கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பத்துக்கட்டுரைகள்

Page 1
தாமரை
பத்துக் க
வி.ஜே.

ட்டுை
ரகள்
冗飞
LI LI

Page 2

தாமரைத்தீவானின்
பத்துக் கட்டுரைகள்
வி; ஜே. பதிப்பகம்

Page 3
நூலின் பெயர்: *தாமரைத்தீவானின்"
நூலாசிரியர் :
வெளியீடு:
பிரதிகள்:
அச்சகம்:
வெளியீடு:
விலை:
பத்துக்கட்டுரைகள்
சோ. இராசேந்திரம் (தாமரைத்தீவான்)
வைகாசி 1 - 1997
1000
சக்தி அச்சகம். திருக்கோணமலை
வி. ஜே. பதிப்பகம், நூல்விற்பனை விநியோக மையம். 02, நகரசபை விடுதி, காந்திநகர், திருக்கோணமலை.
25|- (இலங்கை விலை)

சமர்ப்பணம்
தந்தை இல்லாப்போழ்தும் அவையத்து முந்தி இருப்பச்செய்து (67) மறைந்ததாய் சோ. முத்துப்பிள்ளைக்கும்;
O
நெஞ்சம் நடு ஒரீஇ அல்ல செய்த வேளை (116) தக்க வழிகாட்டிய (இன்றுமுள்ள) குரு வ. பு, சி. பெர்னாந்துக்கும்;
OO.
புணர்ச்சிபழகாது உணர்ச்சியால் நற்பாகி (785)
அடிக்கடி தூண்டிவந்த (இன்றுமுள்ள) தோழர்
எஸ். கே. தம்பிக்கும்.

Page 4
என்னுரை
மாணவர்கள் நல்ல தமிழில் எழுதவும், பேசவும் வல்ல வர்களாக வேண்டும். நான் ஆசிரியராக இருந்த காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அவ்வப் போது எழுதிய கட்டுரைகளை வெளியிட வேண்டுமென ஆவலுற்றேன். அந்த ஆவலை நிறைவேற்ற வி. ஜே. பதிப்பகத் தினர் முன்வந்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி.
இதுவரை கவிதைகள் மூலம் என்னைப் பலர் சந்தித் துள்ளனர். கட்டுரைகள் மூலம் பலரை இப்போது சந்திக்கின் றேன். கட்டுர்ை எழுதுவது ஒரு கலை எங்கே, எவ்வாறு தொடங்குவது என்பதில் தயக்கம், எப்படி முடிப்பது என்பதில் தடுமாற்றம். நன்கு வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு, எழுதப்பழகிக் கொண்டால் சாதனை படைத்து விடுவீர்கள். பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும். நான் இக் கட்டுரையில் கூறியவை புதியவை அல்ல. பயின்றவர்களுக்குத் தெரியும். தெரிந்தவற்றை நல்ல தமிழில், பிறரைக் கவரும் வகையில் கூறவேண்டும். சிந்தித்து சிந்திக்க வைக்கும் வகையில் எழுத வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை நூலை உங்கள் முன் வைக்கின்றேன்.
அத்துடன் முக்கியமாக வி. ஜே. பதிப்பக உரிமையாளர்கள் சு. இராசதுரை அவர்களும், வை. ஜெயமுருகன் அவர்களும் அணிந்துரை நல்கிய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. ச. அருளானந்தம் அவர்களும் LCGõTL DTT ti jög5 நன்றிக்குரி யோர்களே.
ஈச்சந்தீவு சோ. இராசேந்திரம் கிண்ணியா, (தாமரைத் தீவான்)

அணிந்துரை
*தாமரைத்தீவான்’ எனும் புனைப்பெயருள் புகுந்து இலக்கியச் சேவை செய்து வரும் முதுபெரும் கவிஞரான திரு. சோ. இராசேந்திரம் அவர்கள் ஓய்வு பெற்ற அதிபராவார். பழந் தமிழ் இலக்கியங்களில் நிறைந்த பரீட்சையம் உடையவர் நகைச்சுவையோடு பேச வல்லவர்.
ஆசிரியராக, அதிபராகப் பணிபுரிந்த காலத்தில் மாண வர்களைச் சிந்தித்துச் செயற்பட வைத்தவர். தமிழ் மொழியில் எழுத்து வசனம், இலக்கணப் பிழைகள் ஏற்படா வண்ணம் கற்பித்தல், திருக்குறளையும், பழைய பாடல்களையும் மனப் பாடம் செய்து வைத்திருப்பவர். அவர் மாணவர்களுக்காக எழுதிய கட்டுரைகள் சிந்திக்கவைப்பன, இலகு நடையில் எவ் வாறு எழுதலாம் என்பதற்கு அவரது கட்டுரைகள் உதாரணங் களாகின்றன.
கல்வி உலகம் அவரது கட்டுரைகளை வரவேற்கும் என்பது உறுதி. மாணவர்கள் வாங்கிப் படிக்கவேண்டும், ஆசிரியர்கள் அதற்கு ஊக்கமூட்ட வேண்டும். தாமரைத் தீவானின் பணி தொடர வேண்டும்.
கல்வி சார்ந்த நூல்களை வி. ஜே. பதிப்பகத்தினர் வெளியிடுவதன் மூலம் தங்களை உயர்த்திக் கொண்டுள்ளார்கள் .
ச. அருளானந்தம்
பிரதி மாகாண கல்விப்பணிப்பாளர்
மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம்
வடக்கு கிழக்கு மாகாண சபை 25 - 3 - 97 திருக்கோணமலை.

Page 5
புத்தகப் பண்பாட்டை நோக்கி
சமூக, பொருளாதார, கல்வி, பண்பாட்டு ஆளுமைகளின் மிளிர்ப்பை வெளிக்கொணர்ந்து, பலதள நிலை எடுத்துச் செல்கைகளுக்கு உதவுவது வெளியீட்டுத் துறைக்கான முயற்சிகள் ஆகும்.
வி. ஜே. பதிப்பகம் இந்நோக்கை அடிநிலைத் தளமாக கொண்டு தன் முயற்சியை கட்டியெழுப்பி வருகிறது. இந்நூல் * காலத்துயர், "தரப்பட்டுள்ள அவகாசம்’ ஆகிய கவிதை நூல் கள் கடந்த ஆண்டு வெளிவந்தபின் மூன்றாவதாக எம்மால் இந்நூல் வெளியிடப்படுகிறது.
*தாமரைத்தீவான்’ ஒரு நடைநேர்த்தியாளன். பழந்தமிழ் கொண்டு எளிமையை எவ்வாறு தமிழிற்கு கொண்டு வரலாம் என்பதை எமக்கு இங்கு காட்டுகிறார். இவரின் பல்கோண நோக்கு நிலை கொண்ட கட்டுரைகள் போல் தமிழில் வெளி வந்தவை மிகக் குறைவு. மொழியின் ஆளுமை இவரில் தெரிகிறது.
தமிழில் எழுதவேண்டும், பேசவேண்டும், தாய்மொழி வளர்ச்சிக்கு பாடு படவேண்டும் என உரத்துக் குரலெழுப்பி ஆவேசமாகப்பேசும் பலர் மத்தியில் அமைதியான முறையில் உறுதியான தொழிற்பாடாக இக்கட்டுரைத் தொகுப்பு வெளி வருகிறது.
மொழியின் பொலிவுக்கு வளம் தரும் எத்தனையே எழுத்தாளர்க i எமது கண்ணில் படாது, புறக்கணிக்கப்பட்டு ஊக்கிவிப்பின்றி இருக்கும் ஒரு சூழ்நிலையை மாற்றியமைக்க எமக்கு உதவி செய்யுங்கள்.
சக்தி அச்சக உரிமையாளர், ஊழியர்கள், மற்றும் நூல் ஆசிரியர் "தாமரைத்தீவான் அவர்களுக்கும் எமது நன்றிகள்,
சு. இராஜதுரை வை. ஜெயமுருகன் 1 - 5 - 97 வி. ஜே. பதிப்பகம்.
திருக்கோணமலை.

