கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசறிவியல் பகுதி 2 இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி

Page 1
G A C. C. E.
(பாடநூல் G
SJEF
(LI (955
இலங்கையின் திட்டவ.
புன்னிய
 
 
 
 
 

தாடர் – 3)
வியல்
|-2)
ர் அரசியல் είτήτό όε
ாமீன்
r Gutt to
சாலை - யாழ்ப்பாவிாம் - கொழும்பு

Page 2

''' స్ట్రీ స్టో s స్కో *** ** ጳጳ፩· ፩ ፲.!‛ ሶ! அரசறிவியல் லேதத்துவங்கள்
POLITICAL SCIENCE SUPPLIMENTARY SERIES - 02
G.C.E (AVL) G.A.Q.
சிந்தனை வட்டம் 14, உடத்தலவின்னை மடிகே
உடத்தலவின்னை - 20802
O1

Page 3
இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி
(ид'*'? வினாக்களையும்
சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது)
565 EELIU TEEÜTEG Pootballasighan Book Depot 340, Sea Street
Colombo-1 Te: 422321
ஆசிரியர் : பீ. எம் புன்னியாமீன் B.A.(Cey)
Dip in Journ (Ind) S.L.T.S
முதலாம் பதிப்பு : 1993 May இரண்டாம் பதிப்பு : 1994 April மூன்றாம் பதிப்பு : 1995 March நான்காம் பதிப்பு : 1995 July ஐந்தாம் பதிப்பு : 1996 March ஆறாம் பதிப்பு : 1997 March ஏழாம் பதிப்பு : 1998 January
பதிப்புரிமை : Mrs Mazeeda Puniyameen
அச்சுப் பதிப்பு
Wijaya Graphics 76/12 Jampattah Street,
Colombo - 13 Tel: 330100
O2
 

மாதிரி வினாக்கள் தொகுக்கப்பட்ட பாட அலகுகள்
டொனமூர் அரசியல் திட்டம் (1931-1947) சோல்பரி அரசியல் திட்டம் (1947-1972) Iம் குடியரசு அரசியலமைப்பு (1972-1978) 2ம் குடியரசு அரசியலமைப்பு (1978 முதல்)
இப் த.
தெரு த) பவர்கள் முதற்றத் தேர்வு (GAC) வெளிரி விவர்கள் ሓsናኽaዘቦቦና (BA)விெரி ார்,
JATI, I, njll . siji, firlfri.
சட் நல்லூரி மு:டு பாண்வர்:
அனைவருக்கும் ஏற்புடையது
ஆசிரியருடனான தொடர்புகளுக்கு
P.W. PLUNYA WEEN 14. Jeta Talavia Mari të Wild Katugas tota
Sri Lak Phone : 078 - 80645 Fox : 08 - 49933
3.

Page 4
க.பொ.த (சாதா) மாணவர்களுக்கான
வரலாறும் சமூகக்கல்வியும் பாடத்தில் 40% புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய
ஆண்டு 9 47.50 ஆண்டு 10 60.00 ஆண்டு 11 70.00
பரீட்சை வழிகாட்டி வினா-விடைத்தொகுதிகள் வெளிவந்துவிட்டன.
நூலாசிரியர்:- புன்னியாமீன் B.A.(Cey). Dip in Journ (Ind) S.L.T.S
10க்கு மேற்பட்ட பிரதிகளைப் பெற விண்ணப்பிக்கும் பாடசாலைகள், தனியார் கல்விநிலையங்களுக்கு 35% கழிவு வழங்கப்படும்.
தொடர்பு :-
P.M.Puniyameen 14 Udatalowinna - Madige Udatalawinna - 20802
Phone: 078 - 80645
Fox: 08 - 49933
 

சுதந்திரமும், எனும் தலைப்பில் நுணுக்கக் குறிப்புரை ஒன்று எழுதுக
Lக் ப்பகள்
இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தைப் பெறும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கள் தேசிய இயக்கங்கள் எனும் வார்த்தைப் பிரயோகத்தால் அழைக்கப்படுகின்றன. இலங்கையில் தேசிய இயங்கங்களும் சுதந்திரமும் எனும் தலைப்பானது பரந்த ரீதியில் ஆராயப்பட வேண்டியதொன்றே. இருப்பினும் தேசிய இயக்கங்களின் போக்குகளுக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பது கவனத்திற்

Page 5
கொள்ளப்படவேண்டும். இலங்கையில் தேசிய இயக்கங்கள் தேசிய உணர்வையும் சுதந்திர உணர்வையும், தட்டியெழுப்பியதென்பது அரசியல் அவதானிகளின் பொதுவான கருத்தாகும்.
1796ம் ஆண்டில் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்ட பிரித்தானியர் 1815ம் ஆண்டில் இலங்கை முழுவதும் தமது பரிபாலனத்தின் கீழ் கொண்டுவந்துள்ளனர். 1833ம் ஆண்டில் கோல்புறுக் சீர்திருத்தங்களினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மானிய பணிபுகளை இழக்கச் செய்ததுடன் முதலாளித்துவம் சார்ந்த பெருந்தோட்டத்துறை வளர்ச்சிக்கும் வித்திட்டது.
இலங்கையின் பெருந்தோட்டத்துறை சார்ந்த முதலாளிகள் தமது நிலவுரிமைக்காக யாப்புச் சீர்திருத்தங்களைக் கோரி நின்றனர். 1884ல் ஜோர்ஜ் வோலின் தலைமையில் "இலங்கைச்" சங்கம் எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. விதேசிய தலைமைத்துவத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பினை "தேசிய சங்கம்" என அழைக்க முடியாது.
1870ம் ஆண்டுகளின் பின்னர் சுதேச தலைவர்களால் 'மது ஒழிப்பு இயக்கம்' ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கமானது பெளத்த, இந்துமத எழுச்சியை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்பட்டிருந்தது. இந்த மது ஒழிப்பு இயக்கம் அரசியல் சீர்திருத்தங்கள் கோரியோ அன்றேன் சுதந்திரத்தைக் கோரியோ தமது போராட்டத்தை அமைத்துக் கொள்ளவில்லை. 20ம் நூற்றாணர்டுகளில் ஆரம்பகாலத்தில் கற்ற, மத்தியதர வர்க்கங்களினால் சில இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உதாரணமாக சிலாபச் சங்கம் கரைநாட்டு உற்பத்தியாளர் சங்கம் தென்னை உற்பத்தியாளர் சங்கம், யாழ்ப்பாணச் சங்கம் என்பன இவைகளுள் சிலவாகும். 1908ம் ஆண்டில் திரு ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களால் அரசியல் சீர்திருத்தம் கோரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1912ம் ஆண்டின் பின்னர் மது ஒழிப்பு இயக்கமானது சற்று அரசியல் தன்மை கொண்ட இயக்கமாக மாற்றமுற்றாலும்கூட அரசியல் சீர்திருத்தம் பெறுமளவுக்கு அதன் அரசியல் தன்மையானது பலமாகக் காணப்படவில்லை. 1915ம் ஆண்டுகளில் திரு ஏஈ. குணசிங்க, விக்டர் கொரயா போன்றோரால் "இளம் இலங்கையர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பொறுப்பாட்சியைப் பெறும் நோக்கில் இச்சங்க நடவடிக்கைகள் அமைந்திருந்தாடி அவதானத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும். 1915ம் ஆண்டில் சிங்கள, முஸ்லீம் இனக்கலவரமானது பித்தானியருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சி யெனக் கருதிய பிரித்தானியர், மார்ஷன் சட்டத்தின் ஊடாக கல்வரத்தை அடக்கிய அதேநேரம் தேசிய சங்கத்தலைவர்கள் பலரை கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்டங்களில் இலங்கையில் காணப்பட்ட தேசிய இயக்கங்களின் போக்கினை நோக்குமிடத்து (1) சுதேச தலைவர்கள் மத்தியில்

ஒற்றுமையின்ம்ை (2) தலைமைத்துவம் செல்வந்தர்கள் மத்தியில் சுருங்கி இருந்தமை (3) சுறுசுறுப்பின்மை போன்ற விடயங்களை இனங்காட்டலாம். 1917ம் ஆண்டில் ஜேம்ஸ் பீறிஸ் தலைமையிலான தேசிய சங்கத்தில் உரைநிகழ்திய திரு பொன்.அருணாசலம் பின்வரும் கருத்தினை முன்வைத்தார். "எங்களது அரசியல் கொள்கைகளை அடைந்து கொள்ள பேச்சு வார்த்தைகள் மட்டும் போதாது. போராட்டத் தன்மை மிக்க இயக்கம் ஒன்றினை நாம் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவின் அரசியல் உரிமைக்காக போராடி வரும் தேசிய காங்கிரஸ் போன்று, அனைத்துச் சங்கங்களையும் ஒன்றிணைத்து நாமும் தேசிய காங்கிரஸ் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார். y.
இக்கருத்தினை இலங்கைத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாமையினால் 1917ம் ஆண்டில் சேர் பொன். அருணாசலம் இலங்கைச் சீர்திருத்தச் சங்கம் எனும் பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார். இச்சங்கமும் செல்வந்தர்களுடன் மட்டுமே சுருங்கியிருந்தது. -
1919ல் தேசிய காங்கிரஸ் ஏற்பட்டது. நாட்டின் சகல இனக்குழுக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட போதிலும், சுதந்திரத்திற்காக தேசிய காங்கிரசின் பங்களிப்பு என்ன? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேசிய காங்கிரஸ் தனது முதல் கோரிக்கையாக சட்ட நிரூபண சபையில் அங்கத்துவம் 50 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் இனரீதியான முறை ஒழிக்கப்பட்டு பிரதேசரீதியான முறை இடம்பெற வேண்டும் என்றும் கூறியது. தேசிய காங்கிரஸ் மிதவாத போக்குக்களுடனும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவுமே அரசியல் உரிமைகளைப் பெற விழைந்தது. கூட்டங்கள் கூடுதல், அறிக்கைகள் விடல், மகஜர்கள் சமர்பித்தல், ஆட்சியில் உள்ளோர்களுடன்
பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளல் ஆகியவைகளே இவற்றின் வழிமுறைகளாகக் காணப்பட்டன. 1921ம் ஆண்டில் இவ்வமைப்பில் சில பிளவுகள் ஏற்பட்டன. எவ்வாறாயினும் சுதந்திரம் வரை இச்சங்கத்தின் செயற்பாடுகளை அவதானிக்கலாம்.
இலங்கையின் தேசிய இயக்கங்களும் சுதந்திரமும் எனும் தலைப்பில் ஆராய்கையில் இடதுசாரிகளின் பங்களிப்பினையும் எம்மால் மறந்துவிட முடியாது. 1930ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இடதுசாரிகள் அமைப்பானது இலங்கையின் சுதந்திரத்தையே பிரதான குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இந்த அமைப்பானது 1935ல் லங்கா சமசமாஜக் கட்சியை தோற்றுவித்தது. பல தலையீடுகள் காணப்பட்ட போதிலும் கூட இவற்றின் எழுச்சியும் வளர்ச்சியும், செயற்பாடுகளும் சுதந்திரத்திற்கான ஒரு மைற்கல் எனக்கூறுவதில் தவறில்லை.
மேற்படி நிலைமைகளின் அடிப்படையில் தொகுத்து நோக்கும் போது தேசிய இயக்கங்கள்தான் இலங்கையின் சுதந்திரத்திற்கான அடிப்படைக் காரணி
O7

Page 6
என்று கூறமுடியாதுள்ளது. சுதந்திரத்தைவிட அரசியல் சீர்திருத்தம் கோருவதிலேயே தேசிய இயக்கங்கள் கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளன என்றால் மிகையாகாது.
வினா இலக்கம் 02
டொனமூர் அரசியலமைப்புத் தொடர்பாக பின்வரும்
விடயங்க்ள் பற்றிச் சுருக்கக் குறிப்புரைகள் எழுதுக.
அ) அமைச்சரவை. ஆ) ஆள்பதியின்கடமைப்பங்கு (தேசாதிபதி)
விடைக் குறிப்புகள்:
1931ம் ஆண்டு இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அரசியலமைப்பே டெனமூர் அரசியலமைப்பு எனப்படுகிறது. இநத அரசியலமைப்பை எடுத்து நோக்குமிடத்து பிரித்தானியக் காலனித்துவத்திற்கும் இலங்கையின் சுதந்திரத்திற்கும் இடைப்பட்டதோர் இணைப்புப் பாலம் என்று கூறலாம்.
CỞ) Ở6)IDjđJ3)6): டொனமூர் அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக அங்கு ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையைக் குறிப்பிடலாம். இநீத அமைச்சரவையானது, பிரித்தானிய அமைச்சரவை, சோல்பரி யாப்பின் பின்னர் இலங்கையில் செயற்பட்ட அமைச்சரவை என்பவற்றை விட மிகவும் மாறுபட்ட பண்புகளை உடையது. கட்சி முறையின் அடிப்படையிலோ அல்லது ஒரு கொள்கையின் அடிப்படையிலோ அது காணப்படவில்லை. கூட்டுப் பொறுப்பு முக்கியமாகக் கருதப்படவுமில்லை.
டொனமூர் அமைச்சரவை 10 அங்கத்தவர்களைக் கொண்டது (3 காரியதரிசிகள் 7 நிர்வாகக் குழுத் தலைவர்கள்) சயற்பாட்டில் இந்த அமைச்சரவை பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகளை உடையதாகக் காணப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த அமைச்சரவையின் அதிகாரங்களைத் தொகுத்து நோக்குமிடத்து இரண்டு பிரதான அம்சங்களைச் சுட்டிக்காட்டலாம்.
(அ) வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்(கூட்டாகத்
தயாரித்தல்) (ஆ) நிர்வாக சபையின் தீர்மர்னங்களைச் செயற்படுத்தல். டொனமூர் அமைப்பின் ஆரம்பகட்டத்தில் சுதேச அமைச்சர்களைவிட காரியதரிசிகளின் அதிகாரங்களே மிகைத்திருந்ததெனவும். அமைச்சரவைக்குள்

ஓர் அமைச்சரவையாகக் காரியதரிசிகள் செயற்பட்டனர் எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. காரியதரிசிகளினூடாக காலனித்துவக் கொள்கை பேணப்பட்டுள்ளது.
இருப்பினும் 2ம் உலக மகா யுத்தக்காலத்தில் இந்த அமைச்சரவையின் செயற்பாட்டுத் தன்மைகள் மாற்றமுற்றுள்ளன. குறிப்பாக நிர்வாக விடயங்கள் ஒரயளவுக்கு அமைச்சரவையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ள அதேநேரம், ஆள்பதியின் அதிகாரங்கள் கணிசமான அளவில் குறைந்துள்ளன. இக்கட்டத்திலிருந்து சோல்பரியின் அமைச்சரவை அமுல்படுத்தப்படும்வரை, குறித்த நிர்வாக விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தக்கவகையில் டொன மூர் அமைச்சரவை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். (ஆ) ஆள்பதியின் கடமைப்பங்கு (தேசாதிபதி)
1931 அரசியலமைப்பின் கீழ் சட்டவாக்கத் துறையும், உள் நாட்டு நிர்வாகத்துறையும் சர்வசன் வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கசபை உறுப்பினர்களைச் சென்றடைந்தாலும் கூட, தொடர்ந்தும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதநிலை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக ஆள்பதி விளங்கினார். இவரின் அதிகாரங்கள் முன்னைய யாப்புகளில் காணப்பட்ட அதிகாரங்களைவிடச் சற்று குறைந்திருந்தாலும்கூட அததிகாரமற்றவர் என்று கூற முடியாது.
டொனமூர் ஆணைக் குழுவினர் தமது சிபாரிசுகளில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கணிசமான அதிகாரத்தினை வழங்க முடிவெடுத்துள்ளதால் முன்னைய ஆளுனர்கள் பெற்றிருந்த அதிகாரத்தை வழங்க நாம் முடிவு செய்யவில்லை. மாறாக மேலதிக அதிகாரங்களை ஆளுனருக்குப் பெற்றுக் கொடுத்து. ஆலோசனை நிலையில் (மேற்பார்வை நிலையில்) வைத்திருக்கவே விரும்புகிறோம் எவ்வாறாயினும் சட்ட நிர்வாக, நிதி ஆகிய சகல துறையிலும் அதிகாரமும் சட்ட அந்தஸ்தும் பெற்றவராகவே 1931ல் ஆள்பதி காணப்பட்டார் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
இலங்கையின் அமைதியையும், சமாதானத்தையும் பேணுவதற்காக வேண்டி ஆணையைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை இவர் பெற்றிருந்தார். அரசாங்க சபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் இவரின் கையொப்பத்துடனேயே சட்ட அங்கீகாரம் பெறும். இந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்கும் போது பின்வரும் ஏதாவதொரு வழி முறையைக் கையாள ஆள்பதிக்கு அதிகாரமுண்டு. (அ) அனுமதி வழங்கல். (ஆ) நாட்டின் சமாதானத்தையும், ஒழுங்கையும் கருத்திற்கொண்டு
நிராகரித்தல். (இ) மன்னனின் அனுமதிக்காகத் தடுத்து வைத்தல்.

Page 7
(ஈ) அனுமதி வழங்கி அவற்றின் செயற்பாடுகளை மோதங்களுக்கு
மேற்படாமல் வரையறை செய்தல். (உ) மீளாய்வுக்காக அனுப்புதல். V, (ஊ) சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுமாறு திருப்பி
அனுப்புதல். நாட்டின் அடிப்படைத் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தத்தக்க விமான, கடல் மற்றும் பாதுகாப்புப் படைகள் தொடர்பான சட்டமூலங்களுக்கு ஆளுனர் கையொப்பமிடக் கூடாதென யாப்பு வரையறை செய்கின்றது.
மேலும் அரசாங்க சபையில் அனுமதி வழங்காத, அதே நேரம் நாட்டின் நலனுக்கு அவசியமெனக் கருதும் விடையங்களில் சட்ட ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் ஆள்பதிக்குண்டு.
மேலும் நிர்வாக விடயங்களில் தனது நேரடிப் பங்களிப்பை அல்லது 3 காரியதரிசிகளினுாடான பங்களிப்பை இவர் வழங்குவார். பொதுச் சேவைக்கு ஆள் சேர்க்கும் அதிகாரமும் இவருக்கே உண்டு. எனவே தொகுத்து நோக்கும் போது ஆள்பதி தனித்துவமான அதிகாரங்களுடன் செயற்பட்டார். எனக் சுருக்கமாகக் கூறுவதில் தவறில்லை.
யாப்பின் இறுதிக்காலங்களில் ஆள்பதி தனது அதிகாரங்களை மிகவும் குறைவாகவே பயன்படுத்தி வந்தார். இக்கட்டத்தில் அமைச்சரவை அதிகாரத்துடன் செயற்பட்டு வந்ததென விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வினா இலக்கம் 03
(அ) குயாட்சியை நோக்கிய வழி என்ற வகையிலும்
(ஆ)பிரித்தானியாவின் ஏகாதிபத்தியக் கொள்கை மேலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்ற வகையிலும டெர்னமூர் ஆணைக் குழுவின் விதர் ரைப்புக்களை ஆராயக.
'டொனமூர்யாப்பானதுயிரித்தானியஏகாதிபத்தியத்திற்கும் 凸 蘇器 ஏற்பட்ட ஓர் p
குழ்” இக்கூற்றை நீர் ஏற்பீரா? உமது விடைக்கான நியாய்ங்கள்ைத் தருக.
OTEUTlus fillus
இவ் விரு வினாக்களும் ஒரே அடிப்படையைக்
10
 
 
 

கொண்டவை. டொனமூர் யாப்பில் இடம்பெறக்கூடிய வினாக்களுக்கு விடையெழுதும் நீங்கள் பின்வரும் அடிப்படை விடயத்தைக் கருத்திற்கொள்ளல் வேண்டும். சுயாட்சியை நோக்கியவழி அல்லது சுதந்திரத்திற்கான வழி அலலது இலங்கையின் அரசியல் வளர்ச்சியில் இச்சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் பற்றிய வினாக்கள் வினவப்படும் போது பின்வரும் மூன்று விடயங்களையும் குறித்துக் காட்டல் அவசியமாகும்.
(அ) இனரீதியான தெரிவு முறை ஒழிக்கப்பட்டு பிரதேச ரீதியான தெரிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டமை.
(ஆ) சுதேச மக்கள் உள்நாட்டு நிர்வாகத்தில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தமை. (நிர்வாக குழு முறையினூடாக)
(இ) சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமை (டொனமூர் யாப்பில் அதிக ஜனனாயகத்தன்மை மிக்க அம்சம் என இது சுட்டிக் காட்டப்படுகிறது)
அதேநேரம் பிரித்தானிய ஏகாதிபத்தியம் மேலும் இலங்கையில் நிலைத்துள்ளது என்ற அடிப்படையில் வினாக் கள் இடம் பெறின், பின் வரும் இரண்டு விடயங்களையும் குறித்துக்காட்டுவது முக்கியமாகும்.
(அ) மூன்று அரசாங்கக் காரியதரிசிகளின் பொறுப்புக்கள் (ஆ) ஆள்பதியின் அதிகாரங்கள். எனவே இந்த 5 அடிப்படை விடயங்களைப் பற்றியும் பூரண தெளிவினைப் பெற்றுக் கொள்வீர்களாயின் டொனமூர் யாப்பில் இடம்பெறும் எந்த வினாவிற்கும் உங்களால் இலகுவான முறையில் விடையளிக்க முடியும்.
வினா இலக்கம் 04
டொனமூர்யாப்பின் முக்கியத்துவத்தினைப் பின்வரும் தலைப்புக்க்ளின் கீழ் விமர்சிக்குக.
(ಶ್ಯೆ உள்ளூர்ப் பிரதிநிதிகள் உள்நாட்டு நிர்வாக
டயங்களில் ஈடுபட்டமை.
(ஆ)சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்
L60)).
Innium
11.

