கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்

Page 1
புன்னாலை வித்துவான் பிரமயூரீ சி.க
எழுதட
"ஈழகேசரி நா.பொன்னைய பதிப்பிக்க
- 17 N
 

ணேசையர் அவர்களால்
ப்பட்டு
ரி அதிபர் ா அவர்களால் 2. SU LILL-5).

Page 2

6). கணபதி துணை
ஈ ழ நாட் டு த் தமிழ்ப்புலவர் சரிதம்
-ms- - up a war
இது
புன்னலைக்கட்டுவன் வித்துவான் பிரமரீ சி. கணேசையர் அவர்களால்
எழுதப்பட்டு
* ஈழகேசரி ' அதிபர்
நா. பொன்னையா அவர்களால்
பகிப்பிக்கப்பட்டது.
1939 (விலை ருபா 1-50
18

Page 3
திருமகள் அழுத்தகம்
சுன்னுகம்

10. 11.
12
» نیمه
18.
14. 15.
16.
17.
1 S,
19.
20.
பொருளடக்கம்
mജിത്തം
பக்கம் முகவுரை . . . . νίi பிழைதிருத்தம் 0. A xiii ஈழத்துப் பூதங்தேவனர் w 2
ஆரியச் சக்கிரவர்த்திகள்
பாராசசேகரன் 8 - 8 w 7
செகராசசேகரன் øy 8 9
அரசகேசரி s 8 se e po 1
அரசரல்லாத புலவர்கள் பண்டிதராசர் ... a 17 கவிராஜர் .P. s. 18 வாதபண்டிதர் e B ep 19 சிற்றம்பலப்புலவர் . P - 21. சின்னத்தம்பிப்புலவர் a 22 மயில்வாகனப்புலவர் es e a 25 இணுவைச் சின்னத்தம்பிப்புலவர் 27 நெல்லைநாத முதலியார் 29 சேனகிராய முதலியார் P 31 சந்திரசேகர பண்டிதர் . . . . . 35 சுவாமிநாதர் r g q r ፰ 7 சாவணமுத்துப்புலவர் V & 3S எசாம்பரப்புலவர் 8 d 4 , v r • 40 காதக்கேயஐயர் P. P. e. a 4 O சம்பந்தப்புலவர் ... 40
கார்த்திகேயப்புலவர் . 4 4.

Page 4
31.
32
33. 34.
35,
36.
3.
38.
39. 40. 41.
42.
43.
44.
45.
46.
47
48.
49.
முத்துக்குமார கவிராயர் 8
பக்கம்
44
சிதம்பரப்பிள்ளை (உவில்லியம் நெவின்ஸ்) 46
அம்பலவாண பண்டிதர் பீதாம்பாப்புலவர் w ஆறுமுககாவலர் நாகநாதபண்டி தர்
சங்கரப ண்டிதர் கனகசபைப்புலவர் குமாரசுவாமி முதலியார் தாமோதரம்பிள்ளை v4 பொன்னம்பலப்பிள்ளை முருகேசபண்டிதர் வல்வை வைத்தியலிங்கம் கணேசபண்டிதர் திருஞானசம்பந்த உடாத்தியாயர், கணபதிப்பிள்ளை கதிரைவேற்பிள்ளை வேற்பிள்ளை
சபாபதிநாவலர் v/
திரைவே ற்பிள்ளை அம்பிகைபாகர்
கதிர்காமையர்
நடராசையர்
திருஞானசம்பந்தப்பிள்ளை
சிவசம்புப்புலவர்
வேன்ம யில்வாகனப்புலவர் நமச்சிவாயப்புலவர் கந்தப்பிள்ளை
ஏாம்பையர் p
48
49
51
58 59
61
(56
68 11 76
S0
83
S3
84
87
90
95 101 102
1 ()3
104
105
1 O(6
11
113
1 6
118

51. 52.
53. 54. მ55.
56.,
57.
58.
59.
60.
6 L. (32.
63.
64
65.
66,
67.
77.
சிவப்பிரகாச பண்டிதர், ! சரவணமுத்துப்பிள்ளை சிற். கைலாசபிள்ளை வித்துவான் சிவானந்தையர் குமாரசுவாமிப்புலவர் சபாரத்தின முதலியார் கி. த. கனகசுந்தரம்பிள்ளை காசிவாசி செந்திநாதையர் வ. குமாரசுவாமிப்புலவர் அம்பலவாண காவலர் பேரம்பலப்புலவர் முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் சுவாமிநாத பண்டிதர் . செவ்வந்திநாததேசிகர்
த. கைலாசபிள்ளை
அனுபந்தம் ஞானப்பிரகாசர் کسہ ...
விசுவநாதசாஸ்திரியார் கந்தப்பிள்ளை அப்புக்குட்டிஐயர் அருணுசலப்பிள்ளை இராமசாமிஐயர் இராமலிங்கையர் இராமலிங்கப்பிள்ளை க. ஏகாம்பரம்
நா. எகாம்பரம்
கணபதிஐயர்
சின்னத்தம்பி
சந்திரசேகர பண்டிதர்
பக்கம் 123.
23
27
136
157
1.59 64
176
17 S
1 Si 188 194 197
20 ()
205
206 208
210
211
211
211
212 212
213
214
215 216

Page 5
78.
79.
80.
81. 82.
83.
S4.
85.
S6.
Sና7.
88.
S9.
90.
91.
92.
93. 94.
95,
96.
97.
98.
99. 100. 101.
vi
சின்னக்குட்டிப்புலவர் . சண்முகச்சட்டம்பியார் தொம்பிலிப்பு நமச்சிவாயப்புலவர் நாகேசஐயர் பிரான்சிஸ்பிள்ளை பூலோகசிங்க முதலியார் மாப்பாண முதலியார் . முத்துக்குமாார் முருகேசையர் வெற்றிவேலர் வைத்தியநாதச் செட்டியார் வைத்தியநாத தம்பிரான் சுப்பையர் o சதாசிவம்பிள்ளை பூபாலபிள்ளை ஆறுமுகத்தம்பிரான் அருணசலஐயர் தாமோதரம்பிள்ளை பொன்னுத்துரைஐயர் சதாசிவ பண்டிதர்
சோமாஸ்கந்த பண்டிதர்
நாகமணிப்புலவர் a மயில்வாகனப்புலவர் .
பக்கம்
21
2S
218 219 220
221
222
223
223 224 224
225 226
226
227
22"l
22S
229
229
230 230
23
232
233

ගී
முகவுரை
sowo-4ar) kiwv
இந்நூலின் ப்ெயர் ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் என்பதாகும். ஈழநாடு எனினும் இலங்கைத்தீவு எனினுமொக்கும். இதன் பெருமையைப்பற்றி நூலின் தொடக்கத்திலேயே கூறியுள்ளாம்.
தமிழ் என்பது, வடக்கின்கண் வேங்கடமும் தெற்கின்கண் குமரியும் எல்லையாகவுடைய நிலத்து வழங் கும் மொழியாகும். தமிழ்மொழியே எங்கிலத்து மொழி யினும் முற்பிறந்த மொழியென்றும், தமிழ்மொழியைப் பேசுமக்களே எங்கிலத்து மக்களினும் முற்ருே?ன்றின சென்றும், தமிழ்மக்களே முற்முேன்றினரென்று கோடற் குக் காரணம் அவர் தோன்றுதற்குக் காரணமாகிய நிலம் உஷ்ணபாகத்துட்பட்டதும் உயர்ந்த மலைப்பிரதேசங்களு ளொன்முகிய பொதியமலைப் பிரதேசத்தைத் தன்கட் கொண்டிருத்தலுமே யென்றும், தமிழ்மொழி இனிய தொரு மொழியாய் இருத்தற்குக் காரணம் உஷ்ணமான நிலத்து வாழும் மக்களிடத்துப் பிறந்தமையேயென்றும், தமிழ்மொழி முற்காலத்து எங்கிலத்துஞ் சென்று பரவி வழங்கியதென்றுஞ் சரித்திர ஆராய்ச்சியாளர் சிலர் கூறுவர். தமிழ்மொழி முற்காலத்து எங்குஞ் சென்று பரவி வழங்கியதாயினும் தொல்காப்பியர் காலத்துக்கு எத்துணையோ காலத்திற்கு முன்னேயே மேற்கூறிய எல்லையுட்பட்டு வழங்கியதென்றும், அது தொல்காப்பி யப் பாயிர்த்துள் "வடவேங்கடங் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறுகல் லுலகத்து’ என்று பனம்பாானுர் கூறிய தானும், 8 வடதிசை மருங்கின் வடுகு வரம்பாக” என்று

Page 6
i is a
ΥII
சிறுகாக்கைபாடினியார் கூறியதானும் அறியப்படு மென்றும் ஆராய்ச்சி வல்லுநரும், பெரும் புலவருமாகிய பூரீமாங் மு. இராகவையங்கார் அவர்கள், “ தமிழரும் ஆங்கிாரும்’ என்ற ஆராய்ச்சி விஷயத்துட் கூறியுள் ளார்கள். ஆண்டுக் காண்க. அஃது எங்ஙனமாயினும் தமிழ்மொழி மிகப் பழையதொரு மொழியென்பதிற்
படையேயில்லை.
தமிழ் என்னும் மொழிப்பொருட்குக் காரணம் இன்னதென்பது, * மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்மு’ என்று தொல்காப்பியர் கூறியவாறு, தம்மாற் றுணிந்து கூறமுடியாதாகவும், எவ்வாறேனும் அதற் கொரு காரணங் கூறிவிடவேண்டுமென்றுகருகித் தமிழ்ப் புலவருட் சிலர், கிராவிடம் என்பதன் திரிபென்றும், இனிமையுடையதென்றும், தனித்ததென்றும், ஒப்பற்ற தென்றும், தனித்த ழகரமுடையதென்றும், தம்மொழி என்பதன் றிரிபென்றும் தம் மனம் போன வாறெல்லாங் கற்பித்துக் கூறினர். கூறியுமென் அஃது அவர்கள் கற்பனையுளெல்லா மடங்காது, கற்பனை கடந்த கடவுள் போலவே நின்று விளங்குகின்றது. தமிழ்மொழிக்கு இனிமை என்று பொருள்கூறிய நிகண்டுநூலார், அம் மொழியின் இனிமையை அம்மொழிக்குங் காரணமாக்கிக் கூறினரோ உண்மையிற் காரணமாதல் உணர்ந்து கூறி ணுரோ? என்பது மாராயத்தக்கது.
தமிழ் இயற்கையிலொன்முயினும் செயற்கையான் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்திறப் படும். /இயற்றமிழ் - இலக்கணத்தோடு கூடிய தமிழ். இசைத்தமிழ் - பண்ணேடு கூடிய தமிழ். நாடகத்தமிழ் - கூத்தோடு கூடிய தமிழ். இம் முத்தமிழிலும் வல்லவரே தமிழ்ப் புலவரெனப்படுவார். தமிழ்ப் புலவராவார் முத்தமிழும் முறையே பயின்று ஐந்திணை நெறிகளையுக்

ix
தழுவிக் கவிபாடும் வலியமைந்தவரென நிகண்டுநூலார் கூறுவர். (புலவர் - அறிவுடையோர். புலம் - அறிவு. அர் - பலர்பால் விகுகி.
இச் சரிதத்தின்கண்ணே, இலக்கணங்களில் நன்கு பயின்று கவிபாடுக் திறமுடைய புலவர்களுடைய சரிதம் மாத்திரம் கூறினேமல்லேம், இயற்கையிற் கவிபாடுங் திறனமையாதவராயினும் இலக்கண இலக்கியங்களில் அதி கிறமைவாய்ந்த புலவர்கள் சரிதமுங் கூறியுள்ளாம். அதற்குக் காரணம், கவிபாடுக் திறமுடையார் காலஞ் செல்லச்செல்ல அருகினமையே. நம் ஈழநாட்டுக்கு மட்டு மன்றித் தமிழ்நாடு முழுமைக்கும் பெரும் பயனளித்துப் பெரும்புகழ் படைத்த புலவரும் இவருட் சிலருளர்.
இந்நூலின்கண் வரும் புலவர்களின் சரித் வைப்பு முறை, அவர்களுடைய இறந்தகாலத்தின் முறையே முறையாகப் பெரிதுங்கொண்டு வைக்கப்பட்டுள்ளது. மறந்து விடப்பட்ட புலவர்கள் சிலர் சரிதங்களையும், பலர்க்குங் தெரியாது மறைந்துபோன புலவர்கள் சிலர் சரிதங்களையும், இயற்கையிற் கவிபாடுங் திறமாத்திர மமைந்த புலவர்கள் சிலர் சரிதங்களையும் அநுபந்தமாகச் சேர்த்துக் கூறியுள்ளாம்.
இதன்கண் வரும் புலவர் சரிதங்களுள், இருபாலை ஏகசந்தக்கிராகி எனப் போற்றப்படும் நெல்லைநாதமுதலி யார், சேணுதிராயமுதலியார், நல்லூர், சிற். கைலாய பிள்ளை, ஊரெழு, சு. சரவணமுத்துப்புலவர் முதலிய பலர் சரிதக் குறிப்புக்கள், தென்கோவைப் பண்டிதர் பரீமாங் ச. கந்தையபிள்ளை அவர்களா லெமக்கு உதவப் பட்டன. அவர்களுள் சிற். கைலாசபிள்ளை சரிதமுழுதும் அப் பண்டிதர்களாலேயே எழுதி உதவப்பட்டது. அத லுடன் யாமுஞ் சில சேர்த்து அச்சிட்டுள்ளாம். மட்டுவில் உரையாசிரியர் வேற்பிள்ளை சரிதக்குறிப்பும், வ. குமார்
l

Page 7
坎
சுவாமிப்புலவர் சரிதக்குறிப்பும், நா. கதிரைவேற்பிள்ளை சரிதக்குறிப்பும், பண்டிதர் பூரீமாங் வே. மகாலிங்கசிவம் அவர்களால் எழுதி உதவப்பட்டன. புலோலி, ம. முத்துக்குமாரசுவாமிக்குருக்கள் சரிதக்குறிப்பை, அவர் கள் மருகரும், மாணக்கருமாகிய பிரமறுரீ ச. சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள் எழுகியுதவினர்கள். அம்பல வானகாவலர் சரிதக்குறிப்பை அவர்களது தமையனுர் புதல்வரும், றிTஸ்ருர் உத்தியோகத்தரும், பண்டிதரு மாகிய பூரீமாங் ச. சங்காப்பிள்ளையவர்கள் எழுதி உத வினர்கள். வேன்மயில்வாகனப்புலவர் சரிதக்குறிப்பை அவர் மாணுக்கரும், கந்தவனக்கடவைக் கந்தசுவாமி கோயி லாதீன கர்த்தருமாகிய பூரீமாங் செல்லையாபிள்ளை அவர்கள் எழுதியுதவினர்கள். வல்வை, இயற்றமிழ்ப் போதகாசிரியர் வயித்கியலிங்கம் என்பவர் சரிதக் குறிப்பை அவ்வூரிலுள்ள 5ம் அன்பரொருவர் எழுதி யுதவினர். செந்திநாதையர் சரிதக்குறிப்பை, அவரோ டுடன் வசித்தவரும், அவர்தம்பியாரும், வடமொழி தென்
மொழி ஆங்கிலம் என்னும் மும்மொழிப் பயிற்சியுடைய بر-- வருமாகிய பூரீமாங் சிவசம்புநாதையரவர்கள் எழுதி யுதவி னர்கள். இவர்களுக்கெல்லாம் எமது பெரிய வணக்க முரியதாகுக. ஏனைய புலவர் சரிதங்களுள் பெரும்பா லன அவர்கள் முற்சரிதங்களை நோக்கிச் சுருக்கி எழு தப்பட்டன. சில சரிதம் எமக்குத் தெரிந்தவாறே எழுதப்பட்டன. இச் சரிதங்களெல்லாம் புனைந்துரை யின்றி உண்மையாகவே எழுதப்பட்டனவாகும். எம் காலத்திலிருந்து இறந்த புலவர்களுடைய சரிதங்களுள் எமக்கு உண்மையென்று காணப்படாத சில சரிதங்களை நீக்கியுள்ளாம். அவர்கள் சரிதங்களை யறிந்தவர்களாய் இந் நாட்டிலும் பிறநாட்டிலுமுள்ளவர்கள் எம்பாற் குறை கூருதபடியே அங்ஙனம் செய்தேமன்றிப் பொருமையாற்
செய்தேமல்லேம். இச்சரிதங்களுட் சில எமக்கு இடையே

xi
வந்த தேக அசெளக்கியங் காரணமாக எமது மாணவர் களால் எழுதப்பட்டு எம்மாற் றிருத்தப்பட்டனவாகும்.
இச் சரிதங்களுள் நீண்டகாலத்துக்கு முன்னும் அதன் பிற்காலத்தும் இறந்தவர்களுடைய சரிதங்களே யன்றி, சமீபகாலத்திலே இறந்தவர்களுடைய சரிதங் களைத்தாமும் பெற்றுக்கொள்ளுதல் மிக அருமையா யிருந்தது. அவர்கள் காலத்தைப் பெறுதல் அதனினுமரிதா யிருந்தது. புலவர்களுடைய சரிதங்களை, அவர்கள் சுற்ற மித்கிரர்கள் வாயிலாகவே பெறுதல் அரிதாயிருந்த தெனின், ஏனையோர் வாயிலாகப் பெறுதலைப்பற்றி யாம் இங்கே எடுத்துக்கூறன் மிகையாகும். சில புலவர்களுடைய காலத்தை அவர்களோடு ஒரேகாலத்திருந்த புலவர்க ளுடைய காலங்களைக்கொண்டு ஒருவாறு நிச்சயித் தெழுதி யுள்ளேம் இற்றைக்குச் சில மாசங்களின் முன் இறந்த புலவரொருவருடைய பிறந்த ஆண்டை அறிதற்கு யாம் பெரிது முயற்சித்தும் பெற்றிலேமெனின், அதற்குமுன் இறந்தவர்களுடைய காலங்களைச் சரியாக அறிவதெப் படி என்பதை அறிஞர்கள் சிந்திப்பார்களாக. ஆதலாற் காலவரையறையின் கண்வரும் பிழைகளை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்களென எண்ணுகின்றேம்.
இச் சரிதத்தை யான் ஐந்து வருடங்களுக்கு முன் பேயே எழுதத்தொடங்கினேன். தொடங்கியபோது ஒவ் வொரு சரிதமாக எழுகிப் பத்திரிகை ஒன்றில் வெளிப் படுத்திப் பின் சேர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தலா மென்று கருதி அவ்வாறே எழுதித், தென்கோவை பண் டிதர் ச. கந்தையபிள்ளையை ஆசிரியராகக்கொண்டதும், புதுவை, பூரீமாங் நாகரத்தினம்பிள்ளையால் தமது அச் சியந்திர்சாலையில் அச்சிட்டு வெளிப்படுத்தியதுமாகிய 'வித்தகம்’ என்னும் பத்திரிகையில் ‘ஈழநாடுந் தமிழும் ” என்னுந் தலைப்பெயரோடு வெளிப்படுத்திவந்தேன். சில

Page 8
xii
வாண்டில் அப் பத்திரிகை நிறுத்திவைக்கப்பட்டபடி யாலும் வேறு காரணங்களாலும் அச்சரித மெழுது முயற்சியை யானுமொழிந்தேன். இப்போது ‘ஈழகேசரி’ப் பத்கிராகிபர் பூரீமாங் நா. பொன்னையபிள்ளையவர்கள் வந்து பலமுறை என்னை ஊக்கப்படுத்தியதால் முன்பு ள்முகி வித்தகப் பத்திரிகையில் வெளிப்படுத்திய புலவர் கள் சரிதமொழிய, ஏனைப் புலவர்கள் சரிதங்களையெல்லா மெழுகி அவற்றேடு சேர்த்து மேற்குறித்த பத்திசாதிப ரிடமே அச்சிட்டு வெளிப்படுத்தும்படி கொடுத்துவிட் டேன். இச் சரிதங்களிலுள்ள வாக்கியங்களுள் வருங் தொடர்மொழிகளுட் பெரும்பாலன படிப்போர் எளி துணாற்பொருட்டுச் சங்கிநோக்காது பிரித்தெழுதப்பட் டும், புலவர்களுடைய இயற்பெயர்களுட் சில இலக்கண விதி நோக்காது வழங்கிவந்தபடியே எழுதப்பட்டும் உள் ளன. அவற்றையும் மற்றும் வரும் பிழைகளையுமெல்லாம் பொறுக்குமாறு அறிஞர்களை வேண்டி க்கொள்ளுகின்றேன்.
இச் சரிதங்களைப் படிப்போர் பண்டைக்காலப் புலவர் களது கல்வியறிவின் பெருமையையும், அவர்களியற்றிய கவிகளின் அருமையையும், அக்கவிகளால் அரசரிடத்தும் பிரபுக்களிடத்தும் அவர்கள் பெற்ற மதிப்பையும் பரிசிலை யும் அறிந்து தாமும் கற்றற்கண் ஊக்கமுடையவராகிக் கற்றுப் பெரும் புலவர்களாய் மதிப்பும் பரிசிலும் பெறு வார்கள். ஆதலால் இச் சரிதம் மிக்க பயனுடையதேயாம்.
இச்சரிதத்தை அச்சிடுவதற்கேற்றவாறு நன்கிதாக எழுதியுதவியும், அச்சிடும்போது பிழையற கோக்கித் கிருத்தியும் உதவிய எமது மாணவர்களுக்கும், இதனை அச்சிட்டு வெளிப்படுத்திய ‘ஈழகேசரி’ப் பத்திராகிபர் பூரீமாங் கா. பொன்னையபிள்ளைக்கும் எம் நன்றி யுரிய
தாகுக.
f. 5(86).JIQFui.

பிழை திருத்தம்
பக். வரி பின்ழ திருத்தம்
முகவுரை ! G_凸S இருபாலை.போற் ப்ோற்றப்படும் இரு # ... } றப்படும் Lu72eu
நூல் 历 西西 இாாக்கதற்குரிய இராக்க சர்க்குரிய 52 &5ፊ#5 கூறப்பட்டது கூறப்பட்டது. கஉ | கஅ | மாலிகையும் மாலிகையு 5th, 459 மொழிபெயர்க்கப்
பட்ட த | பெயர்க்கப்பட்டது
空5 P | 高cm・ அதிகப்பயிற்சி அதிக பயிற்சி கடு உக வே வேய்
gみ கணிமல கணிமலர் கசு கக இருநூறு இருநூற்றுமுப்பது உக உஉ | பிறந்தவர் இருந்தவர் உஉ | ஈ | நூற்றெண்பது இருநூற்றுப்பத்து உடு கடு நூற்றறுபது இருநூறு 2 (5 is 6t பிறந்தவர் இருந்தவர் 2_@エ நூற்றறுபது இருநூறு 2-9 t அவற்றுள்ளும் அதனுள்
h8; சு | வேளாண்குடி வேளாண்ی - 60 ෆි - භී || පි. හී சன்மானித்தார் உபசரித்கார் 2 க் 2-.ெ சன்மானம் உபசாரம்
枋9一 Gr அவர் இவர்
ஈஉ உஅ கந்துமுகக், கந்து முகக்
9 p. ධී .ඵ්ණ් • ነ
திக்களிகூர், திக்களிகூர் நா. கக திருத்தணி திருத்தணிகை
*9 y s கசு உச வேங்குழலையுடைய வேய்ங்குழலையுடைய ஈக ச | நெல்லை நல்லை , கச பூகம் பூதப்
FO || AS 5Tr சமஸ்கிருத சம்ஸ்கிருத துண் மதி துன் மதி 5 | ملک சக கூ மெய்ஞ்ஞான விஞ்ஞான &#fro || 2 kín எனபது
dPir 9 O ஆண்டுவரையில் வரையில் சசு உஎ | தாதைகன்றதை மாதாமகன்

Page 9
பக், ! வரி பிழை திருத்தம்
P3r உள யாவர் ஆவர் ፵...9! உo | லக்கண விலக்கண டுசு கன குணத்தினஞய் குணத்தினய்ைச்
έή. Ο ΕΡ-6'' சிவது ஷ சிவதூஷண ó9一 உ | சுப்பிரமணியதம்பி சுப்பிரமணியத் தம்பி
ாான் [rባ Gör 5活9° 目 9 % மெய்த்த மொய்த்த 3分@T உ | இவருடைய இவர்
67 Ο ö茄 வேதமுத் வேகமுக் 9 لئے تھے கொழந்தை கொழுந்தை 6 go ஈ | ஆறுமுகங்களு ஆறுமுகங்களுக்கு
sy SO பொருள்கூறினர் பிரமாணங்காட்டினர் உடு திருவாரூர்ச்சோமசுச் நாகை நீலலோசனிப் தா தேசிகர் பத்திராதிபர் சதா
சிவம்பிள்ளை எடு கள மருகனு மருகரு எசு கச | முகப்பில் எழுதப்பட் முகவுரைகாரர் எழுதி
டுள்ளன னர் 69 9. அவற்றுள் அதனுள் அஎ உக | பிள்ளையிடத்தும் பிள்ளையிடத்துத்
கா, ! உச | மின்னிலங் மின்னித் கசி Pس( கொழுத்த கொளுத்த “ፈg5O¢፩ அ | சொற்ற சொற்ருரன் கoடு கசு வசிக்கையி வசிக்கையினி கoள கஎ வயித்திலிங்கச் வைத்தியலிங்கச் ககO கச | புகழ்ந்து பாடிய մո էջ-ամ ககாக உக 1 வாவென் வாவென ககச கக என்பன சகஅ | சு சோழ பாண்டி & 8 O 2.O 06öð7 LUÈO மண்டபத்
Fæ for i D-ffy, ØDo6NSELOL 6õOፈቓ6ዃ] fr dቓff f]f கஉடு | த அ பிரசங்கம்குறிப்புரை பிரசங்கமுங் குறிப்
புரையும் 9 2O சபைகளிலும் சபைகளில் s பிரசங்க பிரசங்கமு
2. க | சேர்வரென சார்வரென

XV
பக், வரி பிழை திருத்தம்
கஉடு உஎ | வித்தியா தரிசியுமாக வித்தியா தரிசியாக
இருந்தவருமாகிய க.ெ is 1857 1856
s தந்தைமாபு தந்தைமாபினரும்
த்
●○ } தாயமாபு தாய்மரபினருமாகிய கo கல்விச் கல்வி 罗多 கடு சிறிது தமிழ் தமிழ் சிலகாலம்
ෆි. ඒ6 மிக்க மிகப் ககக கடு உச்சாகாணத்தொனி உச்சாசனத்தொனி
மாசிவரிறுமதி | மாசுதவிர்சிறுமதி 爱露 jf ாானின் 6ਨa காகடு சச மீடுபெலங் மீடுபாங்
罗梦 FO } நிலையிப்- நிலைஇப்பெறுமா ப்ெ *தி றறு மருமால
கழீஇப் リ。 நாமெலா யாமெலா ❖3&ዎ7ፊ5 என்பது கசடு டு | தென்கோவை சாவகச்சேரி
s தேசிகர் Saraamt கடுo | நக 1981 1913 கடுக உஅ | சென்னப் சென்ன
கசுO உடு இராாாசன் இராசாாசன் ද්%ජ්” පි - १ १ முதலான முதலாக கன2. கடு கதிர கதிரை
● @7cm | R.零。 வருமாறு வருமாறு அவை கஎச உச விளங்குஞ் விலங்குஞ் 'க எடு உகூ | தார்திக தாங் திரிக கஅ0 | உஅ அவற்றுள் அதனுள் கஅடு கக அமெரிக்கன்மிஷன் அமெரிக்கமிஷன் கஅசு கஅ | லிகிதர்த் விகிதத்
ககக உO அது வருமாறு نتھک ககடு டு அப்பொழுது படிக்கும்பொழுது
, உஅ | சிதம்பாங், சிதம்பாம், உ00 கன கன்றறிந்தவர் கற்றறிந்தவர் golesF|| 3 || UTL-së பொருள்

Page 10

6
ஈழநாட்டுத்
தமிழ்ப் புலவர் சரிதம்
ஈழ5ாடு எனினும் இலங்கையெனினும் ஒக்கும். இவ்விலங்கை தென்னிந்தியாவின் தென்கீழ்த்திசையி லூளதாகிய ஒரு தீவு. இது, சங்க நூல்களுள் ஒன் முகிய பத்துப்பாட்டினுள் சிறுபாணுற்றுப்படையிலே, * தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை’ என்னும் (119-120) அடியுள் “தொன்மா விலங்கை” யென்று கூறப்படலானும், மணிமேகலை புள், ‘இலங்காதீவகத்துச் சமனுெளி யென்னும் சிலம் பின்ன யெய்தி வலங்கொண்டு மீளும்’ என உஅ-ம் காதை 107-ம், 108-ம் அடிகளிற் கூறும் * சமனுெளி’ என்னு மலை இதன்கணுள்ளதாதலானும் இதன் பழமையும் பெருமையும் அறியப்படத்தக்கன. அகத்திய முனிவர் . கந்தருவத்தா லிராவணனைப் பிணித்துத் தென்னுட்டி லியங்காதபடி செய்தாரென்று தொல்காப்பிய உரையுட் கூறப்படுதலின் இது முதற்சங்க காலத்திற்கு முன்னும் தமிழ்நாட்டோடு சம்பந்தமுற்று இருந்தது என்பதூஉம், இது சிங்களருக்குரிய நாடாகுமுன் இராக்கதற்குரிய காடாய் இருந்ததென்பதூஉம், இராக்கதர் பாஷை தமிழா மென்பது உம் ஊகிக்கப்படத்தக்கன என்பர் சிலர். அவர் கருத்துப் பொருந்துமென்பது, சிங்கள நாடாகிய காலத் தும் இதன் வடபாகமும் கீழ்பாகமும் தமிழ்நாடாயே யிருத்தலால் அறியப்படும். எவ்வாருயினும் இதன் வட

Page 11
2 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கீழ் பாகங்கள் செந்தமிழ் நாடென்பது அங்கு வழங் குஞ் செந்தமிழ்ச் சொற்களா லறியப்படும். சங்க காலத் துப் பழங் கமிழ்ச் சொற்கள் அங்கங்கே இன்றும் பெரு வழக்காய் இதன் வடபாகங்களிலும் கீழ்பாகங்களிலும் வழங்குகின்றன. அவை பின் சமயம் வாய்த்துழிக் காட்டப்படும். நாகர் என்னும் ஓர் சாதியும் வசித்தமை யால் முரஞ்சியூர் முடிநாகராயர் இவ் வீழநாட்டினரோ வென்று சிலரபிப்பிராயப்படுவர். அஃது எங்ஙனமாயி னும் கடைச்சங்கப் புலவருள் ஒருவராய மதுரை ஈழத் துப் பூதங்தேவனுர் என்பார் இவ்விழத்து மரபினரே என்பது துணிபு. ஆதலினிவ்விழநாடு பண்டுதொட்டு முத்தமிழுக்குறைவிடமா புள்ளதென்பது எவரானு மொப்புக்கொள்ளப்படத் தக்கதேயாம். ஆகலின் அவ் வீழ5ாட்டின் பெருமைக்குக் காரணர்களாயிருந்த தமிழ்ப் புலவர்களின் சரிதத்தையும் ஒருவாறு ஆராய்ந்து அவ் வவரிருந்த கால முறைப்படி இங்கே தருதும் :-
ஈழத்துப் பூதந்தேவனர்
இவர் மதுரை ஈழத்துப் பூதங்தேவனுர் எனவும் படுவர். இவர் மதுரையில் வந்து தங்கிய ஈழத்துப் பூதனது மகன் தேவன் எனப்படுவார். இவர் நாடு ஈழநாடு எனப்படினும் அங்காட்டில் எவ்வூர் என்பது தெரிந்திலது. இவர் எதோ காரணமாக இக் காட்டை விட்டு மதுரையி லிருந்தவராகத் தெரிகின்றது. மது ரைவிலேயே இவர் பிறந்து படித்துச் சங்கத்திலொருவ ராகச் சேர்ந்தாரெனக் கருதற்கு மிடமுண்டு. இவர் பாலேயையுங் குறிஞ்சியையும் பாராட்டியுள்ளார். இவரது பாடல்கள் நற்றிணையிலொன்றும் குறுங்தொகையில் மூன்
றும் அகத்தில் (நெடுந்தொகையுள்) மூன்றுமாக எழுபாடல்
கள் காணப்படுகின்றன. நற்றிணைப் பாடலிலே வாடை

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 3.
வீசுங் குளிர்ந்த காலத்தே தலைவியைப் பிரிங்தோர் மடை மையரென்று பாடுவர். அப்பாடலை இங்கே தருதும்.
uт 260
இஃது உலகியல் கூறிப் பொருள் வயிற் பிரிய வலித்த ܗܝ நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
அாவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல்காழ் வீடுறு நுண்டுகி லூடுவந் திமைக்குங் திருந்திழை யல்குற் பெருந்தோட் குறும கண் மணியே ாைம்பான் மாசறக் கழீஇக் கூதிர் முல்லைக் குறுங்கா லலரி மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த விரும்பன் மெல்லணை யொழியக் கரும்பின் வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை மூங்கி லங்கழை தாங்க வெற்றும் வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழியில் வுலகத் தானே. (Ep. —-866)
இச் செய்யுளில் அாவுக் கிளர்ந்தன்ன - அல்குல் என் மகனுல் காமஞ்சான்ற இளமகள் என்பதையும், காழ்-நுண் டுகிலூடுவங் கிமைக்கும் அல்குலென்றதனுல் துகிலின் நுண்மையையும், மணியோைம்பாலென்றகனல் ஐம்பாலி னழகையும், முதுக்குறை குரீஇ என்றதனல் குடம்பை செய்யுங் குரிஇயின் நுண்மதியையும் புலப்படுக்கியிருக் தல் மிகவும் பாராட்டத்தக்கது. இன்னும், குறுங் தொகையில் வரும் மூன்று செய்யுட்களும் மிகவுஞ் சிறந்த பொருளமைவுடையன. அவற்றுளொன்ற் கர்ட் டுதும் :-

Page 12
4. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
குறிஞ்சி இது தலைமகன் சிறைப்புறத்தானுக வெறியஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
வெறியென வுணர்ந்த வேல னேய்மருந்
தறியா குைத லன்னை காணிய வரும்பட செவ்வ மின்று5ா முழப்பினும் வாரற்க தில்ல தோழி சாாற் பிடிக்கை யன்ன பெருங்குர லேன லுண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்புஞ் சோலை யிலங்குமலை நாட னிாவி னனே, (360)
இதில் வெறியென வுணர்ந்த வேலனென்றதனுல் அவன் பேதைமையையும், கொடிச்சிகைக்குளிர் சிலம்பிற் சிலம்பு மென்றதனுல் அக் குளிரினெலியின் பெருமையை யும் உணர்த்துதல் மிகவுஞ் சிறப்புடைத்து. கினைக் குர லின் வளைவிற்கு பிடிக்கையை புவமை கூறுதலும் வியக் கத்தக்கது. VA
இன்னும் நெடுந்தொகையுள் வரும் மூன்றுள் ஒன்று காட்டுதும் :-
குறிஞ்சி முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
யோங்குவணர்ப் பெருங்குர லுணிஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும் புருவைப் பன்றி வருதிற நோக்கிக் கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய நெடுஞ்சுடர் விளக்க நோக்கி வந்துநம் நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே குன்றத் திரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 5
கவுண்மலி பிழிதருங் காமர் கடாஅ மிருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத் திருங்கல் விடாளை யசுண மோர்க்குங் காம்பம லிறும்பிற் பாம்புபடத் துவன்றிக் கொடுவிர லுளியங் கெண்டும் வடுவாழ் புற்றின் வழக்கரு நெறியே. (88)
இச் செய்யுளில் பன்றி செந்தினைக்குரலை யுண்ணும் படி பல்லிப்பாடோர்த்துக் குறுகும் என்றதும், அப்பல்லி யின் கிமித்தம் அதற்குப் பிழைத்தமையைக் குறிப்பிட்டு,
* கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
செஞ்சுடர் விளக்கம்
என்ற தூஉம் மிகவும் பாராட்டப்படத்தக்கன. இன்னும் அசுணம், யாழோசையில் விருப்புடையதென்பதைக் குறிப்பிட்டு é 6 யாழ்செக்கசுணமோர்க்கும் ’ என்றும், தாடி குரும்பிதேரும் இயல்பைக் குறிப்பிட்டுக், “ கொடு விர லுளியங் கெண்டும் வடுவாழ் புற்றின் ’ என்றும் கூறுதலும் பொருள்களினியற்கையைப் புலப்படுத்தலின் மிகவும் மகிழத்தக்கன.

Page 13
- ஆரியச் சக்கிரவர்த்திகள்
ஈழநாட்டின் வடபாகத்துள்ள நாடு யாழ்ப்பாணம். இதற்கு “மணற்றி’ என்பது முற்பெயர். தொண்டை காட்டினின்றும் ஈழநாடு வந்த யாழ்ப்பாணனுெருவன், அப்போது அதன் தலைநகராயிருந்த அநுராசபுரம் சென்று, அரசனகிய எலேலசிங்கனைக் கண்டு, தன் யாழ்ப்பாடலின் திறமையைக் காட்டி, அவனிடம் பரிசி லாக ** மணற்றி ’ என்னும் இங்காட்டைப் பெற்று, காடு கெடுத்து நாடாக்கி, தன் பெயரானே இதற்கு * யாழ்ப் பாணம்’ என்னும் பெயரை இட்டு, தானே அரசு செய்திருந்தான். அவனிறந்தபின், சோழராஜனல் அனுப் பப்பட்ட அவன் (அச் சோழன்) புதல்வன் ஒருவன் சிங்கையாரியச் சக்கிரவர்த்தி என்னும் பெயரோடு முடி சூட்டப்பெற்று அரசாண்டான். அவன் தன் இராஜ தானியாகிய கல்லூரிலே, தன்னட்டினும் பிறகாட்டினு மிருந்து பண்டிதர்கள் சிலரை அழைத்து ஒரு தமிழ்ச் சங்கம் தாபித்து, அதற்குச் சர்வமானியமாக ஒரு கிரா மத்து வயனிலங்களையும் விடுத்தான். அக் கிராமம் இப் பொழுது சங்கவேலி (சங்குவேலி) என்னும் பெய ரொடு விளங்குகின்றது. அச் சங்கப் புலவர்கள் செய்த நூல்கள் யாவும் இவனல் அமைக்கப்பட்ட * சரசுவதி மகாலயம்” எனப் பெயரமைந்த புத்தகாலயத்தில் வைக் கப்பட்டிருந்தன என்றும், அது சிங்கள அரசன் ஒரு வல்ை தீக்கொளுவப்பட்டு அழிந்ததென்றும் சரித நூல் கூறும். அதனுற்போலும் அவர்கள் செய்த நூல்க ளாயினும் தனிச் செய்யுட்களாயினும், எமக்குக் கிடைத் கில. இவனுக்குப்பின் இவன் மரபில் வந்த குணபூஷண சிங்கையாரியச் சக்கிரவர்த்தியும் தமிழை நன்கு பரிபா லித்தனன். இவன், * அடியார்க்கு நல்லார்’ என்னும்
பண்டிதமணியை இந்திய தேசத்தினின்றும் அழைப்பித்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 7
துத் தனக்கு முதன்மங்கிரியாக வைத்து, அப்பண்டிக மணி வாயிலாகக் கல்வியை விருத்தி செய்தான். அன் றியும் அப்பண்டிதமணியால் அறுபத்துமூன்று நாயன் மார்க்கு ஒரு மடாலயமும், தன் பெயராலும் அப்பண் டி சுமணி பெயராலும் இரு குளங்களும் அமைப்பித் கழன். மடாலயம் அமைந்த இடம் * நாயன்மார்கட்டு’ என்றும், குளங்கள் முறையே ? ஆரியகுளம்” என்றும், 66 அடியார்க்கு நல்லார் குளம் ’ என்றும் வழங்குவன வாயின. * அடியார்க்கு நல்லார் குளம்” இக்காலத்துக் * கன்னதிட்டிக் குளம் ' என வழங்கலாயிற்று. இப் பண்டிதமணியே சிலப்பதிகாரத்துக்கு உரைசெய்த * அடி யார்க்கு நல்லார்’ என்பர் சிலர். அது பொருந்துமோ என ஆராயத்தக்கது. இக் குணபூஷணசிங்கையாரியன் மகன் விரோதயசிங்கையாரியன் காலத்திலேயே கண்ணகி கோயில்கள் யாழ்ப்பாணத்தில் உண்டாயின என்று சரி தம் கூறலின், ஒருகால் அவன் காலத்து இப்பண்டிக மணி இருந்து உரைசெய்திருக்கலாம் என்பது ஊகிக்கத் தக்கது. விரோதயனுக்குப் பின்னுள்ள ஆரியச் சக்கிர வர்த்திகள் காலத்திலே சிலப்பதிகாரம் என்னும் நூல் இங்கே பெரிதும் வழங்கியுள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உளவாதலின் ஒருபோது சிலப்பதிகார உரையை இவ் அடியார்க்கு நல்லாரே செய்திருக்கலாம். சரிதகாலங்கள் முன்பின்னுக மாறியும் இருக்கலாம் என் பதும் இங்கே நோக்கத்தக்கது.
பரராசசேகரன்
இவன் கி. பி. 1410-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்து கல்லூரிலிருந்தரசாண்ட குணவிரசிங்கையாரியன் மக னை கனகசூரியசிங்கையாரியனுடைய புதல்வன். இவ
னுடைய தந்தையாகிய கனகசூரியசிங்கையாரியன் பகை

Page 14
8 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
வருக் கஞ்சி இந்திய தேயத்துக்குச் சென்றபோது அங் குத் தொண்டைமண்டலத்துள்ள கிருக்கோவலூரிலே இவனையும் இவன் தம்பியாகிய செகராசசேகரனையும் ஒரு ஆசிரியனிடம் கல்வி பயிலும்படி விடுத்திருந்தான் என் அறும், பின்னர்ப் பதினன்கு வருஷங் கழித்து இவனை பும் இவன் தம்பியையும் அழைத்துக்கொண்டு யாழ்ப் பாணம் வந்து பரராசசேகரனுகிய இவனுடைய உதவி யாற் பகையரசனை வென்று இவனை இளவரசனுக்கித் தான் அரசனுகவிருந்து யாழ்ப்பாணத்தை யாண்டான் என்றும், தங்தைக்குப் பின் இவனே அரசாண்டானென் அறும் யாழ்ப்பாணச் சரித்கிரங் கூறும். இவன் அரசன யிருந்த காலத்தே இவனிடங் தொண்டைமண்டலத் துள்ள பூதூரைப் பிறப்பிடமாகவும் பொற்களங்தைப் பதியை வாசத்தானமாகவுங் கொண்ட அந்தகக் கவி வீரராகவ முதலியார்’ என்னும், புலவர் வந்து, தாம் பாடிய வண்ணக் கவியை இவன் முன்னிலையில் அரங் கேற்றி அக் கவிக்குப் பரிசிலாக இவனிடம் பொன்னின் பந்தமும், மத்தயானையும், பிறவும் பெற்றர். அவர் இவன் பொற்பந்தமளித்தபோது இவனை வியந்து பாடிய செய்யுளை இங்கே காட்டுதும். அது :-
Gang LJT
* பொங்குமிடி யின்பந்தம் போயதே யென் கவிதைக் கெங்கும் விருதுபந்த மேற்றதே-குங்குமந்தோய் வெற்பங்க மானபுய வீரபா ராசசிங்கம் பொற்பந்த மின்றளித்த போது.
இவனுங் கவிபாடுவதில் அதிசாமார்த்தியமுடையவன யிருந்தான் என்பது அக் கவி வீரராகவாைப் புகழ்ந்து பாடிய சில செய்யுட்களா லறியக்கிடக்கின்றது. அக்
கவிகள் வருமாறு :-

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கட்டளைக் கலித்துறை * புவியே பெறுந்திரு வாரூ ருலா வைப் புலவர்க்கெலாஞ்
செவியே சுவைபெறு மாறுசெய் தான்சிவ ஞானவனு பவியே யெனுநங் கவிவீர ராகவன் பாடியதற் கவியே கவியவனல்லாத பேர்கவி கற்கவியே." இது அவர் பாடிய கிருவாரூருலாவைக் கேட்ட போது மன்னன் பாடியது.
கட்டளைக் கலித்துறை
இன்னங் கலைமகள் கைம்மீதிற் புத்தக மேந்தியந்தப் பொன்னம் புயப்பள்ளிபுக்கிருப்பா ளென்ன புண்ணியமோ கன்னன் களங்தைக் கவிவீர ராகவன் கச்சியிலே கன்னெஞ்ச மேடெனக் கற்றன் கனமுத் தமிழையுமே.
இது அவர் கல்வித்திறமை நோக்கி மன்னன் பாடியது.
விருத்தம் விாகன முத்தமிழ் வீர ராகவன் வரகவி மாலையை மதிக்கும் போகெலாம் உாகனும் வாணனு மொப்பத் தோன்றினுற் சிாகர கம்பிதஞ் செய்ய லாகுமே.
இது அவர் வண்ணக்கவியை அரங்கேற்றியபோது
மன்னன் பாடியது.
செக்ராசசேகரன்
இவன் முன்னர்க் கூறிய பரராசசேகரனுடைய
கம்பி. பரராசசேகரன், தந்தைக்குப்பின் அரசனுகி
கல்லூரிலிருந்து யாழ்ப்பாண நாட்டை ஆளுங் காலத்தில்
இவன் அவன் கருத்தோடு ஊர்கடோறும் தமிழ்ப் LT --
சாலைகள் தாபித்தும், தமிழ்ச்சங்கமொன்று தாபித்தும்
2

Page 15
IO ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
தமிழை வளர்த்தான். புலவர்களைக்கொண்டு பலவகை நூல்களையுஞ் செய்வித்தான். அழிந்து போன * சரசு வகி மகாலய’ மென்னும் பெயர் படைத்த புத்தகசாலை யைப் புதுக்குவித்து அகில், இந்தியா தேசத்தினின்றும் வடமொழி தென்மொழி நூல்களை வருவித்து வைத் துப் பலரும் படிக்குமாறு உதவினன். புலவர்களாற் புதுப்புது நூல்களையுஞ் செய்வித்தான். புலவர்களுக் குப் பரிசிலுமீந்தான். அதுபற்றி அவர்களால்,
* ஐந்தருவும் நவநிதியுங் குலமணியும் ஆவுமொன்முய்
வந்தனைய கொடைக் குரிசில் '
எனப் புகழப்பட்டான். இவனுற் செய்விக்கப்பட்ட நூல் களுள் இப்போது வழங்குவது ? செகராசசேகர மாலை” யென்னுஞ் சோதிடநூல். அது சோமஐயர் என்பவரால் ஆக்கப்பட்டது. அதனை அந்நூற் பாயிரத்து வரும் ? ខ្ពង់ தருவு நவநிதியு ’ மென்னு முதலையுடைய செய்யுளில் வரும்,
* கந்த மலை யாரியர்கோன் செகராச சேகரமன்
கங்கை நாடன்."
என்னு மடியானும்,
*தன்கடவுட் சுருதிகளின் மனமெனுஞ்சோ திடமதனைத் தலத்தின்மீது மின்குலவு தென்கலையாற் றருகவென
வருள்புரிய விருத்தப் பாவாற் பொன்குலவு செகராச சேகரமா
லையைச்செய்தான் பொருந்து மேன்மைத் சொன்குலவு மிராசவிரா மேசனருள்
சோமனெனுஞ் சுருதி யோனே' என்னுஞ் செய்யுளானும் அறியப்படும்.

ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம் 11
இவன் காலத்திலேயே பண்டிதராசரென்னும் புலவ ።rዘ ወህ “ பரீ தக்ஷிண கைலாச புராணம்’ இயற்றப்பட்ட தாகும். அதனை, கவிவீரராகவரென்னும் புலவராலியற் றப்பட்ட அந்நூற் பாயிரத்துள் வரும்,
", Q}i, 5 TL L-ger ஞரியர் கோமான்
பொன்னட் டைந்தரு பொருவரு காதலன் மறுநில நிருபாை வானிலத் திருத்தி யுறுநில முழுவது மொருதனி புரப்போன் றென்னிலங் காபுரித் திசைதொறு மருவும் மின்னிலங் கியவேல் மேவலர் புயத்துப் படவரா முடித்தலைப் பார்முழு தாண்ட இடப வான்கொடி யெழுதிய பெருமான் சிங்கை யாதிபன் சேது காவலன் கங்கை நாயகன் கருங்கடற் சேர்ப்பன் பெளவ மேற்றுயில் பாாபான் சூட்டிய தெய்வ மாமுடிச் செகராச சேகரன் அவனது காலத் தத்திரி கோணைச் சிவனது கோயிற் சிவமறை முசலோன் அருமறை யுபநிட மாகமஞ் சோதிடம் விரிசுமிழ் வரையற விளங்கிய குரவோன் சேயினுந் திறலான் றயாநிதி யனையான் முப்புரி நூற்புயன் முளரியந் தாமன் செப்பரு பண்டித ராச சிகாமணி என்னு நாமத் தெங்குரு பெருமான்
மன்னுநாற் கலியும் வல்லநா வலனே'
என்னுஞ் செய்யுளடிகளா னறிக.
அரசகேசரி அரசகேசரி என்பவர் ஏறக்குறைய முந்நூற்றைம் பது ஆண்டுகளுக்கு முன்னே யாழ்ப்பாணத்து நல்லூரி விருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் மருக

Page 16
12 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
ராவர். கிருநெல்வேலியில் வசித்த பாண்டிமழவன் மர பிற் பிறந்தவளும் பரராசசேகர மகாராசாவின் இரண் டாம் மனைவியுமாகிய வள்ளியம்மையின் மகளை விவாகஞ் செய்தவர். இம்முறையினுற்ரு?ன் மருகர் போலும். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்தி ரத்தை நோக்கும்போது பரார்சசேகரன் கி. பி. 1260-ல் பாண்டியன் மரபில் வந்தவனுயும், ஜயவீரசிங்கைஆரியப் பட்டம் பெற்றவனபுமுள்ள ஒருவன் வழித்தோன்ற
சேகரமாலை
லாகக் காணப்படுகிறன். ஆனல் செகாாச
*_。 ^そ) مہہ {} یا " . . . . ” w எனனுஞ ம்ே சாதிடநூலின் சிறப்புப்பாயிரம் அதற்கு மாருகக் கூறுகின்றது சிறப்புப்பாயிரக்திலே, இராம பிரான் தான் தாபித்த இராமேசரரைப் பூசிக்கும்படி பாசுபதர்களாகிய பஞ்சக் கிராமவேதியர் ஐஞ் இது ற்றுப்
பன்னிருவரை அழைத்து,
* பூசனை செய்மி னிரெனக் கருணை
புரிந்தவர் தங்களி லிருவர்
காசினி தாங்கும் படிவாங் கொடுத்துக்
கமழ்செழுந் துளபமா லிகையும்
மாசறு சுருதி யாரிய வேந்தென்
றணிம்னிப்பட்டமுங் கொடுத்து
தேசுறு குடையு மொற்றையும் வெற்றித்
திகழ்விடைத் துவசமு நல்க ”
அன்றுமுதல் சதுர்புக நாலாறிற் புவிபுரந்த வரசர் குலத்தில் வந்தவனுகக் கூறப்பட்டுள்ளது. செகராசசேகர மாலை செய்தவர் சோம ஐயர். ஆதலின் பரராசசேகரன்
மரபு நன்கு ஆராயத்தக்கது. கிற்க,
அரசகேசரி என்னுமிவர் வடமொழி தென்மொழி என்னும் இரு மொழிகளிலும் வல்லவர். இவர் ச்ெய்த நூல் தமிழ் இரகுவமிசம். அந்நூலை இவர் வடமொழி

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 18
இரகுவமிசத்தினின்றும், அதன் ஆசிரியரான காளிதாச மகாகவியின் மொழிவழிச் சென்று ? உரைவழி Байт னெடுங் குன்றிசைப்பது ’ போல தமிழில் மொழி பெயர்த்துச் செய்தது மிகவும் புகழத்தக்கது. இவரின் மொழிபெயர்ப்புச் சாதுரியத்தை, மேற்காட்டிய இரு மொழியி னும் வல்ல புலவர்கள் கன்கு பாராட்டுவார்கள். அதற்குச் சான்முக ஒன்று காட்டுதும்:
* ஸராஜ்யம் குருணுகத்தம் பிரதிபத்யாதிகம் பபெள
திநாந்தெ நிஹிதம் தேஜஸ் ச வித்திறே வஹ”0
ᏭᏁ Ꮺ- fᏴ : fl என்னும் வடமொழி இரகுவமிச சுலோகம், தமிழ் இரகுவமிசத்தில்,-
* கனைகழல் வீரனுங் காவ லான்றரு
புனைமணி முடியொடும் பொலிந்து தோன்றினுன் றினகரன் றிவாந்தகா லத்திற் சேர்த்திய வினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே என, இவரால் மொழிபெயிர்க்கப்பட்டது. இதனுல் இவ ாது மொழிபெயர்ப்பு வன்மையை அறிந்து கொள்க.
இவர் இரகுவமிசத்தைப் பாடுங்காலத்தே நல்லூ ரின் கீழ்ப்பாகத்திற் பொருங்கிய நாயன்மார்கட்டிலுள்ள தாமரைக் குளத்தருகே இருந்து பாடினரென்றும், அதற் குச் சான்முக நாட்டுப் படலத்திலே முதலில் குளங்க ளின் வருணனையே கூறப்படுகின்றது என்றும் ஆன் ருேர் கூறுவர். -
அன்றியும், வயன் முதலியவற்றை "வருணிக்குங் காலும் அக்குளத்தருகே உள்ள வயல்களையும் பக்கங்க ளில் நடப்பட்ட கமுகு, வாழை, கரும்பு முதலியவற் றையும் பார்த்தே வருணித்தார் என்பர். அங்ஙனமாதல்,

Page 17
14 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
* கூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க
ளூறு செய்திடத் தொடுத்தகூன் குயமொத்த வேனும்
பாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த்
தாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும்’ என்பதனுன் கன்கு அறியப்படும். இவர் இருந்த இடம் இப்பொழுதும் அரசகேசரி’ வளவு என்னும் பெய ரோடு கல்லூரிலுள்ள யமுனரி என்னும் ஏரியின் பக் கத்துள்ளது.
இன்னும், அந்நூல் கம்பருடைய இராமாவதார மென்னும் நூலைப் பின்ருெடர்ந்தே பாடப்பட்டுள்ளது. ஆயினும் கடினமான சொற்பிரயோகங்களை யுடைமையா னும் வடமொழி நூலைப் பெயர்த்துப் பாடினமையானும் கற்றேர்க்கன்றி மற்றேர்க்குணர்ந்து சுவைத்தல் கூடா தாயிற்று.
இவர் சிலப்பதிகாரமென்னும் நூலில் அதிகப் பயிற்சி யுள்ளவரென்பது அந்நூற் பிரயோகங்களை இதனு ளமைத்துக் கூறுமாற்று னறியப்படும். சிலப்பதிகாரத்தில்,
பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும் அரிமுக வம்பிய மருந்துறை யியக்கும் டெருந்துறை மருங்கில்" என்னு மடியில் வரும் அம்பி விசேடங்களை (அம்பிதோணி),
அரிமுக மடுத்து வீழு மான்மத வளறு நாறக் கரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு காப்பச் சுரிமுக நெற்றி துற்றச் சுடர்மணி வர்க்கங் தொக்க பரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு போனர்.
என்னுஞ் செய்யுளி லமைத்தும்,

ஈழநாட்டுக் கமிழ்ப் புலவர் சரிதம் 15
* கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
இன்று நம் மானுள் வருமே லவன் வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி' எனறும,
* பாம்பு கயிருகக் கடல்கடைந்த மாயவன் ஈங்குடும் மானுள் வருமே லவன் வாயின் ஆம்பலக் தீங்குழல் கேளாமோ தோழி' என்றும்,
* கொல்லையஞ் சாாற் குருந்தொசித்த மாயவன்
எல்லைடும் மானுள் வருமே லவன் வாயின் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி' என்றும் வருவனவற்றுள், ‘கொன்றையங் தீங்குழல்", * ஆம்பலங் தீங்குழல்”, “முல்லையங் தீங்குழல் ? என்பன வற்றை, " நீக்குமா னழைக்கு மாயர் டிேசை நிறைய வூது மூக்கமேன் றளவே யாலை யோதைய தளவே யுந்த வாக்குதீங் கொன்றை மீன்பா டாவத்தீங் கொன்றை மாற்றத் தேக்குவே யேனற் காப்பின் றிறத்தவே யகற்று மன்றே" என்னுஞ் செய்யுளி லமைத்தும், (தளவு-முல்லைக்குழல், கொன்றை-கொன்றைக்குழல், வே-வேய்ங்குழல், ஆம் பலும் வேயு மொன்று.) இன்னுஞ் சிலப்பதிகாரத்திற் கூறிய மகிற் பொறிகளிற் சிலவற்றை இதனுளமைத்தும் பாடியிருத்தல் காண்க. அன்றியும், அகநானூற்றில்,
* வலந்த வள்ளி மானேங்கு சாாற்
கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள் இன்ன விசைய வோசை பயிற்றலின் எக லடுக்கத் திருள?ளச் சிலம்பின் ஆகொள் வயப்புலி யாகு மஃதென "
என்று வருமடிகளின் கருத்தை,

Page 18
16 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம் * கான்குழற் குறத்தி நல்லார் கணிமலர் கொள்ளு மோதைக் கான் கிளைக் காப்புச் செய்தங் கண்டர்கின் றாற்று மோதை'
என அமைத்தும் பாடியுள்ளார். இதனுல் இவர் சங்க நூல்களிலும் பயிற்சியுள்ளவர் என்பது பெறப்படும்.

அரசரல்லாத புலவர்கள்
مست۔ بسمتیہ مسسچیمہ محبت--.......... ۔
பண்டித ராசர்
இவர் ஏறக்குறைப இருநூற்றைம்பது வருடங் களுக்கு முன்னே கிரிகோணமலையிலே கோணேசுரரால யத்து அருச்சகராயிருந்தவர். வடமொழியிலும் தென் மொழியிலும் அதி சாமர்ந்தியம் வாய்ந்தவர். கவி பாடு வதிலும் மிகச் சிறந்தவர். தக்கிண கைலாசபுராண மெனப்படும் கோணுசலபுராணம் இவர் இயற்றியதாகும். அப் புராணத்துள்ள சிறப்புப்பாயிரக் கவி யொன்றினல் இவர் செகராஜசேகர மன்னன் காலத்திருந்தவரென்பது
தெரிகிறது. அக்கவி, g
** மணிநிறக் கண்டன் வடபெருங் கயிலையில் அணிநிறக் கொடுமுடி யாயிரத் தொருமுடி படவரா வொதுக்கப் பறித்தினி திலங்கை வடகட னடுவண் மாருதம் பதிப்ப வருமுக் கோண மலைதென் கயிலைப் பாமர்க் குருத்திரர் பதினெரு பேரும் ஒருபது முகுங்கரு மொன்பது விரிஞ்சரும் வருகடற் கமடம் வழங்கிய மீனமும் திருமலை சழுவிய தெசமுக நிருதனும் பொருமலை மதகரிப் புரவலர் பலரும் பூசையொ டிறைஞ்சிய புராணநூற் கதையைத் தேசிகன் சொற்படி தென் கலைப் படுத்தி யங் கா தித்தொடை யடைவொடு தொடுத்து நந்தா விருத்த நவையறக் கூறினன் அந்நாட் டாசன் ஆரியர் கோமான் பொன்னுட் டைர்தரு பொருவரு காதலன் மறுநில நிருபரை வானிலத் திருத்தி
யுறுநில முழுவது மொருதனி புரப்போன்
3

Page 19
18 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
சென்னிலங் காபுரித் கிசைதொறு மருவும் மின்னிலங் கியவேல் மேவலர் புயச் த ப் படவரா முடித்தலைப் பார்முழு காண்ட இடப வான் கொடி யெழுதிய பெருமான் சிங்கை யாதிபன் சேது காவலன் கங்கை நாயகன் கருங்கடற் சேர்ப்பன் பெளவ மேற்றுயில் பராபான் சூட்டிய தெய்வ மாமுடிச் செகராச சேகரன் அவனது காலக் கத்திரி கோணைச் சிவனது கோயிற் சிவமறை முதலோன் அருமறை யுபநிட மாகமஞ் சோதிடம் விரிதமிழ் வரையற விளங்கிய குரவோன் சேயினுந் திறலான் றயாநிதி யனையான் முப்புரி நூற்புயன் முளரியந் தாமன் செப்பரும் பண்டித ராச சிகாமணி என்னு நாமத் தெங்குரு பெருமான் மன்னுநாற் கவியும் வல்ல நாவலனே.” என்பது.
கவிச்சுவை புணர்தற்காக இவர் இயற்றிய கோன
சல புராணத்துள் ஒரு கவி ஈண்டுத் தருதும்.
* பூவெலா ந் துய்ய வாசம் புனமெலா முனிவர் வாசம்
மாவெலாங் குயிலி னேசை மலையெலாங் குயிலி ைேசை காவெலா முயர்ந்த தாழை கரையெலாங் கமழுக் காழை
பாவெலா மானுர் சஞ்சீர் பகர்வரி தன்னேர் சஞ்சீர். கவிராஜர்
இவர் ஊருங் கிரிகோணமலையாகும். இவரும் முற் கூறிய பண்டிதராசரும் ஒரு காலக் கவரே. அஃது அவர் இயற்றிய கோணுசலபுராணக்கிற்கு இவாளிக்க சிறப்புப் பாயிரக் கவியில்ை அறியக்கிடக்கின்றது. இவர் கோணேசர் கல்வெட்டென வழங்கும் கோணேச சாசனத்தைப் பாட்டானும் உரையானும் இயற்றியுள்
ளார். அதனுள் ஒரு பாட்டு ஈண்டுக் காட்டுதும்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 19
* திருந்து கலி பிறந்தைஞ்ஞாற் ருெருபதுட
னிரண்டாண்டு சென்ற பின்னர்
புரிந்திடப மாதமதி லீாைங்காங்
தேதி திங்கள் புணர்ந்த நாளிற்
றெரிந்தபுக ழாலயமாஞ் சினகாமுங் கோபுரமும் கேரூர் வீதி
பரிந்து ரத்ன மணிமதிலும் பாவாா
சகச்சுனையும் பகுத்தான் மேலோன்,'
இவர் இயற்றிய கோணேசர் கல்வெட்டையும் பண் டிதாாசர் இயற்றிய திரிகோணுசல புராணத்தையும் பல ஏட்டுப் பிரதிகள் கொண்டு பரிசோதித்து அச்சிற் பகிப் பித்துதவியவர், புலோலி பூரீமான் பொ. வைத்தியலிங்க தேசிகர். அவர் செய்த உதவி ஈழநாட்டாரால் என்றும் மறக்கற்பாலதன்றம். ܗܝ
வரதபண்டிதர்
இவர் காசியிலிருந்து வந்து யாழ்ப்பாண நாட்டிலே சுன்னகம் என்னும் ஊரில் வசித்த வேகியர் குலத்தில் பிறந்தவர். ஏறக்குறைய இருநூறு வருடங்களுத்தமுன் இருந்தவர். தமிழில் இலக்கிய இலக்கணங்களுழ் சோதிட
மும் வைத்தியமுங் கற்றுப் பாண்டித்தியமும் பெற்றவர். வேதாந்த சித்தாந்த நூல்களும் நன்கு கற்றர் அவற் றில் அநுபவமும் பெற்றவர். பாடுதலில் Tu Diji
கியம் வாய்ந்தவர். வாழவுங் கெடவும் பாடவல்லுநர். அதனுல் இவரை வரகவி என்றுங் கூறுவர். လျှို့ချ်`~)
தக்கையார் பெயர் அரங்கநாதையர் என்பது -
செந்தமிழ் முனிவன் செப்பிய கதையும்
கந்த புராணக் கதையினுள் ளதுவும் .இலிங்க புராணத் திருந்த நற் சதையும்
உபதேச காண்டத் துரைத்த நற் கதையும்
தேர்ந்தெடுத் தொன்முய்த் திரட்டியைங் சாற்கு
18

Page 20
20 ஈழநாட்டுக் கமிழ்ப் புலவர் சரிகம்
வாய்ந்தநல் விாக மான்மிய முாைத்தான் கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்கும் துன்னிய வளவயற் சுன்னு கத்தோன் அரங்க நாத னளித்தருள் புகல்வன் திாம்பெறு முருகனைத் தினக்தொறும்
வரம்பெற வணங்கும் வாதபண் டிகனே.
என்னும் பிள்ளையார் கதைச் சிறப்புப்பாயிரச் செய் யுளானே அறியக்கிடக்கின்றது. இவரியற்றிய நூல்கள் :- சிவராத்கிரி புராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளை விடு தூது, அமுதாகரம், பிள்ளையார் ககை முகலியன. இவற்றுள் :-
சிவராத்திரி புராணம் சிவராத்கிரி விரத மகிமை கூறுவது. ஏகாதசிப் புராணம் ஏகாகசி விரத மகிமை கூறுவது. கிள்ளைவிடுதூது காங்கேயன்றுறைக்குக் கென் பாகத்திலே கண்ணியவளை என்னுங் கலக்கில் விற்றிருக் கும் குருநாதசுவாமி (கந்தசுவாமி) மேல் இயற்றியது. இதன்கண் சிவபிரான் சுந்தரருக்காகப் பறவையார்பாற் அாதுபோன கதையும், அனுமான் இராமபியாலுக்காகச் சீதைபாற் றாதுபோன கதையும், கண்ணபிபான் பஞ்ச வர்க்காகத் துரியோதனன்பாற் றாதுபோன கதையும், நளன் அாது முதலியவும், பீகாம்பரங் கிழிக்குக் காவிற் சிலந்தியைச் சோழராஜனுக்குச் சடையப்பவள்ளல் காட் டிய கதை முதலியவும், மாவிட்டபுர முகவிய வார்களில் வசித்த வேளாளர்களின் மரபு முகவியலங் கறியுள் ளார். இந்நூல் இவர் வழிக்கோன்றலும், இந்தியா தேச வாசருமாகிய பண்டிகர் இரக்கினே சுவா ஐயாவர் களால் அச்சிட்டு வெளிப்படுக்கப்பட்டுள்ளது. இவரது கவிச்சுவை புணர்தற்காகச் சிவசாக்கிரி புராணத்துள் ஒரு செய்யுள் காட்டுதும் :-

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 21
காவாசு மலாயன் மால் கடவுளர்க்காச் சென்றமர்செய்கா மனமைம் பூவரசு படவிழித்துப் புனவேங்கை யத்தியதள் புனைந்துபோர்த்த தேவரசு மனமகிழத் திருப்பதிக மிசைத்தமிழிற் சிறக்கப் பாடும்
நாவரசு பதம்பரசு நமக்குயர்பொன் னட்டரசு நல்கு மன்றே.
இவரது குலம் முதலியன இவரியற்றிய அமுதாகரம் என்னும் வைத்திய நூலில் உள்ள சிறப்புப் பாயிரச் செய்யுளா னறியப்படுகின்றன. அதனையு மிங்கே காட் டுதும். அஆவ,
ஐயமின் முன்னூற் றையிரு விருத்தம் செய்யசெந் தமிழாற் றெரித்துரை செய்தனன் ' கங்கைமா நதிசூழ் காசிமா நகரும்
பங்கமில் பங்கயப் பைந்துணர் மாலையும் ஆதிநான் teறைசோந்தண ாாணையும் கோதக லோதிமக் கொடியுமிங் குடையோன் கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்கும் துன்னிய வளவயற் சுன்னை நன் னுடன். 6Taoil 131.
சிற்றம்பலப் புலவர்
இவர் ஏறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்னே மாதகல் என்னு மூரிலே வேளாண் குலத்திலே பிறந்தவர். வேதாரணியஞ்சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயரென்னும் பெயருடைய சைவ குருவினிடம் இலக்கண இலக்கியங்கற்று மீளத் தம்மூரில் வங்கிருந்தவர். இவரிடங் கற்றவர்கள் இருபாலைச்சேனதிராய முதலியார், அராலி அருணசலம் பிள்ளை முதலியோர் என்பர். இவர் கண்டி யாசன்மேல், கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம்பாடி அதை அரங்கேற்றற்காகச் சென்ற பொழுது வழியில் அவ் வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப்பட்டான் என்ற
சொற்கேட்டுத் தம்மூர்க்குத் திரும்பினர் என்பர்.

