கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து சமயம் காட்டும் ஆன்மீக வாழ்வு

Page 1
பேராசிரியர் கலாநிதி التغيير النباتات
థ్రో கேஷத்திர(வயல்
துரி முன்னேஸ்வரம் Ksh ethira Winayaka TETIph Sri
ශී ගණ දෙවි දේවාලය [ෂවිශීල් ].
hitl t TliLil: k s het lirius, insika ili:
Sri Sankar
-
 
 
 
 
 

6) Typé) ப.கோபாலகிருஷ்ண ஐயர்,
画
ital - TS . விநாயகர் ஆலயம், ம், சிலாபம், இலங்கை, Viun nes Wai'a III. Chila vyr.Sri Lankı.
මුන්ෂන්ස්ඝථම, හලාවත, ශ්‍රීශූuක].
o.o"" lill:11111 + ':' :FI:III: EE 1413 4.L: 311 Publications A - 2 t)

Page 2


Page 3

இந்து சமயம் காட்டும் ஆன்மீக வாழ்வு
பேராசிரியர் கலாநிதி ப. கோபால கிருஷ்ண ஐயர்
நீங்கள் முதலில் கேட்கவேண்டியது இந்த ஆன்மாவைப் பற்றிய உண்மை. நீங்கள் கேட்டிருந்தால் அதைப்பற்றிச் சிந்தியுங்கள். பிறகு அதைப்பற்றித் தியானம் செய்யுங்கள். வீண்வாதங்கள் இனி வேண்டாம்! நீங்கள் எல்லையற்ற ஆன்மாதானா என்று உங்களைத் திருப்திசெய்து கொள்ளுங்கள். அது உண்மையானால் நீங்கள் உடல் என்று நினைப்பது பொய். நீங்கள் ஆன்மா, அதை உணர வேண்டும். ஆன்மா தன்னை ஆன்மாவாகப் பார்க்க வேண்டும். இப்பொழுதோ ஆன்மா தன்னை உடலாகப் பார்க்கிறது. அது நிற்க வேண்டும். இந்த உணர்வு வந்தவுடனேயே உங்களுக்கு முத்தி கிடைத்து விட்டது.
ஆன்மீக வாழ்வு பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய அனுபவ வார்த்தைகளே இவை. மனிதர்களாகிய எமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? இந்த உலகந்தானா வாழ்க்கையின் குறிக்கோள்? மனிதன் அனுபவித்துக்கொண்டிருக்கும் தொல்லைக்குமேல் வேறு ஒன்றும் கிடையாதா? அன்றி தொல்லை நீங்கி இன்பமாக இருப்பது தான் வாழ்க்கையின் குறிக்கோளா? பிறப்பு என்பது என்ன? பிறவியின் நோக்கம் யாது? பிறப்பெடுத்து மனிதர்களாக வாழும் நாம் வாழ்க்கையில் காண்பவையும் அனுபவிப்பவையும் நிலையற்றவை; அநித்தியமானவை; இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கும் மெய்ப் பொருள் உண்டா? இறப்பு என்பது என்ன? என்பன போன்ற பல ஐயங்கள் மனிதனது வாழ்க்கையில் காலத்துக்குக் காலம் எழுந்துள்ளன. காலத்துக்குக் காலம் தோன்றிய ஞானிகளும் அநுபூதிமான்களும் தத்துவ சிந்தனையாளர்களும் இத்தகைய சந்தேகங்களுக்கு விடை கண்டு விளக்கமளித்துள்ளனர். இத்தகைய வினாக்களுக்குரிய தெளிவான விடைகளே மனிதனின் ஆன்மீக வாழ்வுக்கு உரமூட்டுபவையாக அமைவன. உலகத்து மக்கள் யாக்கையைப் பெற்றோர். அந்த யாக்கையைப் பெற்றதனாலாகிய பயனைப் பெற முந்துதல் வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். வாழும் வகையறிந்து வாழவேண்டும் எனச் சமய நூல்கள் இயம்புகின்றன.

Page 4
இந்து சமயத் திருநூல்களிலே இத்தகைய ஆன்மீக விடயங்கள் மிக விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மனிதனது ஆன்மீக விடயங்கள் பற்றிப் பொருள் கொள்வதிலோ அத்தத்துவங்களுக்கு விளக்கம் காண்பதிலோ ஞானியர்களிடையே வேறுபாடு இருக்கலாம். எனினும், இவை யாவற்றுக்கும் அடிப்படையாக சமயத் திருநூல்கள் விளங்குகின்றன. புனிதம் நிறைந்த அழிவற்ற வேதங்கள் எமது வாழ்க்கையின் உயர் லட்சியத்தின் அம்சங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கும் தோற்றுவாயாக உள்ளன.
மனிதன் தூல சரீரத்தில் மாத்திரம் அடங்கியிருப்பவன் அல்லன். அவனுடைய இச்சரீரத்தினுள் சூட்சுமமான மனது உள்ள தென்றும் அதற்கும் மேலாக அதனை இயக்கும் ஒரு பொருள் உண்டு என்றும் நாம் நம்புகின்றோம். இதனையே ஆத்மா என்பர். இது மாறுபாடு இல்லாதது. ஆதியும் அந்தமும் அற்றது. மரணமில்லாத பெருவாழ்வில் அவ்வாத்ம சொரூபம் உள்ளது. இவ்வாத்மா பற்றி இந்துக்களிடையே நிலவும் கொள்கை கவனத்திற்குரியது. அது இவ்வாத்மா பல சரீரங்களை எடுத்துச் சரீரத்திலுள்ள விருப்புத் தீரும் வரை அதில் தங்கியிருந்து விருப்புத் தீர்ந்தவுடன் விடுதலைப்பேறு அடைகின்றது என்ற கொள்கையாகும். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி பல்வேறு கொள்கைகள் இந்துக்களிடையே காணப்படுகின்றன. இவை இரண்டும் என்றைக்குமே வெவ்வேறு பொருள்கள் என்பது ஒரு பிரிவினரின் கொள்கை, பிறிதோர் பிரிவினர், பரமாத்மாவே ஜீவாத்மாவாக உள்ளதென்றும் உள்ளது. பரமாத்மா. வாகிய ஒரு பொருள் தான் என்றும் கூறுவர். இவ்வாறு பல கொள்கை வேறுபாடுகள் காணப்படுமிடத்தும், ஆத்மா எல்லையிலடங்காதது. பிறப்பும் இறப்பும் அற்றது; பல சரீரங்களை எடுத்து இறுதியில் மனித சரீரத்திலிருந்து பூரணத்துவமாகிய விடுதலையை அடைகின்றது என்ற அடிப்படைக் கொள்கையில் இந்துக்கள் உறுதியாக உள்ளனர்.
எண்ணரிய பிறவிகளில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிதிலும் அரிது என்ற வாக்கின்படி பிறப்பில் உயர்ந்தது மனிதப் பிறவியாகும் என்பது பெறப்படுகின்றது. இப்பிறவியின் நோக்கத்தைச் சரிவர அறிந்து அதற்கேற்ப வாழ்பவனே நிறை மனிதனாக விளங்குவான். மனிதன் நிறைமனிதனாக வாழ்வதற்கேற்ற வழிமுறைகளை ஞானிகள் எடுத்துக் கூறியுள்ளனர். மனித வடிவத்தில் பிறப்பெடுத்திருந்தால் மட்டும் போதாது மனிதனாகப் பிறந்தவனிடத்திலே மனிதத் தன்மை பொருந்தியிருத்தல் வேண்டும்.