காற்று
இப்பூவுலகிற்கு இயற்கை அளித்த நன்கொடைகளுள் ஒன்றுதான்காற்று. உயிர் வாழமுதலில் தேவையானது காற்றே. கருவிலேயே இது தேவை. இது சும்மா கிடைப்பதால் மக்கள் காற்றுக்காகச் செலவழிக்கவேண்டிய அவசியமில்லை. காற்றை வாயு, பவனம் என்பர் வடமொழியார். காற்றைக்கடவுளாக்கி வழிபட்டும் வந்துள்ளனர். தமிழில் கால், வளி என்டோம். காற் றில்லா இடமே இல்லை. வெற்றிடம் எங்குண்டோ அங்கு காற் மிருக்கும். வெப்பக்குடுவைக்குள் காற்றில்லை என்பர். திங்கள் துணைக்கோளில் காற்றின்மையால் உயிரும் இல்லையாம், ஆழ் கடலுள் காற்றின் துணையோடு தான் செல்வர், பெருமலை உச்சிக்கும் அவ்வாறே, அண்டவெளிசெல்வதும் அவ்விதமே. உயிர் வளிமூச்சுப்பையுட் சென்று கெட்டகுருதி தூய்மையாக்கப்படு வதால் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காற்றைக் காணமுடியாது உணரமுடிகின்றது.
வடக்குக்காற்றை வாடை என்போம். தெற்குக்காற்றைத் தென்றல் என்போம். மற்றும் கொண்டல்காற்று சோழகக் காற்றுக்களுமுண்டு. பகலில் கடற்காற்றும், இரவில் தரைக்காற்று முண்டு. பூங்காற்றுச் சிலவேளை புயலாகமாறி நாட்டை அழிப் பதுமுண்டு. சுழிக்காற்றாகியாவையும் அள்ளிச்செல்வதுமுண்டு. Jலவனம் எரியும் போது பற்றுதீக்குறவாம் காற்று - மெலிவது விளக்கேயாயின் மீண்டுமக்காற்றே கூற்றாம். என்கின்றது விவேகசிந்தாமணி இலங்கைச்சோலையில் ‘கறங்குகால்புகா' என்பார் கம்பர். காற்று பொதுவுடைமைச்சொத்து. "காற்றும்

Page 6
சிலரை நீக்கி வீசுமோ? எனவினவுவார் கபிலர். காற்றுஊடறு க்காத்தழுவல் காதலர்க்கு இனிதாம். "வீழும் இருவர்க்கினிதே வளியிடை போழப்படாஅமுயக்கு.’ (1107) என்பார் வள்ளுவர். *காசில் பொற்சிலம்பின் சிகரத்தைக்கால் பறித்தே எறிந்திட வந்த மாசில்தென்கோணமாமலை. மலைமுடிகாற்றால் பறிக் கப்பட்டு வீசப்பட்டதே நம் கோணமாமலை என்னும் புராண க்கதையும் காற்றின் வலிமையைக்காட்டுகின்றது. இப்படி யெல்லாம் இலக்கியங்களில் இடம்பெற்ற காற்றை மனிதன் பலவிதங்களில் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான்.
காற்று பந்தைக்கிளம்பவைக்கும். பல ஊர்திகளை ஒடவைக்கும் பறவைகளைப் பறக்கவைக்கும். 'கோடை அவ்வளி குழ லிசையாக, குழலில் இசையெழுப்பும். அலையை மோதவைக்கும் முகிலை ஒடவைத்து மழையைப்பொழியவைக்கும். முழக்கத்தை முழங்கவைக்கும். கப்பலைஓட்டிக்காட்டும். கோடையில் வெப்ப மாகும். மாரியில் குளிராகும். இறைவனைப்போல் அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும். காற்றுள்ள போதில் தான் தூற்றப்பார்ப்பர்.
இத்தகைய இயற்கைதந்த இனிய காற்றை நாம் கெடச்செய்து விடுகிறோம். சூழலை மாசடையச்செய்து தூய் மையைக்கெடுத்து நாமும் கெடுகிறோம். நுண்ணுயிர்களைக் காற்றுச்சுமந்துவந்தால் மின்விசிறி இருந்தென்னபயன். ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா? நாமே நமக்கு நோயை வருவித்து அவதிப்படுகிறோம். மருந்து தேடி அலைகிறோம். யாவற்றிலும் முக்கியமான அவசியமானகாற்று சுதந்திரக்காற்றாகும். அந்த விடுதலைக்காற்று வீசாமல் - உரிமைக்காற்றில்லாமல் எத்தனை காற்றுக்கள் எத்தனை ஆண்டுகள் எப்படியெல்லாம் வீசினாலும் என்னபயன் காணப்போகின்றோம்? காற்றே, நீதான் கடவுள் நீ வாழ நாம் வாழ்வோம் ! உனக்கே. எம் முதல் நன்றி!
.
O2

நீர்
காற்றுக்கு அடுத்தபடியாக இவ்வுலகிற்கு இயற்கையளித்த நன்கொடைகளுள் ஒன்றுதான் நீர். நீரும் உயிர்வாழ அவசிய மானதுதான். ஒரு சில பகுதிகள் தவிர. மற்றிடமெல்லாம் நீரும் சும்மா கிடைப்பதால் சிலர்க்குச்செலவிருப்பினும் பலர்க்கு நீர்ச்செலவும் கிடையாது. ஒருகிணற்றை - குழாயை அமைக்கும் செலவே தவிர நீருக்குச்செலவில்லை. புவியில் முக்காற்பங்கு நீர். காற்பங்குநிலம். புவிசுழலாதிருந்தால் முழுவதும் நீராகி விடும் என்கிறார்கள் அறிவியலார், நீரில் உவர்நீரே அதிகம். நன்னீர்குறைவு. கந்தக வெந்நீரும் உண்டு. புவி வெப்பமாய் இருந்தாறிய வேளையில் ஆண்டுக்கணக்கில் பெய்தபேய் மழை யால் கடல்கள் ஏற்பட்டதாய்ச் சொன்னாலும், இன்று மழை யால் நீர்வர்க்காரணம் கதிரோனும் கடல்களுமே நீரை ஜலம், அப்பு, உதகம் என்பர் வடமொழியாளர். மழையைப் புனற் கடவுள் என வழிபட்டும் வந்தனர். தமிழில் புனல் என்போம். "இரு புனலும்வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு' (737). ஆறுகளெல்லாம் நன்னீராய் ஒடிய் வண்ணம் உள்ளதால் ஓரளவு தூய்மையாய் உள்ளன. ஏரி, குளம், குட்டைகள் கட்டுப்பட்ட நீராய் இருப்பதால் தூய்மை கெட்டுவிடவும் இடமுண்டு. கீன்ணைக் கழுவ கண்ணீர் வேண் டும். உடலின் உள் உறுப்புக்களைக் கழுவச் செந்நீர் வேண்டும். வெளி உறுப்புகளைக் கழுவத்தண்ணீர் அவசியம். "நீர் இன்ற மையாது உலகெனின் யார் யார்க்கும் வான் இன்று அமையாது
O3

Page 7
ஒழுக்கு’ (20) என்பது வள்ளுவர் கருத்து. மழைநீர் விடாங் தீர்ப்பது மட்டுமல்ல. உணவை உண்டாக்குவது மட்டுமல்ல, தானும் உணவாகவும் பயன்படுன்றதென்ற உண்மையைச் சொன்னவரும் வள்ளுவரே. "துப்பார்க்குத்துப்பாய துப்பாக் கித்துப்பார்க்குத் துப்பாயது உம் மழை" (12) என்றார்.
நீரிலும் காற்றுக் கலந்துள்ளது. அக்காற்றையே மீன்கள் சுவாசித்து நீரில் வாழ்கின்றன. நிலவளத்திலும் நீர்வளம் பெரி யது. நீரிலே வாழும் உயிரினம் நிலம் வாழ் உயிரினத்திலும் அதிகம், நீரே உப்பைத் தருகின்றது. 'உப்பில்லாப் பண்டம் குப் பையிலே அல்லவா? பவளம், சுண்ணச்சல்லி, சங்குகள், மீன், இறால், நண்டு, முத்து, எரிபொருள் மற்றும் பலவும் நீரால் பெறப்படுவையே. நீரிலிருந்து (அருவிகள்) மின்சாரமும் :ெறு கின்றார்கள். நீர் நெருப்பை அண்ைடக்கிறது. (கப்பல்) போக்கு வரத்தை எளிதாக்குகிறது. துயகாற்றைத் (கடல்) தருகின்றது. வெப்பம் கூடின் கொதிக்கின்றது . ஆவியாய் மாறியும் விடுகின் றது. குளிர் கூடின் பனிக்கட்டியாய் விடுகின்றது. கடல் நீரைக் குடிநீராக் மாற்றும் முறையையும் கண்டுவிட்டார்கள்.
"ஆயில்லா ஊருக்கு அழகுடாழ்' என்று அவ்வையார் நீரைச் சிறப்பித்துள்ளார். "செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்று நிலமும் நீருமாகக் காதல் நெஞ்சங்களை வாழ்த்துகிறார் சங்ககாலப்புலவர். நீர் இல்லாவிடில் சமையலே இல்லை. நீர் கொண்டமைக்கப்பட்ட பல குடி வகைகளைக் குடிக்கிறோம். இத்தகைய நிலத்தாய் தரும் நீர்ச் செல்வத்தைப் பக்குவமாகப் பாவிக்காமல் சும்மா வீணாகவும் செலவு செய்கிறோம். திங்கட்கோளிலே நீர்வளம் இல்லாததால் இங்கிருந்து நீர்மாற்றுக் கொண்டு போனதாய் அறிகிறோம். பாலைவனங்களில் வாழ்வோருக்கே நீர் அருமை தெரியும் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்களும் (முதலை, ஆமை, தவளை, வாத்து) உள்ளன. இத்தகு நீரையும் மரீச டையச் செய்து (கடலை, ஆற்றை) விடுகின்றோம். நீரைக்
04