Page 21
22 ஈழநாட்டுக் கமிழ்ப் புலவர் சரிகம் சின்னத்தம்பிப் புலவர்
இப்புலவர் பெருந்தகையார் ஏறக்குறைய நூற்றெண் பது ஆண்டுகளுக்கு முன்னமே கல்லூரிலிருந்க வரும், ஒல்லாங்க அரசினரால் கேசவளமை என்னும் நூலைக் கிருத்தி அமைக்கும் வண்ணம் நியமிக்கப்பட்ட அறிஞர் களுள் ஒருவராய் விளங்கியவரும், பெரும் பிரபுவுமாகிய வில்லவராய முதலியாருடைய அருங்கவப் புகல்வர். இவர் யாரிடத்தில் கல்வி கற்றனர் என்பது கெரியவில்லை. இவர் இளமையிலேயே பாடும் சாமர்த்கியமுடையவ ரென்றும், மாடுமேய்க்கும் பிள்ளைகளுடன் இவர் விளை யாடிக்கொண்டு நிற்கும்போது, அவ்வழியாக வந்த புல வர் ஒருவர் இவரை நோக்கி வில்லவராய முதலியார் வீடு எது? என்று வினவியபோது, இவர் உடனே வாயிலிற் கொன்றைமரம் நிற்கும் வீடே அவர் வீடு என்பதைக் குறிப்பிட்டுப்,
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுச் சாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம்-மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவரா யன் கனக
வாசலிடைக் கொன்றை மாம்.
என்று ஒரு கவியினல் அப்புலவர் ஆச்சரியமுறுமாறு விடையிறுத்தா ரென்றும் முதியோர் சிலர் கூறுவர். அன்றியும் ஒரு நாள் இவர் தமது கங்கையார் ஒரு செய்யுளின் முதலடிகளிாண்டையும் பாடி, ஒரு எட்டி லெழுதி, ஏனையிற்றடி யிரண்டையும் செவ்வனே பாடி நிரப்பமுடியாது வைத்துவிட்டு அயலூர்க்குச் செல்ல, இவர் அவ்விரண்டடியையும் செவ்வனே பாடி நிரப்பி வைத்தாரென்றும், பின் தந்தையார் வந்து அவ்வேட்டை யெடுத்துப் பார்த்தபோது தான் பாடிய செய்யுளின் ஈற்றடியிரண்டும் நிரப்பப்பட்டிருக்கல் கண்டு மகிழ்ந்து,

ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம் -23
அதனை நிரப்பி வைத்தவர் தம் புதல்வரே யென்றறிந்து, தம் சொற்படி பாடசாலைக்குச் செல்லாது விளையாட்டிற் குச் செல்லுதல் காரணமாக முன் இவர்பால் வைத் திருந்த வெறுப்பை நீக்கி, அன்றுதொட்டு இவரிடம் பேரன்புடையாாயினரென்றும், இங்ஙனம் இவர் இள மையிலே பாடத் தொடங்கியதற்குக் காரணம் இவர் பெற்றுக்கொண்ட சரஸ்வதி கடாட்சமே யென்றுங் கூறு வர். இவர் புலமைக்குக் காரணம் யாதாயினும் ஆகுக'. இவர் பாடுதலிலே மிகுந்த சாமர்த்திய முடையரென்ப தில் தடையேயில்லை. இவர் இலக்கிய இலக்கணங்களை 15ன்கு கற்றவரென்பது இவர் பாடிய பிரபந்தங்களால் கன்கு புலப்படுகின்றது. இவர் பாடிய பிரபந்தங்கள், மறைசையந்தாதி, கல்வளையங்தாகி, காவை வேலன் கோவை, பருளைப் பள்ளு என்பன.
w
மறைசையந்தாதி: இது வேதாரணியேசுரர்மேற் பாடப்பெற்றது. இதற்கு யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி கிரு. அ. சிவசம்புப் புலவரவர்களும், மதுரை மகாவித்து வான் சபாபதி முதலியாரவர்களு முரையெழுகியுள்
ዩ?ኽዥ ቨ`ffg5óኽ፲` .
கல்வளையந்தாதி ! இது யாழ்ப்பாணத்துச் சண் டிருப்பாயிலுள்ள கல்வளையென்னும் பதியில் எழுந்தருளி யிருக்கும் விநாயகக் கடவுள்மீது பாடப்பெற்றது. இதற்கு யாழ்ப்பாணத்து வல்லுவெட்டித்துறை இயற் றமிழ்ப் போதகாசிரியர் பூரீ வைத்தியலிங்கம்பிள்ளை
யவர்கள் உரையெழுகியுள்ளார்கள்.
கரவை வேலன் கோவை : இது யாழ்ப்பாணத் துக் கரவெட்டியிலிருந்த பிரபு கிலகராகிய வேலாயுதம் பிள்ளை மேற் பாடப்பெற்றது. இக்கோவையை அரங் கேற்றியபோது ஒவ்வொரு செய்யுட்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசிலாக அளிக்கப்பட்டது என்பர். இதனுள் பல செய்யுட்கள் சுன்னகம் அ. குமாரசுவாமிப்

Page 22
24 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
பிள்ளையவர்களால் செங்கமிழ்ப் பக்கிரிகையில் வெளி யிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில காட்டுதும்.
மாசால மோமணி வாய்கோகு மோ,நம் மரபியலின் ஆசார மோவிர தத்தடை வோகிரை யாடைசுற்றுங் தேசா திபர்மெச்சும் வேலன் காவைச் சிலம்பனையீர் பேசா திருக்கும் வகையின்ன வாறென்று பேசிடுமே.
பூவென்ற மாலிலங் கேசனை நாளைக்குப் போர்புரிய வாவென்ற வீரன் கரவையில் வேல மகிபதிமேற் பாவென்ற வாணிப் பவளச்செவ் வாய்மடப் பாவையிவள் எவென்ற காகள வோடிய பார்வையிமைக்கின்றதே.
இக்காவை வேலன் கோவை சிறக்க அரும்பத வுரையோடு, கிரிபாஷா விற்பன்னரும், ஆரிய கிரா விட சங்க ஸ்தாபகரும், விக்கியாதரிசியுமாகிய பூரீமாங். தி. சதாசிவ ஐயரவர்களால் இப்போது அச்சிட்டு வெளிப் படுத்தப்பட்டுள்ளது.
பற2ளப்பள்ளு இது யாழ்ப்பாணக்திப் பறrாய் என்னுமிடத்தில் எழுந்தருளியிருக்கும் விகாயகக் கடவுள் மீது பாடப்பெற்றது. இதன் கவிகள் மிகவுஞ் சுவை யுள்ளன. சுவையுணரும்படி சில காட்டுதும்.
பகுத்த வந்தணர் சாலைக டோறும்
பயிலும் வேதத் தொலிபண்ணை ரீகிற் ருெகுத்த மள்ளர் குரவையை மாற்றிடு சோழமண்டல நாடெங்க ணுடே. பண்ணிற் ருே யப் பொருண்முடிப் புக்கட்டிப் பாடும் பாவலர்க் கீந்திட வென்றே யெண்ணிப் பொன் முடிப் புக்கட்டி வைத்கிடு
மீழமண்டல நாடெங்க ணுடே. இப்பள்ளு, சென்னை பூரீமாங் செ. வே. ஜம்புலிங்கம் பிள்ளையால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் இவர் சிறப்புப்பாயிரக் கவிகளும் பாடி யுள்ளாரென்பது வாதபண்டிதர் பாடிய சிவராத்திரி புரா
ணத்துக்கு அளித்த சிறப்புக்கவியால் அறியக்கிடக்கின்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 25
றது. அதனல் இருவரும் ஒரேகாலத் திருந்திருக்கிறர்
கள் என்பதும் பெறப்படும்.
சிவராத்திரி புராணச் சிறப்புப்பாயிரக்கவி வருமாறு :-
மைத்தவிடப் பணிப்பணியான் வாாசனமுஞ்
சாாசனமு மலையாக் கொண்ட
சித்தனுயர் சிவநிசிமான் மியமகனைச்
செந்தமிழாற் றெரித்தல் செய்தா
னத்தகைய பாரத்து வாசகோத்
திரனாங்க னருளு மைந்தன்
சத்தபுரி களிற்காசி நகர்வாக
பண்டிதன் முத் தமிழ்வல் லோனே.
வர ஆசனம் - மேலான ஆசனம். சராசனம் - வில்,
மயில்வாகனப் புலவர்
இப்புலவர் ஏறக்குறைய நூற்றறுபது வருடங்க ளுக்கு முன்னே யாழ்ப்பாணத்து மாதகல் என்னு மூரிலே பிறந்தவர். வேளாண் குலத்தவர். இவ்வூர்ப்பிறந்த சிற்றம் பலப் புலவரது சகோதரி புதல்வர். வையா என்னும் புல வரது மரபில் உதித்தவர். அது,
நெய்யார்ந்த வாட்கைப் பாராச சேகரன் பேர்நிறுவி மெய்யாக நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரித்துரைத்த வையாவின் கோத்திரத் தான் மயில் வாகனன் மாதவர்கள் பொய்யாத வாய்மைப் புலியூரக் காதி புகன் றனனே.
என்னுஞ் செய்யுளானறியப்படும்.
இவர் இந்தியாவினின்றும் யாழ்ப்பாணத்தில் வங்
திருந்த கூழங்கைத் தம்பிரானிடம் வண்ணுர்பண்ணைச்
சிவன் கோயிலைக் புதிதாகக் கட்டுவித்த வைத்தியலிங்கச்
செட்டியாரோடு ஒருங்கு கற்றவர். கூழங்கைத் தம்பிரான்
4.

Page 23
26 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
மாணக்கர்களுக்கு ஒரு பாடக்கை ஒரு முறையன்றி இரண்டாமுறை சொல்லிக் கொடாரென்றும், வைத்திய லிங்கச் செட்டியார் ஒரு முறையிற் கிாகிக்கக் கக்கவரல்ல ரென்றும், இவர் ஒரே முறையிற் கிாகிக்கும் ஞாபக சக்கி உடையவரென்றும், அதல்ை கம்பிரான் சொல்பவற்றை ஒரே முறையிற் கிரகித்து வைக்கியவிங்கச் செட்டியா ருக்கு மீளச் சொல்லிக் கொடுப்பாரென்றும் சரிதாசிரியர் கள் சிலர் கூறுவார்கள். இவரியற்றிய நூல்கள் : புலியூர் யமகவந்தாகி, யாழ்ப்பாண வைபவம் முகவியன. புலியூர் யமகவந்தாதி, உரையாசிரியர் எனச் சிறப்புப்பெயர்வாய்ந்த ம. க. வேற்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்ட உரை யுடையது. யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாண நாட் டின் சில வைபவங்களைக் கூறும் ஒரு வசன நூல். இவரது செய்யுட்டிற முணரும் பொருட்டு புலியூர் யமகவந்காகியுள் ஒரு செய்யுள் காட்டுதும் :-
பாயசங் கண்டு பரியாக்கி யாசபத் தர்க்கினிய பாயசங் கண்டு நிகர்புலி யூர பகையை வெல்லு பாயசங் கண்டு காத்தாற் கரிய பழவினைக்குப் பாயசங் கண்டொட ராதென யாள்க பராபாமே.
பாய் அசம்-பாய்கின்ற ஆடு, பரி-வாகனம், பாயசம்பாற்சோறு. கண்டு-கற்கண்டு. வெல்உபாய-வெல்லும் உபாயமுடையவரே. சங்கு அண்டு காக்காற்கு-விட்டுணு வுக்கு. குப்பாயம்-சட்டை. சம்-பிறப்பு.
இன்னும் மேற்கூறிய நூல்களன்றி, ஞானுலங்கார நாடகம், காசியாத்திரை விளக்கம் என்னும் நூல்களும் இவரியற்றியன என்பர். அந்நூல்கள் இப்போது கிடைக் கப் பெற்றில. இவர் வாதபண்டிதர் செய்த சிவராத்திரி புராணத்துக்கும் சிறப்புப்பாயிரக் கவி ஒன்று அளித் துளளாா. அது வருமாறு:-

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 27
Մ) է !
ulus tritrapu gara) TTF6örto66î
பங்க னன்புதரு பண்புசேர் விரத ராசசிவ நிசியி னிள் சரித
மிகவி ளங்கிட விளம்பினன் கரத ராசனைய மொழிய ரங்கனருள்
கருணை மாரிசிகர் பருணிதன் வரத ராசன்மறை வாண ராசன் மிகு
மதுர வாசுகவி ராசனே.
அசலாாசன் -இமயம். சிவகிசி - சிவராத்திரி கர தராசு அனைய மொழி எனப் பிரிக்க.
இவரோடு இருபாலைச் சேனகிராய முதலியாரும்
உடன் கற்றவர் என்பர். சிலர் அவர் தங்திையாரென்பர்.
இணுவைச் சின்னத்தம்பிப் புலவர்
இவர் இணுவில் என்னுமூரிலே வேளாளர் மரபிலே ஏறக்குறைய நூற்றறுபது வருடங்களுக்கு முன் பிறந்த வர். இவர் தந்தையார் பெயர் சிதம்பர நாதர். இளமை யிலேயே பாடுஞ் சாமர்த்தியம் வாய்ந்தவர். இவர் ஒல் லாந்த அரசினரிடம் சாதனம் எழுதும் உத்தியோகத்தி லிருந்தவரென்றும், அவ்வுத்தியோகத்கில் நேர்ந்த யாதோ ஒரு பிழை காரணமாகச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டன ரென்றும், அப்போது இவர் அச்சிறைச்சாலையில் கதவு திறக்க தன் வழிபடு தெய்வமாகிய இணுவைச் சிவகாமி சுந்தரியம்மை பேரில் ஒரு பகிகம் பாடினரென்றும் கூறு வர். அப்பதிகத்துள் ஒரு செய்யுள் தருதும்.

Page 24
28 ஈழநாட்டுத் கமிழ்ப் புலவர் சரிகம்
தரவுகொச்சகம் பெற்றவணி யானுனது பிள்ளையுல சோாறிய அற்றமிலாச் செல்வ மருளிவளர்ச் சன்புசர்ராய் இற்றைவரை யுக்தனியே யான்வருந்த வெங்கொளித்தாய் சிற்றிடைமின் னன்னை சிவகாம சுந்தரியே.
இன்னும் இவர், கலிங்கராயன் என்னும் ஒல்லாந்த அரசமந்திரியின் மகனுகிய கயிலாயநாதன் பேரில் பஞ்சவர் ணத்தூது என்னும் ஒரு பிரபந்தம் பாடியுள்ளார். அவற் அறுள்ளும் ஒரு செய்யுள் காட்டுதும் :-
விகாயகர் துதி திங்கண்முக சங்கையுமை திருத்தாட் கன்பு
சேர்ந்தாதி குலக்காலிங் கேந்த்ான் சேயாங் துங்கமிகு கயிலாய நாதன் சீர்த்தி
துலங்கு செஞ்சொற் பஞ்சவன்னத் தூது பாட வெங்கயசே கானையொரு கோட்டாற் ன்ேற
விண்ணவர்சே கானைமலை வேந்தன் மாது பங்கில்வைத்த சந்திரசே கான்று னின்ற
பாராச சேகானைப் பணிகு வோமே.
இச் செய்யுளில் கயசேகரன் என்றது யானைக் கலையை யுடைய கயமுகனை. பரராசசேகரன் என்றது ப்ர ராச சேகரப் பிள்ளையாரென்னும் பெயரைக் குறித்து நின்றது.
இவர் செய்யுட்களை நோக்கும்போது இவரொரு
இலக்கணப் புலவரல்லரென்பது புலப்படுகின்றது.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 29
நெல்லைநாத முதலியார்
இவர் ஏறக்குறைய நூற்றறுபது வருடங்களுக்கு முன்னே யாழ்ப்பாணத்திலே தென்கோவையைச் சார்ந்த இருபாலை என்னும் ஊரிலே இருந்தவர். உயர்ந்த வேளாண்குடி மரபிற் பிறந்தவர். ஞாபக சக்தியில் இணை யற்றவர். இவர் ஞாபக சக்தியைக் குறித்து முன்னுேர் ஒரு கதை கூறுவர். அக்கதை : வணிகர்குலப் பெரும் பிரபுவும் வள்ளலுமாய் விளங்கிய வண்ணை வைத்திய லிங்கச்செட்டியார் மீது ஒரு பிரபந்தம் பாடிக்கொண்டு வந்த செந்திக்கவி என்னும் வடதேயப் புலவர் ஒருவர் செட்டியாரைக்கண்டு தமது கருத்தைத் தெரிவிக்க, செட்டி யார் தம்மாற் கட்டுவிக்கப்பட்ட வண்ணை வைத்தீஸ்வர ஆலய மண்டபமே அக்கவியை அரங்கேற்றுதற்குரிய இடமாக நியமித்து, யாழ்ப்பாணத்துள்ள பல வித்து வான்களுக்கும் திருமுகம் அனுப்பினர். அத்திருமுகத்தை கோக்கிய வித்துவான்கள் பலரும் அம்மண்டபத்தில் வந்து கூடினர். அப்போது நெல்லைநாத முதலியாரும் அங்கு வந்தனர். வந்தபோது அங்கிருந்த வித்துவான் களும், பிரபுக்களும், செட்டியாரும் எழுந்து இவரைச் சன்மானித்தனர். வடதேயப் புலவர் மாத்திரம் எழுந்து இவருக்குச் சன்மானம் செய்யாது இறுமாந்திருந்தனர். பின் செட்டியார் ஆஞ்ஞைப்படி அவ் வடதேயப் புலவர் பிரபந்தத்தைப் படித்தனர். அப்போது செட்டியார் அங்கிருந்த வித்துவான்களுள் சிரேட்டராய் விளங்கிய இவரை நோக்கிப் பிரபந்தம் எப்படி என்று கேட்டனர். இவர் வடதேயப் புலவரின் இறுமாப்பை அடக்க நினைந்து புலவர் பாடியது பழையபாடலே, எனக்கும் ஞாபகமே என்று அப் பிரபந்தச்செய்யுளை அப்படியே ஒப்பித்து விட்டனர். உடனே வடதேயப் புலவர் திகைத்து நாணி

Page 25
30 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
எழுந்து இவரை நமஸ்கரிக் துக் காஞ்செய்க குற்றத்தைப் பொறுக்குமாறு வேண்டிக்கொண்டனர். பின் இவர் செட்டியாருக்கு உண்மைகூறி, அப்புலவருக்கேற்ற சன் மானஞ் செய்யும்படி கூறினர். செட்டியார் வடகேயப் புலவரை நோக்கி, யான் உமக்குச் சன்மானமாக வழங் கும் இப்பணத்தில் பாதி உமது பிரபந்தத்திற்காகவும், பாதி, இப்பிரபந்தத்தைப் படிக்கும்போது ஒரே முறை யில் அவதானித்து, மீள அப்படியே ஒப்பிக்அப் பழம் பாட்டெனக் கூறி உம்மை அவமானஞ்செய்த முதலியார் அவ் வவமானத்தை நீக்கும்பொருட்டு உமக்குத் தந்த தாகவும் தருகிறேன் என்று இரண்டாயிரம் ரூபா
பரிசில் அளித்தனர் என்பது.
இதனுல் இவருடைய ஞாபகசக்தி எத்துணைய தென்பது நாம் அறியக் கிடக்கின்றது. இவர் எவரிடம் கற்றனர் என்பது தெரியவில்லை. சிலர் கூழங்கைத் கம் பிரானிடம் கற்றனர் என்ப. இவர் காலக்கிலே இரு பாலையே ஒரு வித்தியாபீடமாயிருந்தது. கற்போர் பலரும் அங்கேயே போய்க் கற்பர். கவியரங்கேற்று வோரும் அங்கேபோய் இவர் முன்னிலையிலேயே அரங் கேற்றுவர். இவர் காலத்திலே இருந்த யாழ்ப்பாணக் கச்சேரி முதலியார்மீது “இன்பகவி’ என்னும் ஒரு புலவர் பிரபந்தம் பாடிவந்த போதும் இருபாலையிற் சென்று இவர் முன்னிலையில் அரங்கேற்றினர் என்ப. இவர் இலக்கண இலக்கியங்களில் வல்லவராய் இருந்த தன்றி, பாடுவதிலும் வல்லவராய் இருந்தனர். இவர் இயற்றிய நூல்களாயினும், தனிச் செய்யுள்களாயினும், இப்போது கிடைத்த லரிதாயின. இவரும் இவர் புகல்வர் சேணுதிராய முதலியாரும் வறிய மாணவர்களுக்கு அன்னமளித்துக் தற்பித்தனர் என்றும் கூறுப.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 31.
சேனதிராய முதலியார்
இவர் மேற்கூறிய நெல்லைநாத முதலியாருடைய அருந்தவப் புதல்வர். இவர் தமது தந்தையாரிடத்தும் கூழங்கைத் தம்பிரானிடத்தும் மாதகல் சிற்றம்பலப் புலவரிடத்தும் இலக்கிய இலக்கணங்கள் கற்றவர். கூழங்கைத் தம்பிரானிடம் பெருக்தொகைப் பொருள் கொடுத்து நாற்பது நாளையில் நன்னூல் கற்றுணர்ந்தவர். தந்தையார்போல ஞாபகத்திற் சிறந்தவர். ஆங்கில பாஷையும் போத்துக்கேய பாஷையுங் கற்றுணர்ந்தவர். நியாயஸ்தலத்திலே கியாய துரந்தரராகியும் துவிபாஷக சாயுமிருந்து உத்தியோகம் நடாத்தியவர். சிலகாலம் கோவைக் கோவிற்பற்றுக்கு மணியகார தாசில்தார் உத்தியோகம் வகித்தும் இருந்தவர். அக்காலத்திலே கல்வியினன்றி, செல்வம், அதிகாரம், குலம், குணம், ஒழுக்கம், சைவசீலம் முதலியவற்றிலுஞ் சிறந்தவரெனப் போற்றப்பட்டவரும் இவரே. அன்றியும், இவர் தங் காலத்துள்ள வித்துவான்களுக்கெல்லாம் ஒரு சிரோமணி யாயும் விளங்கினர். இவரிடம் நெடுங்காலம் கல்விகற்றுத் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் பலர். அவருள் சிறந்த வித்துவான்களாய் விளங்கினேர், கல்லூர் சரவணமுத் துப்புலவர், தென்கோவை அம்பலவாண பண்டிதர், நீர் வேலி பீதாம்பாப் புலவர் முதலாயினேர். யாழ்ப்பாணத் திலே தமிழ்க் கல்வியையும் சைவ சமயத்தையும் நிலை நாட்டிவைத்த பூரீலழறீ ஆறுமுகநாவலரவர்களும் இவ ரிடங் கற்றவரேயாவர். இவர், அரச உத்தியோகத்தி லிருக்கும்போது ஐரோப்பிய உத்தியோகத்தர்கள் பலர் இவர்பால் தமிழ்க்கல்வி பயின்றுள்ளார்களென அறி கின்முேம், அக்காலத்திருந்த புலவர்களுள் இவரிடம் கல்வி கல்லாதவரும் சந்தேகம் கேட்டுத் தெளியாத

Page 26
t 32 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
வரும் இலர். பொதுப்படக் கூறுகில் அக்காலத்தில் இவராலே யாழ்ப்பாணத்தில் தமிழ் விருக்கி அடைந்த தெனலாம். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் முதலிற் புராணப் பிரசங்கஞ் செய்தவரிவரே. இவருக்குப்பின் அப்பிரசங்கத்தை ; அவர் மாணவர் சரவணமுத்துப் புல வரும், இவர்பின், இவர்க்கும் அவர்க்கும் மாணவராய ஆறுமுகநாவலரும், நாவலர்க்குப்பின் அவர் 1 D/Taຫm auth
ரென் . இவர்
பொன்னம்பலபிள்ளையும் நடாத்தி வந்தன நல்லூர்க் கந்தசுவாமியார்மீது மிகு பக்தி வாய்ந்தவர். அதனுல் அவர்மீது நல்லைவெண்பா, கல்லையங்காகி, 15ல் லைக்குறவஞ்சி முதலிய பிரபந்தங்களும், நீராவிப்பிள்ளை யார்மீது ஒர் கலிவெண்பாவும் பல தனிக் கவிகளும் செய் துள்ளார். தனிக்கவிகள் நல்லூரிலிருந்த தமது ஆபீசி லிருந்து கந்தசுவாமியைத் தரிசனஞ் செய்யச் செல்லும் அவ்வப்பொழுது வழியிலே பாடியன என்பர். மாவிட்ட புரம் சுப்பிரமணியக் கடவுண்மீதும் ஊஞ்சல் பதிகம் முதலியனவும், வேறும் பல தலங்கண்மேல் ஊஞ்சல் பதி கங்களும் பாடினரென்ப. அவற்றுள் நல்லைவெண்பா, பாடங் கேட்டுப் படிப்போாால் பலவாகக் கிரித்து எழு தப்பட்டு தன் சொரூபம் பலவாகக் கிரிவுபட்டது எனினும், அவர் மாணவர் அம்பலவாணபண்டிகரால் . பின்னளில் அது ஒருவாறு கிருக்கி அச்சிடப்பட்டுள்
ளது. ஏனைய நூல்கள் இப்போது அகப்படமாட்டா.
இவருடைய பாடலின் சிறப்பு உணர்தற்காகச் சில காட்டுதும் :-
கல்லை வெண்பா கந்துகமுந், தானைவேற் காளையருங் கன்னியரும் கந்துகமுந், திக்களிகூர், நல்லூரே-சந்திரமா மாவைப் பிழந்தார் மகிழ்பூப்ப வீரையிலோர் மாவைப் பிழந்தார் மனை.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 33
கந்துகமுந்து ஆனவேல் காளையர் - கட்டுத்தறி முரி யும்படி மதத்தால் முற்பட்டுச் செல்லும் யானைப் படையை யுடைய வேல்விார். உந்து - (காலால்) தள்ளுகின்ற எனி னுமாம். கந்துகம்- குதிரையும் பந்தும். சந்திரமாம் மா வைப்பு-பெரிய பொன்னுலகம். சந்திரம்-பொன். விரைகடல். பிழத்தல்-பிளத்தல். ழகர ளகர ஒற்றுமை பற்றிப் பிழத்தில் என்ருர்.
நத்தமூ ருங்கயத்தால் நன்கிளைகொள் பாடலத்தால் சித்தச வேள்போலுந் திருநல்லை-முத்தின் திருத்தணி மாமலையுந் திண்கோட்டிற் காட்டும் திருத்தணிமா மலையான் சேர்வு.
நத்தம் - இருள்; சங்கு, கயம் - யானை ; குளம். கிளை - கிள்ளை ; கொம்பு. பாடலம்-குதிரை ; பாகிரி மரம். முத்தின் திருந்தணி கைம்மா - முத்தினுற் செய்த திருந் திய அணியாகிய கிம்புரியை புடைய யானை. கோடு-உச்சி. தணிகைமலை - செருத்தணிகைமலை. இவர் பாடிய நல்லைக் குறவஞ்சியிலும் ஒன்று காட்டுதும் :-
திருவாரு நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானுர் இருவாலைக் குயத்தியரோ டின்பமுற்ற ரம்மானை இருவாலைக் குயத்தியரோ டின்பமுற்ரு ராமாயின் சருவாரோ சட்டிகுடம் சாறு வைக்க வம்மானை'
தருவார்காண் சட்டிகுடம் சாறுவைக்க வம்மானை.
இருவாலைக் குயத்தியர்-இரண்டு வாலைப்பருவமுடைய மகளிர். குயம்-ஸ்தனம். சட்டி - ஒரு திதி. குடம் - கும்ப மாதம், சாறு-கிருவிழா. இங்கே இருவாலை என்னும் ஊரி அலுள்ள குயத்தியரும், சட்டியும், குடமும், சாறும் தொனித் தல் காண்க. இவர் பாடிய தனிச்செய்யுளுள்ளும் ஒன்று காட்டுதும்:-
5

Page 27
34 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவரீசரிதம்
கொடிவளரு மணிமாடக் கோபுரஞ்சூழ்ால்லூரிற் குமர மூர்த்தி அடியருளத் திருளகல அமரர்முக மலாவா அணிமா னீன்ற கொடியினெடும் பிடியினெடும் குலவுமுடம் பிடியொடுங்கோ
(கண்ட மேர்தி மிடியகல மயிலேறி விடியவந்த தினகரன்போல் மேவி னனே.
இச்செய்யுள் மிகவுஞ் சொற்சுவை பொருட்சுவை நிறைந்ததாய் விளங்குதல் காண்க. இவர் பாடிய ஊஞ்சலி அலும் ஒருசெய்யுள் காட்டுதும் :-
கனகநவ ரத்நமணி மவுலி மின்னக்
கவின்கொணெற்றிச் சுட்டியிளங் கதிர்கள் காலப் பனகமணிக் குண்டலங்கள் பகலை வெல்லப்
பணித்தாளத் தொடைநிலவின் பரப்பை யெள்ள அனகவிடைக் கிரக்கியமே கலைக ளார்ப்ப
அடியவரை யஞ்சலெனச் சிலம்பு மார்ப்பத் தினகரமண்டலமளவு மதில்சூழ் கோவைத்
தேவிதிருக் கண்ணகையே யாடீ ரூஞ்சல்,
இன்னும் மானிப்பாயில் அச்சிடப்பட்ட சுமிழ் அக ராதி தொகுத்தபோது இவரேமுதல்வராயிருந்து கொகுத் தனர் என்ப. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு என்பர். மகன் பெயர் இராமலிங்கமுதலியார். இவர் தமிழ் -நன்கு கற்றவர் என்றும் பிரபுத்துவமுடையவர் என்றும் ஆறுமுக நாவலருடைய முதற்பிரசங்கத்தில்அக்கிராசனகி பதியாய் இருந்தவர் என்றும் கூறுவர். மகளுடைய மகன் கந்தப்பிள்ளை என்பவர். இவர் தமது மாதாமஹராகிய சேனுதிராயரிடம் இலக்கண இலக்கியமும் சமய சாஸ்திரங் களும் கற்றவர்; சிவநேசர்; தருமவான் ;பிரபு; சாங்ககுண முடையவர் எனவும், தாமாகவும் சுன்னுகம் முருகேச பண்
டிதர் வாயிலாக்வும் தம் ஊரிலும் அயலூரிலும் உள்ள

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 35
மாணவர் பலர்க்குத் தமிழ் கற்பித்தவர் எனவும் முகி யோர் சிலர் கூறுவர். உடலுயிர் அமலமடைந்து அருள்வடி வாய் ஞானகாசத்தில்மறைந்து சிவாங்கமாதலே உண்மைச் சைவமுத்தி என நிலைநாட்டிய “ வித்தகம்’ என்னும் பத் கிரிகையின் ஆசிரியரும், கொழும்பு அரசினர் ஆசிரிய கல்லூரியிலும் வித்தியாநிலையத்திலும் தமிழ்ப் பண்டி தராயிருந்தவரும், கவித்துவம் வாய்ந்தவருமாகிய தென் கோவை ச. கந்தையபிள்ளையவர்கள் டிை கந்தப்பிள்ளை யவர்களுக்குத் தெளUத்திரராவர். (தெளஹத்திரன்மகளுக்கு மகன்) இச் சேனுதிராய முதலியார் சிலகாலம் யாழ்ப்பாணம் பெரிய கோட்டில் நீதிபதியாயு மிருந்தன ரென்றுங் கூறுப. இவர்காலம் ஏறக்குறைய நூற்று முப்பது வருடங்களுக்கு முன்னும்.
சந்திரசேகர பண்டிதர்
இவர் ஏறக்குறைய நூற்றைம்பத்துகான்கு வருடங் களுக்கு முன்னே யாழ்ப்பாணத்து கல்லூரிலிருந்த ஆகி சைவப் பிராமண குலத்தவராகிய காராயணபட்டர் என்ப வருக்குப் புத்திரராகப் பிறந்தவர். இலக்கிய இலக்கணங் களிற் சிறந்த பண்டிதர். பழையகவிகள்போலப் பாடுவதிற் சாமர்த்தியம் வாய்ந்தவர். கல்லூர்க்கந்தசுவாமிமீது ஒரு கிள்ளைவிடுதூது பாடியிருக்கின்றர். அது, கருணை வாய் என்னுமூரில் இருந்தவரும் வடமொழி தென்மொழி என் னும் இரு மொழியினும் புலமை படைத்தவருமாகிய பூரீ. கை. நமச்சிவாயதேசிகர் என்பவரால் சென்ற இரத்தாட்சி வருடத்து ஆனிமாதத்திலே அச்சிற் பதிப்பிக்கப்பட்டுள் ளது. அந்நூலின் சிறப்புப்பாயிரத்தினலே அந்நூ லியற் றப்பட்ட ஆண்டு முதலியன அறியலாகும். ஆதலின் அதனை இங்கே தருகின்றம்.

Page 28
36 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சிறப்புப்பாயிரம்
ஆசிரிய விருத்தம் சீர்செறி சகவ்ாண் டாயிரத் தெழுநூற் றெட்டெனச் செறிந்திட விாவும் பேர்பெற மருவும் பாாபவ வருடம்
பிறங்குதை மதியிரு பத்தோ டேர்தரு மொன்பான் றிகதிபொன் வாா
மிசைத்திடுஞ் சோதிகா னிதனிற் சார்தரு நல்லூர் முருகவே ளருளாற்
றருங்கிளித் தூது சொன் னதுவே.
கட்டளைக் கலித்துறை செந்நெற் பழனத் திருல்ேலை வேன் முரு கேசருக்கு வன்னப் பசுங்கிளித் தூதுரைத் தான் சது மாமறைதே ான்னத் தவணிகர் காரா யணனரு ளாலுதித்தோன்
பன்னத் தருபுகழ்ச் சந்திர சேகர பண்டிதனே.
இனி, இவரது கவித்திறமுணர்தற்காக அந்நூலின் காப்புச் செய்யுளை இங்கே தருதும் :-
வெண்பா
விந்தைசெறி நல்லூர் விரும்பியுறுங் கந்தன் பாற் சுந்தாஞ்சேர் கிள்ளை விடு தூதுக்குத் - தங்கவிசைச் சீராம்ப லா னனத்தான் சிந்திக்கு மோர்கோட்டுக்
காாாம்ப லானனத்தான் காப்பு.
ஆம்பலான் - வேங்குழலையுடைய விஷ்ணு. கார் ஆம்பல் - கரிய யானை.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம 37
சுவாமிநாதர்
இவர் ஏறக்குறைய நூற்றிருபது வருடங்களுக்கு முன்னே யாழ்ப்பாணத்து மானிப்பாயிலே செல்வப் பெருமையோடு வாழ்ந்த வேளாண் குடியிலே அருணு சலம்பிள்ளை யென்பவருக்குப் புத்திராாகப் பிறந்தவர். கொழும்பிலே வாழ்ந்து சலாபத்துறையிற் குளிக்கும் முத்துக்கள் முழுவதையும் தாமே யொருங்கு விலைக்கு வாங்கி வாணிகஞ் செய்தமையினலே பிறதேயங்களி னும் தம் பெயர் சென்ற முத்துச்சாமிப்பிள்ளை என்பவர் இவருக்குத் தம்பியாராவர். இலங்கைச் சட்ட நிரூபண சபையிலே அனேக ஆண்டுகளாகப் பிரதிநிதியாக இருந்த ஏலேலசிங்க முதலியார் இவர்புத்திரர். இவர் இளம்பிராயத் கிலே மானிப்பாய் வோகப் பிள்ளையார் கோவிலிலே கந்த புராணம் படித்துக்கொண்டிருந்த பொழுது இராகம் தவ அறுறப் படித்தமையினலே அர்த்தம் சொல்லிக்கொண் டிருந்தவர் இவரைப் பழிக்க, அதனல் இவர் இந்தியாவிற் குப் போய் பல ஆண்டுகளாக சங்கீதம் பயின்று வந்தன ரென்றும், இவர் காலத்திலே மானிப்பாயே சங்கீத வித் தையிற் சிறந்து விளங்கிய தென்றும், பெயர் படைத்த வாச்சியகாரரும் இவர் முன்னிலையில் வாச்சியங்களை இயம்பு தற்கு அஞ்சுவரென்றும் முன்னேர் கூறுவர். சங்கீதம் பாடுவதிலன்றி, நாடகம் பாடுவதிலும் இவர் பெயர் படைத்து விளங்கினர். இவர் பாடிய நாடகங்கள் இராம நாடகம், தருமபுத்திர நாடகம் முதலியன. இவர் காலத் திலும் பிற்காலத்திலும் இவர் பாடிய நாடகங்களே நடிகர் களாற் படிக்கப்பட்டு வந்தன. இவர் குரல் கோகிலத் தின் குரல் போல மிக இனியது என்றும், அதனல் இவர் பாடுவதைக் கேட்கும்படி முதியோரும் சிறுவரும் விரும்பி வருவர் என்றும் சிலர் கூறுப. இவர் பாட்டின் திறமை யறிதற்காக ஒரு செய்யுள் ஈண்டுத் தருதும் :-

Page 29
38 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
ஆண்டுகொண் டவனிமுக லன்றிலங் கையிலுறையும்
அரியரா வணகிசிசரன் அழகுசெறி சீதையைச் சிறைவைக்க ராமனு
யவதரித் திடுமாயவன் தாண்டவனு மான்சென் றறிந்துவர் தேசொலர்
தொடுகடலை யணைகட்டியே * சுக்கிரிப னெடுசே?ன சூழ்ந்திட விலங்கையிற்
ருெகுதியொடு போயடைந்து வேண்டியம ருக்குவரு கம்பியும் பிள்ளைகளும்
வெகுமூல பலமுமழிய விறலிாா வணன் மடிய நொடியிலே சிறைமீட்ட
வீராா கவன்மருகனே மீண்டவன் பிலையெனினு மாண்டுகொண் டிடுமடிமை
மீயருளெ னக்குதவுவாய் நிகரில்தொண் டமனற்றில் நிலவுசந் நிதிமேவும்
நிமலகுரு பாமுருகனே.
சரவணமுத்துப் புலவர்
இவர் ஏறக்குறையத் தொண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னே நல்லூரி லிருந்த மனப்புலி முகலியாருக்கு இரண்டாம் புத்திரராவர். வித்துவ சிரோமணியாகிய இரு பாலைச் சேனுகிராய முதலியாரிடம் பலகாலம் இலக்கிய இலக்கணங் கற்று வித்துவ சிரேட்டராய் விளங்கியவர். வேதாந்த சித்தாந்த நூல்களினுந் தெளிக்க அறிவுடைய வர். தேசமெங்குங் கீர்த்திபெற்று விளங்கிய பூரீலபூரீ ஆறுமுகநாவலாவர்கள் இவரிடம் பலகாலங் கற்றவர். சம்பந்தப் புலவர், கார்த்திகேய உபாத்தியாயர், சிவசம்புப் புலவர் முதலியோரும் இவரிடங் கற்றவர்கள். இவர் வேதாந்த சுயஞ்சோதி, ஆத்துமபோதப் பிரகாசிகை என்னு நூல்களை இயற்றியுள்ளார். நீண்ட ஆயுளோடும் இன்றும் கின்று நிலவுகின்ற உதயதாரகைப் பத்திரிகை

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 39
யிலே களத்தூர் வேதகிரி முதலியாரோடும் வேறு புல வர்களோடும் வாதித்து, இலக்கிய இலக்கண சம்பந்த மாகப் பற்பல விஷயங்கள் எழுதியவர். அரசினர்பால் உத்தியோகம் பெற்றிருந்தவர். நெல்லை வேலவருலா என ஒரு பிரபந்தம் இயற்றியதன்றிப் பல தனிக் கவிகளு மியற்றினவர். இவரியற்றிய தனிக் கவிகளி லொன்றை ஈண்டுத் தருதும் :-
ஆசிரிய விருத்தம்
சுத்திபெற லாம்புத்தி முத்திபெற லாம்பவுத்ா
சுகபுத்தி சாதி பெறலாம் தொலையாத குன்மகய சோகமுத னேய்களொரு
சொல்லிலே சுத்தி பெறலாம் பத்திபெற லாங்குருடு கடன் செவிடு சப்பாணி
பரிசுத்த மாகை பெறலாம் பயமேறு பூதம் பிரேதப் பசாசுகள்
பறந்தோட வெற்றி பெறலாம் சித்திபெற லாஞ்சுத்த வித்தைபெற லாஞ்செயச்
சிற்சொருப மகிமை பெறலாம் சிவயோக மாதிபல வகையோக சாதனச்
சிவபோக திர்ப்தி பெறலாம் சத்திபெற லாஞ்சைவ தர்மலிங் கச்சாமி
சங்கிதி யடைந்து பணிமின் சற்சங்க சகலசன சமயபரி பாலர்காள்
சத்தியஞ் சத்திய மிதே.
இது வேதாரணியத்துத் தருமலிங்க சுவாமிபேரிற் L-1 Ti9t u gb7.

Page 30
20 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
ஏகாம்பரப் புலவர்
இவர் யாழ்ப்பாணத்து உடுப்பிட்டியைச் சார்ந்த வல்லிபட்டித்துறையிலே பரதவ குலத்திற் பிறந்தவர், இவர் தங்தை தாய் பெயர் தெரியவில்லை. அக்காலத்திலே தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கிய சேனகிராய முத லியாரிடத்தும், திருத்தணிகைச் சரவணப்பெருமா ளைய ரிடத்தும் இவர் பாடங் கேட்டவர் என்பர். இவர் கந்த ாந்தாதிக்கு ஒருரை எழுகியுள்ளார். பற்பல தனிக் கவி களும் பாடினவர் என்ப. கவிகள் கிடைக்கில. சேனகி ராயர் காலமே இவர் காலம்.
கார்த்திகேய ஐயர்
இவர் யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்த வேங்கடா சல ஐயருக்குப் புத்திரர். இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் இலக்கியஇலக்கணங்கள் நன்குகற்றவர். தமி ழிலுஞ் சமஸ்கிருதத்திலுமன்றி ஆங்கிலக்கிலுஞ் சிறந்த அறிவு படைத்தவர். வேதாந்த சிக்காந்த நூல்களுக் தேர்ந்தவர். இவர் வண்ணுர்பண்ணையிலே வயித்தீஸ்வர ஆலயத்திலும் பிறவிடங்களிலும் பூரீலபூரீ ஆறுமுக நாவலரோடு பற்பல பிரசங்கங்கள் செய்தவர். இவர் கால
மும் நாவலர் காலமும் ஒன்ருகும்.
சம்பந்தப் புலவர் இவர் யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்த வேலாயுத முதலியாருக்குப் புத்திரர் ஆறுமுகநாவலருக்கு நண்பர். இவர் முன் சேனகிராய முதலியாரிடத்தும் பின் சரவண முத்துப் புலவரிடத்தும் இலக்கிய இலக்கணங்கள் கர்
றவர். சமய நூல்களுங் தேர்ந்தவர். உடுப்பிட்டிச்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 41
சிவசம்புப்புலவரும் புன்னுலைக்கட்டுவன் செந்திநாதை யர் முதலியோரும் இவர்க்கு மாணவர்கள். இவர் கதிர்
காமசுவாமி பேரிற் பல கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
கார்த்திகேயப் புலவர்
இவர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த காரைதீவிலே இருந்த முருகேசையர் என்பவருக்குப் புத்திரர். இவர் தமது தந்தையாரிடம் தமிழும் அவ்வூரிலிருந்த சுவாமி நாத தேசிகர் என்பவரிடம் சம்ஸ்கிருதமும் கற்றுவந்த னர். பின் அவ்வூரிலிருந்த சண்முக ஆசிரியரிடம் சென்று இலக்கிய இலக்கணங்கள் கற்றுவந்தனர். இவருக்கு இள மையிலேயே பாடும் வல்லமையுமுளதாயிற்று. தமது தந்தையார் பாடிய தன்னை யமகவந்தாதியின் குறையை இவரே பாடி நிரப்பினர். தங்தையார் பாடியன எழுபது செய்யுட்கள். ஒழிந்த முப்பதும் இவர் பாடியன. இவர் பாடிய செய்யுட்களுள் முதற் செய்யுளை ஈண்டுத் தரு அதும் :-
* மணிக்கோ கனகத் தருநிதி யாரும் வணங்கிடமா
மணிக்கோ கனகத் தருமாக வன்பர்க்கு வைப்பவனி
மணிக்கோ கனகத் தருவகை யோடருண் மைந்தருன் கார்
மணிக்கோ கனகத் தரும்புகழ்த் தென்றன்னை மன்னவனே.
அக்காலத்திலே நெல் மதிப்பின் பொருட்டும் வேறு முயற்சிகளின் பொருட்டும் இருபாலைச் சேனதிராயமுத லியார் காரைதீவுக்குச் செல்வது வழக்கம். சென்ருல் இவர் வீட்டிலே பதினைந்துநாள் வரையில் விடுதி விடு வதும் வழக்கம். அப்பொழுது இராக் காலங்களிலே தமக்குச் சந்தேகமானவற்றை முதலியாரிடம் கேட்டு இவர் தெளிந்துகொள்வர். இவரது கல்வி விருப்பத்தை யும் கூரிய புத்தியையும் கண்ட முதலியாரவர்கள் இவ ரைத் தம்மூருக் கழைத்துக்கொண்டுபோய் அங்கே பல
6

Page 31
42 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
காலம் இருக்கி அரும்பெரும் இலக்கண இலக்கியங் களைக் கற்பித்து வைத்தனர். அதனுல் இவரும் பெரும் புலவராய்விளங்கினர். பின் இவர் தம்மூரிலே ஒருவித்தியா சாலை தாபித்துத் தாமே ஆசிரியராகவிருந்து கற்பித்துப் பலரைத் தமிழிற் றேர்ச்சி பெறச் செய்தனர். இவருடைய புதல்வர்களும் இவரிடமே கற்றர்கள். இவர்களுள் சிவ சிதம்பரஐயர் கந்தபுராணத்து மகேந்திர காண்டத்துக்
குச் சிறப்பு வாய்ந்த ஒருரை எழுகியுள்ளார்.
இன்னும் இவர் சண்டிலிப்பாயிலிருந்த கார்த்திகே யக் குருக்களிடம் சுத்தவாதுளம் மிருகேந்திரம் முதலிய ஆகமங்களைக் கேட்டு அவ்வாகம நூலறிவினுஞ் சிறந்த
வாாய் விளங்கினர்.
மேலும் இவர் சிதம்பர தலஞ் சென்று அங்கே சில காலம் வசித்தபொழுது திருத்தில்லைப் பல்சந்தமாலை என்று ஒரு பிரபந்தம் பாடினர். அன்றியும் யாழ்ப்பா ணத்திலே நடந்த ‘இலங்கை நேசன்', 'உதயபானு’, ‘விஞ் ஞானவர்த்தனி என்னும் பத்திரிகைகண்மீது தனித் தனி சிறப்புக் கவிகளும் பாடியுள்ளார். அவற்றுள், *உதயபானு 'ப் பத்திரிகை மேற் பாடிய சிறப்புக் கவியை ஈண்டுத் தருதும் :-
தாரகைகண் மறையத்துண் மதிசாய்ந் தோடத்
தடுத்தெதிர்வஞ் சரையNத்துத் தங்கு மந்த காாலிரு எளினையோட்டி வெளிய தாக்கிச் சந்தேக மின்றியுறு பொருளை யாரு மோரவே தெரிந்துண்மை யினையு ணர்த்தி
யுலகமெங்குஞ் சென்றெவரு முவந்து போற்றச் சேருதய பானுவினை யவனி மீதிற்
றிகழுதய பானுவெனச் செப்ப லாமே.
* விஞ்ஞான வர்த்தனி' என்னும் பத்திரிகைமேற் பாடிய சிறப்புக் கவியையும் ஈண்டுத் தருதும் :-

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 43
மயக்கந்தீ ராகமநூல் யாவும் பார்த்து
மனமதனைப் புலன்வழிசெல் லாமற் பேர்த்துத் தயக்கரிய மார்க்கவிரு டன்னைத் தீர்த்துச்
சற்சனருக் கிடுக்கணுரு தருளைக் கூர்த்துப் பயக்கவரு மான்புகழைச் சொல்லி யார்த்துப் பாங்கான முத்திவழி யதனிற் சேர்த்து வியக்கவுறு மெய்ஞ்ஞானி தனைப்போற் பாரின்
மெய்ஞ்ஞான வர்த்தினியு மேவிற் றன்றே.
ஒருமுறை இவரும் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்க ளும் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்பொழுது யவர்கள் இவரின் கவிபாடும் வன்மையைச் சோதிக்க விரும்பிப்போலும், கற்றைச் சடையுடைத் தேவே கயி லைக் கறைக் கண்டனே' என்னும் இறுதியடியைக் கொ டுத்து முன் மூன்றடியையும் பாடி நிரப்புமாறு சொற்ற னர். இவரும் அதற்குடன்பட்டு, முன் மூன்றடிகளையும் இயற்றி அக் கலித்துறையை கிாப்பினர். அக் கலித்து றைச் செய்யுள் வருமாறு:-
* எற்றைக்கு முன் னடி பேணும் வாமே யெனக்கருள்வை பற்றைக் களைந்திடு ஞானிகள் போற்றும் பழம்பொருளே பெற்ற முகைத்திடு மங்கையொர் பங்க பிறையுலவுங் கற்றைச் சடையுடைத் தேவே கயிலைக் கறைக்கண்டனே.”
என்பது.
இத்த்கைய புலவர் தேகவியோகமடைந்தபோது
இவர் தேகவியோகத்தைக் குறித்துச் சி. வை. தாமோ
தரம்பிள்ளையும் திருமயிலை வித்துவான், சண்முகம்பிள்ளை
தலாயினுேரும் பல கவிகள் பாடியுள்ளார்கள்.

Page 32
44 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
முத்துக்குமார கவிராசர்
இவர் ஏறக்குறைய நூற்றுமுப்பது ஆண்டுகளுக்கு முன் உடுவிற்பகியிலே, வேளாளர் குலத்திலே சந்திர சேகர மாப்பாணர் மரபிலே அம்பலவாணபிள்ளை என்ப வருக்குப் புதல்வராகப் பிறந்தார். சுன்னகம் அ. குமார
சுவாமிப் புலவர் இவருக்குப் பெளத்திார்.
இவர் கவிபாடும் வன்மையில் மிகச் சிறந்தவர். இவர் கவிகளைக் கேட்டுணர்ந்த கற்றேர் பலரும் இவ ரைக் கவிராசர் என்று வழங்கி வந்தார்கள். அங்கில திரா விட பண்டிதராய், அதிகார புருடராய்ப் பிரசித்திபெற்று விளங்கிய, சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களுக்குத் தமிழாசிரிய ரிவரே. பிள்ளையவர்கள் தமது நூற்பதிப் புரைகள் எல்லாவற்றிலும் குருவணக்கமாக இவருக்குக் கூறியிருக்குக் துதியே அதற்குச் சான்முகும். அவற்று ளொரு ஆகிச் செய்யுளை ஈண்டுத் தருதும் :-
இலக்கண விளக்கப் பதிப்புரை
1 திங்கள் தங்கிய செஞ்சடை முடியினன் றிருத்தாட்
பங்கயங் கயிலாய நாதனை முனிப் பழிச்சிச் சங்க மங்களத் தமிழ்முத்துக் குமாான்றன் மலர்ப்பா தங்கள் வங்கமாத் தமிழ்க் கடலிடைப் படிகுவனே."
இவராற் செய்யுள் வடிவாகச் செய்யப்பட்ட நூல் களும் பலவுள. அவற்றுள் யேசுமதபரிகாரம், ஞானக் கும்மி யென்னு மிரண்டுமச்சிடப்பட்டுள்ளன. இவற்றுள் ஞானக்கும்மியைக் கண்டித்து அஞ்ஞானக் கும்மியென வொன்றைப் பிற்காலக் கிறிஸ்தவரொருவரியற்றி வெளி யிட்டனர். அதைக் கண்டித்துச் சிலம்புநாதபிள்ளை யென் பவர் "அஞ்ஞானக் கும்மி மறுப்பு’ என ஒரு நூலியற்றி வெளியிட்டனர்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் , 45
கவிராசர் அவர்களாற் பாடப்பட்ட தனிப் பாடல்கள் எண்ணிறந்தவென்றும், யாவரும் விரும்பிக் கேட்டுக் கேட்டுப் பாடம்பண்ணிக்கொள்வர் என்றும் முதியோர் சிலர் கூறுவர். ஒன்றேனுமேட்டிலெழுதப்படவில்லை. அக் கவிகளை இவரிடங் கேட்டுப் பாடஞ் செய்திருந்த முகி யோர் சிலர்பாற் கேட்டுச் சுன்னகம் குமாரசுவாமிப்புலவ ரவர்கள் எழுதி, ‘முத்தக பஞ்ச விஞ்சகி என்னும் பேரோடு புத்தக ரூபமாக அச்சிட்டனர். அப்புத்தகம் இருபத்தைந்து செய்யுள்களையுடையது. செய்யுளிற் சில தில்லை நடராசமூர்த்திமேற் பாடப்பட்டன. சில மாவிட்ட புரம் சுப்பிரமணியசுவாமி மேலன. சில நல்லூர்ச் சுப்பிர மணியசுவாமி மேலன. விநோதமான அச் செய்யுள்களுள்
ஒன்றைத் தருதும் :-
* மல்லாக மாதகலான் மருகன்சுன் னகத்தான்
மகன்பா வாணர்
சொல்லாச்சி ரீவினையான் துன்னலை யானத்தான்
சுரும்ப ரோதிச்
சில்லாலை யிருள்வென்ற குறக்கொடி கா மத்தானைச்
சிகண்டி மாவூர்
வல்லானை மாவிட்ட புரநகரத் திடைப்பவனி
வாக்கண் டேனே."
இது மாவிட்டபுரக் கந்தசுவாமி பவனி வருதலைக் கண்ணுற்றபோது கூறிய ஆசிரிய விருத்தம். இதன்கண் 15ாமாந்தரிதையென்னும் பிரகேளிகை அமைக்கப்பட் டிருக்கிறது. பிரகேளிகையாவது, கருதிய பொருளை ஆழ்ந்து கிடக்குமாறு மறைத்துவைத்து வெளிப்படை யிலே வேருெமுன்முகத் தோன்றும்படி விநோதமுறச் செய்யப்படுஞ் செய்யுள். நாமாந்தரிதையாவது கருகிய பொருளை வேறு நாமங்களிலே மறைத்துவைப்பது. மல் லாகம், மாதகல், சுன்னுகம், ஈவினை, துன்னலை, சில் லாலை, கொடிகாமம் என்னும் ஊர்ப்பெயர்கள் எழும்

Page 33
46 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கருகிய பொருளை மறைக்கிருக்கும் நாமாந்தாங்கள். இங்கே மறைத்துவைக்கப்பட்ட பொருளையுங் கூறுதும் :-
மல்லாக மாதகலான் மருகன் - வலிய மார்பிலே பூரீ தேவியகலாகிருத்தலையுடைய நாராயணக் கடவுளுக்கு மருகன். சுன்னுகத்தான்-கைலைமலைவாசராகிய சிவன். சுல் - வெள்ளி, நாகம் - மலை. சீரீவினையான் - செல்வங்கொடுக் குஞ் செயலுடையவன், அன்னுலையானத்தான் - மன்ம தன் மைத்துனன், சில்லால் ஐ இருள்வென்ற - தகட் டணியால் வியக்கப்படுமிருளையும் வென்ற, குறக்கொடி
காமத்தான் - வள்ளி நாயகியின்மேல் விருப்புடையவன்.
சேதுபுராணக் கதையொன்று கொண்டு சகத்திரா ணிக நாடகம் என்னும் ஒரு நாடகத்தையும் இக் கவிரா சர் பாடினரென அறிகின்றேம்.
சிதம்பரப்பிள்ளை (உவில்லியம் நெவின்ஸ் )
இவர் யாழ்ப்பாணத்திலே சங்குவேலி யென்னும் ஊரிலே வேளாண் குலத்கிலே முத்துக்குமாரபிள்ளை என்பவருக்குப் புத்திரராகப் பிறந்தவர். இவர் சாலி வாகன சகாப்தம் கஅகO-ம் ஆண்டுவரையில் இருக்தவர். இவர் இந்துக்கல்லூரியிற் பல காலம் பிரதமாசிரியரா யிருந்தவரும், இலங்கை அரசாங்கசபை அங்கத் கினரில் ஒருவராயிருந்தவருமாகிய பூரீமான் கெவின்ஸ் செல்வத்துரைப்பிள்ளை அவர்களுக்குத் தங்கையார். வடமாகாண வித்தியாதரிசியாயிருந்தவரும், கொழும்பு வித்தியாகங்தோரில் இப்பொழுது உபவித்கியாகிகாரியா யிருப்பவருமாகிய பூரீமான் உவாட்சன்துரை அவர்களுக் குத் தாதைதன்முதை (பாட்டன்) யாவர். இவர் இளமை யிலே ஆங்கிலங் கற்று, அகிலுள்ள தர்க்க நூலிலும்,

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 47
கணித நூலிலும் சிறந்த அறிவுபடைத்தவராய் விளங் கினர். தமிழிலும் இலக்கணஇலக்கியங்கள் கற்றுச் சிறந்த புலமையடைந்தவர். இயற்கையிலேயே குசையி லுங் கூரிய நுண்மதி படைத்தவர். யாழ்ப்பாணக் கல் ஆாரி முதலிய சில வித்தியாசாலைகளில் ஆசிரியராக விருந்து கற்பித்தவர். ஆங்கிலத்திலும், வடமொழி தென் மொழிகளிலும் அரிதுணர் சொற்கள் பல அறிந்தவர். ஆங்கிலமொழியைத் தமிழிற் பெயர்க்குங்கால், அவற் றிற்குப் பொருளாலே கன்கியையும் தமிழ்ச்சொற்களை யும், வடசொற்களையுங் தெரிந்தெடுத்துச் சேர்த்து வாக் கியங்களைத் தொடுக்கும் வன்மையுடையவர். ஆங்கில மொழிகளுக்குச் சமமான தமிழ்மொழிகளை ஆராய்க் தெடுத்துக் கற்பவர் நன்குணருமாறு ஆங்கிலமுங் தமிழு மாக அகராதியும் ஒன்று செய்தவர். வின்திலோ அக ராதி எழுதுங்கால், அதற்குங் துணைசெய்தவர். ‘இலங்கை நேசன் முதலிய பத்திரிகைகளில் பல அரிய விஷயங்கள் எழுதினவர்.
பாடசாலைக் கணிதம் என்னும் விஷயத்திலே ஒன் பது என்னும் சொல் சங்கியான முறைக்கு மாமுய் நிற்ற லால், ஒன்பது என்பதற்குச் சமமான பொருளுடைய தொண்டு என்பதை ஒன்பது கின்ற இடத்திலே வைத் தும், பின்னும் ஒன்பது என்பது வரும் பத்தொன்பது, இருபத்தொன்பது முதலியவைகளைப் பதின்தொண்டு, இருபதின்தொண்டு, முதலியனவாகக் கொண்டும், தொண் ணுாறு என்பது கிற்குமிடத்திலே, எழுபது எண்பது என்பனபோலப் பத்து என்பதன் விகாரமாகிய பது என்பது பின்னே தோன்ற தொண்பது என்பதை வைத் தும், தொள்ளாயிரம் என்பது நிற்குமிடத்திலே எழுநூறு எண்ணுாறு போல, நூறு என்பது பின்னே தோன்ற தொண்ணுறு என்பதை வைத்தும் முடித்தலே பொருத்த மெனவும் எழுதினவர்.

Page 34
48 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
கற்பவர் பொருட்டுப், பாரதம் இராமாயணம் (ւՔ5 லிய இலக்கியங்களிலிருந்து சிறந்த சில கவிகளைத் கிாட்டி இலக்கிய சங்கிரகம் என ஒரு நூலையும், ஆங்கிலத்திலுள்ள தர்க்கவிதிகள் சிலவற்றைத் தமிழிற் பெயர்த்துப் பாட் டும் உரையுமாக நியாய இலக்கணம் என ஒரு நூலும் இயற்றி அச்சிட்டு வெளிப்படுத்தினவர். நியாய இலக்கண நூலின் இறுதியிலே சித்தியார் கூறும் அளவைகளை யும் சேர்த்து விளக்கினவர். இவையன்றி இலக்கணவிதி கள் சிலவற்றைத் திரட்டித் தமிழ் வியாகரணம் என ஒரு நூலும் எழுதின வர். இந் நூலின் மூன்ரும் பருவ மாகிய வசன இலக்கணம் வாக்கியங்களை எழுதுவோர்க் குப் பெரிதும் பயன் தருவதாகும். இதில், முடிப்பு என் னும் பகுதியில் சில பதங்களைப் பிரித்துக் கூறிய தாதுக் களை நோக்குமிடத்து, இவருக்குப் பிற்காலத்திலுள்ளவர் சில பதங்களைப் பிரித்துத் தாதுகாட்டி, நூல்கள் எழுது வதற்கு வழிகாட்டினவர் இவரே என்று சொல்லலாம். இவர் கவியியற்றும் சாமார்க்கியமுமுள்ளவர். அதனை உணரும் பொருட்டு அவரியற்றிய நியாய இலக்கண நூலி லுள்ள கவிகளுள் ஒன்றை இங்கே தருதும் :-
*உலகம் புகழு நியாய லக்கணம் யுத்தியதன்
கலைவித்தை யென்ப நியாய கடைபினுக் காதாாமாய் லேவுமி லக்கண மேதெளியுங்கலை வித்தையென்ப தலமின்று புந்தி யனுமிக்க வேவிதி யாய்ந்திடுமே.”
இவர் பல தனி நிலைக் கவிகளுஞ் செய்தவர்.
அம்பலவான பண்டிதர்
இவர் ஏறக்குறைய கஉடு-வருடங்களுக்கு முன்னே கோப்பாய் என்னும் ஊரிலே அருளம்பலமுதலியாருக் குப் புதல்வராகப் பிறந்தவர். சேனதிராசமுதலியாரிடம் தமிழிற் பல நூலுங் கற்றவர். பாரதம், இராமாயணம்,

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 49
இரகுவம்சம் முதலிய பெருங் காப்பியங்களிலும் கோவை அந்தாகி உலா முதலிய பலவகைச் சிறு காப்பியங்களி லும் பயிற்சியுடையவர். காவிய சாத்திர விநோதத்தாற் பெரிதுங் காலங் கழித்தவர். சேனகிராசமுதலியார் பாடிய நல்லைவெண்பா, நீராவிக்கலிவெண்பா என்பவைகளைப் பரி சோதித்து அச்சிட்டவர். இவருடைய கல்விப்பெருமை, செல்வப்பெருமை, வாக்குவன்மை முதலியவைகளை இவர் மீது சி. வை. தாமோதரம்பிள்ளை பாடிய சாமகவிகள் விளக்கும். அவற்றுள் ஒரு செய்யுளைத் தருதும் :-
தெல்லி நகரங் திருவிழந்த தோதமிழ்மா தில்லந் தனையின் றிழந்தனளோ-சொல்லரிய வித்தார வாய்மை விறலம் பலவாணன்
செத்தானென் முரோ சிவா.
இவருடைய மரபில் வந்தவர்கள் இன்றும் சைவ சமய ஒழுக்கமும் தெய்வபக்தியு முடையாாய் வாழு
கின்றனர்.
பீதாம்பரப் புலவர்
இவர் ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன்னே நீர்வேலியிலே வேளாண்குலத்திற் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் சண்முகம்பிள்ளை. அவர் ஊர் மானிப்பாய். இவர் தாயார் ஊரே நீர்வேலி. இவர் தெல்லிப்பழையிலே அமெரிக்க மிஷனல் தாபிக்கப்பட்ட ஆங்கில வித்தியாசாலையிலே சிறிது காலம் ஆங்கிலம் கற்றனர். பின் அதனை விடுத்து இருபாலைச் சேனுதிராய முதலியாரிடம் சென்று தமிழ் இலக்கண இலக்கியங் களைக் கற்றனர். கற்று அவற்றில் மிகச் சாமர்த்திய முடையராயினமையன்றிப் பாடுதலிலும் மிகச் சாமர்த்திய
7

Page 35
50 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
முடையராயினர். இவர் பாடிய பிரபந்தங்கள் மறைசைக் கலம்பகம், மறைசைத் திருப்புகழ், நீர்வை வெண்பா, வல்லிபுரநாதர் பதிகம் முதலியனவாம். இவர் பாடற் றிறமறிய மறைசைக் கலம்பகத்திலும், வல்லிபுரநாதர் பதிகத்திலும் ஒவ்வோர் செய்யுள் முறையே தருதும் :-
மறைசைக் கலம்பகம் மேவுமலை மானை விழைவோ டிடம்வைத்து வாவுமலை மானைமுடி வைத்தவா-கா வகமேல் வந்துவழங் கும்மறைசை வானவா வாழ்த்தெனக்கு வந்து வழங் குன்ருரண் மலர்,
மலைமான் - உமாதேவி, வாவும் அலைமான் - கங்கை, வந்து - காற்று. மறைசை - வேதாரணியம்.
வல்லிபுரநாதர் பதிகம்
தேமேவு மாலயன் றேடியங் காணுத
சிற்பாற் குளியமலையைத் கோா தகங்தைகொடு பாரோ டெடுத்திடுஞ்
செப்பரிய திறனிருதனைப் பூமேவு சுராசுரர் பொற்பொடு துதிக்கவே V பூவைகுல திலகனகிப்
போாகத் திருபது சிாங்களு முருண்டிடப்
பொருதபுய பலராமனே கார்மே வாங்கம் பொருந்து கா குத்தனே காமனைப் பெற்றகண்ணு காசினி விசும்பங்கி கமலமா லானவா
கம்பேறு கையினனே மாமேவு முல்லைசெறி மார்பனே மாயனே
மகிழ்வினுட னென்னையாள்வாய் வல்லிபுர நகர்வாச வல்லிகித ரிடைவனச
வல்லிமகிழ் நேயமாலே.