மனித வடிவில் வாழ்ந்திருந்தால் மட்டும் போதாது. எவ்வெவ் வகைகளில் மனிதன் தன்னை மேலோனாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும். இவ்வகையில் எல்லா நிலைகளிலும் நிறைவு பெற்றவனே ஆத்மீக சாதனையிலும் வெற்றிபெறக்கூடியவனாவான். ஆத்மீக நிலைக்கு உயர்ந்துவரும் உயிர் மானிடவடிவத்தை எட்டுகின்றது என்பது அறிஞர் கருத்தாகும். மனிதன் பெற்றுள்ள உடம்புநிறை வாழ்வு பெற உதவியாகவுள்ளது. மனிதன் தனது மனதைப் பெருநிலை எய்தத் தகுதியுடையதாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். இதற்கு மேலும் வழிவகுப்பது மனிதனுடைய ஒழுக்கமாகும்.
நெறியான வாழ்க்கைக்கும் ஒழுக்கமுடைமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனிதன் ஏன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும்?தனது உள்ளத்தில் எழும் சிந்தனைகளுக்கேற்ப எப்படியும் நடந்து கொள்ளலாமே என எண்ண்த் தூண்டுவது இயல்பே. இந்துக்களின் ஆத்மீக வாழ்வைப் பொறுத்தவரை ஒழுக்கம் சமய வாழ்வுக்குப் பக்கபலமாக அமைகின்றது. மனித மனம் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட செயல்களையே சிந்தனை என்கின்றோம், சில சிந்தனைகள் ஒழுக்கங்களைத் தனதாக்கிக் கொள்ளும் போது அது ஞானமாக நிறைவு பெறுகின்றது.
வாழ்வின் வளர்ச்சி, நீடித்த மகிழ்ச்சி ஆகியவற்றிற்கு மாத்திரமன்றி ஆன்மீக வாழ்வுக்கும் ஞானம் வழி செய்கின்றது. இக்காரணத்தினால் தான் இந்து சமயத் திருநூல்கள் ஞானத்திற்குச் சிறப்பிடம் வழங்கியுள்ளன. உபநிடதங்கள் ஞானத்தையே பிரதான பொருளாகக் கொண்டுள்ளன. பகவத் கீதை ஞானயோகமாக உபதேசிக்கின்றது. ஆகமங்கள் ஞானபாதமெனச் சிறப்பிக்கின்றன. ஞானநிலையில் ஒருவன் கடவுள் திருவுளத்துக்கு ஒப்ப ஒழுகவேண்டும் என்பதை மனிதன் உணரத் தவறுவதில்லை. ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கையின் வாயிலாக மனிதன் தனது விழுப்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை வள்ளுவர்.
ஒழுக்கம் விழுப்பம் தரல7ன் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
என்று வலியுறுத்திக் கூறுவது குறிப்பிடத்தக்கது. மலரானது தன்னிடத்தேயுள்ள அழகையும் நறுமணத்தையும் இயல்பாகவே வெளிப்படுத்துதல் போல மனிதனும் தன்னிடத்தேயுள்ள புனிதத் தன்மையையும் பேரன்பையும் பண்பையும் புலப்படுத்தக் கடமைப்
7

Page 5
பட்டுள்ளான் எனவும் அதற்காகவே மானிடப் பிறவி ஏற்பட்டுள்ளது எனவும் கொள்வதில் தவறில்லை. தனது மேலான இயல்பைத் தோற்றுவிப்பதற்கு ஒழுக்கம் ஒன்றே அவனுக்குரிய வழி என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதனுக்கு ஒழுக்கம் விழுப்பம் தரும் காரணத்தால் ஒழுக்கம் மனிதனால் உயிரினும் ஒம்பப்படும் எனக் குறள் அறிவுறுத்துகின்றது. ஒழுக்கமானது நாளடைவில் மனிதனைத் தெய்வ சந்நிதியில் கொண்டு சேர்த்துவிடுகின்றது.
மக்களது சிந்தனையின் தன்மைக்கேற்ப வாழ்க்கையின் நோக்கங்களும் வேறுபடுகின்றன. ஒரு சிலர் உலகியல் வாழ்க்கையில் இன்பமுற்று இருப்பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கருதுவர். மனித வாழ்க்கையின் நோக்கம் பலவிதமான அனுபவங்களைப் பெறுவதும் அதற்குண்டான வழிகளைத் தேடுவதுமே எனச் சிலர் கருதுவர். அனுபவத்தைப் பெறத் துடிக்கும் ஒவ்வொரு ம்னிதனும் தனக்குள் ஓர் அளவுகோலை வைத்திருக்கின்றான்.இந்த அளவுகோல் தரும் விமர்சனங்களே நல்லன - தீயன என்றும், உயர்ந்தவை - தாழ்ந்தவை என்றும் விருப்பு - வெறுப்பு என்றும் கொள்ளத்தக்கவை - தள்ளத்தக்கவை என்றும் பல்வேறு மனோ விகாரங்களாகவும் அதன் அடிப்படையில் செயல்களாகவும் தோன்றுகின்றன. வாழ்க்கையின் நோக்கங்கள் மனிதர்க்கு மனிதர் வேறுபடுவதற்கு இதுவே அடிப்படையாகும்.
அனுபவத்தைத் தேடிப்பிடிப்பதிலும் அதற்குரிய பொருளை நாடுவதிலும் இந்த அளவுகோல்கள் தனித் தன்மை பெற்றிருப்பினும் அடிப்படையில் இதனிடத்தில் ஒரு பொதுமைக் குணம் காணக்கிடக்கின்றது. மனிதன் தெளிவைத் தேடவேண்டிய தேவையும் இங்குதான் தோன்றுகின்றது. எல்லோரிடத்திலும் மாறாமல் காணப்படும் இந்தப் பொதுமைக் குணத்தை ஒருவன் தனது வாழ்விலே கண்டறிய முயல வேண்டும்.
ஞானத்தின் நோக்கம் வாழ்வின் அடிப்படை இலட்சியத்தையும் அதனை அடைவதற்கான வழிகளையும் சுட்டிக் காண்பிப்பதாக அமைய வேண்டும். இந்நிலையில் செயல்படத் தொடங்கிய ஒவ்வொரு முயற்சியும் சமயம் என்ற பெயர் பெறுகின்றது. மனிதன் பெறவிரும்பும் மனோநிலைதான் என்ன என்ற வினாவுக்கு ஏற்பட்ட விடைகளே ஆன்மீகம் என்றும் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.
ஒரு தனிமனிதனின் வளர்ச்சி அவன் அனுபவிக்கும் அமைதியைப் பொறுத்தது என அறிஞர் கருதுவர். அமைதி கூடும் பொழுது
8

வாழ்வின் நிலை கூடுகின்றது. ஞானத்தின் இயல்பு மோனத்தின் எல்லையைக் காட்டுவதாய் அமையும். இந்த அமைதியின் தன்மையைப் பற்றி ஆராய்வதே சமயத்தின் முக்கிய பணியாக அமைந்தது. வேதங்களும் உபநிடதங்களும் கீதையும் வேறு பல ஞான நூல்களும் இது பற்றி விளக்கிக் சுறுகின்றன. இந்த அமைதிக்கு உரிய மறுபெயரே ஆத்மா என்பதாகும். இதனைப் பற்றிய தெளிவான ஞானமே ஆத்மஞானம் எனப்படும். எது சாந்த வடிவாகவும் தன் சுய அமைதியைத் தானே உணரும் அறிவு ரூபமாகவும் இருக்கிறதோ அதுதான் ஒவ்வொரு மனிதனின் இயல்பான, என்றுமுள்ள பிறப்பு இறப்பு அற்ற சுயநிலை என ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சுய நிலை தற்காலிகமாக மறைக் கப்பட்டு அது எட்டாத ஒரு பொருள் போன்றும் அதை அடைய ஆயிரமாயிரம் முயற்சிகள் தேவை என்பது போன்றும் மனதுக்குத் தோன்றுகின்றது. இந்த நிலையில் மனிதனுக்கு "ஜீவன்" என்ற பெயர் கிடைக்கின்றது.
இந்த ஜீவனே ஆத்மஞானத்திற்கு உரியவனாவான். தனக்கும் தான் விரும்பும் அமைதிக்கும் இடைவெளி இல்லை என உணர்த்துவதே ஞானமாகும். இதற்காக மனிதன் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் ஞானமார்க்கம், சாதனை, ஆன்மீக வளர்ச்சி, தவம் போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகின்றது. எனவே, ஆத்மீக சாதனைகள் பற்றி மனிதன் தனது வாழ்க்கையில் தெரிந்து கொள்ளக் கடமைப்பட்டவனாகின்றான். ஆத்மீக சாதனைகளுக்குத் தடையாக அமைவது அறியாமையே ஆகும். இந்த அறியாமையைத் திருத்துவதற்கான முயற்சிகளுக்கே பக்தி, தியானம், யோகம் ஆகிய பெயர்கள் தரப்பட்டுள்ளன. அறியாமையை நீக்குவதற்குரிய மற்றொரு மாற்று மருந்து ஒழுக்கங்கள் ஆகும். ஆத்ம சாதனை உள்ளத்தைப் பற்றிய தெளிவை நிச்சயப்படுத்தும் முயற்சியாகவே அமைகின்றது.
மனிதனைப் பொறுத்தவரை மரணம் நிகழ்ந்தே தீரும். அதனைத் தவிர்க்க முடியாது எமக்கு முன் வாழ்ந்த எத்தனையோ பெரிய மகான்களும் இறந்துள்ளனர். சாதாரண எளிய மக்களும் இறந்துள்ளனர் ஒருவகையில் இந்த உலகம் எல்லையற்ற இறந்த காலத்தின் இருப்பிடமாக உள்ளதுபோலத் தோன்றுகின்றது. அவ்வாறிருந்தும் நாம் இந்த உடலுடன் ஒட்டிக்கொள்கிறோம். "நான் என்றும் இறக்கமாட்டேன்" என்ற நினைப்பில் பல காரியங்களைச் செய்கின்றோம். உடல் இறந்துதான் ஆக வேண்டுமென்று தெரிந்துங்கூட நாம் அதனையே பெரிதாகக் கருதி ஒட்டிக் கொள்வதோடு
9.