Page 8
(இந்த வினாவுக்கான விடையை வினா இலக்கம் 03க் குரிய விடையில் நிர்வாகக் குழுமுறை, சர்வஜன வாக்குரிமை போன்ற குறிப்புகளிலிருந்து ஆயத்தப்படுத்திக்கொள்ளவும்.)
விடைக் குறிப்புகள்:
டொனமூர் அரசியல் அமைப்பானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் சுதந்திரத்திற்குமிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு இணைப்புப் பாலம் என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இந்த யாப்பில் சுதந்திரத்திற்கான சில முற்போக்கு அம்சங்களையும் அதேபோல பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினை உறுதிப்படுத்தும் சில அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
சுதந்திர நிலைக்கான அம்சங்களாகப் பின்வருவனவற்றைத் தொகுத்துநோக்கலாம்.
1. இனரீதியான தெரிவு முறை ஒழிக்கப்பட்டு பிரதேச ரீதியான தெரிவுமுறை ஏற்படுத்தப்பட்டமை. - 2. நிர்வாகக்குழு முறையினூடாக உள்நாட்டு நிர்வாகப்
பொறுப்புக்களை சுதேச பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டமை. 3. சர்வஜன வாக்குரிமை மூலமாக ஜனநாயக உரிமையை இலங்கை
மக்கள் பெற்றுக்கொண்டமை. 01. இனரீதியான தெரிவு முறை ஒழிக்கப்பட்டு பிரதே ரீதியான தெரிவு முறை ஏற்படுத்தப்பட்டமை.
டொனமூர் யாப்பிற்கு முன்னைய குருமெக்கலம்-(1910) தற்காலிக மெனிங் - (1921) மெனிங் - (1924) ஆகிய யாப்புக்களை எடுத்து நோக்குமிடத்து சட்ட நிரூபணசபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கையில் இனரீதியான தெரிவு முறையும் பின்பற்றப்பட்டது.
மெக் கலம் யாப்பின் கீழ் இலங்கையில் முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்ட 4 உறுப்பினர்களும் இனரீதியாகவே தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள்
ஐரோப்பிய இனத்தவர்கள் 02 பறங்கியர் 01 படித்த இலங்கையர் 0.
தற்காலிக மெனிங் யாப்பில் 5 உறுப்பினர்கள் இனரீதியாகத் தெரிவு செய்யப்பட்டனர் இவர்கள்
ஐரோப்பிய இனத்தவர் 02 பறங்கியர் 0.
12

கரைநாட்டுப் பெருந்தோட்ட சங்கப் பிரதிநிதி 0. வர்த்தக சங்கப் பிரதிநிதி 0. இதேபோல மெனிங் யாப்பின் கீழும் 8 உறுப்பினர்கள் இனரீதியாகத் தெரிவு செய்யப்பட்டனர்
ஐரோப்பிய இனத்தவர் 03 பறங்கியர் 02 மேல்மாகாணத் தமிழர் 01.
இனரீதியாக தெரிவுமுறை ஒழிக்கப்பட வேண்டுமென தேசிய காங்கிரஸ் உட்பட அனைத்து தேசிய தலைவர்களும் நீண்ட நாட்களாக குரலெழுப்பி வந்தனர். இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இனரீதியான தெரிவு முறையானது இனப்பிரிவினைக்கு வித்திம்டதென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்தனர்.
டொனமூர் யாப்பின் இனரீதியான தெரிவுமுறை ஒழிக்கப்பட்டு பிரதேசரீதியான தெரிவின் கீழ் இலங்கையில் அமைக்கப்பட்ட அரசாங்க சபையானது பின்வருமாறு அமைந்தது. x
அரசாங்க சபையின் மொத்த அங்கததவர் எண்ணிக்கை-81 ஆகும்.
அ) இதில் 50 உறுப்பினர்கள் தொகுதிர்தியாக சர்வஜன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டனர்
மேற்கு மாகாணம் 14 உறுப்பினர்கள் மத்திய மாகாணம் 08 உறுப்பினர்கள் தென் மாகாணம் 07 உறுப்பினர்கள் கிழக்கு மாகாணம் 02 உறுப்பினர்கள் வட மாகாணம் 04 உறுப்பினர்கள் வடமேல் மாகாணம் 08 உறுப்பினர்கள் வடமத்திய மாகாணம் 01 உறுப்பினர்
ஊவா மாகாணம் 03 உறுப்பினர்கள் சப்பிரகமுவ மாகாணம் 05 உறுப்பினர்கள்
மொத்தம் 50 உறுப்பினர்கள்
ஆ) 08 உறுப்பினர்கள் சிறுபான்மையினரின் நல உரிமைகளைப் பாதுகாக்க தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
ஐரோப்பியர் 04 பறங்கியர் 01. இந்தியத்தமிழர் 01 மலாய் இனத்தவர் 0முஸ்லிம் இனத்தவர் 0.
தேர்தலின் மூலம் போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாத சிறுபான்மை
13 ,

Page 9
இனத்தவரின் நன்மைக்காகவே இந்த நியமனமுறை தொடர்ந்தும் இடம் பெற்றது. (இது இனரீதியில் அமைந்த தெரிவுமுறையல்ல, நியமன முறையே)
இ) 03 உறுப்பினர்கள் உத்தியோக சார்புடைய அங்கத்தவர்கள்
பிரதம காரியதரிசி 0. சட்டத்துறை நாயகம் 0. நிதிக்காரியதரிசி 0.
அரசாங்கசபையானது சட்டவாக்கம் நிர்வாகம் இரணிடும் ஒன்றிணைக்கப்பட்ட சபையாகும்.
சுயாட்சியை நோக்கிய வழி என்ற வகையில் அல்லது சுதந்திர நிலைக்கான மற்றுமோர் அத்திவாரம் என்ற ரீதியில் இதனைக் கொள்ளலாம். டொனமூர் யாப்புக்கு முற்பட்ட யாப்புக்களை எடுத்தாராயும் போது சுதேசிய பிரதிநிதிகளுக்கு நிர்வாக விடயங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. (தற்காலிக மெனிங் யாப்பில் மூன்று சுதேசியருக்கும், மெனிங் யாப்பில் நான்கு சுதேசியருக்கும் நிர்வாக வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட நிர்வாகத்தில் எவ்விதத்திலும் இவர்களால் தாக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை.) く
ஆனால் டொனமூர் யாப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்நாட்டு நிர்வாக விடயங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. பொதுவாக அரசாங்க சபையில் 61 உறுப்பினர்களுன் சபாநாயகரையும், மூன்று காரியதரிசிகளையும் தவிர்ந்த ஏனைய 57 உறுப்பினர்களையும் 7 குழுக்களாகப் பிரித்து 7 விதமான உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட முறையே நிர்வாகக்குழு முறை எனப்படுகிறது. (உள்நாட்டுப் பிரதி நிதிகளுக்கு இந்த உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டமையினாலேயே சுயாட்சிக்கான வழியாக இது கருதப்படுகின்றது.) a
இவ்வாறாக வழங்கப்பட்ட உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புக்களாவன:
1. உள்ளுராட்சி
உள்நாட்டு அலுவல்கள். கல்வி போக்குவரத்து சுகாதாரம் பொதுச் சேவைகள் குடிசைக்கைத்தொழில், விவசாயம் 1931 முதல் 1947 வரை சுமார் 18 ஆண்டுகளாக இலங்கையில்
14

நடைமுறையிலிருந்த நிர்வாகக்குழு முறையானது பல நன்மைகளையும், தீமைகளையும் கொண்டதாகக் காணப்பட்டது. இத்தகைய நன்மை, தீமைகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். நிர்வாகக் குழுமுறையின் நண்மைகளாவன: 1. அரசாங்கசபையின் சுதேசிய உறுப்பினர்களுக்கு நிர்வாக விடயத்தில்
பயிற்சியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக அமைந்தமை. (டொனமூருக்கு முற்பட்டகால யாப்புக்களில் சுதேசிய உறுப்பினர்களுக்கு நிர்வாகத்தில் பயனுறுதிவாய்ந்த முறையில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை) w 2. இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மைப் பிரதிநிதிகளுக்கும் நிர்வாகத்தில்
ஈடுபட வாய்ப்புக்கிட்டியமை. − 3. பின்வரிசை அங்கத்தவர்களுக்கும், பிரபல்யமற்ற அங்கத்தவர்களுக்கும்
நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு கிட்டியமை. 4. நிர்வாகத்தில் ஏற்கனவே பயிற்சிகளைப் பெற்றிருக்காமை காரணமாக தனியாகச் சேர்ந்து எடுக்கும் முடிவுகளை சி. குழுவாக சேர்ந்து எடுக்கும் முடிகள் பயனுறுதி வாய்ந்தவையாக இருக்கும் என்பது நிர்வாகக் குழுமுறையின் தீமைகள்: 1. காலதாமதத்தை ஏற்படுத்தியமை. 2. அங்கத்தவர் மத்தியில் கூட்டுப் பொறுப்பு பேணப்படாமை. 3. ஒரு குழு இன்னொரு குழுவின்மீது பொறுப்புக்களைச் சுமத்திவிட்டு
ஒதுங்கிக் கொள்ள வாய்ப்பிருந்தமை. 4. தமது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளத் தாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியிலுள்ள ஒருவருக்கு (அவர் தகுதி இல்லாதிருந்தும்) நியமனம் வழங்குமாறு வற்புறுத்தியமை.
சுயாட்சியை நோக்கிய வழி என்ற வகையிலும் அல்லது சுதந்திர நிலைக்கான மற்றுமோர் ஏற்பாடு என்ற ரீதியிலும் சர்வஜன வாக்குரிமையை நோக்கலாம்.
டொனமூர் யாப்பின் கீழ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஜனநாயகத்தன்மை மிக்கதுமான அம்சம் என்ற அடிப்படையிலேயே சர்வஜன வாக்குரிமை பற்றி அரசியலறிஞர்கள் கருத்துத் தெரிவிப்பார். பொதுவாக ஒரு நாட்டில் ஒருகுறித்தவயதுக்கு மேற்பட்டசகலருக்கும் இன, மத, மொழி, பால், சொத்து, கல்வி போன்ற எத்தகைய தகைமைகளையும் கவனத்திற் கொள்ளாது வழங்கப்படும் வாக்குரிமையே சர்வஜன வாக்குரிமை எனப்படுகிறது.
15

Page 10
இன்றைய உலகில் நாடுகளின் சனத்தொகைப் பெருக்கமும், வியாபகமும் நேரடி ஜனநாயகத்திற்குத் தடைக்கல்லாக அமைந்துள்ளது. இந்நிலையில் தமது சார்பில் பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஜனநாயக உரிமையாகவே சர்வஜன வாக்குரிமை கொள்ளப்படுகிறது. இத்தகைய உரிமையினை 1931-ம் ஆண்டில் டொனமூர் யாப்பின் கீழேயே இலங்கைவாழ் மக்கள் பெற்றுக்கொண்டனர்.
டொனமூர் யாப்புக்கு முன்னர் இலங்கையில் வழங்கப்பட்டிருந்த வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை என அழைக்கப்படுகின்றது. 1910-ம் ஆண்டில் குரு-மெகலம் யாப்பினால்அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையைக் கற்ற சொத்துள்ள ஆண்கள் மாத்திரமே பெற்றிருந்தனர்.
1924ம் ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீழ் மொத்த சனத்தொகையில் சுமார் 4% மக்கள் மாத்திரமே 2,04996 பேர்) வாக்களிக்கும் தகுதியினைப் பெற்றிருந்தனர். ஆனால் டொனமூர் யாப்பின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இத்தகைய வாக்குரிமையை வழங்கப்பட்டமையினால் வாக்காளர் தொகை சுமார் 18 1/2 இலட்சமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. இது ஜனநாயக சக்தியின் கட்டவிழ்ப்பாகும்.
சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டமையினால் 6šu pas பொருளாதார அரசியல் விளைவுகள்: இவற்றைப் பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம்:
1. இலங்கை வாழ் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொண்டமை. シ
2. மக்களின் மனக்குறையைத் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டமை.
3. நாட்டின் கிராமப் பிரதேசங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை.
4. அரசியல் பற்றிய கல்வியை மக்கள் பெற்றுக் கொண்டமை. 5. நகர் மட்டத்தில் மட்டும் காணப்பட்டிருந்த பிரதிநிதித்துவமானது பரந்த அடிப்படையில் இடம்பெறத் தொடங்கியமை.
8. அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றமை. 7. சமூக நலச் சட்டங்கள் ஏற்பட்டமை 8. இன்றைய சமூக, பொருளாதார விருத்திகளுக்கும் இந்தச் சர்வஜன வாக்குரிமையேகாரணமெனலாம். (உதாரணமாக ஜனசக்தித்திட்டம், வீடமைப்புத்திட்டம் போன்ற பல திட்டங்களைக் குறிப்பிடலாம்) மேற்குறிப்பிட்ட மூன்று பிரதான அம்சங்களும் சுயாட்சிக்கான ஆரம்ப ஏற்பாடுகள் எனக் கொள்ளப்படுகின்றன.

அதேநேரம்
மூன்று அரசாங்கக் கரியதரிசிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களும் அதிகாரங்களும் அதேபோல ஆள்பதியின் அதிகாரங்களும் பிரித்தானிய ஏகாதிபத்தியக் கொள்கைகளை மேலும் இலங்கையில் நிலைநாட்டுவதற்கான ஏற்பாடுகளாகவே டொனமூர் யாப்பில் சேர்க்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
இலங்கையில் சுதந்திர நிலைப்பாட்டிற்கான ஆரம்ப ஏற்பாடுகளை வழங்கிய
அதேநேரம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் சார்பான தன்மைகளைக் கொண்டிருப்பதன் காரணமாக டொனமூர் யாப்பானது சுதந்திரத்திற்கும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் இடைப்பட்ட இணைப்புப் பாலமாகக் கருதப்படுகின்றது.
ஏகாதிபத்தியக் கொள்கைகளை உறுதிப்படுத்தும் இந்பாடுகள்
O gali a Truff Gigi Slună a6
அ. அரசாங்கக் காரியதரிசிக்கு (பிரதம காரியதரிசிக்கு) வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களாவன ズ 1. வெளிநாட்டு அலுவல்கள்
பாதுகாப்பு சிவில் சேவைகள் ஒழுக்கக் கட்டுப்பாடு பதவி நியமனம், பதவி மாற்றம் . கணக்குப் பரிசோதனை ஆ.சட்டத்துறைக் காரியதரிசிக்கு (நீதிக் காரியதரிசி) வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்கள்
1. இலங்கையின் சகல விதமான நீதிப் பொறுப்புக்கள் 2. இலங்கையின் சகல விதமான சட்ட ஒழுங்குகள் 3. தேர்தல்களை நடாத்துதல் 4. அரசாங்கத்திற்குச் சட்ட ஆலோசனைகள் வழங்குதல் இ. நிதிக் கரியதரிசிக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்கள் (சகல விதமான நிதி விடயங்களும் இவர் பொறுப்பிலே இருந்தன)
1. வரி அறவிடல் 2. கடன் வழங்குதல் 3. ஊதியம், ஓய்வூதியம் 4. வரவு செலவுத்திட்டம்
2.
: Aw

Page 11
5. அரசுக்கு இறுதிக்கடன் வழங்கல் 8. உய மதிப்பீடுகளை மேற்கொள்ளல் 7. வெளிநாட்டு நாணயக்கொள்கைகளை வகுத்தல் நிர்வாகக் குழு முறையின் கீழ் சுதேச மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புக்களை விடவும் 3 அரசாங்கக் காரியதரிசிகளுக்கும் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் விசாலமானவை. நாட்டின் நிர்வாகத்திற்கு மிகவும் அத்தியாவசியமானவை. எனவே தான் இது சுயாட்சிக்கான தடைக்கல்லாக விமர்சிக்கப்படுகின்றது.
இதேபோல ஆள்பதியின் அதிகாரங்களையும் குறிப்பிடலாம். ஆள்பதி ஒரு மேற்பார்வையாளரைப் போல காணப்படுவார் என டொனமூர் குழுவினர் குறிப்பிட்ட போதிலும் கூட, அரசாங்க சபையில் சட்ட வாக்க நடவடிக்கைகள் குறித்து இவர் பெற்றிருந்த தடுப்பதிகாரங்கள் விசேடமாகப் பிரித்தானிய காலனித்துவத்திற்கு சார்பான தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது (ஆள்பதியின் அதிகாரங்கள் பற்றிமேலதிகத் தெளிவிற்கு வினா இலக்கம் 2 பக்கம் 11 ஐப் பார்க்க).
எனவே தொகுத்து நோக்குமிடத்து சுயாட்சிக்கான சில ஆரம்ப ஏற்பாடுகள் வழங்கப்பட்ட அதேநேரம் காலனித் வேத் தன்மையை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளும் காணப்படுவதினாலேயே இந்த யாப்பு சுதந்திரம் (இலங்கை 1948-ல் சுதந்திரம் பெற்றது) காலனித்துவம் இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்புப் பாலமாக காணப்படுகின்றது.
வினா இலக்கம் -05
சோல்பரி பாப்பின் கீழ் இலங்கையில் சிறுபான்ழை இனத்தவர்களுக்காக வழங்கப்பட்ட காப்பீடுகளைப் பற்றி நுணுககக குறபபரை ஒனறு எழுதுக
விடைக்குறிப்புகள்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1948ஆம் ஆண்டு மனித உரிமைப் பிரகடனம் 31 பிரிவுகளில் எல்லா அரசுகளும் தம் மக்களுக்கு வழங்க வேண்டிய மிக விரிந்த உரிமைப் பட்டியல்ஒன்றைத் தந்துள்ளது. இத்தகைய அடிப்படை உரிமைகளினை அரசுகளாற் குறைக்கவோ மறுக்கவோ முடியாதவையாகும். அதேபோன்று எப்பொழுதும் எல்லா மனிதருக்கும் கிடைக்க வேண்டியதெனவும் கருதப்படுகின்றது.
1947ம் ஆண்டில் சோல்பரி யாப்பின்கீழ் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட அத்தியாயம் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும்

