கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புது உலகம்

Page 1
|(
· · · ·
: ( ) -----------------------:TT**·: : : :·|×
s os·| -!シsae杜)No.sae....! |- |-----:-|- ----黏|-...-)------- 藏-r ≡|- : E.·-
·-|-()-|---·. No - |-... |-
|-- - .- - :-*_= :: -|-■-|--『::::sae H----|-|- :|-
 

. ·():|- | ( )
· · ·|-·|-|-|× |×|×
·: ( )
|- |×|-|-
( ) No.
...|-
|-
|- ■ s, ( )|-
o : ( ) |×
|( |- ( ) ( ) , ! |×|× |-- ( )
: | , !
: , | | ()!
|×
- | _
|- |- |- |-

Page 2

புது உலகம்
கவிஞர் பசுபதி
தேசிய கலை இலக்கியப் பேரவை
W
சவுத் விஷன்

Page 3
Puthu UHagam Pypothy
Fšt Publishg i 1965 Secord Edition. June 2000 Plbissrd in ÄSSocialios with National Association for Arl R. Liarture
by
STH WISÖN 6Thayar Sahib II Lane, Chennai 600 CO2,
Published arid Listributed in Sri Lanka by
Wasantham (P) Ltd. South Asia Books, 44, 3rd Fkoor, CCSM Complex. Colombo - *t
al: 941 - 33584.4 F : 004 - 33329
தேசியக் கணவ இவக்கியப் பேரளவயின் 23 வது ஆண்டு நிறைவு வெளியீட்டு வரிசையில் பதினோராவது துல்
புதிய உலகம் கவிஞர் பசுபதி முதற் பதிப்பு: 1985 முதற் பதிப்பு ஜூன் 2000
வெளியீடு: தேசியக் கலை இயக்கியப் பேரவையுடன் இனணந்து
சவுத் விஷன் 5. தாயார் சர்கிப் 2ஆது சந்து. சென்னை ர்ே 002.
yunu: 499)
ய் ஒளிஅச்சுக் கோர்வை ஆதல் கிராபிக், சென்னை ரே 1ே4 ப அச்சு: மணி ஆப்செட் சென்னை-5 அட்டை அச்சு பிரிண்ட் ஸ்பெஷாவிடி

அன்பான வாசகர்களுக்கு
கவிஞர் பசுபதியின் புது உலகம் என்ற கவிதைத் தொகுதியின் இரண்டாம் பதிப்பிளான மனநிறைவுடன் தங்கள் கரங்களில் தருகின்றோம்.
கவிதை உலகில் பல்வேறு முன்னேற்றங்கள்! புதுக்கவிதை. ஹைக்கூ என்று பலவித பாணிகளும் முனைப்புகளும் விரித்துள்ள பின்னணியில், வீறுகுன்றாத பாரம்பரியக் கவிதை வார்ப்பில், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை வலி யுறுத்தி முப்பது ஆண்டுகளக்கு முன்பே.க விஞர் தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அக்கருத்துக்கள் இன்றும் வற்புறுத்தப்பட வேண்டிய நிலையிலேயே எமது சமூக அமைப்பு அமைந்துள்ளதால், இந்நூலை வெளியிடுவதில் |5 I tb மகிழ்ச்சி அடைகின்றோம்
lui ia akan Luyan

Page 4
宝 I Hت
க. பகயதி
யாழ்ப்பான்க் கவிராயர்
பாழ்ப்பானக் கவிராயர் என்று - புரட்சி
யாப்புக்குள் கவிசெய்த தோழா வாழ்க்கைக்கு முற்றிட்டுச் சென்றாய் - நீ வைத்திங்கு சென்றகவி வாழும்:
கதிர்
தோற்றம் : 14129 up : 5.7.1985
 

தமிழுக்கு வாய்த்த தனம்
சிந்தையால், வாக்கால், செம்மைச்
செய்கையாற் புரட்சி உய்க்க, செந்தமிழ் செங் கொடிக்குச்
சேவகம் செய்ய வைக்க வந்த மா மனித னான
பசுபதிக் கவிஞன், காயம் வெந்தழல் உண்டும் வாழும்
வித்தகன் உயிர், இப் பா நூல்:
உலகினைப் புதுக்கி, மூசி
உழைப்பவர்க் குடைமை யாக்கி, அலகிலாப் பொதுமை வையம்
அமைத் தின வேதச் சாதி சிவகைகள் அனைத்தும் மாய்த் தித்
கறத்தினை, அழகை ஒம்பப் பல சுவைப் பாக்கள் யாத்துப்
படைத்துள்ான் படித்துப் பாராய்!
பொற்புறு நாடும் ஏடும்
புதுமையில் எழுமா தெய்யும் சொற் சரம் பழமை உட்கும்
சோற்றியை வீழ்த்திப் பாயும், கற்பக தருவைத் தென்னங்
கன்றினை உவத்தே கொஞ்கம் கற்பனை எய்தும் நாள் எம்
கையில் என் றொரு பாட் டார்க்கும்:

Page 5
உழைப்பவர் அரசம் ஈழத்
துதிக்கும் அத் தினத்தின் பின்னாள் தழைப்பதற் கிருக்கும் செம்மைத்
தமிழ் இலக் கியப் பொற் கோயிற் தலத் திருப் பீடத் தேற்றித்
தலைக் கரம் கூப்பிப் போற்றித் தொழத்தகும் பொதுமைப் பூம் பாத்
தொகுதியா தோழா? ஈதோ:
தத்தெடுத் தனைத்துக் காத்துதி தமிழெனும் கன்னிக் கீங்கு செத்தவன் வைத்துச் சென்றான் சீதனம் கவிதை வைப்பின் முத்தொடு பவள வைர
மூரலில் திளைக்க வேட்பின் புத்தகம் திறனாய் ஆங்கோர் புத் தகம் திறக்கும் பேகம்
5.总帖。 Aisha Giosureit

நாளை நம்முடையதே
நண்பர் பசுபதியுடன், அவரது இறுதி நாட்களில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றேன். தன்னைப் பீடித்திருத்த நோய் சம்பந்தமான மு: அகளை என் வாங்ாலேயே பேச வைத்துவிட்ட அவர், தாது மான நிச்சத்தை நன்கு தெரிந்து கொண்டு.துணிச்சராகவும், நிதானமாகவும் வேண்டியவர்களுக்கு வேண்டியவைகளைச் சொல்லிய அதிசயத்தைக் கேட்டேன் கடைசியாக அவர் என்னிடமும் தனது நிறைவேறாத ஆசை ஒன்றைக் கூறினார்.
"டானி என்ரை பாட்டுக்கனைப் புத்தகமாகப் போட முடியாமல்ப் போச்சு தீயும், ரகுநாதலுமாகச் சேர்ந்து யோசிச்சு கொஞ்சம் பாட்டுக்களைமாவது புத்தகமாகப் போடப் பாருங்கோ, இதன. ஈடை வாற கஷ்டத்தைப் பற்றி எனக்குத் தெரியும் இப்ப பிரயோசீனப்படாட்டாலும் பின்னர.க்கு - ங்ங்க்ரட அதிகாரம் வார காலத்தினலாவது எல்லாருக்கும் அது பிரயோசனப்படும் இது எனக்கு நல்லாத் தெரியும்"
ாேன் கரத்தை இறுக்கி தெருடிக்கொண்டு அவர் கூறிய இத்த வார்த்தைகளை நினைக்குந்தோதும். கடைசியாக ஏற்பட்ட அந்த ஸ்பரிச உண்ார்வை அனுபவிக்கின்றேன்
மானம் தன்னை நோக்கி தெருங்கி நெருங்கி வருவதை அறிவு பூர்வமாக உங்ார்த்து கொண்டு, அதற்காகத் துளியேறும் கலக்கம் கொள்ளாமல், எமது பாதையிலே அEரிஷ்குத்து திற்கும் ஆயிரமாயிரம் தோழர்களுக்கு நானை நம்முடையதே" - ன்று தன்னையும் உள்ளடக்கி ஒருமைப்படுத்தி, எதிர்கால நம்பிக்கையை உடை டி . த லகெங்கும் தமீது விதேலைக்காகப் போாாடி நிற்கும் கோடானுகோடி மக்கனை நினைவுபடுத்தி நிலையான இடத்தைப் பெற்றுச் சென்றுள்ள தோழர் பசுபதியுடைய ஆசையின் ஒரு பகுதி இத்தொகுதியின் மூலம் நிறைவேற்றப் படுவதை தினைக்கும்போது ஒரனவு மன அமைதி ஏற்படுகின்றது.
..S., கே. டானியல்

Page 6
+ ር] கதி
தன்னடக்கமுள்ள தொண்டன்
நிலப் பிரபுத்துவத்தின் சாபக் கேடான சமூகக் கொடுமைகட்கும். முதலாளித்துவச் சுரண்டலுக்கும் உட்பட்டு சமுகத்தின் அடத்தளத்தில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்குமாகத் தன் இளம்பராயம் தொடக்கம் உழைத்து வந்தவர் காலஞ் சென்ற பசுபதி அவர்கள்.
மக்களின் மேற்படி இயக்கங்களிலெல்லாம் பங்கு கொண்டு தொண்டாற்றி வந்துள்ளார். இத்துறையில் அவர் பெற்ற அனுபவங்களைத் தம்முள் இயற்கையாக அமைந்திருந்த கவிப்புலமையினால் காலத்திற்குக் காலம் பல கவிதைகளாகப் புனைந்து வேளியிட்டுள்ளார்.
பசுபதி அவர்கள் நம்மிடையில் டோழ்ந்த காலத்தில் அவரை ஒரு திறனமLான கவிஞரென்று அநேகருக்குத் தெரியாது. அவர் தம்மை ஒரு கவிஞன் என்று மற்றவர்களுக்கு விளம்பரம் செய்தவருமல்லர். அவர் ஒரு தன்னடக்கமுள்ள தொண்டனாக எம் மத்தியில் வாழ்ந்து மறைந்துவிட்டார். ஆனால், அவருடைய கவிதைகள் மக்கள் மத்தியில் அமரத்துவம் பெற்று நிலவும் என்பதில் எல்வித ஐயமுமில்லை.
格岛临岳。 எம். சி. சுப்பிரமணியம்

ZAFE?
இயக்கத்தோடு இணைந்த கவிஞன்
கொடூரமான புற்று நோய் யாழ்ப்பானத்திலுள்ள கம்யூனிஸ்ட்டுகளின் அணியை இருமுறை ஊடுருவிச் சென்றுள்ளது. முதல் முறை அது இராமசாமி ஐயரின் உயிரை அவரது 45-ம் வயதில் கவர்ந்து சென்றது. இப்பொழுது அவரிலும் இளமையான பசுபதியை அரவது 40-ம் வயதில் பறித்துச் சென்றுள்ளது.
சமூக ரீதியில் பிளவு பட்டதும் பொருளாதார முறையில் தேக்கமுடையதுமான இந்து சமுதாயத்தின் இரண்டு துருவங்களினின்றும் அவர்கள் ஒரே நோங்கங் கொண்டு மாற்றத்தை விரும்பும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபடுவதற்கு நெருங்கி வந்து சேர்ந்தனர்.
தம் வாழ் நாளில் இறுதி நாள்வரை யாழ்ப்பானத்தையும் இலங்கையையும் சீாதி பேதமற்றதாகவும் முன்னேற்ற முடையதாகவும் உருவாக்கப் போராடினர். வர்க்க பேதமற்ற சமுதாயத்தாலும் கம்யூனிச அமைப்பாலுமன்றி இதளினச் செயற்படுத்த இயலாதென அவர்கள் உனர்ந்தனர்.
அவர்கள் ஆசிரியர்களாகவும் நம் நாட்டிற்குச் சிறப்பாகக் கடமை ஆற்றினர். இராமசாமி ஐயர் சிறந்த கணித ஆசிரியராவர். பசுபதியும் அவரேயொத்த திறமையுடைய :ொழி ஆசிரியராலர் எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகுமெனச் சொல்வார்களன்றோ! அதற்கேற்ப சமூகத்தின் இரு கண்களுக்கும் கூர்மையளித்தனர். அது மட்டுமல்ல, அவற்றிற்கு நோக்கமும் இலட்சியமும் காட்டினர். அதனால்தான் அவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து தம் உடல் பொருள் ஆவியில் பெரும் பங்கினை அதன் வளர்ச்சிக்க அர்ப்பணித்தனர்.

Page 7
1, area அவரது கருத்துக்களையும் எண்ணங்களையும் வெனிப்படுத்தும் பொருட்டு பசுபதி பல்வேறு மேடைகளுக்கு அழைக்கப்பட்டார். அவர் பொதுவுண்டமைவாதியாகவும் சமுதாய சீர்திருத்தவாதியாகவும் இலக்கிய விமரிசகராகவும் பலமுறை சொற்பொழிவாற்றினார். அவர் பொருத்தமாகவும் பொறுப்புடனும் பேசினார். ஆனால், அவர் ஒரு பேச்சாளராக நினைவு கூரப்படமாட்டார். ஜனத்திரள் மத்தியில் நாவன்மையைக் காட்டியவரல்லர் பசுபதி. கற்பளனயினால் உந்தப்பட்டு பேனா வரிசையைக் காட்டியவரே அவர்.
கவர்ச்சியற்ற யாழ்ப்பாணக் கவிராயர் என்ற புனை பெயரில் மறைந்திருந்து கவிதை மூலம் தன் உள்ளுணர்வையும் ஆழ்ந்த கருத்துக்களையும் வெளியிட்டார் பசுபதி
ஒருளமப்பாடற்ற பாழ்ப்பாணச் சமுதாயத்திற்கு எதிராக பொது விவகாரங்களில் ஈடுபட்டு தன் கண்டனத்தைத் தெரிவிக்க முற்பட்ட அவருக்கு கவிதை கருவியாக அமைந்தது இயல்பே.
சமூகத்தின் தேவைகளை எடுத்தியம்ப முதன்முதல் எழுந்தது கவிஎதயே இருள் சூழ்ந்த பண்டைக் காபத்தில் மனிதன் இயற்கைக்கு எதிராக தனித்து வாழ இயலாதபேனாகவும் கூட்டுமுயற்சியே அவன் வாழ்விற்கு இன்றியமையாததாகவும் இருந்தபோது. மொழி அச்சமூகத்தை கவிதை மூலமாகவே தொழில் புரியச் செய்தது. எழுத்தையோ நூலையோ அறியா அக்காலத்தில் கவிதையே தன் ஒழுங்கான தன்மையினாலும் ஓசையினாலும் மனிதனது மனதையும் கற்பனையையும் அருட்டி மனித சமூகத்தை இயற்கைக்கு எதிராகப் போராடத் துண்டியது.
உளிழப்பிள் மூலம் ஏற்பட்ட ஒற்றுமையினாலேயே கவிதை தோன்றியது. ஆனால், இன்றோ சமுதாயத்திற்கும் கவிதைக்குமோ. அன்றி உழைப்பிற்கும் கவிதைக்குமோ யாதொரு தொடர்புமின்றி இரண்டும் இரு வேறுபட்ட நிலையில் உள்ளனவாகக் கருதப்படுகின்றது. இப்பொழுது அது தனியொருவரின் தனிப்பட்ட கற்பனையினால் உருவாக்கப்படுவதாகவே கருதப்படுகிறது எல்லாக் காலங்களிலும் எல்லா மொழிகளிலும் கவிதை எழுதப்பட்டுள்ளது. எந்தக் காலத்திலும் சமூகத்திலிருந்து அப்பாற்பட்ட உயர்நிலையிலில்லாமல், தம் கரங்களினால் படைக்கும் ஆற்றல் வாய்ந்த கூட்டு முயற்சியுடைய

அகதி"
மக்களின் அபிலாஸ்டிகளளப் பிரதிபலிக்கும் முறையில் எழுதப்பட்ட கவிதையே உயர்ந்ததாகவும் மறத்தற்கரியதாகவும் கொள்ளப்படுகிறது. 2க்கள் வாழ்விற்கு உழைப்பே நியதி. எனவே, எக்காலத்திலும் எந்நாட்டிலும் உழைப்பாளர்களே காட்சிக்கெளிய பல்லாயிரக்கணக்காள கரங்களளயுடைய இவ்வுலக பிரம்மாக்களாவர்.
பாட்டாளி மக்களின் பரந்த பலம் வாய்ந்த சர்வதேச இயக்கத்தில் ஈடுபட்டு பல சேவைகள் புரிந்தார் பசுபதி அவர் இதய பூர்வமாக இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவரது இதயத்தினின்றும் தோற்றமெடுத்த கவிஎதகளே அவ்வியக்கத்திற்குக் காணிக்கையாயின
அவரது கவிதைகள் கருத்தற்றளவயாகவோ, அன்றி கேளிக்கைக்குரியவையாகவோ அமையவில்லை. அவை கருத்தும் குறிக்கோளுமுடையவையாக விளங்கின. விளங்குகின்றன. வேறு வகையாகக் கூறினால் அவரது ஏட்டிலே எடையுண்டு எழுத்திவே ஆணியுண்டு. அவரது கவிதைகள் ஏழை மக்களுக்கும் கரண்டப்படுபவர்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்குமே எழுதப் பட்டவில் புத்துலகினைப் படைப்பதற்கு ஊக்கமளிக்கவே எழுதப்பட்டவே.
5.6.65. மு. கார்த்திகேசன்