Page 6
உடல் தான் நாம் என நினைக்கின்றோம். எமது உடலை ஆத்ம சாதனைக்குரிய பொருளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அனுபூதமான்களின் கருத்தாகும்.
இருக்குவேதம் தரும் ஆன்மீகக் கருத்துக்களை நாம் ஆராயுமிடத்து அவ்வேதம் இறப்புப் பற்றியும் இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு பற்றியும் விளக்கும் பல கருத்துள்ள பாடல்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வரும் இருக்குவேத்தில் பத்தாம் மண்டலத்தில் வரும் நாசதிய சூத்திரத்தில் (X - 129) இறப்பு நிகழ்ந்ததா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இறப்புக்குப்பின் ஆன்மா வேறோர் உல. கத்தில் பிறப்பதாக நம்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. பிராமணங்களில் வரும் பகுதியில் மறுபிறப்புப் பற்றிய குறிப்பு உள்ளது.
ஒழுக்கத்திற்கும் சமயப்பற்றுக்கும் உள்ள பரிசு விண்ணுலகில் இன்பம் துய்ப்பதாகும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. இருக்கு வேதத்தில் இறப்புப்பற்றிய பாடல் (X - 14) இறப்போடு தொடர்புடைய பல நம்பிக்கைகளைக் கூறுகின்றது. இறந்த உடலை அக்கினியே பிதிரரும் தேவரும் உறையும் மறு உலகுக்கு எடுத்துச் செல்வதாக இப்பாடல் குறிப்பிடுகின்றது. இருக்கு வேதத்தில் யமனே இறப்புக்குரிய தெய்வமாகச் சித்திரிக்கப்படுகின்றான். இறந்தோருக்குரிய பாதையை வகுத்தவனும் அவனேயாவன். யமனோடு சேருவதற்கு இறந்தவர் நல்வினைப் பயன்களோடு செல்லவேண்டுமென வற்புறுத்தப்படுகின்றது. ஒருவனது நல்வினைத் தேட்டமே இறப்பின் பின் மறு உலகில் உயர்ந்த பேற்றினை நல்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்குவேதப்பாடல் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
இறப்பின் பின் உள்ள நிலை பற்றி இருக்குவேதம் கூறும் சிந்தனையின் வளர்ச்சியாகவே உபநிடத சிந்தனைகள் அமைகின்றன எனக்கொள்ளலாம். இம்மண்ணுலக வாழ்வுக்குப் பின் மனிதன் எங்கே செல்கின்றான்? மரணத்துக்குப் பின் ஆத்மாவின் நிலை என்ன என்பது போன்ற வினாக்களுக்கு உபநிடதங்கள் விடையளிக்கின்றன. அநாதியாகிய ஆன்மா இவ்வுலகில் தான் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்பப் பல்வேறுபிறப்புக்களுக்கு உட்படும் நியதியை உள்ளடக்கியதே கருமக்கோட்பாடு ஆகும். "வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான்" என்ற நியதிக்கேற்பச் சிந்தனை, சொல். செயல் ஆகிய மூன்றும் பிறவியைத் தீர்மானிக்கின்றன. நாம் இப்போது இருக்கும் நிலைக்கு நமது முன்னைய கருமங்களே காரணமாக அமைகின்றன எனவும்.
10

எதிர்காலத்தில் எமது நிலையை இன்று நாம் ஆற்றுகின்ற கருமங்களே தீர்மானிக்கும் எனவும் இக்கோட்பாடு விளக்கிநிற்கின்றது. மனிதரிடையேயுள்ள பிறவிக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் உரிய விளக்கமாக இது அமைகின்றது. -
சைவசித்தாந்தத்தில் வினை பற்றிய கருத்துக்கள் மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன. உயிர்கள் அறிவோடும் அறியாமையோடும் கூடியிருக்கின்றன. உலக வாழ்வால் உயிர் அறிவு விளக்கம் பெறுவதால் உயிருக்கு அறியாமை செயற்கையாகவே இருத்தல் வேண்டும். இவ்வறியாமையைப் பேரறிவுப் பொருளாகிய இறைவன் விளைவித்திருக்க மாட்டான். வேறொரு பொருளே இதற்குக் காரணமாக இருத்தல் வேண்டும். இப்பொருளையே சைவசித்தாந்தம் ஆணவ மலம் என்று குறிப்பிடுகின்றது. இப்பொருளை இறைவன் உண்டாக்கியிருக்கமாட்டானாதலால் இதுவும் எவராலும் உண்டாக்கப்படாதது என்றும் உள்ள பொருள் என்றும் உயிர்கள் தம் எளிய இயல்பால் மயக்குத் தன்மையுடைய இப்பொருளை அநாதியே பற்றி அறியாமைக்குள்ளாயின என்றும் இம்மலத்தை நீக்குவதற்காகவே தனக்கென ஒரு தேவையும் இல்லாத இறைவன் கருணை ஒன்றே காரணமாக உயிர்களுக்கு இயற்கையிலிருந்து உலகையும் உடல்களையும் படைத்தருளியிலுக்கின்றான் என்றும் சைவசித்தாந்தம் கூறுகிறது. அறிவுடைய பொருட்கள் தம் அனுபவத்தாலேயே பயன் பெறுதல் வேண்டும். எனவே, உயிர்கள் அனுபவம் பெறும் பொருட்டே இறைவன் உலகையும் உடல்களையும் படைத்தருளியுள்ளான். உயிர்கள் உடல்களைக் கொண்டு உலகில் வினைகளைச் செய்து அனுபவம் பெற்று அவ்வனுபவத்தால் ஆணவ மலக்கட்டிலிருந்து விடுதலை அடைகின்றன. எனவே வினை, சைவசித்தாந்தத்தில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.
"நன்மை செய்தால் நன்மை விளையவேண்டும். தீமை செய்தால் தீமை விளையவேண்டும்" என்ற நியதி அறிவுக்குப் பொருத்தமான ஒன்றாகும். ஆனால் உலக வாழ்க்கையில் நல்லவர்கள் துயருறுவதும் தீயவர் பலர் செழிப்புடன் வாழ்வதும் நாம் காணக்கூடிய விடயங்களாகும். அறிவியல்வாதிகள் இதற்குரிய விளக்கங்களை அளித்துள்ளபோதும் நியதி தப்பாமல் வினைப் பயன்கள் வரவேண்டும் என்பதில் சைவசித்தாந்தம் உறுதியாகவுள்ளது. நடுநிலையாளனாகிய இறைவன் உலகை நடத்தும்போது ஒருவர் ஏழையாக மற்றொருவர் செல்வந்தராக, பிறிதொருவர்
11