சிறுபான்மை இன மக்களின் நல உரிமைகளைப் பேணுவதற்காக சில ஏற்பாடுகள்ை சோல்பரி யாப்பு தன்னகத்தே கொண்டிருந்தது.
1947ம் ஆண்டு சோல்பரி யாப்பின் கீழ் இலங்கையில் வாழும் சுமார் 28 வீதமான சிறுபான்மை மக்களுக்காக வழங்கப்பட்டிருந்த காப்பீடுகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
01. யாப்பின் 29-ஆம் விதி
சோல்பரி யாப்பின் 29ம் விதியின் மூலமாக சிறுபான்மையினர் உரிமைகளைப் பாராளுமன்றத்தின் தாக்குதலிலிருந்து ஓரளவுக்கேனும் பார்க்கக்கூடியதாக இருப்பது அவதானிக்க முடிகிறது. இன, சாதி, மத அடிப்படையில் மக்களிடையே வேறுபாடு காட்டும் சட்டங்கள் ஆக்குவதை தடைசெய்வதே இவ்விதியின் நோக்கமாகும்.
29aib asfé (1--sebub 2_laf uffaly)
அமைதி, ஒழுங்கு, நல்லாட்சி ஆகியவற்றிக்கு வேண்டிய சட்டங்களை ஆக்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு உண்டு. இதனால் எச்சட்டங்களையும் பாராளுமன்றம் ஆக்கலாம்.
29ம் விதி (2-ஆம் பிரிவு)
இருப்பினும் இப்பரந்த சட்டவாக்க அதிகாரத்திற்கு 2-ஆம் உப பிரிவானது சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. அதாவது பாராளுமன்றம் ஆக்கும் சட்டங்கள்
அ) எச்சமயத்தையும் பின்பற்றும் தன்னுரிமையைத் தடுக்கக்கூடாது ஆ) பிறசமூகத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்களை உட்படுத்தாத இடைஞ்சல்களுக்கோ கட்டுப்பாடுகளுக்கோ ஒரு தனிப்பட்ட சமூக மதத்தைச் சேர்ந்தவர்களை உட்படுத்துதல் கூடாது.
இ) பிறசமூக மதத்தினருக்கு அளிக்கப்படாத நயமோ சலுகையோ ஒரு குறிப்பிட்ட சமூக மதத்தினருக்கு அளித்தல் கூடாது.
FF) எந்தவொரு மதத்தாபனத்தின் அமைப்பையும் அந்தத்தாபனத்தை ஆள்வோரின் சம்மதமின்றி மாற்றியமைக்கக்கூடாது.
29-ஆம் விதி(3-ஆம் உப பிரிவு)
மேற்கூறிய விதிகளுக்கு (2-ஆம் உப-பிரிவு) முரணாக ஆக்கப் படும் சட்டங்கள் செல்லுபடியாக மாட்டாது (யாப்பை மாற்றுவதற்குக் கீழ்சபை அங்கத்தவர் தொகையில் 2/3 க்கு குறையாதோர் வாக்களித்தனர் என்று சபாநாயகர் அத்தாட்சிப்படுத்த வேண்டும். ஆனால் உபவிதி இரண்டை 213
பெரும்பான்மையினாலும் மாற்றியமைக்க முடியாதென்று 1984ல்
19

Page 12
உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்துகின்றது.)
எனவே யாப்பின் 29ஆம் விதியின் 2-ஆம் உப பிரிவு அ முதல் ஈ வரையுள்ள அம்சங்கள் சிறுபான்மையினரின் காப்பீடு என்று குறிப்பிடலாம்.
02 நியமன அங்கத்தவர்கள்
சோல்பரி யாப்பின் கீழ் அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் நியமன அங்கத்தவ முறையொன்றும் காணப்பட்டது. விசேடமாக இலங்கையில் நாலா பக்கங்களிலும் சிதறி வாழக்கூடிய சிறுபான்மை இனத்தவர்களுக்கு தமது இனத்தின் சார்பில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல்போகும் சந்தர்ப்பத்தில் அத்தகைய சிறுபான்மையினரின் நலனைக் கருத்திற் கொண்டே நியமன ரீதியில் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்படுவர். பிரதமரின் ஆலோசனைப்படி மகா தேசாதிபதி இந்த நியமனங்களை வழங்குவார்.
1947, 1952, 1956ம் ஆண்டுத் தேர்தல்களின் போது பாராளுமன்றத்தின் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 101 ஆக இருந்தது . இதில் 6 உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாவார். அதே போன்று 1960 மார்ச், 1960 ஜூலை, 1965, 1970 தேர்தல்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 157 ஆகக் காணப்பட்டது. இதிலும் 8 உறுப்பினர்கள் நியமன
உறுப்பினர்களாவர்.
03 செனட் சபை
சோல்பரி யாப்பின் கீழ் இரண்டாம் மன்றமான செனட் சபை ஸ்தாபிக்கப்படுவதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று அதன் மூலம் சிறுபான்மையினருக்கு சட்டமன்றத்தில் திருப்திகரமான பிரதிநிதித்துவத்தை அளிப்பதும், அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைக்குரிய விடயங்களை அமைதியான சூழ்நிலையில் ஆராய்வதுமாகும்.
செனட் சபையில் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகக் காணப்பட்டது. இதில் சுமார் மூன்றிலொரு பங்கினராவது சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த அங்கததவர்களிடமிருநீது தெரிவு செய்யப்படவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.
சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்புக்காக இந்த செனட் சபை நிறுவப்பட்ட போதிலும், சிறுபான்மையினர் பேரில் நியமனம் பெற்றோர் கட்சிரீதியாக கடமையாற்றியதினால் சிறுபான்மையேளின் நலன்கள் பாதிக்கப்பட்ட நேரத்திலும் அந்நிலைப்பாடுகள் வன்மையாக எடுத்துரைக்கப்படவில்லை என்று குறைகூறப்படுகின்றது.
04 நீதிச்சேவை ஆணைக்குழுவும், பொதுச்சேவை ஆணைக்குழுவும்
சோல்பரி யாப்பின் கீழ் சிறுபான்மையினத்தவரின் நல உரிமைகளைப்
2O

பாதுகாப்பதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு காப்பீட்டு நடவடிக்கையாக நீதிச்சேவை ஆணைக்குழுவையும், பொதுச்சேவை ஆணைக்குழுவையும் குறிப்பிடலாம்.
நீதிச் சேவை, பொதுச்சேவை என்பவற்றின் நியமனங்களின், பணிகளின்போது சிறுபான்மையினத்தவர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டக்கூடாது என்பது இவ்வமைப்பின் பிரதான எதிர்பார்க்கையாகும். (அ) நீதிச்சேவை ஆணைக்குழு
1. அமைப்பு-3 அங்கத்தவர்கள் (தலைவர் பிரதம நீதியரசர்) 2. பதவிக்காலம்-5 ஆண்டுகள் 3. நோக்கங்கள் (1) அசியல் சார்பற்ற முறையில் நீதித்துறைப் பதவிகள் வழங்குதல் (2) சிறுபான்மையோரைப் பொறுத்தவரையில் நீதிச்சேவைப் பதவிகள்,
அவற்றின் செயற்பாடுகள் இனரீதியாக அமையாது என உறுதிப்படுத்தல் (3) நீதிச்சேவைப் பதவி வழங்குதல், பதவி மாற்றம் பதவி நீக்கம் ஒழுங்கு
நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (4) நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணல் (ஆ)பொதுச்சேவை ஆணைக்குழு 1. அமைப்பு 3. அங்கத்தவர்கள் 2. பதவிக்காலம் 5 ஆண்டுகள் 3. நோக்கங்கள் (1) அரசியல் சார்பற்ற முறையில் பொதுச்சேவைப் பதவிகளை வழங்குதல் (2) சிறுபான்மையோரைப் பொறுத்தமட்டில் பொதுச்சேவைப் பதவிகள்,
அவற்றின் பணிகள் இனரீதியாக அமையாது என உறுதிப்படுத்துதல் (3) பொதுச்சேவைப் பதவி வழங்குதல், பதவி மாற்றம், பதவி நீக்கம்,
ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (4) பொதுச்சேவையின் சுதந்திரத்தைப்பேணல்,
நீதிச்சேவை ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரதமரின் சிபாரிசின் பேரில் மகாதேசா ல் நியமிக்கப்படுவார்.
05 இரட்டை அங்கத்துவ அல்லது பல அங்கத்துவ தேர்தல் தொகுதி
சிறுபான்மை இனத்தவர்களுக்கான மற்றுமொரு காப்பீடாக இது கொள்ளப்படுகின்றது. 1959ல் யாப்பின் புதுச்சேர்க்கை விதிகளுக்கிணங்க இலங்கையில் தேர்தல் தொகுதி நிர்ணயத்தின்போது பல அங்கத்துவ அல்லது இரட்டை அங்கத்துவ தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. விசேடமாக ஒரு தொகுதியில் அணிணளவாக சிறுபான்மையினரும், பெரும்பான்மை இனத்தவர்களும் அல்லது இரண்டு சிறுபான்மை இனத்தவர்கள் சமனாக வசிப்பார்களாயின் இவர்களுக்கும் தத்தமது பிரதிநிதிகளைத் தெர்ந்தெடுக்கும்
21

Page 13
வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி 8 தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும்
பலஅங்கத்தவர் தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு மொத்தம் 14 உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர். எண்ணிக்கை பின்வருமாறு:
1. பேருவளை 02 i மட்டக்களப்பு O2 iii பொத்துவில் 02 iv ஹாரிஸ்பத்துவை O2 V கொழும்பு மத்தி 03 Vi நுவரெலியா, மஸ்கெலியா 03
எனவே மேற்கூறிய விடயங்களைத் தொகுத்து நோக்குமிடத்து (மேற்குறிப்பிட்டவற்றைச்) சிறுபான்மை மக்களுக்காக வழங்கப்பட்ட காப்பீடுகள்
எனக் கூறலாம்.
வினா இலக்கம் 06
லங்கையின் 1978ம் ஆண்டுக் குடியரசு
அரசியலழைப்புடன் தொடர்புபடுத்திப் பின்வரும் அம்சங்களின் சட்டவிதிகளை ஆராய்க
அ) அரச கொள்தைத்தித்துவங்கள் ஆ) மக்கள் தீர்ப்பு (ஒப்பங்கோடல்)
d
விடைக் குறிப்புகள்:
3) e De Elfi TGli enefiù ggiuristi
ஓர் அரசானது எத்தகைய கொள்கையைக் கடைப்பிடிக்க
வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதே அரச கொள்கைத் தத்து வங்களாகும். 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் ம்ே அத்தியாயம் அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகள் எனும் தலைப்பில் தமது அரசின் கொள்கைத் தத்துவங்களைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது
இது பற்றிய சட்ட ஏற்பாடுகளை யாப்பின் 27ம் உறுப்புரையில் 1ம் பந்தி முதல் 15ம் பந்தி வரை காண முடிகின்றது. இவற்றைச் சுருக்கமாகப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
27 (1) இதன்கண் அடங்கியுள்ள அரச கொள்கையின் வழி காட்டிக் கோட்பாடுகள், நீதியானதும், சுதந்திரமானதுமான சமூகத்தைத் தாபிப்பதற்கான சட்டங்களை யாக்குவதிலும் இலங்கையை ஆளுவதிலும் பாராளுமன்றத்திற்கும், ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் வழிகாட்டுதல் வேண்டும்.
27 (2) இலங்கையில் சனநாயக சோசலிச சமூகம் ஒன்றைத் தாபிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் குறிக்கோளைப் பின்வருமாறு
22

சுருக்கமாகக் கூறலாம்.
(அ) எல்லாப் பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரங்களையும் அடையச் செய்தல். W
(ஆ) மக்களின் பொது நலனை முன்னேற்றுதல், (இ) போதிய உணவு, உடை, வீட்டு வசதி, வாழ்க்கை நிலைமைகளில் தொடர்ச்சியான சீர்திருத்தம், ஒய்வு நேரத்தினை முழுமையாகத் துய்த்தல், சமூக கலாசார வாய்ப்புக்கள் என்பன உட்பட, எல்லாப் பிரஜைகளும், அவர்களினது குடும்பத்தினரும் போதியதான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தல்.
(ஈ) பகிரங்கப் பொருளாதார முயற்சியின் மூலமும்,தனியார் பொருளாதார முயற்சியின் மூலமும் அத்தகைய பகிரங்கப் பொருளாதார முயற்சியையும் தனியார் பொருளாதார முயற்சியையும், சமூகக் குறிக்கோள்களுக்காகவும், பொது மக்கள் நலனுக்காகவும் நெறிப்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் உகநீததாக இருக்கக் கூடிய அதீதகைய திட்டமிடலையும் கட்டுப்பாடுகளையும் விதித்துரைக்கின்ற சட்டங்களின் மூலமும் நாடு முழுவதனையும் விரிவாக அபிவிருத்தி செய்தல். உ) மூல வளங்களையும், சமூக உற்பத்திகளையும் சமமாகப்( ܗܝ பங்கிடுதல். y
(ஊ) உற்பத்திக் கருவிகள் பங்கீட்டுப் பரிமாற்றம் என்பன மக்களிடம் பரவலாக்கப்படல், அத்துடன் அவர்களுக்கே சொந்தமாகவுள்ள ஒரு நீதிச் சமூகத்தை உருவாக்குதல்
)ை மக்களின் உள கலாசார நிலைகளை உயர்த்துவதுடன் மனித ஆளுமையின் முழு அபிவிருத்தியினையும் உறுதிப்படுத்துதல்.
(ஏ) எழுத்தறிவின்மையை முற்றாக இல்லா தொழித்தலும் எல்லா நிலைகளிலும் உலகளாவியதும், சமத்துவமானதுமான கல்வி வாய்ப்புக்கான உரிமையை எல்லாப் பிரசைகளுக்கும் உறுதிப்படுத்துதல்.
1978ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின், அரச கொள்கைத் தத்துவங்களில் முக்கியமானவைகள் மேலே தரப்பட்டுள்ளன. 1977ம் ஆண்டு முதல் இலங்கையில் பதவி வகித்து வரும் அரசாங்கங்கள் இத்தகைய கொள்கைகளை மையமாகக் கொண்டே செயற்படுவதனைக் காணலாம்.
அரசறிவியலிலி பயன்படுத்தப்படும் அடிப்படை
எண்ணக்கருக்களுள் ஒன்றாக விளங்கும் மக்கள் தீர்ப்பு என்பது
ஜனநாயகத்தின் ஓர் முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றது. மக்கள் தீர்ப்பு
எனும் போது அரசியலமைப்பு ஏற்பாடுகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
23

Page 14
நிகழ்ச்சிகளின் போது பொது மக்களின் விருப்பு வெறுப்புகளை மக்கள் மூலமாகவே அறிந்துகொள்ளும் வழிமுறை என்று பொருள்ப்படும்.
அரசியல் நிர்வாகத்தில் பொதுமக்களையும் தொடர்புபடுத்த வேண்டும் என்ற கருத்தினை 1762ல் ஜின் ஜெக்குலின் ரூசோ தன்னுடைய "பொது விருப்பு என்ற கருத்தின் மூலம் தெளிவுபடுத்தினார். பொதுமக்கள் பிரதிநிதிகள் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் அரசாங்க செயற்பாடுகளைப் பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்கவே செயற்படுத்துவது பயனுறுதி வாய்ந்ததாகும் என்பது இவரின் வாதமாகும். 1793ல் பிராணி சிய அரசியலமைப்பில் "மக்கள் தீர்ப்பு" எனும் அம்சம் முதன் முதலாக இடம்பெறலாயிற்று.
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் ஜனநாயகத் தன்மை மிக்க ஓர் அம்சமாக இது கருதப்படுகிறது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் மக்கள் தீர்ப்புக்கான சட்ட விதிகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1) யாப்பின் 4ம் உறுப்புரை (அ) பந்தி மக்களின் சட்டவாக்க அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண ட பாராளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சட்டவாக்க அதிகாரத்தைச் செயற்படுத்தும் ஒரு வழி முறை மக்கள் தீர்ப்பு என்பது புலப்படுகின்றது.
2) யாப்பின் 83ம் உறுப்புரை (அ) (ஆ) பந்திகளின் கீழ் குறிக்கப்பட்டுள்ள உறுப்புரைகளை மாற்றியமைப்பதாயின் பாராளுமன்றத்தில் முழு அங்கத்தினரதும் (சமுகமளிக்காத அங்கத்தவர் உட்பட) 23 பெரும்பான்மை பெற்று அதை மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களும் அனுமதிக்க வேண்டும் எனப்பட்டுள்ளது.
அந்த உறுப்புரைகளாவன
அ) 1ம் உறுப்புரை:
இலங்கை சுதந்திரம், தன்னாதிக்கம், இறைமைமிக்க சனநாயக சோசலிசக் குடியரசாகும். ஆ) 2ம் உறுப்புரை:
இலங்கைக் குடியரசு ஓர் ஒற்றையாட்சியாகும். இ) ம்ே உறுப்புரை: ” ሓ இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடமே உண்டு. அதை மாற்ற முடியாது. (இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்பட்ை 24

உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்கியது)
ஈ) ம்ே உறுப்புரை:
இலங்கைக் குடியரசின் தேசியக் கொடி சிங்கக் கொடியாகும். (யாப்பின் 2ம் பின்னிணைப்பில் கூறப்பட்டுள்ளது)
உ) 7ம் உறுப்புரை:
இலங்கைக் குடியரசின் தேசிய கீதம். "பூரீலங்கா தாயே." ஊ) ம்ே உறுப்புரை:
இலங்கைக் குடியரசின் தேசிய தினம். பெப்பிரவரி 4ம் திகதி எ) 9ம் உறுப்புரை: w
இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு முன்னிடம் அளித்துள்ளது. மற்றைய மதங்களுக்கு அவற்றிற்குரிய இடத்தை வழங்கும் அதே வேளையில் இலங்கைக் குடியரசு பெளத்த சாசனத்திற்கு முன்னிடம் வழங்குவதோடு அதைப் பேணி வளர்த்தலும், பாதுகாத்தலும் அரசின் கடமையாகும்
ஏ) 10ம் உறுப்புரை:
சகல பிரஜைகளுக்கும் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பிரசாரம் செய்ய உரிமை உண்டு. (சிந்தனை செய்யும் சுதந்திரம், மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம் மதச்சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராயிருத்தல் வேண்டும்)
ஐ) 11ம் உறுப்புரை:
ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகை க்கு அல்லது தணி டனைக்கு உட்படுத்தப்படலாகாது.
ஒ) 30(2) உறுப்புரை:
குடியரசின் ஜனாதிபதி ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கவென மக்களால் தெரிவு செய்யப்படுவார்.
ஒ) 82(2) உறுப்புரை:
பாராளுமனறத் திணி முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஆறு ஆணிடுகளுக்கு மேல் அதனி பதவிக்காலத்தை நீடிக்க முடியாது.
மேற் குறித்த விடயங்களில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் மக்கள் தீர்ப்புக்கு விடப்படல் வேண்டும். 3) மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது மக்களின் தீர்ப்பிற்காக குறித்த பிரச்சினையை முன்வைக்கும் அதிகாரம் சனாதிபதிக்கு உண்டு. 4) சனாதிபதி மக்கள் தீர்ப்பிற்காக சமர்ப்பிக்கும் வழிமுறை (சுருக்கமாக)
அ)1. மக்கள் தீர்ப்பிற்காக அமைச்சரவை சான்றுரை அளித்துள்ள அல்லது.
25