கொதிக்க வையாமற் குடித்து நோயையும் தேடிக்கொள்ளு கிறோம். "நீர்கருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி வாழ்பவர்தம் பேருரைக்கிற் போமே பிணி என்கின்றது ஒரு மருத்துவப் பாட்டு. கோடையில் வெப்பம் அதிகரிப்பதால் தாகமும் அதிக ரிக்கின்றது. அதிக நீர் பருகவேண்டி ஏற்படுகின்றது. எல்லா வற்றிலும் பெரியதாகம் சுதந்திரதாகமே. விடுதலை நீரே (உரிமையே) அதைத்தணிக்கவல்லது. அல்லது தாகம் இருந்து கொண்டே இருக்கும். இந்தத்தாகம் என்று தணியுமோ தெரி யாது. நீரே நீ வாழ நாம் வாழ்வோம். உனக்கும் எமது
நன்றிகள் உரியதாகட்டும்!
O5

Page 8
உணவு
காற்றை - நீரை அடுத்து உயிர் வாழ வேண்டியது உண யாகும். ஒரு காலத்தில் உணவுக்கும் மக்கள் செலவிடும் தேவை (பணமும் இருக்கவில்லை) இல்லாதிருந்தது. இயற்கையாவே பச்சை (ஊன், கனி, கிழங்கு) உண்ணவேண்டியிருந்தது. (நெருப்பும் இருக்கவில்லை) சமையலே கிடையாது. நெருப்புக் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு (சக்கிமுக்கிக்கல் - தீக்கடைக்கோல்) தீயில் வெதுப்பிச்சாப்பிடும் நிலைமை வந்தது. பிறகு, சமையல் முறைகள் - பாகங்கள்! மச்ச - மாமிச - மரக்கறிகள்! ஆனாலும் இன்றும் சமையாச் சாப்பாடுகள் பல உள. உணவை ஆகாரம் போஜனம் என்பர் வடமொழியாளர். தீன், இரை, சாப்பாடு, ஊண், உண்டி என்போம் நாம். நாளும் மூவேளை பசியா விடினும் தின்னும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம். வயிறு ஒரு நாள் உணவை விடெனறால் விடாது. இருநாளுக்குரியதை எடு என்றால் எடாது. "ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய், இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ அறி யாய் இடும்மை கூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’ என்கின்றார் ஒளவையார், மாறுபாடில்லா உணவை ஒழுங்காகச் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மருந்தே தேவை பில்லை என் கிறார் வள்ளுவர். "மருந்தென வேண்டாவாம். யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ (942), "மாறுபாடில்லா உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடில்லை உயிர்க்கு (945). உண வாலேதான் நோய் என்பது அவரது ஆய்வு, இழிவறிந்துண் பான்கண் இன்பம் போல் நிற்கும் கழிபேரிரையான்கண்நோய்" (946), "தீயளவன்றித்தெரியான் பெரிதுண்ணின் நோயளவின்
06

றிப்படும்’ (947), தான் உழைத்துண்டாக்கிச் சாப்பிடுவதுதான் உண்மையான சாப்பாடு. பிறர்தர வாங்கித்தின்பதல்ல என் பதும் வள்ளுவர் கருத்தே. 'தெண்ணிர் அடுபுற்கையாயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்கினியதில் (1065) ஆவிற்கு நீர் என்றிரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்ததில் (1066) "அன்ன விசாரம் அதுவே விசார மென்ற பட்டினத்தார், "இருக் குமிடந்தேடி என்பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன்’ என்கிறார்.
சிலர்க்குச் சிலவகை உணவு ஒத்துவரா. (ஒவ்வாமை) சிலர் அவாவினால் பலவகைச் சத்துணவுகளையும் ஒன்றாக உண்டும், ஈமொய்த்த - பதங்கெட்டவற்றை உண்டும் உடல் பெருத்து நோய்வந்து அவதிப்படுவதுமுண்டு. பலர் ஊட்டமில்லாத உணவுகளால் உடல் வெளிறுவதுமுண்டு - இல்லாமையால் பட்டினி கிடந்து இறப்பதுமுண்டு, இதனால்தான் தனியொரு வனுக்குணவில்லையெனில் ஐெகத்தினை அழித்திடுவோம், 'வயிற்றுக்குச் சோறிடவேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெ ல்லாம்’ என்றெல்லாம் பாரதியார் குரல் கொடுத்தார். உணவு காற்றைப்போல் நீரைப்போல் இலவசமாகக்கிடைக்காது. (அன் னசத்திரங்கள் இருந்தகாலமும் உண்டு) காசு கொடுத்தே பெறவேண்டும். ஈழத்தரசு வறுமை ஒழிப்புத்திட்டத்தைக் கொண்டுவந்ததும், உணவு முத்திரை (மாணவர்) யைச் செயற் படுத்துவதும் மக்களின் நலத்திற்காகவே.
உணவை ஏ-பீ-சீ-டி-ஈ-கே என்றும், புரதம் - கொழுப்பு மா - இனிப்பு - கனி என்றும் அறிவியலார் பிரித்து விளக்கி யுள்ளார்கள். உணவுகள் நாட்டுக்கு நாடுவேறுபடும். நளபாகம், பதார்த்தகுணசிந்தாமணி போன்ற சமையற்பாக நூல்களும் உள்ளன. தற்காலத்தில் விதவிதமான உணவுவகைகளும், சமையல் அடுப்புகளும், குளிர்பெட்டிகளும் விற்பனைக்குள்ளன. சிலசமயங்கள் உண்ணா நோன்பை (காந்தியார்)க் கடைப்
பிடிப்பது முண்டு. மனிதனுக்கு வயிறு இல்லாவிடில் உலகில்
07

Page 9
பிரச்சினையே இருக்காது ஒன்றிற்கொன்று உணவாகவே படைப்-பும் உள்ளது. பசி வந்தால் பத்தும் பறந்து விடுகிறது. உணவுக்கே உழைக்க முடியாத பலர் உளர். பசியில் பெரிய பசி சுதந்திரப் பசியே. இப்பசிக்கு விடுதலைத்தீன் கிடைக்கவேண்டும். கிடைக் குமா? பசியாற்றலிலும் பசிமாற்றலே பெரிய ஆற்றல் என்கிறார் வள்ளுவர். "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்று ஆற்றலின் பின்" (2:25). உணவே உனக்காக நாமல்ல, எமக்காகவே நீ! அறிவாய்! நன்றி!
ί)β

92.60)
காற்றும் நீரும் உணவும் பெற்றாலும் உடையும் பெற வேண்டிய நிலையிலேயே மக்கள் உள்ளனர். ஒருகாலத்தில் விலங்குகளுக்கும் மக்களுக்கும் வேறுபாடு இருக்கவில்லை. இயற் கையாக - நிர்வாணமாகவே வாழ்ந்தனர். பின்னர் இலை-குழை மரப்பட்டை - தோல்களால் அரையை மறைந்தனர். நாணம் - வெட்கம் தோன்றவே மானத்திற்காகச் சில உறுப்புக்களை குறைக்க வேண்டியதாயிற்று. எவற்றை மறைத்தோமோ அவற் றில் விருப்பும் ஏற்படலாயிற்று. காதல் வாழ்விற்கு உள்ளமே முக்கியமாயினும் உடையும் தேவைப்படலாயிற்று.
உடையும் நாட்டுக்கு நாடு - வீட்டுக்கு வீடு வேறுபடுவ தாயுள்ளது. உடையால் நாகரிக மண்டந்த நாடுகளும் உள்ளன. நாளொன்றுக்கு நாலைந்து முறை உடைமாற்றி வாழ்ந்து காட் டும் நாடுகளும் உள்ளன. பலவண்ணங்களில் - பலவடிவங்களில் பல சம்பிரதாய முறைகளில் உடைகள் அணியப்படுகின்றன. குழந்தைகள் - இளைஞர்கள் - மகளிர் - மணமக்கள் - முதியோர் மன்னர் முதலியோரையும், பல பதவிகளில் அமர்ந்துள்ளோரை யும் உடைகளாலேயே அறியக்கூடியதாயுள்ளது. உடையணியா அமைப்புக்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றன.
குழந்தை உடையுடன் பிறப்பதில்லை. இறந்த பின் உடை யுடன் தான் எரிப்பர் அல்லது புதைப்பர். ஆனாலும், வெறுமை யாகவே போகிறார்கள். ‘பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லைப் பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடு போவதில்லை."
09