Page 8
Zaza'
வாழ்க்கைக் குறிப்பு
இந்நூலாசிரியர் பசுபதி அவர்கள் 14.7.1925-ல் பருத்தித்துஎறயிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தையார் கந்தையா. தாய் அன்னம்.
இளமைக் காலத்திலிருந்தே கவி புனையும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர் காலஞ் சென்ற தமிழறிஞர் கந்தமுருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தம் கவிப் புலமையை விருத்தி செய்துகொண்டார். இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளியாகும் பல பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன பல நூறு கவிஎதகளை அவர் எழுதியுள்ளார். எனினும் இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்களிடையே காணப்பெறும் படாடோபத் தன்மை சிறிதும் அற்றவர் அவர் வெறும் கவிஞரல்லர் போராட்ட வீரர் இயக்கத்தோடு தன்னை இrணத்துக் கொண்ட கவிஞர். அவர் கவிதைகளில், கேலியும். குத்தலும், கேள்விக்கனனகளும் போராட்ட உணர்வும் நிறைந்திருக்கும்.
கல்வி கற்ற காலம் முழுவதும், பாடசாலைகளில் சாதிக்கொடுமைஎய எதிர்நோக்க வேண்டி வந்ததால், இளமைக்காலத்திலி ருந்தே சாதிவெறியை எதிர்த்த போராட்ட உணர்வும். சமூக சேஎவயில் நாட்டமும் வரப்பெற்றார். அந்நாட்களில், யாழ்ப்பானத்திலும், பருத்தித்துறையிலும் இருந்த சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவா சங்கம் போன்ற சமுக சீர்திருத்த ஸ்தாபனங்களுடன் இணைந்தது சேவை செய்தார் சிறுவயதிலிருந்தே பகுத்தறிவுவாதி. யாழ்ப்பாண தி.மு.க.வின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவர்.
1958-லிருந்து 1983 வளர அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சஏபயின் இணைச் செயலாளராகவும். நிர்வாகச் செயலாளராகவும்

15 *தக் கடமை புரிந்தார். இக்காலங்களில் மகாசபையின் முயற்சியால். யாழ்ப்பானப் பகுதியில் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்கெனச் சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டனம குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் மகாசபை நடத்திய தேநீர்க்கடைப் பிரவேசம். மனித உரி: ட் போராட்டம் முதயே இயக்கங்களில் தீவிரமாக ாடுபட்டுேேழத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள். அவர்களுடைய பிரச்சினைகள், எதிர்காலத் திட்டங்கள் முதலியவற்றை பெரார்ச்சி பூர்வமாக விளக்கி 1959-ல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்குப் பொறுப்பாசிரியராக இருந்து பணி
செய்தார்.
1336-ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் அங்கத்தவராகச் சேர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள். உளழப்பாளி மக்களின் விடுதலைக்காக இறக்கும்வரை இதய பூர்வமாக உழைத்தார். கம்யூனிஸ்டாக வாழ்ந்து கம்யூனிஸ்டாகவே இறந்தார்.
நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலி ல் இரத்மலானையிலும், பின்னர் கைதடியிலுமுள்ள சேவிப்புலன், சுட்புலனற்றோர்க்கான கல்விநிலையங்களில் பணிபுரிந்தார்.
புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு 5, 7 85-ல் மரணமடைந்தார்.
எவருடனும் இனிமையாகப் பேசும் இயல்பினர் நகைச்சுவை நிரம்பியவர். தன்னம்பிக்கையும் திடசித்தமும் கொண்ட உளத்தினர்.
ஸ்தாபனங்களில் நிதானமாகவும். உறுதிப்பாட்டுடனும் நின்று தம் கொள்கைளிய உருவாக்குவதில் வல்வலராயிருந்தார். கோடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் எப்பொழுதும் ஒரு சண்டைக்காரராகவே இருப்பார் - தமர் என்றும் பிறர் என்றும் பார்க்க மாட்டார். எதற்காகச் சண்டை பிடிக்கிறோமென்ற தெளிவிருந்தால், சண்டைக்காரனாய் இருப்பதில் தவறில்லை என்பது அவர் கொள்கையாகும்.

Page 9
Z/2Zas?
கவிமலர்கள்
16
புது உலகம்
தமிழ்த்தாய் . 18
கவிதைக்கன்னி. 20
LHğı 2-006ub ... 22 நாடும் ஏடும். 27
ஏட்டுச் சுரைக்காய்? . 29
தொண்டு . ... 31
புரட்சிப் புலவன். 33
தொழிலாளர் செங்கொடி பறக்குது. 36 புரட்சிக் கீதம். 37 புரட்சி வாழ்க!. 39 பாட்டாளி துயரம் . 41 தொழிலாளர் சபதம் . 43
நாளை நம்முடையது. 45 முடிவு காண்போம்! . வையகம் பணிந்தது. 48 தோழர் கந்தையா . 50 மே தினம் . 53
தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர்
உரிமைக் கீதம் . 56
சாதிக் கொடுமை . 58 தாழ்வோ சாதி? . 60
மூடிமறைக்காதீர்!. 62
ஒன்றே குலம். 66
ஏது செய்தீர்?. 68
இயற்கை
இயற்கைச் செல்வம் . 70
ஞாயிறு. 71
79 ......................................................... آfناDا
5Tld6, ................................................. 8
கற்பக தரு. 82 தென்னம்பிள்ளை. 85
பல்கவை
நோக்கு. 87 வாழ்வுப் பிரச்சினை
ஒன்றே!. 92 கேரள வீழ்ச்சி. 95
காதல் . 97
மாய மோகினி? . ၃-••••.................••••• 98 எக்காலம்?. 100
մenծ:...................................... 101
இன்பம். 102
 
 
 

புது உலகம்

Page 10
A/2Za?
தமிழ்த்தாய்
ஆண்டவன் தமிழ்ப டைத்தான்;
அவன்மகன் படைத்தான்! என்று மாண்டவர், மற்றும் மாள
இருப்பவர் சொன்ன தெல்லாம் காண்டிலேன்; அவைக தைகள்!
கருத்தினிற் கொவ்வா தாகும். ஈண்டுனை ஈர்த்த தென்றால் எனக்குநீ தாயே அம்மா!
முன்னைய தமிழர் வல்லோர் முற்றுனைக் காக்க நின்று தன்னையே தந்து இசைத்தார் தருபுகழ் எய்தி நின்றார். அன்னையே! இவரை ஒக்க
ஆக்கமும் சிறிது காணேண்! என்னை நீ வளம்ப டுத்து,
இசையினை எய்தி நிற்பேன்!
பாட்டினால் உரையி னாலும்
பலமாலை தன்னைச் சூடி கேட்டவர் தலைய சைக்க
கேண்மைகொண் டாய், தமிழர் நாட்டவர் மறந்த போதும்
நாநிலத் துயர்ச்சி பெற்றாய்! மீட்டுனை வேண்டு கின்றேன்:
மேன்மைகொள் தமிழே தாராய்!

19
Z/2Zaf
பண்டைய காலந் தொட்டு
பழகிய மொழிகள் பல்லாம் அண்டினர் மொழியை அந்நாள்
அன்னையாய் மதித்து வந்தார். தொண்டதற் காகச் செய்தார்
தூயநற் பெருமை பெற்றார். வண்டமிழ் உன்னை ஏற்றார்
வளம்படு தமிழர் ஆனார்!
பரந்ததோர் உலகில் தாயே
பழம்பெரும் பெண்ணாய் நின்று திருந்திய நாக ரீகம்
தெளிவுற உலகிற் தந்து விரும்பிய யார்க்கும் வித்தை
வியப்புறச் செய்தாய்! என்னைச் கரந்திடும் அமிழ்தம் ஊட்டி
கவைதனைக் கூட்டி நிற்பாய்!

Page 11
Z/2Zaz
கவிதைக் கன்னி
கவிதையெனும் கன்னிதனைக் காண வென்று காதலால் மனமுருகக் கடிது சென்றேன். புவியிலுள்ள பொருளெலாம் ஒவ்வொன் றாக புதுவுணர்வு பொலிந்ததொரு தோற்ற மாகி நவஉலகிற் கேற்றநல் நாட கத்தாய் நடனமிடு பாவங்கள் நசர சங்கள் உவகையொடு உளங்குளிர உணர்ச்சி பொங்க உவந்தபல் ஒவியமாய்த் தோற்றந் தந்தாள்!
நீலவான் முகட்டினிலே தாவிச் சென்று, நிலவொளியின் சாயலிலே மயங்கி நின்று, கோலமிளிர் காலையிலே கதிரோன் முன்றில் குதிநடனம் செய்யுமந்தக் கடலில் தாவி, மாலையொளி மயக்கினிலே மருவும் வெள்ளி மதிவண்ணக் கட்டழகி கலைகள் தோறும் சோலையிலே சிரிக்கின்ற பூக்கள் தன்னில் சுதிமீட்டும் சுடர்க்கொடியாள் நடனம் செய்தாள்!
ஒடுகின்ற காட்டாற்றில் ஊடிச் சென்று, ஊற்றெடுக்கும் அருவிகளில் ஒலித்து நின்று, பாடுகின்ற பறவையிடம் பண்ணைச் சேர்த்து, படையெடுக்கும்\ஒங்காரக் காற்றில் வந்து, சாடுகின்ற மரங்களிடை சலச லப்பில் சதிராடும் புள்ளினங்கள் கொடிகள் யாவும் ஆடுகின்ற அசைப்பினிலே பிறந்து வந்து அன்ன நடைத் தென்றலிலே அணைந்து நின்றாள்!

2
Z/2Za? தொழிலாளர் திண்தோளில், திரண்ட மார்பில், திருவுலகிற் கொளியூட்டும் ஆலை தன்னில், உழவோடு உறவாடும் உழவர் கூட்டம் ஊற்றான விளைவுகளின் கழனி தோறும், எளிதான இல்வாழ்வை இயங்கச் செய்யும் இசைவான மனைமக்கள் களிப்பின் ஊடும் விழைவோடு வியனுலகம் உய்ய வேண்டி விரைகின்றார்; அவரோடு இசைந்தாள் கன்னி!

Page 12
Z/2Za?
புது உலகம்
காணுகின்ற புதுவுலகம் கற்பனைக்கே யெட்டாக் கரையல்ல, கடலல்ல, கன்னியுந்தான் அல்ல! பேணுகின்ற பொருளெல்லாம் தனியுடமை யாகா, பொதுவுடைமை; பொதுமக்கள் பொதுச்சொத்து ஆகும்! வேணுமென்று விழைகின்ற வேதனையோ இல்லை! வேண்டாத வீணர்களும் வித்தகரும் இல்லை; மண்ணின்பம் தனைவெறுக்கும் மக்களவர் கூட்டம் மருந்துக்கும் கிடைக்காது; மாண்புபெறு வையம்!
இனம்வேறு காட்டுகின்ற இழிநிலையர் மாந்தர் இருப்பதற்கே இடமில்லை மதவேறு தன்னால் மனம்மாறு அடைகின்ற மாந்தர்களு மில்லை; மதமுண்டு, மதமில்லைச் சம்மதமே யதன்பேர்! தனம்வேறு கொண்டவர்கள் தலைக்கிறுக்கே யில்லை! தக்காரே யெல்லோரும் தரணியது தன்னில், சினம்வேறு சிந்தாமல் சீற்றமது இன்றி செம்மைநலம் புரிகின்ற செந்நலரே வாழ்வர்!
உயர்வில்லை தாழ்வில்லை உழுதுண்டு வாழ்வர்! உற்றபெரு நற்கலைகள் உயர்ந்தோங்கி வாழும்! பயங்காட்டி பலன்பெறுதும் பாதகர்கள் பாதை: பணந்தேடி யலைகின்ற பாமரர்கள் வாதை, கயல்விழியார் கண்தேடிக் காமுறுதும் கயவர், கற்பதனை விலைசுறும் கன்னியர்கள் முதலாம் மயல் கொண்டு மடிகின்ற மாந்தர்களும் மற்றும் மனமுடைந்து மாழ்கின்ற மாந்தர்களு மில்லை!

23
Z/aza7 விழை நிலங்கள் விவசாயி சொந்தமதே! யாரும் விலாவொடிய வேலைசெய்யும் வினைஞரற்றுப் போகும் களைபிடுங்கி வாழ்வதற்குக் கூட்டமொன் றில்லை! கதையளந்து காய்வாருங் காண்பதற்கு இல்லை! மழைபொழியும் மாதங்கள் தோறுநிலை நின்று; மருந்துண்டு அதற்காக மந்திரமோ அன்று! பொழிகின்ற நிலவதனைப் பெறுவதனைப் போல பொருளெல்லாம் பொதுவாகப் பெறுவரவர் சால!
ஈயென்று இரப்பவர்கள் எவருமங்கு இல்லை! இரந்துண்ணும் இழிநிலைதான் இருப்பதென்ப தில்லை. பேயென்ப பெல்லிதனி யங்கள் பித்தலாட்டம்; பெருச்சாளி பூதங்கள் பேசுவதிண் டாட்டம்! நோய்நொடி நுழைவதற்கு நுழைவென்பதில்லை; நுண்கலைகள் பெருகுதற்கு வழிபலவே உண்டு! தாய்தன்னை, தம்மொழியை, தன்னாட்டை மேவி தலையாயத் தாம்காப்பர்; தாழ்வகன்ற வையம்!
சாதியெனுங் கொடுமையோ சற்றுமில்லை; யங்கே சாத்திரங்கள் கோத்திரங்கள் பார்ப்பதில்லை; மேல்கீழ் ஒதிவரும் உண்மைக்கு உயர்வுண்டு நாளும் உலகதனைக் காப்பதற்கு வழி செய்வர் கேளும்! பீதிபயம் பீடைமுதல் பிடித்திருந்த கோழை பித்தர்வரை பூண்டோடு அற்றொழிந்து போனார்! நீதியொன்று நிலைநிற்கும்; நிலைக்களனும் அதுவே! நீசரவர் நீட்டோலை இழிந்திறந்து போச்சே!
ஊணுண்டு உடையுண்டு உறங்குதற்கு மிக்க உப்பரிகை எல்லார்க்கும் உண்டுண்டு சொர்க்கம்! தேனுண்டு தீந்தமிழின் செல்வமிக வுண்டு; தித்திக்கப் பேசிவரும் சிறார்கள்கற் கண்டு நானுண்டு நீயுண்டு நலமில்லை யென்போர் நடராசா ஆகிவிட்டார் - நலமவர்க்கு இல்லை! மாணுண்டு மகிமைபெற உழைத்தவர்க்கு மட்டும்; மற்றவர்கள் மறைந்தொழிந்து மடிந்தேதான் போனார்!

Page 13
24
ZZZ ترجمے/4 நாடென்றும் நகரென்றும் பேதமென்ப தில்லை! நல்லவர்கள் கெட்டவர்கபேச்சுக்கிட மில்லை; வீடொன்று இல்லையென விசனமிட்டுக் காட்டும் வீணர்களே இல்லையங்கு விதவையவர் துன்பம் பாடுகின்ற பாவலரும் இல்லையங்கு வீணே பாழடையும் பொருட்களில்லை, பயன்பெறுதும் பொருட்கள்! பேடகன்ற அன்றிலைப்போல் துடிப்பவரு மில்லை; பெண்பார்த்து விலைபேசும் பேதையில்லை யாதல்!
தொலைதூரம் நீண்டிருக்கும் மக்களவ ரெல்லாம் தொகைபெருகி யிருந்தாலும் துணைவர்நமக் காவர்! அலைபாயும் சமுத்திரங்கள் ஆழிதழும் வையம் அணைபோட்டு அழித்திடா அன்புவெள்ளம் பெருகும்! மலையேறி மணிக்கொடி பொறித்தகதை யெல்லாம் மக்களுக்குப் பொதுவாகும் மாற்றாரே யில்லை! விலைவாசி பேசிவரும் வீணர்குழாம் முற்றாய் வீழ்ந்துவிட்டார்! விளைபொருட்கள் வெகுத்ததடா அங்கே!
வீதிவழி விட்டெறிந்த சந்திரர்கள் மேலே விரைந்தோடி விண்மீனை அணுகியங்கு வாழும்! சோதியெங்கும் சொர்ணமயம் வானம்மீ தெல்லாம் சுடரொளிதான் சொல்லிவரும் கதைகள் நமக்கெல்லாம்! சேதிபல சேகரிப்பர் சேர்ந்திருந்து வாழ்வர்; செயமெனது உனதென்று சொல்லுசண்டை யில்லை; ஒதிவரும் உலகமெங்கும் உண்மைதனை, நெறியை உலகமெலாம் ஒருசேர வாழுகின்ற வையம்!
காதல்செயும் உரிமையுண்டு; காமமென்ப தில்லை கற்புநெறி பொதுவாகும் பேதமது தொல்லை. சாதிமதம் காதல்தனைக் கெடுதலெதும் செய்யா, சாடுகின்ற சளக்கரினக் கூட்ட மில்லை யாதல்! தீதிழைக்கும் திருமணங்கள், தெய்வத்தின் பேரால் தீட்டிழைக்கும் தீயவர்கள் தீர்ந்தொழிந்து போனார்! வேதியர்தாம் ஒதமணம் முடிப்பதென்ப தில்லை; விழைகின்ற இன்பத்தில் தடையெதுவு மில்லை!

