்பின்படி, தினமும் வீதிகளிலும், சந்து பொந்துகளிலும், வாசற்படிகளிலும் படுத்துறங்குவோர் தொகை சுமார் நான்காயிரம் ஆகும். வேலையிழந்து வறியவர்களாக சுமார் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் கொலைகள், கொள்ளைகள், போதை வஸ்துகள், வன்செயல்கள் என்பன மலிந்து விட்டன. இவ்வாருன கெடுதியான சந்தர்ப்பத்தில் தான் இவ்வருடம் சித்திரை மாதம் முதல் "தலா வரி" எனப்படும் சனசமூகக் கட்டணமும் அமுலுக்கு வந்தது. குப்பை கூழம் அகற்றல், கல்வி போன்ற சமூக சேவைகளுக்கென சகல, வயது வந்தோரும் செலுத்த வேண்டும் என்ற இந்தத் தலாவரியால் பிரித்தானியாவில் பலநூற்ருண்டு காணுத ஒரு பெரும் கலவரமே நடந்தேறியது. தச்சரின் "அரசியல் சயனைட் மாத்திரை” எனப்பட்ட இந்த வரியினை எதிர்த்துக் கடைகள்,
80

|பிரித்தானியா 23.11.1990
கட்டிடங்கள் அடித்து நொருக்கப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன. றஃபல்கார் சதுக்கத்தில் பொலிசாருக்கெதிராக இடம் பெற்ற கலவரத்தில் 450 பேர் படுகாயமடைந்தனர். தச்சரிஸம் உற்பத்தி செய்த வறிய இளைஞர்களால் ஜனநாயகத்திற்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இந்த வன்செயல்களினுல் அரசாங்கத்தின் செல்வாக்குச் சரிந்தது. மார்ச் மாதம் நடந்த ஒரு இடைத்தேர்தலில் தொழிற் கட்சி பெற்ற அமோக வெற்றி இதை மேலும் உறுதிப்படுத்தியது. மே மாதம் நடந்த மாநகர சபைகளுக்கான தேர்தல் முடிவுகளும் இதையே கூறுகின்றன. தொழிற்கட்சிக்கு ஐம்பது வீதத்துக்கும் அதிகமாகவும், ஆளும் கட்சிக்கு முப்பது வீதத்திலும் குறைவாகவும் மக்களாதரவு இருப்பதைக் கொண்டு, 1992 இல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில், 650ஆசனங்களைக் கொணர்ட பாராளுமன்றத்தில் 200 பெரும்பான்மையுடன் தொழிற்கட்சி வெற்றி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீல் கின்ஞெக் தான் 92 இல் 10 டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்தின் புதுக்குடியிருப்பாளர் ஆவார் என நம்பப்படுகிறது. 1945 ஆம் ஆண்டுக்குப் பின் முதன் முறையாக பிரித்தானியாவின் மத்திய தர மக்களும், தொழிற்கட்சிக்குத் தமது ஆதரவைத் தர முன்வந்துள்ளமை, இனியும் தச்சரது ஆட்சியைப் பிரித்தானிய மக்கள் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றது.
உள்நாட்டில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள தச்சரின் கீர்த்தி, வெளியரங்கிலும் வெகுவாக வீழ்ந்து விட்டது. நிறவெறிக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தென்னுபிரிக்க வெள்ளைச் சிறுபான்மை அரசு மீது பொருளாதாரத் தடைகளை வலியுறுத்துவதை விடாப்பிடியாக மறுத்தவர், தச்சர். 1989 அக்டோபரில் கோலாலம்பூரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் 48 நாட்டுத் தலைவர்களுக்கும் எதிராக இந்த விடயத்தில் தச்சர் மட்டுமே தனித்து நின்று மல்லுக்கட்டிஞர். முழு உலகையும் இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஈராக்கின் சதாம் ஹுசைனை "அடித்து வீழத்துவோம்” என்று அடிக்கடி ஆவேசமாக கூக்குரலிட்டு, ஈராக்கினதும் அதன் ஆதரவு நாடுகளினதும் அவதூறுகளை மிகக் கூடுதலாக வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பவர், தச்சர்தான். ஜேர்மன் இணைப்பிலும் தச்சருக்கு அடிமனதில் மகிழ்ச்சி இல்லை. ஐரோப்பாவில் பிரித்தானியா எப்போதும் வலிமையுடன் இருக்க வேண்டும் என விரும்பும் தச்சருக்கு, ஏனைய மூத்த ஐரோப்பிய நாடுகள் பற்றி எப்போதும் ஒரு சமுசயம் தான். புவியியல் ரீதியாக ஐரோப்பாவில் தனிமைப்பட்டு நிற்கும் பிரித்தானியா, அரசியல் பொருளாதார ரீதியிலும் ஒதுக்கப்படக் கூடாது எனத் தச்சரின் அமைச்சர் பலரும் கருதியதன் பலஞகவே, இன்று தச்சர் அரசியல் மரணப்படுக்கையில் படுக்க நேர்ந்தது. பிரித்தானியாவில் தச்சரிசம் தடுமாறத் துவங்கியதாலும், வெளியுலகில் அவரது ஏகாந்த வெளிநாட்டுக் கொள்கை மதிப்பிழந்ததாலும் தச்சரது தலைமைக்கு இன்று ஒரு புதிய சவால் தலைதுாக்கியுள்ளது.
81

Page 45
|பிரித்தானியா 23. 11. 1990
தன்னிரகரற்ற தனிப்பெரும் தலைவராக இருந்து, 88 இல் தனது கட்சிக் கூட்டத்தில் “நான்காவது முறையும் ஆட்சிக்கு வருவேன்; ஏன் ஐந்தாம் முறையும் யாருக்கு தெரியும்” என்று கூறிய தச்சரை எதிர்த்து, அவரது பதவியைப் பறிக்க என மைக்கல் ஹெஸல்ரைன் கோதாவில் குதித்துள்ளார். மைக்கல் 372 கொன்ஸர்வேட்டிவ் உறுப்பினர்களுள் பெரும்பான்மை ஆதரவு தனக்கு உண்டு என்று நம்புகிருர், தச்சரின் சர்வாதிகாரப் போக்கினுல் அவரைப் பதவி விலகக் கோரும் விருப்புடன் இருந்த பல உறுப்பினர்களும், மைக்கலின் வெற்றி நிச்சயம் எனக் கூறுகின்றனர். அதே வேளை வளைகுடாவில் யுத்தப்பதட்டம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தில் தலைமை மாற்றம் நல்லதல்ல எனக்கூறும் தச்சர், தானே மீண்டும் தலைமைக்கு வருவேன் எனத் திட்டவட்டமாகக் கூறுகிருரர். ஆட்சியில் தலைமை மாற்றம் அவசியமா இல்லையா என்பது நவம்பர் 20 இல் தீர்மானிக்கப்படும். அதன் பின்னர்தான் தலைவருக்கான தெரிவு நடைபெறும். இதில் மைக்கல் தெரிவாஞல் பிரித்தானிய வரலாற்றில் கடந்த 160 வருடங்களில், தொடர்ந்து மூன்று தடவை ஆட்சியமைத்துச் சாதனை புரிந்த தச்சர், பிரதமர் பதவியை மைக்கலிடம் கையளிக்க வேண்டும். பணவீக்கம், வேலையில்லாமை, வறுமை, வட்டிவீத அதிகரிப்பு, வீடில்லாமை, ஐ.ஆர்.ஏ, சுரங்கத் தொழிலாளர் அதிருப்தி, அரச குடும்பத்துடன் இணைந்து போகாமை, வன்செயல்கள்,ஐரோப்பிய நாணய இணைப்பு இவையாவும் சேர்ந்து, தச்சரின் செல்வாக்கை வீழ்த்தி விட்டன."பேட்டுக் கோழி அட்டில்லா” என்றும் "திறந்த குளிருட்டிப் பெட்டி" என்றும் பகிரங்கமாக எதிரிகளால் விமர்சிக்கப்படும் தச்சரின் மீள்வருகையை இப்போது TBWஎனும் வினேதமான காரணி தீர்மானிக்க உள்ளது. "தற் பிளடி வுமன்" தலைவராயிருக்கும் வரை அக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என கொன் ஸர்வேட்டிவ் ஆதரவாளர்களே கீழ்த் தரமாகக் கூறுவது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் மைக்கல் ஹெஸெல்ரைன் என்ற தடையைத் தச்சர் சில வேளை தாண்டியோட முடிந்தால் அதிசயப்படுவதற்கில்லை. ஆஞல் விரைவில் பாரிய சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்று ஏற்பட்டாலன்றி, 1992 பொதுத் தேர்தலில் நீல் கிண்ஞெக் எனும் தடையைத் தடம் புரளாமல் நிச்சயம் தாண்டி ஒடுவாரோ என்பது சந்தேகம் தான்!
82

|எல் சல்வடோர் 30. 11.1990
அரச பயங்கரவாத அத்திவாரத்தில்
ஒரு ஜனநாயகமா?
ல்ெ சல்வடோரில் சென்ற வருடம் இதே மாத நடுப்பகுதியில் ஒரு நாள், கங்குல் கலைந்து மக்கள் கண்விழிக்கும் வேளையில் அந்தக் கொடுமை நிகழ்ந்தது தலைநகரான சான் சல்வடோரில் உள்ள மத்திய அமெரிக்க ஜோசி சிமியோன் கஞஸ் பல்கலைக்கழக விடுதி ஒன்றினுள் படுத்துறங்கிக் கொண்டிருந்த யேசு சபை மத போதகர்கள் ஆறு பேரையும் , அவர்களது பணிப்பெண்ணையும், அவளது 15 வயது மகளையும் படுக்கையில் இருந்து பற்றிப்பிடித்து இழுத்து வந்து, வெளியே உள்ள புற்றரையில் குப்புறப் படுக்க வைத்து, அவர்கள் தலைகளுக்குள் துப்பாக்கிச் சனியன் பீச்சிய குண்டுகளைப் பாய்ச்சிக் கொன்று குவித்தன, சில ஆறறிவு படைத்த மனித விலங்குகளமுடிந்து போன முன்னிரவில் நிம்மதியாகத் துயில் கொள்ளச் சென்ற அந்த எட்டு அப்பாவிகளும் மறுநாள் பொழுது புலர்ந்து விடுவதற்கு முன்னர் மடிந்து போவோம் என்று எண்ணியிருந்திருப்பார்களா? காற்சட்டை அணிந்த காவல் நாய்கள்,கருக்கலில் நிகழ்த்திய இந்தக் காட்டுமிராண்டித்தனத்தினுல் எல்சல்வடோரில் அன்றைய பொழுது கண்ணிருள் கரைந்து போயிற்று. இராணுவத்தில் ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்டுத் தீனி போட்டு வளர்க்கப்பட்ட, மரணப்படைப்பிரிவைச் சேர்ந்த சில விலங்குகள் இந்தக் கொலைபாதகச் செயலைச் செய்து விட்டு ஓடி ஒழித்துக் கொண்டன. உலக நாடுகள் அதிர்ச்சியால் விக்கித்து நின்றன. எல்சல்வடோர் இராணுவத்தின் மிலேச்சாதிகாரத்துக்கு எதிராகச் சர்வதேச சமூகம் ஆட்சேபனையையும், கவலையையும்

Page 46
எல் சல்வடோர் 30. 11.1990
தெரிவித்துக் கொண்டது. அரசபடைகளுக்கு ஆதரவும், உதவியும், பயிற்சியும் அளித்து வளர்த்து வந்த "அங்கிள் ஸாம் • உலக நாடுகளுடனர் சேர்ந்து தானும் ஒத் துரதி "காட்டுமிராண்டித்தனம்" என ஒப்புக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டதை என்னவென்று சொல்ல? குருக்கள் செய்தால் குற்றமில்லை என்ற மனுேபாவமோ, இது?
அமெரிக்காக் கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் மிகச்சிறிய நாடு இந்த எல்சல்வடோர். சுமார் எட்டாயிரம் சதுரமைல் பரப்பளவுடைய குடியரசான இந்த நாடு, பசுபிக் சமுத்திரத்தை ஒரு கரையோரமாகவும், வடக்கே குவாதமாலா, ஹொண்டியுரஸ் ஆகிய நாடுகளையும், கிழக்கே நிக்கராகுவாவையும் அயல்நாடுகளாகக் கொண்டுள்ளது. ஸ்பானிய மொழியை அரசகரும மொழியாகக் கொண்ட இந்த நாட்டில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கர். ஒரு அதிகாரம் மிக்க ஐஞதிபதியும், 42 அமைச்சர்களை உள்ளடக்கிய ஒரு காங்கிரசும் இந்நாட்டு அரசாங்கத்தின் அங்கங்களாகும். அண்மைக்காலம் வரை வல்லரசுகளின் பரீட்சார்த்த களமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நாடுகளில் எல் சல்வடோரும் ஒன்று. அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதங்களை வழங்கி, இடதுசாரிக் கிளர்ச்சியாளர்களை கம்யூனிச அணி நாடுகள் வளர்த்து வந்தன. இவர்களை அழித்தொழிக்க என அரச காவல் படையினரைப் பயிற்றுவித்து, ஆயுதங்களையும், நிதியுதவிகளையும், ஆலோசனைகளையும் அமெரிக்கா வழங்கி வந்தது. வழமையான வாய்ப்பாடாக அமைந்து விட்ட இந்தக் கெடுபிடி யுத்தப் போட்டியிஞல் கடந்த 11 வருடங்களாக எல் சல்வடோரில் ஓயாமல் மரண ஒலங்கள் கேட்டபடியே உள்ளன. பல்லாயிரம் மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். பல நாட்கள் தொடர்ந்தும் உம்ரடங்குச் சட்டத்தால் மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். சோவியத் யூனியனுல் முன்னர் தனது அணியைச் சார்ந்த நாடுகளில் சொருகி வைக் கப்பட்டடிருந்த "பிளக்" ஒவ்வொன் ருக வெளியே இழுத்தெடுக்கப்பட்டு விட்ட போதிலும், எல் சல்வடோர் போன்ற நாடுகளில் இன்னமும் இந்த இழுபறிகள் இடம் பெற்றுக் கொண்டிருப்பது வியப்புத்தான்!
மத்திய அமெரிக்காவில் கியூபா, நிக்கராகுவா போன்ற அண்டை அயல் நாடுகளில் நிலை கொண்டு வந்த சோஷலிசஸம் எல்சல்வடோரிலும் கால் பதிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. கம்யூனிசத்தின் வருகையைத் தடுத்து முதலாளித்துவத்தை நிலைகொள்ளச் செய்யவென அமெரிக்கா,எல்சல்வடோரின் அரசியல் விவகாரங்களில் தனது செல்வாக்கைப் பிரயோகித்தது. அமெரிக்காவின் பக்க பலத்துடன் ஆட்சியிலிருப்பவர் தான் ஜஞதிபதி அல்பிரடோ கிறிஸ்டியானி. 41 வயதுடைய இவர் ஒரு கோப்பிப் பயிர்ச் செய்கையாளர். இவரது அருேஞ கட்சியினது ஆட்சியின் கீழ், இந்நாட்டில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் வன்செயல்கள் குறைந்தபாடில்லை. பதிலாக மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்வது இவரது எஜமானர்களுக்குத் தலைவலி தரும் விடயம். 1989 இல் மோல்டாவில் நடைபெற்ற அமெரிக்க சோவியத்
84

எல் சல்வடோர் 3O. 11, 1990
உச்சி மாநாட்டின் போது ஜோர்ஜ் புஷ் இதுபற்றி உறுமிய தருணம் "என்னை விட்டால் போதும், எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்றவாறு சோவியத் தலைவர் கொர்பச்சேவ் மறுப்புக் கூறியிருந்தும், அமெரிக்கா தொடர்ந்தும் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டொலர் என்ற அடிப்படையில் வழங்கிய இராணுவ பொருளாதார உதவிகளைத் துரிதப்படுத்தி எல்சல்வடோர் அரசின் படைகளை நவீனப்படுத்தி வளர்த்தெடுத்து வருகின்றது.
எல்சல்வடோரின் ஜனநாயகக் கனவுகளை வன்செயல்கள் கலைக்க, சிதைந்த நம்பிக்கைகளின் சின்னமாக வானத்தை அண்ணுந்து பார்த்தபடி ஏகாந்தமாய் நிற்கும் அந்த "ஜனநாயகத்தின் கோபுரம் ஏன் எழுப்பப்பட்டது?" இக்கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கும் அந்த நாட்டு மக்களுக்கு இன்னமும் இது ஒரு புரியாத புதிர். தலைநகரான சான்சல்வடோருக்கு அருகே, வானளாவ வளர்ந்து நிற்கும் இந்தக் கண்ணுடிச் சுவர்களால் ஆன 20 மாடிக்கட்டிடம் அந்த நாட்டு மக்களின் எட்டு மில்லியன் டொலர் பணத்தைத் தின்று ஏப்பம் விட்டு வளர்ந்த கோபுரம், 89 ஜூன் மாதம் பூர்த்தியாக்கப்பட்ட இக்கோபுர மாடிக் கட்டிடம், அடுத்த மாதமே கொரில்லாக்களால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. எல்சல்வடோரில் அமெரிக்கா கட்டி எழுப்ப எண்ணிய நீண்ட காலக்கனவின் சிதைந்த சின்னமாக உடைந்த சுவர்களுடன் மூளியாக நிற்கும் இந்தக் கோபுரத்தை, இன்று ஆந்தைகளும் வெளவால்களும் அவற்றுடன் அரசபடை விலங்குகளும் குடிபுகுந்துள்ள குகையாக எண்ணி அஞ்சி, அந்த நாட்டு மக்கள் வெறுக்கிருர்கள். "ஜனநாயக மோகத்தினுல் விளைந்த துன்பங்களின் விம்பம்” என எதிர்கட்சித் தலைவர் றுரபின் ஸமோராவினல் குறிப்பிடப்பட்ட இந்தக் கோபுரம் ஒருவருக்கும் வேண்டப்படாத நிலையில் இன்று இராணுவத்தினரின் தற்காலிக இருப்பிடமாகிவிட்டது. இதன் உச்சியில் இருந்து பார்க்கும் போது சென்ற வருடம் நவம்பர் 18 அதிகாலை அரச படையினரின் மரணப்பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மதகுருமாரின் உடல்கள் குப்புறக்கிடந்த புற்றரை தெளிவாகத் தெரியும்.
இடதுசாரித் தீவிரவாதக் குழுக்களுக்கு மதகுருமார் ஆதரவளிக்கினர் றனர் எனர் ற சந்தேகத்தினர் காரணமாக மரணப் படையைச் சார்ந்தோர் தான் இப்படுகொலையைச் செய்தார்கள் என்பதை அந்த நாட்டு மக்களும், வெளியுலகும் அறிந்து கொள்ள அதிக நாள் பிடிக்கவில்லை. அல்பிரடோ கிறிஸ்ரியானியின் அரசாங்கம் ஊழல் நிறைந்ததாகவும், அரசபயங்கரவாதத்தை முடுக்கிவிட்டதாலும்,நிலச்சீர்திருத்தங்களை தடுத்து, பணவீக்கத்துக்கு வழிவகுத்து, யுத்தத்தைத் திட்டமிட்டு நீடித்துக் கொண்டு வந்ததாலும் மக்களது ஆதரவை அது இழந்தது. முக்கியமாக அரசபடைகளின் அராஜகங்களால் பாதிப்படைந்த மக்களும், மதநிறுவனங்களும், அவரது ஆட்சியையும், அருேஞ கட்சியையும் வெறுத்து போராளிகள் மீது நம்பிக்கையும் அனுதாபமும் கொள்ளலாயினர். இதனல் ஆத்திரமுற்ற மரணப்படையினர், போராளிகள் மீது பழியைச் சுமத்தி விடுவதற்கென்றே இப்படுகொலைகளை இருளில் நிகழ்த்தினர். ஆனல் மக்களோ இதனை நம்ப மறுத்தனர். "தாமே இக்கொலைகளைச் செய்து
85
r- - -

Page 47
|எல் சல்வடோர் 30.11.1990
விட்டு போராளிகள் மீது பழியைச் சுமத்தி, அவர்களுக்குக் கெட்ட பெயர் தேடிக் கொடுக்க எண்ணும் அரசபடைகள், செல்வந்தரையும் செல்வாக்குள்ளோரையும் பாதுகாக்கும் ஒரு கொலைக்கருவி; எஜமானர்களை காக்கும் காவல் நாய்கள்” என்று கூறிச் சாதாரண மக்கள் கொதிக்கின்றனர். இந்நாட்டின் அரசபடையில் ஒவ்வொரு 15 வீரருள் 14 பேர் மனித உரிமை மீறல்கள் மூலம் பதவிக்கு வந்தவர்கள் என்றும் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவரும் இவ்வாருன ஒரு குற்றவாளியே என்றும் அமெரிக்கக் காங்கிரஸ் ஆய்வுக்குழுவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது. இவற்றைத் தெரிந்து கொணர்டும் பொருளாதாரத்தை சீர்திருத்தவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் இடதுசாரிக் கலவரங்களை அடக்கவும் , இராணுவ விஸ்தரிப்புக்கெனவும் அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளமை மக்களுக்கும் போராளிகளுக்கும் அமெரிக்காவின் அடிப்படை நோக்கத்தைத் தெளிவுற சுட்டிக்காட்டுகிறது.
அரசபடைகளுக்கும் கிளர்ச்சிக் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் இடம் பெறுகின்றன. Farabundo Mari National Liberation Front Tsar JuGib (paararajafaoud Gafrtiss இந்தப் போராளிகளோ, அடக்குமுறை நிறுத்தப்படும் வரை போராட முடிவு செய்துள்ளனர். "ஏழைத் தொழிலாளிகள் வாழும் பிரதேசங்களை அரச படைகளிடமிருந்து காப்பாற்றி வெற்றி பெறும்வரை போராடுவோம், அல்லது செத்து மடிவோம்" என்று தீவிரவாதிகள் கொமாண்டர் கிளவ்டியோ ரபிந்திரநாத் கூறியுள்ளார். 55 ஆயிரம் அரசபடையினருக்கு எதிராக சுமார் 1500 போராளிகள் கடந்த ஒரு தசாப் தத்திற்கு மேலாக நிகழ்த் தி வரும் இப் போராட்டத்தினுல் சுமார் 70 ஆயிரம் மக்கள் உயிர் இழந்துள்ளனர். தீவிரவாதிகள் அரசபடையினரையும் அவர்களது குடும்பத்தினரையும் தேடி வேட்டையாட, அரச துருப்புகளோ தொழிலாளர்கள், மாணவர்கள், மனித உரிமைகள் சங்கத்தினர் ஆகியோரைத் தேடிக் கொன்று குவித்து வருகின்றன. எல் சல்வடோரின் "வாட்டர்கேட்" என வர்ணிக்கப்பட்ட யேசுசபை மதகுருமாரினர் கொலைபற்றி வாய் திறக்காமல் இருந்த கிறிஸ்ரியானியின் அரசாங்கம், சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் தான் வெளியுலக நிர்ப்பந்தங்களின் காரணமாக, இதில் சம்பந்தப்பட்ட 9 மரணப் படை உறுப்பினரை விசாரணைக்குட்படுத்தியது. ஓராண்டு பூர்த்தியாகியும் குற்றத் தீர்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை. இது வழங்கப்படும் என்ற நம்பிக்கை நாட்டில் 19 சதவீத மக்களுக்கு மட்டுமே உண்டு. இந்த விசாரணை தொடர்பான அதிருப்தி காரணமாக ஐம்பது சதவீத இராணுவ நிதியுதவியை அமெரிக்கா தற்போது துண்டித்து விட்டது. பத்து வருடமாக எல்சல்வடோரில் அமெரிக்கா கடைப்பிடித்து வந்த கொள்கையில் முன்னர் எப்போதும் நிகழாத இந்த தடை விதிப்பு, அந்த நாட்டு அரசு மீதான அமெரிக்காவின் புதிய அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
அரசபடையின் ஒரு பிரிவான வலதுசாரி மரணப்படைக்கும்,
| ၉၉ H

(எல் சல்வடோர் 30. 11.1990 | அரசை எதிர்க்கும் இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல்கள் நாட்டைக் கொலைக்களமாக்கி விட்டன. சன்சல்வடோரில் தொழிலாளர் நெருக்கமாக வாழும் பகுதிகளிலும், போராளிகளின் கேந்திர ஸ்தானங்கள் அடங்கிய மொரு சா மாநிலத்திலும், கபான மாநிலத்திலும் பொதுமக்கள் வீணே கொன்று குவிக்கப்படுகிருர்கள். இந்த வருடம் ஜனவரியில் இருந்து மீண்டும் வலதுசாரி மரணப் படையினர் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் கூறுகின்றது. இந்தப் படையினரையும் தனது அருேஞ கட்சியினரையும் வன்செயல்களில் ஈடுபடாமல் தடுக்க வல்லமையற்ற ஜஞதிபதி கிறிஸ்ரியானியின் ஆட்சி மீது மக்கள் ஆத்திரமடைந்திருக்கிருர்கள். இக்கொடிய யுத்தத்தினல் விரக்தியடைந்த மக்கள் இப்போது தங்களை வாழ விடுங்கள் என்று கெஞ்சி மண்ருடுகிருர்கள். "நீங்கள் யாருக்காகச் சண்டையிடுகிறீர்கள்? எங்களுக்காகச் சணர்டை யிடுவதாக இருந்தால் எங்களைப் பலிக்கடாக்கள் ஆக்காதீர்கள். சண்டை தான் உங்களுக்கு சந்தோஷமானுல் சனம் இல்லாத இடம் பார்த்துப் போங்கள். அங்குநின்று சண்டையைப் பிடியுங்கள்” என்று மக்கள் அழுது புலம்புகின்றனர்.
எல் சல்வடோரில் பதவியில் இருக்கும் ஆட்சியாளர் சாதாரண ஏழைத் தொழிலாள வர்க்கத்தினருக்கு இழைத்து வரும் அநீதிகளுக்கு எதிராகவும், அரசாங்கத்தின் ஊழல்கள், அடக்குமுறைகள் என்பவற்றிற்கு எதிராகவும், நீதி கேட்டுப் போர்க் கொடி தூக்கவேண்டிய தேவையை இடதுசாரித் தீவிரவாதிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததே அந்த நாட்டு அரசாங்கம் தான். இந்த எழுச்சிக்குக் கம்யூனிச சாயத்தைப் பூசிய அரசாங்கம்,அமெரிக்காவின் உதவியுடன் அரச பயங்கரவாதத்தைத் தன் ஆயுதமாகக் கைக் கொண்டது. மத்திய அமெரிக்காவில், பிராந்திய நலன் கருதித் தனது செல்வாக்கை நிலைநாட்ட விரும்பும் அமெரிக்காவும், கம்யூனிசத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவிகளை வழங்குவதாக வெளியுலகுக்குக் காண்பிப்பதற்கு இது நல்ல வாய்ப்பு. ஜனநாயகத்தைத் துரக்கி நிமிர்த்தி நிலைநாட்டவென்று இராணுவப் பயிற்சிகளையும், நிதியுதவிகளையும் அமெரிக்கா வழங்கியது. இதஞல் தீவிரவாதிகள் இயல்பாகவே கியூபா ஜனதிபதி காஸ்ட்ரோவையும் முன்ஞள் நிக்கரகுவா ஜஞதிபதி ஒட்டேகாவையும் உதவிக்கு நாடினர். கியூபா கம்யூனிச நாடாக இருந்த போதிலும் மத்திய அமெரிக்காவைத் தனது வீட்டுக் கொல்லைப்புறமாக எண்ணி வந்துள்ள காஸ்ட்ரோ இப்பிராந்திய விடயங்களில் தான் விரும்பியவாறே நடந்து வந்துள்ளார். இதுபோலவே இங்குள்ள அமெரிக்க ஆதரவு அரசுகளும் தமக்கு விரும்பியவாறே அடாவடித்தனங்களில் ஈடுபட்டு அவப்பெயர்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளன. எனவே மத்திய அமெரிக்காவால் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் எப்போதுமே தலைவலி இருந்து வந்துள்ளது. அமெரிக்கா அதனை இப்போதும் அனுபவித்து வருகின்றது. எல் சல்வடோரில் அரசபடைகளும் தீவிரவாதிகளும் வன்முறைகளைக் கைவிடாத வரை தொடர்ந்தும் அது மத்திய அமெரிக்காவில் ஒரு குருக்ஷேத்திரம் தான்!
87

Page 48
四运 07. 12.1990
எண்ணெய் சட்டியிலிருந்து
எரிதணலுக்குள்?
"நாண் வெற்றி பெறுவேன்; நாணி வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவன்; நான் எப்போதும் வெற்றி பெறுவேன்" என்று பல முறை அன்று அடித்துக் கூறிய சர்வதேச பிரசித்தி பெற்ற, சொலிடாரிட்டி இயக்கத் தலைவர், லெக் வலேசா "எங்கிருந்து வந்தான் என்ற இரகசியம் இறைவனுக்கு மட்டும் தான் தெரிந்த இலட்சாதிபதியை ஆதரிக்கப் போகிறீர்களா?அல்லது என்னை ஆதரிக்கப் போகிறீர்களா?" என்று போலந்து நாட்டு மக்களைப் பார்த்து நின்று இவ்வாறு கேட்டுக் கையேந்தி நிற்கின்ருர், "90 வீத மக்களின் ஆதரவுடன் ஜனதிபதியாக வெற்றி வாகை சூடுவேன்” என்று மார்தட்டி நின்ற 'உழைக்கும் வர்க்கத்தின் உன்னத நாயகன்" வலேசா உண்மையில் தனது இலட்சியத்தை அடைந்துவிடுவாரா? சுமார் அரைநூற்றண்டு காலமாகக் கம்யூனிச ஆட்சிக்குள் அகப்பட்டிருந்த போலந்து மண்ணை மீட்டெடுத்து, கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குவித்திட்ட மாவீரன் வலேசாவின் மனதில் புதிதாக ஓர் அவநம்பிக்கை முளைத்தது ஏன்?
88
 