Page 7
நோயாளியாகவெவ்வேறு நிலைகளில் இருக்கக் காரணம் என்ன என்பது சிந்திக்கற் பாலதாகும்.
உயிர்கள் வினைகளைச் செய்து ஆணவமலப்பற்றை நீக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே இறைவன் உலகைப் படைத்துள்ளான். தமக்குக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு திருத்தம் பெறாது இறந்து போகும் உயிர்கள், வினையாற்றி ஆணவ மல நீக்கம் பெற மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென்ற காரணத்தால் அவை மீண்டும் பிறக்கும் எனக் கூறப்படுதல் பொருத்தமாகவேயுள்ளது. இதனால் உயிர்களுக்கு அடுத்து பிறவியுண்டென நம்பவேண்டியுள்ளது. எனவே, அதற்கு முற்பிறவியும் இருந்திருக்க வேண்டுமென்பதும் பெறப்படுகின்றது. இப்பிறவியில் செய்யும் நல்வினைக்குப் பயன் நமக்குக் கிடைக்கவில்லையென்றால் இறைவன் அடுத்து பிறவியிலாவது நமக்கு அப்பயனைத் தருவான் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. எனவே, ஒவ்வொரு பிறவியிலும் செய்த வினைகளுக்கேற்பவே பிறவிப்பயன் கிட்டுகின்றது. முற்பிறவியிலே செய்த வினைகளுக்கேற்றவாறே இப் பிறவியின் வாழ்க்கை அமையுமாதலால் மக்கள் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன எனச் சைவசித்தாந்தம் கூறுகின்றது.
சமண, பெளத்த சமயங்கள் வினைபற்றிய உண்மையை ஒப்புக்கொள்ளுமிடத்தும் வினைப்பயன்கள் தாமே வருமென்று அவை கூறுகின்றன. நியதி தப்பாமல் அவ்வுயிர்க்குப் பயனை ஊட்ட வினைக்கு அறிவில்லை. எனவே, பேரறிவுப் பொருளாகிய இறைவனே உயிர்களின் நிலையினை அறிந்து நியதி பிறழாமல் வினைப்பயனை ஊட்டவேண்டும் எனச் சைவசித்தாந்தம் கூறும். உயிர்களின் நன்மைக்காக இறைவன் காலமறிந்து அளவறிந்து பல்வேறு நிலைகளில் வினைகளுக்குரிய பயனை ஊட்டுகின்றான்.
இப்பொழுது நல்வினை செய்யும் உயிர், அதன் பயனை நுகராமல் முன்னைய தீவினைப் பயனை இப்பிறவியில் நுகர்வதால் அதன் அறிவிலே பல திருத்தங்கள் உண்டாகின்றன. அதுபோன்றே தீவினையைச் செய்யும் உயிர் நல்வினைப் பயனை நுகர்வதால் பல திருத்தங்களை அடைகின்றது. இதனால் நியதியை மாற்றாமல் ஏனையவற்றை இறைவன் மாற்றுகின்றான். உடலை மாற்றினாலும் காலம் இடத்தை மாற்றினாலும் செய்த வினைக்குரிய பயனை நியதி தப்பாமல் செய்த உயிரே அனுபவிப்பதால் பயன்கிட்டுகின்றது.
12

ஆணவமல நீக்கத்திற்காகவே இறைவன் வினைப்பயன்களை ஊட்டுகிறானேயன்றி, செய்த வினையின் பயனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்காகவன்று. வினைப்பயனால் உயிர்கள் திருத்தம் பெறுகின்றன.
சைவசித்தாந்தம் மூவகை வினைகளைக் குறிப்பிடுகின்றது. சஞ்சிதம் என்பது முற்பிறப்புக்களில் செய்து அனுபவிக்கப்படாமல் எஞ்சி நிற்கும் வினைத்தொகுதியாகும். பிராரத்தம் அத்தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டு, இப்பிறவியில் அனுபவத்திற்கு வரும் வினைப்பகுதியாகும். இதனையே ஊழ்வினை எனக் கூறுவர். ஆகாமியம் இப்பிறவியில் செய்யப்படும் வினைகளாகும். முற்பிறவியில் நாம் என்ன வினை செய்திருக்கிறோம் என்பதை நாம் அறியவொட்டாமல் இறைவனின் திரோதான சத்தி மறைத்துவிடுகின்றது.
அப்படி மறைத்தால் தான் நாம் ஊக்கத்தோடு மேல்வினை செய்வோம். ஆனால் செய்த வினையின் வாசனை மட்டும் நம்மிடையே இருந்து இப்பிறவியில் நாம் செய்யும் முயற்சிக்குத் தூண்டுகோலாகவுள்ளது. நாம் முற்பிறப்புக்களில் செய்துள்ள வினைகளுக்குரிய பயன்களில் என்னென்ன பயன்களை ஊட்டினால் இப்பிறவியில் நமக்கு ஆணவமல நெகிழ்ச்சி ஏற்படுமென்பதை அறிந்து இறைவன் அவற்றை ஊழாக அமைக்கின்றான். எனவே, பிராரத்தமாகிய ஊழ், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும் அவற்றைப் பெறுதற்குரிய காலம், அளவு, இடம், சந்தர்ப்பம், சூழ்நிலை ஆகியவற்றுக்கும் ஏதுவாக அமைகின்றது. ஊழுக்கும் முயற்சிக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தின் வாயிலாகத்தான் உயிர்கள் ஆணவமலக் கட்டினின்றும் விடுபடுகின்றன. இப்போராட்டம் இல்லாவிடில் உயிர்கள் முன்னேற இடமில்லாது போய்விடும். நாம் உய்வுபெறவும் இதுவே உதவுகின்றது. மிகவும் முனைந்து செய்யும் முயற்சிக்கு இம்மையிலேே பயன் உண்டு.
அறவாழ்க்கையால் ஆணவ நெகிழ்ச்சி உண்டாகும். எந்த அளவுக்கு நெகிழ்ச்சி உண்டாகின்றதோ அந்த அளவுக்கு ஊழ் வினையின் தாக்குதல் குறையும், நல்லொழுக்கம், நற்சிந்தனை, பிறர் நலம் பேணல் உயிர்களிடத்து அன்புகொள்ளல் ஆகியவற்றால் ஆணவமலம் நெகிழும் வாய்ப்புண்டு. இறைவழிபாடும் இதற்கு மிகுந்த துணைசெய்யும். சைவசித்தாந்தத்தில் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களும் நான்காவதாகிய
13

Page 8
ஞானத்திற்கு இறைவழிபாடு ஊழ்வினையின் தாக்கத்தைக் குறைத்துக்கொள்வதற்கும் ஒருசில ஊழ்வினைப் பயனை முழுதும் வெல்வதற்கும் சிறந்த சாதனமாகும்.
வினைகளை ஆற்றி, ஆற்றி இன்பதுன்ப அனுபவங்களைப் பெற்று வரும் உயிர் சிறிது சிறிதாகப் பயன் கருதாது வினையாற்றும் பக்குவத்தினைப் பெறும். பகவத்கீதை கர்மயோகத்தின் வழி எடுத்துக்கூறும் கர்மசந்நியாசம் இத்தகையதே. பயன் கருதாது வினையாற்றும் திறத்தினால் ஆணவமல நெகிழ்ச்சி ஏற்பட்டு, நல்வினை தீவினை இரண்டையுமே ஒப்புநோக்கி அவற்றால் வரும் இன்பதுன்பங்கள் இரண்டையுமே பொருட்படுத்தாமல் பற்றற்று இறையருளை நாடி நிற்கும் நிலையுண்டாகும். உயிர் தன் அறிவில் இரு வினைகளையும் ஒப்பநோக்கி, பற்றின்றி வாழ்தலையே "இரு வினையொப்பு" எனக் கூறுவர். இருவினையையும் ஒப்பநோக்கி இறையருளை நாடி நிற்கும் உயிரின் பக்குவம் கண்டு இறைவனே குருவாக வந்து காட்சி கொடுத்து அதற்கு ஞானத்தை உணர்த்துவான். சமயாசாரியரின் வாழ்க்கை அனுபவங்ஸ் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒவ்வொரு உயிரும் பிறவிதோறும் பக்குவடைந்து மும்மல நீக்கம் பெற்றுப் பிறவாப் பெருநிலை எய்துவதே நோக்கம் என்பதைச் சைவசித்தாந்தம் தனிப்பெருங்கொள்கையாக எடுத்துக் கூறுகின்றது.
உபநிடதங்களில் பிறவி பற்றி வரும் கருத்துக்களும் சிந்தனைக்குரியன. இவ்வுலகில் சரீரந்தோறும் தம்மால் செய்யப்பட்ட கருமத்தின் பலனை அனுபவிப்பவர்களாய் இருதய குகையில் இருவர் புகுந்துறைகின்றனர். அவரவர் கருமத்துக்கும் ஞானத்துக்கும் தக்கவாறே வேறு உடல்களையோ தாவர நிலையையோ அடைகின்றனர். மனிதன் பூண்டுபோல் அழிகின்றான்; மீண்டும் பூண்டுபோல் உண்டாகின்றான். "ஒருவன் தனது சரீரம் விழுவதற்கு முன்பே ஆத்மப் பொருளை அறிவதற்கு முடியாதவனாகப் போவானாகில் பின்னர் மீண்டும் சரீரத்தை அடைந்தவனாகப் போவானாகில் பின்னர் மீண்டும் சரீரத்தை அடைந்தவனாகின்றான்" எனக் கடோபநிடதம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. பிறப்பின் நியதியைக் கூறும் உபநிடதங்கள் பிறப்பற்ற நிலையை அடைவதற்குரிய வழிவகைகளையும் கூறுகின்றன:
"எப்போதும் அடக்கப்பட்ட மனதுடனும் விவேகமுள்ள புத்தி. யுடனும் கூடியவன் எவனோ அவனுக்குச் சாரதிக்கடங்கிய நல்ல
14