25
A/2Zav சிறுபிள்ளை கல்விகற்கக் கலைக்கூட மெங்கும் சிங்காரத் தோட்டங்கள் ஓடிவிளை யாட சிறைக்கூடம் போலிருப்ப தில்லையது தொல்லை! சிந்தனையைத் தூண்டிவிடும் இயற்கைவளக் காட்சி! அரைகுறையாய்க் கற்பதில்லை; ஆய்வுதிறன் உண்டு. அவரிவரைக் குறைசொல்லி வாழ்வதென்ப தில்லை; திறமைகொண்டார் அங்கொருவர் இருப்பதென்ப தில்லை; திரைமறைவில் தீமைதரும் தீத்தொழில்கள் இல்லை!
விஞ்ஞானம் விளைத்திட்ட வழிகளவை தன்னில் வாழ்வமைத்து வளம்பெற்று வாழுகின்ற வையம் அஞ்ஞான இருள்நீக்கி அறிவுதனைத் தேக்கி அயலவனை அருளொழுக அன்புதனைச் சேர்க்கும் மெய்ஞானப் பொருளுண்டு; மேவுமவர் செல்வம் மேதினியிற் காண்பதுவே மெய்ம்மையது வாகும்! எஞ்ஞான்று மின்பமதாய் வாழுகின்ற மக்கள் இருக்கின்றார்! இனிக்கின்றார் எழுந்திடுக வையம்!
அணுகுண்டு அகிலத்தை அழிக்குமென்ற பீதி அடியோடு அற்றொழிந்த அறிஞர்தரும் சேதி அணுசக்தி ஆக்கத்தின் வழிதேடி நல்ல அற்புதங்கள் அளித்துமே அரும்பணிகள் புரியும்! கணமேனும் காத்திரார் கலைஞர்கை வண்ணம் ககனத்தின் கலைப்பொருளாய் கவியுமது திண்ணம்! மணமுண்டு மறுமலர்ச்சி மகிமைதரும் வாழ்வு! மறுபிறப்பு, மறுலோகம் மற்றில்லைத் தாழ்வு
அதிகார அரசொன்று ஆளுவது மில்லை! அயல்நாட்டை அடிமைகொளும் அவலநிலை இல்லை அதிகாரம் அந்நாட்டு மக்களவர் கையில்: அடிமைதனம் அற்றொழிந்து அன்புநெறி தோயும்; சதிராடு தேவடியாள் போலாடு பணமோ சண்டாளர் கையிருந்து சாரமற்றுப் போகும்! துதிபாடித் தொந்திவளர் தூபமிட்ட தீயர் தொலைந்திட்டார்! துன்பமிலை இன்பஞ்சூழ் வையம்!

Page 14
26
Zazaf எல்லார்க்கும் எல்லாமென் றிருக்கின்ற தங்கே: இன்பபரி இந்நாடு பொன்னாடு ஆச்சே! உல்லாச வாழ்வுண்டு உலுத்தர்ககம் இல்லை உலகமது புதுவுலகு உயிர்த்துடிப்புக் காணிர்! கல்லாதார் என்றொருவர் காணவிலலை: கருத்து கலைநுணுக்கம் கண்டவரே காண்பார்கள்; பெருத்து தில்லிக்கும் போவதனால் திருப்தியெதும் காணார்: திசையெங்கும் புவியெங்கும் திருப்திமிகக் காணும்!
குயில்கவிக் கொண்டாடும் கோலமதி முட்டும்; குன்றேறி நின்றாடு மானினங்கள் கூட்டம் மயிலாடும் மாந்தோப்பு மணங்கமழும் அழகு மலர்வனங்கள் மண்டபங்கள் மாலைவெயில் நிலவு வயல்வெளியின் வனப்புக்கள் வசந்தந்தரு இன்பம்! வளமுள்ள நீர்தேக்கம் வட்டநிலா சொட்டும்! முயல்கின்றார் எல்லார்க்கும் மூழ்கிவரும் இன்பம்; முன்பிருந்து அநுபவிக்க வாழுமெழில் வையம்!

Zazasó7
நாடும் ஏடும்
தாய்நாட்டைத் தன்நாடாய்ப் பேண வேண்டும். தாய்மொழியைத் தன்மொழியாய்ப் பேச வேண்டும். தாய்மையிலே பற்றில்லா மனித ருண்டால் தந்தைபேர் தெரியாத காரணந் தான்! தாய்நாடு சேய்நாடு என்று கூறாய்! தரங்கெட்ட மனிதர்கள் பிரித்து நின்றால் தாயின்தாய் பேர்த்தியார் நாடு எங்கே? தாம்கேட்க தருவாரோ பதில்ள மக்கு?
எந்தாயாம் எழிலான ஈழ நாட்டில் இருக்கின்ற என்சகத்துத் தமிழர் சில்லோர், எந்தாயின் அணைப்பினிலே இனிமை பெற்றும் என்நாடு இந்தியாநா டென்று சொல்வர்: எந்தாய்தான் இவர்கட்கு இழைத்த அநீதி எதுவென்று கேட்டாலோ - சொல்ல இல்லை! தன் தாயை தான்கொண்ட தாரம் தன்னை தன்முன்னே உரிமைகொள உடன்பட் டாரோ?
தேசத்தின் பண்புதனைத் தெரியக் காட்டும் தரமுள்ள இலக்கியங்கள் தாரும் என்றால் தேசீயம் இதிலுமா வேண்டும் என்பார்! தேசத்தின் வாசனையே தெரியா தோர்கள் பேசுதற்கும் எழுதுதற்கும் பொருளே இல்லை! பற்றுதலும் புரட்டுதலும் பொருள்கள் ஆகும்! நாசத்தின் படுகுழியை நாடிச் செல்வர்; நாடுநலம் ஏடுநலம் நாட்ட மில்லார்!

Page 15
28
Z/2Za2
முரண்பட்ட கொள்கைதனை முற்றும் பேணி
முயற்சிகள் உடையாரை முடித்துக் கட்டிச் சுரக்கினற் பொருளெல்லாம் கரண்டி முற்றாய் சுற்றத்தார் தெரியாமல் சோரம் செய்து அரண்கொண்ட தேசத்திற் கழிவு தேடி ஆக்கமோ தனதாக்கம் பேணி நிற்பார்! சிரங்காட்டின் சீற்றந்தான் சீறு தன்றோ சீ! இவர்கள் செயல்தன்னைச் செப்ப லாமோ?
இலக்கியத்தைப் பொழுதுபோக் காகக் கொள்வோர் இருக்கின்றார் இந்நாட்டில் என்று சொன்னால் விலக்கியதை வீட்டில்வைத் தேபூ சிக்கும் வீணர்களும் வாழ்கின்றார்; விடிவு காட்டும் கலைக்கதிரைக் கண்மூடி மறைத்தல் போலாம் கசடர்சிலர் குழறுதலைக் கேட்க நாணும்! விலைக்குவரும் இவர்கருத்து வேண்ட என்றால் வேசியரும் விழைவாரோ விருத்தங் கண்டு.

Zaza/
ஏட்டுச் சுரைக்காய்?
அன்றிருந்த நந்தமிழர் பெருமை,உயர் திறமை, அயலவனை நேசிக்கும் அன்பொழுகு பண்பு, நன்றிருந்த நல்வாழ்க்கை நலம்விழைக்கும் நட்பு, நம்மவர்கள் மட்டுமல்ல நாட்டவர்கள் எவரும் ஒன்றிருந்த உயர்தன்மை உலகத்தில் கவரும்: உள்ளத்தில் களிப்பூட்டும் உன்னதக் கொடையே! என்றிருந்த எழிலெல்லாம் எங்குமறைந் ததுவோ? ஏனிந்த இழிநிலைமை எம்மவர்க்குத் தகுமோ?
ஒன்றுகுலம், ஒருவன்தான் தேவன்நமக் கென்று ஒருகுலமே உண்டிங்கு மறுபேதம் இன்று! என்றுணர்ந்த எந்தமிழர் இன்றிருக்கும் நிலைமை எண்ணிவிடல் இழிவுபல எவ்வெவர்க்கும் புலமை நின்றொருவன் சமதரையில் பேசுகின்ற போது நீவேறு நான்வேறு நினைப்பதுவே வாது. சென்றொருவன் சமவுரிமை சொல்லுகின்ற துண்டு; செயலில்லை; சீர்திருத்தம் பேச்சுருவில் மண்டும்!
சிறுபுறாவின் உயிருக்காய் தசைதன்னை யீந்து சீர்த்திபெற்ற சிபிமன்னன் வாழ்ந்ததுண்டு; உயர்ந்து மறுகிவிழும் கொடிமுல்லை வாழ்வதனிற் காக மணிபொறித்த தேர்தன்னை மதித்தளித்த பாரி: சிறுமழையில் நனைந்தமயில் தன்நிலைமை கண்டு சிங்காரப் பொன்னாடை போர்த்துயர்ந்த பேகன்; வறுமையினில் வாடிநின்ற புலவரவற் காக வாழுமுயிர் தனையீயக் குமணனெனும் வள்ளல்;

Page 16
3 O
Z/2Zaf
இவர்பலராய் எந்தமிழர் நாடுதனில் இருந்தார் என்று நான் படித்ததுண்டு! இலக்கியத்தில் விருந்து! அவர்பலரின் அரும்புகதை அங்கலாய்த்துக் கூறும் அன்புடையார் அறத்தமிழர் அருங்கருத்து மாறும்; சுவரெழுதாச் சித்திரம்போல் செயலற்றுக் காட்டும்! சுவைகாட்டும் சொல்லடுக்கு சுரைக்காயோ ஏட்டில்! தவறேதும் புரியாத தமிழர்சிலர் வாழ்வு தந்தவர்கள் நந்தமிழர் தானிந்த வாழ்வு?

Zazaf
தொண்டு
வாழப் பிறந்தவர் மக்கள் - அவர்
வாழும் வழிமுறை கண்டு
நாளும் உழைத்திடல் வேண்டும் - அது
நன்மை தரும்நலத் தொண்டு.
நாளும் உழைத்திடும் மனிதர் - தினம்
நலிந்து மடிவதைக் கண்டு
பாழும் துயரினை வென்று - உயர் பணி செய்வதேநலத் தொண்டு.
சாதி மதப்பெரும் பூசலால் - தினம்
சஞ்சலப் படும் மக்களை
மோதி வருகின்ற தீமையை - இங்கு
முற்றாய் ஒழித்திடல் தொண்டு.
இரந்து வாழும் இழிமையை - பணம் கரண்டி வாழும் கொடுமையை விரைந்து நீக்கும் வழியினை - சால
தொடர்ந்து செய்தல்நற் தொண்டு.
பற்றி வந்த பழமையால் - தினம்
கெட்டு நொந்து உழல்பவர் வெற்றி கிட்டும் புதுமையில் - இங்கு வேண்டி நிற்றல்நற் தொண்டு.
கல்வி யற்ற நிலையினை - உயர் செல்வம் அற்ற துயரினை வெல்வம் என்ற விருப்பொடு - வினை
ஆற்றி நிற்றல்நற் தொண்டு.

Page 17
32
Z/2Za? என்னை ஈன்றஈ ழத்தினை - நன்கு என்னை வளர்த்த தமிழினை முன்னை சிறக்க முயன்றிடல் - உலகில்
மேன்மை தரும்நலத் தொண்டு.
உள்ளத் துணர்வை ஊட்டி - உலக
இன்ப நிலையைத் தேக்க
தெள்ளு தமிழிற் பாடி - தீஞ்
கவை யளிப்பநற் தொண்டு.

Z/aza7
புரட்சிப் புலவன்
பாரதி மாகவி பாட்டி சைத்தான் - இந்தப் பாருக் கெல்லாம் பொது வாகிடவே!
நாடு சுதந்திரம் நன்று விடுதலை என்று முழங்கி முழங்கி நின்றான்; பாடு படும்தொழி லாளி அவர்தம் பாவம் அறிந்து வருந்தி நின்றான்!
பாடும் தமிழ்மொழி பாதை அறிந்து பண்ணினை விண்வரை சாடி நின்றான்; துடும் கவிமலர் சூடி அணைனையைச் சுந்தர விந்தர மாக்கி நின்றான்!
செந்தமிழ் நந்தமிழ் என்று முழங்கியே விந்தை பலப்பல செய்து நின்றான்; முந்தை முறையினை மோதி அடித்து முற்றும் புதுமுறை தேடி நின்றான்!
சாதி முறையினைச் சாடி ஒன்றாய்ச் சஞ்சலம் யாவும் போக்க வென்று வேதியர் தம்முறை வீழ்த்தி விட்டே விண்ணினை மண்ணினிற் கொண்டு வந்தான்!
மாதர் குலத்தை மதித்து, மாயும்
மக்கள் குலத்தை உயர்த்தி நின்றான்; பாதக ரானவர் தேடு கொடுமையை, பாவச் செயலினைச் சுட்டெ ரித்தான்!

Page 18
34
Z/2Zasz
மூட முறைகள் யாவும் அழிந்திட முற்றும் நல்வினை பேணி நின்றான்; நாடு நகங்கிடக் காரண மாகிய நச்சுக் கொள்கை பொகங்கி டவே!
தேடும் செல்வமே நாடும் வழியினைத் திட்ப நுட்பமாய்ச் சொல்லி விட்டான்; நாடு நலம்பெற வேண்டி நின்றார் நன்கு புரிந்திட வேண்டு மென்றே!
ஒற்றுமை தன்னை உயர்த்தி நின்றான்; உண்மை பலப்பல சொல்லி வைத்தான்; பற்றுல குற்றிடு பான்மை தெரிந்து பண்புறு மார்க்கம் படர வைத்தான்!
தனியொரு வர்க்குண வில்லையெனி லிச் சகத்தினை யழித்திட வேண்டு மென்றான்; இனியொரு விதிதனைச் செய்வ மென்றே இயல்புறு புரட்சிக் குரல் இசைத்தான்!

தொழிலாளர்

Page 19
Zazaf
செங்கொடி பறக்குது
செங்கொடி பறக்குது சிந்தை அள்ளுது! செகத்திற் புதுமை செறியுது: செழியுது மங்கின இன்னல் மடியுது. சாயுது மக்களின் வாழ்வு மலருது; மகிழுது எங்கும் பொறுமை என்ற கீதம் இசையுது. இணையுது இனிய நாதம்! பொங்குது உணர்ச்சிப் புதிய வேகம்! புன்மை யகன்ற புகழும் ஞாலம்!
கொடுமை ஒழியுது கொள்கை மலருது கொத்தடி மைத்தனம் விட்டு மறையுது மிடிமை சாயுது மேதினி எங்கும்! மேலெனச் செல்வம் மேவுது: தாவுது நடுநிலை வாதிகள், நடிப்புச் சுதேசிகள் நாடிய யாவும் பேடியின் நிலையே! விடிவை நோக்கி விரையுது உலகம்! வென்றது புரட்சி வீழ்ந்தது தீமை!

A/aza7
புரட்சிக் கீதம்
போரை நோக்கிப் புறப்படடா - ஜெகப் புரட்சி வருகுது புறப்படடா! - போரை
பாரை ஆள்பவர் நாமன்றோ - பல படைத்துக் காத்தவ ராமன்றோ?
ஊரைக் காக்கும் உத்தமர்நாம் - இவ்
உலகம் தந்த வித்தகராம்! - போரை
போரைக் கண்டு அஞ்சிடோம் - புது வாழ்வை எண்ணி நின்றநாம்.
வீரர் எம்மை எதிர்க்க யார்? - வெறும்
விட்டில் பூச்சி அழிந்திடும்! - போரை
கொடுமை இதுவரை போதுமடா - இனிக்
குவலயம் நமது சொந்தமடா.
அடிமை என்று அறைந்தவரை - பாழ்
அழியா நரகிற் கேற்றிடுவோம்! - போரை
உழைத்த கூட்டம் உடல்நோக - தினம்
உறிஞ்சும் வர்க்கம் தலையெடுக்க
விளைத்த நிலையை மாற்றிடுவோம் - நாம்
விரும்பும் பொதுமை காத்திடுவோம்! - போரை

Page 20
38
Z/2Za? செங்குருதி வெள்ளம் ஜெகத்திடையே - நீள்
செக்கர் வானத் தொளியுடனே சங்கம மாகி விட்டதடா - நம்
செங்கொடி வானில் பறக்குதடா - போரை
புரட்சிக் கீதம் கேட்குதடா - எங்கும்
பொங்கி எழுந்த படைகளிடை
எழுச்சி கொண்ட வீராரீ - இனி
எழுந்து முன்னே புறப்படடா -போரை

Z/aza7
புரட்சி வாழ்க!
புதுவுலகம் காண்பதற்குப் புரட்சிவேண்டும்! புதுமைதனை அப்போதே பேண லாகும். இதுஉலகம் எமக்களித்த பாடம் என்றால் ஏற்றதொரு இலட்சியத்தை நழுவ விட்டு அதுபுரட்சி இப்போது நமக்கு வேண்டாம் அதற்கான காரணங்கள் அமையா தென்பர்; புதுவுலகம் காண்பவரின் பேச்சுத் தானோ? புரட்சியே நீவாழ்க! வணக்கம் செய்தேன்!
புரட்சியிலே பூரணமாய்ப் பேறு கண்டு புத்துலகச் சிருஷ்டிகளைப் போற்றி நின்றார் மருட்சிகொண்டால் மாறுதலைக் காண்பர் தாமோ! மயக்கமென்ன மட்டற்ற முயக்கத் தாலோ? வெருட்சிகொண்ட மானதற்கு வெய்யில் கேடா? வெந்தழல் வீழ்ந்தாலும் விளைவு வேறா? சிருஷ்டிநோக் கற்றீரே! செல்வர் போகம் செறிவதனால் செகம் புதுமை செழித்ததாமோ?
பாட்டாளி விவசாயிப் புரட்சி இன்றி பாரதனில் புதுமைபெற முடியா துண்மை! நீட்டோலை நெட்டுருப் போட்ட பின்னர் நெடுஞ்சாணை மரமானார் என்றால் இங்கு கூட்டாளி கூட்டுறவு குறைந்தே போகும். கொத்தடிமை வாழ்வுதனில் குலவிச் செல்லும் நாட்டீரே, இழிவுநிலை வேண்டாம் இன்றே நல்லதோர் புரட்சிக்கு வித்துக் கொள்வீர்!