போலந்து ΟΤ - 12 - 1990 கடந்த பத்து வருடங்களாக சொலிடாரிட் டி என்ற தொழிற்சங்கத்தைக் கட்டியெழுப்பி, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, 1983 இல் உலக சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற அந்த அரசியல் வசீகரத்துவம் மிக்க தலைவன், தனக்கு வரும் என நம்பியிருந்த தன்னிகரற்ற தலைமைத்துவம்,அவ்வளவு இலகுவாகத் தன் கையை வந்தடைந்து விடக் கூடியதல்ல என இப்போது எண்ணி மனம் சோர்ந்து விடக் காரணம் யார்? சொலிடாரிட்டி என்ற கனவை நனவாக்கி, அதன் பாரிய பலத்தினை பிரயோகித்து, நாற்பது வருடங்களுக்கு மேலாக நிலைபெற்றிருந்த கம்யூனிச அரசைக் குப்புற வீழ்த்தி, போலந்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் வலேசாவுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று உழைத்து, அதன் பின்னர் ஜனநாயக ரீதியில் முதன் முதலாக நாட்டின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட ராடியூஸ் மாசூவியேஸ்கியை, இந்த ஐஞதிபதி ஒட்டப்பந்தயத்தில் இருந்து உதைத்துக் கீழே தள்ளி வீழ்த்தியது யார்?நவம்பர் 25 இல் போலந்தில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தலில் திடீரெனப் போய்க் களத்தில் குதித்த போலந்து கனடியன் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட எதிர்பாராத அரசியல் குழப்பங்கள் தான் இவை அனைத்தும். வறுமையின் அடித்தளத்தில் வாழ்ந்து வரும் போலந்து மக்களின் மனதில் நம்பிக்கை நட்சத்திரமாக மின்னிய ஸ்ரனிஸ்லோரிமின்ஸ்கி, ஜஞதிபதி தேர்தலில் இரண்டாம் இடத்தைச் சுவீகரித்துக் கொண்டதினுல் விளைந்த விபரீதங்கள் தான் இவை யாவும். லெக் வலேசா நாற்பது வீதத்துக்கும் சற்றுக் குறைவானதாகவும், ரிமின்ஸ்கி 23 சதவீதமும், மாசூவியேஸ்கி 18 வீதமும் வாக்குகள் பெற்றதஞல் நிகழ்ந்த உடனடி விளைவுகள் சில -மொத்தம் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்கினைப் பெற்ற வலேசா ஐம்பது சதவீதத்திற்கும் மேலான பெரும்பான்மை வாக்குகளைப் பெறத் தவறியதால், இரண்டாம் இடத்தைப் பெற்ற ரிமின்ஸ்கியுடன் டிசம்பர் 9 இல் மீண்டும் போட்டியிட வேண்டும். முன்ரும் இடத்தைப் பெற்ற பிரதமர்மாசூவியேஸ்கியும் ஏனைய மூன்று வேட்பாளர்களும் அடுத்த தேர்தலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த தேர்தல் முடிவுகள் வெளியானதும், தனது பிரதமர் பதவியை ராஜினுமா செய்யப் போவதாக மாசூவியேஸ்கி அறிவித்துள்ளார். புதிதாகக் கைக்கெட்டிய ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும் வகை தெரியாமல் போலந்து மக்களும், மக்கள் தலைவர்களும் தலை குழம்பி நிற்கின்றனர். ஜனநாயகத்தின் வசீகரத்துவம் மிக்க இலட்சணங்களுடன் போலந்திலும் மக்களாட்சி மலரும் என நம்பிக்கையுடன் அந்த நாட்டு மக்களும், உலக மக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனல் உண்மை ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தில் இவை எல்லாம் திடீர் திடீரென இடம் பெறும் என இவர்கள் எதிர்பார்த்திருந்தார்களா?
89

Page 49
Guru isg 07.12.1990
மத்திய ஐரோப்பாவில் ஜேர்மனி, செக்கோஸ்லாவாகியா, சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு நடுவே ஆரும் நூற்ருண்டில் உருவாக்கப்பட்ட நாடு போலந்து. முதலாம் உலகப் போரின் போது ஜேர்மன் ஆஸ்திரியப் படைகளிளுல் ஊடுருவப்பட்டு, பின்னர் 1919 இன் சமாதான ஒப்பந்தப்படி போலந்தின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் 1939 இல் உலக யுத்தம் மூண்ட போது ரஷ்ய -ஜேர்மன் படைகளால் கைப்பற்றப்பட்டிருந்த போலந்து, 1945 இல் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர், ரஷ்யப் படையினுல் விடுவிக்கப்பட்டு, ரஷ்ய சார்பு நாடுகளில் ஒன்முக இயங்கலாயிற்று. கம்யூனிஸ்ட் கட்சியை ஒரேயொரு கட்சியாகக் கொண்டு செயற்பட்ட இந்த நாட்டின் தலைநகரான வார்சோவில் கம்யூனிச அணியைச் சார்ந்த நாடுகள் கூடி, ஒப்பந்தம் செய்து கொண்டதிஞலேயே அந்நாடுகளை வார்சோ அணி நாடுகள் என அழைக்கலாயினர்.
கம்யூனிச ஆட்சிக்குள் சிக்குண்டிருந்த தொழிலாளர்களின் நலன்களுக்காகப் போராடுவதற்கென, 1980 ஆகஸ்ட் 3 இல், 12 அடி உயரமான வேலி ஒன்றில் ஏறி நின்று லெக் வலேசா வைத்த தீ, லெனின் கப்பல் தளத்தில் உள்ள 17ஆயிரம் தொழிலாளர்களையும் முதன் முறையாக சொலிடாரிட்டி என்ற குடையின் கீழ் வேலை நிறுத்தத்தில் ஒன்று சேர்த்தது. உற்சாகமடைந்த ஏனைய தொழிற்சாலை ஊழியரும் 700 அரசாங்க ஊழியரும் இணைந்து கொண்டனர். கம்யூனிச நாடுகளில் தோன்றிய முதலாவது தொழிற்சங்கமான சொலிடாரிட்டி, தொழிலாளர்களது கடின உழைப்பின் குறைவான பலாபலன்களையும் கம்யூனிஸ்ட் கட்சி உயர்பீடத்தின் சுகபோகங்களையும், அதிகார மோகங்களையும், சோவியத் ஆதிக்க ஊடுவலையும் எதிர்த்துத் துணிச்சலுடன் குரல் எழுப்பியது. முப்பது லட்சம் தொழிலாளருடன் முதலாவது மாநாட்டை நடாத்திய சொலிடாரிட்டி பத்து மாதங்களுக்குள் ஒரு கோடி உறுப்பினரைத் தனதாக்கியது. அன்றைய உதவிப் பிரதமருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பலன் கிட்டவில்லை. பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்தது. உணவு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாட்டில் தொடர்ச்சியான பதற்றமும், பட்டினி ஊர்வலமும், பகிரங்க ஆர்ப்பாட்டமும், வேலைநிறுத்தமும் நிகழ்ந்தன. பொலிஸ் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. தொழிலாள, விவசாய, மாணவ சங்கங்களுக்கு விலங்கிடப்பட்டது. 1981 டிசம்பர் 13 இல் யுத்தப் பிரகடனம் செய்யப்பட்டு இராணுவ சட்டம் அமுலுக்கு வந்தது. லெக் வலேசா உட்பட ஐயாயிரம் சொலிடாரிற்றி உறுப்பினரை இரவோடிரவாகப்படுக்கையில் வைத்துக் கைதுசெய்த இராணுவம் தொழிற்சங்கத்தைச் செயலிழக்கச் செய்தது. 1982 இல் சொலிடாரிட்டி தடை செய்யப்பட்டது. வேலைநிறுத்தம் சட்ட விரோதமாக்கப்பட்டது. இதஞல் சொலிடாரிட்டி தலைமறைவானது. உறங்கு நிலையிலிருந்து இரகசியமாக வளர்ந்தது. 1983 இல்
| 90

|போலந்து 07.12.1990 வலேசாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததுடன் சொலிடாரிட்டி மீண்டும் கிளர்ந்து எழுந்தது. சொலிடாரிட்டியின் பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்; சிறையில் அடைக்கப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர்; 1984 இல் சொலிடாரிட்டிக்கு ஆதரவாயிருந்த மதகுரு ஜேர்சி பொபிலஸ் கோ இரகசிய பொலிசாரால் கொலை செய்யப்பட்ட போது, இயக்கம் மீண்டும் கொதித்தெழுந்தது. சொலிடாரிற்றி இன்றிப் போலந்தின் பிரச்சனைகள் தீராது என்று போலந்து அரசும் உலக நாடுகளும் உணர்ந்தன. 1988இல் நடைபெற்ற மூன்று வார கால வேலை நிறுத்தத்தால் நாடே ஸ்தம்பித்தது. இவ்வேலைநிறுத்தத்தை தடுத்து உதவும்படி வலேசாவை வேண்டிய அன்றைய ஜனதிபதி ஜருசெல்ஸ்கி, சொலிடாரிட்டியைச் சட்டப்படி அங்கீகரித்து, 1989 பெப்ரவரி 6ம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி ஓர் ஒப்பந்தத்தை எழுதி வாங்கிக் கொண்டார். இதன்படி போலந்தில் சுதந்திரமான தேர்தல் ஒன்றுக்கு உறுதி அளிக்கப்பட்டது. திறந்த பொருளாதாரத்தை நோக்கிய, சோஷலிஸ் பாராளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தச் சீர்திருத்த ஒப்பந்தம் தான் ஹங்கேரி, செக்கோஸ்லாவாகியா, கிழக்கு ஜேர்மனி போன்ற ஏனைய கம்யூனிச நாடுகளிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் பயனுக 1989 ஜுனில் முதலாவது ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடந்தது. பெரும்பான்மை ஆசனங்களைத் தேர்தலின்றியே கம்யூனிச ஆட்சியாளருக்கு ஒதுக்கி விட்டு, மிகுதி ஆசனங்களுக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புத் தேர்தலில் சொலிடாரிட்டி பெருவெற்றியீட்டியது. ஆயினும் ஆட்சியைக் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்தும் தமது கைக்குள் வைத் திருந்ததால் ஏற்பட்ட எதிர்ப்புகளின் முடிவாக இரண்டாம் உலகப்போருக்கு பின், போலந்தில் 1989 செப்டம்பரில் முதலாவது கம்யூனிஸ்ட் அல்லாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. சொலிடாரிட்டியின் அரசாங்கம் ராடியூஸ் மாசூவியேஸ்கியைப் பிரதமராகக் கொண்டு 38 மில்லியன் மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றவென ஆட்சிக்கு வந்தது.
சொலிடாரிட்டியை ஒரு வலிமை மிக்க போர்ச்சக்தியாக வளர்த்தெடுத்து, கிழக்கு ஐரோப்பிய கம்யூனிசத்திற்கு ஒரு கண்ணி வெடியாக அமைந்தவர், லெக் வலேசா தான். 47 வயதுடைய இவர் அரசியல் அறிவில் இன்னமும் பக்குவம் அடைந்திராத போதிலும், மேடைகளில் சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் சமயங்களில் கோமாளித்தனமாகவும் பேசி சாதாரண மக்களைக் கவர்ந்துள்ளார். தந்திரமும் குள்ளப் புத்தியும் உள்ள இவர் தனது முன்னுள் நண்பரான மாசூவியேஸ்கியின் எதிரியானமைக்கு வலேசாவின் பதவி மோகம் ஒரு காரணம். வலேசாவின் உதவியுடன் பிரதமரான மாசூவியேஸ்கியோ, நாட்டின் புத்திஜீவிகள் மத்தியில் மதிப்பும் செல்வாக்கும் மிக்கவர். வார்த்தைகளை அளந்து பேசிப் பழக்கப்பட்ட இவர், கவர்ச்சியாகப் பேசி மக்களைத் தற்காலிகமாக
91

Page 50
போலந்து 07.12.1990 உணர்ச்சி வசப்படுத்தி காரியமாற்றும் திறன் தன்னிடம் இல்லை எனப் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிருரர். முன்னுக்குப்பின் முரணுகப் பேசி, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் வலேசாவோ, ‘மாகுவியே ஸ்கியிடம் கொடுத்த நாட்டை, தொடர்ந்தும் கம்யூனிஸ்டுகள் கையிலேயே இருக்க விட்டிருக்கலாம்" என இப்போது விமர்ச்சிக்கிருர், போலந்தை சீர்திருத்துவதில் மாசூவியேஸ்கி நத்தை வேகத்தில் இயங்குவதாகவும், இந்த நூற்றண்டில் இவரது ஆட்சியில் நாட்டுக்கு மீட்சி இல்லை என்றும் குறை கூறுகின் முர். அது மட்டுமல்ல பதவி ஆசை தலைக்கேறியிருந்தும் அதை தான் விரும்பவில்லை என வெளியே கூறிக் கொள்ளும் வலேசா, மாசூவியேஸ்கியை ஒரு யூதன் எனக் கூறியும் அரசியல் லாபம் தேடிக் கொண்டுள்ளார். ஒருமித்த சக்தியாயிருந்து உலக வரலாற்றை மாற்றி எழுதிய சொலிடாரிட்டி இப்போது வலேசா, மாசூவியேஸ்கி தலைமைகளில் இரு வேறு கட்சிகளாகப் பிளவுபட்டுப் பதவிக்காகப் போட்டியிட்டு, ஒன்றையொன்று அவதூறு சொல்லிப் பலவீனப்பட்டு இருந்த தருணம் பார்த்து, கனடாவில் இருபது வருடம் வாழ்ந்து இலட்சாதிபதியான ஸ்ரனிஸ் லோ ரிமின் ஸ்கி திடீரெனப் போலந்துள் வந்திறங்கி ஜஞதிபதி தேர்தலில் குதித்தார். வறுமைப்பட்டுக் கிடக்கும் போலந்தின் "நம்பிக்கையின் சின்னம் நான்” என்று கூறிக் கொண்டு, மேற்கு நாட்டுச் சமூக பொருளாதார, வாழ்க்கை முறைகளை மக்களின் மனங்களில் சித்திரமாய் சித்திரித்து, அவர்களின் அபிமானத்தைத் தேடிக் கொண்டுள்ளார். 1969 இல் கையில் ஆறு டொலருடன் போலந்தை விட்டு வெளியேறி, பின்னர் பேரு நாட்டு மனைவியுடன் கனடாவில் வந்து குடியேறி பணக்காரளுகி விட்ட இவரை, போலந்தின் கிராமப்புறம் நம்பி ஆதரிக்கிறது. கடந்த குறுகிய கால ஆட்சிக்குள் பணவீக்கத்தைக் குறைத்து, ஜேர்மனியுடனுன எல்லைப் பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்த்து, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்மதிப்பைத் தேடத் தொடங்கியுள்ள பிரதமரைப் பதவியிழக்க செய்த,42வயதான ரிமின்ஸ்கி, ‘ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவராகி விடலாம்" என்ற வலேசாவின் கனவுக்கும் ஓர் அச்சுறுத்தலாகி விட்டார். மக்கள் மத்தியில் ரிமின்ஸ்கியின் செல்வாக்கு வளர்ந்து வருவதைத் தடுப்பதற்கென அவர் பற்றிய பல வதந்திகள் கிளப்பி விடப்பட்டுள்ளன. லிபியாவுக்குப் பல தடவை சென்று வந்துள்ளதால் கேர்னல் கடாபிக்கும் ரிமின்ஸ் கிக்கும் இடையே இரகசிய தொடர்பு உணர்டென்றும், பிரதமர் மாசூவியேஸ்கி பற்றி உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை முன்னுக்குப் பின் முரணுகக் கூறி வந்த ஒரு “மனநோயாளி” என்றும், நீதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவர் என்றும் எதிர்த்தரப்பினர் பிரசாரத்தை முடுக்கி விட்டும், இவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் வளர்ந்து வருவது வலேசா உட்பட பலருக்கு நிம்மதியீனத்தை ஏற்படுத்தி விட்டது.
92

போலந்து O7.12.1990 |
நீண்ட காலமாக ஜனநாயக உரிமைகளை இழந்து வாழ்ந்த போலந்து மக்கள், பலத்த பிரயத் தனங்களினர் பினர் கம்யூனிசத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டுள்ளனர். வறுமையின் பிடியில் இருந்தும் விரைவான விடிவு கிட்டும் என எதிர்பார்த்திருந்தனர். சொலிடாரிட்டியை நம்பி ஆட்சியைக் கொடுத்தனர். ஆளுல் மாற்றங்கள் ஒரு சில மாதங்களுக்குள் நிகழக் கூடியன அல்ல என்பதை அவர்கள் உணரத் தவறி விட்டனர். இதஞல் புதிதாகத் தாம் தேர்ந்தெடுத்த பிரதமரை நிராகரித்து விட்டனர். பிரதமரைக் குறை கூறித் தன் பிரபலத்தைக் காப்பாற்றிக் கொண்ட வலேசாவையும் மக்கள் தமது பூரண நம்பிக்கைக்குரிய ஏக தலைவனுக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டி விட்டனர். சொலிடாரிட்டி இயக்கத்தினர் தலைமைத்துவப் போட்டி காரணமாகத் தமக்குள் பிளவுபட்டதுடன், தம்மிடம் திட்டவட்டமான ஒரு அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கை இல்லை என்ற வெறுமையையும் வெளிக்காட்டி விட்டதால், எங்கிருந்தோ வந்த "மிஸிஸ்ஸாகா மில்லியனயர்" ரிமின்ஸ்கி மீதுமக்கள் நம்பிக்கையை வைத்து விட்டனர். பண்படுத்தப்பட்ட ஓர் அரசியற் கலாசார அறிவும், அனுபவமும் இல்லாத போலந்து மக்களும், மக்கள் தலைவர்களும் புதிதாகக் கிடைக்கப்பெற்ற அரசியல் உரிமைகளையும் கடமைகளையும் அதிகாரங்களையும் புத்திபூர்வமாக உபயோகிக்கத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்து கொள்ளும் கெடுதியான காலகட்டத்தை வந்தடைந்துள்ளதைப் பார்க்கும் போது, எங்கே எண்ணெய்ச்சட்டியில் இருந்து எரிதணலுக்குள் அவர்கள் வந்து வீழ்ந்து கொண்டனரோ என எண்ணத் தோன்றுகின்றது.
மக்களிடம் காணப்படும் அவசரமான எதிர்பார்ப்புகளும், தலைவர்களிடம் காணப்படும் திட்ட வட்டமான கொள்கைகளில்லாமையும், அவர்களுக்கிடையே கொழுந்து விட்டெரியும் குரோதங்களும் மீண்டும் போலந்தில் விரைவில் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், வன்செயல்கள் போன்றவற்றிற்குப் பச்சைக்கொடி காட்டுவதாகவே தெரிகிறது. டிசம்பர் 9 இல் ஜஞதிபதி ஆகப் போகின்றவர் வலேசா தான், ஆஞல் அரசியலில் எதுவும் நடக்கலாம். ரிமின்ஸ்கியே போலந்தின் ஜனதிபதியாளுர் என்ற செய்தி மறுநாள் காதில் விழுந்தாலும் அதிர்ச்சி அடையத் தேவை இல்லை. போலந்தில் நடைபெறும் பலப்பரீட்சையின் முடிவை முன்கூட்டியே கட்டியம் கூறுதல் சற்றேனும் கடினமானதல்ல என்ருலும் சற்றுப் பொறுத்திருந்து தான் பார்ப்போமே!
93

Page 51
|ஐக்கிய நாடுகள் அமைப்பு 14. 12.1990
பூச்சியத்துக்குள்ளிருக்கும்
இராச்சியம் தானே?
உலக நாடுகள் அனைத்தையும் ஒரே குடைக் கீழ் ஒன்றிணைத்து நடுநிலை அமைப்பாக இயங்க வேண்டிய ஐக்கிய நாடுகள் அமைப்பும் NATO அணியுடன் இணைந்து கொண்டதோ! சமன் செய்து சீர்தூக்கும் கடப்பாடுடைய இந்தச் சர்வதேச சபை, இன்று பக்கம் சாய்ந்து கொண்டது என்பது அதன் அர்த்தம் அல்ல. “sm fnuusaübav, s Googs uD'Guib 5m Gir” (No Action- Talk Only) GT sirany இயங்கி வரும் அமைப்புகள் வரிசையில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் இணைந்து கொண்டதோ எனப் பலரும் எண்ணுமளவிற்கு இது தன் ஆன்மாவை இழந்த அமைப்பாக இருந்து வந்துள்ளது என்பது தான் உண்மை. அது மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபைக்குள் அமெரிக்கா ஆர்வத்துடன் நுழைந்து கொணர்டால், சபை புதுப்பொலிவுடன் புத்துயிர் பெற்று இயங்கும். அமெரிக்கா புறமுதுகைக் காட்டிக் கொண்டால், அமெரிக்க அணி நாடுகளும் "அங்கிள் சாம்" எவ்வழியோ,அவ்வழியே தம் வழியென்று பின்பற்ற, ஐக்கிய நாடுகள் அமைப்பும் வெறுமனே தமக்குள் கதைக்கும்; காரியம் எதுவும் ஆற்ருது ஆற்றவும் முடியாது. வழக்குகளை நுணுக்கமாக விசாரணை செய்து, நீதியின் வழிநின்று தீர்ப்பைக் கூறிய பின்பும், அதனை நிறைவேற்றும் அதிகாரமற்ற நீதிபதிக்கு ஒப்பானது இந்த ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று இதன் கடந்த இரு தசாப்த வரலாறும் நிருபிப்பதாக, நீண்ட காலமாக இதன் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு. இந்த ஐக்கிய நாடுகள் அமைப்பு செயற்றிறன் அற்ற ஒரு போலி அமைப்புத் தானு? அமெரிக்கா, தான் விரும்பிய போதெல்லாம் உயிர் கொடுக்கவும், உயிர் பறிக்கவும் செய்ய, அமெரிக்காவின் தோள் மீது ஒட்டி உயிர் வாழும் ஓர் ஒட்டுண்ணி தாளு, இந்த ஐக்கிய நாடுகள் அமைப்பு?
இரண்டாம் உலக மகாயுத்தப் பின்னிராக் காலத்து, 1945 சான் பிரான்சிஸ்கோ மாநாட்டின் விளைவாக 110 நாடுகள் கூடி உருவாக்கிய உலகப் பொது ஸ்தாபனம் தான் இந்த ஐ.நா.அமைப்பு. இப்போது 160 நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய இந்தச் சர்வதேச நிறுவனத்தில் ஒரு பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, சமூக பொருளாதார சபை, சர்வதேச நீதிமன்றம்
94.

|ஐக்கிய நாடுகள் அமைப்பு 14.12.1990
என்பன பிரதான சபைகளாகும். இவற்றுள் பாதுகாப்புச் சபை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சபையாகும். இப்பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனு, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, கியுபா, கொலம்பியா, எதியோப்பியா,பின்லாந்து, ஐவறி கோஸ்ற், மலேசியா, ருமேனியா, யெமன், ஸாயர் என்பன அங்கம் வகிக்கின்றன. உலக சமாதானத்தையே பிரதான குறிக்கோளாகக் கொணர்ட ஐ.நா பொதுச்சபை, பாதுகாப்புச் சபை ஆகியவற்றின் கூட்டங்கள் எப்போதும் எகோபித்த கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை. வீட்டோ என்ற நாசாஸ்திரத்தைக் கொண்ட அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், சீஞ ஆகிய வல்லரசுகள் ஐ.நா அமைப்பினர் ஐக்கியத்துக்கும் உலக சமாதானத்துக்கும் செய்த நன்மைகளை விட, நாசங்களே அதிகம் எனலாம். ஆயினும் கல்வி விஞ்ஞான கலாசார அமைப்பு (UNESCO). p6vora afias nu sy6ouolul (FAO) . Frray Gá5áF தொழிலாளர் அமைப்பு (ILO) போன்ற பல கிளை அமைப்புகளுக்கூடாக ஐ.நா தனது சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாச்சாரப் பணிகளைச் செய்து வந்துள்ளது.
ஐ.நா அமைப்பு அமெரிக்க அமுக்கங்களால் அடிக்கடி பலமிழந்து போயுள்ள ஒரு உலக சபை என்பது வாஸ்தவம் தான். இம்சிக்கப்படும் மக்களுக்கும், நாடுகளுக்கும் ஆபத்பாந்தவளுக ஓடோடிச் சென்று ஐ.நா இன்னல் தீர்த்து வைப்பதில் பூரண வெற்றி ஈட்டி வந்துள்ளதாகக் கூறி விட முடியாதபோதிலும், உலக சமாதானத்திற்குத் தன்னல் இயன்றவரை கடந்த 45 வருடங்களாகக் கணிசமான அளவு சேவை செய்து வந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. 1948 இல் அரபு இஸ்ரேலிய யுத்தத்துக்குச் சமாதானப் படையை முதன் முதலாக அனுப்பிய ஐ.நா., பின்னர் 1949 இல் காஷ்மீருக்கும், 1950 இல் கொரியாவுக்கும், 1956 இல் எகிப்துக்கும், 1958 இல் லெபஞனுக்கும், 1960 இல் ஸாய்ரேக்கும், 1962 இல் நியுகினிக்கும், 1963 இல் யேமெனுக்கும், 1964 இல் சைபிரசுக்கும், 1985 இல் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கும், 1973 இல் மீண்டும் எகிப்துக்கும், 1988 இல் ஆப்கானிஸ்தானுக்கும், ஈரான் ஈராக் யுத்தத்திற்கும், நமீபியாவிற்கும் படைகளை அனுப்பி உலக சமாதானத்துக்குச் சேவை செய்திருக்கிறது. சமாதானத்துக்கான 1988 ஆம் ஆண்டு நோபல் பரிசை ஐ.நா சமாதானப் படை பெற்றமை குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இவ்வாருன சமாதான சேவைகளுடன், தனது கிளை நிறுவனங்களின் ஊடாக, அபிவிருத்தி அடைந்து வரும் மூன்ரும் உலக நாடுகளுக்கு கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரம், உணவு, சுகாதாரம், விவசாயம், அகதிநிலை போன்ற இன்னுேரன்ன துறைகளில் பணிபுரிந்து வந்துள்ளது. உலக சமாதானத்தின் பாராளுமன்றமாக இயங்க வேண்டும் என்று எண்ணி உருவாக்கப்பட்ட ஐநா, வல்லரசுகளுக்கிடையிலான கெடுபிடி யுத்தப் போட்டிகளின் மல்யுத்த வளையமாக நீண்ட காலம் இருந்தமையினல் தான், இவ்வரிய பணியைச் செவ்வனே செய்து கொள்ள முடியாமற் போயிற்று. ஐ.நாவின் பாதுகாப்புக்
95

Page 52
|ஐக்கிய நாடுகள் அமைப்பு 14.12.1990
கவுன்சிலின் வட்டமேசை மீது, 1954 கொரிய யுத்தம் முதல் 1989 நிகரகுவா தேர்தல் வரை அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சித்தாந்த வேறுபாடுகளின் அடிப்படையில் ஏறி நின்று அடிபட்டு வந்ததில் பெருமளவு காலத்தை விரயமாக்கிக் கொண்டன. ஒரு வல்லரசு ஏனைய நாடுகளின் ஆதரவுடன் எடுக்கும் காத்திரமான தீர்மானங்கள் பல, அடுத்த வல்லரசின் வீட்டோவினல் இங்கு செயலிழந்து மடிந்து போயுள்ளன.
ஐ.நாவின் இத்தகைய பலவீனங்களை உணர்ந்த பல நாடுகள் அதன் தீர்மானங்களைத் தட்டிக் கழித்து உதாசீனம் செய்து வந்தமை, அதன் வளர்ச்சிக்கு ஊறு விளைவித்த சில சம்பவங்களாகும். ஐ.நா நீதிமன்றம் அமெரிக்காவுக்கு எதிராகவும், நிகராகுவாவுக்குச் சார்பாகவும் வழங்கிய தீர்ப்பை அமெரிக்கா ஏற்க மறுத்தமை முதற் கொண்டு, மேற்குக் கரையோரத்தில் இருந்தும் காசா பகுதியில் இருந்தும், இஸ்ரேலை வெளியேற்றுதல், மத்திய அமெரிக்காவில் பொது மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைத் தடுத்தல், அண்ைமையில் மலைக்கோவில் சம்பவத்தின் போது ஜெருசலேத்தில் 21 அரேபியர்கள் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்துதல், குவெய்த்தை விட்டு ஈராக் வெளியேற வேண்டும் எனத் தீர்மானம் எடுத்தல் ஈருகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐநாவின் தீர்மானங்கள் கருத்தில் எடுக்கப்படாது அங்கத்துவ நாடுகளால் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளன. இது போலவே ஏனைய துறைகளிலும் ஐ.நா திறம்பட இயங்குவதில் சில தடைகள் விதிக்கப்பட்டமை கருத்திற் கொள்ளப்பட வேண்டும். ஐநாவின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியுதவி அதன் அங்கத்துவ நாடுகளாலேயே வழங்கப்படுகிறது. பலம் வாய்ந்த வல்லரசான அமெரிக்காவின் நிதியுதவி மிகவும் கணிசமானது. மூன்ரும் உலக நாடுகளின் அமெரிக்க விரோதப் போக்கிஞல் அதிருப்தியடைந்த அமெரிக்கா, ஐ.நா தனது நலன்களுக்கு விரோதமாகச் செயற்படும் ஒரு நிறுவனம் என்றும், திறனற்ற, நிதி விரயம் செய்யும் நிறுவனம் என்றும் 1983ல் குற்றம் சாட்டியது. இதே காலப்பகுதியில் இவ்வாருன அதிருப்தியால் யுனெஸ் கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அமெரிக்கா ஐ.நாவுக்குச் செலுத்த வேண்டிய மொத்தம் ஐநூறு மில்லியனைக் கொடுக்க மறுத்ததாலும், ஐநாவை உதாசீனம் செய்ததாலும் கடந்த இரு தசாப்தங்களாக இது ஒரு பயனுள்ள,பலம் வாய்ந்த சர்வதேச அமைப்பாக இயங்க முடியாமற் போயிற்று என்பது உணர்மையே
கடந்த இரண்டரை வருடங்களாக ஐ.நா உலக அரங்கில் புத்துயிர் பெற்று, மீண்டும் முக்கியத்துவம் அடைந்து வருவதாக அதன் செயலாளர் நாயகமான ஜாவிர் பெரஸ் டி கொயேலர் கூறியுள்ளார். ஐ.நாவின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள நியூ யோர்க் நகரைத் தேடி வருவோரின் எண்ணிக்கை இப்போது திடீரென இரண்டு மடங்காக அதிகரித்து விட்டதாம். நமீபியாவின் சுதந்திரம், இதன் பெறுபேருக அங்கோலாவிலிருந்து கியூபா வெளியேற்றம், ஈரான் ஈராக் யுத்த நிறுத்தம், நிக்கராகுவாவில்
S6

|ஐக்கிய நாடுகள் அமைப்பு 14.12.1990
வெற்றிகரமான தேர்தல் மேற்பார்வை, கம்போடியாவில் சமாதான முயற்சி போன்றவற்றில் ஐ.நா ஈட்டிய அண்மைக்கால வெற்றிகள் அதற்கு நற்பெயரைத் தேடிக் கொடுத்துள்ளன. மேலாக சோவியத் தலைவர் கொர்பச் சேவின் சீர்திருத்தக் கொள்கைகள் கெடுபிடி யுத்தப் போட்டியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்ததஞலும் ஐ.நா ஊடாக உலக சமாதானத்துக்கான புதியதொரு நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியுள்ளது. இவற்றுடன் கடந்த ஆகஸ்ட் 2 இல் ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றிய போது அமெரிக்கா தன் தோழமை நாடுகளுடன் துருப்புக்களை வளைகுடாவில் கொண்டு வந்து குவித்து, ஈராக்கை வெளியேற்றுவதற்கு என ஒரு சர்வதேச அங்கீகாரம் அவசரமாகத் தேவைப்பட்டது. றேகளுல் உதாசீனம் செய்யப்பட்டு வந்த ஐ.நாவை ஜோர்ஜ் புஷ் உதவிக்கு நாடிஞர். பல்தேசியப் படையினை வளைகுடாவில் நிறுத்துவதற்கு ஐ.நாவின் அங்கீகாரத்தைப் பெற்றதுடன், குவெய்த்தை விட்டு ஈராக்கின் நிபந்தனையற்ற வெளியேற்றத்துக்கும், அதுவரைக்கும் ஈராக் மீதான பொருளாதாரத் தடைகளுக்கும் ஐ.நா ஊடாகத் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டார். சுமார் பதிஞெரு ஐ.நா தீர்மானங்களில் மூன்று தவிர ஏனையவை யாவும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 91 ஜனவரி 15க்கு முன் ஈராக் குவைத்தை விட்டு வெளியேற வேண்டும; அது தவறின் அவசியம் எனக் கருதப்படும் எந்த வழியும் அதற்கெனப் பயன்படுத்தப்படலாம் என்ற கடைசித் தீர்மானமும் சோவியத் யூனியனின் ஆதரவுடன், சீனு வாக்களிப்பில் கலந்து கொள்ளாதிருக்க, கியூபாவும் யேமெனும் மட்டுமே எதிர்த்து வாக்களிக்க, பாதுகாப்பு கவுன்சிலில் 15க்கு 12 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இவற்றை வெற்றிகரமாகச் செய்து முடிக்க எண்ணிய புஷ், ஐ.நாவை மீண்டும் வெறும் கையோடு அணுகக் கூச்சப்பட்டதால், ஐநாவுக்கு கொடுக்க வேண்டிய நிதியுதவியைக் கொடுக்கப் போவதாக வாக்களித்துள்ளார்.
ஐ.நாவில் பெரும்பான்மையினராக உள்ள, கூட்டுச் சேராக் கொள்கையுடைய மூன்ரும் உலக நாடுகள் கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு, சற்றுத் தளர்ந்து காணப்படுவதும் அமெரிக்காவின் மனமாற்றத்துக்கு ஒரு காரணம் எனலாம். மத்திய கிழக்கின் மாருத புண்ணுகக் கிடந்து வருத்திக் கொண்டிருக்கும் அரபு இஸ்ரேல் பிரச்சண், தென்னுயிரிக்க நிறப்பிரச்சனை, இன்றைய வளைகுடாப் பிரச்சனை போன்ற முக்கிய பதட்ட நிலைகளை ஐ.நா மூலம் தணித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எல்லா நாடுகளிடமும் இப்போது தோன்றியுள்ளது. ஐ.நாவின் கையாலாகத் தன்மையால், விரைவில் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட "புதிய பூகோள அமைப்பு” ஒன்றின் தேவை தற்போது குறைந்து போயுள்ளது. நீண்ட காலமாக ஐ.நாவில் அரசியல் சித்தாந்த அடிப்படையில், வலது இடதுதீவிரவாதிகள் தான் ஆதிக்கம் செலுத்திவந்துள்ளனர். கூட்டுச் சேராக் கொள்கையைப் பின்பற்றிய மிதவாதிகளும் தமது சொல்லுக்கு அங்கு செல்வாக்கு உணர்டென்று இப்போது கண்டு கொண்டனர். இவர்களது அமெரிக்க எதிர்ப்புத் தணிய இதுவும்
|97।