குதிரைகள் போன்று ஜம்புலன்கள் வசப்பட்டவையாகின்றன. எப்போதும் விவேகமற்றவனாகவும் அடங்காத மனதுடையவன7யும் அழுக்குடையவனாயும் உள்ளவன் எவனோ அவன் சேரவேண்டிய பரமபதத்தைச் சேரமாட்டான். மீண்டும் மினேன்டும் பிறவிப் பாதைமயிலேயே சென்று கொண்டிருப்பான். எப்போதும் விவேகத்துடனும் அடங்கிய மனத்துடனும் கூடியவனாகவும் பரிசுத்தமானவனாகவும் உள்ள7வன் எவனோ அவன் மீண்டும் பிறப்பதில்லை. அவன் பரமபதத்தை அடைகின்றான். எப்போது ஒருவனுடைய உள்ளத்திலே பொதிந்துள்ள ஆசைகள் யாவும் ஒழிகின்றனவோ அப்போது ச7கும் இயல்புடைய மனிதன் ச7காதவனாகின்றான். எப்போது இருதயத்தில் அறியாமை அகங்காரம் ஆகியவற்றின் காரணமாய் உண்டான முடிச்சுகள் எல்ல7ம் இங்கேயே அவிழ்ந்துபோகின்றனவோ அப்போது சாகும் இயல்புடைய மனிதன் ச7காதவன7கின்ற7ன்."
(கடோபநிடதம்: 3.6; 6.14)
உபநிடதம் தரும் இத்தகைய சிந்தனைகள் ஒருவனது ஆன்மீக வாழ்க்கைக்குப் பெரிதும் வேண்டற்பாலன.
ஆன்மா அழிவற்றது: உடல்கள் அழியக்கூடியவை என்பதைப் பகவத்கீதை தெளிவாகக்கூறுகின்றது. நித்தியமாய், அழிவற்றதாய், அளப்பரியதாய் உள்ள ஆன்மாவின் இவ்வுடல்கள் யாவும் அழியுந்தன்மையுடையவை. (கீதை 2 18) பிறத்தல், இருத்தல், வளர்த்தல், மாறுதல், தேய்தல், மாய்தல் ஆகிய ஆறுவித பாப விகாரங்கள் உடலுக்கு உண்டு. ஆனால், ஆத்மாவுக்கு விகாரம் இல்லை (கீதை 2.20) பிறப்புப்பற்றியும் கீதை தெளிவாகக் குறிப்பிடுகின்றது. "பழுதுபட்ட துணிகளைக் களைந்து விட்டு மனிதன் புதியவைகளைப் போட்டுக்கொள்வது போன்று ஆத்மா பழைய உடல்களை நீத்துப் புதியனவற்றுள் புகுகின்றது. இவ்வாறு புதிய பிறப்புக்கு ஏதுவாக அவைவன வினைகளேயாம். (கீதை 2.22). "பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் உறுதியெனின் விலக்கமுடியாத இவ்விடயத்தில் மக்கள் வருந்துவது பொருத்தமாகாது" எனக் கீதை உபதேசிக்கின்றது. (2:27). ஒருவன் முத்தியடையும் வரை இந்நிலை தொடரும். பற்றுக்கு ஆளாயிருக்கும் வரை பிறப்பதும் இறப்பதும் இயல்பு என்பதும் வினையின்படி வருகின்ற மரணத்தை தடுக்க யாருக்கும் இயலாது என்பதும் உணர்த்தப்படுகின்றது. ஆத்ம தத்துவத்தைப்பற்றிக் கூறி கீதை ஆத்ம விமோசனத்திற்கும் வழிகூறிநிற்கின்றது. உள்ளத்திலே நடுவு
15

Page 9
நிலையோடு நிற்கும் ஞானிகள் வினைப் பயனை விட்டொழித்துப் பிறவித்தளை நீங்கிக் கேடில்லாத பெருநிலை அடைகின்றனர். (கீதை 251) மனத்தில் எழுகின்ற ஆசைகளை அகற்றி, ஆத்மாவில் ஆத்மதிருப்தி அடைந்திருப்பவன் ஸ்திதப்பிரக்ஞன என்று கீதை குறிப்பிடுகின்றது (கீதை 2.55) நலமும் கேடும் கலந்துள்ளது உலகம். பற்றுடையார்க்கு அது இன்பதுன்பத்தை விளைவிக்கிறது. பற்றற்ற ஞானி அத்தகைய விளைவுகளுக்கு ஆட்படுவதில்லை. எவன் பற்றற்றவனாய் நலம் வரும்போது மகிழாமலும் கேடுவரும்போது துயரடையாமலும் இருக்கின்றானோ அவனுடைய அறிவு உறுதிபெறுகின்றது." என்பது கீதையின் போதனையாகும் (2.57).
யாகத்தில் எஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால், தங்கள் பொருட்டே உணவைச் சமைக்கும் பாபிகள் பாபத்தை உண்கின்றனர். (கீதை 3 13). எச்செயலைச் செய்தாலும் அதன் மூலம் உலக நன்மையும் இறைவனது பெருமையும் முன்னணியில் நிற்றல் வேண்டும். தான், தனது என்னும் செருக்குப் பின்னணிக்குப் போகுமளவு அது புண்ணியச் செயலாகக் கருதப்படுகின்றது. நித்திய கடமையில் இதற்குதரிய உதாரணத்தைக் குறிப்பிடுமிடத்து, அன்றாடம் சமைத்து உணவை மற்றவர்களுக்கு முதலில் வழங்கிவிட்டு எஞ்சியதை உண்பவன் மேலோன். இவ்வாழ்வான் ஒருவன் ஐம்பெரும் வேள்விகளைச் செய்யக் கடமைப்பட்டவன். தேவயக்ஞம் என்பது கடவுள் வழிபாடு. அடுத்து பிரமயக்ஞம் என்பது உலக நன்மையின் பொருட்டுச் சான்றோர் அமைத்த தெய்வநெறி நூல்களை முறையாக ஆராய்வதும் அவற்றை மற்றவர்களுக்கு எடுத்து ஒதுவதும் ஆகும். இது ரிஷிகளைப் போற்றுவதற்கு ஒப்பாகும். நூல்களை ஒதுதல் பிரமயக்ஞமாகும். பித்ருயக்ஞம் வரும் உடலுடன் கூடிய வாழ்க்கையில் தம்முன்னோர்க்கும் கடப்பாடுடையவன் ஆகின்றான். எனவே, அவர்களைக் குறித்து நாம் வழிபடுதல் வேண்டும். உயிரோடிருக்கும் பெற்றோருக்குப் பணிவிடை நாள்தோறும் செய்வதும் இதன்பாற்படும் நான்காவதாகிய நரயக்ஞம் மக்களது பசியைப் போக்குதல், பிணியை நீக்குதல், வாழ்க்கையைப் பண்படுத்துதல், கல்வியைப் பெருக்குதல் இவை யாவற்றையும் உள்ளடக்கியது. ஐந்தாவதாகிய பூதயக்ஞம் ஆடு, மாடு முதலிய உயிரினங்களைப் பேணிவருதலைக் குறிக்கும். இந்த ஐவகை யக்ஞத்தில் மனிதன் உறுதியாக ஈடுபடுமிடத்து ஆத்மீக நலம் கிட்டுகின்றது.
16