ஈழ5ாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 51
ஆறுமுக நாவலர்
இவர் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காக்த வேளாள வருணத்திலே பாண்டி மழவர் குடியிலே ஞானப்பிரகாசசுவாமி மரபிலே சாலிவாகன சகாப்தம்
தனசடு-க்குச் சமமான சித்திரபானு வருஷம் மார்கழி
மாதம் டு-ந் திகதி புதன்கிழமை இரவு சிங்க லக்கினத் திலே பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் கந்தப் பிள்ளை. காயார் பெயர் சிவகாமிஅம்மை. இவர் தொடக் கத்திலே கல்லூரிலிருந்த சுப்பிரமணியபிள்ளை என்பவ ரிடத்திலே தமிழ் நெடுங்கணக்குப் பயின்று பின் அவ ரிடத்தில் மூதுரை முதலிய நீதி நூல்களும் நிகண்டு முதலிய கருவி நூல்களும் கற்றுவந்தனர். , கற்றுவருங் காலத்தில் இவரது ஞாபக சக்கியையும் கல்வித்திறமை யையுங் கண்ட இவருடைய தமையன்மார், இவரை அக்காலத்து வித்துவ சிரோமணியாய் விளங்கிய இரு பாலைச் சேனகிராய முதலியாரிடம் இலக்கிய இலக்கணங் களைக் கற்கும்படி அனுப்பினர்கள். இவர் அவரிடம் சென்று இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்று வந்தனர். அவருக்குப் பின் அவர் மாணவர் 15ல்லூர்
சரவணமுத்துப் புலவரிடம் கற்றனர். இவருடைய
தமிழ்ப் புலமையைக் கண்டு மகிழ்ந்த தமையன்மார் இவருக்கு ஆங்கிலப் புலமையையும் அடைவிக்கும்படி கருதி இவரைப் பிற்றர் பார்சிவல்’ என்னும் பாதிரியா ருடைய ஆங்கில வித்தியாசாலைக்கு அனுப்பினர்கள். இவர் அங்கே போய் ஆங்கிலங் கற்று அகினுஞ் சிறந்த புலமை அடைந்தனர். இவருடைய இருபாஷைப் புலமை யையுங் கண்ட பாதிரியார் இவரை அவ்வித்தியாசாலை யிலே இருமொழியையுங் கற்பித்தற்குரிய ஒர் ஆசிரிய சாக்கினர். ஆசிரியராகிய இவரும் அங்கே பாதிரியார்

Page 36
52 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
விரும்பியவாறு இருமொழியையும் கற்பித்து வந்தனர். வரும்போது இவர் ஆங்கிலக்கிலுள்ள விஷயங்களை மொழிபெயர்த்துக் தமிழில் உரைநடையாக எழுதுவ கில் வல்லவரென்பதையறிந்க பாதிரியார் இவரை ஆங்கிலத்திலுள்ள பைபிளைக் கமிழில் மொழி பெயர்த்துத் தரும்படி வேண்டினர். இவரும் அ தற்கு உடன்பட்டு அதனை மொழிபெயர்த்து நன்மு ன செங் தமிழில் உரை நடையில் எழுகிக் கொடுத்தனர். இவர் பைபிளை மொழிபெயர்த்த காலத்திலே சென்னையிலும் சிலர் அதனை மொழிபெயர்த்தனர். அவற்றினும் இவர் மொழிபெயர்ப்பே சிறந்ததென்று மதிக்கப்பட்டது. பாதிரியாரும் இவர் மொழிபெயர்ப்பையே அச்சிட்டு எங்கும் பரப்பினர். அக்காலங் தொடங்கி உரைநடை எழுதுவதில் இவருக்கு ஒப்பவர் இல்லை என்னும் பெயர் எங்கும் பரவலாயிற்று. இவர் பைபிளை மொழிபெயர்த்த காலத்தில் அகில் நன்கு பயின்றிருந்த உணர்ச்சியே, பின்னர் இவர் கிறீஸ்துமத கண்டனஞ் செய்வதற்கும் எழுதுவதற்கும் உதவியாயிற்றுப்போலும். தமிழிலும் ஆங்கிலத்திலுமன்றி சமஸ்கிருதத்திலும் இவருக்கு அகி கம் பயிற்சி உண்டு.
இவர் பீற்றர் பார்சிவல் பாதிரியாருடைய ஆங்கில வித்தியாசாலையிலே படிப்பித்து வருங் காலத்திலே தமிழ் மொழியையும் சைவசமயத்தையும் வளர்க்க விரும்பிச் சில பிள்ளைகளைச் சேர்த்து அவர்களுக்குக் கருவி நூல்களை யும் சமய நூல்களையும் பிற்பகலிலும் இரவிலும் கிரம மாகக் கற்பித்து வந்தனர். அப்போது இவரிடம் படித்த வர்கள் சதாசிவப்பிள்ளை, நடராசையர், விசுவநாதையர், சு வழிநாதையர்,ஆறுமுகப்பிள்ளை, கந்தசுவாமிப்பிள்ளைன் ஆறுமுகச்செட்டியார் மு த லா யி னே ர். இவர்களுள் சதாசிவப்பிள்ளை, நடராசையர், ஆறுமுகப்பிள்ளை யென்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 53
பவர்கள் சிறந்த வித்வத்தன்மை அடைந்தவர்களாய் விளங்கினர். இவர்களுள்ளும் சதாசிவப்பிள்ளையே இவ
ருடைய தருமங்களைப் பரிபாலித்து வந்தவர்.
இவர்களுக்குப் பின் இவரிடம் கற்றவர்கள் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பலபிள்ளையும், மா. வைத்திய லிங்கபிள்ளையும் முதலாயினுேர். இவர்களுள் ச. பொன் னம்பலபிள்ளை இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அறிஞர்களால் மதிக்கப்பட்ட பிரபல வித்துவானுய் விளங்கினர். மற்றை வைத்தியலிங்கபிள்ளை என்பவர் இவராற் ருபிக்கப்பட்ட வண்ணுர்பண்ணை வித்தியாசாலை யிலே தலைமை உபாத்தியாயராய் நீண்டகாலமாக இருந்து படிப்பித்து வந்தனர்.
இவர்களுக்குப் பின் இவரிடம் கற்றவர்கள் தர்க்க குடாரதாலுதாரி வை. திருஞானசம்பந்தபிள்ளையும், சிதம் பாத்திலுள்ள இவருடைய சைவப்பிரகாச வித்தியாசாலை யிலே உபாத்தியாயராயிருந்த ச. பொன்னம்பலபிள்ளையும், வை. விசுவநாதபிள்ளையும், வண்ணுர்பண்ணையிலுள்ள இவருடைய சைவப்பிரகாச வித்தியாசாலைக் கதிபரா யிருந்து இற்றைக்குச்சிலமாதங்களுக்குமுன் தேகவியோக மடைந்த, த. கைலாசபிள்ளையும் முதலாயினேர். இவர் களும் இவரிடம் படித்துச் சிறந்த வித்துவான்களாயினர். இவர் கற்பிக்கத் தொடங்கிய காலத்திலேயே, பாதிரி மாருடைய முயற்சியினலே யாழ்ப்பாணத்திலே கிறீஸ்து மதம் வளர்ச்சி அடைவதையும் சைவமதம் குன்றுவதை யும் கண்டு பொருதவராய் சைவ மதத்தை விருத்திசெய்ய விரும்பிச் சைவ சாஸ்திரங்களைத் தேடிக் கற்றுச் சைவப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினர். இவர் முதலிற் பிரசங்கஞ் செய்ய த் தொடங்கியது வண்ணுர்பண்ணைச் சிவன்கோயில் வசந்த மண்டபத்திலேயாகும். அங்கே

Page 37
54 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
பிரசங்கஞ் செய்து வருவதற்கு நல்லூர் வேங்கடாசல ஐயர் குமாரர் கார்த்திகேச ஐயரையும் ஒருவராக நிய மித்துக் தாமொருமுறையும் அவரொருமுறையுமாகப் பிரசங்கஞ் செய்துவந்தனர். இவர் பிரசங்கத்தைக் கேட்க விரும்பி யாழ்ப்பாணத்திலுள்ள பற்பல ஊர்களினின்றும் அறிஞர்கள் வருவார்கள். அவர்களுட் சிலர் இவரை அழைத்துக்கொண்டுபோய் தம்மூர்களிலும் சைவ மத விருத்தியின்பொருட்டுப் பிரசங்கஞ் செய்வித்தார்கள். அப் பிரசங்கங்களாலும் வண்ணுர்பண்ணையிற் செய்துவந்த பிர சங்கங்களாலும் சைவமதம் மேலோங்கி வளர்வதாயிற்று. அகனல் இவர் புகழும் எங்கும் பரவலாயிற்று. கிறீஸ்து மதப் பிரவேசஞ் செய்ய விரும்பிய அநேகர் இவர் பிரசங் கங்களைக் கேட்டு அதனை ஒழித்தனரென்முல், இவர் பிரசங்க வன்மையும் நன்மையும் எத்துணையவென்பதை நாம் சொல்லவும் வேண்டுமா? யாழ்ப்பாணக்கிலே பாகிரி மாரால் சைவத்துக்கு நேர்ந்த கேடுகள் பலவற்றையும் நீக்கிச் சைவத்தை யாழ்ப்பாணக்கில் நிலைபெறச்செய்தவர்
இவரென்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். இவர் பிறந் نمي கிலரேல் யாழ்ப்பாண முழுவதும் கிறிஸ்துமதமே பாவு மென்பது நிச்சயம்.
இவர் தமது பிரசங்கக்கால் சைவ சமயத்தை விருத்தி செய்துவரும்போது, கமிழ்க் கல்வியையும் விருத்திசெய்ய விரும்பி, வண்ணுர்பண்ணையிலே கலி யப்தம் சகூடுO-க்குச் சமானமான கீலக வருஷம் ஆவணி மாதம் டு-ந் திகதியில் சைவப்பிரகாச வித்தியா சாலை என்னும் பெயரோடு ஒரு விக்கியாசாலையைத் தாபித்துத் தாமும் அதில் ஒர் ஆசிரியராகவிருந்து இலக் கிய இலக்கணங்களையும் சமய நூல்களையும் கற்பித்து வந்தனர். அக்காலத்து இவரிடம் படித்தவர்கள் மேற்
காட்டியவர்களுள் :- கிருஞானசம்பந்தபிள்ளை, கைலாச

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
பிள்ளை முதலாயினேராவர். இவ் வித்தியாசாலையைத் தாபித்த பின்பு சிதம்பரத்திலும் ஓர் வித்தியாசாலையைத் தாபித்தனர். இவ்விரண்டும் இப்போதும் நன்கு கடை பெற்று வருகின்றன.
வண்ணுர்பண்ணையிலே வித்தியாசாலையைத் தாபித்த, பின்னர்த் தம்மால் புதிதாக இயற்றப்படுவனவும் கிருத் தப்படுவனவுமாகிய புஸ்தகங்களையும் தம்மால் எழுதப் படும் துண்டுப் பத்திரிகைகளையும் அச்சிட்டு வெளிப் படுத்தும்படி ஒர் அச்சியந்திரசாலையையும் தாபித்தனர். அவ் வச்சியந்திரம் தமது வேலைக்குப் போதாமையினலே சிலவாண்டுகளின்பின் அதனை விற்றுவிட்டுச் சென்னை யிலே இப்போதும் கடந்துவருகின்ற அச்சியந்திரசாலை யைத் தாபித்தனர்.
இவரால் புதிதாக இயற்றப்பட்ட நூல்களாவன :- முதற் பாலபாடம், இரண்டாம் பாலபாடம், நான்காம் பாலபாடம், முதற் சைவ வினவிடை, இரண்டாம் சைவ வினவிடை, இலக்கண வினவிடை, இலக்கணச் சுருக்கம், பெரிய புராண வசனம், கிருவிளையாடற் புராண வசனம், சிதம்பர மான்மியம், கோயிற்புராணவுரை, சைவசமய நெறியுரை, நன்னூற் காண்டிகையுரை முதலாயின.
இவரால் கிருத்தப்பட்ட நூல்களாவன :- கந்தபுரா ணம், பெரியபுராணம், சேதுபுராணம், திருக்குறள் பரி மேலழகருரை, திருக்கோவையுரை, தொல்காப்பியம் சேன வரையருரை, இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் குத்திர விருத்தி, பிரயோகவிவேகம், தருக்கசங்கிரகவுரை, நன்னூல் விருத்தியுரை முதலாயின. இன்னும் கிறிஸ்து மத கண்டனங்களும் பிறவும் இவரால் எழுதப்பட் டுள்ளன.

Page 38
56 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
இவற்றுள் கிருக்குறள் பரிமேலழகருரை, கிருச் சிற்றம்பலக்கோவையுரை, தருக்கசங்கிரகவுரை முதலா யின இராமநாதபுரம் பூரீமாங். பொன்னுசாமித் தேவ ாவர்கள் விரும்பியவாறு அவர் உதவிய பொருள் கொண்டு இவராற் பதிப்பிக்கப்பட்டன. இந்நூல்களுக்கு இவர் நண்பராய் விளங்கிய திருவாவடுதுறை ஆதீனத்து மகா வித்துவான் மீனுட்சிசுந்தாம் பிள்ளையும் பிறரும் சிறப்புக் கவிகள் அளித்துள்ளார்கள். அக்கவிகளுள் மீனுட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இவரைப் புகழ்ந்து மிகப் பாராட்
டிக் கூறிய சில கவிகளை இங்கே காட்டுதும் :-
* மன்னுபெருந் தமிழ்ப்பாடை யிலக்கணமு மிலக்கியமும்
வரம்பு கண்டோன் பன்னுசிவ புராணங்கள் பலதெரிந்தோன் சிவாகமநாற்
பாவை மூழ்கி உன்னுமனு பூதியெனும் விலைவரம்பி லாமணிகை
யுறக்கொண் டுள்ளான் இன்னுருய குணத்தினனுய் சைவமெனும் பயிர்வளர்க்கு
மெழிலி போல்வ்ான்.”
* மீடுபுகழ்த் திருக்கேதீச் சாந்திருக்கோ னசலமிக்
நிலவா நின்ற
நாடுபுகழ்த் தலம்பொலியாழ்ப் பாணத்து நல்லூர்வாழ்
நகராக் கொண்டோன்
தேடுபுக முருவமைந்த கந்தவே டவத்துதித்த
செல்வன் யாரும்
பாடுபுக ழாறுமுக நாவலனவ் வாறச்சிற் பதிப்பித் தானே'
இவராற் பரிசோதிக்கப்பட்ட சேனவரையருரை சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்
பட்டது.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் S7
இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திர விருத்தி முதலாயின அக்காலத்துத் திருவாவடுதுறை யாதீனத்துச் சங்கிதானமாயிருந்த பூரீலறுரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் விரும்பியவாறு இவராற் பகிப்பிக்கப் பட்டன.
பெரும்பாலும் பிழையின்றிப் புத்தகங்களை அச்சிடு வகில் இவர்க்கு நிகராவார் பிறரிலர்.
இவர் யாழ்ப்பாணத்திலன்றி இந்தியாவிலும் ஆங்காங் குள்ள ஆலயங்களிலும் ஆதீனங்களிலும் பற்பல பிரசங் கங்கள் செய்துள்ளார். ஆங்கும் இவர் பிரசங்கத்தைப் புகழாதாரிலர். இவர் திருவாவடுதுறை ஆதீனத்திலே பிரசங்கஞ் செய்தபோது அங்கு அதனைக் கேட்டு மகிழ்ந்த பூரீலறுரீ அம்பலவாணதேசிகர், பூரீலபூரீ சுப்பிரமணிய தேசிகரென்னும் உபய சந்நிதானங்களாலும், மற்றை வித் துவான்களாலுமே ? காவலர் என்னும் சிறப்புப் பெயர் இவருக்கு அளிக்கப்பட்டதென்முல், இவர் பிர சங்கத்தின் அருமை பெருமைகள் இத்துணைய என எம்மால் அளவிட முடியுமா?
இராமநாதபுரம் பொன்னுச்சாமிதேவரவர்களும் இவரை விரும்பி அழைத்துத் தமது சபையிலே பிர ஈங்கஞ் செய்வித்து, அதனைக் கேட்டு மகிழ்ந்து இவ ருக்குப் பல விருதுகள் அளித்தனர்.
இத் தகைமை வாய்ந்த நாவலாவர்கள் சாலிவாகன சகாப்தம் கஅoஉ-க்குச் சமானமான பிரமாதி வருடம் கார்த்திகை மாதம் உ-ம் திகதி சுக்கிரவாரத்திலே இவ்
வுலக வாழ்வை ஒருவினர்.
வாக்கிய நடை எழுதுவதில் இவருக்குச் சமமானவ
ரில்லை. தமிழ் வாக்கியங்களுக்குக் குறியீடுகள் இட்டு
8

Page 39
58 ஈழநாட்டுத் தமிழ்ப் புவலர் சரிதம்
எழுதத் தொடங்கியவரும் இவரென்றே சொல்லலாம். செய்யுள் நூல்களை இவரியற்றுவிட்டாலும் செய்யு ளியற்றுவதிலும் இவர் மிகு சாமர்த்திய முடையவர். அதனை புணரும் பொருட்டு இவரியற்றிய செய்யு ளொன்றை யீண்டுத் தருதும் :-
சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச்
சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப் பார்பூத்த புறச்சமய விருள்கணிங்கப்
பாம்பூத்த சைவகிலை பாரோர் தாங்கப் பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைபூத்த சடைமெளலிப் பிரானர் தந்த வார்பூச்த வறிவிச்சை தொழிலென் முேதும்
மதம்பூத்த விநாயகன்ருள் வணங்கி வாழ்வாம்.
இவருடைய விரிந்த சரிதத்தை கல்லூர் பூரீமாங். த. கைலாசபிள்ளை அவர்கள் எழுதிய ? ஆறுமுக 15ாவ லர் சரித்திரம்’ என்னும் நூலாலும், அருணசலக் கவி ராயர் பா டி ய * ஆறுமுககாவலர் புராணத்தாலும் ”
அறிந்து கொள்க.
நாகநாதபண்டிதர்
இவர் ஏறக்குறைய நூற்றுப்பத்து வருடங்களுக்கு முன் சுன்னுகமென்னுமூரிலே வேளாளர்குலத்திலே சிங்க மாப்பாண முதலியார் கோத்திரத்திலே அம்பலவாண பிள் ளைக்குப் புதல்வராகப் பிறந்தவர். பிரசித்திபெற்ற வைத் தியர் வல்லிபுரநாதருக்கு மாதுலர். வட்டுக்கோட்டையி லுள்ள சாஸ்திர கலாசாலையிற் கற்றவர். தமிழ் சம்ஸ் கிருதம் அங்கிலம் சிங்களம் என்னும் கான்கு பாஷை யிற் பாண்டித்தியமுடையவர். முல்லைத்தீவு நியாயசாலை யிலும் கற்பிட்டி நியாயசாலையிலும் துவிபாஷாவாகி முதலியார்) என்னும் உத்தியோகத்திலிருந்தவர்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 59
அங்கில மொழிபெயர்ப்போடிருந்த மானவ தரும சாத்கிரம், பகவத்கீதை, மேகதூதம் முதலிய சம்ஸ் கிருத நூல்களைத் தமிழிற் பெயர்த்துச் சங்கரபண்டிதர் படித்துக்கொள்ளக் கொடுத்தவர். இதோபதேசம், சிசு பாலவதம் முதலிய சில காவியங்களையும் சில வியாகா பனங்களையும் தமிழில் விளக்கிச் சுன்னகம், அ. குமார சுவாமிப் புலவருக்குப் படிக்கக் கொடுத்தவர். அவருக்குச் சில சம்ஸ்கிருத நூல்களுக்குப் பாடஞ் சொன்னவர். சாங்தோக்கியம் முதலிய சில உபநிடதங்களையும் சாங்கி பக்தையும் மொழிபெயர்த்தவர். இவர் மொழிபெயர்த்த இதோபதேசத்தைச் சுன்னகம், அ. குமாரசுவாமிப்புலவர் அச்சிட்டுள்ளனர். * இலங்காபிமானி’ முதலிய பஞ்சிகை களிலும் பல விஷயங்க ளெழுதினவர். கவிபாடுஞ் செயலு முடையவர். இவர் செய்யுட்டிறத்தை உணரும்பொருட்டு ஒரு கவியை இங்கே தருதும் :-
நீதி நெறிவிளக்க நேர்முறை யாராய்ந்து போகவுரை செய்யப் புலவோர்க்கு-மேதினியில் ஆமோ வயிரவ நாதாரு ளாசிரியன் தாமோ தாற்கன்றித் தான்.
இவர் பாடிய தனிக்கவிகள் சில * உதயதாரகை”யில்
வெளிவந்தன என்பர்.
சங்கரபண்டிதர்
இவர் யாழ்ப்பாணத்துச் சுன்னுகத்திலே வேளாளர் மாபிலே கலியப்தம் சகsக-க்குச்சமமான விரோதிகிருது வருடம் சித்திரை மாதம் உக-ந் தேதியில் பிறந்தவர். நீர் வேலியில் வசித்தவர். இவர் தந்தையார் பெயர் சிவகுரு ாதர். இவர் வேதாரணியத்திலே சுவாமிநாத தேசிகளிடம் சம்ஸ்கிருதத்தில் வியாகரணம், தருக்கம், காவிய முதலி

Page 40
60 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
யனவும், யாழ்ப்பாணத்துக் கந்தரோடையிலிருந்தவரும், வித்துவசிரோமணியாய் விளங்கிய சேனதிராய முதலியா ருடைய மாணுக்கருமாகிய அப்பாப்பிள்ளை என்பவரிடம் தமிழில் இலக்கண இலக்கியங்களும் கற்றவர். யாழ்ப்பா ணத்திலிருந்த சம்ஸ்கிருதபண்டிதர்களுள் இவரே.சிரேட்ட ரெனலாம். இவர் சம்ஸ்கிருதத்திலுள்ள ஆகம சாஸ்தி ரங்களிலும் வல்லவர். தமிழிலுள்ள சித்தாந்த நூல்க ளிலும் வல்லவர். சைவநெறி யொழுக்கத்திலுஞ் சிறந் தவர். இவரிடம் கற்றவர்கள் கீரிமலைச் சபாபதிக்குருக் கள், சுன்னுகத்து முருகேச பண்டிதர் முதலாயினேர். இவருடைய புத்திரர் சிவப்பிரகாச பண்டிதரும் இவரிடங் கற்றவரே.
இவர் மாணவர்களுக்குக் கற்பித்தும் பற்பல நூல்க ளியற்றியும் சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இருமொழி களையும் வளர்த்தமையோடு, பிரசங்கங்கள் செய்து சைவ
சமயத்தையும் வளர்த்து வந்தவர்.
இவர் செய்த சைவப் பிரசங்கத்தைப் புகழ்ந்து இவர் மாணுக்கர் முருகேச பண்டித ரியற்றிய கட்டளைக் கலித்துறையையும் இங்கே காட்டுதும் :-
* சைவத்தை நாட்டிப் பரமத மோட்டத் தயங்குமொரு
தெய்வத்தைப் போல்வரு சங்கர பண்டித தேசிகர்தாம் மெய்வைத்த கண்டிகை வெண்ணிற்றி னேடு விளங்கிடச்செய் சைவப் பிரசங்கத் தெள்ளமு தென்றினிச் சார்குவமே."
இவரியற்றிய நூல்கள் சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி யுரை, கிறிஸ்துமத கண்டனம், சிவதூஷ கண்டனம், அநுட்டானவிதி முதலியனவாகும். சைவப்பிரகா சனத்திலே தர்க்கப்பிரமாண இயல்புகள், சுருதி
யிலக்கணம், சமயவிலக்கணம், சைவசமய நிரூபணம்,

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 61
முப்பொருளிலக்கணம் முதலிய விஷயங்கள் கூறப்பட் டுள்ளன. இவரெழுகிய கிறிஸ்துமதகண்டனம் உண்மை யும் தருக்கமுறையும் அமைந்து மற்றைய கிறிஸ்துமத. கண்டனங்கள் எவற்றினுஞ் சிறந்து விளங்குகின்றது.
இவரும் ஆறுமுகநாவலரு மொரேகாலத்தவ ரென் பது, இவர் பெரியபுராணவசனத்திற்கு அளித்த சிறப்புப் பாயிரத்தா னறியப்படும். அப் பாயிரச் செய்யுள் பாப் புடைமையின் அதனுட் சிலவடிகளை ஈண்டுக் காட்டுதும் :-
*உலக மனைத்தினு முலப்பிலா தோங்கி
யிலகுபே ரொளியா யேகனுய்ச் சிவன யனுதி முத்தன யதிபா மார்த்தனுய்த் தனது சத்தியாந் தனிவடி வினணுய்த் திருவளர் தில்லைச் சிற்றம் பலத்தினுட் பொருவிலா நிருத்தம் புரிந்துநின் முெளிரும் உயர்சபா நாயக லுலகெலா மென்றெடுத்(து)
LLLLLL L LLLLL S SSSSSSS S SS S S S S L L L L S S S SL SL SL S L SL S L L S S L S C
L S L S L 0 0 L L L L SSS L0L 0 SS S SS L S S SS SS SS a a
மறைதிகழ் பிரணவ மன்ன முறைதிக ழாறு முகநா வலனே."
இத்தகைய இவர், கலியப்தம் சகளs-க்குச் சமமான பிரமோதூத வருடம் புரட்டாசி மாதம் கஉ-ந் தேதியில் இவ்வுலக வாழ்வைத் அறந்தனர்.
கனகசபைப்புலவர்
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள அளவெட்டி என்னு மூரிலே வேளாண் குலத்திலே வைத்தியநாத தம்பிரா னுடைய வழியிலே ஏறக்குறைய நூற்றுப்பத்து வருடங் களுக்கு முன்னே பிறந்தவர். இவர் தங்தை பெயர் வேலுப் பிள்ளை. யாழ்ப்பாணத்திலிருந்து போய்ச் சிதம்பரத்தில்

Page 41
62 ஈழ5ாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
வசித்த சுப்பிரமணிய கம்பிரான் இவருக்குத் தாய் மாமன். இலக்கிய இலக்கணங்கள் நன்கு கற்றவர். சிறுபிராயத்திலே பாடுஞ் சாமர்த்தியம் வாய்ந்தவர். பெற்றர் சைவசமயத்தவ ாாயினும் இவர் கிறீஸ்து மதத்தைச் சார்ந்தவர். இவர் வட்டுக்கோட்டையிலிருந்த பழைய சாஸ்கிர சாலையிலே ஆங்கிலமுங் தமிழுங் கற்றுத் தேர்ச்சி பெற்றதேயன்றி, அங்கிருந்த உவாட் வைத்தியரிடம் ஆங்கில வைத்தியமுங் கற்றுத் தேர்ச்சி பெற்றவர். ஆங்கிலவைத்தியமுங் தெரிங் தவராயினும் தமது தந்தையார் தமிழ் வைத்தியராயிருங் தமையினலே தாமும் அவ்வைத்தியத்தையே செய்ய வேண்டுமென விரும்பி, அதனைத் தந்தையாரிடத்தேயே கற்றுத் தாமும் அதனையே செய்து தங்தையாரினும் பன் மடங்கு சிறந்து விளங்கினவர். பாடுந்திறமை நோக்கி இவரைப் ‘புலவன்’ என்றும், ‘புலவன் கனகசபை என்றும் ஊரிலுள்ளார் பேசுவர். இவர் பாக்கள் பழையபாக்கள் போன்று மிகவும் சொற்சுவை பொருட்சுவை அமைந்தன வாகும். பல தனிப்பாக்களன்றித் கிருவாக்குப் புராணம் என ஒருபுராணமும்பாடியுள்ளார். இதனைக் கிறிஸ்தவர்கள் மிகக் கொண்டாடுவர். இதில் ‘கண்டுக’ விருத்தப்பாக்கள் அமைந்துள்ளன. இதுவன்றி ஒரு சொற் பலபொருட் டொகுதியாக ஒரு நிகண்டும் பாடியுள்ளார்.
உடுவிலிலிருந்த சந்திரசேகா பண்டிகர் செய்த அக ாாதிக்கும் வேறும் பலநூல்களுக்கும் இவர் சிறப்புக்கவி கள் அளித்துள்ளார். சமயோசிதமாகத் தோன்றும் விவேக சாதுரியப் பேச்சுகளும் இவருக்கு உண்டென்றும் அதற்குச் சான்முக இவர் ஒருநாள் வேருெருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் இவருக்குக் கோப மூளத்தக்கதாக யாதோ வார்த்தையாடினமையால் இவர் அவரிற் கோபங்கொண்டு ‘பேய்க்கூதிமகனே' என்று அவரை ஏசினர் என்றும், அப்போது இவர்மேல் அவருக்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 63
குப் பெருஞ்சினமுண்டாக, அது கண்ட இவர் அவரை நோக்கி, ‘* நீர் என்மேல் ஏன் கோபிக்கின்றீர்? உமது தங் தையார் பேய்க்கு ஊதிப் பார்க்கின்றவர் அல்லவா? அவரு டைய மகனென்றல்லவா உம்மை யான் சொன்னேன்’ என்று கூறிச் சமயோசிதமாக எழுந்த விவேக சாதுரியப் பேச்சினுலே அவரை மகிழ்வித்தார் என்றும் சிலர் கூறுப. இவர் தாயாரும் கல்வியிற் சிறந்தவர் என்றும், மிஷனரி மாருடைய பெண்பாடசாலைகள் வருதற்குமுன் கல்வியிற் சிறந்து விளங்கிய பெண்களுள் அவ்வம்மையாரும் ஒருவர் என்றும் அறிகின்முேம்.
இத்தகைய புலவர்கிலகர் யாவருங் துன்புறுமாறு கிறீஸ்து வருடம் கஅஎB - ல் தை மதியில் கூ-ந் தேதி யன்று தேகவியோகமாயினர். به
இவர் ஒர் உலாவும் பாடினர் என அறிகின்ருேம். இவர் பாடிய கிருவாக்குப் புராணத்திலுள்ள காப்புச் செய்யுள் ஒன்றை அதன் சுவையுணர ஈண்டுத்தருகின்ரும்.
திருவாக்குப் புராணம் அனைத்துலகுக் நிருவாக்கா லளித்தகில சராசாமு மருட்சித் தத்தே நினைத்துளவப் படியமைத்துக் காத்தளிக்குங் தனிமுதலா
நிகரி லாதான் தனைத்துதிசெய் தெண்ணுகின்ற சுகுங்கருமஞ் சித்திபெறத்
தருக வென்றே இனைத்தெனவொப் போதரிய விணைமலர்த்தாள் சிரத்தேர்தி
யிறைஞ்சு வாமே. இவர் சென்னை பட்டணத்திலே வசித்தபோது, தாம் கண்டி ராசாவின் புதல்வரான அழகர்சாமி பேரில் பாடிய மடற் பிரபந்தத்தை அரங்கேற்ற விரும்பி அவரிருந்த வேலூருக்கு ஒரு சீட்டுக்கவி எழுதி அனுப்பினர். அக் கவி வருமாறு:-

Page 42
64 ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம்
நிறைநிலவு பொழியமுத கிாணசந் திானென்ன நின்றிலகு கின்ற தொடையாய் நோலர் படைக்கடலை வீரவே கங்கொண்டு
நிருமூல மாக்கு படையாய் நெடியதரு வைந்துமெழு முகிலுமிணை யல்லவென
நிச்த மருள் கின்ற கொடையாய் லேவலைய மெங்கனுங் கல்விநிலை பெற்றிலகு
நிகரற்ற கீர்த்தி யுடையாய் திறைநிலவு தவழுமுயர் பொறைபலவு மெனவெளவு
செங்கை யுத் தண்ட தீாா செயமாது குடிகொண்ட திண் புயா சலவுளங்
திருமா துவக்கு நெறியாய் தென்னிலங் கேசவெழின் மன்னுமங்கசரூப
திறலழகர் சாமி யென்னுஞ் சிங்கவே றனையவுத் துங்கவுள் ளக்களி சிறந்திட மகிழ்ந்து காண்க துறைகிலவு கலைவாரி கரைகண் டுயர்ந்துகின் முெல்குலத் தாசர் தம்பாற் ருேமிலா நண்புபெற் ருேங்குவைத் தியநாத
சுகுணன் குலத் துதித்தோன் துகளற்ற சீரளவை நகரத்து வருகனக
சபைமிக்க துன்று பத்தி தூண்டகின் மாபெருமை பூண்டசுமு கம்பெறச்
சோர்விலா தெழுது கிருபம் முறைநிலவு மிறைமைபெறு முடிமன்னர் திலகமீ
முகமலர்ச் தகமு வந்தே மூளுமன் பாலணிய மீளுமின் பானவிசை
மெய்த்தமடன் மாலை தரவும் முகதரிசனங்கண்டு மிகுகரிச னங்கொண்டு
முன் பெய்த வுங்கருதி நின் முன்னணுகு மென்றனக் கின்னருள் சுரந்தூழி.
மூது லகி னிவாழியே.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 65
இவர் வேலூருக்குப்போய் அழகர்சாமி முன்னிலை யில் தாம் அவர்மீது பாடிய மடலை அரங்கேற்றி மீண்டு வரும்போது, வழியில் எதிர்ந்த சில புலவரை நோக்கிப் பரிசில்பெறச் செல்லுமாறு அழகர்சாமிபால் ஆற்றுப்படுத் கியதாக ஒரு புலவராற்றுப்படைச் செய்யுளும் பாடியுள் ளார். அதனையுமிங்கே தருதும் :-
பூவின் மீதெவரு மெய்ச்சு பாவருளில்
புல்லர் மீது சொலி நெஞ்சுகால் புண்கள் பட்டுவரு பாவ லீரென யொர் புரவ லன்கொலென வெண்ணலீர் யாவின் மீது முய ரோவில் சீருறு மிலங்கை நாடா சியற்றுபேர் இசைவி ளங்கழகர் சாமி யண்ணலரு ளிகை பெற்றுவரு புலவன்யான் நாவின் மீது லவு பாவி னத்தருமை
நன்கு ணர்ந்த கமி ழறிவினன் சாவ லர்க்குதவு வள்ளலங் கவனை
நண்ணி லின்னபரி செய்துவீர் மாவின் மீதாச னந்த மத்திமிசை
மருவு பேராச னந்தள்ே வைய மீதாச னந்த மென்றுமவன்
வாயின் முன்னாடை யாளமே.
இவர் பாடுதற்குக் காலமும் இடமும் வேண்டியதின்று. ஒரு பாட்டுப்பாட வேண்டுமென்று யாரும் வேண்டினல் உடனே பாடிவிடுவார். இவர் சென்னையிலிருக்கும் போது இவருடன் அகராதி வேலையிலிருந்த வீராசாமிச் செட்டியாருடைய நரைத்த குடுமியை ஒருவர் இவர்க்குக் காட்டி இதன்மீது ஒரு பாட்டுப் பாடுவீர் புலவிர் என் றனராம். உடனே அக்குடுமிமேல் வைத்து ஒரு செய்யுள் பாடிவிட்டனர். அச்செய்யுள் வருமாறு :-
9

Page 43
66. ஈழநாட்டுத் தமிழ்ப் புவலர் சரிதம்
சாவலர் வியக்கப் பாவலர் நாவா
னன் க ைமதிவளர்க் கோங்கிப் பாவலர் முகஞ்செம் பதுமமாக் குவிக்கும்
பான்மையோன் மாயனே டுளத்து மாவலர்வீரா சாமிவேள் குஞ்சி
மலாயன் றேவிவெண் கஞ்சப் பூவலர்ங் திருப்ப வதன்மிசை யிருந்த
பொற்பெனப் பொலிந்திலங் குறுமால்.
இச் செய்யுள் மிகவும் இன்பம் படைத்ததாகும்.
குமாரசுவாமி முதலியார்
இவர் உடுப்பிட்டியைச் சார்ந்த வல்லுவெட்டி (வல்லி பட்டி) என்னும் ஊரிலே உயர்ந்த வேளாண்மாபிலே பிறந்தவர். ஏறக்குறைய ஐம்பது வருஷங்களுக்கு முன்னே இருந்தவர். இவர் தந்தையார் சந்திரசேகா மாப்பாண முதலியாருக்குப் புத்திரராகிய கதிர்காமபூப முதலியாரெனப்படுவர். இவர் தாயார் பெயர் வள்ளி யம்மை. சந்திரசேகா முதலியார் புத்திரரும் தாயாருடன் பிறந்தவருமாகிய முத்துக்குமார முதலியார் என்பவர் இவருக்கு ஆசிரியர். அவரிடம் இலக்கண இலக்கியங் களை இவர் கற்றுச் சாமார்த்தியமடைந்ததே யன்றிப் பாடு வதிலும் சாமார்த்திய மடைந்தனர். இவர் இயற்றிய நூல்கள் அருளம்பலக்கோவை, தீருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய்ச் சித்தி விநாயகர் ஊஞ்சல், நல்லைக் கலித் துறை, கந்தவன நாதர் ஊஞ்சல், இந்திரகுமார நாடகம் முதலியன. பல தனிக் கவிகளும் பாடியுள்ளார். ஊர்கா வற்றுறையில் நீதிபதியாயிருந்தவரும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்ட தமிழக ராதிக்கு ஆசிரியருமாகிய கதிரைவேற்பிள்ளை இவருக்கு
இரண்டாம் புதல்வர்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 67
இவருடைய பாடற்றிறம் உணரும் பொருட்டு இவ ருடைய கவிகளிற் சிலவற்றை ஈண்டுத் தருதும் :-
அருளம்பலக்கோவை திங்கா ளுடலகங் தேய்வுற மாய்வுறச் சித்தாைப்போற் றங்கா மலந்தா மார்க்கந் தவம்புரிந் தாலுந்தமிழ் மங்கா துடுவை வருமரு ளம்பல மன்னன்வரைக் கொங்கார் குழலி முகம்போன் மெனநினைக் கூறரிதே. தீருவிற் சுப்பிரமணியர் பதிகம் பூமேவு வாவிப் பொறிச்சிறகர் வண்டினம் பொதியிணர் முறுக்கவிழ்த்துப் புது மது வருத்தியிசை கூடக் கருங்குயில்கள்
புத்தமிழ் துறழ்ந்து பாட மாமேவு களிமயில் சிறைப்பறை யடிக்கமட
வஞ்சருட மாடமீடி மன்னுதண் டலைதலை யசைத்து நனி நாடமிடை
வண்டான நன்று புகழுங் தேமேவு வளமருத வயல்புடை யுடுத்திலகு
செங்கமலை தங்குவல்வைத் தீருவிலை நற்மு ன மாவெண்ணி வள்ளியொடு
தேவகுஞ் சரியுமகிழத், துமேவு சத்திகைத் தலமொளிா வெம்மனேர்
துயர்தீர்க்க வந்தமுருகே சூாசீ லக்கலப மயின்மீது லாவிவரு
சுப்ாமணி யக்கடவுளே.
நல்லைக் கலித்துறை கல்லைக் கடையர்கள் கைவிட் டெறியக் கனன்றெழுந்து பல்லைத் திறந்துறு மிக்கவி தெங்கின் பழமுதிர்க்கு மல்லற் பழனங்கள் சூழ்நல்லை நாதனை வந்தடைந்தோர்க் கில்லைப் பிாமக் குயவன் வனைவதற் கேதுக்களே . கட்டித் தயிாை யிடைச்சியர் மத்திற் கடையப்பிரி குட்டிப் புலியொலி யென்றே புலிகுமு றும்புறவம் கிட்டிக் கிடக்கின்ற நல்லையில் வேலற்குக் கிள்?ளப்பிள்ளாய் எட்டிச்சற்றேசென்றெனுள்ளஞ்சொ லாய்பின்ன யென்சொல்வதே.

Page 44
68 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
தாமோதரம்பிள்ளை
இவர் யாழ்ப்பாணத்திலே புத்தூரைச் சார்ந்த சிறுப் பிட்டி என்னும் சிற்றூரிலே வேளாண் குலத்திலே சாலி வாகன சகாப்தம் 1755-க்குச் சமமான நந்தனவூடு) ஆவணி மாசம் பிறந்தவர். இவர் தந்தையார் வயிரவ நாதபிள்ளை என்பவர். தாயார் பெருங்தேவி அம்மையார். இவர் தமது தந்தையாரிடம் ஆத்திசூடி, வாக்குண் டாம் முதலிய நீதி நூல்களையும் சூடாமணி நிகண்டு முதலியவற்றையும் கற்றுணர்ந்தபின், சுன்னுகத்தி லிருந்த முத்துக்குமாரக் கவிராயரிடம் சென்று இலக் கிய இலக்கணங்களையும் கற்றுணர்ந்தவர். தெல்லிப் பழையில் அமெரிக்கமிஷனல் தாபிக்கப்பட்ட ஆங்கில கலாசாலையிலே ஆங்கிலம் சில ஆண்டுகள் கற்றபின், வட் டுக்கோட்டையிலே அம் மிஷனுற் முபிக்கப்பட்ட சர்வ சாஸ்திர கலாசாலையிலும் எட்டாண்டுகள் வரையிற் கற் றவர். கோப்பாயிலிருந்த போதன வித்தியாசாலையில் சில காலம் ஆசிரியராக இருந்து, பின்பு சென்னையில் பார்சிவல் துரையால் நடாத்தப்பட்ட ‘கினவர்த்தமானி’ப் பத்கிரி கைக்கு அதிபராய் அங்குச் சென்று சிலகாலம் அதனை நடத்தியவர். சென்னைச் சர்வகலாசாலையிலே பீ. ஏ. பரீட் சையிற் சித்தி எய்தியபின் கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலையிலே ஆசிரியராக இருந்தவர். சென்னை அரசாட்சியாரால் அளிக்கப்பட்ட * ராவ்பகதூர்’ என்னும் சிறப்புப் பெயரும் பெற்றவர். புதுக் கோட்டையில் பெருமன்றத்து நீதிபதி உக்கியோகமும் வகித்து நடாத்கியவர். சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்
சகராகவு மிருந்தவர்.
இவர் உயர்ந்த உத்தியோகங்களில் அமர்ந்தன
d d o ாாயினும், தமிழ்நூற் பயிற்சியையும் விடாது அரிய

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 69
தமிழ் நூல்களையெல்லாம் தேடிக் கற்று வந்தவர். செல் லரித்தும் இராமயாணங் கின்றும் எழுத்துக்களின் உருத் தெரியாது கிடந்த ஏட்டுப் பிரதிகளில் உள்ள நூல்களுட் சிலவற்றை மிக அரிதாக ஆராய்ந்து அச்சிட்டு தமிழ் நாட்டார்க்கு உதவி மகிழச் செய்தவர். தாமும் புதிதாகச் சில நூல்கள் இயற்றினவர். சிறப்புக் கவியும் துதி கவி யும் சீட்டுக் கவியும் பிற கவியுமாகத் தனிநிலைக் கவிகள் பல பாடினவர். இவர் பரிசோதித்து அச்சிட்ட தமிழ் நூல்களாவன:- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச் சினர்க்கினியருரை, ஐந்தியல் நச்சினர்க்கினியருரையும் ஏனைய பேராசிரியருரையுமாயுள்ள பொருளதிகாரவுரை, இறையனு ரகப்பொருளுரை, இலக்கண விளக்கவுரை, வீரசோழியவுரை முதலிய இலக்கண நூல்களும், குளா மணி, தணிகைப் புராணம் முதலிய இலக்கிய நூல்களு மாம். ஆறுமுகநாவலரால் பரிசோதிக்கப்பட்ட தொல் காப்பியத்துச் சொல்லதிகாரம் சேனவரையருரையும் இவராலேயே பதிப்பிக்கப்பட்டது. இவர் இயற்றிய நூல்கள் சைவ மகத்துவம், கட்டளைக்கலித்துறை, சூளா
மணி வசனம் முதலியவாகும்.
இவருடைய பாடுங் திறமையை உணர்தற்பொருட்டு இவர் பாடிய சில கவிகளை ஈண்டுக் காட்டுதும்.
வீரசோழியப் பதிப்புரை
ஆசிரிய வணக்கம்
எழுத்தொடு விழுத்தமிழ் பழுத்தசெந் நாவினன் முழுத்தகை யேற்கவை யழுத்தியோன் சுன்ன கத்துயர் மாபினேன் முத்துக்கு மாா வித்தக னடிதலை வைத்துவாழ்த் துவனே.

Page 45
70 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சைவ மகத்துவம் பூவின் மெய்ம்மத மிதுவிது பொய்யெனப் புகலுவ தரிதேயோ நாவி ஞன் மனத் தானவின் றுணர்வரு ஞானசாகர மாமெய்த் தேவ வாசகம் யுத்தியிற் கதீதமாங் திறம்புமோ மனுவாலே மேவு மெல்வெவ வேதமுத் திறம்புருல் விஞ்சையா லளப்பின்னே.
சுப்பிரமணிய தேசிகர்
விண்ணுடு கைலை வழித்தே சிகர்வெவ் வினைக்குநெற்றிக் கண்ணுன சுப்பிா மணிய சுவாமிகள் கான்மலரை
ண்ேணத் தலையி னசைதீாத் தாங்கநற் கோகழிவாய் மண்ணுய்ப் பிறந்தில னேயைய கோவிந்த வையகத்தே.
அம்பலவான பண்டிதர்
வாக்கிற் சாச்வதி வாய்மைக் கரிச்சந்த்ர மன்னனெடுங் தூக்கு நடுவு நிலைமையிற் சான வி தூய்மையிற்பொன் ஆக்கர் தனிலள காபதி மாா னழகிலிந்த்ான் தேக்கும்வை போகத்தி லம்பல வாணனைச் செப்பிடினே,
புத்திர சோகம் விந்தை மிகுந்த வியன்சோம சுந்தா மென்கெர்ழந்தைச் சந்திர சூரியர் வந்துதி யா முன் சகோதார்தாய் தந்தைய சின்றித் தனிநின்ற வேளையிற் முவினையோ கிந்தனை நிந்தனை காணந்த காவிது நின்றனக்கே.
இவர் தமிழ் மொழியை வளர்க்குமாறு புத்தகங் களை அச்சிட்டமையேயன்றி ஏழாலை என்னும் ஊரிலே ஒரு தமிழ் விக்கியாசாலையையும் தாபித்தார். அவ் வித் தியாசாலை ஆசிரியராக இருந்தவர்கள் முருகேச பண்டித ரும் குமாரசுவாமிப் புலவருமே. அகிற் கற்றுச் சிறந்த வர்கள் வித்துவான் சிவானந்த ஐயர், மாணிக்கத்தியாக
ராச பண்டிதர் லாயிைேர்கள்.
t ணு

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 71.
பொன்னம்பலப்பிள்ளை
இவர் யாழ்ப்பாணத்து கல்லூரிலே சாலிவாகன சகாப்தம் 1759-க்குச் சமமான ஏவிளம்பிவடு) சித்திரை மாதம் 24-ங் திகதியிற் பிறந்தவர். இவர் தந்தையார் வைசிய குலத்துப் பிறந்த சரவணமுத்துச் செட்டியார். இவர் தாயார் ஆறுமுகநாவலர்க்குத் தமக்கையார். ஆகை யால் இவர் அவருக்கு மருகராவர். இவர் தமது இள மையிற்ருெடங்கி கல்லூரிலிருந்த கார்த்திகேய உபாத்தி யாயரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்று வந்தபின் தன் மாமனுராகிய நாவலரிடமும் பலகாலங் கற்றவர். அவர்களிடங் கற்றவளவிலமையாது, தமது நுண்மா ணுழை புலங்கொண்டு சங்க இலக்கியங்களையும், சிந்தா மணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, இராமாயண முத லிய இலக்கியங்களையும், தொல்காப்பிய மென்னும் பேரிலக் கண நூலையும் பலமுறை துருவித்துருவி ஆராய்ந்து கற்றவர். படித்தவற்றை ஒரேமுறையி லவதானிக்கும் ஞாபக சக்தி யமைந்தவர். பாடுஞ் சக்தியுமுள்ளவர். கோவில்களிலும் மடங்களிலும் வீடுகளிலும் கந்தபுரா ணம், பெரியபுராணம், கிருவிளையாடற் புராணம், கம்ப ராமாயணம் முதலியவற்றைப் படித்துப் பொருள் சொன் னவர். பொருள் சொல்லுங்கால் கேட்டவர்கள் ? யாழி சையோ பாாகிதன்னின்னிசையோ’’ என்று அயிர்க்கு மாறு தமக்கு இயற்கையாயமைந்த இனியமிடற்முேசை யோடும், விரிவுரையோடும் சொல்லின்பமும் பொருளின்ப மும் தோன்றச் சொல்வர். இவர் சொல்லும் பொரு ளிலே பரிமேலழகர் நச்சினர்க்கினியர் பேராசிரியர் முத லியோ ருரைத்த உரைத் திறங்களெல்லாம் அமைந்து மிளிரும். வாக்கிற் பிறக்கும் உரையும் பரிமேலழகர் உரைபோலத் தெளிவும் இனிமையும் பொருந்தி ஒளி

Page 46
72 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
ரும். இவர் பொருள்சொல்லும் அழகையும் இனிமை யையுங் கேட்பதற்காக யாழ்ப்பாணத்திலே பற்பல ஊர் களிலுமுள்ள பிரபுக்களும் அறிஞர்களும் தத்தங் கோயில்களிலே புராணபடனம் நடக்குங் காலத்திலே இவரை அழைத்துப் பொருள் சொல்லுவித்துக் கேட்டு மகிழ்வர். சபைகளிலே இவர் சொல்லும் பொருளைக் கேட்கவந்த சனங்கள் அப்பொருளிலுள்ள இன்பங்களை நுகரும் அவாவினலே சத்தஞ் செய்யாது தாமே அடங்கி இருந்து கேட்பர். ஒருமுறை இவர் வண்ணுர்பண்ணைச் சிவன்கோவில் வசந்த மண்டபத்திலே பெரியபுராணம் படித்தபோது திருஞானசம்பந்தர் திருக்கலியாணப்படிப் பைக் கேட்பதற்காக ஆயிரக் கணக்கான சனங்கள் வந்திருந்தார்கள். இருப்பதற்கு மண்டபம் இடம் பெரு மையால் நெருக்கமுற்றுச் சனங்கள் சத்தம் செய்யத் தொடங்கினர்கள். அங்குள்ள அதிகாரிகள் சத்தஞ் செய்யவேண்டாமென்று சொல்லி அமைகி செய்துங் கேளாமல் சனங்கள் சத்தஞ் செய்தார்கள். அப்பொழுது இவர்களை அமைதி செய்தற்குரிய உபாயம் தாம் படிக் கத் தொடங்குதலே யென்று கருதி இவர் காப்புச் செய் யுளைப் படிக்கத் தொடங்கினர். உடனே சனங்கள்எல் லாம் நெருக்கத்தையும் கோக்காமல் அமைதியாயிருந்து விட்டார்கள். இதனுல் சனங்களுக்கு அவர் சொல்லும் பொருளைக் கேட்டலில் எவ்வளவு அவா இருந்ததென் பதையும், இவர் சொல்லும் பொருட்சுவையின் மேன்மை
எவ்வளவு என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
இன்னும் கம்பராமாயணத்திற்கு இவர் பொருள் சொல்வது மிக விசித்திரமாயும் மிக இன்பமாயுமிருக் கும். இவர் சொல்லும் நூதனப் பொருள்களைக் கேட் டோர் கம்பன்முன் மீளவும் பிறந்து, தான் பாடிய
இராமாயணத்திற்குப் பொருள் சொல்லுகின்ருனே

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 73
வென்று அதிசயமுறுவர். இவர் பொருள் சொல்லும் போது நச்சினர்க்கினியரையும் சிவஞான முனிவரையும் போலச் சில இடங்களிலே செய்யுள்களில்வரும் சொற்களை நூதனமாகப் பிரித்துப் பொருள் கொள்வர்.
ஒருமுறை இவர் நல்லூர்க் கந்தசுவாமி கோவி லிலே கந்தபுராணத்துத் திருக்கலியாணப் படலத்திற்குப் பொருள் சொன்னபோது,
* பூசனை புரிந்த பின்னர்ப் புவனமீன் முடன் கையைப்
பாசம ககன்ற தொல்சீர்ப் பாஞ்சுடர் காத்துள் வைத்து நேசமொட்வித்தே னென்ன நெடுமறை மனுக்கள் கூறி வாசநல் லுதக முய்த்தான் மருகனென் றவனை யுன்னி.” என்னுஞ் செய்யுளில், “மருகனென்றவனையுன்னி’ யென்றதற்குப் பொருள் சொல்லுங்கால், மருகனென்று + அவனையுன்னி என்று பிரிக்கவேண்டியதை அங்ஙனம் பிரியாது; என்றவனையென ஒரு சொல் விழுக்காடாகக் கொண்டு அதற்கு, என்று அவமதித்த தக்கனை யென்று பொருள் கூறி; யான் இப்பொழுது சிவனை மருக னென்று நினையாமல் கடவுளென்றே நினைப்பேன்,-தக் கன் சிவனைக் கடவுளென மதியாது மருகனென்று அவமதித்தமையானே தலையிழந்தானன்ருே? எனத் தக்கன் தலையிழந்த நினைப்பு அப்பொழுது மலையரச னுக்குண்டாயது. அதனுல் இவ்வாறு கூறினம். என்று தாம் சொன்ன பொருளுக்குக் காரணமும் கூறி முடித்தனர். சில இடங்களிலே தமது ஆராய்ச்சி அறிவு தோன்றவும் பொருள் கூறுவர். கந்தபுராணத்துத் தெய்வயானை கிருமணப்படலத்தில் வரும் * மாவொடு வாழை வருக்கைகொள் பைங்காய் - தீவிய கன்னல் செறிந்திடு செங்கேன் - ஆவருள் பாலிவை யண்டர்கள் செம்மல் - மூவிரு மாமுக னநுகர் வித்தான்' என்னுஞ்
10

Page 47
74 ஈழ 5ாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
செய்யுளுக்குப் பொருள் சொல்லுங்கால்; மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், இனிய சர்க்கரை, தேன், பால் என்னும் ஆறு பொருள்களையும் ஆறுமுகங்களு மாக நிவேதனம் செய்தான் என்று பொருள் கூறி, அதற்குச் சான்முக வள்ளியம்மை கிருமணப்படலத்து வரும் * செந்தினை இடியும் தேனும்’ என்பதை முத லாகக் கொண்ட செய்யுளிலும் இவ்வாறே ஆறுபொருள் களை ஆசிரியர் அமைத்துக்கூறி இருத்தல் காண்க வென்று பொருள் கூறினர். இப்படிப் பல. இவற்றை யெல்லாம் விரிக்கிற் பெருகும்.
யான் இவரிடம் படிக்கும்போதும் வண்ணுர்பண் ணைச் சிவன்கோவில் வசந்த மண்டபத்திலே கந்தபுரா ணமும், பெரியபுராணமும், இராமாயணமும் முறையே படிக்கப்பட்டன. அப்பொழுது அவற்றிற்கு இவரே பொருள் சொன்னர். இவர் சொல்லும் பொருளைக் கற் றவர்களும் பலர் வந்து கேட்டுச்செல்வர். கற்பவர்களும் பலர் வந்து கேட்டு, இவர் சொல்லும் பொருள்களுள் அரியனவற்றைக் காகிதங்களில் குறித்துஞ் செல்வர். இங்ஙனம் கேட்டும் குறித்தும் அறிஞர்களாயினேர் பலர். கந்தபுராணம் முதலிய அந்நூற் குறிப்புக்கள் இப்போ தும் பலரிடம் உண்டு. இவரிடம் கேட்டுக் குறித்த பெரியபுராணக் குறிப்புக்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்தி லிருந்து வெளிவரும் * செந்தமிழ்ப் பத்திரிகையிலே திருவாரூர்ச் சோமசுந்தர தேசிகரால் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. கிற்க:
இவரிடம் நேரே கற்றவர்கள் யாழ்ப்பாணத்திற் பலர்; இந்தியாவிலும் சிலர். அவர்களுள் சிதம்பரத்தி லுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையிலே தலைமை யாசிரியராயிருந்து கற்பித்தவரும், திருவாதவூரடிகள்

ஈழ5ாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 75
புராணம், அபிராமி அந்தாகி, புலியூர் அங்காகி என் அனும் நூல்களுக்கு உரை எழுதியவரும், ஈழமண்டல சதகமென்னும் நூலை இயற்றியவரும், உரையாசிரியர் என்னும் சிறப்புப்பெயரைப் பெற்றவருமாகிய மட்டுவில், க. வேற்பிள்ளையும் ஒருவராவர். சிவாஞானமாடாடியம், திருக்கோவையாருண்மை முதலிய நூல்களைப் பிழை யறப் பரிசோதித்து அச்சிட்டு வெளிப்படுத்தியவரும், இங்கியாவிற் சென்று வசித்து அங்குள்ள பற்பல வூர் களில் பிரசங்கங்கள் செய்து சைவசமயத்தை விருத்தி செய்தவருமாகிய சுவாமிநாத பண்டிதரும் ஒருவராவர். புரானேகிகாசங்களுக்கும், கோவையந்தாதி முதலியவற் றிற்கும் இவர்போலப் பொருள் சொல்ல வல்லவரும், கவிபாட வல்லவருமாகிய வண்ணுர்பண்ணை, சி. பொன் இணுத்துரை ஐயரும் ஒருவராவர். சிதம்பாத்திலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையிலே சிலகாலம் தலைமை யாசிரியராயும், பலகாலம் தலைவராயும் இருந்தவரும், இவரது மருகனுமாகிய ச. பொன்னம்பல பிள்ளையும் ஒருவராவர். *உதயபானு ’, ‘இந்துசாதனம்’ முத விய பத்திரிகைகளில் சமய விஷயமும் பிறவுமாகப் பல அரிய விஷயங்களை எழுகி வெளிப்படுக்கியவரும், பல அரிய நூல்களுக்கு ஆக்கியோனுய் விளங்கியவருமாகிய கொக்குவில், க. சபாரத்தின முதலியாரும் ஒருவராவர். வண்ணுர்பண்ணை இந்துக்கல்லூரித் தமிழ்ப் பண்டிதரா யிருந்த தாவடி, ஆ. மு. சோமாஸ்கந்தபிள்ளையும் ஒருவ பாவர். கந்தர்மடம், வை. சி. சி. சிவகுருநாதபிள்ளையும் ஒருவராவர். கொக்குவில், பண்டிகர் தம்பு என்பவரும் ஒருவராவர். இராமநாத மான்மியம், அருணுசலமான்மியம் முதலிய நூல்களை இயற்றியவரும், புலவருமாகிய சாவகச் சேரி, ச. பொன்னம்பலப்பிள்ளையும் ஒருவராவர். இந்தி யாவிலுள்ள தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த உரத்தூர்

Page 48
76 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கோ. வைத்தியலிங்க பிள்ளையும் ஒருவராவர். திருவாவடு துறை ஆதீனஸ்தராய்விளங்கிய பொன்னேதுவாரும் ஒரு வாாவர். மேற்படி ஆதீனஸ்தர் சுப்பிரமணிய ஒதுவாரும் ஒருவராவர். காரைக்குடி சொக்கலிங்கச்செட்டியாரும் ஒரு வராவர். பழனிக் குமாரசுவாமிக் கம்பிரானும் ஒருவரா வர். வடகோவைச் சபாபதி நாவலரும் இவரிடம் சில
நூல்கள் கற்றனர் என்ப.
இவர் வேதாரணியம், தேவகோட்டை முதலியஇடங் களிலும் சிலகாலம் வசித்தவர். வேகாரணியத்து வசித்த காலத்தில்,கற்றிணைஉரையாசிரியர், பின்னத்தூர் நாராயண சாமி ஐயரும் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் தமக்கு நேர்ந்த ஐயங்களை இவரிடம் கேட்டுத் தெளிந்தனர் என்று அங்கற்றிணை என்னும் நூலின் முகப்பில் எழுதப்பட் டுள்ளன.
இவர் பாரதத்தில் சில பருவங்கட்கும் மயூரகிரிப் புராணத்துக்கும் உரையெழுதி அச்சிட்டு வெளிப்படுத்தி புள்ளார். இவராலேயே யாழ்ப்பாணத்து நல்லூர் மகா வித்துவான் அரசகேசரி தமிழில் மொழிபெயர்த்து இயற்றிய இரகுவம்சம் என்னும் நூல் பரிசோதித்து அச்சிடப்பட்டது. யாழ்ப்பாணத்துப் புலவர்களுள் மிகச் சிறந்த புலமை படைத்த இவர் சாலிவாகன சகாப்தம் 1825-க்குச் சமமான எவிளம்பி வருஷம் மார்கழி மாதத் தில் தேசவியோகமடைந்தனர்.
முருகேசபண்டிதர்
இவர் யாழ்ப்பாணத்துச் சுன்னகம் என்னு மூரிலே வேளாண்குலத்திலே பூதப்பிள்ளை என்பவருக்கு மைந்த ராகப் பிறந்தவர். இவர் தேகவியோகமடைந்த காலம்
VS O O w சாலிவாகன சகாப்தம் கஅஉஉக்குச் சமமான விகாரி

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 77
வருடம் ஆவணி மாசம் இருபத்தோராங் தேதியாகும். உடுப்பிட்டி, சிவசம்புப் புலவரிடத்தும், நீர்வேலி, சங்கர பண்டிதரிடத்தும் சிற்சில நூல்கள் கற்றவர். பாரதம், இராமாயணம், கந்தபுராணம், சேதுபுராணம் முதலிய இலக்கியங்களிலும், தொல்காப்பியம், நன்னூல், யாப் பருங்கலக்காரிகை, அகப்பொருள் முதலிய இலக்கணங் களிலும் மிக வல்லுநர். இவர் இலக்கணக்கிற் பெரிதும் சாமர்த்தியம் வாய்ந்தவர். அதனுல் ‘இலக்கணக் கொட் டன்’ என்று அழைக்கப்படுவர்.
யாழ்ப்பாணத்திலும், இந்தியாவிலே சிதம்பரம், கும்பகோணம், சென்னை, கிருப்பற்றுார் முதலிய இடங் களிலும் தமிழாசிரியராக இருந்தவர். யாழ்ப்பாணத்திலே குமாரசுவாமிப் புலவர்க்கும், வண்ணுர்பண்ணே காவலர் கோட்டத்து முத்துத்தம்பிப்பிள்ளைக்கும், பிறருக்குக் தமிழாசிரியர். யாழ்ப்பாணத்திற் கற்பித்தவிடங்களை, இவர் மாணவர் குமாரசுவாமிப்புலவ ரியற்றிய பின்வருங் கொச்சகப்பாக் காட்டும்.
தரவு கோச்சகம் wd சுன்னோகர் புன்னை நகர் சொல்லியதென் கோவைநகர் மன்னுசிறுப் பிட்டியள வெட்டியொடு மல்லாகக் துன்னியகல் வளைமுதலாந் தொன்னகர்வாழ் மாணவர்க்கும் பன்னுதமிழ் சொன்னவன்மன் முருகேச பண்டிதனே.
பலவகையழகுக் தொடைநய முதலியவும் பெற விரைந்து கவிபாடுக் கிறமுடையவர். மடக்கு சிலேடை முதலிய கவிகள் பாடுதலிலும் வல்லவர்.
இவரியற்றிய பிரபந்தங்களாவன :- மயிலனிச்
சிலேடை வெண்பா, ஊஞ்சல், பகிகம்; சந்திரசேகர
ஞ 9 s
விநாயகரூஞ்சல், குடந்தைவெண்பா, நீதிநூறு, பதார்த்த
தீபிகை என்பனவும் பிறவுமாம். இவையன்றிப் பல

Page 49
78 ஈழ 5ாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
தனிநிலைக்கவிகளும் பாடியுள்ளார். மயிலனிட்-சுன்னுகத் தைச் சேர்ந்த ஒரிடம், குடந்தை--கும்பகோணம். பதார்த்ததீபிகை-தருக்கசங்கிரக மூலத்தைக் கட்டளைக் கலித்துறையி லமைத்துப் பாடியது. இவர் பாடிய குடந்தை வெண்பாவில் ஒரு செய்யுளும், மயிலனிச் சிலேடை வெண்பாவில் ஒருசெய்யுளும் காட்டுதும் :- குடந்தை வேண்பா மாமியொடு கூடி மகிழ்ந்து மலைதோறும் கோமி யுறையுங் குடந்தையே-எமுனையில் தாாணித் தோார் தமையெரித்தார் பூமகனூர் தாாணித் தேரார் தலம். கோமி-சரசுவதி. அவள் மாமி இலக்குமி. ஏ-அம்பு. தார்-கொடிப்படை. தேரார்-பகைவர். பூமகன்-பிரமா. தாரணி-பூமி.
மயிலனிச் சிலேடை வெண்பா கோகனகப் பூமேலும் கோவேந்தர் வீதியிலும் வாகனங்க ளேறு மயிலணியே-ஆகவத்தில் வந்துகைக்கும் தோார் மடிந்தருளப் பாகனென வந்துகைக்கும் தோார் மனை. - கோகனம்-காமரை. வாகனங்களென்பதற்கு வாகு அன்னங்களெனவும்,வாகனங்களெனவும் பொருளுரைக்க, வாகு-அழகு. ஆகவம்-போர்க்களம். கைத்தல்வெறுத்தல். தேரார்-பகைவர். வக்து- வாயுதேவன். உகைக்கும்-செலுத்தும், தோார்-கேரையுடையவர்.
இவரியற்றிய தனிக்கவியிலும் ஒன்று காட்டுதும்:-
நடுவேழத் தலங்காரம் மைந்தன் விதை மாமிகவர் வழிமீ னென்று
மதனவேள் புறவிதழிவ் வேழின் மீது வர்தாடு வெழுத்தெனக்குச் செய்கான் மற்றை
வரிகள் பதி ஞன்கினையுந் தானே கொண்டான்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 79
அந்தநாள் வளைத் திச்சி தரித்துத் தம்மை
அருச்சிக்கு மவர்க்ககற்றி யங்கை யேந்தி முந்தவதன் கீழிருந்து டேனஞ் செய்து
முனிக் துரித்தான் மயிலனிவாழ் முதல்வன் முனே.
இங்கே நடுவெழுத்தாற் கொள்ளப்பட்ட பொருள் தத்துவராமற் செய்தான் என்பது. 5டுவெழுத்து எடுக்கும்படி கொள்ளப்பட்ட சொற்கள் ‘மைந்தன், விதை” முதலியவற்ருற் பெறப்பட்ட மதலை, வித்து, மாதுலை, கவலை, ஆாால், காமன், புல்லி என்னும் ஏழு சொற்களும் என்க. வரிகள் பதினன்கு என்றது, இவைகளிலே நடுவெழுத்து நீங்கிய மற்றை எழுத்துகளை. அவற்றை மலைமுதலியனவாகக்கொண்டு வளைத்து முத விய எச்சங்களோடும் முறையே சேர்த்துப் பொருள் அறிக.
இவர், நிரம்பிய கல்வியறிவில்லாதார் செய்த நூ லுரை களில் உள்ள குற்றங்களை எடுத்துக்காட்டி வாதம் புரி யும் வழக்கமுடையவர். பத்திரிகைகளிலே வாத விஷய மாகப் பல கடிதங்கள் எழுதினவர். ஆறுமுக நாவலரை யும் பிறரையும் வெல்லக் கருதித் தம் பத்திரிகையிலே சைவ விரோதமும் பிறவுமாகப் பல விடயங்கள் எழுகிய கத்தோலிக்கு வித்துவான் அருளப்ப முதலியார் செய்த அலங்கார பஞ்சகம் என்னும் நூலிலே குற்றங்காட்டி, அலங்கார பஞ்சக சண்டமாருதம் எனக் கண்டனம் ஒன்று
வரைந்தவர். அவற்றுள் ஒன்று காட்டுதும்.
அலங்கார பஞ்சக சண்டமாருதம் அரும் பிராமணத் தினிய கனியுதவு மருங்கொடி
பருதியம் பாத்தி இருந்தாா சாத்தி கழுமொரு மீதி யிறைமகள்
இணையறு மறத்தி

Page 50
80 ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம்
பொருந்திவெஞ் ஞான்று ஞானசக் கிலிச்சி புல்லனை
யருள்கநன் குறத்தி மருந்தெனப் புகழு மருத மடுவினில் வதிசெப
மாலைமா மரியே.
அருங்கொடி இருந்தராசு என்னுங் தொட்டர்களை அரும்-கொடி, இரும்-தராசு எனப் பிரித்தது ஏன் ? இவற்றிற்கு மை இறுதியாவதன்றி “இனமிகல்’ என் பதணுற்ருேன்றிய மகரவொற்றும் இறுதியாகுமா ? மணத்தினியகனி என்பதற்கு வாசனையைக்கொண்ட இன்பமாகிய கனி என்று உரைத்தவர் மணத்து இனிய எனப் பதம் பிரித்தது என்ன? மணத்து என்னும் வினையெச்சம் வாசனையைக் கொண்ட என்னும் பெய செச்சப்பொருளைத் தருமா? இனிய என்பதற்கு இன்ப மாகியது எனப் பொருளுரைத்தது என்னை -இனி மைக்கு இன்பம் பிரதிபதமாகுமா? சக்கிலிச்சி என்பதில் இச்சி என்பதற்கு விரும்பி எனப் பொருளுரைக்க ஆன் ருேரர் வழக்கும் உண்டா?
வல்வை வயித்தியலிங்கம்
இவர் சாலிவாகன சகாப்தம் osat 5-6-5c35j 3 Lotra 6ot சுபகிருதுளுநில மாசிமாதத்திலே வல்லுவெட்டித்துறை யென்னும் ஊரிலே பரதவகுலத்திலே சங்கரக்குரிசிலுக் குப் புதல்வராகப் பிறந்தனர். இவர் உரிய காலத்திலே வித்தியாரம்பஞ் செய்யப்பெற்று, அவ்வூரிலுள்ள ஒரு வித்தியாசாலையிலே சென்று கல்விகற்றனர். பின் உடுப் பிட்டிச் சிவசம்புப் புலவரிடஞ் சென்று இலக்கிய இலக் கணங்களைக் கற்றுப் பாண்டித்கியம் அடைந்து, தென் னிந்தியநாடு சென்று சமஸ்கிருத நூல்களையுங் கற்று அவற்றிலும் தேர்ச்சியுடையராயினர். இலக்கண இலக்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 81
கியங்களிலன்றித் தருக்கம், ஜோதிஷம், வானசாஸ்திரம் முதலிய கலைகளினும் இவர் சிறந்து விளங்கினர். தமி ழினும் சம்ஸ்கிருதத்தினும் கவிகளியற்றும் வன்மையு முடையாாயினர். சில புலவர்க்கு சம்ஸ்கிருத சுலோகத் தானும் பாயிரம் அளித்துள்ளார். சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலிய சந்தான சைவசாஸ்திரங்க ளையும் கற்றறிந்தார். சைவசமயத்திலே மிகுந்த அபி மானமுடையவராதலினலே அதனை விருத்திசெய்யும்படி * சைவாபிமானி' என்னும் பெயரோடு ஒரு பத்திரிகை நடாத்தி வந்தார்.
அக்காலத்திலே சென்னையிலிருந்த ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் எழுகிய சைவமகத்து வம் என்னும் நூலுக்கு மாருக பூரீ அருளப்பமுதலி யார் எழுதிய சைவமகத்துவகிக்காரம் என்னும் கண்ட னத்திற்கு எதிராக இவர் சைவமகத்துவதிக்கார கிக்கிர கம் என ஒரு கண்டனமெழுகி முதலியார் வாயை அடக்கினர். அதனுல் தாமோதரம்பிள்ளையவர்களும் சென்னையிலுள்ள மற்றும் அறிஞர்களும் இவரைப்போற்றி இவர்க்கு இயற்றமிழ்ப் போதகாசிரியர் என்னும் பட் டப்பெயரை அளித்தனர் என்ப
ஈழமண்டலத்திலே அட்டாவதானத்தை முதலிற் செய்து பெயர்பெற்ற வல்வை - ஏகாம்பரம் என்பவர்க் கும் இவர் மிக அணுகிய சுற்றத்தவரென்றுங் கூறு வர். இவரிடங் கல்விகற்ற மாணவர்களுட் சிலர் இன் அனும் இலைமறைகாய்போல வல்வையிலும் மற்றுமூரிலும்
அங்கங்கே காணப்படுகின்றனர்.
இவர் சைவாசாரத்திற் சிறந்து விளங்கியதோடு தம் மவர் பலரையுஞ் சைவாசாரமுஞ் சிவபக்தியுமுடையாாய்
ll