Page 53
|ஐக்கிய நாடுகள் அமைப்பு 14.12.1990
ஒரு காரணம். இதன் விளைவாகவும் அமெரிக்கா தனது ஐ.நா தொடர்பான அலட்சியப் போக் கினை விடுத்து, அதனர் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பரித்துள்ளது. அமெரிக்காவின் புகழ் பெற்ற ராஜதந்திரிகளுள் ஒருவரான தோமஸ் பிக்கரிங் என்பவரைத் தற்போது ஐ.நாவுக்கான பிரதிநிதியாக அமெரிக்கா நியமித்துள்ளமை இதற்கு மேலும் ஓர் உதாரணமாகும். இன்றைய வளைகுடா நெருக்கடியில் ஐ.நா கொடியின் கீழ் மேற்கு அணியின் பல் தேசியப் படைகள் திரண்டு நிற்காத போதிலும், இந்நெருக்கடியில் அமெரிக்காவின் தலையீட்டுக்குச் சட்டபூர்வமான ஒரு கூட்டு அங்கீகாரத்தை, ஈராக்கைக் கண்டிக்கும் எல்லாத் தீர்மானங்கள் மூலமாகவும் சர்வதேச சமூகம் ஐநா ஊடாக வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே வளைகுடா நெருக்கடியும் அமெரிக்க ஐ. நா உறவை ஒரு அவசியத்தின் அடிப்படையில் வலுப்படுத்தி விட்டது. இதஞல் ஐநா அமைப்பு மீண்டும் புத்துயிர் பெற்று விட்டது என்பதுதான் உண்மை.
ஐக்கிய நாடுகள் அமைப்பு உலகநாடுகளின் பாராளுமன்றம் போன்றது. இங்கு ஒவ்வொரு நாட்டினையும் ஒவ்வொரு உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும் நிதியுதவி, உலக அரங்கிலுள்ள செல்வாக்கு என்பவற்றின் அடிப்படையில் வலிய நாடுகளின் ஆதிக்கம் இந்த அமைப்பில் அதிகளவில் கோலோச்சி வந்துள்ளது. அரசியற் சித்தாந்தம், நாடு, எல்லை, நிறம், மதம், இனம், மொழி, கலை, கலாசாரம், பிராந்தியம், பிரதேசம் இனினும் எனர் னெனர் னவோ ஏராளமான காரணிகளினர் அடிப்படையில், பல்வேறுபட்ட கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டுள்ள நாடுகள் யாவும் சந்திக்கும் ஒரே ஒரு பொதுச்சபை இந்த ஐக்கிய நாடுகள் அமைப்பு. இது எப்போதும் முரண்பாடுகள் மோதிக் கொள்ளும் ஒரு யுத்தகளமாகத் தானிருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. சர்வதேச சமாதானத்தையே பிரதான குறிக்கோளாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த உன்னத அமைப்பு, முரண்பாடுகளின் இடையருத மோதல்களின் விளைவாகச் செயல் இழந்து, உயிரற்ற ஜடமாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மனித சமுதாயத்திற்கு இது ஆற்றிய பணிகளோ அளப்பரியன. இன்று மனித கவசங்களாக ஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்கு நாடுகளைச் சேர்ந்த பணயக் கைதிகளைத் தாம் விரைவில் விடுவிக்கப் போவதாக ஜனதிபதி சதாம் அறிவித்துள்ளார். இதே தினம் அரபு இஸ்ரேல் தொடர்பான மத்திய கிழக்குப் பிரச்சனையையிட்டு ஒரு சமாதான மாநாட்டை ஐ.நா ஊடாகக் கூட்டுவது பற்றி வெள்ளை மாளிகை முதன் முதலாகச் சாதகமான சமிக்ஞை காட்டியுள்ளது. இவை கூட ஐ.நாவின் அண்மைக்கால முயற்சிகளின் வெற்றி என்றே கூறவேண்டும். உறங்குநிலையிலிருந்து வந்த ஐ.நா இன்று மீள உயிர்பெற்று வந்து கொண்டிருக்கின்றது. மனுக்குலம் பயன் பெற்றுயர இதன் மகத்தான சேவை இந்த மண்ணில் என்றும் தொடர வேண்டும்.
98

பணுமா 21.12.1990
அமெரிக்க ஜனதிபதியின் காலடியில் புதைத்த கணிணிவெடி!
1989 டிசெம்பர் 20. உங்களில் யாருக்காவது இந்த நாள் ஞாபகத்தில் உண்டா? "நீதி நோக்கு நடவடிக்கை” (Operation Just Cause) என்ற நாமகவசத்துடன் அமெரிக்கா, பணுமாவை ஊடுருவிய நாளல்லவா அது ஜனநாயக நங்கையின் கால் விலங்கை உடைத் தெறிந்து, சர்வாதிகாரத்துக் குக் கைவிலங்கிட்டுக் கைது செய்து, அங்கு வாழ்ந்த அமெரிக்க உயிர்களுக்கு அபயமளிக்கவென, மழைக்காலப் பின்னிராக் கள்ளன் போல, அமெரிக்கா பளுமாவுக்குட் புகுந்து ஊழித்தாண்டவம் ஆடி முடித்த நாள். பளுமாவின் "அதிஉயர்ந்த” தலைவனது அமெரிக்காவின் அதி உயர்ந்த சிறைச்சாலை வாசத்துக்கு அடியிடப்பட்ட நாள். "பலவான்” மானுவேல் நொறியேகாவை அமெரிக்கா சிறைப்பிடித்து, விலங்கு மாட்டி, மயாமியில் உள்ள மிகப்பெரிய பந்தோபஸ்துகளுடன் கூடிய சிறைச்சாலையில்,#41586

Page 54
பணுமா 21.12.1990
இலக்கக் கைதியாக உள்ளே தள்ளி, குயிலேர்மோ என்டாராவைப் பஞ மாவின் ஜனதிபதியாக அங்குள்ள அமெரிக்க படைத்தளத்திலேயே பதவிப்பிரமாணம் செய்ய வைத்து, ஆட்சியை ஒப்படைத்து ஒரு வருடம் ஓடி மறைந்து விட்டது.
பணுமாவைச் சூழ்ந்திருந்த மையிருள் விலகியிருக்க வேண்டுமே என்ருல், அதுதான் இல்லை. இப்போது அங்கு அரசபடைகளும் அமெரிக்கத் துருப்புகளும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் காணப்படாத இட மேயில்லை. ஏனென்று கேளாமல் எந்நேரமும் அந்தத் துப்பாக்கிகள் தம் மீது வெறி தீர்த்துப் புகை கக்கி, வேகமடங்கலாம் என்ற பீதியுடன் தான் மக்கள் வீதிகளில் நடமாடுகின்றனர். அமெரிக்க ஆக்கிரமிப்பினுல், வீடு வாசல்களை இழந்த பல்லாயிரம் மக்கள் இன்னமும் அகதிகளாகப் பொது இடங்களில் வாழ்கின்றனர். வீதியோரங்களை வீடுகளாக்கிப் படுத்து எழும்புகின்றனர். அண்ருட வாழ்க்கைத் தேவைகளுக்காக மக்கள் அங்காடி நாய்களாக அலைந்து திரிகின்றனர். வேலையில்லாமை நாளுக்கு நாள் விஷம் போல ஏறிக் கொணர்டு செல்கிறது. கலவரங்கள், வன்செயல்கள், குற்றச் செயல்கள் வளர்ந்து செல்கின்றன. பொதுச் சொத்துக்களைத் தீ இரையாக்குகின்றது. வீதிகள் தடுத்து அடைக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தினமும் அரங்கேறுகின்றன. சென்ற வாரம் சுமார் நாற்பதாயிரம் மக்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்ற சமயம் பார்த்து,ஓய்வு பெற்ற முன்னுள் இராணுவ கேர்னல் எட்வாடோ ஹெரேரா என்பவர் ஓர் அரசு கவிழ்ப்புச் சதி முயற்சியை மேற்கொண்டு, அமெரிக்கப் படைகளிடம் வகையாக அகப்பட்டு, ஈற்றில் முயற்சி நசுக்கி முறியடிக்கப்பட்டது. பளுமாவின் அரச படைகள் இதனைக் கை கட்டி ஒரமாக ஒதுங்கி நின்று பார்த்துக் கொணர்டிருந்தன! ஜஞதிபதி எணர் டாராவுக்கு விசுவாசமாக இருப்பது யார்? அவரது அரச படைகளா? அல்லது அமெரிக்கப் படைகளா? எதிரிகளைத் தேடி அழித்தல் எனும் பெயரில் அங்குநிகழ்ந்துவரும் கொடுமைகளுக்குக் கணக்கில்லையா? ஒரு வருட காலத்தில் பளுமாவில், ஜனநாயக நங்கைக்குக் கிடைத்த சீர்சிறப்புகள் என்ன? இந்த மானபங்கங்களை விட, காலில் விலங்கு மாட்டப்பட்ட மறியல் பரவாயில்லை என எண்ணி அவள் மனம் வெதும்ப மாட்டாளோ!
மத்திய அமெரிக்கப் பிரதேசத்தில் கொஸ்ராறிக்காவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையே அமைந்திருக்கும் சிறிய நாடு தான், பளுமா. 1903 இல் கொலம்பியாவிடமிருந்து பிரிந்து சுதந்திரம் பெற்ற இந்நாட்டில் ஸ்பானிஷ் மொழியே தேசிய மொழி. தேசிய மதம் ருே மணி கத் தோலிக்கம் . இரணர் டு மில்லியன் சனத்தொகையுள்ள இந்நாட்டை, சர்வ அதிகாரம் மிக்க ஒரு ஜஞதிபதியும், 52 பிரதியாளர்கள் அடங்கிய ஒரு சபையும் ஆளும் அரச அங்கங்களாகும். பசுபிக் அத்லாந்திக் சமுத்திரங்களை
1 OO

பணுமா 21.12.1990)
இணைத்து நிற்கும் இந்த நாட்டின் தேசிய சொத்தும், சோகமுமாகி விட்ட பளுமாக் கால்வாய், அமெரிக்க பளுமா ஒப்பந்தப்படி 1903 இல் நிர்மானிக்கப்பட்டது. ஐம்பது மைல் நீளமும் 300-1000 அடி அகலமும், 41 அடி ஆகக்குறைந்த ஆழமும் கொண்ட பளுமாக் கால்வாயை, 387 மில்லியன் டொலர் செலவு செய்து அமைத்த அமெரிக்கா, தனது கட்டுப்பாட்டுக் குள் இன்னமும் வைத்திருக்கின்றது. 1979 ஒப்பந்தப்படி, 1999 இன் முடிவில் இது பளுமாவுக்கே சொந்தம். இதற்கு இன்னமும் 9 வருடம் தான் இருக்கின்றதே என்ற அமெரிக்க ஏக்கம், இந்த நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவித்த காரணிகளுள் முக்கியமானது.
24 ஆயிரம் துருப்புகளுடன் நிகழ்த்திய இந்தப் பஞமாத் தாக்குதல் தான், வியட்னும் யுத்தத்தின் பின், அமெரிக்கா மேற்கொணர்ட மிகப்பெரிய இராணுவத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதல் நடந்தேறி சில நாட்களின் பின், வத்திக்கான் தூதரகத்தில் பதுங்கியிருந்த நொறியேகா, அமெரிக்க துருப்புகளிடம் சரணடைந்தார். இந்த இடைப்பட்ட காலத்துள் நொறியேகாவுக்கு விசுவாசமான அரசபடையினர் அமெரிக்க துருப்புக்களை எதிர்த்துப் போரிட்டனர். இடையில் அகப்பட்ட மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். வியாபார நிலையங்கள் யாவும் சூறையாடப்பட்டன. "புஷ்ஷுக்கு விவா” என்ற ஆரவாரத்துடன் காடையர்களுடன் பொது மக்களும் பொருட்களை அள்ளிச் சென்றனர். அமெரிக்கா நிகழ்த்திய இத்திடீர்த் தாக்குதலின் விளைவாக 314 பஞமா படையினர், 202பொதுமக்கள், 24 அமெரிக்க துருப்புக்கள் உயிர் இழந்ததாகவும், 200அமெரிக்கப் படைவீரர்கள் காயமடைந்ததாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது. இத்தாக்குதலை மேற்கொண்டதற்காக அமெரிக்கா பின்வரும் காரணங்களைக் கூறியது. 1நொறியே காவின் தலைமையில், பளுமாவில் வளர்ந்து வரும் அமெரிக்க எதிர்ப்பை முறியடித்தல் 2.நொறியேகாவை போதைவஸ்துக் குற்றச்சாட்டுகள் காரணமாகக் கைது செய்து, அமெரிக்காவில் விசாரணைக்குட்படுத்தல் 3.1989 மே மாதம் நடந்த தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்றிருந்தும், நொறியேகாவினுல் நிராகரிக்கப்பட்ட எண்டாராவின் அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தி, ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் 4.பஞமாவில் உள்ள அமெரிக்கரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல். மேற்கு நாடுகள் இக்காரணங்களுக்கு வழக்கம் போல "ஆமா" போட்டன. சோவியத் ரஷ்யா, கிழக்கு மேற்கு நல்லுறவைச் சீர்குலைக்க விரும்பாது, சர்வதேச சட்டங்களை அமெரிக்கா மீறியதாக மட்டும் கூறிக் கொண்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் சம்பிரதாயபூர்வமான ஒரு கண்டனத்துடன் நின்று கொண்டன. 32 உறுப்பினர் அடங்கிய "அமெரிக்க நாடுகள் அமைப்பு வருத்தம் தெரிவித்தது; கண்ைடிக்க விரும்பவில்லை. பேரு மட்டுமே அமெரிக்காவிலிருந்த தனது தூதுவரைத் திருப்பி அழைத்து ஆட்சேபம் தெரிவித்தது. ஏனைய
1O1

Page 55
பளுமா 21.12.1990
உலக நாடுகளில் சீனு தான் தனது அதிர்ச்சியையும், கடுமையான ஆட்சேபத்தையும் அமெரிக்காவுக்குத் தெரிவித்தது. இவை யாவும் நடந்து முடிந்து ஒரு வருடமாகி, இப்போது தான் பளுமா மீதான அமெரிக்கத் தாக்குதல் பற்றி ஏராளம் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. அமெரிக்கத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பொதுமக்களின் உண்மையான தொகை என்ன? பஞமாப் படைவீரர்கள் எத்தனைபேர் உயிரிழந்தனர்? அந்தச் சடலங்களுக்கு என்ன நடந்தது? தாக்குதலின்போது எத்தனை அமெரிக்க வீரர்கள் மடிந்தனர்? நொறியேகாவைக் கைப்பற்றவும், அமெரிக்கப் பிரஜைகளைக் காப்பாற்றவும் தான் இந்த அத்துமீறல் அரங்கேற்றப்பட்டதா? ஒரு நொறியேகாவுக்காக இத்தனை உயிர் இழப்புகளும், அழிவுகளும், பொருளாதார நிர்முலங்களும், மக்கள் இன்னல்களும் அவசியம் தானு? ஒரு நொறியே காவைச் சிறைப்பிடிக்க 24 ஆயிரம் துருப்புக்கள் அவசியம் தானு?ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டது போல இவ்வாண்டின் இறுதியில் அமெரிக்க இராணுவம் மீண்டும் தளத்துக்கே திரும்பி விடுமா? விடைபெறப்படாத வெறும் விஞக்களாகவே இன்னமும் இவை இருந்து வருகின்றன.
வியட்னும், கம்போடியா, டொமினியன் குடியரசு, கிறெனடா, எல்சல்வடோர், ஆப்கானிஸ்தான்,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்கா ஆடிய கூத்துக்களுக்குக் கம்யூனிசம் ஒரு பிரதான காரணம். லிபியாவை அமெரிக்கா தாக்கியதற்கும் "பயங்கரவாதம்” பக்க துணையாக இருந்த போதும், லிபியாவின் கம்யூனிச நேயம் ஒரு துணைக்காரணம். கம்யூனிச அழிப்பு என்ற கொள்கையிலும் சீனுவுடஞன அமெரிக்க அந்நியோன்னிய உறவு, நியாயமான சந்தேகத்தைக் கிளறி விடுகின்றது. கம்யூனிச விரோதியான அமெரிக்கா, அதிதீவிர கம்யூனிஸ்ட் நாடான சீனுவுடன் எப்படி நெருங்கிய சகவாசத்தை வைத்துக் கொண்டு, கம்யூனிஸ அழிப்பை ஒரு கொள்கையாக மேற்கொள்ள முடியும்? சென்ற வருடம் மாணவர் எழுச்சியை சீன ஆயுத பலத்தால் நசுக்கி நெரித்தபோது அமெரிக்கா என்ன செய்தது? வெறுமனே சில கணி துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொணர்டு, பின்னர் இரகசியமாகப் பின் கதவால் சென்று மீண்டும் சிநேகிதத்தை உறுதிப்படுத்திக் கொணர் டமை, கம்யூனிஸ எதிர்ப்பினர் யதார்தத்தைத் தெளிவுறத் தொட்டுக் காட்டுகின்றதல்லவா? பெயரளவிலாவது கம்யூனிசத்தைக் காரணமாகக் காட்டிக் கொள்ளாமல் கடந்த நாற்பது வருடங்களில் அமெரிக்கா நிகழ்த்திய முதலாவது ஆக்கிரமிப்புத் தான் இந்த பளுமா தாக்குதல். கெடுபிடி யுத்த காலத்தின் பின் ஞன அமெரிக்கா, வெளிநாட்டுக் கொள்கையில், "உலக ஜனநாயகத்தின் ஏக இரட்ஷகன்' என்ற நிலை மாறி, பூகோள பொலிஸ்காரன்" ஆகி விட்டமைக்கான நல்ல உதாரணமல்லவா இது?
102

பளுமா 21.12.1990
அமெரிக்கா நொறியோகாவின் கையைக் கட்டி விலங்கிட்டதற்கும், பளுமாவை அடித்து நொண்டியாக்கியதற்கும் வெளியிற் சொல்லப்படாத பல காரணங்கள் பின்னணியில் மறைந்து கிடக்கின்றன. வத்திக்கான் தூதுவரகத்தில் இருந்து அமெரிக்கப் படையிடம் தன்னை ஒப்படைக்க வந்தபோது, ஒரு கையில் பைபிளும், மறுகையில் ரூத் பிரஷ"ம் மட்டும் கொண்டு வந்த நொறியேகா, ஒரு நாட்டின் தலைவர். அவரை சர்வதேச சட்டங்களுக்கு முரணுன முறையில் அமெரிக்கா கைது செய்து, சிறை வைத்திருக்கின்றது. அவரை ஆட்சியிலிருந்து வீழ்த்தி, விலங்கிட்டு, விசாரணைக்குட்படுத்த, போதைவஸ்து மட்டும் தான் காரணமல்ல. ஒரு நாட்டின் தலைவஞய் இருக்கத் தகுதியற்ற பல தன்மைகள் கொண்ட நொறியேகா என்ற பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்த அமெரிக்கா, இன்று அதன் பல்லைக் கழற்றிக் காவலில் வைத்திருப்பதற்கான உண்மைக் காரணம் என்ன? 1960 தொடக்கம் 87 வரை சி.ஐ.ஏயின் உளவாளியாக இருந்து வந்த நொறியேகா நிக்ஸன், போர்ட், காட்டர், றேகன் ஆட்சிக்காலங்களில் $110-180 ஆயிரம் வரை வருடாந்த சம்பளமாகப் பெற்று வந்தார். 1976 இல் சி.ஐ.ஏ யின் முகாமையாளராகவும், றேகன் காலத்தில் உப ஜனதிபதியாகவும் கடமையாற்றிய தற்போதைய ஜனதிபதி ஜோர்ஜ் புஷ், நொறியேகாவைப் பல தடவை சந்தித்து, விருந்துண்ைடு, பல இரகசிய தொடர்புகளை வைத்திருந்தவர். கியூபா, நிக்கராகுவா, எல் சல்வடோர், டொமினியன் குடியரசு, கிறெனடா உட்பட ஈரானி கொன் ட்ரா ஆயுதப் பிரச்சனையிலும் நொறியே கா சம்பந்தப்பட்டுள்ளார். பஞமாவின் உளவுத் துறைத் தலைமைப்பதவியில் இருந்து கொண்டு, 1983 இல் ஜஞதிபதி பதவியைப் பிடித்துக் கொண்ட நொறியேகா,புஷ் அமெரிக்காவில் ஜஞதிபதி ஆவதற்குத் தேர்தல் பிரசாரத்துக்கென நிதியுதவியை மறைமுகமாக வழங்கியதாகவும் ஒரு பேச்சு உண்டு. எனவே ஜனதிபதி புஷ்ஷின் முகத்தில் வாரி வீசுவதற்கென, சேறு சேகரித்து வைத்துள்ள நொறியே கா, ஜோர்ஜ் புஷ்ஷின் காலடியில் புதைக்கப்பட்ட ஒரு கண்ணிவெடி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசியல் வாழ்வுக்கு ஒரு சங்கடமாகவும், சங்கையீனமுமாகி விட்ட இவரிடம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், கீர்த்திக்கும் பங்கம் விளைவிக்கும் விபரங்கள் பல இருக்கலாம். இந்த அச்சம் காரணமாக அவரை அகற்றவென அமெரிக்கா பஞமாவில் பல பிரசாரங்களைச் செய்தது; பொருளாதாரத் தடைகளை விதித்தது; 1989 அக்டோபரில் ஒரு அரசியல் சதிமுயற்சியையும் முயன்று பார்த்தது. ஒன்றுமே பலனளிக்காமல் போனதால்,அமெரிக்க படைவீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டது. அத்துடன் 1999 முடிவில் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி, பளுமாக் கால் வாயைப் பளுமாவுக்கே திருப்பிக் கொடுக்க அமெரிக்காவுக்குச் சம்மதம்
103

Page 56
Lon 21.12.1990
இல்லை. மேலும் பிராந்திய நலன் கருதி பளுமாவில் நிறுத்தி வைத்துள்ள தனது படைகளை அங்கிருந்து அகற்றவும் அமெரிக் காவுக்கு விருப்பமில்லை. இதனுல் பளுமாவின் அரசபடையினை அடித்துச் சிதைத் துப் பலவீனப்படுத்தி, பொருளாதாரத்தைச் சீர்குலைத்து,நாட்டில் பதட்டத்தைத் துண்டி, அங்கு தனக்குச் சாதகமான அரசை நிறுவி, கால்வாயின் உரிமையை நீடிக்கவும், தன் படைகளைத் தொடர்ந்து அங்கு வைத்திருக்கவும், நொறியே கா இரகசியங்களை வெளியே கொட்டி விடாமல் வாய்ப்பூட்டுப் போடவும் தான் அமெரிக்கா பளுமாவில் இந்தக் கூத்தை ஆடி முடித்தது.
"டிசம்பர் 20 இல் வீழ்ந்த குடும்பங்களின் சங்கம்” என்ற அமைப்பை பளுமாவில் தோற்றுவித்த இசபெல் ருெட்றிக்கஸ், அமெரிக்கத் தாக்குதலினர் போது நானர் காயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும்,அமெரிக்க துருப்புக்கள் சடலங்களைக் குவித்து எரித்ததாலும், கடலுக்குள் வீசியதாலும், பாரிய புதைகுழிகளில் புதைத்ததாலும் சரியான எண்ணிக்கையை அறிவது கடினம் என்கிருர், நாடகாசிரியரும், சமூகவியலாளருமான ராவுல் லீஸ் என்பவர் இந்த விபரங்கள் தங்களுக்குத் தேவை எனவும், இவை பற்றி சர்வதேச சமூகம் நீதி விசாரிக்க வேண்டும் என்றும் கோருகின்ருர், பல அமெரிக்க மனிதஉரிமை நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும், முன்னுள் ஜனநாயகக் கட்சியின் ஜனதிபதி வேட்பாளரான வண.ஜெஸி ஜாக்சனும் அமெரிக்க அரசு தந்த புள்ளி விபரங்களை மறுக்கின்றனர். பளுமா மக்களை இப்போதும் தொடர்ந்து அமெரிக்க துருப்புக்கள் துன்புறுத்திக் கொலையும் செய்வதாகக் கத்தோலிக்க மதகுரு லிஞ்ச் கூறுகின்றர். பஞமா அரசோ வாய் முடி நிற்கின்றது. சட்ட நுணுக்கச் சிக்கல்களைக் காரணம் காட்டி, நொறியே காவினர் விசாரணைகளும் ஆரம்பிக்கப்படாமல் பின் போடப்பட்டு வருகின்றன. இவ்வாறே இவ் விசாரணை ஒரு போதும் நடக்கப் போவதில்லை என்ற அபிப்பிராயம் கூட பளுமாவில் உண்டு. முடிந்து போன நத்தார் பண்டிகை நாட்களில் நடந்து போன இத்துன்பங்களை முழு உலகமும் அறிந்திருந்தும், வாய் முடி மெளனித்திருக்கக் காரணம் என்னவா இருக்குமோ? பஞமா தாக்குதலை வெற்றிகரமாகச் சாதித்து முடித்த, கறுப்பு இனத்தவருள் முதலாவது அமெரிக்க JointChiefOfStaரிஜெனரல் கொலின் பவல் கூறிய அந்த வாக்கியம் தான் காரணமோ?
"சோவியத் யூனியன் என்ன தான் செய்தாலும் எமக்கு அக்கறை இல்லை; நாங்கள். எமது வெளிவாசற் கதவில் இவ்வாறு ஒரு பலகையை எழுதித் தொங்க விடுவோம், "ஒரு வல்லரசு இங்கே வாழ்கிறது!"
104

|சோவியத் யூனியன் 28.12.1990
மீண்டும்
ஒரு ஜோசப் ஸ்டாலின் வேண்டும்?
சரிர்திருத்தவாதிகள் வெளியேறி விட்டனர். சர்வாதிகாரம் மேலோங்கி விட்டது. கடினமான கொள்கைவாதிகளது ஆதிக்கத்தை ஆட்சேபித்து என் பதவியை ராஜிஞமா செய்கிறேன்" என்று இம்மாதம் 20ம் திகதி, சோவியத் வெளிவிவகார அமைச்சர் எட்வார்ட் ஷெவர்ட்நாஸ் சோவியத் பாராளுமன்றத்தில் திடீரென துரக்கிப் போட்ட வெடிகுண்டு, 2250 அங்கத்தவர் அடங்கிய சுப்ரீம் சோவியத்தை மட்டுமல்ல, சோவியத் யூனியனையும், மேற்கு நாடுகளையும், ஏன் முழு உலகையுமே ஒரு கணம் அதிரவைத்தது. "அது எவ்விதமான சர்வாதிகாரம்? யார் அந்த சர்வாதிகாரி? என்பவைதான் இன்னமும் தெரியாதனவே தவிர, இந்த நாட்டில் சர்வாதிகாரம் கால் பதித்துவிடப் GLufTQué51 சந்தேகத்துக்கிடமில்லாத உணர்மை" என முழங்கி, அவர் தன் ராஜிஞமாவைச் சமர்ப்பித்த போது, சோவியத் யூனியனின் இராணுவ உறுப்பினர்களும், உளவுத்துறையான கே.ஜி.பி உறுப்பினர்களும் பலத்த ஆரவாரத்துடன் கரகோஷம் செய்து
105