Page 15
2. மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ஏதேனும் ஒன்று. இவை பாராளுமன்றத்தில் 23 பெரும்பான்மையின் குறித்த சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்காக ஜனாதிபதி சமர்ப்பிப்பார். ኧ
ஆ) பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்ட மூலத்தை தனது தற்துணியின் பேரில் மக்கள் தீர்ப்பிற்கு சமர்ப்பிக்கலாம். ஆனாலும் இச் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புத் திருத்தம் அல்லது நீக்கம், மாற்றம் குறித்து சட்ட மூலத்தை சமர்ப்பிக்க முடியாது.
மக்கள் தீர்ப்பினைக் கோரி நடாத்தப்படும் தேர்தலின்போது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகள் (50% மேல்) பெறப்படின் மாத்திரமே உரிய பிரேரணை மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ளப்படும்.
எவ்வாறாயினும் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வாக்காளர்களுள் 23 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்தல் அவசியமாகும். இவ்வாறு 23 க்கும் குறைவானவர்கள் வாக்களிக்குமிடத்து குறித்த பிரேரணை சார்பாக மொத்த பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கையில் 113 க்கு அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறு அளிக்கப்படாதிருப்பின் குறித்த பிரேரணை மக்களால் நிராகரிக்கப் பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.
சனாதிபதியால் மக்கள் தீர்ப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின் மக்கள் தீர்ப்புத் தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையாளரைச் சார்ந்தது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட விதிகள், 1981-7ம் இலச்சல் பாராளுமன்ற சட்டமூலம் என்பவற்றுக்கு இணங்க இத்தேர்தல் நடாத்தப்படுதல் வேண்டும்.
1981-7ம் இலக்க பாராளுமன்ற சட்ட்மூலத்துக்கிணங்க மக்கள் தீர்ப்புக்காக விடப்படும் பிரேரணை வினா வடிவில் முன் வைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயின் வாக்காளன் அப்பிரேரணைக்கு விருப்பமாயின் ஆம் எனவும் விருப்பமில்லை யெனில் இல்லை எனவும். வாக்கினை வழங்குதல் வேண்டும்.
வாக்குச் சீட்டில் "ஆம்" இல்லை' என்ற சொற்கள் மும்மொழியிலும் அச்சிடப்பட்டிருக்கும். ஆம் என்ற சொல்லுடன் “விளக்கு" அடையாளமும் இல்லை என்ற சொல்லுடன் குடம் அடையாளமும் அச்சிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.
வாக்காளருக்கு வழங்கப்படும் மாதிரி வாக்குச் சீட்டு பின் வருமாறு:-
ஆம் விளக்குச் இவ்விடத்தில் மக்கள் தீர்ப்பிற்காக சின்னம்
விடப்படும் பிரேரணை மும்மொழிகளிலும்
வினா அடிப்படையில் இல்லை குடச்
அச்சிடப்பட்டிருக்கும். சின்னம்
(1981-7ம் இலக்க மக்கள் தீர்ப்பு, சட்டமூலத்தின் 59ம் பக்கம் 3வது உட்பிரிவு அ மாதிரி)
26

வினா இலக்கம் 07
蠶" ಙ್ಗತಿ 蟲 பின்வருவனவற்றுள் எவையிேனும் இரண்டுபிற்றி 6(560) alpis.
ಲೈವ್ಲಿ 器 கீற்றத் ற்கான காரணிகள்
egg lug) ut 560601.pd சியல் பாப் O. O.
தேசிய அரசுப் பேரவை
(b6: -
க) முதலாம் : குடியரசு யாப்பின் தோற்றத்திற்கான காரணிகள
சோல்பரி யாப்பில் காணப்பட்ட சில குறைபாடுகளே 1ம் குடியரசு யாப்பின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன. இக்குறைபாடுகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
அ) சோல்பரி யாப்பு இலங்கையர்களால் எழுதப்பட்டதல்ல.(இது ஒரு திணிக்கப்பட்ட யாப்பு)
ஆ) சோல்பரி யாப்பின் கீழ் வழங்கப்பட்ட சுதந்திரம் பூரணமற்றதாகும். (ஒப்பந்தத்திற்கு உட்பட்ட சுதந்திரம்)
இ) இலங்கையின் தலைவராக பிரித்தானிய மகாராணி கருதப்பட்டமை. (மகாராணியின் பிரதிநிதியாக மகா தேசாதிபதி செயலாற்றினார்)
ஈ) இறைமையற்ற பாராளுமன்றம் காணப்பட்டமை . உ) ஜனநாயகத் தன்மையற்ற செனட் சபை காணப்பட்டமை. ஊ) அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள் இல்லாமை.
எ) அரசாங்க சேவை, (பொதுச்சேவை ஆணைக்குழு) நிரந்தர நிர்வாகத்தையும் அரசியல் நிர்வாகத்தையும் பிரித்தமை.
து அரசியல் யாப்பு நீதி மன்றம்
1. முதலாம் குடியரசு யாப்பின்படி தேசிய அரசுப் பேரவை இயற்றும் சட்டங்களை எந்த நிறுவனத்தாலும் விவரணம் செய்யவோ, மறு சீராய்வு செய்யவோ முடியாது.
2. தே. அ. பே. இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க அரசியல் யாப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது:
3. இது பிரதமரின் ஆலோசனைப்படி சனாதிபதியால் நியமிக்கப்படும் 5 27

Page 16
உறுப்பினர்களைக் கொண்டது. பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். (யாப்பின் 54ம் உறுப்புரை 1ம் பந்தி)
4. தேசிய அரசுப் பேரவையில் விவாதிக்கப்படும் மசோதாக்கள் சட்டமாகுமுன் அது அரசியல் திட்ட விதிகளுக்கு அமைந்தனவா என ஆலோசனை கூறும் கடமை இதற்குண்டு.
அ) நாட்டு நலனுக்கு அவசரமானவை எனக் கருதும் மசோதாக்கள் ஆ) சாதாரண மசோதாக்கள். 5. குறித்த ஒரு மசோதாவை அரசியல் யாப்பு நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டுமாயின் <
அ) தே. அ. பே. நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று 7 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர் அல்லது 20க்குக் குறையாத பேரவை உறுப்பினர்கள் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்தால்,
ஆ) ஒரு பிரசை அல்லது குழு ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால்,
இ) சட்டத்துறை நாயகம் சபாநாயகருக்கு அறிவித்தால் ஈ) சபாநாயகர் தாமாகவே கருதினால் அம் மசோதா அரசியல் யாப்பு நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்படும். 8. தீர்ப்பு பின்வருமாறு அமையும்.
அ) சட்டமூலம் யாப்புக்கு முரணல்ல. ஆ) சட்டமூலம் யாப்புக்கு முரண். இ) சட்டமூலம் யாப்புக்கு முரணா இல்லையா என்பது பற்றிச் சந்தேகம். 7. யாப்புக்கு முரணல்லாவிடின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும். 8. யாப்புக்கு முரணாயின் மூன்றில் இரணிடு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்.
E. giu deu Eus
1. சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் சட்டவாக்கத் துறையானது இரண்டு மன்றங்களைக் கொண்டதாக இருந்தது.
அ) பொது மக்கள் பிரதிநிதிகள் சபை ஆ) செனட் சபை 2. ஆனால் 1ம் குடியரசு அரசியலமைப்பில் சட்டவாக்கத்துறையானது இறைமைமிக்க ஓரங்க மன்றத்தை உடையதாகவே ஏற்படுத்தப்பட்டது. அதுவே தேசிய அரசுப் பேரவையாகும். 3.

Page 17
நிறைவேற்றப்படும். iநீதி நிர்வாக இறைமை அதற்கென அமைக்கப்பட்ட நீதித்தாபனங்கள் ஊடாக நிறைவேற்றப்படும். இந்த முத்துறை அதிகாரமும் தேசிய அரசுப் போரவையின் சட்டவாக்க அதிகாரம் மூலமாக ஒருங்கிணைக்கப்படும். இ) மூன்று துறைகளிலும் சட்டவாக்க அதிகாரமே முக்கியமானது. நாட்டுக்குத் தேவையான சகல சட்டங்களையும் ஆக்கலாம், மாற்றலாம், நீக்கலாம். ஈ) தேசிய அரசுப் பேரவை தனது சட்டவாக்க அதிகாரத்தைத் துறக்கவோ, கையளிக்கவோ, பாதிப்பு ஏற்படுத்தவோ முடியாது. அதே நேரம் தேசிய அரசுப் பேரவைக் குச் சமனான அதிகாரம் பொருந்திய எந்தவொரு தாபனத்தையும் அமைக்கவும் முடியாது.
(யாப்பின் 45வது உறுப்புரை) (தேசிய அரசுப் பேரவை விரும்பினால் துணை நிலைச் சட்ட ஆக்க அதிகாரத்தை ஏனைய தாபனங்களுக்கு வழங்கலாம், மீளப் பெறலாம்.) உ) தேசிய அரசுப் பேரவையின் நிகழ்ச்சிகளின் மீதோ அல்லது அது செய்த, அது செய்யாது இருக்கும் அல்லது செய்யாது விட்ட எதன் மீதும் எந்த நீதிமன்றமோ அல்லது நீதியைப் பொலிக்கும் எந்தவொரு நிறுவனமோ நீதிப்பரிபாலனம் செய்ய முடியாது. w ஊ) நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரம்:- சட்டவாக்க அதிகாரத்தில் இடம் பெறல். இதனால் எந்த உள்ளூராட்சித் தாபனமும், நிறுவனமும் வரிவிதிக்க வகுலிக்க முடியாது. (தேசிய அரசுப் பேரவையின் தீர்மானப்படியே செயலாற்றவேண்டும்)
வினா இலக்கம்-08
ஆ)முதலாழ் குடியரசு யாப்பு சோல்பரி யாப்பை விட்டும் விலகிச் சென்றுள்ளது.
முதலாம் குடியரசுயாப்பு:சேல்பரி யாப்பை ட்டும் முற்றாக விலதிச் செல்லவில்லை
. - இக்கூற்றுக்களை ஆராய்கமுதலாம் குடியரசு யாப்பில் தாணப்ப்டும் புதிய அம்சங்கள் பற்றியும்.ஏற்கனவே இருந்த யாப்பிலிருந்து தொடரும் அம்சங்கள் ப்ற்றியும் கருத்துரை வழங்குக்?
விடைக்குறிப்புகள்
1970-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது அமோக வெற்றி பெற்ற 30

சிரிமாவோபண்டாரநாக்க அம்மையளின் தலைமையிலான ஐக்கிய முன்னணினர் (யூரீலசுக, கம்யுனிசக் கட்சி, பூரீலசமசமாஜக் கட்சி ஆகியவற்றின் கூட்டு) ஏற்கனவே 1947ம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த சோல்பரி யாப்பிற்குப் பதிலாக புதியதோர் யாப்பினை ஆக்கி 1972 மே 22ம் திகதி. பிரகடனப்படுத்தினர். இந்த யாப்பே முதலாம் குடியரசு யாப்பு எனப்படுகின்றது.
முதலாம் குடியரசு யாப்பில் காணப்படும் அம்சங்களை விரிவாக ஆராயுமிடத்து சில அம்சங்கள் சோல்பரி யாப்பில் இடம் பெறாத புதிய அம்சங்களாக இருப்பதையும், அதே நேரத்தில் இன்னும் சில அம்சங்கள் சோலி பரி யாப் பைவிட்டும் முற்றாக விலகிச் செல்லாதவாறு ஆக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடியும். இவ்வாறாக சோல்பரி யாப்பிலிருந்து விலகிச் சென்றுள்ள புதிய அம்சங்களையும், சோல்பரி யாப்பிலிருந்து முற்றாக விலகிச் செல்லாத பழைய அம்சங்களையும் பின்வருமாறு தொகுத்து ஆராய்வோம். 9) 5u 8üoefreas.
1. நாடு குடியரசானமை. ஆட்சி நிறுவனங்கள் அனைத்தும் மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பெற் று மக்களுக்கும் பொறுப்பு வகிக்கும் வகையில் யாப்புத் திருத்தம் பெற்றுள்ளது: குடியர்சு நெறிக் கொள்கைக் கொவ்வாத, "முடியும், அவரின் பிரதிநிதியான மகாதேசாதிபதியும் அகற்றப் பட்டுள்ளனர். பதிலாக பிரதம மந்திரியினால் நியமனம் பெறும் ஜனாதிபதி அரசின்
தலைவராகின்றார்,
2. மக்கள் இறைமை மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை மாத்திரம் கொண்ட தேசிய அரசுப் பேரவையைச் சென்றடைகின்றது. பாராளுமன்றம், இரண்டாவது மன்றமான செனட் நீக்கப்பட்டு தனிமன்றமாகத் திகழ்கின்றது. முன்னைய பாராளுமன்றத்திற்கிருந்த அதிகாரக் கட்டுப்பாடுகள் தேசிய அரச பேரவைக்கு கிடையாது. சாதாரண சட்டங்களை ஆக்குவதிலும் புதிய யாப்பைத் திருத்துவதிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்பட்டன்.
3. அரச கொள்கைத் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், பெளத்தம், மொழி ஆகியன பற்றியஅத்தியாயங்கள் புதியன.
4. பாராளுமன்ற மசோதாக்களை மீளாய்வு செய்யும் நீதிமன்ற அதிகார நிலை இல்லாததொழிக்கப்பட்டுள்ளது, மசோதாக்கள் யாப்புக்கு உட்பட்டதா? முணைானதா? என ஆராய்ந்து தேசிய அரசுப் பேரவைக்கு ஆலோசனை வழங்க அரசியல் யாப்பு நீதி மன்றம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பழைய நீதிச்சேவை ஆணைக்குழுவிற்குப் பதிலாக அதிகாரம் குறைந்த நீதிச்சேவை
31

Page 18
ஆலோசனை சபையும், நீதிச்சேவை ஒழுங்காற்றுச் சபையும் அமைக்கப்பட்டது.
5. பொதுச் சேவை ஆணைக்குழு மறைந்துள்ளது. அதற்குப்பதிலாகப் பொதுச்சேவை ஆலோசனை சபையும் பொதுச்சேவை ஒழுங்காற்று சபையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இவைகள் யாப்பில் காணப்படும் புதிய அம்சங்கள் என இனங்காட்டலாம்
ஆ) முதலாம் குடியரசு யாப்பு சோல்மரி யாம்மை விட்டும் முற்றாக விலகிச் செல்லவில்லை.
1. சோல்பரி யாப்பைப் போன்றே ஒற்றையாட்சி அரசாங்க முறை நிலவியமை, ஒற்றையாட்சி முறையே தொடர வேண்டுமென்று 1ம் குடியரசு யாப்பு வலியுருத்துகின்றது.
2. தேசிய அரசுப் பேரவையின் தகைமை, வாக்குரிமை, தேர்தல் முறை,
தேர்தல் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படும் முறை, அவற்றை நிர்ணயிக்கும்
ஆணைக்குழு ஆகியன பற்றிய பழைய ஏற்பாடுகள் (சோல்பரி யாப்பில் காணப்பட்ட) சிறு மாற்றங்களுடன் தொடர்ந்தமை.
3. பிரதமரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை நிர்வாகமுறை. அதன் ஆதிக்கத்தினையும், அதிகாரத்தினையும் வலியுருத்தும் சில புதிய ஏற்பாடுகள் காணப்பட்ட போதிலும் கூட நிர்வாக முறை சோல்பரியை ஒத்ததே. 1
4. புதிய யாப்பை பிரகடனப்படுத்தும் போது சாதாரண சட்டங்களில் பெரும்பாலானவை தெரடர்ந்தும், செயற்பட்டமை. i."
எனவே தொகுத்து நோக்குமிடத்து முதலாம் குடியரசு:யாப்பு சில புதிய அம்சங்களைத் தன்னகத்தே உள்ளடக்கியிருந்தபோதிலும் கூட அது 100% சோல்பரியை விட்டு விலகிச் சென்றுள்ளது என்று கூறுவது இயலாத காரியமாகும்.
வின இலக்கம் - 09 . 1947,1972ம் ஆண்டு அரசியலமைப்புகளில் காணப்பட்ட பெயர்ள்வு நிர்வாகம் பற்றி நுணுக்கக் குறிப்பொன்று எழுதுக.
32

koli Lib6i
1947ம் ஆண்டு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சோல்பரி யாப்பினையும், 1972ம் ஆண்டு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1ம் குடியரசு யாப்பினையும் எடுத்து நோக்குமிடத்து நிர்வாகமானது இரு பெரும் " பிரிவுகளாக வகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
அ) உணர்மை நிர்வாகம்
(பிரதம மந்திரியும், அமைச்சரவையும்)
ஆ) பெயரளவு நிர்வாகம் (நாம நிர்வாகம்)
(முறையே மகா தேசாதிபதி, ஜனாதிபதி)
முறையே 1947, 1972ம் ஆண்டு அரசியலமைப்புக்களில் மகா தேசாதிபதியும் ஜனாதிபதியும் உண்மை நிர்வாகத் தலைவர்ான பிரதம மந்திரியின் ஆலோசனைப்படியே கருமமாற்றியதனால் இந்த நிர்வாகத்தை நாம நிர்வாகம் (பெயரளவு நிர்வாகம்) என அழைக்கின்றோம்.
1947ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் நாம நிர்வாகம்
1. இவர் பிரித்தானிய முடியின் பிரதிநிதி என்ற வகையிலே இலங்கையில் செயற்பட்டார்.
2. இலங்கைப் பிரதம மந்திரியின் ஆலோசனைப் படியே இவரின் கருமங்கள் அமைந்திருந்தமையினால் இவரது நிர்வாகத்தைப் பெயரளவு நிர்வாகம் (நாம நிர்வாகம்) என அழைக்கின்றோம்.
3. இலங்கையில் சோல்பரி அரசியலமைப்புக்கு முன்னர் காணப்ப்ட்ட
அனைத்துத் தேசாதிபதிகளை விடவும் இவர் அதிகாரத்திற் குறைந்தவர்.
4. மகா தேசாதிபதிப் பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அமைந்தமையினால் இவர் இலங்கையராகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை (இலங்கையின் முதலாவது மகா தேசாதிபதி சோல்பரி பிரபுவும், இறுதி மகா தேசாதிபதி திருவில்லியம் கொபல்லாவும்
ஆவார்கள்)
5. Unanih இலங்கைப் பிரதம மந்திரியின் சிபாரிசின்படி பிரித்தானிய முடியினால் இவர் நியமிக்கப்படுவார்.
33

Page 19
6. பதவிக் காலம் பதவிக்காலம் குறித்து யாப்பில் வரையருக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொருமுறை மகா தேசாதிபதி மாற்றப்படுவது மரபாகப் பேணப்பட்டது.
7. அதிகாரங்கள்
(9) و 1
(seb)
(
இ
சட்டத்துறை சார்ந்த அதிகாரங்கள்
நியமன அங்கத்தவர்கள்(8 பேர்)களை மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு
நியமித்தல்.
செனட்டின் வெற்றிடங்களை நிரப்புதல், மக்கள் பிரதிநிதிகள் சபையின் சடங்கு ரீதியான இருக்கைகளுக்குத் தலைமைதாங்குதல். − மக்கள் பிரதிநிதிகள் சபையைக் கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல், செனட்சபையைக் கூட்டல் ஒத்திவைத்தல். நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்கள் பிரதம மந்திரியைத் தெரிவு செய்தல். அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்தல். பாராளுமன்றக் கரியதரிசி, நிரந்தரக் காரியதரிசிகள், அமைச்சரவைக் காரியதரிசிகள், ஆகியோரை நியமித்தல். கணக்காளர் நாயகத்தை நியமித்தல். தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்.
நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்
பிரதம நீதியரசரை நியமித்தல். உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமித்தல். நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல். மன்னிப்பு வழங்குதல்.
1972ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் நாம நிர்வாகம்
அரசியலமைப்பின் 7ம் அத்தியாயம் 19, 20, 21 ஆம் உறுப்புரைகள்
குடியரசின் ஜனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள் என்பவற்றைக் குறிப்பிடுகின்றன
(ei)
19h gÚlaoy இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும்
அவரே அரசின் தலைவராவார்.