Page 51
82 ஈழ 5ாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
விளங்கவும் செய்தனர். தாம் நடாத்கிய பத்திரிகையை அச்சிடுதற்பொருட்டும் தாம் இயற்றிய நூல்களை அச் சிடுதற்பொருட்டும் ஓரச்சியந்திரத்தையும் தமதூரிலே தாபித்து வைத்திருந்தனர்.
இவரியற்றி அச்சிட்டு வெளிப்படுத்கிய செய்யுணுால் கள் :- சிந்தாமணி நிகண்டு, செல்வச்சங்கிகி முறை, வல்வை வயித்தியேசர் பதிகம், சாகிநிர்ணயபுராணம் என்பனவாகும். இவரியற்றிய உரைகள் :-கந்தபுரா ணத்து அண்டகோசப்படலவுரை, தெய்வயானை திரு மணப்படலவுரை, வள்ளியம்மை திருமணப்படலவுரை, கல்வளையங்தாதியுரை, கந்தரலங்காரவுரை என்பனவா கும். சூரபன்மன் வதைப்படலத்திற்கும் உரையியற்றி அச்சிட்டு வந்தனர். அது முற்றுப்பெறவில்லைபோலும்.
இவர் கிருத்தி அச்சிட்டநூல், நாற்கவிராசகம்பி யகப்பொருள்விளக்க வுரையாகும். இவரியற்றிய கவித் திறமுணர ஒரு கவியை இங்கே காட்டுதும் :-
சிந்தாமணி நிகண்டு
சீர்செறி செஞ்சடைக்கட் டிகழ்மதிப் பிளவுதாங்கும் ஏர்செறி கரிமுகன்ற னிணைமல பாடியையேத்தி நேர்செறி யி2ளஞாோர்சொற் கொருபொரு ணோாயோரப் பார்செறி நிகண்டுசிந்தா மணியெனப் பகர்வனன்றே.
இவர் இற்றைக்கு A கூ வருடங்களுக்கு முன்னே சார்வரி வருடத்து ஆவணி மாதத்திலே கற்முேரும் மற்றேரும் வருந்தத் தேகவியோகமடைந்தனர்.
இவர் மட்டைக்களப்பிலும் சிலகாலம் வசித்தவர். அஞ் ஞான்று அவ்வூர் வித்துவான் பூபாலபிள்ளை என்பவர் இலக் கண இலக்கியங்களிற் தமக்குற்ற சங்தேகங்களை இவர்பாற் கேட்டுத் தெளிந்தனர் என்ப.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 83
கணேச பண்டிதர்
இவர் ஏறக்குறையத் தொண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணையிலே வேதியர் குலத்திலே பிறந்தவர். வடமொழி வியாகரணங்களை பும் காவியங்களையும், தென்மொழி இலக்கண இலக்கி யங்களையும் கற்றுத் தேர்ந்து பாண்டித்தியம் படைத்த வர். கவிபாடுங் கிறமுமுடையவர். இவர் செய்யுள்கள் பழைய செய்யுள்கள் போல ஒழுகிய ஒசையும் விழுமிய பொருளு முடையன. இவர் பாண்டிகாட்டில் இளையாற் றங் குடியில் இருந்த காலத்தில் அக்கல மான்மியத்தைத் தமிழிற் பெயர்த்து விருத்தப் பாவாக அந்நகரவணிகர் வேண்டுகோட்கிணங்கி இயற்றினர். அதனுள் ஒரு செய் புள தருதும. அது வருமாறு :
* அப்பெரு மான்மி யத்தை யாவணி சடையி னுர்தஞ் செப்பரு முகத்தில் வந்த சீர்கெழு குரவன் முனும் எப்பெரும் புகழும் வாய்ந்த விளசைமா நகரத் தாரும் தப்பருங் தமிழின் பாவாற் பாடியே தருக வென்முர்."
இவர் திருவண்ணுமலை யாதீனத்து வித்துவான யிருந்தவர். இவர் தேகவியோகமாகி முப்பத்தெட்டு வரு
ஷங்களாகின்றன.
திருஞானசம்பந்த உபாத்தியாயர்
இவர் ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்னே சுளிபுரமென்னு மூரிலே செல்வநாயகச் செட்டியார் குலக் கிலே பிறந்தவர். ஆறுமுககாவலரிடம் இலக்கண இலக் கியங் கற்றவர். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் முதலிய இலக்கியங்களிலே மிகுந்த பயிற்சி உடையவர். பலருக்குங் கற்பித்தவர். பிரசங்கஞ் செய்யுங் கிற மும் கவி பாடுங் கிறமுமுடையவர். மாணிக்கப்பிள்ளை

Page 52
84 ஈழநாட்டுத் தமிழ்ப் புவலர் சரிதம்
யார் திருவருட்பா, க.கிர்காமவேலர் கிருவருட்பா முதலிய பிரபந்தங்களும் சில தனிநிலைக் கவிகளு மியற்றினவர். இவர் புதல்வராகிய பண்டிதர் சோமசுந்தரப்பிள்ளை இராம நாதன் கல்லூரியிலே தமிழ்ப் பண்டிதராகவிருந்து இப் பொழுதுங் கற்பித்து வருகின்றனர். இவர் கவியுள் ஒன்று காட்டுதும் :
கதிர்காமவேலர் திருவருட்பா * பூவார் மலர்மிசைப் போதனு மாயனும் போற்றியினும்
நாவாற் றுதித்தற் கரிதாங் கதிரை நகருறையும்
மாவாரும் வள்ளிதெய் வானை மணளற்கு மன்னுமருட்
பாவார் துதித்துணை மாணிக்க வைங்கான் பாதங்களே."
இவர் முப்பத்துமூன்று வருடங்களுக்குமுன் தேக வியோகமாயினர்.
கணபதிப்பிள்ளை
இவர் யாழ்ப்பாணத்துள்ள புலோலியென்னு மூரிற் பிறந்தவரும் சைவாசாரம்பூண்ட வேளாளர் குலத்தவருமாகிய வல்லிபுரநாதபிள்ளைக்குப் புதல்வர். தமதூரிலுள்ள ஒரு வித்தியாசாலையிலே கல்வி பயின்ற பின் உடுப்பிட்டி, பூரீமான் அ. சிவசம்புப் புலவரிடஞ் சென்று தமிழிலுள்ள இலக்கிய இலக்கண்ணங்களைக் கற் துப் பெரும் பண்டிதரானுர். பின் சென்னை சென்று அங்கே ஆங்கிலமும் வடமொழியுங் கற்று, ஆங்குள்ள சர்வகலாசாலைப் பிரவேச பரீட்சையிற் சித்தியெய்திய பின் வடமொழி நூல்களைக் கற்பதிலே அதி கருத் துடையாாகி அவ்வடமொழியிலுள்ள பல நூல்களையும் விரும்பிக் கற்று, அவற்றில் மிகுந்த புலமையுடைய .ாாய் விளங்கினர். அக்காலத்தில் இவர் தமது புலமையை யறிந்த சில . அறிஞர்களது வேண்டுகோட்கிணங்கி

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 85
காஞ்சிபுரம் சென்று அங்குள்ள பச்சையப்பன் கலா சாலையிலே கமிழ்ப்பண்டிதராயிருந்து தமிழ் நூல்களை மாணவர்க்குக் கற்பிக் து வந்தனர். பின் கிருவனந்த புரத்து மஹாராஜ கல்லூரிக்குப் பிரதமாசிரியராகச் சென்று அங்கிருந்து வடமொழி தென்மொழியாகிய இருமொழிநூல்களையும் கற்பித்துவந்தனர். வருங் காலத்திலே த மக்கு ற் ற நோ யி ன லே சாலி வாகன சகாப்தம் 1817-ல் தேகவியோகமடைந்தனர். தாம் படிப்பித்துவருங் காலத்திலே லோகோபகாரமாக இவரியற்றிய நூல்களும் பல. அவை பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல்களே. அவையாவன :-
வில்ஹணியம், இரகுவமிசச் சுருக்கம், இந்திரசேன நாடகம், வாதபுரேசர் கதை (மாணிக்கவாசகர் புராணம்) முதலியவாம். வில்ஹணியம் வில்ஹணகவிராசன் சரித் கிாங் கூறும் நூல். வில்ஹணகவிராசன், பாமினி பூரண கிலகை என்னுமிராசகுமாரிக்குத் தான் காவிய நாடகாலங்கார சாத்திரம் கற்பித்ததையும், அவளைக் தனக்கு மனைவியாக்கிய வரலாற்றையும் சந்திரோதய வருணனையையும் வித்தியாமகத்துவ முதலிய பிறவற் றையும் இதன்கட் கூறுவன்.
இவர் கவித்துவம் புலப்பட அவற்றுள் ஒரு செய் புள் காட்டுதும் :-
* மந்திரி கேளா யென்றன் மாதவங் தன்னல் வந்த சந்திர வகனை யாகுங் தையல்சங் கீதங் தன்னில் கந்திரி வீணை தன்னிற் சமமிலாள் சாகித் யந்தான் வந்திடும் வகையா தென்ன மகிழ்ந்தெனக் குரைப்பாய் சீயே’
இவர் வேதாரணியத்துள்ள வேதாரணியேசுரருக்கு ஒரூஞ்சலும் பாடியுள்ளார். அதனுள்ளும் ஒரு செய் պoir காட்டுதும் :-

Page 53
86 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
* மணியோங்கு மகோததியின் பால தாய
மறைக்காட்டு மதியொளிரு மெளலி யார்மேல் அணியோங்கு மூஞ்சலிசை யடியார் தங்கள்
அடிக்கடியேன் றமியேனு தாத்திற் பாடப் பணியோங்கு மென்பாயற் பதுமக் கண்ணன்
பழிதொலைத்தாட் கொண்டவருட் பாம ஞர்தங் கணியோங்கு வீரகத்திச் சேத கன்செங்
கமலமலர் கிகாடிகள் காப்ப தாமே."
இவர் மாணுக்கருட் சிறந்தோர் :- தம்பியாராகிய குமாரசுவாமிப் புலவரும் தங்கையாராகிய பார்வகிஅம்மை யாரும் ஆவர். (பார்வதி அம்மையாரது மாணவிகள் இருவர் மதுரைத் தமிழ்ப் பண்டித பரீட்சையிற் சித்தியடைந்திருப்பதே அவ்வம்மையாரது கல்வி வன்மை யைக் காட்டும்.)
மொழிநூல் ஆசிரியராகிய மாகறல் கார்த்திகேய முதலியாரும் இவர் மாணுக்கருளொருவரென்பது அவ ரியற்றிய மொழிநூலின் ஆசிரியவணக்கத்தால் அறி யக்கிடக்கின்றது. இன்னும் இவர் சென்னையிலிருந்த கிராவிடவர்த்தன சங்கத்துப் பண்டிதருளொருவரா யிருந்தனரென்றுங் கூறுப. அச்சபையைச் சேர்க்த சதுர் வேத வையாகாண பூரீநிவாசாசாரிய சுவாமிகள் என் ஒனுஞ் சம்ஸ்கிருத வித்துவ சிரோமணிக்கு இவர் குரு வாக இருந்தவரென்றுஞ் சொல்வர்.
முன் காட்டியவையன்றி இன்னும் பல நூல்கள் இவரியற்றியனவாக உள்ளன. அவற்றுட் பல அச் சிடப்படவில்லைப்போலும். அவையாவன :-
இரகுவம்மிச மொழிபெயர்ப்பு, மார்க்கண்டேய புரா ணம், தருக்க சாஸ்திர வினவிடை, பதப்பிரயோக விவ *ாணம் என்பன. இன்னும் இவர் சம்ஸ்கிருத நூல்
களும் է 167) இயற்றியுள்ளார்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 87
நா. கதிரைவேற்பிள்ளை
இவர் ஏறக்குறைய எண்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னே, புலோலி என்னுமூரிலே, சைவாசாரமுடைய வேளாண்குலத்திலே, நாகப்பபிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். இளமை தொட்டு அதி தீவிர புக்கியும், அகி ஞாபகசக்கியும் வாய்ந்தவர். இவர் வித்தி யாரம்பஞ் செய்தபின், அவ்வூரிலுள்ள வித்தியாசாலை யொன்றிலே கல்வி கற்று வந்தார். அதிகம் வறிய குடும் பத்திலே பிறந்தவர் ஆதலினல், நீண்ட காலங் கற்றுக் கொள்ள முடியாதவராய், ஆரும் வகுப்பு முடிந்தவுடன் வித்கியாசாலையை விடுத்து, அவ்வூர் கொத்தாரிசு சிதம் பரப்பிள்ளை என்பவருக்கு இலேககராக அமைந்தனர். பிறருக்குக் கீழமைந்து வாழ்தலில் விருப்பமில்லாத இவர், இருபத்திரண்டாம் வயதிலே, அந்த கொத் தாரிசு சிதம்பரப்பிள்ளைக்கும் தமக்குமுண்டான பிணக் கொன்றைச் சாட்டாகக்கொண்டு அம்முயற்சியை விடுத்து, இந்தியாவிலுள்ள சென்னைக்குப் போய், அங்கே சம்ஸ் கிருதத்திலும், தமிழிலும் வல்ல புலவரை அடைந்து, தமிழும் சம்ஸ்கிருதமும் . கற்றுப் பாண்டித்தியமடைக் தனர். இவர் சென்னை சென்ற அக்காலத்தே, அங்கு உத்தியோகத்திலமர்ந்கிருந்த, தி. த. கனகசுந்தாம்பிள்ளை யிடத்தும் தொல்காப்பியமும், வேறு சில நூல்களுங் கேட்டறிந்தனர் என்ப. இருமொழியினும் வல்ல புலவ சாய் விளங்கிய இவர், சென்னையிலே பலவாண்டு வசித் தனர். வசித்த காலத்திலே சென்னையிலும் பிறவூர்களி லுஞ் சென்று, பிரசங்கங்கள் செய்வாராயினர்; இணை யற்ற காவன்மையை இயல்பாகவே பெற்றவராதலின், சொற்பஞ்சமின்றி உபங்கியாசங்கள் செய்வதில் எவரி லுஞ் சிறந்து விளங்கினர். வித்துவ சபைகளிலும், அரச

Page 54
88 ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்
சபைகளிலும் அஞ்சாது நின்று பேசுவார். பேச்சு வன்மையில் இவருக்கிணையாவாரில்லை யெனலாம். தடைப் படாமலும் விரைவாகவும் பலமணிநோம் நின்று ஆயாச மின்றிப் பேசும் வன்மை இவருக்குண்டு. அங்காளில் இவரது பேச்சுவன்மையை எடுத்துப் பாராட்டாதாரிலர். அதனலிவருக்கு எங்கும் மிக்க புகழுண்டாயிற்று. அறி வின்மிக்கா ரெவாாயினும் தம்மை எதிர்ப்பட்டு ஒரு விஷயத்தை வினவின், உடனே யவர்மனக் கிருப்தியாகச் சமாதானஞ் சொல்லும் சமையோசிதயுத்தியு முடைய வர். இவரை வலிந்து வாதுக்கழைத்துத் தோல்வியுற்ற வித்துவான்களும் பலராவர். பேரிலக்கணமாகிய தொல் காப்பியமும், தமிழ்மறையாகிய தேவர்குறளும் என்று மிவர் நாநூனியிலிருந்து குதிகொண்டாடும்.
Y இவரியற்றிய நூல்கள் : கூர்மபுராண விரிவுரை, பழனித்தல புராணவுரை, சைவசந்திரிகை, சைவசித்தாங் தச் சுருக்கம், சிவாலய மகோற்சவ விளக்கம், சுப்பிர மணிய பராக்கிரமம் என்பன. இவரோரகராதியுங் தொ குத்தெழுதி அச்சிட்டுள்ளார்.
இவர் மாயாவாகத்தை கிராகரித்துப் பேசுங் தன்மை வாய்ந்தவராதலினலே, சென்னையிலுள்ள வித்துவான்கள் யாவருங் கூடி, மாயாவாத தும்சகோளரி என்னும் பட் டத்தை அளித்துள்ளார்கள். அப்பொழுது அக்கிரா சன ராயிருந்து அப்பட்டத்தை அளித்தவர், காசிவாசி பூரீ செந்திநாதையரேயாவர். இன்னும் இவர்க்குப் பல சிறப்புப் பெயர்களுள.
இவர் பிரசங்கங்கள் செய்வதிலன்றி அட்டாவ தானம், சதாவதானம் முதலியன செய்தலிலும் வன்மை படைத்துப் பெரிய வித்துவ சபைகளிலெல்லாம் அவ்

ஈழ5ாடடுக த பபூட புouவா சரிதம் 89
வவதானங்களைச் செய்துகாட்டிப் பெரும் புகழ்படைத் தார். இத்தகைய தீரம் வாய்ந்த இப்புலவர் கிறீஸ்தாப் தம் 1907-ம் ஆண்டில் தேகவியோகமடைந்தார். இவ ருடைய கவித்திறனுணர்தற்பொருட்டு இவர் பாடிய சில கவிகளை இங்கே காட்டுதும்.
கட்டளைக் கலிப்பா
* நல்ல யாழ்ப்பாண மேலைப்பு லோலியி
னஞமெங்கட் கருள்செய வந்துறை செல்வ னுகும் கதிரையில் வேலவன்
சீரடித்துணை செய்துணை யாலுல கல்ல லோட வறிவில னிங்கிதை
யாற்றி னேன்குறை யாண்டிட லீங்கிது மல்கு நந்தா மணிவிளக் காயெழ
மாசிலெந்தை யருடூண்டு முண்மையே."
(சிவகேஷத்திார்லய மகோற்சவ உண்மை விளக்கம் அவையடக்கம்)
* இடந்தானு முனரான யின் முருகை யெல்லாங்கடந்தானை அருளாந்தன் கடலானை வேல்கைச் கிடந்தானை யெப்பொருளுங் கிடப்பானைச் சூர்க்கா நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே நம்பானை யேத்தாத நாவென்ன நாவே, ?
(சுப்பிரமணிய பராக்கிரமம் )
இவர் சென்னையில் வசிக்குங்காலத்திற் கருங்குழி இராமலிங்கபிள்ளை பாடலை அருட்பா அன்று மருட்பா என மறுத்து எழுதிய கண்டனங் காரணமாக இவர் மீது வேறுசிலர் சென்னைப் பெருமன்றத்து நீதிபதியிடம் முறையீடு செய்தார்கள். அம்முறையிட்டு விசாரணையில் இவரே வெற்றிபெற்ருர். இது கிறீஸ்தாப்தம் 1904-ம் ஆண்டு மார்கழிமாதத்து நிகழ்ந்தது. இதனை * மருட்பா
2

Page 55
90 fyp 5ாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம்
மறுப்பு விஜய மகாசாபம்" என்னுஞ் சிறு புத்தகச் சுவடியாலறியலாம். இச்சுவடி கிறீஸ்தாப்தம் 1905-ம் ஆண்டு தைமாதம் 22-ங் திகதி பூரீ காஞ்சிபூஷண அச்சியந்திாசாலையில் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டது.
இவர் ஆரணி நகர சமஸ்தான வித்துவானுயு மிருந்தவர். சைவசித்தாந்த மகாசாபம் என்னும் பெய
ரும் பெற்றவர்.
வேற்பிள்ளை
இவர் சாலிவாகன சகாப்தம் கனசுகூ-க்குச் சம மான பிலவங்க வருஷத்திலே, மட்டுவில் என்னும் ஊரிலே பிறந்தவர். இவர் தந்தையார் புலோலி என்னும் ஊரிலே யிருந்த வேலாயுதப்பிள்ளை கணபதிப்பிள்ளை உடையார். (உடையார் என்னும் பெயர், அவருக்கிருந்த நன்கு மதிப்புப்பற்றி வந்ததேயாம்.) ஐந்து வயதானவுடன் தங்தையார் இவருக்கு வித்தியாரம்பஞ் செய்து, மட்டுவிலிலிருந்த சண்முகம்பிள்ளை ஆசிரியரிடம் இவரை அழைத்துச்சென்று நெடுங்கணக்கு முதலியவற்றைக் கற்பிக்கும்படி வேண்டினர். அவரும் இவர் தந்தையார் கருத்துக்கு உடன்பட்டு இவருக்கு நெடுங்கணக் காதிய வற்றைக் கற்பித்து வந்தனர். இவரும் அவரிடஞ்சென்று நெடுங்கணக்குப் பயின்று, நீதிநூல்களையும், நிகண்டு, அங்காகி முதலியவற்றையும் படித்துவருங் காலத்திலே, இவருக்குக் கல்வியிலிருந்த ஆர்வத்தையும், இவரது நுண்ணறிவையும் நோக்கிய தங்தையார் உயர்ந்த இலக் கிய இலக்கணங்களைப் பயிற்ற விரும்பி, அக்காலத்திலே நல்லூரிலே சிறந்த புலவராயிருந்த கார்த்திகேய ஆசிரிய ரிடக்கிலே இவரை யழைத்துச்சென்று இவருக்கு உயர்ந்த இலக்கண இலக்கியங்களைக் கற்பிக்கும்படி வேண்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 9.
டினர். அவர், தந்தையாருடைய் வேண்டுதற்குடன் பட்டு, இவருக்கு உயர்ந்த இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தனர். பின் இவர் பூநீலறுரீ ஆறுமுகநாவலரிடம் சென்று உயர்ந்த நூல்களைக் கற்முர். நாவலரவர்கள் சென்னைக்குச் சென்றிருந்த காலத்துத் தாமு முடன் சென்று அங்கிருந்தும் இவர் கற்றதுண்டு. ஆறுமுக காவலரவர்களுக்கு இவர்களிடம் மிகுந்த அன்புண்டு. காவலரிடம் இவர் கற்ற காலத்து ஒருங்கு கற்றுச் சிறக் தவர்களுட் சபாபதி காவலருமொருவர். இவர் பொன் னம்பலப்பிள்ளையவர்களிடமும் பல நூல்களைக் கற்ற ஆண்டு. அவரிடம் கற்றமையினலே அவர்போல இவ ரும் கம்பாாமாயணத்தில் அதிக பயிற்சி பெற்றவரா யிருந்தார். யாம் பொன்னம்பலப்பிள்ளையவர்களிடம் வண்ணையிலிருந்து படிக்குங் காலத்திலே இவரும் வண் ணையிலே சில மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லிக்கொண் டிருந்தனர். அப்போது யாமும் ஐயமானவற்றை இவ ரிடமுங் கேட்டுத் தெளிவதுண்டு. இவர் வாதவூரர் புரா ணத்திற்கு விரிவுரையெழுதிய காலமு மக்காலமேயாம். இவர் காமெழுதும் விரிவுரையை அவ்வப்போது பொன் னம்பலப்பிள்ளையவர்களிடம் கொண்டுவந்து காட்டுவ துண்டு. இவர் எழுகிய விரிவுரை முழுவதையும் பார்த்து முடித்தபின் உரையின் கிறந்தையும், இவர் அறிவின் திறக்தையும் வி ய ங் து இ வ. ரு க் கு உரையாசிரி யர் என்னுஞ் சிறப்புப்பெயரையும் பொன்னம்பலப் பிள்ளை யவர்களே அளித்தனர். இவர் வாகஆரர் புரா ணத்திற்கு எழுதிய உரையே, இவரது இலக்கிய வன்மை யையும் சித்தாந்த சாஸ்திர வன்மையையும் கண்கூடா கக் காட்டும். இவ்வுரையேயன்றி, இன்னும் புலியூர் அங் தாகியுரை, அபிராமி அந்தாகியுரை, கெவுளிநூலுரை முதி
விய உரைகளும் இவராலியற்றப்பட்டனவாகும்.

Page 56
92 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
இவர் இவ்வுரையியற்றிச் சிலகாலம் சென்றபின்பு, சிதம்பரத்திலுள்ள நாவலர் வித்தியாசாலைக்கு ஆசிரிய ராக அவ்வித்தியாசாலை அதிபரால் அழைக்கப்பட்டுச் சென்று, பலவாண்டுகளாக அவ் வித்தியாசாலைக்குத்
தலைமையாசிரியராகவிருந்து கற்பித்துவந்தனர். தம வயோகிக நிலைமையாலே கற்பித்தலினின்று நீங்கிய பின்னும், நடேசப்பெருமானைத் தரிசிக்க விரும்பிச் சிதம்
பாத்திலேயே தமது மரணகாலம்வரையுமிருந்து அங் கேயே தேகவியோகமடைந்தார். சிதம்பரம் சைவப்பிர காச வித்தியாசாலையிலே இவரிடம் கற்றவருட் சிறந்த வாாய் விளங்குபவர், இப்போது வண்ணுர்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையிலே தலைமையாசிரியராக விருந்து கற்பித்துவருபவரும், தஞ்சைவாணன் கோவை யுரையைப் பரிசோதித்துப் பல திருத்தங்களோடும் பல குறிப்புகளோடும் அச்சிட்டு வெளிப்படுத்தியவரும், சிதம் பரத்தையே ஜெனனவூாாகக் கொண்டவருமாகிய வித்து வான் சுப்பையாபிள்ளையும், சிதம்பரம் வித்துவான் தண்ட பாணி ஐயரு முதலாயினேர். சிதம்பரத்திலன்றி, யாழ்ப் பாணத்திலும் பலர் இவரிடங் கற்றுச் சிறந்த புலமை யடைந்துள்ளனர். அவர்களுட் சிரேஷ்டரானேர் ஆவாங் கால் நமசிவாயப்பிள்ளை, சாவகச்சேரிப் பொன்னம்பலப் பிள்ளை என்பவர்களாவர். இவர் இலக்கிய இலக்கணங்களி லன்றிக் கவிகளியற்றுவதிலும் வல்லவர். இவரியற்றிய செய்யுணுால்கள் புலோலிப் பர்வதவர்த்தனியம்மை தோக்கிாம், புலோலி வயிரவக்கடவுள் தோத்திரம், ஈழ மண்டல சதகம் என்பனவாம். இவ் வீழமண்டல சதகம், இங்கியாவிலே இவர் இருந்தபோது ஈழமண்டலத்தின் பெருமையையறியாது இகழ்ந்தோர் சிலர்க்கு அதன் பெரு மையை அறிவிக்கும்படி இயற்றப்பட்டதாகும். இவர் பரிசோதித்து அச்சிட்ட நூல்கள் வேதாரணியபுராணம்,

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 93
சிதம்பரச் சிவகாமியம்மை சதகம் முதலியனவாம். இவர் இலக்கிய உணர்ச்சியிற் சிறந்த புலவராய் விளங்கியதன்றி அவற்றையெடுத்து நயம்பட வுரைக்கவும் வல்லவராயிருங் தார். தம்மோடு சம்பாஷிக்க விரும்பிவரும் அறிஞர் களுக்குப் பழைய நூற் சிறப்புக்களையும், சைவசமயப் பெருமைகளையும் எடுத்து இனிமையாகவும் தெளிவாக வும் மகிழ்வோடு சொல்லிக்கொண்டிருப்பார். அவற் றைக் கேட்பவர்களும் அலுப்பின்றி யிருந்து கேட்டு மகிழ்வார்கள். இன்னும் இவர் புராணங்களுக்குப் பொருள் கூறிப் பிரசங்கஞ் செய்வதிலும் வல்லவர். தம் விருத்தாப்பிய தசை முதிரமுதிர, சிவனடிக்கண் அன் பும் முதிரப்பெற்று, அவனடிப் பூசையையுங் கிரமமாகச் செய்துவந்தனர். இவர் கவித்திறமுணா ஈழமண்டல சத கத்துள் ஒரு கவியை இங்கே காட்டுதும் :-
வித்துவசிரோமணி ந. ச. போன்னம்பலப்பிள்ளை
பொன்னம் பலப்பெயர்ப் புட்கலா வர்த்தம்
புராதன நியாயோததி புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயணப்
பொருவறு மளக்கர்புவியிற் முன்னித் துலங்கிமலி சூதஞெலி மாலையார்
தொல்பயோ ததிகாவியத் துங்கவார் கவிபாா தப்பாவை லக்கணச் தொடுகடல்க டுய்த்தெழுந்தே மின்னிலங் திடுக்கிட விடித்தியாழ்ப் பாண கிரி
மீதேறி நல்லைமுடிமேன் மேவிப் படிந்து செந் தமிழ்மேதை நிதிமாரி
மிகவும்பொ ழிந்திட்டதிச் சன் மத்து வித்தியார்த் திப்பயிர் தழைத்திடச்
சாந்தகா யகிசமேத சந்த்ரமெள லீசனே யைந்தொழில் விலாசனே
சந்த்ரபுர தலவாசனே.

Page 57
94. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
இவர் பாடிய தனிச்செய்யுளொன்றையும் இங்கே காட்டுதும் :
குருவாகி ஞானங் கொழுத்தவல் லாயெனைக் கூய்மலரின் மருவாகி முத்தி வழங்கவல் லாய்வறி யேனை வண்மைத் தருவாகி யாங்கணுந் தாங்கவல் லாய்சிற் சபா மத்தியிற் திருவாகி நிற்குஞ் சிவகாமி தேவியென் சீரமுதே.
இவருக்கு ஐந்து புத்திரர்கள் உளர். அவர்களுள் முதற்புதல்வர் கிருஞானசம்பந்தப்பிள்ளை. இவர் நெடுங் காலமாக இந்துசாதனப் பக்கிராகிபராக இருந்து வருத லோடு இந்துக்கல்லூரி என்னும் ஆங்கில வித்தியாசாலை யிலே தமிழ்ப்பண்டிதராக இருந்து கல்விகற்பித்தும் வருகின்றனர். இரண்டாவது புதல்வர் மாணிக்கவாசகர் இவர் ஆங்கிலம்பயின்று நியாயவாதி உத்தியோகத்தி லமர்ந்திருக்கின்றனர். இவர், கொக்குவில் பூரீமான் சபாரத்தின முதலியார் புத்திரியை விவாகஞ்செய்து கொண்டு அங்கேயே வாழ்கின்றனர். மூன்ருவது புதல்வர் மகாலிங்கசிவமாவர். இவர் தமிழிற் சிறந்த பண்டிதர். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவருக் குச் சிறிது அறிவுண்டு. வாக்குச் சாதுர்யமும் சமயோ சித புத்தியு முள்ளவர். சபையோர் விரும்பிக் கேட்கு மாறு இனிமையாகப் பேசும் சாமர்த்கியமும் பூண்ட வர். அதனல் பற்பல இடங்களிலும் இவரை யழைத் துப் பிரசங்கஞ் செய்விப்பார்கள். நற்குணமும் கெய்வ பக்தியும் வாய்ந்தவர். பிறரை இகழும் குணம் இல்லாதவர். நான்காவது புத்தியர் கந்தசுவாமி என் பவராவர். இவர் கொழும்பில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறர். ஐந்தாவது புக்கிரர் நடராசப்பிள்ளை. இவர் ஆங்கிலங் கற்று ஆங்கில விக்கியாசாலையிற் படிப்பித்து வருகின்றனர். இவரும் மிகச் சிறந்த குணமுள்ளவர்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 95
சபாபதி நாவலர்
இவர் சாலிவாகன சகாப்தம் கனசுக-ல் வடகோ வைப்பதியிலே, வேளாளர் மரபிலே சுயம்புநாதபிள்ளை செய்த அருந்தவப்பயனல் அவருக்குப் புதல்வராகப் பிறந்தனர். தங்தையார் இவருக்கு உரிய காலத்தில் அவ்வூரிலிருந்த ஜகநாதையர் எனப் பெயரிய பிராமண குருவினல் வித்தியாரம்பஞ் செய்வித்து அவரையே ஆசிரியராக்கினர். அவரிடம் இவர் கல்விபயின்று வரு நாளிற் தந்தையார் இவருக்கு உயர்ந்த இலக்கண இலக் கியங்களைக் கற்பிக்க விரும்பித் தமிழ் சம்ஸ்கிருதம் என் னும் இரு மொழியினும் வல்லவராய் நீர்வேவிப் பதியி லிருந்த சங்கரபண்டிதரிடம் இவரை யழைத்துச் சென்று அவருக்குத் தம் கருத்தைத் தெரிவித்தனர். பண்டித ரும் அவர் கருத்துக்கிசைந்து அவ்வாறே இவருக்கு இருபாஷையிலும் உயர்ந்த நூல்களைக் கிரமமாகக் கற் பித்து வந்தனர். இவரும் அவரிடம் இரு மொழியிலு முள்ள உயர்ந்த நூல்களைக் கிரமமாகக் கற்றுத் தேறி னர். ஆறுமுக நாவலரிடமும் இவர் சில நூல்களைக் கேட்டனரென்ப. வித்துவ சிரோமணி 15. ச. பொன் னம்பலப்பிள்ளை யிடக்கிலே தேவர்குறளைப் பரிமே லழகர் உரையுடன் நன்கு கற்றனர். இவர் இளமையி லேயே ஆங்கிலமுங் கற்று அதன் கண்ணும் மிகப்
பழக்கமுடையாாய் விளங்கினர்.
இவர் கல்வியிற் சிறந்து விளங்கும்பொழுது இவ ரது கல்விக்கிறமையை யறிந்த ஆறுமுகநாவலர் சிதம் பரத்திலே தம்மாற் ருபிக்கப்பட்ட சைவப்பிரகாச வித் கியாசாலைக்கு இவரைத் தலைமையாசிரியராக அனுப்பி னர். இவரங்குச்சென்று தலைமையாசிரியராகவிருந்து

Page 58
96 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கற்பித்துவந்தனர். சிலகாலஞ் சென்றபின் இவர் திரு வாவடுதுறையை அடைந்து அவ்வாதீனத்துப் பதினறு வது சங்கிதானமாக விளங்கிய பூரீலறுரீ சுப்பிரமணிய தேசிகரிடம் அருளுபதேசம் பெற்று அவர்களிடம் பன்னிரண்டுவருடம் சந்தான சைவ சித்தாந்த நூல் களை முறையாகக் கற்று வல்லராகி இலக்கண இலக்கிய தருக்க வேதாந்த சித்தாந்த சாகரமாய் அவ்வாதீன வித்துவ சிகாமணியாய் விளங்கினர்.
அவையிலிருந்து கேட்போர் மகிழப் பேசும் இவ ாது உரை வன்மையினையும் மாயாவாதம் முதலிய சமய வாகிகளையெல்லாம் வாயடங்கச் செய்யும் கியாயவாத வன்மையினையும் நோக்கி இவருக்கு நாவலரென்னுஞ் சிறப்புப்பெயரை மனமகிழ்ந்து அவ்வாதீனத்துச் சுப் பிரமணிய தேசிகர் அளித்தனர் என்றும், அதனை அநு வகித்து மதுரைத் கிருஞானசம்பந்த ராதீனகர்த்தாா கிய ஞானசம்பந்த தேசிகர் மகாவித்துவான் என்னும் விசேடணத்தோடு சேர்த்துக் கூறி ஆசீர்வகித்தனர் 6T607 Olt D 3rill 1.
திருவாவடுதுறை யாதீனத்திலே சிவஞான போதத் கிற்குச் சிவஞானமுனிவர் அருளிச்செய்த கிராவிட 'மாபாடிய ஏட்டுப்பிரதியொன்று உளது. அதனை வித்து வான்கள் பெற்றுப் படித்த லரிதாகும். அப்பிரதியை இவர் மஹா சங்கிதானமாய் விளங்கிய சுப்பிரமணிய தேசிகளிடம் அன்போடு பெற்றுப் படித்தனர். இதனுல் இவர்பால் ஆதீனத்திற்கிருந்த மதிப்பு எத்துணையதென் பதை நாம் அறிந்துகொள்ளலாம். அவ்வேட்டுப் լգg கியை பூரீலபூரீ ஆறுமுகநாவலரும் பெற்றுப் படித்தனர் என்று சிலர் கூற யாங் கேட்டுள்ளேம்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 97
இவர் நீண்டகாலஞ் சென்னையிலே வசித்தனர். வசித்த காலத்திலே தமிழ்நாடெங்குஞ் சென்று பற்பல பிரசங்கங்களைச் செய்தும், பற்பல கட்டுரைகளைப் பத் கிரிகையில் வரைந்தும், புதுநூல்களை இயற்றி அச்சிட்டு வெளிப்படுத்தியும் தமிழையும் சைவசமயத்தையும் வளர்த்து வந்தனர். இவராற் றமிழ்காடடையும் கன் மையைக் குறித்துத் தமிழ்நாட்டிலுள்ள மடாதிபதி களும் கோயிலதிகாரிகளும் பிரபுக்களும் இவரைப் புகழ்ந்து போற்றி மதித்துவந்தனர்.
இராமநாதபுரத்த ரசராகிய பாஸ்காசேதுபதி அவர் களும் இவரிடத்கே பெரும் பற்றும் மகிப்புமுள்ளவ ாாய் இருந்தனர். அதனை இவருக்கெழுகிய கடிதங்களில்,
* சைவ சிகாமணியாயும் பரசமய கோளரியாயும்
2
விளங்காநிற்கும் கனம் நாவலரவர்களுக்கு’ என்றும்,
* சைவப் பயிர்தழைக்கப் பிரசங்க இடிமுழக்குட னும், விபூகி ருத்திராக்ஷப் பொலிவாகும் மின்ன லுடனும் ஒங்கி வளரும் ஒரு முகிலாகிய கனம் காவல ாவர்களுக்கு ’ என்றும் பாராட்டிக் கூறியவற்ருல்
அறியலாகும்.
இவர்காலத்தே திருவாவடுதுறை மடாதிபதியா யிருந்த பூரீலபூரீ சுப்பிரமணியதேசிகரேயன்றி அவருக் குப்பின் மடாதிபதியான அம்பலவாண தேசிகரும் இவரைப் பெரிதும் போற்றி மதித்தனர். இவ்வாதீன மடாதிபதியன்றி மதுரையாதீன மடாதிபதியாயிருந்த ஞானசம்பந்த தேசிகரும், குரியனுர்கோயில் மடாதி பதியாயிருந்த முத்துக்குமார தேசிகரும் இவரைத் தங்கள் வாக்காலும் திருமுகங்களாலும் பெரிதும் போற்றி மதித்துள்ளார்கள்.
18

Page 59
98 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
இவர் கவி இயற்றுவதிலும் வல்லுநர். இவரியற்றிய நூல்களெல்லாம் மாதவச் சிவஞான சுவாமிகளுடைய போக்கினைப் படியெடுத்துள்ளனவாகும். இவரியற்றிய நூல்களாவன :- யேசுமத சங்கற்ப நிராகரணம், சிதம் பர சபாநாத புராணம், சிவகர்ணுமிர்தம், பாரததாற்பரிய சங்கிரகம், இராமாயணதாற்பரியசங்கிரகம், சதுர்வேத தாற்பரியசங்கிரகம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, கிரு விடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, மாவையந்தாதி, நல்லைச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம், இலக்கணவிளக் கப் பதிப்புரை மறுப்பு, வைதிக காவிய தூஷண மறுப்பு, கிராவிடப்பிரகாசிகை என்பனவாம். இவர் பதிப்பித்த நூல் சிவசமவாதஉரை மறுப்பு. (சிவஞானசுவாமிகள் இயற்றியது). (பாரததாற்பரியசங்கிரகம், இராமாயண தாற்பரியசங்கிரகம், சதுர்வேதகாற்பரியசங்கிரகம், என் பன இவரால் மொழிபெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களாகும்). இவரியற்றிய சிதம்பரசபாநாதபுராணம் மிகச் சிறப்புடையதாகும். அதனுள் ஒரு செய்யுளை இங்கே காட்டுதும் :
* ஞான மிக வளரினஃ நிணையவுயர் திணையாகு
கவிலஞ் ஞான வீனமிக வளரினுயர் திணையவஃ றிணையாகு
மென்று தேற்றன் 3 மாணவஃ றினை மேலு மாண்டஉயர் திணைகீழும்
வடிவிற் காட்டித் தேனமரும் பொழிற்றில்லைச் சிகரிவாழ் கற்பகத்தை
வணக்கஞ் செய்வாம்.'
இவர் இயற்றிய யேசுமத சங்கற்ப நிராகரணம், சிவ ஞானசித்தியார் பரபக்கப்போக்கும் நோக்கும் உடைய செய்யுட்களான் அமைந்த சிறந்தநூல் என அறிஞர்
喙 * s Lia) LIT TITL9.5 பிரிவT. இந்நூலுக்குச் சிறப்புப்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 99
பாயிரமாக ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் பாடிய விருத்தங்களும் மிகச் சிறந்தனவாய் இவர் புலமையையும் நன்கு தெரிக்கின்றன.
இவர் கரவருடம் சித்திரைமாதம் சிதம்பரத்திற்குக் கும்பாபிஷேக தரிசனத்தின்பொருட்டுச் சென்றனர். அப் பொழுது அங்கே தரிசனத்கின்பொருட்டு வங்கிருந்த மாட்சிமைதங்கிய பாஸ்கரசேதுபதி மகாராஜா இவரைச் சந் கித்துத் தம்மொடுகூட இராமநாதபுரத்திற்கு அழைத்துச் சென்று அங்கே இவரைச் சிலகாலம் வசிக்கச்செய்தனர். அக்காலத்திலே அங்கே சேதுபதி மகாராஜா வேண்டு கோட்படி சுத்தாத்துவித சைவக்கொள்கையை நிலைநாட் டும்படி பல பிரசங்கங்கள் செய்தனர். பின் இவர்கள் மகாராஜாவோடு கூட ஆலயதரிசனஞ் செய்யும்படி சென்ற பொழுது உத்தரகோசமங்கை, தூத்துக்குடி, திருச்செங் தூர், திருக்குற்முலம் முதலிய இடங்களிலெல்லாம் மகா ராஜாவே அக்கிராசனராக வீற்றிருப்பப் பிரசங்கஞ்
செய்தனர்.
இவர் செய்த பிரசங்கங்களைக்கேட்ட மகாராஜா மீட் டுக் கம்மூருக்கு இவரை அழைத்துச்சென்று தமது அத்தாணிமண்டபத்தில் உயராசனத்திருக்கி நண்பினுல் இனிய உரைகள் கூறிச் சன்மானமாக மூவாயிரம் ரூபா அளித்து வேண்டியபோது வேறும் உதவி செய்வதாகக் கூறினர்கள். அப்போது இவர் மகாராஜாவிடம் விடை பெற்றுக்கொண்டு திருப்பூவணம், திருவாலவாய் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு சென்னைமாநகர் சேர்ந் தனர்.
மகாராஜா செய்த சன்மானத்தோடு சென்னைமாநகர் சேர்ந்தபின் சித்தாந்த சைவபரிபாலனத்தின்பொருட்டுச் சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலை எனப் பெயரிய

Page 60
  

Page 61
102 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
ஒரகராதி தகரவருக்கம்வரையு மெழுகினவர். அந்நூல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரால் அச்சிடப்பட்டுள்ளது. தர்க்க பரிபாஷை என்னும் நூலு மிவராற் பரிசோதித் கச்சிடப்பட்டது. இவர் முப்பத்தைந்து வருடங்களுக்கு
முன் தேகவியோகமாயினர்.
அம்பிகைபாகர்
இவர் ஏறக்குறைய எண்பத்தைந்துவருடங்களுக்கு முன்னே இணுவில் என்னுமூரிலே வேளாளர்குலத்திலே பிறந்தவர். கந்தபுராணம், தணிகைப்புராணம், பாரதம் முதலிய இலக்கியங்களையும், தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கணங்களையும் கற்றவர். நாவலரிடம் சேனவரையத்தையும் நடாாசையரிடஞ் சிவஞானசித்தி யார் முதலிய சித்தாந்த சாஸ்திரங்களையும் பாடங் கேட் டவர். இணுவை அந்தாதி, தணிகைப்புராணத்திற்கு நகரப் படலம்வரையுமுரை, சூளாமணி வசனம் முதலியன இயற்றி அச்சிட்டு வெளிப்படுத்தியவர். தணிகைப்புரா ணம் முழுவதற்கும் ஒரு பொழிப்புரை எழுதியுள்ளா ரென அறிகின்றேம். அது அச்சிடப்படவில்லை. இவ ருக்கும் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களுக்கும் மிகுந்த நண்புண்டு. இவரிடத்து யாம் தணிகைப்புரா ணத்துக்குப் பொருள்கேட்டறிந்துள்ளேம். இவரியற்றிய இணுவையந்தாதியில் ஒரு செய்யுள் காட்டுதும் :- * திருத்தங் செழி யுடைத்தாமர் தில்லைத் திருச்சபையில்
நிருத்தங்கொ வீச ரளித்தமுன் னேன் சிச மீண்மருப்பொன்
றுருத்தங் கொசித்த வுணற்செற்ற முன்னே லுறுதுணைகாண்
மருத்தங் கிணுவையந் தாதியென் வாயில் வருவிக்கவே."

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 103
கதிர்காமையர்
இவர் இற்றைக்கு அடு வருடங்களுக்குமுன்னே புன்னலைக்கட்டுவன் என்னுமூரிலே அந்தணர் மரபிலே சங்கர ஐயருக்குப் புதல்வராகப் பிறந்தவர். உரியகாலத் திலே தந்தையாரால் வித்தியாரம்பஞ்செய்யப்பெற்று அவ ரிடத்திலே சிலவாண்டு சம்ஸ்கிருதமுங் தமிழும் பயின்ற பின், ஊரெழு என்னுமூரிலிருந்த மயில்வாகனப்புலவர் என்பவரிடத்திற் சென்று தமிழிலக்கியங்கள் சில கற்றவர். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் என்னும் இலக் கியங்களில் அதிக பயிற்சி உடையர். மறைசையந்தாதி, கல்வளையங்தாதி, புலியூரந்தாதி என்பவற்றிலும் மிகப் பயிற்சி உடையர். சூடாமணி நிகண்டை முதலில் இருந்து முடிவுபோக வாய்ப்பாடமாகச் சொல்ல வல்லவர். நீர்வே விச் சங்கரபண்டிதரிடத்திலே சென்று தமக்கு நேர்ந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தவர். ஆறுமுகநாவலரோடும் பரிசயமுடையவர். சுன்னகத்து முருகேசபண்டிதர் இவ ருக்கு நண்பராவர். இணுவில் கடராசையரிடஞ் சித்தாந்த நூல்களைக் கேட்டறிந்தவர். சிவஞானசித்தியாருரைகளுள் ஒன்முகிய ஞானப்பிரகாசருரையில் நன்கு பயின்றவர். ஊரெழு சாவணமுத்துப்புலவருங் காசிவாசி செந்திநாதை பருங் தமகிளமைப்பருவத்திலே இவரிடம் பாடங்கேட்ட வர்களாவர். இவரிடம் யாமும் இளமைப்பாராயத்திலே பாடங் கேட்டுள்ளேம். இவர் எமக்குப் பெரியதந்தையா ராவர். இவர் புன்னுலைக்கட்டுவனிலே ஒரு தமிழ் விக்கியா சாலையைத் தாபித்து அரசினர் நன்கொடையும் பெறச்செய் தவர். இவர்க்கு நான்குபுக்கிாருளர். பின்காளிலே புத்திரர் களும் ஆசிரியர்களாக இருந்து அவ்வித்தியாசாலையி μή கற்பித்துவந்தனர். அவ்வித்தியாசாலை இப்பொழுது அர சினரால் நடாத்தப்படுகின்றது. இவர் புதல்வர்களுள் முதற் புதல்வராகிய சுந்தர்மூர்த்தி ஐயரென்பவர் தாம்

Page 62
104 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
விவாகஞ்செய்த ஊராகிய தெல்லிப்பழையிலே ஒரு தமிழ் வித்தியாசாலையைத் தாபித்துத் தாமே தலைமையாசிரிய ராகவிருந்து நடாத்தி அரசினர் நன்கொடையும் பெறச் செய்தனர். அஃது இப்பொழுதும் நடந்துவருகின்றது. புத்தூர், சிறுப்பிட்டி, அச்செழு, ஊரெழு, ஏழாலை, மயிலிட்டி, தையிட்டி, மாவிட்டபுரம், வயாவிளான், பலாலி முதலிய ஊர்களிலிருந்துவந்து பலர் இவரிடங்
கற்று அறிஞர்களாயினர்.
IBLJ T 60) g uli
இவர் ஏறக்குறைய 95 வருடங்களுக்குமுன் இணு வில் என்னுமூரிலே அந்தணர் குலத்திலே பிறந்தவர். இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த சாத்திரங் களையும் ஆறுமுககாவலரிடங் கற்றவர். சித்தாந்தசாக் திரங்களிலே பாண்டித்தியம் பெற்றவர். சிதம்பரம், மதுரை முதலிய சிவஸ்தலங்களிலே பலநாள் வசித்தவர். அங்கும் இங்கும் பலர்க்குச் சித்தாங்க சாத்திரம் படிப் பித்தவர். சோதிடம், மந்திரம், வைத்தியம், யோகம், வடமொழி முதலியவைகளுங் தெரிந்தவர். கவி பாடுங் திறமுமுடையவர். தற்புகழ்ச்சி தருக்கு தலையெடுப்பு முக லிய தீக்குணங்களில்லாதவர். இவர் ஆராய்ந்து அச்சிற் பகிப்பித்த நூல் :
சிவஞானசித்தியார் சுபக்கம் ஞானப்பிரகாசர் உரை. இவர் ஞானப்பிரகாசர் உரையைக் குறித்துப் பாடிய செய்
வருமாறு :-
* சொல்லி ஞவிற் றுரிசறுஞ் சோத்திரத்
தொல்லு மேற்சிவ ஞான முதித்திடும் செல்லு மெய்யரு ணந்திசெய் சித்திக்கு நல்ல ஞானப்ா காச னவிற்றுாை'

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 105 திருஞானசம்பந்தப்பிள்ளை
இவர் ஏறக்குறைய கூO வருடங்களுக்குமுன்னே நல்லூரிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். காவலர்க் கும் விச்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளைக்கும் மாணவகர். இலக்கண இலக்கியங்களுக் தருக்கமுஞ் சித் தாந்த சாத்திாமுங் கற்றவர். தர்க்கசாத்திர ஆராய்ச்சி யிலுங் தர்க்கவாதஞ்செய்வதிலு மிக விருப்பமுடையவர். அதுபற்றி இவர் தர்க்ககுடாாதாலுதாரி என எவராலு மழைக்கப்படுவர். கும்பகோணத்திலே சில ஆண்டுகளும் சிதம்பாத்திலே பல ஆண்டுகளும் வசித்தவர். பலருக்குப் பாடஞ்சொன்னவர். தர்க்காமிர்த மொழிபெயர்ப்பு, அரிகா தாரதம்மியம், வேதாகமவாததீபிகை, நாராயணபாத்துவ நிரசனம் முதலிய நூல்கள் செய்தவர். இவர்செய்த அரி காதாாதம்மியத்துள் ஒருசெய்யுள் இங்கே காட்டுதும் :-
* ஒருவனே ரிடத்திலிந்த விசுவத்தில்
- வசிக்கையி லுவகை யுற்முன்
கருது மற்றை யவன்விசுவே சானெனவே
யவனியினிற் கழறப் பெற்முன்
இருவர் தமி லெவனதிக னெனவூகித்
துண்மையிசைத் திடுக மாசு
மருவுதலி லறிவுடையீர் யாமவனை
யடைந்து வழி படுவா மன்றே."
இத்தகைய இவர் இற்றைக்கு க.அ வருடங்களுக்கு முன் சிதம்பரக்கிற் றேகவியோகமாயினர்.
14

Page 63
  

Page 64
108 ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம்
அவர்கள் தேகவியோகமான காலத்து அவர்மீது மயில் வாகன வம்ச வைபவமென்னும் ஒரு நூலும் இயற்றி யுள்ளார்.
இவரியற்றிய கல்லாடக் கலித்துறை முதலியவற் அறுள் இவர் பாடற்றிறம் அறியும்பொருட்டுச் சில செய் யுள்கள் காட்டுதும்.
பாற்கரசேதுபதி கல்லாடக் கலித்துறை
உண்மகிழ்ந் துரைத்தல் ܗܝ
பொருந்தனல் வெஞ்சாம் பொன்னுக்குற் றேன் கட்
புணர்த்ததுன்புன் வருந்தன மூழ்கத் தொடமுனம் பாற்கா வள்ளறந்த பெருந்தனங் தீண்டமுன் பாவல சொற்கம் பிரிந்ததென மருந்தன வின்மொழி யாய்தீர்ந்த தற்புதம் வாய்ப்பித்ததே.
பதிபரிசுரைத்தல்
வாத்திய லோங்கிய பாற்கா ஞட்டு வளவயல்பார் தாத்தியல் வையைப் பெருக்கது பார்மலர்த் தண்டலைபார் புரத்தியல் பாரன்ன சத்திரம் பார்செல்வர் பொன்மனை பார் சாத்திய னேக்கன மேபார் கருங்கல்விச் சாலைகளே.
பாற்கரசேதுபதி கான்மணிமாலை
வேண்பா
உம்பரிடைப் பாற்கான்ற ைேவாத வெஞ்சுடரோ னிம்பரிடைப் பாற்கான்றண் ணென்சுடரோன்-பம்பும்
புறவிருளைப் போக்குமவன் பொங்கவகத் தூர்கார் நிறவிருளைப் போக்குமிவ னின்று.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 109
கலித்துறை நின்றஞ்ச மென்ன வடைபவர்க் கன்னை நெடிதுறமேற் சென்றஞ் சவித்த வடியவர்க் காவி செழுந்தமிழ்க்கு மன்றஞ் சகத்துக்குக் கற்பக மன்னர் மகுடமணி குன்றஞ் சமான மெனுங்குணப் பாற்காக் கொற்றவனே.
பாற்கரசேதுபதி இரட்டைமணிமாலை
கலித்துறை மானுறு மீகை பொறைநிறை பத்திமை வாய்மையுறக் காணுறு ரீதியுட் டூய்மை கருணை நற் கல்வியின்ன பூணுறு மேரு நிகர்புயப் பாற்கான் புண்ணியமெய்க் கேணுறு மங்க மெனத்தவத் தாற்பெரி தெய்தியவே.
பாண்டித்துரைத்தேவர் கான்மணிமாலை w Geducó. IT
சீர்வாய்ந்த சைவ சிகாமணிபொன் லுச்சாமிப் பேர்வாய்ந்த செல்வப் பிரபுமைந்த-னேர்வாய்ந்த
பாண்டித் துாையையுற்ற பாவலர்க ளில்லமெல்லாம்
வேண்டித் திருமருவு மெய்.
சொல்லாரும் பாமாலை சூடினன் வண்மையின ரெல்லாரு மோர்வடிவா யேய்க்கனையா-னல்லார்கள்
பல்லாரு மேத்தியிடும் பாண்டித் துாைபுகழ்மை செல்லாத தெம்மா திாம்.
மயில்வாகன வம்ச வைபவம்
தென்னிலங்கைத் தீவினுக்கோர் தீப மென்கோ
தெளிதருசஞ் சீவியென்கோ செந்தே னென்கோ மன்னர்முடி மணியென்கோ தரும தான
மாளிகையென் கோசுகுண வடவெற் பென்க்ோ

Page 65
110 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
புன்னெறியி லாக்கருணைப் புணரி யென்கோ
போதருமேர்க் குஞ்சுகந்த புட்ப மென்கோ
சொன்னகரு வென்கோமெய்ச் சுரபி யென்கோ துங்கமயில் வாகனமா துாையைத் தானே.
இவர், ஆறுமுககாவலரவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவர்மீது பாடிய கவிகளுள் ஒன்றை யும் ஈண்டுத் தருதும் :
ஆரூர னில்லை புகலியர் கோனில்லை யப்பனில்லை சீரூரு மாணிக்க வாசக னரில்லை திசையளந்த மேரூரு மாறு முகநா வலனில்லை பின்னிங்கியார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கு நீர்மையாே.
இக் கவியைப் பாடிய இப்புலவரைப் புகழ்ந்து சி. வை. தாமோதிரம்பிள்ளையவர்கள் புகழ்ந்து பாடிய ஒரு கவியையும் ஈண்டுக் காட்டுதும் :
ஆரூர னில்லையென் காரிகை யாலிவ் வவனிதொழப் பேரூரு மாறு முகநா வலர்பெரு மான்பெருமை சீரூரு மாறு கெரித்தாய் சிவசம்பு தேசிக்கிற் காரூரி னேரின்றன் முேநின்சொல் வன்மை யறிந்தனனே.
இத்தகைய இப்புலவர்பெருந்தகை சாலிவாகன சகாப்தம் கஅகூக-க்குச் சமமான சாதாரண வருஷம் புரட்டாகி மாதம் கs-ம் கிகதி இவ்வுலக வாழ்வைத் துறந்தார். அதனை,
வெண்பா
சாதா ரணவனிகை சாந்தன்றேய் பிற்பக்க மீதாரும் பன்மூன்றின் மேதினிவிட்-டாதார மன்னு சிவசம்பு மாபுலவன் சங்காஞர் துன்னுலகுற் றுற்முன் சுகம். என்னும் வெண்பாவா லறிக.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 111 வேன்மயில்வாகனப்புலவர்
இவர் முன்பின் சாலிவாகன சகாப்தம் 1788 வரை யில் அச்சுவேலி என்னுமூரிற் பிறந்தவர். இவர் தங்தை யார் சிதம்பரச்செட்டியாருக்குப் புதல்வராகிய அரிகா புத்திரச்செட்டியார். தாயார் புலோலியூரில் வசித்த வைத் கியநாதச் செட்டியாருக்குப் புதல்வியாகிய முக்காச்சி அம்மை. பரம்பரையாகச் சைவாசாரம் பெற்ற இருமர. புங் தூய வைசிய குலத்தவர்களாகிய இவ்விருவருக் கும் அருந்தவப் புதல்வராகப் பிறந்த இவர், உரியகாலத்திலே வித்கியாரம்பஞ் செய்யப்பெற்றுத் தமதூர்ப் பாடசாலை யொன்றிலே கல்வி கற்றபின் தந்தையார் விரும்பியவாறு உடுப்பிட்டி, பூரீமத் அ. சிவசம்புப் புலவரிடஞ் சென்று இலக்கிய இலக் கணங்கள் கற்றுவந்தனர். புலவரிடம் கந்தபுராணம், பெரியபுராணம் முதலிய புராணங்களையும், இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களையும், கடைச்சங்க நூல் களையும், இடை கடைச்சங்க இலக்கணமாக விளங்கிய தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூலையும் பிறவற் றையுங் கற்றுப் பாண்டித்தியமுடையராயினர். பின் நல்லூர் பூரீலறுரீ ஆறுமுககாவலரிடஞ் சென்று சித்தாந்த பாடங் கேட்டு அதிலுஞ் சிறந்த பயிற்சியுடையராய் விளங்கினர். அப்பொழுது வித்துவசிரோமணி ச. பொன் னம்பலப்பிள்ளையிடமுஞ் சில நூல்கள் பாடங் கேட்டனர்
என்ப.
காவலரிடங் கற்றபின், அவரால் புலோலியிலே தாபிக்கப்பட்ட 'சைவ வித்தியாசாலைக்கு இவரே தலைமை ஆசிரியராயினர். இவர் ஆசிரியராக இருந்து படிப்பிக்குங் காலத்திலே இவரிடம் உயர்ந்த இலக்கிய இலக்கணங் களைக் கற்றுத் தேறினர் பலர். அவருட் சிறந்தவர்களாய்

Page 66
112 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
விளங்கினேர் அல்வாயில் விதான உத்தியோகத்தமர்ந்த க. வைரமுத்து என்பவரும், அல்வாய் தெற்குச் சைவ வித்தியாசாலை ஸ்தாபகரும் ஆசிரியருமாயிருந்த க. மயில் வாகனம்பிள்ளையும், மேலைப்புலோலிச் சைவ வித்தியாசாலை யில் ஆசிரியராயிருந்த க. ஆறுமுகம்பிள்ளையும், அல்வாய் க. மார்க்கண்டேயக்குருக்களும், இ. சபாபதிக்குருக்க ளும், ஆத்தியடி மு. ஐயாமுத்துக்குருக்களும், கரவெட்டி さ写T。 குமாரசுவாமிப்பிள்ளையும், புலோலி சு, சோமசுந் தரஞ்செட்டியாரும், அச்சுவேலியை ஜ55ஸ்தானமாகவும் கந்தவனக்கடவையை வாசஸ்தானமாகவுங் கொண்டவரும், கந்தவன ஆலய மனேசரும், சித்தாந்த சைவப்பிரசாரகரு மாய் விளங்கும் கிக்கம் சி. செல்லையபிள்ளையும், கிக் கம் சி. பொன்னையபிள்ளையும், வித்துவானும் ஞான சித்தி” ப் பத்திராதிபருமாய வதிரி சி. நாகலிங்கபிள்ளை பும், அல்வாய் வே. சபாபதி ஜோதிஷரும், ஆனைக்கோட் டையைப் பிறப்பிடமாய்க் கொண்டவரும் தென்மயிலை வாசருமாகிய முத்துக்குமாரு சிவராமலிங்கம்பிள்ளையும், முத்துக்குமாரு வைரமுத்துப்பிள்ளையும் (யாழ்ப்பாணம் மணியம்) முதலாயினுேராவர்.
இவர் ஏறக்குறைய 37வது வயசில் தேவகோட்டைத் தனவைசியர்கள் வேண்டுகோட்படி அங்குச் சென்று 7 வருஷ காலம் வரையில் பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துக்கொண்டும், சைவப் பிரசங்கங்கள் செய்து கொண்டுமிருந்தனர். பின் கொழும்புக்குவந்து தம்பையா முதலியார் சத்திரத்திலே ஏறக்குறைய மூன்று வருஷ காலம் வாரங்தோறும் சைவப் பிரசங்கங்கள் செய்துவங் தனர். பின் யாழ்ப்பாணம் வந்து தம் செனனவூரில் இருக்குங் காலத்திலே 47வது வயசிலே தேகவியோக
மடைந்தனர்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 113
இன்னு மிவர் கிரமந்தவருது பத்தியோடு சிவபூசை செய்துவந்தவர். அறிவு நிறை ஒர்ப்பு கடைப்பிடி என் னும் ஆண்மைக் குணங்கள் உண்மையாக நிறையப்பெற். நவர். பிறர் மனை விரும்பாப் பேராண்மை பூண்டவர். ‘குலனருள் தெய்வம் கொள்கை” என்னுஞ் குத்திரத்திற் கேற்ப ஆசிரிய இலக்கணம் அமைந்தவர். ஆசர்ரசீலர்.
நமச்சிவா யப்புலவர்
இவர் ஏறக்குறைய அடு வருஷங்களுக்குமுன்னே ஆவரங்கால் என்னுமூரிலே வேளாளர் குலத்திலே சுப் பிரமணியபிள்ளைக்குப் புதல்வராகப் பிறந்தவர். உடுப் பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்தும், மட்டுவில் உரையா சிரியர் வேற்பிள்ளையிடத்தும் தமிழ் இலக்கிய இலக் கணங்கள் கற்றவர். சித்தாந்த சாஸ்திரங்களுங் தெரிங் தவர். சுப்பிரமணியக் கடவுள்மீது பத்தியுடையவர். சங்கீதத்தில் மிகுந்த ஞானமுடையவர். அதனுற் பல சங்கீத கீர்த்தனங்கள் பாடியுள்ளார். இவர் பாடிய சங் கீத கீர்த்தன பல்லவி ஒன்றைச் சிறப்பித்து, அல்வாய், ஆரிய கிராவிட பண்டிதர் வே. கணபதிப்பிள்ளைச் சோகி
டர், தாம் பாடிய ஈழமண்டல சதகத்திலே,
"நேயப் படவே லனைக்கொண்டு வாவென் னீள்பல்லவி தாயப் படமொழிக் தோன்புயல் கண்வளர் தங்கரியா காயப் படவுய் ராவாங் கானகர் காணமச்சி வாயப் புலவனைப் பாராட்டு மீழநன் மண்டலமே.” என்னுங் கவியாற் பாடியுள்ளார். இக் கணபதிப்பிள்ளை இவரிடமுஞ் சிலவாண்டு கற்றவரெனக் கேள்வி. இவர், அக்காலத்துச் 'சுதேசநாட்டியப் பத்திராதிபராயிருந்த வரும், யாழ்ப்பாண வைபவ நூலாசிரியருமாகிய வயா விளான் திரு. க. வேலுப்பிள்ளை அவர்களுக்குக் குருவா
5

Page 67
114 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
மபிமானங் கருகி அவர் புதல்வர் திரு. சாரங்கபாணி என்பவர், இவர் பாடிய சங்கீதகீர்த்தனங்களைத் தொகுத்து அச்சிட்டுள்ளார். அக்காலத்திலே நல்லூர்க் கந்தசுவாமி கோவிலைப்பற்றி பூரீலறுரீ ஆறுமுக நாவலர் எழுதிய கண்டனங்களுக்கு மாமுகப் பிறர் எழுகிய கண்டனங் களை மறுத்துச் சில கண்டனம் இவரும் எழுதியதாக அறிகின்ருேம். அவற்றுள் ஒன்று, ‘பரிகண்டனம்” என்பது. அதன் முகப்பிலும் இறுதியிலு மிவர் பாடி வைத்த இரு வெண்பாக்களை இங்கே காட்டுதும் :-
* அண்ணுரீ கம்பெருமா னன்றநெடுஞ் சீர்மறைக்க
வெண்ஞதே நின்மதிக்கூர்ப் பென்னேயோ-வுண்ணுடி யம்பரத்தை மேற்கட்டி யான்மறைக்கப் புக்கானை
இம்பரிடைக் கண்டனையோ வின்று."
* பித்தனென்றும் பேயனென்றும் பேய்வனத்தி லா டியென் எத்தனைபே ரீசனையு மேசினர்-அத்தனையும் [றும் சான்றே எறியாரோ சாற்றுதியோ மூத்தவா! என்று ணுனக்கிந்த வேச்சு."
என்பன.
இவ் வெண்பா இரண்டனுள்ளும் அண்ணு' ! என வும், மூத்தவா ! எனவும் இவர் விளித்தற்குக் காரணம், தமது மாற்ருர் கண்டனத்துள் தம்மைத் * தம்பி 1’ என அவர் விளித்தமையே : மூத்தவா ! என்பது, மூதேவிக் கிடமானவனே ’ என்ற பொருளையுங் குறிப்பது போலும்.
இவர் பாடிய சங்கீத கீர்த்தனையுள்ளும் ஒன்றை இங்கே கருதும் :-

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 115
இராகம் - கமாசு தாளம் - ஆதி பல்லவி நெஞ்சமே யிந்தச் சடமென்ன சதமா-நீ நிதமு முருகனை யேது தி 8 & 9 (டுெஞ்சமே)
அனுபல்லவி
தஞ்சமென்பவர்க்குச் சஞ்சலந் தீர்த்திடும்
சதுர்மாமறை துதியேசெயுஞ் சாவணபவ னிருதாள் பணி
1.
3.
(நெஞ்சமே) சரணங்கள்
காமவிகாரப் பிரபஞ்ச மாய்கைதனை நீக்குரீ நீக்குக்-காலன் கட்டிக்கொண்டேகுவான் துஷ்டச் சினேகத்தைப் போக்குரீ போக்கு-கால தாமதஞ் செய்யாமல்-நேயமுடனிதம் w தருவாய்கதி அருள்வாயெனச் சரவணபவ னிருதாள்பணி. (நெஞ்சமே)
பொய்யாமுடல் மும்மலக்கிர்மி
கட்குயர் நாட்டம்-வெகுநாட்டம்-உயிர் போய்விட்டாலு மார்
சுடுவாரப்போதல்லோ-ஒட்டம் விட்டோட்டம்-இசை மெய்யாக எண்ணி-ேஉய்ய முயற்சிசெய்
மேலோர்களு மேலோனென
வெகுபிரியமுட னுனை நாடுவர் (நெஞ்சமே)
தாய்தந்தையுற்றவர் தாாமென் றிருக்காதே! இருக்காதே-இது
தப்புமோ நாங்கணக்
தப்புவமோ தெரியாதே! தெரியாகே-திரு
மாயன்மருகனை மாதவர்போற்றிடும் வானக்குற மகளாாணை பானைத்துதி தருவார்கதி
(நெஞ்சமே)

Page 68
116 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கந்தப்பிள்ளை
இவர் கிறீஸ்தாப்தம் கஅசO-க்குச் சமமான சார்வரி வருடம் வைகாசி மாதத்திலே மக நட்சத்திரத்திலே வேலணை என்னுமூரிற் சைவாசாரமுள்ள வேளாண் மர பிலே வினுசித்தம்பி என்பவருக்குப் புதல்வராகப் பிறந்த வர். தமிழ் இலக்கண இலக்கியமுஞ் சித்தாந்த சாத்திரமும் கன்கு கற்றவர். சங்கான ைேசவ சித்தாந்த சாத்கிரங்கள் பதினன்கையுஞ் சித்தாந்தபானுவாய் விளங்கிய இணுவில் கடராசையரிடங் கிரமமாகக் கேட்டறிந்தவர். 5ற்குண மும் கல்லொழுக்கமும் வாய்ந்தவர். சைவசமயப் பற்றுடை யவர். பூநீலபூரீ ஆறுமுகநாவலரிடம் மிகுந்த பத்தியுள் ளவர். அவரிடமும் இலக்கண இலக்கியங்கள் கேட்டறிங் தவர். அவர் கட்டளைப்படி தமதூரிலே தமிழ் வித்கியா சாலையொன்று தாபித்துத் தாமே அதிபராகவிருந்து நடாத்கி அரசினர் நன்கொடையும் பெறச் செய்தவர். தவருது சிவபூசை செய்துவந்தவர் சித்தாந்த நூலா கிய கத்துவப்பிரகாசத்தை உரையோடு பரிசோ கித்து அச்சிட்டவர். கொழும்புச் சைவபரிபாலன சபை பிற் பலவாண்டு சைவப் பிரசாரகராயிருந்து பிரசங்கங்கள் செய்தவர். யாழ்ப்பாணம், சிதம்பரம் முதலிய பல இடங் களிலும் சைவசித்தாந்த மகிமைகளை எடுத்து இனிது விளக்கிப் பிரசங்கஞ் செய்தவர். அரிய பல சித்தாந்த விஷயங்களைப் பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்தின வர். தமதூரிலே அச்சுயந்திரமொன்று தாபித்து, அகிலே சைவசமயத்துக்குரிய குக்குமார்த்தங்களையெல் லாம் தெரிவிக்கும் பொருட்டுச் “ சைவ குக்குமார்த்த போதினி” எனப் பெயரிய பத்திரிகையை அச்சிட்டு மாதந்தோறும் வெளிப்படுத்தி வந்தவர். தமதுாரிலும் பிறவூரிலுமாகப் பலர்க்கு இலக்கண இலக்கியமுஞ் சித்