Page 57
(சோவியத் யூனியன் 28.12.1990
வரவேற்றனர். ஷெவார்ட்நாஸ்வின் நீண்ட கால நண்பரும், 'பெரஸ் ரோய்க்கா, கிளாஸ் நொஸ்ட்" ஆகிய சீர்திருத்தக் கொள்கைகளின் சூத்திரதாரியும், ஜஞதிபதியுமான மிகையில் கொர்பச்சேவ் அவரது ராஜினுமாவை உடனடியாகக் கண்டித்தார். "ஓர் இக்கட்டான சந்தர்ப்பத்தில் இவ்வாருன இக்கட்டான காரியத்தைச் செய்ய முடிவெடுத்ததை மன்னிக்க முடியாது ” எனக் கூறிய கொர்பச் சேவ், ஷெவார்ட்நாஸவின் நடவடிக்கையால் எவரும் திகிலடைய வேண்டியதில்லை என்றும், பெரஸ் ரோய்க்கா, கிளாஸ்நொஸ்ட் என்பவற்றின் கதை முடிந்து விட்டதாகக் கருத வேண்டியதில்லை என்றும், சோவியத் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என எண்ண வேண்டியதில்லை என்றும் உறுதியளித்தார். பல தசாப்தங்கள் காணுத வெளிநாட்டுக் கொள்கை மூலம் சோவியத் யூனியனது மட்டுமல்ல சர்வதேச அரசியல் வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்து விட்ட ஷெவார்ட்நாஸவின் இராஜிஞமா, சோவியத் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அவர் பதவி விலகுவாரேயானல், "கெட்ட போரிடும் மாந்தரை வேரோடு சாய்த்து, புதியதோர் உலகம்" செய்யக் காத்திருந்த ஐஞதிபதி கொர்பச் சேவின் கனவுகள் கைகூடாமற் போய் விடுமோ என்ற ஏக்கம் உலகெங்கும் ஊமைக்காயம் போல உறுத்திக் கொண்டிருக்கிறது.
1917 இல் மாவீரர் லெனின் தலைமையில் நடந்தேறிய போல்ஷ்விக் புரட்சியின் விளைவாகத் தோன்றிய முதலாவது சோஷலிஸ் நாடு, சோவியத் யூனியன். நூற்றுக்கு மேற்பட்ட இனத்தவர்களையும் மொழிகளையும் கொண்ட 15 குடியரசுகளின் சமஷ்டிக் கூட்டமைப்புத்தான் இந்த சோவியத் யூனியன். உலகின் மிகப் பெரிய நாடான சோவியத் யூனியனின் 15 குடியரசுகளிலும் ரஷ்யாவே பெரிய குடியரசு. இந்த ரஷ்ய மாநிலத்தில் உள்ள மொஸ்கோ, சோவியத்தின் தலைநகரம் ஆகும். தாடிக் கிழவன் கார்ல்மார்க்ஸ் தந்த சமதர்ம தத்துவத்தை சோவியத் யூனியனில் நடைமுறைப்படுத்தியவர், லெனின். இவர் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் சோசஷலிஸ் சமுதாயத்தைத் தோற்றுவித்து அதன் வழியே கம்யூனிச சமுதாயத்திற்கு வாய்க்கால் வெட்டியவர். "எல்லார்க்கும் எல்லாமென்றிருப்பதான இடம் நோக்கி இந்த வையம் நடக்க வேண்டும் என்ற இலட்சியத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச அரசு சோவியத் யூனியஞலேயே முதன் முதலாக நிறுவப்பட்டது. லெனினின் மறைவுக்குப் பின், நாடு ஸ்டாலினின் கைவசப்பட்டிருந்தபோது, இரணர்டாம் உலக மகாயுத்தம் வெடித்தது. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததும் உலக வல்லரசுகள் இரு முகாம்களாகச் சித்தாந்த அடிப்படையில் பிளவுபட்டன. சோவியத் யூனியன் தலைமையிலான கம்யூனிச நாடுகள் ஒரு அணியிலும்,அமெரிக்காவின் தலைமையிலான முதலாளித்துவ நாடுகள் மறு அணியிலும் மல்லுக்கட்டி நின்றன. சோவியத்
106

சோவியத் யூனியன் 28.12.1990
யூனியனில் சோசலிசத்தை ஒரு மதமாக்கி, அதனை அண்டை நாடுகளுக்குப் பரப்பிய ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர், நாடு குருக்ஷேவின் கையைச் சென்றடைந்தது. அவரது ஆட்சிக்காலத்தின் போது மாவோவின் தலைமையில் சீனுவில் மலர்ந்திருந்த கம்யூனிச அரசு சோவியத் யூனியனுடன் எல்லை, சித்தாந்தப் பிரச்சனைகளின் காரணமாக முரண்பட்டுக் கொண்டது. மாக்ஸிசத்தை மாசுபடுத்திய 'திரிபுவாதிகள்" என சோவியத் யூனியனைக் குற்றம் சாட்டி, அதிதீவிர கம்யூனிஸ்ட் நாடாக மாவோயிசத்தைப் பின்பற்றிச் சென்ற சீனு, தன் சகோதர கம்யூனிச நாடான சோவியத் யூனியனின் எதிரியானது.குருக்ஷேவின் பின்னர் சுமார் 12 ஆண்டுகளாக சோவியத் யூனியனை தன்னதிக்கத்தில் வைத்திருந்த பிரெஷ்னேவ், கெடுபிடி யுத்த நெருக்கடிகளை அதிகரித்து, உலகப் பிரிவினையைப் பெரிதுபடுத்தினர். சோவியத் யூனியனின் ஆயுத பலத்தையும் யுத்த தந்திரோபாயங்களையும் வலுப்படுத்தி, வளர்த்தெடுத்துக் கொணர்ட பிரெஷ்னேவின் ஆட்சிக்காலத்தில் அங்கு ஊழல், உறவினர் சலுகை, நிர்வாகச் சீர்கேடு, உற்பத்தி வீழ்ச்சி, பொருளாதார மந்த நிலை என்பன தோன்றி இரும்புத் திரைக்குள் இரகசியமாக வளரலாயின. பிரெஷ்னேவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பலருள், 1985 மார்ச் 11 இல் தலைமைக்கு வந்த மிகையில் கொர்பச்சேவ் தான் சோவியத் யூனியனின் அண்மைக்காலத் தலைவிதியை மாற்றி அமைத்த முக்கிய தலைவராவர்.
உழைக்கும் வர்க்கத்தினர் உலகை ஆள்வதில் தமது ஆதிக்கத்தைச் செலுத்த வழிகூறிய அந்த மார்க்சிச தத்துவமானது "வறுமையைப் பங்கு போடக் கூறும் ஒரு வரட்டு வேதாந்தம்" என மாற்றுக்கருத்துடையோர் இழிவு செய்யும் அளவுக்கு,மார்க்சிசத்தின் பாதுகாவலர் எனக் கூறிக் கொண்டு, பல கம்யூனிச நாடுகளிலும் பதவிக்கு வந்தவர்களது மமதையாலும் அதிகார வெறியாலும் அது தன் மகத்துவத்தை இழந்தது. உலகப் பெருவல்லரசாக இருந்து வந்த சோவியத் யூனியன் உணவுக்குக் கையேந்திப் பிச்சை கேட்டு நிற்கும் இழிநிலைக்குள் வீழ்ந்தமைக்கு இதுவும் ஒரு காரணம். கொர்பச் சேவின் உள்நாட்டு,வெளிநாட்டுக் கொள்கைகளில் தாராண்மையைத் தவிர்க்க முடியாத அம்சமாக்கியது சோவியத் யூனியனின் இன்றைய பொருளாதார சூனியம் தான். மிகப் பழைய உற்பத்திச் சாதனங்களும், உற்பத்தி முறைகளும் வேகமாக வளர்ந்து வரும் நாட்டின் நுகர்வுத் தேவைகளை ஈடு செய்யமுடியாமல் திணறுகின்றன. உணவுப் பற்ருக்குறை காரணமாக மக்கள் உணவுக்கென பல மணிக்கணக்கில் கியூவில் காத்துக்கிடக்கின்றனர். கைத்தொழிற்றுறை உற்பத்தித் திறனை இழந்து போகவே வருமானம் வீழ்ச்சியடைந்தது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி வேர்விடத் தொடங்கியுள்ளன. இவ்வாருரன கெடுதிகளில் இருந்து நாட்டை
107

Page 58
|சோவியத் யூனியன் 28.12.1990
மீட்டெடுக்கும் நோக்குடன் பெரஸ் ரோய்க்கா எனும் பொருளாதார மீள் அமைப்பினை கொர்பச்சேவ் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். பொருளாதார நடவடிக்கைகளில் தனியார் ஈடுபாட்டினை அதிகரித்து ஒரு சந்தைப் பொருளாதார முறையைப் புகுத்திஞர். மேலும் கிளஸ்நொஸ்ட் மூலமாக கட்டுப்பாடுகளைத் தளர்த்திப் பல ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு இடமளித்து, புதிய காற்றினை நாட்டினுள் பிரவேசிக்க விட்டார். பேச்சு, எழுத்து, கருத்து சுதந்திரங்களுடன் வாக்குரிமை, மனித உரிமை, மக்கள் அதிகாரம் போன்ற பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களைப் புகுத்தினர். இதே போன்று சோவியத் யூனியனின் வெளிநாட்டுக் கொள்கையிலும் முன்னெப்போதுமில்லாத பல புதிய மாற்றங்களைச் செய்தார். வார்சோ அணி நாடுகளின் வெளிவிவகாரங்களிலும் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தார். 13 ஆயிரம் உயிர்களுக்கு உலை வைத்த ஆப்கானிஸ்தான் யுத்தத்திலிருந்து தமது துருப்புகளை வாபஸ் பெற்றுக் கொணர்டார். மேற்கு நாடுகளுடன் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். வார்சோ நாடுகளின் எல்லை ஓரங்களில் மேற்கு நாடுகளை நோக்கி நிறுத்தப்பட்ட ஐம்பதாயிரம் துருப்புகளையும், பத்தாயிரம் டாங்கிகளையும் வாபஸ் பெற்றுக் கொண்டார். கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிச அரசாங்கங்களின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தார். ஜேர்மன் இணைப்புக்குக் காரணகர்த்தாவாஞர். அமெரிக்காவுடனும் ஏனைய நேட்டோ அணி நாடுகளுடனும் நல்லுறவுகளை வளர்த்துக் கொணர்டார். வளைகுடா நெருக்கடியில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து, ஐ.நா.தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கினர். சீனு, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார். கெடுபிடி யுத்தங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து, உலக சமாதானத்துக்கான 1990 நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார். வேறெந்த சோவியத் தலைவரும் பெற்றிராத பெரும் புகழையும் பெருமதிப்பையும் மேற்கு நாடுகளில் பெற்ற இவர், இந்த மேற்கு நாட்டுத் தலைவர்களை விட அங்கு கூடுதலான மதிப்பைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அரங்கில் பிரபலம் மிக்கவரான கொர்பச் சேவ், துரதிஷ்ட வசமாகத் தனது நாட்டில் செல்வாக்கை இழந்து காணப்படுகிருர், ஜனநாயக ரீதியில் சமூக, அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த போது ஆர்வத்துடன் வரவேற்று ஆதரித்த மக்கள், இன்று இவருடைய இதே கொள்கைகளால் விளைந்த அனர்த்தங்களின் பயனுக இவரைத் தூற்றுகின்றனர். வார்சோ அணிநாடுகளை இழந்தமைக்காக மேற்கு நாடுகள் வழங்கிய ஆறுதல் பரிசு தான் இந்த நோபல் பரிசு என்று விமர்சிப் போரும் உண்டு. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயக நாட்டத்தின் விளைவால் ஏற்பட்ட எழுச்சிகளின் உடனடிப்பாதிப்பு போலத்துக்கு அருகாக உள்ள லத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா ஆகிய
108

சோவியத் யூனியன் 28.12.1990
சோவியத் குடியரசுகளில் எதிரொலித்தது. இவற்றுடன் ரஷ்யா, அஸர்பைஜான், ஆர்மீனியா, ஜோர்ஜியா, உக்ரெயின் ஆகிய ஏனைய குடியரசுகளிலும் பிரிவினைக் கோரிக்கைகள் பரவிப் படர்ந்தன. ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்கும் இடையில் கிறிஸ்தவ முஸ்லிம் கலவரங்கள் தீவிரமடைந்தன. சுதந்திரப் போராட்டங்களும் இன மதக் கலவரங்களும் சோவியத்தின் மத்திய அரசுக்கும் மாநிலக் குடியரசுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் கம்யூனிச கூட்டமைப்பில் இருந்து உறுப்பு நாடுகளைப் பிரிந்து செல்ல அனுமதித்த கொர்பச்சேவ், தனது நாட்டிலுள்ள குடியரசுகள் பிரிந்து செல்வதை விரும்பாததால், இராணுவத்தின் உதவியுடன் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. மேலும் பொருளாதார நடவடிக்கைகளில் தனியார் செல்வாக்கினை அதிகரிக்கச் செய்து சந்தை முறைமை புதிதாக புகுத்தப்பட்டதால் சோவியத் யூனியனில் கறுப்புச் சந்தைகள் தோன்றலாயின. கள்ளச் சந்தையில் உணவுப் பொருட்களும் பாவனைப் பொருட்களும் பதுக்கி வைக்கப்படுகின்றன. உணவுப் பொருட்களுக்கான பற்ருக்குறையை இது மேலும் மோசமாக்க வழிவகுத்தது. மக்கள் அத்தியாவசியப் பொருட்களையே பெற்றுக் கொள்ள வழியில்லாமல் திண்டாடுகின்றனர். மேற்கு நாடுகளின் செளகரியமான வாழ்க்கை முறையைத் தரிசிப்பதற்கு கிளாஸ்நொஸ்ட் வாய்ப்பளித்ததால், பொது மக்கள் தாங்கள் அனுபவிக்கும் இன்னல்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவ்வாருன வாழ்க்கை முறைகளைத் தமக்கு வழங்கத் தவறி விட்டதாக குற்றம் சாட்டி அரசாங்கத்தின் மீது தமது வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றனர்.
இவ்வாருக நாடு சீர்குலைந்து போயுள்ள சந்தர்ப்பத்தில் இராஜினமாவை சமர்ப்பித்த ஷெவார்ட்நாஸ, நாடு அதிதீவிர கம்யூனிஸ்டுகள் கையில் சிக்கி விடலாம் அல்லது இராணுவத்தின் பிடிக்குள் அகப்படலாம் என்று எதிர்வு கூறிஞர். இவர்களால் கொர்பச்சேவ் வீழ்த்தப்பட்டு, நாடு இன்னெரு சர்வாதிகாரியின் கையில் அகப்பட்டுக் கொள்ளலாம் அல்லது அவர்களின் மிரட்டல்கள் காரணமாக, மிதவாதத்தைக் கடைப்பிடிக்கும் கொர்பாச்சேவ் கூட, ஒரு சர்வாதிகாரியாக மாறவும் கூடும் என்ற கருத்தும் அதில் புதைந்து கிடக்கிறது. ஷெவார்ட்நாஸ்வின் சொந்த மாநிலமான ஜோர்ஜியாவின் கம்யூனிஸ்டுகள் அல்லாதோரது அரசாங்கம், மத்திய அரசின் அதிகாரங்களை மறுதலித்து, கூடுதலான மாநில அதிகாரங்களைக் கோரி, நிகழ்த்தி வரும் எழுச்சியை அடக்க, அங்குள்ள மாநில அரசாங்கத்தை கலைத்து, ஜனதிபதி ஆட்சியை ஏற்படுத்த வேணர்டி ஏற்படும் என கொர்பச்சேவ் எச்சரிக்கை விடுத்த மறுநாள் தான் ஷெவார்ட்நாஸ தன் இராஜினமாவை சமர்ப்பித்தார். பிரிவினைக் கோரிக்கைகளை அடக்கவும் , இனக் கலவரங்களை ஒடுக்கவும், நாட்டைப்
109

Page 59
சோவியத் யூனியன் 28.12.1990
பொருளாதார முடையிலிருந்து மீட்கவும், ஊழல் நிர்வாக சீர்கேடுகளில் இருந்து காப்பாற்றவும் கொர்பச் சேவ் தனக்கென கூடுதலான அதிகாரங்களை விரிவுபடுத்திக் கொண்டு வருவதால் ஒரு சர்வாதிகாரம் அங்கு உதயமாகலாம் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது. சோவியத் யூனியனை ஒரு வல்லரசு ஸ்தானத்தில் இருந்து வீழ்த்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுக் கோப்புகளை உடைத்தெறிந்து, மேற்கு நாடுகளின் கவர்ச்சிகளுக்கு நாட்டை அடகு வைத்து, முதலாளித்துவ நாடுகளின் கம்யூனிச அழிப்பு முயற்சிகளுக்கு மண்டியிட்டு, வல்லரசு ஒன்றைப் பிச்சைப்பாத்திரம் ஏந்த வைத்து, கம்யூனிசத்துக்கு சமாதி கட்டி, நாட்டைக் குட்டிச்சுவராக்கியவர்கள் கொர்பச் சேவும் அவரது சகாவான ஷெவார்ட்நாஸவும் அவரது ஆதரவாளர்களும் தான் என்று கம்யூனிச தீவிரவாதிகளும் கேஜிபியினரும் குறை கூறுகின்றனர். இவ்வாறு தீவிரவாதிகளாலும், பின்னர் பிரிவினை வாதிகளாலும், இப்போது தன்னேடு கூட இருந்த சீர்திருத்தவாதிகளாலும் கொர்பச்சேவ் கைவிடப்பட்டு, அஞதரவாகத் தனித்து நிற்கிருர், அவரது கொள்கைகளுக்கு துணை போன மேற்கு நாடுகள் அவரது அரசியல் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பதற்கென, உணவுகளையும் பொருளாதார உதவிகளையும் வழங்க முன் வந்துள்ளன. ஆயினும் கொர்பச்சேவின் அதிகாரத்தை வலுப்படுத்தி அவரைப் பதவியில் வைத்திருக்க, சோவியத் யூனியனின் உள்நாட்டு நிலைமைகள் தொடர்ந்தும் சாதகமாக இருக்குமோ என்பது சந்தேகமே
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் உலகின் அதிகாரச் சமநிலையைப் பேணிப் பாதுகாத்து வந்த வல்லரசான சோவியத் யூனியன் இப்போது அதிகார வலுவிழந்து போய்விட்டது. மூன்ரும் உலக நாடுகளின் உற்ற நண்பன் ஆன சோவியத் யூனியன், இன்று முன்ரும் உலக நாடுகளுக்கே உரித்தான பிரச்சனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உருக்குலைந்து போய் விட்டது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு எச்சரிக்கையாக இருந்து வந்த நாடு, இன்று ஏழ்மையில் செயலிழந்து போய் விட்டது. இன, மத,மொழி, பிரதேச வேறுபாடுகளால் பலநூறு பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு நாட்டில், முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்கள் திடீரென ஏற்படுத்தக் கூடிய தீங்குகளுக்கு சோவியத் யூனியன் ஒரு சிறந்த உதாரணம். இனிமேலும் இந்த நாடு வளம் மிக்க ஒரு வல்லரசாக ஒன்றித்து உயர்ந்து நிற்க வேண்டுமானுல், ஜோசப் ஸ்டாலின் மீண்டும் மறுபிறவி எடுத்து வரவேண்டும் என்று சோவியத் மக்களில் ஒரு பகுதியினர் இப்போது எண்ணுகின்றனர். ஏனையோரும் விரைவில் அதை உணர்ந்து கொள்வர். முழு உலகும் இதனை வெகுவிரைவில் ஒப்புக் கொள்ளத்தான் போகின்றது.
1 1 O

மொஸாம்பிக் 04.01.1991
போர்வழி வந்த பஞ்சமும் பசியும்
DTனுடம் முற்ருக மரணித்து விட்ட மண்ணுக்கு ஓர் உதாரணம், மொஸாம்பிக். உலகிலேயே இன்று மிகக் கூடுதலான சோகங்களைச் சுமந்து கொண்டுள்ள நாடு, மொஸாம்பிக் தான். கடந்த 15 வருட காலப் பகுதியில், சுமார் ஆறு லட்சம் உயிர்களைப் பலிகொண்டும் பசி அடங்காதிருக்கும் பாவ பூமி, இது. ஊனமுற்றுப் போனதால் மண்ணில் ஊர்ந்து செல்லும் மனிதப் பிராணிகளையும், கால்களை இழந்த முண்டமும் இரு கைகளும் மூன்று கால்களாக நகர்ந்து செல்லும் மனித ஐந்துக்களையும், உணர்வற்ற வெறும் உடல்களைச் சிக்கெனப் பிடித்து நிற்கும் ஜீவன்களையும், மார்பகங்கள் அரிந்து வீசப்பட்ட அப்பாவிப் பெண்களையும், ஆயிரமாயிரம் அங்கவீனர்களையும்,அஞதைச் சிறுவர்களையும்,வெறும் தோல்களைப் போர்த்திய எலும் புக் கூடுகளையும் ஏக காலத்தில் காண வேண்டுமாயின், வேறெங்கும் போக வேண்டியதில்லை; மொஸாம்பிக் நாட்டு நகர வீதிகளுக்குப் போங்கள். மறுபிறவி பிறக்க நேர்ந்தால் மனிதப் பிறவி மட்டும் வேண்டாம் என்று உங்கள் மனங்கள் நிச்சயம் கெஞ்சி மண்ருடும். 1975 முதல் உள்நாட்டு யுத்தம் ஒரு புறமும், உணவுப் பஞ்சம் மறுபுறமாக அந்த நாட்டை நாசப்படுத்திச் சுடுகாடாக்கி விட்டன. வலிய நாடுகளும் வழக்கம் போல, இந்த மண்ணிலும் தத்தமது வல்லமைகளைப் பரீட்சித்துப் பார்த்து மகிழ்ந்து வந்துள்ளன. மக்களோ துன்பங்களைத் தான் வாழ்க்கையாக எண்ணிச் சுமை சுமையாகச் சுமந்து கொண்டனர்.
1 11

Page 60
[Quom smm ub -ssë: 04.01.1991
இங்கு மக்கள் மனங்களில் எப்போது மகிழ்ச்சி முகிழ் விடுமோ!
இந்த மண்ணில் எப்போது மனிதம் துளிர்விடுமோ!
இருண்ட கண்டமான ஆபிரிக்காவின் கிழக்குப் புறமாக
இந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் வடக்கே தன்ஸானியாவுக்கும்,
மேற்கே ஸாம் பியா, ஸிம் பாப் வேக் கும் , தெற்கே தென்னுபிரிக்காவுக்கும் இடையே அமைந்துள்ள நாடுதான் இந்த மொஸாம் பரிக் . 1498 இல் வாஸ் கொடகாமாவால்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாடு, 1505 முதல் நீண்ட காலமாக போத்துக்கேயரின் குடியேற்ற நாடாக இருந்து வந்தது. சுமார் 16. 3 மில்லியன் சனத்தொகை கொண்ட மொசாம்பிக்கின் தலைநகரம் மபுடோ ஆகும். 1974 இல் போத்துக்கேயரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து ஜனதிபதி ஸமோரா மைக்கேல் தலைமையில் கம்யூனிச அரசாங்கம் அங்கு நிறுவப்பட்டது. 1986 இல் நிகழ்ந்த விமான விபத்து ஒன்றில் ஸ்மோரா இறந்த பின்னர், இன்றைய ஜனதிபதி ஜோக்கிம் சிஸானே நாட்டைப் பொறுப்பேற்ருர், சோவியத் யூனியனின் அனுசரணையுடன் கம்யுனிச அரசாங்கம் 1975 இல் நிறுவப்பட்ட போது ஆரம்பித்த உள்நாட்டு யுத்தம், இன்று வரை அந்த நாட்டில் நிகழ்த்திய சேதங்களுக்கு அளவே இல்லை.
மாக்சிச லெனினிச சித்தாந்தத்தை அடியொற்றி உருவாக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக, 1975 இல் தோன்றிய ஆயுதம் தாங்கிய இயக்கத்தின் பெயர் றென மோ. சுமார் இருபதாயிரம் உறுப்பினர்களை உள்ளடக்கிய இப்பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி உதவியையும், ஆயுத உதவியையும், பயிற்சியையும், ஆலோசனைகளையும் வழங்கி வளர்ந்து வந்த நாடு, மொஸாம்பிக்கின் அயல்நாடான தென்னுபிரிக்காவே. முன்னுள் ஜனதிபதியான பி. டபிள்யூ.போத்தாவின் தலைமையிலான தென்னுபிரிக்க அரசுடன் சில அமெரிக்க தேவாலயங்களும்,அமெரிக்க வர்த்தகக் குழுக்களும், மொஸாம்பிக்கை விட்டு வெளியேறித் தென்னபிரிக்காவில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் போர்த்துக்கேய வர்த்தகர்களும் றெனமோ இயக்கத்துக்கு ஆதரவையும் நிதியுதவியையும் வழங்கி வருகின்றன. 37 வயதுடைய அபோன்ஸோ திலகம என்பவரது தலைமையில் ஆயுதம் ஏந்திப் போராடி வரும் றெனமோ இயக்கம் தான் உலகிலேயே மிகக் கொடுரமான பயங்கரவாத இயக்கம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. மனித குருதியையே குடித்து, மனித குருதியிலேயே குளித்து, வெப்பமும் வேகமும் அடங்கும் மிருக வெறி பிடித்த றெனமோ இயக்கம் மனித நாகரிக வரலாற்றுக்குக் கிட்டிய ஒரு களங்கம் எனக் கருதப்படுகிறது. இத்தகைய பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக ஜனதிபதி ஜோசிஸானுேவின் அரசபடையான ஃபிறிலிமோ படைகள் இடையருது போராடி வருகின்றன. மொஸாம்பிக்கில் சுதந்திரத்தின் பின் இற்றை வரை செயற்பட்டு வந்த ஒரே ஒரு அரசியல் கட்சியான ஃபிறிலிமோவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இப்படையானது, றென மோ இயக்கத்தினர் வெறித்தனமான கொரில் லாத் தாக்குதல் களுக்கு ஈடு கொடுக்க முடியாது தடுமாறிக்
772

|மொஸாம்பிக் 04.01.1991
கொண்டிருக்கும் இத்தருணத்தில், நப்ரமாஸ் எனப்படும் புராதன பாரம்பரிய வீரர் படை ஒன்று களத்தில் குதித்து, பயங்கரவாதிகளை புறமுதுகு காட்டி ஒட வைத்து வருகின்றது. நப்ரமாஸ் போராளிகள் மலைச்சாரல்களில் இருந்து நாட்டுப் புறங்களையும் நகர்ப்புறங்களையும் நோக்கி, வெறும் ஈட்டிகளை மட்டும் ஆயுதங்களாகக் கொண்டு சமாதானத்திற்காகப் போரிட வந்துள்ளார்கள். துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க முடியாத அதிசய சக்தி வாய்ந்த இந்தப் போராளிகளின் தலைவர், அந்தோனியோ மனுவேல். இறந்து ஆறு நாட்களின் பின் மீண்டும் உயிர் பெற்றவராகக் கூறப்படும் அந்தோனியோ, யேசுபிரானின் அனுக்கிரகம் பெற்றவராகவும், அதிசயிக்கத் தக்க ஆன்மீகப் பலம் மிக்கவராகவும் நப்ரமாஸ் படையினரால் ஆராதிக்கப்படுகிறர் ஜெபிக்கப்பட்ட வெண்ணிறும், சில வகை வேர்களும் தடுப்பு மருந்தாகத் தனது போர்வீரர்களுக்கு இவரால் வழங்கப்படுகிறன. இத்தடுப்பு மருந்து துப்பாக்கிக் குண்டுகளை நீராக்கும் தன்மையது எனக் கூறப்படுகிறது. மது அருந்துதல்,பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் இருந்து தடுக்கப்பட்டுள்ள சுமார் ஐயாயிரம் வீரர்களைக் கொண்ட இப்படையினரின் தலைகளில் சிவப்புப் பட்டி ஒன்று அடையாளச் சின்னமாகக் கட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராகப் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு மக்களைச் சொல்லொணுத் துன்பங்களுக்குள்ளாக்கி வரும் றெனமோ இயக்கத்தினரின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த என ஈட்டியுடன் துரத்தி வரும் நப்ரமாஸ் போராளிகள் தமது எதிரிகளை ஒரு போதும் கொலை செய்வதில்லை. பதிலாக அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து, அரச படைகளுக்கு வழங்கி மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். றெனமோ இயக்கத்தினரிடமிருந்து ஒரு லட்சம் பொதுமக்களை விடுவித்து மக்கள் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வரும் குண்டுகள், நேரில் நிற்கும் நப்ரமாஸ் படையினரைத் தாக்காது செயல் இழந்து விடுகின்றன என்ற அதிசயமான செய்தி இன்னமும் விடுவிக்கப்படாத புதிராக இருந்து வருகிறது. றென மோ இயக்கத்தினரின் பயங்கரவாத நடவடிக்கைகளை வெற்றிகரமாக முறியடித்து, அரசாங்கத்தின் இராணுவப் படையினரைவிடப் பன்மடங்கு பிரபலமடைந்து வரும் நப்ரமாஸ் படையினரின் மந்திரஜால சக்தியை விளங்கிக் கொள்ள முடியாத மேற்கு நாட்டு நிபுணர்களும் ராஜதந்திரிகளும் முக்கில் விரலை வைத்து நிற்கின்றனர். தலைவர் அந்தோனியோ மனுவேலிடம் உள்ள தெய்வீக பலத்தில் அவரது வீரர்கள் அதீத நம்பிக்கை வைத்து விசுவாசத்துடன் அவரைப் பின்பற்றுகிருர்கள். அந்த நம்பிக்கை தான் இந்த அதிசயிக்கத்தக்க பலத்துக்குச் சான்முகக் கூறப்படக் கூடிய ஒரே ஒரு காரணி என்று கருதப்படுகிறது.
15 வருட உள் நாட்டு யுத்தத்தின் விளைவாக சுமார் 1.5 மில்லியன் மக்கள் அகதிகளாக காடுகளிலும் மலைகளிலும் அண்டை அயல் நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழ்கிருர்கள். இவ்வாறு அகதிகளாக வெளியேறும் மக்களை றெனமோ இயக்கத்தினர் தடுத்து
113