(édi) 20iíh 5—guÜuqsoyg
ஜனாதிபதி ஆட்சித்துறைத் தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவருமாவார்.
(இ) 21ம் உறுப்புரை
அவர் போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யவும், தேசிய அரசுப் பேரவையைக் கூட்டவும், கூட்டத் தொடர்களை நிறுத்தவும். கலைக்கவும் அதிகாரமிக்கவர். முதலமைச்சரையும், அமைச்சரவைக்கான பிரதியமைச்சர்களையும் அவரே நியமிப்பார். மேலும் இலங்கைக் குடியரசின் பகிரங்க இலச்சனையைக்காப்பில் வைத்தும் இருப்பார்.
02 ஜனாதிபதி நியமனம்
குடியரசு ஜனாதிபதியின் நியமனமும் , அவர் பதவி யேற்றலும் அரசியலமைப்பின் 25 ஆவது உறுப்புரையில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. "தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினரைத் தெரியும் நோக்கத்திற்கான தேர்தல் ஒன்றில் தேருனரொருவராவதற்குத் தகுதியுடையபிரசை எவரும் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதிப் பதவிக்கு முதலமைச்சரால் பெயர் குறிப்பிடலாம். அவ்விதம் பெயர் குறிப்பிட்ட ஆள் மிகவுயர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற முதன்மை நீதிபதி முன்னர் அல்லது அந்நீதிமன்றத்தின் நீதிபதியொருவர் முன்னிலையில் சத்தியம் செய்து கொள்வதன்மேல் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியாக பதவி மேற்கொள்வார். (இதன்படி ஜனாதிபதியை பிரதம மந்திரியே தெரிவு செய்வார் என்பது புலப்படுகிறது. இலங்கையில் முதலாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் திரு வில்லியம் கொப்பல்லாவ அவர்களாவார்.)
03. பதவிக்காலம்
இதுபற்றி யாப்பில் 28ஆம் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும் ஆயினும் இக்கால எல்லைகழியினும் கூட அடுத்துவரும் ஜனாதிபதி, அவரது பதவியை ஏற்கும் வரை தொடர்ந்தும் ஜனாதிபதிப் பதவியை வகித்தல் வேண்டும்.
04. ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பங்கள்
(2ம்ே உறுப்புரை 2ம் உப பிரிவு)
(அ) ஜனாதிபதி இறக்குமிடத்து அல்லது, (ஆ) இராஜிநாமாச் செய்யுமிடத்து, (@) உளப்பலவீனம் அல்லது உடற்பலவீனம் காரணமாக ஜனாதிபதி அவரது பதவியின் பணிகளைப் புரிய இயலாதவராகிவிட்டார் என முதலமைச்சர் தீர்மானிக்குமிடத்து,
35

Page 20
(FE) முதலமைச்சராற் பிரேரிக்கப்படுவதான ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம் ஒன்றைத் தேசிய அரசுப் பேரவை நிறைவேற்றுமிடத்து,
(உ) தேசிய அரசுப் பேரவை உறுப்பினரின் மொத்தத் தொகையில் ஆகக் குறைந்தது அரைபங்கினருக்குக் குறையாதோராற் கையொப்பமிடப்பட்டதும் எவரேனும் உறுப்பினராற் கையொப்பமிடப்பட்டு சபாநாயகருக்கு முகவரியிடப்பட்டதுமான எழுத்திலான அறிவித்தலொன்றின் மூலம் கொண்டுவரப்படும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம் ஒன்றை (சமுகமாயிராதோர் உட்பட) தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்களின் மொத்த தொகையில் ஆகக் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினரின் வாக்குக் கொண்டேனும் தேசிய அரசுப் பேரவை நிறைவேற்றுமிடத்து.
5. ஜனாதிபதியின் அந்தஸ்தும், அதிகாரமும் மகா தேசாதிபதியை ஒத்தது. (ஆனால் மகா தேசாதிபதியின் சில கடமைகளை நேரடியாக நிறைவேற்றலாம். இங்கு இல்லை)
6. தேசிய அரசுப் பேரவை ஆக்கும் சட்டங்களுக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறவேண்டியதில்லை. அவர் நிறைவேற்றிய நிறைவேற்றாது விட்ட எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கேள்வி கேட்க முடியாது. இவரின் செயற்பாடு தொடர்பாக இவருக்கு எதிராக வழக்குத் தொடரவும் முடியாது. இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயலாற்றுவதால் அமைச்சரவையே இறுதிப் பொறுப்புக் கூறும்,
7. ஜனாதிபதியின் கடமைகளையும், அதிகாரங்களையும் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்
(அ) சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்
தேசிய அரசுப் பேரவையைக் கூட்டல், கலைத்தல் ஒத்தி வைத்தல். சடங்கு ரீதியான இருக்கைகளுக்கு தலைமை வகித்தல். அரச கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தல். பொதுஇலட்சனையை வைத்திருத்தல் பிரயோகித்தல், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தல். பொதுத் தேர்தலின் பின் அரசாங்கத்தை அமைத்தல்.

C
6
(இ)
5. og
நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்களும்,கடமைகளும் . போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனப்படுத்தல். பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் போன்றோரை நியமித்தல். அரசாங்கசேவை செயலாளர்கள், உயர் அதிகாரிகள், இராணுவத் தளபதி ஆகியோரை நியமித்தல். கணக்காளர் நாயகத்தை நியமித்தல். வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஆணையாளர்கள் பூரண அதிகாரம் பெற்ற முகவர்கள், இராஜதந்திரிகள் போன்றோரை நியமித்தழவரவேற்றலும் அரசாங்கிTஆலோசனை சபை, அரசாங்க சேவை ஒழுங்காற்று சபை உறுப்பினர்களை நியமித்தல் கெபினட் செயலாளர்கள், பாராளுமன்றச் செயலாளர் ஆகியோரை நியமித்தல்
நீந்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும். உயர்நீதிமன்ற நீதியரசர்களையும்,மேல்நீதிமன்ற நீதியரசர்களையும் நியமித்தல்.
நீதித்துறை நாயகத்தைத் தெரிவு செய்தல். நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல். நீதிச்சேவை ஒழுக்காற்று உறுப்பினர்களை நியமித்தல். குற்றவாளிகளை மன்னித்தல்.
பு-ே மேற்படி கருமங்கள் அனைத்தும் பிரதமரின் (கெபினட்டின்)
ஆலோசனைப்படியே புரிய வேண்டியிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும். ஆகவேதான் ஜனாதிபதி நாம நிர்வாகியாகக் கருதப்பட்டார்.
வினா இலக்கம் - 10
1978f # குடியரசு அரசியலமைப்பின் கீழ்
நடைமுறைபபடுததப
உறுப்பினர்கள்ைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்
6)
醬 ழலமைப்பின் கீழ் நட்ைமுறைப்படுத்தப்பட்ட
தேர்தல் ಣ್ಣ-ಐ! ஒப்பிட்டு ஆராய்க.
b
பாராளுமன்றப் பி !!!!!!!!!မျိုးမြို့ ன் 器 ஆராய்க
பட்டுள்ள பாராளுமனிற்
GOL 1972 if ஆணடின குடியரசு
டைம்றைப்படுத்தப்பட்டுள்ள
is
37

Page 21
義) 醬 醬盟 顏 மனபு பததரம தரககல செழயும முறை U੭ ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும் முறை
| விடக் குறிப்புகள்
இலங்கையில் வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1ம் குடியரசு அரசியலமைப்புக் காலம் வரை பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தேர்தல் முறை பெரும்பான்மைத் தேர்தல் முறை எனப்படுகின்றது.
பொதுவாகப் பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொகுதிவாரியாக மக்கள் தம் பிரதிபிரிகளை நேரடியாகத் தேர்ந்தெடுத்"க்கொள்வார். அதிகமான வாக்குகளைப் பெற்றவரே பிரதிநிதியாகத் தெரி செய்யப்படுவார்.
1978ம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு மூலம் இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விநாசார தேர்தல் முறை எனும்போது ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்துவ) தேர்தல் தொகுதியில் அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளருக்கு அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய ஒரு குழுவுக்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்பட்ட வாக்குகளிள் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் டெபாயங்களைக் கொணர்ட வாக்களிக்கும் முறையே விநாசார முறை எனப்படுகின்றது.
இந்த விகிதாசார தேர்தலானது இரண்டு பிரதான மாதிரிகளைக் கொண்டதாகும். அவை.
(அ) தனிமாற்று வாக்கு முறை. (ஆ) பட்டியல் முறை.
தனிமாற்று வாக்கு முறை
தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். (இத்தகைய தேர்தல்கள் 1982
38.

1988ம் ஆண்டுகளில் இலங்கையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 3வது ஜனாதிபதித் தேர்தலானது 1994 நவம்பர் மாதத்தில் நடாத்தப்பட்டது.)
மட்டியல் முறை
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (1989ல், 1994இல் நடாத்தப்பட்டன) மாகாணசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (1987, 1993ம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டன) உள்ளுராட்சிசபை உறுப்பினர்களை (மாநகர, நகரசபை, பிரதேசசபை) தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் (1991ல் நடாத்தப்பட்டது) என்பன விகிதாசார முறைக்கிணங்கவே நடாத்தப்படும்.
பாராளுமன்ற பிரதிநிதிகள்ைத் தேர்ந்தெடுப்பதற்காக 1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெரும்பான்மைத் தேர்தல் முறையையும் 1978ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராய பின்வரும் தலைப்புகளின் கீழ் நோக்குதல் பொருத்தமானதாக அமையும்.
(அ) தேர்தல் தொகுதி பிரிக்கும் முறை (ஆ) நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் முறை (இ) வாக்களிக்கும் முறை (ஈ) ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறை (உ) வெற்றிடமேற்படும்போது மீள் நிரப்பப்படும் முறை
இவற்றைப் பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்குவோம்
(அ) தேர்தல் தொகுதி பிரிக்கும் முறை
1972-ம் ஆண்டு யாப்பின் படி 1. தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் யாப்பின் 77 முதல் 81 வரையுள்ள உறுப்புரைகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
2. இதன்படி 78(2) இல் இலங்கையில் 75,000 மக்கள் தொகைக்கு
ஒரு பிரதிநிதியென்றும் 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதியென்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது
3. ஒவ்வொரு தடவையும் குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதையடுத்து மூவரைக்கொண்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆண்ைக்குழுவொன்றை ஜனாதிபதி அமைத்தலி வேணடும் என யாப்பினி 77(1)

Page 22
குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (பிரதமரின் ஆலோசனைப்படி) இதன்படி 1974ம் ஆண்டில் திரு நோயல் தித்தவெல என்பவரின் தலைமையில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு வொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபார்சின் பேரிலேயே தேசிய அரசுப்பேரவையினால் 1975 பெப்ரவரி மாதத்தில் 1ம் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தமாக 78(2) உறுப்புரையில் 90,000 மக்களுக்கு ஒரு தொகுதி 1000 சதுர மைலுக்கு ஒரு தொகுதி என்ற நிலை பேணப்பட்டது
5. திரு.நோயல் தித்தவெல ஆணைக்குழுவின் அறிக்கை 1976ல் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-இதன்படி 1977-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலின் போது
உறுப்பினர் எணணிக்கையும், தொகுதிகளும் பினி வருமாறு
தீர்மானிக்கப்பட்டிருந்தன.
மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 168 1. சனத்தொகையின் அடிப்படையில் 143 அங்கத்தவர்கள் i. பரப்பளவுள் "ப்படையில் 25 அங்கத்தவர்கள் மொத்தம் 168 அங்கத்தவர்கள்
இந்த 168 அங்கத்தவர்களும் 160 தொகுதிகளிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர்
தனி அங்கத்தவர் தொகுதி 154 தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 154
பல அங்கத்தவர் தொகுதி 06 தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 14
- W. 160 168
1978-tîb seb60'i (6 Kaspirafsör Lig . . .
1. யாப்பின் 96-ம் சரத்து 1ம் உப பிரிவு பின்வருமாறு கூறுகின்றது. ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை இருபதுக்குக் குறையாததும் இருபத்துநான்குக்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப்பிரித்து அவற்றிற்குப் பெயர்களை குறித்தொதுக்குதல் வேண்டும்.
2. அரசியலமைப்பின் 95(1) பிரிவுக்கமைய 1978-11-29ம் திகதி திரு G.B.Aசில்வா தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு வொன்றும் ஜனாதிபதியால் அமைக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகிறது. இவ்வறிக்கையின் படி (26-ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல்
மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது.
3. அரசியலமைப்பின் 62ம் சரத்தின் 1ம் உப பிரிவின்படி இலங்கைப்
40

பாராளுமனற அங்கதீத வர்களினி எணணிக்கை பின வருமாறு: தீர்மானிக்கப்பட்டடிருந்தது.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் , மாவட்டங்களின் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 198 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும்.
யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திணங்க இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் தெரிவு செய்யப்படுவர்
1. இலங்கையில் முழு வாக்காளர் தொகையையும் கருத்திற்கொண்டு 160 உறுப்பினர்களை மாவட்டரீதியாகத் தெரிவுசெய்தல்,
2. ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும் 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.
3. தேசிய பட்டியல் மூலமாக 29 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.
(ஆ) நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் முறை
1972th Bigatii UIÖljais fi
அரசியலமைப்பினி 70(1) இல் தேசிய அரசுப் பேரவை உறுப்பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட்ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயர் பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் உரிமை உண்டு.
நியமனப்பத்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி யொன்றின் மூலமாகவோ சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்யலாம்.
1978ம் ஆண்டு யாப்பின் கீழ்
நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் யாப்பின் 99ம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1ம் குடியரசு அரசியலமைப்பைப்போல இங்கு நேரடியாக நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்.
41

Page 23
யாப்பின் படி பட்டியலைத் தாக்கலி செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எண்ணிக்கையுடன் மூன்றிலொரு பங்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண்டும். யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும் போது தேர்தல் மாவட்டத்திற்கு தெரிவு செய்யும் அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்று பேரை கூட்டி பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும்.
உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் அல்லது சுயேற்சைக்குழுக்களும் பின்வரும் எண்ணிக்கைக்கிணங்க பட்டியலைத் தயாரித்தல் வேண்டும்
12+3=15 வேட்பாளர்கள்
(இ) வாக்களிக்கும் முறை
(1972i unŪīGir Uņ) w
வாக்களிப்பது நேரடி முறையாாம். வாக்குரிமை பெற்ற எவரும் தொகுதிரீதியாக தான் விரும்பும் வேட் ருக்கு நேரடியாக புள்ஸ்டி இடுவதன்
மூலம் வாக்களிக்கலாம்.
1978ம் ஆண்டு யாப்பின் படி
பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக நிகழ்த்தப்படல் வேண்டும் , .
1. தான் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கான வாக்கு 2. விருப்பத் தெரிவு வாக்கு
வாக்களிப்பு முறை தொடர்பான மேலதிக விளக்கங்கள் 1981ம் இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல்சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளாலும் தா கல் செய்யப் பட்டுள்ள பட்டியல் சிங்கள் அகரவரிசைக்கிணங்க வரிசைப்படுத்தப்பட்டு, அபேட்சகர்களுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்படும். இதில் கூடியது மூன்று அபேட்சகர்களுக்கு விருப்புத் தெரிவு வாக்குகளை வழங்குமாறு வாக்காளர் கோரப்படுவர்.
(ஈ) ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.
1972ம் ஆண்டு யாப்பிள் படி தொகுதிரீதியாக நடந்த தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். உதாரணமாக X எனும்
42

தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ABC ஆகிய போட்டியாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்
A - 18,332 B 16,218
C O8,272
இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் "A" ஆவார். இதன் படி X எனும் தேர்தல் தொகுதியில் "A" என்பவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்.
1978ம் ஆண்டு யாப்பின் மடி
அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணிப்பிட்ட பின் (தேர்தல் மாவட்ட ரீதியில்) ஒவ்வொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெற்ற வாக்கு விகிதத்திற்கு இணங்க ஆசனங்களை பகிர்ந்தளிப்பதற்காக வேண்டி பின்வரும் 6 படி முறைகள் கடைப்பிடிக்கப்படும்.
1 வது படி
உரிய தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு போனஸ் ஆசனம் ஒன்றினை வழங்குதல் .
2 նil:1 Մէգ3 A.
தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 1120 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத (அதாவது வெட்டுப்புள்ளி வாக்குகளைப் பெறாத) கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட்டியிலிருந்து நீக்குதல்.
3 նացl Utդ:
தொடர்புடைய வாக்குகளைக் கணித்தல். தொடர்புடைய வாக்குகள் = அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்(நீக்கப்பட்ட வாக்குகள் + நிராகரிக்கப்பட்ட வாக்குகள்)
(யாப்பில்ல (ஆ) பிரிவு)
4 նմ:յն Սlդ:
முடிவான எண்ணை கணிப்பீடுசெய்தல். முடிவான எண் = தொடர்புடைய வாக்குகள்
ஆசனங்களின் எண்ணிக்கை-1 5 նայ1 Սեգ։
தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 5 வீதத்துக்கு மேல் வாக்குகளைப்பெற்ற கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற 43

Page 24
மொத்த செல்லுபடியான வாக்குகளை முடிவான எண்ணினால் வகுத்து ஆசனங்களை ஒதுக்குதல்.
6 նայն Ալգ:
இவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் போது முடிவான எண்ணுக்கிணங்க தேர்தல் மாவட்டத்திற்குரிய ஆசனங்கள் பெறப்படாவிடின் முடிவான எண்ணுக்கிணங்க ஆசனங்கள் பகிரப்பட்ட பின் கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்றுள்ள மிகுதிப் பெரும்பான்மைக்கிணங்க குறைவாக உள்ள ஆசனங்களை பகிர்தல்.
இந்த அடிப்படையில் இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 ஆசனங்களையும், கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்கு விகிதத்திற்கிணங்க ஒதுக்கப்படும் மேற்படி நடவடிக்சையானது முதலாம் கட்ட வாக்கெடுப்பினை அடுத்த நிலையாகும்.
ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கமைய உப்பினர்களை பின்வருமாறு தேர்ந்தெடுப்பர்.
அதாவது வாக்கெடுப்பின் இரண்டாம் , கட்டமாக விருப்பத்தெரிவு வாக்குகள் கணிப்பீடு செய்யப்படும்.
x எனினும் தேர்தல் மாவட்டத்தின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 12 எனக் கொள்வோம், இதற்கு போட்டியிட்ட "A கட்சியானது 7 ஆசனங்களை விகிதாசாரத்திற்கிணங்க பெற்றுள்ளது. எனவே "A" கட்சியில் மிகக்கூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப் பெற்ற முதல் 7 அபேட்சகர்களும் அங்கத்தவர்களாகத் தெரிவு செய்யப்படுவர். அதே போல "B" கட்சி 5 ஆசனங்களைப் பெற்றிருந்தால் B கட்சியில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவர்.
மீதமான 29 அங்கத்தவர்களும் தேசிய பட்டியல் மூலமாக பகிரப்படுவர். அதாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்துக்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் 29 பேரை உள்ளடக்கிய தேசிய பட்டியலொன்றினையும் தாக்கல் செய்தல் வேண்டும். தேசிய ரீதியாக கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்கு, விகிதத்தி கிணங்க இந்த 29 உறுப்பினர்களும் பகிர்ந்தளிக்கப்படுவர்.
இவ்வாறாக 225 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்.
வெற்றிடம் நிரப்பப்படும் முறை 1972ம் ஆண்டு அரசியல் அமைப்பு
எத் தொகுதியில் உறுப்புரிமை காலியானதோ அத் தொகுதியில் இடைத்தேர்தல் நடாத்தப்பட்டு வெற்றிடம் நிரப்பப்படும். 1978ம் ஆண்டு அரசியல் அமைப்பின்படி
44

ஒரு தேர்தல் மாவட்டத்தில் எக்கட்சியின் உறுப்புரிமை காலியானதோ அதே கட்சி ஏற்கனவே நடந்த தேர்தலின் போது தாக்கல் செய்த பட்டியலில் அதிக விருப்புத் தெரிவு வாக்கினைப் பெற்றவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் (ஆனால் கட்சியின் தலைமைத்துவத்தின் அதிகாரம் இங்கு மிகைத்திருக்கும்)
66OIFT இலக்கம் ll
பின்வருவன பற்றி சிறுகுறிப்புகள் எழுதுக.
(அ) நிருவாகத்துக்கான பாராளுமன்ற
ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்)
(ஆ) இரண்டாம் குடியரசின் பிரதமர்.
விடைக்குறிப்புகள்.
SSL TTLTTTLLL LLLLTTT KSLLLLL
உலக அரசியல் வரலாற்றில் நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் என்ற பதவி சுவிச்சர்லாந்து நாட்டில் 1809ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பின்லாந்தில் 1819ம் ஆண்டிலும், டென்மார்க்கில் 1954ம் ஆண்டிலும், நியுசிலாந்தில் 1962ம் ஆண்டிலும், இங்கிலாந்தில் 1967ம் ஆண்டிலும் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல்மைப்பில் (1978) முதற்தடவையாக எமது இலங்கையிலும் இப்பதவி ஏற்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் 156வது உறுப்புரை இதுபற்றிய ஏற்பாடுகளைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.
156 வது உறுப்புரை 1ம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது. அரசாங்க அலுவலர்கள், பகிரங்கக் கூட்டுத்தாபன அலுவலர்கள், உள்ளுர் அதிகாரசபை அலுவலர்கள், அதையொத்த வேறு நிறுவனங்களின் அலுவலர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்கள் என்றும் அநீதி களை இழைத்து விட்டார்கள் என்றும் கூறுகின்ற முறைப்பாடுகள் அல்லது சார்த்தல்கள் பற்றி அத்தகைய சட்டத் தின் ஏற்பாடுகளுக்கிணங்கவும் அவற்றுக்கமைவாகவும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பொறுப்பாகவுள்ளவரான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) என்ற பதவியினைத் தாபிப்பதற்காகச் சட்டத்தின் மூலம்
45