Page 21
4. O
Zazza?
பண்டிருந்த நிலைமாறி, பழமை மாறி பாவலரும் நாவலரும் போற்ற வந்த தெண்டிரை திசைமேவு தேச மெல்லாம் திகழ்கின்ற நிலைதன்னைத் திரும்பிப் பார்த்தும், கொண்டிருந்த தம்மனைவி கருணை விட்டு கணிகையரின் கல்வியிலே காலம் மாய்க்கக், கண்டிருந்த கவிவாணர் கவிதை பாட காலந்தான் மாற்றத்தைக் கடந்த தையோ!
காலத்தால் உழைத்துழைத்துக் களைத்துப் போயோ காணாத கட்டியத்தைக் காண வென்றோ ஞாலத்தில் பெரிதுவந்தீர்! நன்மை பேணி நாள்தோறும் நின்விளைவு மறந்தா போனிர்? ஏலத்தில் எம்கொள்கை இட்ட தென்றால் ஏசாரோ? இசைந்தவடு இற்றுப் போமோ? பாலத்து நட்டாற்றுப் பாய்ச்சல் நீரில் பாய்ந்தீரோ? பறித்தாரோ புரட்சி தானோ?

Z/aza7
பாட்டாளி துயரம்
பாட்டாளி வர்க்கமொன்று உழைப்ப தாலே பாருண்டு பலனுண்டு பாரீர் இங்கே! கூட்டாளி அவர்நமக்குக் குறையாச் செல்வம்: குவலயத்தில் அவர்பெருமை குன்று போலாம்! நாட்டிற்கு முதுகெலும்பு போல்வா ரென்றும் நல்லதொரு வாழ்வமைத்தார் மக்கட் கானால் வீட்டிலே வெந்துயரப் படுவ ரன்றோ! வேதனையே அவர்துயரம் சொல்லப் போமோ?
பாரதிலே பற்பலவாய்ப் புதுமை கண்டார்; பகம்பொன் வரைதனிலே எடுத்துத் தந்தார்; காரதிலே கடல்தனிலே கடமை செய்தார்; கல்லிலே மண்ணிலே குடைந்து ழைத்தார்; நேரதிலே பார்த்திருப்பின் நெஞ்சம் வேகும்! நீரருவி தாரையாய்ச் சொரியும் கண்ணில், ஊரதிலே உழைத்தவர்க்கு உணவு இல்லை! உள்ளத்தின் வெந்துயரம் சொல்லப் போமோ?
காலையிலே எழுந்துசென்று காடு வெட்டி கழனியிலே விளைவுதர உழைத்த பேர்கள், சாலையிலே சந்தையிலே சாக்க டையில் சலியாது உழைத்துழைத் தலுத்த பேர்கள், மாலையிலே மனைநோக்கி மக்கள் நோக்கி மாற்றின்பம் சிலவேனும் அடைய வந்தால் வேலையிலே அலையுறுத்தும் கப்பல்போல வேகுமே அவர் துயரம் சொல்லப் போமோ?

Page 22
42
Zazav பஞ்சுபடும் பாடுபடும் அவர்தம் உள்ளம்! பாடுபட்டுப் பலனிழந்து நிற்கும் போது நஞ்சனையார் அவருள்ளம் காண்ப தில்லை! நலன் தனது சுயநலத்தை நாடி நிற்கும் வஞ்சனையார் வாழுகின்றார் வாய்ப்ப வர்க்கு! வளமூட்டும் வினைஞர்க்கு வாழ்வு இல்லை; வெஞ்சினமே கொள்ளுதடா! வீணர் கூட்டம் விளங்கவில்லை! அவர் துயரம் சொல்லப் போமா?

Z/2Za7
தொழிலாளர் சபதம்
கொடுமைகள் யாவும் ஒழிப்போம்! - கொண்ட
கொள்கையை நன்கு வளர்ப்போம்!
அடிமைதம் விலங்கினை அறுப்போம்! - அன்பு
ஆளமட்டும் இங்கு வளர்ப்போம்!
முதலாளி தன்மை முடிப்போம்! - நம்
தொழிலாளர் நன்மை வளர்ப்போம்!
இதமான வாழ்க்கை அமைப்போம்! - இன்ப
இலங்கையை நன்கு சமைப்போம்!
நாசக் காரரை வீழ்த்துவோம்! - நம்
நாட்டின் ஒற்றுமை தேக்குவோம்!
தேச பக்தியைக் கூட்டுவோம்! - தினம்
தேசம் சிறக்க வாழ்த்துவோம்!
விடிவுகாலம் இங்கு எமக்காம் - இதை வெற்றியோ டீட்டித் தருவோம்!
மிடிமையை முற்றும் மடிப்போம்! - கய
ஆட்சியைப் பெற்றே உழைப்போம்!
தேசநலம் என்றும் காப்போம்! - திரு செல்வவளம் மிகச் சேர்ப்போம்!
பேசுமின மக்கள் மொழியை - பெரும்
பேறாக எண்ணி மதிப்போம்!
காடுகளை வெட்டி எரிப்போம்! - நல்ல கழனிகள் எங்கும் வளர்ப்போம்!
தேடிடும் செல்வம் யாவும் - இங்கு
தேவை வரையினில் சேர்ப்போம்!

Page 23
44
A/aza7.
ஆலைகள் எங்கும் அமைப்போம்! - அதில்
ஆயிரம் வித்தைகள் செய்வோம்! வேலைகள் எவர்க்கும் கொடுப்போம்! - விதம்
ஆன கலைகள் வளர்ப்போம்.
நவீன இக் காலம் தந்த - நல்ல
நாகரீகம் நன்கு அளிப்போம்!
புவியின் பாகம் எங்கும் - பெரும்
புதுமைகள் பெற்று வாழ்வோம்!
மண்ணில் விளைந்த புதுமை -உலக மக்கள் எவர்க்கும் பொதுமை! எண்ணி முடிக்க மறுப்போர் - இங்கு இருக்க முற்றும் வெறுப்போம்!
சோஷலிசப் பாதை செல்லுவோம்! - வெறும்
சோதாக் கருத்தினைத் தள்ளுவோம்! தாசர்களாக வாழ்ந்திடோம்! - தகு
நேசர்களாக வாழுவோம்!

Z/aza
நாளை நம்முடையது
リ
ஒடுது உலகம் நாடுது இன்பம் உதய சூரியன் உற்று நோக்கினான். பாடுது தென்றல் படருது கொடிகள் பறவைகள் மெல்லென எழுந்து பறக்குது காடு மலருது கறவை இரங்குது கஞ்சம் கலந்து நெஞ்சம் நெகிழுது மேடுகள் தோறும் மிதந்த பனித்திரை சாயுது சாயுது சந்திக லக்குது
தேடுது மந்தி கடுவனைத் தாவி தேனினை மீட்க வண்டு பறக்குது கோட்டுக் களிறு காட்டை முறிக்குது கொன்று தின்ற புலியும் பாயுது கூவுது கோழி கொண்டை நிமிர்த்தி கூடும் பேட்டைக் குத்தி மறிக்குது பூவும் மலர்ந்து புன்னகை பூக்குது பாவை கழைந்து கொண்டை புனைகிறார்!
ஒடுறார் உழவர் விதைநிலம் நோக்கி உர்எனப் பாயுது நீர்நிலம் தேக்கி பாடு படுவோர் பாட்டாளி மக்கள் பாதை யோரம் பறவை போல ஏழை எளியவர் இன்றைக் கென்ன ஏங்கி நிற்கிறார் இதயம் விம்முது நாளை மலரும் நமக்கும் உண்டு நல்ல நினைப்பில் நாளும் கடுகுது:

Page 24
7مجھZZ ۶ھے/4
முடிவு காண்போம்!
சுதந்திரம் பெற்ற நாட்டில்
ககத்தினை விரும்பி நின்று நிதம்நலம் உழைத்த மக்கள்
நிர்க்கதி யுற்று வாடும் விதந்தனை இங்குக் கண்டோம்.
வெந்தவர் உள்ள மெல்லாம் இதம்பெறு நாளெப் போதோ
இதற்கொரு முடிவு காண்போம்!
காலையில் ஏக்கத் தோடு
கடிதினில் வேலை நோக்கி ஆலையில் உழைத்து ழைத்து
அரைக்கோலம் பூண்டு நின்று சாலையில் வீதி தோறும்
சஞ்சலத் தோடு கூடி மாலையில் மனையை நோக்க மகிழ்விலை: முடிவு காண்போம்!
வெய்யிலும் மழையும் தாக்க
விண்வெளிக் காற்று வீழ்த்த மெய்யினில் வியர்நீர் சிந்த
மின்னலும் இடியும் வாங்க நொய்திடும் உடலம் நோக
நாளெல்லாம் உழைத்த மக்கள் வெய்யஇக் கொடுமை போக்க
இதற்கொரு முடிவு காண்போம்!

47
Z/2Za?
உணவினைப் பொருளை எல்லாம்
உற்றநம் தேவைக் காக பிணநிலை யடையுந் தோறும்
பெரிதுறச் செய்தொ ழிந்தார்; மணவினை கண்டும் நாளாய்
மகிழ்விலை மனையில் வீழ்ச்சி. பணநிலைப் பக்க மெங்கோ
பாரிது முடிவு காண்போம்!
சிந்திய இரத்தம் வேர்வை
சேர்ந்தது பொருளா யங்கு. முந்திய முதலு ளார்கள்
மொய்த்தனர் முந்திக் கொண்டு நொந்தவர் தாம தித்தால்
நொண்டி சப்பாணி யாமோ? தந்தஇக் கொடியோர் தம்மைத்
தகர்த்திட முடிவு காண்போம்!
உழைத்தவர் பலபேர் வாட
உறிஞ்சிடும் உந்திப் பேய்கள்
விழைத்தஇக் கொடுமைக் கெல்லாம்
விடிவுறு காலம் எங்கே?
பிழைத்தவர் பிழைத்துக் கொண்டார்
பெரும்பணக் கார ரானார்
இளைத்தவர் இனைத்தா விட்டார்?
இதற்கொரு முடிவு காண்போம்!
மலையினைச் சாட வல்ல
மாபெரும் உழைப்பா ளர்கள், அலையினை எதிர்த்து நீந்தும் ஆயிரம் இளஞ்சிங் கங்கள், விலையிலா மாணிக் கங்கள்,
வித்தகர், புலமை மிக்கோர் நிலைபேறு கூட்ட மைத்தார்!
இதற்கொரு முடிவு காண்போம்!

Page 25
Z/2Zaf7
வையகம் பணிந்தது!
புதியதோர் உலகம் காணப்
புறப்படு புரட்சி நோக்கி! நிதியினால் நம்மை ஆட்டி
நெடுந்துயர் தந்த பேர்தம் சதியினால் வீழ்ந்து நிற்பர்;
சாவினைத் தேடித் தத்தம் விதியினால் வந்த தென்று
விரைந்த நாம் வெற்றி என்றார்!
இனத்தினால் மதத்தி னாலே
இரண்டுபட் டென்றும் வாழோம்! சனத்தினால் நாங்கள் ஒன்று
சச்சர விதனால் ஏனோ? தனத்தினால் வேறு காணும்
தரித்திரம் ஒழிந்து போக மனத்தினில் மகிழ்ச்சி பூக்கும்
மணங்கமழ் வாழ்வு என்றார்!
போலிகள் பதுக்கந் தேட,
பொய்யவிழ் சூதர் தங்கைக் கூலிகள் குழம்பித் தம்முள்
குந்தகம் விளைக்கத் தூய பாலியர் மகிழ்ச்சி பொங்க
பாவையர் உணர்ச்சி ஊட்ட வாலிபப் படைக ளெல்லாம்
வளைந்தது களத்து மேட்டில்!

49
Z/aza7 செங்கொடி கையில் ஏந்தி
செம்படை விரைதல் கண்டு எங்கணும் முரசம் ஆர்க்க
எழுந்தது புரட்சி இன்றே! கங்குலில் கரந்தி ருந்த
கவினுறு உலகம் மீட்க பொங்கின உணர்ச்சி வெள்ளம்
பொதுமையில் புதுமை காண.
போர்த்தொழில் விந்தை யாவும்
புரிந்திட வந்து சேர்ந்தார்: ஆர்த்தனர் அகம கிழ்ந்து
அணிநடை பயின்ற போதே பார்த்தவர் பார்த்த காலை
படைகளே அவரும் ஆனார். வார்த்தடந் தோளர் தம்முன் வையகம் பணிந்த தம்மா!

Page 26
Z/2Za7
தோழர் கந்தையா
மாமேதை கந்தையா மறைந்த நாளை மறந்திடவும் கூடுவதோ? மக்கட் பண்பின் மாமூலன் இவனென்று எண்ணும் போது மயிர்க் கூச்சம் அடைகிறது; அந்தி வானத் தேமேவு செங்குருதி செறிந்து பட்டு திசைநான்கும் செங்கொடியே காற்றில் ஆட பாமேவு புரவலனின் பாதை நம்மைப் பாய்ந்துவரு புரட்சிக்கே இட்டுச் செல்க!
அரசியலில் ஆன்றடிகழ் கொண்ட மேதை; அறிவினிலே அயல்நாடும் மதிக்கும் செல்வம்: புரவலனும் புலவோனும் இவனே யென்று புகழாதார் யாரில்லைப் புவியின் மேலே? இரவினிலே வான்பூத்த வெள்ளிக் கூட்டத் திலங்குகின்ற மதியன்ன ஏற்றங் கொண்டோன்! விரவியஇஞ் ஞாலத்தின் ஒளிவி ளக்கே வீழ்ந்தனையே இந்நாளை மறக்க லாமோ?
பன்மொழியில் பாண்டித்யம் பெற்ற ஆசான்; பலதேசம் சென்றவற்றின் நிலைமை கற்றாய்! இன்தமிழில் ஆங்கிலத்தில் இனிமை சான்ற ஏற்றநற் கருத்துக்கள் எடுத்துச் சொல்வாய்! அன்பிற்கு உரித்தான மக்கள் தம்மை அண்டிநற் சேவைதனை ஆய்ந்து செய்தாய்! துன்பத்து நோயதனில் உழன்ற போதும் துயர்காணாய், தூய்மையருள் நெஞ்சத் துள்ளோம்!

5
Z/aza7
பாட்டாளி மக்களின் அதிகார ரத்தை பறைசாற்றிப் பலநாளும் உழைத்து நம்மின் கூட்டாளி கொண்டுணர்வு கூட்டி இங்கும் குதித்தெழும்பும் புரட்சிஎதிர் பார்த்து நின்றாய்! வீட்டோடு ஒதுங்கிவிட்ட திரிபு வாத வீரர்களோ, இன்று நீ இங்கி ருந்தால் காட்டுக்குப் போவதன்றிக் காவி கட்டிக் கடைத்தேற அவர்க்கேது மார்க்கம் உண்டாம்!
தீண்டாமை யென்னுமொரு கொடிய பேயைத் தீமைதரும் தமிழர்களின் சாபக் கேட்டை வேண்டாமை ஆக்கிடுதல் கடமை என்றே வேண்டும்வரை உழைத்துழைத் துரிமை காத்தாய்! ஆண்டாண்டு பலபேர்கள் பேசி வந்தார்; ஆனால் பொன், கந்தையா நீயே செய்தாய்! மாண்டு பலவருடங்கள் நகர்ந்திட்டாலும் மறப்பாரோ நின்பெருமை மாநி லத்தில்?
பாராளு மன்றத்தில் பலரி ருந்தும் பலராலும் போற்றியவர் ஒருவர் உண்டாம்! ஆராளும் நிலைமைதான் அன்றி ருந்தும் அமர! நின் உரைகேளாச் செவிகள் இல்லை! சீரான கருத்துக்கள் செழுமை யுற்ற சிங்களத்து மக்களவர் முழுமைக் கெல்லாம்! பேரான பெருமைதனைத் தேடித் தந்தாய்! பெரும்புகழோய் கந்தைய நின் நாமம் வாழ்க!
சேவையே செய்து நாளும்
செந்தண்மை பூண்ட செம்மல் தேவையே என்னும் போது
தேர்ந்துமே பணிகள் செய்யும் சேவையே தொழிலாய்க் கொண்டோன்!
செகத்தினில் இவனைப் போல யாவரைச் சொல்ல லாகும்?
யார்க்கிது எளிதாம் அன்றோ!