Page 10
என்றார் பட்டினத்தார். உடை மக்களின் தேவை எனினும் காற்றின் - நீரின் - உணவின் அடுத்த முக்கியத்துவமே அதற்குக் கிடைக்கின்றது. கந்தையானாலும் கசக்கிக் கட்டினாற் போதும் என்ற நிலைதான். ஆனால் பலர் பகட்டுக்காக - பிறருக்குத் தங்கள் இருப்பைக் காட்டுவதற்காக உடையணிவதுமுண்டு ஆடைபாதி ஆள்பாதி’ என்று சாதாரண ஆடையுடன் நில்லாமல் வேறு பல அணிகளையும் அணிகிறார்கள் - அலங்கரிக்கி றார்கள் - நேர்த்தை "மண்ண்ர்க்குகிறார்கள். சிலர் ஆலய வழி பாட்டைக்கூடப் பக்திக்காகவல்லாமல் அணிகளைப் பிறருக்கும் காட்டுதற்கும் பயன்படுத்துகிறார்கள். களவுகள் நடந்தாலும் அணிகள் இன்றிக் கோயிலுக்குக் கூடச் செல்லமாட்டார்கள். "கற்றோர்க்குக்கல்வி நலனே கலன் அல்லால் மற்றோர் அணி கலம் வேண்டாவாம்? என்கிறார் ஒரு புலவர். "பணிவுடையன் இன்சொல்னாதல் ஒருவதற்கு அணியல்ல மற்றுப்பிற (95) என்பது வள்ளுவர் வாக்கு. ‘ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக்கிடந்தாராம் சத்தி முத்தப்புலவர் மாறன் கூடலில். "உடைகோவணமுண்டு உறங்கப் புறந்திண்ணையுண்டு என்கிறார் பட்டினத்தார். பாஞ்சாலிக்கு மலைபோல் ஆடைகுவியச் செய்தான் கண்ணன் என்கிறது பாரதம்.
குளிர் உடைவேறு. சூட்டு உடைவேறு. பருத்திஉடை வெப்பநாடுகளுக்கு நலம் என்கிறார்கள். வஸ்திரம், பீதாம்பரம் , அங்கி என்பர் வடமொழியார். துணி, அறுவை, கலிங்கம், ஆடை, தூசு, துகில் என்போம் நாம், காற்றுக்கு ஆடுவதால் ஆடையானது போலும்? உடுப்பதால் உடையானதாகலாம்? புதிய ஆடைதைக்கும் பொறிகள் பலவகைவந்துள்ளன. தையற் கலை வளர்ந்துள்ளது. திருமணக்காலத்தில் ஆடை அணிகட்கு இலட்சக்கணக்கில் செலவிடுவோருமுள்ளனர். ஆடையாலும் அணியாலும் அலங்கரித்து நீடவைக்கு வந்த பெருமூடன் எள்ளளவும் பேசாதிருத்தலே மேன்மையானதாம், (அதாவது ஆடை மனிதனின் அளவுகருவியல்ல) என்கிறதோர் பழம்பாடல். ஆவியன்ன தோயாப் பூந்துகிலும் பழந்தமிழகத்தில் இருந்தாகக்
10

காணக்கிடக்கின்றது. காந்தியார் ஆடைபற்றி அலட்டிக் கொள்ளாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எவ்வளவு உடையணிந்தாலும் சுதந்திர ஆடையில்லா மனிதன் மானமிழந் தவனே. உரிமைஆடையே மனிதனின் பாதுகாப்புக்கவசமாகும். வன்செயற்காலங்களில் உடைகளைப்பெட்டிகளுடன் இழந்தோர் பலர். வீட்டேரடு உடைகளும் எரிக்கப்பட்டு அகதிகளாக்கப் பட்டோர் பல்ர். உடல் தூய்மையாயிருப்பது போல் உடையும் தூய்மையாயிராவிடில் பலவித தோல் நோய்கட்காளாவோம். ஒருவிதவெயர்வைநாற்றம் வீசும், ஆடைகழுவுவோர் சலவைத் தொழிலாளராவர். அது தொழிற்பெயரேயொழியச் சாதிப் பெயர் அன்று. உடையே, எளிமையாகுக! நன்றி!
l

Page 11
காற்றும், நீரும், உணவும், உடையும் இருந்தாலும் மக்கள் பாதுகாப்பாகப் படுத்துறங்கி எழுவதற்கு வீடும் தேவை யான ஒன்றாகவே உள்ளது. வீடுகட்டப் பொருள் வேண்டும். பொருள் பெறத்தொழில் வேண்டும். ஆதிமனிதரின் இயற்கை வீடுகள் மலைக்குகைகளும், மாப்பொந்துகளுமே. விலங்குகள் பறவைகளிற்சிலவும் வீடமைத்தே வாழ்கின்றன. எலிக்கு வளையும், பாம்புக்குப் புற்றும், அழுங்கிற்குப் பாழியும், நரிக்குக்கிடங்கும், முயலுக்குப் பற்றையும், குருவிக்குக்கூடும், கிளிக்குப்பொந்தும் வீடுகளாகப் பயன்படுகின்றன. கம்பு, தடி, இலை, குழைகளால் வீடமைத்த மனிதன் நாளடைவில் களிமண் செங்கல், சுண்ணத்தால் அமைக்கத்தொடங்கி தற்போது சீமெந்து, இரும்புச்சலாகை, தகரம், ஓடு என்பவற்றால் மாடி வீடுகள் வரை அமைத்து அமைதியாய்ப் படுத்துறங்கி எழுகின்றான். பணி, வெயில், மழை, இடி, மின்னல் என்ப வற்றால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுகின்றான். இடத்துக் கிடம் நகர்த்தும் - உடனமைக்கும் வீடுகள் கூடச்சந்தைக்கு வந்துவிட்டன.
சிலர் பல இடங்களில் காணிகள் பெற்றுப் பலமாடி வீடுகளை அழகுற அமைத்து நவீன நாகரிகப்பொருட்களால் அவற்றை நிரப்பிப் (மின்விசிறி - விளக்கு - குளிர்சாதனம்) பணக்காரர்க்கு வாடகைக்கும் விடுகிறார்கள். அதேநேரம் பலர்
12

குந்த வீடில்லாமல் புகைவண்டிமேடை, தெருவோரம், சத்திரங் களில் கையே தலையணையாய், வானமே கூரையாய், தரையே பாயாய்ப் படுத்துறங்கி எழுகிறார்கள். ஈழத்தரசு பத்துலட்சம் பதினைந்து லட்சம் வீட்டுத்திட்டங்களை உருவாக்கி வீடில்லாச் சிக்கலைத் தீர்த்து வைக்க முயற்சியெடுப்பது பாராட்டப்பட வேண்டியதே.
அறவழிப்பொருளீட்டலும், அப்பொருளால் இன்பம் துய்த்தலும், அவ்வின் பத்தால் வீடடைதலுமே ஒரு காலத் தமிழர் கோட்பாடுகளாய் இருந்தன. வள்ளுவப்பெரியார் நாலாம்பேறாகிய ஆரியக்கற்பனை வீட்டை விடுத்து மற்றைய மூன்றையும் பற்றியதாகவே தமது நூலை ஆக்கியுள்ளார். "தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு? (1103) என்னும் வினாவையும் வினவியுள் ளார். வடமொழியார் வீட்டைக் கிருகம் என்பர். நாம் அகம், மனை, இல்லம், குடம்பை, குடில், குச்சில், குடிசை என்றெல் லாம் கூறுகிறோம். பெருஞ்செலவில் பெரும் பாடுபட்டுக்கட்டிய இல்லங்கள் பலவும் வன்செயல்களால் இல்லாமற் போகலா மென்றுதான் அந்நேரமே இல் என்றொரு பெயரை வீட்டிற் கிட்டனர் போலும்? வீடடைதல் என்றால் உயிர் இப்பிறப்புக் களிலிருந்து விடுதலை பெறுதல் என்னும் பொருளையும் கொண் டுள்ளது. பல தடவைகளில் இறவாமல் இறந்து பிறந்து கொண்டிருக்கிறோம். விடுதலையைத்தான் வேண்டி நிற்கின் றோம். கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாயினும் நம்பிக் கையை விட்டோமில்லை. இல், மனை என்னும் சொற்களை மனைவியைக்குறிக்கவும் பயன்படுத்துகிறார் வள்ளுவர். வீட்டிற் குரியவள் (அரசி). அவள் தான்போலும்? 'இடம்பட வீடெடேல்" என்பது பாட்டியின் வாக்கு. "வீடு நமக்குத் திருவாலங்காடு" என்கிறார் பட்டினத்தார். நாடு இருந்தால்தான் வீடு இருக்கும். எனவே வீட்டிற்கு முன் நாட்டை நாடவேண்டியுள்ளது. காட் டையே வீடாகக் கொண்டு வாழ்வோர் இன்றுமுள்ளனர். வீடமைப்பு முறைகளும் நாட்டுக்கு நாடுவேறுபடும். "மறுவில்லா உலகு என் மனைவி ஆளும் வீடே என்கின்றார் பாவேந்தர். வீடே, நீ அழியாதிருக்க வரம் பெறமாட்டாயா? நன்றி!
13