Page 61
மொஸாம்பிக் 04.01.1991
வைத்துக் கொடுமைப் படுத்துகினர் றனர்; பெணி களைக் கற்பழிக்கின்றனர்; கந்தல் ஆடை அணிகள் உட்பட உடைமைகள் அனைத்தையும் கொள்ளை அடிக்கின்றனர். ஆடைகளை இழந்த பெண்கள் சாக்குகளை உடலில் சுற்றி மானத்தைக் காப்பாற்றியபடி நாட்டை விட்டு ஓடுகிருர்கள். பயங்கரவாதிகளால் எதிரிகள் எனக் கருதப்படுவோர் காட்டுமிராணி டித்தனமாகச் சித் திரவதை செய்யப்படுகிருர்கள். ஆணர் பெண் இருபாலாரும் பாலியல் உறுப்புகள் சிதைக் கப்பட்டுத் துடிக் கத் துடிக்க வதைக்கப்படுகின்ருர்கள். உலகிலேயே மிக உயர்ந்த குழந்தைகள் இறப்பு விகிதமான 35 சத வீதத்தைக் கொண்ட இந்த நாட்டில், சுமார் முப்பதாயிரம் அஞதைக் குழந்தைகள் குப்பைத் தொட்டிகளைக் கிண்டிக் கிளறிப் பசி ஆறுகிருர்கள். சுமார் ஐந்து லட்சம் குழந்தைகள் போரினுலும் பஞ்சத்தினுலும் கடந்த 15 ஆண்டுகளில் உயிரிழந்து போஞர்கள். போக்குவரத்துகளைத் தடை செய்வதற்காகக் குவிக்கப்பட்டுள்ள மனித சடலங்கள் அழுகி, துர்நாற்றம் வீசி, கொடிய தொற்றுநோய்களைத் தோற்றுவிக்கின்றன. நோய் வாய்ப் பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க வைத்தியசாலைகளில் போதிய வசதிகள் இல்லை. வைத்தியர்கள் இல்லை. வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகத் தங்கியுள்ள கர்ப்பிணிப் பெணர்களே ஈவிரக்கமின்றி வெட்டிக் கொலை செய்யப்படுவதால், அங்கு சிகிச்சைக்குச் செல்வதற்கும் மக்கள் அஞ்சுகின்றனர். நோய் வாய்ப் பட்டவர்களுக்கும் , காயப் பட்டவர்களுக்கும் , பசித்திருப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு இயலாமல், சர்வதேச நிவாரண அமைப்புகளும் ஐ.நா நிவாரணக் கிளைகளும் செயலற்று நிற்கின்றன. வெளிநாடுகளிலிருந்து இவ்வாருன நிவாரண அமைப்புகள் மூலமாக வந்து சேரும் உணவுகளும் கூட, றென மோ இயக்கத்தினராலும் இராணுவத்தினராலும் களவாடப்படுவதனுல் அவை மக்களைச் சென்றடையத் தவறி விடுகின்றன.
மொஸாம்பிக் நாட்டில் நிலவி வரும் இவ்விதம்ான பரிதாபகரமான நிலைமைகளாலும், உலக அரங்கில் ஏற்பட்டு வரும் அன்ைமைக்கால மாற்றங்களாலும் தூண்டப்பட்ட ஜனதிபதி ஜோ. சிஸாஞே தனது கொள்கைகளிலும் பாரிய மாற்றங்களை அணர்மையில் புகுத்தினர். மாக்சிச லெனினிசக் கொள்கைகளைக் கைவிட்டு, புதிய அரசியற் சட்டம் ஒன்றின் அடிப்படையில் பல கட்சி முறைமையையும், கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதார முறைமையையும் அறிமுகப்படுத்திஞர். எதிரிகளிடம் மண்டியிடாத குறையாக கீழ் இறங்கி வந்து சமாதானத் தீர்வுக்கு அழைப்பு விடுத்தார். தனது ஃபிறெலிமோ கட்சியை விட மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கும், மதிப்பும், பிரபலமும் மிக்கவரான இவர் அண்மையில் புகுத்திய புதிய அரசியல் சட்டத்தினுல் கவரப்பட்ட அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் யூனியன், இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்தோர் இங்கு முதலீடுகளைச் செய்வதில் ஆர்வம் கொணர் டுள்ள போதிலும், நாட்டு நிலைமைகள் இன்னமும் சீரடையாதிருப்பது அதற்குத் தடையாக உள்ளது. இப்போதும்
114

மொஸாம்பிக் 04.01.1991
வெளிநாட்டு உதவியாக வருடாந்தம் 1.6 பில்லியன் டொலரும், வரவு செலவுத் திட்டத்தின் அறுபது வீதமும் மேற்கு நாடுகளிலிருந்து உதவியாகக் கிடைத்தும், பொருளாதார முடையிலிருந்து மீள முடியாமல் இருப்பதஞல், தொடர்ந்தும் வெளிநாட்டு உதவிக்குக் கூக்குரலிட்டபடி உள்ளார், சிஸானே. ஆபிரிக்க நாடுகளுள் எல்லாம் மிகவும் நேர்மையான, ஒளிவுமறைவற்ற அரசாங்கத்தின் தலைவரான ஜோ.சிஸானுேவின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காதுள்ளமைக்கு முக்கிய காரணங்கள் சில உண்டு. 1984 ஏப்ரல் ஒப்பந்தப்படி, றென மோவினருக்குத் தென்னுபிரிக்கா தனது உதவிகளை நிறுத்திக் கொள்ளாமல், இன்னமும் இரகசிய முகவர்கள் வாயிலாக உதவி செய்து வருகின்றது. றென மோவின் தலைவரான அபோன்ஸோ சமாதானத்திற்குச் சம்மதித்தாலும், முழு இயக்கமும் அவரது ஆணைக்கு அடங்க மறுப்பதால் சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்து போகின்றன. அரச படையினரும் நீண்ட காலமாக ஊதியமின்மையால் கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடுவதால், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட சுதந்திரமான ஓர் அரச கருவி அங்கு இல்லை. நோயும், பிணியும், பஞ்சமும், பசியும், போரும் இந்த நாட்டை விட்டுப் போக மறுப்பதால் வெளிநாட்டு முதலீடுகளும், உதவிகளும், வர்த்தகங்களும் கேள்விக் குறிகளாகி விட்டன. சுமார் 90 சதவீத கல்வியறிவின்மை உள்ள இந்த நாட்டினை அறியாமை, ஆற்றலின்மை போன்ற மாய இருள் முடிக் கொண்டுள்ளது. இவ்வாருன பல்வேறு காரணிகளின் விளைவாக மொஸாம்பிக் நாடு கீழ்மையிலும் ஏழ்மையிலும் கிடந்து அழுந்திக் கொண்டிருக்கின்றது.
உலகிலேயே மிக மோசமான உள்நாட்டு யுத்தத்தினுலும் பஞ்சத்தினுலும் அழிந்து கொண்டிருக்கும் மொஸாம்பிக்கின் வெளிநாட்டுக் கடன் 4.7 பில்லியன் டொலருக்கும் அதிகமானது என்பதும், வருடாந்த தலா வருமானம் 90 டொலர் என்பதும் வியப்பூட்டும் விபரங்கள். இந்தப் பொருளாதாரப்பளுவிலிருந்தும், போர்ச்சூளையில் இருந்தும், பஞ்சச் சகதியிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்பது இலகுவான காரியமல்ல என்பதனை இந்த நாட்டு ஜனதிபதி உணர்கின்ருர். அண்டை அயல்நாடுகளுடன், குறிப்பாகத் தென்னுயிரிக்காவின் வெள்ளைச் சிறுபான்மை அரசுடன் நட்புறவை வளர்த்து, மொஸாம்பிக் நாட்டைப் பீடித்துள்ள மிடியை நீக்கிக் கொள்ளப்பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்ருர், ஆபிரிக்காவின் தென்பகுதியில் தன்னை ஒரு வல்லரசாகக் கருதிவரும் தென்னுபிரிக்க அரசும் அப்பிராந்தியத்தின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பற்றி இப்போது அக்கறை செலுத்தத் தொடங்கி உள்ளமைக்கான ஓர் அறிகுறி, மொஸாம்பிக் நாட்டு ஜனதிபதியின் மனதில் சிறு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகத் தெரிகின்றது. எனினும் ஒரு வேலையைப் பெற்று உழைத்து வாழ்வதை விட, துப்பாக்கியைக் கையில் தூக்கித் திரிந்து வாழ்க்கையை நகர்த்துவது இலகுவானது என்ற எணர்னம், இங்கு துப்பாக்கி தூக்குவோர் மனதை விட்டகலாதிருக்கும் வரை மொஸாம்பிக் நாட்டில் சுபீட்சம் என்பது சுலபமல்ல.
115

Page 62
பங்களாதேஷ் 11.01. 1991
வங்கச் சுதந்திரத்தை
வாரிச் சுருட்டினரோ!
"முப்பத்து முக்கோடி மக்களின்
உணவைத் திருடி உண்பவர்களுக்கு என் ரத்த எழுத்துக்கள் கொலைத்தணர்டம் விதிக்கட்டும்!"
"வங்க இலக்கியத்தின் பிரளயம்" என்று வர்ணிக்கப்பட்ட கவிஞன் நஸ்ருல் இஸ்லாம் அன்றைய இந்தியாவில் வெள்ளையனின் ஆட்சிக்கெதிராக மீட்டிய "அக்கினிவீணையில்" எழுந்த ஆவேசத் தீப்பிழம்புக் கவிதை இது. 1947இல் திரிசூலமும் வாளும் இந்தியாவின் தலைவிதியை வெட்டிச் சிதைத் து விட்டதஞல்,பாரதம் என்றும் பாகிஸ்தான் என்றும் அந்த நாடு
116
 

பங்களாதேஷ் 11. O1. 1991
பிளவுபட்டது. கிழக்குப் பாகிஸ்தான் வங்கதேசமாக வடிவெடுத்து சுமார் இருபது வருடங்களாகி விட்டன. "கலகக் கவிஞன்” நஸ்ருல் இஸ்லாம் இன்னும் வாழ்ந்திருப்பாளுகில் "ஒன்பது கோடி மக்களின் உணவைத் திருடி உண்பவர்களுக்கு, என் இரத்த எழுத்துக்கள் கொலைத்தண்டம் விதிக்கட்டும்” என்று சுதந்திர வங்கத்தின் ஆட்சியாளர்கள், மக்களுக்கு இழைக்கும் அநீதிகளைக் கணர் டு சணர் டமாரு தம் செய்திருப்பானர் . அந்நியர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபின்பும், வங்கதேசத்தின் எண்பது சதவீத மக்கள் இன்னமும் ஏழைகளாகவே வாழ்கின்றனர். இயற்கை ஒருபுறம் துன்புறுத்த, பஞ்சமும் பசியும் பிணியும் மறுபுறம் மக்களை வருத்த, அதிகார பீடத்தில் உள்ளோர் மட்டும் ஆடம்பர சுகபோகங்களைச் சுகித்திருக்க, மக்கள் எத்தனை காலம் தான் சகித்திருப்பர்? எட்டு வருடங்களாக ஜஞதிபதியாய் இருந்து, மக்களை ஏமாற்றி மகிழ்ந்த எதேச்சாதிகாரி எர்ஷாத்துக்கு, இப் போது மக்கள் எனர் ன தணர் டனை விதிக்க காத்திருக்கிருர்களோ? மக்கள் எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் தன் பதவியைத் துறந்த எர்ஷாத், கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். "போர்வாளாால் சவரம் செய்கிருர்" என்று கவி தாகூரால் செல்லமாக விமர்சிக்கப்பட்ட, போர்க்குணம் மிக்க கவிஞன் நஸ்ருல் இஸ்லாம் வங்கத்தில் இன்னமும் வாழ்ந்திருந்தால், ஏழை மக்களின் உணவைத் திருடித் தின்று ஏப்பம் விட்ட எர்ஷாத்துக்குத் தனது குருதிக் கவிதைகளால் கொலைத்தண்டம் விதித்திருப்பானே?
இந்தியாவிடம் இருந்து விவாகரத்துச் செய்து கொண்டு. பாகிஸ்தான் தனிக்குடித்தனம் நடத்தவென 1947இல் புறப்பட்ட போது, இந்தியாவுக்குக் கிழக்கே கிழக்குப் பாகிஸ்தாளுகவும், மேற்கே மேற்குப் பாகிஸ்தானுகவும் பிரிந்து சென்றது. இந்த இருதலை வாழ்க்கை முறை அதிகாலம் நீடிக்கவில்லை. பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியினது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, கிழக்கு பாகிஸ்தான் மக்கள் ஆரம்பத்தில் இருந்தே குரல் எழுப்பி வந்துள்ளனர். மாணவர்கள் இப்போராட்டங்களில் முன்னணி வகித்து வந்துள்ளனர். 1950களில் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துச் சென்ற போராட்டங்கள், ஷேக் முஜிபுர் ரஹற்மானின் தலைமையில் கிழக்குப்பாகிஸ்தானின் சுதந்திரப் போராட்டமாக மாறியது. 1971 இல் நிகழ்ந்த இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது, இந்தியாவின் உதவியுடன் கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து சென்று, சுதந்திர பங்களாதேஷாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. பங்களாதேஷின் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய அவாமி லீக் கட்சியின் தலைவரான முஜிபுர்
117

Page 63
பங்களாதேஷ்ட 1.01.1991
ரஹற்மானே அந்த நாட்டின் முதலாவது ஜஞதிபதியாக, 1972 ஜனவரி 10 இல் பதவி ஏற்ருர், சோஷலிஸத்தின் மீது ஈடுபாடும் நாட்டமும் கொணர் டவரான முஜிபுர்தானி சுதந்திர பங்களாதேஷின் முதலாவது அரசியல் சட்டத்தை வகுத்தவர். சோஷலிஸத்தின் பாதையில் பங்களாதேஷைக் கட்டி எழுப்ப அடிக்கல் நாட்டி அவர் செயற்பட ஆரம்பித்த சமயம், 1975 இல் இடம் பெற்ற இராணுவச் சதியின் போது முஜிபுர் கொலை செய்யப்பட்டார். வெளிநாட்டுச் சக்திகளின் பின்னணியில் இடம் பெற்ற இப்படுகொலைகளின் முலம் ஜேர்மனியில் வசித்து வந்த இவரது இரண்டு பெண்பிள்ளைகள் தவிர, முழுக்குடும்பமும் அவரது சகாக்களும் அழிக்கப்பட்டனர். அதன் பின்னர் தொடர்ந்தும் இராணுவத்தின் பிடிக்குள் சிக்குண்டிருந்த மக்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலின் விளைவாக, 1979 இல் நிகழ்ந்த ஒரு தேர்தலில் சியாவுர் ரஹற்மான் பங்களாதேஷின் ஜஞதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1981 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சிச் சதியில் இவரும் படுகொலை செய்யப்பட்டதால் எழுந்த ஆர்ப்பாட்டங்களையும் கிளர்ச்சிகளையும் அடக்குவதில் வெற்றி கண்டு, பங்களாதேஷ் அரசியலில் முக்கியத்துவம் பெற்று, 1982 இல் இரத்தம் சிந்தாப்புரட்சி ஒன்றின் முலம் தற்காலிகமாக ஜனதிபதி ஆசனத்தில் வந்து அமர்ந்து கொண்டவர் தான், ஹொசைன் மொகம்மட் எர்ஷாத்.
பங்களாதேஷின் ஜாதீயக் கட்சியின் தலைவரான எர்ஷாத், கடந்த எட்டு வருடங்களாக ஜனதிபதியாய் இருந்து நாட்டை ஆண்டவர். 1930 இல் மேற்கு வங்காளத்தில் பிறந்த இவர், 1947 இல் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்ற போது அங்கு போய் இராணுவப் பயிற்சி பெற்றவர். சியாவுர் ரஹற்மான் ஜனதிபதியான போது, பிரதி இராணுவத் தளபதியாக இருந்து, 1977 இல் பங்களாதேஷ் இராணுவத்தின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றவர். 1981 இல் நிகழ்ந்த சியாவுர் ரஹற்மான் படுகொலைக்குப் பிறகு, அந்த நாட்டின் அரசியலில் முக்கிய பிரமுகராகி விட்ட எர்ஷாத், மக்களால் தெரிவு செய்யப்பட்ட இரணர் டு ஜனதிபதிகளையும் நீணி ட காலம் பதவியில் இருக்கவிடாமல் ஒரு சில மாதங்களில் அகற்றி விட்டு தானே 1983 இல் அந்த நாட்டின் நிரந்தர ஜனதிபதியாஞர். சுமார் இருபது வருட சுதந்திர வரலாற்றை உடைய வங்க தேசத்தில், ஆகக் கூடுதலான காலம் அதிகாரத்தில் இருந்த எர்ஷாத், ஏன் இன்று மக்களால் தூக்கி எறியப்பட்டுவிட்டார் என்பது விடை காணப்பட வேண்டிய ஒரு விஞவாகும். பங்களாதேஷில் உள்ள இருபத்தொரு எதிர்க்கட்சிகளும் எர்ஷாத்தை ஆட்சியில் இருந்து அகற்றும் இலக்கில் மட்டும் ஒற்றுமைப்பட்டு, தமது ஏனைய வேற்றுமைகளை மறந்து ஓரணியில் திரணி டன. ஜனதிபதி
118

பங்களாதேஷ் 1.01.1991
எர்ஷாத்தின் அரசியல் வாழ்வுக்கு உலைவைத்தவர்கள் இரு பெண்கள். பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதும் ஒரு ஆண் ஏகபோகச் சமுக அமைப்பில் இரண்டு பெண்கள் தலைமை தாங்கிய எதிர் அணி, எர்ஷாத்தின் ஆதிக்க வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டமை அதிசயம் தான். எர்ஷாத்துக்கு எதிராக எழுந்த எதிர்க்கட்சிகள் யாவும் மூன்று கூட்டணிக்குள் அணி திரண்டன. படுகொலை செய்யப்பட்ட முதலாவது ஜனதிபதி முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனுவின் தலைமையில் உள்ள அவாமி லீக் கட்சியின் பின்னல் ஆறு கட்சிகள் ஒரு கூட்டணியில் இணைந்திருந்தன. படுகொலை செய்யப்பட்ட முன்னுள் ஜனதிபதி சியாவுர் ரஹற்மானின் மனைவி பேகம் ஹலீடா ஷியாவின் தலைமையில் உள்ள பங்களாதேஷ் தேசியக் கட்சியின் பின்னுல் ஆறு கட்சிகள் சேர்ந்து இரண்டாவது கூட்டணியாகின. ஏனைய ஏழு கட்சிகளும் முன்ருவது கூட்டணியை அமைத்துக் கொள்ள இந்த மூன்று கூட்டணிகளும் பல்கலைக்கழக மாணவர்களையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் இணைத்து நீதியான ஜனநாயக அரசாங்கம் வேண்டிப் போராட்டத்தில் இறங்கினர். ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், வேலைநிறுத்தங்கள் வெற்றிகரமாக நடாத்தப்பட்டன. பல உயிர்களைப்பலி கொடுத்துப் போராடிய எதிர்க்கட்சியினர், எர்ஷாத் மீது ஏராளம் குற்றங்களைச் சுமத்தினர். அரச திறைசேரியில் இருந்து தங்கத்தையும் பணத்தையும் களவாடியதாகவும், வெளிநாட்டு உதவிகளை வாரிச் சுருட்டிக் கொண்டதாகவும், வெளிநாட்டு வங்கிகளில் ஐம்பது கோடி டொலர் சேமிப்பிலிருப்பதாகவும், ஹவாயில் சொந்தமாக ஹோட்டல் நிறுவியுள்ளதாகவும், அமெரிக்காவில் வீடு வாங்கி வைத்திருப்பதாகவும், மக்கள் ஏழ்மையில் கிடந்து அழுந்தும் போதுமக்களுக்குச் சேரவேண்டிய செல்வங்களைச் சூறையாடிச் சுகம் அனுபவித்து வந்ததாகவும், நாட்டில் லஞ்சமும், ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளும் மலிந்து விட்டதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை அவர் சீர்குலைத்து விட்டதாகவும் குற்றப்பட்டியலை மக்கள் முன் சமர்ப்பித்து, எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட கிளர்ச்சிகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமற் போன எர்ஷாத், கடந்த டிசம்பர் 4 இல் தனது பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஹாப்தீன் அகமத் தற்காலிகமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள இத்தருணத்தில், எர்ஷாத் டாக்காவில் உள்ள பரித் தானிய தூதுவரகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது முழுக் குடும்பத்தவரதும் ராஜதந்திரக் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இவரது சகாக்களும் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா சபையில் பங்களாதேஷின் நிரந்தரப் f 19

Page 64
பங்களாே 1.01.1991
பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த இவரது மைத்துனர், பதவி பறிக் கப்பட்டு உடனடியாக நாடு திரும்பும் படி கட்டளையிடப்பட்டுள்ளார். பதில் ஜஞதிபதி, சட்டத்துக்கு அமைவாக எர்ஷாத்துக்கு எதிரான இக்குற்றச்சாட்டுக்கள் சரிவர விசாரிக்கப்பட்டு, பின்னர் அச்சட்டத்தின் தீர்ப்புக்கு அமைவாகவே தண்டனைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். நான்கு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவித்த இவர், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட உதவும்படி சகல மக்களையும் வேண்டியுள்ளார்.
1984 இல் இருபது லட்சம் மக்கள் நிகழ்த்திய ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், வேலைநிறுத்தங்களால் நிலைகுலைந்து போன எர்ஷாத், பாராளுமன்றத்தைக் கலைத்து நீண்ட காலமாகத் தேர்தலைப் பின் போட்டு வந்தார். மக்கள் கொந்தளிப்பைத் தொடர்ந்தும் சமாளிக்க முடியாமற் போனமையால், 1986 இல் ஒரு தேர்தலை நடாத்திக் காட்டி, தனது கட்சியே பாராளுமன்றத்தில் ஆதிக்கம் பெற வழிசெய்தார். இத்தேர்தலில் போட்டியிட்ட வங்கத்துச் சிங்கம் முஜிபுரின் மகளான ஹசீனவை, எர்ஷாத் எப்படியோ தோற்கடித்து விட்டார். தொடர்ந்து 1988 இல் நடைபெற்ற ஜஞதிபதி தேர்தலினர் போது வாக்குப்பெட்டிகளைக் கணினியமற்ற முறையில் தனக்குச் சாதகமாக நிரப்பித் தன் பதவியைப் பாதுகாத்துக் கொண்ட எர்ஷாத், அவசர காலச்சட்டம் மூலம் எதிர்க்கட்சிகளை இயங்க விடாமல் விலங்கிட்டுக் கட்டி வைத்தார். அத்துடன் பொலிஸ், இராணுவம்,புலஞய்வுத் துறைகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை நடாத்தி வந்தார். இந்த இராணுவ ஆட்சி முறையை எதிர்த்து எதிர்க்கட்சிகளும், மக்களும், மாணவர்களும் சளைக்காமற் போராடி வந்தனர். மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினரது செல்வாக்கு மேல்ோங்கி வருவதைக் கண்டு அஞ்சி, அவர்களது செல்வாக்கினை உடைத்தெறிய எனப் பல முயற்சிகளைச் செய்து பார்த்தார். அவற்றுள் முக்கியமானதாக இஸ்லாம் மதத்தை அரச மதமாக்கினர். இராணுவச் சதிப் புரட்சி தொடர்பாக, சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றையும் கொண்டு வந்தார். மேலும் இஸ்லாமிய மதச் சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் தனது எதிரணிகளுக்குத் தலைமை தாங்கும் பெண்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி, அங்கும் பாகிஸ்தானில் உள்ளது போலப் பெண்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கிவிட முயற்சி செய்தார். இவை யாவும் மக்களின் ஆதரவைப் பெறத் தவறியமையால், மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமற்போனபோது, எர்ஷாத் ஈற்றில் ஆசனத்தை விட்டு இறங்கி ஓட வேண்டியாயிற்று. 1983 இல் அவர் ஆட்சிக்கு வந்தபோது "ஊழலையும், அநீதியையும், சீர்கேடுகளையும் வேரோடு சாய்ப்பேன்" என்ற சபதத்துடன்
12O

வந்த எர்ஷாத், இன்று அதே குற்றச்சாட்டுகளின் காரணமாக தனர் பதவியையும் பறிகொடுத்து ஈற்றில் காவலில் வைக் கப்பட்டுள்ளார். தனது ஆட்சிக் காலத் தில் இடம்பெற்றவையையிட்டு மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று கூறும் இவர் "மீண்டும் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வருவேன்" என்று எதிர்பார்க்கிருர். தனக்கு நம்பிக்கையும் விசுவாசமும் மிக்க இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இரகசியமாக இன்ஞெரு சதி முயற்சிக்கு அவர் தயாராகிக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ஒன்று நிலவி வருகிறது.
1990 ஆம் ஆண்டு உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஓர் ஆண்டு. உலகின் நாலாபக்கமும் சற்றேனும் எதிர்பார்க்காத அரசியல் திடீர்த் திருப்பங்கள் பலவற்றை ஏற்படுத்திய ஆண்டு. தென்னுசிய நாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டால், பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் அரசாங்கங்களை வீழ்த் திய இதே ஆணி டு, தனது இறுதி மாதத்தில் பங்களாதேஷிலும் அதே கைங்கரியத்தைச் செய்து முடித்துள்ளது. அதிகாரத்தைக் கைப் பற்ற முனர் னர் இலஞ்சத்தையும், ஊழலையும்,அராஜகத்தையும், சீர்கேடுகளையும் பூண்டோடு அகற்றி நீதியான ஆட்சியை அமைப்போம் எனக் கூறி ஆட்சியைக் கைப்பற்றும் எந்த முன்ரும் உலகத் தலைவரும், முடிவில் தவருமல் அதே குற்றச்சாட்டுகளின் விளைவாகப் பதவி இறக்கப்படுதல் நிச்சயமான ஒரு நிகழ்வாகி விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. துய கரங்களுடன் ஆட்சியில் ஏறுவோர் பின்னர், கறைபடிந்த கரங்களுடன் கலைத்துத் துரத்தப்படும் நியதியில் இருந்து வங்க ஜனதிபதி எர்ஷாத்தும் விதிவிலக்காகி விடவில்லை. பங்களாதேஷில் நான்கு மாதங்களுக்குள் நீதியான தேர்தல் உண்மையில் நடக்குமா? பாராளுமன்ற ஜனநாயகம் அங்கு நிலைநாட்டப் படுமா? மக்கள் சு கங்களைச் சூறையாடியோருக்குத் தண்டனை வழங்கப்படுமா?மக்கள் அங்கு அனுபவித்து வரும் துன்பங்களுக்கு முடிவு கிடைக்குமா? இராணுவ எதேச்சாதிகாரக் கலாசாரத்தில் வளர்ந்து விட்ட பங்களாதேஷ் பற்றிய இந்த விஞக்களுக்கு முன்கூட்டியே விடையிறுத்தல் விவேகமல்ல. ஆயினும் அந்த நாட்டு மக்கள் இப் போது விழித்துக் கொணர் டுள்ளார்கள்; அதஞல் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு இனிமேலும் அவர்கள் அசைந்து கொடுக்க மாட்டார்கள் என்பதை மட்டும் உறுதியாகக் 9һдрбvтио.
727

Page 65
|கனடா 18.01.1991
கடலில் மிதந்து
காணுமற் போன
கலங்கரை விளக்கமோ?
*சிற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளாகி, தத்தமது நாடுகளை விட்டுப் பறந்தோடி அநாதரவாக வந்தவர்களுக்கெல்லாம் ஆதரவு காட்டி, தஞ்சம் அளிக்கும் தடாகம் போல இற்றை வரை இயங்கி வந்த நாடு, கனடா. ராகங்களுள் மிகவும் ரம்யமான கானடா போன்று பல்லாயிரக்கணக்கானேரின் எதிர்காலக் கனவுகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததால், உலக நாடுகளுள் மிகவும் இதமான நாடாக இருந்து வந்த நாடு, கனடா. வந்தாரையெல்லாம் வரவேற்று வாழவைத்து, "வாய்ப்புக்களின் தேசம்" என வர்ணிக்கப்பட்ட நாடு, கனடா, காலாகாலமாக இங்கு வாழ்ந்தவர்களால் கட்டி எழுப்பப்பட்ட ஜனநாயகப் பண்பும்,
122
 

asco, LIT 18.01.1991
சகிப்புத் தன்மையும், சமாதான விருப்பும், செல்வச் செழிப்பும் தேடிக் கொடுத்த பெருமைகளால் உலக அரங்கில் பெருமையோடு தலைநிமிர்ந்து நின்ற நாடு, கனடா. சொந்த நாடுகளில் சுகங்களையும், வசதி வாய்ப்புகளையும் , உரிமைகளையும் , உயிருக்கான உத்தரவாதத் தினையம் பறிகொடுத்து, அகதிகளாக வெளியேறியோர்க்கு ஆதரவளித்து வரவேற்பதில் முன்னணியில் நின்ற நாடு, கனடா. மனித குலத்தினர் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாகக் கெட்ட போர் தீப்பற்றி எரிந்த இடங்களில் எல்லாம் சமாதானத்தின் பாதுகாவலனுக நின்று உழைத்து வந்த நாடு, கனடா. மூன்ரும் உலக நாடுகளை வாட்டி வரும் வறுமையை விரட்டி அடிப்பதற்கென உணவுடன் ஏனைய உதவிகளையும் வழங்கி, ஏழை நாடுகளின் உற்ற நண்பனுயிருந்து வந்த நாடு, கனடா, உலகிலுள்ள எல்லா மொழிகளும், மதங்களும், இனங்களும், நிறங்களும், கலை கலாசாரங்களும் ஒருங்கே சங்கமித்துள்ள நாடு, கனடா. இன்னும் பல்லாயிரம் மக்கள் காலடி எடுத்து வைப்பதற்கென ஏங்கியபடி, வரிசை வரிசையாய்க் காத்துத் தவம் கிடக்கும் நாடு, கனடா. சமஷ்டி அரசியல் முறைக்கு நல்ல சான்முக நீண்ட காலமாக விளங்கி வந்த நாடு, கனடா. இந்தப் பெருமைகளெல்லாம் எப்போது பொய்யாய்,பழங்கதையாய், கனவாய்ப் போயினவோ? கனடாவில் தமது எதிர்காலத்தை வெறும் கானலாக இப்போது கனடியர்கள் பார்த்துக் கலங்கி நிற்கின்றனரே வரலாறு காணுத கொடிய இருள் கனடாவை வந்து எவ்வாறு கெளவிக் கொண்ட தோ?
1867 இல் வட அமெரிக்காவிலுள்ள பல பிரித்தானிய குடியேற்றங்கள் ஒன்றிணைந்த போது, கனடா என்ற தனிநாடு தோன்றியது. எழுத்து வடிவிலிருந்த "பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம்" கனடாவின் முதலாவது அரசியற் சட்டமானது, கனடிய அரசியல் சட்டத்தின் எஞ்சிய பகுதி, எழுதப்படாத பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும், சம்பிரதாயங்களையும் உள்ளடக்கியதாகும். பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டத்தின்படி, கனடா பத்து மாநிலங்களையும் இரண்டு எல்லைப் பிரதேசங்களையும் கொண்ட ஒரு சமஷ்டி அரசுடைய நாடாகும். பொதுநலவாய அமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் இந்த நாட்டின் சம்பிரதாய தலைவி, பிரித்தானிய அரசியே. இவரது பிரதிநிதியான மகாதேசாதிபதி பெயரளவில் நாட்டின் தலைவராவர். தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே நாட்டின் மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க பிரதமர் ஆவார். பிரதமரால் நியமிக்கப்படும் அமைச்சர்களை உள்ளடக்கிய மந்திரிசபை, நாட்டினை நிர்வகிக்கும். சமஷ்டி அரசினது பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட 282 உறுப்பினரும், மேல் சபையான செனட்டில் நியமனம் பெறும் 112 உறுப்பினர்களும் இடம் பெறுவர். கனடாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வாறே ஒரு கவர்னரும்
123