Page 27
52
Z/7Zas?
அடிமையின் விலங்க நுக்க
ஆப்ரகாம் லிங்கன் என்றே அடிமைகொள் மனித ரெல்லாம்
அஞ்சுவர் இவனைக் கண்டால் மிடிமையில் மூழ்கும் மக்கள்
மீட்சியை மனதிற் கொண்டு பொடிபடப் புரட்சி காட்டும்
புரந்தகன், புவியின் மேலோன்!
புகழினை வெறுப்பான்; புன்மைப்
பேச்சினைத் துறப்பான்; சில்லோர் இகழினைப் பாரான்; இன்னார்க்
கினிமையே இயற்றி வாழ்ந்தான்! சுகமனை பேனான்; பிள்ளை
சுகத்தினை நாடான்; மக்கள் சுகவழி சார்ந்து நிற்பான்!
செயலிது புதுமை யன்றோ!
சொந்தமென் றெதுவு மில்லாய்
சுகம்பெற நினைத்தாய் இல்லை! தந்திரம் சிறிதும் பேணாய்;
தார்மிக உணர்வு கொண்டாய், பிந்திய மக்கட் காகப்
பிறந்தனை பாரில் மேலாம் இந்தவான் இருக்கு மட்டும்
இசைக்குமுன் கீர்த்தி நன்றே!

Z/2Zaz
மே தினம்
மேதினமே எழுந்ததடா பாரில் இன்று மேன்மைபுறப் பொதுமக்கள் வாழ்வுற் றோங்க மேதினியில் இதுபோன்ற தினமொன் றில்லை! மேவிடுவோர் எல்லோர்க்கும் பொதுவொன் றாகும், வாதிதனில் எவர்க்குமிலை, வையம் வாழ வாழ்த்திடடா வாழ்கதொழி லாளர் என்றே தீதகன்ற திருவினைகள் செய்து வாழும் செகத்தொழிலா ளர்தினமாம் மே நாள் வாழ்க!
உலகத்தின் அச்சாணி உழைக்கும் தோழர் உடல் நொந்தே உருக்குலைந்து உழைத்த தெல்லாம் உலகத்தார் உவந்தேற்றார்; ஆனால் அந்த உழைப்பினது பெருமைதனை உணர வில்லை. அலையொத்த அன்னாரின் புரட்சி கண்டு அவர் பெருமை உணர்ந்திட்டார் வாழ்வு பெற்றார். மலை தன்னைப் பிளந்தெறியும் வினைஞர் கூட்டம் மார்தட்டி நிமிர்ந்ததினம் வாழ்க மேநாள்!
வாழ்கின்ற மக்களுக்கு வாழ்வ எரித்தார், வகைசெய்தார், வறுமையுடன் கால மெல்லாம் மாள்கின்ற அவர்நிலைமை உணரார்; மேலும் மனதற்ற முதலாளி மிடுக்கு மிஞ்ச - வீழுந்தன் நிலையு னர்ந்தார்; வீறுகொண்டார்; வெடித்ததடா எரிமலைபோற் புரட்சி மேற்கே! ஆழ்கடல்தழ் உலகமெலாம் தொழிலா ளர்கள் ஆர்த்ததினம் அடிமைவிழ, வாழ்க மேநாள்!

Page 28
54
Z/aza7 மண்ணிருந்து மடிவதற்கோ வினைஞர் கூட்டம்? மக்களவர் பணிக்காக என்ன செய்தார்? விண்ணிருந்தும் வாழ்வதற்கு விதிகள் செய்யும் வீரரவர் துயர்வாழ்வு விளங்கி டீரோ? மண்ணதிர விண்ணதிர மயக்கம் போட மதிப்புயர்ந்த பணிநமக்குச் செய்த போது கண்ணிருந்தும் காணவிலை அதனாலன் றோ கடல்போலப் பொங்கிற்றுப் புரட்சி, வாழ்க!
காலமதைக் குறைக்காது கடுமை காட்டி காலம்பகற் காலமெல்லாம் வேலைவாங்கி கூலிதனைக் குறைத்தளித்தார் கொள்ளைக் கூட்டம். கொடுமையிது கொடுமையென உணர்த்தும் போதும், கேலி செய்தார்; கிண்டலிட்டார் கயவர். மேலும் கிளர்ந்ததடா புரட்சிஇந்த ஞாலம் அஞ்ச ஜாலியாய் இருந்தவர்கள் ஜமாய்க்க வில்லை. ஜயங்கொண்டார் தொழிலாளர்; வாழ்க மேநாள்!

தாழ்த்தப்பட்டோர்

Page 29
7ڑھZZ تجھےZZ
ஒடுக்கப்பட்டோர் உரிமைக் கீதம்
வாழ்க வாழ்கவே! வாழ்க தமிழினம், வாழ்க சுதந்திரம் வாழ்க வாழ்கவே!
சிறுபான் மையருள் சிறுபான்மை யராய்ச் செறிந்து கிடக்கும் செந்தமிழ் மக்கள் சிறுமை ஒழித்துப் பெருமை சிறக்கச் சீரும் சிறப்பும் செய்திடு வோமே! - வாழ்க
மனிதர் உரிமை மனிதர் பறிக்கும் மடைமை இந்த நாட்டில் உண்டாம்: மனிதர் தம்மை மனிதர் தாழ்த்தும் மயக்க நிலையை மாய்க்க வேண்டும் - வாழ்க
ஒடுக்கப் பட்டோர் உரிமை முழக்கம் உயிரின் மூச்சு; உணர்வின் பேச்சாம்! தடுக்கும் உரிமை தரணிக் கில்லை! தமிழா இதைநீ சரியாய் உணர்வாய்! - வாழ்க
அடிமை விலங்கை அறுத்தெறி வோமே! அச்சம் என்பது துச்சம தாமே! மிடிமை தன்னை மிரட்டிடு வோமே! மீட்டும் சொர்க்கம் நாம் பெறுவோமே! - வாழ்க
சாத்திரம் கோத்திரம் சஞ்சலம் யாவும் தழ்ச்சியின் தத்திரம்; சுயநலம் வாஞ்சை மீத்திடும் உலகினில் மேன்மை காணா மேவிடு செல்வம் மிக்கநல் உரிமை! - வாழ்க

57
4/25Za? தமிழ்மொழி பேசித் தாய்தனைக் காப்போம்! தகுபணி பலவும் மிகைபடச் செய்வோம்! அமிழ்தெனும் உரிமை அறவே இழந்த அல்லல் ஒழிப்போம்; தொல்லை தவிர்ப்போம்! -வாழ்க
பஞ்சமும் பசியும் பிணியும் பயமும் பண்பில செயலும் பாதகர் உறவும் துஞ்சிட, துன்பம் துடைத்திட எழுவீர்! துணிந்திடு நமக்கு விடிந்திடும் காலம்! - வாழ்க
தமிழர் தொன்மை பண்பு பெருமை தானம் மானம் தியானம் ஞானம் சிமிழில் அடைத்த கதையோ இங்கு?
செப்புதல் இன்றிச் செயல்படக் காண்பாய்! -வாழ்க
இறுதி வெற்றி நமதே ஆகும்! இசையும் புகழும் கீர்த்தி மேவும்! அறுதி எழுதி முடித்தார் இல்லை; அயரா துழைப்போம்; அஞ்சோம்; துஞ்சோம்! -வாழ்க

Page 30
Z/2Zay7
சாதிக் கொடுமை
சாதியெனும் கொடுமையினால் தமிழர் கூட்டம் சஞ்சலத்தில் வீழ்ந்ததடா சகதி யாகி ஆதியிலே ஒருசாதி இருந்த தென்பர் அந்தநெறி இந்நாளில் காண வில்லை! நீதியிலே பிழைத்தவர்கள் நெடும ரம்போல் வீழ்ந்தசெய்தி ஒதுகின்றார் நீதி யில்லை. சேதியிது தமிழ்நாட்டுச் சேதி கேளீர்! செயலில்லை; செப்புதலே மட்டும் தம்பீ!
தாய்மொழியாம் தமிழ்பயிலத் தடுப்புத் தம்பீ தனதுரிமை பேணுதற்கு இரத்தல்; தீரா நோய்கொண்ட மாந்தருக்கு உணவுச் சாலை நல்லவர வேற்பளிக்கும்; ஆனால் என்றும் தீமைதவிர் தொழில்புரிந்து வாழ்நர் தம்மை தீட்டென்று தடுக்கின்றார் தீய மாக்கள்! தாய்மகனைச், சகோதரனை அடிமை கொண்ட
சேதியிது; தமிழ்நாட்டுச் சேதி கேளிர்
மானத்தை மறைத்தேழை துணிய னிந்தால் மானமுள்ள தமிழர்பலர் கொதிப்பர் தம்பீ ஈனத்தர் இழிசெயலர் என்று சொல்வர். இவரைத்தான் இன் தமிழர் என்பர் போலும்! தானதவம் செய்துவந்த தமிழர் என்போர் தாய்பசித்தால் தான்புசிப்பர்; இதுவே வாழ்வு! ஞானமுள்ள மக்கள் சிலர் உயர்வு காட்டில் அவர்தீயர் தமிழ்நாட்டுச் சேதி கேளீர்!

59
A/av/27
நாவினிலே நல்லதமிழ் நடன மாட நலவுரைகள் செய்தபோது அடடா கொள்ளை! பாவினிலே எடுத்தியம்பி பலவா றாக "பஞ்சமரைப் பார்த்துநாட் பயனுஞ் சொல்வர். பாவிசிலர் பார்ப்பதுண்டு; படுமோச ந்தான்! பைந்தமிழர் பார்ப்பதில்லை; ஆனால் தம்பீ! சாவடைந்த பிணங்கடச் சுடலை தன்னில்
சாதிகாட்டும் தமிழ்நாட்டுச் சேதி கேளீர்!
வாழ்கின்ற மக்களுக்கு உரிமை வேண்டி வகைசெய்து தாவென்று தாழ்ந்தோர் கேட்டார்; சூழ்நிலைதான் மாறட்டும், சுற்றத் தார்கள் சொன்னாலும் கேட்பதில்லை; காலம் மாறும்; வாழ்வுண்டு மெல்லமெல்ல வாழும் பாரும்! வளர்கல்வி கற்றுவிட்டால் பேத மில்லை; தாழ்கின்ற மக்களுக்கு விடையி வைதான் தருகின்றார்! தமிழ்நாட்டுச் சேதி கேளீர்!

Page 31
27کی بربر تھےZZ
தாழ்வோ சாதி?
ஆயிரமாம் புதுமைகள் அடைவர் மேற்கே: அயலவனை வஞ்சித்து வாழ்வர் இங்கே! ஆயிரமாம் படைப்புக்கள் வாழ்வுக் காக அவர் செய்து புகழீட்டி வாழ, நம்மோர் ஆயிரமாம் சாதிகளை ஆக்கஞ் செய்து அவன் தீது இவனடிமை தீண்டாச் சாதி ஆயிரமாய் வாழ்வதிலே பெருமை கண்டார்! அவர் மானம் போகையிலே தாழ்வோ சாதி!
பாய்கின்ற வெள்ளமே படியும் வீட்டில் பஞ்சமர்கள் வாழ்கின்றார் பஞ்சை என்றும்! காய்கின்ற வெய்யிலெல்லாம் அவர்மேல் நாளும்; களைக்கின்ற போதுமழை உடல்மேற் கொட்டும்; நோயின்றி நொடியின்றி வாழ்வ தற்கு நுண்கலைஞர்க் கேலாத செய்கை செய்தார்! தாய் முந்தித் தன்மகற்குத் தோட்டியன்றோ: தப்புக் கணக்கேன்போட்டீர்? தாழ்வோ சாதி?
நாய்வருடி நலம்பேணிப் பாது காக்கும் நாம் தமிழர் நம்மினத்தை நசிப்ப தேனோ? வாய்நாற்றம் அடிக்கும்வரை ஊன்பு சிப்பார் வைதீகம்! அவர்பேச்சு; உயர்வு தாழ்வு தூயவர்கள் தாமென்று சொல்லு கின்றார். தூயவரே, தினந்தோறும் குளிப்ப தேனோ? மாயையடா உலகமிது காயம் பொய்யே மாட்டறையும் மனிதர்களே! தாழ்வோ சாதி?

6
A/aza?
ஊன்தீண்டும் உத்தமரே உம்மைத் தானே! உடல்தீண்டல் தீதென்பீர், தீண்டாச் சாதி மான்விழியாள் ஒருத்திவந்து மயக்க மேற்ற மறுப்பதிலை; முயக்கமுண்டு முடிவில் இன்பம்! ஏன் இந்த அநியாயம்? சாதி இல்லை! எள்ளளவும் குருதியிலே ஏற்றம் உண்டோ? வானளக்கும் புகழ்படைத்த தமிழைப் பேசும் மாந்தர்களே, வாய்திறவீர்! தாழ்வோ சாதி?

Page 32
Zaza7
மூடி மறைக்காதீர்
வாழும் மனிதரது வாழ்வை வளம்படுத்த சூழும் முறைக்கேற்பச் சொல்லிச் செயல்படுத்தல் நாலும் தெரிந்தவரின் நற்பணி என்பதனை நாளும் நினைவூட்ட வேண்டுவ தோதமிழா?
உள்ளதை உள்ளபடி உற்று உணர்வோடு தெள்ளத் தெளிவாகத் தேர்ந்து உரைத்தாலோ பொல்லாத கோபம் 'பொடுக்கென்று வந்திடுமோ? நல்லதோ இச்செய்கை நாட்டை வளம்படுத்த? மூடிம றைப்பதனால் முன்னேற்றங் காணாதே! வாடி வளங்குன்றும் வாழ்வும் பறிபோகும்; பாடிப் பலனுமில்லை; பல்கலையும் பாழாமே! நாடும் நலிவடையும், நல்லினமும் வீழாதோ?
சாதிப் பிரச்சினைச் சாகடித் பாம்பென்று ஒதி முடிக்கும் ஒருகூட்டம் வாழுகின்ற சேதிதனைக் கேட்டுச் சிரிக்கின்றேன்; அழவில்லை! பாதி துகிலுரிந்த பாவைதனைப் பார்த்து: போதும் உனக்கிந்தப் போர்வை நிலையென்று நீதிதனை ஒதும் நீசரிவர்; வாழுகின்றார்!
வீர இனமென்று வீராப்புப் பேசுங்கால் சாரம் தனைவிடுத்துச் சச்சரவுக் காளானிர்! சீரான வாழ்வு செப்பனிட வேண்டிப் பின் நேரான நல்வழிகள் நேர்மை இவைக்கண்ணே, மேன்மக்கள் என்று மிகுந்த பணிந்துரைத்து, ஆன்மீகம் பேசி, அறமுரைத்து, ஆனவழி

63
Z/2Zaf7 பேசி முடித்தும் பேறென்ன கண்டீரோ? ஆசி மொழிகறி ஆதரவு தந்தீரோ?
சேரிதனிற் தீயிட்டு தீப்பிழம்புக் காடாக்கி, ஏரிதனில் நஞ்சிட்டு, எஞ்கம் கிணறுகளில் கொட்டி மலமள்ளிக் கொண்டு தணியாமல், திட்டி வசைமாரி தீரா துடல்தன்னைத் தட்டிப் பதம்பார்த்து தலைகால் தெரியாமல் விட்டெறியும் சேதி விரவி யிருப்பதனை மூடி மறைக்காதீர்! முன்னேற்றம் காணாது! பேடித் தனமாகும் பீத்தற் பெருமைக்கண் ஒடி ஒளிந்திருக்கும் ஏராளம் தீவினைகள் தேடித் திரிவானேன் தேசத்தின் எல்லைக்குள்!
சாதி வெறியர்கள் சச்சரவுக் குள்ளாக்கி நீதி தனைத்தேடி நீதிநிலை சென்றாலும் மோதி உடைத்தெறியும் மோட்டு அதிகாரி, மேதிக் குணம்படைத்த மாநகர்க் காவலர்கள், நாட்டின் பழமையினை நாட்டி நிலைநிறுத்த சேட்டை பலபுரிந்து சீரழிக்கும் தன்மையினை கேட்டதிலை யோவிந்தைக் கிள்ளைமொழிக் கவிவாணர்? பாட்டதிற் பாடினால் பாவம் பிடித்திடுமோ?
மாறாத துயரத்தால் மாறி மதஞ்சேரும் நூறான பேர்களைத்தான் நோக்க மனமற்றீர்! பாராமல் இந்தநிலை பார்க்க மறுத்தீரோ? ஆரோ இவர்என்று அசட்டைதான் செய்தீரோ? பட்டினத்தை விட்டுப் பழமை நிறைந்தயெவாரு பட்டிதொட்டி பார்த்தால் பரந்த அள வினதாய் சட்ட வரம்புடைய சாதி முறை யங்கு கொட்ட மடிப்பதனைக் கொள்ளும் மரபாக்கி விட்டிருக்கும் நந்தமிழர் வீட்டு விறாந்தையினில் கிட்ட நெருங்காமல் கீழ்சாதி என்றுரைக்கும்! ஆண்டவன் சந்நிதியில் அண்டி வணங்கிடவும் வேண்டாத மேதை விரும்பாத பேதையரும், தேநீர்க் கடைதன்னில் திவ்விய நாகரிகம்