Page 12
கல்வி
மூச்சை இழுத்தாலும், நீரைக்குடித்தாலும், உணவை உண்டாலும், உடையை உடுத்தாலும், வீட்டில் துயின்றாலும் மக்கள் சீராக வாழக் கல்வி அவசியமாகின்றது. அதாவது அறிவுதேவை - சிந்தனை முக்கியம். சிந்திக்கத்தூண்டுவது தான் கல்வி கல்லுவதே கல்வியாகும். அதாவது கிண்டுவது -கிளறுவது அலசுவது, ஆராய்வது என்பதே பொருள். * கல்விகரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கிற்பிணிபல" என்கின்றது நாலடியார். வீரம் இருந்தாலும், பொருள் தேடினாலும் கல்விச் செல்வமே மேலான செல்வம் என்கிறார் வள்ளுவர். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை . (400) அது மட்டுமல்ல, ஒருமுறை கற்றால் எழுமுறைக்கும் உதவும் கல்வி என்கிறார். 'ஒருமைக் கண்தான் கற்றகல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ (398) கற்றவர் முகத்துள்ளதே கண் கல்லாதார் முகத்துள்ளவை புண் என்கிறார். "கண்ணு டையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் (393) எல்லாம் தன் ஊராய் எதுவும் தன்நாடாய் இருக்கச் சாம்வரை ஒருவன் கல்லாதிருப்பதேன்? என்றும் கேட்கிறார். ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு?" (397) கற்கவேண்டியதைக் குற்றமறக்கக்கற்று அதன்படி நிற்கச்சொல்கிறார். "கற்க கசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்குத்தக. (391) தோண் டத் தோண்டக்கிணறு ஊறும். கற்கக் கற்க அறிவு ஊறும் என்கிறார். “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
14

கற்றனைத்தூறும் அறிவு (396) மக்களும் விலங்கும் போலவே படித்தவரும் படியாதவரும் என்கிறார். ‘விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்.” (410) கல்லா தவனின் அழகு புனையப்பட்ட மண்ணின் பாவை என்கின்றார். "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் மண்மாண் புனைபாவையற்று.” (407) கல்லாவிடினும் கேட்கவேண்டும் அதுவுமில்லார் இருந்தென்ன இறந்தென்ன? என்கிறார். "செவியிற்சுவையுணரா வாயுணவின்மாக்கள் அவியினும் வாழினும் என்?' (420) எதை எவரிடம் கேட்டாலும் அதை (ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக, எவ்விதம்) ஆராய்ந்து மெய்ப்பொருள் கொள்ளுவதே அறிவு என்கின்றார். "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (423).
கல்வி வெள்ளத்தால் அழியாது. வெந்தழலால் வேகாது. வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது. கொடுத்தாலும் நிறை வன்றிக்குறைவுறாது. கள்ளருக்கு மிக அரிது. காவலோ மிக எளிது "மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்" என்பது ஒளவை யார் வாக்கு. ‘பிச்சைபுகினும் கற்கை நன்றே" என்பது வெற்றி வேக்கை. எனவே சிற்றுயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்கில்லை. பெண்ணுக்கும் கல்வி முக்கியம் என்பது பாரதி யாரின் கருத்து. ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைக்காண்’ என்கின்றார். "கல்வியில்லா பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில் புல் முளைத்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை" என்கின்றார் பாவேந்தர். ஆகவே இள மையிற் கல்வி சிலையில் எழுத்தாதலால் காலை எழுந்தவுடன் படிக்கும் மாணவர், ஆசிரியரான பின்பும் - முதியோரான பின் பும் - வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும் ஆராய வேண்டும் - சிந்திக்க வேண்டும் - தெளிவுபெற வேண்டும் அவ்வாறே வாழ்க்கையில் நடக்கவேண்டும். நடக்கவியலாத கல்வி வெறும் ஏட்டுச்சுரைக்காயே. மண்டையை போட்டு டைத்து வினாவுக்கு விடைதந்து வெற்றிபெற்றுப் பட்டம் பெற்றுப்பதவி பெற்றுப் பணம் பெறும் வாழ்க்கை பெற உதவாத
15

Page 13
கல்வி தேவையல்லை. வீண்பணச்செலவும் நேரச்செல்வுந் தான். பாரதியார் சொன்னது போல் ‘நலமோர் எட்டுணை யுங்காண்கிலேன் இதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லு வேன்' என்ற மாதிரியே இருக்கும் இளமையில் வீண்பொழுது போக்குவோர் பிற்காலம், 'துள்ளித்திரிகின்ற காலத்திலே என் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே" என்று வருந்த வேண்டியும் வரும். தரப்படுதல் தீங்கற்ற தாய் மொழிக்கல்வி, உரிமைக்கல்வி, சுதந்திரக்கல்வி, விடுதலைக் கல்வியே உண்மையானகல்வியாகும். கல்விக்குத் தடையிடுதல், விரும்பாததைத்திணித்தல் தீமைபயக்கும். கல்வியாற் கலை வாழ்வு பெறுவோம் இன்புற்றுவாழ்வோம்! அறிவே தெய்வம்!
16

வாழ்வு
காற்றிருந்தும், நீரிருந்தும், உணவிருந்தும், உடையி ருந்தும், வீடிருந்தும், பொருளிருந்தும், வாழ்வில்லாமல் அதா வது அமைதியில்லாமல் (நிம்மதி) மக்கள் அவதிப்படுவதைக் காண்கிறோம். உலகிலே எங்குபார்த்தாலும் பொய், புரட்டு, ஏமாற்று, வஞ்சகம் - சூது, சூழ்ச்சி - களவு, கற்பழிப்பு - எரிவு பொறாமை - அநீதி, அடக்குமுறை - போர், கொலை - பாதகம் பறிப்பு - அறியாமை, மூடநம்பிக்கை என்பனவே காணக்கிடக் கின்றன. அறிவு, கிந்தனை - நீதி, உண்மை - அமைதி, நிம்மதி. சாந்தி, சமாதானம் - உரிமை, விடுதலை என்பன மிகவும் அரிதாகவே உள்ளன இல்லை என்றும் சொல்லி விடலாம். ஏனென்றால் பள்ளியுண்டு, பதவியுண்டு - சமயமுண்டு. கோயி லுண்டு! சிந்தனைக்கல்வியுமில்லை - திருந்திய போக்குமில்லை. வாழ்விலே வளமுமில்லை - மனதிலே மகிழ்வுமில்லை. மானி டப்பிறவி ஒருமுறையே. வயது நூறு எனக்கொண்டால் ஐம்பது துயிலிலே போய்விடும். இளமைக்குப் பத்தையும், முதுமைக்கும் பத்தையும், நோய் நொடிக்குப் பத்தையும் கழித்துவிட்டால் வாழும் காலம் இருபது வயது கூட இருக்காது.
3. தனக்கும் பிறர்க்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ்வதுவே சுதந்திர வாழ்வு. ஒருவரின் உரிமையில் ஒருவர் கைவைக்காமல் கட்டுக்களிலிருந்து விடுபட்டு கடமையுடன் கண்ணியமாய் ஒழுங்குபட வாழ்வதுவே நல்வாழ்வு. மக்களில் இடபேதம், மொழிபேதம், பால்பேதம், வயதுபேதம், இனபேதம், மத பேதம், சாதிபேதம், கட்சிபேதம், கருத்துப்பேதம், சிறுபான் மை = பெரும்பான்மைபேதம் காட்டுதலோ - பார்த்தலோ -
17