Page 66
scoln 18.01.1991
மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரும் அவரால் நியமிக்கப்பட்ட மந்திரிசபையும் மாநிலத்துக்கென ஒதுக்கப்பட்ட நிர்வாகக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரச அங்கங்களாகும். சமஷ்டிப் பாராளுமன்ற முறைமைக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி, துரித வளர்ச்சியடைந்து, உலகில் தனிமதிப்புடன் விளங்கிய கனடாவில் இப்போது தேசிய ஒருமைப்பாடு, பொருளாதாரம், அரசு மீதான மக்களின் நம்பிக்கை என்பன கேள்விக்குறிகளாகிவிட்டன. 1871 இல் கனடிய கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்ட நாள் முதலாக இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், அரசியல் ஒழங்கமைப்புக்கும் தொடர்ந்து நெருக்கடிகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா, 1880 களில் ஒன்ராறியோ, இரணர்டு உலக யுத்தங்களுக்கிடைப்பட்ட காலத்திலும், எழுபதுக்களுக்குப் பின்னரும் கியுபெக் போன்ற மாநிலங்கள் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன. ஆளுல் கனடிய சமஷ்டி அரசியல் முறைக்குப் பங்கம் விளைவிக்க கூடியதாக, இன்று ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு பாதகமான சூழ்நிலை முன்னர் ஒரு போதும் இருந்ததில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. பிரெஞ்சு மாநிலமான கியுபெக் நீண்ட காலமாக சமஷ்டிக் கூட்டமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று வந்துள்ளது. 1989 ஜுன் மாதம் மீச் லேக் ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தமை எரிகின்ற பிரிவினை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது. கியுபெக் மாநிலத்தின் சம்மதமின்றி 1981 இல் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்ட சீர்திருத்தத்தில் மீண்டும் கியுபெக் மாநிலத்தை உள்ளெடுத்து, அதன் தனித்துவத்துக்கும் கலாசார பாதுகாப்புக்கும் அங்கீகாரம் வழங்க என ஐந்து திருத்தங்களுடன் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தமே இந்த மீச் லேக் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் மத்திய அரசிடமிருந்து கூடுதலான அதிகாரங்களைப் பெற்று மாநிலங்களுக்கு வழங்குவதுடன், கியுபெக் மாநிலத்துக்கு விசேட அந்தஸ்தையும் அளிக்கின்றது. கனடாவின் பத்து மாநிலங்களில் நியுபவுண்ட்லாந்து, மனிட்டோபா ஆகிய இரு மாநிலங்களும் கியுபெக் மாநிலத்துக்கு விசேட அந்தஸ்து வழங்குதல், அரசியல் சட்ட மாற்றங்களை மாநிலங்கள் வீட்டோ அதிகார மூலம் தடுத்தல், கூடுதலான அதிகாரங்களை மாநில அரசுகளிடம் குவித்தல் போன்ற காரணங்களைக் காட்டி அங்கீகரிக்க மறுத்ததால் ஒப்பந்தம் தோல்வியடைந்தது. இது கியுபெக் பிரிவினைவாதிகளின் வாய்க்கு மெல்லுவதற்கென அவல் கிடைத்தது போலாயிற் று. பிரிவினைக் கோஷம் அங்கு வலுப்பெற்றுவிட்டது. இன்றைய அரசாங்கத்திலிருந்து மீச் லேக் கருத்து வேற்றுமை காரணமாக, மந்திரிப் பதவி துறந்த லுரஷியன் புஷார்ட் ஆரம்பித்த புளொக் கியுபெக்வா, பிரிவினைவாதிகள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வளர்ந்து வருகிறது. கியுபெக் பிரிவது தொடர்பான அபிப் பிராயத்தைத் திரட்ட வென நியமிக்கப்பட்டுள்ள கம்போ கமிஷன், ஒன்றில் தனிநாட்டையோ
124

கனடா 18.01.1991
அல்லது மத்திய அரசின் அதிகாரங்கள் பலவற்றை கியுபெக் பெற்றுத் துார விலகி, கூடுதலான சுயாதிக் கமுள்ள மாநிலமாயிருத்தலையோ சிபார்சு செய்யும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இதே வேளை கனடாவின் நான்கு மேற்கு மாகாண முதலமைச்சர்களும் தமக்குள் கூட்டிய அரசியல் சட்ட சீர்திருத்த மகாநாடு இம்மாநிலங்களின் இன்றைய மனுேநிலைக்கு நல்ல உதாரணமாகும். இதனை இம்மேற்கு மாகாணங்களைப் பாதிக்கக் கூடிய, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் பிரதிபலிப்பு என் றே கூற வேணர் டும். இவ் விதமான கொள்கைகளாலும், மத்திய அரசின் தான் தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும் பாதிப்புக்குள்ளான மக்கள், அங்கு தோன்றிய புதிய பிரிவினைக் கட்சியான சீர்திருத்தக் கட்சிக்குப் பலத்த ஆதரவை வழங்கி வளர்த்து வருகிருரர்கள். அத்துடன் அத்திலாந்திக் பிரதேசத்தில் உள்ள கனடியர்களது நலன்களை மத்திய அரசும் ஏனைய பிரதேசக் கனடியர்களும் புறக்கணிப்பதால் அவர்களது மனங்களிலும் தேசிய ஒருமைப்பாடு மீதான நாட்டம் குறைந்து போயுள்ளது. இவ் விதமாகக் கனடாவின் மாநிலங்களுக்கிடையில் இருந்த உறவுகள் முறிந்து, நாடு எக்கணமும் பல கூறுகளாகத் துண்டுபடலாம் என்ற ஆபத்தான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாரத்திலிருக்கும் கொண் சர்வேட்டிவ் அரசாங்கம், மக்களின் அதிருப்தியைத் தேடிக் கொள்வதற்கு, அமெரிக்காவுடன் செய்து கொண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அடுத்த முக்கிய காரணம். நீண்ட கால பலாபலன்களைக் கருத்தில் கொண்டு பிரதமர் மல்ருேனியின் அரசாங்கம் அமெரிக்காவுடன் இவ்வொப்பந்தத்தைச் செய்து கொண்ட போதிலும் உடனடி விளைவுகள் கனடிய மக்களைப் பெரிதும் பாதித்துள்ளதால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பாரிய தொழில் நிறுவனங்கள், கம்பனிகள் மூடப்பட்டு விட்டன; பல அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. வேலையின்மை, வருமானமின்மை என்பன அதிகரிக்க, 55% மக்கள் இவ்வொப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேணர் டும் என வற்புறுத்துகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா கனடா மெக்சிக்கோ ஆகிய நாடுகளடங்கிய மும்முனைச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றிய முயற்சிகள் மக்களை மென்மேலும் பயமுறுத்துகின்றன.
கடந்த வருட நடுப்பகுதியில் கியுபெக் மாநிலத்திலுள்ள ஒகாவில் செவ்விந்தியர்களுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நிகழ்ந்த பிரச்சனையால், மனித உரிமைகளுக்காக உலகெங்கும் குரல் கொடுத்த கனடா, தனது நாட்டிலுள்ள செவ்விந்தியர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாகக் கெட்ட பெயர் வாங்கிக் கட்டிக் கொண்டது. நிறவேறுபாடுகளுக்கும் இன, மத ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய கனடா, தனது நாட்டு ஆதிவாசிகளின் உரிமைகளை உதாசீனம் செய்வதாக உலக நாடுகள் குற்றம் சாட்டின. இந்த நாட்டின் முதல்
125

Page 67
|கனடா 18.01.1991
இனத்தவர்க்கும் ஏனையோர்க்கும் இடையே வெடித்துக் கிளம்பிய இனக்குரோத சம்பவங்களும் கனடாவின் பெயருக்கு உலக அரங்கில் களங்கத்தைத் தேடிக் கொடுத்து விட்டன.
முன்னர் ஆட்சியிலிருந்த லிபரல் அரசாங்கம், கண்ைணை முடியவாறு செய்த செலவினங்களின் பொருளாதார பாதிப்புகளை ஈடு செய்ய என இன்றைய அரசாங்கம் ஜி.எஸ்.ரி எனப்படும் பொருட்கள் சேவைகள் வரியை இவி வருடம் முதலாம் திகதியிலிருந்து அறவிடத் தொடங்கியது. ஏற்கனவே அரசாங்கத்தின் வரிப்பளுவினுல் நொந்து போயுள்ள மக்கள், இந்த ஜி.எஸ்.ரியிஞல் மேலும் பாதிப்புக்குள்ளாயினர். 1984 இல் ஒரு சாதாரண கனடியன் அரசாங்கத்துக்குச் செலுத்திய வரியை விட 1990 இல் ஆயிரம் டொலர் கூடுதலாகச் செலுத்தியுள்ளான் என்ற தகவல், வரி எவ்வளவு வேகமாகக் கனடியனின் கழுத்தை நெரிக்கிறது என்பதற்குத் தக்க சான்ருகும். அரசியல் சட்ட ஒருமைப்பாடின்மை, வருமானச் சமமின்மை போன்ற பல பிரச்சனைகளில் தமக்குட் பிளவுபட்டு நிற்கும் கனடிய மாநிலங்களும் மக்களும், வரிச்சுமையை எதிர்ப்பதிலும், கொன்சர்வேட்டிவ் கட்சியை பதவியிறக்குவதிலும் மட்டும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். பிரித்தானியாவில் சென்ற வருடம் அறவிடப்பட்ட தலாவரி தான் அங்கு நிகழ்ந்த கலவரங்களுக்கும் தச்சரின் வீழ்ச்சிக்கும் மூலகாரணம். இவை கனடாவிலும் நிகழ மாட்டா எனச் சொல்வதற்கில்லை.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை காரணமாக, இப்போது நாடு பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. கம்பனிகள், தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன: வங்குருேத்துப் பிரகடனங்கள் தினமும் அதிகரிக்கின்றன: பல்லாயிரக்கணக்கானுேர் வேலையிழந்து போயினர்; அன்ருடம் உணவுக்கோ உடைக்கோ உறைவிடத்துக்கோ வழியில்லாது அவதிப்படுவோர் எணர்ணிக்கை அதிகரித்துக் கொணர் டே போகின்றது. பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்கெனி அரசாங்கம் சேவைகளைக் குறைத்து வரிவருமானங்களை உயர்த்தும் பொருட்டு, ஒரு புறம் ஜி.எஸ்.ரி அறவிடப்பட, மறுபுறம் 1989 இல் வியா றெயில் சேவை நிறுத்தப்பட்டது. இதே போல கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பல கிளை நிலையங்கள் மூடப்படடன; இதனுல் ஆயிரக்கணக்கானேர் வேலையிழந்தனர். ஜி.எஸ் .ரி ம சோதாவை சட்டமாக் கவிடாது தடுத் து நிறுத்துவதற்கென செனட் சபையில் இடம் பெற்ற கேலிக்கூத்துகளும், மகாராணியின் சம்மதத்துடன் பிரதமர் 12 புதிய செனட்டர்களை நியமித்தமையும் கனடிய ஜனநாயக பாரம்பரியத்துக்கு ஊறு விளைவித்த சம்பவங்களாக மக்கள் எணர்ணுகின்றனர். மேலும் கனடாவினர் வெளிநாட்டுக் கொள்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் இப்போது மேலோங்கி நிற்பதாகவும், வளைகுடா நெருக்கடியில் கனடிய படையினர்
126

| கனடா 18.01.1991
பங்குபற்றுவது தொடர்பாக அரசு எடுத்த முடிவு இதனை மேலும் உறுதிப்படுத்துவதாகவும் மக்கள் கருதுகின்றனர். இவ்வாருக, கனடா தேசம் தனது தனித்துவத்தையும், பெருமையையும், புகழையும் பறிகொடுத்து விட்டுப் பாதை தவறிப் போய்க் கொண்டிருப்பதால், எதிர்காலம் வெறும் சூனியமாகத் தோன்றி ஒவ்வொரு கனடியனையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
கனடியனுக வாழ்வதில் இருந்த பெருமையை மக்கள் இப்போது இழந்து போய் விட்டனர். இன்றைய அரசு மீதும், அரசியல்வாதிகள் மீதும் என்றுமில்லாதளவு அதிருப்தியையும் அவநம்பிக்கையையும் இபபோதுமக்கள் கொண்டுள்ளனர். மக்கள் மனங்களில் அரும்பத் தொடங்கிவிட்ட இவ்வாறன வெறுப்புகளை முளையிலேயே கிள்ளி விடத்தவறும் பட்சத்தில், பாரிய கெடுதிகள் தோன்றுவது தவிர்க்க முடியாததாகி விடலாம். தேர்தல் காலங்களில் மட்டும் ஜனநாயகவாதிகளாகத் தங்களைக் காண்பிக்கும் அரசியல்வாதிகள், இரு தேர்தல்களுக்கிடைப்பட்ட காலங்களில் சர்வாதிகாரிகளாகித் தான் தோன்றித்தனமாகச் செயற்படும் தன்மை விரைவில் தவிர்க்கப்பட வேணர்டும். அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முக்கிய தீர்மானத்திற்கும், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமன்றி,மக்களும் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பினை வழங்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளுக்கென, தமது தொகுதி மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டும். கட்சியின் சட்டதிட்டங்களை விட, மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே இவர்கள் பாராளுமன்றத்தில் தமது வாக்குகளை அளிக்க முன் வரவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் கழிக்கும் நேரத்தையும் நாட்களையும் அதிகரிக்கும் பொருட்டு, பாராளுமன்றக் கூட்டத் தொடர்களைக் குறைத்து,தொகுதிகளுக்குச் செல்ல வாய்ப்பளிக்க வேண்டும். பல நூறு நாடுகளிலிருந்து வந்த பலநூறு மொழி, மத, இன, நிற, கலை, கலாசார வேறுபாடுகளையும் கொணர்ட மக்கள் வாழும் கனடாவில், உணர்மையான தேசப் பற்றினைக் கட்டி எழுப்பி, அதன் அத்திவாரத்தில் இந்த நாட்டை நல்வழிப்படுத்துவது சுலபமான காரியம் அல்ல. ஆயினும் வகையற்று வந்தவர்களுக்கு வாழ்வளித்த இந்த நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது தனது கடமை என ஒவ்வொரு கனடியனும் உடனடியாக உணர வேண்டும். இல்லையேல், கதியற்று வந்தவர்க்கெல்லாம் கைகொடுத்து உதவிய கனடா தேசம் நிச்சயம் ஒருநாள் "கடலில் மிதந்து காணுமற் போன கலங்கரை விளக்கம்” ஆகி விடும்.

Page 68
(சோவியத் யூனியன் 25. O1. 1991
வல்லரசு ஒன்று வலுவிழந்து போகிறது
ைெளகுடா நெருக்கடி கொதிநிலையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். உலக நாடுகள் தமது முகங்களைப் பீதியுடன் வளைகுடாவின் திசையை நோக்கித் திருப்பி வைத்துக் கொண்டிருந்த வேளை- இந்த நூற்ருண்டில் இன்னெரு உலக யுத்தமா என உலகம் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த தருணம்- சோவியத் யூனியனில் அந்தக் கொலைகள் விழுந்தன ஜனவரி 13 ஞாயிறு அன்று, சோவியத் லித்துவேனியாவுக்குக் கதிரவன் தனது கதிர்வீசும் முகத்தில் கரிபூசிக் கொண்டு புறப்பட்டு வந்தாஞே? அதனுல் தான் அன்றைய தினம் லித்துவேனியர்களுக்கு ஒரு "கறுப்பு ஞாயிறு" ஆகப் பிறந்ததோ? வீரசுதந்திரம் வேண்டி நின்று குரலெழுப்பிய 15 மக்களின் உயிர்களைக் குடித்து விட்ட அந்த "இருண்ட ஞாயிறு" அன்று விடியாதிருந்திருக்கக் கூடாதோ? கிரெம்ளின் ஏவி விட்ட கனரகத் தாங்கிகளின் இராட்சத சில்லுகளுக்கிடையே விடுதலை வீரர்களை நசித்து நெரித்துக் கொணி ற அந்தக் கரிய ஞாயிறு, லித்துவேனியாவின் சுதந்திர வேட்கையை வேரோடு அழித்து விட்டதோ? 230 அப்பாவி மக்களைப் படுகாயப்படுத்திய அந்த இருள் மேகம் சூழ்ந்த நாள், மொஸ்கோ கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைக்கு அடிபணிந்து போய் விட்டதோ? புதிய சோவியத் யூனியனின் மனச்சாட்சிக்குச் சவால் விடுத்த அந்தப் படுகொலைச் சம்பவம், சர்வாதிகாரி ஸ்டாலின் இன்னமும் இறக்கவில்லை என்பதை உலகுக்குப் பறைசாற்றுகின்றதோ? துப்பாக்கிகளாலும்,
 

சோவியத் யூனியன் 25.01.1991
தாங்கிகளாலும், பம்பர்களாலும், ஷெல்களாலும் மக்கள் எழுச்சியை மழுங்கடித்து விட முடியாது என்ற வரலாறு கண்ட உண்மையை சோவியத் அதிகாரம் உணர்மையில் மறந்து விட்டதோ? அல்லது மறந்தது போலப் பாசாங்கு செய்கிறதோ? வித்துவேனியாவில் இன்னெரு "தியனன்மென் சதுக்க எழுச்சி அழிப்பு” எப்படி நிகழ்ந்ததோ? ஏன் நிகழ்ந்ததோ? யுத்த மேகங்களால் முழு உலகும் சூழப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அன்று சோவியத் யூனியனில் நடந்து போன சம்பவங்களை இட்டு, உலக மக்கள் மனங்களில் இது போன்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவாறு தலைதுாக்கி நிற்கின்றன.
1940 இல் நாஸி ஜேர்மனி, பிரான்சுக்கு எதிராகப் போர் தொடுத்த போது சோவியத் ரஷ்யா அருகிலிருந்த போல்ரிக் அரசின் சுதந்திரத்தைப் பறித்தெடுத்தது. அன்று சோவியத்தின் பிடிக்குள் அகப்பட்ட போல்ரிக் நாடு, லித்துவேனியா, லத்வியா, எஸ்ரோனியா ஆகிய மூன்று குடியரசுகளாகப் பிரிக்கப்பட்டு, சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்டது. இந்த முன்று குடியரசுகளும் இன்று சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து, சுதந்திரமாகச் செயற்படுவதற்கு விருப்பம் கொண்டு அதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இன்றைய சோவியத் ஜனதிபதி மிகைல் கொர்பச்சேவ் கொண்டு வந்த சீர்திருத்தக் கொள்கைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிச நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை மீதான விருப்புக்கு வித்திட்டு, கிழக்கு ஐரோப்பாவின் வரலாற்றை மாற்றி அமைத்தமை உலகறிந்த சமாச்சாரம். சோவியத் யூனியனில் இருந்து மேற்கு நாடுகளைப் பார்ப்பதற்கென சாளரமாக அமைந்திருந்த போல் டிக் குடியரசுகளிலும் இது போன்ற ஜனநாயக சீர்திருத்த நாட்டங்கள் ஏற்பட்டமை புதினமல்ல. இவ்வாருன சீர்திருத்த வேட்கையினல் உந்தப்பட்டு, மொஸ்கோவிலிருந்து வெளியேறி, 1940க்கு முன்னர் கொண்டிருந்த சுயாதிக்கத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளும் போராட்டத்தில் லித்துவேனியா குடியரசு முன்னணி வகித்தது. இதன் விளைவாக லித்துவேனியாவில் 1990 மார்ச்சில் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் விடுதலை வேண்டி முன்னின்று போரிட்ட பெண்மணியான புறுன் ஸ்கீன் தலைமையிலான கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மொஸ்கோ சார்பான கம்யூனிஸ்டுகள் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்றுக் கொள்வதையே முக்கிய கொள்கையாகக் கொண்டு, பிரதமர் பதவியைப் பிடித்துக் கொண்ட புறுன் ஸ்கீனின் அரசாங்கம் மொஸ்கோவுக்குத் தலையிடியாக இருந்து வந்துள்ளது. சுதந்திரம் கோரி லித்துவேனியர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்; ஊர்வலங்களில் சென்றனர்; வேலை நிறுத்தங்கள் செய்தனர்; சோவியத் கட்டுப்பாடுகளையும் தலையீடுகளையும் வெறுத்தனர். இவ்வாருன ஒரு பதட்டமான சூழ்நிலையில் தான் இவ்வருடம் ஜனவரி 9 இல், இக்குடியரசின் பிரதமான புறுண் ஸ்கீன், தனது பதவியை ராஜிஞமாச் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி அவரது அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. உணவுப் பொருட்களின் விலைகளை
129

Page 69
சோவியத் யூனியன் 25.01.1991
உயர்த்துதல் தொடர்பாக அவரது மந்திரிசபை கொண்டு வந்த மசோதா ஒன்று அக் குடியரசினர் பாராளுமன்றத் திஞல் நிராகரிக்கப்பட்டதஞல் புறுண் ஸ்கீன் பதவி விலக வேண்டி ஏற்பட்டது. இவர் பதவி விலகி நான்கு நாட்களின் பின்பு தான் அந்தச் சோகம் லித்துவேனியாவில் நிகழ்ந்தது.
ஜனவரி 13ம் திகதி லித்துவேனியாவின் சுதந்திரத்தை வேண்டிப் போராடும் மக்கள் ஊர்வலமாக வந்து, அக்குடியரசின் வாஞெலி, தொலைக்காட்சி நிலையத்தை முற்றுகையிட்டிருந்த போது, "பிளாக் பெறே" எனப்படும் சோவியத் இராணுவம் அங்கு அனுப்பப்பட்டிருந்தது. மக்கள் கொந்தளிப்பை அடக்குவதற்காக துப்பாக்கிகளுடனும் தாங்கிகளுடனும் இராணுவம் மக்கள் வெள்ளத்தை நெருங்கியது. ஆயுதங்களைக் காண்பித்து இராணுவம் மக்களை எச்சரிக்கை செய்தது. மக்கள் அசைய மறுத்தனர்; கூக்குரல் இட்டனர்; கோஷம் எழுப்பினர்; இராணுவத்தைத் தூற்றித் திரும்பிப் போவென அறைகூவினர். ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பமான அன்றைய தினம், அரச இயந்திரமான இராணுவத்தினர் அராஜகத்தில் வந்து முடிந்தது. இராணுவம் தனது வேட்டுக்களைத் தீர்க்கத் தொடங்கிய போது, மக்கள் சிதறி ஓடினர். எதிர்த்து நின்றவர்கள் தமது உயிர்களை இழந்தனர். ஈற்றில் தகவல் நிலையத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. உயிரிழந்த 15 பேரில், தாங்கியால் நெரித்துக் கொல்லப்பட்டோரும் உள்ளனர். ஐந்து நாட்களின் பின்னர் இடம் பெற்ற அமைதியான மரண ஊர்வலத்தில் சுமார் அரை மில்லியன் மக்கள் அஞ்சலிக்காக அணிவகுத்து நின்றனர். லித்துவேனியாவின் தலைநகரான வில்னியஸ் நகர், இரண்டு கிலோமீட்டர் நீளமான ஊர்வலத்தில் தனது வரலாற்றில் மறக்கமுடியாத சோக நாளாக, சோபை இழந்து போய் ஊர்ந்து சென்றது. காரியாலயங்கள், கடைகள், கட்டிடங்கள் யாவும் அடித்து மூடப்பட்ட நிலையில், கறுப்புக் கொடிகளைச் சுமந்து நின்றன. உயிரை அர்ப்பணித்த 15 தியாகிகளில் ஒருவராகக் காணப் பட்ட பெணி மணியொருத்தியினர் சமாதியில் "லித்துவேனியாவின் சுதந்திரத்தைக் காப்பதற்காய், நீ கல்லறை, சென்ருய்" என்று பொறிக்கப்பட்டிருந்த வாசகம், ஒவ்வொரு லித்துவேனியனது மனதிலும் "பூரண சுதந்திரம் இனிமேலும் புறக் கணிக்கப்படக் கூடாது" என்பதை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.
அன்று லித்துவேனியாவில் சோவியத் இராணுவம் நடாத்திய வெறியாட்டத்துக்கு எதிராக நாடு பூராவும் கண்டனங்கள் எழுந்தன. "இரத்தக் கறை படிந்த ஞாயிறு" என்று "மொஸ்கோ நியூஸ்" எழுதியிருந்தது. "சோவியத் மனச்சாட்சிக்குச் சவாலான சம்பவம்” எனக் கண்டித்து, அது பற்றி அறிக்கை விடத் தாமதித்த ஜனுதிபதியைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்த சோவியத்தின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான டாஸ், "மக்களை யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும் இராணுவ வெறியாட்டம்" என அன்றைய நிகழ்வை விமர்சித்துள்ளது. சோவியத் யூனியனில் மிகப் பெரிய குடியரசான ரஷ்யாவின் தலைவரும், கொர்பச் சேவின்
130

(சோவியத் யூனியன் 25.01.1991
அரசியல் சத்துராதியுமான போரிஸ் யெல் ஸ்ரின் "சோவியத் யூனியனில் தொடரப் போகின்ற அடக்குமுறைகளின் ஆரம்ப அங்கம் தான் இந்த லித்துவேனிய சம்பவம்” எனக் கூறியுள்ளார். லித்துவேனியாவில் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியாது என முதலில் கூறிச் சமாளிக்க முயனர்ற கொர்பச் சேவ் , பின்னர் தனி அதிருப்தியையும் வருத்தத்தையும் கூறத் தவறவில்லை. அதே வேளை லித்துவேனியா போன்று எ ஸ்தோனியா, லத்வியா ஆகிய ஏனைய இரு போல்ரிக் குடியரசுகளுக்கும் மொல்டோவியா, ஜோர்ஜியா, ஆர்மீனியா, உக்ரெயின் ஆகிய மாநிலங்களுக்கும் "பிளாக் பெறே" இராணுவம் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. லத்வியாவில் இன்று புதிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக மேலும் செய்திகள் கூறுகின்றன. ஏனைய இம்மாநிலங்கள் யாவற்றிலும் இது போன்ற நெருக்கடிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மத்திய அரசை எதிர்ப்பவர்களையும், சோவியத் இராணுவத்திலிருந்து விலகியவர்களையும் தேடி வலை போடுவதற்காகவும், வன்செயல்கள், ஆர்ப்பாட்டங்கள், தேசிய சொத்துக்கள் சேதமாக்கப்படுதல் போன்றவற்றைத் தடை செய்யும் பொருட்டும் தான் இராணுவம் இங்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் காரணம் கூறும் கொர்பச் சேவ், பிரிவினைவாதிகளைப் பெரிதும் கண்டித்துக் குறைகூறுகின்ருர். மேலும் லித்துவேனியாவில் வாழும் பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் போன்ற ஏனைய இனத்தவர்கள், தமக்கு அங்கு இழைக்கப்படும் இனப்பாகுபாடுகளைத் தடுக்கும் பொருட்டும், நாடு பிரிவதை எதிர்த்தும், தமது குடியரசில் மொஸ்கோவின் கூடுதலான கட்டுப்பாட்டை வற்புறுத்தியும் , ஊர்வலங்கள் சென்றுள்ளனர்; வேலைநிறுத்தங்கள் செய்துள்ளனர். இவை ஏனைய மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன. ஜோர்ஜியா குடியரசில், கிறிஸ்தவ முஸ்லிம் இனக்கலவரங்களில் பல உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாருகக் கலவரங்களைத் தடுப்பதற்காகவும், சுதந்திரம் வேணர்டிப் போரிடுவோரது வன்செயல்களில் இருந்து மக்களை, கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பாதுகாப்பதற்காகவும், சோவியத் யூனியன் துண்டாடப்படுவதைத் தடுப்பதற்காகவுமே இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டி ஏற்படுகின்றது என்று கொர்பாச்சேவ் கூறும் காரணத்தையும் மறுப்பதற்கில்லை. ஆயினும் தீவிர கம்யூனிஸ்டுகளின் கெடுபிடி வழிக்குள் மீண்டும் நாடு இட்டுச் செல்லப்படுவதாக நிலவும் கருத்துக்கு நிருபணமாக, லித்துவேனியாவில் இப்போது கம்யூனிச ஆதரவான "தேசிய இரட்சணியக் குழு தான் அங்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. லத்வியாவிலும் இதே கமிட்டி தான் இப்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதாக அறியப்படுகிறது. முடிவாக சகல குடியரசுகளிலும் இராணுவம் அனுப்பப்பட்டு மக்களது சுதந்திர எழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் கம்யூனிஸ்டுகளே பின்னணியில் இருந்து செயற்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமலில்லை.
லித்து வேனியாவில் இடம் பெற்ற இராணுவ அடக்குமுறையின் விளைவாக சோவியத்-அமெரிக்க உறவிலும்
-31

Page 70
(சோவியத் யூனியன் 25.01.1991
ஊடல் சிறிதளவு ஏற்பட்டுள்ளது. சோவியத் யூனியனுக்கு வழங்கவிருந்த உதவிகளை அமெரிக்க காங்கிரஸ் தடுத்துள்ளது. மேலும் பெப்ரவரி 13 இல் மொஸ்கோவில் நடைபெற இருக்கும் சோவியத்-அமெரிக்க உச்சி மாநாடு பற்றி சந்தேகங்கள் இப்போது எழுந்துள்ளன. ஐரோப்பிய சமூகம் தன் கணிடனத்தைத் தெரிவித்ததோடு சோவியத்துக்கான உதவிகளை நிறுத்தியுள்ளது. கனடாவும் இதே வழியில் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. லித்துவேனியா தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு கூட்டுவது பற்றி மேற்கு நாடுகள் விடுத்த ஆலோசனையை, கொர்பச்சேவ் நிராகரித்து விட்டார். ஆயினும் சொந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து பலத் த கனன் டனத்தையும் விமர்சனத்தையும் இராணுவ நடவடிக்கையால் சம்பாதித்துக் கொணர் ட கொர்பச் சேவ் , சற்றேனும் எதிர்பாராத நபர் ஒருவரிடமிருந்து ஆதரவான வார்த்தைகளைப் பெற்றிருக்கிருர், "சோவியத் யூனியனின் பூரண இறைமையைச் சிதைய விடாமல் கட்டிக் காக்கும் பொருட்டு, வன்செயல்களும் அராஜகமும் மலிந்த நிலையில், ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட, இது போன்ற கடுமையான நடவடிக்கை அவசியமே " என முன் ஞள் வெளிநாட்டமைச்சர் எட்வார்ட் ஷெவார்ட்நாஸ் கூறியுள்ளமை கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
சோவியத் யூனியனில் அடக்குமுறை அரசு அடியோடு அழிந்துவிட்டது என்பதில் மேற்கு நாடுகளுக்கு இன்னமும் சந்தேகம் உணர்டு. லித்து வேனியாவிலும் ஏனைய குடியரசுகளிலும் , கம்யூனிஸ் டுகளினதும் அவர்களது கருவியாயியங்கும் இராணுவத்தினதும் ஆதிக்கம் இன்னமும் அழியாதிருத்தல் இது போன்ற சந்தேகத்தை உறுதிப் படுத்துகின்றது. உலக சமாதானத்துக்கென 1990 நோபல் பரிசைப் பெற்றவரான கொர்பச் சேவ், தனது நாட்டில் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு, சர்வாதிகாரியாகி விட முற்படுகிருர் என்று உலக நாடுகளும் அவரது உள்ளுர் எதிரிகளும் பழி சுமத்துகின்றனர். ஆயினும் அவரை அரசியற் சங்கையீனத்துக்கு இட்டுச் சென்றது, அவரது சீர்திருத்தக் கொள்கைதான் என்பதைப் பலரும் உணரத் தவறி விடுகின்றனர். பெரஸ் ரோய்க்கா என்ற பொருளாதாரச் சீர்திருத்தத்தை, கிளாஸ்நொஸ்ட் என்ற திறந்த கொள்கை முந்திக் கொண்டுள்ளதால் பொருளாதார மீட்சிக்கு முன்னர் அரசியல் விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுக் கொண்டுள்ளது. விளைவாக, இக்கொள்கைகளின் சூத்திரதாரியான கொர்பாச்சேவின் அரசியல் வாழ்வே நிச்சயமற்றதாகி விட்டது. இதனுல் சோவியத் யூனியனின் எதிர்காலம் பற்றிய சந்தேகம் எல்லோரது மனங்களிலும் இன்று ஏற்பட்டு விட்டது. இதனுல் தான் சென்ற வாரம் சோவியத் யூனியன் தொலைக்காட்சியின் காலநிலை அறிவிப்பாளர் ஒருவர் இவ்வாறு சிலேடையாகக் கூறினரோ என்னவோ தெரியவில்லை.
"இதம் தரும் குளிரான காலநிலை இத்துடன் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. எங்களை நோக்கிக் கடுங்குளிரான உறை நிலை ஒன்று காத்திருக்கின்றது ”
132