Page 33
64
4/azaz பேணி கறள்கட்ட, போத்தலும் ஊதுகுழல் ஆனநிலை இன்னும் எங்கும் இருப்பதனை ஏன்பார்க்க எண்ணம் இசையாதோ உம்மனது?
மாண்டு மடிந்தபினும் மாற்றம் விரும்பாது. தோண்டும் இடுகாடும், தூய்மைப் படுத்தும்
சுடுகாடும் சாதியினைச் சுட்டித்தான் காட்டும்!
எடுபாடு இங்கன்றி எங்குதான் கண்டோமோ? வான்பார்த்த பூமி வளமாக்கித் தந்தவரும் கான்பார்த்த சாக்கடையில் சாகத் துடிப்பதுவோ? நீர்தமிழை விட்டு நிலைபிரிந்த காலத்தும் சீருடை தானணிந்து சீமை மொழிபேரி, ஆரோ கணித்துநீ ராங்கிலேய ராயிருந்து பேரான வாழ்க்கை பெரிதுவந்த நாளதிலும், நாம்பேசி வாழ்ந்திருந்தோம் நம்தமிழ்த் தாய்மொழியை! ஆம்.இதனை அட்டியின்றி ஏற்பீரோ இந்நாளில் தீந்தமிழைப் பேசித் தேவை வரைகாத்த இந்தத் தழிழருக்கா இத்தொல்லை செய்கின்றீர்?
தோழர்கள் என்றாலோ தோளொடுங்கி ஒடுகின்ற காளான்கள் காலம் கரைந்து ஒழியாதோ? மீளா மிடிமையால் மேலும் உயராமல் வாழ்விக்க வைக்கும் வறுமையின் தத்துவத்தைப் பூசி மெழுகிப் புதுமெருகுக் கூட்டென்று பேசி உளறும் பெரும்பிணிதான் மாளாதோ? தேசியம் பேசினால் தீட்டென் றதைத்தொடவும் கூசிநடுங்கும் கூட்டம் இதற்கெல் லாம் பாசி பிடித்ததுவோ! பாழும் நிலைமறந்து காசிக்குப் போவாரோ காசினியி லிருப்பாரோ? நேசமணப் பான்மை நீடு செறிந்திருந்தால் தேசம் சிறக்காதோ? செல்வநிலை சேராதோ? வாழும் இலங்கையை வாய்த்ததாய் நாடென்று நாளும் ஒருமுறையும் நாநவிலல் இல்லாத பாழும் படித்த பாவலரும் வாழ்கின்றார்! தோழமை அற்றார்க்குத் தேசியம்தான் தேறிடுமோ? சேரும் பொருள்வளத்தால் செல்வம் சமனாக்க

65
”مجھZZ تھے بر4
சாரும் பொதுவுடமை சாதிமுறை ஒழியும்! பேசும் மொழிச்சண்டை பேரற்றுப் போய்விடுமே! கூசம் குறைசேர; கொள்கை நிலைத்துவிடும்!
கூறும் பொருளதனை நாம்கூற மாற்றாக வேறு பொருளதனை வேண்டுமென் றேயுரைப்பார்! ஆறு வளம்வேண்டும் அதுகொள்வம் என்றாலோ சேறு வளம்விரும்பிச் செழிப்பிப்போம் என்பாரே! நாம்கூறும் நல்லவைகள் நாட்டுக்கு நல்லதெனில் தாம்கூற வேண்டுவதில் தப்பில்லை! ஆனாலும் வீம்பென்று சொல்லாதீர்; விரைஎட்டி தின்னாதீர்; மூடி மறைக்காதீர்; முன்னேற்றம் காணோமே! பாடிக் கிறுக்காதீர்; பாதை தவறாதீர்! வேடிக்கை இல்லை விரும்பு!

Page 34
7مجھZ/ تھےZZ
ஒன்றே குலம்
சாதி இரண்டென முத்தமிழ் அவ்வை
சாற்றினள்! - மிகத் - தேற்றினள்!
சாதி வளர்த்துத் தமிழர் அழிவது சாபமோ? - பரி - தாபமோ?
பிறப்பொக் குமுயிர்க் கென்றே வள்ளுவன் போதித்தான்! - தெளி - வாகத்தான்!
பிறப்பினில் பேதம் ஒழித்து வாழ்வது பேதமோ? - இனச் - சேதமோ?
யாது மூரே யாவரு மினமென
யாத்தனர்! - ஒன்று - சேர்த்தனர்!
ஏது பின்னும் இதனை மறுப்பது
ஏற்றமோ? - அல்ல - சீற்றமோ?
ஒன்றே குலமென முன்பே தமிழர்கள் ஒர்ந்தனர்! - நன்கு - தேர்ந்தனர்!
இன்று குலமெலாம் எண்ணில் அடங்குமோ?
இழிவிதே! - மிகத் - தெளிவிதே!
சாதி மதங்களைப் பாரதி வேகமாய்ச்
சாடினன்! - உற - வாடினன்!
ஒதி உணர்ந்த மகாகவி சொன்னவை
ஒறைக்குமோ? - அது - விறைக்குமோ?
அடிமை இருப்பது தீதெ னப்பலர்
ஆர்த்தனர்! - குரல் - சேர்த்தனர்! அடிமை குடிமை இன்று மிருப்பது ஆகுமோ? - அது - சாகுமோ?

67
ZZZ ۶یےZZ உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றே தமிழர்கள்
இருப்பதோ? - அதை - மறுப்பதோ? பயந்தவன் பண்பல மற்றவன் தன்னைப் பார்ப்பீரோ? - பலன் - சேர்ப்பீரோ?
உரிமை பெறுவது மனிதர் இயல்பது
உண்மையே! - இது - திண்மையே!
உரிமை தவிர்ப்பதும் உள்ளங் கொதிப்பதும்
ஊட்டமோ? - உன் - தேட்டமோ?
வேதனை கொண்டவர் உள்ளந் துடைப்பது
விருப்பமே! - நல்ல - திருப்பமே!
சோதனை செய்வதும் வேதனை செய்வதும்
சாதனையோ? - பழம் - போதனையோ?
நீதியைச் செய்திட நீபின் நிற்பது
நியாயமோ? - சுய - உபாயமோ?
பீதியை ஊட்டிப் பின்னே வரச்செயல் பித்தமோ? - மனச் - சித்தமோ?

Page 35
Z/aza7
ஏது செய்தீர்?
பொன்னான பூமியிலே பிறந்து நாமே புகழுடனே வாழ்ந்திருந்தோம் புவியீர் கேளீர்! என்னான போதிலுமே எமக்கே யீடாய் இருப்பரோ இவ்வுலகில் எவரும்? என்றீர் அன்னாரப் போதினிலே மகிழ்ச்சி கூர அடைந்திட்டார் ஆரவாரம் ஆனால் இங்கே பின்னோடி வாழ்கின்றார் மக்கள் பல்லோர்! பீடைதனைப் பிடித்தோட்ட ஏது செய்தீர்?
தாய்நாட்டின் விடுதலைக்காய் உழைப்போ மென்றீர்! தமிழ்மொழியைக் காக்கஉயிர் கொடுப்போ மென்றீர்! தாய்நாட்டின் பெருமைபல எடுத்துரைத்தீர்! தமிழர் நன்கு வாழவழி வகுப்போ மென்றே பேய்க்கூச்சல் இடுகின்றீர் வானம் முட்ட! பெருமைதான்; நாமதனை எதிர்க்க வில்லை! நாய்போன்று வாழ்கின்றார் தமிழர் இன்று. நாதியற்ற அவர்க்காக ஏது செய்தீர்?

இயற்கை

Page 36
Z/2Zaf2
இயற்கைச் செல்வம்
காலையெழும் கதிரவனார் ககனம் சூழக் காணுகின்ற கடலாறு கான கங்கள் மாலையெழும் மதிவாணன் மாலை வெய்யில் மணங்கமழும் மலர்க்கூட்டம் மதுவுண் வண்டு சோலையெழில் தருபுனங்கள் கனைகள் ஊற்று சுழன்றடிக்கும் புயற்காற்று சுடரும் வெள்ளி கோலமிடும் வானவில்லுக் குளிரும் தென்றல் கோதைபெண் குழந்தைகளே இயற்கைச் செல்வம்!
ஆடுகின்ற மயிற்கட்டம் அந்தி வானம் அசைந்தாடு மலர்க்கொடிகள் அரவின் ஆட்டம் பாடுகின்ற குயிற்கட்டம் பறவை சட்டம் பால்பொழியும் பசுக்கூட்டம் மேதி கன்று ஒடுகின்ற மானினங்கள் ஒளிரும் மீன்கள் ஒளிந்தொதுங்கும் முயற்குட்டி முந்திச் செல்லும் ஆடுநரி யானைஅரி அச்ச மூட்டி ஆர்த்தெழும்பும் புலிகரடி இயற்கைச் செல்வம்!
'சோ' வென்றே சொட்டுகின்ற காள மேகம் சொலநடுங்கும் பனிப்படலம் சூழ்ந்து நின்றே வாவென்றே அழைக்கின்ற மரங்க ளிட்டம் மனமகிழ்வு தருகின்ற மலையின் கூட்டம் தேவொன்றும் திருத்தலங்கள் குளங்கள் செந்நெல் செழித்தோங்கும் வளவயல்கள் புலவோர் நாவில் பாவொன்றத் தோற்றுகின்ற இயற்கைச் செல்வம்! பார்த்துமகிழ் வெய்திடுமின் பாருள் வீரே!

Z/2Za’
ஞாயிறு
கீழ்த்திசையில் வானத்தில் கிளர்ந்தெழுந்தான் பரிதி
கீச்சொலி பறவையினம் விலங்கினங்கள் கருதி: ஆழ்த்திருந்த ஆழியலை அடித்தடித்து மோதும்!
அருங்கணவன் வரவுகண்டு அலர்ந் தொளிரும்போதும் வாழ்த்துகின்ற ஒலிபோல வனங்களிடை கேட்கும்; வண்ணமலர் தம்மிடத்து வண்டுதேன் மீட்கும்! பூத்திருந்த மலரினிடை புதைத்தெடுத்து முத்தம்
புனலோட்டம் போலோடி வருந்தென்றல் நித்தம்!
கங்குலவள் காரிகையும் விரைந்தோடிப் போனாள்;
காதலவள் திங்களிடம் முறையிடவும் ஆனாள். பங்கயமு கத்தனைய பாவையவர் தத்தம்
பணியினைவி ரைந்தோடிச் செய்திடுவர் நித்தம். செங்கதிரோன் தன்முகத்தில் சிந்துகின்ற சிரிப்பு
செகமெல்லாம் செயல்படுத்த வந்தஒளி விரிப்பு. பொங்குதிரைக் கடலெல்லாம் பொன்னொளியின் ஜாலம்;
புவியெங்கும் பொழியுமந்த எழில்மிக்க கோலம்!
அகல்விளக்கு வீடுகளில் சுடர்மெல்ல அணையும்; ஆதவனின் ஒளிவிளக்கு அங்கங்கு பிணையும் பகலவனின் வரவுகண்டு பனித்துளிகள் மாயும்:
பச்சிலைகள் துளிர்த்தொளிரப் பசுவோடி மேயும். செகமனைத்தும் வீசுகின்ற செஞ்சுடரின் வீச்சு
செயல்படுத்தும் தொழிலாளர் உயிரினது மூச்சு! ககனத்தில் கவிழ்ந்திருந்த கறைமறைந்து போகும்;
கச்சிதமாய் உலகமது கலைவடிவிற் காணும்!

Page 37
72
Z/azasí7 சேவலினம் கூரையினிற் குரலெடுத்துக் கூவும்:
சேக்கைவிடு பெட்டையினை அணையவந்து தாவும்! ஆவினங்கள் மடியிரங்கிப் பால்தன்னைச் சுரக்கும்:
அங்கோடிக் கன்றினங்கள் வாய்வைத்துக் கறக்கும்! தாவிவிளை யாடுகின்ற இளம்பிள்ளை, பள்ளி
தானோடிப் போகுமே விரைந்தங்கு துள்ளி. மேவுகின்ற பொருளெல்லாம் மேதினியின் மேலே மிஞ்சுகின்ற தெழிலதுவே சூரியன்தன் னாலே!

Zaza
மதி
விரிந்தெங்கும் ஒளிபரப்பி விளையாடும் மதியே! வெண்ணிலவே விஞ்சிவரும் அமுதேயென் நிதியே! கரித்தவான் தனைக்கூடி கலைவளர்த்தாய்; செல்லும் கடலின்மேல் காவின்மேல் அழகொளித்தாய்: அல்லும் விரிந்தவுன் ஒளியதனால் வீதியெலாம் மயக்கம்: விளையாடும் காதலர்கள் விரும்புகின்றார் முயக்கம்: சொரிந்தவுன் பாலொளியோ சொர்க்கமது சேர்க்கும்! சொல்லுதற்குக் கூடுதியோ உன்னழகு ஆர்க்கும்!
வானத்தில் விட்டெறிந்த வெள்ளியது தட்டோ? வாண்துதலார் ஒளிமுகமோ வடிவழகின் கட்டோ? வானகத்தார் அமுதருந்து வட்டிலது தானோ? வாள்வீரன் கேடயமோ வகையறியேன் நானே! கானகத்து நீயுலவி வருகின்ற மாலை
கலையழகு முழுவடிவாய்த் தெரிகின்ற வேளே! சேணத்தில் நீயோடிச் செல்லுகின்ற போதும் செயல்படுத்தி மகிழ்கின்றாய்; இன்பங்கள் மோதும்!

Page 38
Z/2Zaf2
எழில் வான்
வானத்தை வந்துவந்து பாராய் - எழில்
வண்ணங்கள் மின்னுவது தேராய்.
கானத்தில் காணுகின்ற அழகே - கலை
ஞானத்தில் நாம்காணும் நிலையே.
விலங்கிளைப் போன்றதொரு தோற்றம் - விண்
விரைகின்ற பறவையொரு மாற்றம்.
துலங்கிடும் வெள்ளிகளின் ஒட்டம் - துய்ய
மலர்களாய் மலர்ந்து விட்ட தோட்டம்,
கார்முகில் வந்துவந்து தவழும் - ஒரு
காரிகையின் கூந்தலெனத் துவஞம்.
வாரணங்கள் மலையெனவே பொருதும் - கோபம்
வந்திடிலோ இடியங்கு அதிரும்.
தோகைமயில் விரித்துவிரித் தாடும் - பெடை
மோகமுடன் அணைய வந்து கூடும்.
தாகமுடன் மான்கள்வந்து தாவும் - மதி
தடாகமிலை யென்றறிந்து போகும்.
ஓடிவரும் முகிலினது கூட்டம் - அதில் ஊடிவரும் காற்றினது பாட்டும். தேடிவரும் தேனிலவைப் பார்த்து - முகில்
தேய்ந்துஉரு மாய்ந்துவிடும் சோர்ந்து.
அணங்கினர் ஆடியாடிக் குலவும் - அதில் அணிசெய்யும் முகத்திடையே நிலவும். இணைந்திருந்த காதணிகள் தளர்ந்து - அங்கு
சிதறிவிட்ட வைரங்கள் பரந்து.

75
7ھبر۶ZیےZZ
சிரிப்பதற்கு மின்னலெனப் பேரோ - துகில்
விரிப்புக்கு வானம்என்ற தாரோ? வரித்துவிட்ட மங்கலத்தின் நானோ - வான்
வில்லென்று உரைத்துவும் ஏனோ?
கோணங்கள் பலப்பலவாய்ப் போடும் - அவ்வக்
காலங்கள் கலையுருவம் காட்டும். ஞாலத்து நாம்காணும் உண்மை - பல
காலத்தும் நினைப்பதற்கு இனிமை!

Page 39
7ریخ بر۶ZھےZZ
&ીfિો
பச்சைப் பசிய கிளியே - நல்ல பண்பெழில் நிறை விழியே! இச்சைக் கினிய அமுதே' - எந்தன் இன்பத் தமிழின் மொழியே!
குழந்தைப் பேச்சுப் பேசி - என்னைக் குளிர வைப்பாய் நெஞ்சில். அணைந்து கொஞ்சும் பிள்ளை - அதில் அயர்ந்து தூங்கும் கிள்ளை.
கூட்டில் வைத்து உன்னைச் - சிலர் குறுக்கி நிற்ப தென்னை? காட்டில் திரியும் போது - கலை மிளிரும் நல்ல மாது.
வானை எட்டிப் பறப்பாய் - உயர் வனங்கள் மீதும் எடுப்பாய். சேனை கூட்டி ஆர்த்து - செல்லும் அழகு மிக நேர்த்தி.
ஆரம் உண்டு கழுத்தில் - அது அசையும் அங்கு எழுத்தில், காரம் உள்ள மிளகாய் - பழம் கொத்தித் தின்பாய் அழகாய்.