Page 14
ஒதுக்குதலோ கூடாது, இவ்வேறுபாடுகள் இருந்தாலும் எல்லோ ரும் மக்களே. எல்லோரும் பிறப்பால் ஒன்றே. *பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972) இறப்பும் யாவர்க்குமுள்ளதே. எல் லோரும் வாழவே வேண்டும் ஒருவருடையதை ஒருவர் சுரண் டல் (பறித்தல்) ஆகாது. ஒருவரை ஒருவர் அடக்கல் (பழித்தல்) ஆகாது. சமகண்ணோட்டம் வேண்டும். எனது பெரிது உனது சிறிது என்ற எண்ணமே கூடாது. நான்முந்தி - நீ பிந்தி, நான் மேல் - நீ கீழ், நான் முதலாளி - நீ தொழிலாளி, நான் ஆண் டான் - நீ அடிமை என்ற சிந்தனையே கூடாது. ‘வாழு-வாழ விடு" என்பதாயிருப்பதே நல்லது. தன்னைப்போல் பிறரையும் நேசித்துவந்தால் சிக்கல் எழாது.
இத்தகைய நல்ல சிந்தனைகளை ஊட்டாத கல்வியால் வாழ்வு சீராகாது. சிந்தனைகள் நல்ல செயற்பாடுகளாய் மலரா விட்டால் ஒரு பயனுமில்லை. ‘ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியுமல்ல பல. (337) ஒதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்" என்பதுபோல் ஆயிரத்தைப்படிப்பதிலும் ஒன்றை - நன்றை - இன்றே - இன்னே செய்வதுமேல். உதட்டில்தேனும், உள்ளத்தில் நஞ்சும் உள்ளவரை ஒன்றும் சரிவராது. "கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறுபட்டார் தொடர்பு (819) மனம், வாக்கு, காயம் என்னும் 'திரிகரணசுத்தி இன் றேல் எவ்விதபயனுமில்லை. ' உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுவார் உறவுகலவாமை வேண்டும். (வள்ளலார்) எனவே வீடும் பொருளும், உடையும் உணவும், பட்டமும் பதவியுமே வாழ்வல்ல. பணம் முக்கியம் எனினும் பணமே வாழ்வல்ல. இன்பதுன்பம் இரவுபகல் போல் இயற்கையானது. இடுக்கண் வருங்கால் (இழப்புக்கள்) நகுக . (621) முயற்சியே திருவினை ஆக்கும். (616) மனந்தான் வாழ்வு. "மனமே மனிதன்" என்பது கவியோகியின் வாக்கு. எனவே முதலில் தூயமனம் வேண்டும். "மனத்துக்கண் மாசிலனாதல்" (34) அதில் அழுக்கேறினால் "மனம் வெளுக்க வழியில்லை" என்று பாரதியாரே சொன்னால் நாமென்ன செய்யலாம்? மனநோய்க்காரரே உடல் நோய்க் காரரிலும் அதிகம் உள்ளனர். இதற்காகவே தெய்வம்-கோயில்
18

சமயம் - வழிபாடு எல்லாம் உள்ளன. இவற்றால் - நற்சிந்தனை களால் மாசை நீக்கவேண்டும். இத்தகு சிந்தனைகளை எழுப்பு வதாகக் கல்வி அமையவேண்டும்.
"அச்சமகன்றது வாழ்வு - நல்அன்பில் விளைந்தது வாழ்வு' என்றார் பாவேந்தர் . நம் வாழ்வு இவ்வாறுள்ளதா? "அச்ச முடையதே வாழ்வு - நல் அன்பைக் களைந்ததே வாழ்வு" என்றல்லவாபோகிறது? வையத்துள் வாழ் வாங்கு வாழும் வழி முறைகளைக்காட்டும் தமிழ் மறையான திருக்குறளை நன்கு கற்று அந்த நெறிமுறைகளில் வாழவேண்டும். மனத்துக் கண் மாசிலனாகி வாழ்வது எங்குமே கிடையாதே? பிறகேதுவாழ்வு? "ஒட்டார் பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று’ (967) இது வள்ளுவரின் மான வாழ்வு. இதற்கு அடுத்த குறள் இன்னும் சிறப்பானது. அதை நூலில் (968) கண்டு கொள்க. இவ்விதம் வாழ எம்மால் முடி யுமா? வேண்டாமா? அப்படியென்றால் மனம் போன போக் கெல்லாம் போய், எப்படியும் வாழ்ந்து மடிய வேண்டியதே. அவசரகால நவீன (சில சம்பிரதாயங்களுடன்) வாழ்விற்போய் இருந்தும் இல்லாமலாக வேண்டியதே. நல்வாழ்வே, நீ வரா விட்டாலும் வாழ்வாயாக! நன்றி!
19.

Page 15
உண்மை
இப்புவியில் எளிதில் வெளிவராத ஒன்று உண்மையாகும். வாழ்வில் இதைக் காணுதல் அருமையிலும் அருமை. பொய் இதனை அடக்கி ஆள்கின்றது. ஆயினும் பூண்டோடு அழிக்க முடியாத நிலையில் உள்ளது. உண்மை உள்ளத்தால் வருவது. * உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். (294) உள்ளம் அறியப் பொய்யின்றி நடந்தால் உலகத்தார் உள்ளமெல்லாம் இருப்பான் என்கிறார் விள்ளுவர். வாய்மை வாயால் வருவது. பிறர்க்குத்தீமைதராத சொற்களைச் சொல்லுதலே வாய்மை யாகும் என்கிறார் வள்ளுவர். ‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதென்றும் தீமையிலாத சொலல். (291) மெய்ம்மை உடம்பால் தவறா தொழுகுவது. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (299) என்று வள்ளுவர் சொல் லியும், புறப்புனிதம் நீரால் ஏற்படும் அகப்புனிதம் வாய்மை யால் வரும். 'புறந்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும்" (298) எனச்சொல்லியும், 'தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்" (293) எனச்சொல்லியும் அதிகமாய் உண்மை சொல் வாருமில்லை. நெஞ்சு சுட்டதாகவும் காணோம்.
நாவன்மையால் பொய்யை மெய்யாக்கி விடுகிறார்கள். அறமன்றில் வழக்குரைஞர்கள் கூட. உண்மை உடையோன் பொய்யனாகி விடுகிறான் பேச்சு வன்மையில்லாமையால்.
20

* பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே - மெய்யுடையொருவன் சொலமாட்டாமை யால் பொய்போலும்மே பொய்ப்ோலும்மே." என்கிறது அதி. வீரராமபாண்டியரின் நறுந்தொகை, “உள்ளம் என்பது ஆமை. அதில் உண்மை என்பது ஊமை, சொல்லில் வருவது பாதி தூங்கிக்கிடப்பது மீதி." என்று பாடவில்லையா கவியரசர்? எனவே இன்றைய உலகில் உண்மையைக் காண்பது Ꮽ8 -- ᎧᏓᏪ ᏯᏏ அதிசயங்களில் எட்டாவது போலவே தெரிகின்றது. உண்மை பலருக்குப் பலசங்கடங்களை ஏற்படுத்திவிடுவதால் அதை வேம்பாக நினைப்போரும் உள்ளனர். அரிச்சந்திரன் நாட கத்தைப்பார்த்தால் எல்லோருமா திருந்தினர். ஒரேயொரு மோகனதாஸ் தானே காந்தியானார். உண்மை எளிதில் காணக் கிடைக்காத ஒன்றாதலால் தானோ பாரதியார். "உண்மை யின்பேர் தெய்வம் என்போம்" என்றார். பொய்யை மெய் யென்று வாழ்ந்து பழகிய மக்கள் திடீரென்று ஒரு உண்மையை நம்புவதுமில்லை. உலகம் தட்டை என நம்பிய மக்களுக்கு உலகம் உருண்டை என்ற (கொப்பேணிக்கஸ் கலிலியோவின்) கூற்றில் நம்பிக்கை வரவில்லை. எனவே உண்மை வெளியாகப் பல காலம் பிடிக்கலாம்? டார்வினின் பரிணாமக் கோட்பாடு இன்றும் உண்மையின் பக்கம் வரவில்லை. மானிடத்தன்மைக்கு வேறாய் ஒரு வல்லமை கேட்டிருந்தாலதைக் கூறாய்?" எனப் பாவேந்தர் வினாவிப்பார்த்தார். இவன் யார் பித்தன் என்பது போல் உள்ளனர் மக்கள்.
கொலை செய்கிறான், பொய்யுரைக்கிறான், தப்பியும் விடுகிறான், கொள்ளையடிக்கிறான், இல்லையென்கிறான், விடுபடவும் செய்கிறான், அப்பாவி பிடிபடுகிறான், முழுப் பூசணிக்காயையே சோற்றுள் மறைப்போருமுள்ளனர். கொய பல்ஸ் ஒரு டொய்யை பத்துமுறை அழுத்தி மெய்யாக்குவதில் வல்லவனாய் இருக்கவில்லையா? பொய்க்கற்பனைகளால் உரு வாக்கப்பட்ட பல புளுகு நூல்கள் இன்றும் மெய்யாக விளங்க வில்லையா? இதனால் தானோ அவ்வையார், "மெய்யென்னில்
Q