சீன 01.02.1991
சுதந்திரத்தின் பிறப்பும் இறப்பும்
துப்பாக்கி முனையில் தானே!
கினரக பீரங்கிகள் பொருத்தப்பட்ட கவச வண்டிகள் அந்த இளைஞனது மனத்துணிவின் முன்னல் ஸ்தம்பித்து நின்ற காட்சி, இப்போதும் எங்கள் கண்களில் நிழலாடுகின்றது. "மனுேதிடம் மிக்க ஒரே ஒரு மனிதன் போதும், தனது அணியினைப் பெரும்பான்மை ஆக்கிவிடுவதற்கு" என விதந்துரைக்கக் காரணமாயிருந்த அந்த சீனத்து வாலிபனின் மன வைராக்கியம் எங்களை மெய் சிலிர்க்க வைக்கின்றது. 1989 ஜுன் மாதம் சீனத் தலைநகரான பீஜிங்கில் உள்ள தியனன்மெண் சதுக்கத்தில் திரண்டிருந்த மாணவர்களையும் மக்களையும் அச்சுறுத்தி அடக்கி ஒடுக்குவதற்கென வீதியில் அணிவகுத்து வந்த இராணுவ தாங்கிகளுக்கு முன்னுல், தனியணுக நெஞ்சு நிமிர்த்தி நின்று, தடுத்து நிறுத்திய அந்தப் போராளியின் தீரத்தை அகில உலகமும் பார்த்து அதிசயித்து நின்றது. ஜனநாயக சீர்திருத்தம் வேண்டிப் போர்க் கொடி தூக்கிய மக்களது மனத்துணிச்சலின் குறியீடாக விஸ்வரூபம் எடுத்துநின்ற அந்த மாவீரனின் நெஞ்சழுத்தத்திற்கு முன்ஞல், முழு உலகும் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்திக் கொண்டது. இந்தப் பெருமிதங்களின் இதமான நினைவுகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஜுன்மாதம் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சீன வரலாற்றில் ஓர் இரத்தக்கறை படிந்த இருனர். ஞாயிருக" இடம் பிடித்துக் கொண்டது. "புதிய ஜனநாயக மாற்றங்களை நாட்டு நிர்வாகத்தில் புகுத்தும் பொருட்டு, மாணவர்களுடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" எனக் கோரி, இரண்டு மாதங்களாக இடம் பெற்று வந்த மாணவ எழுச்சிப் போராட்டத்தை
133

Page 71
|é@ 01.02.1991
டெங் சியாவோ பிங் தலைமையிலான அரசாங்கம், தனது இராணுவ இயந்திரத்தினுல் நெரித்துக் கொன்றழித்தது. மாணவர்களால் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னர் அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக வந்த அறிவுஜீவிகளையும், சாதாரண பொதுமக்களையும் உள்ளடக்கிய உணர்ணுவிரதம், ஊர்வலம், வேலைநிறுத்தம் என்பன எழுச்சிப் போராட்டமாக எம்பிக் கொதித்த போது, அதனை ஈவிரக்கமற்ற முறையில் இராணுவம் நசித்துக் கொன்றழித்ததால் ஏற்பட்ட களங்கத்தினைச் சீன அரசு, போராளிகளின் இரத்த வெள்ளத்தில் கழுவித் துடைத்து அகற்றிக் கொண்டது. சோவியத் யூனியனின் சில குடியரசுகளிலும், போலந்து தேசத்திலும், ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிச இரும்புக் கதவுகள் உடைத்தெறியப்பட்டுள்ள போதிலும் சீனுவில் மட்டும் இது எப்படித் தோல்வி அடைந்தது? இன்று ஏறக்குறைய சகல கம்யூனிச அரசுகளும் ஜனநாயக எழுச்சிக்கு முன்ஞல் தமது அழுங்குப்பிடியைத் தளர்த்திக் கொண்டுள்ள போதிலும் சீனுவில் மட்டும் இன்னுமேன் இது சாத்தியமாகவில்லை?
உலகிலேயே மிகக் கூடிய சனத் தொகையைக் கொண்ட நாடு, சீஞ. நீண்ட காலமாக பல அரச பரம்பரையினரால் மாறி மாறி ஆளப்பட்டு வந்த சீளுறவில் கடைசியாக மஞ்சூஸ் எனப்படும் அரச வம்சம் ஆட்சி செலுத்திவந்தது. மஞ்சூஸ் அரச பரம்பரையின் ஆட்சி 1912 இல் அஸ்தமனமானதைத் தொடர்ந்து, நாடு தேசியவாதிகளின் கைகளைச் சென்றடைந்தது. 1928இல் குஒமின்ராங் எனும் கட்சியைச் சேர்ந்த சியாங் கைஷெக் அந்த நாட்டின் தலைவராஞர். 1937-45 காலப்பகுதியில் ஜப்பானுடன் நிகழ்ந்த யுத்தத்தின் பின்னர், சீன அரசாங்கத்தினருக்கும் அங்கு மக்கள் மத்தியில் செல்வாக்கினைப் பெற்று வளர்ச்சியடைந்து வந்த கம்யூனிஸ்டுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இம்முரண்பாடுகளின் குழந்தையாக, 1946 இல் புதியதொரு அரசியல் சட்டம் சீனவில் பிறந்தது. இப் புதிய அரசியலமைப்புக்கமைய ஒரு புதிய தேசிய சபை 1947 இல் தெரிவாகியது. கம்யூனிஸ்டுகள் ஆட்சிப்பதவியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததஞல் பீதியடைந்த சியாங் கைஷெக், தனது பதவியை ராஜிஞமாச் செய்து கொண்டார். தொடர்ந்து இதே ஆண்டில் மாசேதுங் தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் நாட்டினைக் கொண்டு வந்து, சீனுவை ஒரு கம்யூனிச நாடாக உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்.
மாசேதுங் தலைமையின் கீழ் சீனுவில் கம்யூனிச ஆட்சி உதயாமானபோது, சோவியத் யூனியனுக்கும் சீளுவுக்கும் இடையே இறுக்கமான சகோதர நேய உறவு ஏற்படலாயிற்று. இதஞல் 1950களின் ஆரம்பத்தில் பரஸ்பர உதவிகளையும் நல்லுறவுகளையும் உள்ளடக்கிய 30 வருட ஒப்பந்தம் ஒன்றை இரு நாடுகளும் எழுதி எடுத்துக் கொண்டன. ஆயினும் இந்த உறவின் ஆயுள் அதிக காலம் நீடிக்கவில்லை. 1959 இல் சோவியத் தலைவர் நிகிரா குருக்ஷேவ், அணுவாயுத உலக யுத்தத்தை தடுப்பதற்கென அமெரிக்காவுடன்
134

சீனு 01.02.1991
"இணக்கநிலை ஒப்பந்தத்தினைச் செய்ய முடிவு எடுத்ததை எதிர்த்த சீனத்தலைவர் மாவோ, சோவியத் யூனியனுடஞன உறவை முறித்துக் கொண்டார். அமெரிக்காவை ஒரு “காகிதப்புலி’ எனக் கடுமையாகக் கண்ைடித்த மாவோ, தனது கலாசாரப் புரட்சி தொடர்பான சித்தாந்த முரண்பாடுகளாலும் எல்லைப்பிரச்சனைகளாலும் சோவியத் யூனியனை விட்டுத் தூர விலகிச் சென்றதோடல்லாமல் எதிர்க்கவும் துணிந்தார். குருக்ஷேவின் வீழ்ச்சியின் பின்னர், பிரெஷ்னேவ் சோவியத் யூனியன் தலைமைப்பீடத்தைப் பெற்றிருந்த போது, 1964 இல் உடைந்து போயிருந்த சோவியத்-சீன உறவுக்கு ஒட்டுப் போடும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது. உலகின் மூண்ருவது வல்லரசாக வளர்ச்சியடைந்த சீனுவும், இன்ஞெரு வல்லரசான சோவியத் யூனியனும், 1969 இல் தமது எல்லைகளில் இராணுவத்தை குவித்து, யுத்தத்துக்கு தயாராகி நின்றன. இதே வேளை சோவியத் யூனியனின் அபரிமிதமான ஆயுத வளர்ச்சியைக் கண்ட சீனுவும் அமெரிக்காவும் தமக்குள் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதில் நாட்டங் கொண்டன. சீளுவில் முதன் முதலாக கம்யூனிச ஆட்சி மலர்ந்த போது அதை அங்கீகரிக்க மறுத்த அமெரிக்கா, 1972 இல் 'பிங் பொங்' இராஜதந்திரத்தை ஆரம்பமாகக் கொண்டு, ஜஞதிபதி நிக்ஸனை சீனுவுக்கு அனுப்பிப் புதிய நட்புப்பாலத்தை அமைத்துக் கொண்டது. 1976 இல் மாவோ இறந்தபின் அமெரிக்க சின சகவாசம் மேலும் வலுவடைந்தது. 1978இல் அமெரிக்காவுக்கும் சீனுவுக்கும் இடையில் முழு அளவிலான இராஜதந்திரத் தொடர்புகளும் பலவித ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இது இவ்வாறிருக்க, மிக நீண்ட காலமாக சோவியத் யூனியனுக்கும் சீனுவுக்கும் இடையில் இருந்து வந்த கசப்புணர்வை அண்மையில் தீர்த்து வைத்தவர், இன்றைய சோவியத் ஜஞதிபதி கொர்பச்சேவ் தான். 1989 இல் மாணவர் எழுச்சிப் போராட்டம் ஆரம்பமான காலப்பகுதியில் கொர்பச்சேவ் சீனுவுக்கு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்துடன் இருநாடுகளுக்கும் இடையே இருந்து வந்த நீண்ட நாள் குரோதம் தணிந்து கொண்டது. இவ்வாருக உலக அரசியல் போக்கிலும், உலக நாடுகள் சீனுவுடன் கொண்டிருந்த உறவிலும், பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கடந்த தசாப்தத்தில், பல நாடுகளிலும் வெற்றியளித்த ஜனநாயக எழுச்சிகள் சீனுவில் மட்டும் எப்படித் தோல்வியைத் தழுவிக் கொண்டன?
மாக்சிய-லெனினிசக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் சோவியத் யூனியனை விட அதி தீவிரப் போக்கினைக் கைக் கொண்டிருந்த சீன, சோவியத் யூனியனில் இருந்து ஏற்படலாம் என எதிர்பார்த்த அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு என முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தலைவனுகத் தானே முன்னர் முடிசூட்டிப் புறக்கணித்த அமெரிக்காவுடன் கைகோர்த்து நணர்பஞகிக் கொணர்டது. இவ்வாறே, மார்க்சிசத்தைப் பூணர் டோடு பெயர்த்தெறிவதை இலட்சியமாக கொண்ட அமெரிக்காவும், கம்யூனிஸ மிதவாத சோவியத் யூனியனை எதிர்ப்பதற்கென, அதிதீவிர
135

Page 72
01.02.1991
கம்யூனிஸ்டுகளான சீனுவுடன் சினேகம் கொண்டது. இந்தக் களிப்பில் மகிழ்ந்திருந்த டெங் சியாவோ பிங், அரசாங்கம் சீனுவில் கடந்த பத்து வருடங்களாக மேற்கு நாடுகளை நோக்கி ஒரு திறந்த கொள்கையைக் கடைப் பிடித்து வந்தது. இதஞல் சீனப்பெருஞ்சுவரையும் ஊடறுத்துக் கொண்டு மேற்கு நாட்டு அரசியல், சமூக, பொருளாதார, கல்வி,கலை, கலாசார சிந்தனைகள் சீனுவுக்குள் புகுந்து கொணர்டன. இப்புதிய சிந்தனைகளால் முளைச்சலவை செய்யப்பட்ட மாணவர் சமூகம்,மாவோ காலத்தில் கற்பனை செய்து பார்க்கவே முடியாத ஒரு தீக்குளிப்பு முயற்சியில் இறங்கிப் பார்த்தது. மேற்கு உலகின் உதவிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சமுக பொருளாதாரக் கொள்கை மாற்றங்களால், இவ்வாருன விழிப்புணர்வு தமது நாட்டில் திடீரென ஒரு நாள் ஏற்படும் என்பதை டெங் அரசாங்கம் அன்று உணரத் தவறி விட்டது. அத்துடன் கிழக்கு ஐரோப்பாவில் பரவி வந்த ஜனநாயக எழுச்சியும், சீனவில் சிறிது சிறிதாகத் தலைகாட்டத் தொடங்கி விட்ட பொருளாதார நெருக்கடிகளும், ஆட்சியாளர் மத்தியில் காணப்பட்ட அதிகார துஷ்பிரயோகம், இலஞ்சம், ஊழல் என்பனவும் இளைஞர் மத்தியில் மாற்றம் ஒன்றின் மீதான விருப்பினை வளர்த்தன.
மாற்றங்களை வேண்டிப் போரிட்ட இளைஞர் சமுதாயத்தின் வேணி டுகோளுக்குச் செவிசாய்க்க மறுத்த அரசாங்கம், இராணுவத்தை அனுப்பிப் போராளிகளின் குரல்வளையை நெரித்துக் கொன்றது. போராளிகளோடு பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கண்மூடித்தனமாகக் கொன்று குவித்தது. உலக நாடுகள் அனைத்தும், அன்று சீனவில் நடந்தேறிய சம்பவங்களைப் பார்த்து, அதிர்ச்சியடைந்து நின்றன. அன்றைய கிழக்கு ஜேர்மனி, செக்கோஸ்லாவாகியா, கியூபா போன்ற நாடுகள் மட்டும் சீன அரசுக்கு ஆதரவு கூற, சோவியத் ரஷ்யாவும், மேற்கு நாடுகளும் தமது எதிர்ப்பையும், வருத்தத்தையும் தெரிவித்தன. ஆனல் சீன எந்த ஒரு வலிய நாட்டின் சண்டித்தனத்துக்கும் அடிபணிந்து செவிமடுத்ததாகத் தெரியவில்லை. இருநூறு உயிரிழப்புகள் ஏற்பட்டதாகச் சீன அரசு கூறிக் கொண்ட போதிலும், மேற்கு நாடுகளின் கணிப்பின்படி, சுமார் மூவாயிரம் உயிர்களைப் பலிகொண்ட அன்றைய இராணுவ அழிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னரும், எதிர்ப்புரட்சியாளர்களைத் தேடி அழித்தல் என்னும் பெயருடன் பல்கலைக்கழகங்கள் சுற்றி வளைக் கப்பட்டன; மாணவர்கள், விரிவுரையாளர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் பலர் கைதாகினர்; பலர் காணுமற் போயினர். இந்த வாரமும் சில மாணவர்களுக்குவிசாரணையின் பின் சிறைத் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இன்னெரு ஜனநாயக எழுச்சிப் போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாதவாறு சீன அரசாங்கம் ‘களை எடுப்பு நடாத் தி முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏனைய பல நாடுகளைப் போலல்லாமல், சீனுவில் கம்யூனிச
136

சீன 01.02.1991
எதிர்ப்புப் போராட்டம் ‘கரைகுட்டி' போட்டமைக்குச் சில காரணங்கள் உணர்டு. அன்று சீனவில் இடம் பெற்றது மாணவர்களது அல்லது அறிவுஜீவிகளது எழுச்சியே தவிர, நாடளாவிய மக்கள் எழுச்சி அல்ல என்பதஞல் அது இலகுவில் அரசாங்கத்தினுல் முறியடிக்கப்படக் கூடியதாக அமைந்து விட்டது. அடுத்து சாதாரண தொழிலாளி,விவசாயிகளை உள்ளடக்கத் தவறிய போராட்டமானதால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை இதஞல் ஏற்படுத்த முடியாமல் போயிற்று. மேலும் மேற்கத்திய உரிமைகள், சலுகைகளின் கவர்ச்சியால் விளைந்த இப்போராட்டம்,உண்மைப் பொருளாதார நெருக்கடியின் பயனுக தோன்ருததால் பொதுமக்களைத் தனக்குள் இழுத்து வந்து சேர்த்துக் கொள்ளத் தவறிவிட்டது. அத்துடன் சீன அரசு உலக அபிப்பிராயத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் அடிபணிய மறுத்ததால், துணிச்சலுடன் இராணுவ பலத்தைக் கொண்டு இலகுவில் போராட்டத்தை முறியடித்துக் கொண்டது. சோவியத் யூனியனைப் போன்று, உலக அபிப்பிராயத்துக்கு அடிபணிந்து போகும் அளவிற்கு பொருளாதார நிர்ப்பந்தங்கள் சீனுவுக்கு இருக்கவில்லை. மேலாக அன்று நடந்து முடிந்தது, அதிகாரத்தை இலக்காகக் கொண்டு, இரண்டு பிற்போக்குக் கும்பல்களுக்கிடையில் நிகழ்ந்த ஒரு சண்டையே தவிர,உணர்மையான ஒரு மக்கள் போராட்டமல்ல என்பதஞல் அது வெற்றி அளிக்கவில்லை என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. கூடுதலான ஜனநாயக உரிமைகளைக் கோரி நிகழ்த்தப்பட்ட இந்த மாணவர் போராட்டத்தின் போது, ஆளும் வர்க்கத்தினருள் பிளவு ஏற்பட்டு தமது கை மேலோங்கும் என மாணவ தலைவர்கள் போட்ட கணக்கு தவருகிப் போனதும் அன்றைய தோல்விக்கான காரணங்களில் ஒன்ருகும்.
"மாவோயிஸத்தின் நிழலில் நிகழ்ந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியில் தோன்றிய கம்யூனிச அரசைக் கவிழ்க்க என, முதலாளித்துவ பிற் போக்குச் சக்திகளின் ஆதரவுடன் எதிர்ப் புரட்சியாளர்கள் மேற் கொணர் ப. அரச துரோக நடவடிக்கைகளுக்கு, சீனுவில் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்" எனச் சூளுரைத்தவாறு, சீன அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறைகளைக் கண்ணுற்ற மேற்குநாடுகள் தியனன்மென் சதுக்கப்படுகொலைகளை இராணுவ வெறியாட்டம் என்றும், பத்திரிகை, செய்தித் தொடர்புச் சுதந்திரங்களின் பறிப்பு எனவும், மனித உரிமைகளின் மறுப்பு எனவும் குற்றம் சாட்டி பல்வேறு மிரட்டல்களை மேற்கொண்டன. சீன அரசோமசிந்து கொடுக்காமல், வெற்றிப்பெருமிதத்தில் மிதந்து கொண்டிருக்கின்றது. துப்பாக்கி முனைகளில் இருந்து தான் தனது பிறப்பு மட்டுமல்ல, இறப்பும் சம்பவிக்கலாம் என்பதை இப்போது நன்கு தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது, சுதந்திரம். ஆனல் மக்கள் சக்தி ஒருநாள் திரண்டு கிளர்ந்தெழும் போது, தனது துவாரங்களும் அடைக்கப்படும் என்பதை துப் பாக்கிகள் தானர் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை!
137

Page 73
கம்பூச்சியா 08.02.1991
காற்ருேடு சங்கமித்த
கம்போடிய சமாதானம்!
கிம்பூச்சியாவில் இப்போது வரண்ட காலம். வழக்கமாக இதுவே இங்கு யுத்தங்களுக்கு உகந்த காலம்! வாஞெலிகள் இங்கே எதிரும் புதிருமாக யுத்தங்களை வேண்டி ஸ்தோத்திரம் பாடுகின்றன. வனங்களிலும் மலைச்சாரல்களிலும் இருந்து துப்பாக்கி வாத்தியங்கள் போர் முழக்கங்களில் ஈடுபடுகின்றன. பதின்மூன்று வருடங்களாகக் கம்பூச்சியாவைச் சுடுகாடாக்கி விட்ட உள்நாட்டு யுத்தத்தின் ஊமைச்சத்தம் நாடு, நகரம், காடு
ஐக்கிய நாடுகள் அமைப்பினூடாகச் சர்வதேச சமூகம் முன் வைத்த சமாதானம் சாஸ்வதமாகி விட முன்னர், இன்ஞெரு போர் மேகம் அந்த நாட்டை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கி
138
 

கம்பூச்சியா O8.02.1991
விட்டது. கம்பூச்சியாவில் உள்நாட்டு யுத்தம் ஒன்றுக்கான காலம் கனிந்து காணப்படுவதாக பி.பி.சியின் கிழக் காசிய அலைவரிசைகள் அச்சம் தெரிவிக்கின்றன. 1978 இல் கம்பூச்சிய மண்ணில் காலடி பதித்த வியட்னுமிய படையினர் பதவியில் அமர்த்திச் சென்ற கம்பூச்சிய அரசாங்கத்தின் இராணுவமும், இவ்வரசாங்கத்தை எதிர்த்துக் கொரில்லாப் போரில் ஈடுபட்டு வந்த எதிர் அணியினரும் இன் ஞெரு யுத்தத்துக்கான முஸ்தீபுகளில் இறங்கி விட்டனர். கம்பூச்சியாவின் வடக்கு, வட மேற்குப் பிராந்தியங்களில் ஏற்கனவே மோதல்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டன. 1979 செப்டம்பரில் வியட்னும் தனது இராணுவத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட போதிலும், அவர்கள் வந்து சேர்ந்த போது அங்கு அவதரித்த போர்ப்பிசாசு மட்டும் இன்னமும் கம்பூச்சியாவை விட்டு வெளியேறியதாகத் தெரியவில்லை. கொலைபாதகச் செயல்களும், அடக்கு முறைகளும், அடாவடித்தனங்களும் அந்த நாட்டு மக்களுக்கு நன்கு சகஜமாகி விட்ட சங்கதிகள் தான். ஆயினும் சென்ற வருட இறுதியில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற் கொண்ட சமாதான முயற்சிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை இவ்வளவு விரைவில் நாசமாகிப் போய் விடும் என அவர்கள் எண்ணியிருக்கவில்லை. சகல உலக நாடுகளினதும் பார்வை பாரசீக வளைகுடாவின் பக்கம் திரும்பியிருக்கும் சந்தர்ப்பத்தில், உலகின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மக்கள் விரோதச் செயல்கள் இரகசியமாக இடம் பெற்றுக் கொண்டிருப்பதற்கு இன்றைய கம்பூச்சிய சம்பவங்கள் நல்ல உதாரணங்களாகும்.
தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்ருன கம்பூச்சியா,நீண்ட காலமாகப் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாக இருந்து வந்துள்ளது. முன்னர் கம்போடியா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த நாடு, 1953 இல் பிரான்சிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றிருந்தது. தாய்லாந்துக்குக் கிழக்காகவும் வியட்னமுக்கு மேற்காகவும் அமைந்துள்ள கம்பூச்சியாவின் பரப்பளவு சுமார் 70 ஆயிரம் சதுர மைல் ஆகும். இதன் தலைநகரம் நொம் பெண் ஆகும். 1975 முதல் 79வரை இந்த நாட்டை ஹற்மர் ரூஜ் எனப்படும் சீனச்சார்புக் கம்யூனிச ஆட்சியாளர்கள்,பொல் பொட் என்பவரின் தலைமையில் ஆண்டு வந்துள்ளனர். இவர்களது ஆட்சிக்காலத்தின் போது மக்கள் சொல்லொளுத் துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர். மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பறிகொடுத்தவர்களாய், அடக்குமுறை ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். ஜனநாயகப் பண்புகளைச் சிரச் சேதம் செய்தெடுத்துக் கொண்ட பொல் பொட் ஆட்சியின் போது, பல மில்லியன் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பொல் பொட் தலைமையிலான சர்வாதிகார அரசை அப்புறப்படுத்தும் நோக்குடன் 1978 இல் சோவியத் சார்புள்ள அணி டை நாடாகிய வியட் ஞம்,
139

Page 74
súdyšéfum O8.02.1991
கம்பூச்சியாவினுள் காலடி எடுத்து வைத்துக் கொண்டது. கடும் சமரின் பின் ஹற்மர் ரூஜ் கும்பலை ஆட்சியிலிருந்து விரட்டியடித்து விட்டு, தமக்கு இசைவான ஒரு பொம்மை அரசை, வியட்னும் கம்பூச்சியாவில் நிறுவிக் கொண்டது. விரட்டி அடிக்கப்பட்ட பொல் பொட் ஆதரவாளர்கள் தலைமறைவாகி காட்டுப்புறங்களிலும் மலைப்பிரதேசங்களிலும் மறைந்திருந்து அரசாங்கத்தின் ஆயுதப்படையினருடன் மோதிக் கொண்டு வந்தனர். கம்யூனிஸ்டுகளான ஹற்மர் ருஜ் குழுவினருடன் கம்யூனிஸ்டுகள் அல்லாத மேலும் இரு குழுவினர் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான கொரில்லாப் போரில் ஈடுபட்டு வந்தனர். வெளிநாடொன்றில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வரும் முன் ஞள் இளவரசர் நொ ருே டொம் சிஹானுக் என்பவருக்கு ஆதரவான குழு ஒன்றும் தேசியவாதியான முன்ஞள் பிரதமர் சொன் சான் என்பவருக்கு விசுவாசமான பிறிதொரு குழுவும் தான் கம்யூனிஸ்டுகளான ஹமர் ரூஜ்ஜினருடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி வரும் கம்யூனிஸ்டுகள் அல்லாத குழுக்களாகும். இம்மூன்று குழுக்களும் அரசியல் கொள்கைகளையிட்டுத் தத்தமக்குள்ளே வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டு வருகின்ற போதிலும் வியட்னுமிய அரசின் தலையாட்டிப்பொம்மையான இன்றைய கம்பூச்சிய அரசாங்கத்தை வீழ்த்துவதில் ஒன்றுபட்டுப் போராடி வருகின்ருர்கள்.
வியட்ஞமிய சார்பு அரசாங்கத்துக்கு எதிராக கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாகப் போராடி வரும் எதிரணியினர், தமக்கென வைத்துக் கொண்டுள்ள "ஜனநாயக கம்பூச்சியாவின் தேசிய இராணுவ வாஞெலி மூலமாகத் தமது செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். கம்பூச்சியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒட்டர் மீஞ்செக் மாகாணம் எதிரணியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில், உள்ள பிறிதொரு மாநகரான பட்டாம் பாங், தற்போது எதிரணியினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொணர் டு வரப்படவுள்ளதாகவும் தேசிய இராணுவ வாஞெலி பிரசித்தம் செய்கிறது. அத்துடன் சீம் றிப் எனும் மாகாணத்திலும், மிகப்புராதன வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள அங்கோர் வாட் எனும் நகரத்திலும் விரைவில் எதிர் அணியினர் தாக்குதலில் ஈடுபடத் தயார் நிலையில் இருப்பதாகவும் இவ்வாஞெலி அறிவிக்கினர் றது. ஆயினும் நாட்டினர் வடமேற்குப் பிராந்தியத்திலிருந்து அரசாங்கத்துக்கு எதிராக ராஜதுரோகச் செயல்களில் ஈடுபட்டு வரும் எதிர் அணியினருள் சுமார் 4300 பேரை அரசபடையினர் வெற்றிகரமாகச் செயலிழக்க செய்துள்ளதாகத் தலைநகரில் இருந்து பிரதமர் ஹன் சென்
14O

கம்பச்சியா 08. O2. 1991
அரசின் செய்தி ஸ்தாபனங்கள் எதிர்க்கூச்சல் இடுகின்றன. சர்வதேச சமுகம் மேற்கொண்டு வரும் சமாதான முயற்சிகள் கைகூடி வரமுன்னர் நாட்டின் கணிசமான பகுதிகளைத் தம் வசப்படுத்திக் கொள்ளவே எதிரணிகள் இவ்வாருன அவசரத் திடீர்த் தாக்குதல்களில் ஈடுபடுவதாக அரச தரப்பினர் கூறுகின்றனர். 1975 முதல் 79 காலப்பகுதி வரை பல மில்லியன் பொதுமக்களைப் படுகொலை செய்த ஹற்மர் ரூஜ் ஆட்சியாளர்களைச் சிறைப்பிடித்து விசாரணைக்குட்படுத்தித் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறும் அரசாங்கம், அவர்களுள் 12 தலைவர்களை மீண்டும் கம்பூச்சிய மண்ணில் காலடி எடுத்து வைக்கவிடாது தடுக்கத் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றது.
கம்பூச்சியாவில் இற்றைவரை இடம் பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்திற்கு எரியூட்டி வளர்த்து வரும் வெளிநாட்டுச் சக்திகளின் பங்கு புறக்கணிக்கப்படக் கூடியதல்ல. இன்று ஆட்சியில் இருக்கும் ஹன் சென் தலைமையிலான அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்தியவர்கள், அயலவர்களான வியட்னுமியர்களே. இந்த வியட்னுமியரின் படைகள் தான் கம்பூச்சிய அரசாங்கத்துக்கு ஆதரவாக எதிரணியினருடன் பொருது மோதிக் கொண்டு வந்தவை. வியட்னும் அரசாங்கத்தின் பாதுகாவலஞக இருந்து கொண்டு பொருளாதார ஊட்டமும், ஆயுத உதவியும் வழங்கி வந்த நாடு, சோவியத் யூனியன். ஆகவே கம்பூச்சியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஹன் சென் அரசாங்கத்தின் மறைமுக எஜமான் சோவியத் யூனியன் என்பது வெளிப்படை. இன்றைய கம்பூச்சிய அரசாங்கத்துக்கு எதிராகக் கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு வரும் எதிரணியினருள் கம்யூனிஸ்டுகளான ஹம்மர் ரூஜ்க்கு நிதியுதவியும் ஆயுதமும் ஆலோசனையும் வழங்கி வரும் நாடு சீனவாகும். ஆகவே கம்யூனிச வல்லரசுகளும், 30 வருட எதிரிகளுமான சீனவும் சோவியத் யூனியனும் , தமது வல்லமைகளைப் பரீட்சித்துப் பார்க்கும் பரிசோதனைக் களமாகக் கம்பூச்சியாவைப் பயன்படுத்தி வந்துள்ளன. கம்பூச்சிய அரசுக்கு எதிரான அணியிலுள்ள கம்யூனிஸ்டுகள் அல்லாத இரு குழுக்களுக்கு அமெரிக்காவும் ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகள் சங்கம்) அமைப்பு நாடுகளும் சகல உதவிகளையும் நல்கி வந்துள்ளன. ஹன் சென் தலைமையிலான இன்றைய அரசுதான் சட்டபூர்வமானது என்று வியட்ஞம் வலியுறுத்த, ஹற்மர் ரூஜ் குழுவினர் தாங்கள் தான் மக்கள் அங்கீகாரம் பெற்ற ஆட்சியாளர் என்று வற்புறுத்த, வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இளவரசர் சிஹானுக் தான் கம்பூச்சியாவுக்கு ஏற்றவர் என்று அமெரிக்கா வாதிட, முன்னுள் பிரதமர் சொன் சான் தான் கம்பூச்சியாவின் உத்தியோகபூர்வ தலைவர் என ஐ.நா வாழ்த்தி நிற்க, இந்தச் சிதம்பர சக்கரத்தினுள் சிக்குண்ட மக்கள் திக்குத்திசை தெரியாமல் திணறியபடி இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள்.