Z/aza
மயில்
ஆடும் மயிலே ஆடும் மயிலே
அணங்கினை ஒக்க ஆடும் மயிலே
காடும் வனமும் களிப்புக் கொள்ள
கண்டவர் அன்பு கொண்டு குழைய - ஆடும்
கார்முகில் கண்டு களிநடனம் செய்வாய்
காதலர் உன்எழில் பருகுதல் செய்வார்
சீர்படத் தாளம் சார்புற மேவும்
சோவெனச் சாரல் சேருது வேகம் -ஆடும்
தோகை யிலாயிரம் தங்கப் பதக்கம்
துலங்கிடும் ஒள்ளிய செல்வ மயக்கம்
பாகை பரிதி வட்டமுன் ஆட்டம்
பாவலர் கவிதைக் குயிருள ஊட்டம் -ஆடும்
காவிய நாயகி ஆனவள் போலே
கானகத் தேயுயர் ஆனதும் நீயே
ஒவிய மான உடலினைக் கொண்டாய்
ஒப்புதல் இல்லை உனதெழில் கண்டாய் -ஆடும்
வான வில்லின் வண்ணங்கள் வைத்தாய் வளரும் திங்கட் கலையும் ஒப்பாய்
ஆன அந்திக் காலம் காப்பாய்
அழகிய மைகடல் எண்ணமும் சேர்ப்பாய் -ஆடும்

Page 40
Zasza7
குயில்
கூவும் குயிலின் இனிமை - தமிழ் குரலின் ஒலிக்கும் இனிமை! பாவும் பண்ணும் தோற்கும் - உந்தன் பைந்தமிழ் இசை ஏற்கும்!
கொள்ளை அழகு இல்லை - ad-l-6) குரலின் இனிமை கொள்ளை கொல்லைப் புறத்தில் கூவும் - இசை குழந்தை உள்ளந் தாவும்!
வசந்த காலம் வந்தால் - நீயும் வாவென் றழைப்பாய் என் அசந்து போவேன் இங்கே - நீதான் ஆர்த்துப் பறப்பாய் அங்கே!
முட்டை யிட்டுக் காக்கைக் - கூட்டில் விட்டுச் செல்வாய் சேக்கை பெட்டைக் குஞ்சும் கூவும் - காக்கை கொத்தித் துரத்தும் பாவம்'
தாய்மைக் குரலைக் கேட்டு - குஞ்சு தஞ்சம் புகுமுன் மாட்டு தாய்மை உலகில் புதுமை - இது தரணி கண்ட உண்மை!

Z/2Za7
LOQOT
மெல்லிதழ் கொண்டாய்; பெண்ணின் மேனியை நிகர்ப்பாய்; வண்டின் புல்லுதல் உணர்வாய், உள்ளம்
பொலிவுடன் மகிழச் செய்வாய்! சொல்லுதல் எளிது யார்க்கும்
சுகத்தினை அளிப்பாய் நன்று. துல்லிய உடலாய், தீண்டத்
துயரினைப் பொறுக்க மாட்டாய்!
அழகினில் நீயோர் உச்சம்;
அவனியின் ஒளியே மிக்க நிழலினைச் சேர்க்கும் காவின்
நெஞ்சினை நெகிழ்க்கும் முத்தம் பழகிடப் பழக இன்பம்;
பைம்புனல் குளிர்மைப் பண்பு. குழைவுடன் நோக்கு கின்றாய்
குதிநடம் ஆடு கின்றேன்!
நறுமணம் தருவாய், நல்ல
நயத்தலைச் செய்வாய், நட்புக் குறுதுணை யாவாய்; உள்ள
ஒளிநிகர் ஆமோ இன்பம்? மறுதுணை வேண்டி நிற்பார்
மலருனைத் தூண்டி நிற்பார்! சிறுமனை முதலாய்க் கொண்டு
செகமெலாம் வேண்டிற் றாமே!

Page 41
8 O
4/aza7 தென்றலும் அலர்த்தத் தேனைத் தெவிட்டிட ஈவாய்; வண்டும் நன்றுற வுண்டு, உண்டு,
நனிமிகப் போதை கொண்டு, சென்றிடும் மலர்கள் தோறும்;
செழிப்புறு மகரந் தத்தை ஒன்றுதல் செய்யும் இன்பம்!
இயற்கையும் செழிக்கும் வையம்!

Z/2Za?
தாமரை
பூக்களில் சிறந்தது தாமரை! - அது
பூத்து மலர்ந்ததும் நாமதை
பார்க்க மனது பறக்குது; - உயர் பண்பு அதனில் சிறக்குது!
கண்ணைக் கவரும் அழகிதே - மலர்
கட்டவிழ்ந் தேதேன் சொட்டுமே.
விண்ணில் இருக்கும் மதியினை - ஒளி
விண்டு சிறக்கும் மலரிடை
அன்னை முகத்தின் அழகினை - அங்கு அகத்தில் ஒளிரும் பொலிவினை
மின்னி மறைக்குது நேரிலே - மிக மேன்மை பெருக்குது பாரிலே,
பிள்ளையின் உள்ளம் போலவே - இதழ்
பெண்மையின் கன்னம் ஆகவே
மெல்லவும் மென்மை பெற்றது - எழில்
மிஞ்சியே கஞ்சம் உற்றது!

Page 42
7ڑھZZ ترجمے برZ
கற்பக தரு
நீண்டோங்கி வளர்ந்தி ருப்பாய் நீலவான் முகட்டை நோக்கி ஆண்டுபல் ஆண்டு காலம் அறத்தினைச் செய்து வாழ்வாய்! மாண்டுநீ மடிந்த பின்னும் மனைகளுக் குதவி நிற்கும் ஈண்டுநின் புகழ்ச்சி சொல்லில் இன்னதென் றுரைக்க லாமோ?
ஒலையை உதவி நீயும் ஒண்தமிழ்ச் சுவடி தந்தாய்; மேலைநாட் டவர்க்குக் கிட்டா மேவிடு செல்வ மானாய்! வாலையிற் குமரி போல வாழ்கின்றாய் வறுமை நீத்து. பாலையிற் பகமை காட்டும்
பண்பினை என்ன சொல்வேன்?
கிழங்கினைக் கனியைக் காயை கேட்டவர்க் கீந்து யர்ந்தாய்! புழங்கிடப் பெட்டி பாய்கள் புடைத்திடச் சுளகுந் தந்தாய். விலங்கினிற் குணவு தந்தாய்; விளக்கிட மாறுந் தந்தாய், குலுங்கிடக் குலைகள் நுங்குக் கோலத்தை என்ன சொல்வேன்?

83
கூழினைப் பனாட்டைப் பிட்டை பதநீரைக் கள்ளைத் தந்தாய்!
நாவினிற் குருசி நல்கும்
கற்கண்டுக் கட்டி சீனி ஒய்விலா தெமக்குத் தந்து உயர்கொடை வள்ள லானாய்! வாழ்வுனைக் காப்ப வர்க்கு வையத்தில் வறுமை நீத்தாய்!
மட்டையைக் கொட்டை தன்னை மாட்டிடும் சட்டைப் பன்னா
அட்டையை அடுப்பில் வைத்து
எரித்திட விறகு மீந்தாய்! கட்டிலைக் கதிரை மேசை கவினுறச் செய்ய லாகும்; தொட்டிலைக் குழந்தைக் கீந்து, துயர்தனைப் போக்கி வாழ்வாய்!
மண்டபம் கட்டு தற்கும் மாபெருந் தூண்க ளாவாய்! பண்டங்கள் செய் வதற்கும் பலகாரம் சேர்ப்ப தற்கும் கண்டுசர்க் கரையே பாணி கலந்திட குசியுந் தந்தாய்! பண்டுநம் தமிழர் உந்தன் பண்பினைப் பேணி வாழ்ந்தார்! தேனினைப் போன்ற பாணி தீந்தமிழ்ச் சுவையைக் காட்டும்: ஊயினைத் தருவ தாலென் தாயினை உணர்த்தி நிற்கும்; கோணலில் உந்தன் தோற்றம்
கொடையினை உயர்த்தி நிற்கும்:
வானினை எட்டி விட்டாய்! வான்புகழ் மிஞ்சி விட்டாய்!
Z/2Zaf

Page 43
84
z/சzதி? பனையென்று பேர்ப டைத்தாய்! பஞ்சத்தை யோட்டி நின்றாய்! சுனையினைப் போலப் பானம் சொரிந்துமே தாகந் தீர்த்தாய்! தினையள வுதவி யேனும் செய்திலேன்; எனினும் எந்தன் மனையுளோர் மக்க ளெல்லாம் வாழ்கின்றார் உன்ன ருளால்
ஈழத்தின் பொருள்வ ளத்தை ஈட்டவுன் குலம் பெரிது! ஆளத்தான் திறமை யுள்ள ஆட்சியர் வந்து விட்டால் பாழினிற் போகு மந்தப் பயனெலா மொருங்கு கூட்டி வாழ்வளித் தென்றும் நல்ல வளங்கட்ட வாழும் பூமி காரினை அணுகிச் செல்லும் கற்பக தருவே! பாரின்
சீரிய கொடைத் திறத்தால் செகத்தினிற் செம்மை பெற்றாய்!
மாரியைப் போல அள்ளி வழங்கினாய் வாரி வாரி
ஆருனக் கீடு செய்வர்? அன்னைபோல் வாழ்க என்றும்!

Z/aza
தென்னம்பிள்ளை
வீசிடும் விசிறிபல் லாயிரம் கீற்று. பூசிடும் பொன்முலாம் போர்த்து மேனியில் நேரிய தோற்றமாய் நீண்டு நிமிர்ந்து கூரிய அம்புகள் போல்வன கொண்டாய்! வான வெளியில் விரித்த குடையாய் மோன நிலவை ஒளித்த சிறகாய் காடும் நாடும் கூடும் மரமாய் பாடும் குயிலின் வீடும் தனதாய் - செக்கச் செவேலெனச் செவ்விள நீர்! அவை பக்குவம் வாய்ந்திடு கொங்கை களாமோ! பச்சைப் பசேலெனப் பருவ இளநீர் இச்சைக் கினிய தமிழினை ஊட்டி, குமரிச் சிரிப்பைக் கொள்ளை கொள்ளும் கமழும் பாளை வெடித்த சிரிப்பில் சங்கு வரிகள் போலவுன் மேனி எங்கும் வளைந்து வளைந்து செல்லும். மாதம் தோறும் மடல்தனை நீட்டி மாதர் மலர்ச்சி கொள்வதும் காட்டி பிள்ளே யென்று பெரிதும் போற் கொள்ளைச் செல்வம் கொண்டு தருவாய்!

Page 44

பல்சுவை

Page 45
Z/2Za?
நோக்கு
கவிவாணர் தங்கக் கவிதை அரங்கின் புவிராசன் போன்று பொலியும் கவித்தலைவ! நாட்டும் புதுக்கவிதை நாடும் ரசிககுழாம் கேட்டுக்கொண் டேயிருப்பீர், ஆனால் உமக்கொன்று: பாட்டெழுதும் பான்மை வரப்பெற்றும் மேலாக பாட்டிசைக்கும் தன்மை அறியேன். அதற்காக மன்னிப்பீர் மற்றும் கவிதை தனைக் கேட்டு என்னை மிகப்புகழீர்; ஏற்கும் தமிழ்வணக்கம்!
ஈழத் திருநாட்டின் இன் தமிழ்க் காதலர்கள் ஆழப் பொருளுடைய ஆன்ற கவிவாணர் ஈர்த்த பெருமகனாம் இந்நூற்றாண் டின்கவியை ஏத்த அவன் நாமம் சோமசுந்த ரன்தன்னைப் பார்த்த அளவினிலே பண்பார் திருமேனி நேர்த்தி நிலவும் தமிழ்என்பால் வந்தடையும். வார்த்தை பலதந்தான் வாழ்த்திச் சிலசொல்வேன்; ஆர்த்த அவன்புகழை ஆசிப்பீர் என்பதனால், வங்கத்துத் தாத்தாவை வையகம் வாழ்த்துங்கால் தங்கத்தின் தாத்தாவை தாயகமும் வாழ்த்தாதோ? என்று மனமொடிந்தார் இன்று மனங்குளிர நன்று விழாவெடுத்தார் நாநிலமும் போற்றுங்கால்! தாய்நாடாம் நம்நாட்டின் தக்க புகழ்கீர்த்தி நேய முறப்பாடி நீளும் புகழ்தேடி ஆய தமிழ்வளர்த்தான் ஆண்டு பலவாக தேய மிவனுக்குத் தோத்திரம் செய்யாதோ?

89
ZZ7 تھےZZ அன்னை தமிழை அழகாக வேதொடுத்து முன்னைத் தமிழறிஞர் முற்றும் வழிதனிலே நாமகளி சைபாடி நல்லபேர் தானெடுத்து பூமகற்குக் காணிக்கை பூண்டதும், நம்குழந்தைக் கேற்ற கவிபாடி எல்லா அறிஞர்தாம் போற்றிப் புகழ்பாடப் பேருண்மை கொண்டவனாம். ஆடிப் பிறப்பும், அதின்சுவைக் கூழினையும், தாடி அறுந்தஅவ் வேடன், கொழுக்கட்டைப் பொன்னன், பசும்பால் பவளக் கொடிக்கதையும், என்றென்றும் ஈழச் சிறுவர் மனத்தாக வைத்த பெரும்புலவன் வாழ்க அவன் நாமம்! மொய்த்த புலவனுள்ளம் பெய்த கவிமழையும் அச்சேறா வண்ணம்மேல் ஆயிரமாய் உண்டென்று இச்சகத்தில் இன்னாள் இதுகேட்டு வாளாமல் நிச்சயமாய் நாமிருந்தால் நீசரெனப் பேசாரோ? பிச்சை இடுவதிலும் பேசும் பிரச்சாரம் பிய்த்துக்கொண் டெசெய்யும் பேரும் நமக்கன்றோ? மெய்த்த பொருளுக்கும் மேலும் விரைவாக சோடைக் கருத்துக்கள் சொல்லி மகிழ்பவர்கள் பாடை அடைவதற்குள் மாட்டார் பலனடைய,
நாள்தோறும் நல்ல பலன் நண்ணி மேற்குலகில் வாழ்வில் வளம்செழிக்க வாய்ப்புக்கள் செய்கின்றார். வானத்து வீதியெலாம் வந்து வலங்காணும் ஞானத்தைப் பெற்ற நல்ல வியனறிவு மேலும் விரிவாக மேலுலக வாழ்விற்கு சாலும் மனித வாழ்வங்கே சாற்றுகின்ற பேருண்மை நாமறிந்தும் பேரெழுச்சி கொண்டோமா? சேருண்மை அங்கேயாம்; செப்பும்பொய் இங்கயாம். நாலும் தெரிந்த நல்அறிஞர் பலரிருந்தும் போலி அறிஞர்கள் முன்கூட்டி வாழ்கின்ற ஞாலத்தைப் பெற்றோமா? நாடு நலிவதனை ஏலத்தில் போட்டாலும் ஏனென்று கேட்பதற்கு வாய்பேகம் வல்லவர்கள் வாய்பிளந்து நிற்பார்கள். பேய்கசும் காரணங்கள் பேசித் துடிப்பார்கள்.

Page 46
9 O
A/azza?
பேச்சு இதனாலும் பேசரிய பேரதிர்ச்சி ஆச்சு அதனை அறிந்தபின் நாம்மேலும் தீர்க்க முழுமுயற்சி கொண்டோமா இந்நாளும் ஆர்க்கும் கடல்தழ்ந்த அன்புத் திருநாட்டில்?
சாதியெனும் பேரால் சதிசெய்யும் மக்கட்கு பீதிகொண்ட மக்கள் பெருகுநிலை பேரிடியாம். சாதிக்குள் சாதியெனும் சாக்கடை நாற்றத்துள் மோதிவரும் நம்மொழிச் சண்டைகள் வேறாகும். நாளும் உழைப்பதற்கு நல்லபணி இல்லாமல் வாழ்வும் கசந்து வளமும் தினங்கலைந்து பாழும் உலகென்று பாயும் பரமபதம் வீழும் மனிதர்களை மீட்டும்நாம் காண்போமா? நோயும் நொடியும் நுழையும் மனிதர்கள், காயும் இவையெல்லாம் கண்டு களிப்போமா?
ஓங்கும் பிரச்சினைகள் ஒர்ந்து ஒழிப்பதினால் தூங்குமோ நம்நாடு, தோள்தட்டி நில்லாதோ? ஈங்கிதனை விட்டு இருட்டடிப்பு நீர்செய்யும் பாங்குதான் நல்ல பலன்தர வழியாமோ? நாடு நலன்பெற நல்ல கருத்துக்கள் தேடும் அறிஞரைத் திட்டித்தான் தீர்ப்பதுவோ?
ஊறும் பகுத்தறிவுக் கொவ்வாத காரணத்தால் சேறும் பலனென்றால் செய்வதொன்றும் வேண்டாமே, இத்தனைக்கும் காரணம் இன்னதென்றும் காணாமல் செத்த கருத்துக்கள் தேடிப் பிடித்திழுத்து வித்தகம் செய்ய முயல்கின்றீர் வீணாகும்.
பித்த மனிதரெனப் பேசநாள் சிலவாகும். மக்கட் பிரச்சினையை முன்னிறுத்தி லக்கியத்தை ஒக்க அறிவுடனே ஒர்ந்து செயல்படுத்தி தேசத்தின் பாரம் பரியத்தை நேர்நிறுத்தி பேசப் படுமானால் பேசும்; இதிற்கண்டும் வாதம் புரிகின்ற வாழும் எழுத்தாளர் ஏதம் விழைக்கின்ற இழிநிலையும் மாறாதோ?