Page 25
பாராளுமன்றம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் சனாதிபதியினால் நியமிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், நன்னடத்தை உடையவராயிருக்கும் காலத்தின் போது அவர் பதவி வகித்தலும் வேண்டும். அவரின் சம்பளம் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும். அதேநேரத்தில் பதவிக்காலத் தில் அவரின்
சம்பளம் குறைக்கப்படவும் மாட்டாது.
நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளரினது பதவி வறிதாதல் சம்பந்தமாக 4ம் பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
(அ) அவர் இறப்பதன் மேல்.
(ஆ) இராஜினாமாச் செய்வதன் மேல்.
(இ) சட்டத்தினால் நிர்ணயிக்கப்படும் வயதை அடைவதன் மேல்.
(ஈ) சுகவீனம் அல்லது உடற்பலவீனம், மனப்பலவீனம் காரணமாக
ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்வதன் மேல்.
(உ) அவரைப் பதவியிலிருந்து அகற்றுமாறு கூறும் பாராளுமன்றத்தின்
தீர்மானத்தின் மீது ஜனாதிபதியினால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படுவதன்மேல்.
பாராளுமன்றத்தின் 1981ம் ஆண்டு 15ம் இலக்க சட்ட மூலம் ஒம்புட்ஸ்மனின் செயற்பாடுகள். அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு. s
1) ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் பாராளுமன்ற பெட்டிசன் குழுவாலேயே சமர்ப்பிக்கப்படும்.
2) ஆகவே முறைப்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் ஊடாகவே அனுப்பப்படுதல் வேண்டும்.
3) குறித்த முறைப்பாட்டை ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிப்பதா? இல்லையா? என்று தீர்மானிப்பது பாராளுமன்ற பெட்டிசன் குழுவேயாகும்.
4) ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்பபடும் முறைப்பாட்டை (தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க) விசாரணை செய்து அறிக்கையை சபாநாயகருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
பிரஜைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்கப்படும் என்ற நோக்கில் எமது அரசியலமைப்பில் ஒம்புட்ஸ்மன் பதவி ஏற்படுத்தப்பட்ட போதிலும் நடைமுறையை நோக்குமிடத்து உரிய விசாரணையை ஒம்புட்ஸ்மனுக்கு வழங்கக் கையாளும் வழிமுறையானது சிக்கல் மிக்கது. என்பதுடன் அரசியலமைப்பு ரீதியாகவும் பாராளுமன்ற சட்டமூலத்தின் மூலமாகவும் ஒம்புட்ஸ் மனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்

குறைவானதாகும் என்பதும் கூறப்பட்டு வரும் குறைபாடுகளாகும்.
(g) gGJacihLinLib (sgtgurJay ulunTÜLlgi ijgijLDrfi
1) யாப்பின் படி இலங்கை ஜனாதிபதியே பிதமரைத் தெரிவு செய்வார்.
2) யாப்பின் 43(3) இன் படி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் ஆதரவு உள்ளவரை ஜனாதிபதி பிரதமராகத் தெரிவு செய்வார். (இதன் படி ஆளும் கட்சியின் பிரதானி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கருதலாம்)
3) 1978 க்கு முன்னர் இலங்கையில் அமுல் படுத்தப்பட்ட அரசியல் அமைப்புடன் ஒப்பு நோக்கும் இடத்து 1978ம் ஆண்டு அரசியல் அமைப்பினி படி பிரதமரினி அதிகாரங்களும் கடமைகளும் குறைக்கப்பட்டுள்ளதை காணலாம். இங்கு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் கடமைகளும் நிறைவேற்ற பிரதமரின் ஆலோசனை அவசியமில்லை. பிரதமரின் ஆலோசனை தேவை எனக் கருதினால் மட்டுமே ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையைப் பெறலாம். எவ்வாறாயினும் பிரதமரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி நடக்க வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை. '
4) பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசியல் அமைப்பின் படி அவரின் அதிகாரங்களை வகைப்படுத்துவதும் கடினம்.
5) அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதி சுகவீனம் உற்றால், நாட்டின் வெளியே சென்றால், அல்லது வேறு காரணங்களுக்காக ஜனாதிபதி கடமையாற்ற முடியாது என்று இருந்தால் ஜனாதிபதிக்கு பதில் கடமையாற்ற பிரதமர் நியமிக்கப்படலாம்.
6) பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல. அதேநேரம் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதில்லை. 2ம் குடியரசு யாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டபின் இன்றுவரை ஜனாதிபதி பிரதமருக்கு அமைச்சரவைப் பொறுப்புக்களை வழங்கியமையால் அவர் அமைச்சரவைக்குச் செல்கின்றார். (பிரதமருக்கு அமைச்சரவைப் பொறுப்புக்கள் வழங்கவேண்டிய அவசியமில்லை) −
7) இதுவரை ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் எழவில்லை.
47

Page 26
எவ்வாறாயினும் இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக அமையுமிடத்து பிரதமரது கடமைகள், அதிகாரங்கள் தொடர்பான புதிய நிலைப்பாடுகள் தோன்ற இடமுண்டு.
8) 1994 ஆகஸ்ட் தேர்தலில் பொஐ.மு அரசாங்கமைத்து சந்திரிக்கா குமாரணத்துங்க பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். 94 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சந்திரிக்கா அரசாங்கத்தினால் ஐதேக ஜனாதிபதி விஜேதுங்க காணப்பட்ட போதிலும் விஜேதுங்கவின் ஒத்துசெல் மனோநிலை காரணமாகப் பிரச்சினைகள் எழவில்லை
வினா இல 12
இரண்டாம் . யாப்பின் கீழ் சனாதிபதிப்பதவி, அவரது பதவக காலம முடிவடைவதறகு முன வறிதற்கினால்(வெற்றிடமாகினால்) နှီးဝှိုမျိုချီ சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்ட விதிகளை
நுணுக்கமாக ஆராய்க.
விடைக்குறிப்புகள்
நிறைவேற்று அதிகாரம் கொணிட சனாதிபதிப்பதவி அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் வறிதாகினால் அடுத்துவரும்
சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கைச் சனநாயக
சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 37ஆம் உறுப்புரை, 40ஆம் உறுப்புரை போன்றவற்றிலும் 1981ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க சனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலத்தின் மூலமும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசியலமைப்பிணி 37ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தியில் சனாதிபதிக்குரிய தத்துவங்களும் கடமைகளும் பணிகளும் முதலமைச்சரினால் பிரயோகிக்கப்படுதலும் புரியப்படுதலும் நிறைவேற்றப்படுதலும் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
சனாதிபதியின் சுகவீனம் காரணமாக, இலங்கையில் இல்லாமை காரணமாக அல்லது வேறேதும் காரணமாகத் தமது பதவிக்குரிய தத்துவங்களையும்,கடைமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பாரெனக் கருதுவாரெனில்
48

அத்தகைய காலத்தின் போது சனாதிபதி என்ற பதவியில் முதலமைச்சரரைச் சனாதிபதி என்ற பதவிக்குரிய தத்துவங்களையும், பணிகளையும், பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறை வேற்றுவதற்கும் அவர்(சனாதிபதி) நியமிக்கலாம் என்பதுடன் அத்தகைய காலத்தின் போது முதலமைச்சர் என்ற பதவியில் பதிற்கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம்.
(இச்சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் பதவி வறிதாக இருப்பின் அல்லது செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலப்பகுதியின் போது சனாதிபதியின் பதவிக்கான தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அவர் சபாநாயகரை நியமிக்கலாம்)
37ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் ஒரு தற்காலிக நிலையாகும்.
1993 மெய் மாதம் முதலாம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2வது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதி உயர்திரு ரனசிங்க பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து சனாதிபதிப்பதவி வெற்றிடமானது. (யாப்பின் 38ம் உறுப்புரையின் 1ம் பந்தி பின்வரும் சூழ்நிலைகளில் சனாதிபதிப்பதவி வெற்றிடமாகும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ) அவர் இறப்பதன் மேல். (ஆ) அவர் இராஜினாமா செய்வதன் மேல். (இ) அவர் இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழக்கும்போது (ஈ) தமது பதவிக்காலம் தொடங்கியது முதல் ஒருமாதத்துக்குள்
பதவி ஏற்காவிடில். (உ) 38 (2) படி பதவி நீக்கம் செய்யப்பட்டால். (ஊ) 130 (அ) படி அவரது தெரிவு பிழையானது என உயர்
நீதி மன்றம் தீர்ப்பு வழங்கினால் இந்நிலையில் சனாதிபதியின் பதவி வறிதாகும்.
இந்நிலையில் (சனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் அவரின் பதவி வறிதாகும் நிலையில்) பாராளுமன்றம், பாராளுமன்ற உறுப்பினருள் ஒருவரை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென அரசியலமைப்பின் 40ம் உறுப்புரையில் (1) அ, ஆ, இ, பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.
சனாதிபதிப் பதவிக்கு அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் பதவி
49

Page 27
வறிதாகிச் செல்லும் சனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.
அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச் சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் தேர்தல் நடத்தப்படல் வேண்டும். பாராளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியவாறான அத்தகைய நடவடிக்கை முறைக்கிணங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும். அளிக்கப்பட்ட வாக்குகளின் பூரணப்பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்.
அரசியலமைப்பின் 40 (1) (இ) பிரிவு அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட காலத்திற்கும், புதிய சனாதிபதிப்பதவி ஏற்கின்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலதி திணி போது சனாதிபதிப் பதவியில் முதலமைச்சர் பதிற்கடமையாற்றவேண்டும் என்பதுடன் முதலமைச்சர் பதவி வறிதாக இருக்குமெனின் அல்லது முதலமைச்சர் பதிற்கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருப்பாரெனின் சனாதிபதி என்ற பதவியின் சபாநாயகர் பதிற்கடமையாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சனாதிபதி அவர்களின் மறைவை அடுத்து மேற்படி ஏற்பாடுகளுக்கமைய (அரசியலமைப்பின் 37(2), 40(1) (இ) ) 1993 மெய் முதலாம் திகதி இலங்கையின் முதலமைச்சர் திரு டீயி விஜயதுங்க அவர்கள் பதில் சனாதிபதியாகப் பதவிப்பிரமானம் செய்து கொண்டார். அரசியலமைப்பின்படி பதில் சனாதிபதிக்கு ஒரு மாதம் மட்டுமே கடமையாற்ற முடியும். இதற்கிடையில் 40ம் உறுப்புரைப்படி பாராளுமன்றம் தமது உறுப்பினர் ஒருவரை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு சனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) பாராளுமன்ற சட்ட மூலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சனாதிபதிப்பதவி வெற்றிடமாகி மூன்று தினங்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும். அவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்பட்டதும் 48மணிநேரத்திற்குள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் விசேட பிரகடனத்தின்படி சனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை (பாராளுமன்ற அங்கத்தவர்களிடமிருந்து) கோரப்படுவதுடன் வேட்புமனு பெறும் காலம், நேரம் என்பனவும் அறிவிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தினுள் சனாதிபதியைக் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை நடாத்துவதற்குப் பொறுப்பாக பாராளுமன்றச் செயலாளர் நாயகமே இருப்பார்.

இத்தகைய தேர்தலின்போது கடைப்பிடிக்கப்படும் ஒழுங்கு முறைகள் சாதாரண தேர்தல் முறைகளை ஒத்ததாகும். வேட்பு மனு கோரப்படுதல் எனும்போது இங்கு வேட்பாளரின் அனுமதியுடன் ஒரு அங்கத்தவர் அவர் பெயரைப்பிரேரித்து மற்றொருவர் ஆமோதிக்க வேண்டும். எதிர்ப்போட்டிகள் இல்லாதிருப்பின் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் ஏகமானதாக இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியாகத் தேந்தெடுக்கப்பட்டுள்ளார் என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அறிவிப்பார். அதையடுத்து சனாதிபதி உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமானம் செய்து ஏற்கனவே பதவி வறிதான சனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்திற்கு சனாதிபதியாகப் பதவியேற்றுக்கொள்வார்.
இதன்படி 1993-05-07ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டபோது பதில்சனாதிபதி திரு D.B விஜயதுங்க அவர்களின் பெயர் முன்மொழியப்பட்டு (திரு விஜயபால மென்டிஸ் முன்மொழிந்தார்) வழிமொழியப்பட்டு (திரு A.C.S ஹமீட் வழிமொழிந்தார்) எதிர்ப்பிரேரனைகள் இல்லாதிருந்தமையால் சனாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்( இவரின் பதவிக்காலம் 1995-01-02 உடன் முடிவடையும். (1989-01-02ஆம் திகதியன்று திரு ரனசிங்ஹ பிரேமதாச பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவது 1995-01-02 ஆகும்)
சனாதிபதி தெரிவுக்கான வேட்பு மனு கோரப்பட்டதும் ஒன்றுக்குமேற்பட்டோர் பிரேரிக்கப்பட்டால் தேர்தலை நடாத்த வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையே சார்ந்திருக்கும். அவர் தேர்தலுக்கான திகதி,நேரம் என்பவற்றைக் குறிப்பிடுவார். தேர்தலின் போது இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். தேர்தலின் மூலம் சனாதிபதியாகத் தெரிவாவதற்கு பெரும்பான்மை வாக்குகள் அவசியம். அதாவது செல்லுபடியான வாக்குகளில் இரண்டில் ஒன்றுக்கு அதிகமானவாக்குகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
வினா இலக்கம் 13
1978ஆழ் ஆண்டு அரசியல் அழைப்பின் கீழ் சனாதிபதிப்பதவிகாலியாகக் கூடிய சந்தர்ப்பங்களையும், சனாதிபதிக் கெதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டு வரக் கையாளக்கூடிய வழிமுறைகளையும் பற்றி ஆராய்க்.
விடைக்குறிப்புகள்
5

Page 28
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் 7 ஆவது அத்தியாயம் 30 வது உறுப்புரையின் 1ஆம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது. இலங்கைக் குடியரசுக்கு சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும், அவரே அரசின் தலைவரும் ஆட்சித்துறையினதும் , அரசாங்கத்தினதும் தலைவரும், ஆயுதம்தாங்கிய படைகளின் தலைவருமாவார்.
யாப்பின் 30ஆவது உறுப்புரையில் 2ஆம் பந்தியில் குடியரசின் சனாதிபதி மக்களால் (வாக்காளரால் தனிமாற்று வாக்குமுறையின் அடிப்படையில்) தெரிவு செய்யப்படுதல் வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்தலின் போது இலங்கை முழுவதும் ஒரு தேர்தல் தொகுதியாக கொள்ளப்படும்.
எனவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதியின் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்களும், சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகளும் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவற்றைப் பின்வருமாறு ஆராயலாம் சனாதிபதிப் பதவி வெற்றிடமாகக் கடடிய சந்தர்ப்பங்கள் (யாப்பின் 38 ஆவது உறுப்புரை 1ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன)
பதவிக்காலத்தில் இறத்தல், தன் கைப்பட இராஜிநாமாவை சபாநாயகருக்கு சமர்ப்பித்தல், இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்த்தை இழத்தல், பதவிக்காலம் தொடங்கி ஒருமாதத்திற்குள் பதவி ஏற்காதுவிடல், 38(2)இல் ஏதேனும் குற்றச்சாட்டின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டால், தெரிவு பிழையானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கின்ால். மேற்குறித்த நிலைகளில் சனாதிபதிப் பதவி வெற்றிடமாகும்.
சனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரேரணை ஒன்றினை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் வழி முறைகளைப் பற்றி நோக்குமிடத்து, யாப்பில் 38ம் உறுப்புரையின் படி பின்வரும் சந்தர்ப்பங்களில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
38(2)அ-பாராளுமன்ற உறுப்பினர் எவரும் சபாநாயகருக்கு
முகவரியிட்டனுப்பும் கடிதத்தின் மூலம் மனப் பலவீனம் அல்லது உடற்
பலவீனம் காரணமாக அவரது பதவிக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு
நிரந்தரமாக இயலாதுள்ளார் எனச் சார்த்துகின்ற அல்லது சனாதிபதி
- 52

பின்வருவனவற்றைப் புரிந்ததற்குக் குற்றவாளியாக உள்ளாரெனச்சார்த்துகின்ற தீர்மானம் பற்றி அறிவித்தல் ஒன்றைக் கொடுக்கலாம்.
1. அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம், 2. தேசத்துரோகம் புரிந்த குற்றம், 3. இலஞ்சம் பெற்ற குற்றம், 4. தமது பதவிக்குறிய அதிகாரங்களைத் துர்ப் பிரயோகம்
செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம், 5. அல்லது ஒழுக்கக்கேட்டை உற்படுத்தும் ஏதேனும் சட்டத்தின்
கீழான ஏதேனும் தவறு.
மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்தும் படி உயர் நீதிமன்றத்தைக் கோர பாராளுமன்ற உறுப்பினர்களால் முடியும். இச்சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் குறிக்கப்பட்டு பாராளுமன்ற அங்கத்தவர்களுள் 2/3 குறையாதோர் கையொப்பத்துடன் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கலாம். இக்கையொப்பம் 23க்கு குறைவாக இருப்பின் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் மறுக்கவும் முடியும். இருப்பினும் குறித்த பிரேரணைக்குப் பாராளுமன்ற அங்கத்தவர்களுள் 1/2 பாதிப் பங்கினருக்கு மேல் கையொப்பமிடப்பட்டிருப்பின், நியாயங்கள் காணப்படுமிடத்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற முடியுமென கருதினால் குறித்த பிரேரணையை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சபாநாயகரால் சேர்க்க முடியும்.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் மூன்று படிமுறைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
1. குறிதி த பிரேரணை பாராளுமனற விவாததி திற்கு எடுத்துக்கொள்ளப்படும். விவாத முடிவில் நடாத்தப்படும் வாக்கெடுப்பில் சமுகமளிக்காத உறுப்பினர் எண்ணிக்கை உட்பட 2/3 பெரும்பான்மை வாக்குகள் பெறப்படின் மேற்குறித்த பிரேரணை குறித்து விசாரணையை மேற்கொள்ளும்படி உயர் நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
2. உயர் நீதிமன்றம் குறித்த பிரேரணையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். இவ்விடத்தில் தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்கவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கவும் சனாதிபதியால் அல்லது அவரின் சட்டத்தரணியால் சாட்சியமளிக்க யாப்பில் இபல் வழங்கப்பட்டுள்ளது (29gறுப்புரைப்படி இந்த விசாரணை

Page 29
இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படல் வேண்டும்)
3. சனாதிபதியால் மனப்பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாக அவரது பதவியைத் தொடர்ந்தும் வகிக்க முடியாதென, அல்லது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உணர்மையானவை என உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிக்கை (தீர்ப்பு) சமர்ப்பிக்கும் இடத்து மீண்டும் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காத உறுப்பினர் உட்பட 2/3 பெரும் பான்மை வாக்குகளைப் பெற்று சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யலாம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 1991ம் ஆண்டில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதி காலம்சென்ற திரு ரனசிங்க பிரேமதாசாவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரையப்பட்டது.
இக்குற்றப் பிரேரணையில் 116 பாராளுமன்ற உறுப்பினர்கள்(அரை வாசிக்கு மேல்) கையொப்பமிட்டிருந்தனர் என்று கூறப்படுகின்றது. சபா நாயகர் அவர்களினால் ஆரம்பத்தில் அக்குற்றப்பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும் பின்னர் கையொப்பமிட்டுள்ள உறுப்பினர்களின் கை யொப்பங்கள் பிழையானது என்று காரணம் காட்டப்பட்டதினால் உரிய குற்றப் பிரேரணை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்புப் பற்றிய விவாதத்தில் கலாநிதி NM பெரேரா அவர்கள் குறிப்பிட்டுக்காட்டிய ஒரு அம்சத்தை இவ்விடத்தில் எடுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
சனாதிபதியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான சட்டவிதிகள்
யாப்பில் இடம் பெற்றபோதிலும் கூட இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா? என்பது கேள்விக் குறியே.
சனாதிபதிக்கெதிரான முறையில் குற்றப்பிரேரணை ஒன்றினை கொண்டு வர முனையும் நிலையில் சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டால் ஒன்றுமே செய்யமுடியாது போகும். (குற்றப்பிரேரணையை சபாநாயகர் ஏற்றபின் தீர்ப்பு வரும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தினைச் சனாதிபதி இழந்து விடுகிறார்.)
54

மேலும் யாப்புவிதிகளை நுணுக்கமாக ஆராயும் போது உயர் நீதிமன்றம் இப்பிரேரணையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் பிரதிவாதியின் சார்பில் யாரை விசாரிப்பதென்ற தெளிவுகளும் கூறப்பட்டில்லை.
வினா இலக்கம் 14
லங்கையில் இரண்டாவது குடியரசு யாப்பின் தித்துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகளை பின்வடுபி) தலைப்புகளின்கீழ் விளக்குக.
நீதித்துறையின் சுதந்திரம் ஆ) உயர்நீதி மன்றம்
நீதித்துறை
15ம் அத்தியாயம் 105 ஆம் உறுப்புரை 1ம் பந்தி
மக்களினி உரிமைகளைப் பாதுகாக்க, அவற்றை நிலைநாட்டி நடைமுறைப்படுத்தும் நீதி நிர்வாகத்திற்கான நிறுவனங்கள் பின் வருவனவாதல் வேண்டும்
(அ) இலங்கை குடியரசின் உயர் நீதி மன்றம். (ஆ) இலங்கைக் குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்றம் (இ) இலங்கைக் குடியரசின் மேல் நீதி மன்றமும், பாராளுமன்றம் காலத்திற்கு காலம் ஆணையிட்டமர்த்தித் தாபிக்கக் கூடிய அத்தகைய முதநிலை நீதிமன்றங்களும், நியாயசபைகளும் அல்லது அத்தகைய நிறுவனங்களும். ( (அ) (ஆ) என்பன மேன்நிலை நீதிமன்றம் எனப்படும்)
அ)நீதித்துறையின் சுதந்திரம் (107ம் உறுப்புரை)
நீதித் துறையின் சுதந்திரம் பற்றிய ஏற்பாடுகள் யாப்பில் பின்வருமாறு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
107/1 பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், உயர்
நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றதினதும் ஏனைய நீதிபதிகளையும் சனாதிபதி நியமிப்பார்.