ஈழ5ாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 117
தாங்த சாத்திரமுங் கற்பித்தவர். தீவுப்பகுதியிலுள்ள வர்களைத் தீட்சை பெறவும், மாமிச போசனஞ் செய்யாதுவிடவும், சிவபூஜை செய்யவும் செய்தவர். வேலணையிலுள்ள மகாகணபதிப்பிள்ளையார் கோயிற் றிருப்பணியை நிறைவுபெறச் செய்தவர். நிக்கிய நைமித் கியங்களும் நடைபெறச் செய்தவர். அப் பிள்ளையார்மீது திருவூஞ்சல் முதலியவும் தனிக்கவிகளும் பாடியவர். காசிவாசி செந்திநாதையருக்கும், வட்டுக்கோட்டை அம் பலவாண காவலருக்கும், சுவாமிநாத பண்டிதருக்கும் கண்பர்.
இத்தகைய அறிஞராகிய இவர் சென்ற பிரமாதீச வருடம் தைமாதம் உச-ம் திகதி தேகவியோகமாயினர். இவராற்முபிக்கப்பட்ட தமிழ் வித்தியாசாலை இப்பொழு அதும் இவர் சந்தகியாரால் கிரமமாக கடத்தப்பட்டு
வருகிறது.
இவரிடங் கற்றவர்கள் அவ்வூர் ஆசிரியர் தம்பு, அவ்வூர் ஆசிரியர் நமசிவாயம், அவ்வூர் போம்பலப் புல வர் முதலாயினேர்.
இவர் பாடிய ஊஞ்சலுள் ஒரு செய்யுள் இங்கே காட்டுதும் :-
திருமாலு மலாயனு மிருகை கூப்பச்
சிறந்தமுனி வாரமார் வணங்கிப் போற்ற வருமிாவி மதிகவிகை தாங்கி மேவ
வரமுறு நல் லடியர்மலர் மாரி துவ உருகவரு தும்புருகா ரதர்கள் பாட
உயர் கணத்தி தைர்து தி யோசை மீட அருளுருவாய்ப் பெரியபுல மமர்ந்தே யோங்கு
மாதிமகா கணபதியே யாடீ ரூஞ்சல்,

Page 69
118 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
ஏரம்பையர்
இவர் சோழநாட்டிலுள்ள திருப்பூவண மென்னு மூரிலிருந்து வந்து மாதகலிற் குடியேறிய பசுபதி ஐய ரின் வழியில் வந்த சுப்பிரமணிய் சாஸ்திரியாருக்குக் கிறிஸ்தாப்தம் 1847-ம் ஆண்டுக்குச் சமமாகிய பில வங்க வருடம் மாசிமாதம் 29-ம் திகதி சனிவாரத்திற் புதல்வராகப் பிறந்தார். இவருக்கு இளமையிலே தங் தையார் தாமே ஆசிரியராக வித்தியாரம்பஞ் செய்து சம்ஸ்கிருதமும் தமிழும் கற்பித்து வந்தனர். வருங் காலத்தில் தமிழில் உயர்தரக் கல்வி கற்க விரும்பிச்
சங்கானை மேற்கிலிருந்த வேலுப்பிள்ளை ஆசிரியரென்னு மொருவரிடம் சென்று இவர் இலக்கண இலக்கியங்களைக் கற்று வந்தார் பின் கல்லூரிலிருந்த சம்பந்தப் புலவ ரிடஞ் சென்று மேலான சில இலக்கண இலக்கியங்களையுஞ் சித்தாந்த நூல்களையுங் கற்றர். பின், சங்கர பண்டிக ரிடஞ் சென்று சம்ஸ்கிருத நூல்களைக் கற்றுக்கொண் டனர். அக்காலத்திலே ஆறுமுகநாவலரிடத்துஞ் சென்று ஐயங்களைக் கேட்டுத் தெளிவார். பின் நிருவாண தீட்சை பெற்று சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு அப் பூசையைக் கிரமமாகச் செய்து வந்ததன்றி, ஊர்கடோ அறுஞ்சென்று சைவப்பிரசங்கங்களுஞ் செய்துவந்தார். வண் ணுர்பண்ணையிலே சைவபரிபாலன சபை தொடங்கிய காலத்திலே அச்சபையின் சைவப்பிரசாரகராகி, நந்தாவிலி லிருந்த அறிஞர்திலகராகிய சுப்பையருடன் ஊர்கடோ அறுஞ் சென்று சைவப் பிரசங்கமுஞ் செய்து வந்தார். அக் காலத்திலே கொழும்பு, திரிகோணமலை, மட்டக்களப்பு முதலிய இடங்களிலுஞ் சென்று சைவப் பிரசங்கங்கள் செய்து புகழ்படைத்தார். அரனடிக்கன்பு, சாந்தகுணம், பரோபகாரம், அருட்குணம் முதலிய 5ற்குணங்களும்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 119
நல்லொழுக்கமும் நிறைந்தவராய் விளங்கினர். ஆறுமுக நாவலரால் வண்ணுர்பண்ணையிற். முபிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தில் இவருமோ சங்கத்தவராயிருந்தார். வடமொழி நீதி சாத்திரத்தைத் தமிழிலே பெயர்த்துச் செய்யுள் நூலாக இயற்றினர். வண்ணுர்பண்ணையிற் பெருங் தனவா ணுபும் சிவபக்திமானுயுமிருந்த இராவகப்பிள்ளையின் புதல் வர் மயில்வாகனப்பிள்ளை விரும்பியவாறு, செய்புள் நூலா யுள்ள சேதுபுராணத்தை எவரும் எளிதிற் படித் துணர்ந்து கொள்ளுமாறு வசன ரூபமாக்கி, அப்பிரபு வின் பொருளுதவிகொண்டு அச்சிட்டு வெளிப்படுத்தினர். சிராத்தவிகி, கனுநூல், குரனுடைய முற்பிறப்பின் சரித் கிரம், 5ாகேஸ்வரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமா அனுரஞ்சல், கவணுவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கதிரேசர் ஊஞ்சல் ஆகிய இந்நூல்களும் இவரால் இயற்றப்பெற்று வெளிப்படுத் தப்பட்டன. மிருகாவதி விலாசம், கண்ணப்பர் சரித் திரம் (5ாடகம்), ஆசௌச தீபிகை வினவிடை, மனு நீதி கண்ட சோழன் சரித்திரம் (நாடகம்) ஆகிய இங் நூல்களும் இவரால் இயற்றப்பெற்றனவாய் வெளிவராதன வாகும். வண்ணுர்பண்ணே இந்துக்கல்லூரியிலே சைவ பரிபாலன சபையாரால் நடாத்தப்பெற்ற குருவகுப்
பிற்கு இவர் தலைமை ஆசிரியராக இருந்தவர்.
கீரிமலையிலுஞ் சிலகாலம் வசித்து வந்தார். அங்கே அப்போது ஆறுமுகநாவலருடைய தருமப் பொருள் கொண்டு த. கைலாசபிள்ளையால் ஸ்தாபிக்கப்பட்ட வித் தியாசாலையை அவர்களுடைய அற்ப பொருளுதவி யைப் பெற்றும் பெருமலும் தாமே ஆசிரியராக விருந்து நடாத்கி வந்தார். அக்காலத்தே பிராமணப் பிள்ளைகளுக்கும் பிறர்க்கும் தமிழிலுஞ் சம்ஸ்கிருதத் திலும் உயர்ந்த இலக்கண இலக்கியங்களைக் கற்பித்து

Page 70
120 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
வந்தனர். சிலகாலஞ் சென்றபின் உடம்பிலுண்டான அசெளக்கியத்தால் மாதகல் என்னுந் தமதுரையடைந்து, அங்கே கிறீஸ்தாப்தம் 1914-ம் ஆண்டு ( ஆனந்த வடு) தை மாதத்தில் தேகவியோகமானர்.
இவர் பல தனிக் கவிகள் பாடியதேயன்றி பல ருக்குச் சிறப்புப்பாயிரங்களுமளித்துள்ளார். அவற்றுள் திருக்கோவையாருண்மை என்னும் நூலைப் பதிப்பித்த போது அப்பதிப்பின் சிறப்புப்பாயிரமாக சி. சுவாமி நாத பண்டிதருக்கு (தம்பையபிள்ளைக்கு) அளித்த கவி
வருமாறு :-
கேரிசை யாசிரியப்பா திருவளர் மார்பத் துருவளர் கண்ணன் மருவளர் பதுமத் தொருபெருந் தாதை யிருவரு மிகலிப் பொருவறப் பொலிந்து பெருகிலம் போகிய வருமருந் தன்ன வடிமுடி யறியு மாகா வதனிற் படிதனை நொடியிற் பகிரக் கிழிக்குங் தாளுறு மேனமுந் தாவிச் சிறையாற் கோளுறு மண்டபம் போழுறு மெகினமு மாகிய வுருக்கொண் டகங்தை மேலிட மோகியர் வேகியர் மூள்சி னத்தாாய்த் துருவிச் சென்று துன்னுத லரிதென மருவித் துதிக்கு மங்கை மணுளன் சதுருறுந் துவாத சாந்தத் தலமாம் பதியென விளங்கும் பகாால வாயி னேதரு மோர் திசை யுயர்ந்தங் சோங்கும் வாதவூர் வள்ளல் வாய்மலர்ந் தருளிய கோவைபி னுண்மையாங் கோதறு முாையைப் பாவலர் மகிழப் பாப்பின னிழத் தென்னிலங் காபுரி மன்னியாழ்ப் பாண மென்னுற் றேயத் திலங்கிய நல்லூர்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 121
நாவலர் புகழுறு நாவல னென்றே பூவுல களவோ தேவுல களவும் பொங்கிய சீர்த்தி யங்கவன் மருகாய்த் தங்கியு மக்குருத் தண்ணளி பெற்றுங் கலேக்கட லனைத்து நிலைத்திடக் கொண்டே மலைத்திடா தெவருக் தலைப்படப் புகட்டி பயன்மிகும் பொன்னம் பலவப் பிள்ளை வியனுறுஞ் சிரேட்ட வித்துவ சிரோமணி தன்னிடத் தன்பு மன்னிட நெடு நா ளன்னிய மின்றி யமைதாக் கற்ருேன் றன்ன சிரியன் றன்னைப் போல வுன்னரு நூல்க ளு றுநர்க் குாைப்போ னல்லூர் மாவை சொல்லூர் மருதடி பல்லூ ராலயம் பணிந்திடச் சாரு மடியவர் முன்ன படர்ந்து பலவாய்க் குடிலவார்த் தைகள் கூறி நிற்கும் விவிலியர் தூடனம் வினவ றிதென நவிலரு மோர்சபை உண்ணிடக் கூட்டியும் பத்திரப் புத்தகம் பரிவொடு பதிப்பித் தெத்திசை தனிலு மெண்ணில பாப்பியுங் கண்டன மியற்றி மிண்டிடா தோட்டி யெண்டகு கீர்த்தி பண்டையிற் படைத்தோன் கொச்சைச் சமயக் குழியில் வீழ வச்செழு வூரி லடர்ந்த வெழுவரின் முன்னர்ச் சென்று முதல்வன் மேன்மையைப் பன்னிச் சைவப் பண்பைத் தேற்றித் திருத்திய கருணை திகழ்ந்த வறிஞ னுருத்த லில்லா உயர்குண சீலன்
சிவனடி யவரைச் சிவனெனப் பேணிப் பவவினை கெடுக்கும் பக்திமிக் குடையோன் றுர்க்குணத் தவரைத் தராத் தகற்றி நற்குணத் தவரை கண்ணுறும் பெயரின்
6

Page 71
122, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
முளாண் முயற்சி தண்ணளி யுற்ற வேளாண் குலத்தில் விளங்க வந்தோன் சைவ தீக்கை யுய்வாப் பெற்று மெய்நிகழ் நூல்கள் விழைபவன் 66ਰਗ ਕੌਰ சின்னத் தம்பி செய்த தவத்தான் முன்ன வந்த முழுத்தவ முடையோன் றம்பைய பிள்ளை யென்பதோர் பெயரை யம்புவி யேத்திட, வாண்ட5 ற் சுவாமி நாத சுகுண பண்டிதனே,
இவர் இறந்தபோது இவரைக்குறித்து “ இந்துசாத ன’ப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையைபு மிங்கே தருதும்:
பூரீமத் ஏரம்பையர் அவர்களின் தேகவியோகம்
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபைப் பிரசாரகரா யிருந்து பின், கீரிமலையிலே ஒரு பாடசாலையை ஏற் படுத்தி நடத்திவந்தவராகிய பூரீமத். சு. எரம்பையர் அவர்கள் இற்றைக்குச் சில வாரங்களின்முன் சிவபத மடைந்துவிட்டனர். இவர் சைவ சித்தாந்த சாஸ்திரங் களை நன்கு கற்றுத் தமது வருணத்துக்கேற்ற ஒழுக் கங்களிற் சிறிதுங் தவருது நடந்துவந்த ஒரு பிராம ணேத்தமர். அதிக கல்வியறிவும், மிக்க வாக்குவல்லப மும், பக்கி விசுவாசமுமுள்ள இவரையிழந்து துன்புறு மிவரது சுற்றமித்கிரருடன் நாமுமனுதாபப்படுகிருேம்.
9
இந்த சாதனம் ஆனந்தஞ் தை மீ 8-ங் உ ٤٤ ســــــس

ஈழநாடடுத் தமிழ்ப் புலவர் சரிதம் 123 சிவப்பிரகாசபண்டிதர்
இவர் எறக்குறைய எழுபத்தைந்து வருடங்களுக்கு முன் நீர்வேலி என்னுமூரிலே வேளாளர் குலத்திலே சங்கர பண்டிதருக்குப் புதல்வராகப் பிறந்தனர். இவர் தந்தையாரிடத்திலே வடமொழியில் இரகுவம்சம், மாகம் முதலிய காவியங்களையும், முக்தபோதம், ஆசுபோதம் முதலிய வியாகாணங்களையும், தென்மொழியில் தொல் காப்பியம், நன்னூல் முதலிய இலக்கணங்களையும் வேறு நூல்களையுங் கற்றவர். பாலாமிர்தம், பாலபாடம் முத லிய நூல்களும், கிருச்செந்தூர்ப் புராணவுரை, சிவானந்த லகரித் தமிழுரை முதலிய உரைகளும், வேறுஞ் சில மொழிபெயர்ப்புக்களுஞ் செய்தவர். கவிபாடுக் கிறமு முடையவர். கவிக்கிற முணா ஒரு செய்யுள் கர்ட்டுதும்:
பாலாமிர்தம் இச்செயலா லீது வரு மென்றாா யாமலே எச்செயலு மேலோ ரியற்றுர்காம்-இச்சையொடு வல்லையியற் றுவாேல் வந்திடுமே மாரு த அல்லலவர்க் கென்றே யறி.
சரவணமுத்துப்பிள்ளை
இவர் கிறீஸ்காப்தம் 1848-ம் ஆண்டளவில் ஊரெழு என்னும் ஊரிலே சைவசமயமுடைய வேளாளர் குலத் திலே சுப்பிரமணியபிள்ளை என்பவருக்குப் புக்கிராாகப் பிறந்தவர். தங்கையாரூர் சங்கானை. இளமையிலே அயலூ சாகிய புன்னலைக்கட்டுவனிலிருந்த இலக்கியப் புலவராகிய பிரமறுரீ ச. கதிர்காமையரிடம் சில இலக்கியங்கள் கற்ற வர். பின்பு, சுன்னுகம் முருகேச பண்டிதரிடம் நன்னூல்,
காரிகை மு தலிய இலக்கணங்களும், சில இலக்கியங்களும்

Page 72
124 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கற்றவர். இவர் கற்ற காலத்திலே இவருடன் சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரும், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யும் கற்றனர். தெளிவாகத் தமிழிலே வசனநடை எழுது வதிலும் கவி பாடுவதிலும் பிரசங்கஞ் செய்வதிலும் இவர் சிறந்தவராக விளங்கினர். ஆங்கிலமுந்தெரிந்தவர். சந்தான சித்தாந்த சாஸ்திரங்களிலும் மிக்க பயிற்சியுடையவர். இதனு லிவரைச் சுத்தாத்துவித சைவசித்தாந்தப் பிா சாரகர் எனப் பலரும் புகழ்ந்து பேசுவர். கொழும்புச் சைவ பரிபாலன சபையிற் சிலகாலம் சைவப் பிரசார காாயிருந்தவர். “சைவ உதயபானு' என்னும் பத்திரி கைக் கதிபராய் அதனை ஆறுவருடம் வரையில் கடத்தி யவர். இதனுல் * பத்திராதிபர் சரவணமுத்து ’ எனப் பலரும் இவரைக் கூறுவது பெருவழக்காயிற்று. பிற் காலத்திலே வேறுசில பத்திரிகைகளுக்கும் விஷயதானம் புரிந்தவர்.
கல்லூரில்இருந்த (ஒவசியர்) தம்பு றைற்றர் என்பவ ாது மகளை விவாகஞ் செய்தவர். அவ்விடத்திற்முனே தமது மாணகாலம் வரையும் வசித்தவர். இவருக்குச் சிவஞானசுந்தரம் எனப் பெயரிய புதல்வரொருவர் இருந் தனர். அவர் ஆங்கிலத்தில் வல்லவராய்க் காட்டு உடையா ரென்னும் உத்கியோகத்தமர்ந்து இளமையிலே தேக வியோக மடைந்தனர். சரவணமுத்துப்பிள்ளை யென்னு மிவர் போலிக்கொள்கைகளைத் தாக்கிக் கண்டன மெழுது வதிலும் அகி சமர்த்தர். இவர் விரைவிற் பாடும் சாமர்த்தியமுடையவர். இராமநாதபுரத்து மகாராசாவா கிய பாஸ்காசேதுபதிமீது பிரபந்தம் பாடிப் பரிசிலும் பெற்றவர். அவர்மேல் சித்கிரகவியுளொன்றுகிய தேர்க் கவியும் பாடியுள்ளார். கவிநயம் அறிதற்பொருட்டுப் பிரபந்தத்துள் ஒரு செய்யுளையும் தேர்க்கவியையும் முறையே இங்கே காட்டுதும் :

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 125
பிரபந்தச் செய்யுள்
கட்டளைக் கலித்துறை சித்தாந்த சைவத் திறங் தெரிந் தான் மன்னர் தேடுசெங்கோ ?லத்தாக் தகையி னிறுத்து வாாங்க ணமர்பிரச்ை சத்தாந் தவநெறி சேர்வரென் முேர்ந்தத் தனிவழிக்சே சித்தாந்தஞ் செய்தது சேது பதிப்பெயர்ச் சிங்கமொன்றே.
தேர் வெண்பா தேர்மீது தேமாலை தேனேக மார்புதுவ ளார்மீது விற்பனர்க்கீ யற்புதத்தின்-போர்மீது போதுவபோலாமணத்திற் போய்த்திகழ்ந்தாய்பன்னேச்துச் சேதுபதி மன்னவனே தேர்.
தென்னிந்திய நாடுகளினுஞ் சென்று சிற்சில பிர சங்கங்கள் செய்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத் தாப கரும் தலைமைப் புலவருமாகிய பாண்டித்துரைத் தேவர் அவர்களை அக்கிராசனாாகக்கொண்ட ஒர் சபையிலும் பிர சங்கஞ் செய்து அவராற் பாராட்டப் பெற்றனர். யாழ்ப் பாணத் தமிழ்ச் சங்கப் புலவருள்ளும் ஒருவர். யாழ்ப் பாணத்தில் இவரது பிரசங்கம் குறிப்புரை நிகழப் பெருத சபைகள் மிகச் சிலவாகும். கோயில்களிலும் சபைகளிலும் புராணப் பிரசங்கம் செய்கவர்.
சேர். அம்பலவாணர் கனகசபைப்பிள்ளை, அத்துவக் காக்து கிருநாவுக்கரசு முதலிய கனவான்கள் சிலர் இவரிடஞ் சித்தாந்த நூல்கள் கேட்டறிந்துள்ளார்கள். இவரிடஞ் சித்தாந்த நூல்களைக் கிரமமாகக் கேட்டறிந் தவர்கள் நல்லூரில் வசிப்பவரும் முகாந்தாம் என்னும் பட்டம் பெற்றவரும் விக்கியாதரிசியுமாக விளங்கும் சி. கங்தையபிள்ளையும் கல்லூர் வைத்தியர் கா. பொன்
ஆனயபிள்ளையும் முதலாயினேர். சுன்னுகம் அ. குமாா

Page 73
126 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சுவாமிப்பிள்ளையின் மாணவரும் 8 வித்தக ” ப் பத்தி ாாதிபரும் சிறந்த பண்டிகருமாய் விளங்கும் தென்கோவை ச. கந்தையபிள்ளையும் இளமையிலே இவரிடம் சிலநூல் க்ள் கற்றவர். சரவணமுத்துப்பிள்ளை ஆறுமுக காவல ரிடம் மிகுந்த அன்புடையவர். ஆறுமுக நாவலர் தேக வியோகமடைந்த காலத்திலே இவரியற்றிய இரங்கற் பாக்கள் ஒழுகிய ஓசையுடையனவாய்க் கேட்போர் மனத்தை உருக்கு நீர்மையவாய் மிளிர்கின்றன.
இன்னு மிவரியற்றிய கையறுநிலச் செய்யுட்களும் சிறப்புக் கவிகளும் L. 16).
சிறப்புக்கவிகளுள் சங்காபண்டிதர் இயற்றிய சைவப் பிரகாசனத்துக்கு இவர் அளித்த சிறப்புக் கவியை இங்கே தருதும் :-
. . . . கற்ருர் புகழ்சைவ சித்தாந்தப் பாலின் கடல்கடைந்து
மற்றர் நினைக்கருஞ் சைவப் பிரகாசன மாவமிழ்தை ஈற்று ாணிச்சைவ நற்புல ஹோர்க்கு நயந்தளித்தான் வற்று வறிவுடைச் சங்கா பண்டிச மாதவனே.
இவர் தமது தங்தையார் மீது கையறுநிலைச் செய் யுளாக இயற்றிய நீண்ட கலிவெண்பா ‘யமகத்தொடை அமைந்து ஐக்கிணை வளம் காட்டும் வர்ணனைகளும் சித் தாந்த சாஸ்கிரப் பொருளும் அமைந்தது. அக்கவி இப் பொழுது அகப்படவில்லை. ஞாபமாக ஒருவர் கூறிய அக் கவியின் முதல் இரண்டு அடிகள் பின்வருவன.
பூமேவு சக்காத்துப் புத்தேளுங் கண்ணளித்த பூமேவு சக்கரத்துப் புத்தேளும்-பூமேவும்
影剑 s* * * * * * * * t s a : ۔

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 127
ஊர்காவற்றுறை நீதிபதியாயிருந்த கு. கதிரவேற். பிள்ளையால் தொகுக்கப்பட்ட அகராதி வேலைக்குஞ் சில காலங் துணைபுரிந்தனர். இத்தகைய புலவர் கிறீஸ்தாப்தம் 1916-ம் ஆண்டில் தேகவியோகமடைந்தனர். தேக வியோகமடைந்தபோது மேற்கூறிய இவரது மாணவர் தென்கோவை ச. கந்தையபிள்ளை பாடிய இரங்கற் பாக் களு ளொன்றை இங்கே காட்டுதும் :
பாற்கர சேது பதிமேற் பிரபந்தம் பாடியவன் பாற்கர வாத பரிசுகள் பெற்றவன் பங்கயனும் பாற்கர வாரணக் கோவு மறியாப் பதம்பணிவோன் பாற்கர நாம சாவண முத்தெனும் பாவலனே.
வண்ணுர்பண்ணையைச் சார்ந்த கந்தர்மடத்து வசிக் கும் கல்லூர், கி. கிருஷ்ணபிள்ளை என்பவரும் இவரது மானக்கர் என்பர். கிருஷ்ணபிள்ளை ஆறுமுக நாவலர் கலாசாலையில், சிலகாலம் ஆசிரியருளொருவராக இருந்து கற்பித்தவர். VA
சரவணமுத்துப்பிள்ளை இறந்தபின் இவரது மனைவி யாராகிய அன்னபூரணியம்மையார் கைம்மை நோன்பிற் சிறந்தவராய், சிவஸ்தல யாத்திரைகள் செய்து திருச் செந்தூர்ச் சுப்பிரமணிய தலத்திற் சிலகாலம் வசித்து இப்பொழுது நல்லூரில் இருக்கின்றனர்.
சிற். கைலாசபிள்ளை
இராசவாசல் முதலியார் என்னும் சிறப்புப் பெயர் பெற்று இலங்கைத் தேசாதிபதியின் தமிழ் முதலியா ராகவும் இராசமாலிகித நிலையத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்த இவர் யாழ்ப்பாணத்துப் பரம்பரைத் தமிழ்ப் பண்டிதருளொருவராவர். இவர்

Page 74
123 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கிறீஸ்காப்தம் 1851-ம் ஆண்டு நல்லூரிற் பிறந்தார். இவரது தங்தையார் கொழும்புத்துறையில் மணியகார ராயிருந்த இசாசாத்தின முதலியார் மகன் கிருச்சிற் றம்பலம் என்பவராவர். இவர் தாயார் வித்துவசிரோ மணியாகிய இருபாலைச் சேனகிராச முதலியாருக்குப் பிரதம மாணவரும், ஆறுமுக நாவலர்க்குப் பலகாலம் இலக்கண இலக்கியங்கள் படிப்பித்தவருமாகிய சரவண முத்து முதலியாருக்கு மகளாகிய மாணிக்கவல்லி என் பவர். கைலாசபிள்ளையவர்களது தங்தைமரபு தாய்மர பாகிய இருமரபினரும் கல்விச் செல்வம் அதிகாரம் சைவாசாரம் முதலியவற்றில் தலைசிறந்து விளங்கியோ
ராவர்.
இவர் இளமையில் தமது உறவினராகிய நல்லூர்ச் சம்பந்தப் புலவரிடம் சிறிது தமிழ் கற்றவர். பின் * சென்ஜோன்ஸ் கொலீஜ்’ என்று கூறப்படும் சுண்டிக் குளி ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கிலங் கற்று உயர்தர வகுப்பிற் சித்திபெற்று அக்கலாசாலை மாணவருள் சிறந்த வராயினர். ஆங்கிலபாஷையில் மிகச் சிறந்த அறிவுடைய வர். மேற்படி கலாசாலையை இவர் விட்டகாலத்தில் நிகழ்ந்த கூட்டத்தில் சபையார் வியப்படையுமாறு சிறந்த உச்சா ரணத்தோடு பொருட் சிறப்பமையும்படி இவர் நிகழ்த்கிய ஆங்கிலப் பிரசங்கத்தை இப்பொழுதை முதியோர் பலர் பாராட்டிக் கூறுவர். பின்பு அரசினர் லேகக பரீட்சையா கிய * கிளறிக்கல்’ பரீட்சையில் சித்தியெய்திக் கொழும் புப் பகிரங்கத் தொழில் நிலையத்தில் (அரச) சேவை நடாத்கினர். அக்காலத்துத் தமிழ் இலக்கண இலக் கியங்களையும் சம்ஸ்கிருதத்தையும் தாமாகவே படித் துச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மிக்க பரி சயமுடையாாயினர். சிலவருடம் அரச சேவை செய்து பின் உடல் நலம் குன்றியமை காரணமாக அதனை விடுத்

r
ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 129
துத் தென்னிந்தியாவில் ஸ்தலயாத்திரை செய்வாராயினர். அக்காலத்தில் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் இவ ரது ஆழ்ந்த கல்வியறிவையும் கூரிய மதியையுங் கண்டு தமது பழந்தமிழ் நூற் பரிசோதனத்துக்குச் சிலகாலம் இவரைத் துணைவராக்கிக்கொண்டனர். இக்காலத்தில் சென்னைக்கு அண்மையில் உள்ள வடகிருமுல்லைவாயில் சென்று சுவாமிதரிசனஞ்செய்வது இவர் வழக்கம். இக்காட்களிற்முன் இவரும் இவர்நண்பரிருவருமாகக் கூடி வடகிருமுல்லைவாயில் மும்மணிக் கோவையைப் பாடினர். அகவல் இவர் பாடியன. வெண்பாவும் கலித்
அகவல்களை அக்காலத்து வித்துவான்களாகிய தொழு வூர் வேலாயுதமுதலியார், சபாபதிநாவலர் முதலிய பலரும் மிகப் பாராட்டிக் கூறுவர். அக்காலத்தில் சென்னையிலும் பிற இடங்களிலும் இருந்த வித்துவான் கள் யாவரும் இவர்பால் மிக்க நண்பும் அன்பும் உடைய சாயினர். டக்ாரும் மஹாமஹோபாத்தியாயருமாகிய சாமிநாதையர் இவருட் சிறந்தவராவர். இவரது அகவல் கள் கல்லாடச் செய்யுட்கள்போல இறுக்கமும் பொரு ளாழமும், குமரகுருபர சுவாமிகளது அகவல்கள்போல ஒசையும் வனப்பும் உடையனவாகும். மஹாமஹோ பாத்தியாயரும் டக்ாருமாகிய சாமிநாதையரவர்கள் இவரை ஒருகால் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு அழைத்துச் சென்று அக்காலச் சந்தானகுரவராகிய சுப்பிரமணிய தேசிகரை அடையும்படி செய்தனர். தேசி கர் இவரது மும்மணிக்கோவை அகவல் ஒன்றை இவர் படிக்கக்கேட்டு ஆநந்தமடைந்து அதனை இரண்டாம் முறையும் படிக்கும்படி கட்டளையிட்டு இவரை 6 வித்து வான்’ எனப் புகழ்ந்து பட்டுப் பீதாம்பரங்களும் பரி சாக வழங்கினர். கிருவாவடுதுறை ஆதீனத்திலும் இவர் தேசிகருக்கு அணுக்கராய்ச் சிலகாலம் வதிந்தனர்.
17

Page 75
130 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
ஆதீன சம்பிரதாயங்களையும் இவர் நன்முக அறிந்தவர். இக் காலத்தில் இவருக்கும், சி. வை தாமோதரம்பிள்ளைக்கும் சபாபதிநாவலருக்கும் தேசிகர் சிவஞானபோத மாபாடி யத்துட் சில பாகங்களை வாசித்து விளக்கியுள்ளார். இப் பாகத்தை இவர் பிரதி செய்து வைத்துக்கொண்டார். இவர் சந்தான சித்தாந்த சாஸ்திரங்களிலும் பண்டார சாஸ்திரங்களிலும் மிக்க பயிற்சியுடையவர். இதன் பய னகவே பிற்றைஞான்று கொழும்பு விவேகானந்தசபை அங்கத்தவர் பலருக்குச் சந்தான சித்தாந்த சாஸ்திரங் களை இலக்கண இலக்கிய தருக்கமுறை பிறழாது பல வருடம் படிப்பித்துமுள்ளார்.
மூன்று வருடகாலம் ஸ்தல யாத்திரை செய்தபின், தமது தாயார் கேள்விப்படி மீண்டு யாழ்ப்பாணம் வந்து அரசினர்பாற் பலவருடம் உயர்தா நீதிமன்றத் துவி பாஷகராய்ச் சேவைபுரிந்தனர். பின்பு யாழ்ப்பாணக் கச்சேரிப் பிரதம முதலியாராகவும், மட்டுக்களப்புக் கச்சேரி முதலியாராகவும் இருந்து, ஈற்றில் தேசாதிபதி யவர்களுக்குத் தமிழ் முதலியா ராய் இராசமாலிகித நிலை யத்தில் சேவை செய்தனர். கொழும்பில் வசித்த இக் காலத்தில், சேர் பொன். இராமநாதர் இவரிடம் தாயு மானசுவாமி பாடல் முதலிய சில நூல்களைப் படித் தனர். சேர் பொன். அருணுசலம் அவர்கள் இவருக்கு மிக்க நண்பராய் இவரை உசாத்துணைவராகக் கொண்டு பொதுவாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களும், சிறப் பாகச் சங்க நூல்களும் கற்றனர். இவர் பத்துப்பாட்டு, புறநானூறு, கல்லாடம் முதலிய நூல்களில் மிக்க பயிற்சியுடையவர். பழைய அகவல்களை மிகப் பாராட்டு வார். இவர் அகவல் படி க்கும் முறையும், அதற்குரிய இசையும் கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய் உள்ளன.
இவர்போல உரிய இசைப்படி அகவல் படிப்போரும்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 13.
பாடுவோரும் இவர்காலத்தும் இக்காலத்தும் இல்லை என்று கூறுவது மிகையன்று. மற்றைய பாக்கள் பாவினங்கள் பாடுவதிலும் வல்லவர். சம்ஸ்கிருதத்திலும் காவிய நாடகங்கள் தெரிந்தவர். சாகுந்தல நாடகச் சுலோ கங்கள் சில இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அச்
செய்யுட்கள் இப்பொழுது கிடைக்கவில்லை.
இவர் வாக்கு மிகச் சிறந்தது. சம்ஸ்கிருத சுலோ கங்களை இவர் உதாத்த அநுதாத்த ஸ்வரிதப்பிரசயம் வழுவாது படிப்பது கேட்டுப் பார்ப்பனகுருமாரும், பெளத்தகுருமாரும் வியப்படைவர். ஒருமுறை “பிளேக்” என்னும் பெயரிய இலங்கைத் தேசாதிபதி முன்னிலை யில் கூடிய ஒரு சமாசத்தில் இவர் சம்ஸ்கிருத சுலோ கங்கள் வாசித்து அவற்றை ஆங்கில பாஷையில் விளக்க நேர்ந்தபோது, இவரது உச்சாகாணத் தொனி யைக் கேட்ட மஹோபாத்தியாய சர்வேசுரசாஸ்திரி களும், சம்ஸ்கிருத மகா பண்டிதர்களாகிய பூரீ சுமங் கலா, தர்மராமா முதலிய பெளத்த குருமாரும் வியப் புற்று காணி நின்றனர் என்றல், இவர் வாக்கின் கிறம் என்னென்று உரைக்கலாம்.
இவர் சங்கீத ஞானமும் உடையவர். தேவாரம் முத லியவற்றை யாழிசையோடும் பத்திமையோடும் பாரா யணம் செய்பவர். சிவசின்னங் தரித்தலிலும், சைவா சாரத்திலும், சிவபத்தியிலும் சிறந்தவர். எவரோடும் மலர்ந்த முகமுடையாாய் இன்சொல்லே பேசுபவர். சமயவிஷயமும் கல்வி விஷயமுமாகவே பலரோடும் சம் பாஷணை செய்பவர். விண் வார்த்தை பேசுவோரைக் கண் டால் மெளனம் சாகிப்பவர், இலங்கையிலுள்ள ச்ேசாகி பதிமார், உயர்தர நீதிமன்றத் தலைவர்கள், உயர்தர உத்தி யோகஸ்தர், பிரபுக்கள் முதலிய யாவரும் இவரை மிக

Page 76
132 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
நன்கு மதித்து வந்தனர். * காவன் மன்னரைக் கடவுள் காக்கவே” என்னும் அரச வாழ்த்தை ஆங்கிலத்தி னின்று ஆங்கில சுரமும் சங்கீதசுரமும் வழுவாதபடி மொழிபெயர்த்தவரிவரே. இக்கவி, பாடசாலை மாணவரா அலும் பிறராலும் இன்றும் பாடப்பட்டு வருகிறது.
உயர்தர நீதிமன்றத் துவிபாஷக உத்தியோகஸ்தர்க ளுள்ளும், சம்ஸ்கிருத உணர்ச்சியும் தமிழ்ப் புலமை யும் வாய்ந்த இவரே சிறந்து விளங்கினர். அரசினர் கட்டளைச் சட்டங்களை ஏற்ற தமிழ்கடையில் இவர் மொழிபெயர்த்த நூல்களும் பலவாகும். இந்நூல்களே இவருக்குப் பின்வந்த மொழிபெயர்ப்பாளர் பலர்க்கு வழிகாட்டியாக இருந்தன ; இருக்கின்றன.
இவருக்கு இராசவாசல் முதலியாரென்னும் சிறப் புப் பெயர் புனையப்பட்டபோது கொழும்பு நகரத்தில் உயர்தர உத்தியோகஸ்தரும் பிரபுக்களும் இவரை ஒரி டத்து வரவழைத்து விசேஷ உபசரணை நடாத்தி னர். இலங்கை அரசினர் சேவையில் இருக்கோருள் தமிழ்ப் புலமையிற் தலைவராய் விளங்கியவர் இவர் ஒருவரே ஆவர். பொருள் புகழ் கருதி ஒருபாற்கோடாது பணிபுரிந்தவரும் இவரே என்பதும் மிகையன்று. அக் காலத்தில் வித்தியாகிகாரியாகிய ஹாவேட்துரை இவர் பால் மிக்க மதிப்பும் நம்பிக்கைபும் உடையவராதலால் இவரைக்கொண்டே சிவில் சேவிஸ், நொத்தாரிசுப் பிரதம பரீட்சை, கிளறிக்கல் பரீட்சை என்பனவற்றில் தமிழ்ப் பரீட்சைகளை நடாத்துவித்தனர்.
இவர் மிக்க சாந்தமும் பொறுமையும் உடையவர். ஆடம்பரமான ஒழுக்கமும் இல்லாதவர். இவரது பாடம் சிறப்பைப் பின்வரும் ஆசிரியப்பா கன்று புலப்படுத்துவ தாகும்.
g

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 133
வடதிரு முல்லை வாயில் மும்மணிக்கோவை தேசிவர் தடித்துத் தெளித்த செஞ் சடைமிசை மாசிவர் இறுமதி மறன்மறந் துடங்கு மாசுணம் பயிலிய வைத்தவெம் மாசிலா மணியெனத் தன்பெய ரணியிய நாயகன்
திரிகுவாாணின் றிறந்தேர் பாற்றரோ மாது நீ மொழிமோ வாழிய யாது கொ றில்ல யாஞ்செய வற்றே.
(குறிப்பறிதல் என்னுர்துறை)
இச்செய்யுளைச் * செந்தமிழில்’ (1913) * வெள்ளி யங் கிருமலை கிழார்’ என்னும் பெயரோடு வெளிவந்த கட்டுரையிற் காண்க.
இவர் 1916-ம் ஆண்டு தேகவியோகமடைந்தனர். இவரது உத்தியோகம் இவருக்குப் பின் இவரது தாயார் சகோதரி புத்திரரும், ஆங்கிலம் தமிழ் என்னும் இரு மொழிகளிலும் மிக்க பாண்டித்தியமுடையவரும், சோகி டம் வானசாஸ்கிரம் சரித்திர ஆராய்ச்சி என்பனவற் றில் வல்லவருமாகிய வைத்தியகாக முதலியாருக்குக் கிடைத்தது. இவர் இறந்தபொழுது இவருக்கு வயது
• ilینی 0JLJےHکے
இவர் மதுரைச் சங்கத்திலும் ஒர் அங்கத்தவர். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தவரால் நடாத்தப்பட்ட பரீட்சைகளிலும் சிலகாலம் இவர் பரீட்சகராய் இருந் திருக்கின்றனர். ' போற்றுகம் வம்மே” எனப் புலவரை உளப்படுத்தி ஆற்றுப்படுத்தி இவர் பாடிய தனிச் செய் யுள் ஒன்று ‘செந்தமிழ்” முதலாம் தொகுதியில் * வெள் ளியங் திருமலை கிழார்’ என்னும் பெயரோடு வெளிவந் துள்ளது. அதனே இங்கே தருதும் :- -

Page 77
134.
O
கடு
ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
நிலைமண்டில ஆசிரியப்பா
போற்றுகம் வம்மே! போற்றுகம் வம்மே ! மாற்றருஞ் சிறப்பின் வண்டமிழ்ப் புலமைப் பாவல் லீரும் நாவல் லீரும் போற்றுகம் வம்மே ! போற்றுகம் வம்மே! வடாஅது நெடியோன் வண் புகழ் மலையே தெனஅது குமரியந் தெண் டிரைப் பெளவமே, குணு அது வங்கக் குாைகடற் குடாவே குடாஅது மலையக் குண்டுரீர்ப் பாப்பே, என்றென் றமைந்த தென்றமிழ் வாழ்க்கைப் பாவல் லீரும் நாவல் லீரும் போற்றுகம் வம்மே 1 போற்றுகம் வம்மே ! தென்றமிழ் நிலத்தின என்றுதாம் பலகாற் பிரிந்துறை கொள்கைய சாகித் தெரிந்த யாழின் வங்க வாழ்வுடைப் பெயரிற் முழ்வின் ருேங்கிய தண்டமிழ் நிலத்திலும் முத்தமிழ் விரகன் முதிரிசைப் பனுவல் * நிாைகழ லாவ ” நிறைமொழி பெறீஇக்
கோணு தோங்கிய கோணமா மலையினும்:
2.டு
AO
திசைகட லோடிய திருவமர் சிறப்பிற் சிங்கா வண்டுறைச் சிங்க புரத்தினும் ; தாங்கா விளையுட் டகை சால் கழனியுங், தாங்கு குலைத்தெங்கு தேங்குபல படப்பையும் பொறிகா ண லவனெடு மீனமுங் குறையாச் செறிமாண் கழிசூழ் புளியங் திருத்தி மட்டுக் களப்பினும் வண் புகழ் நிறீஇய அரும்பொருட் பொன் பெயர் அமர்நாட் டங்கணும் இட்ட வாழ்க்கை கட்டிய பான்மைப் பாவல் லீரும் நாவல் லீரும் போற்றுகம் வம்மே 1 போற்றுகம் வம்மே! தென்றிரு மதுரைச் செழும்பதி யகவயின் நான்மைச் சங்கமும் நன்குநிலை யிடுமார்,

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 135
மும்மைச் சங்க மும்மையி னிரீஇர் செம்மைத் தமிழ்த்திறம் சீர்பெற வளர்த்த பாண்டி மன்னர்மன் வேண்டுபு கொண்டனர் கடு பாண்டியந் துரைக் கோலமும் போலுமென்
றியாண்டு மேதையோர் செம்மார் தனரால் சமாங் காள்! நம் மொருமொழி கேண்மோ :- அன்பினை ந் திணையென் றரும்பொருண் மலர்ந்த அங்கயற் கண்ணி பங்குறை யிறைவனும் சO கீரன் றமிழினின் வாரம் வைத்த
முருக வேணம் முதற்பெரு வணிகச் சங்கத் தமிழின் றலைமைப் புலவனும் யாங்கா கியரென யாமயங் கலமால் ; பொலம்புரி முளரிப் பொய்கையங் கோட்டுக் சடு கூட லாலவாய் மீடுபெலங் குன்றினும்
எஞ்ஞான் றும்மென இஞ்ஞான் றதனினும் உண்மகிழ்க் துடங்கும் உறைகுரு ரலாோ ? கலையெலா முவர்பாற் கற்முெருங் குணர்ந்த பொதியமா மலையிற் றிருமா முனியும் டுo வதியுமா மகிழ்தலும் தவிர்கலன் மன்னே!
வடமா மொழிக்கட் கடவுண்மா மறையோ, அப்பெரு மறையின் அரும்பெறற் பயனச் செப்பிடு மருணுரற் றிறங்கெரி பாதமோ, கேட்டன் முதலாக் கிௗந்திடு திறமோ, டுடு கோட்டமில் சிவநெறிக் குரவருந் தாமோ,
என்றென் றிவ்வெலாங் துன்றுபு மன்ற நான்மையின் முடிந்த பான்மையி னன்றே சங்கமு மிங்ங்ண் சான்றுகின் றதுதான் ! ஈது நந் தெய்வத் திருவருட் பாங்கென் சுO ருே துறு மருநூல் ஒருநாற் பயனும்
நாற்பெருஞ் சங்க நன்னெறி நிலையிப் பிறவா நெறியி னிறுமாப் பம்மே! ஆகலின் நாமெலாங் காதலிற் குழுமிப் சுடு போற்றுகம் வம்மே ! போற்றுகம் வம்மே

Page 78
136 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
மாற்றருஞ் சிறப்பின் வண்டமிழ்ப் புலமைப் பாவல் லீரும் நாவல் லீரும் போற்றுகம் வம்மே 1 போற்றுகம் வம்மே !
இவரது முதற்றரத்து மகன் சபாநாதர் கொழும்பு ரேகுக் கங்தோரில் லேககமாய் இருக்கின்றனர். இவர் மட்டுக்களப்புக் கச்சேரி முதலியாராக இருந்த காலத் தில் அவ்வூரவரைத் தமிழார்வமும் சைவசமயப் பற்றும் உடையராமாறு ஊக்கிப் புளியந்தீவில் 1902-ம் ஆண் டில் சைவப்பிரகாச வித்தியாசாலையொன்று தாபித்து நடாத்தச் செய்தவர். ஆரம்பகாலத்தில் இவ்வித்தியா சாலையில் பிரதம ஆசிரியராயிருந்து இதனை நடாத்தியவர் கைலாசபிள்ளையவர்களது சிரமித்திரராகிய தென்கோவை பண்டிதர் ச. கந்தையபிள்ளை யவர்களாவர்.
வித்துவான் சிவானந்தையர்
இவர் தெல்லிப்பழைக்கு அயற்கிராமாகிய பன் னலை யென்னுமூரிலே ஏறக்குறையச் சாலிவாகனசகாப் தம் கன கூடு வரையில் (கிறீஸ்தாப்தம் 1873 வரையில்) பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் சபாபதி ஐயர். தங் தையார் இவருக்கு ஐந்து வயதானவுடன் விக்கியாரம் பஞ் செய்து, அக்கிராமத்திலுள்ள ஆசிரியரொருவ ரிடஞ் சென்று கல்வி கற்கும்படி செய்தனர். இவர் கல்வி கற்று வரும் நாளிலே இவரது திறமையைக் கண்ட தங் தையார், இவருக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பிக் கத் தகுந்த ஆசிரியர் அவ்வூரில் இல்லாமையால், ன்ழாலை யென்னுமூரிலே உயர்தரக் கல்வி கற்பித்தற்குரியதாக, பூரீமான் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்
களால் ஸ்தாவிக்கப்பட்ட வித்தியாசாலைக்கு இவரை

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 137
அழைத்துச் சென்று அங்கு அப்போது தலைமை யாசிரியராகவிருந்த சுன்னுகத்துக் குமாரசுவாமிப் புலவ ரிடம் ஒப்பித்து, இவருக்கு இலக்கிய இலக்கணங்களைக் கற்பிக்கும்படி வேண்டினர். புலவரும் உடன்பட்டு இவரை உயர்தர வகுப்பிற் சேர்த்து அவ்வகுப்பிற் குரிய இலக்கிய இலக்கணங்களைக் கற்பித்துவந்தனர். இவரே அவ்வகுப்பு மாணவருள் நுண்ணிய விவேக மும் ஞாபகசக்திபு முடையவராய்க் காணப்பட்டமையி ணுல், இவரிடம் புலவரும் மிக்க அன்புவைத்து இவ ருக்குத் தமிழ் நூல்களை மாத்திரம் கற்பித்தலோடமை யாது விசேடமாகச் சம்ஸ்கிருத நூல்களையும் கற்பித்து வந்தனர். அதிக விவேகியாகிய இவர் புலவரிடம் பல் லாண்டு படித்துத் தமிழ் இலக்கண இலக்கிய அறிவிற் சிறந்து விளங்கியதன்றிக் கவிபாடுவதிலும் அதி சாமர்த் கியம் பெற்றனர். பின் சிதம்பரத்தையடைந்து அங்கே பச்சையப்ப முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்ட ஆங்கில வித்தியாசாலையிலே தமிழ்ப் பண்டிதராகவிருந்து சில் லாண்டு கற்பித்து வந்தனர். ஆங்கில உணர்ச்சியும் இவ ருக்குச் சிறிதுண்டு. சிதம்பரத்திலே சாஸ்திரியாரொருவ ரிடம் இவர் சம்ஸ்கிருதத்திலே தருக்க சங்கிரக நூலு ரைகளைக் கற்று அவைகளிற் சிலவற்றை மொழிபெயர்த் அத் தமிழிலே எழுதியச்சிட்டு வெளிப்படுத்தினர். அவை, தருக்க சங்கிரகத்தின் உரைகளாகிய நியாய போதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், அதனுரை யாகிய நீலகண்டீயம் என்பவைகளாம். மொழி பெயர்க் கும்பொழுது அங்கிருந்த யாழ்ப்பாணத்தவரான தர்க்க குடார தாலுதாரி எனப் போற்றப்பட்ட பூரீமான் திரு ஞானசம்பந்தப்பிள்ளை என்பவரின் உதவியையும் பெற் றனர் என்ப. இவர் சிதம்பரத்திலிருக்கும் காலத்திலே புலியூர்ப் புராணம் என்னும் ஒரு புராணம் பாடியுள்ள னர். புலியூர் அந்தாகி முதலியனவும் பாடியுள்ளனர். புலி
8

Page 79
138 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
யூர்ப் புராணம் இவருடன் அதி கண்ட பூண்டவரும், தமிழிலும் ஆங்கிலத்திலும் வல்ல அறிஞராயும் சித் தாங்த விற்பன்னாாபும் விளங்கியவருமாகிய தெல்லிப் பழை பிறக்றர் பூரீமான் தம்பையா அவர்கள் விரும்பிய வாறு இயற்றப்பட்டதாகும். அதனை அவர் பாரியாராகிய பூரீமதி பவளநாயகியம்மையார் இற்றைக்கு இரண்டு வரு டங்களின் முன் அச்சிடுவித்து வெளிப்படுத்தியுள்ளனர். ஏனைய வெளிவரவில்லை. இவர் தாம்பாடிய சனி துதியைத் தாமே அச்சிடுவித்து வெளிப்படுத்தியுள்ளனர். இவர் சிதம் பாத்திலிருந்து படிப்பித்துவருங் காலத்திலே யாதோ ஒரு காரணத்தால் அவ் வித்தியாசாலையைவிட நேர்ந்தது. அதனுல் இவர் தம்மூருக்கு வங்கிருந்த பின்னர், தம் தமையனர் விரும்பியவாறு விவாகஞ் செய்துகொண்ட னர். இவருக்கு ஒரு புத்திரியுண்டு. இவர் காத்திராப்பிர காரம் உண்டான சுரநோயினலே நளவருடம் (கிறீஸ் தாப்தம் 1916-ம் ஆண்டு) மார்கழி மாதத்தில் தேகவி யோகமடைந்தனர். இவர் தேகவியோகமானபோது வயது நாற்பத்துமூன்று. இவர் புத்திரியை இவர்மருகரும் பால பண்டிதருமாகிய ப. இரத்தினேஸ்வர ஐயர் என்பவர் விவாகஞ் செய்துள்ளார். இவர் கவிச்சிறப்பு அறியப் புலி யூர்ப் புராணத்துள் ஒரு கவியை இங்கே தருதும் :-
*ஆம்பல் பற்பல வொருகையிற் பற்றின சழிப்பார்
தேம்பப் புண்டரீ கம்பல வொருகையிற் சிதைப்பார் சாம்பு மெல்லியர் மகளிரென் அறுாைப்பது சழக்கோ சாம்பு கன்றது பொய்யுரை படுங்கொலோ டூவிற்றீர்.”
இவரது தலையின் முற்பக்கம் உயரமான புடைப் புடையது. அதனல் இவரை மிடாத்தலையரென்பர். தம்மோடு பேசுபவர்க்கும், படிப்பு விஷயமாகத்தான் வேறு விஷயமாகத்தான் வாதம்புரிவோர்க்கும் p i gjë குடன் வேடிக்கையாக யாவரும் வாயடங்கி 15ாணி நகைப்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 139
போடு செல்லும்படி மிகச் சாதுரியமாகவும் விசேடமாக வும் விடைகூறுவதில் நிபுணர். விரைவிற் பாடும் வன்மை யும் உடையவர். பல தனிச் செய்யுட்களும் கையறு நிலைகளும் பாடியுள்ளனர்.
கையறுநிலை * ஒயா தொருகண மூழியொன் ருக வுளங்குலைந்து
பாவாய் நினதுயிர்க் கேள்வர்மெய் வாடிப் பதைபதைக்கப் போவா யவர் துயர் தீவொன் றேனும் புகல்கின்றிலாய் ஆவா கொடியையன் ருேவுரை சீதைய லம்பிகையே. "
சனி துதி * வருங்கொ லைத்தொழின் மடங்க லுட்படப் புகாவகையா
னெருங்கு றுஞ்சிறு நெறிகடிங் துள்ளன்பு டேப் பருங்க யிற்றிடைப் பிணித்து வன்கொடு வரிபாற்றி யருங்க லைத்தொகை வளர்ப்பது நைமிசா ரணியம். '
வருத்திடு கோர மேனி
வானவ போற்றி வான்மே லுருத்திா னவாய் போற்றி
யுலகுளோ சஞ்சி யஞ்சிக் கருத்தழி கடவுள் போற்றி
காாளடுே ருருவாய் போற்றி யருத்தியின் யாவு முண்ணற்
கமர்ந்திடு முளத்தாய் போற்றி.
குமாரசுவாமிப் புலவர்
இவர் யாழ்ப்பாணத்துச் சுன்னகத்திலே வேளாண் குலகிலகாாய் விளங்கிய அம்பலவாணபிள்ளைக்குப் புகல் வாாகத் த்ோன்றினர். உடுவில் முத்துக்குமார கவி சாயருக்குப் பெளத்திார். இவர் பிறந்த காலம் சாலி வாகன சகம் ஆயிரத்து எழுநூற்று எழுபத்தைந்துக்குச்

Page 80
140 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
(கிறீஸ்தாப்தம் 1850) சமமான பிரமாதீச வருஷம் தைமாதம் பதினெட்டாங் திகதி ஞாயிற்றுக்கிழமை, இவர் இளமையிலே தமிழ் நெடுங்கணக்குப் பயின்று சொற் பயிற்சியும் வந்தபின், மல்லாகத்திலுள்ள ஆங் கில வித்தியாசாலையிலே சென்று ஆங்கிலமும் தமிழுங் கற்றுவந்தனர். அக்காலத்திலே இவரது நுண்மதியை நோக்கிய தங்தையார், தமிழ்க் கல்வியை நன்கு கற் பிக்க விரும்பித் தம்மூரிலே யிருந்தவரும் இலக்கணக்" கல்வியில் நுண்மகி படைத்தவருமாகிய முருகேச பண் டிதரிடம் இலக்கிய இலக்கணம் கற்குமாறு இவரை யனுப்பினர். இவர் அவரிடஞ்சென்று இலக்கிய இலக் கணம் கற்றுவரும் நாளிலே, ஆசிரியரைப்போலவே இவ ரும் இலக்கணவறிவிற் சிறந்தவராய்க் கவிபாடும் வன் மையையும் பெற்றுக்கொண்டார். பின் சம்ஸ்கிருதம் படிக்க விரும்பி, அப்பாஷையில் அதிக வன்மை படைத்தவரும் குற்ற விசாரணைச் சிறுமன்றில் (பொலிஸ் கோட்டில்) பாஷாந்தரீகாண உத்தியோகத்தமர்ந்தவரும் அவ்வூரவருமான நாகநாத பண்டிதரிடஞ் சென்று அப் பாஷையைக் கற்றுவந்தனர். அவரிட மிவர் இரகுவம்சம் முதலாகிய காவியங்களையும் பயின்று, சாகுந்தலம் முத லிய நாடகங்களையும், வேறு நூல்களையும் கற்றுக் தேர்ந்து, சம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கத்தகும் வன்மையும் உடையார்யினர். இவர் மொழிபெயர்ப்பு வன்மையும், கவிபாடும் வன்மையும் உடையவர் என்பதை அறிதற்பொருட்டு இவர் மொழி பெயர்த்துப் பாடிய ஒரு கவியை இங்கே காட்டுதும்:
* முந்தேறு கிருதயுக பூபதிமாங் தாதாவு முடிந்து போனுன் நந்தேறு கடலடைத்த செயராமச் சந்திரனு
பீடந்து விட்டான்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 14t
வந்தேறு குருகுலத்துத் தருமன்முதன் மகிபரெலா
மாய்ந்து போனர்
அங்கோ விங் கிவரொடும்போ காசபுவி நின்னெடுதா
னடையு மையா, '
என்பது. இக்கவியேயன்றி இன்னும் மொழிபெயர்த் துப் பாடிய நூல்கள் :- மேகதூதக் காரிகை, இராமோ தந்தம், சாணக்கிய நீதிவெண்பா முதலியவைகளாம். இவையும் அவரது இருமொழி வன்மையையும் காட்டும். சிசுபால சரிதம் இவர் மொழிபெயர்த் தெழுதிய சிறந்த
GF6 நூலாகும்.
இவர் முருகேச பண்டிகளிடத்தன்றி, அளவெட்டி கனகசபைப் புலவரிடத்துஞ் சென்று சிற்சில இலக்கண நூல்களைப் படித்தவரென்றும், படிக்கும் காலத்திலே பிரயாசையோடும் தேகசிரமத்தையும் நேரத்தையும் கவனியாது, எவரிடத்து அரிய நூல்கள் இருக்கின் றனவோ அவரிடம் வருத்தம் பாாாது சென்று பெற் அறுப் படிப்பரென்றும் அறிந்தோர் சிலர் கூறுவர்.
இவர் தமிழிற் சிறந்த பாண்டித்தியமடைந்திருக் கும் காலத்திலே, தமிழபிமானம் பூண்டு எட்டுப் பிரதி களாயிருந்த தொல்காப்பியம் நச்சினர்க்கினியருரை, கலித் கொகை, இறையனர் களவியலுரை முதலிய சங்கச் சான்றேர் நூல்களையும், சூளாமணி இலக்கண விளக் கம் முதலிய பிற்றைச் சான்றேர் நூல்களையும் அச் சுப் பிரதிகளாக்கித் தமிழுலகிற்கு உபகரித்தவராகிய ராவ்பகதூர் பூரீமான் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் சைவசமய விருத்தியையும், தமிழ்மொழி வளர்ச்சியையுங் குறித்து ஏழாலையிலே ஆயிரத்தெண் லுTற் றெழுபத்தெட்டாம் ஆண்டுக்குச் சமமான தாது வருஷம் ஆவணிமாசம் பத்தாந்திகதி புதவாரத்திலே

Page 81
142 ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம்
ஒரு தமிழ் வித்தியாசாலையைத் தாபித்து, அகில் (1Բ35 கேச பண்டிதரையும் இவரையுமே ஆசிரியர்களாக நியோ
கித்தனர். அப்போது இவருக்கு வயசு இருபத்திரண்டு.
இருவரும் கற்பித்துவருங் காலத்திலே, சிறிது காலத்தின்பின் முருகேச பண்டிதர் அவ்வித்தியாசாலையை விட்டு வேறிடஞ் செல்ல, இவரே தலைமை ஆசிரியராக விருந்து கற்பித்துவந்தனர். இவ்வித்தியாசாலையிலே இவ ரிடத்துப் படித்துப் புலமையடைந்தவர்கள் தெல்லிப் பழை வித்துவான் சிவானந்தையரும், அவ்வூர் பால சுப்பிரமணிய ஐயரும், அவ்வூர் க. சங்காப்பிள்ளையும், அவ்வூர் நா. மயில்வாகனப்பிள்ளையும், மாவிட்டபுரம் ச. விசுவநாத முதலியாரும், தையிட்டி மா. பொன்னை யரும், வண்ணுர்பண்ணை சைவப்பிரசாரகர் மாணிக்கத் கியாகராச பண்டிதரும், ஏழாலை வி. தம்பையபிள்ளை யும், கொக்குவில் வாசரும் மானிப்பாய் இந்துக்கல்லூரித் தமிழ்ப்பண்டிதருமாகிய இளையதம்பிப்பிள்ளையும் முதலா யினுேர். இவர்களுள்ளே இயற்கையான நுண்மதியோடு நூலறிவும் மிக்குப் பிரபலம் பெற்றவர் சிவானங் தையரே. (சம்ஸ்கிருத தருக்க சங்கிரகத்தை அதனுரை களாகிய கியாயபோகினி, பதகிருத்தியம், அன்னம்பட் டீயம் என்னுமிவற்முேடும், அன்னம்பட்டீயத்தின் OG) யாகிய நீலகண்டீயத்தோடும் மொழிபெயர்த்து அச் சிட்டு வெளிப்படுத்தியிருக்கின்றனர். புலியூர்ப் புராணம், புலியூரங்காகி, சனிதுதி முதலியன பாடியுமிருக்கின்ற னர்.) இச் சிவானந்தையரும், மாவிட்டபுரம் மயில்வாக னப்பிள்ளையும் தேகவியோகமடைந்தனர். பூரீமான் மாணிக்கத்தியாகராச பண்டிதர், கேட்டார்ப்பிணிக்குக் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல் வன்மையோடு இவ்வீழ காட்டிலுள்ள பற்பல ஊர்கடோ
அறும் கதாப்பிர்சங்கஞ் செய்து வருகின்றனர். வி. தம்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 143
பையபிள்ளை புராணப் பிரசங்கங்கள் புரிந்து வருகின்
றனர்.
இவரிங்கே படிப்பித்துவருங் காலத்திலே, இலங்கை நேசன் முதலிய பத்திரிகைகளில் பல அரிய விஷயங் கள் எழுகி வந்தனர். அன்றியும், பற்பல ஊர்களிலுஞ் சென்று பிரசங்கங்களுஞ் செய்து வந்தனர்.
இன்னும் அக்காலத்திலே பற்பல ஊர்களிலுமுள்ள ஆலயங்களுக்கு அவ்வவ்வாலய அதிபர்கள் விரும்பிய வாறு பதிகங்களும் ஊஞ்சல் முதலியனவும் பாடியுள் ளார். அவைகள் :- வதுளைக் கதிரேசரூஞ்சற் பதிகம், நகுலேஸ்வாரூஞ்சல், துணை வைப் பதிகம், தென்கோவை வெள்ளெருவை விகாயகரூஞ்சற் பதிகம், ஏழாலை யத்தி யடி விநாயகரூஞ்சற் பதிகம் முதலியனவாகும். மிலேச்ச மத விகற்பக் கும்மியொன்றும் இவரால் அக்காலக்கிலே பாடப்பட்டதாகும். இவரால் பாடப்பட்ட தனிக் கவி கள், சிறப்புக் கவிகள், கையறு நிலைகளும் மிகப் பல
வாகும்.
பிற்காலத்தில், சி. வை. தாமோதரம்பிள்ளை அவர் களைப்போன்று இவரும் கட்டளைக்கலித்துறை பாடுத விற் சிறந்தவராயினர். ر--
இன்னும் அக்காலத்திலே அஃதாவது கிறீஸ் தாப்தம் ஆயிரத்தெண்னூற்றுத் தொண்ணுாற்றிரண் டிலே இவருக்கு விவாகமும் நிகழ்ந்தது. இவருக்கு ஒரு புத்திரியும், இரு புத்திரருமுளர். அவருள் முதற் புதல்வரான அம்பலவாணபிள்ளை கந்தரோடை ஆங்கில வித்தியாசாலையிலே ஆசிரியராகவிருந்து ஆங் கிலம் கற்பித்து வருகிருரர். இளைய புதல்வரான முத் துக்குமாரசுவாமிப்பிள்ளை சென்னையிற் சென்று படித்து

Page 82
144 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
பீ. ஏ. பரீட்சையிற் சித்தியெய்தி, இப்பொழுது கிரு நெல்வேலியில் உள்ள துவிபாஷா பாடசாலைத் தலைமை யாசிரியராகவிருந்து படிப்பித்து வருகின்றனர்.
இவர் ஏழாலை வித்தியாசாலையில் படிப்பித்தலை ஒழித்து வீட்டிலுமிருந்து சிலகாலம் படிப்பித்தனர். அப்போது இவர் இயற்றிய நூல்கள், இலக்கண சங் திரிகை, வினைப் பகுபத விளக்கம், மேகதூதக் காரிகை முதலியனவாம். அன்றியும் அக்காலத்திலே சூடாமணி நிகண்டின் முதலாவது இரண்டாவது தொகுதிகளுக்குச் சொற்பொருளும் எழுதி யச்சிட்டு வெளிப்படுத்தியுள் ளார். நீதிநெறி விளக்கத்திற்கு ஒரு புத்துரையும் இவ
ாால் எழுதப்பட்டுள்ளது.
ஆயிரத்துத் தொளாயிரத்து இரண்டா மாண்டிலே இவர் ஆர்முகநாவல ரவர்களாலே தாபிக்கப்பட்ட வண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையிலே அவ்வித்தி யாசாலைக் கதிபராகவிருந்த பூரீமான். த. கயிலாயபிள்ளை யவர்கள் விரும்பியவாறு தலைமையாசிரியராக விருந்து கற்பித்து வந்தனர். அக்காலத்திலே தமிழிலும் ஆரியத் திலும் உயர்தர நூல்களைக் கற்பிக்கும் நோக்கத்தோடு அவ் வித்தியாசாலையின் ஒரு பாலாக அவ்வித்தியா சாலையின் அதிபரவர்களால் அரசின . ருதவியோடு காவிய பாடசாலை தொடங்கி கடத்தப்பட்டது. அப் பாடசாலைக்கு இவரே தலைமையாசிரியராக விருந்து தமிழிலக்கண இலக்கியங்களும் சம்ஸ்கிருத பாடங்களிற் சிலவும் கற்பித்து வந்தனர். அப் பாடசாலையிலே இவ ரிடம் படித்துப் பரீட்சையிற் சித்தியெய்கிய மாணவர்
கள் பெயர் வருமாறு:-
உடுவில் வ. மு. இரத்தினேஸ்வர ஐயர், அவ்வூர்
ஜெகநாதையர், க்ாரைநகர் ச. பஞ்சாட்சா ஐயர், வல்லு

ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம் 145
வெட்டித்துறை மு. சுப்பிரமணிய தேசிகர், تیر இருபாலை (LP- வேதாாணிய தேசிகர், அவ்வூர் சி. கியாகராசபிள்ளை, தாவடி மு. பொன்னையபிள்ளை, நாயன்மார்கட்டு செ. சிவ சிதம்பாப்பிள்ளை, நீர்வேலி மயில்வாகனம்பிள்ளை, தெல் லிப்பழை சி. கதிரிப்பிள்ளை, தென்கோவை வேதாரணிய தேசிகர், வேதாரணியம் கி. அருணுசல தேசிகர், சிறுப் பிட்டி த. கார்த்திகேசபிள்ஜா, நல்லூர் கா. குருமூர்த்தி ஐயர், மட்டுவில் சி. கணபதிப்பிள்ளை, மட்டக்களப்பு ஏ. பெரியதம்பிப்பிள்ளை.
இவருள். மட்டுவில் சி. கணபதிப்பிள்ளை யவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்க (பண்டித பரீட்சையில்.சித்தி யெய்தி இலக்கண இலக்கிய உணர்ச்சியில் மிகச் சிறந் தவராய். இப்பொழுது திருநெல்வேலிச் சைவ ஆசிரிய கல்லூரியில் தமிழ்த் தலைமையாசிரியராக இருந்து கல்வி கற்பித்து வருகின்றனர். 6)). (էք. இரத்தினேஸ்வர թԶlւմ ரும் இப்போது பர்மா தேசத்திலே கல்வி கற்பித்துவரு கின்றனர். காவலர் கலாசாலையிற் படிப்பித்துவருங் காலத் கிலே இவர் யாப்பருங்கலக்காரிகையுரை, தண்டியலங்கார வுரை, "அகப்பொருள் விளக்கவுரை என்பவைகளை மாணக்கர்கள்-படித்தற்கேற்றி வகையாக எழுதி அச் சிட்டு, வெளிப்படுத்தியுள்ளனர். -
நாவலர் வித்தியாசாலையில் இவர் படிப்பிக்கும் காலத் - -ال. கிலே அங்கே மேற்கூறிய அதிபரவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் தாபிக்கப்பட்டது. அச்சங்கத்தில் பிரதம வித் வானுய் விளங்கியவர் இவரே.
இச்சங்கங் தாபித்தபின் றுரீமான் காண்டித்துரைத்
தேவர். அவர்களால் மதுரையிலே ஒரு சங்கந் தாபிக்
கப்பட்டது. அச் சங்கத்திற்கு ஒாங்கத்தவராகும்படி
தேவர்வர்கள் இவருக்கு ஒரு கடிதம் எழுதி வேண்டி
9

Page 83
146 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
னர். அவ்வேண்டுகோட்குத் தாமுடன்பட்டுத்தம துடன் பாட்டைக் குறித்துக் தேவர் அவர்களுக்கு இவர் ஒரு கடிதம் எழுகினர். அக்கடிதம் நோக்கிய தேவர்அவர் கள் மகிழ்ந்து இவரைத் தமது சங்கத்தில் அங்கத்தவரா கச் சேர்த்ததுமன்றி, இவர் உடன்பட்டமைக்காக ஒரு வந்தனக் கடிதமும் எழுதினர். அக்கடிதம் வருமாறு :-
மதுரைத் தமிழ்ச்சங்கம்
29-1-02
8ut l
தாங்கள் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் கல்வியல்
கத்தினருள் ஒருவராய் அமர்ந்து செந்தமிழ்ப்பாஷாபி
விருத்திக்கு வேண்டுவனவற்றைப் புரிதற்கு மன
முவந்து வரவிடுத்துக்கொண்ட சம்மதப் பத்திரிகை
யைக் கண்ணுற்றுப் பெருமகிழ்ச்சியடைந்தேன்.
இவ்வாறு அன்புகூர்ந்து மனமுவந்து வாக்குதவிய சங்கட்கு அநேக வந்தனம் அளிக்கின்றேன்.
இங்ங்ணம்
பாண்டித்துரை.
அதன்பின் தேவரவர்க்ள் சங்கத்தால் நடாத்தப் பெறும் செந்தமிழ்ப் பத்திரிகைக்கு விஷயதானம் புரியு மாறும் ஒரு கடிதம் எழுதி வேண்டினர். இவரும் அதற் குடன்பட்டு அவர் வேண்டிய நாட்டொட்டு அருமை யும் பெருமையுமமைந்த விஷயங்கள் பல எழுதி வந்த னர். தேவரவர்கள் கடிதம் வருமாறு:-
மதுரைத் தமிழ்ச்சங்கம்
ஐயா !
கம் சங்கத்தினின்றும் செந்தமிழ்" எனப் பெயரிய ஒரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை வெளிப் படுத்தலாகுமென முன்னரே யறிவித்துள்ளபடி வெளியிடற்கு அப்பத்திரிகைக்குத் தீங்கள் அருமை

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 147
யிற் கற்ற கல்வியாஞய விஷய சாதனங்கள் இன்றி யமையாச் சிறப்புடையவாதலின் தங்கள் நுண் ணறிவிற்கெட்டிய அரும்பெரும் விஷயங்கள் யாவும் ாம் செந்தமிழ்ப் பத்திரிகை தன்னிடங்கொண்டு இத்தமிழுலகிற்கு மிக்க நன்மை புரியுமாறு செய் விக்கத் தங்களை வணங்கிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
இங்ங்ணம் பாண்டித்துரை அக்கிராசனுதிபதி
இவர் செந்தமிழ்ப் பத்திரிகைக்கு எழுதிய விஷ யங்கள் யாவும் அருமையும் பெருமையுமாயவை என் பதை அப்பக்கிரிகைக்கு உதவியாசிரியராயிருந்த வித்து வான் பூரீமான் மு. இராகவ ஐயங்காரவர்கள் எழுதிய மதிப்புரைக் கடிதமொன்ருலு மறியலாம். அதனைபு மிங்கே தருதும் :-
மதுரைத் தமிழ்ச்சங்கம் 8 - 1 - 05 பூரீமத் பிள்ளையவர்கட்குப் பிரிய விஞ்ஞாபனம்,
தங்கட்கு யாங்கள் நெடுநாளாகக் கடிதம் எழு தாக பிழையைப் பொறுப்பீர்களாக. தாங்கள் நம் செந்தமிழுக்கு எழுதிவரும் அரிய விஷயங்கள் தமி ழகம் முழுவதும் படித்துப் பாராட்டத்தக்கனவாக ஒளிர்கின்றன. நம் செந்தமிழ்ப் பெருமையை வளர்த் தற்கண் தாங்கள் கொண்டுள்ள முயற்சியளவு வேறெவருங் கொண்டிலர் என்பது இந்நாட்டின் பொது அபிப்பிராயம். யான் தேவரவர்களுடன் சென்னை சென்றிருந்தபோது மகாவிச்வான் பூரீமச் வே. சாமிநாதையாவர்கள் தங்களையும் என்னருமை மைத்துனர் பூரீமத் ரா. இராகவையங்காாவர்களை யும் இரண்டு தமிழ் இரத்தினமென்று பாராட்டித்

Page 84
148 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
தேவாவர்கள் திருமுன்பு புகழ்ந்தது உண்மையில் அதிசயோக்தியன்று. யான் தங்களுடன் கடித மூலம் மிகுதியும் பழகாதவனுபினும் தங்கள். அருமைப்பாடு கிள்ை. நன்கு உணருமாற்றல் உடையேனுதலாலும் செந்தமிழ்ப் பத்திரிகையோடு சம்பந்தமுடையே தை லாலும் இக்கடிதத்தை வலியத் தங்கட்கு எழுதத் துணிந்தேன்.
எங்களோடு கொண்ட நட்புரிமை என்றும் பெருகிவாத் திருவருளைச் சிந்திக்கிறேன்.
இங்ஙனம் ܫ ழ. இராகவையங்கார் செந்தமிழ் உதவிப் பத்திராசிரியர்
எமது புலவர் அடுத்த வருடம் (1910-ம் ஆண்டில்) மதுரைத் தமிழ்ச்சங்கத்தை கோக்கும்படியும் ஆலயதரிச னஞ் செய்யும்பொருட்டும் இந்தியாவுக்குப் பிரயாண்மாயி னர். அப்போது இவருடன்சென்றவர் பண்டிதர் சோமாஸ் கந்தபிள்ளையும், பூரீநிவாசக் குருக்களும், இவர் நண்பர் சுன்னகம் வயித்தியநாதப்பிள்ளையுமாவர். இவர்களோடு பிரயாணமாகி இராமேசுவரம் சென்று அங்கு முறைப்படி தீர்க்கமாடிப் பின், சேதுபந்தன தீர்த்தமாடிப் பின் லும் இராமேசுவாஞ் சென்று இராமங்ாத தரிசனஞ் செய்து, அன்றிரவு அங்கு வசித்து மறுநாள் தமது வருகையைப் பாண்டித்துரைத்தேவர் அவர்களுக்குத் தங்கி மார்க்கமாகத் தெரிவித்து, அவர் வசிக்கும் இராம நாதபுரம் போயினர். அப்போது தேவாவர்களனுமதிப் படி வித்துவான் பூரீமத் கோபாலையரவர்கள் புகையிரத ஸ்தானத்தில் வந்துகின்று இவரை அழைத்துக்கொண்டு சென்று தேவரவர்களுடைய மாளிகையின் பக்கலிலுள்ள ஒரு மாளிகையில் வசிக்கச்செய்து, வேண்டிய உபசரணை களுஞ் செய்தனர். இவரங்கே வசித்து மறுநாள் மதுரை

ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம் 149
சென்றனர். தேவாவர்கள் மதுரைப் புகையிரத ஸ்தா னத்தில் வந்துநின்று தமது வண்டியிலேற்றிக்கொண்டு சென்று தாமிருந்த மாளிகையில் வசிக்கச்செய்து உப். சரித்தார்கள். மறுநாள் பூரீமத் சுப்பிரமணியக் கவிராயர், பூரீமத் அருணசலக் கவிராயர், பூரீமத் நாராயண ஐயங் கார், பூரீமத் ரா. இராகவையங்கார் முதலிய வித்துவான் களையும். அங்கே வரவழைத்து, அவர்களும் தாமுமாக வித்தியாவிடயங்களைக் குறித்து இவரோடும் சம்பாஷித் தனர். பின் தேவாவர்கள் சங்க மண்டபத்துக்கு அழைத் துக்கொண்டுபோய் அங்குள்ள கலாசாலை, புத்தகசாலை, அச்சியந்திரசாலை முதலியவற்றையெல்லாம் காண்பிக் துக்கொண்டு, மீளவும் தம் மாளிகைக்கு அழைத்துவந்து இரவு அங்கே தங்கும்படி செய்தனர். மறுநாளும் இவர் சங்கஞ் சென்று, அங்குள்ள வித்துவான்கள்ோடு சம் பாஷித்துக்கொண்டு இரவு தேவர் மாளிகையிலே தங்கி, மற்றை5ாள் தேவர் விடையோடு அங்குகின்றும் புறப்பட்டுக் கும்பகோணஞ் சென்றனர். சென்று சுவாமி தரிசனஞ் செய்து பின் திருவாவடுதுறை யாதீனத்துக் தம்பிரானகிய பூரீ லறுரீ அம்பலவான தேசிகரைக் காணும்படி அங்குப் போயினர். அப்போது தேசிகர் திருவிடைமருதூரில் இருக்கின்றர்களெனக் கேட்டு அங் குச் சென்றனர். சென்று தேசிகரைக் கண்டு 'அவரால் உபசரிக்கப்பட்டு அன்று அங்கே தங்கினர். கங்கிய பொழுது தேசிகர் இவரை இலக்கண இலக்கியங் களிலும், தருக்க சாஸ்திரங்களிலும் பல வினுக்கள் வினவினர். அவ் வினுக்களுக்கெல்லாம் இவர் தக்கவாறு விடையளித்தனர். அப்பொழுது தேசிகர் இவரது புத் தியின் கூர்மையை வியந்து * யாவற்றையும் கிரமமாகப் படித்கிருக்கிறீர்கள்” எனப் பாராட்டி, ஒருநாள் முழுவ தும் இவரோடு அளவளாவி உயர்ந்த பட்டுச் சோமன் சோடியும் பரிசாக வழங்கினர்கள்.