ஒருவன் ஆன்மீக மேம்பாடு அடைய விரும்பின் பிறப்பு, இறப்பு என்ற பெருங்கடலில் மூழ்காது தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளுதல் வேண்டும். தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனெனில் தானே தனக்கு நண்பன், தானே தனக்குப் பகை என்று கீதை உபதேசிக்கின்றது. (கீதை 6.5) ஆத்ம மேம்பாட்டுக்குத் தியானம் ஒரு சிறந்த சாதனையாகக் கீதை குறிப்பிடுகின்றது. மனதைத் தியானத்தில் நிறுத்தி உள்ளத்தை அடக்கியயோகி, இறைவனிடத்தில் முக்திநிலையில் நிறைவு பெறுகின்ற சாந்தி எய்துகிறான். (6.15) இறைவனை பக்தியுடன் வழிபடுபவர்க்குப் புத்தியோகம் கைவரப் பெற்று இறைவனை அடைகின்றனர். இறைவன் அவர்களுக்கு அருள் கொண்டு அந்தக் கரணத்தில் வீற்றிருந்து மெய்ஞ்ஞானச் சுடர்விளக்காய் அறியாமை என்னும் இருளை அகற்றிவிடுகின்றார். (கீதை 10 - 10-11) இறைவனை அடைந்தவனுக்கு மறுபிறப்பில்லை என்பது கீதையின் போதனை. அனைத்துத் தர்மங்களையும் இறைவனுக்கென்றே அர்ப்பணஞ் செய்து அவனைச் சரணடைதல் வேண்டும். அப்பொழுது இறைவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் எம்மை ஈடேற்றுவான். கவலையும் ஒழியும் (கீதை 16.66) என்ற உபதேசம் ஆத்மீக மேம்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக அமைவதாகும்.
மகாபாரதத்தில் கீதையைப் போன்று ஆத்மீக சிந்தனைகளை நல்குவது ஸநத்-சுஜாதியம் என்ற ஒப்பற்ற தத்துவப் பகுதியாகும். ஸநத் சுஜாதா என்ற பிரம்ம ஞானி திருதராட்டிரனுக்குப் பிரம்மத்தின் தத்துவத்தை உபதேசித்த வாயிலாக எழுந்ததே ஸநத்- சுஜாதீயம். ஆத்மீகத்தாகம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம். மரணத்தைப் பற்றிய உண்மை இதில் விளக்கப்படுகின்றது. வாழ்க்கையை நன்கு அறிய முயல்பவன் மரணத்தை உள்ளவாறே அறியவேண்டும். பிறப்பையும் இறப்பையும் இரு எல்லைக்கோடுகளாக அமையப் பெற்றதே வாழ்க்கை, வாழ்க்கையை ஆராய்பவன் முன்னைய இரண்டினைப்பற்றியும் தெளிவடைதல் அசியமாகும். கடோபநிடதம், கீதை முதலியவை மரணம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதுபோல, இப்பகுதியும் மரணத்தைப் பற்றிய விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. நாம் இறைத்தன்மை பெற்றவர்கள். சத், சித், ஆனந்தம் என்ற நிலைகளை மறவாது வாழ்தலே நமக்கு இயல்பான வாழ்க்கையாகின்றது. இதனை மறத்தலே மரணம். அறியாமையே பிறப்புக்குக் காரணம், அகங்காரமே மரணத்திற்கு அடிகோலும் அடிப்படையான பெருந்தீங்கு எனக் குறிப்பிடப்படு
17

Page 10
கின்றது. அகங்காரத்தில் தோன்றும் மரணத்தைக் கடக்க ஞானத்தில் நிலையைக் கண்டு அஞ்சுவதில்லையென உபதேசிக்கின்றது ஸ்நத் சுஜாதீயம்.
உடல் உயிரோடு இருக்கும்போதே ஆற்றவேண்டிய நற்கருமங்கள் பற்றி நாயன்மார்கள் வற்புறுத்தியுள்ளனர். நாம் பிறப்பதும் இறப்பதும் எப்போது நிகழும் என்பதை யாரும் நிச்சயமாக கூறமுடியாது, இந்த உடலில் இறைவன் ஆன்மாவை வைத்ததன் நோக்கம் பிறப்பிபிறப்பென்னும் உடலையில் உருக்கி உருக்கி ஆன்மாவைச் சூழும் கழிம்பறுத்தலேயாம். இப்பிறவி நிலையில்லை. இதோ சாவு வருகிறது. நாளை வீணாக்காமல் இறைவனை வணங்கவேண்டும். உயிருள்ளபோதே. நாம் திருவருளுக்குப் பாத்திரராகவேண்டும் என்பது அடிக்கடி வற்புறுத்தப்படுகின்றது. பிறவிப்பிணி நீங்குவதற்குச் சம்பந்தர் சிறந்த வழி கூறுகின்றார். "எந்தையே எம்பெருமானே அப்பனே ஆட்கொள்", என்று ஆர்வமுடன் இறைஞ்சி முழுமுதல்வராகிய இறைவன் திருவடிகளில் அன்றாடம் அர்ச்சிக்கவேண்டிய மலர்களைத் தலையாரச் சுமந்து சென்று அர்ச்சித்து வழிபடுவதும் இறைவனது அதியற்புதமான பெருமைகளைச் செவியாரக் கேட்டுச் சிந்தித்து மகிழ்வதும் அவனது திருநாமங்களை நாவார உள்ளம் உருக உச்சரித்து வழிபடுவதும் சிறந்த வழிபாடாகும் என்பதை.
நிநாளும் நன்னெஞ்சே நினைகண்டாம் யாரரிவார்
சாந7ளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்ந7மஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றெத்தப் பெறலாமே நல்வினையே எனக் குறிப்பிடுகின்றார்.
மணிவாசகரின் திருவாசகமாகிய தேன் பிறவித்துன்பம் நீக்கும் மருந்து, மனித வாழ்வில் அல்லல்கள் அனைத்தும் அறியாமையால் விளைவன. தொல்லையிரும் பிறவி நீங்க வழிவகுப்பது திரு வாசகத் தேன் ஆகும். சிவபுராணத்திலே.
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறிநின்று பிறந்த பிறப்புறுக்கும் எங்கள் பெருமான் எனப் போற்றுகின்றார்.
பிறந்து இறந்து மீண்டும் பிறந்து பரிதவிக்கின்ற மாக்களாகிய எமக்கு ஆத்மீக ஞானியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்பவர் மாணிக்கவாசகர். அவர் தரும் திருவாசகம் சிவநெறி காட்டும் உயர்
18

தனிவழி. இந்த உடம்பினுள் உள்ள உத்தமனைக் கண்டு பிறவிப் பயனைப் பெற்றுவிட வேண்டும். அப்பயனைப் பெறாது வீணே உடம்பைச் சுமந்து அலைதல் அறிவுடைமையாகாது. உடம்பு உள்ளபோதே உடம்பினாலாய பயனைப் பெற்றுவிட்ட உத்தம ஞானிகள் இந்த உடம்புடன் வாழ்வதை விரும்புவதில்லை. மணிவாசக சுவாமிகள் இந்த உடம்புடன் இருப்பது பற்றிப் பொறுக்கவில்லையே என்ற பொருளில் "ஆற்றேன்" எனக் கூறுகின்றார். "வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்" என உரைக்கின்றார்.
இந்த உடம்பினாலாய பயனாகிய சிவபோகத்தைப் பெற்று உய்வதற்கு மணிவாசகள் கூறும் வழிகள் குறிப்பிடத்தக்கன:
ஆம7று உன் திருவடிக்தே அகங்குழையேன் அன்புருகேன் பூம7லை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோம7ன்நின் திருக்கோமில் துரகேன் மெழுகேன் சுத்தரடேன் சாம7றே விரைகின்றேன் சதுர7லே ச7ர்வானே எனப்பாடுகின்றார். உலகிலுள்ள உயிர்கள் உய்யும் பொருட்டு ஆறுவழிகளைக் கூறுகின்றார். உனது திருவடியை நினைந்து உள்ளம் குழையவேண்டும். மனம் தழலிடைப்பட்ட மெழுகுபோல உருக வேண்டும். நல்ல மலர்களை மாலையாகத் தொடுத்துத் துதிக்க வேண்டும். உனது புகழை இனிது ஓதவேண்டும். உனது திருக்கோயிலைக் கூட்டி மெழுக வேண்டும். ஆனந்த மிகுதியால் ஆடவேண்டும் என்பது மணிவாசகர் காட்டும் ஆத்மீக வழிகளாகும்.
காரைக்காலம்மையார் இறைவன் தாள் சேரும் நிலையில் கிட்டும் அனுபவத்தை அற்புதத் திருவந்தாதியில் குறிப்பிடுமிடத்து,
இனியே7ம் நாம் உய்ந்தோம் இறைவன் தாள் சேர்ந்தோம் இனிமோர் இடர்இல்லே7ம் நெஞ்சே - இனியோர் வினைக்கடலை ஆக்குவிக்கும் மி7ேப் பிறவிக் கனைக்கடலை நதிந்தினே7ம் காண் எனக் கூறுகின்றார்.
வள்ளுவரும் இதேநிலையை,
பிறவிப் பெருங்கடல் நிந்துவர் நிந்தார் இறைவன் அடி சேர7 தவர். எனக் குறிப்பிடுகின்றார்.
19