Page 30
1072நன்னடத்தைவரை இவர்கள் பதவியில் இருப்பர். துர்நடத்தை அல்லது தகவின்மை நீதிபதியின்பால் உள்ளதெனில் பாராளுமன்றத்தின் பிரேரணை மூலம் (மொத்த எண்ணிக்கையின் பெரும்பான்மையுடன்) சனாதிபதி பதவி நீக்குவார். 107/5உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வுபெறும் வயதெல்லை 65 மேன்முறைமீட்டு நீதிபதிகளின் ஒய்வுபெறும் வயதெல்லை 83
108/1உயர்நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் நீதிபதிகளின் சம்பளம் பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டு திரட்டு நிதியிலிருந்து வழங்கப்படும்.
1082சம்பளமும் ஓய்வூதியமும் பெறுவதற்கு அவருக்குள்ள உரித்தும் அவர் நியமிக்கப்பட்ட பின்னர் குறைக்கப்படுதல் ஆகாது.
1121 நீதித்துறைச் சேவை ஆணைக்குழு
இதன் தலைவர் பிரதம நீதியரசர் ஆவார். ஏனைய இரணிடு உறுப்பினர்களும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாவர்.(இவர்களை சனாதிபதி நியமிப்பார்)
1124 நீதிச் சேவை ஆணைக் குழுவினி உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள உட்யர் நீதிமன்ற நீதிபதியொருவர் தமது பதவியை முன்னரே துறந்தால் ஒழிய நியமன திகதியிலிருந்து ஐந்து ஆண்டுளுக்குப் பதவி வகிக்க உரித்துடையவர். (அதே நேரம் அவர் மீள நியமிக்கப்படவும் தகுதியுடையவர் ஆதல் வேண்டும்.)
1128 நீதிச்சேவை ஆணைக்குழுவானது நீதிச்சேவை உத்தியோகத்தவாது பதவி வழங்கல், இடமாற்றம்,பதவி நீக்கம் ஒழுங்குக் கட்டுப்பாடு என்பவற்றுக்குப் பொறுப்பாக இருக்கும்.
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முகமாக மேற்படி சட்டவிதிகள் சேர்க்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கதாகும்.
தற்கால சனநாயக அரசுகளில் மக்களினி உரிமைகளினி பாதுகாவலனாகவே இந்த நீதித்துறை திகழ்கின்றது. பேராசிரியர் பிறைஸ் என்பவரின் பின்வரும் கூற்றினை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக அமையும்.
56

"ஒரு அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு பாரபட்சமற்ற நிர்வாகமும், நீதித்துறையின் சுதந்திரமும் அவசியமானதாகும். ஒரு அரசாங்கத்தின் சிறப்புக்கான சோதனை அதன் நீதித்துறையே
இதிலிருந்து நீதித்துறையின் சுதந்திரமானது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை உணரமுடிகிறது. -
(ஆ) உயர் நீதிமன்றம்.
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் உயர் நீதிமன்றம்பற்றிய சட்ட, ஏற்பாடுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
அரசியலமைப்பின் 15வது அத்தியாயம் 118ம் உறுப்புரை உயர் நீதிமன்றத்தினி பொது நியாயாதிக்கங்கள் பற்றிப் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக் குடியரசின் உயர் நீதிமன்றமானது குடியரசிலுள்ள மிக மேலானதும், முடிவானதுமான மேனிலைப் பதிவேட்டு நீதிமன்றமாகவிருத்தல் வேண்டும். என்பதுடன், அது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய, பின்வரும் விடயங்களில் நியாயாதிக்கம் பிரயோகித்தலும் வேண்டும். அதாவது:- (அ) அரசியலமைப்புக் கருமங்கள் தொடர்பிலான நியாயாதிக்கம், y. (ஆ) அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தலுக்கான நியாயாதிக்கம். (இ) மேன்முறையீட்டுக்கான இறுதி நியாயாதிக்கம். (ஈ) ஆலோசனை நியாயாதிக்கம். (உ) தேர்தல் ஆட்சேபனை மனு வழக்குகளிலான நியாயாதிக்கம். (ஊ) பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பிலான
நியாயாதிக்கம். (எ) சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் உரித்தாக்கும் அல்லது ஆணையிட்டளிக்கும் அத்தகைய வேறு கருமங்கள் தொடர்பிலான நியாயாதிக்கம்.
அரசியலமைப்பின் 119ம் உறுப்புரை உயர் நீதிமன்றத்தின் அமைப்பு முறை பற்றி குறிப்பிடுகிறது. உயர் நீதிமன்றம் பிரதம நீதியரசரையும் ஆறுபேருக்கு குறையாத ஆனால் பத்துப்பேருக்கு அதிகமாகாத ஏனைய நீதிபதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.
பிரதம நீதியரசர் உட்பட ஏனைய நீதிபதிகளை சனாதிபதியே நியமிப்பார். இவர்கள் நன்நடத்தைவரை பதவியில் இருப்பர். இருப்பினும் உயர் நீதிமன்ற 5

Page 31
நீதிபதிகளின் ஒய்வுபெறும் வயதெல்லை 85ஆகும்.
துர்நடத்தை அல்லது தகவின்மை நீதிபதியின்பால் உள்ளதெனில் பாராளுமன்றத்தின் பிரேரணை மூலம் (மொத்த எண்ணிக்கையின் பெரும்பான்மையுடன்) சனாதிபதி உயர்நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வார்.
உயர் நீதிமன்றத்தினி கடமைகளையும், அதிகாரங்களையும் (நியாயாதிக்கம்) பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம்.
(3) 120th -gyuany:
அரசியலமைப்புச்சார்ந்த நியாயாதிக்கம் (ஏதேனும் சட்டமூலம் அல்லது அதன் கண் உள்ள ஏதேனும் ஏற்பாடு அரசியலமைப்புக்கு ஒவ்வாததாக உள்ளதா எனும் கேள்வி எதனையும் திர்மானிப்பதற்குத் தனியானதும், பிரத்தியேகமானதுமான நியாயாதிக்கம் இதற்குண்டு.
(ஆ) 125ம் உறுப்புரை:
அரசியலமைப்பைப் பொருள் கொள்ளுதல் பற்றிய ஏதேனும் பிரச்சினையை விசாரணை செய்வதற்கும், அதுபற்றித் தீர்மானிப்பதற்கும் தனியானதும், பிரத்தியேகமானதுமான நியாயாதிக்கம் இதற்குண்டு.
இ) 126ம் உறுப்புரை: ر
அடிப்படை உரிமை அல்லது மொழிஉரிமை ஆட்சித்துறை நடவடிக்கையால் அல்லது நிர்வாக நடவடிக்கையால் மீறப்பட்டமை பற்றிய ஏதேனும் பிரச்சினையை விசாரணை செய்வதற்கும், தீர்மானிப்பதற்கும் உயர் நீதிமன்றம் தனியானதும் பிரத்தியேகமானதுமான நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ளது.
(H) 127ih 0-apÜlqSOg:
உயர் நீதிமன்றமானது, மேண்முறையீட்டு நீதிமன்றத்தால் அல்லது ஏதேனும் முதனிலை நீதிமன்றத்தால் நியாயசபையால், அல்லது வேறுநிறுவனத்தால் புரியப்பட்ட எல்லா நிகழ்வுப் பிழைகளையும் அல்லது சட்டப் பிழைகளையும் திருத்துதல் தொடர்பில் இலங்கைக் குடியரசுக்காகவும் குடியரசுக்குள்ளும் குடியியல், குற்றவியல் மேன்முறையீட்டு நியாயாதிக்கம் கொண்ட இறுதியான நீதிமன்றமாக அரசியலமைப்புக்கமைய இருத்தல் வேண்டுமென்பதோடு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் கட்டலைகளும் அத்தகைய எல்லாக் கருமங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முற்றும் முடிவுமானவையாக இருத்தலும் வேண்டும்.

(உ) 129ம் இடறுப்புரை:
ஆலோசனை நியாயாதிக்கம். அ) உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைப் பெறுவதை உசிதமானதாக்குகின்ற அத்தகைய தன்மையும், அத்தகைய பொதுசன முக்கியத்துவமும் வாய்ந்ததான சட்டப்பிரச்சினை, அல்லது நிகழ்வுப் பிரச்சினை எழுந்துள்ளதென அல்லது எழக்கூடுமென குடியரசின் சனாதிபதிக்கு எந்த நேரத்திலும் தோன்றினால் அப்பிரச்சினை குறித்து சனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவது.
ஆ) 38மீ உறுப்புரையினி 2ம் பநீதியில் குறிப்பிட்டுள்ளபடி சனாதிபதிக்கெதிரான குற்றப்பிரேரணை கொண்டுவரப்படும் வேளையில் விசாரணையை மேற்கொண்டு சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பித்தல்.
(ளெ) 130ம் டெறுப்புரை:
தேர்தல் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பிலான நியாயாதிக்கம். அ) சனாதிபதியின் தேர்தல் பற்றிய ஏதேனும் சட்டநடவடிக்கை. ஆ) தேர்தல் ஆட்சேபனை மனு வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளைக்கு அல்லது தீர்ப்புக்கு எதிரான ஏதேனும் மேன்முறையீடு.
(எ) 131ம் இடறுப்புரை:
பாராளுமன்றத்தின் தத்துவங்களையும் சிறப்புரிமைகளையும் , மீறியமையைக் கவனத்துக்குட்படுத்தவும் மீறியமைக்காக எவரேனும் ஆளைத்தணிடிக்கவும் உயர்நீதிமன்றம் சட்டத்துக்கிணங்கியதான தத்துவம் கொண்டிருத்தல் வேண்டும்.
அரசியலமைப்பின் 132ம் உறுப்புரைப்படி உயர்நீதிமன்றத்தின் பல்வேறு நியாயாதிக்கங்கள் பிரதம நீதியரசர் வேறுவிதமாகப் பணித்தாலொழிய சாதாரணமாக கொழும்பிலேயே பிரயாகிக்கப்படுதல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வினா இலக்கம் 15
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் பின்வரும் அம்சங்கள் குறித்தசட்ட ஏற்பாடுகளை ஆராய்க. அ) 2ம் குடியரசு யாப்புத்திருத்தம். ஆ) அடிப்படை உரிமைகள்,

Page 32
விலுக்குறிப்புகள்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் 12ம் அத்தியாயத்தில் 82,83,84ம் உறுப்புரைகளில் கூறப்பட்டுள்ளன.
இதன்படி அரசியலமைப்பில் ஏதேனும் ஏற்பாட்டை மாற்றுதல், புதிதாகச் சேர்த்தல், நீக்குதல் அல்லது அரசியலமைப்பை முற்றாக மாற்றிப் புதியதை அமுல்படுத்தல் போன்ற அதிகாரங்களைப் பாராளுமன்றமே பெற்றுள்ளது.
அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டைத் திருத்த அல்லது நீக்க அல்லது மாற்றம் செய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சித்தாளில் இடம்பெறுமிடத்து அதற்குச் சாதகமாக அளிக்கப்படும் வாக்குகளின் எணணிக்கை உறுப்பினர்களினி மொத்த எணணிக்கையில் (சமுகமளிக்காதவர்கள் உட்பட) மூன்றில் இரண்டிற்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமிடத்து அரசியலமைப்பின் 80ம், 79ம் உறுப்புரைகளுக்கிணங்க சனாதிபதி அல்லது சபாநாயகரின் சான்றுரை அதன் மீது எழுதப்பட்டு சட்டமாக வருதல் வேண்டும்.
83ம் உறுப்புரை: மக்கள் தீர்ப்பினால் சிலவகைச் சட்டமூலங்கள் அங்கீகரிக்கப்படுதல்
அரசியலமைப்பின் 1ம், 2ம், 3ம், 6ம், 7ம், 8ம் 9ம் 10ம், 11ம் உறுப்புரைகளின் அல்லது அந்த உறுப்புரையின் எவையேனும் ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான அல்லது நீக்குவதற்கும், மாற்றீடு செய்வதற்குமான சட்டமூலம் 30ம் உறுப்புரையின் (2) ம் பந்தியின் அல்லது 62ம் உறுப்புரையின் (2)ம் பந்தியின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாததாக இருக்கும் ஒரு சட்டமூலம்
பாராளுமனறத் தில் 2/3 (சமுகமளிக் காதோர் உட்பட) பெரும்பான்மையைப் பெற்று மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கீகாரம் பெறுதல் வேண்டும் (தயவு செய்து மேலதிக விபரங்களுக்கு "மக்கள் தீர்ப்பு" எனும் பகுதியை வாசிக்க)

இந்த சட்ட மூலம் மக்கள் தீர்ப்பினால் ஏற்றுக் கொள்ளப்படுமிடத்து அரசியலமைப்பின் 80ம் உறுப்புரைக்கிணங்க சனாதிபதியின் சான்றுரை அதன் மீது எழுதப்பட்டு சட்டமாக வருதல் வேண்டும்.
84ம் உறுப்புரை
1. அரசியலமைப்பின் ஏதாவது ஏற்பாட்டைத் திருத்த நீக்க மாற்றீடு செய்வதற்குமான சட்ட மூலமாக இல்லாமல் அரசியலமைப்பின் ஏதாவது ஏற்பாட்டுடன் ஒவ்வாததாக வருகின்ற சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சித்தாளில் இடம்பெறலாம்.
2. அத்தகைய சட்ட மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படல் வேண்டுமென அமைச்சரவை அல்லது உயர்நீதிமன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கினால் பாராளுமன்றம் நிறைவேற்றி 80.79இன் படி சனாதிபதி அல்லது சபாநாயகர் சான்றுரையுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.
(g) é3Lg)LuenL 2.fleD)Loa56ñ
ஒரு அரசில் வாழும் பிரஜைகளுக்கு அரசானது யாப்புரீதியாக உறுதிப் படுத்தும் உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்று சுருக்கமாக வரைவிலக்கணப் படுத்தலாம். இலங்கை அரசியல் வரலாற்றில் அடிப்படை உரிமைகள் எனும் சட்ட ஏற்பாடுகள் 1972ஆண்டு அரசியலமைப்பிலே முதற்தடவையாக வழங்கப்பட்டது. 1972ம் ஆண்டு அரசியலமைப்பினை விட 1978ஆண்டு அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் எனும் அம்சம் தெளிவான விளக்கத்தினைத் தந்துள்ளது.
இதுபற்றி கருத்துத் தெரிவித்த பேராசிரியர் கலாநிதி விக்கிரமசூரிய
அவர்கள்.
முன்னாள் அரசியல் திட்டம் அடிப்படை உரிமைகளில் சில அம்சங்களையே கொண்டிருந்தது. புதிய அரசியல் திட்டம் பொருளாதார சுதந்திரம், நிர்வாகத்தினை பரவலாக்குதல், சமூகப்பாதுகாப்பு, குழந்தைகள், தனியார் துறையைப் பாதுகாத்தல் என்பதோடு சூழல் சம்பந்தப்பட்டதையும் பாதுகாக்கிறது என்கிறார்.
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் அடிப்படை உரிமையற்றிய சட்ட ஏற்பாடுகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

Page 33
i 10ம் உறுப்புரை
ஆளொவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனட்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.
i 11ம் உறுப்புரை
ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லதுஇழிவான நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தலாகாது.
iii 12h இடறுப்புரை
சட்டத்தின் முன் ஆட்கள் எல்லோரும் சமம்ானவர்கள், அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள் (சமத்துவத்துக்காக உரிமை)
iv 13ம் உறுப்புரை
எதேச்சையாக கைது செய்யப்படாமலும் அதீதுடனி தண்டிக்கப்பட்டாமலும் இருப்பதற்கான சுதந்திரம்
V 14ம் உறுப்புரை
ஒவ்வொரு பிரசையும் பின்வருவனவற்றிற்கு உரித்துடையவராவர். அ) பேச்சு, கருத்து வெளியீட்டுச் சுதந்திரம். ஆ) அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் , இ) ஒருங்குசேர்வதற்கான சுதந்திரம். ஈ) தொழிற்சங்கம் அமைக்கவும், அதில் சேர்வதற்குமான சுதந்திரம். உ) தமது மதத்தினை அல்லது நம்பிக்கையை அனுசரிப்பதிலும்,
சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம் ஊ) தமது கலாசாரத்தைப் பின்பற்ற, மேம்படுத்தக்கூடிய சுதந்திரமும், சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரமும் எ) சட்ட ரீதியான தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான சுதந்திரம். ஏ) தடையின்றி இலங்கை முழுவதும் நடமாட விரும்பும்
இடத்தில் வசிப்பதற்கான சுதந்திரம். ஐ) இலங்கைக்குத் திரும்புவதற்கான சுதந்திரம்.
அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடுகள்
15ம் உறுப்புரையில் மேற்படி அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
62

அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக 14ம் உறுப்புரை (ஆ) (இ) பிரிவுகள் சமாதானமாக ஒன்றுகூடுதல், கூட்டம் கூடுவதற்கான சுதந்திரத்தை வழங்கிய போதிலும் 15ம் உறுப்புரை 3ம் பிரிவு இவ் இருசுதந்திரங்களும் இன, மத, சமாதானத்தை முன்னிட்டு கட்டுப்படுத்தப்படலாம் எனக் குறிப்பிடுகின்றது. அதேவேளை 15ம் உறுப்புரை 7ம்,8ம் பிரிவுகள் பிரத்தியேகமான சூழ்நிலையில் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்ப்டுத்துவது பற்றி குறிப்பிடுகிறது.
வின இலக்கம் 16
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவியை பின்வரும் தலைப்புக்களின் கீழ் ஆராய்க. அ) சனாதிபதியைத் தெரிவு செய்யும் முறை. ஆ) பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்கள்.
வினுடக்குறிப்புகள்.
அ) சனாதிமதியை தெரிவுசெய்யும் முறை
1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் சனாதிபதியை 6 ஆண்டுகளைக்கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டிய தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியைக் குறித்து தேர்தலை நடாத்துவார். சனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய அபேட்சகர்.
1. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினூடாக, அல்லது 2. ஒன்றில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவராயிருப்பின் அல்லது இருப்பவராயிருப்பின் சுயேட்சை வேட்பாளராக நியமனப் பத்திரத்தைத்
தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு நியமன்ப்பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் பின்வரும் தகமையீனங்களுள் எதற்கேனும் உட்பட்டவராகயிருத்தலாகாது என்று யாப்பின் 92ம் உறுப்புரை எடுத்துக் கூறுகின்றது.
தகமையீனங்கள். (31(1)
(அ) முப்பது வயதடையாதவராக இருத்தல்.
63

Page 34
(ஆ) 91ம் உறுப்புரையின் (1) ம் பந்தியின் ஈஉ2அல்லது எ
எனும் உற்பத்தியின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையற்றவராக இருத்தல். (இ) சனாதிபதிப் பதவிக்கு மக்களினால் இருதடவைகள்
தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருத்தல். (ஈ) 38ம் உறுப்புரையின் 2ம் பந்தியின் ஏற்பாடுகளின் கீழ் சனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருத்தல்.
தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரம் கோரப்பட்டதும் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்தல் வேண்டும். கட்டுப்பணமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாகப் போட்டியிடுவதாயின் 50,000 வும் சுயேட்சையாகப் போட்டியிடுவதாயின் 75,000 வும் செலுத்தல் வேண்டும்.
சனாதிபதித் தேர்தலில் 2 வேட்பாளர்கள் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது விருப்பத்தை ஒரு வேட்பாளருக்கும், 3 வேட்பாளர்கள் போட்டியிடின் 1ம், 2ம் விருப்பங்களையும், மூவருக்கு மேல் போட்டியிடின் 3ம் 4ம் . விருப்பங்களையும் வழங்குமாறு கேட்கப்படுவர்.
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் (செல்லுபடியான) 50%க்கு மேல் பெற்றவர் சனாதிபதியாகத் தெரிவு செய்யட் பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார். வேட்பாளர்கள் 3அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50% வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர் (அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
இவ்வாறு நீக்கப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பா ருக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு பதியப்படும். இக்கணிப்பீட்டின்படி பின்பும் 50%பெறப்படாவிடின் ம்ே (4ம்) விருப்ப வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 32ம் உறுப்புரையின் 1ம் பந்திக்கிணங்க பிரதம நீதியரசரின் முன்னிலையில் அல்லது அந்நீதிமன்றத்தின் வேறு எவரேனும் நீதிபதியின் முன்னிலையில் சத்தியம் செய்து கீழ் ஒப்பமிடுவதன் மேல் பதவியேற்றுக் கொள்வார்.
இலங்கையில் 1982, 1988, 1994ம் ஆண்டுகளில் சனாதிபதியைத்

தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடாத்தப்பட்டன. அத்தேர்தல் முடிவுகள்
வருமாறு. 1982 சனாதிபதித் தேர்தல்
திரு JR ஜயவர்த்தனா (U.N.P) 52.9% திரு ஹெக்டர்கொப்பேகடுவ , (S.L.F.P) 39.1% திரு ரோஹன விஜயவீர (JVP) 42% ški G.G. Guristi jsouh (egosíluň) (T.C) 2.6% திரு கொல்வின் RD சில்வா (L.S.S.P) 0.9% திரு வாசு தேவ நாணயக்கார (N.L.S.S.P) 0.3%
1988 சனாதிபதித் தேர்தல்
திரு R.பிரேமதாச ” (UNP) 50.4% திரு சிரிமாவோ பண்டாரநாயக்கா (S.L.F.P) 45% திரு ஒளி அபயகுணசேகரா (S.L.M.P) 46%
1994 சனாதிபதித்தேர்தல் s
திருமதி சந்திரிக்கா குமாரணதுங்க (P.A) 62.28% திருமதி வஜிரா பூரீமதி திசாநாயக்க (UNP) 35.91% திரு ஹட்சன் சமரசிங்க (Ind-II) 0.78% திரு ஹரிச்சந்திர விஜேதுங்க (S.L.B.P.P) 0.43% திரு. ஏ.ஜே ரணசிங்க (ind-) 0.30% திரு நிஹால் கலப்பதி (SLPF) O.30%
இம் மூன்று தேர்தல்களின் போதும் வேட்பாளர்கள் 50%த்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றமையினால் இதுவரை நடந்த தேர்தல்களில் 2ம் விருப்பு வாக்குகள் கணிக்கப்படவில்லை.
LLLT TT LT LLL LLTTTLTLL TTLTTTS 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது அத்தியாயம் 30வது உறுப்புரையின் 1ம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது. இலங்கைக் குடியரசுக்கு சனாதிபதி ஒருவர் இருத்தல் ணேடும். அவரே அரசின் தலைவரும் ஆட்சித்துறையினதும், அரசாங்கத்தினதும் தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவருமாவார்.
யர்ப்பின் 30வது 9- றுப்புரை 2ம் பந்தியும் "குடியரசின் சனாதிபதி மக்களால் (வாக்காளரால்) தனிமாற்று வாக்கு முறையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் இத் தேர்தலின் போது இலங்கை முழுவதும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடுகின்றது. 65

Page 35
எனவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதியின் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்களும் சனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான வழி முறைகளும் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றைப் பின்வருமாறு இராயலாம் (அ) சனாதிபதிப் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்கள் (யாப்பின் 38ம் உறுப்புரை 1ம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன) '
பதவிக்காலத்தில் இறத்தல், i தன்கைப்பட இராஜினாமாவை சபாநாயகருக்கு சமர்ப்பித்தல், ii இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழத்தல், iv பதவிக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் பதவி
ஏற்காதுவிடின், V 38(2) இல் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டின் படி பதவி
நீக்கம் செய்யப்படின், vi தெரிவு பிழையானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கினால். சனாதிபதிப்பதவி வெற்றிடமாகும்.
(ஆ) சனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரே, ணை கொண்டு வரக்கூடிய
சந்தர்ப்பங்கள் (38ம் உறுப்புரை 2ம் பந்தி)
1 அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம் i தேசத்துரோகம் புரிந்த குற்றம். ii இலஞ்சம் பெற்ற குற்றம். iv தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் துஷ்ப்பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம் V ஒழுக்கக்கேட்டை உட்படுத்தும், ஏதேனும் சட்டத்தின் கீழான
ஏதேனும் தவறு,
வினா இலக்கம் 17
இலங்கையின் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் (2ம் குடியரசு அரசியலமைப்பு) நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதி'ரின் கடமைகளையும், அதிகாரங்களையும் பின்வரும் தலைப்புக்களின் கீழ் ஆராய்க.

1. சட்டவாக்கத்துறை சார்ந்த கடமைகளும்,
அதிகாரங்களும்.
2. அமைச்சரவை சார்ந்த கடமைகளும் அதிகாரங்களும்.
3. அவசர கால நிலையில் கடமைகளும்,
அதிகாரங்களும்.
விடைக்குறிப்புகள் が
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 30ம் உறுப்புரை 1ம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது.
இலங்கைக் குடியரசிற்கு சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலைவரும், ஆட்சித்துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவரும், ஆயுதம் தாங்கியபடைகளின் தலைவரும் ஆவார்.
எனவே இலங்கை சனாதிபதியின் அதிகாரமானது சகல துறைகளிலும்
வியாபித்து நிற்பதனை அவதானிக்க முடிகிறது. இலங்கையின் நிறைவேற்று
அதிகாரம் மிக்க சனாதிபதியின் கடமைகளையும், அதிகாரங்களையும் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1. சட்டவாக்கத்துறை (பாராளுமன்றம்) சார்ந்த சனாதிபதியின்
கடமைகளும், அதிகாரங்களும்.
2. அமைச்சரவை சார்ந்த சனாதிபதியின் கடமைகளும், அதிகாரங்களும்.
3. அவசரகால நிலையில் சனாதிபதியின் கடமைகளும், அதிகாரங்களும்.
சட்டத்துறை பாராளுமன்றம் சார்ந்த கடமைகளும், அதிகாரங்களும் ே இலங்கையில் சட்டவாக்கத்துறைக்குப் பொறுப்பாக பாராளுமன்றம் காணப்பட்டபோதிலும் கூட, நிர்வாகத்துக்குப் பொறுப்பான சனாதிபதி சட்டவாக்கத்துறையில் பின்வரும் வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.
(இ) யாப்பின் 32ம் இடறுப்புரை 3ம் யந்தி
சனாதிபதி, அவரது பதவி காரணமாக பாராளுமன்றத்தில் வருகை தருவதற்கும் அதில் உரையாடுவதற்கும் அதற்குச் செய்திகள் விடுப்பதற்கும் எந்நேரத்திலேனும் உரிமையுடையவராயிருத்தல் வேண்டும்.அத்தகைய
ANAT

Page 36
உரிமையைப் பிரயோகிக்கையில், வாக்களிப்பதற்குள்ள உரிமையைத் தவிர, பாராளுமன்ற உறுப்பினருக்குள்ள எலிரைச் சிறப்புரிமைகளுக்கும், விடுபாட்டுரிமைகளுக்கும், தத்துவங்களுக்கும், சனாதிபதி உரித்துடையவராய் இருத்தல் வேண்டும், என்பதுடன், பாராளுமன்றத்தின் அல்லது அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறியமைக்காக வகைசொல்ல ஆளாதலுமாகாது. − (ஆ) யாப்பிள் 33வது இடறுப்புரை
(அ-பிரிவு) பாராளுமன்றத்தின் அமர்வு ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் பாராளுமன்றத்தில் அரச கொள்கைக்கூற்றை வாசித்தல்.
(ஆ-பிரிவு) பாராளுமன்றத்தின் சடங்கு முறையிலான இருக்கைகளுக்குத் தலைமை தாங்குதல் (இ) யாப்பின் 70வது உறுப்புரை 1ம் பந்தி
சனாதிபதி காலத்துக்குக்காலம், பிரகடனத்தின் மூலம் பாராளுமன்றத்தை கூடுமாறு அழைக்கலாம் அமர்வினை நிறுத்தலாம். அத்துடன் கலைக்கலாம் ஏனைய அதிகாரங்களை விட இந்த அதிகாரமானது சட்டவாக்கத்துறையில் சனாதிபதியின் நிலையை வலியுறுத்தி நிற்பதற்கான ஏற்பாடாக அரசியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்தல் தொடர்பான அதிகாரத்தில் சனாதிபதி
(3) 7Oh gu on 3, Fouis
ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றம் நிராகரித்ததன் விளைவாக சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்காதுள்ளவிடத்து, அடுத்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றம் நிராகரித்தால் சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தல் வேண்டும். இதன் விளைவாக பொதுத் தேர்தலொன்று நடாத்தப்பட்டுள்ள விடத்து, அத்தகைய பொதுத் தேர்தற் திகதியிலிருந்து ஓராண்டு காலம் முடியும்வரை (பாராளுமன்றத்தின் மூலம் ஒரு தீர்மானத்தின்படி பாராளுமன்றத்தினை கலைக்கும்படி சனாதிபதியை வேண்டினாலொழிய) சனாதிபதி இரண்டாந்தடவையாக பாராளுமன்றத்தினைக் கலைத்தலாகாது. இதே உறுப்புரையின் (ஆ) பிரிவு பின்வருமாறு கூறுகின்றது. பொதுத்தேர்தல், ஒன்றின் பின்வரும் அமர்வின் தொடக்கத்தின் போது அரச கொள்கைக்கூற்று நிராகரிக்கப்பட்டதன்மேல் சனாதிப பாராளுமன்றத்தைக் கலைக்கலாகாது.
(ஆ) யாப்பின் 3ம்ே உறுப்புரை 2வது பந்திக்கிணங்க சனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை தாக்கல் செய்யப்பட்டு சபாநாயகர் ஏற்றநேரத்திலிருந்து
 
 

குற்றப்பிரேரணைக்கு ஒரு தீர்ப்பு காணப்படும்வரை பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை சனாதிபதி இழக்கிறார்.
இந்த ஏற்பாடு குறித்து கருத்துத் தெரிவிக்கும் பேராசிரியர் அண்டன் குரே என்பவர் "சனாதிபதியை பொறுத்தவரையில் அவருக்கெதிரான குற்றப் பிரேரணையை பாராளுமனிறம் தயார் பணி னுகையிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்துவிடக் கூடியதாக இருக்கும் இந்த நிலையானது சபாநாயகருக்கு ஓர் அச்சுறுத்தலாகும்" என்றார்.
எவ்வாறாயினும் சட்டவாக்கத்துறையினுள் சனாதிபதி செலுத்தும் அதிகாரமானது சட்டவாக்கத்துறையையும், நிர்வாகத்துறையையும் மறைமுகமாக இணைத்துவைக்கின்றதென்றால் பிழையாகாது.
LLLLLLLLLLLL LLL LLLLLLTL TLLLLLT LTTTTTT
ஆட்சித்துறையின் தலைவர் என்ற ரீதியில் இலங்கையினி நிர்வாகத்துறை அதிகாரங்களும், பொறுப்புக்களும் சனாதிபதியையே சார்ந்துள்ளது. அரசியலமைப்பின் 43வது உறுப்புரை 2ம் பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
சனாதிபதி அமைச்சரவையின் ஓர் உறுப்பினராக இருத்தல் வேண்டும். என்பதுடன், அமைச்சரவையின் தலைவராயிருத்தலும் வேண்டும். ஆயின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை கலைக்கப்படுவது எப்படியிருப்பினும் சனாதிபதி தொடர்ந்தும்பதவி வகித்தல் வேண்டும்.
இதன்படி அமைச்சரவை கலைக்கப்பட்டாலும் கூட சனாதிபதி தொடர்ந்தும் பதவி வகிப்பார் என்பது புலனாகிறது. அரசியலமைப்பின் 43ம் உறுப்புரையின் 3ம் பந்திக்கமைய சனாதிபதி அவரது கருத்துப்படி பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவராக இருக்கின்றாரோ அந்த உறுப்பினரை முதலமைச்சராக நியமித்தல் வேண்டும்.
மேலும் அமைச்சரவையின், அமைச்சர்களினதும் எண்ணிக்கை பற்றியும் அத்தகைய அமைச்சர்களுக்கு வழங்க வேண்டிய பணிகள் பொறுப்புகள் போன்றவற்றைத் தீர்மானிப்பவர் சனாதிபதியாவார். யாப்பின் 44ம் உறுப்புரையின்படி முதலமைச்சரின் ஆலோசனை தேவையெனக் கருதும் சந்தர்ப்பத்தில் சனாதிபதி முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வார்.
மேலும் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தினையும் சனாதிபதியேபெற்றுள்ளார்.
69

Page 37
அரசியலமைப்பிணி 45ம் உறுப்புரைப்படி அமைச்சரவையில் உறுப்பினர்களாயிராத அமைச்சர்களையும் , 48ம் உறுப்புரைப்படி உதவி அமைச்சர்களையும் நியமிக்கும் பதவிநீக்கும் பதவிமாற்றும் அதிகாரத்தையும் சனாதிபதியே பெற்றுள்ளார். w
பராளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து அடுத்த பொதுத்தேர்தல் வரை நடைமுறையிலுள்ள அமைச்சரவையை சனாதிபதி விரும்பினால் வைத்திருக்க முடியும். (அதே நேரம் முழு அமைச்சுக்களையும் அவரால் வகிக்கவும் முடியும்.)
தொகத்து நோக்குமிடத்து குடியரசு அரசியல் திட்டத்தின் கீழ் சனாதிபதியானவர் அமைச்சரவை மீது செலுத்தும் அதிகாரம் மிகையானது. இலங்கை அரசியல் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதி பாராளுமனற உறுப்பினர்களல்லாதோரையும் அமைச்சரவைக்கு அழைக்கிருப்பதை (அமைச்சர் அந்தஸ்துடன் அல்லாது) யும் அவதானிக்க முடிகின் W
(நன்றி- ராவய பத்திரிகை 93-6-13)
A CSICOGGEO BENEDIOLE ELEg CEgLE
OLEDIDIGO CONORICI
அரசியலமைப்பின் 155வது உறுப்புரையின் கீழ் (பொது மக்கள் பாதுகாப்பு) அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தும் அதிகாரத்தினை சனாதிபதி பெற்றுள்ளார். இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் போது அரசியலமைப்பு தவிர்ந்த அனைத்து சட்டங்களையும் சனாதிபதியால் செல்லுபடியற்றதாக்கவும் முடியும். இந்நிலையில் புதியசட்டங்களைப் பிறப்பிப்பதற்கும், அவற்றை இடைநிறுத்துவதற்கும். மீறுவதற்கும் சனாதிபதி பெற்றுள்ள அதிகாரங்கள் மிகைத்தன என விமர்சிக்கப்படுகிறது.
இலங்கையின் அரசியலமைப்பை நோக்குமிடத்து சனாதிபதியை ஓரளவேனும் பாராளுமன்றத்தால் கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு அவசரகால நிலையின் போதே உள்ளதெனலாம். விசேடமாக அவசரகால நிலையை சனாதிபதி பிரகடனப்படுத்திய பின் 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் அனுமதியை வழங்க மறுத்தால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை 14 தினங்களுக்குள் காலாவதியாகிவிடும். அதேநேரம் பாராளுமன்றம் அனுமதியை வழங்கினாலும் அந்த அனுமதியானது ஒரு மாதத்திற்கு மாத்திரமே செல்லுபடியானதாகும். அவசரகால நிலையை நீடிக்க வேண்டுமாயின் மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
O
 

1983ம் ஆண்டு ஜூலை 25ம் திகதி இலங்கையில் ஏற்பட்ட கலவர நிலையின் போது அப்போதைய சனாதிபதி மாண்புமிகு J. R.ஜயவர்த்தனா அவர்களினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வாறு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நேரத்தில் (சாதாரண சட்டங்களினால் செய்ய முடியாத) பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டமையை அவதானித்தல் வேண்டும்.
(அ) ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தமை, (ஆ) முன்று அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட்டமை, (இ) அக்கட்சிகளின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டமை, (ஈ) ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை அல்லது சொத்துக்களைச்
சேதப்படுத்துபவர்களை அல்லது கொள்ளையாளிகளைக் கண்ட இடத்தில் சுட்டுக்கொலைசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை, (உ) அத்தியவசிய சேவை பிரகடனப்படுத்தப்பட்டமை, (ஊ) மாவட்ட தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை, (எ) சேதம் இழைக்கப்பட்ட சொத்துக்களை அரச உடமையாக்கியமை
(பாதுகாப்பு நோக்கில்)

Page 38
புன்னியாமீன் ஆசிரியரின் 与 at 56) இலக்கிய அரசறிவியல்
புத்தகங்களையும் பெற
தொடர்பு கொள்க
PQobalasigham Boo Depo 覆
影
தபாலில் பெற
P.M. PUNYAMEE 4. dataaway na Mai
a) Katugastota
Sri Lanka
72
 
 
 
 
 
 
 
 


Page 39
(பாடநூல் ே
9 fl
سسې (L II (U53J:
இலங்கையில் وہ یہ سڑکg
புன்னி
விநியோக உரிமை: பாசிங்கம் த்த
TETeli
 
 
 
 

(Ca).
· (A/L)
_)__ü
தொடர் – 3)
Goal UL GÖ
- 2)
oi egöusai αιτίτό όε
யாமீன்
η σουι ι το
கர31 - பார்ப்பான31ார் - கொழும்