Page 16
மெய்யாய் விளங்குமே மேதினியில் பொய்யென்னில் பொய் யாகிப்போம்." என்றுரைத்துள்ளார். பொய்யை அடியோடு வள்ளுவர் வெறுக்க வில்லை. நன்மை தருமானால் பொய்யும் மெய் போன்றதே! என்றுரைத்துள்ளார். “பொய்மையும் வாய் மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின், (292) அதற் காக எதற்கும், எப்போதும், எவரிடத்தும் பொய்யையே சொல்லி வாழலாமா? " பொய்யதைச் சொல்வாராகில் போச னம் அற்பமாகும் நொய்யவர் இவர்கள் என்றுநோக்கிடார் அறிவுள்ளோரே!” என்பதால் அதனை நீக்கி, "மெய்யதைச் சொல்வாராகில் விளங்கிடும் மேலாம் நன்மை வையகம் அவ ரைக்கொள்ளும் மனிதரில் தேவராவார்! என்பதால் மெய் சொல்லிவாழத் தெண்டிப்போமா? பெரும்பதவியாரே பொய் யரானால் சிறியோர் யாது செய்யலாம்? உண்மையே என்றும் நீ வெளிவரவே செய்வாய் என்னும் நம்பிக்கை இன்னும் எமக் கிருப்பதால் இருக்கிறோம்? வருவாயா? நன்றி!
22

நெறி
ஐபறிவு விலங்குகிற்கு நெறி வேண்டா திருக்கலாம். ஆற றிவு விலங்கான மனிதர்க்கோர் நெறி வேண்டும். அது நன்னெறி யாய் - நல்வழியாய் இருப்பதவசியம். இல்லையேல் மனித வாழ்வு ஒரு ஒழுங்கற்றதாகிவிடும். நெறிகள் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம் வேறு படுகின்றன. எல்லோரும் தம் நெறியே மெய்ந்நெறி என்கின்றார்கள். ஒரு நெறி மறுநெறியைப் பழிப்ப தாகவும், அழிப்பதாகவும் உள்ளது வருந்தத் தக்கது. உலகப் பொதுநெறி ஒன்று வேண்டும். சான்றாக, "எச்சமயத்தோர் சொல்லும் தீது ஒழிய நன்மைசெயல் இது அவ்வையாரின் உலகப் பொது நெறி 'யாதும் ஊரே யாவரும் கேளிர் - தீதும் நன்றும் பிறர்தரவா ரா? இது பூங்குன்றனாரின் உலகப்பொது நெறி "ஒன்றே குலமும், ஒருவனேதேவனும் இது திருமூலரின் உலகப்பொதுநெறி. "எவ்வதுறைவதுலகம் உலகத்தோடு அவ்வ துறைவதறிவு (426) இது வள்ளுவரின் உலகப்பொதுநெறி "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பது பழங்காப்பியம். உயர்ந்தோர் அதாவது பெரியோர் யார்? "செயற்கரிய செய் வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார் . (26) என் கிறார் வள்ளுவர். இத்தகைய 'பண்புடையார்ப்பட்டுண்டு உலகம் அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்" (996) என்பது வள்ளுவர். கருத்து. அறிவல்ல, பண்பே முக்கியம் என்பதும் அவர் கருத்தே. "அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்" (997) உறுப்பொத்தல் மக்கள் ஒப் பல்ல என்பதும் அவர்கருத்தே. ‘உறுப்பொத்தல் மக்கள் ஒப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு’ (993),
23

Page 17
நாம் தமிழ் இனத்தார் எனப்பார்த்தாலும் தமிழர்க்கு ஒரு குணமுண்டு என்கிறார் காந்திக் கவிஞர் நாமக்கல்லார் . "தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவற்கொரு குண முண்டு’ என்ன அந்தக்குணம்? 'அமுதம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்" என்கிறார். அமுதத்தில் வேண்டு மென்றே நஞ்சுகலக்கிறார்கள். அன்பை விட்டு அவனை அவனே காட்டிக்கொடுக்கிறான் ‘மானம் பெரிதென உயிர் விடுவான். (விடுகிறாரா சிலர் தவிர) மற்றவர்க்காகத்துயர்ப்படுவான். (துயர்ப்படுகிறார்களா? சிறைப்படுத்துகிறார்களா?) தானம் வாங்கிடக் கூசிடுவான். தருவது மேலெனப் பேசிடுவான்? (அகதி யாகி இருந்துண்ணும் நிலைமையல்லவா? கொடை தான் பாரி யோடுபோயிற்றே) என்றெல்லாம் பாடினார். ஏற்பது இகழ்ச்சி யென்றால் ஐயமிட்டுண்பவர் யார்?
பெளத்தம் அன்பென்கிறது. கத்தோலிக்கமும் அன்பு (பொறுமை) என்கின்றது. இஸ்லாமும் அன்பு (சகோதரத்துவம்) என்கின்றது. காந்தீயம் அன்பு (அகிம்சை) என்கின்றது. "அன்பே சிவம்’ என்பது நமது சைவ நன்னெறி, மொத்தத்தில் எல்லாம். அன்பே. எல்லா மதமும் ஒன்றாகி அன்பாகவில்லையே? அதிலும் ஒன்றை ஒன்று சாப்பிடுவ்தேன்? இலங்கையில் அன்பு எவ்வாறு ஆட்சி செய்கின்றது? ஒரு நெறியும் மனிதரை உருப்படவைக்க வில்லையென்றால் ஒரு உலகப்பொது நெறிபோதும். அது எல் லோர்க்கும், எப்போதும், எந்நாட்டுக்கும் பொருந்துவதாயிருக்க வேண்டும். தமிழ்மறையான - பொது மறையான திருக்குறள், நெறியே உலகப்பொது நெறியாகும் தகுதிகொண்ட தாய்த் தெரிகின்றது. எனவே அது சட்டமாக்கப்பட்டு - பாடமாக்கப் பட்டு (ஒரு சில காலத்திற்கொவ்வாதவை மாற்றப்பட்டு) வாழ்விற் பின் பற்றப்பட வேண்டும். குறள்நெறி தாளில் கோலால் கட்டுரை (கவிதை) தீட்டவும், மேடையில் (விழாவில்)
24

இசை முழக்கவும் மட்டுமல்ல, வாழவும் பயன்பட வேண்டும். பயன்படுமா? உலகம் திருந்தி முன்னேறுமா? நடக்கக் கூடியதா? நடைமுறைப்படுத்த முடியாவிடில் நோன்பிருக்கும் வரை புலாலை மறுக்கவேண்டியது. மறுநாள் கொலைக்கு உடந்தை யாகிப் புலாலை உண்ணவேண்டியதே. இதை விட நோன்பின் றியே உண்ணலாமே? நீற்றைப்பூசி மச்சமுண்பதைவிடப்பூசா துண்பதே சிறந்தது. நன்நோக்க முள்ள உள்ளங்கொள்வதே கொள்கை. அக்கோட்பாட்டை வாழ்வில் நெறிப்படுத்தல் நெறி மக்கட்குரியதாய்ச் சமைத்ததே சமயம். மதமும், மார்க்கமும் வேண்டாம். நெறியும், வழியுமேதேவை, பேசவல்ல - வாழ! போர்வ்ை வேண்டாம். உண்மை நெறியே வருக! வாழ்க! நன்றி!
S