Page 85
150 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
வடதேய யாத்திரையால் யாழ்ப்பாணம் வந்தபின்பு, 5ட வா மடி சி முதலாக கன்னூலார் வகுத்துக் கூறிய இருபத்துமூன்றீற்றினுள்ளும் அடங்கிய வினைப் பகு பதங்களுக்கும் அவ்வவற்றினடியாகப் பிறந்த பெயர்ப் பகுபதங்களுக்கும் பகுதி விகுதி முதலிய உறுப்புக் களைப் பகுத்துக்காட்டி ஒருநூல் இயற்றி, அதனை வினைப் பகுபத விளக்கமென்னும் பெயரோடு அச்சிட்டு வெளிப்படுத்தினர். இதுவும் வடமொழி தென்மொழி யென்னு மிருமொழி யுணர்ச்சியோடு நுண்மானுழை புலமுமுடையோர்களாலன்றி ஏனையோர்களால் இயற்றற் கரியது. இதன் சிறப்பு மஹாமஹோபாத்தியாய உ. வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிய கடிதத்தானும், தற் போது செந்தமிழ்ப் பத்திராகிபராகவிருக்கும் வித்துவ மணி கிரு. நாராயண ஐயங்காரவர்கள் எழுகிய மதிப் புரையானு மறியலாம். அவற்றுள் மஹாமஹோபாக்கி யாய உ. வே. சாமிநாதையாவர்கள் கடிதம் வருமாறு:-
நீங்கள் போன்புடன் அனுப்பிய வினைப் பகுபத விளக்கம் என்னும் புத்தகம் வாப்பெற்று மிக மகிழ்ச்சியடைந்தேன். மேற்படி புத்தகம் உருவத் தாற் சிறியதாய் இருந்தாலும், பொருளமைப்பில் மிகப் பெரியதாயிருக்கின்றது. எத்தனை வருடம் கடினமாக உழைத்துத் தொகுத்தீர்களோ தெரிய வில்லை, தங்களுடைய வேலைகளுள் எதுதான் சாதா ாணமானது.
இந்நூல் இயற்றிய ஆண்டிலே சென்னையரசாட்சி யார் வித்துவான்களைக்கூட்டி ஒரு தமிழகராதி யெழுது விக்க விரும்பி, அக்கருத்தை அரசாங்க உத்தியோகத் தர்களுக்குத் தெரிவித்தார்கள். அவ்வுத்தியோகத்தர்கள் * சான்ட்லர்’ என்பவரை அக்கிராசனராகக் கொண்டு
1931-ம் ஆண்டிலே அதாவது பிரமாதீச வருஷத்தில்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 151
ஒரு சபை கூட்டினர்கள். கூட்டப்பட்ட அச்சபையார் அவ்வகராதியை எழுதுவிக்கமுன் அவ்வகராதி எப்படி எழுதப்படவேண்டு மென்பதைப்பற்றித் தத்தம் அபிப் பிராயத்தைத் தெரிவிக்குமாறு பற்பல வூர்களிலுமிருக் கும் தக்க வித்துவான்களிடம் கடிதமூலமாகக் கேட் டார்கள். கேட்கப்பட்டவர்களில் இவருமொருவர். இவர் தம் நண்பரான பூரீமத் கைலாயபிள்ளை, பூரீமத் முத் துத்தம்பிப்பிள்ளை என்னுமிருவரோடும் ஆலோசித்து, ஆறுமுகநாவலர் கலாசாலையில் ஒரு சபை கூட்டினர். கூட்டிய அச்சபையார் கருத்தின்படி இவ்விதம் எழுதப் படவேண்டுமென்று ஒரு நிருபம் அச் சென்னைச் சபை யாருக்கு இவர் எழுதினர். எழுகிய நிருபத்தைக் கண்ட அச் சபைத் தலைவராகிய சான்ட்லர்’ அவர்கள் அடுத்த வருடம் தைமாதம் யாழ்ப்பாணம் வந்து இவரையழைத்து அகராதி எழுதுதற்கு வேண்டிய விஷயங்களைப்பற்றிப் பேசினர். இரண்டுவாரம் வரையில் இருந்து வேண்டிய வற்றை இவரோடு கலந்து பேசிக்கொண்டு இவரைச் சென்னைப்பட்டினம் வந்து எழுதுவோரி லொருவராக விருக்குமாறு கேட்டனர். இவர் தேகாரோக்கியமின்மை முதலியவற்றைக் கருதி அதற்குடன்படவில்லை. பின், *சான்ட்லாவர்கள் இவர் அச்சிடும் நோக்கமாக எழுதி வைத்திருந்த ஒாகராதிப் பிரதியை ஒருதொகைப் பணங் கொடுத்துப் பெற்றுச் சென்றனர்.
இவர் பின் வடமொழியிலுள்ள சாணக்கிய சத கத்தை மொழிபெயர்த்து வெண்பாவாற் பாடி * சாணக் கிய நீதிவெண்பா’ வெனப் பெயரிட்டு அச்சிட்டனர். அவ்வெண்பாக்கள் பழைய வெண்பாக்கள்போல மிகச் சுவையும் இசையும் அமைந்துள்ளனவாகும். இது அச் சிட்ட காலம் 1914. இதன்பின் இவர் சங்க இலக்கி யங்களிலும், சங்கமருவிய இலக்கியங்களிலும், பிற்றைக்

Page 86
152 ஈழந்ாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சான்றேர் இலக்கியங்களிலுமுள்ள அருஞ் சொற்களை யெல்லாம் ஆராய்ந்து தொகுத்து ஓர் அகராகியெழுகி, அதற்கு இலக்கியச் சொல்லகராதி யெனப் பெயர் தந்து அதனை ஒரு நூலாக அச்சிட்டனர். இது அச்சிட்ட காலமும் முன்னைய ஆண்.ே
இதன்பின் இவர் அச்சிட்ட நூல் தமிழ்ப்புலவர் சரிதம்; இது தமிழிற் புலமையடைந்த புலவர்களுடைய சரிதங் கூறுவது. இதில் ஏறக்குறைய நானூறு புலவர் களின் சரிதங்கள் அடங்கியுள்ளன. சரிதம் மிகச் சுருக் கிக் காட்டப்பட்டிருப்பினும், எழுதப்பட்ட வாக்கிய நடையோ முரண் முதலிய தொடைநயமும், சுருங்கச் சொல்லல் முதலிய அழகுமமைந்து தஞ்சுவையை மிகப் பெருக்கிக் காட்டுகின்றன. புலவர்களுடைய ஊரும். பேரும் குலமும் செயலும் முதலியனவன்றிக் காலமும் தெரிந்தவரையில் உணர்த்தப்பட்டுள்ளது. சிற்சில புல வர்கள் பாடிய அருஞ் செய்யுள்களும் காட்டப்பட்டுள் ளன. கடினமான சில செய்யுட்களுக்கு உரையும். எழு கப்பட்டுள்ளது. இந்நூற்கு ஒரு முகவுரையும் மிக விசேடமாக எழுதப்பட்டுள்ளது. அம் முகவுரையை வியந்து பூரீமத் சா. இராகவையங்கார் அவர்களும், பூரீமத் திரு. நாராயணையங்காரவர்களும் கடிதமெழுதியுள்ளார் கள், இது அச்சிட்ட காலம் 1916. -
இப்புலவர் சரிதம் மகாராஜ சமுக பூஜித மகத் gló) . பூரீயுக்த ராஜராசேசுவர் சேதுபதியவர்களின் செந்தமிழ்ப் பரிபாலன விருப்பம் நோக்கி யமைக்கப் பட்டது. இந்நூலை யச்சிடுதற்குச் சேதுபதியவர்களும் ஒரு தொகைப் பொருளுதவினர்கள். -
இதன்பின், இவரும் தி. த. கனகசுந்தரம்பிள்ளையு மாக ஆராய்ந்த் பதிப்பித்தது இராமாவதாரத்துப் பால

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 153
காண்டம். முன்னுள்ள அச்சுப்பிரதிகளையும், பல ஏட்டுப் பிரதிகளையும் வைத்து ஒப்புநோக்கி நன்கு ஆராய்ந்து அவற்றுள் உண்மையான பாடம் இதுவெனக் கண்டு கிருத்தப்பட்ட செய்யுட்களை உடைத்தாகலின், இது முன்னுள்ள அச்சுப்பிரதிகளினும் எத் துணையோ மடங்கு சிறந்தது. இதற்கு ஒர் அரும்பதவுரையும் செவ்விதாக எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் கருத்துக்குச் சிறிதும் இயையாத முன்னுரைகளையெல்லாம் விடுத்துப் பெரும் பாலும் அவர் கருத்தோடு பொருந்த எழுதப்பட்டுள்ள தாகலின் இவ்வுரையும் முன்னுரைகளினும் மிகச் சிறக் தது. இது அச்சிடப்பட்ட காலம் கி. பி. 1918-ம் ஆண்டு.
பின் வடமொழியிலுள்ள மாகமெனப்படும் சிசுபால வத மென்னும் நூலை அந்நூலிலுள்ளபடி வருணனைகளும் நடையும் சுவையுமமையத் தமிழில் மொழிபெயர்த்துக் கத்தியரூபமாக எழுகியச்சிட்டனர். எழுதும்போது வட மொழியிலுள்ள மகாபாரதம், பாகவதம் என்னும் நூல் களிற் சொல்லப்படும் சிசுபாலனென்பவனது கதையை யுங் தழுவி எழுதினர். தமிழிலே உரைநடையில் இது போலும் மொழிபெயர்ப்பு நூல் செய்தவர் இதுவரை யும் இல்லையெனலாம். இது அச்சிடப்பட்ட காலம் 1921.
பின் வடமொழியிலுள்ள இராமோதந்தமென்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடி மதுரைத் தமிழ்ச் சங்கத்தாருக்கு அச்சிடும்படி உதவினர். மாணுக் கர் படித்தற்பொருட் டியற்றியதாதலின் இதிலுள்ள செய்யுட்கள் யாவும் கடினபதம் நீக்கி யியற்றப்பட்டன. ஆயினும் பொருளாழமுஞ் சுவையுமமைந்துள்ளன. இது அச்சிடப்பட்ட காலம் 1922-ம் ஆண்டு.
அதன்பின் இரகுவம்ச காவியத்தைக் கத்தியரூப மாகத் தமிழில் மொழிபெயர்த் தெழுதிவந்தனர். எழுதி
20 -

Page 87
154 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
வந்த இந்நூல் பூரணமாகமுன் முன்பற்றிய வாதநோய் குறைந்து வயிற்றுளைவு நோய் உண்டாயிற்று. உண் டாய அந்நோயின் முதிர்வினலே இவர் கிறீஸ்தாப்தம் 1922-க்குச் சமமான துர்மதி வருடம் மாசிமாதம் 25-க் திகதி புதன்கிழமை புத்திரரும் மித்திரருமேங்கக், கற் முேரும் மற்முேருமிாங்கத் தேகவியோகமடைந்தனர்.
இவர் தேகவியோகமடைந்த காலத்தைக் குறித்து யாம் பாடிய வெண்பாவையு மிங்கே தருதும்.
* ஆண்டுகிகழ் துன்மதியி லாயகும்ப நன்மதியிற்
பூண்டவிரு பானைக்கிற் புர்தியினி-னிண்டகலை கூர்தசமி சன்னைக் குமாரசுவா மிப்புலவப் பேர்மணிசென் மேற்கதிநாட் பேறு. '
இந்நூல்களன்றி, இன்னுஞ் சில நூல்கள் இவராற் றிருத்தப்பட்டும், உரையெழுதப்பட்டும் நூதனமாக இயற்றப்பட்டுமுள்ளன. திருத்தப்பட்டன உரிச்சொ னிகண்டு, பழமொழி விளக்கமென்பன. உரையெழுதப் பட்ட நூல் கலைசைச்சிலேடைவெண்பா என்பது. இவ் வுரையே இதற்கு முதலுரை. இயற்றப்பட்டன, அத்கி யடி விநாயகரூஞ்சல் முதலியன. விரிவஞ்சி இவை முத
லிய விரிக்கப்படாது விடப்பட்டன.
இன்னுந் தன் மாணக்கராகிய பிாமறுரீ ஆ. சண் முகரத்தினசர்மா என்பவர் கடாத்திய ஞானப்பிரகாச மென்னும் பத்திரிகைக்கு இவரளித்த சிறப்புக்கவியொன் றையும் இங்கே காட்டுதும் :-
* பற்றுள செந்தமிழ் வாக்கியங் காட்டும் பகைநொது மல்
அற்றுயர் நூதன சம்பவங் காட்டு மருங்க விக்குஞ் - சிற்றுரை காட்டும் பொழிப்புரை காட்டுஞ் சிறந்தபொருள்
分》
உற்றுள ஞானப் பிரகாச மென்னு மொளிவட்டமே.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 155 இனி, இவர் புலமை கலங்களுட் சில கூறுதும் :-
இவர் சொற்களை வரையறுத்துப் பிழையின்றி யெழுதுவதிலும், அவற்றிற்குப் பொருள் கூறுவதிலும் மிக வல்லுநர். இலக்கியங்கoரின் மூலபாடங்களைப் பல முறை நோக்கி அவற்றின் பொருளை நுண்ணிகிற் கண்டு உரை கூறுவதிலும் வல்லுநர். எட்டுப்பிரதிகளாயுள்ள பழைய நூலுரைகளை நோக்கிப் பிழையற அச்சிற் பதிப்பித்தலிலும் வல்லுநர். பிறர் அச்சிற் பதிப்பித்த நூலுரைகளை நோக்கி யவற்றிலுள்ள பிழைகளை நுண் ணிதிற் கண்டு வெளிப்படுத்தவும் வல்லுநர். சொற் சுருங்கன் முதலிய அழகுபெற வாக்கியங்களைக் கொடுக் கவும் வல்லுநர். பழைய பாக்கள்போல வெண்பா முத லிய பாக்கள் இயற்றவும் வல்லுநர். இவருடைய இவ் வன்மைகளை நோக்கித் தாம் செய்த நூல்களைத் கிருத்து வித்தாரும் பிழை கூறுவாரோ என்னுமச்சத்தால் சிறப் புப்பாயிரம் பெற்ருரும் பலரென்முல் இவர் வன்மை யைக் குறித்து யாம் சொல்வதென்னே ?
இனி, இவர் குண நலங்களுள்ளும் சில கூறுதும் :-
இவர் மாணுக்கர்களுக்குத் தாம் அறிந்த நுண் பொருள்களையெல்லாம் வஞ்சியாது உணர்த்துபவர். பணத்தை விரும்பி மாணக்கர்களைக் கற்பியாதவர். தமது புத்தகங்களைக் கொடுத்தும் மானுக்கர்களைக் கற்பிக்கும் தருமசிலர். தமிழ்க்கல்வி கற்கும்படி இளைஞரை ஏவு பவர். கற்றவரிடத்தில் மிக அன்புடையவர். அவரைப் பெரிதும் உபசரிப்பவர். கற்றவரோடு பேசும் விருப் புடையவர். மற்றவரோடும் வினுேதமாகப் பேசும் விருப்ப முடையவர். ஏனைய புலவரைப்போலப் பிறரைக்கொண்டு தம்மை மகிப்பிக்க விரும்பாதவர். உடைகடைகளாற்
பிறர் தம்மை மதிக்கவேண்டுமென்று எண்ணுதவர். தம்

Page 88
156 ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
மைப் புலவரென்று தாமியற்றிய நூல்களில் தாமே எழுதாதவர். தமக்கு அவமானமென்று கருதாது தமக் குப் புலப்படாதவற்றைக் கற்றவர்பால் வின வியறியும் பெருங்குணம் பூண்டவர். தெரியாதென்று சொல்லு தல் அவமானமென்று கருதாது தெரியாதவற்றைக் தெரியாது என்றே சொல்லுபவர். நூலுரைகளில் வரும் பிழைகளையும் ஒப்புக்கொள்பவர்.
இவர்காலத்தில் இலங்கையரசாட்சியார் இலங்கையி லுள்ள தமிழ் வித்துவான்களுட் சிறந்தவராயுள்ளவர் கள் ஐவர்க்குத் தனித்தனி இருநூற்றைம்பது ரூபா கொடுத்துச் சன்மானிப்பதாகத் தீர்மானித்தனர். அப் பொழுது யாழ்ப்பாணத்திலுள்ள செந்தமிழ்ப் பரிபாலன சபையார் நாவலர் கலாசாலையில் ஒரு சங்கங் கூட்டி அரசாட்சியாருடைய சன்மானப் பணத்தைப் பெறுதற் குத் தகுந்த தமிழ்ப்புலவர் இவரேயென்று தீர்மா னித்து அதனை அரசாட்சியாருக்கு அறிவித்தார்கள். அரசாட்சியாரும் அப்பணத்தைக் கொடுத்து இவரைச் சன்மானித்தார்கள். இவர் சன்மானிக்கத் தகுந்தவர் என் பதை இவரியற்றிய நூல்களே கூறுமாதலின் யாம் கூறல் மிகையாகும்.
ஊர்காவற்றுறைக் கோட்டு நீதிபதியும் திரிபாஷா விற்பன்னரும் குணக்குன்றுமாக விளங்கிய கல்லூர் கு. கதிரைவேற்பிள்ளையவர்களால் மிகப் பெரிய தமி ழகராதி தொகுக்கப்பட்ட காலத்தில் இன்றியமையாத் துணைவராய் விளங்கியவர் இவரே. இவரது சொந் பொருளுணர்ச்சி வன்மைக்கு இவ்வகராதியும் தக்க சானருகும.
இவர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராய் அமர்ந்து
முறையாகக் கற்பித்தகாலத்துப் படித்தவமேயன்றி, இவர்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 157
இல்லத்தும் வழிதெருக்களிலும் இவர்பால் தொடர்ந்து சிலபல நூல்களைக் கற்றேரும் ஐயங்களை வினவித் தெளிந்தோரும் பலராவர். இவ்வாறு இவரிடம் கற் ருே?ர் வண்ணைச் சண்முகரத்தின சர்மா, தென்கோவை ச. கங்தையபிள்ளை, இளவாலைச் சங்காப்பிள்ளை, கோண் டாவில் இளையதம்பிப்பிள்ளை, கந்தரோடை அ. கங்தைய பிள்ளை, சுதுமலை 5ாகலிங்கப்பிள்ளை முதலியோர். யாமும் இவர் இல்லத்துஞ் சென்று சில நூல்களில் ஐயங்களை வினவித் தெரிந்ததுண்டு. தாம் நூல்கள் எழுதுவதில் கவனம் செலுத்தி இருக்கும் கோத்திலும் தம்மிடம் இடையிடையே பல நூல்களில் ஐயங்களைக் கேட்பவர் களுக்கு இயன்றவரை விடைகூறி அவரைத் திருப்தி செய்வதும் இவர் இயல்பு.
சங்கரபண்டிதர், ஆறுமுகநாவலர், தென்கோவை அம்பலவாணபண்டிதர் என்பவரிடத்தும் இவர் சில நூல் களின் ஐயங்களை வினவித் தெளிந்துள்ளனர் என்பர்.
சபாரத்தினமுதலியார்
இவர் கொக்குவிலிலே சைவாசாரம் வாய்ந்த வேளாண் குலத்திலே முல்லைத்தீவுக் கச்சேரியில் லிகித உத்தயோகத்தமர்ந்திருந்த சபாபதிப்பிள்ளை என்பவருக் குப் புதல்வராகக் கிறீஸ்தாப்தம் கஅடுஅ-க்குச் சம மான காலபுத்தி வருடம் சிக்கிரைமாதம் B-ம் திகதி புதன்கிழமை பிறந்தார். பிறந்து வித்தியாரம்பஞ்செய்து சுயம்புநாதபிள்ளை என்பவரிடம் தமிழ் பயின்று பின், இக்காலத்திலே மத்திய கல்லூரி என வழங்கப்படும் (அப்போதைய) கொக் பாடசாலையிலே ஆங்கிலங் கற்று வந்தார். வண்ணுர்பண்ணையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையிலே ஆறுமுகநாவலரிடம், த. கைலாச

Page 89
158 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
பிள்ளையுடன் இவரும் ஒருங்கு கற்றனர் என்ப. காவலரிடங் கற்றதனுற்போலும் இளமையிலே சமயப்பற்றும் சமயாபி மானமும் இவருக்கு உண்டாயிற்று. அதனல் இவருஞ் சமயவிருத்தியின்பொருட்டுத் தமது ககூ-ம் வயசிலேயே உழைக்கத்தலைப்பட்டனர். தலைப்பட்டு * உதயபானு'ப் பத் திரிகையிலே நிரீச்சுர வாதத்தை மறுத்துப் பல கண் டனங்களெழுகியுள்ளார். சைவசித்தாந்த நூல்களும் கனகு கறறவா.
இவர், கஅஎஅ-ம் ஆண்டிலே யாழ்ப்பாணக் கச் சேரியில் விகித உத்தியோகம் பெற்று, சிலவாண்டு நடத்தியபின் முல்லைத்தீவு, கொழும்பு, கண்டி, காலி முதலிய இடங்களுக்குச் சென்று, ஆங்காங்குள்ள கச் சேரிகளில் அவ்வுத்தியோகத்தை கடத்தியபின், யாழ்ப் பாணக் கச்சேரியில் முதலியாருத்தியோகத் தமர்ந்தார். அமர்ந்து தமது கடமையைச் செவ்விதாகச் செய்து வ5தாா.
ககoடு-ம் ஆண்டிலே முதலியார்ப் பட்டமு மிவ ருக்கு அளிக்கப்பட்டது. பின் கசுகன-ல் சமாதான நீகி பதியாயிருந்து கசக்கக-ல் இராசவாசல் முதலியாரென் னும் பட்டமும் பெற்று, ககூஉக-ல் தமது உத்தியோக கடமையினின்றும் நீங்கி ஆறுதலுற்றர்.
இவர் உத்தியோகத்தமர்ந்த காலத்திலும், ஒழிக் கிருந்த காலத்திலுமாகச் சமயச்சார்பாக இந்துசாதனம்’ என்னும் பத்திரிகையில் பல அரிய விடயங்களெழுதி யுள்ளார்.
இங்கு மிந்தியாவிலுமாகப் பலமுறை சித்தாந்தசபை களில் அக்கிராசனத்தமர்ந்தவர். தாமும் அக்காலத்துச் சைவசமய மாண்புகளை விளக்கிப் பற்பல பிரசங்கங்கள் செய்தவர். சீவான்ம பேகம், ஈச்சுர நிச்சயம், பிரபஞ்ச
விசாாம் என்னுஞ் சமய நூல்களை எழுதி வெளிப்படுத்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 159
தினவர். தமிழ் நூல்களிற் சிலவற்றை ஆங்கிலத்தும் மொழிபெயர்த்தவர். காசி முதலிய தலங்களுக்கு யாத் திரை செய்தவர். 5ற்குணமும் நல்லொழுக்கமுமமைந்த வர். சிவபெருமான்மேலும், விநாயகப்பெருமான்மேலும் கந்தசுவாமிமேலும் பற்பல கவிகளுமியற்றியவர். கவிகள் அச்சிடப்படவில்லை.
இத்தகைய இவர் ககஉஉ-ம் ஆண்டுக்குச் சமமான துந்துபி வருடம் ஐப்பசிமாதம் கூO-ம் திகதியிற் தேக
வியோகமடைந்தார்.
இவருடைய ஏகபுத்திர ராகிய 15வரத்தினம்பிள்ளை என்பவர் யாழ்ப்பாணக் கச்சேரியில் உத்தியோகத்தமர்ந்து செவ்விதாக வாழ்கின்றனர். இவரின் மூத்த மகளான பாஞான அம்மையார் மட்டுவில் உரையாசிரியர் வேற் பிள்ளையின் புதல்வரும் பிறக்ரருமாகிய மாணிக்கவாசக ரால் விவாகஞ் செய்யப்பெற்று நல்வாழ்வுடன் இருக் கின்றனர்.
தி. த. கனகசுந்தரம்பிள்ளை
இவர் கிரிகோணமலையிலே வேளாளர் குலத்திலே சாலிவாகன சகாப்தம் கனகB-க்குங் கிறீஸ்தாப்தம் கஅசுக-க்குஞ் சமமான ருகிரோற்காரி வருடம் ஆவணி மாதம் உச-ந் தேதி தம்பிமுத்து என்பவருக்குப் புதல் வராகப் பிறந்தார். பிறந்து ஐந்துவயதானவுடன் வித்கி யாரம்பஞ் செய்யப்பெற்றுக் கதிரைவேற்பிள்ளையிடமும், கணேசபண்டித ரென்பவரிடமும் தமிழிலக்கணவிலக் கியமு மாங்கிலமுங் கற்றுவந்தார். பதினன்காம் வய தளவில் திருவாதவூரடிகள் புராணம், மறைசையந்தாதி என்பவற்றிற்குப் பொருள் சொல்லு மாற்றலுடையாா யிருந்தார். பின் கஅஅO-ம் ஆண்டிற் சென்னப்பட்டினஞ் சென்று, முதலிற் செல்வநாயக்கர் பாடசாலையிற் கல்வி

Page 90
160 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கற்று மத்திய பாடசாலைப் பரீட்சையிற் சித்தி எய்தி னர். பின் பச்சையப்பன் காலேஜில் எவ். ஏ. வகுப் பிலும், பிறசிடென்சிக் காலேஜில் பி. ஏ. வகுப்பிலுஞ் சித்தியெய்தியமையோடு பீ. ஏ. வகுப்பில் தத்துவ சாத் திரத்திலும், தமிழிலும் விசேட சித்தியடைந்தமை காரணமாக மிகச்சிறந்த பரிசுகளும் பெற்றனர். அதன் பின் இவர் அரசாட்சியாரது வித்தியாவிருத்தி நிலையத் தில் உத்தியோகம் பெற்று, அதனை மிக்க திறமை யோடு முறைவழாது நடத்தினர். சிலகாலஞ் சென்ற பின், இராசாங்க லேகக நிலையத்தி லுத்தியோக மாற் றம் பெற்று அந்நிலையத்திற்முனே வித்தியாவிருத்தி சம் பந்தமான காரியங்களுக்கு அத்தியட்சருமாயினர்.
இவர், தெல்லிப்பழை வாசரும் கிராமக்கோட்டு நீகி பகியுமாயிருந்த சிதம்பரநாத முதலியார் புதல்வி சுந்தாம் என்னும் பெண்மணியை விவாகஞ்செய்து, அறநெறி வழா தில்லறத்திலொழுகினர். இவருக்கு நான்கு புதல் வர்களும் ஒரு புதல்வியும் பிறந்தபின், மனைவியார் தமது உஅ-ம் வயதிலே தேகவியோகமாயினர். இவர் தமது மனைவியாரிறந்தபின், மறுமணஞ் செய்யாது பிள்ளைக ளிடத்திலேயே அன்புமிக்குக் கண்ணுங்கருத்துமாக அவர்களை வளர்த்தும், கல்வி கற்பித்தும் நன்னிலையில் வைக்க முயன்றுவந்தனர். இவர் புதல்வர் நால்வரும் பீ. ஏ. வகுப்பிற் சித்தி பெற்றுள்ளனர். அவர்களுள் இராராசன் என்பவர் சங்கீதத்திலும் வல்லராய்ப் பலர்க்கு மாசிரியராகி விளங்குகின்றனர். இராசசேகரன் என்ப வர் எம். ஏ. பட்டதாரியாய்ச் சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் ஆசிரியராயமர்ந்துள்ளனர். இராசேசுவரன் என்பவர் சென்னை நகரசங்கத்தில் இன்ஸ்பெக்றராயிருக் கின்றனர். இராசமார்த்தாண்டன் என்பவர் அரசினர் லெக்சிக்கன் ஆபீசில் லேககராக இருக்கின்றனர்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 161
இவர் தமது உத்தியோகக் கடமைகளைச் செய்யுங் காலமொழிய, மற்றைய காலங்களிலெல்லாம் பழந்தமிழ் நூல்களையும், வடமொழிநூல்களையும் ஆராய்தலையே பெருங்கடனுகக்கொண்டு காலங்கழித் துழைத்துவங் தனர். சென்னையிலிருந்த வித்துவான் இராசகோபால பிள்ளையின் உதவிகொண்டு, கம்பராமாயணத்திற் சில பாகங்களையும் வேறு சில நூல்களையும் நுண்ணிதாக
ஆராய்ந்துகொண்டனர். ஏனைய நூல்களையுங் தாமாகவே கற்றுணர்ந்தனர். தொல்காப்பியத்தையுஞ் சங்கஇலக்கி
யங்களைபு மேட்டுப்பிரதிகள் பலவற்றேடு ஒப்புநோக்கி நுண்ணிதாக ஆராய் ந்தனர். இந்நூல்களிலுள்ள உண் மைப்பாடங்களும் நுண்பொருளுங் கண்டறிதலில் ஒப் புயர்வின்றி விளங்கினர். இவரால் ஏட்டுப்பிரதிகள் பலகொண்டு ஆராய்ந்து சூத்திரங்கள் சில திருத்தப் பட்டும், படிப்போர்க் கெளிதிற்பயன்படும்வண்ணம் உரையிலுள்ள •தாரணங்களுக்கு இடங்காட்டப்பட்டு முள்ள தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினுர்க்கினிய ருரையும், சொல்லதிகாரஞ் சேணுவரையருரையும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப் பட்டுள்ளன.
இவர் கவியியற்றுவதிலும் வல்லுநர். அக் கவிக ளெல்லாஞ் சங்கச் செய்யுட்கள்போல ஒழுகிய ஒசையும் விழுமிய பொருளும் பெற்றுள்ளவையாகும். இவர், இந்தியாவிலுள்ள பெரிய வித்துவான்கள் இயற்றியவும், பதிப்பித்தவுமாகிய நூலுரைகட்கெல்லாம் அவ்வப்போது பேருதவி புரிந்தனர். பின்னத்தூர் 15ாராயணசாமிஐயர் இயற்றிய நற்றிணையுரையை அவரிறந்தபின் இவரே பரிசோகித்து அச்சிட உதவிபுரிந்தனர். பொதுவாக இவரை உசாத்துணையாகக் கொள்ளாத வித்துவான்கள் இந்தியாவி லிலரென்றே சொல்லலாம். இவர்காலத்தில்
21

Page 91
162 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சென்னையிலும் பிறஇடங்களிலுமிருந்த பண்டிதர்களெல் லாம் சலஞ்சலத்தைச்சூழும் வலம்புரிகள்போல அறி ஞர்பெருந்தகையும் குணக்குன்றுமாகிய இவரைச் சூழ்வாராயினர். தமிழிலக்கணஇலக்கிய விஷயமாக எங் நேரத்தும் எவ்வகையான வினுக்களுக்குங் தடையின்றி விடையிறுக்கும் ஆற்றல்வாய்ந்த நுண்மானுழைபுல முடையார் இவர் என்பது மிகையாகாது. புலோலி கா. கதிரைவேற்பிள்ளை இவரிடமே தொல்காப்பியமுஞ் சங்க நூல்களுங் கற்றுணர்ந்தனர் என்பர். சென்னைப் பச்சை யப்பன் காலேஜ் தமிழ்ப் பேராசிரியர் கந்தசாமிமுதலி யார், தமிழ்ப்பண்டிதர் மணி. திருநாவுக்காசுமுதலியார், கிறிஸ்தியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சுப்பிரமணியசிவா, துளுவவேளாளர் உயர்தரப்பாடசாலைத் தமிழ்ப்பண்டிதர் எதிராஜலு5ாயுடு முதலியோர் இவரிடங் கிரமமாக இலக் கணஇலக்கியங் கற்றேராவர்.
இவரது வடநூலுணர்ச்சி மாண்பையும், மொழி பெயர்க்குமாற்றலையும், தமிழ்ப்பண்டிதர் நடேசசாத்திரியா ாவர்களுக்குப்பின் இவரால் மொழிபெயர்த் கியற்றப் பட்ட வான்மீகி ராமாயணத்துக் கிட்கிந்தாகாண்ட பாக மும், சுந்தரகாண்டமுங் காட்டும். இலக்கணஇலக்கிய நூலுணர்வின் வன்மையையும் ஆராய்ச்சி வன்மையையும் இவராலும், இவருதவிகொண்டு பிறராலும் வெளியிடப் பட்ட அரிய நூல்களும், யாப்பிலக்கணம், திருவள்ளுவர், இராமாயணம் முதலான மாசிக சங்கியைகளிலும் பிற பத்திரிகைகளிலும் இவராலெழுதப்பட்ட விஷயங்களுங்
காட்டும்.
இவர் நெடுங்காலமாகச் சென்னைச் சர்வகலாசாலைப் பரீட்சகரா யிருந்தமையோடு நான்குவருடகாலம் பரீட்சா சங்கத் தலைவராயுமிருந்தனர். அன்றியும், மதுரைத்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 163
தமிழ்ச்சங்கப் பரீட்சகர்களு ளொருவராயும், கிறிஸ்தியன் காலேஜிலும், பச்சையப்பன் காலேஜிலும் தமிழ்த் தலை மைப் புலவராயும் இருந்தனர். சான்ட்லர்துரை. என் பவரால், அரசின ராஞ்ஞைப்படி நடாத்தப்பட்டு வந்த மிகப் பெரிய தமிழகராதிக்கும் சிலகாலம் உதவிப் பதிப் பாசிரியராக இருந்தார். பின் ஏதோ ஒரு காரணத்தாற் ருமே இவ்வேலையினின்றும் விலகினர். பின் வடமொழி தென்மொழி வித்துவானுகிய சுன்னகம் அ. குமாரசுவா மிப் புலவரோடு கண்புடையராய், அவரோடு சேர்ந்து கம்பியகப்பொருளுக்கு ஒாரிய உரை எழுதி வெளியிட் டும், கம்பராமாயணத்தைக் கூடியமட்டில் எட்டுப்பிரதிகள் பலவற்றேடு ஒப்புநோக்கிச் சுத்தபாடங் கண்டு முழு வதையு மரும்பதவுரையோடு அச்சிடமுயன்று முதலிற் பாலகாண்டத்தை அவ்வாறு வெளியிட்டுமுள்ளார். அயோத்தியாகாண்டமு மவ்வாறே சோகித்துச் சுத்த பாடமாக்கப்பட்டும் அரும்பதவுரை பூர்த்தியாகமுன் இவ் விருவரு மொருவர்பின் ஞெருவராகத் தேகவியோக முற் றமையா லது கடைபோக முடிந்து அச்சு வாகன மேற முடியாதாயிற்று. இந்நூல் முழுவதும் இவ்வாறே இப் புலவர்கிலகர்களாற் பரிசோதித்து முடிவுபெருமை, கம்ப 15ாடர் தவக்குறைவும், தமிழ்நாட்டார் தவக்குறைவு மெனலாம். தமிழ்நாவலர்சரிதை என்னும் நூலும், வேறுசிலநூல்களும் இவரா லச்சிடப்பட்டன. இத் தகைய புலவர்சிகாமணி தேகவியோகமான காலம், கிறீஸ் தாப்தம் ககூஉஉ -க்குச் சமமான துந்து பிவருடம் ஆனி மாதமாகும.
இவர் புலவர் பலர்க்கு மாதாரமா யிருந்தாரென்ப தைத் தென்கோவை பண்டிதர் ச. கங்தையபிள்ளையவர்க ளியற்றிய கையறுநிலைச் செய்யுளொன்ற லறியத்தகும். அது வருமாறு:-

Page 92
164 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
* செந்தமிழ்நூன் முற்றுமுணர் சீரார் புகழ்க்கனக
சுந்தாவேள் வாழ்க்கை துறந்ததனுற்-செந்தமிழாம் மாதா சொந்து வருந்தினளே பாவலரு மாதாா மற்றனரே யாம்."
இவர்மீது யாமியற்றிய கையறுநிலைச் செய்யுள் களுள் இரண்டை இங்கே தருதும். அவை வருமாறு:-
* கோணமலை தனிற்பிறந்த கதிரெழுவெண் கொழுமுத்தே
கோதி லாயாழ்ப் பாண மதின் மணக்குமொரு செழுங்கமலத் திருமலரே
பாத மேய மாண காாஞ் சென்னையிருந் தொளிவிடுநன் மணிவிளக்கே
வான டுற்ற தேனுறுகல் வளம்பெறவே லுனைக்கனக சுந்தானென் றியம்ப லென்னே.”
ஆங்கிலமுந் திராவிடமும் வடமொழியுங் கற்றறிஞ
னகி யார்க்கு
மோங்குமுப காரியென வாழ்கனக சுந்தாப்பே
ாோதும் வள்ளால்
கேங்குதமி ழாய்ந்து மிக வளர்ப்பவர்க டமினியுஞ்
சிறந்தோ யாத
முங்குமணத் தமிழ்நாடு மீசுவர்க்கம் புகுது யாம்
தாங்கு மோதான்.”
காசிவாசி செந்திநாதையர்
இவர் ஏழாலையென்னுமூரிலே கிறீஸ்தாப்தம் 1848-க்
குச் சமமான கீலக வருடம் ஐப்பசிமாதம் 2-ந் தேதி யில் சிங்கயஐயர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். பிறந்து ஐந்தாம் வயசிலே வித்தியாாம்பஞ் செய்யப்
பெற்றுப் புன்னுலைக்கட்டுவனில் தமது மாமனுராய்

ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம் 165
விளங்கிய கதிர்காமையர் என்பவரிடம் தமிழுஞ் சம்ஸ் கிருதமும் கற்றுவந்தார். இளமையிலேயே அன்பு, அருள், வாய்மை முதலிய நற்குணங்களெல்லாம் இவரிடத்து அமைந்து விளங்கின. இவர் தமது பத்தாம் வயதில் யாழ்ப்பாணத்து மத்திய கல்லூரியிலே சென்று சேர்ந்து ஆங்கிலக் கல்வி கற்றுவந்தனர். இருபதாம் வயசிலே ஆங் கிலங்கற்றலை விடுத்து நல்லூர்ச் சம்பந்தப்புலவரிடஞ் சென்று அவரிடங் தமிழ் இலக்கியஇலக்கணங்களைக் கற்று அவற்றில் வல்லவரானர். கி. பி. 1871-ம் ஆண் டிலே தங்தையாரோடு இந்தியாவுக்குச் சென்று சிதம் பரம் முதலிய தலங்களைத் தரிசித்து மீண்டனர். பின் னர் 1872-ம் ஆண்டிலே வண்ணுர்பண்ணையில் ஆறுமுக நாவலரவர்களால் தாபிக்கப்பட்ட சைவ வித்தியாசாலை "யிலே ஆறு வருடமும், அவருடைய ஆங்கில வித்தியா சாலையில் ஒரு வருடமும் ஆசிரியராகவிருந்து கற்பித் தனர். அக்காலத்தில் நாவலருடைய சமயப் பிரசங்கங் களை இவர் தவமுது கேட்டுவந்தார். நாவலர் எழுகிய * விவிலிய குற்சிதம்’ என்னும் நூலையும் இவரே யச்சிட்டு வெளிப்படுத்தினர்.
இவர் வண்ணுர்பண்ணை வாசரும் சைவசித்தாந்தத் துறையில் வல்லுநருமாகிய விசுவநாதையர் என்பவருக் குப் புதல்வியும், சோகிட சாஸ்திர வல்லுநராகிய சபா பதி ஐயருக்குச் சகோதரியுமாகிய சிவகாமியம்மையாரை விவாகஞ்செய்து மீனட்சியம்மை யென்னும் ஒரு புதல்வி யைப் பெற்றர். சிலவாண்டு கழித்து இவருடைய மனைவி யார் தேகவியோகமடைந்தனர். 1878-ம் வருடத்திலே இவர் காவலர் விக்கியாசாலையை விடுத்து இந்தியாவுக்குச் சென்றர்.
இவர் இக்கியாவுக்குச்சென்று மலையாளத்தின் தலை நகராகிய கிருவனந்தபுரத்திலே பிரதம நீதிஸ்தல கிே

Page 93
166 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
பகியாய் விளங்கிய பூரீமான் தா. செல்லப்பாபிள்ளை என்பவரது உதவியாலும், பூரீலபூரீ ஆறுமுகநாவலர் எழுகி அனுப்பிய நன்னடக்கைப் பத்திர உதவியா அலும், அங்குள்ள சுப்பாசாஸ்திரியாரிடத்தும், அரண் மனேச் சம்ஸ்கிருத பரீட்சாதிகாரிகளுள் ஒருவராகிய பிரஹ்மபூரீ அனந்தகிருஷ்ண சாஸ்கிரியாரிடத்தும் காவி யம் தர்க்கம் வியாகரணம் முதலிய வடமொழிக் கருவி நூல்களைக் கற்றுவந்தார். காவலரெழுதிய கன்னடக்கைப்
பத்திரம் வருமாறு:-
மலா-ா பூரீ சி. செந்திநாதையரை யான் எழு வருடகாலம் அறிவேன். ஆறு வருடம் என்னுடைய தமிழ் வித்தியாசாலையிலும், ஒரு வருடம் என்னு டைய இங்கிலீஷ் வித்தியாசாலையிலும் உதவி உபாத்தி யாயராக இருந்து தமது கடமையைச் ஜாக்கிாதை யோடு பிறழாமல் நடத்திக்கொண்டு வந்தவர். ஒழி வுள்ள பிறநோங்களிலே நான் பொது நன்மையின் பொருட்டு எடுத்துக்கொண்ட பிற கருமங்களையும்
நிறைவேற்றினவர்.
இங்ங்ணம் க. ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணம், 1879-ம் இல் புரட்டாதி மீ" 19 வ. 拳
இவர் திருவனந்தபுரத்திலே யிருந்து கற்றுவருங் காலத்திலே காவலர் தேகவியோகமடைந்தார். அவர் பிரி வைக் குறித்து இவர் பல இரங்கற் பாக்களைப் பாடியுள் ளார். இவர் பாடிய பாக்களுட் சில பின்வருவன :
Gaj GöTLIT வன்ருெண்டன் நாவலர்கோன் வாழ்வா வது மாய மென்றுண்த்த தேவாரத் தின்பொருளை-நன்றியுடன் சிங்தை செய்தேன் சாவலனே செத்தாய்ரீ யென்பதனற் புந்திநொச்து போதமிக்க போது.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 167
ன்ேனடக்கைப் பத்திரிகை நாவலனே சீயனுப்ப என்ன தவஞ் செய்தேனே யானறியேன்-அன்னதனு ளுள்ளசில வாசகங்க ளுற்றுணரும் போதெல்லாம்
வெள்ளம் பொழியும் விழி.
கட்டளைக் கலித்துறை
தேவாரம் யான்சொலக் கேட்டு மகிழ்ந்து சிரத்தையுடன் பூவாதி கொண்டு புரிசிவ பூசைப் பொலிவழகும் பாவாணர் மெச்சச் செயும்பிர சங்கமும் பார்த்தினிநான் சாவார வாழ்த்திடு நாளுமுண் டோநல்லை நாவலனே.
பின்னர்த் தந்தையாரின் அழைப்புக்கிணங்கித் திருச் செந்தூர் பழனி ஆகிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தார். பின்பு இவர் கொழும்பு பூரீமான். தம்பையாமுதலியாருடைய வேண்டுகோளுக்கிணங்கிக் கொழும்பு சென்று அவருடைய தருமசக்கிரத்திலே 1880-ம் ஆண்டு தைமாதங் தொடக்கம் ஆறுமாசகாலம் வரையும் வைதிக சைவசித்தாந்த பரமாக உபங்கியாசங்கள் செய்துவந்தார். பின்னர் அங்குகின்றுங் கதிர்காம யாத் திரை செய்தார். அங்கேயிருந்து உபவாசத்தோடு கந்த புராணத்தைப் பன்னிருதினத்துட் படித்துமுடித்து யாழ்ப்பாணம் வந்தார். பின் 1882-ம் ஆண்டு மறுபடி யும் இந்தியாவுக்குச் சென்று கிருநெல்வேலியில் உள்ள சைவவித்தியாசாலை யொன்றில் ஆசிரியராய் அமர்ந்து சமயபாடத்தோடு இலக்கிய இலக்கண பாடங்களையுங் கற் பித்து வந்தார். 1883-ம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள முனிசீப், திருவாளர் சுப்பிரமணியபிள்ளையால் நடத்தப் தப்பெற்றுவந்த 8 சுஜனமநோரஞ்சனி’ என்னும் பத் கிரிகைக்கு உதவிப் பத்திரிகாசிரியராகவிருந்து உதவி புரிந்துவந்தார். அக்காலத்தில் சாத்தூர் உதவிப் பதிவுக் காரியஸ்தராகிய சாமுவேல் சற்குணர் எனபவர், “ சாணு

Page 94
168 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
செல்லாஞ் சஷத்திரியர்’ என்னுங் கருத்தினேடு ஒரு புத்தகத்தை யெழுகி யச்சிட்டு வெளியிட்டனர். அது கண்ட கிறிஸ்தவர்கள் இவரை அப்புத்தகத்திற்கு மறுப்பு எழுகித் தரும்படி வேண்ட இவர், “ சாண் க்ஷத்திரியப் பிரசண்டமாருதம்’ என்னும் புத்தகத்தை யெழுதிக் கொடுத்து வெளியிடுவித்தார். இதைக்கண்டு சற்குணரும் பிறரும் இவர்மீது “ அவதூற்றுப்பத்திரிகை’ ஒன்றை எழுகி வெளியிட்டார்கள். அதனைக் கண்ணுற்ற இவர் அந்தச் சாணுர்கள்மீது வழக்குத்தொடுத்தார். விசாரணை யில் சாணர்கள் குற்றமுடையவராகக் காணப்பட்டுத் தண்
டிக்கப்பட்டார்கள்.
இவர் ஒருமுறை திருநெல்வேலியிலுள்ள திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாது ஆலயத்திலே ' ஞானத்தின் றிருவுருவை” என்னும் முதலையுடைய பெரியபுராணத் திருவிருத்தத்தைப் பீடிகையாகக்கொண்டு ஒர் உபந்நியா சஞ் செய்தார். அது 'சுஜனமகோரஞ்சனி’ என்னும் பத் கிரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இதனைக்கண்டு மகிழ்ந்த கோயமுத்தூர்ச் சைவசித்தாந்தசபை அக்கிராசனராகிய திருச்சிற்றம்பலப்பிள்ளை என்பவர் இவரை ஆங்கு வரும் படி விரும்பிக் கேட்டார். இவரு மதற்கியைந்து அவ் வாண்டு ஆவணிமாசத்திற் புறப்பட்டு மேலைச்சிதம்பரம் எனப்படுங் கிருப்பேரூரை யடைந்து * உலகெலாமுணர்ந் தோதற்கரியவன்’ என்று தொடங்கும் பெரியபுராணக் காப்புச் செய்யுளையும் * அளவாயளவதனளவாய்’ என்று தொடங்கும் பேரூர்ப் புராணத் திருச்செய்யுளையும் பீடி கையாகக்கொண்டு பேரூரைச்சார்ந்த கோயமுத்தூர்ச் சைவசித்தாந்த சபையிலே ஒர் உபங்கியாசஞ் செய்தார். பின்னர் கவியரணசுந்தரம்பிள்ளை யென்பவரது அழைப் புக்கிணங்கி உடுமலைப்பேட்டைக்குச் சென்று அங்கு சில வைதிகசைவ உபங்கியாசங்கள் செய்தார். அப்பாற்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 169
காசிக்குச் சென்று சிவாலய தரிசனஞ் செய்துகொண்டு அணிக்காகவுள்ள “சிக்களூர்” என்னுமிடத்தையடைந்து அங்குள்ள ஐரோப்பியவைத்தியசாலையில் “பண்டிற்” என் லும் மாசிக சஞ்சிகையில் அச்சிடப்பெற்ற பூரீ நீலகண்ட பாஷியத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர்த் தமது
ஜெனன நாடாகிய யாழ்ப்பாணத்துக்கு மீண்டனர்.
பின்பு 1886-ம் ஆண்டில் 8 கந்தபுராண நவநீதம் ? என்னும் நூலை எழுகிமுடித்து, கொழும்பிலிருக்கும் சேர் அருணுசலந்துரை முதலிய பிரபுக்களின் பேருதவி பெற்றுச் சென்னைக்குச் சென்று அதனை அச்சிடுவித் துக்கொண்டு மீண்டார். இக்காலங்தொடங்கி இவருடைய இளைய சகோதரராகிய சிவசம்புநாதையர் என்பவர் இவ ரோடு வசித்துவந்தார். *
1887-ம் ஆண்டிலே வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்தத்தில் வல்லுநராகிய இணுவில் பிரஹ்மறுரீ நடராசையர் என்பவரிடத்திலே சென்று சிவஞானசித்தி யாரை அதனுரைகளுளொன்முகிய ஞானப்பிரகாச ருரை யோடும் பாடங்கேட்டுவந்தார். கேட்டபின் மீளவுஞ் சென் னைக்குச் சென்று அங்கு வசித்தார். அங்கிருந்தபோது பெரியபுராணத்திலுள்ள ‘சிவனடியேசிந்திக்கும்’ என்று தொடங்கும் செய்யுட்கு ஒருவர் கூறிய பொருளைக் கண் டித்து உண்மைப் பொருள் இதுவாமென்றுணர * ஞான போத விளக்கச் குழுவளி” என்னும் நூலினை எழுதி வெளியிட்டார். பின்னர்ச் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த திருப்பற்றூருக்குச் சென்று அங்கிருந்து “அமிர்த போகினி” எனப் பெயரிய வாரவெளியீடொன்றை 1888-th gait 19.6) ஆரம்பித்துச் சிலகாலம் நடத்தி வங் தார். அக்காலத்திலே சென்னையிலுள்ள கிறிஸ்தவருட் சிலர் ‘சிவனுங் தேவன” என்னுங் தலைகாமத்தைக்
22

Page 95
170 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கொண்ட துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டனர். இதனைக் கண்ணுற்ற, சென்னைக் காசிச்செட்டியாரது வீதியிலேயுள்ள இந்துலகுலேக சங்கத்தின் தலைவ ராகிய சை. இரத்தினச்செட்டியார் என்பவர் இவரை ஒரு கண்டனம் எழுகித்தரும்படி கேட்டார். அதற்கிணங்கிச் * சிவனுங் தேவனு என்னுங் தீயநாவுக்கு ஆப்பு’ எனப் பெயர்கொடுத்து ஒரு நூலை யெழுதிக்கொடுத்தார். இது வும், * வஜ்ாடங்கம்’ என்னும் வேருெரு நூலும் “கிறிஸ்துமத கானன குடாரி” என்னும் பெயரினேடு அச்சங்கத்தாரால் அச்சிடப்பெற்று வெளிவந்தன. பின் அச்சங்கத்தினர் இவரை யழைத்து ஒர் உபங்கியாசஞ் செய்வித்தனர். அப்பொழுது சிதம்பரம் * பிரஹ்ம வித்தியா’ பத்திராதிபரும் பல பண்டிதர்களும் கூடி யிருந்தனர். இவருக்கு அச்சங்கத்தின் உறுப்பினர் ஒரு வாால் “கிறிஸ்துமத கானன குடாரி” என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. இன்னும் கிருமங்கலக்குடிச் சூரியனர் கோயில் அதி வருணுச்சிரம ஆசாரிய வரிய சைவசமய பரிபாலக பூரீ சிவாக்கிர யோந்ேதிர ஞான சிவாசாரிய சுவாமிக ளாதீனத்து பூரீலறுரீ முத்துக்குமார தேசிகர் என்பவர் இவருக்கு எழுதி விடுத்த கடிதத்திற் கண்ட,
'நிறைகல்வி தவவொழுக்கஞ் சான்றுண்மை கண்ணேட்ட
நெடுகு மன்பு பொறைமேன்மைச் சிவஞான முதிர்ச்சியநுபூதிமுதற்
குணங்க ளெல்லாம் குறையாம னிறைசெந்தி நாகமறை யோய்கின்னை க்
குறித்தியா மிட்ட மறைவாய்மைச் சித்தாந்த சிகாமணியாம் பெயர்பிறர்க்கு
வழங்க லாமோ."
என்னுஞ் செய்யுளால் இவருக்குச் : சித்தாந்த சிகாமணி”
என்னும் பட்டத்தை முத்துக்குமார தேசிகர் என்பவர் அளித்துள்ளார் என்பது தெரிகிறது.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 171
இன்னும் 1888-ம் ஆண்டில் “ஞான ரத்தினவளி? என்னும் ஒரு நூலை எழுதி இவர் வெளியிட்டார். அக்காலத்துச் சங்கியாசி ஒருவர் சென்னைத் தங்கசாலைத் தெருவில் * குதசம்ஹிதாப்” பிரசங்கஞ் செய்து வங் தார். அவர் பிரசங்கஞ் செய்யும்போது அறுபத்து மூன்று நாயன்மார்களுட் சிலரைத் தூஷித்து வந்தார். இதனை யறிந்த இவர் * வீரபத்கிராஸ்திரம்’ என்னும் ஒரு நூலை யெழுகி, அச் சங்கியாசியாரது போலி கியா யங்களைத் தகர்த்தார். பின் கிருவாளர்கள்: கு. பூரீநிவாச சாஸ்கிரியார், சை. இரத்தினச்செட்டியார், விஜயத்துவச' பத்திராதிபர் முதலிய பெரியார்களது கருத்துக்கிசைந்து * விவிலிய குற்சித கண்டன கிக்காரம்’ என்னும் நூலையெழுதி யச்சிட்டு வெளியிட்டார். இது ஆறுமுக நாவலர் எழுகிய விவிலிய குற்சிதத்துக்குக் கிறிஸ்தவ
சால் எழுதப்பெற்ற மறுப்புக்கு மறுப்பாக அமைந்தது.
இவர் 1888-ம் ஆண்டு தொடங்கி 1898-ம் ஆண்டு வரையும் காசியிலே வசித்து வந்தார். அதனுல் இவர் காசிவாசி செந்திநாதையர் எனவும் அழைக்கப்படுவர். அங்கு வசிக்கும் காலத்திலே சிதம்பரம் * பிரஹ்ம வித்தியா’ முதலிய பத்திரிகைகளிலே வைகிக் சைவ சித்தாந்தத்துக்கு மாமுக வெளிப்போந்த பல விஷ யங்களைக் கண்டித்து எழுதிய விஷயங்களை * இந்துசாத னம்’, ' விவேக திவாகரன் ’, ‘ நாகை நீலலோசனி ?, * விஜயத்துவஜம்’, ‘ வெற்றிக்கொடியோன் ’ முதலிய பத்திரிகைகளிலே வெளிப்படுத்திவந்தார். இவர் இந்து சாகன’ப் பத்திரிகையில் வெளிப்படுத்திய வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த சமயம் என்னும் விஷ யத்தைக் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து யாழ்ப் பாணத்து நல்லூர் பூரீலழரீ த. கைலாசபிள்ளை யவர்கள்
செந்திநாதயோகிகளால் இயற்றப்பெற்றன என்னும்

Page 96
172, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
முகவுரையோடு ஏவிளம்பி வருடம் சித்திசைமாசம் அச்
சிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
1898. ஆண்டிலே இவர் காசியை விட்டுச் சென் னேக்கு அணித்தாகவுள்ள திருவொற்றியூரை யடைந்து அங்குச் சிலகாலம் வசித்தபின் அங்குள்ள பழவேற்காடு என்னும் சிற்றுாரிற்சென்று அங்குவசித்தனர். அப்போது கிருவாளர் சோமசுந்தரநாயகர் என்பவரது விருப்பப் படி சென்னையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் சன்னிதானத் திலே ஒர் உபங்கியாசம் செய்தார்.
மேலும், இவர் அங்கிருக்குங் காலத்திலே, சிங் தாதிரிப்பேட்டையிலுள்ள அறிஞர் சிலரால் கூட்டப் பெற்ற சபைக்கு இவர் அக்கிசாசன சாயும் யாழ்ப்பா ணத்து மேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை சிறந்த உபங்கியாசகராயும் இருந்தார்கள். ஒருநாள் மாயா வாதத்தை நிராகரித்து கதிரவேற்பிள்ளை அவர்கள் செய்த பிாசங்கத்தைக்கேட்ட சபையோர் அவருக்கு * மாயாவாத துவம்ச கோளரி' என்னும் பட்டப்பெயரை
இவரால் அளிப்பித்தார்கள்.
பின்னர் இவர் 1901-ம் ஆண்டு பாண்டிநாட்டிலுள்ள சிவஸ்தலங்களையும் குகஸ்தலங்களையும் தரிசித்துக் கொண்டு அமராவதி புத்தூரின்கண்ணே வசிப்பவரும் மதுரை மீனுட்சியம்மை கோயிலின் தேவஸ்தானசபை அங்கத்தவருள் ஒருவருமாகிய திருவாளர் வயி. நாக. ராம. இராமநாதச் செட்டியார் என்பவர் விரும்பிய பிர காரம் மதுரையம்மை குருபூஜாமடத்திலே வசித்து வந்தார். அப்பொழுது மதுரையிலுள்ள * பிரஹ்ம ஞான சபா' மண்டபத்திலே திருவாளர் கிரவியம் பிள்ளை என்பவர் வேண்டிக்கொண்டபடி ஒர் உபங்கியா

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 173
சம் செய்தார். 1902-ம் ஆண்டில் சுப்பிரமணியப் பெரு மான் எழுந்தருளியிருக்கும் ஸ்தலமாகிய திருப்பாங் குன்றத்துச் சங்கிதி வீதியிலுள்ள மயில் மண்டபத்துக் குக் கீழ்ப்புறத்திலே ஒரு வித்தியாசாலையைத் தாபித்து அதற்கு “ வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த வித் கியாசாலை’ எனப் பெயர்சூட்டி அகில் மாணுக்கர்களுக்கு சம்ஸ்கிருதங் தமிழ் ஆங்கிலம் ஆகிய பாஷைகளிலுள்ள நூல்களைக் கற்பித்துக்கொண்டு வந்தார்.
பாலவனத்தஞ் ஜமிந்தாரும் நான்காவது தமிழ்ச் சங்க ஸ்தாபகருமாகிய பூரீமான் பாண்டித்துரைத் தேவர் விரும்பிய வண்ணம் ‘செந்தமிழ் என்னும் பத்திரிகைக் குத் திருப்பாசுரம் ’, ‘ உள்ளது', 'திருச்சிற்றம்பலம்’, ‘கடவுள்' என்னும் தலையங்கங்களோடு கூடிய விஷயங்களை எழுதி உதவினர். இவ்விஷயங்கள் ‘செந்தமிழ் முத லாம் தொகுதியிலும், இரண்டாங் தொகுதியிலும் வெளி வந்துள்ளன. மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் * ஞானமிர் தம்’ என்னு நூலைத்திருத்தி அச்சிட்டபோது இவ ரும் அவர்க்கு வேண்டிய உதவிபுரிந்தனர்.
வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்தப் படம் எனப் பெயரிய பிரணவப் படமும் இவரால் 1904-ம் ஆண்டிலே அச்சிட்டு வெளியிடப்பட்டது. கருங்குழி இராமலிங்கபிள்ளையின் பாடல்காரணமாகப் புலோலிக் கதிரவேற்பிள்ளைக்கும் அச்சென்னையிலுள்ளார் சிலருக் கும் சென்னைப் பிரதமரீதிஸ்தலத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. அவ்வழக்கிற் சாட்சி பகர்ந்தவர்களில் இவரும் ஒருவர். வழக்கு முடிந்தபின்னர் பிள்ளையவர் கள் இவருக்கு எழுகி விடுத்த கடிதசாரமும் பாக்களும் வருமாறு :