Page 75
(கம்பூச்சியா O8.02.1991
1978 இல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலாக, எந்த அணியினரும் வெற்றி கோர முடியாதவாறு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தத்தினை ஒரு முடிவுக்குக் கொண்டு வர என 1988 ஜுலை கடைசியில் ஒரு சமரச மாநாடு இந்தோனேசியாவில் கூட்டப்பட்டது. அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சோவியத் யூனியன் தொடர்ந்தும் வியட்னுமுக்கு உதவப் போவதில்லை எனக் கையை விரித்துக் கொண்டதாலும் சீன-சோவியத் நல்லுறவு ஏற்படுத்தப்படுவதற்கு, கம்பூச்சியாவில் இருந்து வியட்னுமியப் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என சீனு, சோவியத் யூனியன் மீது நிபந்தனை விதித்ததாலும், வியட்னும் தனது மேலதிகாரியான சோவியத்தின் பணிப்பின் பேரில் கம்பூச்சியப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானது. மேலும் மேற்கு நாடுகளின் நன்மதிப்பைப் பெற்று, அந்த நாடுகளிடம் பொருளாதார உதவி கோர வேண்டிய வறுமையும் வியட்ஞமை வாட்டி வருகிறது. இந்தோனேஷிய சமாதான மாநாட்டுக்கு வியட்னும் சம்மதிக்க இவையே முக்கிய காரணங்களாகும். ஆயினும் கிளர்ச்சியாளர்கள் ஏந்திக் கொண்டுள்ள ஆயுதங்களை எப்படிக் கீழே போட வைப்பது? தேர்தல் முலம் புதிய அரசு ஒன்று தெரிவாகும் வரை அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்வது? போன்ற விடை காணப்படாத விஞக்களால் அந்த மாநாடு தோல்வியில் முடிந்தது. உடன்பாடுகளை விட, கூடுதலான முரண்பாடுகள் காணப்பட்டதால் அந்த மாநாடு வெற்றியளிக்கத் தவறிவிட்டது. ஆயினும் 13 வருட காலப் போரில் 55 ஆயிரம் வீரர்களையும் பல மில்லியன் பணத்தையும் பறிகொடுத்த வியட்னும், "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி' என்பது போல, இனியும் வேண்டாம், இத்துடன் போதும் என்று தீர்மானித்துத் தனது படைகளை 1989 செப்டம்பரில் கம்பூச்சியாவிலிருந்து திருப்பி அழைத்துக் கொண்டது. பொல் பொட் ஆட்சியை வீழ்த்துவதற்கென 11 வருடங்களுக்கு முன்னர் வந்த பாதை வழியாக, வியட்னம் திரும்பிச் சென்று ஒன்றரை வருடமாகியும் கம்பூச்சியாவில் ஏன் இன்னமும் அமைதி ஏற்படவில்லை? வியட்னம் தனது படைகளை முற்ருக வாபஸ் பெற்றுவிட்டதாகக் கூறிக் கொண்ட போதிலும் சுமார் முப்பதாயிரம் வியட்னும் படைவீரர்கள் மக்களோடு மக்களாக மறைந்து கம்பூச்சியாவில் இன்னமும் வாழ்கின்றனர் எனவும், சுமார் ஒரு லட்சம் வியட்னுமிய மக்கள் ஆயுதபாணிகளாக கம்பூச்சிய எல்லைகளில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடக்கின்றது. இதனல் சீன இன்னமும் ஹமர் ருஜினருக்கு உதவிகளை வழங்கி வரும் வேளையில், எதிரணியிலுள்ள கம்யூனிஸ்டுகள் அல்லாத குழுக்களுக்கு அமெரிக்காவும் ஆசியான் நாடுகளும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. வியட்னும் தனது இயலாமையின் நிமித்தம் கம்பூச்சியாவை விட்டு வெளியேறிக்
142

sibu ов.02.1991 |
கொண்ட போதிலும் தொடர்ந்தும் அங்கு உள்நாட்டு யுத்தம் நிகழ்வதற்கு வேண்டிய விதைகளை விதைத்து விட்டுச் சென்றுள்ளதாக எதிரணியினர் கூறுகின்றனர்.
கம்பூச்சியப் பிரச்சனைக்குத் தீர்வு காண எனக் கடந்த கிறிஸ்மஸ் காலப்பகுதியில் ஐ.நா அமைப்பு ஏற்பாடுகள் செய்தது. பாரிஸில் இது தொடர்பாக நிகழ்ந்த பேச்சுவார்த்தையின் போது கம்பூச்சியாவில் உள்ள நான்கு குழுக்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினரை உள்ளடக்கிய ஓர் உயர் தேசியசபையுடன் ஐ.நா சமாதானப்படை இணைந்து புதிய தேர்தலில் அரசு ஒன்று தெரிவாகும்வரை நாட்டை நிர்வகிப்பது என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது. ஆயினும் இந்தத் தேசியசபை கம்பூச்சியாவில் யுத்தநிறுத்தத்தை மேற் கொள்ளவோ, எதிரணியினர் தூக்கிய ஆயுதங்களைக் கீழே போட வைப்பதிலோ இனக்கத்தைக் காணத் தவறியமையால் அந்த முயற்சியும் பூரண வெற்றியளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கம்பூச்சியாவின் முன்னுள் காலனி ஆதிக்க நாடான பிரான்ஸ், இரண்டு மாதங்களுக்குள் 19நாடுகளை உள்ளடக்கிய ஒரு சமாதான மாநாட்டைக் கூட்டி, சமாதானத்துக்குத் தடையான காரணிகளை அகற்றி, ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி செய்வதாக அறிவித்திருக்கிறது. ஆஞல் பேச்சுவார்த்தை மேசைகளில் பெறமுடியாது போன வெற்றிகளைக் கம்பூச்சிய அதிகார அவாக்குழுக்கள் யுத்தகளத்தில் பெற்றுக் கொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருவது துரதிஷ்டமான விடயம் ஆகும்.
கம்பூச்சியாவின் அதிகார வேட்கைக்குழுக்கள் யாவும் தமக் கிடையிலான முரணர் பாடுகளைத் தவிர்த்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, விரைவில் சுதந்திரமான தேர்தலை நடாத்தி, புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்ய வேணர் டும் என்பதில் இணங்கி வருகின்ற போதிலும், அதுவரையிலான காபந்து அரசாங்கம் எவ்வாறு அமைய வேண்டும்? அதில் அதிகாரம் எவ்வாறு பகிரப்பட வேண்டும்? தேர்தலில் வாக்களிப்பை எவ்வாறு கண்காணிக்க வேண்டும்? என்பவற்றில் இணங்க மறுப்பதால் சமாதான முயற்சிகள் தொடர்ந்தும் மண் கவ்விக் கொண்டு வருகின்றன. இதனல் கம்பூச்சியாவில் சமாதானம் என்பது அண்மையில் சாத்தியப்படக் கூடிய ஒன்ருகத் தெரியவில்லை. ஒரு குழு ஆதிக்கம் பெற்று, ஏனைய குழுக்களை அது அழித்தொழிக்கும்வரை அங்கு யுத்தம் தொடரும். அதுவரை பொல் பொட் ஆட்சியின் கொடூரங்களையும் வியட்ஞமிய ஊடுருவலால் விளைந்த பதின் முன்று வருட உள்நாட்டு யுத்தக் கெடுதிகளையும் கண்டு சகித்துப் பழகிப் போன மக்களின் துன்பங்களும் அங்கு தொடரவே செய்யும்.
143

Page 76
பாரசீக வளைகுடா 15.02.1991
உணர்மைகளின்
மெளன ஊர்வலங்கள்
ைெளகுடா தீப்பற்றி எரிகிறது எண்ணெய் வளப் பிராந்தியம் எரிதழலாய் தகிக்கிறது! இறுமாப்பு மிக்க இரு நாட்டுத் தலைவர்களது தலைக்கு மிஞ்சிய தன்மானப் பிரச்சினையால் மத்திய கிழக்கு யுத்த நெருப்பில் வெந்து கருகுகிறது! இந்நூற்றண்டின் இன்ஞெரு உலகப் போர்ப்புகை முட்டத்தில் சிக்குண்டு முழு உலகமும் மூச்சுத் திணறுகின்றது!"பாலைவனப்புயல் நடவடிக்கை” என்று பெயரிட்டு, இந்த வருடம் ஜனவரி பதிஞறில் ஜோர்ஜ் புஷ் போரைத் தொடக்கி வைக்க, "போர்களுக்கெல்லாம் தாயான பெரும் போர்” எனக் கூறிச் சதாம் ஹ"சைன் தனது பக்கத்தே நின்று யுத்தத்தை முடுக்கி விட்டார். ஏவியவர்கள் எல்லோரும் எங்கெங்கோ ஓடி ஒழிந்து கொண்டிருக்க “ஏவுகணைகள்” மட்டும் ஒன்றையொன்று மோதி அழிக்கின்றன. பாதிமனதோடு போருக்குப் புறப்பட்டுச் சென்ற படைவீரர்களோ, பாலைவனச் சுடுமணலுக்குப் பசளையாகி மாண்டு போகிருர்கள். பாவம், இடையில் நின்று ஏங்கிப் பரிதவிக்கும் மக்களுக்காக
144
 

பாரசீக வளைகுடா 15.02.1991
மனமிரங்குவோர் யாரும் இல்லாததால் வீணே செத்து மடிந்து போகிருர்கள். 'சின்னஞ்சிறிய குவெய்த் நாட்டை சர்வாதிகாரி சதாமிடமிருந்து சிறைமீட்பேன்’ எனச் சினந்த வண்ணம் போரில் குதித்தார், ஜோர்ஜ் புஷ். "அமெரிக்க அணியினரையும் அடிவருடிகளையும் அவர்களது குருதியில் குளிப்பாட்டுவேன்" எனக் கூறி எதிர்த்தார், ஹசைன். ஈற்றில் புஷ்ஷ"க்கும் அவர் பின்னுல் அணிவகுத்து நிற்கும் அனைவர்க்கும் எதிரான "இஸ்லாமிய புனித யுத்தம் இது எனப் புதுவடிவம் எடுத்து, வளர்ந்து வரும் இக் கொடிய யுத்தத்தினுல் இந்த மண்ணுக்கு வந்த லாபமென்ன? இதஞல் விளைந்த துனர் பங்களில் கிடந்து உழல்வதற்கு மனுக்குலம்தான் செய்த பாவமென்ன?
ஈரானுடஞன எட்டு வருட யுத்தத்தின் போது ஏற்பட்ட "நரம்புத் தளர்ச்சிக்கு" மருந்து வேண்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் இரண்டில், அண்டை நாடான குவெய்த்தினுள் அத்துமீறிப் பிரவேசித்தது, ஈராக். தனது பொருளாதார உயிருட்டத்துக்கு உதிரம் அளித்து வரும் குவெய்த் மீது ஈராக் பலாத்காரம் புரிந்ததைப் பார்க்கச் சகிக்காத அமெரிக்கா, "போ வெளியே” என ஈராக்கை மிரட்டியவாறு போர்ப்படைகளை அனுப்பி வைத்தது. நேட்டோ அணிநாடுகளையும் தனது நேசநாடுகளையும் திரட்டி எடுத்துக் கொண்டு, ஐ.நாவின் அங்கீகாரத்துடன் காலக்கெடு விதித்தது. கட்டளைகள் விடுத்தது. அப்பாவிச் சிறிய நாடுகள் மீது அண்டை அயலிலுள்ள வலிய நாடுகள் அடாவடித் தனம் செய்ய அனுமதிக்கலாகாதென்றும், மனித உரிமை மீறலுக் கோ மக்கள் வரி ரோத செயல்களுக்கோ மன்னிப்பளித்தலாகாதென்றும் காரணங்கள் பல கூறி அமெரிக்கா போருக்குப் புறப்பட்டது. இதேபோல குவெய்த்தைத் தனதாக்கிக் கொண்டதற்கு ஏற்கனவே பல காரணங்களைக் காட்டி நின்ற ஈராக், ஆருத புணர்னை வைத்து ஆதாயம் தேடும் வைத்தியர் போல, மத்திய கிழக்கு மண்ணுேடு ஒட்டிப் போன பலஸ்தீனப் பிரச்சினையைத் தன்பக்கம் சேர்த்து இழுத்துக் கொண்டது. அரபு உலகின் அபிலாஷைகளைத் தனது அணிகலனுக சதாம் வலிந்து அணிந்து கொள்ள, அகில உலக ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்ற பதக்கத்தைப் பாவனைக்காக ஜோர்ஜ் புஷ் புனைந்து கொண்டு, இருவரும் போருக்குப் புறப்பட்டனர். போரைத் தவிர்ப்பதற்குப் பலரும் சமாதானத் துரது போய்ப்பார்த்தனர். எகிப்திய ஜனதிபதி முபாரக் முதற் கொண்டு லிபியத் தலைவர் மொகமர் கடாபி, சோவியத் யூனியன், சீனு, பிரான்ஸ், ஐரோப்பிய சமூகம், ஐ.நா அமைப்பு, அணிசேரா நாடுகள், பாகிஸ்தான், பாப்பாண்டவர் ஈருக வந்து, முடிவில் இரு தரப்பு எதிரியுமான ஈரான் வரை எடுத்த சமாதான முயற்சி எதுவும் இதுவரை பயனளித்ததாகத் தெரியவில்லை. இடையில் நிறுத்தப்படக் கூடிய யுத்தமாக இல்லாமல் இது கடைசிவரை போராடி ஒரு கட்சியைப் பூண்டோடு களைந்தெறியக் கங்கணம் கட்டி விட்ட யுத்தமாகவே இன்று காட்சியளிக்கின்றது!
145

Page 77
பாரசீக வளைகுடா 15.02.1991
ஐ.நா அமைப்பின் அங்கீகாரத்துடன் கடந்த 25 நாட்களாக சுமார் ஐம்பதாயிரம் ஆகாயமார்க்கத் தாக்குதல்களைப் பல்தேசியப் படையினர் மேற்கொணர்டுள்ளனர். பாக்தாத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கட்டிடம், செய்தித் தொடர்பு நிலையங்கள், இராணுவ கேந்திர நிலையங்கள், இரசாயன ஆயுத உற்பத்தி நிலையங்கள், பாலங்கள், பெருஞ்சாலைகள் போன்ற ஈராக்கின் உயிர் நிலையங்களைத் தேடிப் பிடித்துக் குறி வைத்துக் குண்ைடுமாரி பொழிந்ததாகக் கூறுகின்றனர். இரண்டொரு வாரங்களில் குவெய்த்தை விட்டு ஈராக்கை வெளியேற்றி, சதாம் ஹரசைனை கைப்பற்றி, அவரது ஆட்சியை வீழ்த்தி விடுவோம் என ஆர்ப்பரித்துக் கொண்டு ஏவுகணைகளால் தொடர்ந்து தாக்கினர். ஆயினும் மிக ஆறுதலாகவும் நிதானமாகவும் தனது யுத்த தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வரும் சதாம், சோவியத் ஸ்கட் ஏவுகணைகளால் எதிரிகளின் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதிலும், சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை நோக்கி இடையிடையே கணை தொடுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்ருர், பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளையும் மஸ்டார்ட், நேர்வ் இரசாயன, உயிரியல் ஆயுதங்களையும் பதுக்கி வைத்துக் கொணர்டு, பிரித்தானியரால் நிர்மானித்துக் கொடுக்கப்பட்ட பாதாள மண்டபங்களுக்குள் பாதுகாப்பாக இருந்தவாறு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டும், வாஞெலி தொலைக்காட்சிகள் வாயிலாக செய்திகளை வெளியுலகுக்குத் தெரிவித்துக் கொண்டும் காலம் கடத்தி வருகின்றர். ஈரானுடஞன நீண்ட காலயுத்தத்தின் மூலம் நல்ல அனுபவத்தையும் தேர்ச்சியையும் பெற்று, இந்தப் போரிலும் பல்லாயிரம் படைவீரர்களைப் பலியிடத் தயாராக உள்ள ஈராக்குடன் அந்தப் பாலைவனத் தரையில் நின்று யுத்தம் புரிவது பற்றிப் பல்தேசியப் படைகள் மனதுள் பயந்தபடியே உள்ளன. அதற்கான தக்க தருணம் பார்த்து தயாரான நிலையில் ஈராக் காத்திருப்பதாகவே எதிரணியினர் எண்ணுகின்றனர்.
குவெய்த்தை விட்டு ஈராக் வெளியேற வேண்டுமாயின் கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ள பலஸ்தீனப் பிரதேசங்களை விட்டு இஸ்ரேலும் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை வெகுசாதுரியமாக இந்த நெருக்கடிக்குள் திணித்துக் கொண்ட சதாம், இஸ்ரேலை யுத்தத்தினுள் இழுத்தெடுத்து அமெரிக்க கூட்டணியை உடைத்தெறிவதற்கு முயன்று வருகிருர், இஸ்ரேல் மீது இடையிடையே நிகழ்த்தி வரும் ஸ்கட் ஏவுகணைச் சீண்டல் ஒரு யுத்த தந்திரமல்ல. அது ஒர் அரசியற் தந்திரோபாயமாகும். இதில் இவர் வெற்றி பெறுவாராயின் மேற்கு உலகுக்கு எதிராக முழு அளவிலான முஸ்லிம் உலகப் போர் ஒன்றை முட்டி விட்டு, முஸ்லிம்களின் தன்னிகரற்ற தலைவன் என்ற ஸ்தானத்தை இலகுவில் எய்தி விடுவார். பலஸ்தீனப் பிரச்சனையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதால், அரபு உலகில் ஈராக்கைத் தனிமைப்படுத்த என அமெரிக்கா எடுத்த முயற்சியை
146

(பாரசீக வளைகுடா 15.02.1991
முறியடித்துக் கொண்ட சதாம் ஹ "சைனுக்கு முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் செல்வாக்குப் பெருகி வருகிறது. பலஸ்தீன இயக்கங்கள் அனைத்தும் இவரையே ஆதரிக்கின்றன. சிரியா, ஜோர்தான்,பங்களாதேஷ், பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா, அல்ஜீரியா, துருக்கி, எகிப்து, லிபியா என்பன உட்பட அனைத்து மூன்ரும் உலக நாடுகளிலும் வாழும் முஸ்லிம் மக்களும் நிகழ்த்தி வரும் சதாம் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் அவருக்கான இந்த ஆதரவை நிருபிக்கின்றன. இந்நாடுகளில் இடம் பெற்று வரும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் அங்குள்ள சில அமெரிக்க சார்பு ஆட்சியாளர்களோ பெரும் நெருக்கடிகளுக்குள்ளாகி வருகின்றனர்.
மத்திய கிழக்கின் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலவேர், இஸ்ரேல். இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதலாக அராபியரும் யூதரும், கீரியும் பாம்புமாக உள்ளனர். சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளின் பகுதிகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளதுடன், கைப்பற்றிவைத்துள்ள மேற்குக் கரையோரம், காசா துண்டுப் பகுதிகளில் பலஸ்தீனியர்களை அடக்கி ஒடுக்கி, அகதிளாக்கி வைத்திருக்கின்றது, இஸ்ரேல். ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றியதையிட்டுப்பிரலாபிக்கும் மேற்கு நாடுகள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை மன்னித்து மறந்திருப்பது வியப்புக்குரியது. இது தொடர்பாக ஐ.நா தீர்மானங்களை இஸ்ரேல் ஏற்க மறுத்த போது தணி டிக்க முன் வராத மேற்கு நாடுகளும் அவற்றினர் இராகங்களுக்குத் தாளம் போடும் ஐ.நாவும் ஈராக் மட்டும் ஐ.நா தீர்மானங்களை மீறியதற்காக நடவடிக்கை எடுக்க முன் வந்துள்ளன்மை, மேற்கு நாடுகளினதும் ஐநாவினதும் இரட்டை முகங்களுக்குநல்ல உதாரணம் என அவதானிகள் கருதுகின்றனர். இதனை நன்கு உணர்ந்து கொண்டுள்ள அரபு உலகும், ஏனைய முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம் மக்கள் வாழும் மூன்ரும் உலக நாடுகளும் தமது அமெரிக்க எதிர்ப்புணர்வை வெளிக்காட்டியபடி நிற்க, பலஸ்தீனியப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படுதல் அவசியம் என இன்று அகில உலகும் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு உலக அபிப்பிராயம் மாற்றம். அடைந்து விட்டது.
ஐ.நாவின் அங்கீகாரத்துடன் பலநாடுகள் ஈராக்கை எதிர்த்துப் போரிட அணி திரண்டுள்ள போதிலும், உணர்மையில் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையிலான ஆதிக்க முரண்பாடுகளின் விளைவாக முணர்ட இந்த யுத்தத்தினுல் ஏற்பட்ட பாதிப்புகள் பல. வளைகுடாவில் திறந்து வரிடப்பட்ட எண்ணெயாலும் எரிந்து கொண்டிருக்கும் எணர்ணெயாலும் சூழல் படுகாயப்பட்டு, கைதியாகிக் கிடப்பதைக் கண்ட சூழலியலாளர்கள் இது ஒரு "சூழல் பயங்கரவாதம்" எனக் கூறி வருந்துகின்றனர். கடந்த ஆகஸ்ட் இரண்டில் ஊடுருவப்பட்ட குவெய்த்திலிருந்தும், யுத்தம் எப்போதும் வெடிக்கலாம் என்ற அச்சத்தினுல் ஏனைய அயல்நாடுகளிலிருந்தும், குறிப்பாக ஆசிய
147

Page 78
பாரசீக வளைகுடா 15.02.1991
நாட்டு மக்களும் ஏனையோரும் அகதிகளாக வெளியேறி இருந்தனர். யுத்தம் ஆரம்பித்த பின்னரும் ஜோர்தான், ஈரான் போன்ற அயல்நாடுகளுக்குள் ஆசிய நாட்டவருடன் பலஸ்தீனியரும் எகிப்தியரும் சோமாலியரும் ஈராக்கியரும் வந்து குவிந்த வண்ணம் இருப்பதஞல் அகதிகள் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் சம்பந்தப்பட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் தடுமாறிக் கொணடிருக்கின்றன. யுத்தத்தின் போது கைதிகளாக்கப்பட்ட வீரர்கள், ஜெனீவா ஒப்பந்தத்துக்கு முரணுக உடல் உள ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வருவதற்கான ஆதாரங்களை உலக மக்கள் தொலைக்காட்சிகள் மூலமாகக் கண்டு ஊகித்தறிகின்றர்கள். வடகொரியாவிலும், வியட்னுமிலும் யுத்தக் கைதிகள் அனுபவித்த துன்பங்களை அமெரிக்க மக்கள் இன்னமும் மறக்காதிருக்கும் இந் நேரம் இன்றைய போருக்கான, மக்கள் எதிர்ப்பை அமெரிக்காவிலும் ஏனைய நேசநாடுகளிலும் இது வளர்ப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் மக்கள் காண்பித்து வரும் யுத்த எதிர்ப்புணர்வு இந்நாட்டின் தலைவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றது. இவற்றைத் தடுப்பதற்கென யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பிலும் செய்தித் தணிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் எதிர்த்தரப்பினர் பற்றிப் பொய்ப் பிரசாரங்களும் செய்யப்படுகின்றன. யுத்தத்தின் போது ஏற்பட்ட அழிவுகள் முடி மறைக்கப்படுகின்றன. எதிரிகள் பற்றி தவருகவும் தமக்குச் சாதகமாகவும் உலக அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியில் உண்மைக்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தினுல் பாரதூரமான உடனடிப் பாதிப்புகளுக்குள்ளான நாடுகள், முன்மும் உலக நாடுகளே. வளைகுடாவில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்தவர்கள் வேலை இழந்து அகதிகளாகி விட்டதஞலும் ஊர் திரும்பியதஞலும் எண்ணெய் விலை அதிகரிப்பாலும் அந்த நாடுகள் தமது வருமானத்தைப் பெரிதும் இழந்து போயுள்ளன. ஒரே நாளில் சுமார் ஒரு பில்லியன் டொலரை இந்தயுத்தம் விழுங்கிக் கொண்டிருப்பதால், மேற்கு நாடுகளில் இருந்து கிடைத்துவந்த உதவிகளும் மூன்ரும் உலகநாடுகளுக்கு இப்போது இல்லை. உணவு, பாவனைப் பொருட்களின் பற்ருக்குறை, விலையேற்றம் என்பன வறுமையை மேலும் அதிகரிக்கச் செய்ய, கல்வி, சுகாதாரம், ஏனைய சேவைகள் துண்ைடாடப்பட்ட நிலையில் மூன்ரும் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இன்றைய யுத்தத்தில் இஸ்ரேலும் இணைந்து, இது மேலும் தொடருமானல், ஒரு பாரிய யுத்தமாகி, நச்சு ஆயுதங்களும் இதில் பயன்படுத்தலாம். முடிவில் ஓர் அணு ஆயுத யுத்தமாகவும் இது மாறலாம். அமெரிக்க எதிர்ப்பு உணர்வு வேகமாக வளர்ந்து வருவதால், அதன் அணியில் நிற்கும் முஸ்லிம் நாடுகளினதும், சில நடுநிலைநாடுகளினதும் தலைவர்கள், அந்நாட்டு மக்களால் ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்படலாம். மேற்கு நாடுகளின் நவீன யுத்த முறைகளுக்கு ஈராக்கிஞல் முகங் கொடுக்க முடியாது
148

(பாரசீக வளைகுடா 15.02.1991
போகும் போது, தரை மார்க்கமான யுத்தத்துக்கும் கொரில்லா முறை யுத்தத்துக்கும் எதிரணியினர் தயாராக இருக்க வேண்டும். இது பல் தேசியப் படைகளுக்குப் பயமுட்டும் செய்தி! மேற்கு அணியானது அவ்வாருன நிலைமையில் களைத்துப் பின் வாங்க நேரிடின், சதாம் ஹுசைன் இஸ்லாமிய உலகின் ஏகதலைவன் ஆகிவிடக் கூடும். போரில் சதாமின் சாதுரியங்கள் கைகூடாது போனல், தனது மக்களாலேயே அவர் வீழ்த்தப்படுவார். அல்லது எதிரணியினரால் வீழ்த்தி அழிக்கப்படுவார். முடிவு எதுவானுலும் வளைகுடாவில் அமெரிக்கா நீண்ட காலம் தரித்து நிற்க இந்த யுத்தம் வழிவகுத்து விட்டது. இது அமெரிக்காவின் நீண்ட நாள் ஆசைகளுள் ஒன்று! இதனை ஈரானே, சோவியத் யூனியஞே,அல்லது அரபு நாடுகளோ விரும்பமாட்டா. ஈராக் வீழ்ந்து போஞல் அங்கு பிராந்திய அதிகாரச்சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு, ஈரான் ஆதிக்கம் பெறுவதை அமெரிக்கா விரும்பாததாலும், அமெரிக்காவின் பிரசன்னம் அங்கு நீண்ட காலம் நிலைத்திருக்கும். கெடுபிடியுத்தம் முடிவுக்கு வந்தும், சமாதானத்தை அஞதரவாக்கிவவிட்ட இந்த யுத்தத்துக்குக் காரணமானவர்களுள் ஒருவரான ஜோர்ஜ் புஷ் தனது நாட்டில் செல்வாக்கை இழந்து, அடுத்த பதவிக்காலத்தைப் பறிகொடுக்கவும் வாயப்ப்புக்கள் உண்டு. அரேபிய நாடுகளும் தமது பேதங்களைக் களைந்து தமக்குள் உறுதியான அராபிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த யுத்தம் அந்நாடுகளுக்கு ஏற்படுத்தும். தாம் உற்பத்தி செய்த ஆயுதங்களுக்குத் தமது வீரர்களே பலியாகும் விபரீதத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வலிய நாட்டினர், தமது ஆயுத விற்பனைகள் பற்றி நிச்சயம் இனி விழிப்பாக இருந்து கொள்வார்கள் என்பதுவும் உறுதி.
பாரசீக வளைகுடாவைக் குதறி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த யுத்தம், ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல ஒரு குறுகிய கால யுத்தமாக இருக்கப் போவதில்லை. இன்று வளைகுடாவில் பற்றி எரியும் யுத்தம், மத்திய கிழக்கு எங்கும் பரவி, ஈற்றில் மதத்தை மையப்படுத்திய உலக மகாயுத்தமாக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஈராக் இதனையே விரும்பி முயற்சிக்கின்றது. எதிரணியோ இதனைத் தடுக்கப் பிரயத்தனம் செய்கிறது. பொய்யான காரணங்களை உலகுக்குக் கூறிக் கொணர் டே இரு தரப்பினரும் இந்தப் போரில் குதித் திருந்தனர். தொடர்ந்தும் போர்முனையில் நிகழும் அனர்த்தங்கள் பற்றிய செய்திகளையும் இரு தரப்பினரும் இருட்டடிப்புச் செய்து வருகின்றனர். ஏராளம் உண்மைகள் இந்த யுத்தத்தில் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்டு விட்டன. எஞ்சி உயிர் தரித்துள்ள உண்மைகளோ தலைகுனிந்து மெளனமாய் இன்று ஊர்வலம் போகின்றன. இறந்து போன உண்மைகள் பற்றிய உண்மைகள் விரைவில் ஒரு நாள் உலகுக்குத் தெரியவரும். அதுவரை உலகும் ஊகங்களுடன் ஊமையாய் காத்திருக்கும்.
149

Page 79
திரு.க.நவம் அவ கைவரப்பெற்ற ஒரு நல் வட்டத்துள்ளும் வளைந்து இழந்து போகாத ஓர் இல இவரிடம் ஊடுருவி பத்திரிகைச் செய்திகளைக்க காவடி எடுக்க வைத்துள் சத்தடியின் சாக்கில் வரலாற்றுக் குறிப்புக்கள் முனையில் எரிமலையாய் பி வரலாற்றின் இரத் பதிக்க வேண்டிய நிர்ப்பந்த மனிதநேயம் விடியலின் ஆரம்பங்களைப் புஷ்பிக்கின தற்கால நிகழ்வுகளி சரித் திரச் சகடங்களை இம்முயற்சியால், தமிழில் ஒ உள்ளது. கட்டுரைகள் ஒவ்ெ காதலிக்கும் ஒரு கலைஞ கருவில் திருவான காவிய
F GBTL T 2. O3.99
 

ர்கள் பல்வேறு கலைகளும் ல கலைஞன். எந்த ஒரு சுழிந்து தன் சுயத்தை க்கியவாதி. புள்ள கலைத்துவம், வெறும் டட எம்முன் செதில் குத்திக் ளது. , நினைவில் சரிந்துபோகும் ஆசிரியரின் மையேர் ரவகிக்கின்றன. தத் தடங்களில் பாதம் த நிலைகளிலும் ஆசிரியரின் பாளமாக எம்முன் புதிய ர்றன.
ன் பின்னணியில் உலக
உரைநடையில் தரும் ரு புதிய வெளிச்சம் பரவ வொன்றும் மானுடத்தைக் னின் கைவண்ணத்தில், ங்கள்
அ.கந்தசாமி