Page 18
உலகம்
உலகம் என்று இப்புவியை - புவி மக்களைத்தான் குறிப்பிடுகின்றோம். உலகம் என்று உலகின் ஒரு பகுதியையும் குறிப்பிடுவதுண்டு. "வருணன்மேய பெருமணலுலகம்." என்பது பழங்காப்பியவரி. "நெருநல் உளனொருவன் இன்றில்லை” (336) என்னும் பெருமைகொண்ட இவ்வுலகம் பலவிதம். பலநாடுபல இனம் - பலமொழி - பலமதம் - பலகலை - உணவு - உடை பழக்கவழக்கம் - நம்பிக்கை - சம்பிரதாயம் - நிறம் - தோற்றம் கொண்டது. ஒவ்வொருவர் ஒவ்வொருவிதம் மக்கள் அதிகமாய் இன, மொழி, மத, நாட்டு அடிப்படையிலேயே வாழ்கிறார்கள் சிலர்க்கு ஆடை அணிகளே உலகம் . சிலர்க்குச் சாப்பாடே உலகம் - சிலர்க்குப் பெண்ணே உலகம் - சிலர்க்கு மதுவே உலகம் சிலர்க்கு இசையே உலகம் சிலர்க்கு கலையே (நாட்டியம்) உலகம் சிலர்க்குக்கற்பனையே (கவிதை, கதை, கட்டுரை) உலகம் - சிலர்க்கு பணமே உலகம் . சிலர் க்குத்துறவே உலகம் சிலர்க்குத் (மக்கள்) தொண்டே உலகம் - சிலர் க்கு நூலே (கல்வி) உலகம் - சிலர்க்குத்தூக்கமே உலகம் - சிலர்க்கு உலாவே (பயணம்) உலகம் சிலர்க்கு ஆய்வே (அறிவியல்) உலகம். சிலர்க்கு விளையாட்டே (சிறுவர்) உலகம் - இப்படிப்பலவிதம் சிலர் உலகம்- பற்றிக்கவலைப்படாமல் தம் இலட்சியப்பாதையில் எதிர் நீச்சல்(இப்படித்தான்வாழ்வு) போடுவர். சிலர் எவர் எது சொன்னாலும் தலையாட்டி ஆடுகள் போல் (எப்படியும் வாழ்வு) வாழ்வர். சிலர் எதையும் அறிவுக்கண் கொண்டு ஆய்ந்து நம்பிக் கடைப்பிடித்து வாழ்வர். சிலர் கண்மூடி அறியாமையில் (மூடநம்பிக்கை) மூழ்கிக் சொல்வதெல்லாம் நம்பிவாழ்வர்.
26

உலகம், அதாவது உல்கமக்கள் எதற்கும் ஒவ்வொன்று சொல்வது இயல்பு. சொல்வது எளிது. செய்வது கடினம். *சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய்வாம் சொல்லியவண்ணம் செயல்.” (664) மக்கள் (மனித) மனம் பொல்லாதது. இருவித செயற்பாடுடையது. மேல்மனம் சர்தாரணமாய்ப் பழகவில்லது அடிமனம் கனாவில் - சினத்தில் - போதையில் - மய்க்க நிலையில் உணர்வுக் கொந்தளிப்பில் எதிராகவும் செயற்படவல்லது. எனவே தங்கள் மனம் விரும்பியதைப் பாராட்டுவர். வெறுத் ததைத் தூற்றுவார். ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும். ஏசும் வையகம் இது தானடா! வீழ்ந்தாரைக்கண்டால் வர்ய்விட்டுச் சிரிக்கும். வாழ்ந்தாரைக்கண்டால் மனதுக்குள் வெறுக்கும். இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும், இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்." என்னும் திரைப்படபாடல் உலகிற்குப் பொருத்தமானது தான் போலும்? உலகத்தைப்பற்றி ஒரு கதையுமுண்டு. "ஒரு கிழவனும், சிறுவனும் ஒரு கழுதை வாங்கி வரும்போது சிறுவன் கழுதை மேலும் கிழவன் நடந்தும் செல்வதைக்கண்ட அவ்வூரார், "பாவம் கிழவன், கழுதைமேல் இவனா? என்றனர். பின்னர் கிழவன் கழுதைமேலும் சிறுவன் நடந்தும் சென்றதைக்கண்ட அடுத்த ஊரார், பாவம் சிறுவன் கழுதைமேல் கிழடா? என்றார். பின்னர் இருவரும் கழுதை மேல் ஏறிச்சென்றதைக் கண்ட அடுத்த ஊரார், "பாவம் சிறு கழுதை, இந்த இரண்டும் அதன்மேலா? என்றனர். பின்னர் இருவரும் கழுதையைக் காலில் கட்டித் தோளிற் காவிச் சென்றதைக் கண்ட அடுத்த ஊரார், ‘இதென்ன புதுமை? ஆட்களின்மேல் கழுதை சவாரி செய்வதா?’ என்றனர் கடைசியாகக் கழுதையும் இழந்து போனதாகக்கதை. உலகம் இப்படித்தான்.
அதற்காக உலகை அறவே புறக்கணித்தும் வாழமுடியாது. *உலகத்தார் உண்டென்பதில்லென்பான் வையத்து அலகையா வைக்கப்படும், (850) என்றுவள்ளுவர் சொன்னது போலுமாகி விடும். ஆனாலும் சில புதிய சிந்தனைகளைச் (கருத்துக்களை)
27

Page 19
சொன்னவர்களைத் தொடக்கத்தில் உலகம் கணக்கெடுத்த தில்லை. அதற்காக அறிஞர்கள் சொல்லாமல் விட்டதுமில்லை இயேசுவுக்குச் சிலுவையும், நபிக்குச் கல்லெறியும் சோக்கிறட் டீசுக்கு நச்சுக்கோப்பையும், காந்திக்குத் துப்பாக்கிக்குண்டும் பரிசாகக்கிடைத்தாலும் உலகைத்திருத்திய உத்தமர்களாக (ஒளிவிளக்குகளாக) அவர்களும், அவர்களைப்போன்றோருமே விளங்குவதைக்காண்கிறோம் இன்றும் பார்க்கப்போனால் சிலர் க்குப்டணமே உலகமாய்த்தெரிகிறது எவ்வளவு கற்றிருந்தாலும் மதிப்பாரைக்காணோம். இருக்கட்டும் நாம் தெரிந்ததைமுடிந்த வரை செய்வோம் உலகம் புரியாவிட்டாலும் நாம் உலகைப்புரி ந்துகொண்டால் போதும் உலகோ உலகு? மக்களோ மக்கள்? கைமாறுவேண்டா கடப்பாடு (மாரிமாட்டு) என்னாற்றுங் கொல்வோ உலகு?" (211)


Page 20
இவரைப்பற்றி . .
"கவிஞர் தா களில் ஒரு முன்னே யும் சொல் இனி3 ஆண்மையும் வீர
மனித உணர்வி னித்து நிற்கும்! கனின் அச்சானிய
இல் தன் பாவன்ெ அறுபது மல்ல இன்று வை அல்ல சந்திரனா
மகாகவி பாரதி பாரதி தாசனின் இவர் கவிதைகளு அமைத்து நின்றது வெளியான பல் மான "இவர் கவி
நின்றன.
சோ. இராசேந் கொண்ட தT
சுதந்திரன் ஆகிய கவிதைகளைப் ப
இவரின்
 

மரைத்தீவான்" சமகாவக் கவிஞர் ாாடி இவர் கவிதைகளில் புதுமை மயும் கொஞ்சி விளையாடும்! அங்கே மும் அடிநாதமாக ஒலிக்கும்! புகளுக்கு இவர் கவிதைகள் பதிப்ப இவரின் ஆழமான புலமை கவிதை பாக அமர்ந்திருக்கும்! ா முதற்கவிதையை ஆக்கி அளித்த து. எழுபிது, எண்பதுகளில் மட்டு ர கவிதை வானில் நட்சத்திரமாக கவே திகழ்ந்து வருகிறார்.
நியாரின் புதுமைக் கருத்துக்களும், புரட்சிக் கருத்துக்களும் சங்கமிக்கும் தக்கு அன்று சுதந்திரன் இதழ் களம் து. அதனைத் தொடர்ந்து ஈழத்தில் வேறு பத்திரிகைகளில் ஆரோக்கிய பிதைகள் அணிகலன்களாக விளங்கி
திரம் என்னும் சொந்தப் பெயரைக்
மரைத்தீவான், அகதிக்கவிநாயர், புனை பெயர்களிலும் புதுமைக்
டைத்து வருகின்றார்.
ன் கீறல்கள், பிள்ளைமொழி ஆகிய
படைப்புக்கள் போன்று இவரின்
ட்டுரைகளும் வாசகர் நெஞ்சங்களால்
வரவேற்கப்படும் என்பதோடு
"க மா ன வ ர் உலகத்தினரால்
ரவேற்கப்படும் என்பது திண்னம்
فا=
க. தங்கராசா பிரதேச கல்விப் பணிப்பாளர், திருகோணமலை,