Page 97
174 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
நீதிபதிமுதற் பலரும் வியப்புறச் சுவாமிகள் எழுங் தருளித் கிருவாய்மலர்ந்தருளிய வாக்கன்ருே 1 எமக்கு இப் பெருஞ் செயத்தை உண்டாக்கிற்று. இஃது எல்லா ரும் அறிந்ததொன்றே. சுவாமிகள் பரங்குன்று நோக்கி என்னைப் பார்த்து * நின் வழக்கு நினக்குச் செயமாகவே முடியும்; அங்ஙனமின்றி மாறுபட வரின் * நீறு கண் டிகை வேல்மயில் என்பவற்றை வேண்டிலன் ’ என அன் பால் நைந்து அருளிய ஆசிமங்கிரம் என் மனத்தை விட்டகலாது. இத்துணை அன்பும் ஆர்வமும் உளவேல் எமக்கு அபஜெயமும் எய்துவதாமோ?
"செர்தூர்நங் குகக்கடவுள் போலெனக்குத் தலைக்கருணை
செய்வோய் நாளும்
கர்தாருங் காத்தார்க்கு மறிவரிய பாம்பான்ற னலத்த ஞானம்
வந்தாரு மெய்யுளத்த வடமொழியுங் தென்மொழியும்
வாம்பே கண்ட
நந்தோமின் மெய்ப்புலவ சித்தாந்த பாதுவென
ஈவில நின்றேய்.
அன்பதுவே யுறுப்பாக வருட்குழாம் வடிவாக
வழகே வாய்ந்த இன்பதுவே குணஞக வியைசிவமே யுணர்வாக வெழிற்சித் தாந்தம் என்பதுவே கலனுக விதை விரித்த முெழிலாக விளங்குஞ் செந்தி முன்பதுவா நாசப்பேர் நாவலசற் குருமணியே
முறையைக் கே عان.
என்னுடலு முயிர்தானு யேன்றே வென்பொருளே
யெனக்கு வாய்ந்த
மன்ன.லே பெரும்பேற்றுக் குணக்குன்றே யடிகளென
விாழ்த்த லன்றிப்

ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிகம் 175
பின்னெதையா னின்றிறத்துச் செய்குவன்கா னிவ்வுலகிற்
பிறந்தே கற்ற அன்னபய னியன்ருே வடைகின்முய் புகழ்மிக்கோ
estift caust
தம்மையே புகழ்ந்தென்னு முதலதுள திருவருட்பாத்
தன்னைக் கொண்டே
எம்மையோர் தம்மையும்நான் புகழ்ந்ததிலை யிதுகாறு
மின்பே யீது
மெய்ம்மையே ரீயென க்குச் சற்குருவாய் விளங்கலினின்
u f'g/ un l
அம்மையால் வந்ததென்றே நினக்கியான் கூறலிச்சை
யன்முன் மாதோ.”
என்பன முதலியன. பர்க்களுட் சில விரிவஞ்சி விடப் பட்டன.
1906-ம் ஆண்டில் இவர் தேவகோட்டைச் சைவசீல ராகிய கிருவாளர்கள் : அரு. சோம. சோமசுந்தாச் செட் டியார், மெ. அரு. நா. இராமநாதச்செட்டியார் ஆகிய இருவ ருடைய பொருளுதவியைப் பெற்றுச் செந்திநாதைய சுவாமி யந்திர சாலை என்னும் பெயரால் ஒர் அச்சியங்கிர சாலையை நிறுவித் தாமெழுகிய நீலகண்டபாஷ்யத்தமிழ் மொழிபெயர்ப்பு, பூரீ சீகாழிப் பெருவாழ்வின் ஜீவ காருண்ய மாட்சி, வைதிக சுத்தாத்துவித சைவசித்தாங்க தத்துவப்பட வினவிடை, விவிலிய குந்சிதக் குறிப்பு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். கோட்டை யூரில் வசித்த சங்கியாசியார் ஒருவர் ஆகி சைவகுலத் கில் உதித்தவனது முகத்தைத் தகர்க்கும் கோல் எனப் பொருள் தரும், 1 ஆதி சைவ நாமக குலீன முக
பங்க முத்திர' என்னும் புத்தக வாயிலாகவும்,'தாங்கிக
* குலீன:= குலத்துதித்தவன் t முத்திா = கோல்

Page 98
176 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
துண்டகண்டனம்” என்னும் புத்தகவாயிலாகவும், சிவாக மங்களையும் ஆகி சைவர்களையும் கண்டித்தார். இவர் இவ் விரு நூல்களையும் முறையே, * வச்சிரதண்டம்’, * காங் திரிக துண்ட கண்டன கண்டனம்’ என்னும் இரண்டு நூல்களை எழுகிக் கண்டித்தார். இவர் எழுகிய இவ் விரு நூல்களும் 1910-ம் ஆண்டிலே அச்சிடப்பட்டன. இன்னும் இவரியற்றிய ‘மகாவுக்கிர வீரபத்திராஸ்கிரம்” என்னும் நூல் சாம்பவ பூரீ சதாசிவபண்டித சிவாசாரிய ாாலும், “ சிவஞானபோதவசனுலங்காரதீபம்’, ‘தேவா ரம் வேதசாரம் ? என்னும் நூல்கள் புரசைச் சுந்தர முதலியார் புதல்வர் ஏகாம்பரமுதலியாராலும், “ தத்துவ விளக்கம் மூலமும் உரையும்’ மதுரை ஜில்லாவைச் சேர்ந்த காரைக்குடி ஆ. வி. பழ. சிதம்பரச்செட்டியா என்னும் நூல் மேற்படியூர் முத்த. வெ. வெள்ளைச்செட்டியாாாலும் அச்சிடுவிக்கப்
ராலும், “சைவவேதாந்தம்’
பெற்று வெளிவந்தன.
இவ்வாறு சைவத்தொண்டு புரிந்துவந்த இவர் சில காட் சுரநோயாற் பீடிக்கப்பட்டிருந்து சென்ற இரக் தாட்சிவடு வைகாசிமீ உ-க் உ (15-5-1924) வியாழக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் சிவசிந்தையோடு தேக
வியோகமடைந்தார்.
6) J. குமாரசுவாமிப்புலவர்
இவர் யாழ்ப்பாணத்துப் புலோலி என்னும் ஊரிலே சைவாசர்ரம் பூண்ட வேளாளர் குலத்திலே வல்லிபுர நாதபிள்ளைக்குப் புதல்வராகப் பிறந்தனர். இவர் இளம் வயதிலே தமது இளையசகோதரியாகிய பார்வகியம்மையா ரோடும் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடம் தமிழ் இலக் கண இலக்கியங்களைக் கற்றர். இவருக்கு இளமை

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 177
தொட்டுத் தமிழிலுள்ள பஞ்ச இலக்கணங்களில் மனஞ் சென்றதாகலின் அவற்றை மேற்படி புலவரிடத்தும், வித்துவசிரோன்மணி பொன்னம்பலப்பிள்ளையவர்களிடத் அதும் கற்று அவ்விலக்கணத்துறையிற் பெரும் பாண் டித்தியம் பெற்று விளங்கினர். இவர் சிறுபிள்ளைகளோ டும் கல்வியறிவற்ற சனங்களோடும் பேசுங்காலும் இலக் கண வழுவின்றியே பேசுவார். இலக்கண வழுவுடைய தமிழ்ப் பிரயோகங்களைக் கேட்குந்தோறும் மிக மனம் வருந்துவதோடமையாது பேசுபவர்களையும் கண்டிக்குக் தன்மையுடையவர். அதனுல் இவரை ‘இலக்கணக்கொத் தர்' எனப் பலருங் கூறுவதுண்டு. ‘இலக்கணக்கொத்து’ என்பது ஒரு இலக்கண நூல்.
இவர் தமிழ்மொழிப் பயிற்சியிலன்றி வடமொழிப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினர். வடமொழியை இவ ருக்குக் கற்பித்த புலவர் இவர் தமையனுராகிய பண்டிதர் கணபதிப்பிள்ளையாவர். இவர் வடமொழியினும் சாரஸ்வத வியாகரணத்திற் சிறந்த பாண்டித்திய முடையரென்ப. இவர் இலக்கணத்திலன்றித் தருக்க அறிவிலும் மிகச் சிறந்தவர். கவிபாடுங் கிறமுமுடையவர். இவர் தமது குருவாகிய சிவசம்புப் புலவரியற்றிய யாப்பருங்கலக்காரி கைக்குச் சிறப்புப் பாயிரமாகக் கொடுத்த செய்யுளை இங்கே காட்டுதும் :-
" தாரா யுரையொன்று காரிகைக் கிங்கெனத் தந்து பொருள்
போார் கலைவல்லோர் கேட்டிட வேற்கைப் பிரான்பத்திமைச் சீரார்ர் திடுஞ்சிவ சம்புப் புலவன் றெரித்தவுரை
ஆராயமைந்த ரகத்திருளோட்டிடு மாதித்தனே'
இவர் தமிழிலக்கணத்திற் சிறந்த பர்ண்டித்திய முடையரென்பதை இவர் கிருத்தி யச்சிட்ட நன்னூற் காண்டிகையுரையானறியலாம். தமிழிலக்கியங்களுள்ள்ே
23

Page 99
178 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தில் மிகுந்த பயிற்சியுடை யவர். அதனை அவர் அப்பாரதத்துச் சூதுபோர்ச்சருக்க முதலிய சில சருக்கங்களுக்கு இயற்றிய உரையா லறிய லாம். இவர் யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணையிலுள்ள இந்துக்கல்லூரியிற் சிலவருடம் தமிழ்ப் பண்டிதராக இருந்தவர். இவர் சாலிவாகனசகாப்தம் ஆயிரத்தெண் ஆணுாற்று நாற்பத்தெட்டில் தேகவியோகமடைந்தனர், தமிழிரகுவம்சத்திற்கு யான் இயற்றிய உரைக்கும் சிறப்புப்பாயிர மளித்துள்ளார். அப்பாயிரச் செய்யுளு. ளொன்றை இங்கே தருதும் :-
* பெரும்புகழ்பெற்றிட்டமகா கவிதாளி தாசன் வட
மொழியிற் பேசும் அருங்கவியாம் ரகுவம்ச காவியத்தை யாசகே
சரியென் முேதும் விரும்புசுடர்ப் பரிதிகுலத் தமிழரசன் யாழ்ப்பாண.
மிசைதல் லூ ரான் இருந்தமிழாற் பாடியமிழ் கென வருந்த விருந்திட்டா
னெவர்க்கு மன்றே.
இவருடைய புதல்வர்களு ளொருவராகிய டக்றர் பூரீமாங், சிவப்பிரகாசம் என்பவர் கிருநெல்வேலிப் பர மேசுவா பண்டித ஆசிரிய கலாசாலைக்கு அதிபராயிருக் கின்றனர். s
அம்பலவாண நாவலர்
இவர் ஏறக்குறைய எண்பது வருடங்களுக்கு முன்னே வட்டுக்கோட்டை என்னுமூரிலே கார்காத்த வேளாளர் குலத்திலே முடிதொட்ட வேளாளராகிய இராஜமழவர் குடியிலே ஆறுமுகப்பிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். இவர் தாயார் பெயர் சுந்தா வல்லியம்மை.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 179
இவருக்கு ஐந்துவயதானவுடன் தங்தையார், சங் கானை என்னுமூரிலிருந்த வேற்பிள்ளை என்னுமாசிரியண்ா அழைத்து அவரால் வித்தியாரம்பஞ் செய்வித்து, அவ ரிடத்திலே தமிழ்மொழியைக் கற்றுவரச் செய்தனர். அவரிடஞ் சிலவாண்டு கற்றபின், இவர் மட்டுவில் உரை யாசிரியர் வேற்பிள்ளைப் புலவரிடம் தமிழிலக்கண இலக் கியங்களையும், நீர்வேலிச் சிவப்பிரகாச பண்டிதரிடம் சம்ஸ்கிருத நூல்களையும் கற்றுர். சுளிபுரத்திலிருந்த பூரீமான் கனகரத்தின முதலியார்பால் இவர் ஆங்கிலமுங் கற்றுவந்தார். முப்பாஷையிலும் இவர் பாண்டிக்கிய மடைந்தபின், விளைவேலியிலே தமது பாம்பரைக் குரு வாயிருந்த வேதக்குட்டிக் குருக்களுடைய புத்திார் அப் பாத்துரைக் குருக்களிடஞ் சென்று வழிபட்டு, அவர் பால் அவ்வக்காலங்களில் சமய விசேட நிருவாண தீசைஷ களும் பெற்றுச் சிவபூசையும் எழுந்தருளப்பண்ணுவிச் துக் கொண்டார். பின், இவர் மதுரையிலுள்ள திரு ஞானசம்பந்தர் மடத்து மகா சங்கிதானத்திடத்து மந்திர காஷாயம் பெற்று நைஷ்டிகப் பிரமசரிய மாதுல்ய மாசங்கி
யாசியாய் விளங்கினர்.
இவர் தமது இளவயதிலேயே சமயாபிமானம்பூண்டு சைவப் பிள்ளைகள் வட்டுக்கோட்டையிலே பாகிரிமார் களால் ஸ்தாபிக்கப்பட்ட வித்தியாசாலைகளிற் சென்று கற்பதைத் தடுக்கும்படி, ஒரு சைவத் தமிழ் வித்தியா சாலையைத் தாபித்து, சைவமுங் தமிழுக் தழைக்குமாறு அவ்வித்தியாசாலையிலே தாமும் ஒராசிரியராகவிருந்து கற்பித்து வந்தார். வருநாளிலே யாழ்ப்பாணத்திலே சைவமுங் தமிழும் மேலோங்க அவதரித்த பூரீலழரீ ஆறு முக நாவலருடைய பிரசங்க வன்மையைக் கேள்வியுற்று அவற்றைக் கேட்க விரும்பி அவர் கிரமமாகப் பிரசங்கஞ் செய்துவரும் (வண்ணுர்பண்ணைச் சைவப்பிரகாசவித்தியா

Page 100
180 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சாலையும், சிவன்கோயில் வசந்த மண்டபமுமாகிய) இடங் களில் தவமுது சென்று அவர் செய்யும் பிரசங்கங்களைக் கேட்டுவந்தார். வருங்காலத்திலே இவருக்கு அவர்பால் அன்பு பெருகிற்று. அவ்வன்பின் முதிர்ச்சியினலே அவ ரைத் தமக்குக் குருவாக மனத்திற் பாவித்துக்கொண் டனர். பின்பு சின்னுளில் அவரைப்போல ஒழுகவும் பிரசங்கஞ் செய்யவும் விரும்பினர். விரும்பித் தம்மாற் முபிக்கப்பட்ட சைவ வித்தியாசாலையிலும் சித்தங்கேணிப் பிள்ளையார் கோவிலிலுமாகக் கிழமைதோறும் பிரசங்கஞ் செய்து வந்தனர். ஆறுமுக நாவலரைக் குருவாக மனத் கிற் பாவித்து வந்தமையாற்போலும் அவரைப்போலப் பிரசங்கஞ் செய்யுஞ் சாமர்த்தியத்தை இவரும் பெற்றனர்.
அங்காளிலே இவர் செய்யும் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்து புகழ்ந்து இவரை யுற்சாகப்படுத்திய பிரபுக்கள் பலராவர். அவர்களுள் வலிகாமம் மேற்கு மணியகாரனுக விளங்கியவரும் வட்டுக்கோட்டையைச் செனனத்தானமாகக் கொண்டவருமாகிய பூரீமான் இளங் தழையசிங்க மாப்பாண இரகுநாத முதலியாரவர்களே
விசேடமானவர்.
பூரீலறுநீ ஆறுமுகநாவலாவர்களும் தம்மீது இவர் கொண்ட அன்பையும், இவர் சமயப் பிரசங்கங்கள் செய் வதையும் கேள்வியுற்று இவரை அழைத்து இளையராய் விளங்கிய இவர்மீது மிகுந்த அன்பு பாராட்டினர். அத னனும் இவருக்கு காவலரிடத்தில் அன்பு மிகப் பெரு கிற்று. நாவலாவர்கள் தேகவியோக மடைந்தபின்பு அவர்மீது இவர் “சற்குருமணிமாலை” என ஒரு பிரபந் தம் பாடி அச்சிட்டுள்ளார். அவற்றுள் ஒரு செய்யுளை இங்கே காட்டுதும் :-

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 181
*திருவே யருட்செல்வ மேசிவ மேசிவ சிற்சுகமே மருவே மருவின் மலரே மலர்க்கற் பகவனமே கருவே யிரித்தெமை யாண்டிட மீயுருக் கண்டனையே குருவேயெம் மாறு முகநா வலசற் குருமணியே.'
அங்காளில் யாழ்ப்பாணத்திலே வாணிகநோக்கமாக வங்கிருந்த நாட்டுக்கோட்டைத் தனவைசியர்களுள்ளே வித்துவான்களாய் விளங்கிய பெரிய சொக்கலிங்கச்செட் டியார், சின்னச் ேொக்கலிங்கச்செட்டியார் என்னும் இரு வரும் இவருடைய பிரசங்க வன்மையையும், கல்வி வன் மையையுமறிந்து இவரிடத்திலே போபிமானங்கொண்டு, பிரசங்கங்கள் செய்விக்கும்படி இவரை இங்கியாவிலுள்ள கிருநெல்வேலி என்னு மூருக்கு அழைத்துச் சென்று அங்குச் செளகரியமாக வசித்தற்கேற்ற ஒரு இல்லத்தில் இவரை அமரச் செய்தனர்.
செய்தபின் மறுநாள், இவருடைய உடன்பாட் டோடும், அங்குள்ள பூரீ கெல்லையப்பர் காந்திமதி தேவஸ் தானத்திலே, அம்மை சங்கிகியிலே உள்ள காந்திமதி விலாச மண்டபத்திலே இவர் பிரசங்கஞ் செய்வதாக யாவர்க்கும் அறிவித்து, தாமும் அங்குள்ள பிரபுக்களு மாக அன்று மாலையிலே, குடை கொடி ஆலவட்டமாகிய வரிசைகளோடும் மேளவாச்சிய கோஷத்தோடும் இவரை அழைத்துச் சென்று பிரசங்க பீடத்திலே அமரச்செய்து, மாலையிட்டு உபசரித்தனர். அப்பொழுது இவராற் சமய விஷயமாய் ஒரு நீண்ட பிரசங்கஞ் செய்யப்பட்டது. அப் பிரசங்கம் சபையிலிருந்த யாவரையும் குதூகலிக்கச் செய் தது. பிரசங்க முடிவில் அங்குள்ள பிரபுக்களால் இவ ருக்கு ஆயிரம் (1000) ரூபா சன்மானஞ் செய்யப்பட் டது. அஃதன்றியும், இவர் அங்கிருந்து பிரசங்கஞ் செய் யும் காலம்வரையும் தமது குறுக்குத்துறைச் சத்திரத்தி
லிருந்து மாதங்தோறும் இவர்செலவுக்குப் பணம்

Page 101
182 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
கொடுக்கும்படி, இவரை அழைத்துச்சென்ற தனவைசியப் புலவர்க ளிருவரது முயற்சியாலும் அங்ககாத் தனவைசி யப் பிரபுக்கள் கூடி நியமித்தனர்.
பின்பு இவர், மேற்குறித்த தேவஸ்தானத்திலே காந்திமதிவிலாச மண்டபத்திலே நாட்டுக்கோட்டைத் கனவைசியப் பிரபுக்களும் அவ்வூர்ப் பிரபுக்களும் விரும் பியவாறு, ஒருவருடகாலம் திருவாகவூார்புராண விரி வுரைப் பிரசங்கஞ் செய்துவந்தார். இவர் செய்துவந்த அப்பிரசங்கத்தைக் கேட்டுவந்த தனவைசியப்பிரபுக்க ளும் மற்றும் அவ்வூர் வேளாளப்பிரபுக்களும் மிக மகிழ்ந்து இவர்க்கு யாம் செய்யுங் கைமாறு யாதென ஆலோசிப்பாாாயினர். அக்காலத்திலே இவர் கிருநெல் வேலியிலே குறித்த தேவாலயத்தின் விகியிலே கிரு ஞானசம்பந்தசுவாமிகள்பேரினலே ஒரு மடம் ஸ்தாபித்து ஆண்டுதோறும் குருபூசை செய்யவேண்டும் என்னும் வேணவாவினலே உந்தப்பட்ட உள்ளமுடையவராகி, அக் கருத்தை அங்கிருக்கும் வேளாளப் பிரபுக்களுக்கும், காட்டுக்கோட்டைத் தனவைசியப் பிரபுக்களுக்குங் தாமே குறிப்பாகத் தெரிவித்து வந்த துமன்றித், தம் பிரசங்க 6ாட்களில் ஒருநாள் அங்கு அக்கிராசனத்தமர்ந்த இராம நாதபுரஞ் சேதுபதி மகாராசா அவர்களாலும் அச்சபை யிலே தெரிவித்தனர். பின் இவர் கருத்தைத் தெரிந்த பிரபுக்கள் யாவரும் அக்கருத்தை நிறைவேற்ற விரும்பி ஒருங்குசேர்ந்து தாமே பணஞ்சேர்த்து அவ்வாலயத்தின் வீதியிலே ஒரு கட்டிடம் அமைத்துக் கொடுத்தனர். இவர் அக் கட்டிடத்திலே கிருஞானசம்பந்தசுவாமிகள் திருவுருவைப் பிரகிட்டைசெய்வித்து, அப் பெருமா அணுக்கு நித்திய பூசையும் விசேஷ பூசைகளும் நடை பெறச் செய்து, அதற்குத் திருஞானசம்பந்த சுவாமி மடாலயம் எனப் பெயருமிட்டனர்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 183
சிலகாலங் கழித்து அம்மடாலயத்திலே பிரதிட்டை செய்த கிருஞானசம்பந்தசுவாமிகளுக்கு நித்திய பூசையும் விசேட பூசைகளும் நடத்துவதன் பொருட்டு நிபந்தமாக அந்தத் தலத்தின் கீழைவீகியிலே ஐந்துவிடுகளும் கல்லூர்க்கோடக நல்லூர் என்னுங் கிராமத்திலே நூற்று மூன்று குறுணிகொண்ட கெல்விளையத்தக்க வயல்களும் இவரால் வாங்கிவிடப்பட்டன. அம் மடாலயத்திலே கித் தியபூசைகள் முதலியன இன்றுங் தவறுது கடந்து வருகின்றன.
இன்னும் இவர் இந்தியாவிலுள்ள கூேடித்திர்ங்கள் பலவற்றையுந் தரிசிக்கச்சென்றபோது திருவாவடு துறைக்குஞ் சென்ருர் என்றும், சென்றபோது அங்குள்ள மடக்கிற்கும்போய் அப்போது அங்கே மகா சங்கிதானமா யிருந்த பூரீலறுரீ அம்பலவாண தேசிகரைச் சந்தித்தனர். என்றும், அவர் அப்போது இவர்பால் இலக்கண இலக் கியங்களிலும், சித்தாந்த சாஸ்திரங்களிலும் பல வினக். கள் தொடுத்து இவர் கல்வியறிவைப் பரிசோதித்து, இவர்க்கு நாவலர் என்னும் பட்டப் பெயரும் பட்டுப் பிதாம்பரம் ஒன்றும் அளித்துப் பெருமதிப்புச் செய் தனர் என்றுங் கூறுப. இவர் தரிசிக்கச்சென்ற தலங்களி லெல்லாம் பற்பல பிரசங்கங்கள் செய்துள்ளார்.
கண்டனூர், காளையார்கோயில், காரைக்குடி, தேவ கோட்டை, நாட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள தனவைசியப் பிரபுக்களே இவரைப் பெரிதுஞ் சன்மா னித்து வந்தனர்.
இவர் பெரியபுராணத்திலே அதிகம் பயிற்சியுடை யர். தேவகோட்டையிலுள்ள தனவைசியப் பிரபுக்க ளின் வேண்டுகோட்படி அங்கே இரண்டுவருட காலம்

Page 102
184 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
பெரியபுராணப் பிரசங்கஞ் செய்துள்ளார். பிரசங்க முடிபு தினத்தில் அங்குள்ள தனவைசியப் பிரபுக்களும் பிற ரும் இவரை யானைமீதேற்றி, வாத்திய கோஷத்தோடும் சகலவரிசைகளோடும் ஊர்வலஞ்செய்வித்து அன்அறு பன்னிராயிரம் (க2உooo) ரூபா சன்மானமாகக் கொடுத்த னர். இப் பிரசங்க சம்பவத்தின் விரிவு “பெரியபுராணப் பிரசங்க வைபவம்” என்னும் நூலிலே பாக்கக் கூறப் பட்டுள்ளது. ஆண்டுக் காண்க. இவர் பிற்காலத்திலே சிதம்பரத்திலும் ஒரு மடங் கட்டுவித்து அதற்கு ஆறு முகநாவல சந்தான ஞானசம்பந்த சுவாமி ஆதீனம் எனப் பெயரிட்டு, அதற்கும் வேண்டிய நிபந்தங்கள் செய்துள் ளார். பிற்காலத்திலே இவர் அங்கேயே வசித்திருந்தார்.
யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டையில் தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட சைவத்தமிழ்வித்தியாசாலையை ஆங் கில வித்தியாசாலையாக்கி, அதற்கோர் கட்டிடமும் மிகப் பெரிதாகப் பெரும்பொருள் செலவுசெய்து அமைத் துள்ளார். பிற்காலத்திலே அதற்கு முகாமைக்காரராக, இந்துக்கல்லூரிக்கு முகாமைக்காரராகவிருக்கும் இலங் கைப் பிரதிநிதித் தலைவர் பூரீமான் துரைசுவாமியவர் களையே நியமித்தனர்.
இவர் பரிசோதித்தும் இயற்றியும் அச்சிட்ட நூல் கள் வருமாறு :-
(க) பெளஷ்கரசங்கிதாபாஷியம், (உ) அகோரசிவா சார்யார் பத்தகி (கிர்மலமணி வியாக்கியானம்), (1) பிரம தருக்கஸ்தவம், (ச) திருவாகிரைத்திருநாள் மகிமைப் பிரபாவம், (டு) சற்குருமணிமாலை, (சு) வேணுவனலிங் கோற்பவம், (எ) அருணசலமான்மியம், (அ) சிவக் துரோக கண்டனம். .

ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம் 1S5
அச்சேருத நூல்கள் -
(க) பெரியபுராண பாடியம் (பாடியப் பிரகாசிகை யோடு), (உ) சித்தாந்தப் பிரபோதம், (B) தக்ஷாதர்சம், (#) சைவ சங்கியாச பத்ததி, (டு) ஆரிய கிராவிடப் பிா
காசிகை.
இப்பெருமை வாய்ந்த நாவலர் சிதம்பரத்திலே சென்ற ஆங்கிரசவூடு சித்திரைமீ" 23-ந் திகதி வியா
ழக்கிழமை தேகவியோகமடைந்தனர்.
பேரம்பலப் புலவர்
இவர் வேலணையென்னு மூரிலே வேளாண்குலத் கிலே கோணமலை என்பவரின் அருந்தவப் புதல்வ ாாகக் கிறீஸ்தாப்தம் 1859 - க்குச் சமமான இரெளத் கிரி வருடம் தைமாதம் உக-க் கிகதி வெள்ளிக்கிழமை பிறந்தார். பிறந்து வித்தியாரம்பஞ் செய்தபின் அவ் வூரிலுள்ள அமெரிக்கன்மிஷன் பாடசாலையிற் சென்று கல்வி கற்று வந்தார். கற்று வரும்போதே இவருக்குக் கல்வியில் மிகுந்த ஆசையுளதாயிற்று. அதனுல் வகுப் புப் படிப்பு முடிந்தபின்னும் அவ் வித்தியாசாலைத் தலைமை ஆசிரியர் கனகசபைப்பிள்ளை என்பவரிடஞ் சென்று தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று வந் தார். கனகசபைப்பிள்ளை இலக்கண இலக்கியங்களிற் சிறந்த புலமையுள்ளவர். அவரிடம் இவர் கற்றுவருங் காலத்திலேயே ஒரு அகராதியைப் பெற விரும்பி தம் முடன் ஒரு வகுப்பிற் கற்றவரும் சோதிடநூலில் வல் லவருமாகிய பூரீ சாந்தலிங்கம்பிள்ளை என்பவருக்கு ஒரு வெண்பாப் பாடியனுப்பினர். அதுவே இது.
24

Page 103
186 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சாந்தலிங்க மென்றிச் சகம்பழிச்ச வாழ்வுகூர் சாந்தலிங்க சோதிடருற் சாகரமே-ஒர்ந்தும் அகராதி தன்னை யனுப்புஞ் சிலசொற் றகவாக நானுணாத் தான்.
கனகசபைப்பிள்ளையிடம் சில ஆண்டு கற்றபின் இவர், அவ்வூரிலே இலக்கிய இலக்கணங்களிற் பேரறிவு படைத் தவரும் சைவசித்தாந்த சாகரமுமாய் விளங்கிய கந்தப் பிள்ளை என்பவரிடஞ் சென்று, உயரிய இலக்கண இலக் கிய நூல்களும் சந்தான சைவசித்தாந்த நூல்களும் படித்துணர்ந்தார். அவ்வூரிலே சோதிடக் களஞ்சிய மாய் விளங்கிய குமாரு என்பவரிடம் சோதிடமும் நன்கு கற்றறிந்தார்.
பின்னர் இவர் அவ்வூரிலேதானே கொத்தாரிசு முரு கேசு என்பவருக்கு லிகித ராய் அமர்ந்திருந்தார். லிகி தராயிருந்த காலத்தில் பல தனிநிலைக் கவிகளும் கை யறுநிலைச் செய்யுளும் பாடியுள்ளார். சிலவாண்டு கழித்து அந்த லிகிதர்த் தொழிலை விட்டுத் தமக்குரிய வேளாண் மைத் தொழிலையே செய்துகொண்டு வந்தார். கொழில் செய்யும் காலமொழிய மற்றைக் காலங்களில் மாணக்கர் சிலர்க்குப் படிப்பித்தும் நூல்களியற்றியும் வந்தார். இவரியற்றிய நூல்கள் வண்ணைச் சிலேடைவெண்பா, வேலணை இலங்தைக்காட்டுச் சிக்கிவிநாயகர் இரட்டை மணிமாலை, கடம்பரந்தாகி முதலியன.
இவற்றுள் முன்னுள்ள இரண்டு நூல்களும் இவர் சரிதமும் இவர் தேகவியோகமுற்றபின் இவர் தெள கித் திரரான பண்டிதர் பொ. இரத்தினம் என்பவரால் அச் சிடப்பட்டுப் பேரம்பலப் புலவர் நினைவுமலர்' என்னும் பெயரோடு இவரின் ஞாபகார்த்தமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன என்னய அச்சிடப்படவில்லை.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 187
இவருக்கு புதல்வர்களிருவரும் புதல்வியர்கள் மூவருமுளர். இவர் ஒருமுறை இப்போது தீவுப்பற்று மணியகாரனுயிருக்கும் பூரீமான் மு. சோமசுந்தாம்பிள்ளை J. P. அவர்களுக்கு ஒரு சீட்டுக்கவி பாடியனுப்பினர். பிள்ளையவர்கள் அதனை நோக்கிப் பெரிதுமகிழ்ந்து இவ ருக்குப் பொற்பரிசில் வழங்கினர்கள். இவரியற்றிய சித்திவிநாயகர் இரட்டைமணிமாலையையும் முகவில்
மணியகாரனவர்களே பதிப்பித்தார்கள். அதனை,
நலஞ்சேரும் வேலணை யூர் முத்து மண்ய நரேந்திான்சேய் புலஞ்சேருங் கல்வி கனஞ்சீலம் யாவும் பொருந்து மண்ணல் குலஞ்சேர் மணிய துாைசோம சுந்தாங் கூறமுன்னேன் பொலஞ்சே ரிாட்டை மணிமாலை யச்சிற் பொலிந்ததுவே.
இவரிடங் கற்றுப் புலமையடைந்தோர் இவர் மரு கர் வேலாயுதம்பிள்ளை, இவர் புதல்வர் கனகரத்தினம், இவருடைய தெளகித்திரர் பண்டிதர் பொ. இரத்தினம் ஆகியோர். இவரைச் சுன்னகம் வித்துவசிரோமணி அ. குமாரசுவாமிப் புலவரும் ‘கவிதை பாடும் புலவன்’ என வியந்து பாராட்டியுள்ளார்.
இப்புலவர் 1835-ம் ஆண்டுக்குச் சமமான யுவ வருடம் புரட்டாகிமாதம் கஅ-ந் திகதி நவராத்திரி பூஜா சம்ப தினத்தில் தேகவியோகமடைந்தார்.
இவர் பாடிய வண்ணைச் சிலேடை வெண்பாவி னுள்ளும், இலங்தைக்காட்டுச் சித்திவிநாயகர் இரட்டை மணிமாலையுள்ளும் பாடற்சுவையறிய ஒவ்வொரு செய் யுள் தருதும்.
வண்ணைச் சிலேடை வெண்பா
செந்திருவாழ் வீதியினுஞ் செய்செபத்தோர் நாவினுஞ்சீர் மந்திரங்க ளாருமெழில் வண்ணையே-சந்தமிகுஞ்

Page 104
88 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சார விருக்கார் தயையிலர்பா லெப்போதுஞ் சார விருக்கார் தலம்.
சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை தேசம் பரவும் புகழா ரிலங்தைத் திருவனத்தில் வாசஞ் செயுமொரு வன்கோட் டிருபத வாரணமே
நேசஞ்செ யன்பர்க் கியைபாச மோடெம னேர்க்தெறியும் பாசக் தனையு மறுத்தே யுயர் கதி பாலிக்குமே.
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்
இவர் பருக்கித் துறையைச் சேர்ந்த புலோலி என் னும் ஊரிலே ஸ்மார்த்தப் பிராமணகுலத்திலே சாலி வாகன சகாப்தம் ஆயிசத்தெழுநூற்றெழுபத்தைந்துக்கும் கிறீஸ்தாப்தம் 1853-க்கும் சமமான பிரமாதீச வருடம் ஆடிமாதம் ஐந்தாந்தேகி பிறந்தனர். இவர் தங்தையார் அக்காலத்திலே யாழ்ப்பாணத்தை யாண்ட பரராசசேகா மகாராசனுற் றமது அரசாங்க சோகிட கணிதராக இங் தியாவினின்றும் அழைக்கப்பட்டு வந்து குடியேறிய அந்தணரொருவரின் வம்ச பாாம்பரியத்தில் வந்தவராய் விளங்கிய சுப்பிரமணிய ஐயரின் முதற் புதல்வரும் தமிழ் சம்ஸ்கிருதமென்னும் இரு பாஷையினுஞ் சிறந்தவரு மாகிய மகாதேவ ஐயர். மகாதேவ ஐயர் புள்ளிருக்கும் வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன்கோயில் முத்துக் குமாரசுவாமியின் அநுக்கிரகத்தால் இவர் பிறந்தமையி னலே, அக்கடவுளின் பெயரையே இவருக்குப் பெயராக இட்டனர் என்ப. இவர் இளமைதொடங்கி நுண்ணறி வும் சாதுரிய புத்தியும் 5ற்குணமும் நல்லொழுக்கமு முடைய ராய் விளங்கினர்.
இவருடைய பிதாவாகிய மகாதேவ ஐயர் உரிய காலத்தில் இவருக்குத் தாமே குருவாகவிருந்து வித்தி

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 189
யாரம்பஞ் செய்து தாங் கற்பிக்கக்கூடியவற்றை யெல் லாங் கற்பித்தபின் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த விற்பத்தி உடையவராக்கக் கருதி இவரை அழைத்துச் சென்று வண்ணுர்பண்ணைச் சிவன்கோயில் அக்கிரகாரத்தில் இக் தியாவினின்றும் வந்திருந்தவருஞ் சிறந்த சம்ஸ்கிருத வித்துவானுமாகிய ஐயாத்துரை ஐயரிட மொப்பித்து இவருக்கு உயர்ந்த காவியங்களையும் வியாகரணம் முத லியவற்றையுங் கற்பிக்கும்படி வேண்டினர். அவருமதற் குடன்பட்டுச் சம்ஸ்கிருகத்திலுள்ள இரகுவம்சம், மாகம், குமாரசம்பவம் முதலிய காவியங்களையும், சித்தாந்தகெள முகி முதலிய வியாகரணங்களையுங் கற்பித்து வந்தது மன்றிப் பிராமணர்க்குரிய வைதிகக் கிரியைகளையுங் கற் பித்து வந்தனர். அவரிடம் இவற்றையெல்லாம் நுண்ணி தாகவும் விரைவாகவுங் கற்றுத்தேறிய இவருட்ைய சம்ஸ் கிருத விற்பத்தியை அறிந்த தங்தையார் தமிழிலு மிவ ரைச் சிறந்த விற்பத்தி உடையவராக்கக்கருதி, தமது ஊருக்கு ஆறு மைல் தூரத்திலுள்ள உடுப்பிட்டி என் னும் ஊரிலிருந்த சிவசம்புப் புலவரிட மிவரை அழைத் துச்சென்று தமிழில் இலக்கிய இலக்கணங்களைக் கற்பிக் பிக்கும்படி வேண்டினர். புலவரு மதற் குடன்பட்டனர். இவர் புலவரிடம் தமது ரினின்று மொவ்வொருநாளும் கடந்து சென்றே உயர்ந்த இலக்கிய இலக்கணங்களைக் கற்று வந்தனர். இவர் தமக்கு மழையாலும் வெயிலாலும் வரும் வருத்தத்தைப் பொருட்படுத்தாது ஒவ்வொரு 5ாளுஞ் சோர்வின்றிப் பன்னிரண்டு மைல் நடந்து சென்று படித்தமையே இவருக்குக் கல்வியிலிருந்த ஆர் வத்தின்பெருமையைப் புலப்படுத்தும். இவர், சிவசம்புப் புலவரிடம் பஞ்சலக்கணங்களையும், கந்தபுராணம், பெரிய புராணம் முதலிய புராணங்களையும், அந்தாகி, கோவை, கலம்பகம் முதலியவற்றையுங் கற்று அவற்றினும் பெரும் பாண்டித்தியமுடையராய் விளங்கினர். நல்லூர் வித்

Page 105
190 ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம்
துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையவர்களிடமு மிவர் சிலகாலஞ் சில நூல்களைக் கேட்டனர் என்ப. வேதாக மங்களிலு மிவர் சிறந்த பயிற்சியுடையவர். ஆரியம் திரா விடம் என்னும் இருமொழியிலும் வல்ல மகாபண்டிதராகி இவர் யாழ்ப்பாணக்கில் விளங்கினர்.
இவருக்குத் தங்கையார் பதினெட்டாம் வயதிலே விவாகஞ் செய்துவைத்தனர். பின் ஆசாரியாபிடேகமுஞ் செய்து வைத்தார். அதனல் இவர் தாம் ஆசாரியராக விருந்து ஆலயக் கிரியை முதலியவற்றைச் செய்தற்கு வேண்டிய பத்தகிகளைத் தேடிப் படித்துக்கொண்டார். பத்ததிகளையேயன்றி ஆகமங்கள் சிலவற்றையுஞ் சந்தான சைவசித்தாந்த சாத்திரங்களையுந் தேடிப்பெற்று வல்லோ ரிடங் கேட்டுணர்ந்து அவற்றினுங் தேர்ச்சியுடையாாய் விளங்கினர். இவர் தமது சீவியத்தின் பொருட்டுச் சில காலம் புலோலிப் பசுபதீசுரன் கோயிலுக்கு அருச்சக
ராகவும் ஆசாரியராகவு மிருந்தார்.
இவரது கல்வியின் மேன்மையையறிந்த அயலூரி லுள்ள பிராமணர்கள் தம் பிள்ளைகளை அழைத்துவந்து அவர்களுக்குச் சம்ஸ்கிருதமுங் கமிழும் கற்பிக்கும்படி இவரை வேண்டினர். இவர் உடன்பட்டு இருமொழி யினுஞ் சிறந்த நூல்களைக் கற்பித்து வந்தனர். இவரிடங் கற்கும் மாணவர் இருமொழியினுஞ் சிறந்த அறிவுபெற்று வருதலைக்கண்ட தூரமான ஊரிலுள்ள பிராமணர்களும் தம்பிள்ளைகளை அழைத்துச்சென்று இவரிடமொப்பித்து அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும்படி வேண்டினர். அதனு லிவர் கோயி லருச்சகத்கொழிலை விட்டுக் கல்வி கற்பிக் குங் தொழிலையே மேற்கொண்டனர். மந்திரங்களின் பொருளை நன்குணர்ந்து கிரியைசெய்யும் மேன்மை பூண் டவராயிருந்த்மையினும் நமது அருச்சகத் தொழிலை

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 191
விட்டாலும் ஆசாரியத்தொழிலை விட முடியாதவராயிருக் தார். இவரது கிரியா மேன்மையினையறிந்து தூரதேசத் தவர்களும் இவரை ஆலயக்கிரியை முதலியவற்றைச் செய் வித்தற்பொருட்டு அழைப்பாராயினர். இவர் கொழும்பு, மட்டக்களப்பு, கிரிகோணமலை முதலிய இடங்களிற் சென்று அங்குள்ள சைவ ஆலயங்களிற் சம்புரோட்ச ணம் பிரதிட்டை மகோற்சவம் முதலியவற்றைச் சைவா கம முறை வழுவாது நடத்திப் பெரும்புகழ் பெற்றனர். சைவக் கிரியைகளையேயன்றி வைதீகக் கிரியைகளையும் பொருளுணர்ச்சியோடு செய்தலில் வல்லவராய் விளங்கி னர். அதனுற் பிராமணர்க்குரிய கிரியைகளையும் அவர் களுக்கு உபாத்தியாயராயிருந்து செய்விப்பார்.
இவர் பசுபதீசுசன்மேல் ஒரந்தாகியும். சிவபெரு மான் அலங்காரம் என்னும் ஒரு தோத்திரப் பாமாலை. யும் தனிச்செய்யுள் பலவும் பாடியுள்ளார். தென்கோவை பண்டிதர் ச. கந்தையபிள்ளை அவர்கள் நடாத்திய விக் தகம்’ என்னும் பத்திரிகைக்கு வழங்கிய வாழ்த்துப்பா ஒன்றை இவர் பாடிய தனிச்செய்யுளுக்கு உதாரணமாக இங்கே தருதும். அது வருமாறு :
இத்தகைய வித்தகமாம் பத்திரிகை
இத்தலத்தே இனிதுவாழி
சித்தமகிழ் வுடனிதனை யாதரிப்போர்
சிவனருள் பெற்றினிது வாழி
வித்தகனம் புதுவை சந்தி யுயாருளால் விமலநெறி விளங்குசைவ
முத்திநிலை முறைவிளக்கு முதன்மைபெறு
மாசிரியர் வாழிவாழி.
என்பதாம்.
இவர் தேகவியோகமாவதற்கு காற்பத்தெட்டு வ்ரு டங்களுக்குமுன் திருக்கணித பஞ்சாங்கம் ஆரம்பமான

Page 106
192 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
காலத்திலே திருக்கணிதமோ வாக்கியமோ சுத்தமான கணிதமென நிச்சயிக்கும்படி கூட்டிய சபையில் வாக் கியமே சுத்தமான கணிதமென நியாயங்காட்டிப் பேசியவ ருள் இவரும் ஒருவர் என்பர். அதனுல் இவர் தங் குருபரம்பரைக் கல்வியாயுள்ள சோதிட கணித சாத் திரத்திலும் வல்லவராயிருந்தா ரென்பது அறியத்தகும். ஆசௌசங்களிலும் விரதநிர்ணயங்களிலும் வேறு சாஸ் திர சம்பந்தமான எக்காரியங்களிலும் ஆசங்கைகள் எழுந்த காலத்தில் அவற்றைத் தீர்த்துக்கொள்ளும்படி தேர்ந்தெடுக்கப்படுஞ் சாத்திர விற்பன்னர்களுள் இவரே சிறந்தவராக விளங்கினர். ஆலய மடாலயங்களிற் புராண படனம் நடக்குங் காலங்களிலே விசேட படிப்புக்குப் பற்பல ஊரிலுள்ளோர் இவரை அழைத்துச் செல்வர். இவர் பொருள் சொல்லுங்காற் சபையிலிருந்து கேட் போர் இன்புறும்படி விரிவாகவுங் தெளிவாகவுஞ் சொல் வர். புராணபடன காலத்தே யாமும் விசேட படிப் புக்குச் செல்வது வழக்கம். ஒருமுறை மயிலிட்டிபி லுள்ள கோயிலொன்றில் வள்ளியம்மை திருமணப் படலப் படிப்புக்கு யாஞ் சென்றிருந்தபோது இவரும் அங்கே அழைக்கப்பட்டு வந்திருந்தனர். அப்பொழுது இவர் சொல்லிய பொருளழகையுஞ் சொல்லழகையும் யாம் நேரே பார்த்து மகிழ்ந்துள்ளேம். அக்காலத்திலே சபையிலிருந்து கேட்போர் மகிழுமாறு பொருள் சொல் வதிலே மதிப்படைந்து விளங்கிய வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை அவர்களுக்கு அடுத்தவராக இவர் மகிக்கப்பெற்று விளங்கினர். புராணங்களுக்குப் பொருள் சொல்லுவதன்றிப் பிரசங்கங்கள் செய்வதிலும் இவர் சிறந்தவராக விளங்கினர். பற்பல ஊரிலுள்ள வித்தியாசாலைகளிலும் திருமடங்களிலும் இவர் சென்று பிரசங்கஞ் செய்துள்ளனர். இவருக்கு இரு புத்திரிகள் பிறந்தபின், மீனவியாரிறக்கப் பின்னரும் ஒரு பெண்ண்ை

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 193
விவாகஞ் செய்தனர். முதன் மனைவியாரிடத்துப் பிறந்த புதல்வியருள் மூத்த புதல்வியைத் திருக்கோணமலை வாச ரும் தமது மாணவருமாகிய இராமலிங்கக் குருக்களுக்கு விவாகஞ்செய்து கொடுத்தனர். இளைய புதல்வியைத் தமது சகோதரிபுதல்வரும், மானுக்கரும், வாக்கிய பஞ் சாங்க கணிதரும், கந்தபுராணத்தின் முதன் மூன்று காண்டங்களுக்கு உரை எழுதியவரும், வேறுஞ் சில நூல்களுக்கு ஆசிரியராக விளங்குபவருமாகிய சுப்பிர மணிய சாஸ்கிரிகளுக்கு விவாகஞ் செய்து கொடுத்தனர்.
இரண்டாவதாக விவாகஞ் செய்த மனைவியாரிடத்தில் இவருக்கு ஒரு புதல்வன் பிறந்தனன். பிறந்து சின்னுளில் அம்மனைவியாரும், புதல்வனும் ஒவ்வொருவராகத் தேக வியோகமெய்தினர். அதன்பின்னர் தமது மாணவருள் ஒருவராகிய காசிநாத சர்மாவைச் சுவீகார புத்திரராகக் கொண்டு தமகில்லத்திருத்திக் கற்பித்து அவருக்கு விவ கமுஞ் செய்துவைத்தனர்.
இவ்வாறக வாழ்ந்து இவர் எண்பத்துமூன்றுவது வயசிலே கிறீஸ்தாப்தம் 1936-க்குச் சமமான யுவ வரு டம் மாசிமாதம் இருபதாந்தேதி ஏகாதசித் திதியில் கற்ருேரும் மற்றேரும் துயருற இவ்வுலக வாழ்வை யொருவினர். இவரியற்றிய சிவபெருமான் அலங்காரத் துள் ஒரு செய்யுள் காட்டுதும்:
போங்காணு மிவ்வுயிர் போனபி னிந்தப் புலையுடலம் வேங்காணுந் தீயினில் வெண்பலியாக வெறும்பெரும்பொய்
யாங்காணு மிந்தப் புாைவாழ்வு போத வகமகிழ்ந்து நாங்காணு நங்கள் பெருமானைப் பாடுது நாடுதுமே."
பசுபதீசுரர் அந்தாகியுள்ளும் ஒரு செய்யுள் காட்
டுதும் :
25

Page 107
194 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
என்னே யுரைப்ப தெழிலார் புலோலியி னெம்பெருமான் பொன்னே ருருவப் பசுபதி யாாருள் போலுமிவ டன்னேர் முகங்கண்டு தாமரை நாணித் தடம்புனல்சார்ந் தெங்கோ முந்தவ மாற்றியு நேரெழி லேற்றிலதே."
இன்னும் இவர் சாவகச்சேரி ச. பொன்னம்பல பிள்ளை அவர்களியற்றிய இராமநாத மான்மியத்துக் களித்த சிறப்புக்கவியுளொன்றையும் இங்கே தருதும் :
* கருதுபெருஞ் செல்வமின மாயுள்செயல்
கல்வியெனக் கழறு மைந்துட் பொருவரிய வொவ்வொன்று மேலதிக
மதிப்பாகப் புகலு நூல்கள் திருவளரு மிரா ம5ா தக்குரிசிற்
கிவையைக் துஞ் சிறந்த வென்முல் ஒருவரிவர்க் கினையென்றிங் கோதரிதா லுண்மைதெரிந் துணருங் காலே "
சுவாமிநாத பண்டிதர்
இவர் யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணையைச்சார்ந்த கந்தர்மடமென்னுமூரிலே வேளாளர்குலத்திலே சின்னத் தம்பி என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். பிறந்து வளர்ந்துவருங் காலத்திலே வித்தியாரம்பஞ் செய்யப் பெற்று அவ்வூர் வித்தியாசாலை ஒன்றிலே தமிழ்க்கல்வி பயின்று வந்தார். வருங்காலத்திலே இலக்கண இலிக்கியங் கற்க விரும்பி, வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவ்வூரிலுள்ள ஆறுமுகம் சிவகுருநாதபிள்ளைக்கு அவ ரில்லத்திலே வந்து இலக்கிய இலக்கணங்களைக் கற்பிப் பதை யறிந்து, இவரும் அங்குச்சென்று சிவகுருகாத பிள்ளை பாடங் கேட்கும்போது தாமுங் கூடவிருந்து கேட்டறிந்தனர். சிவகுருநாதபிள்ளையிலு மிவர் விவேகியா யிருந்தமையினல் இலக்கிய இலக்கணங்களில் அவரினுஞ் சிறந்த அறிவு பெற்றனர். இனிய கண்ட சாரீரமுடை

Y.
ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 195
யவாா யிருந்தமையினலே, பொன்னம்பலப்பிள்ளை தாம் புராணுதிகளுக்குப் பொருள் சொல்லுமாறு ஆலய மடா லயங்களுக்குப் பிறரால் அழைக்கப்பட்டுச் செல்லுங்கால், அவற்றைப் படித்தற்பொருட்டுத் தம்முட னிவரையும் அழைத்துச்செல்வர். அப்டொழுது பொன்னம்பலப்பிள்ளை சொல்லும் சொன்னயம் பொருணயங்களையும் விரிவுரை களையுங் கேட்டு அதனனும் மிகுந்த அறிவுபெற்றமையே யன்றி, அவர்போலத் தாமும் கயமுறப் புராணுகிக ளுக்குப் பொருள்சொல்லு மழகையும் பயிற்சியையும் பெற்றுக்கொண்டார். ஒருமுறை காலியிலிருந்து வியா பாரஞ்செய்த நாட்டுக்கோட்டைத் தனவைசியர்களுட் சிலர், அங்குள்ள சிவன்கோயிலிலே பெரியபுராண பட னஞ் செய்தற்கு விரும்பி கல்லூருக்கு வந்து அக்கருத் தைப் பொன்னம்பலப்பிள்ளை அவர்களுக்குத் தெரிவித்து அவர்களை வரும்படி வேண்ட, அவர்கள் தமக்குச் சமய மில்லையென மறுத்துத் தமக்குப் பதிலாக இவரையே யனுப்பினர். இவர் அங்குச்சென்று அப்படனத்தைத் தனவைசியர்கள் மகிழுமாறு செய்து முடித்து அவர்கள் மதிப்பும் பொருளும் பெற்று மீண்டனர். பின்னர் இங் தியாவிலுள்ள தேவகோட்டை, காட்டுக்கோட்டை முத விய இடங்களுக்குச்சென்று அங்குள்ள தனவைசியர்கள் வேண்டுகோட்படி புராண படனதிகள் செய்து, அதனல் அங்குள்ள தனவைசியர்களோடு அதிக பரிசயமுடைய சாய் அவர்களுடைய மதிப்பையும் பொருளையும்பெற்று, அங்கிருந்து அத் தனவைசியர்களுடைய பிள்ளைகளுக்கும் பிறருக்கும் இலக்கிய இலக்கணங்களுஞ் சமயபாடங்களும் கற்பித்து வந்தார். அங்கிருந்தகாலத்திலே சென்னை, சிதம் பாங், திருச்செந்தூர் முதலிய ஊர்களுக்கெல்லாஞ் சென்று அவ்வவ்விடங்களிலுஞ் சிற்சிலகாலம் வசித்து அங்குள்ள வித்துவான்களோடு பரிசயமுடையராயினர்.
அன்றியும், கிருவாவடுதுறை முதலிய ஆதீனங்களிலுஞ்

Page 108
196 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சென்று அங்குள்ள ஆதீனகர்த்தர்களோடும் பரிசய முடையாாயும் விளங்கினர். இவருடைய அதிககால வாசம் இந்தியாவிலேயேயாயிற்று. இவர் சிதம்பரத்தி லிருக்குங் காலத்திலே சபாபதி நாவலரிடமிருந்த சிவ ஞானபாடியத்திற் சிலபாகங்களை ஒருவாறு பெற்று அப் பாகங்களை யச்சிட்டு வெளிப்படுக்கியுள்ளார். சென்னை யிலே ஒரு அச்சியங்கிரசாலையுங் காபித்துவைத்திருங் தார். அவ்வச்சியந்திரசாலையிலேயே அப்பாடியத்தை அச்சிட்டார். மூவர் தேவாரத்தையும் பல எட்டுப் பிர கிகளோடு ஒப்புநோக்கிப் பரிசோதித்துச் சுத்த பாட மாக அச்சிட்டு வெளிப்படுத்தினர். திருக்கோவையா ருண்மை என்னும் அரியநூலும் இவராலேயே அச் சிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கிருச்செந்தூரில் ஒரு வித்தியாசாலையையுந் தாமே தாபித்துச் சிலகாலம் நடத்திவந்தார். தென்னிந்தியாவிலேயுள்ள பல ஊர்களி லுஞ் சென்று சைவப் பிரசங்கங்களுஞ் செய்துவந்தனர். கவிகள் இயற்றவும்பயின்றுள்ளார். சைவசமயப்பற்று மிக வுடையவர். பகைவருக் கஞ்சா வியல்புடையவர். புலோ விக் கதிரவேற்பிள்ளையோடும் மிகுந்த நண்புடையவர். அருட்பா மறுப்பு வழக்கு நடந்த காலத்திலே அவ ருக்கு மிகுந்த துணைவரா யிருந்தார். வித்துவ சிரோமணி சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் மிகுந்த பற்றுடையவராக இருந்தார். அவர் துணையை மிகவும் பெற்றுள்ளவர். இத்தகைய இவர் கிறீஸ்தாப் தம் 1937-ல் தேகவியோகமாயினர். இவரியற்றிய சிறப் புக்கவியொன்றை இங்கே தருதும் :-
திராவிடப்பிரகாசிகை
திராவிடசன் னுரன்மாண்பு தேருருங் தேறத் திராவிடப்ா காசிகையைச் செம்மை-விராவிடச்செய் தீக்கான் சபாபதியென் றேயிசைக்கு நாவலன் முன் மீந்தேன் ம்மிழருமை தேர்ந்து.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 197
செவ்வந்திநாத தேசிகர்
இவர் கரணவாய் என்னுமூரிலே பரம்பரையாக வந்த சைவகுருமாபிலே திருஞானசம்பந்த தேசிகருக்குப் புதல்வராகக் கிறீஸ்தாப்தம் 1907-க்குச் சமமான பிலவங்க வருடம் ஆனி மாதம் உB-ந் திகதி ஞாயிற்றுக்கிழமை பிறந்தார். இவர் பிறந்து இரண்டாமாண்டிலே தந்தையார் தேகவிபோகமடைய, இவரது சிறியதந்தையாராகிய நமசி வாயதேசிகரே இவரையும் இவருடைய தமையனுராகிய கயிலாயநாததேசிகரைபும் தமது இருகண்கள்போலக் கொண்டு வளர்த்துவந்தார். வளர்த்து வந்ததேயன்றி இரு வருக்கும் சம்ஸ்கிருதங் தமிழ் என்னும் இருமொழிக் கல்வி யையுங் தாமே கற்பித்தும் வந்தார். வருங்காலத்தே கிரி பாஷா விற்பன்னரும் ஆரிய கிராவிட பாஷாபிவிருத்திச் சங்க ஸ்தாபகரும் விக்கியாகரிசியுமாகிய பிரமறுரீ கி. சதாசிவஐயர் அவர்களால் சுன்னகத்திலே பிராசீன பாடசாலை தொடங்கப்பட்டு நடைபெறுவதையறிந்து, இவரையும் இவரது தமையனுரையும் அழைக்திக் கொண்டுவந்து அவ்வித்தியாசாலையிற் படிக்கும்படி சேர்த்து வேண்டிய பொருளுதவியைபுக் காமே செய்து வந்தார். இவரும் தமையனரும் என்னிடத்தே தமிழும் வேதவிசாரதர் பிரமயூரீ வி. சிதம்பரசாஸ்திரிகளிடத்திற் சம்ஸ்கிருதமும் முறையாகக் கற்றுப் பிரவேச பாலபண் டித பண்டித பரிசைஷ்களிற் சித்தியெய்தினுர்கள். சித்தி யெய்கியதோடமையாது பின்னும் இவர் இருமொழியி னும் பல நூல்களை ஆராய்ந்து கற்றுவந்தார். என்னி டஞ் சில சித்தாந்த நூல்களுங் கேட்டறிந்தார். இளமை யிலேயே இவருக்குப் பாடுஞ்சக்தியு முண்டாயது.
இவர் வித்தியாசாலையைவிட்டு ஊரிலிருக்குங் காலத் கே மாவைக் கந்தசுவாமிபேரில் மும்மணிமாலைப் பிர

Page 109
198 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
பந்தமொன்று இயற்றியுள்ளார். அஃது 1932-ல் அச் சிடப்பட்டுள்ளது. பின்னர், நல்லூர்க் கந்தசுவாமிபேரில் ஒரு கோவையும் பாடி முடித்துள்ளார். அஃது இன்னும் அச்சிடப்படவில்லை. அவ்விரு நூலுள்ளும் ஒவ்வொரு செய்யுள் காட்டுதும் :-
மாவை மும்மணிமாலை
வெண்பா
மட்டியலுங் கோ கனக மாமலரோன் சென்னிமிசைக் குட்டியநன் மாவையுறுங் கொற்றவனைச்-கட்டியவெம் பாசவினை நீத்தவன்பொற் பாதமலர் சென்று றுவா னேசமுட னெஞ்சே நினை.
நல்லைக்கோவை
இயற்கைப்புணர்ச்சி இரந்து பின்னிற்றற்கெண்ணல், விடமன்ன நாட்டக் குறமகள் கேள்வன் விசும்புலவுங் தடமன்ன வாறிரு தோணல்லை வாணன் றனிவாைவாய்ப்
படமன்ன வல்குற் றளவென் ன லாக் நகைப் பான்மொழிபொற் குடமன்ன கொங்கைகண் மேவுது மம்ம குறையிாந்தே.
இன்னும் தம்மூரிலே தமிழ்விருத்தியின்பொருட்டு வித்தியாபிவிருத்திச் சங்கமென்னும் பெயரோடு ஒரு சங்க நிறீஇ அதன்மூலமாக ஒருவித்தியாசாலையையுங் தாபித்து அதற்குத் தமது தமையனரையே அதிப ராக்கிச் சங்கத்தையும் விக்கியாசாலையையுங் தளர்வின்றி நடத்திவந்தார். வித்தியாசாலையை அரசினர் நன்கொடை பெறவு மாக்கினர். அவ்வித்தியாசாலையில் மாதங்தோறும் பிரசங்கங்களும் செய்துவந்தார். அவ்வூரிலும் பிறவூரிலு மாகப் பிறார்ல் அழைக்கப்பட்டுச் சென்று பிரசித்தமான

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 199
பெருஞ்சபைகளிலும் சமயவிஷயமாகவும் வேறுவிஷய மாகவும் பிரசங்கங்கள் செய்தார். தம்மூரிலே சில மாண வர்க்கு இலக்கண இலக்கியங்கள் கற்பித்துப் பண்டித பரிக்ஷையிலுஞ் சித்தியெய்த வைத்தார். தமிழ்மொழி யாராய்ச்சி என ஒரு நூலும் உரைநடையில் இயற்றினர். இளமைதொடங்கி அதி ஞாபகசக்தியும் விவேகமும் வாய்ந்தவர். இத்தகைய இவர் ஈசுர வருடம் ஆவணி மாதம் கா-ங் திகதி புதன்கிழமை இரவு தமது முப்பத் தொராம் வயசின் தொடக்கத்திலே கற்ருேரும் மற்ருே? ருந் துயருறத் தேசவியோகமடைந்தார். இவர் நீண்ட ஆயுளுக்கு இருக்கப்பெறின் தமிழ்த்தொண்டு செய்த புலவர்களுள் இவரும் ஒருவராவர் என்பதிற் சங்தேகமே யில்லை. -
இவரேயன்றி இவருடைய தந்தையாரும், சிறிய தந்தையாராகிய நமசிவாயதேசிகரும் இருமொழியி இனும் வல்ல புலவர்களாயிருந்தார்கள். இருவரும் தமிழ் இலக் கண இலக்கியங்களைச் சிவசம்புப்புலவரிடங் கற்றவர்கள். கவிபாடும் வன்மையுமுடையவர்கள். இவருடைய தந்தை யார் வேதாரணியேசுவரர்மேல் ஒரு கோவைபாடத் தொ டங்கி அது முற்றமுன் தேகவியோகமடைந்தார். அகிற் செய்யுள்கள் அறுபதுவரையில் பாடப்பட்டுள்ளன. அவற்
அறுள்ளும் ஒன்று காட்டுதும் :-
இரந்து பின்னிற்றற்கெண்ணல் விந்தம் பிலம்புக விட்டோன் வணங்க விரிகடுக்கைக் கந்தம் பொலிசடை யானுறை யாாணக் கானனநேர்
சந்தம் பொலியணங் கிற்குரைத் தாசை தகமுயலி னுந்தம் பொனர் சரு சொற்கம் பெறுது முவகையொடே.