Page 11
இவற்றால் பிறவிப் பெருங்கடலை நீந்துவதே ஆத்மீக வாழ்க்கையின் முக்கிய நோக்கம் என்பது பெறப்படுகின்றது.
இந்து சமய மரபிலே ஆத்மீக வாழ்வுக் கேற்ற வழி வகைகள் எண்ணற்றவையாக உள்ளன. அவற்றில் ஏதாவதொன்றைப் பற்றுக் கோடாகக் கொண்டு ஆத்ம நலம்பெற எவருக்கும் வாய்ப்புண்டு. பிறவிப் பயனைப்பெற எமது உடலைப் பயன்படுத்துவதே சிறந்த முயற்சியாகும். உடம்பினுள் உள்ள ஆத்மாவைக் காண முயல்வது பெருஞ்சாதனையாக அமைவதோடு விடுதலைக்குரிய வழியாகவும் அமைவதாகும். இப்பிறவியை உரிய வாய்ப்பாகக் கொண்டு ஆத்மீக வாழ்வில் மேன்மை அடைதல் வேண்டும் என்பதைச் சமயத் திரு நூல்களும் அனுபூதிமான்களின் அருள் வாக்குகளும் எடுத்தியம்புகின்றன.
ஆத்மீக வாழ்வு பற்றி அன்று முதல் இன்றுவரை வளர்ச்சி பெற்ற கருத்துக்கள் எமது சிந்தனைக்கு என்றென்றும் விருந்தாக அமைவதோடு வாழ்வை வளம்படுத்துவனவாகவும் உள்ளன.
20

ஆதி சங்கரர் அருளிய சிவானந்த லகரி தரும் சிந்தனைகள்
மனஸ்தே பாதாப்ஜே நிவஸ்து வச: ஸ்தோத்ர பணிதெள கரெள சாப்யர்ச்சாயாம் ச்ருதிரபி கதாகர்ணன விதெள தவ த்யானே புத்திர் நயனயுகளம் மூர்த்தி விபவே பர க்ரந்தான் கைர்வா பரமசிவ ஜானே பரமத //
(ual_að 7) க-து: பரமசிவனே! என் மனம் உன் திருவடி மலரிலும் வாக்கு உன் துதிகளைச் சொல்வதிலும் கரங்கள் உன் பூசையிலும் செவி உன் சரிதைகளைக் கேட்பதிலும் புத்தி உன் தியானத்திலும் கண்ணிரண்டும் உன் திருக்கோலக் காட்சியிலும் என்றும் இருக்கும்படி அருள்புரிக: (அப்படி அருள் புரிந்தால்) அதன்மேல் எந்தக் காரணங்களாற்றான் பிறநூல்களைக் கற்றறிவேன்?
வடுர் வா கேஹறி வா யதிரபி ஜடீவா ததிதரோ நரோ வா ய: கஸ்சித் பவது பவ கிம் தேந பவதி / யதியம் ஹர்ருத்பத்மம் யதி பவத தினம் பசுபதே ததியஸ் த்வம் சம்போ பவளமி பவபாரஞ்ச வஹஸி /
(பாடல் 11) க-து: சிவபிரானே! ஒருவன் பிரமசாரியாயோ கிருகஸ்தனாயோ வானப்பிரஸ்தனாயோ சந்நியாசியாயோ வேறு எந்நிலையிலுள்ளவனாயோ இருக்கட்டும். அதனால் என்ன (பயன்) உண்டாகும்?பசுபதியே எவனுடைய மனமலர் உன் வசப்பட்டிருக்கின்றதோ அவனுக்கு நீ ஆளாகின்றாய்! அவனுடைய சம்சார பாரத்தையும் நீ சுமக்கின்றாய்
குஹாயாம் கேஹே வா யஹிரபி வனே வா (அ) த்ரிசிகரே ஜலே வா வ ஹர்நெள வா வஸ்து வஸ்தே; கிம்வத பலம் / ஸ்தா யஸ்யைவா (அ) ந்தக் கரணமயி சம்போ தவபதே ஸ்திதம் சேத் யோகோ (அ) ஸெள ஸச பரமயோகீஸ் சஸா கீl
(uau að - 12) க-து: குகையிலேனும் வீட்டிலேனும் வெளியிடத்திலேனும் வனத்திலேனும் மலைச் சிகரத்திலேனும் நீர் நிலையிலேனும் தீ நடுவிலேனும் வசிக்கலாம்: (ஒருவன்) அப்படி வசித்தலாற்றான் பயன் யாது? சொல்லுக ஓ! சம்புவே! எவனுடைய மனம் எப்போதும் உன் பாதத்திலேயே நிலைபெறுமோ அதுவே யோகமாகும் அவனே பரமயோகியாவான். அவனே பேரின்பத்தை நுகர்பவனுமாவான்.
21

Page 12
கற்பகவல்லி நற்கதி அருள் வாயம்மா
ராகமாலிகா இராகம்: ஆனந்த பைரவி தாளம்: ஆதி
பல்லவி கற்பக வல்லி நின் பொற்பதம் பிடித்தேன் நற்கதியருள்வாயம்மா - தேவி
அனுபல்லவி பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
சரணம் நீயிந்த வேளையினில் நீசன் என்னை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ? ஏனிந்த மெளனமம்மா ஏழையெனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாழுமம்மா (கற்பக)
கல்யாணி எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாயிளறஞ்சி யென்றும் நல்லாக்கி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே கபாலி காதல் புரியுமந்த உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா (கற்பக)
பாகேஸ்வரி நாகேஸ்வரிதேவி நாயேன் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம் பாகேஸ்வரி தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரியே உலகில் நீதுணையம்மா (கற்பக)
ரஞ்சனி அஞ்சனமையிடும் அம்பிகே எம்பிரான் கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே நின்னிடம் தஞ்சமென அடைந்தேன் தாயே உன்சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேனம்மா (கற்பக)
ஆக்கம்: கலாரத்தினா, கலாபூஷணம், இயலிசைவாரிதி, மகாவித்துவான்
யாழ்ப்பாணம் இணுவில் அமரர் பிரம்மறி மா.த.ந. வீரமணி ஐயர் MA; JP. அவர்கள்.
22

9 -
சிவமயம்
பஞ்சபுராணம்
தேவாரம்
திருச்சிற்றம்பலம் அப்பன் நீ அம்மை நீ ஐய னும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஒரு ரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய் நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே
அப்பர்.
தனித்திருத்தாணர்டகம்
திருவாசகம் யானேதும் பிறப்பஞ்சேன்
இறப்பதனுக் கென் கடவேன் வானேயும் பெறில் வேண்டேன்
மண்ணாள்வான் மதித்துமிரேன் தேனேயும் மலர்க் கொன்றைச்
சிவனேயெம் பெருமானெம் மானேயுன் அருள் பெறு நாள்
என்றென்றே வருந்துவனே.
திருச்சதகம்.
23

Page 13
திருவிசைப்பா இவ் அரும் பிறவிப் பெளவரீர் நீர்த்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே ஆர் துணை என்பால்
அஞ்சல் என் றருள் செய்வான் கோவில் கைவரும் பழனம் குழைத்த செஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம் செய்வரம் பரும்பும் பெரும் பற்றப் புலியூர்
திருவளர் திருச்சிற்றம் பலமே
திருப்பல்லாண்டு சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல்
உனனை எனறும மறவாமை வேண்டும் இன்னும் வேண்டு நான் மகிழ்ந்துபாடி அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழிருக்க, என்றார்
- காரைக்காலம்மையார்
24

திருப்புகழ்
இருவினைப் பிறவிக் கடல் மூழ்கி
இடர்கள் பட்டலையப் புகுதாதே திருவருட்கருணைப் ப்ரபையாலே
திரமெனக் கதியைப் பெறுவேனோ அரியயற் கறிதற் கரியானே
அடியவர்க் கெளியற் புதநேயா குருவெனச் சிவனுக் கருள்போதா
கொடுமுடிக் குமரப் பெருமாளே.
வாழ்த்து வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
25