9 1
Z/azaz
போலிப் படைப்புக்கு புத்துணர் ஆட்டுபவர் கேலித் தனத்தினைக் கண்டும் மகிழ்வாரோ?
முற்போக்கு என்றுரைத்தால் மூச்சுத் திணறுகின்ற பிற்போக்குப் பிண்டங்கள் பேசும் சரித்திரத்தில் பொன்னாடை போர்த்து புகழ்தனிற் கிட்டுதற்கு என்னதான் சாகசங்கள் செய்தார்! அதுநிற்கும்.
ஒன்றொருவன் ஏட்டில் எழுதி வெளிக்காட்டும் நன்றவன் பேரோ அதுவா யிருக்காது! சென்று சிலநாளில் செப்பும் சிறுமைகள் நின்று தரவல்லார் நூறான பேராகும். உள்ளத் தொளியிழந்தார் ஒவ்வாத பாதைகளில் மெள்ள நடப்பார்; பின் வேகமாய் ஒட்டமாம்! கள்ளத் தனங்கள்பின் கண்டு பிடித்தாலும் கொள்ளை யடித்தவரைக் குத்துமோ குற்றங்கள்?
இல்லை இதுவென் றடித்துரைத்துப் பேசுதற்கும் தொல்லை தருவதற்கும் தொற்றுநோய் சூழ்ந்திருக்கும் பொல்லாத இந்நிலையைப் போற்றி வளர்க்காதீர்! காலத்தால் கெட்டொழியும் என்று கருதாதீர்!
ஆகையால் என்னருமை அன்புச் சகோதரரே! பாகான பாட்டெழுதும் பண்புப் புலவோரே! சீர்த்தி சிறுகதைகள் செப்பனிடும் வித்தகரே! கீர்த்திப் பெரும்புலவன் ஈழக் கவிவாணன் நாள்தனைக் கொண்டாடும் வேளை இதுநாளில் வீழும் மனிதருக்கு வாழும் வகைசெய்ய சின்னத் தனமான சீர்கேடு சிக்கறுத்து, முன்னேறும் மார்க்கம் முற்றும் கடைப்பிடித்து, காலத்தோ டொட்டிக் கருத்துக்கள் நீர்படைத்து, ஞாலப் புதுமையினை நீர்காட்டி நிற்பீரால் பொன்னும் பொருளும் புதுவாழ்வு மேசிறக்கும். எண்ணும் கருத்துக்கள் இன்பத்திற் கேஅழைக்கும் துன்பம் பறக்கும்; துயரங்கள் ஒடிப்போம். அன்பு செழிக்கும், அறனும் சிறந்தாகும்.

Page 47
92
۶ZZ7ھ/4 மக்கள் மலர்வார்; மகிழ்ந்கொண் டேயிருப்பார்! தக்க மனதோடு தம்மொழியில் பற்றாகி இன்பத் தமிழ்படிப்பார் ஏற்கும் இலக்கியங்கள் அன்புக் குரித்தான ஆசைப் பொருளாகும்; நன்று அதைக்காண்க நந்தமிழ் வாணர்களே! இன்று இவை போதும் இன்பம்.
15.6.1962-ல் யாழ்ப்பாணம் நகர மண்டபத்தில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொண்டாடிய சோமசுந்தரப் புலவர் விழாக் கவியரங்கில் பாடப் பெற்றது.

93
Z/2Zaz
வாழ்வுப் பிரச்சினை ஒன்றே!
தமிழைப் படித்திடு தோழா! -அதில் அமிழ்தம் கிடைத்திடும் காண்பாய் சிமிழில் அடைத்திட வேண்டாம் -அந்தச் செல்வம் பொதுச் சொத்து ஆகும்.
என்மொழி என்தாய் நன்று -என எண்ணிட லேகற் கண்டு. தன்மொழி தாயகம் தன்னை -அவர் தாயெனப் போற்றுதல் பண்பு.
அன்னை மொழியை மதித்தல் -போல அயலவர் மொழியை மதிப்போம். மன்னிய இப்புவி மேலே -நம்
மக்கள் சமமென்ப தாலே.
காக்கைக்கு தன்குஞ்சு பொன்னாம் -எனக் கண்டது நந்தமிழ் அன்றோ. யாக்கை நிலையற்ற தென்போர் -மக்கள் யாரை மதித்தலும் தீதோ?
உன்னத மொழிபல உண்டே -அதில் ஒன்று தமிழ்எனக் கண்டோம். சன்னதம் கொண்டிட வேண்டாம் -மொழி சார்ந்து வெறித்திட வேண்டாம்.
எத்தனை எத்தனை மொழிகள் -உலகில் ஏற்றம் பெறுகின்ற வழிகள். அத்தனை யும்நல் அமுதாம் -மக்கள் இன்பஞ் சுரக்கும் கடலாம்.

Page 48
94
Z/2Zasí7 தாயைப் பழித்திடும் போது -ஒருவன் தருக்கம் அடைந்த நிலையை, தாயைப் பழித்தலினாலே -மேலும் உருக்கம் அடைந்திடுவானோ!
பழிக்குப் பழிஎன்ப தாலே -பெற்ற
பழியைத் தவிர்த்திட லாமோ? வழியைப் பிழைத்திடு வோர்க்கு -பாழும் குழியைப் பறித்திட லாமோ?
அன்புக் கரங்களைக் கொண்டு -அவர் அறிவையும் பண்பையும் விண்டு துன்பந் துன்டத்திட வேண்டும் -அது தூய வழியினைத் தூண்டும்.
ஆணவம் பேசிட லாலே -அறிவு அற்று மடிந்திட லாகும். நாணவும் கோணவும் வேண்டும் -மிக நைந்து நலிந்திட வேண்டும்.
துய்ய தமிழினைப் போற்று -சார்ந்து வந்த மொழியினை ஏற்று. வெய்ய கொடுமைகள் வீழும் -பெரும் விந்தைப் புதுமைகள் சேரும்.
இனத்தின் பண்பினைக் காட்டு -வெறும் இனத்து வேஷத்தினை ஒட்டு. சினத்தின் கொடுமை யினாலே -நம் செம்மை மறைந்து போகும்.
வேற்று மொழிகள் பேசும் -மக்கள் விந்தை புரிந்த திலையோ? நேற்று வந்த மொழிகள் -உயர் நீர்மை பெற்றதும் இலையோ?
பேசும் மொழிகொண்டு மக்கள் -வேறு பிரிந்து வாழ்வது நன்றோ?

95
A/2Zaf7 காகம் பொருளும் உடையோர் -ஒன்று கலந்து வாழ்வ தறிவீர்.
கூழைக் குடிப்பதற்காக தினம் கூடிநின்றே உழைப் போர்கள் நாளும் ஒருஇனம் தோழா இது நாட்டில் இருப்பதைக் காண்பாய்.
தேசம் மொழிபல ஆயினும் -அவர் தேடிநிற் பதுநல் வாழ்வே. வாழ்வுப் பிரச்சினை ஒன்றே -இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்!

Page 49
A/aza7
கேரள வீழ்ச்சி
இந்திய நாட்டின் நல்ல இணையிலா ஆட்சி கொண்ட விந்தை கேரளமே நீதான் வீழ்ந்தனை ஐயோ! வீணர் சிந்தையே சிறிது மில்லார் செயல்படு திறன ற்றோர்கள் நிந்தைசேர் சூழ்ச்சி தன்னால் நெடிதுற வீழ்ந்திட் டாயோ!
எக்கலை களையும் கொண்டு ஈடிலாப் புகழ் பரப்பி மக்களின் மனது ஈர்ந்த மகிழ்வுறும் ஆட்சி செய்தாய்! வக்கணை கொண்ட மாக்கள் வஞ்சனை மீந்து ஐயோ! தொக்கென வீழ்ந்திட் டாயோ துடிக்குதே மக்கள் உள்ளம்
பண்டுநம் பரத நாட்டின் பார்த்திபன் மைந்தன் தன்னை சண்டையில் ஜெயிப்ப தற்கு சாதுர்ய மற்ற வீரர் மண்டிநின் றுயிரை மாய்த்த மதியற்ற செய்கை போல கொண்டுனைக் கொடியோர் மாய்த்தார், கொடுமையே, கொடுமை தாமே!

97
Z/2Zav
கொடையினில் சிறந்த கர்ணன் உயிரினைப் போக்க எண்ணி இடையறாச் சரங்கள் எய்தும் ஏகிடா திருந்த போது கடல்நிற வண்ணக் கண்ணன் கருணையால் அறத்தைச் சாடி முடித்த அச்செய்தி போலக் கேரளம் வீழ்ந்த தாமோ!
அறமது பிழைத்த தோதான்? ஆழ்கலை தந்த நல்ல விரவிய ஜனநா யகமே வினையற்று வீழ்ந்த தோதான்? மருவிய மக்கள் உள்ளம் மரத்ததோ, மறைந்த தோதான்? நிரல்படு நீதி சாய்ந்து நிலைகெட்டு வீழ்ந்த தோதான்?

Page 50
44ø7 Azazeszź 9 8
காதல்
காதல் நமக்கொரு பாடமடி -அது கற்பனைக்கே யுயர் மாடமடி பேதம் நமக்கது தருவதில்லை -இன்பப் பேற்றினில் பெருமை பேணுமடி,
ஒத்த உளத்தினர் ஊடுகின்ற -அந்த உண்மை நிலையினைக் கண்டுவிட்டால் பித்த மனத்தினர் பேசுகின்ற -பிடி வாதங்கள் அற்று ஒழிந்துவிடும்!
உள்ளம் உறுதியைப் பெற்றிருக்கும் -உயிர் ஒன்றி இணைந்து பிணைந்திருக்கும் வெள்ளம் ஒடிக் கலப்பது போல் -ஒரு வேற்றுமை யற்ற நிலை இருக்கும்.
இயற்கை அளித்த பெருமையடி -அது இயன்றவர் யாவர்க்கும் உரிமையடி செயற்கை அளித்த நிலைமைகளால் -நற் செயலற்ற வர்க் கது இல்லையடி
பண்பிற் சிறந்தது காதற்பண்பு -நற் பண்ணிற் சிறந்தது காதல் கீதம். அன்பிற் சிறந்தது காதலன்பு -எவ் அழகில் சிறந்ததும் அதுவேயாம்!
விந்தை பலப்பல கொண்டுதரும் -அதில் விருப்பு மிகமிக விண்டு தரும். சிந்தை செழுமை நிறைந்து நிற்கும் -எழில் செல்வம் பலவாய்ச் கொழித்து நிற்கும்.

Zazasó7
மாயமோகினி
செவ்விதழ் வாய் மலர்ந்து, சிரிப்பினில் முத்து திர்த்து, திவ்விய தமிழில் ஊறும் தேனினை உமிழ்ந்து தந்து, மெய்யினில் உணர்வு தூண்ட மோகன உருவம் காட்டி பெய்தொறும் மழையைப் போல பெரிதெனை உவந்து நின்றாள்!
தாங்கிடு கலசந் தங்கம்: தளிர்க்கொடி போற் துவண்டு வாங்கிடு புருவம் வில்லே! வாளினைக் கண்ணிற் கொண்டு நீங்கிடு இடையாள் நன்று நீள்கரும் கூந்தல் நீவி பாங்கொடு பவனி காமப் படைக்கலம் தாங்கி நின்றாள்!
மயிலென நடந்து, துள்ளும் மானென மருண்டு பார்த்தாள். குயிலென மொழிந்து, நல்ல குலமகள் போல நின்றாள். கயலினைக் காட்டி உள்ளக் கடல்தனில் மேவி நின்றாள். புயல்தனை எழுப்பிக் காமப் போரினைச் செய்ய வந்தாள்?

Page 51
4ീ കബ് 1 OO
நிலைதடு மாறி நெஞ்சம் நெகிழ்ந்தது. அவளே தஞ்சம்! சிலையென நின்றாள் நாணி, செயலிழந் துழன்றேன் நானும், கலையெலாம் திரண்டு வந்த கவின்பெறு கன்னி தந்த அலைதனில் ஆழ்ந்து மீள. அணங்கிணை அங்குக் காணேன்

1 Ο Z/azasó7
எக்காலம்?
(பத்தாம்பசலிப் பண்டிதர் ஒருவரின் புலம்பல் முன்னை தமிழ்படைத்தான் முக்கண்ணன்; மேலாக இன்னாள் எனையென்று ஏற்றுவது எக்காலம்? ஒங்கு புகழ்எய்தி ஊழ்வினைகள் சேராமல், ஈங்குநான் வீற்று இசைபெறுவ தெக்காலம்? மன்றில் நடமாடும் மாசிவனைப் போல்நின்று என்றும் நடமாடிப் புகழ்பெறுவ தெக்காலம்? இழிசனர்க் கிலக்கியங்கள் ஏனிருக்க வேண்டுமென்றால் பழிசுமத்திப் பாழடிப்பர் பட்டொழிவ தெக்காலம்? முற்போக் கிலக்கியமாம்; முன்னேற்றங் காண்பவராம்;
பிற்போக்காம் எம்மவரை? பிரிந்தொழிவ தெக்காலம்? தண்டமிழ்க்கு நான்வகுக்கும் தந்நலத்துச் சித்தாந்தம் கண்டுகண்டு நான்களிக்கும் காலந்தான் எக்காலம்?
பண்டிதர்க்குப் பண்டிதனாய், பாமரர்க்கு நான்குருவாய் கொண்டிருக்க நான்வகுத்த கொள்கைநிலை எக்காலம்? மண்டலத்தில்" என்நடனம்; மாநிலத்தில் என்தமிழே! கண்டெவரும் கண்கலங்கிக் காமுறுதல் எக்காலம்?
பாட்டெழுதிக், கேட்டெழுதி, பார்த்தெழுதிப் போர்த்தெழுதிக்
கூட்டா யெழுதிக் குருமரபைப் காப்பவர்கள்
நாட்டில் நமக்கதிகம்; நாளும் பலபதிப்பு தேட்டம் இவையிருக்கத் தேங்குவதேன்; தேறேனோ?
* சாகித்திய மண்டலமெனக் கொள்ளவேண்டியதில்ைைல.

Page 52
4ള്ള മ-ബ് 1 O2
மீசை
துள்ளிக் குதிக்கும் ஒரு மீசை துவண்டு தாழும் ஒரு மீசை எள்ளி நகைக்கும் ஒரு மீசை
எண்ணிற் கவரும் ஒரு மீசை
கம்பி முறுக்கு ஒரு மீசை காதல் கிறுக்கும் ஒரு மீசை வம்பில் இழுக்கும் ஒரு மீசை வண்மை செழிக்கும் ஒரு மீசை
வீரம் தெறிக்கும் ஒரு மீசை வேஷம் கலைக்கும் ஒரு மீசை சோரம் போகும் ஒரு மீசை சொந்தம் இருக்கா ஒரு மீசை
செந்தமிழ் காக்கும் ஒரு மீசை சிலம்பொலி கேட்கும் ஒரு மீசை விந்தை பலபுரி யும் மீசை வேண்டி இருப்பவர்க் கது ஆசை!

1 O3 Z/2Zaf7
இன்பம்
காலையில், மாலையில், கலையின் கவினிலும், சோலையில், கனையில், சோதனை வழியிலும்;
இளமையில், இருட்டில், இணைப்பின் மருங்கிலும்: நிலவின் ஒளியில், நித்திரைச் செறிவிலும்:
கனவில், நனவில், கதையின் நடையிலும்: தமிழில், இசையில், தென்றல் அசைவிலும்;
ஆடல், பாடலில், அங்கியின் அசைவிலும்: பிள்ளையின் மொழியில், பெண்மையின் அழகிலும்:
ஆலையில், வேலையில், அயரா உழைப்பிலும்: ஆக்குந் திறனிலும், அடைவது இன்பம்!

Page 53
பெர்க்க பேதத்தினால் ஏற்ற கிடக்கும் சமூக அமைப்பை - ஒரு மிகப் பலருக்கு இல்லாமையைபு கோணற் தனத்தையும், கொடுமைன் இச்சமூக அமைப்பை மாற்றி இ தாழ்வற்ற ஒரு சுபீட்சமான சமூ: உலகைத் தோற்றுவிக்க வே வேட்கையினால் உந்தப்பட்டு, படைப்பவர்கள் தான் மக்கள் : பேதம் நிறைந்த சமூக அமைப்ை எழுதுகோலர்கள் என்னதான் மறு உண்மைக் கலைஞர்கள் இவர்கள் இலக்கியமோ மக்களை இயக்கிச் ெ என்று ஒரு மேதை கூறியதற்கொப் பெரும் சமூக மாற்றங்களுக்கும் முன்னேற்றத்துக்கும் உதவியிருக்கி பங்கைச் செலுத்தியிருக்கின்றன.
அத்தகைய படைப்புக்க கர்த்தாக்கள், தாம் வாழ்ந்து வந்த சகாத்பமாக்கிச் சென்றுள்ளதோடு த வாரிசுகளையும் உருவாக்கில அவ்வாரிசுகள் நேற்றும் இருந்தன நாளையும் இருப்பர் நம்மைவிட் கவிராயரான பசுபதியும் அவ்வாரிச கவிதைகள் சிலவற்றைத் தொ வெளியிடுகிறோம்.

த் தாழ்வுற்றுத் தாறுமாறாகக் சிலருக்கு எல்லாவற்றையும் ம் திணித்து வாழ்க்கையில் யயும் நிலவச் செய்திருக்கும் பர்க்க பேதமற்ற - ஏற்றத் க அமைப்பை, ஒரு புதிய ண்டும் என்ற இலட்சிய
அதற்கமைய இலக்கியம் எழுத்தாளர் ஆவர். வர்க்க பக் கட்டிக் காக்க விழையும் த்துச் சுடச்சலிட்ட போதிலும் தான் கலையோ அல்லது சயலுக்குத் தூண்ட வேண்டும் ப. இவர்தம் படைப்புகள்தாம் 3, மானிட வாழ்க்கையின் கின்றன; இலக்கியத்துக்குரிய
ளை ஆக்கிய இலக்கிய காலத்தை ஒரு இலக்கிய மது அடியொட்டி வரக்கூடிய பிட்டுச் சென்றுள்ளனர். ார். இன்றும் இருக்கின்றனர். டு மறைந்த "யாழ்ப்பாணக் 1களில் ஒருவர் அவருடைய குத்து இங்கே மீண்டும்.