Page 110
200 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
த. கைலாசபிள்ளை
இவர் இற்றைக்கு எண்பத்தினன்கு ஆண்டுகளுக்கு முன்னே நல்லூரிலே கார்காத்த வேளாண்குலத்திலே ஞானப்பிரகாசர் மரபிலே தம்பு என்பவரின் அருந்தவப் புதல்வராகப் பிறந்தார். பிறந்து வித்தியாரம்பஞ் செய்க பின் தமக்கிளைய கந்தையாராக விளங்கிய ஆறுமுக நாவலரால் வண்ணுர்பண்ணையிலே தாபிக்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையிலே சென்று படித்தார். அப் போது அவ்வித்தியாசாலைக்கு ஆசிரியராயிருந்து கற்பித் தவர்களுட் செந்திநாதையருமொருவர். அவரிடத்திலே இவர் கற்றுவந்தார். செந்திநாதையர் வித்தியாசாலையை விட்டு இந்தியாவுக்குச் சென்றபின், இவர் மட்டுவில் உரையாசிரியர் க.வேற்பிள்ளையிடம் இலக்கண இலக்கி யங்களைக் கற்றுவந்தார். பின் ஆறுமுகநாவலரிடத்துங் கற்ருரர். கற்றுவருங்காலத்தே சித்தாந்த சாத்திரங்களையு மவரிடங் கேட்டறிந்தார். தமிழேயன்றி ஆங்கிலமுஞ் சம்ஸ்கிருதமும் கன்கு கன்றறிந்தவர். ஆகமங்களுக் தெரிந்தவர். சில உபநிஷதங்களுங் தெரிந்தவர். நல் லொழுக்கமுஞ் சைவாசாரமும் சிவபத்தியுமுடையவர். சமய விசேட நிருவாண தீட்சைகளும் பெற்றுச் சிவ பூ  ைச யும் எழுந்தருளப்பண்ணிக்கொண்டவர். சிவ பூசையை அதிக அன்போடுங் கிரமத்தோடுஞ் செய்து வந்தவர். சிதம்பரம் முதலிய பல தலங்களுக்குச் சென்று சிவதரிசனஞ் செய்தவர். பிதிரார்ச்சிதமான பொருளு முடையவர். பிரபு திலகராய் விளங்கிய பசுபதிச் செட் டியாருடைய கங்கையை விவாகஞ் செய்தவர்.
சைவபரிபாலன சபையாரால் நடாத்தப்பட்டுவரும் ‘இந்துசாதனப் பத்திரிகைக்குத் தொடக்கத்திலே ஆசிரிய ராகவிருந்து சிலகாலம் நடாத்திவந்தவர். அப்போது

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 201
அப்பத்திரிகையிற் சைவசமய மாண்பும் பரசமய கண் டனமுமாகப் பல அரிய விஷயங்கள் எழுதினவர். சிவ ஞானசித்தியார் என்னும் நூலின் சுபக்கத்தைப் பல எட்டுச்சுவடிகளோடு ஒப்புநோக்கி ஆராய்ந்து கிருத்தி அச்சிட்டு வெளிப்படுத்தியவர். பாலர்கள் படித்தற்கேற்ற வாறு சில பாடபுத்தகங்களு மெழுதியவர். இவருடைய வசன நடை காவலருடைய வசன கடையைப் படியெடுத் ததுபோல எளிதுக் தெளிவுமுடையதாயிருக்கும். வசன நடை எழுதுவோர்க்குதவியாக ஒரு வசன இலக்கண நூல் எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தியவர். பின்னல் விரிவாக வும் ஒரு வசன இலக்கண நூல் எழுதியதாகவுமறிகிமுேம், அஃது அச்சிடப்பட்டு வெளிவரவில்லை,
இவரும் நாவலரைப்போலவே சைவ்ாபிமானம் பூண்டு சைவசமயத்தை வளர்த்து வந்தவர். உலகிற்குப் பயன்படும்படி தெளிவான வசனநடையில் இலெளகீக சம்பந்தமாகவும் சமய சம்பந்தமாகவும் காலங்கோறும் விஷயங்களெழுதிச் சிறுச்சிறு சுவடிகளாக அச்சிட்டு வெளிப்படுத்தி வந்தவர். வண்ணுர்பண்ணையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு வித்துவசிரோமணி ச. பொன்னம்பலப்பிள்ளைக்குப் பின்னே இவரே அதிப ாானுர். தாம் அதிபராயபின்பு அவ்வித்தியாசாலையின் பொருட்டுப் புதிதுஞ் சிறப்புமாக வேருெரு கட்டிடத்தை அமைத்துக் கற்போரை அகிற் பிரவேசிப்பித்துச் சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவரை அதற்குத் தலைமை ஆசிரியராக வைத்து நடாத்தி அவ்வித்தியா சாலையை உன்னதங்லை பெறச்செய்தவர். மாணவர்களுக் குச் சம்ஸ்கிருதத்திலும், தமிழிலு முயர்ந்த நூல்களைக் கற்பித்தற்பொருட்டு, அவ்வித்தியாசாலையின் ஒரு பக் கத்திலே காவிய பாடசாலை ஒன்றைத் தாபித்து நடாத்கி அரசினருதவியும் பெறச்செய்தவர். இன்னும் அவ்வித்
26

Page 111
8 . . . ܘ ܐ ↓ i 8 s 202 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
தியாசாலையையே இடமாகக் கொண்டு, தமிழ்ச் சங்க மொன்றையுந் தாபித்து நடத்திவந்தவர். அப்போது அதற்கு அங்கத்தவராயிருந்தவர்கள் : சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர், புலோலி வ. குமாரசுவாமிப்புல வர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, மாதகல் சு. எாம்பையர், மாதகல் அ. அருணசல ஐயர், நீர்வேலி ச. சிவப்பிரகாசபண்டிதர், ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர் முதலாயினேர். இச்சங்கம் இப்பொழுது மதுரை யில் நடக்குஞ் சங்கத்துக்குமுன் தொடங்கப்பட்டு {256ნმ)t_ - பெற்றது. இவருக்குக் கடிதமொன்றெழுகி இச்சங்க முறையை அறிந்தே பூரீமான் பாண்டித்துரைத்தேவர்
அச்சங்க முறையை அமைத்தனர்.
இன்னும் இவ்வித்தியாசாலையிலே சமய வளர்ச்சி யின் பொருட்டுச் சித்தாந்த சபையொன்றையுந் தாபித்துக் காலங்தோறுஞ் சைவப் பிரசங்கங்கள் நடைபெறச் செய் தார். அப்போது அச்சபைக்குக் காரியதரிசியாயிருந்து கடத்திவந்தவர், தாவடி பண்டிதர் ஆ. மு. சோமாஸ் கந்தபிள்ளை என்பவர். 'வித்தியாசாலையின் பிற்பக்கமாக, அச்சியங்கிாசாலை யொன்றையும் ஸ்தாபித்து வைத்திருங் தவர். இவர் காவலரிடத்திலே மிகுந்த பக்தியு மபிமானமு முடையவர். அவரையே குருவாகக் கொண்டு ஒழுகி வந்தார். காவலர் கலாசாலையின் பக்கத்தே ஒரு ஆலயங் கட்டுவித்து அதிலே சமய குரவர்களுடைய விக்கிரகங் களையும் சேக்கிழார் சுவாமி விக்கிரகத்தையும் பிரதிட்டை செய்ததுமன்றி, நாவலருருவச் சிலையையும் பிரதிட்டை செய்து கித்தியபூசை நடைபெறச் செய்து, கித்திய பூசையின்பொருட்டு நிபந்தங்களு மமைத்து வைத்த வர். யாழ்ப்பாணத்திலுள்ள காவலர்வித்தியாவிருக்கித் தருமங்களை நன்கு பரிபாலனம் பண்ணினவர். தமது

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 203
இறுகிக்காலம்வரையும் கல்வி விருத்தியிலேயே கண் லுங் கருத்துமாயிருந்தவர்.
யாழ்ப்பாணத்திலே காவலருக்குப்பின் தமிழ்க் கல்வியிலும், சைவசமயத்திலும் உண்மை யபிமானம் பூண்டு அவற்றின்பொருட்டுத் தமதாயுட்காலத்தை அர்ப் பணஞ் செய்தவரிவரே யென்பது ஒருபோதும் மிகை யாகாது. காவலருக்குப்பின் மறைகணிக்தனை சைவ நிக் தனை ஏற்பட்டகாலந்தோறும் அவற்றைப் பொருமன முடையவராய் அங்கிந்தனைகளை மறுத்துப் பற்பல கண் டனங்களெழுதி எதிர்த்துப் போராடினவரு மிவரே. உண்மைப் புலவர்களையன்றிப் போலிப் புலவர்களை முக நோக்கியு மறியாதவரு மிவரே. முகநோக்கிப் பொய்யான காரியங்களைச் செய்தற்கு உடன்படாதவரு மிவரே. காலங்தோறும் புதிது புதிதாகத் தோன்றும் நாகரீகங் களி லிடுபட்டு அவற்றின்பொருட்டுப் பழைய பழக்க வழக்கங்களைக் கைவிடாது ஒழுகினவரு மிவரே.
இத்தகைய இவர் வெகுகானிய வருடம் ம்ாசிமாதம் கஉ-ந் திகதி கற்ருேரும் மற்முேருங் அன்புறத் தமது உலகவாழ்வை ஒருவினர். s

Page 112

அனுபந்தம்
ஞானப்பிரகாசர்
இவர் யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய முந்நூற்றிரு பது வருடங்களுக்கு முன்னே திருநெல்வேலி என்னு மூரிலே சைவாசாரம் பொருங்கிய வேளாளர் குலத்திற் பிறந்தனர். ஆறுமுகநாவலர் இவர் வழித் தோன் றல் ஆவர். இவர் சீவகாருண்ணியமும் தரும சிங்கையு முள்ளவர். குடிகளாகிய ஒவ்வொருவரும் முறை முறை யாக ஒவ்வொரு பசு அரசாங்கத்துக்கு உணவின் பொருட்டுக் கொடுத்தல்வேண்டும் என்னும் பறங்கி யா சாங்கக்கட்டளைக்கு அஞ்சி, இந்தியாவிற்குச்சென்று, சிதம்பரத்திற்றங்கிச் சிவகாமசுந்தரியை உபாசனைசெய்து அநுக்கிரகம் பெற்றுக் கெளடதேசஞ் சென்றனர். அங்கே ஓரிடத்திற் பிராமணசங்நியாசி ஒருவர் தருக்கம், வியாகரணம் முதலிய நூல்களைப் பிராமணப் பிள்ளைகளுக் குக் கற்பித்துவந்தனர்.இவர் தினந்தோறும்அங்கேசென்று தூரத்து நின்று அவற்றினைக் கேட்டு மனத்தமைக் துக்கொண்டுவந்தார். சங்கியாசி பிராமணப் பிள்ளைகளைப் பரீட்சித்தபொழுது அவர்கள் தகுந்தவிடை அளியாமையி னல், யாங் கற்பித்தவற்றைத் தூரத்து நின்று கவன மாகக் கேட்டவன் தகுந்தவிடை அளித்தல்கூடுமென்று நினைந்து இவரை அழைத்துப் பரீட்சிக்க இவர் அவற்றிற் கெல்லாம் தகுந்த விடை அளித்தனர். சங்கியாசி மகிழ்ந்து நீயே பிராமணன் என்று புகழ்ந்து இவருக்குத் தருக்கம், வியாகாணம் முதலியவற்றைக் கற்பித்து நீ தமிழ் நாட் டிற்குச் சென்று அங்குள்ளார்க்குப் பயன்படுவன புரிவா யாக என்று கட்டளை இட்டனர். இவர் அக்கட்டளையை மேற்கொண்டு. கிருவண்ணுமலை ஆதீனத்தை அடைந்து சங்கியாசம் பெற்று ஆகமங்களையும், சைவசித்தாந்த நூல்களையுங் கற்றனர். ܐܗܝ

Page 113
206 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
இவர் சம்ஸ்கிருத பாஷையிற் சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிரசாததீபிகை, சிவயோகசாரம் என்னும் நூல்களுக்கு வியாக்கியானம் இயற்றியும், தமிழில் சிவஞானசித்தியாரின் சுபக்கத்துக்கு உரை இயற்றியும்உள்ளார். இவ்வுரை அரிதினுணாற்பாலது.
சித்தியுரை வணக்கம்
சிவமுற நமக்கு முந்தித் தந்திவத் திரனைச் சிந்தித் துவமையில் சிவனெப் பில்லா வுமைகுரு குலங்கண் மற்றென் இவர்களே வணங்கி யின்பச் சிவஞான சித்திக் கேற்ப நவமுறு முாையு ரைப்பா முன்னுரை நலங்கொ ளார்க்கே.
இவர் நடராச தரிசனம் செய்ய விரும்பித் கிரு
வண்ணமலையை நீங்கிச் சிதம்பரத்தையடைந்து ஞானப்
பிரகாசம் என்னும் திருக்குளம் ஒன்றினை அமைத்துச் சிலகாலம் வதிந்து அங்கே தேகவியோகமாயினர்.
விசுவநாத சாஸ்திரியார்
இவர் இற்றைக்கு ஏறக்குறைய நூற்றுமூன்று வருஷங்களுக்குமுன்னே அராலி என்னுமூரிலே வசிக் தவர். நாராயணசாஸ்திரியாருக்கு மைந்தர். தமிழ் இலக் கிய இலக்கணங்களிற் சிறந்த புலவராயிருந்தமையேயன் றிச் சோதிட கணிதத்திலுஞ் சிறந்தவராய் இருந்தவர். அக்காலத்திலே இலங்கையிற் கணிக்கப்பட்ட பஞ்சாங்கங் களுக்குள்ளே இவருடைய பஞ்சாங்கத்துக்கே அதிக மதிப்புண்டு. இலங்கைக் கவர்ணரால் 'இராசாவின் கணி தர் என்னும் பட்டமளிக்கப்பெற்றவர். இவர் கீர்த்தி பெற்ற பெரிய சோகிடகணிதராயிருந்தும், கஅஉஅ-ம் ஆண்டு பங்குனிமாதம் உஅ-ம் கிகதி தோற்றிய சங்கிர கிரகண கணிதமொன்றிற் சிறிது பிழையுற்றர் என்பர்,

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 207
இவர் இயற்றிய நூல்கள் வண்ணக்குறவஞ்சி, நகுலமலைக்குறவஞ்சி முதலியன. கிரகணங் கணிக்கும் முறையை எவர்க்குங் தெரிக்குமாறு வாக்கிய காண கிரக ணம் என்னுமொரு நூலையும் இயற்றினவர். இது ஒயிசிங் தன் தேசிகர் செய்த சோதிசாத்திர நூலோடு சேர்த்து அச்சிடப்பெற்றுள்ளது. இவர் கவித்திறமுணர இவர் பாடிய வண்ணைக்குறவஞ்சியின் காப்புச் செய்யுளை இங்கே தருதும் :-
வண்ணைக் குறவஞ்சி சித்திர முளரிக் கண்ணர் சிறந்தவா மனத்த ராசை வத்திர முடைய ரஞ்சக் காத்தர்பொன் வனத்தா மத்தர் இத்திற வயன்மா லீச னிவர்களி லிறைவு ரான அத்தர் தாள் வணங்கி வண்ணைக் குறவஞ்சி யறைகு வேனே. இக்கவியில் முன்னீரடியும் பிரமா, விட்டுணு, சிவன் என்னு மூவருக்குஞ் சிலேடை. அப்பொருளை மூவருக்கு மிலக்கமிட்டு முறையே எழுதுவாம். சித்திரம்-அழகு. முளரிக்கண்ணர்,-
க. தாமரைப்பூவை யாசனமாக வுடையவர். முளரி
தாமரை. கண்-இடம். உ. தாமரை மலர்போலுங் கண்ணுடையவர். க. அக்கினிக் கண்ணுடையவர். முளரி-அக்கினி.
சிறந்தவாமனத்தர்,-
க. சிறந்து அவாம் அன்னத்தர்-சிறப்புற்று விரும்
பப்படுகின்ற அன்ன வாகனமுடையவர். அவாவும்
என்பது அவாம் என நின்றது. உ. சிறந்தவாமனத்தர்-சிறந்த குறளுருவங் கொண்
டவர். வாமனம்-குறள்.
க. சிறந்த ஆம் மனத்தர்-அன்பிற் சிறந்தனவாகிய
மனங்களில் இருப்பவர்.

Page 114
208 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
ஆசைவத்திரமுடையர்,-
<秀。 கிக்குமுகமுடையவர். ஆசை-திக்கு. வத்திரம்
முகம். உ. பொற்சீலையுடையவர். ஆசை-பொன். வத்தி
ரம்- சீலை.
க. கிக்காகிய சிலையுடையவர். ஆசை-கிக்கு. அஞ்சக்கரத்தர்,-
க. அஞ்சம் காத்தர்-அன்னக்கொடிதாங்கிய கையை
யுடையவர். உ. அம் சக்காத்தர்-அழகிய சக்கராயுதமுடையவர். கூ. அஞ்சு அக்கரத்தர்-ஐந்தெழுத்தாகிய மந்திர
முடையவர். அஞ்சு-ஐக்கின்போலி. பொன்வனத்தாமத்தர்,-
க. பொன்வனம்தாமத்தர்-பொன்னிறமாகிய ஒளி
புடையவர். தாமம்-ஒளி. அழகிய துளசி மாலையை- 99 ه سست
யுடையவர். வனம்-துளசி. f 92 -பொன் போன்ற நிறத்தை யுடைய கொன்றை மாலையை புடையவர். தாமம்-கொன்றை.
கந்தப்பிள்ளை
இவர் நல்லூரிலே கிறீஸ்தாப்தம் 1766-ம் ஆண் டிலே பரமானந்தர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந் தார். பின் ஐந்தாம் வயதிலே வித்தியாாம்பஞ் செய்யப் பெற்றுச் சண்முகச் சட்டம்பியார் என்னும் ஒருவ ரிடங் கற்றுப் பின் வண்ணுர்பண்ணையிற் சென்று கூழங்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 209
கைத் தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்கள் கற்று வல்ல புலவராயினர். தமிழன்றி, ஆங்கிலம், போத்துக் கீஸ், ஒல்லாந்தம் முதலிய பாஷைகளும் நன்கு கற்றறிக் தவர். கஅ வருஷ காலம் அரசினரிடம் ஆராய்ச்சி உத்தி யோகத்திலிருந்தமையால் ஆராய்ச்சி கந்தர் என்றும் எவ ராலும் இவர் அழைக்கப்படுவர். இவர்க்கு ஆறு புத்திர ரும் ஆறுபுக்கிரிகளுமுளர். இவருடைய கனிஷ்ட புத் கிரரே ஆறுமுகநாவலர். வித்துவசிரோமணி பொன்னம் பலப்பிள்ளை இவருக்குத் தெளகித்திரர். த. கயிலாய பிள்ளை பெளத்திரர்.
இவர் புலவராய் விளங்கியதன்றிப் பிரசித்திபெற்ற வைத்தியராயும் விளங்கினர். அதனனும் இவருக்கு ஊரில் அதிக மதிப்பு உண்டு. இவர் பாடிய நள்டகங்கள் இருபத்தொன்று. இறுதியிற் பாடிய நாடகம் இரத்தின வல்லி நாடகம். அதனைப் பாடிக்கொண்டிருக்கும்போதே இவர் உயிர் நீத்தார் என்பர். இவர் தேகவியோகமடைந்த காலம் கஅச2-ம் ஆண்டு ஆடி மாதம் உ-ம் திகதி புதன்கிழமையாகும். அப்போது வயது எசு.
இவர் தமது முற்றத்திலே நின்ற மாமரத்தின் காய் களை அரித்துக்கொண்டிருந்த ஒர் அணிலின் மீது அது விழுந்து இறக்கும்படி ஒரு செய்யுள் பாட உடனே அது விழுந்து இறந்தது என்பர்.
இவர் பாடற்றிறமறிய, இவர் பாடிய இராமவிலாசத் துள் ஒரு செய்யுள் காட்டுதும் :-
கருவளர் வனஞ்கு ழயோத்தியம் பதியிற்
றசாத னருள் பெறு ராமன் றகுகவு சிகற்காய்த் தம்பிலட் சுமணன்
றன்னெடுங் தனிவனம் புகுந்து 27

Page 115
210 ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
செருவளர் படைகள் செலுத்துதா டகையைச்
சிகைத் துயா கமுதிறை வேற்றித் திசழக லிகை தன் சிலையுரு வகற்றிச்
சீதையைக் கண்டுவின் முரித்து மருவளர் மிதிலை மணம்புரிந் தேதம்
வளநகர்க் கேகுமல் வழியில் வரும்பா சிராமன் வலியொடும் வில்லு
வாங்கியே சென்றுவாழ்ந் திருந்த திருவளர் கதையை விலாசம தாகச்
செப்பினேன் பிழையிருந் தாலும் செந்தமிழ்ப் புலவீ ரவைபொறுத் தருள்வீர் தேவசா ரித்திர மென்வே,
இங்கு முன் கூறப்பட்ட புலவர்களன்றி இன்னும் பல புலவர்கள் யாழ்ப்பாணத்திலே அங்கங்கே இருந்தவர்க ளாக அறியப்படுகின்றர்கள். அவர்கள் சரித்திரங்கள் சரி யாகப் புலப்படவில்லை. ஆயினுந் தெரிந்தவற்றை இங்கே காட்டுதும் :-
அப்புக்குட்டிஐயர்
இவர் நல்லூரிலே சாலிவாகன சகாப்தம் கஎ0க-க் குச் சமமான பிலவங்க வருடம் மாசிமாதம் உஅ-ந் திகதி சிகிவாகன ஐயர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தவர். தமிழ், சம்ஸ்கிருதம் என்னுமிரு மொழியினும் வல்லுநர். ஞாபகசக்கியுடையவரென்று யாவராலும் பாராட்டப் பட்டவர். இவரியற்றிய நூல்கள் :- குதுபுராணம், நல் லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் என்பன. தனிக் கவிகளும் பல பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களுள் ஒன்றுங் கினிடத்திலது.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 211
அருணசலப்பிள்ளை
இவர் அராலியென்னுமூரிற் பிறந்தவர். மாதகல் சிற்றம்பலப் புலவரிட மிலக்கிய இலக்கணங் கற்றவர். காரிகை யென்னு மிலக்கண நூலிற் சிறந்த அறிவுடைய வர். சோகிடநூலினும் வல்லவர். பாக்களியற்றுவதினு மிகச் சிறந்தவரெனப் பலருஞ் சொல்வர். பாடல்களுள்
ஒன்றும் கிடைத்திலது.
இராமசாமிஐயர்
இவர் வட்டுக்கோட்டையைத் தமது ஜெனன ஊரா கக் கொண்டவர். நாடகப் புலவர் எனப் பிரசித்தம் பெற்ற நாகேசையருக்குத் தங்தையார். சுப்பிரமணிய ஐயருக்குப் புதல்வர். இவர் கதிரமலைக் கந்தசுவாமி பேரிற் பற்பல கீர்த்தனங்களும், விருத்தங்களும் பாடின ரென்று அறிஞர்கள் சிலர் கூறுவர். அருச்சுனன் மனைவியாகிய அல்லியின் சரித்திரத்தை நாடகமாகப் பாடினவ சென்றுங் கூறுப. இவரிற்றைக்கு நூற்றிருபத் தைந்து வருடங்களுக்கு முன் இருந்தவர் என்பர். பாடல்களுள் ஒன்றுங் கிடைத்திலது.
இராமலிங்கையர்
இவர் கல்லூரிற் பிறந்த ஒர் அந்தணர். தங்தையார் சந்திரசேகர ஐயர். இவர் யாழ்ப்பாணத்தை அரசாண்ட கூழங்கைச் சக்கிரவர்த்தி தனக்குச் சோதிடராய்ச் சம்பு கேசுரத்திருந்தழைத்துவந்த சிரேட்டரொருவரின் வழித் தோன்றலென்ப. இவர் சந்தான தீபிகை என்னுமொரு
சோதிடநூல் செய்துள்ளார்.

Page 116
212 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிகம்
இர ாமலிங்கப்பிள்ளை
இவர் சுதுமலையிலே மாப்பாண முதலியார் கோத் கிரத்திலே வைரமுத்து உடையாருக்குப் புதல்வராகப் பிறந்தவர். கவாலியிலிருந்த கா. முத்துக்குமாரபிள்ளை என்பவரிடங் கற்றவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் வல்லுநர். சபாமத்தியிலே புராணங்களுக்குப் பொருள் சொல்லுவதிலும், இனிமையாக வாசிப்பதிலும் பேர் பெற்றவர். இனிய கண்டமுடையவர். பற்பல தனிப் பாடல்களுங் கீர்த்தனங்களும் பாடினவர். அன்றியுஞ் சங்களையந்தாகி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கர வர்த்தி விலாசம் என்னும் நூல்களையு மியற்றியவர். இவர் 1885-ம் வருஷம் மாசி மாதம் 16-ம் திகதி கொ ழும்பிலே தேகவியோகமடைந்தார். இவர் பாடற் றிறத்தை யறியும்பொருட்டு 6ள ச்சக்கரவர்த்தி விலாசக் காப்புச் செய்யுளை இங்கே தருதும் :-
* பொன்னுலக மென்னப் பொலியுகிட தம்புரக்கு
மன்னனளச் சக்ரவர்த்தி மாகதையை-இங்கிலத்தே சந்த விலாசத் தமிழா லியம்புதற்குத் தந்தி முகன்முள் சாண்,
க, ஏகாம்பரம்
உடுப்பிட்டியைச் சார்ந்த வல்லுவெட்டியிலே, பர தவர் குலத்திலே பிறந்தவர். இருபாலைச் சேனகிராய முதலியாரிடம் முதலிற் கற்றுப் பின் இந்தியாவிற்குச் சென்று, கிருத்தணிகைச் சரவணப்பெருமாளையரிடங் கற்றவர் என்பர். மிஷனரிமார்க்கும் ஆங்கிலேய துரை மார்க்குங் தமிழ் கற்பித்தவர். கந்தாந்தாதிக்கோ ருாைபு
மெழுதின ரென்பர். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு

ஈழநாட்டுத் தமிழ்ப் புலலர் சரிதம் 213
முன்னிருந்தவர். பல தனிக்கவிகள் பாடினவர். இவர் பாடிய கையறுநிலைச் செய்யுளொன்றை இங்கே தருதும் :
* சீரேறு பரிதாபி வருடமா டித்திங்கள்
சென்றபதி னன்குதேதி சித்திாை யுடுப்புதன் வாரபூ ருவமான
திதியாறு கும்பசென்மன் பேரேறு வண்ணை நகர் திருமலைச் செட்டிபெறு பேறுமா னிக்காத்தினம் பிணியருக் கருமருந் துதவுத்த மன்கணித
பிரதானி சொல்வித்தகன் தோேறு வாதர்க்கொ ரிடியேறு சபையினடு நீதிப்பிர சங்க சிங்கம் நிகழைம்ப கொன்பதாம் வயதினன் குலதிலத
நிபுணனெனும் ராமசாமி ஏாேறு வற்சா விரோதிகிரு தேறுமதி யீரொன்ப தேற்றவெள்ளி யெழிலுாோ கணியமை விருச்சிக விலக்கினத்
நிறைவர்பத மெய்தினனே, "
நா. ஏகாம்பரம்
இவரூரும் வல்லுவெட்டித்துறையே. இவர் கிறீஸ் காப்தம் 1844-க்குச் சமமான பிலவ வேடு பங்குனிமீ" 23வ. பிறந்தவர். தமதுரளிலுள்ள வித்தியாசாலையிலே தமிழ் பயின்று, பின் வட்டுக்கோட்டையிலுள்ள ஆங்கில வித்தியாசாலையிலே ஆங்கிலங் கற்றவர். பின் சென்னைக்குச் சென்று அங்கேயுள்ள கல்லூரி யொன் றிற் படித்துப் பிரவேச பரீட்சையிற் சித்தியெய்தினர். அதன்பின் ஆங்கிலங் கற்றலை விடுத்துத் தமிழிலக் கண இலக்கியங்களைக் கற்க விரும்பி, இந்தியாவிலே சிறந்த வித்துவான்களா யிருந்த மீனுட்சிசுந்தரம்

Page 117
214 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
பிள்ளை, இராஜகோபாலபிள்ளை, இராமலிங்கபிள்ளை
என்பவர்களிடஞ் சிலகாலங் கற்றனர் என்பர். இக் காலத்திலே இவர் அட்டாவதானமுஞ் செய்யப்
பயின்றுகொண்டார். தம்மூரிலும், பிறவூரிலுமாகப் பலர் கூடிய சபையி லட்டாவதானஞ் செய்து காண்பித்துப் பரிசும் பெற்றவர். இலங்கையிலுங் கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு முதலிய இடங்களிலு மட்டாவதானஞ் செய்து பரிசு பெற்றவர் என்பர். இவரே இலங்கை யில் முதலில் அட்டாவதானஞ் செய்த பெரியார். இவர் தமது 33-ம் வயதிலே பூரீமுகடுநில ஐப்பசிமீ 27வதேகவியோகமாயினர். இவாட்டாவதானத்தி லன்றிப் பாடுவதிலும் வல்லுநர். இவர் தமது ஆசிரியராயிருந்த அ. சண்முகம்பிள்ளை என்பவரைக் காணும்பொருட்டு அச்சுவேலிக்குப் போனபொழுது ஒருவர், இவரை நோக்கி ஆகாரத்திற் ருெடங்கி ஈகாரத்தில் முடியும்படி கந்தசுவாமி பேரில் ஒரு வெண்பாப் பாடுமென, இவர் உடனே யொரு வெண்பாப் பாடினர் என்பர். அது
வருமாறு a
ஆத்தியணி யுஞ்சடையா னைமுகற்குப் புத்திானே ஏத்தும் பலர்க்குவர மீவோனே-கூத்தென்றே காசினியில் வாழ்வெல்லாங் கட்டழிக்குங் காாணனே ஏசிலளி நீயேசே யீ.
கணபதி ஐயர்
இவர் இந்தியாவிலுள்ள காஞ்சிபுரத்திலிருந்து வட்டுக்கோட்டையில் வந்து குடியேறியிருந்த பால கிருஷ்ண ஐயாது புத்திார். இவர் தஞ் சுற்றத்தாரைப் பிரிந்து இந்தியாவிற்குப் போய் அங்குள்ள திருவை யாற்றிலே, வயிரவ கோயிற் சங்கிகி யொன்றிலே

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 215
இரவிற் பசியாலிளைப்புற்றுத் தூக்கமற்றிருந்தபொழுது, தாமாகப் பாடுஞ் சக்தி உண்டாக, உடனே அவ்வயிர வர்மீது பதிகமொன்று பாடினரென்பர். அங்குள்ள தலங்களையெல்லாங் தரிசித்து மீண்டு ஊர்க்கு வந்தபின், தமது சுற்றத்தாருள் ஒருவராகிய சண்முகஜயர் என்பவ ரால் தொடங்கி நிறைவேற்றமுடியாது விட்டிருந்த சுந்தரி நாடகத்தை இவர், வாளபிமன் நாடகமென்று பெயர்மாற்றி எவரும் வியப்பப் பாடிமுடித்தார். அதன்பின் வண்ணே வைத்திலிங்கக் குறவஞ்சி, மலையகங்கினி நாடகம், அலங் காாரூப நாடகம், அதிரூபவதி நாடகம் என்னும் நாட கங்களையும், வட்டுநகர் பிட்டிவயற் பத்திரகாளியம்மை பேரிற் பதிகமு மூஞ்சலும், பருத்தித்துறையிலுள்ள ஒரு விநாயகர்மேற் பாவிகற்பம் பெற்ற 100 தவிகளும் பாடினர். இத்தகைய இவர் இற்றைக்கு 150 வருடங் களுக்குமுன் தேகவியோகமாயினர். பாடல்களுள் ஒன்
அறுங் கிடைத்திலது.
சின்னத்தம்பி
இவர் கிறீஸ்காப்தம் 1830-க்குச் ŠE[ ፫)፱ ፫)ff6∂ ̇ காவடு சித்திரைமீ 4வ. உடுப்பிட்டியென்னு மூரிலே வேளாளர் குலத்திலே தாமோதரம்பிள்ளைக்குப் புதல்வ ராகப் பிறந்தவர். கியாகராச பண்டிதரிட மிலக்கண இலக்கியங்கள் கற்றவர். கணித சோதிட சாத்திரங் களில் வல்லுநர். இவரியற்றிய நூல்கள் :- வீரபத்திரர் சதகம், மதனவல்லி விலாசம், நிலஅளவைச் சூத்திரம், சோதிடச் சுருக்கம் முதலியன. இவர் தீம்தூரிலே ஒரு தமிழ் வித்தியாசாலையைத் தாபித்து மரணபரி யந்தம் அகிலாசிரியராக விருந்து அரசினர் உதவிப் பணம் பெறவிரும்பாது அதனைக் கிரமமாக நடாத்கிய வர். சிவதர்மங்கள் பல செய்தவர். மாண பரியந்தம்

Page 118
216 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
பிரமசாரியாகவே யிருந்தவர். கனதனப் பிரபு. இவர் கவித்திறனுணர வீரபத்திர சதகத்துள் ஒரு செய்யுள் தருதும் :-
ஏரேறு பரிதியுட னெழிலேறு மமரர்களு
ழேழேறு முனிவருமலா s தியலேறு மதிமுதல விவரேறு துதிகள் செய
வினிசுேறு கயிலை மலையில் வாரேறு தன மதனின் மணியேறு பணியணியும் வகையேறு மலைமகளுடன் வயமேறு முலக தனி னயமேறு முயிர் கணிதம்
வாழ்வேற வீற்றிருக்குங் காரேறு கடுமிடருெ டேறேறு கடவுளது
கண்னேறி வந்தபுலவர் கழலேறு பதமதெனு நிழலேறி யெனது துயர்
கரையேற வருடருகுவாய் தாரேறு கன்னலொரு செந்நெல்விளை செல்வயற்
றங்குடுப் பிட்டி நகரிற் சந்திர குளத்திலம செந்தையே வந்துனரு
டருவீர பத்திரதேவே.
இத்தகைய இவர் தமது 45 ஆவது வயதிலே கிறீஸ் தாப்தம் 1878-ல் தேகவியோகமாயினர்.
சந்திரசேகர பண்டிதர்
இவரே உவின்சிலோ எனப்படும் தமிழ் அகரா தியை இயற்றி அச்சிட்டு வெளிப்படுத்தினவர். இவர் தமிழன்றி, ஆங்கிலமுஞ் சம்ஸ்கிருதமும் நன்கு பயின் றவர். உடுவில் என்னுமூரிலே இற்றைக்கு 135 வரு ஷங்களின் முன் வேளாளர் குலத்திற் பிறந்தவர்.
இவர் தங்தையார் அம்பலவாணர். இவரூர் வட்டுக்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 217
கோட்டை. இவர் 1879-ம் ஆண்டில் தேகவியோக மடைந்தார். இவரது கவித்கிறமுணர இவர் செய்த தமிழ் அகராகியிலுள்ள அவையடக்கச் செய்யுளை ஈண்டுத் தருதும் :-
உத்தமர்க ளெந்நூலு முற்ற வோர்ங்கே
உறுகுறைகண் மறையவுண்மை யுகங்து கொள்வர் மத்திமர்க ளவையிரண்டுஞ் சமமாய்க் கொள்வர்
மற்றையாா மதமருண்மை வகுக்க மாட்டார் இத்தகையா லாய்ந்துணர்ந்த நல்லார் கல்லா
னியற்றுமக சாதியென விகழா சென்றே சித்தமிசைக் கொண்டுதெளி வில்லாப் பேதைச்
சிற்றறிவே னறிவளவிற் சேர்த்திட் டேனே. சின்னக்குட்டிப்புலவர் இவர் தெல்லிப்பழையிலே கஉடு வருஷங்களுக்கு முன்னே இருந்தவர். இவர் மாதகல் சிற்றம்பலப் புலவ ாது மாணவர். இவர் செய்த நூல் கனகதண்டிகைக் கனக ராயன் பள்ளு. அது தெல்லிப்பழையிலிருந்த கனக தண்டிகைக் கனகராய முதலியார் என்னும் பிரபுமேற் பாடப்பட்டது. இப்பள்ளினைத் தெல்லிப்பழை பிறக்றர் வ. குமாரசாமிப்பிள்ளை அவர்கள் தாமெழுகிய விளக்கக் குறிப்புக்களோடு 1932-ம் ஆண்டில் அச்சிற் பகிப்பித் தனர். அப் பள்ளுச்செய்யுளு ளொன்று காட்டுதும் :-
பனக மாமணி பாவலர்க் கீந்தருள்
பாரி வேரிப் பசுங்காவி மார்பன் தினக ரோதயம் வள்ளொளி வீசிய
செம்பொன் ஞழிச் செழுமலர்க் கையான் வினக மாமுலை யார்மத ராசன்
விளங்கு செம்பொன்னின் மேழித் துவசன் கனக ராயன் வழிவரு தண்டிகைக்
கனக நாயகன் ாேடெங்கள் சாடே.
28

Page 119
218 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் g i75ul
சண்முகச்சட்டம்பியார்
இவர் வடக்காாலியிலே வைசியர் குலத்திலே சுவாமி நாதர் என்பவருக்குப் புதல்வராக கிறீஸ்தாப்தம் 1194-ல் பிறந்தவர். தமது தந்தையாரிடத்தே இளமையிலே தமிழ் நெடுங்கணக்கு முதலிய பயின்று, பின் இருபாலைச் சேனதிராய முதலியாரிடங் தமிழ் இலக்கண இலக்கியங்கள் கற்றவர். ஆங்கிலமுங் கற்றவர். இவர் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலை ஆசிரியராயிருந்ததுமன்றி, அநேக மிஷனரி மார்களுக்குங் கல்வி கற்பித்தவர். சைவசமயியாயிருந்து பின் கிறீஸ்தவரானவர். இவர் மரபினர் இப்பொழுது சைவசமயிகளாயிருக்கின்றனர். இவர் சைவராயிருந்த போது சில்லாலையிலிருந்த வைத்தியருங் கிறீஸ்தவருமான சந்தியாப்பிள்ளை வேண்டுகோட் கிணங்கி கிறீஸ்துவின் தாயாரை வாழ்த்தி மூன்று செய்யுள் பாடிக் கொடுத் தனர் என்பர். அவற்றுள் ஒன்று காட்டுதும் :
நெல்லாலே போல்வளரு நீர்ப்பண்ணை சூழ்ந்திலங்கு சில்லா?ல யென்னுந் திருவூரில்-எல்லாரும் போற்றுசரு வேசுரன்ரு ய் பொற்பாத தாமரையைப் போற்று மனமே புகழ்ந்து.
தொம்பிலிப்பு
இவர் தெல்லிப்பழையிலே வேளாண்குலத்தில் பிறந்தவர். கத்தோலிக்க கிறீஸ்தவர். இவர் தமது வேதக் கருத்தையமைத்து ஞானனந்த புராணம் என்னும் ஒரு காவியத்தைப் பாடியுள்ளார். இக் காவியம் மூன்று காண் டமாகப் பகுக்கப்பட்டுள்ளது. ககOச விருத்தப் பாக்களா லாயினது. இது சென்னையிலிருந்த சவரியப்ப முதலி யார் குமாரர்.ஜெகசாவு முதலியார் என்பவரால் கஅரச-ம்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலலர் சரிதம் 219
ஆண்டிலே பகிப்பிக்கப்பட்டது. விசாகப்பெருமாளையர் முகலிய சிறந்த வித்துவான்கள் இதற்குச் சிறப்புப்பா யிரம் அளித்துள்ளார்கள் என்ப. இவர் செனன மரண காலமாகிய தெரிந்தில. இவர் பாடற்றிறமுணர அப் புராணத்துள் ஒரு செய்யுள் காட்டுதும் :
என்றினைய நிகழ்ந்தவண்ண மருளப்ப
னன்னை தன்பா லிசைப்ப வெய்தி பொன்னுடலம் வெயர்பொடிப்பப் பொருமியுள்ளம்
பறையடிப்பப் புலன்வாய் விம்ம நின்றனன்மெய் தள்ளாடி நெடுந்தாரை
கண்பனிப்ப நிலத்தில் வீழ்ந்து துன்றுமல iTty. யிறைஞ்சித் தோன்றல்படுக்
து யாமெலாஞ் சொல்ல லுற்றன்.
நமச்சிவாயப் புலவர்
இவர் அச்சுவேலி தெற்கிலே வைசியர் குலத்திலே கிறீஸ்தாப்தம் 1749-ல் பிறந்தவர். இவர் தங்தையார் பெயர் கணபதிப்பிள்ளைச் செட்டியார். இவருடைய ஆசிரி யர் இவர் என்பது தெரியாதாயினும் இலக்கண இலக் கியங்களிற் சிறந்த பயிற்சியுடையவர் என்பது இவரது பாடலாலறியக்கிடக்கின்றது. வாணியிலுள்ள கல்வளை விநாயகர்பேரிற் பாடிய வெண்பா ஒன்றை இவர் பாடற்
றிறமுணர ஈண்டுக் காட்டுதும் :
நல்வனமார் புன்னை நறுங்கொன்றை யத்திமுதற் பல்வளனும் பக்தர்போற் பாங்குசூழ்-தல்வளையில் அத்திமுக வத்திமத வுத்திகிற கித்தசுத சித்திமுத்தி தங் துாமைத் தேற்று.

Page 120
220 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
நாகேசஐயர்
இவர் இற்றைக்கு நூற்றுமுப்பது வருடங்களுக்கு முன்னே வட்டுக்கோட்டையிலே அந்தணர் குலத்திலே இராமசாமிஐயர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்த வர். இவர் ஆசிரியர் இவர் என்பது தெரிந்திலதாயினும் இலக்கண இலக்கியப் பயிற்சியுடையவர் என்பது இவர் பாடலால் அறியக்கிடக்கின்றது. இவர் பல நாடகங்களும் பல தனிக் கவிகளும் பாடினமையன்றி, தமதூரிலுள்ள அடைக்கலங் தோட்டத்துக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்குங் கந்தசுவாமிபேரில் நாணிக் கண்புகைத்தல்’ எ ன் னு க் துறைமேல் 100 செய் யுளும் பாடினவர். இன்னும் ஸ்தல யாத்திரை செய்த காலத்திலே இராமேசுரம் முதலிய தலங்களிலுள்ள அவ்வக்கடவுண் மேலும் கவிகள் பாடியுள்ளார் என அறி கின்றேம். அமுதநுணுக்கம்’ எனப் பெயரிய ஒரு விஷ வைத்திய நூலும் இவர் இயற்றியுள்ளார் எனவுமறிகின் ருேம். இத்தகைய இவர் தமது சஅ-வது வயதில்ே துன்மதி வருடம் தைமாசம் கஉ-ங் திகதியில் தேக வியோகமாயினர். இவர் பாடற்றிறமுணா அடைக்கலங் கோவையுள் ஒரு செய்யுள் காட்டுதும்:
பொன்பூச்த நாாணன் வேதன் முதலபுத் தேளிரெலாம் தென்பூத்த வேத முறையா லருச்சனை செய்தமரும் மின் பூத்த வேலனடைக்கலங் கோவை விளம்புதற்குக்
கொன் பூத்த குஞ்சாச் செஞ்சா ணெஞ்சினிற் கொள்ளுவனே.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 221
பிரான்சீஸ்பிள்ளை
இவர் மயிலிட்டியைச் சார்ந்த வயாவிளான் என்னு மூரிலே வேளாண் குலத்திலே, இற்றைக்கு 130 வரு டங்களுக்கு முன்னே இருந்தவர். கத்தோலிக்க சமயக்க வர். இவரைப்பற்றிய வேறு சரிதங்கள் ஒன்றுங் தெரிங் திலவாயினும் இவர் இலக்கண இலக்கியங்களிற் பயின்று பாடுகற்முெழிலில் வல்லவராயிருந்தார் என்பது மாத்திரம், இவர் பாடிய நூல்களாலறியக்கிடக்கின்றது. இவர் பாடிய நூல்கள் மூவிராசர் வாசகப்பா, தசவாக்கிய விளக்கப் பதி கம், இரட்சகப் பதிகம், கிருவாசகம், பிள்ளைக்கவியாகிய, இவர் ஆயுள்வேத வைக்கியர் எனப் பட்டமும் பெற்று வைக்கியத் தொழிலிலுஞ் சிறந்து விளங்கினவர். இவர் பாடற்றிற முணர இவர் பாடிய பிள்ளைக் கவியுள் ஒரு
செய்யுள் காட்டுதும் :
குவலயத் தவான்பு கொண்டாட வண்டாடு
குளிர்மலர்ப் பொழில்க ளாட கோலமயி லாடவய னிடுகுயி லாடநெற்
குலைகல கலென்ரு டிடக் கவலையற் றிடுமாயர் சளியாட விளவாழை களினிடு தளிர்க ளாடக் காராடு மொய்குழலி ஞாாட வழகனைய
கழிமீடு தளிர்க ளாடச் தவில்முர சடித்து ம்பர் சபையாட நவகோடி
சனமாட விளமைகொ னிலத் தண்ணிழல் பாந்தாட விண்மணி யொடுங்கிான
காாகை தயங்கி யாடத் திவலையமு தைப்பருகு தெய்வீக பாலனே செங்கீரை யா டி யருளே திருமருவு பாமகனி மரியுதவு பாலனே
செங்கீரை யாடி யருளே,

Page 121
222 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
பூலோக சிங்க முதலியார்
இவர் தெல்லிப்பழையில் வசித்தவர். காரைதீவிற் பிறந்தவர். கத்தோலிக்க சமயத்தவர். சிறந்த புலவர் களில் இவருமொருவராவர். இவருடைய மறுநாமம் அரு ளப்ப5ாவலர் என்பதாகும். இவர் செய்த காப்பியம் திருச் செல்வராசர் காப்பியமாகும். இஃது இருபத்தைந்து படல மும் ஆயிரத்துத்தொளாயிரம் செய்யுளுங் கொண்டது வாகும். இவர் பெயரூர் முதலியன இந்நூற் சிறப்புப் பாயிரச் செய்யுளால் அறியப்படும். ஆதலின் அதனை ஈண்டுத் தருதும் :
செல்லினுயிர் பெருகுதவச் செல்வரா
யன்கதையைத் தேர்ந்து நுண்ணுற்
றுல்லியமோர்ந் திடும்புலவர் மகிடூங்க
விருத்தத்தாற் சொற்றிட் டானல்
நல்லிசைகா டகமியலின் றமிழ்தெரிகா
வலன்சதுர சாக ரீகன்
தெல்லிநக சருளப்ப னற்காரைப்
பூலோக சிங்கர் தானே.
இவர் கவித்திறமுணா அக் காப்பியத்துள் ஒரு செய்
புள் காட்டுதும் :
அயாவுயிர்த்திருந் தவ்விடத் தந்தடுள்ளிாவின் வயாவருத்தகோ மாசுகு சகமுதன் மறுக்க ளியாவு மின்றிவெண் படிகத்திற் காந்திபாய்ந் தென்னத் தயா பான்றிருச் சுதனையத் தவக்கன்னி தந்தாள்.
இப் புலவருடைய செனன Taifa) முதலியவை
கள் தெரிந்தில,

ஈழநாட்டுக் தமிழ்ப் புலவர் சரிதம் 223
மாப்பாணமுதலியார்
இவர் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த எழுது மட்டுவாள் என்னுங் கிராமத்திலே இற்றைக்கு ஏறக் குறைய 155 வருடங்களுக்கு முன்னே வைரவசந்தானக் குரு மரபிலே பிறந்தவர். இருமாபுந்துய்ய குலசேகரப் புதுகல்லமாப்பாண முதலியார் என்னுஞ் சிறப்புப் பெயரு மிவருக்குண்டு. இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலன்றி சைவசித்தாந்த நூல்களிலும் வல்ல வர். சம்ஸ்கிருதமும் நன்கு பயின்றவர். ஆகமங்களுக் தெரிந்தவர். ஆங்கிலமுங் கற்றவர். தென்மராட்சி மணிய கார உத்தியோகம்பூண்டு பலவாண்டு நடாத்தினவர். பாடற் முெழிலிலும் வல்லவர். இவர் சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம் என்னும் இரு நாடகங்களையும், குற வஞ்சியொன்றையும் பாடியதுமன்றி, விரதநிச்சயம், ஆசௌசவிதி என்னும் இருநூலையும் செய்தவரென்றும், திருச்செந்தூர்ப் புராணத்துக்கு ஒரு விரிவுரையு மியற் றினவர் என்றும், பலமுறைகளிலும் வண்ணுர்பண்ணே யிலே வைத்திலிங்கச்செட்டியார் காலத்திலே கூடும் வித் கியாசங்கத்துக்கு வருபவர் என்றுங் கூறுவர். இத்தகைய இவர் தமது டுO-ம் வயதிலே கிறீஸ்தாப்தம் 1S27-ல் தேகவியோகமடைந்தார். இவர்பாடல்களுள் ஒன்றேனுங் கிடைப்பதளிதாயிற்று.
முத்துக்குமாரர் இவர் வட்டுக்கோட்டையில் வேளாண் குல க்கி μή பிறந்தவர். கஞ்சன் காவியம், வலைவீசு புராணம் என்
லும் இருநூல்கள் இயற்றினவர். இவர் பாடற்றிற முணரக் கஞ்சன் காவியத்துள் ஒரு செய்யுள் காட்டுதும் :

Page 122
224 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
வெயிலே றிரத்ன மகுடம் புனைந்து வியன்மிக்க சென்னியழகார் மயிலேறி யன்ப ரிதயத் துலாவி வருபத்ம பாகமறவேன் குயிலேறு போகி தருமாதி னேடு குறமாது தோயும்புயத் சயிலேறு செங்கை முருகாமு குந்தன் மருகா வான்புதல்வனே.
இவரிடஞ் சேணுதிராய முதலியார் கம்பராமாயணத் துக்குப் பாடங் கேட்டவர் என்று பழைய சரித்திர மொன்றிற் கூறப்படலால் இவர் காலம் இற்றைக்கு ஏறக்குறைய 160 வருடங்களுக்கு முன்னென்று கூற லாம்.
முருகேசையர்
இவர் காரைதீவிலே அந்தணர்குலத்திலே ஏறக் குறைய 165 வருடங்களுக்குமுன் கார்த்திகேசையருக் குப் புதல்வராகப் பிறந்தவர். தமிழிலும் சம்ஸ்கிருதத் கிலும் வல்லவர். இவர் பாடிய நூல்கள் தன்னை யமக வந்தாதி, தன்னை நாயகரூஞ்சல், குருக்ஷேத்திரநாடகம் என்பன. இவர் பாடலில் ஒன்றேனும் கிடைப்பதளிகா யிற்று. இப்புலவர் கிறீஸ்தாப்தம் 1830-ல் தேகவியோக மடைந்தார். இவர் மகன் கார்த்திகேசையரே விதான
மாலை யென்னுஞ் சோதிடநூலை யச்சிட்டவர்.
வெற்றிவேலர்
இவர் சாவகச்சேரியைச் சார்ந்த மீசாலை வடக்குப் பகுதியிலிருந்தவர். மாப்பாணமுதலியார் என்பவருக்குப் புத்திரர். இருபாலை நெல்லைநாதமுதலியாருக்கு நண்பர். இலக்கண இலக்கியங்களில் மிக வல்லுநர். பாடுங் கிற மும் வாய்ந்தவர். இவரால் இரு குறவஞ்சிகள் பாடப்பட் டன என்றும் ஒன்று மல்விற்கோவின் மேலதென்றும்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 225
மற்றையது வன்னியிலுள்ள ஒரு தனவான்மேலது என் அறும், தனவான் தன்மேற் பாடிய குறவஞ்சியின் பொ ருட்டு 100 பசுக்கள் இவருக்குப் பரிசாகக்கொடுத்தான் என்றும் கூறுப. இவர் காலம் முற்கூறிய நெல்லை5ாத முதலியார் காலமே. இவர் எண்பதாவது வயதில் தேக
வியோகமடைந்தார்.
வைத்தியநாதச் செட்டியார்
இவர் அச்சுவேலி தெற்கிலே வைசியர் குலத்தில் கிறீஸ்தாப்தம் 1753 லே அரிகாபுத்திரச் செட்டியாருக்கு மைந்தாாகப் பிறந்தவர். இவர் இலக்கிய இலக்கணங்க ளில் மிகப் பயின்று பாடற்முெழிலிலும் வல்ல்வரானர். தம்மாற் பூசிக்கப்பட்ட நெல்லியோடைத் தேவிமீது பல தனிப்பாக்களும் பிள்ளைக்கவி என்னும் ஒரு பிரபந்த மும் இவர் இயற்றினவர். இவர் பாடற்றிறமுணரப் பிள்ளைக்கவியுளொன்றை இங்கே காட்டுதும்.
பவளத் தியற்றுங் கலசமிசைப் பன்னி ரதன லுலைவார்த்துப் பதுமாாக வடுப்பில் வைத்துப் பகருங் கனகத் தழல்கொழுத்தித் திவளும் வைா விறகடுக்கிச் சிறந்த தவள வரிசிபெய்து சோ வடித்து நீறணிந்து செவ்வே யிறக்கிப் பசுங்கிாணம் தவழும் பச்சை யிலைமீது தயங்கப் படைத்துச் சாாசாங்கள் தழைக்கவளர்க்குமருட்கெளரி தகைசேர்செல்லியவோடைவளர் குவளை விழிச்சி மெய்ஞ்ஞானக் கொழுந்தே சிற்றில் சிதையேலே குன்ற முலைச்சி மாரியம்மாள் கோதாய் சிற்றில் சிதையேலே.
இத்தகைய புலவர் கிறிஸ்தாப்தம் 1844-ல் தேக வியோக மடைந்தனர்.
29

Page 123
226 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
வைத்தியநாத தம்பிரான்
இவர் அளவெட்டியிலே பிறந்தவர். திருநெல்வேலி ஞானப்பிரகாசசுவாமி காலத்தவர். வடமொழி தென் மொழியென்னும் இரு பாஷைகளிலும் வல்லவர். தமக் குப் பங்கான நிலமுதலியவற்றைத் தனது சகோதரி யும் மைத்துனனும் அபகரித்துக்கொண்டமை காரண மாக அவர்மீது வெறுப்புக்கொண்டு அவ்வூரைவிட்டுக் கண்டிக்குச் சென்று அங்கே அரசுசெய்துகொண்டிருந்த முத்துச்சுவாமி மகாராசாவின்மேல் ஒரு பிரபந்தம் பாடி விருதும் பரிசிலும் பெற்று அங்குச் சிலகாலம் வசித்துப் பின் சிதம்பரஞ் சென்று வாழ்ந்தார் என்றும் அங்கிருந்த காலத்திலே சம்ஸ்கிருத நூல்களை நன்கு பயின்று அம்மொழியிலுள்ள வியாக்கிரபாதமுனிவர் சரிதத்தைப் பெயர்த்துப் புராணமாக இவர் பாடினர்
6Taoighth 5, 41LJ.
சுப்பையர்
இவர் இந்தியாவிலே உள்ள கோதாவரிடுதி தீரத் திலே வசித்த வைதிகப் பிராமணர்களுள் ஒருவரான மேருகிரி ஐயரின் புதல்வர். மேருகிரி ஐயர் தமதூரில் நிகழ்ந்த ஒரு கலகங்காரணமாக அவ்வூல்ரைவிடுத்து 5ாக பட்டணம் வந்து தோணியேறிக் கோவளக்கரையில் வந்து இறங்கிக் காரைதீவையடைந்து அங்குள்ள பிசா மணரொருவரின் புதல்வியை விவாகஞ் செய்தவர். அவ ரின் மூத்த புத்திரரே இவர். இவர் தன் பிதாவி னிடத்திலே ஆரியம், தெலுங்கு, தமிழ் என்னும் முப் பாஷையையுங் கற்று வல்லரானுர். சங்கீத சாஸ்திரத் திலும் பாண்டித்கியம் உடையவர் என்ப. இவர் பாடி
யன நல்லை5ாயக நான்மணிமாலை, காரைக்குறவஞ்சி என்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 227
பன. பாடல்களுள் ஒன்றுங் கிடைத்திலது. இவர் காலம் கிமீஸ்தாப்தம் கண்கூடு.
பின்வரும் புலவர்கள் எமது காலத்தவராயினும் அவர் சரிதத்துட் காட்டப்பட்டனவோழிய மற்றைய வொன்றும் புலப்படவில்லை. பெரிது முயன்றும் அவை கிடைத்தில.
சதாசிவம்பிள்ளை
இவர் மானிப்பாயிலே வேளாளர் குலத்திலே பிறந் தவர். ஆங்கிலங் தமிழ் என்னுமிரு மொழிகளையும் நன்கு கற்றவர். “உதயதாரகைப்’ பத்திரிகைக்குத் தலைவராயிருங் தவர். பாவலர் சரித்திர தீபகம், வெல்லையங்தாகி, திருச் சதகம், கன்னெறிக் கதாசங்கிரக முதலிய நூல்கள் செய் கவர். இவர் பாடற்றிறமுணர வெல்லையந்தாகியுள் ஒரு செய்யுள் காட்டுதும் :
காத்தவ னேயிந்தக் காசினி தன்னைநற் காதலொடு பூத்தவ னேயருள் பூப்பவ னேவெல்லைப் பொற்புரியிற் சாத்திரி மார்வர்து சாட்டாங்க தண்டஞ்செய் சற்பானே போத்துறை வாருளம் போகா வடியனைப் போற்றுவையே.
இவர் பாவலர் சரித்திர தீபகம் பதிப்பிக்த காலம் 1886-ம் ஆண்டாகும். இவர் தேகவியோகமாகி ஏறக்குறைய 38 வருஷங்களாகின்றன. இவர் சமயம் கிறீஸ்து சமயம்.
பூபாலபிள்ளை
இவர் மட்டக்களப்பிலுள்ள புளியந்தீவிலே வேளாண் குலத்திலே ஏறக்குறைய 75 வருடங்களுக்கு முன்னே

Page 124
228 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
சதாசிவப்பிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தவர். தமிழும் ஆங்கிலமும் நன்கு கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தும் ஒாங்கத்தவராயிருந்தவர். பாடுஞ் சாமர்த்திய மும் வாய்ந்தவர். சீமந்தனிபுராணம், விநாயகமான்மியம், தமிழ்வரலாறு முதலிய நூல்கள் செய்தவர். இவர் கவித்திற முணா விநாயக மான்மியத்து அவையடக்கச் செய்யுளை ஈண்டுக் காட்டுதும் :
அகவல்
* ஆதியென் றேத்து மம்மையு மப்பனுங்
காதலி னினைந்தவை கைகூட டற்கு தந்திமா முகனையே தவத்திடை நோற்ருல் அந்தமா கடவுட் காரிணை யெனலாம் மற்றவன் புகழ்சேர் மான்மிய சரிதம் கற்றவர் முன்னே கழறப் புகுதல் விண் வளர் மேனிலை மாட கூடத்தை மண்விளை யாட்டிற் சிறுமிகள் வகுத்துப் பாரெனக் காட்டும் பரிசே யாயினும் சீருடைப் பெரியோர் சேற்றெழு மலாையும் மணத்தாற் கொள்ளு மரபிலிக் நூலைக் குணத்தாற் கொள்வர் குறைதவிர்த் தன்றே."
ஆறுமுகத்தம்பிரான்
இவர் இந்தியாவிலுள்ள கிருவண்ணுமலையிற்சென்று அங்குள்ள ஆதீனத்தை யடைந்து சைவசித்தாந்த நூல் களைக் கற்றவர். பெரியபுராணத்துக்கு ஒரு சிறந்த உரை எழுதினவர். இதுவே அதற்கு முதல் எழுதப்பட்ட உரையாகும். இவரைப்பற்றிய சரிதங்கள் முழுவதுக்

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 229
தெரியாதாயினும், இவர் பூரீலறுரீ ஆறுமுகநாவலரிடங் கற்றவரென்றும், அவரால் வண்ணர்பண்ணையிற் முபிக் கப்பட்ட வித்தியாசாலையிலே சிலவாண்டு ஆசிரியராக அமர்ந்து கற்பித்தவரென்றும், அவரோடு யாதோ ஒரு காரணத்தான் முரணி அவ்வித்தியாசாலையை விட்டுத் திருவண்ணமலை சென்ருர் என்றும் அறிஞர் சிலர் கூறக் கேட்டுள்ளாம். இவர் கலியாப்தம் 4993 வரையி லிருந்
தவர்.
அருணசல ஐயா
இவர் மாதகல் என்னுமூரிலே ஏறக்குறைய எண் பது வருடங்களுக்கு முன்னே அந்தணர்குலத்திலே அப் பாசாமி ஐயர் என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தவர். இவர் சம்ஸ்கிருதமுங் தமிழும் நன்கு கற்றவர். கல்லூர் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடத்திலுங் கற்றவர். கவி பாடும் வன்மை வாய்ந்தவர். வடமொழி
நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்தவர்.
தாமோதரம்பிள்ளை
இவர் வகிரி என்னுமூரிலே இற்றைக்கு ஏறக்குறைய எண்பது வருடங்களுக்கு முன்னே பிறந்தவர். இந்தி
வேதாந்த
யாவை யடைந்து சாஸ்திரியா ரொருவரிடம் சித்தாந்த நூல்கள் கேட்டறிந்தவர். இந்தியாவிலும்
யாழ்ப்பாணத்திலும் சைவசித்தாந்தப் பிரசங்கங்கள் பல
செய்தவர். “ஞான சிக்கி’ என்னும் ஒரு பத்திரிகையை
நடாத்தி அதுவாயிலாகச் சைவசித்தாந்த உணர்ச்சியைப் பலரு மறியச் செய்தவர்.

Page 125
230 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
பொன்னுத்துரைஐயர்
இவர் வண்ணுர்பண்ணையி லிருந்தவர். அந்தணர் குலத்தவர். ஆறுமுககாவலரிடத்தும், வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடத்தும் தமிழ் இலக்கண இலக் கியங்கள் நன்கு கற்றவர். இலக்கியங்களுள்ளும் கோவை யந்தாதி, உலா முதலிய பிரபந்தங்களிலும் புராணேகி காசங்களிலும் மிக்க பயிற்சியுடையவர். பாடுஞ் சக்தியு மமைந்தவர். இவர் நல்லை நிரோட்டக யமக அந்தாதி எனப் பெயரிய ஒரு அந்தாகி பாடினவர் எனவு மறிகின் முேம். இவருடைய ஏனைச் சரிதங்கள் தெரிந்தில. இவர் தேகவியோகமாகி ஏறக்குறைய 10ஆண்டுகள் ஆகின்றன.
சதாசிவபண்டிதர்
இவர் இற்றைக்கு எறக்குறைய முப்பது வருடங் களுக்கு முன்னே வண்ணுர்பண்ணையைச்சார்ந்த நாச்சிமார் கோவில் எனப் பெயரிய கிராமத்திலே பொன்வினைஞர் குலத்திலே பிறந்தவர். இவர் தங்தையர் பெயர் நம சிவாயம். இவர் பாடலால் தமிழ் இலக்கண இலக் கியங் கற்றவர் என்பது அறியக்கிடக்கின்றது. இவர் செய்த நூல், வண்ணையந்தாதி, வண்ணே நகரூஞ்சல், சிங்கைநகரந்தாகி என்பன. பல சித்திரகவிகளும் பாடி யிருக்கின்றனர். மேற்காட்டிய நூல்கள் 1887-ல் பதிப் பிக்கப்பெற்றன. பாக்கள் மிகச் சுவையமைந்தன. சில காட்டுதும் :- 翰
வண்ணே நகரந்தாதி GG JGóI LI IT
அறிவுக் கறிவாகி யாருயிருக் குள்ளே செறியுஞ் சிவகாமித் தேவி-நெறியுடனே மாலயனைப் பெற்றருள்வாள் வண்ணை நகர்க் காமாட்சி யாலயமென் னகமே யாம்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 231
சிங்கைநகரந்தாதி கலித்துறை
குதிக்கின்ற வாணவக் கூத்துங் குல5லக் கொள்கைகளு மதிக்கின்ற மாடமு மாளிகைத் தோப்பு மனைவிமக்கள் விதிக்கின்ற கட்டளைப் பட்டங்கள் யாவும் விழலெனயான்
மதிக்கின்ற நெஞ்சைத் தருவாய் பழஞ்சிங்கைப் பண்ணவனே.
இவரைப்பற்றிய பிற சரித்திரங்களொன்றுங் தெரிய ၏ဓါးဒိ%).
சோமாஸ்கந்த பண்டிதர்
இவர் தாவடியில் பிறந்தவர். வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடங் கற்றவர். இந்துக்கல்லூரி யிற் பலவாண்டு தமிழ்ப் பண்டிதராயிருந்தவர். யாழ்ப் பாணத்துச் சித்தாந்தசபைக் காரியதரிசியாயிருந்தவர். சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரோடு மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்றவர். இராமாயண முதலிய காவி யங்களுக் கெரிந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்குப் போயபோது பாண்டித்துரை கேட்ட இராமாயணப் பாட்டுக்களுக்குப் பொருளுஞ் சொன்னவர். கவிபாடும் வன்மையுடையவர். எம்மோடுங் கூடக் கற்றவர். இவர் எமது இரகுவம்ச உரைக்களித்த சிறப்புக் கவியொன்று
காட்டுதும் :-
மதுரையில் வந்த சங்க மாசிக பத்தி ரத்திற் சதுரனுய்த் தமிழி ராம வவதார மாதி தர்க்க முதிர்வினன் முறையே தீட்டு மூதறி வுடைய மேலோன் மதியினி னுண்மை வாய்ந்தோன் மாபுளி நூல்க ளாய்ந்தோன்.
இவர் தேகவியோகமடைந்து மூன்று வருடங்க ளாகின்றன.

Page 126
232 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
நாகமணிப்புலவர்
இவர் நயினுதீவிலே சாலிவாகன சகாப்தம் கஅகடு-க் கும் கிறீஸ்தாப்தம் கஅகூக-க்குஞ் சரியான விக்கிரம வருடம் மார்கழி மாதம் கO-ங் தேதியிற் பிறந்தார். ஐந்து வயதாகி வித்தியாரம்பஞ் செய்யப்பெற்று வீரகத்திப் பிள்ளை ஆசிரியரால் நடத்தப்பட்ட கிண்ணேப் பள்ளிக் கூடத்திற் சென்று அவரிடங் கற்றுவந்தனர். அக்காலத் தில் தில்லையம்பல வித்தியாசாலை என்னும் சைவ விக் தியாசாலை ஆரம்பமாகி நடத்தப்பட அவ்வித்தியாசாலை யிற் சென்று அங்கிருந்த ஆசிரியருளொருவராகிய சோம சுந்தர ஐயரிடஞ் சில இலக்கண இலக்கியங்களைக் கற்று வந்தார். பின் யாழ்ப்பாணத்திலே வணிகர்களுக்குக் கணக்கெழுதுங் தொழிலிலமர்ந்தார். பின் அத்தொழிலை விடுத்துத் தமது ஊராகிய நயினுதீவிலே ஐந்துவருடங் கிராமசங்கத் தலைவராக இருந்து அவ்வுத்தியோகத்தை நடத்திவந்தார். இக்காலத்திலேயே நயினை நிரோட்டக யகமவந்தாகியும், நயினை மான்மியமு மிவராலியற்றப்பட் டன. அந்தாதி ககூso-ம் ஆண்டு அச்சிடப்பட்டது. மான் மியம் திருத்கி அச்சிடமுன் கிறீஸ்தாப்தம் கககூக-க்குச் சமமான பூரீமுக வருடம் ஆடி மாதம் உo-க் கிககி தேக வியோகமாயினர். இலக்கண இலக்கியங்களில் அதிகம் பயிற்சியில்லாதொழியினும் இளமைதொட்டுப் பாடுஞ் சக்கி இவருக்குத் தானேயுண்டானமையால் இவரை வாகவியென்று அழைப்பர்.
நயினைமான்மியம் முச்சகமுங் தனியளிக்கு மருண்மழைதோய்க் தனகுழலு
முதுநீர்க் கஞ்சத் தச்சனைய திருமுகமுங் கருவிழியும் வெண் ணகையு
மாம்பல் வாயுங் கச்சணியு மிளமுலேய மலர்க்காமுஞ் சிற்றிடையுங்
கனகத தாளும பச்சுருவுக் திகழமணி யாங்கில்வளர் சுந்தரியைப்
- பணிதல் செய்வாம்.

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 233
மயில்வாகனப் புலவர்
இவர் தெல்லிப்பழையைச் சார்ந்த வறுத்தலை விளான் என்னுமூரிலே சைவாசாரமுடைய வேளாண் குலக்கிலே இலங்கை15ாயக முதலியார் மாபிலே கண பகிப்பிள்ளை ஆசிரியருக்குப் புதல்வராக 1875-ம் ஆண் டிலே பிறந்தார். பிறந்து வித்தியாரம்பஞ் செய்தபின் அவ்வூரிலுள்ள அமெரிக்க மிஷன் தமிழ்ப்பாடசாலையில் சென்று கற்றுவந்தார். 12-ம் வயதிலே தமிழ் கற்பதை விடுத்துத் தெல்லிப்பழையிலுள்ள அமெரிக்க மிஷன் ஆங்கில விக்கியாசாலையிற் சென்று ஆங்கிலம் கற்றுவங் தார். பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக்கல்லூரி பிற் சென்று சர்வகலாசாலைப் பிரவேச வகுப்பிற் கற்று வந்தார். கற்று வருங்காலத்திலே அதற்குரிய பாடங்களைப் படிக்குநேரமொழிந்த மற்றைநேரங்களிலே தமிழிலுள்ள இலக்கண இலக்கியங்கள் சிலவற்றையுங் தாமே படித்து நேர்ந்தஐயங்களை அப்போது அக்கல்லூரியில் தமிழ்ப்பண் டிதராயிருந்த ஆ. சோமாஸ்கந்தபிள்ளையிடத்திற் கேட்டு வந்தார். கல்லூரி விடுதலை நாட்களில் சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரிடத்துஞ் சென்று தமக்கு வந்த ஐயங்களைக் கேட்பார். இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்பதை விடுத்தபின் மேற்கூறிய புலவரிடஞ்சென்று இலக்கண இலக்கியங்கள் சில கற்றுவந்தார்.
1897-ம் ஆண்டிலே ஆலயதரிசனத்தின் பொருட்டு இந்தியாவுக்குச் சென்றபோது இராமநாதபுரத்கிலே யாழ்ப்பாணம் உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவரிருப்பதை யறிந்து அங்கே சென்று அவரைக் கண்டு கலந்து பேசிய பின் அவரோடு சென்று சேதுபதி மகாராஜாவைத் தரிசித்தனர் என்றும், அப்போது ராஜா இவரையும் புலவரென வறிந்து ஒரு கவி பாடச்சொல்ல இவர் பாடி
30

Page 127
234 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்
அம்மகாராஜாவின் வியப்பைப்பெற்று மீண்டனர் என்றும் கூறுப. அப்போது இவர் வயது இருபத்திரண்டு.
அதன்பின் 1893-ம் ஆண்டு தொடங்கி 1901-ம் ஆண்டுவரையும் தெல்லிப்பழை ஆங்கில வித்தியாசாலை யிலே முன்னும், மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலே பின்னும் ஆசிரியராக விருந்து ஆங்கிலம் கற்பித்து வந்தார். மல்லாகத்திற் படிப்பித்த காலத்தில் கொத்தா ரிசுமாருக்குரிய பிரவேசபரிசைஷயிற் சித்தியெய்தினர். அதன் பின் கற்பிப்பதைவிடுத்து யாழ்ப்பாணத்திற் சென்று அங்கே பிறக்றர் பூரீ. வி. காசிப்பிள்ளையிடம் கொத்தாரிசுமாருக்குரிய பிரமாணங்கள் முதலாயவற் றைக் கற்று இறுதிப் பரிசைஷயிலுஞ் சித்தியெய்கினர். சித்தியெய்தியபின் நொத்தாரிசு உத்தியோகத்தில் நிய மனம் பெறும்வரையும் காங்கேயன்துறையிலுள்ள ஆங்
கில வித்தியாசாலையிற் கற்பித்துவந்தார்.
இவர் கொத்தாரிசு உத்தியோகத்திற் பிரவேசித் தற்கு முன்னும் பின்னுமாக மயிலை மும்மணிமாலை, விநாயகரகவல், மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், ஊஞ் சல், வைரவர் தோத்திரம், மாவைப்பதிகம், இணுவைப்
பதிகம் முதலிய நூல்களைப் பாடியுள்ளார்.
1908-ம் ஆண்டிலே வட்டுக்கோட்டைப்பகுதி நொத் தாரிசுவாக நியமனம் பெற்று அங்கே சென்றிருந்து அவ்வுத்தியோகத்தை நடாத்கி வந்தார். வருங்காலத் லே துணவைப்பதிக முதலியவற்றைப் பாடினர். பின், கீரிமலையிலுள்ள நகுலேசுவரர் மீது வினுேதவிசித் திரகவிப்பூங்கொத்து எனப்பெயரிய ஒரு நூலியற்றி, அக்காலத்திலே சாசன அத்தியக்ஷாாகக் கொழும்பி லிருந்த ઉFi. அருணுசலந்துரைக்கு அந்நூலை அர்ப்ப

ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் 235
னன் செய்து அச்சிட்டு வெளிப்படுத்தினர். இதிற் பெரிதுன், சிக்கிசங்களமைந்துள்ளன. இதற்கு யாழ்ப்பா னக்கிலும் இந்தியாவிலுமுள்ள பெரும் புலவர்கள் சிலர் சிmப்புக்கவிகள் அளித்துள்ளார்கள்.
இவர் 1908-ம் ஆண்டில் விவாகஞ் செய்தனர். இவருக்கு நான்கு புக்கிரிகளுளர். 1908-ம் ஆண்டிலே தமது உக்கியோகத்தில் இடமாற்றம் பெற்று மயிலிட் டிப் பகுதிக்கு நொக்காரிசுவாகி அங்கே வந்திருந்து அவ் வுக்தியோகக்கை நடாத்தி வந்தார். அப்போது மயி விட்டிகெற்கில் இந்து பரிபாலன சபை என ஒரு சபையைக் காபித்து அகற்குத் தானே அக்கிராசனராக விருந்து ஈடாக்கிப் பிரசங்கங்கள் செய்தும் செய்வித் தம் வங்கார். திருநீலகண்டகாயனர் சரிக்கிரத்தை நாடகமாக இயற்றி அங்காடகத்தை நடிக்கச் செய்தார். இக்காலக்கிலேயே இணுவைப் பதிற்றுப்பத்தந்தாகியும் இவசாற் பாடப்பெற்றது.
இக்ககைய புலவர் தமக்குண்டான சுரநோய் கார ணமாக 191-ம் ஆண்டிலே தேகவியோகமானுர். இவர் பாடற்றிறமுணர ஒரு செய்யுள் இணுவைப் பதிற்றுப் பக்கங்காகியுட் காட்டுதும் :
ஆசிரியவிருத்தம்
அறமே புரிந்து மறமே தவிர்ந்து மழகோ டிருந்து நிதமு நிறமே பொலிந்த மயிலே முகந்த கிமலா சிறந்த விணுவைக் குறமாது மும்பல் வளர்மாது மன்பு குறையாதிருந்த புடையோய் புறமீது முள்ளு நினையானி னந்து புகழாவ ணங்க வருளே.

Page 128

ட்டுத் வர் சரிதம்
அதிபர் ா அவர்களால் ப்ேபட்டது.