Page 14
தில்லையில் அருளிச் செய்த திருப்பொற்சுணர்ணம்
ஆனந்த மனோலயம் (மனம் ஆனந்தத்திலேலயப்படுந் தன்மை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
முத்துநற்றாமம் பூமாலை தூக்கி
முளைக்குடந் தூபநற்றிபம் வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளு
நாமகளோடு பல்லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்பதியுங்
கங்கையும் வந்துகவரிகொண்மி னத்தனையாறனம் மானைப்பாடி
யாடப்பொற் சுண்ணமிடித்து நாமே.
பூவியல்வார்சடை யெம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணமிடிக்க வேண்டு மாவின் வடுவகிரண்ண கண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் றொண்டர் புறநிலாமே
குனிமின் றொழுமினெங்கோ னெங்கூத்தன் றேவியுந்தானும் வந்ததெம்மையாளச்
செம்பொன் செய்சுண்ணமிடித் துநாமே.
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்திநிதிபரப்பி யிந்திரன் கற்பகநாட்டி யெங்கு
மெழிற்சுடர் வைத்துக் கொடியெடுமி
26
 

னந்தரர் கோனயன்றன் பெருமா.
னாழியானாதனல் வேலன்றாதை
யெந்தரமாளுமையாள் கொழுநற்
கேய்ந்த பொற்சுண்ணமிடித் துநாமே,
காசணிமின்களுலக்கை யெல்லாங்
காம்பணிமின்கள் கறையுரலை நேசமுடைய வடியவர்க
னின்றுலாவுகவென் றுவாழ்த்தித் தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சித்
திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடிப் பாசவினையைப் பறித் துநின்று
பாடிப் பொற்சுண்ணமிடித் துநாமே.
அறுகெடுப்பாரய னும்மரியு
மன்றிமற்றிந் திரனோடமரர் நறுமுறுதேவர் கணங்களெல்லா
நம்மிற் பின்பல்ல தெடுக்கவொட்டோஞ் செறிவுடைமும்மதி லெய்தவில்லி
திருவேகம்பன் செம்பொற் கோயில்பாடி முறுவற் செவ்வாயினி முக்கணப்பற்
காடப்பொற் சுண்ணமிடித் துநாமே.
உலக்கை பலவோச் சுவார்பெரிய
ருலகமெலாமுரல் போதாதென்றே கலக்கவடியவர் வந்து நின்றார்
காணவுலகங்கள் போதாதென்றே நலக்கவடி யோமையாண் டுகொண்டு
நாண்மலர்ப்பாதங் கள்குடத் தந்த மலைக்குருமருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்து பொற் சுண்ணமிடித் துநாமே.
சூடகந்தேர்ள்வளையார்ப் பவார்ப்பக்
தொண்டர்குழா மெழுந்தார்ப்பவார்ப்ப நாடவர்நந்தம்மையார்ப் பவார்ப்ப
நாமுமவர் தம்மை யார்ப்பவார்ப்பப்
27

Page 15
பாடகமெல்லடி யார்க்குமங்கை
பங்கினனெங்கள் பராபரனுக்
5. Bot)6O)6) யன்னகோவுக்
காடப்பொற்சுண்ணமிடித் துநாமே.
வாட்டடங்கண் மடமங்கைநல்லீர்
வரிவளையார்ப்பவன் கொங்கைபொங்கத் தோட்டிருமுண்டந் துதைந்திலங்கச்
சோற்றெம்பிரானென் றுசொல்லிச் சொல்லி நாட்கொண்டநாண் மலர்ப்பாதங்காட்டி
நாயிற்கடைப் பட்டநம்மையிம்மை யாட்கொண்ட வண்ணங் கள்பாடிப்பாடி
யாடப்பொற் சுண்ணமிடித் துநாமே.
வையகமெல்லா முரலதாக
மாமேருவென் னுமுலக்கை நாட்டி மெய்யனுமஞ் சணிறையவட்டி
மேதகுதென்னன் பெருந்துறையான் செய்யதிருவடி பாடிப்பாடிச்
செம்பொன்னுலக் கைவலக்கை பற்றி யையனணிதில்லைவாண னுக்கே
யாடப்பொற்சுண்ணமிடித் துநாமே.
முத்தணி கொங் கைகளாடவாட
மொய்குழல் வண்டினமாடவாடச் சித்தஞ்சிவனொடு மாடவாடச்
செங்கயற்கண் பனியாடவாட பித்தெம்பிரா னொடுமாடவாடப்
பிறவிபிற ரொடுமாடவாட வத்தன் கருணை யொடாடவாட
வாடப்பொற் சுண்ணமிடித் துநாமே.
மாடுநகைவாணிலா வெறிப்ப
வாய்திறந்தம் பவளந்துடிப்பப்
பாடுமினந்தம் மையாண்டவாறும்
பணிகொண்டவண் ணமும்பாடிப்பாடித்

தேடுமினெம் பெருமானைத்தேடிச்
சித்தங்களிப்பத் திகைத்துத்தேறி
யாடுமினம்பலத் தாடினானுக்
காடப்பொற் சுண்ணமிடித் துநாமே.
மையமர்கண்டனை வானநாடர்
மருந்தினைமாணிக் கக்கூத்தன்றன்னை யையனையையர் பிரானைநம்மை
யகப்படுத்தாட் கொண்டருமைகாட்டும் பொய்யர்தம்பொய் யனைமெய்யாமெய்யைப்
போதரிக்கண்ணினைப் பொற்றொடித்தோட் பையரவல்குன் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணமிடித் துநாமே.
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீ ரென்னுடையாரமு தெங்களப்ப
னெம்பெருமானிமவான் மகட்குத் தன்னுடைக்கேள்வன் மகன்றகப்பன்
றமையனெம்மையன் றாள்கள் பாடிப் பொன்னுடைப்பூண் முலைமங்கைநல்லீர்
பொற்றிருச்சுண் ணமிடித் துநாமே.
சங்கமரற்றசிலம் பொலிப்பத்
தார்குழல்சூழ் தருமாலையாடச் செங்கனிவாயிதழுந் துடிப்பச்
சேயிழையீர் சிவலோகம்பாடிக் கங்கையிரைப் பவராவிரைக்குங்
கற்றைச்சடை முடியான்கழற்கே பொங்கியகாதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச்சுண் ணமிடித் துநாமே
ஞானக்கரும்பின் றெளிவைப்பாகை
நாடற்கரியநலத் தைநந்தாத் தேனைப்பழச் சுவையாயினானைச்
சித்தம்புகுந் துதித்திக்கவல்ல
29

Page 16
கோனைப்பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனைநாத் தழும்பேறவாழ்த்திப்
பானற்றங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணமிடித் துநாமே.
ஆவகைநாமும் வந்தன் பர்தம்மோ
டாட்செயும் வண்ணங் கள்பாடி விண்மேற் றேவர்கனாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப்பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவகமேந்தியவெல்கொடியான்
சிவபெருமான் புரஞ்செற்றகொற்றச் சேவகனாகமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய்சுண்ணமிடித் துநாமே.
தேனகமாமலர்க் கொன்றைப்பாடிச்
சிவபுரம்பாடித் திருச்சடைமேல் வானகமாமதிப் பிள்ளைபாடி
மால்விடையாடி வலக்கையேந்து மூனகமாமழுச் சூலம்பாடி
யும்பருமிம் பருமுய்யவன்று போனகமாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச்சுண்ணமிடித் துநாமே.
அயன்றலைகொண்டு செண்டாடல்பாடி யருக்கனெயிறு பறித்தல்பாடிக்
கயந்தனைக்கொன்றுரி போர்த்தல்பாடிக் காலனைக்காலாலுதைத்தல்பாடி
யியைந்தனமுப்புர மெய்தல்பாடி
யேழையடி யோமை யாண்டுகொண்ட
நயந்தனைப்பாடி நின்றாடியாடி
நாதற்குச்சுண்ணமிடித் துநாமே.
வட்டமலர்க் கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந் தெனறில்லைபாடிச்
சிற்றம்பலத் தெங்கள் செல்வம்பாடிக்
30

கட்டியமாசுணக் கச்சைபாடிக்
கங்கணம்பாடிக் கவித்தகைம்மே
லிட்டுநின்றாடு மரவம்பாடி
யீசற்குச்சுண்ணமிடித் துநாமே.
வேதமும்வேள் வியுமாயினார்க்கு
மெய்ம்மையும் பொய்மையுமாயினார்க்குச் சோதியுமாயிருளா யினார்க்குத்
துன்பமுமாயின் பமாயினார்க்குப் பாதியுமாயமுற்று மாயினார்க்குப்
பந்தமுமாய் வீடுமாயினாருக் காதியுமந்தமு மாயினாருக்
காடப்பொற்சுண்ண மிடித் துநாமே.
திருச் சிற்றம் பலம்
31

Page 17